View Full Version : new serials/programs
aanaa
20th July 2016, 09:07 PM
ஆயிரம் எபிசோட் கண்ட வாணி ராணி
ராடான் மீடியா சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்து நடிக்கும் தொடர் வாணி ராணி. ராதிகாவுடன் வேணு அரவிந்த், பிருத்விராஜ், ரவிகுமார், சாந்தி வில்லியம்ஸ், நீலிமா ராணி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஹரி பின்னணி இசை அமைக்கிறார். முதல் பகுதியை ரத்னம் இயக்கினார், அடுத்த பகுதியை வி.சி.ரவி இயக்கினார், தற்போது ஆர்.ராமச்சந்திரன் இயக்கிக் கொண்டிருக்கிறார். 2013ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய வாணி ராணி 1000 எபிசோடை எட்டியுள்ளது. 1000மாவது எபிசோட் இன்று ஒளிபரப்பாகிறது.
கதைப்படி நீண்ட காலம் பிரிந்திருந்த சாமிநாதன்-ராணி தம்பதியினர் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். வாணிக்கும், தாதா ஜீ.பிக்கும் மோதல் முற்றுகிறது. வாணி குடும்பத்திற்கும், ராணி குடும்பத்திற்கும் மீண்டும் மோதல் உருவாகிறது. 1000மாவது எபிசோடை தாண்டியும் பரபரப்புடன் நகர்கிறது வாணி ராணியின் கதை.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160711112853176265.jpg
நன்றி: தினமலர்
aanaa
20th July 2016, 09:08 PM
பாலிமர் டி.வியில் கர்ணன் கதை
புராண சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசுதான். ஹனுமன், ராமன், கிருஷ்ணன், சனி பகவான், என தனித்தனி கதைகளையே நெடுந்தொடராக ஒளிபரப்பாகி வருகிறார்கள். இவை அனைத்துமே டப்பிங் சீரியல்கள்தான். டப்பிங் சீரியலை ஒளிபரப்ப மாட்டோம் என்று சபதம் எடுத்த சேனல்கள்கூட தற்போது டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டது
அந்த வரிசையில் தற்போது பாலிமர் சேனல் கர்ணன் கதையை 'கர்ணன் சூர்யபுத்ரன்' என்ற பெயரில் ஒளிபரப்புகிறது. இதுவும் இந்தி டப்பிங் சீரியல்தான். கர்ணனின குழந்தை பருவம் முதல் அவர் துரியோதனின் தேரோட்டியாகி பின்னர் மன்னராகி, கொடை வள்ளலாக வாழ்ந்து பெற்ற தர்மங்கள் அனைத்தையும் தானம் கொடுத்து மறைவது வரையிலான நெடுந் தொடர் இது. இதில் கர்ணனின் குழந்தை பருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை (11ந்தேதி) முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
29th July 2016, 10:56 PM
6 ஆண்டுகளை கடந்து வெற்றி நடைபோடும் அது இது எது
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று அது இது எது. இரண்டு நடிகர்களை சினிமாவுக்கு தந்த நிகழ்ச்சி. ஒருவர் சிவகார்த்திகேயன் மற்றொருவர் மா.. பா. ஆனந்த். முதலில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் அவர் சினிமா நடிகர் ஆனதும் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தற்போது அவரும் நடிகராகிவிட்டாலும் இன்னும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ப்ரைம் டைமான இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இப்போதும் மக்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருக்கிறது. குரூப்ல டியூப், சிரிச்சா போச்சு, மாத்தியோசி போன்ற ரவுண்டுகள் மக்களை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சிரிச்சா போச்சு ரவுண்டில் வந்த பல காமெடிகள் வைரலாக பரவியது.
லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டல் செய்து வந்த “என்னம்மா இப்படி பண்றீங்ளேம்மா” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மக்களை கவர்ந்த அது இது எது 6 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 350 எபிசோட்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. விரைவில் மா.கா.பா ஆனந்த் முழுநேர நடிகராக இருக்கிறார். அதன்பிறகு புதிதாக ஒருவர் தொகுத்து வழங்க வருவார். அப்படியொரு நட்சத்திர தொகுப்பாளரை சேனலும் தேடிக் கொண்டிருக்கிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160723165941688582.jpg
நன்றி: தினமலர்
aanaa
29th July 2016, 11:07 PM
வந்தது புதிய டிரண்ட்: இனி வாரத்தின் 6 நாட்களும் சீரியல்
சின்னத்திரை சேனல்களின் தரம் என்பது அந்த சேனல் ஒளிபரப்பும் புதிய திரைப்படங்கள், தரமான தொடர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சேனலில் டிஆர்பி ரேட்டை உயர்த்துவது இந்த இரண்டும் தான். செய்தி சேனல்கள் தவிர மற்ற அனைத்து சேனல்களுமே தொடர்களை ஒளிபரப்புகிறது. சொந்தமாக தயாரிக்க முடியாத சேனல்கள் டப்பிங் சீரியல்களை வாங்கி ஒளிபரப்புகிறது. இப்போது முன்னணி சேனல்களும் டப்பிங் சீரியலை வாங்கி ஒளிபரப்ப தொடங்கி விட்டது.
சில முக்கிய தொடர்கள் மட்டுமே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சில ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஒளிபரப்பாகும். மற்ற தொடர்கள் அனைத்துமே திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும். இப்போது இந்த நிலையில் மாற்றம ஏற்பட்டுள்ளது.
தற்போது முன்னணி சேனல்கள் தொடர்களை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறிது. சமீபத்தில் விஜய் டி.வி. இந்த பார்முலாவை கையில் எடுத்துள்ளது. விஜய் டி.வியின் முக்கிய தொடர்களான சீதையின் ராமன், பகல் நிலவு, தெய்வம் தந்த வீடு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை இந்த தொடார்கள் அனைத்தும் திங்கள் முதல் சனி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து சேனல்களுமே தொடர்களை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பும்.
இதற்கு காரணம் தற்போது முன்னணி சேனல்கள் திரைப்படங்களை வாங்குவதை குறைத்துக் கொண்டன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட சில பண்டிகை காலங்களில் மட்டும் புதிய படங்களை ஒளிபரப்பி விட்டு மற்ற நேரதித்தில் போட்ட படத்தையே திருப்பி திருப்பி போடுகிறார்கள். இது விளம்பரதாரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டுத்தியது. போட்ட படத்திலேயே தங்கள் விளம்பரத்தை ஒளிபரப்புவதை விட நெடுந்தொடர்களில் ஒளிபரப்புவதையே விரும்புகிறார்கள். எனவேதான் தொடர்கள் ஒளிபரப்பாகும் நாட்களை சேனல்கள் அதிகரிக்கின்றன. இனி சிறப்பு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஒளிபரப்பாகும். சீரியல் பார்க்கும் பெண்களும் அடுத்து என்ன என்பதை காண இரண்டு நட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் பொறுத்துக் கொண்டால் போதும்.
நன்றி: தினமலர்
aanaa
29th July 2016, 11:10 PM
நாட்டு நடப்புகளைதான் சீரியல்களில் சொல்கிறார்கள்! -ஏகவள்ளி
அபூர்வ ராகங்கள் தொடரில் பத்மினி என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஏகவள்ளி. இந்த தொடரில் எனக்கு அமைதியான வேடம். எத்தனை பெரிய பிரச்சினைகள் என்றாலும் அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு போராடும் பெண்ணாக நடிக்கிறேன். அதனால் எனக்கு பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் கிடைத்திருக்கிறது. அதையடுத்து வம்சம் தொடரில் ஒரு அண்ணி வேடத்தில் நடிக்கிறேன். இதுதவிர மதியால் வெல் என்ற படத்தில் வில்லனின் மனைவியாக நடிக்கிறேன். தவிர சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன் என்கிறார் இந்த ஏகவள்ளி.
அவரிடத்தில் எந்தமாதிரியான சீரியல்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது,
என்னைப்பொறுத்தவரை ஜாலியான சீரியல்களில் நடிப்பதுதான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் எனக்கு கிடைப்பதோ பிரச்சினைக்குரிய கேரக்டர்கள்தான். ஆனால் அப்படி அந்த பிரச்சினைக்குரிய கேரக்டர்களே இறுதியில் சந்தோசத்துடன் முடிவடைய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அந்த வகையில், சீரியல்களில் பிரச்சினைகளை மட்டுமின்றி, சந்தோசங்களை யும் சொல்லக் கூடிய இரண்டுவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது என்கிறார்.
அவரிடத்தில், சமீபகாலமாக சில சீரியல்களில் கொடூரமான மற்றும் வக்ரத்தன்மையுள்ள காட்சிகள் அதிகமாக காண்பிக்கப்படுகிறதே? இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்றபோது,
மக்கள் எந்த மாதிரியான சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்களோ அதை மனதில் கொண்டுதான் சீரியல்கள் உருவாகின்றன. அதோடு, இப்படி
சீரியல்களில் சொல்லப்படும் விசயங்கள் எல்லாமே நாட்டு நடப்புகள்தான். மக்கள் மத்தியில் நடக்கிற விசயங்களைத்தான் கதையாக்குகிறார்கள். அந்தமாதிரி விசயங்கள் தங்களது வாழ்க்கையில் நடந்திருப்பதால் அதை நேயர்களும் விரும்பிப்பார்க்கிறார்கள். அதனால் சீரியல்களை தவறாக விமர்சனம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஏகவள்ளி.
நன்றி: தினமலர்
aanaa
4th August 2016, 07:29 PM
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்: 6ந் தேதி முதல் ஒளிபரப்பு
இதுவரை சிறுவர், சிறுமிகளுக்கான பாட்டு போட்டி, நடன போட்டிகளை நடத்தி சின்னத்திரை சேனல்கள் ஒளிபரப்பி வந்தன. முதன் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சி சிறுவர், சிறுமிகளின் நடிப்பு திறனை வெளியில் கொண்டு வரும் வகையில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதிலும் ஆடிசன் நடத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவர் சிறுமிகளை தேர்வு செய்துள்ளனர். இந்த போட்டியின் படப்பிடிப்புகள் கடந்த பல வாரங்களாக நடந்து வந்தது.
இந்த நிகழ்ச்சிகள் வருகிற 6ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றம் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை குஷ்பு, தொகுப்பாளினி அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். தற்போது முதல்கட்ட போட்டிகள் ஒளிபரப்பாகிறது. பின்னர் கால் இறுதி போட்டி, அரைஇறுதி போட்டிகள் ஒளிபரப்பாகும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் சிறுவர், சிறுமிகளுக்கு கணிசமான பரிசுத் தொகை வழங்கப்படுவதுடன் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160804113011234848.jpg
நன்றி: தினமலர்
aanaa
4th August 2016, 07:31 PM
விஜய் டி.வியில் பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா
கடந்த ஜூன் மாதம் 18ந் தேதி 63வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபத்தில் உள்ள கன்வென்சன் சென்டரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு 2015ம் ஆண்டுக்கான பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டது. தென்னிந்தியாவின் முக்கிய நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட இந்த விழாவில் நடிகர் நடிகைளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
இந்த விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டி.வி பெற்றுள்ளது. விரைவில் பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவை மூன்று பகுதிகளாக ஒளிபரப்ப இருக்கிறது. இதுவரை தேதி அறிவிக்கவில்லை என்றாலும் வருகிற ஞாயிற்றுக் கிழமை விழாவின் ரெட்கார்பட் வரவேற்பு உள்ளிட்ட அறிமுக நிகழ்வுகள், பேட்டிகளை ஒளிபரப்ப இருக்கிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தமிழ் நடிகர் நடிகைகள் விருது பெறும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம் என்று தெரிகிறது.
நன்றி: தினமலர்
aanaa
24th August 2016, 06:44 AM
கலக்க போவது யாரு: 21ம் தேதி முதல் ஒளிபரப்பு
விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. மிமிக்ரி மற்றும் மற்றும் காமெடி திறமைகளை வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டிய சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், உள்ளிட்ட பலர் திரைப்பட நடிகர்களாகிவிட்டார்கள்.
கலக்கப்போவது யாரின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 6வது சீசனுக்கான பணிகள் நடந்து வந்தது. தற்போது அது முடிந்திருக்கிறது. வருகிற 21ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியவர்கள் பலர் திரைப்பட நட்சத்திரங்களாகிவிட்டதால் இந்த 6வது சீசனுக்கு வெள்ளித் திரைக்கான அடுத்த பயணம் ஆரம்பம் என்பதையே ஸ்லோகனாக வைத்திருக்கிறார்கள்.
6வது சீசனில் பல புதுமையான அம்சங்களும் இடம்பெற இருக்கிறது. பல திறமையான புதியவர்கள் வர இருக்கிறார்கள். அவர்களுடன் பழைய திறமையாளர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை பிரமாண்ட அரங்கம் நிர்மாணம் செய்து அதில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் இன்னொரு சிவகார்த்திகேயனோ, ரோபோ சங்கரோ கிடைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: தினமலர்
aanaa
31st August 2016, 07:27 AM
சிரிப்புடா விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி
கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடல்வரி ஒரு படத்தின் தலைப்பில் இருந்து பச்சை குழந்தைகளின் மழலை வார்த்தை வரை ஊடுருவிவிட்டது. இப்போது இந்த நெருப்புடாவை சிரிப்புடா என்று மாற்றி விஜய் டி.வியில் புதிய காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
இதில் விஜய் டி.வியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி இணைந்து நடத்துகிறார்கள். பிரபலமான திரைப்படங்களில் வரும் ஹீரோவின் ஸ்டைல்கள் பன்ஞ் டயலாக்குகள், ஆக்ஷன் காட்சிகளை நையாண்டி செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கரு. முதல் நிகழ்ச்சியாக அவர்கள் நையாண்டி செய்வது கபாலியைத்தான்.
இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வருகிற 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது
நன்றி: தினமலர்
aanaa
8th September 2016, 07:38 PM
ராஜ் டி.வியில் புதிய பக்தி தொடர் காக்க காக்க -
எல்லா சேலனல்களும் புராண தொடர்களை ஒளிபரப்பி வரும்போது ராஜ் டி.வி காக்க காக்க என்ற பக்தி தொடர் ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறது. இது பேண்டசி கலந்த சமூக பக்தி தொடர். விநாயகர் சதுர்த்தி முதல் இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
தமிழ் கடவுள் முருகன் தன் பக்தையான கார்த்திகாவுக்கு வரும் இடையூறுளிலிருந்து அவளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. கார்த்திகாவிற்கு
பல வழிகளில் துன்பம் வருகிறபோது அதை முருகன் சில மாய வேலைகள் செய்தும், சிலரை நல் வழிபடுத்தியும் திருத்துகிற மாதிரியான கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒளிபரப்பாகும் பக்தி தொடர் இது. சமூக வாழ்க்கை, மாயாஜாலம், திகில் கலந்த விறுவிறுப்பான தொடராக தயாராகி உள்ளது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160904104954526220.jpg
நன்றி: தினமலர்
aanaa
8th September 2016, 07:42 PM
‛நாகினி-க்கு போட்டியாக ‛மாய மோகினி : விஜய் டி.வியில் புதிய திகில் தொடர் http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160831114759004199.jpg
"டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி எங்கள் வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள்" என்று ஒரு புறம் சின்னத்திரை நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னொரு புறம் முன்னணி சேனல்கள் போட்டிபோட்டுக் கொண்டு இந்தி சீரியல்களை இறக்குமதி செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. முன்னணி சேனல் ஒன்று ஒளிபரப்பி வரும் நாகினி தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதையொட்டி அதே போன்ற ஒரு பேண்டஸி திகில் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டி.வி. இந்தியில் பிரபலமான திகில் தொடரை வாங்கி அதனை மாய மோகினி என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்ப இருக்கிறது.
