PDA

View Full Version : KAVICH CHAARAL [ SIVAMAALAA]



Pages : 1 [2] 3

chinnakkannan
2nd October 2011, 02:16 PM
கிறுக்கரே..வாங்க வாங்க..ஏதோ நானும் தான்கிறுக்கறேனாக்கும்.. பாருங்க பொய்யூன் கொடுத்திருக்காங்க..(புலவின் தமிழ்வார்த்தையா?)
*
பொய்யூன் கொடுத்த புலவியே நாங்களதை
மெய்யுள் செலுத்துவோ மே..

ஒருகவளம் தாவென்றால் ஒன்பதைத் தந்தே
சிறுவயிற்றை சோபித்தீர் தான்..

மாறும் சுவைக்கு மணமுடன் சேர்த்திட்ட
சாறுதான் சோயாவா சொல்..
(சோயா சாஸ் லாம் இல்லாமத் தான் என் மனைவி செய்திருந்தார்!)

மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
ஊன்இல்லாச் சோற்றை உணர்வுடன் கொடுத்தவும்
தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
பூந்தென்றல் தீண்டிய பூ

chinnakkannan
2nd October 2011, 02:24 PM
பானை வயிற்றுடனே பாந்தநடை கொண்டுவரும்
யானைக்கும் பாக்களைத் தா(ரும்)

chinnakkannan
2nd October 2011, 03:52 PM
வெண்பா வேண்டாம்..விருத்தமாய்த் தருக..

**
ரொம்ப நாளைக்கு முன்னால் எழுதிப் பார்த்தது..
*
மழைமுன்வரும் சிறுகாற்றென மகிழ்விக்குமுன் வதனம்
அலையால்வரும் சலனங்களில் அசைந்தாடிடும் கடலில்
வலைவீசிடும் வலைஞர்வலை விழும்மீனென திகைத்தென்
நிலைமாறிடச் செயினும்பல நெடுநாளுளம் இருக்கும்..

கனவில்நிதம் கனிவாய்முகம் களிகாட்டியே சிரித்தே
நனவில்பல தினமும்விதம் விதமாய்க்கதை படிக்கும்
ரணமானசொல் ரதியானவுன் ஒருபார்வையில் கரைந்தே
கணமும்மறைந் திடவேமனம் எளிதாகியே விடுமே

தனியாயெனைத் தயங்காமலே தளர்வாக்குதல் முறையோ
பணிவாயெனைப் பருவத்திலே அணைபோட்டிட வருவாய்
இனிமையினி யெனவேநினைத் திதயம்மகிழ்ந் திடவும்
பனிபோலவே மனமாறிட எனைச்சேர்ந்திடு அழகே..

kirukan
2nd October 2011, 05:22 PM
கிறுக்கரே..வாங்க வாங்க..ஏதோ நானும் தான்கிறுக்கறேனாக்கும்.. பாருங்க பொய்யூன் கொடுத்திருக்காங்க..(புலவின் தமிழ்வார்த்தையா?)
*
பொய்யூன் கொடுத்த புலவியே நாங்களதை
மெய்யுள் செலுத்துவோ மே..

ஒருகவளம் தாவென்றால் ஒன்பதைத் தந்தே
சிறுவயிற்றை சோபித்தீர் தான்..

மாறும் சுவைக்கு மணமுடன் சேர்த்திட்ட
சாறுதான் சோயாவா சொல்..
(சோயா சாஸ் லாம் இல்லாமத் தான் என் மனைவி செய்திருந்தார்!)

மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
ஊன்இல்லாச் சோற்றை உணர்வுடன் கொடுத்தவும்
தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
பூந்தென்றல் தீண்டிய பூ

கலக்குறீங்க பாஸ் !!!!

chinnakkannan
2nd October 2011, 06:06 PM
உணர்வுடன் - தளை தட்டி விட்டது..உணர்ந்து என மாற்றி..

மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
ஊன்இல்லாச் சோற்றை உணர்ந்து கொடுத்தவும்
தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
பூந்தென்றல் தீண்டிய பூ

chinnakkannan
2nd October 2011, 06:10 PM
முன்பு எழுதிய ஒரு விருத்தக்கதை..பலவருடங்க்ளுக்கு முன்னால்.. எழுதிப்பார்த்தது..
திண்ணையிலும் பிரசுரமானது..
**
’வெளி’யில் இருக்கும் கடவுளர்க்கு
...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு
வெளியில் வந்து நின்றாலே
...வருவோர் போவோர் தெரிவதுண்டு
உளியால் வரைந்த ஓவியங்கள்
...ஒன்றா இரண்டா பலவுண்டு
நளினங் கொண்ட நல்லவர்கள்
...நன்றாய் அதனை நடத்திவந்தார்

இடையில் இருக்கும் குழவிமுதல்
...இனிதாய்ச் சிரிக்கும் நங்கையரும்
கடைசிக் காலம் தனையெண்ணி
...கசிந்தே உருகும் கிழவியரும்
விடையைக் கேட்கும் சிறுவனென
...விடையைத் தேடும் கிழவ்ருமாய்
நடையைத் திறந்தால் தெரிந்திடுமே
...நன்றாய் ஏதோ புரிந்திடுமே..

வாசலதைத் திறந்துவிட்டால் வழியி லெல்லாம்
... வாசமலர் நறுமணங்கள் மனதை யள்ளும்
காசதனைக் காண்பதற்கு இரண்டு பூக்கள்
...கரங்களிலே தொடுத்திடுமே உயிராய்ப் பூக்கள்
பாசமுடன் மக்களும்தான் வாங்கிச் செல்வர்
...பக்தியுடன் கோவிலினுள் வேண்டுதற்கு
நாசமென வருகின்ற தீமை எல்லாம்
...நலமுடனே விலகுதற்குப் பூவால் சொல்வர்

chinnakkannan
2nd October 2011, 06:12 PM
வளைந்த முதுகைக் கண்டுவிட்ட
…வயதின் மூப்பூ ஒன்றதனின்
இளைய பருவம் இழைத்துவிட்ட
…இளம்பூ ஒன்று அதுவோதான்
மழைபோல் சிரிக்கும் பேசாது
…மனதுள் பேசும் கேட்காது
களையாய்ப் பூவைத் தொடுத்தேதான்
…கட்டும் பூவால் பேசிவிடும்..

ஊமையாய் இருந்த பூவின் உணர்வதைத் தூண்டச்செய்ய
…ஆமையாய்ச் சொந்தமொன்றை அன்னையும் கட்டிவிட்டாள்
ஊமையை மண்ந்த மாறன் ஊரிலே உள்ள எல்லாத்
…தீமையைத் தன்னுள் கொண்டு குடியிலே மூழ்குந்தீரன்..

சக்கரம் மூன்று கொண்ட சாலையில் அழகாய் ஓடும்
…வக்கணை யான வண்டி வசத்தினில் வைத்தி ருந்தான்
திக்கெலாம் சென்றால் தானே திரவியம் கிடைக்குமன்றோ
…மக்கெனச் சோம்பி நின்று மங்கையை வாட்டி வந்தான்.

chinnakkannan
2nd October 2011, 06:27 PM
ஒரு நாள் கோவிலினுள்

கலையாமல் மேகங்கள் ஒன்று கூடி
…கண்களையும் கருத்தினையும் குளிர வைத்தே
நிலையாக நீர் நிலைகள் நிரம்பும் வண்ணம்
…நல்ல மழை வரவேண்டித் தேவர் மீது
வளையாத எண்ணத்தில் வேதியர்கள்
…வளமான யாகத்தைச் செய்யுங்காலம்
சிலைபோன்ற கல்மனதும் உருகும் வண்ணம்
…சிறப்பாக மந்திரங்கள் சொல்லி வந்தார்..

கோவிலின் வெளியே ஊமைப் பெண்ணின் கணவனோ..

இலவு காத்த கிளிபோல
…இருக்கின்றாயோ நீயடியே
செலவுக்கெனக்கோ பணம்வேண்டும்
…சொர்க்கம் தன்னைப் பார்ப்பதற்கு
களவு ஏதும் செய்தாயோ
…காசோ எங்கே எனக்கேட்டு
நிலவைத் தரையில் போட்ட்டித்தான்
…நுதலில் வண்ணம் வரவழைத்தான்

பூவதனை நசுக்கிவிட்டே திரும்பியவன் மீது
…புலம்வந்த வாகன்ந்தான் மோதிவிட்டுச் சற்றும்
பாவமென எண்ணாமல் பார்க்காமல் மேலும்
…வேகத்தைக் கூட்டிவிட்டு விரைந்தோடிச் செல்ல
ஆவென்றே அலறியந்த அணங்கவளும் ஓடி
…காலதனில் அடிபட்ட கணவனையும் நாடி
தாவித்தான் தன்சேலைத் துணிகிழித்துக் கட்டி
…தக்கபடி மருத்துவரைப் பார்ப்பதற்குச் சென்றாள்

chinnakkannan
2nd October 2011, 06:28 PM
சற்றுமுன்னே அடித்தவந்தான் என்று சற்றும்
…சங்கடமாய்ச் சிந்தனைகள் கொள்ளா மென்மை
பற்றுடனே அவனருகில் பதறிச்சென்று
…பரிவுடனே கட்டிவிட்டபாசத்தன்மை
கற்றவர்க்குக் கிடைத்திடுமோ இந்த ஞானம்
…கன்னியவள் வாய்மொழியாய்ச் சொல்லா உண்மை..
நற்றமிழில் பெண்மையதன் சிறப்பைச் சொல்ல
…நாலுபக்கம் போதாதே என்ன செய்ய..

கண்பலவாயிரம் கொண்டசெவ் வானமக் காட்சியினை
மண்ணிலே கண்டுவிட்டு நெஞ்சில் மயங்கிட மேகத்தை
விண்ணிலே கூட்டியே வேகமாய் நல்ல இடிமுழக்கப்
பண்ணை இசைத்தே மழையினைப் பாரில் பொழிவித்த்தே..

வீட்டிற் கெதிரே கோயிலுண்டு வேண்டும் தெய்வம் வெளியிலுண்டு
…நீட்டும் கரத்தை அழகாக நேசங்கொண்டே அணைப்பவளைத்
தீட்ட நினைத்தே கேட்டேன்நான் தங்கப் பெயரை மனைவியிடம்
…பாட்டில் வல்ல பாரதியால் பாவை அவளை அழைப்பாராம்..

chinnakkannan
2nd October 2011, 06:31 PM
கிறுக்கரே.. கலக்கியது சிவமாலா.. நான் சும்மா நன்றி தானே சொன்னேன்..

bis_mala
5th October 2011, 01:37 AM
கிறுக்கரே.. கலக்கியது சிவமாலா.. நான் சும்மா நன்றி தானே சொன்னேன்..


நீங்கள்தான் செந்தூள் கிளப்பிவிட்டீர்கள்,.உங்கள் கவிதை மிக நன்றாகவே உள்ளது.

இப்போது மலேசிய யானைகள் பற்றி.......




யானை

கோலலம் பூர்நகரின் கொஞ்சமப் பால்செல்ல
கோல இயற்கையே கொஞ்சுசர --- ணாலயத்துள்
யானைகள் பற்பல யாரும் மகிழ்வெய்தக்
காணலாம் காண்பீரே சென்று.

அண்மையில் இம்மலை நாட்டில் அமைத்ததுவாம்;
உண்மை! உயிர்களைக் காத்திடும் --- தண்மையினால்
ஆனைக் கரண்செய்தார் அம்முயற்சி நாம்புகழ்வோம்
கூன்படாக் கொள்கை இது.

ஆனைகளை நாம்காக்க ஆனைமுகன் காக்கநமை!
வான்கதிரைப் போல வளர்ந்திடுக --- மேனிலைக்கு!
பானை வயிறன் பரந்த அருட்கொடையால்
யானும்நம் பாவலரோ டிங்கு.

bis_mala
5th October 2011, 01:59 AM
தனியருளைப் பொழிவாய்...

அட்டகாசம் செய்தனவாம் ஆனைக் கூட்டம்,
அதுபற்றித் தொலைக்காட்சிச் செய்தி கேட்டேன்!
ஒட்டிவனம் உள்ளசில சிற்றூர் மக்கள்
உள்ளபடி பலதுன்பம் உழன்ற காட்சி!
முட்டிபொரு பையனையும் கொன்ற தாக,
மூதாட்டி அழுவதையும் கண்டேன் அந்தோ!
தட்டிநமைக் கழிக்காமல் தண்மை பெய்து
தனியருளைப் பொழிவாய்நீ பிள்ளை யாரே!

chinnakkannan
5th October 2011, 10:53 AM
அசைந்தாடும் யானை அழகைப்போல் இங்கே
இசைந்தாடும் பாக்கள் எழில்

bis_mala
5th October 2011, 11:21 PM
கொசுத்தொல்லை பற்றியிரு வரிகளிலே
கொஞ்சுதமிழ் வரைகோலால் எழுத எண்ணி,
அசைத்திட்டேன் அதனியக்கம் துவங்கியநாள்
ஆட்சிசெய்த உடுக்களெவை பலன்கள் யாவை?
இசைத்தபொருள் யானைவரை சென்றதுவே!
இனியுங்கள் பாக்களையான் கேட்கும் நேரம்
திசைத்தரவாய் வசப்படுதல் விழைகின்றேன்
தீட்டுங்கள் குதிரைகளைப் பற்றிப் பாக்கள்.

chinnakkannan
6th October 2011, 09:20 AM
பிடரிகளைச் சிலிர்த்திருக்கும் கால்கள்மாற்றி
...பரப்ப்பாய் நின்றிருக்கும் வேகம் கொண்டே
மிடறுகளாய் முழுங்கியுள்ள உணவும் நன்றாய்
...மிச்சமெதும் இல்லாமல் செரிக்க எண்ணி
திடமான சிந்தனைகள் கொண்டு இங்கே
...திண்ணமாக நின்றிருக்கும் மிருக மன்றோ
இடங்கொடுத்தால் இப்புவியின் திசைக ளெல்லாம்
...இச்சையுடன் சுற்றிவரும் குதிரை யன்றோ..

உளமுழுதும் போகின்ற் பாதை நோக்கி
..உணர்வுகளை ஒருங்கிணைத்து நிற்கும்போது
குளம்புகளை நன்றாகத் தரையில் தேய்த்து
..கண்க்ளிலே கொண்டுவிடும் ஊக்கம் தன்னை
புல்ம்சென்று ஏறியதும் தட்டி விட்டால்
..புரவியதும் பறந்திடுமே வழியைப் பார்த்து
களம்பலவும் கண்டமன்னர் வெற்றி எல்லாம்
..கொண்ட்துவும் குதிரைகளின் திறமை யாலே..



கற்பனைக் குதிரை என்போம் காரிய மாற்று தற்கு
விற்பனை செய்வ தற்கும் வேகமாய்க் குதிரை போல
நிற்காமல் ஓடு என்போம் நேரிழை கன்வில் வந்தால்
சிற்றிடை பற்றி ஏற்றிச் செல்வதும் புரவி யில்தான்
*

chinnakkannan
6th October 2011, 09:31 AM
மேலமாசி வீதியில் ஒரு மிதி மிதித்து
ஆரியபவன வ்ந்த்தும் இடம்திரும்பி
நேரே சென்றால்
மேங்காட்டுப் பொட்டல்..
ஜான்சி ராணிபூங்கா எதிரில் ஒய் எம் சி ஏ..
நடுவில் குதிரைவண்டிகளின் வரிசை..

சில வண்டிகளில் குதிரைகள்
பூட்ட்ப் பட்டு
சாதுவாய்
புதிதாய் வீட்டிற்கு வந்திருக்கும்
நாட்டுப் பெண்போல தலை குனிந்து
கொஞ்சம் ஆடிய படி நின்றிருக்கும்
சில வண்டியிலிருந்து
அவிழ்த்து விடப்பட்டு
குனிந்து இரும்பு வாளியில்
வைக்கப்பட்டிருக்கும்
புல், கொள் எதையாவது
உண்டு கொண்டிருக்கும்
அருகில் சென்று தொட்டாலோ
முனிவர் போல அருட்பார்வை பார்த்து
மறுபடி குனியும்..

சிகப்பு.
மங்கிய வெள்ளை,
கறுப்பு வெள்ளை என
கலந்து கட்டிய நிறங்களில்
அழுக்காகவும்
அதைவிட அழுக்காக
வண்டிக்காரன்..

உலகத்தில் மற்ற்விஷயங்களை விட
குதிரைவண்டிக்காரனிடம் தான்
மக்கள் பேரம்செய்வர்..
எட்டணா அவனிடம் குறைத்தால்
ஏதோ இமயத்தைத் தொட்டாற்போல்
பெருமிதம் கொள்வோரும் உண்டு..

காலப் போக்கில்
கொஞ்ச்ம் கொஞ்சமாய்
அந்த குதிரை வண்டி நிலையம் மாறி
குதிரைகளும்
காணாமற் போயின..

இப்போது
அந்த இடம் கடந்தால்
கண்டிப்பாய் வரும்
குதிரை வாசனை..

**

chinnakkannan
6th October 2011, 09:53 AM
**

ப்ஹா ப்ஹா..ப்ஹா..

மரக்கலரில் ஜீன்ஸ்
வெள்ளையாய் மேலுடை
அதே நிறத்தில் காலணிகள்
பஃபென்று கூந்தல் அலைபாய
ஓடிவ்ந்து நின்றவளைப் பார்க்கையில்
சிரிப்பு வர.,..
‘ஏய்.. உனக்காக
காலங்காத்தாலே பாக்க ஓடி வந்தா
என்ன சிரிப்பு’
‘கிட்ட்த் தட்ட குதிரை மாதிரி இருக்கே..
பிடரில அழகாய் முடி அலை மோதுது..
நெற்றிநுனியில் சின்னதாய்
ஒற்றை வரியாய் இறங்கும் வியர்வை..
என்னை இலக்கு வைத்து ஓடி வரும்
உன் எண்ணம்..’
‘யோவ் குதிரை முட்டினால்
எப்படி இருக்கும் தெரியுமா..’
சற்றே பின்சென்று
முட்டுதற்போல் வந்தவளை
இடைபற்றி அணைத்து...
‘அடியே நீ என் காதல்குதிரை’ என்றால்
முறைத்துப் பின் சிரித்தாள்.
மேலும்
‘குதிரைகளை அடக்குவது சுலபம்..
உன்னை..மிக்க் கஷ்டம் ஆ ஆ..’

குதிரை கிள்ளினால் இப்படித் தான் இருக்கும்..
திரும்பி அவள் ஓட ஆரம்பிக்க
நானும் ஆண்குதிரையாய் மாறித் தொடர்ந்தேன்...

bis_mala
6th October 2011, 01:34 PM
V.G.
Please continue...
You have the requisite knowledge too, to write on horses. (I did not expect....)

chinnakkannan
6th October 2011, 09:34 PM
சுப்புலட்சுமிக்கு எப்போதும்
சிறுவயது முதல்
குதிரைக் கனவுகள் வரும்..
எப்பொழுதும் வரும் குதிரைகள்
இவள் கண்ணசைவில் மெல்ல நிற்கும் நகரும் பறக்கும்
திரும்பிய பின் ஒவ்வொன்றாய் அருகில் வந்து
உரசும்..
இவளும் பிடரியைச் செல்லமாய் தடவ
விழித்துக் கொள்வாள்..

வயது வந்தபின் கனவில்
சிலசமயம்
சின்னதாய்த் தலைப்பாகையுடன்
முகமறியா ஆடவன்
இவளை அள்ளித் தூக்குவான்
பின் சுழன்று பறந்து மறைவான்..

அம்மாவிடம் சொல்ல சிரிப்பாள்..
ஆமாண்டி நீயும் ராஜகுமாரி மாதிரிதான் இருக்கே
ஒரு ராசாமகன் தான் வருவான்..
ஆனா குதிரைக் கனவா சொல்றதப் பாத்தா
குதிரைக்காரன் தான் வருவான் போல..

கடைசியில் சிக்கியது
குதிரைக் காரன் தான்..
துபாயில் வேலையாம்
ஷேக்கின் குதிரைகளைப்
பராமரிப்பவனாம்..
கை நிறைய சம்பளமாம்..
மனம் போல மாங்கல்யமடி உனக்கு
அம்மா சொன்னாலும்
உள்ளுக்குள் நினைத்தாள்
இன்னும் வேறு வரனா பார்த்திருக்கலாமோ

சுப்புவிற்குக் குஷி..
கையில் மெஹந்தி கழுத்தில் தொங்கத் தொங்கத் தாலி
துபாய் சென்றால்
கணவனுக்குப் பேச்செல்லாம் குதிரைபற்றித்தான்..

அதுக ஒரு நாளைக்கு
மூணு மணி நேரம் தான் தூங்கும் தெரியுமா..
அதுவும் நின்னுக்கிட்டு தான்
விட்டு விட்டு தூங்கும்..
ரொம்ப களைப்புன்னா தான்
படுக்கும்..
எரிச்சல்னா வால் சுழற்றும்..
நல்ல ஜீவன்கள்..

வேலைக்குச் சென்றால்
தினமும் நள்ளிரவு தான் வருகை..
கொஞ்சம் மெலிதான மோசமான் வாசனை வரும்..
பின் தூங்க சில நேரம்..

சுப்புவிற்கு முதலில் அதிர்ச்சி
பின் கொஞ்சம் பழக
குதிரைகளைக் காட்டுவீங்களா..

கல்யாணமாய் இரண்டுமாதங்கள் கழித்து
தயங்கிக் கேட்க
சரி நாளை எனவும்
காலையிலேயே விழித்து
அழகாய் உடையுடுத்தி
கோவில் கடையில் சொல்லி வாங்கிய
மல்லிகை கூந்தலில் இருத்தி
அவனிடம் ’நல்லா இருக்கா’
பதில் சொல்லாமல்’சீக்கிரம் வா..
அதுகளுக்கு உணவு வைக்கணும்”
சென்றால்..

லாயத்தில் ஏக்க் குதிரைகள்..
கணவன் அவளை விட்டுவிட்டு
எதற்கோ உள் செல்ல
ஒவ்வொன்றாய் தொட்டு தொட்டு
பரவசப் பட்ட்வள்..
கன்வில் வருவதைப் போல
ஒரு கரிய நிறக் குதிரையைப் பார்த்துத்
தடவி..
மெல்லச் சொன்னாள் அதனிடம்..

உனக்கும் அவருக்கும் ஒரே ஒரு வித்யாசம்
தெரியுமா..
நீ நிறக்குருடு..
அவர் மனக் குருடு..

சின்னதாய் கண்ணோரம் நீர் உதிர
அமைதியாய் அவளை
அசைபோட்டபடி பார்த்த்து குதிரை...

bis_mala
7th October 2011, 09:02 PM
நீ நிறக்குருடு..
அவர் மனக் குருடு.

Your punchline is very powerful. Well done.

chinnakkannan
7th October 2011, 09:34 PM
நன்றி சிவமாலா..புதுக் க(வி)தை இட்டு விட்டு சற்றே பயந்திருந்தேன்.. என்ன்வோ தெரியவில்லை..கற்பனைக் குதிரை கொஞ்சம் நொண்டியடிக்கிறது..ம்ம் மரபில் எழுதணும் இன்னும்..
*
கல்லிலே குதிரை செய்து கலையுடன் மன்னர் வீரம்
சொல்லிலே எழுத ஒண்ணா சித்திரம் படைத்த நாளும்
தள்ளியே சென்றிடாமல் தரமுடன் இருந்தே அவையும்
துல்லிய உணர்வாய் நெஞ்சில் தங்கியே நிற்குமன்றோ

குதிரைகள் பாட்டைக் கேட்டீர் கொஞ்சமாய் நெஞ்சில் வந்தே
ப்திந்தநல் கற்பனைகள் பாங்குடன் இட்டு விட்டேன்
புதியதாய் எழுதச் சொல்ல பூவையே உமையே கேட்பேன்
சதிருடன் மரபில் தோய்த்து சுகமுடன் படைக்க லாமே..

bis_mala
8th October 2011, 07:56 AM
இது நான் வானொலியில் கேட்ட ஒரு பாட்டு. குறித்து வைத்துக்கொண்டேன்.

"குட்டியாய் இருக்கையிலே -- கழுதை
குதிரையைக் காட்டிலும் எட்டுமடங்கு-- ஏழு
எட்டுமாத மானபின்னே -- முழங்கால்
முட்டுவிழுந்து மோச மாகவிளங்கும்!

யார் எழுதியதோ!

கழுதையைப் பற்றி எழுதினால், சுவையாக இருக்குமே!

bis_mala
8th October 2011, 07:47 PM
நெடுஞ்செவி தானுடையோன் --கேட்க
நேரிதல் லாதது நாணுடையோன்.
கொடுமொழி காழென்பதே -- அன்றிக்
கூறப் பிறமொழி யாதுடையான்?

