PDA

View Full Version : TAMIL W0RD DEVELOPMENT



Pages : 1 [2]

bis_mala
14th April 2011, 06:03 PM
சஹான்ய என்ற சங்கதச் சொல்லினின்று "சேகர்" என்ற பெயர்
தோன்றியிருத்தல் கூடுமென்பது ஒரு கருத்து. சஹா - சேஹ - சேக
என்று திரிதல், அ > ஆ > ஏ திரிபுவிதியின்பாற் படும்.

அங்ஙனமாயின், சந்திர சேகர என்ற தொடருக்கு: நிலா
மலை என்று பொருள் கொள்ளவேண்டும்.

தமிழ்வழியில்் நோக்கின் இதற்குப் பொருள் யாது?

bis_mala
20th April 2011, 06:27 PM
சேகர் என்பது சிவபெருமானைக் குறிப்பதென்று கூறுவர். சந்திர சேகரன் என்ற தொடரில், பிறை சூடிய நிலையைக் குறிப்பதாகக் கொள்வர்.

சேகர் என்ற பெயர், திருமாலைக் குறிப்பதாகக் கூறுவர். இவர்கள் பெரும்பாலும் வட நாட்டினர். மலையுச்சி என்று பொருள்தந்து, திருமாலைக் குறிக்குமாம்.

பாரசீக மொழியில் "இரை" என்று பொருள்படுகிறது. எபிரேய மொழியில் ( Hebrew ) "குடிவகை" (any liquor obtained by fermentation) என்றும், அரபியில் "சர்க்கரை" என்றும் அர்த்தம் என்பர்.

இங்கு கூறப்பட்டவை ஏறத்தாழ ஒரே மாதிரி ஒலிக்கப்பெறும் வெவ்வேறு சொற்கள் என்க.
{தொடரும்.}

bis_mala
20th April 2011, 09:44 PM
சேகர் என்பது சங்கதச் சொல் என்று பலர் நினைத்தாலும், அதைச் சங்கதத்தில் காணமுடியவில்லை. மலை குறிக்கும் சொல்லினின்று திரித்தமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறலாம். பாலி மொழியிலும் கிடைக்கவில்லை. ஆனால் இச்சொல்
இந்திய வழக்கில் உள்ளது.

சே என்ற மூலவடி, செம்மை நிறம் குறிப்பது. சே > செ > செம்மை, சிவப்பு நிறம். சே - சேயோன். (ஓன் - விகுதி ). (சேய் - சேயோன் என்றும் ஆகும் என்பது ஒருபுறம் இருக்கட்-
டும்). சே - சேவடி, சிவந்த அடி.
சே > செவப்பு > சிவப்பு > சிகப்பு. இவ்வடிவங்களில் சில பேச-்சு வழக்கினவாகும். இதில், வ>க திரிபு கவனிக்கத்தக்கது. சிவப்பு என்பதை சோப்பு என்றும் சிலர் ஒலிப்பதுண்டு.

சே > செகப்பு.
சே > சேக > சேகர் எனின், சிவ > சிவன் என்பதனோடு ஒத்த சொல் என்பது கவனிக்கத்தக்கது. சே, செ, சி என்பனவுடன், வ/க அடுத்து நின்று சொல்லமைவது, தமிழினியற்கை என்பதும் கொள்ளத்தக்கதே.

(தொடரும்.)

bis_mala
21st April 2011, 06:21 PM
தமிழில் எங்ஙனமெலாம் பொருளுரைக்கலாம் என்ற ஆய்வு தொடரும். இடைவேளையில், சீனமொழியில் சேகர் என்பது என்ன பொருள் படக்கூடுமென்று பார்ப்போமே!

(ே)ஷ என்றால் மண்ணின் கடவுள் என்று பொருள். கர் ் (கெர்) மண்மேற்பகுதி என்று பொருள். எனவே நிலக்கடவுள் என்பதாம்.் ஒப்பாய்வில் பொருளொற்றுமை தென்படுகிறது.

(தொடரும்.)

Notes: 社壳儿

社 shè​ god of the soil

壳儿 kér​ crust

For further reading on antiquity of Tamil:
http://www.mayyam.com/talk/showthread.php?956-Kumari-Kandam&p=108498&viewfull=1#post108498

bis_mala
22nd April 2011, 10:43 AM
சேகர் (தொடர்ச்சி)

சேகு = சிவப்பு நிறம்.
சேகு+ அர் = சேகர் = சிவந்தவர்; சிவன்.
சேகன் என்ற ஒருமைவடிவம் அமையவில்லை. (apparently)

சேகன் என்னும் வேறொரு சொல் உள்ளது. அது சேவகன் என்ற
சொல்லின் இடைக்குறை. சேவகன் - சே(வ)கன் - சேகன்.

கு என்பதோர் சொல்லமைப்பு விகுதி அல்லது ஈறு.

அடகு
பிசகு
குடகு
விறகு
மசகு
தரகு

இம்மூன்றெழுத்துச் சொற்கள் -கு விகுதி பெற்று முடிந்தன.

ஆகு(=எலி); நாகு என்பன காண்க

"ku" is also a popular suffix for verb formation in Tamiz.


(தொடரும்.)

bis_mala
22nd April 2011, 05:36 PM
சேகரன் என்ற வடிவமும் வழங்குகிறது. குலசேகரன், குணசேகரன், சந்திர சேகரன் என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.

சேகரன் = சிறந்தோன் என்பது அகராதிப் பொருள். மேலே குறித்த சேகர் என்பதே அன்விகுதி பெற்று சேகரன் என்றாகியது என்று சொன்னால், பன்மை அர் விகுதியும் ஒருமை
அன் விகுதியும் அடுத்தடுத்து நிற்பது சற்று முரணாகத் தோன்றும்.இவன்கள்(இவய்ங்க), அவன்கள்(அவய்ங்க) என்று ஒருமை-பன்மை கலந்து பேசுவதை இலக்கணியர் ஏற்றுக்கொள்ளார்.ஆனால் தவறாய் அமைந்த பல சொற்கள் மொழியில் உள்ளன. அவற்றைக் களைந்துவிடுதல் இயலாது. அல்லது, "அர்" என்பதன் பன்மைப்
பொருள் மறக்கப்பட்டபின், சேகர் என்பதை ஒரு விகுதியற்ற முழுச்சொல்லாகக் கருதிய நிலையில், சேகரன் என்ற சொல் அமைக்கப்பட்டிருக்கலாம். அங்ஙனமாயின், அர் என்பது வெறும் சொல்லாக்க இணைப்பாகப் பயன்பட்டு, அன விகுதியை ஏற்றது என்று விளக்கலாம். எனவே, அர் அவ்விடத்து வெறும் சொல்லமைப்புச் சாரியை ஆகும்.

அரன் என்ற சொல்லும் சிவனையே குறிக்கும். சேகரன் என்ற சொல்லை சேகு+ அரன், அதாவது செந்நிறத்தனாகிய அரன் என்று கொண்டால், அந்த விளக்கம் தேவையற்றதாகிவிடுகிறது.

இதிலிருந்து, சேகர் என்பதற்கும் இன்னொரு முடிபு கூறலாம். சேகரன் என்பதே கடைக்குறைந்து சேகர் ஆயிற்று என்று.

அது மட்டுமோ? இன்னும் தொடரும்.

bis_mala
1st May 2011, 09:04 PM
சேகரித்தல் என்பதொரு வினைச்சொல். அஞ்சல் தலை சேகரித்தல், பன்னாட்டு நாணயங்கள் சேகரித்தல் என்றெல்லாம்
வாக்கியங்களில் இச்சொல் கையாளப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்.
இது உண்மையில், சேர் + கு +அரித்தல் (சிறுகச் சிறுகச் சேர்த்தல்), அல்லது சேர+ அரித்தல் = சேரவரித்தல் --
சேர்கரித்தல் என்ற மூலச்சொற்களின் சேர்க்கையால் அமைந்திருக்கலாம். சேர்க்க அரித்தல் - சேர்கரித்தல் - சேகரித்த-
ல் என்பதும் கருதத்தக்கது. கருத்தல் (செய்தல்) என்றொரு பழைய வினைச்சொல் இருந்து வழக்கற்றது என்று ஆய்வாளர்
கூறுவதனால், சேர்கருத்தல் > சேகரித்தல் என்று வந்ததென்பதும் ஏற்புடைத்தே. கருத்தல் > கரித்தல் என்று திரிவது, இரு
> இரி என்ற மலையாளத் திரிபு போன்றது. எங்ஙனமாயினும் , சேர் > சே என்று திரிந்துள்ளது தெளிவு.

எனவே, சேகரித்தல் - சேர்த்துவைத்தல்.

சந்திரசேகரன் - சந்திரனைச் தன்னுடன் சேர்த்து வைத்துக்கொண்டிருப்பவன் என்று இவ்வாய்வின்படி பொருள்தரும்.

bis_mala
1st June 2011, 04:30 PM
பிடி >பிடித்தல்.
உருண்டை பிடித்தல், பிண்டம் பிடித்தல்.
பிடி > பிண்டி
பிண்டி > பிண்டித்தல்.
பிண்டி + அம் = பிண்டம்.
பிண்டி என்பதன் டி-யில் உள்ள இகரம் கெட்டுப் புணர்ந்தது.

bis_mala
1st June 2011, 09:14 PM
பிண்டம் என்ற சொல்லின் அமைப்பை மேலே கண்டீர்கள்.

இதன் தொடர்பில், பண்டிதன் என்ற சொல்லைப் பார்ப்போ-
ம்.

பிடி - பிண்டி - (பிண்டம்)
இதுபோல,
படி - பண்டி - (பண்டிதர்). பொருள்: படித்தவர் என்பது.

தர் என்பது உண்மையில், த்+ அர் என்பதே.

இது என்ற சொல்லின் தேய்ந்த வடிவமே, "த்".
விரித்துரைத்தால்:

இது > இ+த் +உ, இங்கு "இ" "உ" முதலிய உயிர்கள் கெட்டன.

படி > பண்டி > பண்டி+இது+ அர் > பண்டி+து+அர் > பண்டி த் அர் >
பண்டிதர்.
இங்கு இது என்பதிலுள்ள "த்" சொல்லாக்க இணைப்பாகப்
பயன்பட்டுள்ளது.

பண்டிதர் என்பது எந்தமொழிச் சொல்லாயிருந்தால் என்ன, அது
படி என்பதனின்று தோன்றியுள்ளமை தெளிவு.

bis_mala
2nd June 2011, 04:13 AM
பிடி > பிண்டி (இங்கு ணகர ஒற்று ் தோன்றியதனால், இது
இடைமிகை ஆகும்.)
படி > பண்டி(தர்) (இதுவும் ணகரவொற்று ் தோன்றியதே).

இவை மேலே விளக்கப்பட்டன.

இப்போது, வேறு ஒரு சொல்லில், இடை மிகுந்து வந்துள்ள-
தைக் காட்டுவோம்.

குறு > குறவர். (பொருள்: மலைவாழ்நர்).
குறு > குன்று (பொருள்: சிறிய மலை, அல்லது (ெ)பரிய மேடு)

குறு > குன்று ஆனதில், ஒரு "ன்" அதாவது னகர ஒற்று
தோன்றியது. குன்று என்ற சொல், பின் குன்னு என்றும்
திரியும்.

கடி (கடிதல்) > கண்டி(த்தல்).

இங்ஙனம் மாறிய சொற்களில், பொருள் நுட்ப வேறுபாடுகள்
ஏற்படுவது இயல்பு.

bis_mala
5th June 2011, 06:55 PM
"உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்"

For the full stanza, please refer to:
Post 225, 31st May 2011 10:20 PM
http://www.mayyam.com/talk/showthread.php?3010-pala-suvaik-kavithaikaL.&p=692827#post692827

உடையிலை என்ற கூட்டுச்சொல்லைப் பார்ப்போம்.

பழங்காலத்தில், மனிதன் ஆடை நெய்ய அறியுமுன், இலைகளை உடையாக அணிந்திருந்தான்.

மேற்குறித்த புற நானூற்றுப் பாட்டு, உடையாக இடுப்பில் அணியப்படும் இலையின் அளவேனும் பிறருக்கு விட்டுக்கொடுக்காமல் தாமே ஆண்ட காவலால் சிறந்த
மன்னர் என்று பொருள் படுகிறது.

சீரை என்ற சொல் மரப்பட்டையைக் குறிக்கிறது. இதுவும் எடுத்துச்
ெசெதுக்கப்பட்டு இடுப்பில் அணியப்பட்டது.

சீரை - சீலை - சேலை
சீரை - சாரி தமிழ்ச்சொல் பாகத மொழிகள் வழிப் பரவியது.

தமிழின் பழமைக்கு இவைபோன்ற சொற்களும் சான்று
பகர்கின்றன

bis_mala
22nd June 2011, 09:05 PM
மரத்தின் உள்ளீடு குழம்பாக்கப்பட்டு, ஒரு வடிகட்டுத் தட்டில்
பரப்பி ஊற்றி, நீரை அகற்றிவிட்டுக் காயவைத்துக் காகிதம்
செய்யப்படுகிறது.

காயவைத்தலே இதில் இறுதி நடவடிக்கை ஆதலின், "காய்தல்"
என்ற கருத்திலிருந்து:

காய் - காயிதம் - காகிதம் என்று சொல்லமைந்தது.

பேச்சுவழக்கில் "காயிதம்" என்றே சொல்லப்படும்.

இதம் என்ற ஈறு, இது+ அம் என்ற சொற்களின் கூட்டு.

bis_mala
23rd June 2011, 09:15 PM
காயிதம் என்ற மக்கள்வழக்குச் சொல், காகிதம் என்று திரிந்தது, அல்லது திருத்தம் பெற்றது.

"அவரெழுதிய காயிதம் வந்து கிடைத்தது" என்று சொல்வர். இப்போது பெரும்பாலும் லெட்டர் என்ற ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.

யகரத்திற்கும் ககரத்திற்குமுள்ள அணுக்கத்தொடர்பினை இப்போது சிறிது காண்போம்.

நேயம் > (ஸ்நேயம்) > ஸ்நேகம். (ய> க)

நெய்தல் என்ற சொல்லில் தோன்றியதே நேயம் என்ற சொல். நெயவில் (நெசவில்) இழைகள் நெருங்கிப் பிணைகின்றன. அதுபோன்ற ஒரு நெருக்கமே நேயமாயிற்று.

நெய்(தல்) > நெய +அம் > நேயம்.

இதை முதனிலை நீண்டு விகுதிபெற்ற பெயர்ச்சொல் எனலாம்.

சூடம் என்பது முதனிலை நீண்டு விகுதிபெற்றதுபோல. சுடு+அம் =
சூடு+ அம் = சூடம்.

நேயம் என்பது நேசம் > நேஸ என்று திரியும்.

bis_mala
25th June 2011, 03:29 AM
மேலும் ஓர் எடுத்துக்காட்டினைப் பார்க்கலாம்:

ஆயிற்று > ஆகிற்று.

{ஆதல் = ஆகுதல்.}


குறிப்பு:
நாயர் என்ற சொல் (சாதி அல்லது பட்டப்பெயர்) நாகர்
என்பதன் திரிபு என்று கூறும் ஆய்வாளரும் உண்டு. இதில்
நாம் கவனிக்கவேண்டியது: ய<>க எழுத்து அல்லது ஒலிகளின்
அடைவு ஆகும். அதாவது க என்பது ய -வாகத் திரியுமென்கி-
றார்கள்.

bis_mala
25th June 2011, 09:27 PM
இதுகாறும் ய>க திரிபுச் சொற்களில் நாம் கண்டவை யாவும்
நெடிலில் தொடங்கின.

இனி, உய்த்தல் என்ற சொல்லைக் காண்போம்.

இது பேச்சுமொழியில் வழங்குவதாகத் தெரியவில்லை. நல்லா-
சிரியன்மார்தம் எழுத்துக்களில் இச்சொல்லைப் பயன்படுத்தக்-
காணலாம்.

இதில் வரும் யகர ஒற்று, கிகரமாகத் திரியும்.

உய்த்தல் > ( ஊயித்தல்)> ஊகித்தல்

உகரக் குறிலும் நெடிலாகியே, சொல் திரிகிறது.

மற்ற சொல்வடிவ மாற்றங்களின் போக்கைப் பின்பற்றியே
"ஊயித்தல்" என்பது வருவித்துரைக்கப்பட்டது..

bis_mala
26th June 2011, 06:35 AM
அகலியை - அகலிகை

இதில் வரும் "யை - கை" மாற்றத்தையும் கவனிக்கவேண்டும்.

Note:


மாமன் ஒரு நாள் மல்லிகைப் பூ கொடுத்தான் என்பதை "...........மல்லியப்பூ............" என்று ..............உச்சரிக்கிறார்கள்? .......... என்றுவினா எழுப்பிக் கொண்டு விடை கூறுங்கள்.

bis_mala
29th June 2011, 10:44 AM
முன் இடுகையின் தொடர்ச்சி.

இன்னோர் எடுத்துக்காட்டு:-

வையை - வைகை.

ஆற்றின் பெயர்.




Note:

"The key to understanding how languages evolved may lie in their
structure, not their vocabularies, a new report suggests. Findings
published in the journal Science indicate that a linguistic technique
that borrows some features from evolutionary biology tools can unlock
secrets of languages more than 10,000 years old."
Scientific American (23 September 2005)

bis_mala
9th July 2011, 11:35 AM
பெற்றம் எருமை புலி மரை புல்வாய்
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே. (தொல்.சொல் 43)
நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய
(தொல்.சொல். 44)

தொல்காப்பியத்தில் "சாதி" என்ற சொல் உள்ளது. ஆனால் வேதங்களில் இல்லை என்பர். அங்கு "வர்ண" என்ற சொல்லே உள்ளது.

