PDA

View Full Version : KAVITHAAVILAASAM



VENKIRAJA
27th September 2006, 12:17 PM
விலாசம் எண் 1:கவிக்கோ அப்துல் இரகுமான்.

"இரவுக்கு
தாலாட்டு பாடுகின்றனவா
சில்வண்டுகள்?"

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அப்துல் இரகுமான்.செல்லமாக கவிக்கோ.மதுரை மண்ணில் முளைத்த கவிவிருட்சம்.பெற்றோரும் கவிஞர்களே,ஆனால் உருது.அதுவும் நல்லதற்குத்தான்,அவர் உருது மொழியின் பலத்தை தமிழில் apply செய்ய அது உதவியது.மெல்லிய பிரெஞ்சு தாடியோடு ஜிப்பா அணிந்த கண்ணாடிக்காரர்.ஒளிபடைத்த கண்ணினார்,மதுரையின் கார்வண்ணத்தை தோலில் கொண்டவர்.கடைசி புத்தகம்:இது சிறகுகளின் நேரம்,இந்த கணநொடி வரை மூச்சுவிடுகிறார்.முப்பது ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறார்,பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமாவார்.தமிழ் படிப்பித்த ஆசிரியரான
அவர் தமிழில் கஜல் எழுதலானார்.மரபுக்கவிகளை எழுதிக்கொண்டிருந்தவர் மெல்ல புதுக்கவிதைகளுக்கு தடம் மாறினார்.ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு கொண்டுவந்தார்.அதைப்பற்றி அவர் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை மிகப்பிரபலம்.அதன் தலைப்பு:மின்மினிகள்.இந்நிலையில் அவரது முதல் கவிதைத்தொகுப்பாக வெளிவந்தது பால்வீதி.மிகப்பெரிய வரவேற்பைப்பெற்ற அந்த புத்தகம்,தமிழில்க்கியத்தின் மற்றுமோர் பரிமாணமாய் ஒளிர்ந்தது.அந்த காலகட்டம் புதுக்கவிஞர்களும் மரபுக்கவிஞர்களும் போரிட்டுக்கொண்டிருந்த தருணம்.மேத்த,வாலி,வைரமுத்து,இன்குலாப் ஆகியோருடன் அந்த போர்க்களத்தில் இரகுமானும் புதுக்கவிதை வாள் வீசினார்.அந்த renaissance-க்கு பிறகு தான் தன் கவிதைகளின் பால் தமிழ் நெஞ்சங்களை ஆண்டார் அப்துல் இரகுமான். இரகுமான் வாணியம்பாடி கல்லூரியில் பேராசிரியராக இருந்த சமயம் பற்பல ஆய்வுகள் நிகழ்த்தினார்.அவற்றுள் "புதுக்கவிதையில் குறியீடு" என்ற ஆய்வு அவருக்கு டாக்டர் பட்டத்தை அளித்தது.தொடர்ந்து சர்ரியலிசம் என்ற தலைப்பிலும் அவரது ஆய்வுகள் இருந்தன.ஆங்கிலக்கவிஞர்களான ஷெல்லி,கலீல் ஜிப்ரான் ஆகியோர் இவரது விருப்பத்துக்குரியவர்கள்.தீவிர இசுலாமியரான இவர்,தன் உரைகளில் தவறாமல் நபிகளின் மொழியொன்றை சமர்ப்பிப்பார்.குறிப்பாக தமிழில் யாராலும் தீண்டப்படாத சூஃபி கருத்துக்களும்,ஜென் தத்துவங்களும்,சீன மதபோதனைகளும் கவிக்கோவால் தமிழுக்கு பெயர்க்கப்பட்டன.அது மட்டுமின்றி உபனிஷதமும்,நான்மறையையும் கூட கற்றவர் ரகுமான்.கல்லூரியிலேயே சங்கத்தமிழை படித்துவிட்டிருந்தார்.அனைத்து கவி வடிவங்களையும் பரீட்சார்த்த முயற்சியில் பயின்றும் வைத்திருந்த ரகுமான் உண்மையிலேயே தமிழை சுவாசித்தவர்.பேராசிரியராக இருந்தபோதே தன் மாணவர்களிடையே வகுப்புகளினூடே கவிராத்திரி என்ற பெயரில் தமிழை மாணவர்களுக்கும் பருகினார்.அவரே கவியரங்குகளில் பங்கேற்கவும் செய்தார்.ஒருமுறை கலைஞர் கருணாநிதி தலைமையேற்ற அரங்கத்தில் வாசித்த கவிதை கருணாநிதியை கவர,அதன் பின் கலைஞரின் அனைத்து அரங்குகளுக்கும்,அன்னாரிடமிருந்து கவிக்கோவுக்கு அழைப்பு போயிற்று.மெல்ல கழகக்கவிஞராகவே இரகுமான் அறியப்பட்டாலும்கூட தன் தனித்த்ன்மையை அவர் இழந்துவிடவில்லை.அதுவே இன்றுவரை அவர் ஒழுகி வரும் இன்பம் கலந்த மாண்பு.இரகுமானின் சேவையை பாராட்டி அவருக்கு தமிழன்னை விருது வழங்கப்பெற்றது.மேலும் கவிஞர் விருதாக 1 இலட்சம் ரொக்கமும் தரப்பெற்றது.மேலும் இந்தியாவின் மிக உயரிய இலக்கிய அங்கீகாரமான சாகித்ய அகாதமியும் வழங்கப்பெற்றது.இத்துணை ஆண்டுகளாக இலக்கிய சேவை புரிந்துகொண்டிருந்த அப்துல் இரகுமான் ஓர் இலக்கிய இதழ் ஆரம்பித்தார்.அதன் பெயர் பித்தன்.அதில் அவர் இயற்றிய ஹைக்கூ ஒன்று.

"புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள்"

இந்த ஒரு படைப்பின் மூலமாக அவரது மொழிப்புலமையும்,மேதமையும் விளங்கும்.மெய்யில் பிள்ளைகளும் புத்தகங்களும் இடம் மாறி இருக்கவேண்டும்,ஆனால் அதை நிரல்நிரை மாற்றி ஒரு அற்புதமான கருத்தினை வெறும் இயல்பான சொற்கள் கொண்டு விளக்கியிருப்பது மேதமை தானே?கவிக்கோ இன்றைய தமிழிலக்கிஅப் பரப்பில் கவிதைகளின் நவீனத்துவதிற்கான அடிகோல் என்றால் அது மிகையல்ல.ஏனென்றால் அவர் தன் கவிதைகளில் கருத்தாழமும்,இயல்பும் ஒளித்து வைத்திருந்தார்.கவியரசு கண்ணதாசனே இரகுமானை தென்னகத்து கலீல் ஜிப்ரான் என்று அழைக்குமளவு தன்னகத்தே இருந்த திறமையை அடக்கமாக எழுத்துக்களால் மெய்ப்பித்திருக்கிறார்.தன்னுடைய சுதந்திரத்தை பறித்துவிடக்கூடும் என்று அஞ்சி அவர் திரையுலகின் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை.எனினும் தமிழ் வாழும் வரை இரகுமான் வாழ்வார்,அவரது எழுத்துகளின் சாட்சியாக.