பழுதில் தொழில்புரிவான் ---முதுகு
பளுவில் அழுந்தினும் நோவுரையான்
கழுதை எனப்பழிப்பார் -- தொடர்பு
காணாப் பொழுதிலும் பேரிழுப்பார்.

காலக் கணக்கெடுப்பால் -- ஏதும்
கட்டுகள் இல்லா கடுமுழைப்பால்,
நீலக் கடலலைபோல் -- படும்
நெட்டிடர் சொல்லாlல் தொடுத்திழைப்போம்.

குட்டிச் சுவரருகில் -- அதைக்
கொண்டு நிறுத்தும் அவர்புகல்வில்,
எட்டி உதைப்பதுபோல் -- பல
ஏளனச் சொற்கள் விதைப்பதுண்டே!


அரியது சேவைஎன்றால் -- அதற்
கழகிலை என்பதால் நோவொன்றுசொல்,
உரியது ஒருவிலங்காய் -- அஃது
ஒதுக்கம் அடைதல் வருமொழுங்கோ?

அருஞ்சொற்கள்.

நேரிதல்லாதது - நேரிது அல்லாதது : நேர்மை அல்லாதது.
புகல்வு - புகலுதல். புகல்வில் = சொல்லுதலில். பேச்சில், நோவொன்றுசொல் = துன்பம் வந்து ஒன்றுகின்ற, அல்லது தொடர்புபடுகின்ற சொல். (நோ(வு) ஒன்றும் சொல்.)

chinnakkannan
9th October 2011, 09:48 AM
வெள்ளி மூக்கு...ன்னு கழுதையைப் பத்தியா எழுதறேப்பா என்று கேட்டாள் குட்டிப் பெண்.. இல்லடீ ஒன்னைத்தான் குட்டிக்கழுதை என்றவுடன் அம்மாவிடம் சொல்வதற்கு ஓடி விட்டாள்

வெள்ளியில் மூக்கிருக்கும் வக்கணையாய்ப் பாரமதைத்
தள்ளாமல் தாங்கிவிடும் அந்தியில் நன்றாய்
விழுந்து புரண்டிடும் வீம்பாகப் பேசுங்
கழுதையும் நீயென்றே கொள்..
*

தொழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் பிறரோ
க்ழுதையாய்த் தேய்பவர் தான்..
(காப்பி ரைட்ஸ் ரிசர்வ்ட் எந்த கட்சிக்கும் தரப்பட் மாட்டாது!)

chinnakkannan
9th October 2011, 10:35 AM
சிவமாலா..உங்கள் கழுதைப் பாட்டு அழகு..என்ன கொஞ்சம் ஆழத் தமிழ்..

bis_mala
9th October 2011, 06:37 PM
எளிய சிந்தனைதான் -- அதைப்
பதிய முனைந்த பதங்களிலே
வலிய வந்தசில --கடின
வளியின் வீச்சை விளைத்தனவே.

கழறும் குறிப்புகளால் -- அந்தக்
கடினம் சிறிதே குறையுமென்றால்,
குழையும் இளங்காற்றாய் -- அது
குளிர்ந்து விரிந்திட மறுத்ததுவோ?

பாலை வனம்வீசும் -- அந்த
மணற்புயல் தன்னை மையமிட்டு
நாலின் மிகுபாக்களை - நீங்கள்
நன்கு புனைந்திட வேண்டுகிறேன்


அந்தியில் நன்றாய்
விழுந்து புரண்டிடும்

அது குப்பை கூளங்களில் விழுந்து புரள்வதாகக் கேட்டிருக்கிறேன். அது ஏன் அப்படிச் செய்கிறது?

chinnakkannan
9th October 2011, 11:58 PM
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!
குட்டி.. பாடம் படிப்பதற்கு விழுந்து அழுது புரளும்.. அல்லது மற்ற பிடிவாதங்களுக்கும்..

chinnakkannan
10th October 2011, 12:00 AM
வ்ளி என்றால்..
கழறும் குறிப்புகளால்... பின்னால் இடப்படும் குறிப்புகளால் சரியா

bis_mala
10th October 2011, 11:14 AM
வளி என்றால்..
கழறும் குறிப்புகளால்... பின்னால் இடப்படும் குறிப்புகளால் சரியா

வளி என்பது காற்று. வீச்சு - வீசுதல்.

கழறும் குறிப்புகள் என்றது பின் இட்ட குறிப்புகளை என்பது சரிதான்.

கழறு : to make solemn declaration, to say, declare, tell. There are other meanings too.

bis_mala
10th October 2011, 06:31 PM
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!




பாவம் கழுதை பளுதூக்கும் நோவதனால்
ஆவ தறியாமல் கீழ்விழுந்து --- கேவிப்
புரண்டெழுந்து கத்துமோ போம்கதி எண்ணி
மிரண்டநிலை மீளுமோ தான்.

bis_mala
18th October 2011, 10:35 PM
நான் எழுதினால்தான் நீ எழுதுகிறாய்
தோழீ! உனக்கும் எனக்கும் வாய்த்தது
என்ன பொருத்தமோ? -- இதற்கு
என்ன அருத்தமோ?

நான் சிரித்தால் நீயும் சிரிக்கிறாய்,
தோழீ ! உன்னுள்ளம் எனதோடு
ஒன்று பட்டதோ?--சிரிக்காதபோது
நின்றுவிட்டதோ?

நான் அழுதுவிட்டால் நீயும் அழுதுவிடுவாயோ?
தோழீ! காரணம் தேவையில்லையோ?
அறியவும் ஆவலில்லையோ?

chinnakkannan
19th October 2011, 11:50 PM
தோழனுக்கு..

குறுந்தகவல்கள் வேலை செயவில்லை
மின்னஞ்சல்களுக்கான மெய்ன் சர்வரில்
ஏதோ கோளாறு
தொலைபேசி செய்யலாமென்றால்
சுண்டு விரலில் சுளுக்கு..

என்றெல்லாம் காரணம் சொல்ல மாட்டேன்..

ஏதோவேதனை
ஏதோ தொடர் வேலைகள்..

உனக்கு மட்டுமல்ல
எதுவும் எழுதுத்ற்குக் கற்ப்னை
ஓடவில்லை.
ஏனெனத் தெரிய்வில்லை

எழுதுவேன் விரைவில்
என்ச் சொல்லும் போது

ஏன் உன் எழுத்துக்கள் பார்த்தால்
என் சோகம் போகாதா எனக் கேள்வி

என்னுள் எழுகிறது..

chinnakkannan
20th October 2011, 12:05 AM
அன்பின் சிவமாலா
நேற்றும் இன்றும் வலைப்பக்கம் வர நேரம் விளையவில்லை..இப்போது தான் பார்த்தேன்.அது தான் மேற்க்ண்ட மடல்..

chinnakkannan
24th October 2011, 12:57 AM
கள்ளங்க்ள் கரைந்தோட கண்களிலே காட்டிவிடும்
உள்ளத்தில் பொங்கும் ஒளி
தீபாவளி வருது என்ன பாட்டு தரப்போறீங்க

chinnakkannan
25th October 2011, 11:44 PM
அணுகுண்டு...

பச்சை நிறத்துடன் இருந்த
ரப்பர் வளையத்தைத்
தொட்டபடி படுத்திருந்த சிறுமியைப் பார்த்தபடி
அப்பா சொன்னார்
எப்படியாவது இவளுக்கு
மேலும்பாட்டுப்பயிற்சி கொடுத்து
தொலைக்காட்சிப் போட்டியில்
அடுத்தபடிக்குச் செல்ல வைக்கவேண்டும்..
அம்மாவும் சொன்னாள்..
ஆமாங்க.. அதான் எனக்கும் டென்ஷனா இருக்கு..
கண்ணை மூடியிருந்த
சிறுமி நினைத்துக் கொண்ட்து...
பாவம் அப்பா அம்மா..
எப்படியாவது என்னைத்
தோக்க வச்சிடு சாமி

chinnakkannan
25th October 2011, 11:44 PM
வெடி..

முதல் நாள் அனுப்பிய
மின்ன்ஞ்சலை படித்திருப்பாள்
நேரில் பார்த்தால் திட்டுவாள்
அதோ வருகிறாளே
கொஞ்ச்ம் பார்த்தும் பாராமல்
நடக்கலாம் என
நடந்தவனை
கைபற்றி இழுத்து
அவள் சிரித்த போது
சந்தோஷமாய் இருந்தாலும்
சரவெடி புஸ்வாணமாய் ஆனதில்
கொஞ்சம் ஏமாற்றம் தான்..

*

chinnakkannan
25th October 2011, 11:45 PM
தரைச் சக்கரம்..

சுத்து சுத்தென்று
ஓரிட்த்தில் நிற்காமல்
சுற்றினாலும்
எப்படியும் எங்காவது
மோதி நிற்கத் தான் வேண்டும்..
அல்லது
தடாலென நின்று விட்வேண்டும்
என
சொல்லாமல் சொல்கிறது த்த்துவம்..
*

chinnakkannan
25th October 2011, 11:46 PM
புஸ்வாணம்

பூச்சிதறலாய் சிதறுவதை
கண்ணிடுக்கி
ஒருகையால் தூக்கிய
ப்ட்டுப்பாவாடையை
இறக்கத் தோன்றாமல்
பார்ப்பவளை பார்த்துக்கொண்டே
மனசே இல்லாமல்
நின்று போகிறது
*

chinnakkannan
25th October 2011, 11:46 PM
சரவெடி

சும்மா வா..
ஒண்ணும் பண்ணாது..
ஓஹ் எனக்கு பயங்க..
தைர்யமா வா நான் இருக்கேன்ல..
ச்ச்.. அம்மா பாக்கறாங்க..
புதுமனைவி தடுக்கத் தடுக்க
கையில் ஊதுபத்தி கொடுத்து
சரவெடியைத் தோரணமாய்க்
கையில் பிடித்து
தைர்யமா திரில வை சொல்லி
கண்சுருக்கி வைத்தவள்
திரி பற்றியதும்
ஸ்ஸ் நீங்களும் போட்டுடுங்க
எனச் சொல்லி தள்ளிச்செல்ல..
படபடவென முழங்க
தூரப்போட்டு
அடங்கும் வரை கொஞ்சம் பயமாய்ப் பார்த்த
மனைவியின் அழகை ரசித்தவ்னின்
கண்ணில் பட்ட்து
சத்தம் அடங்கிய சரத்தின்
பக்கம்
விழுந்திருந்த மல்லிகைச் சரம்...

chinnakkannan
25th October 2011, 11:47 PM
சிகப்புக் கலர் தீக்குச்சி..

வாடா
இப்படி ஒரசணும்..
மாத்தேன் போ..
சரி நான் செய்றேன் நீ பாரு
பய்ம்மா இர்க்கு வெடிக்குமா..
பார்..
பற்ற வைத்து பிஞ்சுக்கையில்
கொடுக்க
ஸ் ஆ என கையைப் பின்னால் இழுத்து
அழ
தரையில் விழுந்த தீக்குச்சியின் பிரதிபலிப்பு
குழந்தையின் கண்களில்..
*

chinnakkannan
25th October 2011, 11:48 PM
சிவமாலா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

bis_mala
30th October 2011, 10:57 PM
கடுமையான காய்ச்சல். இப்போதுதான் கொஞ்சம் மீட்சி அடைந்துள்ளேன்.

மிக அழகிய கவிதைகளை வரைந்துள்ளீர்கள்.
வியக்கும் வண்ணம் உள்ளன.

உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும்.என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - காலம் தாழ்ந்த நிலை என்றாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

எலிக்கும் விருந்து கொடுத்தீர்களா?

chinnakkannan
31st October 2011, 12:37 AM
அச்ச்ச்சோ..காய்ச்சலா..இப்போ தேவலையாய்டுத்தோன்னோ..
இப்படித்தான் கேட்டேளா எனக்குத்தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு என்ன ஆச்சுதெரியுமோ..அது நன்னா பாடுமாக்கும்..ஒரு நாள் ஆசப்பட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டா.மறு நாள்...ஜூரமான ஜூரம்.. பாடறதுக்கு வேற போயிட்டா..பாட் ஆரம்பிச்சா சரியாவே இல்ல ஐஸ்க்ரீமால அவளோட..

குரலும் கரைந்துதான் காணாமல் போக
சுரத்தால் வராத சுரம்

எலியா..எங்கபோச்சோ என்ன ஆச்சோ..

தள்ளியே நிற்கவைத்து துள்ளித் தவிக்கவைத்து
எள்ளியே சென்ற எலி

bis_mala
31st October 2011, 08:41 PM
காய்ச்சல் கரையவைத்த என்மூளை நீச்சல்
இணையத்(து) இனியடிக்கு மோ!


அடித்தனரோ கொன்றனரோ ஐயோ அடுப்படியில்
தோன்றிடுமோ மீண்டும் எலி?

chinnakkannan
31st October 2011, 11:36 PM
அப்படில்லாம் ஆகாது..என்ன நெறைய மாத்திரை மருந்து சாப்பிட்டிருப்பீங்க..அதால ஏற்பட்ட களைப்பாக இருக்கும்..

பாய்ச்சலாய்ப் பாட்டெழுத வொண்ணாமல் வந்துவிட்ட
காய்ச்சலால் கொண்ட களைப்பு

bis_mala
1st November 2011, 04:48 AM
எலிக்கு:


வாகனமே பிள்ளையார்க்கு! கண்ணன்இல் வாசல்முன்
வாகனமாய்ப் போற்ற உனை.

வா கனமாய் = வா, வெகுவாக;


உங்களுக்கு:


என்ன பலகாரம் தின்னக் கொணர்ந்தீரோ
சின்னக்கண் செம்மலே நீர்.

chinnakkannan
1st November 2011, 10:31 PM
வடை தாங்க..உங்களுக்கு ஒண்ணு..எலிக்கு ஒண்ணு..!
(சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னேன்)

ஆடி அசைந்தே அருகில் வருமெலியால்
வாடி வதங்கும் வடை (ரொம்ப முன்னால எழுதினது)

bis_mala
2nd November 2011, 07:25 PM
எலிக்கு வடைவைத்தால் ஏற்றமே தீபா
வளிக்கதுவும் வாழ்த்தும் உமை.

மொருகல் வடையிற் பிறிதுண்டோ தீபத்
தொளியின் உயர்வாக்கும் ஊண்.

இனைய வடைசுட்டு இனிதுசெய் இல்லாட்கு
இணையத்தார் செய்வர் புகழ்.

எலிசெய்த புண்ணியம் யார்செய்தார் வீட்டுள்
ஒலிசெய்துட் கொண்ட வடைக்கு.

chinnakkannan
2nd November 2011, 10:38 PM
வீட்டிற்கு வெளியே மாமழை... வீட்டிற்கு உள்ளேஉங்கள் பாமழை..

இன்று மதியம் பன்னிரண்டரைக்கு அடிக்க ஆரம்பித்தமழை மூன்றரை வரைக்கும் ஹோ ஹோவெனப் பெய்தது...ம்ம ஒவ்வொரு ரவுண்டபெள்ட்டிலும் வெள்ளமாய்த் தண்ணீர்...ஏகப்பட்ட வாகன நெரிசல்...வழக்கமாய் எட்டு நிமிடத்தில் செல்லும் இடத்திற்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது..இருந்தாலும்..

பளிச்சென சாலையைப் பார்க்கவே நெஞ்சம்
களிப்பென ஆனதே காண்..

மழை பெய்து முடித்துவிட்டு சும்மா போய்விட்டது..சாலைகளைக் கழுவியது மட்டும் போதுமா..துடைத்திருக்கவும் வேண்டாமா..

கழுவித் துடைக்காமல் விட்டதால் கார்கள்
வழுக்கியே வீழ்ந்ததே பார்..

இன்னும் சாரலடித்துக்க் கொண்டிருக்கிறதுவெளியில்..ப்ளஸ்குளிர்ந்தகாற்று .. கிட்டத்தட்ட ஒரு வருடம் நான்கு மாதம் கழித்துப் பெய்கிறது மழை..என்ன நிறைய விபத்துகள்..

bis_mala
4th November 2011, 12:18 AM
மஸ்கட்டில் அல் சைடிஸ் தெருவில் அமைந்துள்ளதா உங்கள் வீடு?

அங்கேதானே விபத்துகள்?

bis_mala
4th November 2011, 12:52 AM
ஒருவருடம் ஓடி ஒருநாள் மழையால்
திருவருடும் தேடிவந் தாங்கு.

செல்வம் சேரும். கவலை வேண்டாம்.
தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டுமோ?

bis_mala
17th November 2011, 06:16 PM
யானெழுதிய ஒரு பழைய கவிதை. ஒரு தோழிக்கு ஆலோசனை.


இரவும் பகலுமே மாறிவந் தாலும்
இடர்கள் சிலருக்கு மாறாதவை!
உறவும் பகையும் உதயம் உறுவதும்
ஓரிடம் என்பதும் உண்டல்லவோ!

இரவென்ன எல்லோன் பகலென்ன எல்லாம்
இனியென்ன என்றே தொடர்ந்திடுவாய்
மறைவென்ன மற்றும் குறைவென்ன யாவும்
மனம்நினைத் தாலன்றி ஒன்றுமில்லை.

chinnakkannan
24th November 2011, 01:14 AM
எழுதப்படா எண்ணங்கள்

நினைத்தால் கொஞ்சம்
சிரிப்பாகவும் நிறைய குழப்பமாகவும்....

ஆயிரமாயிரமாய்
அலைகள் மனதில் அடிக்கையில்
எதை எழுதுவது
*
வேறொரு பிரச்னைக்காக
வைத்தியரிடம் சென்றிருக்கையில்
பக்கத்து இருக்கைப் பெண்
அவளது எண் வ்ந்ததும்
படீரென எழுந்து
பக்கத்து அறைப் பெண்மருத்துவரிடம்
செல்கையில்
கண்ணில் பட்ட அவளது கண்ணின் ஈரம்..

வயிற்று வலியா..
அவர்களுக்கான பிரத்யேகப் பிரச்னையா..
ஒரு வேளை
புருஷன் விரும்பவில்லையா வாரிசை.

மறுபடி பார்க்க நினைத்திருக்கையில்
என் வரிசை வர
அவள் மறந்தும் மறைந்தும் போனாள்..
*
அடுத்த வருஷத்திற்கான
விற்பனை லாப நஷ்டம்...
இந்த வருடம் இலக்கை எட்டுவோமா..
வயிறு சற்றே கலங்குகிறதே
உப்புமாவுடன் அந்தக் காரச்சட்டினியின் வேலையோ..
என்ன இது..
இவ்வளவு வாகனங்களின் ஊர்வலம்..
எதனால் அடைப்பு..
அடச்சீ சும்மா இரு..
முன்னால் செல்பவள்பெண் என்பதால்
அவள் வாகனத்தை முத்தமிடுதல் முறையல்ல..
என் உந்து வண்டியிடம் சொன்னேன்..
பின்...
ஆண்டவா..
வாழ்க்கை அழகாக இருக்கிறது
என
காலையில் உன்னை வாழ்த்தியது
என் தவறு தான்
எதற்காக இந்தப்
பயணத் தடங்கல்..
பொறுமை மீறுகிறதே..
நிறுத்தலாம் என்றால்
நிறுத்துமிடம் போவது கடினம்..
நான் மிடில் லைன் எனத் தமிழில் சொல்லப்படும்
நடுக்கோட்டில் இருக்கிறேன்
இட,வலம் சுய நலமிகள்
இடம் தரமறுக்கிறார்கள்..
பாட்டைப் போடலாமா..
போனால் போகட்டும் போடா.
மேலும் வெறுத்து
மெல்லமெல்ல
நத்தையின் வழித்தோன்றலாய் நகர
படீரென்
தடைகள் விலகி ஓட்டமெடுத்ததில்
எல்லாம் மறந்து போனது..

*

அலுவல்களில்
தோய்ந்து தேய்ந்து
வெளிப்போந்த
ஒரு முன்னிரவு வேளையில்
சாலையின் நடைபாதையில்
சில பல இறகுகள்
புறாவினுடையவை தான்..
எப்படி இவ்வளவு
எனச் சிந்தனையுடன்
கண்ணை ஓட்டுகையில்
சாலை நடுவில்
மொத்தமான் மித்தமானவைகள்..
உயிருடன் இருந்த போது
அதைப் புறா எனத்தான் சொல்லியிருப்பார்கள்..
பக்கென்று கொஞ்சம் கனம்
மனதில் பூசிக்கொள்ள
நடத்தல்முடிந்து
என் குடியிருப்பை என்கால்கள்
அடைந்து
வீட்டில் நுழைந்ததும்
குழந்தைகள் மனைவியைப் பார்த்ததும்
புறா மறந்து போனது எதனால்..
நாட்குறிப்பிலும் எழுத மறந்த்தேனே ஏன்..

*
தோழா நலமா..
உன் ஊரில் வெள்ளம் எனக்
கேள்விப் பட்டேனே..
என்ன ஆயிற்று
என வாஞ்சையாய்
கேள்வி
முகமறியா தோழியிடம் இருந்து
வந்தும்
சோம்பலா
வேலைப் பளுவா..
அல்லது வேறு ஏதாவதா..
பதிலிறுக்க்காததற்கு
காரணம் என ஒன்றுமில்லை
என்றாலும் மனதில்
எழுதிப் பார்த்த பதில்கள்
அரங்கேறாதது ஏன் என்பதற்கு
விடையுமில்லை..
*
இது ஏன் எனக் கேட்டு
சற்றே யோசிக்கையில்
மேலே இருந்து பல்லி
சிரிக்கிறது...

எப்படி அர்த்தம் கொள்வது..
**
anpin sivamala
mannikka ungal idukaiyai ippo thaan kanden..just pp mattum pOikkitu irunthutten..( vazhakkam pol light aa ezhuthath than vanthathu..athaan varalai..
anpudan
chi.ka.

bis_mala
25th November 2011, 09:17 PM
வீற்றிருக்கும் குயிலொன்று மரக்கிளையில்
வீசுகின்ற தென்றலதைத் தாலாட்டும்!
காற்றினிலே மிதந்துவரும் துகள்கள்தம்மை
கௌவியெடுத் தவற்றையின்று கவிசெய்து
நாற்றிசையும் ஒலித்திடவே செயும்விந்தை
நான்கண்டு வியந்திட்டேன் தேனினையே
ஊற்றியது போலினிமை செவிகளிலே
நேற்றுவர நினைப்பிலையோ ஏன்குயிலே

chinnakkannan
26th November 2011, 01:15 AM
பாலதுவும் கொதிக்கையில்தான் பொங்கு மன்றோ..
..பாழ்மனது கொதிக்கையிலே கவியும் வாரா..
ஊழலதைக் கொண்டுவிட்ட உள்த்தின் தன்மை..
..உறக்கத்தையே மறந்துவிட்டு எழுவ தெப்போ..
காலமது சிறகுகளை விரித்துச் செல்ல
..கூட்டினிலே கதவ்டைத்த குயிலோ மெல்ல
கோல்த்தில் நல்வரவு என்றே சொல்லும்..
..கோலமயில் தோழியவர் அழைப்பில் பாடும்..(விரைவில்..)

bis_mala
1st December 2011, 03:19 AM
பாலதுவும் கொதிக்கையில்தான் பொங்கு மன்றோ..
..பாழ்மனது கொதிக்கையிலே கவியும் வாரா..
.....................(விரைவில்..)

நின்றதோ நெஞ்சக் கொதிப்பே கவிமழை
இன்றுமுதல் பெய்தற் கிசைந்து.

chinnakkannan
1st December 2011, 11:04 AM
மாலையில் முழுவதும் மணத்தினைத் தந்தவள்
..மாதவன் அழகினில் மயங்கியே நின்றவள்
காலமும் கண்ணனைக் கண்ணுளே கொண்டவள்
..காலினைப் பற்றியே நெஞ்சினுள் வைத்தவள்
கோலினால் வாயினில் குழலினை ஊதியே
..கோபியர் மதியிலும் விதியிலும் ஆடிய
வாழ்வதன் அர்த்தமாம் கண்ணனைப் பாடிநீ
..வாழிய கோதையே வாழியுன் பாடலே

*பல வருடங்களுக்கு முன் திருப்பாவைக்குப் பொழிப்புரை எழுதிப் பார்த்தபோது எழுதியது...

chinnakkannan
1st December 2011, 08:37 PM
கன்னியும் குருவும்:

ஒரு வழியாய்
பிரயாணம் முடிந்து
ஆற்றங்கரைக்கு
வந்தாயிற்று.

குரு சாமி
பெருமூச்சு விட்டுச் சொன்னது..
அவ்ளோ தான்..
மலை கொஞ்ச தூரம் தான்
நடந்தா
மேல அவன் இருக்கான்
நம்மளைப் பாத்துப்பான்..

