View Full Version : Latest News on Tamil Cinema
Pages :
1
2
3
4
5
6
7
8
[
9]
mexicomeat
25th January 2016, 09:12 PM
don't miss this rare interview of raja
http://www.techsatish.com/2016/01/vijay-tv-pongal-special-show-koffee.html
balaajee
26th January 2016, 07:59 PM
Happy to be part of this team. Congrats to Director @jayam_mohanraja (https://twitter.com/jayam_mohanraja) @actor_jayamravi (https://twitter.com/actor_jayamravi) @thearvindswami (https://twitter.com/thearvindswami) @ags_cinemas
(https://twitter.com/ags_cinemas)
https://pbs.twimg.com/media/CZksxNaUsAAoTZH.jpg
balaajee
27th January 2016, 02:01 PM
'சென்னை 28' இரண்டாம் பாகம்: வெங்கட்பிரபு புதிய விளக்கம் - Tamil HINDU
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02608/chennai28_2608480f.jpg
பெரும் வரவேற்பைப் பெற்ற 'சென்னை 28' படத்தின் 2ம் பாகம் எப்போது தொடங்கப்படும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்திருக்கிறார்.
'மாசு (எ) மாசிலாமணி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இப்படத்தில் மீண்டும் தனது 'சென்னை 28' நாயகர்களோடு இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் 'சென்னை 28' 2ம் பாகம் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு "அப்படி ஒரு யோசனை நிச்சயமாக இருக்கிறது. அனைவரையும் ஒன்றிணைத்து இரண்டாம் பாகம் தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம். ஆனால் அனைத்தும் இப்போதைக்கு எண்ணங்களாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் கண்டிப்பாக நடக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், 'சென்னை 28' 2ம் பாகம் இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து தயாரிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திக்கு, "நானும் இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். ஆனால் அது வேறொரு படம். 'சென்னை 28' 2ம் பாகம் அல்ல" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
balaajee
28th January 2016, 01:16 PM
கெத்து தமிழ் வார்த்தையா? நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!
உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்ஸன் நடிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கெத்து. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படாததால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் “கெத்து” என்பது தமிழ் வார்த்தை தான் என்றும், சமீபத்தில் வெளியான சில படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கெத்து என்பது தமிழ் வார்த்தை இல்லை என்றுகூறி வரிவிலக்கு தரமறுக்கின்றனர் என்று பட தயாரிப்பு சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
http://img.vikatan.com/cinema/2016/01/28/images/gethu.jpgஅரசு சார்பில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது, அதில், “ கெத்து என்ற தமிழ் வார்த்தைக்கு இணையாக பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில பெயரில் முதல் எழுத்து ‘கே’ என்பதற்குப் பதிலாக ‘ஜி’ என உள்ளது. இதனால் வரிவிலக்கு அளிக்க முடியாது. மேலும் கெத்து என்ற சொல் தமிழ் வார்த்தை கிடையாது” என்று வாதிட்டார். தமிழ்வளர்ச்சித்துறை மண்டல இயக்குநரும் தனது பதில் மனுவில் கெத்து என்பது தமிழ்வார்த்தை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
எதிரெதிர் வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
balaajee
28th January 2016, 01:55 PM
'காதலும் கடந்து போகும்' கதைக்களம்: இயக்குநர் நலன் குமரசாமி சுவையான விளக்கம்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02713/kakakapo_2713972f.jpg
'காதலும் கடந்து போகும்' ஸ்பெஷல் என்னவென்றால் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும் என்று இயக்குநர் நலன் குமரசாமி தெரிவித்தார்.
விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'காதலும் கடந்து போகும்'. நலன் குமரசாமி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் நலன் குமரசாமி, "'காதலும் கடந்து போகும்' ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த காமெடி படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று காமெடி அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிகாட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் காமெடி இருந்து கொண்டே இருக்கும்.
எனது முதல் படமான 'சூது கவ்வும்' படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து பண்ணியிருக்கிறேன். அப்படத்தின் சாயல் இப்படத்தில் நீங்கள் காணவே முடியாது. குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
'சத்யா' படத்தில் நடித்த சுந்தர் இப்டத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். 'ப்ரேமம்' படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனாவை நாயகியாக இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். விஜய் சேதுபதி மற்றும் மடோனா இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒரு முறை "என்னய்யா இந்த பொண்ணு இப்படி நடிக்கிறா" என்று விஜய் சேதுபதி பாராட்டினார். போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தின் 70% முதல் 80% காட்சிகள் நாயகன், நாயகி சம்பந்தப்பட்டே இருக்கும்.
நாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பது தான் கதையே. தமிழ் சினிமாவில் உடனே நட்பு உருவாகி விடுவது போல பண்ணியிருப்பார்கள். ஆனால், இப்படத்தில் படிப்படியாக பண்ணியிருக்கிறோம். அதில் காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன். அக்காட்சிகள் மூலமாக நட்பு உருவானது என்பதை பார்ப்பவர்கள் நம்புவது போல சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும். இப்படத்தில் காதல் தோல்வி எல்லாம் கிடையாது.
'சூது கவ்வும்' நயன்தாரா கோயில் கட்டும் காமெடி காட்சிகள் எல்லாம் படம் வந்தவுடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல இப்படத்தின் காமெடி காட்சிகளுக்கும் கிடைக்கும் என நம்புகிறேன். இப்படம் ஒரு கொரியன் திரைப்படத்தின் ரீமேக்காகும். அப்படத்தை அப்படியே எடுத்திருக்கிறேன், ஆனால் அதில் என்னோட பாணி இருக்கும்.
'காதலும் கடந்து போகும்' படத்தின் கதை ஒன்றரை வருடத்திற்கு முன்பே தயார் தான். நானும் விஜய் சேதுபதியும் தயாராக தான் இருந்தோம். ஆனால், வேறு ஒரு கதை பண்ணலாம் என்று தான் வேறு ஒரு கதை பண்ணினோம். அதை சரியாக வரவில்லை என்றவுடன் ஒரம் வைத்துவிட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி அதே படத்தை பண்ணினோம்.
இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், காதல் அது பேசாமல் வந்துவிட்டு போகட்டும் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
balaajee
28th January 2016, 04:32 PM
செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா இணையும் படம் ரீமேக்கா?
கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் செல்வ ராகவன் இயக்கும் இணையும் “ நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் படப்பிடிப்பு இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் துவங்கியது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா , ரெஜினா கசான்றா , நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
http://img.vikatan.com/cinema/2016/01/28/images/IMG_3051.jpgகதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் செல்வராகவன் , ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா , இசை சந்தோஷ் நாராயணன் , இவர் செல்வராகவனுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். கலை விஜய் ஆதிநாதன் .
பெரிய விளம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக இன்று துவங்கிய படப்பிடிப்பை இடைவிடாமல் தொடர்ந்து மார்ச் இறுதிவரை நடத்தத் திட்டமிட்டுள்ளனராம். அதற்குள் மொத்தப்படப்பிடிபையும் நடத்தி முடித்துவிடுவார்களாம். இயக்குநர் செல்வராகவன் இயக்கிவரும் நெஞ்சம் மறப்பத்தில்லை முற்றிலும் புது பாணியில் உருவாகிவரும் திரைப்படமாகும். இது வேறு எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல என்று படக்குழுவினர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
balaajee
28th January 2016, 04:34 PM
9 மணிக்கு வந்துவிட்டால் நல்லநடிகரா? இயக்குநர் முருகதாஸ் சாடல்
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் 'கணிதன்'. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸின் மாணவர். படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. இசையை ஏ.ஆர் ரகுமான் வெளியிட ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது " இது பத்திரிகையாளர் சம்பந்தப் பட்ட கதை. இதைத் தயாரிக்கும் தாணு சாரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.ரஜினி சாருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தவர் அவர். கடின உழைப்பாளி ராசியானவர்.
http://img.vikatan.com/cinema/2016/01/28/images/DSC_6028.jpgநான் 'துப்பாக்கி' படம் எடுத்த போது அதன் முதல் தோட்டாவாக இருந்தவர் அவர்தான். நான் 'கத்தி' படம் இயக்கிய போது நான் ஒரு கத்திதான் எடுத்தேன். ஆனால் ஊரில் யார் யாரோ 100 கத்திகள் எடுத்தார்கள். நான் படத்தில் பாம் வைத்தால் நிஜமாகவே தியேட்டரில் பாம் வைத்தார்கள்.அப்போது நான் செய்வது அறியாமல் தவித்த போது எனக்குத் துணை நின்றவர் தாணு சார்தான். அவர் தயாரிக்காத படத்துக்குக்கூட எனக்கு அவ்வளவு பக்க பலமாக இருந்தார்.சத்யம் திரையரங்கில் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடந்தபோது படம் வெளிவருமா வராதா என்று நான் தவித்துக் குழம்பிய போது அவர் அங்குஅவர்கள் நடுவில் வந்து சொன்னார், படத்தை திரையிடுங்கள் எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன பாதிப்பு வந்தாலும் நான் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். அப்படிப்பட்டவர்தான் இந்த தாணு சார்.
என் உதவியாளர்கள் 'அரிமா நம்பி' ஆனந்த் சங்கர், 'கணிதன்' சந்தோஷுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'துப்பாக்கி' படத்தில் வேலை பார்த்த என் ஆறு உதவியாளர்களும் இப்போது படம் இயக்குகிறார்கள்.
தமிழ்த்திரையுலகில் 'கபாலி', 'தெறி' என்கிற இரண்டு பெரிய படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படத்தோடு என் உதவியாளர் இயக்கும் 'கணிதன்' படமும் தயாரிக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 'கபாலி', 'தெறி' என்கிற இரண்டு பெரிய படங்களோடு அதற்கு எந்த அளவிலும் குறையில்லாமல் இந்தப் படத்தையும் நேசிப்பார் என்பது எனக்குத் தெரியும். 'கணிதன்' இயக்கும் சந்தோஷ் நல்ல உழைப்பாளி, சுறுசுறுப்பானவர்.
நாயகன் அதர்வாவைப் எனக்குப் பிடிக்கும்.,காரணம் அவரது அப்பா முரளிசார் எனக்குப் பிடிக்கும்.,. தமிழ்ச் சினிமாவில் அதிகமான புதுமுக இயக்குநர்களுக்கு முதல் படம் கொடுத்த நாயகன் முரளிசார்தான். அவர். நமக்கு அதர்வாவையும் கொடுத்தவர் என்பதால் அவரைப் பிடிக்கும். அதே போலஅதர்வாவும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். ஒரு கதாநாயகன் சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும் பெரிய கதாநாயகன் என்றில்லை. காலையில் 9 மணிக்குப் படப்பிடிப்புக்கு வந்தால் பெரிய உண்மையான நடிகர் என்று கூறமுடியாது. காலை 7 மணிக்கே சீருடையுடன் பள்ளிக்குப் போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அவர்களை சின்சியரானவர்கள் என்று நாம் கூறுவதில்லை.
http://img.vikatan.com/cinema/2016/01/28/images/DSC_5973.jpgநல்ல கதையைத் தேர்வு செய்து நடிப்பதுதான் திறமை. கதாநாயகன் 50 கதைகள் கேட்டால்தான் ஒரு நல்ல இயக்குநரை கண்டுபிடிக்கமுடியும்;அடையாளம் காணமுடியும்.நல்ல கதை கேட்டது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமோ அதே போல் மோசமான கதை கேட்பதும் கொடுமையான விஷயம். அஜீத்சார் ,விஜய்சார் போல அதர்வாவும் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதில் நடித்துள்ள கேத்தரின் தெரசா முன்னணி நாயகியாக வருவார். இசையமைத்திருக்கும் சிவமணியும் நானும் ஒரு முறை விமானத்தில் போனோம். அவர் கண்ணை மூடிக் கொண்டு இருந்தார். அட கவலையில்லாத மனிதர் என்று நினைத்தேன். சற்று நேரத்தில் என் காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு விமானத்தின் ஒலியை அடிப்படையாக வைத்து ஒரு ரிதம் போட்டுள்ளேன் கேளுங்கள் என்றார். கேட்டு விட்டு அசந்து விட்டேன்.
நான் வெளியிட ரகுமான் சார் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் என் படத்துக்காக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆஸ்கார் விருது வாங்கும் போது வெள்ளைக்காரர்கள் மத்தியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார். அப்போது எனக்கு எல்லாப் புகழும் தமிழனுக்கே என்று தோன்றியது.
சாப்பாடு எப்படி இருக்கும் என்பதற்குச் சாப்பிடவே வேண்டாம்.சமையல் கட்டிலிருந்து வரும் வாசனையிலேயே தெரியும். இந்த'கணிதன்' படமும் அப்படித்தான். எடிட்டிங், டீஸர், பாடல் நிலையிலேயே நன்றாகத் தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. இப்படம் வெற்றிப் படமாகி சந்தோஷ் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு முருகதாஸ் பேசினார்.
balaajee
28th January 2016, 09:57 PM
'நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கணும்னு எழுதிருந்தா அத யாராலும் மாத்த முடியாது' என்று நடிகர் சித்தார்த்தின் திடீர் ட்வீட் தத்துவத்தால் நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தன் ஹாலிவுட் பிரவேசம் பற்றி ட்வீட்டி இருந்தார் தனுஷ்
https://pbs.twimg.com/media/CZz6Lw1UcAA9IJE.jpg
balaajee
29th January 2016, 11:49 AM
சிக்கலில் அஜீத்தின் இயக்குநர்? - vikatan
அஜித்தை வைத்து வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா அவருடைய அடுத்தபடத்தையும் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. அஜித் இப்போது ஓய்வில் இருக்கிறார்.
ஓய்வு முடிந்தவுடன் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் அந்தப்படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுதான் நடக்கும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் திரையுலகினர். ஆனால் அதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இயக்குநர் சிவா, தமிழில் முதல்படம் இயக்க வந்தபோது அந்தப்பட நிறுவனத்துக்கு இன்னொரு படம் இயக்குவதாக ஒப்புக்கொண்டு முன்தொகையும் வாங்கியிருந்தாராம் சிவா. ஆனால் தொடர்ந்து அஜித்தோடு பணியாற்றுவதால் அவர் சொல்கிற தயாரிப்பாளர்களுக்கே படம் பண்ணும் நிலை அமைந்துவிட்டது. அடுத்தபடமும் வேறு தயாரிப்பாளருக்கே இயக்குகிறார் என்ற செய்தி வந்தவுடன், எங்கள் நிறுவனத்தில் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்களே என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கேட்டிருக்கிறார்கள்.
இந்தவிசயம் தெரிந்த இப்போதைய தயாரிப்புநிறுவனம் அந்தச்சிக்கலைச் சரிசெய்துவிட்டு வாருங்கள் என்று இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்களாம். அதனால் முதல்படத் தயாரிப்பாளரோடு பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம் இயக்குநர். சிக்கல் சரி செய்யப்பட்டுவிடுமா?
balaajee
30th January 2016, 06:15 PM
All praise to Vetrimarans VISARANAI by Ulaganayagan....Thanks sir
https://pbs.twimg.com/media/CZ5goFpUEAAjfbk.jpg
balaajee
30th January 2016, 06:16 PM
https://pbs.twimg.com/profile_images/597865661264596992/NnOqToId_bigger.jpg A.R.Rahman @arrahman (https://twitter.com/arrahman)
(https://twitter.com/arrahman/status/693091161917886464)
https://pbs.twimg.com/media/CZ5avTkUAAA_MMs.jpg
balaajee
30th January 2016, 06:19 PM
AGS Cinemas Tnagar is open
#Ags (https://twitter.com/hashtag/Ags?src=hash) #Tnagar (https://twitter.com/hashtag/Tnagar?src=hash) First glimpse https://abs.twimg.com/emoji/v2/72x72/1f601.png @ags_cinemas
(https://twitter.com/ags_cinemas)
https://pbs.twimg.com/media/CZ0pxKBUAAA-TPQ.jpg
https://pbs.twimg.com/media/CZ5I4CUUUAAEKGX.jpg
balaajee
30th January 2016, 06:21 PM
@alphonseputhren (https://twitter.com/alphonseputhren) @stonebenchers
(https://twitter.com/stonebenchers) https://pbs.twimg.com/media/CZ5DqGgUsAAi9bT.jpg
balaajee
30th January 2016, 11:03 PM
Visaaranai in cinemas from Feb 5th !!!http://image.noelshack.com/fichiers/2016/04/1454164324-kh.jpg
balaajee
1st February 2016, 12:49 PM
'காஷ்மோரா'... 4 கெட்டப், 15 அரங்குகள், ரூ.60 கோடி பட்ஜெட் - Tamil hindu
4 கெட்டப்களில் கார்த்தி, 15 அரங்குகள், 60 கோடி பொருட்செலவு என மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது 'காஷ்மோரா'.
'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'காஷ்மோரா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து நாகார்ஜூனுடன் கார்த்தி நடிக்கும் 'தோழா' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது தான் 'காஷ்மோரா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
சுமார் 60 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் 'காஷ்மோரா', கார்த்தி நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தின் பிரதான காட்சிகள் அனைத்துமே சுமார் ஒன்றரை கோடி பொருட்செலவில் உருவான அரங்கில் தான் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தின் காட்சிகளை சுமார் 15 அரங்குகளில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படத்தில் சுமார் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. ஒவ்வொரு கெட்டப்பின் மேக்கப்பிற்கும் போட சுமார் 3 மணி நேரமும், படப்பிடிப்பு முடித்தவுடன் கலைப்பதற்கு 2 மணி நேரமும் ஆகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தான் முடிவடைய இருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
balaajee
1st February 2016, 07:51 PM
இறுதிச்சுற்று சக்ஸஸ் மீட்
https://pbs.twimg.com/media/CaIn_qKUYAAjCGX.jpg
balaajee
1st February 2016, 08:19 PM
கேப்டனுக்கு இந்தியாவின் முதல் ஃபோர்டு எண்டேவர் கார் பரிசு
https://pbs.twimg.com/media/CaCDCCcVAAAs8q9.jpg
balaajee
2nd February 2016, 01:08 PM
Actor @iamNivinPauly (https://twitter.com/iamNivinPauly) with Ilayathalapathy @actorvijay
(https://twitter.com/actorvijay)
https://pbs.twimg.com/media/CaLukuwUYAA7-40.jpg
balaajee
2nd February 2016, 09:07 PM
SURPRISE :MIKE TYSON WANT TO SEE THE MOVIE !!!http://image.noelshack.com/fichiers/2016/05/1454419919-mike.jpg-------------------------------
balaajee
2nd February 2016, 09:14 PM
CELEBRITY BADMINTON LEAGUE PHOTOS !!! (http://tamilrockers.com/index.php/topic/36103-celebrity-badminton-league-photos/)
http://image.noelshack.com/fichiers/2016/05/1454422651-cbl-2.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422652-cbl-3.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422647-cbl-4.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422648-cbl-5.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422643-cbl-6.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422650-cbl-1.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422653-cbl-14.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422659-cbl-16.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422671-cbl-18.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454422662-cbl-10.jpg
balaajee
3rd February 2016, 06:36 PM
ட்விட்டர் கருத்து சர்ச்சை: நடிகர் சித்தார்த் விளக்கம்
ட்விட்டரில் கூறியிருப்பது தன்னுடைய படத்தின் வசனம், யாரையும் குறிப்பிடவில்லை என்று நடிகர் சித்தார்த் தெரிவித்தார். சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'அரண்மனை 2' மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
மேலும், தீரஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து, தயாரித்திருக்கும் 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில், "நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது. #தமிழ் #தத்துவம்" என்று குறிப்பிட்டு இருந்தார் சித்தார்த். இக்கருத்தில் தனுஷின் ஹாலிவுட் வாய்ப்பைத் தான் குறிப்பிட்டார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகின. சித்தார்த்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை சமூக வலைத்தளத்தில் உண்டாக்கியது.
ட்விட்டர் கருத்து குறித்து சித்தார்த்திடம் கேட்ட போது, "நான் நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் வரும் வசனம் அது. நான் யாரையும் குறிப்பிட்டு அதனை வெளியிடவில்லை. எனது ட்விட்டர் பக்கத்தில் நான் நடித்த படத்தின் வசனத்தை எழுதினேன். மற்றவர்கள் வேறு விதத்தில் யூகித்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்" என்று தெரிவித்தார்.
balaajee
4th February 2016, 10:11 PM
https://pbs.twimg.com/profile_images/695241910596665348/-G-nuQ-N_bigger.jpg Allu Arjun @alluarjun (https://twitter.com/alluarjun) 3h3 hours ago (https://twitter.com/alluarjun/status/695240068903010304)
I THANK all my FANS for making me Touch ONE CRORE LIKES ON FACEBOOK ! THANKS for all the Love & Support! pic.twitter.com/l5JIVO6vxJ (https://t.co/l5JIVO6vxJ)
https://pbs.twimg.com/media/CaX9JfeUEAApnwO.jpg
balaajee
4th February 2016, 10:26 PM
https://pbs.twimg.com/profile_images/463259042953973760/Xeio27Ry_bigger.jpeg Rajinikanth @superstarrajini (https://twitter.com/superstarrajini) 11h11 hours ago (https://twitter.com/superstarrajini/status/695129764437192704)
விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்
balaajee
6th February 2016, 07:43 AM
First Look Of Randeep Hooda In "Sarbjit" !!!http://image.noelshack.com/fichiers/2016/05/1454677989-81647-thumb-665.jpg The first Look of Randeep Hooda in Omung Kumar biopic on Sarabjit Singh is revealed. The method actor has toiled really hard to get into the skin of the character.http://image.noelshack.com/fichiers/2016/05/1454677931-x.jpgThe film is based on an Indian prisoner who was beaten to death in a Pakistan jail. The picture of Hooda as Sarabjit is intriguing. The film which also stars Aishwarya Rai Bachchan, Richa Chadha and Darshan Kumar is jointly produced by Vashu Bhagnani, Bhushan Kumar, and Sandeep Singh
balaajee
6th February 2016, 07:45 AM
First Look Photos Of Deepika Padukone With Vin Diesel From The Hollywood Movie xXx: The Return of Xander Cage !!!http://image.noelshack.com/fichiers/2016/05/1454678249-5-1.jpghttp://image.noelshack.com/fichiers/2016/05/1454698540-caakhsvusaag4ux.jpg
balaajee
6th February 2016, 08:12 AM
UDHAYANIDHI REPORTS VICTORY OVER TN GOVERNMENT
Udhayanidhi Stalin’s Gethu which was released for Pongal 2016 was an U certified film sans any elements that call for an A certification. But the film did not receive its entertainment tax rebate and the authorities had cited that the name Gethu is not a Tamil word and that’s the reason the film is not qualified to enjoy the tax waiver.
But Udhay had given substantial proof that Gethu is indeed a Tamil word which means ‘Thanthiram’ or cleverness. He has filed a case in High Court regarding this.
Now the producer/actor has shared in his microblogger that he has won the case against the TN government and the Chennai High Court has granted tax exemption for the film. He says, “#redgiant wins the case against the TN govt! Chennai high court grants tax exemption for #gethu from the date of release!”
balaajee
7th February 2016, 01:33 PM
#VilAmbu (https://twitter.com/hashtag/VilAmbu?src=hash) trailer launch by @Suriya_offl (https://twitter.com/Suriya_offl) at 6:00pm today in his twitter account!@dir_susee (https://twitter.com/dir_susee)
https://pbs.twimg.com/media/Cal-THfUsAAmwLC.jpg
balaajee
7th February 2016, 07:59 PM
Sony Music South @SonyMusicSouth 5h5 hours (https://twitter.com/SonyMusicSouth/status/696264692574998528)
.@karthiksubbaraj (https://twitter.com/karthiksubbaraj)'s #Iraivi (https://twitter.com/hashtag/Iraivi?src=hash) teaser crosses 1 million views!Watch it again & make some noise https://youtu.be/LmiaxIxDrFQ (https://t.co/tNm1TFs7Jb)
https://pbs.twimg.com/media/Camg7TkUsAEqM6X.jpg
balaajee
7th February 2016, 08:13 PM
25 days
http://extraimago.com/images/2016/02/07/722016_FE_0702_MN_19_Cni7281.jpg
http://extraimago.com/images/2016/02/07/722016_FE_0702_MN_22_Cni3385.jpg
http://extraimago.com/images/2016/02/07/722016_FE_0702_MN_22_Cni3386.jpg
http://extraimago.com/images/2016/02/07/722016_MDSB178533-M.jpg
balaajee
9th February 2016, 03:09 PM
DIRECTED by AM Jothi Krishna and produced by Shri Sai Ram creations.
http://data1.ibtimes.co.in/cache-img-599-0-photo/en/full/38070/-62170005200_anu-emmanuel-has-signed-her-second-project-after-nivin-paulys-action-hero-biju-telugu-project.jpg
balaajee
9th February 2016, 03:30 PM
நடிகர் சங்கத்துக்கு இரண்டு கோடி கொடுத்தது யார்? நடிகர் சங்கத் தேர்தலுக்கு முதன்மைக் காரணமாக இருந்த கட்டிட விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. எஸ்பிஐ நிறுவனத்துடன் முந்தைய பொறுப்பாளர்கள் போட்டிருந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத்தினர் கூறியதாவது, இன்று தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். கடந்த நிர்வாகத்தால் நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் 2010-ல் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
http://img.vikatan.com/cinema/2016/02/09/images/karthi.jpgஅந்த ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால் அது அறக்கட்டளை சட்டப்பட்டி தவறானது என சங்க உறுப்பினர் திரு.பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகர்களான நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். அது நிறைவேறாததால் தேர்தலிலும் பாண்டவர் அணி மூலம் நின்றோம். வெற்றியும் பெற்றோம்.
நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தபடி பதவிக்கு வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தனியார் நிறுவனத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிலுள்ள சட்ட சிக்கல்களை விவாதித்தோம். முடிவில் அந்த ஒப்பந்தத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ.48 லட்சம் மற்றும் பத்திரப்பதிவுக்காக கொடுக்கப்பட்ட 1 கோடி 41 லட்சம் கடந்த 2 வருடங்களாக நடிகர் சங்க அலுவலுக்கு மாதாந்திர செலவுகளுக்கு கொடுக்கப்பட்ட சுமார் ரூ.60லட்சத்தையும் சேர்த்து 2 கோடியே 48 லட்ச ரூபாயை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவிலும் ஒப்புதல் வாங்கப்பட்டு இன்று ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வரலாற்றுப்பதிவு நிகழ்ந்தேற உதவிய நல்ல உள்ளங்களுக்கு இன்று நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இக்கால கட்டங்களுக்கான கால தாமதத்திறாக முதலீடு செய்த பணத்திற்கான வட்டியை ரத்து செய்து எதிர்காலத்தில் நடிகர் சங்கத்துடன் என்றும் ஒத்துழைப்போம் என்று கூறிய எஸ்.பி.ஐ சினிமாவிற்கு நன்றி.
இந்த ஒப்பந்தத்துக்கு பல கட்டங்களில் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த திருஎஸ்.வி.சேகர், திரு.மன்சூர் அலிகான், திரு.ஆனந்த்ராஜ்,திரு. குமரிமுத்து. திரு.பி.ஏ.காஜாமைதீ்ன், திரு.ஆர்.எம்.சுந்தரம் ஆகியோருக்கும் நன்றி.
http://img.vikatan.com/cinema/2016/02/09/images/vishal.jpgபல சோதனைகளையும், மிரட்டல்களையும் சமாளித்து உறுப்பினர்களின் நலனுக்காக நிலத்தை மீட்டெடுக்க தனி்த்துப் போராடிய திரு. பூச்சி முருகனுக்கு நன்றி. ரூ. 2 கோடி கொடுத்தால்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்ற சூழ்நிலையில், தற்போதைய சங்க அறக்கட்டளை அறங்காவலர் திரு.ஐசரி கணேஷ் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு குறுகிய காலத்தில் 2 கோடியைப் பெற்றுத் தந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த வழக்கிற்காக ஆரம்ப நிலையில் இருந்து வாதாடிய வழக்கறிஞர் திரு.தண்டபாணி, திரு.முத்து்க்குமார், திரு.சுல்தான் ஆகியோருக்கும், உடனிருந்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய உதவிய திரு. கிருஷ்ணாவுக்கும் நன்றிகள். என்று கூறினார்கள்.
அந்த நிகழ்ச்சியில், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, சங்கத் துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கோவை சரளா, லலித குமாரி, சங்கீதா, ஜூனியர் பாலையா, சோனியா, பசுபதி, ஸ்ரீமன், டி.பி.கஜேந்திரன், உதயா, பிரேம்குமார், அயூப்கான், நியமன செயற்குழு உறுப்பினர் காஜாமைதீன், சிறப்பு விருந்தினர்கள் சத்யராஜ், பிரபு, ஐசரிகணேஸ் , ராஜேஸ்வரி, ஆர்.கே.சுரேஸ் , பவன் ,பொது மேலாளர் பால முருகன் மற்றும் ஏ.ஆர்.ஒக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
balaajee
9th February 2016, 08:56 PM
Vikatan Gives 61 marks For Visaaranai. 2nd Highest In Vikatan History !!!http://image.noelshack.com/fichiers/2016/06/1455021329-d.jpg
balaajee
9th February 2016, 08:58 PM
The Team Bangalore Naatkal on Valentine's Day Special KWDD !!!http://image.noelshack.com/fichiers/2016/06/1455021039-casq7d8umaeuxum.jpg
balaajee
10th February 2016, 03:31 PM
Akshay Kumar to star in Priyadarshan’s Hindi remake of Visaranai.https://pbs.twimg.com/media/Ca163CiUAAEkxlC.jpg
balaajee
10th February 2016, 03:47 PM
Prod City cine creations Satishkumar arranged Nadigar Sangam members to meet @SriSri (https://twitter.com/SriSri) in chennai
https://pbs.twimg.com/media/Ca1ntvtUAAAcLgx.jpg
balaajee
11th February 2016, 12:05 PM
'புலி' விழாவுக்குப் பின் மன உளைச்சல்: டி.ராஜேந்தர் புலம்பல் - TAMIL HINDU
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02731/pokkiriraja_2731056f.jpg 'போக்கிரி ராஜா' ஒரு பாடல் வெளியீட்டு விழாவில்...
'புலி' இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளானதாக 'போக்கிரி ராஜா' ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.டி.செல்வக்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் 'அத்துவுட்டா' என்ற ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினரோடு டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது, "’புலி’ படத்துக்குப் பிறகு எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஏனென்றால் அந்த விழாவில் ’புலி’யைப் பற்றி தொடர்ச்சியாக பேசினேன். எனக்கு ’புலி’ என்றால் பிடிக்கும். ஈழத்தமிழர்களுடைய ஆதரவாளன் நான். இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக என் பதவியை ராஜினாமா செய்த பிழைக்கத் தெரியாத தமிழன். அந்த உணர்வு எனக்கு உண்டு.
டி.ஆர் பேசிய அடுக்கு மொழியை மற்றவர்கள் வேறு பார்வையில் பார்த்தால் தப்பில்லை. அது எந்த தொலைக்காட்சியில் வெளியிட்டாங்களோ, அதற்கு யாரெல்லாம் எப்படி பார்த்தார்கள் என்பது கடவுளுக்குத் தெரியும். நான் அந்த விழாவுக்கு சென்ற பிறகு மன உளைச்சலுக்கு ஆளானேன். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். இந்த விழாவுக்கு பார்வையாளனாகவும், நண்பனாகவும் வருகிறேன் என்று சொன்னேன். இங்கு பேச்சாளராக வரவில்லை. 'வாலு' படம் பிரச்சினையின் போது வந்து நின்ற ஒரே ஒரு இதயம் பி.டி.செல்வக்குமார் தான்.
நான் இங்கு வந்து நிற்பதற்கு கடவுள் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை மூன்றும் தான் காரணம். இந்த மூணு கையை வைத்து தான் என் வாழ்க்கை. இந்த மூணு கை இருந்ததால் தான் நான் வாழ்க்கையில் ஆகவில்லை மொக்கை. இப்படி பேசுவதால் என்னிடம் கொடுத்திருக்கிறார்கள் மைக்கை.
டி.ராஜேந்தர் இதற்கு முன்னாடி இப்படி அடுக்குவான் என்று தெரியாதா. நீ நக்கல் பண்ணினால், நானும் நக்கல் பண்ணுவேன். வாழ்க்கையில் யார் தான் நக்கல் பண்ணவில்லை. நான் அத்தனை புலியை அடுக்கினேன் என்றால் எல்லாமே என் மனதில் இருந்து வந்தது. 'புலி' என்று தலைப்பு வைத்ததிற்கு ஒரு தில் வேண்டும். அந்த தில்லை வைத்து தான் என்னிடம் இருந்து சொல் வந்தது.
என்னை பொறுத்தவரைக்கும் ஹன்சிகா ஒரு குழந்தை மாதிரி. 'வாலு' படத்தை வேறு ஒருவர் தயாரித்திருந்தார். அப்படத்தை நான் வாங்கி கடன் பட்டு வெளியிட்டேன். தாறுமாறு என்ற பாடலை அந்த தயாரிப்பாளர் படப்பிடிப்பு பண்ணவில்லை. அப்பாடலை நான் ஒரு கோடி ரூபாய் செலவில் படப்பிடிப்பு பண்ணிய போது, ஹன்சிக TR UNCLE கேட்டாரா என்று சொல்லி வந்து எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் வந்து நடித்துக் கொடுத்ததற்கு நன்றி.
நான் அடுத்தவர்களை மாற்றுவதை விட, என்னை நான் மாற்றிக் கொண்டேன். எதுகை மோனை மட்டுமல்ல அடுக்கு மொழியிலும் பேசத் தெரியும். ஒரு காட்சியைச் சொல்லும்போது கூட நாயகியை தொடாமல் 35 வருடங்கள் வாழ்த்திருக்கிறேன். இதற்கெல்லாம் யாருமே விருது தர மாட்டார்கள். எனக்கு தேவையுமில்லை. இன்று வரைக்கும் நான் விருதுக்கு அலைந்ததே இல்லை. இந்த காலத்தில் விருதையும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டியதிருக்கிறது. மக்கள் கொடுத்த ரிவார்டு மட்டுமே போதும்" என்று தெரிவித்தார்.
மேலும், படக்குழுவினர் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்தி பேசி எதுகை மோனை
யோடு தனது உரையை முடித்துக் கொண்டார்.
balaajee
11th February 2016, 06:43 PM
இவரையும் விட்டுவைக்கலையா இளையராஜா?
ஏதோ ஒரு பள்ளிக்கூட அறை. பிரம்பும், சாக்பீஸும், டஸ்டரும், நோட்டுப் புத்தகமும் இருக்கிறது.
இப்போது ஒருவர் நடந்து வருகிறார். வெளிநாட்டுக்காரர்.
உடைந்த தமிழில் பேசுகிறார்.
‘நமஸ்காரம்.. என் பேரு மத்தி..’ என்று ஆரம்பித்து தமிழிலேயே பேசுகிறார். அவர் எப்படித் தமிழ் பேசுகிறார் என்பதற்கு, பின்னால் போர்டில் குழந்தைக் கையெழுத்தில் இருக்கிற இரண்டு பாடல்களின் ஆரம்ப வரிகள் பதில் சொல்கிறது..
‘ஆகாய கங்கை’
‘மண்ணில் இந்தக’
http://img.vikatan.com/cinema/2016/02/11/images/ilaiyaraja-next-is-megha.jpg
இரண்டுமே இளையராஜாவின் பாடல்கள். கடல் கடந்தும், தமிழரல்லாத ஒருவரை தமிழ் பேச வைத்தது இசையன்றி வேறு எதுவாக இருக்கும்?
‘இளையராஜா பிடிக்கிறது’ என்ற அவரது கூற்றே அதை உறுதிப்படுத்துகிறது. .தொடர்ந்து, 'ஆகாய கங்கை' பாடலை ஒருவரி விடாமல் பாடுகிறார். முடிந்ததும் போர்டில் இருக்கிற ‘ஆகாய கங்கை’க்கு அருகில் OK போட்டுவிட்டு, ஒரும் மிடறு காஃபி குடித்துவிட்டு மண்ணில் இந்தக் காதலின்றி பாடுகிறார்.
இரண்டு பாடல் பாடி முடித்ததும், ஒரு தம்ஸ் அப் காட்டிவிட்டுப் போகிறார். அவரே போய் கேமராவை ஆஃப் செய்கிறார்.
இசை ஏதும் இல்லை. நம் ஜட்ஜ்கள் சொல்கிற சுருதி, லயம், தாளம், சங்கதி போன்ற சமாச்சாரங்கள் இல்லை. இருப்பதெல்லாம் அவருக்கு இசை மீதிருக்கிற காதல் மட்டுமே. ’என் தமிழ் நண்பனுக்கு இளையராஜா பிடிக்கும். அவர் மூலமாக நானும் ராஜா இசை கேட்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கும் இளையராஜா பிடிக்கும்’ என்றிருக்கிறார்.
கடல் கடந்து மொழிதெரியாத ஃபின்லாந்துக்காரரை இளையராஜா கவர்ந்திழுக்க என்ன காரணம்?
