View Full Version : condolence for cine personnel
aanaa
20th October 2006, 10:43 PM
srividya- passed away
usha_pooja
21st October 2006, 02:38 AM
rest in piece sridivya. Its very sad 2 hear abt her death so sudden. Shes such a brilliant acteress. Let her soul rest in piece.
Take care
from usha
Braandan
21st October 2006, 04:50 PM
Here is a Tamilian lady (her mother was a great Carnatic vocalist) who is most loved by Mallus, many Mallus still think of her as a Mallu. Condolences to her immediate family, friends and the film industry.
aanaa
21st October 2006, 09:18 PM
Here is a Tamilian lady (her mother was a great Carnatic vocalist) who is most loved by Mallus, many Mallus still think of her as a Mallu. Condolences to her immediate family, friends and the film industry.
her mother was ML vasanthakumari
aanaa
21st November 2008, 06:19 AM
பழம்பெரும் நடிகர் நம்பியாரின் ஆத்மா சாந்தி அடைய ...
aanaa
21st November 2008, 08:02 PM
மகாபாரதம் தொடரை தயாரித்த பி.ஆர்.சோப்ரா மரணம்
*மிக அ*திக ம*க்களா*ல் பா*ர்*க்க*ப்ப*ட்ட தொட*ர் எ*ன்ற புக*ழை*ப் பெ*ற்ற மகாபாரத*ம் (டிடி*யி*ல் ஒ*ளிபர*ப்பானது) தொடரை தயா*ரி*த்த *பி.ஆ*ர். சோ*ப்ரா மரணமடை*ந்தா*ர்.
இந்தி சினிமா உலகின் பழம்பெரும் தயாரிப்பாளரு*ம், இயக்குனரு*ம் ஆன பி.ஆர்.சோப்ரா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.
கடந்த சில காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த அவரது உ*யி*ர் நே*ற்று காலை *பி*ரி*ந்தது. அவருக்கு ரவி சோப்ரா என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
பெரும் பொருட்செலவில் இந்தியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பரபரப்பாக ஒளிபரப்பாகிய `மகாபாரதம்' *தொலை*க்கா*ட்*சி*த் தொட*ர் தயாரித்தவரும் இவர்தான். சமூக சிந்தனையுள்ள பல சினிமாக்களை தயாரித்து, இயக்கி பரபரப்பு ஏற்படுத்தியவர் பி.ஆர்.சோப்ரா
aanaa
1st February 2009, 07:02 AM
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் மிகச்சிறந்த நடிகராக கருதப்படும் நாகேஷ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் நாகேஷ் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
----------
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
aanaa
14th March 2009, 07:12 PM
ஓமக்குச்சி நரசிம்மன் மரணம்
சென்னை, மார். 12: பிரபல நகைச்சுவை நடிகர் "ஓமக்குச்சி நரசிம்மன்' சென்னையில் புதன்கிழமை காலமானர். அவருக்கு வயது 73.
ஓமக்குகுச்சி நரசிம்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற 3 மகள்களும், காமேஸ்வரன் என்ற மகனும், 3 பேத்திகளும், ஒரு பேரனும் உள்ளனர்.
சிறிது காலமாக தொண்டை புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சில நாட்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதையடுத்து திருவல்லிகேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் புதன்கிழமை இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நரசிம்மன்: திருச்சியை பூர்விகமாக கொண்ட நரசிம்மன் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 13-வது வயதில் "அவ்வையார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்பு கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்து எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்து வந்தார்.
பின்பு நடிப்பின் மீது இருந்த தீராத காதலினால் நடிகர் சுருளிராஜன் உதவியுடன் 1969ல் "திருக்கல்யாணம்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
அதை தொடர்ந்து சென்னையில் செயல்பட்டு வந்த "நாடக மந்திர்' நாடக சபாவில் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். அப்போது அரங்கேற்றப்பட்ட "நாரதரும் நான்கு கடவுள்களும்' என்ற நாடகத்தில் அவரது "ஓமக்குச்சி' எனும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு ரசிகர்களால் "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்கப்பட்டார். பின்பு அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக நடித்த படம் "தலைநகரம்'.
ஓமக்குச்சி நரசிம்மனின் 2-வது மகள் நிர்மலா அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் சனிக்கிழமை காலை சென்னை வந்த பிறகு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
நன்றி -- தினமணி
heartfelt condolence
aanaa
14th March 2009, 07:17 PM
திரைப்பட கதாசிரியர் காலமானார்
சென்னை, மார்ச் 5: பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகரும் கதாசிரியருமான கோவை கதிரொளி (83) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார்.
மறைந்த கதிரொளி "தெய்வம் பேசுமா', "அன்னையின் ஆணை', "முக்கனிகள்' உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். எம்.ஆர்.ராதா நடித்த "நாகமலை அழகி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அவருக்கு ரோஸி என்ற மனைவி, கே.ஆர்.செல்வராஜ் என்ற மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். ரோஸி பழம்பெரும் நாடக நடிகை. இயக்குநரும் நடிகருமான கே.ஆர்.செல்வராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைச் செயலாளராக இருக்கிறார்.