ஆனால் தொல்காப்பியர் காலத்தில், நீர்வாழ் இனங்களைக் குறிக்கவே அது வழங்கப்பட்டது. "சாதி" என்பதை மனிதனுக்கு வழங்கியது ஒரு மாற்றமே ஆகும்.

bis_mala
10th July 2011, 07:10 PM
அமரர், - (மரித்தல் ) அ+மரி+அர்
அமிழ்து, அம்= சோறு. அம்+து, அம்+இழ்+து.
அவி - அவித்தல், இங்கு நெய்யில் இட்டு அவித்தல்.
ஆசாரம் - ஆ = ஆகுதல்; சார் (தல்_); சார் >சாரம். ஆவன மேற்கொண்டு சார்ந்து தொடர்ந்து ஒழுகுதல்;
ஆசை - மனமொன்றன்பால் அசைந்து செல்லுதல் (முதனிலை திரிந்த தொழிற்பெயர் _
ஆதி - ஆக்க காலம். ஆதல் - ஆதி
இந்திரன் - Pl refer to FSG's discussion before. Elaborately explained.
( Pl see notes below ** )
இலக்கம்- இலக்கித்தல். வரையப்பட்ட குறி.,
கணம் - கண் = இடம்; கண்+அம் > கணம்.
கருமம், கருத்தல் = செய்தல் என்பது மறைந்த தமிழ்ச் சொல். கரு > கருவி.
கரு+அணம் = காரணம். ஏன் செய்யப்பட்டதென்பது.
கரு ,பழைய மறைந்த வினைச்சொல்
காமம், காமன், - கா, காம், காமுறு, காமம். காமன் என்பவை இந்தோ ஐரொப்பிய மொழிகளில் இல்லை.
காலம், = கால் +அம்; நீண்டு செல்வது. Refer to S K Chatterji: not found in Avestan. (Dravidian Tamil word.)
சலம்,= " சல சல" ஒலியடிப்படைச் சொல்.
சூது; சூழ்தல் என்ற வினையடிப் பிறந்த சொல்.
சூழ் > சூ > சூது.
சூதர்,
தண்டம்- தண்டப்படுவது; குற்றத்திற்காகப் பறிக்கப்படும் தொகை.
தவம் : தபு> தபு+அம் > தபம் > தவம்; தபுதல் - கெடுதல்; பற்று அழித்தல்.
தானம்> தா+(அ)ன்+அம், பிறருக்குத் தரப்படுவது;

தொடரும்.

Notes:


http://www.mayyam.com/talk/showthread.php?1798-Tamil-roots-of-sanskrit-words&p=49490&viewfull=1#post49490

Excerpts from FSG:

Inthran is eulogized in vedhas.

Inthran/varunan= inththu=im+th+u- Im and U are suttu words specified the water/cold water of river. varunan=vari(alai) again a name for water flowing/sea.

The same inththran was god of masses when tamils turned agriculturists. The same inththran was turned sivan later.

The god of water based/agriculturists was inththran. That is why
some of the castes of tamilnadu called themselves inthrakula katthiriyar(Shatriyar) and inththrakula vellalar.

bis_mala
10th July 2011, 08:59 PM
தூது :

தூது செல்பவன் தூயவனாய், தன்னை அனுப்பியவனுக்கு உண்மையுள்ளவனாய், மறைக்கவேண்டியவற்றை மறைத்து வெளியிடவேண்டியனவற்றை வெளியிட்டு, பயன் ஈட்டி வருபவனாய் இருக்கவேண்டும். இன்னும் பிற நற்குணங்களை திருக்குறள் முதலிய நூல்களில் காண்க.

தூ = தூய்மை.
தூது = தூதுவனாய்ச் சென்று செய்யும் வேலைகள்
தூதன் = தூது+அன்.
தூதுவன் = தூது+வ்+அன்.

bis_mala
10th July 2011, 10:01 PM
தேவர்:
தேய் > தீ.
தேய்> தேய்வு> தேவு > தேவர்.
தீ வணங்கப்பட்டது. பல தெய்வச் சொற்கள் தீ குறிக்கும் அடிச்சொல்லினின்று பிறந்தவை.

நகர் > நகரகம் > நகரிகம் > நாகரிகம். ( நகரவாழ்நர் பண்பாடு).

நா : நாக்கு. நா + ம் + அம் = நாமம்.
நாமம்: நாவினால் அழைக்கப் பயன்படும் சொல்.

பகவு = பகிர்வு.
>பகவன் = பகிர்ந்து அளிப்பவன்; படியளப்பவன்.

பண் > பண்ணு > பண்ணுதல்.
பண்+து+அம் = பண்டம், பண்ணப்பட்ட பொருள்.

பகு> பாகு > பாக்கு > பாக்கியம். = நன்மையான பாகம், அல்லது நல்ல பகுதி.

பகு > பகுத்தல்.

பகு+அம் =பாகம், முதனிலை நீண்டு விகுதி பெற்றது.
(இப்படி நீண்ட சொற்களை அடுக்கலாம். பிறகு பாரக்கலாம்).

பாழ் > பாழ்வு > பாவு > பாவம்.

பாவம் > பாவி.

பூசனை (இந்தத் திரியில் முன் இடுகைகளைக் காண்க).

பூதம் = "பூ" என்ற ஒப்பொலியில் இருந்து எழுந்த சொல்.

பூதம் = புது+அம்; புதியதாய்த் தோன்றுவதும் ஆகும்.

மங்குதல், மங்கல் > மங்கலம்.(மங்கல் நிறம்
நற்பயன் விளைக்கும் என்பதே நம்பிக்கை.)

மன்னுதல்; மன்+திரம் > மந்திரம் (மன்றிறம் என்பதன் திரிபு).
(முன்னு > மன்னு )

முன்+ தி = முந்தி , பின் + தி = பிந்தி ( முந்துதல் , பிந்துதல் என்பவற்றின் எச்சங்கள் ஏன் இம் முடிபு எய்தின என்று சிந்திக்கவும் )

மந்திரி < மந்திரம்.

மாய் > மாயம். அறிவை மாய்ப்பது.

மன்> மனம்.

மானுதல் : ஒத்தல். மானம் = பிறர் மதிக்கும் நிலைக்கு ஒத்திருத்தல்.
மானம் அளவும் ஆகும்.
வரன் < வரிப்பவன். வரித்தல்: மணத்தல்.

வள் > வண் > வணிகம் >வாணிகம். (வாங்கி விற்று வளம் பெறுதல்).

பின் தேவை ஏற்பட்டால் விரிவு செய்யப்படும்.

bis_mala
3rd August 2011, 10:00 PM
பிம்பம்.

பின் > பின்பு > பின்பு+அம்> பின்பம் >பிம்பம்.

ஒளியை நோக்கிச் செல்கையில், பின்பு தோன்றுவதாகிய நிழலுரு.

குறிப்பு: கல்லாதார் பேச்சு வழக்கில் "இன்பம்" என்பது "இம்பம்" என்றும் "துன்பம்" என்பது "தும்பம்" என்றும் நாவொலிக்கப் பெறுதல் கேட்டிருக்கலாம்.இம்ப தும்பம் என்பர்.

பிம்பம் என்பதும் இத்தகைய திரிபே.

bis_mala
17th August 2011, 12:22 PM
சொற்பம்

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவினவானால், அவற்றைச் "சில" என்று குறிக்கிறோம்.

வாயால் எளிதில் சொல்லிவிடக்கூடிய எண்ணிக்கை உடையனவானால், சொற்பம் என்கின்றோம்.

சொல் - (சொல்லக்கூடிய எண்ணிக்கை, அல்லது சொல்வது).

சொல் > சொற்பு > சொற்பம்.

பு, பு+அம், என்பன விகுதிகள்.

ஒன்று என்பதறிந்த முந்தியல் மாந்தனுக்கு, இரண்டு பெரியதாம். இரண்டறிந்தபோது,மூன்று பெரிதாம். நான்கு அறிந்தகாலை, இரண்டு சொற்பமாகும்.
இப்போது கோடிக்கணக்கில் எண்ணுகிறார்கள்.

சொற்பம் = சொல்லத்தக்க சிற்றளவு, சிறு எண்ணிக்கை.

bis_mala
2nd September 2011, 06:54 PM
அவர்தானே என் தெய்வம்.

இது இக்காலத்தில் சரியென்று எண்ணப்படுகிறது. ஆனால் பழந்தமிழ் இலக்கணப்படி,

அவர்தாமே என் தெய்வம்

என்றிருக்கவேண்டும்.


அவர் - உயர்வுப் பன்மை அல்லது மரியாதைப் பன்மை.

எதுவானாலும் பன்மை பன்மைதானே.


தான் (ஒருமை) : தாம் (பன்மை).


அவன் தானே என் தெய்வம்.

இதில் பணிவு இல்லை ஆனால் இலக்கணம் உண்டு.


அவர் என்பது பன்மை வடிவில் இருந்தாலும் அதனால் சுட்டப்படும் பொருள் ஒருமைப் பொருளே என்பர் சிலர். ஆகையால், அவர்தானே என் தெய்வம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்று சிலர் வாதாடுவர்.
இவ்விலக்கண விதி சொல்வடிவு நோக்கியது. சொற்பொருள் பற்றியதன்று.

bis_mala
14th September 2011, 02:34 AM
தேதி


சங்க காலத்திலும் (2000 ஆண்டுகளின் முன்) அதற்கு முன் மிகப் பழங்காலத்திலும் தமிழை எவ்வளவு திருத்தமாக மக்கள் பேசினார்கள் என்று தெரியவில்லை. இதை நாமறிய உதவும் ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. இலக்கியங்களில் காணப்படும் தமிழை வைத்து, இதை நாமறிய இயலாது என்பது கூறாமலே புரியும்.

திகைதல் என்ற சொல் பெரிதும் வழக்கில் இல்லை என்று நினைக்கிறேன். "விலை திகையவில்லை" என்று கூறுவதுண்டு.

The price has not been determined or settled என்பது இதன் பொருள்.

நாள், நேரமிவை திகைவதற்குத் (to determine) தேதி, மணிக்கணக்கு முதலியவை உள்ளன.


திகை > திகைதி > திகதி.

தி என்பது விகுதி.

கை என்ற எழுத்து, "க" ஆனது, ஐகாரக் குறுக்கம்,

திகதி > தேதி,

பகுதி > பாதி என்பதுபோன்ற திரிபு.

தேதி என்றால், "இன்ன நாள் என்று நிறுவப்பட்டது" என்பது பொருள்.

bis_mala
20th September 2011, 04:01 AM
உயிர் எழுத்தில் தொடங்கிய பல சொற்கள், பின் உயிர்மெய் முதலாகி விட்டன:

எடுத்துக்காட்டு:

ஏணி -- சேணி.

bis_mala
28th September 2011, 01:44 AM
உயிர் எழுத்தில் தொடங்கிய .................

எட்டி - செட்டி. (செட்டியார்).

ஏன் இப்பெயர் ஏற்பட்டது தெரியுமோ?

Further derivations:


செட்டி >செட்டு. (being thrifty).

"கட்டுச் செட்டு."

bis_mala
29th September 2011, 03:37 AM
உயிர் எழுத்தில் தொடங்கிய ................... பின் உயிர்மெய் முதலாகி விட்டன:
.


எத்துதல் - கெத்துதல் to cheat, defraud.

bis_mala
5th October 2011, 02:31 AM
இத்தகைய உயிர்முதற் சொற்கள், உயிர்மெய் முதலாகி நிற்றலை, ஏனைத் தமிழின் இனமொழிகளிலும் தேடிக் கண்டுபிடியுங்கள்.

உ-ம்:

ஏறு > கேறு (மலையாளம்).

இது ஏறுதல் எனும் வினைச்சொல்.

bis_mala
10th October 2011, 09:53 AM
இத்தகைய உயிர்முதற் சொற்கள், உயிர்மெய் முதலாகி நிற்றலை, .....................

குமரிமுனைக்கும் தெற்கே குமரிநாடு இருந்ததாகத் தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. சமஸ்கிருத நூல்களிலும் புராண நூல்களிலும் குறிப்புகள் உள்ளன என்பர். இது குமரி(க்) கண்டம் என்றும் அறியப்படுகின்றது.இதை மறுப்பவர்கள் சிலரும் உள்ளனர்.

ஆய்வாளர் சிலர், தமிழ் என்ற மொழிப்பெயர், அமிழ் என்ற சொல்லினின்றும் பிறந்ததாகக் கூறுகின்றனர். குமரி அமிழ்ந்து போயிற்றன்றோ? அமிழ்ந்துபோன நாட்டவரின் மொழி என்ற பொருளில் இங்ஙனம் அமைந்ததாம். தமிழ் என்ற சொல் தோற்றம் பற்றி வேறு கருத்துக்களும் உள்ளன.

உயிர்முதலாகிய சொற்கள் உய்ர்மெய் முதலாகத் திரிதலை முன் இடுகைகளீல் எடுத்துக்காட்டி யுள்ளேன்.

அமிழ் என்பதுதான் தமிழ் என்று திரிந்து மொழிப்பெயர் அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள இயலுமாயின், இத்திரிபையும், மேற்குறித்த சொல்லமைப்பு விதியின்பால் அடக்கிவிடலாம்.

தெலுங்கு என்ற மொழிப்பெயர் அமைந்ததற்கு பலவாறு ஆய்வாளர் கூறுவதுபோல, தமிழுக்கும் பல கூறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

vidyasakaran
17th October 2011, 01:34 PM
இத்தகைய உயிர்முதற் சொற்கள், உயிர்மெய் முதலாகி நிற்றலை, ஏனைத் தமிழின் இனமொழிகளிலும் தேடிக் கண்டுபிடியுங்கள்.

உ-ம்:

ஏறு > கேறு (மலையாளம்).

இது ஏறுதல் எனும் வினைச்சொல்.

மலையாளத்தில் 'கயறு' என்பது மருவியே 'கேறு' என்றானதாக நினைக்கிறேன். ஏற்றம் என்பதன் மலையாளச் சொல்லான கேற்றம் என்பதன் தூய வடிவம் கயற்றம் ஆகும்.

bis_mala
20th October 2011, 04:40 AM
Welcome to this thread and thank you for sharing your knowledge and thoughts with me and our readers.

Grateful if you are able to spare your time to give us more examples of this കയ > കേ --
kaya - kE corruption in the Malayalam language.

Anbudan,

vidyasakaran
4th November 2011, 10:25 AM
Thank you!
Sorry for the delay, I am not very frequent here yet.
Though I am interested in linguistics and etymology, my knowledge is limited.
I am not aware of any other examples for the kaya - kE corruption in Malayalam. Let me check with my friends.

bis_mala
16th December 2011, 11:15 PM
உயர் > உயர்வு
உயர் > உயர்ச்சி

இவைபோலவே, உயர் > உயர்த்தி.

உயர்த்தி என்ற வினை எச்சம் வேறு. இங்கு நாம் ஆய்வது, உயர்த்தி என்ற தொழிற்பெயரை.

இந்த நறுமண நீர், அதைவிட உயர்த்தியோ?

இந்த தொழிற்பெயர் வடிவம், எழுத்தில் இடம்பெற்றுள்ளதா என்று தெரியவில்லை. இஃது ஒரு பேச்சுவழக்குச் சொல்.

உயர்த்தி என்பது உருமாறி, ஒஸ்தி என்ற வடிவில் வழங்கக் காணலாம்.

இதைப்போலவே, வளர்த்தி என்ற சொல்லும். ஒரு பேச்சுவழக்குச் சொல்.

bis_mala
16th January 2012, 09:56 PM
அவித்தும், அட்டும், அது செய்யப்படுமானால், அது அவுடதம் (அவிடதம்) ஆகும்.

மூலிகைகளை நீரிலிட்டு அவித்தல், அல்லது ஆவியினால் வேகுவித்தலையே "அவி" என்ற சொல்
தெரிவிக்கிறது.

அடுதல் என்பது சட்டியிலிட்டு அவித்தல் மட்டுமின்றி, வறுத்தல், புரட்டுதல் எனப் பலவகையாக வேகவைத்தல்.

அவி+ அடு+அது +அம்.= அவிடதம் -ஔடதம்.

அவி + (அ)டு என்பதில் (அ) கெட்டது. (மறைந்தது).

அது + அம் = அ(த்)(உ) +அம் , இதில் உகரம் கெட்டது.

இதில் நிலைமொழி, வருமொழி இல்லை. இவை சொல்லாக்கத்தில் ஏற்பட்ட திரிபுகள்.

ஔடதம் தமிழ்ச்சொல் என்று கொள்வது கருத்தன்று.

bis_mala
2nd February 2012, 09:37 PM
இரு முழுச்சொற்கள் சேர்வதுபற்றிய இலக்கணமே
புணர்ச்சி என்ப்படுகிறது.இது சந்தி என்றும் கூறப்படும். அதாவது, புணர்ச்சி இலக்கணம் சொல்லாக்கம் பற்றியதன்று.

அங்கு, இங்கு, எங்கு என்னும் சுட்டுச் சொற்களை வல்லெழுத்தில் தொடங்கும் சொல் எதிர்கொண்டால் அப்போது அவ்வல்லெழுத்தே மிகும்.