VENKIRAJA
27th September 2006, 12:22 PM
முதலில் என்னை மன்னிக்கவும் கவிதைகள் தளத்தில் கட்டுரை எழுதியமைக்கு.கவிதாவிலாசத்தின் நோக்கு தமிழ்க்கவிஞர்களைப்பற்றிய குறிப்புகளை சேகரித்து வைப்பதே,கவிதைமொழியில் சொல்லுவதென்றால் மகரந்தச்சேமிப்பு செய்வது நிகர.ஒருவேளை நாணயங்கள்,தபால் தலைகள் போல இது பிரபலமில்லாமல் இருக்கலாம்,ஆனால் விலைமதிப்பற்றது.இத்திரியின் ஒளி பலருக்கு தமிழ்க்கவிஞர்களின் நதிரிஷிமூலங்களை புலப்படுத்துவதே.அதன்மூலமாக அவரைப்பற்றி தெரியாத செய்திகளை நானும் பிறரும் அறிந்துகொள்ளுதற் பொருட்டே.இது சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்ல.வெறும் வாசிப்பு சம்ம்ந்தப்பட்டது.அன்பர்களும் தங்களிடமிருக்கும் விலாசங்களை வெளிக்கொணர்வார்களாக.

pavalamani pragasam
27th September 2006, 12:44 PM
[tscii:606b79424a] :clap: «Θ’ΣΈυ «Υ¨Α! Ί’ΘσΎ §ΎχΧυ άΌ! ΑΈΓσΎ §Ίχμ¨Έ ΑΔΓ’Ιυ Ύ¨ΖμΈ Α’ΈΧυ «ςΎ’Β‘ΕΊ’Βυ![/tscii:606b79424a]

VENKIRAJA
27th September 2006, 01:22 PM
நன்றி அம்மையாரே!உங்களிடமிருந்து நான் வேறுமாதிரியான பதிலை எதிர்பார்த்தேன்.இது தேவையில்லத வேலை என்று சொல்வீர்கள் என்று,பிழைத்தேன்.அன்பர்ர்கள் அனைவரும் தன்களுக்கு விருப்பமான கவிஞர்களைப்பற்றி குறிப்பெழுதலாமே!

crazy
30th September 2006, 03:08 PM
venki :clap:
I used to read his "Idhu siragugalin neram" when I was in India. They were really great! :)

VENKIRAJA
20th October 2006, 01:19 PM
விலாசம் எண் # 2.

"கற்றவன் என்ற
கர்வம் தகர்ந்தது
அந்த விவசாயி
கன்னடத்தில் எழுதப்பட்ட
கடிதத்தை கொடுத்து
வாசித்துக் காட்டச் சொல்லி
வணங்கிய போது"

மு.மேத்தாவின் வரிகள் தாம் இவை.நிச்சயமாக அவரது நெடி இதில் வீசுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.அவருக்கென்று சில கோட்பாடுகள் இருக்கின்றன.ஆச்சரியமாக இருக்கிறதா?ஆமாம் புரட்சியின் விழுதுகளில் இன்றைய கவிஞர்கள் ஊஞ்சலாடுகையில் அதன் வித்துகளை விதைத்துவிட்டு அமைதியாக குழந்தைகளின் விளையாட்டை ரசித்துக்கொண்டிருக்கிற முன்னோடிகளுள் சிலர் இன்னும் உயிரோடிருக்கிறார்கள்.அவர்களுள் என்னை மிகவும் பாதித்தவர் மு.மேத்தா.அடிப்படையில் அவர் தமிழ் யாப்பிலக்கணத்தை படித்தவர் தான்,ஆனாலும் விடாப்படியாக நின்று தன்னுடைய கவிதை நடையை தீர்மானிக்கவேண்டியது தான் தான் என்று மார்தட்டியவர்களுள் முதன்மையானவருமாவார்.கவிஞரின் கண்ணீர் பூக்கள் கவிதைத்தொகுப்பு 25 மறுபதிப்புகள் கண்டிருக்கிறது.அது போதும்,இவரது ஆளுமையை சொல்ல!மிக சமீபத்தில் இவரது பார்வைகள் குறித்து மக்கள் தொலைக்காட்சி அவரது பேட்டியை ஒளிபரப்பியது.அது பற்றி சொல்வதற்கு முன் அவரது நடையை உரசிப் பார்க்கலாம்.மேத்தாவின் சிறப்பே வசன கவிதைகள் தான்.உரையாடல் போல காதலர்கள் பேசும் கிராமிய மணம் வீசும் இவரது கவிதைகள் இடம்பெற்ற ஊர்வலம் எனும் புத்தகம் தமிழக அரசின் விருதைத் தட்டிச் சென்றது.மேத்த இசுலாமியர் என்றாலும்கூட அவரது அடையாளமாக அது உருப்பெறவில்லை.சில சமயங்களில் மட்டும் வசவு செய்வார் என்றாலும் ஆழ்ந்த நிதர்சனமுடையதாகவே அவை இருக்கும்.காதல் கவிதைகள் எழுதியே பிரபலமானவர் என்ற களங்கத்தை இவர்மீது சுமத்திய மரபுக்கவிஞர்களை வெகு சாணக்கியமாக மடக்கினார் மேத்தா.வெறும்,அனே சதையை மட்டும் எழுதுபவனல்லன் நான்,என்னுள் இருக்கும் கங்கின் வெளிப்பாடு தான் என் முகவரி,என்றபடி தன் வெற்றிப்பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார்.அடிப்படையில் பேராசிரியராக இருந்தபடியால் பட்டறிவும் இவரது கவிகளில் தெறிக்கும்.

"என்மீது வீசப்பட்ட
கத்திகளுக்கு நான்
முத்தம் கொடுக்கிறேன்

ஏனென்றால்
இந்தக்காயங்களில்
மைதொட்டுக்கொண்டுதான்
நான்
கவிதை எழுதுகிறேன்!"

