View Full Version : PAATHASAARI
VENKIRAJA
7th June 2006, 07:40 PM
பாதசாரி.
பாthaசாri
paaதsaaரி
paathasaari
AN
ANTHOLOGY
OF JOURNEYS......
A
TODDLER'S HISTORY
WITHOUT DATES......
THROUGH
BLUE BLOOD......
REACHING
YOUR HEARTS
VIA MY BRAIN......
OR
VICE-VERSA....
LONG LONG AGO,
SO LONG AGO,
VERY LONG AGO,
NOBODY CAN SAY HOW LONG AGO,
THERE LIVED A FELLOW CALLED PAATHASAARI,
WHO WRITES ....
பாதசாரி (http://paathasaari.blogspot.com)
பயணத்தடம்:
முதல் சுவடு (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=0)
முகவுரை (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=2)
அத்தியாயம் #1 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=4)
அத்தியாயம் #1 தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=9)
இடைச்செருகல் #1 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=15)
அத்தியாயம் #1 தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=19)
அத்தியாயம் #2 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=26)
அத்தியாயம் #2 தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=28)
அத்தியாயம் #3 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=34)
அத்தியாயம் #4 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=52)
இடைச்செருகல் # 2 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=54)
அத்தியாயம் # 5 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=57)
அத்தியாயம் #6: வேஷதாரி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=62)
இடைச்செருகல் #3 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=66)
அத்தியாயம் #7 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=71)
அத்தியாயம் #8 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=73)
அத்தியாயம் # 9: கிரணகணங்கள் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=79)
அத்தியாயம் #10 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=83)
அத்தியாயம் #11: BLACK AND WHITE (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=91)
அத்தியாயம் #11: தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=93)
அத்தியாயம் #12: நகராத பயணம் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=94)
அத்தியாயம் #12: தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=98)
அத்தியாயம் #12: மறுபடியும் மறுபயணம் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=100)
அத்தியாயம் #12: யாத்திரிகன் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=103)
அத்தியாயம் #13: பதினாறு வயதினிலே (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=105)
அத்தியாயம் #13: பிரயாணி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=106)
இடைச்செருகல் #3: ஒரு பார்வை, சில பரிமாணங்கள் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=127)
இடைச்செருகல் #3: தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=128)
தன்னிலை விளக்கம்: பாதசாரி ஒரு பூவா? (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=138)
தன்னிலை விளக்கம்: பாகம்-2 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=140)
அத்தியாயம் #14: மாலுமி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=144)
அத்தியாயம் #15: 356 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=164)
பாதசாரி- புதிய அத்தியாயம் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=167)
அத்தியாயம் #16: ரணத்தடச்சுவடு (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=170)
பாதசாரி-மீண்டும் ஒரு முன்னுரை (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=171)
புதிய அத்தியாயம்-I: இரவலன் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=174)
இடைச்செருகல் # 4: உறைந்த காலம் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=180)
தலைப்பேதும் தோன்றவில்லை (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=189)
P_R
7th June 2006, 08:04 PM
[tscii:c32084dc19]±ýÉÅ¡¸ þÕ측Р±ýÚ ¦º¡øÄ¢ '±ýÉÅ¡¸ þÕìÌõ' ±ýÈ ¬Å¨Äì ¸¢ÇôÀ¢ Å¢ð¼¡îÍ.¯ÁÐ ¦¾¡¼÷ þÉ¢¾¡¸ Å¡úòÐì¸û.
¯Â¢÷, ¯¼ø þÃñÊý Á£Ðõ «¾£¾ ÀüÚûÇ
À¢ÃÒ Ã¡õ [/tscii:c32084dc19]
VENKIRAJA
7th June 2006, 08:25 PM
உயிர் தமிழுக்கு,உடல் தமிழர்க்கு!
பாதசாரி.
GENRE:கட்டுரை
முகவுரை:
உலகிலேயே விசித்திரமானவற்றின் பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்?என்ன யோசிக்கிறீர்களா,தெரியவில்லையா?'பெயர்' தான் அது.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் : தலையில் சூடியிருக்கும் ரோஜாவுக்கோ,அண்டை வீட்டு ஜிம்மிக்கோ,ஏன் படைத்தவன் என்று கருதப்படும் பூசையறை கடவுள் படத்துக்கோ தெரியுமா இன்னது தான் அவர்களுக்கு இடுகுறியாகவோ காரணமாகவோ வந்த பெயரென்று?!!பெயர்க்காரணத்திற்கான பீடிகைதான்,அதனை பின் காண்போம்,முதலில் இயற்றுபவன்?ஒரு பள்ளி மாணவன்,இறுதியாண்டு.ஊர்சுற்றி.சுமாராகப்படிப்பேன்.கே ள்விக்குறிகள் அவ்வளவுதான்,இனி அறிமுகம்.நண்பர்களே,நான் கடந்து வந்த பாதை மிகவும் சிறியது,எளியது.ஆனாலும் பகிர்தல் நோக்கோடு வந்துள்ளேன்,மையமெனும் கலங்கரை விளக்கொளியில்.
"கரைவரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால்கூட
ஏறிநின்று போர் தொடுப்போம்"
(நா.முத்துக்குமார்)
இக்கவி என்னை மிகவும் கவர்ந்தது.இது ஒத்தே அனுதினமும் பல பிரச்சனைகளை தாண்டி ஒற்றை நாள் கடந்து காலண்டரிலிருந்து பறக்கிறது.அதனால் ஈட்டிய பட்டறிவின் மூலம் தினமொரு பிரம்மாஸ்திரத்தை துணையாய் அழைத்துக்கொண்டு மறுநாள்போருக்கு புறப்படுகிறோம்.உதாரணங்கள் தேவையில்லை.நான் பார்த்த முகங்களும் புத்தகங்களும் ஒருசேர என்னை உந்துதலளித்து எழுத வைத்தது.அவற்றின் மறுபரிமாணமாம் கட்டுரையை எழுதக்கிட்டிய முதற்பக்கங்கள் இவை.காதினின்று ரத்தம் வழிந்தால் என் பள்ளியில் கட்டுரைப்போட்டி முதற்பரிசளித்தோரை சபியுங்கள்.சரி என்ன எழுதப்போகிறாய் நீ? என்ன தெரியுமுனக்கு? என்று வினவினால்,அதற்கு விடை- என்னை பாதித்த இடங்களையும் மனிதர்களையும் பற்றி,என் பாதையைப்பற்றி.வரலாறு எனக்கு பிடிக்கும்,அதையும் குழைத்து.மனதில் பதிந்த சுவடுகளை,வானத்துக்கு மேலேயுள்ள மனிதாபிமானமாம் 'fictuos' வஸ்துவைப்பற்றியோ சுவிஷேசச் சொற்பொழிவைப் போலவோ,சித்த மருத்துவன் போலவோ அரசியல் உரையன்னவோ இது இருக்காது.
"எனக்கு அம்மாவைப் பிடிக்கும்,அம்மாவுக்கு அப்பாவைப் பிடிக்கும்,அப்பாவுக்கு தம்பியைப் பிடிக்கும்,எங்கள் எல்லோருக்கும் சோறு பிடிக்கும்":இந்த ஈழப்பிஞ்சின் குரலைப்போன்ற ஒரு ஆழ்ந்த நிதர்சனத்தை தர விழைகிறேன்.எறும்பளவோ,எறும்பின் வாயளவோ,அதன் ஆகாரமளவோ,ஆகாரத்தின் அணுவளவோ மிகையோடு.இம்முயற்சி எனக்கு வெற்றிமுரசாகவும்,வெற்றிமுகடாகவும் அமைய வாழ்த்தக்கேட்கும் வாசகயாசகன்,
நெறியன்,
இரா.கு. வெங்கடேஷ்.
crazy
7th June 2006, 10:55 PM
venki
keep writting :thumbsup: :clap:
good intro with nice poem! :)
VENKIRAJA
8th June 2006, 05:19 PM
அத்தியாயம் #1.
வாழ்க்கை என்பது பயணம்.குழந்தையிலிருந்து முதுமையை நோக்கி,ஏழ்மையிலிருந்து வளமையை நோக்கி என பல்பரிமாணங்களாய்.அவ்வித பயணங்களின் தொகுப்பு இத்திரி.ஆனால் வழக்கமான பயணக்கட்டுரைகள் போலவோ,சுற்றுலா முடித்த மாணவனது பதிவாகவோ, டைரிக்குறிப்பாகவொ அன்று.சரி சவடால் போதும்,நிரூபணமிதோ.
தமிழ்நாட்டை வரைபடத்தில் காணின் முகம் போல் காட்சி தரும்.கூடவே பன்னீர்த்துளியாய் கமழவேண்டிய ஈழமோ கண்ணீர்த்துளி போல.ஆகட்டும்,சென்னைக்கு வருவோம்-மாநிலத்துக்கண்ணாய் இருக்கும் தலைநகரம்.அங்கு பல்லவ நாட்டினின்று புலம்பெயர்ந்த ஒரு பொறியியல் குடும்பத்தின் வாரிசு அடியேன்.மேற்கு மாம்பலத்தில்,ஆலந்தூரில்,தாமஸ் மவுண்டில்,பட் ரோட்டில்,சென்னை ட்ரேட் செண்டரில் என பல முகவரிகள் விவரம் தெரியாத எனக்கு.தற்போது போரூர்.ஒரு நாள் "தனியாக சென்று வருவேன்" என தம்பட்டம் அடித்துக்கொண்டு தி.நகர் புறப்பட்டேன்.அது தான் என் முதல் பயணம்.ஆனால் first impression best impression-ஆக இருக்கவில்லை.49-a பஸ் ஏறிய நான்,பேசிக்கொண்டே வந்தேன்.அருகிலிருந்தவன் "கலிகாலம்,கலிகாலம் எவனையுமே நம்ப முடியறதில்லை",என்றான். பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தவன் தோளில் சாய்ந்தும் கொண்டேன்.பேருந்து நிற்க தி.நகரில் இறங்கினேன்.அப்போது பையில் துழாவியபின் தான் தெரிந்தது,தோளை கொடுத்தவன் தோலை பறித்துக்கொண்டானென.சொச்சம் மொத்தமாக அறுபது ரூபாய் நைந்து,நசுங்கி அவ்வளவே.
" வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ"
(கவியரசு கண்ணதாசன்)
ரேடியோ பாட்டு அருகில்,சோகத்தை பகிர்ந்து கொள்ள.
எப்படியும் இல்லம் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையோடு,தொடர்ந்தேன்.பேருந்து நிலையம் திரும்பினேன்,அதே பஸ்ஸில் ஏறி வந்துவிட்டேன்.அட,தி நகரில் என்ன நடந்தது என்று சொல்லவில்லையே.... வழியிலொருத்தன் மூணு பத்து ரூபா எனக்கூவிக்கூவி கைக்குட்டை விற்றுக்கொண்டிருந்தான்.என் வயது இருக்கும்,வியாபாரி!ஒரு அம்மாவிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான்:
"மூணு பத்து விலை கட்டுப்படியாகது,நீ நாலு குடு,வாங்கிக்கறேன்"
"சரிம்மா உனக்கும் வேணாம்,எனக்கும் வேணாம்,40 ரூபாய்க்கு எட்டு எடுத்துக்கோ"
என வேகமாக சொன்னதில்,அவருக்கு புரியவில்லை,கண்ணை சுழற்றிக்கொண்டே வாங்கிக்கொண்டுவிட்டார்,ஒன்றையே ஐந்து ரூபாய்க்கு!
பிறகு தான் ரங்கநாதன் தெருவில் நுழைந்தேன்.ரங்கநாதனது ஆலயமாகட்டும்,தெருவாகட்டும் பேதமின்றி எங்கும் நெரிசல்மயம்,அங்கே....
..
crazy
8th June 2006, 05:23 PM
ange...............
pavalamani pragasam
9th June 2006, 11:45 AM
[tscii:fa7fca5456]†¾É¢ò¾ý¨Á§Â¡Î ¾ÃôÀÎõ ¾ÃÁ¡É þò¦¾¡¼÷ þÉ¢§¾ ¦¾¡¼Ã Å¡úòÐì¸û![/tscii:fa7fca5456]
krk64in
9th June 2006, 08:22 PM
seper vengiiiiiiiiii
keep it up
kumar
iyappan
10th June 2006, 09:22 PM
[tscii:d9f6dd9ed0]¦Åí¸¢.. ¿øÄ ¸Å¢¨¾¸û ¾Õ¸¢È£÷¸û. ¦¾¡¼÷óÐ ±ØÐí¸û
¸Å¢¨¾ìÌ ¸Å¢¨¾Â¢ø ºó¾¢ì¸Ä¡õ «Êì¸Ê þÉ¢§Áø
«ýÒ¼ý
³ÂôÀý :) [/tscii:d9f6dd9ed0]
VENKIRAJA
11th June 2006, 09:12 AM
அங்கே மனிதமுகத்தின் மிருகப்பார்வையை முதல் முறையாக உணர்ந்தேன்.லாபநோக்கில் உலகமே ஒரு முழு வியாபாரப்பாறை ஆகிவிட்டது.இவ்வாறெல்லாம் யோசித்து நின்றிருக்கையில் ஒரு ஐஸ்-கிரீம் வாங்கி இதயத்தை குளிர்வித்தேன்.ராணுவ டாங்கி அளவில் ஒரு குழு என்னை வாரியணைத்து இழுத்துச்சென்றது.இலவசமாக என்னை ரயில் நிலையம் அழைத்துச் சென்றுவிட்டனர்.அத்தெருவில் சிந்திய சில்லறையை பொறுக்குவது கம்பசூத்திரத்துக்கு நிகரான வேலை!மீண்டும் சாலையை சுத்தப்படுத்தியபடி என்னிடம் இருந்த காசுகளை முகர்ந்தெடுத்தேன்.மறுமுனை வந்து சேர்வதற்குள் ஆயுளில் முக்கால் பகுதி கழிந்துவிட்டது.அங்கே ஒரு சிறுவனிடம் புத்தகக்கடை எங்கிருக்கிறது என்று கேட்க அவன் தெரியாதென்றான்.டஜன் பேர் அதே பதிலைத்தான் சொன்னார்கள்.பதிமூன்றாமவன் ஒரு மிகச்சிறந்த புத்தகக்கடையினைக்காட்டினான்.புத்தகம் எழுதுபவர்கள் வறுமையில் வாடியிருந்ததை கேட்டிருக்கிறோம்,புத்தகத்தில் வறுமை?அக்கடையில் இருந்தது-ஆடை வறுமை.வெளியிலும் அதே போல் பல விதமாய் கீழ்த்தர சாதனங்கள்.கடைசியில் தெற்கு உஸ்மான் வீதியில் சேகர் என்றொருவரை சந்தித்தேன்.உத்தமர்.புத்தகங்கள் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.ஞானம் போதிமழையாய் சொறிந்தது.அவர் சொன்னதையே என் தமிழாசிரியையும் சொன்னார்:பிறந்தநாட்களுக்கு ஆடைகளோடு புத்தகங்களும் வாங்கினால் எத்துணை பெர் மகிழ்ச்சியடைகிறார்கள் தெரியுமா,உங்களையும் சேர்த்து?புத்தகம் வாங்க நிறைய நேரமாகும்,அப்படி புரட்டுகையில் கவிக்கோவின் இவ்வரிகள் மேற்சொன்ன காரியத்துடன் தொடர்புடனும் இருந்தமையால் மேற்கோள் காட்டுவிக்கிறேன்:
"புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள்"
(கவிக்கோ அப்துல் ரகுமான்)
ஆனால் நான் இன்னும் குரூரமானவற்றை விவரிக்கவில்லை....
pavalamani pragasam
11th June 2006, 10:39 AM
[tscii:1a8296bb4f]õ..õ..§Á§Ä ¦º¡øÖí¸û![/tscii:1a8296bb4f]
crazy
11th June 2006, 04:09 PM
venki :clap:
kannannn
12th June 2006, 09:43 PM
venkiraja, It's been a long time since I read a write-up as engrossing as yours. Not all essays with philosophical shades work, but yours does and that's quite an achievement.
And, may I add, please continue posting in unicode.
VENKIRAJA
13th June 2006, 08:45 PM
எல்லோரும் பாராட்டுவது ஒருசேர பயத்தையும் தைரியத்தையும் மூக்குத்துவாரத்தைப்போல,கொணர்கிறது.
ஆனால் பயனற்று எழுத்து அமையவேண்டா,ஏதாவது உபகாரமாய் சொல் என்றனர் நண்பர்கள்.உபதேசியாக எனக்கு வயதும் இல்லை,அறிவும் இல்லை.சரி முயன்று பார்ப்போமே என சிரஞ்சொறிந்ததில் விழுந்தவற்றை எழுதுகிறேன், குரூரங்களை 'ப்ளாஷ் பாக்' முடிவுற்றபின் பார்க்கலாம்.
(சினிமாவில் இப்படித்தானே கதையை அந்தரத்தில் விட்டு பழங்கதை பேசுவார்கள்?)
crazy
14th June 2006, 12:42 PM
எல்லோரும் பாராட்டுவது ஒருசேர பயத்தையும் தைரியத்தையும் மூக்குத்துவாரத்தைப்போல,கொணர்கிறது.
ஆனால் பயனற்று எழுத்து அமையவேண்டா,ஏதாவது உபகாரமாய் சொல் என்றனர் நண்பர்கள்.உபதேசியாக எனக்கு வயதும் இல்லை,அறிவும் இல்லை.சரி முயன்று பார்ப்போமே என சிரஞ்சொறிந்ததில் விழுந்தவற்றை எழுதுகிறேன், குரூரங்களை 'ப்ளாஷ் பாக்' முடிவுற்றபின் பார்க்கலாம்.
(சினிமாவில் இப்படித்தானே கதையை அந்தரத்தில் விட்டு பழங்கதை பேசுவார்கள்?)
:lol:
VENKIRAJA
14th June 2006, 07:41 PM
இடைச்செருகல் ஒன்று:
வெற்றிக்கு பத்து வழிகள்.
எப்படி வெல்வது என்ற கேள்வி 'எத்தை தின்னால் பித்தம் தெளியும்?' என்பது போலில்லை.most wanted என நாடேறும் வினவப்படும் வாக்கியம் இது.விரலுக்கொரு யோசனை என்று வைத்துக்கொள்ளுங்கள்,எத்தனை வேண்டுமோ உபயோகியுங்கள்.
> எத்தனை இடர்வந்தினும் தனித்தன்மையை கைவிடாதீர்கள்.அத்தனித்தன்மை உங்கள் பெயர் சொன்னவுடன் நினவுக்கு வரவேண்டும்.காந்தி,பாரதி,இளையராஜா போல்.
> தீர்க்க சிந்தனைக்கு பிறகு ஒரே ஒரு குறிக்கோளை முடிவு செய்யுங்கள்.ஒரே குறி,உயர் குறி.வரைபடங்கள் உதவக்கூடும்.
> செவிப்பசியை தடையோ முடையோ செய்யாதீர், எவ்வழியாயினும் தகவல்களையும்,சுவையையும் புத்தகங்களினூடே,பட்டறிவினூடே உண்ணுங்கள்.அதைவிட அதிமுக்கியமாக அசைபோடுங்கள்.
> பல்தேய்ப்பீர்களா?இனி அழுத்தமாக தேயுங்கள்.அப்போதுதான் சிரித்தால் அழகாய்த்தெரியும்.சாகும்போதுகூட சிரியுங்கள்-வெற்றிகரமாக சொர்க்கம் போகலாம்.
> கண்மணியில் பதியுங்கள்.நேரவிரயம் வேர்,தோல்வி பூ.குறைந்தபட்சம் எழுதும்போது தேதி குறியுங்கள்.tracking செய்து முன்போகலாம்.
> தேக்குத்தடிகளிவிட சிறு புல்லாங்குழல்கள் அழகானவை.சுற்றி வளைப்பது old fashion.சொல்லிலும் செயலிலும் சுருக்கமாய் இருங்கள்.அது ஜெயத்திற்கு express ticket.
> அவசியமேயின்றி தியாகம்,உதவி,தர்மம் என ஈண்டு ஈடுபடாதீர்.அவற்றை வெற்றி வந்தபின் செய்யலாம்.
> தோல்விகள்,வெற்றிகள் எல்லாவற்றையும் போகிக்கு போட்டுவிட்டு ஒவ்வொன்றையும் முதல் செயலாக நுணுக்கமாகவும் ரசித்தும் செய்யுங்கள்.no போதை,no கீதை.
> வாயாடி என்று கிண்டலடித்தால் நன்றிகூறுங்கள்.நாக்கு தான் நம் வாள்,கேடயம் எல்லாம்.தெளிவாகவும் சமயோசிதமாகவும் பேசினால் உலகம் கடைவாய்ப்பல்லுக்கு கீழ்.
> பாரதியாரே முண்டாசு கட்டி வந்தால்தான் நம்மவர்களுக்கு தெரியும்.ஆதலால் பொருத்தமான உடை அத்தியாவசியம்.வெற்றியெல்லாம் வயிற்றுக்குத்தான் - எனவே உணவில் வஞ்சனை வேண்டாம்.சக்தியுடன் அழகான வெற்றிதான்!
சும்மா school magazinukkaaka ezuthinathu.a break amongst hecticness.
crazy
15th June 2006, 12:05 PM
venki
well said :clap:
வாயாடி என்று கிண்டலடித்தால் நன்றிகூறுங்கள்.நாக்கு தான் நம் வாள்,கேடயம் எல்லாம்.தெளிவாகவும் சமயோசிதமாகவும் பேசினால் உலகம் கடைவாய்ப்பல்லுக்கு கீழ்
:thumbsup:
krk64in
15th June 2006, 03:37 PM
very nice and unilateral thinking............
i appriciate u much my vengi
kumar
krk64in
15th June 2006, 03:38 PM
'எத்தனை இடர்வந்தினும் தனித்தன்மையை கைவிடாதீர்கள்"
nice..........
kumar
VENKIRAJA
17th June 2006, 05:09 PM
இந்தியாவிலேயே மிக பிரும்மாண்டமான வியாபர மையம் என்று கருதப்படும் இடம்.ஒரே நேரத்தில் கோவில்களுக்கு அடுத்தபடி இந்தியர்கள் குழுமும் இடம் என கண்டாய்வு செயப்பெற்ற தலம்.ஒசாமா பின் லேடன் ஒரு தீபவாளி அல்லது பொங்கல் திருநாளுக்கு முந்தைய ஞாயிறோ,பள்ளி திறப்பதற்கு முன்னால் வரும் மே மாத கடைவிடுமுறையன்றோ அங்கே குண்டு வைத்து தகர்த்தால் குறைந்தபட்சம் சென்னை பாதிக்கு மேல் காலியாகும் களம்!
தி.நகரல்ல அது தீ நகர்.ரங்கநாதன் தெருவின் நெரிசலை மீறி கையிழந்த ஒருவன் வீதியில் பிச்சை எடுப்பது,குழந்தை தொழிலாளித்துவத்தை ஒழிப்போமென சிறார்கள் போஸ்டர் ஒட்டுவது என மிகவுண்டு அவலம்.ஜாதிப்பெயர்களை தெருப்பலகையிலிருந்து எடுத்தவர்கள் கடைப்பலகைகளிலிறுந்து எடுக்க முற்படவில்லை.தெருவுக்கொரு ஜவுளிக்கடை,நகைக்கடை,மதுக்கடை,ஆனால் புத்தகக்கடை அல்லது தமிழிசை ஒலிநாடாக்கடை?அங்குள்ள வியாபாரிகள்,நுகர்வோர் என பேதமின்றி அனைவரும் தகாத வார்த்தைகளை உதிர்த்தபடி நடக்கிறார்கள்.கேவலம் தென்னமரக்குடிக்காக அந்த நடுத்தர வயதுக்காரர் விற்பவனின் பிறப்பையே களங்கப்படுத்திவிட்டார்.கோபப்பட்ட கடைக்காரன் அவனது உறுப்புகளை இழித்துரைக்கிறான்.இதுதான் நாம் நம் நாற்பதாண்டு கால வாழ்வின் பயனாக கற்றுக்கொண்டதா?மிக இன்னல்களைத்தாண்டி செல்ல உதவக்கேட்கும் ஆட்டோக்காரன் அநியாய பேரம் பேசுவது,வெறும் இருபத்தைந்து ரூபாய் இலாபத்துகாக உயிரை போக்குமளவு கீழ்த்தரமான பண்டம் செய்து விற்பது,மேகநிறத்து எண்ணையில் பொன்னிற வடை பொறிப்பது,அத்தனை குப்பைகளை,எச்சில்களை,சிகரட் துண்டுகளை, என சகலமானவற்றையும் வீசி நோய்க்கு வழிவகை செய்வது எண்ணற்ற இடர்ப்பாடுகள் அங்குண்டு.நாகரிகங்கள் உருவான தேசத்தில் மாதரசிகளை இழிவுபடுத்தும் பாடல்களை ஒளிபரப்பும் ரேடியோக்களும்,தொலைக்காட்சிகளும் என மனம் தன் மணத்தை இழந்துவிடுமளவு குரூரங்கள்.வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இந்திக்கரர்களை எட்டுமாடிக்கட்டிடங்கள் கட்டவும்,தமிழனை கையேந்தவும், நாவற்பழம் விற்கவுமே அனுமதிக்கும்.அவ்வப்போது சிட்டி ரௌடிகள் வந்து துவம்சம் செய்து மாமூல் வசூலிக்கவும் செய்வர்.போலீசார்(சிலர்) தம் பங்குக்கு லஞ்சம் வாங்கும் இடம்.மூளையை கசக்கிப்பிழிந்து இந்திய இளைஞன் அமெரிக்கா சென்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை நம்மாள் பத்து ரூபாய் சி.டி யில் அடைத்து கனஜோராக கடத்தல் பொருட்களை சந்தைபடுத்தும் சுரண்டல் துறைமுகம்.கணிணிப்பொருட்கள் மட்டுமல்ல அயல்நாட்டு படங்கள்,விளையாட்டு பொருட்கள்,நாணயங்கள்,புத்தகங்கள்.
எல்லாவற்றையும் விட அத்தனை சுகங்களைத்தேடி அனைவரும் ஆலாய்ப்பறந்து அனுபவிக்கும் போது ஒரேயொருவன் மட்டும் துர்நாற்றத்தை முகர்ந்துகொண்டு தன் கிழிந்த டவுசர் அல்லது அரைசட்டை(அது கால்சட்டைகூட இல்லை)அல்லது நிக்கரில் இருந்து ஒரு காகிதம் எடுத்துச்சென்று தன் அண்டைவீடு போன் நம்பரினை கொடுத்து கொஞ்சம் போட்டுத்தரச்சொல்லி......பேசி ஏறத்தாழ 3 நிமிடங்கழித்து சிரித்தானந்த சாக்கடை துப்புரவு தொழிலாளி!ஏற்றத்தாழ்வு.ரொம்ப அழுவாச்சியாக அவார்டு படம் மாதிரி ரத்தம் வர அறுக்கிறேனா?நிறுத்துகிறேன்.ஆனால் இது நான் ஒருமுறை போய்வந்ததில் கண்டவை.கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப்போல பழகிவிட்டது.நாற்பது ரூபாய் மீதமிருக்கிறது,அதில் ஒரு சுஜாதா நாவல் வாங்கினேன்.அப்புறத்தை தான் அப்புறப்படுத்திவிட்டேனே. பஸ்ஸில் செல்லும் போது புத்தகம் புரட்டியபோது கண்டது:
"ஏட்டில் கிடக்கும்
வெள்ளத்தை மறந்து
நிஜவெள்ளத்தைப்பார்"
(பி.ஸ்ரீ)
சிறுசிறுகதைகளில் சுஜாதா மேற்கோள் காட்டியது தென்பட்டது.
அன்றுதான் நான் பாதசாரியாகத்தொடங்கினேன்.
ஆனால் அதற்குமுன்னரே மனதளவில் பாதசாரித்ததை சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.
pavalamani pragasam
17th June 2006, 06:46 PM
[tscii:158b8d37ef] :clap:
þó¾ ¬§Åºõ, ¯½÷ §Å¸õ þýÛõ ¿¢¨È þ¨Ç»÷¸Ç¢¼õ §¾¡ýȢŢð¼¡ø ¿¡ðÊüÌ ¿¢îºÂÁ¡ö ¦À¡ü¸¡Äó¾¡ý![/tscii:158b8d37ef]
VENKIRAJA
18th June 2006, 11:54 AM
அம்மையாரே,
நீங்களாவது சொல்லுங்கள்:என் எழுத்து நடை வேறு யாருடையதைப் போலாவது இருக்கிறதா?
crazy
18th June 2006, 04:23 PM
venki naan thamizha adihammaa padichadhu illa, so unnga writing yaara maadhiriyum irukkira maadhiri thonala!
pavalamani pragasam
18th June 2006, 05:20 PM
[tscii:25314d34d4]þø¨Ä§Â! ¾É¢ò¾ý¨Á§Â¡Î, ¸ñ½¢Âò§¾¡Î, ¯ò§Å¸ò§¾¡Î ¦ºÆ¢ôÀ¡¸ þÕ츢ÈÐ! Keep it up![/tscii:25314d34d4]
aanaa
18th June 2006, 06:49 PM
எல்லோரும் பாராட்டுவது ஒருசேர பயத்தையும் தைரியத்தையும் மூக்குத்துவாரத்தைப்போல,கொணர்கிறது.
தொடரட்டும்
முத்து எடுக்க வேண்டுமென்றால் மூச்சுப் பிடித்துத்தானாக வேண்டும்
crazy
19th June 2006, 12:19 PM
venki :clap: romba azhaga ezhudira, keep going :thumbsup:
VENKIRAJA
22nd June 2006, 05:10 PM
அத்தியாயம் #2.
'நான்' எனும் சொல் தற்போது மிகவும் மெலிந்துவிட்டது.கண்டவனெல்லாம்,தன்னை ஏதோ மிகப்பெரிய சாதனையாளன் என எண்ணிக்கொண்டு பேசுவது ஒரு புதுவித நாகரீகமாகிவிட்டது.ஆனால்,மிகப்பெரிய திறமைசாசிகளும்,புத்திசாலிகளோ அடக்கத்தோடு தங்களை குறிப்பிடுகிறார்கள்:அதனாலொ என்னவோ அடக்கமோம்புபவர்களை உயர்ந்தோரென எண்ணுவதே நன்மை எனப்படுகிறது-இது இந்த சிதடன் கற்றுக்கொண்டது,காயலான் கடைகளில்!.எனது விநோதமான பழக்கங்களில் ஒன்று பழைய பேப்பர் கடைகளுக்கு சென்று புத்தகங்கள் படிப்பது.அவற்றினாலாய பயன் நிறைய உணர முடிவது.ஒரு பொங்கல் தீபாவளிக்கு முன்னைய இதழ்களினை புரட்டுகையில் சினிமாக்காரர்களது குட்டு வெளிப்படுகிறது!உதாரணம்:ஆதி.விஜய்யின் இப்படத்தினைப்பற்றி ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு தொடரில் அவர் ஆஹா ஓஹோ என குறிப்பிட்டார்.மேலும் கதை(!) தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் புதிய முடிச்சுகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.ஆனால் படத்தை டி.வி.டி யில் கூட காண சகிக்கவில்லை.ஒருவேளை தற்போது அவர் மனந்திருந்தியிருக்கலாம்,நாம் எது செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்ற எண்ணத்திலினின்று.இவரை குற்றம் சொன்னதை யாரும் தப்பர்த்தம் செய்து கொள்ளத்தேவையில்லை.ஒரு உதாரணம்,அவ்வளவே.சாரு நிவேதிதா என்றொரு எழுத்தாளரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தான் ஏதோ மிகப்பெரிய எழுத்தாளர் என்ற எண்ணத்தோடு அவர் கொடுத்த பேட்டியை படித்தேன்.உண்மையில் none are perfect.அவர் சாடும் போது திருந்தவேண்டும் என்ற எண்ணமெலாம் "வரமாட்டேன்" என்கிறது.சில அநாகரீகமான சொற்கள் என் அடித்தொண்டையில் சிக்கிக்கிடக்கின்றன.தனது எண்ணத்தை பகிர்ந்துகொள்ளவும் இன்புற செய்யவும் தான் இலக்கியம்.ஏன் வள்ளுவர் செய்யவில்லையா என்ற் அவர் 'வள்ளும்' போது அவர் மீது பரிதாபம் தான் வருகிறது.தமிழில் படிப்பிலக்கியம் எப்போதுமில்லாத வறட்சியை கொண்டுள்ள்தாகவும்,உரைநடையை அசோகமித்திரன் தவிர யாரும் எழுதுவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.அசோகமித்திரன் சாலச்சிறந்த எழுத்தாள்ர் என்பதில் ஐயமிலை,எனினும் அவர்தவிர யாரும் சரியாக எழுதவில்லை என்பதற்கு இவருக்கு என்ன அருகதை?மேலும் மிக சொற்பச்சிலர் நல்ல கவிகளை எழுதுவதாகவும் குறிப்பிடுகிறார்.மேலும் இவரைப்போல சாடுவதற்கும் எழுதுவதற்கும் இன்னொருவர் பிறக்கவேண்டும்,அதனால் இவரை மேன்மேலும் அனைவரும் வாசகஞ்செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதியிருந்தார்.ஆனால் இவர் அத்தகுதியினைப்பெறவில்லை.
இது ஒத்து நிறைய பேர் தங்களின் தகுதியை தலைக்கேற்றிக்கொண்டு தேவையின்றி அவர்களது கொஞ்ச நஞ்ச திறனையும் வீணடித்துவிடுகின்றனர்.இன்னும் சிலர் ரொம்ப மோசம்.அவர்கள் பற்றி வேண்டாம்.அடுத்து வார இதழ்களில் என்னை பாதித்த தொடர்களை பற்றி சொல்கிறேன்
"தங்களை இப்படிக்
கிறுக்குத்தனமாக கிறுக்கிய
யாரைப்பற்றிச்
சொற்கள் முறையிடுகின்றன?
ஒவ்வொரு சொல்லும்
காகித ஆடை அணிந்திருக்கிறது."
(ஃகாலிப்,தமிழில்:கவிக்கோ அப்துல் இரகுமான்)
crazy
22nd June 2006, 05:15 PM
venki :)
VENKIRAJA
22nd June 2006, 06:14 PM
நான் முதலில் படித்த தொடர் கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய "கி.மு-கி.பி",'மனிதனுக்குள் ஒரு மிருகம்'.மிகவும் arouse செய்த தொடர்கள் அவை.இரண்டாம் தொடரினால் இன்ஸ்பயர் ஆகி ஒரு திரைப்படத்திற்கான கதையை ஒரு வருஷம் முழுக்க கட்டம் கட்டி எழுதி வைத்திருக்கையில் தான் இந்த மையம் சிக்குண்டது.அதற்குள் மதன் எழுதிய தொடர்கள்,புத்தகங்கள் அத்தனையையும் படித்து முடித்தேன்.அதற்கப்புறம் தான் தெரிய வந்தது அவை எல்லாமே இணையத்திலிருந்து copy/paste செய்யப்பெற்றவையென!பரவாயில்லை என சுயசாந்தி செய்துகொண்டு சுஜாதாவை படித்தேன்.எழுத்தாளர்களை "படித்தேன்" என்பது அவர்களது எழுத்துக்கள் அவர்களது உள்மனத்தை படிப்பதாய் இருக்கின்றன என்பதால்.சுஜாதாவின் அனாசாய நடையும்,விசாலமான அறிவும் ஆச்சர்யப்படுத்தின.அவரது சிறுசிறு கதைகள்,திரைக்கதை எழுதுவது எப்படி,ஹைக்கூ,கற்றதும் பெற்றதும்,என அனைத்தும் ஒருவிதப் புதுமையும்,அழகுணர்ச்சியையும் அதிமுக்கியமாக சுருக்கத்தையும் ஒருங்கே வெளிக்கொணர்கின்றன.அவரது உவமைகள் அபாரமானவை.எல்லாவற்றையும் விட அவர் உபதேசிப்பதில்லை,அசர வைக்கிறார்.கணேஷ்-வசந்த் பத்திரப்படைப்பு உலகத்தரம் வாய்ந்தது.அவரது வசனங்கள்(பாய்ஸ் தவிர)பிறரை விட நன்றாகவே இருந்தன.இன்றுகூட குமுதத்தில் ஒரு தொடரை அவர் ஆரம்பித்திருக்கிறார்:தூண்டில் கதைகள்.அப்புறம் தமிழருவி மணியன்,எஸ்.ராமகிருஷ்ணன் ஒரே நேரத்தில் எழுதிய இரு தொடர்கள்.முறையே ஊருக்கு நல்லது சொல்வேன்,கதாவிலசம்.இரண்டும் தலைசிறந்த தொடர்கள்.இலக்கியச்செறிவும்,பொருட்செறிவும் ஆங்காங்கே ரோஜா இதழ் தூவியதைப்போல்.அட,சென்றமுறை கவிதை தரவில்லையா?இதோ வருகிறது போனஸாகவே:
காவியம்:
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது.
(பிரமிள்)
இதனால் பறவையைப்போல பறந்து கொண்டே இருக்கும் எழுத்தாளனையும்,தினந்தினம் இத்தகு கவிப்பட்சிகள் இரைதேடுவதில் கஷ்டப்படுவதும்,அற்ப ஆயுசிலேயே மரித்துவிடுவதுமுஎன இருக்கிறார்கள் என கவிதையின் பொருளை இடத்திற்கேறவாறு மாற்றிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
சில தொடர்கள் விட்டுப்போய்விட்டன:கவிக்கொ அப்துல் ரகுமானின் 'இது சிறகுகளின் நேரம்' போல.இந்நூல் எனக்கு எத்துணை அகவையானாலும் பிடித்த பத்து நூல்களிலொன்றாய் விளங்குவது.அட்டகசமான கவிட்டுரைகளின் தொகுப்பு இது,பொங்குதமிழில்.ஞானி என்பவரின் தொடர்கள் ரொம்ப complicated ஆனவை.ஆனால் அவர் என்னைப்பொறுத்தவரை மிகக்கூர்மையான சமகால விமர்சகர்,knowledgable.கேள்விபதில் பக்கங்கள் அனைத்து வெகுஜன பத்திரிக்கைகளிலும் இன்றியமையாதவை.அவற்றில் அரசு பதில்களை அடித்துக்கொள்ள ஆளில்லை.நையாண்டியின் உச்சம்.பாக்கியராஜின் கேள்வி பதில்களும் தனித்தன்மையினால் ஜொலிக்கின்றன.சினிமாக்காரர்கள் அவ்வப்போது தொடர்கள் எழுதுவார்கள்.அவற்றில் சேரனின் டூரிங் டாக்கீஸ் 'மிக நன்று' என்ற யோக்கியதாபத்திரத்திற்கு தகுதியானது.தெருவாசகம்(யுகபாரதி),வந்த நாள் முதல்(செழியன்),வாரந்தோறும் வாலி,கிருஷ்ண விஜயம்(வாலி),கடவுள் வந்திருந்தார்(பா.விஜய்),'அ'ண்ணா 'ஆ'வண்ணா(நா.முத்துக்குமார்),கொஞ்சம் தேனீர் நிறைய வானம்(வைரமுத்து) ஆகியவை சிறந்த கவித்தொகுதிகள்.தீராநதி எனும் பத்திரிக்கையில் இடம்பெறும் அ.முத்துலிங்கம் பக்கம் எனும் செப்பனிடப்பட்ட மலர்தூவிய சாலை பொற்றத்தக்கது.இலங்கைத்தமிழில் காலச்சுவடு.மத்திய அமைச்சர் எழுதிய ஸ்கூப் மறந்துவிட்டது.பாலகுமாரன் சற்று முன்னர் இயற்றிய தொடரொன்று சிநேகிதியில் வெளிவந்தது.பெயர் தவிர அனைத்தும் நினைவுக்கு வருகிறது!மந்திரச்சொல் என்ற தொடர் அமர்க்களமாக வந்துகொண்டிருக்கிறது, எஸ்.கே.முருகனுடையது. வெற்றியாளர்களின் சரித்திரத்தை ஒரே பக்கத்தில் தெளிவாக சொல்கிறார்.டாலர் தேசம் -பா.இராகவனது எழுத்துகள் அமெரிக்காவை அக்குவேறு ஆணிவேறாக கிழிக்கின்றன.கடைசியாக 'தேசாந்திரி' (எஸ்.ராமகிருஷ்ணன்)எனும் தொடரை விகடனிலும் 'மாயவலை'(பா.இராகவன்)எனும் தொடர்களை படித்து வருகிறேன்.ராகவனுடைய மாயவலை தீவிரவாதத்தைப்பற்றியும் தேசாந்திரி அவருடைய சுயசரிதையின் மூன்றாம் பாகமாகவும் திகழ்கின்றன.
"பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத்துடைக்கிறது
எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது
பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது
டி.வி டேப் ரிக்கார்டர்,கம்ப்யுட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது
எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது
இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டிருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை."
(முகுந்த் நடராஜன்)
இது ராமகிருஷ்ணன் மேற்கோள் காட்டிய ஒரு கவிதை.
சுஜாதாவின் சில்வியா பரவாயில்லை.தொடர்களின் வெற்றியை நிர்ணயிப்பதில் ஓவியங்களுக்கு முக்கியப்பங்கு.மேலும் நான் வரையாவிட்டாலும் வேடிக்கை பார்ப்பதில் வல்லவன்.(எழுத்தும் அப்படித்தான்)எனவே,ஓவியங்கள் அடுத்து.
crazy
22nd June 2006, 06:24 PM
:)
pavalamani pragasam
22nd June 2006, 07:45 PM
[tscii:dac73812f4]À¡¾º¡Ã¢Â¢ý ܼ À½¢ôÀÐõ «Åý À¡÷¨Å¸¨Ç À¸¢÷óÐ ¦¸¡ûÅÐõ ¿øÄ ¦À¡ØЧÀ¡ì¸¡ö þÕ츢ÈÐ.’¸Å¢ðΨÒ §À¡ýÈ coinage ¿Âõ![/tscii:dac73812f4]
VENKIRAJA
22nd June 2006, 08:31 PM
பவளமணி அம்மையாரே,கவிட்டுரை என்பது என்னுடைய சொல்லமைப்போ கண்டாய்வோ அல்ல.ரா.பார்த்திபனுடையது.
P_R
23rd June 2006, 02:00 PM
[tscii:026202f5a3](¦ÀÂÕ째üÀ)À½ì¸ðΨáö ¦¾¡¼í¸¢, ¾¢.¿¸÷ ÀüȢ ¸Î¨ÁÂ¡É Å¢Á÷ºÉÁ¡¸¢, þ¨¼Â¢ø ÍÂ-¯¾Å¢¨Â þ¨¼î¦ºÕ¸¢, ±Øò¾¡ÇÕìÌ ±¾¢÷¸ÕòÐ, ¾ü¸¡Ä þ¾ú Å¢Á÷ºÉõ ±ýÚ þó¾ò ¦¾¡¼÷ ±øÄ¡ÓÁ¡É blog ÅÊÅõ ¦¸¡ñÊÕ츢ÈÐ. ±ØòÐ , «ÎòÐ µÅ¢Âõ ±ýÚ §Å¸Á¡¸×õ «§¾ºÁÂõ ÑðÀÁ¡¸×õ À¡ö¸¢ÈÐ ¯í¸û ±ØòÐ. '¸¨¾¸û ' À̾¢Â¢ø ÐÅíÌ¢ÕôÀ¾¡ø ´Õ §¸ûÅ¢: þÐ ÀÊòРú¢ôÀ¾ü¸¡ «øÄÐ ¸ÕòÐ츨Çô ÀüȢ ¸ÕòÐ ÀÈ¢Á¡üÈí¸ÙìÌõ þ¼õ ¯ñ¼¡ ?
[/tscii:026202f5a3]
VENKIRAJA
23rd June 2006, 08:13 PM
நான் மட்டும் தான் பாதசாரியா என்ன?நீங்கள் ரசிப்பதற்காகத்தான் எழுதுகிறேன் என்றாலும்,பரிமாற்றதிற்கும் இத்திரி நெய்யிழுக்கும்.பேசலாம்,இன்புறலாம்,பாதசாரிக்கல ாம்.
VENKIRAJA
24th June 2006, 09:21 PM
அத்தியாயம் #3.
ஓவியம் தான் ஒவ்வொருவரும் பாதசாரிக்க ஆரம்பித்ததின் முதல் சாட்சி,மனிதன் பாதசரித்து வந்த தூரத்தின் ஆதி சாட்சி.
"குழந்தைகள் வரைவதை
ஆழமாக பார்ப்பவன்
சிறந்த மாடர்ன் ஆர்ட் வரைவான்"
அறியாத வயதுக்குழந்தையிடம் ஒரு கரித்துண்டு சிக்கினால் அது செய்யும் முதல்காரியம் சுவரிலோ தரையிலோ கிறுக்குவதுதான்.ஒரு குருட்டு இளைஞனிடம் காகிதத்தையும்,பேனாவையும் கொடுத்து வரையச்சொல்லும் போது மனித இனத்தின் அபார மூளை வளர்ச்சியும்,கற்பனைத்திறனும் விளங்கும்.நாமெல்லாம் எம்மாத்திரம்?ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் ஒரு தாடிக்காரர் உட்கார்ந்து தரையில் கோலமிடுவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.அலங்கோலமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைமுறையின் மிக நுட்பமான பதிவு அது.சினிமாவின் அகோர விளம்பரமும் படிப்பின்மையும் கூச்சலிடவியலாததினை காட்டும் ஊமை சாட்சி.நான் மேற்கூறிய தொடர்களின் வெற்றியை வாங்கித்தந்ததில் முக்கியப்பங்கு ஓவியங்களையே சாரும்.குறிப்பாக ம.செ என்றழைக்கப்படும் மணியம் செல்வனையும்ம்,ட்ராட்ஸ்கி மருதுவையும்.ம.செ பாரம்பரிய ஓவியம் புனைபவர்.சென்ற ஆண்டின் சிறந்த ஓவியமாக சுஜாதா அவர்கள் தேர்ந்தெடுத்தது ம.செவின் எம்.எஸ்.விஸ்வநாதனின் முகப்பு ஓவியத்தை(கல்கி).வைரமுத்துவின் கவிதைத்தொகுப்புகள்,தமிழருவி மணியன்,அசோகமித்திரன், போன்ற உரைநடையாளர்கள்,குமுதத்தின் மிக முக்கியமான தொடர்கள் யாவும் இவர் கைவண்ணம் தான்.மருது ராமகிருஷ்ணனின் துணையெழுத்து தொடர் மூலமாக எனக்கு அறிமுகமானார்.கணையாழி எனும் இலக்கிய பத்திரிக்கையின் அட்டைப்படங்கள் இவரது கையெழுதிய சித்திரங்கள்.மருது ஓவியத்தையும் புகைப்படத்தையும் கலந்து கிராபிக்ஸ் செய்து நவீனமாய் கவர்ந்திழுப்பார்.நாசரின் அவதாரம் திரைப்படத்திலும் இவர் பங்காற்றியுள்ளார்.மேலும் தினத்தந்தியின் ஜெ வையும் பிடிக்கும்.மதன்/பாலா/ஹரன் ஓ.கே.என் சிநேகிதன் அபிலாஷ் என்பவன் தான் எனக்கு ஓவியங்களின் மீது அபிலாஷையை ஏற்படுத்தினான்.அனைத்து ஓவியப்போட்டிகளிலும் அவன் தான் முதல்வன்.ஆனால் அவன் கொஞ்சம் மோசம்,தோழிகள் விஷயத்தில்.பரவாயில்லை ஆற்றல் காரணமாய் மன்னித்துவிடலாம்.சரி ஓவியர்களில் நம்மவர்களை விட அயலாரை எனக்கு கொஞம் எக்ஸ்ட்ராவாக பிடிக்கும்.அவர்களுள் முதன்மையானவர் வான்கா.சுரங்கங்களில் கரியள்ளிக்கொண்டிருந்தவர் கிறுக்க ஆரம்பித்து மெல்ல நன்றாக வரையப்பழக,அவரது கடைசி ஓவியம்:மரணப்படுக்கையில் அவருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவரை வரைந்தது 350 கோடி ரூபாய்க்கு விலைபோனது!
அப்புறம் மைக்கேலேஞ்சலோ.அவரது சிற்பங்கள் உலகப்புகழ் பெற்றவை.ஆனால் அவர் ஒரு தேர்ந்த ஓவியரும் கூட.வாடிகனில் அமைந்த தேவாலய அரைகோளின் மீது போப்பின் ஆணைக்குட்பட்டு அவர் வரைந்த ஏசுவின் வாழ்க்கை அவரது திறனுக்கு இன்றும் காட்சியாக நிற்கிறது.அப்புறம் சர்ச்சைக்குள்ளான டா வின்சியின் ஓவியங்கள்.வர்ணங்கள் அதில் விளையாடும்.கடவுளின் மகோன்னதம் விளங்கும்.மோனாலிசாவின் மந்திரப்புன்னகை மயக்கும்(ஆனால் அந்த மோனாலிசாவின் ஓவியம் வெறும் 30 x 30 அளவிலானதாம்!)RENAISSANCE எனப்படும் அந்த கலைப்புரட்சி விளைந்த காலம் பல திறமைசாலிகளை கூட்டிலிருந்து வெளிப்படுத்தியது.ஒரு அதிர்ச்சிகரமான தகவல் சொல்லவா?உலகமாக வில்லர் ஹிட்லர் ஒரு ஓவியர்,ஓவியங்கள் விற்காததால் நாஜிக்கட்சியில் சேர்ந்தார்.ஏன் நடிகர் சத்தியராஜ்,கிரேஸி மோகன்,இசைஞானி இளையராஜா அனைவரும் ஓவியர்கள் தாம்.ஓவியம் தற்போது இம்ப்ரெஷனிஸமாக உருமாறியுள்ளது.பெரும்பாலும் என்னைப்போன்ற மரமண்டைகளுக்கு அதன் பொருளும்,அருளும் விளங்குவதில்லை.அதனாலோ என்னவோ நான் அத்தகு ஓவியங்களின் விலையை பார்க்க மறந்துவிடுகிறேன்.ஒரு ஜோக் இது:
24768907
ஒவியரின் போன் நம்பரா இது?
இல்லை விலை!
இப்படியாக விறகப்படும் கலை தன் களையை இழந்துவிடுகிறது.
நவீன ஓவியங்கள் கிறுக்கல்கள் அல்ல தான்,ஆனாலும் மிகவும் குழப்பமானதும் கூட.தங்களது கருத்தினை சொல்ல எளிய வழியிருந்தும் ஏன் ஒரு குறுகலான மண்டைகாயவைக்கும் நெறியை அவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்?மிக முக்கியமாக ஏன் உடலை அவர்கள் பிரதானப்படுத்தி கேவலமாக உடையின்றி மானிடர்களை அவர்கள் வரைய வேண்டும்?கலை என்பது சங்ககாலம் தொட்டே மாற்றம் கண்டிருக்கிறதுதான்,ஆனாலும் சராசரி மக்களுக்கும் அக்கலையானது புரிந்தும்,பிடித்தும் இருந்திருக்கிறது.
இவை மனதளவில் பாதசாரித்தது நான் படித்தவையும் ரசித்தவையும்.அச்சாகரத்தில் ஒரு அலையை சிந்திவிட்டேன்.ஒரு அதிர்ச்சித்தகவல்:மேலே உடுக்குறியிட்டு டைப் அடித்த கவிதை என்னுடையது!
pavalamani pragasam
24th June 2006, 09:57 PM
[tscii:b3f0e462d9]¿Ê¸÷ º¢ÅÌÁ¡Õõ º¢Èó¾ µÅ¢Âá§Á?
ÌÆ󨾸û ¸¢Úì¸ø¸¨Ç ú¢ô§Àý, Á¡¼÷ý ¬÷𨼠²§É¡ ú¢ì¸ò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä!!![/tscii:b3f0e462d9]
VENKIRAJA
25th June 2006, 08:05 AM
அது ஏனோ எனக்கு அவை மேலனதாகவும்,பிந்தியவை மடத்தனமானதாகவும் தோன்றுகிறது.கேட்டதால் உங்களுக்கு ஒரு கவிதையை அனுப்புகிறேன்(நவீனம்),பொருள் விளக்குங்கள்.
P_R
25th June 2006, 02:14 PM
மெல்லிய நீரோடை போல இருந்த கட்டுரையில் கட்டுப்பட்டிருக்கும் கோவத்தைக் கண்டேன.
சினிமாவின் அகோர விளம்பரமும் படிப்பின்மையும் கூச்சலிடவியலாததினை காட்டும் ஊமை சாட்சி இதைக் கொஞம் விளக்க முடியுமா ?
அது ஏனோ எனக்கு அவை மேலனதாகவும்,பிந்தியவை மடத்தனமானதாகவும் தோன்றுகிறதுமடத்தனம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் ?
VENKIRAJA
25th June 2006, 02:36 PM
அங்ஙனம் வரையப்படும் ஓவியங்கள் பெரும்பாலும் திரைப்பட நடிகர்களாகவே இருக்கும்.அரிதாரம் பூசி அறிமுகமானவரகள் அரிமுகங்களாக இருக்குமளவு கற்பனையொடு வாழும் அவர்கள் படிப்பினையால் பிடிப்பின்றி சில்லறை பொறுக்குகின்றனர்,அதன் சூளுரையது.
கலை என்பது பல்தரப்பட்டோரின் ஆசை,நிராசைகலை,எண்ன ஓட்டங்களை,வாழ்க்கையினை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.பாமரன் கூட புரிந்துகொள்ளுமளவு simple-ஆகவும் அதே சமயம் பொருளடர்த்தியுடனும் இருத்தல் முறை.அது விடுத்து சிலருக்கு மட்டும் புரியும் வகையறாவை சேர்ந்தவைகளை மடத்தனம் என்றேன்.
P_R
26th June 2006, 12:11 AM
கலை என்பது பல்தரப்பட்டோரின் ஆசை,நிராசைகலை,எண்ன ஓட்டங்களை,வாழ்க்கையினை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்றேல்லாம் கலையை நிர்பந்திக்க முடியுமா என்ன ?
பாமரன் கூட புரிந்துகொள்ளுமளவு simple-ஆகவும் திருவாய்மொழி என்பது எனக்குத் தெரிந்த தமிழில் புரியவில்லை தான். ஏதோ ஹப் நண்பர் சுதாமா தொடர் எழுதுவதால் பிழைக்கிறேன். என்னைப் போன்ற பாமரர்களுக்குப் புரியாதவண்ணம் எழுதியிருக்கும் நம்மாழ்வாரை என்ன செய்யலாம் ?
பாமரன் என்று பொத்தாம் பொதுவாக ஒரு மாய மனிதனை நாம் தயாரித்து விவாதம் நடத்துகிறோம். 'பாமரன்' என்பது "விஷய ஞானம் இல்லாதவன்" என்று பொருள் கொள்வோமேயானால், நாம் எல்லோரும் பற்பல துறைகளில் பாமரர்கள் தான்.
அதனால் எல்லோரையும் சென்றடைய முடியாது. அந்தந்த துறைகளில் ஆரம்பப்படிகளில் உள்ளோர்க்காவது அவசியம் புரியவேண்டும் என்று சொன்னால் கூட அது ஏற்பதற்கில்லை. எல்லாமே எல்லார்க்கும் அல்ல.
அறிவியலில் ஏதாவது புரியாவிட்டால் விஞ்ஞானியை மேதை என்றும் தம்மை தற்குறி என்றும் கூறிக்கோள்ளும் நாம், கலையில் ஏதாவது புரிதலுக்கு அப்பார்ப்பட்டால் கலைஞனை "மடையன்" என்று சொல்வது சரியா ?
அதைவிட முக்கியமாக, தன் கலை பலரை சென்றடைய வேண்டும் என்ற ப்ரக்ஞையே ஒரு கலைஞனுக்கு ஆரோக்யமானதல்ல.
madhu
26th June 2006, 03:07 AM
[tscii:0f4251fb23]¿ñÀ÷ ¦Åí¸¢Ã¡ƒ¡ «Å÷¸§Ç
¿ñÀ÷ À¢ÃÒáõ ÜÚÅÐ §À¡Ä ¸¨Ä ±ýÀÐ ¦ºýȨ¼Â §ÅñÊ þ¼õ ÀüȢ ±ùÅ¢¾Á¡É ±¾¢÷À¡÷ôÒõ þøÄ¡Áø ¯ÕÅ¡¸ §ÅñÊ ´ýÈøÄÅ¡..? ¸í¨¸ ¿¾¢Â¢ø ¿£Ã¡¼ §ÅñÎõ ±ýÚ Å¢ÕõÀ¢É¡ø ¿¡õ «íÌ ¦ºø¸¢§È¡õ. ¸í¨¸¨Â ´ù¦Å¡Õ Å£ðÎìÌõ ÅÃŨÆì¸ ÓÊÔÁ¡ ? §ÅñÎÁ¡É¡ø ´Õ º¢Ú ¦ºõÀ¢ø «¨¼òÐì ¦¸¡ñÎ ÅÃôÀð¼ ¸í¨¸ ¿£Ã¢ø ÌÇ¢ì¸Ä¡õ . ¬É¡ø «¾ý ãÄõ ¸í¨¸Â¢ø ¿£ó¾¢ì ÌÇ¢ò¾ «ÛÀÅò¨¾ «¨¼ÅÐ ¸ÊÉõ. ¿¡Óõ ¸í¨¸Â¢ø ÌÇ¢ò§¾¡õ ±ýÈ «ó¾ ÁÉ ¿¢¨È¨Å ÁðÎõ «¨¼ÂÄ¡õ.
±ý §À¡ýÈ simpletons-ìÌ Ò⡾ ¸¨Ä¸û þÕì¸Ä¡õ. «¨¾ ¯½÷óÐ ¦¸¡ûÇ ¿¡õ «ó¾ ¯ÂÃòÐìÌ ±ØÅÐ º¢ÈôÒ ±ýÚ ¸Õи¢§Èý. ±ø§Ä¡Õõ ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸ º¡¾¡Ã½ ¿¢¨ÄìÌì ¦¸¡ñÎ ÅÃôÀð¼¡ø ¸¨Ä¢ý ¾É¢ò¾ý¨Á ̨ÈóÐ §À¡öÅ¢Îõ «øÄÅ¡..?
¸ÕòÐì¸¨Ç ºÃ¢Â¡É ӨȢø ±ÎòÐì ÜÈ «È¢ó¾¢§Äý. À¢¨Æ¢ÕôÀ¢ý ¦À¡Úò¾Õû¸.[/tscii:0f4251fb23]
pavalamani pragasam
26th June 2006, 08:47 AM
[tscii:1d11dbfa7b]À¡ÁÃ÷¸Ù측¸ À¨¼ì¸î ¦º¡øÄ¢ ¸¨Ä»÷¸¨Ç ¸ðÎôÀÎò¾ ¡Õõ Å¢ÕõÀÁ¡ð¼¡÷¸û. (À¡Á÷¸¨ÇÔõ ¦¾¡ð¼ ¸¨Ä»÷¸Ùõ þÕ츢ȡ÷¸û! ¸¨Ä ±ýÀÐ ¸¨Ä»É¢ý ͦÅÇ¢ôÀ¡Î, ÍÂò¾¢ý «ÛÀÅ¢òÐ ¿¼ìÌõ À¢ÈôÒ, ¾¡É¡ö, ¾É측ö ¿¼ôÀÐ; ÁüÈÅ÷¸û «¨¾ ú¢ôÀ§¾¡, ´ÐìÌŧ¾¡ ¸¨Ä»É¢ý ¾¨ÄÅÄ¢§Â þø¨Ä! ¦¸¡Î¨ÁÂ¡É §ÅÊ쨸 ¸¡Í측¸×õ ¸¨Ä À¢È츢ÈÐ!) ÒâóЦ¸¡ûÇ ÓÊ¡¾Åü¨È Áñ¨¼¨Â ¯¨¼òÐ ÒâóЦ¸¡ûÙõ ÓÂüº¢Ôõ, ¦À¡Ú¨ÁÔõ ¦À¡ÐÅ¡¸ À¡ÁÃ÷¸ÙìÌ þÕ측Ð. Ò⡾¨¾ ´ÐìÌÅÐõ ÒâÂÅ¢ø¨Ä, «¾É¡ø À¢Êì¸Å¢ø¨Ä ±ýÚ ¦ÅÌǢ¡¸ ´òÐì ¦¸¡ûÅÐõ À¡ÁÃ÷¸û þÂøÒ. §Á¨¾¸§Ç¡Î §Á¡Ðžü¦¸øÄ¡õ À¡ÁÃ÷¸ÙìÌ ˆ»¡É§Á¡ °ì¸§Á¡ ²Ð? À¢¨ÆòÐô§À¡¸ðÎõ À¡ÁÃ÷¸û![/tscii:1d11dbfa7b]
madhu
26th June 2006, 08:49 AM
PP akka.. thanks for protecting me :P
VENKIRAJA
26th June 2006, 07:10 PM
மழுப்ப விரும்பவில்லை.ஆனால்,கலை என்பது இப்படி இருக்கவேண்டும் என நிர்பந்திக்க இந்த சிதடனுக்கு அறிவு இல்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.என் அறிவிற்கு(அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றாலும்)எட்டியவரை பலருக்கு புரியா வண்ணம் ஒரு கலையை படைப்பதினால் பயனென்ன?அவருக்கு இன்பம் தரும் கலை என்றால் பரவாயில்லை,வெறும் பணத்திற்காக விற்கப்படும் அவை(ஆண்டொன்றுக்கு 1500 கோடிகளாம் இந்திய ஓவியங்களின் மதிப்பு);வாங்கியவர்களுக்கு புரிந்ததா என எனக்கு புரியவில்லை!எப்படியாயினும் சில ஓவியங்களில் கருத்து அணுவளவு கூட இல்லை என்பதையும் மறுக்கமுடியாது.நீங்களனைவரும் பார்த்ததில் முக்கால்வாசிக்கு மேல் ஓவியக் கருத்துநேர்த்தி புலப்பட்டிருக்கிரதா?(எங்கள் குழாமில் ஒருவனுக்கும் பல ஓவியங்கள் புரியவில்லை)தன்னிலை விளக்க்கத்திற்கு மன்னிக்கவும்.பாமரன் எனெ குறிப்பிட்டது என்னை.சரி இந்த கவிதைக்கு பொருள் தாருங்கள்:(என்னைப்போல் அன்றி மனசாட்சிக்கு புலப்பட்டதினை,தெளிவாக)மேலும் பல தொடர்ந்து வரும்.
ஒரே ஒரு மீன்.
மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றன
ஒரே ஒரு மீன்
துள்ளுகிறது.
சும்மா
துள்ளுகிறது.
யாரும் பதட்டமடையத்
தேவயில்லை.
ஒரே ஒரு மீன் தான்
துள்ளுகிறது.
(மனுஷ்யபுத்ரன்)
pavalamani pragasam
26th June 2006, 10:01 PM
[tscii:7c7ab86c74]¸Å¢»É¢ý §Å¾¨É¢ø, ¬ò¾¢Ãò¾¢ø, ¬üÈ¡¨Á¢ø À¢Èó¾¢ÕôÀÐ ÍÕ즸ýÚ ¨¾ì¸¢ýÈ Á¡¾¢Ã¢Â¡É ¨¿Â¡ñÊ ¸Äó¾ º¡¼ø![/tscii:7c7ab86c74]
VENKIRAJA
27th June 2006, 06:56 PM
பாடலின் பொருள்?
VENKIRAJA
27th June 2006, 06:59 PM
இது வரை கொஞ்சம் வெறுப்பு விருப்பு பேசி நேரவிரயமாகிவிட்டது.supersonic வேகத்தில் தொடரினை தொடருவது இன்றியமையாததாகிவிட்டது,ஆற்றாமைக்கு மன்னித்தருள்க.
pavalamani pragasam
27th June 2006, 08:42 PM
[tscii:e8f431587d]À¡¼Ä¢ý ¦À¡Õû ±ÉìÌ Òâó¾ÀÊ: ±§¾îº¡¾¢¸¡ÃÁ¡É º÷Å¡¾¢¸¡Ã¢ ´ÕÅý ÒÃ𺢠¦ºöÂìÜÊÂ, ±¾¢÷ì¸ìÜÊ Áì¸¨Ç ¦¸¡ÞÃÁ¡¸ ¾¡ì¸¢ ÀÄÁ¢Æì¸î ¦ºöÔõ ÓÂüº¢Â¢ø ¸¨¼º¢ ÁÉ¢¾Ûõ ¾ý ¸¨¼º¢ ã ¿¢ÚòÐõ ¸¡ðº¢, ¸¨¼º¢ ÁÉ¢¾É¢ý ¸¨¼º¢ ãîÍ À¡÷òÐ ±ì¸¡Çõ, ±ýÉ ¦ºö ÓÊÔõ þÅÉ¡ø ±ýÚ....
¦¾¡Æ¢Ä¡Ç÷¸û «ì¸¢ÃÁí¸¨Ç ±¾¢÷òРӾġǢìÌ ±¾¢Ã¡¸ §Å¨Ä¿¢Úò¾õ, §À¡Ã¡ð¼õ ¿¼ò¾ò ÐÅíÌÅ¡÷¸û, ¿¡Ç¡¸ ¿¡Ç¡¸ ¸¡öó¾ ÅÂ¢Ú «Å÷¸û ¦¿ïÍÚ¾¢¨Â ̨ÄòÐÅ¢Îõ, ÅÆ¢ ¿¼ò¾¢Â ¾¨ÄÅÛõ ´Õ ¸ð¼ò¾¢ø ÐÅûÅ¡ý. ¦¸¡Îí§¸¡Ä¨É ±¾¢÷ìÌõ ÌÊÁì¸Ùõ âñ§¼¡Î «Æ¢ì¸ôÀÎÅ¡÷¸û Á¢Õ¸ ÀÄò¾¡ø, §À¡Ã¡Ç¢¸Ç¢ý ¾¨ÄÅý ºüÚ «¾¢¸ §¿Ãõ ¾¡ìÌôÀ¢ÊôÀ¡ý.
þôÀÊÂ¡É ´Õ ¯ÕŸõ ±ÉìÌ ÒÄôÀθ¢ÈÐ. þó¾ ¸Å¢¨¾ ±Ø¾ôÀð¼ Ýú¿¢¨Ä¨Âô ÀüÈ¢ ±ÉìÌ ´ýÚõ ¦¾Ã¢Â¡§¾![/tscii:e8f431587d]
kannannn
28th June 2006, 04:41 AM
[tscii:9192287f05]பாமரர்களின் விஷயத்தில் பிரபுராமின் கருத்தே என் கருத்தும். சிறு வயதில் “British Library” நடத்திய ஓவிய கண்காட்சிக்கு என் தந்தையுடன் சென்ற அநுபவம் நினைவுக்கு வருகிறது. இரண்டு கோடுகள் குறுக்கு வாராக செல்கின்றன. நடுவில் ஒரு புள்ளி. ஒன்றும் புரியவில்லை. மண்டயை குடைத்துக்கொண்டிருந்த கேள்விக்கு கடைசியில் விடை கிடைத்தது. ஓவியத்தின் பெயர் “The Meeting” ஆம். “Simple but Subtle” என்பது ஒரு வகை. “Specialized” என்பது இன்னொரு வகை. நான் அன்று பார்த்த ஓவியம் முதல் வகையைச் சார்ந்தது. இன்று அதே ஓவியத்தைப் பார்த்தால் எனக்கு அதன் அழகும் அர்த்தமும் புரியலாம். ஆனால், இரண்டாம் வகை ஓவியங்கள் இன்றும் எனக்கு புரிவதில்லை (von Gogh-ன் “Sunflower” ஓவியத்தில் அப்படி என்ன உள்ளது என்பது எனக்கு இன்றும் புரியாத புதிர்). நமக்கு புரியவில்லை என்பதற்காக ஓவியரை குறை சொல்லலாமா?[/tscii:9192287f05]
pavalamani pragasam
28th June 2006, 08:08 AM
[tscii:b3a411aff4]Ò⡾ÀÊ Å¨Ãó¾Ð µÅ¢Ââý ÌüÈÁøÄ, Ò⡾¨¾ À¢Ê측Áø §À¡ÅÐ À¡ÁÃÉ¢ý ÌüÈÓÁøÄ![/tscii:b3a411aff4]
VENKIRAJA
28th June 2006, 08:32 PM
மணிப்பிரவாள நடையினை விடுத்து மின்னல் வேகத்தில் பயணிப்பது இங்ஙனம் இன்றியமையாததாகிறது என கடந்த திரியில் தெரிவித்தேன்;ஆனால் இந்த தொடரினை முடிக்கப்போவதிலையெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.கவிதையின் பொருளுக்கு நன்றி.நான் கூறியிருந்ததவற்றினைப்பற்றி போதுமான அலசலில் எனக்கு கிட்டிய அறிவுரை இனி புரியாதவைகளை புரிந்துகொள்ள உயரமுயல்வதே!தொடருவோம்,அதிவேகமாக/அதிசீக்கிரத்தில்.
krk64in
30th June 2006, 04:27 PM
ADDEY MAGANEY .....NALLAVEY YELUTHARA
ALL THE BEST.............
NB: +2 THIS YEAR ..............R U REMEMBER.......
KUMAR
VENKIRAJA
1st July 2006, 04:11 PM
அத்தியாயம் #4.
வெற்றுச்சாலையில் நின்று கனவு கண்டு முடித்தபின்னர்,வீதி முழுதும் போகன்வில்லா பூக்கள் இறைந்து கிடப்பதைப்போல பால்யத்துடைய நினைவலைகள் சர்க்கரைமழையை சொரிந்துவிட்டு செல்கின்றன.பள்ளியில் வருடாவருடம் பிறந்தநாள் மிட்டாயைப்போல வந்தனஞ்சொல்லும் மற்றொருவன் சுற்றுலா.(ஏனோ,பின்னர் பிறந்தநாட்களையெல்லாம் நாம் கொண்டாடுவதில்லை)அவை தான் ஈ.சி சேரையோ,ஊஞ்சலையோ போல எனக்கு மிச்சமிருப்பவை என வயோதிகத்தில் பலர் சொல்லக்கூடும்.ஒவ்வொரு முறை செல்லும் போதும் வந்தபின் ஒரு கட்டுரை எழுத வேண்டும்.ஆனால் நான் ஒருமுறை கூட எழுதியதில்லை.அதற்கு இங்கே பரிகாரம் செய்துகொள்கிறேன்.எனக்கு நினைவிருக்கும் மிகப்பழைய சுற்றுலா லிட்டில் ஃபோக்ஸ் என்ற ஈ.சி.ஆர் ரோட்டின் பழைய தீம்பார்க்.பெயருக்கேற்றபடி இடம் சின்னதாகவே இருந்தது.ஆனால் சந்தோஷம் அருகிலிருந்த கடலளவு.அந்த ஈரமணலில் மிகவும் ஆழமாக தோண்டியது நினைவிருக்கிறது.பிறகு அலைகளுக்கு ஆசீர்வாதம் செய்தது,அவ்வளவே.என் நண்பர்கள் சொல்வதைப்போல தத்தம் முன் ஜென்மமெல்லாம் இல்லை.பிறகு இரண்டொரு தடவை எம்.ஜி.எம் மிற்கும்,வி.ஜி.பி க்கும்.ஹோட்டல் பில்லின் முடிபுவான மினி காபியைப் போல இந்தப் பட்டியலில் புதுவரவான குவீன்ஸ்லாந்துக்கும்.சற்றே உருப்படியான தலங்களும் உண்டு,தளங்களும் உண்டு.முதலில் எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி.அந்த தொன்மையான(அப்போது வயது பத்து இருக்கும்)சின்னங்களை முதல்முறையாக பார்த்தபோது ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்படுகிறது.அங்கே தான் சிவாஜி பாடுவாரா என நான் கேட்டதற்கு இல்லை வெறும் வாயசைப்பார்,டி.எம்.எஸ் தான் பாடுவார் என்பதற்கு நான் எதிர்த்து:"இல்லை சிவாஜி மாமா(!)தான் பாடுவார்" என்று கூறியிருந்தது டிஜிட்டல் டால்பியில் இப்போது எதிரொலிக்கிறது.
அங்கிருந்து செகரட்டேரியட் புறப்பட்டோம்.அந்கு நடந்தவை நினைவில்லை.அப்புறம் அருங்காட்சியகம்.அங்கு பழைய வாள்களை பார்த்தோம்,அவை எங்களைப்போல் இன்னுமொரு மடங்கு உயரமாய் இருந்தன!பிரகு கொஞ்சம் ஆமைகள்,நாணயங்கள்:அவற்றிலிருந்தவை எங்களது கையெழுத்தைவிட அசிங்கமாக இருந்தன!அப்புறம் வெளியில் அமைக்கப்பெற்ற யானையை விட கொஞ்சம் பெரிய டைனோசர்.ரொம்ப நாட்களாக அதற்குப்பிறகு சுற்றுலா செல்லவில்லை நாம் லைப்பிரரிக்கு போவதைப்போல.பத்தாவதில் வேடந்தாங்கல் சென்றோம்,அது சீசன் இல்லை என்பதனால் வெறும் ஆயிரம் கொக்குகள் அதுவும் அவற்றின் இறகுகள் மட்டும் தான் தென்பட்டன,சினிமா போஸ்டரில் இருக்கும் கவர்ச்சிபடத்தைப்போல.அப்புறம் இருபது குரங்குகள்,அவை என் நண்பர்களை விடவும் குறும்புத்தனத்தில் குறைச்சல்தான்.ஆனால் வழியில் கடியற்புதமானவற்றை கண்டோம்.பெரிய பெரிய வயல்களும்,மேகமில்லா வானமும்.ஒரே நேரத்தில் மலைக்கு அந்தப்புறம் மழை,இந்தப்புறம் வெயில்!திருவண்ணாமலைக்கு சென்ற வருடம் சென்றிருந்தோம்.அதில் சுவாரஸ்யங்கள் இல்லை,நான் நாள் முழுக்க பொறிக்குள் எலிபோல நொறுக்குத்தீனி தின்றதைத்தைவிர.ஆனால் வரும் வழியில் சாத்தனூர் அணைக்கட்டை பார்த்தோம்,அங்கு உற்சாகத்தை வழியவிட்டோம் தண்ணீர் தட்டுப்பாட்டால்;தடாகம் ஓடவில்லை,மணல் லாரிகள் எங்கள் புறப்பாட்டிற்காக காத்துக்கொண்டிருந்தன.சென்ற வாரம்கூட இதே நேரம் ராயபுரத்திலிருக்கும் ஒரு யுனானி ஆய்வகத்துக்கு போயிருந்தோம்.பசுங்காற்று எங்கள் உடல்களை பலூன் போல் நிரப்பின.வீட்டினருடன் செல்லும் உலாக்களும் அலாதியானவையே.அவற்றுள் ஒன்றை மட்டும் இப்போது.2004-ம் வருடம் நாங்கள் எங்களது மிகமிக நெருங்கிய குடும்பநண்பர்களுடன் முட்டுக்காடு போட் ஹவுஸுக்கும்,மகாபலிபுரத்துக்கும் சென்றோம்.மறுநாள் ஞாயிறு;கண்டுபிடித்திருப்பீர்களே:ஆமாம் மறுநாள் சுனாமி!உண்மை.அதுவும் மறுநாள் தான் போவதாக இருந்தது,ஆனால் சில உன்னதக்காரணங்களால் ப்ரீபோன் ஆகிவிட்டது திட்டம்,போர்களைப்போல.இந்தப்பத்தியில் இடம்பெற்றிருக்கும் சிற்சில அற்ப உவமைகள் உவமைக்கவிஞர் சுரதாவின் மறைவுக்கு அர்ப்பணிப்பு.அவரது கவியுடன் விடை.
"உரைநடையின் சிக்கனந்தான் கவிதை;ஓங்கும்
உண்ர்ச்சிகளின் சிக்கனந்தான் அடக்கம்;காதல்
வரவேற்பின் சிக்கனந்தான் பெண்ணின் நாணம்;
மாளிகையின் சிக்கனந்தான் குடிசை யாகும்;
உரிமைகளின் சிக்கனந்தான் சட்டதிட்டம்;
உணவுகளின் சிக்கனந்தான் பங்கீடாகும்;
அரசியலின் சிக்கனந்தான் இரண்டே கட்சி;
அனுபவத்தின் சிக்கனந்தான் நீதிநூல்கள்."
"அவனுரைக்காத உவமையில்லை;
அவனுக்குத்தான்
உவமையில்லை"
என வாலி இவ்வார குமுதத்தில் எழுதியிருந்தார்.
pavalamani pragasam
1st July 2006, 05:59 PM
[tscii:b977dd5e93]ͨÅÂ¡É ¼Ââì ÌÈ¢ôÒ! «ÛÀÅí¸Ç¢ø ¬Æó¾ ¯½÷×î ¦ºÈ¢×![/tscii:b977dd5e93]
VENKIRAJA
6th July 2006, 08:16 PM
இடைச்செருகல் # 2.
சுருக்கத்தைப் பற்றி மட்டும் சுருக்கமாக சொல்லவியலாது!இந்த பூசையும் பாற்கடலை நக்க முயற்சி செய்கிறேன்.எனது படைப்புகளனைத்திலும்(சிறுகதை,சரிதை,திரைப்படம்) அந்த சுருக்கத்தையே கடைபிடித்தொழுகுகிறேன்.மிக்க முயற்சி பெரிதாய் எழுதுவதைக்காட்டிலும் சுருக்கியெழுதுவதில் அத்தியாவசியம்.என் மேதமையை இங்கே சொல்லவில்லை;அப்படி எதுவும் எனக்கு இல்லை.எனக்கு நீட்டிமுழக்க பிடிக்கவில்லை,அவ்வளவுதான்.GENRE:கட்டுரை என்று முகப்பிட்டுவிட்டு அனைத்து அத்தியாயங்களும் பத்தியளவிலே இருப்பதை சிலர் சாடினர்.ஆனால் அதை கட்டுரையாக எழுதி புலப்படுத்துவதை விட சுருக்கமாக அதனை நன்றாகவே செய்துவிடுகிறேன் என எண்ணி பெருமிதங்கொள்கிறேன்.யாருக்கும் நேரமில்லாத போது தேவையில்லாத வருணனையும்,உருவகமும்,உதாரணமும் ஏன் என்று நினைத்தேன்.அதனால் தேவையான இடத்தில் மட்டும் அளவோடு அதை வழங்க முற்பட்டேன்.உதாரணம்:'அளவான விருந்து போல' எனும் உவமை.தேவைக்கதிமாக ஆகிவிட்டால் அதை குப்பைத்தொட்டியில் போடுவது வேண்டாமே!பாதசாரித்ததன் மூலம் நான் கற்றுக்கொண்ட மந்திரவாசகம் இது.தமிழின் இனிமையே அதன் சுருக்கமும் தெளிவும் தான்,அதன் பெயரைப்போல.போல,அன்ன,நிகர,ஒப்ப என்ற உவம உருபுகள் கூட சுருக்கமாய் இருப்பது காணீர்.என் நடை மட்டுமல்ல்,நானும் குள்ளம் தான்,என் கையெழுத்தும் குள்ளம் தான்!அது போகட்டும் நான் சொல்ல வந்தது இந்த தருணத்தில் என் பாதசாரத்தில் நான் கற்றுக்கொண்ட ஒன்றை.சுருக்கமாக இருப்பது.காந்தியின் தண்டியாத்திரை வெற்றிபெற்றது அவரது சுருக்கான நடையாலும்,சுருக்கமான எளிய திட்டத்தாலும்.சின்னதாய் இருந்தாலும் சிறப்பிக்கப்பெறுவது அணில் தான்,தூற்றப்படுவது மான் தான்:இராமாவதாரத்தில்.மேன்மேலும் நீளமதிகரிக்க வேண்டாம்,சிற்சில சமீபத்திய அனுபவங்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் இப்போதைக்கு "தொடரும்" போட்டு விலகியபடி.