நன்றி -- தினமணி
aanaa
14th March 2009, 07:34 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்
aanaa
28th March 2009, 08:41 PM
சகஸ்ரநாமம் சகோதரி காலமானார்
சென்னை, மார்ச் 20: பிரபல நாடக மற்றும் திரைப்படக் கலைஞர் மறைந்த எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சகோதரி எஸ்.வி.கிருஷ்ணம்மாள் (92) வியாழக்கிழமை சென்னையில் இயற்கை எய்தினார். "சேவா ஸ்டேஜ்' என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சமூக விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றிய எஸ்.வி.சகஸ்ரநாமம் "பராசக்தி', "வாழ்க்கை', "நல்லதம்பி', "பைத்தியக்காரன்' உள்பட ஏராளமான திரைப்படங்களிலும் நடித்தவர். அவருடைய கலைப்பணிக்கு உற்ற துணையாக இருந்தவர் எஸ்.வி.கிருஷ்ணம்மாள்.
மறைந்த கிருஷ்ணம்மாளுக்கு கவிஞர் வைத்தீஸ்வரன் என்ற மகனும் தைலம்மாள் என்ற மகளும் உள்ளனர். அவருடைய மறைவுக்கு எழுத்தாளர்கள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சச்சிதானந்தம், கூத்துப்பட்டறை நா.முத்துசாமி உள்ளிட்ட ஏராளமான இலக்கியவாதிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
aanaa
9th May 2009, 06:19 PM
VETERAN FILM ACTOR AND PRODUCER K.BALAJEE DEAD
Chennai: Well known producer and Tamil actor K Balajee died here on Saturday evening after prolonged illness. He was 74.
Balajee, father-in-law of famous Malayalam actor Mohanlal, was admitted to Apollo Hospital last month for kidney failure. He is survived by a son and two daughters.
He has acted in over 150 films and have also produced Tamil films under Sujatha Cine Arts, most of his films were produced with the Late actor Shivaji Ganesan. Before, producing films, he had acted in various Tamil films as villain and one remarkable film was that he did the villain role in Pattanathil Bootham starring with Jai Shankar. Balaji was sometime ill and from his ill-bed he gave interview to the Jaya TV Channel for five days. Then he appealed to all the film actors to reduce their salaries, so that the film producers could not burn heavily their fingers. In the interveiw, he also narrated how a film could be made, once the adjustment of the leading artistes stop demanding a separate caravan for them. Now the late actor's son Suresh Balaji is in the production and direction. This he learnt by working with his father whenever he produced films.
It was Balaji who remade the Hindi film Qurbani into Tamil as Viduthalai with Shivaji Ganesan, Rajinikanth and Kannada idol Vishnuvardhan. Kamal who was to do a role, did not want to join in that film following which there was a misunderstanding arose between Balaji and Kamal Hassan.
AIADMK leader and former Chief Minister and also former actress Jayalalithaa and Super Star Rajinikanth visited the late actor's house and offered their condolences to the members of the beraved. On Sunday Balaji's body was taken to Besant Nagar crematorium with hundreds of film fraternities and other relatives participating in it.
துயரத்தில் வாடும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
aanaa
16th May 2009, 06:31 PM
சின்னத் திரை நடிகர் சங்கத் தலைவராக இருந்து வந்த நடிகர் எஸ்.என்.வசந்த் மாரடைப்பால் மரணமடைந்தார்.
மெல்லப் பேசுங்கள் என்ற படத்தின் மூலம் நடிகரானவர் வசந்த். இதே படத்தின் மூலம்தான் பானுப்பிரியாவும் நடிகையாக அறிமுகமானார்.
பெரிய திரையில் சில படங்களில் நடித்துள்ள வசந்த் பின்னர் சின்னத் திரையில் நடிக்கத் தொடங்கினார். நிறைய சீரியல்களில் நடித்துள்ள வசந்த், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.
சமீபத்தில் வசந்த்துக்கு இருதய நோய் ஏற்பட்டது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை விஜயா இருதய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
52 வயதாகும் வசந்துக்கு மனைவி , ஒரு மகள் உள்ளனர். வசந்த் உடலுக்கு திரையுலகினர், சின்னத் திரை நடிகர் , நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
[html:6924e03f4a]
<div align="center">
http://www.hindu.com/fr/2003/11/28/images/2003112801870302.jpg
</center>
</div>
[/html:6924e03f4a]
aanaa
16th May 2009, 06:33 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்
Madhu Sree
16th May 2009, 09:46 PM
RIP :bow: :(
aanaa
30th May 2009, 08:36 PM
Kovai Ramesh, a popular artiste in Sun TV's comedy show Asatha Povathu aru, died in a road accident today early morning. He and his friends were coming back to Kovai from Madurai, when near Kankeyam, his car collided with a truck. He and his died on the spot
source: chennaitvnews
Heartfelt condolence
NOV
2nd June 2009, 07:01 AM
Kovai Ramesh, a popular artiste in Sun TV's comedy show Asatha Povathu aru, died in a road accident today early morning. He and his friends were coming back to Kovai from Madurai, when near Kankeyam, his car collided with a truck. Mimicry artiste Kovai Ramesh alias Ramesh Kumar, who is known to leave his audience in fits of laughter, had them in tears on Saturday, for, he died on his 40th birthday. Coincidentally, it was also the birthday of driver Karthikeyan who also died in the fatal accident.
Kovai Ramesh rose to dizzy heights from a humble beginning as a mimicry artiste performing at stage shows. His acquaintance with Kovai Guna and Kovai Ashok helped him become part of the talent show `Kalakkapovadhu Yaaru' telecast by Vijay TV in 2005. Since then there was no looking back for this talented artiste who captivated the viewers by dressing in female attire and imitating yesteryear heroines' voices.