இரண்டு பெண்கள் முக்கிய கதாபாத்திரம். ஒருவனை தீவிரமாக காதலிக்கும் பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். ஆனால் அவளின் ஆன்மா அந்த இளைஞனையே சுற்றிச் சுற்றி வருகிறது. அந்த இளைஞனுக்கு திருமணமாகிறது. மனைவியின் ஆன்மா மூலம் அந்த இளைஞனோடு வாழ துடிக்கிற பெண்ணின் கதை. "உள்ளே உருவம், வெளியே அருவம் விளங்க முடியாத அதிசயம் நான்" என்பதுதான் அந்த கேரக்டரின் தாராக மந்திரம். "அவள் தொடுவாள் நான் பரவசமாவேன், அவள் உடல் நான் உயிர்" என்பது கேரக்டரின் தன்மை.
மாயமோகினி வருகிற 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு ஒளிப்பாகிறது. இந்த மாயமோகினி அந்த நாகினியை வெல்வாளா என்பது ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.
நன்றி: தினமலர்
aanaa
23rd September 2016, 07:11 AM
தயாராகிறது நாகினி இரண்டாம் பாகம்
வட நாட்டு சேனலான கலர்ஸ் டி.வியில் ஒளிபரப்பான பரபரப்பு தொடர் நாகினி. மந்திர தந்திரங்கள் நிறைந்த சமூக கதை. நல்ல பாம்பு பெண்ணுக்கும், கெட்ட பாம்பு பெண்ணுக்கும் நடக்கிற மோதல் கதை. கதையை விட அதில் நடித்திருக்கும் அழகான பெண்களுக்காக ஆண்களையும் பார்க்க வைத்த சீரியல். குறிப்பாக ஹீரோயின் மவுனி ராயின் காந்த கண்கள் பிரபலம்.
அர்ஜுன், பிஜ்லானி, அதா கான், சுதா சந்திரன் நடித்துள்ள இந்த தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒளிபரப்பாக தொடங்கி கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இந்த தொடர் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் நாகினி தொடருக்கு இந்தியில் கிடைத்த வரவேற்பினால் அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி உள்ளது. வருகிற 8ந் தேதி முதல் கலர்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதிலும் மவுனிராயின் கவர்ச்சியும், கலாட்டாவும் கலக்க இருக்கிறது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாகினி முதல் பாகம் முடிந்ததும். அப்படியே இரண்டாம் பாகத்தையும் ஒளிபரப்புகிறார்கள். ரசிகர்களை சினிமாவில் பேய் பிடித்து ஆட்டுகிறதென்றால் சின்னத் திரையில் பாம்பு பிடித்து ஆட்டுகிறது.
நன்றி: தினமலர்
aanaa
23rd September 2016, 07:14 AM
இலங்கையில் உருவான காக்க காக்க
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் பக்தி தொடர் காக்க காக்க. இதில் தீபா, சூசன், கமல், ஜீவாரவி, எஸ்.வி.எஸ்.குமார், அகில், கிஷன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சரவணன் மீனாட்சி தொடரை இயக்கிய விஜய் இயக்குகிறார். அஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார்.
இது முருகனின் மகிமை கூறும் பக்தி தொடர். சூரபத்மனை அழிப்பதற்காக அன்னை பார்வதி தன் சக்தி அனைத்தையும் ஒரு வேலுக்குள் வைத்து அதனை முருகனுக்கு கொடுக்கிறார். அந்த வேலுக்கு பின்னால் பல மர்மங்களும், புதிர்களும் இருக்கிறது என்பதை பேண்டசியாக சொல்லும் சமூக கதை.
இதன் படப்பிடிப்புகள் திருச்செந்தூர் முருகன் திருத்தலத்திலும், இலங்கையில் உள்ள கதிர்காமகம், கொழும்புவில் உள்ள முருகன் கோவில்களிலும் நடந்துள்ளது. தொடர்ந்து புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களில் படமாக உள்ளது. ராதிகாவுக்கு பிறகு இலங்கைக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியிருப்பது காக்க காக்க யூனிட்தான். இந்த தொடர் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
23rd September 2016, 07:18 AM
மருது சகோதரர்களின் பிரமாண்ட வரலாற்றுத் தொடர் தென்பாண்டி சிங்கம்
கலைஞர் டி.வி தனது 10வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி தென் பாண்டி சிங்கம் என்ற பிரமாண்ட வரலாற்றுத் தொடரை இன்று முதல் ஒளிபரப்பு செய்கிறது. ரோமாபுரி பாண்டியன் வரலாற்று தொடருக்கு பிறகு தி.மு.க தலைவர் கருணாநிதி கதை, திரைக்கதை வசனத்தில் ஒளிப்பாகும் தொடர். தென் பாண்டி சிங்கம் என்ற பெயரில் அவர் எழுதிய நாவல் இப்போது தொடராகி இருக்கிறது.
18ம் நூற்றாண்டில் சிவகங்கையை தலைநகராக கொண்டு நல்லாட்சி செய்த மருது சகோதரர்களின் கதை. 1801 முதல் 1857 வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த மாவீரர்களின் கதை. ரோமாபுரி பாண்டியனை தயாரித்த குட்டி பத்மினியே இதையும் தயாரிக்கிறார். கருணாநிதியின் ராமானுஜர் தொடரையும் இவரே தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இன்று தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
23rd September 2016, 07:20 AM
மெட்டிஒலி திருமுருகனின் அடுத்த மெகா சீரியல்!
மெட்டிஒலி சீரியலை இயக்கி பிரபலமானவர் திருமுருகன். அதையடுத்து அவர் இயக்கிய நாதஸ்வரம் தொடரும் பிரபலமான நிலையில், தற்போது குலதெய்வம் சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலைத் தொடர்ந்து அவர் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி சில முன்னணி நடிகர்களிடம் கால்சீட் கேட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தவர்கள் யாரும் கால்சீட் தரவில்லையாம்.
அதனால் குலதெய்வம் சீரியலை இன்னும் இரண்டு மாதத்தோடு நிறுத்தி விட்டு, அடுத்தபடியாக மெட்டி ஒலி ரேஞ்சுக்கு இன்னொரு மெகா சீரியலை இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டார் திருமுருகன். அதோடு, இதற்கு முன்பு தான் இயக்கிய சில சீரியல்களில் முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்த அவர், புதிய சீரியலில் பிரபலமான சீரியல் நடிகர் நடிகைளை நடிக்க வைக்கப்போகிறாராம். அதற்கான தேர்வினை தற்போது தொடங்கியிருக்கிறார் திருமுருகன்.
நன்றி: தினமலர்
aanaa
23rd September 2016, 07:21 AM
சுந்தர்.சி தயாரிக்கும் மெகா சீரியல்
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சுந்தர்.சி. இப்போது அவர் பரபரப்பாக படங்களில் நடிப்பதில்லை. படத்தயாரிப்புக்கும் பிரேக்விட்டிருக்கிறார். 'அரண்மனை 2' படத்தைத் தொடர்ந்து தற்போது 'சங்க மித்ரா' என்ற படத்தை இயக்குகிறார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இது சுந்தர்.சிக்கு இலட்சிய படமாம். எனவே அந்தப் படத்தின் பிரீ புரடக்ஷன் பணியில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அவரை நம்பி பல கோடி ரூபாயை கொட்டி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். காரணம் இது அவர்களது 100வது படம். எனவே தான், ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ்பதிப்பில் சூர்யா நடிக்க மறுத்தவிட்டதால், தற்போது ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு மொழிகளில் பிரம்மாண்ட படம் என்பதால் இரண்டு வருடம் ஆகும் என்பதால், கிடைக்கும் இடைவெளியில் டிவி சீரியல் தயாரிப்பு ஒன்றிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் சுந்தர்.சி.
நான்கு தென்னிந்திய மொழிகளில் இந்த சீரியல் உருவாகிறது. 'தேவ சேனா' என இந்த டிவி சீரியலுக்கு பெயரிடப்பட்டிருக்கிறாராம். இந்த மெகா ஹாரர் தொடரை ராஜ் கபூர், செல்வா இணைந்து இயக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
23rd September 2016, 07:24 AM
புதுயுகத்தில் மதன் வழங்கும் மனிதனும் மர்மங்களும்
பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் மதன் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய புத்தகம் மனிதர்களும் மர்மங்களும். மனிதனால் கண்டுபிடிக்கமுடியாத அமானுஷ்ய சக்திகள் பற்றி எழுதியிருந்தார். இப்போது அதனையே தொலைக்காட்சி நிகழ்ச்சியாக வழங்குகிறார்.
ஆவிகள், பேய்கள், பறக்கும் தட்டுகள், வேற்று கிரகவாசிகள். பெர்முடா முக்கோண ரகசியம், இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுவது, மனோசக்தியால் மனித மூளையை கட்டுப்படுத்துவது, பூர்வ ஜென்ம நினைவுகள், டைம் மிஷின் மூலம் காலத்தை கடந்து செல்வது என பல நிகழ்வுகளை காட்சி தொகுப்புகளுடன் ஆதாரத்துடன் பேச இருக்கிறார் மதன்.
"உலகில் மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட ஆச்சர்யமமான, அதிசயமான நம்ப முடியாத பல சம்பங்கள் இந்த நிகழ்ச்சியில் காட்சிகளாக காட்டப்பட்டுள்ளது. இதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து காட்சிகளை சேகரித்திருக்கிறோம். அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசினாலும் அறிவுபூர்வமான நிகழ்ச்சியா இது இருக்கும் என்கிறார் புதுயுகம் டிவியின் நிகழ்ச்சி அதிகாரி இக்கி. நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
28th September 2016, 08:12 PM
விஜய் டி.வியின் அடுத்த அதிரடி - காவிய நேரம்
டப்பிங் சீரியல்கள் இறக்குமதியால் தமிழ் கலைஞர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் முன்னணி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு டப்பிங் சீரியல்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி விஜய் டி.வி. அடுத்த அதிரடியை ஆரம்பிக்கிறது. தனித்தனி நேரங்களில் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியர்களை காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை தொடர்ச்சியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கு காவிய நேரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
காலை 8 மணிக்கு மகாதேவ், 9 மணிக்கு சீதையின் ராமன், 9.30 மணிக்கு மங்கையின் சபதம், 10 மணிக்கு கிரன்மாலா, 10.30க்கு என்னுடைய தோட்டத்தில், 11 மணிக்கு அம்மா, 11.30க்கு என்றும் அன்புடன் என தொடர்ச்சியாக ஒளிபரப்பாகிறது. வருகிற அக்டோபர் 3ந் தேதி முதல் தொடங்கும் இந்த காவிய நேரம் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160924125446809333.jpg
நன்றி: தினமலர்
aanaa
7th October 2016, 05:05 AM
சொல்வதெல்லாம் உண்மை'-க்கு போட்டியாக ‛நிஜங்கள்
தெலுங்கு சேனலான ஜெமினியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ரக்ஷா பந்தா. இந்த நிகழ்ச்சியை நடிகை ரோஜா தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். அதற்கு தீர்வு காண முடியாமல் தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் பேசி, அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்வு காணும் நிகழ்ச்சி.
இப்போது தமிழில் அப்படியே ரீமேக் செய்கிறார்கள். நிஜங்கள் என்ற தலைப்பில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்குகிறார். முன்னணி சேனலில் தினமும் 12.30 மணியிலிருந்து 1.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் தேர்வும், தேர்வு பெற்றவர்களுக்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. விரைவில் இது ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இன்னோரு வடிவம்தான் நிஜங்கள்.
நன்றி: தினமலர்
aanaa
7th October 2016, 05:14 AM
பெண் வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் டி.வி.நடிகர்கள்
திரைப்பட நடிகர்களுக்கு பெண் வேடம் போடுவதில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். கமலஹாசன் அவ்வை சண்முகி படத்தில் பெண்ணாகவே நடித்தார், ரஜினி, பிரசாந்த், சத்யராஜ், வடிவேலு உள்பட அத்தனை பேரும் பெண் வேடம் போட்டுவிட்டார்கள். தற்போது இருமுகன் படத்தில் விக்ரமும், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனும் பெண் வேடம் போட்டுவிட்டார்கள். ஹீரோக்கள் பெண் வேடம் போட்டால் அந்த படம் ஹிட் என்கிற செண்டிமெண்டும் சினிமாவில் இருக்கிறது.
தற்போது சின்னத்திரை நடிகர்களும் பெண்வேடமிட்டு நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை தொடங்கி வைத்திருப்பவர் மதன். ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியல் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ரம்யாக கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
சமீபத்திய கதைப்படி நந்தகுமாரை கொலை செய்து விட்டதாக நம்பும் மதன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். பல வேடங்கள் போட்டு மறைந்து வாழும் மதன், தற்போது பெண் வேடம் போட்டிருக்கிறார். இந்த வேடத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாலும் மதன் பெண்ணாக நடிப்பதில் வெளுத்துகட்டுவதாலும் இன்னும் பல எபிசோட்களுக்கு பெண் கேரக்டரை நீட்டிப்பார்கள் என்று தெரிகிறது.
நன்றி: தினமலர்
aanaa
7th October 2016, 05:16 AM
விண்ணைத்தாண்டி வருவாயா - விஜய் டி.வியில் புதிய தொடர்.
டப்பிங் சீரியல்களை காவிய நேரம் என்ற தலைப்பில் சகட்டுமேனிக்கு ஒளிபரப்பி வரும் விஜய் டி.வி. அடுத்து ஒரு யூத்புல்லான நேரடி தமிழ் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. நடிகர் சரத்குமார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார். பல திரைப்படங்களையும், டி.வி. தொடர்களையும் இயக்கிய சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.
