View Full Version : MAKKAL THILAGAM MGR (Part 2)
Pages :
1
2
3
4
5
6
7
8
[
9]
10
11
12
13
14
15
16
goldstar
31st July 2012, 11:10 AM
http://i47.tinypic.com/2vj6fs0.jpg
Thank you Vinod sir to see our Madurai Chinthamani theater image with Adimai Pen cut outs, thank you very much sir.
Cheers,
Sathish
groucho070
31st July 2012, 11:58 AM
esvee, you are doing fantastic job.
Oru request: image crop pannunggalEn. Taking up lots of spaces.
masanam
31st July 2012, 12:45 PM
http://i49.tinypic.com/2ltit8p.png நன்றி ..... நன்றி. நன்றி .....
21 .4 .2007 அன்று நடிகர் திலகம் அன்பு ரசிகர் திரு . JOE அவர்களால் துவக்க பட்ட மக்கள் திலகம் PART 2 இன்று 200 பக்கம் தாண்டியது ஒரு மாபெரும் சாதனையாகும் .இந்த திரியில் பல்வேறு கருத்துக்கள் , விமர் சனங்கள் ,பாடல்கள் , ஆய்வுகள் , புகைப்படங்கள் ,வீடியோ பேப்பர் விளம்பரங்கள் ,,கருத்து மோதல்கள் , என்று பல்வேறு கோணங்களில் நடிகர் திலகத்தின் நண்பர்கள் மற்றும் மக்கள் திலகத்தின் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பாக எங்களது நன்றியினை நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம் .
மதிப்பிற்குரிய நதியின் நண்பர்கள்.
திருமதி சாரதா அவர்கள்
திரு . பம்மலர் - திரு .ராகவேந்திரன் . திரு ,முரளி ஸ்ரீநிவாஸ் . திரு JOE திரு . வாசுதேவன் . திரு திருமாறன் .
திரு .பாலாஜி . திரு .செல்வகுமார் . திரு .கார்த்திக் . திரு .மகேஷ் . திரு .தமிழரசன் . திரு .ராஜாராம் . திரு .சதீஷ் . திரு கல்நாயக் . திரு ராஜா .திரு .பாரிஸ்டர் ரஜினிகாந்த் . திரு .PR
திரு . groucho70 . திரு. tfmlover . app _engine .m -23 -bayarea - திரு hattori மற்றும் எல்லா நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நன்றியினை மீண்டும் தெரிவித்து கொள்கின்றோம் .
நடிகர் திலகத்தின் ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்டு, An Extended Nadigar Thilagam's Thread போன்றே திகழும் இத்திரிக்கு, 200 பதிவுகளை கடந்து செல்லும் நிலையில் வாழ்த்துகள்.
Richardsof
31st July 2012, 02:05 PM
MAKKAL THILAGAM WITH SUNIL GAWASKAR
http://i48.tinypic.com/2wd8wo4.jpg
Richardsof
31st July 2012, 02:10 PM
http://i48.tinypic.com/2cf62xc.jpg
RAGHAVENDRA
31st July 2012, 03:25 PM
சிறப்பு நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills/KAVAL02.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills/engalthangam02.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills/engalthangam01.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills/DEIVATHAI01.jpg
Richardsof
31st July 2012, 05:50 PM
http://i49.tinypic.com/1zlr57q.jpg
jaafna - winsor - theatre - nalla neram
mr_karthik
31st July 2012, 05:54 PM
வெற்றிகரமாக 2000 பதிவுகளைக்கடந்து நடைபோடும் 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.' திரி 2-ம் பாகத்துக்கு பாராட்டுக்கள்.
திரு எஸ்.வீ. (வினோத்) அவர்களின் வருகைக்குப்பின் திரி ஜெட் வேகம் எடுத்துள்ளது என்றால் மிகையில்லை. நண்பர் முன்பே வந்திருந்தால் திரி இன்னும் பல பக்கங்களைக்கடந்திருக்கும். இந்நேரத்தில் திரு ராஜாராம் அவர்களின் சீரிய சேவையையும் மறவாமல் மனதில் கொள்ள வேண்டும்.
மக்கள் திலகத்தின் வெற்றிகளைப்போல, அவர் புகழ்பாடும் இத்திரியும் இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்.
Thomasstemy
31st July 2012, 09:24 PM
நடிகர் திலகத்தின் ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்டு, An Extended Nadigar Thilagam's Thread போன்றே திகழும் இத்திரிக்கு, 200 பதிவுகளை கடந்து செல்லும் நிலையில் வாழ்த்துகள்.
Dear Masanam sir,
Unmayilaeyae Ungaludaya Vaazhththu, Vaazhththaa?
Alladhu Vaazhthuvadhaipoal Thaazhpunarchiyai velikaatum vaakka endru theriyaadha alavirkku ungaludaya vaazhththai theriviththadharkku engal vaazhthukkall.
Yellarayum, Yella nerathilum Yella Vishayangalilum Thrupththi paduththa mudiyaadhenbadhu ullangai nellikani " Matrum,
Nadigar Thilagaththin Oru extended thiriyaaga Makkal Thilagaththin Thiriyil kondu sellavendiya avasiyam ingu parandha manadhudan seidhigalai parimaarum yavarukkumae illai enbadhai mattum purindhukollungal.
Thiru. Esvee avargal matrum Thiru Rajjaa avargal matrum pala nal ullangal evalavu mana varuththam adaivaargal thangal vanja pugazchiyaal endru ungalukku theriyuma enbadhu enakku theriyavillai. "Theeyinaal Sutta Vadu Aarum..Naavinaal Sutta Vadu???
Nallullam konda Nallavargal Endrum Natpayae Varavaerpaargal, Virumbuvaargal Thiru.Masanam Sir !
Irundhaalum Ungaludaya Vanja Pugazhchi Vaazhththukku "THILAGASANGAMATHIN" Nandrigal
:smokesmile:
pammalar
31st July 2012, 11:47 PM
MAKKAL THILAGAM WITH SUNIL GAvASKAR
http://i48.tinypic.com/2wd8wo4.jpg
My sincere thanks for this Special Still [MT & LM], esvee Sir..!
pammalar
31st July 2012, 11:49 PM
சிரித்து சிரித்து சிறையிலிட்ட செம்மல்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MT1-1.jpg
'மக்கள் திலகம் இரண்டாம் பாகம்' இழை, இருநூறு பக்கங்களைக் கடந்து வெற்றிநடை போடுவதற்கு உளங்கனிந்த பாராட்டுக்கள்..!
இந்த இழை மென்மேலும் பொலிவோடு ஓங்கி உயர உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
1st August 2012, 01:19 AM
டியர் 'மக்கள் திலகம் பக்தர்' esvee சார்,
இருநூறு பக்கங்களை மிகமிக வெற்றிகரமாகக் கடந்துள்ள மக்கள் திலகம் திரியின் இரண்டாம் பாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..! இத்திரி மேலும் மேலும் வளர்ந்து பற்பல பாகங்களைக் காண மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்..!
மக்கள் திலகம் திரியை, தனியொரு மனிதராக தூக்கிநிறுத்திக் கொண்டிருக்கும் தங்களின் சேவை, பாராட்டிற்கெல்லாம் அப்பாற்பட்டது. தாங்கள் இங்கே பதித்துள்ள பொன்மனச்செம்மலின் புகைப்படங்கள், திரைப்பட விளம்பரங்கள்-விமர்சனங்கள்-குறும்பிரசுரங்கள்(Notices), இணையதள செய்திகள்-தகவல்கள்-கட்டுரைகள், இன்னும் இதுபோன்ற எத்தனையோ இனிய இடுகைகள் எல்லாமே கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள்.
இருநூறு பக்கங்களை இத்திரி கடந்திருக்கும் இந்த நல்ல நேரத்தில், நடிகர் திலகத்தின் பக்தர்களை மிகுந்த நன்றியுடன் தாங்கள் நினைவுகூர்ந்திருப்பது, தங்களின் உயர்ந்த பண்பை மீண்டும் பறைசாற்றுகிறது. தங்களுக்கு, நடிகர் திலகத்தின் பக்தர்கள் சார்பில், இதயங்கனிந்த நன்றிகள்..!
திரு.Raajjaa, நமது அன்புச்சகோதரர் திரு.நெய்வேலி வாசுதேவன், மதிப்புக்குரிய மாடரேட்டர் திரு. திருமாறன், நமது மூத்த சகோதரர் ராகவேந்திரன் சார் ஆகியோரும் இங்கே அளப்பரிய பங்களிப்புகளை நல்கியுள்ளனர். அவர்களுக்கு நமது அகம் குளிர்ந்த நன்றிகள்..! மற்றும் இங்கே பங்குகொண்ட ஏனையோருக்கும் நமது அன்பான நன்றிகள்..!
மக்கள் திலகத்தைப் போலவே, நன்மை செய்து, நன்றி சொல்லி, நட்பை வளர்ப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள அவரது பக்தரான தாங்கள், வாழ்வில் மென்மேலும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ இந்த நடிகர் திலகம் பக்தனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்..!
இருதிலகங்களின் அருளாசிகளும் தங்களுக்கு என்றென்றும் துணைநிற்கும், நல்வழிகாட்டும்..!
வீறுகொண்டு மேலும் வெற்றிகரமாகத் தொடரட்டும், தங்களின் மக்கள் திலகத் திரித்தொண்டு..!
தங்களின் அபார சேவைக்கு எனது அன்பான பரிசு:
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MT2-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
rajeshkrv
1st August 2012, 01:21 AM
fantastic articles and fantastic stills. thanks to everyone especially vasudevan sir, esvee sir & Pammalar sir
pammalar
1st August 2012, 01:26 AM
fantastic articles and fantastic stills. thanks to everyone especially vasudevan sir, esvee sir & Pammalar sir
Thanks for your compliments, Mr. rajeshkrv..!
Richardsof
1st August 2012, 06:07 AM
Dear Pammalar sir
My sincere thanks to your valuable comments with MT smiling picture and appreciation.
your gifts is always golden memory and live ever with our hearts.
Richardsof
1st August 2012, 06:07 AM
http://i47.tinypic.com/fjggvd.jpg
ADIMAIPENN - JAAFNA- RANI THEATRE
ADIMAI PENN -JAAFNA - WELLINGTON THEATRE
Richardsof
1st August 2012, 06:14 AM
http://i45.tinypic.com/2nv70j8.jpg
- JAAFNA- RANI THEATRE - Mattukara velan
-JAAFNA - WELLINGTON THEATRE - mattukara velan
Richardsof
1st August 2012, 06:21 AM
http://i47.tinypic.com/f10bcp.jpg
Richardsof
1st August 2012, 06:25 AM
BANGALORE - BALAJI THEATRE - 1974 - URIMAIKURAL
http://i50.tinypic.com/15ozchy.jpg
Richardsof
1st August 2012, 06:35 AM
http://i50.tinypic.com/35lyu8h.jpg
Richardsof
1st August 2012, 06:45 AM
http://i47.tinypic.com/t6uohe.jpg
Richardsof
1st August 2012, 06:51 AM
http://i47.tinypic.com/11uyixl.jpg
7-11-1966 daily thandhi paper advt
joe
1st August 2012, 07:48 AM
சமீப நாட்களில் மக்கள் திலகம் திரி அதிக பங்களிப்பும் , கவனமும் பெற்று வருவதில் மகிழ்ச்சி ..பங்கு கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
Richardsof
1st August 2012, 09:18 AM
makkal thilagam with hindi actor dharmendra
http://i46.tinypic.com/345kfnl.jpg
Richardsof
1st August 2012, 09:22 AM
http://i48.tinypic.com/b8qpfb.jpg
Richardsof
1st August 2012, 09:26 AM
http://i48.tinypic.com/emr07.jpg
Richardsof
1st August 2012, 09:31 AM
http://i45.tinypic.com/6p70qw.jpg
Richardsof
1st August 2012, 09:34 AM
http://i47.tinypic.com/90a9z7.jpg
Richardsof
1st August 2012, 09:43 AM
1974- திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!
நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?
“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.
pammalar
1st August 2012, 12:03 PM
Dear Pammalar sir
My sincere thanks to your valuable comments with MT smiling picture and appreciation.
your gifts is always golden memory and live ever with our hearts.
Dear esvee Sir,
Thanks for your Compliments..!
Once again great going, Keep it up..!
Warm Wishes & Regards,
Pammalar.
pammalar
1st August 2012, 12:04 PM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 9
புகைப்படப் பொக்கிஷம்
குமுதம் : 1.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6166-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6167-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
hattori_hanzo
1st August 2012, 02:52 PM
Post #2025 - Mr.Mukbe from East Africa who held talks with M.G. Ramachandran regarding the making of the latter's film "Raj in East Africa" is seen here presenting a memento to the actor.
Interesting. Was this "Raj in East Africa" a shelved MGR movie? Or a non-starter?
Btw, MGR's pose in Parakkum Pavai paper ad is only MGR fasibil :-)
Richardsof
1st August 2012, 03:42 PM
Interesting. Was this "Raj in East Africa" a shelved MGR movie? Or a non-starter?
Btw, MGR's pose in Parakkum Pavai paper ad is only MGR fasibil :-)
Dear hattor_hanzo
KIZHAKKU AFRICAVIL RAJU IN 1973, MAKKAL THILAGAM MGR PLANNED TO SHOOT ENTIRE MOVIE UNDER THE BANNER OF MGR PICTURES WITH HOLLY WOOD ACTORS. BUT UNFORTUNATELY PRODUCTION WAS STOPPED DUE TO SEVERAL REASONS.
PARAKKUM PAVAI [1966 ] BASED ON CIRCUS BACKROUND MOVIE WITH GOOD ENTERTAINMENT.
hattori_hanzo
1st August 2012, 04:15 PM
Dear hattor_hanzo
KIZHAKKU AFRICAVIL RAJU IN 1973, MAKKAL THILAGAM MGR PLANNED TO SHOOT ENTIRE MOVIE UNDER THE BANNER OF MGR PICTURES WITH HOLLY WOOD ACTORS. BUT UNFORTUNATELY PRODUCTION WAS STOPPED DUE TO SEVERAL REASONS.
PARAKKUM PAVAI [1966 ] BASED ON CIRCUS BACKROUND MOVIE WITH GOOD ENTERTAINMENT.
Thanks esvee!
Looks like MGR had do give up many such projects for his political commitments - Naanum Oru Thozhilaali & the other movie, clippings of which were later used by K.BaghyaRaj in Avasara Police.
Richardsof
1st August 2012, 04:37 PM
Thanks esvee!
Looks like MGR had do give up many such projects for his political commitments - Naanum Oru Thozhilaali & the other movie, clippings of which were later used by K.BaghyaRaj in Avasara Police.
Another MGR movie venus pics untitled -1971 a still from that movie
http://i47.tinypic.com/2i1fs3o.jpg
Richardsof
1st August 2012, 04:45 PM
one more movie .........
MGR - Geethanlali in inaindha kaigal - 1966. unreleased movie.
http://i48.tinypic.com/40pk1.jpg
Richardsof
1st August 2012, 04:51 PM
THOMAS MOVIES MGR IN " YESUNATHAR". UNREALEASED.
http://i45.tinypic.com/255026c.jpg
pammalar
1st August 2012, 05:32 PM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 10
தாய் சொல்லைத் தட்டாதே [வெளியான தேதி : 7.11.1961]
100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/53TST-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
vasudevan31355
1st August 2012, 05:54 PM
மக்கள் திலகம் (part 2) பக்கங்கள் இருநூறைத் தாண்டியதற்கு பங்களிப்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பான இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
http://www.graphics99.com/wp-content/uploads/2012/06/congrats-its-good-to-see.gif
சிறப்புப் பதிவு
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/AdimaiPenn00001.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/AdimaiPenn00004.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/AdimaiPenn00009.jpg
http://i582.photobucket.com/albums/ss261/creative_photos/vlcsnap-2009-09-04-05h16m16s96.png
http://i582.photobucket.com/albums/ss261/creative_photos/vlcsnap-2009-09-04-05h17m53s43.png
http://i582.photobucket.com/albums/ss261/creative_photos/vlcsnap-2009-09-04-05h21m14s9.png
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/AdimaiPenn0003.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/AdimaiPenn0005.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/AdimaiPenn0010.jpg
vasudevan31355
1st August 2012, 06:03 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSXfsfTFxH98MNIof7G1i1kSyEzzD-ZrnwkFS2uxnN3V_f-uLcb5n5qJvKiXQhttp://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRw0OQdcAD34TechnxbUkP2geIzxb1u_ gI1OqqMGY7Di2v5fe7VumKouRpnhttp://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSziOMzELj23KCWtWolGywChshFR2FzA jZrUZUgiZsPxblgnPSu0Y8wc04Jqg
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSCcV_PqTIWFS47o7OH6Uwvy0neIUx0B b9sNjOEnQaxKlPWKcApZRr-CtQ2nghttp://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSEczUrlXmhGZr1xH6kaiL-DHNPSTTRLeiS1Kl8-zJVsv9HGo_lNPA6gjPghttp://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR171dcZC5-xKolxxWEuAgm-AVASUVnYd63z4ii-5ocRaGLkSb13ysrtPLBew
http://52.img.v4.skyrock.net/521/mgr-online/pics/2581579445_small_1.jpg
http://img171.imageshack.us/img171/8978/adimaipennmovieonline5.png
http://img69.imageshack.us/img69/4927/adimaipennmovieonline6.png
Richardsof
1st August 2012, 06:04 PM
article ..... http://i46.tinypic.com/2ltoxi0.jpgfrom kalki - RM VEERAPPAN ABOUT MGR
vasudevan31355
1st August 2012, 06:23 PM
http://3.bp.blogspot.com/_Qul3VnFzlPw/RYdi15n6lRI/AAAAAAAABRU/uq5Krw6IyLg/s400/jaya_ap.jpghttp://www.ejumpcut.org/currentissue/Tamil/pixB/26b.jpg
http://img705.imageshack.us/img705/5010/adimaipennmovieonline7.png
http://img811.imageshack.us/img811/6154/adimaipennmovieonline8.png
http://img513.imageshack.us/img513/8219/adimaipennmovieonline10.png
http://img713.imageshack.us/img713/1945/adimaipennmovieonline12.png
http://img228.imageshack.us/img228/2081/adimaipennmovieonline11.png
vasudevan31355
1st August 2012, 06:34 PM
http://www.hindu.com/cp/2008/10/10/images/2008101050301601.jpg
En Thangai 1952
http://www.hindu.com/cp/2008/11/28/images/2008112850361601.jpg
Panakkari 1953
http://www.hindu.com/cp/2008/12/26/images/2008122650411601.jpg
pammalar
1st August 2012, 06:53 PM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 11
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் [வெளியான தேதி : 14.1.1978]
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/136MMSP-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Richardsof
1st August 2012, 07:21 PM
BANGALORE- 2011- ADMAI PENN RERELEASED AT NATARAJ THEATRE .
http://i48.tinypic.com/fwm3w7.jpg
Richardsof
1st August 2012, 07:27 PM
http://i46.tinypic.com/dxxyj5.jpg
Richardsof
1st August 2012, 07:33 PM
BANGALORE - LAVANYA THEATRE 2011- ADIMAI PENN
http://i50.tinypic.com/hrbux3.jpg
Richardsof
1st August 2012, 07:41 PM
http://i45.tinypic.com/dr60j.jpg
Richardsof
1st August 2012, 07:54 PM
எங்களை திக்க்கு முக்காட வைத்து கொண்டிருக்கும் இனிய நண்பர்கள் திரு பம்மலார் .திரூ .ராகவேந்திரன். மற்றும் திரு வாசுதேவன் ஆகியோரின் கால பெட்டகங்களை என்னென்று சொல்வது ?.
சந்தோஷங்களின் பரிமாற்றங்களுக்கு நதியின் [ நடிகர் திலகம் திரி - மக்கள் திலகம் திரி ]
நண்பர்களும் மதியின் நண்பர்களும் தொடர்ந்து பல்வேறு கடந்த கால ஆவணங்களை பரிமாறி ஆனந்தம் கொள்வோமாக !
Richardsof
1st August 2012, 08:27 PM
http://i45.tinypic.com/4t96av.jpg
Richardsof
1st August 2012, 08:29 PM
http://i47.tinypic.com/1ny13s.jpg
Richardsof
1st August 2012, 08:32 PM
1971- BANGALORE - KUMARIKOTTAM - NEW OPERA THEATRE - 3RD WEEK CROWD
http://i48.tinypic.com/n50z8n.jpg http://i46.tinypic.com/qqzo5l.jpg
pammalar
2nd August 2012, 02:39 AM
எங்களை திக்க்கு முக்காட வைத்து கொண்டிருக்கும் இனிய நண்பர்கள் திரு பம்மலார் .திரூ .ராகவேந்திரன். மற்றும் திரு வாசுதேவன் ஆகியோரின் கால பெட்டகங்களை என்னென்று சொல்வது ?.
சந்தோஷங்களின் பரிமாற்றங்களுக்கு நதியின் [ நடிகர் திலகம் திரி - மக்கள் திலகம் திரி ]
நண்பர்களும் மதியின் நண்பர்களும் தொடர்ந்து பல்வேறு கடந்த கால ஆவணங்களை பரிமாறி ஆனந்தம் கொள்வோமாக !
தங்களின் உயர்வான பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றிகள், esvee சார்..!
தங்களின் தொடர் கலக்கல்களுக்கு ஆனந்தமான பாராட்டுக்கள்..!
pammalar
2nd August 2012, 03:46 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 12
ஆயிரத்தில் ஒருவன் [வெளியான தேதி : 9.7.1965]
100 நாட்களுக்கு மேல் ஓடிய சிறந்த வெற்றித் திரைப்படம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : வெண்திரை : ஆகஸ்ட் 1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/78AayirathilOruvan-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Richardsof
2nd August 2012, 05:15 AM
http://i49.tinypic.com/34o4zuf.png
Richardsof
2nd August 2012, 05:16 AM
http://i46.tinypic.com/2sakl0n.png
Richardsof
2nd August 2012, 05:19 AM
http://i50.tinypic.com/eg97j6.png
Richardsof
2nd August 2012, 05:23 AM
http://i49.tinypic.com/2m6mz2u.png
Richardsof
2nd August 2012, 05:24 AM
http://i46.tinypic.com/2ytwrav.png
Richardsof
2nd August 2012, 05:29 AM
http://i47.tinypic.com/2md4d1e.jpg
Richardsof
2nd August 2012, 05:35 AM
comment from inter net - இது நாளை வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிற புதிய "ஆயிரத்தில் ஒருவன்" பற்றி இல்லைங்கோ... நம்ம புரட்சித் தலைவர் நடித்து 1965 ஆம் ஆண்டு வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிய அந்த "ஆயிரத்தில் ஒருவன்" பற்றியது....
# எனினும் பெரும் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாகவே ஆயிரத்தில் ஒருவன் தயாரிக்கப்பட்டது.
# இது தான் MGR - ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் திரைப்படம்.
# இது தான், (அந்தக் காலகட்டத்தில்) எம்.எஸ்.விசுவநாதன் - டி.கே.ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி திரைப்படம். பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்!!! (பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் இருவரும் 'எங்கிருந்தோ வந்தான்' எனும் திரைப்படத்தில் இணைந்தனர்)
# அந்த காலகட்டத்திலே இந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்பங்கள் ஆங்கில திரைப்படங்கள் போல பெரும் வரவேற்பைப் பெற்றது.
# படம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்து வசுலில் சாதனைப் படைத்தது. இன்றும் கூட மறு-திரையிடலிலும் நல்ல வசுல் செய்கின்றது.
Richardsof
2nd August 2012, 05:44 AM
article- from ken - internet கிராமத்தின் விடியற்காலைகள் வேப்பம்பழக்காலங்களில் காக்கைகளின் கூக்குரலோடு விடியும். அதுவும் வேப்பம்பழக்கால ஆரம்பித்த ஓரிரு நாட்களில் வேம்பின் வாசம் ஒரு வித போதையூட்டும் . வீட்டின் வாசலில் இருந்த பெரிய வேப்பமரம் நல்ல காற்றுக்கும் விடுமுறை நாட்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவதற்கும் வசதியாக இருந்தது அதுவும் என் வீட்டில் காரின் டயர் இருந்தது டயரின் இரு முனையிலும் கயிறைக்கட்டி ஊஞ்சலாடுவது எங்கள் தெருவின் அனைத்துப்பசங்களுக்குமே ஒரு கனவு. வீட்டின் எதிரில் ஆறு , வீட்டின் பக்கத்தில் சாலை என பலவிதங்களில் எனக்குப் பெருமை தேடித்தந்தது என் வீடு. அதே நேரத்தில் தண்டனைகளின் போதும் ஊர் முழுவதும் எளிதில் செய்திப்பரவிடவும் அந்த இடமைப்பு ஒரு பெரிய தொல்லையாகவும் இருந்தது.
ஊரில் பெரும்பாலான வீடுகளின் வாசலிலோ கொல்லைப்புறங்களிலோ கட்டாயம் ஒரு வேப்பமரமாவது இருக்கும் கிராமத்தில். அதுவும் என் வீட்டில் ஒரு வேப்பமரமும் வீட்டிற்கு எதிரிலிருக்கும் முனீஸ்வரனின் கோவிலில் ஒரு பெரிய வேம்பும் இருந்தது. கோவில் வேம்புக்கும் அரசமரத்திற்கும் கல்யாணம் நடந்திருந்ததால் அதன் மேல் ஏறுவது தெய்வக்குற்றம் என்று பெரிதாக பேசப்பட்ட காலம் அது. எனக்கோ முனீஸ்வரனுக்கு அதன் மேல் பெரிதாய் நம்பிக்கையில்லை.
கிராமத்திலிருந்து இரண்டாவது கிமீட்டரில் சங்கரன்பந்தல் என்றொரு சிற்றூர் இருக்கிறது. அது எங்களின் கனவு ஊர் ஏனென்றால் அங்குதான் ஓடியன் தியேட்டர் இருந்தது. சிறு வயதில் எங்களின் பெரிய கனவுகளில் ஒன்று எங்களின் வீடுகள் சங்கரன்பந்தலுக்கு மாறிட வேண்டுமென்பதும் தினமும் படம் பார்க்க வேண்டுமென்பதாகவும் இருந்தது.
கிட்டத்தட்ட என் பதினொன்றாம் வயதில் அந்த தியேட்டரின் பெஞ்ச் டிக்கெட்டின் விலை 60 பைசா. பேக் பெஞ்ச் டிக்கெட்டின் விலை 1.20 பைசா. முன்னால் மணல்குவித்து உட்காருமிடத்தின் விலை 45 பைசா. எங்களுக்கு எப்போதுமே பேக் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்திட துடித்தாலும் அப்போதைய பொருளாதார நிலை பெஞ்ச் கிளாஸின் 60 பைசாவில் தள்ளிடும் எப்போதும்.
பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் மட்டுமே வரும்.அதுவும் ஒரு எம்ஜிஆர் படமென்றால் அடுத்த படம் சிவாஜி படம். அதுவும் எம்ஜிஆர் படங்கள் மாதக்கணக்கில் ஓடும் . இந்த நிலையில் தான் ஆயிரத்தில் ஒருவன் வந்தது. எம்ஜிஆரின் படங்களைப்பற்றி நிறையக்கதைகள் சொல்ல எங்களூரின் துருத்தி ஆசாரி இருந்தார். தீவிர எம்ஜிஆர் ரசிகர் அவர். எப்போதும் தலைவரைப்பற்றி பேசியபடியே இருப்பார். மாயூரம் கூட்டத்தில் தலைவர்க்கு இந்தக்கையை கொடுத்தேன் என்றபடி அவரின் கைகளைக்கண்களில் ஒத்திக்கொள்ளும் பக்தர். எவரேனும் சிவாஜி ரசிகர்கள் வந்திட்டால் பேசியே அவர்களை துரத்திடுவார். உலகத்திலேயே அவருக்கு பிடிக்காத ஆட்களென்றால் சிவாஜி ரசிகர்கள்தான் முதல் ஆட்கள். அவர் சொல்லும் எம்ஜிஆரின் படக்கதைகளைக் கேட்கவே சனி , ஞாயிறுகளில் பசங்களின் கூட்டம் கொல்லுப்பட்டறையில் நிரம்பி வழியும். அவர் கதைகள் சொல்லியபடியே தேவையான வேலையையும் வாங்கிக்கொள்வார்.
ஆசாரியின் கதையில் மதி மயங்கி வாழ்நாளில் எப்படியாவது ஆயிரத்தில் ஒருவன் படத்தைப்பார்த்திட வேண்டும் என்கிற நிலைக்குத்தள்ளப்பட்ட நாளொன்றில் ஓடியன் தியேட்டரின் நோட்டீஸ்கள் எங்களூரில் மூன்று இடங்களில் மட்டுமே ஒட்டப்படும் காலமது. ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தது ஓடியன் தியேட்டருக்கு.
அதுவும் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ என்ற பாட்டை முழுவதும் ஆசாரி நடித்தே காண்பித்திருந்தார். நம்பியாரின் வில்லத்தனம் , கப்பல் , கடற்கொள்ளை, நாகேஷ் , ஜெயலலிதா என்று ஒரு வாரம் முழுக்க கதைக்கேட்டுவிட்ட நிலையில் படம் வந்திருந்தது.
இப்போது எங்கள் முன் இருந்த பெரிய பிரச்சனை பள்ளி நாளில் படத்திற்கு போக முடியாது, போவதாயிருந்தால் முதலில் காசு இல்லை, இரண்டாவது சங்கரன்பந்தலுக்கு இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கு போய்விட்டு திரும்பும் தைரியம் இருந்தாலும் வீட்டில் விட மாட்டார்கள்.
ஒரு வாரத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் மாறிப்போக போவதான வதந்தி வேறு எங்களின் வயிற்றில் புளிக்கரைத்துக்கொண்டிருந்தது. பள்ளியில் முழுக்க ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு போவதான பேச்சு வேறு எரிச்சலைக்கிளப்பிக் கொண்டிருந்தது.
அம்மாவிடம் கெஞ்சிக்கூத்தாடி பார்த்தும் சினிமா பார்க்க விட முடியாதென்று விட்டாள். எம்ஜிஆர் படமென்றாலும் இரண்டாம் ஆட்டம் போவதென்றால் நாவமரங்களைக்கடந்து போக வேண்டுமென்பதாலும் அந்த நாவ மரத்தில் மோகினிப்பேய் இருப்பதாய் பல கால பேச்சு என்பதாலும் பிடிவாதமாய் மறுத்து விட்டாள். இனி அம்மாவிடம் பேசிப்பயனில்லை என்று முடிவு செய்தேன். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் வாளோடு நிற்கும் போஸ்ட்டரை நள்ளிரவில் பிய்த்து வந்து வீட்டின் கதவுக்குப்பின்னால் ஒட்டி வைத்தேன்.
இதனிடையே இரண்டு நாள் போய் விட்டிருந்தது. அப்போதுதான் சாதிக் வந்தான் உலக மகா யோசனையோடு. வேப்பப்பழக்காலமது. ஊர் முழுவதும் வேப்பப்பழங்கள் கொட்டி தெருவெங்கும் சிதறி நசுங்கி வாசமெடுக்கும் காலமது. வேப்பபழங்களைப்பொறுக்கி விற்பதுதான் அந்த யோசனை. படி 10 பைசா என்றும் சனிக்கிழமைக்குள் ஆளுக்கு ஆறு படிகள் சேர்த்திட்டால் சனிக்கிழமை மதியக்காட்சிக்கு எவருக்கும் தெரியாமல் போய்விட்டு சாயங்காலம் ஆறு மணிக்குள் வீட்டிற்குத் திரும்பிடலாம் என்பதுதான் அந்த யோசனை. எனக்கும் வெகு எளிதான யோசனையாகவே பட்டது. தினமும் அம்மா தெருக்கூட்டி ஒதுக்கி வைத்திருக்கும் வேப்பம்பழங்களை எடுத்தாலே ஆறு படி மூன்று நாட்களில் தேறிடும் என்பதால், ”சாதிக் ஆயிரத்தில் ஒருவன் பாத்திட்டோம்னு நினைச்சுக்க” என்றேன்.
அந்த சாயங்காலமே என் கனவில் பெரிய மண் விழுந்தது. அம்மா சேர்த்து வைத்த வேப்பப்பழங்கள் நாத்தங்காலில் போடுவதற்காய் அப்பா எடுத்துக்கொண்டு போய்விட்டிருந்தார். தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்து விடியற்காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து வாசலுக்கு ஓடினேன்.
பார்த்தால் ஊரின் குஞ்சுக்குளுவான்களெல்லாம் ஆளுக்கொரு பையுடன் வேப்பப்பழம் பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். சாதிக்கைப்பார்க்க அவனோ வெகுவாய் அழுகிற முகபாவத்துடன் தான் ஒரே ஒருவனிடம் மட்டும் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்கப்போகும் யோசனையை சொன்னதாகவும் அதுவும் ஒரு வெல்லக்கட்டி வாங்கித் தின்றதற்கு பதிலாய் சொன்னதாகவும் அது இப்படி ஊருக்கே தெரிந்த ரகசியமாகிவிட்டதாகவும் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கோ அதலபாதாளத்தில் குரல் கேட்பதாயிருந்தது.
ஊர் முழுக்க தெருவில் இருந்த வேப்பமரங்களை மொட்டையடித்துப்போயிருந்தார்கள் தெருப்பசங்கள். இப்போது எங்கள் முன்னால் இருந்தது முனீஸ்வரனின் வேப்பமரம். அரசமரத்தோடு பின்னிப்பிணைந்து வானத்துக்கும் பூமிக்குமாய் வளர்ந்து நிற்கும் வேம்பு அதுவும் முழுவதுமாய் அரச மரத்துக்குள் புதைந்து கிளைகள் மட்டும் வெளியில் தெரிய ராட்சச அரக்கனாய் தெரியும் வேம்பு. ஒரு பயலும் சாமிக்குப்பயந்து அந்த மரத்தின் பக்கம் மட்டும் போகவில்லை. நான் சாதிக்கைத்தனியா தள்ளிக்கொண்டு போய் திட்டத்தை விளக்கினேன். சாயங்காலம் ஏழு மணிக்கு மேல் ஒரு பயலும் முனீஸ்வரன் கோவிலின் பக்கம் போக மாட்டார்கள். விளக்கு வெளிச்ச ஏதுமில்லாமல் சூலமும் அரசமரமும் வேப்ப மரமுமாய் பறவைகளின் சப்தங்களோடு சில்வண்டுகளின் சப்தமும் பயமுறுத்திட , இரவு நேரத்தில் வெள்ளைக்குதிரையில் முனீஸ்வரன் உலா வருவதாய் சொல்லப்பட்ட கதையின் காரணமாகவும் அந்த நேரத்தில் குறுக்கே போகிறவர்கள் ரத்தம் கக்கி செத்துப்போய்விட நேரிடும் என்பதாலும் ஒரு காக்கா குருவிக் கூட இருட்டியப் பின் அந்த பக்கம் போவதில்லை.
முதலில் பயந்து வர மறுத்த சாதிக் , எம்ஜிஆரின் வாள் வீசும் போஸ்ட்டரைக்காட்டிய பின் ஒரு அரைமனதாக ஒப்புக்கொண்டான். ஏதோ ஒரு வேகத்தில் இதை சொல்லி விட்டாலும் இரவில் மரமோ ஒரு ராட்சச அரக்கனாய் முணுமுணுத்துக்கொண்டு காத்திருப்பதாய் பயமேற்பட்டது.