ஒன்றே ஒன்றுதான். ஒரே ஒரு ஊர்ல.. அல்லல்ல.. உலகத்துக்கே அவர்தான் ராஜா என்பதே அது!
http://www.youtube.com/embed/mGBEJn-7KCU
balaajee
14th February 2016, 09:14 PM
Anjaathe 2 In Preparation !!!:goodidea:
http://image.noelshack.com/fichiers/2016/06/1455459966-aa.jpgThe movie « Anjathe » had offered the first commercial success to the director Mysskin and the latter would be about to direct the sequel of this movie. The official announcement is very expected soon. This project will be produced by Nemichand and Hitesh Jhabak who had produced the first part. The director produced the film « Savara kaththi » his assistant G.R. Aathityaa in which he plays the role of the antagonist. The director Raam takes the lead role with Poorna.
balaajee
14th February 2016, 09:21 PM
Vikatan Awards Cover !!!
http://image.noelshack.com/fichiers/2016/06/1455458597-cover.jpg
balaajee
16th February 2016, 12:33 PM
வித்தியாச படங்களைத் தயாரித்தவரின் புது அவதாரம்அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுபட்டி உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தன்னுடைய திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர்.
http://img.vikatan.com/cinema/2016/02/16/images/Mayavan%20Movie%20Pooja%20Stills%20(2).jpgதற்பொழுத ு சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அவர் இயக்கவிருக்கும் படத்திற்கு மாயவன் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைக்கவிருக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மேலும் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.
balaajee
16th February 2016, 12:46 PM
'குற்றம் கடிதல்' பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்க வாய்ப்பு
'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மாவின் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. அஜய், ராதிகா, சாய் ராஜ்குமார், பாவல் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை கிரிஷ்டி மற்றும் சதிஷ்குமார் இணைந்து தயாரித்திருந்தார்கள். செப்டம்பர் 2015ல் இப்படம் வெளியானது.
பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய படமாக 'குற்றம் கடிதல்' உள்ளதால் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வென்றது.
தற்போது, இயக்குநர் பிரம்மா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் பெண்களுக்கான பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பிரதான வேடத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முடிவானவுடன் ஜோதிகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
'36 வயதினிலே' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜோதிகா இக்கதையைத் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
balaajee
16th February 2016, 05:32 PM
இறைவி படம் பற்றிப் பரவிய திடீர்வதந்தி - VIKATAN
கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இறைவி. இந்தப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப்படம் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்று செய்திகள் வந்தன. இச்செய்திகள் வரத்தொடங்கியதும் தயாரிப்புநிறுவனம் உடனடியாக அதை மறுத்திருக்கிறது.
http://img.vikatan.com/cinema/2016/02/16/images/IRavi.jpgஇறைவி படத்தைத் தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் நிறுவனம், இறைவி படத்தின் வெளியீடு தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்பாதீர்கள். படவெளியீடு எப்போதென விரைவில் நாங்களே அறிவிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இறைவி தொடர்பான செய்திக்கு இவ்வளவு வேமாக மறுப்புச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? ஏனெனில், விஜய்சேதுபதி நடிப்பில் வருகிற 19 ஆம் தேதி சேதுபதி படம் வெளியாகிறது. இப்படம் வெளியாகி இருபதுநாட்கள் கழித்து மார்ச் 11 ஆம் தேதி அவர் நடித்திருக்கும் காதலும்கடந்துபோகும் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் இறைவி வருகிறது என்று செய்திகள் வந்தால் அந்தப்படத்தின் வசூல் பாதிக்கப்படும். இதனால்தான் வேகமாக இறைவி தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள் என்று வேகமாக மறுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
balaajee
17th February 2016, 05:43 PM
TOLLYWOOD
1000 திரையரங்குகளில் டீஸர்...மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்கும் சரைனோடு படத்தின் முதல் டீஸர், 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்*ஷன் படமாக உருவாகும் இப்படத்தினை போயபட்டி ஸ்ரீனு இயக்க, ரகுல் ப்ரீத் சிங், கேத்ரின் தெரசா, ஸ்ரீகாந்த் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்திற்கு இசை தமன். படத்தின் அதிகாரபூர்வ டீஸர் வரும் வியாழன் அன்று வெளியாகிறது, இருப்பினும் வெள்ளியன்று, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் 1000 திரையரங்குகளில் படத்தின் டீஸரை திரையிட முடிவுசெய்துள்ளனர் படக்குழுவினர்.
http://img.vikatan.com/cinema/2016/02/17/images/allu-arjun_640x480_41428503193.jpgசாதரணமாக ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாக அப்படத்தின் டிரெய்லரே திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும், ஆனால் முதல் முறையாக சரைனோடு படத்தின் டீஸர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏப்ரல் 8ம் தேதி வெளியாக உள்ள இப்படம், அல்லு அர்ஜுனின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
balaajee
23rd February 2016, 11:22 AM
Jayam Ravi, Vijay party together day before 'Mirthun' and 'Sethupathi' release
http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/38690/1455938177_actor-jayam-ravis-miruthan-vijay-sethupathis-sethupathi-movie-released-same-day-both.jpg
Actor Jayam Ravi's 'Miruthan' and Vijay Sethupathi's 'Sethupathi' movie released on the same day. Both the movie has higher expectations from the Kollywood fans. Ravi and Vijay are seen hugging each other at 'Miruthan' special screening. Both actors shared their wishes for the film Success. The photos went viral on the Social media sites
http://data1.ibtimes.co.in/cache-img-600-0-photo/en/full/38691/1455938177_actor-jayam-ravis-miruthan-vijay-sethupathis-sethupathi-movie-released-same-day-both.jpg
Miruthan Is the first Zombie film in Tamil film industry, directed by Shakthi Soundar Rajan. Starring Jayam Ravi and Lakshmi Menon in the lead role. Sethupathi is an action movie, directed by Arun Kumar. Starring Vijay Sethupathi and Remya Nambeesan in the lead role
http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/38692/1455938177_actor-jayam-ravis-miruthan-vijay-sethupathis-sethupathi-movie-released-same-day-both.jpg
Actor Jayam Ravi tweeted: Wishing my bro Vijay Sethupathy super duper success at the BO today! #Sethupathy #fromtoday
balaajee
24th February 2016, 04:34 PM
மிருதன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்*ஷன் எவ்வளவு தெரியுமா? - VIKATAN
தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் மிருதன். ஜெயம்ரவி, லட்சுமிமேனன் நடிப்பில் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியானது.
இப்படத்திற்கான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்*ஷன் என்னவென்பதை ஜெயம்ரவி தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
http://img.vikatan.com/cinema/2016/02/24/images/Miruthan%201.jpgமிருதன் படத்தின் முதல் முன்று நாள் வசூல் 10.66 கோடி மற்றும் உலகளவில் அதாவது இந்தியாவையும் சேர்த்து மொத்தமாக 20.13 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதை, ஐங்கரன் நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
#Miruthan (https://twitter.com/hashtag/Miruthan?src=hash) TN Opening Weekend 3 day Collection: 10.66 Crs. Worldwide Weekend including ROI and TN BO: 20.13 Crs. Official from Ayangaran. — Jayam Ravi (@actor_jayamravi)
balaajee
25th February 2016, 11:56 AM
'சண்டக்கோழி 2' கைவிடப்பட்டது: 'அறிவுரை'யுடன் விஷால் அறிவிப்பு
'சண்டக்கோழி 2' படம் கைவிடப்பட்டதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சண்டக்கோழி'. யுவன் இசையமைத்த இப்படத்தை ஜி.கே நிறுவனம் தயாரித்தது. 2005ம் ஆண்டு இப்படம் வெளியானது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் ஈடுபட்டு வந்தார்கள். முத்தையா இயக்கத்தில் 'மருது' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருந்தார் விஷால். மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் "சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. 'சண்டக்கோழி 2' கைவிடப்படுகிறது" என்று தனத் ட்விட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருக்கிறார்.
'சண்டக்கோழி 2' படத்துக்கான கதை விவாதம் உள்ளிட்டவை மிகவும் தீவிரமாக நடைபெற்ற வந்த சமயத்தில் விஷாலின் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது
balaajee
25th February 2016, 05:21 PM
Lingusamy opts out of 'Sandakozhi 2'; Vishal lodges complaint at producers' guild - http://www.ibtimes.co.in/
http://data1.ibtimes.co.in/cache-img-0-450/en/full/599682/imgvishal-krishna.jpgA picture of Vishal.Vishal Twitter Account
Vishal Krishna and Lingusamy's ambitious "Sandakozhi 2" has been shelved with the director opting out of the project. This has upset the actor, who has now taken the issue to the producers' guild, seeking a solution.
"Sad 2 c certain filmmakers lackin commitmnt twds projects.guess actors shd stick 2 actin n Dir s 2 directing.sandaikozhi 2 cancelled.GB," Vishal shared (https://twitter.com/VishalKOfficial/status/702709286577635330) his anger on Twitter.
Speaking to the DNA (http://www.dnaindia.com/entertainment/report-sandakozhi-2-vishal-says-lingusamy-was-unethical-2182102), Vishal said that he had signed Lingusamy to direct "Sandakozhi 2" in 2014 but the project was delayed as they could not lock in a script. Finally, the duo wanted to start the Tamil film in February 2016. But to the actor's surprise, the filmmaker has decided to walk out of the flick at the last minute after making the actor wait for months.
"I got to know through sources that he had signed on another film. I don't want to get into details, but this is extremely unethical of him to pull out at the last minute. I have filed a complaint with the Producers Council and have asked that my money and expenditure since November 2014 be returned," Vishal told the daily.
The planned project was supposed to be a sequel to their earlier hit film "Sandakozhi," which had Meera Jasmine in the female lead role. The first instalment was a big hit, paving way for its sequel plans.
Meanwhile, Lingusamy is reportedly getting ready to direct a Tamil movie starring Telugu actor Allu Arjun. It will mark the debut of the Tollywood star in Tamil. This film is said to be the reason why the director opted out of "Sandakozhi 2."
On the other hand, Vishal is busy with his next movie "Marudhu." The shooting of the movie is progressing at a rapid pace and it is likely to come to an end soon. The Tamil flick, directed by Arun Kumar, has Sri Divya playing the female lead role.
balaajee
29th February 2016, 01:57 PM
மிஷ்கின் இயக்கத்தில் விஷால்: உருவானது புதிய கூட்டணி
'மருது' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தில் நடித்து, தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால்.
முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மருது'. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விஷால். ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது அப்படம் கைவிடப்பட்டது.
இதனால், விஷால் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், விஷால் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடித்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மிஷ்கின் நடித்து, தயாரித்து வரும் 'சவரக்கத்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. அப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின், விஷால் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது. 'சவரக்கத்தி' படத்தை அவருடைய உதவி இயக்குநர் ஆதித்யா இயக்கி வருகிறார்.
balaajee
29th February 2016, 04:39 PM
சரத்குமாருக்குப் பதிலாக விஷாலா? கிளம்பும் புது சர்ச்சை
மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான படம் பிசாசு. அதற்கடுத்து அவர் தயாரித்து, நடித்துக்கொண்டிருக்கும் படம் 'சவரக்கத்தி'. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறதாம். அப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின், விஷால் படத்தை இயக்குவார் எனச் சொல்லப்படுகிறது.
http://img.vikatan.com/cinema/2016/02/29/images/S%20V%20600.png இதற்கு முன்பாக கடந்த ஆண்டில், மிஷ்கின் இயக்கத்தில்,. சரத்குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார். அவரோடு நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று சொல்லப்பட்டது. ஆனால் அது இப்போது வரை நடக்கவில்லை, நடப்பதற்கான அறிகுறியும் இல்லை.
இந்நிலையில், திடீரென விஷாலை அவர் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விஷால் இப்போது மருது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அது முடிந்ததும் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கும் திட்டத்தில் இருந்தாராம். லிங்குசாமி தெலுங்குப் படத்துக்குப் போவதால் சண்டக்கோழி 2 கைவிடப்பட்டது.
அதனால் அந்தத் தேதிகளில் படப்பிடிப்பு நடத்த மிஷ்கின் தயாராக இருப்பதால் அவர் படத்தில் நடிக்க விஷால் தயாராகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே சரத்குமாருக்கு எழுதிய கதையை அப்படியே விஷாலை வைத்துப் படமாக்கப்போகிறார் என்கிற பேச்சுகள் இப்போது வரத்தொடங்கியிருக்கின்றன. நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு இப்படி நடப்பதால் இது பரபரப்பான பேச்சாகிறதாம்.
balaajee
29th February 2016, 05:24 PM
இளையராஜா 1000, மிக மோசமான நிகழ்ச்சி - விஜய் டிவியைக் கடுமையாகச் சாடும் பிரதாப் போத்தன்! - Vikatan
பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் தனது முகநூல் பக்கத்தில் விஜய் டிவியின் ‘இளையராஜா1000’ நிகழ்ச்சி குறித்து மிகவும் வருத்தத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞரின் மரியாதைக்குரிய நிகழ்ச்சி பலரின் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. முக்கியமாக நட்சத்திரங்கள், ரசிகர்களின் நன்மதிப்பைப் பெறத் தவறியுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் விருந்தினர்களில் ஒருவரான பிரதாப் போத்தன் தனக்கு நேர்ந்த சங்கடத்தைப் பதிவிட்டுள்ளார்.
http://img.vikatan.com/cinema/2016/02/29/images/420pratab.jpgஅவர் முகநூலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
ஏகப்பட்ட அழைப்புகள், நான் இயக்குநர்கள் குழுவிலும் , நடிகர்கள் குழுவிலும் இருப்பதாகத் தெரிவித்தார்கள். நானும் அதை நம்பினேன். ஏனெனில் இளையராஜாவின் சிறந்த சில பாடல்கள் என்னை வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு இயக்குநராக இதுவரை சரியில்லாத பாடல்களை அவர் என் படங்களுக்குக் கொடுத்ததே இல்லை. கடைசியாக நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த யாத்ரா மொழி, மற்றும் வரவிருக்கும் ஒரு மலையாளம் படம் என அனைத்தும் நல்ல பாடல்கள்.
சரி நான் சீக்கிரம் சென்றைடைய வேண்டியிருந்த இந்த விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வருவோம். அப்போது தான் நான் இளையராஜாவின் ஆசியைப் பெற முடியும் என நினைத்து வந்து சேர்ந்தேன். ஒரு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி அளவிற்கே ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருந்தது விஜய் டிவி. என்னுடைய பாடல்கள் எதுவும் அங்கே அரங்கேற்றப்படவில்லை. கௌதம் மேனனின் பாடல்கள் வரிசையில் மட்டும் என் இனிய பொன் நிலாவே, மற்றும் கோடைகாலக் காற்றே பாடல்கள் பாடப்பட்டன.
பிறகு இயக்குநர்கள் வரிசையிலும் நான் அழைக்கப்படவில்லை. எனக்கு அது பெரிதாக பாதிக்கவில்லை. காரணம் எனது சர்க்கரை அளவு அதிகமானதால் இயற்கை அழைப்பு. அதனால் எழுந்து சென்றுவிட்டு வந்தால் அப்போதும் இயக்குநர்கள் விடாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு நடிகைகள் பேச்சு இப்படி எல்லாம் கமலின் வருகையை பிரகடனப்படுத்தவே நடந்தன. எல்லாம் முடிந்து ’லார்ட் ஆஃப் தி ரிங்’ பாணியில் காத்திருந்தமைக்கு விருந்தாக சுமார் 11 மணியளவில் மணிரத்னத்தின் ’கீதாஞ்சலி’ பட ஓ பிரியா, பிரியா பாடல் பாடப்பட்டது. அப்போது நான் கிளம்ப ஆயத்தமானேன்.
http://img.vikatan.com/cinema/2016/02/29/images/CcPHeg2WAAA0tda%20(1).jpgஅந்நேரம் நிகழ்ச்சியின் பொறுப்பாளரான பெண் ஒருவர் வந்து அடுத்து நீங்கள் தான். மலையாள நடிகர்கள் சார்பாக நீங்களும், ஜெயராமும் மேடையேறவேண்டும் எனக் கூறினார். ஒரு இயக்குநராக நான் அவருடன் ஒரு படம் இயக்கியிருக்கிறேன் என்றால் அந்தப் பெண் கறாராக நீங்கள் இருந்தே ஆக வேண்டும் நடிகர்கள் வரிசையில் கண்டிப்பாகப் பேச வெண்டும் என அடம்பிடித்தார். ஆனால் நான் கிளம்பிவிட்டேன்.
இந்த விஜய் டிவியின் எப்போதுமான சம்பவாமி யுகே யுகே அட்டூழியங்களால் ருபெர்ட் முர்டொக்கின் (ஸ்டார் டிவியின் நிறுவனர்) பெயரைக் கெடுக்கிறார்கள். ஒரு மேஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் பாணி இதுவல்ல. நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான நிகழ்ச்சி இது தான் என கோபமாகப் பதிவிட்டுள்ளார் பிரதாப் போத்தன்.
இளையராஜா இசை நிகழ்ச்சியில் ராஜா இசை மழையில் நனைய வைப்பார் என சென்றிருந்த பலருக்கும் ஏமாற்றமான நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது விஜய் டிவியின் ‘இளையராஜா1000” நிகழ்ச்சி.
balaajee
29th February 2016, 05:33 PM
சமூக வலைதளத்தில் இணைந்த இயக்குநர் சசிகுமார் - Tamil HINDU
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னை இணைத்துக் கொண்டார் இயக்குநர் சசிகுமார்.
'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்திருக்கும் 'வெற்றிவேல்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. TRIDENT மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, சசிகுமார் பெயரில் ஒரு ட்விட்டர் தளம் இயங்கி வந்தது. இது குறித்து இயக்குநர் சசிகுமார், " முதலில் அது நான் கிடையாது. நான் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கிடையாது. போலியாக என் பெயரில் யாரோ நடத்தி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக தன்னை ட்விட்டர் மற்றும் ஃ
பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் தன்னை இணைத்துகொண்டார் சசிகுமார். @SasikumarDir என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்திலும், sasikumardir (https://www.facebook.com/sasikumardir/) என்ற பெயரில் ஃபேஸ்புக்கிலும் இணைந்து இருக்கிறார்.
சமூக வலைதளத்தில் இணைந்திருப்பது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் சசிகுமார் கூறியிருப்பது, "ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் இப்போதான் முதன் முறையாக அடியெடுத்து வைக்கிறேன். என்னைப் பற்றிப் பெருமிதம் பேசவோ, பாராட்டு தேடிக்கொள்ளவோ நிச்சயமாக நான் வரவில்லை. அப்படி நினைத்திருந்தால் முன்னாடியே வந்திருப்பேன். இத்தனை நாள் நான்தான் வரவில்லையே தவிர, என்னுடைய பெயரில் நிறைய பேர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி இஷ்டத்துக்கு ஏதேதோ எழுதியபடி இருந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நானே களத்துக்கு வரவேண்டியதா ஆகிடிச்சு.
இது மட்டுமில்லாமல், சக மனிதர்களில் ஒருவனாக என் பார்வையைப் பதிவு செய்யலாமேங்கிற ஆர்வமும், சமீபகால நிகழ்வுகள் மீதான அக்கறையும்தான் என்னையும் எழுதத் தூண்டியது. அதுக்காக 'சாப்பிட்டேன்', 'தூங்கினேன்'னு வெறுமனே சுயபுராணம் பாடப் போறது கிடையாது; ஒருத்தரோட இறப்புக்குகூட வருத்தமா ரெண்டு வார்த்தைகளையும் கண்ணீரோடு ரெண்டு பொம்மைங்களையும் பதிவா போட்டு, 'நானும் வருத்தப்பட்டேன்'னு சொல்லப்போறதும் கிடையாது. நல்லதுக்குப் போக முடியலைன்னாகூட இறப்புக்கு ஓடோடிப்போய் நிற்கிறதுதுதானே நம்ம வழக்கம். முடிஞ்சா நேர்லபோய் அனுதாபமா நிற்கணும்; இல்லைன்னா சும்மா இருந்திடனும்.
என்னோட பார்வை, என் படம், சந்தோசம், சங்கடம்... இப்படி மனசுல பட்டதை அப்படியே இறக்கி வைக்கிற எண்ணம் தாண்டி வேறெந்த நோக்கமும் இந்த வருகைக்குப் பின்னால இல்லை. கடைசியில என்னையும் ட்விட்டர் பக்கம் வர வைச்சிட்டீங்களே" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சசிகுமார்.
balaajee
29th February 2016, 05:33 PM
லட்சுமண் - ஜெயம் ரவி இணையும் 'போகன்'
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு 'போகன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'மிருதன்' படத்தைத் தொடர்ந்து 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜெயம் ரவி.இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு
தொடங்க இருக்கிறது. இப்படத்தை பிரபுதேவா தயாரிக்க இருக்கிறார். இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இரண்டு நாயகர்களைக் கொண்ட கதைக்களம் என்பதால் ஜெயம் ரவியுடன் நடிக்கவிருப்பது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. தற்போது 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த அரவிந்த்சாமியை இப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
மேலும், படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்துக்கு 'போகன்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
balaajee
1st March 2016, 06:18 PM
பிரேமம் படத்துக்கு கேரள அரசு விருது இல்லை- அரசியல் சூழ்ச்சி காரணமா? - VIKATAகேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான “மாநில திரைப்பட விருதுகள்” இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை திரைப்படத்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் வெளியிட்டார்.
சிறந்த நடிகராக துல்கர் சல்மான் மற்றும் சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
http://img.vikatan.com/cinema/2016/03/01/images/charl.jpgசார்லி படம் எட்டு விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது. சிறந்த நடிகர்(துல்கர்), சிறந்த நடிகை(பார்வதி), சிறந்த இயக்குநர் (மார்டின்), சிறந்த வசனகர்த்தா (உன்னி, மார்டின்), சிறந்த ஒளிப்பதிவு (ஜோமோன் டி ஜான்ச்), சிறந்த கலை இயக்கம்(ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன்), சிறந்த ஒலிப்பதிவு (ராஜகிருஷ்ணன்), சிறந்த டிஜிட்டல் லேப் (பிரசாத் லேப், மும்பை) உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
http://img.vikatan.com/cinema/2016/03/01/images/ennu.jpgதவிர, சிறந்த நடிகையாக பார்வதியும், சிறந்த ஒளிப்பதிவிற்காக ஜோமோன் டி ஜான்ச் இருவரும் என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காக
* சிறந்த பாடல் - ரபீக் அகமது - Kaathirunnu Kaathirunnu Song
* சிறந்த இசையமைப்பாளர் - ரமேஷ் நாராயணன் - Edavapathy Song
* சிறந்த பாடகர் - ஜெயச்சந்திரன் - Njnanoru Malayali Song
* சிறந்த ஒலி வடிவமைப்பு - ரங்கநாத் ரவி
* பாப்புலர் படம் - ஆர்.எஸ்.விமல் - என்னுநின்டே மொய்தீன்
இவ்விரு படங்களே அதிகப்படியான விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://img.vikatan.com/cinema/2016/03/01/images/collage-1.jpgஆனால் கேரளத் திரையுலகின் பல்வேறு சாதனைகளை முறியடித்த, 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமான பிரேமம் படத்துக்கு ஒரு விருது கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் மற்ற பல்வேறு விருதுகளில் கூட சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற பிரேமம், கேரள அரசு விருதில் ஒரு விருதைக் கூட பெறாதது, அங்குள்ள ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதும் அரசியல் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பொங்கிவருகின்றனர்.
balaajee
2nd March 2016, 11:49 AM
கார்த்தியை 'சதுரங்க வேட்டை' வினோத் இயக்க வாய்ப்பு
'சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்கத்தில் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வினோத் இயக்கத்தில் நட்ராஜ், இஷாரா நாயர், பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சதுரங்க வேட்டை'. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 2014ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை வினோத் இயக்கவிருப்பதாக இயக்குநர் லிங்குசாமி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது நிதிநெருக்கடியில் சிக்கி இருப்பதால், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் வினோத்.
இப்படத்தில் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கும் கார்த்தி, அப்படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
balaajee
2nd March 2016, 11:50 AM
பிரேமம் படத்துக்கு விருது இல்லையா? முருகதாஸ் விமர்சனம் விருதுகள் என்றாலே சர்ச்சைகளும் வருவது இயல்புதானே. 2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. அதுவும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது.
http://img.vikatan.com/cinema/2016/03/02/images/muruga%20600.png சார்லி படத்தில் நடித்தற்காக துல்கர் சல்மான் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். என்னு நிண்டே மொய்தீன் படத்தின் நாயகி பார்வதி சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்ற வருடம் கேரள திரை உலகில் பல சாதனைகளை முறியடித்த பிரேமம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேரள அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ரசிகர்கள் மட்டுமின்றி இப்போது இயக்குநர் முருகதாஸும் அதை விமர்சித்துள்ளார். பிரேமம் படத்துக்கு விருது கொடுக்கவில்லை. இது அழகல்ல என்று டிவிட்டரில் சொல்லியிருக்கிறார்.அவருடைய கருத்துக்குப் பலர் வரவேற்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
balaajee
2nd March 2016, 01:52 PM
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் போக்கிரிராஜா படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகிறது. ஆனால் சொன்ன தேதியில் படம் வெளியாகுமா? என்கிற கேள்வி இருந்தது.
ஏனெனில் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமாரின் தயாரிப்பில் வெளியான விஜய்யின் புலி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நிறைய நட்டம் ஏற்பட்டுவிட்டதாம்.அதனால் அவர்களெல்லாம் ஒன்றுகூடி, எங்கள் நட்டத்துக்குப் பொறுப்பெடுத்துக்கொண்டால் மட்டுமே போக்கிரராஜாவை திரையிட அனுமதிப்போம் என்று சொல்லிவிட்டார்களாம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
http://img.vikatan.com/cinema/2016/03/02/images/t_r%20600.png அந்தப்பேச்சுவார்த்தையின் போது, புலி படத்தால் சுமார் ஆறுகோடிவரை நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தொகைக்கான பொறுப்பை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டால்தான் போக்கிரிராஜாவை வெளியிடுவோம் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாகக் கடந்த சில நாட்களாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக டி.ராஜேந்தர் கூறியதாவது....
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள போக்கிரி ராஜா படம் மார்ச் 4ம் தேதி ரிலீசாவதில் பிரச்சனை இருந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது சினிமா இருக்கும் நிலையில் ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது. கலையாக இருந்த சினிமாவை வியாபாரமாக்கி எதை தொட்டாலும் பிரச்சனையாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். பி.டி.செல்வகுமார் எனக்கு நல்ல நண்பர் எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது எனக்கு உறுதுணையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்.
புலி என்று தலைப்பை வைத்து தமிழ் மீது அவருக்குள்ள பற்றை நான் மிகவும் ரசித்தேன். தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று முழுவதும் இருந்து போக்கிரி ராஜா பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம். தயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் ரிலீசுக்காக தலைவர் தாணு, சிவசக்தி பாண்டியன், திருப்பூர் சுப்ரமணியன், டி.சிவா, அருள்பதி மற்றும் பலர் இணைந்து பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைத்துள்ளார்கள். போக்கிரி ராஜா திட்டமிட்டப்படி வருகிற மார்ச் 4ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
balaajee
2nd March 2016, 02:46 PM
http://data1.ibtimes.co.in/cache-img-849-0-photo/en/full/39212/-62170005200_megastar-mammootty-who-known-his-love-towards-costly-exotic-cars-has-become-proud-owner-brand.jpg
Megastar Mammootty , who is known for his love towards costly exotic cars, has become the proud owner of brand new Porsche Cayenne S Diesel. It is a mid-size luxury crossover sport utility vehicle
http://data1.ibtimes.co.in/cache-img-960-0-photo/en/full/39213/-62170005200_pathemari-actor-considers-369-his-lucky-number-most-his-vehicles-have-369-number-plate.jpg
The 'Pathemari' actor considers "369" as his lucky number and most of his vehicles have "369" in the number plate. Even Mammootty's son Dulquer is a car lover and is also crazy about two-wheelers. He also owns many costly cars and bikes.
http://data1.ibtimes.co.in/cache-img-540-0-photo/en/full/36447/1456209428_malayalam-tamil-actor-dulquer-salmaan-now-owner-bmw-r1200gs-adventure.jpg
Malayalam-Tamil actor Dulquer Salmaan is now the owner of BMW R1200GS Adventure.
http://data1.ibtimes.co.in/cache-img-720-0-photo/en/full/36448/1456209428_actor-bought-motorcycle-november-like-his-father-mammootty-who-very-fond-luxurious-cars.jpg
The actor bought the motorcycle in November. Like his father Mammootty, who is very fond of luxurious cars, Dulquer is also known for his love towards riding bicycles.
balaajee
4th March 2016, 05:37 PM
ஜி.வி.பிரகாஷ் - ஆதிக் இணையும் 'விர்ஜின் மாப்ள'
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு 'விர்ஜின் மாப்ள' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை சி.ஜே.ஜெயகுமார் தயாரித்தார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. செப்டம்பர் 17, 2015ல் வெளியான இப்படத்தை பெரும் சர்ச்சையானலும், வசூலை பெருமளவில் குவித்தது.
இப்படத்தின் பாடல்கள் 2015ல் அதிக முறை எஃப்.எம்களில் ஒளிபரப்பட்ட பாடல் என்றும் தகவல்கள் வெளியானது.
தற்போது ஜி.வி.பிரகாஷ் - ஆதிக் ரவிசந்திரன் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை சீஸ் கார்னர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்துக்கு 'விர்ஜின் மாப்ள' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
balaajee
10th March 2016, 12:52 PM
மிஷ்கின் - விஷால் இணையும் 'துப்பறிவாளன்'
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்துக்கு 'துப்பறிவாளன்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மருது'. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.
'மருது' படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' நடிக்க திட்டமிட்டார். அப்படம் கைவிடப்பட்டதால் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விஷால். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
இப்படத்தின் பூஜை இன்று (மார்ச் 10) விஷால் அலுவலகத்தில் நடைபெற்றது. இப்படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்க இருக்கிறார் விஷால். இப்படத்துக்கு 'துப்பறிவாளன்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
விஷாலுடன் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு.
balaajee
10th March 2016, 08:12 PM
தெறி அட்லீயின் அடுத்த அவதாரம், ஆச்சரியத்தில் திரையுலகம் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் தெறி. ராஜாராணி படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கிவிட்டார் அட்லி.
தொடர்ந்து அட்லி ஒரு படம் ஒன்றையும் தயாரிக்கவுள்ளார். புதுமுக இயக்குநர் பழநி இயக்கவிருக்கும் படத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி, இளவரசு ஆகியோர் நடிக்கவிருக்கும் படம் “ சங்கிலி புங்கிலி கதவ தொற”. பிரபலமான பாடல் வரிகளே ஜீவா, அட்லி படத்தின் டைட்டில்.
http://img.vikatan.com/cinema/2016/03/10/images/CdHR2LQUsAA1faE.jpgஅட்லியின் தயாரிப்பு நிறுவனமான A For apple தான் இப்படத்தைத் தயாரிக்கிறது. மேலும் அட்லி சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரண்டாவது படமே விஜய் படமாக அமைந்ததால் அட்லீயைப் பார்த்து ஆச்சரியப்பட்ட திரையுலகம், இரண்டாவது படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அவதாரம் எடுக்கவிருப்பதை எண்ணி மேலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறது.
balaajee
10th March 2016, 08:13 PM
ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிக்கும் '99 சாங்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02769/99songs_2769030f.jpg
முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது படத்துக்கு '99 சாங்ஸ்' என்று பெயரிட்டுள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். அப்படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கவிருப்பதாகவும், ஹாய்மேன் பட் மற்றும் டென்சிங் டாலா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இப்படத்தை தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் தயாரிப்பது மட்டுமன்றி, இசையமைக்கவும் இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். '99 சாங்ஸ்' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 2017ம் ஆண்டில் தான் இப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
'99 சாங்ஸ்' படத்தின் போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், பல திரையுலக பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
balaajee
16th March 2016, 12:06 PM
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2'
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02775/imsai_2775549f.jpg
'இம்சை அரசன் 23ம் புலிகேசி' இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, மோனிகா, தேஜஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. சபேஷ் - முரளி இசையமைத்த இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 2006ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் '2.0' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அந்நிறுவனத்துடன் இணைந்து இரண்டாம் பாகத்தை தயாரிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வடிவேலு நடிக்க சிம்புதேவனே இயக்க இருக்கிறார்.
இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
balaajee
16th March 2016, 12:11 PM
'குஷி 2' பணிகளைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02775/kushi2_2775394f.jpg
தெலுங்கில் 'குஷி 2' படத்திற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. பாடல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை எஸ்.கே.சூர்யா இயக்கவிருக்கிறார் என்றும், அது 'குஷி 2' என்றும் செய்திகள் வெளியாயின.
பல்வேறு இயக்குநர்கள் விஜய்யை சந்தித்து கதைகள் கூறினர். அக்கதைகளில் இயக்குநர் பரதன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கினார் விஜய்.
இந்நிலையில், தெலுங்கில் 'குஷி' படத்தின் ரீமேக்கில் நடித்த பவன் கல்யாணை நாயகனாக வைத்து 'குஷி 2' படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதற்கான முதற்கட்ட பணிகளான பாடல்கள் உருவாக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பாடலாசிரியர் ராமஜோகியா சாஸ்திரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "எஸ்.ஜே.சூர்யாவுடனும் அனுப் உடனும் பணியாற்றுவதில் ரொம்ப ’குஷி’" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது 'சர்தார் கப்பர் சிங்' படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண், அதனைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
balaajee
28th March 2016, 01:51 PM
63-வது தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் 'விசாரணை', இளையராஜா, சமுத்திரக் கனிக்கு விருதுகள்
இயக்குநர் வெற்றிமாறனின் 'விசாரணை' படத்துக்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக 'தாரை தப்பட்டை' படத்துக்கு இளையராஜாவுக்கு விருது அளித்திருக்கிறார்கள். 63-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.
'விசாரணை' படத்துக்கு 3 விருதுகள்
இதில், 'லாக்கப்' என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' படத்துக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் எடிட்டர் கிஷோருக்கு சிறந்த எடிட்டிங்கிற்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை சமுத்திரக்கனிக்கு கிடைத்திருக்கிறது.
சிறந்த பின்னணி இசைக்கான விருதை 'தாரை தப்பட்டை' படத்துக்கு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இளையராஜா இசையில் உருவான 1000வது படம் 'தாரை தப்பட்டை' என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்.. சிறந்த நடிகை கங்கனா ரணவத்
இந்திப் படமான 'பிக்கு' படத்தில் நடித்ததிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அமிதாப் பச்சன் பெறுகிறார். 'தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. கடந்தாண்டும் சிறந்த நடிகைக்கான விருதை 'குயின்' படத்திற்காக வென்றார் கங்கனா என்பது நினைவுக் கூறத்தக்கது.
தேசிய விருதுகள் பட்டியல்
சிறந்த படம்: பாகுபலி
சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த தமிழ்ப் படம்: விசாரணை
சிறந்த நடிகை: கங்கனா ராவத் (தானு வெட்ஸ் மானு, இந்தி)
சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பிக்கு, இந்தி)
சிறந்த உறுதுணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த உறுதுணை நடிகை: தான்வி ஆஷ்மி (பாஜிராவ் மஸ்தானி, இந்தி)
சிறந்த பாப்புலர் திரைப்படம் - பஜ்ரங்கி பாஜ்யான்
சிறந்த நடன வடிவமைப்பு: ரெமோ டிசோஸா - தீவானி மஸ்தானி என்ற பாடலுக்காக படம் பாஜிரோ மஸ்தானி
சிறந்த இசையமைப்பு: என்னு நிண்டே மொய்தீன் படத்தில் இடம்பெற்ற காத்திருன்னு காத்திருன்னு பாடலுக்காக எம்.ஜெயச்சந்திரன்
சிறந்த ஆடை வடிவமைப்பு: நானக் ஷா ஃபகிர் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒப்பனை: நானக் ஷா ஃபகிர் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த எடிட்டிங்: விசாரணை படத்துக்காக கிஷோர் (மறைவுக்குப் பின்)
சிறந்த திரைக்கதை: பிக்கூ படத்துக்காக ஜூஹி சதுர்வேதி மற்றும் ஹிமான்சு சர்மா
சிறந்த ஒளிப்பதிவு: சுதீப் சாட்டர்ஜி - படம்: பாஜிரா மஸ்தானி
சிறந்த பின்னணி இசை: இளையராஜா (தாரை தப்பட்டை)
சிறந்த பின்னணி பாடகி: மொனாலி தாகூர் - பாடல்: மோ மோ கே தாகே
சிறந்த துணை நடிகை - தன்வி ஆஸ்மி - படம்: பாஜிரா மஸ்தானி
சிறந்த குழந்தைகள் திரைப்படம் - துரந்தோ
சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - வல்லிய சிறகுள்ள பக்*ஷிகள்
சமூக பிரச்சினைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - நிர்ணயகம் nirnayakam
தேசிய ஒறுமைப்பாட்டை பறைச்சாறியதற்காக நர்கீஸ் தட் விருது பெறும் திரைப்படம்: நாநக் ஷா ஃபகிர்
அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: நீரஜ் கியாவன் - படம்: மஸான்
சிறப்பு பரிந்துரை:
ரிங்கு ராஜகுரு - படம்: சாய்ராட்
ஜெயசூர்யா - su su sudhi vathmeekam & lukka chuppi
ரித்திகா சிங் - படம்: இறுதிச் சுற்று
சிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு - மொழி வாரியாக:
சிறந்த போடோ மொழிப்படம்: தவ் ஹூதுனி மெத்தாய்
சிறந்த காஷி மொழிப்படம்: ஒனாத்தா
சிறந்த ஹர்யான்வி மொழிப்படம்: சத்ராங்கி
சிறந்த வாஞ்சோ மொழிப்படம்: தி ஹெட் ஹன்டர்
சிறந்த மிசோ மொழிப்படம்: கிமாஸ் லோட் பியாண்ட் தி கிளாஸ்
சிறந்த மணிப்புரி மொழிப்படம்: எய்புசு யோஹன்பியு
சிறந்த மாய்திலி மொழிப்படம்: மிதிலா மக்கான்
சிறந்த சம்ஸ்கிருத மொழிப்படம்: பிரியமானஸம்
சிறந்த தெலுங்கு மொழிப்படம்: காஞ்சி
சிறந்த பஞ்சாபி மொழிப்படம்: சவுதிகூட்
சிறந்த ஒடியா மொழிப்படம்: பஹதா ரா லூஹா
சிறந்த மராட்டிய மொழிப்படம்: ரிங்கன்
சிறந்த மலையாள மொழிப்படம்: பதேமரி
சிறந்த கொங்கனி மொழிப்படம்: எனிமி
சிறந்த கன்னட மொழிப்படம்: தித்தி
சிறந்த இந்தி மொழிப்படம்: தம் லகா கே ஹைசா
சிறந்த வங்காள மொழிப்படம்: சங்காசில்
சிறந்த அசாமி மொழிப்படம்: கோத்தனோடி
balaajee
28th March 2016, 06:30 PM
தேசிய விருது கிடைத்திருப்பதை ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்வதாக ரித்திகா சிங் குறிப்பிட்டு இருக்கிறார்.
63வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. 'இறுதிச்சுற்று' படத்தில் நடித்ததிற்காக சிறப்பு தேசிய விருது ரித்திகா சிங்கிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து ரித்திகா சிங் கூறும்போது, "வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். ஆஸ்கர் விருது வென்றிருப்பது போன்று உணர்கிறேன். 'இறுதிச்சுற்று' மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படத்திலேயே இப்படி ஒரு விருது கிடைக்கப் பெறுவது ரொம்ப பெரிய விஷயம். இன்னும் நன்றாக செயல்படுவதற்கான ஒரு ஊக்கமாக கருதுகிறேன்.
இயக்குநர் சுதா மற்றும் மாதவன் குறிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான ஆதரவும், என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையும் இல்லையென்றால் நான் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன் " என்று தெரிவித்திருக்கிறார்
interz
28th March 2016, 07:48 PM
One question always pop in my head after prestigious awards are given. How many of the awarded movie reached out well and made people speak about the movies? Even movie like Kutram Kadithal flopped after receiving several awards. So are the the awards just a console trophy, a symbolic gesture?
This is not personally against any of the award winners, this is just in generel. I want clarity on how much impact this award has.
uruzalari
28th March 2016, 09:37 PM
One question always pop in my head after prestigious awards are given. How many of the awarded movie reached out well and made people speak about the movies? Even movie like Kutram Kadithal flopped after receiving several awards. So are the the awards just a console trophy, a symbolic gesture?
This is not personally against any of the award winners, this is just in generel. I want clarity on how much impact this award has.
This is how I see it. Awards and commercial success are two different things. Not necessarily mutually exclusive. It is not a consolation trophy. It is not a catalyst to commercial success either. Kakka Muttai and Visaranai did do well to market the critical recognition to garner interest among the general public.
A pure classical 'Dravid' innings in a Test match might be played before a 30% filled stadium and a baseball type slogfest by a T20 player amidst thunderous applause in the same stadium which is jam packed now. Both are different. Purists will understand the worth of Dravid's innings. Again I am not undermining the T20 player's talent. That is a different ball game and is a fact that Dravid might not be able to pull off such an innings either. Problem is comparing the two. The purpose is different and so should be the way we see and enjoy each.
balaajee
6th April 2016, 09:07 PM
Manithan Official Track List ::.
http://extraimago.com/images/2016/04/05/12957534_1039186972810497_1275361414223044654_o.jp g (http://extraimago.com/image/aSaT)
raagadevan
11th April 2016, 02:13 AM
Tamil Cinema: Entertainment... and some art, please
-By Baradwaj Rangan; The Hindu, April 9, 2016
"A film need not be 'cerebral' in order to be good cinema. It just needs a good director with a sensibility. So the next question: Why don’t we have enough of those in Tamil cinema? Mainly because most of our 'directors' are essentially screenwriters who also end up directing a movie. There’s nothing to say that the same person cannot do both, but these are different things, and someone who can do the first need not be able to do the second."
http://www.thehindu.com/opinion/columns/tamil-cinema-entertainment-and-some-art-please/article8452248.ece?homepage=true&w=ma446
balaajee
11th April 2016, 03:21 PM
பிறந்தநாள்னா இப்படிதான்பா கொண்டாடணும்...ராம் கோபால் வர்மா கலர்ஃபுல் பிறந்தநாள் கொண்டாட்டம்..
http://img.vikatan.com/album/2016/04/zwmzwi/large/145957.jpg (javascript:;)
Prev
balaajee
19th April 2016, 01:23 PM
வெளியானது மணிரத்னத்தின் அடுத்தபட தலைப்பு -Tamil vikatan
http://img.vikatan.com/cinema/2016/04/19/images/Karthi-Sai-Pallavi-Maniratnam-film-from-June-696x4651.jpg
மணிரத்னம் ஓ காதல் கண்மணி படத்தையடுத்து தனது அடுத்தப் படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். கார்த்தி, சாய் பல்லவி நடிக்கும் இப்படத்தின் கதை தீவிரவாதிகளை மையமாகக் கொண்டு ரோஜா பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் முன்பு கசிந்தன.
தற்போது இப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. மேலும் போஸ்டரில் ஒற்றை ரோஜாவும், துப்பாக்கியும் ரத்தம் சிந்திய நிலையில் காட்சியளிக்க, குருதிப் பூக்கள் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
http://img.vikatan.com/cinema/2016/04/19/images/130455431285595068136253242712833n1.jpg எனவே போஸ்டரும் ரோஜாவை மறக்காமல், அதே சமயம் அப்படத்தின் தீவிரவாதத்தைக் காட்டும் படியும் துப்பாக்கி சகிதம் இருப்பதிலேயே காதலும், வன்முறையும் கலந்த படம் என்பதைக் காட்டுகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்கும் மேலும் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது
Russellmvr
20th April 2016, 05:02 PM
Poster looks so plain.. :-x:-x
balaajee
25th April 2016, 04:26 PM
பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார் பவர் ஸ்டார் சீனிவாசன்
சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசன் பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்போது களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதனையொட்டிபிரபலமான நடிக, நடிகையர் பலரும் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை நமீதா முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் தற்போது பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசனின் அரசியல் நிகழ்வு அரங்கேறியது.இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ''உடன்பிறப்புகளே! உங்களுக்காக நான்.உங்களுக்காகவே நான்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான சீனிவாசன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர்.மேலும் பல்வேறு மோசடி வழக்குகளுக்காக சீனிவாசன் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இமான் அண்ணாச்சி, விந்தியா, செந்தில், நமீதா வரிசையில் பவர்ஸ்டாரும் பட்டையைக் கிளப்புவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
balaajee
25th April 2016, 04:32 PM
'நெஞ்சம் மறப்பதில்லை'யில் சந்தோஷ் விலகல்; யுவன் ஒப்பந்தம்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. கெளதம் மேனன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு முதலில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்துக்காக 2 பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் யுவன். இன்னும் 7 நாட்கள் மட்டுமே இப்படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது.
'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், யுவன் தான் இசையமைப்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
balaajee
25th April 2016, 05:50 PM
உடலமைப்பு மாற்றம்: பின்னணி பகிர்கிறார் ஆர்யா
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02828/arya_2828202f.jpg
88 கிலோ அளவுக்கு உடலமைப்பை தான் மாற்றியதன் காரணம் குறித்து நடிகர் ஆர்யா தெரிவித்தார்.
'பெங்களூர் நாட்கள்' படத்துக்குப் பிறகு, ராகவ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்திற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனது உடலமைப்பை மாற்றியிருக்கிறார் ஆர்யா. சமீபத்தில் மேலும் தனது உடலமைப்பை மாற்றி புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிந்தார். அவருடைய உடலமைப்பு மாற்றத்தால் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
இது எப்படி சாத்தியமானது? ஏன் இந்த மாற்றம்? என்று ஆர்யாவிடம் கேட்டபோது, "ராகவ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் பழங்குடியினர் வேடத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் பழங்குடியினர் வேடத்திற்காக 88 கிலோ அளவிற்கு உடலமைப்பை மாற்றினேன். சுமார் 6 மாதங்கள் நாள் முழுக்க உடற்பயிற்சி கூடத்திலேயே இருந்து இந்த அமைப்பை கொண்டு வந்திருக்கிறேன். வேடத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பை மாற்றுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும்" என்று கூறினார்.
மீண்டும் காதல் நாயகன் வேடம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடலாம். சைக்கிளிங் மற்றும் சில உடற்பயிற்சிகள் மூலம் பழைய நிலைமைக்கு திரும்பிவிடலாம். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை" என்றார் ஆர்யா.
balaajee
26th April 2016, 12:10 PM
ரசிகர்கள் மனம்கவர்ந்த ஹீரோ இவர்தான்..! - சினிமா விகடன் சர்வே - VIKATAN
http://img.vikatan.com/cinema/2016/04/25/images/1301073610879481479308654326426573722332776n1.jpgம க்களுக்கு விருப்பமான நடிகர் யார்னு ஒரு பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தி இவர்தான்’ன்னு அறிவிக்க அவர் தான் ஃபர்ஸ்ட் வந்தார் இவர்தான்னு எப்டி சொல்லலாம்?ன்னு ஒருத்தர் கேட்க பரபரப்பா இருக்கு இணையம்.
http://img.vikatan.com/cinema/2016/04/25/images/dhanush.pngஉண்மையில் யார் தான் வெற்றியாளர் என விஜய், அஜித், சூர்யா, தனுஷ் நால்வருக்குமிடையே கடந்த சனிக்கிழமை மாலை முதல் சினிமா விகடனில் சர்வே நடத்தினோம்.. அதன் படி வெற்றியாளராக 51 சதவீத வாக்குகளுடன் விஜய் முதலிடமும், 35 சதவீதத்துடன் அஜித் இரண்டாம் இடமும், சூர்யா , தனுஷ் முறையே 10 மற்றும் 4 சதவீதத்துடன் மூன்றாம், நான்காம் இடம் பிடித்துள்ளனர். அதன் விபரங்கள் பின்வருமாறு. மேலும் உடனுக்குடன் வாக்களித்து ரிசல்ட்டும் அங்கேயே தெரியும்படி செய்திருந்தோம்.
http://img.vikatan.com/cinema/2016/04/25/images/vijay1.pngஇந்நிலையில் ஆரம்பித்த சில மணிநேரங்கள் அஜித்தும், பின்னர் விஜய்யும் என மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஒரு நாள் இடைவேளையில் தற்போது விஜய் வெற்றி பெற்றுள்ளார். நமக்குத் தெரிந்து இப்போதைக்கு இப்படி போட்டி நடத்தினால் ஒன்று விஜய் அல்லது அஜித் இருவர் மட்டுமே முதலிடம் வகிப்பார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையே. அதன்படி இப்போது விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.
வாக்குகளின் நிலவரங்கள்
மொத்தம் 15, 836 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. விஜய் 8080அஜித் 5492 சூர்யா 1582தனுஷ் 681
balaajee
28th April 2016, 10:36 AM
மூணு கோடி ரூவா படம் உப்புமாவா? #வாட்ஸ்அப்பில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ
டெல்லி கணேஷ் தயாரிப்பில் என்னுள் ஆயிரம் படம் கடந்த வெள்ளி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் அவர், ஒரு ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் பேசியிருப்பது..
நான் நடிகர் டெல்லி கணேஷ் பேசுகிறேன். என்னுள் ஆயிரம் என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் செய்துவிட்ட, ஒரு தயாரிப்பாளர். ரொம்ப சிரமம். யாருமே மதிக்க மாட்டீங்கறாங்க. ஒரு இந்திப் படம், ஒரு தெலுங்குப் படம், ஒரு இங்க்லீஷ் கார்ட்டூன் படம் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கறாங்க. தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா.. புண்ணாக்கு புடலங்கான்னு சொல்றாங்க. ஆனா தமிழ்நாட்டுல தமிழ்ப்படங்களுக்கு ஒரு ஷோ குடுக்க மாட்டீங்கறாங்க. அந்த இந்திப் படத்தையும், இங்க்லீஷ் படத்தையும் மத்தியானம் ஒரு மணிக்குப் போட்டா ஒண்ணும் குடிமுழுகிப் போறதில்ல. பார்ப்பாங்க. ஆனா நம்ம படத்த ஒரு மணிக்குப் போட்டா ஒரு பய வரமாட்டீங்கறான். சார்.. மூணு மணி ஷோ இல்லையா சார்.. ஆறு மணி ஷோ இல்லையா சார் அப்டின்னு கேட்கறாங்க.
ரொம்ப மோசம்.. திருச்சில எல்லாம் என் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. கோயமுத்தூர்ல ஒரு தியேட்டர்ல.. எங்கயோ ஓரத்துல இருக்கற தியேட்டர். திருநெல்வேலில எங்கயோ கொடுத்திருக்காங்க. அதும் ஒரு ஷோ. ஏ.ஸி. இல்ல. இந்த வெயில்ல சாகறாங்க அங்க உட்கார்ந்து. ஒரு பய போமாட்டீங்கறான். ‘உங்களுக்காகத்தான் போனேன் சார். இல்லீன்னா அந்த தியேட்டருக்கு மனுஷன் போகமாட்டான்’ங்கறாங்க. அப்டி ஒரு தியேட்டர்.
இப்டி யாராலும் தேவையில்லாத, இந்த மாதிரி ஒன்னரை மணிக்கு வர்ற படங்களெல்லாம்.. வாசல்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கற பய என்ன சொல்றான்னா, இதெல்லாம் உப்புமா கம்பெனின்னு சொல்வாங்க சார் நார்மலா அப்டின்னு. நம்ம மூணு கோடிரூவா போட்டு க்வாலிட்டியா டெக்னிஷியன்லாம் வெச்சு படம் எடுத்தா, ஒன்னரை மணிக்கு ரிலீஸ் ஆகறதால உப்புமா கம்பெனின்னு சொல்லுவாங்களாம். அதும் யாரு சொல்றா. ப்ளாக்ல டிக்கெட் விக்கறவன் சொல்றான்.
எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.. நமக்குத்தான் ஒரு எழவும் தெரிய மாட்டீங்குது.. யாரும் சொல்லவும் மாட்டீங்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட போய்க் கேட்கறது..
ஒண்ணாந்தேதி வந்தா, ‘ஐயயோ.. ஒண்ணாந்தேதி வராதீங்க. எட்டாம் தேதி.. அய்யயோ எட்டாம் தேதி நெறைய படம் வருது... பக்கத்துலயே வராதீங்க.. பதினாலு.. ஐயோ போச்சு தெறி வருது.. இருபத்து இரண்டு.. ம்ம்ம். பாக்கலாம்... எப்படி போனாலும் உங்களுக்கு வர்ற கூட்டம் வரும் அப்டின்னு சொல்லி ஆரம்பிச்சு.. இப்ப எல்லாரும் என்ன சொல்றாங்க.. 29 வந்திருக்கணும் சார்.. நீங்க ஏன் 22ல வர்றீங்கன்னு..
மொத்தத்துல என்னமோ பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிடறாங்க.. சரி போகட்டும்.. ஏதோ நம்ம ஒரு படம் எடுத்தோம்.. நெறைய கத்துக்கிட்டேன். இத்தன வருஷத்துல நான் கத்துக்காத விஷயங்கள்லாம் இப்ப கத்துகிட்டேன். ‘நண்பரும் பகைபோல் தெரியும்.. அது நாள்படப் நாள்படப்புரியும்’ அப்டிங்கற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.. பார்ப்போம்!
எல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும்னு தெரியாதபடி.. எதாவது கொஞ்சம் சம்பாதிச்சா முடிவெடுக்க உட்காரலாம். சம்பாத்யமே இல்லாம மூணு கோடி போட்டு மூணு லட்சம் சம்பாதிச்சா (விரக்தியாகச் சிரிக்கிறார்) என்ன முடிவெடுக்க வருவா? பார்ப்போம். தொடர்பிலிருப்போம். ஆவன செய்வோம். நன்றி”
இவ்வாறு தன் படம் வெளியிட தியேட்டர்கள் கிடைக்காத ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். இந்த ஆடியோவுக்கு ‘படம் நன்றாக இருந்தால், எப்படி ஆயினும் வென்றே தீரும். எத்தனையோ படங்கள் இதுபோல கண்டுக்கொள்ளப் படாமல், தரமாக இருந்ததன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டடித்திருக்கிறது! 35 வருடங்களுக்கு மேல் துறையில் இருப்பவருக்கு இது தெரியாதா.. இதற்குப் போய் மொழிப்பிரச்னையெல்லாம் இழுப்பதா?’ என்று எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்காமல் இல்லை.
balaajee
2nd May 2016, 01:30 PM
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் 61...!
விஜய் இப்போது பரதன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தை விஜயாபுரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இப்போது கோடைவிடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க வெளிநாடு சென்றிருக்கிறார் விஜய். அவர் வந்ததும் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள். தொடங்கினால் வேகவேகமாக நடந்து முடிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் விஜய் தன்னுடைய அடுத்தபடத்துக்கான தயாரிப்புநிறுவனத்தை முடிவுசெய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவரை வைத்துப் படம் தயாரிக்கப் பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்களில் சிவாஜி புரொடக்ஷன்ஸூம் அடக்கம். தங்கள் நிறுவனத்துக்கு ஒருபடம் நடிக்கவேண்டும் என்று கேட்டு அவர்கள் அணுகியதாகவும் அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
அந்தப்படத்தை இயக்கப்போகிறவர் தெறி படத்தை இயக்கிய அட்லிதான் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சிவாஜிபுரொடக்ஷன்ஸ் தரப்பில் கேட்டால், விஜய் சாரிடம் பிரபு சார் பேசியிருக்கிறார், ஆனால் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
balaajee
2nd May 2016, 05:48 PM
கலையுலக சேவைக்காக டாக்டர் பட்டம் பெறுகிறார் நாசர்!
http://img.vikatan.com/cinema/2016/05/02/images/Nassar.jpg
தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவரும், நடிகருமான நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது. இவரின் கலைச்சேவையைப் பாராட்டி, வேல்ஸ் பல்கலைக்கழகம் வருகின்ற 7ம் தேதி காலை 9 மணியளவில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கவிருக்கிறது.
நாசர், தன்னுடைய 6வது வயதிலேயே நாடகங்களில் நடித்து, தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்னர், 1985ல் இயக்குநர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் “கல்யாண அகதிகள்” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த 30 வருடங்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவின்போது நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறார்கள். விழாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தலைமையேற்று அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் .P.S.சவ்ஹான் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
balaajee
5th May 2016, 11:04 AM
தேசிய விருது மீது அதிருப்தி ஏன்?- இளையராஜா விளக்கம்
இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசையமைப்பு என பிரிக்க தேவை என்ன இருக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 63-வது தேசிய விருதுகளை வழங்கினார். தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த விருதினை பெற்றுக்கொள்ள இளையராஜா செல்லவில்லை.
இது குறித்து திருவண்ணாமலை ஸ்ரீ ரமண ஆசிரமத்தில் இருந்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு இளையராஜா அளித்த பேட்டியில், "கடந்த 2010-ம் ஆண்டு வரை சிறந்த இசையமைப்புக்கான தேசிய விருது என்று ஒரு பிரிவு மட்டுமே இருந்தது. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணா போன்ற படங்களுக்காக சிறந்த இசையமைப்புக்கான விருதினை நான் பெற்றிருக்கிறேன்.
அந்த நடைமுறையை மாற்றி சிறந்த இசையமைப்பு (பாடல்), சிறந்த பின்னணி இசையமைப்பு என இரு பிரிவுகளில் தற்போது தேசிய விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு எனக்கு சிறந்த பின்னணி இசைக்கும், ஜெயச்சந்திரனுக்கு சிறந்த இசையமைப்புக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி இசைக்கான விருதை இரண்டாக பிரித்துள்ளது நான் ஏதோ பாதி வேலையை மட்டுமே சிறப்பாக செய்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த இசையமைப்பு (பாடல்) என பிரிக்க தேவை என்ன இருக்கிறது? ஒருவேளை தேசிய விருது வழங்கும் கமிட்டி இசையமைப்பாளர்கள் பாதி வேலையை மட்டும் சிறப்பாக செய்தால் போதும் என்பதை ஊக்குவிக்கிறதா?" என்றார்.
இளையராஜா கடிதம்
இது தொடர்பாக இளையராஜா மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு இரண்டு கடிதங்களை எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தில், "சினிமா இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற துறையினருக்கு வழங்கப்படுவதுபோல் இசையமைப்புக்கும் ஒரே ஒரு விருது மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அவர் ஒரு படத்திற்காக படைத்த பாடல்கள், அமைத்த பின்னணி இசை என எல்லாவற்றையுமே ஒருசேர சீர்தூக்கி பார்த்து விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும். அதைவிடுத்து பாதி வேலைக்கும் மட்டும் அங்கீகாரம் அளிக்கும் முறை எதற்காக? தேசிய விருதுகள் வழங்கப்படுவதற்கான இலக்கும் இதுவல்ல என்றே கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
balaajee
6th May 2016, 04:41 PM
நடிகர், அனிமேட்டர், இயக்குநர்!- ’நிழல்கள்’ ரவி சிறப்பு பேட்டி
தென்னிந்திய மொழிகளைக் கடந்து இந்திப் படவுலகம் வரை முன்னேறி சுமார் ஐநூறு படங்களில் நடித்துமுடிந்துவிட்டார் ‘நிழல்கள்’ ரவி. தீராத தாகத்துடன் நடிப்பைத் தொடரும் அதேநேரம் சினிமா இயக்கத்தில் முதல்முறையாகக் களமிறங்குகிறார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கான தொலைக்காட்சி விளம்பரத்தில் ‘உலகம் உயிர்பெறும் உங்கள் மொழியில்’ என கணீரென்று குரல்கொடுத்திருந்த அவர், “இயக்குநர் ஆகும் செய்தியை உங்களிடம்தான் முதலில் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது” என வாஞ்சையுடன் பேச ஆரம்பித்தார். அவரிடம் உரையாடியதிலிருந்து…
கடந்து வந்த பாதையில் உங்கள் மனதுக்கு நெருக்கமான சில படங்கள் இருந்திருக்கும் அல்லவா?
ஒரேயொரு காட்சியில் வந்துபோகிற கதாபாத்திரம் என்றாலும் அது எனக்கு நெருக்கமானதுதான். எனக்குத் தகுதியான கதாபாத்திரங்களைத்தான் தொடர்ந்து கொடுத்திருக்கிறார்கள். என்றாலும் ஐநூறு படங்களில் ‘நிழல்கள்’, ‘நாயகன்’, ‘மறுபடியும்’, ‘நான் பிடிச்ச மாப்பிள்ளை’ என்று 50 படங்களைத் தனியே எடுத்துவிடலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து என்னைச் செதுக்கியவர் நடிகர் பாலாஜி.
வில்லன் நடிகர் என்ற இமேஜ் உங்கள் மீது படியாமல் போனதற்கு என்ன காரணம்?
எனது முகத்தை எப்படி வேண்டுமானும் மோல்ட் செய்துகொள்ளலாம் என்பதுதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். படம் முடியும்வரை இவன் நல்லவனா கெட்டவனா என்ற குழப்பத்திலேயே என் மீது கண்களைக் குவித்திருப்பார்கள் ரசிகர்கள். ஆனால் படத்தின் முடிவில் நான் கெட்டவனாக இருப்பேன். இதுபோன்ற கதாபாத்திரங்களை திரும்பத் திரும்ப நான் எத்தனைமுறை ஏற்று நடித்தாலும் ரசிகர்களுக்கு என் மீது அதே குழப்பம் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கும். இந்த அம்சம் எல்லா நடிகர்களுக்கும் அமைந்துவிடாது. என் பலம் இதுதா்ன். குணச்சித்திரம், ஹீரோ, வில்லன், திரும்பவும் ஹீரோ, திரும்பவும் வில்லன், மறுபடி குணச்சித்திரம் என்று நிழல் தன் ரூபத்திலும் மாறிக்கொள்வதுபோல எனக்கான பிம்பம் அமைந்துவிட்டது.
‘நிழல்கள்’ ரவி என்றாலே உங்கள் குரலே பாதி நடிப்பைத் தந்துவிடும். உங்கள் குரலால் உங்களுக்கு நடந்த நன்மைகள் என்ன?
எனது குரல்தான் எனக்கு முதல் வாய்ப்பையே வாங்கிக்கொடுத்தது. கோவையில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு நடிகனாவது என்ற முடிவுடன் சென்னை வந்துவிட்டேன். தி. நகரில் இன்று ரெட் ரோஸ் பில்டிங்காக இருக்கும் வீட்டில் அன்று ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் படப்பிடிப்பு. ‘நினைவோ ஒரு பறவை’ பாடல் காட்சியை பாரதிராஜா ஷூட் செய்துகொண்டிருந்தார். மனோபாலா, மணிவண்ணன், ரங்கராஜ் என்று ஏகப்பட்ட உதவியாளர்கள். உதவியாளர் ஒருவரை அருகே அழைத்து “ ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் விஜயனுக்குப் பொருத்தமாக இருக்கிறமாதிரி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் வேணும், தேடிப்பிடிங்க”ன்னு சொன்னார். இதைக் கேட்டுகொண்டிருந்த நான் உடனே இடையில் மூக்கை நுழைத்தேன். “சார் நான் நல்லா டப்பிங் பேசுவேன் சார்” என்றேன். அவரது உதவியாளர்களோ என்னடா இவன், நடிக்க வாய்ப்புத் தேடி வந்துட்டு டப்பிங் பேசறேன் என்று சொல்லி உள்ளே நுழையுறான் என்று ஆச்சரியப்பட்டார்கள். எனது ஆர்வத்தைக் கண்ட பாரதிராஜா “நாளை பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்துடுங்க” என்றார். நான் டப்பிங் தியேட்டரை முன்னே பின்னே பார்த்தது கூட கிடையாது.
மறுநாள் பிரசாத் ஸ்டூடியோ சென்றதும் சவுண்ட் என்ஜினியரிடம் அழைத்துச் சென்று எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் பாரதிராஜா வந்தார். அவரிடம் சவுண்ட் என்ஜினியர் “ எங்க சார் பிடிச்சீங்க இந்தப் பையனை?! நல்ல மெட்டாலிக் வாய்ஸ். கணீர்ன்னு இருக்கு.” என்றார். எனக்கு சந்தோஷத்துல கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. மறுநாள் பல காட்சிகளுக்கு டப்பிங் பேசிவிட்டேன். அதற்கும் அடுத்த நாள் சென்றபோது எனக்குப் பதிலாக இயக்குநரே டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். என்னடா இது! முந்தா நாள்தானே நமது குரலை மெட்டாலிக் வாய்ஸ் என்று பாராட்டிக்கொண்டிருந்தார்கள் என்று குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தேன். பிறகு மதிய உணவு இடைவேளையில் டப்பிங் அறையை விட்டு வெளியே வந்தார் பாரதிராஜா. என்னைக் கண்டதும் தோளில் தட்டிக்கொடுத்தபடி “விஜயன் மலையாள ஸ்லாங்கில பேசியிருக்கார். அதை மேனேஜ் பண்ணிப் பேசணும். அதனால நானே பேசிட்டேன். எனிவே.. நீங்க நம்ம படத்துல நடிக்கிறீங்க. படிச்சுட்டு வேலை தேடுற ஒரு பட்டதாரியோட கதை அடுத்த படத்துல நடிக்கத் தயாரா இருங்க” என்றார். இப்படித்தான் என் குரல் எதற்காக நான் சென்னைக்கு வந்தேனோ அதை நிறைவேற்றிக்கொடுத்தது. எனது குரலை மீண்டும் அங்கீகரிக்கும் விதமாக ‘பொம்மலாட்டம்’ படத்தில் நானா படேகருக்குக் குரல்கொடுக்க வைத்தார் பாரதிராஜா.
சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறை கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். ஒரே அச்சில் வார்த்ததுபோல் வரும் கதாநாயக சினிமாக்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
பாகவதர் காலத்திலேயே கதாநாயக சினிமா ஆரம்பித்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவுக்குக் கிடைத்த வெற்றியால்தான் அதை விட மறுக்கிறோம். கிட்டத்தட்ட குதிரைப் பந்தயம் மாதிரிதான் இது. தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் கதாநாயக சினிமாவை நீங்கள் என்றைக்கும் ஒழித்துவிட முடியாது. இங்கே கதாநாயன் வில்லனை மன்னிப்பதைவிட அடித்துக் கொன்றால்தான் ரசிகர்களுக்கு முழுப் படம் பார்த்த திருப்தி கிடைக்கும். ஆனால் இந்தித் திரையுலகம் அப்படியில்லை. அது மிகப் பெரிய சந்தையைக் கொண்ட திரையுலகம். அங்கே அமிதாப் பச்சன் ஒரு ‘சீனி கம்’ ‘பா’, ‘பிக்கு’ மாதிரி படங்களில் நடிக்கிறார். ஆமிர் கான், ஷாருக் கான், சல்மானும்கூட வித்தியாசமாக முயற்சித்து வெற்றிபெறுகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அப்படிப்பட்ட கலைஞனாக கமல் மட்டுமே இருக்கிறார். அஜித்துக்கு ஆரம்ப காலத்தில் அந்த ஆர்வம் இருந்தது. வரும் தலைமுறை நடிகர்கள் இதிலிருந்து விலகி வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். காரணம் கதாநாயகர்கள் செய்யும் அத்தனை சாகசங்களையும் தூக்கிச் சாப்பிடும்விதமாக தற்போது 3டி அனிமேஷன் கதாபாத்திரங்கள் வந்துவிட்டன. அவற்றுக்கு ஹீரோக்களைவிட அதிக அளவில் ரசிகர்கள் பெருகிவிட்டார்கள்.
அனிமேஷன் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் ஒரு அனிமேஷன் பள்ளியை நடத்தி வருகிறீர்கள் இல்லையா?
ஆமாம்! ஒரு கட்டத்தில் குழந்தைகளோடு அனிமேஷன் படங்களைப் பார்க்க ஆரம்பித்து அவற்றின் மீது தனிக் காதலே வந்துவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் அனிமேஷன் படங்கள் இத்தனை ஈர்ப்பதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோதுதான் அவற்றில் இருக்கும் கலை நேர்த்தியே காரணம் என்று புரிந்தது. அனிமேஷன் படங்கள் எப்படி உருவாகின்றன என்று தேடித்தேடித் தெரிந்துகொண்டேன். அனிமேஷனையும் கற்றுக்கொண்டு நானே அனிமேட்டராகவும் ஆகிவிட்டேன். உலகம் முழுவதும் ‘லைவ் ஆக்*ஷன்’ படங்களுக்கு இருக்கும் சந்தையை விட இவற்றுக்கு அதிகம். வேலைவாய்ப்புகள் அனிமேஷனின் மட்டுமில்லை, கேமிங், பிராண்டிங், ஹெல்த், என்ஜினியரிங் என பல துறைகளில் தேவை இருக்கிறது என்று தெரிந்ததும் மிகக் குறைந்த கட்டணத்தில் அனிமேஷன் சொல்லித்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் தொடங்கியதுதான் அனிபிக்ஸ் அனிமேஷன் அகாடெமி. என்னை வளர்த்த திரையுலகத்துக்கு உருப்படியாக இதைச் செய்திருக்கிறேன் என்று நிறைவாக இருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் அனிமேஷன் சொல்லித்தந்து திறமைக்கேற்ப வேலை வாங்கிக்கொடுப்பதையும் நாங்களே செய்துவிடுகிறோம். இதுவரை 20 பேருக்கு வேலை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். அனிமேஷன், வி.எஃப்.எக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து சாஃப்ட்வேர்களையும் இங்கே சொல்லிக்கொடுக்கிறோம்.
படம் இயக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
மிகச் சிறந்த இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அவர்களது விதவிதமான பாணிகளை உள்வாங்கியிருக்கிறேன். நடிகன் என்ற ஒருநிலையோடு திருப்தி அடைந்துபோய்விடுவதில் எனக்கு விருப்பமில்லை. எனவேதான் திரைப்படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒரு நல்ல நடிகனால் சக நடிகர்களிடமிருந்து தரமான நடிப்பை வாங்கிவிட முடியும் என்று நம்புகிறேன். திரைக்கதை வேலைகள் முடியும் நிலைக்கு வந்துவிட்டன. மிக விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்க இருக்கிறேன்.
balaajee
9th May 2016, 11:42 AM
தேனாண்டாள் பிலிம்ஸ் 100-வது படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி
முன்னணி தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்பந்தமாகியுள்ளார். 'ஆடி வெள்ளி', 'காஞ்சனா', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை தயாரித்த நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். படத்தயாரிப்பு மட்டுமன்றி பல்வேறு பேய் படங்களை தமிழகமெங்கும் விநியோகம் செய்து வருகிறது.
தற்போது சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்பந்தமாகி இருக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
வரலாற்று பின்னணியோடு உருவாக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சுந்தர்.சி. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் ஒரே தலைப்பாக வருவது போன்று தலைப்பு பரிசீலனை நடைபெற்று வருகிறது. மேலும், மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
இப்படத்துக்காக அந்த காலத்து கப்பல்கள், அரண்மனைகள் என பல்வேறு பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்
balaajee
11th May 2016, 11:29 AM
good one
’வெயிலில் நின்றால் கறுத்துவிடுவீர்களா?’ நடிகர்களை வறுக்கும் திருப்பூர் சுப்ரமணியம்
விஷால் நடிப்பில் மே 20ல் வெளியாகவிருக்கும் திரைப்படம் மருது. முத்தையா இயக்கத்தில் ராதாரவி, ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் மே 20ல் வெளியாகவிருக்கிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பில், விஷால். "பைரஸியை கொன்றே தீருவேன், மேலும் 24 படத்திற்கான திருட்டு விசிடி எங்கு தயாரானது என்பது வரைக்கும் தெரியும், ஆனால் நடவடிக்கை எடுக்க யாருமில்லை" என்றெல்லாம் கொதித்தெழுந்தார்.
தொடர்ந்து, “மருது படத்திற்கான திருட்டி விசிடி வெளியிடுபவர்களை நானே கண்டுபிடிப்பேன், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன், எல்லா ப்ரிண்டும் தியேட்டர்களிலிருந்துதான் வெளியில் போகிறது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் பொறுப்பு. தயாரிப்பாளர்கள் தான் திருட்டைத் தடுக்க உதவ முன்வர வேண்டும்” என்றும் கூறினார். விஷாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வாட்ஸ் அப் மூலமாக திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் ஆடியோவில்,
"திருட்டு விசிடி பற்றி விஷால் பேசியதைக் கேட்டேன். திருட்டு விசிடி என்னமோ தமிழ்நாடு திரையரங்குகளில் எடுப்பது போல மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிக் கிடையாது. தொடர்ச்சியாக 200 படங்கள் வெளியாகிறது என்றால், 5 முதல் 10 படங்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் திரையரங்கில் இருந்து எடுக்கப்படலாம். அது கூட அந்தத் திரையரங்க முதலாளியால் கிடையாது.
சின்ன திரையரங்குகளில் ஒரு நாளுக்கு ரூ.2000 வருமானம் கூடக் கிடையாது. ஆகையால் அந்த திரையரங்கில் 3 அல்லது 4 ஆட்கள் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் 2 மணிக்கு வேலை முடிந்து சென்றவுடன் வாட்ச் மேன் அல்லது ஆப்ரேட்டர் படுத்து தூங்குவார். அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தான் இந்த வேலை நடக்கிறது. அது கூட ஏதோ ஒரு சின்ன திரையரங்கில் தான் நடக்கிறது. அதைக் கூட தடுப்பதற்கு அதிகாலை 2 மணி முதல் 9 மணி வரை க்யூப் லாக் பண்ணி வைப்பதற்கு க்யூப்பில் கேட்டிருக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்துமே இதற்கு தயாராக இருக்கிறோம். சின்ன திரையரங்கில் நடப்பதை நீங்கள் தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் நடப்பது போல பேசுகிறீர்கள். எல்லாத் துறைகளிலும் இருப்பது போல, இரண்டு மூன்று சதவிகித ஆட்கள் தப்பானவர்களாக இங்கும் இருக்கலாம். அவர்களை தண்டிப்பதற்கு நாங்களே தயாராக இருக்கிறோம்.
ஒரு படத்தின் திருட்டு டிவிடி எங்கு எடுக்கப்பட்டது என்று கண்டறிய 54000 மட்டும்தான் செலவாகும் என்கிறீர்கள். வருடத்திற்கு 200 படங்கள் வெளியாகிறது என்றால் மொத்தம் ஒரு கோடி ஆகிறது. அனைத்து சங்கங்களும் ஆளுக்கு 20 லட்சம் போடலாம். திரையரங்கு உரிமையாளர் சங்கமும் 20 லட்சம் கொடுக்கத் தயார். எந்த படத்தின் டிவிடி வந்தாலும் நாம் போய் சோதனை செய்யலாம். நான் அடித்துச் சொல்கிறேன்.. அந்த 200 படங்களில் 190 படங்கள் வரை வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கும். ஆனால் நீங்கள் தமிழ்நாடு திரையரங்குகள் என்று மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து தான் அதிக திருட்டு டிவிடிக்கள் வருகிறது. நீங்கள் வெளிநாட்டு உரிமை விற்கும் போது மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுகிறீர்கள். எல்லா உரிமையையும் கொடுத்துவிடுகிறீர்கள்.
ஒவ்வொரு நாயகனும் வெளிநாட்டு உரிமையை வாங்கி இரண்டு வாரம் கழித்து வெளியிடலாமே. தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கும் போது வெளிநாட்டு உரிமைக்கு ஓர் ஒப்பந்தம் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தற்போது முழுக்க டிஜிட்டல் மயம் என்பதால் எங்கு எடுத்தாலும் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட திரையரங்கிற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இணைந்து ஆறு மாதத்திற்கு படம் கொடுக்க வேண்டாம் என சொல்வோம். இரண்டாவது முறையும் அந்த திரையரங்கம், திருட்டு டிவிடி குற்றத்தில் பிடிபட்டால் அந்த திரையரங்கிற்கு படம் கொடுப்பதையே நிறுத்துவோம். திரையரங்கை மூட வலியுறுத்துவோம். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் அப்படியெல்லாம் தொழில் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.