தன்னை பழைய சொற்களில் பதுங்கிக்கொண்டவன் அல்ல என்றும்,புதிய சொற்களின் மூலம் போராட வந்தவன் என்றும் பிரகடனம் செய்கிறார்.இவரது கடைசி தொகுப்பானாஅகாயத்தின் அடுத்த வீட்டில் கூடைவர் "இந்தியா என் காதலி"என்று தான் முகப்பிடுகிறார்.தேசப்பற்றுடைய இவரது கவிதைகள் இவரை இன்றைய பாரதிதாசனாக நிலைகொள்ளச்செய்யலாம்.தொடர்ந்து சமூகபிரக்ஞைகளினால் இழுத்துச்செல்லபட்டு கவி புனைவதாக ஒப்புக்கொண்டார் மேத்தா.காவிரிப்பிரச்சனையை பற்றியும்,ஈழத்தைப்பற்றியும் தொடர்ந்து சாடியபடியே மேத்த தன் அன்றாட காபியை குடிக்கிறார்.தொடர்ந்து விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டாலும் இவரது படைப்புகள் விளம்பரம் சார்ந்த இலக்கியம் அல்ல.கூர்மையான பார்வை இருந்தாலும் இலகுவான புரிதல் இவரது படைப்புகளில் கண்கூடு,ஒரு வாளைப்போல.ஏறத்தாழ கால்நூற்றாண்டுகாலமாக இவர் கவிதை உலகில் அறியப்பட்டிருந்தாலும்,இவர் முதலில் ஒரு சிறுகதையாளர்!மேத்தா திரைப்படங்களுக்கும் கூட பாடல்கள் எழுதியிருக்கிறார்.இவரது சீடரான பழனிபாரதி இன்றைய மூத்த கவிஞர் ஆவார்.மேத்தாதாசன் என்றுகூட ஒருவர் இருந்ததாக தகவல்.இவரைப்பற்றிய பேட்டியில் இவர் சொன்ன ஒரு சுவாரஸ்யமான தகவல்.அ.இ.அ.தி.மு.க-வின் தொட்டில் குழந்தைத்திட்டதினால் சினமெழுந்து இவர் எழுதிய கவிதை பரபரப்பாகிவிட அதற்கு அ.இ.அ.தி.மு.க அமைச்சர்களே ஆதரவு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.மேலும்,மரபுக்கவிதைகள் எழுதுவதும் கடினமே,அவற்றுக்கும் பிரத்திய்யெகமான ருசிகள் உண்டு என்றும் சொல்லி,தானும் ஒரு மரபுக்கவிஞரே என்றார்.கருத்துக்கூட்டங்களிலும் தான் இருவேறு கவிநடடைகளுக்கு பாலமானவன் என்றும் சொன்னதாகக் கூறினார்.மொத்ததில் அவரது நடை எளிமையானதாக இருந்தாலும் பாதை கடினமானதாக இருந்திருக்கிறது,அடையப்போகிற கரைகள் அவரை வரவேற்கட்டும்!

அவரது இரசிகர்களின் குரலாக பதுருத்தீனின் வார்த்தைகள் இவை:

"உன் புகழ்
விளக்கெரிய
என் விரல்களை
தீக்குச்சியாக்குகிறேன்"

crazy
23rd October 2006, 10:53 PM
Venki
u r doing a great job!
when u write about these poets/ writers ..................u bring them into my knowledge. I never knew about him8them)....................
:ty: :notworthy: :clap: :thumbsup:

VENKIRAJA
24th October 2006, 01:31 PM
thats why i opened a thread crazy,but i'm afraid that i'm gonna take a long leave from the hub.i'll b meeting u all after my board exams only.this is probably my last post till april!so please can u do me a favour?u can write about ur favourite poets in this thread,please!

crazy
24th October 2006, 06:51 PM
thats why i opened a thread crazy,but i'm afraid that i'm gonna take a long leave from the hub.i'll b meeting u all after my board exams only.this is probably my last post till april!so please can u do me a favour?u can write about ur favourite poets in this thread,please!

Oh Dear
Focus on ur studies..............will be waiting for ur post til april. Good Luck :)
enakku ezhudalaam theriyaadhu.
Maybe PP amma can write :)

TamilMoon
17th November 2006, 02:56 PM
nice information Venky :)

gragavan
19th November 2006, 10:18 PM
[tscii:54bbc5d299]¦ΕνΈ’ ΤΙ’§Έ‘π ΐΒύΐΞςΠΈ’ύΘ£χΈΗ‘?[/tscii:54bbc5d299]

VENKIRAJA
20th November 2006, 10:13 PM
yes,i feel a bit lazy to write in tscii n copy it again,etc.(though its cozier)

sundararaj
26th November 2006, 07:54 PM
Good info VENKI.

VENKIRAJA
18th December 2006, 07:40 PM
விலாசம் எண் #3:

"நாட்கள் எல்லாம் அழுகின்றன
அவள் பிறந்தநாளாய் பிறக்காததற்காக"

இத்தனை அற்புதமாய் காதலை நவில புதுக்கவிஞர்களுள் யாரிருக்கிறார்கள் இவனைத் தவிர?பெயர் கடைசியில்.ஆனந்த விகடன் இவனது வாசலாயிற்று.தமிழ் வாசகர்களின் நெஞ்சில் இவன் குடியேறியது பேப்பர்கார சிறுவர்களின் மூலமாகத்தான்.இளைஞர்களை பெரிதும் கவர்ந்த பட்டியலில் தற்போதைக்கு இவன் முதலிடத்தில் இருப்பான்."திமிருக்கும் அழகென்று பேர்"என பாவேந்தன் கவியை திரித்த இவன் கவிமத்து செயமத்து.அடுத்த பெண்கள் கல்லூரி 5 கீ.மீ.இது தான் இவரது முதல் தொகுப்பு.பிறகு தேவதைகளின் தேவதை,விழியீர்ப்புவிசை,இளங்கலை காதலியல்(B.Sc love-ology) என இவரது கவிதை ரதங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இவனது கவிதை வேள்வியில் ஆரம்ப சுடர்களை ஏற்றிவைத்தவர்கள் பழனிபாரதியும்,அறிவுமதியும் தான்.மாணாக்கனாக்கி பின் சிற்பமாக்கியிருக்கிரார்கள்.காதல் கவிதைகள் எழுதினாலும் இவர் காதலித்ததில்லை என்கிறார்.காதலர்களின் உரையாசிரியராக அவதாரமெடுத்துவரும் இவர் நிச்சயமாக எனது அலமாரிகளில் நிறைந்திருக்கிறார்.காதலினை உருவகம்,நவீனம்,அழகியல் போன்ற கட்டங்களுள் புகுத்தாமல் மிகவும் எளிய சொற்களை வைத்துக்கொண்டே கவி நெய்கிறார்.சொற்களுள் புகுந்து அர்த்தங்களை தேட வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் சில கவிதைகள் மட்டும் எங்கோ வாசித்ததைப் போன்ற மணம் வீசுவதை இவர் தவிர்த்துக்கொள்ளலாம்.நடையில் பெரிதாக சிலாகிப்பதற்கு ஒன்றுமில்ல,இதுவே இவரது பலம்.இத்தனை எளிய நடையில் எப்படி இவரால் இத்தனை கருத்தாழத்தை கொணர முடிகிறது.பார்ப்பதற்கு வெறும் கிணரு,பாய்ந்தால் தான் தெர்யும் நீங்க இயலாத பாதாளமென்று,நிறைந்திருக்கு நீர் காதலல்லவா?