ஆபீஸ், தாயுமானவன், அச்சம் தவிர் தொடர்கள் மற்றும் மாப்ளசிங்கம், ரோமியோ ஜூலியட், பூஜை திரைப்படங்களில் நடித்திருக்கும் மதுமிலா ஹீரோயினாக நடிக்கிறார். நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த விக்ரம் தொடரின் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரியமானவள் தொடரில் நடித்து வரும் கிரிதரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"விண்ணைத்தாண்டி வருவாயா யூத்புல்லான ஒரு காதல் கதை, அழுதுவடியும் சீரியல்களும் பயறுமுத்தும் மாந்த்ரீக சீரியல்களும் பெருகியிருக்கும் இந்த நேரத்தில் பார்த்து, ரசிக்க, சுவைக்க தகுந்த சீரியலாக விண்ணைத்தாண்டி வருவாயா உருவாகி இருக்கிறது" என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. வருகிற 3ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
7th October 2016, 05:25 AM
புதுயுகம் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 24 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மற்றும் இரவு 10.30 மணிக்குஒளிபரப்பாகவிருக்கும் புத்தம்புதிய மெகா தொடரான ’கல்லூரி பறவைகள்’ இளமை தொடர்.
கல்லூரி என்பது பறவைகள் சங்கமிக்கும் சரணாலயம் போன்றது. எங்கோ பிறந்த மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் ஒன்றுகூடி சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள்.
வானத்தை தாண்டியும் பறக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்லூரி காலம்தான் வசந்தகாலம். கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான நட்பு, நேசம், கலகலப்பு, காதல், மோதல், பிரிவு, போராட்டங்களை இளமை துள்ளலுடன் விவரிக்கிறது புத்தம்புதிய மெகா தொடரான கல்லூரி பறவைகள்.
பெற்றோரை விபத்தில் பறிகொடுத்தவள் நந்தினி. அந்த விபத்தில் பேச்சை இழந்துவிட்ட தம்பியை குணப்படுத்துவதற்காக கிராமத்தில் இருந்து மும்பைக்கு வருகிறாள்.
மும்பையில் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் ஒரு பிரபலமான கல்லூரியில், ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் வாய்ப்பு நந்தினிக்கு தற்செயலாக கிடைக்கிறது. அந்தக் கல்லூரியின் நிர்வாகியின் மகனான மாணிக்கும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
யாராலும் தட்டிக்கேட்க முடியாத பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கண்டு அத்தனை மாணவர்களும் அஞ்சி நடுங்குகிறார்கள். அந்த அராஜக மாணவர் குழுவின் தலைவன் மாணிக்குடன் நந்தினிக்கு மோதல் உண்டாகிறது. யாரும் எதிர்பாராதவகையில் மாணிக்கை அடித்துவிடுகிறாள் நந்தினி.
அதனால் நந்தினியை பழிவாங்கவும், கல்லூரியில் இருந்து வெளியேற்றவும் மாணிக் துடிக்கிறான். அவன் கோபத்தை நந்தினி தாக்குப்பிடித்து கல்லூரியில் நீடிக்க முடியுமா என்பதை, ‘கல்லூரி பறவைகள்’ தொடரில் கண்டுகளியுங்கள்.
இந்தத் தொடரின் நாயகி நந்தினியாக பிரபல நடிகை நிட்டி டெய்லர், நாயகனாக பார்த் சம்தானும் நடிக்கிறார்கள்.
இவர்களைத் தவிர வீபா ஆனந்த், அஜஸ் அகமது, சார்லி சவுகான், கரன் ஜோத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.00 மற்றும் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை மறுநாள் பகல் 1.30 மணிக்கும், வாராந்திர தொகுப்பை வாரத்தின் இறுதியிலும் காணலாம்.
aanaa
7th October 2016, 05:26 AM
வேந்தர் டிவி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடும் தொடர் கண்ணே என் கண்மணியே இப்போது இரண்டாம் பாகமாக ரசிகர்களின் பேராதரவுடன் 100 எபிஸோடுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
நேர்மை தவறாத போலீஸ் குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகி ஆரோகியை நிழல் உலக தாதா சின்ஹானியாவின் வளர்ப்பு மகன் அர்ஜுன் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டாலும், ஆரோகிக்கு அர்ஜுன் மீது இருக்கும் வெளியே காட்ட முடியாத காதலால் அவனை விட்டு பிரியவும் மனம் இல்லாமல் அவனுடன் சேர்ந்து வாழவும் வழியில்லாமல்துடிக்கும் ஆரோகி அர்ஜுன் காதலை சுவாரஸ்யமாகவும் இளமைத்துள்ளலுடனும் சொல்லும் காதல் காவியம் கண்ணே என் கண்மணியே .
இதில் கதாநாயகனாக கரண் குன்ரா (அர்ஜுன்) கதாபாத்திரத்திலும் கதாநாயகியாக நடிக்கும் ஆரோகி (கிருத்திகா கம்ரா) கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர் .
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் கண்ணே என் கண்மணியே நெடும் தொடர் வேந்தர் டிவி யில் ஒளிபரப்பாகிறது.
aanaa
14th October 2016, 09:03 PM
மாப்பிள்ளை.
மீண்டும் சின்னத்திரையில் செந்தில்-ஸ்ரீஜா
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர் செந்தில். ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை நடிகர் ஆனவர். சரவணன் மீனாட்சியில் உடன் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணனாக சினிமாவில் அறிமுகமானவர். செங்காத்து பூமியிலே, பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவண்டா நீ உள்பட சில படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு உதவவில்லை.
இதனால் சினிமா வாய்ப்பு இன்றி இருந்தவர் இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார். அதுவும் தனது மனைவி ஸ்ரீஜாவுடன். சரவணன் மீனாட்சி ஜோடி மாப்பிள்ளை என்ற தொடரில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறது. இந்த தொடர் விஜய் டி.வியில் வருகிற நவம்பர் 7ந் தேதி முதல் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. செந்திலும், ஸ்ரீஜாவும் இணைந்து நடித்து வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்குள் வருகிற ஈகோதான் கதை களம்.
நன்றி: தினமலர்
aanaa
14th October 2016, 09:18 PM
தெய்வ சக்தி பெரிதா? மனித சக்தி பெரிதா?: களைகட்டுகிறது காக்க காக்க
சீரியல்களை பொறுத்தவரை ராஜ் டி.வி சற்று பின் தங்கிய நிலையில் தான் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் காக்க காக்க தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் வேகமாக முன்னேறி வருகிறது. காரணம் பக்தி கலந்த பேண்டசியாக கதை விறுவிறுப்புடன் நகர்கிறது.
காஞ்சனா, யாமிருக்க பயமேன், ஏழாம் உயிர் தொடர்களை இயக்கிய அழகர் இயக்குகிறார். இது முருக கடவுளை மையப்படுத்திய கதை. முருகன் கையில் இருந்த ஒரு நவபாஷான வேல் காணாமல் போகிறது. அது கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புடையது. அதை காலம் காலமா தேடி வருகிறார்கள். அப்படி தேடுகிறவர்கள் வாழ்க்கையில் முருகன் எப்படி திருவிளையாடல் செய்கிறான் என்பதுதான் கதை. தெய்வ சக்தி பெரிதா? மனித சக்தி பெரிதா? இரண்டுக்கும் இடைப்பட்ட அமானுஷ்ய சக்தி பெரிதா என்ற கேள்விகளோடு விறுவிறுப்பாக பயணிக்கிறது தொடர்.
இலங்கையில் உள்ள முருகன் கோவில்களில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஒரு திரைப்படத்துக்கான விறுவிறுப்புடன் தொடரை நகர்த்திச் செல்கிறாகள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரவு 9.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நன்றி: தினமலர்
aanaa
24th October 2016, 08:23 PM
நிஜங்கள்
SUN TV
2016-10- 24 தொடக்கம்
Actress Khushboo tries to resolve family disputes by discussing the problems in detail with the concerned people.
https://www.youtube.com/watch?v=S41mq3VI7TE
http://www.suntamil.net/sun-tv-shows/nijangal-24-10-2016-sun-tv-show/
https://www.youtube.com/watch?v=Ntgl0F57I_M
aanaa
24th October 2016, 08:31 PM
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5: குரல் தேடல் தொடங்கியது
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது 5வது சீசனை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறார்கள். முந்தைய சீசன்களில் இருந்து ஏராளமான திறமையாளர்கள் திரைப்பட பாடகர், பாடகிகாளவும், நடிகர், நடிகைகளாவும் உயர்ந்திருக்கிறார்கள். நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான், கமலஹாசன், எஸ்.பி.பாலசுப்பிரணியம், பி.சுசீலா, ஜானகி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருக்கிறார்கள்.
இப்போது இதன் 5வது சீசனுக்கான குரல் தேடல் துவங்கி உள்ளது. உலகின் எந்த மூலையில் உள்ளவர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியில் தங்கள் குழந்தைகளும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், தங்கள் குழந்தைகள் வயது 6 முதல் 14 வயதிற்குள் இருந்தால் குழந்தை பற்றிய முழு விபரங்களுடன் அவர்களை பாடச் செய்து அதனை ஒரு சி.டியில் பதிவு செய்து அனுப்பலாம்.
திறமையான குழந்தைகள் தபால் மூலமாக நேரடியாக அழைக்கப்பட்டு நேர்முக தேர்வின் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று விஜய் டி.வி.தெரிவித்துள்ளது.
நன்றி: தினமலர்
aanaa
24th October 2016, 08:33 PM
டப்பிங் சீரியல் மூலம் தமிழுக்கு வருகிறார் ஸ்வேதா பாசு
ரா ரா மற்றும் சந்தமாமா படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்வேதா பாசு, கடந்த ஆண்டு ஒரு விவகாரமான விஷயத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு 15 நாள் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டார். பின்னர் மன்னித்து விடுதலை செய்யப்பட்டார். வறுமையின் காரணமாகவே பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாக அப்போது ஸ்வேதா தெரிவித்தார். அவரின் பரிதாப நிலை கண்ட இந்தி இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முன் வந்தனர். அவர்களில் முக்கியமானவர் ஏக்தா கபூர்.
தற்போது அவர் தான் தயாரிக்கும் சந்திர நந்தினி என்ற இந்தி தொடரில் ஸ்வேதா பாசுவை ஹீரோயின் ஆக்கிவிட்டார். சந்திரகுப்த மவுரியரின் வரலாற்று தொடரான தொடரில் சந்திரகுப்த மவுரியரை வீழ்த்திய இளவரசி நந்தினியாக நடிக்கிறார் ஸ்வேதா. இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 31ந் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு இந்த தொடரை காணலாம். தமிழ் படங்களில் நடித்த ஸ்வேதா பாசு டப்பிங் சீரியல் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
நன்றி: தினமலர்
aanaa
24th October 2016, 08:35 PM
விஜய் டி.வியில் புதிய சரித்திர தொடர் சந்திர நந்தினி
விஜய் தொலைக்காட்சி டப்பிங் சீரியலை ஒளிபரப்புவதில் சரித்திர சாதனை படைத்து வருகிறது.
விஜய் டி.வியின் தாய் டி.வியான ஸ்டார் பிளஸ்சில் ஒளிபரப்பாகும் அத்தனை டப்பிங் சீரியல்களையும் இறக்குமதி செய்கிறது. அந்த வரிசையில் அடுத்து களம் இறக்குகிறது சந்திர நந்தினியை.
இது முன்பு ஒளிபரப்பான பழைய தொடர் அல்ல. கடந்த 10ந் தேதி முதல் ஸ்டார் பிளஸ்சில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய இந்தி சரித்திர தொடர். அதனை அப்படியே சுடச்சுட டப் செய்து ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டி.வி. வருகிற 31ந் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
ஏக்தா கபூர், ஷோபா கபூர் இதனை வடிவமைத்துள்ளனர். சந்திரகுப்த மவுரியரின் வாழ்க்கையை கதையை மையமாக கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. ராஜன் குமார் சிங் இயக்குகிறார். ரஜத் டோக்ஸ் சந்திரகுப்த மவுரியராக நடிக்கிறார். ஸ்வேதா பாசு பிரசாத் நந்தினியாக நடிக்கிறார். தனுகான் துருதராக நடிக்கிறார்.
நன்றி: தினமலர்
aanaa
24th October 2016, 08:37 PM
பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வது எப்படி? ரம்யா விளக்கம்
சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகை ரம்யா. தற்போது பெப்பர்ஸ் டி.வியில் சாட் வித் ரம்யா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வாழ்க்கையில் எந்த பிரச்சினை இருந்தாலும் ரம்யாவோடு ஷேர் பண்ணிக்கலாம். அதற்கு அவர் ஆலோசனையும், தீர்வும் சொல்வார். கிட்டத்தட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மாதிரிதான். பங்கேற்பாளர்கள் தொலைபேசியில் பேசுவார்கள். அதுதான் வித்தியாசம். ரம்யா மனநல நிபுணரோ, அல்லது வழக்கறிஞரோ அல்ல, பிறகு எப்படி பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார். அவரே அளித்துள்ள விளக்கம்...
"இதை பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நிகழ்ச்சியாக பார்க்க வேண்டாம். மனதுக்குள் இருப்பதை பூட்டி வைத்திருப்பதை விட மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் மன ஆறுதல் கிடைக்கும் அல்லவா அப்படியான ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். பிரச்சினைகளை என்னுடன் பேசி தங்கள் மன பாரத்தை இறக்கிக் கொள்கிறார்கள். முடிந்த வரை நான் யோசனை சொல்கிறேன். நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். டி.வியில் நான் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது. நான் நடித்த படங்கள், பார்த்த படங்கள் வாயிலாக நிறைய கற்றிருக்கிறேன். அதை வைத்து அவர்களோடு பேசுகிறேன். ஒருவர் மனதை புரிந்து கொண்டு அதை ஆறுதல் படுத்த நல்ல மனசு இருந்தாலே போதும். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான மனிதர்களையும், பயணங்களையும் கொண்டது என்பதை இந்த நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியுள்ளது" என்கிறார் ரம்யா.
நன்றி: தினமலர்
aanaa
1st November 2016, 09:34 PM
பிரமாண்டமாய் தயாராகிறது ஜோடி சீசன்- 9
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான ஜோடி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இன்றைக்கு இருக்கிற நடன நிகழ்ச்சிகளுக்கு அதுதான் முன்னோடி. இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ளது.
விரைவில் ஜோடி சீசன் 9 தொடங்க இருக்கிறது. ரீல் வெசஸ் ரியல் என்பதுதான் இந்த சீசனின் தீம். சினிமா, சின்னத்திரையில் ஜோடியாக நடிப்பவர்களும், நிஜ வாழ்க்கையில் ஜோடியாக வாழ்கிறவர்களும் இணைந்து கலக்கப்போகிறார்கள். பிரமாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமையான, பிரமாண்ட அரங்கங்கள் இந்த சீசனில் ஸ்பெஷலாக இருக்கும் என்கிறார்கள். ரெயின் எபெக்ட்டைகூட அரங்கத்திற்குள் கொண்டு வருகிறார்களாம்.