"FOR MEN MAY COME
AND MEN MAY GO
BUT I GO ON FOR EVER!"
(alfred lord tennyson,the brook)
ஆங்கிலத்திடமும் கைகுலுக்குவோமே சில தருணம்.
Shakthiprabha.
12th July 2006, 02:00 PM
உங்கள் வர்ணனையும் உவமையும் கவர்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வலைப்பூ தொடங்குங்களேன். அங்கு இன்னும்
உங்கள் திறமை அதிகம் கவனிக்கப்படும் என்பது என் எண்ணம். :)
crazy
13th July 2006, 04:23 PM
appadiyooooooooooooooooooooooo venki kanna ippo thaan naan enga vitteno angirundhu padichittu vaaren
naan unakku enna solla, naan solladiyum sonnaalum........nee thiramaisaali..............keep going :clap: :clap: :thumbsup:
PS. mannikkanum ..........naan erkanave solli irundhen....... :) :) :)
anbudan
vasi akka.
VENKIRAJA
14th July 2006, 09:36 PM
அத்தியாயம் # 5.
இத்தோடு மூன்று முறை கட்டுரையெழுதிவிட்டேன்,ஈ.பி-காரரின் கிருபையால்.இன்றைய சந்தோஷம் சுஜாதா மீண்டும் கற்றதும் பெற்றதும் எழுத ஆரம்பித்திருப்பதுதான்.மானசீக குருவாதலால் பெருமிதம்,மழையாய்.
"பெய்யும் மழைக்கு
கருப்புக்கொடி வரவேற்பு
குடை"
(எச்.கணேஷ்)
சுஜாதா தேர்ந்தெடுத்த சென்ற ஆண்டின் மிகச்சிறந்த இரு ஹைக்கூக்களில் ஒன்று.இந்த கட்டுரைத்தொகுப்பின் நோக்கு பாதசாரித்ததை ஆராய்வதுதான்.பிரபு ராம் சொன்னது மூளை நியூரான்களால் மீண்டும் தொடர்பாக்கப்பட்டன"பெயருக்கேற்ப பயணக்கட்டுரையாய் தொடங்கி.." எஞ்ஞான்றும் இனி சொதப்பேன் என உறுதியளிக்கிறேன்.
நெய்தல் நாடனாகிவிட்டதால் மழையை காண்பதரிது.எனினும் வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது.முதலில் மழை பற்றி கவியுதிர்த்தது இன்று மழைப்பயணங்களை பற்றி பேசுவதற்காக.சுகானுபங்கள் அவை.பள்ளி இறுதியாண்டில் இருக்கும் நான் மாலை மழையையே சௌகரியமாக கருதுகிறேன்.காலையில் வர்ஷம் பொழிந்து தொலைத்தால் மறுமுறை திரு.இரமணன் அவர்களை பார்த்துத்தொலைக்க வேண்டும்.(இரமணன் சென்னை வானிலை நிலைய இயக்குனர்,கடந்த தாரண ஆண்டு முழுதும் அசின்,விஜய்,அஜித்,ஜோ ஆகியோரை விட அதிகமாக பெட்டிக்குள் தென்பட்டவர்)அப்புறம் ரெய்ன்கோட் மாட்டிக்கொண்டு கூரைப்புடவையை முதன்முதல் கட்டும் பெண் போல ஜோடித்துக்கொள்ள வேண்டும்,நிறைய சம்பிரதாயங்கள்.சாயுங்காலத்தின் போது பெய்யும் மழை நல்லது.ஏனெனின் அப்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரசிக்கலாம்.குறிப்பாக டியூஷன் முடித்துவிட்டு வருகையில் வருணன் கருணை காட்டினால் நட்சத்திரங்களுக்கு ஆப்ஸண்ட் போட்டுவிட்டு கூரையின் கீழ் கவினழகை ஸ்ட்ரா போட்டு பருகலாம்.போரூர் ரவுண்டானா மிக அழகாக அதன் தொங்கும் விளக்குகளின் வெளிச்சத்தை சிதறடிக்கும்,அதை வார்த்தைகளால் விவரிக்கவியலாது.(www.flickr.comஇல் rain என தேடிப்பாருங்கள்,மயங்கிப்போவீர்கள்)மெல்ல முன்னோக்கி வந்தால் மொத்த ஜனமும் போரூர் பாலத்திற்கு கீழே கோவர்த்தன மலையின் கீழ் கோபியர்கள் போல வீற்றிருப்பர்.அவர்கள் புறந்தள்ளி முன்னேறி ஓர் solitary voyage ஆரம்பிக்கும்.மெல்ல துள்ளித்துளியாய் பேண்ட் ஈரமாகும்,இதுவே பகலாக இருப்பின் 'ஜெனடிக்ஸை' உலராத நாற்றத்தோடு கவனிக்க வேண்டி வரும்.அப்பூரம் வெப்பம் முற்றிலுமாக தணிக்கப்பட்டு தாகசாந்தி லேசாக தலர்த்தப்படும்.நம்மவர்களுக்கு கொஞ்சம் என்ற வார்த்தை ரொம்ப பிடிக்குந்தானெ:கொஞ்சம் பருமனாக குஷ்பு அல்லது ஜோ போல,அல்லது கொஞ்சம் சூடான் வெந்நீர் அல்லது காபி,கொஞ்சம் பூசிய மணமகள்,எட்செடரா.அது போல கொஞ்சம் சூடேற்றிவிடும் மழை,மண்மணத்தோடு.ஏதேதோ சினிமா பாடலகளை பாடிக்கொண்டு தன்னிச்சையாக நான் விடடைய,காற்று வாசற்கதவை திறந்துவைத்திருப்பான்.சரியாக அப்போது மழை நிற்கும்;தாயோ வருணனை சபிப்பார்.காற்று நான் உள்ளே வந்தவுடன் தானே கதவடைத்துக்கொள்வான்.தலைதுவட்டுகையில் ஓரத்து நந்தியாவெட்டை மலர்கள் ஜன்னல் மார்க்கமாக சொரிந்திருக்கும்.இன்றும் பிரசன்ன வெங்கடேசன்(இரை)வழிபாடு முடிய கொஞ்சம் மணித்துளியிருக்கையில் திறந்த விண் கத்திரிக்காய் நிறத்திலிருப்பது வியந்தேன்,பிரகாரத்தில் விழுந்து எழுந்திரிப்பதற்குள் தூறல் விசையொடு இசைந்தது.சைக்கிள் மேற்சொன்னவாறு நியூட்டனின் விதிகளின் பால் விரைந்தது.
VENKIRAJA
14th July 2006, 09:55 PM
இப்பகுதியை நான் தொடர்ந்து புதுபிப்பது வாசகர்களின் உந்துதலாலேயே.நேற்று 1775-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 1820-ஆக உயர்ந்துள்ளது,நிச்சயமாக இதற்கு நான் ஏற்றவனா என புலப்படவில்லை.
அப்புறம் சக்திப்பிரபா அம்மையாரே,உங்களை அண்ணியென்றழைக்கலாமா?எனக்கு அண்ணியில்லை,ஏனென்றால் அண்ணன் இல்லை.வசி அக்கா,உங்களது ஏகோபித்த வரவேற்பு தான் மையத்தில் என்னை தங்கவைத்தது,இல்லையெனின் நான் தொடர்ந்து எழுதியிருக்கவே மாட்டேன் தெரியுமா?
நாளை காமராசர் பிறந்தநாளாம்,முழுநாள் பள்ளியாம்,பரவாயில்லை வணங்குவோம்.
P_R
14th July 2006, 11:26 PM
உங்கள் முதல் கட்டுரையைப் போல மிக தெளிவாக ஒரு வடிவழகு கொண்டது இந்த மழை பற்றிய குறிப்பு.கோவர்த்தன உவமையும் கண்ணோர நந்தியாவெட்டையும் நுட்பமான ரசனையை வெளிப்படுத்தும் உதாரணங்கள்.
பகல் மழைக்கு ரசிகர்கள் கம்மி தான். அதற்கு அழகியலைத் தாண்டி லௌகீகக் காரணங்களும் உண்டு.மும்பையில்,ஒரு மாதம் முழுவதும், சரியாக காயாத துணிகளில் யு-டி-கொலோன் கொட்டிப் போட்டுக்கொள்ளவேண்டிய நிர்பந்தங்களில் வாழ்ந்த என்னைப் போன்றவர்கள், வருணணை மன்னிப்பது கஷ்டம். சரி ஒழிகிறான் என்று மனம் இறங்கினால், எப்போதோ ஜெயிக்கவிருக்கும் கிரிக்கெட் மாட்சின் காலையை குறிவைத்து தாக்குபவனை என்ன செய்வது ?
இன்றும் பிரசன்ன வெங்கடேசன்(இரை)வழிபாடு முடிய கொஞ்சம் மணித்துளியிருக்கையில் திறந்த விண் கத்திரிக்காய் நிறத்திலிருப்பது வியந்தேன்,பெருமாள் கோவில் பிரசாதம் பிரசித்திதான். ஆனால் இத்தனை வெளிப்படையான பக்தி பசி அரிதுதான். கத்திரிக்காய் உவமைக்கு நிறத்தைத் தவிற வேறு உந்துதல்களும் உண்டு என்பது என் யூகம் :-)
crazy
15th July 2006, 05:16 PM
இப்பகுதியை நான் தொடர்ந்து புதுபிப்பது வாசகர்களின் உந்துதலாலேயே.நேற்று 1775-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 1820-ஆக உயர்ந்துள்ளது,நிச்சயமாக இதற்கு நான் ஏற்றவனா என புலப்படவில்லை.
அப்புறம் சக்திப்பிரபா அம்மையாரே,உங்களை அண்ணியென்றழைக்கலாமா?எனக்கு அண்ணியில்லை,ஏனென்றால் அண்ணன் இல்லை.வசி அக்கா,உங்களது ஏகோபித்த வரவேற்பு தான் மையத்தில் என்னை தங்கவைத்தது,இல்லையெனின் நான் தொடர்ந்து எழுதியிருக்கவே மாட்டேன் தெரியுமா?
நாளை காமராசர் பிறந்தநாளாம்,முழுநாள் பள்ளியாம்,பரவாயில்லை வணங்குவோம்.
venki kanna,
NANDRI...........unkitta talent irukku, so......naan unna varaverkkaamal irundu irundaalum, unakku kandippa vera yaaravadhu varaverppu koduttu iruppaanga :)
btw enn peyar vasavi.........thamizha ezhudum podhu va illa vaa varum :)
keep going :clap: :thumbsup:
VENKIRAJA
15th July 2006, 06:52 PM
-edited-
VENKIRAJA
16th July 2006, 12:52 PM
அத்தியாயம் # 6.
வேஷதாரி.
நேற்று நான் அனுப்பிய மின்னஞ்சல் பலரை துன்புறுத்திவிட்டது.மன்னிக்கவும்-பவளமணி அம்மையும்,பிறரும்.அற்புதமான பேட்டி ஒன்றினை நேற்று பார்க்க நேர்ந்தது:விஜய் தொலைக்காட்சியில்.பாண்டியராஜன் அவர்களது சொற்கள் இன்றைய மேற்கோளாக,
"கல்லை ஆயிரம் அடி அடித்தால் தான் அம்மி,பத்தாயிரம் அடி அடித்தால் தான் பிள்ளையார்,இருபதாயிரம் அடி அடித்தால் தான் முருகர்,ஐம்பதாயிரம் அடி அடித்தால் தான் பெருமாள்,ஆதனால அடி நிறைய வாங்க வாங்க தான் நாம் உயர்றோம்"
என்ன அற்புதமான உருவகம்!இங்கு பாதசாரி வேஷதாரி ஆகிறான்.
தேடுகிறோம் தேடுகிறோம்,ஆகப்படவில்லை,ஒரு பொன்னிறப்புடவை,எனக்குத்தான்!ஆண்டுவிழாவொன்றிற் கு காஸ்டியூம் தேடிய அந்தப்புறப்பாடு தான் எனக்கு நினைவிலிருக்கும் மிகத்தொன்மைவாய்ந்த வரலாற்றுப்பயணம்.குள்ளமாக இருந்தமையால் முன்வரிசையில் ஏசுபிரான் துதிபாட மேரியன் பள்ளி நிர்வாகத்தால் ஆணையிடப்பட்டிருந்தேன்.துரதிர்ஷ்டவசமாக விழாவில் நான் முற்றிய நெற்பயிராய் தலைகுனிந்து தூங்கிவிட(ஸ்கிரீனை போட்டுவிட்டு கால்மணியாகியிருந்த ஆறு மணி மாலையாதலால்)கையிலிருந்த மெழுகுவர்த்தி உருகி கரத்தில் கசிந்தபின் துயில்கலைந்தேன்.அதற்குள் பாடல் முடிந்துவிட்டது.அப்புறம் நான் தொடங்கித்தொலைய....வெகுநாள் கழித்து மீண்டும் ஓர் அழைப்பு.அதனால் விளைந்த பயன் என் தந்தை இன்றுவரை என்னை கிண்டல் செய்துகொண்டிருப்பது தான்.பாத்திரம் ஒன்றுமில்லை,ஒரு கணவனாக நான் கண்ணாடி பார்த்து ஷேவிங் செய்துகொண்டு இருக்க சற்றே நிறங்குன்றிய ஒருத்தி அருகில் ஈஷிக்கொண்டு காப்பியாத்துவதாக.அவளைப்போல கருப்பான(கருப்புக்கு என்ன ஸ்பெல்லிங் என்று இன்னும் தெளிந்தபாடில்லை:ரு-வா,றுவா?) ஒருத்திதான் உனக்கு வாய்க்கப்போகிறாள் என்று இன்றும் அவர் என்னை கிண்டலடிப்பதுண்டு!பள்ளி மாறினேன்,விலாசம் மாறினேன்.அந்தப்பள்ளியிலும் ஒரு ஆண்டுவிழா,எல்லா ஆண்டுகளிலும் பிறந்தநாள் வருவதைப்போல.அதற்காக பாதசாரிக்கவில்லை,பாதசிராய்த்தேன்!
அந்த நாடகத்தில் கடைசி ஒத்திகை முடிய இருட்டிவிட்டதால் பொறுப்பாளர் ஒருவரே என்னை இல் சேர்ப்பதாக உறுதிமொழிந்தார்.வழியில் சிறு விபத்தாகி காலில் முழநீள கட்டு.அடுத்த நாள் நாடகம்.போர்வீரனாக வீரவெற்றித்தழும்புகளுடன் போர்புரிய செருக்களம் அடைந்தேன்.அந்நாடகத்தில் காட்டுத்தீவிரவாதியை சந்தித்து பேட்டி காணும் நிருபராக வேடம்.அட,அதுக்குள்ள என்ன அற்புதமா மேக்-அப் போட்டிருக்காங்கப்பா!",என்று பார்வையாளர்கள் நான் கீழிறங்கியவுடன் பாராட்டிய கணம் வலியைமீறி சிரித்தேன்.இப்போது நான் படிக்கும் களத்தில் ரொம்ப பாரம்பரிய நாடகங்களை போடுவது வழக்கம்.சென்ற ஆண்டு மகாபாரதம் போட்டோம்,ஆக்கம் பள்ளி ஆசிரியக்குழு.ஒப்பனை மிகவும் எடைகூடி அந்தக்கிரீடமும்,விக்கும் சேர்த்து இந்த பிதாமக பீஷ்மனை,பிதாமக விக்ரமாக ஆக்கிவிட்டது.தலை பின்புறம் சாய்த்துவிட்டது.மேடையில் அது வேட கம்பீரத்தைக்கூடிக்காட்ட,அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள் தெரியுமா?அதற்கு இரு தெவசங்கள் முன் போட்டது ஒக்க புரட்சி நாடகம்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் சாடி ஓர் நையாண்டி நாடகம்.மாபெரும் வெற்றிபெற்ற நாடகம் அது.அதனின்று சில துளிகள் உங்களுக்காக
(விளம்பரங்கள்)
சொர்க்கம் பேக்கரி:
நூறு ரூபாய்க்கு திண்பண்டங்கள் வாங்குவோர்க்கு பாடை இலவசம்,
இருநூறு ரூபாய்க்கு மேல் வாங்குவோர்க்கு சங்கு,தாரை,தப்பட்டை இலவசம்:
KARLO MARNA MUTHTHI MEIN!(RELIANCE டியூனில் பாடவும்)
நா நரம்புகளை இழுக்க வைக்கும் சுவை!
************************************************** ***அப்பா அப்பா இனிமே நாம பணக்காரங்களாகிடலாம்
எப்படிம்மா?
இன்னைக்கு ஸ்கூல்ல எங்களுக்கு பைசாவையெல்லாம் எப்படி ரூபாயா மத்துறதுன்னு சொல்லிக்கொடுத்தாங்களே!
:கவனமாக முதலீடு செய்யுங்கள்,இன்றைய சேமிப்பு,நாளைய வாழ்வு!ஆகவே தேர்ந்தெடுங்கள் கோவிந்தா பைனாண்ஸ்.
************************************************** ***
நேற்று காமராஜர் பிர(ற)ந்தநாளையொட்டி(அவ்வப்போது நான் கான்வண்ட் மாணவன் என்று நிரூபிக்க வேண்டாமா?) முழுநாள் காயவிட்டார்கள்.காலை வழிபாட்டில் காமராஜரைப்பற்றி ஒரு உரையாடலை பேசினேன்.வகுப்புக்கொரு தலைப்பு என தலா ஒரு தீம் தந்து அதைப்பற்றி ஏதேனும் செய்யப்பணிப்பார்கள்.அதற்காக நிறைய பாதசாரிக்கச்சொல்வார்கள்.மகிழ்ச்சியாக ஊர்சுற்றுவோம்.அந்த தீம் ஒர்க்கில்(கருத்தொழுகல்) ஆகமவிதியாக ஒரு தமிழ் ஒரு ஆங்கில நாடகம் இடம்பெறும்,அதன் பயனாக பல கிளாஸ்களை கட் அடித்துவிட்டு வாகனசாரிப்போம்.இன்னும் இவ்வருட தீம் ஒர்க்கோ,ஆண்டுவிழாவோ அறிவிப்பு வரவில்லை,வந்தால் சொல்கிறேன்.முடிபுவாக "ஒரு சினிமாப்படம் தன் வரலாறு கூறுதல்"என்ற தலைப்பில் கட்டுரையியற்ற சொன்னார்கள்.வாசகர்கள் முயற்சிக்கலாமே,என் படைப்பை அடுத்த அஞ்சலில் பறக்க விடுகிறேன்,தொழில்நுட்பச்சிறகுகளில்.
pavalamani pragasam
16th July 2006, 03:07 PM
[tscii:c89e5e86d1]¿øÄ ¿¨¸îͨŠ¯½÷×![/tscii:c89e5e86d1]
VENKIRAJA
16th July 2006, 06:36 PM
மிக்க நன்றி.
பகைச்சுவை இல்லாத நகைச்சுவை!
crazy
18th July 2006, 04:10 PM
:)
VENKIRAJA
19th July 2006, 08:21 PM
இடைச்செருகல் # 3.
வாரமொன்றிற்கு ஏறத்தாழ இருநூறு கிளிக்குகள் பாதசாரியின் மேல் பதிவது மகிழ்ச்சி.
யாராவது எழுதுங்களேன் என்று விடுத்திருந்த தலைப்பு அநாதையாகிவிட்டதால் நான் முதல் ஆளாக தருகிறேன் என் படைப்பினை,முடிந்தவர்களும் சமர்ப்பிக்கலாம்.
ஒரு திரைப்படம் தன் வரலாறு கூறுதல்.
பிறந்த வீடு நான் பூப்படைவதற்குள் நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது.என் காலி பிலிம்சுருள் மனங்களில் நிறைய பதித்திருக்கிறது.மூளையின் இடத்தில் வெற்றோட்டைகள் நிறைந்திருக்கின்றன.இப்போதுதான் என் தந்தை(தயாரிப்பாளர்)என் புகுந்த வீட்டு வரவேற்புக்கு வந்துபோயிருந்தார்(டி.விக்கு விற்றுவிட்டு)ஆனாலும் இந்த புகுந்த வீடு ஏற்கனவே பழக்கமானதுதான்.ட்ரெய்லர்,விளம்பரம் ஆகிய விஷேஷங்களுக்கு வந்து போயிருக்கிறேனல்லவா.இப்போது தான் மாமியாருக்கு பக்கவாதம் வந்திருக்கிறது,பாவம்(வி.சி.டி).ஆனால் அன்று ஒட்டாக பழகிய நாத்தனார் விளம்பரங்கள் தான் மக்கர் செய்கிறார்கள்.நானும் கணவனும்(பிரைம் டைம்) அந்நியோன்யமாக இருக்கும் போது நடுவில் புகுகிறார்கள்.இன்னும் ஓரகத்திகளைப்பற்றி புரியவில்லை,ஆனால் யமகாதகிகள் தானாம்(தொடர்கள்).நான் இன்னும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்,எனக்கென்று சொத்துண்டா(ராயல்டி),சுகமுண்டா(விளம்பரமின்மை).இப்போ து நாங்கள் பண்டிகை வீட்டில் வசிக்கிறோம் சன் டிவி பதவியில்.நண்பர்கள் ராஜ்,விஜய்,ஜெயா என்று இருக்கிறார்கள்.தூரத்து உறவு ஒன்றும் உண்டு:தூர்தர்ஷன் பொதிகை.என் கணவர் மெல்ல சனிக்கு தாவி அப்புறம் ஞாயிறுக்கு முன்னேறி,அப்புறம் கே டிவிக்கு பிரமோஷனான பின் சூப்பர் ஹிட் இரவுக்காட்சி பதவியில் இருப்பார்.கடைசி காலத்தில் கிளாசிக் மேட்னியில் நிம்மதி காணலாம் என்று இருக்கிறோம்.இப்போது எங்கள் இனத்திலும் குளோனிங் வரத்தொடங்கியுள்ளது(ரீமேக்).அப்புறம் சில உறவினர்கள் டேஜா,உதயா என்றும் இருக்கிறார்கள்.(டப்பிங்)என்றும் எங்களால் பயனடைய எங்களை படைப்பவர்கள்(இயக்குனர்) ஆசி புரியவேண்டும்,அப்புறம் வாழ வழி செய்யும் நீங்களும் தான்!
pavalamani pragasam
19th July 2006, 10:28 PM
[tscii:3fc63c8522]§ÅÊì¨¸Â¡É ¯ÅÁ¡É ÅÃÄ¡Ú![/tscii:3fc63c8522]
crazy
20th July 2006, 02:21 PM
:)
VENKIRAJA
20th July 2006, 09:32 PM
நீங்கள் யாரும் எழுதமாட்டீர்களோ?
crazy
21st July 2006, 12:31 PM
enakku ezhuda theriyaadhu. PP amma ezhuduvaanga :)
VENKIRAJA
22nd July 2006, 04:37 PM
அத்தியாயம் # 7.
ஏற்கனவே சொன்னதைப்போல இன்றும் இது இரண்டாவது முறை,கனெக்டிவிட்டி லேது என்பதால்.ஐயோ பகவானே.
வியாபாரம் என்பது சாகரம் போல,மிகப்பெரிது.வெரூஉம் உள்ளங்கை முதலீடிட்டு திரவியந்தேடியவர்களை நாம் அறிவோம்.அவர்களது வெற்றிகளின் வாசல்முகடாக இருந்திருக்கக்கூடிய தளம் அல்லது தலம் மார்க்கெட்.என் மார்க்கெட் பயணங்கள் பின்வாசல் மார்க்கமாக இருக்கும்,காரணம் போரூரின் ஏனைய மூன்று வீதிகளிளும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் புகையால் முக்கால் பாகமும் வண்டிகளால் கால் பாகமும்.எலி பொறிக்குள்ளிருப்பதைப்போல.சென்னையின் தெருக்கள் அனைத்தும் அதன் மனிதர்களைப்போல குறுகலாகவே இருப்பது மாண்பு!போரூர் மார்க்கெட் மட்டுமின்றி பிறவையும்-எங்க ஏரியா... (புதுப்பேட்டை) பாடலில் வருவதைப்போன்று டியூப்லட்,அஸ்பெஸ்டாஸ்,பாலிதீன் சகிதம் இருப்பது கண்கூடு.மார்கெட் தன் கொல்லைவழி செல்கையில் வீட்டின் கொல்லையைப்போல செம்மணம் வீசும்.எனில் அசைவப்பகுதி:கோழியில் ஆடிருக்கும்,ஆட்டில் மாடிருக்கும்,தரையில் ரத்தமிருக்கும்,மூக்கில் விரலிருக்கும்.என் பயணங்கள் அங்கிருந்த வாழைமட்டைகளை தரதரவென தேய்த்துக்கொண்டு சுகமாக நடக்கவே தொடங்கியது என்றாலும் சிறிது காலத்திலேயே அந்த மார்க்கெட் மிகவும் பழக்கப்பட்டுவிட ஒன்று.மீண்டும் மீண்டும் வரையப்பட்ட இந்திய வரைபடம் போல மாநிலங்களாக அதன் அங்கங்கள் எனக்குள் பதிவாகியிருக்கின்றன.கரத்தினின்று பிரியும் விரல்கள் போல ஐந்து பாதைகள்.மளிகை சாமான்களுக்கு,காய்கறி வகையறாவிற்கு,கொசுறுச்சாமான்களான மஞ்சள்,இஞ்சி,மிளகாய்,தேங்காய் போன்றவற்றிற்கு,பிளாஸ்டிக் சாமான்கள்,ஊறுகாய்,வற்றல் ஆகியவற்றிற்குவற்றிற்கு என தலைக்கொரு தொழில்.ஒரேயொரு வளைவில் மட்டும் நான் சென்றதில்லை.சிரித்துக்கொண்டேயிருக்கும் அங்குள்ளவர்கள் கள்ளங்கபடற்று இருக்கிறார்கள்,ஆனால் அசுத்தத்தில் உழல்கிறார்கள்.நாம் ஆரோக்யச்சூழலில் புரண்டாலும் மனதில் எத்தனையோ அழுக்காறவாக்களை கைகொள்கிறோம்.அவை உபதேசங்களாகவும்,கவி-கதை-உரைகளாகவும் வெளிவருகின்றன.மூச்சை அடக்கமுடியாது,உண்மையை மறைக்கமுடியாது!டியூஷன் முடித்துவிட்டு வாரத்தேவைகளை பூர்த்தி பண்ணி நகர்ந்தால் கொசு மொட்டுகள் இரட்டை ஏரியில் ஊர்வலம் மேற்கொள்ளும்,தாரண ஆண்டில் மழைத்துளிகள் பூ போல் பூத்தது.எப்போதும் மார்க்கெட்டுக்குள் நுழைகையில் ஒரு திரையரங்கினுள் நுழையும் வாசமும் நேசமும் எனக்குள் இப்போதெல்லாம் பரவுகிறது,கையில் ஒரு பத்திரிக்கையோடு நான் விற்பன்னர் முன் செருமுவேன்.கொஞ்ச காலம் என்னுடன் தம்பி என்றபடி உறவாடுவார்,கொசுறு தந்து உரவான உறவை துண்டித்துக்கொள்வார்,எப்படியாயினும் ஈ.பி.கார கொள்ளிவாயன் போல அவ்வப்போது அவர் அன்பை ஏற்றியேற்றி இறக்கிக்கொள்வதில்லை.இம்முறை பயணக்கட்டுரை சற்றே வியாக்கியானம் ஆகிவிட்டது,அருள்க.நான் அவ்வப்போது மழை பற்றி சொல்கிறேன் என்று நண்பண் ஒருவன் சொல்வதால் இப்போதைக்கு ஒரு கவி,அப்புறம் விவரமாக வெயிலில் காய்வோம்.
"பிளாஸ்டிக் குடம் பூக்கும்
தார் செடிகளில்
நித்தம் பறிக்கிறார்கள் மக்கள்
தண்ணீருக்கு பதிலாக
தவிப்பை"
(யுகபாரதி)
crazy
23rd July 2006, 09:35 PM
:) :thumbsup:
VENKIRAJA
23rd July 2006, 10:04 PM
அத்தியாயம் # 8.
"ஆறிலொன்றை
தொலைத்துவிட்டு ஐந்தாய்
அலைகிறான் தள்ளுபடி தேடி."
(கவிஞர் சேகர்)
மற்றுமோர் மேற்கோளை இந்த அத்தியாயத்திற்காக தத்தெடுத்துக்கொள்கிறேன்.
இன்று ஒரு அரிய சந்திப்பு நிகழ்ந்தது,இப்போதைக்கு பாதசாரி அமர்கிறான் ஒரு கட்டாயத்தால்.எங்கள் மூர்த்தி நகர் "திருவள்ளுவர் அமைப்பு" என்ற குழுவின் கீழ் சீரமைக்கப்படுகிறது.அது தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதொட்டி ஓர் விழா எடுக்கப்பெற்றது.நான் கொஞ்சம் சின்னப்பையன் என்பதால் இருக்கையில் அமர்த்தப்பட்டேன்.விருந்தினராக வந்திருந்தவர்கள் இருவேறு பெருங்கட்சி அமைச்சர்கள்.மேலும் சென்னையின் இணை ஆணையர்,அப்புறம் மேலெழுதிய கவியின் சொந்தக்காரர்.கூடவே குமுதம் இதழின் தலைமை நிருபர் திருவேங்கிமலை சரவணன்.அந்த பெயரை நேற்று கட்டிய பேனரில் பார்த்த மாத்திரத்திலேயே அந்த விழாவிற்கு சென்று நாம் ஏதாவது செய்வோம் என்று மனதிற்குள் ஒரு கோட்டைச்சுவர் எழுப்பினேன்.கோட்டை அகழி தாண்டி பாதசாரித்ததில் ஓரளவிற்கு கோட்டையில் கொடி நாட்டியாகிவிட்டது.ஆம்,கூடிய விரைவில் இந்த புண்ணாக்கு காளமேகத்தின் எழுத்து லட்சக்கணக்காண குமுதம் பிரதிகளில் விழும் என்று எதிர்பார்க்கலாம்,ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களில்!ஆம் அவருடன் ஒரு இருபது நிமிட உரையாடல் மேற்கொண்டேன்.என் ஊர் அடைவது நீண்ட வழி தாண்ட வேண்டியிருக்கிறது,சிந்துபாத் ஆகிவிடுகிறேன் நான் என்றார் ஆரம்பிக்கையில்.நானோ அப்படியில்லை,இது ஒரு மதுக்கிண்ணி போல:நீண்ட கைப்பிடி தாண்டினால் நீங்கள் அடைவது மது போல இன்பம் பயக்குவோர்,என.அப்புறம் நான் உளறிய சில பக்கங்களை காட்ட அவர் பூரித்தார்.நல்லா இருக்கு தம்பி என்றார்.
சார் நீங்க எழுதின தலை நிமிர்ந்த தமிழர்கள் புத்தகம் கிடைக்குமா?
தர்ரேன் தம்பி,விஜயராகவன்(தமிழ் முனைவர்,அண்டை வீட்டுக்காரர்,அவருடைய தோழர்)கிட்ட குடுத்தனுப்புறேன்.
ரொம்ப பிடிக்கும் சார்,குமுதம் வாராவாரம் படிப்பேன்!
யார் ராகவன் சொல்லிக்குடுத்தானா?தெரியும் இந்த பயல்களைப் பத்தி,எத்தனை வருஷ பழக்கம்!என்ன?
அய்யய்யோ இல்ல சார் நான் படிப்பேன் சார்,அப்பா மூலமா..
என் 'சன்னல்',வெற்றிக்கு பத்து வழிகள்,"பதில் கடிதம்" ஆகியவற்றை படித்துவிட்டு....
பரவாயில்ல,நல்லா எழுதுற தம்பி,இன்னும் நிரைய படி.ரெண்டு நாள் பெங்களூர் கிரிக்கட் கவரேஜ் போக வேண்டியிருக்கு.அதனால் செவ்வா இல்ல அடுத்த வாரம் பார்த்து ராகவன் கிட்ட அனுப்பு,பார்த்துக்கலாம்.ஆனா ஒரு தரம் எழுதி அப்படியே விட்டுடாதே,அதயே நூறு முறை கேப் விட்டு விட்டு படி,ஏகப்பட்ட திருத்தம் தோணும்,அப்புறம் உன் கவிதை தான் எல்லாருக்கும் முணுமுணுப்பு,உனக்கு திறமை இருக்கு,பெருசா வருவ பாரு.நிறைய படி:மேத்தா,அப்துல் ரகுமான்,வைரமுத்துன்னு,அப்ப கற்பனை விரியும் நல்லா எழுதுறே,உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
நன்றி சார்.உங்களை சந்திததில் சந்தோஷம்.
ராகவன் கிட்ட போன் நம்பர் வாங்கிப்பேசு,அப்புறம் பார்க்கலாம்.வர்ரேன்.
இந்த சந்திப்பின் தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது,அட ஒரு பிரபல எழுத்தாளர்,ஐம்பது இலட்சம் பிரதிகளின் பிரதிநிதி,contemporary,அவருடன் ஒன்றாக,அட வியப்பாகத்தான் இருக்கிறது.அடுத்த வாரம் கலைஞர் கருணாநிதியுடன் சந்திப்பு இருக்கிறதாம்.நிறைவு.உங்களுடன் பகிர்தலைப்போல வேறு மகிழ்வில்லை.மேலும் கொஞ்ச நேரம் அளவளாவுவதற்குள் கனெக்டிவிட்டி போய்விடுமோ என்று பட்சி அலறிக்கொண்டிருக்கிறது,அதனால் போய் வருகிறேன்.
crazy
23rd July 2006, 10:14 PM
venki :) vaazhthukkal :D
VENKIRAJA
23rd July 2006, 10:30 PM
நன்றி,நல்லுறங்க வாழ்த்துக்கள்.
VENKIRAJA
23rd July 2006, 10:30 PM
அக்கா,நீங்கள் அந்த வரலாறுகூறுதலை முயலுங்களேன்,எனக்காக..
crazy
23rd July 2006, 10:37 PM
அக்கா,நீங்கள் அந்த வரலாறுகூறுதலை முயலுங்களேன்,எனக்காக..
ennadhu venki kanna?
kannannn
25th July 2006, 01:56 AM
Glad for you, Venkiraja :clap: . May your philosophical musings continue. Just a small request. Reread before you post. Spelling mistakes tend to escape attention in unicode.
VENKIRAJA
27th July 2006, 07:22 PM
அத்தியாயம் # 9.
கிரணகணங்கள்.
கண்ணணுக்கு நன்றி.
மழை வெளியே பெய்துகொண்டிருக்கிறது.எனினும், இப்போது வெயிலைப்பற்றி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.சம்மந்தமில்லாமல் பேசுவதும் ஒரு கலை தெரியுமா?அதற்கு ஒரு உதாரணம்:நான் மேற்கோள் காட்டும் கவிதைகள்.எனக்கு பிடித்தவற்றை எழுதி உங்களை கண்டிப்பாக படித்தாக வேண்டி வற்புறுத்துவது.இந்தமுறை இது.
" தமிழ் இணைக்கிறது
தம்ளர் பிரிக்கிறது! "
(anonymous:இதன் தமிழாக்கம்?)
வெயில் என்பது மெல்ல சூரியன் மலையிலிருந்து எழுவது,அதுதான் அழகியல் என்று சிலாகிப்பவர்கள் எனக்கு பாவப்பட்டவர்களாய்த் தெரிவார்கள்,அதுவும் மதிய வெயிலை தூற்றுபவர்கள்.நான் கூட முதலில் வெயில் என்பதை விரும்பியதற்கு காரணம்,வெயில் வாழும் வரையே கிரிக்கெட் மாட்ச் விளையாட முடியும் என்பதும்,மழை பெய்தால் கிரிக்கெட் டி.வி யில் ஒளிபரப்பப்படாது என்றும் மனம் கற்பித்த ஐதீகம்.இன்று மாலை ஐந்தரை மணியளவில் அற்புதமான ஓர் காட்சியை கண்டேன்.உதயசூரியன் குன்றுகளிலிருந்து பூப்பதை ஒத்து,இரண்டு தெருவிளக்கு கம்பிகளுக்கிடையிலிருந்து நிலா உடையவிழ்த்தது.அட்டகாசமான தருணமது,ஆனால் அத்தோடு நான் உயிரிழக்க வாய்ப்பிருந்தது.வேகமான லாரி மோதி,நல்லவேளை விசையீர்த்தது,பிழைத்தேன்.வெயில் என்பது ந்ம் அடையாளங்களுள் ஒன்று.நம் கறுப்பு வர்ணத்தின் அன்னை.விஞ்ஞானப்பூர்வமாக சூரியன் வெரூஉம் நெருப்புக்கொளங்களின் புகலிடம்,வாயுக்களின் சரணாலயம்.வெண்ணிலவை கவிஞர்கள் புகழும் ,செஞ்சூரியனை ஏன் பாடமறுக்கின்றனர் என்பது புதிர்.நிலவு கூடவே வருகிறது என்போர்க்கு சூரியன் தெரியவில்லையா?வெயிலில்,அஃதாவது நடுப்பகல் பன்னிரண்டிற்கு தொலைவு நடந்து வந்து,அமர்கையில் ஒரு சுகம் வருமே,அதுவும் தாய்மடியில் என்றால்,அவ்வளவு செல்வம் போதுமானது இக்குபேரனுக்கு.மெதுவாக மின்விசிறி வியர்வை முத்துக்களை சரும சிப்பிக்குள் மறுபடியிழுத்து தெர்மோடைனமிக்ஸால் சற்று உஷ்ணம் வெளியிடுகிறதே,இது மழையை விட உயர்ந்த சுகானுபவம்.ரோமமெல்லாம் வியர்வை மெல்ல கர்ப்பஸ்திரி போல பாதசாரித்து சொட்டுவதை ரசிக்கத்தெரியாதவர்கள் கண்ணிருந்தும் காணாதோர்.வெயிலில் தான் சேறு மறையும்.இதே போல மழைக்கட்டுரையில் வெயிலை திட்டியதை மறந்துவிடக் கடவது.நான் முன்பே மொழிந்தாற்போல வெயில் வைகறைகளில்(நகரத்து இளைஞனுக்கு வைகறை எட்டு மணி),வேனை தவறவிட்டு நடந்துசெல்கையில் புத்தக சுமை மட்டும் இல்லையென்றால் நான் நிச்சயம் நடந்தே ஏழு கிலோமீட்டர் தினந்தினம் பயணித்திருப்பேன்.வெயிலுக்கு மற்றொரு அவதாரமும் உண்டு.மாலைப்பொழுதில்.மதியமெலாம் சுட்டெரித்த சூரியனே கார்னென்டோ ஐஸ்கிரீம் சாப்பிட்டு இளைப்பாறிக்கொண்டிருக்கும் போது வாசலில் கோலம் தெளிக்கையில் சைக்கிள்சாரியான என் நாசி துளைக்கும் மண்வாசணை மிளகாய் பஜ்ஜியை தோற்கடிக்கும்.சில சமயம் அந்த தண்ணீர் என் மீது படும்,ஆனால் சில நொடிகளிலேயே காய்ந்துவிடும்,அந்த அம்மாவின் மீது பழித்துரைத்த சொற்களைப்போல.வெயில் கனவில் மழையும் மழைக்கனவில் வெயிலும்,என்று நான் ஒருமுறை எங்கோ எழுதிய நினைவு.அஃதாவது ஒன்றிருக்கும் போது மற்றொன்றிற்கு அலைபாயும் மனிதமனம்.வெயிலா?மழையா என்றால்....மழை வெயில் இரண்டுமே இல்லாத ஒரு வித மப்பான வானிலை இது இரண்டையும் விட எனக்கு பிடித்தது!
crazy
27th July 2006, 08:13 PM
VEYYIL :)
VENKIRAJA
27th July 2006, 08:27 PM
என் கேள்விக்கென்ன பதில்?
