View Full Version : MAKKAL THILAGAM MGR (Part 2)
Pages :
1
2
3
4
5
6
7
8
9
[
10]
11
12
13
14
15
16
ScottAlise
13th August 2012, 02:53 PM
Dear Esvee sir,
Nice photos and articles but K shankar directed Uzhaikum Karangal also sir.PL add that too
ScottAlise
13th August 2012, 02:54 PM
Madurai veeran small bit is in colour in Sri MGR website.PL look at that
ScottAlise
13th August 2012, 02:56 PM
Can anyone say about Gulebagavali,Pudhumai Pittan, Nallavan Vaazhvan,Sabash Mapillai, Chakravarthi thirumagal,Vikramathidiyan movies
Richardsof
13th August 2012, 03:46 PM
Can anyone say about Gulebagavali,Pudhumai Pittan, Nallavan Vaazhvan,Sabash Mapillai, Chakravarthi thirumagal,Vikramathidiyan movies
Dear Raglram sir
thanks a lot for your appreceation.
seen madurai veeran clips in sri mgr.com . very nice colour clippings.
uzhaikkum karangal directed by k. shankar . thanks for the correction .
shortly i will post about Gulebagavali,Pudhumai Pittan, Nallavan Vaazhvan,Sabash Mapillai, Chakravarthi thirumagal,Vikramathidiyan movies
with cheers
esvee
Richardsof
13th August 2012, 04:00 PM
http://i48.tinypic.com/sbsx0m.png
http://i45.tinypic.com/ncnii9.png
Richardsof
13th August 2012, 04:06 PM
http://i49.tinypic.com/11u98no.png
http://i45.tinypic.com/ncnii9.png
Richardsof
13th August 2012, 04:21 PM
http://i48.tinypic.com/11hebns.png
Raajjaa
13th August 2012, 04:25 PM
வினோத் சார்,
என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அந்த காலத்தில் ரசிகர்கள் எல்லாம் எந்த அளவுக்கு வெறித்தனமாக இருந்து இருக்கிறீர்கள் என்று உங்கள் பதிவுகளைப் பார்த்தால் தெரிகிறது.
பணப் புழக்கம் இல்லாத அந்த காலத்திலேயே தியேட்டருக்கு சென்று போட்டோ எடுத்து அதையும் இத்தனை வருடங்களாக பத்திரப்படுத்தி வைத்து....
புல்லரிக்கிறது சார்.
எம்.ஜி.ஆர் திரை உலகிலும், அரசியலிலும் வெற்றி பெற்றதில் ஆச்சர்யம் இல்லை சார்.
Raajjaa
13th August 2012, 04:28 PM
.வாசுதேவன் சாருக்கும், பம்மலாருக்கும் மிக்க நன்றி
Richardsof
13th August 2012, 04:30 PM
THANKS MR . RAJAA SIR
MORE THAN ONE MONTH GAP ... NO POSTINGS FROM YOU SIR .. HOPE YOU ARE BUSY WITH YOUR WORK.
NEED YOUR POSTINGS IN THIS BLOG .
http://i48.tinypic.com/241ldlt.png
kalnayak
13th August 2012, 04:54 PM
டியர் வினோத் சார்,
நீங்கள் பதிக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு அரிதான புதையல். ரசிகர் ஒருவர் பத்திரமாய் பாதுகாத்து வெளியிடுவதில் தெரிகிறது மக்கள் திலகத்தின் கீர்த்தி.
Raajjaa
13th August 2012, 04:55 PM
http://i45.tinypic.com/2u97dvt.jpg
Raajjaa
13th August 2012, 04:57 PM
http://i50.tinypic.com/34nno8l.jpg
Raajjaa
13th August 2012, 04:59 PM
http://i47.tinypic.com/2n6w4n7.jpg
Raajjaa
13th August 2012, 05:00 PM
http://i47.tinypic.com/2a5lt7r.jpg
balaajee
13th August 2012, 05:29 PM
http://i47.tinypic.com/2a5lt7r.jpg
Thanks a ton
Richardsof
13th August 2012, 06:31 PM
Dear Ragulram
for you .........1. chakravarthi thirumagal ...1957 movie
http://i46.tinypic.com/35bxdp4.jpg
1957 -movie
http://i47.tinypic.com/i3gx6o.jpg
1961 - movie
http://i49.tinypic.com/156pbo6.jpg
1961- movie
http://i50.tinypic.com/2u6o0ar.jpg
1962- vikkiramadithan
http://i45.tinypic.com/i1zbyc.jpg
1956- movie- gulebhavali
http://i48.tinypic.com/34gwv40.jpg
Richardsof
13th August 2012, 06:58 PM
1936 இல் வெளிவந்த ”சதிலீலாவதியி”ல் முதன் முதல் அறிமுகமான எம்.ஜி.ஆர்
கடும் உழைப்பினால் படிப்படியாக கதாநாயகனாக தரமுயந்தார். என்தங்கை,
ராஜகுமாரி, மந்திரிகுமாரி, சர்வாதிகாரி, மலைக்கள்ளன், குலேபகாவலி,
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரைவீரன், தாய்க்குப் பின் தாரம்,
சக்கரவர்த்தித் திருமகள், புதுமைப்பித்தன், மகாதேவி உட்பட பல பெரும் வெற்றிப்-
படங்களை ஏற்கனவே தந்திருந்தாலும் ஐம்பதுகளின் இறுதிப்பகுதியில் புதிய
முயற்சி ஒன்றில் துணிந்து காலடி வைத்தார். தன்னுடைய எதிர்காலத்தை
மற்றவர்கள் நிர்ணயம் செய்வதற்காக காத்திருக்காமல் அவரே அதை முடிவு செய்யத்
தீர்மானித்து ஒரு மாபெரும் திரைப்பட தயாரிப்புக்கு தன்னைத் தயார் செய்து, அதற்கான
முன் ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் என்ற நிறுவனம்
பதிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா ஒன்றும் உருவானது.
ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வி.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி என்ற மூன்று
பேரையும் எம்.ஜி.ஆர் அழைத்து "The Prisoner of Zenda", "If I Were King",
"Viva Zapata", என்ற மூன்று ஆங்கித் திரைப்படங்களையும்பார்க்க வைத்தார்.
இந்த மூன்று திரைப்படங்களில் இருந்தும் மனத்தில் தான் ஏற்கனவே உருவாக்கி-
யிருந்த சுவாரிசியமான ஒரு மூலக்கதையை அவர்களிடம் சொல்லி அதை
மெருகூட்டச் சொன்னார். பல நாட்கள் இரவு பகலாக அவர்கள் நால்வரும் அந்த
மூலக்கதையை அலசி ஆராய்ந்து, தமிழ் கலாச்சாரதிற்கு ஏற்ப அதைக் கச்சிதமாக
வடிவமைத்தார்கள். முடிவில் "நாடோடி மன்னன்" என்ற அந்த மகத்தான திரைப்-
படத்திற்கான திரைக்கதை உருவானது. தயாரிப்புப்பணியில் முழு மூச்சாக இறங்க
முடிவு செய்திருந்தபோது, ஒரு அதிர்ச்சியான செய்தி வந்தது. நடிகை பானுமதி
"The Prisoner of Zenda" என்ற ஆங்கிலப்படத்தைத் தழுவி பரணி பிக்சர்ஸ் சார்பில்
ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். இதைக்
கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், பானுமதியை நேரடியாகச் சந்தித்து தன்னுடைய திட்டம்
பற்றி சொன்னார். தான் முற்று முழுதாக "The Prisoner of Zenda" வை
தமிழாக்கம் செய்யப் போவதில்லையென்றும், பானுமதி அப்படிச் செய்வதானால் தான்
தன் தயாரிப்பை நிறுத்தி விடுவதாகவும், பானுமதியே தொடரலாம் என்றும் சொன்னார்.
ஆனால் எம்.ஜி.ஆரின் நேரடியான அணுகுமுறையையும், நல்ல பண்பையும்,
சுவாசிரியமான "நாடோடி மன்னன்" திரைக்கதையையும் கேட்ட பானுமதி அவரையே
திரைப்படத்தை தொடரச் சொன்னார். எம்.ஜி.ஆரும் நன்றியுடன் பானுமதிக்கு
புரட்சிக்காரி "மதனா" என்ற முக்கிய கதாபாத்திரத்தை அந்தப் படத்தில் கொடுத்தார்.
தன்னிடமிருந்த செல்வம் அனைத்தையும் திரட்டி பெரும் அர்பணிப்புடன் முழு
மூச்சாக அந்த திரைப்படத்தயாரிப்பில் எம்.ஜி.ஆர் இறங்கினார். இது ஒரு சூதாட்டம்
என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தும் அதைத் தன் அபரிமிதமான உழைப்பால்
வெற்றிகொள்ள முடியும் என்று நம்பினார். "நாடோடி மன்னன்" தோல்வியடைந்தால்
தான் ஒரு நாடோடியாகவோ அல்லது வெற்றி பெற்றால் தான் திரைப்படத்துறையில்
ஒரு மன்னனாகவோ தன் வாழ்க்கையைத் தொடர வேண்டியிருக்கும் என்று தன் உற்ற நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிவந்தார். ஆரம்பத்தில் மர்மயோகி வெற்றிப்-
படத்தின் இயக்குனர் கே.ராம்நாத் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால்
எதிர்பாராத விதத்தில் 1956 இல் அவர் மரணமடைந்தார். எம்.ஜி.ஆர் "நாடோடி
மன்னன்" பற்றி மனதில் என்ன நினைத்து வைத்திருந்தாரோ அதைத் திரையில்
கொண்டு வர இனி தன்னால் மட்டுமே முடியும் என்பதை நன்கு உணர்ந்து, தானே
அதை இயக்கவேண்டும் என்று செயலில் இறங்கினார். இரட்டை வேடம், தயாரிப்பு,
இயக்கம் என்று முழுமூச்சாக தன்னை மறந்து இரவு பகலாக உழைத்தார். இந்த
மகத்தான தயாரிப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட பி. நாகி ரெட்டி, எம். ஜி.ஆரை
அழைத்து, தன்னுடைய விஜயா ஸ்டுடியோவில் அமைந்திருந்த பிரமாண்டமான
செட்டுகளின் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்தார். ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனும் தானாகவே முன்வந்து, தன்னுடைய விலையுயர்ந்த
படப்பிடிப்பு கருவிகளை இரவல் தந்து எம். ஜி.ஆருக்கு உதவினார். இதற்கு முன்
ஒருபோதும் இந்த கருவிகள் ஜெமினி ஸ்டுடியோ வளாகத்தைவிட்டு வெளியே
போனதேயில்லை. அது மட்டுமல்ல மிகப் பெரிய நிறுவனங்களான ஜெமினி,
விஜயா போன்றவற்றால் மட்டுமே பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்க
முடியும் என்றிருந்த காலகட்டம் அது.
"நாடோடி மன்னன்" ஏறத்தாள அரைவாசி படமாக்கப் பட்ட நிலையில், எம்.ஜி.ஆர்
அப்போது தமிழ் திரைப்படயுலகில் மூத்த இயக்குனராக இருந்த கே.சுப்ரமணியத்தை
அணுகி மீதி படத்தை மேற்பார்வை செய்து தர வேண்டினார். அவரும் எம். ஜி.ஆரின்
வேண்டுகோளுக்கிணங்க ஒரு முழு நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
எம்.ஜி.ஆரின் இயக்குனர் திறமையை கண்டு அதிசயித்த அவர் வேறு எவருடைய
தலையீடுமில்லாமல் எம். ஜி.ஆ ஆரையே தொடரச் சொன்னார்.அது மட்டுமல்லாமல்
மீதிப் படத்தை வர்ணத்தில் எடுக்க, கே.சுப்ரமணியமே மும்பைக்கு பறந்து சென்று
படச்சுருளும் வாங்கித் தந்தார். மேலும் வெளிப்புறப்படப்பிடிப்புகளுக்கான ஒழுங்குகளும் செய்துதந்தார். மொத்த படத்தையும் எடுத்து முடிப்பதற்குள் ஒன்றன்-பின் ஒன்றாக பல இடையூறுகள் வந்தன. ஆறுமுகம், பெருமாள், கடைசியில் ஜம்பு
என்று மூன்று எடிட்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றப்பட்டார்கள். என்.எஸ்.பால-
கிருஷ்ணன் இசைமைப்பாளராக பொறுப்பெற்று மூன்று பாடல்களுக்கு இசை
அமைத்துவிட்டு விலக, எஸ்.எம்.சுப்பையா நாயுடு மீதி ஏழு பாடல்களுக்கும், படத்தின் பின்னணி இசைக்கும் பொறுப்பேற்றார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
முத்துக்கூத்தன், ஆத்மநாதன், சுரதா, லட்சுமணதாஸ் என்று ஏராளம் கவிஞர்கள்
பாட்டெழுத, கவிஞர் கண்ணதாசன், ரவீந்தர் இணைந்து உரையாடல்
எழுதியிருந்தார்கள். இங்கு கவனிக்கவேண்டியது, படத்தில் இடம்பெற்ற பத்துப்
பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் ஒன்றைக்கூட எழுதவில்லை! படப்பிடிப்பு
முடிந்தபோது ஏறத்தாள ஐந்து மணிநேரம் ஓடக்கூடிய படம் தயாராக இருந்தது. பின்னர் மிகுந்த சிரமத்துடன் மூன்றரை மணிநேரப் படமாகச் சுருக்கி 1958 இல்
"நாடோடி மன்னன்" வெளியானது. திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம்
மகத்தான வெற்றிவாகை சூடி தமிழ்திரைப்பட வரலாற்றில் புதிய வசூல்சாதனை
கண்டது. எம் ஜி ஆருக்கு மிகப் பிரமாண்டமான நட்சத்திரத் தகுதியும் உருவானது.
தொடரும்.......
Richardsof
13th August 2012, 08:41 PM
http://i48.tinypic.com/5u1cvo.png http://i50.tinypic.com/161ahow.pnghttp://i48.tinypic.com/3451kx0.pnghttp://i50.tinypic.com/2z9f5s0.jpg
oygateedat
13th August 2012, 09:03 PM
Makkal thilagam mgr fan - from tiruppur s. Ravichandran proudly entering in makkal thilagam part2 with great happiness and my sincere thanks to all my friends in this thread.
Richardsof
13th August 2012, 09:17 PM
DEAR RAVICHANDRAN SIR
WELCOME TO OUR MAKKAL THILAGAM MGR PART 2
MAKKAL THILAGAM MGR WELCOMES YOU
http://i45.tinypic.com/9pyji9.jpg
warm welcome from
esvee
RAGHAVENDRA
13th August 2012, 09:48 PM
டியர் ரவிச்சந்திரன் சார்,
வருக வருக தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள். தங்களைப் பற்றி திரு வினோத் அவர்கள் சிறப்பாகக் கூறியிருக்கிறார். தங்களுடைய பங்களிப்பில் எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம்.
அன்புடன்
ராகவேந்திரன்
oygateedat
13th August 2012, 10:08 PM
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இந்த திரியில் இணைவதில் பெரும் மகிழ்ச்சி. நாடகத்துறை, திரைப்படத்துறை, அரசியல் துறை இம் மூன்றிலும் முத்திரை பதித்த முழு நிலவு தமிழகம் போற்றும் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள். அவரின் நினைவுகள் நமக்கெல்லாம் அனுதினமும் மகிழ்ச்சியையும் அளவற்ற உற்சாகத்தையும் தருகின்றது. இந்த திரியில் இதுவரை மக்கள் திலகம் பற்றிய பல நல்ல செய்திகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
kalnayak
13th August 2012, 10:28 PM
வருக, வருக. மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்பே வருக. வருக. பாரத ரத்னா ராமச்சந்திரனின் ரசிக தொண்டரே, ரவிச்சந்திரனே வருக. வருக. தங்கள் வரலாற்று நினைவுகளை பகிர்ந்து எல்லோரும் களிப்புற்றிருக்க செய்யவே வருக. வருக.
Richardsof
14th August 2012, 05:53 AM
[இனிய நண்பர் திரு கார்த்திக் சார்
தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றி .
Richardsof
14th August 2012, 05:55 AM
இனிய நண்பர் திரு கல்நாயக் சார்
தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றி .
oygateedat
14th August 2012, 06:17 AM
மக்கள் திலகத்தின் தீவிர பக்தனான என்னை வரவேற்ற இத்திரியின் எழுத்து வேந்தரான திரு ராகவேந்திரன் அவர்களுக்கும் திரு கல்நாயக் அவர்களுக்கும் எனது வணக்கங்கள்
.மக்கள் திலகத்தின் திரியை நான் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து கொண்டு வருகின்றேன் . அதே போல் நடிகர் திலகத்தின் திரியையும் தொடர்ந்து படித்துகொண்டு வருகின்றேன் .
என்னை வியக்க வைத்த மக்கள் திலகத்தின் திரைப்பட அசத்தல் ஆவணங்கள் , கடந்த கால நிகழ்வுகள் ,விளம்பரங்கள் , சாதனை தொகுப்ப்கள் , கட்டுரைகள் , ஆய்வுகள் , என பல்வேறு கோணங்களில் , பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஆவன திலகம் திரு .பம்மலார்,
நடமாடும் பதிவேந்தன் திரு வாசுதேவன் ,திரு ராஜா , திரு வினோத் , திரு, திருமாறன் , மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி .
என்னால் இயன்ற வரை மக்கள் திலகத்தின் திரைப்பட அனுபவங்களையும் , மனித நேய பண்புகளையும், நடிகர் திலகத்தின் நட்பு பெருமைகளையும் உங்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பதிவுகளை பகிர்ந்து கொள்கின்றேன் .
அன்புடன்
ரவிச்சந்திரன் ,
Richardsof
14th August 2012, 06:58 AM
மக்கள் திலகத்தின் தீவிர பக்தனான என்னை வரவேற்ற இத்திரியின் எழுத்து வேந்தரான திரு ராகவேந்திரன் அவர்களுக்கும் திரு கல்நாயக் அவர்களுக்கும் எனது வணக்கங்கள்
.மக்கள் திலகத்தின் திரியை நான் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து கொண்டு வருகின்றேன் . அதே போல் நடிகர் திலகத்தின் திரியையும் தொடர்ந்து படித்துகொண்டு வருகின்றேன் .
என்னை வியக்க வைத்த மக்கள் திலகத்தின் திரைப்பட அசத்தல் ஆவணங்கள் , கடந்த கால நிகழ்வுகள் ,விளம்பரங்கள் , சாதனை தொகுப்ப்கள் , கட்டுரைகள் , ஆய்வுகள் , என பல்வேறு கோணங்களில் , பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஆவன திலகம் திரு .பம்மலார்,
நடமாடும் பதிவேந்தன் திரு வாசுதேவன் ,திரு ராஜா , திரு வினோத் , திரு, திருமாறன் , மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி .
என்னால் இயன்ற வரை மக்கள் திலகத்தின் திரைப்பட அனுபவங்களையும் , மனித நேய பண்புகளையும், நடிகர் திலகத்தின் நட்பு பெருமைகளையும் உங்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பதிவுகளை பகிர்ந்து கொள்கின்றேன் .
அன்புடன்
ரவிச்சந்திரன் ,
http://i48.tinypic.com/33eo6yo.jpg
vasudevan31355
14th August 2012, 07:22 AM
நல்வருகை திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் சார்,
http://i597.photobucket.com/albums/tt54/ronniedio2/welcome.gif
http://cineidentity.com/wp-content/uploads/2011/09/SHIVAJI-GANESAN-MGR.jpg
வருக! வருக.
தங்கள் பொன்னான பதிவுகளைத் தருக! தருக.
வினோத் சாரின் தோளோடு தோள் நின்று சாதனைகள் பல புரிக.
மனமார வரவேற்று வாழ்த்தும்
நெய்வேலி வாசுதேவன்.
ScottAlise
14th August 2012, 08:29 AM
THANK you ESVEE sir. Waiting for those movies stories. I have watched Vathiyar's many movies but missed certain movies mainly befmittore Nadodi Mannan, thai magaluku kathttiya thali, thali bakyam, ther thiruvizha,kadhal vaaganam,anna mitta kai,enkadamai, paasam .If you could discuss the story it would be helpful
Richardsof
14th August 2012, 09:45 AM
kalangarai vilakkam 1965
http://i49.tinypic.com/24ky646.png
http://i48.tinypic.com/1rw9pz.jpg
http://i45.tinypic.com/17tqhc.png
goldstar
14th August 2012, 09:54 AM
THANK you ESVEE sir. Waiting for those movies stories. I have watched Vathiyar's many movies but missed certain movies mainly befmittore Nadodi Mannan, thai magaluku kathttiya thali, thali bakyam, ther thiruvizha,kadhal vaaganam,anna mitta kai,enkadamai, paasam .If you could discuss the story it would be helpful
Hi Ragulram,
Following movies are available in YouTube
ther thiruvizha,
kadhal vaaganam,
enkadamai,
paasam
Cheers,
Sathish
Richardsof
14th August 2012, 09:59 AM
article from net
MGR 20 ஆம் நூற்றாண்டு கண்ட உத்தம தலைவன்
கைபட்ட இடத்தைக் கழுவ மனமில்லை…
பொன்மனச் செம்மலால் சாப விமோசனம் பெற்றது மதுரை மாவட்டம். அன்று வள்ளல் மட்டும் அரசியல் களத்தில் வெற்றி வாகை சூடாதிருந்திருப்பாரே யானால், ‘அத்திப்பட்டி கிராமம் மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் தண்ணீர் என்பது உலக அதிசயங்களில் ஒன்றாகி இருக்கும். அன்று மட்டும் வெற்றி சூடாதிருந்திருப்பாரேயானால் நெல்லுச்சோறு என்பது தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் சாப்பிடப்படும். அதிசய உணவாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும். முப்பிறவி கண்ட நாயகன் மட்டும் முதல்வராக முடி சூட்டப்படாமல் இருந்திருந்தால், அந்தப் பாமர மக்களின் பிள்ளைகள் சத்துணவு கிடைக்காமல் மழைக்காக கூட, பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியிருக்கமாட்டார்கள். அதுவரை வறட்சி, நிவாரணப் பணி வேலைகள் மட்டுமே நடந்து வந்த தமிழகத்தில் வள்ளல் முதல்வராக வாகை சூடியவுடன் தான் வெள்ள நிவாரணப் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படி தெற்குத் திசையையே மாற்றியமைத்த வள்ளல், அந்தக் கரிசல் பூமிக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்தச் செய்தி தென்மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவி, அரசு விடுமுறை போல், அத்தனை பாட்டாளி விவசாயப் பெருங்குடி மக்களும், அவரவர் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு, வள்ளல் எந்த வழியில் வருவார் என்று திக்கு நோக்கி, கண்கள் பூக்க காத்துக் கிடக்கிறார்கள்.
அன்று வீரபாண்டித் திருவிழா வேறு, வள்ளலின் வருகைக்காக வானம் கூட , மழை தூவி வரவேற்கிறது. வள்ளலின் கார் தேனியில் இருந்து கிளம்பி, முத்துத் தேவன்பட்டியைத் தாண்டி வீரபாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, என்கிற விபரம் திருவிழாக்கூட்டத்திற்குத் தெரிந்து விடுகிறது,. வீரபாண்டி தேர், வீதி உலாவர புறப்படத் தயாராகிறது. ஆனால் அந்தக் கண நேரத்தில், ஆடு வெட்டி பொங்கல் வைக்க வந்த லட்சத்தற்கும் மேற்பட்ட அத்தனை பக்தர்களும், அந்த இடத்தில் இல்லை, கோயில் வளாகமே வெறிச்சோடிக் கிடக்கிறது. குழம்பிப்போன தர்மகர்த்தாக்கள், கோயில் வளாகத்திறகு வெளியே வந்து பார்க்கிறார்கள். வீரபாண்டித் தேரைச் சுற்றி நிற்க வேண்டிய பக்தர்களெல்லாம் ரோட்டில், வள்ளலின் காரைச் சுற்றி வணங்கி நின்ற காட்சியைப் பார்க்கிறார்கள். வீரபாண்டிக் கோயிலே இடம்பெயர்ந்து போன அதிசயம், அங்கே நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால் வள்ளல் மட்டும், தான் தவறிழைத்துவிட்டதாக வருத்தப்படுகிறார். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் ,தான் வேறு வழியாக வந்திருக்கலாம் என்று திரும்பத் திரும்ப விசனப்படுகிறார். அந்தப் பாசமிகு பக்தர்களிடம் இருந்து எப்படி விடைபெறுவது? காவல்துறை தன் முழு பலத்தையும் பிரயோகித்து, வள்ளல் செல்ல வழியமைக்கப் பார்க்கிறார்கள். முடியவில்லை. அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வள்ளல் ஒரு முடிவுக்கு வந்து, தான் வந்த வேன் மீது ஏறி, “வீரபாண்டித் திருவிழா என்னால் பாதிக்கப்பட்டு விட்டது, என்ற பழி என் மீது வராதிருக்க வேண்டுமானால், நீங்கள் எல்லோரும் கலைந்து, கோயிலுக்குச் செல்லுங்கள்” என்று அன்புக் கட்டளையிடுகிறார்.