உங்கள் படம் வரும் போது மட்டுமே பேசுகிறீர்கள். முக்கியமான வீடியோ வெளிநாட்டில் இருந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து வருகிறது என்பதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும். சின்ன திரையரங்குகளுக்கு என்ன வருமானம் பண்ணிக் கொடுக்கிறீர்கள். பெரிய நாயகர்கள் படம் வந்தால் அதிகமான விலை கேட்கிறீர்கள். நீலகிரி மாவட்டத்தில் 38 திரையரங்குகள் இருந்தது, தற்போது மொத்த மாவட்டத்திற்கும் சேர்த்து, ஊட்டியில் மட்டும் வெறும் 2 திரையரங்குகள் தான் இருக்கிறது தெரியுமா? ஒரு மாவட்டத்தில் இருக்கிற 36 திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பெரிய நடிகர்களின் படம் போடும் போது ரூ.300க்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் என நீங்களே சொல்கிறீர்கள்.
சென்னை திரையரங்குகளில் எத்தனை திரையரங்குகளில் நீங்கள் முன்பணம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதே போல கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்டவற்றில் யாராவது சொன்னால் எங்களது வருமானமே போச்சு என்று சொல்கிறீர்கள். மல்டிபிளக்ஸ் திரையரங்குகிற்கு மட்டும் 50%, 40%, 30% என்பார்கள். எங்கே போனீர்கள் நடிகர்கள் எல்லாம்? சிறுதிரையங்கம் என்றால் 80% கொடு, 5 லட்சம் அட்வான்ஸ் கொடு என்று கேட்டு அவனைப் போட்டு சாகடிப்பீர்கள். தியேட்டரை மூடினால் ஊருக்குள் பேசுவார்கள்.. மரியாதை வேண்டும் என்பதற்காக பலர் திரையரங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் நடிகர் சங்கத்தில் ஒரு நடவடிக்கை கூட எடுத்து விடாதீர்கள். டிக்கெட் ரூ.100க்கு மேல் விற்கக் கூடாது, விற்றால் ரசிகர்கள் எங்களிடம் சொல்லுங்கள் என நடிகர் சங்கம் சொல்ல வேண்டியது தானே.
கடந்த வாரம் டெல்லி கணேஷ் ஒரு ஆடியோ பேசியிருந்தார். தியேட்டர்கள்மீது குற்றம் சாட்டியிருந்தார். முதலில் ஏன் உங்கள் பையனை நேரடி நாயகனாக்கினீர்கள். ரஜினி சார், கமல் சார் போல சிறு சிறு வேடங்களில் நடித்து நாயகனாக்கி இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னிறுத்தி பண்ணலாம். எடுத்தவுடனே விஜய் மாதிரி நேரடி நாயகன் என்று வந்துவிடுகிறீர்கள். விஜய்யை நாயகனாக்க அவங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா? கிட்டதட்ட 8 முதல் 10 படங்கள் சொந்த காசு போட்டு பண்ணினார். இயக்குநர்கள், நடிகர்கள் அவர்களின் மகன்கள் அனைவருமே நேராக நாயகன் தான் என்கிறீர்கள். படம் நன்றாக இருந்தால் ஓட்டுவதற்கு அனைவருமே தயாராக இருக்கிறார்கள். இறுதிச்சுற்று எங்கள் மல்ட்டிப்ளக்ஸில் இரண்டு ஷோ மட்டுமே போட்டோம். நன்றாக போனதால் 12 ஷோவாக எல்லா ஸ்கிரீனுக்கும் மாற்றினோம். நன்றாக இருந்து, ஜனங்கள் பார்த்தால் யார் என்ன என்பதெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை.
எந்த திரையரங்க உரிமையாளர் ஒடுகிற படத்துக்கு திரையரங்கம் தரமாட்டேன் என்று சொல்லுவார். மக்கள் சிறிய படங்களைப் பார்க்க வருவதில்லை. அனைத்து நடிகர்களும் தான் வரவிடாமல் பண்ணிவிட்டீர்கள். ஏனென்றால் ஒரு பெரிய படத்திலேயே அவன் பையில் இருக்கும் மொத்த காசையும் பிடுங்கிவிடுகிறீர்கள். பின்பு எப்படி சிறிய படத்திற்கு வருவான்.
அரசாங்கத்திடம் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யுங்கள். அனைத்து ஏரியாக்களுக்கும் சதவீத அடிப்படையில் படங்கள் தருகிறோம் என்று சொல்லுங்களேன். கார்ப்பரெட் கம்பெனிகளுக்கு 50% கொடுப்பவர்கள் சிறு திரையரங்குகளுக்கும் கொடுங்கள். அந்த சிறு திரையரங்கில் கண்விழித்துப் படம் ஓடியதால் இன்று சொகுசாக வாழ்கிறீர்கள். யாரோ இரண்டு திரையரங்க உரிமையாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லாதீர்கள்.
நடிகர்களுக்கு ரூ. 5 கோடி, 10 கோடி, 30 கோடி, 40 கோடி என்று சம்பளம் வேண்டாம். லாபம் பொறுத்து சம்பளம் வாங்கலாம் என்று நடிகர் சங்கத்தில் இருந்து அறிவிக்க வேண்டியதானே. அதை விடுத்து ரூ.20 கோடி, 30 கோடி கொடு என்று தயாரிப்பாளரை நச்சரிக்க வேண்டியது ஏன்? மொத்தமாகக் கொடு, படப்பிடிப்பில் கேரவன் கொடு என்று கேட்கிறீர்கள். ஹீரோ, ஹீரோயின், காமெடியன் ஆளுக்கொரு கேரவன். ஏன் வெயிலில் நின்றால் கறுத்துப் போய்விடுவீர்களா?
நாங்களும் வெயிலில் நின்று தான் தொழில் பண்ணுகிறோம். ஒரு படத்துக்கு சக்சஸ் மீட் என்று தயாரிப்பாளர் பணத்தில் ரூ.10 லட்சம், 20 லட்சம் என செலவு பண்ணுகிறீர்கள். 'பிச்சைக்காரன்' படத்துக்குத் தான் சக்சஸ் மீட் வைக்க வேண்டும். ஏனென்றால் வாங்கியதை விட 3 மடங்கு லாபம் கொடுத்தது அந்தப்படம்தான்.
எதற்கு எடுத்தாலும் விநியோகஸ்தர் மீதும் திரையரங்க உரிமையாளர் மீதும் குறை சொல்லாதீர்கள். வெளிநாட்டில் பட வெளியீட்டை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் எந்த திரையரங்கில் இருந்து திருட்டு டிவிடி வருகிறது என்று நாங்களும் பார்க்கிறோம். எங்களுக்கு திருட்டு டிவிடிக்கு துணை போய் தொழில் பண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. எதற்கெடுத்தாலும் திருட்டு டிவிடிக்கு தமிழ்நாடு திரையரங்குகள் துணை போகிறது என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது.
இப்போது டிவி உரிமை விற்பதில்லை. அதே போல வெளிநாட்டு உரிமையை விற்காமல் ஒரு 2 வாரங்கள் கழித்து விற்கலாமே. விற்றுப் பாருங்கள் அப்புறம் எப்படி திருட்டு டிவிடி வருகிறது என்று பார்க்கலாம்" என்று கடுமையாகப் பேசியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.
faithiu11
12th May 2016, 09:32 AM
Now a days this guy full time job is to target actors....he talks so much about actors salary but never opens about the canteen and parking charges and profit(infact its more than a ticket sales)
The reason y now a days families rarely turns up in the theatres are
1.canteen..they spending more for snacks than a ticket
2.lack of good content(family oriented movies)
3.Even in small towns minimum popcorn price is 40
Now a days People who r taking more risk in this business are producer and distributor.. Now a days only few theatres releasing movies in MG basis tat too they are very calculative(mostly they releasing in percentage basis or rent basis)
Theatre owners happily and silently enjoying canteen and parking profits for years..
Is subramaniam running a 5 screen multiplex without getting profits..?
He similarly bashed theatres for openly revealed collections during vedalam time...so he dont want theatres to be transparent in revealing the collections...His allegations doesnt make sense
balaajee
12th May 2016, 11:30 AM
'யு/ஏ' சான்றிதழுடன் மே 20-ல் வெளியாகிறது 'மருது'
முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'மருது' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மருது'. முத்தையா இயக்கி இருக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ராஜபாளையத்தில் நடத்தியிருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து சென்சார் அதிகாரிகளுக்கு 'மருது' திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு சில வசனங்களை மட்டும் மியூட் (mute) செய்ய சொல்லிவிட்டு 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
சென்சார் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து , மே 20-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
'மருது' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்றதைத் தொடர்ந்து, சுராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கத்தி சண்டை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.
balaajee
12th May 2016, 06:03 PM
உருவாகிறது 'சந்திரமுகி 2' - ரஜினிக்கு பதிலாக லாரன்ஸ் - tamil hindu
பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் 'சந்திரமுகி 2' உருவாகவுள்ளது.
கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் 'சிவலிங்கா'. வேதிகா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கியது.
'சந்திரமுகி' போலவே இப்படத்தையும் ரஜினியை வைத்து பி.வாசு இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். லாரன்ஸ் உடன் முக்கிய பாத்திரத்தில் வடிவேலு நடிக்க, பி.வாசு இயக்க இருக்கிறார்.
நாயகி மற்றும் லாரன்ஸ் உடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிந்தவுடன் முறையாக தகவல்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.
balaajee
13th May 2016, 11:18 AM
ஒலிம்பிக் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02633/rahman_2633264f.jpg ஏ.ஆர்.ரஹ்மான். | கோப்புப் படம்.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற் கும் இந்திய அணியின் நல்லெண் ணத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப் பட்டுள்ளார்.
31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடை பெறுகிறது.ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த சர்ச்சையில் இருந்து தப்பிக்க மேலும் பலரை நல்லெண்ணத் தூதர்களாக நியமிப்பதில் ஐஓஏ தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அபிநவ் பிந்த்ரா ஆகியோரைத் தூதராக்கும் முயற்சியில் இறங்கியது. ஐஓஏவின் வேண்டு கோளை ஏற்ற நிலையில் அபிநவ் பிந்த்ரா, சச்சின் ஆகியோர் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஐஓஏ-வின் கோரிக்கையை ஏ.ஆர்.ரஹ்மா னும் ஏற்றுக் கொண்டுள்ளார்.இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் நேற்று வெளியானது. ஒலிம்பிக் போட்டிக்கு தூதராக இருப்பது தனக்குப் பெருமை அளிப்பதாக ரஹ்மான் தெரிவித் துள்ளார்.
"Adakkam amararul uiykkum adangaamai aarirul uiythu vidum"
balaajee
13th May 2016, 11:40 AM
15 lakhs not enough for a debutante director !
''படம் நல்லா வந்திருக்கு. ஆனாலும், சங்கடம்தான்..!’’ - இது ‘பென்சில்’ பஞ்சாயத்து!
வழக்கமாக பணம் படைத்த பலரின் மகன்கள் 'அப்பா நான் ஹீரோவாக நடிக்கணும் " என்று அடம்பிடித்து நடித்து வெளிவந்த படங்கள் பல. அவற்றில் ரிலீஸான உடனே பல படங்கள் சுவற்றில் எறிந்த பந்தாக திரும்பி வந்தது. கோடம்பாக்கத்தில் கோடீஸ்வரன்களாக திவான் மாதிரி வந்தவர்கள் திவால் ஆகிப்போன கதைகள் ஏராளம். 'பென்சில்" தயாரிப்பாளரின் பங்களா போயஸ்கார்டனில் இருக்கிறது. டாக்டரான சண்முகம் மகனுக்கு சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்பது கனா. பெற்ற மகன் ஆசைக்காக 'பென்சில்" எடுத்து இப்போது பிளேடால், தன் கையை தானே கீறிக்கொண்டதுபோல நிற்கிறார், சண்முகம்.
ஜி.வி.பிரகாஷ், திவ்யா நடிப்பில் உருவானது 'பென்சில்" திரைப்படம். கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்த்த மணிகண்டன் இயக்கிய இந்தப்படம் வருகிற 13-ம்தேதி திரைக்கு வருகிறது. முதல் சினிமா இயக்கும் வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் சண்முகத்தின் கண்களில் 'ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்" என்று ரத்தக் கண்ணீரை வரவழைத்து விட்டார், மணிகண்டன் .
முதல்பட வாய்ப்பு வழங்கும்போது அறிமுக இயக்குனருக்கு ஆயிரங்களில் சம்பளம் தருவது ஆர்.பி.செளத்ரி போன்ற தயாரிப்பாளருக்கு வழக்கம். 'பென்சில்" படத்துக்கு மணிகண்டனுக்கு ஏழு லட்சம் சம்பளம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அண்மையில் 'பென்சில்" வெளிவர இருக்கும் சூழ்நிலையில் இயக்குனர்கள் சங்கத்தில் 'எனக்கு 10 லட்சம் சம்பளம் தரவேண்டும்"" என்று தயாரிப்பாளர் மீது புகார் பட்டியல் வாசித்தார், மணிகண்டன்.
தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இரண்டும் இணைந்து இருவரையும் அழைத்து அருகருகில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. 'டைரக்டருக்கு சம்பளமாக 7-லட்சம் பேசப்பட்டது. நான் 15-லட்சம் கொடுத்து விட்டேன். பேசிய சம்பளத்தைவிட எட்டு லட்சம் அதிகமாக கொடுத்து விட்டேன்" என்று சொன்னார், சண்முகம். 'ஆமாம் 15-லட்சம் வாங்கி விட்டேன்" என்று கூலாக ஒப்புக்கொண்ட மணிகண்டன். 'எனக்கு சம்பளம் போதாது இன்னும் 10-லட்சம் தரவேண்டும்" என்றும் அடம்பிடித்தார்.
'படம்தான் நல்லா வந்திருக்கு இல்லே. பேசாம டைரக்டர் கேட்குறதை கொடுங்க" என்று மணிகண்டனுக்கு ஆதரவாக தலைவர் விக்ரமனும், செயலாளர் செல்வமணியும் குரல் கொடுத்தனர். கடைசியில் வேறு வழியில்லாமல் பேரம்பேசி ஐந்து லட்சம் கொடுத்து செட்டில் செய்தார் தயாரிப்பாளர். இதுபோல் புது டைரக்டர்கள் நன்றி மறந்து நடந்து கொள்கிறவரை கோடம்பாக்கத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு, பின்னங்கால் பிடறியில் இடிபட, தலைதெறிக்க ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.
இதுபற்றி டாக்டர் சண்முகத்திடம் பேசினால், ‘இயக்குநர் சம்பள விஷயத்தில் சிக்கல் வந்தது உண்மைதான். அது பேசி முடிக்கப்பட்டுவிட்டது, ஏழு லட்சம் பேசி, பதினைந்து லட்சம் கொடுக்கப்பட்டதும் உண்மைதான். இந்தப்படம் தொடங்கும்போது ஜி.வி.பிரகாஷுக்கு இருந்த மார்க்கெட் இப்போது அதிகரித்திருக்கிறதென்றும் அதனால் இயக்குநருக்கு அதைவிடவும் அதிகச் சம்பளம் தரவேண்டும் என்றும் சொன்னார்கள். அதையும் கொடுத்துவிட்டோம். படம் நன்றாக வந்திருக்கிறது. நன்றாகப் போகும். ஆனால் படத்தைத் தயாரித்த நாங்கள் மட்டும் நட்டப்பட்டிருக்கிறோம்” என்கிறார் வேதனையுடன்.
balaajee
13th May 2016, 01:41 PM
சர்ச்சை: இளையராஜாவின் வாதம் சரியா? - tamil hindu
பாடலுக்கு ஒரு விருது, பின்னணி இசைக்கு ஒரு விருது என்று திரையிசையை இரண்டாகப் பிரித்து விருது கொடுப்பதை இசையமைப்பாளர் இளையராஜா ஆட்சேபித்திருக்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் சேர்ந்ததுதான் திரையிசை என்றும் அதை முழுமையாகத்தான் அணுக வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக அவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை இந்த அடிப்படையில் அவர் மறுத்திருக்கிறார். இது குறித்துத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். ‘பழசிராஜா’ படத்துக்காகத் தனக்குப் பின்னணி இசைக்கான விருது அளிக்கப்பட்டபோதும் அவர் இதையே சொல்லியிருந்தார்.
திரையுலகம் கண்ட இசை மேதைகளில் ஒருவர் இளையராஜா என்பதில் சந்தேகம் இல்லை. பாடல்கள், பின்னணி இசை இரண்டையும் ஒருங்கிணைத்து மதிப்பிடும்போது இசையமைப்பாளரின் பன்முகத் திறனும் அவரது முழுமையான இசை ஆளுமையும் வெளிப்படும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், இரண்டையும் தனித்தனியாக மதிப்பிடுவது ஒருவருடைய பெருமையைக் குறைப்பதாக அமையும் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
இரண்டும் ஒரே கலை நோக்கின் மாறுபட்ட வெளிப்பாடுகள் என்றாலும் பல்வேறு காரணங்களால் இவை இரண்டும் தனித்தனியே அணுகக்கூடிய வகையிலேயே இருக்கின்றன. இயக்குநர்கள் இவை இரண்டையும் பார்க்கும் விதத்திலும் இசையமைப்பாளர்கள் இவற்றை அணுகுவதிலும் இவை வெளிப்படும் விதங்களிலும் இருக்கும் வித்தியாசங்கள்தான் இந்தப் பிரிவுக்கு அடிப்படை.
பல படங்களில் பின்னணி இசை, பாடல்கள் இரண்டும் ஒரே சீரான தரத்தில் அமைவதில்லை. அற்புதமான பாடல்கள் கொண்ட படங்கள் பலவற்றில் பின்னணி இசை மிகவும் சுமாராக அமைந்துவிடுகிறது. பின்னணி இசை அபாரமாக உள்ள சில படங்களில் பாடல்கள் அவ்வளவாகச் சோபிக்காமல்போவதும் உண்டு. எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இது நேர்கிறது.
இந்நிலையில் இரண்டையும் சேர்த்துப் பார்ப்பதன் மூலம், சிறப்பாக அமைந்த ஓர் அம்சத்துக்குக் கிடைக்க வேண்டிய பெருமை கிடைக்காமல் போகலாம். இதைத் தவிர்க்க இரண்டையும் பிரித்துப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்கும்.
பாடல்களின் இடம்
உலகத் திரை அரங்கில் பாடல்கள் திரைப்படத்தின் இன்றியமையாத அம்சமாக இல்லை. பின்னணி இசை அவ்வாறு இருக்கிறது. இதன் காரணமாகப் பாடல்களைச் சற்றே குறைத்து எடைபோடுவது இந்தியப் பின்னணியில் பெரும் பிழையாகவே அமையும். இந்தியத் திரையிசையைப் பொறுத்தவரையிலும் பாடல்கள் திரைப்படம் என்னும் கலையின் தவிர்க்கவியலா அம்சமாகிவிட்டன.
இதற்கான பண்பாட்டு, வரலாற்று, சமூகக் காரணங்கள் பல தளங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இசை வெளி பரந்து விரிந்தது. செவ்வியல், பக்தி, நாட்டார் இசை எனப் பன்முகத்தன்மை கொண்டது. இசையும் பாடல்களும் இங்கே இரண்டறக் கலந்தவை. இந்தியாவைப் பொறுத்தவரை இசை என்றாலே பாடல்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம்.
இந்தியப் பொது மனத்தில் பாடல்கள் முக்கியமான இடம்பெற்றுள்ளதாலும் பாடல்கள் படத்தின் மதிப்பைக் கூட்டுவதாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழில் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், வஸந்த், செல்வராகவன், கௌதம் மேனன் போன்ற இயக்குநர்கள் சிலர் திரைப்படத்தில் பாடல்களின் இடத்தை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தங்கள் படங்களின் வலுவான அம்சங்களில் ஒன்றாக அமைத்துக்கொள்கிறார்கள். பாடல்களைத் தவிர்த்துவிட்டு இவர்களது படங்களை யோசிப்பதுகூடக் கடினமாகிவிடும் அளவுக்கு அவை வலுவாக இடம்பெற்றுவிடுகின்றன.
பின்னணி இசையின் இடம்
இந்தியத் திரைப்படங்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பே பாடத் தொடங்கிவிட்டன. பேசும்படங்கள் பெருகிவந்த கட்டத்திலும் வசனங்களுக்கு இணையாக, சில சமயம் அவற்றைவிடவும் அதிகமாக, பாடல்கள் இடம்பெற்றன. காலப்போக்கில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்துவந்தது. 20, 30 என்ற எண்ணிக்கை மெல்லத் தேய்ந்து 5, 6 என்று நிலைபெற்றது. அண்மைக்காலம்வரை நீடித்த இந்தப் போக்கு இப்போது 2, 3 என்று குறைந்துவிட்டது. சில சமயம் பாடல்களே இல்லாமல் படங்கள் வருகின்றன.
தன் திரை மொழியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர்கள் பாடல்களைக் கூடியவரையிலும் தவிர்க்கவே பார்க்கிறார்கள். சத்யஜித் ராய் இதற்கு உதாரணம். ஆனால், பின்னணி இசை இல்லாமல் படங்கள் வருவதில்லை.
காட்சிகளுக்கு உறுதுணையாக வரும் பின்னணி இசை கதையை எந்த விதத்திலும் சிதைக்காமல் உடன் பயணிக்க முடியும். காட்சிகளின் பொருளையும் ஆழத்தையும் கூட்ட முடியும். பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர்த்திய கலைஞர்களில் இளையராஜாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
பாடல்களைப் போலவே பின்னணி இசையும் செயற்கையானதுதான் என்றும் வாதிடலாம். காட்சிகளுக்கேற்ற இயல்பான ஒலிகளை மட்டுமே வைத்துப் படம் எடுப்பதே யதார்த்தத்துக்கு நெருக்கமானது என்பதில் ஐயமில்லை. எனவே இரண்டில் எது முக்கியமானது என்னும் விவாதத்தில் இறங்குவதைவிட, இரண்டும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்பதுதான் முக்கியமானது.
பாடல்கள், பின்னணி இசை ஆகிய இரண்டும் சேர்ந்ததுதான் திரையிசை என்று சொல்லும் இளையராஜா, இதில் ஒன்றுக்கு மட்டும் தனக்கு விருது கொடுத்தால் தான் தன் வேலையை அரைகுறையாகச் செய்திருக்கிறேன் என்று பொருள் என்கிறார். இது ஆழமாக யோசிக்க வேண்டிய கருத்து. ஒரு படத்துக்கான பாடல்களும் அதன் காட்சிகளுக்கான பின்னணி இசையும் பிரிக்க முடியாதவை என்றால் இவை இரண்டுமே படத்தை, திரைக்கதையை அதன் காட்சிகளை ஒட்டி எழுபவை என்றுபொருள்.
ஆனால், நடைமுறையில் அப்படித்தான் இருக்கிறதா? பல சமயம் பாடல்கள் தேவையற்ற திணிப்பாக இருப்பதைப் பார்க்கிறோம். இத்தகைய தருணங்களில் பாடல்கள் படத்தினின்று தனியே நிற்கின்றன. இதற்கு இசையமைப்பாளர் காரணம் இல்லை. இந்நிலையில் இரண்டையும் அவரது படைப்பின் இரு பரிமாணங்களாக எப்படிப் பார்க்க முடியும்?
படத்தின் பின்புலத்தோடு பார்க்கும்போது பின்னணி இசைக்குப் பாடல்களை விடவும் முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், பாடல்கள் படத்தின், பின்புலத்தைத் தாண்டியும் கதைத் தருணங்களைத் தாண்டியும் முக்கியத்துவமும் உயிர்ப்பும் பெறக்கூடியவை. எனவே படத்திலிருந்து விலக்கியும் அவற்றைப் பார்க்கலாம். பின்னணி இசையை அப்படிப் பார்க்கவே முடியாது.
ஆக, இரண்டுமே தமக்கே உரிய சாதக, பாதகங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டின் உருவாக்கத்திலும் இந்தச் சாதக, பாதகங்களின் பாதிப்பு இருக்கவே செய்யும்.
ஆக, வெவ்வேறு பின்புலங்களும் காரணங்களும் பரிமாணங்களும் சாதக, பாதகங்களும் கொண்ட பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது, இவற்றிடையே உள்ள அடிப்படையான வேற்றுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சார்ந்த அணுகுமுறை என்று கருத இடமிருக்கிறது. ‘தாரை தப்பட்டை’ படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் ஆதாரத் தன்மையோடும் காட்சிகளோடும் ஒரே விதத்தில் உறவுகொண்டிருக்கின்றன என்பது உண்மைதான்.
இப்படிப் பார்க்கும்போது அந்தப் படத்துக்கான இசையைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று சொல்வதற்கான நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது எல்லாப் படங்களுக்கும் பொருந்தாது. இதற்கு இளையராஜா உட்பட எந்த இசையமைப்பாளரும் விதிவிலக்கல்ல.
faithiu11
13th May 2016, 05:33 PM
thozha movie pirated version was taken from #atsc theatre pollachi on da day of release based on analysis reports
This theatre was under the lease of thiruppur subramaniyam...
Pesimbothae theriyuthu fraud nu
balaajee
17th May 2016, 12:59 PM
மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்ட சூர்யா!
இன்று நடந்து வரும் சட்டமனற தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாமல் போனதற்கு வருத்தமும், மன்னிப்பும் கோரி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா.. அதில்,
வணக்கம்,
“24” படத்துக்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும் ஆதரவுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி. நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னுடைய மன்னிப்பையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். அது எனக்கு குற்றவுணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வாக்களிக்கும் உரிமையை, கடமையை அனைவரும் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான்.
இதுவரை ஒரு தேர்தலிலும் என்னுடைய வாக்குரிமையை செலுத்தாமல் நான் இருந்ததே இல்லை. இந்த முறை வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு முதல் நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்ற பயணத்திட்டம் வைத்திருந்தேன். ஆனால், நானே எதிர்பார்க்காத சூழல் என் பயணத்தைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள இயலவில்லை.
என் சூழ்நிலையை விளக்கி, அஞ்சம் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். சட்டப்பூர்வமான வழிகள் ஏதும் இல்லை. மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன்.
அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். என் மீது அன்பு கொண்ட அனைவரும், என்னைப் புரிந்து கொள்ளவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
balaajee
19th May 2016, 02:34 PM
மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!
http://img.vikatan.com/news/2016/05/17/images/shanthitheatre6001.jpg
வணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது.
1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்தப் புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது.
நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான்.
1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது மூத்த மகள் 'சாந்தி'யின் பெயரில், தனது ஆசைப்படி ஒரு தியேட்டரை கட்டினார் சிவாஜிகணேசன். இதன் பங்குதாரர் ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.
http://img.vikatan.com/news/2016/05/17/images/sivaji5502.jpg
பின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார். அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன.
திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில், சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தைக் காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது.
தியேட்டரின் முழுநிர்வாகத்தையும், சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான நாராயணசாமி கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே, திரையுலகிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சக போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.
http://img.vikatan.com/news/2016/05/17/images/mgranniversary600sivaji.jpg
இந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான், தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.
சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலகப் போட்டியைத் தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், " சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். " கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார். ஆனால் இருவரது ஆசையும் நிறைவேறவில்லை என்பது வேறு கதை.
http://img.vikatan.com/news/2016/05/17/images/sivajikamarajar.jpg
2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது.
சிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.
http://img.vikatan.com/news/2016/05/17/images/shanthitheatre6005.jpg
சென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் 'சாந்தி'யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக்கொண்டுவிட்டது, சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் வகிப்பது சினிமா. இதன் ஆதார ஸ்ருதி தியேட்டர்கள்தான். அந்த வகையில் தமிழர்களின் மனதில் முக்கிய இடம்பெற்றிருப்பது தியேட்டர்கள். இன்றும் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போகும் அந்தக்கால இளைஞர்கள், தங்கள் நினைவுகளில் கண்டிப்பாக சில தியேட்டர்களை குறிப்பிடுவர். அந்தளவிற்கு சினிமா ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட விருப்பங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகரீதியான ஒரு கலையாக மாறிய பின், சினிமா என்பது பல சிக்கல்களுக்கிடையில் இயங்கவேண்டிய நிலை உருவானது.
http://img.vikatan.com/news/2016/05/17/images/shanthiright.jpgஅதிகபட்ச கட்டணம், திருட்டுவிசிடி, தகவல் தொழில்நுட்ப வளரச்சி, வணிக ரீதியான தயாரிப்பாளர்கள் போன்ற காரணங்களால் இன்று சினிமா என்பது குற்றுயிரும் குலையுருமாகவே ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. இந்த பிரச்னைகளால் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய், இன்று தமிழத்தின் பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே ரசிகர்கள் வருகிறார்கள்.
இதன் காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. ஸ்டுடியோக்கள் கூட இந்த சுனாமியில் தப்பவில்லை.
அந்தவரிசையில் சென்னை நகரில் வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சஃபையர், எமரால்டு, கெயிட்டி, பாரகன், புளூடைமண்ட், சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறி கால ஓட்டத்தில் கரைந்துபோன தியேட்டர்கள்.
இந்த காரணங்களால், கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தி திரையரங்கமும் வணிக வளாகம் கட்டும் நோக்கில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி நவீன திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுவதற்கான முதற்கட்டமாக நேற்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
தியேட்டர் இடிப்பு அறிவிப்பு வெளியான தகவலால் மிகுந்த துயரமடைந்த சிவாஜி ரசிகர்கள், நடிகர் பிரபுவிடம் இதுகுறித்து பேசினர். 'சாந்தி தியேட்டர் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம். அதை இடிப்பது எங்கள் தலைவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேருவதுபோல் உணர்கிறோம்' என அவர்கள் சிவாஜி குடும்பத்தினரிடம் கவலையுடன் பேசினர்.
இருப்பினும் காலத்திற்கு தக்கபடி மாறவேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துக்கூறிய பிரபு, தியேட்டரை இடித்தபின் நிர்மாணிக்கப்படும் மல்டி ஃபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உருவாகும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே சூட்டப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் சமாதானமடைந்தனர். அதன்படி தியேட்டர் மூடப்படும் அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் சார்பில் நேற்று வைக்கப்பட்டது.
இருப்பினும் சாந்தி தியேட்டர் இடிப்பு என்பது தங்களைப்பொறுத்தவரை தங்கள் திரையுல பிதாமகனை இன்னொருமுறை இழந்தது போன்ற ஒரு துக்கத்தில்தான் உள்ளனர். சிவாஜியின் திரைப்பட வரலாற்றையும் அவரது நினைவுகளையும் சுமந்து நின்ற சாந்தி தியேட்டர், சிவாஜி ரசிகர்களின் சாந்தியை தற்காலிமாக இழக்கவைக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு, வணிக வளாகங்களாக ஆடைபோர்த்திக்கொள்வதை வெறுமனே ரசிகர்களின் கவலையாக மட்டுமே கொள்ளக்கூடாது; அது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் விடப்படும் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியும் கூட. திரையுலகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
balaajee
19th May 2016, 04:11 PM
Dir of LUCIA - Samantha, Naga Chaitanya give thumbs-up to Pawan Kumar's 'U Turn'
http://data1.ibtimes.co.in/cache-img-526-389/en/full/608165/1463642672_u-turn.jpg
Pawan Kumar's "U Turn," which is getting released on Friday, May 20, has got a big fillip after the movie was praised by two big names from the South Indian film industry. Samantha and Naga Chaitanya have appreciated the Kannada film, which has already garnered positive reviews at the premiere held in New York last week.
The director has posted a short video clip on his Facebook page in which both the stars are seen praising "U Turn." "Love the film and love the content," the actress is seen saying in the video. The "Kaththi" actress has also acquired the Tamil remake rights of "U Turn."
Naga Chaitanya confesses in the video that he became a big fan of Pawan Kumar after watching "Lucia." He has also liked the latest film, which is an edge-of-the-seat thriller.
Their positive words are expected to boost the collection of the movie, which is having a premiere show in Bengaluru on Thursday. May 19. The special show, which is scheduled to be held at Bhumika theatre, has already been talked about a lot, and is being waited for with much anticipation.
"U Turn" is hitting the screens in over 100 theatres in India. It is being released in Pune, Mumbai, Chennai, Hyderabad and many other places.
The upcoming Kannada movie is a mystery thriller that stars Shraddha Srinath and Dilip Raj in the lead roles. Roger Narayan, Skanda, Krishna, Pavan, Naveen, Divya, Pramod, Aarna, Kennedy and others are also a part of the cast.
"U Turn," which has been made under Pawan Kumar's newly-launched banner PK Studios, features Poornachandra Tejaswi's music, Satya Hegde, Advitha Gurumurthy and Siddharth Nuni's cinematography, and Suresh's editing.
balaajee
23rd May 2016, 02:35 PM
Pichaikkaran doing good in Telugu....
Brahmotsavam Replaced By Bichagadu
http://www.greatandhra.com/newphotos5/bichagaadu1463992165.jpgBrahmotsavam is heading towards an epic disaster due to the astronomical rates it was sold for. Buyers will be unable to recover at least half their investment in most of the territories.
The film is too weak in Mahesh’s strong areas like overseas and Nizam too. In Ceded Brahmotsavam is unlikely to collect even 4 crore in its theatrical run says the trade.
The film is unable to recover theater rents in side theaters that the distributors are forced to replace it with other films. Tamil dubbed flick Bichagadu got lucky as Brahmotsavam is replaced with it in many side theaters from Monday.
Next week is going to be a tough one for Tollywood trade with no notable new releases except for Vishal’s Rayudu.
Trivikram’s A Aa is going to be the last hope for this season. A Aa is releasing on June 2nd and it will surely get so many screens across Telugu states with literally no competition.
balaajee
23rd May 2016, 03:46 PM
"ஐ.டி. மட்டுமே தரமணி இல்லை!” - ராம்
தரமணி டீசர் வெளியிடப்பட்டு பலரும் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க.. படம் ஆரம்பித்தபோது, ராம் இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதை இங்கே பகிர்கிறோம்:
''இது, ஐ.டி. இளைஞர்கள் பற்றிய படம் இல்லை!'' - 'தரமணி’ குறித்து இயக்குநர் ராம் சொல்லும் ஒன்லைன் இதுதான்!
வெளியீட்டில் சிக்கல், எதிர்பார்ப்புடன் வெளியீடு, விமர்சன சர்ச்சைகள், விருதுகள், அங்கீகாரங்கள்... என 'தங்கமீன்கள்’ இன்று வரை செய்திகளில் ஸ்க்ரோல் அடித்துக்கொண்டிருக்க, அதற்குள் 'தரமணி’யில் பெரும் தூரத்தைக் கடந்துவிட்டார் ராம். 'தரமணி’ என்ற பெயரும் 'யோயோ பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’ டீஸர்களும் 'ஐ.டி. இளைஞர்கள் பற்றிய படமோ?!’ என்று எழுப்பும் சந்தேகத்தை முதல் வரியிலேயே மறுக்கிறார் ராம்.
http://img.vikatan.com/av/2014/06/mqytji/images/p10d.jpg''ஆனா, 'தரமணி’னா ஐ.டி, ஐ.டி-யும் சார்ந்ததும்னுதானே நினைவுக்கு வரும்?''
''சார்ந்ததும்னு சொல்றீங்களே... அதுதான் உண்மையான தரமணி! ஐ.டி. அடையாளங்கள், இப்போ கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு வந்தது. ஆனா தரமணி, பல நூற்றாண்டுகளா அங்கேயேதான் இருக்கு. சென்னையில் தென் சென்னைக்கும், வட சென்னைக்கும் தனித்தனி அடையாளங்கள் இருக்கும். அதே மாதிரி தரமணியையும் பிரிக்கலாம். ஐ.டி. கட்டடங்கள் இல்லாத தரமணியில், வட தமிழகத்தின் பூர்வ குடிகள் இருக்காங்க. அங்கே காடு, ஏரி, குளம், மலை, வயல், கிராமம், பேக்வாட்டர் எல்லாம் இருக்கு. வட இந்தியாவில் இருந்து வந்து கூலி வேலை பார்க்கும் பீகார், ஒடிசா, மிசோரம் மாநில நண்பர்கள் இண்டு இடுக்குகள்ல ஆயிரக்கணக்கில் குடியிருக்காங்க. பல்லவர்களோட வரலாற்று மிச்சங்கள் இன்னும் இருக்கு. மீனவர்கள் இருக்காங்க. அவங்களுக்கு நடுவுல மூணாவது மாடிக்கு ரெண்டு கோடி கொடுத்து 'ஸீ வியூ ஃப்ளாட்’ல குடியிருக்கிற வசதியானவங்களும் இருக்காங்க. இவர்கள்... இவைக்கு மத்தியில் நடக்கிற கதைதான் 'தரமணி’. படத்தில் ஐ.டி. துறை இருக்குமே தவிர, அது மட்டுமே படம் கிடையாது. ஆண்ட்ரியா, வசந்த் ரவி இடையிலான காதல்தான் படத்தின் பேசு பொருள்!''
'' 'கற்றது தமிழ்’ல தமிழ் பட்டதாரிகளை சென்னை துரத்தியடிக்கிறதைச் சொன்னீங்க... 'தரமணி’யில் பளபளக்கும் சென்னையின் மற்றோர் உண்மையான முகத்தைக் காட்டுறேன்னு சொல்றீங்க. சென்னை மேல் உங்களுக்கு என்ன கோபம்?''
''கோபம் இல்லைங்க. சென்னைதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். இதுதான் எனக்கு எல்லாமே கொடுத்தது. ஆனா, சென்னை, மும்பை போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்குனு பிரத்யேகக் குணங்கள் இருக்கு. அது தனது அடையாளத்தை மாத்திட்டே இருக்கும். சென்னையின் பிரமாண்டத்தால் ஈர்க்கப்பட்டு வர்றவங்க, அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தங்கள் உழைப்பைச் செலவிடுவாங்க. அவங்களை அரவணைச்சுக்கிற சென்னை, அதுக்கு முந்தைய தலைமுறையை தனக்கு வெளியே கொண்டுபோயிடும். இப்படி குடியிருப்புகளும் குடியிருக்கும் மனிதர்களும் மாறிக்கிட்டே இருப்பது, சென்னை மாதிரியான நகரங்களின் பிரத்யேகக் குணம். அதை நாம் குற்றம்னு சொல்ல முடியாது. அதே சமயம் அதனால் பாதிக்கப்படுறவங்களோட வலியைப் பேசாமல் இருக்க முடியாதே!''
http://img.vikatan.com/av/2014/06/mqytji/images/p10.jpg
''சும்மா ஒரு காதல் கதைங்கிறதுக்காக ஆண்ட்ரியா இந்தப் படத்துல நடிக்க வந்திருக்க மாட்டாங்க. அவங்களை எப்படிச் சம்மதிக்கவெச்சீங்க?''