எடுத்துக்காட்டு:

அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன்.
இங்கு +சமம் = இங்குச் சமம்.
எங்கு + கிடைக்கும் = எங்குக் கிடைக்கும்.

இக்காலத்தில் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இவ்விதியைப் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது.

அங்கு கண்டேன் என்றே எழுதுவர்.

bis_mala
3rd March 2012, 03:05 PM
பது என்பது ஓர் அடிச்சொல்.

பது > பதுங்கு.

ஒரு குடைவு உள்ள இடத்தில் உள் சென்று அடங்குதலையே தொடக்கத்தில் "பதுங்கு" என்பது குறித்திருக்கவேண்டும். இப்போது அது பல பொருட்சாயல்களைத் தழுவி நிற்பது தெரிகிறது.

பது பின் பதி என்று திரிந்தது.

பது > பதி - பதிதல்.

bis_mala
12th March 2012, 04:35 PM
பதிவிருத்தல்.

இனிப் "பதிவிருத்தல்" என்ற சொல்லைப் பார்ப்போம்.

இது ஒளிந்துகொண்டிருத்தலைக் குறிக்கிறது.

ஆகவே, பதுங்குதற் கருத்து இதில் தொடர்ந்துவந்திருப்பதை அறியலாம்.

முன் இடுகையிற் கூறப்பட்டதை ஒப்பு நோக்குக.

bis_mala
12th March 2012, 06:14 PM
முன் இடுகையிற் கூறப்பட்டதை ஒப்பு நோக்குக.

பது என்ற அடிச்சொல்லுடன் தொடர்புடைய சொற்கள் சிலவற்றைக் காண்போம்.

பது -பதுமை. ஓர் உருவம் பதிவாகியிருக்கும் களிமண் பிடி அல்லது வேறு பொருள்.

பது > பதுமினி.அதாவது, வீட்டுக்குள் பதிவாய் இருப்பவள். படிதாண்டாதவள். வீட்டின் எல்லையினின்று நீங்காதவள்." கிழித்த கோடு தாண்டாதவள்" என்பதும் காண்க.

பதுமினி > பத்மினி.

பத்மினி தமிழென்பது எம் கருத்தன்று. பதுமினி = தாமரை என்றும் கூறுவர்.

bis_mala
13th March 2012, 08:18 PM
சில குழுவாரிடையே. பெண்வீடு புகுந்த மணவாளன், அவ்வீட்டிற்குத் தலைமை ஏற்பானாகிறான். இங்ஙனம் பெண்வீட்டிற "பதிவாகி"
வாழ்க்கை நடாத்துபவன், "பதி" எனப்பட்டான் என்று உணரலாம்.

பெண்ணின் மனத்திற் பதிவானவன் என்றும் கூறலாமேனும், அது சற்று மனப்பதிவு முறையிலான விளக்கம் (a subjective explanation ) என்று கருதப்படலாம்.

bis_mala
16th March 2012, 06:48 PM
பலகணி என்பது சன்னல் (ஜன்னல்) என்று பொருள்படுவது.

கண் என்பது பொத்தல், துளை என்றும் பொருள்தருவதாம். "ஊசிக்கண்" என்பதைக் காண்க.

பல கண்களையுடையதே பலகணி. ஒரு வட்டம் அல்லது நாற்கோண அமைப்பினுள் பல் காற்றுத் துளைகள் இருக்கும்படி இச்சன்னல்களை அமைத்திருந்தனர் என்பதை உணரலாம். பிற்காலத்தில், மரச்சட்டங்களை குறுக்கு நெடுக்காக இணைத்து இந்தக் "கண்கள்" அமைக்கப்பட்டன. இப்பொழுது பெரும்பாலும் இரும்புச் சட்டங்களே பலகணிக்குப் பொருத்தமெனலாம்.

பல+கண்+இ = பலகணி.

பலகண்ணி> பலகணி.

சொல்லாக்கத்தில் வேண்டுழித் தொகுத்தலும் விரித்தலும் இயல்பு. இப்படி விரித்தும் தொகுத்தும் அமைக்கப்பட்ட சொற்களில் பட்டியலை எழுதிவைத்துப் பாராயணம் பண்ணிக்கொள்ளுங்கள்.

bis_mala
21st March 2012, 06:52 PM
அவி > அவல். (அவி+ அல்) இகரம் கெட்டது
அவி > அவம். (அவி + அம்_). இகரம் கெட்டது
அவி >அவியல் (இங்கு இகரம் கெடவில்லை, மற்றும் யகர உடம்படு மெய் பெற்றது)
அவம்: அவிதலில் கெடுவது, பின் பொதுவாகக், கேடு
குறித்தது
அவி > ஆவி ( நீரில் அவிக்கையில் வெளிப்படுவது).
சுடு > சூடு என்பதில் போல முதலெழுத்து நீண்டது

(ஆவி - நீராவி )

குறிப்பு: ஆய்வாளர் பிறர் வெளியிட்டவை. அவர்கட்கு நன்றி.

bis_mala
22nd March 2012, 04:36 PM
மேற்கண்டவற்றைப் பின்வருமாறும் காட்டலாம்.

( அவ் ) > அவி.
( அவ் ) > அவல்
( அவ் ) > அவம்
( அவ் ) > அவியல்.
( அவ் ) > (ஆவ்) > ஆவி.

இப்படி விளக்கும் சொல் ஆய்வாளரும் உண்டு. பாணினி கண்டுபிடித்த முறை இது என்பர். இதில் இடர் ஒன்று உண்டு என்றால், "அவ்" என்ற ஓரசைச் சொல் தமிழில் இல்லை என்பதுதான். "அவ்" "அவ்" என்றால் தமிழனுக்கும் புரியாது.

ஆனால் அதனால் என்ன. அவ் : நீரால் சூடேற்றுதல்,
இடித்த உணவு, அவித்த உணவு, கெடுதல், காற்று என்று பொருள்தரும் ஓர் மூலச்சொல் என்று அகரவரிசையில் எழுதி வைத்துக்கொள்வதுடன், "அவ்"என்பதிலிருந்து வேறு புதிய சொற்களையும் பிறப்பிக்கலாம், அவ் ஒரு தமிழ் மூலச்சொல் என்றும் வாதிடலாம்.

அவ் - அவன் (ஆங்கிலம்: பொருள் அடுப்பு)
அவ் - அவியேஷன் ( ஆங்: பொருள்: காற்றில் பறத்தல் என்றெல்லாம் தொடர்பு காண்பதுடன், இன்னும் பல மொழிச் சொற்களையும் இழுத்துவர வாய்ப்பு ஏற்படுகிறது அன்றோ?

In Chinese, "ao" " அவ் " means:


āo​ to boil / to simmer


áo​ to cook on a slow fire / to extract by heating / to decoct / to endure

The meanings are so close!

(I have shown other Chinese words too, in some posts)


நானும் ஒருபோது:

இர் - இருள்
இர் - இரவு
இர் - இரா,
இர் - இராமன்
இர் - இரா - இராவண்ணன் - இராவணன்
இர் - இராதை
இர்- இரணியன்
இர் - இரம்மியம் - ரம்யா (கருப்பழகி)

என்று கூறியிருந்தேன். வேறு யாரும் இதையே கூறியிருந்தனரா என்பது தெரியவில்லை.

பாணினிவழியும் சிறந்ததுதான் என்று ஒப்புவீரா?

bis_mala
23rd March 2012, 06:53 PM
ஒரு சொல்லுக்கு முதற்பொருளும் வழிப்பொருளும் உண்டென்பதை நாம் சிந்தித்தறிவது எளிதுதான். மேல் இடுகைகளில் பேசப்பட்ட "அவ்" (>அவி) என்பதன் முதற்பொருள் வெம்மையினால் மென்மையாகிவிடுதல் என்பதாக இருக்கலாம்.இதை வெந்துபோதல் என்கிறோம்.

நாம் வேண்டுமென்றே வேகவைத்த அல்லது அவித்த ஒரு பொருளைக் "கெட்டுவிட்டது" என்று (at the end of the heating operation ) சொல்வதில்லை. அப்படிச் சொல்வதானால், கூடுதலாகவோ அல்லது பயன்படுத்த முடியாத அளவிற்குக் குழைத்தோ கருக்கியோ வேவித்திருக்கவேண்டும். ஆனால் சில பொருட்கள் வெம்மையினால் மாற்றமடைந்துவிட்டால், அவற்றைப் பயன்பாடு செய்ய இயல்வதில்லை. எடுத்துக்காட்டு: வெற்றிலை. அவிந்த வெற்றிலை போடுவதற்கு உதவாது என்பர்.

ஆகவே:

அவ் > அவி > அவிதல்

என்பதில் வேறுபட்டது:

அவ் >அவி > அவித்தல்.

ஒன்று தன்வினை மற்றொன்று பிறவினை என்பது இலக்கணம்.

கேடு என்று பொருள்படும் "அவம்" அவிதலில் (not aviththal) இருந்து தோன்றியதென்பதை அறியலாம். இஃது வழிப்பொருள். (derived meaning ), சீன மொழியில் அஒ "ao" or "av" என்பதன் வழிப்பொருள் "பொறுத்துக்கொள்ளல்" "தாங்கிக்கொள்ளல்" { endure} என்பதாம்,. இதுவும் பொருத்தமான வழிப்பொருள் தான்.அவிக்கும்போது சூடேற்றப்பட்ட பொருள், சூட்டைத் தாங்கிக்கொள்கிறதல்லவா?

வெவ்வேறு மொழிகளில்,முதற்பொருள் ஒற்றுமை இருப்பினும் வழிப்பொருளில் இருப்பதில்லை. சிந்தனை வேறாகி,பயன்பாடும் வேறுபட்டுவிடுகிறது.

bis_mala
7th April 2012, 12:29 PM
ஆறு > அறு?

ஆறுபடை வீடு - அறுபடை வீடு.
ஆறு தொழில் - அறுதொழில்.

ஆறுதலை - அறுதலை

அறுதலைப்பிள்ளை = முருகன்.

மேற்கண்டவாறு ஆறு என்ற எண்ணுப்பெயர் அறு என்று குறுகும் என்பர்.

இங்ஙனம் குறுகாமல் இயல்பாகவும் வரும்.
(ஆண்டி யானதென்ன ஆறுமுகா" என்ற பாடல் வரி காண்க).

ஐந்தொழில் உடையவராகக் கருதப்பட்ட அரசர், பின்னர் அறுதொழிலராய் உணரப்பட்டு நூல்களில் உரைக்கப்பட்டது ஒரு கருத்துவளர்ச்சியே ஆகும்.இதை நாம் முரண்பாடென்று கருதவேண்டியதில்லை.
A progress in analysis and thought or revision according to the situation then prevailing.

bis_mala
7th April 2012, 06:52 PM
ஆறு > அறு?

ஆறுப................... பாடல் வரி காண்க).

அறுதொழில் , இச்சொல்லுக்கு இருபொருள் கூறலாம். ஒன்று ஆறு தொழில்கள் என்பது. இன்னொன்று அறுவடைத் தொழில் என்பது. செய்யுளிலோ உரைநடையிலோ இச்சொல் வருமானால், முழுவதும் நோக்கியே பொருள்கூற வேண்டும்.

பண்டைக்காலத்தில் அரசர் நீங்கிய பல்வேறு தொழிலுடையோருக்கும் ஆறு ஆறு தொழில்நடவடிக்கைகள் கூறப்பட்டன.
எடுத்துக்காட்டாக,

ஐவகை மரபின் அரசர் பாக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பாக்கமும்

(தொல்.புறத்.20)


என்பது காண்க. தமிழ் மரபுப்படி அரசருக்கு ஐந்து வகை நடவடிக்கைகள் இருந்தன. ஏனையோருக்கு ஆறு நடவடிக்கைகள். இவை அவர்கள் பிழைப்புத் தொடர்பான நடவடிக்கைகள் ஆகும்.

ஆகவே அறுதொழிலோர் என்பது அரசர் நீங்கிய அனைவரையும் குறித்தது. அம்பலவாணர் ஐந்தொழில் புரிபவர்; அரசரும் அவருக்கு இணையாக ஐந்தொழிலுடையவராய்க் கொள்ளப்பட்டார் போலும். சில நூல்கள் அரசருக்கும் ஆறு தொழில்கள் கூறும். (பிங்கலம் காண்க).

அங்ஙனம் கொள்வதானால், அரசரும் ஏனோர்போல் அறுதொழில் உடையவரே என்க.
ஐந்தொழில் உடையவராகக் கருதப்பட்ட அரசர், பின்னர் அறுதொழிலராய் உணரப்பட்டு நூல்களில் உரைக்கப்பட்டது ஒரு கருத்துவளர்ச்சியே ஆகும்.இதை நாம் முரண்பாடென்று கருதவேண்டியதில்லை,
A progress in analysis and thought or a revision according to the situation then prevailing.

aRuthozil - does it refer to six duties / activities or harvest activity? Which is appropriate in a given verse?
எது பொருத்தம் என்று கண்டு பொருள்கொள்வது உங்கள் பொறுப்பாகட்டுமே.

bis_mala
8th April 2012, 03:36 PM
Ref: my last post in this thread.

இறைவனின் ஐந்தொழில்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

மறைத்தல் = மலம் நீங்கிய பற்றாளனின் ஆன்மாவினை இறைவன் தன்னுடன் இணைத்துகொள்ளுதல்.

அரசனின் ஐந்தொழில்: ஓதல், பொருதல், உலகு புரத்தல், ஈதல், வேட்டல், ( 6th function: படைபயில்தல்.)

ஓதலாவது: நூல்களை ஓதியறிதல்; பொரு > போர். உலகு புரத்தல் - மக்களைக் காத்தல்; ஈதல்-பிறருக்குத் தருதல் (தருமம்). வேட்டல்- நல்லன நிகழுமாறு வேண்டிக்கொள்ளுதல், வேள்வி செய்தல்.

bis_mala
19th April 2012, 09:31 PM
நாடு > நாட்டவர்.
எ-டு: வேற்று நாட்டவர்.

நாடு > நாடவர்

என்பது சரியா?

உங்களுக்குத் தெரிந்தால் விடைதாருங்கள்.

bis_mala
24th April 2012, 09:21 PM
நாடு > நாட்டவர்.
எ-டு: வேற்று நாட்டவர்.
=================================
நாடு > நாடவர்

என்பது சரியா?

உங்களுக்குத் தெரிந்தால் விடைதாருங்கள்.

இதென்ன, மிகவும் கடினமான கேள்வியா?

bis_mala
27th April 2012, 06:57 AM
இதென்ன, மிகவும் கடினமான கேள்வியா?

இதற்குப் பதில்:

நாடு >நாட்டவர்

என்று வரும்.

நாடு > நாடவர் என்றும் வரும்.

ஆனால், நாடவர் என்பது கவிதைகளில் வழங்கும் வடிவம்.

இதற்கு எப்படி இலக்கணம் கூறுவீர்கள்?

bis_mala
27th April 2012, 06:52 PM
Words from the root: n-Adu:

நாட்டவர் என்ற சொல்லில் டகரம் இரட்டித்து வந்ததென்றாலும் நாடவர் என்பதில் அங்ஙனம் இரட்டிக்க வில்லை.

இப்போது தொடர்புடைய வேறு சொற்களைப் பார்ப்போம்:

நாடு > நாட்டார் (நாடு+ ஆர்).
நாடு > நாடார் (நாடு+ ஆர்).

ஓர் அரசர் காலத்தில் நேமிக்கப் பட்ட அலுவலரை "நாட்டார்" என்றனர். வேறோர் ஆட்சியாளர் நேமித்த அலுவலாளரை நாடார் என்றனர்.

மிகுதியான சொற்கள் தேவைப்பட்டபொழுது, அல்லது வேறுபடுத்தவேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது, டகரம் இரட்டிக்கும் இலக்கண விதி மாற்றப்பட்டது.

மனிதனின் பயன்பாட்டுக்காகவே மொழி யாதலின், இவை யாவும் சரிதான்.
இனி:

நாடு > நாடன் (புனல் நாடன், ஈர்ங்குன்ற நாடன் என்ற இலக்கிய வழக்குகளைக் காண்க.

நாடன் பெண்ணானு நீ என்ற மலையாள வாக்கியத்தையும் நோக்குக.

SoftSword
27th April 2012, 07:21 PM
explain karnaadagam pls.

bis_mala
29th April 2012, 10:59 PM
explain karnaadagam pls.

ஓர் இசையின் பெயராக வரும் " கருநாடக இசை" அல்லது கர்நாடக இசை என்பது, மற்ற இசை வடிவங்கள் அனைத்துக்கும் கருவாக அல்லது அடிப்படையாக அமைந்தது அல்லது நடப்பது என்று பொருள்படுவது.

கரு+ நட + அகம் = கருநாடகம்> கர்நாடகம். music that is the foundation of all other musical forms and renderings.

கரு என்பது "நடு" என்றும் பொருள்படும். ஏனை இசைவடிவங்களுக்கு நடுநாயகமாவது என்றும் பொருள் கூறலாம். central in nature to other musical forms.

நட அகம் என்பது முதனிலை திரிந்து நாட அகம் > நாடகம் என்றாயிற்று.

கர்நாடக இசை எல்லாத் திராவிட மொழிகட்கும் உரியதே.

இனிக் கர்நாடக மாநிலத்தைக் கவனிப்போம்.

(தொடரும்.)

bis_mala
1st May 2012, 07:45 PM
ஓர் இசையின் பெயராக ......................................
இனிக் கர்நாடக மாநிலத்தைக் கவனிப்போம்.