நன்றி: தினமலர்
aanaa
1st November 2016, 09:36 PM
நாளை முதல் விஜய் டி.வியில் சந்திர நந்தினி
ஏக்தா கபூர், ஷோபாக கபூர் தயாரிப்பில் உருவாகும் சந்திர நந்தினி தொடர் ஸ்டார் பிளசில் கடந்த மாதம் 10ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரின் தமிழ் பதிப்பு நாளை (31ந் தேதி) முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.
இது சந்திரகுப்த மவுரியருக்கும், நந்தினிக்கும் இடையிலான காதல் கதை. ரஞ்சன் குமார் என்பவர் இயக்குகிறார். ரஜட் டோகாஸ் சந்திரகுப்த மவுரியராக நடிக்கிறார். நந்தினியாக நடிகை ஸ்வேதா பாசு நடிக்கிறார். இவர்கள் தவிர தனுகான், ஜினீத் ரத், ஏஞ்சல் ரூப் சந்தினி, பப்பியா சென்குப்தா. மான்சி சர்மா உள்பட இந்தியில் பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பிரமாண்ட அரண்மணைகள், போர் காட்சிகள், கிளாமர் காட்சிகள், ரொமாண்டிங் காட்சிகள் என மிரட்டலாக இந்த சரித்திர தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த தொடர் தமிழ் தவிர விரையில் தெலுங்கிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த பிரமாண்ட பட்ஜெட் தொடரால் தற்போது கலைஞர் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தென்பாண்டி சிங்கம் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெறும் வசனத்தில் வண்டி ஓட்டினால் வேலைக்கு ஆகாது. சந்திர நந்தினிக்கு இணையான பிரமாண்டத்தை காட்டினால்தான் அந்த தொடர் நிலைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20161030122736693274.jpg
நன்றி: தினமலர்
aanaa
1st November 2016, 09:43 PM
சாப்பாட்டுக்கு ஊர் ஊராக சுற்றும் நகுல் மனைவி -
நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி. சின்னத்திரையில் பகுதிநேர தொகுப்பாளினியாக இருந்தார். நகுலை பேட்டி எடுக்கக்போன இடத்தில் காதல் உருவாகி அது கசிந்துருகி கல்யாணத்திலும் முடிந்தது. திருமணம் முடிந்ததும் முழுநேர தொகுப்பாளினி ஆகிவிட்டார் ஸ்ருதி.
புதிய தலைமுறை டிவியில் இவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ஊரும் உணவும் நிகழ்ச்சி செம ஹிட். காரணம் விதவிதமான கிராமத்து உணவுகள் அதை தொகுத்து வழங்கும் ஸ்ருதியின் ஸ்டைல், ஆங்கில சேனல்களில் வரும் சமையல் நிகழ்ச்சி போன்று திடீரென்று ஒரு கிராமத்துக்குள் போகிறார். அங்குள்ளவர்களிடம் இந்த ஊரில் என்ன சாப்பாடு விசேஷம் என்று கேட்கிறார். அதை செய்வதில் யார் ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு அவர்களை அதை செய்ய வைத்து ருசித்து சாப்பிட்டுவிட்டு அடுத்த ஊருக்கு கிளம்புகிறார்.
>ஸகூட்டியில், சைக்கிளில், மாட்டு வண்டியில் இப்படி கிடைத்த வாகனத்தில் ஏறி ஊர் ஊராக செல்கிறார். இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த பல திட்டங்கள் வைத்திருக்கிறாராம் ஸ்ருதி நகுல்.
நன்றி: தினமலர்
aanaa
7th November 2016, 11:21 PM
அவுட்டோர்களில் நடக்கும் சீரியல் படப்பிடிப்புகள்!
சினிமா படப்பிடிப்புகளைதான் பெரும்பாலும் அவுட்டோர்களில் முகாமிட்டு நடத்துவார்கள். சீரியல்களைப்பொறுத்தவரை சென்னையை தாண்ட மாட்டார்கள். ஏதேனும் பங்களா டைப் வீட்டிற்குள்ளேயே சுற்றிசுற்றி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், சமீபகாலமாக சீரியல் படப்பிடிப்புகளையும் வெளியூர்களில் நடத்தி வித்தியாசம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில், சி.ஜே.பாஸ்கர் இயக்கிய ஆதிரா சீரியலை கேரளாவில் முகாமிட்டு அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கினர்.
அதையடுத்து மேலும் சில சீரியல் படப்பிடிப்புகளும் அவுட்டோர்களில் நடந்து வந்த நிலையில், தற்போது ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் காக்க காக்க சீரியல் படப்பிடிப்பும் அவுட்டோர்களில் நடக்கிறது. முருகன் கதை என்பதால் தமிழ கத்தில் உள்ள பிரதான முருகன் கோயில்களில் அதாவது அறுபடை வீடுகள்அனைத்திலும் இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம். தற்போது திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் காக்க காக்க சீரியல் படப்பிடிப்பு நடக்கிறது.
அதேபோல், கிருஷ்ணா, வாணி போஜன் முக்கிய வேடங்களில் நடித்து வரும் தெய்வமகள் சீரியலின் படப்பிடிப்பு யூனிட்டும் இம்மாதம் கேரளா செல்கிறது. அதையொட்டி கதையில் விறுவிறுப்பூட்டும் திருத்தங்களை செய்து வேறு சில நடிகர் நடிகைகளையும் கதையில் இணைத்து வருகிறார்கள்.
நன்றி: தினமலர்
aanaa
18th November 2016, 12:55 AM
தொலைக்காட்சி சீரியல் என்றாலே மாமியார் மருமகள் சண்டை மட்டும் தான் என்ற காலம் மாறி விட்டது.
சினிமாவை பிடித்த பேய் தற்போது சீரியல்களை பிடிக்க தொடங்கிவிட்டது. தொடர்ந்து எந்த தொலைக்காட்சியை ஓபன் செய்தாலும் பாம்பு, பேய் என சீரியல்கள் வரத்தொடங்கிவிட்டது.
ஜீதமிழ் தொலைக்காட்சியில் நாகராணி என்ற ஹிந்தி சீரியலை டப் செய்ய அதே கதையம்சம் உள்ள நாகினி என்ற சீரியலை சன்டிவி ஒளிபரப்ப தொடங்கியது.
இதன் வரவேற்பை பார்த்த விஜய் டிவியும் தன் பங்குக்கு தற்போது மாய மோகினி என்ற டப்பிங் சீரியலை ஒளிபரப்ப உள்ளனர்.
aanaa
18th November 2016, 12:56 AM
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு சீரியல் 400வது எபிசோடை எட்டியுள்ளது.
இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளின் ஏகோபித்த வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு சீரியல், புதிய திருப்பங்களை நோக்கி பயணிக்க உள்ளதாக கூறுகின்றனர் சீரியல் குழுவினர். நாட்டாமை குடும்பத்து மருமகள்கள் லட்சுமியும். தேன்மொழியும் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சுமிக்கு சுகப்பிரசவம் மூலம் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.
தேன்மொழியை சிசேரியன் அறைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அனைவரும் தேன்மொழிக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறதோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிவேல் தனது மனைவி லட்சுமியின் முகத்தையோ குழந்தையின் முகத்தையோ பார்க்க வரவில்லை.
அதேபோல சக்திவேலும் மருத்துவமனைக்கு வரவில்லை. இந்த இரண்டு பேருக்கும் என்னவாயிற்று? ஏன் குழந்தைகளை பார்ப்பதை தவிர்க்கின்றனர் என்ற கேள்வி சீரியலை பார்க்கும் நேயர்களுக்கு எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தருமாம் லட்சுமி வந்தாச்சு சீரியல்.
aanaa
18th November 2016, 12:59 AM
’அட..அட…என்ன ஒரு தங்கமான பொண்ணு. இப்படி ஒரு மருமகள் கிடைக்காதா?’ என்று மகன்களைப் பெற்ற அம்மாக்களை ஆசையாய் பார்க்க வைத்திருக்கும் சின்னத்திரை மருமகள்தான் ‘பிரியமானவள்’ தொடரின் கவிதா…இல்லையில்லை நிரஞ்சனி. அவருடன் ஜாலியாக ஒரு காபி டைம் டாக் அடித்தோம்…
உங்களைப்பற்றி…
“என் சீரியல் பேர்தான் நிறைய பேருக்கு ஞாபகத்தில் இருக்கும். ஆனா, என்னோட பேர் நிரஞ்சனி அசோக். பெற்றோரோட சொந்த ஊர் திண்டுக்கல். அவங்க செட்டில் ஆனது சென்னை. அதனால, டிபிக்கல் சென்னை பொண்ணு நான்.”
ஸ்கூல், காலேஜ் படிப்பு…
புதுயுகம் தொலைக்காட்சியில் ‘கல்லூரி பறவைகள்’ என்ற புத்தம் புதிய இளமை தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கி உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான நட்பு, நேசம், கலகலப்பு, காதல், மோதல், பிரிவு, போராட்டங்களை இளமை துள்ளலுடன் விவரிக்கிறது புத்தம்புதிய மெகா தொடரான கல்லூரி பறவைகள்.
கல்லூரி என்பது பறவைகள் சங்கமிக்கும் சரணாலயம் போன்றது. எங்கோ பிறந்த மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் ஒன்றுகூடி சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். வானத்தை தாண்டியும் பறக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்லூரி காலம்தான் வசந்தகாலம்.
பெற்றோரை விபத்தில் பறிகொடுத்தவள் நந்தினி. அந்த விபத்தில் பேச்சை இழந்துவிட்ட தம்பியை குணப்படுத்துவதற்காக கிராமத்தில் இருந்து மும்பைக்கு வருகிறாள்.
மும்பையில் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் ஒரு பிரபலமான கல்லூரியில், ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் வாய்ப்பு நந்தினிக்கு தற்செயலாக கிடைக்கிறது. அந்தக் கல்லூரியின் நிர்வாகியின் மகனான மாணிக்கும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
யாராலும் தட்டிக்கேட்க முடியாத பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கண்டு அத்தனை மாணவர்களும் அஞ்சி நடுங்குகிறார்கள். அந்த அராஜக மாணவர் குழுவின் தலைவன் மாணிக்குடன் நந்தினிக்கு மோதல் உண்டாகிறது.
யாரும் எதிர்பாராதவகையில் மாணிக்கை அடித்துவிடுகிறாள் நந்தினி. அதனால் நந்தினியை பழிவாங்கவும், கல்லூரியில் இருந்து வெளியேற்றவும் மாணிக் துடிக்கிறான். அவன் கோபத்தை நந்தினி தாக்குப்பிடித்து கல்லூரியில் நீடிக்க முடியுமா என்பதை, கல்லூரி பறவைகள் தொடரில் கண்டுகளியுங்கள்.
இந்தத் தொடரின் நாயகி நந்தினியாக பிரபல நடிகை நிட்டி டெய்லர், நாயகனாக பார்த் சம்தானும் நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர வீபா ஆனந்த், அஜஸ் அகமது, சார்லி சவுகான், கரன் ஜோத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.00 மற்றும் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை மறுநாள் பகல் 1.30 மணிக்கும், வாராந்திர தொகுப்பை வாரத்தின் இறுதியிலும் ஒளிபரப்பாகிறது.
aanaa
18th November 2016, 01:54 AM
சென்னை: ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான டிவி சீரியல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக முடிந்து வருகின்றன. பொம்மலாட்டம், பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்கள் முடிந்து விட்டன. இப்போது சன்டிவியில் யமுனா என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறகு சன்டிவி சீரியலில் நடிக்கிறார் பானுப்பிரியா. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சுரேஷ். இவர்கள் இருவருமே எண்பதுகளில் சினிமாவில் நாயகி, நாயகனாக கலக்கியவர்கள்.
இப்போது சுரேஷ் பானுப்பிரியா இருவரும் சன்டிவியில் ரசிகர்களை கண்ணீர் விட யமுனா சீரியல் மூலம் களமிறங்கியுள்ளனர்
ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிறந்த பானுப்பிரியா எண்பதுகளில் மெல்லப் பேசுங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் பிரபலமாக காரணம் இவரது நடிப்பும் நடனமும்தான். கண்களால் பேசிய பானுப்பிரியாவிற்கு ஐ டெக்ஸ் விளம்பர வாய்ப்பு வந்தது. சின்னத்திரையில் தூர்தர்சனில் விஸ்வாமித்ரா சீரியலில் நடித்தார். தொடர்ந்து பெண், சக்தி, வாழ்க்கை, பொறந்த வீடா புகுந்த வீடா, விஜய் டிவியில் ஆஹா என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் பானுப்பிரியா. சென்னை திரும்பிய பானுப்பிரியா மீண்டும் பல சீரியல்களிலும், சினிமாவிலும் அம்மா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ஐம்பது வயதாகும் பானுப்பிரியா, மீண்டும் சன் டிவியில் யமுனா சீரியல் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறார். இவருக்கு ஜோடி சுரேஷ். விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று ருசி பார்த்து மதிப்பெண் போட்டு வந்தார் சுரேஷ். மொட்டையடித்து வில்லனாக தோன்றிய சுரேஷ் இப்போது சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.
aanaa
30th November 2016, 08:28 PM
ராஜ் டி.வியில் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20161120140626635551.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டையட்டி அவரது வரலாற்று நிகழ்ச்சியை ராஜ் டி.வி. ஒளிபரப்புகிறது. ராஜ் டி.வியில் தினமும் காலை 9 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் வெள்ளித்திரை என்ற நிகழ்ச்சியில் அந்த நாள் ஞாபகம் பகுதியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறார். திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன்.
எம்.ஜி.ஆரின் குழந்தை பருவம் முதல் அவர் முதல்வரானது வரையிலான தகவல்கள் இதில் இடம்பெறுகிறது. அவரது வரலாறு தொடர்பான புகைப்படங்கள், சினிமா காட்சிகள், அரசியல் மேடை பேச்சுகள் போன்றவையும் ஒளிபரப்பாகிறது. சினிமா, அரசியல் இரண்டிலும் அவர் சந்தித்த சோதனைகள் சாதித்த சாதனைகள் அனைத்தும் இடம் பெறுகிறது.
நன்றி: தினமலர்
aanaa
30th November 2016, 08:30 PM
சீரியலில் இணைந்த சுரேஷ் - பானுப்ரியா
பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இளம் ஹீரோவாக அறிமுகமானார் சுரேஷ். அன்றைக்கிருந்த அழகான இளம் ஹீரோக்களில் முக்கியமானவர். ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தார். 100 படங்களுக்குமேல் நடித்த சுரேஷ் ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்து தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தின் மூலம் வில்லனாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு அசல், வல்லக்கோட்டை, ஆடுபுலி, தலைவா என தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்.