கன்னி சாமி முழித்தது.
வா குளிக்கலாம்..
குளிக்கும் போது
யப்போவ் குளிருது..
அப்பால்லாம் சொல்லாதே
குருசாமின்னு சொல்
சாமியேன்னு கத்து..குளிர் ஓடிடும்

மறுபடி இருமுடி கட்டி
கூட்டத்தோடு கூட்டமாய்
வேகமாக மலைப்பாதையில் நடக்க
யப்பாவ் பசி..
குரு முறைத்து
பத்திரமாய் வைத்திருந்த பை திறந்து
கன்னிக்கு ஒரு சப்பாத்தி கொடுத்து
தான் நான்கு உண்டது..

கொஞ்சமாச் சாப்பிட்டாத்தான்
வெரசா நடக்கலாம்..சொல்லு சாமியேய்..

யப்போவ்..கால்ல கல்லுப்பா..
ஆமாண்டா..
கால்ல காலெடுத்தா கல்லுதான்..
குரு தன் நகைச்சுவைக்குத்
தானே சிரித்தபடி நடக்க
மூச்சு வாங்கி மூச்சு வாங்கி
கூட்டத்தோடு கூட்டமாய்
சிலமணிப்பொழுதில்
மேலே சேர...

வாடாவா.. முதல் படி இது..
நீ கன்னி சாமியோல்லியோ..
உடை தேங்காயை..
பின்னால் நின்றவாறே ஏறு..

‘கன்னி சாமி ரொம்பச்
சின்னவரா இருக்காரே சாமியேய்’
குரு பெருமிதத்துடன்
‘என் பையந்தான்.. ஆறு வயசாச்சு..’
சொல்லு சாமி சாமியேய்...
ஒருவழியாய்
கடகடவென மெள்ளமாய்
படியேறி
இறைவனைப் பார்க்கலாமென்றால்
ஒரே கூட்டம்..

யப்பாவ்.. ஒண்ணும் தெரிய்லை..
கூட்டம் நசுக்குது..
ஒண்ணும் சொல்லாதே..
வா தூக்கிக்கறேன்..
நல்லா தெரியுதா...

கூட்டத்தின் கோஷமும்
நச நசவென்ற நெரிசலும்
இருந்தும்
எட்டி எட்டிப் பார்த்ததில்
ஒன்றும் தெரியவில்லை..
கொஞ்சம் சின்னதாய் விளக்கொளி மட்டும்..
ஒருவேளை அது தான் இறைவனா..

அப்பா குருசாமியிடம் கேட்க பயம்..
சரி கண்ணை மூடி
‘சாமிபசிக்குது..
அப்பா நல்ல சாப்பாடு கொடுக்கணும்..
சீக்கிரம் கீழ போணும் கல் குத்தாம..
நாளைக்கு ஸ்கூல் போணும்..
ஹோம்வொர்க் பண்ணலை..
டீச்சர் கேக்கக் கூடாது...”

என்னடா சாமி கிட்ட வேண்டிக்கிட்டயா..
ஓ..
என்ன கேட்ட..
உங்கள மாதிரி பெரியாளா வரணும்னுப்பா
சாரி குருசாமி...””

என்னை விட பெரியாளா வரணுண்டா
என்றது குரு பெருமிதத்துடன்..

கொஞ்சம் கீழே இறங்கி
ஆகாரம் முடித்து
மறுபடியும் இறங்குகையில்
குருசாமியைக் காணோம்..

கொஞ்ச்ம யோசித்துத்
தேடினால்
பின்னால் புதர்மறைவிலிருந்து
க்ப் கப் என்று
புகைவிட்டிருந்த குரு கண்ணில் பட
கன்னி உரத்த குரலில் “சாமியேய்..”’”

ஒருகணம் திகைத்த குரு
கையிலிருந்ததைக் கீழ் போட்டுச் சொன்னது
“சரணம் ஐயப்போவ்..”

**

bis_mala
2nd December 2011, 12:27 AM
மாலையில் முழுவதும் மணத்தினைத் தந்தவள்
..மாதவன் அழகினில் மயங்கியே நின்றவள்
காலமும் கண்ணனைக் கண்ணுளே கொண்டவள்
..காலினைப் பற்றியே நெஞ்சினுள் வைத்தவள்
கோலினால் வாயினில் குழலினை ஊதியே
..கோபியர் மதியிலும் விதியிலும் ஆடிய
வாழ்வதன் அர்த்தமாம் கண்ணனைப் பாடிநீ
..வாழிய கோதையே வாழியுன் பாடலே

*பல வருடங்களுக்கு முன் திருப்பாவைக்குப் பொழிப்புரை எழுதிப் பார்த்தபோது எழுதியது...


சும்மா சொல்லக்கூடாதுங்க ....இது உண்மையிலேயே மிக்க அழகான பாடல். நீங்கள் ஒரு கவி என்பதை எடுத்துக் கூவும் (கூறும் மட்டும் அல்ல) கவிதை. பக்தி ரசம் சொட்டுகிறது.

என் வாழ்த்துக்கள்.

ஐயப்பா பற்றிய கதையும் அருமை என்றே சொல்வேன்.

தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் அடையுமாறு சொல்லும் திறனும் ஓர் இறைக்கொடைதான்.

Please keep up your excellent work.

bis_mala
2nd December 2011, 12:41 AM
பொழிப்புரை கண்ட திருப்பாவை அச்சில்
பதிப்புறக் காண்ப தினிது.

chinnakkannan
2nd December 2011, 12:44 PM
பெறிய குயிலும் சிரிய குட்டியும்

உள்ளே நுழைந்த போது
இசைத் தென்றல்
தாடியுடன் வரவேற்றது..
‘வாம்மா வா..
பயிற்சி பண்ணிட்டயா..”” “

மெல்லிய நகை சிந்தி
‘பண்ணிட்டேங்க..
நீங்க செய்திருந்த
மொத இரண்டு வரி பிரமாதம்
அதுவும் சுபபந்து வராளில்ல
விளையாடியிருக்கீங்க..”

“என்ன பந்தோம்மா..
உன் வரியைப் பாடிப் பாத்தியா...

ஓ பாடட்டுமா..
சுகமான தமிழ்ப்பாடல் நீயே...ஆஆ.
“இல்லைம்மா. தப்பாப் பாடறே..
ஆங்கிலத்தில எழுதிக் கொடுத்ததைத்
தான் பாடறேன்..”
“இல்ல அத அப்படியே பாடணும்..
எங்க பாடு..
ஸ்ஸோகமான்..தமில்ப்பாடள்...நீர்ர்ர்யேஹ்..”
“.......” “
ம்.. இப்படித் தான்..
நீக்கும் யேக்கும் நடுல்ல
நெறய ஈஈ போட்டுக்குங்க..
வாங்க பதிவு செய்யும் அறைக்குப் போங்க..
“............”
இதாம்மா ஒங்ககிட்ட
எனக்கு ரொம்பப் பிடிச்சது..
பாட்ட அப்படியே ஆன்மால
உள்வாங்கிட்டு
படக்குன்னு கொடுக்கறீங்க பாருங்க” ” “
அறையில் இருந்து வெளிவந்தவுடன்
மலர்ச்சிரிப்புடன தயாரிப்பு சொல்ல
“”எல்லாம் சரிங்க..
சொன்னது நினைவிருக்கா..
கொஞ்சம் பத்து கூடச் சொன்னேனே” “
மலர் வாடி
“இருக்கும்மா..வீட்டுக்குப் போங்க
காசோலை வரும்..”

காரில் ஏறுகையில்
செயலாளினி சே..செகரட்ரி
நினைவு படுத்தினாள்..
இப்போ அந்த டிவிக்குப் போணும் மேடம்
நீங்க தலைமை..போட்டிக்கு..
ச்ரி..வண்டியத் தொலைக்காட்சி அலுவலக்த்துக்கு விடுப்பா..

ஜம்மென்று கவுனும்
முகமெல்லாம் சிரிப்புமாக
சின்னப் பெண் அரங்கில் நின்று
‘இனிய மாலை மேடம்”
“சரி பாடும்மா” “
“........” “

இதப் பாரும்மா
நன்னாப் பாடறே நல்ல குரல்
கொஞ்சம் மறுபடி அந்த வரி பாடு...
“”பலகும் தமிலே பார்த்திபன் மகனே
அழுகிய மேனி சொகமா..””
“சே..இது இப்படியா இருக்கும்..”
“இது கலந்திசை மேடம்.. நீங்க பாடினது..”
“தமிழ்ல ரீ மிக்ஸ்னு தெளிவாச் சொல்லு...
யா.. நான்பாடினது தான் இப்படி இல்லை
பளகும் டாமிலே..பார்த்திபன் மகன்ன்னே ந்னு
வரும்...
சரியா.. நல்லா பயிற்சி பண்ணும்மா..
அடுத்த முறை...”
“ நன்றி மேடம்” “

எதற்கோ வெளியில் வந்தால்
சின்னது அன்னையிடம்
சொல்லிக்கொண்டிருந்தது..
“தப்பு என் மேல தான் மம்மி..
அவங்க பாட்டு வேறயா
அப்செட் ஆகிட்டாங்க..
அடுத்த தடவை அவங்களோட
புதுப்பாட்டு பாடி தகுதி பெற்றுடுவேன்..”
“என்ன பாட்டுடீ..”
“பொன் எலிழ் போத்தது புது ஸ்கையில்..””

அருகில் சென்று
சின்னவளை
தனியாக வரச்சொல்லி..
“திரைப்பாட்டெல்லாம் வேணாம்மா..
நல்ல குரல்..
கர்னாடிக்ல கொஞ்சம் பயிற்சி பண்ணு..” “

சின்னது சென்றதும்
மனதில் படர்ந்தது நிம்மதி..

***

chinnakkannan
2nd December 2011, 12:47 PM
நன்றி சிவமாலா..முன்பு போல் மரபு எழுத ஏனோ கொஞ்சம் சோம்பல் எனில் தான் மனக்கொதிப்பு வந்த்து..இப்பொழுது மாறுமென நினைக்கிறேன்...

bis_mala
3rd December 2011, 12:02 AM
நன்றுசெய்தீர் நகைச்சுவை! வென்றீரே! கேட்போரின்
னொன்றுதாரீர் என்றென்றும் உகந்திடும் வண்ணமாய்!

type of verse: தாழிசை

bis_mala
3rd December 2011, 12:15 AM
இதையே உங்களுக்குக் குறள்வெண்பாவாக:

நன்றுசெய்தீர் வென்றீர் நகைச்சுவையால் கேட்போர்இன்
னொன்றென் றுகந்து நிற் பார்!

மரபும் மகிழ்வு தருவதே.
மறவாமல் --
இயலும் போதெலாம்
எடுத்துக்கொள்ளுங்களேன்!

bis_mala
9th December 2011, 09:44 PM
வயிற்றுப் பிழைப்புக்கு வாய்த்ததொழில் தன்னை
உயர்த்திப் பிடித்தல் கடன்.

வேலையின் நீங்கியது யாதெனினும் நாளைப்போய்
நன்கமையச் செய்தல் நலம்.

chinnakkannan
9th December 2011, 10:44 PM
ந்கச் சுற்று

பெண்ணே பெண்ணே
எத்தனைநகங்களை நீ வளர்த்தாய்
எத்தனை நகங்கள் நீ அழித்தாய்
வளர்ப்பதும் நீதான் அழிப்பதும் நீ தான்
உலகினில் முதன்மை நீ தானே

வாழ்க்கை என்னும் நாடகத்தில்
பிரச்னைக ளெல்லாம் நகச்சுற்று
எலுமிச்சம் பழத்தை
விரலினில் வைத்து
தீர்ப்பது நமது பெண்ணினமே.
*.*
கட் பண்ணினா
**
ஒண்ணாம் சுற்று
**
கட் பண்ணினா..
**
வாம்மா பவித்ரா வா
வெள்ளிக்கிழமையும் அதுவுமா
வ்ந்திருக்க “
“ மஹாதேவன்
ஒங்கள பாக்க வரலை
எங்க நித்யா...”
“உள்ள பூஜைல்ல இருக்கா”” “
“சொல்லு பவி.பிரசாதம் எடுத்துக்கோ””” “.”
“நித்தி..
ந்ல்லா நடிக்கிற..” என் வாழ்க்கைய
அழிச்ச நீ உருப்பட மாட்டே“
“ நா எதுக்கு நடிக்கணும்” “
“லுக்..
உன்னோட ரெண்டாவ்து புருஷனை
நான் காதலிப்பது உண்மை தான்
அதுக்காக
என் புருஷன் நீ மாட்டி விட்டா..
நா ஒண்ணும் சும்மா இருக்க மாட்டேன்..”
“பவி.. பேசறதப் பார்த்துப் பேசு..
சாதாரணமா இருந்தா அது அரிசி..
வெந்துச்சுன்னா அது சாதம்..” “
“பவித்ரா கோச்சுக்காதம்மா..
இப்போ நித்தி என்ன பண்ணிட்டா..” “
“மஹாதேவன்
ஒங்களுக்குச் சொன்னா புரியாது...
ஆஆ..”ன் “
“ ப்வி என்னாச்சு....
ஒக்காரு நெஞ்ச நீவி விடறேன்
இந்தா மாத்திரை..” “

*
கட் பண்ணினா
*
முன்னால ஒங்க தலை
வழுக்கையா இருந்தது
தொட்டா வழுக்கும்
இப்போ
இந்த ஆயில் யூஸ் ப்ண்ணினதுக்கப்புறம்
பாருங்க
முடி வளராட்டாலும்
நல்லா சொரசொரப்பாயிடுச்சுல்ல...
எங்கே
ஒங்க தலையில கைய வச்சு
சொல்லுங்க *
*
கட் பண்ணினா
*
சொல்லு ராஜ் எப்படி இருக்கே
ஏதோ சோகமாப் போறது பாஸ்
இப்ப என்ன சோகம் உனக்கு
நா அவளக்காதலிக்கறேன்
ஆனா அவ தங்க என்னைக் காதலிக்கிறா
அவ அப்பாவோ
“ என்னடா சொல்ற
அவ அப்பாவும் உன்னைக் காதலிக்கிறாரா
ச்... அவ அப்பா பணத்த்க் காதலிக்கிறார்
இதோ அவரே வராரே..””
“ஹலோ மகாதேவன் சார்”
“ ராஜ் ஒன்னால என்னோட
மகள்கள் படற கஷ்டம் இருக்கே..”
நீங்க சொல்றது புரிலை..
டேய் எங்க வாழ்க்கையில ஏன் விளையாடறே
என்ன சார் மரியாத தவறுது
ஒங்க வாழ்க்கை என்ன கிரிக்கெட் கிரெள்ண்டா..
ஆமாடா ஆமா அதான் நீ
வைட் வைடா போடற பாயுறே
ராஜ் நீங்க ரெண்டு பேரும்
பேசிக்கறது சுத்தமாப் புரியலை..
”மஹாதேவன் காம் டவுன்
.” என்னத்தடா காம்டவுன்
இதோ கத்தி இவனக் குத்தறேன் பாரு..
ஆஆஆ
*
கட் பண்ணினா.
*
ஹேய்
டயர்டா இருக்கீங்களா..
ஏன் பேசமாட்டேங்கறீங்க..
இந்தாங்க க்ரூ காபி...
வாவ் ரொம்ப நல்லா இருக்கு
டிகாக்*ஷனா..
போங்க..ஒரு சேஞ்ச்க்கு
கொஞ்சம் டீத்தூள் கலந்தேன்...
வாழ்க்கையில் சேஞ்ச் வர
க்ரூ காப்பி அருந்துங்கள்...
*
கட் பண்ணினா
*
” பெண்ணே பெண்ணே
எத்தனைநகங்களை நீ வளர்த்தாய்
எத்தனை நகங்கள் நீ அழித்தாய் *
*
இரண்டாம் சுற்று
*
அச்சச்சோ
அதுக்குள்ள ரெண்டாவதா
யாருப்பா அது
மலேசியா தோழிய
மரபுக்கவித போடச்சொல்லு
*

chinnakkannan
12th December 2011, 09:47 PM
நேற்றைய முன் தினம் சந்திரகிரகணம்..அலுவலகத்திலிருந்து திரும்பும் போது முக்கால் வாசி மறந்திருந்தது நிலா –இரவுஆறரை மணிவாக்கிலேயே... வீடு வந்து கிரகணம்விலகவிலக அப்பாடா விட்டுட்டான்யா விட்டுட்டானென மகிழ்வோடு சிரித்தது போலிருந்தது..அன்றே எழுதிப் பார்த்தது தான்.. நேற்று வலையுள்ளேயே வரமுடியவில்லை..இன்று தானிட முடிந்தது
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி அருகே என்பது அதிகரீணி..தேமாங்கனி என எழுதிப்பார்த்தேன்

ஆங்கேநிலா மெதுவாகவே அகத்தைமறைத் திடவே
தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்

bis_mala
14th December 2011, 10:40 PM
நே........................
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி அருகே என்பது அதிகரீணி..தேமாங்கனி என எழுதிப்பார்த்தேன்

ஆங்கேநிலா ......................... திதிப்பாய்மதி சிரிக்கும்

I enjoyed this marabuk kavithai. Well done.

bis_mala
16th December 2011, 07:28 PM
வஞ்சிவிருத்தம்.

ஆடும் மயில்களவை அடுத்திருந்தீரோ!
பாடும் குயில்கள்செவி மடுத்திருந்தீரோ!
கூடும் இவர்களுரை எடுத்துரைத்தீரே
தேடும் முயற்சியறத் தொடுத்துவைத்தீரே.

bis_mala
31st December 2011, 07:32 PM
ஈரா யிரத்துப் பன்னிரண்டு --யார்க்கும்
இனிய ஆண்டாய் மலரட்டும்.

யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Note: Please do not p-m me, I cannot access my message folders,

chinnakkannan
1st January 2012, 01:22 PM
வருடங்கள் போனாலும் வாழும் கவிதை
பருவத் திளமையாய்ப் பார்

புதுவருட நல் வாழ்த்துக்கள்.. டோண்ட் பிஎம் மின்னா ஒங்கள ப்ரைம் மினிஸ்டரா ஆக்கக் கூடாதா..ஏஏஏன்..(தி.மோ மனோரமா போல)

bis_mala
2nd January 2012, 06:50 PM
வருடங்கள் போனாலும் வாழும் கவிதை
பருவத் திளமையாய்ப் பார்

புதுவருட நல் வாழ்த்துக்கள்.. டோண்ட் பிஎம் மின்னா ஒங்கள ப்ரைம் மினிஸ்டரா ஆக்கக் கூடாதா..ஏஏஏன்..(தி.மோ மனோரமா போல)

மடல் பெட்டிகளைத் திறக்க முடியவில்லை. புதிய மடல்களும் எழுதவோ அனுப்பவோ முடியவில்லை.
மென்பொருள் கோளாறு என்று நினைக்கிறேன். எங்கே எப்படி என்று தெரியவில்லை.சரிசெய்யவும் தெரியவில்லை.

You mean - Manorama was having a similar problem with her computer?

chinnakkannan
4th January 2012, 09:30 AM
மனோரமாவுக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரியுமான்னு தெரியாது..ஆனா மனோரமாவைத் தெரியும்...

சிக்கலில் வந்த நண்பர்
..ஷண்முகம் நாய னத்தை
மிக்கவே ஆவல் நெஞ்சில்
..மேவியே தானெ டுத்து
திக்கியே இசைக்கப் பார்த்து
..திகுவெனச் சிரிக்க வைத்து
மக்களைப் பக்கம் ஈர்த்த
...மனோரமா ஆச்சி தானே

bis_mala
8th January 2012, 03:09 AM
வல்ல நடிப்பால் அனைவரையும்
வளைத்துப் போட்டு வைத்திருக்கும்
வெல்ல மொழியால் மனங்கவரும்
வீழாக் கலையின் நிறைகுடமாம்
நலல இரம்மிய ரமாவினை
நாடிப் புகழ்ந்த நும்கவிதை
சொல்ல இனிக்கும் விதமாகச்
சூடும் மலராய் அமைந்ததுவே.

bis_mala
10th January 2012, 09:47 PM
மலேசிய நாடன்றி வேறு --- உண்டோ
மயங்காமல் நீயுண்மை கூறு


எதிர்நிற்கும் கட்சியென் றாலும் --அதை
யார்நின்று இயக்கிய போதும் --யார்க்கும்
மதிமுற்றி மாண்புற்ற நீதி -- அரசர்
மாறா முறைகூறும் நாடு.

மலேசிய நாடன்றி வேறு --- உண்டோ
மயங்காமல் நீயுண்மை கூறு!

chinnakkannan
10th January 2012, 11:08 PM
அன்பின் சிவமாலா பாராட்டியமைக்கு நன்றி...

இந்தக் கவிதை சமீபத்திய நிகழ்வினால் எழுத்ப் பட்டதா.

bis_mala
11th January 2012, 10:18 AM
ஆம், சி-க அவர்களே! அண்மைய ஒரு நிகழ்வு பற்றியதுதான்.

இங்கே சென்று சில கருத்துரைகளைக் காணலாம்:

http://www.nst.com.my/local/politics/international-media-praises-anwar-verdict-1.30657

bis_mala
12th January 2012, 10:28 PM
அரசியலே அழுக்கென்பார் அறிந்த மாந்தர்
அரசியலில் நாகரிகம் விழைவா ருள்ளார்.
உரசியதும் எரிகின்ற நெருப்புக் குச்சி
ஒத்தபலர் உலவிடுமோர் மேடை அஃதாம்,
வருசினத்திற் கடிமையென வளைந்து கையால்
வாய்வீச்சால் வம்புசெய்த வழியோர் பல்லோர்,
முரசறைந்து செயல்திட்டம் முளைப்பித்துப் பின்
முனைந்தொருகாய் பழம்படுத்தா தணைந்தோர் கோடி!.

chinnakkannan
13th January 2012, 10:37 AM
பக்கெனத்தான் இருக்குதயயா நெஞ்சத் துள்ளே
..பாரினிலே அரசியலின் தன்மை கண்டு...
திக்குகளில் எங்கெங்கும் நோக்கும் நேரம்...
..தெரிகிறதே சுயநலந்தான் செயலில் எல்லாம்..
மக்கெனத்தான் மக்களையும் நினைத்து அந்த
..மாண்புமிகு மாந்தரவர் சேர்க்கும் காசு
தக்கப்டி தங்கிடுமோ அவர்கள் கூட..
..தயங்காமல் தெரிந்திடுமே காலப் போக்கில்....

முனைந்தொருகாய் பழம் படுத்தாது அணைந்தார் கோடி..என்றால்.கோடிகளை கொய்கிறார்கள் என அர்த்தமா..
நன்றாக இருக்கிறது உங்கள் எண் சீர்...

chinnakkannan
13th January 2012, 01:14 PM
தழுவல்கள்

ஜிஞ்சும்மா பட்டும்மா செல்லப் பாப்பு
...சில்லென்றே சிரிக்கின்ற ரோஜா ஈர்ப்பு
ப்ஞ்சுகொண்ட் மென்மையிலே ஆன கன்னம்
...பார்க்கும்விழி இரண்டிலுமே கவிதை மின்னும்
துஞ்சுவது தான்விழித்தால் தாவிக் கையில்
..தூக்கியதை எடுத்திடுவாள் தோளில் கொஞ்சம்
நெஞ்சகத்தின் அமுதத்தை ஈயும் தாயின்...
..நெகிழ்வான அணைப்புமொரு தழுவல் அன்றோ..

**

பள்ளியிலே படிக்கின்ற காலம் தொட்டு
...பக்குவமாய்க் கல்லூரி முடித்த பின்னே
கல்லுக்குள் நாரெடுக்கும் கடின மான
..களமான வாழ்க்கையிலே வெற்றி தேடி
நல்லபடி மனம்நினைத்த வேலை பெற்றே
...நல்வார்த்தை தந்தையிடம் சொல்லும் நேரம்
உள்ளத்தில் பெருமிதத்தால் கைகள் நீண்டு
...உடலுடனே அணைத்திடுவார் அதற்கீ டேது...

*

சிறப்பான காலமெது வாழ்க்கை தன்னில்..
...சில்லென்றே கனவுகளும் மலரும் காலம்
உரமான உடலினுள்ளே ஊடிச் சென்று
..உணர்வுகளால் ஆட்கொள்ளும் இளமைக் காலம
கரந்தொட்டு கண்ணுக்குள் நுழைந்து விட்ட
..காதலமலர்ப் பெண்மகளை எண்ணுங் காலம்
தரமான ஆசையுடன் வெட்கம் விட்டே
...தழுவுமவள் செய்கையுந்தான் தவறா என்ன..