An alumnus of CSI Higher Secondary School, Ramesh did costume designing course. After learning the nuances of the trade at a men's wear showroom, he had set up a shop at Ramanathapuram. Director Rajkumar said that it was a tragic end to an artiste who was a darling of the masses. Nakeeran Gopal who flew to Coimbatore took part in a procession from the Oppanakkara Street, where Ramesh body was kept to Chokkampudur Corporation cremation ground. Ramesh's younger brother Sathish said that they have planned to hold a condolence meeting next week.
aanaa
19th July 2009, 01:41 AM
இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் மறைவு
சென்னை, ஜூலை 16: கர்நாடக இசையில் தனி முத்திரை பதித்த டி.கே. பட்டம்மாள் (90) சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவருடைய பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன் கர்நாடக இசையில் பிரபலமான பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் என்ற ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகள் பட்டம்மாள். அவருடைய தாயார் காந்திமதி சிறந்த பாடகி. தாயிடம் சிட்சை பெற்ற பட்டம்மாள் 1932-ல் தனது பத்தாவது வயதிலேயே ரசிக ரஞ்சனி சபாவில் மேடையேறி முதல் கச்சேரி செய்து புதிய வரலாறு படைத்தார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், கான சரஸ்வதி மற்றும் சங்கீத நாடக அகாதெமி வழங்கும் விருதுகள் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் டி.கே. பட்டம்மாள்.
heartfelt condolence
aanaa
30th July 2009, 02:13 AM
கொச்சி: பிரபல மலையாள - தமிழ் வில்லன் நடிகர் ராஜன் பி தேவ் காலமானார். அவருக்கு வயது 54.
நீரிழிவு நோயாளியான அவர் உடல் நலம் இல்லாமல் சில தினங்களாக தனது கிராமமான அங்கமல்லியில் ஓய்வில் இருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு ரத்த வாந்தி மற்றும் சுகவீனம் ஏற்பட்டது.
இதனால் அவர் கொச்சியில் லக்ஷோர் மருத்துவமனையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் அவர் அபாய கட்டத்தைத் தாண்டாமல் நினைவிழந்த நிலையில் இருந்தார்.
இன்று காலை அவர் நினைவு திரும்பாமலேயே அவர் உயிர் பிரிந்தது.
அவரது இந்த திடீர் மறைவு, மலையாள - தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
'சூரியன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ராஜன் பி தேவ். பின்னர் ஜென்டில்மேன், லவ்டுடே, குஷி, பெரிய இடத்து மாப்பிள்ளை, ஆனந்தப் பூங்காற்றே என பெரும்பாலான வெற்றிப் படங்களில் அவரது பாத்திரம் முக்கியப் பங்கு வகித்தது.
வில்லனாக மட்டுமின்றி அருமையான குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார். சில படங்களில் அவர் நடித்த நகைச்சுவை வேடங்கள் ரசிகர்களுக்கு பெரும் மாறுதலாக அமைந்தன.
1983-ம் ஆண்டிலிருந்து நடிக்கும் நடித்துவரும் ராஜன் பி தேவ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 520க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு சாந்தா என்ற மனைவியும், ஆஷாம்மா என்ற மகளும் ஜிபில் ராஜ் என்ற மகனும் உள்ளனர்.
மறைந்த ராஜன் பி தேவின் இறுதிச் சடங்கு நாளை நடக்கிறது.
[html:7f4e884961]<div align="center">http://thatstamil.oneindia.in/img/2009/07/29-rajan-p-dev200.jpg</div>[/html:7f4e884961]
Harihalan
4th January 2010, 04:10 AM
Ragu is a very talented dancer and Maanaada Mayilaada Choreographer for Karthik & Soundarya .If you watch last few episodes specially Karthik's re-entry.It's mind blowing. Soundarya is stll in I.C.U.
Our hearty condolences for Ragu' family and may Ragu's soul Rest in Peace and wish Soundarya a faster recovery.
To watch Mm4's sympothy episode
http://tamil-theater.blogspot.com/
mr_karthik
12th September 2010, 02:35 PM
Cinema Playback Singer "SWARNALATHA" passed away.
http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=14706
aanaa
1st October 2010, 11:02 PM
நினைவு திரும்பாமலே உயிர் பிரிந்தது
இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்
உடல் தகனம் இன்று நடக்கிறது (http://www.dailythanthi.com/article.asp?NewsID=597618&disdate=10/1/2010&advt=1)
குடும்பத்தாருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்
aanaa
14th January 2011, 08:49 PM
காமெடி நடிகை ஷோபனா தற்கொலை (http://www.tamil.thecinemanews.com/2011/01/blog-post_7823.html)
http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2401.jpg
ஆத்மா சாந்தியடைப் பிராத்திப்போமாக.