"நானும் ஏசுபிரான் தான்
ஆனால் ஒரு வித்தியாசம் -
நீ ஒரு கன்னத்தில் முத்தமிடவேண்டும்"
(இது நான் கொஞ்சம் மாற்றியடித்தது)

அளப்பெரிய இந்த ஆற்றலை எங்கே மறைத்துவைத்திருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஓர் அற்ப தோற்றம்.சாதாரண அரசு அலுவலராட்டம்.இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்.அர்த்த ராத்திரியின் திரி போல கருப்பின் வாசனையை இவரது காதல் தோல்வி கவிதைகளில் காணலாம்.என்னை புறநானூற்று,அகனானூற்று கவிகளை விடவும் இவரது தொகுப்புக்கள் பிடித்தது.என் வகுப்பு முழுதும் இவர் புத்தகம் பறந்து பல்லவி பாடியது.நடையில் அடர்த்தி வாழையாட்டம் இருந்தாலும் சுவையில் ஆலமாகிவிடுகிறார்.மேலும்,இவரது உவமைகளும் உருவகங்களும் வித்தியாசமானவை.அறிவியல் இவரது கவிதைகளில் ஊடாடும்.கவிதை நடையில் இவர் வெறும் புதுமையை மட்டும் நம்பியவர்.பாடுபொருள் பெண்,துறை சேலை என்றாகிவிட்டாலும்,தாடியற்ற கவிஞர் இவர்.விகடன்,குமுதம் முதலான ஜனரஞ்சக பத்திரிக்கைகளும் இவரது படைப்புகளை வெளியிட்டுள்ளன,கணையாழி,தீராநதி போன்ற இலக்கிய இதழ்களும் இவரது படைப்புகளை ஏந்தியிருக்கின்றன.இதோ இக்கவியை பாருங்கள்,புரியும் இவர் யாரென்று:

"ஐந்து லட்சம் மைல்களுக்கு
அப்பால் உள்ள நட்சத்திரத்தில்
75% ஹைட்ரஜன் என
கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானம் உள்ளது
பகத்து வீட்டிலிருக்கும் உன்
இதயத்தி நான் இருக்கிறேனா
எனக் கண்டாயத் தான் ஒரு விஞ்ஞானமும் இல்லை"

சரிதான்.அவர் பெயர் தபூ சங்கர்,இயற்பெயர் காதலாக இருக்கக்கூடும்.

VENKIRAJA
18th December 2006, 08:05 PM
விலாசம் எண் # 4.

பட்டப்பெயர்கள் ஏதும் இல்லை.இவர் இட்டுக்கொண்ட ஒரே பெயர் மாத்திரமே உண்டு.அதுவும் ஒரு புராண பெயர்,அதுவும்சமகால ஓவியருடைய பெயருக்கு எதுகைப்பெயர்.ஆம்,வாலி.எதுகை மாலி,புகழ்பெற்ற ஓவியர்.படுத்துக்கொண்டே ஜெய்க்கும் ரங்கன் வாழ் ஸ்ரீரங்கத்து திருமகன் வாலி.ஓவியராக ஆசைப்பட்டு சென்னை வந்தார்.பாடெழுதித்தான் வயிறு கழு ஆயிற்று என கவிதைத்தொழில் புரிந்தவர்.வந்து ஆண்டுகள் ஐம்பது ஆகிவிட்டன,ஆனால் இன்னும் ஒரு விருதோ,புகழோ,பெயரோ இன்றி சர்வ அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது தாடிகளை
கரையாகக் கொண்ட கவிதைக் கடல்.கண்ணதாசன் உச்சியில் இருந்தபோது அன்னார் கவிதை எழுத வந்தார்,எப்போதுமே,இளையேன்,எளியேன்,அடியேன் என்றே தன்னை அடக்கிக்கொள்வது வாலிக்கு விருப்பமான ஒன்று.எம்.ஜி ஆரின் உடன்பிறவா சகோதரராக இருந்தவர் வாலி:

"நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
இந்த ஏழைகள் வேதனை படமாட்டார்"

"ஒரே வானிலே
ஒரே மண்ணிலே
ஒரே கீதம் -
உரிமைகீதம் பாடுவோம"

போன்ற பல இறவாக்கவிகளுக்கு சொந்தக்காரர்.இவரது வரிகல் தாம் தலைவருக்கு புரட்சியின் வித்தாய் அமைந்தன,தமிழ்த்தாய்க்கு சொத்தாய் அமைந்தன்.உவமைகலின் ஒன்றுவிட்ட சகோதரர் வாலி.அவரது வார்த்தை வழியே உவமை எள்ளி நகையாடும்.

"தேயும் நிலாவைத்
தாயும் காட்டி
தேயா நிலாவுக்குச்
சோறு ஊட்டினாள்"

-இராமனுக்கு கோசலை சோறூட்டும் காட்சியை இப்படி விவரிக்கிறார்.அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் "மழை கொட்டும் நேரம்,உப்பு விற்கப் போனேன்;காற்றடிக்கும் நேரம்,மாவு வாங்கப் போனேன்"என்று எழுதியது நினைவிருக்கலாம்.ஏரத்தாழ இருபதின்பாயிரம் பாடல்களையும்,இராமாயணம்,மகாபாரதம்:இவற்றினை வசனகவிதையாகவும்,எண்ணற்ற தனி நூல்களையும் எழுதியிருக்கிறார்."வாலி ஓவியராகவில்லை என்ற வருத்தம் அவருக்கு மட்டுமே இருக்கும்",என்று விகடன் பதிப்பாளர் ஒருமுறை பேசினார்.எம்.ஜி.இராமச்சந்திரன்,இவரிடம் ஐயா
நீங்கள் எழுதியது எல்லாம் நடந்துவிட்டது,உங்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என நினைக்கிறேன் என்றபோது இப்படி நீங்கள் கேட்பதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றாராம்.நேற்று நடிக்கும் சிம்புவுக்கும் இன்ஸ்பிரேஷனாக,அன்றிருந்த எம்.ஜி.ஆருக்கும் இன்ஸ்பிரேஷனாக என இருப்பினும்,இன்னும் டில்லி கூட பார்த்ததில்லை மனிதர்.அற்புதமாக புதுக்கவிதைகளில் மரபுத்தமிழ்ச்சுவையை கொண்டுவரும் கலையை அறிமுகப்படுத்தியவர் வாலி.வசன கவிதைகலுக்கு புத்துயிர் கொடுத்து எழுப்பியவர் வாலி.சிறுவயதிலேயெ அவருக்கு கவியார்வம் இருந்திருக்கிறது.அவர் இலக்கிய அரட்டைகலில் கலந்துகொள்வதுண்டாஅம்,அவ்வரட்டைகளில் சுஜாதா,பாலகுமாரன் போன்றோரெல்லாம் இருந்ததாகக் கேள்வி

"பூமாலை வாங்கிவந்தான்
பூகள் இல்லையே!
போதையின் பாதையில் போகின்றான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்!"

