PDA

View Full Version : 30 NAATKALIL KAADHAL BAASHAI!



VENKIRAJA
19th December 2006, 04:00 PM
ஆதியும் அந்தமும் காதல்......

இவை பிரத்தியேகமாக காதலைப் பற்றி மட்டும் எழுதப்பட்ட கதைகள்.

சத்தியமாக காதலித்ததில்லை.காதல் கதைகளைப் பார்த்துவிட்டு அனைவரும் கேட்கும் முதல் வினா இதுதான்.காதலிக்கிறாயா?something wrong?"என்று தான்.காதல் பற்றி கதை,கவிதை எழுதுகிறவன் காதலித்த பின்னே தான் எழுத வேண்டுமென்றாஅ,மரணம் பற்றி எழுதுபவன் செத்த பிறகு தான் எழுத வேண்டுமோ?இது வெறும் ஒரு முன்குறிப்பு,a caution,thats all.

பொங்கலுக்கு நடுவே முந்திரிப்பருப்பு போல தமிழிலக்கியத்துள்ளும் பரவி விரவிக் கிடக்கிறது காதல்.தங்களுக்கெ உரிய மிடுக்குடன் நளினமாக அவை வீற்றிருக்கின்றன.விழிவழியாக அன்றி செவிவழியாக நான் நுகர்ந்த கவிதைகள் காதலாய் என்னை தூண்டின.வருடிய அந்த வேரின் கிளையாக,இதோ என் பாஷையில் காதல்.அனுபவிக்காவிடினும்,கனவுகள் உங்களை பாதிப்பது மாதிரி இம்மாணவனை பாதித்தது காதல்.ஜன்னல்க்கு சொந்தமான தென்றலைப் போல,செருப்புக்கு சொந்தமான வீதிகளைப் போல,சூரியகாந்திக்கு சொந்தமான சூஇயனைப் போலஓர் உணர்வின் பிரசவம் ஈன்றிருக்கிறது இந்த அரும்பு மீசைக்காரனுக்கு காதல் கதைக் குழந்தைகளை.என் விரல் முனையும்,கீபோர்டும் உரசி முத்தமிட்ட போது உங்களுக்கு கேட்கின்றன என் காதல் கதைகள்.முகம் தெரியாத தோழியொடு மெரீனாவில் நான் கட்டிய தாஜ்ஹால்களே துணை.கேரம் பலகையின் துளைகள் கொஞ்ச இடம் அடைத்தாலும் ஆட்டத்தின் மையமாக இருக்கும்.அது போல் காதல் கொஞ்ச நேரம் வந்தாலும் வாழ்வின் மையமாக இருக்கும்.மழைபெய்த பிஉரகும் வீசும் மண்மணத்தைப்பொல காதல் வடியாத ஒரு தாக்கத்தின் சொந்தக்காரன்.அஃது முற்றுப்புள்ளி இல்லாத ஒரு வாக்கியம்,ஆச்சர்யக்குறியை தாண்டிய ஆச்சர்யம்.காதலெனும் விளக்கைப் போட்டவுடன் ஒளி வராது மாறாக இருள் வரும்,வைரசகியைத்தவிர யாராலும் ஒளிர வைக்க முடியாத இருள்.இதயம் இரண்டு கூட்டப்படும்,ஒன்றாய் கழிந்துவிடும்,மேலும் பெருகக்கூடும்,ஊடலால் வகுக்கப்படும் என ஒரு விசித்திரமான ஒரு கணக்கு.மொத்தத்தில் பரமானந்தம்.

வானுக்கு ஒரு நிலா,உலகிற்கு ஒரு சொல்-காதல்.

இப்படிக்கு கவிதைகளில் மட்டும் காதலிக்கும்,
நெறியன்,
இரா.கு.வெங்கடேஷ்.

VENKIRAJA
19th December 2006, 04:02 PM
"KILLனு ஒரு காதல்."