அதன்பிறகு சின்னத்திரைக்கு வந்த சுரேஷ் நிகழ்ச்சிகளின் நடுவராக இருந்தார். சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் அடுத்தகட்டமாக இப்போது சீரியில் நடிகராகிறார். விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் யமுனா என்ற சீரியலின் நாயகன் இவர்தான். இவருக்கு ஜோடியாக பானுப்பிரியா நடிக்கிறார். சில காலம் சின்னத்திரையை விட்டு விலகி இருந்த பானுப்ரியாவும் மீண்டும் வருகிறார். இருவரும் 80களில் கலக்கிய ஹீரோ, ஹீரோயின்கள். 50 வயதை கடந்தவர்கள்.
நன்றி: தினமலர்
aanaa
30th November 2016, 08:41 PM
சிக்கனம் சேமிப்பு செல்வம்
பொதுவாக, வணிக நிகழ்ச்சி என்றாலே அவ்வளவாக ஆர்வம் இருக்காது. ஆனால், அந்த வணிக நிகழ்ச்சியைச் சொல்லும் விதத்தில் சொன்னால் எல்லோருக்கும் பிடிக்கும். சாமானியர்களுக்கு எட்டாததாக, விளங்காத பல விஷயங்களை அத்துறை சார்ந்த வல்லுனர்கள் மிக எளிமையாக சுவாரஸ்யமாக விவரித்தால் பிடிக்கும்தானே...?
அப்படியொரு நிகழ்ச்சிதான் புதிய தலைமுறை டிவியில் வரும் "சிக்கனம் சேமிப்பு செல்வம்'. சாதாரண மக்களின் குடும்ப நிதி நிர்வாகத்துக்கு, தேவைகளுக்கு வழிகாட்ட, வலுவூட்ட முயல்வது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்களில் வருவாய் ஈட்டும் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதையும், ஒவ்வொரு துறையிலும் உள்ள வாய்ப்புகள், அந்தத் தொழிலுக்குப் பயிற்சி கிடைக்கும் இடங்கள், கடன்பெறுவதற்குள்ள நடைமுறைகள் என பலவும் பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது இந்நிகழ்ச்சி. டிவி சேனல் எப்படி ஆரம்பிக்கிலாம்னு சொல்லித்தருவாங்களா?
aanaa
30th November 2016, 08:43 PM
தொடர்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த திவ்யா!
"மரகத வீணை' என்ற தொடரின் முலம் காயத்ரியாக சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் திவ்யா. தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கவந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார்.
இவருக்கு, ராதிகாவின் ராடன் தொலைக்காட்சியின் லண்டன் பிரிவு நிறுவனமான ஐபிசி நிறுவனம் மூலம் லண்டன் சென்று நடிக்க வாய்ப்பு கிடைத்தது. "யாழினி' என்று பெயரிடப்பட்ட அத்தொடரை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். இத்தொடர் லண்டன் வாழ் தமிழர்கள் பற்றியதாகும். லண்டனில் ஒளிபரப்பாகும். இத்தொடரில் யாழினி என்ற யுவதியாக திவ்யா நடிக்கிறார்.
இதற்காக லண்டனுக்கும் சென்னைக்குமாக பறந்துகொண்டிருக்கிறா
aanaa
30th November 2016, 08:46 PM
The fresh and colourful series ‘Sippikkul Muthu’ is airing on Puthuyugam Monday to Friday at 6.30 pm and 8.30 pm.
In this series, Sureka and her family move from her village to the city. Her teenage daughter Jessi who is shy and timid by nature is most anxious about moving to a different place.
Fortunately for Sureka, she meets her childhood friend Simran who is well settled and provides everything right for her daughter Diya. Sureka also wants her daughter to get all the opportunities and develop new talents.
So she gets Jessi admitted in the same school as Diya. In the new school, Jessi finds it hard to fit due to her introvert nature. She is teased and bullied, but learns how to tackle her new classmates including Diya.
When it is revealed that Jessi is an adopted child in the family and that the legal procedures have not been completed, tensions rise within the family.
The Child Welfare Board threatens to take legal action against Sureka and her family. They also say that Jessi will be taken away from them. How will Sureka and her husband handle this situation? Will Jessi come to know that Sureka is not her real mother ?
This very relatable series that portrays the troubles the modern day teenagers go through and how the parents manage in bringing up their children.
It ultimately brings out the love, caring and bond that every family has during times of happiness and sadness. It stars sandeep Baswana, Sangeeta Ghosh, Diana Khan, Bhavika Sharma and Anuj P Sharma among others.
‘Sippikkul Muthu’ will air on Puthuyugam Monday to Friday at 6.30 pm and 8.30 pm with repeat at 12.00 pm the next day.
புதுயுகம் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30மணி மற்றும் இரவு 8.30 மணிக்கும் “சிப்பிக்குள் முத்து” தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் தன் குழந்தைகளின் நலனுக்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்கின்றனர் சுரேகா குடும்பத்தினர், எதிர்பாராத விதமாக நகரத்தில் உள்ள தனது சிறுவயது தோழியான சிம்ரனை சந்திக்கிறாள் சுரேகா.
நகரத்தில் செல்வச்செழிப்போடு வாழும் சிம்ரன் தன் மகள் தியாவை நகரத்தின் பிரபலமான முன்னணி பள்ளியில் படிக்க வைக்கிறாள், சுரேகாவும் தன் மகள் ஜெஸ்ஸியை தியா படிக்கும் பள்ளியில் சேர்த்துவிடுகிறாள்.
ஆனால் கிராமத்திலிருந்து வந்த ஜெஸ்ஸியின் பயந்த சுபாவத்தால் நகரத்து மாணவர்களின் பழக்கவழக்கங்களுடன் ஒத்துபோகாமல் பள்ளியில் பல அவமானங்களை சந்திக்கிறாள் ஜெஸ்ஸி, இதற்கிடையில் ஜெஸ்ஸி சுரேகாவால் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என தெரிய வருகிறது.
சட்டரீதியாக ஜெஸ்ஸியை தத்தெடுக்கவில்லை என குழந்தைகள் நல வாரியத்திலிருந்து சுரேகா குடும்பத்தினர் மீது புகார் வருகிறது.
ஜெஸ்ஸியை தத்தெடுத்ததில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்த்தார்களா சுரேகா குடும்பத்தினர்?
தன்னை பெற்ற அம்மா சுரேகா இல்லை என்பதை ஜெஸ்ஸி தெரிந்துகொண்டாளா?
ஜெஸ்ஸியின் பயந்த சுபாவத்தை போக்கினாளா சுரேகா என சுவாரஷ்யமாக நகர்கிறது சிப்பிக்குள் முத்து தொடர்.
aanaa
16th December 2016, 08:27 PM
ஜீ தமிழில் புதிய தொடர் டார்லிங் டார்லிங்: 12ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
ஜீ தமிழ் சேனலில் டார்லிங் டார்லிங் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. டப்பிங் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜீ தமிழ் ஒளிபரப்பும் நேரடி தமிழ் தொடர் இது. இதில் ராம்ஜி, வசந்த்கோபி, சித்ரா, நந்தினி என இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள். இவர்களுடன் நளினி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
திருமணமான இரு இளம் தம்பதிகளை பற்றிய கதை. ஒரு தம்பதியில் கணவன் வேலைக்குச் செல்வான் மனைவி வீட்டை கவனித்துக் கொள்வார். இன்னொரு தம்பதியில் மனைவி வேலைக்குச் செல்வார், கணவன் வீட்டை கவனித்துக் கொள்வார். இந்த இரு தம்பதிகளுக்குள்ளும் இருக்கும் முரண்பாடுகள், வாழ்க்கை சூழல்கள் ஆகியவற்றை காமெடியா சொல்லும் தொடர். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. வருகிற திங்கட்கிழமை (12ந் தேதி) முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நேயர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ப்ரைம் டைமுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.
நன்றி: தினமலர்
aanaa
16th December 2016, 08:27 PM
சினிமாவில் தொடர்ந்து நடிக்க மகேஸ்வரி விருப்பம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி மகேஸ்வரி. நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என்று கலக்கி வருகிறார். அதோடு விளம்பர படங்களிலும் நடித்தவர் இப்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் சினிமா நடிகையாகவும் ஆகிவிட்டார்.
"மீடியாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதிர்ஷ்ட லட்சுமி நிகழ்ச்சி என்னை எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. வெளியில் போனால் என்னை அதிர்ஷ்ட லட்சுமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது. தொகுப்பாளினி வேலை என்பது கேமரா முன்னால் நின்று ஸ்கிரிப்டை படித்துவிட்டுப்போவது என்று எளிதாக நினைக்கிறார்கள். இப்போது அப்படியில்லை. தங்களிடம் உள்ள தனித் திறமையை வெளிப்படுத்தினால் தான் அந்த நிகழ்ச்சியில் நிலைத்து நிற்க முடியும். ஸ்கிரிப்ட்டையும் தொகுப்பாளினிகள் தான் தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வெங்கட்பிரபு சந்தித்தார். சினிமாவில் நடிக்கிறீங்களா என்று கேட்டார். ஏதோ விளையாட்டாக கேட்கிறார் என்று நினைத்து ஓகே சார் என்றேன். அதை மனதில் வைத்து சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைத்தார். ரொம்ப ஜாலியான ஸ்கிரிப்ட், ஜாலியான படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன். சினிமாவில் நடிப்பதும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன்'' என்கிறார் மகேஸ்வரி.
நன்றி: தினமலர்
aanaa
16th December 2016, 08:33 PM
4 மொழிகளில் சீரியல் தயாரிக்கும் குஷ்பு!
மருமகள், ஜனனி, கல்கி, ருத்ரா என நெடுந்தொடர்களில் நடித்தவர் குஷ்பு. அதேபோல், கோடீஸ்வரி, ஜாக்பாட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சில ஷோக்களும் நடத்தி வருகிறார். அந்த வகையில, சிம்ப்ளி குஷ்பு உள்பட சில நிகழ்ச்சிகளில் பிரபலங்களை சந்தித்து பேட்டி கண்டவர், தற்போது நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது நந்தினி என்றொரு மெகா தொடரை தயாரித்து வருகிறார் குஷ்பு. இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சீரியல் ஒன்று நான்கு மொழிகளில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள். மேலும், தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்படும் இந்த தொடரை, தெலுங்கு, மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகிறார்கள்
அது மட்டுமின்றி சமீபகாலமாக சினிமாவுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி நேயர்களை கவர்ந்து வருகிறது. அதனால் குஷ்புவும் தனது நந்தினி தொடரை இந்தி தொடர்களுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்தி சீரியல்களுக்கு இணையாக தமிழ் சீரியல்களை பிரமாண்டமாக தயாரிக்க யாரும் முயற்சிக்காத நிலையில், முதன்முறையாக குஷ்பு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்நன்றி: தினமலர்
aanaa
16th December 2016, 08:35 PM
விஜய் டி.வியில் புதிய திகில் தொடர் நீலி
விஜய் தொலைக்காட்சியில் நீலி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அன்பான கணவன், அழகான மனைவி, ஆசைக்கு ஒரு மகள் என அழகாக செல்லும் ஒரு குடும்பம். ஒரு நாள், மனைவி ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அப்பா வேலையே பிசியாக இருக்கிறார். தனித்துவிடப்பட்ட மகளுக்கு துணையாக இருப்பது நீலி என்கிற பொம்மை. அந்த பொம்மைக்குள் புகுந்து கொள்கிறது குழந்தையின் அம்மா ஆவி. அந்த பொம்மைக்குள் இருந்து கொண்டே குழந்தையை கவனித்துக் கொள்வதோடு. தன் சாவில் உள்ள மர்மங்களையும் குழந்தையை கொண்டே வெளிப்படுத்துகிற மாதிரியான திகில் கதை.
தாய்க்கும் மகளுக்குமான ஆழமான அன்புதான் கதையின் பிரதானம். வருகிற டிசம்பர் 12ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
3rd January 2017, 02:27 AM
கங்கா -
SUN TV : 02-01-2017
https://i2.wp.com/www.tamilserialtoday.org/wp-content/uploads/2016/12/ganga-Sun-Tv-Serial-Tamil-Serial-Today-Org.jpg
https://www.youtube.com/watch?v=vFuSvtk76DI
aanaa
4th January 2017, 03:03 AM
நீலி சீரியலில் சாமியாக நடிக்கும் ஜீவிதா!
பாசமலர் உள்பட பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் ஜீவிதா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்யும் சாமி வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த அனுபவம் குறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களில் நடிக்கத் தொடங்கி எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். என்றாலும் சாமியின் அருள் பெற்ற கதாபாத்திரம் இப்போதுதான் கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரத்திற்காக எனது கெட்டப்பை மாற்றி நடிக்கிறேன். சாமி எனக்குள் வந்து நல்ல மனிதர்களுக்கு உதவி செய்யும் வேடம். இந்த வேடம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
மேலும், இதற்கு முன்பு குடும்பப் பாங்கான கேரக்டர்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக நடித்த எனக்கு இந்த நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது புதுமையாக உள்ளது. அதனால் இந்த வேடத்தை உணர்ந்து இயல்பாக நடித்து வருகிறேன் என்று கூறும் ஜீவிதா, பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்து வரும் ஆருத்ரா என்ற படத்திலும் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.
நன்றி: தினமலர்
aanaa
4th January 2017, 03:11 AM
செட்டுக்கு வெளியே படமாகும் ராமானுஜர் தொடர்!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராமானுஜர். இதற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதுகிறார். பெரும்பாலும், சரித்திர தொடர்கள் என்றாலே செட்டுக்குள்தான் படமாக்குவார்கள். ஆனால் இந்த தொடரை செட்டுக்கு வெளியே படமாக்கி வருகிறார்கள். அதற்காக சென்னை மட்டுமின்றி பல வெளி யூர்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ராமானுஜர் தொடரின் படப்பிடிப்பை காரைக்குடி, கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள பழைய காலத்து செட்டியார்களின் வீடு களில் நடத்தி வருகிறார்கள். 80 சதவிகிதம் வெளியூர்களில்தான் நடக்கிறது. அதுமட்டுமின்றி சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, படப்பை பாரஸ்ட் ஆகிய ஏரியாக்களிலும் அவ்வப்போது படப்பிடிப்பு நடக்கிறது. இந்த தொடரின் கதை வசனகர்த்தாவான கலைஞர் கருணாநிதி, செட்டுக்கு வெளியே இந்த மாதிரியான லொகேசன்களில் படப்பிடிப்பு நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளாராம்.
நன்றி: தினமலர்
aanaa
4th January 2017, 03:17 AM
சின்னத்திரை ஒரு பார்வை
தொடர்களில் பாம்பு ராஜ்யம் நடந்தது. மூன்று முடிச்சு, கேளடி கண்மணி, நாகினி, மாயமோகினி, நாக ராணி ஆகிய தொடர்கள் பாம்பை பின்னணியாக கொண்டவை
நாகினி, கர்ணன், சூர்ய புத்ரன், சீதையின் ராமன், ஜெய் அனுமான், மாயமோகினி, போன்ற பேண்டசி மற்றும் புராண தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு, வாணி ராணி, தெய்வமகள் சீரியல்கள் பெண் ரசிகைகளை அதிகம் ஈர்த்துள்ளது.