அற்புதம்!இயைபுத்தொடை இவரதி இடதுத்தொடை.பேச்சிலேயே இயைபருவி வழியும்,நுங்கும் நுரையுமாக பிரவாகம் எடுக்கும் இவர்,ஆங்கிலத்திலும் தேர்ந்தவர்.தூய தமிழ் பாவலரும் கூட.தாடிக்காரர் குமுத்தத்தின் வாரந்தோறும் வாலி பகுதிக்கு தொலைபேசி அழைப்பிலேயெ கவிதை வாசிக்குமளவு இவரது நரம்புகள் கூர் தீட்டப்பட்டுள்ளன,கவிதை பொறிகள் சிதற.நிறைய படங்களிலும் நடித்துள்ளார்.இந்த நொடிவரை கவிதை எழுதுகிறார்.கலைஞரின் செல்லத்தம்பி.ஏகப்பட்ட வெற்றிப்பாடல்கலின் கர்த்தா.ஏனோ இவருக்கு ஒரு தேசியவிருது கூட தரவில்லை,அதுசரி....ஒரு பிரமுகர் பேசியது நினைவுக்கு வருகிறது:இத்தகு பிரபலங்களின் பெயரில் விருது தரலாமே தவிர,பிரபலங்கலுக்கு விருது தருவது ஏற்புடைத்தன்று!சரிதானே!வாலி பாரதி,பாரதிதாசன்,சுரதா தலைமுறையில் வந்தவர்.அவர்களது புகழ் குறையாத அளவிற்கு,முடிசூடா மன்னனாக,பட்டமில்லா இராஜாவகா தமிழ்மொழியை ஏறத்தாழ ஆட்சி செய்துவிட்டார்.முழுக்க நரைத்தாலும்,உள்ளே கரும்பு வில்லொடு ஒரு மன்மதன் அரை உறக்கத்திலிருக்கிறான்,இவருள்ளே.உணர்ச்சிகளில் 'வாலி'பனாகவும்,கோபத்தில் தாலிபனாகவும் மாறிவிடுகிற இவர் சாதிப்பற்றும் இல்லாதவர்.புழுவென்றறியாது புலியென்ப்று சொல்பவர்கள் மத்தியில
"கலங்களுக்கு நடுவே கட்டுமரத்தோடு வந்தவன்"என தன் ஆரம்பகாலத்தை விமரிசிக்கும்

இவரது simplicity உண்மையாகவே அட்டகாசம்.மேலும் பெயரில் மட்டுமல்லாது,தன்னுடன் மோதுபவர்களின் பாதிபலத்தை பெற்றுக்கொண்டு உடனுக்குடன் கவிசொல்லு ஆற்றல் படைத்தவரும் ஆவார்.பழகுவதற்கு எளியவர்,புன்முறுவலுக்கு பதிலவர்,ஆவேச வல்லவர்.எங்கள் வாலியவர்.

TamilMoon
18th December 2006, 08:31 PM
பாடுபொருள் பெண்,துறை சேலை என்றாகிவிட்டாலும்,தாடியற்ற கவிஞர் இவர்.

"ஐந்து லட்சம் மைல்களுக்கு
அப்பால் உள்ள நட்சத்திரத்தில்
75% ஹைட்ரஜன் என
கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானம் உள்ளது
பகத்து வீட்டிலிருக்கும் உன்
இதயத்தி நான் இருக்கிறேனா
எனக் கண்டாயத் தான் ஒரு விஞ்ஞானமும் இல்லை"

சரிதான்.அவர் பெயர் தபூ சங்கர்,இயற்பெயர் காதலாக இருக்கக்கூடும். :clap: :clap:

crazy
19th December 2006, 01:59 PM
venki : good job :)

VENKIRAJA
19th December 2006, 04:35 PM
did i satisfy u aal?was thje topic enriched by me?then i'm happy.can u please say anout whom i should write?it would be better if i cater ur needs."neengal kaettavai?"

haran
2nd January 2007, 10:19 PM
'அதோ அந்தப் பறவை' பாடலை எழுதியது கண்ணதாசன்; தாங்கள் குறிப்பிட்டதுபோல் வாலி அல்ல.

VENKIRAJA
7th January 2007, 01:29 PM
விலாசம் எண் # 5.

எங்கள் ஊர் என்பதனால் கொஞ்சம் பெருமை.ஆமாம்,காஞ்சியைச் சேர்ந்த கவிஞரின் விலாசத்தை இப்போது ஆராய்வோம்.நா.முத்துக்குமார்.வெளிவரும் அனைத்து படங்களிலும் தன்னுடைய வரிகளை பொதித்துவிடுகிற பாட்டுக்காரர்.வழக்கம் போல அறிவுமதியிடம் பயின்றவர் தான்.தபூ சங்கரைப் போலவே எளிமையை வகிடெடுத்துக்கொண்ட கவிஞர்.எளிமையென்றாலும் எரிமலை தான்.

"கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே"

இதுதான் இவரது முதல் பாடல்.செல்வராகவனின் திரைப்படங்கள் இவரை வெளியுலகுக்கு அடையாளம் காட்ட,அட இந்த பலூன்காரன் வராத தெரு,ஆனா ஆவன்னா,வானம் என் அலமாரி அதையெல்லாம் எழுதினவருப்பா!என இலக்கிய வட்டாரம் சித்தரித்தது.பாடல்களுக்குள இவரது ஹைக்கூக்கள் ஒளிந்திருக்கும்:

"காட்டிலே காயும்
நிலவை கண்டுகொள்ள
யாருமில்லை."

தனிக்கவிதையாக,

"யாருமற்ற தனிமையில்
ஒன்றையொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்"

என்றும் கவிதை இயற்றியுள்ளார்.அந்நியன் திரைப்படத்தின் "காதல் யானை.."பாடல் இவரை புகழின் உச்சிக்கு அழைத்துச்சென்றது.இந்த சமூகத்தின் கண்ணாடியாக தன்னை பாவிக்கும் முத்துக்குமார் பிற கவிஞர்கள் போல பேசும்போது கரடுமுரடான சொற்களோ,பாஷ்யங்களோ உபயோகிப்பதில்லை.கவிஞருக்குரிய கர்வம் இல்லாதவர்.ஏதோ பக்கத்து வீட்டுக்காரரைப் போல தான் இருப்பார்,பேசுவார்.வெகுசமீபத்தில் இவரது திருமணம் நடந்தேறியது,அதன் அழைப்பிதழின் முகப்பிலிருந்த கவிதை கூட புகழ்பெற்றது.சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் இயற்றப்படும் இவரது கவிதை "காலங்களில் அவள் வசந்தம்... "எனும் பாடல் தருவதைப் போன்ற ஒரு ஆனந்தத்தை தரவேண்டும் என விழைகிறார்.லேசான தாடியும்,அறிவியலாளர் ஆகவேண்டும் என்ற ஆசையும் இவருக்கு உண்டு.பத்திரிக்கைகள் மூலமாக வந்த பேரும்,பாடல்களில் இவர் அடைந்த புகழும் மேன்மேலும் வளரட்டும்.முத்துக்குமார் தன்னுடைய சிறுவயது ஞாபகங்களையெல்லாம் எழுதிய ஆனா ஆவன்னா என்ற புத்தகம் அவ்வாண்டு புத்தகக்கண்காட்சியில் சாதனை புரிந்தது.தமிழ்,தமிழன் பொன்ற விளம்பரம் சார்ந்த பேச்சுகளிலோ,அதனை மதம் மாதிரியே வன்முறைக்குள்ளாக்கும நடைமுறைகளையோ கடுமையாக சாடுபவர் ஆவார்.கட்சி,மதம்,சாதி பற்றில்லாதவர்.மேலும் செயற்கையான உவமைகளின்றி,உள்ளத்தின் ஊற்றுக்கண்ணாக இவரது கவிதைகள் அமைகின்றன.தன்னுடைய சிஷ்யர்கள் என்று வரையறையாக யாருமின்றி,தனக்கு நல்ல முன்னேற்றம் அடையக்கூடிய,பிடித்த இளைய கவிஞர்களை ஊக்குவிக்கிறார்.க்லாப்பிரியாவின் தீவிர இரசிகர்.ஆங்கில இலக்கியத்திலும் தீவிர ரசிப்புத்தன்மை உண்டு,குறிப்பாக ரஷ்ய நாவல்களில்.இவரது பக்கங்களில் நவீன கவிதைகளும் உண்டு.இவருடைய பாணி எளிதில் புரியக்கூடியது என்றாலும்,எளிதில் நீங்காதது.எப்படி என்றால் திருவள்ளுவரின் படத்தைக்க் காட்டுகிறார்!

