leomohan
17th November 2006, 03:00 PM
[tscii:bbb78ff441]கடைசி பேட்டி
1
ராஜேஷ். வயது 28. 5 அடி 11 அங்குலம். மாநிறம். வழக்கமாக உடற்பயற்சி செய்யும் தேகம். மிடுக்கான நடை. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை. உடை அணிவதில் தற்போதை நாகரீகம் எது என்று இவனை கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் உண்டு. ஆனாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு ஹீரோ ஹோன்டா ஸ்பெலன்டர். இவன் தான் கதையின் நாயகன். இவனும் ஒரு ஸ்பெலன்டர் தான்.
உலக ஞானம். அனைத்து நாட்டு அரசியலும் விரல் நுனியில். இந்திய நடப்பை கரைத்து குடித்தவன். யார் மந்திரி யார் சட்டமன்ற உறுப்பினர் அவர் ஜாதகம் என்ன என்று அனைத்தும் அறிவான்.
வேலை. மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சியில் நிருபர். தனியே ஒரு மேசை நாற்காலி. விலை உயர்ந்த கணிப்பொறி இரண்டு. நான்கு தொலைபேசிகள். இரண்டு செல் பேசி வேறு. குளிர் சாதனம் பொருத்தப்பட்ட அறை. பணியிடத்தில் மரியாதை. காலையில் அவன் நுழையும் போது காலை வணக்கம் சொல்லவாவது அவனிடம் பேச வேண்டும் என்று காத்திருக்க சக பெண் ஊழியர்கள். ஆனாலும் மார்னிங் மார்னிங் என்று சொல்லிக்கொண்டே யாரையும் பாராமல் தன் அறைக்குள் செல்லம் ஆணவப் பாங்கு.
ஆனாலும் வேலையில் சளைத்தவன் அல்ல.
மெல்லிய விளக்கு அவன் அறையில். கத்திரி கோபாலனின் ஸாக்சாபோன் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் ராமு ஒரு டீ என்று -சொல்லிவிட்டு சுழலும் நாற்காலியில் மெத் என உட்கார்ந்தான்.
மேசையின் மேல் பல மஞ்சள் போஸ்ட்-இட்டுகள். பல குறிப்புகள். வலது பக்கம் இரண்டு தொலைகாட்சிப் பெட்டிகள். ஒன்று அவன் வேலை செய்யும் சூப்பர் டிவி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒலி இல்லை. இன்னொன்றில் போட்டி டிவியான ரெயின் டிவி ஒலி ஒளியுடன்.
மேசையின் மேல் இருந்த ஒரு போஸ்ட்-இட்டு மஞ்சள் காகிதத்தை எடுத்து சின்னதாக 4 என்று பென்சிலால் எழுதினான்.
ராஜேஷைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய பல விஷயங்கள் உண்டு. பள்ளிப்பருவத்திலிருந்து கையில் எண்களை எழுதும் பழக்கம் உண்டு.
கிரிகெட்டில் வேக பந்து வீச்சாளன். பந்து வந்ததும் விரலால் கையில் ஒரு எண் எழுதுவான். அந்த எண் தான் அவனுடைய ஓடும் தூரம். 8 என்று எழுதினால் 8 அடி தூரத்திலிருந்து ஓடி வந்து பந்து வீசுவான். சில முறை 18 என்று எழுதிவிட்டு 18 அடி தூரத்திலிருந்து ஓடி வந்து மூச்சிறைக்க பந்து வீசியதுண்டு. எந்த நேரத்தில் எந்து எண் எழுதுவான் அதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரியாது. அவனுக்கும் தெரியாது. நண்பர்கள் அவனை கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும் அவன் இல்லாமல் ஆட்டம் இல்லை. ஒரு ஆட்டத்தில் குறைந்தது நான்கு விக்கெட் நிச்சயம்.
பரீட்சைக்கு படிக்க உட்கார்ந்தாலும் இதே கதை தான். புத்தகத்தை ஒரு முறை புரட்டிப் பார்ப்பான். 15 அத்தியாங்கள் இருந்தாலும் 5 என்று எழுதினால் 5 பாடங்களே படித்து செல்வான். ஆனாலும் வாழ்க்கையில் இதுவரை தோற்றதில்லை. இது நல்ல பழக்கமா இல்லை கெட்ட பழக்கமா என்று அவனுக்கு தெரியாது. ஆனாலும் அவனை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்ப்படவில்லை.
தொலைபேசி ஓலித்தது. அவனுடைய பாஸ் இந்த சூப்பர் டிவியின் பிரம்மா அழைத்தார். அவரை சீஃப் என்று கூப்பிடும் வழக்கம் இவனுக்கு. இப்பவே வரேன் சீஃப் என்று கூறிவிட்டு எழுந்து நாற்காலியை சுழலவிட்டு சென்றான். நாற்காலி நான்கு முறை சுழன்று ஓய்வதற்கு முன் அந்த பெரிய அலுவலகத்தின் மறுபகுதியில் உள்ள டைரெக்டரின் அறைக்குள் நுழைந்தான்.