'' 'தங்கமீன்கள்’ ரிலீஸுக்காகக் காத்துட்டு இருந்த நாள்களில் 'தரமணி’க்கான ஒன்லைன் மட்டும் என்கிட்ட இருந்தது. அந்தக் கதைக்கு சூப்பர் ஸ்பெஷல் ஹீரோயின் தேவைப்பட்டாங்க. அதை மனசுல வெச்சுக்கிட்டு ஆண்ட்ரியாகிட்ட ஒரு காபி ஷாப்ல இந்தக் கதையைச் சொன்னேன். '10 நிமிஷக் கதைதான் என்கிட்ட இருக்கு. நீங்க நடிக்கிறதா இருந்தா சொல்லுங்க... மேல டெவலப் பண்றேன். படத்துக்கு தயாரிப்பாளர் யாரு, உங்க சம்பளம் என்ன, எப்போ ஷூட்டிங் போவோம்... எதுவுமே இப்போ எனக்குத் தெரியாது. ஆனா, நீங்க ஓ.கே. சொன்னா இந்தப் படம் பண்ணலாம்’னு சொன்னேன். அப்போ ஆண்ட்ரியா சொன்ன 'யெஸ்’தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் கியர்.
ஆண்ட்ரியா கொஞ்சம் ஸ்பெஷல். ஸ்க்ரிப்ட்ல இருந்து டயலாக் டெலிவரி வரை யோசிக்கிற நடிகை. தமிழ் தெரிஞ்ச பொண்ணு. அவங்களுக்குனு இருக்கிற இமேஜ், படத்துக்கு பெரிய ப்ளஸ். அதுக்கு நேரெதிரா எந்த இமேஜும் இல்லாத ஒரு ஹீரோ தேவைப்பட்டான். ஏன்னா, அவன் செய்யும் சில விஷயங்களை எந்த முன்தீர்மானமும் இல்லாமல் பார்க்கணும். அந்த கேரக்டருக்கு வசந்த் பர்ஃபெக்ட் ஃபிட்!'
http://img.vikatan.com/av/2014/06/mqytji/images/p10b.jpg
''ஒவ்வொரு படத்திலும் யுவன்கிட்ட இருந்து ஒரு மாஸ்டர் பீஸ் டியூன் எப்படிப் பிடிக்கிறீங்க?''
''அது திட்டம் போட்டு நடக்கிறது இல்லை. எனக்கு மியூசிக் தெரியாது. ஆனா, யுவனுக்கு ஸ்க்ரிப்ட் தெரியும். அதனால் அந்த மூடுக்கு என்ன தேவைனு அவரே தீர்மானிச்சு ப்ளே பண்ணிடுவார். நான் கடைசி ஆளா கேப்பேன். பிடிச்சிருக்கும். அவ்வளவுதான். அது எத்தனை அற்புதமான மெலடியா இருந்தாலும், அரை மணி நேரத்துக்குள் நா.முத்துக்குமார் பாட்டு எழுதிடுவார். ரெண்டும் சேர்ந்தா, அது மேஜிக் ஆகிடுது. இந்தப் படத்துல இன்னொரு ஸ்பெஷல், தேனி ஈஸ்வரின் கேமரா. கேண்டிட் ஷாட்களையே உலகத் தரத் துல்லியத்தில் கொடுக்கக்கூடிய ஆளு. இந்தப் படத்துக்கு அப்புறம் இவரை அநேகமா இந்தி சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போயிருவாங்க!''
''தங்கமீன்களுக்கு முன், தங்கமீன்களுக்குப் பின்... ராமிடம் என்ன வித்தியாசம்?''
''பெரிய வித்தியாசம் எதுவும் நான் உணரலை. ஆனா, பொறுமையா இருந்தா நமக்கு நடக்க வேண்டிய நல்லதோ, வெகுமதியோ கிடைக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன். பொறுமையின் அவசியத்தை அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். சட்சட்டுனு முன்னாடி எல்லாம் கோபம் வரும். இப்போ இந்தக் கோபம் அவசியமானு ஒரு சின்னக் கேள்வி தோணுது! அப்புறம் நம்ம படைப்புல குறைந்தபட்ச நேர்மை இருந்தாலும் போதும்... அதுக்கான நம்ம போராட்டம் வீண்போகாது!
இதை ஒரு புரிதலுக்காகத்தான் சொல்றேனே தவிர, நிஜ வாழ்க்கையில் ஆங்ரி யங் மேன் கேரக்டர் வாழணும்னு ஆசைப்படலை. அதனால, எங்கேயும் சண்டை போட்டுத்தான் ஒரு விஷயத்தை அடையணும்னு இல்லை. நாம பண்ற விஷயம் சரியா இருக்கிறப்ப, அதுக்காகக் குரல் கொடுக்கிறது தப்பு இல்லையே. என் படைப்புகள் அரசியல் பேசும். அது என் உரிமை!'
http://img.vikatan.com/av/2014/06/mqytji/images/p10a.jpg
''உங்க குரு பாலு மகேந்திரா இழப்பில் இருந்து மீண்டுட்டீங்களா?''
''அடிக்கடி போய் அவரைப் பார்க்க மாட்டேன். ஆனா, சில பிரச்னைகள், சில சந்தர்ப்பங்களின்போது அவர் பக்கத்தில் இருந்தா நல்லா இருக்குமேனு தோணும். சினிமா மொழியைத் தாண்டியும் என் வாழ்க்கையை டிசைன் பண்ணவர் அவர். 'உன் கோபத்தை விட்டுராத... எப்பவும் உனக்குள்ள அந்த ஆவேசத்தைத் தக்கவைச்சுக்கோ’னு சொல்லிட்டே இருப்பார். இப்பவும் பல சமயங்களில் அவரோட வார்த்தைகள்தான் என்னை ஓடவைக்குது. திடீர்னு மனசு அவரைத் தேடும். அப்போ மொபைலை எடுத்து அவர் நம்பருக்கு கால் பண்ண கை துடிக்கும். அந்த நிமிஷங்களைக் கடக்கிறதுதான் கஷ்டம்!'
''பாலுமகேந்திராவோட சினிமா லாங்வேஜ் ரொம்ப ஸாஃப்ட். தன் வரம்பு மீறி வீம்புக்குனு இயக்கின படம் 'நீங்கள் கேட்டவை’ மட்டும்தான்னு அவரே சொல்லியிருக்கார். ஆனா, அவர் பட்டறையில் இருந்து வந்த பாலா, ராம் போன்றவர்கள் அன்பு, பிரியத்தைக்கூட வயலென்ட்டா சொல்றீங்க... ஏன்?' ''ஒரு சினிமாவை எப்படி எடுக்கணும்னுதான் பாலு சார் சொல்லியிருக்காரே தவிர, எந்த சினிமாவை எடுக்கணும்னு சொல்லிக் கொடுத்தது இல்லை. கேமரா பொசிஷன், லைட்டிங், எடிட்டிங்னு ஒரு சினிமாவை மோல்டு பண்ணக்கூடிய பிட்ச் பத்தி பேசிட்டே இருப்பார். ஆனா, கதை-வசனம் பத்தி ரொம்ப விவாதிக்க மாட்டார். இன்னொரு விஷயம், எங்க எல்லாரையும்விட பாலுமகேந்திரா ரொம்ப ரௌத்ரமானவர். அவர் ஆசைப்பட்ட சினிமாவை கடைசி வரை அவரால் எடுக்க முடியலை. ஏன்னா, 'புலம் பெயர்ந்தவர்’ என்ற அடையாளம் இருந்ததால், உள்ளூரின் அரசியலை, சமூகச் சூழலை அவரால் முழு வீரியத்தோட படமாக்க முடியாத தயக்கம் இருந்தது. நாங்கள்லாம் இந்த ஊர் பசங்க. எதையும் துணிஞ்சு பேசலாம். அந்தத் தயக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, பாலு சாரின் அடையாளமே வேறயா இருந்திருக்கும்!''
balaajee
26th May 2016, 12:31 PM
"அப்துல் கலாமின் கனவு காணுங்கள் வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை” – இளையராஜா
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2016-05/26/full/1464242603-5466.jpg
ஈரோட்டில் இருக்கும் ‘தமிழ் இலக்கியப் பேரவை’ என்கிற அமைப்பு ஆண்டுதோறும் தமிழுக்கு தொண்டு செய்து வரும் தமிழறிஞர்களை தேர்ந்தெடுத்து அவரின் தமிழ்ச் சேவையை பாராட்டி தமிழறிஞர் எஸ்.கே.எம். பெயரில் இலக்கிய விருதினை வழங்கி வருகிறது. இந்த இலக்கிய விருது சான்றிதழையும், இருபத்தைந்தாயிரம் ரூபாய் பொற்கிழியையும் உள்ளடக்கியது.
இந்த ஆண்டிற்கான எஸ்.கே.எம். இலக்கிய விருதை கவிஞர் மு.மேத்தாவிற்கு கொடுத்து கவுரவித்திருக்கிறது ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை.
ஐம்பதாண்டு பாரம்பரியமான ஈரோடு தமிழ் இலக்கிய பேரவையில் இதற்கு முன்பு ‘தமிழ்க் கடல்’ இராய.சொக்கலிங்கம், அ.ச.ஞானசம்பந்தம், பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன், கவிஞர் முடியரசன், அவ்வை துரைசாமி பிள்ளை, கி.வா.ஜெகநாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதன், ம.பொ.சிவஞானம், குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.
இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா ஈரோடு திண்டல் மலைப் பகுதியில் அமைந்திருக்கும் வேளாளர் மகளிர் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.
இசைஞானி இளையராஜா இந்த விழாவிற்கு தலைமையேற்று, கவிஞர் மு.மேத்தாவிற்கு எஸ்.கே.எம். இலக்கிய விருதினை வழங்கினார்.
இந்த விழாவில் இசைஞானி இளையராஜா பேசும்போது, “நான் அதிகம் படிக்காதவன். நான் எங்கு சென்றாலும் அங்குள்ள தவறுகளைத்தான் முதலில் பார்ப்பேன். எனவேதான் பல நிகழ்ச்சிகளுக்கு வருவதை நான் தவிர்க்கிறேன். நான் ஒதுங்கியிருப்பதையே விரும்புகிறேன். இருப்பினும் நான் செல்லும் இடங்களில் எல்லாவற்றையும் பார்த்தபடிதான் இருக்கிறேன்.
‘இந்த விழாவுக்கு நீங்கள் வர வேண்டும். உங்கள் கையால்தான் விருதைப் பெற்றுக் கொள்வேன். இல்லையென்றால் எனக்கு இந்த விருதே வேண்டாம்..’ என்று கவிஞர் மு.மேத்தா என்னிடம் மிகவும் கேட்டுக் கொண்டதால் அவருடைய விருப்பத்திற்காகவே இந்த விழாவுக்கு வந்தேன்.
ஒரு பாடலை கேட்கும்போது உங்கள் மனதில் ஒரு வேதியியல் மாற்றம் ஏற்படும். அது எவ்வாறு ஏற்படுகிறதென்று உங்களால் சொல்லவே முடியாது. அமைதியிலும், இசையிலும் இறைவன் இருக்கிறான். இறைவனின் சன்னதியில் நிற்கும்போது கிடைக்காத அமைதியைக் கொடுப்பது இசை.
நாம் பாட்டு கேட்கும்போது, பாடலுக்குள் நம் சிந்தனை நின்றுவிடும். சன்னிதானத்தில் நிற்கும்போதும், அங்கு ஏற்படும் அமைதியை நாம் வேறு எங்கும் பெற முடியாது. இதனால்தான், ‘இசையின் பயனே இறைவன்தான்’ என திருநாவுக்கரசர் கூறுகிறார். இறைவன் இசையாகவே இருக்கிறான்.
‘கற்றதலினால் ஆன பயன் இறைவனை தொழுவதே’ என திருக்குறள் சொல்கிறது. அப்படியானால் கல்லாதவன் கடவுளை தொழுவதால் பயனில்லையா..? அந்தக் குறளின் இறுதியில் ‘படித்தவனைவிட படிக்காதவனே மேல்’ எனக் கூறுகிறது. படித்தவன்தான், ‘கோவிலுக்குப் போக வேண்டாம்’ என்கிறான். எங்கிருந்தாலும் தொழு. அது உனக்கு பலன் தரும். அதைத்தான் கல்லாதவன் செய்து பலனைப் பெறுகிறான்.
‘அகர முதல’ என்பதில் ‘அ’ என்பது எழுத்து அல்ல. சத்தம் வடிவில் அரூபமாக இருக்கும் இறைவனைத்தான், அந்த ‘அ’ என்கிற எழுத்து குறிக்கிறது. சிந்தனை என்பது தெளிவோடு இருப்பதைக் குறிக்கவில்லை. சிந்தனை இல்லாதவனே தெளிவாக இருக்கிறான். குழப்பம் இருந்தால்தான் சிந்தனை ஏற்படும்.
மக்களால் ஈர்க்கப்பட்ட மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமை அபூர்வமாகத்தான் நான் பார்க்கிறேன். நடிகராக, அரசியல் தலைவராக இல்லாமல், குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட, அவருக்கு அஞ்சலி செலுத்தியதைப் பார்த்தேன். இது எனக்கு நிறைய விஷயங்களை உணர்த்தியது. ஆனாலும், அவரது ‘கனவு காணுங்கள்’ என்ற வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை.
தானாக வருவதுதான் கனவு. நாம் முயற்சித்து காண்பது கனவல்ல. நாம் காணும் கனவில் வரும் காட்சிகள் நிஜமல்ல. இருந்தாலும், கலாம் கூறிய நோக்கம் சிறந்தது என்பதுடன், உலக அளவில் நான்கு கோடி மாணவர்கள், இளைஞர்களை சந்தித்த பெருமைக்குரியவர் என்ற ரீதியில் எனக்கு அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு..” என்றார்.
balaajee
26th May 2016, 02:35 PM
Can This Flop Hero Bounce Back?
http://www.greatandhra.com/newphotos5/rayudu1464247537.jpgAt one point of time Tamil hero Vishal used to be very hot in Tollywood trade too. However a series of flops affected the Pandem Kodi hero’s market. Despite releasing most of his Tamil films in Telugu, Vishal is unable to get back on track.
Films like Pooja did okay, but couldn’t make an impact like Pandem Kodi. Vishal is coming up with Rayudu tomorrow. This is a dubbed version of Vishal’s recent Tamil release Marudhu, which has been doing well at the Tamil box office ever since it has hit the marquee.
It is an out and out mass masala film directed by Muthaiah. Sri Divya played the female lead. With Brahmotsavam turning out to be a huge flop and no notable Telugu releases in this weekend, Rayudu has a clear advantage.
However Vishal has to strike a chord with the masses as Rayudu. This is a great opportunity for him to bounce back and win back his lost market in Tollywood.
balaajee
26th May 2016, 04:29 PM
ஓகே கண்மணி 9...நானும் ரவுடிதான் 8... முழுமையான siima விருது பரிந்துரைப்பட்டியல்!
2016ம் ஆண்டுக்கான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கான siima விருதுகள் பரிந்துரைப் பட்டியல்கள் வெளியாகியுள்ளன.
அதில் தமிழுக்கான பரிந்துரைப் பட்டியல் பின்வருமாறு..
சிறந்த துணை நடிகர்:
ராஜ் கிரண் - கொம்பன்
பிரகாஷ்ராஜ் - ஓ காதல் கண்மணி
கருணாகரன் - இன்று நேற்று நாளை
சார்லி - கிருமி
நாசர் - உத்தம வில்லன்
சிறந்த துணை நடிகை:
ஆஷா சரத் - பாபநாசம்
லட்சுமி மேனன் - வேதாளம்
ராதிகா சரத்குமார் - தங்கமகன்
நித்யா மேனன் - காஞ்சனா 2
லீலா சாம்சன் - ஓகே கண்மணி
சிறந்த வில்லன்:
அருண் குமார் - என்னை அறிந்தால்
அரவிந்த்சாமி - தனி ஒருவன்
சுரேஷ் கோபி - ஐ
கார்த்திக் - அனேகன்
விஜய் ஏசுதாஸ் - மாரி
சிறந்த பாடலாசிரியர்:
வைரமுத்து - மலர்கள் கேட்டேன் (ஓ காதல் கண்மணி)
தாமரை - உனக்கென்ன வேணும் சொல்லு (என்னை அறிந்தால்)
விக்னேஷ் சிவன் - எனை மாற்றும் காதலே (நானும் ரவுடிதான்)
தனுஷ் - என்ன சொல்ல (தங்கமகன்)
சிறந்த இசையமைப்பாளர் :
ஹாரிஸ் ஜெயராஜ் - என்னை அறிந்தால்
அனிருத் - நானும் ரவுடிதான்
ஹிப் ஹாப் தமிழா - தனி ஒருவன்
ஏ.ஆர்.ரஹ்மான் - ஓ காதல் கண்மணி
ஜிப்ரான் - உத்தம வில்லன்
சிறந்த பின்னணிப் பாடகி:
ஷாஷா திரிபாதி - பறந்து செல்ல (ஓ காதல் கண்மணி)
சின்மயி - இதயத்தை ஏதோ ஒன்று (என்னை அறிந்தால்)
நீத்தி மோகன் - நீயும் நானும் (நானும் ரவுடிதான்)
கரிஷ்மா ரவிசந்திரன் - காதல் கிரிக்கெட் (தனி ஒருவன்)
ஸ்வேதா மோகன் - என்ன சொல்ல (தங்கமகன்)
சிறந்த பின்னணிப் பாடகர்:
அனிருத் - தங்கமே (நானும் ரவுடிதான்)
கார்த்திக் - ஏய் சினாமிகா (ஓகே கண்மணி)
பென்னி தயாள் - உனக்கென்ன வேணும் சொல்லு( என்னை அறிந்தால்)
ஜி.வி.பிரகாஷ் குமார் - அன்பே அன்பே (டார்லிங்)
சித் ஸ்ரீராம் - என்னோடு நீ இருந்தால் ( ஐ)
சிறந்த நகைச்சுவை நடிகர்:
கோவை சரளா - காஞ்சனா 2
ஆர்.ஜே பாலாஜி - நானும் ரவுடிதான்
சதிஷ் - தங்கமகன்
சந்தானம் - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
யோகி பாபு - காக்கா முட்டை
சிறந்த அறிமுக நடிகை:
அமைரா தஸ்தூர் - அனேகன்
கீர்த்தி சுரேஷ் - இது என்ன மாயம்
ராதிகா பிரசித்தா - குற்றம் கடிதல்
தீபா சன்னதி - எனக்குள் ஒருவன்
சுஷ்மா ராஜ் - இந்தியா பாகிஸ்தான்
சிறந்த அறிமுக நடிகர்:
சண்முக பாண்டியன் - சகாப்தம்
ஜி.வி.பிரகாஷ் குமார் - டார்லிங்
சாய் ராஜ்குமார் - குற்றம் கடிதல்
தர்புகா சிவா - ராஜதந்திரம்
வருண் - ஒரு நாள் இரவில்
சிறந்த அறிமுக இயக்குநர்:
அனுசரண் - கிருமி
எம்.மணிகண்டன் - காக்கா முட்டை
பிரம்மா ஜி - குற்றம் கடிதல்
அஸ்வின் சரவணன் - மாயா
ரவிக்குமார் - இன்று நேற்று நாளை
சிறந்த நடிகை
நித்யா மேனன் - ஓகே கண்மணி
நயன்தாரா - நானும் ரவுடிதான்
ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை
ஜோதிகா - 36 வயதினிலே
எமி ஜாக்சன் - ஐ
சிறந்த நடிகர்:
தனுஷ் - அனேகன்
விக்ரம் - ஐ
ஜெயம் ரவி - தனி ஒருவன்
ராகவா லாரன்ஸ் - காஞ்சனா 2
விஜய் சேதுபதி - ஆரஞ்சு மிட்டாய்
சிறந்த இயக்குநர் :
விக்னேஷ் சிவன் - நானும் ரவுடிதான்
எம்.ராஜா - தனி ஒருவன்
மணிரத்னம் - ஓ காதல் கண்மணி
கே.வி.ஆனந்த் - அனேகன்
கௌதம் வாசுதேவ் மேனன் - என்னை அறிந்தால்
சிறந்த படம்:
காக்கா முட்டை
தனி ஒருவன்
ஐ
ஓகே கண்மணி
நானும் ரவுடிதான்
இவற்றில் ஓகே கண்மணி 9 பிரிவுகளிலும், நானும் ரவுடிதான் 8 பிரிவுகளிலும், என்னை அறிந்தால் 6 பிரிவுகளிலும் என பரிந்துரைப் பட்டியல்களில் அதிக இடங்களைப் பிடித்துள்ளன.
balaajee
26th May 2016, 05:34 PM
NEW VILLAN IN TOWN
’நாஞ் சொல்றேன்ணே... விஷால் அரசியலுக்கு வரமாட்டாப்ல!’ - ‘ரோலக்ஸ்’ ஆர்.கே.சுரேஷ்
'என்னா மருது.. நீந்தான ச்சொன்ன? அடிக்கறதுல மூணு ரகம். ஒண்ணு - பேசறதுக்கு முன்னாடி அடிக்கறது. ரெண்டு - பேசிட்டிருக்கும்போதே அடிக்கறது. மூணு... பேசவிட்டு அடிக்கறது. இதுல மருது மொதொ ரகம்னா ரோலக்ஸு மூணாவது ரகம்” என்று மதுரை பாஷையில் மிரட்டி, ‘ரோலக்ஸ் பாண்டியனா’க கண்களில் வெறிமின்ன வில்லத்தனத்தில் கலக்கிய ஆர்.கே.சுரேஷுக்கு, இது இரண்டாவது படம். தாரை தப்பட்டை (http://www.vikatan.com/cinema/movie-review/57725-tharaithappattai-movie-review.art)யில் கருப்பையாவாக அறிமுகமான இவர், வில்லன் க்ளப்பிற்கு புதுவரவு.
‘என்னை மொதல்ல ஃபோட்டோ ஷூட் எடுத்தது சங்கிலி முருகன் அங்கிள்தான். காலேஜ்க்கு முன்னாலயே நான் கேரளாபோய் ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்து நடிப்பு கத்துகிட்டேன். ‘பவர் ஃபாஸ்ட்’ மாஸ்டர்கிட்ட ஃபைட்டிங் கத்துகிட்டேன். நடனம் மூணு மாஸ்டர்கள் கிட்ட கத்துகிட்டிருக்கேன்.
புதுப்பேட்டைல அடியாட்கள்ல ஒருத்தரா நடிக்க வாய்ப்பு வந்துச்சு. கொஞ்சம் பெரிய வேஷமா இருந்தா பரவால்லைன்னு அத மிஸ் பண்ணிட்டேன். இப்பவும் செல்வராகவன் அண்ணன் படம் கூப்டா கண்டிப்பா நடிப்பேன். சாட்டைல ஆரம்பிச்சு, பல படங்கள் விநியோகஸ்தரா இருந்தேன். அப்பறமா சலீம் படம் தயாரிச்சேன். இப்ப விஜய் சேதுபதி நடிப்புல ‘தர்மதுரை’ தயாரிப்புல போய்ட்டிருக்கு. பரதேசி விநியோகஸ்தரா இருந்தப்ப பாலா அண்ணன்கிட்ட கேட்டு, அவர்மூலமாத்தான் தாரை தப்பட்டைல அறிமுகமானேன்’ என்றவரிடம் தொடர்ந்து உரையாடியபோது..
ரெண்டே படத்துல போஸ்டர் ஒட்ற அளவுக்கு ரசிகர்கள். இது தானா சேர்ந்த கூட்டமா...
(கேள்வியை முடிக்கும் முன் இடைமறிக்கிறார்) காசு குடுத்தெல்லாம் சேர்க்கலைண்ணே. எமக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். எங்கப்பா அப்பவே முரளியை வெச்சு படம்லாம் தயாரிச்சவரு. ஊர்ல யாருக்கு எதுன்னாலும் ஹெல்ப் பண்றவரு. பேரே “ ‘வள்ளல்’ களஞ்சியம்”தான். அவர் பையன் சினிமால வந்திருக்கேன்னதும் கொண்டாடுறாங்க பசங்க. நானும் வேணாம்டானு சொல்லிப்பாத்துட்டேன். கேட்டாய்த்தானே. இதெல்லாம் கூட பரவால்ல.. அன்னதானம், திருவிழான்னு ஊரே களை கட்டிருக்கும். இவங்க துப்பாக்கியோடல்லாம் என் ஃபோட்டோ போட்டு பேனர் வைப்பாய்ங்க. கலெக்டர் வந்து ‘யார்ரா இவன்’ன்னு கேட்டதெல்ல்லாம் நடந்திருக்கு. என்னமோ போண்ணே.. சந்தோஷமா இருக்கேண்ணே..
“யாருக்கு வில்லனா நடிக்க ஆசை?”
தல அஜித் அண்ணனுக்குத்தான். அவருகூட வில்லனா நடிக்கணும்னு ரொம்ப ஆசை. காத்துகிட்டிருக்கேன்.
நம்பியார் / பிரகாஷ்ராஜ் / ரகுவரன்..?
இவங்க பாதிப்பு இல்லாம வில்லனா பண்றதெல்லாம் சாத்தியமே இல்ல. ரோகிணி அக்கா கூப்டப்ப நான் சொன்னேன். ‘தாரை தப்பட்டை’ல ரகுவரன் ரெஃபரன்ஸ் பண்ணிருப்பேன். சான்ஸே இல்லை. இப்பவும் எங்ககூட வாழ்ந்துட்டிருக்காங்க. நான்லாம் இவங்கள மாதிரி மிமிக்ரி பண்ணுவேன். பிரகாஷ்ராஜ் டூயட் லேர்ந்து கோ-2 வரைக்கும் விடாம பார்த்திருக்கேன். யார் ஷாட்ல இருந்தாலும் இவரு உள்ள வந்தா தூக்கிச் சாப்டு போய்ட்டே இருப்பார். நம்பியார் ஏற்கனவே சொல்லிட்டேன். இவங்கள்லாமே ஒரு டிக்*ஷ்னரி மாதிரி. காலத்துக்கும் ரெஃபர் பண்ணிட்டே இருக்கலாம்.
http://img.vikatan.com/cinema/2016/05/26/images/RKSuresh.jpg
வில்லனுக்கெல்லாம் வில்லன் ராதாரவி. நீங்க அவருகிட்டயே வில்லத்தனத்த காட்னீங்க. எப்டி இருந்துச்சு செட்ல?
அவரா வில்லன்? நீங்க வேற. ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ்னா என்னான்னு அவர்கிட்ட கத்துக்கணும். ஆனா ஸ்கிரீனுக்கு வெளில எப்டி நடந்துக்கறதுன்னு நான் அவர்கிட்ட கத்துகிட்டேன். மருது ‘செட்’டுக்கு வந்தாலே, டைரக்டர் கிட்ட போய் அவ்ளோ பணிவா வணக்கம் வெச்சுட்டுதான் வருவார். எத்தனை படம். எத்தனை பேரப் பாத்தவரு. கேட்டா ‘ஒரு டைரக்டர்தாண்டா நாம ஸ்க்ரீன்ல எப்டி தெரியறோம்’ங்கறதுக்கு எல்லாமே. அவர் நினைச்சாதான் எல்லாமே நடக்கும். அவருக்குண்டான மரியாதைய நாம குடுத்தே ஆகணும்’ங்கறார். இப்படி அவர்கூட இருந்த நாளெல்லாம் டெய்லி ஒரு பாடம் படிச்சேன்.
நடிகர் சங்க செயலாளர் விஷால் என்ன சொல்றாரு?
மொதல்ல விஷால் எனக்கு ‘ஹாய் பாய்’ ஃப்ரெண்ட்தான். ஆனா மருதுல கல்யாண மண்டபம் சீன். ‘அவன் ஏன் மாத்தணும்??”ன்னு சொல்லிட்டே நான் ஸ்கிரீனுக்கு நான் வரணும். கல்யாணத்துக்குள்ள என்டர் ஆகி படபடன்னு சிங்கிள் ஷாட், சிங்கிள் டேக்ல பண்ணிட்டு வெளில வந்துட்டேன். ‘அப்பத்தா.. பத்திரம்’ன்னு மிரட்டிட்டு டைரக்டர் ‘கட்’ சொன்னதும் விஷால் கேரவனுக்குள்ள கூப்டு பேசினார். ‘அடேய் சண்டாளா.. என்னடா இப்டிப் பண்ற! கண்லயே நிக்குதுடா.. பாலா படத்துல அப்டிக் காமிச்சுட்டாரு அடுத்து என்ன பண்ணப்போறான்’ன்னு நெனைச்சேன். நீ வேற லெவல்ல இருக்கடா’ன்னு பாராட்டினார்ணே. ஒரு நடிகனா ரெண்டாவது படம் பண்ற எனக்கு இதைவிட என்ன வேணும்!
விஷால் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்தானே? அவர் அரசியலுக்கு வந்துடுவார் போலயே..
(பலமாக சிரிக்கிறார்) விஷால் பண்ற பல உதவிகள் வெளில பல பேருக்கு தெரியாது. இப்ப ப்ளஸ் டூ ரிசல்ட் வந்திருக்கு. புக்ஸ், நோட் வாங்க க்யூவுல நிப்பாங்க அவர் ஆஃபீஸ்ல. ஆனா எல்லாமே ‘எதாச்சும் நல்லது பண்ணுவோம் மச்சி’ங்கற மாதிரிதான். மத்தபடி அவரு அரசியலுக்கெல்லாம் வர சான்ஸே இல்ல. மத்தவங்க சொன்னா நம்ப மாட்டீங்க. எனக்கொண்ணுன்னா வந்து நிக்கறவரு விஷால். அவ்ளோ நல்ல ஃப்ரெண்ட், நானே சொல்றேன். போதுமா?
http://img.vikatan.com/cinema/2016/05/26/images/RKSureshLowRes.jpg
வசன உச்சரிப்பும் உங்க ஸ்பெஷாலிட்டிதான். அதப்பத்தி யாரும் சொல்லிருக்காங்களா?
நான் படிச்சதெல்லாம் இங்க்லீஷ் கான்வென்ட். ஆனாலும் ரத்தத்துல இருக்கற மொழி போகுமாண்ணே? அதான் விடாம இருக்குது. தமிழ் புத்தகங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். நான் மதுரைல இருந்ததால அந்த ஃப்ளோ கரெக்டா வந்துடுச்சு. ரெண்டு மாசம் கோண வாயா ‘என்னா பண்ற?’ன்னு பேச டிரை பண்ணினேன். படம் முடிஞ்சு, தாடி எடுத்தப்ப ஃப்ரெண்ட்ஸ்லாம் ‘டேய் நீ பேசறப்ப வாய் கோணுதுடா’னாங்க. மாத்தறதுக்குள்ள மெனக்கெட்டுட்டேன். மிமிக்ரிலாம் கொஞ்சம் பண்ணுவேன். அதுனால வசன உச்சரிப்பு கொஞ்சம் சுலபமா கை வந்துடுச்சு.
அடுத்த ப்ராஜக்ட்ஸ்?
தாரை தப்பட்டை கருப்பையாவுக்கு கெடச்ச பேரை, மருது ரோலக்ஸ் பாண்டியன் தக்க வெச்சிருக்கான். அதே மாதிரி, பேசப்படற கதாபாத்திரம்னா நான் ரெடியா இருக்கேன். சிக்ஸ் பேக் வைக்கணுமா, தாடி வைக்கணுமான்னு எதுனாலும் சரி. ரெண்டு மூணு ப்ராஜக்ட்ஸ் பேசிட்டிருக்காங்க. இன்னும் முடிவாகலை.
பேட்டி முடித்து கீழே வந்து அவர் டிராக்டரிலோ, ராயல் என் ஃபீல்டிலோ போவார் என்றுதான் எதிர்பார்த்தோம்.
அவர் Posrshe கார், 1314ல் பறந்தார். ஆனால் அப்போதும் கண்ணாடியை இறக்கிவிட்டு ‘டிராப் பண்ணணுமாண்ணே?’ என்றார்.
பாசக்காரபய தான் சார் சுரேஷ்!
balaajee
27th May 2016, 11:20 AM
Mahesh - Murugadoss Film Launch In July
Director A R Murugadoss has finished the script and pre-production work for his ambitious project with Mahesh Babu. The movie will be made in Telugu and Tamil languages simultaneously but till now the producers have not announced the project to the media officially.
According to our sources, producer N V Prasad and Tagore Madhu along with Murugadoss will be addressing the media next month to announce the movie's details and cast and crew will also be revealed on the stage.
Mahesh Babu will not be attending the event but he will grace the muhurtham launch which will be held in July and there after the regular shoot will commence in Chennai.
Touted to be costliest movie in Tollywood after "Baahubali", the action adventure features Parineeti Chopra as heroine. Harris Jayaraj has already composed couple of songs, while Ravi Varman has been roped in to handle the cinematography.
balaajee
27th May 2016, 11:24 AM
திருட்டு பயலே பார்ட் 2 - ரீ என்ட்ரியாகும் சுசிகணேசன்
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனரான சுசி கணேசனின் வரவும், மணிரத்னம் ஸ்கூல் என்ற கவுரவமும் சிறப்பாகவே அமைந்தது.
http://media.webdunia.com/_media/ta/img/article/2016-05/27/full/1464327685-7373.jpg
திருட்டு பயலே படத்தின் வெற்றி அவரையே கொஞ்சம் திணறடிக்கச் செய்தது. அதன் பிறகு விக்ரமை வைத்து அவர் இயக்கிய அகலக்கால் படம்தான் பாதாளத்தில் தள்ளியது. அது என்ன அகலக்கால் படம்? கந்தசாமி படத்தைத்தான் சொல்கிறோம்.
அந்தப் படத்தை விமர்சகர் ஞாநி கிழிக்க, பதிலுக்கு சுசி கணேசன் ஞாநியை கடுப்படிக்க, படமும் ப்ளாப்பாக, மும்பைக்கு வண்டியேறினார் சுசி. திருட்டு பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்வதுதான் நோக்கம். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்தார். ஆனால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வேண்டுமே?
மும்பை இனி தேறாது என்ற நிலையில் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். திருட்டு பயலே இரண்டாம் பாகம்தான் சுசியின் டார்கெட். கதை ரெடி. ஆனால், ஆர்யா உள்பட எந்த ஹீரோவும் சுசியின் ரயிலுக்கு தலை கொடுக்க தயாரில்லை.
பேசாம திருட்டு பயலேயில் நடித்த ஜீவனையே முயற்சி பண்ணலாமே.
balaajee
30th May 2016, 05:53 PM
தாமதமாகும் பாலாவின் அடுத்த படம் - Tamil HINDU
'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் எனத் தெரிகிறது. 'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறும் போதே விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோர் நடிக்கும் படத்தை அடுத்து இயக்கவிருப்பதாக பாலா அறிவித்தார். பல்வேறு முன்னணி நாயகர்கள் இணைவதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது.
'குற்ற பரம்பரை' படத்தை பாலா எடுக்கவிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா - இயக்குநர் பாலா இருவருக்குமே வார்த்தைப் போர் உண்டானது. இதில் எழுத்தாளர் ரத்தினகுமாரும் பாலா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். "தான் எடுக்கப் போகும் கதை 'குற்ற பரம்பரை' இல்லை. வேறு ஒரு கதை" என்று பாலா விளக்கம் அளித்தார்.
பாலாவின் மும்முரமான அறிவிப்பால், படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், தற்போது 2017 ஜனவரியில் தான் படப்பிடிப்பு தொடங்கப்படும் என விஷால் தெரிவித்திருக்கிறார்.
'மருது' படத்தைத் தொடர்ந்து 'கத்தி சண்டை' படத்தில் நடித்து வருகிறார் விஷால். அப்படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் 'துப்பறிவாளன்' படத்திலும், 'டெம்பர்' ரீமேக்கிலும் இந்தாண்டு நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.
இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் பாலா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஷால்.
balaajee
31st May 2016, 01:56 PM
தணிக்கை குழுவுக்கு தடை விதிக்க நடிகை நந்திதா தாஸ் கோரிக்கை
தணிக்கை குழுவை கலைக்க வேண்டும் என்று பிரபல நடிகை நந்திதா தாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2016-05/31/full/1464679473-5522.jpg
இது குறித்து, பிரபல நடிகை நந்திதா தாஸ் கூறுகையில், சினிமா என்பது மக்களுக்கானது. அதில் பொழுதுபோக்கு மட்டுமே நல்ல விழிப்புணர்வு தகவல்களும் உள்ளது. ஆனால், சினிமா படங்களுக்கு தணிக்கை குழுவில் சான்று பெறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது.
ஒரு படத்தை உலகம் முழுவதும் 200 கோடி இந்தியர்கள் பார்க்கிறார்கள். ஒரு படம் எனக்கு பிடிக்கும் படம், அடுத்தவருக்கு பிடிக்காது. இப்படி பலரது விருப்பங்கள் மாறுபடும்.