இப்பொழுது சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்களைப் போலத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஏக்கத்துடன் சத்தமில்லாமல் செல்லும் பக்தர்களைப் பார்த்து, கையசைத்து விடைபெறுகிறார், வள்ளல்.
வள்ளலின் கார் வயல்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை அதிசயங்களும் அற்புதங்களும் இங்கே நடப்பதை கொஞ்சமும் அறியாத பஞ்சவர்ணம் என்ற பத்து வயதுப் பெண், வயலில் பருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் பருத்தி எடுத்தக் கொண்டிருந்த பெரியாத்தா என்ற தோழி, எலே பஞ்சு “உனக்கு விஷயம் தெரியுமாழ” எம்.ஜி.ஆர் தேனிக்கு வந்திருக்கிறாராம். இப்பத்தான் எங்க அப்பன் எங்கிட்ட சொன்னாரு” என்று பஞ்சவர்ணத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வயலை ஒட்டிய வண்டிப்பாதையில், ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க! பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் வாழ்க’ என்ற கோஷங்களுடன் கார்கள் வரிசையாகப் பறந்து கொண்டிருக்கிறது.
அவ்வளவுதான், மடியில் பறித்து வைத்திருந்த பருத்தியை ஆகாயத்தில் வீசி விட்டு, இருவரும் கார்கள் செல்லும் திசை நோக்கி, அந்தக் கரம்பைக் காட்டில், கால்கள் பின்னக்கு இழுக்க கஷ்டப்ப்ட்டு ஓடி வருகிறார்கள். தன் மீது அம்பு வீசினாலும் சரி, அன்பு வீசினாலும் சரி, நேரடியாகச் சந்திக்கிற சரித்திர நாயகன், நம சந்தனக் தலைவன். இந்த இரண்டு பெண்களும் தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு காரை, நிறுத்தச் சொல்கிறார். அதனை கார்களும், ஒன்றன் பின் ஒன்றாக ரெயில் பெட்டியைப் போல் வளைந்து நிற்கிறது.
வள்ளல் காரைவிட்டு இறங்கி, அந்தக் கரிசல் பூமியில் கால் பதித்து நிற்கிறார். மூச்சிறைக்க ஓடி வந்த பெண்களுக்கு, முதலில் தான் வைத்திருந்த பழச் சாற்றைக் கொடுத்து, மூச்சு வாங்கச் செய்கிறார்.
“நீங்க வர்றது இந்த ஊர் முழுக்கத் தெரிஞ்சிருக்கு. இந்த ரெண்டு கூமுட்டைகளுக்கு மட்டும்தான் தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா, இந்த அஞ்சு ரூபா காசுக்காக வேலை செஞ்சுட்டு இருப்போமா?” என்று படபடவென்று; பேசுகிறாள் பஞ்சவர்ணம். நிதானத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வள்ளல், இருவர் கைகளிலும் ஆளுக்கு நூறு ரூபாய் நோட்டைத் திணிக்கிறார். “நாங்களென்ன காசுக்காகவா உங்களைப்பார்க்க, பரக்க பரக்க ஓடி வந்தோம். கருணை தெய்வத்தைக் கண்குளிரப் பார்த்தாலே போதும், என்றுதான் ஓடி வந்தோம்” என்கிற தோரணையில் அவர்களின் பார்வை இருந்தது. அந்தப் பரங்கிமலை மன்னனுக்கு புரிந்தது. “ஒரு அண்ணன், தங்கைக்குத் திருவிழாச் செலவுக்கு கொடுத்தது போல், நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி புறப்படுகிறார்.
அதோடு பஞ்சவர்ணம் பருத்தி எடுக்கவில்லை. வீட்டுக்குச் சென்று விடுகிறாள். சோறும் கறியும் தட்டில் போட்டு வைக்கிறார் உடன் பிறந்த அக்காள். பஞ்சவர்ணம் “பசியில்லை” என்கிறாள். பொங்கல் வைக்கத்தான் வீரபாண்டி கோயிலுக்கு வரலை சட்டுபுட்டுன்னு சாப்பிட்டியினா, பொழுது சாய திருவிழா பார்க்கவாவது போகலாம்ல்ல. வரவை கோறும் கோயிலுக்கும் வேண்டாம். இரவும் அதே பதில். மறுநாள் காலையில் கண்மாய்க்குக் குளிக்கச் செல்லவில்லையா? என்று பாட்டி கேட்கிறாள். “உடம்புக்குச் சரியில்லை” என்று பஞ்சவர்ணம் சொல்கிறாள். கும்பாவில் கூழும், கும்பாவின் வெளிப்புற விளிம்பில் துவையலையும் ஒட்ட வைத்துக் கொண்டு, “போவட்டும் கையையாவது கழுவிட்டு கரைத்துக்குடி” என்று மீண்டும் அக்கா வலியுறுத்துகிறார்.
“ஊட்டி விடு, இல்லாட்டி கரைத்து லோட்டா சொம்பில் கொடு. கடகடவென்று குடித்து விடுகிறேன்” என்கிறாள் பஞ்சவர்ணம். இப்படிப் பஞ்சவர்ணம் பிரமை பிடித்தவள் போல் பேசியதால், அக்கா பயந்து போய்,
“ஏலே உனக்கு என்னாச்சுடி பணம் கொடுக்கிறபோது, அவரின் தங்கக்கரம் தன் கையில் பட்டுவிட்டது என்றும், இந்தச சாதாரண பக்தைக்குத் தெய்வம் கரம் தொட்ட இடம் தண்ணீர் பட்டால் அழிந்துவிடும் என்று பயந்துதான் குளிக்காமல், சாப்பிடாமல் இருந்தேன்” என்கிறாள். இப்பொழுதுதான் நிம்மதி அடைந்தனர் பெற்றோர்கள்.
இப்படி ஆறு வயதில் இருந்து அறுபது வரை, வயது வித்தியாசம் இல்லாமல் பொன்மச் செம்மல் மீது வைத்திருந்த அன்பை, மூட நம்பிக்கையென்றும், சினிமாக் கவர்ச்சியென்றும் கேலி செய்தனர். சிலர் உலக அரங்கில் சர்வாதிகாரி என்றும், கொடுங்கோலன் என்றும் வர்ணிக்கபட்ட அடால்ப் ஹிட்லர், ஒருமுறை வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஏழை பெண்மணிகள் தோள்களில் கைபோட்டு நடந்து சென்றிருக்கிறார். அந்த நிமிடத்தில் இருந்து, அந்த சக்கரவர்த்தியின் கைகள் பட்ட தோள்களில் தண்ணீர்பட்டால், அவனின் கைத்தடம் அழிந்துவிடும் என்று, தன் வாழ்நாள் முழுவதும், குளிக்காமலேயே இருதிருக்கிறார்கள்.
கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்பட்டவனின் கரங்களுக்குகே அவ்வளவு மவுசு என்றால், கொடுத்துச் சிவந்த நம் கொற்றவன் கரங்களுக்கு எவ்வளவு மவுசு இருந்திருக்கும். சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள். சில பேர் பொன்னுக்கு அடிமையாவார்கள். சிலர் பெண்ணுக்கு அடிமையாவார்கள். ஆனால் கொடுப்பதற்கு அடிமையான ஒரே கருணை வள்ளல், கண் முன் கண்ட கலங்கரை விளக்கம் நம் காவிய நாயகன் ராமாவரத் தோட்டத்தில் கொலு வீற்றிருந்த பொன்மனச் செம்மல் ஒருவர்தான்.. அப்படிப்பட்ட புண்ணியவானை புழுதி வாரித் தூற்றியவர்கள், பொல்லாங்கு பேசியவர்கள் பலரை, மக்கள் தண்டித்து விட்டார்கள். சிலரை சட்டம் தண்டித்துவிட்டது.
மற்ற சினிமாக்காரர்கள் மீது இல்லாத பக்தி, இவர் மீது மட்டும் ஏன் எப்படி வந்தது? அவர்கள் எல்லோரும் தன்னுடைய நடிப்பு என்கிற வித்தைக்குக் கைத்தட்டினாலே போதும், நாலு காசு சம்பாதித்தால் போதும் தன் சந்ததிகள் வாழ்ந்தால் போதும். என்கிற அளவில் மட்டும் இருந்து விட்டார்கள். ஆனால் வள்ளல் ஒருவர்தான், உங்களால் கிடைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்றார். என் அளவுக்கு உடலை உறுதியாக வைத்திருங்கள். உழைத்து வாழுங்கள். உண்மையாக இருங்கள். சத்தியத்தை நம்புங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். இப்படி நடிப்பில் மட்டுமல்ல; நடப்பிலும் செய்து காட்டியவர். அதனால்தான் அந்தத் தலைவன் மீது அதிசயத் தக்க அதீத பக்தி செலுத்தினார்கள் என்று, அன்று கொச்சைப்படுத்தியவர்களெல்லாம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
Richardsof
14th August 2012, 10:25 AM
A request from mgr fan ilangao from net
http://i46.tinypic.com/2hwdv9z.png
எம்ஜிஆருக்கு ஒரு ஹீரோவைப் போல் சிலை வையுங்கள் !
தி.தமிழ் இளங்கோ
எம்ஜிஆர் என்றால் அவர் ஒரு ஹீரோ. அவர் நடித்த படங்களில் அவருக்கென்று ஒரு பாணி. அதாவது தனி ஸ்டைல். எம்ஜிஆர் ஸ்டைல்.அவரது காலத்தில் கதாநாயகனாக நடித்த எல்லோருமே வயதானவர்கள்தான். எல்லோருமே கதாநாயகனாக, கல்லூரி மாணவனாக, இளைஞனாக நடித்தனர். அவர்களில் அவர்களை விட இவர், அதாவது எம்ஜிஆர் கொஞ்சம் மூத்தவர் அவ்வளவுதான். ஆனாலும் அவரை எதிர் முகாமில் வயதான நடிகர் என்று கிண்டலடித்தனர்.
எனவே தனது தோற்றத்தை காட்டிக் கொள்வதில் தனி கவனம் செலுத்தினார். அதற்குத் தகுந்தாற் போல காட்சிகள் அமைக்கச் சொன்னார். உடைகள் அணிந்தார். மேக்கப் போடச் சொன்னார். பெரும்பாலும் அவரது பாடல்களில் அவர் அணியும் அரைக் கை சட்டை என்பது கைகளில் உள்ள முண்டாவைக் காட்டும். அவரது எந்த தனிப் பாடலை பார்த்தாலும் அவர் கைகளை வீசிக் கொண்டும், உயர்த்தி கொண்டும் வேகமாக ஓடி வருவதை நாம் காணலாம். (அச்சம் என்பது மடமையடா – மன்னாதி மன்னன் ; உலகம் பிறந்தது எனக்காக – பாசம் ; புதிய வானம் புதிய பூமி – அன்பே வா ; அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் & ஏன் என்ற கேள்வி – ஆயிரத்தில் ஒருவன் ) அதே போல திடீரென்று ஏதேனும் ஒரு கனமான பொருளை தூக்குவார் அல்லது நகர்த்தி வைப்பார். துள்ளி குதிப்பார். அவரது காதல் பாடல்களும் இதற்கு தப்பாது ( காற்று வாங்கப் போனேன் – கலங்கரை விளக்கம் ; நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் –அன்பே வா )
எம்ஜிஆர் கதாநாயகிகளை மாற்றிக் கொண்டே இருந்தார். அவர்கள் இவரைவிட வயது குறைந்தவர்கள். கதாநாயகிகள் மாறிக் கொண்டே இருந்தாலும் இவர் என்றும் ஹீரோவாகத்தான் ( ever green hero ) இருந்தார்.அதுதான் எம்ஜிஆர். ஆனால் அவருக்கு சிலை வைக்கும் அன்பர்கள் அவர் விரும்பிய ஹீரோ தோற்றத்தில் சிலை வைப்பது கிடையாது. அவரது வாழ்வின் பிற்பகுதியில் தொப்பியோடு இருந்த அவரது முதுமை தோற்றத்தையே வடிவமைக்கின்றனர். இது சரியா? எம்ஜிஆர் என்றால் இளமை – கம்பீரம் – புன்னகை என்று சிலை வடிவமையுங்கள்.
Richardsof
14th August 2012, 07:21 PM
nadodi - 1966 - movie stills
http://i48.tinypic.com/2zfj19u.png
http://i45.tinypic.com/kpwfr.png http://i49.tinypic.com/e9aw42.pnghttp://i49.tinypic.com/5nkg3n.png
http://i45.tinypic.com/kpwfr.jpg
http://i50.tinypic.com/20fb6lz.png
http://i48.tinypic.com/2mo2dtk.jpg
Richardsof
14th August 2012, 07:41 PM
INDEPENDENCE DAY - - NICE SONG FROM
NADODI.
திரைப்படம்: நாடோடி
பாடல்: நாடு அதை நாடு
பாடகர்கள்: P.சுசீலா, TM. சௌந்தரராஜன்
இசை: பழையது
பாடல் ஆசிரியர்: Kannadasan
English
================================================== ==============================
நாடு (நாடு)
அதை நாடு (அதை நாடு)
அதை நாடவிட்டால் ஏது வீடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பன்பாடு
மானம் பெரிதென்று வாழும் பன்பாடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
பாலைவனம் என்ற பொரும் நம் நாடு
பாரை மலை கூட நம் எல்லை கொடு
ஆரு நிலம் பாய்ந்து விளயாடும் தோட்டம்
வீர சமுதயமே எங்கள் கூடம்
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
வானும் குலமாதர் முகம் பார்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்ததில்லை
வெற்றி திரு மாது நடை பொடும் எல்லை
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
பசி என்று வருவூர்க்கு விருந்தாக மாரும்
பகைவரின் முகம் பார்து புலியாக சீரும்
நிலதில் உயிர் வைது உரிமை கொண்டாடும்
எதிர்து வருவொரை உரமாக பொடும்
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பன்பாடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
=
mr_karthik
14th August 2012, 07:46 PM
//இவர் என்றும் ஹீரோவாகத்தான் ( ever green hero ) இருந்தார்.அதுதான் எம்ஜிஆர். ஆனால் அவருக்கு சிலை வைக்கும் அன்பர்கள் அவர் விரும்பிய ஹீரோ தோற்றத்தில் சிலை வைப்பது கிடையாது. அவரது வாழ்வின் பிற்பகுதியில் தொப்பியோடு இருந்த அவரது முதுமை தோற்றத்தையே வடிவமைக்கின்றனர். இது சரியா? எம்ஜிஆர் என்றால் இளமை – கம்பீரம் – புன்னகை என்று சிலை வடிவமையுங்கள்.//
இந்த ஆதங்கம் நடிகர்திலகத்தின் ரசிகனான எனக்கும் உண்டு.
நடிகர்திலகத்துக்கு சென்னை, புதுவை, மதுரை, தஞ்சை, நாகர்கோயில் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் அமைக்கப்படுள்ளன. அனைத்தும் அவர் இறுதிக்காலத்தில் இருந்த, தாடியுடன் கூடிய தோற்றத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. 'படங்களில் கதாநாயகனாக நடித்த தோற்றங்களில் வைக்கக்கூடாது, ஒரிஜினல் தோற்றத்தில்தான் வைக்க வேண்டும்' என்று வாதிட்டாலும் அட்லீஸ்ட் அவர் இளமைக்காலத்தில் இருந்த தோற்றத்திலாவது வைக்கலாம் அல்லவா?.
Richardsof
14th August 2012, 08:24 PM
article from tamil cinema
எம்.ஜி.ஆர் எல்லாவற்றிலும் குறுக்கீடு செய்கிறார். அதிக செலவு வைக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுந்த குறைபாட்டுக்கு பதில் சொல்வதற்காகவே நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள் இன்றைக்கும். படம் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். மன்னன், இல்லையென்றால் அவர் நாடோடி என்று திரையுலகில் பரவலாகவே பேசினார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி,ஆர் கடன் வாங்கி படத்தை தயாரித்து கொண்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தமிழ்ப்படங்களுக்கு ஒரு திறமைமிக்க சிறந்த டைரக்டர் நாடோடி மன்னன் மூலம் கிடைத்திருக்கிறார் என்று பெரும்பாலான பத்திரிகைகள் எழுதியிருந்தன. திருடாதே எம்.ஜி.ஆர். சரித்திர படங்களில் வெறும் கத்திச் சண்டை போடத்தான் லாயக்கு. சமூக படங்களுக்கு அவர் பொறுந்த மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டதற்கு திருடாதே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த படத்தின் வெற்றி எம்.ஜி.ஆருக்கே ஒரு நம்பிக்கையாக அமைந்தது. தன்னாலும் சமூகப் படங்களில் நடிக்க முடியுமென்று. தாய் சொல்லைத் தட்டாதே எம்.ஜி.ஆர் சமூகப் படங்களில் வெற்றிகரமாக இயங்க முடியுமென்பதற்கு உறுதியான அஸ்திவாரம் அமைத்துத் தந்த படம் இது.
தாயார் மீது தனக்குள்ள பற்றுதலை அவர் வெளிப்படுத்த துவங்கிய படமும் இதுதான். பாசம் தன் அழகு முகத்தை எம்.ஜி.ஆர் கருப்பாக்கிக் கொண்டு வித்தியாசமாக நடித்த படம் பாசம். என்றாலும் படத்தின் முடிவில் அவர் இறந்து போவதாக நடித்ததால் படத்தின் வெற்றிக்கு பாதிப்பானது. இருந்தாலும் எம்.ஜி.ஆரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டும் படங்களில் இதுவும் ஒன்று. தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.
தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி பட இயக்குநர்களையும் கவர ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். கருப்பு-சிவப்பு ஆடைகளை அணிந்து தான் சார்ந்த கட்சிக்கும் எம்.ஜி.ஆர். விளம்பரம் தேடித் தந்தார். எங்க வீட்டுப்பிள்ளை தமிழ் திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் வெற்றி விழா கண்ட முதல் படம் இது. எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் கொண்டு சென்ற படம் எங்க வீட்டுப்பிள்ளை.
ஹவுஸ் ஃபுல், தியேட்டர் ஃபுல், அரங்கம் நிறைந்துவிட்டது என்று தினத்தந்தியில் இதே வாசகங்களையே முழு பக்கத்திலும் வித்தியாசமான விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள். ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தை இந்த படத்திற்கு பின் பிரபலமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் கட்சி வேறுபாடின்றி ரசிகர்களால் நேசிக்கப்படுவதற்கும், அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாவதற்கும் எங்க வீட்டுப் பிள்ளையும், அதில் அவரது மாறுபட்ட இரட்டை வேட நடிப்பும் துணை போட்டோந்தது. இந்தப் படத்திற்குப் பின் வெளிவந்த அவரது வெற்றிப் படங்களெல்லாம் வசூலில் பிரமிக்கும்படியாக இருந்தன. அவரது தோல்வி படங்கள்கூட வசூலில் தோல்வியுற்றதில்லை.
சிவாஜியைக் கொண்டு அதிக படங்களைத் தயாரித்த பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரைக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் தயாரித்த முதல் படம் என்பதாலும், எம்.ஜி.ஆருடன் (புதுமுகம்) ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமென்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி கண்டது. இதன் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் புதுப்படம் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது. அன்பே வா ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் என்பதோடு, இது ஏவி.எம்.முக்கு முதல் தமிழ் வண்ணப்படமும் கூட.
pammalar
15th August 2012, 04:50 AM
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!
'ஒருதாய் மக்கள் நாமென்போம்...'
http://www.youtube.com/watch?v=nhVztpWRldY
அன்புடன்,
பம்மலார்.
RAGHAVENDRA
15th August 2012, 07:17 AM
டியர் பம்மலார் சார்
விடுதலை நாளினையொட்டி ஒரு தாய் மக்கள் நாமென்போம் பாடலைப் பதித்து ஒற்றுமையை வலியுறுத்தி சிறப்பித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
எம் ஜி ஆர் படத்திலிருந்து சில நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/BSDFlyBird.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrevp01.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/bsdevp02.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/bsdevp01.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/enkadamai2.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/enkadamai1.jpg
Richardsof
15th August 2012, 07:25 AM
நமது நண்பர்கள் யாவர்கட்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துகள் .
Richardsof
15th August 2012, 09:35 AM
THE FIRST DEVOTIONAL INDIAN ACTRESS K.B..SUNDARAMBAL OWN THEATRE AT KODUMUDI , KOVAI DISTRICT.
PIC FORWARDED BY MATHI RAVICHANDRAN.
http://i45.tinypic.com/21o3o1e.jpg
http://i45.tinypic.com/e05w2b.jpg
http://i50.tinypic.com/10pdsau.jpg
Richardsof
15th August 2012, 10:35 AM
15 TH AUGUST 1977 - MAKKAL THILAGAM MGR IN MEENAVA NANBAN RELEASED.
35TH ANNIVERSAY TODAY.
http://i50.tinypic.com/jpd5hj.jpg
Richardsof
15th August 2012, 10:53 AM
1971- MAKKAL THILAGAM MGR IN NEERUM NERUPPUM SHOOTING WITH HINDI ACTRESS HEMAMALINI
http://i45.tinypic.com/2j428ua.jpg
oygateedat
15th August 2012, 11:42 AM
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
oygateedat
15th August 2012, 01:08 PM
மக்கள் திலகத்தின் மனிதநேய பண்பை அவரின் மெய்காப்பாளர் திரு கே பி ராமகிருஷ்ணன் அவர்கள் கடந்த வாரத்தில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் விழாவில் தெரிவித்தபோது அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு சேர கை தட்டி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மக்கள் திலகம் முதல்வராக இருந்த போது அவரின் கார் மேல் மோதிய ஆட்டோகாரரை மன்னித்து அவருக்கு பணமும் கொடுத்துள்ளார் தமிழகம் போற்றும் அந்த வள்ளல்.