aanaa
21st February 2011, 05:40 AM
பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் (http://www.newindianews.com/view.php?22300442200mmDD44eeyOOllccbbCCAKddddyKMMq bbccllOOee44DDmm30023440022)
ஆத்மா சாந்தியடையட்டும்
aanaa
12th September 2011, 05:29 AM
Actress Gandhimathi passed away (http://www.indiaglitz.com/channels/tamil/article/70802.html)
ஆத்மா சாந்தியடையட்டும்
http://www.behindwoods.com/tamil-movie-news-1/sep-11-02/images/gandhimathi-str-09-09-11.jpg
aanaa
29th October 2011, 07:30 AM
ஆத்மா சாந்தியடையட்டும்
நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் காலமானார்
October 28, 2011
‘ஆறிலிருந்து அறுபது வரை’ உள்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, ஜட்ஜ், வக்கீல் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் எல்.ஐ.சி. நரசிம்மன்(71). எல்.ஐ.சியில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் சினிமா ஆசையால் விருப்ப ஓய்வு பெற்று நடிக்க வந்தார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் படங்கள் அனைத்திலும் இவர் நடித்துள்ளார். வயிற்றில் கட்டி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அந்த கட்டி கேன்சர் என கண்டறியப்பட்ட நிலையில் அவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் காலமானார். அவரது உடல் நெற்குன்றம் பகுதியில் உள்ள சின்மயாநகர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் நடக்கிறது. நரசிம்மன் மனைவி பெயர் நளினி. அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்
http://www.alaikal.com/news/wp-content/uploads/lic.jpg
aanaa
23rd February 2012, 05:19 AM
http://tamil.oneindia.in/img/2012/02/20-sn-lakshmi-300.jpeg
தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடைந்துள்ளார்.
பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் லட்சுமி.
தமிழ்த் திரையுலகம் கண்ட சிறப்பான நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. 85 வயது குடு குடு பாட்டியானாலும் கூட தனது நடிப்பை விடாமல், தொடர்ந்து வந்தவர் லட்சுமி.
அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கே அம்மாகவாக நடித்து அசத்தியவர். இந்தக் காலத்து நடிகர்களுடனும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். துலாபாரம் படத்தில் இவரது கேரக்டர் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1000. ஆனால் அதில் இவரது நடிப்பு பல ஆயிரம் படங்களுக்குச் சமமானது.
சமீப காலமாக டிவி தொடர்களில் நடித்து வந்த எஸ்.என்.லட்சுமி, ஒரு படப்பிடிப்பின்போது வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது முதுக் தண்டுவடத்தில் அடிபட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்போடு வாழ்ந்து வந்தவர் லட்சுமி. தனது சாலிகிராமம் வீட்டில் அண்ணன் பேத்திகளோடு வசித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நாளை உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சென்னல்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
நாடகங்களிலேயே அசத்தியவர்
ஆரம்ப காலத்தில் இவர் நாடக நடிகையாக இருந்தார். என்.எஸ்.கேவின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தார். பின்னர் கே.பாலச்சந்திரன் ராகினி ரீக்ரியேஷன்ஸ் உள்ளிட்டவற்றிலும் இடம் பெற்று நடித்தார்.
நாடகத்தில் நடித்தபோதே தனது நடிப்பாற்றலால் அனைவரையும் வியக்க வைத்தவர் லட்சுமி. பெண்களே நடித்த நாடகம் ஒன்றில் இவர் ஸ்டண்ட் காட்சிகளிலும், பல்டி அடிக்கும் காட்சிகளிலும் நடித்து அசத்தினாராம். சண்டையை முறையாகவும் கற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கத்திச் சண்டை பிரமாதமாகப் போடுவாராம்.
எம்.ஜி.ஆர் நடித்த பாக்தாத் திருடன் படத்தில் இவர் சிறுத்தையுடனும் கூட சண்டை போட்டு நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவர் நடித்த முதல் படம் எது என்றால் அது நல்ல தங்காள். ஆனால் சர்வர் சுந்தரம்தான் இவருக்குப் பிரேக் கொடுத்த படமாகும். சர்வர் சுந்தரத்தில் இவரது பாத்திரத்தை யாரும் மறக்க முடியாது.
பின்னாளில் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகையாக மாறிப் போனார் லட்சுமி. தேவர் மகனில் ஆரம்பித்து விருமாண்டி வரை கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அத்தனைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இவர் நடித்த அந்த திருட்டுப் பாட்டி கேரக்டரை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதேபோல மகாநதியில் கமல்ஹாசனின் மாமியாராக வந்து அனைவரையும் கவர்ந்தார்.
அதேபோல மணிரத்தினமும் இவரை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அக்னிநட்சத்திரம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
aanaa
6th November 2012, 08:36 AM
சன் டிவி சமையல் கலை நிபுணர் செஃப் ஜேக்கப் மரணம்
http://www.manithan.com/contents/photos/post/full/2012/11/suntv_jacob_002.w540.jpg
இந்தியாவில் தமிழ்நாட்டில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் "ஆஹா என்ன ருசி" சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜேக்கப் சகாயகுமார்(வயது 38) மாரடைப்பால் மரணமடைந்தார்.
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த ஜேக்கப் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கின்னஸ் சாதனை
கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரம் 485 விதமான உணவுகளை தயாரித்து ஜேக்கப் கின்னஸ் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆஹா என்ன ருசி நிகழ்ச்சியில் சமையல் செய்வதை சமையலறையோடு நிறுத்தாமல் ஏரிக்கரை, குளம், அருவி என பல்வேறு இடங்களில் சமைத்து நிகழ்ச்சியை வித்தியாசப்படுத்திக்காட்டினார்.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
groucho070
6th November 2012, 11:03 AM
My nod to this wonderful chef in my signature. In tears when I wrote the last paragraph. Cook in peace, brother.
aanaa
16th February 2013, 04:39 AM
http://filmschannels.blogspot.ca/2013/02/actress-bhanumathi-passes-away.html
http://4.bp.blogspot.com/-b5itFKt6j1o/URB9QYj5jvI/AAAAAAAAECI/svuaw_zda-w/s1600/Bhanumathy.jpg
Veteran Tamil film actor and danseuse M.Bhanumathy passed away on Monday evening at a private hospital in Chennai. Bhanumathy who had acted in more than hundreds of films in Tamil and some Tamil television serials was suffering from jaundice and had been under treatment for more than a month. When the health condition of the actress deteriorated she was rushed to a private hospital for treatment, but she died at the hospital.