ஒரு படத்துக்கு என்ன சான்று அளிப்பது என்று தணிக்கை குழுவில் உள்ள 5 பேர் மட்டுமே முடிவு செய்வது சரியா அல்லது நியாயமா என தெரியவில்லை. ஆகவே, தணிக்கை குழுவை தடை செய்யலாம். அதற்கு பதில் ரேட்டிங் முறை கொண்டுவரலாம். எனவே, நல்ல படமா? இல்லையா? என்பதை மக்கள் மட்டுமே முடிவு செய்யவேண்டும் என்றார்.
balaajee
31st May 2016, 03:47 PM
தமிழ் சினிமாவில் சம்பளம் தராத இயக்குனர்கள் - மிஷ்கின், பாலா மற்றும் பலர்
தமிழ் சினிமாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்று, சம்பளம். வியாபாரம் உள்ள நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தை தர தயங்காதவர்கள் உதவி இயக்குனர்கள் போன்றவர்களுக்கு அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியத்தில் ஒரு சதவீதத்தைகூட தர முன்வருவதில்லை.
அறம், உழைப்பு, உன்னதம், கலை, மக்கள் என்று தொண்டை கிழிக்கும் இயக்குனர்கள்தான் இதுபோன்ற சின்னச் செயல்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
வாயை திறந்தால் மக்கள் உரிமை என்று முழக்கமிடும் தங்கர் பச்சான் தனது உதவி இயக்குனர்களுக்கு சரிவர சம்பளம் தருவதில்லை. தயாரிப்பாளர் உதவி இயக்குனர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்திலும் கணிசமான பகுதியை தங்கர் எடுத்துக் கொள்வார்.
இயக்குனர் சேரன் தனது படத்தை தயாரிக்கவே ஆளில்லாத நிலையில், ரோகிணி இயக்கிய அப்பாவின் மீசை படத்தை தயாரித்தார். கொல்கத்தாவில் நடந்த படப்பிடிப்பில், அங்குள்ள கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு பைசா பாக்கியில்லாமல் சம்பளத்தை செட்டில் செய்தவர் தமிழகத்திலிருந்து அழைத்து செல்லப்பட்ட கலைஞர்களுக்கு இன்றுவரை பாக்கி வைத்துள்ளார். உதவி இயக்குனர்கள் நிலைபற்றி சொல்ல வேண்டியதில்லை.
காசு கேட்கும் போதெல்லாம், நான் எவ்ளோ பெரிய விஷயத்துக்காக போராடிகிட்டிருக்கேன். அது தெரியாம காசு கேட்கிறீங்களே என்று உதவி இயக்குனர்களை அர்ச்சித்திருக்கிறார். சினிமா டூ ஹோம் என்ற சேரனின் செல்லுபடியாகாத திட்டத்தைதான் அவர் போராட்டம் என்று வர்ணித்தது. நீங்க போராடுறதுக்காக மத்தவன் கூலியில்லாமல் வேலை பார்க்கணுமா என்ன.
மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வேலை பார்த்த உதவி இயக்குனர் இதுபோன்ற குற்றச்சாட்டை இணையத்தில் முன் வைத்துள்ளார். அவர் பெயர் ஸ்ரீகணேஷ்.
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் உழைப்பு மிகப்பெரியது. அந்த படத்தின் கதை ஆரம்பத்திலிருந்து, Pre production, பல பொருளாதார நெருக்கடிகளில் நடந்த படப்பிடிப்பு, எல்லாவற்றிலும் உதவி இயக்குநர்கள் இரவு பகலாக உழைத்தோம். நரேஷ், பாலாஜி, சீனிவாசன் மூவரும் கதை விவாதத்தில் நிறைய பங்கெடுத்தனர். நரேஷ் வேலைப்பளுவால் ஆஸ்பத்திரியில் 1 வாரம் கிடந்தார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதையை மிஷ்னின் எழுத, முழுக்க தமிழில் தட்டச்சு செய்தது நான்.
படம் ரிலீஸுக்கு பின் நடந்த வெற்றி விழாக்கள் துவங்கி இந்த திரைக்கதை புத்தக வெளியீட்டு விழா வரை எங்கள் யாருக்குமே அழைப்பு இல்லை (சம்பளம் தரவில்லை என்பது தனிக்கதை). கமர்ஷியல் சினிமா என்றாலும் மாற்று சினிமா என்றாலும் வண்ண விளக்குகளுக்கு பின் சினிமாவில் உதவி இயக்குநர்கள் போன்ற உதிரி தொழிலாளர்களின் நிலை இது தான்" என்று ஸ்ரீ கணேஷ் வருத்தப்பட்டிருக்கிறார்.
இந்த பஞ்சாயத்து நிலுவையில் இருக்கையில், நான் கடவுள் படத்தில் நடித்த மாற்றுத் திறனாளி பெண், ஒன்பது மாதங்கள் பாலா படத்தில் பணிபுரிந்ததற்கு அவர் சம்பளமே தரலை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். வாட்ஸ் அப்பில் அப்பெண் சாந்தியின் வீரியோ வைரலாகி வருகிறது. தற்போது பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திவரும் சாந்தியின் குற்றச்சாட்டுக்கு இன்னும் பதில் வரவில்லை.
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியே என் தோள் ஒடிஞ்சுப் போச்சி என்று கதைவிடும் அறச்சீற்ற இயக்குனர்கள்தான் இப்படி அடிமட்டத்தில் உள்ளவர்களின் வயிற்றில் கை வைக்கிறார்கள். கலையே சரணம் என்று சாஷ்டாங்கமாக கிடக்கும் வசந்தபாலன் தனது உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தையில் திட்டுவதைப் பார்த்தால் யாருக்கும் குமட்டிக் கொண்டு வரும்.
கலைக்காகவே உயிர் வளர்ப்பதாக நாடகமாடும் இவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
balaajee
31st May 2016, 05:32 PM
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாவாரா சாய்பல்லவி!
http://img.vikatan.com/cinema/2016/05/31/images/saipallavi.jpgஇசையமைப்பை ஓரங்கட்டிவிட்டு, ஹீரோயிஸத்தில் குதித்திருக்கும் ஜி.வி.பிரகாஷூக்கு அடுத்தடுத்து படங்களின் ஷூட்டிங், ரிலீஸ் என்று படு பிஸியில் இருக்கிறார்.
டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா படங்களைத் தொடர்ந்து பென்சில் படமும் சமீபத்தில் ரிலீஸானது. அடுத்ததாக “ எனக்கு இன்னொரு பேர் இருக்கு” படத்தின் படப்பிடிப்பு முடிந்து, நாளை டிரெய்லரும் ரிலீஸாகவிருக்கிறது. தொடர்ந்து புரூஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் நடித்துவருகிறார்.
இந்தப் படங்கள் முடியும் நிலையில், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது ஹைலைட்! இப்படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆனால் இப்படத்திற்கான நாயகி யாரென்பதே இன்றைய லேட்டஸ்ட் டாபிக். பிரேமம் படத்தில் மலர்டீச்சராக வந்த சாய்பல்லவி (http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/61491-permam-actress-malar-aka-sai-pallavi-hot-dance.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1)யிடம் தான் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் உறுதியான தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
balaajee
31st May 2016, 06:24 PM
"தம்" அடிக்காதீங்க தம்பிகளா.. டி.ஆர். வேண்டுகோள்
சென்னை: சென்னையில் இன்று புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த பேரணியில் லட்சிய திமுக தலைவரும், நடிகர் - இயக்குநருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.தனது வாழ்க்கையில் இதுவரை புகை பிடித்ததில்லை என்று கூறிய அவர் இளைஞர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். View Photosஇன்று புகையிலை எதிர்ப்பு தினமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன. பாஜக சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் இன்று இப்பேரணி நடைபெற்றது.அதில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது டி.ராஜேந்தர் பேசுகையில், நான் இதுவரை சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தியது கிடையாது. இங்கே நான் கட்சி மற்றும் கொள்கையை பார்த்து வரவில்லை. கையில் எடுத்துள்ள குறிக்கோளை பார்த்து வந்தேன்.கொடியின் வண்ணத்தை பார்த்து வரவில்லை. நல்ல எண்ணத்தை பார்த்து வந்தேன். கொடியை பார்த்து வரவில்லை - நல்ல கொள்கையை பார்த்து வந்தேன். இளைஞர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
balaajee
1st June 2016, 10:31 AM
‘ஊமை விழிகள்’ புகழ் ஆபாவாணனுக்கு ஐந்து ஆண்டு சிறை
செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஆபாவணனுக்கு நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
http://media.webdunia.com/_media/ta/img/article/2016-05/31/full/1464696591-2358.jpg
தமிழ் சினிமாவில் ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆபாவாணன். இவர் 1999ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் காசோலை செலுத்தி பணம் பெறுவதில், வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது அதன் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், வங்கி தலைமை மேலாளர் மற்றும் உதவி மேலாளருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், ஆபாவாணனுக்கு ரூ.2.40 கோடி அபராதமும், மேலாளருக்கு ரூ.15 லட்சமும், உதவி மேலாளருக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதித்து திர்ப்பளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
balaajee
1st June 2016, 11:44 AM
T. Rajendar joins BJP for social cause | World No Tobacco Day
https://www.youtube.com/watch?v=mDqg5hmmcv0
balaajee
1st June 2016, 11:46 AM
சிரிக்க வைத்த என்னை அழ வைக்கின்றனர்: வாட்ஸ்அப் வதந்தியால் நடிகர் செந்தில் வேதனை
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02876/senthil_2876836f.jpg மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த நடிகர் செந்தில் | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
எல்லோரையும் சிரிக்க வைத்த நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரப்பி அழ வைக்கின்றனர் என நடிகர் செந்தில் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருச்சியில் நடிகர் செந்தில் அதிமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தக வல் பரவியது. அதிர்ச்சி அடைந்த அவர், தான் நலமுடன் இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இதனால் கடும் மன உளைச்சலடைந்த அவர் நேற்று மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங் களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறேன். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு வந்தேன். அப்போது நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் மீண்டும் தகவல் பரவுவதாகக் கேள்விப்பட்டேன். வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
திமுகவினர்தான் காரணம்
நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் எல்லோரையும் சிரிக்க வைத்து பழக்கப்பட்டவன். ஆனால், இப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக என்னை அழ வைக்கின்றனர். இதன் பின்னணியில் திமுகவினர்தான் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக நான் பிரச்சாரம் செய்ததால், தற்போது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவினர்தான் நான் இறந்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர் என்றார்
balaajee
1st June 2016, 11:48 AM
பெரிய திரைப்படங்கள் வசூல் லாபகரமாக இல்லை: மதுரை, ராமநாதபுரம் விநியோகஸ்தர்கள் அதிருப்தி
பெரிய திரைப்படங்கள் வசூல் லாபகரமாக இல்லை என மதுரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோ கஸ்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
மதுரை, ராமநாதபுரம் யுனைடெட் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் அசோசி யேஷன் பொதுக் குழு கூட்டம் சங்க கவுரவத் தலைவர் ஜி.என். அன்புசெழியன், தலைவர் ஆர்.செல்வி ன்ராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயலர் எம்.ஓ.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து அவர்கள் கூறி யதாவது: மதுரை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள திரையரங்குகளில் நுழைவுக் கட்டணம் குறைவாக உள்ளது. நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக ஏற் கெனவே அளித்த மனு மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து திரையங்கு நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரந்தோறும் அதிகளவில் வெளியாகும் திரைப்படங்கள் எண்ணிக்கையை கட்டுப் படுத்த தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்து ழைப்பு கொடுப்போம்.
சமீப காலமாக தமிழ் திரைப் படங்களின் விலை மிக அபரிமிதமாக உள்ளது. பெரிய திரைப்படங்களின் வசூல் விநியோகஸ்தர்களுக்கு லாப கரமாக இல்லை. பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திரைப்படத் தொழிலையே நம்பி தொழில் செய்யும் திரைப் பட விநியோகஸ்தர்களும், உரி மையாளர்களும் தொடர்ந்து தொழில் செய்யவும், நலிந்துவரும் திரைப்படத் தொழிலைக் காப்பாற்ற நடிகர், நடிகைகள் தங்கள் ஊதிய த்தைக் குறைக்க வேண்டும்.
ரூ.50 லட்சத்துக்கு மேல் ஊதியம் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகி யோரிடம் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் அவர்களின் ஊதி யத்தில் 25 சதவீதம் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். படம் வெளியான ஆன பின்பு படம் வெற்றி பெற்று லாபம் கிடைத்தால் நிறுத்தி வைத்திருந்த 25 சதவீதம் பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
தோல்வி ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டால் அந்த 25 சதவீதம் ஊதியத்தை அதன் தயாரிப் பாளர்கள், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சதவிகித அடிப்படையில் பகிர்ந்து வழங்க வேண்டும்.
இதற்கான முயற்சியை தமிழ் திரைப்படத் துறையில் உள்ள சங்கங்கள் ஒன்றுகூடி உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
balaajee
1st June 2016, 06:08 PM
'ஜில் ஜங் ஜக்' படத்துக்கு பின் சித்தார்த்தின் அடுத்த திட்டங்கள்
'ஜில் ஜங் ஜக்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சித்தார்த்.
'ஜில் ஜங் ஜக்' படத்தை தயாரித்து அதில் நாயகனாக நடித்தார் சித்தார்த். அப்படத்தைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சித்தார்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த திட்டங்கள் குறித்து சித்தார்த், "கப்பல் இயக்குநர் கார்த்திக் க்ரிஷ் இயக்கத்தில் 'சைத்தான் கா பச்சா' வெளிவரவிருக்கிறது. இது ஒரு நகைச்சுவை பொழுதுபோக்குப் படம். அடுத்ததாக இயக்குநர் சசியின் இயக்கத்தில் ஓர் உணர்வுப்பூர்வமான படத்தில் நடிக்கிறேன். அவரோடும், அதில் இசையமைக்கும் ஜிவி பிரகஷோடும் இணைவதில் மகிழ்ச்சி.
தொடர்ந்து விளம்பரப்பட இயக்குநர் ரதிஷ் அம்பட் இயக்கத்தில், முரளி கோபியின் திரைக்கதையில் பிரபல மலையாள நடிகர் திலீப்புடன் எனது முதல் மலையாளப் படத்தை தொடங்கவுள்ளேன். 2016-ஆம் ஆண்டு எனது நான்காவது படமாக, ஒரே சமயத்தில் இந்தி-தமிழ்-தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு படம் உருவாகவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுன் 10-ஆம் தேதி வெளியாகும்.
எனது இந்தப் படங்கள் மூலம் என் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியும் என நம்புகிறேன். தொடர்ந்து வரும் உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. அதுதான் எனக்கு தூண்டுகோலாக இருக்கிறது.
மற்ற மொழிகளில் நடித்ததைப் போல எனது (முதல்) மலையாள படத்திலும் எனக்கு நானே பின்னணி பேசவிருக்கிறேன். அதில் சந்தேகம் வேண்டாம்." என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
balaajee
2nd June 2016, 11:45 AM
Taiwanese Film Festival Inauguration
http://g.ahan.in/tamil/Taiwanese-Film-Festival-Inauguration160531/Taiwanese-Film-Festival-Inauguration-Stills-(4).jpg
balaajee
2nd June 2016, 03:55 PM
திருமண வாழ்க்கைக்கு உண்மையும் விட்டுத்தருவதும் முக்கியம்: சன்னி லியோன் பேட்டி - Tamil THE HINDU
வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு உண்மையும், விட்டுக்கொடுத்தலும் தான் முக்கியம் என்கிறார் நடிகை சன்னி லியோன். திரையுலக நட்சத்திர தம்பதிகளுக்கிடையில் பிரச்சினைகள் எழுவது சகஜம். இந்த வருடம் பாலிவுட்டில், இரண்டு ஜோடிகள் பிரிந்துவாழ முடிவு செய்துள்ள நிலையில், சன்னி லியோன் தன்னுடைய திருமண வாழ்வின் ரகசியத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
2009-ல் டேனியல் வெபரைத் திருமணம் செய்துகொண்டார் சன்னி லியோன். அவர் சினிமா, திருமண வாழ்க்கை குறித்துப் பேசியதாவது:
வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு என்ன தேவை?
திருமண வாழ்க்கைக்கு முக்கியம் உண்மை பேசுவதும், விட்டுக்கொடுப்பதுதான். 'மகிழ்ச்சியான மனைவி இருந்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கும்' என்ற கூற்றை நம்புகிறேன். ஆனால் அதைத் தாண்டி, விட்டுக்கொடுப்பது, எல்லையில்லாத அன்பு, மனம் விட்டுப் பேசுவது, உண்மையாய் இருப்பது ஆகியவையும் முக்கியம்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்காமல் சில விஷயங்களுக்கு விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். அதுதான் முக்கியத்தேவை.
2012-ல் வெளியான ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நீங்கள், சினிமா துறையில் அந்நியன் போல உணர்வதாகக் கூறினீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
எல்லாத் துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். சில நல்ல மனிதர்களை இங்கு சந்தித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
தற்போது ராகுல் தோலக்கியா இயக்கத்தில் ஷாருக் கானுடன், ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறீர்கள். அந்தப்பாடல் 1980-ல் வெளியான குர்பானி படத்தின் லைலா ஓ லைலா பாடலை ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் ஃபெரோஸ் கானும், ஜீனத் அமனும் நடித்திருப்பார்கள். இப்போது ஷாரூக்குடனான உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது?
என்னுடைய கனவு இப்போது நனவாகி இருக்கிறது. அவருடன் வேலை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஷாரூக்கானுடன் நாயகியாக நடிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
படங்களின் தோல்வி உங்களை வருத்தமடையச் செய்யுமா?
கண்டிப்பாக. ஒரு படத்தில் வேலை பார்க்கும்போது முழு மனதோடுதான் பணிபுரிகிறோம். படம் சரியாகப் போகாமல், தோல்வி அடைந்தால் கண்டிப்பாய் அது என்னை பாதிக்கும்.
திரைப்படங்களில் நடிப்பது தவிர?
இளைஞர்கள் சம்பந்தமான உண்மைச் சம்பவத் தொகுப்பான எம்டிவியின் 'ஸ்பிளிட்ஸ்வில்லா சீசன் 9'-ஐ தொகுத்து வழங்க இருக்கிறேன். என்னுடன் ரண்விஜய் சின்ஹாவும் இணைந்துள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் வாழ்க்கையின் உண்மைத் தன்மையை வெளிக்காட்டுகின்றன.
முந்தைய 'ஸ்பிளிட்ஸ்வில்லா' நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு இடையே நடந்த வார்த்தைப் பூசல்கள் குறித்து?
மனிதர்கள் திடீரென்று வருத்தப்படுவார்கள்; கோபப்படுவார்கள். அவர்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால்தான் அவற்றைப் பார்க்கிறோம். இப்போது அடுத்தவரின் வாழ்க்கை அதைவிட சுவாரஸ்யமாக இருப்பதால் ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கிறோம். நானும் ரண்விஜய்யும் நிகழ்ச்சிகளில் தனிமனித தாக்குதல்களை அனுமதிக்கப் போவதில்லை. அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வோம்.
balaajee
3rd June 2016, 03:26 PM
Pichaikkaran in Telugu
was a dull one for Tollywood box office as Rayudu(Marudhu) failed to make an impression. Despite drawing the attention of the masses, Rayudu failed to make use of it as it didn’t suit the sensibilities of our audience. Bichagadu(Pichaikkaran) made use of the vacuum and went on to become a much bigger hit.
As per trade sources Bichagadu has grossed around 6 crore until now. The investors that bought the film’s rights for half a crore have hit a jackpot. Brahmotsavam’s dismal show is another reason for Bichagadu’s phenomenal success
balaajee
8th June 2016, 01:38 PM
அந்தக் குழந்தையே நான்தான் - ‘ சந்திரமுகி பொம்மி’ - பிரகர்ஷிதா ஜாலி பேட்டி - VIKATAN
''கொக்கரக்கோ சேவல் வந்து என்ன பேரு கூவுது ?
வேல் வேல் வேல்முருகா வேல்..
இந்தப் பாட்டைக் கேட்டதும் ‘வேலன்’ நாடகம் ஞாபகம் வருதா? அந்த வேலன் நாடகத்துல நடிச்ச இந்த வேலாயி-தான் , ‘ஏ பொம்மி... ஏஏ பொம்மி... ’ என்று ரஜினி சந்திரமுகியில் அழைத்த ’குழந்தை’. இப்ப என்ன பண்ணுது அந்தக் ‘குழந்தை’?
http://img.vikatan.com/cinema/2016/06/08/images/prakshi1.jpg
சென்னை மயிலாப்பூரில் ஷாப்பிங்ல பிஸியாயிருந்த பொம்மியை மடக்கிப் பிடித்தோம். '' அய்யோ அக்கா என் பேர் " பிரகர்ஷிதா " என்றார், சந்திரமுகியில் பார்த்த அதே குழந்தை சிரிப்புடன்..
உங்களை இப்போ டி.வில பார்க்கமுடியலையே?
கடைசியா சிம்ரன் மேடம் பொண்ணா "அனுவும் நானும்" சீரியல்-ல நடிச்சேன். அப்போ நான் சிக்ஸ்த் படிச்சிட்டு இருந்தேன் .தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. ஒரு நாள் அம்மா ''நடிக்கபோறியா இல்ல படிக்கப்போறியா’ன்னு கேட்டாங்க. நான் படிப்பு தான்னு முடிவெடுத்துட்டேன்.
அது சரி.. அதுக்குன்னு இவ்ளோ பெரிய இடைவெளியா ?
ஒரு தடவ நான் கபாலீஸ்வரர் கோயில் போயிருந்தேன். அங்க ஒரு 6 வயசு பாப்பா, அம்மாவைத் தொலைச்சுட்டு அழுதுட்டு இருந்துச்சு. அந்தக் குழந்தைய தூக்கிட்டு அவங்க அப்பா அம்மாவைத் தேடினேன். கடைசியா சிவன் சன்னதியில அவங்க அம்மா சாமி கும்பிட்டுட்டு இருந்தாங்க. குழந்தையை பதறி வாங்கினவங்க, என்னைப் பார்த்து ‘நீதானே சந்திரமுகியில நடிச்ச?’ன்னு கேட்ட கேள்வியை இப்ப வரைக்கும் மறக்க முடில. குழந்தை காணாம போன பதற்றம் கூட அவங்க முகத்துல பார்க்கலை. என்னவோ அந்த நிமிடம், கொஞ்ச நாள் ஃபீல்டுக்கு பிரேக் விடலாம்னு தோணுச்சு அவ்வளவு தான்.
இப்போ என்ன பண்றீங்க ?
எம்.ஓ.பி வைஷ்ணவ் காலேஜ்ல பிஎஸ்சி எலக்ட்ரானிக் மீடியா செகண்ட் இயர் படிக்கிறேன். அடுத்து பிஜி படிக்கணும். ஸ்கிரிப்ட் எழுதுறதுக்கான முயற்சிகள் பண்ணிட்டு இருக்கேன் .
காலேஜ்ல உங்களுக்கு ஃபேன்ஸ் இருக்காங்களா?
நானே போய் யார் கிட்டயும் சொன்னதில்லை. யாரும் அப்படி கண்டுபிடிச்சாலும் சிரிச்சிட்டே போய்டுவேன்.
சரி, உங்க எதிர்கால திட்டம் தான் என்ன?
சின்ன வயசுல டாக்டர் ஆகணும்னு நினைச்சேன். இப்போ சினிமா தான் கனவே. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மாதிரி பெரிய இயக்குநர் ஆகணும். என் படத்துல மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கணும். ஹாலிவுட் “ரூம்” மாதிரி ஒரு படம் பண்ணனும்.
http://img.vikatan.com/cinema/2016/06/08/images/Prakshi.jpg
நீங்க நடிச்சதுலயே பிடிச்ச படம் அல்லது சீரியல் ?
கண்டிப்பா சந்திரமுகி (http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/60278-once-again-rajinikanth-and-pvasu-join-hands.art)படத்துல நடிச்ச பொம்மி கேரக்டர் தான். கொஞ்ச நேரம் வந்தாலும் நல்ல ரீச். எல்லாரும் பொம்மிதான் என் பேருன்னு நினைச்சி பொம்மி பொம்மின்னு கூப்பிட்டாங்க .
உங்க ட்ரீம் பாய், கேர்ள்?
''கங்கனா ரனாவத், ட்ரீம் பாய்னா ஃபவாத் கான், மேடி
உங்க குடும்பம் பத்தி?
என் பாட்டிதான் டானிக், டேப்லட் எல்லாம். என் கனவுக்கு அவங்க தான் வழிகாட்டி.
ராஜராஜேஸ்வரி சீரியலில் முருகனா வந்து உபதேசம் கொடுப்பீங்கல்ல, அப்படி ஒரு மெசேஜ் சொல்லுங்க?
யாருக்காகவும் உங்க கனவை விட்டு கொடுக்காதிங்க. கனவை நோக்கி ஓடுங்க.
சிறந்த இயக்குநராக வாழ்த்துகள் பொம்மி... ஸாரி.. ஸாரி.. பிரகர்ஷிதா!
mappi
8th June 2016, 02:30 PM
http://img.vikatan.com/cinema/2016/06/08/images/prakshi1.jpg
http://img.vikatan.com/cinema/2016/06/08/images/Prakshi.jpg
Time goes by so fast.
balaajee
8th June 2016, 03:58 PM
ஐ 8, என்னை அறிந்தால், பாபநாசம் 5.. ஃபிலிம்ஃபேர் முழுமையான பரிந்துரைப் பட்டியல்!
தேசிய விருதையடுத்து, மிகப்பெரிய கௌரவமாக திரையுலகினரால் மதிக்கப்படும் ஃபிலிம்ஃபேர் விருதுகளின் 63வது ஆண்டின் விருதுக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. கடந்த வருடத்திற்கான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விருது வழங்கும் விழா வரும் ஜுன் 18ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த விருதுகளுக்கு தமிழில் விக்ரமின் ‘ஐ’ 8 பிரிவுகளிலும், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ , கமலின் ‘பாபநாசம்’ ஜோதிகாவின் 36 வயதினிலே, மற்றும் ஜெயம்ரவியின் தனி ஒருவன் படங்கள் தலா ஐந்து பிரிவுகளிலும் என அதிகமான பரிந்துரைகளில் இடம்பிடித்துள்ளன. ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்கான முழுமையான பரிந்துரைப் பட்டியல்:
சிறந்த படம்
36 வயதினிலே
ஐ
காக்கா முட்டை
ஓ காதல் கண்மணி
பாபநாசம்
தனி ஒருவன்
சிறந்த நடிகர்
அஜித் குமார் (என்னை அறிந்தால்)
தனுஷ் (அனேகன்)
ஜெயம் ரவி (தனி ஒருவன்)
கமல்ஹாசன் (பாபநாசம்)
விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை
ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
கௌதமி (பாபநாசம்)
ஜோதிகா (36 வயதினிலே)
நயன்தாரா (நானும் ரௌடிதான்)
நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி)
சிறந்த துணை நடிகை
ஆஷா சரத் (பாபநாசம்)
தேவதர்ஷினி (36 வயதினிலே)
லீலா சாலமன் (ஓகே கண்மணி)
பார்வதி நாயர் (என்னை அறிந்தால்)
ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த இசை
அனிருத் ரவிச்சந்தர் (மாரி)
அனிருத் ரவிச்சந்தர் (நானும் ரௌடிதான்)
ஏ.ஆர்.ரகுமான் (ஐ)
ஏ.ஆர்.ரகுமான் (ஓ காதல் கண்மணி)
ஹாரிஸ் ஜெயராஜ் (என்னை அறிந்தால்)
சிறந்த பாடலாசிரியர்
கபிலன் (என்னோடு நீ இருந்தால் - ஐ)
மதன் கார்க்கி (பூக்களே சற்று - ஐ)
தாமரை (உனக்கென்ன வேணும் சொல்லு - என்னை அறிந்தால்)
விக்னேஷ் சிவன் (தங்கமே - நானும் ரௌடிதான்)
விவேக் (வாடி ராசாத்தி - 36 வயதினிலே)
சிறந்த பின்னணிப் பாடகர்
அனிருத் ரவிச்சந்தர் (தங்கமே - நானும் ரௌடிதான்)
ஏ.ஆர்.ரகுமான் (மென்டல் மனதில் - ஓ காதல் கண்மணி)
தனுஷ் (ஓ... ஓ... - தங்கமகன்)
சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் - ஐ)
விஜய் (ஏண்டி ஏண்டி - புலி)
சிறந்த பின்னணி பாடகி
கரிஷ்மா ரவிச்சந்திரன் (காதல் கிரிக்கெட் - தனி ஒருவன்)
நீத்தி மோகன் (நீயும் நானும் - நானும் ரௌடிதான்)
ஸ்ரேயா கோஷல் (பூக்களே சற்று - ஐ)
ஸ்ருதிஹாசன் (ஏண்டி ஏண்டி - புலி)
ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல - தங்கமகன்)
சிறந்த இயக்குனர்
மோகன் ராஜா (தனி ஒருவன்)
ஜித்து ஜோசப் (பாபநாசம்)
மணிரத்னம் (ஓ காதல் கண்மணி)
மணிகண்டன் (காக்கா முட்டை)
ரோஜன் ஆண்ட்ரீவ்ஸ் (36 வயதினிலே)
ஷங்கர் (ஐ)
balaajee
8th June 2016, 04:39 PM
'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' 'U/A' உடன் ஜூன் 17-ல் ரிலீஸ்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02886/CkVjnPYUoAEZls2_2886254f.jpg
சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
'டார்லிங்' படத்தைத் தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. ஆனந்தி, சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சில இருப்பதால் 'U/A' சான்றிதழ் அளித்தார்கள்.
தணிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம், இப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது.
balaajee
9th June 2016, 11:34 AM
BOLLYWOOD
'உட்தா பஞ்சாப்' படத்தில் 89 'வெட்டு'- அரசியல் நெருக்கடி குற்றச்சாட்டுக்கு சென்சார் தலைவர் மறுப்பு
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02886/udta_punjab_2886435f.jpg சர்ச்சைக்குரிய ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படம் ஜூன் 17-ம் தேதி ரிலீஸாக வேண்டும்
“ஆம் ஆத்மியிடம் பணம் பெற்றுக் கொண்டு அனுராக் காஷ்யப் பஞ்சாப் மாநிலத்தை மோசமாக சித்தரித்துள்ளார்” என்று சென்சார் வாரியத் தலைவர் பலஜ் நிஹலானி கூறியுள்ளார்.
அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரித்துள்ள ‘உட்தா பஞ்சாப்’ படத்தை வெளியிடுவது தொடர்பாக பஞ்சாப் அரசு தனக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்கவில்லை என்/று சென்சார் வாரியத் தலைவர் பலஜ் நிஹலானி தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பஞ்சாப் மாநிலம் போதை மருந்து வசம் சிக்கியுள்ளது பற்றி விரிவாகச் சித்திரப்படுத்தியுள்ளதாக எழுந்த செய்திகளையடுத்தே கடும் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான அனுராக் காஷ்யப்பின் ஃபேண்டம் பிலிம்ஸ் விவகாரத்தை கோர்ட் ரீதியாக எதிர்கொள்ளும் அதேவேளையில் அரசியல் தலைவர்களோ, சென்சார் வாரியத் தலைவர் பஞ்சாப் அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட வேண்டுமென்று சென்சார் வாரியம் முடிவெடுத்ததோடு, தலைப்பிலிருந்து ‘பஞ்சாப்’ என்பதை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் சென்சார் வாரியத்தின் மீது சாடல் மழை பொழிந்துள்ளார்.
ஆனால் சென்சார் வாரியத் தலைவர் நிஹலானியோ, “அனுராக் காஷ்யப் ஆம் ஆத்மியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தை மோசமாகக் காட்டியுள்ளார் என்று நான் கேள்விப்பட்டேன்” என்று கூறி வருகிறார்.
இதற்கிடையே ஆம் ஆத்மியின் ஆஷிஷ் கேத்தன் கூறும்போது, “உட்தா பஞ்சாப் பட விவகாரத்தில் மோடி அரசு தனது கறைபடிந்த அரசியல் விளையாட்டை விளையாடக்கூடாது” என்று கூறியுள்ளார்.
சென்சார் வாரியத் தலைவர் நிஹலானி ‘சர்வாதிகாரி’ போல் செயல்படுகிறார் என்று அனுராக் காஷ்யப் கூறியது குறித்து நிஹலானியிடம் கேட்ட போது, “இது அவரது சொந்தக் கருத்து. அது அவரது தெரிவு. பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர், இது அவர்களது பொறுப்பு. ஆனால் ஒரு படம் பொதுமக்கள் பார்வைக்குச் செல்லும் போது அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் வழிதான் நாங்கள் இயங்க முடியும்” என்றார்.
தலைப்பிலிருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்க வலியுறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு நிஹலானி கூறும்போது, “அவர்கள் உரிமைத் துறப்ப்பு வாசகங்களைச் சேர்த்திருந்தாலும் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே என்றாலும் ஒட்டுமொத்த படமும் பஞ்சாப் பற்றியதாக உள்ளது, பெயர்கள் பஞ்சாப் பெயர்களாக இருக்கின்றன. எனவே எங்களுக்கான காரணங்கள் உள்ளன, விதிமுறைகளின் படி நாங்கள் ‘கட்’ செய்யலாம். அதனால்தான் கட் செய்தோம்.
படத்திலிருந்து நீக்கிய காட்சிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய கடிதத்தை நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் அளிக்க மறுக்கவில்லை, அவர்கள்தான் கடிதத்தை பெறவில்லை. ஆனால் நேராக ஊடகங்களிடம் சென்று விவகாரத்தை பெரிது படுத்துகின்றனர்.
நாங்கள் படத்தயாரிப்பாளர்களை திங்களன்று சந்தித்து நீக்கிய பகுதிகள் குறித்து தெரிவித்தோம். அதற்கு அவர்களும், நீக்கியபிறகு சான்றிதழ் அளிப்பீர்களா? என்றனர், நானும் ஆம் என்றேன். ஆனால் அவர்கள் கடிதத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை. அவர்கள் நேரடியாக ஊடகங்களிடம் சென்றனர். இன்று கடிதத்தை பெற்றுக் கொள்ள வந்தனர்” என்றார்.
தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
சென்சார் வாரியத் தலைவர் நிஹலானிக்கும், படத்தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் இப்போது ஏற்பட்டது அல்ல. கடந்த ஆண்டு அவர் நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் ஏற்பட்ட வண்ணமே இருந்தன.
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ‘ஸ்பெக்டர்’ படத்தில் வந்த முத்தக்காட்சியின் நீளத்தைக் குறைத்தார், அனுஷ்கா சர்மாவின் என்.எச்.10, மற்றும் அலிகார் போன்ற படங்களில் ஏகப்பட்ட காட்சிகளை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
balaajee
9th June 2016, 02:21 PM
'உறியடி' மீண்டும் ரிலீஸ்: இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02887/uriyadi_2887409f.jpg
'உறியடி' திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜயகுமார், மைம் கோபி, சந்துரு குமார், சிவகுமார், ஜெயகாந்த் வேலு உள்ளிட்ட பலர் நடிக்க விஜயகுமார் இயக்கி, தயாரித்த படம் 'உறியடி'. மே 27ம் தேதி வெளியான இப்படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டிய திரைப்படம் என்று தங்களது ஆதரவை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தார்கள். இப்படம் வெளியான போது, தமிழகத்தின் சில இடங்களில் வெளியாகவில்லை. இப்படம் வெளியாகி 2 வாரங்கள் முடிவடைய இருப்பதால், பல திரையரங்குகளில் இருந்து எடுத்துவிட இருக்கிறார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் விஜயகுமார், "அன்பு ரசிகர்களே, நீங்கள் சென்னைவாசி என்றால், உங்களுக்கு 'உறியடி' படம் பார்க்க வேண்டும் என்றால் நாளை திரையரங்கத்துக்கு செல்லுங்கள். வெள்ளிக்கிழமை ஒரு காட்சியை தாண்டி படம் நீட்டிக்கப்படுமா எனத் தெரியவில்லை.
மற்ற நகரங்களிலும் படத்தின் வெளியீட்டை விரிவுபடுத்த அதிகபட்ச முயற்சிகள் எடுத்து வருகிறோம். படத்தைப் பற்றி மக்கள் ட்விட்டர்/பேஸ்புக் போன்ற இடங்களில் பேசி, விவாதித்து, படத்தை தங்கள் ஊரில் பார்க்க விரும்புகிறார்கள் என வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிரூபித்தால் மட்டுமே படம் வெளியாகும்.
உங்கள் ஊர்களில் படம் வெளியாகுமா என நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் தான். ஆனால் முடியவில்லை. விரைவில் திரையரங்க பட்டியலை வெளியிடுகிறேன். பண்பலை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. 'உறியடி' படத்தை கொண்டு சேர்க்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டேன்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
balaajee
10th June 2016, 11:29 AM
வலுவாகிறது 'உட்தா பஞ்சாப்' சென்சார் சர்ச்சை: அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02887/anurag_2887874f.jpg இயக்குநர் அனுராக் காஷ்யப் | படம்: ஏஎப்பி
'உட்தா பஞ்சாப்' படத்தில் சுமார் 90 இடங்களில் கத்தரி போடவேண்டும் என்ற சென்சார் குழு முடிவின் தொடர்ச்சியாக பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநருமான அனுராக் காஷ்யப் விரிவான கருத்துகளுடன் கொந்தளித்துள்ளார்.
அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் பஞ்சாப் மாநிலத்தின் போதைப்பொருள் இருள் உலகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக எழுந்த தகவல்களைத் தொடர்ந்தே சென்சார் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது.
அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான அனுராக் காஷ்யப்பின் 'ஃபேண்டம் பிலிம்ஸ்' இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் அதேவேளையில், பஞ்சாப் அரசின் கைப்பாவையாக சென்சார் வாரியத் தலைவர் செயல்படுவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
'உட்தா பஞ்சாப்' படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட வேண்டுமென்று சென்சார் வாரியம் முடிவெடுத்ததோடு, தலைப்பிலிருந்து ‘பஞ்சாப்' என்பதை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் கடுமையாக சாடினார்.
ஆனால், திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் நிஹலானியோ, "அனுராக் காஷ்யப், ஆம் ஆத்மியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தை மோசமாகக் காட்டியுள்ளார் என்று நான் கேள்விப்பட்டேன்” என்று கூறி வருகிறார். தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பினர் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியும், பாஜகவின் கூட்டணி கட்சியுமான சிரோமணி அகாலி தளம், இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க உள்நோக்கம் இருப்பதாக கூறுகிறது. அதாவது, இதன் பின்னணியில் ஆம் ஆத்மி இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
நிஹலானி கருத்தை மறுத்துள்ள ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், பாஜகவை கடுமையாக குறைகூறியுள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே சென்சார் வாரியம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப் மாநிலத்தில், உட்தா பஞ்சாப் படத்துக்கும் சென்சார் வாரியத்துக்கும் இடையிலான மோதலுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு வருவதாக தெரிகிறது.
http://tamil.thehindu.com//multimedia/archive/02887/maxresdefault_2887875a.jpg
அனுராக் காஷ்யப் காட்டம்
இந்நிலையில், சென்சார் அதிகாரிகள் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை அடுக்கி இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"தணிக்கைத் துறையுடன் கடுமையான போராட்டம் கண்டுள்ளோம். இந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பும் வண்ணம் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.
நான் பலமுறை தணிக்கைக் குழுவுடன் போராடியுள்ளேன். முதலில் 'பான்ச்' திரைப்படத்துக்காக. அனைவரும் அது தணிக்கையால் தடை செய்யப்பட்ட படம் என நினைத்திருக்கின்றனர். ஆனால், தணிக்கை மறுஆய்வுக் குழு சில காட்சிகளை நீக்கச் சொல்லி படத்தை வெளியிட அனுமதித்தது. அதுதான் தற்போது இணையத்தில் காணக் கிடைக்கிறது.
'பிளாக் ஃப்ரைடே' தணிக்கையால் எந்த வித வெட்டுகளும் இன்றி ஒப்புதல் பெற்றது. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்ததால், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. கடைசியில் 2 வருடங்களுக்குப் பிறகு, நீதிபதி சபர்வால், அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் முன்னரே, படத்தை வெளியிட அனுமதியளித்தார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த படமும் அப்படியேதான் வெளியானது. சிவசேனாவைக் குறிக்கும் ஒரு சில காட்சிகள் மட்டும் வேறு வழியின்றி நீக்கப்பட்டன.
'குலால்' எந்த தணிக்கை சர்ச்சையிலும் சிக்கவில்லை. அதில் இருந்த சில வசனங்கள் மட்டும் நீக்கப்பட்டன. அது தயாரிப்பு தரப்பு பிரச்சினையால் முடங்கியது. இணையத்தில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் மீம்களில், அனைத்து படங்களிலும் பல்லாயிரக்கணக்கான வெட்டுகள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் அந்த வெட்டுகள், தொலைக்காட்சிக்கான மறு தணிக்கையின் போதே செய்யப்படுகின்றன.
'அக்லி' எந்த பிரச்சினையையும் சந்திக்கவில்லை. புகை பிடித்தல் எச்சரிக்கை விளம்பரத்தை வைக்க மாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் போராடினோம். அப்போதைய அரசாங்கத்துடன் இதுகுறித்து போராட வேண்டும் என நினைத்தது எங்கள் தனிப்பட்ட முடிவே. நீதிமன்ற வழக்கில் நாங்கள் தோற்றோம். படம் எந்த வெட்டும் இன்றி வெளியானது.
'வாட்டர்' படம் படப்பிடிப்பே அனுமதிக்கப்படவில்லை. அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அல்ல. அப்போதுதான் முதன்முதலில் அருண் ஜேட்லியை சந்தித்தேன். அப்போதிலிருந்து இன்றுவரை அவர் மீது நன்மதிப்பு கொண்டுள்ளேன். இந்த சர்ச்சைகளில், போராட்டங்களில் எப்போதுமே நான் அச்சுறுத்தப்படுவதாகவோ, நிர்பந்திக்கப்படுவதாகவோ, என் விருப்பத்துக்கு மாறாக செயல்பட வறுபுறத்தப்படுவதாகவோ நினைக்கவில்லை.
அனைத்து போராட்டங்களுமே நியாயமாக, இரண்டு நம்பிக்கைகளுக்கு நடுவில் நடந்தவை. அந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னவென்று தெரியாமல் தோல்வியடையவும் இல்லை. அந்தச் சமயங்களில், எங்கள் எதிரி யார், என்ன, அது ஒரு தனிப்பட்ட நபரா, அல்லது ஒரு சிந்தனையா அல்லது தணிக்கைத் துறையின் புரிதலா என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இது வித்தியாசமானது. இது அச்சுறுத்தல். இது பொய் மூட்டைகள்.
அதிகாரபூர்வமாக எங்களுக்கு கடிதம் கிடைத்தது, நாங்கள் ஊடகங்களை அணுகிய அடுத்த நாள், நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை முடிந்தவுடனே கிடைத்தது. நிஹ்லானியின் அலுவலகத்திலிருந்து, அவரது கையெழுத்துடன், 7 ஜூன் தேதியிட்ட கடிதம் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் அதிகாரபூர்வ கடிதம் தருமாறு அவருக்கு அளித்த கோரிக்கை விண்ணப்பத்தின் நகல் இருக்கிறது. எனவே, திங்கள்கிழமை கடிதம் தந்ததாக அவர் கூறுவது அப்பட்டமான பொய்.
படத்தின் வெளியீட்டை தாமதமாக்கவும், சொன்ன வெட்டுகளை ஏற்றுக்கொள்ளவும் தரப்படும் திட்டமிட்ட அழுத்தம் இது. ஆம் ஆத்மி கட்சியிடம் நான் பணம் பெற்றுள்ளதாக அவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அதோடு, உண்மையான பிரச்சினையிலிருந்து திசைதிருப்பி ஒரு திரைப்பட இயக்குநர் தனது உரிமைக்காக அரசியல் ரீதியாக போராடுமாறு செய்கிறார். இதற்கு இணையத்தில் வரும் நையாண்டிகளும் அவருக்கு திசைதிருப்ப உதவுகின்றன.
கருத்து சுதந்திரத்துக்காக போராடும், எங்கள் உரிமைகளோடு, எங்கள் படத்துக்கும் தணிக்கைத் துறைக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும் என வேண்டுகிறேன். வேறெந்த புரளிகளிலும் தலையிட விரும்பவில்லை.
நான் ஆம் ஆத்மி அல்லது காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவன் அல்ல. எந்த அரசியல் கட்சி சார்புடையவனும் அல்ல. நான் மற்றவர்களை விட மிக அதிகமான படங்களை பணம் வாங்காமல் எடுத்துள்ளேன். நியாயமற்ற முறையில் வரும் பணத்தை வாங்கியதுமில்லை. நன்றி" என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
'உட்தா பஞ்சாப்' சர்ச்சை குறித்து பல்வேறு முன்னணி இந்தி திரையுலக பிரபலங்கள் த
ங்களது ஆதரவை படக்குழுவுக்கு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
balaajee
10th June 2016, 01:59 PM
கதாநாயகி தேர்வில் தலையிடுகிறேனா?- ஜி.வி. பிரகாஷ் சிறப்பு பேட்டி
டார்லிங்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இந்தப் படத்தில் ஆக்*ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து…
‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ட்ரெய்லரைப் பார்த்தால் சண்டைக் களத்தில் இறங்கிவிட்டீர்கள் போல இருக்கிறதே?
‘டார்லிங்' முடிந்தவுடன் அந்தப் படத்தின் இயக்குநர் சாம் உடன் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தீர்மானித்தேன். அப்படித்தான் இந்தப் படம் ஆரம்பித்தது. ஆனந்தி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். முழுக்க காமெடி படம்தான், அதில் கொஞ்சம் ஆக்*ஷன் இருக்கும். மக்கள் திரையரங்குக்கு வந்தார்கள் என்றால் கைதட்டி ரசிக்கும் வகையில் இருக்கும்.
காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே பண்றீங்களே. எப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் பண்ண திட்டம்?
நான் கமர்ஷியல் படங்கள்தான் பண்ண வந்திருக்கிறேன். இங்கு நடிப்புத் திறமையைக் காண்பிக்க வரவில்லை. ‘இவன் படம் ஜாலியா இருக்கும்பா’ என்று நம்பி மக்கள் வர வேண்டும். அது மட்டும்தான் என் எண்ணம். நான் பெரிய நடிகன் எல்லாம் கிடையாது. என்னுடைய வரம்புகள் என்னவென்று எனக்குத் தெரியும். அதற்காக எனக்கு நடிப்பு தெரியாது என்றும் கிடையாது. மக்கள் ரசிக்கிற படங்கள் பண்ணினால் போதும். அவ்வளவுதான்.
ராஜேஷ், சசி, பாண்டிராஜ் என வரிசையாகப் படங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களே?
அடுத்து ‘ப்ரூஸ்லீ ' செப்டம்பரில் வரும். அது ஒரு அவல நகைச்சுவை ஆக்*ஷன் படம். ‘சூது கவ்வும்' பாணியில் இருக்கும். அதைத் தொடர்ந்து ராஜேஷுடன் ‘கடவுள் இருக்கான் குமாரு' வெளியாகும். சந்தானம் இல்லாத இயக்குநர் ராஜேஷின் படம். நான், ஆர்.ஜே.பாலாஜி, சிங்கம்புலி, ரோபோ சங்கர் எனப் புதிய கூட்டணியோடு களம் இறங்கியிருக்கிறோம்.
இந்தப் படத்துக்காக ஆனந்தியை நான்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தேன் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உண்மையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா' பார்த்து இயக்குநர் சாம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். இயக்குநர் ராஜேஷும் ஆனந்திதான் இந்த கேரக்டருக்கு கரெக்ட் என்று ஒப்பந்தம் செய்தார். கதாநாயகி விஷயத்தில் இப்போதும் எப்போதும் நான் தலையிட மாட்டேன். இயக்குநர் பாண்டிராஜ் படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
ராஜீவ் மேனன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் என்று செய்திகள் வெளியானதில் பலருக்கும் ஆச்சரியம்!
திடீரென்று ஒரு நாள் போன் பண்ணினார் ராஜீவ் சார். கதையைச் சொன்னார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று சொல்லலாம். மூன்று பாடல்களை முடித்துக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான் அங்கிள். எனக்கு லோக்கல் பையன் கதாபாத்திரம்.
வெளிப் படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துக்கொண்டுவிட்டீர்களா?
அப்படி எதுவும் இல்லயே. ‘தெறி' பண்ணினேன். எனக்கென்று ஒரு சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். ‘மீண்டும் ஒரு காதல் கதை' என்னுடைய இசையில் வெளிவர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ‘காக்கா முட்டை' மராத்தி ரீமேக் மூலமாக அங்கும் இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். இப்போது நான் நடிக்கும் படங்களில் ராஜீவ் மேனன் படம் தவிர மற்ற படங்களுக்கு நானேதான் இசையமைக்கிறேன். நடிப்பு - இசை என மாறி மாறிக் கவனம் செலுத்திவருவதால், வெளிப் படங்களைத் தேர்வு செய்து இசையமைக்கிறேன்.
திரையுலகில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் என்று யாருமே இல்லையா?
இல்லை. பத்து வருடங்கள் இசையமைப்பாளராக இருந்துவிட்டேன். நெருங்கிய நண்பர்களாக இருந்தால் சண்டையில்தான் முடிகிறது. ஏதோ ஒரு இடத்தில் என்னுடைய எண்ணமும் அவர்களுடைய எண்ணமும் வித்தியாசப்படுகிறது. அதனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாருமே கிடையாது.
balaajee
10th June 2016, 02:03 PM
Bombay HC to CBFC: Your Job Is to Certify Films Not Censor Them
The Bombay High Court, on Friday, came down heavily on the Central Board of Film Certification (CBFC) for the cuts ordered in the movie 'Udta Punjab' and observed that the board's job is to certify films and not censor them.
In a scathing observation, the court asked CBFC that if it thinks the movie glorifies drugs, then why is it not banning the whole movie. Mincing no words in its observation, the court categorically told the CBFC, that whether its TV or cinema, the board should leave it to the people to decide whether the film is defaming a state.
During the hearing, the CBFC argued that the vulgar words and scenes from the movie must be removed. Claiming that the dog in the movie which is named after Jackie Chan is contemptuous, the board tried to justify its decision for the cut.
Anurag Kashyap, who the producer of the film, had earlier accused CBFC chief Pahlaj Nihalani of bullying and purposely not certifying the film. The CBFC has demanded 89 cuts in the film that features Shahid Kapoor, Kareena Kapoor, Alia Bhatt and Diljit Dosanjh. Directed by Abhishek Chaubey, the film is scheduled to release in theatres on June 17.
Meanwhile, the makers have agreed to cut one scene, where Shahid Kapoor's character is seen urinating in front of the public in the song 'Chitta Ve'. The cut was one of the numerous scenes that CBFC demanded be changed.
balaajee
14th June 2016, 02:29 PM
சென்சாருக்கு எதிராக 'உட்தா பஞ்சாப்' வெற்றி: சசிகுமார் பெருமிதம்
கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளான 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் தற்போது வெளியாவது குறித்து, நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தணிக்கை வாரியத்துக்கு எதிரான போராட்டத்தில் அனுராக் காஷ்யப்புக்கு கிடைத்த வெற்றி எங்களுக்கும் உரித்தானது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சசிகுமார் வெளியிட்டுள்ளா ட்விட்டர் பதிவில், ''அனுராக் காஷ்யப் அவர்களே, தணிக்கை வாரியத்துக்கு எதிரான உங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல, எங்களுடையதும்தான்'' என்று தெரிவித்துள்ளார்.
'உட்தா பஞ்சாப்' சர்ச்சை பின்னணி
அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் பஞ்சாப் மாநிலத்தின் போதைப்பொருள் இருள் உலகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக எழுந்த தகவல்களைத் தொடர்ந்து சென்சார் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது.
'உட்தா பஞ்சாப்' திரைப்படத்தை தணிக்கை செய்த தணிக்கைக் குழுவினர், ஆபாசமாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் இருப்பதாகக் கூறி, 89 இடங்களில் கத்தரி போட பரிந்துரைத்தனர். மேலும், படத்தின் தலைப்பில் இருந்து பஞ்சாப் என்ற பெயரையும் நீக்குமாறு உத்தரவிட்டனர். திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உத்தரவு நாடு முழுவதும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் அனுராக் காஷ்யப், சென்சார் அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கினார். அவர் பலமுறை தணிக்கைக் குழுவுடன் போராடியுள்ளதாகக் கூறியவர், கருத்து சுதந்திரத்துக்காக மட்டுமே போராடுவதாகக் கூறினார். இந்தப் பிரச்சனைக்கு அரசியல் சாயம் பூசாமல் படத்துக்கும் தணிக்கைத் துறைக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
'உட்தா பஞ்சாப்' சர்ச்சை குறித்து பல்வேறு முன்னணி இந்தி திரையுலக பிரபலங்கள் தங்களது ஆதரவை படக்குழுவுக்கு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மறு தணிக்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில், படத்துக்கு 13 இடங்களில் கத்தரி போடப்பட்டு, படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனமான பான்தம் பிலிம்ஸ் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரே ஒரு வெட்டு மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட பொறுப்புத் துறப்பு வாசகங்களுடன் படத்தை வெளியிட படக்குழுவினருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஷாகித் கபூர் கூட்டத்தினர் மத்தியில் சிறுநீர் கழிக்கும் காட்சியை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தொடர்பான வாசகங்களை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்றம் தனது உத்தரவில், ''தணிக்கை வாரியம் பாட்டி மாதிரி செயல்படக் கூடாது. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். கலையை மிக அதிக உணர்வுப்பூர்வமாக அணுகக் கூடாது. படைப்பாளிகளுக்குத் தடை போடக் கூடாது" என்றும் தணிக்கை வாரியத்துக்கு அறிவுரை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
balaajee
17th June 2016, 03:17 PM
'உட்தா பஞ்சாப்' சர்ச்சை: படம் கற்றுக்கொடுத்த பாடம்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02898/15_2898066f.jpg
இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ‘உட்தா பஞ்சாப்’ என்ற இந்திப் படத்தைக் கையாண்டிருக்கும் விதமும், அதன் அணுகுமுறைக்கு எதிராக பாம்பே உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் திரையுலகில் மீண்டுமொரு விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன.
‘உட்தா பஞ்சாப்’ என்றால் ‘பறக்கும் பஞ்சாப்’ (போதையில் மிதக்கும் என்றும் வைத்துக்கொள்ளலாம்) என்று அர்த்தம். பஞ்சாப் மாநிலத்தின் தீவிர பிரச்சினையாகப் பேசப்படும் போதை மருந்துப் பழக்கத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ஜூன் 17-ம் தேதியான இன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெறச் சென்றதிலிருந்து பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.
படத்தை வெளியிடத் தணிக்கை குழு பல நிபந்தனைகளை முன்வைத்தது. படத்தின் பெயரில் இருக்கும் ‘பஞ்சாப்’ நீக்கப்பட வேண்டும்; எந்தக் காட்சியிலும் ‘பஞ்சாப்’ மாநிலத்தைப் பற்றிய குறிப்பு இருக்கக் கூடாது; 89 காட்சிகளை வெட்ட வேண்டும்; ‘சிட்டா வே’ என்ற பாடலை நீக்க வேண்டும் என தணிக்கைக் குழுவின் கோரிக்கைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போனது.
தணிக்கைத் துறையின் மறுபரிசீலனைக் குழுவை படத் தயாரிப்பாளர்கள் அணுகியபோது, 13 காட்சிகளை நீக்கிவிட்டுப் படத்தை ‘ஏ’ சான்றிதழுடன் வெளியிடலாம் என்று அறிவித்தது. இதை எதிர்த்துப் படத்தின் தயாரிப்பாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பில், படத்தில் ஒரேயொரு ஒரு காட்சியை மட்டும் நீக்கிவிட்டு, ‘ஏ’ சான்றிதழ் வழங்கத் தணிக்கைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அத்துடன், மாற்றம் செய்யப்பட்ட பொறுப்புத் துறப்பு வாசகத்துடன் படத்தை அறிவித்த தேதியில் வெளியிடலாம் என்றும் சொல்லியிருக்கிறது.
தீர்ப்பு தரும் நம்பிக்கைகள்
இந்தப் படத்தைத் தணிக்கைக் குழு கையாண்ட விதம் ஒட்டுமொத்த இந்தியத் திரைப்படவுலகை அதிர்ச்சியடையச் செய்திருந்தது. ஆனால், நீதிமன்றம் இயக்குநரின் படைப்புச் சுதந்திர உரிமையை வலியுறுத்தும்படி வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு எல்லோரையும் நிம்மதியடைய வைத்திருக்கிறது.
நீதிபதிகள் எஸ். சி. தர்மாதிகாரி, ஷாலினி பன்சால் ஜோஷி அடங்கிய பெஞ்ச் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பில், “இந்தப் படத்தின் திரைக்கதையில் நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் எந்த விஷயமும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஓர் இயக்குநர் எப்படிப் படமெடுக்க வேண்டும், எந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என யாரும் கட்டளையிட முடியாது. படத்தில் ஒரு காட்சியை நீக்குவதும் வெட்டுவதும் அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும் இருக்க வேண்டும். அதுதான் படைப்புச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்கும்” என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.
“தணிக்கைக் குழுவுக்குக் காட்சிகளை வெட்டுவதற்கும், மாற்றங்கள் செய்ய சொல்வதற்கும், நீக்குவதற்கும் எல்லா விதமான உரிமைகளும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதே சமயம் இந்த வழக்கில் தணிக்கைக் குழு படத்துக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் சரியானவையல்ல.
ஒரு படத்தை அது சொல்லவரும் முழுமையான கருத்தின் அடிப்படையில் அணுக வேண்டுமே தவிர, கதாபாத்திரங்கள், காட்சிகள், பாடல்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது” என்றும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம். தணிக்கைக் குழு ஒரு பாட்டியம்மா மாதிரி செயல்பட வேண்டாம் என்றும், காலத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ளவும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.
அரசியல் தலையீடு காரணமா?
‘உட்தா பஞ்சாப்’ படத்தைத் தணிக்கை குழு இந்த அளவுக்குக் கடுமையாக நடத்தியதற்குக் காரணம், பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தின் பெரிய பிரச்சினையான போதை பழக்கத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் வெளியாவதை ஆளும்கட்சி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் ‘பஞ்சாப்’, ‘பாராளு மன்றம்’, ‘தேர்தல்’, ‘எம்பி’ போன்ற வார்த்தைகளைப் படத்தில் இருந்து நீக்கச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
எப்படிச் செயல்படுகிறது தணிக்கைக் குழு?
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், 1952-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு. பன்முகத்தன்மை கொண்ட ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் ஒரு பெரிய ஊடகமான சினிமாவைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக, அது பல சமயங்களில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் அதன் செயல்பாடுகள் விவாதத்துக்கும் உள்ளாகின்றன. இது பற்றி மூத்த திரைப்பட வரலாற்றாசிரியர்களில் ஒருவரான தியடோர் பாஸ்கரனிடம் பேசியபோது, “தணிக்கைக் குழு என்பது ஒரு நல்ல அமைப்பு. அதிலிருக்கும் நபர்களுக்கு சினிமாவைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வும், புரிதலும் இல்லாதபோதுதான் பிரச்சினை உருவாகிறது.
1977-ல் ஷியாம் பெனகல், கிரிஷ் கர்னாட் போன்ற இயக்குநர்களால் புதிய சினிமா அலை வீசியது. அப்போது இருந்த தணிக்கை குழு இவர்களுடைய புதிய முயற்சிகளைப் பெரிய அளவில் அங்ககீரித்தது. அப்போதிருந்த தணிக்கைக் குழுத் தலைவர், உறுப்பினர்கள், பிராந்திய அதிகாரிகள் என அனைவருக்கும் சினிமாவைப் பற்றிய பரிச்சயம் இருந்ததும் அதற்குக் காரணம்.
ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. ‘உட்தா பஞ்சாப்’ மாதிரியான சமூக அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கமாகப் பேசும் படங்களில் இந்த மாதிரி கத்திரி போட்டால், அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தரமான படங்கள் வெளியாவதைக் தடுத்துவிடும். ஒரு படம் ஏற்படுத்தும் முழுத் தாக்கத்தை வைத்துத்தான் அதை மதிப்பிட வேண்டுமே தவிர, அதில் போதை மருந்துக் காட்சிகள் இருக்கின்றன, கதாபாத்திரங்கள் கெட்ட வார்த்தைகள் பேசுகின்றன என்பதை வைத்து மதிப்பிடக் கூடாது” என்று சொல்கிறார்.
தீர்ப்பை வரவேற்கும் தமிழகம்
நீதிமன்றத் தீர்ப்பைத் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் வரவேற்றிருக்கிறார்கள். தேசிய விருதுபெற்ற இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றி மாறன், “இது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பில் கூறியிருக்கும் விஷயங்களை முன்வைத்து இனிமேல் தணிக்கைக் குழுவின் நிலைப்பாடுகள் இருக்கும் என்று நம்புவோம். அத்துடன், இயக்குநர்களும் அவர்களுடைய அளவில் சுயபொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.
இயக்குநர் மிஷ்கினும் இந்தத் தீர்ப்பு இயக்குநர்களுக்கு இனிமையானது என்று வரவேற்றிருக்கிறார். “ஒரு படம் நல்ல படமில்லை, அருவருக்கத்தக்கது, ஆபாசமானது என்று அதை மறுக்கும் உரிமை மக்களுடையது. அதை அவர்களிடம் கொண்டுசெல்வதற்கு முன்பே அது நல்ல படமில்லை என்பதைத் தணிக்கை குழு தீர்மானிக்கக் கூடாது. சினிமா என்பதே பெரியவர்களுக்கான ஊடகம்தான். இயக்குநரின் கருத்துச் சுதந்திரத்தை மதித்திருக்கும் இந்தத் தீர்ப்பு எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது” என்கிறார் அவர்.
பஞ்சாபைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், படத்தை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. அத்துடன், பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்திலும் இந்தப் படத்தை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. எனவே, ‘உட்தா பஞ்சாப்’ படத்தை திரையரங்குகளில் பறக்கவிடுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கவே செய்கிறது.
தணிக்கைக் குழுவைச் சீரமைக்க அரசு அமைத்த ஷியாம் பெனகல் குழு, தணிக்கை குழு ஒரு சான்றிதழ் வழங்கும் அமைப்பாகச் செயல்பட்டால் போதும் என்று பரிந்துரைத்திருப்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்கப் பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் படங்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.
ஏதேனும் ஒரு பிரச்சினையை, தீவிரமான ஒரு விஷயத்தை மையப்படுத்தும் படங்களுக்குத்தான் சிக்கல்கள் முளைக்கின்றன. படைப்பாளிக்கு அதிக சுதந்திரம் தேவைப்படும் இத்தகைய படங்களின் மீதே தணிக்கைத் துறையின் கத்தி கூர்மையாக இறங்குவது இந்தியத் திரையுலகின் முரண்களில் ஒன்று.
balaajee
20th June 2016, 11:40 AM
புதிய படத்தில் மீண்டும் இணையும் ஜெய் - அஞ்சலி
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02899/jaianjali_2899388f.jpg
சினிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஜெய் - அஞ்சலி இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'எங்கேயும் எப்போதும்'. இப்படத்துக்குப் பிறகு ஜெய் - அஞ்சலி இருவரும் இணைந்து படங்கள் நடிக்கவில்லை.
தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய் - அஞ்சலி இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கவிருக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சரவணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ரூபன் எடிட்டராக பணிபுரிய உள்ளார்.
இப்படம் குறித்து சினிஷ், "ஒரு திறமையான நடிகையாக அஞ்சலி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அஞ்சலியின் நடிப்பாற்றலுக்கு எல்லை என்பதே கிடையாது. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திரையில் அப்படியே பிரதிபலிக்கும் ஆற்றலை உடையவர் அஞ்சலி.
ஜெய் - அஞ்சலி கூட்டணி ஏற்படுத்திய இதே உற்சாகம் படம் முழுக்க நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்கிறார் இயக்குநர் சினிஷ்.
balaajee
21st June 2016, 04:30 PM
ஷாங்காய் பட விழாவில் 'அருவி'க்கு வரவேற்பு: தயாரிப்பாளர் மகிழ்ச்சி
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02902/aruvi_2902842f.jpg
ஷாங்காய் திரைப்பட விழாவில் 'அருவி'க்கு கிடைத்த வரவேற்பால் தயாரிப்பாளர் பிரபு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
'மாயா' படத்தைத் தொடர்ந்து 'காஷ்மோரா', 'ஜோக்கர்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 'அருவி' என்ற புதிய படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதற்கு பிறகு தமிழகத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் திரைப்பட விழாவில் 'அருவி' திரையிடப்பட்டது. இப்படத்தை புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் 'அருவி' திரையிடலில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய தயாரிப்பாளர் பிரபு, " 'அருவி' எப்போதுமே என்னை பெருமிதம் கொள்ளச் செய்யும் ஒரு படைப்பு. ஒரு சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது ’அருவி’.
பல்வேறு திரைப்பட விழாக்களிலும் ’அருவி’ தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. முற்றிலும் உள்ளூர் உணர்வுகளால் பின்னப்பட்ட காட்சிகளை சர்வதேச பார்வையாளர்கள் ரசனையுடன் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படிப்பட்ட ஓர் அற்புதமான படைப்பை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த குழுவுக்கு என மனமார்ந்த நன்றி." என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
balaajee
28th June 2016, 03:13 PM
'மாயவன்' இயக்குநர் பொறுப்பை ஏற்றது ஏன்?- சி.வி.குமார் விளக்கம்
'மாயவன்' படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றது ஏன் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் விளக்கமளித்துள்ளார்.
'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது 'மாயவன்' என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'மாயவன்' படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'மாயவன்' படம் குறித்து இயக்குநர் சி.வி.குமார், "முதலில் இப்படத்தின் கதை உருவான பின் நலன் குமாரசாமியை அழைத்து இயக்கி தரச் சொன்னேன். கதையினை படித்தவர் நன்றாக இருப்பதாகவும் தான் திரைக்கதையினை மேற்கொள்வதாகவும் என்னை இயக்கும்படியும் கூறினார்.
எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால் நலன் குமாரசாமி உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியுமென்று நம்பிக்கை அளித்தனர். பின்னர் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கி, தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
இதுவரை நாங்கள் தயாரித்த அனைத்து படங்களிலும் பட துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். ஆனால் தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குநரை வேலை வாங்குவதற்கும், இயக்குநராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியது" என்றார்.
balaajee
28th June 2016, 03:30 PM
Surya and Kajal Aggarwal locked lips for a scene in 2012's 'Maattrraan'... or did they?
http://dc-cdn.s3-ap-southeast-1.amazonaws.com/dc-Cover-u6vh6fnanepps49avs4iukpkc2-20160623102757.Medi.jpeg Maattrraan featured an intimate moment between Surya and Kajal in a movie theatre.
K. V. Anand’s Tamil film ‘Maattrraan’, which starred Surya and Kajal Aggarwal in leading roles did fairly well at the box office, when it hit theatres in 2012. The science fiction thriller that opened to mixed reviews, went on to be dubbed in different languages including Hindi and Telugu.
Apart from its stunning visual effects, comic timing and underlining story, the film also featured an intimate moment between the lead actors in a movie theatre. The film shows the two engaging in a short lip-lock.
A behind the scenes video on the making of this scene has once again started doing the rounds online. Much to fans’ surprise, the two actors didn’t really lock lips on camera. Their brief on-screen smooch happens to be the work of good VFX and face tracking devices.
Both Kajal and Surya kissed pieces of styrofoam, with face tracking censors, that were then merged together to get the final outcome. VFX thus proved to be a good alternative for those actors who wouldn't want to kiss their co-stars don't you think?
A similar VFX style was seen in recent films like Shah Ruk Khan’s ‘FAN’ and the Hollywood film ‘The Jungle Book’.
https://www.youtube.com/embed/SUUU_mftG1E
balaajee
4th July 2016, 01:08 PM
தமிழில் ரீமேக் ஆகிறது 'கோதி பன்ன சாதாரண மைக்கட்டு'
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02919/prakashraj_2919626f.jpg
கன்னடத்தில் வரவேற்பைப் பெற்ற 'கோதி பன்ன சாதாரண மைக்கட்டு' திரைப்படம், தமிழில் ரீமேக்காக இருக்கிறது.
ஹேம்நாத் இயக்கத்தில் புஷ்கர் மல்லிக்கார்ஜுன் தயாரிப்பில் ஆனந் நாக் மற்றும் ரக்*ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான படம் 'கோதி பன்ன சாதாரண மைக்கட்டு’.
சுமூகமாக சென்று கொண்டிருக்கும் நடுத்தரமான குடும்பத்தில் திடீரென காணாமல் போகும் தந்தையை கண்டுபிடிக்க முயற்சிக்கும் மகனின் தேடல் தான் கதைக்களம். இதற்கிடையில் தந்தை கடத்தப்படுவதற்கான காரணிகளை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கும் படம் தான் 'கோதி பன்ன சாதாரண மைக்கட்டு'
கன்னடத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். மேலும், இப்படத்தை தயாரித்து, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து முதற்கட்ட பணிகளும் முடிந்து முறையாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
balaajee
4th July 2016, 03:14 PM
ஆண் - பெண் உறவில் உலகமயமாக்கல் தரும் தாக்கத்தை 'தரமணி' சொல்லும்: ராம்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02861/taramani_2861746f.jpg
’கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’ வரிசையில் உலகமயமாக்கலின் தாக்கத்தை எடுத்துச் சொல்லும் கடைசிப் படம் ’தரமணி’ என்று இயக்குநர் ராம் தெரிவித்திருக்கிறார்.
வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'தரமணி'. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் 'தரமணி' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராம் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "’கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’ வரிசையில் உலகமயமாக்கலின் தாக்கத்தை எடுத்துச் சொல்லும் கடைசிப் படம் ’தரமணி’. இந்தப் படம் உலகமயமாக்கல் ஆண் - பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே கதை.
இவ்வாறு நான் சொல்வதால் நான் முழுக்க முழுக்க உலகமயமாக்கலுக்கு எதிரானவன் என நினைக்காதீர். உண்மையில் உலகமயமாக்கல் கொள்கை பெண்களுக்கு அதிக நம்பிக்கையை விதைத்துள்ளது.
பெண்களின் சுய மரியாதையும், சுய மதிப்பீடும் அதிகரித்திருக்கிறது. கடல் கடந்து சென்று தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை விஸ்தரித்துக் கொள்ள வழிவகை செய்துள்ளது. ஏன் பெண்ணைப் பெற்ற தந்தைகள்கூட தங்கள் குறுகிய பார்வையை மாற்றிக் கொண்டுள்ளனர். இருந்தாலும், ஒரு பெண்ணுடன் வேலை செய்யும் சக ஆண் ஊழியர் அவரை எப்படி பார்க்கிறார். இது எப்படி ஆண் - பெண் உறவில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதைத் தான் ’தரமணி’ படம் அலசுகிறது.
’கற்றது தமிழ்’ படம் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களுக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது. ஆனால், அப்படமானது சேவைத் துறைக்காக கலை, மனிதவளம் சார்ந்த படிப்புகள் புறக்கணிக்கப்பட்டால், சமூகத்தில் எப்படி பொருளாதார சமன் சீர்குலையும் என்ற யதார்தத்தை உணர்த்துவதே. இதன் விளைவு சைக்கோபாத் போல சோசியோபாத் என்ற ஒரு பிரிவினர் உருவாக்கப்படிருக்கின்றனர்.
’தங்க மீன்கள்’ படமும் தனியார்மயமாக்கலால் நமது கல்வித் துறையை எப்படி சீர்குலைத்திருக்கிறதை என்பதை விரிவாக பேசப்பட்டிருக்கும். மேலும், அதனால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு சமூகம் எப்படியெல்லாம் முத்திரை குத்துகிறது என்பதையும் விவரித்திருக்கும். ஒரு தந்தை - மகள் உறவுப் பின்னணியில் சொல்லப்படாமல் இருந்திருந்தால் அந்தக் கதை ஒரு ஆவணப்படமாக ஆகியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
’தரமணி’ ஒரு சர்வதேச தரத்திலான கதை. உலகமயமாக்கல் ஆண் - பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது விரிவாக அலசும் கதை" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராம்.
balaajee
4th July 2016, 05:29 PM
ஃபிலிம்ஃபேர், மாநில விருதுகளில் விட்டதை, சீமாவில் அள்ளிய பிரேமம்!
2012-ம் ஆண்டு முதல் சைமா விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்திய மொழிப்படங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
http://img.vikatan.com/cinema/2016/07/04/images/siima.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=5695)தமிழகத்தில் மெகா ஹிட்டாக ஓடிய மலையாளத் திரைப்படம் பிரேமம். பிரேமம் படத்திற்கு கேரள அரசு முக்கியமான விருதுகள் எதையும் தராமல் ஒதுக்கியது பிரேமம் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. கடந்த மாதம் நடந்த ஃபிலிம்ஃபேர் விருதுகளிலும் பிரேமம் அதிக விருதுகளைப் பெறவில்லை. கடந்த வாரம் நடந்த சைமா விருதுகள் தான் பிரேமம் ரசிகர்களை முதல் முறையாக மகிழ்ச்சியில் திளைத்தனர் .
பிரேமம் அள்ளிய விருதுகள்
சிறந்த படம் : பிரேமம்
சிறந்த நடிகர் (சிறப்பு விருது ) : நிவின் பாலி
சிறந்த இயக்குனர் : அல்ஃபோன்ஸ் புத்திரன்
சிறந்த புதுமுக நடிகை : சாய் பல்லவி
சிறந்த இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்
சிறந்த பாடல் ஆசிரியர் : ஷபரீஷ் வர்மா
சிறந்த ஆண் பாடகர் : விஜய் யேசுதாஸ்
விருதுகளை அள்ளிய நானும் ரவுடி தான்
http://img.vikatan.com/cinema/2016/07/04/images/simma14.png (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=5695)(கலர்ஃபுல் சைமா விருதுவிழா ஆல்பத்திற்கு படத்தின் மீது க்ளிக்குக!) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=5695)நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே , பெரிதும் கிசுகிசுக்கப்படும் ஜோடி நயந்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான். இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சைமா விருதுகளுக்கு, நயனும், விக்னேஷ் சிவனும் இணைந்து சென்றது கடந்த வார கோலிவுட் வைரலானது.
அதற்கு ஏற்றாற்போல சைமாவிலும் விருதுகளை அள்ளியது நானும் ரவுடி தான் திரைப்படம்.
சிறந்த இசை : அனிருத்
சிறந்த ஆண் பாடகர் : அனிரூத்
சிறந்த காமெடி நடிகர் : RJ பாலாஜி
சிறந்த நடிகை : நயன்தாரா....
balaajee
5th July 2016, 03:26 PM
பதவி விலக நடிகர் கருணாஸ் திடீர் முடிவு
தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பதவியில் இருந்து நடிகர் கருணாஸ் விரைவில் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றி பெற்று எம்எல்ஏ (http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=http://tamil.webdunia.com&q=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0 %AF%8D%E0%AE%8F)ஆனார்.
இந்த நிலையில், தனக்கு அரசியலில் பல்வேறு பணிகள் இருப்பதாலும், தொடர்ந்து சினிமாவிலும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும், தான் தற்போது வகித்து வரும், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
balaajee
6th July 2016, 04:12 PM
சரத்குமார் இளைஞர் படைக்கு நான் ரெடி! ’ஒருவன்’ க்ரிஷ் பேட்டி - VIKATAN
http://img.vikatan.com/cinema/2016/07/06/images/WhatsApp-Image-20160630111.jpeg
சீரியல் நடிகர், சினிமாவில் சிறப்புக் கதாபாத்திரங்கள் என க்ரிஷ் கொஞ்சம் பிஸி.. ஹாய் என்றால் ‘ஒருவன்’ படத்துல சரத்குமார் சாருக்கு பையனா நடிச்சது நான் தான் என முன்னாள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கிறார் க்ரிஷ் என்கிற கிருஷ்ணா...