thimuru
13th January 2007, 04:32 PM
venki...dhool!

especially thaboo shankar and muthukumar...i dint think u would cover them along with metha and vaali!..both thaboo shankar and n.muthukumar are my favourites

thaboo shankar:

"nee veyyil karanamaaga
un mugathai moodi kondai
un mugathai paarkadha kobathil
sorriyan engalai sutterikiradhu"

:clap:

muthukumar:

"idhu enna katril indru
eerapadham kuraikiradhu
yegaandham pooosikondu
andhi velai azhaikiradhu
vidikalai neram ellam thoongamal vidikiradhe
vizhi moodi thanakkul pesum mounangal pidikiradhe"

:clap:

VENKIRAJA
13th January 2007, 05:11 PM
my favourite poems of muthukumar:

karai varum neram paarthu
kappalil kaathiruppom
erimalai vanthaal kooda
eri ninru por thoduppom

thimuru
13th January 2007, 05:30 PM
my favourite poems of muthukumar:

karai varum neram paarthu
kappalil kaathiruppom
erimalai vanthaal kooda
eri ninru por thoduppom

yeah..these lines where my most favourite lines...if its written by na.muthukumar

sundararaj
20th January 2007, 02:56 PM
my favourite poems of muthukumar:

karai varum neram paarthu
kappalil kaathiruppom
erimalai vanthaal kooda
eri ninru por thoduppom
Good liners indeed :D

VENKIRAJA
20th February 2007, 08:44 PM
[tscii]விலாசம் எண் # 6

இம்முறை அநேகம் பேருக்கு தெரியாத கவிஞரை பற்றி எழுத விழைந்து இவரைப் பொறுக்கினேன்.ஆனால் அதற்கு தமிழின் வரலாற்றை ஆயத் தேவையிருக்கவே,முதலில் இதைப்படியுங்கள்,அடுத்த அஞ்சல் அவர் குறித்து.இனி கவிதையின் வரலாறைக்கொஞ்சம் ஆராய்வோமாக.எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தான் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பழமையான செய்யுள் நூல்களாகும்.அவற்றுள் அடங்குபவை புறநானூறு, அகனானூறு,குறுந்தொகை,நற்றிணை முதலிய பாடல்களாகும்.அவை துறை தினையென வழக்காறுகளுடையவை.அதற்குப்பிறகு இவ்விலக்கியங்களுக்கு இலக்கணமாகிய தொல்காப்பியமும்.பதிணெண்கீழ்கணக்கு நூல்கள் அடுத்து வந்தன.இந்த சேர்வில் திருக்குறல்,திரிகடுகம்,நான்மணிக்கடிகை,இன்னை/இனியவை நாற்பது,பழமொழி அகயவை சேரும்.அவற்றின் அடியைப் பற்றி காப்பியங்கள் எழுந்தன:சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி எட்செடரா.பின்னர் பக்தி இலக்கியங்கள் தோன்றின.அவை நாயன்மார்களாலும்,ஆழ்வார்களாலும் பெரும்பாலும் பாடப்பட்டன..தமிழுக்கு தேய்பிறையாக களப்பிறர் ஆட்சிக்காலம் நடுவில் இருந்ததையும நினைவில் கொள்வோம்.பக்தி இலக்கியங்களுகுப் பிறகு சிற்றிலக்கியங்கள் வந்தன.பள்ளு,குறம்,கலம்பகம்,அந்தாதி,பரணி,பிள்ளைத்தம ிழ்,குறவஞ்சி,தூது,உலா முதலியவை.சிற்றிலக்கியங்களில் காணப்பட்ட சந்தம் மெல்ல பரிணமித்து புதுக்கவிதையாக உரக்ுகொண்டது.புதுக்கக்விதையை உரைநடைக்கவிதை என்று சொல்வோரும் உளர்.வானம்பாடி என்ற தனிக்குழு புதுக்கவிதைகளை பாடி வந்தது.அவற்றுக்கு பெரிய இலக்கணமில்லை.புதுக்க்விதையும் சலிப்பைத் தர நவீன கவிதை தற்போதைய நிலைக்கோளை ஈட்டிக்கொண்டது.தற்போது பிந்நவீனத்துவமே:post modernism தமிழின் இலக்கிய மொழியாய் தன்னை அங்கீகரிக்கிறது.

இது இன்னும் விரிவாக,அன்பர் ஒருவரின் வலைப்பூவிலிருந்து லவட்டியது.......

நவீன உலக மனிதனின் இருப்பு தான் எனது கவனமாகிறது. எவ்வளவு விதமான சாத்தியங்களுக்கு மனித இருப்பை நகர்த்த முடியும்? பிறப்பு, உடல், சாதி, நிறம், மரணம் எதுவுமே நமது தேர்வில் இல்லை. நமது இருப்பு மட்டும் தான் குறைந்த பட்சம் நமது தேர்வில் இருப்பது போல தோன்றுகிறது. ஆனால், மனித இருப்பை சட்டதிட்டங்களால் சமூகம் இறுக்குகிறது, திட்டமிடுகிறது. அப்போது குறிப்பிட்ட வாய்ப்புகளே உள்ள வாழ்வை வாழத் தள்ளப்படுகிறோம். உலக வாழ்வே ஒரு அலுவலக நடைமுறையாகிவிட்ட இந்த நிலையில் மனிதன் தன் வாழ்விற்கான சாத்தியங்களை விஸ்தரித்துக்கொண்டு போவதன் மூலமாகத்தான் அர்த்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

- பிரான்ஸ் காஃப்கா

தன் காலத்திய உலகமே ஒரு அலுவலகமாக மாறி விட்டதாக காஃப்கா கருதுவது மிகச் சரியான கணிப்பு. இன்றைய இந்த நிலையில் வேறு வெளிகளை நோக்கியும் கட்டுப்பாடற்ற வெட்டவெளிகளின் சுவாசத்தை நோக்கியும் நம்மை அழைத்துச்செல்ல படைப்பாளி விழைகிறான். அவன் காட்டும் திசைகளில் தான் நம் வாழ்வுக்கான கனவும், சுதந்திரமும், கொண்டாட்டமும் தங்கி இருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிமொழி கொண்டது நம் தமிழ். “தமிழ் கவிமொழி” படைப்பாளிக்கு இது பலம்; சவால்; பலவீனம். காலத்துக்கும் மனித வாழ்வுக்கும் மொழிக்குமான உறவை பேணுவதில் நவீன தமிழ்க் கவிதை படைப்பாளிகளான கவிஞர்கள் அப்படியொன்றும் சோடைப்போய்விடவில்லை. இன்றைய “நவீன விருட்சம்” என்ற நிலையை அடைய கவிதை மேற்கொண்ட தன்னிலை மாறுதல்கள் பல உண்டு.