குடும்ப பிரச்சினைகளை கேட்டு தீர்வு சொல்லும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் வந்ததும் களை கட்ட ஆரம்பித்தது. இதே சாயலில் மற்ற சேனல்களும் நிகழ்ச்சியை தொடங்கியது. "நடிகைகள் நடித்தால் மட்டும் போதும் தீர்ப்பு சொல்ல வேண்டாம்" என்று இந்த நிகழ்ச்சிகளுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.
சரவணன் மீனாட்சி புகழ் செந்தில்-ஸ்ரீஜா ஜோடி மாப்பிள்ளை தொடர் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகியுள்ளனர்.
எல்லா சேனல்களும் தங்களை இணைய தளத்துடன் இணைத்துக் கொண்டது. பிடித்தமான நிகழ்ச்சியை தவற விட்டவர்கள் அந்தந்த சேனலில் பக்கங்களுக்கு சென்று டவுண்ட் செய்து பார்த்துக் கொள்ளும் வசதி விரிவுபடுத்தப்பட்டது.
ஆங்கில சேனல்களின் பாணியில் உயிரை பணயம் வைக்கும் அச்சம் தவிர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது
சிறுவர், சிறுமிகளின் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
>ராதிகா, ரோஜா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் ஆகிய நடிகைகளின் ஆதிக்கம் இந்த ஆண்டும் தொடர்ந்தது. சினேகா, சதா என புதிய நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்தார்கள்
பல வருட இடைவெளிக்கு பிறகு தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.
சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலர் சினிமாவில் ஹீரோவானார்கள். நடிகைகள் பலரும் சினிமாவுக்கு வந்தார்கள்.
பல ஆங்கில சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்புவதை அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டில் ஆங்கில படங்களையும் டப் செய்து ஒளிபரப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதில் செய்தி சேனல்களிடையே கடும் போட்டி இருந்தது. இறந்த செய்தியை முன்கூட்டியே சொல்வதில் பல குழப்பங்களையும் விளைவித்தது. சின்ன சின்ன நிகழ்ச்சிகள், பேட்டிகளைகூட நேரடி ஒளிபரப்பாக தொடங்கிவிட்டன செய்தி சேனல்கள்.
இந்த ஆண்டு மாலை முரசு, என்.எச் 18, 1எஸ்.டி.வி, மதிமுகம், வானவில், சஹானா உள்பட 10 புதிய சேனல்கள் தொடங்கப்பட்டது.
நன்றி: தினமலர்
aanaa
4th January 2017, 03:21 AM
மலையாளத்தில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்துகிறார் சுரேஷ் கோபி
ஸ்டார் டி.விவின் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி பல ஆண்டுகளை கடந்தும் பல மொழிகளில் தற்போது 4 வது சீசனாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியில் அமிதாப்பச்சன் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் இப்போது பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்று நடத்தி வருகிறார்கள். தமிழில் சூர்யா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் நடத்தினார்கள். தற்போது அரவிந்த்சாமி நடத்தி வருகிறார்.
தற்போது மலையாள சேனல் ஏசியா நெட்டில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நிங்களும் ஆகாம் கோடீஸ்வரன் என்ற பெயரில் 4வது சீசனாக வருகிற ஜனவரி 9ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பிரபல மலையாள ஆக்ஷன் ஹீரோ சுரேஷ் கோபி நடத்துகிறார். இதே நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்ஷன் (மேலோ எவரு கோடீஸ்வரடு) 4வது சீசனை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடத்துகிறார். குடும்ப பணிகள் காரணமாக நாகார்ஜுனா நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்ள சிரஞ்சீவி அந்த நாற்காலியில் உட்காருகிறார்.
நன்றி: தினமலர்
aanaa
4th January 2017, 03:35 AM
டிவி சீரியலாக வரும் பாகுபலி
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‛ பாகுபலி' படம் உலக அளவில் வசூலை குவித்தது . இதைத்தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது பாகுபலி படம் தொலைக்காட்சி தொடராக வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‛பாகுபலி- 2' படம் வசூலில் நிச்சயம் சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தை தொலைக்காட்சி தொடராக எடுத்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு . இது குறித்து பாகுபலி பட தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா கூறுகையில், பாகுபலியை டிவி தொடராக வெளியிடுவது குறித்து பணிகள் நடந்து வருகிறது , அதை யார் ஒளிபரப்பப் போகிறார்கள் உள்ளிட்ட எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார். ‛பாகுபலி -2' படம் ரிலீஸூக்கு பிறகு தொலைக்காட்சி தொடராக வரும் என்றும் கூறினார்
நன்றி: தினமலர்
aanaa
4th January 2017, 03:37 AM
பெரிய திரையிலிருந்து சின்னத்திரைக்கு செல்லும் ‛நீலி; சவி.
பொதுவாக சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு குறைவு. சீரியல்களில் பெரியவர்களே ஒருவரை ஒருவர் பழிவாங்க திட்டமிடுவதால் குழந்தை நட்சத்திர கேரக்டர்கள் குறைவு. ஆனால் குழந்தை நட்சத்திரத்தை மையப்படுத்தும் சீரியல்களில் அவர்களுக்கு முக்கியத்தும் இருக்கும்.
அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரத்தை மையமாக வைத்து விஜய் டி.வியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் நீலி. இதில் அபி என்ற கேரக்டரில் சவி என்ற குழந்தை நட்சத்திரம் நடிக்கிறார். புலி, தில்லுக்குதுட்டு உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் சவி.
தொடர் பற்றி இயக்குனர் ஜெரால்டு கூறியதாவது: இப்போது பெண்களை கவரும் சீரியல்கள்தான் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. குழந்தைகளையும் கவரும் வகையில் ஒரு தொடரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் நீலி தொடர். மாயாஜாலம், திகில், பேய் கதைகள் என்றால் இப்போது விரும்பி பார்க்கிறார்கள். அதையும் மனதில் வைத்து இதனை உருவாக்கி வருகிறோம். உயிரற்ற ஒரு பொம்மை. அதன் பெயர்தான் நீலி. அந்த பொம்மை மீது பாசம் கொண்ட சிறுமி அபி. இறந்துவிட்ட அபியின் அம்மா. இந்த மூவரைச் சுற்றி நகரும் கதை. ஒவ்வொரு எபிசோடும் முடியும்போது அடுத்த எபிசோடை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தும் வகையில் ஒரு டுவிட்ஸ்ட் வைத்திருக்கிறோம் என்கிறார் ஜெரால்டு.
நன்றி: தினமலர்
aanaa
22nd January 2017, 09:29 PM
மீண்டும் கனா காணும் காலங்கள்
விஜய் டி.வியின் புகழ்பெற்ற தொடர் கனா காணும் காலங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொடர் பல சீசன்களாக ஒளிபரப்பானது. பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகளை மையமாக கொண்ட தொடர் இது. இந்த தொடரில் நடித்த இர்பான், பால சரவணன் உள்ளிட்ட பலர் பின்னாளில் திரைப்பட நடிகர்கள் ஆனார்கள். ஒரு கல்லூரியின் காதல், கல்லூரி சாலை என வேறு சில பெயர்களிலும் ஒளிபரப்பானது. ஆர்.பிரபு கண்ணா, ஜி.அன்பழகன் இயக்கினார்கள்.
சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த தொடர் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 16ந் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதனை விஜய் டி.வி. அறிவித்துள்ளது. கனா காணும் காலங்கள் புதிய சீசனில் ரசிகர்களுக்கு எதிர்பாரா ஆச்சர்யங்கள் காத்திருப்பதாகவும் விஜய் டி.வி.தெரிவித்துள்ளது. இந்த தொடர் மூலம் பல இளம் கலைஞர்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். தற்போது இதற்கான படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.
நன்றி: தினமலர்
aanaa
22nd January 2017, 09:32 PM
நந்தினி -
SUN TV : 23-01-2017
https://www.youtube.com/watch?v=LQH8A5wkYzg
https://www.youtube.com/watch?v=UVLyB7E_j2w
https://www.youtube.com/watch?v=cks73mor5gw
aanaa
22nd January 2017, 09:36 PM
நாகினி - முடிவுற்றது
21-01- 2017
https://www.youtube.com/watch?v=C2y5on9bIyA
aanaa
8th February 2017, 02:27 AM
நந்தினியில் கலக்கும் மாளவிகா
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் என்ன சத்தம் இந்த நேரம். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாளவிகா வேலஸ். இதில் இயக்குனர் ராஜா, நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாளவிகாவுக்கு இது முதல் தமிழ் படம் என்றாலும், மலையாளத்தில் ஏராளமான படத்தில் நடித்துள்ளார். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், மகரமஞ்சு, ஆட்டகதா முக்கிய படங்கள். இதுதவிர சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அழகு மகன், அறுசுவை அரசன் என்ற தமிழ் படங்ளிலும் நடித்தார்.
அதன்பிறகு சின்னத்திரைக்கு வந்தார். அமிர்தா டி.வியிலில் சூப்பர் ஸ்டார் அல்டிமேட் நிகழ்ச்சியை நடத்தியவர். அதன்பிறகு பொன்னம்பில்லி என்ற மலையாள தொடரில் நடித்தார். அதன் மூலம் இப்போது தமிழ் நந்தினிக்கு வந்திருக்கிறார். நந்தினியில் அவர் ஜானகி கேரக்டரில் நடித்து வருகிறார். அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் உற்சாகமாக நடித்து வருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் தமிழ் படங்களில் அக்கா, அண்ணி போன்ற குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
நன்றி: தினமலர்
aanaa
8th February 2017, 02:31 AM
விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடர் லட்சுமி கல்யாணம்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் காதல் முதல் கல்யாணம் வரை தொடர் முடிவடைவதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு வரும் புதிய தொடர் லட்சுமி கல்யாணம். வருகிற 7ந் தேதி ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
இது ஒரு குடும்பத் தொடர். அக்கா தங்கை பாசத்தை உருக உருக சொல்லப்போகிறது. தன் தங்கை ஸ்வாதிக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் லட்சுமி என்ற பெண்ணின் கதை. தாய் தந்தைய இழந்த இவர்கள் வாழ்க்கையில் போராடுகிறார்கள். தையல் வேலை செய்து தங்கை ஸ்வாதியை படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறாள் லட்சுமி. அவளது தியாகமே பின்னாளில் அவளுக்கு பிரச்சினையாக வந்து நிற்கிறது.
தன் தியாகத்துக்கெல்லாம் சேர்த்து பெரிய தியாகம் ஒன்றை தங்கைக்காக செய்கிறாள் லட்சுமி. இப்படி செண்டிமெண்டை பிழிந்து தரப்போகிற தொடர். லட்சுமியாக தீபிகாகவும் ஸ்வாதியாக சத்யசாயும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.
நன்றி: தினமலர்
aanaa
8th February 2017, 02:36 AM
சின்னத்திரை: உருவாகிறது ஒரு மணி நேர தொடர்கள்
பொழுதுபோக்கு சேனல்களில் திரைப்படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது தொடர்கள். வாரக் கடைசியில் ஒளிபரப்பாகும் சிறப்பு தொடர்கள் மட்டுமே ஒரு எபிசோட் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் தொடர்கள் 30 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும், இதில் டைட்டில், விளம்பர நேரங்கள் 5 நிமிடம் போக ஒரு தொடரின் நீளம் 25 நிமிடங்கள்தான்.
ஆனால் இனி வரும் காலங்களில் இந்த நிலை மாற இருக்கிறது. இனி வார நாட்களில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த டிரண்டை தொடங்கி வைத்திருக்கிறது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை தொடர். இந்த தொடர் தற்போது ஒரு எபிசோட் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
சரவணன், மீனாட்சியில் காதலன், காதலியாக நடித்து, பின்னர் நிஜகாதலர்களாகி, திருமணமும் செய்து கொண்ட செந்தில்&ஸ்ரீஜா ஜோடி இதில் நடிக்கிறார்கள். மாப்பிள்ளை கதைப்படி இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இருவருக்கு பின்னாலும் ஒரு பெரிய உண்மை மறைந்திருக்கிறது. அதை மறைத்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஒருவர் உண்மை மற்றவருக்கு தெரிந்து விடக்கூடாதே என்கிற பதட்டம் இருவருக்கும் இருக்கும்... இப்படி போகிற கதை.
மாப்பிள்ளை தொடரின் 1 மணி நேர எபிசோட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், இது தொடர்ந்தால் மற்ற தொடர்களையும் ஒரு மணிநேர தொடராக மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
நன்றி: தினமலர்
aanaa
4th March 2017, 05:58 AM
விஜய் சூப்பரில் ஓல்டு இஸ் கோல்ட்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் விஜய் டி.வியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. விஜய் டி.வியில் தொடரை தவற விடுகிறவர்கள் விஜய் சூப்பரில் பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல ஒரு காலத்தில் விஜய் டி.வியில் சக்கை போடு போட்ட நிகழ்ச்சிகளும் விஜய் சூப்பரில் ஒளிபரப்பாகி வருகிறது. மகாபாரதம் தொடர் முதல் முதல் பாலியல் நிகழ்ச்சியான புதிரா புனிதமா வரையிலும் ஒளிபரப்பாகிறது. சில முக்கிய நிகழ்ச்சியின் விபரம் வருமாறு..
காலை 10 மணிக்கு மகான், 11 மணிக்கு சீதையில் ராமன், 11.30 மணிக்கு மகாபாரதம், 12 மணிக்கு காவியாஞ்சலி, 12.30க்கு சலனம், பகல் 1 மணிக்கு அக்னி சாட்சி, 1.30க்கு பூவிலங்கு, மாலை 5 மணிக்கு மாயா மச்சீந்திரா, இரவு 7.30 மணிக்கு இது ஒரு காதல் கதை, 8 மணிக்கு கனா காணும் காலங்கள், 9 மணிக்கு கலக்கப்போவது யாரு, 11 மணிக்கு புதிரா புனிதமா.
கிரிக்கெட், கால்பந்து உலக போட்டிகள், டிஸ்கவரி சேனலில் வருவது போன்ற விலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகள், டூரிசம் தொடர்பான நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சிகளும் தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்னும் பல சர்ப்பரைஸ்கள் காத்திருக்கிறது என்கிறது சேனல் வட்டாரம்.
நன்றி: தினமலர்
aanaa
4th March 2017, 06:03 AM
ஜுனியர் சீனியர்: கல்லூரி மாணவர்களுக்கான புதிய நிகழ்ச்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கும் நிகழ்ச்சி ஜுனியர் சீனியர். இது கல்லூரி மாணவர்களிடையே மறைந்திருக்கும் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. இதில் கல்லூரி மாணவர்கள் அணியாகவோ, அல்லது தனியாகவோ கலந்து கொள்ளலாம். கூட்டு நடிப்பு, தனி நடிப்பு எதையும் செய்யலாம். தங்கள் நடிப்பாற்றலை வெளிக்காட்ட வேண்டும். நாடகத்தனமான நடிப்பாக இல்லாமல் யதார்த்தமான நடிப்புக்கு மதிப்பெண் அதிகமாக வழங்கப்படும்.