யாராவது இவற்றுக்கு பதிலளியுங்கள்:
anonymous:தமிழாக்கம் யாது?
யாரேனும் "திரைப்படம் தன் வரலாறு கூறுதல்" என்ற தலைப்பில் எழுதுங்களேன்.
இங்கு எழுதியிருந்த மேற்கோள்களுள் உங்களைக் கவர்ந்தது எது?
crazy
29th July 2006, 02:20 PM
:cry: sooooooooo sad.............ennaala indha fonda padikka mudiyala :cry2:
VENKIRAJA
4th August 2006, 06:04 PM
அத்தியாயம் # 10.
நாளை நான் ஓர் கட்டுரைப்போடிக்கு செல்லவிருக்கிறேன்.தமிழ் யானைகள்,இந்த இம்சையை பொறுத்துக்கொள்வார்களாக.சமீபத்தில் அனுபவித்த சில சுக நொடிகளை பகிரக்கடமைப்பட்டிருக்கிறேன்.யாருக்கும் எந்த மேற்கோள் கவியும் பிடிக்கவில்லையா என்ன?(கடந்த அஞ்சலின் கேள்வி)
" வாகன இரைச்சலினூடே
கேட்கும்
மாட்டுவண்டிமணி. "
(அம்பலம்.காம்)
ஏற்கனவே அறிமுகப்படுத்திய பிரசன்ன வெங்கடேசனின் ஆலய குடமுழுக்கு தான் தலம்.அரைத்தூக்கத்தில் நீராடிவிட்டு ஜிப் போடாமலேயெ கோயிலடைந்தேன்.அதிகாலையிலிருந்து பகல் வரை விண்மலர் விரிவதை சுகித்துக்கொண்டிருந்தேன்,ஜிப் போட்டபடி.பழகிய முகங்கள்,தெருக்கள்,கடைகள் எல்லாவற்றையும் நான் பெருமாளுக்கு காட்டிக்கொண்டிருந்தேன்.அதற்குள் நடை திறக்க எல்லோரும் முந்திக்கொண்டு சுவாமியை சேவித்துக்கொண்டிருந்தார்கள்,நான் மெல்ல மேல்தளத்திற்கு ஏறிவிட்டேன்,மரக்கட்டை மார்க்கமாக.அங்கு நீரை கும்ப நீரோடு dilute செய்துகொண்டிருந்தார்கள்.புளியோதரை, தயிர்சோறு, சர்க்கரைபொங்கலோடு கொஞ்சம் பக்தி.பக்கத்தில் பலூன்கள்,ராட்டினமென மழலைக்கொண்டாட்டங்களும்,பட்டாசு.ராக்கெட் என்று மறுபுறம் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்த ஏரியாவும் விழித்திரையில் பட்டு ஒளி பரவிக்கொண்டிருந்தது.புகை இன்னும் சூரியனை புலப்படுத்தவில்லை.ராக்கெட் ஒன்று கிளியாட்டம் ஆகாயஜாலம் புரிந்து குபுக்கென வெடித்து விழ, அருகிலிருந்த குளம் வளையல்களை அணிவித்துக்கொண்டது.நிறங்கள் நிரலாக தாவணியிலும்,பட்டு வேட்டிகளிலும்,சாத்தப்படும் மாலைகளிலும் மிளிர்ந்தது.கவிதை ஒன்று யோசித்துக்கொண்டிருக்கையில் ஜலம் மாயிலையினூடே என்னை அடைந்தது.சிலிர்ப்பினை வாங்கிக்கொண்டு கவிதையை எடுத்துக்கொண்டு வடிந்தது.பன்னீர் பாட்டலொன்றில் அதை நிரப்பி பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு கீழே இறங்கியாகிவிட்டது.தெய்வ வழிபாட்டில் ரசனை,அழகியல்,நுட்பம் எல்லாம் இருக்கிறது அல்லவா?
அப்புறம் பள்ளி சார்பில் யுனானி அறிவியல்மையத்திற்கு பாதசாரித்தது.பாதசாரிப்பதென்பது இங்கு ஆகுபெயர்:நாங்கள் தேர்வு செய்த வாகனம் சுவராஜ் மஜ்தா ஊர்தி.வழிநெடுக அது எங்களுக்கு நகரத்தின் ரணங்களையும்,துர்கதியில் துவளும் மானிடர்களையும் காட்டிக்கொண்டே வந்தது புகையுமிழ்ந்தபடி.அப்போது சிவாஜி சிலை இல்லை.மீதி சிலைகளுக்கு அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு கருவாட்டுப்பூவை முகர்ந்தோம்,கைக்குட்டைகளால்.ராயபுரத்தின் மீன்வாசத்தையும்,மண்தொடும் கடல்நுரையையும் தாண்டி மூலிகைச்செடி பராமரிக்கப்படுவது தெரியாது, உணர்ந்தேன்.வேண்டாவெறுப்பாக குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன் துளசிமணத்தில்.அந்த குறிப்பிட்ட இடம் போகப்போக நீண்டுகொண்டே இருந்தது,கண்மூடுகையிலும் மூடாதபோதிலும்!.புராதன முறைப்படி விவசாயம் செய்து மருந்துகளை தயாரிப்பதும் உள்ளது,டிஜிட்டல் முறையில் செய்யும் ஆய்வுக்கூடங்களும் உள்ளன,தமிழ்நாட்டைப்போலவே.அந்த இசுலாமிய பேரா. நிகழ்த்திய உரை மறந்துபோய்விட்டது.கூடவே அவர்கள் எழுதிக்கொள்ளச்சொன்ன தாவரவியல் பெயர்களும்.ஆனால் நாசியில் அந்த நறுமணம் நினைவிருக்கிறது.திரும்புகையில் கால் வலித்தது,அந்த கானகத்தை கடந்த காரணத்தால்.ராத்திரி கடனுக்கு அந்த ரிப்போர்ட்டை முடித்துவிட்டு வானம் காணுகையில் நட்ச்சதிரங்கள் கண்ணடித்து குட் நைட் சொன்னது.
பதிலுக்கு நான் சொல்வதற்குள் சூரியன் குட் மார்னிங் என்றது!
VENKIRAJA
6th August 2006, 05:38 PM
நண்பன் அபிலாஷ் நேற்றைய கவிதைப்போட்டியில் பாடிய கவியிது.ஆனால் அவனுக்கு பரிசு தரவில்லை.வெறும் இயைபிற்காக தாயுடன் நாயை கோத்தோருகெல்லாம் முதற்பரிசு வழங்கப்பெற்றது.வாழ்க ஜனநாயகம்.
என் நாடு இந்தியா.
முக்கடல்கள் படை சூழ
வீற்றிருந்தாள் ஒரு நங்கை.
இமயமலை கிரீடமாயேற்றி
ஆட்சிபுரிந்தாள் இம்மங்கை.
அவள் பெயர் இந்தியா!
அவள் வாழும் இடம் இந்தியா!
இமயம் முதல் குமரிவரை
பரந்திருந்தது அவளது சிவப்பழகு மேனி.
செலவ வளத்தில் செழித்திருந்தாள்
பண்பாட்டில் வளர்ந்திருந்தாள்!
அவளுடைய அமைச்சர்களின் புகழை
சொல்லாமலிருக்க முடிய்முமோ?
வீரம் நிறைந்தவன் பஞ்சாப்
அறிவு நிறைந்தவன் வங்காளம்
அழகில் சிறந்தவன் காஷ்மீர்
சரித்திரம் படைப்போன் இராஜஸ்தான்
படிப்புதேறியவன் கேரளம்
இரும்பு உள்ளம்படைத்தவன் பீஹார்
சிலை வடிப்பவர் ஒரிசா
பால்வடியும் பிள்ளை ஹரியானா
கடமை தவறாதோன் தமிழ்நாடு!
நதிகளவர் சகோதரியர்!
அவள் செல்வவளம் கண்டு
அவளை ஆட்சி செய்யத் துணிந்ததோர்
அயல்நாட்டுப்படி.
வாளே ஆயுதமாய்க்கொண்டோர்க்கு
தோட்டா என்றதும் புரியவிலை!
திகைய்த்தனர்,திடுக்கிட்டனர்
திக்குமுக்கு தெரியாமல் தவித்தனர்.
வழியேதும் தெரியாமல்
விழித்திருந்த அவளுக்கு
பிறந்தானோர் மகன்
கதருடை சாத்திக்கொண்ட
அச்சீமான் காந்தி மகாத்மா!
என்செய்தான் அம்மாவீரன்
கத்தியெடுத்தானா?
தோட்ட நம்பினானா?
குண்டேதும் வைத்தானா?
அவன் நம்பியது அகிம்சையை,
அவனது மந்திரம் ஹேராம்!
இதுவரை யாரும்
கையாளா ஆயுதத்தால்
வந்தவர் வணங்க,வாழ்த்த
தியாக உணர்வை
தோற்கடிக்க இயலாது
விடுதலை வழங்கினான் பரங்கியன்!
இன்றோ...
நாமென்ன செய்துகொண்டிருக்கிறோம்?
விடுதலை நாளை விடுதலை நாளாகி
நட்ச்சத்திரப்பேடிகல் காணுகிறோம்!
நாட்டுக்காக படுபட்ட சிலருக்கு
சிலை வெண்டாம்,பட்டம் வேண்டாம்;
சிந்துகின்ற இருதுளி கண்ணீரால்
பல்கோடி புண்ணியம் கிட்டுமே!
"என் நாடு இந்தியா"
என்றுரையாமல்
"நம் நாடு இந்தியா"
என்ரு மனமோங்கி
இளைஞர் சரித்திரம் படைப்போம்!
pavalamani pragasam
6th August 2006, 06:37 PM
[tscii:47f0da80ec]வெறும் இயைபிற்காக தாயுடன் நாயை கோத்தோருகெல்லாம் முதற்பரிசு வழங்கப்பெற்றது.வாழ்க ஜனநாயகம்.
:cry: ÐÂÃÁ¡É ¾¡÷ò¾õ! ¿øÄ ¸Å¢¨¾¨Â, ¿øÄ ¸Õò¨¾, ¿øÄ ¯½÷¨Å þíÌ ¦¸¡Îò¾¨ÁìÌ ¿ýÈ¢! :D [/tscii:47f0da80ec]
crazy
7th August 2006, 12:49 PM
kanna :) :cry:
VENKIRAJA
9th August 2006, 03:23 PM
அவர்கள் எங்களுக்கு சொன்ன சமாதானம் பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே ..."பாடல் கூட இரண்டாம் பரிசு பெற்றது என்பதுதான்.நான் சில சிறுகவிகளின் சரமாக அங்கு சென்று படித்தேன்,extempore:இதற்கும் தமிழ்ப்பதமறியேன்.ஏற்கனவே இதே போல anonymus-க்கும் தமிழ்க்கிளவி கேட்டிருந்தேன்.
வானை அளப்போம்.
நிலாச்சோறு சாப்பிட்டது
போதும் - நிலாவில்
சோரு சப்பிடலாம் வா!
தோல்வீதிகளில் நடந்தது
போதும் - பால்வீதிகளில்
நடக்கலாம் வா!
கிரகப்பெயரில் சோதிடம் கேட்டது
போதும் - கிரகத்திற்கு நம்
பெயர் வைக்கலாம் வா!
நட்சத்திரங்களிடம் கையெழுத்து ஏந்தியது
போதும் - நட்சத்திரத்தில்
கையெழுத்திடலாம் வா!(நிலாச்...)
சேனை வளர்ப்போம் - அதனால்
வானையளப்போம்.
பாலைவனங்களை சோலைவனமாக்கி,
விறகைக்கூட வைரமாக்குவோம்.
வெறுங்கை மூலதனங் கொண்டு
பெருஞ்செல்வம் அறுவடை செய்வோம்.
மதி வெல்வோம் - அதனால்
மதி செல்வோம்.(சேனை...)
கரங்கள் கோத்து,
மனங்கள் சேர்த்து,
கால்கள் இணைத்து,
சிரங்கள் புணர்ந்து
மொழியால் மட்டுமின்றி
விழியாலும் வானையளப்போம்!
பாதசாரியைத் தொடர்கிறேன்.
pavalamani pragasam
9th August 2006, 03:28 PM
Wow! :clap: :clap: :clap:
VENKIRAJA
9th August 2006, 04:12 PM
பவளமணி அம்மையார் கைதட்டுமளவு அக்கவி இருந்ததென்றால்,எனக்குப் பெருமை தான்.அடுத்த அஞ்சலில் தொடரும்படி ஆகிவிட்டதற்கு மன்னிக்கவும்,நான் திரிகளில் உலவும் கட்டுரைகளை வரிசைப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறேன்.
pavalamani pragasam
9th August 2006, 04:23 PM
[tscii:ce1783f905]þó¾ §Å¸õ, þó¾ °ì¸õ, þó¾ò ¾¢¼õ, þó¾ ¸É×ò¾¢Èý -«ò¾¨ÉÔõ þ¨Ç»¸Õ째 ¯Ã¢ò¾¡ÉÐ - þ¨¾ò¾¡§É «ôÐø ¸Ä¡õ Ó¾ø þó¾ º¡Á¡ýÂû Ũà «¨ÉÅÕõ Á¨Ä¡ö ¿õÒ¸¢§È¡õ! :2thumbsup: [/tscii:ce1783f905]
VENKIRAJA
9th August 2006, 05:31 PM
ஏன் யாரும் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?(தன்வரலாறு கூறுதல்,சிறந்த மேற்கோள்,இத்தியாதி வினாக்கள்)பரவாயில்லை,மீண்டும் தொடர்கிறேன்.
BLACK AND WHITE.
படங்களில் கொசுவர்த்தி சுற்றி தத்தம் வரலாற்றை டைரி,பேச்சு,மனோதத்துவம் முதலிய மார்க்கங்களால் விவரிப்பது ஒத்து என் முயற்சி இது.விடுமுறைக்கு விடுமுறை ஏன் விடுமுறை விடுகிறார்கள் என்ற சந்தேகம் மனதில் எழும்,என் தொடை வரை இருந்த எனக்கு.எண்ணற்ற வேலைகள் தந்துவிட்டு "ஹேப்பி ஹாலிடே" சொல்லும் ஆசிரியைகளின் வீட்டை அமளிதுமளிபடுத்த என்று கற்பிதங்கள் பயிற்றுவித்துக்கொண்டேன்.பசுவின் சாணத்தின் மையத்தில் வெடி வைத்தால்,அருகிலிருக்கும் மிஸ் வீட்டு சுவர் நாஸ்தி;கிரிக்கெட் மட்டைகள் ஜன்னல்களுக்கு குறி வைத்து பந்துகளை ஏவூஉம்;டாபர்-மேன்கள் மீது கல்மாரி பொழியூஉம்;வாகன சக்கரங்களிலிருந்து காற்று விடுதலை செய்யப்பெரூஉம்.இவற்றிற்கான கர்த்தாக்களை குறிப்பிட்டவர்கள் புலன்விசாரணை செய்வதற்குள் நாண்க்கள் பூர்விகங்களுக்கு புறப்பாடாவோம்.ஊர்களில் வீடியோ கேம்கள் இருக்காது என்பதொழிய பிறிதொரு இம்சை வாய்த்திருக்கவில்லை.எனது அத்தகு பயண நினைவுகள் வரிக்குதிரைகளின் மீது பதிந்த கோடுகள் நிகர சுவடுடுத்தியிருக்கின்றன.
சிலபல வீட்டுப்பாட நோட்டுகளை மாமிகளிடம் ஒப்படைத்துவிட்டு,விடைகளை குறித்துவிட்டு சிறகு விரிக்கவேண்டியதுதான்.முதல் நாள் காலை,நாளேடு விளம்பரங்களை புரட்டிவிட்டு,தோப்பிற்கு பயணப்படலாம்.உலகிலேயே மனிதன் நிம்மதியாக இருக்குமிடம் என்று கண்டாயப்பட்ட கழிவறைக்கு தான் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.ஏனெனின்,அங்கு ஃபிளஷ்ஷுடன் கூடிய வகையறாக்களெல்லம் "லேது".மிகப்பெரிய திறந்தவெளி-பெயர் தெரியாத மரங்களின் நிழல்,குளம்,விநாயகர் ஆலயம்,புளியந்தோப்பு இவை தான் லொக்கேஷன்கள்.கடன்களை அடைத்தப்புறம்,நாளைய கடனுக்கான சோறு.பெரும்பாலும் இட்டலி/தோசை,சாம்பார்.ஞாயிறுக்கு ஆப்பம் அல்லது இடிஆப்பம்.காலைகள் எப்போதுமே சற்று வெறுமையானவை.மதியங்கள் தான் வேட்டைருது.பெண்டிரெல்லாம் குறட்டை விடும் பொழுதில் கரப்புகளோடு கூட்டணை வைத்து வீட்டுச்சிற்றுண்டிகளை களவாடுவது தான் சாகசம்.ஏப்பங்கலை தானஞ்செய்துவிட்டு தோப்புக்கு போகலாம்.ம்ஹூம்,இப்பொது புளியந்தோப்பிற்கு.அதை தாண்டி பிள்ளையாரின் இடப்புறம் தான் "அந்த"ப்புரம்.அடுப்புக்கில்லையென்றாலும் விளையாட கிரிக்கெட் மட்டைகள் இருக்கும் ஐயன்பெட்டையில்.("தில்லுமுல்லுக்காக இரஜினிகாந்த் கடன் வாங்கிக்கொண்ட நெசவுக்கிராமம்,காஞ்சி மாவட்டம்)பெரியம்மாள் பிள்ளைகளோடு செஞ்சுரிகள் அடிக்கவேண்டியது பாக்கி.நிலா வந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று விடும்.சில நேரங்களில் பாண்டி,புல்-கோட்டி(கில்லி),கோலி விளையாட்டுக்கள்(சோங்கு,இத்தியாதி),கண்ணாமூச்சி முதலியன அனுமதிக்கப்படும்.பாட்டி முக்காடத்தை(தாழ்ப்பாளின் வட்டாரச்சொல்)இழுத்துக்கொண்டு பவம் புரிந்த ஃபியட்டில் ஏறச் செருமுவார்.சுமார் பதினைவரோடு செல்லும் ஊர்தி!விலை சல்லிசு என்பதால் மாம்பலத்திலிருந்து காஞ்சி செல்வோம்:இப்போது கூட இங்கு எழுபதிற்கு விற்கும் அனுமதிசீட்டு அங்கு பதினைந்து!பெரியம்மாள் வீடும்,பாட்டியின் வீடும் அருகருகே இருந்தது மற்றொரு வசதி.பங்காளிகள் ஐவரும் சேர்ந்து தேன் மிட்டாய்,பல்லி மிட்டாய்,புரை,எல்லாம் வாங்கித்தின்போம்.பபுள்கம் வாங்கினால் கிரிக்கெட் கார்டுகள் இனாம் என்பதால் அவற்ரை வாங்கி சேகரிப்போம்.சகோதரர்கள் நால்வரும் ஏரத்தாழ ஐந்நூறு செகரித்திருந்தோம்!
"எந்த இடத்திலிருந்தும்
சொர்க்கம் சமதூரத்தில்
இருக்கிறது."
நாம் நெருங்கிவிட்டோம்.
pavalamani pragasam
9th August 2006, 07:46 PM
[tscii:9f0d5f0dc6]¦¾Ç¢Å¡É À¾¢×, «Æ¸¢Â ¯Å¨Á¸Ù¼ý. ±ØòÐôÀ¢¨Æ¸û ¸ÅÉ¢ì¸ôÀ¼§ÅñÎõ.[/tscii:9f0d5f0dc6]
VENKIRAJA
12th August 2006, 05:57 PM
மிக்க நன்றிகள் பாதசாரியை மாபெரும் வெற்றியாக்கியமைக்கு.ஒரே மாதத்தில் 1500 கிளிக்குகள் பதிந்திருக்கின்றன அவன் மேல்.சென்ற மாதம் 1425,இப்போது 2921!இதற்கு எஞ்ஞான்றும் நன்றி மறக்கிலன்.
ஐயன்பேட்டை புராணம் பாதி தின்ற ஆப்பிள் போல பழுப்பாகித் தொங்கிக்கொண்டிருக்கிறது.முடித்துவிடுகிறேன்.
தோப்புகளில் விளையாடியதும்,காஞ்சிக் கோவில்கள் 1008க்கு சென்றதும்,புளியங்காய்(அதுதான் டிரிங்க்ஸ் பிரேக்கின் போது ஆகாரம்)அடித்ததும் உறைந்த பனிக்கட்டியாகிவிட்டன.அதை காட்சிகளாகவே மனமூர்ந்து செல்லும்படி செய்த இயற்கைக்கு நன்றி.பனை நுங்கு இறக்கப்படும் சனிக்கிழமைகளில் மாலுமிகள் ஒத்து திட்டமிட்டு பங்கீடு செய்து கொடுப்போம் அவற்றை.வெட்டி வைக்கப்பட்டிருக்கும் விறகுப்பிரம்புகளை "சுட்டு" ஸ்டம்ப் நட்டதுகூட ஞாபகம் இருக்கிறது.பெயர்கள் தரும் வினோதம் அளப்பெரியது.என் அம்மாவின் பாட்டி பெயர்:செல்சா!நன்பனொருவனது பெயர்:பட்டு ரோஸ்!ஆனால் அவை அரிதாரம் பூசிக்கொள்வதில்லை நகரமாந்தர்களை நிகர்த்து.எவ்வளவு பெரிய படிப்பாளியும் அங்கு நெசவு செய்வார்.ஊர் முழுக்க சாயமும்,தராசு முள்ளாட்டும் நூற்கண்டுமணமும்,பவர்லூமிடி சப்தங்களுமென பட்டணிவிக்கப்பட்டிருக்கும்.நகரமோ கிழிந்த ஜீன்ஸும் பெர்பியூமும் சூடியிருக்கிறது.இல்லையில்லை வாடியிருக்கிறது.மேலும் அங்கு நடக்கும் திருவிழாக்கள் அழகானவை.இன்று அப்போதிருந்த மிடுக்கு குறைந்தாலும்,கிராமம் கிராமமாகவே இருக்கிறது.மெகா சிரியல்களால் மட்டும் கொஞ்சம் உருகி.எஸ்.இராமகிருஷ்ணன் ஒருமுறை எழுதினார்:
"உலகம் ஒரு தின்னமுடியாத பெரிய பழம்.அதன் ஒரு பகுதியை தின்பதற்குள்ளேயே நம் ஆயுள் முடிகிறது....."
நான் தொடர்கிறேன்:ஒவ்வொருவனும் தின்று முடித்த பகுதி மீண்டும் பழத்திற்குள்ளேயே போய் பழத்தை நிரப்பிவிடுகிறது,ஆதலால் இன்றுவரை உலகம் உருண்டை.திருவிழாக்கள் தொடரும் அஞ்சலில்.
VENKIRAJA
29th August 2006, 09:29 PM
நகராத பயணம்.
இம்முறை என் கட்டுரை சற்று மலினமாகிவிட்டது,அருள்க.ஆயினும் அற்புதமானதோர் மேற்கோளுடன் தொடங்கலாம் என்று உத்தேசித்தவுடன் கிறீச்சிட்ட வரிகளும் அவற்றின் சொந்தக்காரரும் இதோ:
" காத்திருக்கு காத்திருக்கு
காலி பக்கெட்டு
வாடா வாடா வாடா வாடா
வாட்டர் பாக்கெட்டு! "
(பேரரசு) (விஷ்க் விஷ்க் விஷ்க்)
இது ஒத்த அமரக்கவியை குமரித்தமிழில் பரிமாற இவரால் மட்டுமே இயலும்.வள்ளுவரும்,தொல்காப்பியரும் இவரது சொல்வங்கியிலிருந்து கந்துவட்டிக்கு கொஞ்சம் வாங்கிக்கொள்ளலாம்.அர்த்தமற்ற தமிழைப்போல நகாரத பயணமென்றும் ஒன்றுண்டு,அஃது தொலைக்காட்சி!
[தயை கூர்ந்து நடுநிசியில் வேறு சில பாதசாரிப்புகளை களிக்குஞ்சிலரை மன்னித்துவிடலாம்.]பால்யத்திலேயே டி.வி-யெனும் கயிறு ஆட்டுவிக்கும் பம்பரமாகத்தான் ஜனித்திருக்கிறேன்.இப்போதுங்கூட போகோவில் மிஸ்டர் பீன் - தி அனிமேட்டட் சீரீஸ் பார்க்கையில் உள்ளம் மழலையுருவெடுக்கிறது.சென்ற வருடமென் நண்பன் பிரசன்ன கோபாலது பெற்றோர் சொன்ன புகாரென்ன தெரியுமா?அவன் ரொம்ப கார்ட்டூன் பார்க்கிறான் என்பதே.இத்தனைக்கும் எழுபது கிலோ தாஜ்மஹாலனான அவனது வயது பதினேழு!கண்ணீர் தெறிக்கும் சீரியல்களைக்காட்டிலும் கார்ட்டூன்கள் உத்தமமே.சிறுவயதில் அநேகம் பேர் பார்க்கிற கார்ட்டூன்களாகவே மாறுவார்களாம்.எனக்கோ நேரெதிர்!உலகமனைத்தும் கார்ட்டூன்களால் நிரம்பி வழிந்தது.நான் ஒண்டி மனிதன்.மீதியெல்லாம் வர்ணமடிக்கப்பட்ட கார்ர்ட்டூன் படங்களே!நான் சுகித்த நிகழ்ச்சிப்பெயர்கள் அநேகமாக உங்களது இரசனைப்பட்டறையில் பத்திரமாக இருக்கலாம்.தூர்தர்ஷனின் ஸ்ரீ கிருஷ்ணா,மகாபாரதம் எல்லாம் ஞாயிறின் ஞாயிறு உதிக்கையில் வந்தென் வைகறை நித்திரை கலைக்கும்.கொஞ்சம் உயரமானதும் 'மேன்'களின் மேனியா என்னைத் தாக்கியது.கேபிள் கனெக்ஷன் பிரபலமானதும் தொடர்களின் நோய்.ஆனாலும் தூர்தர்ஷனே இன்னும் சில வருடம் வரவேற்பறையின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது.குறிப்பாக சிறார்களின் மனம் ஈர்த்தது சூப்பர் ஹியூமன் சாமுராய்.அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்ட நாடகம் அஃது.இந்தியத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மாபெரும் வெற்றி பெற்ற மெகா மகா தொடர் ஜுனூன்.கார்ட்டுன் நெட்வொர்க் பிற்பாடு வந்தது.அஃது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் போர் மூள காரனமாய் அமைந்தது வேறு விஷயம்.ஸ்கூபி டூவும்,பாப்பாயும் அமரத்துவம் பெற்றவை.அதிலும் பாப்பாயின் நான்கு புத்திரர்களும்,ஸ்கூபி/ஸ்க்ராப்பி டப்பிங் குரல் பொருத்தமும் அசர வைத்தன.மனித முகம் தேடிய போது தான் மெல்ல தொடர்கள் வந்தன.'நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்' ஒரு புராதன குடும்பத்தைக்காட்டியது.கோவை அனுராதா மெல்லிய நகைச்சுவையை அறிமுகப்படுத்தினார்.அவ்வப்போது தாய்வீடு புகும் மருமகளொத்து DD-யும் பார்த்தேன்.கிரேஸி மோகனுக்காகவும்,எஸ்.வி.சேகருக்காகவும்.திடீரென் று கார்ட்டூன் நெட்வொர்க் ரெவல்யூஷன் என்ற பெயரில் மனங்களைத் திருட திட்ட்டம் தீட்டினர்.அவற்றுள் முக்கியமானவை centurions,fantastic four,laff-a-lympics,road-runner ஆகியன.சன் தொலைக்காட்சி தன் வேர்களை பிஞ்சுகளில் ஊன்ற மாலையிருள் கவியும் நேரத்தில் கார்ட்டுன்களை பெயர்த்து ஒளிபரப்பியது.அவற்றின் பெயர்கள் மட்டும் நினைவிலில்லை.மெல்ல தொலைக்காட்சிப்பெட்டி தன் சாயலை இழந்து வெள்ளித்திரையின் நகலாகத்தொடங்கிய போது ஆபத்பாந்தவர்களாக வந்தனர் சில இயக்குனர்கள்.அவர்களது பெயர்கள்.....
crazy
2nd September 2006, 01:24 PM
:)
ragav89
6th September 2006, 08:10 PM
tat was really good and i hope i have read d same in the class da...
VENKIRAJA
6th September 2006, 08:44 PM
IDHUKKU MUNTHINA PAGE ELLAM PADI KAUSHIK MACHI!I'VE NOT SHOWN U THOSE!
BTW,WHY RAGAV?
VENKIRAJA
12th September 2006, 07:07 PM
கே.பி!பாலச்சந்தர் தொலைக்காட்சியை முற்றுகையிட்டு அனைத்து அலைவரிசிகளிலும் தன் கவிதாலயா நிறுவனத்தின் தொடர்கள் தான்.திருவள்ளுவர் இலையராஜாவின் 'அகர முதல் எழுத்தெல்லாம்..' குரலுக்கு உலகை சுழற்றலாயினார்.மறுபுறம் சன் தொலைக்காட்சியின் வேர்கள் அனைத்து மனங்களிலும் வேர்பரப்பியிருந்தது.முதன்முதலில் ஹிட்டான சீரியல் சாங் நானறிந்து 'பிரேமி'.நாகா மர்மதேசம் வழியாக எனக்கு என் திகிலுறையும் ரேகையை அறிவித்தார்.ஏறத்தாழ பத்து வருடங்கலாக தரமான நாடகங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.தலையாய படைப்பு:ரமணி vs ரமணி பாகம் இரண்டு.நகரத்து நியூக்ளியர் குடும்பத்தின் நகைச்சுவையை மையலாகக்கொண்டது.கொஞ்ச நாள் கழித்து தமிழுதடுகள் அனைத்திலும் பதிந்த சொற்கள்:கண்ணின் மணி கண்ணின் மணி...."ஆம் சித்தி தொடரது பாடல்.ஸ்ரீரங்கத்தையும் நட்பையும்,ஊனத்தையும் வெகு ரம்மியமாக வெளிக்கொணர்ந்த தொடர் அது.அதை வழிமொழிந்த அலைகளும்,மெட்டி ஒலியும் ஜஸ்ட் பாஸ்.பிறகு கிளிசரின் கண்ணாம்பூச்சிகளால் நிறைந்து அலறிக்கொண்டிருக்கிறது இன்று.காலப்போக்கில் காணாமற்போகும் காளானாக மாறியிருக்கிறது தொலைக்காட்ட்சி.சிறுவயதில் நாம் விரும்பும் பலவும் பெரியவர்களானதும் அலுத்துவிடுமாம்,அதுபோலத்தானா இதுவும்?எது எப்படியாயிருந்தாலும் மீன்தொட்டியை விட கடல் எப்போதும் பிரும்மாண்டமானது தான்.அந்தக்கடலானது பயணம்,நீண்ட நெடிய பயணம்.பாவம் பேரரசு,அவரை அதிகப்படியாக நகையாடிவிட்டேன்,அவருக்காக மட்டுமின்றி:
" வேருக்கு நீரு
ஊத்தித்தான் பாரு
பூவிலெல்லாம் உன் பேரு "
(பேரரசு,திருப்பதி..... வந்தா பாடலிலிருந்து)
crazy
12th September 2006, 10:37 PM
yes i do remeber ramani vs ramani.............i enjoyed it! hm....... :)
perarasu :lol:
VENKIRAJA
30th September 2006, 03:18 PM
மறுபடியும் மறுபயணம்.
நிரம்ப நாட்களாகிவிட்டதால் மீண்டும் ஒருமுறை என் பூர்வீகத்தை கண்டுவர என்று இந்த காலாண்டுவிடுமுறையின் இருநாட்களை ஒதுக்கினேன்.செல்ல நாயிடம் விடை பெறுவதைப்போல கணிணியிடம் சொல்லிக்கொண்டு ஆட்டோவில் பேருந்துநிலையம் அடைந்தேன்.இதற்குமுன் இவ்வளவு கனத்ததில்லை,ஊருக்கு சென்றுவர.அநேகம் முறை பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு ஆனந்தமாய்த்தான் கிளம்பியிருக்கிறேன்.ஆனால் இம்முறை பள்ளி சகாக்களுடன் இரண்டு நாட்களை மிஸ் செய்யப்போகிறேன் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன்.ஆட்டோவில் முன்னாடி ஓட்டுனருடன் அமர்ந்துகொள்வதே வழக்கம்.வழிகளெல்லாம் எனது ஊரின் பழைய முகத்தை காட்டிக்கொண்டே வந்தன.எங்கள் மாமாவிற்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மாமியிடம் அறிமுகமான முதல் பிரமுகர்கள் நாங்கள் ஐந்து பங்காளிகள் தான்.வெட்கத்தோடு பேசி நண்பர்களாகி பரிசுப்பொருட்கள்அனைத்தையும் பிரித்தது நினைவிருக்கிறது. எங்களுக்கான பேருந்து வந்துவிட்டிருந்தது.என் ஞாபகங்களை அங்கேயே போட்டுவிட்டு பேருந்தில் ஏறி வேகவேகமாக ஒரு ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.சென்னையின் புழுக்கத்தை விட்டுவிட்டு பட்டுநகரத்திற்கு விரைந்துகொண்டிருக்கிறது உந்து.ஒரு வேடிக்கை பாருங்கள்:பல்லவனின் நகரத்தில் பாரதி ஓடுகிறான்,பாரதியின் நகரில் பல்லவன் ஓடுகிறான்,நான் பேருந்துகளின் பெயரை சொன்னேன்.பாதையின் முன்னோட்டம்,வாழ்க்கையை பின்னோடியது.ஐயம்பேட்டை,இது லா.ச.ரா. வாழ்ந்த ஊராம்!ஐயம்பேட்டையிலிருந்து முத்தியால்பேட்டை செல்ல அவா கொண்ட என்னிடம்,ரெண்டு ஊருக்கு ஊடால முதைலைங்க கிடக்கு என்று பயமுறுத்தியவர்களின் முகங்கள் நினைவில் பூச்சாண்டி காட்டின.தூக்குச்சட்டியில் நுங்கு கொணர்ந்தது,மரத்தில் ஏற முற்பட்டு விழுந்தது,வண்டி ஓட்ட கற்றுக்கொண்டது தோற்றது- பசுமரத்தாணி.ஸ்ரீபெரும்புதூரை அடைந்த பின் நினைவுகளை விட குமுதம் கொஞ்சம் சுவாரஸ்யமாகப்பட்டது.எவ்வலவு நேரம் தான் கன்னத்தில் கரம் வைத்து முட்டுக்கொடுத்து வேடிக்கை பார்ப்பதைப்போல பாவ்லா காட்டுவது?காற்றின் கைகள் அப்போதுதான் வேலையில் இறங்கின.என் முகத்தினை வறட்சிப்பிரதேசமாக்கி சுத்தமாக உலரவைத்தது.காற்றின் விஸ்வரூபக்கைகளில் மிகவும் காயம் கண்டிருந்த பொம்மை போலிருந்தது என் சிரம்.என் பால்யம் அலாதியாக எல்லாம் இல்லை.எனக்கு கிடைத்த வசவுகள் இவை:அடுப்பு,தயிர்வடை,டியூப்லைட்,தத்தி,எருமை இன்னபிற.ஆனால் என்னைடம் அன்று எக்காளமிட்டவர்களால் இன்று பேசி மாளவில்லை.அவர்களாலேயெ பழக்கப்பட்டு அவர்களையே காயப்படுத்தும் கத்தி நான்.இந்த துர்நினைவுகள் சலனமிட,கொஞ்ச தூரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.காற்றூ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.தூரத்து பனைமரங்கள் சாய்ந்தபடி "எங்க அவஸ்தை உனக்கு புரியுதா?"என்று கேட்பது போல இருந்தது.ஊருக்கு செல்லும் குழந்தைகளின் வழக்கமான செயல்களைப்போல அன்றி நான் ஏதேதோ விபரீத கற்பனைகளில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்தேன்.கையிலிருந்த வால்காவிலிருந்து கங்கை வரை-யையும் படிக்க முடியவில்லை.கடந்த முறை வந்துப்ப்யிருந்தபோது ஒரு இழவுக்கு வந்திருந்ததால்,அந்தப்பயணத்தின் ரணங்கள் இன்னுமொருமுறை எனக்கு வலித்தன.ஆறு தெருக்களும்,நூற்றுக்கணக்கான நாராசந்துகளும் நிரப்பிய ஊரின் தொழிலான நெசவின் சாயங்கள் மனதில் ஊறின.சாயடிகளில் பந்துகளை அடித்து அதை தேடி ரகசியமாக கடத்தல்காரர்களைப்போல சென்று வந்ததும்,மாமியின் குழந்தையோடு விளையாடியதும்,விநாகருக்கு கண்கள் பறித்ததும்,தாயபாஸ் ஆடியதும் தெருவில் டயர் உருட்டியதும்,தராசுகளில் விளையாடியதும் என்று எண்ணற்ற ஞாபகங்கள்.அதன் நகைச்சுவையில் சிரித்துக்கொண்டிருந்த என்னை சுற்றியிருதவர்கள் பைத்தியக்காரன் என்று நினைத்திருக்க வேண்டும்.ஊர் அடைந்து டி.வி.டியில் படங்கள் பார்த்தேன்.அதிகம் பேசவில்லை.பாடியின் கைமணத்திலான ஆபங்களை புசித்தபடி நினைவுகளையும் சேர்த்து ஏப்பம் விட்டேன்.ஊருக்கு போஇ வருவது வீண் என்று கற்றுக்கொண்டதோடு இந்த பயணம் முடிவுக்குவந்தது.திரும்பும் தடங்களில் தொலைத்த என் நினைவுகளை சுருட்டிக்கொண்டு மீண்டும் கையிலெடுத்து காகிததில் கொட்டிவிட்டேன்.காற்று அடிக்கிறது
crazy
30th September 2006, 03:24 PM
திரும்பும் தடங்களில் தொலைத்த என் நினைவுகளை சுருட்டிக்கொண்டு மீண்டும் கையிலெடுத்து காகிததில் கொட்டிவிட்டேன்.காற்று அடிக்கிறது
:)
VENKIRAJA
3rd October 2006, 07:03 PM
மீண்டுமொருமுறை முதலிலிருந்து வாசித்துப்பாருங்களேன்,இது பாதசாரியின் திருந்தியபடிவம்,திருத்தியபடிவம்.