Richardsof
15th August 2012, 01:24 PM
MATHI NANBAR TIRUPPUR S. RAVICHANDRAN FORWADED THIS PIC.
http://i48.tinypic.com/1267arc.jpg
Richardsof
15th August 2012, 01:29 PM
MAKKAL THILAGAM AND HINDI ACTOR SHASI KAPOOR IN SINGAPRE 1972 -APPEARED IN THE STAGE SHOW.
http://i46.tinypic.com/15cd3yg.jpg
Richardsof
15th August 2012, 01:40 PM
A RARE STILL MAKKAL THILAGAM WITH VANISHREE & G. SHAKUNTHALA DURING KANNI PENN SHOOTING -1969
PIC FORWADED BY C.S.KUMAR SIR
http://i46.tinypic.com/2qbznlz.jpg
RAGHAVENDRA
15th August 2012, 01:52 PM
டியர் வினோத் சார்,
மிக மிக மிக அருமையான அபூர்வமான படங்களை நீங்களும் ரவிச்சந்திரன் அவர்களும் அளித்து, தமிழ்த்திரைப்படத்தின் வரலாற்றினை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறீர்கள். குறிப்பாக கே.பி.எஸ். அவர்களின் திரையரங்கு துவக்க காலத்தில் தகடு வேயப்பட்ட அரங்காக இருந்து காலப் போக்கில் கட்டடமாக உருவானதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். இன்றைக்கு அந்த அரங்கினைக் கண்முன்னே நிறுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
தங்கள் பார்வைக்கு சில நிழற்படங்கள். ஏற்கெனவே இங்கே பதியப் பட்டதாகக் கூட இருக்கலாம்.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/deiva_thai_release.jpg
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/malai_kallan_running.jpg
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/kulabaghavali_running.jpg
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/thaikupintharam_boxrecord.jpg
Richardsof
15th August 2012, 03:19 PM
makkal thilagam rare pic
http://i45.tinypic.com/143kqhx.jpg
oygateedat
15th August 2012, 03:21 PM
http://i49.tinypic.com/29ergxl.jpg
oygateedat
15th August 2012, 03:29 PM
Mr. Vinod
thank you for posting excellent rare pictures of makkal thilagam
Richardsof
15th August 2012, 03:39 PM
http://i49.tinypic.com/2ijpxug.png
Richardsof
15th August 2012, 03:44 PM
http://i47.tinypic.com/16p8gp.png
Richardsof
15th August 2012, 03:54 PM
http://i46.tinypic.com/xlxv6u.png
oygateedat
15th August 2012, 04:01 PM
http://i47.tinypic.com/2e3zime.jpg
oygateedat
15th August 2012, 04:15 PM
http://i47.tinypic.com/jjqvzt.jpg
oygateedat
15th August 2012, 04:36 PM
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் புகழ் வாழ்க
vasudevan31355
15th August 2012, 05:50 PM
ரவி சார்,
உங்களுக்காக மற்றும் அருமை வினோத் சாருக்காக.
http://3.bp.blogspot.com/-qPACCo9nb5k/Tw1cy70k1RI/AAAAAAAABnE/-LUitauZPdM/s1600/turban+man+1828.jpg
vasudevan31355
15th August 2012, 06:21 PM
http://www.indopia.com/imagerepository/i/20120201174124.jpg
vasudevan31355
15th August 2012, 06:24 PM
http://2.bp.blogspot.com/__vnK9wWtIw0/R9fWXraaTEI/AAAAAAAAAko/wL01xEkC6y8/s400/nadodi_mannan.jpg
http://static.sify.com/cms/image/jdwmK0ijgja.jpg
http://srimgr.files.wordpress.com/2008/08/wrapper_2.jpg
LihDacRurdy
15th August 2012, 07:34 PM
Vasudevan sir, engala madhri chinna pasangaluku MGR padam tv la mattum dha pathu palakam, but unga post gal ellamey current oru mgr padangal odura madhiri feelsss.. Amazing collection of you all ! Pammalar/Murali sir too!
LihDacRurdy
15th August 2012, 07:36 PM
MGR/Sivaji sarithra nayagargal padangal odina theatregal ellamey shutdown pannitanga!
In recent royapettah - Melody theatre (Odean-> This info got from Great pammalar):(
LihDacRurdy
15th August 2012, 07:38 PM
esvee sir,
This theatre is still running or shut downed?
THE FIRST DEVOTIONAL INDIAN ACTRESS K.B..SUNDARAMBAL OWN THEATRE AT KODUMUDI , KOVAI DISTRICT.
PIC FORWARDED BY MATHI RAVICHANDRAN.
http://i45.tinypic.com/21o3o1e.jpg
http://i45.tinypic.com/e05w2b.jpg
http://i50.tinypic.com/10pdsau.jpg
Richardsof
15th August 2012, 07:39 PM
still from ' thambikku endha ooru'
http://i48.tinypic.com/4tvzg1.jpg
LihDacRurdy
15th August 2012, 07:39 PM
Esvee sir,
Can you give information on this film, any cassetes available now in stores??
15 TH AUGUST 1977 - MAKKAL THILAGAM MGR IN MEENAVA NANBAN RELEASED.
35TH ANNIVERSAY TODAY.
http://i50.tinypic.com/jpd5hj.jpg
Richardsof
15th August 2012, 07:45 PM
Makkal thilagam mgr in thaalibakkiyam 1966 - a review from mithran - net
http://i45.tinypic.com/34q465l.png
முதியவர் ஒருவர் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்வதற்குப் பக்கத்து வீட்டு இளைஞனையும் அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் செல்கிறார். முதியவருடன் வந்த இளைஞனின் அழகில் மனதைப் பறிகொடுத்த பெண் இளைஞன் தான் மணமகன் என நினைத்து சந்தோஷக் கனவில் மிதக்கிறõள். தன்னைப் பெண் பார்க்க வந்தது முதியவர் என்பதை மண மேடையில் அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இளைஞனை மனதில் நினைத்துக் கொண்டு முதியவரின் தாலியைக் கழுத்த்தில் சுமக்கும் இளம் பெண் ணின் கதை தான் தாலி பாக்கியம்.
எம்.ஜி.ஆரின் பக்கத்து வீட்டில் சரோஜாதேவி வசிக்கிறார். சிறு வயது முதலே பழகும் எம்.ஜி. ஆரும் சரோஜாதேவியும் பருவ வயதை அடைந்ததும் காதல் வலையில் வீழ்கிறார்கள். சரோஜாதேவியின் தகப்பன் மறுமணம் செய்வதற்காகப் பெண் பார்க்கப் போகும் போது எம்.ஜி. ஆரையும் அழைத்துச் செல்கிறார். மணமகளான எம்.என். ராஜம் தனது எதிர்காலக் கணவன் எம்.ஜி.ஆர் எனத் தவறாக நினைத்து மனதைப் பறிகொடுக்கிறாள். எஸ்.வி. சுப்பையாவுக்கு எம்.என். ராஜத்தைப் பிடித்து விடுகிறது. ஆகையால் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் எம்.ஜி.ஆர். தான் தனது கணவன் என்ற கனவில் மிதக்கும் எம்.என். ராஜம் திருமண நாளை எதிர்பார்க்கிறாள்.மணமேடையில் எஸ்.வி. சுப்பையாவைக் கண்ட எம்.என். ராஜம் அதிர்ச்சியடைகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையினால் எஸ்.வி. சுப்பையாவுக்கு மனைவியாகிறாள் எம்.என். ராஜத்தின் மனதில் எம்.ஜி. அதன் உருவம் ஆழமாகப் பதிந்ததனால் எம்.ஜி. ஆரை மறக்க முடியாது தடுமாறுகிறார் எம்.என். ராஜம். தன் மனதில் உள்ள ஆசையை ஒருநாள் எம்.ஜி.ஆரிடம் கூறுகிறார் எம்.என். ராஜம். எம்.என்.ராஜத்தின் விபரீத ஆசை தவறெனக் கூறுகிறார் எம்.ஜி.ஆர். எம்.என். ராஜத்துக்கும் புத்திமதி கூறி அனுப்புகிறார். இவர்கள் பேசியதை மறைந்திருந்து கேட்ட நம்பியார் தனது குள்ளநரித்தனத்தால் எம்.ஜி. ஆரின் குடும்பத்துக்கும் எஸ்.வி. சுப்பையாவின் குடும்பத்துக்கும் இடையில் பூசலை உருவாக்குகிறார். நம்பியாரின் மிரட்டலுக்குப் பணிந்த எம்.என். ராஜமும் இதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்.
குடும்பப் பிரச்சினை விஸ்வரூபமானதால் எம்.ஜி.ஆ.ரின் மீதான சரோஜாதேவியின் காதலுக்குத் தடை ஏற்படுகிறது. சரோஜா தேவியின் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று எம்.ஜி.ஆர். சவால் விடுகிறார். சரோஜாதேவியின் கழுத்தில் எம்.என். ராஜம் தாலியைக் கட்டி விட்டு எம்.ஜி.ஆர். திருட்டுத் தாலி கட்டி விட்டதாகக் கூறுகிறார். இந்தப் பிரச்சினையை விசாரித்த ஊர்ப் பஞ்சாயம் எம்.ஜி.ஆரை ஊரைவிட்டு விலக்கி வைக்கிறது. தான் குற்றமற்றவன் என்பதை இறுதியில் நிரூபிக்க எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை கரம் பிடிக்கிறார்.
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, எஸ்.வி. சுப்பையா எம்.என். நம்பியார், வி. நாகையா நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்தனர். புளுவாரூர்சுந்தராமவின் மூலக் கதைக்கு ஆருர்தாஸ் வசனம் எழுதினார். பாடல்கள் வாலி, இசை கே.வி. மகாதேவன். அன்னை இல்லாமல் பிறந்தவர் யார், கண் பட்டது நெஞ்சம் புண்பட்டது நெஞ்சம், உள்ளம் ஒரு கோயில், இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் ஆகிய பாடல்கள் கதைக்கு வலுச் சேர்த்தன.
வரலஷ்மி நிறுவனத்தின் பெயரில் கண்ணாம்பா தயாரித்த இப்படத்தை அவரது கணவன் கே.பி. நாகபூஷணம் இயக்கினார்.
Richardsof
15th August 2012, 07:53 PM
Dear raj splash
makkal thilagam mgr in meenava nanban cd/dvd casettes are available in all leading stores.
Modern cinema and mosbear also released meenavananban casettes.
kodumudi KBS theatre is still running.
Richardsof
15th August 2012, 08:16 PM
Intresting article about mgr movies in politics from net;
திராவிடமுன்னேற்றக் கழகத்துக்கு எம்.ஜி.ஆரும்,காங்கிரஸ் கட்சிக்கு சிவாஜியும் பிரதமபேச்சாளராக விளங்கினார்கள்.திராவிடமுன்னேற்றக்கழகத்திலிருந ்து எம்.ஜி,ஆர் வெளியேறி அண்ணா திராவிடமுன்னாற்றக்கழகத்தை ஆரம்பித்தபோதுதமிழக திரைப்படக் கலைஞர்கள், திராவிடமுன்னேற்றக்கழகம்,காங்கிரஸ்,அண்ணாதிராவி ட முன்னேற்றக்கழகம் ஆகியமூன்று கட்சிகளிலும் சேர்ந்துபிரசாரம் செய்தனர்.
ஊழலற்ற அரசியலை உருவாக்கப்போவதாக அவர்கள் மேடைகளிலும்,சினிமாவிலும் பிரசாரம் செய்தார்களேதவிர அதனை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியவில்லை.
அரசியல்பிரசாரங்களுடன் எதிரணிஅரசியல் வாதிகளை மட்டம் தட்டும்நோக்கிலும் சினிமா பயன்படுத்தப்படுகிறது.சினிமாக்கலைஞர் பிரசாரம் செய்வதுடன் மட்டும் நில்லாது ஆட்சியையும் பிடிக்கமுடியும் என்பதை எம். ஜி.ஆர் தமிழகத்தில் நிரூபித்தார். எம்.ஜி.ஆரைத்தொடர்ந்து என்.டி .ராமராவ் ஆந்திராவில் ஆட்சியைப்பிடித்தார்.
1958ஆம் ஆண்டுவெளியான "நாடோடிமன்னன்"படத்தில் மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்து மகக்ளாட்சிமலரவேண்டும் என்பதற்காகப்போராடும் நாடோடி எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்படுகிறார்.தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்துவிடுபடவிரும்பும் மன்னன் எம்.ஜி.ஆர் உருவ ஒற்றுமையைப்பயன்படுத்தி நாடோடியை மன்னனாக்கி மக்களாட்சி மலர வழிவிடுகிறார்.
1969ஆம் ஆண்டு வெளிவந்த "நம்நாடு" திரைப்படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த பொதுநலவாதியான எம்.ஜி.ஆர் நகராட்சித்தேர்தலில் வென்று தலைவராகிறார்.எஸ்.வி.ரங்கராவ்,அசோகன், கே.ஏ.தங்கவேலு ஆகிய மூண்று பணக்காரர்களும் எம்.ஜி.ஆரைப்பணீசெய்யவிடாது சதி செய்கின்றனர்."நம்நாடு" படத்தில் சமூக விரோதியாகவரும் எஸ்.வி. ரங்கராவ் பேசும் வசனங்கள் இனறும் அரசியலுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது.
"ஆண்டவனே மனிதனாகப் பிறந்து தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அவன் இலஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது."
"ஏழைகளீடமிருந்து காப்பாற்றுகிறேன் எனககூறி பணக்காரர்களீடம் காசு வாங்கவேண்டும்.பணக்காரர்களீடம் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏழைகளிடம் காசு வாங்கவேண்டும்."
" ஒருவன் ஐந்து ரூபா தந்தாலே வருவான். ஒருவன் நூறு ரூபாய்க்குதலை வணங்குவான்.ஒருவன் லட்ச ரூபாய்க்கு காலில் விழுவான்.இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது"
"ஒரு கெட்டகாரியத்தை செய்து கொள்ளையடிக்கவேண்டுமென்றால் எப்போதும் ஒரு நல்லவனை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்."
அவை "நம்நாடு" படத்தின் வசனங்கள்.http://i47.tinypic.com/2luukx1.jpg
Thirumaran
15th August 2012, 08:17 PM
எனக்குள் M.G.R.! – ஒரு X – Ray தொடர் –வாலி
14. அண்ணா எனும் அரிய மனிதர்!
‘குருசாமி! நாளைக்குக் காலேல வாலியோட பாட்டெ எடுத்துக்கிட்டு, காஞ்சீபுரம் போய்ட்டு வா! அண்ணாகிட்ட காட்டணுமில்லே!’ – என்று இயக்குநர் நீலகண்டன், தன் உதவி இயக்குநர் குருசாமியை, என் பாட்டோடு காஞ்சிக்கு அனுப்பினார். எனக்குள் ‘அண்ணா என்ன சொல்வாரோ?’ என்ற அச்சம் மேலிட்டு நின்றது. என் பாட்டை அண்ணா அங்கீகரித்தால்தான், அது ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் இடம் பெறும்; ஏனெனில், அண்ணா அவர்கள்தான் அந்தப் படத்தின் கதை வசனகர்த்தா!
என்னைப் போன்ற, புதுமுகப் பாடலாசிரியர்கள் – அற்றை நாளில் அவ்வளவு சுலபமாக அங்கீகரிக்கப் பட மாட்டார்கள்.; அங்கீகரிக்கப்படுவது கிடக்கட்டும், எழுதவே அனுமதிக்கப்பட மாட்டார்கள்!
உடுமலையார்; மருதகாசி; கே.டி.சந்தானம்; பட்டுக்கோட்டை; கண்ணதாசன்; தஞ்சை ராமையாதாஸ் என்று –
பாட்டுவனத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பட்டியல் நீளமாயிருந்தது. இவர்கள் கோலோச்சி நின்ற கோடம்பாக்கத்தின் கதவுகள் –
என்னொத்த புதிய காற்று உள்ளே புகச் சாளரங்களைச் சட்டென்று திறந்து விடமாட்டா!
இத்தகு –
இறுக்கமான சூழ்நிலையில் –
எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு, திரு. எம்.ஜி.ஆருக்கும் திருமதி. ராஜசுலோச்சனாவுக்கும் ஒரு Duet எழுதுவது; இது பெறற்கரிய பெரும் பேறு –
இன்னும் தன் கணக்கைத் தொடங்காத ஒரு கற்றுக்குட்டிக் கவிஞனுக்கு!
எனவே –
என் எழுத்துகள் ஒலிப்பதிவு நாடாவில் ஓரிடத்தைப் பிடிக்கு முன் – ஏகப்பட்ட 'Acid Test' க்கு ஆளானதில் ஆச்சரியமில்லை!
நான் எழுதிய பாட்டை –
திரு.நீலகண்டன் ஏற்றார்; திரு.டி.ஆர்.பாப்பா ஏற்றார்; திரு. எம்.ஜி.ஆர். ஏற்றார்;
– ஆனால், அந்தப் பாட்டின் மேல் அக்மார்க் முத்திரையை அண்ணா குத்தினாலேயன்றி – எனக்குக் கிடைத்த வாய்ப்பும், அதன் பொருட்டு அடியேன் வடித்த வியர்வையும் – விழலுக்கு இறைத்த நீராய் வியர்த்தமாகிப் போகும்.
அங்ஙனமாயின் –
பரமபத சோபன படத்தில் பெரிய பாம்பில் கீழிறங்கி, மீண்டும் தாயம் போட்டு மேலேற வேண்டிய கதைதான்!
மூன்று நாள்களாகியும் அரசு பிக்சர்ஸிலிருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. காலைப் புலரிக்குக் கட்டியம் கூறுவதுபோல் ஒரு விடிவெள்ளி, ககனத்தின் கக்கிருட்டுப் படலத்தைக் கிழித்துக் கொண்டு முகம் காட்டும்.
அஃதேபோல் –
அந்தகாரம் அடையாய் அப்பிக் கிடந்த அடியேனின் வாழ்க்கை வானில், ஒரு விடிவெள்ளி – அரசு பிக்சர்ஸ் புண்ணியத்தில் முகம் காட்டியிருக்கிறது. அது – ‘விடிவெள்ளியா? வீழும் கொள்ளியா?’ என்பதை உறுதிசெய்ய ஒண்ணாது நான் உச்சக்கட்டப் பதற்றத்தில் –
காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு நிற்க – என் பரிதவிப்பைப் பார்த்துப் பச்சாத்தாபப்பட்டு நாகேஷ் என்னைத் தேற்றினான்!
‘டேய், ஸ்ரீரங்கம் ரங்கராஜா! பாட்டெ வெச்சுக்கிட்டா வெச்சுக்கிறான்; வெச்சுக்காட்டிப் போறான்! ஊர் உலகத்துல – வேற சினிமாக் கம்பெனியா இல்லெ? அடேய் – Buttocks, have seen many ponds; ponds have seen many buttocks!' என்று சொல்லி விட்டு, ஒரு சார்மினாரை உதட்டிடையே செருகித் தன் வாயைக் காளவாயாக்கினான் நாகேஷ்.
நாகேஷ், ஆங்கிலத்தில் சொன்னதை வாசகர்களுக்குத் தமிழில் தர வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை; ஆனால் ‘துக்ளக்’ ஆசிரியர் அதற்கு என்னை அனுமதிக்க மாட்டார்!
நாகேஷ் எனக்கு உபதேசித்தருளிய ஒரு மணி நேரத்திற்கெல்லாம், அரசு பிக்சர்ஸிலிருந்து என்னை அழைத்துப் போக வண்டி வந்தது!
என் பாட்டைப் படித்து விட்டு, அண்ணா அவர்கள், பல்வேறு வரிகளை வட்டமிட்டுச் சுழித்திருந்ததை இயக்குநர் நீலகண்டன் என்னிடம் காட்டினார்.
‘அண்ணா சுழிச்சிருக்கிற வரிக்கெல்லாம் வேற Alternative எழுதிக்கிட்டு நாளைக்கு வர்றேன் சார்!’ என்றேன் நான்.
அதைக் கேட்டு –
நீலகண்டன் அவர்கள், ‘வாலி! அண்ணா சுழிச்சதுக்கு அர்த்தம் அது இல்லய்யா!.... இந்த இந்த வரிகளெல்லாம் அற்புதம் – இதையெல்லாம் மாத்தக் கூடாதூன்னு அர்த்தம்! உங்க பாட்டெ அண்ணா ரொம்பவே ரசிச்சாராம்... குருசாமி சொன்னான்!’ என்று என் தோளைத் தட்டிப் பாராட்டினார். என் பாதங்கள் நிலத்தில் பாவவில்லை; என் வாழ்க்கை வானத்தில் தோன்றியது விடிவெள்ளிதான்; வீழ் கொள்ளியல்ல!
காஞ்சீபுரத்தை நோக்கிக் கரம் கூப்பினேன் நான்!
அன்று அண்ணா பாராட்டிய என் பாட்டு வரிகள் இன்றும் பசுமையாய் என்னுள் ஈரப் பசையோடு இருக்கிறது. கதாநாயகனும் கதாநாயகியும் மலைச் சாரலை ஒட்டிய ஓர் ஓடையில் நீராடுகிறார்கள். அருவி கொட்டிக் கொண்டிருக்கிறது.
கதாநாயகி பாடுகிறாள்:
‘தேன் மலராடும் –
மீன் விளையாடும் –
அருவியின் அழகைக் காணீரோ!’
– கதாநாயகன் பதிலுக்குப் பாடுகிறான்:
‘– அது
நான் வரவில்லை –
என்பதனால் உன் –
மீன்விழி சிந்திய கண்ணீரோ?’
– இவைபோல் பல வரிகளை அண்ணா அடையாளமிட்டுப் பாராட்டியிருந்தார்கள்!
நான்கு நாள்கள் கழித்து –
காஞ்சீபுரத்திலிருந்து அண்ணா அவர்களே பாட்டைக் கேட்க வருவதாக எனக்குச் சொல்லப்பட்டது.
அண்ணாவை அங்குதான் அன்றுதான் முதன் முதலாகச் சந்தித்தேன்.
நீலகண்டன் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தி வைத்ததும், அண்ணாவை எழுந்து நின்று வணங்கினேன்.
என் ஊர் – கல்வி – பெற்றோர் எல்லாவற்றையும் அண்ணா அளப்பரிய பாசத்தோடு விசாரித்து விட்டு –
மெல்ல மெல்ல என்னிடம் அன்பு பாராட்டி, ஆங்கிலத்தில் உரையாடலானார்.
‘வடகலை அய்யங்காரா? தென்கலை அய்யங்காரா?’ என்று கேட்டார். சொன்னேன். ஓரிரு மணி நேரம் பழகிய போதே – என் உள்ளம் அவர்பால் ஈர்க்கப் பெற்றது. சில ஆங்கில நூல்களையெல்லாம் சொல்லி – குறிப்பாகக் கவிதைகள் – என்னைப் படிக்கச் சொன்னார். ‘கன்னிமாரா!’வுக்குப் போகச் சொன்னார். அவர் குறிப்பிட்ட நூல்கள் –
'Paradise Lost'; 'Twelfth Night'; - மற்றும் கீட்ஸ்; வேர்ட்ஸ் வொர்த்; மில்டன்; வால்டர் விட்மன் என்று பலரது எழுத்துகளை எடுத்தோதி –
‘இவற்றையெல்லாம் வாசிங்க, வாலி! உங்க கவிதாவிலாசம் மெருகேறும். நீங்க – ஆங்கிலம் தெரிஞ்சவரா இருக்கிறது, உங்களுக்கு மிகப் பெரிய வசதி.... உலகளாவிய நூல்களைப் படிச்சு, அதையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வாங்க...’ என்று ஒரு தந்தை தன் தனயனுக்கு அறிவுகொளுத்துதல் போல், என்னை ஆற்றுப்படுத்தினார் அண்ணா!
‘நல்லவன் வாழ்வான்!’ பாட்டைப் பாப்பா பாட –
அண்ணா கேட்டுப் பாராட்டி விட்டு,
“வாலி! கோயமுத்தூர்ல சண்முகசுந்தரம்னு ஒருத்தர் இருக்காரு.... நம்ம கட்சிக்காரரு.... அவருக்கு ஒரு படம் பண்றேன்.... ‘எதையும் தாங்கும் இதயம்’னு பேரு... நான்தான் கதை வசனமெல்லாம் எழுதிக் கொடுத்திருக்கேன்... கே.ஆர்.ராமசாமி; S.S.R... இவங்களெல்லாம் நடிக்கிறாங்க... நீலகண்டன்தான் அதுக்கும் டைரக்டர்... உங்களுக்கு அந்தப் படத்துல ஒரு பாட்டு சொல்றேன்... எழுதுங்க.... பாப்பாதான் மியூசிக்... நல்லா வருவீங்க!” என்று அண்ணா என்னை வாழ்த்தியருளினார்கள். அண்ணாவின் உள்ளம் ஆகாயத்தை விட அகலமானது என்று அறிந்து மகிழ்ந்தேன்; நெகிழ்ந்தேன்!
அண்ணா அவர்கள் சொன்னபடியே எனக்கு ‘எதையும் தாங்கும் இதயம்’ படத்தில் பாட்டு வாங்கிக் கொடுத்தார்கள். அற்றை நாளில் எனக்குப் பிடித்த பாட்டு அது. திருமதி.-B.S.சரோஜா அவர்கள்தான் அந்தப் பாடலுக்கான காட்சியில் நடித்தார்கள். தன் சேயைப் பிரிந்த ஒரு தாய் – எங்கெங்கோ அலைந்து – ஒரு வனப்பிரதேசத்தில் மரம் அறுக்கும் தொழிலாளர்களிடையே தஞ்சமடைகிறார்.