என் காதல் யாழினிக்கு,
நலமில்லை தான்.நலமில்லாதவர்களைப்பற்றி அறிய ஆவலும் இல்லை தான்.நான் இதுவரை நெடிய மடல்கள் யாருக்கும் எழுதியதில்லை,இனி எழுதப் போவதும் இல்லை.நான் உன்னை அழைத்தது எல்லாவற்றையும் பேசுவதற்கு:ஒட்டுமொத்தமாக,ஒரேயடியாக.

நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன்,ஆனால் காதலித்ததெல்லாம் இல்லை.அவர்கள் அழகாயிருப்பார்கள்,ரசிப்பேன்.மலர்களே பார்ப்பதற்குத்தானே,நான் எந்த மலரையும் கசக்கவில்லை.சத்தியமாக.

"தேவதைகளை சந்தித்ததில்லை
என்று பொய் சொல்ல விரும்பவில்லை
வந்திருக்கிறார்கள்
வந்து வெறுமனே
வணக்கம் சொல்லிப் போய்விடுவார்கள்"
- மு.மேத்தா.

அன்றொரு நாள் என் நண்பனுக்காக காத்திருக்கையில் தான் ஒரு பூகம்பத்தை நேருக்கு நேராக சந்தித்தேன்.ஒரு மாதம் பின்தொடர்ந்து,உன் செருப்பு அளவு வரை கற்றறிந்தேன்.அப்புறம் நீ அடிக்கடி கவிதைப் புத்தகம் வாங்க வந்தது தெரிந்து,உனக்கொரு காதல் கவிதை புத்தகம் பரிசளித்தேன்.நன்றி பழனிபாரதிக்கு,அவரால் தான் நம் காதல்குழந்தை பிறந்தது.

"நான் தண்டவாளத்தில்
பூத்த பூ
நீ ரயிலில் வருகிறாயா?
நடந்து வருகிறாயா?"
- பழனிபாரதி

நீ நடந்து தான் வந்தாய்.ஊரெல்லாம் சுற்றினோம்.காதலை பருகினோம்,கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ட்ராவில்.கல்யாணம் பண்ணிக்கொண்டேம்,அலைபாயுதே ஸ்டைலில்.காதல் வளர்ந்து விரிந்த வெட்டிக்கதை பேசி பயாஸ்கோப் ஓட்ட விரும்பவில்லை,அவை பாவம்,இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கவிருக்கிறது என்பதை உணராத அற்ப நொடிகள்.

"If you think
I love you!
You are wrong.
Its something more than that."

இந்த கவிதையை ஞாபகமிருக்கிறதா?ஆமாம் நான் வாசித்தது தான்.பாவம்,உனக்கும் எத்தனை நேரம் தான் காதலிக்க பிடிக்கும்?ஊடல் கொண்டாட ஆரம்பித்தாய்.நதியே நாஞ்சிலே என்று நான் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை.உன்னை சமாதானப்படுத்த நான் கொலம்பஸ்ஸாக வேண்டியிருந்தது.இருந்தாலும்,அமெரிக்கா நல்ல நாடுதான்.சருகுகள் சிந்தும் சிங்கார முற்றம் கொண்ட வீடொன்றை உனக்காக வடித்தேன்.அழகான பேஸ்மெண்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு பேசிக்கொண்டிருப்போமே...அடடா எத்தனை அழகான நாட்கள் அவை!மேன்ஹட்டன் ஸ்கைலைனை விட அழகாய் இருந்ததே நம் வாழ்க்கை.இருனூறு மைல் வேகத்தில் நாம் பயணித்ததெல்லாம் ஞாபகமிருக்கிறதா செல்லமே?பகலிலும் நான் நிலவுடன் பேசிவந்தேன்.ப்ச்.. எல்லாம் கானல் நீர்.

"அமாவாசையில் தான்
தோன்றுகிறது நிலவைப்பற்றி
கவிதை எழுத."