M.Bhanumathy has done her role with the Late Actor Sivaji Ganesan in Thillana Mohanambal in a nurse role which had fetched her name.She has acted in Thiru Neelgandar, Mayangugiral Oru Madhu, Vietnam Veedu, Kadhal Jothi and several other films numbering more than 100 films.
The actress had a beautiful voice with which she delivered dialogues either in films or in tv serials and stage performances."One could easily visualize the scene of her by closing eyes with the voice of the late actress alone," says one of her fans. The actress had attracted a lot of audience with her delivery of dialogues with her metallic voice, which normally would fetch good name for singers alone.
A TV serial Associate Director who had long standing experience in direction,said that Bhanumathy never undertook trouble for memorizing dialogues, she used to go through the dialogues twice or thrice and would be ready for shots. According to the director he had never seen her missing even a single word when she stood before cameras. " She was always spontaneous and had the self-confidence of acting in any roles assigned to her", says the Associate Director.
She had done meaty roles in Abhinaya Cretions mega-serial, Thiruppavai and Anu Pallavi. The actor was acting for the Vellai Thamarai, the mega-serial now being telecast through the Sun TV Channel.
The actress was living with her only daughter Lakshmi. The funeral of the actress will be taking place on Tuesday.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
aanaa
29th March 2013, 05:37 AM
பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!! (http://123tamilcinema.com/2013032624803.html)
http://123tamilcinema.com/images/2013/03/sukumari.jpg
உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. சமீபத்தில் சுகுமாரி தன், தி.நகர்., வீட்டில், விளக்கு ஏற்றும்போது, புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, குளோபல் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
aanaa
16th April 2013, 08:55 PM
பிரபல பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார்...!! (http://cinema.dinamalar.com/tamil-news/11989/cinema/Kollywood/Playback-singer-P.B.Sreenivas-died.htm)
http://userserve-ak.last.fm/serve/_/41692927/P+B+Sreenivas+PBSreenivas_232.jpg
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
aanaa
17th April 2013, 05:57 PM
ராமமூர்த்தியின் உடலுக்கு எம்.எஸ்.வி இறுதி அஞ்சலி
http://cinema.dinakaran.com/gallery/Kollywood-news-6082.jpg
திரைப்பட இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மாரடைப்பால் நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 91. ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று புகழ்பெற்றவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி. கடந்த சில மாதங்களாக ராமமூர்த்தி உடல்நிலை குன்றியிருந்தார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். 1922ல் திருச்சியில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர், டி.கே.ராமமூர்த்தி. இசைக் குடும்பம் என்பதால், சிறுவயதிலேயே இசையை கற்றுக்கொண்டார். பிறகு சென்னைக்கு வந்த அவர், இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன் சிபாரிசு மூலம் ஹெச்.எம்.வி. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் சரஸ்வதி ஸ்டோர் நிறுவனத்தில் இணைந்தார்.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
aanaa
25th May 2013, 08:12 PM
RIP -TMS
TM Soundarajan (http://en.wikipedia.org/wiki/T._M._Soundararajan) died on 25 May 2013 at his residence in Mandaveli (http://en.wikipedia.org/wiki/Mandaveli), Chennai (http://en.wikipedia.org/wiki/Chennai) due to illness. He was 91 years old at the time of his death.
http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/images/legendary-playback-singer-tms-admitted-in-the-icu-photos-pictures-stills.jpg
sample song..
http://www.youtube.com/watch?v=cJI5hgdvsMg
aanaa
18th July 2013, 08:57 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQAQKOThYA1wlcj_elFYF5yx9rfB0xb0 LTz3we1PtA0IslUZR3Qqg
கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ். ரங்கராஜன். இவர் கடந்த 29 அக்டோபர், 1931ல் பிறந்தார். தமிழ் கவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் ஆன இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதை தொகுப்புகள் புகழ் பெற்றவை. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருவரங்கத்தில் பிறந்து, வளர்ந்தார். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்து பத்திரிக்கையை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதி கொடுக்கும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது.திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்த கையெழுத்து பத்திரிக்கையில் பல இளைஞர்கள் பங்கேற்று கொண்டனர். அப்படி பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ் பெற்ற எழுத்தாளரான சுஜாதா ஆவார்.தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாக படம் வரையும் திறமையும் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியை போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளி தோழன் பாபு, ‘மாலி'யை போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்று கூறி 'வாலி' என்னும் பெயரை சூட்டினார்.வாலி எங்க வீட்டு பிள்ளை என்ற படத்தீல் எம்.ஜி.ஆருக்கு எழுதிய நான் ஆணையிட்டால், ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தீல் எழுதிய ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... ஆகிய பாடல்கள் புகழ் பெற்று விளங்கின.இவர் ஐந்து முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.2007-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
aanaa
23rd July 2013, 11:58 PM
நடிகை மஞ்சுளா விஜயகுமார் மரணம் (http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=56490)
http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_88038271666.jpg
சென்னை: நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். அப்போது விஜயகுமார், மகன் அருண் விஜய் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். 1965ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்' படத்தில் சிறுமியாக அறிமுகம் ஆனார் மஞ்சுளா. பின்னர் ‘ரிக்ஷாக்காரன்' படத்தில் கதாநாயகியாக எம்ஜிஆருடன் நடித்தார்.