ராஜேஷ்உங்களை ஒரு முக்கியமான விஷயத்திற்காக கூப்பிட்டேன்
சொல்லுங்க சீஃப். ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற முகபாவனை வைத்துக் கொண்டான். இவனைவிட சிறந்த நடிகன் உண்டோ?
டெஹல்கா விவகாரம் கேள்விப்பட்டு இருக்கீங்களா?
நிச்சயமா சீஃப் . ஒரு வலைதள பத்திரிகை. மத்திய அரசாங்கத்தில் பெரிய தலைகளிடம் ராணுவ ஆயுதங்களை விற்பதாக பொய்யான பேரம் பேசி ஏனைநழ பிடித்து அவர்கள் லஞ்சம் வாங்கியதை காட்டி கலக்கியவங்க தானே?
ஆமா. இதுக்கு பெயர் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம். உங்களுக்கு ஆபரேஷன் துரியோதன் பத்தி தெரியுமா?
ஆஃப் கோர்ஸ் சீஃப். நாடாளமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியிருக்காங்க. ஆளும் கட்சிகளிருந்து எதிர்கட்சி மாநில கட்சிவரை அனைவரும் மாட்டினாங் இதில். அதை கோப்ரா போஸ்ட்-னு ஒரு பத்திரிகை வெட்வெளிச்சமாக ஆக்கியருக்காங்க.
அது மாதிரி ஒரு பிரம்மாண்டத்தை நாம ஏன் செய்யக்கூடாது?.
ஒரு நிமிடம் மௌனம் சாதித்துவிட்டு அவசியம் சீஃப் என்று உற்சாகமாக கூறினான்.
'Would you like to be part of such a sensation?'
(நீங்கள் இந்த மாதிரி ஒரு திருப்புமுனை முயற்சியில் பங்க கொள்ள விரும்பிகிறீர்களா?)
நிஜமாகவா சீஃப்?"
'Chief. It will be a lifetime opportunity'
(இது என்னுடைய வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. நான் தயார்.
நல்லது. என்னப் பண்ணலாம்னு யோசியுங்க. அப்புறம் என்னை வந்து பாருங்க.. வாழ்த்துக்கள்.
என் பாக்கியம் என்று விட்டு உற்சாகமாய் வெளியே வந்தான்.
ரவி எதிர்பட மச்சான் சௌக்கியமா? என்று விசாரித்தான்.
என்னடா சந்தோஷமா இருக்கே? வா தம் அடிச்சிகிட்டே பேசலாம்.
நீ தம் அடி. நா எப்ப அடிச்சிருக்கேன் அந்த கருமத்தை? நான் டீ குடிக்கிறேன்.
அலுலக உணவு விடுதியில் ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்தார்கள்.
மச்சான் எங்க அப்பா எங்கடா இருக்காங்க?
இது என்னடா முட்டாள்த்தனமான கேள்வி. உங்க அப்பா அமெரிக்காவிலே இருக்காரு. உங்க அம்மாவும் தான்.
அக்கா தங்கச்சி அண்ண தம்பிங்க?
என்னடா உளர்ற. உனக்கு யாரும் கிடையாது. நீ ஒன்டிக் கட்டை. ஆமாம் என்ன லூசு மாதிரி இதேல்லாம் என்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க?
இல்லைடா. இமயமலையில் உயரத்தில இருக்க ஒரு சிகரத்தில ஒரு சாமியாரை பேட்டி எடுக்கப் போறேன். அங்க போனவங்க யாரும் இதுவரை உயிரோடு திரும்பியதில்லை. எடுத்துக் கொண்ட காரியத்தின் ரகசியத்தை கருதி ஏதோ கதை சொன்னான். இவனைவிட பெரிய கதையாசிரியன் உண்டோ?
வேணாம்டா மச்சான். இது ரொம்ப ரிஸ்க். நீ ஏதாவது த்ரிஷா ஜோதிகான்னு உள்ளூர்ல பேட்டி எடுத்துட்டு ஜாலியா இருப்பியா? அதைவிட்டுட்டு இமயமலை போறானாம்.
ரவி சாதாரணமா வாழ்ந்த சாகிற ஒரு மனுஷனா இருக்க விரும்பலைடா. நம்ம பேரு உலகம் பூரா பரவனும். பிபிசி சிஎன்என் இங்கேர்ந்தெல்லாம் வாய்ப்பு வரனும். அதுலதான்டா த்ரில்.
ஏதோ செய். பிரச்சனையின்னா என்னை கூப்பிடு. பாலும் ஊத்துவேன். சங்கும் நானே ஊதுவேன் என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தான்.
மீண்டும் தன் அறைக்கு வந்து மேசையில் இன்று எழுதிய எண்ணைப் பார்த்தான். 4 என்று இருந்தது. ஒரு எண்ணம் தோன்றியது.
முதலாளியை அழைத்தான். ரகசியமாய் கூறினான்.
Brilliant idea, Rajesh. Go ahead. But be careful. Meet me later to discuss in details என்றார்.
யோசித்துப் பார்த்தான். உடல் சூடு அடைந்து காதின் பக்கம் காற்று அடித்தது. இதை நான் செய்யத்தான் போகிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
[/tscii:bbb78ff441]