**

சிவந்துவிட்ட கண்களிலே சீற்றம் காட்டி
...சினத்துடனே பாஞசாலி சொன்னாள் அன்று
கவர்ந்துசென்ற என்மானம் நிலைக்கும் வண்ணம்
..கவ்ர்ந்திடுவீர் கெளரவரின் உயிரைப் பின்னே
துவங்கிடுமே என்வாழ்வும் துன்பம் நீங்கி
...துயர்மறந்த் விழிகளிலே மகிழ்ச்சி பொங்க
உவ்ந்தேநான் அணைத்திடுவேன் அழுத்தி நெஞ்சில்
..உள்ளத்தின் மகிழ்ச்சியது தெரியும் வ்ண்ணம்

ப்டபட வென்ற பேச்சை..
..பாஞ்சாலி சொல்லக் கேட்டு
கடகட வென்றே சென்ற
..காலத்தில் போரில் நன்றாய்
மடமட் வென்றே வென்று
..மறவரைக் கொன்றே செல்ல
தடந்தோளகள் ந்சுங்கும் வண்ணம்
..தயங்காமல் அணைத்துக் கொண்டாள்..

**

நேற்றுதான் தென்றலாய் தீண்டிச் சென்ற
..நயமான சுகவுணர்வு நெஞ்சில் நன்றாய்
ஊற்றுப்போல் உற்சாகம் பெருகி ஓடி
உணர்வுடனே நின்றிருந்த மரங்கள் எல்லாம்
சீற்றமுடன் முகமாற்றி சுழன்று வந்தே
..செல்லமென இருக்காமல் அடித்தே கொண்ட்
காற்ற்துவும் புயலாகக் கொண்ட தோற்றம்..
..கண்டும்னம் தாளாமல் வீழ்ந்த தங்கே...

**

நழுவாமல் நேரத்தைத் தேக்கி வைக்க
..நயமுடனே வேற்றுமொழிக் கதைகள் தன்னை
ப்ழுதாக்கிக் கொள்ளாம்ல் ச்ற்றே மாற்றி
..ப்க்குவமாய் எடுத்திடுவார் திரையின் முன்னே
வழுவாத வசனங்கள் எல்லாம் கொண்டு
..வஞ்சியரை நடிகர்களை வைத்துக் கொண்டு
தழுவித்தான் தீந்தமிழில் எடுத்த வற்றைத்
...தழுவ்லென அலட்சியமாய்ச் சொல்ல லாமா...

*****

அன்பின் சிவமாலா..
உங்கள் எழுத்துக்க்ளில் முதிர்ச்சி தெரிந்தாலும் என்னை போல் நீரும் இளமை என் நினைத்து ஒன்று சொல்லட்டுமா...

நேற்றுப் பார்த்த ஒரு திரைப்படம் நண்பன்.. ஹிந்தியில் வந்த படத்தின் கதையைத் தமிழில் ஆரத் தழுவி எடுத்திருக்கிறார்கள்.(ஆரத் தழுவி என்றால் காட்சிக்குக் காட்சி அப்படியே – நடிகர்க்ள்,மொழி மட்டும் வேறு...கொஞ்ச்ம் விற்பனைக்காக பாடல்கள் சில கூட்டி... நன்றாய்த் தான் இருந்தது..இருந்தும், என்ன் இருந்தும் நமது ஒரிஜினல்..சுயகற்பனை இல்லையே என்பது கொஞ்சம் நிரடிய்து...

அப்படியே சிந்தித்தபடி எனது தாரத்தையும் தமிழையும் தழுவியிருந்ததில் எழுந்த் எண்ணம் இது...! கவிதையா இல்லையா எனத் தெரியாது...
**

bis_mala
14th January 2012, 10:50 PM
தழுவித்தான் தீந்தமிழில் எடுத்த வற்றைத்
...தழுவ்லென அலட்சியமாய்ச் சொல்ல லாமா...

தழுவி, தான் எடுத்தவற்றைப் பிறர் அங்ஙனம் அலட்சியப் படுத்துவது, கவலை தரக்கூடும்.

போட்ட பணம் திரும்பி வந்துவிட்டால், கவலை தீர்ந்துவிடுமே.....

போட்ட பணம்திரும்பப் போகும் கவலையெலாம்
ஆட்டமுடன் பாட்டமதன் பின்.

How did the film do at the box office?

bis_mala
14th January 2012, 11:35 PM
ஜிஞ்சும்மா பட்டும்மா செல்லப் பாப்பு
...சில்லென்றே சிரிக்கின்ற ரோஜா ஈர்ப்பு
ப்ஞ்சுகொண்ட் மென்மையிலே ஆன கன்னம்
...பார்க்கும்விழி இரண்டிலுமே கவிதை மின்னும்
துஞ்சுவது தான்விழித்தால் தாவிக் கையில்
..தூக்கியதை எடுத்திடுவாள் தோளில் கொஞ்சம்
நெஞ்சகத்தின் அமுதத்தை ஈயும் தாயின்...
..நெகிழ்வான அணைப்புமொரு தழுவல் அன்றோ..

பட்டறிவு மிக்கப்பா வல்லவர் --என்று
பார்த்தவுடன் நான்கண்டு கொண்டேனே.
இட்டகவி தழுவற்குக் காவியம் -- நெஞ்சுக்
கிதமான கோவைச்சொல் ஓவியம்.

அனைத்தும் இனிய விருத்தங்கள்.

chinnakkannan
14th January 2012, 11:36 PM
இப்போதைக்கு அரங்கு நிறைகாட்சிகள் தான்..பட் போகப்போகத்தாந்தெரியும்..கொஞ்ச்ம் நீளம்..மூன்றே கால் மணி நேரம்..ஹிந்தியில் பார்த்தபோதே சற்று கண் வ்லித்தது...

chinnakkannan
14th January 2012, 11:52 PM
நன்றி சிவமாலா...

தாராட்டில் தான்மயங்கும் சேயினைப் போலுங்கள்
பாராட்டு மான தெனக்கு... (ஹிஹி..கண்ணா ஜஸ்ட் லைக்தட் குறள் எழுதிட்டடா)

வசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் பெற்றாற்போலிருக்கிறது...

bis_mala
15th January 2012, 12:00 AM
iniya ponggal vazththukkaL, ungkaLukkum anaivarukkum.

time 2 something in Malaysia, bye for now......

chinnakkannan
15th January 2012, 12:02 AM
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...இனிய இரவு...

bis_mala
15th January 2012, 09:22 PM
எழுந்த் எண்ணம் இது...! கவிதையா இல்லையா எனத் தெரியாது...


எதுகவிதை என்பதற்கோ இயலறிந்த ஆசிரியர்
எடுத்துரைக்கும் காரணங்கள் பலவே;
புதுவகையோ மரபுவழிப் போம்கவியோ யாதெனினும்
பொதிந்துவைத்த உணர்வுகளே கவியாம்;
மதுமலர்க்குள் வண்டினங்கள் மாந்தினது தேனன்றி
மற்றெவையும் குறியாதல் உளதோ?
பதிவுணர்வு தானன்றிப் பாட்டுக்குள் எதுவேண்டும் ?
இதுகவியென் றாடிடுக இனிதே.


அன்புடைய சி.க. அவர்களுக்கு என் நன்றி.

chinnakkannan
15th January 2012, 11:47 PM
அழகிய விருத்தம் சிவமாலா நன்றி.

chinnakkannan
16th January 2012, 12:05 AM
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதய்ம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்

பக்க்த்து வீட்டு பாட்டுக்குப் பாட்டிற்காக அதிகரீணியில் முய்ன்றது...

என்னவென்று தெரிய்வில்லை..வஞ்சியையும் புரிந்துகொள்ள முடியவில்லை..வஞ்சி விருத்தததையும்..கொஞ்ச்ம சொல்லிக் கொடுங்களேன்..

bis_mala
16th January 2012, 06:50 PM
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதய்ம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்

Wow!



என்னவென்று தெரிய்வில்லை..வஞ்சியையும் புரிந்துகொள்ள முடியவில்லை..வஞ்சி விருத்தததையும்..கொஞ்ச்ம சொல்லிக் கொடுங்களேன்..

மீன்குஞ் சடிக்க முயல்கின்ற நீச்சலின்முன்
நான்சொல் கொடுக்கவோ! நன்று,,,,

ஓடையின் பக்கலில் ஓசைகுன்றித் தான்பறக்கும்
பாடறியாப் பாப்பாத்தி நான்.

bis_mala
16th January 2012, 07:46 PM
எண்ணியாங்கு பாடும் எழுபா வலர்கைக்குள்
வஞ்சி வடித்தால் வரும்.

chinnakkannan
16th January 2012, 09:55 PM
ஹை..இது தான் நழுவல் என்பது...

கழுவும் பொழுதிலே கையிலே சிக்கா
நழுவும் மீனாமோ நீர்...

bis_mala
16th January 2012, 10:08 PM
ஹை..இது தான் நழுவல் என்பது...

கழுவும் பொழுதிலே கையிலே சிக்கா
நழுவும் மீனாமோ நீர்...



ஊஹூம், நான்thAn பறக்கும் பூச்சி என்று சொல்லிவிட்டேனே.

chinnakkannan
16th January 2012, 10:45 PM
பூச்சியெனப் பெயராமே
சூச்சுமமாய்த் தவஞ்செய்வீர்
கூச்சமதை அகற்றியுந்தான்
மூச்சுவிட்டுக் கவிபுனைவீர்..

என்னென்று உரைப்பதம்மா
தன்னடக்கம் கொளும்நெஞ்சை
வண்ணமய இசைச்சாறாய்
எண்ணமுடன் எழுதியவர்

தாழ்ந்தப்டி பறப்பவரோ
ஆழ்ந்துமனம் உழுபவரோ
சூழ்ந்துவரும் இடரினிலும்
வீழ்ந்துபடா திருப்பவரே...

நன்றி..கொஞ்சம் கஷ்டப் பட்டு வஞ்சித் தாழிசை (உபயம் அ.கி.பரந்தாமனார்) ப்டிச்சு எழுதிப் பார்த்தேன்..சரியா

bis_mala
17th January 2012, 06:44 PM
ஒரே நாளில் - "வஞ்சி வருமென்று " நான் புகன்றதை ஐயமற நிறுவிவிட்டீர்.

பறக்கும் பூச்சி, நீச்சல் வீரரான மீனுக்கு வேறென்ன விளம்ப முடியும்!

The poochchi seems to make some noise, It is now decoded for you, follows:-

மனம்போல் பாடல்புனைவீரே
விரைந்தே பாவகைகள் அறிந்தே...

உம்மனம் ஒன்றை நினைத்தால் - அதைத்
திண்ணமாகச் செய்து முடிப்பீர்,
உயர் கல்வி கலைகளில் முயன்றே
உண்மையாய்ப் பண்பினால்.....(மனம்போல்) -

bis_mala
17th January 2012, 09:08 PM
பூச்சியொன்று பறந்தநேரம்
மீன்களுக்கு நல்லநேரம்;
ஆச்சுதென்று குஞ்சுமீனும்
ஆழநீரில் நீச்சலிடும்.

புதுவெள்ளம் இதுவென்று
பொடிமீனோ அஞ்சவில்லை.
நதி நீரின் ஓடுவேகம்
நழுவவில்லை கண்டபின்பும்,

பாராட்டுக்கள்.

chinnakkannan
17th January 2012, 10:13 PM
நன்றி சிவமாலா..கொஞ்சம் கலிவிருத்தமா...

பொடிமீனா பொடியவனா பைந்தொடியே யானறியேன்
மடிநிறையப் பொரிபோலே மலரடுக்காய்க் கற்பனைகள்
வடிவமைக்க மனக்குளத்தில் வந்துவிழ அவைதொடுக்க
படித்ததையே தான்முயல பாவந்தே இசைத்ததுவே

chinnakkannan
17th January 2012, 11:15 PM
நேற்று மாலை, பார்த்தீர்களென்றால், என் அ.மாடிக் குடியிருப்பில் எனது மூன்றாவது மாடிப் பலகணியில் அந்தக்கால கறுப்பு வெள்ளை நிறத்தில்
ஒரு புறா வந்துவிட்டது..

கைப்பிடிச் சுவர் பெரிதோ அல்லது உடல் நிலை சரியில்லையோ தெரியவில்லை... அதனால் மறுபடி பறக்க இயலவில்லை.என் மனைவிதான் முதலில் பார்த்தது..( நான் அலுவலகம் முடித்து இரவு ஏழு மணிக்குத் தான் வருவேன்)

கொஞ்சம் பொரி வைத்தாள்..ம்ஹீம் சாப்பிடவில்லை.. சோர்வாய் மூலையில் சென்று உறங்கிவிட்டதாம்.. நேற்று கொஞ்சம் குளிர்காற்று நிறைய..எனில் குளிரில் நடுங்கியபடி.. நான் வந்தபின்பும் பார்த்தால் தலையை உள்செலுத்தி நல்ல தூக்கம்..

இன்று காலையில் அலுவல் கிளம்பும் போதும் பார்த்தால் உறக்கம் தான்..
நான் சென்றபிறகு சமர்த்தாய்க் கண் விழித்து வீட்டுக்காரி போட்ட கோதுமை தானியங்களைக் கொத்தி கிண்ணத்தில் வைத்த காலைக்காப்பிபோன்ற தண்ணீரை அருந்திவிட்டு அன்ன நடை போட்டுக் கொண்டிருந்ததாம்

சொல்ல மறந்துவிட்டேனே..இன்று என் தந்தையாரின் நினைவு நாள்.பலவருடங்களுக்கு முன் இந்நாளில் தான் என் தகப்பனார் வானுலகம் சென்றிருந்தார்.

எனில் அலுவலகம் சென்றபோது தொலைபேசி.. அப்பாவுக்கு என்ன ஸ்வீட் ப்ண்ணி படைக்கிறது...சரி கேசரி செய்யேன்..

செய்து படைத்தபோது பால்கனி வழியாக அந்தப் புறா கண்ணாடிக் கதவைக் கொத்திக் கொண்டிருந்ததாம்.. பின் தீபாராதனைகாட்டும் போதும் கொஞ்சம் தன்னைத் தானே சுற்றியதாம்.. கண்ணில் ஒற்றிவிட்டு பால்கனியில் கண்ணை ஓட்டினால்.. அது இல்லை..காணோம்..எப்படிப் பறந்ததென்றும் தெரியவில்லை..

மாலை வந்து கொஞ்சம் விளையாடலாம் என எண்ணியிருந்த எனக்கு சற்றே ஏமாற்ற்ம் தான்..

அதைக் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன்..

புறவே புறவே அழகுறும் அலகுடன்
உறவு கொளவே ஓடிவந் தனையோ
துறவைத் திடுமென துணிந்தே எடுத்தே
விரைந்த துமேனோ விளக்குவாய் நீயே

வானில் பறந்தே வகையாய் மகிழ்வைப்
பேணிய படியே இருந்திருக் கலாமே
நேற்று வந்தாய் நெஞ்சு நிறைத்தாய்
ஊற்றாய் உளத்தில் சோகம் பொங்குதே..

இட்ந்தான் மாறி இங்குவந் தாய்நீ
இனிதா கவேதான் இருந்திருக் கலாமே
திடமா யொருமுடி வெடுத்தே சென்றாய்
தவிக்கும் மனதுன் அழகின் நினைவிலே

எங்கோ பறந்தாய் மகிழ்வாய் இருந்தாய்
இங்கே இருந்த இடமும் வெற்றாய்
வெறுமையாய்ப் பாலையாய்த் தெரிந்தே
புறவே உந்தன் நினைவைச் சொலுமே..

**

bis_mala
18th January 2012, 06:27 PM
எலி சென்று மறைந்ததுவோர் ஏமாற்றமே
வலி நெஞ்சில் கரைந்திடவே வருமாற்றமே
என்றிருந்த நண்பருக்குப் புறவேற்றமே
சென்றமன மகிழ்வினையே மீளேற்றுமே,
இப்படியான் எதிர்பார்த்து நின்றபோதில்
இப்புறவும் பறந்ததுவோ இன்றுகாதில்
செப்பரிய துன்பியல்சேர் செய்திமாதே!
ஒப்பிடவே ஏமாற்றம் இனியொன்றேதே!
எனவாங்கு,
யானுமென் கவலை ஈண்டு பதிவேன்,
ஊணும் உறக்கமும் மீண்டு
காணும் நன்மை அனைத்தும் மீளவே.

chinnakkannan
19th January 2012, 11:39 AM
நல்லா இருக்கு...இது வஞ்சி தானே..

பக்கத்து வீட்டு பாட்டுக்குப்பாட்டில் மா காய் காய் காய் என எழுதியிருக்கிறேன்..பார்த்துச் சொல்லுங்கள்..(இங்கும் இடலாம்..ஆனால் இரண்டு இடுகையாகுமென இடவில்லை..

bis_mala
19th January 2012, 07:01 PM
ஞானும் நல்லதுபோல தெரக்கி நோக்கி, அது கிட்டிட்டில்லா ஸாரே! ஏ திரி,நிங்ஙள் எவிட இட்டு?

I am sorry

anbudan

bis_mala
19th January 2012, 07:32 PM
ரசிகத் தன்மையில்
கைதேர்ந்தவள் வஞ்சி,
ராகத்தில் சிறந்தது
நாட்டைக் குறிஞ்சி

என்றொரு பாடலில் இசைப்பா அரசர் பாபநாசம் சிவன் அவர்கள் பாடியுள்ளார்.

நாட்டைக் குறிஞ்சிக்கு ஒத்துவரும்படி வஞ்சி யாப்பில் அல்லது அதன் சாயலில் ஏதேனும் தரமுடியுமா?

அன்புடன்

chinnakkannan
19th January 2012, 08:59 PM
தோழீ ஈஈஈ... ரொம்ப் எதிர்பார்க்கறீங்க.. முயற்சி செய்யறேன்..
அது ப்வள்மணிக்காவோட கவிதைக்குக் கவிதை பாட்டுக்குப் பாட்டு பொய்ம்ஸ்/க்விதைகள்ல முதல் திரி...

bis_mala
19th January 2012, 09:38 PM
உலகின் மறுபெயர் துன்பம் - இதை
ஒதுங்கின பேரகளுக் குள்ளதாம் இன்பம்!
அளவிடும் ஆழறி வுள்ளார் --பல்
லாண்டுகள் முன் நம தேட்டினில் சொன்னார்.

புயல்மழை காற்றொடு வாட்டும் -- படு
குளிர்பெருந் தீ புகை என்றிவற் றோடு
கொலைகள வாம்வெடி வைப்பு -- எனக்
கூறுதற் கில்லாத பட்டியல் நீட்டம்.

வான்வழிச் செய்திகள் தம்மில் -- இந்த
வன்மைகள் தின்மைகள் வற்றி இஞ் ஞாலம்
கூன்படல் இல்லாத வாழ்வை -- மக்கள்
கொண்டுயர்ந்தார் எனக் கேட்பதெந் நாளோ!

chinnakkannan
20th January 2012, 10:36 AM
என்னால எல்லாம் உலகத்துயரிலிருந்து ஒதுங்கெல்லாம்முடியாது! இன்னும் வயதாகலையோன்னோ...!
நல்ல கவிதை நன்றி..

ம்லேசிய் நாட்டிலோர் மாலா – அட
பலேயெனச் சொலும்பாடல் புனையுமோர் ஆளா!
கலையுடன் கவிதைகள் தந்தே – நெஞ்சில்
நிலையாக என்றுமே நிற்பாரே இங்கே

bis_mala
28th January 2012, 07:40 PM
..............................!
நல்ல கவிதை நன்றி..

ம்லேசிய் நாட்டிலோர் மாலா – அட
பலேயெனச் சொலும்பாடல் புனையுமோர் ஆளா!
கலையுடன் கவிதைகள் தந்தே – நெஞ்சில்
நிலையாக என்றுமே நிற்பாரே இங்கே


நன்றிதனை நான்நவில்வேன்
மன்றுபுகழ் சின்னக்கண்ணர்
நன்றுநன்றும் கவிதையென்றே
இன்றினிதே உரைத்தமைக்கு.

அம்மாவை நினைத்தபோது
சும்மாவிளித் திடும்குழந்தை
நம்மால்வே றியலாதென்றே
சும்மாநான் எழுதிப்பார்த்தேன்


கவிதையம்மை வந்தாளென்று
நவின்றதாலே நான்மகிழ்ந்தேன்;
செவிமடுத்த சீரோர்யார்க்கும்
இவண்வணங்கி அமைகின்றேன்.

bis_mala
28th January 2012, 10:10 PM
நன்றிதனை நான்நவில்வேன்
......................




இவர் யாரோவெனின்,
கவிதைக்குக் கவிதைபாடும் மன்னர்;
கலைமொழி புனையுவிற் பன்னர்;
நிலையாக நிறுத்திவைத்த
சிலைபோலும் ஒருபோதும்
கலையாத சொற்களையே
கவித்து அழகுகாட்டிய கவி;

இவர் ஈண்டு நிகழ்த்திய விந்தை
யாதோவெனின்,
அதுதான்,
தோட்டத்துச் சிறுமலரை
நாட்டியது நன்மலை நயந்த மதுமலராய்.
இத்துணைப் புகழ்ச்சியோ இச்சிறு மலருக்கு?

கொல்லையிற் கிடந்தே எல்லையுட் பட்ட
முல்லை எனவே முகிழ்த்து
பிறபுகழ் விழையா துறைந்தனம் யாமே.

chinnakkannan
28th January 2012, 11:00 PM
உறுமீனாய் நிற்காமல் ஓடுகின்றார் செந்தமிழில்
சிறுமலராம் ந்ம்புவா யா..

அட அட நன்றியையும் அழகான பாக்களில் சொன்னீர்...

bis_mala
30th January 2012, 09:15 PM
கொப்பளிக்கும் வெம்மை -- ஒரு
குளிரறை தேடிட வைத்ததே எம்மை;
தெப்பக்குளம் அண்மை -- எனில்
தேங்கா ததிற்சென்று வீழுவோம் உண்மை.

இப்படித் துன்புறவே -- கண்ட
இயற்கைதந் தாள்பெய்க! பெய்யென் பொழிவே!
செப்படி வித்தையன்றே--இந்தச்
சீர்மிகு நன்மலை நாட்டிலி(து) இயல்பே.

நான்கு பருவங்களோ -- இல்லை!
நாமறிந் தோம்வெயில் மாரி இ ரண்டே
பாங்குற வாழ்வதற்கு -- இயற்கை
பண்பாடும் பொன்மலை நன்னாடு போலுண்டோ?

chinnakkannan
30th January 2012, 11:54 PM
ஹாய் மால்ஸ்! நேற்று உங்கள இடுகைக்கு முன்னால் நழுவல் என்ற் தலைப்பில் எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.இன்று பார்த்தால் அனல் அடிக்கும்பாட்டு..சூட்டோடு சூட்டாக மீதியையும் எழுதி விட்டேனே...! நிறைய எழுத் நினைத்துச் சுருக்கிவிட்டதால் கொஞ்ச்ம் சுமாராய்த் தான் இருக்கும்.

***
நழுவல்கள்
**

விரும்பி எழவும் முடியவில்லை
…விழித்து நோக்கவும் தெரியவில்லை
குருட்டாம் போக்காய் குறுகித்தான்
...ஒடுங்கி நன்றாய் இருந்தாச்சு
புருவஞ் சுருக்கிக் கண்மூடிப்
...பொய்யா யுறங்கி இருந்ததுவும்
இருட்டில் நழுவி ஓர்நாளில்
...உலகம் பார்க்க வந்தாச்சு.

விழிகள் வெற்றாய்ப் நோக்குங்கால்
...வெளிச்சம் கண்ணில் அடித்திடவே
கிலியால் உதடுகள் தான்கோணி
...கோவென் றழுதால் அன்னையவள்
வலியச் சேர்த்தே அணைத்த்படி
...அமுதம் தன்னை புகட்டுங்கால்
துளீயாய்ச் சிரித்துத் துஞ்சியதில்
...சென்ற நேரம் கொஞ்சமல்ல.

கிட்ட இருந்தும் வாராமல்
...கூவி அழைத்தும் கேளாமல்
எட்டி எடுக்க் முடியாமல்
...ஏயென் றழவும் அன்னையும்தான்
தட்டித் தழுவிப் புற்ம்போட்த்
...தவழ்ந்து பொம்மை தானெடுத்துக்
கட்டிப் பிடித்தே தூங்கியதில்
....கழிந்த காலம் எத்தனையோ

தளர்நடை பழ்கும் போது
....த்யக்கமும் கொண்டி டாமல்
உள்றலாய்ச் சொற்க ளோடு
...உயரமாய் உள்ள வற்றை
மலர்ச்சியாய் எடுக்கப் பார்த்து
...ம்றுபடி முய்ற்சி செய்து
கலவரம் அடைந்து க்த்தும்
...காலமும் போன தங்கே.