(தொடரும்.)

மாநிலப் பெயராக வரும் "கர்நாடகா" எவ்வாறு அமைந்தது என்பதில் அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு கவனிப்போம்.

கர்நாடகா, கர்நாடகம் என்ற வடிவங்கள் கன்னடா, கன்னடம் என்ற வடிவங்களுடன் ஒப்புமை உடையன என்று எண்ணுவர். இவை ஒன்று மற்றொன்றன் திரிபு என்பர்.

கன்னடம் என்பது இனிய மொழி என்று பொருள்படுமென்று இவர்கள் கூறுகின்றனர் .

கன்னல் = கரும்பு. (இனிமை)
ஆகவே, அடிச்சொற்கள்
கன் = கரு (கரு >கர்.) அல்லது:
கரு > < கன்.

கன் > கனி
கன் > கனிதல்,
கன் > கனிவு
கன் > கன்னி.**
கன் > கன்னல்
கன் > கன்னடம். (கன்+அடம்) > கன்னடா
கன் > கன்னடா > கானடா ( இனிய இராகம்)

will continue...

Footnote:
Also proposed:

** கன்னி < கன்னு(-தல்) < a variance of கன்றுதல்.

bis_mala
3rd May 2012, 05:42 AM
மேல் இடுகையைத் தொடர்ந்து:

கல்+ நாடு+ அகம் = கன்னாடகம், கர்நாடகம் என்று திரித்து, கற்பாங்கான நிலங்களை மிகுதியாக உடையதென்றும் அதனால்தான் மாநிலத்திற்கு அப்பெயர் வந்ததென்றும் கூறுவதுண்டு.

பின், கன்னாடகம் >கன்னடம் எனத் திரிந்ததென்பர்.

தொடரும்.

SoftSword
9th May 2012, 04:19 PM
thanks bis_mala...
i would like to know the etimology of karnadagam used in the meaning of 'old'... as in, suttha karnadagamaa irukkiyae...

bis_mala
9th May 2012, 04:35 PM
மேலிருந்து தொடர்வோம்:

கல்லெனும் சொல்லுக்குப் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உள்ளன. அவையாவன:


கல்: 1. ஒலி. 2. மலை. 3. ஆங்கிலத்தில் ஸ்டோன் எனப்படும் கல். 3. சந்தனக் கல்.

ஆகவே, கன்னாடகம் என்ற சொல்லுக்குக் கற்பாங்கான இடமென்னாது மலைப்பாங்கான இடமென்னும் பொருளுரைக்கலாம். அதுவும் சொல்லமைப்புக்குப் பொருந்தியதே.

தொடரும்.

bis_mala
9th May 2012, 05:09 PM
thanks bis_mala...
i would like to know the etimology of karnadagam used in the meaning of 'old'... as in, suttha karnadagamaa irukkiyae...



பழமையில் உழல்பவன் என்ற பொருளில் "சுத்தக் கர்நாடகமாக இருக்கிறான்" என்பதுபோன்ற வாக்கியங்களில் வரும் சொல் பயன்பாடு ( term and its usage ) பேச்சு வழக்கில் ஏற்பட்டதாகும்.

கரு = இருள். நாடு = நாடுதல். விழைதல். அகம் = மனம்.

இருளை நாடும் மனத்தை உடையோனாய் இருத்தல்.

ஒளி என்பது முற்போக்கையும், இருள் (கரு, கருப்பு) அது இன்னும் ஏற்படாமையையும் குறிக்கும்.

This is not a reference to people of Karnataka State. All South Indian states and their languages are very progressive and have been so for quite a long time.

There is quite a mix-up and one has to sort things out to understand the terms.
The terms are same sounding. (homonyms).

Arising differently and reaching the same finished form.




நன்றி.

bis_mala
18th May 2012, 04:41 PM
தேவநேயப் பாவாணர் பல தமிழ் - ஆங்கிலச் சொற்களை ஒப்பீடு செய்துள்ளார்.
அவற்றில் சிலவற்றை இங்குக் காணலாம்:


http://www.scribd.com/doc/6951117/-Tamil-English-comparision-by-PAVANAR

bis_mala
18th May 2012, 09:57 PM
லகர, மகர,னகர ஒற்றுப் பரிமாற்றங்கள்.


சில மொழிகளில் மகர ஒற்று னகர ஒற்றுப் பரிமாற்றம் பெரும்பான்மையாய் உள்ளது.

அறம் - அறன்.
குவான் இம் - குவான் இன். (சீனமொழி)

ஆனால் , மகர ஒற்றுடன் முடியும் "நீலம்" தெலுங்கில் "நீலமு" என்று மாறி நீண்டுவிடுகிறது.
இப்படி வேறு வகையில் திரியும் மொழிகளில், மேற்சொன்ன திரிபுகளைக் காண்பதரிது.

திறம் - திறன் - திறல்.
உரம் -உர ன்.

உரல் எனின் பொருளும் மாறும்.

கொடுமணல் - கொடுமணம்.

இது ஊர்ப்பெயர்.

பதிற்றுப்பத்து 67, மற்றும் 74.

ஆயின், மணல் என்ற தனிச்சொல் இங்ஙனம் வழங்கவில்லை.

bis_mala
25th May 2012, 06:06 PM
சர்மா

இது ஒரு பட்டப்பெயராய் வழங்கிவருகிறது. ஷர்மா, சர்மா, ஸர்மா, சர்மன் என்று பல்வேறு வடிவங்களில் அறியப்படும் இப்பெயர், எங்ஙனம் தோன்றியதென்பதில் சிக்கல் நீடிக்கின்றது.

மகிழ்ச்சி என்று பொருள்தரும் ஒரு சமஸ்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியதாகக் கூறப்படினும், இஃது முடிவான கருத்தென்று கூறிவிட இயலவில்லை.

இது இப்போது பெரும்பாலும் ஸ, ஷ என்ற முதலெழுத்தைக் கொண்ட சொல்லாக எண்ணப்பட்டாலும் இது முற்காலத்தில் "ச" என்றே தொடங்கியது என்று எண்ணத்தோன்றுகிறது.

சர்மண்வத் என்பது ஒரு ஆற்றின்பெயராய் இருத்தலின், இவ் ஆறு ஓடும் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்று அடையாளம் கூற அமைந்த பெயரென்று கருதவும் இடமுண்டு.

சர்மன் என்பது தோலைக்குறிப்பது. நல்ல தோல் நிறமுடைய கூட்டத்தினர் என்றும் பொருள்பட்டிருக்கலாம்.

சர்மவத் என்பது தோலை அணிந்துகொண்டோர் என்றும் பொருள்தரும். போர்மறவரையும் குறிக்கலாம்.

சர்மா என்பது தமிழ்ச்சொல் என்று கூறவியலவில்லை. சமஸ்கிருதத்தில் ஆற்றங்கரை வாசி என்றோ போர்மறவர் என்றோ குறிக்க எழுந்த பெயராகலாம்.

ச, ஷ, ஸ திரிபுகள் இயல்பானவை.

bis_mala
1st June 2012, 09:19 AM
opportunity என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, "தருணம்", "வாய்ப்பு", "அற்றம்" என்றெல்லாம் தமிழில் பொருள் கூறலாம்.

இந்த ஆங்கிலச் சொல் எப்படி வந்ததென்று அறிஞர் திட்டவட்டமாகக் கூறவில்லை. பலர் "முழங்கைக்கு இடம்" (elbow space) என்ற கருத்தில் அமைந்ததாகச் சொல்வர்."ஒரு பிடிகிடைப்பது" (to get a handle ) என்பதாகவும் பொருள்பட்டிருக்கலாம். There has been no final decision on how this English word evolved.

தமிழில்:


தருணம் ( தரு+ உண்+ அம்) தந்தது உளதாகுதல். இதில் உண் என்பது உள் என்பதன் வேறு வடிவம். தருணம் என்பது சூழ்நிலை நமக்குத் தரும் ஒரு வசதி. அடிப்படைக் கருத்து: தருதல் என்பதே. இதிலும், "உண்" என்பது உகரம் கெட்டு "ண்" என்றிருக்கிறது.

இங்ஙனம் உகரம் கெடுதல், பிற சொல்லமைப்புகளிலும் காணக்கிடைக்கின்றது.

வரு + கு + இன்று + அது.
வரு + க் + இன்று + அது (ஓர் உகரம் கெட்டது)
வரு + கின்று + அது.
வரு + கின்ற் + அது (இன்னொரு உகரம் தொலைந்தது)
வருகின்றது.

வருகுவின்றுவது என்று வகர உடம்படு மெய்கள் வந்து சொல்லமைப்பைத் தேவையில்லாமல் குழப்பவில்லை என்பதை உணரவேண்டுமே.

தருணம் - தந்து உண்டாகிய ...நேரம், ...வசதி, ....நிலை என்றெல்லாம் சொல்லமைப்புப் பொருளை அறிக.

bis_mala
1st June 2012, 07:33 PM
தருணம் ( தரு+ உண்+ அம்) தந்தது உளதாகுதல். இதில் உண் என்பது உள் என்பதன் வேறு வடிவம். தருணம் என்பது சூழ்நிலை நமக்குத் தரும் ஒரு வசதி. அடிப்படைக் கருத்து: தருதல் என்பதே. இதிலும், "உண்" என்பது உகரம் கெட்டு "ண்" என்றிருக்கிறது.

தருணம் - தந்து உண்டாகிய ...நேரம், ...வசதி, ....நிலை என்றெல்லாம் சொல்லமைப்புப் பொருளை அறிக.


தருணம் என்பதில்போல வருணம் என்பதிலும் "உண்" என்ற துணச்சொல் இடைநிற்பதைக் கூர்ந்துணரலாம்.

(வர்) - வரி (இ)
(வர்) - வரிசை (இ+சை)
(வர்) - வரை - வரைதல். (ஐ, ஐ+தல்)
(வர்) - வரு - வருடு - வருடுதல். (டு, டு+தல்)
வருடுதல் என்பது விரல்களால் வரியிடுதல் போலத் தடவுதல்).
(வர்) - வரி - வரித்தல்.
வரிகளை உண்டாக்குதல், வரிகளை வண்ணங்களால் வரைந்து, மணப்பெண்ணை அழகுபடுத்துதலும் பின் அவளை மணத்தலும். ##

(வர்) - வரி / வரு + உண் + அம் = வருணம்.

Well, to be comfortable, you will need some more explanation. I shall return ...

## Note: This has been so explained by other researchers.

bis_mala
4th June 2012, 07:18 PM
வருணம் என்பது பல மொழிகளிலும் பரவிவிட்ட ஒரு சொல். அது எம்மொழிக்குரியது என்று தீர்மானிப்பது எளிதன்று. மலாய் மொழியில் கூட இச்சொல் உள்ளது. அதற்கு அங்கு "நிறம்" என்று பொருள்.

முதலில், சமஸ்கிருதம் என்னும் சங்கத மொழியில் அது எப்பொருளை உடையதாய் இருக்கின்ற தென்பதை அறிந்துகொள்வோம்.


varNa

1 a covering , cloak , mantle (L.) ; a cover , outward appearance , exterior , form , figure , shape , colour (Rig Veda. &c. &c. )

2 colour of the face , (esp.) good colour or complexion , lustre , beauty ( Manu &c. ); colour , tint , dye , pigment (for painting or writing) (Maha Bharatam. &c. );

3 colour = race , species , kind , sort , character , nature , quality , property (applied to persons and things) ( Rig Veda. &c. &c.) ; class of men , tribe , order , caste

4 a letter , sound , vowel , syllable , word ; a musical sound or note (also applied to the voice of animals) ( Maha Bharatam.) ; the order or arrangement of a song or poem ;

5 praise , commendation , renown , glory

6 an unknown magnitude or quantity ; (in arithmetic.) the figure , `" one "' ; (accord. to some) a co-efficient ; a kind of measure ( L.)

7 gold (L.) ;

8 a religious observance (L.) ; one who wards off , expeller (Rig Veda.)

9 Cajanus Indicus ( L.) ; n. saffron ( L.)
[Compare. according. to some , (Slavonic:) {vranu} , `" black "' , `" a crow "' ; ( Lithuanian:) {vArnas} , `" a crow. "']

10 relating to a sound or letter (in grammar.)

will edit later and will continue

bis_mala
10th June 2012, 09:44 PM
தமிழில் வருணம் என்பதற்கான பொருள்.

varuNam
1. colour;
2. the four-fold occupational divisions
3. caste divisions
4. letter;
5. beauty;
6. brightness;
7. varnini turmeric;
8. streak of gold on the touchstone;
9. gold;
10. fame;
11. praise;
12. fragrance;
13. disguise;
14. manner;
15. style;
16. elephant
17. water

தமிழிலும் சங்கதத்திலும் இது பெரிதும் பொருளொற்றுமை உடைய சொல் என்று கருதப்படுகிறது. You may now compare. Will continue.

bis_mala
15th June 2012, 03:24 PM
வருணம், தருணம் என்பனவற்றில் இடைநிற்பது "உண்" என்று கூறப்பட்டது.
மேல் இடுகைகளை நோக்குங்கள்.

இந்த "உண்" என்ற சொல், சில வினைச்சொற்களிலும் வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். (முதனிலைத் தொழிற்பெயர்கள் எனினுமாம்)

வெட்டுண்ட கை.
கட்டுண்ட காளை.

இங்கு "உண்" துணைவினை எனலாம். இதுபோன்ற ஓரமைப்பினையே வருணம், தருணம் என்பனவும் பின்பற்றியுள்ளமை தெளிவு.

அரைப்புண்ட மாவு
கழிவுண்ட மூலிகை வேர்கள்.
தொய்வுண்ட காரியங்கள்

இங்கு அரைப்பு, கழிவு, தொய்வு என்ற தொழிற்பெயர்களை அடுத்து "உண்" என்னும் வினை எச்சமாக நிற்றலைக் காணலாம்.

இவ்விடத்திலெல்லாம் "உண்" என்பது தின்னற்கருத்தை உணர்த்தவில்லை, அதுவேபோல் வருணம், தருணம் என வருவனவற்றுள்ளும் அக்கருத்திலதாதல் அறிக.

bis_mala
18th June 2012, 08:10 AM
With reference to the foregoing:


தருணம், வருணம் என்ற சொற்கள் பற்றி நாம் கவனித்த இதன் முடிவுரையாக, குறிப்பிட்ட மூன்று சொற்களுக்குமான மூலங்களை ( பகுதிகளை) நாம் இப்போது தெரிந்துகொள்வோம்.

தருணம் < தரு (தருதல் அடிப்படைக் கருத்து).

வாய்ப்பு < வாய் (வாய்த்தல் அடிப்படைக் கருத்து )

அற்றம் < அறு ( அறுதல் அடிப்படைக் கருத்து )

வாய்ப்பு யாதொன்றும் நிகழாத ஒரு நெடும் கால ஓட்டத்தில், அறுதல் ஏற்பட்டு ஒரு நல்வேளை வருமாயின், அதுவே அற்றம் எனலாம்.

bis_mala
20th June 2012, 06:47 PM
We shall continue with our enquiry into tharuNam etc., We now look into a related word.

இதை சம்+தர்ப்பம் என்று பிரிப்போம்.

சம் என்ற முன்னொட்டு இருக்கட்டும்.

தர்ப்பம் என்பது உண்மையில் தருப்பம் என்பதன் திரிபே. தரு>தருதல்; தரு > தருப்பு> தருப்பம் > தர்ப்பம்.

அதாவது: தரு +பு + அம்.

இப்போது, தருணம் என்பதில் உள்ள "தருதல்" கருத்துடன் ஒப்பு நோக்கவேண்டும். தொடர்பு புரியும்.

மாற்றுவிளக்கங்கள் ஒருபால் நிற்கட்டும்.


=============================

Notes:

1. "சன்" என்பதற்கு சங்கதத்தில் பல பொருட்சாயல்கள்: to gain for another , procure , bestow , give , distribute RV. ; to be successful , be granted or fulfilled or to wish to acquire or obtain ; to wish to procure or bestow RV. AV.

2 "sam" prefix: with , together with , along with , together , altogether (used as a preposition or prefix to verbs and verbal derivatives , like in Gk. Lat. {con} , and expressing `" conjunction "' , `" union "' , `" thoroughness "' , `" intensity "' , `" completeness "' e.g.{saMyuj} , `" to join together "' ; {saM-dhA} , `" to place together "' ;{saM-dhi} , `" placing together "' ; {saM-tap} , `" to consume utterly by burning "' ; {sam-uccheda} , `" destroying altogether , complete destruction, note: " for many glorious waters surrounded Agni "' ; it is sometimes prefixed to nouns in the sense of 2. {sama} , `" same "' ; cf. %{samartha}) RV. &c. &c.

We shall look into this later. No hurry.

bis_mala
20th June 2012, 06:49 PM
னகர ஒற்றில் முடியும் பல சொற்கள், மகர ஒற்றோடும் முடியும்.

இதற்குதாரணம்:

குணன் - குணம்.#
அறன் - அறம்
திறன் - திறம்

இன்னும் மணம் - மணன் என்றும் அமையும்.

இப்படி முடிதல் வேறு மொழிகளிலும் உள்ளது. சீன மொழியில், குவான் இன் என்பது குவான் இம் என்றாதல் போல.

நிலம் - நிலன்.
புறம் - புறன்.