இருவரும் ஆளுக்கொரு பையுடன் வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் கோவில் மரத்துக்குக் கீழாய் காலால் கூட்டி சேர்க்கத்துவங்கினோம். அரை மணி நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க இரு பையையும் நிரப்பி விட்டிருந்தோம். இப்போது பிரச்சனை எங்கு கொண்டு வைப்பது என்பதில் இருந்தது. வீட்டில் வைத்தால் அப்பா வயலுக்குக்கொண்டு போய்விடுவார். அம்மாவுக்கு தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டும் எங்கு வைக்கலாம் என்ற யோசனையின் முடிவில் சாதிக் வீட்டின் சந்துக்குள் ஒளித்து வைத்திட முடிவெடுத்தோம்.
சனிக்கிழமையின் முடிவில் கோவில் மரத்தை முழுவதும் சுத்தம் செய்திருந்தோம். காலையிலிருந்தே வேப்பம்பழக்காரனைத் தேடிக்கொண்டிருந்தோம். எங்க எந்த வியபாரி போனாலும் வேப்பம்பழம் வாங்கிறீங்களா என்று கேட்டு அலைந்துக்கொண்டிருந்தோம்.
வந்தான்யா கடைசியா ஆறு மணிக்கு வியாபாரி, நாங்களோ அரைச்சாக்கை தூக்கமுடியாமல் தூக்கி வந்து பெருமையாக பார்த்தோம். அவனோ இவ்ளோதானா இருக்கு என்றபடி எடுத்தான் படியை.
எனக்கோ அதுவரை என் வீட்டின் ஒரு லிட்டர் அளக்கும் அரிசிப்படி ஞாபகம்தான் இருந்தது. அவன் வைத்திருந்த படியோ தகரத்தில் செய்யப்பட்ட படியாய் ஒரு மரக்கால் அளவுக்கொள்ளுமாய் இருந்தது. எங்களின் அரைச்சாக்கு வேப்பம்பழம் வெறும் ஐந்து படிகளில் முடிந்து போயிருந்தது.
அதிலும் நான்கு நாட்களில் பழங்கள் காய்ந்துப்போய் விட்டதால் அளவு இன்னும் குறைந்துப்போய் விட்டிருந்தது. நாப்பது பைசா மட்டுமே தரமுடியுமென்றும் அவன் பேரம் பேசத்துவங்க எனக்கு தூரமாய் எம்ஜிஆர் நகர்ந்துப் போய்க்கொண்டிருப்பதாய் பட்டது.
ஐம்பது பைசாவை சாதிக் சண்டைப்போட்டு வாங்கி விட்டிருந்தான், அதுவரை கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் கனவோடு இருந்த நானும் அவனும் நொந்துப்போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.
இன்னும் நாப்பது பைசா தேறினால் மண் டிக்கெட்டுக்காவது படத்திற்கு போகலாம் என்றான் சாதிக். வேறு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டிக்கொண்டுருக்கையிலே அம்மா தலைவிரிக்கோலமாய் வந்து ஆளுக்கொரு அடியை முதுகில் வைத்தாள். முனீஸ்வரன் கோவில் வேப்பம்பழம் விவகாரத்தை அதற்குள் யாரோ சிண்டு முடித்து வைத்திருந்தார்கள்.
கையில் வைத்திருந்தக் காசைப்பிடுங்கி 25 காசுக்கு சூடமும் வாங்கிக்கொளுத்த செய்தாள், 25 காசை உண்டியலிலும் போட செய்தாள். ஞாயிறு முழுவதும் ஆற்றுத்தண்ணீர் கொண்டு வந்து கோவிலை சுத்தம் செய்ய வைத்தாள். ஆளுக்கு ஐம்பது தோப்புக்கரணம் வேற.
வீட்டிக்குள் வைத்து சிறப்பு அடி வேறு கிடைத்தது. கதவின் பின்னால் எம்ஜிஆர் வாள் வீசும் போஸ்ட்டரில் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆக்கம் கென்
Thirumaran
2nd August 2012, 08:33 AM
எனக்குள் M.G.R.! – ஒரு X – Ray தொடர் –வாலி
10. வந்தது வாய்ப்பு!
ஒரு சிகரெட்டும்; ஒரு சொம்புத் தண்ணீரும் இருந்தால் போதுமானது – இரண்டு நாள்களுக்குப் பசிக்காது!
ஆம்;
பற்ற வைத்த சிகரெட்டின் முதற் பாதியை ஊதி – உள்வாங்கிய புகையை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் விட்டு –
புறக் கவலைகளாலும்; பொருளாதாரச் சிக்கலாலும் – புண்ணாகிக் கிடக்கும் மனதைப் புகைபோட்டு ஆற்றிக் கொள்ளலாம்; பசியை ஆற்ற வேண்டுமென்றால் புகையை வெளியே விடக்கூடாது.
பின்பாதி சிகரெட்டைப் புகைக்கையில் முழுப் புகையையும் முழுங்கிவிட்டு – ஒரு சொம்புத் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்து விட்டால் –
நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு, நாஸ்தாவோ சோறோ கேட்காது வயிறு!
இது –
அற்றை நாளில், தானும் கடைப்பிடித்துத் தன்னொத்த தோழர்க்கும், நாகேஷ் உபதேசித்தருளிய நன்னெறி!
அந்த
நன்னெறிப்படி – ஒரு நண்பகலில் சாப்பாட்டுக்கு வழியின்றிச் ‘சார்மினா’ரையும் சொம்புத் தண்ணீரையும் –
மதிய உணவாய் உட்கொண்டு விட்டு, என் அறையில், ‘கரிச்சான் குஞ்சு’வின் கதையொன்றைப் பழைய கலைமகளில் படித்தவாறு, மரபெஞ்சில் மல்லாந்து கிடந்தேன்.
கதவைத் தட்டும் ஓசை கேட்டது. எழுந்து போய்த் திறந்தேன்.
‘இங்க, யாருங்க – வாலீங்கறது?’ – என்று, வந்தவர் வினவ –
‘நான்தான்!’ என்றேன்.
‘உங்களெ – நாளைக்குக் காலேல, பத்து மணிக்கு அரசு பிக்சர்ஸுக்கு வரச் சொன்னாரு, டைரக்டர் ப.நீலகண்டன் சார்... அவர் படத்துக்கு நீங்க ஒரு பாட்டெழுதணும்னு சொல்லச் சொன்னாரு... என் பேரு கோபால் நாயர்... நான் புரொடக்ஷனைப் பாத்துக்குறேன்’ என்று –
ஒரே மூச்சில் பேசிவிட்டு, என் பதிலுக்குக் கூட எதிர்பாராமல் வந்த மனிதர் போய் விட்டார்!
கண்டதும் கேட்டதும் கனவா? நனவா? என்று நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்; வலித்தது!
ஆனந்தம் ஒருபுறம்; ஆச்சரியம் ஒருபுறம்!
குட்டிபோட்ட பூனைபோல், குறுக்கும் நெடுக்கும் அறைக்குள் அலையலானேன்.
‘அரசு பிக்சர்ஸ்....! ஆர் நடிக்கும் படம்? ஆர் மியூசிக் டைரக்டர்? ஆர், கதை வசனம்?’
– என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் என் மூளையைப் பிறாண்டி எடுத்தன.
‘சட்’டென்று நினைவிற்கு வந்தது, போன வாரம் ‘பேசும்பட’த்தில் பார்த்த அரசு பிக்சர்ஸ் விளம்பரம்!
ஆஹா! அவ்வளவு பெரிய படத்திலா – பாட்டெழுத வாய்ப்பு வருகிறது?!
நான் –
உற்சாகத்தின் உச்சிக்கே போனேன்! அது – எம்.ஜி.ஆர்; ராஜசுலோச்சனா; எம்.ஆர்.ராதா நடிக்கும் படம்! படத்தின் பெயர் ‘நல்லவன் வாழ்வான்!’; இசை திரு. டி.ஆர்.பாப்பா அவர்கள்.
இவற்றிற்கெல்லாம் –
சிகரம் வைத்தாற்போல் – ‘திரைக்கதை, வசனம் – அறிஞர் அண்ணா!’ என்பதுதான்.
அண்ணா;
எம்.ஜி.ஆர்.;
டி.ஆர்.பாப்பா!
–இந்த மூவரையும் எட்ட நின்று ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ படத்தின் Shooting–ல்
மூன்று ஆண்டுகளுக்கு முன் விழியை மூடாமல் பார்த்தவன் நான்; இப்போது, அவர்களோடு பணிபுரியும் வாய்ப்பு என் வாசற்கதவை வந்து தட்டியிருக்கிறது!
படத்தின் இயக்குநர் திரு. ப.நீலகண்டன்!
எவரை நான் – என் இருபது வயதில், புதுக்கோட்டையில் –
‘கலைவாணி’ பத்திரிகையின் ஆசிரியராய்ப் பார்த்தேனோ, அதே நீலகண்டன் சார்!
நீலகண்டன் அவர்கள், நிகரற்ற எழுத்தாளர். ஏவி.எம். தயாரித்த ஆரம்பகாலப் படங்களான –
‘நாம் இருவர்’; ‘வாழ்க்கை’; – இவையெல்லாம் நீலகண்டன் அவர்களுடைய கதை வசனத்தால் ஓடியவை. இன்றும் அந்தப் படத்தின் உரையாடல்கள் இறவாமல் இருக்கின்றன என்றால் –
அது – ப.நீலகண்டன் அவர்களின் பேனா பிலிற்றிய செந்தமிழ் நறவம் ஆகும்!
டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி, அந்தக் காலத்தில் அரங்கங்கள் நிரம்பி வழிந்ததே – ஒரு புரட்சிகரமான நாடகம் ‘முள்ளில் ரோஜா’ –
அது நீலகண்டன் அவர்கள் எழுதியது! திரு. எம்.ஜி.ஆர். அவர்களை – திரு. ப.நீலகண்டன் அவர்கள் தான் – சரித்திரப் படங்களிலிருந்து சமுகப் படங்கள் நோக்கித் திருப்பிய முதல் இயக்குநர்.
அவர் இயக்கி – எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘திருடாதே’ பெருத்த வெற்றியைப் பெற்ற பின்புதான் –
எம்.ஜி.ஆர். தொடர்ந்து Pant; Shirt போட்டு நடிப்பதில் வெகுவாக ஆர்வம் காட்டினார்!
‘அது சரி! ஆர், என்னைப் பற்றி அரசு பிக்சர்ஸுக்குச் சொல்லியிருப்பார்கள்?’
– இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்; விடை கிடைக்கவில்லை! விட வேண்டியதுதானே? விடாது மனது! அதுதான் மனித இயல்பு!
‘ஆராக இருக்கும்? ஆராக இருக்கும்?’ என்று அல்லாடி அலை பாய்ந்து மண்டை காய்ந்து போனதுதான் மிச்சம்!
நாகேஷ் ரூமுக்குப் பல பேர் வருவதுண்டு. எவர் வந்தாலும் என் பாட்டைப் பாடச் சொல்லி, தாராபுரம் சுந்தரராஜனை வற்புறுத்து வான் நாகேஷ்.
அதற்குக் காரணம் –
எனக்கும் பாட்டெழுத வாய்ப்பு வரலாம்; சுந்தரராஜனுக்கும் பாடுவதற்கு வாய்ப்பு வரலாம் என்று தீவிரமாக நாகேஷ் நம்பியிருந்ததுதான்.
என் விரலின் மீதும், சுந்தரராஜனின் குரலின் மீதும் – அவனுக்கு அந்த அளவு அசைக்க முடியாத நம்பிக்கை!
நாகேஷ் –
இரவு எட்டு மணிக்கு வந்தான் – பாலன் பிக்சர்ஸ் படமான ‘கடவுளைக் கண்டேன்’ Shooting ஐ முடித்து விட்டு.
அரசு பிக்சர்ஸிலிருந்து அழைப்பு வந்திருப்பதை அவனிடம் சொன்னேன்; குதிகால் நிலத்தில் படாமல் குதுகலத்தில் குதித்தான்!
‘அடேய் ரங்கராஜா! உன் சரக்கு ஒரு நாள் விலை போகும்னு எனக்குத் தெரியும்டா! நீ பூனை; உன்கிட்ட புனுகு இருக்கிறது உனக்குத் தெரியல்லே; அதனாலதான் கொசுவத்தி மாதிரி சுருண்டு சுருண்டு ரூம்லேயே படுத்துண்டு கொட்டாவி விட்டுண்டிருக்கே! அரசு பிக்சர்ஸுக்கு நாளைக்கு உன் கூட நானும் வர்றேன்!’
– என்று என் முதுகில் ஓங்கி ஒரு தட்டுத்தட்டி விட்டுக் குளிப்பதற்காகக் கொல்லைப்புறம் போனான் நாகேஷ்.
நான் சிந்திக்கலானேன். நாகேஷ் சொன்னது - அதாவது என்னை நான் அறியாதவனாக இருக்கிறேன் என்பது – உண்மையல்ல!
நானொன்றும் –
விரலில்லாமல் வீணை வாசிக்கச் சென்னைக்கு வரவில்லை. ஏறத்தாழ எட்டாண்டு காலங்கள் பட்டி தொட்டியெல்லாம் நாடகங்கள் போட்டு, திருச்சி மாவட்டத்தின் திசைகளை என் பாட்டாலும் வசனங்களாலும் அளந்தவன்.
அவ்வளவு ஏன்? தொழில் முறை நாடகக் குழுவான ‘வைரம் நாடக சபா’ வில் சேர்ந்து –
ஓராண்டுக்கு மேல் கம்பெனி சாம்பார் சாப்பிட்டவன். என்னோடு அப்போது அந்த நாடகக் கம்பெனியில் இருந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் திரையுலகில் புகுந்து தகத்தகாயமாய்ப் பிரகாசித்தது உண்டு.
திருமதி மனோரமாவின் கணவர்திரு. கு.M.ராமனாதன்; இயக்குநர்கள் தேவராஜ் மோகனில் ஒருவரான திரு. மோகன்ராவ்; அவரது சகோதரியார்; சகோதரியாரின் கணவர் திரு. முத்துராமன் – இப்படி அனேகம் பேர்.
நான் குறிப்பிடும் முத்துராமன் – நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து –
ஓர் அந்திப் போதில், நீலகிரியில் ஆவி நீத்த பிரபல திரைப்பட நட்சத்திரம்தான்!
மேற்கண்டவர்களெல்லாம் –
நாடகங்களில் என் பாடல்களைப் பாடியவர்கள்; வசனங்களைப் பேசியவர்கள்!
இத்தகு –
அனுபவ மூட்டைகளைத் தோளில் சுமந்து கொண்டுதான் நான் சென்னைக்கு ரயிலேறினேன்.
என்னை நான் அறியாமலில்லை. இருப்பினும் நாகேஷ் சொன்னது போல், நான் என் அறையை விட்டு வெளிக்கிளம்பி –
ஓர் இசையமைப்பாளரையோ; ஓர் இயக்குநரையோ; வாய்ப்புத் தேடிப் போய்ப் பார்த்ததில்லை.
அதற்குக் காரணம் –
முதல் முயற்சியிலேயே என் முனைப்பின் முனை முறிந்து போனதுதான்!
ஒரு
காலைப் பொழுதில் –
திரு. கோபி அவர்கள், தன் ஸ்கூட்டரில் ஒரு பிரபல இசையமைப்பாளர் இல்லத்துக்கு அழைத்துப் போனார்.
வழக்கம் போல் என் கையில் ஒரு நாற்பது பக்க நோட்டில், நாலைந்து பாடல்களை நான் எழுதி வைத்திருந்ததை –
உடன் எடுத்துச் சென்றேன். ஒரு பானைச் சோற்றுக்கு ஓர் அரிசி பதம் போலே – ஒரு சில பாடல்கள் என் புலமையை நிர்ணயிக்கப் போதுமானது என நான் எண்ணியிருந்தேன்.
இசையமைப்பாளரின் இல்லத்தில் நுழைந்ததும் –
அவரே எதிர் கொண்டு ‘வாங்க கோபியண்ணே!’ என்று வாஞ்சையுடன் வரவேற்றார்.
‘அண்ணே! இவர் என் நெருங்கிய நண்பர்; நல்ல கவிஞர்; திருச்சி ரேடியோ ஸ்டேஷன்லே தற்காலிகமா வேலெ பாத்துக் கிட்டிருக்காரு; சினிமாவுல பாட்டெழுத விரும்பினாரு. நான்தான் சென்னைக்கு வரச் சொன்னேன். வந்து பத்தாவது நாளிலேயே ஒரு படத்துல பாட்டெழுதிட்டாரு!’,
– என்று கோபி சொல்லிக் கொண்டு வருகையிலேயே, அந்த இசையமைப்பாளர் –
‘என்ன படம்? யாரு மியூசிக்?’ என்று என்னைப் பார்த்து வினவினார்.
நான் பவ்வியமாக –
“படத்தின் பேரு ‘அழகர்மலைக் கள்ளன்’; மியூசிக் திரு. கோபாலம்; பாடினது பி.சுசீலா மேடம்!” என்று பதிலிறுத்தேன்.
‘அது என்ன பாட்டு? சொல்லுங்க!’ – என்றார் அவர்.
“அது ஒரு தாலாட்டுப் பாட்டு – ‘நிலவும் தாரையும் நீயம்மா! உலகம் ஒருநாள் உனதம்மா!’ – இதுதான் பல்லவி!” – என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன்.
கூடவே – ‘இந்த நோட்டில் சில பாடல்கள் எழுதியிருக்கிறேன்!” என்று அவரிடம் நீட்டினேன்.
அதற்குள் தேநீர் வந்தது, எங்கள் இருவருக்கும்.
பாட்டு நோட்டைப் பார்த்து விட்டு – அந்த இசையமைப்பாளர் கோபியைத் தனியாய் அழைத்துப் போய் ஏதோ சொன்னார்.
பிறகு, ‘வாங்க வாலி! போலாம்!’ என்று என்னை அழைத்துக் கொண்டு புறப்பட்டார், கோபி!
ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இசையமைப்பாளர் சொன்னதை கோபி என்னிடம் சொன்னார்.
‘வாலி! ரேடியோ ஸ்டேஷன் வேலைய – நீங்க விடவேண்டாம்னு சொன்னாரு; அதுமட்டுமில்லே – உங்க பாட்டெல்லாம் ரொம்ப சுமார்; நீங்க சினிமாவுக்குப் பாட்டு எழுதற அளவு உங்ககிட்ட திறமை இல்லேன்னும் நாசூக்கா சொன்னாரு!’
இப்படி –
கோபியிடம் சொன்ன அந்த இசையமைப்பாளரிடம், நான் பின்னாளில் நாலாயிரம் பாட்டெழுதினேன்!
அந்த இசையமைப்பாளர்தான் – என் அன்பிற்குரிய அண்ணன், மெல்லிசை மன்னர் – திரு. எம்.எஸ்.விசுவநாதன் அவர்கள்!
(தொடரும்)
Richardsof
2nd August 2012, 08:43 AM
1989-makkal thilagam in kalathai vendravan movie released in Bangalore at 15 theatres.
BANGALORE - SHREE TALKIES PIC
http://i45.tinypic.com/28ri1rc.jpg
Richardsof
2nd August 2012, 08:47 AM
KUDIYIRUNDHA KOIL -1986 - BANGALORE - ARUNA THEATRE VIEWhttp://i45.tinypic.com/2wf8fn7.jpg
Richardsof
2nd August 2012, 08:49 AM
BANGALORE - SANGEETH THEATRE - 1986 - KUDIYIRUNDHA KOIL.
http://i50.tinypic.com/2imbci0.jpg
Richardsof
2nd August 2012, 08:55 AM
BANGALORE - ARUNA THEATRE - 1986- KUDIYIRUNDHA KOIL
http://i50.tinypic.com/2q2ltp5.jpg
Richardsof
2nd August 2012, 08:59 AM
1986- BANGALORE - ARUNA THEATRE -
KUDIYIRUNDHA KOIL
SUNDAY MASS PROECESSION MORE THAN 5000 MAKKAL THILAGAM MGR FANS ASSEMBLED.
A GREAT HISTORICAL RECORD AT BANGALORE.
http://i47.tinypic.com/1g27o1.jpg
Richardsof
2nd August 2012, 09:04 AM
1986- BANGALORE - SHREE TALKIES
KUDIYIRUNDHA KOIL
http://i46.tinypic.com/9r58g9.jpg
Richardsof
2nd August 2012, 09:08 AM
BANGALORE - SHREE TALKIES - 1986
KUDIYIRUNDHA KOIL THEATRE VIEW
http://i49.tinypic.com/2utq8bd.jpg
Richardsof
2nd August 2012, 09:11 AM
SHREE - TALKIES
1986
KUDIYIRUNDHA KOIL
http://i47.tinypic.com/makwoz.jpg
Richardsof
2nd August 2012, 09:17 AM
1986- shree talkies
http://i48.tinypic.com/2nqzjmw.jpg
joe
2nd August 2012, 11:10 AM
For the new hubbers like Esvee , Just sharing one of my old posts in my blog ..on funny experiences of watching MGR movies at open space
http://cdjm.blogspot.sg/2005/07/mgr.html
Richardsof
2nd August 2012, 12:37 PM
http://i49.tinypic.com/9amfyo.jpg
BANGALORE - SHREE TALKIES - 1986
Richardsof
2nd August 2012, 12:40 PM
http://i48.tinypic.com/97upep.jpg
BANGALORE - SHREE - TALKIES -1986
Richardsof
2nd August 2012, 03:12 PM
எம் ஜி ஆர் தமிழகத்தின் ஒரு தலை சிறந்த கலைஞர். *நம் இந்திய வரலாறு கண்ட - காணக்கிடைக்காத - மாபெரும் அதிசயம். *அவர் ஒரு மிகப்பெறிய சாதனையாளர். * தன் கொள்கைகளை மிகவும் தெளிவாக மக்களுக்கு உரைத்தவர்.
அவருக்காக பாடல்கள் எழுதப்பட்டன அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்: *உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
*.
காதல், *தேசப்பற்று, வீரம், விவேகம், தாய்ப்பாசம் என்று பல நல்லு கருத்துள்ள பாடல்கள் அவர் படங்களில் இடம் பெற்றுள்ளன. *மக்கள் திலகம் என்று சரியான பெயர் அவருக்கு சூடினார்கள்.
அவர் நடிப்பில் சண்டை காட்சிகளில் மட்டும் அல்லாமல் நாட்டியத்திலும் தன் திறமையை காட்டினார். *ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்
என்னை மிகவும் கவர்ந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தி.பா.ஆனந்த
துபாய்
1st August 2012*
Richardsof
2nd August 2012, 04:07 PM
http://i45.tinypic.com/e7fjls.jpg
[
http://i50.tinypic.com/25a0zzb.jpg[/QUOTE]
Richardsof
2nd August 2012, 07:35 PM
http://i47.tinypic.com/24mew51.jpg
Richardsof
2nd August 2012, 07:44 PM
http://i48.tinypic.com/apfsys.jpg
Richardsof
2nd August 2012, 08:13 PM
http://i46.tinypic.com/262wms5.png
Richardsof
2nd August 2012, 08:16 PM
http://i46.tinypic.com/2hhkpah.png
Richardsof
3rd August 2012, 05:33 AM
புரட்சித் தலைவர் நடித்துக் கொண்டிருந்த படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் எல்லாருமே இலட்சாதிபதிகள் அல்லர் அவருள் சிலரைத தவிர மற்றவர்களெல்லாம் சாமானியர்கள்தாம்.அவர்களின் ஒரே முதலீடு புரட்சித் தலைவர்தான்.அவர் பெயரைச் சொல்லிக் கடன் வாங்கித்தான் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்புக்கும் எம்.ஜி.ஆரின் கால் ஷீட்டுக்களைக் காட்டி விநியோகஸ்தர்களிடமும், பைனான்சியர்களிடமும் பணம் வாங்கித்தான் அவர்கள் தங்கள் தயாரிப்பைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.
அந்த விநியோகஸ்தர்களையும் பைனான்ஸியர்களையும் அழைத்து சிலர் தொடர்ந்து மிரட்டிகொண்டருந்ததனால் அவர்களுள் சிலர் வாக்களித்த தொகைகளைக் குறிப்பிட்ட காலத்தில் கொடுக்காமல் காலம் கடத்தினார்கள். அதன் விளைவாகப் புரட்சித் தலைவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியிடப்பட முடியாமல் தாமதப்பட்டன.
அப்படி காலதாமதமாய் வெளிவந்த சில படங்கள் சிறப்பாக ஓடி வெற்றிப்பெற்றாலும் தயாரிப்பாளர்களுக்கு நட்டமே ஏற்படுத்தின; விநியோகஸ்தர்களும், திரையரங்க அதிபர்களும் தாம் இலாபம் பெற்றனர். அதற்குக் காரணம், படத்தயாரிப்பாளர்கள் பலரும் பைனான்ஸியர்களிடம் தொடரும் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்ததுதான். குறிப்பிட்ட காலத்திற்குள் படம் வெளிவந்தால் வட்டி குறையும்; தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு இலாபம் கிட்டும். தாமதமாகப் படம் வெளிவந்தால் அதிகரிக்கும் வட்டித் தொகை அவர்களுடைய இலாபத்தைக் குறைத்துவிடும்! இதுதான் திரையுலக பொருளாதாரம்.
இதை நன்கு அறிந்திருந்த எம்.ஜி.ஆரின் எதிரிகள் பைனான்ஸியர்ளை மிரட்டி, புரட்சித் தலைவரின் படங்களுக்கு வாக்களித்தப்படி உரிய காலத்தில் கடன் தொகையைக் கொடுக்காமல் தாமதிக்கச் செய்தனர். அதன் மூலம், புரட்சித் தலைவரை நடிக்கச் செய்து திரைப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலரை நட்டமடையச் செய்தார்கள்.
பின்னர், எம்.ஜி.ஆரை நடிக்கச் செய்து படம் தயாரிப்பவர்களுக்கு இனிமேல் இதுதான் கதி” என்று பிரச்சாரமும் செய்தனர். இவ்வாறு தொழில்துறையிலும் புரட்சித் தலைவரை செயலற்று விடச் செய்யவும் ஒழித்துக் கட்டவும் அவர் எதிரிகள் பெரும் முயற்சி செய்தனர். அதையும் மீறி புரட்சித் தலைவர் திரைப்படத் தொழிலில், அசையாது நிமிர்ந்து நின்றார். 1972 முதல் 1978 வரை ஆறாண்டுக் காலத்தில் அவர் 16 வெற்றிப் படங்களைக் கொடுத்தார்! இந்த முனையிலும் அவர் எதிரிகள் தோல்வியையே தழுவினார்கள்.
1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியன்று புரட்சித் தலைவரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்; 14 – ஆம் தேதியன்று நிரந்தரமாகவே (டிஸ்மிஸ்) நிக்கினார்கள்; எம்.ஜி.ஆர் 16 – ஆம் தேதியன்று அது பற்றி அறிவித்தார். 18 – ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 3 ஆம் தேதிக்குள்- எண்ணிப் பதினைந்தே நாட்களுக்குள் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலும் 6000 கிளைகள் தொடங்கப்பட்டன. 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 15 நாள்களில் 10 இலட்சம் உறுப்பினர்க்கைச் சேர்ந்த சாதனையை உலகில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதற்கு முன்னர் சாதித்ததே இல்லை.
1949 இல் தொடங்கப்பட்ட தி.மு.க.வுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் – அதாவது, 1972இல் தான் -18,000 கிளைகளும், 15 இலட்சம் உறுப்பினர்களும் இருப்பதாகத் தி.மு.க. தலைவர் கருணாநிதியே அந்தச் சமயத்தில் ஒப்புக்கொண்டார். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் பத்து இலட்சம் உறுப்பினர்களையும், ஆறாயிரம் கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய சாதனை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட சாதனை இது என்றுதான் கூறவேண்டும். இந்த சாதனை, புரட்சித் தலைவருக்கு தி.மு.கழகத்திலும், பொதுமக்கள் மத்திலும் எத்துணை செல்வாக்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டியது.
தொடரும்...
Richardsof
3rd August 2012, 05:40 AM
ONE OF MAKKAL THILAGAM FAN FROM BANGALORE - MGR SIGNATURE STICKER IN HIS CAR
http://i47.tinypic.com/96fg1x.jpg
Richardsof
3rd August 2012, 05:47 AM
[
http://i46.tinypic.com/333khz8.jpg
Richardsof
3rd August 2012, 08:25 AM
MT AND NT IN TMS FUNCTION AND MT AND GG RARE PIC
http://i47.tinypic.com/2dse8sx.jpg
Richardsof
3rd August 2012, 08:31 AM
makkal thilagam with noted vetran k.p. sundarambal at kodumudi.
http://i50.tinypic.com/317irt5.jpg
Richardsof
3rd August 2012, 09:06 AM
வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார் தேவர். அத்தனை வருடங்கள் எம்.ஜி.ஆரின் தாயாக, பாசம் பொழிந்த கண்ணாம்பா காலமாகியிருந்தார். புதிய அன்னை எம்.வி. ராஜம்மா.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் பாடல்களால் உச்சாணிக் கொம்பில் இருந்தனர். தேவர் பிலிம்ஸிலும் அவர்கள் இசை அமைக்கட்டும் என்றார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ட்யூன்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி கேட்பதாக ரசிகர்கள் அபிப்ராயம் சொன்னார்கள். எந்தப் பாட்டு எந்தப் படத்திலிருந்து ஒலிக்கிறது என்று சட்டென்று உணரமுடியாதபடி தேவரின் ‘தா’ வரிசைப் பாடல்கள் இருந்தன.
எதிலும் ஒரு மாற்றத்தை விரும்பியவர் எம்.ஜி.ஆர். அவர் கருத்தை மறுக்கும் சூழலில் தேவர் அன்று இல்லை. எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்க்கச் சென்றார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசைக்கு விநியோகஸ்தர்களும் அதிக விலை கொடுத்தார்கள். அதை ஏன் இழக்க வேண்டும். தேவர் தன் மடியிலிருந்த பணம் முழுவதையும் விஸ்வநாதன் முன்பு வாரி இறைத்தார். ‘ஆண்டவனே என் முதல் படத்துலருந்து உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். இப்ப வேட்டடைக்காரனுக்கும் வந்துருக்கேன். நீங்கதான் இசையமைச்சித் தரணும்.’
ஏற்கெனவே விஸ்வநாதனுக்கு அகன்ற கண்கள். அவை இன்னும் பெரிதாகி விரிந்தன. எவ்வளவு பணம்! அதற்கு முன்பு யாரும் அப்படிக் கொண்டு வந்து கொட்டியது கிடையாது. தேவரின் மடி என்ன குபேர விலாஸா? ஒப்புக் கொள்ளலாம் என்று அவர் நினைத்த தருணத்தில் ‘அடேய் விசு’ என்று உள்ளிருந்து தாயார் அழைக்கும் குரல். விஸ்வநாதன் உள்ளே சென்றார். அவர் திரும்பி வந்தபோது தேவர் காணாமல் போய் விட்டார்.
‘நம்ம மாமாதான் (கே.வி. மகாதேவன்) உனக்கு குரு. அவர் செய்த உதவிகளை மறந்துட்டு அவர் பொழப்பை நீ கெடுக்கலாமான்னு விசுவநாதன் கன்னத்துல அவங்க அம்மா ஓங்கி அறைஞ்சுட்டாங்கண்ணே!’
தேவர் சொல்லச் சொல்ல எம்.ஜி.ஆர். அதிர்ந்தார். தன் கன்னங்களைப் பதறியபடி தடவிக் கொண்டார். ‘சரிங்கண்ணே, இது நமக்குள்ளயே இருக்கட்டும்’ எம்.ஜி.ஆர். தேவருக்கு உத்தரவிட்டார்.
மகாதேவன், வேட்டைக்காரன் படத்தில் மெட்டுப் போட்ட பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரப் புகழையும் பெருமையையும் தேடித் தந்தன. எம்.ஜி.ஆர். அவரே முயன்றும் வற்புறுத்தியும்கூட விஸ்வநாதன் கடைசி வரையில் தேவர் பிலிம்சில் இசை அமைக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரே எதிர்பாராமல் அவரது சிறந்த ஜோடியாக ரசிகர்கள் கொண்டாடிய சரோஜா தேவி வேட்டைக்காரன் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
தமிழ் சினிமாவில் பத்மினி, பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்ரி போன்ற சிறந்த கதாநாயகிகளுக்குப் பாமர மக்களின் மனத்தில் நிரந்தர இடம் கிடைக்காமல் போய்விட்டது. ஒட்டுமொத்த பாட்டாளித் தமிழர்களும் தங்களின் கனவுக் கன்னியாகக் கருதியது சரோஜா தேவியை மட்டுமே. அதனால் எம்.ஜி.ஆரும், சரோஜா தேவி தாமதமாக வந்தால் கோபிக்க மாட்டார்.
நிலைமை அப்படியிருக்க சரோஜா தேவியின் தாயாரிடம் வேட்டைக்காரன் படத்துக்காக கால்ஷீட் கேட்டார் தேவர். எப்போதும்போல் மொத்தமாகத் தேதிகளைத் தனக்கு ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று எண்ணினார். நம்பிக்கையோடு அடையாறு காந்தி நகருக்குப் புறப்பட்டார். சரோஜா தேவி தேவர் மீது அளவில்லாத மதிப்பு உடையவர். தேவருக்கு ஜனவரி 7 முக்கியம். அன்று அவரது ஆஸ்தான கதாநாயகி சரோவின் பிறந்த நாள்! தேவர் ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தில் சரோஜா தேவிக்குப் பொற்காசுகளால் அபிஷேகம் செய்வார். அத்தனைச் சிறந்த நட்பும் பரஸ்பர மரியாதையும் அவர்களுக்குள் நிலவியது.
வேட்டைக்காரன், அந்த சிநேகத்தில் விரிசல் விழ வைத்து விட்டது. சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா. கண்டிப்புக்கும், கறாருக்கும் புகழ் பெற்றவர். அவர் சரோஜா தேவியின் வாழ்க்கையை கால்ஷீட்டுகளாகவே கணக்கெடுத்தார். தேவருக்கும் ருத்ராம்மாவுக்கும் நடைபெற்ற காரசாரமான மோதலை சரோஜா தேவி பயந்தபடியே நோக்கினார்.
‘வேட்டைக்காரன் கதை வசனமெல்லாம் ரெடியாயிடுச்சு. ஆரூர்தாசு எழுதிக்கிட்டு வராரு. உங்க தேதி தெரிஞ்சா பூஜையை நடத்திடுவேன்.’
‘முன்ன மாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க. பாப்பாவுக்கு நிறைய படம் புக் ஆகுது. டே அன்ட் நைட் வேல செஞ்சாலும் போதல. நாகி ரெட்டியார் கூடக் கேட்டிருந்தார். எம்.ஜி.ஆர். மேனேஜர் வீரப்பன் படம் ஆரம்பிச்சிருக்காரு.’
‘எம்.ஜி.ஆர். கால்ஷீட்டை மொத்தமாக் கொடுத்திட்டாரு. வர்ற பொங்கலுக்குப் படம் ரிலீஸ். அவர் தேதியை நான் வேஸ்ட்டு செய்ய முடியாதே.’
‘சரவணா பிலிம்ஸ் படம் வேறே கலர்ல முதன்முதலா எடுக்கறாங்க. யார் கலர்ல தயாரிக்கணும்னாலும் எடுத்தவுடன் பாப்பாகிட்ட வந்து கால்ஷீட் கேக்குறாங்க’ – ருத்ரம்மாவின் குரலில் அலட்சியம். தேவர் அதை எதிர்பார்க்கவில்லை.