பள்ளியில் படித்த பாடம்
...பருவமும் அடைந்த பின்பு
துல்லிய மாக மேலே
...தொட்ர்ந்த்து வேறு திக்கில்..
கல்வியும் முடித்த பின்பு
...கனிவுடன் வேலை தேடி
நல்லிடம் த்னிலே சேர
...ந்ழுவிய் காலம் பலவே

பழுதுகள் ஏதும் இல்லா
...பக்குவ மாக வேலை
பார்த்த்தில் மனைவி சேய்கள்
...பாய்ந்துதான் சேர இன்றோ
வழுக்கிடும் தரையைப் போலே
...வாழ்வதன் சுவைகள் எல்லாம்
நழுவுது மெல்லக் கொஞ்சம்
....நாரணன் பேரைச் சொல்லி

chinnakkannan
30th January 2012, 11:58 PM
அழகான பாடல்..அங்கே வெப்ப்மா..இங்கே இன்னும் மெல்லிய குளிர் இருக்கிறது...இன்னும் ஏசி போட் ஆரம்பிக்கவில்லை..அனேக்மாக அடுத்த வாரம் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.

chinnakkannan
31st January 2012, 12:07 AM
முன் பக்கத்தில உள்ள நழுவல்கள் படிச்சுடுங்க... இது பாட்டுக்குப் பாட்டுக்காக எழுதியது...

போச்சு போச்சுவென்றே பொங்குவதும் போதாமல்
...பேச்சில் நல்வார்த்தை சிறிதேனும் சொல்லாம்ல்
வீச்சு வீச்சென்றே விள்ங்காமல் கத்துவதும்
...வில்லி நாயகனின் நாயகியை வீழ்த்திடவே
பூச்சி பிடிக்கின்ற பல்லியைப்போல் காய்நகர்த்தி
... பொன்னும் மணிநகையும் புடவையும் தானுடுத்தி
சூழ்ச்சி செய்வதையும் விடாமலே பார்த்திடுவார்
...சோம்பல் மாந்தரவ்ர் தொலைக்காட்சித் தொடரினிலே

chinnakkannan
31st January 2012, 12:09 AM
இதுவும் பாட்டுக்குப் பாட்டுக்காய் எழுதியது..


நானாகத் தானிருந்த கால மெப்போ
...நலமாகத் தானிருந்த பொழுது மெப்போ.
தானாடி என்னுடனே ஓடி யாடி
..தயங்காமல் என்மழலைப் பேச்சி லாடி
ஆணாக எனைவளர்த்த அன்னை கூட
..அழ்காக இருந்திருந்த நாட்க்ள் தானா..
தேனாகப் பலவாறாய்ப் பேசி வானில்
..திசைக்கெல்லாம் பறந்திருந்த இளமைப் போதா

ஊனாசை உயிராசை எல்லாம் கொண்டே
..உறங்காமல் ப்லவாறாய்ச் செல்வம் சேர்த்து
காணாமல் போய்விட்ட வெள்ளை உள்ளம்
..கண்களிலே மறுபடியும் தெரியுங் காலம்
வீணாசை என்றேதான் அறிந்த போதும்
...வேடிக்கை தனைக்கூட்டும் விந்தை நெஞ்சால்
தானாகத் தோன்றிடுமோ என்றே உள்ளே.
..தவித்தபடி கேட்கின்றேன் விடைதான் எங்கே...

bis_mala
1st February 2012, 10:35 PM
Well written poems,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Enjoy the coolness of the climate and write more...

bis_mala
2nd February 2012, 11:14 AM
இதுவும்...................................... .....
..தவித்தபடி கேட்கின்றேன் விடைதான் எங்கே...







விடைதன்னை வியனுலகம்
விரிந்தெங்கும் தேடுகின்ற
நடைசிறந்த கவியுடையார்
அடைந்திடுக இனியவிடை.

தொலைக்காட்சி நிகழ்வுகளைத்
தொலைவில்நின்றே அலசியிந்த
வலைத்தளத்தில் வளர்த்துவதும்
வண்டமிழ்க்கும் இலக்கியமே.

உள்ளத்துக் கிடக்கைகளை
ஒளிவறவும் மறைவறவும்
தெள்ளிதினே தெரிவிக்கும்
திறனிதற்கோ ஒப்பரிதாம்.

வெள்ளமொரு வீறுகொண்டு
விரைந்தணையைக் கடந்ததுபோல்
கள்ளமற வருமொழிகள்
பொருத்தமென்பார் கருத்துடையார்.

chinnakkannan
2nd February 2012, 12:47 PM
நன்றிங்க..

ஒங்களுக்கு சுலபமா வஞ்சி வருது..ம்ம்

bis_mala
3rd February 2012, 02:12 PM
நன்றிங்க..

ஒங்களுக்கு சுலபமா வஞ்சி வருது..ம்ம்



எத்துணைப் பேருவகை ஏலா தியம்புதற்கே
அத்துணையும் இன்ப மயமாகும் --ஒத்தியன்றே
உள்ளபடி ஓங்கித் திளைத்திடுக -- நல்லபடி
நாளைக்கு வஞ்சி நயம்தருவாள் என்னகுறை
அல்லல் அலுவலகம் ஆய்வுகள் என்றாலும்
இல்லையிவை என்னும் இன்ஞாலம் -- இல்லையில்லை!
சொல்லுங்கள் வஞ்சியே சோர்வின்றி வந்திடுவள்
வெல்லுங்கள் வெல்கவே வேல்.

bis_mala
6th February 2012, 09:17 AM
அருட்கவிகள் வாழ்ந்தவந் நாளில்நாம் வாழ்ந்தே
இருப்பினது இன்பமே நெஞ்சம் -- பொருத்தி
அவரருகில் நின்று செவிமடுத்தல் போல்பே(று)
எவர்க்கெளிதாய்க் கிட்டு மினி.

This was composed some years back and published in uNarvuakaL forum, which now appears to have changed,

I have now re-written the stanza to put it in veNba format.

bis_mala
17th March 2012, 10:05 PM
ஒரு --
குமரியின்மேல் உனக்குக்
கோபம் வந்திடுமானால்
கொடிகளுடன் சென்று விளையாடுவாய்!

கொடிகள் அவைபல தடைகள் தமைத்தாண்டி,
படரும் திறன்கண்டு பயன்காணுவாய்,
மடியும் வாஞ்சைஅது முடியும் கணம் வருமுன்
நொடியும் தயங்காமல் படிபேணுவாய்.
நொசித்தன்பு மாறாத படிபேணுவாய்.
(ஒரு குமரியின்)

Ref to a Malaysian case in which an accountant (young female ) was killed with 5 stab wounds by a low grade worker .He was apparently so angry with her.....Isn't there a way of channeling such emotional surges to some positive direction....? These lines deal with such situation albeit in an oversimplified manner....

bis_mala
18th March 2012, 05:50 PM
இரண்டு குருவித் தோழிகள் பேசிக்கொண்டார்கள். பின் கூரையின் கீழ் அவர்கள் இருப்பிடத்திற்குப் பறந்து சென்றுவிட்டார்கள்.

அப்பம் எறிந்தாள் சிவமாலா -- தோழீ
அதுநம் விருந்தாம் வருவாயே.
வெப்பம் மிகுந்திடில் கூரையுண்டு - தோழீ
வேறேது வேண்டும் மகிழ்வாயே

கூரையின் கீழொரு மண்டபமாம் -- கேள்
குறையில்லை அங்கே வருவாயே.
ஆருமே அங்கு வருவதில்லை -- எனில்
அஞ்சா அரசும் நமதல்லவோ

முட்டை குஞ்சென்றே எதனையுமே --திருடி
முடக்கிடும் தீமைகள் நேர்வதில்லை;
பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்
பண்ணாகும் நல்லிடம் வந்திடுவாய்.

note: வகையுளி: முட்டைகுஞ் / சென்றே / எதனையுமே. இதை முட்டை குஞ்சென்றே எதனையுமே என இயல்பாகவே எழுதியுள்ளேன்.

geno
24th March 2012, 09:05 PM
ஆருமே அங்கு வருவதில்லை -- எனில்
அஞ்சா அரசும் நமதல்லவோ

அஞ்சா அரசு! அடடா!


பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்
பண்ணாகும் நல்லிடம் வந்திடுவாய்.

அருமையான சொல்லாட்சி. இந்த வரிக்கு உங்கள் கூற்றை விரிவுரை செய்யுங்கள்.

bis_mala
31st March 2012, 11:26 PM
அஞ்சா அரசு! அடடா!



அருமையான சொல்லாட்சி. இந்த வரிக்கு உங்கள் கூற்றை விரிவுரை செய்யுங்கள்.

கவிதையைப் படித்துத் திறனாய்வு செய்து பாராடிய தாங்களுக்கு என் நன்றி.

இந்தக் குருவிகள், கூரைக்குக் கீழும் கூரைப்பலகைக்கு மேலுமுள்ள இடைவெளியில் வாழ்கின்றன. இவ்வளவு உயரத்துக்குப் பூனைகள் ஏறிப் போவதில்லை.( 3 storey building) எலிகளும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. வேறெந்த "உயிரி"யும் (other than insects etc) செல்லாத இடம். இந்தக் குருவிகளுக்கே உரிமைபூண்ட இடம்போல ஆகிவிட்டது. ஒருவன் நிலம் வாங்கினால்கூட, அங்கு விளவனவற்றைப் பாதுகாத்துக்கொள்ளவும் அத்துமீறி யாரும் அங்கு புகுந்துவிடாதபடியும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியனாய் இருக்கின்றான்.அவன் பட்டா பெற்றிருந்தாலும் இதற்கு விதிவிலக்காக இல்லை. ஆகவேதான் "பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் மிகப் பண்ணாகும் நல்லிடம்" என்று வருணித்தேன். இந்தக் குருவிகள் அதிகாலையிலேயே எழுந்து ஒலிசெய்கின்றன. அதிலும் பண் ( இசை) இருக்கிறது...இதனைக் குறிப்பாக உணர்த்தியுள்ளேன்.

குழந்தைகள் விரும்பும் பாடல் எழுதுவது கடினம் என்று நினைக்கிறேன்.

பள்ளிப் பிள்ளைகள் படிக்க விரும்பும் பாடலாக இது அமையுமானல் அஃது எனக்கு மகிழ்வு தரும்.

bis_mala
1st April 2012, 09:19 PM
எழுத்துப்பிழைத் திருத்தம்: விளவனவற்றை என்பதை விளைவனவற்றை என்று திருத்தி வாசித்துக்கொள்ளவும். முன் இடுகையைத் திருத்த இயலவில்லை. The Edit feature is "jammed".

geno
6th April 2012, 01:54 AM
nanRikaL bis_mala!

bis_mala
15th June 2012, 02:31 PM
தன்பற்றியே யாரும்
பேசும்படி செய்தோன்,
பண்பட்டு உயர் தன்விளம்பரத்தின்
விண்தொட்டோன்!
சிக்கினோன் அன்னோன் எனப்பட்டால்
சிக்கினோன் அன்னவனோ?
மற்றோரோ
யார்?

குறிப்பு: பண்பட்டு உயர் தன்விளம்பரம் = மிகவும் பண்பட்ட அல்லது வளர்ச்சி முற்றிய நிலையடைந்த சுயவிளம்பரத் தந்திரத்தைக் குறிக்கிறது இத்தொடர். அவன் பண்பட்டானோ இல்லையோ, அது பண்பட்டுவிட்டதென்பது கருத்து.

bis_mala
18th June 2012, 08:46 AM
சின்னக்கண் அழகன் என்றால்
சீனனைச் சொல்ல வேண்டும்.
என்பக்கம் சிரிக்கும் போதில்
இமை மூடிக் கண்மறைக்கும்.

வெளிறிய மஞ்சள் மேனி
வேண்டுமோ குளிக்க மஞ்சள்?
உளறிய அசை ஒவ் வொன்றுக்கும்
உட்பொருள் வாஞ்சை கெஞ்சும்.

chinnakkannan
18th June 2012, 09:47 PM
வண்ணமாய்ப் பாடினீரே
..வழக்கமென் றாலும் கூட
சின்னதாய்க் கண்ணன் பற்றி
சந்தமாய்க் கவிதை சொல்வீர்....

ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த இழைக்கு வந்தேன்.. நல்ல பாட்டு நன்றி

bis_mala
20th June 2012, 03:46 PM
வண்ணமாய்ப் பாடினீரே
..வழக்கமென் றாலும் கூட
சின்னதாய்க் கண்ணன் பற்றி
சந்தமாய்க் கவிதை சொல்வீர்....

ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த இழைக்கு வந்தேன்.. நல்ல பாட்டு நன்றி



Welcome back !

வேய்ங்குழல் நாதம் தாங்கியே வீசும்
வீங்கிள வேனில் தருதென்றல்
விண்ணிலும் மண்ணிலும் விரிந்திடும் தண்ணருள்
பண்ணினைத் தந்தவன் கண்ணனவன்.

chinnakkannan
21st June 2012, 01:55 PM
நன்றி மாலா..

வெளியிலே வெய்யி லென்றால்
..உளத்திலே சூடு எல்லாம்
மெலியதாய்க் கூடிக் கூடி
..மேகமாய்ச் சூழ்ந்துகொள்ளும்

துளியென மகிழ வந்தேன்
..தூங்கிய நெஞ்சை இன்று
களிகொளச் செய்த தாலே.
..கண்ணனும் சொல்வான் நன்றி..

bis_mala
24th June 2012, 06:53 PM
அதிகாலை எழுந்து,
பகலெல்லாம் உழைத்து,
மாலையில் ஓய்கின்றான்,
ஆண்டுகள் பலப்பல,
அதைச் செய்தான் பிறிதில்லை
அயர்வேதும் உறுதலின்றி !

உழைப்பாளி ஓய்ந்த நாள்
ஒப்பிலாத் துன்பம் ஏய்ந்தநாள்
உழைத்துக்கொண்டே இருந்தால்,
உலகினர் இன்பம் எலாம் வாய்ந்தே
ஒப்புயர்வு இலாது உலவுவர்,
அந்த உழைப்புக்குச் சொந்தக்காரன்
எந்த நாளும் இனிது வாழ்க!

sundararaj
28th June 2012, 08:06 PM
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளேன். நலமாய் உள்ளீர்களா மாலா அவர்களே? ஒரு வெண்பாவை இங்கு பதிய விரும்புகிறேன்:

நேரிசை வெண்பா :
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும் வாழ்த்துகிறோம் மங்கையரை – ஏய்ப்பதுவே
என்பேன்நான், எல்லாமே ஏதம்தான், பெண்ணியத்தில்
நன்றாக இல்லையெநம் நாடு

bis_mala
29th June 2012, 03:17 PM
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளேன். நலமாய் உள்ளீர்களா மாலா அவர்களே? ஒரு வெண்பாவை இங்கு பதிய விரும்புகிறேன்:

நேரிசை வெண்பா :
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும் வாழ்த்துகிறோம் மங்கையரை – ஏய்ப்பதுவே
என்பேன்நான், எல்லாமே ஏதம்தான், பெண்ணியத்தில்
நன்றாக இல்லையெநம் நாடு


வருக வருக, நல்வரவாகுக திரு சுந்தரராஜ் அவர்களே; நீங்கள் நலம்தானே?

நீங்கள் சொல்வது சரிதான். பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் சமமாகாத நிலையில், ஏமாற்று வேலைதான்.

பெண்ணியத்திற்கு உங்களைப்போல் நீதியுணர்வு மிக்க ஆடவர்களின் தார்மீக ஆதரவு என்றும் தேவைப்படுகின்றது.

இப்படியெல்லாம் பெண்களை ஏமாற்றக்கூடா தென்றுதான்,

"தந்தையர் நாடென்னும் பேச்சினிலே --ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"

என்று பாடிவிட்டார் பாரதியார்.

உங்கள் நேரிசை வெண்பாவும் நன்று. இத்துடன் ஒரு இருநூறாவது பாடிமுடித்திருப்பீர்களா?

sundararaj
1st July 2012, 07:07 AM
வருக வருக, நல்வரவாகுக திரு சுந்தரராஜ் அவர்களே; நீங்கள் நலம்தானே?

நீங்கள் சொல்வது சரிதான். பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் சமமாகாத நிலையில், ஏமாற்று வேலைதான்.

பெண்ணியத்திற்கு உங்களைப்போல் நீதியுணர்வு மிக்க ஆடவர்களின் தார்மீக ஆதரவு என்றும் தேவைப்படுகின்றது.

இப்படியெல்லாம் பெண்களை ஏமாற்றக்கூடா தென்றுதான்,

"தந்தையர் நாடென்னும் பேச்சினிலே --ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"

என்று பாடிவிட்டார் பாரதியார்.

உங்கள் நேரிசை வெண்பாவும் நன்று. இத்துடன் ஒரு இருநூறாவது பாடிமுடித்திருப்பீர்களா?
மிகவும் நன்றி ...மாலா அவர்களே. இருநூறு பாடல்கள் முடிக்கவில்லை. ஏதோ கொஞ்சம்தான். கடுமையான நீரழிவு நோய், தைரோயடு, இதய நோய் எல்லாம் சேர்ந்து கஷ்டப்பட்டேன். அதிகவேளைப்பளு வேறு. மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். ஆக எல்லாம் சேர்ந்து கவிதை எழுதுவதில் கவனம்செலுத்த முடியவில்லை. இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை. எனவே அவ்வப்போது எழுதி வருகிறேன். இன்னும் ஒரு வருடத்தில் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பின்பு முழுவதுமாக கவனம் செலுத்த உள்ளேன்.

sundararaj
1st July 2012, 07:19 AM
நம்முடைய நாடறி நீ நன்கு

[இன்னிசை கலிவெண்பா]
ஆண்குழந்தை வேண்டுமென்ற ஆசையிலே நம்நாட்டில்
வீண்கொலைகள் செய்கின்றார் வீணர்கள் பெண்சிசுவை
சொல்கிறதே ஐநாவின் தூற்றுகின்ற ஓரறிக்கை
“கொல்வதுவோ ராயிரமேல்க் கூடுமென்றார் ஒர்நாளும்”
பெண்பிள்ளை வந்துதித்தால் பெற்றோர்கள் பேரிடியால்
மண்ணிடிந்து வீழ்ந்திட்ட மாளிகைபோ லாகிடுவர்
கள்ளிப்பால் ஊட்டிவிட்டுக் கல்நெஞ்சாய் நெல்மணியை
உள்வாயில் தூவிவிட்டே ஓருயிரைத் மாய்த்திடுவர்
இப்படியே செய்வதினால் இங்கோஈர் பால்விகிதம்*
தப்பிதமாய் தான்குறைந்தே தாறுமாறாய் போனதுபார்
சின்னதிலே கல்யாணம் செய்தவளைத் தள்ளிடுவர்
சொன்னபடித் தட்சனையைத் துன்முகமாய்த் தந்திடுவர்
தப்பிதமாய்த் தன்கணவன் தற்செயலாய் மாண்டுவிட்டால்
எப்போதும் கைம்பெண்ணாய் ஏதிலிபோல் வைத்திடுவர்
மும்பையிலும் கொல்கத்தா முன்வளர்ந்த வூர்களிலும்
தம்முடலைத் தந்தலையும் சாக்கடையாய் லட்சம்மேல்
நம்முடைய நாடறிநீ நன்கு

ஈர் பால்விகிதம்* = Male/Female Sex Ratio
-----சுந்தரராஜ் தயாளன்

[முழுவதுமாக நேரில் துவங்கும் காய்ச்சீரில் இக் கலிவெண்பவை எழுதியுள்ளேன். உங்களின் கருத்தை தெரிவிக்கவும். குற்றம் குறைகள் இருப்பேன் தவறாமல் சுட்டவும்.]

chinnakkannan
1st July 2012, 12:40 PM
அன்பின் சுந்தர்ராஜன்.. சின்னக் கண்ணனின் நமஸ்காரங்கள்.. தங்கள் பாடல்கள் அபாரம்..அது என்ன நம் நாட்டில் நல்லதே இல்லையா என்ன

குற்றங்கள் பல்விதமாம் கூச்சலுமே பல்வாறாம்
உற்றுத்தான் பார்த்தாலே எவ்விடமும் தானுளதாம்
விம்மிடுதே நெஞ்சமெலாம் வெற்றிபல பெற்றவரும்
திம்மென்றே தண்மதியாய் நங்கையரும் தானிருக்க
பாட்டுப் பலபாடிப் பேர்பெற்ற பாவலர்கள்
நாட்டமாய் பாடுபட்ட நல்லவரைத் தான்நினைத்தே
உம்மென்றே மற்றவற்றை உன்னிப்பாய் நோக்காமல்
நம்முடைய நாடறிவீர் நன்கு

இப்படி எழுதித் தான் சமாதான்ம கொள்ளவேண்டும்..(சும்மா எழுதிப் பார்த்தேன்..தவறாக எண்ண வேண்டாம்)

chinnakkannan
1st July 2012, 01:13 PM
திரையிட்டுக் கண்மறைகக் செல்வமதைத் தேடி..
..திரைகடலைத் தாண்டிபல அன்னியமண் நாடி
விரைந்தேதான் பலவாறாய் உழைத்ததொரு காலம்..
..வண்ணமய இளமையுந்தான் கரைந்ததுவந் நேரம்..
நிறைகுடமாய் வாழ்ந்தேனா நானுமிந்த ஊரில்
..நினைக்குங்கால் பதைக்குந்தான் நெஞ்சத்தின் ஓரம்..
மறைத்ததெது நான்வாழ்ந்த தேசத்தை இங்கே
..மறக்கத்தான் வைத்ததெது எனக்கொள்ளும் ஏக்கம்...

chinnakkannan
1st July 2012, 01:22 PM
மழையே நீபோய் எங்கள் மண்ணில்
..விழுந்தால் எழும்பும் வாசம் வேறு
அலையே நீபோய் வங்கக் கடலில்
..உரசிப் பார்த்தால் உள்ளம் மலர்வாய்
கலையே நீபோய்ப் பாரென் ஊரில்..
..கண்களிவ் வைத்தே போற்றுவர் உன்னை
சிலையாய்ப் போன் நெஞ்சம் எல்லாம்
..சிரித்து மகிழும் பூமி எமது.

bis_mala
2nd July 2012, 06:43 PM
ம.............து.

நன்கு முயன்று எழுதியுள்ளீர்கள். சுந்தரராசு அவர்கட்கும் சின்னக்கண்ணர் அவர்கட்கும் வாழ்த்துக்கள், இனியும் பாடுங்கள், கேட்போம்.

bis_mala
4th July 2012, 07:34 PM
பெண்ணொருத்தி சொல்வது:

கல்யாணம் கட்டி வாழென்று சொன்னார்
கருத்துரை கழறும் பெரியவர்!-- சரி
கல்யாணம் பண்ணிக் கொள்வோமென்றாலே
காதலன் கிடைக்கவில்லை! -- பின்னே
காதலன் நான் என்றுஅவன் வந்த போதினில்
நேரமே கிட்டவும் இல்லை! -- கொஞ்சம்
நேரம் இருந்துநான் வாவென்ற நாளிலே
கூட வேறொரு குட்டி!--பின்
குட்டியை விட்டவன் வர நின்ற வேளையில்
எட்டவே நின்றதென் நெஞ்சம் -- மீண்டும்
வேறொரு பெரியவர் பகர்ந்த மதியுரை
கல்யாணம் கட்டி வாழ் என்று......--சரி
கட்டி முடிக்கலாம் என்று ஒட்டிப் போகையில்
காதலன் யாருமிங் கில்லை.....

chinnakkannan
4th July 2012, 09:32 PM
மனதை வெறுக்காமல் மாயவனை எண்ணுங்
கணத்தினில் வந்திடுவான் காண்..

ம்ம்ம் யார்யாருக்கு என்னென்ன சோகம் இருக்கோ..புரியவே மாட்டேங்குது! (ச்சும்மா நகைச்சுவைங்க)

bis_mala
5th July 2012, 01:49 PM
மனதை வெறுக்காமல் மாயவனை எண்ணுங்
கணத்தினில் வந்திடுவான் காண்..

ம்ம்ம் யார்யாருக்கு என்னென்ன சோகம் இருக்கோ..புரியவே மாட்டேங்குது! (ச்சும்மா நகைச்சுவைங்க)

அவள் ஒரு குதிரைக்குட்டி போன்ற அழகிய சீன நங்கை. மாயவனைக் கும்பிடச் சொல்லலாமா என்றுதான் யோசிக்கிறேன்....

sundararaj
5th July 2012, 06:30 PM
சின்னக்கண் ணன்தரும் சீர்மிகு நற்கவிதை
கன்னத்தில் கைவைத்தேன் காண் !!

bis_mala
5th July 2012, 10:12 PM
சின்னக்கண் ணன்தரும் சீர்மிகு நற்கவிதை
கன்னத்தில் கைவைத்தேன் காண் !!