பாரதிக்குப்பின் 1921 - 1934 காலக்கட்டத்தில் கவிதை எழுதியுள்ளவர்களில் முக்கியமானவர்களாக பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். மரபு வழிக் கவிதை அமைப்பில் பல புதுமைகளைச் செய்து இசைப்பாடல்களை கவிதையின் தரத்திற்கு உயர்த்தி தமிழ்க் கவிதைப்போக்கில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய - பாரதி, தன் இறுதிக்காலத்தில் வசன கவிதை முயற்சிகளையும் மேற்கொண்டார். பாரதியின் வசன கவிதை முயற்சியை தமிழில் புதுக்கவிதை இயக்கத்திற்கான விதை என்று கொள்ளவேண்டும்.

பாரதியை தொடர்ந்து அவரது கவிதைப்பாட்டையில், அவரது நிழல்களாகவே பயணம் செய்த கவிஞர்கள் யாருமே வசன கவிதை முயற்சியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சுத்தானந்த பாரதியார், சாது. சு. யோகி, திருலோக சீதாராம், எஸ்.டி. சுந்தரம், வாணிதாசன், கம்பதாசன், கொத்தமங்கலம் சுப்பு என்று அப்போதைய கவிஞர்களின் பட்டியல் நீண்டாலும் கவிதைப்போக்கு திருப்திகரமானதாக இல்லை. பரவலாகப்பேசப்பட்ட சீர்திருத்தக்கருத்துக்களையே திரும்பத் திரும்பத் தம் கவிதைகளில் சலிப்படையும் விதத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தனர். மரபின் தொடர்ச்சியான பாரதியையே அவர்கள் நகலெடுத்துக் கொண்டிருந்தனர்.

தமிழில் புதுக்கவிதையின் தொடக்க காலம் 1934ல் தொடங்கியது என கூறலாம். பாரதியின் அடியொற்றி வசன கவிதை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுகதைகள் எழுதுவதிலேயே தீவிர கவனம் செலுத்தி வந்த ந.பிச்சமூர்த்தியே அம்முயற்சியின் முன்னோடி. 1934ல் “மணிக்கொடி” இதழில் ந. பிச்சமூர்த்தியின் முதல் வசனக்கவிதை “காதல்” பிரசுரமானது. “மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது” என்று தொடங்குகிறது அந்தக்கவிதை. இப்புதுக்கவிதை முயற்சிக்கு அமெரிக்க கவிஞர் “வால்ட் விட்மன்” எழுதிய “புல்லின் இதழ்கள்” என்ற தொகுப்பு தான் வித்திட்டது. அதை படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின் வசன கவிதையை படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக கவிதைகளை உணர்ச்சிப்போக்கில் எழுதத் துவங்கினேன் என்று பின்னொரு சந்தர்ப்பத்தில் பிச்சமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இவரை
பின்பற்றி கு.ப. ராஜகோபாலனும் 1938ல் வசன கவிதைகளை மணிக்கொடி இதழில் எழுதத்தொடங்கினார்.

ந. பிச்சமூர்த்திக்கு வெகு சமீபமாக புதுமைப்பித்தன் 1934ல் “ஊழியன்” இதழில் புதுக்கவிதை முயற்சியை தொடங்கினார். தன் சமகாலத்து வசன கவிதை முயற்சிகளை கடுமையாக விமர்சித்துள்ள போதிலும் புதிய கவிதை முயற்சிகளை வரவேற்றார். உருவ அமைப்பில் மரபுக்கவிதையை பின்பற்ற முனைந்த போதிலும் கவிதைக்கான விஷயங்களும் பார்வையும் புதுமையானவை. இவரது கவிதையமைப்பை பின்பற்றி கவிதைகளை எழுதியவர் சிதம்பர ரகுநாதன்.

1939ல் “சூறாவளி” என்னும் வார இதழை தொடங்கிய க.நா. சுப்ரமணியம், “மயன்” என்னும் பெயரில் எழுதிய “மணப்பெண்” வசன கவிதைகள் வந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் புதுக்கவிதைப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கவிதையாகும். இந்தக்கவிதை “சூறாவளி”யில் வெளியானதை தொடர்ந்தே வசன கவிதை பற்றிய விவாதங்கள் எழுந்ததாக வல்லிக்கண்ணன் தனது “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” எனும் நூலில் குறிப்பிடுகிறார். இந்தக்காலகட்டத்தில் எம்.வி. வெங்கட்ராம், தி.க.சிவசங்கரன் போன்றோரும் வசன கவிதைகள் எழுதியுள்ளனர்.

இத்தனை பேர்கள் புதுக்கவிதையின் ஆரம்ப முயற்ச்சியில் ஈடுபட்ட போதிலும் மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி, சூறாவளி போன்ற இதழ்களின் ஆதரவு இருந்த போதிலும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் கவிதையின் வளர்ச்சி இல்லை. காரணம், புதிய கவிதை முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களின் கவனம் சிறுகதை எழுதுவதிலேயே, அதில் சாதனை புரிவதிலேயே முனைப்பாகக் குவிந்திருந்தது. புதிய கவிதை முயற்சியில் ஆர்வம் இருந்த அளவிற்கு அதில் செயல்படவில்லை. இதனால் சிறுகதைகளில் அவர்கள் அடைந்த வெற்றியை புதிய கவிதை முயற்சியில் அடைய முடியவில்லை. எனினும், பின்னாளில் அறுபதுகளில் புதுக்கவிதை ஓர் இயக்கமாக வளர்ந்து, தமிழ் கவிதை வரலாற்றில் உரிய அங்கீகாரம் பெறுவதற்கான விதை 1934 - 1944 காலகட்டத்தில் தான் விதைக்கப்பட்டது.

“எழுத்து” காலகட்டம்:

கு.ப.ரா (1944), புதுமைப்பித்தன் (1948) இருவரின் மறைவு, ந.பிச்சமூர்த்தியின் “இலக்கியத் துறவு”, புதிய கவிதை முயற்சிக்கு களம் அமைத்துக் கொடுத்த இலக்கிய இதழ்களின் மறைவு, இந்த காலகட்டத்தில் புதிதாக எழுதத்தொடங்கிய படைப்பாளிகளின் முனைப்பின்மை காரணமாக 1944 - 1958 காலகட்டத்தில் புதுக்கவிதை முயற்சியில் ஒரு தேக்கநிலை - இடைவெளி ஏற்பட்டது.