உன் மச்சங்களைப்போல இத்தகு சின்னசின்ன ஹைக்கூ கவிதைகள் கூட மிளிர்ந்தன பெண்ணே!நியுட்டனின் விதிகள் உடைத்து புவியீர்த்து விழவே இல்லை நம் காதல்.சில்லென்றே இருந்தது.ஆனால் எங்கே இடி விழுந்ததென எனக்கு இப்போதுதான் விளங்கியது சிநேகிதியே!நான் மும்முரமாக வேலை பார்க்கும் வேளைதான் நம் காதல் படகு விரிசல் விட்ட தருணம்.வெடி கையில் இருக்கிறது,வெடித்து விடும் என்று வீசியெறிந்தேன்,ஆனால் வெடி விழுந்ததோ என் காலடியில்.

"நீ மேல் உதடு
நான் கீழ் உதடு
நாம் மௌனமாகவே
பேசிக்கொள்வோம்"
-இரமேஷ் விஸ்வநாதன்.

இப்படித்தான் நாம் இருக்கிறோம் என்று நினைத்தேன்.ஆனால் உண்மை ஃபிக்ஷனை விட விசித்திரமானது என்பதனை கண்டுகொண்டேன்.முதலில் யாரோ தோழி வந்திருப்பதாகச் சொன்னய்.அதற்கப்புறம் ஒருமுறை தொலைபேசி மாதத்திற்கு இருபதினாயிரம் வந்ததும் தான் எனக்குள்ளிருந்த மிருகம் விழித்தது தலையணையே!மானே,நீ ஏன் கடித முனைகளையெல்லாம் படுக்கயறை ஓரமாக கத்தரித்திருந்தாயோ!நான் அறியேன்.ரகசிய ஈ-மெயில்களை ஏன் அனுப்பினாயோ!நான் அறியேன்.ஒருநாள் என் அலுவலக மேலாளர் வைகுந்தம் சென்ற காரணமாக எனக்கு விட்டிருந்த அரைநாள் விடுமுறையை லாஸ்-வேகாசில் செலவளிக்க நான் வர,வாழ்க்கை என்னை சூதாடிவிட்டது போ!சருகுகளை கிழித்துக்கொண்டு என் lambhorgini வந்து பேஸ்மெண்ட் அடைய,அங்கே ஒருவன்.நானும் நீயும் கதைத்துக்கொண்டிருந்த தோரணையில்.எனக்கு ஒன்றுமே யோசிக்கத் தோன்றவில்லை.அதீத ஆசை உன் மேல்.பூப்பறிக்க வந்தானோ கள்வன் என்றென்னி மூளை பையிலிருந்த துப்பாக்கி தோட்டாவை அந்த மடையனின் வாயில் ஊட்டியது.ரொம்ப சொங்கி போலிருக்கிறது.ஒரே குண்டு தான், சாய்ந்துவிட்டான்.அதற்கப்புறம் உன்னை நெருங்கினேன்.நீயாவது ஏதாவது சொல்லியிருக்கலாம்.அவன் உன் தோழியின் கணவன்,நம் வீட்டுக்கு உன்னை ட்ராப் செய்ய வந்திருக்கிறான், பின்னாடியே அவரது மனைவி வந்துகொண்டிருக்கிறாள் என.உனக்கு அறிவே கிடையாது.தோட்டத்தில் இருக்கவேண்டிய spade-ஐ அங்கு வைத்து தொலைத்திருந்தாய்,என் கைக்கு வாட்டமாக.உன் தலையை அப்படிப் பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக இருந்தது.