குறிப்பு:

# நடுவணதென்னும் ஆட்சியுங் குணனும் காரணமாகப் பெற்ற பெயர்.-- நச்.உரை. தொல், அகத்திணையியல் 2.

இஃது முன்னம் ஒருக்கால் யான் கூறியதுதான், ஆயின் சற்று விரித்துரைத்தேன்.

bis_mala
28th June 2012, 08:42 AM
சந்தர்ப்பம் என்பதை வேறு வகையில் சொல்லவேண்டுமானால், "அமைந்தது" என்று சொல்லலாம்.சந்தர்ப்பம் இல்லை என்பதை "அமையவில்லை" என்றோ, வாய்ப்புக் கிட்டவில்லை என்றோ, அல்லது வேறு வழிகளிலோ சொல்லலாம்.

அமை > சமை > சம்.
அம் > அமை.
சம் > சமை.
(அம்) > (சம்). அம்=சம்.

அகர முதலான பல சொற்கள், பின் சகர முதலாகிவிட்டன.

எ-டு: அமண் > சமண்.

இன்னொரு சொல்லைக் கவனிப்போம்.


அண் > அண்டு.> அண்டுதல்.

அண் >அண்மு > அண்முதல்.

அண் > அணு > அணுகு > அணுகுதல்.

அண்டு > சண்டு > சண்டை.

அண்டை > சண்டை.

அண்டி, அணுகி, அடுத்து நின்றுதான் சண்டை போடுகின்றனர்.

கலந்து , கைகலந்து கலகம் உண்டாவதில்லை?


For further explanation please see: அடுத்திருத்தல் கருத்து அமைந்த சொற்கள் :
(http://www.sivamaalaa.blogspot.com)

aanaa
28th June 2012, 09:26 PM
நன்றி

bis_mala
30th June 2012, 12:43 PM
நன்றி

You are welcome. Appreciated.

bis_mala
5th July 2012, 06:28 PM
இதைக் கவனியுங்கள்.

மொழி - அன்மொழி.
முறை > அன்முறை

இப்போது:

ஆதரவு > அனாதரவு

பின்: அனாதரவு > அனாத > அனாதை.

நாதி என்பதைப் பின் பார்க்கலாம்.

அன் - என்பது எதிர்மறை முன்னொட்டு.

bis_mala
14th July 2012, 07:53 AM
கதை ஏதும் சொல்லாத தொல்காப்பியத்துக்கு எப்படிக் காப்பியம் என்று பெயர் வந்தது?

கதை சொல்லும் சிலம்பு, மணிமேகலை போன்ற காப்பியங்கள் வேறு. தொன்மை மரபு என இவற்றைக் காக்கப் புறப்பட்ட காப்பியமான தொல்காப்பியம் வேறு.

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். கதைக் காப்பியமன்று.

தொல்+காப்பு+இயம் = தொன்மையைக் காக்கும் (இயம்) ஆயிற்று.

bis_mala
25th July 2012, 09:42 AM
பாஷாணம்

பாசாணம் (பாஷாணம் ) என்ற சொல் எங்ஙனம் அமைந்தது.?


பசுமை + ஆணம் = ; பாசாணம் .> பாஷாணம்.

to save space here, only short details are posted. For more expln, see http://sivamaalaa.blogspot.com/2012/07/blog-post_23.html

bis_mala
22nd August 2012, 06:34 PM
பேச்சுத் தமிழுக்கும் எழுத்து நடைத் தமிழுக்குமிடையில் ஏற்படும் திரிபுகளை முழுவதும் ஆய்ந்து யாரும் கட்டுரை அல்லது நூல் வெளியிட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால்
இத்திரிபுகளிலிருந்து நாம் கற்றுக்க்கொள்ளத் தக்க நெறிமுறைகள் (principles) உள்ளன என்றே தெரிகிறது.

அவர்கள் என்பது :

அவக, அவுக, அவங்க, அவுங்க, அவைங்க,

எனப் பலவாறு திரிவதாகத் தெரிகிறது.

அவைங்க என்பது அவன்கள் என்பதன் திரிபாகத் தோன்றலாம். அவன்கள் என்பது இலக்கணப் புலவர் ஏற்றுக்கொண்ட வடிவமன்று. தவறு என்பர்.

ரகர ஒற்று மறைந்துபோவது பிறமொழியாளர் பேச்சிலும் காணக்கிடக்கின்றது.1


அவ(ர்)க(ள்) > அவக, இதில் ர் மற்றும் ள் என்னும் ஒற்றுக்கள் மறைந்தன.

-------------------------------------------------------
Footnote:
1 A research on "ESM"
The English of Singapore and Malaysia
Prof. Ray K. Tongue Eastern Universities Press, (1974)

bis_mala
28th August 2012, 09:04 PM
இவற்றை ஊன்றிக் கவனிக்கவேண்டும்.

நேர் > நேர்மித்தல் > நேமித்தல்.
சேர் > சேர்மித்தல் > சேமித்தல்.

சார் > சார்தி > சாதி.
சார்தல் என்பது சேர்தல். எதைச் சார்ந்தவன், எதைச் சேர்ந்தவன்? எனவரும் வழக்குகளை நோக்குக.

(ஜா என்னும் பிறத்தல் வினையிலிருந்து தோன்றியது ஜாதி என்பது முன்னைய கருத்து)

ஒருவனின் பெயருக்கு நேராக அவன்றன் பதவியை அல்லது தகுதியைக் குறித்தல். அதுவே நேர்மித்தல்/ நேமித்தலாம்.

நியமித்தல் என்னும் வினை திரிந்து நேமித்தல் ஆயிற்று என்பது முன்னைய கருத்தாகும்.

காட்டிய சொற்களில் ரகர ஒற்று மறைந்தது.

aanaa
30th August 2012, 06:28 AM
பேச்சுத் தமிழுக்கும் எழுத்து நடைத் தமிழுக்குமிடையில் ஏற்படும் திரிபுகளை முழுவதும் ஆய்ந்து யாரும் கட்டுரை அல்லது நூல் வெளியிட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால்
இத்திரிபுகளிலிருந்து நாம் கற்றுக்க்கொள்ளத் தக்க நெறிமுறைகள் (principles) உள்ளன என்றே தெரிகிறது.

அவர்கள் என்பது :

அவக, அவுக, அவங்க, அவுங்க, அவைங்க,

எனப் பலவாறு திரிவதாகத் தெரிகிறது.

அவைங்க என்பது அவன்கள் என்பதன் திரிபாகத் தோன்றலாம். அவன்கள் என்பது இலக்கணப் புலவர் ஏற்றுக்கொண்ட வடிவமன்று. தவறு என்பர்.

ரகர ஒற்று மறைந்துபோவது பிறமொழியாளர் பேச்சிலும் காணக்கிடக்கின்றது.1


அவ(ர்)க(ள்) > அவக, இதில் ர் மற்றும் ள் என்னும் ஒற்றுக்கள் மறைந்தன.

-------------------------------------------------------
Footnote:
1 A research on "ESM"
The English of Singapore and Malaysia
Prof. Ray K. Tongue Eastern Universities Press, (1974)

"அவக" " அவுக" இன்னுமே பேச்சு வழக்கில் உள்ளன யாழ் - நெடுந்தீவ்ல்

lydayaxobia616
1st September 2012, 11:06 AM
We have 30 base letters in Tamil (12 vowels + 18 consonants). The remaining letters are combination of consonants & vowels notations (12*18 = 216). Total 30 + 216 = 246 + 1 (Ayutha Ezhuthu)

What is missing here is the sound notations or sound differentiators. For which loaning of worlds from other language started happening like Sri, Sha, Jha etc

bis_mala
12th September 2012, 04:38 PM
நன்றி, நன்றி.

மேலே நம் இணைய அன்பர்களின் கருத்துரைகட்கு மாற்றுக்கருத்துகள் இல்லையென்றே கருதுகிறேன். அதனால் யாரும் பதிலெழுதாது வாளாயிருக்கின்றனரென்று எண்ணத்தோன்றுகிறது.

எழுத்துக்கள் எண்ணிக்கை சரியாகவே உரைக்கப்பட்டது. "வடவொலிகளும்" தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவைதாம்.

ஜ, ஹ , ஸ, ஷ, க்ஷ,முதலாயினவற்றை ஏன் தமிழர் முன்னாளிலேயே மேற்கொள்ளவில்லை என்று தெரியவில்லை. இவற்றைப் புறம்பான ஒலிகள் என்றும் இவற்றை விலக்கியே சொல்லமைக்கவேண்டுமென்றும் ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டனர் போலும்.

இவ்வொலிகளை உலகுஅறியாமுன்பே தமிழ் தோன்றிவிட்டதென்றே தெரிகிறது. This inference should be considered as arising appropriately from the circumstances....

bis_mala
17th September 2012, 12:33 PM
வெட்டு

வெட்டு என்பது ஒரு கூரான அல்லது சுணைப்பு உள்ள ஆயுதத்தால் அறுத்தல் அல்லது கூறுபடுத்தல் என்று பொருள்படும். இதை இன்னும் பயன்பாட்டுக்குத் தக்கபடி பொருள் விரிக்க இடமுண்டு.

இதன் அடிச்சொல்லான "வெடு" என்பதை வெடு > வெடுப்பு (பேச்சு வழக்கு ) என்பதினின்று அறியலாம். இது பிளவு என்று பொருள்தரும். வெடித்தல் என்பது சற்று வேறுபட்டது ஆனால் தொடர்புடையது.

வெடு > வெட்டு. இப்படி இது வினைச்சொல்லாய் ஆக்கம் பெறுகிறது.

வெட்டு என்பது "முகவெட்டு" என்ற தொடரிலும் வருகிறது. முகவெட்டென்பதில், வெட்டுதல் என்னும் வினை (the act of cutting with instrument) ஒன்றும் நிகழவில்லை.

இங்கு வெட்டு = அமைப்பு என்று பொருள். முகம் வெட்டி அமைக்கப்படுவதில்லை எனினும், வெட்டி அமைப்புறும் பொருள்களின் வாயிலாக இதற்கு இப்பொருள் விரிந்து அடைவு பெறுகிறது என்பது தெளிவு.

சிலர் "ஃவேஸ்கட்" (facecut or face-cut) என்று ஆங்கிலம் பேசும் போதும் குறிப்பிடுகிறார்கள். இப்படிப் பேசுவதும் (இச்சொல் அமைப்பும்) ஏற்றுக்கொள்ளத் தக்கது போலும்.

ஒப்பு நோக்குக.:- கஜம் என்ற சங்கதச் சொல் கடையப்பட்டது (முகம்) என்ற பொருளது என்பர். In other words, it was imagined that the elephant has a face that looks like having been dug out! That was the impression that the elephant gave to the person who coined the word.

bis_mala
25th September 2012, 10:22 PM
அன்னதானம் வழங்கினார்

-என்பது சரியில்லை;

அன்னதானம் செய்தார்

என்பதே சரி.

அன்னம் என்பது சமஸ்கிருதச் சொல்லாதலின், சோறு தானம் செய்தார் என்பதே சரி.


இவ்வாறு ஒரு தமிழ்ப் பேராசிரியர் கூறியுள்ளார்.
உங்கள் கருத்து யாது என்பதைத் தெரிவிக்கலாமே

===============================================

Notes:

The word occurs in Sanskrit and also Pali languages. Anna is participle of adati (to eat). Meaning in Sans and Pali are not confined to rice. Please see below.

In Tamiz, in oridnary parlance, it refers only to cooked rice. (with kuzambu and side servings). Does not refer to uncooked rice or arisi. (or ari as in Malayalam ordinary usage and literary Tamil ).


Anna

Anna (nt.) [Vedic anna, orig. pp. of adati to eat] "eating", food, esp. boiled rice, but includes all that is eaten as food, viz. odana, kummāsa, sattu, maccha, maŋsa (rice, gruel, flour, fish, meat) . Anna is spelt aṇṇa in combns aparɔ aṇṇa and pubbɔ aṇṇa. Under dhañña (combinations in Pali.)

Other Skrt teachers would say: anna
Food; gross visible matter; in its origin the word meant simply being or substance.
annam [nominative]
as opposed to reasearchers who said that it is a participle

Note also that rice is a staple food item of South Indians.

tfmlover
27th September 2012, 04:10 AM
அன்பின் b.i.சிவமாலா !

அன்னம் என்பது சமஸ்கிருதச் சொல்தானா ?

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - ஐந்தாம் திருமுறை-கோயில்

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே

மாணிக்க வாசகர் அருளிய - எட்டாம் திருமுறை
- திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி

தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

நன்றி

bis_mala
4th October 2012, 10:34 PM
அன்பின் b.i.சிவமாலா !

அன்னம் என்பது சமஸ்கிருதச் சொல்தானா ?

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - ஐந்தாம் திருமுறை-கோயில்

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே

மாணிக்க வாசகர் அருளிய - எட்டாம் திருமுறை
- திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி

தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

நன்றி

நன்றி. Thank you for the citations.

அவஸ்தான் மொழியில் "அட்" - உண் அல்லது சாப்பிடு என்று. பொருள். படுகிறது.

அவஸ்தான் இந்தோ ஐரோப்பியம் சார்ந்தது எனப்படுவதால், ஆங்கிலம் முதலாய மொழிகளில் "ஈட்" "ஏட்" (சாப்பிடுதல்) என்று வருவனவும் கவனிக்கத்தக்கவை.

அடதி என்ற வடசொல்லின் வினைச்சொல் உருவங்களில் ஒன்றுதான் அன்னம் எனப்படுவதும் கவனிக்கத்தக்கது.

இப்படிப் பார்த்தால்,"அன்னம்" - உணவு என்று பொருள்கொள்ளலாம்.

தமிழில்:

அடுதல் = சமைத்தல் .
அடு - அடுப்பு.
அடு > அடிசில். (அடு+சு+இல்) இங்கு சுகரத்தில் உள்ள உகாம் கெட்டது. (மறைந்தது),

சங்கதத்தில்ல் உள்ள "அடதி" என்பதிலிருந்து அன்னம் தோன்றியது என்று வடமொழிப் புலவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அடு என்ற தமிழ் வடிவத்திலிருந்து "அன்னம்" மாறியமைந்தது என்பதாகத் தமிழ்ப் புலவர்கள் ஏற்கமாட்டார்கள்.

என் செய்வது?

உங்கள் கருத்து யாது?

bis_mala
4th October 2012, 11:00 PM
வரு >வருந்து.
திரு > திருந்து.

பொரு > பொருந்து.

இவற்றுள், இறுதியில் வந்த "து" வினைச்சொல்லாக்க ஈறு.

இனி,

அரு > அருந்து.

மேலும் நோக்கினால்,

கரு > கன் என்று திரியும்.

கரும்பு > கன்னல்..

எனவே. அரு ஏன் அன் என்று திரியலாகாது?

அரு> அன் > அன்னம்.

அடதி என்பது அன் > அன்னம் என்று சங்கதத்தில் திரியலாம் என்றால்,

அரு> அன் > அன்னம் என்றும் (in Tamil) திரியலாம், கரு > கன் (கரும்பு > கன்னல்) என்பதைப் போல.

ஆக, அன்னத்தை எங்கே பரிமாறுவது என்பதே கேள்வி.

சங்கத இலையிலா?

தமிழ் இலையிலா?

முடிவுக்கான காரணங்கள் யாவை?

bis_mala
5th October 2012, 08:05 AM
வரு >வருந்து.
...............................தமிழ் இலையிலா?

முடிவுக்கான காரணங்கள் யாவை?


இந்த இணைமொழிகளையும் ஆராயுங்கள்:


சின்னஞ் சிறிய குடில்

இதில்: சிறு > சின்.

பென்னம்பெரிய மனிதர்

பெரு > பென்.

கன்னங் கரேல் என்றிருப்பான்.

கரு > கன்.

மேலும், கரு என்பது கண் என்றும் திரியும்.

கரு > கருப்பு > கருப்புசாமி.

கரு > கண்> கண்ணன்.

வருணம் என்ற சொல் வண்ணம் என்ற வடிவிலும் இலங்கும்.

வரு<> வண்.

இவற்றுள், ரு, று, ந், ண் வேறுபாடின்றித் திரிந்தன மேற்கண்டவை.

வரு(வான்) > வந்(தான்) (வந்)

இவ்வினை முற்றுகளில் வரு என்பது வந் (=வன்) என்று திரிதல்
காண்க.

These changes support aru(nthu) > an(nam) change.

In Tamil, annam only refers to cooked rice The Sans and Pali annam include fish, meat and also rice.
Is this a substantial difference? If so, the tamil annam is different from vadamozhi annam.

There are a number of persons in China having the name Nannan. There are also persons having this name in Tamil Nadu, India. We must therefore conclude that the Tamil Nannan is not the same word as the Chinese Nannan or European Nannan for that matter!!

bis_mala
5th October 2012, 10:40 AM
அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது "அன்னாசி". மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"

இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.

அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.

அரு+ நாசி > அருநாசி >அன்னாசி.

நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது. நாவிற்குச் சீர்தருவது நா+சீர் = நாசீர்> நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு.

இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள்.

bis_mala
5th October 2012, 03:09 PM
விரும்பி மேல்செலுத்துவதே விண்ணப்பம். இதில் உள்ள விண் என்ற சொல்லைக் கவனிப்போம்.


விரு > விண்.

இதுவும் மேலே சொன்ன கரு > கண் என்ற திரிபின்பால் பட்டதே.

விழைந்து முன்னே அல்லது மேல் (அதிகாரிக்கு அல்லது கடவுளுக்கு) ச் சமர்ப்பிக்கப்படுவது,

விண்+அ+பு+அம்.