கண்ணன் சின்னக்கண்ணன் தான்,
ஆனால் மூளை அபார மூளை....
அவ்வளவு அழகாகக் கவிதை வடிக்கிறார்/

chinnakkannan
6th July 2012, 10:27 AM
ஹையாங்க்...

படித்த புலவர்உம் பாமலர்கள் முன்னே
அடியவன் சின்ன அரும்பு

என் மூன்றாவது மாடி ஃப்ளாட்டிலிருந்து பார்த்தால் ஒரு மலை தெரியும்..மஸ்கட் மலையும் மலை சார்ந்த இடமும் எனத் தெரியும் தானே.
சில மாதங்களாக மலையுச்சிக்கு ஒரு/இரு இயந்திரம் எடுத்துச் சென்று காலைமுதல் மதியம் வரை வேலை பார்க்கிறார்கள்..காலை ஐந்தரை மணிக்கே
டக்டக் டக் என ஒலி கேட்கும்..இப்போது பார்த்தால் மலையின் ஒரு பகுதி நீளவாக்கில் வெட்டப் பட்டது..இன்னும் இரண்டுமூன்று மாதத்தில்
மலையும் காணாமல் போய்விடும்!

தள்ளும் இயந்திரத்தால் தக்கபடி இவ்விடத்தில்
மெல்லக் கரையும் மலை

bis_mala
6th July 2012, 12:11 PM
ஹையாங்க்...

படித்த புலவர்உம் பாமலர்கள் முன்னே
.................
மலையும் காணாமல் போய்விடும்!
மெல்லக் கரையும் மலை

பக்கமலை போனாலென் தக்கசின்னக் கண்ணனையே
ஒக்குமலை ஒன்றில்லாப் போது!

தொலைமலையால் யாதுயர்? சின்னக்கண் தோன்றல்
கலைமலையாய் முன்னெழுமிக் கால்/

chinnakkannan
6th July 2012, 01:22 PM
நாணியே நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்ந்தாலும்
வானில் மிதக்கின்றேன் நான்..

ஏங்க ரொம்ப வெட்கமாய் இருக்கு..( நான் கொஞ்சம் குண்டுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?!)

chinnakkannan
6th July 2012, 01:58 PM
பாவம் மலை..இப்போது கொஞ்சம் புலம்புவது போல பிரமையாய் இருக்கிறது..

க.க.துவில் சின்ன முயற்சி..

நிறைவாய்ப் பலகாலம் நீண்டுயர்ந்தே நின்றவன்மேல் கண்கள்
வரைந்தவர்யார் நானறியேன் வாட்டமாய் வெட்டியே இங்கே
கரைக்கின்றார் கல்லுக்கும் நெஞ்சுண்டு என்றே தெரியாமல்
தரையாக்கி விட்டாலே என்செய்வேன் தாண்டவக் கோனே

bis_mala
6th July 2012, 05:57 PM
பாவம் மலை..இப்போது கொஞ்சம் புலம்புவது போல

நிறைவாய்ப் பலகாலம் நீண்டுயர்ந்தே நின்றவன்மேல் கண்கள்
வரைந்தவர்யார் நானறியேன் வாட்டமாய் வெட்டியே இங்கே
கரைக்கின்றார் கல்லுக்கும் நெஞ்சுண்டு என்றே தெரியாமல்
தரையாக்கி விட்டாலே என்செய்வேன் தாண்டவக் கோனே


உங்களுக்கு திரு சுந்தரராஜ் அவர்கள்தான் ஆறுதல் சொல்ல, போதிய வயது உள்ளவர். அவரை அழைப்போம்.


அவர்தம் பாடல்கள் இனியவை.

சுந்தர ராசனார் சொல்லாட்டோ இத்திரியில்
மந்திர நன்மொழிபோல் மாண்புற்றுச் -- செந்தமிழை
வெல்பரந் தாமரின் வெள்ளியல் மாறாத
நல்விருந்தாக் கிற்றே நமக்கு.


சொல்லாட்டு - சொல்விளையாட்டு.
வெல் பரந்தாமர் - ஒரு தற்கால இலக்கண ஆசிரியர்.
வெள்ளியல் - வெண்பா இலக்கணம்.


Humour -- wherever it appears, do not take things seriously. Just be happy.

sundararaj
8th July 2012, 07:33 AM
பாவம் மலை..இப்போது கொஞ்சம் புலம்புவது போல பிரமையாய் இருக்கிறது..

க.க.துவில் சின்ன முயற்சி..
நிறைவாய்ப் பலகாலம் நீண்டுயர்ந்தே நின்றவன்மேல் கண்கள்
வரைந்தவர்யார் நானறியேன் வாட்டமாய் வெட்டியே இங்கே
கரைக்கின்றார் கல்லுக்கும் நெஞ்சுண்டு என்றே தெரியாமல்
தரையாக்கி விட்டாலே என்செய்வேன் தாண்டவக் கோனே


கற்சிலை:
கல்லுக்கும் நெஞ்சுண்டு கையுண்டு காலுண்டு
சொல்மட்டும் சொல்லாது சேர்ந்து

sundararaj
8th July 2012, 07:52 AM
கலிவிருத்தம்:
கல்லையே கடவுளெனக் கைகூப்பி நிற்கின்றார்
கல்லையே கடைந்துபல கைவண்ணம் காண்கின்றார்
கல்லையே கோவிலா கமைக்கின்றார்; சிலரிங்கே
கல்லையே (தற்)கொலைசெய் களமாக்கு கின்றாரே!

sundararaj
8th July 2012, 08:08 AM
கல்லின் அழகு :

கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்

sundararaj
8th July 2012, 08:11 AM
நூலெடுத்து நம்முன்னோர் நீள்அகலம் பார்த்திதனைக்
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்

sundararaj
8th July 2012, 08:13 AM
எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு

sundararaj
8th July 2012, 08:15 AM
ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை
ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces = Polygonal

sundararaj
8th July 2012, 08:21 AM
உங்களுக்கு திரு சுந்தரராஜ் அவர்கள்தான் ஆறுதல் சொல்ல, போதிய வயது உள்ளவர். அவரை அழைப்போம்.


அவர்தம் பாடல்கள் இனியவை.

சுந்தர ராசனார் சொல்லாட்டோ இத்திரியில்
மந்திர நன்மொழிபோல் மாண்புற்றுச் -- செந்தமிழை
வெல்பரந் தாமரின் வெள்ளியல் மாறாத
நல்விருந்தாக் கிற்றே நமக்கு.


சொல்லாட்டு - சொல்விளையாட்டு.
வெல் பரந்தாமர் - ஒரு தற்கால இலக்கண ஆசிரியர்.
வெள்ளியல் - வெண்பா இலக்கணம்.

Humour -- wherever it appears, do not take things seriously. Just be happy.

சாற்றுப்பா தந்தீர்கள் சற்றே தடுமாற்றம்
போற்றுதற் கானவனா நான்??

chinnakkannan
8th July 2012, 10:08 AM
கற்களைப் பற்றிந்ற் கவிதந்தீர் உம்முடைய
சொற்திறம் கண்டோம் சுகம்..

bis_mala
9th July 2012, 05:09 PM
சாற்றுப்பா தந்தீர்கள் சற்றே தடுமாற்றம்
போற்றுதற் கானவனா நான்??


இதற்குப் பதிலிறுக்கும் வகையில் நான்கு அடிகள் கொண்ட இரண்டு சந்தப் பாடல்கள் எழுதினேன். கடைசி வரியை முடித்துக்கொண்டிருக்கும்போது கணிணி கண் சிமிட்டுவதுபோல சிமிட்டொளி செய்து, நின்றுவிட்டதுடன், நானெழுதியவை மீட்க முடியாமல் போய்விட்டன. அப்புறம் தாளில் மீட்டெழுதி, அதை இங்கு பதியவில்லை. எனது blogspot-இல் வைக்கப்போகிறேன்.

இன்று மீண்டும் DNS சேவையகம் வீழ்ந்துவிட்டது/ இப்போதுதான் மீட்க முடிந்தது....

உங்கள் கேள்விக்குக் கணிணியே அஞ்சுகிறது போலும்....Just in jest...


எனினும், திரு சின்னக்கண்ணன் அவர்கள் கூறுவதுபோல, நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறீர்கள். நீங்கள் புகழ்ச்சிக்கு மிகவும் தகுதியானவரே.

தகுதி உடையவருக்கு அத் தகுதியை வழங்காமல் இருப்பதும் தவறுதான். நீங்கள் தகுதி உடையவரே என்பது என் கருத்துமுடிவாகும். My best wishes for more goodie poems from you. Write more and enjoy more by composing...

sundararaj
9th July 2012, 07:07 PM
இதற்குப் பதிலிறுக்கும் வகையில் நான்கு அடிகள் கொண்ட இரண்டு சந்தப் பாடல்கள் எழுதினேன். கடைசி வரியை முடித்துக்கொண்டிருக்கும்போது கணிணி கண் சிமிட்டுவதுபோல சிமிட்டொளி செய்து, நின்றுவிட்டதுடன், நானெழுதியவை மீட்க முடியாமல் போய்விட்டன. அப்புறம் தாளில் மீட்டெழுதி, அதை இங்கு பதியவில்லை. எனது blogspot-இல் வைக்கப்போகிறேன்.
இன்று மீண்டும் DNS சேவையகம் வீழ்ந்துவிட்டது/ இப்போதுதான் மீட்க முடிந்தது....
உங்கள் கேள்விக்குக் கணிணியே அஞ்சுகிறது போலும்....Just in jest...
எனினும், திரு சின்னக்கண்ணன் அவர்கள் கூறுவதுபோல, நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறீர்கள். நீங்கள் புகழ்ச்சிக்கு மிகவும் தகுதியானவரே.
தகுதி உடையவருக்கு அத் தகுதியை வழங்காமல் இருப்பதும் தவறுதான். நீங்கள் தகுதி உடையவரே என்பது என் கருத்துமுடிவாகும். My best wishes for more goodie poems from you. Write more and enjoy more by composing...
மிகவும் நன்றி மாலா அவர்களே. உங்களின் blockspot என்ன என்று தெரிவிக்கவும். பார்க்க ஆவலாக உள்ளேன். எனக்கு ஒரு சந்தேகம் மாலா அவர்களே, எனது திரி
"எனது கவிதைகள்" என்பது இங்கு poems/kavithaigal பக்கத்தில் உள்ளது. அங்கே எனது கவிதைகளைப் பதியாமல் உங்களின் திரியில் பதிந்து வருகிறேன். அதில் வெறும் சில குறள் வெண்பாக்களை பதிந்து வருகிறேன். நான் உங்களை திரியில் பதிந்துள்ள கற்களைக் குறித்த வெண்பாக்களை எனது திரையிலும் பதியலாமா. அப்படி இரு இடங்களின் பதிந்தால் தவறு ஆகுமோ. எனக்குத் தெரியவில்லை. சற்று விளக்கவும்.

bis_mala
9th July 2012, 10:01 PM
இது இத்திரிகளின் மட்டுறுத்துநரைக் (moderators) கேட்டறியத் தக்கதென்பர். ஒரே விடயத்தை ஈரிடங்களிலும் இடுவதால் இடம் வீணாகுமென்று முன்பு அவர்கள் கூறியதாக நினைவு.. நான் சில வேளைகளில் குறுக்குச்சுட்டுகைகளின் (cross references) மூலமாக, வாசிப்போருக்கு உதவியிருக்கிறேன். அப்படிச் செய்வது போதுமானதென்பது என் கருத்து. அப்படிச் செய்வதுகூட இப்போது தேவையில்லை. இன்னார் எழுதியதனைத்தும் காட்டு என்று ஆணையிட்டால், இன்றைய தேடும் அமைப்புகள் (search engines) கொணர்ந்து கொட்டிக் காட்டிவிடுமல்லவா? கவலையை விடுங்கள். நானும் பல திரிகளிலும் எழுதிவைத்திருக்கிறேன். அங்கெல்லாம் சுட்டுகைகள் ஏதும் இல்லாமையே பெரும்பான்மை. My last such cross ref. was many years back............. Happy sir?

http://sivamaalaa.blogspot.com/2012/07/blog-post.html

You are welcome.

bis_mala
11th July 2012, 08:19 AM
பலியிடத் தயங்காப் பாழ்மனத் தோர்நிறை
உ;லகிடை உலவியும் ஓருயிர்க் கிரங்கி
எலியென்றும் எள்ளாது நலிவொன்றும் கொள்ளாது
மலைக்கும் மனம்தரு கனம்சிறு கண்ணன்

எலிக்கும் வீட்டில் இடம் வரையாது வழங்கினார்
மலைக்கும் நிலைக்க இடம் தருக என்றார்.
சிறந்த உள்ளம் உடையார்.......

chinnakkannan
11th July 2012, 08:55 PM
மிக்க நன்றி...என்னஎழுதுவதென்று தெரியவில்லை..

வண்ணக் கவிபுனையும் வல்லவரில் இங்கேதான்
கண்ணன் சிறிய பயல்

**

பள்ளி விடுமுறையில் பெற்றோரும் மாணவரும்
துள்ளியே தாய்நாடு செல்ல தினந்தோறும்
மெல்ல நகர்ந்திருந்து மேவுகின்ற வாகனங்கள்
நல்ல நெரிசலுமே நன்றாகக் குறைந்ததனால்
கள்ளநகை சிந்துவதைக் காண்

bis_mala
12th July 2012, 07:27 PM
உள்நாட்டார் தொகையாதோ ஊரினையே நோக்கிப்போம்
வெளிநாட்டார் விகிதமென்ன விரும்பாத நெரிசலென்றால்
வளிகேட்டில் வானமெங்கும் கரும்புகையோ நறும்பெயலும்
துளிகேட்டும் கிடைக்காத துன்பமிதோ விலகியதோ

மகிழுந்துகள் கக்கும் புகை மிஞ்சும் அளவுக்கு நெரிசலோ. அந்த ஊரில் வெளி நாட்டினர்தாம் ("தாய்நாடு செல்ல") அதிகமோ?

bis_mala
15th July 2012, 02:21 PM
மிக்க நன்றி...என்னஎழுதுவதென்று தெரியவில்லை..

வண்ணக் கவிபுனையும் வல்லவரில் ...........


மேற்கண்ட பாடலில் சொற்பயன்பாடு சில கடினமாய்த் தோன்றலாம். எளிதாக்க இதோ கொஞ்சம் விளக்கம்.

வளிகேட்டில் = காற்றுத் தூய்மைக் கேட்டின் காரணமாக .வளி = காற்று.

நறும்பெயல் = நல்ல மழை. அது வந்தால் வானத்துப் புகைக்கூட்டம் கரைந்துவிடும் என்பார்கள்.

துளி கேட்டும் = கொஞ்சம் மாழை வேண்டுமென்று அங்குள்ளோர் கடவுளிடம் வேண்டியும்கூட.

இவர்கள் தொகை என்ன,அவர்கள் விகிதம் என்ன என்பனவெல்லாம் விளையாட்டுக்குக் கேட்டவைதாம் சின்னக்கண்ணன் அவர்களே, அதற்காக நீங்கள் புள்ளி விவர வாரியத்துக்குப் போய் இன்னல் உறவேண்டாம். சும்மா ஏதாவது எழுதி எழுப்பிய கேள்விகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்.

Enjoy the school holidays....!

chinnakkannan
15th July 2012, 06:20 PM
ஹய்யோ.. அஃது அப்படி இல்லை..உடன் வராததற்கு மன்னிக்க

பொதுவாக அரபு நாடுகளில் உள் நாட்டார் வெகு குறைவு.. எல்லாம் அங்கு வந்து வேலை அல்லது வியாபாரம் செய்யும் வெளி நாட்டார் தான்..குறிப்பாக இந்தியர்கள்..அதுவும் பள்ளி விடுமுறைக்கு வெயில் கொஞ்சம் அதிகமென்பதாலும் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள்..இந்தமாத இறுதியில் ரமதான் ஆரம்பிக்கிறது..கேட்கவே வேண்டாம் எல்லா வியாபாரங்களும் கொஞ்சம் சின்னதாய் உறங்க ஆரம்பித்துவிடும்..

நோன்பிருக்கும் மாதத்தில் நன்றாய் வியாபாரம்
பூணும் விரதம் பார்..

இந்ததடவை விடுமுறை கொஞ்சம் தாமதம்.. எனில் ரமதான் விடுமுறையும் சேர்த்து பள்ளிகள் செப்டம்பர் ஆரம்பம் தான் துவங்கும்..

நெரிசல் குறைந்தது என்று சொன்னேனே தவிர..சில இடங்களில் சாலை பராமரிப்பின் காரணமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது..

chinnakkannan
15th July 2012, 06:27 PM
எனக்கெங்கே பள்ளி விடுமுறை.. வேலை தான் இருக்கிறதே..

பள்ளி விடுமுறைக்குப் பாய்ந்து நினைத்ததவும்
கள்வெறி கொண்டுதான் கண்மூச்சி ஆடியதும்
துள்ளியே மானாக திக்கெட்டும் சென்றதுவும்
அள்ளும் இளமை அலைபாய வைத்ததுவும்
கொண்டிருந்த காலமெல்லாம் கானலாய் மாறிப்போய்
எண்ணுகிறேன் நாளைத்தான் இன்று..

chinnakkannan
15th July 2012, 06:41 PM
இங்கே தினம் தினம் நடக்கும் விபத்துகள் கொஞ்சம் அதிகம் தான்.. போன மாதம் மட்டும் 600க்கும் மேற்பட்ட விபத்துக்கள்..காரணம் ஒரு நொடி வேகம் குறைக்காததினால்.. முக்கால் வாசி ஓமானியர்கள் குறிப்பாக பெண்கள்..காரில் ஏறினோமா ம்ம் விதிகள் இருப்பது மீறுவதற்கே என எண்ணுவார்கள் போலும்.. கொஞ்சம் அறிவையும் உபயோகப்படுத்தாமல் கொய்ங்க் கொய்ங்க் என வேகமாய் ச் செல்வதனால் விபத்துக்கள்..ஒரே விபத்தில் மூன்று நான்கு கார்கள்..அடிவாங்கும்.. காரின் சொந்தக்காரர்களுக்கு வேண்டாத மன உளைச்சல்.. அலைச்சல் இன்ஷ்யூரன்ஸிற்காக..
என்ன அந்த ஒரு நொடி - யாரும் யோசிப்பதில்லை..

குறித்த நேரத்தில் கொண்ட இலக்கை
சரியாய் அடையத்தான் சற்றேனும் எண்ணாமல்
ஓட்டுவார் வாகனத்தை ஓர்நொடியில் மோதிவிட
காட்டுவார் கண்களிலே நீர்..

ஏதோ யோசியாமல் படபடவென வெண்பா(?) அடிக்கிறேன்.. சுவை குறைவின் மன்னிக்க்

chinnakkannan
15th July 2012, 06:52 PM
ப்ளாக் ஸ்பாட் வைத்திருப்பதாய் எழுதியிருந்தீர்கள் முடிந்தால் சொல்லவும்.. படித்து இன்புறுவேன்

bis_mala
17th July 2012, 09:07 PM
ப்ளாக் ஸ்பாட் வைத்திருப்பதாய் எழுதியிருந்தீர்கள் முடிந்தால் சொல்லவும்.. படித்து இன்புறுவேன்

You are forever welcome,

The address is: http://sivamaalaa.blogspot.com/

Enjoy yourself by reading as much as possible.

(You may also join as member and criticize and comment freely,,,,even attack....Everything is fine with me). Have a nice journey through the blogspot pl)

bis_mala
27th July 2012, 07:07 PM
காலின் பெருவிரலில் - ஒரு
கட்டை விழுந்ததம்மா! --இது
போலோர் வலிதனையே -- எது
போதும் அறிந்ததில்லை.

தோலும் கிழியவில்லை --விரல்
துண்டாய்த் தெறிக்கவில்லை -- புறம்
மேலே சுரந்துவீங்கி-- நகமே
வேகும் வலிமிகுதே....

அழகிய நகமே அகல்வாயோ எனைவிட்டு
பழகிய நாளெலாம் மறந்தாயோ வினைபட்டு!

chinnakkannan
27th July 2012, 10:30 PM
கட்டை யாக்கையிலே - ஒரு
கட்டை விழுந்ததனால் - சொற்
செட்டாய் பாடலுமே - இங்கு
ஜோராய் எழுந்ததம்மா

வலியின் ஓசையதும் -உள
ஒலியாய்க் காட்டிவிட்டே -நகம்
மெலிந்தே சென்றிடுமோ -குரல்
குறைந்தே கூறிவிட்டார்..

நகமும் விரலும் போல் - இங்கே
நல்லதோர் பாபுனையும் - திற்ன்
சுகமாய்க் கொண்டவர்க்கு - என்றும்
சுகமும் மாறாதே


எளிதாய்க் காற்விரல் ஏறியே கண்ணின்
வழியே மிதக்கும் வலி..

நல்ல பாடல் சிவ மாலா..:clap:

நகத்துக்கு ஒண்ணும் ஆகலையோன்னோ...

bis_mala
28th July 2012, 10:26 AM
கட்டை யாக்கையிலே - ஒரு
.....................................சுகமும் மாறாதே


எளிதாய்க் காற்விரல் ஏறியே கண்ணின்
வழியே மிதக்கும் வலி..

நல்ல பாடல் சிவ மாலா..:clap:

நகத்துக்கு ஒண்ணும் ஆகலையோன்னோ...

Hope I do not have to get this toe nail extracted..

பழைய தாள்களை (பேப்பர்) ஒரு அலமாரியின் மேலடுக்கி, அதன்மேல் ஒரு கட்டையை வைத்துவிட்டாள் பணிப்பெண். காகிதம் (edge) தெரிகிறது. தலை உயரத்துக்குமேல் இருந்த கட்டை தெரியவில்லை. தாள் தேவை படுகிறதென்று ஒரு தாளை இழுக்கப்போய், கட்டை வந்து காலில் (நகத்தின்மேல்) விழுந்துவிட்டது.

நொண்டி நொண்டி நடக்கும் காலம் வந்தால் , அப்படித்தான் நடக்கவேணும்...என்ன செய்வது, வலியை அனுபவிக்கவேண்டியதுதான்.

உங்கள் கவிதை மிகவும் நன்று.

நோவிற் கிடந்தாலும் - கால்
நொண்டி நடந்தாலும் - ஒரு
பாவில் கவிந்துமனம் - வலி
மறந்தே பறந்திடுதே!

nanRi nanRi

chinnakkannan
28th July 2012, 10:39 AM
வலி நிவாரணி - பெய்ன் கில்லர்ஸ் எடுத்து க் கொண்டீர்களா.. கொஞ்சம் பின் விளைவுகள் வந்தாலும்வ்லி நிவாரணி உட்கொள்வது கொஞ்சம் ரிலீஃப் ஆக இருக்கும்..

bis_mala
28th July 2012, 11:25 AM
Paracetimol.

Pain relieving spray.

இப்போது ஓய்வு!


I have taken one tablet... thanks. Pain is now lessened.

bis_mala
28th July 2012, 10:38 PM
P..................d.

a truly affectionate maid....

என்கால் தன்மடி மீதுவைத்தாள்
இனிதாய்த் தடவி வேதுவைத்தாள்
தன்கால் மொத்தடி பட்டதுபோல்
தான்மனக் கவலை உற்றுவிட்டாள்.

சின்னக் கண்ணனும் எனைத்தேற்ற
சேர்ந்தே பெண்ணவள் எனைப்போற்ற.
அன்னை மூவராய் ஆனதினால்
அதைத்த நோவதும் போனதன்றோ!

அன்பினர் யாரும் எட்டநின்றால்
ஆன வலியெலாம் கிட்டவந்து
பண்பில் எருமைபோல் முட்டநிற்கும்
அன்பினர் குறுகிடில் விட்டகலும்

இரவில் வலியும் ஏறிடுமோ
என்பால் தோழியும் கூறிடுவாள்
வருவது வரட்டும் என்செய்வது
வைத்தியம் என்பது பின்செய்வது

வேது = இளஞ்சூடு கொடுத்தல்.
மொத்தடி - மொத்து அடி.
அதைத்த= வீக்கம் ஏற்பட்ட.
நோவு = வலி. நோவு அதும் = நோவு அதுவும்
கிட்ட - பக்கத்தில். அருகில்.
பண்பில் - பண்பு இல் - பண்பு இல்லாத
அன்பினர் - அன்பு உடையோர்.

bis_mala
18th August 2012, 08:33 AM
காட்டை அழித்துவிட்டார் -- அந்தக்
காட்டுக் குரங்குகள் வீட்டின் மருங்கிலே
கூட்டமாய் வந்தனவே -- அவை
கூரைக்குக் கூரை இருந்துகொண்டே வீட்டின்
ஓட்டை அகற்றினவே -- கீழே
ஒதுங்கக் கிடந்தது குப்பைப் பெருந்தொட்டி
ஆட்டிக் கவிழ்த்தனவே -- அதை
அள்ளி இடுதற்கே உள்ளாரோ யாருமே!