"இன்றோடு உன்னைப் பார்த்து
78 நாட்கள் ஆகின்றன
இன்றோடு நீ என்னை
78 முறை கொன்றிருக்கிறாய்"

அட,இரண்டு வருடங்களாயிற்று,இப்படி கவிதையெல்லாம் எழுதி.இப்போது என்ன புண்ணியம்,உன்னிடம் இந்த வரிகளை சிறையிலிருந்து நானும் சொல்லமுடியாது,சொர்ர்க்கத்திலிருந்து நியூயார்க் வந்து உன்னாலும் prison-pass வாங்கமுடியாது.ஆமாம்,உன்னிடமிருந்து விடுதலை வாங்குவதற்குள்,இங்கேயும் எனக்கு ஆயுள் தண்டனை தெரியுமா?.இப்படிக்கு கல்லறையில் அஞ்சல்பெட்டியைத்தேடும்,
ஒரு கொலைகாரக் காதலன்.

madhu
11th February 2007, 05:35 PM
வெங்கி...

காதல் என்பது கல்லைப் பூவாக்கும்.. இரும்பை இளக வைக்கும்.. அப்படி இப்படின்னு எல்லாம் கேட்டிருக்கேன்..

இது சல்லுனு ஆரம்பிச்சு கொல்லுனு இல்ல சொல்லுது..

கொஞ்சம் பயமாத்தான் இருக்கு..

ஒரு விஷயம் என்னன்னா.. இது பாதி உரைநடையாகவும் பாதி கவிதையாகவும் தோணுது.. அதுனாலதான் புரிஞ்சுக்க கொஞ்ச்சம் நேரம் தேவைப்படுது. ( என் மாதிரி ஆளுங்களுக்கு :oops: )

crazy
11th February 2007, 05:46 PM
ஒரு விஷயம் என்னன்னா.. இது பாதி உரைநடையாகவும் பாதி கவிதையாகவும் தோணுது.. அதுனாலதான் புரிஞ்சுக்க கொஞ்ச்சம் நேரம் தேவைப்படுது. ( என் மாதிரி ஆளுங்களுக்கு :oops: )

:yes:

but venki great job............looking forward :)

VENKIRAJA
13th February 2007, 06:15 PM
காதலர் தின நல்வாழ்த்துக்கள்!மீண்டும் ஒரு காதல் கதை.

*//நினைவுப்பாதை புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளுள் ஒன்று.இக்கதை அக்கதை போலிருந்தால்,என்னை மன்னியுங்கள்.எனக்கென்னவோ இதைச் சொல்லிவிடுவது நல்லது என்று பட்டது.//*