அ என்பது சாரியை போன்று பகுதியையும் விகுதிகளையும் இணைப்பது.

அனுப்பு என்ற சொல்லும் அகரச் சுட்டுச் சொல்லினின்று எழுந்ததே.

எனவே, இங்கு அகரம் மிகவும் பொருத்தமான இணைப்பெழுத்து ஆகும்.

அன்றி, விடுத்தல் கருத்துடைய விள் என்பதினின்றும் இதற்குப் பொருள் கூறலாமாகையால், இஃது இருபிறப்பி எனலும் கொள்ளத்தக்கதே.

ஒரு நீண்ட கருத்தைச் சுருக்கி இச்சொல் ஆக்கப்பட்டுள்ளதென்பதை அறிகிறோம்.

San_K
5th October 2012, 03:15 PM
Arumai :clap: thodarungal :)

bis_mala
6th October 2012, 10:16 PM
பாராட்டியமைக்கு மிக்க நன்றி. Please stay tuned and feel free to give your views.


இப்போது இன்னும் இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன்.

அரு <> அண்.

எது முந்துவடிவம் என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. ஒன்று மற்றொன்றாய் மாறியமையும் என்பது ( அருந்து > அன்னம் (அரு>அன்)) ஆய்வுக்குப் போதுமானது.

அருணமலை <>அண்ணாமல

அருணமலை = அருணகிரி, அருணசலம் எனவும் படும்.

ஒரு<> ஒன்.

ஒன்>ஒன்+து = ஒன்று.

will continue

bis_mala
8th October 2012, 07:28 AM
( அருந்து > அன்னம் (அரு>அன்)) ஆய்வுக்குப் போதுமானது.

அருணமலை <>அண்ணாமல


will continue


மேலும் ஓர் எடுத்துக்காட்டு.

கரு > கன்

கருநடம் > கன்னடம்.

bis_mala
8th October 2012, 07:41 AM
மேலும் ......................


அருந்து என்பதிலிருந்து அன்னம் தோன்றியதென்பதை மலையாள மொழியொலிப்புப்படி சென்று காணலாமே.


வந்து - வன்னு
என்றுதான் அங்கு வரும்.

ஆகவே அருந்து என்பது
அருன்னு (அருந்நு) என்றுதான் வரும்,

அருந்நு > அந்நு > அன்னம்.

இப்படிப் பார்த்தால் மிகத் தெளிவாகிவிடும்.

தொடரும்.

bis_mala
9th October 2012, 09:57 PM
More support evidence:

குறு > குன்
குறு - குன் - குன்று (வினைச்சொல்: குன்றுதல்)
குறு - குன் - குன்று = சிறிய மலை.

நறு > நல்- நன். அல்லது நல் > நறு.

அறு>அன் > அன்று.

அறு - முடிதல் குறிக்கும். அ என்னும்சுட்டடிச் சொல் என்றும் கொள்ளலாம்.

னகரம் லகரம் ஒன்று மற்றொன்றாய்த் திரிதலும் கொள்ளப்படும்.

bis_mala
11th October 2012, 07:28 PM
Thursday, october 11, 2012

கண்> கரு > கருணை

வீரம், காதல், இரக்கம் போன்ற பலவேறு பண்புகளும், கண்களின் வழியாகவே வெளிப்படுவனவாகத் தமிழன் கருதினான்.
தமிழனின் மொழியில் அமைந்துகிடக்கும் சொற்கள் பலவும் இக்கருத்தையே நன்கு படம்படித்துக் காட்டுகின்றன.

வீரம் குறிக்கும் "தறுகண்மை" என்னும் சொல் கண்ணினையே நிலைக்களனாகக் கொண்டதாகும். காதலுக்கும் கண்ணுக்கும் உள்ளதாக இலக்கியங்கள் கூறும் தொடர்பினை ஈண்டு விரித்துரைக்கத் தேவையில்லை.

இரக்கம், மனநெகிழ்வு முதலிய கண்ணினின்றே வெளிப்படுவன என்று இலக்கியம் கூறும். கண்ணோடுதல், கண்ணோட்டம் என்ற சொற்களை ஆய்ந்து இதனை அறியலாம்.கண்ணோட்டம் என்பது இரக்கம்.

கண் என்பது கரு என்று திரியும் என்பதை நாம் மேலே ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கண்> கரு > கருணை.

முகத்தின் ஏனை உறுப்புகட்கு இல்லாத ஒரு திறம் கண்ணுக்கு உண்டு. கண் கலங்கி நீர் சிந்தி அழக்கூடியது. கண்ணிலிருந்து (கண் என்றசொல்லில் இருந்து) கரு என்பதமைந்து கருணையில் முடிந்தது மிக்கப் பொருத்தமுடையதாகும்.

நெய்(தல்) என்ற சொல்லே "ணை" என்று மாறி சொல்லீறாக நிற்கின்றது. கண் சென்று ஈடுபாடு கொள்ளுதல் என்பது பொருள்.

கண்> கரு > கருநெய் > கருணை.

எண்ணெய என்ற சொல் எண்ணை என்று வழங்குதல் காண்க. தமிழ்ப் புலவன் இதை எண்ணெய் என்றே எழுதவேண்டுமென்றாலும் எண்ணெய் வணிகர் கேளார். திரிபு வழக்கில் உள்ளது.

அங்ஙனமே, கருணை என்ற திரிபையும் புலவர் ஏற்கமாட்டார்.எனினும் சங்கதத்தில் நல்ல இடப்பிடித்துக்கொண்டு இது மீண்டும் தமிழுக்கு வந்து வழங்குகிறது,


குறிப்பு: கண்+ எய்(தல்) =கண்ணெய் > கருணை எனினும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

bis_mala
17th October 2012, 01:02 PM
Thursday, october 11, 2012

கண்> கரு > கருணை

.......................


You may enrich your references by reading:

http://www.mayyam.com/talk/showthread.php?409-Is-tamil-derived-from-Sanskrit/page12

bis_mala
24th October 2012, 02:05 PM
இனியும் ஓர் எடுத்துக்காட்டு:

நெருநல் > நென்னல்.

இங்கு நெரு என்ற சொல்லின் பகுதி "நென்" என்று மாறி அமைந்துள்ளது காணலாம்.

மேலும்"நெந்நல்" என்றில்லாமல்,"நென்னல்"என்று மாறியுள்ளதையும் உணர்ந்துகொள்க.

அகரவரிசை எழுதினோர் யாது கூறினும், இங்ஙனம் நுண்மாண் நுழைபுலம் உடையாராய், ஆய்ந்தறிதலே செயற்பாலதாம்.

bis_mala
25th October 2012, 01:37 AM
மற்றொன்று:


தரு என்பதும் தன் என்று திரியும். இந்தத் "தரு" முழுச்சொல் அன்று.

இப்படி:

தருமம்> தன்மம்.

bis_mala
25th October 2012, 06:47 PM
ஒரு நண்பர் நீங்கள் ஏற்றுக்கொள்ள வியலாத ஒன்றைச் சொல்லிவிடுகிறார். நீங்கள் கோபித்துக்கொண்டு அவரிடம் கொஞ்ச நாள் பேசாமலிருக்கிறீர்கள். இருவரும் மீண்டும் ஒன்றுபட க் காலம் கனிகிறது. பொறுத்துக்கொள்ளுமாறு அவரும் வேண்ட, இருவரும் மருவிக்கொண்டு (தழுவிக்கொண்டு) மகிழ்கிறீர்கள்.

மருவிக்கொள்ளுதல், அணைத்துகொள்ளுதல், கைகுலுக்கிக் கொள்ளுதல் முதலிய இன்ன பிறவும், மன்னித்துக்கொள்ளுங்கள், மன்னித்துவிட்டேன் என்றெல்லாம் செயல்வாயிலாகத் தெரிவித்தலேயன்றி வேறு என்ன?

கை கூப்புதலும், ஒரு கை இன்னொரு கையைச் சென்று தொட்டுத் தழுவுதலே ஆகும். இரண்டு உள்ளங்கைகள் ஒன்றாய்ப் படிந்து கை கூம்புவதும் (கைகூப்புவதும்) இருவர் ஒன்றாய் மருவிக்கொள்ளுதற் குறிப்பேயாகும். Ipso facto, the embracing of two hearts.

மரு>மருவு> மருவுதல்.

மரு> மன்.

மன்> மன்னி > மன்னித்தல்.

அரு> அன் என்பதிலிருந்து நாம் மேற்கூறிய அனைத்தையும் மீண்டும் கவனிக்கவும்.

ஒரு சொல் இங்ஙனம் மாறும்போது, இனிய ஓசை வருமாறு வேறோர் ஈறுபெற்றமையக்கூடுமென்பதை நீங்கள் கூர்ந்து கவனித்து உணர்ந்திருக்கலாம்.

மன்னுதல் > மன்னித்தல் என்றும் பொருள்கூறல் தகுமாதலின் இஃது ஓர் இருபிறப்பி (இருவகையிலமையக்கூடிய சொல்) எனலாம்.

bis_mala
2nd November 2012, 08:46 AM
அரு > அண், அண்>அரு என்னும் மாதிரியில் அமைந்த பல சொற்களை அறிந்து இதுகாறும் இன்புற்றோம்.

இன்னும் ஒரு சொல்லை ஆய்வதுடன் இதனை முடித்துக் கொண்டு வேறு வகையான சொல்லமைப்புக்களைக் காண முயல்வோம்.

உரு என்று அமைந்த சொல் உண் என்று தொடங்குமாறு மாறியமைந்ததை இங்குக் காண்போம்:

உரு>உண்

இவை இரண்டும் தனிச்சொற்களல்ல. சொற்பாகங்கள்..

இது:

உருண்டை > உண்டை என்று திரியும்.

இங்ஙனம் மாறுவன, பொருள் மாற்றமடைதலு முண்டு; பொருள் மாறாமல் போலிகளாய் இருப்பனவுமுண்டு.

bis_mala
14th November 2012, 09:48 PM
துண்டு = சிறிய துண்டுத் துணி. வேட்டியினும் சிறிய துணி.

துண்டு = முண்டு.

முண்டு என்பது மலையாள வழக்கு அல்லது திரிபு.

ஆசு = பற்றி நிற்பது, பற்றுக்கோடு.

முண்டு+ஆசு = முண்டாசு > " முண்டாஸ்."

முண்டுப்பற்று அதாவது தலையைப் பற்றி நிற்கும் துண்டு, தலைச் சுற்றுத் துணி.

bis_mala
16th November 2012, 06:25 PM
பாம்புக்கு உள்ள பெயர்களில், "கட்செவி" என்பதுமொன்றாகும்.
கட்செவி என்ற சொல் பழைய நூல்களில் உள்ளதுதான். இப்போது நம் தமிழ்மக்களின் பேச்சில், எழுத்தில் இது காணப்படுவதில்லை.

இச்சொல் எங்ஙனம் அமைந்தது? பாம்புக்குக் கண்ணும் காதும் தனித்தனியாகத் தோன்றுவதில்லை. செவியும் விழியும் ஒன்றாக இருக்கும்.

ஆகவே, கண்+செவி = கட்செவி ஆயிற்று.

இச்சொற்களின் புணர்ச்சியில் "ண்" என்பது "ட்" என்று மாறிவிட்டது கண்டுகொள்க. தமிழ்மொழியின் இயல்பு இதுவாகும்.

அடுத்து, "கட்கண்" என்ற சொல்லைக் காண்போம்.

இச்சொல்லை நான் எழுதிய ஒரு வெண்பாவில் பயன்படுத்தியுள்ளேன். இந்தப் பாடலை "கவிச்சாரல்" திரியில் கண்டு இன்புறலாம்.(The link is given below at the end of this post)

கண்+ கண் என்று புணர்த்தினால், அது "கட்கண்" என்றாகும். இங்கு கண் என்ற சொல்லுக்கு "இடம்" என்று பொருள் "அதில்", '
"அதனில்" என்னாமல் "அதன்கண்" என்று எழுதுவதுண்டு.இந்தக் கண்ணுருபுக்கும் "இடம்" என்பதே பொருள்.

ஆகவே, கண்கண் > கட்கண் என்பது "இடம் இடம்" என்று பொருள்படுகிறது. இடம் இடம் என்றால், எல்லா இடங்களிலும், எவ்விடத்திலும், எங்கும் என்று சொல்வதற்கொப்பானதே.

"பரம்பொருள் யுகம்யுகம் தோன்றியது" என்று ஒரு கவி எழுதினார். ஒவ்வொரு யுகத்திலும், எல்லா யுகங்களிலும் என்றெல்லாம் இதற்குப் பொருளுரைக்கலாம்.

இங்ஙனம் ஒரே சொல்லை இரட்டித்துச் சொல்வது தமிழில் குறைவு. ஆனால் மலாய் மொழியில், இப்படி இரட்டிப்பது பன்மைப் பொருளுணர்த்தும். அம்மொழியில் பன்மை யுணர்த்த "கள்" விகுதியோ, ஆங்கில மொழியிலுள்ள "s" என்பதுபோன்ற ஈறோ எதுவும் இல்லை.

"கடைகள்" என்பதற்குக் "கிடாய்கிடாய்" என்று "கிடாய்" என்பதே இரட்டித்துப் பன்மையாகும். "மானா மானா புன்" = எங்காயினும் என்று பொருள்படுவது. பல இடங்களிலும் என்பதாம்.''எங்கெங்கு" என்று தமிழிலும் வரும்.

கண்கண் = கட்கண்= (பொருள்) ' எங்கெங்கும்' என்பது போன்றதே.

http://www.mayyam.com/talk/showthread.php?3647-KAVICH-CHAARAL-SIVAMAALAA&p=977953&viewfull=1#post977953

bis_mala
22nd November 2012, 07:44 PM
அதுவரை, இதுவரை என்பவற்றில், வரை - இட எல்லையையாவது கால எல்லையாவது குறிக்கும். "அது வரை" என்பதை, "அது மட்டும்" என்று கூறலாமென்றாலும், இவை இரண்டும் பொருள் வேறுபடுமிடமும் உண்டு.

"நாலு மணிக்கு 'பிரசாதம்" கொடுப்பார்கள். ஆனால் அது வரை என்னால் காத்திருக்க முடியாது. நான் வேலைக்குப் போகவேண்டும்," என்கிறார் ஒருவர்.

இங்கு "நாலு மணி மட்டும் என்னால் காத்திருக்க முடியாது" என்று பேசுவதுண்டு. இந்த மட்டும் என்பதை "முட்டும்" என்று சிலர் பேசுகிறார்கள். இங்கு முட்டுவதற்கு ஒன்றுமில்லை, மட்டும் என்பதையே அவர்கள் அவசரத்தில் அப்படி உச்சரிக்கிறார்கள்.

:அவனை மட்டும் உள்ளே அனுப்பு" என்ற வாக்கியத்தில், மட்டும் என்பதற்குப் பதிலாக "வரை" என்பதைப் போட முடியவில்லை.

ஆகவே, "மட்டும் = வரை" என்று சொல்ல முடியவில்லை.

"கண்ணிருக்கும் வறை" என்று நண்பர் ஒருவர் எழுதியுள்ளார்.http://www.mayyam.com/talk/showthread.php?10100-%26%232965%3B%26%232979%3B%26%233021%3B-%26%232953%3B%26%232995%3B%26%233021%3B%26%232995% 3B%26%232997%3B%26%232993%3B%26%233016%3B-%26%232986%3B%26%233006%3B%26%232992%3B%26%233021% 3B%26%232980%3B%26%233021%3B%26%232980%3B%26%23300 7%3B%26%232992%3B%26%233009%3B%26%232986%3B%26%233 021%3B%26%232986%3B%26%233015%3B%26%232985%3B%26%2 33021%3B&p=967589&viewfull=1#post967589 இங்கு கவனிக்க வேண்டியது என்னவெண்றால், "வரை" வேறு, வறை வேறு.

வறை என்பது வறுத்த இறைச்சியைக் குறிப்பது.

Here are some words from the root "vaRu".

வறு - வறுத்தல்.
வறு > வறுவல்.
வறு >வறை.
வறு > வற்று > வற்றுதல்.
வறு > வற்றல்.

வறு > வறுமை
வறு > வறியவர், வறியோர்.

எனப்பல.

bis_mala
25th November 2012, 01:38 PM
ரத்து


ரத்து என்ற சொல் தமிழன்று என்பதே பொதுவான கருத்தாகும். ஆனால் தமிழ் மூலங்களை உடைய சொல் என்பதை முன்பு வேறோர் இணையதளத்தில் காட்டியிருந்தேன். அந்தத் தளம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போது மீண்டும் அந்தச் சொல்லைக் காண்போம்.

இறு > இறுதல்= முடிதல்.
இறு > இறுதி என்பதைக் காணவும்.
அறு> அறுதல் : அறுந்து போதல், அற்றுப்போதல்.
அறு > அற்று என்பது வினை எச்சம்.
அறு > அற்று என்பது அத்து என்று பேச்சு வழக்கில் வரும்.
இறு+ அத்து = இறத்து > றத்து > ரத்து.
தலை போய் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டதால் அது வேற்று மொழிச்சொல் போல் தோன்றுகிறது.
அற்று இறுதல் என்பதே இறு அத்து என்று முறைமாறி அமைந்துள்ளது.
இதேபோல் அமைந்த ரவிக்கை என்ற சொல்லையும் கண்டு தெளிக.
முறை மாறி அமைந்துள்ளதால், இதைத் தமிழெனல் ஆகாது என்று இலக்கணியர் கூறலாம்.
சொல்லை ஆய்ந்து எழுதுவது மட்டும்தான் நம் வேலை. முறைப்படி அமையாவிட்டால் இப்போது நாமென்ன செய்வது?