இருப்பிடம் போனதென்று ---அதில்
ஏற்பட்ட கோபத்தின் பாற்பட்டிவ் வண்ணமாய்
தெருக்களில் கூரைகளில் -- ஏறித்
திரண்டதோர் சேட்டைகள் செய்தனவோ இவை!
பொறுப்புடன் செய்தக்கதோ --பிடித்துப்
போக்கிட வேண்டுமே காட்சிசேர் காப்பகம்!
பிழைப்புக்கு வேட்டுவைத்தால் --வந்த
பீதியில் போரிடல் யார்க்கும் இயல்பன்றோ!

chinnakkannan
20th August 2012, 10:56 AM
கால்வலி முழுக்கக் குணமாகி விட்டதா.. இப்பொழுது தான் உங்கள் பாடல் பார்த்தேன்.. நல்ல பணிமகள்..



”பிழைப்புக்கு வேட்டுவைத்தால் --வந்த
பீதியில் போரிடல் யார்க்கும் இயல்பன்றோ! -” நல்ல வரிகள்..

bis_mala
20th August 2012, 07:07 PM
உங்களுக்கும் குணமடைய வாழ்த்திய ஏனையோருக்கும் நன்றி.

பணிமகள் என்ற சொல்லைப் பயன்படுத்திய தங்களையும் பாராட்டவேண்டும். நல்ல தமிழ்.

கால் நன்று. நகமும் தப்பித்துக்கொண்டது.

நலம்தானே? வேலைப்பளு குறைய வாழ்த்துக்கள்.
உங்கள் நாட்டில் இப்போது நோன்புப் பெருநாள் வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்குமே......

chinnakkannan
20th August 2012, 07:22 PM
நேற்று ஈத் பெரு நாள் இங்கு.

இன்னும் நாளை வரை விடுமுறை..பின் மறுபடி வழக்கம் போல..ஆனால் இந்தத் தடவை உபவாசம் காலை 4 மணிமுத்ல் மாலை 7 மணிவரை நீடிக்க மக்களுக்குக் கொஞ்சம் சிரமம் தான்..

bis_mala
5th September 2012, 10:30 AM
நேற்று ஈத் பெரு நாள் இங்கு.

இன்னும் நாளை வரை விடுமுறை..பின் மறுபடி வழக்கம் போல..ஆனால் இந்தத் தடவை உபவாசம் காலை 4 மணிமுத்ல் மாலை 7 மணிவரை நீடிக்க மக்களுக்குக் கொஞ்சம் சிரமம் தான்..

If one is from a vegetarian background, he or she may not be able to partake in such festivals, unless invited with specially catered food thrown in!

Now, on a recent funny criminal case in TN.


ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
ஒருபோதும் ஏலா உலகமீதில்
பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!

மடுத்தசெவி எல்லாம் விழுந்து --அணல்#
மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
விலங்கேற்றார், எவ்வாறு ? அறிகிலேனே.

மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
நிலைகொண்ட தெவ்வாறு? அறிகிலேனே!


Notes

#அணல் -தொண்டை, வாய்

ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.

மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )

வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.

bis_mala
22nd September 2012, 09:53 PM
பார்க்குமிடம் எங்குமொரு
நீக்கமற நிறைந்துள்ளாய்
பரிபூரணானந்தமே! --- நானும்
நோக்குமிட ம் ஒவ்வொன்றும்
ஈர்ப்பதெது கவனமதை
மக்கள்சிலர் ஆர்ப்பாட்டமே!

படைத்தவன்நீ உலகமிதை,
துடைத்தழிக்கும் பலமுடையோன்,
கருத்துமிது பொருத்தமன்றோ--- நீயும்
இடைத்துலக்கித் துயர்விலக்கி
இவர்களெலாம் அமைதிபெற
ஏன் உய்க்க மறந்துவிட்டாய்!

இவர்களைநீ விலக்கிவிடு
இனிநீயே மேற்கொள்வாய்
இவருதவி உனக்கெதற்கு -- நல்ல
தவம்பிழைத்த நெறிசெல்வார்!
தண்ணருளைப் புறம்வைத்தார்
தலைதடு மாற்றமுற்றார்.


Note:

இடை - இடையில்; முன் அல்லது தொடக்க காலத்திலிருந்து தலையிடாமல் இருந்ததை விட்டு இவ் இடைக்காலத்தில் சென்று....; துலக்கி = தூய்மை செய்து.

bis_mala
12th November 2012, 11:44 AM
நாபா ரிதுபார்க்கும் நன்னீலன் தாள்போற்றித்
தீபா வளிஆர்க்கும் தேஞ்சுவையூண் --- ஆன்பாலும்
உட்கொண் டிமைப்போதும் ஓர்துயரும் தீண்டாமல்
கட்கண் சிறக்கவாழ் வீர்.

நா = நாவு. பாரிதுபார்க்கும் - இவ்வுலகைக் காக்கும்.
நன்னீலன் -விட்ணு ( விஷ்ணு). ஆர்க்கும் - தரும்.
தேஞ்சுவையூண் - இனிய உணவு வகைகள். ஆன் பால் - பசும்பால். கட்கண் - வாழ்வின் எல்லா முனைகளிலும். Further explanation of the word is here: http://www.mayyam.com/talk/showthread.php?4124-TAMIL-W0RD-DEVELOPMENT&p=980046&viewfull=1#post980046

குறிப்பு: கவிதைகளில் "ஓர் துயரும்" என்று எழுதலாம். உரைநடையில் அங்ஙனம் எழுதலாகாது. ஒரு துயரும் என்று இப்பாடலில் வந்தால் தளைதட்டி, ஓசை கெட்டுவிடும்.

ஓர் -= ஒன்று என்னும் எண்ணிக்கை; ஓர் > ஓர்தல் = சிந்தித்தல்.
ஓர்துயரும் என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, சிந்திக்கத் தக்க எந்தத் துயரும் என்றும் பொருள்கொள்ளலாம். எனவே இது இருபொருள் தரும் தொடர் என்று உணர்க.

bis_mala
14th November 2012, 06:30 PM
காலைகாற் புள்ளிவிட்டு மாலையது மீள இட்டு
நாளை முடிப்ப தெழுத்து.

எழுத்து = எழுத்துக்கலை,

================================================== ===


I was working on the proof of one of my poems all the morning, and took out a comma. In the afternoon I put it back again.
OSCAR WILDE ((16 October 1854 – 30 November 1900)

bis_mala
24th November 2012, 10:24 PM
நேரம் எப்போதும் ஒருமாதிரிதான்!
நல்லது நடந்தால் நல்ல நேரம்!
கெட்டது நடந்தால் கெட்ட நேரம்.
நல்லதைக் கெட்டதாக்கி விடலாம், ஆனால்
கெட்டதை நல்லதாக்கிவிடப் பெருமுயற்சி தேவைப்படுகிறது.

bis_mala
29th November 2012, 03:49 AM
நல்ல நேரத்தில் உலவப் போய்,
கழுத்தணியைத் திருடன்
பறித்துக்கொண்டால்,
திருடனுக்கே நல்ல நேரம்!
வருட முழுமையும் காப்பி குடிக்க
வருமானம் தந்த நேரம்!

முதல் ஏதும் போடவில்லை,
பொன்னாக வந்துவிட்டது அவனுக்கு.

bis_mala
2nd December 2012, 03:44 PM
இஸ்லாமின் முன்கலை ஈடில் பொருள்கள்
இசைவாகக் காட்சிக்கே இட்டார் --திசைதோறும்
யாவரும் கண்டின் புறுமா றதுகண்டு
நாவரும் பாட நலம்.

http://www.voanews.com/content/saudi-arabias-pre-islamic-history-revealed/1555885.html



.

bis_mala
8th December 2012, 04:12 AM
போரிடாத உலகமைக்க வழியோ இல்லை
போரிடுதற் கருவிகட்குத் குறைவோ இல்லை!
ஏறிவரும் கொலைக்கருவி வகைகள் எண்ண
இருக்குமெண்கள் தமைக்கொண்டு திகைய வில்லை!
பாரில்சிலர் அமைதிவரப் பரிந்து சொல்வார்
பாழ்வெடிவை தீவிரரும் அதையே சொல்வார்
யாரிவருள் உலகமைதி யாப்புற வுள்ளார்
யாம் காணோம் சொல்லளவில் ஒருமை கண்டோம்

bis_mala
8th December 2012, 03:35 PM
மனமிரங்கித் தண்ணீர் தந்தவர்க்குக் கத்திக் குத்தா?



நீர்தருக என்றார்க்கு நீரைத் தந்தார்.
நீர் குடித்து நன்றிசொன்ன நிமையம் அந்தோ
கூர்நெடிய கத்திதனைக் குறித்து நீட்டிக்
கும்பிகலங் கிடவொருத்தன் குத்தினானே!
பார்வைதடு மாறுகின்ற முதியோர் கண்டு
பாய்ந்தோட முடியாத காலோர் பாங்கில்
நேரிரங்கும் நெஞ்சிலையோ திருட்டுக் கும்பல்
நிகழ்த்தியதை நினைத்தாலே பதைக்கும் நெஞ்சம்.

செய்தி: மலேசிய நண்பன் 8.12.2012.

நிமையம் = நிமிடம்.

bis_mala
19th December 2012, 06:13 PM
இணங்கி நடந்து............

இணங்கி நடந்து வணங்கிக் கிடந்தால்
சுணங்கிச் சுருளாத வாழ்க்கை--- பணங்குறையா
நன்னிலை என்றாலும் உண்மையே மேற்கொண்டு
தன்னிலை தாழாமை நன்று.

bis_mala
19th December 2012, 06:59 PM
மனிதன் மனத்தில் எண்ணுவது அளவிலது!
நம்பிக்கை என்பது இதனில் ஒருவகை!
உலகம் இந்நாள் அழியும் என்பதாய்ப்
பலரும் நம்பிப் பயப்படல் காண்கிறோம்.

அழிந்தால் நாம்தான் யாது செய்வது?
வானம் இடிந்து விழுமெனப் பயந்து
சின்னா என்ற கோழிக் குஞ்சு
ஏனை விலங்குகள் தம்மைக் கூட்டி
அழுது புலம்பி அவற்றுடன் ஓட,

கண்ட நரியும் நன்கு நகைத்து
வான மிடிந்தால் எங்கு செல்வது
அஞ்சாது உங்கள் இருப்பிடம் ஏகுவீர்
என்று புகட்டியது அறிவு அதனைப்போல்
இப்போது ஒருநரி வருதல் வேண்டும்
உலகத்தின் அச்சம் தீர்த்திடும் பொருட்டே!


Note:

" மனிதன் மனத்தில் எண்ணுவ அளவில!
நம்பிக்கை என்பது இவற்றுள் ஒருவகை!" ,,,,,,,,,,,,,,,,,,,,
என்றிருக்கவேண்டும் என்பது இலக்கணம். வேண்டியவாறு
வாசித்துக்கொள்ளவும்.

I have written this without the usual rhymes etc.

bis_mala
20th December 2012, 11:52 AM
காலிகள் கொட்டம் களைந்திட, கார்முகத்துப்
பாலியல் வன்செயல்கள் பாழ்பட--- நூலியைக்கும்
சட்டம் இயற்றவைகள் சாலச் செயல்பட்டு
நட்டம் தவிர்ப்பதெந் நாள்?


குறிப்பு:

புதிதாய் இயற்றப்படும் சட்டம் அரசியலமைப்பு என்னும் உயர் சட்ட நூலுடன் ஒத்துப்போவதாய் இருத்தல் வேண்டுமெனப் படுவதால் : அந்நூலுடன் இயைபுடைய புதிய சட்டம் என்பது தோன்ற, "நூலியைக்கும் சட்டம்" எனப்பட்டது.

குற்றச் செயல்கள் ஒரு குமுகாயத்தின் (சமுதாயத்தின்) ஒரு கரும்பகுதி அல்லது கருப்பு முகம் எனலாம், ஆதலின் கார்முகத்து எனப்பட்டது.

பாலியல் கொடுமையால் நெடுநாட்கள் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டுபுரிய வேண்டிய பெண், கொல்லப்பட்டும் மற்றபடி அவலம் அடைந்தும் போவது ஒரு நட்டம் ஆகும். இதையே இங்கு நட்டமென்றோம்.

bis_mala
11th January 2013, 05:10 PM
கைக்குள் இருப்பதைக் காக்க இயலாக்கால்
பைக்குள் பொருள்வேண்டல் ஏன்?




Death toll in Pakistan blasts climbs to 115 people http://www.theglobeandmail.com/news/world/57-reported-dead-in-twin-blasts-in-pakistan/article7172728/

bis_mala
6th February 2013, 04:31 PM
ஒற்றைக்கால் பேயொன் றுளதாமே பள்ளிக்குள்
வெற்றுரையென் றெண்ணாதீர் வீணாக -- உற்றுப்பார்த்
தீரோ அதுகாண்பீர் தீரவே சிந்தித்து
வேறோசொல் வீரும் கருத்து.


GHOST PICTURE OF KANDY SCHOOL GIRL CAPTURED ON CAMERAS:

http://i1125.photobucket.com/albums/l590/danaradio/page-33.jpg

Gossip Lanka News [English Edition]: INCIDENTS AFTER RAIN
A ghost picture of a Kandy School girl who had one leg amputated after an accident captured on cameras

A few weeks back, June 30th to be precise a hall of a famous Kandy High school had been taken as the venue to hold a passing out parade of nurses. Usually there are two or three halls of High schools in Kandy ................................ts about the entire story could be read from see online edition:

The quote has been abridged to save space.

bis_mala
14th February 2013, 09:22 PM
These lines were lost whilst editing but now reconstructed.



வானிற் பதிந்தபடி வந்த நிலாமகளும்
தானும் கடலனைக் காதலித்தாள் --- ஏனோ
ஒருமை கடைப்பிடித் தொப்ப ஒழுகாமல்
இருமை இறைகொண் டனள்.


Note:

நிலாமகட்கு யார் பதி (கணவன்) என்றால், அவள் பதிந்திருக்கும் வானமே பதி. ஆகவே வானிற் பதிந்தபடி எனப்பட்டது. கடலன் = கடல். ஆண்பாலில் கூறப்பட்டது. ஒருமை கடைப்பிடித்தல் = ஒரே காதலனோ கணவனோ உடைய நிலை. இருமை நெறியாவது இரு கணவர்களோ (காதலர்களோ) உள்ள நிலை. (bigamous state).
polygamy - பல்கணவம்


இறை என்பது இறைவனையும் கணவனையும் குறிக்கும் சொல். இங்கு கணவனைக் குறிப்பது.

chinnakkannan
14th February 2013, 09:24 PM
மீண்டு வந்ததைக் கண்டு மீண்டுவந்தேன்..!

bis_mala
14th February 2013, 10:02 PM
மீண்டு வந்ததைக் கண்டு மீண்டுவந்தேன்..!


வந்ததே வந்தீர்நல் வண்ணப்பாட் டொன்றுநான்
தந்துளேன் செந்தமிழில் என்றிங்கே --- சிந்தையுறு
சொல்லுடன் வந்து சுழல்காற்றாய் மேலுலவி
செல்லுமதே சீர்சான் றது.

:)

chinnakkannan
14th February 2013, 10:38 PM
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
கால்கட்டில் மாட்டிய காரிகைக்கு – பால்கலந்த
தேன்வண்ணம் மாறியே தேவியவள் வெட்கத்தில்
பூண்டாள் பொய்க்கோபம் தான்..

bis_mala
15th February 2013, 08:14 AM
மனித உரிமைகள் மாய்விலாக் கோளில்
இனிது மகிழ்பொங்க ஏயும்---கனிவுநாள்
என்றென் றிருந்தேங்கும் ஏதென்ப(து) இல்லாகி
நன்று பிறந்தால் நலம்.

bis_mala
15th February 2013, 08:56 AM
பெண்கள் உரிமைகள் பேணலுற் றிப்புவியில்
கண்களாய்ப் போற்றுபொற் காலமொன்று --- பண்களிலே
பாடல்மட் டின்றித்தான் பட்டிதொட்டி யாவினிலும்
கூடிவர ஆடிடுவம் கூத்து.

bis_mala
15th February 2013, 09:17 AM
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
கால்கட்டில் மாட்டிய காரிகைக்கு – பால்கலந்த
தேன்வண்ணம் மாறியே தேவியவள் வெட்கத்தில்
பூண்டாள் பொய்க்கோபம் தான்..


உங்கள் தேவிக்கு நீங்கள் காதலர்தின வாழ்த்துச் சொல்வது இயல்பானது. "நன்றி" என்று சொல்வதே அதற்கு இயல்பான பதில். ஏன் பொய்க்கோபம் வருகிறது? பொருத்தமாக இல்லை. உண்மையான கோபமும் வரக் காரணமில்லை..... தீண்டியதும் சுட்டதே தீ" என்பதை மாற்றிக் குழப்பத்தில் போய்க்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

சி.க அவர்களே, மறுமுயற்சி செய்யுங்கள்.

chinnakkannan
15th February 2013, 11:04 AM
தீண்டியதும் சுட்டதே தீ என இங்கே இட்டது உண்மை தான்..முக நூலில் இடும்போது கொஞசம் மாற்றினேன்..கடைசியாய் எழுதிய வரியை இடாததால் தான் இந்தக் குழப்பம்..:)

“பின்ன பரிசு எதுவும் கொடுக்கவில்லையே நான்..!”



உங்கள் தேவிக்கு நீங்கள் காதலர்தின வாழ்த்துச் சொல்வது இயல்பானது. "நன்றி" என்று சொல்வதே அதற்கு இயல்பான பதில். ஏன் பொய்க்கோபம் வருகிறது? பொருத்தமாக இல்லை. உண்மையான கோபமும் வரக் காரணமில்லை..... தீண்டியதும் சுட்டதே தீ" என்பதை மாற்றிக் குழப்பத்தில் போய்க்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

சி.க அவர்களே, மறுமுயற்சி செய்யுங்கள்.

chinnakkannan
15th February 2013, 11:20 AM
முதலில் நீங்கள் என்ன உங்கள் வீட்டில் செய்தீர்கள் எனக் கேட்பது போல எழுதியிருந்தேன்.. எழுதலாமா எனத் தெரியவில்லை..எனில் என் மனைவியிடம் சொன்னது போல் எழுதினேன்..(ஆமா ஆக்சுவலா நேத்து என்னவாக்கும் செஞ்சீங்க?!)-வெண்பா ப்ளீஸ்

bis_mala
15th February 2013, 12:03 PM
உங்கள் மனைவியை நீங்கள் "கால்கட்டில் மாட்டிய காரிகை" என்பது அவர்கள் அடிமைப் பட்டுவிட்டு மாட்டிகொண்டிருப்பதையே வரணிப்பதாகக் கொள்ளவேண்டி யுள்ளது. வாழ்க்கையில் இணையான இடமில்லை என்று காட்டுகிறது. காலுக்குக் கட்டுப்போட்டா வைத்திருக்கிறீர்கள்! இல்லாவிட்டால் .......

என்ன வரணணை இது?

bis_mala
15th February 2013, 12:20 PM
பால்கலந்த தேன்வண்ணம் மாறியே

எந்த வண்ணத்துக்கு மாறியதாம்?

உதாரணமாக, கோபத்தில் முகம் சிவந்தது எனலாம். இப்படிச் சொல்லாமல், கோபத்தில் கருவண்ணம் மாறிற்று எனலாமா?
You must describe the end effect.

chinnakkannan
15th February 2013, 12:20 PM
திருமணம் என்பதற்கு கால்கட்டு என்று சொல்வது காலந்தொட்ட வழக்கம்..கால்கட்டு என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை ஆணுக்கும் தான்.. ஓ நான்மோனை வரவேண்டும் என எழுதியது சரியில்லையோ.. சரி மாற்றி எழுதப் பார்க்கிறேன்.. வேறு எதுவும் உள்ளர்த்தம் வைத்து எழுத்வில்லை ம..

chinnakkannan
15th February 2013, 12:22 PM
பால்கலந்த தேன்வண்ணம் மாறியது என்பது பொன்னிறம் என்பது செந்நிறம் என்ற அர்த்தத்தில் எழுதினேன்.. அது எப்படிகருவண்ணம் ஆகும்..

chinnakkannan
15th February 2013, 12:26 PM
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
பால்வண்ணம் தான்கொண்ட பைங்கிளிக்கு - நூல்போல்
மெலிந்த இடையாளும் மென்னகை சிந்த
மிளிர்ந்தது சந்தோஷ மே

இப்ப சரியா.. பைங்கிளி காதலி,மனைவி என வைத்துக் கொள்ளலாம்.. அதெப்படி பெண்களுக்கெல்லா கிளிமூக்கா எனக் கேட்காதீர்கள் :)

chinnakkannan
15th February 2013, 12:28 PM
ஏதாவது தவறுதலாக எழுதி மனம்புண்பட்டிருந்தால் மன்னிக்க

bis_mala
15th February 2013, 12:34 PM
முதலில் நீங்கள் என்ன உங்கள் வீட்டில் செய்தீர்கள் எனக் கேட்பது போல எழுதியிருந்தேன்.. எழுதலாமா எனத் தெரியவில்லை..எனில் என் மனைவியிடம் சொன்னது போல் எழுதினேன்..(ஆமா ஆக்சுவலா நேத்து என்னவாக்கும் செஞ்சீங்க?!)-வெண்பா ப்ளீஸ்

Yesterday, I was enjoying myself. Today, your veNpaa is producing the enjoyment! Please upload your other veNpaas and let me have a good time with those lines of yours chi.ka. avl.

Do not go away.

bis_mala
15th February 2013, 12:50 PM
ஏதாவது தவறுதலாக எழுதி மனம்புண்பட்டிருந்தால் மன்னிக்க

Why have u resorted to apologies. You have done nothing wrong. Everyone has the liberty to express his or her views unless what you have put out conflicts with the rules. So not to worry.

Write and let me read some more! I assure you, you are a good writer.

Let Sivamaalaa enjoy a good veNpaa or other poems from you. This is not a venpaa thread. So feel free.

I am with you.

bis_mala
15th February 2013, 02:34 PM
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
பால்வண்ணம் தான்கொண்ட பைங்கிளிக்கு - நூல்போல்
மெலிந்த இடையாளும் மென்னகை சிந்த
மிளிர்ந்தது சந்தோஷ மே

இப்ப சரியா.. பைங்கிளி காதலி,மனைவி என வைத்துக் கொள்ளலாம்.. அதெப்படி பெண்களுக்கெல்லா கிளிமூக்கா எனக் கேட்காதீர்கள் :)


"ஆண்கிளி .... தன்னே போள்" என்றார் மலையாளக் கவி வயலார். இருபாலாரும் உலகக் கவிகளால் இங்ஙனம் வரணிக்கப்பட்டதுண்டு.

இப்போது உங்கள் கவி சரி. தனிப்பட்ட முறையில் எனக்கேதும் மறுப்போ கோபமோ இல்லை.

chinnakkannan
15th February 2013, 11:33 PM
முதலில் ஒரு நேரிசை ஆசிரியப்பாவில் முயலலாம் என நினைத்தேன்.. அதற்கு முன் வெகு காலம் முன் வெண்பா கற்கையில் எழுதிப் பார்த்தஒரு வெண்பா(?)
கடைசி இருவ்ரி மாற்றி இடுகிறேன்..

வானத்தைப் பார்த்து வரும்மழை என்றெண்ணி
கான மயிலும் களிநடனம் ஆடிவிடும்:
மேகம் கலைந்துவிட மண்ணும் நனையாது
வேகமாய் ஆடும் ஒயிலாட்டம் நிற்காது
கற்பனை வெள்ளம் கரைபுரண் டோடுகையில்
சொற்பொருள் மாறிவிட்ட தே..

(Hope you are cool now)
அன்புடன்
சி.க.

bis_mala
17th February 2013, 04:26 PM
முதலில் ஒரு நேரிசை ஆசிரியப்பாவில் முயலலாம் என நினைத்தேன்.. அதற்கு முன் வெகு காலம் முன் வெண்பா கற்கையில் எழுதிப் பார்த்தஒரு வெண்பா(?)
கடைசி இருவ்ரி மாற்றி இடுகிறேன்..

வானத்தைப் பார்த்து வரும்மழை என்றெண்ணி
கான மயிலும் களிநடனம் ஆடிவிடும்:
மேகம் கலைந்துவிட மண்ணும் நனையாது
வேகமாய் ஆடும் ஒயிலாட்டம் நிற்காது
கற்பனை வெள்ளம் கரைபுரண் டோடுகையில்
சொற்பொருள் மாறிவிட்ட தே..