அங்கே –
ஒரு பெண்மணி, ஏணையில், அதாவது மரக்கிளையில் கட்டி விடப்பட்ட தூளியில் –
தன் குழந்தையை இங்குத் தாலாட்டித் தூங்க வைக்கையில் –
அவளை, மேஸ்திரி வேலைக்கு அழைக்கிறான்.
அப்போது அந்தப் பெண் – அங்கு தஞ்சமடைந்திருந்த B.S.சரோஜாவை –
குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் பணிக்குப் போகிறாள்.
சரோஜா –
ஆசை ஆசையாக அந்தக் குழந்தையை முத்தமிட்டு ஏணையில் படுக்க வைத்துத் தாலாட்டுகிறாள்.
இதில் சுவாரசியம் யாதெனில் –
அந்தக் குழந்தைதான் அவளைப் பிரிந்து போன அவளது சொந்தக் குழந்தை! இது பாத்திரத்திற்குத் தெரியாது; படம் பார்ப்பவர்களுக்குத் தெரியும்!
நான் எழுதிய பாட்டு இதுதான்:
‘உன் –
அன்னை முகம் என்றெண்ணி – நீ
என்னை முகம் பார்க்கின்றாய்; என்
பிள்ளை முகம் என்றெண்ணி – நான்
உன்னை முகம் பார்க்கின்றேன்!’
அண்ணா அவர்கள் இந்தப் பாட்டை வெகுவாகப் பாராட்டினார்கள். ‘இதைவிட இந்த Situationக்குச் சிறப்பாக எழுத முடியாது’ என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள்.
அந்தப் படத்தில், பட்டுக்கோட்டையும் பாட்டு எழுதியிருந்தார்; பட்டுக்கோட்டையோடு என் பெயரும் இணைந்து வந்ததில், நான் ஒரு சுற்றுப் பருத்துப் போனேன்!
அண்ணா அவர்களை எண்ணுங்கால் –
என் கண்கள் பனிக்கின்றன. அவர் – அனா முதல் அக்கன்னா வரை – ஓர் அப்பழுக்கற்ற கனவான்; ஆம் – A perfect gentleman from A to Z.! அவர் –
‘ஆரிய மாயை! எழுதியவர்தான்! ‘கம்பரசம்’ எழுதியவர்தான்! நாத்தழும்பேற நாத்திகம் பேசியவர்தான்! அக்கிரகாரத்தையும் அந்தணரையும் வாய் வாணலியில் போட்டு வறுத்து எடுத்தவர்தான்!
இவையெல்லாம் – அவர் இதயம் ஏந்தி நின்ற கொள்கைகள்! ஆயினும் – அவர் நூறு விழுக்காடு முழு மனிதராக – ஈவு; இரக்கம்; நட்பு; நாகரிகம் – என நானாவித நற்குணங்களின் பொழிவாகவும், பிழிவாகவும் இருந்தார் என்பதை நான் கண்கூடாகக் கண்டவன்!
எதையும் நியாயப்படுத்துவாரேயல்லாது, எவரையும் காயப்படுத்தமாட்டார்! அதனால்தான் – அவர் பார்ப்பனக் குடும்பங்களான வி.பி.ராமன்; மற்றும் நரம்பு சிகிச்சை நிபுணர் திரு.ராமமூர்த்தி ஆகியோருடன் –
காய்தல் உவத்தலற்ற கெழுதகை நண்பராகக் கடைசி காலம் வரை சிறு விரிசல் கூட இல்லாத அளவு சினேகம் பாராட்டி வந்தார்!
அதேபோல்தான் – அண்ணா அவர்கள் என்னையும் தன் அன்பு வெள்ளத்தில் முழுக்காட்டி எடுத்தார்கள். அண்ணாவைப் பற்றி இன்னும் சொல்லுவேன்!
(தொடரும்)
vasudevan31355
15th August 2012, 08:25 PM
ராஜு சார்,
தங்கள் உயர்ந்த பாராட்டுகளுக்கு என் அன்பு நன்றிகள் சார்.
தாங்கள் கேட்டிருந்த மீனவ நண்பன்.
http://www.thehindu.com/multimedia/dynamic/00831/09_mp_memories_GT43_831204g.jpg
http://lulzimg.com/i09/16b692.png
http://upload.wikimedia.org/wikipedia/en/a/af/Meenava_Nanban.jpg
Richardsof
15th August 2012, 08:42 PM
சினிமாவிலும் அரசியலிலும் எதிரும் புதிருமாக இருந்த மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் கூண்டுக்கிளி. நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் துரோகியின் கதை. எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்தனர்.
பி.எஸ்.சரோராஜாவைப் பெண் பார்த்த சிவாஜி, அவர்தான் தன் மனைவி என்று முடிவு செய்கிறார். விதி வச*த்தால் சிவாஜியின் நண்பன் எம்.ஜி.ஆரின் மனைவியாகிறார் சரோஜா. இதை அறியாத சிவாஜி பி.எஸ்.சரோஜாவைத்தேடி ஊரெல்லாம் அலைகிறார். வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவாஜி ரயிலின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தபோபாது எம்.ஜி.ஆர் காப்பாற்றுகிறார். சிவாஜியை வீட்டுக்கு கூட்டிவந்த எம்.ஜிஆர். தன் மனைவி பி.எஸ். சரோஜாவை அறிமுகப்படுத்துகிறார். தனக்கு மனைவியாக வரவேண்டிய பி.எஸ்.சரோராஜா தன் நண்பனின் மனைவியானதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் சிவாஜி.
சிவாஜி செய்த குற்றத்திற்காகக் சிறைக்குச் செல்லும் எம்.ஜி.ஆர் தன் மனைவியை கவனமாக பார்க்கும் படி கூறுகிறார். உயிர் கொடுப்பான் நண்பன் என்பதற்கிணங்க எம்.ஜி.ஆர் சிறைச்செல்ல நண்பனுக்கு துரோகம் செய்ய திட்டமிடுகிறார் சிவாஜி. தனக்கு தலைவலி என்று கூறி தலைக்கு தைலம் பூசும்படி பி.எஸ்.சரோஜாவிடம் கூறுகிறார். கள்ளம் கபடமில்லாத சரோஜா, சிவாஜிக்குத் தைலம் பூ"கிறார். சரோஜாவின் கைப்பட்டதும் சிவாஜியின் காமத் தீ வெளிப்படுகிறது. தன் இச்சையை சரோஜாவிடம் கூறுகிறார். தான் நண்பனின் மனைவி என்பதை சரோராஜா ஞாபகப்படுத்துகிறார்.
கடுமையான மழை பெய்த ஒருநாள் சரோஜாவை கெடுக்க முயற்சிக்கிறார் சிவாஜி. அப்போது உண்டான மின்னலால் சிவாஜியின் கண் பார்வை பறி போகிறது. தன் தவறுக்கு கடவுள் கொடுத்த தண்டணை என்று உணர்ந்த சிவாஜி ஊரை விட்டுச் செல்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த எம்.ஜி.ஆர் நண்பனின் துரோகத்தை மன்னித்து மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
இரு பெரும் துருவங்கள் நடித்த கூண்டுக்கிளி பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படு தோல்வியடைந்தது. தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது இப்படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் அமைதியாக பார்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்சரோஜா, கொட்டாபுளி ஜெயராமன், ஈ.ஆர்சகாதேவன், டிகே.கல்யாணம், குச*லகுமாரி, டி.பி.முத்துலட்சுமி, அங்கமுத்து ஆயோர் நடித்தனர். திரைக்கதை வச*னம் விந்தன். பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ். கவி.காமு.ஷெரீப், மருதகாசி, விந்தன். இசை கே.வி.மகாதேவன். கொஞ்சுங் கிளியான பெண்ணை கூண்டுகிளி ஆக்கிவிட்டு கொட்டு மேளம் கொட்டுறது ச*ரியா தப்பா என்ற டி.எம்.எஸ்ஸின் குரல் இன்றும் மனதை வருடுகிறது. இயக்கம் டி.ஆர்.ராமண்ணா.
1954 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தபோது சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் நட்ச*த்திரங்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. விதி வச*த்தால் அதுவே முதலும் கடைசியுமான படமானது. ரசிகர்களை அமைதிப்படுத்தி இருவரும் இணைந்து நடித்திருக்கலாம். இருவரும் இணைந்து நடிக்காததற்கு தமிழக அரசியலும் ஒரு முக்கிய காரணம்.
http://i50.tinypic.com/2e51dfk.jpg
ரமணி
oygateedat
15th August 2012, 08:56 PM
THIRU VASUDEVAN AVARKALUKKU EN ANBU PARISU
http://i48.tinypic.com/vzj70m.jpg
Richardsof
15th August 2012, 09:00 PM
1971- makkal thilagam - manjula - unreleased movie - vellikizhamai -
song still - nerungi ...nerungi -pazhagum podhu
c.s.kumar sir forwaded this pic
http://i48.tinypic.com/2885z7b.jpg
Richardsof
15th August 2012, 09:42 PM
makkal thilagam national flag hoisting during independence day. 1985
http://i46.tinypic.com/2hhj5sk.jpg
pammalar
16th August 2012, 03:37 AM
Makkal thilagam mgr fan - from tiruppur s. Ravichandran proudly entering in makkal thilagam part2 with great happiness and my sincere thanks to all my friends in this thread.
மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் திரு.திருப்பூர் எஸ். ரவிச்சந்திரன் அவர்களை, மக்கள் திலகத்தின் உன்னத உலகமான இந்தத் திரிக்கு, சுதந்திரத் திருநாளாம் இந்த இனிய நன்னாளில், "வருக ! வருக !" என அன்புடன் வரவேற்கிறேன்..!
தங்களது வருகையால் ம.தி.யின் திரி மேலும் ஓங்கி உயரப் போகிறது என்பது உறுதி..!
தாங்கள் எமக்களித்த அன்பான பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
தங்களுக்கோர் பாசப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Alibaba1-3.jpg
அன்பு கலந்த வாழ்த்துக்களுடன்,
பம்மலார்.
pammalar
16th August 2012, 05:43 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 16
பொன்விழா ஆண்டு நிறைவு [1962 - 2012] ஸ்பெஷல்
குடும்பத் தலைவன் [வெளியான தேதி : 15.8.1962]
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
வரலாற்று ஆவணம் : மதி ஒளி : 15.8.1962
['மதி ஒளி' வெளியிட்ட "குடும்பத் தலைவன்" சிறப்பு மலரிலிருந்து...]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6479-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6480-1.jpg
'மதி ஒளி' வெளியிட்ட "குடும்பத் தலைவன்" சிறப்பு மலரிலிருந்து பதிவுகள் தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
lovedeva_pj
16th August 2012, 06:25 AM
MGR sivaji act together only one film the reason is not only their fans tamil cinema industry also engurage their contest, kamal also said this in one function this actors contest is in high range only in tami,l in telugu kannada hindi all big heroes act together in many films that is the stupidity in tamil film industry
Richardsof
16th August 2012, 06:35 AM
MGR sivaji act together only one film the reason is not only their fans tamil cinema industry also engurage their contest, kamal also said this in one function this actors contest is in high range only in tami,l in telugu kannada hindi all big heroes act together in many films that is the stupidity in tamil film industry
your view is wrong mr.lovedeva_pj
other langauges actors acting capacity is different and the individiual talent also some extent.
but tamil flim concerned both MGR AND SIVAJI CREATED THEIR EXCELLENT ROLES AND PERFORMANCE.
that's why till today mgr and sivali are living in the millions of hearts .
rajeshkrv
16th August 2012, 07:05 AM
your view is wrong mr.lovedeva_pj
other langauges actors acting capacity is different and the individiual talent also some extent.
but tamil flim concerned both MGR AND SIVAJI CREATED THEIR EXCELLENT ROLES AND PERFORMANCE.
that's why till today mgr and sivali are living in the millions of hearts .
esvee though i agree partially with your views but overall tamil film industry did not encourage multi starrers like other languages did
NTR-ANR acted in lot of movies, similarly in hindi even mammoty&lal act in lot of movies together .. Tamil somehow did not develop that culture
lovedeva_pj
16th August 2012, 07:41 AM
your view is wrong mr.lovedeva_pj
other langauges actors acting capacity is different and the individiual talent also some extent.
but tamil flim concerned both MGR AND SIVAJI CREATED THEIR EXCELLENT ROLES AND PERFORMANCE.
that's why till today mgr and sivali are living in the millions of hearts .
I didnt mention about their talent the whole cine world knows MGR capacity and sivaji's talennt there is no doubt I said tamil film industry ( sompe producers and directors in those days ) they encourage sivaji mgr contest for their purpose if they act together there would be more mile stones should exsit
Richardsof
16th August 2012, 08:50 AM
http://i50.tinypic.com/23uekit.png
Richardsof
16th August 2012, 08:52 AM
http://i48.tinypic.com/2hmpzdg.png
Richardsof
16th August 2012, 08:57 AM
http://i47.tinypic.com/t6cmzm.png
Richardsof
16th August 2012, 09:00 AM
http://i49.tinypic.com/6gzzwo.png
Richardsof
16th August 2012, 09:03 AM
http://i46.tinypic.com/2h3aq2t.png
Richardsof
16th August 2012, 09:32 AM
http://i46.tinypic.com/zsqnme.png
Richardsof
16th August 2012, 09:39 AM
INDEPENDENCE DAY POSTER AT BANGALORE
CONGRESS PERSON POSTER WITH MAKKALTHILAGAM- KANNADA ACTOR RAJKUMAR
http://i50.tinypic.com/2wn46yu.jpghttp://i46.tinypic.com/167ruvc.jpg
Richardsof
16th August 2012, 10:17 AM
THALAIVAN -1970
http://i50.tinypic.com/kxq95.png
Richardsof
16th August 2012, 01:31 PM
MATHI PIC IS TAKEN FROM ONE PHOTO STUDIO AT TANJORE ON 15TH AUG 2012 BY MGR FAN BALA.
http://i47.tinypic.com/126aibo.jpg
Richardsof
16th August 2012, 01:57 PM
mathi - temple near madurai pic from net.
http://i48.tinypic.com/24e25w8.jpg
vasudevan31355
16th August 2012, 04:26 PM
Thanks a lot Ravi sir.
http://maduraiveeran.files.wordpress.com/2008/08/ap_mgr.jpg
Richardsof
16th August 2012, 04:31 PM
[http://i46.tinypic.com/qybx40.jpg
vasudevan31355
16th August 2012, 04:35 PM
டியர் ரவி சார்,
கொன்னுட்டீங்க... என்ன ஒரு அற்புதப் பரிசு. திகைக்க வைத்து விட்டீர்கள். ஆனந்தத்தால் திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். நன்றி! தங்கள் பரிசை முன் கூட்டியே என்னிடம் தொலைபேசி வழியே கூறி என்னை மகிழ்ச்சிக் கடழலில் மூழ்கடித்த வினோத் சாருக்கு என் அன்பான ஸ்பெஷல் நன்றி.
vasudevan31355
16th August 2012, 05:24 PM
மக்கள் திலகம் ரசிகர்களுக்கு என் சுதந்திர தின அன்பு ஸ்பெஷல் பரிசு.
டியர் வினோத் சார்,
"என்னப் பொருத்தம்! நமக்குள் இந்தப் பொருத்தம்".
நீங்கள் எம்ஜியார் அவர்களோடு நாகேஷ் இருக்கும் கலர் கிராபிக்ஸ் பதிவை அளிக்கும் போதே நான் மதி திரியில் அளிக்க ஒரு வீடியோப் பதிவை அப்லோட் செய்ய ரெடி செய்து கொண்டிருந்தேன். ஆச்சர்யம் என்னவென்றால் அதுவும் நாகேஷ் எம்ஜியார் சம்பந்தப்பட்ட பதிவு. தங்களுக்கும் அன்பு நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், இனிய நண்பர் ராஜா அவர்களுக்கும், மற்ற மக்கள் திலகம் ரசிகர்களுக்கும் எனது சுதந்திர தின அன்பு ஸ்பெஷல் பரிசாக இந்த பரிசை அளிக்கிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள். இனி ஒரிஜினல் மக்கள் திலகம் நாகேஷைப் பற்றியும், மனோரமாவைப் பற்றியும் உங்கள் அனைவரிடத்திலும் உரையாடுவார்.
http://www.youtube.com/watch?v=KP4-jhptrEg&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
Richardsof
16th August 2012, 06:52 PM
solai [recently passed away] senior journalist with mathi
http://i49.tinypic.com/350wlnd.jpg
Richardsof
16th August 2012, 07:14 PM
http://i47.tinypic.com/dw8bwk.jpg
http://i45.tinypic.com/2hrpr84.jpg
Richardsof
16th August 2012, 07:31 PM
MGR SONG ANALYSIS IN THE NET. எம்.ஜி.ஆர். சட்டசபையில் கேட்ட கேள்விகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.
கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் பாடிய ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று. அதிலும் அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.
http://i48.tinypic.com/2pu0izc.jpg
ஏன் என்று சொல்கிறேன்.
பொறியியல் துறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வோம். அவற்றில் ஒன்று 5 Why and 1 How Analysis.
ஏன் ஏன் என்று கேட்டுக் கேட்டு ஒவ்வொரு ஏனின் பதில் மீதும் மறுபடி ஏன் கேட்க வேண்டும்.
நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.
ஐ.எஸ்.ஒ., டிஎஸ் 16949 போன்ற தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் தகுதிக்கு முன் வைக்கிற விஷயம் continual improvement. அதாவது தொடர்ச்சியான மேம்பாடுகள்.
அதை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?
அதுவும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!
kiamqewaf
16th August 2012, 08:37 PM
To be frank , I am not even a edhirkatchi , when it comes to MGR ..I myself a MGR fan like you ,but may not fit into the same category of Typical MGR fan who prefer MGR over Sivaji .. Likewise I don't think you or selva are anti- Sivaji .I like MGR , But I am a Sivaji veriyan .
As I said before , we have to move on .. If anybody says MGR was a failure hero , I will be one oppose it .. Here the issue is not whether MGR was BO Star or not ..But Whether MGR is the only BO star and NT was not OR MGR is the BO star and NT was also BO Star equally .. I Think you already acknowledged the later ..I also acknowledge that the misconception about NT's BO power compare to MGR was is more of assumptions and the overall view due to MGR's undisputed success as a political leader , unlike NT . Pls lets not get into which poster is real ,which is not .
MGR was really popular In A,B, and C centres. That is why he could capitalise those affectionate fans loyalty in to votes and
become popular in Politics. Even today AIADMK means MGR only. I dont think any body like MGR will captute People mind and
become Chief Minister in next 40 years. In the last 40 years also nobody achieved.
Comparing MGR films with these type of statistics is not warranted This is disdraceful to him. MGR came(from Ceylon),achieved( In
Tamilnadu) and gone and Still lying in the HEARTS of Crores of people. No body can deny it.
Government of India has given highest Civilian award (Bharat Ratna) and full honory respect given to him in Marina Beach.
When lakhs of admirers come from various parts of Tamilnadu to Chennai they can see MGR memorial in T.Nagar
He has given all his earned wealth for Tamilnadu people welfare. He has not allowed his family members to use his good offices.
He has got the record of having the highest number of statues in nook and corner of entire Tamilnadu.
WHAT ELSE REQUIRED to understand the magnanimous of MGR.!!!!!.
After all these achievements (I have narratted only 1/1000) if somebody again and again compares MGR film statistics
no more words to narrate. MGR popularity is beyond comparison of anything with anybody.
MGR has missed one thing during his lifetime. Had he owned one theatre he would not have faced problem in releasing his "USV"
and his films that ran between 70-80 days would have run 100 days and films that crossed 140 days would have run silver jubiliee.
I'm compelled to write above lines since present genaration should know about greatness of MGR tooooooo.
oygateedat
16th August 2012, 10:17 PM
மக்கள் திலகத்தின் அன்பு சகோதரர் பெரியவர் திரு எம் ஜி சக்கரபாணியின் பேரனும் எனது அன்பு நண்பருமான திரு பிரதீப் பாலு அவர்களின் பேட்டியை வெளியிட்ட ஆனந்த விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகளை மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
http://i47.tinypic.com/29qe2ye.jpg
oygateedat
16th August 2012, 10:39 PM
MAKKAL THILAGATHIN VANNA PUGAIPADATHAI EMAKKU PARISALITHA PAMMALAR AVARKALUKKU ITHO NADIGAR THILAGANGAL
http://i48.tinypic.com/t5jh43.jpg
oygateedat
16th August 2012, 11:07 PM
http://i45.tinypic.com/2mxkrq.jpg
masanam
16th August 2012, 11:30 PM
MGR was really popular In A,B, and C centres. That is why he could capitalise those affectionate fans loyalty in to votes and
become popular in Politics. Even today AIADMK means MGR only. I dont think any body like MGR will captute People mind and
become Chief Minister in next 40 years. In the last 40 years also nobody achieved.
Comparing MGR films with these type of statistics is not warranted This is disdraceful to him. MGR came(from Ceylon),achieved( In
Tamilnadu) and gone and Still lying in the HEARTS of Crores of people. No body can deny it.
Government of India has given highest Civilian award (Bharat Ratna) and full honory respect given to him in Marina Beach.
When lakhs of admirers come from various parts of Tamilnadu to Chennai they can see MGR memorial in T.Nagar
He has given all his earned wealth for Tamilnadu people welfare. He has not allowed his family members to use his good offices.
He has got the record of having the highest number of statues in nook and corner of entire Tamilnadu.
WHAT ELSE REQUIRED to understand the magnanimous of MGR.!!!!!.
After all these achievements (I have narratted only 1/1000) if somebody again and again compares MGR film statistics
no more words to narrate. MGR popularity is beyond comparison of anything with anybody.
MGR has missed one thing during his lifetime. Had he owned one theatre he would not have faced problem in releasing his "USV"
and his films that ran between 70-80 days would have run 100 days and films that crossed 140 days would have run silver jubiliee.
I'm compelled to write above lines since present genaration should know about greatness of MGR tooooooo.
Rightly written. Thanks a lot.
Richardsof
17th August 2012, 05:16 AM
எம்.ஜி.ஆர். சுடப்பட்ட பிறகு நடித்து வெளிவந்த "காவல்காரன்", பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வசனம் பேசுவதில் குறை தெரிந்தாலும், சென்னையிலும், மற்ற ஊர்களிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் சத்யராஜா பிக்சர்ஸ் "அரச கட்டளை", சத்யா மூவிஸ் "காவல்காரன்" ஆகியவையாகும்.
"அரச கட்டளை"யில் எம்.ஜி. ஆருடன் ஜெயலலிதா, சரோஜாதேவி ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. "எடிட்டிங்", "ரீ ரிக்கார்டிங்" போன்ற ஒரு சில வேலைகளே பாக்கி. அந்தப் பணிகள் முடிந்து படம் 19_5_67 அன்று வெளிவந்தது. படம் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தை எம்.ஜி. ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி டைரக்ட் செய்திருந்தார். வசனம்: சொர்ணம். இசை: கே.வி.மகாதேவன்.
சத்யா மூவிஸ் "காவல்காரன்" படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம்: வித்வான் வே.லட்சுமணன். இசை: எம்.எஸ். விஸ்வநாதன். டைரக்ஷன் பொறுப்பை பா.நீலகண்டன் ஏற்றிருந்தார்.
எம்.ஜி.ஆர். சில காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. குணம் அடைந்த பிறகு, எம்.ஜி.ஆர். அந்தக் காட்சிகளில் நடித்தார். அவரால் வழக்கம் போல் நடிக்க முடிந்தது; ஆனால் வழக்கம் போல் பேச முடியவில்லை. குரலில் குறை தெரிந்தது.