வேறு முடிபும் உண்டு. அது வைப்பில் உள்ளது,

bis_mala
26th November 2012, 04:39 PM
continue from last post

முறைப்படி அமையாத சொல் என்றால் இப்போது நாம் மறு அமைப்புச் செய்யலாகாதா என்று வினவலாம். தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. விவாக ரத்து என்பது பிடித்தமாக இல்லையென்றால். மணவிலக்கு என்ற சொல் இருக்கிறது, அதுவும் மக்களிடையே புழக்கத்தில் இருக்கிறது அன்றோ?

சரி, விளையாட்டுக்காக, இப்போது ஒரு புதுச்சொல்லைப் படைத்துப் பார்ப்போமே!

இறு+அற்று > இறு+அத்து >இரத்து > ரத்து.

சரி,

இறு + அற்று என்பதை அப்படியே மறுசீரமைப்புச் செய்தால்,

இற்று + அறு= இற்று + அறு+ வு = இற்றறவு என்று வரலாம்.

வினை எச்சம் முன்னும் வினைப்பெயர் (தொழிற்பெயர்)பின்னுமாகத்தான் வரவேண்டும்.

இனி இன்னொரு வகையில் பார்க்கலாம்.

அற்று+ இறுதல் > அற்று+ இறு+ வு > அற்றிறவு எனலாகும்.

இவை இரண்டுமே சற்று மலைப்புத் தரும் சொல்லாக்கங்களாகவே தோன்றுகின்றன.

விவாக ரத்து என்பதே நன்று,இல்லாவிட்டால் மணவிலக்கு என்று சொல்லிவிடலாம் என்று தோன்றவில்லை?

இப்படியெல்லாம் போட்டுப் பார்த்துத்தான் பின்னர் இறத்து >ரத்து
என்று அமைத்தனரோ அறியோம்.

bis_mala
26th November 2012, 06:08 PM
எதையும் ( அதாவது நல்லது எதையும்) இறத்து (ரத்து)ச் செய்யாதிருப்பதே நல்லது. அதாவது, விவாகத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

இல்லறவாழ்வே இனிது என்பது நம் நூல்களின் முடிவு ஆகும். காரணம் இல்லறம் விழுமியது. (சிறந்தது).

விழுமிய வாழ்வு ஆகும்.

வி = விழுமிய.
வா = வாழ்வு.
ஆகும். இதைச் சற்று மாற்றி: ஆகு+அம் = ஆகம்.

வி + வா+ ஆகம் = வி+ வா+ (ஆ) கம் = விவாகம்.

விவாகம் என்பது ஒரு குறுக்கம்.

விவாகம் > விவாஹ.

இது இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் பரவியுள்ளது. விவா = உயிர் வாழ்தல்.

an intervivos gift....

வாழ்வு : விவா. வைவோஸ் viva, vivos etc

bis_mala
3rd December 2012, 01:28 PM
மேற்கண்ட இடுகையின் தொடர்ச்சி:

ஆகம் என்பது விவாகம் என்ற குறுக்கச் சொல்லில் ஈறு என்பது காட்டப்பெற்றது.

இதையும் ஒப்பு நோக்குங்கள்:

நிறுவு - நிறுவுதல்.

நிறுவு + ஆகம்= நிறுவாகம் > நிருவாகம் > நிர்வாகம்.

ஆட்சி செய்தற்கு நிறுவப் பெறும் ஓரு குழு. ஆட்சி செய்தல் அல்லது இயக்குதல்.

முழுமையாகப் பிரிப்பதென்றால்: நிறுவு+ஆகு+அம்.

இதை முன்பு எழுதியுள்ளேன்.

இங்கு றகரம் ரகரமாக மாறியுள்ளது காண்க.

bis_mala
4th December 2012, 10:00 PM
பெரு என்ற அடிச்சொல்லிலிருந்து ஆன சொற்களில் சில:

பெரு > பெருகு.

இங்கு -கு என்பது ஒரு வினைச்சொல்லாக்க விகுதி.

எடுத்துக்காட்டு: மூழ் > மூழ்கு.

(முழு > மூழ்)

பெரு > பெரிய.
பெரு > பேர் (பெரிய என்னும் பொருளில்)

தொடரும்.

bis_mala
5th December 2012, 03:52 AM
முன் இடுகையின் தொடர்ச்சி:

பெயர் என்னும் சொல்லும் திரிந்து "பேர்" என்றாகும்.

"ஊரும் பேரும் தெரியாதவனை உயர்ந்தோன் ஆக்கும் பணம்"

பெரு > பேர்
பெயர் > பேர்

இருவேறு சொற்கள், திரிபில் ஓர் உருவை அடைந்தன.

ஆய்வு செய்வோர் இத்தகைய சொன்முடிபுகளையும் கவனிக்கவேண்டும்.

தொடரும்.

bis_mala
5th December 2012, 04:57 PM
continued from previous post

நிறுவாகம் (நிருவாகம்> நிர்வாகம்) என்பதையும் விவாகம் என்பதையும் கண்டோம். இவற்றின் சொல்லிறுதியாகிய "ஆகம்" என்பதை உணர்ந்தோம்.

இதுபோது இன்னோர் "-ஆகம்" என்று முடியும் சொல்லை ஆய்வோம்.

பெரு > பெருகு > பெருக்கு

இதன் பொருள்களில் "நீர்ப்பெருக்கு" என்பதுமொன்று, பதினெட்டாம் பெருக்கு என்ற வழக்கை நோக்குக.

இதன் அடிச்சொல் " பெரு" என்பது.

பெரு + ஆகம் = பெருவாகம் >பிரவாகம் = பெருக்கு, நீர்ப்பெருக்கு,

இதிலுள்ள "பிர-" என்பது முன்னொட்டு என்று முன்பு ஆய்ந்தோர் கருதினர். அப்படி கருதியது ஒரு பிறழ்பிரிப்பு
(metanalysis) ஆகும்.

ஆகம் என்பது ஒரு பின்னொட்டு ஆதலால், பெரு என்பது பேர் என்று திரியவில்லை.

பிரவாகம் என்பது தமிழ் மூலங்களை உடையது எனினும்,அதைத் தமிழ்ச்சொல் என்று நிறுவுதல் கருத்தன்று.

bis_mala
10th January 2013, 09:44 PM
நள் என்பது ஒரு பழந்தமிழ்ச் சொல். இக்காலத்தில் இச்சொல் தனியாக வழங்கவில்லை. நான் எந்த "நள்" ளைச் சொல்கிறேன் என்பது கொஞ்ச நேரத்தில் புரிந்துவிடுமாதலால் அதன் பொருளை இப்போது விளக்க வேண்டியதில்லை.

நள் > நள்+பு > நட்பு.
நள் >நள்+பு >நண்பு > நண்பன், நண்பர்.

நட்பு என்பது வலித்தற் புணர்ச்சி.
நண்பு என வருவது மெலித்தற் புணர்ச்சி.

நண்பு என்பது தனியாகப் பேச்சில் வழங்கவில்லை. இலக்கிய வழக்கில் இருக்கின்றது. நண்பன் என்ற சொல்லில் அது உள்ளே புகுந்து ஒளிந்துகொண்டு பேச்சில் அவ்வப்போது தலைகாட்டுகின்றது.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஒரே சொல் விகுதி பெற்று இருவகையாகவும் புணரும் என்பதுதான்.

நள் பு - நட்பு, நண்பு.

நடு என்று பொருள்தரும் "நள்" வேறு.

-----------------------------------------------------------------------------------------

I deliberately chose a theatre group for my scholarship as I did not want to be associated with any university structure. Dr Converse, prof at Washington State University. Fullbright Scholar

bis_mala
11th January 2013, 02:24 PM
இனி, மேற்கண்ட நண்பு என்னும் சொல்லமைப்பை, நள் > நண் > நண்பு
என்று காட்டினும் அதில் தவறில்லை. "பு" என்னும் ஈற்றைக் கொண்டு புணர்த்துதலாலன்றி, இயல்பாகவே அங்ஙனம் ள்>ண் திரிபு நிகழ்ந்துள்ளதாகவும் ஆசிரியர்சிலர் காட்டக்கூடும்.

இவற்றுள் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகக் கருதுவதற்கில்லை

இது நிற்க இன்னொரு சொல்லை இங்கு ஒப்பிடுவோம்.

அது "வெள்" என்ற அடிச்சொல்.

வெள் > வெள்ளை. (வெள்+ஐ)

வெள்+பா = வெண்பா.
வெள் > வெண்> வெண்பா எனினுமாம்.

வெண் > வெண்பு (வெள்+பு)

இதுபோலவே,

அள் > அள்ளு > அள்ளுதல்.

அள் > அண்புதல் > அண்முதல்..

கை நெருங்கினால்தான் அள்ளமுடியும். அள் என்பது நெருங்குதல்
கருத்துடைய பண்டைத் தமிழ் அடிச்சொல்.

ளகரம் ணகரமாதலும் பகரம் மகரமாதலும் தெளியலாம்.

இங்கு கூறப்பட்ட விதிகளை அறிந்துகொண்டு, கொண்டபின் "பண்" என்ற சொல் எங்ஙனம் அமைந்திருக்கும் என்று நீங்கள் கூறலாமே!

bis_mala
4th February 2013, 03:45 PM
காலிபிளவர் என்பது நாம் சமைத்துண்ணும் ஒருவகைக் காய்கறியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்.
இது ஸ்காட்லாந்துச்சொல் " கோலே", ஜெர்மானிய "கோல் ஸ்லா" இலத்தீன் காலிஸ் முதலியவற்றுடன் தொடர்பு உள்ளதென்பர். இதன் அடிப்படைச் சொற்பொருள் கால்- கோல் (stem, stalk. stick) , பூ ஆகியவை என்பர்.

தமிழில் கால் - கோல் என்பவை நீட்சி குறிக்கும் சொற்கள். கால் > காலி எனின் " காலை உடையது" என்று பொருளுரைக்கலாம்.

இந்தக் கால்கள், காலிபிளவரில் ஒன்றுக்கு ஒன்று பிளவு பட்டு நிற்பவை. பிளவு >பிளவர். இது ப்லோரா (flora) என்ற இலத்தீன் சொல் எனப்படுகிறது. பிளவுறு என்பதும் பிளவுர்> பிளவர் என்று திரியலாம். அல்லது அர் என்பது சொல்லீறு என்று விடுத்துவிடலாம்.

பூக்களும் மொட்டு பிளந்து வருபவையே ஆகும். பிளவர் என்பதும் நன்கு ஆராயத்தக்கதாம்.

தமிழ் ஒரு மூலமொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல இலக்கம் சொற்களை ஆய்ந்து ஆய்ந்து இதனை விளக்கலாம்,

காலிபிளவர் என்பது தமிழென்று நிறுவுதல் நோக்கமன்று. We just want to refer to the Tamil roots of the Latin language.

bis_mala
13th February 2013, 10:47 PM
விநாயகர் பிற்காலத்தில் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் என்று ஆய்வாளர்கள் கூறுவர். விநாயகன் என்ற சொல்லும் வி+ நாயகன் என்று பிரிக்கப்பட்டு, சமஸ்கிருதச் சொல் என்று சொல்லப்படும்.
இனித் தமிழிலும் இதற்குப் பொருள் கூறுவதுண்டு,

வினை + ஆயகன், அதாவது வினைகளை ஆய்ந்து அவற்றை ஒதுக்குபவன் என்பதாம். வினை என்பதில் உள்ள "ஐ" கெட்டுப் புணர்ந்ததென்பர். ஆய் = ஆய்தல். அகம் - அகன்.

bis_mala
14th February 2013, 05:30 PM
பச்சையாக நடத்தல், பச்சையாகப் பேசுதல்.


பச்சை, பாசி, பாசம் (பாசம் பிடித்திருப்பது). பாசிலை, பச்சூன், பச்சிலை, பச்சோலை, பச்சைப்பெருமாள், பச்செனல், பாசிமணி, பாசிப்பயறு, பசுத்தல், பைங்கிளி, பசுங்கிளி, பசும்பால் (பச்சைப் பால்), பசலை -- என்று பச்சை குறிக்கும் அல்லது நிறத்தோடு தொடர்புகொண்ட சொற்கள் பல

பகரத் தொடக்கத்துச் சொல், பா என்று நீண்டும், பசு-, பை- என்று திரிந்தும் நிற்பதை மேலே கண்டுகொள்ளலாம்.

இடக்கரானவற்றைப் பேசுங்கால், அவற்றை அடக்கிப் பேசாதவன், "பச்சையாகப் பேசுகிறான்" என்பது வழக்கு.

பாசம் என்பது பச்சை குறித்தது.

இனி, பாசம் என்பது ஆபாசம் என்று ஆகாரம் பெற்று பச்சையாகப் பேசுதலை, அல்லது நடந்துகொள்ளுதலைக் குறிக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் வானைக் குறிக்கும் காயம் என்பது, ஆகாயம் என்றும் ஆகாசம் என்றும் திரிந்தாற்போல.

ஆகாயம் - காயம் ஆவது.

ஆபாசம் - இடக்கரடக்கல் இல்லாதது. பச்சை ஆவது.

ஆபாசம் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள், அனார்ய, அசப்த என்பன.

bis_mala
7th July 2013, 12:27 PM
அத்துப்படி என்ற சொல்


அத்துப்படி என்ற சொல் இதுபோது வழக்கில் உள்ளது. இது ஒரு பேச்சு வழக்குச் சொல்.

இது எங்ஙனம் அமைந்தது என்று ஆராயவோமா?

ஐயப்பாடு (சந்தேகம்) யாதுமில்லாமல் மனத்தில் பதிந்து தெளிவாய் இருப்பதான ஒரு நிலையைக் குறிப்பதே இந்தச் சொல்.

அற்று என்பது அத்து என்று பேச்சுவழக்கில் மாறியுள்ளது.

You may read on this more at http://sivamaalaa.blogspot.com/

rsubras
8th July 2013, 01:45 PM
not sure if this is the correct thread for posting my queries, sivamala ur efforts have been great, need your help for choosing a name for our new born (girl).....there are many fashioned, nice sounding, (having) good meaning words to choose from for a girl name, but most of them are derived from sanskrit or mixture of other languages, wanted to go for a pure tamil name that is simple, fashioned, unique, (with) a positive meaning, couldnt get much from the internet. Though there are sites that offer 5000+ names most of the names are old fashioned or derived from a repeated set of words (poo, tamizh, etc.,) names that impress us are either taken by acquaintances (ilakkia, venba, kavinaya etc.,) or used in a song / comic situation by Vairamuthu or Vivek (like angavai is a very good name, but made mockery of in Sivaji film, likewise usitha (in anniyan), poompavaai) . As of now have zeroed in on one name, niralya which is supposed to mean Orderly, but in the vast ocean of tamil literature, i expect there to be so many choices for me to choose from, need your help in finding one..... I feel, Even if not in a single tamil word, atleast suffixing with -tha -ya etc (if it makes sense) we can derive some words. do we have a set of sanga / ancient tamil words that would mean Healthy, happy, (make) cheerful, God blessed, Blessings for a long life etc., which could help me in formulating a good name :)?

bis_mala
11th July 2013, 10:25 PM
Hi welcome to this thread.

I will be back shortly with some names for you.

In the meantime, our other great hubbers can also contribute.

rsubras
12th July 2013, 01:22 PM
thanks Siva mala, I will create one thread for this, so that varungala santhathiyanarum use pannuvanga..... :)

bis_mala
14th July 2013, 09:57 AM
Hi
( my post to your thread was repeated by error and I waw trying to delete one. The delete feature does not seem to work.Hence I have just left it. Hope the moderator cancels the redundant post.

Next I tried to replace the redundant post with the following names, the edit feature gives a rotating sign but fails to load, ) so here are the extra ones I was trying to post.

Hope by now you have got the name you like for your baby girl. Congrats and enjoy your time with your loved one.


பகல்யா
பகலினி
கவின்யா, கவினி, கவின்முகி
வான்மதி
வான்யா/வானியா
அனிச்சா
(மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து)
முகனி
(முகனமர்ந்து நல்விருந்தோம்புவான்....குறள் 94)
இனிதினி
எழுதிரைச்செல்வி
எழுதிரா
எழிலினி, எழிலி
inbithaa (inbam+itham), inbA இன்பிதா, இன்பா


People who want to twist the names may be able to do so with any name with great dexterity. They have done so with airline names, people's name etc., You may have heard of them, E.g., To the question "how did Singtel get the contract?" the answer came from a then prime minister: " They sing and tell, so they got it!". Another one; singapore, singing over a pore (pores of skin .......) There are many. Take such possibilities in account but do not be overly concerned about such. All the best.

bis_mala
18th July 2013, 12:29 PM
தண்ணி, வாணி என்பன பேச்சு வழக்குச் சொற்கள். இவை எங்ஙனம் தோன்றியவை என்பது யாவருமறிந்ததே.

வாய் நீர் என்பது வாணி என்று வழங்குகிறது. இந்த "வாணி" ஆகாசவாணியில் வரும் வாணியன்று. இந்த வாணி வேறு.

தண் நீர் - தண்ணீர் என்பது குறுகித் தண்ணி என்று வழங்குகிறது.

நீர் என்பது "ணி" ஆகும்.