தொடர்ந்து சிவாஜி, என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கமல், ரஜினி உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்தார். ‘உன்னிடம் மயங்குகிறேன்' என்ற படத்தில் விஜயகுமாருடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் எம்ஜிஆர் திருமணம் நடத்தி வைத்தார். கடைசியாக 2011ம் ஆண்டு வெளியான ‘என் உள்ளம் தேடுதே' படத்தில் மஞ்சுளா நடித்தார்.
விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா. ஆனாலும் விஜயகுமாரின் முதல் மனைவி குடும்பத்தினருடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார். விஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மனைவியின் மகன்தான் நடிகர் அருண் விஜய். மஞ்சுளா உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆலப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை அவரது இறுதி சடங்கு நடக்கிறது. திரையுலகினர் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
aanaa
9th November 2013, 08:36 PM
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்...
http://cinema.dinakaran.com/gallery/Kollywood-news-7768.jpg
பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு.
இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ் சர்ஜரி' செய்து கொண்டார்.
அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.
சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.
கடந்த 4ந் தேதி அவர் திடீரென மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில்,
அவரை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலமானார்.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
aanaa
22nd January 2014, 08:30 PM
http://kumarsrinivas04.files.wordpress.com/2011/11/akkineni-nageswara-rao-05.jpg (http://www.tamilcnn.org/archives/242806.html)
பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் இன்று புதன் அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 91. கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.
1940 ஆம் ஆண்டு வெளியான தர்மபத்தினி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் நாகேஸ்வரராவ். அவர் கதாநாயகனாக நடித்து வெளியான தேவதாஸ் மிகப் பெரும் வெற்றி பெற்றது. அதில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
அவர் நடித்து அதிகம் பேசப்பட்ட இன்னொரு தமிழ்த் திரைப்படம், திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான அண்ணா கதை வசனம் எழுதிய ஓர் இரவு.
தமிழ், தெலுங்கு உட்பட 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நாகேஸ்வர ராவ், மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் மற்றும் திரைப்படத்துறை சாதனைகளுக்காக தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
தமிழக அரசும் கலைமாமணி பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது. அவரது மகன் நாகார்ஜூனாவும் பிரபல திரைப்படக் கதாநாயகனாவார்.
aanaa
14th February 2014, 06:00 AM
Southern film industry mourns as Sadma director Balu Mahendra dies (http://indianexpress.com/article/entertainment/entertainment-others/southern-film-industry-mourns-as-sadma-director-balu-mahendra-dies/)
Balu Mahendra, 75, who suffered heart attack, was rushed to the hospital where he breathed his last, sources said. He is survived by his wife and son.
http://images.indianexpress.com/2014/02/balumahendra.jpg
http://www.madhyamam.com/en/sites/default/files/imagecache/w604/balu-mahendra.pnghttp://upload.wikimedia.org/wikipedia/en/thumb/3/34/Moondram_Pirai_Poster.jpg/220px-Moondram_Pirai_Poster.jpg
RR
9th March 2014, 09:39 PM
Comedian Lollu Sabha Balaji Passes Away
Comedian actor Balaji who is known for his hit comedy shows ‘Lollu Sabha’ in Vijay TV and ‘Super 10′ show in Sun TV passed away on 7th Marth in a private hospital in Anagaputthur, near Chennai. He was 43 and is surivived by his wife and 3 children..
Balaji who had been suffering from jaundice from quite some time now, was apparently admitted in hospital after his health condition was deteriorated.He was put on the ventilator but succumbed to his illness. He breathed his last at 2 AM.
He was the one who introduced comedian Santhanam to the director of Lollu Sabha and both the actors shot to fame with the same show.
Balaji has acted in comedic roles in several movies like Silambattam and Dindigul Sarathy. He is also credited with writing dialogues for Shiva starrer “Thillu Mullu”, released in 2013.
aanaa
27th June 2014, 05:11 PM
டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை
http://mmimages.maalaimalar.com/articles/2014/jun/ee04ff6a-2926-46f7-b23f-5277dea09583_s_secvpf.gif
டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54.
பாலமுரளி மோகன் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். விவேக்குடன் நடித்த டி.வி. நிகழ்ச்சி செய்தி வாசிப்பாளர் தேர்வு காமெடி பிரபலமானது.
‘‘வாளைப்பழ தோல் வழுக்கி வாலிபர் உயிர் ஊஷல்’’, ‘‘தேர்தலில் ஆச்சியை பிடிப்பது யார்’’ என்று துணை நடிகையை பேச வைத்து விவேக்கும் பாலமுரளி மோகனும் பண்ணும் காமெடி பேசப்பட்டது.
இதுபோல் தென்றல், வம்சம் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு 10 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தார்.