"பொருத்தமான குரல் உடையவர்களைக்கொண்டு பின்னணி குரல் (டப்பிங்) கொடுக்கலாம்" என்று சிலர் யோசனை தெரிவித்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்கவில்லை. "நானே பேசுகிறேன். மக்கள் ஏற்றால் தொடர்ந்து நடிக்கிறேன். ஏற்காவிட்டால், நடிப்பதையே விட்டு விடுகிறேன்" என்று கூறினார்.
அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்.
7_9_1967 அன்று "காவல்காரன்" வெளியாயிற்று. சில கட்டங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
"காவல்காரன்" சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாள் ஓடியது. மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களிலும் நூறு நாள்.
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் 162 நாட்களும், மற்றொரு தியேட்டரில் 127 நாட்களும் ஓடி சாதனை படைத்தது.
"தன் குரலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்" என்று எம்.ஜி.ஆர். திருப்தி அடைந்துவிடவில்லை. "முன்போல் கம்பீரமாகப் பேசவேண்டும்" என்ற வைராக்கியத்துடன், தினமும் வீட்டிலேயே உரத்த குரலில் பேசிப் பயிற்சி பெற்றார். குரலில் காட்ட வேண்டிய ஏற்றத் தாழ்வுகளையும், உணர்ச்சிகளையும் மீண்டும் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டார். அவருடைய விடா முயற்சி வெற்றி பெற்றது. மீண்டும் முன்போல் பேசும் சக்தியை நாளடைவில் பெற்றார்.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "விவசாயி", 1967 நவம்பர் 1_ந்தேதி வெளிவந்தது. இதில், எம்.ஜி.ஆர். வசனம் பேசுவதில் மிகுந்த முன்னேற்றம் காணப்பட்டது. இந்தப்படத்தில், எம்.ஜி.ஆரின் ஜோடி கே.ஆர்.விஜயா. இதை இயக்கியவர் எம்.ஏ.திருமுகம்.
நன்றாக குணம் அடைந்துவிட்ட எம்.ஜி.ஆர், மீண்டும் நிறைய படங்களில் நடிக்கலானார். 1968_ல் "ரகசிய போலீஸ் 115", "தேர்த் திருவிழா", "குடியிருந்த கோயில்", "கண்ணன் என் காதலன்", "புதிய பூமி", "கணவன்", "ஒளி விளக்கு", "காதல் வாகனம்" ஆகிய 8 படங்களில் நடித்தார். இந்த எட்டுப்படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.
எல்லாமே வெற்றிப் படங்கள் என்றாலும், "குடியிருந்தகோயில்" "மெகா ஹிட்" படம். சரவணா ஸ்கிரீன்ஸ் தயாரிப்பான "குடியிருந்த கோயி" லில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்தார். ஜெயலலிதா, ராஜஸ்ரீ இணைந்து நடித்தனர். இசை அமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன். வசனம்: சொர்ணம்.
"ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்", "துள்ளுவதோ இளமை", "நான் யார்... நான் யார்", "உன் விழியும் என் வாளும் சந்தித்தால்" முதலான இனிய பாடல்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த இந்தப்படத்தில், "குங்குமப்பொட்டின் மங்கலம்" என்ற பாடல் மூலம் பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் அறிமுகம் ஆனார்.
"ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்" என்ற பாடலுக்கு "எம்.ஜி.ஆரும், எல்.விஜயலட்சுமியும் ஆடிய பஞ்சாபி நடனம், ரசிகர்களிடம் கை தட்டல் பெற்றது. எம்.ஜி.ஆரின் 100_வது படம் "ஒளிவிளக்கு". இது ஜெமினி தயாரிப்பு.
1936_ல் வெளிவந்த "சதிலீலாவதி", எம்.ஜி.ஆருக்கு முதல் படம். இந்தப்படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன். முதல் படத்தில் இணைந்த இந்த இருவரும் 100_வது படத்திலும் இணைந்தனர். தமிழ்நாட்டில் ஒளிவிளக்கு நூறு நாள் ஓடியது.
இலங்கையில் ஐந்து தியேட்டர்களில் 100 நாள் படம். கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் 162 நாள் ஓடியது.
Richardsof
17th August 2012, 05:22 AM
malai malar - 1963-1964 mgr movies-
நூறு படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ள கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர். நடித்த படம் எதையும் டைரக்ட் செய்ததில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்" என்ற படத்தின் மூலம்தான், அவர் வசனகர்த்தாவாக திரை உலகில் அடியெடுத்து வைத்தார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். 1963_ல் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், கலைஅரசி, பெரிய இடத்துப்பெண், ஆனந்தஜோதி, நீதிக்குப்பின்பாசம், காஞ்சித்தலைவன், பரிசு ஆகிய 9 படங்களில் நடித்தார்.
"பணத்தோட்டம்", ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரித்த படமாகும். கே.சங்கர் டைரக்ட் செய்தார். கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். பி.எஸ்.ராமையா கதைக்கு வசனம் எழுதியவர் பாசுமணி. இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. வெற்றிகரமாக ஓடிய படம் இது.
"பரிசு" படத்தில் எம்.ஜி.ஆரும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். இசை: கே.வி.மகாதேவன். வசனம்: ஆரூர் தாஸ். இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர்: யோகானந்த். "தர்மம் தலைகாக்கும்", "நீதிக்குப்பின்பாசம்" ஆகியவை தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டிலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். இந்தப்படங்களை இயக்கியவர் எம்.ஏ.திருமுகம்.
டி.ஆர்.ராமண்ணாவின் "பெரிய இடத்துப் பெண்" பெரிய வெற்றிப்படம். இதில், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் சரோஜாதேவி.
மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்" படத்தில், மீண்டும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்தனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட நரசிம்மவர்மர் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட கதை. வசனங்களை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இடம் பெற்றிருந்தனர்.
வசனம், நடிப்பு, காட்சி ஜோடனை எல்லாமே சிறப்பாக இருந்தன. இதை டைரக்ட் செய்தவர் காசிலிங்கம். இப்படம் 26_10_1963_ல் வெளிவந்தது. சரோடி பிரதர்ஸ் தயாரிப்பான "கலை அரசி"யில், எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார். வசனம்: ரவீந்தர். "பறக்கும் தட்டு" காட்சிகள் இடம் பெற்ற படம் இது.
பி.எஸ்.வீரப்பாவின் ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரித்த "ஆனந்த ஜோதி"யில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக தேவிகா நடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். கமலஹாசனும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுத, வி.என்.ரெட்டியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர்.
1964_ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு.
இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.
ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது.
இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசி கர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி.
ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள். வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.
சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Richardsof
17th August 2012, 05:34 AM
http://i49.tinypic.com/34hf0is.jpg
Richardsof
17th August 2012, 08:25 AM
http://i49.tinypic.com/rs7oli.jpg
http://i48.tinypic.com/2lvbedh.jpg
Richardsof
17th August 2012, 08:52 AM
http://i47.tinypic.com/wit25t.png
http://i48.tinypic.com/27zbz0j.jpg
http://i46.tinypic.com/28tev69.jpg
http://i48.tinypic.com/28btx1l.jpg
Richardsof
17th August 2012, 08:57 AM
http://i48.tinypic.com/wi5yk1.jpg
http://i49.tinypic.com/4siq9x.jpg
Richardsof
17th August 2012, 12:31 PM
http://i47.tinypic.com/211mo85.jpg
Richardsof
17th August 2012, 07:32 PM
http://i49.tinypic.com/34eeupw.jpg
Richardsof
17th August 2012, 07:33 PM
http://i48.tinypic.com/m0veq.jpg
Richardsof
17th August 2012, 07:35 PM
http://i46.tinypic.com/30j5z5s.jpg
Richardsof
17th August 2012, 07:36 PM
http://i45.tinypic.com/v9sht.jpg
Richardsof
17th August 2012, 07:37 PM
http://i45.tinypic.com/2823n2t.jpg
Richardsof
17th August 2012, 07:43 PM
http://i46.tinypic.com/k0g9b5.jpg
Richardsof
17th August 2012, 07:57 PM
Article from net
ஒரு திரைப் படத்தில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி படத்தில் திணித்து அந்த பாடல்களை மக்கள் முணுக்க வைத்தவர். எம்.ஜி.ஆர் அவர்கள்.
இன்று சொல்லுகிறார்களே.." மக்கள் விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்ற காட்சிகளை வைக்கிறோம்." எம்.ஜி.ஆர் படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்களுக்கு யார் பொறுப்பு? நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் திரையலகத்தில் இருந்த காலத்தில் இருந்த எத்தனையோ நடிகர்களுக்கு எழுதாத பாடல்களை இவருக்கு மட்டும் ஏன் கவிஞர்கள் எழுதினார்கள்?
இன்னும் சொல்லப் போனால் சிவாஜி அவர்களின் படத்தைத்தான் ரசித்துப் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தை பொழுது போக்கினை எதிர்பார்த்து வரும் ரசிகர்களே அதிகம் பார்ப்பார்கள். அப்படி பொழுது போக்கிற்கு வரும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த ஒரு காரணத்திற்காகவே எவ்வளவு வேண்டுமானால் அவரை புகழ்ந்து கொண்டே இருக்கலாம்.
அவர் மிகக் குறைவாக வசனம் பேசும் நடிகராக வெறும் பொழுதுபோக்கு நாயகராக அவரை பார்க்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்காக ஒரு செய்தி. அவரே தயாரித்து அவ்ரே இயக்கிய படம் நாடோடி மன்னன். நான் அவன் இல்லை. என்று கூறிவிட்டு எம்.என். ராஜம் அவர்களிடம் பத்து நிமிடம் விடாமல் வசனம் பேசுவார். அதில் நவீன தொழில்நுட்பங்கள். காமிராவை கண்டபடி நகர்த்திக் கொண்டும் அவரும் கண்டபடி நடந்து கொண்டும் ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். நாற்பது வருடங்கள் கழித்துதான் அந்த உத்திகளை மற்றவர்கள் பரவலாக உபயோகப் படுத்தினார்கள்.
அதே போல் அவரது நூறாவது படம்கூட அவரது விருப்பக்கதைதான் அமைந்தது.
தாயைக் காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை நேசிக்க வேண்டும். தன்னையே நினைத்து கனவுகாணும் பெண்கள் தன் மனைவியாக இல்லாத சூழலில் தங்கையாகவே நினைக்க வேண்டும் முதலான கருத்துக்களை தொடர்ந்து திணித்து வந்து கொண்டிருந்தவர் அவர்.
எந்த சூழலிலும் படங்களில் மது குடிப்பதையோ புகைபிடிப்பதையோ செய்யாதவர். கூண்டுக்கிளி படத்தில் கூட எரியும் சிகரெட்டை கையில் வைத்திருந்து தூக்கியெரிந்து விடுவார். ஒளி விளக்கில் மது அருந்த நினைத்து பாட்டிலை எடுத்தவுடன் மனசாட்சி வந்து அவரை கண்ட படி திட்டுமாறு பாட்டு அமைத்திருப்பார்கள். இன்று சட்டம்போட்டு செய்யும் வேளையில் மனக் கட்டுப்பாட்டோடு நடத்திக் காட்டியவர் அவர்.
அவர் வில்லனாக நடித்த நினைத்ததை முடிப்பவனில் அவருக்குமுன்னால் சிகரெட் பிடிப்பவர்களை உடனே அடித்துவிடும் குணாதிசயம் படைத்தவராக வருவார். அந்தப் படம் வெளிவந்த காலத்தில்தான் நமது பகுதிகளில் வளர்ந்துவந்த நாகரிகம் அது. அதனை வெளிப்படையாக எதிர்க்கும்வண்ணம் அந்தப்பாத்திரப்படைப்பு அமைந்திருந்தது.
oygateedat
17th August 2012, 09:51 PM
http://i50.tinypic.com/4jm1w6.jpg
oygateedat
17th August 2012, 09:55 PM
http://i45.tinypic.com/bgur6a.jpg
oygateedat
17th August 2012, 10:03 PM
http://i46.tinypic.com/b6a7hz.jpg
oygateedat
17th August 2012, 10:08 PM
http://i50.tinypic.com/11hb9f6.jpg
RAGHAVENDRA
17th August 2012, 10:11 PM
டியர் ரவிச்சந்திரன் சார்,
தங்களுடைய படகோட்டி ஸ்டில் மிகவும் அருமை. படப்பிடிப்புத் தளத்தில் பிரத்யேகமாக எடுக்கப் பட்ட மிகவும் அபூர்வமான புகைப்படம். அப்போதைய ரசிகர்களிடம் மட்டுமே இருந்திருக்கும் இந்த ஸ்டில் சமீப காலத்தில் யாரும் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள். தங்களுக்கு பாராட்டுக்கள். தங்களுக்காகவும் வினோத் மற்றும் நண்பர்களுக்காகவும் ஏற்கெனவே இங்கே பதியப் பட்ட எம் ஜி ஆர் படம் போட்ட 2012 காலெண்டர் மீண்டும் தரப் படுகிறது.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/cal12B.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/mgrcalendar2012fw.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/mgrcalendar20123fw.jpg
oygateedat
17th August 2012, 10:14 PM
http://i48.tinypic.com/iegzzm.jpg
oygateedat
17th August 2012, 10:20 PM
DEAR RAGHAVENDRA SIR, THANK U FOR YOUR APPRECIATION.
http://i47.tinypic.com/20pdlxs.jpg
oygateedat
17th August 2012, 10:25 PM
http://i45.tinypic.com/2ijsydd.jpg
Richardsof
18th August 2012, 06:09 AM
18th AUG 1963 ... DEVAR FLIMS MATHI IN NEETHIKKU PIN PASAM RELEASED.
50 TH YEAR BEGINING......
http://i48.tinypic.com/35ivcs3.jpg
Richardsof
18th August 2012, 06:14 AM
http://i48.tinypic.com/3h407.jpg
RAGHAVENDRA
18th August 2012, 06:46 AM
தாய் சொல்லைத் தட்டாதே படத்திலிருந்து சில நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRBSDTST02.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRBSDTST03.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRTST01.jpg
பெற்றால் தான் பிள்ளையா
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrppillai1.jpg
எங்க வீட்டுப் பிள்ளை
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/EVP04.jpg
Richardsof
18th August 2012, 04:16 PM
என்ன வேண்டும் என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்?
முப்பது ஆண்டுகளுக்கு முன்…
சத்யா ஸ்டுடியோ வாசல்…….
பளபளக்கும் சிவப்பு நிற சில்க் சட்டை,பழுப்பேறிய வெள்ளை வேஷ்டி சகிதமாய், எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீவிய தலை, தான் அணிந்திருந்த சில்க் சட்டைக் காலருக்குள் எண்ணெயும் தண்ணீரும் கலந்த கசடு இறங்கி விடாமல் இருக்க கழுத்தைச்சுற்றிக் கைக்குட்டைத் தூவாளை இப்படி சுத்தமான கிராமத்து மண்வாசணை மணக்க நின்ற அந்த இருபது வயது இளைஞன் திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையைத் தேடும் ஒரு தகப்பனைப் போலவும், ஆபரேஷன் தியேட்டருக்குள் ஆசை மனைவியை அனுப்பி வைத்து விட்டு, வராந்தாவில் காத்துக் கிடக்கும் அன்புக் கணவனைப் போலவும், ஸ்ரீரங்க சொர்க்கவாசலில் ரங்கநாத பெருமாளின் தரிசனத்துக்காக காத்து நிற்கும் பக்தனைப் போலவும், ஸ்டுடியோ வாசலுக்குள் நுழையும் கார்களுக்குள் கண்களை நுழைத்துத் துருவிப் பார்ப்பதும், துழாவிப் பார்ப்பதும் பிறகு தலைகவிழ்ந்து சோகப்பட்டும், அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
கோடி மின்னலை குழைத்தெடுத்த அந்த குளிர் நிலவு, கோமேதகப் பெட்டகம், பெட்டகம். குற்றால அருவி, குறிவஞ்சிப்பாட்டு, அகம்கொண்ட எதிரிகளை புறம் கண்ட எரிமலை, வாரிக் கொடுக்கிற கார்மேகம், கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்தகடைசி வள்ளலான எம் மன்னன் எந்த காரில் வருவார். என்று எதிரில் தென்பட்டவர்களிடமெல்லாம் ஒரு பிச்சைக்காரனைப்போல் யாசித்து, விசாரித்து, எல்லோருக்கும் அவன் வேடிக்கைப் பொருளானான்.
அதில் ஒரு இரக்கவான் மட்டும், நீ நேசிக்கற நினைத்ததை முடிக்கும் நீதியின் நாயகன், பச்சை நிற அம்பாசிடரில்தான் வருவார் என்று, சீதைக்கு அனுமன், ராமனின் கணையாழியைக் காட்டி அடையாளம் சொன்னதைப் போல் கூறியவுடன், அந்தச் சீதையை விட, ஆயிரம் மடங்கு ஆனந்தம் அடைந்தான்; அந்த இளைஞன்.
இனி பச்சை நிறத்தில் எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடுவதென்ற தீர்மானத்துடன், அந்த இளைஞன் நின்றான். நீண்ட நேர பதட்டத்துக்குப் பிறகு, தொலை தூரத்தில் ஒருபசுமை தென்பட்டது. ஆம் அது நம் கலியுக கர்ண்னின் தேர்தான். நம் காவிய நாயகனின் பச்சைநிறக் கார்தான். பச்சை நிறத்தில் மின்னலா? ஓ.. காருக்குள் இருப்பது ஒளிவீசும் பகலவனாயிற்றே! பரவசம் தாளவில்லை. அந்தப் பச்சை நிறக் கார் சர்ரென்று வாசலை கிழித்து நுழைய, அனும் குறுக்கேபாய, கார் கன அடி பிசகி நின்று, பிறகு பின்னோக்கி வருகிறது. எப்படிப் பயமில்லாமல் விழுந்தானோ, அதே வேகத்தில் எழுந்து காரின் கண்ணாடிப் பக்கம் ஓடிவந்து நின்று கொண்டான் அந்த இளைஞன்.
பால்! நிலவை மூடியிருந்த, மேகப் பனி மூட்டம் துளித்துளியாய்க் கரைவது போலவும், பளிங்கு மாளிகையின் மணிமண்டப பட்டுத் திரைச் சேலை மெல்ல, மெல்ல இறங்குவது போலவும், காரின் கண்ணாடிக் கதவுகள் மெதுவாக இறங்குகிறது. அவனுடைய முகமெல்லாம் வியர்வைத்துளிகள்.முதலில் நம் வெற்றித் திருமகனின் நெற்றி மட்டும் தெரிகிறது. பிறகு ஈரமும், வீரமும கலந்த இருவிழிகள் தெரிகிறது. பிறகு வடிவான மூக்குத் தெரிகிறது. பிறகு, தாமரை மலரின் இரண்டு இதழ்களை பிய்த்து பதித்தது போன்ற செம்பவள வாய் தெரிகிறது. இப்பொழுது வட்ட வடிவமான முழு சந்திர பிம்ப முகத்தைப் பார்க்கிறான்.
இப்படி ஒரு பிறைநிலவு மெல்ல, மெல்ல முழு நிலவாய் மாறுகிற அதிசயத்தை ஒருமொட்டு முழு மலராக மலர்ந்து விரிகின்ற, அதிசயத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாக பார்த்து அனுபவிக்கிறான். ஒரு தாயின் மணி வயிற்றில் உருவான கரு, அழகிய சிசுவாக மாறுகிற அதிசயத்தை அப்படியே அவன் மட்டும் பார்த்ததாக ஆனந்தப்படுகிறான். இப்படி பார்த்து, பார்த்து, அப்படியே அவன் மூர்ச்சையாகிப் போனான். அவனுக்குப்பேச்சு வரவில்லை. இப்பொழுது பொன்மனச் செம்மலின் பொற்கரம் சன்னலுக்கு வெளியே வந்து, அவனது புழுதி மண் தோளை தொட்டு மட்டும் உலக்கிற்றது. சிலிர்க்கிறான்.
தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தும், தனக்கு நினைவே தெரியாமல் நோய்வாய்ப்பட்ட போதும், அந்த வீரத் திருமகனை! வாரிக்கொடுக்கிற அந்த வள்ளலை! வந்து சந்தித்தாலும், வேதமொழியாக முதலில் அவர்களிடம் கேட்கும் விசாரிப்பை, அந்த இளைஞனிடமும் அவதாரத் திருமகனான நம் வள்ளல், கேட்கிறார்-
“உனக்கு என்ன வேண்டும்? என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்?-பக்தன் பதறிப்போனான்.
“ஒன்றும் வேண்டாம்”
“ஆபத்து காலத்தில் என்னிடம் வா. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்ன ஏசுபிரானுக்குப்பிறகு,
“எல்லாம் நானே” “நான் பார்த்துக்கொள்கிறே” என்று கீதை சொன்ன கண்ணனுக்குப் பிறகு, நபிகள் நாயகத்துக்குப் பிறகு- இந்த வேத வார்த்தையை வள்ளல் சொன்னவுடன், இளைஞனின் இதயம் கனத்து, கண்களில் நீர் மட்டும் வழிகிறது. வள்ளலன் வலதுகரம் அந்த வியர்வை ஜாதியின் முகம் தொட்டு துடைத்து விடுகிறது. அந்த வித்தக விரல்களின் ஸ்பரிசத்தில், அந்த இளைஞனுக்கு தைரியம் பிறக்கிறது.
“எனக்குத் திருமணம் செய்து வைக்க, இரண்டு வருடங்களாக என் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். செய்தால் உங்கள் தலைமையில்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொல்லி இரண்டு வருடங்களாக உங்களைச் சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் இன்றுதான் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.
“எந்தத் தேதியில் உன் திருமணம்?”
“நீங்க சொல்ற தேதியில தான்”
“இல்லே…இல்லே…திருமணங்கறது பெரியவங்க பார்த்து வைக்கிற தேதி, அவுங்க நிச்சயத்த தேதியோட வா!”
இரண்டு கால்களில் நடந்து வந்த அந்த இளைஞன், இப்பொழுது, இரண்டு இறக்கைகளோடு போரூருக்கு அருகில் உள்ள தன் கிராமத்திறகுப் பறந்து செல்கிறான்.
மூன்று நாள் கழித்து திருமணப் பத்திரிக்கையுடன் சத்யா ஸ்டுடியோ வாசலில் அந்த இளைஞன் நிற்கிறான்.
இப்பொழுது வாட்சுமேனே வரவேற்று வாஞ்சையுடன், அந்த இளைஞனை, “உழைத்து வாழ வேண்டும்” படப்பிடிப்பில் வாள் வீச்சில் இருந்த வள்ளலிடம் அழைத்துச் செல்கிறார். அடையாளம் கண்டு கொண்ட வள்ளல், அருகில் வரச் சொல்கிறார்.
இளைஞன் மெல்லியதான குரலில், “வருகிற ஒன்பதாம் தேதி, ஒன்பதரை மணிக்குக் கல்யாணம்”
பத்திரிகையை வாங்கிய வள்ளல் தன்னுடைய மேக்கப் பெட்டிக்குள் சொருகிக்கொண்டே, பக்கத்தில் நின்ற உதவியாளரிடன், ஒன்பதாம் தேதியை ஞாபகப்படுத்தச்சொல்கிறார்.
ஒன்பதாம் தேதி மணி ஒன்பதேகால். அந்தத் திருமணப் பந்தலில் ‘குய்யோ முறையோ’ என்று ஒரே கூச்சல்.
“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா நீ அவருக்குச் சொந்தமா பந்தமா? இல்லை நீ வட்டமா? மாவட்டமா? இல்லை நீ எம்.எல்.ஏவா, எம்.பி.யா? உன்னை மாதிரி சாதாரண ரசிகன் வீட்டுத் திருமணத்துக்கெல்லாம் அவர் வர்றதுக்கு” என்று பெற்றோர்கள் பேசித் தீர்த்தார்கள்.