VENKIRAJA
20th October 2006, 08:55 PM
யாத்திரிகன்.
மலைகளின் உயரத்தைப்போலவே அது தரும் இன்பமும் உயரமான ஒன்றாகவே இருக்கிறது.சென்னை மற்ற நகரங்களிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது என்று வரைபடத்திலிருந்தே நாம் கணிக்கலாம்.ஏறத்தாழ நம் நகரம் ஐந்நிலங்களின் சங்கமம்.கடலிருக்கிறது:மெரீனாவும்,எலியட்ஸும்.வயலிரு க்கிறது:புறநகரில்.ஆங்காங்கே காடுகள் இருக்கின்றன.மேலும் பாலையும் இருக்கிறது.மலை:தாமஸ் மவுண்ட் இருக்கிறது.மலை என்ற பெயரில் முதன்முதலாக எனக்கு அறிமுகமானது என் தலைமுடியை தட்சணையாக பிடுங்கிக்கொண்ட திருப்பதியும்,திருத்தணியும்.ஒன்றாம் வகுப்பை நான் கற்றுக்கொண்டேன்-ஆசிரியைகளோடு மலையொடும்.தாமஸ் மலையின் எதிரில் தான் என் பள்ளி:மேரியன்.குருகுலமும் ஏறக்குறைய ஒரு குன்றுதான்.மொட்டையடிப்பதற்கு டிராவல்ஸ் மார்க்கமாக செல்வோம்,பள்ளிக்கு மாட்டு வண்டியிலும்,ஆட்டோவிலும்.என் இயற்கை குறித்த பார்வைக்காகவோ என்னவொ எனக்கென்று அவதரித்திருந்தது என் குடியிருப்புக்கு அருகில் ஒரு மலை.
"பெரிதாயும் சில பூக்கள்
வண்டுக்கும் சிட்டுக்கும் மட்டுமா?
சிட்டுக்கும் தேன் பிடிக்கும்"
(உதயஜோதி)
நெடுஞ்சாலையில் ஆந்தை சத்தங்களையும்,லாரிக்கிறீச்சிடல்களையும் கேட்க ஒவ்வாமல் குறட்டை விடுவது என் வழக்கம்.மலையில் ஏற பாஸ் வாங்கும் போது என் தூக்கத்திற்கு குட் நைட் சொல்லிவிடின் அதற்கப்புறம் கனவுலகு தான்.வாகனத்து(பெரும்பாலும் டிராவல்ஸில் சொல்லித்தான் பயணம் செய்துகொண்டிருந்தேன்,இப்போது தான் ஒரு ஐந்து வருடங்களாக அப்பாவின் கார் அதன் இடத்தை சப்ச்டிட்டியூட் செய்திருக்கிறது.)கண்ணாடியை இறக்கிவிடின் வாகனம் எங்களை ஏற்ற ஏற்ற காதைச்சூழும் காற்றின் குளிர்ந்த கரங்கள்.வழியில் இருக்கும் ஒரு விநாயகருக்காக ஒரேயொருமுறை நிறுத்துவோம்.அதற்கப்புறம் பத்துமணி நேரம் இந்த வெங்கடேஷுக்காக அந்த திருப்பதி வெங்கடேஷ் காத்திருக்க வேண்டும்!மலையுச்சியிலிருந்து கீழே காணின் மொத்த தரையும் பிம்பமாகத் தெரியும்.குறிப்பாக அதை இரவில் கண்டு கண்ணாடியில் விழவைத்து புகைப்படம் எடுக்க ஆசை.சரியாக எனது ஏழாம் வயதிலிருந்து மலையுடன் நண்பனாக இருக்கிறேன்.ஒரு மௌனமான துணையாகவே அவன் இருந்திருக்கிறான்.மலை என்ற பாங்கில் அது வெறும் 134 படிகள் தான்.எனக்கும் 134-க்கும் 143!அஃது சுமாரான ஓர் குன்று.அதைவிட சிறிய குன்றாக்கும் எதிரிலிருப்பது.சின்னக்குன்றின் மீதும் மேலிருப்பதைப்போலவே சின்னதாக ஓர் தேவாலயம் இருக்கும்.ஆலயத்திற்கு கீழே சுமார் 40 படிகள் ஆழத்தில் எனக்கே எனக்கான ஒரு பிரத்தியேக நகரம்,அதாவது பள்ளி.செவ்வக அடைப்புச்சுவர்களும்,விவிலிய வாசகங்களும் நிறைந்த ஒரு கட்டிடம்:அது வெளியாட்களுக்கு.ஆனால் அது ஒரு பட்டாம்பூச்சிப் பண்ணை:எங்களுக்கு.அதைப்பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.அந்த வாசகங்கள் எனக்கு பெரும்பாலும் புரியாமல் இருந்தாலும் கிறித்தவ இடம் என்ற குறியீட்டை தாங்கியபடி அவ்வாசகங்கள் சுவற்றுடன் முத்தம் தந்தபடிக்கு உறைந்து நிற்கின்றன.தேவாலயத்துக்கும்,பள்ளிக்கும் நடுவே இருபத்தைந்து குல்மொஹர் விருட்சங்கள்.மழை மட்டும் பெய்தது என்று வையுங்கள்,குல்மொஹர் மலர்கள் நீரோடு அருமையாக வந்து விழும்.வகுப்புகள் போரடித்தால் பக்கவாட்டு
ஜன்னல்,என் கண்ணாகிப்போகும்.ஏதேதோ ரம்மியமான வயலின் இசை மனதில் ஊறும்.இப்போது நினைத்தாலும் அப்படியே மெல்லிய உறக்கம் வருகிறது.இன்னும் சொல்வதற்கு மூட்டை நிறைய நினைவுகள் இருக்கின்றன.ஒவ்வொரு முறை எழுதும்போதும்,கொஞ்சம் என் மூட்டை நினைவுகளில் கொஞ்சம் குறைகிறது.எழுதி முடிப்பதற்குள் மூட்டை இரட்டிப்பாகும் அளவு வேறுவேறு நினைவுகள்,நிகழ்ச்சிகள் நிரம்பிவிடுகின்றன.இப்போதைக்கு விடைபெறுதலுக்கு அடையாளமாக ஓர் கவிதை.
"பாடம் நடந்தது,
தூக்கம் வந்தது,
வெளியே பாத்தேன்
டவர் தெரிந்சிது
பிடிச்சுப் போச்சு
பாத்துகிட்டே இருந்தேன்
பெஞ்ச் மேல் ஏறுன்னு
சொன்னாங்க மிஸ்.
இப்போ டவர்
தெரிஞ்சுது
இன்னும் நல்லா.
பிடிச்சுப் போச்சு
பாத்துகிட்டே இருந்தேன்.
வெளியே போன்னு
சொன்னாங்க மிஸ்.
அவங்கள எனக்கு
ரொம்ப பிடிக்கும்பா.
வெளியே போனேன்.
இப்போ டவர்
ஃபுல்லா தெரிஞ்சது.
பிடிச்சுப்போச்சு.
பாத்துகிட்டே இருந்தேன்.
ஹெட்மிஸஸ் வந்தாங்க.
என்னன்னு கேட்டாங்க.
இன்னன்னு சொன்னேன்.
அவங்க முட்டாள்பா.
மிஸ் என்ன
ஃபனிஷ் பண்ணாங்கன்னு
சொல்லாறாங்கப்பா."
-செ.ச.செந்தில்நாதன்(அவரது ப்ளாக்கிலிருந்து)
crazy
21st October 2006, 03:04 PM
:)
VENKIRAJA
17th November 2006, 06:51 PM
பதினாறு வயதினிலே.
"தங்களை இப்படி
கிறுக்குத்தனமாக கிறுக்கிய
யாரைப் பற்றி
முறையிடுகின்றன சொற்கள்?"
(காலிஃப்,தமிழில்:கவிக்கோ அப்துல் இரகுமான்)
முதல் முதலாக அம்புலிமாமா மூலமாக கிட்டிய இலக்கிய ரஸம் குமுதம்,விகடன் வழியாக வளர்ந்தது.மெல்ல சிறு பத்திரிக்கைகள் பக்கம் ஈர்க்கப்பட்டு,தற்போது எங்கள் வட்டத்திலேயே மிக பிரபலமான இலக்கியவாதியாக ஆனது ரொம்ப சந்தோஷம்.நாங்கள் ஒரு பத்து பேர்.இயற்பியல் பீரியட் வந்தின் செமினார் ஹாலுக்கு அழைத்துச்செல்வார்கள்.நாங்கள் எழுதுவது தான் முக்கியமே ஒழிய,என்ன எழுதுகிறோம் என்பதல்ல.அதனால் ஒரே வரிசையில் பத்து பேர் அமர்ந்து ஒரு காகிதம் எடுப்போம்.அப்பக்கம் முழுதும் அந்தாதி எழுதுவோம்,அதுதான் கவிதைக்கு கவிதை.இப்படித் தான் எங்கள் திறமை உரம் சேர்த்துக்கொண்டது.அண்மையில் எங்களது துண்டுப்பிரசுரங்கள் மாட்டிக்கொண்டுவிட குழு தகர்ந்தது.அத்தனை பேரும் கவியியற்றுவதை நிறுத்திக்கொண்டோம்.ஆனாலும் மனதின் ஓரத்தில் சொட்டிக்கொண்டிருக்கும் இலக்கிய சிந்தைகளை இது போன்ற வெவ்வேறு வடிகால்களில் வாய்க்கால்களாக்கிகொண்டிருக்கிறோம்.எழுதாமல் இருப்பது பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகிறது.நூலகங்களில் முற்றுகையிட்டது,புத்தகக் கண்காட்சிகளில் பேரம் பேசியது எல்லாம் நினைவுக்கு வந்து உயிரை எடுக்கின்றன.பஜ்ஜி மடித்த காகிதத்தில் இருந்த கவிதையை படித்து,பாட்ல்களில் இருக்கும் நயம் பாராட்டுவது என எப்படியோ மனம் கலைந்துவிடுகிறது.உள்ளம் கலைடாஸ்கோப்பாகி நொடியொரு கவிதை எங்கிருந்தோ பறந்து வந்தென் மனக்கிளைகளில் கூடு கட்டிக்கொள்கிறது.இது நேற்று முந்தாநேற்று வந்த பழக்கமல்ல.அத்தனை பேரும் விவாத்தித்த தருணத்தில் தான் நாங்கள் எப்படியோ பத்து வயதிற்குள்ளேயே இலக்கியத்துடன் சம்மந்தப்பட்டிருப்பது தெரிகிறது.உதாரணம்?இதோ:நான் என் முதல் கதையை எழுதிய போது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்,ஒருவன் மூன்று வயதில் ரஜினியை படம் வரைந்திருக்கிறான்.ஒருவன் தன் தாய்மாமன் காதலிப்பதைப்பார்த்து அதை வைத்து ஒரு கவிதை எழுதியிருக்கிறான் பத்து அகவையில்,இது போல.மு.மேத்த என்னை வெகுவாக பாதித்திருந்தார்,கூடவே அப்துல் இரகுமானும்.ஆனால் நண்பன் வைரமுத்துவின் வைரமுத்துக்களுக்கு நிகராகாது என்பான்.ஒருவன் நாம் அப்படி ஆவோமா என்பான்.ஒருவன் அவர்களைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது,நான் நான் நான்... நான் நல்ல கவிஞன்,எனது நல்ல குணங்கள் எனக்கு தெரியும் என்பான்.எல்லோரும் "யே.."என்போம்.இப்படியாக வளர்ந்து வந்த கவிதைப்பாதை,அவ்வப்போது காதல் பக்கம் தலைவைத்து படுக்கும்,காதல் கவிதைகள் எழுதுவோம்.சினிமா பற்றி கதைப்போம்.புத்தகங்கள் பகிர்வோம்.ரேடியோவிலும்,MP3-யிலும் பாடல்களை கேட்போம்.இசையை காகித்தத்தில் வார்ப்போம்.பழைய பேப்பர் கடைகளில் புத்தகம் வாங்கும் உத்தியை நான் கண்டறிந்தேன்.பள்ளி நூலகத்தில் நல்ல புத்தகங்களை அகழ்வாராய்ச்சி செய்வான் ஒருவன்,பள்ளியின் இதழில் கவிதை எழுதுவான் ஒருவன்.ஆசிரியர் தின வாழ்த்தாக கவிதை எழுதி தப்பித்துவிடுவேன் நான்.இவனை நம்பாதீங்கடா,சரியான் நேரத்தில ஜூட் வுட்டுட்டு எஸ்ஸாயிடுறான் என்பான் ஒருவன்.திடீரென ஒரு crime கதையெழுதி அத்தனைபேரும் கதைக்கு தடம் மாறுவோம்.அதிலும் அந்தாதி தான்.ஒரு வரி நான்,ஒரு வரி நீ...இத்தியாதி.வீட்டிற்கு வருகையிலும் இதே பேச்சுதான்.தூக்கம் வரும் வரை கவிதை பற்றி யோசிப்பேன்.இப்படி பல்வேறு நெறிகளில் மனம் முழுக்க கவிதை ஆக்கிரமித்தது.வெறு வழியே இல்லாமல் அருமையான மதிப்பெண்கள்,வகுப்பிலேயெ first mark,கடைசியிலிருந்து(ஹி..ஹி..ஹி).ஏகப்பட்ட அறிவுரைகள்.அதில் எனக்கு பிடித்தது இதோ:
"நீ எழுதுறது jam மாதிரி,jam உபயோகப்படணும்னா bread வேணும்.மத்தவங்க எல்லாம் வெறும் breadஓட வாழ்க்கை கசந்து போக வாழ்வாங்க,ஆனா நீ bread-jam ஓட சந்தோஷமா வாழலாம்.ஆனா அதுக்கு bread வேணுமில்லையா?போ போய் ஒழுங்கா படி. jam மட்டும் இருந்தா பைசாவுக்கு பிரயோசனமில்லை"
(வசந்தா கிருஷ்ணன்,சுவாமீஸ் பள்ளி தலைமையாசிரியை)
அன்று முடிவு செய்தேன்,அறுவை சிகிச்சை செய்து இந்த நோயை தற்காலிகமாக நீக்குவதென,இன்னும் இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சை.
VENKIRAJA
18th November 2006, 04:39 PM
பிரயாணி.
"தலை வழுக்கை
அனுபவச்சீப்பு
கையில் கிடைத்தபோது."
(முனைவர்.ம.இளங்கோவன்,நிலாச்சாரல்.காம்)
அலைந்து அலைந்து ஒருவன் ஒரு மோதிரத்தை வாங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம்.கைக்கு எடுப்பாக,விலையாக,தரமாக.அதை கொண்டுவருகையில் விபத்தொன்றில் கைகள் போய்விடுகின்றன என்றால் .....அதெ போன்ற நிலை தான் ஏறத்தாழ,எனக்கு.தேர்வுகளோடு குடுமிப்புடி சண்டை போட்டுக்கொண்டிருந்த தருணத்தில் நல்ல் வேளை அடைமழை.சீற்றம் காரணமாக எங்களையெல்லாம் 2.30-க்கெல்லாம் சிஐயினின்று விடுவித்துவிட்டார்கள்.ஆபத்பாந்தவனை ரசித்தபடி நான் வந்துகொண்டேயிருந்தேன் சைக்கிளில் ஓவர்ஸ்பீடாக.சர்வலட்சண யமகண்டத்தில் சைக்கிள் செயின் அறுந்தது.மழை வேகமெடுத்தது,நானோ தள்ளிக்கொண்டுவந்தேன்.5 கீ.மி.ஏற்கனவே மழை பற்றி குறிப்புரை ஒன்று எழுதியிருந்தாலும்,அதையும் தாண்டி முகில்கள் எனக்கு ரசிக்கத்தந்த தருணமிது.
வானத்தின் நட்சத்திரங்களே மழைத்துளிகளாக பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கொண்டுவர,வகுப்பில் ஒரே "absent sir!" குரல்களின் ஞாபகம்.வாகங்களின் சோற்றுப்பருக்கைகளான பெட்ரோல் துளிகள் தெருவில் மழையோடு சங்கமமாகி ஆங்காங்கெ மைக்ரோ வானவில்கள்,மேகமிட்ட ரங்கோலியாக.எப்பொழுதும் போல சென்னைவாசிகள் தத்தம் பங்குக்கு தாடைகளுக்கு நடுவிலிருப்பது வழியாகவும்,தொடைகளுக்கு இடையில் இருப்பது வழியாகவும் மழை பொழிந்துகொண்டிருந்தார்கள்.ஜென்மாதி ஜென்மங்களாக குளிக்காத தெருநாய்கள் குளித்துக்கொண்டிருந்தன,விண்ணின் ஷவரில்.புயல்மழையில் டீக்கடை விவாதம்,பாராளுமன்றத்தைவிட இரைச்சல் கம்மியாக.சந்தடி சாக்கில் என் சைக்கிளையும் கழுவிய திருப்தி.இரசனைகெட்ட வேலைக்காரிகள் ஜன்னல்களை மூடிக்கொண்டிருந்தார்கள்.பொறுப்பன மின்சாரத்துறையினர் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள்.பெருமகிழ்ச்சியில் தங்கள் புன்னகைகளால் பொங்கிவழிந்தன சாகடைகள்.வீட்டுக்குள்ளிருந்த நாய்கலும்,வெளியிலிருந்த நாய்களும் தொகுப்பாளினிகள் பாஷையில் பட்டிமன்றம் நட்ந்துகொண்டிருந்தன.மல்லிகைப்பூகள் பாராஷூட் இன்றி தரையிறங்கி சேற்றோடு கலந்துவிட்டன.யாரும் கண்டுகொள்ளாத பாவப்பட்ட ஜீவனஎன தெருவோர பிள்ளையார் குடையின்றி அழுதுகொண்டிருந்தார்.கரைந்துகொண்டிருந்தது,அவரத ு பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருந்த விபூதி கரைந்துகொண்டிருந்தது.குதுகலமாக டூயட் பாஅடிக்கொண்டிருந்தன தவளைகள்.மூக்குக்கண்ணாடியை சரி செய்தபடி ரேடியோவை தட்டித்தட்டி கேட்டுக்கொண்டிருந்தார் கடைக்காரர்.கிரிக்கெட் ஆடும் பிள்ளைகளை அபிஷேகம் செய்தது நீலவானஓடை.ரெயின்கோட்டின் பாக்கெட்டுகளில் மழைநீர் சேகரிப்பு நடைபெற்றது.கடிகாரத்தினுள்ளே அத்துமீறி ஆக்க்கிரமித்தன தூறல் துளிகள்.ஏதேதோ காரணங்களால் விசிலடித்தன பறவைகள்.வாகனங்களின் வைப்பர்கள் பெருக்கிக்கொண்டிருந்தன.மரவேர்கள் ஓவர்டைமில் ஸ்ட்ரா போட்டு தண்ணீரை ருசித்துக்கொண்டிருந்தன.அவ்வப்போது டார்ச் அடித்து மழைக்கு வழிகாட்டியது மின்னல்.மழையின் பன்ச்-டயலாக்காக வெளியதிர்கிரது இடி.மக்க்ளால் நிறுத்தமுடியவில்லை மழையையும்,தெருகுழாய்களையும்.அரை நிர்வாணமாக....சீச்சீ சில ஆண்கள்.கவிதைகளை மறந்துகொண்டிருந்தேன் நான்.எறும்பென நகர்ந்தது வாகனநெரிசல்:பாவம் டிராபிக் சார்ஜண்ட்.கொசுக்களுக்கு ரத்ததானம் செய்தபடியே கவிதைகளை மறந்துகொண்டிருந்தேன் நான்.அய்யய்யோ முற்றுப்புள்ளி வைக்க் மறந்துவிட்டேனே
"மழை வேண்டாம்
தூறல் போதும்
மண்வாசனை"
(மோ.அபிலாஷ்,என் சக கவித்தோழன்)
Shakthiprabha.
19th November 2006, 03:25 PM
திரும்பும் தடங்களில் தொலைத்த என் நினைவுகளை சுருட்டிக்கொண்டு மீண்டும் கையிலெடுத்து காகிததில் கொட்டிவிட்டேன்.காற்று அடிக்கிறது
motha ganamum allathu ganamatra innavendru sollaatha silavum...
kadaisi iru varigaL kotti vittana. :)
plz do spell check.
konjam spelling mistake irukku. parthukonga. :)
Shakthiprabha.
19th November 2006, 03:31 PM
என் கேள்விக்கென்ன பதில்?
யாராவது இவற்றுக்கு பதிலளியுங்கள்:
anonymous:தமிழாக்கம் யாது?
யாரேனும் "திரைப்படம் தன் வரலாறு கூறுதல்" என்ற தலைப்பில் எழுதுங்களேன்.
இங்கு எழுதியிருந்த மேற்கோள்களுள் உங்களைக் கவர்ந்தது எது?
entha mErkoL ai patri kEtkireergaL?
anonymous : peyarili?
sounds okei?
Shakthiprabha.
19th November 2006, 03:36 PM
venkiraja,
your tamizh is extremely concentrated , rich. Probably thats why, not many are able to obsorb themselves with absolute intimacy.
Yet I cant help but to say, UR TAMIZH is a GIFT for tamizh lovers.
I would follow up every now and then.
please keep writing.
Also, soon enough I wanna reinstall my tamizh fonts.
appothu naan ungaLukku tamizhil vidai aLippathu innum enakku magizchi aLikkum. :)
Shakthiprabha.
19th November 2006, 03:39 PM
அத்தியாயம் # 9.
சில சமயம் அந்த தண்ணீர் என் மீது படும்,ஆனால் சில நொடிகளிலேயே காய்ந்துவிடும்,அந்த அம்மாவின் மீது பழித்துரைத்த சொற்களைப்போல.
:thumbsup:
kavithuvam nirambi vazhigirathu :)
Shakthiprabha.
19th November 2006, 04:01 PM
பெயர்கள் தரும் வினோதம் அளப்பெரியது.என் அம்மாவின் பாட்டி பெயர்:செல்சா!நன்பனொருவனது பெயர்:பட்டு ரோஸ்!ஆனால் அவை அரிதாரம் பூசிக்கொள்வதில்லை நகரமாந்தர்களை நிகர்த்து.
.நகரமோ கிழிந்த ஜீன்ஸும் பெர்பியூமும் சூடியிருக்கிறது.இல்லையில்லை வாடியிருக்கிறது.
nagara maanthar meethum nagara vazhkai murai meethum en ithunai abipraayaminmai?
nagarathilEyE piranthu, valarnthu, uzhandra engaLai pondrorukkum
pala pasumai ninaivugaL vaadamal innum sonthamaay, singaaramaay manathil kudikondirukkirathu.
kizhintha jeansum perfumeilum pazhagiya engaLukku athilum kavithai oLinthirupathu pondra bramai :)
நான் தொடர்கிறேன்:[b]ஒவ்வொருவனும் தின்று முடித்த பகுதி மீண்டும் பழத்திற்குள்ளேயே போய் பழத்தை நிரப்பிவிடுகிறது,ஆதலால் இன்றுவரை உலகம் உருண்டை[/b
ungaL karpanaioottathai ennaal rasikaamal irukka mudiyavillai.
wow!
VENKIRAJA
19th November 2006, 07:40 PM
ரொம்ப நன்றி அண்ணி.நான் ஆரம்பத்திலிருந்து கொடுத்த மேற்கோள் அனைத்திலும் எது உங்கள் மனதைக் கவர்ந்திருந்தது?என கேட்டேன்.யாருமே பதில் சொல்லவில்லை :( உங்களை எங்கே ரொம்ப நாளாய் காணோம்?பவளமணி அம்மையாருக்கு என்ன ஆச்சு?
Shakthiprabha.
19th November 2006, 09:46 PM
pp maam pathi therila. hope she would be joining us soon. vEra oorukku maathi porangannu kelvi patten.
regarding merkoL which impressed me, I would answer soon.
Shakthiprabha.
19th November 2006, 10:02 PM
அறிவுரைகள்.அதில் எனக்கு பிடித்தது இதோ:
"நீ எழுதுறது jam மாதிரி,jam உபயோகப்படணும்னா bread வேணும்.மத்தவங்க எல்லாம் வெறும் breadஓட வாழ்க்கை கசந்து போக வாழ்வாங்க,ஆனா நீ bread-jam ஓட சந்தோஷமா வாழலாம்.ஆனா அதுக்கு bread வேணுமில்லையா?போ போய் ஒழுங்கா படி. jam மட்டும் இருந்தா பைசாவுக்கு பிரயோசனமில்லை"
(வசந்தா கிருஷ்ணன்,சுவாமீஸ் பள்ளி தலைமையாசிரியை)
ippErpatta azhagaana (suvaiyaana) aRivurai seitha antha thalaimai aasiriyaiyai paarka manam aasaipadugirathu :D
ungaL 'prayani' pathivum azhagaay irunthathu.
meRKogaLgaL endru neengaL ethai solgireergaL ena puriyavillai.
Do u mean the poetries uve quoted (other's poetries?)
btw,
enakku paLLikooddathu vidai perum kavithai (from blog sa.senthilnaathan?) pidikkavillai. athil ethuvum rasikkum padi iruppathaay enakku t hondravillai.
Shakthiprabha.
19th November 2006, 10:03 PM
Why dont u write in blog?
Do u have one?
Naan inga thaan irukken. Just happen not to visit story section.
ini varuvEn.
arumaiyaana ungaL pathivugaLai padipatharkaagavenum :)
VENKIRAJA
20th November 2006, 10:19 PM
Why dont u write in blog?
Do u have one?
Naan inga thaan irukken. Just happen not to visit story section.
ini varuvEn.
arumaiyaana ungaL pathivugaLai padipatharkaagavenum :)
i didn't mean this quote though.i just asked the very poems ive qouted(obviously others,with myne being just one)senthilnathan's poem,hmmm i liked it;coz it was my own self!
crazy
22nd November 2006, 01:54 PM
"மழை வேண்டாம்
தூறல் போதும்
மண்வாசனை"
(மோ.அபிலாஷ்,என் சக கவித்தோழன்)
venki
naan nee mattum thaan kavidhai ezhuduvennu ninachen, un nanbargral kooda nallave kavidhai ezhuduraanga :)
sundararaj
29th November 2006, 07:37 PM
[tscii:b63c8e6bd3]«Õ¨ÁÂ¡É ¾¢Ã¢. þýÛõ ÓÙ¨Á¡¸ ÀÊì¸Å¢ø¨Ä.Å¢¨ÃÅ¢ø ÓÊô§Àý. ¿ýÈ¢.[/tscii:b63c8e6bd3] :D
VENKIRAJA
11th December 2006, 08:06 PM
அத்தனை விழிகட்கும் நன்றிகள்.எனக்கு கேள்விகளுக்கு அத்தனை பேரும் பதிலளிக்க வேண்டும் என்று ஆசை.செய்யுங்களேன்.
VENKIRAJA
2nd January 2007, 02:33 PM
கூடிய விரைவில் திரியை புதுப்பிக்க நெய்யை காய்ச்ச முற்படுகிறேன்.பால் கறந்துவிட்டேன்.
swathy
2nd January 2007, 02:41 PM
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இந்திக்கரர்களை எட்டுமாடிக்கட்டிடங்கள் கட்டவும்,தமிழனை கையேந்தவும், நாவற்பழம் விற்கவுமே அனுமதிக்கும்.
excellent venkatesh :clap: :thumbsup:
swathy
3rd January 2007, 11:34 AM
venkatesh
venkinnu koopiduradhai vida venakteshnnu koopiduradhu than enakku pidichi irukku.
ettu pakkangalaiyum padichen.
paaadhasari thalaippilaye paadhi sollitte unnai pathi
puthaga sumaigalukku naduvil ivlo yeludhi irukka enna soldradhunne therilai nee nalla varuve.
suthi nadakkiradhai nalla gavanikkirai illai nalla rasikkire.
tamil vaarthaigal suthama irukku pudusa kooda irukku azhagavum irukku.
idaila vara aangila vaarthaigalai thavirkkalame
thodarattum un payanam
vaazhthukkal
madhu
3rd January 2007, 08:09 PM
venkat..
Really I dont know how to write anything about your work...
sariyaga solla vendum enraal bayamai irukkiradhu enrudhan solven..
kadarkarai oram kilinjal segarikkum kuzhanthai naan.. ennaal titanic iceberg patri nichayam edhuvum solla iyaladhu..
but ungal padaipukkal ellame verum ezhutha vendum enra kaaranathukkaga mattum ezhuthapada villai enbathu therigiradhu.
urainadaiye kavithaiyai maari iruppathai ungaL ezhuthil kaangiren.
thEn thuLi naavil sottinaal melE nimirnthu thEn koodu engE ? adhil thEn irukkiradhA ? enru paarka thOnRum. adhu pOla ungLadhu matra padaippugaLukkAga waiting. ( intha tanglishkkuaga ennai mannikkavum :P)
pavalamani pragasam
3rd January 2007, 08:20 PM
madhuvai thEdum madhu! :lol:
VENKIRAJA
6th January 2007, 07:07 PM
iththanai paaraata!nanri nanri.athanai paaratukkum naan innum kodi pakkangal ezutha vendum polirukkirathu,viraivil paarpom.en sitrarivai suaithavarkal kavithaikalil konjam karuppu tajmahalaiyum paarvaiyidalaame!
VENKIRAJA
7th January 2007, 12:14 PM
-deleted,double posting-
VENKIRAJA
7th January 2007, 05:19 PM
[tscii][quote=madhu]venkat..
Really I dont know how to write anything about your work...
sariyaga solla vendum enraal bayamai irukkiradhu enrudhan solven..
kadarkarai oram kilinjal segarikkum kuzhanthai naan.. ennaal titanic iceberg patri nichayam edhuvum solla iyaladhu..
but ungal padaipukkal ellame verum ezhutha vendum enra kaaranathukkaga mattum ezhuthapada villai enbathu therigiradhu.
urainadaiye kavithaiyai maari iruppathai ungaL ezhuthil kaangiren.
thEn thuLi naavil sottinaal melE nimirnthu thEn koodu engE ? adhil thEn irukkiradhA ? enru paarka thOnRum. adhu pOla ungLadhu matra padaippugaLukkAga waiting. ( intha tanglishkkuaga ennai mannikkavum :P)
எனக்கு இது கொஞ்சம் அதிகப்படியான பாராட்டு.உங்களைப்போல நேர்த்தியாக சிறுகதைகள் எழுத எனக்கு வரவே வராது.அப்படி முயன்ற ஒன்ரு அனாதையாக கிடக்கிறது பாருங்கள்.இத்தனை பாரட்டுகள் பெற்று திருஷ்டி வரக்கூடாதென்பதால் தொடர்கிறேன் இன்று மட்டும்.அத்தனை பேரும் புத்தாண்டுக்குன ஏதேனும் சிறப்பாக செய்துகொண்டிருக்க,ரொம்ப நாளைக்குப் பிறகு நான் ஒரு இடைச்செருகல் பதிவு செய்கிறேன்.
இடைச்செருகல் # 3.
ஒரு பார்வை,சில பரிமாணங்கள்.
சென்ற ஆண்டு என்னைப்பொருத்த வரையில் இணையத்துக்கும் எனக்கும் இருந்த பூர்வ ஜென்ம பந்தத்தின் அர்த்தம்,அதாவது நான் இனையத்தோடு பரிச்சயமான வருடம்.இந்த மையம் எனக்கு நிரய கற்றுக்கொடுத்திருக்கிறது.என் சிற்றறிவை கொஞ்சம் பெருக்கியிருக்கிறது.எனது கோணத்திலிருந்த அலசியதில் என் தேர்வுகள் இதோ.
1.இலக்கியம்,இணையம்:
சிறந்த கவிதை வலைமனை:priyan4u.blogspot உதாரணக்கவிதை இதோ:
பலூன் கேட்டு
அழுத சிறுமி
அப்படியே உறங்கிப் போனாள்!
சிறிது நேரத்தில்
அழுதபடி தூங்கியவளின்
முகமெல்லாம் புன்னகை
எத்தனை பலூன்கள்
வந்ததோ அவள் கனவில்!
__________________________________________________
சிறந்த காதல் கவிதை:அருட்பெருங்கோ
Friday, December 29, 2006
"பிறந்த நாள் வாழ்த்து!"
உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவோமா?
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான்
பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்.
உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்!
பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய் உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா?
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!
கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,
நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!
பிறந்தநாளை எப்போதும்
ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…
என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?
தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!
பிறந்தநாளுக்கு
எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்
உன் ‘பிறந்தநாள் ஆடை’? போல் வருமா?
ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!
நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?
அழகப்பன் என்று!
உன் பிறந்த நாளன்று
உன்னை வாழ்த்துவதா?
நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய்!
உன் பிறப்பு
உன் தாய்க்குத் தாய்மையையும்,
எனக்கு வாழ்வையும் தந்தது!
நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென!
என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.
உன் தாய்க்குப் பிறந்தாய்.
என் தாய்க்குப் பின் என் தாய்.
அழுகையோடு பிறந்தாயா?
அழகோடு பிறந்தாயா?
“.....”
( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
_______________________________________________
சிறந்த ஹைக்கூ:பொ.பொன்மணிச்செல்வன்
வறுத்த மீன்
மடித்த் காகிதத்தில்
'மீன்களைக் கொல்லாதே!'
_______________________________________________
சிறந்த கவிதை: (தமிழ்மணம் கவிதைப்போட்டியில் பரிசுபெற்ற கவிதை)
'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு
நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு
ஆனால்தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும்
சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
இட்டவர் பெயர் அங்கு தமிழன் என்று இருந்தது.
_______________________________________________
சிறந்த வாராந்திரத் தொடர்:அ.முத்துலிங்கம் பக்கம்(குமுதம் தீராநதி),மந்திரச்சொல்(எஸ்.கே.முருகன்,ஆனந்த விகடன்),மாயவலை(பா.ராகவன்,குமுதம் ரிப்போர்ட்டர்)
_________________________________________________
சிறந்த செய்தித்தாள்:தி ஹிந்து,தினமலர்.
_________________________________________________
சிறந்த மறுபதிப்பு:கண்ணீர் பூக்கள்(27வது)மு.மேத்தா(கடந்த பத்து வருடங்களாக காணாமல் போய் ஒன்ரிரண்டு கவிதைகள் மட்டும் தந்து பிறகு 2005ல் திரும்பி 2006ல் உலக பயணமெல்லாம் மேற்கொண்டுவரும் எழுத்துச்சிற்பி)
_________________________________________________
சிறந்த திரைப்பாடல்:கற்க கற்க(வேட்டையாடு விளையாடு,கவிஞர் தாமரை)
__________________________________________________
சிறந்த கட்டுரை நூல்:முகத்தில் தெளித்த சாரல்(வெ.இறையன்பு)
__________________________________________________
சிறந்த கச்சேரி:குருசரன்(எனக்கு சங்கீத ஞானமெல்லாம் கிடையாது,கேட்க இதமாக இருந்தது)
__________________________________________________
சிறந்த புத்தகம்:தேசாந்திரி(எஸ்.ராமகிருஷ்ணன்,விகடன் பதிப்பகம்,ரூ.110)
__________________________________________________ _
சிறந்த கவிதைத்தொகுப்பு:நகுலன் கவிதைகள்(அவரது மிகச்சிறந்த கவிதைகளின் தொகுப்பு)
__________________________________________________ __
சிறந்த பதிப்பகம்:அம்ருதா,உயிர்மை மனுஷ்யபுத்ரன்.
__________________________________________________ __
சிறந்த அட்டைப்படம்:குமுதம்(சினேகா double face)
__________________________________________________ __
சிறந்த சிறுபத்திரிக்கை:கணையாழி(உயிர்ப்பிப்பு)
__________________________________________________ ___
சிறந்த பதிப்பாளர்:குமரன் பதிப்பகத்தார்.
__________________________________________________ ___
2.மையம்:
சிறந்த மையம் திரி:கவிதைக்கு கவிதை.(குறிப்பாக பவளமணி அம்மையாரின் கவிகள்),மதுவின் சிறுகதைகள்,(வாசவியின் ஊக்குவிப்பு:எனக்கு),சூரியவிழி/பரணியின் கவிதைகள்.
__________________________________________________ ___
சிறந்த hubber:பிரபு ராம்,நிலவுப்பிரியன்,s.n.சாரதா(பிரத்தியேகமாக சிவாஜி கணேசன் திரிக்காக)
__________________________________________________ ___
சிறந்த குழு:நிஞ்சா,இலங்கை சிங்கங்கள் இதெல்லாம் எனக்கு தெரியாது.என்னைப் பொறுத்தவரை அஜித்,கமல் ரசிகர்கள்:அவர்களுடைய ஏகோபித்த வெறித்தனமான ரசிப்புக்காக.(அஜித் திரி 15 நாட்களில் 100 பக்கங்கள் நிரைந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்)
__________________________________________________ ____
சிறந்த நிகழ்வு:சத்தியமாக 27 கவிதைகள் வரும் என எதிர்பார்க்கவில்லை.அத்தனையும் புதுமை மிளிர,கவர்ச்சி ததும்ப,கருத்து விரிய சிறந்தன,சிரம் உயர்ந்தன,நன்றி அனைத்து பங்கேற்பாளர்களுக்கும்,கவிதை போட்டியில் பங்குபெற்றதற்கு.
__________________________________________________ ___
சிறந்த signatureகள்:bulb_mani.
__________________________________________________ ___
சிறந்த புதுவரவு:வெள்ளக்கோயில் சுந்தர்ராஜன்
__________________________________________________ ___
சிறந்த அவதார்:rami,(எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,நிறைய பேருடையது நன்றாக இருந்தது)
__________________________________________________ ___
சிறந்த ரத்தக்களரி:ajith vs vijay திரி,விஜய் அவார்ட்ஸ் பற்றி செய்த சண்டைகள்.
__________________________________________________ ___
சிறந்த நகைச்சுவை:raikkonen,sanguine sreedhar(அதுவும் அந்த நாச்சி ஊறுகாய்...மாங்கா ஊறுகாய்)
__________________________________________________ ___
சிறந்த சொதப்பல்:moderatorகளே அஜித்/விஜய் திரியை துவக்கி,மீண்டும் அவற்றை delete செய்த பரிதாபம்.
__________________________________________________ ___
சிறந்த reform: புதிய emoticons.
__________________________________________________ ___
மைய இதழ்:குறுக்கெழுத்துப்போட்டி,கம்பராமயண விளக்க உரைகள்.
__________________________________________________ ___
VENKIRAJA
7th January 2007, 06:07 PM
3.சினிமா:
சிறந்த குழந்தை நட்சத்திரம்:ஷ்ரேயா(SOK)
சிறந்த துணை நடிகை/நடிகர்:கமலினி முகர்ஜி(VV),ரகுவரன்(சிவப்பதிகாரம்)
சிறந்த பாடல் தொகுப்பு(picturisation):உன்னைக் கண்டேனே.......(பாரிஜாதம்)
சிறந்த கேடர்(வில்லனுக்கு தமிழ்ப்பதமாம்):அழகம்பெருமாள்(PP),டேனியல் பாலாஜி(VV)
சிறந்த ஒளிப்பதிவு:ரவிவர்மன்(VV)
சிறந்த இயக்கம்:புதுப்பேட்டை
சிறந்த நகைச்சுவை நடிகர்:வடிவேலு(IA23P)
சிறந்த தயாரிப்பு:ஷங்கர்(IA23P)
சிறந்த நடிகை/நடிகர்:பாவனா(சித்திரம் பேசுதடி)அஜித்குமார்(வரலாறு)
சிறந்த கதையம்சம்்:வெயில்
சிறந்த பாடகி/பாடகர்:ஷ்ரேயா கோஷல்(SOK),நரேஷ் ஐயர்(வரலாறு).