அந்தச் சின்ன ரோஜா, சின்ன ரோஜா பாடலில் உருக்கம் காட்டியது நீங்களா?
“ அந்தப் படத்துல நடிச்சு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில விருது கூட வாங்கியிருக்கேன். படிச்சது எம்.பி.ஏ. குழந்தை நட்சத்திரமா ‘ஒருவன்’ , ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படங்கள்ல நடிச்சிருக்கேன். டிவி தொடர்கள்ல ’பைரவி’, ’தென்றல்’, ’அழகி’, ‘சலனம்’..( நீள்கிறது)
இறைவி’ படத்துல எப்படி வாய்ப்புக் கிடைச்சது?
“ ‘555’, ’ஆநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’, ’ஜில்.ஜங்.ஜக்’ ’நட்பதிகாரம்’ படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆமா ஜில்.ஜங்.ஜக் படத்துல காரத் தூக்கிட்டுப் போய் வெடிக்க வைக்கிறதே நான் தான். அப்போ தான் நண்பர் ஒருத்தர் மூலமா கார்த்திக் சார் படத்துல ஒப்பந்தம் ஆனேன். என்னப் பார்த்த உடனே ஜில்.ஜங்.ஜக் பட காட்சி அவருக்கு ஞாபகம் வந்துடுச்சு. என்ன ஒரு ஞாபகம் பாருங்க அவருக்கு!”
குழந்தை நட்சத்திரமா கனமான பாத்திரத்துல நடிச்சிட்டு நடுவுல ஏன் ஆளையே காணோம்?
“ எல்லாம் குடும்ப சூழல் தான். அப்பா இறந்துட்டாரு. அம்மாவுக்கு நான் உதவி பண்ண வேண்டியிருந்துச்சு. அதனால சினிமாவுக்கெல்லாம் மூட்டைக் கட்டி வெச்சுட்டு படிப்புல ஈடுபாடு செலுத்தினேன். படிச்சேன். அவங்க இஷ்டப்பட்ட படி வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். அப்புறம் என்னோட ஆசைப்படியே சினிமாவுக்கு திரும்ப வந்துட்டேன்!”
http://img.vikatan.com/cinema/2016/07/06/images/sara.png
குழந்தையா இருக்கும் போதே உங்களை நடிக்க விடல. இப்போ என்ன சொல்றாங்க?
“ என்ன சொல்லுவாங்க தினம் தினம் திட்டுதான். எல்லாத்துக்கும் மேல எனக்குக் கல்யாணம் வேற ஆகிடுச்சு. சும்மா விடுவாங்களா!”
உங்க மனைவி பற்றி..
“ ஒரு தனியார் கம்பெனியில வேலை செய்யறாங்க. எனக்கு ஒரு பையன் இருக்கான். அவங்க தான் உலகம். இருந்தாலும் கொஞ்சம் சினிமா ஆசையும் இருக்கு. நல்ல வாய்ப்புகளும் வருது. சின்னச் சின்ன திட்டுகளை வாங்கிக்கிட்டே என்னோட லட்சியத்த பூர்த்தி செய்துகிட்டு இருக்கேன்!”
அடுத்தடுத்து என்ன படங்கள்.. எதிர்கால திட்டம் என்ன?
” கௌதம் மேனன் சார் இயக்கத்துல தனுஷ் சார் கூட ‘ எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்துல ஒரு சின்ன கேரக்டர் நடிக்கிறேன். திரைப்படங்கள், டிவி இதுதான் எதிர்கால திட்டம். வில்லனா நடிக்கணும்ங்கறது தான் ஆசை!”
வில்லனா...? ஏன் இந்த கதாநாயகன் கனவெல்லாம் இல்லையா?
“ அந்த பெட்ரமாஸ் லைட்டே வேண்டாம். எனக்கு வில்லன் பாத்திரம்னா அவ்வளவு இஷ்டம். ஒரு படத்துலயாவது பயங்கர வில்லனா நடிக்கணும்!”
சின்னத்திரையில நடிச்சா, வெள்ளித்திரை வாய்ப்புக் குறையும்னு ஒரு கருத்து இருக்கே?
“ இத நான் நம்பலை. உண்மைய சொன்னா ஒரு இயக்குநருக்கு தன்னோட படத்துல இந்த பாத்திரத்துக்கு ஒரு நடிகர் வேணும்னா கண்டிப்பா சின்னத்திரை நடிகரா இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகரா இருந்தாலும் சரி அந்த வாய்ப்பு நமக்கு நிச்சயமா கிடைக்கும். சின்னத்திரை நடிகர் , வெள்ளித்திரை நடிகர்னு எந்த வித்யாசமும் இல்லை. எல்லாருமே நடிகர் தான். அவங்களோட திறமைய பொறுத்து தான் வாய்ப்புகள் அமையறதும், இல்லாமப் போறதும்!”
http://img.vikatan.com/cinema/2016/07/06/images/WhatsApp-Image-201606301.jpeg
சரத்குமார் 100 இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்காரே!
கொலைகளைத் தடுக்க 100 இளைஞர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. (http://www.vikatan.com/news/politics/65727-actor-sarathkumar-will-start-youth-force-movement.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2)
“ நான் ’ஒருவன்’ படம் நடிச்சு சில வருடங்களுக்கு அப்புறம் அவர ஒரு தடவ சந்திச்சேன். அப்போவே உன்னைய எங்கையோ பார்த்துருக்கேன்னு சொன்னாரு. அப்போதான் நான் உங்க பையனா நடிச்சேன்னு சொன்னேன். கேட்ட உடனே ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இப்ப சமீபத்துல என்னை ஒரு நடிகரா பார்த்தப்போ அடடே நல்ல மாற்றம்’னு பாராட்டினாரு. கூடவே ராதிகா மேடம் கிட்ட பேசு ,நடிக்க வாய்ப்புகள் இருந்தா கூப்பிடுவாங்கனு சொல்லி ஊக்கம் கொடுத்தார். அவரு நடிக்க கூப்பிட்டாலே போவேன். நல்ல விஷயத்துக்கு அழைப்புக் குடுத்துருக்காரு, நிச்சயம் நான் ரெடி!”
balaajee
11th July 2016, 09:27 AM
Superstar Creates Sensation with S3
Among Tamil cinema superstars, Suriya has the biggest market in Telugu states after Rajinikanth. Most of his films have done well in Telugu. Telugu audience loves him so much that his last film 24 was a hit in Telugu but failed in Tamil.
Suriya’s reliability and the popularity of Singham franchise have fetched superb deal for Telugu rights of Singham 3 aka S3 in Telugu.
S3’s Telugu dubbing rights were bought for 18 crore, which is the biggest ever deal for a Suriya starrer. Only Rajinikanth or Shankar’s films have got bigger deals than this.
Suriya films have been underperforming in Tamilnadu lately. Even acclaimed films like 24 failed to click at the ticket window. Singham franchise only brought guaranteed returns for Suriya. Therefore he is very confident of bouncing back with S3.
Singham (Yamudu), Singham 2 (Singam) both have performed well in Telugu too. Hence buyers are betting big on S3 to strike a chord with the masses.
balaajee
12th July 2016, 09:50 AM
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்: ராகுலை சந்தித்த பிறகு குஷ்பு பேட்டி
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டால் ஏற்கத் தயார் என அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங் களில் மட்டுமே வென்றது. தோல் விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். இதையடுத்து தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ப.சிதம்பரம், தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கட்சியின் தேசிய செய லாளர் சு.திருநாவுக்கரசரை மாநிலத் தலைவராக்க ராகுல் காந்தி விரும்புவதாகவும், மூத்த தலைவர்களின் எதிர்ப்பால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி டெல்லி சென்ற இளங்கோவன், ராகுல் காந்தியை சந்தித்து பீட்டர் அல்போன்ஸ் அல்லது குஷ்புவை தலைவராக்க வேண்டும். அப் போதுதான் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று கணிசமான இடங் களில் வெல்ல முடியும். உள்ளாட் சித் தேர்தலில் தனித்துப் போட்டி யிட்டு தோல்வி அடைந்தால் 2019 மக்களவைத் தேர்தலில் காங் கிரஸை யாரும் கூட்டணியில் சேர்க்க மாட்டார்கள். அப்படியே சேர்த்தாலும் ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் கிடைக்கும் என தெரிவித்ததாக அவரது ஆதர வாளர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் ராகுல் காந்தியை குஷ்பு நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது இளங்கோவன் மீது எதிர்தரப்பினர் வேண்டுமென்ற புகார் தெரிவித்துள்ளதாகவும், தமி ழகத்தின் தற்போதைய சூழலில் தலைவர் பதவிக்கு இளங் கோவனே பொருத்த மானவர் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
ராகுல் காந்தியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘‘தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாநிலத் தலைவர் பதவி அளிக்கப்பட்டால் ஏற்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை. தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட டெபாசிட் பெறவில்லை. ஆனால், அதற்கு பொறுப்பேற்ற தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை ராஜினாமா செய்யவில்லை. ஆனால், 8 தொகுதியில் வெற்றி பெற்றும் அனைத்து தொகுதிகளில் டெபாசிட் பெற்றும் தோல்விக்கு பொறுப்பேற்று இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்’’ என்றார்.
balaajee
12th July 2016, 10:08 AM
‘தில்லுக்கு துட்டு’ வசூல்: சந்தானம் மகிழ்ச்சி
சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு நான்கு நாட்களில் 12 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் சந்தானம் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2016-07/11/full/1468242776-3751.jpg
சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் காமடி கலந்த திகில் கதை கொண்ட தில்லுக்கு துட்டு திரைப்படம் வெளியான் நான்கு நாட்களில் 12 கோடி வசூல் செய்துள்ளது.
காமடியனாக நடித்து வந்த சந்தானத்துக்கு இத்திரைப்படத்தின் வசூல் தன் நம்பிக்கையை அளித்துள்ளது. இனி தைரியமாக கதாநாயகன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது இத்திரைப்படத்தின் வசூல்.
balaajee
12th July 2016, 04:27 PM
சவ ஊர்வலக்காட்சி...துணைநடிகருக்காக நெக்குருகிய இயக்குநர் பாலா!
http://img.vikatan.com/cinema/2016/07/12/images/bala2.jpg
கலைஞர்கள் எப்போதும் உணர்ச்சிப்புர்வமானவர்கள்...அந்த உணர்ச்சிவயப்படுதல்தான் ஒருவகையில் அவர்களை கலைஞர்களாக நீடிக்கவைக்கிறது. சமீபத்தில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம், தாரை தப்பட்டை. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் பாலாவை நெகிழ வைத்த சம்பவம் ஒன்றை, ஒளிப்பதிவாளரும் பிரபல இயக்குநருமான மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது முகநுாலில் வெளியிட்டுள்ளார்.
பாலா என்ற கலைஞனின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துவதாக உள்ள அந்த நிகழ்வை ஜான் மகேந்திரனே விவரிக்கிறார் இங்கே....
"மனிதன் ஆரம்பமாவது பாடல் படப்பிடிப்பு...தஞ்சாவூரில், சுமார் இருபது நாட்கள் இந்த பாடலின் படப்பிடிப்பு நடந்தது...வயதான பெரியவர் இறந்த ஊர்வலத்தில் சசிகுமார் தன் குழுவினருடன் பறை அடித்தபடி பாடும் பாடல்.
இறந்த பெரியவராக நடித்தவர், தினமும் காலையில் சாப்பிட்டவுடன் பாடையில் ஏறி படுத்ததும், மதிய உணவிற்கு மட்டும் இறங்குவார், மீண்டும் படுத்து மாலை படப்பிடிப்பு முடியும் வரை பாடையில் படுத்திருப்பார். தொடர்ந்து இருபது நாட்கள்,மாலை அணிவிக்கபட்டும், தலை வெள்ளை கயிறால் கட்டப்பட்டும், மூக்கில் பஞ்சு அடைக்கபட்டும், பூக்கள் தூவபட்டும், பட்டாசு வெடிக்கபட்டும், சுற்றி நடந்தவர்கள் அழுதபடி வருவதும், சாவை பற்றிய பாடல் ஒலிக்கபட்டும், கடைசி நாள் நிஜ சுடுகாடு வரை அழைத்து செல்லபட்டார்.
படப்பிடிப்பு நேரத்தில் பாலா சாருக்கு, அந்த நாலு ப்ரேமுக்குள் இருக்கும் பிம்பம் தான் உலகம்.... அதில் இம்மி பிசக கூடாது.... படப்பிடிப்பு முடிந்த ஒரு மாலை வேலையில், அவர் அறையில் பேசிகொண்டிருக்கும் பொழுது... பாலா சார், “ ஏன் ஜான்...சும்மா அந்த பாடை வண்டில ஏறி நிக்கறதுக்கே என்னமோ மாதிரி இருக்கு...பாவம் அந்த வயசான மனுஷன் தினமும் மாலையோடு படுத்து கிடக்குறாரே அவர் மனநிலை எப்படி இருக்கும்...சாவு வரும்போது யாருக்கும் தெரியாது...நம்ம பிணத்த வெச்சு என்ன பண்ணுவாங்கன்னு கூட தெரியாது, ஆனா இவருக்கு இத்தனை நாள், அவரோட சாவு ஊர்வலத்த காட்டுறோம்...அவர் மைண்ட்ல என்னலாம் ஓடிட்டு இருக்கும்? திரும்பி போகும் போது அவர் என்ன நினச்சிட்டு போவார்... அவர் ஷூட்டிங் முடிஞ்சு போகும் போது மனசு நிறைவா எதாவது செய்யணும் ஜான் “ என்றார்...
படப்பிடிப்பு முடிந்து அந்த பெரியவர் கிளம்பும் பொழுது, பாலா சார் அந்த பெரியவரை தனியாக அழைத்து ஒரு தடினமான கவரை கொடுத்து அனுப்பினார்...நிச்சயமாக அவர் ,எந்த வயதிலும் அவ்வுளவு பெரிய தொகை பார்த்திருக்க மாட்டார்.“ வீட்டுக்கு போகும் போது சந்தோஷமா போகட்டுமே “ என்றார் பாலா சார். இதுதான் பாலா சார்..."
ஜான் மகேந்திரனை மட்டுமல்ல; நம்மையும் நெகிழ வைக்கிறது பாலாவின் இந்த மனிதநேயம்...
balaajee
12th July 2016, 04:36 PM
சாய் பல்லவி ஆசைப்பட்டதால செல்ஃபி: ட்விட்டரில் சதீஷ் ஜாலி!
விருது நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றிருந்த நடிகர் சதீஷ், பிரேமம் படப்புகழ் நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து எடுத்த செல்ஃபி படங்களை ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதைப் பற்றி எழுதிய சதீஷ், சாய் பல்லவி ஆசைப்படதால செல்ஃபி என்று வேடிக்கையாக கூறியுள்ளார். இதற்குச் சிரிப்புடன், நன்றி எனப் பதிலளித்துள்ளார் சாய் பல்லவி.
http://media.dinamani.com/2016/07/11/sai-pallavi1.jpg/article3524206.ece/binary/original/sai%20pallavi1.jpg http://media.dinamani.com/2016/07/11/sai-pallavi2.jpg/article3524208.ece/binary/original/sai%20pallavi2.jpg
balaajee
12th July 2016, 04:38 PM
பியூர் சினிமா புத்தகக் கடை
சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், புதிதாக பியூர் சினிமா புத்தகக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை இயக்குனர் மிஷ்கின் திறந்து வைத்தார்.
http://media.dinamani.com/2016/07/06/FB_IMG_1460729849631.jpg/article3516458.ece/binary/original/FB_IMG_1460729849631.jpg இந்தக் கடைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா? இந்தியாவில் முதல்முறையாக சினிமாவிற்கென்றே, சினிமா புத்தகங்களுக்கென்றே, திறக்கப்பட்ட முதல் கடை இது. இங்கே தமிழில் வெளிவந்த சினிமா சார்ந்த புத்தகங்கள், ஆங்கிலத்தில் வெளியான மிக முக்கியமான சினிமா புத்தகங்கள், குறும்பட, ஆவணப்படம் டி.வி.டி.க்கள் என எல்லாமும் ஓரிடத்தில் கிடைக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நல்ல சினிமாவிற்கான இயக்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இன்னொரு மிக முக்கியமான முன்னெடுப்புதான் இந்த பியூர் சினிமா புத்தகக் கடை. முன்னமே இவர்களின் பதிப்பகமான பேசாமொழி பதிப்பகத்தின் மூலம் பல்வேறு நல்ல சினிமா புத்தகங்களை பதிப்பித்து சினிமா சார்ந்த கல்விக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கினின் ஐந்து திரைக்கதை புத்தகங்கள் இவர்கள் பதிப்பித்த முக்கியமான புத்தகங்கள். ஜூன் மாத நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றன இந்த புத்தகங்கள்.
இந்த புத்தகக் கடையின் நிறுவனர் அருண் அவர்களிடம் பேசியபோது, ’இந்த புத்தகக் கடையில் புத்தக விற்பனை மட்டுமின்றி, உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறுகிறது, அதாவது வருடத்திற்கு 1500 ரூபாய் கட்டி உறுப்பினர் ஆகிவிட்டால், இங்கே இருக்கும் புத்தகங்களை இங்கிருக்கும் ஓய்வறையில் உடற்கார்ந்து படித்துக் கொள்ளலாம். உலகப் படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்களை இங்கிருக்கும் பெரிய திரையில், நல்ல ஒலியமைப்புடன் கூடிய அரங்கில் பார்த்து மகிழலாம். தவிர புத்தகங்களை பத்து சதவீதக் கழிவில் ஆண்டு முழுவதும் வாங்கி கொள்ளலாம். இது இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடத்தப்படும் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள சிறப்பு கழிவும் உண்டு’ என்கிறார்.
http://media.dinamani.com/2016/07/06/FB_IMG_1460729877552.jpg/article3516460.ece/binary/original/FB_IMG_1460729877552.jpg மேலும், தமிழில் நல்ல சினிமா, அல்லது சினிமா தொழில்நுட்பம் சார்ந்து நிறைய புத்தகங்கள் வெளிவரவில்லை. நூற்றாண்டுகளை கடந்த தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரம் புத்தகங்கள் கூட சினிமாவிற்காக அச்சிடப்படவில்லை என்பது பெரும் சோகம். இந்தச் சூழலில்தான் சினிமா புத்தகங்களை அதிகமாக கொண்டு வரவும், அவற்றுக்கான விற்பனையை அதிகப்படுத்தவும், நல்ல சினிமாவை எல்லா தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லவும், சினிமா குறித்த கல்வியை உருவாக்கவும் இந்த புத்தகக் கடை திறக்கப்பட்டுள்ளது என்கிறார் அருண்.
ப்யூர் சினிமா கடையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது அருண் கூறியது. ‘பியூர் சினிமா கடை தொடங்கியது முதல் இரண்டு புத்தகங்களை அதிகமான வாசகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒன்று சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி? இன்னொன்று கே. பாக்யராஜின் வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம். சுஜாதா புத்தகம் இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் கே.பாக்யராஜின் புத்தகத்தை அவரிடமே பேசி, அவரிடம் இருந்த நாற்பது பிரதிகளை பியூர் சினிமா புத்தகக் கடையில் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த நாற்பது பிரதிகளும் வெகுவிரைவில் விற்றுத் தீர்ந்தால் அடுத்த பதிப்பிற்கு இந்த புத்தகம் செல்லும். ஒரு கதையை எப்படி சொல்லவேண்டும் என்கிற உத்தியை நீங்கள் நிச்சயம் இதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் புத்தகத்தை தொடர்ச்சியாக வாசகர்கள் கேட்கிறார்கள் என்றதும் உடனே புத்தகத்தை விற்பனைக்கு கிடைக்க ஏற்பாடு செய்தார் கே. பாக்யராஜ். அவருக்கு பியூர் சினிமாவின் நன்றி. இப்போது விற்பனையாகிக் கொண்டிருப்பது ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிதான். இந்த நாற்பது பிரதிகள் விட்டதும், மறுபதிப்பு இன்னும் நிறைய கட்டுரைகளோடு வெளிவரவிருக்கிறது’ என்றார்.
முகவரி:
பியூர் சினிமா புத்தகக் கடை
எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600026
தொடர்புக்கு: 9840698236
balaajee
12th July 2016, 05:53 PM
'அப்பா' படம் பார்க்க பாஸ் வழங்கிய பள்ளி: நன்றி சொல்லும் இயக்குநர் சீனு ராமசாமி!
http://img.vikatan.com/cinema/2016/07/12/images/appa600final.jpg
சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்தை மக்கள் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இயக்குனர்கள் பலரும் இந்த படத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். அப்பா, மகன்-மகளின் புரிதல் எப்படி இருக்க வேண்டும். என்னென்ன விஷயங்களை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என பல விஷயங்களைப் பாடமாக்கியிருக்கிறது 'அப்பா' படம். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இயக்குநர்கள் பலர் கலந்துகொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அதில் சீனு ராமசாமியும் ஒருவர்.
இது எல்லோருக்கும் தெரிந்த செய்தியே. ஆனால் புதிய செய்தி இதுதான். அது, இன்று(செவ்வாய்) தனது முகநூலில் இயக்குநர் சீனு ராமசாமி, கோபிப்பாளையத்தில் உள்ள தூய திரேசாள் முதனிலைப் பள்ளி யைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். காரணம் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் 'அப்பா' படம் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் பார்க்கவேண்டும் என்றும் அதற்கான சலுகைக் கட்டண பாஸ் வழங்கியுள்ளது.
இந்தப் பள்ளியைப் பாராட்டியதோடு, நன்றியும் கூறியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
balaajee
13th July 2016, 02:21 PM
'தில்லுக்கு துட்டு' படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக்க ஆர்வம்
சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தில்லுக்கு துட்டு' படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தில்லுக்கு துட்டு'. ராமசாமி தயாரித்திருந்த இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சந்தானம் நடிப்பில் வெளியான முந்தைய படங்களின் சாதனையை முறியடித்து முதல் நாளில் 3 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருக்கிறது. சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் அரங்கு நிறையந்த காட்சிகள் 100-ஐ கடந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைக்கு பலரும் தேனாண்டாள் நிறுவனத்தை அணுகி இருக்கிறார்கள். தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டு, யாருக்கு ரீமேக் உரிமை என்பதை முறையாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
balaajee
13th July 2016, 03:43 PM
முன்னாடி இருந்த ஸ்பீட் இப்போ இல்லல்ல..! - ஏ.ஆர்.ரஹ்மான்
http://img.vikatan.com/cinema/2016/07/13/images/600final.jpg
தொடக்க காலத்தில் ரசிகர்களைக் கவர்ந்து அவர்களின் மனதில் எப்போதும் அலையடிக்கும் இசைப் பாடல்களைக் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இப்போதெல்லாம் முன்பு போல இசையை என்னால் ரசிகர்களுக்கு வழங்க இயலவில்லை என்று கூறியுள்ளார்.
மும்பையில் நேற்று(செவ்வாய்) நடந்த 'மொகஞ்சதாரோ' என்ற புதிய படத்தின் அறிமுக விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் மொகஞ்சதாரோ படத்தின் இயக்குநர் அஷூதோஷ் கோவரிக்கரைப் பற்றி பேசிய அப்படத்தின் இசையமைப்பாளார் ஏ.ஆர். ரஹ்மான்,
''அஷூதோஷ் என்னை இந்த படத்திற்கு இசையமைக்க அணுகியபோது ஏதோ வரலாறு சார்ந்த ஆவணப்படமாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். பிறகு, அந்தப்படம் பற்றி விளக்கியப் பிறகு சிலிர்த்துப் போனேன். இந்தப் படத்திற்கு இசையமைக்கும்போது அந்தக் களத்தில் இருப்பது போல கற்பனை செய்து கொண்டேன். அங்கே நான் இருந்தது போலவே உணர்ந்து இசையமைத்தேன். " என்றார்.
விழாவில், ரஹ்மானிடம் மொகஞ்சதாரோ பட இயக்குனர் அஷூதோஷ், 'இந்தியப்படங்கள், தென்னிந்தியப் படங்கள், மேற்கத்தியப் படங்கள் என எப்படி அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உங்களால் இசையமைக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ரஹ்மான், 'ஒவ்வொரு மனிதருக்குள்ளும் காதல், கோபம், சோகம், கனவு என எல்லா உணர்வுகளும் இருக்கும். முன்பெல்லாம் இதுபோன்ற உணர்வுகளை எனக்குள் கொண்டுவந்து,அவற்றை என்னுடைய இசையாகப் பிரதிபலிப்பேன். அதுபலரின் மனதையும் கவர்ந்தது. இப்போது எனக்கு வயதாகிவிட்டது. இது போன்ற இசையை என்னால் இனி கொடுக்கமுடியுமா என்று தெரியவில்லை' என்றார்.
balaajee
14th July 2016, 10:08 AM
What lured Demi Moore to do an Indian film?
http://dc-cdn.s3-ap-southeast-1.amazonaws.com/dc-Cover-quba8tonsepku87h3bb5n4tmi2-20160713222821.Medi.jpeg Demi Moore
Tabrez Noorani’s Love Sonia features Hollywood star Demi Moore, playing a reformist and social activist working against human trafficking. This is the first time that Demi will act in an Indian film, but according to the director, the actress wasn’t as elusive as one would’ve imagined. “It wasn’t that difficult at all. Demi has been involved in campaigns against human trafficking for years and has her own non-profit organisation called Thorn, which helps such victims. She loved the script and was happy to play the part of the social worker.”
Mark Duplass is another Hollywood actor who plays a part in the film. “Both Mark and Demi were a delight to work with. We shot with them in LA and have started editing the film now. It was an amazing shoot but a difficult one too.”
For Noorani, it has been a long wait before his dream of making a film on the flesh trade could be realised. “I’ve waited 12 years to make this film. The subject of human trafficking is very close to my heart. I’ve researched extensively on the subject, visited brothels and even rescued sex workers in the process with the help of NGOs.”
Other actors in the film include Freida Pinto, Richa Chadda, Manoj Bajpai, Mrunal Thakur and Riya Sisodia among others.
About the cast he adds, “They all surrendered to my script from the moment they came on board. No money was discussed. I can’t begin to describe Manoj Bajpai’s level of commitment to the project.”
balaajee
14th July 2016, 02:06 PM
கமலஹாசன் படத்தில் நடிச்ச குழந்தையா இது!- VIKATAN
http://img.vikatan.com/cinema/2016/07/14/images/fathima.jpg
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன்
மணிவண்ணன், நாசர் என பெரிய பட்டாளமே நடித்திருந்த அவ்வை சண்முகி 1996 ம் ஆண்டு வெளிவந்தது.
இந்தப் படம் ஹிந்தியில் 1997 ல் டப் செய்யப்பட்டது. ஹிந்தியில் சாச்சி- 420 எனும் பெயரில் வெளியானது.அதில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அமீர் கானின் மகள் பாத்திமா ஸானா சையிக்.
சாச்சி-420 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பாத்திமா ஸானா சையிக், 15 வருடங்களுக்குப் பிறகு இப்போது அமீர்கான் நடிக்கும் 'டன்கல்' திரைபடத்தில் அவருக்கு மகளாக நடிக்கவிருக்கிறார். மல்யுத்த வீரரான கீத்தா போகத் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த கதாப்பாத்திரத்திற்காக தனது நீளமான முடியை வெட்டியதோடு, உடல் எடையைக் குறைத்து ஒல்லியாகியும் உள்ளார். சமீபத்தில் அவருடைய புகைப்படங்களை அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.
balaajee
14th July 2016, 03:12 PM
பிரம்மா - ஜோதிகா இணையும் பட ஷூட்டிங் தொடக்கம்
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தரமணியில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. அப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரம்மா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
முழுக்க பெண்கள் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பிரம்மா. இப்படத்தின் பிரதான வேடத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமானார். ஜோதிகா மற்றும் அவரோடு நடிக்கும் படக்குழுவினருக்கு நடிப்புப் பயிற்சி அளித்து வந்தார் பிரம்மா.
நடிப்பு பயிற்சி முடிந்து, இப்படத்தின் படப்பிடிப்பு தரமணியில் இன்று முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கிரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜோதிகாவோடு லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
'36 வயதினிலே' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் தான் நடித்து வருகிறார் ஜோதிகா. படப்பிடிப்பு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா "ஜோதிகா தனது அடுத்த படத்தை அற்புதமான படக்குழுவினரோடு தொடங்கி இருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
balaajee
14th July 2016, 04:00 PM
இது சிவலிங்கா! வடிவேலுவுடன் அதிரடிக்கும் ராகவாலாரன்ஸ், ரித்திகா
http://img.vikatan.com/cinema/2016/07/14/images/vasu.jpgமொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான பூஜையை இன்று(வியாழன்) தொடங்கிவிட்டார் ராகவாலாரன்ஸ்.
பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ், வடிவேலு, ரித்திகாசிங் மற்றும் வாசுவின் மகன் ஷக்திவேல் வாசு, ஊர்வசி, பானுப்ரியா, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் படமே சிவலிங்கா. இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பும் இன்று தொடங்கியது.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் “சிவலிங்கா”. சிவராஜ்குமார், வேதிகா, ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது சிவலிங்கா. கர்நாடகாவில் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. இப்படத்திற்கான தமிழ் ரீமேக்கில் தான் ராகவாலாரன்ஸ் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வரும் ஆகஸ்ட் முதல் வாரம் படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து பெங்களூரு, மைசூர், மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. தமன் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை, சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தைத் தயாரித்த ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவலிங்கா படத்தை 2017 பொங்கல் நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த 2005ல் வெளியான சந்திரமுகி படத்திற்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து மீண்டும் வடிவேலு, பி.வாசு கூட்டணியில் இப்படம் உருவாகுவதால் நிச்சயம் காமெடி பெரிதும் பேசப்படும் அளவில் இருக்கும் என்று கூறுகிறார்கள் படக்குழுவினர்.
balaajee
15th July 2016, 11:55 AM
சாயா புனிதமான ஆத்மாக்களை பேசும் படம் - இயக்குனர் பழனிவேல் பேட்டி
இது பேய்களின் சீசன். விதவிதிமான பேய்களை உருவாக்கி உலவவிடுவதில் இயக்குனர்கள் நீ நான் என்று போட்டியிடுகிறார்கள். இயக்குனர் பழனிவேல் தன் பங்குக்கு ஒரு பேய் படத்தை எடுக்கிறார். படத்தின் பெயர் சாயா. இதன் முக்கிய அட்ராக்ஷன், சோனியா அகர்வால். மீதியை பழனிவேலையே கேட்டு தெரிந்து கொள்வோம்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2016-07/14/full/1468509801-1305.jpg
அதென்ன சாயா...?
சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்று பொருள். சக்தி நிறைந்த அந்த வார்த்தைக்கும், ஆத்ம சக்திக்கும் தொடர்பு இருப்பதால் சாயா என்று பெயர் வைத்துள்ளேன்.
யார் நடிக்கிறார்கள்?
சந்தோஷ் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகி டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி. இன்னொரு நாயகியாக ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்த கௌதமி சௌத்ரி நடிக்கிறார்.
சோனியா அகர்வால்...?
சோனியா அகர்வாலுக்கு இது முக்கியமான படம். வன இலாகா அதிகாரியாக அவர் நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக கடும் பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். அவருக்கு முற்றிலும் மாறுபட்ட இமேஜை இந்தப் படம் உருவாக்கிதரும். முக்கியமாக அவருக்கு ஆக்ஷன் பாதை அமைத்துதரும் படமாக சாயா இருக்கும்.
மற்ற பேய் படங்களிலிருந்து சாயா எப்படி மாறுபடுகிறது?
இதுவரை எடுக்கப்பட்ட பேய் படங்களில் ஆவிகளை பற்றி மட்டுமே பேசியிருக்கிறார்கள். பயம் காட்டுவது, சத்தங்களால் பயமுறுத்துவது என்ற வழக்கமான பாணியை விட்டுவிட்டு இந்தப் படம் புனிதமான ஆத்மாக்களை பற்றி பேசுகிறது. ஆத்மாக்களின் நல்ல நோக்கம் மாணவர்களுக்கும், சமுதாயத்திற்குமான தேவைகளை நிறைவேற்ற உதவும் என்பதை வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேnம்.
எங்கு படத்தை படமாக்கினீர்கள்?
பெரம்பலூரில் உள்ள பச்சை மலைப் பகுதிகள் மற்றும் சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். சாயா ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தரும்.
balaajee
15th July 2016, 03:43 PM
Wanted Picture With Spielberg As My Fee
Actor Jagapathi Babu, who lent his voice for the giant character in the dubbed Telugu version of Disney’s “The BFG”, agreed to work on the project free of cost in return for a photograph with his idol Steven Spielberg.
“When they approached me, I was asked how much I will charge. I told them I don’t want anything but a picture with Spielberg. I wanted to work in the project free of cost but the makers were considerate enough to pay,” an exhilarated Jagapathi told IANS.
His dream to get a photograph clicked with “The BFG” director Spielberg remains unfulfilled. But working on the project has been a cherished experience for him.
“It’s the first and the best opportunity to dub for someone in my career. The names associated with the project are so big; it’s a huge excitement in itself,” he said, adding that he usually doesn’t watch animation films.
“Although I’ve watched most of Spielberg’s films, I haven’t watched many animated films. I prefer reality over animation,” he explained.
In the film, which is based on Roald Dahl’s novel, Jagapathi has dubbed for the character originally voiced by Mark Rylance.
Talking about the process of dubbing, he said it came with its own set of challenges.
“When I was dubbing, there was no picture on the screen. All I could see was a circle indicating the face of the character and its lips. I did not know the story and nor did I know how my voice would sound in the final version of the film,” he said, and added that while it was challenging, the euphoria associated with all the big names on the project persuaded him to pull it off.
Megastar Amitabh Bachchan has lent his voice to the character in the Hindi version.
Proud to have dubbed for the same character as his Bollywood counterpart, Jagapathi feels such associations will open new avenues for animation films in India.
“Today, animation has become simpler than it was a few years ago. You need not have to go abroad scouting for talent because we have people in India,” said Jagapathi, who would love to be associated with another exciting animated project.
balaajee
15th July 2016, 05:40 PM
SELVARAGAVAN + SANTHANAM
Santhanam (@iamsanthanam) (https://twitter.com/iamsanthanam?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eser p%7Ctwgr%5Eauthor)
22 mins ago - View on Twitter (https://twitter.com/iamsanthanam/status/753918550062923777?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp %5Eserp%7Ctwgr%5Etweet)
Hi friends very glad to announce my next project in association with director @selvaraghavan . More details reg. the project to follow soon.
selvaraghavan (@selvaraghavan) (https://twitter.com/selvaraghavan?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Ese rp%7Ctwgr%5Eauthor)
15 mins ago - View on Twitter (https://twitter.com/selvaraghavan/status/753920531502473218?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp %5Eserp%7Ctwgr%5Etweet)
Very happy to announce that my next film will be starring @iamsanthanam ..looking forward.
kubrick
24th July 2016, 05:17 PM
Sorry for Offtopic post but I am from Chennai and I am seeing this message as I try opening the forums:
*“The url has been blocked under instructions of the Competent Government Authority or in compliance to the orders of Hon’ble Court.”*
raagadevan
22nd July 2017, 01:00 AM
Composer Deva: the monarch of Gaana music
http://www.thehindu.com/entertainment/music/music-composer-deva-talks-about-tweaking-ragas-and-understanding-film-music-in-his-journey-from-composer-to-singer/article19316698.ece?homepage=true
Russellaqi
17th January 2018, 11:09 AM
So, what are the Tamil movies to look forward to in 2018?
mappi
17th January 2018, 07:42 PM
2.O
Kaala
Viswasam
Junga
Kali
Thadam
Oru Nalla Naal Pathu Soldran
Sethakathi
Naachiyar
Party
Super Deluxe
Semma Botha Aagatha
Saamy 2
Dhuruva Natchathiram
Iravukku Aayiram Kangal
Annanukku Jai
Russellaqi
18th January 2018, 06:43 AM
That's an extensive list. Naturally, the top two are in the priority list. :-)
raagadevan
15th September 2018, 05:19 AM
‘I’m more a storyteller than a director’
Lenin Bharathi talks about his directorial début Merku Thodarchi Malai and his interest in making people-centric films
-The Hindu, September 14, 2018
https://www.thehindu.com/entertainment/movies/lenin-bharathi-talks-about-his-directorial-dbut-merku-thodarchi-malai-and-his-interest-in-making-people-centric-films/article24947431.ece?homepage=true
raagadevan
28th December 2018, 11:18 PM
The best of Tamil cinema in 2018
By Srinivasa Ramanujam, The Hindu - December 26, 2018
https://www.thehindu.com/entertainment/movies/the-best-of-tamil-cinema-in-2018/article25834330.ece
kubrick
11th February 2019, 06:44 AM
Sorry for Offtopic post but I am from Chennai and I am seeing this message as I try opening the forums:
I am logging in using a VPN after a couple of years. Still this forum is blocked in India. And there doesn't seem to be much activity here.
Where are all the Indian users now? Do you guys have a different place? Would love to be a part of it, if something like that exists. Thanks.
raagadevan
27th April 2019, 07:24 PM
The Woman Icon of Inspiration in Tamil Cinema...
Khushbu Sundar
https://www.youtube.com/watch?time_continue=93&v=oPODK3kCbOc
கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்...
raagadevan
31st December 2019, 05:43 PM
Tamil cinema’s 15 best masala movies of the decade
(A word of caution: You like chai, I like kaapi. You like Nadhiya, I like Amala. This list is as simple as that. Do not tell me I didn’t warn you.)
https://www.thehindu.com/entertainment/movies/thuppakki-to-petta-tamil-cinemas-15-best-masala-movies-of-the-decade/article30138904.ece
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.