View Full Version : Past one...
mathi
18th May 2006, 12:43 PM
காற்றில் அலையும்
சருகாய்
உன் மீதான
என் காதல்
உலர்ந்து உதிர்ந்துவிட்ட
போதிலும்
மெல்ல பறக்கிறது
காற்றுடன் நீ
கைகோர்த்து நடக்கையில்.
VENKIRAJA
20th May 2006, 08:52 PM
சுழல்
உன்னைச்சேர முடியாமல்
நான் உமிழ்ந்த எச்சிற்துளி
மெல்ல அந்த வாசஸ்தல அருவியினின்று,
பாறையின் காதலை உதறபடிக்கு
பயணித்து ஆறடைந்தது,
கரையின் காதலை
ஆறு துச்சமெனத்துப்பி,
என் எச்சிலை
ஆழியுள் புகுத்தியது.
கடலும் தீவைப்புறந்தள்ளி
மெல்ல அது முகிலாய்
பரிணாமித்தது,
மேகமும் உழவனின் அன்பை
விசிறியடித்துவிட்டு
சரியாக உன் வாயினுள்
அனுமதிக்கப்படுகிறது.
நான் வருகிறேன்
என் காதல் கடிதத்தோடு,
நீ வாயில் நுழைந்த எச்சிலை
என் உதடு வழியாக இதயத்திற்குள்!
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.