தேவருக்குப் புரிந்தது. சினிமா உலகில் கண்ணதாசனிடம் சென்று பலர் புகார் செய்திருந்தார்கள். அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜா படத்துக்காக எழுதிய பல்லவியை மாற்றி எழுதும் படி. ‘ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு – எவரைக் கண்டாயோ’ என்கிற பல்லவியைத் தங்கள் எரிச்சலைத் தணித்துக் கொள்ளும் விதமாக, ‘ஏனடி சரோஜா என்னடி கொழுப்பு – எவரைக் கண்டாயோ’ என்று. அந்த அளவு சரோஜா தேவியின் மார்க்கெட் ஓஹோ. சரோவின் மார்க்கெட்டில் தனக்கு இல்லாத உரிமையா என்று எண்ணினார் தேவர். அதில் சிறுத்தை விழுந்தது.
‘எம்.ஜி.ஆர். கொடுத்த கால்ஷீட்டுல சரோஜா வந்து நடிக்குமா, இல்லையா?’ – தேவர் வழவழா ஆசாமி கிடையாது.
‘இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது.’
தேவருக்குக் கொதிப்பு. ‘உங்க மக என் படத்துல நடிக்கறதா வேணாமான்னு நீங்க முடிவு செய்யக்கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்.’ எரிமலையாக வெடித்தபடியே தன் அங்க வஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு வெளியேறினார். சினிமா காட்சிபோல் சரோஜா தேவி ஓடிவந்து தடுத்தார். அதைச் சட்டை செய்யாமல் கார் கிளம்பியது.
எம்.ஜி.ஆரே வந்து வற்புறுத்தினாலும் இனி சரோ நடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தார் தேவர். 1963 தீபாவளி அன்று வெளியானது ‘பரிசு’. எம்.ஜி.ஆரும், சாவித்ரியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து படம் வெற்றிகரமாக ஓடியது. டி. யோகானந்தின் படம் அது. தேவரும் வேட்டைக்காரனில் அதே ஜோடியைப் பயன்படுத்த முடிவு செய்தார். சரோவுக்குப் பதில் சாவித்ரி வந்தார்.
வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரி நடிப்பதற்காகக் காட்சிகள் வலுவூட்டப்பட்டன. அதை எம்.ஜி.ஆர். வரவேற்றார். சரோஜா தேவிக்கும் கூடுதலாகவே கவர்ச்சியாக எம்.ஜி.ஆருடன் சாவித்ரி ஆடிப்பாடினார். ‘மெதுவா மெதுவா தொடலாமா – உன் மேனியிலே என் கை படலாமா…’
தேவருக்கு அதிலும் திருப்தி இல்லை. அப்போதுதான் திரையுலகில் தடம் பதிக்க ஆரம்பித்திருந்த நாகேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனோரமாவுடன் ஒரு காமெடி பாடல் வைத்தார். ஒரே நாளில் ஊட்டியில் முழுப் பாடலையும் எடுத்து முடித்தார். மனோரமாவுக்கு முதன் முதலில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்து அதிரச் செய்தார். சீட்டுக்கட்டு ராஜா என்ற பாடல் பட்டி தொட்டி முதற்கொண்டு எங்கும் பிரபலம்.
எம்.ஜி.ஆரின் புதிய கெட்-அப் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. சென்னை சித்ரா தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது. திரையிலும் தியேட்டருக்குள்ளேயும் எல்லாம் தொப்பிகளாகவே தெரிந்தன.
தேவர் எம்.ஜி.ஆருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். பிரமாண்டமான செட்களில் அவரது படங்களில் ‘கனவு’ பாடல் காட்சிகள் வரவே வராது. ‘செட்டை எவன்டா பாக்குறான், அண்ணனத்தான்டா ரசிக்க வரான்’ என்பார்.
வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.
வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.
(பா. தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்திலிருந்து)
Richardsof
3rd August 2012, 09:27 AM
எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்
தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர்தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர்தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமாக இருப்பவர். அவரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத்தோடு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்து விட்டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவரது வாழ்க்கை ஸ்டைலும் இன்றைக்கு பலபேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு அவரையே கேலிக்கூத்தாக்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் தயாராகி உள்ள படம்.
சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இன்றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்களுக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்ட படம். இப்போதும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட்டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளிக் கொடுக்கிற படம். அந்தப் படம் எத்தனை இடையூறுகளை சந்தித்து வெளிவந்தது. அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அந்தக் காலத்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்பட்ட அற்புதமான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா? தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படித்தான் முயற்சித்திருக்கிறார் சிவா. எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடையில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொள்வான் எம்.ஜி.ஆர் ரசிகன்.
Richardsof
3rd August 2012, 10:14 AM
MAKKAL THILAGAM WITH HINDI ACTOR SHASI KAPOOR
http://i46.tinypic.com/qz3bs0.jpg
Richardsof
3rd August 2012, 04:16 PM
M.g.r - தமிழில் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆர் திரைப்படங்கள்
இந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்களி்ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் எவை....திடீரென இந்த ஆராய்ச்சியில் இறங்கியதற்கு காரணம் நான் சந்தித்த ஒரு மனிதர். திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான அவர், ஆழ்வார்ப்பேட்டையில் ஏ.வி.எம். நடத்தும் சரஸ்வதி ஸ்டோர்ஸ் கடையில் டிவிடிக்களை வாங்க வந்தார். நானும் தற்செயலாக அங்கு போயிருந்தேன். கடையில் பணியாற்றும் திரு.கருணாகரன் என்னிடம் அந்தப் பிரமுகரை இணைத்து விட்டார். தம்பி எம்ஜிஆர் நடித்து வெளியான படங்களில் இந்தியில் இருந்து தமிழுக்கு வந்த படங்களை சொல்லுங்கள் நாளைக்கே டெல்லிக்கு விமானத்தில் போய் பாலிகா பஜாரில் உள்ள நண்பர் கடையில் இருந்து டிவிடிக்களை அள்ளிட்டு வர்றேன். என்றார். அந்த இந்திப் படங்களை திண்டிவனத்தில் உள்ள தனது திரையரங்கில் வெளியிட்டு அடுத்து அதே கதையில் தமிழில் எம்ஜிஆர் நடித்த படத்தையும் திரையிட வேண்டும் என்பது அவரது திட்டம்.
நினைவை கூர் தீட்டி படங்களைப் பட்டியலிட்டேன்.
1. தோ ஆங்கேன் பாரா ஹாத்- பீமல் ராயின் படம் தமிழில் -பல்லாண்டு வாழ்க
2. சச்சா ஜூட்டா - நினைத்ததை முடிப்பவன்
3. ராம் அவுர் ஷியாம்- எங்க வீட்டுப் பிள்ளை
4. உல்ஜன் - இதயக்கனி
5. ஜன்ஜீர்- சிரித்து வாழ வேண்டும்
6. யாதோங்கி பாரத்- நாளை நமதே
7. ஜிக்ரி தோஸ்த் - மாட்டுக்கார வேலன்
8. ஃபூல் அவுர் பத்தர்- ஒளிவிளக்கு
9. ரக்வாலா -காவல்காரன்
10. ரிக் ஷாவாலா- ரிக் ஷாக்காரன்
11. ஜீனே கீ ராஹ் - நான் ஏன் பிறந்தேன்
12. சைனா டவுண்- குடியிருந்த கோவில் - இது பின்னர் ஷாருக்கான் நடிக்க டூப்ளிகேட் என்ற பெயரிலும் வெளியானது.
13. ஹாத்தி மேரே சாத்தி - நல்ல நேரம்
14 அப்னா தேஷ்- நம் நாடு
15. கோரா அவர் காலா- நீரும் நெருப்பும்
16. ராஜா ஜானி - ராமன் தேடிய சீதை
இதே போல சிவாஜி கணேசனும் ஏராளமான இந்தி ரீமேக் படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி. ஆர் மீது மயக்கம் கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். ்அவர் போடும் டைட்டான சட்டை, நேர்மை நியாயத்துக்காக வாதாடும் குணம், ஏழைகள் மீது கருணை, முதியோர் மற்றும் குழந்தைகள் மீதான பிரியம், அழகான பெண்களுடன் காதல் விளையாட்டு, தத்துவப் பாடல்கள். சண்டைக்காட்சிகள் என அவரிடம் கவர்ந்த விஷயங்களில் எதை முதன்மைப்படுத்துவது என்றே தெரியவில்லை. எனக்கென்னவோ அவரது தத்துவப் பாடல்கள்தான் மனதில் முதலிடம் வகிக்கின்றன. இறைவன் இருப்பதை நான் அறிவேன் என்னை அவனே தான் அறிவான் என்ற பாசம் படப்பாடல் வரி எனக்குள் ரத்தம் முழுவதும் ஊறிப் போன தத்துவம்.இருள் வேண்டும் போது விளக்கொன்று உண்டு என்று சந்திரோதயத்தில் நம்பிக்கை அளித்த எம்.ஜி.ஆர் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, பூவை செங்குட்டவன், முத்துலிங்கம் என அவருக்குப் பாடல் எழுதிய யாவரையும் எம்.ஜி. ஆர் என்ற மனிதரின் மகத்துவத்தை அறிந்தே எழுதியிருக்கிறார்கள். எம்.ஜி,ஆரை ஒரே முறைதான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு மிக இளம் வயது. 12 அல்லது 13 தான் இருக்கும். மக்கள் குரல் மாலை நாளிதழில் டி.ஆர்.ஆர் எழுதும் கட்டுரைகளை விரும்பிப் படித்து வந்தேன். எனக்கு அரசியல் அரிச்சுவடி அதுதான்.
அண்ணா நினைவு நாளில் அவரது சமாதிக்கு முதலமைச்சரான எம்ஜிஆர் மாலை மரியாதை செலுத்த வருகிறார் என்ற செய்தியைப் படித்து அங்கே காலை 6 மணிக்கெல்லாம் போய் உட்கார்ந்து விட்டேன். 8 மணிக்கு செக்க செவேல் என சூரியனை விடவும் பிரகாசமான ஒளிரூபமே நடந்து வருவது போல எம்ஜிஆர் வெள்ளை வேட்டி வெள்ளச் சட்டை, தொப்பி கண்ணாடி அணிந்து வந்தார். காரில் இருந்து இறங்கியதும் மலர்கள் பூமாரி பொழிந்தன. ஆரவாரம் அடங்கவே இல்லை. எல்லோரையும் பார்த்து கையசைத்தபடி சென்றார் எம்.ஜி.ஆர். அப்போது நான் மக்கள் குரலில் வந்த அவரது பெரிய படத்தை காட்டி கையை ஆட்ட அதை கவனித்து விட்டார். தூரத்திலிருந்து என் அருகில் வந்து என் கன்னத்தை செல்லமாக தட்டினார். பிறகு வேகமாக போய் விட்டார். தலைவர் கைபட்ட என் கன்னத்தை தொட்டு தொட்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தங்கள் விரலில் முத்தமிட்டுக் கொண்டனர்.எனக்கோ சொர்க்கத்தில் மிதக்கிற நினைப்பு.
எங்க வீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற அவரது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். காரணம் அந்தப் பாட்டின் கருத்து, இசை, டி.எம்.எஸ் அவர்களின் தன்னிகரற்ற குரல், எம்ஜி ஆரின் சுறுசுறுப்பு மட்டுமல்ல, அற்புதமான நடன அமைப்பும் அந்தப் பாடலில் இடம் பெற்றது. இந்தி ஒரிஜினல் ராம் அவுர் ஷாமில் இப்படிப்பட்ட பாட்டு இல்லை. அதில் நடித்தவர் திலீ்ப்குமார். சாதாரண பார்ட்டி பாட்டாக இருந்ததை எம்ஜிஆர் தனக்கேற்றபடி தத்துவப் பாட்டாக மாற்றினார். அற்புதமான நடன அசைவுகள், கேமரா கோணங்களுடன் இந்தப் பாட்டு எனக்கு மட்டுமல்ல இப்போதைய குழந்தைகளுக்கும் பிடிக்கிறது என்பது ஆச்சரியமளிக்கிறது.எம்.ஜி.ஆரை முதலமைச்சர் ஆக்கிய பாட்டு இது என்றும் சொல்வார்கள். மிகையாக தெரிந்தாலும் சரிதான். அத்தனை அற்புதமான பாட்டு. வாழ்க வாலி.வாழ்க எம்.எஸ்.வி. ராமமூர்த்தி. வாழ்க டி.எம்,எஸ்.
kiamqewaf
3rd August 2012, 06:17 PM
'எங்க வீட்டுப் பிள்ளை' ஸ்பெஷல் (14-Jan-1965) (பிரம்மாண்ட மேளா)
பொங்கல் திருநாள் சிறப்புப் படம்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pc0210700.jpg
http://www.shotpix.com/images/90701803727460905419.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/57.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/58.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/55.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/51.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/59.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/56-1.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/50.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/52.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
As every body thinks MGRamachandran and Shivaji Ganesan were not Traditional Rivalries.
Their idealogy difference in choosing Charecters in Tamil Cenema has only helped only for a healthy
atmospere in Tamil Cenema Industry. Right from 1952 onwards almost MGR and Sivaji films only occupied first and
second place till 1977.( Before 1952 there was MGR but no sivaji and after 1977 there was sivaji and no MGR)
Such a long 25 years domination by these These Giants is a record which has not been seen any state in India.
MR and Mrs, MGR and Sivaji were like family members and Sivaji"s close familly circle starts only with MGR.
Almost MGR will be the first guest to attend sivaji functions. MGR also used to call Shivaji for all his
functions held at Ramavaram House. These are only few exambles of MGR and Sivaji exxemplary relationship.
I heard that Mgr is one of the close friend of sivaji to attend Sivaji Marriage on 1-11-52
(However I dont know whether MGR visited Shanti Theatre or Sivaji Visited Satya studio).Strong MGR or Sivaji fans may clarify.
However after death of Kamaraj (Who was having lot of followeres and party workers), Sivaji Ganesan had to join
Indira Congress.
Had Mr Sivaji Ganesan also started his own party with( then old Congress) admirers,his fans, followers, he would have
been successful in political field also and Tamilnadu would have again seen MGR and Sivaji in a second innings in political field..
This is why we are telling,since MGR was used by DMK and DMK was used by MGR.
But Congress used Sivaji but sivaji could not encash it.
kiamqewaf
3rd August 2012, 06:58 PM
Respected Sir,
Your article on MGR is really Great !!!!!! Excellent . Please some should come frequently.
RAGHAVENDRA
3rd August 2012, 08:48 PM
எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி. படகோட்டி படம் நவீன மயமாக்கல் கிட்டத் தட்ட முடிவடைந்து விட்டதாகவும் வெகு விரைவில் வெளியிடப் பட உள்ளதாகவும் தகவல் கூறுகின்றன. சென்னையின் பழமையான திரையரங்கு நிறுவனத்தினர் இப்படத்தினை வெளியிட உள்ளதாகவும் கேள்வி.
vasudevan31355
3rd August 2012, 09:35 PM
Dear esvee sir,
hope u enjoy the poster.
http://i704.photobucket.com/albums/ww48/Periplo_photos/posters/0503Chennai/P1000096.jpg
Richardsof
4th August 2012, 08:33 AM
அன்புள்ள இனிய நண்பர் திரு .ராகவேந்திரன் சார்
மக்கள் திலகத்தின் படகோட்டி விரைவில் வர உள்ளது என்று முதல் தகவலை எங்கள் செவிக்கு விருந்தளித்த உங்களுக்கு எங்கள் நன்றி .
அன்புள்ள் இனிய நண்பர் திரு . வாசுதேவன் சார்
மக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை காமதேனு திரை அரங்கின் விளம்பரத்தை பதிவிட்டு எங்கள் கண்ணுக்கு விருந்தளித்த உங்களுக்கு எங்கள் நன்றி .
இந்த தருணத்தில் எங்களால் தர முடிந்த ஒரு படத்தின் பதிவு.
நம்மை இணைத்த திலகங்களின் மகிழ்சியான ஒரு நிகழ்வு ....
அன்னை இல்லத்தில் நதியின் இல்லத்தில் மதியும் நடிகர் பாலாஜியும் கலந்து கொண்ட விருந்தில் எடுத்த படம் . விருந்து பரிமாறுபவர் திருமதி நடிகர் திலகம் .
தொடரட்டும் இந்த பரிமாற்றங்கள்
http://i48.tinypic.com/oqdurl.jpg
Richardsof
4th August 2012, 08:58 AM
HISTORICAL OLD THEATRE - CHENNAI - PAROGON .
NADODI MANNAN- 1958 http://i47.tinypic.com/3582oed.jpg
kiamqewaf
4th August 2012, 10:10 AM
You are right. Some one like tfmlover can help :roll:
Where is he btw nowadays :?
He has acted in "IDAYAVEENAI" as MGR father.
Richardsof
4th August 2012, 01:36 PM
தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.
என்ற பாடல் வரிகள் மீனவர் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் நினைவுக்கு வராமல் போகாது. ‘படகோட்டி’ எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் ஓடிய படம். இன்றைக்கும் மீனவர் வாழ்வின் அவலங்களை படகோட்டி அளவுக்கு(க்கூட) முன்வைத்த தமிழ்த் திரைப்படம் ஒன்றும் இல்லை அல்லது படகோட்டி ஃபார்முலாவை மீறிய தமிழ் (மீனவர்) திரைப்படம் ஒன்றுகூட இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது.
படகோட்டிக்குப் பிறகு மீனவர் வாழ்வையும் கடற்கரைப் பிரதேசத்தையும் கதைக்களமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் கதை நிகழும் களமாக மீனவர் பகுதி அமைந்திருந்ததே தவிர கதையின் கரு காதல் அல்லது பழிக்குப் பழிவாங்கும் தமிழ்ச் சினிமாவின் அதே புளித்துபோன சரக்காகவே இருக்கிறது.
Richardsof
4th August 2012, 03:01 PM
TOP PIC
ENGA VEETU PILLAI SILVER JUBILEE FUNCTION AT MADURAI- CENTRAL THEATRE - 1965
BOTTOM PIC
ADIMAI PENN - MADURAI - CHINTHAMANI THEATRE - SILVER JUBILEE FUNCTION - 1969
http://i47.tinypic.com/15eyfs6.jpg
Richardsof
4th August 2012, 03:11 PM
1969- vaighai dam- near madurai- mattukara velan movie shooting spot.
makkal thilagam - director neelakantan
during shooting break- seeing the crowd who all came to see makkal thilagam in the shooting spot
http://i48.tinypic.com/2rrxm3s.jpg
eehaiupehazij
4th August 2012, 06:27 PM
M.g.r - தமிழில் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆர் திரைப்படங்கள்
இந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்களி்ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் எவை....திடீரென இந்த ஆராய்ச்சியில் இறங்கியதற்கு காரணம் நான் சந்தித்த ஒரு மனிதர். திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான அவர், ஆழ்வார்ப்பேட்டையில் ஏ.வி.எம். நடத்தும் சரஸ்வதி ஸ்டோர்ஸ் கடையில் டிவிடிக்களை வாங்க வந்தார். நானும் தற்செயலாக அங்கு போயிருந்தேன். கடையில் பணியாற்றும் திரு.கருணாகரன் என்னிடம் அந்தப் பிரமுகரை இணைத்து விட்டார். தம்பி எம்ஜிஆர் நடித்து வெளியான படங்களில் இந்தியில் இருந்து தமிழுக்கு வந்த படங்களை சொல்லுங்கள் நாளைக்கே டெல்லிக்கு விமானத்தில் போய் பாலிகா பஜாரில் உள்ள நண்பர் கடையில் இருந்து டிவிடிக்களை அள்ளிட்டு வர்றேன். என்றார். அந்த இந்திப் படங்களை திண்டிவனத்தில் உள்ள தனது திரையரங்கில் வெளியிட்டு அடுத்து அதே கதையில் தமிழில் எம்ஜிஆர் நடித்த படத்தையும் திரையிட வேண்டும் என்பது அவரது திட்டம்.
நினைவை கூர் தீட்டி படங்களைப் பட்டியலிட்டேன்.
1. தோ ஆங்கேன் பாரா ஹாத்- பீமல் ராயின் படம் தமிழில் -பல்லாண்டு வாழ்க
2. சச்சா ஜூட்டா - நினைத்ததை முடிப்பவன்
3. ராம் அவுர் ஷியாம்- எங்க வீட்டுப் பிள்ளை
4. உல்ஜன் - இதயக்கனி
5. ஜன்ஜீர்- சிரித்து வாழ வேண்டும்
6. யாதோங்கி பாரத்- நாளை நமதே
7. ஜிக்ரி தோஸ்த் - மாட்டுக்கார வேலன்
8. ஃபூல் அவுர் பத்தர்- ஒளிவிளக்கு
9. ரக்வாலா -காவல்காரன்
10. ரிக் ஷாவாலா- ரிக் ஷாக்காரன்
11. ஜீனே கீ ராஹ் - நான் ஏன் பிறந்தேன்
12. சைனா டவுண்- குடியிருந்த கோவில் - இது பின்னர் ஷாருக்கான் நடிக்க டூப்ளிகேட் என்ற பெயரிலும் வெளியானது.
13. ஹாத்தி மேரே சாத்தி - நல்ல நேரம்
14 அப்னா தேஷ்- நம் நாடு
15. கோரா அவர் காலா- நீரும் நெருப்பும்
16. ராஜா ஜானி - ராமன் தேடிய சீதை
இதே போல சிவாஜி கணேசனும் ஏராளமான இந்தி ரீமேக் படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி. ஆர் மீது மயக்கம் கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். ்அவர் போடும் டைட்டான சட்டை, நேர்மை நியாயத்துக்காக வாதாடும் குணம், ஏழைகள் மீது கருணை, முதியோர் மற்றும் குழந்தைகள் மீதான பிரியம், அழகான பெண்களுடன் காதல் விளையாட்டு, தத்துவப் பாடல்கள். சண்டைக்காட்சிகள் என அவரிடம் கவர்ந்த விஷயங்களில் எதை முதன்மைப்படுத்துவது என்றே தெரியவில்லை. எனக்கென்னவோ அவரது தத்துவப் பாடல்கள்தான் மனதில் முதலிடம் வகிக்கின்றன. இறைவன் இருப்பதை நான் அறிவேன் என்னை அவனே தான் அறிவான் என்ற பாசம் படப்பாடல் வரி எனக்குள் ரத்தம் முழுவதும் ஊறிப் போன தத்துவம்.இருள் வேண்டும் போது விளக்கொன்று உண்டு என்று சந்திரோதயத்தில் நம்பிக்கை அளித்த எம்.ஜி.ஆர் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, பூவை செங்குட்டவன், முத்துலிங்கம் என அவருக்குப் பாடல் எழுதிய யாவரையும் எம்.ஜி. ஆர் என்ற மனிதரின் மகத்துவத்தை அறிந்தே எழுதியிருக்கிறார்கள். எம்.ஜி,ஆரை ஒரே முறைதான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு மிக இளம் வயது. 12 அல்லது 13 தான் இருக்கும். மக்கள் குரல் மாலை நாளிதழில் டி.ஆர்.ஆர் எழுதும் கட்டுரைகளை விரும்பிப் படித்து வந்தேன். எனக்கு அரசியல் அரிச்சுவடி அதுதான்.
அண்ணா நினைவு நாளில் அவரது சமாதிக்கு முதலமைச்சரான எம்ஜிஆர் மாலை மரியாதை செலுத்த வருகிறார் என்ற செய்தியைப் படித்து அங்கே காலை 6 மணிக்கெல்லாம் போய் உட்கார்ந்து விட்டேன். 8 மணிக்கு செக்க செவேல் என சூரியனை விடவும் பிரகாசமான ஒளிரூபமே நடந்து வருவது போல எம்ஜிஆர் வெள்ளை வேட்டி வெள்ளச் சட்டை, தொப்பி கண்ணாடி அணிந்து வந்தார். காரில் இருந்து இறங்கியதும் மலர்கள் பூமாரி பொழிந்தன. ஆரவாரம் அடங்கவே இல்லை. எல்லோரையும் பார்த்து கையசைத்தபடி சென்றார் எம்.ஜி.ஆர். அப்போது நான் மக்கள் குரலில் வந்த அவரது பெரிய படத்தை காட்டி கையை ஆட்ட அதை கவனித்து விட்டார். தூரத்திலிருந்து என் அருகில் வந்து என் கன்னத்தை செல்லமாக தட்டினார். பிறகு வேகமாக போய் விட்டார். தலைவர் கைபட்ட என் கன்னத்தை தொட்டு தொட்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தங்கள் விரலில் முத்தமிட்டுக் கொண்டனர்.எனக்கோ சொர்க்கத்தில் மிதக்கிற நினைப்பு.
எங்க வீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற அவரது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். காரணம் அந்தப் பாட்டின் கருத்து, இசை, டி.எம்.எஸ் அவர்களின் தன்னிகரற்ற குரல், எம்ஜி ஆரின் சுறுசுறுப்பு மட்டுமல்ல, அற்புதமான நடன அமைப்பும் அந்தப் பாடலில் இடம் பெற்றது. இந்தி ஒரிஜினல் ராம் அவுர் ஷாமில் இப்படிப்பட்ட பாட்டு இல்லை. அதில் நடித்தவர் திலீ்ப்குமார். சாதாரண பார்ட்டி பாட்டாக இருந்ததை எம்ஜிஆர் தனக்கேற்றபடி தத்துவப் பாட்டாக மாற்றினார். அற்புதமான நடன அசைவுகள், கேமரா கோணங்களுடன் இந்தப் பாட்டு எனக்கு மட்டுமல்ல இப்போதைய குழந்தைகளுக்கும் பிடிக்கிறது என்பது ஆச்சரியமளிக்கிறது.எம்.ஜி.ஆரை முதலமைச்சர் ஆக்கிய பாட்டு இது என்றும் சொல்வார்கள். மிகையாக தெரிந்தாலும் சரிதான். அத்தனை அற்புதமான பாட்டு. வாழ்க வாலி.வாழ்க எம்.எஸ்.வி. ராமமூர்த்தி. வாழ்க டி.எம்,எஸ்.
originally Engaveettuppillai was remade from NTR's Telugu hit Ramudu Beemudu. Ram our Shyam was made after witnessing the mega success of engaveettuppillai.
ScottAlise
5th August 2012, 08:43 AM
Hi,
Sivaji Senthil nice compilation
But Kavalkaaran,Riksawkaran ,Idayakkani was first made in tamil and then in hindi
joe
5th August 2012, 09:09 AM
originally Engaveettuppillai was remade from NTR's Telugu hit Ramudu Beemudu. Ram our Shyam was made after witnessing the mega success of engaveettuppillai.
To say this , what is the need of quoting the whole story ?
Not only you , this is just an example ,Many doing the same .. Pls considerate about people who access these pages with slow internet connection or from mobile .
Kindly try to cut to the relevant content when you quote something .. Just to thank , people used to quote a essay.
Richardsof
5th August 2012, 09:09 AM
MAKKAL THILAGAM MGR IN DIFFERENT POSE
http://i50.tinypic.com/15dnvhe.jpg
Thirumaran
5th August 2012, 09:13 AM
னக்குள் M.G.R.! – ஒரு X – Ray தொடர் –வாலி
ஏற்கெனவேயே எழுதப் பெற்றவை!
‘இருக்குமிடம் தேடி
என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால்
உண்பேன்!’
– என்று பட்டினத்தார் பாடி வைத்த வெண்பா போல் –
வாய்ப்பு வந்து என் வாசற் கதவைத் தட்டும்போது தட்டட்டும் என்று விட்டேற்றியாய் இருந்தேன். இந்த நிலை விரக்தியாலோ விழுமிய ஞானத்தாலோ விளைந்ததல்ல. அடிமேல் அடி அடித்தாலும், ஆகு நாளன்றி எதுவும் ஆகா என்று அனுபவப் பட்டவர்கள் சொல்லிப் போந்ததை என் மனம் பொன்னே போல் போற்றி நின்றது!
அறைக்குள்ளேயே அடங்கிக் கிடந்தாலும், அவ்வப்போது என்னைப் பார்க்க வந்த இசைத் துறையைச் சார்ந்தவர்கள் என் தமிழைத் துருப்பிடிக்க விடாமல், சாணை பிடித்துக் கொண்டேயிருந்தார்கள். இதுதான் இறைவன் என் பங்கில் இருக்கிறான் என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தது!
எட்டுக்குப் பத்து என்னும் அளவில் சின்ன அறைதான் என்னுடையது. ஆயினும் அங்கு நான் இருந்த மூன்று ஆண்டுகளுக்குள் எனக்கு எத்துணை பேர் அறிமுகமானார்களோ – அத்துணை பேரும்தான் இன்றைய என் ஏற்றத்திற்கு ஏதுவாக இருந்தவர்கள். அப்பாராவ் என்றொரு நண்பன். ஆந்திராவைச் சேர்ந்தவன். அற்புதமாகப் பாடுவான். அவன் தமிழைத் தெலுங்கு கலந்து பேசும்போது, அது ஒரு வகையான இனிமை பயக்கும் நம் செவிக்கு.
அந்த
அப்பாராவ் ‘வாலி! ஏதாவது பாட்டு எழுதுடா; நான் மெட்டுப் போட்டுப் பாடறேன்!’ என்று என்னை வற்புறுத்தி எழுத வைப்பான். அன்னணம், பல பாடல்கள் நான் எழுதி அவன் வர்ண மெட்டமைத்துப் பாடக் கேட்டு நான் பரவசப்பட்டதுண்டு. எந்தச் சூழ்நிலைக்கும் பாட்டெழுதக் கூடிய ஓர் ஆளுமைக்கு, நண்பன் அப்பாராவோடு நான் பழகியது ஒரு பயற்சிப் பட்டறையாக எனக்கு அமைந்தது!
அப்பாராவ் சாரீரம் – பிரபல இந்திப் பாடகர் முகேஷ் போல் – சற்று மூக்கொலியோடு இழைந்து வரும்; அதைத்தான் Nasal Sound என்று, Throat Therapy தெரிந்தவர்கள் வகைப்படுத்துவார்கள்.
1960 –ல் –
அப்பாராவ் இசையமைத்துப் பாடிய என் பாட்டு ஒன்றை – இன்றளவும் என் மனம் மனனம் செய்து வைத்திருக்கிறது.
அதற்குக் காரணம் –
அப்போது நான் அகத்திணையில் ஒன்றான கைக்கிளை வயப்பட்டு வாடியிருந்தேன். என்பால் காதல் கொண்டிருந்த பெண் – என் பொருட்டுக் காத்திருந்து காத்திருந்து, பிறகு –
ஒருவாய்ச் சோற்றுக்கும் வருவாய் இல்லாத இவனை நம்பி என்னணம் கழுத்தை நீட்டுவது என்று கருதி – பெற்றோர்கள் பார்த்து வைத்த ஒருவனை மணந்து கொண்டு, போபால் நகரத்திற்குப் போய் விட்டாள். அந்த அதிர்வலைகள் என்னுள் அடங்காதிருந்த நாளில் நான் எழுதிய பாட்டுதான் அது,
‘கடலோரம் நெடுநேரம்
கதை பேசினாய்; என்னைக்
கடல் சேர்த்து நீ மட்டும்
கரையேறினாய்!’
– இப்படிப் போகும் அந்தப் பாட்டு. அப்பாராவ் தர்பாரி கானடாவில் அதை மெட்டுக்கட்டிப் பாடுகையில் –
ஈரக்குலையை ஈவிரக்கமின்றி எவரோ ஈர்ப்பது போலிருக்கும்.
பழைய மாம்பலத்தில் அறையெடுத்துத் தங்கியவாறு –
கே.வி.மகாதேவன் குழுவில் Chorus பாடிக் கொண்டும் – தமிழிலிருந்து தெலுங்கில் DUB செய்யப்பட்ட படங்களில் சிறு சிறு வேஷத்திற்குக் குரல் கொடுத்துக் கொண்டுமிருந்த அப்பாராவ் – ‘டேய் வாலி! எழுதி வெச்சுக்கடா! சினிமா ஒருநாள் உன்னைத் தேடி வரும்... ஆயிரக்கணக்கான பாட்டு எழுதப் போறே!’ என்று உணர்ச்சிவசப்பட்டு உரக்கக் கூவுவான்!
அற்றை நாளில் –
அப்பாராவ் போல் என் அறைக்கு அடிக்கடி வந்து –
அவநம்பிக்கை மெல்ல மெல்ல அரிக்க – உறுதியெனும் உள்ளீடற்று உளுத்துக் கிடந்த என் உளத்திற்கு, உற்சாக ஊசியை ஏற்றி –
நிமிரச் செய்த இன்னொரு நண்பர் – சேகர்!
சேகர், நல்ல இசை ஞானம் உள்ளவர். குடியாத்தத்தைச் சேர்ந்த தமிழராயினும் மலையாளப் படங்களுக்கே அதிகமாய் இசையமைத்தவர்.
Club House–ல் துருவன் என்றொரு தோழனும், நாகராஜன் என்றொரு தோழனும் எனக்கு உண்டு.
இவ்
இருவரும்
பிரபல இசையமைப்பாளர்களின் வாத்தியக் குழுவிலே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். துருவன் – மிகப் புகழ் வாய்ந்த ஒரு Percussionist; நாகராஜன், ஒரு Tambourine Player. வடநாட்டிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் இசையமைப்பாளர்களான – சலீல் சௌத்ரி; மதன் மோகன் – இவர்களுக்கெல்லாம் துருவனும் நாகராஜனும் தவிர்க்க முடியாதவர்கள். சலீல் சௌத்ரியின் படங்களுக்கு, உதவியாளராயிருந்ததால் – இவர்களைத் தேடி Club House–க்கு வரும்போது – சேகர் எனக்கு சினேகிதரானார். நல்ல தமிழறிவும் இசையறிவும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற நண்பர் சேகர் –
‘வாலி சார்! சோர்ந்து போயிடாதீங்க; நிச்சயம் நீங்க பெரிய்ய ஆளா வருவீங்க; எழுதிக்கிட்டேயிருங்க!’ என்று என் பாடல்களைப் பார்த்தும் கேட்டும் பாராட்டியதோடு நில்லாமல் –
மலையாள தட்சிணாமூர்த்தி, தேவராஜன் முதலிய இசையமைப்பாளர்களிடமெல்லாம் – என் பெருமையைப் பரக்கப் பேசியவர்!
மேற்சொன்ன இரண்டு நண்பர்கள் பற்றி மேலும் சில முக்கியத் தகவல்களை நான் சொல்ல வேண்டும்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபது எண்பதுகளில் –
தெலுங்குப் பட உலகில் கொடி கட்டிப் பறந்த இசையமைப்பாளர் திரு.சக்கரவர்த்தி. நாகேஸ்வரராவும்; ராமராவும்; சிரஞ்சீவியும் சக்கரவர்த்தி இசையமைப்பை – ஒரு Must ஆகக் கருதியவர்கள். பத்தாண்டு காலங்கள் சக்கரவர்த்தியில்லாத படமில்லை; இன்றைய தெலுங்கு இசையமைப்பாளர்களில் பலர் சக்கரவர்த்தியிடம் தயாரானவர்களே!
இந்தச் –
சக்கரவர்த்திதான் – என் ஆரம்ப கால நண்பராயிருந்து என்னை உற்சாகப்படுத்திய அப்பாராவ்!
அதேபோல் –
அன்றைய என் நண்பரான சேகரின் தவப்புதல்வர்தான் –
உலகம் தன் உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் –
International Celebrity ஆன திரு. A.R.ரஹ்மான்!
நம்பிக்கையை ஊட்டிய நல்ல நண்பர்களால் மட்டும் நாள்களை நகர்த்திவிட முடியுமா என்ன? வயிற்றுக்குச் சோறிட வேண்டுமே? பசி வரும் போதெல்லாம் பச்சைத் தண்ணீரைப் பருகி விட்டுப் படுத்துத் தூங்கியே பழக்கப்பட்டவன் நான்.