(Hope you are cool now)
அன்புடன்
சி.க.



நீங்கள் சொல்வது: மயில்கள் தெரியாத்தனமாக ஆடிவிட்டன. மண்ணோ சிறிதும் நனையவில்லை. ஒயிலாட்டம் ஆடுகிறவர்கள், மழை வருகிறதோ இல்லையோ அவர்கள் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஒரு புறம் மயில் மழை இவைகளுக்கும் மற்றொருபுறம் ஒயிலாட்டக்கார்களுக்கும் தொடர்பொன்றுமில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி வெள்ளம் கரைபுரண்டது, மழையே இல்லாதவேளையில்! உங்களுக்குக் கற்பனையில்தான் கரைபுரள்கிறது என்றாலும், நீங்கள் சொன்ன இயற்கைக் காட்சிகள், நடனங்களோடு என்ன பொருத்தம் என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.

மழை வராவிட்டலும் ஆடிய மயில்கள்போல, கரை புரளாவிட்டலும் நீங்கள் சொற்பிழை செய்திருந்தால் அது பொருத்தம் என்று சொல்லலாம். அதாவது நான் சொல்வது உவமை, மற்றும் காட்சிப் பொருத்தங்களை!

மேகங்கள் கலைந்துவிட்டதனால் ஏமாந்துவிட்ட மயில்போல, கற்பனை உருப்பெறாததனால் சொற்பிழையில் ஏமாந்துவிட்டேன் என்றால் இன்னும் பொருத்தம்.

Let us hear from chi.ka avl.

anbudan

chinnakkannan
17th February 2013, 04:57 PM
என்ன ஆச்சு.. நான் இந்த மூன்றாவது பாரா அர்த்தத்தில் தான் எழுதினேன்..

மழை வரப்போகிறது கரு மேகங்கள் சூழ்ந்து விட்டன என மயில் ஆட ஆரம்பிக்கிறது.. இந்தக் காற்று வில்லன் வந்து கலைத்து விடுகிறது மேகங்களை.. மேகம்கலைந்தாலும் மயில் ஆடும் ஒயிலான ஆட்டம் நிற்காது..அது நிற்காமல் ஆடும்..

அது போல டபக்கென்று எழுத ஆரம்பித்ததால் (உங்கள் பார்வையில்) கால்கட்டுப் போட்ட காரிகை என நீங்கள் பொருளில் பிழையாக நினைக்கும் வண்ணம் எழுதி விட்டேன்.. ஒயிலாட்டம் என்றுஆட்டத்தையே எடுத்துக் கொண்டீர்களானால் எப்படி..

ஏன்..ஏன்.. இப்படிக் கோபம்..


[U]மேகங்கள் கலைந்துவிட்டதனால் ஏமாந்துவிட்ட மயில்போல, கற்பனை உருப்பெறாததனால் சொற்பிழையில் ஏமாந்துவிட்டேன் என்றால் இன்னும் பொருத்தம்.

Let us hear from chi.ka avl.

anbudan

chinnakkannan
17th February 2013, 05:00 PM
ஒயில் என்பதற்கு நளினமான என்ற அர்த்தம் தானே..

chinnakkannan
17th February 2013, 05:06 PM
நான் இங்கு மெளன ரசிகனாகவே இருக்கிறேன் இனிமேல்..

bis_mala
17th February 2013, 05:13 PM
என்ன ஆச்சு..

ஏன்..ஏன்.. இப்படிக் கோபம்..

எப்படிச் சொன்னால் பொருத்தம் என்றுதான் சொல்லியிருக்கிறேனே, கோபம் ஏது? இலக்கியத் திறனாய்வு என்பது கோபத்தின் வெளிப்பாடு என்கிறீர்களா?

chinnakkannan
17th February 2013, 05:18 PM
இல்லை.. நீங்கள் சொன்னது சரியே..


எப்படிச் சொன்னால் பொருத்தம் என்றுதான் சொல்லியிருக்கிறேனே, கோபம் ஏது? இலக்கியத் திறனாய்வு என்பது கோபத்தின் வெளிப்பாடு என்கிறீர்களா?

bis_mala
17th February 2013, 05:25 PM
ஒயில் என்பது நீங்கள் கூறிய அர்த்தம்தான். ஒயிலாட்டம் என்பது ஒருவித நடனம்.

chinnakkannan
17th February 2013, 05:27 PM
ஒயிலான ஆட்டம் ஒயிலாட்டம் என எழுதுவது தவறா..

bis_mala
17th February 2013, 05:41 PM
நான் இங்கு மெளன ரசிகனாகவே இருக்கிறேன் இனிமேல்..


இப்போது யாருக்குக் கோபம்? எதுவாக இருந்தாலும் வந்து கலந்துகொள்கிறேன் அல்லவா? எப்போதும்போல் எங்கும் கலந்துகொண்டு இன்புறுவீர்!!

pe ka can become a silent observer, not chi.ka.

chinnakkannan
17th February 2013, 05:50 PM
சே.. என்னை வளரவே விட மாட்டேன் என்கிறீர்கள்..சரி சரி..சி.க வாக வெ இருப்பதற்கு வந்து விட்டேன்..!

bis_mala
17th February 2013, 06:30 PM
ஒயிலான ஆட்டம் ஒயிலாட்டம் என எழுதுவது தவறா..


பரத கண்டத்தில் (இந்தியாவில்) ஆடும் நடனம் எல்லாம் பரத நாட்டியம் என்று சொல்லலாம் என்றாலும், அது ஒரு தனிவகை நடனம் ஆகிவிட்டது. ஆகவே குச்சுபுடி, மணிபுரி என்றெல்லாம் வேறுபடுத்திச் சொல்கிறார்கள். அதுபோல்தான் ஒயிலாட்டம் என்பது.

Not that it is wrong, it may (not must) fail to carry the meaning you intended. Suppose you become very famous later and 500 years from, someone is trying to read and understand you. He might wrongly deduce that you are referring to the dance called oyilattam. You won't be there to explain it to him. Having conversed with you now, I know that you did not mean that dance. It then becomes the duty of every writer to be understood by others correctly. But you can keep the description there if you insist. After all, it is your poem. It is your inalienable right to do so.


பாபநாசம் சிவன் ஒரு பாடலை எழுதும்போது,"முகமது சந்திர பிம்பமோ" என்று எழுதி, தியாகராஜ பாகவதரிடம் கொடுத்தாராம். "முகமது" என்றுவருவதால் பாடமுடியாது என்று மறுத்ததால், பின் வதனமே சந்திர பிம்பமோ " என்று மாற்றிவிட்டாராம். தவறு என்பதற்காக அல்ல, தவறான பொருள்கொள்ளும்படி பிறரை இட்டுச் சென்றுவிடும் என்பதற்காகத்தான்! முகம் அது என்று பிரித்தால் சரியாகவே உள்ளது......

If you separate the words as oyil aattam - oyilaana aattam, it looks ok. Yours is a similar situation.

You like the usage,you can hold on to it.

I cannot object. and exit from this discussion. Thank you chi ka avl.

You may be older and more experienced than me in such matters.

chinnakkannan
17th February 2013, 07:01 PM
ஐநூறு வருஷத்துக்கப்புறம் நான் எழுதறது இருக்குமா.. இப்ப நிஜமாவே கிண்டல் பண்றீங்க...(மயிலைத் தொடர்ந்து - வேகமாய் ஆடும் ஒயிலாட்டம் என்பது மயில் ஆடுவதைத் தான் குறிப்பது போல் வருமென்பது என் எண்ணம்..அதுவும் கிட்டத் தட்ட பதின்மூன்று வருடங்களுக்கு முன் எழுதியிருந்தது இது..அப்போதே சொன்ன உங்களைப் போன்ற பாவலர்கள் இதில் பொருள் மாறுகிறது எனச் சொல்லவில்லை..)( நான் வெண்பா கற்றுக் கொண்டு எழுத முயற்சித்துக் கொண்டிருப்பது இதே மையம் தான்).. எனிவே இந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம்..

சந்தடி சாக்கில் நான் பெரியவனா..அனுபவத்திலா..இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன் குருவே..

chinnakkannan
30th April 2013, 12:19 PM
என்ன ஆச்சு கவிச்சாரலுக்கு..ஏன் தூவவில்லை..

bis_mala
19th August 2013, 09:34 PM
தெருவில் திரிந்தநாய் கர்ப்பமுற்று -- நிறம்
தெறிக்கும் அழகுள்ள குட்டிகளை,
அருகில் ஒருவீட்டின் முன்புறத்தில் -- ஈன்றே
அன்புடன் பால்தந்து போற்றியதே!

தட்டுத் தடுமாறி அங்குமிங்கும் - அவை
தவழ்ந்து சிறிது பருத்துவிட,
குட்டிகள் பத்துமே காணவில்லை -- அந்தக்
குக்கலுக் கங்கோ துணையுமில்லை.

பத்தையும் வீட்டிற் குரியவனே - விற்றுப்
பணம்பண்ணி விட்டான் துயரிதுவே!
எத்தனி டத்தே இழந்தது சேய்களை!
இனிப்பே ரிருட்கடல் சுழ்ந்ததுகாண்!

chinnakkannan
19th August 2013, 09:53 PM
வாங்க சிவமாலா நலமா..

அழகிய கவிதை. குக்கல் என்றால்என்ன பொருள்

venkkiram
20th August 2013, 02:55 AM
குக்கல் என்றால் நாய்

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A E%B2%E0%AF%8D

chinnakkannan
20th August 2013, 10:19 AM
நன்றி வெங்கி ராம்..அதுவாகத் தான் இருக்குமென நினைத்தேன்..இருந்தும் உறுதிப் படுத்தக் கேட்டேன்

bis_mala
20th August 2013, 06:09 PM
நலம், நலமறிய ஆவல், சி.க. அவர்களே.

குக்கல் என்ற சொல்லின் பொருளைத் தந்துதவிய வெங்கிராம் அவர்களுக்கு நன்றி

.முன் வளர்த்த சீன வீட்டினர் வீடுமாறிச் சென்றபோது, இது தெரு நாயாகிவிட்டது. பின்னர் தான் தற்போது கூறிய சீன வீட்டின் அண்டையில் பெரும்பாலும் தங்கியது ஆகவே தெருநாய்தான். குட்டிகளை விற்றுவிட்டு தாய் நாயைக் கவனிக்காமல் விட்டுவிட்டதுடன், எங்கள் நாய் அல்ல என்றும் சொல்லுகிறார்கள் அந்த வீட்டுக்கரர்கள். (சீன வீடு). பாவமாக இருக்கிறது.இப்போது நான் கொஞ்சம் சோறு போட்டேன். நான் வீட்டைவிட்டுச் செல்லும்போது அது என்னைச் சுற்றிவருகிறது.....பாவம்.

பசி அதிகம் போலும். சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் சாப்பிடுகிறது.

bis_mala
21st August 2013, 02:21 AM
குற்றங்கள் குவிந்தன பேரலை ஆயின
திட்டங்கள் தேடினர் ஆய்வறிஞர்!-- துன்பம்
உற்றிங்கு மக்களும் ஓலமிட்டார்-- ஓர்
உய்தியுண்டோ என்று சாவலுற்றார்.



இத்தகு சூழலில் மலேசியக் காவலர்
மெத்தத் திறத்தோடே ஐவர்தமை --சுட்டு
மீளாத மேலுல குக்கனுப்பி--மக்கள்
தாளாத துன்பம்வி லக்கிவைத்தார்..


துப்பாக்கி காவலர் கைப்பற்றினார்-- படு
தோல்விக்குத் தீயாரும் மெய்ப்பற்றினார்.
ஒப்பூக்கம் தந்திதைப் பாராட்டுவோம் -- ஊரே
உண்மைத் திறம்காணத் தேரேற்றுவோம்..

notes


மெய்ப்பற்றினார் -- இறுதி பெருந்தோல்வியில் முடிய வேண்டுமென்பதே இந்தக் கொள்ளைக்காரர்களைப் பற்றிக்கொண்ட பேய்ப்பற்று போலும். (=உண்மையான பற்று உடையவர்கள்.)

bis_mala
24th August 2013, 08:01 AM
மழை வந்து விட்டால்
அதில் மடியும் எறும்புகள் எத்தனை?
பிழைத்துப் பின்தோன்றும் எறும்புகள்
எங்கு ஒளிந்திருந்தனவோ?

இவற்றின் இனம் அழிந்துவிடாமல்,,,,,,,,,,,,,,

தோற்றம் பலப்பல!
அழிவும் பலப்பல!

தான் தோற்றுவித்தவை பல அழிதலில்
இயற்கை அன்னைக்கோ ஏது கவலை?

என்றும் போல்,
பகலவன் தோன்றுவான், மறைவான்!

மனிதனும் அப்படித் தானோ?

கெண்டிங் மலையில் பேருந்து கவிழ்ந்து
இறந்தோர் பலர்.

எனக்குக் கவலை
இயற்கைத்தாய்க்கு கவலை ஏது?

இறைவா நீ உலகைக் காப்பாற்று.....

bis_mala
25th August 2013, 07:20 PM
மரித்தல் எனவொன்றே இல்லையென்றால் இன்பம்

விரித்த புவிவாழ்வில் தெய்வத்தினைக் கூர்ந்து

குறித்த எண்ணங்கள் மாந்தனுக்கே இல்லாகி

வெறித்த தன்மையே விரிதலைக் கோலமே

This was written some years back.

chinnakkannan
27th August 2013, 04:30 PM
முதல் அந்தாதி முயற்சி...!

எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
கண்ணன் கழல்களே காப்பு

காப்பதற் கென்றே குடையாகத் தான்பிடிக்க
ஆக்களுடன் சேர்ந்தங்கு மாக்களும் நின்றுவிட
பேய்மழையைப் பார்த்தே பயந்திருந்த கோகுலத்தைக்
காத்துத்தான் நின்றவன் காண்..

காண்பதோ சின்னக் குழந்தையின் தோற்றமெனில்
தீண்டிய பூதகியைத் தாக்கியே - மண்ணில்
விழச்செய்து வித்தைகள் வேடிக்கையாய்ச் செய்த
குழவிக் கிணையேது சொல்

சொல்ல நினைத்தாலே சோறதுவும் பானையிலே
துள்ளியே ஆர்ப்பரித்துத் தோயாமல் பொங்குதற்போல்
அள்ளிப் பெருகிடுதே கண்ணனவன் லீலையதும்
பள்ளிப் பருவத்தில் பார்..

பார்த்தான் பலவாறாய் பக்குவத்தைத் தானிழந்து
ஆர்ப்பரித்த காளிங்கன் தீச்செயலை – வேர்த்து
விறுவிறுத் தாடியே வெட்கிட வைத்தான்
துறுதுறு கண்ணனவன் தான்..

கண்ணனவன் தானங்கே கட்டிய கல்லிழுத்து
திண்ணமாய் நேர்நோக்கிச் செல்லுகையில் – மின்னலது
பட்டாற்போல் மரங்கள் பிரிந்தங்கே வீழவும்
தொட்டனர் சுட்டியின் தாள்

தாளால் விஷத்துடனே தீண்டிய பூதகியை
மீளா நிலைக்கணுப்பி மீண்டவன் –கேளாமல்
தாயிடம் தப்பித் தளிர்மண்ணைத் தின்னவும்
வாயில் தெரிந்த வுலகு..


உலகங்கள் சுற்றுவதை ஒன்றாக்க் காட்டி
கலக்கத்தைத் தாயிடம் கூட்டி – படக்கென
அன்னையைக் கொஞ்சம் அணைத்தே அழுதிடுவான்
சின்னஞ் சிறுகண்ணன் தான்

சின்ன்ஞ் சிறுகண்ணன் தானென்று எண்ணாமல்
நன்றாய் இழுத்தே நாலுஅடி போடென்றே
கன்ன ஞ் சிவந்திருந்த கன்னியர்கள் சொல்கையிலே
பின்னலைப் பின்னுவான் பார்..

பார்க்கும் இடமெல்லாம் புன்னகைக்கு முன்வதனம்
ஈர்க்கும் பலவாறாய் என்பதனால் – சேர்த்திழுத்துக்
கண்ணிமை மூடவும் கண்ணா சிரிக்கின்றாய்
விண்ணினைக் காட்டுவா யா..

bis_mala
29th August 2013, 10:00 AM
Well done well done!

Your anthaathi is v.gd.

When was this composed chi ka avlE!

chinnakkannan
29th August 2013, 10:03 AM
நேற்றைய முன் தினம்- அதே 27ம் தேதி லஞ்ச் டயத்தில் 40 நிமிடத்தில் எழுதியது..எழுத 30 கரெக்ட் பண்ண 10..ஃபேஸ்புக்கில் போட்டு விட்டு இங்கு போடுகையில் பார்த்தால் முதல் பாட்டின் இறுதி வரி கழலே காப்பு என தவறாக எழுதியிருந்தேன்..அச்சச்சோ என நினைத்துப் பின் மாற்றிவிட்டேன்..!

chinnakkannan
29th August 2013, 10:05 AM
ஒன்று மறந்துவிட்டேன்.மிக்க நன்றி தங்களின் உற்சாக வார்த்தைகளுக்கு

bis_mala
29th August 2013, 10:53 AM
யாது வரைந்துள்ளார் யாதவக் கண்ணனைத்
தீதகலப் போற்றும்சின் னக்கண்ணன், பாதகமோ
யாதுமில்லை! பார்ப்போம்! யமுனா நதிதன்னின்
தீரமில்லை ஆகையால் தூரமில்லை என்றுவர
செந்தா மரைபோலும் அந்தாதி கண்மலர்ந்து
வந்தேனை வாவென்று கூவி வரவேற்க
உள்ள மகிழ்வினை உள்ள படியுரைத்தேன்
தெள்ளு தமிழ்ப்பாட்டி னால்

working now. not enough time to scan. thaLai chari paaththuvittu, innum ezuthungaL.

chinnakkannan
29th August 2013, 10:58 AM
ஆல விழுதாய் அழகாய்ப் பதிந்தது
மாலாவின் பாராட்டுதான் ஆம்

நன்றி சிவ மாலா..

venkkiram
29th August 2013, 04:56 PM
:clap: Chika.

chinnakkannan
29th August 2013, 05:08 PM
நன்றி வெங்க்கிராம்..

bis_mala
17th September 2013, 08:40 AM
காமுகர் தம்மையே தூக்கிலிட்டால் --- அவர்
காலடி போற்றிப்பின் செல்பவரும்
தோமுறு பாதை தவிர்த்திடுவார் --- அதன்
தொல்லை விலங்கை அவிழ்தெறிவார்.

என்றிங் கறிந்தோர் செயல்படினும் -- சிலர்
இயலா ததுவென் றயர்வுறுவார்!
ஒன்றும் செயாமல் இருந்துவிட்டால்-- பெண்டிர்
உலவத் தடையாய் அமைந்துவிடும்.

குற்றச் செயல்கள் எதுவுமில்லா---- ஒரு
குதூகல ஞாலமோ எங்குமில்லை!
பெற்று வளர்க்கும் குழந்தைகளில்--- சிலர்
பின்னர் நெறியே திறம்பிடுவர்.


அழுகும் பழத்தை அகற்றுவது --- உள்ள
அழகிய நற்பழம் காத்திடவே.
முழுகும் படகில் பயணித்திடல் -- குற்றம்
இழைப்பவர் தம்மோ டிசைந்திருத்தல்.

Notes:

முழுகும் = sinking.
மூழ்குதல் = முழுகுதல்.. the latter word also means bathing.
மூழ்குதல் used in written language to denote sinking.

தோமுறு - தோம் உறு - குற்றம் உள்ள.

திறம்பிடுவர் : tiRampu-tal 1. to change; to be over-turned; to be subverted; 2. to sprain; to swerve from, deviate from

bis_mala
17th September 2013, 07:13 PM
புனித மகளிர் கெடுத்தார்க்கு வேண்டாம்
மனித உரிமைக் கொடை.

bis_mala
29th September 2013, 07:11 AM
I have contemplated for a post in Pala Suvaik KavithaikaL>

கவிமணி தேசிக வினாயகனார்
கவியை எழுத விழைந்ததுண்டு!
குவியும் பற்பல சோலிகளால்
அவிய ஒழிந்தன நாட்கள்பல.

bis_mala
5th October 2013, 09:27 AM
அதிராகும் தீர்ப்புகளை..............................

சிதறாத சான்றுகளைக் கண்டு கேட்டார்!
அதிராகும் தீர்ப்புகளை ஒவ்வொன் றாக,
பதறாத தூண் ஒத்தார் பதறிப் போக
கதறாத கட்சியினர் கதறி நிற்க,


Will continue and then explain what is meant.
As for now, you can just guess!

bis_mala
6th October 2013, 09:30 PM
continued from last post.


உதறாமல் கால்கையை* * உச்ச ரித்தார்!
குதறாத வழியர்க்கோ அச்ச மென்ன?
குதர்க்கமிலார் என்றென்றும் எதற்கு மஞ்சார்,
இதற்குவர லாறிதுவாம் நேரம் தானே!


உதறாமல் கால்கையை*- with unshaken resolve to do justice. disregarding the stature of the accused person,
உச்ச ரித்தார்! - made decisions and passed judgment.

bis_mala
8th October 2013, 08:51 PM
With ref to post #494:-

சிதறாத - referring here to evidence ( before a court,) which the judge considered to be reliable and not punctured with holes by the defence attorney in cross-examination etc.,

சான்றுகள் - evidence, oral as well as documentary and exhibits.

கண்டு - seen and examined.

கேட்டார்! - heard in hearing session.

அதிராகு - unprecedented.

பதறாத தூண் ஒத்தார் - refers here to the high stature of the accused person,

கதறாத கட்சியினர் - the political party to which the accused belongs has been taken aback by the court decision. Previously they had never been in such position.

bis_mala
10th October 2013, 07:04 PM
பத்து நூறாயிரம் ஆண்டுகள் நினைவின்றியே
பயன்பெற இனைந்து செயலாற்றிய உணர்வு!
ஒத்து வேறாவன தேடிடும் மனமின்றியே
உடனிவை புனைந்து கவினூட்டிய நிகழ்வு.

சொத்து வீணாவதைப் போன்றது குணமின்றியே
சூழ்த*ரும் உடல்தோல் அழகேற்றுதல் விடுத்தல்,
முத்துப் போலாவது வாழ்விது செயலின்றியே
மூப்பொடு பிணியை உடலேற்றியே அழித்தல்.

இவை பாடகி ரிரி கூறிய சில கொண்டு ஆக்கப்பெற்ற வரிகள்.

bis_mala
3rd December 2013, 09:57 PM
பொட்டு வைத்த எழுத்திலிருந்து
பொட்டினை விலக்கிவிட்டு

கட்டுக் கவிதைக் குள்ளில்சென்று
கண்டபடி நட்சத்தீரங்கள்

கொட்டி வைத்த காட்சிபோன்றே
கோலமே விளைத்ததம்மா

மட்டு மீறி கணிணிமேவி
வைரஸென்னும் அரிபுழுவே!

இது மரபுக் கவிதை அன்று. ஒருபுதுக்கவிதை.

chinnakkannan
3rd December 2013, 10:48 PM
அச்சச்சோ..ஏன் காஸ்பரஸ்கி (kaspersky anti virus) வைத்துக் கொள்ளவில்லையா :)

கசமுசா பெயர்கொண்ட பொருள்தான் - கொஞ்சம்
. கணினியுள் புகுந்தேதான் செய்திடும் அருள்தான்
பசப்புக்கள் பலசெய்த வாறே - உள்ளே
..பக்குவ மாய்நுழைந்த கிருமியை அள்ளும்
வசம்பினை உண்டதால் உடலும் - நல்ல
..வசப்பட்டு வேகமாய் குணமடைதல் போலும்
கசக்கிய துணியான கணிணி - மாற்றி
..கண்குளிர வேலைசெய வைத்திடும், போற்றி!

bis_mala
10th December 2013, 06:36 PM
அதிகாரக் கோதை மயக்கு


கோடி பொதுமக்கள் கொன்றவன்-- அதிகாரக்
கோதை மயக்குநீர் உண்டவன்!
தேடிப் பதைப்பவை செய்தவன் --- இனக்கொலை
தேர்ந்தவன் பாவத்தில் உய்தவன்.

அரியணை நீங்கிடா ஆணவன்-- புவி
அனைத்தும் சொலக்கே ளாதவன்!
புரிந்துள போர்க்குற்றம் நீதிமுன்-- வைத்துப்
புகலவும் நெஞ்சொப்பி டாதவன்..

குற்ற மனைத்துக்கும் கொள்கலம்--- இது
குழைவின்றிக் கண்டதுஇந் நன்னிலம்!
இற்றைக் கியான்மட்டும் கண்டதோ!-- ஆக
இவன்யார் என்பது விண்டிலேன்.