மூகூர்த்தம் நெருங்கி விட்டதால், உறவுக்காரர்கள் மாப்பிள்ளையை மணவறையில் அமர்ந்து தாலி கட்டச் சொல்கிறார்கள். ஆனால் இளைஞன், வள்ளல் வந்தால்தான் தாலி கட்டுவேன் என்று மறுக்கிறான். ஆனால் ஊர்க்காரர்கள் மாப்பிள்ளையை குண்டுகட்டாகத் தூக்கி, மணவறையில் உட்கார வைக்கிறார்கள் ஆனால் எகிறிப் பாய்ந்து , அந்த இளைஞன் தாலி கட்டமாட்டேன். நானே நேரில் போய் தலைவரைப் பார்க்கிறேன்” என்று ஓட்டமும் நடையுமாய் பஸ் பிடித்து, சத்யா ஸ்டுடியோ நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.!
அதே நேரத்தில்,சத்யா ஸ்டுடியோ உழைக்கும் கரங்கள் படப்பிடிப்பில் மேக்கப்பை சரி செய்ய, பொன்மனச் செம்மல் மேக்கப் அறைக்கு வருகிறார். அப்பொழுதுதான் மேக்கப் பெட்டியில் துருத்திக்கொண்டு தெரிந்த கல்யாணப் பத்திரிக்கை வள்ளலின் கண்களில் படுகிறது. பிரித்துப் பார்க்கிறார். பதறிப்போய்விடுகிறார் வள்ளல்! அருகில் இருந்த உதவியாளரிடம், “ஏன் ஞாபகப்படுத்தவில்லை; என்று ஏசுகிறார். டிரைவரை கூப்பிட்டு காரை எடு” என்கிறார். தார்பாச்சி ஸ்டைலில் கட்டிய வேஷ்டி , ஜிப்பா சகிதமாய் மேக்கப்பைக்கூட கலைக்காமல் காரில் ஏறுகிறார். கார் பறக்கிறது. போரூரைத் தாண்டி, அந்த இளைஞனின் கிராமத்தை விசாரிக்க்கிறார். வள்ளல். அந்த ஊருக்கு கார் போக வழியில்லை என்கிறார்கள்.
காரை விட்டு இறங்குகிறார்; வள்ளல். அந்த உச்சி வெய்யிலில் கால் முளைத்த சூரிய பிம்பமாய் உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி வர, ஒரு கிலோமீட்டர் தூரம் வீர நடை போடுகிறார்; வள்ளல்.
வானத்து தேவகுமாரனே தரை இறங்கி வந்தது போல், நம் கருணை வள்ளலின் கால் மலர்கள், அந்தக் கிராமத்துக்குள் பட்டவுடன் , அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்மை மறந்து திகைத்து நின்றார்கள்.
பொன்மனச் செம்மல் மண மேடைக்குச் செல்கிறார். அங்கே மணப்பெண் இருக்கிறாள் ஆனால் மணமகனைக் காணவில்லை. எங்கே? என்று கேட்கிறார் வள்ளல்.
உங்களைத் தான் தேடி ஓடி விட்டான்” என்று ஊரார் சொல்கிறார்கள்.
உடனே வள்ளல் அந்த இளைஞனை அழைத்து வர காரை அனுப்புகிறார். சத்யா ஸ்டுடியோ வாசலை நெருங்கிக் கொண்டிருந்த இளைஞனை காரில் தூக்கிப் போடுகிறார்கள்.
மாப்பிள்ளை மணவறைக்கு வந்தாகிவிட்டது. மக்கள் திலகம் மாங்கல்யம் எடுத்துத் தருகிறார். திருமணம் இனிதாக முடிந்த பிறகு, தன் ஜிப்பா பாக்கெட்டுக்களில் இருந்து இரண்டு நோட்டுக் கட்டுக்களை கையில் கொடுத்து, மாப்பிள்ளையின் காதில் ஏதோ சொல்லிவிட்டு, வள்ளல் கைகூப்பி விடைபெற்றுச் செல்கிறார்.
மறுநாள் அதே சத்யா ஸ்டுடியோ! அதே படப்பிடிப்பு. அங்கு பணியாற்றிய அத்தனை பேரிடமும், மதியம் என் செலவில் விருந்து என்கறார், நம் வள்ளல்.
மதியம் ஒரு மணியாகிவிட்டது. ஷாமியானா பந்தலில் மூன்று சிம்மாசனம் போன்ற சேர். மூன்று சேர் யாருக்காக? எதற்காக இந்த விருந்து? என்று எவருக்குமே புரியவில்லை.
சரியாக ஒரு மணிக்கு ஷாமியானா பந்தலை ஒட்டி ஒரு கார் வந்து நிற்கிறது. நேற்று திருமணமான அதே தம்பதியர், காரில் இருந்து இறங்குகிறார்கள். நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் தான் உட்கார்ந்து கொண்டு, இடதுபுறம் மணமகளையும், வலதுபுறம் மணமகனையும், உட்கார வைத்து, உண்ண வைத்து அழகு பார்க்கிறார் சத்துணவு தந்த நாயகன் நம் வள்ளல். விருந்து முடிகிறது. ஒரு வேன் வந்து நிறகிறது. அதில் கட்டில்,பீரோ, பாத்திரங்கள், இப்பொழுதான் யூனிட்டில் இருந்தவர்களுக்குப் புரிந்தது. வள்ளல் நேற்று மணமேடையில் மாப்பிள்ளையின் காதில் விருந்துக்கு, வரச்சொன்ன விஷயம்.
பொன்மனச் செம்மல் சம்பந்தி விருந்துண்ட அந்த இளைஞன் யார்?
அந்த இளைஞன்தான, வள்ளல் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது, வள்ளல் மீண்டும் உயிர் பெற தீ மிதித்து, தன்னுடை ஒரு கையை வெட்டிக்கொண்டான் என்று பத்திரிகையில், பரப்பரப்பாகப் பேசப்பட்டவன்!
வள்ளலே! இன்றைக்கு மக்களின் மனதில் இடம் பிடிக்க, மார்க்கம் தெரியாமல் அகநானூறு, புறநானூற்றில் இருந்து அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் வரை கரைத்துக் குடித்துவிட்டேன் என்கிற தகுதியோடு, மேடைகளில் பேசிக் கைதட்டல் மட்டும் வாங்கியவர்களெல்லாம், இன்று உனது திசை நோக்கி வாழ்கிறார்கள். அதனால் தான் கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்த கடைசி வள்ளலாய், எட்டாவது வள்ளல் என்று இன்று வரலாறு உன்னை இணைத்துக்கொண்டது.
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு.
Richardsof
18th August 2012, 04:27 PM
http://i49.tinypic.com/2zjf4p5.jpg
kiamqewaf
18th August 2012, 04:45 PM
Raajjaa
I really do not know what are you trying to prove here. Does MGR really need all this statistics to prove his popularity. One more statistics which cannot be argued which talks about MGR's popularity in TN. MGR was the only person who led his party undefeated in Tamilnadu assembly elections which beyond doubt proves his popularity in Tamilnadu and that achievement very unlikely to be repeated in Tamilnadu history again. Now let us focus on his movies and especially songs in his movie. Can we please do that?
Dear Sir, You are very correct.
MGR Popularity has gained elevation and momentum like a "ladder" in the " Paramapadam". Only up ! up !! up !!!
He has achieved the highest glory both in cenefied and and politics and left.
oygateedat
18th August 2012, 07:09 PM
NOW IN COIMBATORE DELITE THEATRE ARASAKATTALAI
http://i47.tinypic.com/d6493.png
oygateedat
18th August 2012, 07:18 PM
http://i45.tinypic.com/65cuxd.png
Richardsof
18th August 2012, 07:22 PM
http://i49.tinypic.com/2uel5vt.jpg
oygateedat
18th August 2012, 07:23 PM
http://i47.tinypic.com/u2bg6.jpg
oygateedat
18th August 2012, 07:26 PM
http://i46.tinypic.com/5mdf81.jpg
Richardsof
18th August 2012, 07:32 PM
http://i47.tinypic.com/2jba3x1.jpg
oygateedat
18th August 2012, 07:43 PM
http://i47.tinypic.com/359fx4m.jpg
oygateedat
18th August 2012, 07:50 PM
http://i50.tinypic.com/dwyidh.jpg
oygateedat
18th August 2012, 07:57 PM
http://i49.tinypic.com/x43l93.gif
oygateedat
18th August 2012, 08:12 PM
http://i48.tinypic.com/2cf0hc.jpg
Richardsof
18th August 2012, 08:27 PM
http://i49.tinypic.com/2qjy82e.jpg
Richardsof
18th August 2012, 08:29 PM
veenai s.Balachander with makkal thilagam.
http://i47.tinypic.com/21caulc.jpg
Richardsof
18th August 2012, 08:46 PM
BANGALORE - SRIRAMAPURAM -MGR BIRTH DAY CELEBRATION -2012
http://i48.tinypic.com/nf0ktk.jpg
http://i49.tinypic.com/2q0r0xe.jpg
http://i46.tinypic.com/a4936.jpg
pammalar
19th August 2012, 01:59 AM
MAKKAL THILAGATHIN VANNA PUGAIPADATHAI EMAKKU PARISALITHA PAMMALAR AVARKALUKKU ITHO NADIGAR THILAGANGAL
http://i48.tinypic.com/t5jh43.jpg
டியர் ரவிச்சந்திரன் சார்,
தாங்களும், esvee சாரும் தொடர்ந்து அட்டகாசப் பதிவுகளை இங்கே அள்ளி அளித்து வருகிறீர்கள், பாராட்டுக்கள்..!
எனது இதயதெய்வம் "தெய்வமக"னாக வாழ்ந்துகாட்டிய காவியத்தின் இரு நடிகர் திலகங்களை அன்புப்பரிசாக வழங்கிய தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
Thirumaran
19th August 2012, 06:12 AM
எனக்குள் M.G.R.! – ஒரு X – Ray தொடர் –வாலி
15. நான்கு நிகழ்வுகள்
அண்ணா அவர்கள் ஆற்றுப்படுத்தியபடி, அடியேன் அடிக்கடி ‘கன்னிமாரா’ நூலகம் சென்று வந்தேன்.
‘கன்னிமாரா’வில், கன்னிமாறாத் தமிழ் நூல்களை மட்டுமே வாங்கி வாசித்தலல்லாது – ஆங்கில நூல்களிலும் ஆழங்காற்பட்டேன். அதுவொன்றும் எனக்கு அசாத்தியமானதல்ல; நான், வெள்ளைக்காரன் காலத்து எஸ்.எஸ்.எல்.சி.! எனவே, வில்லியம் ஷேக்ஸ்பியர் எனக்கு ஏற்கெனவேயே வேண்டப்பட்டவராயிருந்தார்!
ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் – ஓர் உயரிய பாத்திரத்தைப் பேசு முகத்தான், இன்னொரு பாத்திரம் எடுத்தியம்புவதாக ஓர் உரையாடல் வரும்.
அது யாதெனில் –
“அவனது புலன்களே பூரித்தெழுந்து அகிலத்திற்கு அவனைப் பற்றி அறிவித்தன – ‘இதோ! ஒரு மனிதன்!’ என்று!”
– இதன் இறைச்சிப் பொருள் என்னவென்றால் – ஒருவனது உன்னத மாண்புகளுக்கு நற்சான்று, அவனது உறுப்புகளே வழங்குவதாம்!
காந்தி இறந்தபோது – ஷேக்ஸ்பியரின் இந்த வாசகத்தை – காந்திக்கு Attribute பண்ணி – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்!
அண்ணா மரித்தபோது –
மேற்கண்ட வாசகமே என் மனத்திரையில் நிழலாடியது. ஆம்; அடியேன் பார்த்தவரையில் பழகிய வரையில் –
அண்ணாவிடம் ‘மனிதம்’, அடுத்தவர்களைக் காட்டிலும் அதிக விழுக்காடுகள் கொண்டு துலங்கியது!
நான் பெரியார் அவர்களோடு பழகியிருக்கிறேன்; அண்ணா அவர்களோடு பழகியிருக்கிறேன்; கலைஞர் அவர்களோடும் பழகியிருக்கிறேன்.
மூவருமே முடை நாற்றமெடுத்த மூடப்பழக்க வழக்கங்களில் முழுகிக் கிடந்த மன்பதையைக் குளிப்பாட்டி சுத்தப்படுத்தும் பணியையே குறியாகக் கொண்டவர்கள்தாம். ஆனால் ஒன்று; பெரியார் – அடித்துத் திருத்துவார்; அண்ணா – அணைத்துத் திருத்துவார்; கலைஞர் – அடித்தும் அணைத்தும் திருத்துவார்!
இம்மூவருமே – ஒவ்வொரு கால கட்டத்தில் என் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்!
சுருங்கச் சொல்லப் போயின் –
என் திரையுலக வெற்றியெனும் வேர் தீய்ந்து போகாமல், அவ்வப்போது திராவிட இயக்கத்தவர்தான் தீர்த்தம் வார்த்தவர்கள்!
அம்புலிக்கு இருக்கும் அழுக்கு கூட, அண்ணாவுக்கு இருந்ததில்லை; பணம், பதவி – இரண்டும் அவரை அண்டி வந்த ஓராண்டிலேயே அண்ணா அவர்கள் ஆகாயம் ஏறிவிட்டார்கள் – அவற்றின் அழுக்கு தன்மேல் படாமல்!
இத்தியாதி காரணங்களால் –
அண்ணாவை மட்டும் எனக்கு விசேஷமாக எண்ணத் தோன்றுகிறது.
‘அக்கிரகாரத்தின் அதிசயப் பிறவி!’ என்றார் வ.ரா.வை அண்ணா; அடியேன் சொல்லுவேன், ‘அந்தண எதிர்ப்பாளரில் ஓர் அதிசயப் பிறவி’ என்று அண்ணாவை!
இதோ:
சில சம்பவங்கள்!
‘எதையும் தாங்கும் இதயம்’ படத்தில் எனக்குப் பாட்டெழுதும் வாய்ப்பை வாங்கித் தந்ததையும் –
பிறகு, அந்தப் பாட்டைக் கேட்டு அண்ணா அவர்கள் பாராட்டியதையும் ஏற்கெனவேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
அப்பொழுது –
மறக்க முடியாத ஒரு நிகழ்வு. நான் தலையை மொட்டையடித்திருந்தேன்.
‘இது என்ன மொட்டை?’ என்று அண்ணா கேட்டார்கள்.
‘திருப்பதி’ என்றேன்.
‘என்ன, நேர்ச்சிக்கடனா?’ வினவினார் அண்ணா.
‘ஆம்!’ என்றேன்.
அத்துடன் அண்ணா விடவில்லை; ‘என்ன நேர்ச்சிக்கடன்? நான் தெரிஞ்சுக்கலாமா?’ என்றார்.
‘உங்களால்தான் சார், மொட்டையடித்துக் கொண்டேன்!’ என்றேன். அண்ணா அவர்களை நான் ஆரம்ப காலங்களில் ‘சார்’ என்றுதான் விளிப்பேன்.
‘என்னாலா?’ என்று வியப்போடு வினவினார்கள் அண்ணா.
நான் சற்று விரிவாகச் சொல்லலானேன்.
“சார்! நான் படங்களில் பாட்டெழுதும் வாய்ப்பு – இந்தப் பிறவியில் எனக்குக் கிட்டாது – என்று சலித்து, வறுமை வேக்காட்டில் எரியும் சூளையில் வைத்த ஈர மண்ணாக வெந்து கொண்டிருந்தேன். ‘நல்லவன் வாழ்வான்’ வாய்ப்பு வந்தது. அப்போது நான் திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிக் கொண்டேன் – ‘அண்ணா அவர்கள் என் பாட்டை O.K. செய்துவிட்டால், நான் மலைக்கு வந்து முடியிறக்கிக் கொள்கிறேன்!’ என்று. ஏழுமலையான் உங்க உள்ளத்தில் புகுந்து என் பாட்டை O.K. செய்ய வைத்திருக்கிறான் என்று உணர்ந்து – அந்த நன்றிக்கடனை அடைக்கச் சென்ற வாரம்தான் திருப்பதி சென்று மொட்டை போட்டேன்!” என்றேன்.
வெற்றிலைக் காவி இலேசாக வீற்றிருக்கும் பல் வரிசை அவிர – அண்ணா அவர்கள் சிரித்தவாறு சொன்னார்கள்.
‘வாலி! உங்க பாட்டை O.K. செய்ய வைத்தது, உங்க எழுத்தே தவிர –
ஏழுமலையான் இல்லே!’
‘தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லுவார்கள் என்றேன் நான்.
அந்த அளவில் அந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டு அண்ணா கேட்டார்கள், ‘அது சரி; திருப்பதி போய்ட்டு வந்து, சமாராதனையை முடிச்சாச்சா?’ என்று.
‘சமாராதனையா?’ என்றேன் நான்.
‘ஆமாம்யா!.... நீங்க – ஸ்ரீரங்கத்து வைஷ்ணவராயிருந்துண்டு, இது எப்படி தெரியாம போச்சு? அதாவது –
திருப்பதிக்குப் போய், வேண்டுதலை நிறைவேற்றிட்டு வந்தால் மட்டும் பிரார்த்தனை முடிஞ்சதூன்னு அர்த்தமில்லே... வந்த கையோட – அஞ்சாறு பேருக்கு சாப்பாடு போடணும்... அதுக்குப் பேருதான் சமாராதனை! உமக்கு, நான் சொல்ல வேண்டியிருக்கு... இதைப் பண்ணாத்தான் – அந்த Circle பூர்த்தியாகும்!’
– அண்ணா இப்படிச் சொன்னதும் நான் அயர்ந்து போனேன்.
சடங்குகளை; சாங்கியங்களை; சம்பிரதாயங்களை; சமயாச்சாரங்களை –
தன், பேனாவையே பேனாக் கத்தியாக்கித் – தன் பத்திரிகையில் கிழித்துப் போடுபவரா இப்படிப் பேசுகிறார்!?
அதுதான் அண்ணா! அடுத்தவர் உணர்வுகளுக்கு அவர் போல் மதிப்பளிக்க வல்லாரை மண்மிசை நான் இதுகாறும் கண்டதில்லை.
சார்! நான் Club House - என்ற இடத்தில் இருக்கிறேன்... எப்படி சமாராதனையை நடத்த முடியும்?’ என்று பவ்வியமாக வினவினேன்.
‘உம்மகூட Roommates இருப்பாங்க இல்லே! அவங்களிலே யாரையாவது அஞ்சாறு பேரெ அழைச்சுக்கிட்டுப் போயி – Hotel-ல சாப்பாடு போடுய்யா..’ என்று என் முதுகில் வாஞ்சை பொங்கத் தட்டிக் கொடுத்தார் அண்ணா என்னும் அந்தப் பெருமகனார்!
பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் அண்ணாவின் பெருந்தன்மை பிறங்கக் கண்டேன்!
‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் நான் எழுதியதால் –
என்னை அங்கு இங்கு போகவிடாதபடி எல்லாப் பாடல்களையும் எழுதி வாங்க வேண்டி – எனக்கு அதன் தயாரிப்பாளர் திரு. வாசு அவர்கள், ஒரு Room போட்டுக் கொடுத்தாலும் – நான் தப்பித்துப் போய் விடாதபடி காவல் இருந்தார்.
Room என்றால் ஏதோ Hotel என்று எண்ண வேண்டாம்! அந்தக் காலத்தில் ‘எலியட்ஸ் பீச்’ என்று அழைக்கப் பெற்ற – பெஸன்ட் நகர்க் கடலோரத்தில் ஒரு மீனவர் குடிசை அது. அவ்வமயம் – அதுபோன்ற குடிசைகள் அங்கு பக்கம் பக்கம் நிறைய இருந்தன. அயல் நாட்டினர் வந்து அதில் தங்கி, உண்டு உறங்கி Sun Bath எடுப்பதுண்டு.
இதெல்லாம் – 1964– ஆம் வருடக் கதை!
அந்தப் படத்தில் ஒரு Duet. திரு. எம்.ஜி.ஆர். அவர்களும் திருமதி சரோஜாதேவி அவர்களும் பாடுவது.
பாட்டை எழுதி முடித்த பின் – நான், தயாரிப்பாளரோடு எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்க சத்யா ஸ்டூடியோவிற்குச் சென்றேன். Make-up- அறையில் எம்.ஜி.ஆர். இருந்தார்கள். எப்பொழுதும் – என்னை உடனே உள்ளே அனுமதித்து விடுவார்கள். ஆனால், அன்று அண்ணா அவர்கள் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்திருந்ததால் நான் சற்று உட்கார்த்தி வைக்கப்பட்டேன். நான் வந்திருப்பதை, திரு.பீதாம்பரம் அவர்கள் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆரிடம் உள்ளே போய்ச் சொல்ல – நான், உடனே உள்ளே அழைக்கப் பெற்றேன். அண்ணாவையும் அங்கு கண்ட ஆனந்தத்தில் இருவருக்கும் ஒரு வணக்கம் போட்டு ஓரமாக நின்றேன்.
அண்ணாதான் தன் அருகில் என்னை அமர்த்தி – ‘என்னய்யா பாட்டு? கேக்கலாமா?’ என்றார்.
எப்பொழுதும் நான் எழுதும் பாட்டை என்னளவில் ஒரு மெட்டுப் போட்டுப் பாடிக் காட்டுவதுதான் வழக்கம்.
ஆகவே, ‘பாடிக் காட்டுங்க’ என்றார் எம்.ஜி.ஆர்.
பல்லவியைப் பாடினேன்.
‘சக்கரைக்கட்டி பாப்பாத்தி –
என்
மனசெ வெச்சுக்கக் காப்பாத்தி!’ – என்று ஒரு வகையான Folk lyric அது – பாடிக் காட்டினேன் –
முழுப் பாட்டையும் அண்ணா அவர்களும், எம்.ஜி.ஆர். அவர்களும் வெகுவாக ரசித்தார்கள்.
‘அப்போ... நாளைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியோட கம்போசிங் இருக்கு – பாட்டெ, மெட்டுப் போடக் கொடுத்திடலாமா?’ என்று எம்.ஜி.ஆரைக் கேட்டேன்.
‘தாராளமா... வாழ்க!’ என்றார் எம்.ஜி.ஆர். எப்பொழுதும் அவர் தன் மன மகிழ்வை ‘வாழ்க’ மூலம்தான் தெரிவிப்பார்.
திடீரென்னு அண்ணா அவர்கள், ‘அந்தப் பல்லவியை மட்டும் இன்னும் ஒரு தடவை பாடிக் காட்டுங்க!’ என்றார். நான் பாடினேன் –
‘சக்கரைக்கட்டி பாப்பாத்தி –
என்
மனசெ வெச்சுக்கக் காப்பாத்தி!’ என்று.
உடனே அண்ணா, “வாலி! அந்தப் ‘பாப்பாத்தி’ங்கற வார்த்தையை மாத்திடுங்க!” என்றார்.
‘ஏன்? அதுல என்ன தப்பு? பாப்பாத்தி – காப்பாத்தி – என்று இயைபுத் தொடை அழகா வந்திருக்கே?’ என்று நான் தயங்கியவாறு சொன்னேன்.
அதோடு நில்லாது ‘பாப்பாத்தி’ என்று கிராமங்களில் பேர் வைத்துக் கொள்வது உண்டு என்பதையும் நான் இலேசாக ஞாபகப்படுத்தினேன்.
ஆனால் –
அண்ணா அதை ஏற்கவில்லை.
உடனே – நான்,
‘சக்கரைக்கட்டி ராஜாத்தி! –
என்
மனசெ வெச்சுக்கக் காப்பாத்தி!’ என்று சொன்னதும்,
அண்ணா முகம் மலர்ந்தார்.
‘தேவையில்லாமல், நாம் யார் மீதும் கல்லெறிய வேண்டாமே!’ என்றார்.
அதுதான் அண்ணா!
‘பாலன் பிக்சர்ஸ்’ அதிபர் திரு. K.R.பாலன் என் நெருங்கிய நண்பர்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தவுடன் – அண்ணா அவர்களுக்கும் அவரது அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர் பெருமக்களுக்கும், திரு.பாலன் வாஹினிக்கு எதிர்த்திசையில் இருந்த விஜயா கார்டனில் ஒரு அந்தியம்போதில் விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பாலன் அவர்கள் கலைஞரின் ஊர்க்காரர்; கலைஞருக்கு தூரத்து உறவாகக் கூட இருக்கலாம்.