‘கடல் வற்றிப் போனால்
கருவாடு தின்னலாம் – எனக்
குடல் வற்றிச் செத்ததாம்
கொக்கு!’ – என்று ஒரு பழம் பாடல் உண்டு. அதுபோல் –
ஒருநாள் சினிமா நம் கையில் வரும்; அன்று சேர்த்து வைத்துத் தின்னலாம் என்றிருக்க முடியுமா என்ன?
இத்தகு சூழலிலும் –
இறைவன் என்னை இரண்டு நாள்களுக்கு மேல் பட்டினி போட்டதில்லை. அவன் எவரையாவது அவ்வப்போது அனுப்பி வைத்தான், என் கண்ணில் கொஞ்சம் காசைக் காட்ட!
அதில் இருவர் –
இன்னமும் பசுமையாக, என் நினைவில் நன்றிக்குரியவர்களாக இருக்கிறார்கள்!
திரு. லட்சுமி நரசிம்மன் என்பவரை, அவர் தபால் இலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்த நாளிலிருந்தே நான் அறிவேன். ஏனெனில், அவரது மேலதிகாரியாக இருந்தவர், திரு.ராகவன் என்னும் ஸ்ரீரங்கத்துக்காரர். லட்சுமி நரசிம்மன் சென்னையில் ஒரு நாடகக்குழு வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் – Club House – க்கு வருவார்.
‘என்ன வாலி! நம்ம நாடகத்துக்கு ரெண்டு பாட்டு எழுதிக் கொடுத்தாத் தேவலெ; தஞ்சை பாலுதான் ம்யூசிக்!’ என்று சொல்லி என்னிடம் தன் நாடகத்திற்கான காட்சியை விளக்கி – என் அறையில் உட்கார்ந்து இரண்டு பாட்டுகள் வாங்கிப் போவார். அந்த இரண்டு பாட்டுக்கும் சன்மானமாக முப்பது ரூபாய் கொடுப்பார்!
இன்னொரு நண்பர் – ‘முன்னணி’ என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். எழுத்தாளர் திரு.வாசவன் மூலமாக எனக்குப் பழக்கமானவர். அவர் என் அறைக்கு வருவார். தன் பத்திரிகைக்குக் கவிதை எழுதச் சொல்லிக் கேட்டு வாங்கிப் போவார். அடுத்த வாரமே – ரூபாய் பதினைந்துக்கு ஒரு Bearer Cheque அனுப்பி வைத்து என் பசியை ஆற்றுவார்!
லட்சுமி நரசிம்மன் என்று நான் குறிப்பிட்டது வேறு யாருமல்ல; சாக்ஷாத் நாடகக் காவலர் திரு. ஆர்.எஸ்.மனோகர்தான்!
அது போல் –
‘முன்னணி’ பத்திரிகை ஆசிரியர் என்று நான் குறிப்பிட்ட நண்பர் –
கவிஞர் கண்ணதாசனின் சகலை. தீவிர இந்து மதப் பற்றாளர். மதுரைக்காரர்.
பின்னாளில் –
‘சூதாட்டம்’, ‘திருடி’ என்றெல்லாம் திருமதி. கே.ஆர்.விஜயாவை வைத்துப் படங்களை இயக்கிய, பிரபல எழுத்தாளர் திரு. மதுரை திருமாறன்தான் அவர்!
இப்படியெல்லாம் –
என் அறையைத் தேடியே நம்பிக்கை வார்த்தைகளும், நாலு காசும் வந்து கொண்டிருந்ததால்,
நான் வெளியே போய் வாய்ப்புத் தேடுவதற்கு விருப்பமில்லாமல் – பெருவாரியான நேரம் –
மரபெஞ்சிலேயே மல்லாந்து கிடந்ததைத்தான், நாகேஷ் அவ்வப்போது என்னை, 'You are killing the time' என்று கண்டிக்க ஏதுவானது.
‘அவரவர்க்கான அரிசியில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது!’ என்கிறது திருக்குரான். நீ – வாயைத் திறந்து வைத்துக் கிடந்தாலும் உனக்கல்லாத உணவு உன் வாய்க்கு வாய்க்காது; நீ – வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும், உனக்கான அரிசியை ஆண்டவன் உன் வாயை வலியத் திறந்து ஊட்டி விடுவான்.
இந்த மறைவாசகத்தை நாம் மறுதலிப்பதற்கில்லை!
‘இவ்வுலகின் மாட்டு – எவை எவை நிகழ்கின்றனவோ – அவை அவை –
ஏற்கெனவேயே ஒரு நிகழ்ச்சி நிரலாக வரையப்பட்டவைதான்!’ என்று –
உலகின் தலைசிறந்த விஞ்ஞானியும், ‘சார்புக் கொள்கை’ எனும் தத்துவத்தைக் கண்டுபிடித்து அதை உலகின் முன் உத்தாரணம் செய்தவனுமான –
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன வாக்கு, பொய்யெனக் கொளப் போமோ?
என் வாழ்க்கை –
எவ்வழியில் பயணிக்க வேண்டும்; என்னென்ன வெற்றிகளையும் வீழ்ச்சிகளையும் எதிர் கொள்ள வேண்டும்; இவற்றில் எத்துணை விழுக்காடு எவரெவர்க்கு என்னென்ன பங்கு இருக்க வேண்டும் என்பதெல்லாம் –
உறையின் உள்ளிருக்கும் தாளில் குறிக்கப் பெற்று, அனலில் காட்டிய அரக்கைக் கொண்டு அரசு முத்திரையிடப்பட்ட Tender போலே –
நம் பிறப்புக்கு முன்னதாகவே, ஆற்றிய ஆகூழ்; போகூழுக்கு ஏற்ப –
Written And Sealed! அன்னணம் தீர்மானிக்கப் பெற்ற திருவருளுக்கு ஏற்பதான் –
அரசு பிக்சர்ஸிலிருந்து அழைப்பு வந்தது எனக்கு எனலாம்!
மறுநாள் –
நானும் நாகேஷும், உஸ்மான் ரோடிலிருந்து நுங்கம்பாக்கத்தில் இருந்த அரசு பிக்சர்ஸுக்கு நடந்தே சென்றோம்!
(தொடரும்)
joe
5th August 2012, 09:14 AM
esvee,
Likewise , a request for you (Already groucho requested)
When you scan , even for a small photo , it gives you a page full of image file ..Kindly edit the image using Paint or some other tool to cover only the photo instead of the whole blank page ..It will help others to load the page much faster .
joe
5th August 2012, 09:16 AM
Thanks Thirumaran for Posting Vaali's thodar.
It is very interesting to read ..But the only issue is ..while the title says it is between MGR and Vaali , it goes as Vaali's sontha kathai sooga kathai rather than focussing on MGR related episode .. Still it is good read.
vasudevan31355
5th August 2012, 09:23 AM
டியர் esvee சார்,
அருமையான நதியின் வீட்டில் மதி விருந்துண்பது எங்களுக்கு விருந்து. வழங்கிய தங்களுக்கு அன்பு நன்றிகள். இப்போது தங்கள் மனம் கவர்ந்த 'படகோட்டி' உங்களுக்காக.
http://i.ytimg.com/vi/_ibZksuZpCY/0.jpg
http://i.ytimg.com/vi/RJXrqY-Df1M/0.jpg
http://www.shotpix.com/images/68216343795207321802.png
http://www.shotpix.com/images/83285622850922578059.png
http://www.shotpix.com/images/75585744284981680213.png
http://www.shotpix.com/images/55420488588853001617.png
http://www.shotpix.com/images/32714127704694697315.png
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/Padagotti0000006.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/Padagotti0000009.jpg
தரை மேல் பிறக்க வைத்தான்...
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்...
http://www.youtube.com/watch?v=7y1vgcnbbQQ&feature=player_detailpage
Thirumaran
5th August 2012, 09:34 AM
Thanks Thirumaran for Posting Vaali's thodar.
It is very interesting to read ..But the only issue is ..while the title says it is between MGR and Vaali , it goes as Vaali's sontha kathai sooga kathai rather than focussing on MGR related episode .. Still it is good read.
enakkum appadithaan thoanum.. aanaal, appappa MGR um varuvaar... :p
Richardsof
5th August 2012, 11:18 AM
இனிய நண்பர் திரு . வாசுதேவன் சார் .
படகோட்டி ....பட காட்சிகளின் தொகுப்பு அருமை ..
உங்களின் அணைத்து பதிவுகளும் எல்லா திரிகளிலும் அசத்தலாக உள்ளது . தொடரட்டும் தங்களது பணி .
.
Richardsof
6th August 2012, 08:22 AM
MAKKAL THILAGAM AND NADIGAR THILAGAM - MARRIAGE FUNCTION OF VIP IN CINE FIELD.
http://i46.tinypic.com/2vb28vo.jpg.
Richardsof
6th August 2012, 08:29 AM
DEAR VASUDEVAN SIR
KALAI NILAVU RAVICHANDRAN - K.R. VIJAYA IN SABATHAM
PESUM PADAM -1971
http://i50.tinypic.com/1z6f890.jpg
Richardsof
6th August 2012, 09:52 AM
article - from mohanan- internet
நாலு பேருக்கு நன்றி..! - பழைய திரைப்படப் பாடல்
.!
'நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று ..
1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்தான் இந்தப் பாடல். .ப.நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் இது.
இந்த தத்துவப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இசையமைக்க, டி.எம்.ஸ் தன் குரல் வழியே இப்பாடலுக்கு உயிரூட்டினார் என்றால் அது மிகையாகாது.
நன்றி யாருக்குச் சொல்வோம்... அதை எளிதாக சந்த நயத்தோடு கண்ணதாசன் விவரிக்கிறார் இப்பாடலில்.. ஆதலால்தான் இவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் பெற்ற பாடல்களாக விளங்குகிறது...
உதாரணத்திற்கு
"ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி..!" என்ற வரிகளைக் கவனியுங்கள்...
யாருமில்லாத அனாதையாக இறந்து விட்டால் அவரை எடுத்துச் செல்ல நால்வர் வேண்டும் அவருக்கு நன்றி சொல்கிறார்...
"இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி..." - நன்றியை நாம் சொல்வதை சந்த நயத்தோடு எவ்வளவு அழகாக இங்கே கவியரசர் எடுத்துக்
காட்டுகிறார்...
!
நாலு பேருக்கு நன்றி..!
இப்பாடல் குறித்த சிறப்புத் தகவல்
இப்பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
போகும் போது வார்த்தை இல்லை...
போகும் முன்னே சொல்லி வைப்போம்..!
இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.
சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிப் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'
என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.
கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!
Richardsof
6th August 2012, 10:00 AM
நாடோடி மன்னன் படத்தின் சாதனைகள்
நாடோடி மன்னன் வெளியான தேதி : 22.8.1958
புரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.
1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.
1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).
“முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.
சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே !
“திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் ! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே ! அரங்கு கிருஷ்ணா 113நாள்.
சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.
இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே !
“சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.
“லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.
“சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.
மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.
1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.
“லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !
ஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !
முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் ! நாடோடி மன்னனே !
“இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
சீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.
“ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.
“நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.
“பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.
“அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.
“தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.
“அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.
“ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.
“10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.
“கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.
“அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.
“கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.
தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.
தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.
தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.
“4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.
“வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.
முதலில் “அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது !
தகவல் உதவி: http://www.lakshmansruthi.com/cineprofiles/nadodi_mannan.asp
ScottAlise
6th August 2012, 06:50 PM
Can anyone describe about Pudhumai Pittan, Chakravarthy Thirumagal,Gulebagavali, Kalaiarasi,Bagdad Tirudan .I mean story because I have not watched it
Richardsof
6th August 2012, 09:34 PM
மக்கள் திலகம் mgr அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது . தமிழ்நாடு ,கர்நாடகா, புதுவை மாநிலங்களில் இருந்து மக்கள் திலகத்தின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும் எங்களது இனிய நண்பருமான திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்புடன் தொகுத்து வழங்கினார்.
திரு . திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கட்கு எங்களது அன்பு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்
http://i49.tinypic.com/2z3ntxg.jpg
Richardsof
6th August 2012, 09:44 PM
http://i50.tinypic.com/xqh00y.jpg
Richardsof
6th August 2012, 09:46 PM
http://i45.tinypic.com/k3lpmo.jpg
Richardsof
6th August 2012, 09:49 PM
http://i48.tinypic.com/2qd1lpx.jpg
Richardsof
6th August 2012, 09:51 PM
http://i48.tinypic.com/2qd2yqw.jpg
Richardsof
6th August 2012, 09:55 PM
http://i49.tinypic.com/2qc4k03.jpg
Richardsof
6th August 2012, 09:58 PM
http://i47.tinypic.com/sq4gua.jpg
vasudevan31355
6th August 2012, 11:08 PM
டியர் வினோத் சார்,
இன்பக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் இணைந்து கலக்கும் அந்த திருமண விழா புகைப்படம் கொள்ளையோ கொள்ளை அழகு. இப்போதுதான் அதைப் பார்க்கிறேன். பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பார்ப்பேன். அவ்வளவு ஜோர். அட்டகாசமான ஸ்டில்லுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அதுமட்டுமல்ல... எனக்கு மிகவும் பிடித்த 'சபதம்' படத்தின் அருமையான நிழற்படத்தை எனக்காக சிரமம் எடுத்து பதித்ததற்கு அளவு கடந்த என் நன்றிகள். மனதை கொள்ளை கொள்ளும் 'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' என்ற சாகாவரம் பெற்ற பாடலைக் கொண்ட படமல்லவா.... அதே போல் 'சங்கே முழங்கு' திரைப்படத்தில் ஒலிக்கும் "நாலு பேருக்கு நன்றி" என்னை மிக மிக கவர்ந்த ஒரு பாடல். என்ன பாடல் சார் அது!
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிப் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'
கடைசி இரண்டு வரிகள் படத்தின் கதைக்கு மிக அழகாகப் பொருந்துவதால் தான் மக்கள் திலகம் அந்த வரிகளில் திருப்தி அடைந்திருப்பார்.
அருமையான 'நாலு பேருக்கு நன்றி'யை இப்போது கண்டு, கேட்டு ரசிக்கலாம்.
http://www.youtube.com/watch?v=JGdBvKk13jo&feature=player_detailpage
மக்கள் திலகம் mgr அவர்களின் பிறந்த நாள் விழா புகைப்படங்கள் அருமை.
மக்கள் திலகம் திரியில் ராஜாங்கம் புரியும் வினோத் சார்,
தங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
என்னுடைய பதிவுகளுக்கான தங்களது பாராட்டுதல்களுக்கு என் தலையாய நன்றிகள் சார்.
vasudevan31355
6th August 2012, 11:21 PM
டியர் வினோத் சார்,
தங்களுக்காகவும், மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்களுக்காகவும் இதோ உங்கள் மனம் கவர்ந்த 'நாடோடி மன்னன்' சிறப்பு நிழற்படங்கள். (என் அன்புப் பரிசு)
http://img849.imageshack.us/img849/8329/nadodimannan50.jpg
http://desmond.imageshack.us/Himg834/scaled.php?server=834&filename=nadodimannan00067.png&res=landing
http://desmond.imageshack.us/Himg406/scaled.php?server=406&filename=nadodimannan00061.png&res=landing
http://desmond.imageshack.us/Himg408/scaled.php?server=408&filename=nadodimannan00032.png&res=landing
http://desmond.imageshack.us/Himg716/scaled.php?server=716&filename=nadodimannan00022.png&res=landing
http://desmond.imageshack.us/Himg267/scaled.php?server=267&filename=nadodimannan56.jpg&res=landing
http://desmond.imageshack.us/Himg189/scaled.php?server=189&filename=nadodimannan86.jpg&res=landing
http://desmond.imageshack.us/Himg684/scaled.php?server=684&filename=nadodimannan24.jpg&res=landing
http://desmond.imageshack.us/Himg710/scaled.php?server=710&filename=nadodimannan76.jpg&res=landing
http://desmond.imageshack.us/Himg202/scaled.php?server=202&filename=nadodimannan92.jpg&res=landing
vasudevan31355
6th August 2012, 11:25 PM
http://desmond.imageshack.us/Himg827/scaled.php?server=827&filename=nadodimannan38.jpg&res=landing
http://img192.imageshack.us/img192/8208/nadodimannan53.jpg
http://desmond.imageshack.us/Himg577/scaled.php?server=577&filename=nadodimannan11.jpg&res=landing
http://desmond.imageshack.us/Himg269/scaled.php?server=269&filename=nadodimannan90.jpg&res=landing
http://img687.imageshack.us/img687/6082/nadodimannan52.jpg
http://desmond.imageshack.us/Himg337/scaled.php?server=337&filename=nadodimannan00064.png&res=landing
கலக்கல் கலர் விருந்து.
http://2.bp.blogspot.com/__vnK9wWtIw0/R9fWXraaTEI/AAAAAAAAAko/wL01xEkC6y8/s400/nadodi_mannan.jpghttp://www.music.haihoi.com/flimAlbum/Nadodi%20Mannan.jpghttp://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/27/Nadodi_mannan_poster.jpg/377px-Nadodi_mannan_poster.jpg
"கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே"
http://www.youtube.com/watch?v=nYOY9hNNV3c&feature=player_detailpage
vasudevan31355
7th August 2012, 12:02 AM
http://i.ytimg.com/vi/om8AncusULw/0.jpg
http://www.thehindu.com/multimedia/dynamic/00288/14CP_NAMBIAR1_288306g.jpg
http://i.ytimg.com/vi/38DIjY0srew/0.jpg
http://i1.ytimg.com/vi/UVbIUQneRS0/0.jpg
Richardsof
7th August 2012, 06:18 AM
எங்களது இனிய நண்பர் திரு .வாசுதேவன் சார் .
உங்களின் பதிவு .....வார்த்தைகள் இல்லை .......
நான் ஒரு சிறு புள்ளிதான் போட்டேன் . நீங்களோ அந்த புள்ளியை வைத்து நாடோடிமன்னன் என்ற மாபெரும் வண்ண கோலத்தை படைத்து எங்கள் அனைவரையும் ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்டீர்கள் . .
தங்களின் பதிவுகளை பார்த்து மக்கள் திலகத்தின் அலை பேசி நண்பர்கள்
திரு . திருப்பூர் ரவிச்சந்திரன்- பேராசிரியர் திரு . செல்வகுமார் - சென்னை ,சிமோகா- பேராசிரியர் திரு .சிவகுமார் .பெங்களூர் -திரு .மோகன்குமார் . திரு .ரவி .திரு .ஆரணிரவி .திரு ச.ராமு . திரு ரவிச்சந்திரன் . திரு காளிதாஸ் . திரு .கஜநாத்சிங்.திரு குமார் .திரு கணேஷ் .
மக்கள் திலகத்தின் வரலாற்று ஆவணங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் தங்களுக்கும் அருமை நண்பர் திரு .பம்மலார் மற்றும் திரு ராகவேந்திரன் அவர்களுக்கும் மேற்கண்ட மதியின் நண்பர்கள் அனைவரும் இந்த திரியின் மூலம் அவர்களது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறார்கள் .
Richardsof
7th August 2012, 08:28 AM
http://i49.tinypic.com/2bzklt.jpg
நாடோடி மன்னனும் உத்தம புத்திரனும் ஒரு இனிமையான சந்திப்பின் போது எடுத்த படம் .
Richardsof
7th August 2012, 08:51 AM
1971- pesum padam- article about makkal thilagam
http://i50.tinypic.com/fnthyx.jpg
Richardsof
7th August 2012, 09:26 AM
http://i48.tinypic.com/fp9qi8.jpg
Richardsof
7th August 2012, 09:31 AM
MOONDRU DEIVANGAL SNAPS FROM PESUM PADAM - 1971
http://i45.tinypic.com/soy52a.jpg
Richardsof
7th August 2012, 09:33 AM
http://i46.tinypic.com/73kqaq.jpg
Richardsof
7th August 2012, 12:34 PM
சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான ஒரு விஷயம். இந்திபிரச்சார சபாவுக்கு அருகில் சிம்பு வீட்டிலிருந்து தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் பீச்சாங்கை பக்கமாக ஆற்காடு சாலை வரும்.
தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட சூப்பர் ஸ்டாரின் வீடு போல இல்லாமல் மேல்நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரின் வீடுபோல எளிமையோ எளிமை. எம்.ஜி.ஆர் அறக்கட்டளை நிர்வகிக்கிறது. 1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. ஆனால் வெளியே செருப்பினை விட மட்டும் 50 காசு கட்டவேண்டும். செவ்வாய் விடுமுறை. எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இன்றும் தினமும் ஐம்பது பேராவது நினைவு இல்லத்தை தரிசித்து செல்கிறார்கள்.
கீழ்த்தள ஹால் பெரியது. 1950களில் தொடங்கி எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகள் இந்த ஹாலினை அலங்கரிக்கிறது. சுவற்றையொட்டி வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகள் முழுக்க நினைவுப்பரிசுகள். நினைவுப்பரிசுகள் பலவற்றிலும் கருப்பு சிவப்பு திமுக கொடி. பல நினைவுப்பரிசுகள் வேடிக்கையாகவும் இருக்கின்றன.
கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா ஷீல்டு கொடுத்திருக்கிறார்கள். இந்த நினைவுப்பரிசுகளை பாதுகாக்கவே எம்.ஜி.ஆர் மிகவும் மெனக்கெட்டிருக்க வேண்டும். ஹாலுக்கு மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
முதல் தளத்திலும் நினைவுப்பரிசுகளின் ஆதிக்கம். எம்.ஜி.ஆரின் வேட்டி சட்டை, டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள் என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்களும் தொண்டர்களும் வாள் வழங்குவதில் ஆர்வம் அதிகமாக காட்டியிருக்கிறார்கள். அவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடல் பிரமிப்பூட்டுகிறது. இந்த சிங்கம் அடிமைப்பெண் படத்தில் நடித்ததாக சொல்கிறார்கள்.
ஆச்சரியமான விஷயம் எம்.ஜி.ஆரின் நூலகம். வீடு முழுக்க ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை குறைந்தது ஐயாயிரமாகவாவது இருக்கக்கூடும். நிறைய ஆங்கிலநூல்களும் இருப்பது எதிர்பாராத விஷயம். எம்.ஜி.ஆர் ஆங்கிலமும் வாசிப்பார் என்பதை அவர் நூலகத்தில் இருக்கும் நூல்களை வைத்தே அறிய முடிகிறது. எம்.ஜி.ஆரின் பிரத்யேக அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது டிரேட் மார்க் தொப்பி.
அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வரமுடிகிறது. இவ்வறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் திரைத்துறையில் வெற்றிகரமாகப் பணியாற்றியது அவரது அசைக்க முடியாத சாதனை. திரைப்பட ஸ்டில்கள் மட்டுமன்றி பல தலைவர்களோடு எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட அரியப் புகைப்படங்கள் இல்லம் முழுக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது.
vasudevan31355
7th August 2012, 01:07 PM
டியர் வினோத் சார்,
தங்கள் அன்பான பதிவிற்கு அகம் குளிர்ந்த நன்றிகள். பதிவுகளைப் பார்த்து பாராட்டிய அன்புச் சகோதரர்கள், மக்கள் திலகத்தின் மகத்தான ரசிகர்கள்
திரு .திருப்பூர் ரவிச்சந்திரன்
பேராசிரியர் திரு .செல்வகுமார் - சென்னை ,சிமோகா
பேராசிரியர் திரு .சிவகுமார் .
பெங்களூர் -திரு .மோகன்குமார் .
திரு .ரவி .
திரு .ஆரணிரவி .
திரு ச.ராமு .
திரு ரவிச்சந்திரன் .
திரு காளிதாஸ் .
திரு .கஜநாத்சிங்.
திரு குமார் .
திரு கணேஷ்
மற்றும் நட்புத் திலகமான எங்கள் அன்பு esvee அவர்களாகிய தங்களுக்கும் என் சார்பிலும், அன்பு பம்மலார் மற்றும் ரசிகவேந்தர் திரு. ராகவேந்திரன் அவர்கள் சார்பிலும் ஆனந்தக் கண்ணீரோடு கூடிய நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். வளர்க நமது சகோதரத்துவம். அனைத்து நண்பர்களும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்தும்
அன்புச் சகோதரர்
நெய்வேலி வாசுதேவன்.
டியர் வினோத் சார்,
பேசும்படம் 'மூன்று தெய்வங்கள்' பதிவு அட்டகாசம்...அருமை. அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
Richardsof
7th August 2012, 02:15 PM
MT FAN TIRUPPUR S. RAVICHANDRAN FORWARDED THIS PIC.
MT IN RAGASIYA POLICE II5.
TIRUPPUR THEATRE
http://i45.tinypic.com/2ni5pvk.jpg
Richardsof
7th August 2012, 06:58 PM
http://i47.tinypic.com/6i4k1z.jpg
Richardsof
7th August 2012, 07:01 PM
makkal thilagam at RAJAJI HOUSE
http://i46.tinypic.com/4jkpxx.jpg
Richardsof
7th August 2012, 07:21 PM
MAKKAL THILAGAM MUSEUM NEAR MAKKAL THILAGAM SMADHI
http://i47.tinypic.com/t70ayu.jpg
Richardsof
7th August 2012, 07:33 PM
http://i48.tinypic.com/25tdjt2.jpg
Richardsof
7th August 2012, 07:44 PM
http://i47.tinypic.com/30120jo.jpg
vasudevan31355
7th August 2012, 07:45 PM
டியர் வினோத் சார்,
அன்பு நண்பர் திரு.திருப்பூர் எஸ்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு தங்கள் சார்பாக அடியேனுடைய அன்புக் காணிக்கை. நிச்சயம் மக்கள் திலகத்தின் 'ரகசிய போலீஸ் 115' நிழற்படங்கள் தங்கள் அனைவரையும் குளிர்ச்சியாக்கும் என்று நம்புகிறேன். பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுக்கள்.
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ...
என்னப் பொருத்தம்... நமக்குள் இந்தப் பொருத்தம்...
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப் பூ...
பால் தமிழ்ப் பால்..
கண்ணே... கனியே... முத்தே...மணியே அருகே வா...
உன்னை எண்ணி என்னை மறந்தேன்...
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-183550.png
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-225133.png
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-190907.png
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-182271.png
http://williamhuebnerjr.com/wp-content/uploads/2010/07/enjoy-300x197.gif
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ...
http://www.youtube.com/watch?v=WEPgXGH6j9w&feature=player_detailpage
என்னப் பொருத்தம்... நமக்குள் இந்தப் பொருத்தம்...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KJobbwySqRI
பால் தமிழ்ப் பால்..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0ttbU2wssoA
கண்ணே... கனியே... முத்தே...மணியே அருகே வா...
http://www.youtube.com/watch?v=T7PlgoP-x4Q&feature=player_detailpage
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப் பூ...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zGr_HafYHZc
உன்னை எண்ணி என்னை மறந்தேன்...
http://www.youtube.com/watch?v=3hLCRm7_GQc&feature=player_detailpage
Richardsof
7th August 2012, 08:17 PM
எங்கள் கண்களுக்கு இப்படி ஒரு மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் திரை படத்தின் நிழற் படங்களையும் இனிய ஒளி-ஒலி பாடல்களையும் பதிவிட்டு எங்கள் இதயத்தில் நிரந்தர பதிவேந்தன் வாசுதேவனாக இடம் பெற்ற உங்களை பாராட்ட எங்களுக்கு வார்த்தையில்லை . ஒரே வரி ............நடமாடும் பதி வேந்தன் . உங்கள் சாதனை தொடரும் .
மதியின் நண்பர்கள் அனைவரும் .
Richardsof
8th August 2012, 05:44 AM
http://i48.tinypic.com/20a9wck.jpg
Richardsof
8th August 2012, 05:59 AM
http://i47.tinypic.com/sy2st3.jpg
Richardsof
8th August 2012, 06:05 AM
http://i46.tinypic.com/2ljm7tl.jpg
Richardsof
8th August 2012, 06:11 AM
http://i46.tinypic.com/xn8ba8.jpg
Richardsof
8th August 2012, 12:32 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்ற பாடலில் நடித்து, இன்று பல கோடி ரசிகர்களின் மூச்சில் கலந்திருக்கும் அந்த மூன்றெழுத்து தான் எம்.ஜி.ஆர்., தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் , "புரட்சித் தலைவராய், மக்கள் திலகமாய், மன்னாதி மன்னனாய்,' வலம் வந்த எம்.ஜி.ஆர்.,ன் பிறந்த நாள் இன்று. "மறைந்தாலும், இவர் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற பாடல் வரிகள், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்.
"கருப்பு, வெள்ளை' காலத்திலும், தன்னை பற்றி "கலர்' கனவு காண
வைத்தவர். நவீனம் குடியேறிய பிறகும், ரசிகர் மனதில் குடியிருந்த கோயிலாய் ஜொலிப்பவர். "இருந்த இடம் தேடி வெற்றியும், தமிழகமே இவரைச் சுற்றியும்,'
வலம் வந்த வரலாற்றை மறக்கமுடியுமா? "தமிழகத்தில் இவர் தடம் பதியாத பகுதியும் இல்லை; அரசியல் பிரவேசத்தில் தோற்ற தொகுதியும் இல்லை,'. திரையுலகிலும் எம்.ஜி.ஆர்., தான் மாஸ். இன்றும் "ஹவுஸ் புல்' ஆகும், அவரது படங்களே அதற்கு சாட்சி.
இன்றைய நிலவரப்படி தலைவர்களுக்கு "கட் அவுட், போஸ்டர், பேனர்,' வைப்பதன் பின்னணியில், கட்சியில் ஏதாவது பொறுப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஒருவர் மறைந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், எதிர்பார்ப்பு இல்லாமல் அவர் பிறந்த நாளை ஏழைகள், ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அவர் தானே மக்கள் தலைவர்.
இதோ மதுரை ரசிகர்கள் மனந்திறக்கின்றனர்...
வீரபாண்டி(செவித்திறன் குறைவுடைய கூலித்தொழிலாளி): பேசும், கேட்கும் திறன் இல்லாத எனக்கு, எம்.ஜி.ஆர்., திரையில் தோன்றினாலே குதூகலம் தான். நான்
பேச நினைத்ததெல்லாம் அவர் பேசினார். ஆனால் அவர் பேசிய வார்த்தையை தான் என்னால் கேட்க முடியவில்லை. இரு முறை நேரில் பார்த்திருக்கேன். ஒரு முறை காரில் சென்ற போது கைகொடுத்தார். எனக்கான உலகத்தில் ஒரே கடவுள் எம்.ஜி.ஆர்., தான்(சைகையில் பேசினாலும், அவர் கைகள் வணங்கிய போது எதிரில் இருந்தது எம்.ஜி.ஆர்., படம்).
போத்தி கோபாலகிருஷ்ணன்(ஸ்ரீமீனாட்சி பாரடைஸ் தியேட்டர் உரிமையாளர்): அரசியல் பிரச்னையால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட தடை விதித்தனர். எதிர்ப்பை மீறி வெளியிட முடிவு செய்தோம். எம்.ஜி.ஆர்., எங்கள் வீட்டிற்கு வந்து படப்பெட்டியை கொடுத்தார். தியேட்டருக்கு மின் சப்ளை துண்டித்தனர். முதன் முதலாக
ஜெனரேட்டர் வாங்கி படத்தை திரையிட்டோம். எங்கள் தியேட்டரில், 217 நாட்கள் ஓடியது. வேறெங்கும் வெளியிடாததால், வெளியூரிலிருந்து உணவு பொட்டலங்களுடன் வந்து, பல நாட்கள் தங்கி படம் பார்த்து சென்றனர். இன்றும் மாதத்திற்கு மூன்று எம்.ஜி.ஆர்., படம் திரையிடுகிறோம். புதிய படங்களுக்கான அதே "கலெக்ஷன்' கிடைக்கிறது.
விஜயகுமார்(கலைமதி கம்பைன்ஸ் ஆப்பரேட்டர்): கடந்த இரண்டு ஆண்டில் மதுரையில் மட்டும் 40 தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் வெளியானது. நவீன தியேட்டர்களில் டி.டி.எஸ்., ஒலியுடன், கியூப் மற்றும் யூ.எப்.ஓ., தொழில்நுட்பத்திலும் வெளியிட்டோம். புதிய படங்களுக்கு குறைவில்லாத வரவேற்பு, இன்றும் எம்.ஜி.ஆர்., படத்திற்கு உள்ளது.
ஞானசேகரன் (ரிக்ஷா தொழிலாளி): எம்.ஜி.ஆர்., படம் பார்த்தால் உணவே தேவையில்லை. ஒரு நாளில் நான்கு "÷ஷா' பார்த்த படங்கள் நிறைய உள்ளன. அவரை நேரில் பார்க்க சென்னை கிளம்பினேன். அவர் வீட்டில் இல்லை. இரண்டு நாட்கள் ரோட்டில் தங்கி, மூன்றாவது நாளாக பார்த்தேன். திரையில் வருவதை விட அழகாக இருந்தார். "வாத்தியாரே...' என, கத்திய போது, நிமிர்ந்து பார்த்தவர், சிரித்த படி என்னை நோக்கி கையசைத்து சென்றார்.
ரிக்ஷாக்காரன் படத்தில் அவர் அணிந்த உடைகளை தான், இன்றும் அணிகிறேன்.
மாணிக்கம் (ரிக்ஷா தொழிலாளி): விபரம் தெரிந்த நாளில் இருந்து ரிக்ஷா ஓட்டுகிறேன். கடுமையாக கால் வலிக்கும் போது, ரிக்ஷாவில் ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர்., போட்டோக்களை பார்த்தால், தானாக தெம்பு வரும். இன்று, பண்டிகையில் தான் படங்கள் வெளியாகின்றன. அன்று, எம்.ஜி.ஆர்., படம் வெளியானாலே பண்டிகை தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை ரசித்தவர்கள் ஏராளம். இப்படி மனம் விட்டு பேசினர். இவர்களை போல இன்னும் எத்தனையோ ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர்., வாழ்கிறார். "காலத்தை வென்றவன் நீ; காவியம் ஆனவன் நீ'.-நமது சிறப்பு நிருபர்-
Richardsof
8th August 2012, 12:48 PM
1970 - mgr padangal oru kannotatam - MALAIMALAR - KALA PETTAGAM
எங்கள் தங்கம்" படத்தில், புதிய "மேக்_அப்"பில் எம்.ஜி.ஆர். நடத்திய கதாகாலட்சேபம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1970_ம் ஆண்டில் மாட்டுக்காரவேலன், என் அண்ணன், தலைவன், தேடிவந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ஆகிய 5 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
இதில் "மாட்டுக்காரவேலன்" சூப்பர்ஹிட் படம். ஜெயந்தி பிலிம்சார் தயாரித்த இந்தப்படத்தில், எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். வசனம்: ஏ.எல்.நாராயணன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்.
மாட்டுக்காரவேலனும், வக்கீல் ரகுவும் ஒரே தோற்றம் கொண்டவர்கள். சட்டநாதன் குடும்பத்தினர், வக்கீல் ரகுவை வரவேற்கக் காத்திருக்க, அங்கே வேலன் வருகிறான். அவனுக்கு பெரிய விருந்து நடக்கிறது. வேலனை ரகு என்று எண்ணி, அவனை காதலிக்கிறாள், சட்டநாதன் மகள் லலிதா.
உண்மையைச் சொல்லிவிட வேலன் நினைக்கிறான். ஆனால் சூழ்நிலை, அவன் வாயைக் கட்டிப்போடுகிறது. அதே நேரத்தில் ரகு அங்கு வருகிறான். உண்மையை அறிகிறான். தப்பி ஓட நினைத்த வேலனை அங்கேயே தங்க வைத்து, வேலன் _ லலிதா காதல் வளர உதவுகிறான்.