இந்தச்சூழ்நிலையில் “மணிக்கொடி” இதழுடனும், அதன் படைப்பாளிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் தனித்த முயற்சியில் ஜனவரி 1959ல் “எழுத்து” இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்டது. இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துகளுக்கும் களமாக “எழுத்து” அமைவது போலவே, இலக்கிய தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் “எழுத்து” இடம் தரும் என்று முதல் இதழில் சி.சு.செல்லப்பா அறிவித்திருந்தார். இதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்கள் புதிய கவிதை முயற்சிகளுக்கு ஓரளவே ஊக்கமளித்தன. 1959ல் சரஸ்வதி ஆண்டு மலரில் எழுதிய கட்டுரையில் “புதுக்கவிதை” என்ற பதத்தை க.நா.சு குறிப்பிட்டுள்ளார். அதுவரை வசன கவிதை, சுயேச்சா கவிதை, கட்டற்ற கவிதை, ப்ரீவெர்ஸ் என்றே புதுக்கவிதை குறிப்பிடப்பட்டு வந்தது.

“எழுத்து” முதல் இதழில் ந. பிச்சமூர்த்தியின் “பெட்டிக்கடை நாரணன்” (1944ல் கிராம ஊழியனில் வெளிவந்த அருமையான கவிதையின் மறுபிரசுரம்), மயன் (க.நா.சு) எழுதிய “கவிதை மற்றும் வர்ணம்” என்ற தழுவல் கவிதையும் சிட்டி, சாலிவாகனன் ஆகியோரின் கவிதைகளும் வெளிவந்தன. ஓராண்டு நிறைவில் எழுத்து இதழானது ஏற்கனவே இருந்த பழைய கவிகளோடு சேர்த்து பல புதியவர்களையும் அறிமுகப்படுத்தி இருந்தது.

டி.கே. துரைசாமி (நகுலன்) - காத்தபானை - இவரின் முதல் கவிதைத் தலைப்பு

சுந்தர ராமசாமி (பசுவய்யா) - “உன் கை நகம்” எனும் இவரின் முதல் கவிதை ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்க கொஞ்சகாலம் ஆயிற்று

சி.மணி (சி. பழனிச்சாமி) - “முக்கோணம்” என்பது இவரின் முதல் கவிதைத் தலைப்பு.

ம. இளையபெருமாள், கி. கஸ்தூரிரங்கன், தி.சோ. வேணுகோபாலன் ஆகியோரும் “எழுத்தின்” புதிய கவிஞர்கள் பட்டியலில் அடங்குவர்.

இவர்களுக்குப்பின் 1960ல் “நான்” எனும் தலைப்பில் தருமு சிவராமின் (பிரமிள்) முதல் கவிதை வெளியானது.

“ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும் வெளியில்
ஒன்றுமற்ற பாழ் நிறைத்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்றுவிட்டவளென்
தாய்!”

என்று தொடங்கும் மரபு வடிவத்தை நினைவூட்டும் கவிதை அது. 1961ல் வைத்தீஸ்வரனின் முதல் கவிதையான “கிணற்றில் விழுந்த நிலவு” வெளியானது. பின்னர் ஜெயகாந்தன் எழுதிய “நீ யார் ?” என்ற கவிதையும் வெளியானது. எழுத்து இதழை நடத்தி புதிய கவிதை முயற்சிகளில் இயங்கி, சக எழுத்தாளர்களின் கவிதைத் தொகுப்புக்களை பிரசுரம் செய்து, என பன்முக தளங்களில் இயங்கியவர் சி.சு.செல்லப்பா. அன்னைத் தமிழுக்கு கிடைத்த அரும்பெரும் கொடை. 1959ல் ஆரம்பித்து 1970 ஜனவரி வரை அவர் நடத்தி வந்த “எழுத்து” மறைய நேர்ந்தது. “இந்தப் பனிரெண்டு ஆண்டு காலத்தில் அதன் பொருளாதார அவதிகளை
அனுபவித்து வைராக்கியமாக நடத்தியும் அதற்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை” என்று தனது பத்திரிக்கை மறைவை மிகுந்த வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்.

பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட இந்தக் காலத்தில் 700க்கும் அதிகமான புதுக்கவிதைகளையும், 20க்கும் மேற்பட்ட நல்ல கட்டுரைகளையும் வெளியிட்டது “எழுத்து”. மேலும், பாரதி - பாரதிதாசன் கவிதை திறனாய்வுகள், சங்க கால கவிதைகளை பற்றிய கட்டுரைகள், மேல் நாட்டுக்கவிஞர்கள் பற்றிய கட்டுரைகள், (டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், யேட்ஸ், ஆஃடன் லாவரி ஆகியோரின் கவிதை பற்றிய கோட்பாடுகளை வெளியிட்டது) மொழிபெயர்ப்புக்கவிதைகளையும் வெளியிட்டது. காந்தியுகத்தின் அர்ப்பண உணர்வோடும், லட்சிய பிடிவாதத்தோடும் “எழுத்தை” ஒரு இயக்கமாக கட்டமைத்த அபார சக்தி
சி.சு.செல்லப்பாவுடையது. “எழுத்து”க்கு பின் அவ்விடத்தை நிரப்பிக்கொள்ள தாமரை, தீபம், நடை கணையாழி, ஞானரதம்,
சரஸ்வதி, இலக்கிய வட்டம் போன்ற இதழ்கள் முனைந்த போதும், “எழுத்து” விட்டுச்சென்ற பெரும் இடைவெளியை மேற்கூறிய
அத்தனை இதழ்களாலும் நிரப்பவியலாமல் போனது நமது துரதிர்ஷ்டம்.

எழுபதுகளில்:

1970களில் வெளியான இதழ்களில் தரமாக செயல்பட்ட பெருமையுடையவை “கசடதபற” மற்றும் “அஃக்”. இதில் “அஃக்”
பதிப்புக்கும், அச்சுக்கும் தேசிய விருதுகள் பெற்ற சிறுபத்திரிக்கை. அதன் காலத்திற்குப் பின்னரும் இன்றைய காலகட்டத்திலும் எந்த சிறுபத்திரிக்கையுமே தேசிய விருதுகள் எதுவும் பெறவில்லை. மேற்கூறிய இதழ்களில் எழுதியவர்களில் சுந்தர ராமசாமி, பிரமிள், க.நா.சு, ஞானக்கூத்தன், சி.மணி, நா.ஜெயராமன், கலாப்ரியா, ஆத்மாநாம், கல்யாண்ஜி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 1973ல் குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக “கசடதபற” இதழ் நிறுத்தப்பட்டு மீண்டும் 1975ல் தொடங்கி 1977ல் வெளியான 42வது இதழுடன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.

1971ல் கோவையிலிருந்து வெளியீட்டை தொடங்கியது வானம்பாடி என்னும் கவிதை இதழ். அதில் “கசடதபற” இதழை கடுமையாக விமர்சித்து இருந்தார் அக்கினிபுத்திரன். வானம்பாடி கவிஞர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுகிறவர்கள் புவியரசு, சிற்பி, மீரா, தமிழன்பன், ஞானி, சக்திக்கனல், மு.மேத்தா, பா.கங்கைகொண்டான், அக்கினிபுத்திரன் ஆகியோர். அப்துல் ரகுமான், அபி, கலாப்ரியா, இன்குலாப், கல்யாண்ஜி போன்றவர்களும் “வானம்பாடி” இதழில் எழுதி இருக்கின்றனர். ஆனால், இவர்கள் வானம்பாடி கவி

crazy
21st February 2007, 12:31 AM
:)