இந்த போட்டிக்கு நடிகை மீனா, ரச்சிதா, காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்து திறமையான நடிகர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள். கீர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். வெற்றி பெறுகிறவர்களுக்கு கை நிறைய பரிசும், சினிமா வாய்ப்பும் காத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
4th March 2017, 06:05 AM
நந்தினி சீரியலுக்கு பல டீம்கள் இரவு பகலாக பணியாற்றுகின்றனர்
தமிழ் சீரியல் வரலாற்றில் நான்கு மொழிகளில் நந்தினி என்ற பிரமாண்ட சீரியலை தயாரித்து வருகிறார் நடிகை குஷ்பு. தமிழ், கன்னடத்தில் நேரடியாக தயாரிக்கப்படும் இந்த சீரியல், மலையாளம், தெலுங்கு மொழிகளில் டப் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை குஷ்புவின் கணவரான சுந்தர்.சி இயக்குகிறார்.
மேலும், மலையாளத்தில் பல சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ள மாளவிகா நடித்து வரும் இந்த சீரியல் வாரத்தில் 6 நாட்கள் ஒளிபரப்பாகி வருவதால், ஒருநாள்கூட இடைவெளி கொடுக்காமல் சென்னை சாலிகிராமத்தில் போடப்பட்டுள்ள அரண்மனை செட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதோடு, டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளுக்கு பல டீம்கள் உருவாக்கப்பட்டு இரவு பகலாக வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.
நன்றி: தினமலர்
aanaa
4th March 2017, 06:16 AM
SUN TV : 2017 - 03 -06
3 நாடகங்கள்
விதி
சுமங்கலி
மகாலெட்சுமி
https://youtu.be/imue3ff2Tj0
aanaa
11th April 2017, 09:13 PM
ஒரு மணி நேர தொடர் ஆனது டார்லிங் டார்லிங்
முக்கியமான தொடர்களை 30 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரமாக நீட்டித்து ஒளிபரப்புவது இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் 30 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேர தொடராகி இருக்கிறது டார்லிங் டார்லிங்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த தொடர் நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இதன் ஒளிபரப்பு கால அளவு ஒரு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஒரு மணி நேர தொடராக திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
.எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் இரு குடும்பங்களிடையே நடக்கும் பிரச்சினைகள் தான் கதை. இரண்டு குடும்ப குழப்பங்களின் கலாட்டாக்களை காமெடியாக சொல்லி வருகிறார்கள். இதுவரை கொஞ்சம் சீரியசும் கலந்திருந்த கதை இனி முழுநேர காமெடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கி சினிமா தரத்துக்கு தயாரிக்கிறார்கள். சினிமா பார்க்கும் உணர்வை ஏற்பபடுத்த வேண்டும் என்பதே தொடரின் நோக்கம் என்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
aanaa
11th April 2017, 09:15 PM
காமெடி நிகழ்ச்சியில் ரம்பா - ரோபோ சங்கர்!
சினிமாவில் நடிகை ரம்பா கடைசியாக நடித்த படம் பெண் சிங்கம். அதன்பிறகு திருமணம் செய்து கொண்ட ரம்பா, மானாட மயிலாட, ஜோடி நம்பர் -1 உள்ளிட்ட சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்து கொண்டார். இந்நிலையில், விஜய் டிவியில் கிங் ஆப் காமெடி ஜூனியர்ஸ் -என்ற பெயரில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் காமெடி நிகழ்ச்சியிலும் அவர் ஜட்ஜாக கலந்து கொள்கிறார். அதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்டிருக்கும் செட்டில் நடந்து வருகிறது.
மேலும், ரம்பாவுடன் இன்னொரு ஜட்ஜாக நடிகர் ரோபோ சங்கரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த கிங் ஆப் காமெடி ஜூனியர்ஸ் நிகழ்ச்சி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் அடுத்த லெவலாம். அந்த நிகழ்ச்சியைப்போன்று டயமிங் காமெடியும் இடம்பெறுகிறது என்றபோதும், ஜட்ஜாக பங்கேற்றும் ரோபோ சங்கரும் இதில் காமெடி செய்து களைகட்ட வைக்கப்போகிறாராம்.
நன்றி: தினதந்தி
aanaa
11th April 2017, 09:25 PM
சிவகார்த்திகேயனுடன் ஆரம்பமாகும் ‛அன்புடன் டிடி"
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170401100333148782.jpg
விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. எல்லா சினிமா பிரபலங்களும் பேட்டி கொடுக்க விரும்பும் தொகுப்பாளர். காபி வித் டிடி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது. அதற்கென்று தனி ரசிகர் வட்டாரம் இருந்தது. பேட்டியெடுப்பவர்களுடன் கலகல பேச்சு என நிகழ்ச்சியை களைகட்ட வைப்பார். இடையில் சேனலுக்கும் டிடிக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு இருதரப்பும் சமாதானமாகி பல நிகழ்ச்சிகளையும் நடத்தி விட்டார்கள். இப்போது மீண்டும் புதிய பொலிவுடன் காபி வித் டிடி நிகழ்ச்சி அன்புடன் டிடி என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதிலும் பழைய கலாட்டாக்கள் இருக்கும், கூடுதலாக டிடி கிளாமர் உடையில் கலக்க இருக்கிறார். பிரபலமான ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்று டிடியின் உடைகளை டிசைன் செய்கிறது.
அன்புடன் டிடி நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, பின்னர் வார நாள் ஒன்றில் மறு ஒளிபரப்பாகும். புதிய உற்சாகத்துடன் தனது நிகழ்ச்சியை சிவகார்த்திகேயனுடன் தொடங்குகிறார் டிடி.
நன்றி: தினதந்தி
aanaa
11th April 2017, 10:05 PM
ராஜ் டி.வியில் புதிய குழந்தைகள் தொடர் அட்டகாசம்
சின்னத்திரையில் குடும்ப தொடர்கள், மாயாஜால தொடர்கள், புராண தொடர்கள், சரித்திர தொடர்கள் என விதவிதமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. முதன் முறையாக ராஜ் டி.வியில் குழந்தைகளை மையமாக கொண்டு அட்டகாசம் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது
அஞ்சலி, பசங்க போன்ற திரைப்படங்களின் பாணியில் இந்த தொடர் உருவாகி வருகிறது. ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கும் 10 சிறுவர்களின் சேட்டைகளாலும், விளையாட்டாலும் வரும் சிக்கல்களையும் காமெடியாக சொல்கிற தொடர். பெற்றவர்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற பாடத்தோடு குழந்தைகள் உலகம் எப்படி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்பதையும் காட்ட இருக்கிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள், அப்பார்ட்மென்ட் செகரட்டரி, வாட்ச்மேன் போன்ற கேரக்டர்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சென்னை புறநகரில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நன்றி: தினதந்தி
aanaa
10th May 2017, 05:39 AM
ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2: மே 16 முதல் ஒளிபரப்பாகிறது
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த நட்சத்திர நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் ஸ்டார். 14 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. இதற்கு கிடைத்த வரவேற்பையட்டி இதன் சீசன் 2 நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டியது ஜீ தமிழ்.<br>தமிழ்நாடு முழுவதும் முதல்கட்ட தேர்வு நடத்தி நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை ரோஜா, தொகுப்பாளினி அர்ச்சனா பணியாற்றுகிறார்கள். வருகிற 16ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.<br>இந்த நிகழ்ச்சியின் புரமோசனுக்காக வித்தியாசமான நாடகம் ஒன்றை நடத்தி அதனையே புரமோசனாக வெளியிட்டிருக்கிறார்கள். கே.பாக்யராஜும், அர்ச்சனாவும் நாடத்தில் ஜோடியாக நடிக்கிறவர்கள். ஒரு ஊருக்கு நாடகம் போடச் செல்கிறார்கள். புதிதாக நடிக்க வந்திருக்கும் ரோஜாவுக்கு ர,ழ உச்சரிப்பு வராது. நாடகம் தொடங்கும் நேரத்தில் பார்த்தால் பார்க்க யாருமே வந்திருக்க மாட்டார்கள். ஒரே ஒரு சிறுவன் மட்டும் வந்திருப்பான். "இனிமே நீங்க எங்கேயும் நாடகம் போடக்கூடாதுன்னு சொல்லிட்டுப்போகத்தான் வந்தேன். எங்க நடிப்பை பார்க்கணும்னு அங்க வாங்க" என்று சொல்லிவிட்டுப் போகிறான். அவன் சொல்வது ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஷோவை. வித்தியாசமான இந்த புரமோ லைக்குகளை குவித்து வருகிறது.
நன்றி: தினதந்தி
aanaa
10th May 2017, 05:47 AM
தயாரான கமல் - பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி பற்றி சொல்வது என்ன.
வட இந்திய சேனல்களில் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டி.வி தயாரித்து ஒளிபரப்ப இருக்கிறது. 15 பிரபலங்கள் வெளி உலக தொடர்பு எதுவுமின்றி 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கியிருக்க வேண்டும். செல்போன், செய்திதாள், டி.வி, கடிகாரம் எதுவுமே இருக்காது வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. எத்தனை மணி இரவா, பகலா எதுவும் தெரியாது. சாப்பிடலாம், தூங்கலாம், விளையாடலாம், படிக்கலாம். யார் தாக்குபிடித்து 100 நாள் வரை இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். இந்தியில் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை நடத்தினார். தமிழில் கமல்ஹாசன் நடத்துகிறார். தங்கியிருப்பவர்களை கண்காணித்து தீர்ப்பு வழங்குவது அவரது பணி. இந்த நிகழ்ச்சிக்காக கமல் தயாராகி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த நிகழ்ச்சி பற்றி விஜய் டி.வி என்னிடம் சொன்னதும் எனக்கு காமெடியாக தெரிந்தது. என்னுடைய ஒவ்வொரு விநாடியும் மற்றவர்களால் கவனிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு நேர்மாறான ஒரு விஷயத்தை சொல்கிறார்களே என்று யோசித்தேன். ஆனாலும் சவாலான விஷயமாக இருப்பதால் ஏற்றுக் கொண்டேன். வீட்டிற்குள் 100 நாள் வசித்து யார் யார் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்கப்போகிறேன். என்கிறார் கமல்.
பிரபலங்கள் வசிப்பதற்கான வீட்டையும் அதை சுற்றி கேமராக்கள் பொருத்தி படம்பிடிப்பதற்கான பணிகளையும் விஜய் டி.வி. மும்முரமாக செய்து வருகிறது. "தமிழ் ரசிர்களுக்கு எப்போது ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் கமல் நடத்தும்போது அதற்கு இன்னும் மதிப்பு அதிகமாகிறது. நிச்சயம் இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரப்போகிறது" என்கிறார் விஜய் டி.வியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி.
நன்றி: தினதந்தி
aanaa
10th May 2017, 05:48 AM
பிரமாண்ட சரித்திர தொடர் தயாரிக்கிறார் குட்டி பத்மினி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குட்டி பத்மினி. அதன்பிறகு சின்னத்திரையிலும் நடித்து வந்தவர், பல மெகா தொடர்களையும் தயாரித்து வருகிறார். அந்தவகையில், தற்போது வீரமங்கை வேலு நாச்சியார் என்ற பெயரில் ஒரு பிரமாண்ட சரித்திர தொடரை தயாரித்து வருகிறார் குட்டி பத்மினி. இந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
விஜய் டிவியில் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகயிருக்கும் இந்த தொடர் வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு தொடர் என்பதால், அவரது குழந்தை பருவம் முதல் இறுதி காலம் வரை அவர் கடந்து வந்த பாதை அனைத்தும் படமாக்கப்படுகிறதாம். அதோடு, தற்போது குஷ்பு தயாரித்து வரும் நந்தினி சீரியலைப்போன்று பல மொழிகளில் தயாராகும் இந்த தொடரும் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
நன்றி: தினதந்தி
aanaa
10th May 2017, 06:09 AM
தமிழில் ஒளிபரப்பாகும் மாலினி ஐயர்
கடந்த 2004ம் ஆண்டு சகாரா டி.வியில் ஒளிபரப்பான இந்தி தொடர் மாலினி ஐயர். சினிமாவில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த ஸ்ரீதேவி நடித்த முதல் டி.வி.தொடர். இதனை அவரது கணவர் போனி கபூர் தயாரித்தார். மிகுந்த வரவேற்பை பெற்ற அந்த தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது ஒரு காமெடி தொடர்.
தமிழ்நாட்டு பிராமண பெண்ணான ஸ்ரீதேவி ஒரு பஞ்சாபியை திருமணம் செய்து கொண்டு வடநாட்டில் செட்டிலாகிறார். பஞ்சாபி கலாச்சாரத்திற்கும், தமிழ் பிராமணாள் கலாச்சாரத்திற்கும் ரொம்பவே வித்தியாசம், இதனை மாலினி ஐயர் எப்படி சமாளிக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் தொடர். அப்பாவியான மாலினி ஐயர் செய்யும் கலாட்டாக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவியின் நடிப்பை ரசிக்கும் வாய்ப்பும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170426140123168581.jpg
நன்றி: தினதந்தி
aanaa
10th May 2017, 06:12 AM
ஜீ தமிழில் இரண்டு புதிய தொடர்கள் ஆரம்பம்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170425114243308118.jpg
சமீபகாலமாக டப்பிங் தொடர்களுக்கு மவுசு குறைந்து நேரடி தமிழ் தொடர்கள் அதிகரித்து வருகிறது. எல்லா சேனல்களும் போட்டி போட்டு புதிய தொடர்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனலில் நேற்று முதல் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி என இரண்டு தொடர்களை ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறது.
இரண்டு தொடர்களுமே திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. பூவே பூச்சூடவா இரவு 8 மணிக்கும், யாரடி நீ மோகினி இரவு 8.30 மணிக்கும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகிறது. இரண்டுமே பெண்களை மையமாக கொண்ட தொடர்கள். பூவே பூச்சூடவா நதியா நடிக்க பாசில் இயக்கிய திரைப்படத்தின் டைட்டில். யாரடி நீ மோகினி தனுஷ், நயன்தாரா நடித்த படத்தின் டைட்டில். இரண்டு வெற்றிப்பட டைட்டில்களுடன் ஒளிபரப்பாகும் தொடர்களை நேயர்கள் வெற்றி பெற வைப்பார்களா? என்பது இன்னும் சில வாரத்தில் தெரிய வரும்.
நன்றி: தினதந்தி
aanaa
24th May 2017, 07:02 AM
பிரபல டிவி சானலில் மிகவும் பரபரப்பாக போய் கொண்டிருப்பது தெய்வம் தந்த வீடு சீரியல். இதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் சீரியல் என்ற நிலை மாறி இளவட்டங்களும் பார்க்க தொடங்கிவிட்டனர்.