ஆள் மாறாட்டங்களால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களுடன், படம் விறுவிறுப்பாக அமைந்தது. இரட்டை வேடத்தில், எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்தார். குறிப்பாக, மாட்டுக்காரவேலன் வேடத்தில் அவர் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
ஜெயலலிதாவும், மற்ற நட்சத்திரங்களும், பாத்திரத்தை உணர்ந்து, இயல்பாக நடித்தனர். இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்கள் துணை நின்றன. "சத்தியம் நீயே, தர்மத்தாயே", "ஒரு பக்கம் பார்க்குறா", "பட்டிக்காடா பட்டணமா", "பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா", "தொட்டுக்கொள்ள வா" ஆகிய கண்ணதாசன் பாடல்கள், திக்கெட்டும் எதிரொலித்தன.
1970 பொங்கல் அன்று வெளிவந்த இந்தப்படம், சென்னை பிராட்வே, மதுரை சிந்தாமணி ஆகிய தியேட்டர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. 14 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. "என் அண்ணன்" வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு. இதற்கு சொர்ணம் வசனம் எழுதினார். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன். இதில் கதாநாயகி ஜெயலலிதா.
"தலைவன்" படம், தாமஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு. இதை பி.ஏ.தாமசும், சிங்கமுத்துவும் டைரக்ட் செய்தனர். வசனம் ஆர்.கே.சண்முகம். இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இந்தப் படத்தில் எம்.ஜி. ஆருடன் வாணிஸ்ரீ சேர்ந்து நடித்தார்.
"தேடி வந்த மாப்பிள்ளை" பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த படம். நகைச்சுவை கலந்த படம். இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்தார். இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.
மு.கருணாநிதியின் "மேகலா பிக்சர்ஸ்" தயாரித்த படம் "எங்கள் தங்கம்". இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். கருணாநிதி எழுதிய கதைக்கு, முரசொலிமாறன் வசனம் எழுதினார்.
இந்தப் படத்தின் சிறப்பு அம்சம், புதிய தோற்றத்தில் எம்.ஜி.ஆர். நடத்திய கதாகாலட்சேபம்! ஆட்டம் _ பாட்டத்துடன் அவர் நடத்திய இந்த கதாகாலட்சேபத்தை, ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் ரசித்தனர். கிருஷ்ணன் _ பஞ்சு டைரக்ட் செய்த இந்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். பல பாடல்கள் இனிமையாக அமைந்தன. குறிப்பாக, "தங்கப்பதக்கத்தின் மேலே" என்ற பாடல் பெரிய ஹிட்.
பல ஊர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம் இது.
Richardsof
8th August 2012, 03:49 PM
[ சரித்திரப் படங்கள் சில: அலிபாபாவும் நான்கு திருடங்களும் மன்னாதி மன்னன், மதுரைவீரன், குலோபகாவலி, அரசகட்டளை, நாடோடி மன்னன் (அவரின் இயக்கத்தில் வெளியானது), காஞ்சித் தலைவன், அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்றவை சமூகப் படங்கள் பல அவற்றுள் சில: பாசம், பெற்றால்தான் பிள்ளையா? மலைக்கள்ளன், தாய்க்குப் பின்தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, பணத்தோட்டம், பணக்காரக் குடும்பம், தாழம்பூ, மாடப்புறா , காவல்காரன், ஒளிவிளக்கு, தர்மம் தலைகாக்கும், விவசாயி, மாட்டுக்காரவேலன், தொழிலாளி, எங்க வீட்டுப் பிள்ளை போன்றவை.
எப்படி நடிகர் திலகத்திற்கு முக்தா பிலிம்ஸ் சீனிவாசன் , பந்துலு, நடிகர் பாலாஜி போன்ற தயாரிப்பாளர்களும் பீம்சிங், திரிலோகசந்தர் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களும் உறுதுணையாக விளங்கினார்களோ அதேபோன்று மக்கள் திலகத்திற்கு சின்னப்ப தேவர், ஆர்.எம். வீரப்பன் (பின்னர் எம்.ஜி.ஆரின் ,அ.தி.மு.க அரசியல் அமைச்சராகவும் இருந்தார்) போன்ற தயாரிப்பாளர்களும் சின்னப்பதேவரின் சகோதரர் எம்.ஏ. திருமுகம், ப.நீலகண்டன் ஆகிய முன்னணி இயக்குநர்களும் உற்றதுணையாகவும் விளங்கினார்கள். இவர்கள் இயக்குநர்களாக இருந்தபோதும் பல காட்சிகளை எம்.ஜி.ஆர். இயக்கினார்.
இன்றும் எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் திரையிடப்படும் போது திரை அரங்குகள் நிரம்பி வழிவதைக் காணலாம்.
1972 இல் தி.மு.க. விலிருந்து தூக்கி வீசப்பட்டு அ.தி.மு.க.வை அமைத்து 1977 இல் ஆட்சியைக் கைப்பற்றிய அந்த ஐந்து வருட இடைவெளியில் அரசியல் சூறாவளிப் பிரசாரம் செய்து இயங்கினாலும் பதினாறு வெற்றிப் படங்களைத் தந்த பெருமகன் எம்.ஜி.ஆர். என்பது இங்கு கவனத்திற்குரியது.
அமரர் முதலமைச்சராக கோலோச்சிய பொழுது நிகழ்ந்த பல்வேறு மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் மனதை உருக்கும் நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை மட்டும் இங்கு இறுதியாகக் குறிப்பிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
நாடாண்ட நடிகர் முதலமைச்சராக இருந்த போது ஒரு அவசரக் கூட்டம் கருதி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மதியநேரம் கொளுத்தும் வெயில், ஆள் , அம்பு, படை, ஜீப் சகிதம் முதலமைச்சர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் வயல்வெளி, ஆண்களும் பெண்களுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். வருவதை அறிந்து வழியை மறித்து நின்று எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள். கூட்டத்திற்கு காலதாமதமாகிவிட்ட காரணத்தால் முதலமைச்சருடன் வந்த மெய்க்காப்பாளர்கள் அந்த ஏழை விவசாயிகளை அடித்து விரட்டத் தொடங்கினார்கள். இதையறிந்து தனது காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். தது மெய்க் காப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி அந்த விவசாயிகளுடன் அளவளாவத் தொடங்கினார்.
விவசாயிகளுக்கோ தமது தெய்வத்தைக் கண்டதுபோல் பெரும் மகிழ்ச்சி , ஆனந்தக் கண்ணீர் விடாத குறை! சற்று நேரத்தின் பின்னர் முதலமைச்சர் தனது பிரயாணத்தைத் தொடர ஆரம்பமானார்.
அப்போது ஒரு இளம் பெண் கூட்டத்தை விலத்திக் கொண்டு ஓடிவ ந்து முதலமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்கி ஐயா இன்னமும் ஐந்து நிமிடம் தாமதித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் எனது தாயார் தங்களைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறார் என்றார். எம்.ஜி.ஆர். ஏன் அம்மா இப்போது வரவில்லையா? என்று வினாவினார். அதற்கு அந்தப் பெண்மணி இல்லை ஐயா, நான் போய்த்தான் அம்மாவை அனுப்ப வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆர். அந்த இளம் பெண்மணி போய் தாயார் வரும் வரை காத்திருந்தார். தாயாரும் வந்தார். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி ஆனால் ஒரு விடயம் நன்றாகப் புரிந்தது. தாயும் மகளும் ஒரேயொரு சேலையைத் தான் மாறிமாறி அணிகிறார்கள் என்பது.
எம்.ஜி.ஆர். தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை மீண்டதும் அவர் செய்த முதற்காரியம் அந்தப் பெண்மணியின் கிராமத்திற்கு புத்தம் புதிய வண்ண வண்ணச் சேலைகள் ஆயிரம் அனுப்பி வைத்ததே!
மேலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழத்தமிழர் பால் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்பது அவர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் கண்டனக் குரல் கொடுத்து இந்திய மத்திய அரசையும் விழிப்படையச் செய்தாரென்பதும் அகில உலகும் அறிந்த உண்மையே! தவிர அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இந்திய நாணயத்தில் ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலான பெறுமதி மிக்க நூல்களை வழங்கினார். அந்த நூல்கள் இன்றும் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள்ளன. அமரரைக் கௌரவிக்கும் முகமாக அன்னாரின் பெரியதொரு புகைப்படம் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தை அலங்கரிக்கின்றது.
Richardsof
8th August 2012, 03:59 PM
விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…
1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.
திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!
லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.
லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?
துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!
ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!
சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!
சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!
குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!
சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.
திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.
சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.
சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!
திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.
ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!
சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.
ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.
சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!
குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.
சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!
கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!
திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.
Richardsof
8th August 2012, 04:33 PM
http://i47.tinypic.com/5v546s.jpg
Richardsof
8th August 2012, 05:29 PM
http://i45.tinypic.com/kbbmzp.png
Richardsof
8th August 2012, 05:35 PM
http://i48.tinypic.com/vpw4g2.png
Richardsof
8th August 2012, 05:37 PM
http://i45.tinypic.com/345czm1.png
Richardsof
8th August 2012, 05:42 PM
http://i45.tinypic.com/20z5oyc.png
Richardsof
8th August 2012, 07:44 PM
http://i47.tinypic.com/bg9suw.jpg
http://i48.tinypic.com/344bazb.jpg
http://i49.tinypic.com/ruxyjr.jpg
http://i48.tinypic.com/dy3fk7.png
http://i50.tinypic.com/23hvss2.jpg
http://i48.tinypic.com/2gtzyb7.png
http://i45.tinypic.com/1orpqt.png
http://i46.tinypic.com/33yja4n.jpg
NOV
8th August 2012, 08:01 PM
MGR அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த போது.... (rare pics)
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/562875_407968065928185_1052704783_n.jpg
rajeshkrv
8th August 2012, 08:18 PM
Nov thanks for those hospital pics
Richardsof
8th August 2012, 09:27 PM
http://i49.tinypic.com/ixf68y.png
http://i48.tinypic.com/m9txzm.png
http://i45.tinypic.com/29vcqk6.png
http://i45.tinypic.com/34gvt4n.png
Richardsof
9th August 2012, 05:51 AM
MAKKAL THILAGAM MGR BIRTH DAY FUNCTION AT CHENNAI
PHOTOS FORWARDED BY TIRUPPUR S. RAVICHANDRAN
ACTRESS KANCHANA AND RAJASHREE - CHIEF GUESTS.
http://i45.tinypic.com/a14d9v.jpg
Richardsof
9th August 2012, 05:56 AM
MAKKAAL THILAGAM BROTHER MG CHAKRAPANI"S GRANDSON MR. MGC PRADEEP BALU AND TIRUPPUR S. RAVICHANDRAN WITH ACTRESS KANCHANA ALONG WITH SENIOR JOURNALIST THIRU MAJOR DASAN SIR.
http://i46.tinypic.com/vscdae.jpg
Richardsof
9th August 2012, 05:58 AM
http://i45.tinypic.com/9fwlk4.jpg
Richardsof
9th August 2012, 06:01 AM
http://i50.tinypic.com/e0lem9.jpg
Richardsof
9th August 2012, 06:03 AM
http://i46.tinypic.com/14jm8g2.jpg
Richardsof
9th August 2012, 09:20 AM
http://i45.tinypic.com/ekkkt4.png
http://i47.tinypic.com/wr19pc.png
http://i45.tinypic.com/2m31q9v.jpg
http://i49.tinypic.com/2mae52.png
http://i45.tinypic.com/14dpoo9.png
http://i50.tinypic.com/2rwwcp0.png
http://i47.tinypic.com/2yvtqa0.png
http://i48.tinypic.com/1zwcg7s.png
http://i49.tinypic.com/23ijcy0.png
Richardsof
9th August 2012, 09:52 AM
சென்னை, ஆக. 7: பழம்பெரும் நடிகர் "என்னத்த' கண்ணையா (87) உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சென்னை, லாயிட்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, தனுஷ், விஷால் உள்பட தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், 1924-ல் மதுரையில் பிறந்தார்.
70 வருட கலைப் பயணம்: டி.கே.சண்முகம், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரது நாடகக் குழுக்களில் இணைந்து 1942-ல் கலைப் பயணத்தைத் தொடங்கிய கண்ணையா, 1950-ல் "ஏழை படும்பாடு' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த "நான்' திரைப்படத்தில் கண்ணையா பேசிய "என்னத்த' என்ற வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகே அவர் "என்னத்த' கண்ணையா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
http://i49.tinypic.com/68uhci.jpg
எம்.ஜி.ஆர். உடன் "ஒளிவிளக்கு', "கண்ணன் என் காதலன்', "பாசம்' உள்ளிட்ட படங்களிலும், சிவாஜியுடன் "சொர்க்கம்', "வீரபாண்டியன்', "மருமகள்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் "ஊர்க்காவலன்', "மன்னன்', "சிவா' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குணச்சித்திர வேடம், நகைச்சுவை வேடம் என பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த கண்ணையா, பி.வாசு இயக்கத்தில் "தொட்டால் பூ மலரும்' என்ற திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த "வரும்.... ஆனால் வராது.....' என்ற நகைச்சுவை காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனுஷ் உடன் "படிக்காதவன்', அருண் விஜய் உடன் "தவம்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், இறுதியாக விஷாலுடன் "வெடி' திரைப்படத்தில் நடித்தார்.
மறைந்த கண்ணையாவுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி ராஜம் 4 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார்.
கண்ணையாவின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளது.
Richardsof
9th August 2012, 03:14 PM
http://i50.tinypic.com/4vhbup.png
http://i47.tinypic.com/2924g0g.png
http://i45.tinypic.com/25s6681.png
http://i45.tinypic.com/2qcjngw.png
http://i45.tinypic.com/k189yg.png
Richardsof
9th August 2012, 03:51 PM
http://i50.tinypic.com/4vhbup.png
http://i47.tinypic.com/2924g0g.png
http://i45.tinypic.com/25s6681.png
http://i45.tinypic.com/2qcjngw.png
http://i45.tinypic.com/k189yg.png
http://i49.tinypic.com/e63kf7.jpg
TIRUPPUR - RAGAM THEATRE - RAGASIYA POLICE II5 SCREENED LAST WEEK
RAGHAVENDRA
9th August 2012, 03:54 PM
டியர் எஸ்.வி.சார்,
அற்புதமான அபூர்வமான நிழற்படங்களைப் பதிவிட்டு தங்கள் சிறப்பான பணியை செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
குறிப்பாக நமது நண்பர் பிரதீப் அவர்களின் நிழற்படம் மிகவும் அருமையாக உள்ளது. திருப்பூர் ரவி அவர்களுக்கும் தங்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள். பிரதீப் அவர்கள் அறிமுகமாகி இங்கே சில பதிவுகளைத் தந்தார். அவர் இங்கே தொடர்ந்து தமது பதிவுகளை தரவேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
மேலும் சில எம்.ஜி.ஆர். படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
கண்ணன் என் காதலன் படத்திலிருந்து
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrKEK01.jpg
மன்னாதி மன்னன் படத்திலிருந்து
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrmannadhimannan.jpg
Richardsof
9th August 2012, 04:03 PM
[http://i50.tinypic.com/ndvqs3.jpg
Richardsof
9th August 2012, 04:08 PM
http://i48.tinypic.com/23jin89.png
Richardsof
9th August 2012, 04:11 PM
http://i45.tinypic.com/qqqvlc.png
Richardsof
9th August 2012, 04:27 PM
இனிய நண்பர் திரு . ராகவேந்திரன் சார்
தங்களின் அன்பு பாராட்டுதலுக்கு நன்றி .மக்கள் திலகம் பற்றிய தகவல்கள் இந்த அளவிற்கு பதிவிட மூல காரணமே உங்களின் அனைவரது நடிகர் திலகம் திரி நண்பர்கள் என்றால் அது மிகையாகாது.
என்றென்றும்
மக்கள் திலகம் நண்பர்கள் .
Richardsof
9th August 2012, 04:36 PM
http://i49.tinypic.com/2cwphsg.png
goldstar
9th August 2012, 05:14 PM
http://i1075.photobucket.com/albums/w424/sathish1972/NT_MGR.png
Richardsof
9th August 2012, 07:08 PM
Dear Satish sir
very excellent PHOTO FROM jalli kattu function - MAKKAL THILAGAM - NADIGAR THILAGAM TOGETHER.
THANKS A LOT SATISH SIR
WITH REGARDS
esvee
Richardsof
9th August 2012, 07:27 PM
http://i46.tinypic.com/fnfpmf.png
http://i46.tinypic.com/24lu6as.png
http://i45.tinypic.com/n12ydt.png
http://i48.tinypic.com/2ivxow0.png
http://i48.tinypic.com/n6s6x4.png
http://i49.tinypic.com/dchfc.png
Richardsof
9th August 2012, 09:03 PM
http://i46.tinypic.com/29mrmhk.png
http://i50.tinypic.com/29pon6h.png
http://i50.tinypic.com/2wc33th.png
http://i48.tinypic.com/i3gtmu.png
http://i48.tinypic.com/2ahfm88.png
http://i46.tinypic.com/2utl2rm.png
vasudevan31355
9th August 2012, 10:21 PM
டியர் வினோத் சார்,
பலவிதப் படங்களில் பலவிதக் கோணங்களில் மக்கள் திலகத்தின் பல்வேறு ஸ்டில்களை அருமையாகப் பதித்து வருகிறீகள். சும்மா தூள் கிளப்புகிறீர்கள். குறிப்பாக அன்பே வா படத்தில் அந்த பயில்வானை அப்படியே எம்ஜியார் அவர்கள் அலேக்காகத் தூக்கி நிற்கும் ஸ்டில் களேபரம். நன்றி!
Richardsof
10th August 2012, 05:27 AM
RAMAN THEDIYA SEEHTAI 1972
http://i48.tinypic.com/zsmm8.png
http://i49.tinypic.com/2dshe2o.png
http://i47.tinypic.com/jkaa2a.png
http://i46.tinypic.com/uq9li.png
http://i45.tinypic.com/51y984.png
http://i47.tinypic.com/2r6ob9y.png
http://i50.tinypic.com/34y7dwj.png
http://i50.tinypic.com/347emwk.png
Richardsof
10th August 2012, 05:44 AM
MAKKAL THILAGAM WITH PULAVAR PULAMAIPITHAN FAMILY .
PIC FORWARDED BY MATHI THIRU TIRUPPUR S. RAVICHANDRAN
http://i50.tinypic.com/257p00l.jpg
Richardsof
10th August 2012, 05:50 AM
http://i47.tinypic.com/bgclqg.jpg
Richardsof
10th August 2012, 05:55 AM
http://i46.tinypic.com/j7riiq.jpg
Richardsof
10th August 2012, 06:09 AM
10 TH AUGUST 1973
MAKKAL THILAGAM MGR IN PATTIKATTU PONNIAH RELEASED. 39TH YEAR REMEMBRANCE .
http://i49.tinypic.com/2nmds.png
http://i50.tinypic.com/pquf.png
http://i50.tinypic.com/hwmxvq.png
Richardsof
10th August 2012, 06:36 AM
http://i49.tinypic.com/okyyu.jpg
Richardsof
10th August 2012, 07:14 AM
KOVAI - SHANMUGA - FROM TADY 10-08-2012
DAILY 4 SHOWS
http://i46.tinypic.com/2elbaty.jpg
Thirumaran
10th August 2012, 07:27 AM
திரு. சின்ன அண்ணாமலையும் ALS பிக்சர்ஸைச் சேர்ந்த திரு. அருணாசலமும் –
‘கடவுளின் குழந்தை’ என்றொரு படத்தை, தாதாமிராசி இயக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நாகேஷுக்கு அதில் ஒரு முக்கியப் பாத்திரம். அந்தப் படத்திற்கான ஷுட்டிங் பரணி ஸ்டூடியோவில் அன்று நாகேஷுக்கு இருந்தது.
இருப்பினும் என்னை அரசு பிக்சர்ஸுக்கு அழைத்துப் போக வேண்டி, நாகேஷ், அந்தப் படத்தின் ப்ரொடக்ஷன் மேனேஜர் வண்டியெடுத்து வந்தவுடன் – தனக்கு வயிற்றுப் போக்கு என்று ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு, பிற்பகல் ஷுட்டிங்குக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு –
என்னை அரசு பிக்சர்ஸுக்கு அழைத்துச் சென்றான்!
அரசு பிக்சர்ஸ் அலுவலகத்தில் – ஒரு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு –
ஒரு ப்ளைமவுத் காரில் திரு. ப.நீலகண்டன் அவர்கள் வந்து இறங்கினார்கள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் –
உள்ளே அழைக்கப்பட்டேன். நானும் நாகேஷும் திரு. நீலகண்டன் அறைக்குள் நுழைந்தோம்.
‘உங்கள் இருவரில் யார் வாலி?’ என்று நீலகண்டன் சற்று உரத்த குரலில் வினவினார்.
‘நான்தான் சார்?’ என்று சற்று நடுக்கத்தோடு பதில் சொன்னேன்.
‘பின்னெ, இவர் யாரு?’ என்று நீலகண்டன் கேட்க –
‘இவர் என் நண்பர்..... நாகேஷ்னு பேரு; படங்களிலெல்லாம் நடிச்சுக்கிட்டிருக்காரு!’ என்று நான் பவ்வியமாக பதிலிறுத்தேன்.
உடனே நீலகண்டன் –
‘பாட்டு நீங்கதானே எழுதப் போறீங்க?’ என்று என்னை மடக்க –
‘ஆமாம் சார்!’ என்றேன்.
‘அப்ப – அவரெ வெளிய இருக்கச் சொல்லுங்க’ என்று எனக்கு ஆணையிட –
நான் சொல்லு முன்னமேயே நாகேஷ் அறையை விட்டு வெளியேறினான்!
பிறகு –
என்னைப் பற்றி, நீலகண்டன் நிதானமாக விசாரித்தார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு –
“சார்! நீங்க புதுக்கோட்டையிலேயிருந்து நடத்தின ‘கலைவாணி’ பத்திரிகையில கூட – நான் கவிதை எழுதியிருக்கேன் சார்!” என்று தெரிவித்தவுடன் –
நீலகண்டன் முகத்தில் நிலாக் காய்ந்தது!
‘அப்படியா? என்ன கவிதை அது? எந்த வருஷம்?’ என்று பரபரப்பாக என்னைக் கேட்டதும் –
நான் – புதுக்கோட்டையில் அவரை சந்தித்ததையும்; அந்தக் கவிதையின் ஒரு சில வரிகளை, நினைவில் நின்ற வரையில் சொன்னதையும் –
அற்றை நாளில், அவர் அழைத்ததன் பேரில் நான் திருச்சி தேவர் ஹாலில் அவர் எழுதி – டி.கே.எஸ். சகோதரர்கள் நடித்த ‘முள்ளில் ரோஜா’ என்னும் நாடகத்தைப் பார்த்ததையும் – அதுகுறித்து என் விமர்சனத்தை நான் அவரிடம் சொன்னதையும் –
கேட்க கேட்கப் பெரிதும் பரவசப்பட்டார். அவர் மகிழ்ச்சியாக இருந்த அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு –
நான் – என் கையோடு கொண்டு சென்றிருந்த பாட்டு நோட்டை அவரிடம் மெல்ல நீட்டினேன்.
வாங்கிப் புரட்டியவாறே, ஏதோ கவனத்தில் ஆழ்ந்தவர்போல் சற்று இறுக்கமாக இருந்தார்.
‘ஒரு Reaction– ம் இல்லாம இருக்கிறாரே; என்ன சொல்வாரோ? ஏது சொல்வாரோ?’ என்று சப்த நாடியும் சில்லிட்டுப் போய் நான் நின்று கொண்டிருக்க –
‘மோகன்...’ என்று நீலகண்டன் யாரையோ அழைக்க –
கதர் வேஷ்டி; கதர் சட்டையுடன் கண்ணாடி அணிந்த ஒருவர் உள்ளே வர – அவரிடம் எனக்குப் பாடலுக்கான சிச்சுவேஷனை சொல்லச் சொல்லிப் பணித்தார், நீலகண்டன்.
நான் – என் பார்வை பூராவும் நன்றிகளை நிரப்பியவாறு நீலகண்டன் அவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டு விட்டு, அவ் அறையை விட்டு வெளியேறினேன் – மோகனைத் தொடர்ந்து!
தன்னுடைய அறைக்குச் சென்று என்னை உடன் அமர்த்திக் கொண்டு திரு. மோகன் அவர்கள், பாட்டுக்கான காட்சியமைப்பை நிதானமாக எனக்கு விளக்கினார்கள்.
‘மிஸ்டர் வாலி! இந்தப் படத்துக்கு அறிஞர் அண்ணா அவங்கதான் திரைக்கதை வசனம் எழுதறாங்க;
எம்.ஜி.ஆர்.; ராஜசுலோசனா; எம்.ஆர்.ராதா – இப்படி Star Value நிறைஞ்ச படத்துல உங்களுக்குப் பாட்டெழுதற வாய்ப்பு வந்திருக்கு! இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கறதுலதான் – உங்க எதிர்காலமே இருக்கு!’ –
என்று என்பால் அன்பு கொண்டு பேசிய திரு. மோகன் –
‘மியூசிக் டி.ஆர்.பாப்பா அண்ணன்; அவரைப் பாத்திருக்கீங்களா?’ என்று வினவ –
‘ஒரு தடவை பாத்துப் பேசியிருக்கேன்; அதிகமாகப் பழக்கமில்லே!’ என்று தயங்கியவாறு பதிலிறுத்தேன்.
மோகன் சொன்னார்:
‘சினிமாவ்ல பாட்டு எழுதற வாய்ப்பு சுலபத்துல வாய்க்காது; ஆனா – உங்களுக்கு வாய்ச்சிருக்கு! நீங்க எழுதப் போற பாட்டெ – முதல்லே மியூசிக் டைரக்டர் ஒத்துக்கணும்; அவுரு–ட்யூனுக்கு வார்த்தை எங்கையாவது இடிக்கறதூன்னு சொன்னா, நீங்க எதிர்ப்பேச்சு பேசாமெ மாத்திக் குடுக்கணும்; அதுமாதிரி – டைரக்டர் சில கருத்துகள் வர்றணும்னு சொன்னா, அதையும் பாட்டுல கொண்டு வர நீங்க முயற்சிக்கணும்! அந்தக் கருத்துகள் உங்களுக்கு உடன்பாடா இல்லேன்னாலும், அதை எழுதிட்டு அப்புறம் பக்குவமா உங்க யோசனைகளைச் சொல்லணும்! இதெல்லாம் – எதுக்குச் சொல்றேன்னா – உங்களெ எனக்குப் பிடிச்சிருக்கு; நீங்க நல்லா வருவீங்க! நல்லா வரணும்! எனக்கு நம்பிக்கையிருக்கு!’ – இப்படி ஓர் உடன்பிறவாச் சகோதரர்போல் எனக்கு உபதேசித்தருளிய திரு.மோகன் யாரென்று சொல்ல வேண்டாமா?
கோடம்பாக்கத்தில் –
பின்னாளில், உழைக்கும் வர்க்கத்திற்காக உரத்த குரல் கொடுத்த –
திரு.மோகன் காந்திராமன்தான், மோகன் என்று நான் குறிப்பிடும் குணவான்.
திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவராகப் பெரிதும் அறியப் பெற்றவர்.
திரு.மோகன் மட்டும் என்னை அன்று ஆற்றுப்படுத்தவில்லையானால் – நான் சற்று Nervous ஆகி – வந்த வாய்ப்பை இழந்திருப்பேன்.
எவரையும் கைதூக்கி விடுகின்ற ஏரார்ந்த கருணை நெஞ்சம், மோகனுக்கு வாய்த்திருந்ததில் வியப்பில்லை; அவர் அவதரித்த குலம் அத்தகு மரபு வாய்ந்தது!
சிவப்புச்
சிந்தனையாளர்களில் –
‘ஜீவா’வை நிகர்த்தொரு மானுடன் இதுகாறும் ஜனித்ததில்லை எனலாம்.வாக்கும் வாழ்வும் ஒன்றேபோல் அமைந்த தலைவர் அவர்: அதற்குக் காரணம் – நாக்கும் நெஞ்சும் ஒன்றையே மொழிந்தன.
திரு.ப.ஜீவானந்தம் அவர்களைத் தான் பசுந்தமிழ்நாடு ‘ஜீவா ஜீவா’ என்று பாசமுடன் விளித்தது.
ஜீவா அவர்கள் நடத்தி வந்த ஓர் ஆசிரமத்திற்கு – காந்தியடிகள் ஒரு முறை விஜயம் செய்து விரிவாக உரையாடியிருக்கிறார்.
உரையாடலின் ஊடே –
‘ஜீவா! உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?’ என்று கேட்டார் மகாத்மா.
‘இந்தியாதான் என் சொத்து!’ என்று சிறு புன்னகை இதழோரம் அரும்ப, பதிலிறுத்தார் ஜீவா அவர்கள்.
அதற்கு – காந்தியடிகள்,
‘இல்லை; இல்லை; நீங்கள்தான், இந்தியாவின் சொத்து!’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லி, ஜீவாவின் மானுடத்தை உயர்த்திப் பிடித்து உச்சி முகராத குறையாகப் பாராட்டியிருக்கிறார்.
அத்தகு ஜீவாவின் சகோதரர் மகன்தான் திரு.மோகன் காந்திராமன். எனவே –
அவர் என்னொத்த எளியோரை மேலேற்றும் ஏணியாயிருந்ததில் என்ன வியப்பு?
என்னைத் தன் பேச்சால், மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு வரவழைத்து, முதல் முயற்சியாயிற்றே எனும் பதற்றமும் படபடப்பும் அறவே எனக்கு அற்றுப் போக வைத்து –
பிறகு எந்தக் காட்சிக்கு நான் பாட்டு எழுத வேண்டும் என்பதை விளக்கினார் திரு. மோகன்.
‘ஒரு சிற்றூர். அந்த ஊரில் ஒரு கணவன் மனைவி. கணவன் திரு.எம்.ஜி.ஆர்.; மனைவி, திருமதி ராஜசுலோச்சனா. கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தேர்தலில் பங்கு பெற்று வெற்றியும் பெறுகிறார். உள்ளூர் தனவந்தரான திரு. எம்.ஆர்.ராதா, அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவ – கதாநாயகன் மேல், அவன் செய்யாத ஒரு கொலைப் பழியைச் சுமத்திக் காவல்துறையிடம் ஒப்படைக்க; அங்கிருந்து எம்.ஜி.ஆர். தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்கிறார். தான் நிரபராதி என்று நிரூபிக்கும் காரியங்களில் நாள்தோறும் முயன்று பல ஆவணங்களைத் திரட்டுகிறார். இந்தநிலையில் – ஒருநாள் நள்ளிரவில் மனைவியைப் பார்க்க ஊருக்கு வருகிறார். மனைவியும் கணவனும் ஊர் எல்லைப் புறத்தே உள்ள ஓர் அருவிக்கரையில் சந்திக்கின்றனர். அங்கு – அவர்களுக்கான ஒரு டூயட் பாட்டு!’ – மோகன் சொல்லி முடித்தவுடன், ‘நாளைக்காலை பல்லவியோடு வாருங்கள்!’ என்று என்னைக் கம்பெனிக் காரிலேயே க்ளப் ஹவுஸுக்கு அனுப்பி வைத்தார்!
காங்கை மிகுந்த கடும் பாலைவனத்தில் ஓரிரு ஊசித் தூற்றல் விழுந்தால் –
மண் சிலிர்க்குமே; அதுபோல், மனம் சிலிர்த்தபடி இரவெல்லாம் கண்ணுறக்கம் விடுத்துப் பல்லவிகளாக எழுதிக் குவித்தேன். என்பொருட்டு நாகேஷும் விடிய விடிய விழித்திருந்து, என்னிடம் வேலை வாங்கினான்; என் வெற்றியைத் தன் வெற்றியாய் எண்ணும் விசும்பனைய விலாச மனம் நாகேஷுக்கு வாய்த்திருந்தது!
விடிந்தது; வானம் மட்டுமல்ல; என் வாழ்வும்தான்!
பல்லவிகளை எடுத்துக் கொண்டு அரசு பிக்சர்ஸுக்குச் சென்றேன். மோகன் வாங்கிப் பார்த்தார்.
‘அடேயப்பா! இவ்வளவு பல்லவிகளா?’ என்று புருவத்தைப் பொட்டுக்கு ஏற்றிவிட்டு –
‘எல்லாமே சிறப்பாக இருக்கிறது; டைரக்டர் வந்துறட்டும்... உக்காருங்க!’ என்று என்னை அமரச் செய்தார்.
அரை மணி கழித்து –
அதே ப்ளைமவுத்; அதே நீலகண்டன் சார்!
வந்ததும் – என்னை உள்ளே அழைத்து, மோகனிடமிருந்த பல்லவிகளை வாங்கிப் பார்த்தார் திரு. நீலகண்டன். ‘ரொம்ப நல்லாருக்கு... எல்லாப் பல்லவிகளிலுமே உங்க மெனக்கெடல் தெரியுது... நாளைக்கு – பாப்பா அண்ணன் வந்ததும், ட்யூன் பண்ணிப் பாக்கலாம்!’ என்று என்னை மெச்சிவிட்டு –
‘மோகன்! எல்லாப் பல்லவியையும் எடுத்துண்டு போயி – எம்.ஜி.ஆர். கிட்டக் காட்டிட்டு வந்துடு; கூடவே –
இவரு, ப்ராமின்கிற விஷயத்தையும் சொல்லிடு!’ என்று என் பாட்டை அடுத்த கட்டப் பரிட்சைக்கு அனுப்பினார் நீலகண்டன்.
மாலை நேரம்.
எம்.ஜி.ஆரை, ஸ்டூடியோவில் சந்தித்துப் பல்லவிகளைக் காட்டி விட்டு திரு. மோகன் அவர்கள் –
‘இந்த வாலி – ஒரு ப்ராமின்!’ என்று சொன்னதும் –
எம்.ஜி.ஆர். முகம் சுருங்கிச் சிவந்தது!
(தொடரும்)
Richardsof
10th August 2012, 08:39 AM
பட்டிக்காட்டு பொன்னையா ........
மக்கள் திலகம் நடித்த விக்ரம் தயாரிப்பில் மாபெரும் இயக்குனரான திரு ரங்கா வின் சொந்த படம் .திரை இசை திலகம் மகாதேவன் என்று பலமான கூட்டணி இருந்தும் படம் ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் போனதற்கு பல கரணங்கள் .
நீண்ட கால தயாரிப்பு , கிராம கதையில் போதிய திரைக்கதை அமையவில்லை .
, பாடல்கள் ஏமாற்றிவிட்டது ..
மக்கள் திலகம் சோவியத் பயணம் மேற்கொண்ட நேரத்தில் இப்படம் அவசர கோலத்தில் dupe வைத்து மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகளை சொதப்பிவிட்டனர் .
உலகம் சுற்றும் வாலிபன் மாபெரும் வெற்றியுடன் 14 வது வாரம் துவக்கத்தில் இப்படம் வெளியாகி நன்றாக ஓடிகொண்டிருந்த உசுவா ஒரு சில சென்டரில் நூறு நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்தது .
சென்னை , மதுரை , திருச்சி ,சேலம் , கோவை , நெல்லை ,ஈரோடு,வேலூர் ஆகிய இடங்களில் 50 நாட்கள் மேல் ஓடியது . மதுரையில் 10 வரங்கள் ஓடியது .