கட்சியில் உள்ள அனைவரும் அவருக்கு அணுக்கமானவர்கள்!
அந்த விருந்துக்கு நானும் போயிருந்தேன்.
விஜயா கார்டன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பிரமாதமாக அழகை உமிழ்ந்த வண்ணமிருந்தது.
திரு. எம்.ஜி.ஆர். உள்பட, பிரமுகர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த I.A.S., I.P.S., அதிகாரிகள் என்று ஒவ்வொருவராக வந்து –
அண்ணாவை வரவேற்கக் குழுமியிருந்தனர். நான் அந்த மண்டபத்தின் நுழைவாயிலில், ஒரு மரத்தடியில் என் நண்பர் திரு.முல்லை சத்தியுடன், பல்வேறு விஷயங்களைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தேன்.
இந்த – முல்லை சத்திதான் கலைஞரோடு கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தவர்.
பாலன் படங்களுக்கெல்லாம், சத்தியும் திரு. மகேந்திரனும் சேர்ந்துதான் உரையாடல்கள் எழுதுவார்கள். ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனைத்தான் சொல்லுகிறேன்.
அண்ணா அவர்களின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய அண்ணா ஒரு வினாடி யதேச்சையாகச் சுற்று முற்றும் பார்த்தார்கள்.
மரத்தடியில் நின்று கொண்டிருந்த நான் மிக மிக பவ்வியமாக வணக்கம் தெரிவித்தேன்.
உடனே –
வாஞ்சையுடன் என்னை அருகே அழைத்தார்கள். முதலமைச்சராயிருந்த போதும், அவரது சௌலப்பியம் – அதாவது எளிவந்த தன்மை முனை முறியாமல் இருந்தது.
‘என்னங்க வாலி! நிறைய எம். ஜி.ஆர். படங்கள் எழுதுறீங்கன்னு கேள்விப்பட்டேன்... மகிழ்ச்சி... Try to be in his good books!' என்று ஆங்கிலத்தில் மொழிந்து நிறுத்தினார். நான் கேட்டுக் கொண்டேன்.
உடனே – என் காதருகே அண்ணா அவர்கள் ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு – அமைச்சர்கள் புடைசூழ மேடையை நோக்கிப் போனார்கள்.
அவர் சொன்ன வாக்கியம் இதுதான்:
'Your film songs have helped much to the success of D.M.K.!'
கற்பகம் ஸ்டூடியோவில் அண்ணா அவர்கள் ‘எதிர் நீச்சல்’ படம் பார்க்கிறார்கள். அடுத்த வாரம் அமெரிக்காவிற்குப் புறப்பட வேண்டிய அவசரத்தில் அவசியத்தில் அவரது உடல் நிலை தளர்ந்திருந்தது.
ஆயினும் – பாலசந்தர் அவர்களும் அரங்கண்ணல் அவர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, உடல்நலத்தைப் பெரிதாகக் கருதாமல், ‘எதிர்நீச்சல்’ படம் பார்க்க வந்தார்கள்.
அண்ணாவிற்கு –
பாலசந்தர் நாடகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்!
படம் பார்த்துவிட்டு அண்ணா, வெகுவாக பாலசந்தரிடம் பாராட்டுக்களைக் குவித்தார்... கார் ஏறு முன் –
‘வாலியிடம் சொல்லுங்க.. Title Song நல்லா எழுதியிருக்கிறார்!’
அன்றே – என் பிறவிப் பயன் தீர்ந்தது!
(தொடரும்)
Thirumaran
19th August 2012, 06:25 AM
எனக்குள் M.G.R.! – ஒரு X – Ray தொடர் –வாலி
16. எழுந்தார்; நடந்தார்!
‘எனக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!
‘திண்ணை பெருக்க வந்தேன்; என்னைத் தேசத்து மந்திரியாக்கினான்!’ – என்று கண்ணனைப் பாடினான், குவளைக் கண்ணனால் ஆனைக்கால்களிலிருந்து மீட்கப் பெற்ற அல்லிக்கேணிக் கவிஞன்!
தேரோட்டி மகனை அரை நொடியில் அங்க தேசத்துக்கு அதிபதியாக்கி – அழகு பார்த்தான் திருதராஷ்டிரன் மகன்!
இவற்றைப் போல் –
இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!
எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!
கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – Hurdles; Obstacles – ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
அது யாதெனில் –
ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!
நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் Shot -கள் குறைக்கப்படுகிறது!
பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.
ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!
ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். இந்தப் படத்தில்தான் திரு.ஏ.எஸ்.ஏ.சாமியின் உதவி வசன கர்த்தாவாகக் கலைஞர் அவர்கள் பணியாற்றுகிறார்கள்! பிறகு
‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;
‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மேற்சொன்ன மூன்று படங்களும், கலைஞரின் உரையாடல்களைத் தாங்கி வந்தவை!
‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!
மலைக்கள்ளன் படத்தில்...
நாடோடி மன்னன் படத்தில்...
மேலே நான் குறிப்பிட்டவை யாவும் – எம்.ஜி.ஆர். தன் வளர்ச்சி பற்றி ஒருநாள் விரிவாக விளக்கியவை.
விளக்கிவிட்டுச் சொன்னார்:
‘வாலி! உங்கள் பாட்டு எழுதும் துறையில், பல ஏற்றத் தாழ்வுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். விழும் போதெல்லாம், எழுவோம் என்ற நம்பிக்கையோடு இருங்கள். எதுவும் எதனோடும் முடிந்து போவதில்லை என்பதை எண்ணத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!’
– இன்னணம் Optimistic – ஆகப் பேசிய எம்.ஜி.ஆர். தான் எனக்குள் இருக்கிறார்!
எனக்குள் எம்.ஜி.ஆர். இருப்பதாலோ என்னவோ –
எம்.ஜி.ஆருக்கு வைத்தியம் பார்த்த பரம்பரையே எனக்கும் வைத்தியம் பார்க்கிறது!
பல ஆண்டுகளுக்கு முன் மாயவரத்தில் – அதாவது இன்றைய மயிலாடுதுறையில் ஒரு நாடகம் நடக்கிறது.
எம்.ஜி.ஆர். நாடகக் குழுவினர் நடத்திய அந்த நாடகத்தில் –
ஒரு காட்சியில் நடிகர் குண்டுமணி அவர்களை எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் தூக்குவார்.
இதில் என்ன வியப்பு என்று நீங்கள் நினைக்கலாம். நடிகர் குண்டு மணியைப் பார்த்த பட உலகத்தினருக்குப் புரியும் – இது எத்துணை சிரமமான காரியம் என்று; அதுவும் ஒரு மேடை நாடகத்தில் –
நகரும் சிறு குன்றென இருக்கும் நடிகர் குண்டுமணியைத் தலைக்கு மேல் தூக்குவது என்றால், மிகமிக எச்சரிக்கையாக மூச்சை உள்ளடக்கிச் செய்ய வேண்டிய காரியம். எம்.ஜி.ஆர். எப்பொழுதுமே சவால்களை எதிர்கொள்வதில் சந்தோஷப்படுபவர்.
அன்றைய நாடகத்தில் –
அன்னணம் குண்டுமணியை அவர் தூக்குகையில் திடீரென்று பாதங்கள் Balance – இழந்து எம்.ஜி.ஆர். கீழே சரிய –
முழங்கால் எலும்பு முறிந்து போகிறது!
எம்.ஜி.ஆருக்குக் கால் எலும்பு முறிந்த செய்தியைக் காற்று எடுத்துக் கொண்டு போய்க் கடல் கடந்து வாழும் தமிழர்களின் காதுகளில் போட்டது. பதை பதைத்துப் பிரார்த்தனையில் ஈடுபட்டோர் பலர்.
எம்.ஜி.ஆரின் திரையுலக ஏற்றத்தை ஏற்கெனவேயே சீரணிக்க முடியாமல் – அழுக்காறு என்னும் அஜீரணத்தில் அடிவயிறு மப்பேறிக் கிடந்த சிலர் –
“இனி எம்.ஜி.ஆர். அவ்வளவுதான்... அந்த ஆளுக்கு நடிப்பு அவ்வளவா வராது... Fight தான் அவரு கைவசம் இருக்கிற ஒரு கவர்ச்சியான அம்சம்; இப்ப – காலொடிஞ்சு போச்சு... எந்தக் காலத்துலே எலும்பு ஒட்டி, அவர் எழுந்து நடந்து....ம்...இதெல்லாம் ‘அத்தைக்கு மீசெ மொளைச்சா சித்தப்பா’ங்கற கதைதான்... பாவம்! R.R.சந்திரன்.... படம் பாதீல நிக்குது!”
– என்று வாய்நீளம் காட்டி விமர்சித்தனர்; சில பத்திரிகைகளும், அவர்கள் கருத்துக்குப் பெருமாள் மாடாக ஆயின!
இவர்களெல்லாம் –
இறையச்சம் இல்லாதவர்கள்; அல்லது இறைவன் திருவுளம் ஒன்றுதான் இவ்வுலகத்தை இயக்குகிறது என்கிற ஆழ்ந்த தத்துவத்தின்பால் ஆழங்காற்படாதவர்கள்!. எம்.ஜி.ஆர். மீண்டும் எழுந்து வர வேண்டும்; முன்னிலும் அதிக வலிவோடும் பொலிவோடும் வெண்திரையில் தோன்றி, முன்வரிசை மக்களுக்கு ‘வாத்யாரே’ என்று கூவி வண்ண மலரைத் திரைச்சீலையில் வாரி இறைக்கும் வாய்ப்பைத் தரவேண்டும் என்று –
ஈசன் எண்ணினான்; எண்ணியதைப் பண்ணினான்!
அற்றை நாளில் –
என்பு மருத்துவத்தில் ‘ஏதிவரிக்கு நிகர்?’ என எவராலும் ஏத்தப் பெற்ற திரு.எம்.நடராஜன் அவர்கள் வடிவத்தில் –
வானிருந்து வையம் இறங்கி வந்த இறை, திரு.எம்.ஜி.ஆரின் எலும்புகளை சீர் செய்தது; அவ் எலும்புகளை எஞ்ஞான்றும் விரிசல் விடா எஃகுக்கு நேர் செய்தது; எம்.ஜி.ஆர். எழுந்தார்; நடந்தார்; சுழற்றினார் வாளை; கழற்றினார் வில்லனின் தோளை; பொறாமைத் தீயில் பொசுங்கிப் பூதியாகிப் போனது – புறம் பேசிய புல்லர்தம் மூளை!
திரு. எம்.நடராஜனை – ‘எம்.ஜி.ஆர். உயிர்காத்த ஏந்தல்’ என்று வாய் வலிக்க உரக்கக் கூவி வாழ்த்தியது தமிழர் உலகு! – நாற்சந்தியில் அவருக்கு சிலை வைக்காத குறைதான்!
திரு. நடராஜன் அவர்களின் தவப்புதல்வர் திரு.மயில்வாகனன்; தந்தை எவ்வழி? தனயன் அவ்வழி!
திரு.மயில்வாகனன் என்னுடன் தொடர்பு கொண்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் – என் முதுகெலும்பு முறிந்தபோது என் வீடு வந்து வைத்தியம் பார்த்தவர்.
அவரை என் வீட்டிற்கு அனுப்பி வைத்தவர் அருளாளர் திரு.ஆரெம்வீ அண்ணன் அவர்கள். ‘கவிஞரே! எம்.ஜி.ஆருக்கு வைத்தியம் பார்த்தவரோட மகன், இப்போ உமக்கு வைத்தியம் பார்க்கப் போறாரு; நீர் – எம்.ஜி.ஆர். ஆள்தானே! ஆக – அந்த வைத்தியப் பரம்பரை உம்மைத் தொடருது!’ – என்று நகைச்சுவையாகச் சொன்னார் திரு.ஆரெம்வீ அவர்கள்.
இன்னும்
அந்த பந்தம் என்னை விடவில்லை. சென்ற மாதம் முதுகெலும்பில் அடிபட்டேன் கீழே விழுந்து!
இதோ –
வந்துவிட்டார் திரு.மயில்வாகனன் எனக்கு என்பு வைத்தியம் பார்க்க!
திரு. மயில்வாகனன் –
இன்று – எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். இந்தப் பதவிக்கு இவரினும் தக்கார் உளரோ இத்தரணியில்?
எலும்பு வைத்தியத்தில் இந்திய அளவு புகழ் பெற்றவர் டாக்டர் திரு.மயில்வாகனன்.
இவரும் – நானும் –
2007–ல் ஒன்றாக அப்துல் கலாம் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றோம்!
நான் – தீவிர முருக பக்தன்; என்னைக் காக்க மயில்வாகனனை அனுப்பி வைத்தது அந்த மயில்வாகனன்.
என்ன வேடிக்கை பாருங்கள்!
அந்த மயில்வாகனனும் நடராஜன் மகன்; இந்த மயில்வாகனனும் நடராஜன் மகன்!
எம்.ஜி.ஆர். மூலம் எளியேன் பெற்ற எத்துணையோ பேறுகளில் –
அன்பு வைத்தியமும் என்பு வைத்தியமும் ஒருசேரப் பார்க்கும், திரு.மயில்வாகனனின் நட்பும் ஒன்று!
எம்.ஜி.ஆர். –
காலடி பட்டார்; மீண்டார்!
குண்டடி பட்டார்; மீண்டார்!
பின் –
சொந்தக் கழகத்தாரால்
சொல்லடிபட்டார்; மீண்டார்!
இம்முறை – மீண்டதோடு மட்டுமல்ல; மண்ணை ஆண்டார் –
சந்தனப் பெட்டியில்
சயனிக்கும் வரை!
(தொடரும்)
Richardsof
19th August 2012, 07:12 AM
http://i47.tinypic.com/iepd2c.jpg
Richardsof
19th August 2012, 08:39 AM
http://i49.tinypic.com/sd30u8.jpg
http://i48.tinypic.com/29etc7t.jpg
Richardsof
19th August 2012, 08:45 AM
A RARE STILL FROM MATTUKKARA VELAN
http://i47.tinypic.com/1q0l55.jpg
Richardsof
19th August 2012, 08:48 AM
RARE STILL FROM ENTHNGAI - 1952
http://i46.tinypic.com/35n81t1.jpg
Richardsof
19th August 2012, 08:56 AM
TODAY 7PM - MURASU TV-
MAKKAL THILAGAM MGR IN THAYIN MADIYIL LATE EVENING SHOW.
http://i45.tinypic.com/2z520qo.jpg
Richardsof
19th August 2012, 09:09 AM
NOW RUNNING AT
MAHALAKSHMI THEATRE CHENNAI - REGULAR SHOWS. FROM 17TH AUG 2012
http://i45.tinypic.com/r0s2ab.jpg
Richardsof
19th August 2012, 09:14 AM
OLD FILE.
16-04-2010
NETRU INDRU NALAI - MAHALAKSHMI THEATRE PIC
http://i46.tinypic.com/33bfifq.jpg
Richardsof
19th August 2012, 09:16 AM
old file
netru indru nalai
2010
chennai - pilot theatre
http://i49.tinypic.com/1yvpmt.jpg
Richardsof
19th August 2012, 10:30 AM
http://i47.tinypic.com/23m3cw4.jpgKOVAI -DELITE THEATRE - FILE PIC
ARASAKATTALAI - NOW RUNNING [17-8-2012]
http://i47.tinypic.com/2nk42ab.jpg
Richardsof
19th August 2012, 10:59 AM
http://i48.tinypic.com/14ka346.jpg
Richardsof
19th August 2012, 11:02 AM
http://i50.tinypic.com/1r25va.jpg
Richardsof
19th August 2012, 11:03 AM
http://i45.tinypic.com/27yps9x.jpg
Richardsof
19th August 2012, 11:04 AM
http://i47.tinypic.com/15s8zk0.jpg
Richardsof
19th August 2012, 11:11 AM
http://i48.tinypic.com/t4zfqt.png
Richardsof
19th August 2012, 11:13 AM
http://i45.tinypic.com/1zx2ybp.png
Richardsof
19th August 2012, 11:14 AM
http://i45.tinypic.com/122nkvo.png
Richardsof
19th August 2012, 11:56 AM
http://i45.tinypic.com/2qk17qs.jpgதிரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!
நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?
“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.
.
oygateedat
19th August 2012, 12:35 PM
http://i50.tinypic.com/vrsuow.jpg
oygateedat
19th August 2012, 12:51 PM
http://i48.tinypic.com/5kkdas.jpg
oygateedat
19th August 2012, 01:06 PM
http://i45.tinypic.com/dm2vf6.jpg
oygateedat
19th August 2012, 01:09 PM
http://i45.tinypic.com/15fn2te.jpg
Richardsof
19th August 2012, 01:14 PM
http://i50.tinypic.com/2n7h4cl.jpg
Richardsof
19th August 2012, 01:15 PM
http://i45.tinypic.com/9kpizk.jpg
http://i47.tinypic.com/vx13kz.jpg
Richardsof
19th August 2012, 01:18 PM
http://i49.tinypic.com/200ze4y.jpg
Richardsof
19th August 2012, 01:24 PM
http://i50.tinypic.com/351hawi.jpg
oygateedat
19th August 2012, 05:09 PM
KALANKARAI VILAKKAM
http://i49.tinypic.com/raoubr.jpg
oygateedat
19th August 2012, 05:19 PM
STUNT SHANKAR WITH MAKKAL THILAGAM M G RAMACHANDRAN
http://i47.tinypic.com/28k29gz.jpg
Richardsof
19th August 2012, 05:29 PM
WISH YOU ALL A HAPPY RAMZAN .
MAKKAL THILAGAM IN MUSLIM ROLES.
1. MALAIKALLAN
http://i46.tinypic.com/eqng4l.jpg
2. alibabavum 40 thirudargalum.
http://i45.tinypic.com/2lrfh5.jpg
3.http://i45.tinypic.com/9k5xes.jpg
4.http://i49.tinypic.com/wk7j7.jpg
5. BHAGDAD THIRUDAN
http://i49.tinypic.com/alhekg.jpg
6. sirithu vazhavendum
http://i47.tinypic.com/34nrx3o.jpg
Richardsof
19th August 2012, 05:43 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.
யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.
அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.
இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.
1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...
'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.
உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதமாக...
'வாழ்ந்தவர் கோடி...மறைந்தவர் கோடி...மக்களின் மனதில் நிற்பவர் யார்?'
'மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்....ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் என்று போற்றிப் புகழ வேண்டும்'.
'கற்றவர் சபையில் உனக்காகத் தனி இடமும் தர வேண்டும்...
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் ...உலகம் அழ வேண்டும்.
நான் ஏன் பிறந்தேன்?'
'காலத்தை வென்றவன் நீ...காவியம் ஆனவன் நீ...'
'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.'
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.'
article from yazh sudakar from net.
Richardsof
19th August 2012, 06:18 PM
தமது படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில் அதிக அக்கறையும் சிரத்தையும் எடுத்துக் கொள்ளுவார் எம்.ஜி.ஆர்.
தாம் எதிர்பார்க்கும் விதத்தில் மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார் எம்.ஜி.ஆர்.
இதைப் பற்றி ' மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.
தாம் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமன்றி...பாடல் வரிகளும் கூட மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளுவார்.
எந்தப் பெரிய கவிஞராக இருந்தாலும்...எம்.ஜி.ஆர், போதும் என்று சொல்லும் வரை ...அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பாடல் வரிகளை அடித்துத் திருத்தி எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து பாடல் எழுதுவது வரை...இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும் , சகிப்புத் தன்மையும் அவசியமாக இருந்தது.
அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் கசக்கிப் பிழிந்து விடுவார்.
ஆனாலும் அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான் மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட எம்.ஜி.ஆரின் பழைய பாடல்களை இன்றைய 20 வயது இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகை அல்ல.
எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம் 'நினைத்ததை முடிப்பவன்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில் அவர்களை வேவு பார்க்க வந்து மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில் பாடுவதாக ஒரு பாடல் காட்சி.
மெல்லிசை மன்னர் எம்.ஜி.ஆருக்கே உரித்தான உற்சாகம் பொங்கி வரும் விதத்தில் அருமையான ஒரு மெட்டமைத்து எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
ஒரு பிரபலமான கவிஞரை அந்த மெட்டுக்குப் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
காட்சிச் சூழலை நன்கு கேட்டுத் தெரிந்து கொண்ட அந்தக் கவிஞர்...பாடல் எழுதி முடித்ததும் எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார்.
பாடல் வரிகள் நன்றாக இருந்தும் எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால் மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும் ,சரணங்களையும் எழுதச் சொன்னார்.
அந்தக் கவிஞரும் சளைக்காமல் எழுதிக் கொடுத்தார்.
ஆனாலும் எம்.ஜி.ஆர் முகத்தில் திருப்தி இல்லை.
வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து இதே மெட்டுக்கு எழுத வைத்தார்கள்.
அந்தப் பாடலிலும் மக்கள் திலகத்துக்குத் திருப்தி இல்லை.
இதே போல அந்த நாளில் பிரபலமாக இருந்த 5, 6 கவிஞர்கள் அந்த மெட்டுக்குப் பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர்.எந்த வரிகளுமே எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.
கடைசியில் ஒரு மூத்த கவிஞரைக் கூப்பிட்டு எழுதச் சொன்னார்கள்.
பாடல் வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆர் முகத்தில் பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது.
'இது தான் இதே தான் நான் எதிர் பார்த்தது ! என்றார் எம்.ஜி.ஆர்.
உடனே பாடல் ஒலிப் பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர் உற்சாகம் பொங்க.
அந்தப் பாடல் தான்....
' கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்அடையாளம் காட்டும்பொய்யே சொல்லாதது ...'என்ற பாடல்.
எம்.ஜிஆரின் எதிர்பார்ப்பைப் பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் யார் என்று கேட்கின்றீர்களா?
கவிஞர் மருத காசி.
Richardsof
19th August 2012, 07:38 PM
mathi in mattukara velan100 th day function
http://i46.tinypic.com/jqhtzo.jpg
Richardsof
19th August 2012, 07:40 PM
http://i46.tinypic.com/2myb1gj.png
Richardsof
19th August 2012, 07:51 PM
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....
(காலத்தை)
http://i47.tinypic.com/5mahyc.jpg
நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
(காலத்தை)
அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
(காலத்தை)
பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
(வேதனை)
சுடராக..
தோளில் திகழ் மலைத் தொடராக
தோகையின் நெஞ்சம் மலராக
உள்ளத்தில் இருக்கும் கனவாக
ஊருக்குத் தெரியா உறவாக
(காலத்தை)
....
Richardsof
19th August 2012, 08:00 PM
http://i49.tinypic.com/fctnoo.jpg
kiamqewaf
19th August 2012, 08:24 PM
உண்மை. மக்கள் திலகத்தின் படங்கள் a,b,c என அனைத்து சென்டர்களிலும் வசூலில் சாதனை அல்லது குறைந்தபட்ச கியாரண்டியை தருபவை. அதனால் தான் எம்ஜிஆர் அவர்கள் முதலிடத்தில் இருந்தார் என்பது வரலாறு.
Some interesting Statisticss about MGR and Sivaji Films up to 1982 from the book " Tamixz Cenema Vina Vidai" by
Lena Tamizhvanan published by Manimekalai prasuram.(first edition 1989
MGR Sivaji
No. of Films acted 136 236
100 days movies 56 68
Silver Jubilee 12 14
Producers Devar Films (17) Balajee (17)
Director Neelakandan (17) Bimsingh (18)
More No. Movies 1963,1966(9 films each) 1982 (12 films)
They have mentioned films name also in the book.
Please furnish more information about this statistics
Richardsof
19th August 2012, 09:30 PM
http://i48.tinypic.com/2jb2zrl.png
pammalar
19th August 2012, 10:27 PM
அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
"ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்"
http://www.youtube.com/watch?v=8mojYKUy6ws
அன்புடன்,
பம்மலார்.