அதிலும் இந்த தெய்வம் தந்த சீரியலுக்கு பல பெண்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இதில் நடித்துள்ள மேக்னா வின்செண்ட். கதை முழுக்க இவர் தான் லீட். ஒரு நல்ல மருமகளாக இவரே சீரியல் முழுக்க ஸ்கோர் செய்கிறார்.
1000 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் தற்போது நிறைவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. இதற்காக இந்நாடக குழுவினர் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
aanaa
24th May 2017, 07:07 AM
சுமங்கலி சீரியல் நாயகனாகிறார் கன்னட நடிகர் சுஜித்
நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் தொடர் சுமங்கலி. திவ்யா லீடு ரோலில் நடித்து வரும் இந்த தொடரில் பிரதீப் நாயகனாக நடித்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமலேயே சுமங்கலி தொடரின் எபிசோடுகள் நகர்த்தப்பட்டு வந்தன. அதோடு, பிரதீப் நடித்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்கிற பரிசீலணையும் நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது சுஜித் என்ற கன்னட சீரியல் நடிகர் சுமங்கலி தொடரில் பிரதீப் நடித்து வந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
நன்றி: தினதந்தி
aanaa
24th May 2017, 07:14 AM
100 எபிசோட்களை நிறைவு செய்த நீலி.
திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடினால் அதனை கொண்டாடுவதைப்போல இப்போது ஒரு தொலைக்காட்சி தொடரும் 100 எபிசோடை தாண்டினால் பெரிய சாதனையாக கொண்டாடப்படுகிறது. காரணம் இந்த 100 எபிசோட்கள்தான் சீரியலின் பரிசோதனைக் காலம். முதல் 100 எபிசோட்களை தக்க வைத்து விட்டால் அதாவது டி.ஆர்.பி இறங்காமல் பார்த்துக் கொண்டால் அது சீரியலின் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீலி தொடர் 100 எபிசோட்களை கடந்துள்ளது. அதை அதன் கலைஞர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் 12ந் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்கிய நீலி தொடரை சி.ஜெரால்டு இயக்குகிறார். சவி, நவீன், நிரஞ்சனி, திவ்யா, கவிதா, ரேகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது இறந்து போன ஒரு தாய், தன் மகளை ஆவியாக இருந்து பாதுகாக்கிற கதை. குழந்தை பாசம், ஆவி செண்டிமெண்ட் கலந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 100 எபிசோட்களை கடந்திருக்கிறது. இதனை அதில் நடித்த நடிகர் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170515144011532277.jpg
நன்றி: தினதந்தி
aanaa
14th October 2017, 06:57 AM
நெஞ்சம் மறப்பதில்லை: 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20171007105642614298.jpg
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் நெஞ்சம் மறப்பதில்லை. தற்போது விஜய் டி.வி வித்தியாசமான தொடர்களை பிரமாண்டமாக ஒளிபரப்புகிறது. பாகுபலி பிரமாண்டத்தில் தமிழ் கடவுள் முருகன் தொடரை ஒளிபரப்புகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் சின்னத்தம்பியை ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் நெஞ்சம் மறப்பதில்லை குளுகுளு கொடைக்கானில் நடக்கிறது.
இதில், காதல் முதல் கல்யாணம் வரை புகழ் அமித் பார்கவ் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் சரண்யா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர நிஷா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அமித் பார்கவ் கொடைக்கானலுக்கு புதிய போலீஸ் அதிகாரியாக வருகிறார். கொடைக்கானில் ஒரு காலத்தில் அவர் காதலை நிராகரித்த சரண்யா இருக்கிறார். இவர் வந்த நேரம் சரண்யாவின் தந்தை விபத்தில் இறந்து போகிறார். அவரும் ஒரு போலீஸ் அதிகாரிதான். சரண்யா அமித் பார்கவ் மீது சந்தேகம் கொள்கிறார். இப்படி தொடங்குகிறது சீரியல். காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லரா தயாராகிறது சீரியல். வருகிற 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
14th October 2017, 06:59 AM
கிங்ஸ் ஆப் டான்ஸ்: 7-ம் தேதி முதல் ஒளிபரப்பு
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளை துவக்கி வைத்ததே விஜய் டி.வி. தான். இப்போது எல்லா சேனல்களும் ஏதோ ஒரு விதத்தில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதனால் விஜய் டி.வி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த ஆரம்பித்திருக்கிறது.
வருகிற 7ந் தேதி முதல் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட செட்டுகளில் பிரமாண்ட நடன கலைஞர்களை கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் பிரமாண்ட அரங்கில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் நடத்துகிறார்.
இந்த நடன நிகழ்ச்சியில் உயிரை பணயம் வைத்தும் நடனமாடுகிறார்களாம். இதுவரை ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் இதுவே பிரமாண்டமாக இருக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
14th October 2017, 07:01 AM
சின்னத்திரையில் ஒரு பாகுபலி: தமிழ் கடவுள் முருகன் பிரமாண்ட தொடக்கம்
சின்னத்திரை வரலாற்றின் புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது விஜய் டி.வியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள தமிழ் கடவுள் முருகன் தொடர். பல லட்சம் செலவு செய்து பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்திருந்தனர். தமிழ் கடவுளின் கதை என்பதாலும், தங்களுக்கு தெரிந்த கதை என்பதாலும் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொடரை பலரும் பார்க்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தின் பிரமாண்டத்தை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தது. நவீன தொழில் நுட்பத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இருந்தார்கள்.
அசுர குலத்தை அழித்துவிட்டு கேளிக்கையில் விழுந்து கிடக்கிறான் இந்திரன். அரசுகுலத் தலைவனின் மகள் மீண்டும் அசுரகுலத்தை உருவாக்கி தேவர் குலத்தை அழிப்பேன் என்று தன் தந்தையின் பிணத்தின் முன் சபதம் கொள்கிறாள். அசுரகுலத்தின் குரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில் காட்டில் கடும் தவம் புரியும் பிரமனின் மகன் பார்த்திபனை தன் அழகால் மயக்கி மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். நரகாசுரனும் அவரது சகோதர்களும், சகோதரி அஜிமுகியும் பிறக்கிறார்கள். அனைவரும் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து அற்புதமான வரங்களை பெறுகின்றனர்.
வரத்தை பெற்ற அசுரர்கள் தேவர் குலத்தை அழிக்கும் வேலையைத் துவங்குகிறார்கள். கண்ணில் பட்டவர்களை வெட்டி சாய்கிறார்கள். அடுத்து இந்திரலோகத்துக்கு படையெடுக்க திட்டமிடுகிறார்கள். நிலமை கட்டுக்கடங்காமல் செல்லவே சிவன் விழிப்படைகிறார். அரசுரர்களை அழிக்க அவர் ஒரு சக்தியை உருவாக்க நினைக்கிறார். இதோடு முதல் ஒரு மணி நேர எபிசோட் நிறைவடைந்தது. அவர் உருவாக்கும் சக்திதான் முருகன்.
குறைந்த விளம்பரங்களுடன் நேற்றைய எபிசோட் ஒளிபரப்பானது அனைவருக்கும் ஆச்யர்த்தை ஏற்படுத்தியது. தொடர்ந்த அப்படி ஒளிபரப்பாகுமா என்று சொல்ல முடியாது. திரைப்படங்களுக்கு முதல் ஓப்பனிங் கிடைப்பதை போன்று முதன் முறையாக ஒரு சீரியலுக்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்தது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
14th October 2017, 07:02 AM
சின்னத்திரைக்கு திரும்பினார் பிரஜின்: சின்னத்தம்பியாக ரீ எண்ட்ரி
ஒரு காலத்தில் சின்னத்திரையில் நட்சத்திரமாக கலக்கியவர் பிரஜின். பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காதலிக்க நேரமில்லை தொடர்களில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.<p>அவ்வப்போது சிறிய கேரக்டர்களில் சினிமாவில் நடித்து வந்த பிரஜின் தீ குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. சுமார் 10 வருடங்கள் சினிமாவில் போராடி விட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் வருகிற அக்டோர் 2ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் சின்னத்தம்பி தொடரில் நாயகனும், சின்னத் தம்பியும் அவர்தான். ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கிராமத்து கதை. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் சின்னத்தம்பி, பட்டணத்தில் இருந்து ஊருக்கு வரும் ஒரு திமிரான பெண்ணை எப்படி அடக்குகிறான் என்பதுதான் கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
aanaa
14th October 2017, 07:04 AM
மிசஸ்.சின்னத்திரை: விஜய் டி.வியில் புதிய நிகழ்ச்சி
தனது சேனலில் பணியாற்றும் தொகுப்பாளினிகள், தொடரில் நடிக்கும் நடிகைகளை வைத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விதவிதமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதில் விஜய் டி.வி. தனித்து நிற்கும். அந்த வரிசையில் அடுத்து வருகிறது மிசஸ்.சின்னத்திரை.
மிஸ்.இந்தியா, மிஸ் தென்னிந்தியா என்று தலைப்பில் அழகி போட்டிகள் நடத்துவது போன்று இது சின்னத்திரையில் நடிக்கும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திருமதிகளுக்கான அழகிப்போட்டி. ஆனால் இந்தப் போட்டியில் அழகு மட்டுமே பிரதானம் இல்லை. நடிப்பை தாண்டி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அதிகம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அவர்களுக்குள் இருக்கிற சமையல் திறன், ஒவிய திறன், நடனத் திறன், பாடும் திறன் இப்படி என்ன இருக்கிறதோ அதை வெளிப்படுத்தலாம். நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண். நேயர்கள் அளிக்கும் ஓட்டு ஆகியவற்றின் அடிப்படையில் மிசஸ்.சின்னத்திரை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு லட்சக்கணக்கில் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. வருகிற 24ந் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது பிரமாண்ட அரங்கில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நன்றி: தினமலர்
aanaa
14th October 2017, 07:12 AM
விநாயகர்
SUN TV
http://www.biggbosstamil.net/vinayagar-today/"
http://www.biggbosstamil.net/wp-content/uploads/2017/10/Vinayagar.jpg
aanaa
5th November 2017, 04:46 AM
மீண்டும் ரேவதி
மண்வாசனை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரேவதி தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். 1990ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இரவில் ஒரு பகல் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பெண், ரேவதி, நிறங்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தார். சின்ன சின்ன ஆசை, பூம் பூம் சக்கலக்க, கதை கதையாம் காரணமாம், புதுமை பெண்கள், சிந்தனைகள், சேம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சில காலம் சின்னத்திரையிலிருந்து ஒதுங்கியிருந்த ரேவதி இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அழகு என்ற தொடரில் நடிக்க இருக்கிறார். ரேவதியின் கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்ப பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் அழகு என்ற கேரக்டரில் நடிக்கிறார் ரேவதி. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒஸ்தி, பவர் பாண்டி படங்களில் அம்மாவாக நடித்த ரேவதி தொடர்ந்து சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
நன்றி: தினமலர்
aanaa
5th November 2017, 04:49 AM
பரமசிவனும், பார்வதியும் யார்?
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20171027122043631062.jpg
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் கடவுள் முருகன் தொடரில் தற்போதைய எபிசோட்களில் அதிகமாக வரும் பார்வதி, பரமசிவன் கேரக்டர்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும், ஆனால் அவர்கள் யாரென்று தெரியாது. அவர்கள் இருவரும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் தான்.
பரமசிவன் கேரக்டரில் நடிப்பவர் வம்சம் தொடரில் வில்லனாக நடித்த நந்தகுமார். ஆறடி உயரமும், சிவன் கேரக்டருக்கேற்ற முகமும் அமைந்திருப்பதால் அவருக்கு இந்த கேரக்டர் கிடைத்திருக்கிறது. அவரும் சிறப்பாக நடித்து பெண்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
பார்வதியாக நடிப்பவர் பிரபல செய்தி வாசிப்பாளர் பிரியா. அமைதியே உருவான முகம், கனிவான தோற்றம் இவருக்கு பார்வதி கேரக்டரை பெற்றுத் தந்திருக்கிறது. சிறிது காலத்துக்கு செய்தி வாசிப்பை ஒதுக்கி வைத்து சினிமாவில் தலை காட்ட துவங்கி உள்ளார். சீரியல் முழுக்கவே செண்டிமெண்டாக தாய்மை உணர்வுடன் உருகி வருகிறார்.
நன்றி: தினமலர்
aanaa
10th December 2017, 07:27 AM
காமெடி கில்லாடிகள் : ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி
ஜீ தமிழ் சேனல் தனது புதிய மாற்றத்திற்கு பிறகு பிரமாண்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிகள், ஜூனியர் சூப்பர் ஸ்டார், சரிகமபா, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது காமெடி கில்லாடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான ஆடிசன் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி நகரங்களில் நடந்தது. வருகிற 10ம் தேதி சென்னையில் நடக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 போட்டியாளர்களை கொண்டு நிகழ்ச்சியை படம்பிடிக்க இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் காமெடிக்கான ஸ்கிரிப்டை தாங்களே உருவாக்கி கொள்ள வேண்டும் என்பது முக்கிமான அம்சமாகும்
நன்றி: தினமலர்
aanaa
10th December 2017, 07:30 AM
மீண்டும் சின்னத்திரையில் தலைவாசல் விஜய்
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான தலைவாசல் விஜய், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நீலாமாலா தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானர். அதன்பிறகு கோபிகா, கங்கா யமுனா சரஸ்வதி தொடர்களில் நடித்தார். தலைவாசல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், அன்று முதல் தலைவாசல் விஜய் ஆனார். அதன்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்தார். யுகபுருஷன் என்ற மலையாளப் படத்தி ஸ்ரீ நாராயணகுருவாக நடித்து, சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்றார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20171204113240002296.jpg
தலைவாசல் விஜய் தற்போது அழகு சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இதில் அவர் பழனிச்சாமி வாத்தியாராக நடிக்கிறார். அவரது மனைவியாக ரேவதி நடிக்கிறார். 5 குழந்தைகளை கணவன், மனைவி இருவரும் எப்படி வளர்த்து ஆளாக்கி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னை என்ன என்பதான் கதை.
நன்றி: தினமலர்
aanaa
10th December 2017, 07:33 AM
ராஜ் டி.வியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஸ்பெஷல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. இதையொட்டி பல நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ராஜ் தொலைக்காட்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.<br><br>திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு. அவரது சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவை பற்றி பேசுகிறது இந்த தொடர். அவர் சந்தித்த சோதனைகள், செய்த சாதனைகள் படக் காட்சிகளாக விரிகிறது. அரசியல் உலகில் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவர்கள். சினிமாவில் இணைந்து நடித்தவர்கள் ஆகியோரின் நேர்காணலும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20171116110059330754.jpg
எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றை கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக ஒளிபரப்புகிறார்கள்
நன்றி: தினமலர்
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.