Richardsof
10th August 2012, 10:12 AM
[http://i47.tinypic.com/2hnt44m.png - still from nadodi -1966
http://i45.tinypic.com/2rxg07q.png
http://i49.tinypic.com/mw85rp.png
http://i45.tinypic.com/sfjgaf.jpg
Richardsof
10th August 2012, 10:50 AM
nadodi mannan still
http://i48.tinypic.com/15j3lt.png
madurai veeran still
http://i47.tinypic.com/b69ezn.png
Richardsof
10th August 2012, 10:53 AM
http://i48.tinypic.com/dlpch4.jpg
rajeshkrv
10th August 2012, 11:22 AM
திரு. சின்ன அண்ணாமலையும் ALS பிக்சர்ஸைச் சேர்ந்த திரு. அருணாசலமும் –
‘கடவுளின் குழந்தை’ என்றொரு படத்தை, தாதாமிராசி இயக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நாகேஷுக்கு அதில் ஒரு முக்கியப் பாத்திரம். அந்தப் படத்திற்கான ஷுட்டிங் பரணி ஸ்டூடியோவில் அன்று நாகேஷுக்கு இருந்தது.
இருப்பினும் என்னை அரசு பிக்சர்ஸுக்கு அழைத்துப் போக வேண்டி, நாகேஷ், அந்தப் படத்தின் ப்ரொடக்ஷன் மேனேஜர் வண்டியெடுத்து வந்தவுடன் – தனக்கு வயிற்றுப் போக்கு என்று ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு, பிற்பகல் ஷுட்டிங்குக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு –
என்னை அரசு பிக்சர்ஸுக்கு அழைத்துச் சென்றான்!
அரசு பிக்சர்ஸ் அலுவலகத்தில் – ஒரு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு –
ஒரு ப்ளைமவுத் காரில் திரு. ப.நீலகண்டன் அவர்கள் வந்து இறங்கினார்கள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் –
உள்ளே அழைக்கப்பட்டேன். நானும் நாகேஷும் திரு. நீலகண்டன் அறைக்குள் நுழைந்தோம்.
‘உங்கள் இருவரில் யார் வாலி?’ என்று நீலகண்டன் சற்று உரத்த குரலில் வினவினார்.
‘நான்தான் சார்?’ என்று சற்று நடுக்கத்தோடு பதில் சொன்னேன்.
‘பின்னெ, இவர் யாரு?’ என்று நீலகண்டன் கேட்க –
‘இவர் என் நண்பர்..... நாகேஷ்னு பேரு; படங்களிலெல்லாம் நடிச்சுக்கிட்டிருக்காரு!’ என்று நான் பவ்வியமாக பதிலிறுத்தேன்.
உடனே நீலகண்டன் –
‘பாட்டு நீங்கதானே எழுதப் போறீங்க?’ என்று என்னை மடக்க –
‘ஆமாம் சார்!’ என்றேன்.
‘அப்ப – அவரெ வெளிய இருக்கச் சொல்லுங்க’ என்று எனக்கு ஆணையிட –
நான் சொல்லு முன்னமேயே நாகேஷ் அறையை விட்டு வெளியேறினான்!
பிறகு –
என்னைப் பற்றி, நீலகண்டன் நிதானமாக விசாரித்தார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு –
“சார்! நீங்க புதுக்கோட்டையிலேயிருந்து நடத்தின ‘கலைவாணி’ பத்திரிகையில கூட – நான் கவிதை எழுதியிருக்கேன் சார்!” என்று தெரிவித்தவுடன் –
நீலகண்டன் முகத்தில் நிலாக் காய்ந்தது!
‘அப்படியா? என்ன கவிதை அது? எந்த வருஷம்?’ என்று பரபரப்பாக என்னைக் கேட்டதும் –
நான் – புதுக்கோட்டையில் அவரை சந்தித்ததையும்; அந்தக் கவிதையின் ஒரு சில வரிகளை, நினைவில் நின்ற வரையில் சொன்னதையும் –
அற்றை நாளில், அவர் அழைத்ததன் பேரில் நான் திருச்சி தேவர் ஹாலில் அவர் எழுதி – டி.கே.எஸ். சகோதரர்கள் நடித்த ‘முள்ளில் ரோஜா’ என்னும் நாடகத்தைப் பார்த்ததையும் – அதுகுறித்து என் விமர்சனத்தை நான் அவரிடம் சொன்னதையும் –
கேட்க கேட்கப் பெரிதும் பரவசப்பட்டார். அவர் மகிழ்ச்சியாக இருந்த அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு –
நான் – என் கையோடு கொண்டு சென்றிருந்த பாட்டு நோட்டை அவரிடம் மெல்ல நீட்டினேன்.
வாங்கிப் புரட்டியவாறே, ஏதோ கவனத்தில் ஆழ்ந்தவர்போல் சற்று இறுக்கமாக இருந்தார்.
‘ஒரு Reaction– ம் இல்லாம இருக்கிறாரே; என்ன சொல்வாரோ? ஏது சொல்வாரோ?’ என்று சப்த நாடியும் சில்லிட்டுப் போய் நான் நின்று கொண்டிருக்க –
‘மோகன்...’ என்று நீலகண்டன் யாரையோ அழைக்க –
கதர் வேஷ்டி; கதர் சட்டையுடன் கண்ணாடி அணிந்த ஒருவர் உள்ளே வர – அவரிடம் எனக்குப் பாடலுக்கான சிச்சுவேஷனை சொல்லச் சொல்லிப் பணித்தார், நீலகண்டன்.
நான் – என் பார்வை பூராவும் நன்றிகளை நிரப்பியவாறு நீலகண்டன் அவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டு விட்டு, அவ் அறையை விட்டு வெளியேறினேன் – மோகனைத் தொடர்ந்து!
தன்னுடைய அறைக்குச் சென்று என்னை உடன் அமர்த்திக் கொண்டு திரு. மோகன் அவர்கள், பாட்டுக்கான காட்சியமைப்பை நிதானமாக எனக்கு விளக்கினார்கள்.
‘மிஸ்டர் வாலி! இந்தப் படத்துக்கு அறிஞர் அண்ணா அவங்கதான் திரைக்கதை வசனம் எழுதறாங்க;
எம்.ஜி.ஆர்.; ராஜசுலோசனா; எம்.ஆர்.ராதா – இப்படி Star Value நிறைஞ்ச படத்துல உங்களுக்குப் பாட்டெழுதற வாய்ப்பு வந்திருக்கு! இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கறதுலதான் – உங்க எதிர்காலமே இருக்கு!’ –
என்று என்பால் அன்பு கொண்டு பேசிய திரு. மோகன் –
‘மியூசிக் டி.ஆர்.பாப்பா அண்ணன்; அவரைப் பாத்திருக்கீங்களா?’ என்று வினவ –
‘ஒரு தடவை பாத்துப் பேசியிருக்கேன்; அதிகமாகப் பழக்கமில்லே!’ என்று தயங்கியவாறு பதிலிறுத்தேன்.
மோகன் சொன்னார்:
‘சினிமாவ்ல பாட்டு எழுதற வாய்ப்பு சுலபத்துல வாய்க்காது; ஆனா – உங்களுக்கு வாய்ச்சிருக்கு! நீங்க எழுதப் போற பாட்டெ – முதல்லே மியூசிக் டைரக்டர் ஒத்துக்கணும்; அவுரு–ட்யூனுக்கு வார்த்தை எங்கையாவது இடிக்கறதூன்னு சொன்னா, நீங்க எதிர்ப்பேச்சு பேசாமெ மாத்திக் குடுக்கணும்; அதுமாதிரி – டைரக்டர் சில கருத்துகள் வர்றணும்னு சொன்னா, அதையும் பாட்டுல கொண்டு வர நீங்க முயற்சிக்கணும்! அந்தக் கருத்துகள் உங்களுக்கு உடன்பாடா இல்லேன்னாலும், அதை எழுதிட்டு அப்புறம் பக்குவமா உங்க யோசனைகளைச் சொல்லணும்! இதெல்லாம் – எதுக்குச் சொல்றேன்னா – உங்களெ எனக்குப் பிடிச்சிருக்கு; நீங்க நல்லா வருவீங்க! நல்லா வரணும்! எனக்கு நம்பிக்கையிருக்கு!’ – இப்படி ஓர் உடன்பிறவாச் சகோதரர்போல் எனக்கு உபதேசித்தருளிய திரு.மோகன் யாரென்று சொல்ல வேண்டாமா?
கோடம்பாக்கத்தில் –
பின்னாளில், உழைக்கும் வர்க்கத்திற்காக உரத்த குரல் கொடுத்த –
திரு.மோகன் காந்திராமன்தான், மோகன் என்று நான் குறிப்பிடும் குணவான்.
திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவராகப் பெரிதும் அறியப் பெற்றவர்.
திரு.மோகன் மட்டும் என்னை அன்று ஆற்றுப்படுத்தவில்லையானால் – நான் சற்று Nervous ஆகி – வந்த வாய்ப்பை இழந்திருப்பேன்.
எவரையும் கைதூக்கி விடுகின்ற ஏரார்ந்த கருணை நெஞ்சம், மோகனுக்கு வாய்த்திருந்ததில் வியப்பில்லை; அவர் அவதரித்த குலம் அத்தகு மரபு வாய்ந்தது!
சிவப்புச்
சிந்தனையாளர்களில் –
‘ஜீவா’வை நிகர்த்தொரு மானுடன் இதுகாறும் ஜனித்ததில்லை எனலாம்.வாக்கும் வாழ்வும் ஒன்றேபோல் அமைந்த தலைவர் அவர்: அதற்குக் காரணம் – நாக்கும் நெஞ்சும் ஒன்றையே மொழிந்தன.
திரு.ப.ஜீவானந்தம் அவர்களைத் தான் பசுந்தமிழ்நாடு ‘ஜீவா ஜீவா’ என்று பாசமுடன் விளித்தது.
ஜீவா அவர்கள் நடத்தி வந்த ஓர் ஆசிரமத்திற்கு – காந்தியடிகள் ஒரு முறை விஜயம் செய்து விரிவாக உரையாடியிருக்கிறார்.
உரையாடலின் ஊடே –
‘ஜீவா! உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?’ என்று கேட்டார் மகாத்மா.
‘இந்தியாதான் என் சொத்து!’ என்று சிறு புன்னகை இதழோரம் அரும்ப, பதிலிறுத்தார் ஜீவா அவர்கள்.
அதற்கு – காந்தியடிகள்,
‘இல்லை; இல்லை; நீங்கள்தான், இந்தியாவின் சொத்து!’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லி, ஜீவாவின் மானுடத்தை உயர்த்திப் பிடித்து உச்சி முகராத குறையாகப் பாராட்டியிருக்கிறார்.
அத்தகு ஜீவாவின் சகோதரர் மகன்தான் திரு.மோகன் காந்திராமன். எனவே –
அவர் என்னொத்த எளியோரை மேலேற்றும் ஏணியாயிருந்ததில் என்ன வியப்பு?
என்னைத் தன் பேச்சால், மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு வரவழைத்து, முதல் முயற்சியாயிற்றே எனும் பதற்றமும் படபடப்பும் அறவே எனக்கு அற்றுப் போக வைத்து –
பிறகு எந்தக் காட்சிக்கு நான் பாட்டு எழுத வேண்டும் என்பதை விளக்கினார் திரு. மோகன்.
‘ஒரு சிற்றூர். அந்த ஊரில் ஒரு கணவன் மனைவி. கணவன் திரு.எம்.ஜி.ஆர்.; மனைவி, திருமதி ராஜசுலோச்சனா. கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தேர்தலில் பங்கு பெற்று வெற்றியும் பெறுகிறார். உள்ளூர் தனவந்தரான திரு. எம்.ஆர்.ராதா, அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவ – கதாநாயகன் மேல், அவன் செய்யாத ஒரு கொலைப் பழியைச் சுமத்திக் காவல்துறையிடம் ஒப்படைக்க; அங்கிருந்து எம்.ஜி.ஆர். தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்கிறார். தான் நிரபராதி என்று நிரூபிக்கும் காரியங்களில் நாள்தோறும் முயன்று பல ஆவணங்களைத் திரட்டுகிறார். இந்தநிலையில் – ஒருநாள் நள்ளிரவில் மனைவியைப் பார்க்க ஊருக்கு வருகிறார். மனைவியும் கணவனும் ஊர் எல்லைப் புறத்தே உள்ள ஓர் அருவிக்கரையில் சந்திக்கின்றனர். அங்கு – அவர்களுக்கான ஒரு டூயட் பாட்டு!’ – மோகன் சொல்லி முடித்தவுடன், ‘நாளைக்காலை பல்லவியோடு வாருங்கள்!’ என்று என்னைக் கம்பெனிக் காரிலேயே க்ளப் ஹவுஸுக்கு அனுப்பி வைத்தார்!
காங்கை மிகுந்த கடும் பாலைவனத்தில் ஓரிரு ஊசித் தூற்றல் விழுந்தால் –
மண் சிலிர்க்குமே; அதுபோல், மனம் சிலிர்த்தபடி இரவெல்லாம் கண்ணுறக்கம் விடுத்துப் பல்லவிகளாக எழுதிக் குவித்தேன். என்பொருட்டு நாகேஷும் விடிய விடிய விழித்திருந்து, என்னிடம் வேலை வாங்கினான்; என் வெற்றியைத் தன் வெற்றியாய் எண்ணும் விசும்பனைய விலாச மனம் நாகேஷுக்கு வாய்த்திருந்தது!
விடிந்தது; வானம் மட்டுமல்ல; என் வாழ்வும்தான்!
பல்லவிகளை எடுத்துக் கொண்டு அரசு பிக்சர்ஸுக்குச் சென்றேன். மோகன் வாங்கிப் பார்த்தார்.
‘அடேயப்பா! இவ்வளவு பல்லவிகளா?’ என்று புருவத்தைப் பொட்டுக்கு ஏற்றிவிட்டு –
‘எல்லாமே சிறப்பாக இருக்கிறது; டைரக்டர் வந்துறட்டும்... உக்காருங்க!’ என்று என்னை அமரச் செய்தார்.
அரை மணி கழித்து –
அதே ப்ளைமவுத்; அதே நீலகண்டன் சார்!
வந்ததும் – என்னை உள்ளே அழைத்து, மோகனிடமிருந்த பல்லவிகளை வாங்கிப் பார்த்தார் திரு. நீலகண்டன். ‘ரொம்ப நல்லாருக்கு... எல்லாப் பல்லவிகளிலுமே உங்க மெனக்கெடல் தெரியுது... நாளைக்கு – பாப்பா அண்ணன் வந்ததும், ட்யூன் பண்ணிப் பாக்கலாம்!’ என்று என்னை மெச்சிவிட்டு –
‘மோகன்! எல்லாப் பல்லவியையும் எடுத்துண்டு போயி – எம்.ஜி.ஆர். கிட்டக் காட்டிட்டு வந்துடு; கூடவே –
இவரு, ப்ராமின்கிற விஷயத்தையும் சொல்லிடு!’ என்று என் பாட்டை அடுத்த கட்டப் பரிட்சைக்கு அனுப்பினார் நீலகண்டன்.
மாலை நேரம்.
எம்.ஜி.ஆரை, ஸ்டூடியோவில் சந்தித்துப் பல்லவிகளைக் காட்டி விட்டு திரு. மோகன் அவர்கள் –
‘இந்த வாலி – ஒரு ப்ராமின்!’ என்று சொன்னதும் –
எம்.ஜி.ஆர். முகம் சுருங்கிச் சிவந்தது!
(தொடரும்)
Thiru thank you. it's getting interesting
Richardsof
10th August 2012, 11:25 AM
BANGALORE - SHREE THEATRE 1969 - NAMNADU BANNER
http://i50.tinypic.com/6sqm4p.png
Richardsof
10th August 2012, 11:28 AM
BANGALORE - NEW OPERA THEATRE - 1969- ADIMAIPENN CELEBRATION - 9TH WEEK
http://i46.tinypic.com/w1a42q.png
http://i45.tinypic.com/14l6oes.png
Richardsof
10th August 2012, 11:32 AM
http://i45.tinypic.com/27zi0rp.png
Richardsof
10th August 2012, 11:34 AM
http://i48.tinypic.com/2wga9vb.png
Richardsof
10th August 2012, 11:52 AM
http://i46.tinypic.com/15nanid.png
NOTED DIRECTOR V.SANTHARAM BLESSING OUR MAKKAL THILAGAM DURING BHARATH AWARD FUNCTION.
goldstar
10th August 2012, 12:21 PM
http://www.youtube.com/watch?v=eTycSHQEe1Q&feature=related
Richardsof
10th August 2012, 03:41 PM
http://i47.tinypic.com/28tet7b.png
Richardsof
10th August 2012, 04:06 PM
http://i45.tinypic.com/30lctpz.jpg
Richardsof
10th August 2012, 04:28 PM
http://i46.tinypic.com/amuyp5.png
http://i46.tinypic.com/2qdc4rp.png
Richardsof
10th August 2012, 08:22 PM
http://i47.tinypic.com/2j27rkz.png
http://i49.tinypic.com/1jow7m.png
http://i46.tinypic.com/2lm6gj7.png
http://i47.tinypic.com/34zenmt.png
http://i48.tinypic.com/2zqfsw9.png
http://i45.tinypic.com/143ls3b.png
http://i47.tinypic.com/2qa0goh.png
Richardsof
10th August 2012, 09:11 PM
எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் இரு துருவங்களைப் போன்றவர்கள் என்று அவர்களுடைய ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால், இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். "நாங்கள் விரோதிகள் அல்ல; நண்பர்கள்" என்று இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்கள்.
சிவாஜிகணேசன் வாழ்க்கை வரலாறு "எனது சுயசரிதை" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
சென்னை தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தயாரிப்பாளராகப் பணிபுரிந்து, பின்னர் உலகக் குழந்தைகள் நல நிறுவனத்தில் ("ïனிசெப்") தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் டி.எஸ்.நாராயணசாமி, சிவாஜியுடன் பல ஆண்டுகள் பழகி, சிவாஜியிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு பதில்களைப் பெற்று இந்நூலை உருவாக்கியுள்ளார். கேள்வி_ பதில் ரூபத்தில் இந்த நூல் அமைந்துள்ளது.
சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு, சிவாஜியின் தம்பி மகன் கிரிசண்முகம் ஆகியோரைக் கொண்ட "சிவாஜி பிரபு சாரிட்டிஸ் டிரஸ்ட்" இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கல்விப் பணிக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆருடன் இருந்த நட்பு பற்றி சிவாஜிகணேசன் தன் சுய சரிதையில் மனம் விட்டுக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
சின்னப் பிள்ளையிலிருந்தே எம்.ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும், என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம். 1943_44_ல் நான் சென்டிரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள, ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.
`லட்சுமிகாந்தன்' நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர், அவரது தாயார், சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம்.ஜி.ஆர். "பசிக்கிறது" என்றாலும், "இருப்பா! கணேசன் வரட்டும்" என்பார்கள், அவருடைய அம்மா. அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.
எம்.ஜி.ஆர். அவர்கள் இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச்செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சீபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.
ஒரே காலக்கட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதே சமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
என்னை அவர் விமர்சிப்பார், அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான். பர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.
பல வருடங்கள் சென்றபின் அவர் முதல்_மந்திரியானார். அவர் பதவியிலிருந்தபோது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் அவார்டுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில், என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம்.ஜி.ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து, எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.
தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச்சிலையைத் திறந்து வைத்ததில், அவர் மகிழ்ச்சியடைந்தார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி _கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின்போதும் `நானே வந்து திறக்கிறேன்' என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?
அதுமட்டுமில்லை ஒரு சமயம் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன பிறகு, நான் இந்திரா காந்தியுடன் போய், எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு வந்தேன். அதன் பிறகு, எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். `நான் அமெரிக்கா செல்கிறேன். அங்கு வந்து என்னைப்பார்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
உடனே நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு, நேராக நியூஜெர்சி சென்று இறங்கினேன். அங்கிருந்து பால்டிமோர் புறப்பட்டோம். என்னை வரவேற்க எம்.ஜி.ஆர். பால்டிமோர் ஏர்ப்போர்ட்டில், ஐம்பது பேரை நிறுத்தியிருந்தார். அதில்தான் பழனி பெரியசாமி, டாக்டர் பி.ராமமூர்த்தி ஆகியோர் இருந்தார்கள். என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள். நேராக பால்டிமோர் மருத்துவமனைக்குச் சென்றோம். தொப்பி, கண்ணாடி இல்லாமல் ஒரு போர்வை மட்டும் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார், எம்.ஜி.ஆர்.
உள்ளே சென்றவுடன், அப்படியே படுக்கையில் இருந்து எழுந்து, கையை நீட்டினார். ராமாயணத்தில் ராமன் பரதனைச் சந்தித்தது போன்ற சம்பவம் இது. அவர் ராமச்சந்திரன், நான் பரதன். அவர் கையை நீட்டி வரவேற்றார்.
ஓடிச்சென்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதோம். அந்த நேரத்தில் அவரது மனைவி ஜானகி அம்மாவுக்கு "பைபாஸ் சர்ஜரி" செய்திருந்தார்கள். இருவரும் ஒரே ரூமில்தான் இருந்தார்கள்.
அவர்கள் கமலாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ, நான் எம்.ஜி.ஆர்ரை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ, கடைசியில் ஜானகி அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு, "என்ன சின்னப் பிள்ளைபோல் அழுதுகொண்டு இருக்கிறீர்கள். இருப்பது கொஞ்ச நேரம்தான். சிவாஜி ஊருக்குச் செல்ல வேண்டுமல்லவா? கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருங்கள்" என்று எம்.ஜி.ஆரிடம் கூறினார்கள்.
அதன்பின் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். நாட்டையும், நாட்டு மக்கள் நலத்தைப் பற்றியும் பேசினோம். "அண்ணே! தயவு செய்து என்னிடம் மட்டும் ஒரு உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு உடல் நிலை எப்படி இருக்கிறது? டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டேன். அவர் உதட்டைப் பிதுக்கி, தலையாட்டினார்.
உடல் நிலை சரியாகாதென்று முதலிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டது போலும். உடனே நான் `ஓ..." என்று அழுது கொண்டு, வெளியே ஓடிவந்துவிட்டேன். வெளியே வந்தவுடன், ராமமூர்த்தி போன்றவர்களெல்லாம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.
கமலாவும் அறையை விட்டு, வெளியே வருவதற்கு எழுந்த பொழுது, எம்.ஜி.ஆர். கமலாவின் கையைப் பிடித்து, பக்கத்தில் உட்கார வைத்தார். தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு விஷயத்தை சொல்வதற்கு முயற்சி செய்தார்.
அவரால் சரளமாக பேசமுடியவில்லை. இருந்தாலும் சில சைகைகள் காட்டி ஒரு சில வார்த்தைகளால், சொல்ல விரும்பியதை அவரால் சொல்ல முடிந்தது.
"இந்தப்பையன் என்னைப்போலவே முன்கோபக்காரன். கோபித்துக் கொள்ளும்படி விடாதே! அவன் கண்டதைச் சாப்பிடுவான். முதலில் அதிகமாக உப்புக் கொடுக்காதே. சொல்லப்போனால் அவனைப்போல ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் எனக்கும் அதிகப்பிரியம். அதை அடிக்கடி கொடுக்காதே. அதை நிறையச் சாப்பிட்டுத்தான் இந்த நிலைமை எனக்கு" என்று கமலாவிடம் சொல்லியிருக்கிறார். "கணேசனுக்குப் பிறந்த நாள் வரும்போது, வாழ்த்துச்செய்தி அனுப்புகிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.
நானும் கமலாவும் வெளியில் வந்து நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு, விமானம் ஏறி இந்தியா வந்துவிட்டோம். அவர் கூறியபடியே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினார்.
எம்.ஜி.ஆரும் ஓரளவு உடம்பு சரியாகி இந்தியா வந்துவிட்டார். இதன்பின் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஆர்.வெங்கட்ராமன் இந்திய ஜனாதிபதியாக இருந்தார். ஆர்.வி.யுடன் டெல்லியில் பல நாட்கள் இருந்திருக்கிறேன். சென்னையில் ஒரு விழாவுக்காக ஜனாதிபதி வந்திருந்தார். அப்போதைய நம்முடைய முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். நானும் சென்றிருந்தேன்.
கவர்னர் பக்கத்தில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு "இங்கே வா! பக்கத்தில் உட்கார்" என்றார். நான் தயங்கினேன். உடனே என் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக்கொண்டார்.
`ஜனாதிபதி இன்னும் பத்து நாட்களில் ஒரு மருத்துவமனையைத் திறக்க இங்கு வரப்போகிறார். அவர் வந்து சென்றவுடன், நீ வா. உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்' என்று மெதுவாக சைகைகள் காட்டி விளக்கிச் சொன்னார். வீட்டிற்கு சென்றதும் என் மனைவியிடம் அண்ணன் எம்.ஜி.ஆர். இப்படி கூறினாரென்று சொன்னேன்.
"இருவருமே சேர்ந்து அவரைப் பார்க்கப் போகலாம்" என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வருவதற்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர். அமரராகிவிட்டார். என்னிடம் பேசிய நாலைந்து நாட்களில் அவர் மறைந்து விட்டார். அதன்பின் என்ன செய்யமுடியும்? எல்லாம் இறைவன் செயல். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்தோம்.
குடும்ப துக்கம் விசாரிக்க வேண்டுமல்லவா? அதற்காக இரண்டு நாட்கள் கழித்து அவரது தோட்டத்திற்குச் சென்றேன். ஜானகி அம்மாளைப் பார்த்து துக்கம் விசாரித்தேன். அவர்கள் "என் தம்பி கணேசன் வீட்டிற்கு வரப்போகிறான். அவனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசப்போகிறேன். அவனுக்குப் பிடித்த ஆப்பம், கருவாட்டுக் குழம்பு செய்து வை' என்று உங்கள் அண்ணன் கூறினாரே. ஆனால் உங்களிடம் பேசாமலே சென்றுவிட்டாரே!" என்று வருத்தத்தோடு கூறி அழுதார்கள். என்ன செய்வது? எம்.ஜி.ஆர். வாழ்வாங்கு வாழ்ந்து கடவுளாகி விட்டார்.
அவரைப்பற்றி சொல்வதில் எனக்குப் பெருமை உண்டு. ஏனென்றால், அவர் என்னை உண்மையாக நேசித்தார். நானும் அவரை நேசித்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றில் சில கட்டங்களில் நானும் ஒரு முக்கிய பாத்திரமாக இருந்தேன். எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றும் இன்றும் என்றும் என்னுடைய மனதில் ஒரு நல்ல நண்பராக நிறைந்திருக்கிறார்."
இவ்வாறு சிவாஜி குறிப்பிட்டுள்ளார்.
http://i49.tinypic.com/nxufpu.png
pammalar
10th August 2012, 09:29 PM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 13
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
கலைவேந்தரின் 'கண்டி' பயணம்
வரலாற்று ஆவணம் : குமுதம் : 1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6343-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
pammalar
10th August 2012, 09:41 PM
'பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக...'
http://www.youtube.com/watch?v=JnZ5QR6E8PI
அன்புடன்,
பம்மலார்.
pammalar
10th August 2012, 11:16 PM
எங்களது இனிய நண்பர் திரு .வாசுதேவன் சார் .
உங்களின் பதிவு .....வார்த்தைகள் இல்லை .......
நான் ஒரு சிறு புள்ளிதான் போட்டேன் . நீங்களோ அந்த புள்ளியை வைத்து நாடோடிமன்னன் என்ற மாபெரும் வண்ண கோலத்தை படைத்து எங்கள் அனைவரையும் ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்டீர்கள் . .
தங்களின் பதிவுகளை பார்த்து மக்கள் திலகத்தின் அலை பேசி நண்பர்கள்
திரு . திருப்பூர் ரவிச்சந்திரன்- பேராசிரியர் திரு . செல்வகுமார் - சென்னை ,சிமோகா- பேராசிரியர் திரு .சிவகுமார் .பெங்களூர் -திரு .மோகன்குமார் . திரு .ரவி .திரு .ஆரணிரவி .திரு ச.ராமு . திரு ரவிச்சந்திரன் . திரு காளிதாஸ் . திரு .கஜநாத்சிங்.திரு குமார் .திரு கணேஷ் .
மக்கள் திலகத்தின் வரலாற்று ஆவணங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் தங்களுக்கும் அருமை நண்பர் திரு .பம்மலார் மற்றும் திரு ராகவேந்திரன் அவர்களுக்கும் மேற்கண்ட மதியின் நண்பர்கள் அனைவரும் இந்த திரியின் மூலம் அவர்களது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறார்கள் .
டியர் esvee சார்,
தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு எனது உயர்வான நன்றிகள்..!
மக்கள் திலகத்தின் அன்பு இதயங்கள்,
திரு. திருப்பூர் ரவிச்சந்திரன், பேராசிரியர் திரு. செல்வகுமார், பேராசிரியர் திரு. சிவகுமார், திரு. மோகன்குமார், திரு. ரவி, திரு. ஆரணி ரவி, திரு.ச. ராமு, திரு. ரவிச்சந்திரன், திரு. காளிதாஸ், திரு. கஜ்நாத்சிங், திரு.குமார், திரு.கணேஷ் ஆகியோருக்கு எனது வளமான வாழ்த்துக்கள்..!
பொன்மனச்செம்மலின் அன்புள்ளங்களான இவர்கள் ஒவ்வொருவரின் இதயபூர்வமான பாராட்டுதல்களுக்கும், எனது இதயங்கனிந்த நன்றிகளை இப்பதிவின் மூலம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தெரிவித்துக் கொள்கிறேன்..! இதனை அவர்களிடம் தாங்கள் அன்புகூர்ந்து தெரிவிக்கவும்..!
One-man armyயாக இத்திரியில் தாங்கள் தினந்தோறும் அசத்திக் கொண்டிருக்கிறீர்கள்..! பாராட்டுக்கெல்லாம் அப்பாற்பட்ட சேவை தங்களுடையது..! நமது அன்புச்சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களும் நாடோடி மன்னன், படகோட்டி போன்ற காலத்தை வென்ற கலைவேந்தர் திரைப்படங்களின் அழகிய நிழற்படங்களை அள்ளி அளித்து அருந்தொண்டாற்றி வருகிறார்..! அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!
மக்கள் திலகம் பற்றி நடிகர் திலகம் கூறிய கருத்துரையை பதிவிட்டு பிரமாதப்படுத்திவிட்டீர்கள்..! தம்பதி சமேதராக இரு திலகங்களும் இணைந்து காணப்படும் அரிய புகைப்படம், நடிகர் திலகத்தின் அன்னையார் ராஜாமணி அம்மையாரின் திருவுருவச்சிலையை, சென்னை ராமாவரம் சிவாஜி தோட்டத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது திருக்கரங்களால் திறந்துவைத்தபோது எடுக்கப்பட்டது.
'மக்கள் திலகம் குறித்த அரிய விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்' என்கின்ற உயர்ந்த லட்சியத்துடன் சென்று கொண்டிருக்கும் தங்களின் இந்த வெற்றிப்பயணம் இன்று போல் என்றும் சிறக்க இதயபூர்வமான வாழ்த்துக்கள்..!
இறையருளோடும், இரு திலகங்களின் ஆசிகளோடும் நீவீர் 'பல்லாண்டு வாழக' என மனமார வாழ்த்துகிறேன்..!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
10th August 2012, 11:44 PM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 14
பல்லாண்டு வாழ்க ! [வெளியான தேதி : 31.10.1975]
100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் திரைப்படம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/129PV-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
pammalar
11th August 2012, 12:25 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 15
கலைவேந்தர் பொக்கிஷம்
நீதிக்குத் தலைவணங்கு
கண்கொள்ளாக் காட்சிகள்
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜனவரி 1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6346-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6347-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6348-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6349-1.jpg
குறிப்பு:
"நீதிக்குத் தலைவணங்கு", 18.3.1976 வியாழனன்று வெளியானது. 100 நாட்களைக் கடந்து ஓடிய சிறந்த வெற்றிப்படமாகத் திகழ்ந்தது.
அன்புடன்,
பம்மலார்.
Richardsof
11th August 2012, 05:18 AM
http://i49.tinypic.com/35jk09f.jpg
ANANDA VIKATAN - ARTICLE -FORWARDED BY MATHI TIRUPPUR S. RAVICHANDRAN.
Richardsof
11th August 2012, 05:35 AM
இனிய நண்பர் பம்மலார் சார்
மக்கள் திலகம் அன்பு நெஞ்சங்கள் அனைவரது சார்பாக உங்களுக்கு எங்கள் நன்றிகள் .
இலங்கை பயணம் , பல்லாண்டுவாழ்க விளம்பரம் , நீதிக்கு தலை வணங்கு படகாட்சிகள் என்று அட்டகாசமாக பதிவிட்டு எங்களை எல்லாம் கடந்த காலத்திற்கே அழைத்து சென்று விட்ட உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை . தொடரட்டும் தங்களின் அசத்தல் ஆவணங்கள் ..
Richardsof
11th August 2012, 05:41 AM
http://i47.tinypic.com/2qncosi.jpg
Richardsof
11th August 2012, 05:46 AM
http://i49.tinypic.com/2m41sav.jpg
Richardsof
11th August 2012, 05:49 AM
http://i48.tinypic.com/332o2ec.png
Richardsof
11th August 2012, 05:55 AM
http://i45.tinypic.com/w8q1y9.jpg
Richardsof
11th August 2012, 05:57 AM
http://i49.tinypic.com/2aioxgh.jpg
vasudevan31355
11th August 2012, 08:03 AM
'பல்லாண்டு வாழ்க' கலக்கல் நிழற்படங்கள் எம்ஜியார் அவர்களின் தீவிர பக்தர்களுக்காக.
http://img159.imageshack.us/img159/3426/snapshot20070801144922yp8.jpg
http://img518.imageshack.us/img518/7029/snapshot20070726174741ta0.jpg
http://img528.imageshack.us/img528/3838/snapshot20070731190854oq5.jpg
http://img514.imageshack.us/img514/4007/snapshot20070801144813dy4.jpg
http://i48.tinypic.com/f5o1v.jpg
http://i46.tinypic.com/8vsxti.jpg
http://i48.tinypic.com/2gwdz43.jpg
http://i45.tinypic.com/10h688o.jpg
Richardsof
11th August 2012, 08:40 AM
பல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்
http://i45.tinypic.com/1608ry9.png
http://i45.tinypic.com/2d1wx09.jpg
படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்!
பன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.
கருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.
கொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவர்களிடம் குமுறி வெடிக்கின்றன. அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.
கைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.
ஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.
கதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி? கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றாலும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி - சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.
குரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.
குடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்கள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே! இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க!
அரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.
.
Richardsof
11th August 2012, 09:34 AM
இனிய நண்பர் வாசுதேவன் சார்
பல்லாண்டு வாழ்க பட ஆல்பம்.. எங்கோ இழுத்து சென்று விட்டது .1975 ஆண்டில் வெளியான இப்படத்தின் சாதனை களை மறக்க முடியுமா ? அருமையான பதிவு .நன்றி
a rare still
http://i47.tinypic.com/23w387a.png.
vasudevan31355
11th August 2012, 10:38 AM
esvee sir,
Excellent still. Thank u very much sir.
vasudevan31355
11th August 2012, 10:41 AM
வினோத் சார்,
தங்களுக்காக ஒரு அன்புப் பரிசு
http://electanbu.com/photo/13.jpg
Richardsof
11th August 2012, 12:20 PM
DEAR VASU SIR
PARISUKKU PARISU
http://i48.tinypic.com/350w0t4.png
http://i47.tinypic.com/96z0gi.png
http://i48.tinypic.com/8xtvv7.png
Richardsof
11th August 2012, 12:23 PM
ஒன்றே குலமென்று ...