RAGHAVENDRA
19th August 2012, 10:29 PM
IMAGES OF FROM THAYIN MADIYIL
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRBSDMOTHERLAP1.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/BSDMOTHERLAP3.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/BSDMOTHERLAP2.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/BSDMOTHERLAP1.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/BSDTHAYINMADIYIL3.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/BSDTHAYINMADIYIL2.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/BSDTHAYINMADIYIL1.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/THAYINMADIYIL3.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/THAYINMADIYIL2.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/THAYINMADIYIL1.jpg
Richardsof
20th August 2012, 06:21 AM
மக்கள் திலகத்தின் ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் என்ற பாடலை ரம்ஜான் நினைவாக வழங்கிய இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களுக்கு நன்றி .
முரசு தொலைகாட்சியில் நேற்று தாயின் மடியில் கண்டு களித்த நிலையில் . அப்படத்தின் நிழற் படங்களை அள்ளி தெளித்த இனிய நண்பர் திரு .ராகவேந்திரன் அவர்கட்கு நன்றி .
ஞா ன ஒளி வேந்தர் வாசு தேவன் சார்
உங்களின் மின்னல் வேக பதிவுகளுக்கு பாயிண்ட் டு பாயிண்ட் , அருமை ....
அன்புடன்
எஸ்வீ
Richardsof
20th August 2012, 06:29 AM
http://i50.tinypic.com/2ens22r.jpg
Richardsof
20th August 2012, 06:32 AM
http://i50.tinypic.com/294ksuc.jpg
Richardsof
20th August 2012, 06:35 AM
http://i46.tinypic.com/24xjspe.jpg
Richardsof
20th August 2012, 06:57 AM
FROM OLD FILE.
MADURAI - MEENAKSHI THEATRE -2007 ULAGAM SUTRUM VALIBAN
http://i50.tinypic.com/24pkimh.jpg
Richardsof
20th August 2012, 08:50 AM
chennai - otteri - saravana theatre -2009
http://i48.tinypic.com/29oogau.jpg
Richardsof
20th August 2012, 09:09 AM
http://i45.tinypic.com/zo6loy.jpg
குமுதம் - 1973 . தீபாவளி இதழ் .
உலகம் சுற்றும் வாலிபன் பெங்களூர் நகரில் நடராஜ் . சிவாஜி , நியூ அபேரா ஆகிய மூன்று திரை அரங்கில் 18th செப்டம்பர் 1973 அன்று நூறு நாட்களை கடந்தது .
மக்கள் திலகத்தின் இல்லத்தில் [தற்போது நினைவு இல்லம் ] மாடியில் உள்ள அவரது அலுவலகத்தில் உள்ள பீரோவின் மேல் அண்ணாவின் படத்தின் அருகில் உள்ள உலக உருண்டை ஷீல்ட் பெங்களூர் மக்கள்திலகம் மன்றம் சார்பாக 2 அக்டோபர் 1973 அன்று வழங்கப்பட்டது . மன்ற உறுப்பினர்கள் மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து ஷீல்ட் வழங்கி எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் .
THANKS TO MR. ROOPKUMAR . SRIMGR.COM.
Richardsof
20th August 2012, 09:51 AM
ulagam sutrum valiban rereleased several times during 1973-1994.
1994 - ulagam sutrum valiban rereleased in 12 theatre and created all time records .
BANGALORE - LAKSHMI THEATRE
http://i49.tinypic.com/sllb2b.jpg
vasudevan31355
20th August 2012, 12:40 PM
அனைவருக்கும் ரம்ஜான் தின நல்வாழ்த்துக்கள்.
http://www.youtube.com/watch?v=8mojYKUy6ws&feature=player_detailpage
joe
20th August 2012, 12:45 PM
Esvee,
You seems to ignore my request to provide the link when you just cut paste from other websites ..Try to give a credit to original authors.
http://www.tamilcinema.com/permanent/History/mgr.asp
joe
20th August 2012, 12:46 PM
"ரிக்ஷாக்காரன்" 1971-ல் இந்தியாவிலேயே சிறந்த நடிகராக எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது பெற்றத்தந்த படம் இது.
கொடுமை ..'பாரத்' -க்கும் 'பாரத் ரத்னா' -க்கு வித்தியாசம் தெரியாதவர்களெல்லாம் வரலாறு எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
Richardsof
20th August 2012, 12:58 PM
Dear Joe sir
http://www.tamilcinema.com/permanent/History/mgr.asp
by mistake it happened . deleted. thanks for your correction.
kiamqewaf
20th August 2012, 12:58 PM
கொடுமை ..'பாரத்' -க்கும் 'பாரத் ரத்னா' -க்கு வித்தியாசம் தெரியாதவர்களெல்லாம் வரலாறு எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
It is really a mistake in writing. But MGR is the only person to be awarded both such awards in India (1971 and 1988)
Richardsof
20th August 2012, 01:14 PM
http://i49.tinypic.com/104fcr8.png
Richardsof
20th August 2012, 02:14 PM
இனிய நண்பர் திரு .திருமாறன் அவர்கட்கு*
தொடர்ந்து *நீங்கள் பதிவிட்டுவரும் *கவிஞர் *வாலியின் எனக்குள் *mgr
தொடர் * மிகவும் *அருமை .எங்களது அன்பு பாராட்டுக்கள் .
masanam
20th August 2012, 02:54 PM
It is really a mistake in writing. But MGR is the only person to be awarded both such awards in India (1971 and 1988)
உண்மை. பாரத ரத்னாவும் பாரத் பட்டமும் பெற்ற ஒரே தமிழக நடிகர் மக்கள் திலகம் மட்டுமே.
Richardsof
20th August 2012, 03:13 PM
உண்மை. பாரத ரத்னாவும் பாரத் பட்டமும் பெற்ற ஒரே தமிழக நடிகர் மக்கள் திலகம் மட்டுமே.
BHARATH AWARD FUNCTION PIC
http://i47.tinypic.com/2i6z1jr.jpg
BHARATH AWARD PIC FROM SRIMGR.COM - THANKS TO ROOPKUMAR
http://i48.tinypic.com/2vwbjwy.jpg
Richardsof
20th August 2012, 03:39 PM
ANANDHA JOTHI 1963
MAKKAL THILAGAM WITH DEVIKA
http://i48.tinypic.com/23tqqno.png
lovedeva_pj
20th August 2012, 06:01 PM
Originally Posted by M.Kumar
It is really a mistake in writing. But MGR is the only person to be awarded both such awards in India (1971 and 1988)
by masanam
உண்மை. பாரத ரத்னாவும் பாரத் பட்டமும் பெற்ற ஒரே தமிழக நடிகர் மக்கள் திலகம் மட்டுமே.
======
It is not only in tamil nadhu also in whole india he is the only actor got that award even the great hindi actors Dillipkumar Rajkapoor didn't got it only great bangal director Satyajit ray great hindi singeres Latha Mangeskar got it in cine field
===================
Bharat ratha is the highest civilian award for extraordinary talented indians for their service
so it cant be a silly mistake it was properly examined and given
and it was given only very few people like
Rajagopalachari
C V Raman
Nehru , Indra Gandhi
Mother Teresa
joe
20th August 2012, 06:49 PM
ஐயா கனவான்களே,
எம்.ஜி.ஆர் பாரத்ரத்னா-வும் பெற்றார் என்பதும் எமக்குத் தெரியும் ..ஆனால் ரிக்*ஷாக்காரனுக்காக பாரத்ரத்னா பெற்றார் என்பதையே அபத்தம் என்கிறேன் ..பின்னர் அவருக்கு பாரத்ரத்னா கொடுத்தது அவர் நடிகர் என்பதற்காகவோ அவரின் கலையுலக சேவைக்காகவோ அல்ல .. அரசியலில் அவரின் பங்களிப்புக்காக குறிப்பாக சத்துணவு திட்டத்தை வெற்றிகரமாக விரிவாக்கம் செய்து முன்னுதாரணமாக இருந்ததற்காக .
lovedeva_pj
20th August 2012, 07:39 PM
MR joe
joe said :
ரிக்*ஷாக்காரனுக்காக பாரத்ரத்னா பெற்றார் என்பதையே அபத்தம் என்கிறேன் .. அவரின் கலையுலக சேவைக்காகவோ அல்ல .. அரசியலில் அவரின் பங்களிப்புக்காக குறிப்பாக சத்துணவு திட்டத்தை வெற்றிகரமாக விரிவாக்கம் செய்து முன்னுதாரணமாக இருந்ததற்காக
==========================
MGRரின் கலைசேவைக் அல்ல அரசியலுக்கு கொடுத்தது என்று சொல்கிறீர் அப்படியென்றால் ரிக்*ஷாக்காரனுக்காக பாரத்ரத்னா பெற்றார் என்று ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் உம்முடைய கூற்றில் இருந்து கலைக்கும் அரசியலுக்கும்கொடுத்ததாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும்
அதுதான் உண்மையும்கூட
joe
20th August 2012, 07:46 PM
ரிக்*ஷாக்காரனுக்காக பாரத்ரத்னா பெற்றார் என்று ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்
யாராவது இதற்கு பொழிப்புரை அளித்தால் தன்யனாவேன்.
app_engine
20th August 2012, 08:27 PM
Request to Thirumaran :
Can you please start a separate thread for MGR-vAli and move all your posts & related discussions to that?
advance nanRikaL!
oygateedat
20th August 2012, 09:01 PM
http://i48.tinypic.com/2s8h3iq.jpg
thellavaari
20th August 2012, 09:07 PM
http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_20.html
oygateedat
20th August 2012, 09:46 PM
http://i50.tinypic.com/23sugwm.jpg
oygateedat
20th August 2012, 10:05 PM
http://i50.tinypic.com/fxqxba.jpg
rajeshkrv
21st August 2012, 05:27 AM
இனிய நண்பர் திரு .திருமாறன் அவர்கட்கு*
தொடர்ந்து *நீங்கள் பதிவிட்டுவரும் *கவிஞர் *வாலியின் எனக்குள் *mgr
தொடர் * மிகவும் *அருமை .எங்களது அன்பு பாராட்டுக்கள் .
yes. well said
Richardsof
21st August 2012, 05:50 AM
http://i50.tinypic.com/30aq4ie.png
Richardsof
21st August 2012, 06:02 AM
http://i46.tinypic.com/1zco21c.png
Richardsof
21st August 2012, 06:15 AM
http://i46.tinypic.com/2py13xs.jpg
Richardsof
21st August 2012, 08:21 AM
Dear kumar லேனா தமிழ்வாணன் வெளியிட்டுள்ள புத்தகம் பற்றியும் மக்கள்திலகம் , நடிகர் திலகம் படங்களின் விபரமும் கேட்டிருந்தீர்கள் .
இரண்டு திலகங்களும் மகத்தான சாதனைகளை புரிந்துள்ளார்கள் . இன்றைய நிலையில் மக்கள் திலகத்தின் திரியில் அவரது திரைப்பட நிழற் படங்கள் , வீடியோ , விளம்பரங்கள் ,,ஆவணங்கள் , கட்டுரைகள் ,கருத்து பதிவுகள் என்று மதியின் நண்பர்களும் , நதியின் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து கொண்டு வருகின்றனர் .
எனவே கடந்த கால வசூல் சாதனை ஒப்பீடுகள் , தேவையற்றது
நீங்களும் மக்கள் திலகத்தின் பெருமைகளை இங்கே பதிவு செய்யவும் ..
Richardsof
21st August 2012, 08:27 AM
இனிய நண்பர் திருப்பூர் ரவி
உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை . தொடர்ந்து மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் , கடந்த கால ஆவணங்கள் , விளம்பரங்கள் பதிவிடவும்
அன்புடன்
எஸ்வீ
Richardsof
21st August 2012, 08:36 AM
rare pic
http://i48.tinypic.com/maat0i.png
Richardsof
21st August 2012, 08:39 AM
A SUPER FIGHT SECENE FROM BHARATH AWARD MOVIE RIKSHAKARAN 1971
http://i49.tinypic.com/312wh1i.png
Richardsof
21st August 2012, 08:42 AM
Nandri -; cine varalaru . Malai malar
சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த "ரிக்ஷாக்காரன்" வரலாறு படைத்த படமாகும்.
படித்த இளைஞன் ஒருவன், ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண் முகம் எழுத, டைரக்ஷனை எம். கிருஷ்ணன் கவனித்தார்.
எம்.ஜி.ஆர். பெற்ற விருதுகள்....
பாரத் இந்திய அரசு 1971,
பாரத் ரத்னா இந்திய அரசு 1988,
டாக்டர் பட்டம் சென்னை பல்கலைக்கழகம் 1983,
கௌர டாக்டர் பட்டம் அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974,
அண்ணா விருது தமிழக அரசு 1971,
சிறந்த நடிகர் இலங்கை அரசு 1968,
ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971 ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு1971,
மலைக்கள்ளன் சிறந்த நடிகர் இரண்டாம் பரிசு - இந்திய அரசு 1954, காவல்காரன் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1967,
குடியிருந்த கோயில் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1968, அடிமைப்பெண் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1969,
எங்க வீட்டுப் பிள்ளை சிறந்த நடிகர் ஃபிலிம் ஃபேர் வருது, 1965
அடிமைப்பெண் சிறந்த படம், முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது. 1969
உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973
இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், "சோ", ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.
29_5_1971_ல் வெளிவந்த "ரிக்ஷாக்காரன்" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில் வாலி இயற்றிய, "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு", "பொன்னழகை சிந்தும் பெண்மை", "ஆணிப்பொன் தேர்கொண்டு", "கடலோரம் வாங்கிய காற்று", அவிநாசிமணி எழுதிய "கொல்லிமலை காட்டுக்குள்ளே" ஆகிய பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.
Richardsof
21st August 2012, 09:21 AM
http://i45.tinypic.com/3493q7d.jpg
Richardsof
21st August 2012, 09:27 AM
http://i48.tinypic.com/34htjlf.png
Richardsof
21st August 2012, 09:55 AM
Tv - news reader and drama artist mr.varadharajan with makkal thilagam.
http://i50.tinypic.com/2v10uwk.jpg
vasudevan31355
21st August 2012, 10:37 AM
டியர் வினோத் சார்,
பதிவுகள் அட்டகாசம். அருமையான அரிதான புகைப்படங்கள், அற்புத தகவல்கள், தியேட்டர் திருவிழாக்கள் என்று பட்டை கிளப்புகிறீர்கள். அதே போல் இரு சாதனையாளர்களும் நம்மிடையே இல்லை. எனவே வசூல் ஒப்பீடுகள் தேவையற்ற ஒன்று. அந்தந்த சாதனையாளர்களின் சாதனை விவரங்களை மட்டும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட திரியில் யார் மனமும் கோணாமல் பதியலாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். அப்படி வசூல் ஒப்பீடு செய்து அதனால் தேவையற்ற வாதங்கள், மனக்கிலேசங்கள், திரியில் பதிவுகள் நீக்கம் என சங்கடப்படுவதை விட இரு திலகங்களின் ரசிகர்களும் ஒற்றுமை உணர்வுடன் இப்போது போல என்றும் செயல்பட்டு அந்த மாபெரும் மனிதர்களின் புகழை இவ்வுலகிற்கு எடுத்தியம்பலாம். அதைதான் இரு ஆத்மாக்களும் விரும்பும். இந்த விஷயத்தில் தங்களுடைய கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன்.
mr_karthik
21st August 2012, 11:00 AM
மக்கள் திலகம் சம்மந்தப்பட்ட சமீப கால விழாக்களில் அவருடன் நடித்த பழைய நடிகையர் பங்குபெற்று வருவதை பல்வேறு தளங்களில் வரும் புகைப்படங்களின்மூலம் காண முடிகிறது.
அவற்றில் சரோஜாதேவி, ராஜஸ்ரீ, ராஜசுலோச்சனா, சச்சு, நிர்மலா, எம்.என்.ராஜம் ஆகியோரே திரும்பத்திரும்ப பங்குபெறுகிறார்களே தவிர (ஜெயலலிதா இவற்றில் கலந்துகொள்ளும் நிலையைத்தாண்டி எங்கோ போய்விட்டார், சரி) அவருடன் அதிகப்படங்களில் நடித்த மற்ற நாயகியரான மஞ்சுளா, லதா ஆகியோர் கலந்துகொள்வதில்லையே ஏன்..?
Richardsof
21st August 2012, 11:08 AM
வாசுதேவன் சார்
நமது இருவரின் எண்ணங்களும் ஒன்றாக இருப்பது திலகங்களின் நட்பின் அடையாளமாகும்.பாரத் பட்டம் , பாரத் ரத்னா பட்டம் விவாதம் தேவை இல்லாத ஒன்று .மக்கள் திலகத்தின் சாதனைகளை இத் திரியில் தொடர்ந்து பதிவோம் .
உங்களின் பதிவுகள் அருமை .
Richardsof
21st August 2012, 11:24 AM
அன்புள்ள் கார்த்திக் சார்
மக்கள் திலகம் மன்றங்கள் சார்பாக நடைபெறும் விழாக்களில் நடிகைகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர் .சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகம் பிறந்த நாள் விழாவில் நடிகை காஞ்சனா கலந்து கொண்டு மக்கள் திலகம் அவர்களை பற்றி புகழ்ந்து பேசினார்கள் .
தாங்கள் குறிப்பிட்ட நடிகை மஞ்சுளா , நடிகை லதா இருவரும் சமீப காலங்களில் எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை .
Richardsof
21st August 2012, 11:29 AM
அன்புள்ள் கார்த்திக் சார்
மக்கள் திலகம் மன்றங்கள் சார்பாக நடைபெறும் விழாக்களில் நடிகைகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர் .சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகம் பிறந்த நாள் விழாவில் நடிகை காஞ்சனா கலந்து கொண்டு மக்கள் திலகம் அவர்களை பற்றி புகழ்ந்து பேசினார்கள் .
தாங்கள் குறிப்பிட்ட நடிகை மஞ்சுளா , நடிகை லதா இருவரும் சமீப காலங்களில் எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை .
RAJASHREE, KANCHANA . DANCE MASTER THARA
http://i46.tinypic.com/53a686.jpg
mr_karthik
21st August 2012, 12:22 PM
அன்புள்ள வினோத் சார்,
'பாரத் பட்டம்' மற்றும் 'பாரத ரத்னா' பற்றிய விவாதம் தேவையற்ற ஒன்று என்று நீங்கள் கூறியுள்ளதை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், 'ரிக்ஷாக்கரான் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரத ரத்னா பட்டம் பெற்றார்' என்ற தகவலில் உள்ள பிழையைத்தான் திரு ஜோ. அவர்கள் சுட்டிக்காட்டினார். நீங்களும் அதை பெருந்தன்மையுடன் ஏற்று அது பிழையான தகவல் என்று ஒப்புக்கொண்டீர்கள். அதோடு தீர்ந்தது பிரச்சினை.
ஆனால் சிலர் அந்த விளக்கத்தோடு திருப்தியடையாமல், பாரத், பாரத ரத்னா இரண்டையும் பெற்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒருவரே என்று வாதிடத்துவங்கினர். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் பாரத ரத்னா விருது, அவர் அரசியல் தலைவராக ஒரு மாநில முதல்வராக சிறப்பாக பணியாற்றியமைக்காக அவரது மறைவுக்குப்பின்னர் வழங்கப்பட்டதே தவிர, திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்டதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி தவறாக புரிந்துகொண்டால் நடிகர் விக்ரம், நடிகர் தனுஷ் வாங்கிய விருதெல்லாம் 'பாரத ரத்னா' ஆகிவிடும் அபாயம் உள்ளது.
குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், பாரத ரத்னா ஆகிய அனைத்தையும் பெற்றவர் இந்தியாவிலேயே ஒருவர் தமிழ்நாட்டில்தான் இருந்தார். அவர்தான் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.
இந்தியாவில் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது 'தாதாசாகேப் பால்கே' விருதுதான். அது எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
joe
21st August 2012, 12:23 PM
mr_karthik :notworthy:
Richardsof
21st August 2012, 12:53 PM
அன்புள்ள் கார்த்திக் சார்
உங்களின் கருத்துக்களை நான் ஆமோதிக்கின்றேன் .சில நேரங்களில் வலை பதிவில் சில பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு . நண்பர்கள் அதனை புரிந்துகொள்வது நல்லது . இந்த இனிய தருணத்தில் நடிகர் திலகம் நடித்த தர்மம் எங்கே என்ற படத்தில் இடம் பெற்ற tms
குரலில் கண்ணதாசனின்...... சுதந்திர பூமியில் ...... பல வகை ..... தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் என்ற அருமையான பாடலை நினைவு கூர்கின்றேன் .எல்லோருக்கும் பிடித்த பாடல்
Richardsof
21st August 2012, 03:27 PM
http://i50.tinypic.com/xpzi0w.jpg
Richardsof
21st August 2012, 03:29 PM
http://i45.tinypic.com/kxqo5.jpg
Richardsof
21st August 2012, 03:30 PM
http://i50.tinypic.com/2v2jf9e.jpg
Richardsof
21st August 2012, 03:38 PM
http://i47.tinypic.com/289ifs5.jpg
Richardsof
21st August 2012, 03:40 PM
http://i48.tinypic.com/20uobxe.jpg
Richardsof
21st August 2012, 03:50 PM
http://i47.tinypic.com/255q2dk.png
Richardsof
21st August 2012, 03:55 PM
http://i46.tinypic.com/350nfk9.png
Richardsof
21st August 2012, 04:26 PM
http://i47.tinypic.com/nygtxj.jpg
Richardsof
21st August 2012, 06:28 PM
http://i48.tinypic.com/2ugyoeb.jpg
http://i45.tinypic.com/kby7gm.jpg
http://i48.tinypic.com/34yo1oy.jpg
Richardsof
21st August 2012, 08:14 PM
http://i45.tinypic.com/2nsmm2o.jpg
http://i46.tinypic.com/whk4e9.jpg
Richardsof
21st August 2012, 08:20 PM
இதயக்கனி வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் 4.1.1976.
1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.
தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ – லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.
The Movie Ithyakani was released on 22.8.1975 all over the South.
The following movie halls hold the record for 100 days for this movie.
Chennai (or) Madras – Sathyam, Maharani and Uma.
Madurai – Chinthamani
Coimbatore – Central.
Salem – Alankar
Thirunelveli – Central
Trichy – Palace
Erode – Royal
Vellore – Krishna
courtesy; SRIMGR .COM
Richardsof
22nd August 2012, 06:26 AM
courtesy;desi torents.com
Nadodi Mannan (1958) Tamil, stars M. G. Ramachandran in the lead role. The film was released in the year 1958.
The Film was re released several times and runs successfully whenever it is being re-released.
Latest, in 2005 it was re-released and ran success fully for several weeks.
Again the film has been re-released in 2011 in a fully digitalised form and ran successfully all over tamilnadu.
CAST:-
M. G. Ramachandran....... King Marthandan & Veerangan
P. Bhanumathi................. Madhana
P. S. Veerappa................ Rajaguru
M. N. Rajam................... Queen Manohari
B. Saroja Devi................. Rathna
M. N. Nambiar................ Pingalan
J. P. Chandrababu...........Sagayam
M. G. Chakrapani........... Karmegam
K. R. Ramsingh............. Veerabagu
G. Sakunthala
T. P. Muthulakshmi
E. R. Sahadevan
K. S. Angamuthu
Producer: M. G. Ramachandran
Production Company: Emgeeyar Pictures
Director: M. G. Ramachandran
Music: N. S. Balakrishnan & S. M. Subbaiah Naidu
Lyrics: Pattukkottai Kalyanasundaram, Lakshmanadas, M. K. Atmanathan, Suradha, N. M. Muthukkoothan, Vijayanarasimha, Narayanababu & P. Bhaskaran
Richardsof
22nd August 2012, 06:32 AM
http://i49.tinypic.com/mvpzjb.jpg
Richardsof
22nd August 2012, 06:33 AM
http://i45.tinypic.com/2w1uq85.jpg
Richardsof
22nd August 2012, 06:35 AM
http://i47.tinypic.com/1qlkdj.png
Richardsof
22nd August 2012, 06:38 AM
http://i50.tinypic.com/28ro4fc.jpg
Richardsof
22nd August 2012, 06:40 AM
http://i50.tinypic.com/33xc8zc.png
http://i47.tinypic.com/30lcuas.jpg
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.