இன்று காலை அவரது படுக்கை அறையை தட்டிய போது கதவு திறக்கவில்லை. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் வேப்பேரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்ஸ்பெக்டர் பிரபு, சப்–இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விரைந்து சென்று கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு மின் விசிறியில் பாலமுரளி மோகன் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
மரணம் அடைந்த பாலமுரளி மோகனுக்கு சீதாராணி என்ற மனைவியும், உமாசங்கர் என்ற மகனும் உள்ளனர்
.நன்றி -மாலைமலர் (http://www.maalaimalar.com/2014/06/26154907/tv-actor-balamurali-mohan-suic.html)
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஏன் தான் இந்த தற்கொலை வியாதியோ :-(
aanaa
25th October 2014, 07:37 PM
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
எஸ்.எஸ். ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. திமுகவில் சேர்ந்த எஸ்.எஸ்.ஆர். கட்சிக்காக பாடுபட்டார். கடந்த 1962ம் ஆண்டு அவர் தேனி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டசபைக்கு தேர்வானார். நம் நாட்டிலேயே எம்.எல்.ஏ.வான முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.filmibeat.com/img/2014/10/24-legendary-actor-ssr-no-more--600.jpg
http://tamil.filmibeat.com/news/legendary-actor-ssr-no-more-031426.html
aanaa
10th November 2014, 03:19 AM
நடிகர் மீசை முருகேசன் குளியல் அறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். (http://www.newindianews.com/view.php?24AMec03dOSde21mKbb2m0Med3Q4S0c3ADr242AlJ 2236Ae3)
http://www.newindianews.com/photos/thumbs/2014/11/misai_murugan_001.jpg
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
aanaa
9th April 2015, 07:13 AM
பிரபல சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ் தற்கொலை
சின்னத்திரை உலகில் அதிகமான சீரியல்களை இயக்கியவர் பாலாஜி யாதவ். துளசி, அரசி, பந்தம், காய்த்ரி, புகுந்த வீடு, செல்வி, ரோஜா, லட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியவர். இத்தனை சீரியல்களை இயக்கிய பாலாஜி யாதவ் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது
சமீபகாலமாக பெரும்பாலான தொலைக்காட்சிகளில் இந்தி டப்பிங் சீரியல்களே ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. நேரடி சீரியல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பலர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது நேரடி சீரியல்களைத்தான் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறார்கள். நடிகர்கள் சங்கம் இதற்காக ஒரு போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்துது. இந்த நிலையில் பாலாஜி யாதவின் தற்கொலை சின்னத்தரை வட்டாரத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.
பாலாஜி யாதவின் மனைவி அளித்த பேட்டியில் "டப்பிங்க சீரியல்கள் நிறைய வந்து விட்டதால் என் கணவருக்கு வேலை வாய்ப்பில்லை. ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல் இருந்தார். வருமானத்தை நம்பி அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கினோம். அதற்கு தவணை செலுத்த முடியவில்லை. குழந்தை பாக்கியம் இல்லாததால் தத்தெடுத்து ஒரு குழந்தை வளர்த்தோம். தற்போது அதை வளர்க்க முடியாமல் பெற்றவர்களிடமே கொடுத்து விட்டோம். இந்த மன வேதனை தாளாமல்தான் என் கணவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவர் கவிதா பாரதி கூறும்போது "பாலாஜி யாதவின் மரணம் எதிர்பாராத அதிர்ச்சியாகும். சமீபகாலமாகவே பிறமொழி தொடர்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் எங்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. தொலைக்காட்சி நிறுவனங்கள் டப்பிங் சீரியல்களை கைவிட வேண்டும்" என்றார்.
சின்னத்திரை கலைஞர்கள் பாலாஜி யாதவின் உடலுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். விரைவில் சின்னத்திரை கலைஞர்களின் கூட்டமைப்பின் அவசரக்கூட்டம் நடக்கிறது. அதில் டப்பிங் சீரியல்கள் குறித்து சீரியாசன முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.
நன்றி: தினமலர்
aanaa
9th April 2015, 07:19 AM
திமுகவின் பிரசார பாடகரும், திரைப்படப் பாடகருமான நாகூர் ஈ.எம். ஹனிஃபா (97) சென்னையில் புதன்கிழமை காலமானார்.
கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது இரவு 8 மணியளவில் திடீரென அவர் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் சிறு வயது நண்பர்களில் ஒருவர். இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் மூலம் பெரிதும் புகழ் பெற்றவர். சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் இருந்தவர்.
திரைப்படத்திலும் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். "இறைவனிடம் கையேந்துங்கள்', "உன் மதமா, என் மதமா' போன்ற அவரின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அவருக்கு 2 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நாகூரில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
நன்றி: தினமணி
aanaa
30th July 2015, 11:23 PM
சின்னத்திரை இயக்குநர் விடுதலை காலமானார்!
பிரபல சின்னத்திரை இயக்குநர் விடுதலை காலமானார். அவருக்கு வயது 52.
எத்தனை மனிதர்கள், வார்த்தை தவறிவிட்டாய், அக்கினிசாட்சி, ஆனந்தம், ;அவளும் பெண் தானே, குறிஞ்சி மலர்
போன்ற சின்னத்திரை சீரியல்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் வசித்து வந்த விடுதலை, இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிசடங்கு நாளை அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடக்க இருக்கிறது. விடுதலையின் மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150724170757000000.jpg
aanaa
11th October 2015, 01:43 AM
நடிகை ஆச்சி மனோரமா உடல் நலக்குறைவால் மரணம்! (http://www.tamilwin.com/show-RUmtzASUSVhv4G.html)
http://www.tamilwin.com/photos/full/2015/09/11-1444503704-16-1424069417-manoramanomore.jpg
சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.
தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.
மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர்
மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
rajeshkrv
20th October 2015, 03:24 AM
Sarakku vechirukken female singer Radhika thilak passed away in sep
https://www.youtube.com/watch?v=RKzBeIEP53M
aanaa
26th January 2016, 01:18 AM
நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம் (http://www.tamilwin.com/show-RUmuyBRZSWhqyB.html)
http://www.tamilwin.com/photos/full/2016/01/kal%20.jpg
aanaa
14th March 2016, 06:50 AM
பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர் -
https://1.bp.blogspot.com/-E5qbVHZASbE/VuXERFgRyCI/AAAAAAADq5o/rDPCOVmDqFs7aKA_tiCvespilKXXojPwQ/s1600/sai.jpg
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த். நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்து கொண்ட சின்னித்திரை நடிகர் சாய் பிரசாந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், ‘எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு’ என்று தனது மனைவி சுஜிதாவுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள அவர், நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய் பிரசாந்த். நேரம், வடகறி உள்ளிட்ட பல படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட சாய் பிரசாந்த் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ” எனது அன்புக்குரிய சுஜிதா சாய் பிரஷாந்துக்கு
உன் மீது அதீத காதல் வைத்திருந்தேன். மன இறுக்கம் காரணமாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவலைப்படாதே, எனது மரணம் உனக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக்காது. எனது மரணத்திற்கு கண்டிப்பாக நீ காரணமாக இருக்க முடியாது. ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும்.
எனது காதல் எப்போதும் உண்மையானது. நான் செல்வதால் தயவு செய்து அழாதே, ரக்*ஷிதாவும் தான் (மகள்). என் பெற்றோர்கள் கண்டிப்பாக உன்னையும் உனது குடும்பத்தாரையும் கேள்வி கேட்க மாட்டார்கள். உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும். நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம்.
என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகையும் கொடுப்பார்கள். எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு. நான் ரக்*ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா . மிஸ் யூ ரக்*ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சரவண குமார்.
ரக்*ஷிதாவின் புரிதலுக்கு ஒரு கண்டிஷன். யாரும் சண்டையிடவோ அழவோ கூடாது. நான் மட்டுமே எனக்கு பிரச்னை. எல்லோருடனும் இணைப்பில் இருக்கவும், புரிந்துகொள். ராடான் மீடியா முக்கியமாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி. மிஸ் யூ லாட் அம்மா, ரக்*ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.
லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார். “லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த் ..உம்மா”, டேக் கேர் எவ்ரிபடி உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன்” என்று உருக்கமாக கடிதத்தில் கூறியுள்ளார்.
aanaa
7th August 2016, 07:55 AM
http://tamil.filmibeat.com/news/vietnam-veedu-sundaram-passes-away-041505.html
சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குனர் வியட்நாம்வீடு சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 86. 1970 ஆண்டு வியட்நாம் வீடு படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் இயக்குனராக நுழைந்தார். வியட்நாம் வீடு சுந்தரம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, மற்றும் முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
http://tamil.filmibeat.com/img/2016/08/viyatnam-veedu-sundaram-passes-away-600-06-1470453459.jpg
aanaa
12th November 2016, 05:54 AM
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிரபல நடிகை சோபனா திடீர் மரணம்! (http://view-source:http://www.hirunews.lk/tamil/entertainment/147336/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%A F%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%A F%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%A E%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%A E%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%A F%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%A E%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF% E0%AE%B2%E0%AF%8D)
http://www.hirunews.lk/Data/News_Images/201611/1478861357_2305703_hirunews_dfgdgcopycopycopy.JPG
aanaa
12th November 2016, 05:59 AM
பிரபல சின்னத்திரை நடிகை சபர்ணா தற்கொலை (http://www.hirunews.lk/tamil/entertainment/147350/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A E%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%A E%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%A E%B2%E0%AF%88)
http://www.hirunews.lk/Data/News_Images/201611/1478869898_4018806_hirunews_dsfdscopycopy.JPG
aanaa
4th May 2017, 02:00 AM
தமிழ் சானல்களில் பிரபல சீரியல் ரெட்டை வால் குருவி, இதில் நடித்த பவானியின் கணவர் பிரதீப் இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். (http://www.cineulagam.com/celebs/06/139757?ref=lankasritop)
பிரதீப் தமிழில் சுமங்கலி என்னும் சீரியலில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் சீரியல் பிரபலமான இவரின் தற்கொலை பற்றி பவானி பேட்டி அளித்துள்ளார்.
எங்களுக்குள் பெரிய சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் இன்று காலை 2 மணியளவில் வெளியே சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.
மீண்டும் வந்தார். ஆனால் இன்று மிக அதிகமாக காலையிலேயே குடித்துக்கொண்டிருந்தார். நான் அதிகாலையிலேயே ஷூட்டிங் சென்றுவிட்டேன்.
மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவர் இறந்து கிடந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தார். சிறு விசயத்திற்காக இப்படி செய்துகொண்டுள்ளார் என பவானி கூறியுள்ளார்.
http://dimg.zoftcdn.com/s1/photos/albums/photos/cinema/telugu/couples/serial_actor_pradeep_actress_pavani_album001/img/625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.