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்
கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்
பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
Richardsof
11th August 2012, 03:57 PM
எம்.ஜி.ஆர்: இஸ்லாமிய திரைக்கதைகளும் சில முத்திரைச் செய்திகளும் – கநாசு.தாஜ்
எம்.ஜி.ஆர்.!
தமிழ் சினிமாவின் -
தமிழ்ச் சமூகத்தின் -
மிகப் பெரிய அடையாளம்!
நேற்று இன்று மட்டுமல்ல
நாளையும் அவர் தவிர்க்க முடியாத ‘ஜெயண்ட்’!
எம்.ஜி.ஆரே உயிர்த்தெழுந்து வந்து
அவரது இந்தக் கீர்த்தியை
துடைத்தெறிய முயன்றாலும் இயலாது!
*
என இளமையை
‘எம்.ஜி.ஆர் ரசிகன்’-ல் துவங்கி
சிவாஜியிடம் மயங்கி
மீண்டும், எம்.ஜி.ஆரின் ரசிகனாக
சந்தோஷம் கொண்டாடிய போது
அரசியல் என்னை திரும்பவும்
சிவாஜியிடம் சேர்த்தது!
காமராஜ் வாழ்கவென சொல்லித் திரிய ஆரம்பித்த
கல்லூரி காலத்தில்
‘சிவாஜி வாழ்க!’வென உரத்து குரல் எழுப்பி
அவரை மாதிரியே நடை நடந்து
அவரை மாதிரியே உடல் வளர்த்து
அவரை மாதிரியே பனியன் இல்லாமல் சட்டைப் போட்டு
சப்தமாகவும் பேசிப் பழகி
லாவகமாக சிகரெட் பிடித்து
வெறிபிடித்த அந்த என்
ரசிப்பின் காலம்… பதட்டம் கொண்டது.
உங்களிடம் சொல்வதற்கு என்ன
அன்றைக்கு…
எங்களின் இஸ்லாமிய வட்டத்தில்
என் வயதையொத்த வாலிபர்களில்
எவரொருவரும் காங்கிரஸ் கிடையாது.
எவரொருவரும் சிவாஜி என்று பேசுவதும் கிடையாது.
அப்படி வலிய பேசித்திரிந்த நபர் ஒருவன் உண்டென்றால்
அவன் நானாகத்தான் இருக்கும்!
இப்படி தனித்து நின்றதில்
பலரின் ஏளனத்திற்கு ஆளாகியது தனிக் கதை!
பதட்டத்திற்கு சொல்லவா வேண்டும்?
எம்.ஜி.ஆரின் பொழுதுபோக்கு படங்களையும்
சிவாஜியின் அழுகைப் படங்களையும்
பார்த்துப் பார்த்து புத்திபடித்த பின்னரே
நல்ல சினிமாவை தேடத் துவங்கினேன்.
அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்தேன்.
ஏதோவோர் வகையில் என்னை
நல்ல சினிமாவின் பக்கம்
நகர்த்த உதவியதற்காக
எம்ஜிஆர்/ சிவாஜியின் பால்…
இன்றைக்கும் நன்றி உண்டு.
சிவாஜி ரசிகனாக
என்னை நான் உயர்த்திக் கொண்ட காலத்தில்
எம்.ஜி.ஆரின் படங்களில் ஒன்றுமில்லை/
அவருக்கு நடிக்கவே தெரியாது என்கிற
எண்ணமே என்னுள் ஓங்கி இருந்தது.
சிவாஜியையும் தாண்டிப் போனபிறகு
மறந்தும் கூட
சிவாஜியின் படங்களைப் பார்ப்பதில்லை.
ஆனால்…
வாய்ப்பு கிடைக்கிற போது
இன்றைக்கும் எம்.ஜி.ஆர் படங்களை
என்னால் பொறுமையாகப் பார்க்க முடிகிறது.
மேடைத்தனம் இல்லாத
அவரது நடிப்பு நளினமாகவே இருக்கிறது.
எம்.ஜி.ஆரை பற்றிய புகழை
எத்தனைக்கு உயர்த்தி எழுதினாலும்
தடையற ஒப்புக் கொள்ளும் சமூகமாகவே
நம் சமூகம் இருக்கிறது!
அப்படியொரு அந்தஸ்து அமரர் எம்.ஜி.ஆருக்கு!
இண்டர்நெட்டில்…
ஈழத் தமிழர்கள் எம்.ஜி.ஆரின் புகழை
மண்ணில் இருந்து விண்வரை
பரப்பி வைத்து இருக்கிறார்கள்!
சில பல தகவல்களைப் படிக்கிற போது
அவர் வேறு எம்.ஜி.ஆராக இருக்குமோ?
என்கிற கேள்வியும் மேலோங்குகிறது.
ஏன் இதை குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால்…
எம்.ஜி.ஆர். குறித்து
நான் எழுதும் இந்தத் தகவல்களில்
‘மிகை’ தென்பட்டாலோ
காலம் வித்தியாசப் பட்டாலோ
அதை நீங்கள்…
என் ஞாபகப் பிசகாகவே கொள்ள வேண்டும்.
பிளீஸ்.
*
இன்றைக்கு
திடுமென நான்,
எம்.ஜி.ஆரை பற்றி எழுத முனைந்ததற்கு
காரணம் என்று எதுவுமில்லை.
பல நிலைகளைத் தொட்டு எழுதணும் என்கிற
வாழும் ஆவல் ஒன்றேதான்
என் எல்லா கட்டுரைகளுக்குமான காரணம்.
வேறு ஏதேனும் காரணம் இருக்கும் என்றால்….
அது, சாதிக்!
சாதிக் என்கிற…
எ. முஹம்மது சாதிக்.
எனக்கும் ஆபிதீனுக்கும்
நல்ல நண்பர்!
தீவிரமான தி.மு.க. அனுதாபி.
‘கலைஞர் இல்லையென்றால்
தமிழகமே இல்லை’ என்கிறவர்!
சம்பாத்திய நிமித்தமாக மட்டும்
துபாய் என்பது வேறு செய்தி.
ஊர்…. சீர்காழி!
எனக்குப் பக்கம்.
வாழ்வின் சகலவிதப் பிரச்சனைகளோடு
மஹா அரசியல்/
எதற்கும் உதவாத நவீன இலக்கியம்/
மண்டை நரம்புகளை நீவி விடும்
இந்துஸ்தானி இசையில் திளைப்பு/
உலகம் தழுவிய கலைப் படங்களின் தாகம் என்பன தவிர…
அவரை மேலும் உங்களுக்கு காட்டணும் என்றால்..
கூடுதலாக கொஞ்ம் ‘சிகப்பு!’!
இன்னும் கூடுதலாக…
அமெரிக்க எதிர்ப்பும், ஆண்டவனும்!
நாங்கள் பேச ஆரம்பித்தால்
எல்லைகள் தகரும்!
ஆனாலும், வானுக்கு மேலே போவதுமில்லை.
ஏழாவது வானத்தில்
ஆண்டவன் இருக்கிறான் என்பதால் அல்ல.
அத்தனை தூரத்திற்குப் போய் பேசுவதில்
சுவாரசியமில்லை.
இந்திய அரசியல்வாதிகள்/ சினிமாக்காரர்கள்/
விசேசமான கலைப்பட கர்த்தாக்கள்/
அவர்களின் நேற்றைய இன்றையப் படங்கள்/
மதங்கள்/
அதுகளின் புதிய வினோதச் சேட்டைகள்/
கடவுளர்கள்/ அவர்கள் குறித்த பிரஸ்தாபங்கள்/
நமது துப்பறியும் இதழ்கள்/
அதுகளின், வெந்துபோன செய்திகள்/
நவீன இலக்கியக் கிறுக்கல்கள்/
அந்த கிறுக்கல்களைக் கிறுக்கிய கிறுக்குகள்…
என்கிற அளவிலேயே எங்கள் பேச்சு வட்டமடிக்கும்.
இந்தப் பேச்சுகளை விட்டு
பால் வீதியைப் பற்றியே… பரலோகத்தைப் பற்றியே…
பேசுவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?
குறைந்த பட்சம், சொர்க்கம்/ நரகத்தைப் பற்றிய
மதிப்பீடாவது எங்களுக்கு இருக்க வேண்டாமா?
*
இந்த முறை…
நண்பர் சாதிக்
விடுமுறையில் துபாயிலிருந்து
ஊர் வந்திருந்த போது…
நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு அமைந்தது.
உலகமயமாக்கம்/
மதம் சார்ந்த அரசியல் சூழ்ச்சிகள்/
காவி தீவிரவாதம்/ பாபர் மசூதி ஸ்தலம் பற்றிய
24th Sep-2010 நாளன்று வர இருக்கும் ##
உ.பி./லக்னோ/ சிறப்பு பெஞ்சின்
தீர்ப்பு குறித்த அனுமானங்கள் போன்றவைகள்
எங்கள் பேச்சில் பிரதானப்பட்டது.
மதம் சார்ந்த அரசியல் சூழ்ச்சியை முன் நிறுத்தி
அகில இந்திய காங்கிரஸை
சாதிக் தீர திட்டியதை
மறுக்காமல் நான் ஒப்புக் கொண்டேன்.
சாதிக்கிற்கு டெல்லி அரசியலின் பின் நோக்கிய
நிகழ்வுகள் பிடிபட்டு இருக்கும் பட்சம்
காங்கிரஸை இந்த அளவுக்கு திட்டி சாடியிருக்க மாட்டார்.
இந்தியாவில்… வெளிப்படையாக
எத்தனை ஆயிரம் அரசியல் கட்சிகள் இருந்தாலும்
மறை முகமாய் இரண்டே கட்சிகள்தான் இருக்கிறது.
ஒன்று,
இந்து தீவிர வாதம் கொண்ட பழைய சமஸ்தானங்கள்,
பழைய ஜமீன்தார்கள்,
பணம் படைத்த இன்றைய தொழில் அதிபர்கள்,
மடாதிபதிகள் மற்றும் என்றும் வாழும்
பழமைவாதிகளையும் உள்ளடக்கியது.
இரண்டு,
இந்து தீவிர வாதத்தையும், மேற்கண்டவர்களையும்
பொருட்படுத்தாத
நடுத்தர வர்க்க ஏழைகள்/ இடது சாரிகள்/
மற்றும் சிறுபான்மையினர்களை உள்ளடக்கியது.
எப்படிப் பார்த்தாலும்…
இரண்டாவது கட்சியே ஆகப் பெரியது.
ஆனால்…
இந்த ஆகப் பெரியதை
முதலாம் கட்சியினர் ஆளவே அனுமதிப்பதில்லை.
அமெரிக்க ‘வால் ஸ்ட்ரீட்’(Wall Sreet) அரசியலைப் போல
இது இந்திய ‘வால் ஸ்ட்ரீட்’(Wall Sreet) அரசியல்!
முதல் கட்சியினரான ஆதிக்க வர்க்கமே
இரண்டு பெரிய கட்சிகளாகப் பிரிந்து
மக்கள் எல்லோரையும் பகடைக்காயாக்கி
பல்வேறுபட்ட காரணத்தைச் சுட்டிப் பிரித்து
ஆதிக்க வர்க்கமே மத்தியில் மாறி மாறி
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபடிக்கு இருக்கிறார்கள்.
இதற்காக இவர்கள் எத்தனை ஆயிரம் பொதுமக்களையும்
காவு வாங்க தயங்க மாட்டார்கள்.
அது மஹாத்மாவாகவே இருந்தாலும் சரி!
சாதிக்,
கொஞ்சம் முயன்று கவனிக்கும் பட்சம்…
காங்கிரஸும்/ பி.ஜே.பி.யும் வேறு வேறு அல்ல என்கிற
வாழும் உண்மை பிடிபட்டிருக்கும். பிறகு….
பேசவும் பேச்சு இருந்திருக்காது!
சாதிக்கை
இன்னொரு பக்கமாய் அழைத்துப் போய்
ஆசுவாசப்படுத்த நினைத்த நான்…
சினிமாவைப் பற்றி பேசினேன்.
பழைய சினிமா/ எம்.ஜி.ஆர்./ அவரது திறமைகள்/
இஸ்லாமியத் திரைக்கதைகளில்
அவர் தயக்கமற நடித்த தகவலுமாக
என் பேச்சு போய் முடிய,
சாதிக்கிடம் சகஜமும் தெரிந்தது.
மனதில் நிம்மதி.
விடுமுறை கழிந்தது.
சொந்தப் பிரச்சனைகளின் சகல சுமைகளோடும்
தூக்க முடியாத லக்கேஜுடனும்
துபாய் போய் சேர்ந்தார் சாதிக்.
அன்றிரவே ஆபிதீனிடமிருந்து போன்,
சாதிக் போய் சேர்ந்ததின் நலம் குறித்த
தகவலாக இருக்கும் என்கிற ஆவலில்…
‘ஹலோ…’ என்றேன்.
‘இஸ்லாமிய திரைக்கதைகளில் எம்.ஜி.ஆர்.
பற்றி எழுதுங்கள்.’ என்றார்!
வியப்பே முதலில்!
ஆபிதீன் என்னை
எழுதச் சொல்லிக் கேட்டதில் சந்தோஷமே!
எனக்கும் அதுபற்றி எழுதும் எண்ணம்
கனிந்துகொண்டுதான் இருந்தது.
அந்தத் தருணத்தில்
அவர் திடுமென கேட்பார் என நினைக்கவில்லை.
வாழ்க சாதிக்!
*
எம்.ஜி.ஆரை பற்றியதான தகவல்கள் கடலானது!
‘இஸ்லாமிய திரைக்கதைகளில் எம்.ஜி.ஆர்.’ என்பது
அதன் உட்கடல்!
எம்.ஜி.ஆரின் மத்திம காலப் படங்கள்தான்
நான் பார்த்ததில் அதிகம்!
மன்னிக்கணும்
கொஞ்சம் தாமதமாகப் பிறந்து விட்டேன்.
அது மாதிரியே…
அவரது கடைசி காலப் படங்களைப் பார்க்காது
‘டாட்டா’ காண்பித்தும் விட்டேன்.
எம்.ஜி.ஆரைத் தேடி,
எங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ தியேட்டருக்குப் போய்
நான் பார்த்த முதல் படம்… ‘வேட்டைக்காரன்’!
அதுவும்…
அது வெளியாகி ஒரு வருடம் கழித்து!
*
எம்.ஜி.ஆரின் முதல் படம் சதி லீலாவதி(1936)
கடைசிப் படம்…
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்(1977)
எம்.ஜி.ஆர் மூன்று படங்களை இயக்கி இருக்கிறார்
அவரது மிகப் பெரிய வெற்றிப் படம்
எங்க வீட்டுப் பிள்ளை(1965)
நடிகை சரோஜா தேவியும், ஜெயலலிதாவுமே
அவரோடு கதாநாயகியாக
அதிகப் படங்களில் நடித்தவர்கள்
எம்.ஜி.ஆர் அதிகம் நடித்த
படக்கம்பெனி ‘தேவர் ஃபிலிம்ஸ்’
அவர் இலங்கை-கெண்டியில் பிறந்தார்
தாய் மொழி மலையாளம்
அவர் நடித்த ‘மலைக் கள்ளன்’(1954)
முதல் தேசிய அவார்ட் பெற்ற தமிழ்ப் படம்!
‘ரிக்சாக்காரன்(1971)ல் சிறந்த நடிகருக்கான
தேசிய அவார்ட் அவருக்கு கிடைத்தது.
சென்னை மற்றும் அமெரிக்காவின்
பல்கலைக்கழகங்கள் எம்.ஜி.ஆருக்கு
கௌரவ டாக்டர் பட்டங்கள் கொடுத்து கௌரவித்தன.
அவர் மறைந்த பிறகு…
இந்திய அரசின் மிகப் பெரிய விருதான ‘பாரதரத்னா’ விருதை
அவரது புகழுக்கு
அரசு வழங்கி கௌரவித்தது!!
எம்.ஜி.ஆர். குறித்த இப்படியான தகவல்களை
மீடியாக்களின் வழியே
நீங்கள் சகஜமாக அறிய வந்திருப்பீர்கள்.
இங்கே, என் பார்வையின் வழியே
சற்று வித்தியாசமான கோணத்தில்
எம்.ஜி.ஆரை நீங்கள் பார்க்கலாம்…
முயன்றவரை.
*
1959 – வாக்கில்….
எங்கள் ஊரான சீர்காழியில்
எம்.ஜி.ஆரின் நாடகமான ‘இன்பக் கனவு’ நடந்தது.
நாடகத்தின் இடையில், ஓர் சண்டைக் காட்சி
மேடையிலேயே அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
வாழ்வில் சகலவிதமான கஷ்டங்களுக்குப் பிறகு
திரைப் படங்களில் படு அமர்க்களமாக
அவர் முன்னேறிய காலக்கட்டம் அது.
நாடோடி மன்னன்(1958) படத்தின்
வரலாறு காணாத வெற்றியில்
அவர் உச்சத்தில் இருந்த நேரம்!
அந்தச் சண்டைக் காட்சியில்
நடிகர், ‘குண்டு மணி’ என்கிற பொதியை
‘அலேக்’காக தூக்கிய போது,
அவரது கால் ‘ஸ்லிப்’பாகிவிட்டது.
சந்தோஷப்பட்ட
அவரது திரைவுலக விரோதிகள் வியக்க
குணமாகி…
முன்பை விட பல வெற்றிப் படங்களை தந்தார்!
குணமான பின் மீண்டும் சீர்காழி வந்து
தடைப்பட்ட நாடகத்தை நடத்தி தருவதாக
எங்கள் ஊர் மக்களுக்கு
வாக்கு தந்துவிட்டுப் போனாராம் எம்.ஜி.ஆர்.
அந்த வாக்கு இன்னும் அப்படியே இருக்கிறது.
எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கிய காலத்தில்
எங்கள் ஊருக்கு ஒரு தடவை வந்திருந்தார்.
மேலே நான் குறிப்பிட
நண்பர் சாதிக் வீட்டிற்கு
பக்கத்து வீட்டுப் பையனான ராஜேந்திரன்
அ.தி.மு.க.வின் அன்றைய நகரச் செயலாளர்.
எம்.ஜி.ஆர். தலைமையில் அவருக்கு திருமண ஏற்பாடானது!
ராஜேந்திரன் வசதி இல்லாத குடும்பத்து ஆசாமி.
தன் வீட்டுக்கு முன் உள்ள ரோட்டை அடைத்து
தட்டுப் பந்தல் மட்டுமே போட்டிருந்தார்.
எதையும் யோசிக்காமல் எம்.ஜி.ஆர். வரவே செய்தார்!
தலைமை தாங்க வந்திருந்த எம்.ஜி.ஆர்.
மணமக்களை வாழ்த்திப் பேசினாரே தவிர
மறந்தும்,
மீண்டும் ‘இன்பக் கனவு’ நாடகம்
நடித்து தருவது குறித்துப் பேசவே இல்லை.
ஞாபகம் செழித்த எங்க ஊர் பெரிசுகளுக்கெல்லாம்
அதில் கொஞ்சம் வருத்தம்!
எம்.ஜி.ஆருக்கு விபத்துகள் ராசி போலிருக்கிறது!
இப்படித்தான்…
1967-ம் ஆண்டு வாக்கில், நடிகர்வேள் எம்.ஆர்.ராதா
எம்.ஜி.ஆரை சுட்ட போதும் நடந்தது.
இப்பவும் சந்தோஷப்பட்ட
அவரது திரைவுலக விரோதிகள் வியக்க
குணமாகி…
முன்பை விட பல வெற்றிப் படங்களை தந்தார்!
என்றாலும்….
குண்டடிக்குப் பிறகான
எம்.ஜி.ஆரின் வெற்றிகள் கூடுதல் மதிப்பு கொண்டது!
குண்டடி பட்டதில் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட,
உடைந்த அந்தக் குரலோடு கடைசிவரை நடித்தார்!
உச்ச நிலையில் இருக்கும் எந்தவொரு நடிகனும்-
‘டப்பிங் டெக்னாலஜி’ வளர்ந்த ஒரு துறையில்-
இப்படியொரு ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டான்!
அதுவும் சினிமாவில்.
எம்.ஜி.ஆர் ‘ரிஸ்க்’ எடுத்தார்!
மக்களும் ஒப்புக் கொண்டார்கள்.
உலக சினிமா சரித்திரத்தில்
இந்த நிஜம்…
தனித்து நின்று கால காலமும் பேசும்!
தமிழ் சினிமாவில்
அதிகத்திற்கு அதிகமும்
அரச வேடமிட்ட நடிகர் எம்.ஜி.ஆர்.தான்!
இதில் குறிப்பிடத் தகுந்த தனித்துவம் என்னவென்றால்…
சேரன்/ சோழன்/ பாண்டியன்/ பல்லவன் என்று
தமிழகத்தை ஆண்ட
நான்கு மன்னர்களின் வேடங்களையும்
அவர் தரித்தார் என்பதுதான்!
தவிர, தமிழாண்ட பல குறுநில மன்னர்களின்
வேடங்களையும் தவிர்க்காமல் செய்தார்!
அத்தனையும் அவருக்கு பொருந்தியும் போனது!
ஆச்சரியமான ஆச்சரியம்!!
சிவாஜி நடித்த ‘ராஜராஜ சோழன்’ படம் வெளியான போது
எழுத்தாளர் சுஜாதா ஒரு வாரஇதழில் எழுதினார்…
‘ராஜராஜ சோழனை பார்க்கப் போய்
‘சிவாஜி’யை பார்த்து வந்தேன்’ என்று.
இப்படியான ‘பாராட்டை’யெல்லாம்
எம்.ஜி.ஆர். நடித்த அரசப் படங்கள்
அரசபுரசலாகக்கூட பூசிக்கொண்டதில்லை.
எம்.ஜி.ஆர். திராவிட கொள்கைச் சார்ந்து இருந்ததினால்
தன் படங்களின் வசனத்திலும்/ காட்சிகளிலும்/ பாடல்களிலும்
மிகுந்த கவனம் செய்பவராக இருந்தார்.
தயாரிப்பாளர்களும் அதற்கு இடம் கொடுத்தனர்.
படங்களில் சாமி கும்பிட மாட்டார்.
பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்.
சாமி கும்பிடணுமென்றால்…. தாயைத்தான் கும்பிடுவார்.
வசனங்களில் திராவிட கொள்கைகளை இடம்பெற செய்தார்.
அவரது ‘நாடோடி மன்னன்’ படத்தின் வசனத்தை
புரியவர காது கொடுத்துக் கேட்டவர்களுக்கு
அதன் மகத்துவம் புரியும்.
அன்றைக்கு ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை விரட்டிவிட்டு
திராவிட கட்சியை அந்த இடத்தில் அமர்த்த
விபரம் அறிந்த பலரும் முயன்ற நேரம்.
அவர்களின் கனவு பலித்து
தமிழகத்தில் புதிய ஆட்சி மலரக் கூடுமெனில்
அதன் சுபிட்சத்திற்கான சட்டத் திட்டங்களை
குறிப்புணர்த்துகிற மாதிரி
அப்படத்தின் வசனம் அழுத்தம் காண்பித்திருக்கும்.
அவரது சொந்தப் பட ‘லோகோ’வாக
உதயசூரியனின் ஒளியில்
தி.மு.க.வின் கொடியை ஆணும் பெண்ணும்
உயர்த்திப் பிடிப்பதாக அமைத்திருந்தார்.
அண்ணா எழுதிய
‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ -1959
‘நல்லவன் வாழ்வான்’ -1961
என்கிற இரண்டு திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
அர்த்தப்பொதிவுள்ள சமதர்ம பாடல்களை பெரும்பாலும்
எம்.ஜி.ஆரின் படங்களில்தான் கேட்க முடியும்.
தமிழில்…
பொழுதுபோக்குப் படத்திற்குரிய அம்சங்களை
இட்டு நிரப்ப இலக்கணம் வகுத்து,
தர நிர்ணயமும் செய்தவர்
எம்.ஜி.ஆர்.தான் என அழுந்தச் சொல்லலாம்.
படங்களில் அவர் வெற்றி கண்டதும்
மக்களை சென்றடைந்ததும் அதன் வழியாகத்தான்!
ஆனாலும்,
அவர் தலை சிறந்த இயக்குனர்களிடம்
மரியாதையும் கொண்டிருந்தார்.
இந்தி இயக்குனர் சாந்தாராம் மீது அவர் கொண்ட
மதிப்பும் மரியாதையும் அலாதியானது.
சாந்தாராமின்
படங்கள் அத்தனையையும்
விரும்பி பார்ப்பவராகவே இருந்தார்!
எம்.ஜி.ஆரின் ‘பல்லாண்டு வாழ்க’(1975) படம்
சாந்தாராமின் இந்திப் பட பாதிப்புதான்!
அதுமட்டுமல்ல,
அவரது ஆரம்ப காலப் படங்களில் பலவும்
ஆங்கில வழி இறக்கம்தான்.
அவர் இயக்கிய ‘நாடோடி மன்னன்’ கூட அப்படிதான்.
ஆனாலும்….
தமிழுக்கென்று/ தென்னிந்தியாவுக்கென்று
திரைப் படத்தில் அவர் செய்த தர நிர்ணயம்தான்…
இன்றைக்கும்…
நம் வெற்றிப் படங்களில் எதிரொலிக்கிறது.
இந்தவகை தர நிர்ணயம் செய்து நடித்து
வெற்றிகள் பல பெற்ற
அதே எம்.ஜி.ஆர். தான்
சில புதுமைப் படங்களிலும் நடித்து முத்திரைப் பதித்தார்.
பிற்காலத்தில் சில நடிகர்கள்
அத்தகைய கதைவடிவங்களில் நடித்திருந்தாலும்
தொடக்கம் என்னவோ…. எம்.ஜி.ஆர்.தான்!
பறக்கும் தட்டு மற்றும் வேற்று கிரக மனிதர்களை
உள்ளடக்கிய ‘கலையரசி’(1963)
இரண்டாம் உலகப்போரை
மையமாகக் கொண்ட ‘சர்வாதிகாரி’(1951)
‘பிளாஸ்டி சர்ஜரி’யை
மையமாகக் கொண்ட ‘ஆசை முகம்’(1965)
பின் நவீனத்துவ கதை அமைப்பான
‘கலங்கரை விளக்கம்’(1965)
குகை மனிதனாக ‘அடிமைப் பெண்’(1969)
இன்றைக்கு பெரிதாக பேசப்படும்
மிருகங்களிடம் அன்பு என்கிற
சீறிய சிந்தனையை ஒட்டிய… ‘நல்ல நேரம்’(1972)
போன்ற படங்களிலும் அவர் தட்டாது நடித்தார்.
அவரது இந்த ‘கார்னர்’ யோசிக்கத் தகுந்தது.
மேற்குறிப்பிட்ட, முத்திரைப் பட்டியலில்
‘ஏசு’வாக அவர் நடித்த படமும் வந்திருக்க வேண்டும்!
ஏனோ அந்தப் படம் பாதியில் நின்று போய்விட்டது.
இந்த முத்திரைப் பட்டியலில்தான்
இஸ்லாமிய திரைக்கதைகளில் எம்.ஜி.ஆர். நடித்த
படங்களும் இடம் பெறுகிறது.
1. குலோபகாவலி-1955
2. அலிபாவும் 40 திருடர்களும்-1956
3. பாக்தாத் திருடன்-1960
4. ராஜா தேசிங்கு-1960
-மேற்குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். படங்கள்…
இஸ்லாமிய திரைக்கதை கொண்ட
படங்கள் மட்டுமல்ல… எல்லா வகையிலும்
அவரை தனித்துக் காட்டியப் படங்கள்.
*
எம்.ஜி.ஆரைத் தேடி,
எங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ தியேட்டருக்குப் போய்
நான் பார்த்த முதல் படம்… ‘வேட்டைக்காரன்’ என்றும்-
அதுவும்…
அது வெளியாகி ஒரு வருடம் கழித்துதான் என்றும்
மேலே நான் குறிப்பு வைத்திருந்தேன்.
தீர்க்கமாக வாசிக்கும் வாசகர்கள்
கொஞ்சத்திற்கு குழம்பியிருக்கக் கூடும்.
‘அது என்ன ஒரு வருடம் கழித்து?’
சொல்கிறேன்.
அவசரமில்லையே?
எம்.ஜி.ஆரின் மேலுமான
செய்திகளுக்குதானே போக வேண்டும்…
நம்ம எம்.ஜி.ஆர்.தான், கோபித்துக் கொள்ள மாட்டார்!
போகலாம்; மெல்லப் போகலாம்.
அன்றைய கால கட்டத்தில்
எங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ திரையரங்கிற்கு
எந்தவொரு புதுப் படமும்
அத்தனைச் சீக்கிரம் வந்து விடாது.
குறைந்த பட்சம்,
புதுப் படங்கள் வெளியாகி
ஒண்ணு, ஒண்ணறை வருஷம் கழித்தே வரும்.
இந்தத் தாமதம் என்பது
எங்க ஊர் திரையரங்கின் எழுதப்படாத சட்டம்!
அந்த ‘ஃபோர் ஸ்டார்’ திரையரங்கம்
சில வருஷங்களுக்கு முன்
ஒரு நிலச்சுவான்தாரிடம் கை மாறிவிட்டது.
அதன் இன்றைய பெயர் ‘சிவகுமார்’
என்றாலும்…
அதன் மாசு குறையவேயில்லை.
அத்தனைக்குப் பாதுகாக்கிறார்கள்!
அதே அழுக்கேறிய திரை!
அதே இருக்கை! அதே மூட்டை!
என்றாலும் டிக்கட் விலையினை
மட்டும் சிரமம் கொண்டு மாறியிருக்கிறார்கள்!
ஏதாவது ஓர் புதுமை வேண்டுமல்லவா?
நாங்கள் அன்றைக்கு அறுபது காசுக்கு வாங்கிய டிக்கட்
இன்றைக்கு அறுபது ரூபாய்!!
எழுபதுகளில்
ஒவ்வோர் தீபாவளிக்கும் முந்தைய வாரத்தில்
அந்த ஃபோர் ஸ்டார் திரையரங்கில்
‘எம்.ஜி.ஆர். வாரம்’ அமர்க்களப்படும்!
தினைக்கும் ஒரு எம்.ஜி.ஆர். படம்
ஏழு நாளைக்கும் ஏழு படங்களை திரையிட்டு அசத்துவார்கள்!
எம்.ஜி.ஆர். சிவாஜி சேர்ந்து நடித்த
‘கூண்டுக் கிளி’(1954) படத்திற்கு கூட்டம் தாங்காது!
அந்தப் படத்திற்கான விளம்பரத்தில்…
‘ரசிகர்கள் அடித்துக் கொள்ள வேண்டா’மென குறிப்பும் இருக்கும்!’
எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் பலவற்றை
இந்த எம்.ஜி.ஆர். வாரத்தில்தான் அதிகமும் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர். நடித்த,
இஸ்லாமிய திரைக்கதை கொண்ட படங்களையும் சேர்த்து.
*
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.
சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.
எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!
அந்தத் திரைக்கதையின்
சரித்திரக் குறிப்புகள் பிழையெனச் சுட்டி
‘காயிதே மில்லத்’ அவர்களின் தலைமையில் இயங்கிய
‘இந்திய யூனியன் முஸ்லீம் லீக்’ கட்சி
அன்றைக்கு எதிர்ப்பு காட்டிய செய்தியும் உண்டு.
1001 இரவுகள்
பெர்ஷிய மொழியின் செறிவு கொண்ட இலக்கியம்!
ஈரானுக்கு பெருமைச் சேர்த்த
இலக்கிய கலைவடிவங்களில் இதுவும் ஒன்று.
அந்த செறிவு கொண்ட கதைகள்
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் ஆனபோது
உலக இலக்கிய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அன்றைய ஹாலிவுட்
அதை காசாக்கத் திட்டமிட்டது.
1001 இரவுகள்
பல திரைப்படங்களாக வெளிவரவும் துவங்கியது.
உலக மக்களின், மேலான வரவேற்பால்
அப்படங்கள் அமோக வெற்றிப் பெற்றது.
தமிழ்ப் பட முதலாளிகள்
அந்த வெற்றியை… அந்தக் காசை…
தாங்களும் அடைய விரும்ப…
எம்.ஜி.ஆரை முன் நிறுத்தி
குலோபகாவலி
அலிபாவும் 40 திருடர்களும்
பாக்தாத் திருடன் என தயாரித்தார்கள்.
எப்பவும் எங்கேயும் முதலாளிகளின் குறி தப்புவதே இல்லை.
வெற்றியையும் காசையும் அள்ளினார்கள்.
எம்.ஜி.ஆருக்கு கிட்டியது என்னவோ
வெறும் புகழ் மட்டும்தான்.
கூடுதலாக…
ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில்
நிறந்தர இடம்!
Thirumaran
11th August 2012, 08:03 PM
எனக்குள் M.G.R.! – ஒரு X – Ray தொடர் –வாலி
‘விசிட்டிங் கார்ட்!’
‘எனக்கு, ப்ராமினைப் பிடிக்காதூன்னு யார் சொன்னது? எனக்கு – என்ன எழுதறாங்கங்கறதுதான் முக்கியமே தவிர – எவர் எழுதறாங்கங்கறது முக்கியமில்லே! என் டாக்டர் – B.R.சுப்ரமணியம் யாரு? என் வக்கீல் – N.C.ராகவாச்சாரி யாரு? வித்வான் லட்சுமணன் யாரு? என் ஆடிட்டர் N.C.ராஜகோபால் யாரு?’ என்று ஒரு பட்டியல் போட்டு விட்டுப் பிறகு –
சினம் ஆறி சிரித்தபடி ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று அண்ணாவே சொல்லியிருப்பதை நினைவூட்டி –
திரு.மோகனிடமிருந்து பல்லவிகளை வாங்கிப் பார்த்து விட்டு –
‘டைரக்டர் என்ன விரும்பறாரோ, அதையே வெச்சுக்கச் சொல்லுங்க.... எல்லாமே நல்லாருக்கு!’ என்று எம்.ஜி.ஆர். பாட்டுக் காகிதத்தைத் திருப்பிக் கொடுத்தார்!
பின்னாளில் –
நான் திரு. எம்.ஜி.ஆரோடு மிக மிக நெருக்கமாகப் பழகியதை வைத்துச் சிலவற்றைப் பேச விரும்புகிறேன். பொது இடத்திலோ; தனிப்பட்ட முறையிலோ – நானறிந்த வரையில் – எம்.ஜி.ஆர். பிராமணர்களையோ கடவுளையோ, தூற்றியோ, தூஷித்தோ பேசி நான் கேட்டதில்லை. பட உலகில் அவருக்குப் பிடித்தமான இசையமைப்பாளர் திரு. ஜி.ராமனாதன். பிடித்தமான இயக்குநர் திரு.டி.ஆர்.ரகுநாத். அனைத்திற்கும் மேலாக – திரு.பாபநாசம் சிவன் அவர்கள், எம்.ஜி.ஆரின் பெரிய மாமனார்!
எம்.ஜி.ஆர். இறையச்சம் உடையவர். மூகாம்பிகையை விடவும், முருகன்பால் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் – விஞ்ஞானியாக வருகின்ற தன் வேடத்திற்கு அவர் ‘முருகன்’ என்றே பெயர் சூட்டியிருந்தார்!
ஆக –
இதையெல்லாம் வைத்து எண்ணுங்கால் – எம்.ஜி.ஆர். பார்ப்பன வெறுப்பாளருமல்ல; கடவுள் மறுப்பாளருமல்ல என்பது தெளிவாகிறது.