பாணி என்ற வேற்றுமொழி வழக்கில் வரும் ணி-க்கும் இதற்கும் தொடர்பு உண்டோ?

rsubras
18th July 2013, 03:18 PM
Mala -> appo how did the name Kalai Vaani came? (Saraswathi) i think here also Vaani is a pure tamil name

bis_mala
18th July 2013, 05:55 PM
மலையில் வாழ்வோரை மலைவாழ்நர் என்றனர். இதுபின் மலைவாணர் என்று திரிந்தது.

வாழ்நாள் என்ற சொல், வாணாள் என்று திரிவதையும் அறிந்திருப்பீர்கள்.

இது ழ்+நா = ணா என்பதை உணர்த்தும்.

சோழ + நாடு = (சோழ்)+ நாடு = சோணாடு. சோழ என்பதில் உள்ள அகரம் கெட்டுப் புணர்ந்தது என்பர் இலக்கணியர். அகரம் தொலைந்ததா அல்லது சோழ் என்பதுதான் அடிச்சொல்லா என்கிற ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும். ழ்+ நா = ணா எனற்பாலதை மட்டும் கவனித்துக்கொள்ளுங்கள்.

மலையில் மக்கள் வாழ்கிறார்கள். அதனால் மலைவாழ்நர், மலைவாணர் என்பன பொருத்தமான புனைவுகள்.

கலை என்பதோ உருவற்றது. இடத்தில் வாழ்வதற்கொப்ப, கலையில் மற்றும் கவியில் சிலர் திறன்காட்டியதால், கலைவாணர், கவிவாணர் என்று போற்றப்பட்டனர்.

மலையில் உண்மையில் வாழ்வதைப்போல, கவியும் கலையும் இடங்களல்ல, வாழ்வதற்கு! எனினும் ஒப்புமையாக்கம் நிகழ்கின்றது.

கலையில் வாழ்பவர் - கலையால் வாழ்பவர், கலையில் மிகுந்த புலமை உடையவர் கலைவாணர் என்றுமாயினர். கலையில் தந்துறை போகிய அருங்கலைஞர்! அதேபோல், கவிவாணர்.

பெண்பாலைச் சுட்ட நேர்ந்தபோது, கலைவாணி, கவிவாணி, இசைவாணி என்றெல்லாம் சொற்கள் புனையப்பெற்றன.

வாழ்நர் என்பதிலிருந்து வாணர் தனித்தன்மை (ஒரு சுதந்திரம் போல)பெற்று தனக்குரிய பெண்பால் வடிவையும் பெற்றுக்கொண்டது.

xவாணன் > xவாணி. (where x stands for a preceding word qualifying it)

மலையில் வாழ்வோர் மலைவாணர்.
கலையில் வாழ்பவள், குடிகொண்டிருப்பவள், அதை முன் நின்று இயக்குபவள் கலைவாணி.

வாழ்நர் என்பதுபோல வாழ்நி என்ற பெண்பால் வடிவம் இல்லை.( நான் கண்டதில்லை.)

வாணர் முதலில் திரிந்தமைந்து, பின் வாணி அமைந்ததே காரணம்.

வாழ்நர் என்பது வெறுமனே வாழ்தலைச் செய்பவரையே குறிக்கும், ஆனால், வழக்காற்றின் காரணமாக, வாணர் என்பதற்குத் திறனுடையவர் என்ற பொருள் மேலேறிக்கொண்டுவிட்டது. இதனைப் பொருண்மை உயர்பு எனக் குறிக்கலாம்.

Language progresses from something material to something abstract. The above will also demonstrate this clearly.

note: சங்கதத்திலும் வாணி என்ற சொல் காணப்பெறுகிறது. அது நெயவு, நெயவுத் தறி, வண்டித்தடி, சரசுவதி என்ற பொருள்பல வுடையது. சங்க காலத்தில் கலைவாணி பேச்சாயி எனப்பட்டாள். பேச்சுக்கு ஆயி அல்லது தாய். சங்கதத்தில் கலைவாணி என்னாமல் வாணி என்று மட்டும் முன்னிலை பெற்றுவிட்டது தெரிகிறது. கலை அல்லது கலா என்பது எப்படி சங்கதத்தில் உள்ளதென்று ஆய்வாளர்களுக்கு ஐயப்பாடு உண்டு. சங்கதச் சொல் வாய் என்பதனோடு தொடர்புடையது என்று தெரிகிறது. தமிழ் வாணி வேறு சங்கத வாணி வேறு எனலாம்.
Tamil refers to KalaivANi rather than vANi per se.

Sometimes, words arise from different roots and achieve a similar form. They may also have close or similar meaning. Some such words have been explained in the past. One easy example is parliament and பாராளுமன்றம் now usually நாடாளுமன்றம்.

Skrt vANi is a stand-alone word. You do not have to add kalai or kala to it to make the meaning.

bis_mala
20th July 2013, 07:15 PM
இனி, அவானி, லெவானி, சிவாணி (ஷிவானி) என்னும் வட இந்தியாவில் வழங்கும் பெண் பெயர்களும் சுருங்கி "வானி" அல்லது வாணி என்று வழங்குதலும் உண்டு என்று அறிந்துகொள்ளலாம்.
பவானி என்ற பெயருள்ளவர்களையும் சிலவிடத்து "வாணி" என்பதும் உள்ளதென்று தெரிகிறது. வாணி என்பது மராட்டியத்தில் ஓரிடத்திற்கும் பெயராய் உள்ளது.

சங்கத மொழிச்சொல் " வாணி" வங்காள மொழியில் உருவானதாகச் சிலர் கூறுவர். வற்றிப்போனதாகக் கூறப்பெறும் சரசுவதி யாற்றுக்கும் அதற்கும் தொடர்பு கூறப்படுகிறது. ஆகவே சங்கதச் சொல் வாணிக்கு விரிவான ஆய்வு தேவைப்படலாம்.

சங்கத வாணிக்கு, வாக்(கு) என்பதே மூலமாகக் கூறப்படுகிறது.

இதில் கு என்பது பின்னொட்டு (விகுதி),

நா > நாக்கு.
மோ > மூ > மூக்கு
வாய் > வா > வாக்கு.

வாய் > வாய் நி > வாணி, (வாயினின்று புறப்படும் ஒலி, பேcசு.)

நி என்பது நில் என்பதன் கடைக்குறை.

இது ஆராயத்தக்கது.

Happy research to thiru rsubras with the new-born daughter beside him.

bis_mala
20th July 2013, 07:20 PM
இனி, அவானி, லெவானி, சிவாணி (ஷிவானி) என்னும் வட இந்தியாவில் வழங்கும் பெண் பெயர்களும் சுருங்கி "வானி" அல்லது வாணி என்று வழங்குதலும் உண்டு என்று அறிந்துகொள்ளலாம்.
பவானி என்ற பெயருள்ளவர்களையும் சிலவிடத்து "வாணி" என்பதும் உள்ளதென்று தெரிகிறது. வாணி என்பது மராட்டியத்தில் ஓரிடத்திற்கும் பெயராய் உள்ளது.

சங்கத மொழிச்சொல் " வாணி" வங்காள மொழியில் உருவானதாகச் சிலர் கூறுவர். வற்றிப்போனதாகக் கூறப்பெறும் சரசுவதி யாற்றுக்கும் அதற்கும் தொடர்பு கூறப்படுகிறது. ஆகவே சங்கதச் சொல் வாணிக்கு விரிவான ஆய்வு தேவைப்படலாம்.

சங்கத வாணிக்கு, வாக்(கு) என்பதே மூலமாகக் கூறப்படுகிறது.

இதில் கு என்பது பின்னொட்டு (விகுதி),

நா > நாக்கு.
மோ > மூ > மூக்கு
வாய் > வா > வாக்கு.

வாய் > வாய் நி > வாணி, (வாயினின்று புறப்படும் ஒலி, பேcசு.)

நி என்பது நில் என்பதன் கடைக்குறை.

இது ஆராயத்தக்கது.

Happy research to thiru rsubras with the new-born daughter beside him.

bis_mala
24th July 2013, 07:30 PM
அந்தஸ்து என்பது அயன்மொழிச் சொல். (Skrt) இது இறுதியில் ஒருவன் எப்படி தகுதிநிலை பெறுகின்றான் என்பதைக் காட்டுவதாகக் கூறுவர். எனவே ஒருவன் கடைசியில் எத்தகுதி அடைகிறான் என்பதைப் பொறுத்தே அவனது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது என்பது கருத்து,

இதில், அந்தம் = இறுதி. ஸ்தா என்பது நிற்றல் பொருளது. ஸ்தாபன என்பதில் இந்த ஸ்தா உள்ளது.

இந்த அடிச்சொற்கள் மேலை நாட்டுச் சொற்களிலும் உள்ளன. ஆங்கிலத்தில் கூட, தொடர்புடைய சொற்கள் உள்ளன. அந்த - end. ஸ்த - stand

இதற்குத் தமிழ் மூலங்கள் உள்ளனவா?

bis_mala
3rd August 2013, 04:48 PM
விரிதருதல் என்பது விரிதல், விரிந்துதருதல்,விரிவடைதல் என்று பொருள்படும்.

விரிதரு+அம் = விரிதாரம் என்று அமையும்.

விரிதாரம் - விஸ்தாரம்.

தரு+ அம் = தாரம். root: tharu.
பரு+ அம் = பாரம் என்பதுபோல. root: paru

ஒன்று பருத்துவிடுமாயின் பாரமாகிவிடும்.

எதுவும் நிறுத்தமடையாமல், துருவிச் சென்றுவிடுமானால், துருவு > துரு > தூரம், அது செல்லுமிடம் தூரமாகிவிடும்.

துரு> துருவு : to overcome obstacles and proceed through.
துரு > தூரம்

bis_mala
12th August 2013, 12:14 PM
விரி > வி > வீ.

விரிதரம் > விதரம். (இது விரிசலைக் குறிக்கும் சொல்). cleavage.

இங்கு விதரம் என்பதில் தரம் : தரு+அம் = தரம் என்று ஆனது, தாரம் என்று நீளவில்லை as in previous examples.

விரி+ தி = விரிதி > வீதி.

வீ - separation, removal. .

வீதி = (where the sides are separated from one another with s substantial width in between.)

வீ > வீதல்.

இங்கு நீண்டது, விரி > வீ என.


வீ > வீதி

bis_mala
22nd August 2013, 10:21 AM
அஸ்திவாரம் என்ற சொல்லுக்கு முன்பு யான் விளக்கம் எழுதி வெளியிட்டுள்ளேன். அதை நண்பர்கள் சிலர் மறந்திருக்க மாட்டார்கள்.

அஸ்திவாரம் போடும்போது, உண்மையில் தரையை அழுத்தி மண்வாருவது நன்கு புலப்படுகிறது.

அழுத்திவாரு - அழுத்திவாரம் - அஸ்திவாரம்;

அழுத்தி - ஆழமாக.

தொடர்வோம்.

bis_mala
23rd August 2013, 05:02 PM
continued from post no. 375 above.


தழுக்குதல் என்பது ஒரு பழந்தமிழ்ச் சொல். இது ஒருவன் வாழ்வில் வளம்பெற்று உயர்வதையும் குறிக்கும். இதன் அடிச்சோல் "தழு " என்பது. tazukku-tal - to flourish, prosper

அம் என்பது அழகு குறிப்பது .

அம் + தழு + து = அந்தழுத்து > அந்தஸ்து .

இப்படியாக இச்சொல்லுக்கு தமிழ் மூலமும் .காணலாம்.


Here you need to note the ழு> ஸ் change.

அழுத்திவாரு - அழுத்திவாரம் - அஸ்திவாரம் was explained in the previous post. Again: ழு> ஸ் change.

bis_mala
24th September 2013, 10:08 AM
(தெர்) > தெரி

(தெர் ) > தெருள்

(தெர் ) > தெருள் > தெருட்டு > தெருட்டுதல்.

(தெர்)) > தெருள் > (தெருட்டி) > திருட்டி. > திட்டி.

திட்டி சுற்றிப் போடுதல், கண்திருட்டி.

"Ther" (தெர்)) is the root word.

Words which have gone out of existence in the process of evolution of language are usually shown in brackets.


தமிழில் சொற்கள் (முதனிலை அல்லது பகுதிகள்) ஒற்றைக் குறிலடுத்து ரகர ஒற்றுடன் இயல்வதில்லை, இடைச்சொற்கள் தவிர. ஆயினும் தெளிவின் பொருட்டு இங்கு "தெர்" என்றே காட்டப்பெற்றிருக்கிறது. இறுதியில் உகரம் நின்று "தெரு" எனத் தரப்படின் அவ்வடிவிலான வேறு சொல்லுடன் மயங்குமாதலின்.

bis_mala
24th September 2013, 10:32 PM
தெரி என்ற சொல்லினின்று தோன்றிய சில அருஞ்சொற்களை அறிந்துகொள்ளுதல் ஈண்டு பொருத்தமாக இருக்கும்,

தெரிகவி : இது பொறுக்கி எடுக்கப்பட்ட கவி அல்லது கவிதைத் தொகுதியைக் குறிக்கிறது. selected poem or anthology of selected poems

தெரிக்கல் : விவரமாகத் தெரிவித்தல் என்று பொருள்.

தெரிமா = அரிமா ( சிங்கம் ).

தெரிநிலை - clearly indicated , highlighted state.

தெரிகடை *= குப்பை கூளம், கைவிடப்பட்டது

தெரிசொற்கள் * - glossary.


Further discussion pl see http://sivamaalaa.blogspot.com/
"தெர்" என்னும் அடிச்சொல்லும் தெரி என்பதினின்று தோன்றிய சில சொற்களும்.

bis_mala
15th November 2013, 10:27 PM
பிரித்தியங்கரா தேவி என்பதை பிரித்து+ இயங்க + அறா+ தேவி என்று பிரிக்கவும்.

இத் தொடர்மொழிப் பெயரில், பிரித்து என்பது உண்மையில் பிரிந்து என்பதன் வலித்தல் ஆகும். வலித்தல் எனின் "ந்து" என்பது "த்து" என்று வல்லெழுத்துப் பெற்றது என்பதாகும். இது புதியதன்று. விகுதி சேரும்போது வலித்தல் போன்றதே இது. வருந்து > வருத்தம், பொருந்து> பொருத்தம் முதலியன உங்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுக்கள்.

பெருமானிடமிருந்து பிரிந்து என்று பொருள்கூறாமல், பெருமானிடமிருந்து தன்னைப் பிரித்து, அல்லது பிரித்துக்கொண்டு என்னின், இதன்பொருள் இன்னும் எளிதாகிவிடும்.

பிரிந்த பின், அல்லது பிரித்துக்கொண்ட பின், இயங்க = தனித்து அமர்ந்து அருள்பாலிக்க, அறா = அறாத, தேவி = தெய்வம் என்பது பொருள்.

தனித்து அவள் நிற்க, பற்றாளன் அவளைத் தாழ்ந்து பணிந்தாலும், அவனுக்குப் பெருமானின் அருளும் தானே வந்துறும் என்பது தெளிவாகும்படி "அறா" என்ற பதம் உள்பதியப் பட்டுள்ளது கண்டு இன்புறலாம். இது பின் பெயரில் "அரா" என்று மாறியுள்ளது.

இயங்க அறா > இயங்கறா: இங்கு ஓர் அகரம் கெட்டது.

வீறு என்பது அம் விகுதி பெற்று வீரம் என்று திரிந்துள்ளது நோக்குக.
விறுவிறு என்று போனான். விர்ரென்று போனான் என்ற வழக்குகளை நோக்குக. ரகர றகர எழுத்துமாற்றங்கள் தமிழுக்குப் புதியவை அல்ல.

bis_mala
3rd December 2013, 08:07 PM
இனி, ayal என்ற சொல்லுடன் சற்று விளையாடலாம்.


ஐயம், என்பது ஐயப்பாடு. இதன் பகுதி யாகக் கருதத்தக்கது ஐ ஆகும். ஐ+அம் = ஐயம்.

ஐ = அய்.

அல் என்பது அல்லாததைக் குறிக்கும் அடிச்சொல்.


அய் + அல் = அய்யல் > அயல். > அசல்.


அய்யல் என்றுதான் யகரம் இரட்டிக்க வேண்டுமென்பதில்லை.

பை > பையல் > பயல் > பசல் > பசன் > பசங்க....

(Some bug here: When I write "ayal" in Tamil it changes by itself to "ayala". The dot goes missing. Please read it as it should appear.)

bis_mala
18th December 2013, 09:37 PM
ஏகலைவன் என்பது தமிழ் வடிவம். சங்கதத்தில் ஏகலவ்யா. ஏகலைவன் என்று நேர்புனைவாக இல்லாமல் ஏகலைவ்+ய்+அ(ன்) என்று மாற்றம்பெற்றுள்ளது. வகர உடம்படு மெய்யும் யகர உடம்படு மெய்யும் உள்பொதியப்பட்டு, ஆண்பால் னகர ஒற்று களையப்பட்டுச் சொல்லாக்கம் பொற்றுள்ளது. ஏகலைவன் கரு நிறத்தோன் என்பதும் கவனிக்கத் தக்கது.

வட பெரு நிலப்பகுதியில் கருப்பு இனத்தோர் ஆட்சி செய்த பாகங்களும் இருந்தன என்பதும்
அவர்கள் பற்பல கலைகளையும் அறிந்திருந்தனர் என்பதும் இதனால் பெறப்பட்டது.

More expln in sivamaalaa.blogspot.com