தினமும் கதை முடிவதற்கு முன்னரே நாங்கள் தூங்கிவிடுவோம்.அதன் பிறகும் தாத்தா ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார்."கிழம் பிணாத்துது",மருமகள்கள் பாட்டியின் காதுபடவே பேசுவார்கள்.எங்கள் எல்லாரையும் பொறுத்த வரை தாத்தா வெறும் ஒரு கதைசொல்லி,அவ்வளவே தான்.அவர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கடைசி முறை வந்து பார்த்துக்கொள்ளவும் ஓலை வரவே நடுராத்திரியில் எழுப்பி எங்களை காரில் திணித்து மதுரைக்கு நாடுகடத்தினார்கள்.எனக்கு தாத்தாவின் பழைய கதைகளும்,அவர் கையை தலைக்கு முட்டு தந்து சாயும் தோரணையும் கண் முன்னால் நின்றன.அப்படி ஒரு புகைப்படமும்,அவரது குரலை சிறைபிடிக்க ஒர் கையக-கணிணியுடனும் நிலாவை இரசித்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தேன்.என் கனவுகளுக்கும்,ஊர்திக்கும் சேர்த்து அழுந்தியது ப்ரேக்.தாத்தாவின் கொள்ளுப்பேரர்கள் வரை திரண்டிருந்தனர்.வீடு முழுதும் வளையோசை.பெண்கள் அடுப்படியில் விருந்தினர்களுக்கு காபியும்,நேற்றைய ரசத்தை சூடு செய்து செய்து ஊற்றியபடியும் இருந்தனர்.தாத்தாவின் இரும்பு கம்பெனி,எஸ்டேட்டுகள்,வீடுகள்,கிலோக்களில் அலகிடப்பட்ட தங்கம்,என அவரது கோமணத்துண்டு தவிர அனைத்தையும் சமமாக பங்குபோட்டுக்கொண்டிருந்தார்கள் மகன்களும் மகள்களும்.காலை நேரமென்பதால் குளியலறைகள் ஹவுஸ்புல்.நாங்கள் எல்லோரும் பம்பு செட்டுக்கு பயணமானோம்.தாத்தாவின் வயல்வெளிகளையெல்லாம் கோவிலுக்கு எழுதிவைத்திருந்ததை கிலோமீட்டர்கள் சுற்றி சொந்தம் தொட்ட தம்பி சொன்னான்.சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்களெல்லாம் கம்பி கம்பியாக மழை பெய்யும் ரீலில் ஓடின.குளித்த கையோடு அங்கிருந்த டீக்கடையில் ஊர்விவரம் தெரிந்துகொண்டு,கொட்டகைக்கு சினிமா பார்க்கப் போனோம்.அத்தனை நிகழ்ச்சிகளும் இப்படி குறிப்புகளாகத்தான் நினைவுப்பிழம்புகளிலும் இருக்கின்றன.தாத்தாவின் கதைகளே அரைநாளாக சர்வசங்கீதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.வயிறு பசிக்கவில்லை என்றது,கண் தூக்கம் வேண்டாமென்றது.மத்தியான வெற்றிலைகூட குதப்பக்குதப்ப சிவக்கவேயில்லை.மீசை முளைக்கத் துவங்கியிருந்ததை ஒருமணிநேரம் கண்ணாடியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.இன்னும் அவரது கதைகளே ஒலித்துக்கொண்டிருந்தன.கிடடத்திட்ட இழவுவீடாக அவதாரமெடுக்கக் காத்துக்கொண்டிருந்தது வீடு.சங்கூதுபவன் வரைக்கும் வந்து முன்பணம் வாங்கியாயிற்று.யாருக்கும் தாத்தா இறப்பதில் வருத்தம் இருப்பதாகவே தெரியவில்லை,ஆனால் கண்களில் கண்ணீர் விழுதுகள்:மெகாசீரியல் ஆலமரங்களிலிருந்து.தாத்தாவால் பேசமுடியவில்லை என நினைத்தேன்.ஆனால் அல்லி இரவில் மலர்வதொப்ப மலர்ந்ததவர் திருவாய்.பற்களுக்கு பண்டமாற்றாய் அனுபவம்,நரைமுடிகளின் எண்ணிக்கையில் லட்சங்கள்.பழைய பெண்டுல கடிகாரம் பன்னிரண்டுமுறை முரசறைந்தது.தாத்தாவின் அருகில் கண்களை மூடாமல் கனவு கண்டுகொண்டிருந்த நான் என் தோளில் கசையடி உணர்ந்தேன்.தாத்தாவின் கைத்தடி!பாட்டியை அழைக்கச்சொன்னார் தாத்தா.நான் உற்சாகமாக அழைத்தேன்.

"காலையிலிருந்து யார் கூடவுமே சரியா பேசாம,சேராம,உண்ணாம ஏனிருந்த கண்ணு?"

"எனக்கு ஒரு கதை சொல்லுங்க தாத்தா"

பொக்கைப்பற்கள் தெரிய சிரித்தார் மார்க்கண்டேயர்.

"ஒரேயொரு கதை சொல்லுங்க தாத்தா,இதுவரைக்கும் சொல்லாத கதை"

"இன்னும் அதெல்லாம் நெனைவிருக்கா?கனா போல இருக்கு பேராண்டி,இனி என்ன கதை?"

"தாத்தா கிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னென்ன்ல?shut up",தாத்தா சாகமாட்டாரோ என்ற சந்தேகத்தால் வந்த கோபத்தை என் மீது கொப்பளித்தாள் அம்மா.