ஆனால் –
அதே நேரத்தில் – சாதிச் சழக்குகளை; சற்றும் அறிவுக்குப் பொருந்தாத சமயாச்சாரங்களை ஏற்காதவர் எம்.ஜி.ஆர்.; அதனால்தான் – ஏற்றத்தாழ்வும் தோற்றத்தாழ்வும் அற்ற ஒரு சமுகத்தை உருவாக்கும் முயற்சியில் ஓர் இயக்கம் கண்டு; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் தமிழ் மறையைத் தன் நாவிலும் நெஞ்சிலும் தாங்கி நடந்த அண்ணா அவர்களின் அடியொற்றி நடக்க அவாவினார் எம்.ஜி.ஆர்.!
திரு. எம்.ஜி.ஆர். ஒப்புதல் கிடைத்ததில் திரு.ப.நீலகண்டன் அவர்களுக்குப் பரம திருப்தி. ‘வாலி! நீங்க முதல் பரிட்சையில் தேறிவிட்டீர்கள்!’ என்று என் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு – நான் எழுதியவற்றுள் இருந்து ஒரு பல்லவியைத் தேர்ந்தெடுத்து மோகன் காந்திராமனிடம் கொடுத்து திரு.டி.ஆர்.பாப்பாவை வரவழைத்து இசையமைக்கச் சொன்னார்!
மறுநாள் காலை பத்து மணிக்கு Club House–க்குக் கார் வந்தது என்னை அழைத்துச் செல்ல! நாகேஷ் கையசைத்து ‘வெற்றி வாகை சூடிவாடா, ஸ்ரீரங்கம் ரங்க ராஜா’ என்று வழியனுப்பி வைத்தான்!
அரசு பிக்சர்ஸ் அலுவலக மாடியில் – திரு.பாப்பா அவர்கள் வயலினை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். அவரது உதவியாளர் திரு.உசேன் ரெட்டி அவர்கள்தான் ஆர்மோனியம் வாசித்தார். சாதாரணமாக –
எல்லா இசையமைப்பாளர்களும், ஆர்மோனியத்தில்தான் இசையமைப்பார்கள்; ஆனால், திரு. பாப்பா அவர்கள் வயலினைக் கொண்டுதான் வர்ணமெட்டு அமைப்பார்.
யாது காரணம் எனில் –
பாப்பா அவர்கள் மிகச் சிறந்த வயலின் வித்துவான். சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை; ஆலத்தூர் சகோதரர்கள் ஆகிய அற்றை நாளைய சங்கீத ஜாம்பவான்களுக்குப் பக்கம் வாசித்தவர். குதிரைவால் முடிகளால் தயாரான வில்லை, வயலின் தந்திகளின் மீது வைப்பதும் எடுப்பதும் அடுத்தவர் அறியா வண்ணம் அவ்வளவு லாவகமாக அவரது விரல், வித்தை காட்டும். பின்னாளில் திரு.பாப்பா அண்ணனுக்கு மியூசிக் அகெடமியில் ஒரு பாராட்டு விழா நடந்தபோது நான் இதுபற்றிப் பேசினேன். 'The Bow, will bow it's head before him' என்று! அப்போது, அங்கிருந்த என் நெருங்கிய நண்பரும், இசை விமர்சகருமான திரு.சுப்புடு அவர்கள் என் பேச்சை வெகுவாக ரசித்து சிரக்கம்பம் செய்தார்!
இன்னும்
இரண்டு இசையமைப்பாளர்கள் –
தங்களுடைய வர்ண மெட்டுகளை வயலின் மூலம்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் நான் பாட்டு எழுதியிருக்கிறேன். ஒருவர், திரு.குன்னக்குடி வைத்தியநாதன்; இன்னொருவர் திரு.நரசிம்மன்.
ஆனால் –
என்று இசையமைக்கத் தொடங்கி விட்டோமோ, இனி, ஆர்மோனியத்தில்தான் அதைச் செய்வது என்று – அசாத்தியப் பிடிவாதம் காட்டி, அதைப் பதினைந்தே நாளில் தன் வசப்படுத்திய மற்றொரு இசையமைப்பாளர் – சிறந்த மகாவித்வானாக, வயலின் வாசிப்போரிடையே வணங்கப் பெற்ற – திரு. ராமமூர்த்தி அவர்கள்; மெல்லிசை மன்னரில் ஒருவர் என்று சொன்னால் உங்களுக்குப் புரியும்!
ப.நீலகண்டன் தேர்ந்தெடுத்த பல்லவிக்குப் பாப்பா அண்ணன் பல வகையில், பல்வேறு ராகங்களில் தாளங்களில் இசையமைத்துப் பாடிக் காட்டினார்.
‘சிரிக்கின்றாள்! இன்று
சிரிக்கின்றாள்!
சிந்திய கண்ணீர்
மாறிய தாலே!
– இதுதான் பல்லவி.
திரு.நீலகண்டன் அவர்களும் அவரது உதவியாளர் திரு.மோகன் காந்திராமனும் ஒருமுகமாகத் தங்களுக்குப் பிடித்த வர்ணமெட்டைத் தேர்ந்தெடுத்து விட்டு –
அதற்கான சரணங்களை எழுதிக் கொண்டு நாளை வருமாறு என்னைப் பணித்தனர்!
இந்த
இடத்தில் –
திரு.மோகன் காந்திராமன் என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட பிரத்தியேக அக்கறையை நான் குறிப்பிட்டாக வேண்டும். மறுநாள் –
அவரே வந்து என்னை அழைத்துக் கொண்டு – தியாகராய நகர் பனகல் பார்க்குக்குச் சென்றார். ‘வாலி! நான் உங்க கூடவே இருக்கேன் இன்னைக்குப் பூராவும்! மத்தியான சாப்பாடு – பாண்டி பஜார் கீதா கஃபேலே! நடு நடுவே கொறிக்கறத்துக்கு நொறுக்கித் தீனி வாங்கி வரச் சொல்றேன் – டிரைவரை விட்டு! நீங்க அற்புதமாச் சரணங்களை எழுதுங்க!’
– என்று Pad–ஐயும் பேப்பர்களையும் பேனாவுடன் கொடுத்து உதவினார் திரு.மோகன் காந்திராமன்!
அந்தக் காலத்தில் –
படாதிபதிகள் பாடலாசிரியர்களை, அவர்களுக்கு விருப்பமான இடத்துக்குக் காரையும் கொடுத்து, சிலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவார்கள் – பாட்டை எழுதி எடுத்துக் கொண்டு வர. அது – ஓரிரு நாள்கள் ஆனாலும் ஒரு வாரம் ஆனாலும் முகம் சுளிக்க மாட்டார்கள்.
எனக்குத் தெரிந்து –
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எத்தனையோ பாடல்களை, பனகல் பார்க்கில்தான் எழுதியிருக்கிறார்.
சில பாடல்களை –
மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பார்க்கில் அமர்ந்தும் அவர் எழுதியதுண்டு!
‘கல்யாணப் பரிசு’ படத்தின் – இறவாப் பாடல்களை திரு.பட்டுக்கோட்டை அவர்கள் இந்த இரு பூங்காக்களிலும் அமர்ந்துதான் எழுதியிருக்கிறார்கள்.
எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? இந்த அரிய தகவல்களையெல்லாம் எனக்கு எடுத்து ஓதி – ‘ஓய்! நீரும் இன்னொரு பட்டுக்கோட்டை மாதிரி வாரும்! அதற்காகத்தான் – உம்மைப் பனகல் பார்க்குக்கு அழைத்து வந்தேன்!’ என்றார் மோகன்.
தாயினும் சாலப் பரிந்துதவிய தயாபரன் அவர்!
கை நிறையச் சரணங்களை எழுதி எடுத்துக் கொண்டு –
மறுநாள் அரசு பிக்சர்ஸுக்குப் போனேன்.
திரு.பாப்பா அண்ணன் அற்புதமாக மெட்டமைத்துப் பாட –
நானும் திரு.மோகனும், டைரக்டர் வரவுக்காகக் காத்திருக்கையில் –
ஒருவர் வந்தார்!
நல்ல உயரம்; பட்டு வேஷ்டி; பட்டு சட்டை. பாக்கெட்டில், 'Players' சிகரெட் பெட்டி!
பாப்பாவும் மோகனும் அவரை வரவேற்று அமரச் செய்து –
பல்லவியிலிருந்து தொடங்கி சரணங்கள் அனைத்தையும் அவரிடம் காட்டினர்; படித்துப் பார்த்து விட்டு, அவர் ‘ப்ரமாதம்’ என்றார்.
பாப்பா அண்ணன் அனைத்தையும் பாடிக் காண்பித்தார்.
‘யார் இவர்?’ என்ற வியப்பில் நான் இருப்பதைப் பார்த்த திரு.பாப்பா அவர்கள் –
‘வாலி! உங்களப்பத்தி டைரக்டர் நீலகண்டன் சாரிடம் சொல்லி, இங்கே வரவழைத்தவரே இவர்தான். எழுந்து வணக்கம் சொல்லுங்க!’ என்றார்.
உடனே நான் எழுந்து அவரை வணங்கினேன் –
‘ரொம்ப தேங்க்ஸ் சார்!’ என்றேன் கூச்சம் நன்றியொடு விழிகளில் குமிழியிட்டடிக்க!
அவர்தான் –
திரையுலகில் அனைவராலும் அறியப்பெற்ற திரு.மா.லட்சுமணன் அவர்கள்.
‘திருடாதே!’
‘தங்கமலை ரகசியம்!’
‘சக்கரவர்த்தித் திருமகள்!’ முதலிய ஏராளமான படங்கள், அவரது எழுத்துகளை ஏந்தி வெளிப் போந்தவை!
அண்ணாவோடு காஞ்சிபுரத்தில் சில காலம் இருந்தவர். திரு. ஏ.எல்.ஸ்ரீனிவாசன் இந்த லட்சுமணன் அவர்களைத்தான், கண்ணதாசன் ‘மாலையிட்ட மங்கை’ என்று சொந்தப் படம் எடுக்கும் போது –
தன் சார்பாகத் தன் தம்பிக்கு உடனிருந்து உதவச் சொன்னார்.
‘கடவுளின் குழந்தை’ Call sheet விஷயமாக –
ஒரு மாலைப் பொழுதில் நாகேஷைத் தேடி திரு. மா.லட்சுமணன் வந்த பொழுதுதான், தாராபுரம் சுந்தரராஜன் என் பாடல் ஒன்றை அவரிடம் பாடிக் காட்டியிருக்கிறான்.
அந்தப் பாட்டின்பால் மாளாக் காதல் கொண்ட மா.லட்சுமணன் அதை அப்படியே எழுதி வாங்கிக் கொண்டு போய் திரு. ப.நீலகண்டனிடம் படித்துக் காட்ட –
நான், அடுத்த நாளே அரசு பிக்சர்ஸுக்கு அழைக்கப்பட்டேன்!
என் விடியலுக்கு –
ஒரு விசிட்டிங் கார்டாக இருந்த அந்தப் பாட்டு, காவடிச்சிந்து பாணியில் அமைந்த ஒரு தத்துவப் பாட்டாகும்.
இதோ! அந்தப் பாட்டு....
‘நக்கிநக்கி நரகலை
நாவினிக்கத் தின்னுகின்ற
குக்கலுக்கும் ஞானம்வரக்
கூடும்; இனி –
நக்குவதே இல்லையென்று
கூறும்; அதன் –
பக்கமொரு எச்சிலிலை
பந்திவிட்டு வந்து விழ
வெட்கம் விட்டு நக்கித் தின்ன
ஓடும்; அந்த –
வேளையிலே ஞானம்விடை
கூறும்!
குக்குடம்தன் கூவலினால்
கீழ்த்திசையில் செங்கதிராம்
பொற்குடம் திறந்ததெனத்
துள்ளும்; வாய் –
பொத்தியினி நிற்பதாகச்
சொல்லும்; வான் –
செக்கரென வண்ணமுற
செங்கதிரோன் வந்து விட்டால்
வெட்கம் விட்டு வாய்வலிக்கக்
கூவும்; அந்த –
வேளையிலே ஞானம்வந்து
மேவும்!
குக்கலைப்போல் பலபேரும்
குக்குடம்போல் சிலபேரும்
மிக்கவுண்டு மாநிலத்தில்
பாரும்; இந்த –
மக்களுக்கு ஞானமெது கூறும்;
மனப் –
பக்குவம் அடைந்தவர்க்கும்
பற்றறுத்த பேர்களுக்கும்
தக்கபடி உதிப்பதுதான் ஞானம்;
வெறும் –
தர்க்கங்களைப் புரிவதுதான்
ஈனம்!’
(தொடரும்)
pammalar
12th August 2012, 02:40 AM
இனிய நண்பர் பம்மலார் சார்
மக்கள் திலகம் அன்பு நெஞ்சங்கள் அனைவரது சார்பாக உங்களுக்கு எங்கள் நன்றிகள் .
இலங்கை பயணம் , பல்லாண்டுவாழ்க விளம்பரம் , நீதிக்கு தலை வணங்கு படகாட்சிகள் என்று அட்டகாசமாக பதிவிட்டு எங்களை எல்லாம் கடந்த காலத்திற்கே அழைத்து சென்று விட்ட உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை . தொடரட்டும் தங்களின் அசத்தல் ஆவணங்கள் ..
டியர் esvee சார்,
தங்களின் உயர்ந்த பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
Richardsof
12th August 2012, 06:16 AM
http://i45.tinypic.com/2qx3mzm.jpg
Richardsof
12th August 2012, 06:22 AM
http://i47.tinypic.com/nmzude.jpg
Richardsof
12th August 2012, 06:26 AM
http://i47.tinypic.com/s3o682.jpg
Richardsof
12th August 2012, 06:30 AM
http://i48.tinypic.com/2w1s7bm.png
Richardsof
12th August 2012, 06:37 AM
http://i49.tinypic.com/2edxv74.jpg
Richardsof
12th August 2012, 07:18 AM
எம்.ஜி.ஆரை வைத்து ஏவி.எம். தயாரித்த ஒரே படம் 'அன்பே வா.' பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தை, ஏ.சி.திருலோக சந்தர் இயக்கினார். அவர் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுதான்.
1963-ம் ஆண்டு ஏவி.எம். தயாரித்த படம் 'நானும் ஒரு பெண்.' இந்த படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தில் கறுப்பு பெண்ணாக விஜயகுமாரி நடித்து இருந்தார். கதாநாயகனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்தார். கறுப்பாக பிறக்கும் பெண்களும் மனித இனம்தான். அவர்களுக்குள்ளும் நல்ல குணமுள்ள இதயம் இருக்கிறது என்கிற கருத்துக்களோடு, கறுப்புப் பெண்களுக்காக வாதாடிய படம் இது என்றே கூறலாம்.
இந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் ஏ.சி.திருலோகசந்தரின் வாழ்க்கைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. அவர் புகழ் பெற்ற இயக்குனரானார். இந்த படம் பற்றி திருலோகசந்தர் கூறியதாவது:-
'நானும் ஒரு பெண்' கறுப்பு பெண்களுக்காக வாதாடிய படம். எனக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இந்தப் படத்தில் ஜெமினி-சாவித்திரியை நடிக்க வைக்க வேண்டும் என்று ëஅனைவரும் கூறினார்கள். அந்த எதிர்பார்ப்பிலிருந்து மாறுபாடாக இருக்கவேண்டும் என்று, ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் வாதாடி எஸ்.எஸ்.ராஜேந்திரனையும், விஜயகுமாரியையும் நடிக்க வைத்தேன். அவர்கள் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டினார்கள்.
'நான் அழுதாலும் ஜனங்கள் சிரித்து விடுவார்கள்' என்று கூறிய நாகேசை, அந்தப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்தேன். பிற்காலத்தில் 'சர்வர் சுந்தரம்' மூலமாகவும்தான் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்தார்.' இவ்வாறு ஏ.சி.திருலோகசந்தர் கூறினார்.
இந்த 'நானும் ஒரு பெண்' என்ற படத்தை தெலுங்கிலும், இந்தியிலும் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். தெலுங்கு படத்தில் என்.டி.ராமராவும், இந்திப்படத்தில் தர்மேந்திராவும் நடித்தனர். 1965-ல் ஏவி.எம். தயாரித்த 'காக்கும் கரங்கள்' படத்தை ஏ.சி.திருலோகசந்தர் கதை எழுதி இயக்கினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கினார். 1966-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பின் முதல் கலர் படமான `அன்பே வா' வெளியானது.
இந்தப் படத்திற்கு, கதை எழுதி இயக்கினார், திருலோகசந்தர். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, நாகேஷ், அசோகன் ஆகியோர் நடித்தனர். சிம்லாவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஜி.ஆர். பார்முலாவுக்கு முற்றிலும் மாறுபட்ட படம் 'அன்பே வா.' மற்ற படங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பெரிய பணக்காரராக நடித்து இருப்பார்.
அவருக்கு இப்படத்தில் தாய், தந்தை, தங்கை யாரும் கிடையாது. சென்டிமெண்டை பிரதானமாக வைக்காமல் அவர் நடித்த படம். தனது அலுவல் சிக்கல்களிலிருந்து விடுபட்டு ஓய்வெடுப்பதற்காக தனது சிம்லா பங்களாவுக்கு செல்வார் எம்.ஜி.ஆர். அந்த பங்களாவை, ஏற்கனவே சரோஜாதேவிக்கு நாகேஷ் வாடகைக்கு கொடுத்து இருப்பார். இந்த நிலையில் நாகேசுக்கு பணம் கொடுத்து, சொந்த வீட்டில் சென்று தங்குவார், எம்.ஜி.ஆர். அங்கு இருக்கும் சரோஜாதேவியை காதலிப்பதுதான் கதை. மிகவும் கலகலப்பான படம். எம்.ஜி.ஆரை வைத்து ஏவி.எம். எடுத்த ஒரே படம் இதுதான்.
எம்.ஜி.ஆரை வைத்து ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய ஒரே படமும் இதுதான். `அன்பே வா' அனுபவம் பற்றி திருலோசந்தர்:- 'நான் `குமாரி' என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்தபோதே எம்.ஜி.ஆருடன் நட்பு ரீதியில் பழகினேன். அப்போது எம்.ஜி.ஆர். கழுத்தில் தங்க சங்கிலி அணிந்து கொண்டு முழுக்கை சட்டையை மடக்கி அதற்குள் ரூபாய் நோட்டை சொருகி வைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார். வந்தவுடன் தங்கசங்கிலியை கழட்டி எனது கழுத்தில் மாட்டிவிட்டு, 100 ரூபாயை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு மேக்கப் போட சொல்வார்.
சூட்டிங் முடிந்த பிறகு, நான் அவற்றை அவரிடம் திருப்பிக் கொடுப்பேன். `அன்பே வா' ஒரு வித்தியாசமான கதை. அதை எம்.ஜி.ஆரிடம் கூறியபோது சிரித்தார். 'நீங்கள் ஆட்டுவிக்க போகிறீர்கள். நாங்கள் ஆடப்போகிறோம். நீங்கள் எதைச் சொன்னாலும் செய்கிறேன்' என்றார். எம்.ஜி.ஆரின் வழக்கமான பார்முலாவுக்கு மாறுபட்ட தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். `கிராபிக்ஸ்' இல்லாத காலகட்டத்தில் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாட்டுக்கு கார்ட்டூன்களை மலர் தூவ வைத்தோம். அந்தப் பாடல் காட்சியை பிரமாண்டமாக எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். நான், 'ஒரு ரிக்ஷாவைக் கொடுங்கள் போதும்.
அக்காட்சியை எடுத்துக் காட்டுகிறேன்' என்றேன். அதுபோல, ரிக்ஷாவை வைத்தே அந்த பாடல் காட்சியை எடுத்தேன். ஒரு காலண்டரில் அச்சாகி இருந்த நட்சத்திரங்களை படம் எடுத்து, அதைத் திரையில் ஓடவிட்டோம். 'தொடர்ந்து எனக்கு படம் பண்ணுங்கள்' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார். எனக்கு எம்.ஜி.ஆர். நல்ல நண்பர். அப்போது சிவாஜியை வைத்து நிறைய படம் எடுத்துக் கொண்டு இருந்ததால், எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க நேரம் கிடைக்கவில்லை. எனவே, 'அன்பே வா' மட்டுமே இயக்க முடிந்தது.' இவ்வாறு திருலோகசந்தர் கூறினார்.
ஏவி.எம். நிறுவனத்திற்காக வீரத்திருமகன், நானும் ஒரு பெண் (தமிழ், தெலுங்கு, இந்தி), ராமு (தமிழ், தெலுங்கு), அன்பே வா, அதே கண்கள் (தமிழ், தெலுங்கு), எங்கமாமா, அன்புள்ள அப்பா ஆகிய படங்களை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார்.
Richardsof
12th August 2012, 07:27 AM
எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த 'அடிமைப்பெண்' உள்பட பல சிறந்த படங்களை கே.சங்கர் டைரக்ட் செய்தார். 1963-ம் ஆண்டு சரவணா பிலிம்ஸ்க்காக 'பணத்தோட்டம்' படத்தை கே.சங்கர் டைரக்ட் செய்தார்.
அதன்பின் 'சந்திரோதயம்' (1966), 'குடியிருந்தகோவில்' (1968), 'அடிமைப்பெண்' (1969), 'பல்லாண்டு வாழ்க' (1975) ஆகிய படங்களை இயக்கினார்.
இதில், 'குடியிருந்தகோவில்' எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்' பாடலும், பாடல் காட்சியும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
அந்தக் காட்சியில், எம்.ஜி.ஆர். மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருந்தார். ஆனால், முதலில் அந்த பாடலுக்கு நடனம் ஆட எம்.ஜி.ஆர். மறுத்து விட்டார் என்பது, பலருக்கும் தெரிந்திராத உண்மை.
இதுபற்றி சங்கர் கூறியதாவது:-
'ஆடலுடன் பாடலைக் கேட்டு.... பாடலுக்கு விஜயலட்சுமியுடன் சேர்ந்து நடனமாட வேண்டும்' என்று எம்.ஜி.ஆரிடம் கூறினேன். 'விஜயலட்சுமி நீண்டகாலம் நன்றாக நடனம் ஆடி தேர்ச்சி பெற்றவர். அவருடன் நான் எப்படி நடனம் ஆடமுடியும்?' என்று எம்.ஜி.ஆர். கோபமாக கூறிவிட்டுச் சென்றுவிட்டார். நான் அவருக்காகக் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். நடனம் ஆட சம்மதித்தார்.
நடனக் காட்சியைப் படமாக்கத் தொடங்கினோம். எம்.ஜி.ஆருக்கு எங்கிருந்துதான் அப்படியொரு வேகம் வந்ததோ தெரியவில்லை. மிகப்பிரமாதமாக ஆடினார். பாடல் காட்சியை எடுத்து முடித்தவுடன், 'இதை யாருக்கும் போட்டுக் காட்டக்கூடாது. நான்தான் முதலில் பார்ப்பேன்' என்று கூறினார்.
எடிட்டிங் முடிந்து, பாடல் காட்சியை அவரிடம் கொடுத்தேன். எம்.ஜி.ஆர், சில தயாரிப்பாளர்களையும் அழைத்து வந்து, பாடல் காட்சியை திரையிட்டுப் பார்த்தார். அக்காட்சியைப் பார்த்த பட அதிபர்கள் கை தட்டிப் பாராட்டினார்கள். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, 'என்னைக் கொடுமைப்படுத்தி ஆட வைத்தது இவர்தான்' என்று மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார். நான் மற்றொரு செய்தியையும் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரிடம் '2-வது டேக்' கேட்ட இயக்குனர்கள் கிடையாது.
'பணத்தோட்டம்'தான், எம்.ஜி.ஆர். நடிக்க நான் டைரக்ட் செய்த முதல் படம். முதல் நாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். வசனம் பேசும் ஒரு காட்சியை 7 'டேக்' கேட்டு எடுத்தேன்.
7-வது டேக் முடிந்த பிறகு, எம்.ஜி.ஆர். எனது தோளில் கை போட்டபடி 'நீங்கள் எங்கிருந்தோ வந்து, எதையோ என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள். ராமச்சந்திரன் என்ன பண்ணுவான் என்பதை கேளுங்கள். நான் கொடுக்கிறேன்' என்றார்.
நான் சிவாஜி படத்தை டைரக்ட் செய்துவிட்டு, அதே நடிப்பை எதிர்பார்த்ததைத்தான், அவர் அப்படி கூறினார்.'
இவ்வாறு சங்கர் கூறினார்.
எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த படங்கள் மூன்றுதான். அவற்றில் 'நாடோடி மன்னன்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை அவரே டைரக்ட் செய்தார். மற்றொரு படமான 'அடிமைப்பெண்'ணை டைரக்ட் செய்யும் வாய்ப்பை கே.சங்கருக்குக் கொடுத்தார்.
இதில் எம்.ஜி.ஆர். கூனனாக வருவார். உடலை வருத்திக் கொண்டு, சிறப்பாக நடித்தார். சிங்கத்துடன் அவர் மோதும் காட்சியும் நன்கு அமைந்தது. பல காட்சிகள் ஜெய்பூர் அரண்மனையிலும், பாலைவனத்திலும் படமாக்கப்பட்டன.
'அடிமைப்பெண்' அனுபவங்கள் பற்றி சங்கர் கூறியதாவது:-
'பாலைவனக்காட்சிகளை எடுக்க, 1,000 ஒட்டகங்களைப் பயன்படுத்தினோம். 'எல்லா ஒட்டகங்களும் படத்தில் தெரியுமா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'தெரியுமë' என்றேன்.
ஆயிரம் ஒட்டகங்களையும், வளைந்து வளைந்து போகச் செய்து, படம் பிடித்தோம். அக்காட்சி சிறப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர், மிகவும் மகிழ்ந்து பாராட்டினார். அரண்மனையின் சுற்றுசுவரை இடித்து, 'கிரேன்' மூலமாக 'ஆயிரம் நிலவே வா' பாடல் காட்சியைப் படமாக்கினேன்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடுவில் நிற்க சுற்றிலும் மேல் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த வைரங்கள் தெரியும்படி படம் எடுத்தோம். என் மேல் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால், அவரது சொந்தப் படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பை அளித்தார்.'
இவ்வாறு சங்கர் கூறினார்.
எம்.ஜி.ஆரை வைத்து 'கலங்கரை விளக்கம்', 'பல்லாண்டு வாழ்க', 'இன்றுபோல் என்றும் வாழ்க' உள்பட பல படங்களை சங்கர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய 6 மொழிகளில் 100 படங்களை சங்கர் டைரக்ட் செய்துள்ளார். இவற்றில் இந்தியில் மட்டும் இயக்கிய படங்கள் 10.
இளைய தலைமுறையில், கமலஹாசன், விஜயகாந்த் ஆகியோர் சங்கர் டைரக்ஷனில் நடித்து இருக்கிறார்கள். கே.சங்கரின் மனைவி பெயர் காமாட்சி அம்மாள்.
இவர்களுக்கு விஜயலட்சுமி, ருக்மணி, ராதா ஆகிய மகள்களும், சிவபிரசாத், சசீதரன், கணேசன் ஆகிய மகள்களும் உள்ளனர். மூத்த மகள் விஜயலட்சுமி எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் ராமமூர்த்தியை மணந்துள்ளார்.
கே.சங்கரின் மகன் சிவபிரசாத் 1991-ம் ஆண்டு 'கல்யாணராசி' என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். பேரன் விக்னேஷ், அரவாணிகளை வைத்து 'அச்சுப்பிழை' என்கிற படத்தை டைரக்ட் செய்து உள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் கே.சங்கர்.
Richardsof
12th August 2012, 09:05 AM
http://i50.tinypic.com/2h38tuc.jpg
Richardsof
12th August 2012, 04:33 PM
http://i46.tinypic.com/2qibjav.png
Richardsof
12th August 2012, 04:37 PM
TODAY VETRAN PRODUCER THIRU A.V.M REMEMBRANCE DAY.
http://i50.tinypic.com/11qlft2.png
Richardsof
12th August 2012, 06:15 PM
makkal thilagam in sange muzhangu 1972 , different stills.
http://i50.tinypic.com/2vums0k.pnghttp://i45.tinypic.com/mbnzip.png
http://i46.tinypic.com/34yvfdk.png
http://i45.tinypic.com/290xylw.png
http://i48.tinypic.com/i77xpl.png
http://i50.tinypic.com/b53czo.png
http://i50.tinypic.com/35mnrmc.png
http://i48.tinypic.com/2rrulqw.png
http://i46.tinypic.com/250qmhz.png
http://i47.tinypic.com/316xph3.png
Richardsof
12th August 2012, 06:34 PM
Article from net
written by mohan.
*****எம் ஜி ஆர் ரசிகர்களுக்காக ******
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.
இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.
115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!
வினாக்களுக்கான விடைகள்!
கண்டறியப்பட வேண்டும்!
எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?
இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?
கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?
இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.
இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.
இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.
எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.
1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?
நினைத்துப் பாருங்கள்!
Richardsof
12th August 2012, 07:24 PM
MATHI NANBAR THIRU TIRUPPUR S. RAVICHANDRAN FORWARDED MAKKAL THILAGAM STILLS.
http://i49.tinypic.com/2yoem1i.jpg
Richardsof
12th August 2012, 07:28 PM
http://i49.tinypic.com/2ugnp75.jpg
hattori_hanzo
12th August 2012, 11:30 PM
Post #2227 - Oorukku Uzhaippavan
MGR with a machine gun and helicopter in the background. That's new to me. I had thought machine guns came to TFI in late 70's RK-KH times. Nice find, esvee!
pammalar
12th August 2012, 11:37 PM
டியர் esvee சார்,
அசத்தல் புகைப்படங்களை தொடர்ந்து அளித்து அறுசுவை விருந்து படைத்து வருகிறீர்கள்..!
மக்கள் திலகத்தின் திரி தங்களது திருத்தொண்டினால் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது, வாழ்த்துக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
12th August 2012, 11:42 PM
கலைவேந்தரின் காதல் கீதங்கள் : 6
"வளர்வது கண்ணுக்கு தெரியல்லே கொடி வளருது"
http://www.youtube.com/watch?v=a6rGxWMTuTA
நடிப்பு : மக்கள் திலகம், புன்னகை அரசி
பின்னணி : பாடகியர் திலகம் பி.சுசீலா, பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்
இசை : திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்
படைப்பு : கவிஞர் ஆலங்குடி சோமு
திரைப்படம் : தொழிலாளி(1964)
மகாதேவ மாமாவின் மயக்கும் இசை, ஆலங்குடி சோமுவின் அள்ளும் வரிகள், எம்.ஜி.ஆர்-கே.ஆரின் cute chemistry என இதயத்தில் இன்ப அலைகளை மோதச் செய்யும் பாடல். சுசீலாவின் இனிமையுடன் டி.எம்.எஸ்ஸின் அநாயாசம் இணையும்போது இனிக்கும் கீதம் கிடைப்பதில் வியப்பென்ன..!
அன்புடன்,
பம்மலார்.
Richardsof
13th August 2012, 05:48 AM
director sridhar,s kalai koil - unforgettable movie
http://i47.tinypic.com/2e2o7ya.jpg
vasudevan31355
13th August 2012, 06:14 AM
'பணம் படைத்தவன்' 'மக்கள் திலகம்' எம்ஜியார் அவர்களின் பக்காவான நிழற்படங்கள்.
வினோத் சார், தங்களுக்காகவும், தங்கள் (நம்)அன்பு நண்பர்களுக்காகவும்
(ஒரு மெகா பதிவு)
http://i45.tinypic.com/2ngvq79.pnghttp://img717.imageshack.us/img717/4608/68203186.png
http://i46.tinypic.com/54si90.pnghttp://img218.imageshack.us/img218/1420/97884683.png
http://i48.tinypic.com/2mfbre1.pnghttp://i49.tinypic.com/2qlcrom.png
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PanamPadaithavan0002.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj
[IMG]http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PanamPadaithavan0007.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PanamPadaithavan0008.jpg
vasudevan31355
13th August 2012, 06:32 AM
http://i25.lulzimg.com/a393a4.pnghttp://i25.lulzimg.com/342c90.png
http://i25.lulzimg.com/42386f.pnghttp://i25.lulzimg.com/727c1a.png
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PanamPadaithavan0009.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PanamPadaithavan0011.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PanamPadaithavan0007.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PanamPadaithavan0010.jpg
vasudevan31355
13th August 2012, 06:44 AM
'பணம் படைத்தவன்' (super hit video songs)
"பவழக் கொடியிலே"
http://www.youtube.com/watch?v=oFLYvDYxGls&feature=player_detailpage
"கண் போன போக்கிலே"
http://www.youtube.com/watch?v=0BjXwxj6CVY&feature=player_detailpage
"மாணிக்கத் தொட்டில்"
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8C-A5-Rja1o
"அந்த மாப்பிள்ளை காதலிச்சான்"
http://www.youtube.com/watch?v=Xu76ZwB_Cd0&feature=player_detailpage
"எனக்கொரு மகன் பிறப்பான்"
http://www.youtube.com/watch?v=DGpjKCDashs&feature=player_detailpage
வித்தியாசமான பாடல். "பருவத்தில் கொஞ்சம்"
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JrE8GN5xtOk
"தன்னுயிர் பிரிவதை"
http://www.youtube.com/watch?v=SzQCuIR6Kdo&feature=player_detailpage
Richardsof
13th August 2012, 08:41 AM
http://i48.tinypic.com/2i26jhg.png
http://i49.tinypic.com/15d9xdx.png
http://i47.tinypic.com/2ebagy9.png
http://i47.tinypic.com/29wjosh.png
Richardsof
13th August 2012, 08:52 AM
http://i49.tinypic.com/eosbo.png
இனிய நண்பர் திரு வாசு சார்
47 ஆண்டுகள் முன்பு வந்த மக்கள் திலகத்தின் வெற்றி படைப்பான பணம் படைத்தவன் நிழற் படங்களையும் அணைத்து பாடல் தொகுப்பினையும் வழங்கி பணம் படைத்தவன் முழு படத்தினையும் நேரில் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை உண்டாக்கிவிட்ட உங்களுக்கு மக்கள் திலகத்தின் நண்பர்கள் அனைவரின் சார்பாக எங்களின் அன்பு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
Richardsof
13th August 2012, 09:03 AM
vasu sir
a small gift - your favourite song still from thozhilali
http://i48.tinypic.com/r7m7wo.png
and evergreen romance pair from pava mannippu
http://i50.tinypic.com/9fmatx.png
Richardsof
13th August 2012, 09:46 AM
இனிய நண்பர் திரு. பம்மலார் சார்
தங்களின் பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றி . மக்கள் திலகம் திரி இந்த அளவிற்கு செல்ல நதியின் மூவேந்தேர்கள் [ தாங்கள், ராகவேந்திரன் சார் , வாசுதேவன் சார் ] நீங்கள் கொடுத்து வரும் ஆதரவு என்பது உண்மை .
கடந்த கால நிகழ்வுகள் , விளமபரங்கள் , ஆய்வு கட்டுரைகள் ,விமர்சனங்கள் ,ஆவணங்கள் என்று நதியின் திரியில் உங்களின் பங்களிப்பு பிரமிக்க வைக்கின்றது .
நட்பு ரீதியாக நீங்கள் அனைவரும் மக்கள்திலகம் திரியில் வெவ்வேறு பதிவுகளை பதிவிட்டு எங்களை எல்லாம் இன்ப வெள்ளத்தில் மிதக்க விட்ட உங்களுக்கு நன்றி நன்றி .... நன்றி ....
எஸ்வீ
மதியின் அணைத்து நண்பர்கள் .
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.