சிறந்த பாடல் வரிகள்:சிலுசிலுக்கும் சில்மிஷி(பா.விஜய்),முன்பே வா(வாலி),ஒரு நாளில்(PP),கற்க கற்க(VV)
சிறந்த ஒலிநாடா(அனைத்து பாடல்களும்):உன்னாலே உன்னாலே
சிறந்த இசையமைப்பாளர்:யுவன் ஷங்கர் ராஜா(PP)
சிறந்த நச்சரிப்பு:சிம்பு/நயன் விவகாரம்,குஷ்பு சர்ச்சை.
சிறந்த அறிவிப்புகள்:தமிழ்ப்பெயர்கள்,நுழைவுச்சீட்டு விலைக்குறைப்பு.
சிறந்த ஆறுதல்:சூர்யா/ஜோ,செல்வா/சோனியா திருமணங்கள்.
4.தொலைக்காட்சி.
சிறந்த நிகழ்ச்சி:GRANDMASTER(ஸ்டார் விஜய்)
சிறந்த வாராந்திரத் தொடர்:சிதம்பர ரகசியம்.(gr8 job 4m d whole crew)
சிறந்த கரு(concept):ஜோடி நெ. 1,சூப்பர் சிங்கர்,காஃபி வித் சுச்சி(நோக்கவும்:அனு அல்ல்)
சிறந்த பாடல்:நிலவைப் பிடிப்பொம்(பாடியவர்:அருணா சாய்ராம்,எழுதியவர்:டாக்டர் கிருதியாஸ்)
சிறந்த துணை நடிகை/நடிகர்:மாளவிகா(சிதம்பர ரகசியம்),வேணு அரவிந்த்(செல்வி)
சிறந்த நடிகர்/நடிகை:சந்தானம்(லொள்ளு சபா).:(:(:(:(:(:(
சிறந்த தொகுப்பாளர்:விஜய் ஆனந்த்(கே டி.வி),மக்கள் தொலைக்காட்சி:அனைத்து தொகுப்பாளர்கள்.
சிறந்த நகைச்சுவை:ஜெயா டி.வி தேர்தல் நிகழ்ச்சிகள்,அதற்கப்புறம் அது சார்ந்த நிகழ்ச்சிகள்.
சிறந்த திறமையாளர்கள்:'நாகேஷ்' செல்லக்கண்ணு,மருது(கலக்க போவது யாரு)
சிறந்த reality show:கலக்க போவது series.
சிறந்த குழந்தைகள் நிகழ்ச்சி:just for gags,mr.bean(போகோ)
சிறந்த வயிற்றெரிச்சல்:வல்லவன் சிம்பு/டி.ஆர் என சன் குழுமத்திற்கு வேண்டப்பட்டவர்களது நேர்காணல்கல்,இத்தியாதி,countdowns.
சிறந்த சிரந்தவர்கள்்:சங்கிலி போல தொடர்ந்து நடந்துவிட்ட நடிகைகள் தற்கொலைகள்.
kannannn
7th January 2007, 11:54 PM
மீண்டும் 'பாதசாரி'யை தொடரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மீண்டும் உலகத்தை வெண்கிராஜாவின் கண்ணோட்டத்தில் காண ஆவல் கொண்டிருக்கிறேன்.
P_R
8th January 2007, 04:49 AM
உங்கள் 'சிறந்த' பட்டியலைப் பார்த்து ஏன் எதற்கு என்று சிலவற்றைப் பற்றி கேட்கலாம் என்று இருந்தேன். இதைப் பார்த்ததும், வந்தவரை லாபம், இதைக் குடைவானேன் என்று விட்டுவிட்டேன் :P நன்றி
சிறந்த hubber:பிரபு ராம்,நிலவுப்பிரியன்,s.n.சாரதா(பிரத்தியேகமாக சிவாஜி கணேசன் திரிக்காக)
சிறந்த சிறு பத்திரிக்கை:கணையாழி(உயிர்ப்பிப்பு)
சிறந்த சிறுபத்திரிக்கை, சரி அது உங்கள் அபிப்பிராயம். ஆனால் 'உயிர்ப்பிப்பு' ? இந்த வருடம் நின்று தொடங்கியதா என்ன ? கணையாழியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் கொஞ்ச வருடமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
Raikkonen
8th January 2007, 01:49 PM
[quote=VENKIRAJA]
______
சிறந்த நகைச்சுவை:raikkonen,sanguine sreedhar(அதுவும் அந்த நாச்சி ஊறுகாய்...மாங்கா ஊறுகாய்)
__________________________________________________ ___
__________________________________________________ ___
I'm honoured.. Thank You..
pavalamani pragasam
8th January 2007, 02:53 PM
[tscii:7e484d9612]«ó¾ ¾¢Ã¢ «È¢ó¾ ±ò¾¨É§Â¡ º¢Èó¾ ¸Å¢»÷¸û ±ðÊ ¿¢üÌõ ¸¡Ã½ò¾¡ø ¬¨Ä¢øÄ¡ °ÕìÌ þÖô¨Àôâ º÷츨ḢŢð¼Ð :D [/tscii:7e484d9612]
madhu
8th January 2007, 07:18 PM
சிறந்த மையம் திரி:கவிதைக்கு கவிதை.(குறிப்பாக பவளமணி அம்மையாரின் கவிகள்),மதுவின் சிறுகதைகள்,(வாசவியின் ஊக்குவிப்பு:எனக்கு),சூரியவிழி/பரணியின் கவிதைகள்.
idhai vasishtar vaayAl kidaikum "brahmarishi" pattathaiyum,
paramasivanE kodukkum "Eswaran" pattathiayum vida siRappanadhAga karudhi nanRi kURugiREn.. :notworthy:
thimuru
12th January 2007, 02:12 PM
venki...just now gone through ur posts...
ungalukkul ippidi oruvana?
u read pudhumaipithan?...my favourite!
recently in kavidhai i came across a poet called "thaboo" shankar...he is so good!
but what he writes only about "LOVE"
thimuru
12th January 2007, 02:18 PM
சிறந்த hubber:பிரபு ராம்,நிலவுப்பிரியன்,s.n.சாரதா(பிரத்தியேகமாக சிவாஜி கணேசன் திரிக்காக)
just now noticed
honoured :notworthy:
VENKIRAJA
13th January 2007, 04:10 PM
oh!thimiru is nilavu....i didn't konw.but all that were just my opinions,i mean my choice and views.
//////ungalukkul ippidi oruvana?/////
why did u ask so?i read pudhumaipithan's stories which was the cause of paathasaari.his writings about the rickshaw voyage in "kadavulum kandhasaami pillaiyum" was the motivating force of my passion for writing a travelogue.
///// "thaboo" shankar...he is so good! //////
read this link:u'll know,myne ofcourse:
www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=8065
thimuru
13th January 2007, 04:21 PM
oh!thimiru is nilavu....i didn't konw.but all that were just my opinions,i mean my choice and views.
//////ungalukkul ippidi oruvana?/////
why did u ask so?i read pudhumaipithan's stories which was the cause of paathasaari.his writings about the rickshaw voyage in "kadavulum kandhasaami pillaiyum" was the motivating force of my passion for writing a travelogue.
///// "thaboo" shankar...he is so good! //////
read this link:u'll know,myne ofcourse:
www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=8065
Tamil films sectionla adikadi varranaala ungala engala maadhiri nenachuten! :D
By the my favourite is "kayitraravu" of puthumaipithan
VENKIRAJA
13th January 2007, 06:18 PM
தன்னிலை விளக்கம்:
பாதசாரி ஒரு பூவா?
இந்தத்திரியை வலைப்பூ என்று சொல்லும்போது சில சமயம் பெருமிதமாகவும்,சில சமயம் கோபமாகவும் இருக்கிறது.அருட்பெருங்கோ,பிரியன்,கார்த்திக் பிரபு,வெட்டிப்பயல் போன்றவர்களின் வலைப்புக்களோடு பாதசாரியையும் வைக்கும் போது பெருமிதம்.ஆனால் நான் பாதசாரியை துவக்கியதன் காரணமே வேறு.ஆங்கிலத்தில் நிறைய travelogues படித்திருக்கிறேன்.ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டுன்ன்கள் நுழைத்து எழுதுவார்,அப்பா பயணித்தபின் நிறைய கொண்டுவருவார்.செய்தித்தாள்களிலும் இந்த genre பிரபலம்.ஆனால் அவை ஒரு அசட்டையான நடையில்,விட்டேத்தியாக,தேய்ந்த கிராமபோன் ரிக்கார்டு போல இருந்தன.லக்ஷ்மண் கார்ட்டூன் போடுவதோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று தோன்றியது.தேஷ்பாந்தேவும்,ரஸ்கின் பாண்டும் பரம எதிரிகளானார்கள்.பிறவற்றில் ராமன் தண்டகாரணியம் அடைந்த விறுவிறுப்பு கூட இல்லை.எல்லா கட்டுரைகளிலும் தேவையற்ற உபதலைப்புகள் (sub-headings) இருந்தன.தமிழையே ஒருவித சலிப்பாக்கின,தமிழில் மொழியாக்கம் அல்லது சொந்தமாக எழுதப்பட்டவை.ஒரே ஆறுதல் அற்புதமான புகைப்படங்கள்.அவற்றை அடியில் அலங்கரிக்கும் கட்டுரைகளின் உருப்படியான நான்கு வரிகள்.இந்நிலையில் பள்ளி நூலகம் தந்த புதுமைப்பித்தன் சிருகதையொன்றின் கருத்தே,இந்த திரி உருவாக வந்த நூற்கண்டு.பின்பு சில எழுத்தாலர்களின் கர்பிதங்களொடு நான் சிறந்தேன் என நினைக்கிறேன்:பிரபஞ்சன்,அ.முத்துலிங்கம்,எஸ்.ராமகிரு ஷ்ணன்.என்னுடைய கட்டுரைகளை நான் புதுமையாகவே கருதுகிறேன்.இதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு.நான் பயணம் செய்ததற்காக கட்டுரை எழுதுபவன் அல்ல;கட்டுரை எழுதுவதற்காக பயணம் செய்வதுமில்லை.பயணங்களில் எல்லாம் கட்டுரைப்பவன்.இரயில் பயணங்களைவிடவும் கால்வழிப் பயணங்களில் அதன் சுகம் காண்பவன்.இதற்கென இருக்கும் பிரத்தியேக இடங்களில் அவர்கள் நுகரும் சுவையை பத்து மடங்காய் பக்கத்து தெருவில் முகர்பவன்.புத்தியில்லாதவனல்ல,புத்தியில் ஆதவன்.சமயங்களில் எனக்கு என் எழுத்து மிகவும் வசீகரம் வாய்ந்ததாகத் தோன்றும்,அடுத்த வாசிப்பு நீயெல்லாம் ஏந்தான் எழுதுறியோ எனத் தோன்றும்.முரண்களில் முடங்காமல் மரபை மாரில் அடிக்காமல்,ஒரு புதுப்பாதை அமைய எண்ணியவன்.குறிப்பாக வட-எழுத்தாளர்களின் எழுத்து என்னை மிகவும் பாதித்தது:இப்படி எழுதவே கூடாதென்று.குலு மணாலி சென்று சூரியனை பார்ப்பவர்கள்,மொட்டைமாடிகளை சுத்தம் செய்யாதவர்களாகத் தான் இருப்பார்கள்.என் வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு செல்ல இருபது நிமிட நடை ஆகும்.அதன் மூலம் மூளை சுவைக்கும் பாடல்களும்,வீதியோர காளானின் பார்வையும் ஓட்டி மலர்க்கண்காட்சியை விட எனக்கு உயர்ந்ததாகப் படுகிறது.எல்லா ஊர்களும்,அண்டசராசர விண்மீன்களும் ந்ம் வீட்டிலிருந்து தான் அளக்கப்படுகின்றன.ஆனால் நம் சொந்த வீட்டு செடிகளுக்கு நம்மால் நீரூற்ற முடிவதில்லை.நான் ஊற்றுகிறென்.அதன் மலர்களோடு அளவளாவுகிறேன்.என் மீன்தொட்டியோடு மணிக்கணக்கில் பேசுகிறென்.அம்மீன்களின் சாவை மௌன அஞ்சலியோடு கண்ணீர் துறக்கிறேன்.இதுதான் நவீன இலக்கியத்தின் போக்கும்,நோக்கும் என்றால் இதுவும் நவீன இலக்கியமே.என் பயனங்களின் தூரம் குறைவாக இருந்தாலும் அதன் பேனாவாக்கலின் வீச்சு நாமே அனுபவிக்கக்கூடியது.அதன் பிரபந்தம்........(தொடரும்)
thimuru
13th January 2007, 06:23 PM
venki,
for me also first love for short story started after reading a pudhumaipithan story in tamil school book.i think they give a separate book for stories(non-detail)!
some oli..forgot the name!
VENKIRAJA
13th January 2007, 09:13 PM
தன்னிலை விளக்கம்:பாகம்-2.
பாதசாரி ஒரு பூவா?
பாதசாரியின் பிரபந்தம் பாமரர்களுக்கும் புரியும் வகையிலேயே அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.சிலர் தமிழ் அடர்த்தியாக இருந்தது என்று குறிப்பிட்டாலும்,என் வகுப்பின் ஹிந்தி மாணவர்கள் கூட என் வாசிப்பில்,பாதசாரியின் சாராம்சத்தை உண்ர்ந்து கொண்டனர்(சில இடங்கள் தவிர).நான் சொன்ன பாமரர்கள் அந்த அளவில் தமிழ் குறித்த பிரசித்தம் அறிந்தவர்கள்.ஓவியத்தை பற்றிய உரையில் வழிந்த சர்ச்சையை நான் மீண்டும் கொணர விரும்பாததால்,என் புரிதல் குறித்து கொஞ்சம் வெளியிட வேண்டியுள்ளது.கலை என்பது கலைஞனுக்கும்,வாசகனுக்கும் ஒரு பாலம்.கருத்தும்,பொருளும் பரிமாற்றபடுவதே அதன் நோக்கம் என நினைக்கிறேன்.எனில்,கருத்தை சிலருக்கு மட்டும் புரியும் வகையில் சமைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.கவிஞனோ,கலைஞனோ வாசகனுக்கேற்றவாரோ,பிறரின் வாய்வசைக்காகவோ ஆற்ற வேண்டும் என்பதும் என் கருத்தன்று.சொல்வது நல்கருத்தெனின் அஃது அனைவர்க்கும் போய்ச்சேரட்டுமே என்ற பார்வையுடையோன் நான்.அதே சமயம் எக்காரணம் கொண்டும் நெறிகளை மாற்றும் அவசியமும் இங்கில்லை.கலை என்ற சொல் நளினத்தோடு எளிமையும் புதுமையும் பூண்டுகொள்ள வேண்டுமென்ற ஒரே கருத்தே எனக்கு.நானோ,அல்லது யாரோவுமே தமிழை உலக அரங்கில் வைப்பது,அல்லது திருத்துவது போன்ற வீண் வேலைகளில் மூழ்கியில்லை.அதே சமயம் நான் திருவாளர்.பேரரசாக மாறவும் மாட்டேன்.இன்றைய சூழலில் கவிஞன் சில நொடிகளில் வாசனகனை குளிர்விக்கும் ஒரு கருவி.கருவிக்கோ தான் குளிர்வித்தது குறித்து கொஞ்சம் எக்காளம்,மலர் சிந்தும் பாங்கில் கொஞ்சம் பூரிப்பு.அவ்வளவே.நிச்சயமாக சிரவணன் நாடகத்தின் மூலம் இன்னொரு காந்தி கிடைப்பார் எனும் கருத்தில் தலையாட்ட விருப்பமில்லை.என் எழுத்துகள் ஒரு குடிகாரனை குடிக்காமல் செய்யும் என்பதிலும் நம்பிக்கை இல்லை.நானும் இன்பத்திற்கென(அதற்காக அர்த்தமற்று அல்ல)நீங்களும் சுவைக்கென விழியுருட்டுகிறோம்.சில சமயம் புரட்சியாய் எழுதுவது இதயத்தின் ஓரத்தில் படிந்து கிடக்கும் கொஞ்சம் நம்பிக்கையில்.என் எழுத்தின் மையல் இதுவே.நான் கந்தகம் அல்ல,காந்தம்.சயனைடும் அல்ல,சாக்லேட்டு.மிஸ்டு கால் அல்ல ரிங்டோன்.விசயத்திற்கு வருவோம்.(இது போன்ற எண்ண அதிர்வுகள் இத்திரியை வலைப்பூவாக முயற்சி செய்கின்றன என்பதற்கு மன்னித்துவிட தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்)வலைப்பூக்கள் ஒரு கருத்தையோ,பொருளையோ சார்ந்திருப்பதில்லை.முரட்டுத்தனமாக பலவற்றைப்பேசும் பஞ்சவர்ணத்தோடு நீள்கின்றன.அவற்றில் நண்பர்கள் பாராட்டுகிறார்கள்,ஆனாலும் அவை constructive criticismsஆக உருப்பெறுவதில்லை.சில வலைப்பூக்கள் எழுத வேண்டிய நிர்ப்பந்த்தத்தினை கட்டவிழ்க்கின்றன.பலபடத்தோன்றும் எல்லாவற்றினையும் விவாதிக்கும் அல்லது போதிக்கும் கூடங்களாக,டீக்கடை பெஞ்சுகளாக சில தேவையில்லாத விஷயங்களை most of the time ஆராய்கின்றன.நிறைய ப்ளாக்குகள் பாவமாய் விமர்சனங்களின்றி காய்கின்றன.நெத்தியடியாக கருத்துருக்கள் இல்லை.பொழுதுபோக்கு.ஆனால் என்னைப் பொறுத்தவரை நன் எழுத ஆரம்பித்த அதே ஆண்டில்,இதுவரை இல்லாத முயற்சியாக(பாதுகாப்பிற்கென எழுதும் வகையில்:i may be wrong too)பயணக்கட்டுரைகளில் என் பாணியை உருவாக்கிக்கொண்டிருக்கிறென்.இதன் மூலம் நான் எந்த புது தத்துவத்தைக் கண்டாயவில்லை.என்றாலும்,ஒரு சிறுவனாக முயற்சியாவது எடுத்திருக்கிறேன்.பயணக்கட்டுரைகள்(நான் படித்த ஏறத்தாழ பதினாறு எழுத்தாளர்கள்:கல்கி,கண்ணதாசன் தவிர)இந்த வடிவில் தான் எழுதினார்கள் என்பது வேதனை,கொடுமை.பயணத்தை பேருந்திலோ,ரயிலிலோ ஆரம்பிப்பார்கள்.நிச்சயம் நிலச்சரிவால் போகுவரத்து பாதிக்கப்படும்,பிறகு கஷ்டப்பட்டு டேக்ஸியில் நிர்ணயம் செய்த இடத்தை அடைவார்கள்.வழியில் இயற்கை எழிலை இரசிப்பார்கள்.அங்கே ஒரு வயசானவருடன் நட்பு ஏற்படும்.அவர்களின் உறவினர் யாருடைய துணையேனும் கொண்டு சுற்றுலா தொடங்கும்.தொடங்கிய மாத்திரத்தில் கடும் மழையோ,புயலோ,சரிவோ ஏற்படும்.அதனால் அவர்கள் விடுதியிலேயே தங்குவார்கள்.அங்கு வசதிகள் குறையும்.எல்லோரும் நான்காம்/ஐந்தாம் இரவில் மறுநாள் ஊர் செல்வதாக முடிவெடுப்பார்கள்,ஆனல் மறுதினம் சீதோஷ்ணத்திற்கு பிடித்த ஜலதோஷம் விலகி சரியாகும்.சுற்றுலாவில் கடைசி பகுதியில் மிகவும் அழகிய வானம்,ஆந்தக் கிரகமும் அனைவரின் பேனாவுக்கும் சிவப்பாகத்தான் தெரியும்,பிண்ணனியில் அருவியோ மலையோ இருக்கும்.ரொம்ப அழகு,நிறைவு,சுபம்.இது தான் வரையறை.அத்தனை எழுத்தாளர்களும்(ராமகிருஷ்ணன் உட்பட)இந்த மாவைத்தான் அரைத்தார்கள்.பயணம் என்பது மனதளவில் ஒரு ரசாயன மாற்றம் என்று நான் கருதுகிறேன்.வேரிலிருந்து பூவுக்கு செல்லும் நீர் ரொம்பவே பழக்கப்பட்டது.ஆனால்,பாதசாரி.... பூவிலிருந்து கனி முளைத்து மீண்டும் அதன் மீதங்கள் வேர் மீது படர்ந்து அனுப்பிய நீர் பன்மடங்காக பெருகும் சுவை ஒத்து.
"பூக்களின் நறுமணம் ஊர்புகழும்
வேர்களின் புழுக்கம் யாரற்வார்?"
(-இயக்குநர் சேரன்)
அவற்றுள் நான் இரண்டாம் ரக பயணி,நகராமல்.அதற்கென்றே நான் காகிதமாக அடைகாக்கும் பாதசாரிக்கு நண்பன் அபிலாஷை வரையச்சொன்ன படம் பேனாவை மரமென உருவகித்து அது வேர் பரப்புவதுபோல,நிறங்களின் நிரல் பூசாமல்,கறுப்பாய்.முடிக்கும் தறுவாயில் இந்த உரையின் கடைவரியாய் ஒரு கவிதை,கட்டுரை வடிவில்.
எத்தனை மெத்தப் படித்தவர்கள் நீங்கள்?மரங்கள் நகர்வதில்லை என்கிறீர்களே!வேர்கள் தான் பாதசாரித்துக்கொண்டிருக்கின்றனவே.
ஆமாம்,பாதசாரி (வலைப்)பூ அல்ல,வேர்.
P_R
14th January 2007, 03:23 AM
[tscii:377ba0227f]பரவலாக ப்ளாகுகள் ஆழமான அலசலுக்கு அப்பார்ப்பட்டு நிற்பது எழுதுபவர்களின் ஆர்வம்/ஆர்வமின்மையினால். அதை ப்ளாக் என்ற வடிவத்தின் குறையாக எடுத்துக்கொள்ளமுடியாது. பலதரப்பட்ட விஷயங்களைப் பேசாமல், குறிப்பாக ஒரு சிலவற்றையே ஆராயும் ப்ளாகுகளும் உன்டல்லவா.
அனுபவங்கள்(வாசக அனுபவமும் சேர்த்து), அவை எழுப்பும் சிந்தனைகள் என தொடர்ந்து இணையத்தில் வெளியிடும் ஒரு கட்டுரைத்தொடரை ப்ளாக் என்று சொல்வது பிழையான வகைபடுத்துதல் ஆகாது என்று நினைக்கிறேன்.
(நான் உள்பட)யாவரும் இதை ப்ளாக் என்று சொன்னது ஒரு சௌகர்யமான வகைப்படுத்துதலுக்காகத்தான்.எந்த ஒரு வகைப்படுத்துதலும் தனித்தன்மையை முழுவதும் மதிக்காக (மேம்போக்கான) செயல்தான்.கலைஞனை வருத்துவதுதான் :-)
வெங்கிராஜா, எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று ஜி.வி.தேசானியின் All About H. Hatterr.
அந்த நாவல் துவங்குவதற்கு முன் இந்த epigraphஐ காணலாம்:
‘Indian middle-man (to author): Sir, if you do not identify your composition a novel, how then do we itemise it? Sir, the rank and file is entitled to know.
Author (to Indian middle-man): Sir, I identify it a gesture. Sir, the rank and file is entitled to know.
Indian middle-man (to author): Sir, there is no immediate demand for gestures. There is immediate demand for novels. Sir, we are literary agents, not free agents.
Author (to Indian middle-man): Sir, I identify it a novel. Sir, itemise it accordingly.’
:-)
[/tscii:377ba0227f]
kannannn
14th January 2007, 04:24 AM
பயணக்கட்டுரைகள்(நான் படித்த ஏறத்தாழ பதினாறு எழுத்தாளர்கள்:கல்கி,கண்ணதாசன் தவிர)இந்த வடிவில் தான் எழுதினார்கள் என்பது வேதனை,கொடுமை.பயணத்தை பேருந்திலோ,ரயிலிலோ ஆரம்பிப்பார்கள்.நிச்சயம் நிலச்சரிவால் போகுவரத்து பாதிக்கப்படும்,பிறகு கஷ்டப்பட்டு டேக்ஸியில் நிர்ணயம் செய்த இடத்தை அடைவார்கள்.வழியில் இயற்கை எழிலை இரசிப்பார்கள்.அங்கே ஒரு வயசானவருடன் நட்பு ஏற்படும்.அவர்களின் உறவினர் யாருடைய துணையேனும் கொண்டு சுற்றுலா தொடங்கும்.தொடங்கிய மாத்திரத்தில் கடும் மழையோ,புயலோ,சரிவோ ஏற்படும்.அதனால் அவர்கள் விடுதியிலேயே தங்குவார்கள்.அங்கு வசதிகள் குறையும்.எல்லோரும் நான்காம்/ஐந்தாம் இரவில் மறுநாள் ஊர் செல்வதாக முடிவெடுப்பார்கள்,ஆனல் மறுதினம் சீதோஷ்ணத்திற்கு பிடித்த ஜலதோஷம் விலகி சரியாகும்.சுற்றுலாவில் கடைசி பகுதியில் மிகவும் அழகிய வானம்,ஆந்தக் கிரகமும் அனைவரின் பேனாவுக்கும் சிவப்பாகத்தான் தெரியும்,பிண்ணனியில் அருவியோ மலையோ இருக்கும்.ரொம்ப அழகு,நிறைவு,சுபம்.இது தான் வரையறை.அத்தனை எழுத்தாளர்களும்(ராமகிருஷ்ணன் உட்பட)இந்த மாவைத்தான் அரைத்தார்கள்.பயணம் என்பது மனதளவில் ஒரு ரசாயன மாற்றம் என்று நான் கருதுகிறேன்.வேரிலிருந்து பூவுக்கு செல்லும் நீர் ரொம்பவே பழக்கப்பட்டது.ஆனால்,பாதசாரி.... பூவிலிருந்து கனி முளைத்து மீண்டும் அதன் மீதங்கள் வேர் மீது படர்ந்து அனுப்பிய நீர் பன்மடங்காக பெருகும் சுவை ஒத்து.
Venkiraja, பாலகுமாரனின், படைப்புகளை படித்த அனுபவம் உண்டா? பயணக் கட்டுரைகளில் வாழ்க்கையின் சித்தாந்தங்களை அழகாக பிணைத்து எழுதும் திறன் கொண்டவர். வழக்கமான பயணக் கட்டுரைகளிலிருந்து மிகவும் மாறுபட்டவை அவர் படைப்புகள். ஆனால், இப்பொழுதெல்லாம் அவர் எழுதுவதாக தெரியவில்லை.
pavalamani pragasam
14th January 2007, 07:47 AM
Venki! :clap:
VENKIRAJA
14th January 2007, 10:10 PM
நன்றி பிரபு ராம்.இன்னமும் இதை நான் கட்டுரை தொகுப்பாகத் தான் பாவிக்கிறேன்,நீங்கள்?
கண்ணன்,பாலகுமாரனை சென்ற ஆண்டு தான் தொடங்கினேன்.அதற்குள் வானம்பாடிகளால் கவரப்பட்டுவிட்டேன்.இவர்களை முடித்தபின் பாலாவை தொடர்வேன்.அவரது இரும்புக்குதிரைகள் இன்னமும் சில புது எழுத்தாளர்களில்(சில சமயங்களில் நனே கூட)தெரிகிறது.
பவளமணி அம்மையாருக்கு:நல்வரவு,பழைய ஆதரவை மீண்டும் தந்தருள்க,நன்றி.
மாலுமி.
"மொழி
ஒரு தடையில்லை
நூலகத்தில் கரையான்."
(ஜெயார்லின்)
காகிதங்களைத் தின்னுகிற கரையானைப்பார்த்தால் சில நேரங்களில் பொறாமை வரத்தான் செய்கிறது.அதுவும் புத்தகக் கண்காட்சியில் புத்தாக அச்சேறி அடுக்கி வைக்கப்பட்டு,திறந்தால்
புதிதாக இறைவனின் கை செய்யாப் பூவொன்றை முகர்ந்த பூரிப்பு போயும் விடுகிறது கரையானை எண்ணுகையில்.நான் விசித்திரக்குள்ளன்.410வது விரிப்பிலிருந்து தொடங்கினேன்.மூன்று மணி நேரம் புத்தக தேர்ந்தெடுப்பில்,ஒரு மணி நேரம் மீண்டுமொருமுரை விட்டுவிட்ட புத்தகங்களை எடுக்க,அடுத்த ஒரு மணி நேரம் கவிதை படிப்பது போல நகர்வலம் வந்து உலாப்போகும் தேவதைகளை பார்வையிட.(ஹிஹிஹி)அதிலும் சிலர் நம்மோடு பேசுகையில் ஏதோ செவ்வாய்க்கு போய்விட்டதாய் உணர்வு.
"செவ்வாயில் உள்ளதோடி உயிர்க ளெல்லாம்
உன் செவ்வாயில்தான் உள்ளதெந்தன் ஜீவன்"
(கவிப்பேரரசு வைரமுத்து,அமர்க்களம்:மேகங்கள் எனை உரசி... பாடலின் விடுப்பட்ட வரிகளில் சில)
ஏகப்பட்ட தூரம்,என் வீட்டிலிருந்து.கிளம்பும் போதே தடுக்கிவிழ,அம்மா உட்கார்ந்து தண்ணீர் குடித்துவிட்டுப் போகச் சொன்னார்.பேருந்தில் ஏற முயன்று விழுந்து வாரிக்கொண்டது வேறு.சேத்துப்பட்டுவாசிகள் சொன்ன குழப்பமயமான முகவரிகளால் பைத்தியமாகி கீழ்ப்பாக்கம் வரை நடந்தது வேறு.மீண்டு மீண்டும் ஒருவாறாக பேருந்து என்னை பச்சையப்பன் கல்லூரி கொண்டு சேர்த்தது.நண்பர்கள் அத்தனை பேரும் விளையாட வேண்டி வரமறுக்க,தனிமை.கையிலிருந்த சிறப்பு நுழைவுத்தாளையும் தொலைத்துத்தொலைக்க,புதிதாக மீண்டும் வாங்கினேன்.இதற்கிடையில் என் சில்லறைகள் சில காணோம்.முழுக்க நூறு ரூபாய்த்தாள்கள். முகுந்த் நாகராஜனின் தொகுப்பொன்று வாங்கி சில்லறை வாங்கிக்கொண்டு வெளியே வர.......விக்கிரமாதித்த்யன்!அங்கே நிற்கிறார்,சாதாரண அழுக்கு வேட்டியுடன்,வாராத ரோமத்துடன்.அசந்துவிட்டேன்.கஷ்டப்பட்டு அவரிடம் கையெழுத்தையும் தாடிக்குள்ளிருந்து வார்த்தைகளையும் வாங்கினேன்.கையொப்பம் கேட்டால் சிரிக்கிறார்!மனிதரிடம் ஆனாலும் சாராய வாசனை வந்தது.அந்த அதிர்ச்சியிலேயே விலகி இருமுறை அதே வீதியை கடந்திருக்கிறேன்.நிறைய புத்தகங்கள் கீழே சரிந்த சப்தம் உலுக்கி எழுப்ப சாளரம் சரியானது.அப்புரம் சுஜாதாவை கண்கள் தேடின.எதிரிலும்,ஏட்டிலும்.அவரையும் பார்த்துவிட்டால் என் பிறவிப்பயனை அடைந்துவிடுவேன் எனத் தோன்றியது.பிரச்சனை என்னவென்றால் பார்ப்பவர்களெல்லாம் சுஜாதாவாய்த் தெரிந்ததுதான்.இளைப்பாற வெளியே வந்தால் சத்யராஜ்.அவரை கண்டே இன்பம் நுகர்ந்தேன்.ஆள் வாட்டசாட்டமாக,சின்ன முடியுடன்,நன்றாக இருந்தார்.ரொம்பவே சாதாரணம்.புது வெளியீட்டாளர்களை கௌரவித்துக்கொண்டிருந்தார்.கால்கள் வலிக்கத்தொடங்கின,கூடவே கையும்.பின்னே அத்தனை நடை,ஆறு புத்தகங்கள்.எழாவது புத்தகத்திற்கு தான் அகோரப் போராட்டம்.இறையன்பு,மேத்தா,வாலி,வைரமுத்து,விகட னனின் கார்ட்டுன்கள்,தபூ சங்கர்,அறிவுமதி,ஜெயமோகன் என ஒவ்வொரு பக்கம் புரட்டுகையிலும் ஒருவரை நேசித்து அடுத்தவருக்கு முன்னதாக அபகரிக்க சொல்கிறது மனம்.ரா.பி.சேதுப்பிள்ளை,ஈரோடு தமிழன்பன் இருவர் இறுதிப்போட்டிக்கு சென்றனர்.வென்றவர் இரண்டாமவர்.ரா.பி.சேதுவின் புத்தகம்,நான் தேடிவந்ததாக இல்லை.அதுவாக இருந்திருந்தால்(யாராவது சொல்லுங்களேன்:அவர் கடல் சீற்றங்கள் பற்றி எழுதிய நூலின் பெயர்)வாங்கியிருப்பேன்.மீராவும்,நா.காமராசனும் ஏமாற்றிவிட்டனர்.அவர்களுடைய நூலும்,நான் தேடியதில்லை.இம்முறை ஸ்ரீஈரங்கத்து தேவதைகளை கவருக்குள் அடைத்துவிட்டேன்.ஆனால் அவருடைய கணேஷ் வசந்த் தொகுப்பு தேவதைகளை விவாகரத்து பண்ண சிபாரிசு செய்தது.ஆனாலும் தேவதைகளே வென்றனர்,காரணம் சட்டைப்பையின் எடை.அறிவுமதியின் ஈழப்பதிவுகளை வாங்கமுடியாததன் கனத்தை அவற்றை மனப்பாடம் செய்ததால் வென்றுவிட்டேன்.அதன் துண்டு...
"எண்ட மயன்
தாய்மண்ணுல பொறந்த்ததாக
பெருமப்படுறதா?
அல்லது அகதியா பொறந்ததினால
களங்கப்படுறதா?"
பெயர் அவருக்கும் சிலருக்கும் சாலப்பொருத்தம்:புதுமைப்பித்தன்,இன்குலாப்,கபிலன்(Jr ),கூடவே அறிவுமதியும்.என்னை மிகவும் ஈர்த்தது என்னவோ வைரமுத்துவின் வருகை தான்.ஆனால் நான் ஒரு நாள் தாமதம்,அவரின் புத்தகத்தை வாங்குவதில் கூட.அப்புறம் வாலி ஏதேனும் தனி நூல் எழுதியிருக்கிறாரா?நவீன இலக்கியம் குறித்து பேச இன்னும் எனக்கு இரு மாதங்கள் தேவைப்படுகிறது.இனிவரும் பாராட்டுகளை என் தேர்வுகளுக்கு அச்சாணியாக்கிட்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.அதுவரை என்னை முடிந்தால் அசைபோடுங்கள் கவிகதையுரை வாயிலாக.மீண்டும் சந்திப்போம்.பொங்கல் நல்வாழ்துக்கள்.பொங்கலோ பொக்கல்.
pavalamani pragasam
15th January 2007, 10:32 AM
athenna 'pazaiya' aatharavu???
Book fair senRu vantha anupavam soopper! thangkaL aRivu thaagam theeraathu thodarattum!
madhu
17th January 2007, 08:55 AM
[tscii:c513b35a88]¦Åí¸¢..
«Æ¸¡É.. «Õ¨ÁÂ¡É Å÷½¨É.. ¯í¸¨Ç «í§¸§Â ºó¾¢ò¾¢Õì¸Ä¡§Á.. !!
Òò¾¸ì ¸ñ¸¡ðº¢Â¢ý À¡õÒ Å¨ÇºÄ¢ø ¸¨¼º¢ Ũà ¦ºýÚ À¢ÈÌ Ó¾ø
ŨÇÅ¢ø À¡÷ò¾ Òò¾¸õ ¿¢¨É× Åà Á£ñÎõ ¿£§Ã¡ð¼ò¨¾ ±¾¢÷òÐî ¦ºøÖõ Á£ý §À¡Ä
§¾Êò ¾¢Ã¢ó¾ «ÛÀÅõ..
«ôÐø ¸Ä¡õ «Å÷¸Ç¢ý "«ì¸¢É¢î º¢È̸û" ÁüÚõ Á¸¡òÁ¡Å¢ý "ºò¾¢Â §º¡¾¨É" þÃñÎÁ¡¸
´Õ áÚ åÀ¡ö¸û ÁðÎõ ±ýÈ Offer ´Õ Àì¸õ þØì¸.. ¸Å¢ì§¸¡ «ôÐø ÃÌÁ¡É¢ý ¸Å¢¨¾ò
¦¾¡ÌôÒ þý¦É¡Õ ÒÈõ þØò¾Ð.
À¡Âºõ ÌÊò¾ º¢ðÎì ÌÕÅ¢ §À¡Ä ±øÄ¡Åü¨ÈÔõ Å¡í¸ ÁÉõ ÐÊò¾¡Öõ, ܼ§Å ¦¾¡ò¾¢ì
¦¸¡ñÎ Åó¾ º¢ýɾ¢ý "¦¹¡ö ¦¹¡ö" ±¨¾Ô§Á ¿¢¾¡ÉÁ¡¸ô À¡÷ì¸ Å¢¼Å¢ø¨Ä.
¸¨¼º¢Â¡¸ ¿£ÇãìÌ ¦¿ÎÁ¡Èý, §Å¾¡Çõ ¦º¡ýÉ ¸¨¾¸û, À𺢠º¢õÁý, ºÌó¾Ä¡ §¾Å¢Â¢ý ¸½ìÌô Ò¾¢÷¸û, ¸£¾¡ À¢ÃŠ…¢ý ÁÄ¢×ô À¾¢ôÀ¡É À¸Åò ¸£¨¾, Íó¾Ã ¸¡ñ¼õ, Á½¢§Á¸¨Ä
À¢ÃÍÃò¾¢ý ¯ûÇí¨¸ìÌû ÀòÐ «¼íÌõ ÌðÊ Í§Ä¡¸ô Òò¾¸í¸û ±øÄ¡õ Å¡í¸¢Å¢ðÎ
¨¸Â¢Õô¨Àô À¡÷ò¾¡ø...... ¸Å¢¨¾¸û Å¡í¸ ÓÊ¡§¾ !
«Ð ºÃ¢.. ±øÄ¡ô Òò¾¸í¸¨ÇÔõ ¨À¢ø §À¡ðÎò àì¸ ÓÊ¡Áø àì¸¢ì ¦¸¡ñÎ ±ýÉô
À¡÷òÐ º¢Ã¢ìÌõ þó¾ Ó¸Óõ ´Õ ¸Å¢¨¾¾¡§É... ! þÐ §À¡Ð§Á !
[/tscii:c513b35a88]
pavalamani pragasam
17th January 2007, 01:08 PM
[tscii:663655bf89]±ýÉ «¾¢ºÂÁ¡É ´üÚ¨Á! '¦¹¡ö ¦¹¡ö' À¢Ã¨É ²Ðõ þøÄ¡Áø ("±ýÉ þí§¸§Â ±øÄ¡ Òò¾¸ò¨¾Ôõ ÀÊòÐ ÓÊòРŢÎÅ¡ö §À¡Ä¢Õ째!"- ±ýÉÅ÷) §À¡É Å¡Ãõ þí§¸ Òò¾¸îºó¨¾Â¢ø ¿¡Ûõ ºÌó¾Ä¡ §¾Å¢¨Â Å¡í¸¢ ÅóÐ ÒÃðÊ À¡÷òÐ ¦ÀÕãîͼý ¨ÅòÐÅ¢ð§¼ý -ã¨Ç¨Â «ºí¸¡Áø ¨ÅòÐ ¸¡ôÀ¡üÈ ±ñ½õ! «ì¸¢É¢ º¢È̸û, «ôÐø ÃÌÁ¡É¢ý À¡ø Å£¾¢ ±øÄ¡õ Óó¨¾Â ÅÕ¼í¸Ç¢§Ä§Â Å¡í¸¢Â¡¸¢Å¢ð¼Ð![/tscii:663655bf89]
VENKIRAJA
17th January 2007, 05:37 PM
my list:
1.oru iravil 21 centimetre mazai peythathu(mukunth nagarajan),finished reading it there itself.also got kavinjar vikramadhithyan's autograph in it.well anthologised.my only understandeable modern poet's second book after aki.
2.minminikaadugal(erode thamizanban)a collection of 207 short poems by bharadithaasan's patron,interestingly funny and excellently unique.
3.nylon kayiru(sujatha)my favouite author's first novel,ofcourse got recomended by the hubbers at sujatha thread.
4.maunam kalaitha siragugal(jeevan)no comments,my worst read so far.expected a lot in it coz of arivumathi's aninthurai.except his quotations,nothing else was up to the mark.utter waste of 25 rupees.
5.kadhalin pinkadhavu(pazhanibharathy)no words to explain.wonderful expressions of thought,with very good paper quality.
6.sreerangathu thevathaigal(sujatha)again,but a different padhippagam.hoping it'll be good.
7.karaiyai thaandum theevugal(erode thamizanban)a exquisite intro.filled with revolution.again good barter;several beautiful papers for a single paper.
8.en vizhiyil un mugam paar(sooryakumaran)newbie.good one.
9.poovukkum kaatrukkum(ramesh vishwanathan)a budding poet,now in fims it seems.good one,love poems.
total gross:Rs.282(net value discounting a 15% of the bills)and a day.
i missed out some lines in my essay.here it is:
வள்ளுவர் சில சமயம் இடறிவிடுகிறார்."செவிக்கு உணவில்லாத போது சிறிது விழிக்கும் ஈயப்படும்"என்று அவர் எழுதியிருக்க வேண்டும்.இறைவன் அந்தகாசம் சிந்தும் எத்தனை அதிசயங்களை நம் விழிக்கென விட்டுப்போயிருகிறான்!என் வயிற்றுப்பாட்டை கொஞ்ச நேரம் mute போடவைத்தது இருவிழி.போகையில் சூரியன்,வருகையில் நிலா.அதுவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாலை சூரியன் தரையிறங்குகையில் வாகன நிறுத்த ஊர்திகளின் கண்ணாடியில் பிரதிபலிக்க எழுந்த ஒளியும்,கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட புறாவைப்போல மேலெழுந்த இதயத்தின் துடிப்பும் அடடா!
kannannn
18th January 2007, 04:11 AM
வெங்கிராஜா, அது வருடம் ஒருமுறை நடக்கும் புத்தக கண்காட்சியா? ஏனெனில், சென்னையில் புத்தக கண்காட்சிகள் மிகவும் குறைவு (நம் சாபக்கேடு?). எனக்கு தெரிந்து 'மாணவர் புத்தகக் கண்காட்சி' ஒன்று தான் வருடா வருடம் நடக்கும் ஒரே கண்காட்சி. சிறு வயதில் 'நமது நகரம், அழகு நகரம், சென்னை மாநகரம்', என்று சென்னை தெருக்களில் உச்சி வெயிலில் சக மாணவர்களுடன் திறப்பு விழாவுக்கு ஆடிக் கொண்டே சென்ற அனுபவம் உண்டு. அந்த கண்காட்சியும் தற்போது அதே வீற்றத்துடன் நடப்பதாக தெரியவில்லை.
VENKIRAJA
19th January 2007, 06:14 PM
சிறந்த மையம் திரி:கவிதைக்கு கவிதை.(குறிப்பாக பவளமணி அம்மையாரின் கவிகள்),மதுவின் சிறுகதைகள்,(வாசவியின் ஊக்குவிப்பு:எனக்கு),சூரியவிழி/பரணியின் கவிதைகள்.
idhai vasishtar vaayAl kidaikum "brahmarishi" pattathaiyum,
paramasivanE kodukkum "Eswaran" pattathiayum vida siRappanadhAga karudhi nanRi kURugiREn.. :notworthy:
இது கொஞ்சம் அதிகப்படி.நான் அப்படி என்ன எழுதிவிட்டேன்?நிச்சயமாக நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.இத்தனை புகழும் அளசுக்கு என் எழுத்தில் உங்களைக் கவர்ந்தது எது?விரிவான விடை தயை கூர்ந்து.
VENKIRAJA
19th January 2007, 06:18 PM
வெங்கிராஜா, அது வருடம் ஒருமுறை நடக்கும் புத்தக கண்காட்சியா? ஏனெனில், சென்னையில் புத்தக கண்காட்சிகள் மிகவும் குறைவு (நம் சாபக்கேடு?). எனக்கு தெரிந்து 'மாணவர் புத்தகக் கண்காட்சி' ஒன்று தான் வருடா வருடம் நடக்கும் ஒரே கண்காட்சி. சிறு வயதில் 'நமது நகரம், அழகு நகரம், சென்னை மாநகரம்', என்று சென்னை தெருக்களில் உச்சி வெயிலில் சக மாணவர்களுடன் திறப்பு விழாவுக்கு ஆடிக் கொண்டே சென்ற அனுபவம் உண்டு. அந்த கண்காட்சியும் தற்போது அதே வீற்றத்துடன் நடப்பதாக தெரியவில்லை.
this one is by BAPASI,book publishers association kannan.good one.read the book fair thread in tamil literature forum for other clarifications.
madhu
22nd January 2007, 06:46 AM
Hi venki
ungalukku virivAga badhil sollaNum enbadharkAgavE en surukkamana badhilai postpone senjuttEn :mrgreen:
VENKIRAJA
26th January 2007, 03:46 PM
suggest a name for my blog which i'm gonna start shortly where paathasaari is gonna be its first post.
donot say paathasaari.i have "KALEIDOSCOPE" in my mind.so suggest me any other....
pavalamani pragasam
26th January 2007, 07:53 PM
One section of my blog is 'kaleidoscope'!!!
My blog is:blogs.sify.com/ppavalamani
P_R
2nd February 2007, 01:40 AM
>>digression<<
" IDHU VERUM PIRIVALLA,MARANAM ENDRA NAADAGATHIRKAANA OTHIGAI "
Quite an intense line. It reminds me of an old poem my John Donne.
SWEETEST love, I do not go,
For weariness of thee,
Nor in hope the world can show
A fitter love for me ;
But since that I
At the last must part, 'tis best,
Thus to use myself in jest
By feigned deaths to die.
The whole poem is found here (http://www.online-literature.com/donne/348/).
crazy
2nd February 2007, 01:56 AM
idhukku thaan serthu vaichu padikka koodathunnu sollrathu :oops:
venki kanna :thumbsup:
VENKIRAJA
10th February 2007, 12:04 PM
prabhu ram,here are my ANTHOLOGY of poems,do read them too called "KARUPPU TAJMAHAL"!
www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=6406
Sanguine Sridhar
10th February 2007, 03:51 PM
[__________________________
சிறந்த நகைச்சுவை:raikkonen,sanguine sreedhar(அதுவும் அந்த நாச்சி ஊறுகாய்...மாங்கா ஊறுகாய்)
Thanks :oops:
VENKIRAJA
11th February 2007, 01:39 PM
why embarrased emoticon sri?and why are u not puruing ur series of a laughter riot?
Sanguine Sridhar
11th February 2007, 03:09 PM
Venki! Okkandhu ezhudhuradhukku time illa! But I will surely do that
VENKIRAJA
22nd March 2007, 12:41 PM
இன்று மாலை மீண்டும் ஆரம்பம்!
crazy
22nd March 2007, 12:50 PM
இன்று மாலை மீண்டும் ஆரம்பம்!
:bluejump:
madhu
22nd March 2007, 02:32 PM
venkat...
waiting... :yes:
VENKIRAJA
22nd March 2007, 06:17 PM
356
365 நாட்கள் ஒரு வருடத்திற்கு,இல்லையா?இங்கே வந்து சரியாக 356 நாட்கள் உருண்டோடிவிட்டன. 8-) நீங்கள் தந்த ஆதரவு இன்றென்னை ஒரு தனி வலைப்பூ தொடங்குமளவு நம்பிக்கை தந்திருக்கிறது. :D என் வாழ்வின் மிக முக்கிய நாட்கள் இவை. :P என் அனுபவங்களினூடே என்னையே அடையாளம் காட்டும் எழுத்துலகின் விசித்திரப் பிரயோகங்களினை கூர்ந்த்து அவதானித்த பருவம் இது.
"குட்டையில்
சிறுநீர் கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்"
-வீ.இராஜசேகரன்,சேலம்(கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா தேர்ந்தெடுத்த ஹைக்கூ)
சில நேரங்களில் நினைவுகள் அப்படித்தான் வளையலாக பல நினைவுகளை தட்டி நெம்பி விடும்.என் பள்ளிவாழ்வின் கடையாண்டில் பிரிவின் துயரம் புலப்பட்டது.விரியப்போகும் வானைப் பற்ற புதிய பீலிகள் இதோ முளைத்துக்கொண்டே இருக்கின்றன.என் அடிப்படை பேச்சுத்திறனும்,விவாதம் செய்யும் மனப்பான்மையும்,நல்ல நண்பர்கள் வட்டத்தையும் இங்கே அளித்தமைக்கு நன்றி.இலக்கியப் பூர்வமாகவும்,உளவியல் பூர்வமாகவும் என்னுள் பிரளயங்கள் வெடித்த தருணங்கள் இவை.குறிப்பாக அரை நிஜாரும்,ஹூக் மாட்டிய கைக்குட்டையுமாய் நான் பழகிய மனிதர்களை நீங்கும் அவரோகணம்.சென்ற ஆண்டின் தொடக்கம் முதலே(எங்களுக்கு மார்ச் மாதமே பாடங்கள் தொடங்கிவிட்டன)படிப்பில் கவனம் செலுத்தும் முனைப்பில் இருந்தேன்.resolutionகளை உடைப்பது நமக்கென்ன புதிதா?அப்படி கோட்பாடுகளை காற்றில் விட்டேன்,இன்பமாக பொழுதுகள் கழிந்தன.தேர்வுகள் வரும் வேளை விழித்த தீர்மானங்கள் நல்லவேளை கைகொடுத்தன.தேர்வுகள் இனிதே முடிந்தன.இடையில் தானே விவகாரம்!
என் பள்ளி நாட்களை சத்தியமாக மறக்க முடியாது.சென்ற ஆண்டின் ஆரம்பமே பாதசாரிப்புதான்.பள்ளியில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச்சென்றார்கள்.அரவிந்தர் ஆசிரமத்தின் கவ்விய அமைதியை ருசித்தோம்.கடற்கரையில் கண்களால் கால்நனைத்தோம்.ஹயக்ரீவர் கோயில் சென்று வந்தோம்.ஜோக்கடித்தோம்,ஆட்டம் போட்டோம்.சவுக்குத்தோப்பிலும்,பம்பு செட்டிலும் படம் பிடித்தோம்.வரும் வழியெல்லாம் கூச்சல் போட்டோம்.நொறுக்குத்தீனி அரைத்தோம்.ஒருவன் மேல் ஒருவன் தூங்கி வழிந்தோம்.எங்கள் ஆசிரியைகள் ஜன்னல் வெளியே தலைநீட்டி குறட்டை விட்டதை படம் பிடித்தோம்.சகா ஒருவனின் பிறந்தநாளைக் கொண்டாடினோம்.இரவெல்லாம் கனவில் தொடர்ந்து பயணித்தோம்.
தேர்வுகளில் நக்கலாய் எழுதுவது பழக்கமாகிவிட்ட்டது.
$ Q: If you were the U.S president would you drop the bomb on hiroshima?give reasons.
A:No,i wouldn't have.The reasons are highly confidential,military secrecy. $
நான் கணிதத்தில் புளி,கரைந்தே விடுவேன்.இயற்பியலும் சொல்லிக்கொள்ளுவதைப்போல் இல்லை.ஆனால் வேதியியலிலும்,உயிரியலிலும் கெட்டி.ஏதோ தொண்ணூறு சதவிகிதம் வந்தால் புண்ணியம்.இந்நிலையில் நான் வருடம் முழுதும் என்ன செய்திருப்பேன் என்பது உங்களுக்கு புலப்பட்டிருக்கலாம்.அரட்டையும்,கேலியும் தான்.
(தொடரும்)
madhu
22nd March 2007, 06:35 PM
வென்கி...
குட்டை நீரில் வானத்தை அசைக்கும் சிறுவனுக்கு
ராமன் எஃபெக்ட் பற்றித் தெரியாவிட்டால்தான் என்ன ?
பாதசாரிப்பு தொடரட்டும்... வலைப்பூவைப் பார்வையிட
வருகிறோம்..
crazy
23rd March 2007, 12:14 AM
:)
VENKIRAJA
7th April 2007, 09:30 PM
நான் எழுதுவதாக சொல்லியிருந்த மாலைக்கு காமலை பிடித்து கெட்டது.இன்று அனுப்புகிறேன் தூது வருகிறதா பார்க்கலாம்.
பாதசாரி புதிய அத்தியாயம்.
இதுவரை சிறுவனாக இருந்தவன் இன்று இளைஞனாயிருக்கிறேன்.
"பைக் ஓட்டிய போது
செய்த தவறுகள்
புரியத்துவங்கின
கார் ஒட்டிய போது"
(கில்லி.காம்:மின்மினி:XAVIER)
இந்நிலையில் இந்தப் பருவத்தின் கவர்ச்சிகளில் ஈர்ர்ப்புத்தன்மை இருந்தாலும்,இசை இப்போதெல்லாம் ரொம்ப அற்புதமாக கேட்பதை சொல்லியே ஆகவேண்டும்.
இந்த ஆண்டு நிரலான என் பிறந்தநாளுக்கு நண்பன் மனோஜ் ஒரு ரேடியோ பரிசளித்தான்.வெறும் ஆள்காட்டி விரலளவு மட்டுமே இருந்த அந்த இயந்திரத்தை விடுமுறையில் இப்போது நுழைவுத்தேர்வுக்கு வகுப்புகள் செல்லும் நான் அதன் தாத்பரியத்தினை அறிகிறேன்.ரயிலில் தான் பாதி பயணம்.அந்த கணங்களில் காகிதமும்,தூரிகையும் ஈனைவதைப் போல் ரயிலின் ராகமும்,வானொலியின் பாவமும் புணர்ந்து சாஸ்வதமான் உருகவைக்கும் இசையை சமைத்தன.இணையாமல் நீண்டுகொண்டே செல்லும் ரயிலின் தண்டவாளங்கள் கானல் நீரின் திட வடிவமோ என்று எண்ணவைத்தது.பக்கத்தில் சிதறுண்ட கருங்கற்கள் வெயிலின் உக்கிரத்தைனை ரயில் வந்து சாமரம் வீசும் போது குளிர்ச்சியில் உறைந்தே போகிறது.புரோட்டா மாஸ்டரின் பதத்தில் வண்டியின் சக்கரங்களை உராய்வதை 180 டிகிரியில் பார்ப்பது குழந்தையின் சிரிப்பை நினைவூட்டுகிறது.ஓரத்தில் பயணிக்கையில் தாழ்தளத்து வீடுகள்,வட்டமிடும் கழுகுகள்,சிக்னல்கள் எல்லாம் ஒரப்பார்வையில்.இருக்கிற அரையடி கூந்தலும் காற்றில் பரத்முத்திரைகள் குவித்தபடி.துணைக்கு காலடி பெல் பாட்டம் படபட மத்தளம்.விதவித முகங்களும்,விதவித சம்பாஷணைகளும்,விதவித அலைபேசிகளும் சற்று நேரம் நங்கநல்லுர் ஆஞ்சனேயராய் என்னை மாற்றியது - அவருக்கு சஞ்சீவி மலை,எனக்கு தாமஸ் மலை.கல்வி என்ற நோக்கில் செல்லும் என் பாதை பூத்துக் குலுங்குகிறது பயணத்தின் பவழக்கிழமைகளாய்.
காற்றில் எந்தன் கீதம் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்க,கிண்டி வந்துவிட்டது.இறங்கி நடக்கையில் பனிவிழும் மலர்வனத்தில் பேருந்திற்காக காத்திருக்கிறேன்.வளையோசை கலகலகலகலவென ஒலிக்க அழகான பெண்களை கொஞ்சம் விழிகளால் கவிதை எழுதி கவிழ்க்கப் பார்க்கிறேன்.ஒன்று போனால் ஒன் மோர் உள்ளதடா என நகர்கையில் ஷேர் ஆட்டோ வருகிறது.இசையின் முதல் துளி தோட்டாவாய்த் துளைத்து காதில் தெறிக்கையில்,முதல் சொட்டுத் தேனின் சுவை.இசை அதன் ருசியை உடலெங்கும் பரவசமாக இலவசமாக பரவவிட நினைத்து நினைத்து பார்த்தேன் நான் பார்த்ததிலேயே அழகான பெண்ணை.கண்கள் தானாக மூட என்னதான் பாகவதன் இல்லையென்றாலும்,சங்கதிகளை ரசிக்கத்தெரிந்த செவித்தசைகள் உருவை உள்ளே செலுத்தியது.அலைகளை கட்டியிழுத்து என் காதில் கிடத்த செம்பூவின் வாசம்,பின் வசந்தகாலம்.மண்ணில் பெண்ணுக்கு நிகரான இன்பன் இசையெ.காற்றின் சுவாசம் கானம்.வயலினும்,சித்தாரும்,பியானோவும்,நாதஸ்வரமும்,ப ேம்பினோவும் அந்த ஒற்றைக்கருவியின் மோகனம் பரப்புகிறது.கருப்பு வெள்லைப் பூகளும்,சர்க்கரை நிலவும்,சஹாரா சாரலும்,ஒரு மாலை இளவெயிலும் ஒன்றன்பின் ஒன்றாக மோத,முன் வந்த கடன்காரனின் அலட்சியத்தால் ஆட்டோ ஓட்டுனர் போட்ட ப்ரேக் நிறுத்த ரேடியோ கழன்று விழ,அலைகள் அத்தனையும் காற்றில் கசிய,கொஞ்ச நேரத்தில் தென்றல் வரும் வழியெல்லாம் நனைந்துவிட்டன.நின்ற அலைகள் பெருகப்பெருக இசை தீபிடிக்க தீப்பிடிக்க புதுக்கவி வாசித்தது.காற்றெல்லாம் அதிர,பட்டினப்பிரவேசத்தில் கட்டிக்காப்பத்திய இசை காதிலிருந்தும்,வாயிலிருந்தும் மௌனத்தை விவாகரத்து செய்து கோப மொழியாய் தூவின.மீண்டும் அலைகளையெல்லாம் அணைகட்டி இழுத்துவருவதற்குள் வீடுவந்துவிட்டது.நடுவில் கொலை செய்த தொகுப்பாளினிகளை துறந்தபடி அடுத்த ரேடியோ ஊரைப் பார்க்க மந்திரக்கம்பளம் விரிப்பது உத்தமம்.இசை காதருகே திருக வனப்பாய் பயணத்தை இசையோடு களித்தேன்.வழிதடங்களிலெல்லாம் பாதச்சுவடுக்கு பதில் இசைக்குறிகள்.
crazy
8th April 2007, 12:12 AM
nice .......... :)
btw un b.day eppo?
VENKIRAJA
8th April 2007, 11:09 PM
the last day of the first month of the last decade of the past century of the second millenium,
simply guessable......
VENKIRAJA
14th April 2007, 09:12 PM
ரணத்தடச்சுவடு.
"ஃநெர்ட்யுஇஒபச்ட்fக்ஹ்ஜ்க்ல்ழ்xச்வ்ப்ன்ம்
- ஒன்றும் புரியவில்லையா?qwertyuiopasdfghjklzxcvbnm:கீபோர்டின ் வரிசையை தமிழில் அடித்தால் இப்படித்தான் இருக்கும்."
அவ்வப்போது இப்படி ஈ-மெயில்கள் generate செய்வதுண்டு,அளவுக்கதிகமாக வெட்டியாக இருக்கையில்.
ஆரம்பித்த இடத்திலிருந்து மீண்டும் தொடங்கவேண்டியிருக்கிறது.
பள்ளிவாழ்வின் கடைசி ஆண்டு முடிந்த பொழுது மீண்டும் ஒருமுறை 1st standard class-u எந்த பக்கம் அண்ணா? என்று கேட்டதும்,அன்று மதியம் அம்மா ஊட்டிவிட்ட தேங்காய்சாதத்தின் ருசியும் அடிநாவில்.எதைப் பார்த்தாலும் ஒரு மிரட்சியும்,காரணமற்ற வெறுப்பும் சூழ்கிறது.என்ன என விளங்காத விந்தையும்,தினம் தினம் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் பரதேசி வாழ்க்கையும் அலுப்பு தட்டுகிறது.நண்பர்களின் முகங்களும் இறுக்கமும்,பிரிவின் வலியையும் சுமந்தபடி கானல்நீரின் தித்திப்பை பருகவைக்கிறது.நுழைவுத்தேர்வுகளின் பளு வேறு திசையில் இழுக்கிறது.வாழ்க்கையே முடிந்துவிட்டதைப் போல் வெறுமை கனக்கிறது.ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சொற்கள் நாவிலிருந்து குதிக்கிறது.இந்திய கிரிக்கெட் அணி எரிகிற கொள்ளியில் நெய் ஊறுகிறது.சிவாஜியின் சுமாரான பாடல்கள் திரைப்படங்களின் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறது.நாள்காட்டியின் தாள்கள் வேலையே செய்யாமல் சாகின்றது.இந்தத் தருணத்தில் ஒரு நாள்.....
கிளம்புவது என முடிவு செய்து வீட்டினருக்கு சொல்லிக்கொண்டு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.மனோஜ் வீட்டிற்கு சுமார் 6 கீ.மி சைக்கிளை மிதித்து சென்றேன்.அவனும் வர,வண்டியை எடுத்துக்கொண்டு பாலா வீட்டிற்கு சென்றோம்.கொஞ்ச நேரம் கண்ணீரை அடக்கிக்கொண்டு,சந்தோஷ கணங்களை நினைவுகூர்ந்தபடி மௌனங்கள் உடைத்து புதிய செல்போன்களைப் பற்றி பேசிக்கொண்டு,எண்களையும் குறித்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.கொஞ்சம் கொஞ்சமாக மனதில் ஒரு மாதம் வாடகையின்றி தங்கியிருந்த சாத்தானை சாமன்களோடு வெளியேற்றினேன்.வீட்டினுள் அமர்ந்து ஊரே கேட்கிறபடி இசையை அலறவிட்டு வெறிபிடித்தாற் போல கேட்டுக்கொண்டும்,பாடிக்கொண்டும்...பாலா வீட்டில் மதியம் 2 மணி வாக்கில் கிரிக்கெட் விளையாடினோம்.நெகிழ்ச்சியான தருணங்களை,நாங்க்லள் அடிக்க முயன்ற ஓணானை,நகைச்சுவையை செல்போனுக்குள் அடைத்தோம்.அங்கிருந்து கிளம்பி மதிய உணவை இளையராஜா துணையுடன் முடித்துவுட்டு ராமநாதனுக்கு தொலைபேசியில் விவரம் தெரிவித்துவிட்டு நாகராஜ் வீட்டிற்கு சென்றோம்.அங்கு எல்லா நண்பர்களையும் வரச்சொல்லிவிட்டு,அனைவருடனும் மனம்விட்டுப் பேசி சிரித்து நொறுக்குத்தீனி உண்டு,மைதானத்திற்கு கிளம்பினோம்.அங்கு ராமநாதன் வந்து செர்ந்தான்.அனைவரும் கடைசி பள்ளி தினத்தன்று எஉத்த வீடியோக்களைபோட்டு பார்த்தோம்.நண்பர்கள் சில நகைச்சுவையான விசயங்களை விவாதித்தது,விளையாடியது,வகுப்புகள் கட் அடித்தது,விவகாரங்கள் ஆனது,நாடகம் பொட்டது,கவிதை எழுதியது,ஊர் சுற்றியது,பிரியாணி தின்றது,கும்மாளம் அடித்தௌ,சுற்றுலா சென்றது,அழகிகள் ரசித்தது,திட்டு வாங்கியது எல்லாம் எல்லாம்.எங்கள் ஆசிரியைகள் சிலர் போல நண்பர்கள் நடித்து காட்ட,கிரிக்கெட் விளையாடுகயில் சிலர் பல்பு வாங்க என அத்தனை அட்டகாசத்திற்குப் பிறகு கௌஷிக் வீட்டிற்கு சென்றோம்.அவனோடு கொஞ்சம் பேசிவிட்டு,பிரசன்னாவோடு அவன் வீட்டு மொட்டைமாடியில்,கடைசி பெஞ்சில் அமர்ந்து செய்த ரகளைகளைப் பற்றி அசைபோட்டு நான் வீட்டிற்கு வந்து,எல்லோரும் ஒரு கான்பரன்ஸ் கால் பேசினோம்.மறுநாள் எல்லோரும் கடற்கரை போகலாம் என்று முடிவு செய்து பிரிந்தோம்.என் வீட்டிற்கு கொஞ்சம் பேர் வந்தனர்.தொலைக்காட்சியும்,சினிமாவும் அளவளாவிவிட்டு அரட்டைகளை முடித்துக்கொண்டு சாப்பிட்டோம்.மனோஜ் வீட்டில்ருந்து பத்து பேர் கடற்கரைக்கு சென்று மாலையெல்லாம் விளையாடிவிட்டு,கடலில் நீராடி பேருந்தில் பேசிக்கொண்டெ வந்தோம்.அத்தனை துயரமும் கடலில் கலந்த களிமண்ணாய் விலக மீண்டும் என் வானில் சூரிய ஒளி.மகிழ்ச்சியோடு மீண்டும் மலர்ந்த முகத்துடன் உலவ ஆரம்பித்தேன்.பழயபடி எல்லாம் சமநிலைக்கு வர,இப்போதெல்லாம் தினம் எங்காவதொரு தெருமுனையில் சைக்கிள்களில் பேசிக்கொண்டு பொழுதுகள் சர்க்கரையாகப் பூக்கின்றன.
VENKIRAJA
7th June 2007, 04:50 PM
பாதசாரி-மீண்டும் ஒரு முன்னுரை.
எழுத்து தவம் தான்.எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கமுடிவதில்லை.ஆனால் தொடங்கிவிடின் முடிக்கவும் முடிவதில்லை.கொஞ்ச நாட்களாக எழுதவில்லை. ஜெயகாந்தன் சொன்னது போல,ஒரு எழுத்தாளனுக்கு எழுதாமலும் இருக்கத் தெரிய வேண்டும்.எழுத்து என்பது எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை வரலாறு தடவி சொல்வது எல்லாம் இந்த முன்னுரையின் நோக்கம் அல்ல.என்னைப் பொறுத்த வரை எழுத்து தீராத அமுதம்.தாகத்தை தீர்க்காத சுவைமிகுந்த தேவாமிர்தம்.அதை பருகுபவன் எழுதுபவன் மட்டுமல்ல,படிப்பவனும் தான்.இதையே உலகத்தை புரட்டும் நெம்புகோலாகவோ,பெண்களின் மீது வீசும் கணையாகவோ,பணம் சம்பாதிக்கும் கருவியாகவோ மாற்ற எனக்கு உத்தேசமே இல்லை.என் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாண்டி,என் மனதை பாதித்தவற்றை,அனுபவங்கள் என்று நான் ஈட்டி வைத்திருக்கும் செல்வத்தை எழுத்தாய் பதிவு செய்து,என்னுடைய மேதமையை,மொழியின் மீதிருக்கும் ஆளுமையை மட்டுமே பிரதிபலிக்கும் ஒன்றாகவே எழுத்து எனக்கு படுகிறது.அமைதியான ஆழ்கடலின் அதிர்வு அலைகளை உருவாக்கி நுரையாய்க் கரையில் கரைவது போல,மனதில் ஊறும் எண்ணங்களின் வெளிப்பாடு எழுத்துகளாகி அவை காட்சிகளாய்ப் பெருகி,மெல்ல மனதில் கரைந்துவிடுகின்றன.எனக்கு அழகானதாகப்பட்டதை உங்களுக்குக் காட்ட எனக்குக் கிடைத்த வாகனம் தான் எழுத்து.இலக்கியத்தின் ஒட்டுமொத்த நோக்கமும் அதுதான்.பிராமணன்-பாமரன்,வசதியானவன-வட்டியானவன் என்று பேதமின்றி அனைவருக்குமான ஊடகத்தில் அந்த கருத்து மின்னூட்டப்படுகிறது.ஒவ்வொருவரையும் அந்த கருத்து சென்றடையும் அளவு மாத்திரம்,அவரவரின் அனுபவம் சார்ந்து வேறுபடுகிறது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளாய் படும் கவிதையின் மாயம் சொல்லி மாளாது.வாசிப்பில் புரியாமல்,திடீரென்று நடுநிசியில்,அதீத சோகத்தில் எல்லாம் புலப்படும் கவிதைகளும் உள்ளன.பயணம் என்று நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து அவ்வப்போது விலகினாலும்,பயணத்தின் அவதானிப்புகளையும்,இடங்களை தேதி-நேர-நட்சத்திரங்களின்றி என் பார்வையில் சிறைபிடித்து அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விழைந்தேன்.முன்பே கூறியதைப் போல பயணக்கட்டுரைகள்,கட்டு(ப்பாடுகளுடைய உ)ரை எனப்பட்ட பழைய நீண்ட நெடிய வாசகங்களும் வாசகங்களும் உபதேசங்களும் மணிப்பிரவாள நடையில் எழுதப்பெற்ற உயிரற்ற பத்திகளாக மட்டுமே இருந்து வந்தன,இன்றும் இருக்கின்றன.அவற்றின் மேல் உண்டான சலிப்பு இதனை இயற்ற வைத்தது.புதிதாக,எளிதாக,சுருக்கமாக நான் கையாண்ட நடை எனக்கு திருப்தி அளித்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் எழுதியவையும் இந்த சாளரத்தில் பயணிப்பவை என்று எண்ணுகிறேன்.ஒரு சிறுவனின் வாழ்க்கையை பாதித்த நிகழ்ச்சிகள் உங்கள் பால்யத்தையும் நினைவு கூர்ந்திருப்பின்,மிக்க மகிழ்ச்சி.இனி தொடரப்போவது ஒரு இளைஞன்.இனியும் நீங்கள் அளித்துவந்த ஆதரவைத் தொடர விழைகிறேன்.
பாதசாரிப்பும் பூரிப்பும் கொண்ட,
இரா.கு.வெங்கடேஷ்.
crazy
7th June 2007, 08:50 PM
hayya padichutten 8-)
P_R
9th June 2007, 12:05 AM
இதையே உலகத்தை புரட்டும் நெம்புகோலாகவோ,பெண்களின் மீது வீசும் கணையாகவோ,பணம் சம்பாதிக்கும் கருவியாகவோ மாற்ற எனக்கு உத்தேசமே இல்லை.இம்மூன்றில் இரண்டையாவது சாதிக்க உங்கள் எழுத்து உதவும் என்பது உங்கள் திறமையைப் பற்றி எனது மதிப்பீடு. அந்த குறிக்கோள்களை சிறிதாக எண்ண வேண்டாம் :-) தொடர் தொடர வாழ்த்துக்கள்
VENKIRAJA
24th June 2007, 06:32 PM
புதிய அத்தியாயம்-I
இரவலன்.
கரையைக் கடக்கும் நீச்சல்காரனுக்கு கரைகளும் சொந்தமில்லை,வழித்தள நீர்நுரைகளும் சொந்தமில்லை,அவன் கரைகடந்த பாதசாரிப்பு மட்டும் தான் சொந்தம்.நடந்து நடந்து ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு இன்று அகிலமெல்லாம் சொந்தம் கொண்டாடும் குரங்கினத்தின் கையிருப்பும்,அவனது சக உயிரினங்களைக் காட்டிலும் நடந்து வந்து பட்டறிவிலும் பாட்டறிவிலும் தேர்ந்து அவைகளை எஜமானிக்க வல்லவனாக்கிய பயணம் தான்.பிச்சைக்காரனுக்கும் பாட்டுக்காரனுக்கும் இன்னொரு பெயருண்டு:இரவலர்கள்.நான் இரண்டிலும் அரைகுறை.
நான் நாணயங்கள் சேகரிப்பவன்.கூடவே அஞ்சல் தலைகளும்.வீட்டிற்கு வந்து பொருட்களை விநியோகம் செய்யும் நபர்களின் சில்லறைகலை எல்லாம் ஆராய்ந்து அதில் பழைய நாணயங்களை,தினங்கள் இயக்கங்கள் துறைகள் எல்லாவற்றுக்கும் கௌரவம் செய்ய அச்சிடப்பட்ட நாணயங்களை அவர்களிடமிருந்து பண்டமாற்று செய்து தான் என் சேகரிப்பைத் தொடங்கினேன்.அதை வைத்துக்கொண்டு என் நண்பர்களிடமிருந்து விரிகுடா நாடுகளின் நாணயங்களையும்,மலேசியா சிங்கப்பூர் நாணயங்களையும் வாங்கினேன்.இப்படியாக வளர்ந்த என்கையிருப்பு,எனது மாமாக்கள்,தந்தை,தாத்தா இவர்களால் பல்கிப் பெருகியது.ஒருநாள் நாணய்ங்கள் விற்பதாகக் கேள்விப்பட்டு சென்ட்ரலுக்கு விரைந்தேன்.ரயிலடிக்கு அருகிலிருந்த மூர் மார்க்கெட்டில் தான் எனக்குத் தேவையான நானயங்கள் இருப்பதாக தோழன் சொன்னான்.அவனையும் கையோடு அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.அப்போது தான் நான் நகரத்தின் மையத்திற்கு முதன் முறையாக வந்திருந்தேன்.இதுவரை நகரத்தின் விளிம்பிலேயே இருந்துவிட்டு,அளாவிய மக்கட்திரளைப் பார்ப்பது வியப்பாக இருந்தது.அவர்களின் வியர்வையும்,கடின உழைப்பும் வியப்பளித்தது.மறுபுறம் சொகுசான இளைஞர்களின் பகட்டும் அலட்சியமும் தெரிந்தது.இடையில் நான்.ஒரே தளத்தில் இருவேரு விதமான வாழ்க்கைமுறைகளை கையாளும் விசித்திர உலகில் நான் எந்த பக்கம் என்று தெரியாமல் மூர் மார்க்கெட்டினுள் நுழைந்தேன்.வழக்கம் போல இங்கும் போலிகள் தான்.அயல்நாட்டு முத்திரைகளைக் குத்தி இவர்களாக அச்சிட்ட பணம்.100 வருடத்திர்கு முந்தை நாணயத்தின் பளபளப்பு என் கண்களைக் கூசச் செய்தது.விலையும் அப்படித்தான்.ஆப்பிரிக்க டாலர்களுக்கு அமெரிக்க டாலர்கள் விலை.சரியென்ரு யோசித்து ஹார்பருக்கு புறப்பட்டோம்.அருகில் ராயப்பேட்டையில் இருக்கும் ஓர் கடையில் நாணயங்கள் மாற்றிக்கொள்ளப்படும் என்றிருந்த விளம்பரத்தை நம்பி.அவனோ எங்க்ளிடமிருந்த நானயங்களுக்கு இந்தியப் பணம் தருவோம் என்று கடுப்பேற்றிவிட்டு கிளப்பிவிட்டான்.அங்கிருந்து விமான நிலையம் வந்தோம்.அங்கும் ஏமாற்றம்.அங்கு நோட்டுகள் மட்டுமெ தரப்படும் என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.கடைசியில், நணபணை அழைத்துக்கொண்டு அஞ்சல்தலை வாங்க அண்ணா நகர் தலைமைத் தபால் நிலையத்திர்கு சென்றோம்.அங்கு விலங்குகள்,மரங்கள்,காடுகள் சிறப்புக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ரொம்ப மகிழ்ச்சியாகி அந்த்த தலைகளைப் பார்த்ததோடு ஆயிரக்கணக்கில் தலைகளை வைத்திருந்த தலைகலையும் பார்க்க தலைப்பட்டோம்.அவர்களிடமிருந்து போலி தலைகளைக் கண்டுபிடிக்கவும்,மேலே குறியிட்ட தலைகளை மட்டும் சேர்க்கவும் உபதேசங்கள் கற்றுக்குண்டு,கொஞ்சம் வியாபாரம் கொஞ்சம் பண்டமாற்றும் செய்துகொண்டு வீடு திரும்பினோம்.
சென்ற நான்கு இடங்களும் நகரத்தின் நான்கு மூலைகள்.வீடோ ஏற்கனவே சொன்னதுபோல நகர்ப்புறத்தின் புறநகர்.இந்த பெரிய நகரத்தின் முரண்பாட்டுகளும்,அவசரமும்,வியாபார விஸ்தீரனமும் உண்மையிலேயே மலைக்க வைத்தன.எந்தக் கணத்திலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் ஹாரன் சப்தமும்,சினிமா பாடலும்,ஒருவித சலிப்பை ஏற்படுத்தின.யாருக்குமே இங்கு 24 மணி நேரம் போதவில்லை.ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் காரனமே இல்லாமல்;பேசவோ,உண்ணவோ கூட நேரமின்றி.இந்தத் தலைமுறையின் தங்குதடையற்ற் இரைச்சலும்,அதீத பணவெறியும் தேவையற்றவை,இலாபமற்றவை.நட்சத்திரங்களைக் காணவோ,மௌனத்தை ரசிக்கவோ,தன் மனைவியை ரசிக்கவோ தெரியாதவனுக்கு கோடி ரூபாயும் குப்பைதான்.
மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் நண்பன் ஜன்னலுக்கு வந்து எழுப்பினான்......."டேய் இங்க எங்கேயோ மூகாம்பிகை நகர்னு ஒண்ணுத்துல coin stamp எல்லாம் விக்கிறாங்களாம்டா!"முந்தைய நாளின் சிந்தனைகலெல்லாம் பஞ்சாய்ப்பறந்து நண்பர்களவிட அதிகமான எண்ணிக்கையில் நாணயங்கள் சேகரித்து விட எண்ணி மிதிவண்டியை மிதித்தேன்.அந்த மூகாம்பிகை நகரை ஒருவழியாக கண்டுபிடித்தும் விட்டேன்.ஆனால்.......
அந்த இடம் சமீபத்தில் தான் பட்டா போடப்பட்ட வெளி.வெறும் செங்கல் அடுக்குகளுள் மரங்கள் நட்டு சாலைகள் பிரித்துவிட்டு இடம் விற்பனைக்கு என்று பலகை மாட்டப்பட்ட காலியிடம்.அத்தனை காலையில் மூச்சிறைக்க வந்து,ஆசைகலையெல்லாம் வீணாக்கி......அருகிலிருந்த நண்பனை ஓட ஓட் விரட்டி அங்கேயே அடித்துவிட்டேன்.தண்டணையாக அவனை மிதிவண்டியில் ஏற்றாமல் நடக்க வைத்து கூட்டி வந்தேன்.
"டேய் கடைசியா இந்த கடைக்காரர் கிட்ட கேட்டு பார்க்கலாம்டா",என்றான்.
நான் முறைக்க,"சரி நானே கேகுறேன்...
அண்ணா இங்க பக்கத்துல எங்கேயாவது வெளிநாட்டு சில்லறையெல்லம் விக்கறாங்களாண்ணே?"
"இங்க நம்ம ஊரு ரூவாய்க்கே வக்கக் காணோம்,இதுல வெளிநாடு வேறயா?"
சிரிப்பு வெடிகள் வெடிக்க,அவனும் நானும் சோடா குடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
இப்போது என்னிடம் ஏறத்தாழ 50 நாடுகளின் நாணயங்கள் இருக்கின்றன.ஆயிரத்து ஐந்நூறு தபால் தலைகள் இருக்கின்ற்ன.தேடலில் இன்னும் பாதசாரித்துக்கொண்டேயிருக்கின்றேன்....
pavalamani pragasam
24th June 2007, 06:40 PM
Good! :D Reminding of my children's interest in both these hobbies. It never took the seriousness of your passion, but still lies in them alive as hot coals!
VENKIRAJA
24th June 2007, 07:21 PM
Good! :D Reminding of my children's interest in both these hobbies. It never took the seriousness of your passion, but still lies in them alive as hot coals!
I can't get you clearly ma'am,please elaborate.
VENKIRAJA
24th July 2007, 12:33 AM
என் தமிழ் ஃபான்ட்டுகள் பழுதடைந்ததால் சிறிது பிசிறு தட்டி இதோ வந்துவிட்டேன் இன்னுமின்னும் பயணிக்க.......நாளை எதிர்பாருங்கள் புதிய அத்தியாயம் II......
pavalamani pragasam
24th July 2007, 08:21 AM
[tscii:01d0265021]«Åü¨È §º¸Ã¢ì¸ ±ý À¢û¨Ç¸û ¯í¸¨Çô §À¡ø ¦ÁÉ즸¼Å¢ø¨Ä ±ý§Èý![/tscii:01d0265021]
crazy
3rd August 2007, 11:59 PM
venki :clap: :clap:
btw, naalai endru solli....ippo naal 11 aahidhu, enge....????
VENKIRAJA
2nd January 2008, 12:46 PM
நிறைய எழுத விருப்பம்.....திடீரென்று தோன்றியது மீண்டும் தொடங்கலாமென்று....இவ்வருடம் முன்பு சொன்ன சிலவற்றை பூர்த்தி செய்யவும்,இடைவெளியின் குறைகளை நிவர்த்தி செய்யவும்,பாதியில் விட்ட திரைக்கதை,கட்டுரை,கதைகளை எழுதுவோமென....கூடவே....ஒரு பின்னோட்டம்:
இடைச்செருகல் # 4:
உறைந்த காலம்...
சென்ற ஆண்டு ஆரூடங்கள் கணித்தவற்றை பொய்த்து இந்த மீனராசிக்காரனுக்கு நிறைய கஷ்ட நஷ்டங்கள்.இளைஞன் ஆனதன் விளைவோ என்னவோ சிறுவனின் அணுகுமுறையிலிருந்து ஏகப்பட்ட மாற்றங்கள்...இது பக்குவமா அதிகப்பிரசங்கித்தனமா என்று கூட விளங்கவில்லை.நிறையவே கேலி,நிலா பார்த்தலிலிருந்து நிலாக்கள் பார்த்தல்,வெறித்தனமாக ஊர்பவனி,நடை உடை பாவனை எல்லாம் மாறிப்போய்;சரிதான் சரிதான்:மாற்றம் ஒன்றுதானே இங்கே மாறாதது....
சரி விருதுகள் அளிப்போமா?என்னடா என கேட்க வேண்டாம்....சும்மா நம்ம மனதை தேற்றிக்கொள்ள தான்...ஆண்டொன்றை அசைபோட இன்னுமோர் வழி...
1.இணையமும் இலக்கியமும்:
சிறந்த வலைமனைகள்:
தமிழ்த்திரைப்படங்கள்:www.behindwoods.com
செய்திகள்:www.thatstamil.com
பிற:www.sinekithan.com
வலைப்பூ:www.asifmeeran.blogspot.com
சிறந்த சிறுகதை:
நினைவெல்லாம் நித்யா...
(http://nilaraseegansirukathaigal.blogspot.com/)
"மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு" சத்தம்போட்டு என்னை எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு.துள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை கண்டவுடன் கண்ணில் நீர்துளிர்த்துவிட்டது.எத்தனை வருட தவம் இது! எத்தனை வருட முயற்சி இது! வானத்து தேவதைகளே எங்கே
சென்றீர்கள்? உலகப் புகழ்பெறப்போகும் எழுத்தாளனுக்கு கிடைத்த முதல் பரிசுக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?மேகங்களே இன்றுமட்டும் பூக்களை மழையாக பொழியுங்கள். சரித்திரத்தில் இடம்பெறப்போகும் ஒரு முக்கிய எழுத்தாளன் இன்று பிறந்திருக்கிறான் என்று உலகிற்கு சொல்லுங்கள்.
என் கைகள் சிறகாக மாறி விண்ணோக்கி பறக்க ஆரம்பித்த நொடியில்...
"டேய் என்னடா அமைதியாகிட்ட?" உலுக்கிய நண்பன் என்னை மீண்டும் இவ்வுலகிற்கு அழைத்துவந்தான்.
"மச்சான்,என்கிட்ட கூட சொல்லவே இல்லை எப்போடா கதைய அனுப்பினே?" ஆர்வமுடன் கேட்டான் நண்பன்.அப்பொழுதுதான் எனக்கு உறைத்தது. இந்தக் கதையை நான் அனுப்பவே இல்லையே! யார் அனுப்பி இருப்பார்கள்?
"நான் அனுப்பவே இல்லடா,எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு....யார் அனுப்பி இருப்பாங்க?"
"என்னது நீ அனுப்பலையா? அப்போ யாரா இருக்கும்...ம்ம்...டேய் அவளாதான் இருக்கும்டா" கண்ணடித்தான்
நண்பன்.
நித்யாதான் அந்த "அவள்". என் காதலி. பூக்களின் மனித வடிவம். என் கல்லூரியில் படிக்கின்ற ஐந்தடிமல்லிச்சரம்.
அவள் அனுப்பி இருப்பாளா என்று எண்ணிக்கொண்டே
கல்லூரிக்கு சென்றேன்.
"கங்கிராட்ஸ் டா" கைகுடுத்தாள் நித்யா.
"ஏண்டி, என் கதைய பத்திரிக்கைக்கு அனுப்பினா சொல்லமாட்டியா" செல்லக்கோபத்துடன் கேட்டேன்.
"என்னடா சொல்ற,நான் அனுப்பலையே" குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள் என் நித்யா.
"என்னது நீ அனுப்பலையா? அப்போ எப்படி வந்தவுடனே கங்கிராட்ஸ் சொன்ன?"
"நோட்டீஸ் போர்ட்ல போட்டிருந்துச்சு அதனாலதான் சொன்னேன்"
"என்ன நடக்குதுன்னே புரியலை பத்திரிக்கைக்கு யார் அனுப்பினதுன்னு தெரியலை,அதுக்குள்ள நோட்டீஸ் போர்ட்ல வேற போட்டிருக்குன்னு சொல்ற, யார் இதை எல்லாம் பண்ணினது?"
"நான் தான்" பின்னாலிருந்து குரல்கேட்டது...
அங்கே...
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்....மின்விசிறி நின்றிருந்தது...அறைத்தோழனின் குறட்டைச்சத்தம் தவிர
வேறு எதுவும் இல்லை...
அடடா எல்லாம் கனவா? சரி, கனவுலயாவது நம்ம கதைய பப்ளிஷ் பண்றாங்களே.... என்னை நானே சமாதான படுத்திக்கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்.
நித்யா சிரித்துக்கொண்டே கேட்டாள்.... "இதுதான் கதையா, இதே மாதிரி பலதடவை வந்துருச்சுடா"
தெரியும்டி செல்லம்...ஆனால் கனவுன்னு தெரிஞ்சதும் கதை முடிஞ்சிடும். ஆனா என் கதை இன்னும் முடியலை...
அப்படியா எப்படி டா சொல்ற?
அதுவந்துடி....
இறந்த காதலியின் நினைவுகளுடன் தனியே இருட்டில் பேசிக்கொண்டிருந்த என்னை கவலை கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர் என் விடுதி நண்பர்கள்.
சிறந்த write-up:வார்த்தைகளுடன் வாழ்தல் @ http://tamilnathy.blogspot.com/
சிறந்த கவிதை:
மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!
- ப்ரியன்.
மைய திரி:Movie of the week(Selvakumar-Films),Hubbers' drama(Shakthiprabha-Lounge),Yorker07(Sanguine Sridhar)
மைய அன்பர்:m23_bayarea,navin,leosimha போன்ற விடாப்படியான இரசிகர்கள் தவிர்த்து ரோஷன்(பேச்சில் தெளிவும் துணிவும்),சக்திப்பிரபா(வியக்கவைக்கும் படைப்பறிவு),ஆனா(ஆனாலும் கொஞ்சம் தொலைக்காட்சியிலிருந்து வெளியே வாங்க)
சிறந்த வெட்டிக்கதை:[மொக்கசீனோ காபி]மாஸ்டர்-அனீஷா,(ஐயோ பாவம்)தேவா-பூஜா [CC திரிகள்]
சிறந்த நகைச்சுவை:அர்ஷிதா(எ)விபா.....emoticons திரி,எம்.ஜி.பி கணேஷ்(c.c திரியில்)
avatars:{திராட்சைக் கண்ணும் முத்தமிடத் தோன்றும் கன்னங்களுடைய.....!}மது(பாப்பா...:kiki: :glux:)
signatures:பிரபு ராம்.
சிறந்த காணாமல் போனவர்கள்:ராக்கி (எ) சூர்யா.
சிறந்த நிகழ்வு:நிறைய மைய சகா-சந்திப்புகள்(ஹப்பர்ஸ் மீட்கள்)
வாராந்திர தொடர்:உலக சினிமா(செழியன்;ஆனந்த விகடன்)
மறுபதிப்பு:மெர்க்குரிப்பூக்கள்(பாலகுமாரன்,விச ா பதிப்பகம்-17ம் பதிப்பு)
வயிற்றெரிச்சல்:பா.விஜய் கலைஞரை வைத்து நி(பு)கழ்த்திய வெளியீட்டுவிழா.
புத்தகம்:மல்லிகைக்கிழமைகள்(ஜெ.பிரான்சிஸ் கிருபா)
ஓவியம்:ம.செ(குமுதம் திருவேங்கிமலை சரவணன் தொடரில்)
வாரப்பத்திரிக்கை:குமுதம்
அட்டைப்படம்:எல்லா பெண்கள் பத்திரிக்கை(அழகான மங்கைகளை புடவை-தாவணியில் காட்டியதற்காக)
புகைப்படம்:கண்ணதாசனின் வாழ்க்கைக்குறிப்புகளுடன் வெளிவந்த அவரது அரிய புகைப்படங்கள்(விகடன் சிறப்பிதழ்)
வெளியீடு:ராஜு/கோபுலு/மதன் கார்ட்டூஙள்(விகடன் பதிப்பகம்)
2.தொலைக்காட்சி:
தலைசொறிதல்:செய்தி அலைவரிசைகளின் பூதக்கண்ணாடித்தனம்,கலைஞர்><சன் தொலைக்காட்சி மோதல்கள்....விதவிதப்பெயர் இணைப்பு இத்தியாதி குழப்படி,எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒரே சிறப்பு(சலிப்பு) நிகழ்ச்சிகள்,சிரிப்பு நிகழ்ச்சிகள்,போட்டிகள்.
பாடல்:காதலிக்க நேரமில்லை(ஸ்டார் விஜய்)
யோசனை:8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்(தீர்வு தவிர-ஸ்டார் விஜய்)
குழந்தைகள் நிகழ்ச்சி:டோரா(உதவி செய்தல்,நன்றி கூறுதல்,தனியாக பயணித்தல்,சுயமாய் செய்தல்,எளிய ஆங்கிலம் என பழைய நிக்கலோடியன் தொலைக்காட்சி கார்ட்டூனின் தமிழ்ப்பிரதி),ஐன்ஸ்டீன் அங்கிள்(பொம்மை,அழகுப்பொருட்கள் என்று உற்சாக பொழுதுபோக்கு)
அசம்பாவிதங்கள்:ஜோடி நம்பர் 1-ல் சிம்புவின் கூத்து,ரொம்பவே நகைச்சுவையாகிவிட்ட தமிழ்த்தொலைக்காட்சி "செய்திகள்",நடிகர் அஜித்தின் பாடல்களை கேட்டும் காட்டாத குறிப்பிட்ட தொலைக்காட்சிகள்.
ஆறுதல்:அவ்வபோது ந(ல்லி)ள்ளிரவில் பழைய பாடல்களைப் பாடும் தமிழிசை அலைவரிசைகள்,உலக இலக்கியம்/பங்குச்சந்தை/தமிழறிவு/குறும்படங்கள் பற்றி பேசும் மக்கள் தொலைக்காட்சி,குழந்தைகளுக்கு தமிழில் சுட்டி டி.வி,வெகுநாளாய் ஒளிபரப்பாகும் "இன்று" எனும் வரலாற்றுரை(ஜெயா செய்திகள்)
வி.ஜே:பூஜா(எஸ்.எஸ்.மியூசிக்)
தொகுப்பாளர்:விஜய் ஆனந்த்(கே டி.வி),பாலாஜி(விஜய்,ஜெயா டி.வி),ரம்யா(விஜய் டி.வி)
நடிகர்:மிர்ச்சி சிவா,அகில உலக பேமஸ் ப்ளாக் பாண்டி.(ஸ்டார் விஜய்)
நடிகை:எல்லாம் சப்ப பிகர் மச்சி!
தொடர்:கனா கானும் காலங்கள்(வெறும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் இருந்தவரை)
நிகழ்ச்சி:நீயா நானா(கோபிநாத்,என்.டி.டி.வி யின் முந்நாள் ரிப்போர்டர்;ஸ்டார் விஜய்)
தொலைக்காட்சி:மக்கள் தொலைக்காட்சி(தமிழ் பேசும் தொகுப்பாளர்கள்,சினிமா வாடையற்ற நேர்த்தியான திறம்பட நடையிடும் தொழில்நுட்பம்)
3.இசையும் திரைப்படங்களும்:
படமாக்கப்பட்ட விதம்:பேசுகிறேன்(சத்தம் போடாதே),அக்கம் பக்கம்(கிரீடம்)
நடனம்:எல்லாப்புகழும்(அழகிய தமிழ் மகன்),படிச்சு பார்த்தேன்(பொல்லாதவன்)
தீம் பாடல்:யுவன் ஷங்கர் ராஜா(பில்லா)
ரீமிக்ஸ்:பாட்டும் நானே(உன்னிகிருஷ்ணன்.....ப்ளுடூத் புண்ணியம்,ஆல்பம்கூட தெரியாது)
தனிப்பாடல்:காதல் ஒன்றல்லவா(ஏ.ஆர்.ரஹ்மான்)
ஜுகல்பந்தி:அருணா சாய்ராம்(சங்கித ஞானம் கம்மிதான்...தொடையெல்லாம் தட்டாமல்தான் கேட்பேன்)
வரிகள்:நா.முத்துக்குமார்(கல்லூரி,பருத்திவீரன்,கற்ற து தமிழ் ஏனைய),வைரமுத்து(சிவாஜி,மொழி,ஏனைய),யுகபாரதி(பேருந்த ில் நீ:பொறி)
பாடகர்:ஹரிசரண்(சரியா இது தவறா,அரபு நாடே,இன்னும் சில)
பாடகி:பாம்பே ஜயஸ்ரீ(உனக்குள் நானே,உப்புத்தண்ணி,இன்னும் சில)
ஆல்பம்:சென்னை 600028(யுவன் ஷங்கர் ராஜா)
பாடல்:சஹானா சாரல் தூவுதோ(சிவாஜி),டோலு டோலு(போக்கிரி),காற்றின் மொழி(மொழி)
பெருமூச்சு:நல்லவேளை இந்த ஆண்டு பேரரசுவிடமிருந்து தப்பிச்சாச்சு!
இடதுகை விருது:பொம்மைக்கல்யான கோஷ்டிகள்.
சிறப்பு விருது:தமிழக அரசு,பெரியாரை ஊக்குவிதமைகாக+சத்யராஜ்-காசின்றி நடித்ததற்காக+இளையராஜா கொள்கைப்பிடிப்பிற்காக....ஆகமொத்தம் பெரியாருக்காக!
உடைகள்:அனுவர்தன்(பில்லா)
நகைச்சுவை:பிரேம்ஜி/ஷிவா/மற்றும் பலர்(சென்னை 600028),பிரகாஷ்ராஜ்/பாஸ்கர்(மொழி)
கலை:தோட்டா தரணி(சிவாஜி)
குணச்சித்ர நடிகர்/நடிகை:சரவணன்(பருத்திவீரன்),கல்லூரியில் 'கலை'யாக நடித்த பெண்.
ஐயோ பாவம்:விக்ரம்(காரணம் தேவையில்லை.....சரி பொது அறிவு இல்லாதவர்களுக்கு:2ம் ஆண்டாக படமேதும் இல்லாததால்)
சண்டை:ராம்போ ராஜ்குமார்(பொல்லாதவன்)
படத்தொகுப்பு:அந்தோனி(பில்லா)
திரைக்கதை:வெங்கட்பிரபு(cஎன்னை 600028)
போஸ்டர்:கல்லூரி(டிபன் டப்பிகள் மழையில் நனைந்த பழுப்பு நிற நிழற்படம்.....தேனாம்பேட்டையருகே பார்த்தது)
ஒளிப்பதிவு:நீரவ் ஷா(போக்கிரி,பில்லா)
தயாரிப்பு:பிரமிட் சாய்மீரா(ஒன்பது ரூபாய் நோட்டை இலவசமாக காட்டியதற்காக)
தலைப்பு:எவனோ ஒருவன்
அநாயகன்:டேனியல் பாலாஜி(பொல்லாதவன்)
இயக்குநர்:அமீர்(பருத்திவீரன்)
நடிகை:ஜோ(மாற்றுக்கருத்தே இல்லை)
நடிகர்:அஜித்குமார்(எனக்கு பிடித்தவர்,மட்டுமின்றி நல்ல நடிப்புக்காகக்கூட)
crazy
3rd January 2008, 01:27 AM
:)
Shakthiprabha.
3rd January 2008, 04:14 PM
வெங்கி,
:D
எங்க பெயரை எல்லாம் சிறந்த தடங்களில் பதித்து, உங்களின் முதல் கதை பிரசுரம் போல் பரவசமடைய செய்து விட்டீர்களே!
ஆனாலும் நித்யாவும் கதாசிரியரும் ரொம்ப தான் டீ/டா போடுகிறார்கள் ! :|
பாதசாரி இன்னும் அதிகம் பயணிக்க வாழ்த்துக்கள்
Shakthiprabha.
3rd January 2008, 04:15 PM
சிறந்த வலைப்பதிவாக
எங்கள் மரத்தடி புகழ் நண்பர் 'ஆசிஃப் மீரானி'ன் பதிவு தேர்ந்தெடுக்கப் பட்டது குறித்து பெருமகிழ்ச்சி!
VENKIRAJA
3rd January 2008, 04:30 PM
சிறந்த வலைப்பதிவாக
எங்கள் மரத்தடி புகழ் நண்பர் 'ஆசிஃப் மீரானி'ன் பதிவு தேர்ந்தெடுக்கப் பட்டது குறித்து பெருமகிழ்ச்சி!
உங்கள் தோழரா அவர்?என் நன்பர் பிரியனின் வலைப்பூவிலிருந்து பயனித்த் ஏதோ ஓர் நல்பொழுதில் பார்த்தது தான் இப்பூ....நிரம்ப பிடித்தது......இவ்வருடம் வாரம் ஒரு அத்தியாயம் எழுத நோக்குகிறேன்.... :P முடிந்தால் சென்ற ஆண்டு/இந்த ஆண்டு இரண்டு விருதுகளையும் contrast செய்து பாருங்களேன்.....
Shakthiprabha.
3rd January 2008, 04:48 PM
சென்ற ஆண்டு விருதுகளின் சுட்டியை இடுங்கள் :)
VENKIRAJA
27th February 2008, 10:54 PM
ஆழ்ந்த இரங்கல்:எழுத்தாளர் சுஜாதா நம்மைவிட்டுப் பிரிந்தார்....!
அவரது எண்ணங்களாஇ நம்மிடமே விட்டுவிட்டு
சக்தி அண்ணி........சுட்டி இதோ:
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=127
Shakthiprabha.
27th February 2008, 11:00 PM
http://nizhalkal.blogspot.com/2008/02/blog-post.html
அஞ்சலி.
crazy
28th February 2008, 12:16 AM
Rest in Peace :(
VENKIRAJA
1st March 2008, 01:24 AM
தலைப்பேதும் தோன்றவில்லை....
கணம் என்றோ கனம் என்றோ தமிழின் ஏதோ ஒரு சொல்....எண்ணியவுடன் உயிரின் மிக மெல்லிய நுனியை முள் தைப்பது போல் தோன்றும் ஏதேனும் ஒரு சொல் என்று வைத்துகொள்வோம்.
காரணம் எனக்கு இப்படியெல்லாம் எழுத முடியும் என்று கற்றுக்கொடுத்த ஆசான்,ஓர் தினுசான சீனியர்,எந்த வித ரத்தசம்பந்தமுமிலாத யாரோ ஒரு நெருங்கிய உறவு.அவர் இன்று நம்மிடையே இல்லை.என்னை அவர் சுவீகாரம் எடுக்கவில்லை,அவருக்கு இன்றுவரை மின்னஞ்சல் ஏதும் அனுப்பியதில்லை.எங்கோ சாலையோரத்தில்,ரயில் நிலையத்தில்,கல்யாண வீட்டில் சந்தித்து "என்ன மாமா சௌக்கியமா?" என்று கேட்டதில்லை.பாட்டி யாரும் சொன்ன கதைகளில் அவர் இல்லை.என் சமூகத்திற்கு அவர் நெருங்கியவரல்லர்.எங்கள் ஊர்த் தெருவிளக்கை சரி செய்துவிட்டு நன்றிகளோடு கரைந்துபோன உறவில்லை.அவருக்கு பேருந்தில் எங்கோ அமர இடம் தந்ததில்லை.தவறிக்கூட ராங் நம்பரில் சந்தித்ததில்லை.நண்பனின் தம்முக்கு நெருப்பு தந்தவரில்லை.என்றேனும் செய்திகளில் நாயகனானவரில்லை.ராஜ்ஜியத் தலைவரும் இல்லை.அவரை நான் இன்னும் நேரில் பார்த்தது கூட இல்லை.ஒரு வார்த்தை பேசிக்கேட்கவில்லை.
இருந்தபோதும்,கண்ணீர்துளிகள் விழியோரம் பூக்கின்றன.மிகமிக பொறுமையாக வயலினின் இசை கேட்கிறது.மரத்தினின்று உதிரும் இலையென தவழ்ந்து மிதந்து மண் சேரும் நேரம் வரை சுகமான காட்சி....திடீரென இலை தரையை முத்தமிடும் முன்னரே புயலில் சிக்குண்டதைப் போன்ற ஒரு வலி....ஆழ்ந்த சோகம்...இனம் புரியா செய்கைகளின் கோவையாக நிகழ்ந்துவிட்ட பேரதிர்ச்சி.பாதசாரிக்கையில் அவர் கூடவே நடந்து வருவது போலிருக்கிறது,எந்த வரியை வாசித்தாலும் அவர் வாசிப்பது போலிருக்கிறது,அல்லது அவரை வாசிப்பது போலிருக்கிறது.இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.இறந்த வீட்டில் நான் இல்லை.அழுகுரல் என் காதை அடைக்கவில்லை.எந்த தீயும் என் மனதை உருக்கவில்லை.ஆனால் சுற்றியிருப்பதெல்லமே இழவு மாதிரி இருக்கிறது.கோலங்கள் அலங்கோலங்களாய்....சிக்சர்கள் க்ளீன் போல்டாய்...அழகிய பெண்கள் அரக்கிகளாய்!மரணம் தான் உலகின் மொத்த வரலாறுமே.
என்னதான் அவரை இதுவரையோ இனிமேலோ பார்க்காமல் இருப்பேன் எனினும்,பார்த்திராத யாழின் இசை கேட்டிருந்த எனக்கு யாழிசைப்பவர் இன்றோடு இல்லை என்பது தான் நெஞ்சடைப்பதன் காரணம்.நான் தான் அவருடன் பேசியதில்லை....அவர் என்னிடம் நிறைய நிறைய பேசியிருக்கிறார்.ஏகமாய் பேசுவார்.எல்லாவற்றையும் பற்றி.அதுவும் ஒருவராய் இருவராய் எல்லாம் இல்லை....பலராய்...பட்டாளமாய்...பட்டாசாய்.என் தோட்டத்து மலர்களை மட்டும் எண்ணிக்கொன்டிருந்த நான்...இன்று வேர்கள் வெடிக்கக் காண்கிறேன்.வெறும் பேச்சென்றெல்லாம் இல்லை இதெல்லாம்.எந்த குழந்தையிடம் வேன்டுமானாலும் கேளுங்கள் "உனக்கு யாராக வேண்டுமென்று ஆசை",என்று..."டீச்சர்!" என்றுதான் பதில் ஒலிக்கும்.இவர் எனக்கு அதுபோலத் தான் இருந்தார்.இருப்பார்.
என்னைப்போலவே இன்னும் பலருக்கு தோன்றுகிறதாம்.இன்னும் அடர்த்தியாய்,ஆழமாய்.
பிரிந்தோம்...சந்திப்போம்!
அட!சிந்தித்து பார்க்கையில் அவரிடம் இதற்கும் ஒரு விடை இருந்திருக்கிரது.அவர் எழுதிவைத்த எனக்கான தலைப்பு.கச்சிதம் பாஸ்!
crazy
1st March 2008, 05:25 PM
hm...i have never read any of his works ..
VENKIRAJA
2nd April 2008, 01:55 AM
தொடர்களின் வெற்றியை நிர்ணயிப்பதில் ஓவியங்களுக்கு முக்கியப்பங்கு.மேலும் நான் வரையாவிட்டாலும் வேடிக்கை பார்ப்பதில் வல்லவன்.(எழுத்தும் அப்படித்தான்)எனவே,ஓவியங்கள் அடுத்து.
தவறு.எழுத்தாளன் பேச்சு விடியறதுக்குள்ள போச்சு.கீழே சொடுக்கவும்.அறிமுகம்:என் ஓவியம்.
http://www.flickr.com/photos/25235078@N03/2381159058/
தொடரும்.
madhu
2nd April 2008, 07:26 AM
:clap: venki.. keep it up !!
( idhu just for kiNdal.. -> nalla vELai.. kaNNukku theriyumpadiyA orE oru heart mattumthAn irukku :noteeth: )
crazy
2nd April 2008, 11:26 AM
kanna :thumbsup:
VENKIRAJA
2nd April 2008, 12:22 PM
:clap: venki.. keep it up !!
( idhu just for kiNdal.. -> nalla vELai.. kaNNukku theriyumpadiyA orE oru heart mattumthAn irukku :noteeth: )
வெளிசத்தில் நீ...
இருட்டில் நான்.
-கௌஷிக்(பள்ளி நண்பன்)
இருட்டில் இருதய வெளிச்சத்தில்
இடிகளுக்கிடையில்
இருக்கிறாளா பார்த்துக்கொண்டிருக்கிறேன் - மௌன
இசையாக என் இணை.
crazy
2nd April 2008, 01:01 PM
what is inai? companion? :?
VENKIRAJA
2nd April 2008, 06:18 PM
ஜோடி என்பதற்கு சரியான(இணையான)தமிழ்ச் சொல்:இணை.
http://www.flickr.com/photos/25235078@N03/2381996007/
நீரில் தூக்கி எறியப்பட்ட
கிட்டார் எழுப்பிய குமிழிகள் உடைந்தபோது
:musicsmile:
crazy
2nd April 2008, 10:33 PM
:P
VENKIRAJA
4th September 2008, 06:27 PM
I am planning to rearrange and post this series in my blog.Or should I post it in the hub?
Shakthiprabha.
4th September 2008, 06:28 PM
blog plz :P :oops: :yesir:
VENKIRAJA
24th March 2009, 02:22 PM
பாதசாரி (http://paathasaari.blogspot.com)
நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஒரு தமிழ் வலைப்பூ தொடங்கியிருக்கிறேன். அப்படியே இங்கு எழுதிய சங்கிலியை ஏற்றுமதி செய்யவும், தொடர்ந்து எழுதவும் முடிவெடுத்திருக்கிறேன். தங்களது விமர்சனங்களை எதிர்நோக்கும்,
நெறியன்
வெங்கிராஜா.
பயணத்தடம்:
முதல் சுவடு (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=0)
முகவுரை (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=2)
அத்தியாயம் #1 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=4)
அத்தியாயம் #1 தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=9)
இடைச்செருகல் #1 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=15)
அத்தியாயம் #1 தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=19)
அத்தியாயம் #2 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=26)
அத்தியாயம் #2 தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=28)
அத்தியாயம் #3 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=34)
அத்தியாயம் #4 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=52)
இடைச்செருகல் # 2 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=54)
அத்தியாயம் # 5 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=57)
அத்தியாயம் #6: வேஷதாரி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=62)
இடைச்செருகல் #3 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=66)
அத்தியாயம் #7 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=71)
அத்தியாயம் #8 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=73)
அத்தியாயம் # 9: கிரணகணங்கள் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=79)
அத்தியாயம் #10 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=83)
அத்தியாயம் #11: BLACK AND WHITE (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=91)
அத்தியாயம் #11: தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=93)
அத்தியாயம் #12: நகராத பயணம் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=94)
அத்தியாயம் #12: தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=98)
அத்தியாயம் #12: மறுபடியும் மறுபயணம் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=100)
அத்தியாயம் #12: யாத்திரிகன் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=103)
அத்தியாயம் #13: பதினாறு வயதினிலே (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=105)
அத்தியாயம் #13: பிரயாணி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=106)
இடைச்செருகல் #3: ஒரு பார்வை, சில பரிமாணங்கள் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=127)
இடைச்செருகல் #3: தொடர்ச்சி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=128)
தன்னிலை விளக்கம்: பாதசாரி ஒரு பூவா? (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=138)
தன்னிலை விளக்கம்: பாகம்-2 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=140)
அத்தியாயம் #14: மாலுமி (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=144)
அத்தியாயம் #15: 356 (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=164)
பாதசாரி- புதிய அத்தியாயம் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=167)
அத்தியாயம் #16: ரணத்தடச்சுவடு (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=170)
பாதசாரி-மீண்டும் ஒரு முன்னுரை (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=171)
புதிய அத்தியாயம்-I: இரவலன் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=174)
இடைச்செருகல் # 4: உறைந்த காலம் (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=180)
தலைப்பேதும் தோன்றவில்லை (http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=189)
VENKIRAJA
29th March 2009, 08:37 PM
venki :clap: :clap:
btw, naalai endru solli....ippo naal 11 aahidhu, enge....????
-Aug 03, 2007
கடந்த 2007 ஜூன் 27-ம் தேதி தான் கடைசியாக ஒரு அத்தியாயம் எழுதியது. எஞ்ஞான்றும் இனி இடைவெளி விட வேண்டாம் என்ற நோக்கோடு மீண்டும் பாதசாரிக்கத் தொடங்குகிறேன். வலைப்பூவிற்கும் அன்பர்கள் வருகை புரிந்தால் சற்று ஊட்டமளிப்பதாய்த் தோன்றும். வேண்டுகிறேன்.
புதிய அத்தியாயம் #2: துவாரபாலகன்.
சிறுவயதிலிருந்தே நமக்கு பயம் கொஞ்சம் அதிகம். பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் சைக்கிளில் அண்ணன்கள் தங்களுக்குள் ரேஸ் விடுவதுண்டு. எப்போதும் நான் விசில் ஊதுபவனாகவே இருப்பேன். கிராம எல்லை முடிவு வரை சென்றுவிட்டு திரும்ப முதலில் யார் வருவதென்று தான் போட்டி இருக்கும். ஐயன்பேட்டைக்கும் முத்தியால்பேட்டைக்கும் இடையில் அகழி ஒன்று இருப்பதாகவும் அதில் முதலைகள் பசியுடன் எப்போதும் நீந்திக்கொண்டிருப்பதாகவுமே பயமுறுத்தி வைக்கப்பட்டிருந்தேன். குரங்கு பெடல் அடித்து, பின் டபுள்ஸ் ஓட்டும் வரை இதே நிலையில் தோப்பிலேயே வாயிற்காவலனாகத்தான் இருந்துவந்தேன்.
விடுமுறைக்காலம் தவிர்த்து பள்ளி வாழ்க்கை மொத்தமும் சென்னையில் தான் கழிந்திருக்கிறது. அதன் பெரும் பகுதியை போரூரில் தான் செலவிட்டிருக்கிறேன். பள்ளியிலிருந்து மிகவும் தொலைவிலிருக்கும் வீடு என்னுடையது தான். சைக்கிளில் போரூர் சிக்னலைத் தாண்டி வருவதே பானிபட் யுத்ததில் அக்பரின் முன்னேற்றத்தைப் போன்றது. இந்த சமயத்தில் போரூரின் பிரசித்தி பெற்ற இரவுண்டானாவைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும். சென்னையின் புறநகர் பகுதியில் முதன்முதலில் ஒரு சிக்னல் வந்தது இங்கு தான். அது போல சென்னையின் மிக முக்கியமான சாலைகள் புணர்வதும் இங்கு தான். ஒரு பக்கம் ஆற்காடு சாலை (கோடம்பாக்கம், வடபழனி, விருக/வளசரவாக்கம்) சிக்னல் அடைந்து குன்றத்தூர் சாலையாக உருமாறும். மற்றொரு திசையில் மவுண்ட் ரோடு கிண்டியில் முடிந்து பட் ரோடு, வர்த்தக மையம் வழியாக வந்து போரூராகி ரவுண்டானா வந்தடைந்து பூந்தமல்லி சாலையாக பூப்படைந்து செல்லும். அநியாயத்துக்கு விபத்துகள் சம்பவித்த வண்ணமிருக்கும். பள்ளி முடிந்து வசீம், ஜகன், ஜோ, செல்வா, திருமலை, அன்வேஷ், நான் எல்லோரும் ஒன்றாக வருவோம். இதில் ஆற்றின் கிளை போல சாகரத்தில் சங்கமித்துவிடும் ஆசாமிகள் போக நானும் அன்வேஷும் மட்டும் போரூர் சிக்னலைத் தாண்டி இரட்டை ஏரி வழியாக ட்ராஃபிக் பரமபதம் ஆடி முடிப்போம். வழியில் பாரதி பேக்கரியில் ஸ்வீட் பன்னும், வெங்கடேஸ்வராவில் சுடச்சுட சமோசாவும் வாங்கித் தின்போம். ஊடே கொஞ்சம் வெங்காய பகோடாவையும், பம்பாய் லக்கடியையும் லவட்டிக்கொள்வோம். சீருடையெல்லாம் நல்ல செம்பழுப்பில் இருந்தமையால் பிரச்சனையில்லை, அப்படியே துடைத்துக்கொள்ளலாம். சொல்ல மறந்துவிட்டேன், வருவதற்கு முன் ஏதேனும் டீச்சருடைய ஸ்கூட்டியின் காற்றை பிடுங்காமல் வந்ததில்லை.
நமது வீட்டைச் சுற்றியிருக்கும் 'எங்க ஏரியா'-வின் வழிகள் எல்லாம் நமக்கு அத்துப்படியாகத் தான் இருக்கும். கிட்டத்தெட்ட அப்படித்தான். எப்படிப் புகுந்தாலும் போரூரின் சக்கரவியூகத்தினூடே நாங்கள் மீண்டு வரக்கூடிய சக்தி பொருந்தியவர்களாகத் திகழ்ந்தோம். வரும் வழியில் எல்லா சிற்றூர்களைப் போலவே குட்டிக் குட்டி ஹவர் சைக்கிள்கள் வரிசையில் நிற்கும் சைக்கிள் கடை, ஆல்-இன்-ஆல் அழகுராஜா மெக்கானிக் ஷெட், பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும் சலூன், மிளகாய் வாசம் படிந்த மாவு மில், அப்பா முன்னாடியும், பிள்ளை பின்னாடியும் தம் அடிக்கும் பங்க் கடை, மஞ்சள் நிற காலாவதி தொலைபேசி பெட்டிகள், ஃபிரேம் இல்லாத கண்ணாடி மாட்டிய பீட்டர்கள் மொய்க்கும் இன்டர்நெட் செண்டர்கள், டென்த், ப்ளஸ்-டூ மாணவர்களுக்கான கோச்சிங் சென்டர்கள் இத்தியாதி.சமாசாரங்கள். சில விசேஷங்களும் நடைபெறுவதுண்டு: கிறிஸ்துமஸ், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என எந்த பண்டிகை வந்தாலும் அமோகமாக கொண்டாட இடங்கள் இருந்தன. பாலமுருகன் சன்னதியும், மசூதியும், மாதா கோயிலும் சில தெருக்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எந்தவிதமான சச்சரவும் வந்ததாக நினைவில்லை. இவை விடுத்து மாதம் ஒருமுறை பார்வையிழந்த சகோதரர்கள் ஒரு வேனில் வந்து இசைச்சேவை புரிவார்கள், பெரிய புள்ளி ஒருவரை பொடா நீதிமன்றத்திற்கு பந்தோபஸ்துடன், வாகன நிறுத்ததிற்கு இடையே அழைத்து (தவறு, இழுத்துச்) செல்வார்கள். ஏகப்பட்ட சினிமா, சீரியல் ஷூட்டிங்கு நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி கௌபாய் படங்களில் வருவது போல காய்ந்த புற்கள் நிறைந்த ஒரு பெரிய மைதானம் ஒன்று இருந்தது. அங்கு விமான நிலையம் வரப்போவதாக சொன்னார்கள். ஒரு பெரிய ரேடாரையும் நிர்மானித்துவிட்டு பிரும்மாண்டமான கதவுகளையும் போட்டு வைத்திருந்தனர். இப்போதும் அங்கு அனாமத்தாக சில வை-ஃபை கனெக்ஷன்கள் தட்டுப்படுகின்றன. பாதி முடித்து கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று கிலியூட்டியபடி பூதாகரமாக இருந்தது. அன்று சைக்கிள்களை அங்கு நிறுத்தினார்கள். நான் தான் அந்த கதவுகளுக்கு அருகில் துவாரபாலகன் போல நின்றுகொண்டிருந்தேன்.
(தொடரும்)
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.