"இரும்மா,இனி எப்ப இவிங்களை காணப்போறேன்?கதை தானே கேகுறாப்ல,சொல்லிட்டா போகுது!"

என் செட்டு அனைவருக்கும் இப்போது பதினைந்து பதினாறு வயது.அத்தனை பேரும் உற்சாகமாகி தாத்தாவினருகே அமர்ந்தோம்.தாத்தாவின் காலடியில் பாட்டி அமர்ந்துஒண்டு,பாக்கு இடித்து கையில் தந்தார்.அவரது ஈ.ஸி நாற்காலி எண்ணெயில்லாததால் சப்தமிட்டது.

"ஒரு ஊர்ல.."

"புதுசா சொல்லுங்க தாத்தா,இதுவரைக்கும் கேட்காத மாதிரி"

"ம்ம்ம்ம்.க்குர்ர்ம்"செருமியது சிங்கம்.அதற்குள் சொந்தங்கள் அத்தனையும் வந்து கூடத்தில் அமர்ந்துகொண்டன.

"இது எல்லாருக்குந்தேன்.கதையை முடிக்கிற வரை யாரும் நா பேசப்பிடாது ஆமா."

இரவின் சத்தங்களே தெளிவாக கேட்டன.நிசப்தம்.என் தாத்தாவின் மொழிகள் தவளைகளுக்கு மட்டும் புரியவில்லை.என் கண்ணாடியை நான் சரிசெய்துகொண்டேன்.

"ஒரு ஊர்ல ஒரு பையன் இருந்தானாம்.அவன் பேரு வேலு.வேலு ஒரு நெசவாளியோட புள்ளை.காஞ்சிபுரத்துல இருந்தானாம்.காலையில் பள்ளிக்கொடம் போய்ட்டு சாயங்காலமெல்லாம் தறி நெஞ்சானாம்.ரா படிச்சுப்புட்டு ஒறங்கிப்போய்டுவான்.இப்படியா தினமும் போகையில ஒருநா பள்ளிக்கொடத்துலருந்து வர்ற பாதையில சாரக்கல்லு தடுக்கி பயபுள்ள விழுந்துட்டான்.கணக்குல புள்ள புலின்னாலும் கண்ணு மட்டும் மங்கல்.தூரத்தீருந்து ஒரு புள்ள பாலாத்து தண்ணி மொள்ள வந்திருந்தா.அவ கைப்பானைய ஒடச்சுட்டு முந்தானை நுனியை வச்சு கட்டி,பக்கத்திலிருந்த வேம்பு இலையை பிழிஞ்சாளாம்.அப்ப ரெண்டு பேர் முகத்துலையும் வெடிச்சிரிப்பு மலர்ந்துச்சாம்........."

(தொடரும்,காதல் யுகயுகமாக தொடர்ந்தாலும் இக்கதை அடுத்த பகுதியில் நிறைவு பெறும்)

ragav89
13th February 2007, 09:31 PM
good da

crazy
14th February 2007, 12:46 AM
(தொடரும்,காதல் யுகயுகமாக தொடர்ந்தாலும் இக்கதை அடுத்த பகுதியில் நிறைவு பெறும்)


:)

madhu
14th February 2007, 07:45 AM
கதை அடுத்த பகுதியில் நிறைவு பெற்றாலும் அதன் தாக்கம் யுகயுகமாகத் தொடரும் என்று நினைக்கிறேன் !

:thumbsup:

Prasanna
9th June 2007, 08:48 PM
[quote="

(தொடரும்,காதல் யுகயுகமாக தொடர்ந்தாலும் இக்கதை அடுத்த பகுதியில் நிறைவு பெறும்)[/quote]
enna thaan kathai thodarnthaalum naan atha kalaaychikittae iruppaen :twisted: :fishgrin: :boo: :devil: :noteeth: