PDA

View Full Version : Latest News on Tamil Cinema



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9

balaajee
6th May 2015, 02:20 PM
எல்லாப் படங்களுக்கும் சிக்கல்? கடும் அதிர்ச்சியில் முருகதாஸ்? VIKATAN

விக்ரம் நடிக்க விஜய்மில்டன் இயக்கும் பத்துஎண்றதுக்குள்ள படம் திட்டமிட்டபடி முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. முருகதாஸ் தயாரிக்கும் இந்தப்படம் தொடங்கியபோது நன்றாகத்தான் தொடங்கியிருக்கிறது. சிக்கிம் போய்ப் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தார்கள். அதன்பின்னர் கோவையில் படப்பிடிப்பு நடத்தியபோது திட்டமிட்டதைவிட இரண்டு மடங்குக்கு மேல் செலவாகிவிட்டதாம்.

இதனால் படத்தை அப்படியே போட்டுவைத்துவிட்டாராம் முருகதாஸ். சுமார் ஐந்துமாதங்கள் அப்படியே கிடந்திருக்கிறது. அதன்பின் நிறையப் பேச்சுவார்த்தைகள் சமரசங்கள் ஆகியன நடந்து மறுபடி படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். நேபாளம் போய் அடுத்தகட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார்களாம். இதற்கடுத்து பல்கேரியா போய்ப் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்பது படக்குழுவினரின் திட்டம். ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலோ பல்கேரியா போய் வருவதற்கெல்லாம் பணமில்லை. எனவே இந்தியாவுக்குள் எங்கேயாவது போய்ப் படப்பிடிப்பு நடத்துங்கள் அல்லது தமிழ்நாட்டுக்குள்ளேயே எங்காவது படப்பிடிப்பு நடத்தினால் இன்னும் சந்தோசம் என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் விக்ரம் மற்றும் இயக்குநர் விஜய்மில்டன் ஆகியோர் முருகதாஸ் மீது கடும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

http://img.vikatan.com/news/2015/05/06/images/ar%20small.jpg
முருகதாஸ் தயாரிப்பில் தயாராகும் இன்னொரு படம் ரங்கூன். இந்தப்படமும் ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறதாம். இந்தப்படத்தின் பட்ஜெட்டும் திட்டமிட்டதைவிட அதிகமாகிவிட்டது என்று தயாரிப்புத்தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறதாம். அந்தப்படத்துக்காகப் பர்மா போனஇடத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் நடந்துவிட்டனவாம். படத்தின் இயக்குநர் செய்த குளறுபடிகளும் அதிகம் என்று சொல்கிறார்கள். சரியான திட்டமிடாமல் நிறையச் செலவை இழுத்துவிட்டுவிட்டாராம் இயக்குநர். இதனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டேயிருக்கிறதாம்.

இவ்விரண்டு படங்களுக்கும் முருகதாஸூக்குப் பக்கபலமாக இருக்கும் பெரியநிறுவனம், இப்போது முருகதாஸ் மீது வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, பெரியஇயக்குநர் சொன்னபடி செய்வார் என்று நம்பி ஒப்படைத்தால் இவ்வளவு சிக்கல்கள் வருகிறதே என்று அவர்கள் வருத்தப்படுகிறார்களாம்.

இதுமட்டுமின்றி, வலியவன் படத்தைத் தயாரித்த நிறுவனம் முருகதாஸின் பொறுப்பில் ஒருபடத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததாம். வலியவன் படத்தின் படுதோல்வி மட்டுமின்றி முருகதாஸின் பொறுப்பில் எற்கெனவே இருக்கும் படங்களின் நிலையைப் பார்த்து படத்தைத் தொடங்கவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து தான் கைவைக்கும் எல்லாப்படங்களும் சிக்கலுக்கு ஆளாகி வருவதால் முருகதாஸ் கடும் வேதனையில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

balaajee
6th May 2015, 02:22 PM
மைனா நாயகன் விதார்த்துக்கு டும் டும் டும்


மைனா, ஜன்னல் ஓரம், வீரம், காடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விதார்த். இவருக்கும் பழனியை சேர்ந்த வக்கீல் சிவானந்தம் என்பரின் மகள் காயத்திரி தேவிக்கும் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் பழனியில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஜூன் 11ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து ஜூன் 17ல் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த முடிவுசெய்துள்ளனர். பெற்றோரின் ஏற்பாட்டிலேயே திருமணம் நடைபெறுகிறது.

http://img.vikatan.com/news/2015/05/06/images/vidha.jpg

2001ம் ஆண்டிலேயே சினிமாவில் அடியெடுத்துவைத்தவர் வித்தார்த். மின்னலே படத்தில் துணைநடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து சண்டகோழி, கொக்கி, லீ, திருவண்ணாமலை, குருவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
7th May 2015, 01:11 PM
த்ரிஷா - வருண் பிரிந்தது ஏன்?: மனம் திறக்கும் த்ரிஷா அம்மா!- vikatan


த்ரிஷா - வருண்மணியன் திருமணம் நின்று போனது உண்மையா? இல்லையா? என்பது குறித்த மின்னல்வேகச் செய்திகள் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது.
இதுபற்றி இதுவரை த்ரிஷா வீட்டிலோ, வருண் வீட்டிலோ யாரும் வாய் திறக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமணம் குறித்து த்ரிஷாவின் அம்மா உமா, நம்மிடம் மனம் திறந்தார்.

"த்ரிஷாவின் கல்யாணம் சம்மந்தமா அவங்க அவங்க மனசுக்கு என்னவெல்லாம் தோணுதோ, அப்படி இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு வர்றாங்க. இது ஒரு சென்சிட்டிவ்வான விஷயம். அதனாலதான் இதுவரைக்கும் வாய் திறக்காம இருந்தேன்.
பத்திரிகையில எல்லாம் 'த்ரிஷா திருமணத்துக்கு பிறகு நடிக்கறது வருணுக்கும், அவரது குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்' என்று தங்களுக்கு தோணுறதை எல்லாம் எழுதறாங்க. துளிகூட அதில் உண்மை இல்லை.

த்ரிஷா சினிமாவுல நடிக்கிறார்னு தெரிஞ்சுதான் பொண்ணு பார்க்க வந்தாங்க. புதுசாவா சினிமாவுல த்ரிஷா நடிக்கிறார். ஏற்கெனவே ஏகப்பட்ட படத்துல நடிச்சவர்னு தெரிந்துதானே நிச்சயம் செய்தாங்க. கல்யாணத்துக்கு அப்புறமும் நடிக்கலாம்னு த்ரிஷாவை, வருண் என்கரேஜ் செய்து கொண்டு இருந்தார் அதுதான் நிஜம். அதுமட்டுமில்ல, த்ரிஷா சினிமாவுல நடிக்கறது அவங்க குடும்பத்தோட பெருமையாத்தான் நினைச்சாங்க.
நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும்கூட நிறைய புதுப்படத்துக்கு த்ரிஷா தேதி கொடுத்து இருக்கிறது வருண் ஃபேமிலிக்கு நல்லாவே தெரியும். கல்யாணத்துக்கு பிறகு த்ரிஷா நடிக்கக்கூடாதுன்னு வருண் குடும்பத்தார் சொல்லி இருந்தாங்கன்னா நாங்க புதுப்படத்தை கமிட் செய்தே இருக்க மாட்டோம்.

நானும், த்ரிஷாவும் சம்மந்தப்பட்ட விஷயம்னா, யார்கிட்டேயும் ஒபீனியன் கேட்க வேண்டியது இல்லை. எல்லாத்தையும் ஓப்பனா பேசிடுவேன். த்ரிஷா கல்யாணம் நின்னுபோன விஷயத்துல பெரியவங்க பலபேர் சம்மந்தப்பட்டு இருக்காங்க. அதுமட்டுமில்லே, இன்னும் நிறையபேர் இதுல இன்வால்வ் ஆகி இருக்காங்க. அவங்க எல்லார் மேலேயும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அதனால் எல்லாத்தையும் வாய் திறந்து பேச முடியது, பேசறது நாகரீகம் கிடையாது. நாங்க ஏதாவது வாய் திறந்து பேசப்போயி, அதைப்பத்தி வேற மாதிரி திரிச்சு எழுதிடுவாங்க. அதனால அந்த பெரியவங்களோட மனசு காயப்படுறதுக்கு நாங்க காரணமா இருக்க விரும்பலை.

ஒத்துவராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு வாழறது எந்த விதத்துல நியாயம்? சில விஷயங்கள் சரிப்பட்டு வரலைன்னா பிரிந்து விடுவது பெட்டர். அதுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் மனக்குழப்பம்தான் வரும். எல்லாருக்கும் அவங்க அவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதைத் தேடிப் போக வேண்டியதுதான்.

இப்போ த்ரிஷாவோட கவனம் எல்லாம் புதுசா தேதி கொடுத்து இருக்குற படங்களின் மேலதான். அடுத்து கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதுக்கப்புறம் செல்வராகவன் டைரக்*ஷன்ல ஒப்பந்தமாகி இருக்குறார்'' என்றார்.

balaajee
15th May 2015, 01:25 PM
இணையத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பிச்சைக்கார கெட்டப்.. அதிர்ச்சியில் படக்குழு!

’ரஜினிமுருகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வித்யாசமான கெட்டப் இணையத்தில் வெளியாகியதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் “ரஜினிமுருகன்” இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கில் ரஜினி கெட்டப்பில் சிவகார்த்திகேயன் தோன்றினார். இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு மற்றும் படம் வெளீயீடு தேதிகளை படக்குழுவினர் அறிவித்தனர்.

ஜூன் 7ம் தேதி இசை வெளியிடும், ஜுலை 17 ரம்ஜான் விடுமுறை நாளில் படம் வெளியிடப்படும் என்றும் அறிவித்தனர். சிவகார்த்திகேயன் , கீர்த்தி சுரேஷ், சூரி நடிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் வித்யாசமாக அடையாளம் தெரியாத அளவிற்கு பிச்சைக்காரன் கெட்டப்பில் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம். அந்த கெட்டப்பை படக்குழு மிக ரகசியமாகவும் வைத்திருந்தனர்.

http://img.vikatan.com/cinema/2015/05/15/images/siva.jpg
இப்போது யாரோ அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இவ்வளவு ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படம் எப்படி வெளியானது என குழப்பத்தில் உள்ளனராம். மேலும் அந்த புகைப்படம் இது சிவகார்த்திகேயன் தானா என்னும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் அமைந்துள்ளது

balaajee
19th May 2015, 05:45 PM
அஜித்துடன் ராஜா, விக்ரமுடன் காதல் சடுகுடு, விஜயகாந்துடன் ராஜ்யம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி. பிரபல கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் சினிமாவிற்கே முழுக்கு போட்ட பிரியங்கா மீண்டும் கன்னட மொழி திரைப்படத்தில் நடிக்கிறார்.

கன்னடத்தின் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தினேஷ்பாபு இயக்கும் படத்தில் பிரியங்கா நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய கதாப்பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல் படத்தின் பெயரும் பிரியங்கா தான்.

மேலும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறதாம். விரைவில் திரையில் எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் ஹவ் ஓல்ட் ஆர்யூ படத்தின் மூலம் மஞ்சுவாரியரும், தமிழில் 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகாவும் ரி எண்டிரி கொடுத்தது போல கன்னடத்தில் உபேந்திராவின் உதவியுடன் களம் இறங்குகிறார் பிரியங்கா.

balaajee
20th May 2015, 11:26 AM
ஜிகிர்தண்டா இந்தி ரீமேக் - தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்பாராஜ் புகார்
Widgets Magazine
ஜிகிர்தண்டா படம் தயாரிப்பில் இருந்தபோதே அதன் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கும் முட்டிக் கொண்டது. படத்தின் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, படத்தை சரியாக விளம்பரப்படுத்தாமல் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் படத்தில் பங்காற்றிய அனைவரின் உழைப்பையும் அவமதித்தார் கதிரேசன்.

ஜிகிர்தண்டாவின் இந்தி ரீமேக் உரிமை சஜித் நடியட்வாலாவுக்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படும்போது கதை எழுதிய இயக்குனருக்கு 40 சதவீத பணம் தரப்பட வேண்டும். கதிரேசன் ரீமேக் உரிமையை சஜித் நடியட்வாலாவுக்கு விற்றதை கார்த்திக் சுப்பாராஜிடம் தெரிவிக்கவில்லை. முறைப்படி அவரது பங்கும் வந்து சேரவில்லை.

கதிரேசன் மீது இயக்குனர்கள் சங்கத்தில் கார்த்திக் சுப்பாராஜ் புகார் தெரிவித்துள்ளார். விரைவில் பஞ்சாயத்து நடக்க உள்ளது.

balaajee
20th May 2015, 04:30 PM
http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105283.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105283) http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105284.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105284) http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105285.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105285) http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105289.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105289) http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105296.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105296) http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105297.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105297) http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105300.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105300) http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105301.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105301) http://img.vikatan.com/album/2015/05/mjczgm/thumb/105302.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4262&p_id=105302)

Siv.S
24th May 2015, 06:44 PM
Boom time for Kollywood overseas

SREEDHAR PILLAI

One needs to understand the potential of Tamil films abroad.

Last year, Rajinikanth’s Lingaa fetched Rs. 21 crore, the highest ever for a Tamil film in the overseas markets. And in the first five months of 2015, four films have done extraordinary business – Shankar’s I, Mani Ratnam’s O Kadhal Kanmani, Raghava Lawrence’s Kanchana-2, and Ajith’s Yennai Arindhaal. Kamal Haasan’s Uttama Villain and Jyotika’s 36 Vayadhinile have also performed well in the US market.

O Kadhal Kanmani, whose overseas rights were sold for Rs. 2 crore, grossed approximately $714, 000 (Rs. 4.42 crore ) from the US market alone. OKK is one of the biggest hits of all time in the USA, as its acquisition price was very low compared to its business. It came after Mani Ratnam’s previous film Kadal, a flop, which had grossed only $80, 000.

The overseas rights of Raghava Lawrence’s Kanchana-2, went for a paltry Rs. 1 crore but the film is reported to have done business in the range of Rs. 7 crore to Rs. 8 crore. The film did best in Tamil cinema’s traditional overseas markets of Malaysia, Singapore and Europe.

Among Indian films, Tamil films have the second biggest market overseas in all foreign countries except the US, where Telugu cinema occupies the number-two position. Tamil cinema does business equivalent to one-fourth or - in some countries – one-third of Bollywood films. Kollywood’s key markets remain the traditional ones – Malaysia, Singapore and Sri Lanka, where Tamil films have been screened in theatres from the 1960s. 60 to 65 per cent of the total overseas business of Tamil cinema comes from this area.

Later, with the Eelam wars and migration from Sri Lanka, the UK-Europe, Canada, and now Australia territories also became big. The 90s Gulf boom helped Tamil cinema create a new market, hitherto a Hindi cinema citadel. Kollywood and Tollywood discovered the potential of the North American market during the last decade, as many Tamil and Telugu-speaking techies in the IT sector migrated from TN and Andhra to the US. Today, three individual players operating out of Chennai and the London-based veteran K. Karunamoorthy (owner of Ayngaran International) control the overseas business of Tamil cinema.

A leading overseas distributor of Tamil films said: “The foreign market for Tamil films is very star-driven. It is only the big stars like Rajinikanth, Kamal Haasan, Vijay, Ajith and Suriya or directors like Shankar and Mani Ratnam who have an overseas market. Among the younger lot, the emerging stars are Dhanush and Sivakarthikeyan. There is an ocean of difference between what works in each country. Mass content like Kanchana-2 works best in Malaysia, Singapore and Gulf, while class movies do better in US and UK, as proved by O Kadhal Kanmani.”

Ram Muthu, the Managing Director of Atmus Entertainment, a leading US-based distributor of Tamil films, says: “The USA market is becoming bigger by the year and can do $1.5 million — $2 million business. But that kind of business happens only for Rajinikanth films. USA audiences like Rajinikanth films the most, followed by films from Shankar, Mani Ratnam and Kamal Hassan. Kamal’s Uttama Villain, a failure in India, did $585,000 in the US market. These four people can bring more than $500,000 in revenue. The highest for Vijay, Ajith and Suriya were all under $400,000. Now, Vijay has Kaththi at $620,000, Ajith has Yennai Arindhaal at $515,000 and Surya might do the magic with next week’s big release Masss.”

Ram Muthu added: “Among the new-generation actors, Dhanush has recently crossed the $100,000 mark with two of his latest films, Velai Illa Pattathari ($220,000) and Anegan ($135,000). All the others are grossing under $100,000. Sivakarthikeyan’s Kaaki Sattai was able to do $75,000. The other heroes do not sell as well and are below $20,000 and may not recover their VPF (virtual print fees) and publicity cost. There are exceptions like Karthik Subbaraj’s Jigarthanda which did $185,000 and the Arya-Nayantara starrer Raja Rani which grossed $200,000.

Wide overseas releases have also helped the industry. In 2005, Rajinikanth’s Chandramukhi was released in 75 odd locations in foreign countries. Today, Suriya’s Masss is going to release in nearly 600-plus overseas locations. The opening weekend and the paid premieres on Thursday evening and night help to garner huge numbers. Ticket pricing is also market-driven unlike in TN, where it is government-controlled.

The rise of the overseas market is also attributed to the growth of social media (Twitter and Facebook) and a large number of Tamil-cinema-specific sites. The 24x7 coverage of Kollywood has caught the eye of the new generation. Dilani Rabindran, a Toronto-born youngster, became crazy about Tamil films hearing Rajinikanth and Kamal Haasan stories from her parents who immigrated to Canada in the 80s from Batticaloa, Sri Lanka. Today Dilani, an MBA graduate, works for the Toronto International Film Festival (TIFF) as a full-time Financial Analyst, and as a film tracker who helps choose South Asian movies for the festival. She also writes for a popular website.

Dilani says: “I too love to be there for first-day shows of Rajinikanth, Vijay and Ajith films — cheering along with everyone. 60 to 70 per cent of Toronto Tamil audiences reserve their attention for big-hero films, but there is a large artistic Tamil community here of burgeoning actors, writers and filmmakers who are very interested in all types of movies. Some of my favourite Tamil films of the past year have been non-big-hero films, like Mysskin’s Pisasu; which is why I wish we had a better distribution set-up here, so such films could be guaranteed a widespread theatrical release in North America as well.”

Trade analysts in Chennai say that in three years’ time, 40 to 50 per cent of the theatrical revenue of Tamil films is going to come from the overseas markets. The local market remains stagnant due to the government-controlled cap on ticket rates. Ticket prices in Tamil Nadu have not been increased for the last eight years. A leading exporter of Tamil films concludes: “The market for Tamil films is growing. But producers and stars should not kill the goose that lays the golden egg by asking for ridiculous prices. Releases should be planned well in advance, and prints should be delivered to overseas distributors a week in advance.”

Currently, the hottest films for which a bidding war is going on in the international market are Vijay's Puli, Ajith's next (tentatively called Thala 56) and Suriya's 24.

http://www.thehindu.com/features/cinema/boom-time-for-kollywood-overseas/article7238858.ece

balaajee
27th May 2015, 03:31 PM
EROS enters small budget...

சூர்யா, ரஜினி என மாஸ் நடிகர்களின் படங்களை பிரமாண்டமாக தயாரித்தும், விநியோகித்தும் பிரமாண்டமாக தோற்றுக் கொண்டிருந்த ஈராஸ் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
தற்போது அதை செயல்படுத்தியும் இருக்கிறது. சிறியதே அழகு - அதுதான் இப்போது இந்த நிறுவனத்தின் தாரக மந்திரம்.

ஈராஸ் அடுத்து தயாரிக்கும் இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் தயாராகின்றன. நடிப்பதும் சின்ன நடிகர்களே.

ஈராஸின் புதிய படம் ஒன்றுக்கு, எங்கிட்ட மோதாதே என பெயர் வைத்துள்ளனர். நட்டி நட்ராஜ் இதில் நடிக்கிறார். ராமு செல்லப்பா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இன்னொரு படம், பேரை தேடிய நாள்கள். அசோக் செல்வன் இதன் நாயகன். இயக்கம் அறிமுகமான ஆபிரகாம் பிரபு.

படங்களின் நடிகர் மற்றும் இயக்குனர்களின் பின்னணியைப் பார்த்தால் ஈராஸ் படமா இல்லை திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டின் படமா என்று சந்தேகம் எழும். பெரிய நடிகர்களை வைத்து பெரிதாக பல்பு வாங்குவதற்கு, சிறியது எவ்வளவோ அழகு.

balaajee
29th May 2015, 11:36 AM
தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்பாராஜ் வழக்கு - ஜிகிர்தண்டா ரீமேக் உரிமையை விற்க நீதிமன்றம் தடை

ஜிகிர்தண்டா படத்துக்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் தந்த போதே அதன் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யு சான்றிதழ் கிடைக்க சில காட்சிகளை நீக்கும்படி தணிக்கைக்குழு கூறியது. தயாரிப்பாளரும் கார்த்திக் சுப்பாராஜை நிர்ப்பந்தித்தார். ஆனால், அவர் அதற்கு பணியவில்லை. படம் யுஏ சான்றிதழுடனே வெளியானது.
இந்தப் பிரச்சனையை மனதில் வைத்து பட வெளியீட்டை கதிரேசன் வேண்டுமென்றே தள்ளி வைத்தார். கார்த்திக் சுப்பாராஜ் உள்பட யாருக்கும் பட வெளியீடு எந்த நாள் என்பதை தெரிவிக்கவில்லை. படத்தின் ஐம்பதாவது நாளுக்கு சின்ன விளம்பரம்கூட அவர் தரவில்லை.

இந்நிலையில் படத்தின் இந்தி ரீமேக்கை சஜித் நடியட்வாலாவுக்கு கதிரேசன் விற்க முன்வந்தார். கார்த்திக் சுப்பாராஜுக்கு தெரியாமலே இந்த முயற்சியும் நடந்தது. இதனை அறிந்த கார்த்திக் சுப்பாராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரீமேக் உரிமையை விற்க தடை வாங்கியுள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.

எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இந்தி, மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதம் எனக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில், எஸ்.கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் இந்த பிரச்னையை பதிவு செய்தேன். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பிரச்சனையை நாலு சுவற்றுக்குள் முடிக்கலாம் என கூற, பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆயினும் எஸ்.கதிரேசன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் போகவே சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

எனவே இயக்குனர் சங்கத்தின் ஆலோசனையோடு வேறு வழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். சென்னை உயர் நீதிமன்றம் இப்போது படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்கு ஜூன் 11-ம் தேதி வரை தடை விதித்துள்ளது. தயாரிப்பாளருக்கும் இத்தடை உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தரப்பு பதிலையும் நீதிபதி கோரியுள்ளார்.

Russellmvr
4th June 2015, 02:42 PM
Filmfare South Nominations 2015


BEST FILM

"Kaththi"
"Kaaviyathalaivan"
"Madras"

"Mundasupatti"
"Velayilla Pattathari"

BEST DIRECTOR

AR Murugadoss- "Kaththi"
PA Ranjith- "Madras"
Ramkumar- "Mudasupatti"
Vasanthabalan- "Kaaviyathalaivan"
Velraj- "Velaiyilla Pattathari"

BEST ACTOR (MALE)

Ajith – "Veeram"
Dhanush – "Velaiyilla Pattathari"
Karthi- "Madras"
Siddarth- "Kaaviyathalaivan"
Vijay- "Kaththi"

BEST ACTOR (FEMALE)

Amala Paul- "Velayilla Pattathari"
Catherine Tresa- "Madras"
Malavika Nair- "Cuckoo"
Ssamantha- "Kaththi"
Vedika- "Kaaviyathalaivan"

BEST ACTOR IN A SUPPORTING ROLE (MALE)

Bobby Simha- "Jigarthanda"
Kalaiyarasan- "Madras"
Prithviraj- "Kaaviyathalaivan"
Samudrakani- "Velaiyilla Pattathari"
Thambi Ramaiah- "Kathai Thiraikathi Vasanam Iyakkam"

BEST ACTOR IN A SUPPORTING ROLE (FEMALE)

Anaika Soti- "Kaaviyathalaivan"
Kovai Sarala- "Aranmanai"
Ritwika- "Madras"
Saranya Ponvannan- "Velaiyilla Pattathari"
Seetha- "Golisoda"

BEST MUSIC

Anirudh Ravichander- "Maan Karathe"
Anirudh Ravichander- "Kaththi"
Anirudh Ravichander- "Velaiyilla Pattathari"
AR Rahman- "Kaaviyathalaivan"
Santosh Narayanan- "Madras"

BEST LYRICS

Madan Karky- "Selfi Pulla"- "Kaththi"
NA Muthukumar- "Azhagu" – "Saivam"
PA Vijay- "Yarumilla" – "Kaaviyathalaivan"
Vairamuthu- "Ovvondrai Thirudigirai" – "Jeeva"
Yugabharathi- "Manasula Soorakathu" – "Cuckoo"

BEST PLAYBACK SINGER (MALE)

Anirudh Ravichander- "Unvizhigalil" - "Maan Karathe"
Haricharan- "Hey Sandikuthirai" – "Kaaviyathalaivan"
Karthik- "Ovvondrai Thirudigirai" – "Jeeva"

Pradeep Kumar- "Aagayam Theepidicha" – "Madras"
Vijay- "Selfipulla" – "Kaththi"

BEST PLAYBACK SINGER (FEMALE)

Bhavya Pandit- "Ovvondrai Thirudigirai" – "Jeeva"
Sakthisree Gopalan & Deekshitha- "Naan Nee" – "Madras"
Shweta Mohan- "Yarumilla"- "Kaaviyathalaivan"
Vandana Srinivasan- "Unnai Ippa"- "Kayal"
Uthara Unnikrishnan- "Azhagu" – "Saivam"

vithagan
4th June 2015, 09:32 PM
I really wonder how VIP listed in most of the nominations.. Vara vara endha award melayum nambikkai illaama poiduchu..

Russellmvr
5th June 2015, 07:27 AM
I really wonder how VIP listed in most of the nominations.. Vara vara endha award melayum nambikkai illaama poiduchu..

Filmfare awards are kinda top Commercial awards. They choose films which has good stardom end of the day.

balaajee
5th June 2015, 01:39 PM
கொம்பன் திருட்டு கதையா? - ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் உதவி இயக்குனர்

கொம்பன் படத்தின் கதை என்னுடையது என்று துரை என்ற உதவி இயக்குனர் இயக்குனர்கள் சங்கத்தில் புகார் தந்துள்ளார். அந்த பஞ்சாயத்து முழுவீச்சில் நடந்து வருகிறது.

துரை வல்லரசு படத்தை இயக்கிய மகாராஜனிடம் இணை கதாசிரியராக பணிபுரிந்தவர். மகாராஜன் தமிழ் மட்டுமின்றி இந்திப் படங்களுக்கும் கதாசிரியராக பணிபுரிந்துள்ளார். பேரரசு உள்ளிட்ட சில இயக்குனர்களிடம் துரை உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார்.

இவர் ஒரு கதையை எழுதி அதை முழு ஸ்கிரிப்டாக்கி 2012 -இல் முறைப்படி திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தக் கதையை அவர் ஆர்.பி.சௌத்ரியிடம் கூறி, விஷாலை வைத்து படமாக்குவதாகவும் தீர்மானமாகியிருக்கிறது. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீனும் இந்தக் கதையை கேட்டிருக்கிறது. துரையும் ஸ்கிரிப்டை அவர்களிடம் தந்துள்ளார். அதற்கான ஆதாரம் துரையிடம் உள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு துரைக்கு அனுப்பிய இ மெயில் ஆதாரமும் உள்ளது.

துரை எழுதி பதிவு செய்த கதையைதான் கொம்பன் படமாக எடுத்துள்ளனர் என்பது குற்றச்சாட்டு. அதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதால் இயக்குனர்கள் சங்கம் கொம்பன் தயாரிப்பாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.

But Komban character was more of improved version of Kutty Puli....

vithagan
5th June 2015, 04:37 PM
Filmfare awards are kinda top Commercial awards. They choose films which has good stardom end of the day.

I don't think so.. you can say for mainstream cinema.. appa Rajiniyumm Vijayum pala award vaangi irukkanum innerathukku..:-D

balaajee
5th June 2015, 05:47 PM
இந்த வருடம் மூன்று படங்கள்..... இயக்குநர் பாண்டிராஜ் திட்டம் !


இந்த வருடம் கண்டிப்பாக மூன்று படங்கள் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் பாண்டிராஜ்.
பல நாட்களாக இவர் இயக்கத்தில் உருவாகி வரும் படமான 'இது நம்ம ஆளு’ ஓரளவு பிரச்னைகள் தீர்ந்து விரைவில் மீதமுள்ள காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. அதே சமயம் இவரது இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி நடிப்பில் உருவான ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழா நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்திற்கு இசை ஆதி, மற்றும் சூரி காமெடியனாகவும் நடிக்கும் இப்படம் ஆக்*ஷன் த்ரில்லர் படமாம்.
இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகும் என நம்புவதாக பாண்டிராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் டாப்பில் இருக்கும் நடிகர்களே இரண்டு படம் கொடுப்பது என்பது சற்றே முடியாத விஷயம்.
இந்நிலையில் ஒரு இயக்குநர் மூன்று படங்கள் என்பது வேகு நாட்களுக்கு பிறகு இப்போது நடக்கிறது என்றே கூறலாம். 70, 80களில் குறிப்பிட்ட சில இயக்குநர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதால் இது சாத்தியமாக இருந்தது. இப்போது இருக்கும் தருணங்களில் வருடத்திற்கு 10 இயக்குநர்களேனும் அறிமுகமாகி விடுகிறார்கள். எனவே இந்த ஒரு வருடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் கொஞ்சம் சிரமம் என்கிற வகையில் பாண்டிராஜ் தனக்கான பாதையை சரியாக தேர்வு செய்து போய்க்கொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.

Hopefully 3release in 3 genre this year.LoveStory @iam_str#INA| Children film @Suriya_offl#Haiku| ActionThriller @VishalKOfficialfilm
— Pandiraj (@pandiraj3)

Russellmvr
6th June 2015, 07:44 AM
I don't think so.. you can say for mainstream cinema.. appa Rajiniyumm Vijayum pala award vaangi irukkanum innerathukku..:-D
Lol... Well just to get their brand high.. Rajni Vijay kinda stars will be in nominations always...

balaajee
8th June 2015, 03:27 PM
மீண்டும் 'வெத்தல போட்ட சோக்குல நான்' பாடல்?

கார்த்திக் நடிப்பில் 1992ஆம் ஆண்டில் இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக் பானுப்ரியா , ராதா ரவி, பிரதாப் போத்தன் நடிப்பில் வெளியான படம் ‘அமரன் ’. படத்திற்கு இசை ஆதித்யன். இப்படத்தின் மூலம் தான் கார்த்திக் பாடகராகவும் அறிமுகமானார்.படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகமாக அமரன் 2 படம் உருவாக உள்ளது. கார்த்திக்கே ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தின் புகைப்படங்கள் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் நானும் பல தீய பழக்கங்களுக்கு ஆளாகியிருந்தேன், தற்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதால் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். மேலும் நம்மை போன்ற கற்பனையாளர்கள், மற்றும் கலைஞர்களுக்கு எப்போதும் வயதாகாது.

http://img.vikatan.com/cinema/2015/06/08/images/Amaran%202%20Stills%20(11).jpg
ஏனெனில் காலத்திற்கேற்ப சிந்திக்க தெரிந்தவர்கள் நாம் எனக் கூறிய கார்த்திக்கிடம் முதல் பாகத்தில் நீங்கள் பாடிய ’வெத்தல போட்ட சோக்குல நான்’ பாடல் ஹிட்டானது. இந்த அமரன் 2 படத்திலும் நீங்கள் பாடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது நான் பாடவில்லை எனில் இவர் என்னை விட மாட்டார் என கார்த்திக் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். எங்களது நட்பு மீண்டும் எங்களை ஒன்று சேர்த்துள்ளது என இயக்குநர் கே.ராஜேஷ்வர் குறித்தும் கார்த்திக் பேசியுள்ளார். இதன் மூலம் இந்த படத்திலும் கார்த்திக் ஒரு பாடல் பாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

mexicomeat
8th June 2015, 06:09 PM
from memory, amaran was a flop. wasn't it? it was radha ravi's milestone movie or something and he acted with some weird makeup.

balaajee
9th June 2015, 10:29 AM
from memory, amaran was a flop. wasn't it? it was radha ravi's milestone movie or something and he acted with some weird makeup.

I too have same memory...only songs where hit...

k_vanan
9th June 2015, 01:22 PM
I too have same memory...only songs where hit...

AMARAN utter flop ;) rombha prachanai kullana padam antha timeleh

Russellmvr
9th June 2015, 02:56 PM
AMARAN utter flop ;) rombha prachanai kullana padam antha timeleh

Guess Amaran released in 1992
On 1st Jan 1993... Indian Express stated Amaran as 100-days venture in their paper..!!

balaajee
9th June 2015, 03:03 PM
எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர் சரவணன் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்துள்ளார் - Webulagam

திரைப்பட இயக்குனர் சரவணன் எங்கேயும் எப்போதும், வலியவன், இவன் வேறமாதிரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சரவணன் மற்றும் அவரது மைத்துனரும், உதவி இயக்குனருமான கௌதம் ஆகிய இருவரும் தங்களது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், வரகூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.

சென்னையிலிருந்து தொழுதூர், பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல்லுக்கு கார் சென்றுகொண்டிருந்துள்ளது. பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வி.களத்தூர் பிரிவு பாதையில் கார், சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இருவரும் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

balaajee
10th June 2015, 10:54 AM
படம் 'பாஸ்'னா.. வசூல் 'மாஸ்'.. 2015ன் முதல் 100 கோடிப் படமாக உயர்ந்த காஞ்சனா 2! - Tamilone

ரூ.100 கோடி வசூல் வேட்டையாடிய 'காஞ்சனா 2' - Tamil Hindu


ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 2' திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. தற்போது 50 நாட்களைக் கடந்து ஓடி வரும் இத்திரைப்படம், இன்னமும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், 'காஞ்சனா' முதல் பாகத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 'காஞ்சனா 2'-ம் பாகம் வெளியானது. லாரன்ஸ், நித்யா மேனன், தாப்ஸி, கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'காஞ்சனா 2', விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
இது குறித்து பேசிய பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர் த்ரிநாத், "தமிழ் சினிமாவில் இந்த வருடம் முதல் ப்ளாக்பஸ்டர் படமாக 'காஞ்சனா 2' உருவாகியுள்ளது. டிக்கெட் விற்பனையில் மட்டும் இத்திரைப்படம் ரூ.108 கோடியை அள்ளியுள்ளது" என்றார்.
ரூ.17 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் 'காஞ்சனா 2', சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் லாபகரமான படமாக அமைந்துள்ளது.
தற்போது 'காஞ்சனா 3'-ஆம் பாகத்துக்கான கதை தயாராகி வருவதாக லாரன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

balaajee
10th June 2015, 05:44 PM
உருமாறும் ஏவிஎம் ஸ்டுடியோவின் முக்கியப் பகுதிகள்!

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02434/1_2434118f.jpg

ஏ.வி.எம். ஸ்டூடியோவின் கட்டிடப் பணிகள். | படம்: சிறப்பு ஏற்பாடு.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான அடையாளம் ஏவிஎம் ஸ்டுடியோ.

உலக உருண்டையுடன் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவில் சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என எல்லாவிதமான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன.
தற்போது ஏவிஎம் ஸ்டுடியோ மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் ஏவிஎம் சரவணனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் சொந்தமாக உள்ளது.

இதில், பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான பகுதிகள் மட்டும் இடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் பாலசுப்பிரமணியன் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
ஸ்டுடியோக்களால் வருமானம் இல்லை என்பதாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கோயில், பூங்கா, காவல் நிலையம், நீதிமன்றம், பேருந்து நிலையம் என்று சினிமாவுக்குத் தேவையான எல்லா செட்டும் போடுவதற்கு வசதியாக இருந்த ஏவிஎம் ஸ்டுடியோ பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதால், இனி சின்ன பட்ஜெட்டில் சினிமா எடுப்பவர்கள் லொக்கேஷனுக்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

balaajee
11th June 2015, 06:53 PM
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு

ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டியிட தலைவர் பதவியில் போட்டியிட இருக்கிறார். இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை போன்றோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் புதிதாக விஷால், நாசர் அணியினரும் தேர்தலில் நிற்க தயாராகி வருகிறார்கள்.இந்நிலையில் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டும் பணி நடந்துவருகிறது. எனினும் தேர்தல் நடக்கவிருப்பதாக அறிவித்துள்ள ஜூலை 15ம் தேதியான புதன் கிழமை என்பது வேலை நாள்.

http://img.vikatan.com/cinema/2015/06/11/images/NTLRG_150528114312000000.jpg

எப்போதும் தேர்தல் இரண்டாம் ஞாயிறான விடுமுறை தினத்தில் தான் நடக்கும் அதே போல் இந்த முறையும் மாற்ற வேண்டும். இல்லையேல் வெளியூரில் படப்பிடிப்புகளில் இருப்போரால் தேர்தலில் கலந்துகொள்ள இயலாது. அதே போல் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் எனவும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளார் விஷால்.

முக்கியமாக நாடக நடிகர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் அதனால் தேர்தல் தினத்தை மாற்ற வேண்டும் என வழக்கில் கோரப்பட்டுள்ளது. எனவே நீதிபதி விசாரணைக்கு பிறகு தேர்தல் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

balaajee
12th June 2015, 11:05 AM
பனுவல் ஃபிலிம் சொஸைட்டி - சென்னையில் புதிதாக ஆரம்பம்

திரைப்பட ஆர்வலர்களுக்கு, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் தயாராகும் சிறந்தப் படங்களை பார்க்க இன்றும் ஆதாரமாக இருப்பது திரைப்பட சங்கங்கள்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-06/12/full/1434083580-2803.jpg

தனிநபர்களின் அல்லது ஒரு குழுவின் முயற்சியில் ஆரம்பிக்கப்படும் இந்தச் சங்கங்கள், உலகில் வெளியாகும் சிறந்தப் படங்களை கண்டறிந்து, அவற்றை திரையிட்டு நமது திரைப்பட அறிவை, ரசனையை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் கோவையை மையமாக வைத்து இயங்கும் கோணங்கள் ஃபிலிம் சொஸைட்டி முக்கியமானது.

அதேபோன்ற ஒரு ஃபிலிம் சொஸைட்டியை சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும், பனுவல் புத்தக நிலையம் ஆரம்பிக்க உள்ளது. பனுவல் ஃபிலிம் சொஸைட்டி என்ற இந்த புதிய திரைப்பட சங்கம் வரும் ஞாயிறன்று (14-06-15) பனுவல் புத்தக நிலையத்தில் முறைப்படி தொடங்கயிருக்கிறது.

அன்றைய தினம், மதியத்திற்கு மேல் 3 மணிக்கு சே குவேரா குறித்து பிரபல இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய, சே திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட உள்ளன. மூன்று மணிக்கு முதல் பாகம் (134 நிமிடங்கள்) திரையிடப்படும். அதனைத் தொடர்ந்து பனுவல் ஃபிலிம் சொஸைட்டியின் தொடக்கவிழா. அதன் பிறகு சே திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.

தொடர்ச்சியாக பனுவல் ஃபிலிம் சொஸைட்டி அரிய திரைப்படங்களை திரையிட உள்ளது. இதற்கு ஒரு வருட உறுப்பினர் கட்டணம் 500 ரூபாய் மட்டுமே. 500 ரூபாயுடன் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் எடுத்து வந்து எப்போது வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகிக் கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு - நேரில் செல்ல - பனுவல் ஃபிலிம் சொஸைட்டி, 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி எண்கள் - 8939967179, 044-43100442.

அரிய வாய்ப்பு, திரைப்பட ஆர்வலர்கள் அவசியம் பயன்படுத்திக் கொள்ளவும்.

balaajee
12th June 2015, 05:01 PM
வைரலாகும் நஸ்ரியா -ஃபகத் ஃபாசில்!

சமீபத்தில் தனது ரேஞ்ச் ரோவர் கார் மீது ரோட் சைட் கார் வாசி விபத்தை ஏற்படுத்த வரிந்துகட்டிக்கொண்டு இறங்கி சண்டைக்கு போனார் நஸ்ரியா. இந்நிலையில் இந்த விபத்தால் செண்டிமெண்ட்டாக வருந்திய நஸ்ரியா காரை மாற்றிவிட்டார்.

அந்த ரேஞ்ச் ரோவர் காருக்கு பதில் இப்போது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார் நஸ்ரியா. வீட்டில் டிரைவரே இருந்தாலும் ஃபகத் மற்றும் நஸ்ரியா தம்பதியர் இருவரும் தானாகவே கார் ஓட்டி செல்லும் வழக்கம் உடையவர்கள்.

http://img.vikatan.com/cinema/2015/06/12/images/Nazriya-Mercedes-car.jpg
காரையும் அதிகம் நேசிக்கும் இருவரும் தற்போது புது காரான மெர்டிஸ் பென்ஸ் வாங்கிய நிலையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கார் மட்டுமல்ல பல விஷயங்களில் நஸ்ரியா, ஃபகத் இருவருக்கு ஒரே எண்ணங்கள், ஒரே விருப்பங்கள் என்பது யாவரும் அறிந்ததே. கலக்குங்க!

balaajee
17th June 2015, 11:32 AM
வாழ்க்கையில் உத்தம வில்லன்கள் - கமலை நேரடியாக தாக்கிப் பேசிய லிங்குசாமி- webulagam

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் ரஜினி முருகன் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில், கமலை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார் லிங்குசாமி.

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த, வாங்கி வெளியிட்ட பெரும்பாலான படங்கள் லாபத்தையே சம்பாதித்தன. மஞ்சப்பை, சதுரங்க வேட்டை என்று வெற்றிகளை ருசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கமலை வைத்து உத்தம வில்லன் படத்தை தயாரித்தனர். கதை, திரைக்கதை, நடிப்பு மூன்றுக்கும் லம்பாக கோடிகளை வாங்கிய கமல், ஒரு ரூபாய் செலவளிக்காமல் தயாரிப்பிலும் தனது பெயரை போட்டுக் கொண்டார். படத்தின் வெளிநாட்டு உரிமையையும் அவர் வைத்துக் கொண்டதாக கேள்வி.

விஸ்வரூபம் படத்தின் போது கமலுக்கும், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மீது கமல் வழக்கு தொடுத்திருந்தார். அதனை அவர்கள் உத்தம வில்லன் ரிலீஸின் போது பிரச்சனையாக முன் வைத்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்தியும், பணம் தந்தும் அதனை முடிவுக்கு கொண்டு வந்தது திருப்பதி பிரதர்ஸ்தான்.

பணம் போட்டதுடன் இதுபோன்ற பிரச்சனைகளையும் லிங்குசாமி எதிர்கொண்டார். ஒருவழியாக படம் வெளியானது. அனைத்து சென்டர்களிலும் படம் அட்டர் பிளாப். சம்பளம் தவிர்த்து 35 கோடி படத்தின் பட்ஜெட் என்று காசு வாங்கிய கமல் 15 கோடிகளைக்கூட படத்துக்கு செலவளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மொத்தத்தில் உத்தம வில்லனால் திருப்பதி பிரதர்ஸ் சுத்தமாக மொட்டையடிக்கப்பட்டது.

நேற்றைய விழாவில் இதனை குறிப்பிட்டார் லிங்குசாமி. "நீங்க எதாவது நல்லது செய்யணும்னு நினைச்சா உடனே பண்ணிடுங்க. ஏன்னா, வாழ்க்கையில் நாம் நிறைய உத்தம வில்லன்களை சந்திக்க வேண்டிவரும்" என்றார்.
ஆளவந்தான் தோல்வியின் போது தாணு வீசிய வார்த்தைகளைப் போலன்றி மென்மையாகவே லிங்குசாமி கமலை விமர்சித்தார். அது அவரது நாகரிகம்.

balaajee
17th June 2015, 03:06 PM
ரஜினிமுருகன் விழாவில் வருண்மணியனை வறுத்தெடுத்த லிங்குசாமி!

சில வாரங்களுக்கு முன்பாக, பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண்மணியன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், மஞ்சப்பையோடு வந்தவர்கள் மஞ்சப்பையோடு போவார்கள் என்கிற பொருளிலும், ரஜினிமுருகன் அடுத்த எம்ஜிஆர் ஆகுமா என்கிற மாதிரியும் எழுதியிருந்தார். இவை இரண்டும் இயக்குநர் லிங்குசாமியைத் தாக்கி எழுதப்பட்டதென்று அப்போதே சொல்லப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக ரஜினிமுருகன் படத்தின் டீஸர் வெளியீட்டுவிழாவில் பேசினார் இயக்குநர் லிங்குசாமி.

http://img.vikatan.com/news/2015/06/17/images/Lingu.jpg
அவர் பேசும்போது, "மஞ்சப்பையோடு வந்தவன் மஞ்சப்பையோடு போவான் என்பது போன்ற கமெண்ட்டுகள் வந்தன. ஆனால் நான் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டுவந்தவன், ஜி படத்துக்குப் பிறகுதான் சண்டக்கோழி படம் செய்தேன், பீமாவுக்குப் பிறகு பையா எடுத்தேன், எங்கள் நிறுவனத்தில் எடுத்த தீபாவளி, பட்டாளம் ஆகிய இரண்டுபடங்களும் ஓடாதநிலையில் நானே தயாரித்து இயக்கிய படம் பையா.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது துணைநடிகர்களுக்குச் சம்பளம் தரவில்லை என்பதற்காக மொத்தமாக எல்லோரும் கிளம்பிப்போக முடிவெடுத்த சம்பவமும் உண்டு. அவற்றையெல்லாம் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

ரஜினியா எம்ஜிஆரா என்றெல்லாம் கேட்டார்கள், ரஜினியே பெரியவர் அதைவிடப் பெரியவரான எம்ஜிஆராக எங்களை ஆக்க நினைத்தற்குச் சந்தோசம்தான். இந்த ரஜினிமுருகன் படம் திட்டமிட்டபடி வெளிவரும், எட்டுக்குஎட்டு அறைக்குள் இருந்துதான் ஆனந்தம் படத்தை எடுத்தோம்.

http://img.vikatan.com/news/2015/06/17/images/Varun%20Twit1.jpg
அபிபுல்லாசாலையின் டிராபிக்குகளுக்கு மத்தியில்தான் ரன் கதையை எழுதினேன், உண்மையும் நேர்மையும் எந்நாளும் நம்மைக்காக்கும், சோதனைகள் வரும்போதுதான் நல்லவன் யாரு கெட்டவன் யாரு என்பதெல்லாம் தெரியவரும், நம்மைச் சுற்றிப்பார்த்துக்கொள்ள நிதானமாக விளையாட ஒரு வாய்ப்புக் கிடைக்கும், பிரச்சினை இல்லை என்று சொல்லவில்லை, இருக்கு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவருவோம்" என்று லிங்குசாமி பேசினார்.

faithiu11
18th June 2015, 09:08 AM
As papanasam and npno releasing on July 3 now big question is will vaalu release on July 3 as announced...?

balaajee
19th June 2015, 12:53 PM
ஜிகிர்தண்டாவுக்கு 7, கத்திக்கு 8, வேலையில்லா பட்டதாரிக்கு 9

வருடந்தோறும் தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கு சைமா விருதுகள் வழங்கப்படும். சென்ற வருடம் இந்த விருது விழா மலேசியாவில் நடந்தது. இந்த வருடம் துபாயில்.

ஆகஸ்ட் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழித் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கார்த்திக் சுப்பராஜின் ஜிகிர்தண்டா 7 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கத்தி 8 பிரிவுகளில். சிறந்த நடிகர், நடிகை, இயக்கம், சிறந்த படம் உள்பட 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு பரிந்துரை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது வேலையில்லா பட்டாரி.

இதிலிருந்தே சைமா விருதின் தரத்தை நீங்கள் எடைபோட்டுக் கொள்ளலாம்.

balaajee
19th June 2015, 12:54 PM
விமரிசையாக நடந்த சினேகாவின் வளைகாப்பு

நடிகை சினேகாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று விமரிசையாக நடந்தது.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-06/19/full/1434690917-6631.jpg


சினேகாவும், பிரசன்னாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்காக யுஎஸ் சென்ற போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. 2012 -இல் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சினேகா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வளைகாப்பு சடங்கு நேற்று நடந்தது.

நாகராஜன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்துவரும் பிரசன்னா வளைகாப்புக்காக நேற்று சென்னை வந்திருந்தார். இந்த நிகழ்வில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

balaajee
23rd June 2015, 01:39 PM
ரஜினிமுருகன் படவெளியீடு தள்ளிப்போகிறதா?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ரஜினிமுருகன் ஜூலை பதினேழாம்தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன்பின்னர் அதேதேதியில் தனுஷ் நடித்திருக்கும் மாரி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

http://img.vikatan.com/news/2015/06/23/images/rajini.jpg
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சிம்பு நடித்த வாலு படமும் அதேநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரேநாளில் இம்மூன்று படங்களும் வெளியாவதாகச் சொல்லப்பட்டதால் திரையுலகில் பரபரப்பு இருந்தது. மூன்றுபடங்களைத் தயாரித்திருப்பதும் பெரியநிறுவனங்கள் என்பதால், திரையரங்குகள் பிடிப்பது, விளம்பரம் செய்வது என்று எல்லாவற்றிலும் கடும்போட்டி இருக்கும் என்று சொல்லப்பட்டது.

இப்போது பார்த்தால் அந்தத்தேதியில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் வருவது சந்தேகம் என்கிறார்கள். அந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் திருப்பதிபிரதர்ஸ்நிறுவனம் தயாரித்திருக்கும் இன்னொரு படமான இடம்பொருள்ஏவல் படம் ஜூலை வெளியீடு என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ரஜினிமுருகன் படம் எப்போது என்பது பற்றி எந்தத்தகவலும் இல்லை. இதுபற்றி விசாரித்தால், ரஜினிமுருகன் படத்தின் வேலைகளே இன்னும் முடிவடையவில்லை என்று சொல்கிறார்கள்.

பின்னணிஇசைச்சேர்ப்பு வேலைகளே இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். ஒருபடத்துக்குப் பின்னணிஇசைச்சேர்ப்பு மிகவேகமாகக்கூட நடந்துமுடிந்துவிடும் என்றாலும், இடம்பொருள்ஏவல் படஅறிவிப்பு மற்றும் ரஜினிமுருகனுக்குத் தேதி சொல்லாமல் விளம்பரம் வருவது ஆகியனவற்றைப் பார்க்கும்போது ஜூலை 17 அந்தப்படம் வெளியாவது சந்தேகமே என்கிறார்கள்.

balaajee
23rd June 2015, 03:00 PM
கமல், ஷங்கர், மணிரத்னம் ஆகியோரின் நற்செயல்.

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை கமல், மணிரத்னம், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.

சமையல் எரிவாயுவிற்கு மானியமாக 40 ஆயிரம் கோடியை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது. இந்த செலவு மத்திய அரசுக்கு பெரும் சுமையாகவே இருக்கிறது. எனவே வசதி படைத்தவர்கள் தங்களுக்கான மானியத்தை விட்டுத் தருமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கான சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என்று அறிவித்துள்ளனராம். இதைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களான கமல்ஹாசன், பிரபு, இயக்குநர் மணிரத்னம், சின்மயி, பாடகர் ஜேசுதாஸ், அவரது மகனாக விஜய் ஜேசுதாஸ், புனிதா பிரபு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கேஸ் எரிவாயுவிற்கான மானியம் தேவையில்லை என்று அறிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

balaajee
25th June 2015, 11:07 AM
உடல் நிலையில் முன்னேற்றம் - விரைவில் வீடு திரும்புகிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை தேறி வருவதால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தற்போது 87 வயதாகிறது. சில ஆண்டுகள் முன் அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த 14 -ஆம் தேதி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

மெல்லிசை மன்னருக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

mexicomeat
25th June 2015, 02:41 PM
manushan uyiroda irukkara varaikkum evanum oru manivizha, paaraatu vizha edukka maatanga. msv irandha piragu paarunga ellarum inna drama panna porangannu.

balaajee
26th June 2015, 07:54 PM
டி.ஆரின் பப்பரப்பா பாடல் - விழித்திரு

https://www.youtube.com/watch?v=5UstkXu6HZU

balaajee
29th June 2015, 12:49 PM
தமிழில் உருவாகும் ஷட்டர் ரீமேக் படத்தின் தலைப்பு அறிவிப்பு!


தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டரான எடிட்டர் ஆண்டனி ஷட்டர் படத்தின் ரீமேக் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.
த்ரில்லர் படமான இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மேலும் அனுமோல், கல்யாணி நடராஜன்,தீட்சிதா கோத்தாரி, ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தை தனது தின்க் பிக் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார் இயக்குநர் விஜய்.

http://img.vikatan.com/cinema/2015/06/29/images/pg3jIjecjgdbi.jpg

எம்.எஸ்.பிரபு படத்திற்கு ஒளிப்பதிவு. படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஷட்டர் மலையாளத்தில் 2012ம் ஆண்டு வெளியான த்ரில்லர் படம். ஜாய் மேத்யூ என்பவர் எழுதி இயக்கி தானே நடித்த ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
29th June 2015, 05:14 PM
நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல்! எஸ்.வி.சேகர் அதிரடி குற்றச்சாட்டு!

நடிகர் சங்க கட்டிடத்தில் 60 கோடிரூபாக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக எஸ்.வி.சேகர் கோபத்துடன் கூறியுள்ளார்.

http://img.vikatan.com/news/2015/06/29/images/sarath%20S%20V%20Sekar%202.jpg
மன்னார்குடி இயல் இசை நாடகம் மன்ற நிகழ்சிக்கு வந்திருந்த எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலமாக 60 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போலி உறுப்பினர்களை அதிகமாக சங்கத்தில் சேர்த்துள்ளனர்.

எந்த ஒரு முடிவு என்றாலும் சரத்குமாரும், ராதா ரவியும் சேர்ந்து தனித்து முடிவுகளை எடுத்துள்ளனர். சங்கத்தில் 9 பேர் நிர்வாக குழுவில் இருக்கின்றனர் என்பதை அவர்கள் நினைத்துகூட பார்ப்பதில்லை.

எந்த ஒரு செயல்பாடையும் முறையாக வரைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தனை ஊழல்களையும் மறைப்பதற்காகவே மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிபோடுகிறார்கள் என்று கூறினார் எஸ்.வி.சேகர்.

balaajee
29th June 2015, 05:15 PM
சௌத்ல எல்லோருமே அப்படித்தான் - சபாஷ் போடவைத்த ரஹ்மான்

குத்தாமல் குடையாமல் மரியாதையுடன் ஒரு தமிழ் கலைஞனை அவர்கள் பேட்டி எடுக்கிறார்கள் என்றால், அது ரஹ்மான் மட்டும்தான். அவர்களின் கர்வத்தைத் தாண்டிய கௌரவத்தை சர்வதேச அளவில் ரஹ்மான் பெற்றிருப்பதால் வந்த பணிவாக இருக்கலாம்.

பேட்டியில், ரஹ்மானின் எளிமை மற்றும் பணிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் சொன்ன பதில் யாரையும் சபாஷ் போட வைக்கும். தன்னை குறித்த அந்தக் கேள்விக்கு தென்னிந்திய கலைஞர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பதிலை தெரிவித்தார். எப்படி?

தென்னிந்திய கலைஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இந்த குணங்களை (பணிவு, எளிமை) கொண்டிருப்பதாக நினைக்கிறேன் என்றார்.

தென்னிந்திய கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நற்குணங்கள் சொந்தம் என்று கூறவும் ஒரு பரந்த மனம் வேண்டும்.

ரஹ்மானின் வெற்றியில் அவரது இந்த மனவிசாலத்துக்கும் முக்கிய பங்கு உண்டு.

balaajee
29th June 2015, 05:37 PM
நாயகனாக படங்களை அடுக்கும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தொடர்ச்சியாக நாயகனாக நடிக்க பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வரும் இப்படத்தில் ஆர்யா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கெளவர வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய குணா மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, வசனங்களை அட்லீ எழுத இருக்கிறார். இப்படத்திற்கு 'கெட்ட பயடா இந்த கார்த்தி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து பாண்டிராஜின் இணை இயக்குநர் பிரசாந்த் இயக்க இருக்கும் 'பாட்ஷா என்கிற ஆண்டனி' என்ற படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் வசனங்களை இயக்குநர் பாண்டிராஜ் எழுத இருக்கிறார்.
'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் 'பாட்ஷா என்கிற ஆண்டனி' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் 'டார்லிங்' இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

balaajee
30th June 2015, 12:28 PM
நடிகை ராதிகாவுக்கு இயக்குநர் ராஜசேகர் கண்டனம்

சென்னையில் நடந்த, ‘உயிரே உயிரே’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளம் நடிகர்களை, நடிகை ராதிகா விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என திரைப்பட இயக்குநர் ராஜசேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோட்டில் திரைப்பட இயக்குநர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நான் இயக்கி வரும், ‘உயிரே உயிரே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகை ராதிகா பேசும்போது, “இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. வானத்தை பார்த்து மேலே எச்சில் துப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.
ஒரு படத்தின் விழா மேடையில் அந்த நடிகர், நடிகைகளை பற்றியோ, அதில் பணிபுரியும் டெக்னீசியன் பற்றியோதான் பேச வேண்டும். ஆனால், அரசியல் நோக்கில் நடிகர் சங்க பிரச்சினையை மறைமுகமாக ராதிகா பேசியதுகண்டிக்கத்தக்கது.
இளம் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் உள்ளனர். ஒருவருக்கு ஒரு கதை செட் ஆகவில்லை என்றால், அந்த கதைக்கு யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவர்களுக்கு மற்ற இளம் நடிகர்கள் சிபாரிசு செய்கின்றனர். அந்த அளவுக்கு இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.
மூத்த நடிகர்கள் அனைவரும் இளம் நடிகர்களுக்கு வழிவிட வேண்டும். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாதான் பொக்கிஷம் என மோகன்பாபு தெரிவித்தார். அப்படி இருக்கையில் இதுபோன்ற தவறான கருத்தை ராதிகா தெரிவித்தது நாகரிகமற்றது. இவ்வாறு ராஜசேகர் கூறினார்.

balaajee
30th June 2015, 02:34 PM
விரைவில் உருவாகிறது 'இன்று நேற்று நாளை' 2-ம் பாகம்- Tamil HINDU

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02456/indru_2456805f.jpg
'இன்று நேற்று நாளை' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கின்றன.

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க, புதுமுக இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்தார்கள்.

ஜூன் 26ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெளியான 3 நாட்களில் சுமார் 3 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும், திரையரங்குகளும் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

'இன்று நேற்று நாளை' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தில் கதை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். இன்னும் சில தினங்களில் 'இன்று நேற்று நாளை-2' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

balaajee
1st July 2015, 02:18 PM
நேற்றுடன் நிறைவடைந்தது பாயும்புலி

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்து வந்த பாயும்புலி படம் நேற்றுடன் நிறைவடைந்தது.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-07/01/full/1435736201-5714.jpg


இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க, வேந்தர் மூவிஸ் படத்தை வழங்குகிறது. டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதன் கடைசிப் பாடல் மரக்காணத்தில் படமாக்கப்பட்டு வந்தது. இந்தப் பாடல் நேற்று நிறைவடைந்தது. அத்துடன் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கி செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுகின்றனர்.

balaajee
2nd July 2015, 11:00 AM
அடிக்கிறார், சந்தேகப்படுகிறார்... மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்கும் நடிகர் கிருஷ்ணா

திருமணமாகி 16 மாதங்களே ஆன நிலையில், தனது மனைவி தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து ரத்தக் காயமத் ஏற்படுத்தியதாகவும், மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகர், கிருஷ்ணா.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-07/02/full/1435813811-3556.jpg

கழுகு உள்பட பல படங்களில் நடித்த கிருஷ்ணா, தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன். இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி. இப்போது அவர் யட்சன் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும், கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது. திருமணமாகி 16 மாதங்களே ஆன நிலையில், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது -

ஹேமலதாவும், நானும் காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். திருமணத்துக்கு பின்னர் வடபழனியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினோம். ஹேமலதா மனைவிக்குரிய கடமைகளை செய்யாமல், தேவையில்லாமல் என்னுடன் தகராறு செய்து வந்தார். அவரது சந்தேகபுத்தியினால் நடிப்புத் தொழிலில் என் மனதை செலுத்த முடியவில்லை.

வாழ்க்கையின் உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆடம்பரமான வாழ்க்கை நான் அவருக்கு செய்து கொடுப்பேன் என்று நினைக்கிறார். இதற்காக என்னை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்தார். இதனால், சில நேரங்களில் எனக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டது. அவருடன் வாழ்ந்த 14 மாதங்களும், எனக்கு மனரீதியான பல கொடுமைகளை செய்தார்.

என் மனைவி வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்தாலும், அவருக்கு தேவையான அனைத்து செலவுகளையும் நானே செய்தேன். சினிமா படப்பிடிப்பு முடிந்து இரவில் வீட்டுக்கு வரும்போது கதவை திறக்க மாட்டார். இதனால் பல இரவுகள் நண்பர்களது வீட்டில் தங்கியிருக்கிறேன். இதற்கிடையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்மீது ஹேமலதா புகார் செய்தார்.

அப்போது நடந்த கவுன்சிலிங்கில், ஹேமலதா சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் அவரைவிட்டு பிரிந்து நான் தனியாக வசித்து வருகிறேன். கடந்த 18-ந்தேதி கோவை மாவட்ட போலீசார் எனக்கு போன் செய்து, என் மீது ஹேமலதா வரதட்சணை புகார் கொடுத்துள்ளதாகவும், விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்றும் கூறினார் கள். திருமணத்தின்போது ஹேமலதா பெற்றோரிடம் வரதட்சணை எதுவும் நாங்கள் கேட்கவில்லை.

திருமணச்செலவுகள் அனைத்தையும் எனது பெற்றோர்தான் செய்தனர். ஆனால், என்னை துன்புறுத்தவேண்டும் என்பதற்காக சென்னையில் வசிக்கும் ஹேமலதா கோவை மாவட்ட போலீசில் என் மீது பொய் புகார் செய்துள்ளார். என்னை பல்வேறு வழிகளில் துன்புறுத்தும் அவருடன் இனி சேர்ந்து வாழ முடியாத நிலையில் உள்ளேன். எனவே கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி நடந்த எங்களது திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்.

balaajee
3rd July 2015, 02:30 PM
பாம்பை கையால் பிடித்து வீசிய துணிச்சலான சரத்குமார்!

http://img.vikatan.com/news/2015/07/03/images/sarath.jpgசென்னை: துணிச்சலாக பாம்பை கையால் பிடித்து வீசி இருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராடன் நிறுவன அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ராடன் அலுவலகம் அருகில் ரோட்டின் குறுக்கே வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அந்த வேன் ஓட்டுனர், வண்டியின் என்ஜின் பகுதியில் ஒரு குச்சியால் அடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நடிகர் சரத்குமார், தனது காரில் இருந்து கீழே இறங்கி சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரித்துள்ளார். அதற்கு வேன் ஓட்டுனர், பாம்பு உள்ளே இருக்கிறது, வெளியே வர மறுக்கிறது என்று கூறி இருக்கிறார்.

உடனே சரத்குமார், ஓட்டுனரிடமிருந்த குச்சியை வாங்கி தூர எரிந்துவிட்டு, என்ஜின் பகுதியில் பதுங்கி இருந்த பச்சைப்பாம்பை தனது கையால் பிடித்து எடுத்து கீழே வீசினார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் பயந்து ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடி இருக்கிறார்கள்.

துணிச்சலாக பாம்பை கையில் பிடித்து வீசிய நடிகர் சரத்குமாரை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டி சென்றிருக்கிறார்கள்.

balaajee
3rd July 2015, 02:35 PM
நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல: ஆவேசப்பட்ட இளையராஜா!
http://img.vikatan.com/news/2015/07/03/images/ilayaraja.jpgசென்னை: நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல என்று ராயல்டி சர்ச்சை குறித்து இளையராஜா ஆவேசமாக கூறினார்.

மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமை சங்கம் சார்பாக கடந்த 30 ஆம் தேதி சென்னை தி.நகர் வாணி மஹாலில் இசைஞானி இளையராஜாவின் அழைப்பின் பேரில் மெல்லிசைத்துறை பற்றிய ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் இளையராஜா பேசும்போது, ''எனக்கு முன்னால் நிர்வாகிகள் பேசியதைக் கேட்டிருப்பீர்கள். பல்வேறு கருத்துகள் உங்கள் மனத்தில் இருக்கும். நான் உங்களிடம் பணம் கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல. அது உங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கியவன்.

இப்போதைக்கு நான் சந்திக்க வந்திருக்கின்ற காரணம் என்னவென்றால், என்னுடைய பாடல்களையோ மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும்போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. இதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ்.

இதைச் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக் காட்டி அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது. என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேர்வதில்லை. எந்த இசை அமைப்பாளருக்கும் நியாயமாகச் சேர வேண்டியவை சென்று சேர்வதில்லை.

என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் இசை நிகழ்ச்சியில் உங்கள் பாடல்களைத்தான் ஐம்பது சதவீதத்துக்கு மேல் பாடுகிறேன் என்று சொல்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் எனக்கு ஐந்து சதவீதமோ பத்து சதவீதமோ கொடுத்து விட்டு அந்தச் செலவு, இந்தச் செலவு என்று கணக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள் ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகத்தினர். எனக்கே இப்படி என்றால் மற்ற இசையமைப்பாளர்களுக்கு என்ன கொடுப்பார்கள்.

அதேபோல் அவர்களிடம் இத்தனையாவது வருடம் வந்த பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளீர்களா? இந்த உறுப்பினரின் பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று விதிமுறை இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகள் எதற்குமே விடை இல்லை. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமாம். என்ன நியாயம் இது? அதனால் அந்த நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கை இல்லாததால் அந்த அமைப்பிலிருந்து நான் விலகிக் கொள்ள முடிவு செய்து விட்டேன்.

எவனோ ஒருவன் என் பெயரைச் சொல்லி பணம் வசூலித்து உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் உங்களிடமே நேரடியாக இதைச் சொல்லி என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். அதேபோல் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன் நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன். நானும் இதுபோன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி, நாடகத்தின் பின்னணி இசை என்று வாசித்து இசையமைப்பாளனாக வந்ததால் உங்கள் உணர்வுகள் எனக்கு நன்றாகத் தெரியும். கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அமைப்பு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். மற்றவர்களின் பாடல்களுக்கும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் அமர்ந்து பேசி முடிவெடுங்கள்.

குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள், அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினி மியூசிக் யூனியனுடன் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம். ஐ.பி.ஆர்.எஸ் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் கூட்டத்தின் மூலம் இந்தப் பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்வோம்.

இல்லாவிட்டால் நாமே ஒரு புதிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இப்போதே கூட ஒரு கமிட்டியைப் போடுங்கள். நாம் ஏன் மற்றவர்களிடம் ஏமாற வேண்டும்? நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள் அப்போதுதான் ஐ.பி.ஆர்.எஸ் போன்ற அமைப்புகளை சரியாக எதிர்கொள்ள முடியும். மீண்டும் ஒரு முறை வேண்டுமானாலும் இதுபோல் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுங்கள். நான் மீண்டும் வருகை தந்து இது பற்றி உங்களிடம் பேசுகிறேன்.

பாபநாசம் சிவன், டி.ஆர்.மகாலிங்கம், ஜி.ராமநாதன், தக்ஷிணா மூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம் சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இன்றைக்கு இருக்கின்ற இசையமைப்பாளர்கள் வரை அனைவருக்கும் பலன் கிடைக்கட்டும். நம்முடன் இருந்தவர்களும் இருப்பவர்களும் பயன்பெற நாம் பாடுபடுவோம்.

இங்கே அறிவிப்பாளர் பேசும்போது ஏழை இசைக் கலைஞர்கள் என்று குறிப்பிட்டார். இசைக்கலைஞர்கள் எவருமே ஏழை இல்லை உலகிலேயே தினமும் தான் செய்யும் தொழிலை மகிழ்ச்சியுடன் செய்பவர்கள் இசைக் கலைஞர்களே. சாப்பாடு இல்லாவிட்டால்கூட ஒரு பாடலை தனக்குள்ளாகவே பாடி சந்தோஷப்பட்டு திருப்தி அடைபவன் இசைக் கலைஞன். உதாரணத்துக்கு ஷிவ சத்யாய.... பாடலைப் பாடிப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும். மற்ற மனிதர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நாம் மட்டுமே என்பது புரியும்.

இந்தக் கூட்டத்தினை ஏற்பாடு செய்த எல்லோருக்கும் நன்றி. இந்த ஐ.பி.ஆர்.எஸ் விஷயத்திற்கு விரைவாக நீங்கள் முடிவெடுங்கள். சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்கள்" என்றார்.

balaajee
6th July 2015, 06:29 PM
சிக்கல் தீர்ந்தது: விரைவில் விக்ரம் படப்பிடிப்பு துவக்கம்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருந்த படத்தின் படப்பிடிப்புக்கு இருந்த சிக்கல் தீர்ந்ததால் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்கள். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் நடிக்கவிருந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. ப்ரியா ஆனந்த் அப்படத்தில் இருந்து விலக, பிந்து மாதவி அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரத்தில், தயாரிப்பாளர் தாணு அப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று பிரச்சினை எழுப்ப படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அப்படத்திற்கு என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது, " 'பீமா' படத்துக்கு சிக்கல் நிலவி வந்த நேரத்தில், ஐங்கரன் நிறுவனம் உதவி செய்தது. அதற்கு பதிலாக ஒரு படம் பண்ணி தருவதாக விக்ரம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தனது அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் தொகையை தாணுவிடம் வாங்கி இருந்தார்.

தாணு - ஐங்கரன் நிறுவனம் இருவருக்கும் இடையே, விக்ரம் படத்தை யார் தயாரிப்பது என்ற பேச்சுவார்த்தை தொடங்கியது. இறுதியில் ஐங்கரன் தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு கிளம்ப இருந்த நேரத்தில் தாணு, நான் தான் தயாரிப்பேன் என்று மீண்டும் புகார் அளித்தார்." என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது தாணு - ஐங்கரன் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதாகவும், ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க தாணு ஒப்புக் கொண்டார் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் மலேசியாவுக்கு படப்பிடிப்பு கிளம்ப இருக்கிறார்கள்.

balaajee
8th July 2015, 02:27 PM
தயாரிப்பாளர் தற்கொலை மிரட்டல், செல்வராகவன் அதிர்ச்சி?

இயக்குநர் செல்வராகவனின் பெரும்பாலான படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கோலாபாஸ்கர், அவருடைய மகனைக் கதாநாயகனாக வைத்து மாலைநேரத்துமயக்கம் என்றொரு படத்தைத் தொடங்கினார்கள். அந்தப்படத்துக்கு செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிதான் இயக்குநர்.

http://img.vikatan.com/cinema/2015/07/08/images/selva.jpg
இயக்குநர் என்று அவர் பெயரை வைத்துக்கொண்டு செல்வராகவனே இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தின் படப்பிடிப்பு சிலநாட்கள் நடந்தது. அதன்பின் அந்தப்படவேலைகளில் ஆர்வம் காட்டாமல் சிம்பு படத்தை இயக்கப்போய்விட்டார் செல்வராகவன். கீதாஞ்சலியும் அந்தப்பட வேலைகளில்தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

மகனைக் கதாநாயகனாக்குவதால் அந்தப்படத்துக்கு நிறையச் செலவு செய்துவிட்ட தயாரிப்பாளர் கோலாபாஸ்கர், இந்தப்படத்தை முடித்துக்கொடுங்கள் என்று பலமுறை கேட்டும் செல்வராகவன் அதற்கு சரியான பதில் சொல்லவில்லையாம். இதனால் அவர் செல்வராகவனிடம் கோபமாகப் பேசியதால் சிம்பு படத்துக்கு அவர் படத்தொகுப்பு செய்யவேண்டாம் என்று சொல்லி வேறு படத்தொகுப்பாளரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

அதன்பின்னும் மாலைநேரத்துமயக்கம் படத்தை முடித்துக்கொடுப்பது பற்றி எதுவும் பேசவில்லையாம். இதனால் கடும்கோபமான கோலாபாஸ்கர், என் படத்தை முடித்துக்கொடுக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த விசயம் செல்வராகவனுக்குத் தெரிந்துவிட்டதாம்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை முடித்துவிட்டுத்தான் சிம்பு நடிக்கும் கான் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.

balaajee
9th July 2015, 11:40 AM
எனது பெயரில் போலி சமுக வலைதளங்கள்: சரத்குமார் பரபரப்பு புகார்

தனது பெயரில், போலி சமூக வலைதளங்கள் துவங்கி அவதூறு தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு மது பாட்டில் அருகில், மது கோப்பையை வைத்தபடி, சரத்குமார் உள்ள புகைப்படம் பேஸ்புக்கில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் , சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

நடிகர், சட்டமன்ற உறுப்பினர், அரசியல்கட்சி தலைவர், நடிகர் சங்க தலைவர், முன்னணி நடிகர்களுள் ஒருவர் என பல்வேறு துறைகளில் சமூக அந்தஸ்தோடு, முக்கியமான நபராக நான் இருந்து வருகிறேன்.

எனது பெயரில், எனது புகைப்படங்களுடன் போலியான சமூக வலை தளங்கள் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரும்பத்தகாத எனது புகைப்படங்களை வெளியிடுட்டு எனது பெயருக்கும், புகழுக்கும் கெடுதல் விளைவிக்கின்றனர். இவை திட்டமிட்ட சதி. இச்செயல்கள் முற்றிலும், எனது புகழுக்கும், கவுரவத்திற்கும், களங்கம் விளைவிக்கும் செயல்கள் ஆகும்.

எனவே, எனது பெயரில், எனது புகைப்படங்களை வெளியிட்டு இயங்கி வரும் போலி சமூக வலை தளங்களை உடனே முடக்க வேண்டும். அத்தகைய சமூக வலைதளங்களை இயக்கி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் துணை ஆணையர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். மேலும், இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

balaajee
9th July 2015, 12:06 PM
தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்றிய விக்ரமன், ஆச்சர்ய தகவல்!

இயக்குநர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தாமலேயே அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லியிருந்தார்கள். தேர்தலின்போது, புதியஅலைகள் என்கிற அமைப்பின் சார்பாக சில பதவிகளுக்கு உதவிஇயக்குநர்கள் போட்டியிடுவதாக இருந்தது. ஆதனால் தேர்தலே நடத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்டோம், அந்த அளவுக்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காக இயக்குநர் விக்ரமன் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பாக உதவிஇயக்குநர்களிடம் பேசிய விக்ரமன், தேர்தல் போட்டியிலிருந்து எல்லோரும் விலகிக்கொள்ளுங்கள், புதிய நிர்வாகக்குழு பொறுப்பேற்றவுடன், சில புதிய பொறுப்புகளை உருவாக்கி அவற்றில் உங்களை நியமித்துவிடுகிறோம் என்று சொன்னாராம். அதேபோல நிர்வாகக்குழு பொறுப்பேற்றவுடன் பொதுக்குழுவைக் கூட்டி சொன்னபடி செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே நான்கு இணைச்செயலாளர்கள் பொறுப்பு இருந்தது.

http://img.vikatan.com/cinema/2015/07/09/images/200(3).jpg

இப்போது இன்னொருவரைச் சேர்த்து ஐந்தாக்கிவிட்டார்கள். அந்த ஐந்தாவது பொறுப்பில் தேர்தலில் போட்டியிட முன்வந்து விலக்கிக்கொண்ட ஆ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல எற்கெனவே பனிரெண்டு செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பு இருந்தது. அதைப் பதினேழாக உயர்த்தி புதியஅலைகளில் இருந்து மூவரையும் சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவரையும் சேர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நிர்வாகக்குழுவில் உதவிஇயக்குநர்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேறியதால் எல்லோரும் மகிழ்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை பொறுப்பேற்றவுடனே நிறைவேற்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

balaajee
9th July 2015, 02:10 PM
Dir.PA. VIJAY

பாடலாசிரியர், நடிகர் அவதாரத்தை அடுத்து இயக்குநராக புதிய முகம் காட்ட வருகிறார் பா.விஜய். தான் இயக்கி, நடித்துள்ள ‘ஸ்ட்ராபெரி’ படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள அவர், அதன் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கிறார். படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் சென்சார் பணிகளில் இருந்த பா.விஜய்யை சந்தித்தோம்.

நடிகராக வளர்ந்து வரும் நிலையில் ‘ஸ்ட்ராபெரி’ படத்தை இயக்கும் சூழல் எப்படி உருவானது?
‘‘இளைஞன்’ படத்தை முடித்த சில நாட்களில் ‘தகடு தகடு’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்தப் படம் முடிந்து ரிலீஸுக்கு தாமதமாகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஏற்கெனவே நான் எழுதி வைத்திருந்த ‘ஸ்ட்ராபெரி’ படத்தின் வேலையை தொடங்கலாம் என்று இறங்கினேன். நம் கதையை நாமே எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததால் நானே இயக்க முடிவெடுத்தேன். இதை ஒரு கமர்ஷியல் திரில்லராக உருவாக்க கிராஃபிக்ஸ் உட்பட பல விஷயங்கள் தேவைப்பட்டன. இரண்டு ஆண்டுகாலம் இப்படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளேன்.

படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது பேய்ப் படம் போல் தெரிகிறதே?
தொடர்ந்து வரிசையாக வந்துகொண்டிருக்கும் பேய்ப் படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லமுடியாது. காமெடி, திகில் இவற்றை கடந்து திரில்லர் பின்னணியில் சமூகத்துக்கான செய்தியையும் இந்தக் கதை உணர்த்தும்.

பயிற்சிகள் எதுவும் இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறீர்களே?
சென்னை வந்து பாடலாசிரியராகி பணம் சம்பாதித்து கார் வாங்கியபோது எனக்கு கார் ஓட்டத் தெரியாது. புதிய காரை வாங்கிய இரண்டாவது நாளில், டிரைவர் ஒரு இடத்தில் இடித்துவிட்டார். உடனே டிரைவர் இருக்கையில் இருந்து அவரை நகரச் சொல்லிவிட்டு நான் காரை இயக்கினேன். அப்படித்தான் நான் ஓட்டுநரானேன்.
ஏதாவது ஒரு புதிய விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, உள்ளுக்குள் ஒரு உணர்வு அதை நோக்கி நம்மை தள்ளிக்கொண்டே இருக்கும். அப்படித் தான் என் இயக்குநர் பயணத்தை தொடங்கினேன். விஷ்ணுவர்த்தன், செல்வராகவன் மாதிரி நாமும் இயக்க முடியும் என்று நம்பினேன். கவிஞர் வாலியும் படம் இயக்கியிருக்கிறாரே என்று யோசித்தேன். இவை எல்லாம் சேர்த்துதான் என்னை இயக்குநர் ஆக்கியது.

‘தகடு தகடு’ திரைப்படம் ரிலீஸ் ஆக தாமதமாவது ஏன்?
படத்தின் எல்லா பணிகளும் முடிந்துவிட்டது. படத்தின் தயாரிப்பாளர் ‘தகடு தகடு’ படத்தைப்போல ‘சவாரி’, ‘அம்மிணி’ ஆகிய இரண்டு படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படங்களின் வேலைகளும் முடிந்து எந்தப் படம் மேக்கிங்கில் சரியாக வந்திருக்கிறது என்பதைப் பார்த்து அதை முதலில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

பாடலாசிரியராக ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியதுபோல நடிகனாகவும், இயக்குநராகவும் ஒரு தனித்த இடத்தை பிடிக்க என்னமாதிரியான முயற்சிகளில் இறங்கியிருக்கிறீர்கள்?
‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’ படங்களில் நடித்த போது, நடிப்பதற்காக பெரிய பயிற்சிகள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஸ்ட்ராபெரி’ படமும் நான் ஒரு நடிகனாக தனித்து தெரியும் கதை அல்ல. கதாபாத்திரமாக மட்டுமே வெளிப்படுவேன். இப்படத்தில் நான் ஒரு கால் டாக்ஸி டிரைவர். அந்த பாத்திரத்துக்கு ஹீரோயிஸம் தேவையில்லை. படத்தில் சமுத்திரகனி, தம்பிராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும்.
இடைவேளைக்கு பிறகு நான் 12 காட்சிகளில் மட்டும்தான் நடித்திருக்கிறேன். இந்தப்படத்தைப் பொறுத்தவரைக்கும் நாயகன் என்பதிலிருந்து விலகி நின்று நடித்திருக்கிறேன். ஒரு இயக்குநரின் வேலை எவ்வளவு பெரியது என்பதை உணர்த்திய படமாகத்தான் இதை பார்க்கிறேன். இயக்குநராக இருப்பதில் அதிக சவால்கள் உள்ளதை இப்படத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டேன். இப்படத்தில் ஒரு இயக்குநராக நான் எதிர்கொண்ட சவால்கள் அதிகம்.

நடிகர், இயக்குநர் என்று பொறுப்புகள் கூடியதால் பாடல்கள் எழுதும் பணி தடைபடுமே?
அதெல்லாம் இல்லை. மூன்றையும் இணைத்துக் கொண்டு பயணிக்கவே விரும்புகிறேன். ‘யட்சன்’, ‘அரண்மனை 2’, விஜய் அட்லீ இணையும் புதிய படம் என்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறேன். மற்ற ஹீரோக்களின் படங்களையும் இயக்குவேன்.

NOV
9th July 2015, 06:47 PM
http://tamil.filmibeat.com/img/2015/07/09-1436427655-shankar-dhruv-600.jpg


ஷங்கர் கையில் சிக்கி அறிமுகமாகிறார் விக்ரம் மகன்!

சென்னை: கோடம்பாக்கத்திற்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடியாகி விட்டார், ஆமாம் விக்ரம் தனது மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப் படுத்தப் போகிறார். யார் இயக்கத்தில் தெரியுமா இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அனைவராலும் புகழப்படுகிற ஷங்கரின் இயக்கத்தில். ஷங்கரின் இயக்கத்தில் துருவ்வின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன, விக்ரமை வைத்து ஏற்கனவே அந்நியன் மற்றும் ஐ என 2 மெகாஹிட் படங்களைக் கொடுத்து இருக்கிறார் ஷங்கர்.

தற்போது மூன்றாவது முறையாக ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் விக்ரம், ரஜினிக்கு வில்லனாக அமீர்கானை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினாராம் ஷங்கர். அமீர்கான் நடிக்க மறுத்ததால் தற்போது விக்ரமுக்கு ஏற்றவாறு கதையை மாற்றி அமைக்க இருக்கும் ஷங்கர், 2016 ம் ஆண்டு ஷூட்டிங் செல்லத் தயாராக மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். எந்திரன் 2 முடிந்தவுடன் அநேகமாக துருவ்வை வைத்து அவர் இயக்கலாம் என்கிறார்கள், ஏனெனில் ஷங்கரின் இயக்கத்தில் துருவ் நடித்தால் அவன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார் விக்ரம். அதற்காகத் தான் எந்திரன் படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம், ஷங்கரும் துருவ்வை வைத்து இயக்க மறைமுகமாக சரி என்று சொல்லியிருக்கிறார் விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியாகலாம்.

Read more at: http://tamil.filmibeat.com/news/director-shankar-launch-vikram-s-son-dhruv-035598.html

balaajee
13th July 2015, 11:31 AM
'மாலை நேரத்து மயக்கம்' சர்ச்சை: படக்குழு விளக்கம்

'மாலை நேரத்து மயக்கம்' படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது.
புதுமுகம் பாலகிருஷ்ணன், வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிக்க, கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் 'மாலை நேரத்து மயக்கம்'. '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு படத்தொகுப்பு செய்த கோலா பாஸ்கர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, 'கான்' படத்தில் செல்வராகவன் செலுத்து வருவதால் 'மாலை நேரத்து மயக்கம்' பாதிக்கப்படுகிறது. படம் தாமதமாகி கொண்டே வருவதால், தற்கொலை செய்து கொள்வேன் என தயாரிப்பாளர் கோலா பாஸ்கர்
இயக்குநர் செல்வராகனிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இச்செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி' வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக உருவாகி வருகிறது 'மாலை நேரத்து மயக்கம்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நாயகி வாமிகா இந்தியில் சில படங்களில் நடித்து வருவதால், அவரது தேதிகள் கிடைப்பதில் தாமதமானது. தற்போது அவரது தேதிகள் கிடைத்து, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் இரண்டு பாடல்காட்சிகளுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார்கள்.

balaajee
13th July 2015, 03:17 PM
ஃபேஸ்புக்கில் இணைந்தார் விஜயகாந்த்!

முகநூலில் தமிழகத்தை பொருத்தமட்டில் அதீத பிரபலம் விஜய், அஜித் இருவரும் தான். ஆனால் இவர்களை விட போட்டொ, நியூஸ், மிம்ஸ் என அனலாய் பறப்பது கேப்டன் விஜயகாந்த். நமக்கு தெரிந்து விஜயகாந்த் தான் அதிகம் மீம்ஸ்களில் பயன் படுத்தப்பட்டவர் என்றே கூற வேண்டும்.
இதற்காக கோபமடைந்த விஜயகாந்த் போலீஸில் புகார் கூட கொடுத்தார்.எனினும் அவர் அதன்பிறகு பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது பல முன்னணி நடிகர்கள் துவங்கி அனைவரும் முகநூல், ட்விட்டர் என பிசியாகிவிட்டனர்.

அந்த வரிசையில் விஜயகாந்தும் தற்போது முகநூலில் தனக்கென தனி பக்கம் அமைத்து தனது நண்பர் குறித்தும், ரமலான் நோன்பும் குறித்து நிறைய பகிர்வுகளை பகிர்ந்துவருகிறார். ஜூலை 1ம் தேதி தனது முகநூல் கணக்கை ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த். இதுவரை 20க்கும் மேலான பகிர்வுகளை பகிர்ந்துள்ளார் விஜயகாந்த்.

http://img.vikatan.com/cinema/2015/07/13/images/400vijayakanth.jpg
முதல் பகிர்வாக , ‘ அனைவருக்கும் வணக்கம், இது என் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம். இதன் மூலம் கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று போட்டுள்ளார். மேலும் தினமும் ரமலான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமிய நண்பர்களுடன் இஃப்தார் விருந்து எடுப்பது அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது, கட்சியின் அறிவிப்புகள் என விஜயகாந்த் தற்போது முகநூலில் பல ஸ்டேட்டஸ்களை பகிரத் துவங்கிவிட்டார்.

balaajee
15th July 2015, 12:23 PM
த்ரிவிக்ரம் இயக்கத்தில் சூர்யா

தற்போது ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்தவுடன், த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சூர்யா.
சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்க விக்ரம் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வழங்க 2டி நிறுவனம் தயாரித்து
வருகிறது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'24' படத்தைத் தொடர்ந்து 'சிங்கம் 3', 'சதுரங்க வேட்டை 2', ரஞ்சித் இயக்கவிருக்கும் படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சூர்யா.

இப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி இயக்குநரான த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா. 'அதடு', 'ஜல்சா', 'ஜூலாயி', 'Attarintiki Daredi', 'S/O சத்தியமூர்த்தி' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் த்ரிவிக்ரம்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரிக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

balaajee
17th July 2015, 02:39 PM
வெற்றிப் படங்களுக்கும் விலையில்லை ...Tamil Hindu

எல்லாப் படங்களையும் திரையரங்கில் போய்ப் பார்க்க இயலாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ‘டிவில போடும்போது பார்த்துக்கலாம்’ என்று காத்திருப்பார்கள் (கள்ளச் சந்தையில் குறுந்தகடு வாங்கிப் பார்ப்பவர்கள் இங்கே கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை).

படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்களும் படம் பிடித்திருந்தால் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகக் காத்திருப்பார்கள். ஆனால், இனிமேல் திரையரங்கில் மட்டுமே படம் பார்க்க முடியும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோமோ எனத் தோன்றுகிறது. காரணம், தற்போது வெடித்திருக்கும் பிரச்சினை.

வெற்றிப் படங்களுக்கும் விலையில்லை
முன்பு ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியிட்டு, படத்தை வாங்கிவிடும். ஆனால், தற்போது வெற்றியடைந்த படத்தைக்கூட தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ‘வை ராஜா வை', ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை', ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்', ‘இன்று நேற்று நாளை', ‘வன்மம்' உள்ளிட்ட சில படங்களை வாங்க எந்தத் தொலைக்காட்சி நிறுவனமும் முன்வரவில்லை. தொலைக்காட்சி உரிமம் மூலம் வருமானம் என்பதைத் தயாரிப்பாளர் மறந்துவிட வேண்டும் என்பதுபோல இருக்கிறது தற்போதைய சூழல்.
‘எலி', ‘வலியவன்' போன்ற படங்கள் வெளியாகும் முன்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால், படம் வெளியாகி வெற்றி பெற்றால் நீங்கள் எங்களுக்குத் தரப்போகும் பணமே வேறு என்ற பேராசையில் அந்த வாய்ப்பைத் தயாரிப்பாளர்கள் நழுவ விட்டுவிட்டார்கள். படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது வாங்க யாரும் முன்வரவில்லை. இந்தக் காரணத்தாலும் சில படங்கள் பெட்டியில் தூங்கிகொண்டிருக்கின்றன.
அபாயச் சூழ்நிலை

இந்தச் சூழ்நிலை குறித்து தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தபோது, “முன்பு ஒரு சிறு பட்ஜெட் படத்தை எடுத்தால், படத்தை விளம்பரப்படுத்தி, வெளியாகி வரவேற்பை பெற்று, தொலைக்காட்சி உரிமை விற்று, திரையரங்குகள் வசூலில் காசு கிடைத்து கணக்கிட்டுப் பார்த்தால் லாபம் இருக்கும். இப்போது நஷ்டமே இருக்கிறது.

அது மட்டுமன்றி, தொலைக்காட்சி உரிமைக்கு ஒரு நிறுவனத் திடம் ஒப்பந்தம் போட்டு, அதைக் கொடுத்து வட்டிக்குக் காசு வாங்கிப் படத்தைத் தயாரிப்போம். இப்போது படத்தை வாங்கவே யாருமே இல்லையே... பிறகு எப்படி படத்தைத் தயாரிப்பது? இந்தச் சூழ்நிலை தொடரும் என்றால் சில நாட்களில் சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பு நின்றுபோகும். பெரும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது” என்றார்கள்.
“வின்னர் என்ற படத்தின் காமெடிக் காட்சிகளைப் போடாத தொலைக்காட்சி நிறுவனம் கிடையாது. ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர் இப்போது ஒரு வீடுகூட இல்லாமல் இருக்கிறார். அந்தத் தயாரிப்பாளருக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு வருடத்துக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்தால் எப்படியிருக்கும்” என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

தயாரிப்பாளர் சங்கம் கெடுபிடி
இந்தச் சிக்கலைப் போக்க, தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவை எடுத்திருக்கிறது. ஜூலை 24-ம் தேதி முதல் தொலைக்காட்சி உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மட்டுமே பாடல்கள், காமெடி, படக் காட்சிகள், டிரெய்லர் என அனைத்தையும் கொடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சி உரிமையை வாங்கும் நிறுவனம் போக தூர்தர்ஷன், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
படங்களின் விளம்பரங்கள் விஷயத்திலும் தயாரிப்பாளர் சங்கம் கெடுபிடி விதித்திருக்கிறது. உரிமையை வாங்கும் தொலைக்காட்சிக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும். வேறு எந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் விளம்பரங்கள் கிடையாது என்று கூறியிருக்கிறார்கள்.

ஒன்றிணைந்த தொலைக்காட்சிகள்
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவுக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் அசைந்துகொடுக்கவில்லை. அவை தமது நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. அதற்குப் பதிலாக, அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒன்றிணைந்து, இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை எந்த ஒரு புதிய படத்தின் உரிமையையும் வாங்குவதில்லை என்று தீர்மானித்திருக்கிறார்கள். இந்த முடிவிலிருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் மட்டும் விலகி நிற்கிறது. வெற்றி பெரும் படங்களை மட்டும் வாங்குவோம் என்பது சன் டிவியின் முடிவு என்கிறார்கள்.

முன்பு ஒரு படத்தைப் பெரும் விலை கொடுத்து வாங்கித் திரையிட்டால், போட்ட பணம் விளம்பரங்கள் மூலமாகத் திரும்ப வந்தது. தற்போது நஷ்டம் ஏற்படுகிறது என்று தொலைக்காட்சித் தரப்பு சொல்கிறது. படங்களின் பட்ஜெட் அதிகமாகிவிட்டது என்று சொல்லித் தயாரிப்பாளர்கள் அதிக விலை கேட்கிறார்களாம். “நாங்கள் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி நஷ்டமாகத் தயாராக இல்லை” என்கிறது தொலைக்காட்சி நிறுவனங்களின் தரப்பு.
இதே நிலை தொடர்ந்தால், இனி தயாரிக்கவிருக்கும் படங்கள் தொலைக்காட்சி உரிமம் என்ற ஒன்று இருக்கிறது என மறந்துவிட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடும். தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களையும் பாதிக்கும் இந்தத் தேக்க நிலை சீராவதற்கான அறிகுறி எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரையரங்கிலும் கூட்டம் இல்லை, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு இல்லை என்றால் கள்ளச் சந்தை பெருகவே இது வழிவகுக்கும் என்பதை உணர்ந்து இரு தரப்பும் செயல்பட வேண்டும் என்பதே முறையாகப் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

balaajee
17th July 2015, 06:48 PM
சர்வதேச அங்கீகாரத்துக்காக படம் தயாரிக்கும் அமலா பால்

நேற்று அமலா பால் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ப்ரியதர்ஷன் இயக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிக்கின்றனர்.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-07/16/full/1437035172-1377.jpg


ஏ.எல்.விஜய் தனது திங்க் பிக் நிறுவனம் சார்பில் சைவம் படத்தை தயாரித்தார். நைட் ஷோ படத்தை தயாரித்து வருகிறார். அவரது நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்புதான் நேற்று தொடங்கப்பட்டது.

தனது திங்க் பிக் ஸ்டுடியோஸின் பொறுப்பை தனது மனைவி அமலா பாலிடம் ஒப்படைத்துள்ளார் விஜய். அவர்தான் இந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். சர்வதேச அங்கீகாரத்தை தங்களது படம் பெற்றுத் தரும் என அமலா பால் கூறினார்.

விருதுகள் பெற்ற தனது காஞ்சிவரம் படத்தைப் போன்று கமர்ஷியல் இன்றி இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். எய்ட்ஸை மையப்படுத்திய இந்தப் படம் ஒருநாள் பகல் பொழுதில் நடக்கும் கதை. சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கென்றே இந்தப் படத்தை ப்ரியதர்ஷன் எழுதி இயக்குகிறார்.

Russelldwp
17th July 2015, 09:55 PM
ஜூலை 31 முதல் சிங்கத்தமிழனின் சிம்மக்குரலில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்


https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11709713_1616160411933967_5309046731532532715_n.jp g?oh=dbc2a95ba07c9866562bb37f29f94254&oe=565B0640

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11742758_1616161058600569_4845220597176439940_n.jp g?oh=292bc6e9db5e146e2c655c8148fdb7e8&oe=56147EC9

balaajee
20th July 2015, 11:57 AM
சரத்குமார் அணியில் நடிகர் சங்கத் தேர்தலில் சிம்பு, தனுஷ் போட்டி? - திருச்சி நாடக நடிகர் சங்க பொதுச்செயலாளர் தகவல்

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ் போட்டியிட உள்ளதாக திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு கேட்டு விஷால் தரப்பினர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 19) மாலை திருச்சி தேவர் ஹாலில் நாடக கலைஞர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் சங்கப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகமது மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 248 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 148 பேருக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குரிமை உள்ளது.
திருச்சி நாடக நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி அணியை ஆதரிக்கிறது.
சரத்குமார் அணி சார்பில் சிம்பு போட்டியிடப் போகிறார். அது பொருளாளர் பதவியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, ஏற்கெனவே எங்கள் அணியிலுள்ள தனுஷ், எஸ்.எஸ்.ஆர். மகன் கண்ணன் போன்றோரும் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
திருச்சியில் விஷால் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றார் எம்.எஸ்.முகமது மஸ்தான்.




நடிகர் சங்கத் தேர்தலில் தனுஷ், சிம்பு போட்டியை வரவேற்கிறோம்: நடிகர் விஷால் பேட்டி

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர்கள் தனுஷ், சிம்பு போட்டியிட உள்ளதாக திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் நேற்று முன்தினம் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாமக்கல்லில் நாடக நடிகர் சங்கத்தினர் மற்றும் விஷால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் விஷால், நடிகர்கள் தனுஷ், சிம்பு ஆகியோர் போட்டியிடுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது. அதை கேட்பது தவறா?. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நாங்கள் உள்ளே வரக்கூடாது என எதிர்க்கிறார்கள். ஆனால், வந்துவிட்டோம். சேலம் நாடக நடிகர் சங்கத்துக்கு நடிகர் ரித்தீஸ் ரூ.10 லட்சம் வழங்கியதாக கூறுகின்றனர். அதற்கான பதிவு இல்லை. சரத்குமார் பெரிய நடிகர், வயதில் மூத்தவர், அவரை நாங்கள் எப்படி மிரட்ட முடியும்.
எங்கள் அணியில் நடிகர் நாசர், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். கமல் போன்ற பெரிய நடிகர்களை, சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அவமரியாதை செய்கின்றனர்.
முதல்வரை சந்திப்போம்
நடிகர் தனுஷ், சிம்பு போன்றோர் தேர்தலில் போட்டி யிடுவதை வரவேற்கிறோம். சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நடிகர்கள் நாசர், சரவணன், கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

balaajee
20th July 2015, 12:00 PM
காதலில் முடிந்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் உறுமீன் நட்பு

ஒளிப்பதிவாளர் குகன் இயக்கிய இனிது இனிது படத்தில் அறிமுகமானவர் ரேஷ்மி மேனன்.

அதன் பிறகு, தேநீர் விடுதி உள்பட சில படங்களில் நடித்தார். பாபி சிம்ஹா நாயகனாக நடித்துவரும் உறுமீன் படத்தில் இவர்தான் நாயகி.
இந்தப் படத்தின் போது பாபி சிம்ஹாவுக்கும், ரேஷ்மி மேனனுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், ரேஷ்மியின் வீட்டினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜும், அவரது தந்தையும் ரேஷ்மியின் வீட்டினரை சமாதானப்படுத்தியதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கயிருப்பதாகவும் தகவல்.

இதனை பாபி சிம்ஹா மறுத்தார். இந்த செய்தியில் உண்மை இல்லை என்றார். ஜோ*திகாவுடன் காதலே இல்லை என்றுதான் சூர்யாவும் கூறினார். ஆனால், உண்மை அதுவல்லவே.

பாபி சிம்ஹா கூறுவது பொய், ரேஷ்மியும் அவரும் காதலிக்கிறார்கள். அடுத்த மாதமே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கலாம் என்கிறார்கள் படயூனிட்டில்.

balaajee
22nd July 2015, 11:15 AM
'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - vikatan

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் சந்தானம். தன்னுடன் பணியாற்றியவர்கள், பணியாற்றுபவர்கள் அனைவரையும் இயக்குநராக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார் சந்தானம். முருகன் மற்றும் ப்ரேம் ஆனந்த் என தன்னிடம் பணியாற்றிய இருவரையும் முருகானந்த் என்ற பெயரில் 'இனிமே இப்படித்தான்' படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் சந்தானம். அந்நிகழ்ச்சியில் இயக்குநராக பணியாற்றிய ராம்பாலா இயக்கவிருக்கும் படத்தில் தற்போது நாயகனாக நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சந்தானம்.

இது முழுக்க பேய் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக இருக்கிறது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தைப் போல இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க சந்தானம் தயாரிக்க இருக்கிறார்.

balaajee
22nd July 2015, 11:40 AM
அருள்நிதி படத்துக்கு மீண்டும் சிக்கல் - தடை கோரி வழக்கு

அருள்நிதி நடித்திருக்கும், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படம் வரும் 24 -ஆம் தேதியும் வெளியாகும் என்று தோன்றவில்லை. படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-01/16/full/1421423870-8576.jpg

இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை 21 லட்சத்துக்கு எம்.எஸ்.கே.ஃபிலிம் புரொடக்ஷன் என்ற நிறுவனத்துக்கு தருவதாக ஒப்பந்தம் போட்டு 7 லட்சம் அட்வான்ஸும் வாங்கியிருக்கிறார்கள். படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் நிலையில், மீதிப் பணத்தை தந்து உரிமையை வாங்க நினைத்திருக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.

அதனால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று எம்.எஸ்.கே. நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை 23 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கு காரணமாக 24 -ஆம் தேதி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

balaajee
23rd July 2015, 02:33 PM
ரஜினிமுருகன் ரிலீஸ் தாமதமாவது எதனால்?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் காமெடி படமாக உருவாகிவரும் படம் ‘ரஜினிமுருகன்’. படத்திற்கு இசை இமான். இந்த படத்தின் டிரெய்லர் , பாடல்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியாகாமலே உள்ளன.

இது தவிர்த்து நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் படத்தின் டப்பிங் வேலைகளே இன்னும் இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் என்றும் படத்தின் பின்னணி வேலைகள் முடிய இன்னும் 10 நாட்கள் பிடிக்கும் எனவும் கூறியுள்ளனர்.

]http://img.vikatan.com/cinema/2015/07/23/images/rajini-murugan1.jpgஇந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எப்படி படக்குழு முன்னரே அறிவித்தனர் எனக் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. அதே போல் படத்தின் ரிலீஸ் தேதியும் கூட ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என தகவல்கள் கசிந்துள்ளன.

பலரும் படத்தின் ரிலீஸ் தேதி இதுவாக இருக்கலாம் , அதுவாக இருக்கலாம் என தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் இன்னும் படத்தின் வேலைகளே முடியவில்லை என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமே.

balaajee
23rd July 2015, 02:40 PM
குஷி பார்ட் 2: ஓகே சொல்வாரா விஜய்?

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000த்தில் எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் , ஜோதிகா, நடிப்பில் காதல், ஈகோ, என இளசுகளில் மனதை அப்படியே படம்பிடித்து காட்டிய படமாக வெளியானது ‘குஷி’. இந்த படத்திற்காக ஜோதிகா சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
சிறந்த இசைக்காக தமிழ் நாடு மாநில விருதை தேவா வென்றார். மேலும் எஸ்,ஜே.சூர்யாவின் ‘வாலி’ படத்தையடுத்து இந்த குஷி படமும் தமிழ் சினிமாவில் அவருக்கென தனி இடத்தை இப்போது வரை உருவாக்கிக் கொடுத்தது.

http://img.vikatan.com/cinema/2015/07/23/images/kushi.jpgஇந்நிலையில் இந்த படம் தனக்கெ சினிமா உலகில் சரியான பாதை அமைத்துக் கொடுத்தது என்பதை விஜய்யும் பல நிகழ்ச்சிகளில் பகிர்ந்துள்ளார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய்யிடம் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளாராம்.

விஜய் தரப்பிலிருந்து படம் குறித்து இன்னமும் பதில் வரவில்லை. மேலும் துப்பாக்கி, கத்தி, ஜில்லா , என விஜய் ஆக்*ஷன் நாயகனாக களம் இறங்கிவிட்ட இந்நிலையில் விஜய் இந்த படத்திற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஒருவேளை அவர் சம்மதித்தார் எனில் அவரது ரசிகர்களுக்கு இது பேரின்பச் செய்தியாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

balaajee
27th July 2015, 05:47 PM
விஜய்சேதுபதி படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?
பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஆகிய படங்களின் மூலம் பெரிய அளவிற்கு முன்னேறினார் விஜய்சேதுபதி. இப்போதைக்கு இவருக்குப் போட்டியாக எண்ணப்படும் சிவகார்த்திகேயனோ சரியான இடைவெளியில் படங்களைக் கொடுத்து வரும் நிலையில் விஜய் சேதுபதியின் படங்கள் இன்னும் வெளியாகாமலேயே உள்ளன.
மேலும் சமீபகாலமாக ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு ஆகிய பெரிதாக படங்களும் பேசப்படவில்லை. மேலும் விஜய் சேதுபதி என்றாலே தனது கேரக்டர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமாக நடித்தாலும் வசூலில் பெரிதாக இருந்தால்தான் ஹீரோவுக்கு மதிப்பு. அந்தவகையில் அண்மைக்காலப் படங்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

http://img.vikatan.com/cinema/2015/07/27/images/hi66801408686033_OM_1.jpgஇந்நிலையில் விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல், மற்றும் அவரது நடிப்புக்காகவும் ,கெட்டப்பிற்காகவும் எதிர்பார்க்கப்படும் ஆரஞ்சு மிட்டாய் படங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டி வருகிறார்களாம்.
31ம் தேதி வெளியாக உள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு இப்போது வரை 100 திரையரங்குகள் கூட உறுதியாகவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அதே நாளில் ஜெயம் ரவியின் ‘சகலகலாவல்லவன் அப்பாடக்கர்’ மற்றும் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படங்கள் வெளியாக உள்ளன. எனவே தியேட்டர்கள் கிடைப்பதும் சிரமமாக இருக்கும் என்பதால் பட ரிலீஸை தள்ளிபோடலாமா என யோசித்து வருகிறதாம் படக்குழு.

balaajee
28th July 2015, 11:05 AM
திருப்பதி பிரதர்ஸூக்கு 'தூங்காவனம்' அளிக்க கமல் திட்டம் - tamil hindu

ராஜேஷ் இயக்கத்தில் நடித்துவரும் 'தூங்காவனம்' படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க கமல் திட்டமிட்டு இருக்கிறார். கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'தூங்காவனம்'. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தை கமலிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் இயக்கி வருகிறார். ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
'தூங்காவனம்' ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈ.சி.ஆரில் அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கையெழுத்திட்ட 30 கோடியில் முதல் பிரதி அடிப்படையிலான படத்தை துவங்க திட்டமிட்டு இருந்தார் கமல். ஆனால், தற்போது 'தூங்காவனம்' படத்தை அளிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
இது குறித்து "'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்துவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 80 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க திட்டமிட்டோம், ஆனால் முன்பாக படம் முடிவடைந்து விடும் என நினைக்கிறேன். மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த உடன் படத்தின் செலவு கணக்கிட்டுவிட்டு, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கலாம் என்று கமல் சார் திட்டமிட்டு இருக்கிறார்" என்று படக்குழுவில் பணியாற்றுபவர் தெரிவித்தார்.
'தூங்காவனம்' படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளித்துவிட்டால், கமலின் அடுத்த படமாக 'தலைவன் இருக்கின்றான்' தயாராக இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
30th July 2015, 12:58 PM
நான்கு நாளில் முடிவுக்கு வந்தது வேலைநிறுத்தம், 31 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடக்கம்
பெப்சி தொழிலாளர்கள் திடீர் சம்பள உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து, பட அதிபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தார்கள் இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் நடந்துவந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. http://img.vikatan.com/cinema/2015/07/30/images/taanu1.jpg
இந்த நிலையில் சம்பள பிரச்னை தொடர்பாக பட அதிபர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்குமிடையே கடந்த மூன்று நாட்களாக சென்னை பிலிம்சேம்பரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இரண்டு தரப்பினர்களிடையேயும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை முடிந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “ தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சம்பள பேச்சுவார்த்தை சுமூகமாக சென்ற நிலையில் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர்கள் சங்கத்தினருடன் மட்டும் பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. மற்ற அனைத்து சங்கத்தினருடனும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் போன்ற இதர பணிகளை நடத்துவது என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இருப்பினும் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு இறுதி அஞ்சலி நடைபெற்றுவருதால், தமிழக அரசின் ஆணைப்படி இன்று ஒருநாள் மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்து நாளை முதல் அனைத்துப் பணிகளையும் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

balaajee
30th July 2015, 02:05 PM
காக்காமுட்டையைத் தொடர்ந்து உலகை கவனிக்க வைத்திருக்கும் வெற்றிமாறன்

மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து படமாக்குபவர் வெற்றிமாறன். அவருடைய அடுத்த படம் விசாரணை. தனுஷ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க படம் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.

http://img.vikatan.com/cinema/2015/07/30/images/vertimaran.jpgஇதற்கு நடுவில் பாரம்பரியமிக்க வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்று உலக சினிமாக்களுடன் போட்டிபோடவிருக்கிறது. முதன் முறையாக தமிழிலிருந்து வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் படமும் இதுவே.
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே விருதுகளும் பாராட்டுகளும் நிச்சயம் என்பதை ஆடுகளம், காக்காமுட்டை ஆகியவற்றைத் தொடர்ந்து விசாரணை படம் வெளியாவதற்கு முன்னரே நிரூபித்துவிட்டனர்.

ஆட்டோ சந்திரகுமார் என்பவர் தான் ஜெயிலில் அனுபவித்த சம்பவங்களை மையப்படுத்தி எழுதிய லாக்-அப் நாவலை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் காவல் நிலையத்தில் நிகழும் உண்மை நிகழ்வை அப்படியே படமாக்கியிருக்கிறாராம் இயக்குநர்.
கைதியாக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார். கிஷோர், சமுத்திரகனி, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் இறுதியாக படத்தொகுப்பு செய்த படமும் இதுவே.

balaajee
30th July 2015, 05:19 PM
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு?

தெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. பல இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டு இறுதியில் கோரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

http://img.vikatan.com/cinema/2015/07/30/images/mahes.jpgகுறைந்தது 100 கோடியாவது பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துவிடவேண்டும் என்பதற்காக தமிழில் செல்வந்தன் என்ற பெயரிலும் டப் ஆகி ஸ்ரீமந்துடு வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் கோடீஸ்வரனாக நடித்திருக்கும் மகேஷ்பாபு, தன்னுடைய சொந்த கிராமத்தை தத்து எடுத்து பல நலத்திட்ட உதவிகள் செய்வது போல் நடித்துள்ளாராம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது.
பொழுதுபோக்குடன் சமுக கருத்தையும் முன்வைக்கும் படமாக ஸ்ரீமந்துடு தயாராகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கான புரோமோஷனில் பிஸியாக இருந்தவர், “ தமிழில் படம் நடிக்க தயாராகவிருப்பதாகவும், தமிழில் டாப் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியிடும் வகையில் ஒரு படம் நடிக்கத் தயாராகவிருப்பதாகவும் கூறினார். மேலும் கன்னட படங்களில் நடிப்பேன். ஆனால் இந்திப் படங்களில் நடிக்க தயாராகவில்லை என்றும் கூறியுள்ளார்.

balaajee
31st July 2015, 12:08 PM
கவலைக்கிடமான நிலையில் நடிகர் வினு சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி- webulagam

நடிகர் வினு சக்ரவர்த்தி சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முரட்டு உருவம், கரகர குரல். இந்த காம்பினேஷனை வைத்து காமெடியில் வெளுத்து வாங்கியவர் வினு சக்ரவர்த்தி. கதாசிரியராக சினிமாவில் நுழைந்து கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என பல்துறைகளில் பங்களிப்பு செலுத்தியவர்.

பல வருடங்களாகவே வினு சக்ரவர்த்தி நடிப்பதை குறைத்துக் கொண்டார். சமீபமாக சர்க்கரை நோய் அவரை கடுமையாக தாக்கியது. இந்நிலையில் நேற்று ரத்த அழுத்தம் மற்றும் மிகை சர்க்கரை காரணமாக மயங்கிவிழுந்த அவரை உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Russelldwp
2nd August 2015, 02:56 PM
https://pbs.twimg.com/media/CLZLPcBUwAA2mAm.jpg

balaajee
7th August 2015, 04:59 PM
ரஜினி பட டைட்டில் பாபிசிம்ஹா படத்திற்குக் கிடைத்தது எப்படி?

சூதுகவ்வும், ஜிகர்தண்டா என்று தொடர் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பாபிசிம்ஹா. கோ 2, பாம்புச்சட்டை, உறுமீன், கவலைவேண்டாம் உள்ளிட்ட படங்களில் பிஸியாகவிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் படம் வீரா. 1994ல் ரஜினி, மீனா, ரோஜா நடிப்பில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் வீரா. அப்படத்தின் டைட்டிலைத் தான் பாபிசிம்ஹாவின் அடுத்த படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் கதைக்கு வீரா என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் சொன்னதும், பஞ்சு அருணாசலத்தை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். கதை பிடித்ததால், பெயரைத்தர உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பஞ்சு அருணாசலம். அதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

வீரா, ஆக்*ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கிறதாம். அறிமுக இயக்குநரான கே.ராஜாராமன் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்திற்காக இயக்குகிறார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள, கவலைவேண்டாம், கோ 2 ஆகிய படங்களீல் ஏற்கெனவே நடித்துக்கொண்டிருக்கிறார் பாபிசிம்ஹா. ஒரு தயாரிப்புநிறுவனத்தின் மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

balaajee
7th August 2015, 05:40 PM
நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி நாயகனாக நடித்து மலையாளத்தில் வெளியான படம் பிரேமம்.

http://img.vikatan.com/cinema/2015/08/07/images/premam%201.jpeg
த்ரிஷ்யம் படம் போலவே சில கோடிகளில் தயாரிக்கப்பட்டு அதைவிடப் பத்துமடங்கு அதிகமாக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. அந்தப்டபத்தைத் தமிழில் எடுப்பதற்காக அந்த உரிமையை வாங்க தமிழகத்திலிருந்து பல படத்தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டன. அதில் ஸ்டுடியோகிரின் நிறுவனம் வெற்றி பெற்றிருக்கிறதாம்.
தமிழில் அந்தப்படத்தைத் தயாரிக்கும் உரிமையை அந்நிறுவனம் பெற்றிருக்கிறது. உரிமையை அவர்கள் வாங்கிவிட்டார்கள்? அடுத்து கதாநாயகனாக நடிக்கப்போவது யார்? என்கிற கேள்வி வந்துவிட்டது.

ஸ்டுடியோகிரின் என்பதால் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு முன்னுரிமை இருக்கும். ஆனாலும் இப்போது அதுகுறித்து எந்த முடிவும் செய்யவில்லை என்று அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதற்குள் இந்தப்படத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆளாளுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.


Ajay U had watched the movie. Whom will you recommend in TAMIL?

balaajee
10th August 2015, 02:13 PM
வாய்த்துடுக்கால் கிடைத்த படத்தை இழந்த நடிகர்

கே.ராஜாராமன் என்கிற புதியஇயக்குநரின் இயக்கத்தில் பாபிசிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம் வீரா. இந்தப்படத்துக்கான தொழில்நுட்பக்கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவே படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டது. அந்த அறிவிப்பு வந்ததற்குப் பலமான பின்னணிக்காரணம் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் நாயகனாக நடிக்க, பிரபலஇயக்குநரின் தம்பி, தயாரிப்பாளரின் மகன் ஆகிய அடையாளங்களைக் கொண்ட நடிகரைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்குப் போகிற நேரத்தில் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று நினைத்திருந்தார்களாம். அதற்குள் நடிகரின் வாய்த்துடுக்கு இந்தப்பட வாய்ப்பைக் கெடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நடிகர் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்த படம் அண்மையில் தயராகியிருக்கிறது.

அந்தப்படத்தைப் பார்த்தவர்கள், இந்தப்படத்துக்குப் பிறகு நீங்கள் எங்கேயோ போகப்போகிறீர்கள் என்று சொன்னார்களாம். உடனே சிலிர்த்துக்கொண்ட நடிகர், இந்தப்படத்தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு, ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தை மாற்றி எனக்கு அதிகச்சம்பளம் கொடுக்கிற மாதிரி புதுஒப்பந்தம் போடவேண்டும் என்று சொன்னதாகத் தெரிகிறது. அப்படி அவர் கேட்ட தொகை சிலகோடிகள். இதனால் அதிர்ச்சியான தயாரிப்புத்தரப்பு உடனே பாபிசிம்ஹாவைத் தொடர்புகொண்டு கதையைச் சொல்லி அவருக்கும் பிடித்ததால் அவரே நாயகன் என்று அறிவித்துவிட்டார்களாம்.

அந்த அறிவிப்பைப் பார்த்து அதிர்ச்சியான நடிகர், தயாரிப்புத்தரப்பை சமாதானப்படுத்தி மறுபடி ஒரு படவாய்ப்பைப் பெறப் போராடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தயாரிப்பாளரின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பற்றித் தெரிந்த மற்ற தயாரிப்பாளர்கள் இப்படித்தான் செய்யவேண்டும் என்று பாராட்டிக்கொண்டிருப்பதாகத் தகவல்

balaajee
10th August 2015, 05:27 PM
மகேஷ் பாபு, விஜய்க்கு செய்தது நியாயமா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா,சதீஷ் நடிப்பில் சென்ற வருட தீபாவளி அன்று வெளியாகி 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்த படம் ‘கத்தி’. படத்தின் கதைப்படி ஒரு குளிர்பான கம்பெனி கட்டுவதற்காக விவசாய நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கும். அதை விஜய் போராடித் தடுப்பார். இதுதான் படத்தின் கரு.

இதே பாணியில் தான் சமீபத்தில் வெளியான செல்வந்தன், தெலுங்கில் ஸ்ரீமந்துடு படமாக வெளியாகியுள்ளது. விவசாயம், ஊரில் தண்ணீர் பிரச்னை. ஊருக்காக தன் நலத்தைக் கூட பொருட்படுத்தாத ஹீரோ இடையில் செருகப்பட்ட குளிர்பான கம்பெனி விவகாரம் என இந்தப் படத்தின் கதையும் ஓரளவு ‘கத்தி’ படத்தின் கதைதான்.

ஏற்கனவே ‘கத்தி’ படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க முதன்முதலில் மகேஷ் பாபுவிற்குதான் கதை சொல்லப்பட்டது. நான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை எனக் கூறி மறுத்தார்.
அதனைத் தொடர்ந்து பவன் கல்யாணிடம் பேசப்பட்டது அவரும் மறுக்கவே இப்போது படம் காத்திருப்பில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘செல்வந்தன்’ படம் ‘கத்தி’ படத்தின் கதையை ஒத்திருக்கும் பட்சத்தில் பின்னர் ஏன் ‘கத்தி’ ரீமேக்கிற்கு மகேஷ் பாபு சம்மதிக்கவில்லை என கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் ’கத்தி’ படத்தின் கதையைக் கேட்டு அதிலிருந்து கதையை உருவி இந்த ‘செல்வந்தன்’ படத்தின் கதையை உருவாக்கி விட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இனி இந்த செல்வந்தன் வெளியானதால் அதே மாதிரியான கதையை மீண்டும் தெலுங்கில் எடுக்க முடியுமா. ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளரின் நிலைதான் என்ன? இனி எந்த ஹீரோ நடிப்பார் இப்படி பல குழப்பங்கள் உருவாகியுள்ளன.

balaajee
14th August 2015, 11:56 AM
Bollywood

பிரபு தேவா , அக்*ஷய் குமார், எமி ஜாக்ஸன் கூட்டணியில் ’சிங் ஈஸ் ப்ளிங்’ கலக்கும் போஸ்டர்கள்

பிரபு தேவா இயக்கத்தில் அக்*ஷய் குமார், எமி ஜாக்ஸன் , நடிக்கும் புதிய படம் ‘சிங் ஈஸ் ப்ளிங்’. ஆக்*ஷன் கதைக்களமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ட்விட்டர், முகநூல் என வைரலாக பரவி வருகிறது.
ஸ்ருதி ஹாசனைத் தொடர்ந்து எமி ஜாக்ஸனும், விஜய், தனுஷ் , இந்தியில் அக்*ஷய் குமார் என செம பிசியாக நடித்து வருகிறார்.

http://img.vikatan.com/cinema/2015/08/13/images/its-1_635343643815712179.jpg http://img.vikatan.com/cinema/2015/08/13/images/Singh-is-bling-posters.jpg http://img.vikatan.com/cinema/2015/08/13/images/26-singh-is-bling-first-loo.jpg

balaajee
17th August 2015, 12:59 PM
திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-04/22/full/1429713976-3582.jpg


நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இளையராஜா தனது பெயரில் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக அவர் கலந்து கொண்டு பேசினார். அன்றிரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதய பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், உடல்நிலை வேகமாக தேறி வருவதால் இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இளையராஜாவின் திடீர் உடல்நலக்குறைவு அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

balaajee
18th August 2015, 01:50 PM
டிஸ்சார்ஜ் ஆன அன்றே ரிக்கார்டிங்கை தொடங்கிய இளையராஜா

இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜா, டிஸ்சார்ஜ் ஆன உடனேயே ரிக்கார்டிங்கை ஆரம்பித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-08/18/full/1439878081-1264.jpg


இளையராஜாவின் பேச்சு மூச்சு வாழ்க்கை எல்லாம் இசை என்பது பூமி உருண்டை என்பதற்கு சமமானது. சில தினங்கள் முன்பு இளையராஜா தனது பெயரிலான இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

நேற்று மதியம் 12 மணி அளவில் இளையராஜாவை டிஸ்சார்ஜ் செய்தனர். இரண்டு மூன்று தினங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர் மருத்துவர்கள். ஆனால், காரில் திரும்பும்போதே தனது உதவியாளர்களுக்கு போன் செய்த இளையராஜா, இரண்டு மணி நேரத்தில் ரிக்கார்ட்டிங்குக்காக அனைவரையும் பிரசாந்துக்கு வரச்சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி இரண்டு மணி நேரத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் தனது ரிக்கார்டிங் பணியை இளையராஜா தொடங்கினார்.

சும்மாயில்லை இசை ஞானி என்கிறார்கள்.

Russelldwp
19th August 2015, 11:25 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/s526x395/11870924_1626226980927310_2489554713690994362_n.jp g?oh=93cb2392fd47f0102c95df46974386d0&oe=567DFF98&__gda__=1450154173_806ed3debf96df571686228c1d3ee07 f

balaajee
20th August 2015, 02:57 PM
ஹாரிஸ் ஜெயராஜூக்குப் படமே இல்லை, எதனால்?

கடந்த சில வருடங்களாகப் பரபரப்பாக இருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜூக்கு இப்போது படமே இல்லையாம். உதயநிதி நடிக்கும் கெத்து படம் மட்டும் அவர் கைவசம் இருக்கிறது. அந்தப்படத்தின் வேலைகளும் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்து வந்தால் பின்னணி இசையமைக்கும் வேலைகள் இருக்கும். அதன்பின் அவருக்கு எந்தப்படமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

http://img.vikatan.com/cinema/2015/08/19/images/harris_jayaraj_photos_images_wallpapers_01.jpg அவருடைய பாடல்களுக்காகவே படங்கள் ஒடிய காலம்போய் அண்மைக்காலமாக அவருடைய பாடல்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பில்லாமல் போய்விட்டது என்பதால் பெரியபடங்களில் அவரை ஒப்பந்தம் செய்யத் தயங்குகிறார்களாம்.
அதற்கடுத்த நிலையில் உள்ள படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய அவருடைய சம்பளம் பெரிய இடையூறு என்கிறார்கள். அவருடைய சம்பளம் சுமார் மூன்றகோடி என்று சொல்லப்படுகிறது, அதிலிருந்து அவர் இறங்கி வராததால் படங்கள் கிடைக்காமல் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

Bipolar
24th August 2015, 01:30 AM
.



So I hear Ms Asin Thottumkal is getting married?

Best wishes to her and husband-to-be!



.

balaajee
26th August 2015, 11:35 AM
பாலாவின் தாரைதப்பட்டை இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடக்கம் - VIKATAN

பாலா இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும் வரலட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் தாரைதப்பட்டை. இந்தப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

http://img.vikatan.com/cinema/2015/08/26/images/Ilayaraja-at-Director-Balas-Thaarai-Thappatai-Shooting-Spot-Photos-3.jpgகரகாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நடுவில் சசிகுமாருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதம் ஏற்பட்டது. அடுத்து படப்பிடிப்பு தொடங்கியதும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். அண்மையில் அந்தமான் போய்ப்படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தார்கள்.

அந்தமானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி போக வர கப்பலிலும் படப்பிடிப்பு நடத்தினார்களாம். கப்பலில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.

அந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்குகிறதாம். பதினைந்துநாட்கள் இந்தப்படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள். இதோடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் சொல்லப்படுகிறது.

balaajee
26th August 2015, 02:59 PM
தீபாவளிக்கு படங்கள் ‘ரிலீஸ்’ இல்லை? - தயாரிப்பாளர் சங்கம் திட்டம்

இந்த தீபாவளிக்கு புது ரிலீஸ் படங்கள் ரிலீஸ் ஆகாது என்று தயாரிப்பாளர் சங்க வட்டாரத் தில் கூறப்படுகிறது. சினிமா தயாரிப் பாளர்களின் பிரச்சினைகள், சிக்கல்களை பேசித் தீர்த்துக்கொள்ளும் வகையில், அக்டோபர் மாதக் கடைசியில் இருந்தே புதுப் படங்கள் வெளியிடுவதை நிறுத்திவைக்க திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டிருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்கள் பிரச் சினை, க்யூப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறது தமிழ் திரையுலகம். கடந்த 6 மாதங்களில் வெளியான படங்களைப் பொருத்தவரை, ‘காஞ்சனா’, ‘பாகுபலி’ ஆகிய 2 படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்ததாக கூறப் படுகிறது. படத் தயாரிப்புக்கு ஆகும் செலவு, நடிகர்களின் சம்பள உயர்வு, விளம்பரச் செலவு என தொடர்ச்சி யாக சிக்கித் தவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
ஒரு படம் வெளியாகும்போது, ‘4 காட்சிகள்’, ‘மதியம் 2:30 மணி காட்சி மட்டும்’ என்று திரையரங்குகளில் விளம் பரப்படுத்துகிறார்கள். ஆனால், சில திரையரங்குகளில் அந்த நேரத்துக்கு போனால் வேறு படம் ஓடிக்கொண்டி ருப்பதாக கொந்தளிக்கின்றனர் தயா ரிப்பாளர்கள். அது மட்டுமன்றி, பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதால், சிறு முதலீட்டு படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அக்டோபர் மாத இறுதியில் இருந்து, புதுப்படங்கள் வெளியீட்டை நிறுத்தி வைக்க தயாரிப்பாளர் சங்கம் திட்ட மிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர். சங்கத்தின் இந்த முடிவை விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரிவிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் படத் தயாரிப்பு முறையை மாற்றி சீரமைப்பது சம்பந்த மாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியிருப்பதாவது:
எவ்வளவு சரியாக திட்டமிட்டாலும், தயாரிப்பாளர்களே நஷ்டம் அடைகின்ற னர். இதற்கான காரணங்கள்:
எந்த வங்கியும் திரைப்பட தயாரிப் புக்கு கடன் வழங்குவதில்லை. இதனால், பைனான்சியர்களிடம் தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி, அதிக வட்டியுடன் திருப்பித் தரவேண்டியுள்ளது. இதனால் பைனான்சியர்களுக்கு எந்த சிக்கலும் வருவதில்லை. தாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் அவர்கள் வருமானம் பெறுகின்றனர்.

படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பணத்தை பைசல் செய்யாவிட்டால் படம் வெளியாகாது. சேட்டிலைட் உரிமை வாங்கப்படவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு இது பெரிய நிதிச்சுமையாக மாறுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல ‘அவுட் ரைட்’ முறையில் இப்போது திரைப்படம் வாங்கப்படுவதில்லை. அதுவும் ஒரு காரணம்.
படம் விற்கப்படுகிறதோ, இல் லையோ, அனைத்து நிதிச் சுமை யையும் தயாரிப்பாளர் ஏற்க வேண் டும். எல்லா தரப்புக்கும் பணத்தை தந்த பின்னரே படத்தை வெளியிட வேண்டும்.
இதில் எந்த நிலையிலும் தயாரிப் பாளர் தவிர மற்ற அனைவருக்கும் லாபமே. தொடர்ந்து நஷ்டம் அடை யும் பட்சத்தில் நாட்டில் உள்ள சில விவசாயிகளின் கதிதான் தயாரிப் பாளர்களுக்கும் நேருகிறது.
இந்நிலையை மாற்ற தயாரிப்பு செலவை 50 சதவீதமாவது குறைக்க வேண்டும். இதுதவிர, மற்ற தீர்வுகளும் உள்ளன.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திரையுலகை சேர்ந்த அனைவரும் உட்கார்ந்து, படத்தயா ரிப்பு முறைகளை மாற்ற வேண்டும். தற்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த கட்டமைப்பை மாற்ற வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

Cinemarasigan
28th August 2015, 01:57 PM
https://pbs.twimg.com/media/CNZ3SMEUYAEU67u.jpg

Russellbpw
29th August 2015, 10:53 AM
COIMBATORE ROYAL THEATER - DAILY 4 SHOWS - from 28th AUGUST

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpssfbxa32w.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpssfbxa32w.jpg.html)

balaajee
2nd September 2015, 02:28 PM
'நானும் ரவுடிதான்', 'விசாரணை'யை கையகப்படுத்தியது லைக்கா

தனுஷ் தயாரித்திருக்கும் 'விசாரணை' மற்றும் 'நானும் ரவுடிதான்' படங்களின் உரிமையை லைக்கா நிறுவனம் கையகப்படுத்தியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’லாக் அப்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த இரு படங்களின் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. இறுதியாக லைக்கா நிறுவனம் இவ்விரண்டு படங்களின் உரிமையையும் ஒன்றாக கையகப்படுத்தியிருக்கிறது.
'விசாரணை' படத்தினை உலகளவில் வெளியிட அனைத்து உரிமைகளையும் மற்றும் 'நானும் ரவுடிதான்' படத்தின் தமிழக உரிமையையும் லைக்கா நிறுவனம் வசப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
2nd September 2015, 02:52 PM
ஜீவா, ஹன்சிகா இணையும் 'போக்கிரி ராஜா'

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா இணையும் படத்துக்கு 'போக்கிரி ராஜா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திருநாள்' படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிவுற்றது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் ஜீவா. நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இப்படத்துக்கு 'போக்கிரி ராஜா' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை பி.டி.செல்வகுமார் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

balaajee
3rd September 2015, 01:32 PM
தயாரிப்பாளர்சங்கத்துக்கு எதிராக பெண் தயாரிப்பாளர் போர்க்கொடி

பாயும்புலி படச்சிக்கலையொட்டி செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் புதியபடங்களைத் திரையிடமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள்சங்கம் அறிவித்திருக்கிறது.

http://img.vikatan.com/cinema/2015/09/03/images/CN9NAWwVAAASESa.jpgஇதனால் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியடைந்திருப்பதோடு திட்டமிட்டபடி தங்கள் படம் வெளியாகும் என்றும் சொல்கின்றனர்.

அசோக்செல்வன் பிந்துமாதவி நடிப்பில் சவாலேசமாளி படம் நாளை வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தை அருண்பாண்டியனின் மகள் கவிதாபாண்டியன் தயாரித்திருக்கிறார். அவரிடம் இதுபற்றிக் கேட்ட போது எங்களுடைய படம் திட்டமிட்டபடி நாளை (04.09.2015) உலக முழுவதும் 170 க்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகும்.

“படத்தை திடீரென நிறுத்த முடியாது. என்னெனில் பல கோடி செலவில் சரியான திட்டமிடலுடன் படம் தயாரிக்கப் பட்டு ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப் பட்டுள்ளது. நல்ல விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.
நானே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. காரணம் படம் ரிலீசுக்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக திருட்டு வீ.சி.டி உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்னைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை இன்னும் சொல்லப்போனால் லிங்கா படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான்தான். அந்த வகையில் நானும் கடுமையாக பாதிக்கப் பட்டேன்.

அதை நான் இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை.
செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது” என்று கூறினார்கள்.

balaajee
3rd September 2015, 01:33 PM
பாயும்புலி நாளை வெளியாகுமா? பரபரப்பு தொடருகிறது

விஷால் நடித்த பாயும்புலி படத்துக்கு செங்கல்பட்டு திரையரங்க விநியோகஸ்தர்கள்சங்கம் தடை விதித்ததைத் தொடர்ந்து திரையுலகம் பரபரப்பாகிவிட்டது.

அந்தத்தடை காரணமாக, தயாரிப்பாளர்கள்சங்கம் நாளை முதல் புதியபடங்களைத் திரையிடுவதில்லை என்றும் 11 ஆம் தேதி முதல் எல்லாப்படங்களையும் திரையிடுவதில்லை என்றும் முடிவுசெய்து அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள்.

http://img.vikatan.com/cinema/2015/09/03/images/vishal.jpgசெப்டம்பர் 2 ஆம் தேதி மாலை தயாரிப்பாளர்கள்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கை வந்த சில மணிநேரங்களில் விஷால், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், திட்டமிட்டபடி செப்டம்பர் 4 ஆம் தேதி பாயும்புலி படம் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்.

ஏன் இப்படி? செங்கல்பட்டு திரையரங்குஉரிமையாளர்கள்தானே படத்துக்குத் தடை விதித்தார்கள், மற்ற மாவட்டங்களில் நாங்கள் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து காத்திருக்கிறோம் எங்களை ஏமாற்றலாமா? என்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேட்கத் தொடங்கிவிட்டார்களாம்.

அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாகவே விஷால் இப்படி அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர்கள்சங்கமும் இதையொட்டிய அறிவிப்பை வெளியிடும் என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டு திரையரங்குஉரிமையாளர்கள்சங்கக்கூட்டம் இன்று நடக்கவிருக்கிறதாம். அதில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது மதியம் தெரியும்.

balaajee
3rd September 2015, 03:20 PM
திரையுலகில் திடீர்திருப்பம், விஷாலுக்கு சரத்குமார் ஆதரவு

பாயும்புலி படத்துக்கு செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள்சங்கம் தடை விதித்ததையொட்டி பல்வேறு பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

http://img.vikatan.com/cinema/2015/09/03/images/download-8.jpgசெப்டம்பர் 4 முதல் புதுப்படங்கள் திரையிடப்படாது என்று சொன்ன தயாரிப்பாளர்சங்கத்தின் முடிவு மாறி படங்களை வெளியிட முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு திடீர்திருப்பம் ஒன்றும் ஏற்பட்டிருக்கிறது.

விஷால் படத்தை நிறுத்தக்கூடாது திட்டமிட்டபடி படம் வெளியாகவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் சரத்குமார். நடிகர்சங்கத் தேர்தலையொட்டி இருவரும் எதிரும்புதிருமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்த செய்தி.

இந்நிலையில் விஷால் படத்துக்குச் சிக்கல் என்கிற நேரத்தில் நடிகர்சங்கம் சார்பாக அது சம்பந்தப்பட்ட பேச்சுகளில் பங்கேற்றதோடு படம் வெளியாகியே தீரவேண்டும் என்றும் அவர் சொல்லியிருப்பது மிகவும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

paranitharan
4th September 2015, 02:09 PM
vishalukku ethos bill clinton na ninaippu.. ooru aani kuuda pudunga mudila but aatchiyai pidippen'gra kanakkila pechu

balaajee
5th September 2015, 05:43 PM
Nikkil Murugan ‏@onlynikil (https://twitter.com/onlynikil) 57m57 minutes ago (https://twitter.com/onlynikil/status/640120651399823360) Successful #ThaniOruvan (https://twitter.com/hashtag/ThaniOruvan?src=hash) Team @ Thanks Meet @ags_cinemas (https://twitter.com/ags_cinemas) @archanakalpathi (https://twitter.com/archanakalpathi) @actor_jayamravi (https://twitter.com/actor_jayamravi) @jayam_mohanraja (https://twitter.com/jayam_mohanraja)
https://pbs.twimg.com/media/COIqU35UAAAzhJw.jpg
(https://twitter.com/onlynikil/status/640120651399823360/photo/1)



Nikkil Murugan ‏@onlynikil (https://twitter.com/onlynikil) 17m17 minutes ago (https://twitter.com/onlynikil/status/640129449443246080) Emotional @actor_jayamravi (https://twitter.com/actor_jayamravi) #ThaniOruvan (https://twitter.com/hashtag/ThaniOruvan?src=hash) @ Thanks Meet @ags_cinemas (https://twitter.com/ags_cinemas) @archanakalpathi (https://twitter.com/archanakalpathi) @jayam_mohanraja (https://twitter.com/jayam_mohanraja)
https://pbs.twimg.com/media/COIyV1vVEAAYNSB.jpg
(https://twitter.com/onlynikil/status/640129449443246080/photo/1)

balaajee
6th September 2015, 07:55 AM
Rockline Venkatesh is back...

https://pbs.twimg.com/media/CN4YexhVAAA4_k7.jpg
(https://twitter.com/onlynikil/status/638975115582005249/photo/1)

pavalamani pragasam
7th September 2015, 08:37 PM
Watched thani oruvan. A powerful one-word comment says it all:AWESOME!:clap::clap::clap:

balaajee
8th September 2015, 01:35 PM
'தனி ஒருவன்' ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி

மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் 'தனி ஒருவன்' படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'. ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.
ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, "நீண்ட நாட்கள் கழித்து ஒரு படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் தமிழ் படம் இது தான். விடுமுறை நாட்களில் தான் திரையரங்குகள் நிரம்புவது பார்த்து வருகிறோம்.

'தனி ஒருவன்' படத்துக்கு வார நாட்களில் திரையரங்குகள் நிரம்பி வருகிறது. தமிழக அரசு வரிச்சலுகையும் கொடுத்திருப்பதால் இப்படம் கண்டிப்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய் லாபம் கொடுக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ராம்சரண் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்தியில் சல்மான்கானும் இப்படத்தை பார்த்திருக்கிறார்.

ரீமேக் உரிமையில் யார் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்து தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, "தெலுங்கு, இந்தி இரண்டு ரீமேக் உரிமைக்கும் கடும் போட்டி நிலவி வருவது உண்மை தான். ஆனால், இன்னும் ஒரிரு வாரத்தில் உரிமை யாருக்கு, யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது தெரியும்" என தெரிவித்தார்கள்.

balaajee
8th September 2015, 03:24 PM
தீபாவளி நெருக்கடியில் திணறும் படங்கள்

தீபாவளி அன்று பட்டாசு, இனிப்புகளுடன் முக்கிய இடம்பிடிப்பது, புதிய திரைப்படங்கள். தீபாவளியை மனதில் வைத்தே முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டு தேதி நிர்ணயிக்கப்படும்.
பட்ஜெட் 15 கோடிக்கு மேல் உள்ள திரைப்படங்களை தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பத்து முக்கிய தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதியால், தீபாவளியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

இந்த தீபாவளிக்கு இப்போதே பல படங்கள் ஆயத்தாமாகிவிட்டன.

தூங்கா வனம்

2015 -இல் உத்தம வில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து கமலின் தூங்கா வனமும் வெளியாகிறது. ப்ரெஞ்ச் திரைப்படம், ஸ்லீப்லெஸ் நைட்டின் அதிகாரப்பூர்வ தழுவலான இந்தப் படத்தை 38 தினங்களில் முடித்தார் கமல். போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-09/08/full/1441691535-2758.jpg



தீபாவளிக்கு படத்தை வெளியிட்டால் விளம்பரம் அதிகமின்றியை நல்ல ஓபனிங்கை பெற முடியும் என்பதால் கமல், தீபாவளியை குறிவைத்துள்ளார்.

தூங்கா வனத்தில் கமல், பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், த்ரிஷா, ஆஷா சரத், மதுஷாலினி, யூகிசேது உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை. கமலின் முன்னாள் உதவி இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வம் படத்தை இயக்கியுள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பு.

அஜித் படம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் முடியும் நிலையில் உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் அஜித்துடன் ஸ்ருதி, லட்சுமி மேனன், கபீர் சிங், ராகுல்தேவ் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு சூரி. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் அதன் இறுதிகட்டத்தில் உள்ளது.

விரைவாக படத்தை முடித்து தீபாவளிக்கு படத்தை கொண்டுவர விரும்புகிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அவரது முந்தைய தயாரிப்பான என்னை அறிந்தால் 78 கோடிகளை வசூலித்திருந்தாலும் அவருக்கு பெரிய லாபமில்லை. அதில் விட்டதை இதில் பிடிக்க தீபாவளி ஓபனிங் மிக அவசியம்.

தனுஷ் படம்

வேலையில்லா பட்டதாரி டீம் (நாயகி அமலா பால் மட்டும் கிடையாது) மீண்டும் இணைந்து உருவாக்கியிருக்கும் படமும் தீபாவளிக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பு.

மாரி சரியாகப் போகாத நிலையில், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அதிகம் நம்பியுள்ளார் தனுஷ். படம் விரைவில் தயாராகிவிடும் என்பதால் இவர்களின் இலக்கும் தீபாவளியாகவே உள்ளது.

இது நம்ம ஆளு

இடியாப்ப சிக்கலில் இருக்கும், இது நம்ம ஆளு படமும் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்புள்ளது. இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் ஏற்கனவே முடிந்துவிட்டது. கதைக்கு தேவையில்லாத ஒரு குத்துப் பாடலை..

மட்டும் எடுக்க வேண்டும் என்று சிம்பு தரப்பு வலியுறுத்துகிறது. இந்தப் பாடல் முடிந்தால் படம் தயாராகிவிடும்.
இது நம்ம ஆளு கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளதால் தீபாவளிக்கு முன்பே திரைக்கு வரலாம். ஆனால், சிம்பு படமல்லவா. தாமதத்துக்கு குறைவிருக்காது, தீபாவளிக்கே படம் வரும் என்கிறார்கள்.

தாரை தப்பட்டை


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-09/08/full/1441691763-4577.jpg



பாலா படம் குறித்து கடைசி நிமிடம்வரை எதுவும் கூறுவதற்கில்லை. அதேநேரம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் தாரை தப்பட்டையை தீபாவளிக்கு வெளியிட முயற்சிக்கலாம் என்ற பேச்சு உள்ளது. பாலாவின் இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்துள்ளனர். இசை இளையராஜா. இது அவரது ஆயிரமாவது படம். ஒளிப்பதிவு செழியன்.

தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இவை தவிர மேலும் பல படங்கள் தீபாவளி நப்பாசையுடன் ரேஸில் உள்ளன. ஆனால், இதில் எத்தனைப் படங்களை தீபாவளி தாங்கும்?

தமிழகத்தில் புதிய திரைப்படங்களை திரையிடும் நிலையில் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை சுமாராக 800 இருக்கும். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு 300 முதல் 400 திரையரங்குகளை ஒதுக்க வேண்டிவரும். இரண்டு படங்கள் வெளியானாலே ஹவுஸ்ஃபுல்லாகிவிடும் நிலையில், மூன்று படங்களுக்கு மேல் சாத்தியமேயில்லை.

தீபாவளியை கைப்பற்றும் அதிர்ஷ்டம் எந்தப் படங்களுக்கு இருக்கிறதோ.

balaajee
8th September 2015, 05:40 PM
அக்.18-ல் நடிகர் சங்கத் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற உள்ளது. 2015-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற உள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட உள்ளன.
தேர்தல் பார்வையாளராக ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஷால், நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட 'பாண்டவர் அணி' ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரையும் சந்தித்து பேசிவருகிறார்கள்.
இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களின் இறுதி பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது.

balaajee
10th September 2015, 12:27 PM
அக்ஷய் குமாருக்கு பிரபுதேவா அளித்த பரிசு

நேற்று அக்ஷய் குமாரின் பிறந்தநாள். அவருக்குப் பிடித்த, சினிமா தேக்கே மாமா என்ற பாடலை பிரபுதேவா, பிறந்தநாள் பரிசாக வெளியிட்டார்.
அக்ஷய் குமாரை வைத்து, தெலுங்கு விக்ரமார்க்குடு படத்தை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார் பிரபுதேவா.

படம் பம்பர் ஹிட். இதையடுத்து, சிங் இஸ் பிளிங் படத்தில் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் அக்டோபர் 2 திரைக்கு வருகிறது.

இதில் இடம்பெற்ற, சினிமா தேக்கே மாமா பாடல் அக்ஷய்யின் விருப்பப் பாடல். அதனை அவரது பிறந்தநாள் பரிசாக நேற்று பிரபுதேவா வெளியிட்டார்.

பிரபுதேவா கடைசியாக இந்தியில் இயக்கிய 2 படங்களும் தோல்வி என்பதால், சிங் இஸ் பிளிங் படம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் பிரபுதேவா உள்ளார்.

balaajee
10th September 2015, 03:03 PM
உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய சரத்குமார்!

சினிமாவில் மட்டும் தான் பக்கத்திற்கு பக்கம் வசனம் பேசுவார்கள், பொது வாழ்க்கையில் சமூக அக்கறை சினிமாக் காரர்களுக்கு இல்லை என்ற பொதுவான இணையக் கருத்தை சரத்குமார், கருணாகரன், விஷால் உள்ளிட்டோர் உடைத்து வருகிறார்கள்.
நேற்று கருணாகரன் தனது ஒவ்வொரு படத்திலும் தான் வாங்கும் சம்பளத்தில் ஒரு லட்சத்தை ஏழை விவசாயிகளுக்கு கொடுக்க இருப்பதாக முடிவு எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தார். அதே போல் விஷால் கேரளாவில் தெரு நாய்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தினார்.

http://img.vikatan.com/cinema/2015/09/10/images/sarathkumar_help002.jpgஇப்போது சரத்குமார் நெல்லை செல்லும் வழியில் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய நிலையில் சுற்றி இருந்தவர்களை விலக்கிவிட்டு விபத்துக்குள்ளான நபரை தன் காரிலேயே மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று காப்பாற்றியிருக்கிறார்.
நிஜத்திலும் நாங்கள் ஹீரோக்கள் என ஹன்சிகா குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது, சூர்யாவின் அகரம், அஜித் தன் வீட்டில் வேலை செய்வோருக்கு வீடுகள் கட்டித் தருதல், மம்முட்டியின் மரம் நடும் சவால், விஜய் ரசிகர்களின் குடும்பங்களுக்கு தொழில் செய்ய உதவுதல், ராகவா லாரன்ஸின் ஒரு கோடி திட்டம் என சமூக அக்கறை கொஞ்சம் அதிகமாகி வருவது பாராட்டுக்குரியவை.

pavalamani pragasam
10th September 2015, 08:55 PM
Another movie-watching spree(my kin are fishing out old movies worth watching) with my dear and near ones:
Thoroughly enjoyed watching "yuththam sey"! A classic!
"raaman thEdiya seethai" was a wholesome entertainer!
Absolutely bowled over by "rowthiram"! An idealistic marvel-my cup of tea!
Sat dazed after watching "pEraaNmai"! No words enough to praise this awesome movie! Everything about the movie-story, dialogue, acting-was wonderful. Spun around all fields of interest and necessity-political, economical, social, moral, patriotical and technological. A very intelligent and interesting movie. The statements-many they were-made by the level-headed, patient and charming hero are nuggets of pure gold! I was put off by the 'naughtiness' of the girls in the early scenes of their appearance but later gave them unstinted admiration for their mettle and grit and good sense!

balaajee
11th September 2015, 01:59 PM
சரத்குமார் - ராதிகா மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் - கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை மணக்கிறார்
சென்னை: சரத்குமார்- ராதிகா நட்சத்திர தம்பதியின் மகள் ரேயானுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும், வருகிற 23ம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார்-ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான். இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், சென்னையில் உள்ள ராடான் டிவியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். தற்போது இவருக்கு திருமணம் உறுதி செய்யப் பட்டுள்ளது.



http://img.vikatan.com/news/2015/09/11/images/sarathkuamr%20daughter-%20mithun.jpg

பெங்களூருவை சேர்ந்த அபிமன்யூ மிதுனை ரேயான் மணக்க இருக்கிறார். அபிமன்யூ இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபிமன்யூ விளையாடி வருகிறார்.இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வருகிற 23ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருமண தேதி குறித்து முடிவு செய்ய இருக்கிறார்கள்.இது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணம் ஆகும்.

balaajee
11th September 2015, 02:00 PM
கணவரைப் பிரிந்தார் ரம்யா: வேலையில் கவனம் செலுத்த முடிவு

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02543/ramya_2543805f.jpg ரம்யா உடன் கணவர் அப்ரஜித் | கோப்பு படம்

சமீத்தில் திருமணமான ரம்யா, தனது கணவரைப் பிரிந்துவிட்டதாகவும், பணியில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தொலைக்காட்சி வர்ணனையாளராகவும், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரபலமானவர் ரம்யா. அவருக்கும் அப்ரஜித்துக்கும் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. திருமணத்துக்கு பிறகு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் ரம்யா.

சில நாட்களுக்கு முன்பு ரம்யாவும் அவருடைய கணவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்து ரம்யா கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம். எனது திருமண பந்தம் முறிந்தது. இது இருவரும் இணைந்தே எடுத்த முடிவு. இந்த அறிவிப்பின் மூலம் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.
எனது ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். திருமண பந்த முறிவு எனது தனிப்பட்ட பிரச்சினை. மேலும், அது மிகவும் உணர்வுப்பூர்வமானது. எனவே, எனது தனிப்பட்ட சுதந்திரத்துள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையை இத்தோடு விட்டுவிடுங்கள். இப்போது எனது கவனம் எல்லாம் வேலையின் மீதே இருக்கிறது. என் பணி நிமித்தமாக உதவும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

etuhubei
11th September 2015, 05:36 PM
Yatchan (2015) http://www.tamilmoviecritic.com/movie/yatchan-movie-review

balaajee
14th September 2015, 11:29 AM
வெனிஸ் பட விழாவில் 'விசாரணை'க்கு 'மனித உரிமை சினிமா' விருது

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'விசாரணை' படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில், மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற பிரிவில் விருது கிடைத்துள்ளது. தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைகா நிறுவனம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் இப்படம் வெளியாகவில்லை.

படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதால், உலக திரைப்பட விழாக்களில் அனுப்ப திட்டமிட்டார்கள். முதலவாதாக வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிட 'விசாரணை' தேர்வானது. இவ்விழாவில் திரையிட தேர்வான முதல் தமிழ் படம் 'விசாரணை' என்பது குறிப்பிடத்தக்கது. வெனிஸ் திரையிடலில் இயக்குநர் வெற்றிமாறன், தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

இந்தத் திரைப்பட விழாவில், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் - இத்தாலி பிரிவு அமைப்பின் 'மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற விருதை விசாரணைத் திரைப்படம் வென்றுள்ளது. இந்தத் தகவலை, இப்படத்தின் குழு தெரிவித்தது.
http://tamil.thehindu.com/multimedia/archive/02546/visaranai1_2546224a.jpg
இது குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் - இத்தாலி பிரிவின் செய்தித் தொடர்பாளர் ரிகார்டோ நவுரி கூறும்போது, "இந்தப் பிரிவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் கலந்துகொண்டன. அவை அனைத்துமே மனித உரிமைகளைப் பேசும் படங்களே. எனினும், விசாரணை படம் தனித்துவம் மிகுந்தது.

விசாரணைக் கைதியாக இருந்து தற்போது சமூகப் போராளியாக இருக்கும் ஒருவரது அனுபவத்தை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது விசாரணை. இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களையும், கொடுமைகளையும் இப்படம் பதிவு செய்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

balaajee
14th September 2015, 11:34 AM
இயக்குநர் ஆவதற்காக நடிப்பைத் துறந்தேன்: இயக்குநர் பிரேம் சாய் நேர்காணல்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02546/tsta_2546145f.jpg 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தில் ஜெய் மற்றும் யாமி கவுதம் | உள்படம்: இயக்குநர் பிரேம் சாய், படம்: எல்.சீனிவாசன்
பொதுவாக நாடக நடிகர்கள் சினிமாவில் நடிப்பதற்குதான் வருவார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக நாடக நடிகராக இருந்து திரைப்பட இயக்குநராக மாறியிருக்கிறார் பிரேம் சாய். ஜெய், யாமி கவுதம் நடிக்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்த அவரைச் சந்தித்தோம்.

ஒரு காலத்தில் பிரபல நாடக நடிகராக இருந்த நீங்கள், பின்னர் நடிப்பதை நிறுத்தியது ஏன்?
நான் நாடகங்களில் நடிப்பதை நிறுத்தி 10 ஆண்டுகள் ஆகிறது. நாடகங்களில்தான் என்னுடைய பயணம் தொடங்கியது. பல ஆண்டுகாலம் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தேன். தெலுங்கில் என் நடிப்புக்காக இரண்டு முறை நந்தி விருதுகள் வென்றிருக்கிறேன். அப்போது இங்கே தமிழக அரசு விருதுகள் கிடையாது. என்னுடைய தேதிகள் இருந்தால் தொலைக்காட்சியில் ஸ்லாட் கொடுப்பார்கள் என்ற காலம் இருந்தது. ஒரு கட்டத்தில் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது. இயக்குநராக விரும்பினேன். 2004-05ல் இயக்குநர் ஆவதற்காக நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஷூட்டிங்கில் க்ளாப் போர்டு அடிப்பது, மக்கள் கூட்டத்தை தள்ளி நிற்கச் சொல்வது போன்ற பணிகளைப் பார்த்தேன். நடிப்புத் துறையில் இருந்து விலகி இந்த துறைக்கு வந்தேன். கெளதம் மேனன் கூட என்னை நடிக்கச் சொன்னார், ஆனால் நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது முடிந்துபோன ஒன்று. இப்போது நான் எடுத்த முடிவுக்காக சந்தோஷப்படுகிறேன்.

இயக்குநர் பிரபுதேவாவிடம் நீங்கள் பணியாற்றி உள்ளீர்கள். அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ஒரு கட்டத்தில் நான் பார்த்த சம்பவங்களை கதையாக எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய ஒரு கதை தெலுங்கில் குறும்படமாக வெளிவந்தது. அதைப் பார்த்துவிட்டு பிரபுதேவா என்னை அழைத்தார். அவரிடம் நான் பணியாற்றினேன்.

‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ எந்த மாதிரியான கதைக் களம்?
வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு சாதாரண மனிதனின் கதை இது. பொதுவாக கொரியர் கொண்டுவரும் பையனிடம் நாம் அதிகம் பேச மாட்டோம். அவரும் பேச மாட்டார். ஒரு வாரம் தினமும் கொரியர் அலுவலகம் சென்று அவர்களிடம் பேசினேன். அந்த அனுபவங்களை வைத்து எழுதப்பட்டதுதான் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’. அதே நேரத்தில் இது உண்மைக் கதையும் இல்லை. கெளதம் மேனன் சாரிடம் இப்படத்தின் கதையைக் கூறினேன். அவர் இதை தயாரிக்க ஒப்புக்கொண்டார்.

உங்களது முதல் படம் இவ்வளவு தாமதமாகும் என்று நினைத்தீர்களா?
யாருமே தன்னுடைய படம் தாமதமாக வர வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் படத்துக்கே காலதாமதம் ஏற்படுகிறது. மக்கள் திரையில் எனது படத்தைப் பார்த்து கைதட்டும்போது என்னுடைய எல்லா பிரச்சினைகளும் காணாமல் போய்விடும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் பிரபுதேவாவிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
24 மணி நேரமும் சினிமாவைப் பற்றியே நினைக்கும் மனிதர் பிரபுதேவா. சினிமாவைத் தவிர வேறு எதுவுமே அவருக்குத் தெரியாது. நேரம்காலம் பார்க்காமல் உழைப்பார். தூங்கவே மாட்டார். அவரிடம் இருந்து கடின உழைப்பைக் கற்றுக்கொண்டேன்.

balaajee
14th September 2015, 11:56 AM
விவாகரத்து கோரி கன்னட நடிகர் சுதீப் மனு: மனைவிக்கு ரூ.19 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புதல்


http://tamil.thehindu.com/multimedia/dynamic/02546/sudeep_2546115f.jpg மனைவி பிரியாவுடன் சுதீப்.
நடிகர் சுதீப் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி பிரியாவுக்கு ரூ.19 கோடி வழங்கவும் சம்மதம் தெரிவித்துள் ளார்.
நடிகர் சுதீப் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். 'நான் ஈ' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமானார். தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'புலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித் துள்ளார்.
இவர் 2001-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பிரியா ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். கடந்த 14 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு 11 வயதில் 'சான்வி' என்ற மகள் இருக்கிறார். இதனிடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதீப் தம்பதி பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சுதீப் மற்றும் அவரது மனைவி பிரியா ராதாகிருஷ்ணன் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சுதீப் தனது விண்ணப்பத்தில், ‘‘மனைவி பிரியா ராதாகிருஷ்ணனு டன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. தனது மகள் சான்வி மனைவியோடு வாழ்வதில் ஆட்சேபம் இல்லை. மனைவிக்கும், மகளின் வளர்ப்புக்கா கவும் ஜீவனாம்சமாக ரூ. 19 கோடி வழங்குகிறேன்'' என தெரிவித்துள் ளார். இது தொடர்பாக சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பிரச்சினை களை எதிர் கொள்ளாமல் ஓட மாட்டேன். கருத்து வேறுபாடு இயல்பானது. எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது தளத்தில் பேச விரும்பவில்லை'' என பதிவிட்டுள்ளார்.

balaajee
14th September 2015, 12:33 PM
ஆஸ்கர் பட்டியல்...அணிவகுக்கும் தென்னிந்தியப் படங்கள்!

தொடர்ச்சியாக இந்த வருடம் இந்தியா சார்பாக கலந்துகொள்ள உள்ள ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் தென்னிந்திய படங்கள் வரிசையாக இடம்பிடித்து வருகின்றன. சமீபத்தில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான ‘காக்கா முட்டை’ படம் ஆஸ்கர் பட்டியலில் இணைந்தது.

இதனையடுத்து ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ‘பாகுபலி’ படமும் ஆஸ்கர் இந்தியப் பரிந்துரைப் பட்டியலில் இணைந்துள்ளது.

http://img.vikatan.com/cinema/2015/09/12/images/unnamed(1).jpgஇதனையடுத்து சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வெளியாவதற்கு முன்னரே பெற்ற ‘குற்றம் கடிதல் படமும் தற்போது ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் குற்றம் கடிதல் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

balaajee
14th September 2015, 05:18 PM
சூர்யா படத்துக்கு இவ்வளவு விலையா?

சூர்யா இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் 24. விக்ரம்குமார் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் பாடல்காட்சிகளைப் படமாக்க போலந்து போகவிருக்கிறார்கள்.

http://img.vikatan.com/cinema/2015/09/14/images/suriya.jpgஇந்தப் படத்தின் தெலுங்குஉரிமையை தெலுங்கு நடிகர் நிதின் வாங்கியிருக்கிறார் என்று முன்பே சொல்லப்பட்டது. அவர் இந்தப்படத்தின் தெலுங்கு உரிமைக்காக சுமார் இருபது கோடி கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது இதுவரை இல்லாத அளவு பெரியதொகை என்றும் சொல்லப்படுகிறது.

சூர்யாவின் எல்லாப்படங்களுமே தமிழில் வெளியாகும்போதே தெலுங்கிலும் வெளியாகும். கடைசியாக வெளியான மாஸ் மற்றும் அஞ்சான் ஆகியவை சரியாகப் போகாதநிலையிலும் சூர்யா படம் இவ்வளவு விலைக்குப் போயிருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

சூர்யா மட்டுமின்றி இயக்குநரும் தெலுங்கில் புகழ்பெற்றவர் என்பதாலும் அவருடைய முந்தைய படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன என்பதாலுமே இவ்வளவு விலை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

balaajee
16th September 2015, 02:04 PM
Veera Sivaji படப்பிடிப்பு தொடங்கியது

தகராறு படத்தை இயக்கிய கணேஷ்விநாயக் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கும் புதியபடம் வீரசிவாஜி. இந்தப்படத்தில்தான் அஜித்தின் மைத்துனி ஷாம்லி தமிழில் அறிமுகமாகிறார்.

http://img.vikatan.com/cinema/2015/09/16/images/sivaji.jpgஇந்தப்படத்தின் தொடக்கவிழா இன்று புதுச்சேரியில் நடந்தது. தொடக்கவிழாவை அங்கு நடத்தக் காரணம்? தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். முப்பதுநாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

ரோமியோஜூலியட் படத்தைத் தயாரித்த நந்தகோபால் தயாரிக்கிறார். இன்று நடந்ததொடக்கவிழாவில் நடிகர்பிரபு மற்றும் ஷாம்லியின் தந்தை உட்பட பலர் கலந்துகொண்டார்களாம். தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாம். ஷாம்லி நடித்துக்கொண்டிருக்கிறார்.

balaajee
16th September 2015, 03:17 PM
பாலாவின் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு நிறைவு

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02549/thaarai_2549578f.jpg படப்பிடிப்பு முடிந்தவுடன் 'தாரை தப்பட்டை' படக்குழு எடுத்துக் கொண்ட புகைப்படம்

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே சசிகுமாருக்கு கையில் அடிபட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர், அவருடைய கை சரியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது.

தஞ்சாவூரில் நடைபெற்ற இறுதிகட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி முடிவுற்றது. 130 நாட்கள் படப்பிடிப்பில் 'தாரை தப்பட்டை' படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா. அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாளில் மற்ற பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் விரைவில் தஞ்சாவூரிலேயே தொடங்க இருக்கிறார்கள்.

balaajee
16th September 2015, 03:25 PM
கெளதம் மேனன் இயக்கத்தில் நிதின்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02549/nithingvm_2549576f.jpg இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் நடிகர் நிதின் | கோப்பு படம்

'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து நிதின் நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இயக்க இருக்கிறார் கெளதம் மேனன்.
சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு டான் மேக்கார்தர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, துவங்கப்பட்டிருக்கிறது.
'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் நிதின் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கெளதம் மேனன். ஜனவரியில் தொடங்கவிருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் தயாராக இருக்கிறது.
கெளதம் மேனன் தயாரித்திருக்கும் 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'கொரியர் பாய் கல்யாண்' படத்தின் நாயகனாக நிதின் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

balaajee
16th September 2015, 05:50 PM
பாலா படத்தையும் லபக்கிய லைக்கா

கத்தி படத்தின் போது, அப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் ராஜபக்சேயின் ஆதரவு நிறுவனம் என கத்தி கூச்சல் போட்டவர்கள் என்ன ஆனார்கள்?


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-09/16/full/1442385560-9601.jpg


தமிழ் சினிமாவின் முக்கிய படங்களையெல்லாம் தற்போது வளைத்துப் போடுகிறது லைக்கா நிறுவனம்.

வெற்றிமாறனின் விசாரணை, தனுஷ் தயாரித்த, நானும் ரவுடிதான் படங்களின் விநியோக உரிமையை லைக்கா நிறுவனம் ஏற்கனவே வாங்கியிருந்தது. இப்போது, பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் விநியோக உரிமையையும் வாங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகத்தையும் ஐங்கரனுடன் இணைந்து லைக்காவே தயாரிக்கப் போவதாக செய்தி.

லைக்கா அனைத்தையும் அபேஸ் செய்யும் போலிருக்கே.

VinodKumar's
17th September 2015, 02:50 PM
Lyca na vae enakku red colored underlined font thaan nyabagam varudhu ...ippo enga poi kodu poduraaingalo

paranitharan
17th September 2015, 09:16 PM
vijayna forehead'la moonu kodu pOttachu ;)

paranitharan
17th September 2015, 09:18 PM
meenavar'kaaga pOraaduven.. avargalai kolai seithaal, ilangaiyai ulaga map'la irunthu thuukkuvan'nu sonnavar ippo enga bothaila irukaaro therila..

Russellmvr
18th September 2015, 07:09 AM
Lyca na vae enakku red colored underlined font thaan nyabagam varudhu ...ippo enga poi kodu poduraaingalo

We very well know that why they become sudden "Eela atharvalarhal" :lol2:

VinodKumar's
18th September 2015, 07:14 AM
We very well know that why they become sudden "Eela atharvalarhal" [emoji38]2:
Soodu soranainu yedhavadhu irundha adhugalam inneram seri adha vidunga ...

paranitharan
18th September 2015, 09:28 AM
vijayna is a sudden eezha aatharavaalar. Sudden amma atharavaalar. Sudden dmk aatharavaalar. Suddn narendra modi atharavaalar. Sudden kamal rasigan. Sudden simbhuoda brother. Ivarkku suudu siranai iruntha maadila irunthu.., rasigarukkasum ituntha.. Sari vidu

balaajee
18th September 2015, 04:00 PM
சுந்தீப் கிஷனை இயக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/01866/cvkumar_1866475f.jpg தயாரிப்பாளர் சி.வி.குமார் | கோப்பு படம்


தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் முதல் படத்தில் சுந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி', 'முண்டாசுப்பட்டி' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது நலன் குமரசாமி இயக்கி வரும் படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'இறைவி' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் விரைவில் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியானவண்ணம் இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் சி.வி.குமார் இயக்குநராக இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது. சி.வி.குமார் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஜிப்ரான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கின்றன. அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது

balaajee
18th September 2015, 04:03 PM
திரை வெளிச்சம்: வெற்றியுடன் திரும்பிய மாறன்

உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் கலந்துகொண்டது வெற்றி மாறன் இயக்கியிருக்கும் ‘விசாரணை’ திரைப்படம். வெனிஸ் படவிழாவின் போட்டிப் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையோடு ‘மனித உரிமைக்கான படம்’ என்ற பிரிவில் விருதைப் பெற்றுத் திரும்பியிருக்கிறது. கதாசிரியர், நடிகர்கள், நிர்வாகத் தயாரிப்பாளர் உள்ளிட்ட தன் படக் குழுவுடன் வெனிஸ் படவிழாவில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்பி வந்திருந்த இயக்குநர் வெற்றி மாறனைச் சந்தித்தோம்...
சர்வதேசப் பட விழாக்கள் உங்களுக்குப் புதிதல்ல. வெனிஸ் படவிழாவில் விசாரணை திரையிடப் பட்டபோது அதைப் பார்த்த ரசிகர்களின் உணர்வு எப்படியிருந்தது?
செப்டம்பர் 10-ஆம் தேதி வெனிஸ் பட விழாவில் ‘விசாரணை’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது. 1,400 பேர் அமரக்கூடிய மிகப் பெரிய திரையரங்கம். அதில் பாதி அரங்கத்துக்கும் மேல் அமர்ந்திருந்தனர். படம் முடிந்ததும் 8 நிமிடத்துக்கு இடைவிடாமல் கைதட்டினார்கள். என்னோடு வந்திருந்த அத்தனை பேருமே கண் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பிறகு மூன்று நாட்கள் நாங்கள் திரைப்பட விழாவில் இருந்தோம். திரையிடலுக்குப் பிறகு விழாக் குழுவினரும் சரி, சர்வதேச ஊடகத்தினரும் சரி எங்களுடன் கனிவுடன் பழகிய விதம் எங்களை மேலும் நெகிழச் செய்தது.

எந்தப் பிரிவின் கீழ் தற்போது விருது கிடைத்திருக்கிறது?
வெனிஸ் சர்வதேசப் பட விழாவின் விருதுக் குழுவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் இணைந்து ‘மனித உரிமைக்கான படம்’ என்ற விருதை அறிவித்திருக்கின்றன. இந்த விருதை மிக முக்கியமானதாக நினைக்கிறோம். ஏனென்றால் மனித உரிமை மீறல்களைக் கேள்வி கேட்கும் படமாக இது இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். அந்த வகையில் மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட வலு வான அமைப்பாகக் கருதப்படும் ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ இந்தப் படத்தை மனித உரிமைக்கான படமாக அங்கீகரித்திருக்கிறது.
அவர்கள் விருதை அறிவிக்கும்போது “மனித உரிமையை வலியுறுத்தும் பல படங்கள் இந்த ஆண்டு கலந்துகொண்டன. அவற்றில் மனித உரிமைக்கான மிகச் சிறந்த படமாக விசாரணையைத் தேர்வு செய்திருக்கிறோம். குறிப்பாக, படத்தின் ஒளிப்பதிவும், சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பல விஷயங்களும் அத்துமீறல்களைப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் விதமும் துணிவுடனும் நேர்மையுடனும் இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டினார்கள். ஒரு வேலையைச் சரியாகச் செய்யத் தொடங்கியிருக்கிறோம் என்பதற்கான அங்கீகாரமாக இந்த விருது எங்கள் படக் குழுவுக்கு நிறைவைத் தந்திருக் கிறது.

வெனிஸ் பட விழாவைத் தேர்வுசெய்ய என்ன காரணம்?
நமது படம் எடுத்து முடிக்கப்பட்டு முழுவதும் தயாராகும்போது எந்தத் திரைப்பட விழா தயாராக இருக்கிறதோ அந்த விழாவுக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும். விசாரணையின் முதல் பிரதி தயாரானதும் வெனிஸ் பட விழா வெகு அருகில் வந்ததால் அவர்களுக்குப் படத்தை அனுப்பி, பார்க்கும்படி வேண்டுகோள் வைத்தோம். அவர்களும் படத்தைப் பார்த்துப் போட்டிப் பிரிவுக்கு ஏற்றுக்கொண்டார்கள். சின்னச் சின்ன நிபந்தனைகளை வைத்தார்கள். அதையெல்லாம் ஒப்புக்கொண்டுதான் போட்டிப் பிரிவில் கலந்துகொண்டோம்.

ஓர் எளிய ஆட்டோ ஓட்டுநரான மு. சந்திரகுமாரின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கத் தூண்டியது எது?
சந்திரகுமாரின் வாழ்க்கைப் பதிவாக வெளியான ‘லாக் அப்’ புத்தகத்தில் இருந்த உண்மைதான் என்னை அதைப் படமாக்கத் தூண்டியது. நான் வாழும் காலத்தில் வாழும் ஒரு சாமானிய சக மனிதனுக்கு ஏற்பட்ட அவலம் அது. ‘அரசர்களின் வாழ்க்கை மட்டுமே வரலாறாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் சாமானியர்களின் வாழ்க்கை என்ன என்பது நமக்கு எப்போதுமே தெரியாமல் போய்விடுகிறது. சாமானியர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது நமது மரபிலேயே இல்லை’ என்று நண்பர்களில் ஒருவரான தங்கவேலன் அடிக்கடி சொல்வார். அது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.
இந்த உண்மைக் கதையை நான் படமாக்கக் காரணம் அதிலிருந்த சக மனிதனின் வலிதானே தவிர, கலை நயம், இலக்கிய நயம் என்று எதற்காகவும் இல்லை. ஒரு சக மனிதர் பகிர்ந்திருக்கும் வலி, நாளை எனக்கான வலியாகவும் மாறிவிடும் சூழல் ஏற்படலாம். எதிர்காலத்தில் மாற்றங்களை உருவாக்குவதாகத்தான் எந்தக் கலையுமே இயங்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவேதான், சந்திரகுமாரின் கதையைப் படமாக்கினேன்.

உங்கள் நண்பர் தனுஷ் இந்தப் படத்துக்குப் பொருத்தமானவராக இல்லையா?
மிகவும் பொருத்தமாக இருந்திருப்பார். ஆனால், அவரால் பண்ண முடியாமல் போய்விட்டது. நாங்கள் ‘சூதாடி’ படம் பண்ணிக்கொண்டிருந்தோம். அவர் இந்திப் படம் ஒன்றை உடனடியாக நடித்துக் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் நான்கு மாதம் அந்தப் படத்துக்கு ஒதுக்கிவிடுகிறேன் என்றார். அப்படியானால் அந்த இடைவெளியில் நான் ஒரு படம் இயக்கிவிடுகிறேன் என்றேன்.
என்ன இப்படி சொல்கிறீர்கள் என்றார். பிறகு, என்ன கதை என்றார். நான்கு சாமானிய இளைஞர்களின் கதை என்று முழுக் கதையும் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன். உடனே அவர், “வேணாம் சார், கதையைச் சொல்லாதீங்க. சொன்னால் நானே அதில் நடிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும். மறுபடியும் உங்களுக்கு லேட் ஆகும்” என்றார். “உங்களுக்கு இந்தப் படத்துக்கு எவ்வளவு செலவாகுமோ சொல்லுங்கள், நான் கொடுக்கிறேன்” என்று அவரே தயாரித்தார். இன்னும் படத்தை தனுஷ் பார்க்கவில்லை.

தனுஷ் இல்லாத இடத்தை நீங்கள் தேர்வு செய்த தினேஷும் மற்ற நடிகர்களும் எப்படி நிறைவு செய்திருக்கிறார்கள்?
இந்தப் படத்துக்காக எனக்குக் கிடைத்த நடிகர்கள் அனைவருமே வரம் என்றுதான் சொல்லுவேன். காரணம் உடல்ரீதியாகவும் மனரீதியா கவும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய படம். காட்சிப்படுத்தல்களில் உண்மை தேவைப்பட்டதால் நடித்தவர்கள் எத்தனை வலியைச் சுமந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் படத்தைப் பார்க்கும்போது உணர முடியும்.

வெனிஸ் பட விழாவுக்கு கதாசிரியர் சந்திரகுமாரையும் அழைத்துச்சென்று அவருக்குக் கவுரவம் செய்திருக்கிறீர்களே?
அவரது வாழ்க்கை அனுபவம்தான் எனக்குப் படமாக மாறியிருக்கிறது. எனது படத்துக்கான அங்கீகாரம் என்பது அவருடைய வலியிலிருந்து பிறந்திருக்கிறது. படம் முழுவதுமாக முடிந்ததும் அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினேன். என்னைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டுச் சொன்னார். “அந்தக் கொடுமையான நாட்களில் எங்கள் அழுகையும் கூக்குரலும் நாங்கள் அடைபட்டிருந்த நான்கு சுவர்களைத் தாண்டிக் கேட்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தோம். இனி உலகம் முழுக்க எங்கள் குரல் கேட்கப்போகிறது” என்றார். அப்படிச் சொன்னவர், அதை நேரே உணரவும் கேட்கவும் வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் அவரை அழைத்துச் சென்றேன்.

etuhubei
18th September 2015, 09:13 PM
Maya Movie Review

தமிழ் சினிமால கொறஞ்ச செலவுல நெறைய துட்டு எடுக்கற Genre ரெண்டு, ஒன்னு நம்ம தல-தளபதி ரூட்டு. இதுல கொஞ்சம் ரிஸ்க்கு ஜாஸ்தி.கொஞ்சம் மொளகாய அள்ளி போட்டுட்டா ஒரு மாசமாச்சும் வெச்சு செஞ்சிருவாங்க. ஆனா இப்போதைக்கு ஸ்டார் value இல்லாம மக்களை வர வெக்கிறது இந்த பேய் படங்கள்தான்,
இதுலயும் success formula ஒன்னு இருக்கு, சுந்தர் சீ type ஆனா பேய் படங்கள். அதாவது சேலை கட்டிட்டு இருக்கும் போதே செத்து போய் மூஞ்சி முழுக்க முல்தானி மட்டியை அப்பி முக்கியமான மூன்று பாகம் தெரியற மாறி பேயை நடமாட உட்டு கடைசில பேயை பாத்தாலே சிரிக்கற ரஞ்சே இருக்கற படங்கள்.
இன்னொன்னு கொஞ்சம் சீரியஸ் பேய் படங்கள் பிட்சா, டீமான்டேகாலனி மாதிரி. இதுல மாயா[Maya] எந்த வகைன்னு பார்க்கலாம்.

http://www.tamilmoviecritic.com/movie/maya-movie-review

etuhubei
21st September 2015, 01:52 PM
Ennu Ninte Moideen – Eternal Love Journey Through the rain

“reality is stranger than fiction” என்ற ஒரு கூறு உண்டு. ஒரு உண்மை சம்பவத்தை அதன் தன்மை மாறாமல் திரையில் கொண்டு வரவைப்பது மிகவும் கடினம். இத்தனைக்கும் கதையின் நாயகியான காவியமாலா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, அவரின் மனம் புண்படாமலும் பார்த்து கொள்ள வேண்டிய கட்டயாமும் உள்ளது.

http://www.tamilmoviecritic.com/movie/ennu-ninte-moideen-movie-review

balaajee
21st September 2015, 03:47 PM
வசூல் மழையில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ், விடிவி கணேஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. படத்திற்கு இசை .ஜி.வி.பிரகாஷ். இந்தப் படம் குடும்பத்துடன் பார்ப்பது கொஞ்சம் முடியாத காரியமே. சென்சார் தரப்பு ‘ஏ’ சான்று கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்புகளைப் பெற்றுள்ளது.

http://img.vikatan.com/cinema/2015/09/21/images/400Trisha-illlana-Nayanthara.jpg49ஓ, மாயா இரண்டுமே வேறு வேறு கதைக்களம்,ஒரு படம் சமுதாய அக்கறை கொண்ட படம், மற்றொன்று பேய் படம் என்பதால் இரண்டுக்கும் இடையில் ஜாலி, காமெடி, முக்கியமாக கிளாமர் என வெளியாகி இந்தப்படம் இளசுகளை கவர்ந்திழுத்துள்ளது.

இதனையடுத்து இந்தப் படம் 4 நாட்களில் 10 கோடிகளை வசூலித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் தான் தியேட்டருக்கு வரும் டார்கெட் ஆடியன்ஸ் என்பதால் இந்தப் படம் சரியாக அவர்களை இழுத்து வந்துள்ளது என்றே கூறலாம்.

balaajee
22nd September 2015, 02:13 PM
தனிஒருவன் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ 3 கோடி ஃபைன்?

ஜெயம்ரவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் தனி ஒருவன். நயன்தாரா நாயகியாக நடிக்க, ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைத்திருந்தார். படத்தினை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது.

http://img.vikatan.com/cinema/2015/09/22/images/thani%20oruvan.jpgதனிஒருவன் படத்திற்காக அதிகப்படியான விளம்பரங்கள் செய்ததால், ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்குத் தயாரிப்பாளர் சங்கம் தடை (ரெட்) விதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தனிஒருவன் வெளியாகும் போதும், வெளியான பிறகும் தொலைகாட்சிகள், வானெலி, எப்.எம்கள், இணையம் என்று அனைத்திலும் அதிகப்படியாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சில தினசரி மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டும் தான் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதை மீறி விளம்பரம் செய்ததாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு அந்நிறுவனத்திற்கு ரெட் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, “ ஏ.ஜி.எஸ். நிறுவனம் தொடர்ச்சியாக படங்களைத் தயாரிக்க தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் இப்படி டிவிட் செய்திருந்தாலும் அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டோ, அல்லது படங்களைத் தயாரிக்கக் கூடாது என்று சொல்லியோ எந்தக் கடிதமும் வரவில்லையாம். இன்னொருபக்கம், தயாரிப்பாளர்கள்சங்க முடிவை மீறியதற்காக 3 கோடி ரூபாய் ஃபைன் கட்டவேண்டும் என்று சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.

balaajee
24th September 2015, 07:47 AM
G.V.Prakash Kumar ‏@gvprakash (https://twitter.com/gvprakash) 14h14 hours ago
(https://twitter.com/gvprakash/status/646665519295139840) https://pbs.twimg.com/media/CPlq1L2VAAE2g_p.jpg

(https://twitter.com/gvprakash/status/646665519295139840/photo/1)Kollywood Cinema ‏@KollywudCinema (https://twitter.com/KollywudCinema) 17h17 hours ago (https://twitter.com/KollywudCinema/status/646611070468157440) நாளை முதல் மேலும் 40 திரையரங்குகளில் #TrishaIllanaNayanthara (https://twitter.com/hashtag/TrishaIllanaNayanthara?src=hash) சந்தோஷத்தில் @gvprakash (https://twitter.com/gvprakash) @Adhikravi (https://twitter.com/Adhikravi) @StudioGreen2

(https://twitter.com/StudioGreen2)

https://pbs.twimg.com/media/CPk5ERnXAAA-ohg.jpg
https://pbs.twimg.com/media/CPk5KZhWEAAqhCT.jpg



(https://twitter.com/gvprakash/status/646665519295139840/photo/1)

balaajee
24th September 2015, 01:59 PM
பாகுபலி, காக்காமுட்டை, குற்றம்கடிதல் ஆகிய படங்களை மராத்திப்படம் வென்றது எப்படி?


இந்தி, ஆங்கிலப் படங்களைக் கவனிப்பதுபோல நாம் மராத்தி போஜ்புரி படங்களைப் பற்றி கேள்விப்படுவது கூட கிடையாது. ஒரு அளவுக்கு மலையாளம், தெலுங்குப் படங்களைக் கூட அவ்வப்போது காண முடிகிறது. ஆனால், சைலன்டாக 'கோர்ட்' எனும் மராத்தி படம் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டு உள்ளது.
http://img.vikatan.com/news/2015/09/24/images/2.jpgஇது முதல் முறை அல்ல, 2004ல் 'ஷ்வாஸ்', 2009ல் 'ஹரிஷ்சந்திராஸ் ஃபேக்டரி'யின் வரிசையில் இது மூன்றாவது மராத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. வியன்னா, சிங்கப்பூர், வெனிஸ் திரைப்படவிழாக்களில் விருதுகளைக் குவித்தது மட்டும் அல்லாது சிறந்த திரைப்படம் என தேசிய விருதும் பெற்றுள்ளது 'கோர்ட்'. இந்தத் திரைப்படத்தை இயக்கி இருப்பவர் சைதன்யா தம்ஹானே.

'கோர்ட்' படத்திற்கு பலமான போட்டி கொடுத்தன பாகுபலி, காக்கா முட்டை, மேரி கோம், மாசான், பீ.கே, குற்றம் கடிதல் ஆகியன. அட பயங்கரமான பட்டியலா இருக்கே? சூப்பர் ஹிட் படங்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இந்தப் படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

http://img.vikatan.com/news/2015/09/24/images/3.jpgதலைப்புக்கு ஏற்றார் போல கதை ஒரு நீதிமன்றத்தின் உள்ளே நடைபெறுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஒரு கிராமப்புற பாடல் கலைஞரின் வாயிலாக இந்திய சட்டத்துறையில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறது இந்தப் படம். எந்தவித பெரிய நடிகர்களும் இல்லாமல் வெறும் கதையின் பலத்திலேயே பயணம் செய்கிறது 'கோர்ட்' திரைப்படம். முக்கால்வாசி படம் கோர்ட்டுக்கு உள்ளே நடை பெற்றாலும் எந்த இடத்திலும் அலுக்காமல், எதார்த்தத்தை மட்டுமே வெளிக் கொண்டு வருகிறது.

http://img.vikatan.com/news/2015/09/24/images/4.jpgசிறந்த நடிப்பின் மூலம் 16 பேர் கொண்ட தேர்வாளர்கள் குழுவை அசர வைத்திருக்கின்றது இந்தப் படம். இதை இயக்கி இருப்பது ஓர் அறிமுகஇயக்குநர் என்பது கூடுதல் சிறப்பு. குழுவின் தலைவர் அமோல் பலேக்கர் சென்ற மாதம் ஒரு பேட்டியில், ''இந்தியா போன்ற ஒரு நாட்டிலிருந்து ஒரே ஒரு படத்தை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான வேலை. வேறு எந்த நாட்டிலும் இத்தனை வகையான மொழிகளிலும், கலாச்சார பின்னணியில் இருந்தும் படங்கள் வராது" என்று கூறியிருந்தார்.

இதுவரை இந்தியா சிறந்த பிறமொழித்திரைப்படம் பிரிவில் ஆஸ்கார்விருது வாங்கியது இல்லை. கடைசியாக டாப் 5 பட்டியலைத் தொட்ட படம் லகான். கோர்ட் இந்தக் கவலையைத் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறது சினிமா வட்டாரம்!
2000 - ஹே ராம்

2001 - லகான்

2002 - தேவதாஸ்

2004 - ஷ்வாஸ்

2005 - பஹேலி

2006 - ரங் தே பசந்தி

2007 - எக்லாவ்யா: ராயல் கார்ட்

2008 - தாரே ஜமீன் பர்

2009 - ஹரிஷ்சந்திராஸ் ஃபேக்டரி

2010 - பீப்லி லைவ்

2011 - ஆதாமின்டேமகன் அபு

2012 - ப்ர்ஃபி

2013 – தி குட் ரோட்

2014 – லையர்ஸ் டைஸ்

balaajee
24th September 2015, 02:20 PM
மிஷ்கின் சொன்னது நடந்துவிட்டது

கடந்தவாரம் ஜி.வி.பிரகாஷ் நடித்த த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா, நயன்தாரா நடித்த மாயா, கவுண்டமணி நடித்த 49ஓ ஆகிய மூன்றுபடங்கள் வெளியாகின. இவற்றில் மாயா படம் பேய்க்கதை. கவுண்டமணி படம் விவசாயநிலங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று சொல்லுகிற கதை, ஜி.வி.பிரகாஷ் படம் இன்றைய இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பொழுதுபோக்குக் கதை. இம்மூன்று படங்களில் நயன்தாரா படம், திரைக்கதைக்காகவும் சிறப்பான தொழில்நுட்பங்களாலும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கவுண்டமணி படம் கவுண்டமணிக்காவும் படத்தின் கருத்துக்காகவும் வரவேற்புப் பெற்றிருக்கிறது. வசூலைப் பொறுத்தவரை பரவாயில்லை ரகம்தான். ஆனால் த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா படம் வசூலில் முன்னணியில் இருக்கிறது. முன்னணிநாயகர்களின் படங்கள் அளவுக்கு வசூல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குடும்பத்தோடு பார்க்க முடியாது, காதலியோடு சென்று பார்த்தால்கூட வம்பு என்கிற விமர்சனங்களைச் சந்தித்தாலும் திரையரங்குகளில் கூட்டம் இருக்கிறது.

அண்மையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின், என் படத்துக்குப் பெண்கள் குழந்தைகளோடு வராதீர்கள், நான் ஏ சான்றிதழ் படம் எடுக்கப்போகிறேன் என்றார். அப்போது அவருடைய பேச்சு சரியில்லை என்பது போன்ற விமர்சனங்கள் வந்தன. ஆனால் அவர் பேசி இரண்டுநாட்கள் கழித்து வெளியான ஏ சான்றிதழ் படமான த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா பெரியவெற்றியைப் பெற்றிருக்கிறது.

balaajee
24th September 2015, 02:22 PM
வளர்ற பசங்க நல்லா வரட்டும்னு அஜித் சொன்னார்- புது இயக்குநரின் பரவசப் பேட்டி

பேய் பட சீஸனுக்கேற்ப ஒரு பேய்க் கதை சொல்ல வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். அமெரிக்காவில் சினிமா பயின்ற இலங்கைத் தமிழர். இவருடைய கோடம்பாக்க வருகை குறித்து...

http://img.vikatan.com/cinema/2015/09/24/images/unekenna1.jpg‘‘நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே கொழும்புதான். அம்மா, அப்பா இலங்கைவாழ் தமிழர்கள். எங்களுடைய நேட்டிவ் திருச்சி. ஸ்கூல் டைம்லயே நாடகம் நடிக்கிறது, இயக்குறதுனு செம ஆர்வமா இருப்பேன். படிப்பைவிட இந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.
இங்க எங்களுக்கு இருக்கும் பொழுதுபோக்கு, புக் படிக்கிறது இல்லைன்னா படம் பார்க்கிறது. அப்படி நிறையப் படங்கள் பார்த்திருக்கேன். ரஜினி சார் நடிச்ச ‘பாண்டியன்’ எல்லாம் செம கூட்டம் இருக்கும்போது போய்ப் பார்த்த படம். 17 வயசுல குறும்படம் ஒண்ணு இயக்கினேன், அதுக்குப் பிறகுதான் எனக்கே என் மேல நம்பிக்கை வந்து, ‘இனிமே நாம படிக்கிறதுன்னா அது சினிமாவைப் பத்தின படிப்பாத்தான் இருக்கணும்’னு முடிவெடுத்தேன்.
வீட்ல அம்மா, அப்பாகிட்ட சொன்னேன். ஆனா, அவங்களுக்குப் புரியல. சரியா சொல்லணும்னா, அவங்களுக்குப் பயம். ஏன்னா, ‘தமிழ்நாட்ல இருக்கிறவங்களே சினிமாவுக்குப் போனா வாய்ப்புகள் கிடைக்கிறது இல்லை, நீ இலங்கையில இருந்து போற, எப்படிடா சரியாவரும்?’னு கேட்டாங்க. ஆனாலும் அடம்பிடிச்சு அமெரிக்கா போய் கோர்ஸ்ல சேர்ந்தேன். சினிமா சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். கோர்ஸ் முடிச்சதும் சிங்கப்பூர்ல ஒரு கம்பெனியில கிரியேட்டிவ் ஹெட் வேலை கிடைச்சது. சீரியல் ஒண்ணு இயக்கிட்டு இருந்தேன். ஆனா, நமக்கான இடம் இது இல்லையேன்னு தோணினதும் வேலையை விட்டுட்டு நேரா சென்னை வந்து தயாரிப்பாளரைத் தேட ஆரம்பிச்சேன்.
‘என்னடா நல்ல வேலையை விட்டுட்டானே’ன்னு வீட்ல ரொம்பவே வருத்தப்பட்டாங்க. ஆனா, நம்ம லட்சியத்தை மாத்திக்க முடியாதல்லவா. நிறைய அலைஞ்சேன். நான் இங்கே நடக்கிற எல்லாத்தையும் என் நண்பர் சண்முகசுந்தரம்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். ஒருநாள் அப்படிப் பேசிக்கிட்டு இருக்கும்போது அவரே கேட்டார், ‘நான் படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். நீ இயக்குறியா?’னு. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த ‘உனக்கென்ன வேணும் சொல்லு’.’’

‘‘தமிழ்ப் படம் இயக்குறீங்க. ஆனா, அதுக்குப் படிப்பு எல்லாம் அமெரிக்காவுல படிக்கிறீங்க... ஏன்?’’
‘‘எனக்குச் சின்ன வயசுல இருந்தே அமெரிக்காவுல படிக்கணும்னு ஆசை. நம்ம ஊர்ல இருக்கும் தொழிநுட்பம் எல்லாம் இங்கே வேலைசெய்ய ஆரம்பிச்சதும் தெரிஞ்சிடும். ஆனா, ஹாலிவுட்ல என்ன மாதிரி தொழில்நுட்பம் எல்லாம் இருக்கு; அதுல நம்ம சினிமாவுக்கு எது எல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சுக்கவும் அந்தப் படிப்பு எனக்கு உதவுச்சு.’’

http://img.vikatan.com/cinema/2015/09/24/images/unekenna%202.jpg‘‘இப்போதான் பேய் பட சீஸனுக்கேற்ப படமெடுப்பது என்று முடிவு பண்ணி எடுத்தீங்களா?’’

‘‘இப்போ வர்ற பேய் படங்களைக் கவனிச்சீங்கன்னா நல்லா தெரியும், பெரும்பாலும் பேயை வெச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கோம்னு. ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘13 நம்பர் வீடு’னு அந்த டைம்ல வந்த பேய்ப் படங்கள் பார்த்தீங்கன்னா, அதுல வர்ற பேயிக்குன்னு ஒரு பயம் இருக்கும். அதைப்போல இந்தப் படத்துல வர்ற பேய், ஆடியன்ஸைப் பயப்படவும் வைக்கும்; கொஞ்சம் எமோஷனல் ஆகவும் வைக்கும். அதனால இது நிச்சயமா பேய்ப் பட சீஸன் வரிசையில சேராது. வேற மாதிரி உங்களை ரசிக்கவைக்கும்.’’

‘‘அப்போ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்னதான் சொல்லப்போகுது?’’

‘‘ரெண்டு குடும்பங்களுக்கு இடையில நடக்கிற கதை. ரெண்டும் சரிசமமாப் போகும். ரெண்டு குடும்பங்களுக்கும் சில பிரச்னைகள் நடக்கும். அப்புறமாத்தான் தெரியவரும் அந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் ஒரு அமானுஷ்ய சக்தின்னு. அந்த அமானுஷ்ய சக்தி, 8 வயசுப் பொண்ணு. அவள் பெயர் டெய்சி. யார் அந்த டெய்சி... அவள் என்ன பண்றா? இதைத்தான் சொல்லப்போறோம். இது தவிர, படத்துக்கு நடுவுலயே லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் பத்தியும் பேசியிருக்கோம்.
பொதுவா பேய்ப் படம்னா ஒரு வில்லன் இருப்பான், அவனை பேய் பழிவாங்கும். ஆனா, இந்தப் படத்துல வில்லன்னு யாருமே கிடையாது. சூழ்நிலைதான் வில்லன். இப்படிப் படம் முழுக்க வழக்கமான ஒரு படமா இல்லாம இருக்க, பல விஷயங்கள் பண்ணியிருக்கோம்.’’

‘‘அப்போ ஹாரர் ஸ்பெஷலிஸ்ட்டாகணும்னு ஆசையா?’’

‘‘அப்படி இல்லைங்க. இப்போ இந்தப் படத்துக்குப் பிறகு மறுபடி நாலு வருஷத்துக்கு இந்த ஜானரையே தொடக் கூடாதுன்னு இருக்கேன். அடுத்ததா ஒரு ரொமான்டிக் சப்ஜெக்ட் இயக்கணும்னு ஆசை. அதுபோக ஃபேமிலி சென்டிமென்ட் படங்கள் மேலயும் நிறைய ஆர்வம் இருக்கு. குடும்பப்பாங்கான படமே குறைஞ்சிருச்சு. விக்ரமன் சார் கொடுத்த படங்கள் மாதிரியோ, லிங்குசாமி சார் கொடுத்த ‘ஆனந்தம்’ மாதிரியோ இன்னைக்குப் படங்கள் வருவது ரொம்பக் குறைஞ்சிருச்சு. அந்த மாதிரியும் படங்கள் இயக்கணும்.’’

‘‘படத்துக்கு முதல்ல ‘டெய்சி’னு பெயர் வெச்சிருந்தீங்க. இப்போ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு பெயர் மாத்தியிருக்கீங்க?’’

‘‘ ‘டெய்சி’னு பெயர் வெச்சிருந்தப்போ என்ன ஆச்சுனா, எனக்கே நிறையப் பேர் போன் பண்ணி, ‘இது மலையாளப் படமா... இங்கிலீஷ் பட டப்பிங்கா... இல்லை ஷார்ட் ஃபிலிமா?’னு கேட்க ஆரம்பிச்சாங்க. சரி, பட டைட்டில்தான் இவங்க எல்லாரையும் இப்படி யோசிக்கவைக்குது, வேற பெயர் வெக்கலாம்னு யோசிச்சோம். படத்துல மைம் கோபி, பேய் ஓட்டுறவரா நடிச்சிருப்பார்.
அவர் அடிக்கடி ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு கேட்டுக்கிட்டே இருப்பார். அந்தச் சமயத்துலதான் ‘என்னை அறிந்தால்’கூட ரிலீஸ் ஆகி அந்தப் பாட்டும் செம ஹிட்டாச்சு. அதனால அவங்ககிட்டயும் அனுமதி வாங்கிப்போம்னு ஏ.எம்.ரத்னம் சார்கிட்ட கேட்டோம், கௌதம் சாருக்கு பட டீஸர் காமிச்சோம், ஆர்வமாகி ‘டிரெய்லர் இருந்தா, அதையும் காட்டுங்க’னு ஆர்வம் ஆகிட்டார். அஜித் சார்கிட்டயும் கேட்டோம். ‘வளர்ற பசங்க, கொடுங்க நல்லா வரட்டும்னு சொன்னார்’. இதுதான் ‘டெய்சி’ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு மாறின கதை.

http://img.vikatan.com/cinema/2015/09/24/images/uenkenns%203.jpg‘‘சூர்யாவுக்கு டீச்சரா இருந்தீங்கனு தகவல் வந்ததே?’’

‘‘ஆமாங்க. நான் கொஞ்ச நாள் சிங்கப்பூர்ல வேலைபார்த்தேன்னு சொன்னேன்ல, அங்க இருந்த ஒருத்தர் மூலமா வெங்கட் பிரபு அண்ணா அறிமுகம் கிடைச்சது. அடிக்கடி அவரோட சினிமா பற்றி, இயக்குநர் ஆர்வம் பற்றிப் பேசுவேன். சென்னைக்கு வந்ததுக்குப் பின்னால ஒருநாள் பீச்ல சின்ன போட்டோஷூட் பண்ணிக்கிட்டு இருந்தப்போ, வெங்கட் பிரபு அண்ணாகிட்ட இருந்து போன் கால் வந்தது.
‘தம்பி, நீ எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்’னு. உடனே கிளம்பி ஏவி.எம்&க்கு வர சொன்னார். அங்கே போனா சூர்யா சாரை மீட் பண்ணவெச்சு, ‘படத்துல சூர்யா சார் இலங்கைத் தமிழரா நடிக்கிறார். அவருக்கு அந்த ஸ்லாங் எப்படிப் பேசணும்னு கொஞ்சம் பயிற்சி கொடுங்க’னு சொன்னார். அப்பறம் சூர்யா சார்கூட ஒரு வாரம் டிராவல் பண்ணேன். அவரும் சாதாரண ஆள் இல்லைங்க. ஒரு விஷயத்தைக் கத்துக்கிறதுக்காக நிறைய மெனக்கெட்டார்.’’

‘‘பேய்ப் படம் எடுக்கிறீங்க, உங்களுக்குப் பேய் மேல நம்பிக்கை இருக்கா?’’

‘‘நிச்சயமா இருக்கு. நான் 17 வயசுல ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தது பத்தி சொன்னேன்ல. அதுதான் என்னுடைய மறக்க முடியாத பேய் அனுபவம். அதுக்காக ஒரு வீடு தேவைப்பட்டுச்சு. கொழும்புல இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி ஒரு வீடு கிடைச்சது. அது போலீஸ் சீல் வெச்ச வீடு. ஆனா, கொஞ்சம் காசு குடுத்தா அந்த ஏரியாக்காரங்க வந்து உதவி பண்ணி, வீட்டை யூஸ் பண்ணிக்கச் சொல்லிடுவாங்க. எங்ககூட வந்தவர் பல்ப் மாட்டிக்கிட்டிருந்தார். திடீர்னு கரன்ட் கட்டாச்சு.
அஞ்சு நிமிஷம் கழிச்சு, கரன்ட் வந்ததும் பல்ப் மாட்டிக்கிட்டு இருந்த ஹெல்பர் கையில சின்ன வெட்டுபட்டு ரத்தம் வருது. கண்ணாடி ஏதாவது பட்டிருக்கும்னு சொல்லிட்டு, எங்க வேலையை எல்லாம் நாங்க முடிச்சிட்டோம். கிளம்பும்போது அவர்கிட்ட, ‘இந்த வீடு எப்படி உங்களுக்குத் தெரியும்?’னு கேட்டோம். ‘இங்கே இலங்கைப் பெண் ஒருத்தங்க இருந்தாங்க. அவங்களை யாரோ கொலை பண்ணிட்டாங்க. அதனாலதான் இந்த வீட்டுக்கு போலீஸ் சீல் வெச்சிருந்தாங்க.
இப்படி வீட்டுக்குள்ள யாராவது வந்தா, அந்த ஆவிக்குத் தொந்தரவா இருக்கும். உடனே ஏதாவது அசம்பாவிதம் நடக்கும். ஆனா, நீங்க அதிஷ்டக்காரப் பசங்க, எனக்குச் சின்ன வெட்டு விழுந்ததோட எல்லாம் முடிஞ்சிடுச்சு’னு சொன்னதும் பதறிப்போச்சு. சரி, கடவுள் இருந்தா பேயும் இருக்கத்தானே செய்யும்னு நினைச்சுக்கிட்டோம்!’’

balaajee
25th September 2015, 02:15 PM
அலசல்: த்ரிஷா இல்லனா நயன்தாரா | இதுதான் உங்கள் அடையாளமா? - Tamil Hindu

முதல் படம் என்பது எந்த இயக்குநருக்கும் ஒரு மகத்தான கனவு. அதில் தன் திறமையை, ஆளுமையைக் காட்டிவிட வேண்டும் என்று நினைப்பது இயல்பு. வாய்ப்பே கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் ஆண்டுக் கணக்கில் அல்லாடும் சூழலில் இள வயதிலேயே வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது. அத்தகைய அரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆதிக் ரவிச்சந்திரனின் மனதில் என்ன இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவர் படம் அவரது கனவின் வெளிப்பாடு என்றால் அவரைக் குறித்து அனுதாபமும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் அவரது முதல் படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் தரத்தை அலசுவதற்கு முன்பு அதன் கதையை, அதாவது கதை என்ற பாவனையை பார்த்துவிடுவோம். படத்தின் தலைப்பு ஒரு ஆணின் பார்வையின் வெளிப்பாடு. ஆணின் பார்வையில் மட்டுமே ஒரு விஷயத்தைப் பார்ப்பது தமிழ்ச் சூழலுக்குப் புதிதல்ல. எனவே அதை விட்டுவிடுவோம். தலைப்பின் பொருள் சொல்லும் சேதி முக்கியமானது. பெண்களைப் பண்டங்களைப் போலத் தேர்வுசெய்யும் ஒரு ஆணின் மனப்பான்மையை அது வெளிப்படுத்துகிறது.
படத்தின் கதை அல்லது அதுபோன்ற ஒன்று இதுதான்: விடலைப் பருவத்தில் இருக்கும் ஒரு பையன் தன்னுடைய இரண்டு தோழிகளில் ஒருத்தியைத் தன் காதலியாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான். சித்தப்பாவின் வழிகாட்டுதலின்படி ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான். அவளும் காதலை ஏற்கிறாள். அந்தக் காதல் தோல்வியில் முடிய, அவன் உடனே இன்னொரு தோழியைச் சந்தித்துத் தன் காதலைச் சொல்கிறான். அந்தக் காதலும் முறிந்துபோக, அவன் மீண்டும் தன் பழைய காதலியிடம் திரும்புகிறான். அதற்குள் இன்னொரு காதலில் விழுந்து எழுந்திருக்கும் அந்தப் பெண் இவன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் வர, இந்தப் பையன் முற்றிலும் புதிய பெண்ணிடம் தன் காதல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தயாராகிறான்.
காதல் ஏற்படுவது, பிரிவது, புதிய துணை கிடைப்பது என எதையும் நம்பகமாகவோ நேர்த்தியாகவோ சித்தரிக்க இயக்குநர் துளியும் மெனக்கெடவில்லை. காதல் உணர்வைக் காட்டுவதற்கோ பிரிவின் வலியைச் சொல்வதற்கோ ஒரு வலுவான காட்சியைக்கூட இயக்குநரால் யோசிக்க முடியவில்லை. காதல் சமாச்சாரம் இருக்கட்டும். நாயகனின் சித்தப்பாவின் கடை (மதுக் கடைதான்) அவர் கையை விட்டுப் போகிறது. இதை நாயகன் மீட்டுத் தருகிறான். நாயகன் தன் பழைய காதலியை மீண்டும் நெருங்க, காதலியின் உறவினரின் துணையை நாடுகிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவருக்கு ஒரு உதவி செய்கிறான். இதுபோன்ற காட்சிகளிலும் துளியும் நம்பகத்தன்மை இல்லை.
அப்படியானால் படத்தில் என்னதான் இருக்கிறது? காதல் என்னும் பாவனையில் ஆண் பெண் உறவுக்கான ஏக்கம் காட்சி ரீதியாகவும் வசனங்களின் மூலமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இவற்றை எந்த அளவுக்குச் சில்லறைத்தனமாகவும் ஆபாசமாகவும் வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார். நேரடியான, நெருக்கமான காட்சிகள் எதுவுமே இல்லாமல் ஒரு ஆபாசப் படம் எடுக்கும் திறமை இயக்குநருக்குக் கைவந்திருக்கிறது. சொல்லப்போனால், பெண் உடலைக் காட்சிப் பொருளாக மாற்றாமலேயே, உறவின் நெருக்கத்தைக் காட்சிப்படுத்தாமலேயே ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாலுறவைத் தவிர வேறு எந்த உறவும் சாத்தியமில்லை என்னும் பார்வையை வசனங்கள் மூலமும் காட்சிகளாலும் திரும்பத் திரும்பச் சொல்கிறது இந்தப் படம். பாலுறவைத் தவிர வேறு சிந்தனையற்ற விடலைச் சிறுவனின் பார்வையிலேயே படம் நகருகிறது. திரையரங்கில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! பெண்கள் சார்ந்தும் பாலுறவு சார்ந்தும் பல இளைஞர்களுக்கு இருக்கும் ஆழ் மன ஆசைகளுக்கும் பாவனைகளுக்கும் திரையில் ஒரு வடிவம் கிடைக்கும்போது அவர்கள் அதைக் கொண்டாடத்தானே செய்வார்கள்?
நான் கன்னி கழியாதவன், எனக்கு அப்படிப்பட்ட பெண்தான் வேண்டும் என்கிறான் நாயகன். அதெல்லாம் டைனோசர் காலத்திலேயே முடிந்துபோன விஷயம் என்கிறார் சித்தப்பா. திரையரங்கம் அதிர்கிறது! இப்படிப் பல வசனங்களை ஆண்களும் பெண்களும் பேசுகிறார்கள். பெண்களை நம்பாதே, நம்பாதே என்று படம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. பெண்ணை நம்பி உருகும் அப்பாவியாக ஆணைச் சித்தரிக்க முயல்கிறது. ஆனால் படத்தின்படியே பார்த்தாலும் அந்தப் பையன் வாய்ப்புக் கிடைக்காததாலேயே ‘சுத்தமாக’ இருக்கிறான். ஓயாமல் வாய்ப்புக்காக ஏங்குகிறான். இவனை மட்டும் எப்படி நம்புவது? பெண்களை நம்பாதே என்று சொல்ல இவனுக்கும் இவன் சித்தப்பாவுக்கும் என்ன யோக்யதை இருக்கிறது? (மேற்கொண்டு படத்தின் காட்சிகளையோ வசனங்களையோ உதாரணம் காட்டுவது நோய்க் கிருமிகளைப் பரப்புவதற்கு ஒப்பானது என்பதால் அது இங்கே தவிர்க்கப்படுகிறது.)
பாலுறவு விழைவும் பெண்ணின வெறுப்பும் படத்தின் ஆதாரமான அம்சங்கள். கூடவே போதை நாட்டம். போதையிலும் பாலுறவு தொடர்பான பேச்சே இடம்பெறுகிறது. படத்தில் வரும் ஆண்(கள்) விரும்புவது பாலுறவை. ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெண்களின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் சாடுகிறார்கள். பெண் வெறுப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். பாலுறவை நாடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம் என்றால் என்ன பொருள்? பெண்ணின் உடல் மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்று பொருள். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சொல்ல விரும்பும் செய்தியும் இதுதான் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
படம் தன்னை அறியாமலேயே ஒரு நன்மையைச் செய்திருக்கிறது. படம் பார்க்க வரும் ஆண்களின் உளவியலை அம்பலப்படுத்துகிறது. பாலுறவு விழைவும் பெண் வெறுப்பும் வெளிப்படும்போதெல்லாம் அவர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுகிறார்கள். இத்தகைய இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்திருக்கும் இயக்குநர், அவர்களது உளவியலை, அடி மன ஆசைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்குத் தீனிபோடுகிறார். இதன் மூலம் பார்வையாளர்களின் மலினமான இயல்புகளை வெட்கமின்றிச் சுரண்டுகிறார்.
பாலுறவு வேட்கை கொண்ட விடலைச் சிறுவனின் கதையைப் படமாக்கக் கூடாது என்பதல்ல. ஆனால் விடலைச் சிறுவன் என்றாலே அவனுடைய ஒட்டுமொத்த உளவியலும் பெண் உடல் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்னும் தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் பிரச்சினை. பாலுறவு சார்ந்த உணர்வுகளை ‘அழியாத கோலங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘பாய்ஸ்’ முதலான பல படங்களில் தமிழ்த் திரையுலகம் பார்த்திருக்கிறது. அந்தப் படங்கள் விடலைச் சிறுவர்களின் வாழ்வின் வேறு பரிமாணங்களையும் காட்டின. இந்தப் படமோ அவர்களை முழுக்க முழுக்கப் பாலியல் பிண்டங்களாகச் சித்தரிக்கிறது.
இதே விடலைப் பருவத்தில்தான் பெரும்பாலான இளைஞர்கள் கல்வியை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதே விடலைப் பருவத்தில்தான் பல இளைஞர்கள் கலை, விளையாட்டு, பயணம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதே விடலைப் பருவத்தில் பல்வேறு துறைகளில் உலக சாதனை செய்தவர்களும் இருக்கிறார்கள். உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆதிக்கின் விடலைகளுக்கோ பாலுறவு, மது ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. முதிரா இளைஞர்களின் அரைவேக்காட்டுத்தனமான குரலையே தன் முதல் படத்தின் அடையாளமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக்.
கார்த்திக் சுப்பராஜ், நலன் குமரசாமி, மணிகண்டன், பிரம்மா போன்ற பல இளைஞர்கள் தங்கள் முதல் படத்தில் தமிழ் சினிமாவின் எல்லைகளை தொழில்நுட்ப ரீதியாகவும் அர்த்தபூர்வமாகவும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகளுக்கு நடுவே இப்படி ஒரு முதல் படம் வருவது சூழலை மாசுபடுத்தும் முயற்சி. ஆதிக் இப்போதுதான் திரை உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பார்வை விசாலமாகி, திறமையும் கலை உணர்வும் வளர்ந்து செழித்து அவரால் பல நல்ல படங்களைத் தர முடியலாம். அப்படி நேரும் பட்சத்தில் தன் முதல் படத்தை நினைவுகூரும்போது அவருக்குக் கட்டாயம் கூசும்.

balaajee
25th September 2015, 04:11 PM
ரிப்போர்ட்டரை ஓங்கி அறைந்தாரா பிரியாமணி...பரபரப்பில் திரையுலகம்

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டரை அறைந்ததாகச் செய்திகள் வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. நடிகை பிரியாமணி உள்ளம் என்னும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பின் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் பிரபலமானார். பின் பருத்தி வீரன் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் பிரியாமணி. எனினும் பிரியாமணியால் முன்னணி நாயகிக்கான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இடையில் படங்களே இல்லாமல் இருந்த பிரியாமணி பாலிவுட்டின் சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதற்கு பிறகாவது அவருக்கு படங்கள் வரும் என எதிர்பார்க்க அதே நிலை தான் நிலவியது.

http://img.vikatan.com/cinema/2015/09/25/images/priyamani-sexy-wallpaper43.jpgஓரிரண்டு தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தவர் தற்போது திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் ஒரு தெலுங்கு ரிப்போர்ட்டர் பிரியாமணியிடம் ஏன் ஐட்டம் பாடலில் எல்லாம் ஆடுகிறீர்கள், திரையில் தோன்றுவதற்காக இந்தப் பாடலை ஓகே என சொல்லிவிட்டீர்களா எனக் கேட்க இதில் எரிச்சல் அடைந்த பிரியாமணி ரிப்போர்ட்டரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு கேள்வியைக் கேட்கும் முன் யோசித்து கேளுங்கள் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் இரு கன்னடப் படங்களில் நடித்து வரும் பிரியாமணி தெலுங்கில் பன்னி படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடவிருக்கிறார். இதைக் கேட்கப்போய்த்தான் ரிப்போர்ட்டர் அடி வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

mexicomeat
26th September 2015, 04:22 PM
manjal pathirikkai has reported connections between VIP villian and Maari villian's wife

http://www.newtamilcinema.com/villan-in-love-with-others-wife/

Russelltgw
26th September 2015, 04:27 PM
. @arya_offl - #Anushka 's #SizeZero to release on October 9th..

balaajee
27th September 2015, 04:44 PM
Actor Simha has started a new production house and named it as "Assault Productions"


https://pbs.twimg.com/media/CP5kdO7VEAA1znb.jpg
(https://twitter.com/onlynikil/status/648065851816480768/photo/1)

balaajee
27th September 2015, 04:46 PM
manjal pathirikkai has reported connections between VIP villian and Maari villian's wife

http://www.newtamilcinema.com/villan-in-love-with-others-wife/

Even Kumudam & Anandha vikatan had same news...

balaajee
30th September 2015, 02:36 PM
விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02566/IT_raids_2566158f_2566279f.jpg
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது.
சென்னையில் மட்டும் விஜய் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல், கொச்சியில் உள்ள நயன்தாரா வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரை, சென்னை, கொச்சி, ஹைதராபாத் என மொத்தம் 32 இடங்களில் வருமான வரித் துறையினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படம் வரும் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இன்னும் வரிச்சலுகை கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை ரெய்டு நடைபெறுகிறது.

balaajee
30th September 2015, 09:34 PM
Kaushik LM ‏@Lmkmoviemaniac (https://twitter.com/Lmkmoviemaniac) Sep 29 (https://twitter.com/Lmkmoviemaniac/status/648822491905851392) #TrishaIllanaNayanthara (https://twitter.com/hashtag/TrishaIllanaNayanthara?src=hash) #TIN (https://twitter.com/hashtag/TIN?src=hash) at the end of the 2nd weekend .. TN Gross - 18 to 19 CR TN Net - 16 CR Super !! @gvprakash (https://twitter.com/gvprakash) @StudioGreen2 (https://twitter.com/StudioGreen2)

23 retweets 55 favorites

pavalamani pragasam
30th September 2015, 10:04 PM
Watched kutram kadithal. Dumbfounded. A classic! A passionate, honest portrayal of the trauma ensuing a very natural, unfortunate accident in school. A very convincing, thought-provoking human drama on screen. The debutant director has done an awesome feat of tightrope walking in dealing beautifully the very sensitive and debatable aspects of two very important issues in modern scenario: corporal punishment in school and sex education for children. Most importantly I was very impressed by the intelligent way the drama is unfolds at every step requiring the reader's corresponding intelligent understanding of the plot's development. A great experience! Fast-paced and poignant. Of course the issues will be judged differently by people according to their personal views on these matters. Kudos to the director for maintaining almost complete impartiality. No nonsense whatsoever in the name of comedy by nauseating creatures like Santhanam and his tribe. Special mention must be made about the poignant song chinnajsiru kiliye by Bharathi heard in the background of crucial stage rendered in the same tune of ML Vasanthakumari's evergreen old song by different singers in a slower pace suiting the pathos of the situation. It is not surprising that the movie has won awards already and is poised for more laurels. Only one q from me: why cant such wholesome fare be frequently be provided to movie lovers with discernment and refined tastes.

etuhubei
3rd October 2015, 06:25 PM
தமிழ் சினிமாவில் Genre என்று பார்க்கும்போது Love,Action,Thriller நு இதுக்குல்லையே முக்கால்வாசி படங்கள் அடங்கிரும். அதை தாண்டி பார்த்தா மிக சில Genre அளவில மட்டுமே தமிழில் முயற்சி செய்து இருக்கோம். அதில் இந்த Fantasy Genre எடுக்கப்பட்ட படங்கள் மிக குறைவு. அந்த வகையில் சிம்புதேவன் இந்த Genre அவரோட கோட்டைன்னு கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அவரோட ஒவ்வொரு படமும் இதன் உள்ளே அடங்கும்.
ஆனால் இவரது பெரிய பிரச்சனை பட்ஜெட். கொடுத்த காசுக்கு மேல தரமான visual கொடுக்க முடிஞ்சாலும், இரண்டாம் தர நடிகர்களையே தொடர்ந்து நடிச்சனால, இவரோட சில நல்ல படங்கள் கூட எடுபடாம போனது. இப்போ எல்லாத்துக்கும் சேத்து வெச்ச மாறி விஜய் போன்ற பெரிய ஸ்டார் value இணையும் பொது இவர் கேட்கும் பட்ஜெட் சுலபமா கிடைக்கும்.
அதை சரியா உபயோகபடுத்தினாரனு பார்க்கலாம்.

http://www.tamilmoviecritic.com/movie/puli-movie-review

balaajee
6th October 2015, 02:57 PM
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜெயம்ரவி?

அனேகன் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த், ஆர்யாவை வைத்துப் படமெடுக்கவிருப்பதாகவும் அந்தப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.

http://img.vikatan.com/cinema/2015/10/06/images/2417dhv.jpgஇது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. விரைவில் அந்த அறிவிப்பு வருமென்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது வேறொரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் அடுத்து அந்தப்படத்தைத்தான் அவர் தொடங்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை கோகுலம்பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்னபடம்? எந்த நாயகன்? என்பதைத்தாண்டி கே.வி.ஆனந்தின் அடுத்தபடத்தை ஏ.ஜி.ஏஸ் நிறுவனம்தான் தயாரிக்கும் என்று உறுதியாகச் சொல்லப்பட்ட நிலையில் இப்போது இப்படி ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. எது உண்மை என்பதை கே.வி.ஆனந்த்தான் சொல்லவேண்டும்.

balaajee
6th October 2015, 03:22 PM
'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம்


"சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'" என்று வெற்றிமாறனுக்கு இயக்குநர் மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. வெனீஸ் திரைப்பட விழாவில் இப்படம் "மனித உரிமை சினிமா விருது" என்ற விருதை வென்றிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு இயக்குநர்கள் படக்குழு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
வெனீஸ் நகர திரைப்பட விழாவில் உன்னுடைய 'விசாரணை' திரைப்படம் சிறப்புப் பரிசு பெற்றதையெடுத்து, உனக்கு தொலைபேசி மூலம் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அப்போது, நீ என்னை உன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அத்திரைப்படத்தின் ஒரு காட்சியைக் காண்பித்தாய். அதில் பரவியிருந்த குரூரமும், நேர்மையும் என் ஆழ்மனத்தை உலுக்கியது. அதிர்ந்தவனாய் என் அலுவலகத்திற்கு திரும்பினேன்.
என் நண்பர்கள் "படம் பார்த்தாயா? எப்படியுள்ளது 'விசாரணை'?" என்று விசாரித்தனர். என் மெளனம் உடைந்தது, என் எண்ணவோட்டத்தினை பகிர்ந்தேன். அவர்கள் அமைதியானார்கள்.
மறுநாள், சி. மோகனை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். மிகுந்த ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றியபடி, "'விசாரணை' பார்த்தாயா?" என்று கேட்க, "நான் இன்னும் பார்க்கவில்லை" என்று கூறினேன். "நீ நிச்சயம் பார்க்க வேண்டும், பிரமாதமான படமது" என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. அவரது கண்களில் நேர்மை பளிச்சிட்டது.
பின்பு நான் உன்னை அழைத்து "எனக்கு முழுப்படத்தினையும் காண்பி" எனக் கேட்டேன். இன்னும் சில இயக்குநர்களை ஒன்று சேர்க்கட் சொன்னாய், மறுநாள் உன்னுடைய அலுவலகத்தில், எடிட்டிங் ரூமில் காட்டப்படும் என முடிவானது. நான் மற்ற இயக்குநர்களை தொடர்புகொள்ள ஆரம்பித்தேன், பாலாஜி சக்திவேல் என்றவொரு திருடன், "நாம் வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா" என்று கேட்டான். சரிதானே எனத் தோன்றியது. மறுகணமே, என் அலுவலகத்தில் சிறிய விழாவொன்றுக்கான ஏற்பாட்டினை ஆரம்பித்து, இயக்குநர்களை அழைக்க ஆரம்பித்தேன்.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி படைப்பாளிகளுக்கும், "வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா?" எனக்கேட்டு மெசேஜ் தட்டினேன். சரி, நான்கைந்து பேராவது வந்தால் போதுமே என்று தான் என் எண்ணமாக இருந்தது. அனைவருமே 'சரி' என மறுகணமே பதிலளித்தனர்.
மகிழ்ச்சிக் களிப்பில், அன்று முழுவதும் விழாவிற்கான வேலையில் ஈடுபட்டு கடைசியில் படம் பார்க்க முடியாமல் போனது. ஆனால், மற்ற இயக்குநர்கள் உன் அலுவலகத்தினில் படம் பார்த்தனர். சிலர் அமைதியானார்கள், சிலர் புகழ்ந்தார்கள், சிலர் அழுதார்கள்.. சிலர்...
விழாவிற்கு முதல் ஆளாக மணிரத்னம் வந்து நின்றார். அவர் படம் பார்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து பாலா, ஷங்கர், லிங்குசாமி, ராம், சமுத்திரக்கனி, மோகன் ராஜா, பாலாஜி சக்திவேல், கே.வி.ஆனந்த், எஸ்.பி.ஜனநாதான், சசி, மணிகண்டன், ரஞ்சித், சுப்ரமணிய சிவா, ரோகினி, ஸ்டான்லி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், மகேஷ் முத்துசாமி, ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், உனது சக தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். மேடை வலுத்திருந்தது.
ரோகிணி தொகுத்து வழங்க, மணிரத்னம் 'விசாரணை' திரைப்படத்தின் மீது புகழ் கிரீடம் சூட்டினார். படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனியோ பேச நா எழாது உறைந்து நெகிழ்ச்சியுடன் நின்றான். திரைப்படம் கொடுத்த அனுபவத்தினை வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல் மெளனத்தில் தஞ்சமடைந்தான் பாலாஜி சக்திவேல். "நான் பேச மாட்டேன். ஆனால், இப்படத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒலிப்பெருக்கியாவேன்" என்றார் ஸ்டான்லி. உன் தைரியத்தினைப் பற்றி வியந்து பேசினார் சுப்ரமணியசிவா. "என் படம் விசாரணை முன் ஒன்றுமேயில்லை" என்றான் மணிகண்டன்..
உன் படத்தின் ஒளிப்பதிவாளருக்கோ பேச்சு எழவில்லை, உன் கலை இயக்குநர், "நான் மேடையேற மாட்டேன்" என்று கூறி உரக்க "நன்றி" சொல்லி அமர்ந்தார். படம் பார்க்காத மற்றவர்கள் எதுவும் புரியாமல், எல்லோருக்கும் புரிந்த ஒற்றை வாக்கியமான 'வெற்றி பெற வாழ்த்துகள்' என்று சொல்லி தப்பித்தனர்.
பிறகு விருந்து தொடங்கியது. ஆலமரத்தின் கிளைகளில் வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான பறவைகள் போல் கலகலவென்ற குதூகலப் பேச்சொலி.. பிறகு இசைந்தோடியது இளையராஜாவின் பாட்டு. அதில் மயங்கினோம், பாலாஜி சக்திவேலின் சேட்டைகளுக்கு சிரித்து விழுந்தோம். பின்பு மரத்திலிருந்து இறங்கி மனதை வெற்றிடம் ஆக்கிரமிக்க, வீட்டை நோக்கி நகர்ந்தோம்.
மறுநாள் நான் ஃபோர் பிரேமிஸில் 'விசாரணை' படம் பார்த்தேன். படத்தின் முடிவில் "எண்ட் கிரெட்டிட்ஸ்" வரும் முன்னே நான் திரையரங்கினை விட்டு வெளியே ஒடி வந்து என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
"விசாரணையின் ஒற்றைக் காட்சியைப் பார்த்தபின் என் மனதில் எழுந்திருந்த எண்ணம் தவறு. மிகச்சிறந்த படம் இது. கலையும் கலைஞனும் கை கோர்த்து புதிய பரிமாணத்தினை எட்டியிருக்கின்றனர்."
வெற்றிமாறா, என் சக பயணியே, நீ நிகழ்த்திவிட்டாய். கலையின் உச்சியை தொட்டுவிட்டாய், என் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்துவிட்டாய். பாலுமகேந்திரா மட்டும் இன்றிருந்திருந்தால் உன்னைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார்.
ஒரு கடுமையான உண்மையான திரைப்படமே 'விசாரணை'. 'மனிதம்' என்பதனை அத்திரைப்படம் எனக்கு உணர்த்தியது. மக்கள் இதை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். உன்னையும், படைப்புகளையும் மேலும் மதிப்பார்கள்.
நண்பா, உன் 'விசாரணை' என் திரைப்பட ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது.
இதோ, சில வார்த்தைகள் கூவிச் சொல்கிறேன்.
"சினிமா கலைஞர்களாகிய நாம் சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'"
இனி வரலாறு சத்தமிடும்..
வெற்றிமாறா.. தலை நிமிர்ந்து நட..
இவ்வாறு அந்தக் கடிதத்தில் மிஷ்கின் கூறியுள்ளார்.

வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க ‘விசாரணை’ திரைப்படம் சிறப்பு விருது வென்றதையொட்டி, வெற்றிமாறனை இயக்குநர்கள் வாழ்த்திய நிகழ்ச்சி.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8742_2573651i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=1)


http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8803_2573645i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=21)


http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8719_2573653i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=28)


http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8665_2573657i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=32)


http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8852_2573669i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=44)


http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8822_2573673i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=48)



http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8809_2573675i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=50)



http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B9023_2573680i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=55)








http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8984_2573684i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=59)

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02573/6W3B8982_2573685i.jpg (http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/விசாரணை-வெற்றிமாறனை-வாழ்த்திய-இயக்குநர்கள்/article7729869.ece?photo=60)

PARAMASHIVAN
6th October 2015, 07:14 PM
Singam 3 is under production ? :shock:

Enna Kodumai sravanan saar ithu ! :shaking:

balaajee
7th October 2015, 10:34 AM
நடிகை நக்மாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் மிக உயர்ந்த பதவி

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நடிகை நக்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-10/07/full/1444167743-5571.jpg


கடந்த காலங்களில் தமிழ் திரையுல் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து சாதனை படைத்தவர் நடிகை நக்மா. அவரது ஸ்டைல் பெண் நடிகைளில் தனி ஸ்டைல். இதனால், பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்தார் நடிகை நக்மா. அதையும் தாண்டி இந்தி படங்களிலும் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.

அவ்வப்போது, காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றி வந்தார். தேர்தலின் போது, தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலின் பேரில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ் மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

balaajee
7th October 2015, 01:11 PM
காதல் திருமணம் செய்கிறார் அனுஷ்கா?- vikatan

சுந்தர் சி. இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அனுஷ்கா. விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், சிம்புவுடன் வானம், விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், ரஜினியுடன் லிங்கா என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தெலுங்குப் பட உலகிலும் இவர் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.அவர் நடித்துள்ள ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார், அதுவும் காதல்திருமணம் என்று செய்திகள் வருகின்றன.

http://img.vikatan.com/cinema/2015/10/07/images/GKC_2133.jpg

அனுஷ்கா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘பாகுபலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், பிரபாஸ்.அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் இடையே ‘பாகுபலி’ படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டதாகவும் பேசப்படுகிறது.

‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படம் திரைக்கு வந்ததும், அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
இது உண்மையா? அல்லது வழக்கம்போல் வதந்தியா? என்பது தெரியவில்லை.

balaajee
7th October 2015, 10:40 PM
Vadivelu : Nadigar Sangathai Kanom - Comedy Speech | Vishal Sarathkumar Fight

https://www.youtube.com/watch?v=CvcSUsNjnhc

balaajee
8th October 2015, 12:42 PM
விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா? - VIKATAN

நடிகர் சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே போகின்றன.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் தரப்பு நேற்று மீடியாவைச் சந்தித்தது. அதில் நடிகை ராதிகா பேசும்போது, நான் சரத்தின் மனைவியாக இங்கு வரவில்லை, நடிகர்சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் வந்திருக்கிறேன் என்றார். ஆனால் அவர் பேச்சு முழுக்க சரத்குமார் பற்றிய விமரிசனங்களுக்குப் பதிலளிப்பதாகவே இருந்தது.

http://img.vikatan.com/news/2015/10/08/images/radika(1).jpgஅதோடு, நடிகர் விஷாலை பற்றிப் பேசும்போது, முதலில் விஷால் என்றவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு, 'விஷால் ரெட்டி' என்ற அழுத்தம் திருத்தமாகக் கூறினார். துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போதுதான் பிரச்னை தோன்றியது என்றவர், அப்போது. விஷால், சரத்குமாரைத் தரக்குறைவாகப் பேசினார் என்றும் அந்தநேரத்தில் அவர் நிதானமாக இல்லை என்றும் சொன்னார். விஷாலை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ராதிகா அடையாளப்படுத்துது ஏன் ? இங்கு தெரியவருவது ஒரு விஷயம்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விஷால் எங்கிருந்து வந்தார், அவரது பின்புலம் என்ன, அவர் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர் என்று யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு நடிகர் நடிக்கிறார் அவ்வளவுதான்!

இதுவரை விஷால் தான் இந்தச் சமுகத்தைச் சார்ந்தவன் என்று அடையாளம் காட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. விஷாலும் அருமையாக தமிழ் பேசுகிறார். மூச்சுக்கு முன்னூறு முறை சரத்குமார் தரப்பு நடிகர் சங்கத்தில் சாதி புகுந்து விட்டது, அரசியல் புகுந்து விட்டது என்று சொல்கிறது. ஆனால் இங்கு விஷாலை ரெட்டி என்று அழைப்பதன் மூலம் நடிகை ராதிகா எதனை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்?

இங்கு விஷாலை ரெட்டி என்று அழைக்கும் நடிகை ராதிகாவும் நாயுடு சாதியைச் சேர்ந்தவர்தானே என்கிற விமர்சனமும் வரத்தொடங்கிவிட்டது. விஷால் அணியினரால் சங்கத்துக்குள் சாதியும் அரசியலும் புகுந்துவிட்டது என்று சரத்குமார் அணியினர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இதுவரை விஷால் அணியினர் யாரையும் சாதிப்பெயர் சொல்லிப் பேசியதாகத் தெரியவில்லை.

http://img.vikatan.com/news/2015/10/08/images/radika2.jpgஇந்நிலையில் ராதிகா, இப்படிப் பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, தமிழ்நாட்டு நடிகர்சங்கத்தில் தெலுங்குக்காரருக்கு என்ன வேலை? என்று சொல்வது ராதிகாவின் நோக்கமாக இருக்குமானால், அந்த அணியினர் இன்னும் பல சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். தென்னிந்திய நடிகர்சங்கம் என்கிற பெயரை மாற்றி தமிழ்நாடு நடிகர்சங்கம் என்று மாற்றவேண்டும் என்கிற கோரிக்கையை சரத்குமார் நிராகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. தலைவராக ராதிகாவின் கணவரும், செயலாளராக அவருடைய சகோதரரும் இருந்து வருகின்றனர். பிரச்னை என்று வந்துவிட்டது. தேர்தலில் நிற்பது உறுதி என்று விஷால் தரப்பினர் தெரிவித்து விட்டனர். தேர்தல் நடக்கட்டுமே. தேர்தலைத் தெம்பாக எதிர்கொள்வதை விட்டுவிட்டு, சாதிப்பெயர் சொல்லி விமர்சனம் செய்வது அவர்களுக்கு நன்மையாக அமையாது என்று பலரும் பேசத்தொடங்கிவிட்டனர்.

balaajee
8th October 2015, 05:14 PM
அக்.21-ல் 'ரஜினி முருகன்' வெளியாக வாய்ப்பு
பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'ரஜினி முருகன்' திரைப்படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

சென்சார் பணிகள் முடிந்தவுடன் செப்டம்பர் 17-ம் தேதி படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியது. ஆனால், இதற்கு முன்பு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பாக்கியுள்ள கடனை அடைத்தால் மட்டுமே இப்படத்தை வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் செப்.17-ம் தேதி இப்படம் வெளியாகவில்லை.

ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தால் மட்டுமே இப்படம் வெளியாக தாமதமாகி வந்தது. இது குறித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில், சமரச பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அக்டோபர் 21-ம் தேதி படத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

balaajee
8th October 2015, 06:03 PM
Hollywood...

'ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட தற்கொலையே மேலானது: டேனியல் க்ரெய்க் அதிரடி- Tamil HINDU

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02576/daniel_2576585f.jpg
"இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதில் தற்கொலையே செய்து கொள்ளலாம்" என்று நடிகர் டேனியல் க்ரெய்க் தெரிவித்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு வெளியான 'கேஸினோ ராயல்' படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் க்ரெய்க் நடிக்கத் துவங்கினார். தொடர்ந்து 'குவாண்டம் ஆஃப் சோலஸ்', 'ஸ்கைஃபால்', தற்போது வெளியாகவுள்ள 'ஸ்பெக்டர் 'ஆகிய படங்களிலும் அவர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இனிமேலும் இந்த பாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என்று டேனியல் கூறியுள்ளார்.

இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள டேனியல் க்ரெய்க், "இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதில் கண்ணாடியை உடைத்து எனது மணிக்கட்டை அறுத்துக் கொள்வேன். நான் அந்த பாத்திரத்தைக் கடந்து வந்துவிட்டேன். நான் அதை விட்டு நகர வேண்டும். அடுத்த ரெண்டு வருடங்களுக்காவது அதைப் பற்றி சிந்திக்கப் போவதில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறேன் என எதையும் திட்டமிடவில்லை.

இதுவரை யாரும் அடுத்த பாண்ட் படத்தைப் பற்றி என்னிடம் பேசவில்லை. இதற்கு மேல் நான் பாண்ட் வேடத்தில் நடித்தால் அது பணத்துக்காக மட்டுமே இருக்கும். எனது சிந்தனை எல்லாம் ஒன்று தான். இந்த வேடத்திலிருந்து நான் ஓய்வு பெறும் போது, அதை நல்ல நிலையிலேயே வைத்திருக்கிறேன். அடுத்து வருபவர்கள் இதை இன்னும் மேம்படுத்துவார்கள்.

எனவே அடுத்து வருபவர்கள் இந்த பாத்திரத்தில் சிறக்க வேண்டும். அது போதும். இது ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம், கண்டிப்பாக கடுமையான உழைப்புக்கு தகுந்த பாத்திரம்", இவ்வாறு டேனியல் க்ரெய்க் பேசியுள்ளார்.
'ஸ்பெக்டர்' இந்தியாவில் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது. 'ஸ்கைஃபால்' படத்தை இயக்கிய சாம் மெண்டிஸ், ஸ்பெக்டரையும் இயக்கியுள்ளார்.

balaajee
9th October 2015, 11:15 AM
From today

451945204521

balaajee
9th October 2015, 11:20 AM
பாண்டவரணி தேர்தல் சுற்றல் ஆரம்பம்! சிறப்பு ஆல்பம்!
http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122005.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122005) http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122006.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122006)[/URL] (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122010) http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122018.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122018) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122019) http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122020.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122020) http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122021.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122021) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122022) http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122023.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122023) http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122026.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122025) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122027)[URL="http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122029"] http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122029.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122028) http://img.vikatan.com/album/2015/10/mgnkmu/thumb/122035.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4819&p_id=122035)

balaajee
9th October 2015, 01:48 PM
சரத்குமார் அணியினர் ஓட்டுக்குப் பணம் தருகிறார்கள்- விஷால் அணி அதிரடிக் குற்றச்சாட்டு

நடிகர்சங்கத் தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக, திருச்சியில் இன்று நாடக நடிகர்களை சந்தித்தது விஷால் அணி.
காலை 10 மணிக்கு நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், விக்னேஷ், சாந்தனு, எஸ்.வி.சேகர், நடிகைகள் கோவை சரளா, குட்டி பத்மினி, ரோகினி உள்ளிட்டவர்கள் நாடக நடிகர்கள் மத்தியில் பேசி ஆதரவு திரட்டினர்.

http://img.vikatan.com/cinema/2015/10/09/images/vishal.jpgபின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நடிகர் கருணாஸ், சரத் அணியினர் ஓட்டுக்குப்பணம் தரவிருப்பதாகக் குற்றம் சாட்டினார். அவர் பேசும்போது, தென்னந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 18–ந்தேதி நடைபெறுவதை முதன் முறையாக தமிழகமே உற்றுப்பார்க்கிறது.

எதிரணியினர் சில சூழ்ச்சிகள் செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். மணப்பாறையை சேர்ந்த நாடக நடிகர் குடும்பத்திடம் ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 5 ஓட்டுக்கு ரூ.15 ஆயிரம் தருவதாகக் கூறி இருக்கிறார்கள்.

ஓட்டுக்குப் பணம் என்ற சூழ்ச்சிக்கு யாரும் பலியாகி விடக்கூடாது. அதே போன்று தபால் ஓட்டுக்களிலும் முறைகேடு செய்ய எதிரணியினர் முயற்சிக்கிறார்கள். நாடக நடிகர்கள் ஓட்டுகளை நேரடியாகப் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

balaajee
9th October 2015, 02:46 PM
நடிகர் சங்கத் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 18ம் தேதி தேர்தல்!

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02539/nassersarath_24263_2539944f.jpg

நடிகர் சங்கத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
நடிகர் சங்கத்துக்கான 2015-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் அக்டோபர் 18ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் நடைபெற இருக்கிறது. இம்முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி - விஷால் அணி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தேர்தலில் நாடக நடிகர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் என அனைவரிடமும் இரண்டு தரப்பினரும் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இத்தேர்தலி
ல் போட்டியிடுபவர்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், சரத்குமார், சிவசாமி ஆகியோரும், துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ், மோகன் குமார், பொன்வண்ணன், சிலம்பரசன், விஜயகுமார் ஆகியோரும் போட்டியிடுக்கிறார்கள்.
செயலாளர் பதவிக்கு ராதாரவி, சிவசாமி, விஷால் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் மற்றும் கார்த்தியும் போட்டியிடுகிறார்கள்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, மோகன்ராமன், நிரோஷா, பசுபதி, பிரசன்னா, ஸ்ரீமன், தளபதி தினேஷ், உதயா, ராம்கி, ரமணா, கோவை சரளா என மொத்தம் 48 போட்டியிட இருக்கிறார்கள்.
வரும் 18ம் தேதி காலை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவும் அறிவிக்க இருக்கிறார்கள்.

balaajee
9th October 2015, 02:47 PM
முடிவடைந்தது வேல்ராஜ் - தனுஷ் படப்பிடிப்பு! - TAMIL HINDU

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02577/dhanush_2577807f.jpg சமந்தா மற்றும் தனுஷ் | படம்: சமந்தா ட்விட்டர் பக்கத்திலிருந்து..
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
வேல்ராஜ், தனுஷ் இணைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'வேலையில்லா பட்டதாரி'. அதே படக்குழு மீண்டும் இணைந்து படம் பண்ண தீர்மானித்தார்கள். இப்படம் 'வேலையில்லா பட்டதாரி 2' அல்ல என்று படக்குழு அறிவித்தது.

தனுஷ் உடன் சமந்தா, ஏமி ஜாக்சன், சதீஷ்,ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. சில காட்சிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற காட்சிகளை வைத்து இறுதிகட்டப் பணிகளும் துவங்கப்பட்டது.

பிரபுசாலமன் படத்தில் கவனம் செலுத்திவந்த தனுஷ், அப்படத்தில் தன் காட்சிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வந்த படத்தின் மீதம் இருந்த காட்சிகளை தனுஷ், சமந்தா இருவரும் இணைந்து முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.

"வேல்ராஜ் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என்று சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

balaajee
12th October 2015, 09:26 AM
'பிரதிநிதி' படத்தின் ரீமேக்தான் 'கோ 2'?

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02579/ko2pratiniti_2579364f.jpg

தெலுங்கில் வெளியான 'பிரதிநிதி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் 'கோ 2' என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
சரத் மாந்தவா இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ரானி நடிப்பில் தயாராகி வரும் படம் 'கோ 2'. லியோ ஜேம்ஸ் இசையமைத்து வரும் இப்படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படப் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் படம் வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், "தெலுங்கில் வெளியான 'பிரதிநிதி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் 'கோ 2'. இதனை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்" என்று படக்குழுவில் இருந்து ஒருவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஒருவரை சாதாரண மனிதன் ஒருவன் கடத்தி என்ன செய்கிறான் என்பதே 'கோ 2' படத்தின் கதைக்களம். பிரகாஷ்ராஜ் முதல்வர் பாத்திரத்திலும், பாபி சிம்ஹா தொலைக்காட்சி நிருபர் வேடமிட்டு கடத்துவது போல திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
'கோ 2' படத்தின் இயக்குநர் சரத் மாந்தவாவின் அண்ணன் பிரசாந்த் மாந்தவா தான் 'பிரதிநிதி' படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
13th October 2015, 12:40 PM
பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி, மீண்டும் காபி வித் டிடி!

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று காபி வித் டிடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை முதன்முதலில் அனு ஹாசன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அனுஹாசன் நிகழ்ச்சியைக் காட்டிலும் டி.ஆர்.பி அளவில் மிகவும் பிரபலமானது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பிரபலங்களே இல்லை எனலாம். இடையில் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்யாமல் ஒதுங்க அதற்கு சரியான காரணங்கள் இன்றிப் போனது. தற்போது மீண்டும் காபி வித் டிடி நிகழ்ச்சி ஆயுத பூஜை சிறப்பாக நடந்துள்ளது.

http://img.vikatan.com/cinema/2015/10/13/images/CRLIRc3U8AQNGMS.jpgஇந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதையொட்டி டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆயுத பூஜை சிறப்பு காபி வித் டிடி-யில் 10 எண்றதுக்குள்ள படத்தின் நாயகன் நாயகி விக்ரம், சமந்தா கலந்துகொண்டுள்ளனர். ஒருவழியா முற்றுப்புள்ளி வெச்சிட்டாங்களா பஞ்சாயத்துக்கு.

balaajee
13th October 2015, 12:40 PM
எம்.ஜி.ஆர், சிவாஜி ஆத்மாக்கள் எங்களுக்குள் இறங்கிவிட்டது- விஷால் உருக்கம்

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் முதலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி அக்டோபர் 12 ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டு சென்றார்.

http://img.vikatan.com/cinema/2015/10/13/images/vishal.jpgஇந்நிகழ்ச்சியில் பேசியபோது, “ எனக்கு இன்று மிகுந்த காய்ச்சல், பேசிப் பேசியே காய்ச்சல் வந்துவிட்டது இருக்கட்டும் இன்னும் 5 நாட்கள் தான் தேர்தலுக்கு உள்ளது. எனக்கு மேடையில் பேச வாய்ப்பளித்த எஸ்.எஸ்.ஆர் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி.

இதைப் போன்ற மேடையில் எனக்கு பேச வாய்ப்புக் கிடைத்தது மிகப்பெரிய விஷயம்.இங்கே விஜய குமாரி அம்மாவின் அருகே அமர்ந்து பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு இது. எனக்கு அவர்கள் அருகே அமர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி , ஏன் என்றால் என்னுடைய தந்தை விஜய குமாரி அம்மாவின் மிகப் பெரிய ரசிகர்.

இப்போது தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருப்பார் என்று நான் நினைக்கிறேன். வாரா வாரம் வெள்ளிக்கிழமை ஒரு புதுப் பையன் ஒரு புதுப் பொண்ணு என்று வரிசை கட்டி வந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் என்னுடைய ஆசை எல்லாம், பழம்பெரும் நடிகர், நடிகைகள் மற்றும் சாதனையாளர்களை எல்லா நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டும் என்பது தான்.

இதை நான் தேர்தல் சமயத்தில் கூறுவதால் எல்லோரும் தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இதை நான் மனதில் இருந்து பேசுகிறேன். நமக்கெல்லாம் அவர்கள் தான் வழிகாட்டிகள்.

அவன் இவன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது ஆர்யா என்னிடம் சத்தியஜித் ரே அவர்களைப் பற்றி நான் ஒரு நாள் பேசியதை நினைவில் வைத்து சத்ய ஜோதி நிறுவனத்தை நினைவு கூர்ந்து பேசினார் நிஜமாகவே அவருக்கு சத்தியஜித் ரே அவர்களைத் தெரியவில்லை, அதே போல் ஆர்யா அம்பிகா அம்மாவை புதுமுகமா என்று ஒரு நாள் கேட்டு என்னை அதிரவைத்தார். நான் அவர்களை அழைக்க வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் அது தான் என்றார்.

நான் இன்னும் ஒரு விஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன் , எஸ்.எஸ்.ஆர் ,எம்.ஜி.ஆர் ,சிவாஜி ஆகியோரின் ஆத்மா எங்களுக்குள் இப்போது இறங்கி நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்ட எங்களைத் தயாராக்கி வருகிறது என்று பேசினார்.

balaajee
13th October 2015, 03:51 PM
’முதலமைச்சரே அழைத்தாலும் சமரசம் இல்லை’ - விஷாலின் பேச்சால் சர்ச்சை


நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, முதலமைச்சரே பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் சமரசத்திற்கு இடம் கிடையாது என்று கூறியதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-10/13/full/1444727068-1166.jpg


வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் நடைபெறவுள்ளது.

இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் களம் காண உள்ளன. நாசர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல, சரத்குமார் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு மற்றும் பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடத்தில் கூறிய விஷால், ”முதலமைச்சரே பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் சமரசத்திற்கு இடம் கிடையாது” என்று கூறியிருந்ததாக சர்ச்சை கிளம்பியது.

ஆனால், உடனே இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், “நான் நமது மரியாதைக்குரிய முதலமைச்சரை மதிக்கிறேன். மேலும், நான் எனது பக்கத்தில் சரியாக இருக்கிறேன்.

நான் ஒரு போதும் அவ்வாறு சொல்லவில்லை. மரியாதைக்குரிய முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு மதிக்காதபடி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த கருத்து சரியானது கிடையாது” என்று கூறியுள்ளார்.

balaajee
13th October 2015, 04:48 PM
தேசிய திலகம் குஷ்பு... இது நடிகர் திலகம்சிவாஜி ரசிகர்கள் கொடுத்த பட்டமுங்க...- one INDIA

சென்னை: நடிகை குஷ்புவிற்கு 'தேசிய திலகம்' என்று பட்டம் கொடுத்து அசத்தியுள்ளனர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள். அதுவும் நிகழ்ச்சிக்கே வராத குஷ்புவிற்கு வம்படியாக பட்டத்தைக் கொடுத்துள்ளனர் ரசிக கண்மணிகள்.90களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. பிரபு உடன் ஜோடி சேர்ந்து... ரஜினி, கமல் என்று உச்ச நடிகர்களுடன் நடித்த குஷ்புவிற்கு கோவில் கட்டிய தமிழக ரசிகர்கள் இருக்கின்றனர்.

சினிமாவில் கதாநாயகியான நடித்த பின்னர் அக்கா, அண்ணியாக நடித்த போதும் சரி குஷ்புதான் சென்டர் ஆஃப் த அட்ராக்சன். திரை நட்சத்திரமாக ஜொலித்த குஷ்பு தனது அடுத்த ரவுண்டை சின்னத்திரையில் தொடங்கினார். ஜாக்பாட் கேம் ஷோவில் குஷ்புவின் ஜாக்கெட்தான் அதிக பிரபலம்.

அரசியலில் குதித்த குஷ்பு
அதிமுகவின் ஆஸ்தான சேனலில் இருந்த போதே காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் குஷ்பு என்ற பேச்சு அடிபட்டது. இல்லை இல்லை அதிமுகவில் இணைவார் குஷ்பு என்று பேசப்பட்டது. ரைட் இன்டிகேட்டர், லெப்ட்ல சிக்னல் காட்டிட்டு நேரா போயிட்டாங்களே என்பது போல திமுகவில் இணைந்தார் குஷ்பு.

காங்கிரஸ் கட்சியில்
சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சார பீரங்கியாக வலம் வந்தார். ஆனாலும் எந்தவித பதவியோ, தேர்தலில் நிற்க இடமோ கிடைக்கவில்லை. சில கசப்பான சம்பவங்களினால், திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது அவர் என் தாய் வீட்டுக்கு வந்தது போன உணர்கிறேன் என்று கூறினார்

செய்தி தொடர்பாளர்
காங்கிரசில் இணைந்த சில மாதங்களிலேயே குஷ்புவிற்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரசின் பிரசார பீரங்கியாக கட்சி பயன்படுத்தி வருகிறது. அவரும் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார்.

சிவாஜி பிறந்தநாள் விழா
சென்னை சூளையில் சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரசார் சிவாஜி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குஷ்பு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அவரை ‘தேசிய திலகம்' என்ற பட்டத்துடன் சிவாஜி ரசிகர்கள் விளம்பரப்படுத்தி இருந்தனர்.

குஷ்பு வரலையே
குஷ்பு மகள் உடல்நிலை சரியில்லாததால் கடைசி நேரத்தில் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பெண்களுக்கு இலவச சேலைகளை மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் வழங்கினார்

காங்கிரசை வளர்க்கிறார்
நடிகர் திலகம் சிவாஜி காங்கிரசை வளர்த்தார். அவரைப் போலவே இன்று குஷ்புவும் தேசிய அளவில் காங்கிரசை வளர்க்க பணியாற்றுகிறார், எனவே தேசிய திலகம் என்ற பட்டத்தை நாங்கள் வழங்கி உள்ளோம் என்று கூறினார் சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் சூளை ராஜேந்திரன். போஸ்டர் அடிச்சு... பட்டம் எல்லாம் கொடுத்தும் குஷ்பு வரலையேப்பா என்று கடைசியில் சிவாஜி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தது கண் கூடாக தெரிந்தது.

balaajee
13th October 2015, 05:20 PM
'ஆறாது சினம்' பெயரில் ரீமேக் ஆகிறது 'மெமரீஸ்'

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02582/sinam_2582968f.jpg
தமிழில் அறிவழகன் - அருள்நிதி இணைப்பில் ரீமேக்காகி வரும் 'மெமரீஸ்' ரீமேக்கிற்கு 'ஆறாது சினம்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'ஈரம்', 'வல்லினம்' போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் அறிவழகன்.

தற்போது அறிவழகன் இயக்கும் இப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மெமரீஸ்' படத்தின் ரீமேக்காகும். ப்ருத்வி ராஜ் நடித்திருந்த இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். தற்போது இப்படத்துக்கு 'ஆறாது சினம்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

balaajee
15th October 2015, 06:41 PM
NOT AGAIN...

மீண்டும் படம்இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்

இவ்வாண்டு தொடக்கத்தில் டூரிங்டாக்கீஸ் படத்தை இயக்கி வெளியிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது இனிமேல் படம் இயக்கமாட்டேன் இதுதான் கடைசிப்படம் என்று சொல்லியிருந்தார்.

http://img.vikatan.com/cinema/2015/10/15/images/01CP_SAC_JPG_2296056f.jpgஆனால் இப்போது மீண்டும் அவர் ஒருபடத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

நையப்புடை என்பது அந்தப்படத்தின் பெயராக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை கலைப்புலிதாணு தயாரிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

VinodKumar's
16th October 2015, 12:11 AM
முதல்ல இவர நையப்புடைக்கனும்

thamiz
16th October 2015, 02:12 AM
NOT AGAIN...

மீண்டும் படம்இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்

இவ்வாண்டு தொடக்கத்தில் டூரிங்டாக்கீஸ் படத்தை இயக்கி வெளியிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது இனிமேல் படம் இயக்கமாட்டேன் இதுதான் கடைசிப்படம் என்று சொல்லியிருந்தார்.

http://img.vikatan.com/cinema/2015/10/15/images/01CP_SAC_JPG_2296056f.jpgஆனால் இப்போது மீண்டும் அவர் ஒருபடத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

நையப்புடை என்பது அந்தப்படத்தின் பெயராக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை கலைப்புலிதாணு தயாரிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ஏன் வேணாம்ங்கிறீங்க..அவரும் ஏதாவது "ப்ரேக் த்ரு" பண்ணலாம்னு பார்க்கிறாரு. செய்யட்டுமே! You never know, he might strike Gold this time! :)

faithiu11
16th October 2015, 08:36 PM
Even though his political aspirations and his recent flicks sucks..he has given some good /watchable films down the line...he is one of the rare directors who worked with rajni/chiranjeevi/amitabh..last film of him I liked was nenjirukum varai...also Shankar told in a interview he wants to be a actor and sac insisted him to join as asst director...tat was a great decision from him...he was good in extracting some nice songs from Md's

irir123
17th October 2015, 02:03 AM
folks like P_R, Joe, venkkiram, SKV will appreciate/enjoy this:

https://www.youtube.com/watch?v=xuosA1ij7r8

Sivakumar - what an astounding memory and diction - sweet lord!

venkkiram
17th October 2015, 11:20 PM
எதிலயுமே ஒரு நிலையான முடிவு எடுக்கத் தயங்கும் இவருக்கெல்லாம் புனிதப்பசு பர்சனாலிடி. என்னத்த சொல்ல!

irir123
18th October 2015, 02:38 AM
venkkiram - referring to Sivakumar or Sarathkumar?

venkkiram
18th October 2015, 07:25 AM
உச்ச நட்சத்திரம். ரெண்டு அணிக்கும் ஆதரவாம்.

mexicomeat
18th October 2015, 08:05 AM
sorry if i offend anyone.. but why do we give so much importance to these election? these koothaadis are not going to do anything useful to this community - no matter who gets elected. they are still going to transact crores and crores in black money.

thamiz
18th October 2015, 08:12 AM
sorry if i offend anyone.. but why do we give so much importance to these election? these koothaadis are not going to do anything useful to this community - no matter who gets elected. they are still going to transact crores and crores in black money.

இன்று ஓட்டுப்பதிவு நடக்குது. நாளையிலிருந்து அவர் அவர் அவரவர் வேலையைப் பார்ர்ப்பார்கள் :)

paranitharan
18th October 2015, 09:22 AM
உச்ச நட்சத்திரம். ரெண்டு அணிக்கும் ஆதரவாம்.

Kamal paandavar aninu thane sonnaaru.

irir123
18th October 2015, 10:15 AM
https://www.youtube.com/watch?v=IuqjuA2Gr0k

Radharavi / Sarathkumar - vandavaalam thandavaalam aanadhu

interz
18th October 2015, 11:46 PM
http://maruthitalkies.com/vishal-pandavar-ani-conquered-the-crown-of-nadigar-sangam-in-elections/90457.html

balaajee
20th October 2015, 06:45 PM
புகையை ஜெயித்த கதை! மனோபாலா... மனோபலம்!


குச்சி மாதிரி... ஸாரி, குச்சியேதான்!

மூங்கில் ஒன்று புல்லாங்குழலானதுபோல், வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் வித்தகன் மனோபாலா. மனோபலம் கூடிய மனோபாலா, 13 வருடங்களுக்கு முன்பு செத்துப் பிழைத்தவர் என்றால், நம்ப முடிகிறதா?

''யப்பா... அந்த நாட்களை இப்ப நினைச்சாலும் கசப்பா இருக்கு தம்பி. வழக்கமா எல்லோருக்கும் நண்பர்களாலதான் சிகரெட் பழக்கம் வரும். வலியப்போய், அந்தப் பழக்கத்துக்கு அடிமையான ஆளு நானாத்தான் இருப்பேன். 17 வயசுல, காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப, முதன் முதலா சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன். அந்த டேஸ்ட்டும் ஸ்மெல்லும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. ஆரம்பத்துல ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு சிகரெட் பிடிச்சிட்டிருந்த நான், நாளாக நாளாக அதிகமாப் புகைக்க ஆரம்பிச்சேன். சினிமாவுக்குள் என்ட்ரி ஆனப்ப, நான் ஒரு செயின் ஸ்மோக்கர். அப்பவே சுதாரிச்சிருந்தா, பெரிய பாதிப்புலேர்ந்து மீண்டு இருந்திருப்பேன்'' என்று மூச்சை இழுத்துவிட்டபடியே, பாதிப்பின் வீரியத்தைச் சொன்னார்.
http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/p26.jpg
''கை நடுக்கம் வர ஆரம்பிச்சது. எப்பவும் சோர்வா இருக்கும். அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். சாப்பாடு எறங்காது. முகமெல்லாம் கறுத்துப்போச்சு. டாக்டர்கிட்ட போய் செக்-அப் பண்ணேன். அதிகமா சிகரெட் பிடிச்சதால், நுரையீரல் முழுக்க சிகரெட் புகை அடைஞ்சு இருக்குன்னு சொன்னார். டெஸ்ட் ரிசல்ட்லகூட, எலும்புகள் அரிச்சுப்போயிருக்கிறதா வந்துச்சு. 'சிகரெட் பிடிச்சா இவ்வளவு பாதிப்பு வருமா டாக்டர்?’னு அப்பாவியாக் கேட்க, அதுக்கு டாக்டர், 'புகையோட இயல்பான பண்பே படிதல்தான். வீட்டு அடுக்களைக்குள் நுழைஞ்சிருக்கீங்களா? சுவர் முழுக்கப் புகை படிஞ்சு இருக்கும். அது மாதிரிதான் தம்பி நம்ம உடம்பும். நீங்க உள்ள இழுத்த புகை, உங்க உடம்பு முழுக்கப் படிஞ்சுகிடக்கு. அதனால் நுரையீரல், நரம்பு, எலும்பு எல்லாம் பாதிச்சிருக்கு. இன்னும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிச்சீங்க, நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க, அப்புறம் உங்க இஷ்டம்’னு சொல்லிட்டு எழுந்துபோய்ட்டார். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்.

ஒரு நிமிஷம் என் மனைவி, குழந்தைகளை நினைச்சுப் பார்த்தேன்.

குடும்ப எதிர்காலத்தைவிட கருமம் பிடிச்ச இந்த சிகரெட் முக்கியமா? பலரது சிரிப்புக்குக் காரணமாயிட்டு, என் குடும்பத்தைச் சோகத்துல தள்ளலாமா?’ அப்படினு என் மனசாட்சி கேள்வி கேட்டுச்சு. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனேன். எக்கச்சக்கமா செலவு செஞ்சு, புது மனோபாலாவா வீட்டுக்குத் திரும்பினேன். அதுக்கு அப்புறம் சிகரெட் பக்கமே போகலை. எத்தனையோ படங்கள்ல சிகரெட் பிடிக்கிற மாதிரி நடிச்சேன். ஆனால், திரும்ப அந்த கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகலை. அந்த அளவுக்குக் கண்டிப்பா இருந்தேன். சிகரெட் பிடிச்சப்ப 42 கிலோவா இருந்த நான், இப்போ 62 கிலோ இருக்கேன். இப்ப என் உடம்பும் ரொம்ப நல்லா இருக்கு. சந்தோஷமா இருக்கேன்.'' - சிரித்தபடியே சொன்ன மனோபாலா, சிகரெட் பழக்கத்தில் இருந்து மீண்டுவருவருவதற்கான சீக்ரெட் டிப்ஸ்களையும் தந்தார்.

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpg பெரும்பாலும், சாப்பாடு, டீ சாப்பிட்ட பிறகுதான் அதிகமா சிகரெட் அடிப்பாங்க. அந்த நினைப்பு வந்தால், உடனே திசை திருப்ப முயற்சி பண்ணுங்க. ஒரு டம்ளர் தண்ணி குடிங்க. எழுந்து ஒரு ரவுண்ட் நடந்துட்டு வாங்க.

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpg சாப்பாடு சாப்பிட்டதும், சும்மா உட்கார்ந்து இருக்காமல், ஏதாவது ஒரு வேலையில் உங்க கவனத்தைச் செலுத்துங்க. கொஞ்ச நேரத்தில் சிகரெட் புகைக்கணும்கிற எண்ணம் போயிடும்.

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpg சிலருக்கு சிகரெட் பிடித்தால்தான் டாய்லட் போக முடியும் என்ற நிலை இருக்கும், இதைக் காரணமாககொண்டே சிலர் சிகரெட் பிடிப்பார்கள். அவர்கள் முந்தைய நாள் இரவே நன்கு கனிந்த பூவன்பழம் மாதிரியான மலமிளக்கிகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். மறுநாள் சிகரெட்டின் தேவை இருக்காது.

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpg சிகரெட் தரும் பாதிப்புகளை உங்க வீட்டிலோ, தனி அறையிலோ கண்ணில் படும் இடத்தில் பெரிதாக எழுதிப் படங்களுடன் ஒட்டிவைக்கலாம்.

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpg பெட்டிக் கடைப் பக்கம் தயவுசெஞ்சு போகாதீங்க.

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpgஉங்க கண் எதிர்ல ஒருத்தர் சிகரெட் பிடிக்கிறார்னா, அவர் நிக்கிற திசைக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பிச்சிடுங்க.

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpg 'ரொம்ப நாளாச்சே... ஒண்ணே ஒண்ணு மட்டும் அடிப்போமே...’ அப்படிங்கிற வேலையே கூடாது. ஒண்ணு நூறாயிடும். ஜாக்கிரதை!

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpg சிகரெட் பிடிக்கத் தூண்டும் நண்பர்களின் சகவாசத்தையே துண்டிச்சிருங்க.

http://img.vikatan.com/doctor/2013/04/njzlzm/images/dot%281%29.jpg சிகரெட் பிடிக்கத் தோணுச்சுன்னா, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்க. இது உடம்புக்கும் நல்லது. சிகரெட் பிடிக்கணும்கிற எண்ணத்தையும் மறக்க வெச்சிடும்.

தியானம், யோகா போன்ற நல்ல பழக்கங்கள்ல கவனத்தைத் திருப்புங்க. மனசை ஒருமுகப்படுத்தி, நீங்க எடுத்திருக்கும் நல்ல முடிவுக்கு பக்க பலமா இது இருக்கும்.

சிகரெட் பழக்கம், வாழ்க்கையைச் சீரழிச்சிடும் கண்ணுங்களா! விட்டுடுங்க!

venkkiram
20th October 2015, 09:59 PM
இப்பதான் ஒருவழியா தீ அணைந்தது என்றால்.. மறுபடியும் பத்த வச்சிட்டாங்க அம்மணி...

https://twitter.com/realradikaa/status/656292026032353280

ட்விட்டர் மறுபடியும் பத்திகிச்சி..

VinodKumar's
21st October 2015, 05:24 AM
இப்பதான் ஒருவழியா தீ அணைந்தது என்றால்.. மறுபடியும் பத்த வச்சிட்டாங்க அம்மணி...

https://twitter.com/realradikaa/status/656292026032353280

ட்விட்டர் மறுபடியும் பத்திகிச்சி..
Biggest mistake by Sarath was his last campaign speech !!! I guess Radharavi and Radhika forced him to do so.

ajaybaskar
21st October 2015, 09:13 AM
தேர்தல் தோல்விக்கு காரணங்களாக நான் விகடனில் படித்தது..

1. சரத் அணியினரின் எல்லை மீறிய பேச்சுக்கள். கமல்,சிவகுமார் போன்றோரை தேவையில்லாமல் சாடியது நடுநிலையாளர்களை விஷால் அணி பக்கம் சாய்த்தது.

2. அதிமுக கடைசி நேரத்தில் நடிகர் சங்க தேர்தலில் பங்குபெற வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டது

3. ஜே.கே ரித்தீஷ் நாடக நடிகர்களை 'கவனித்தது'

4. விஷால் அணியினரின் கடைசி நேர கேன்வாசிங். பூத்துக்குள் வாக்காளர்கள் செல்லும் வரை விஷால் அணியினர் அவர்களை விடவில்லை. சரத் அணியினர் இதில் கோட்டை விட்டு விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்

Sent from my SM-G531F using Tapatalk

venkkiram
21st October 2015, 07:59 PM
https://www.facebook.com/sve.shekher/posts/10153223364432496?pnref=story

குரலைத் தாழ்த்தி நீலிக்கண்ணீர் வடித்தவுடன் மீடியாக்கர் மீடியாவினரும் நம்பி கைத்தட்டினார்கள்.. ஒப்பந்த ரத்து என்பதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் பாண்டவர் அணியினர் தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக கொண்டாடியிருப்பார்கள் என்று சொல்வதில் இருக்கும் மோசடித் தனமான எண்ணங்களை, தர்க்கப் பிழைகளை எண்ணி எதிர் கேள்வி கேட்க திராணியில்லாமல் நடந்து கொண்டார்கள் மீடியாக்கர் மீடியாவினர்.

etuhubei
22nd October 2015, 11:23 AM
தனுஷ் தயாரிப்பு, முதல் முறையா விஜய் சேதுபதி இணைய, நயன்தாரா,விக்னேஷ் சிவன், அணிருத்னு ஒரு கலர்புல் கூட்டணி,அதிலும் எல்லா பாடல்களுமே ஹிட்டு ரகம். படம் அதை திருப்திபடுதியதானு பார்க்கலாம்.

நானும் ரவுடி தான் – படத்தின் தலைப்பிற்கேற்ப தன்னை ரௌடியாக பாவித்து வளர்கிறார் விஜய் சேதுபதி.சிறுவயதில் அம்மா ராதிகாவை போல போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும் பாண்டியனிடம்(விஜய் சேதுபதி) ரௌடிசம் தான் கெத்து என்று மொட்டை ராஜேந்த்ரன் சொல்கிறார்.கூடவே கிள்ளிவளவன் (பார்த்திபன்) என்ற பெரிய தாதாவின் கதையையும் சொல்கிறார்.இந்த கதையில் ஒரு போலீஸ் கிள்ளிவளவனை எதிர்க்கிறார்.அதனால் தன் மனைவியை இழக்கிறார்.தன் சிறிய மகளோடு இடம்மாற்றம் பெற்று செல்கிறார்.
விஜய் சேதுபதி வளர்ந்த பிறகு அம்மாவின் ஆசைக்காக போலீஸ் தேர்ச்சிக்கு சென்றாலும் தன்னை ரௌடி என நினைத்து டம்மி கெத்துடன் வாழ்கிறார் சேதுபதி .இந்நிலையில் காதம்பரி(நயன்தாரா) என்ற பெண்ணை சந்திக்கிறார்.அவள் தன் தந்தை ஒரு பிரச்சனையில் இருப்பதை சொல்கிறார்.விஜய் செத்துபதி உதவ வருகிறார்.பின்னர் காதம்பரியை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் .இந்நிலையில் காதம்பரியின் தந்தை கொலை செய்யபடுகிறார்.இதை பாண்டியன் காதம்பரியிடம் மறைக்கிறார்.ஆனால் காதம்பரி ராதிகாவின் மூலம் தந்தை இறந்ததை அறிந்து கொள்கிறார்.பின்னர் சேதுபதியிடம் தன் தந்தையை கொலை செய்தவனை தான் கொன்ற பிறகு தான் காதல் என்று சொல்ல பயத்துடனே டம்மி ரௌடியான சேதுபதி தயாராகிறார்.பின்னர் எவ்வாறு பார்த்திபனை கொலை செய்கிறார் என்பது தான் மீதி கதை.இறுதியில் பார்த்திபனை சாகடிக்கும் வரை அனைத்தையுமே டம்மியாகவே செய்து முடிக்கிறார் சேதுபதி.

http://www.tamilmoviecritic.com/movie/naanum-rowdy-dhaan

Russelltgw
22nd October 2015, 11:58 AM
Kamal paandavar aninu thane sonnaaru.
Uchcha natchathitram naale, Rajini thaane...appo chumma kidaikkumaa super star pattam...thaana vanthathu..kaasu koduthunaa vaanga mudiyaathu

balaajee
22nd October 2015, 12:36 PM
திரைப்பட விழாக்களுக்கு 'குற்றமே தண்டனை' தேர்வு: வித்தார்த் மகிழ்ச்சி - the HINDU tamil

தனது முதல் தயாரிப்பான 'குற்றமே தண்டனை' திரைப்படம் இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்வாகி இருப்பதால் வித்தார்த் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். 'காக்கா முட்டை' படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'குற்றமே தண்டனை'. வித்தார்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா பின்னணி இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பாடல்கள் கிடையாது. நாயகனாக நடித்தது மட்டுமன்றி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் வித்தார்த்.
நீண்ட நாட்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், இறுதிகட்ட பணிகள், இளையராஜா பின்னணி இசை பணிகள் ஆகியவை நடைபெற்று வந்தன. இன்னும் இரண்டு நாட்களில் இப்படத்தின் முதல் பிரதி தயாராக இருக்கிறது.

மும்பை மற்றும் கேரளா ஆகிய இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட 'குற்றமே தண்டனை' தேர்வாகி இருக்கிறது. முதல் தயாரிப்பே இதற்கு தேர்வாகி இருப்பதில் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்தார்த்.
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது குறித்து கேட்ட போது, "இதற்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குநர் மணிகண்டன் தான். நான் அல்ல. இப்படத்தின் கதையை கேட்ட போதே, இது ஒரு வேறு களத்தில் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டு தயாரித்தேன். படப்பிடிப்பு முடிந்தவுடன் பார்த்த போது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருந்தார் இயக்குநர். முதல் தயாரிப்புக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்றார் வித்தார்த்

balaajee
22nd October 2015, 06:48 PM
தனுஷ் மீது கோபத்தில் இருக்கும் முருகதாஸ்? - VIKATAN
அக்டோபர் 21 ஆம் தேதி விக்ரம் சமந்தா நடித்த பத்துஎண்றதுக்குள்ள மற்றும் விஜய்சேதுபதி நயன்தாரா நடித்த நானும்ரவுடிதான் ஆகிய இரண்டுபடங்கள் வெளியாகின. இவ்விரண்டு படங்களில் விக்ரம் படம் ஒரேநாளில் ஐந்துகோடி வசூல் செய்துவிட்டதாக ஒரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.

http://img.vikatan.com/cinema/2015/10/22/images/dhanush.jpgஇந்தியா முழுவதும் ஆறரைகோடி வசூல் என்றும் தமிழகத்தில் மட்டும் ஐந்துகோடி என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி வந்த செய்தியை, ரீடிவிட் செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் முருகதாஸ்.

அதேசமயம், நானும்ரவுடிதான் படத்தைத் தயாரித்துள்ள நடிகர் தனுஷ், பத்துஎண்றதுக்குள்ள படத்தின் (ஒருநாள் வசூல்) சரியானகணக்கு 2,92 கோடிதான் என்று சொல்லப்பட்ட ஒரு டிவிட்டை ரீடிவிட் செய்திருக்கிறார்.

இதன்மூலம் முருகதாஸ் பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் கணக்கு தவறானது என்ற எண்ணம் வருவது இயல்பு. இதனால், தன்னுடைய தயாரிப்பை விளம்பரப்படுத்த எங்கள் படத்தைப் பற்றிக் குறைவாகச் சொல்வதா என்று பத்துஎண்றதுக்குள்ள படக்குழு தனுஷ் மீது கோபமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

balaajee
24th October 2015, 02:11 PM
சென்னை சர்வதேச திரைப்பட விழா: டிசம்பர் 10 முதல் 17ந் தேதி வரை நடக்கிறது

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_151024125834000000.jpg

தமிழ்நாடு அரசும், இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும் இணைந்து நடத்தும் 13து சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 10ம் தேதி முதல் 17ந் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இதில் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இந்தப் படவிழாவில் தமிழ் படங்களும் போட்டியிடும், தேர்ந்தெடுக்கப்படும் படத்திற்கு விருதுகள் வழங்கப்படும். இதுகுறித்து சர்வதேச பட விழாவின் இயக்குனர் இ.தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் மாதம் 10ந் தேதி முதல் 17ந் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டி பிரிவில் கலந்து கொள்வதற்கான தமிழ் படங்கள் வரவேற்கப்படுகிறது. 2014 அக்டோபர் 16ந் தேதி முதல் 2015 அக்டோபர் 15ந் தேதிக்குள் தணிக்கை சான்று பெற்ற திரைப்படங்களை அனுப்பலாம்.

ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்பட்டு இரண்டு டிவிடி காப்பி அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவம்பர் 7ந் தேதி. அனுப்ப வேண்டிய முகவரி: இண்டோ சினி அப்ரிசேஷன் அலுவலகம், எண் 4, இரண்டாவது மாடி, ஈ பிளாக், ஜெமினி பார்சன் அப்பார்ட்மெண்ட், கதீட்டரல் கார்டன் சாலை, சென்னை 6. மேலும் விபரங்களுக்கு 914428212652 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தங்கராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

balaajee
27th October 2015, 06:20 PM
கே.வி.ஆனந்தின் அடுத்த நாயகன்?

அனேகன் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படம் பற்றி நிறையச் செய்திகள் வந்துவிட்டன. அவர் அடுத்து இயக்கும்போகும் நடிகர் என்று அஜித்தில் தொடங்கி சிவகார்த்திகேயன் அதற்கடுத்து ஆர்யா அதன்பின் ஜெயம்ரவி ஆகியோருடைய பெயர்கள் சொல்லப்பட்டன. இவை எதுவுமே இல்லை.

http://img.vikatan.com/cinema/2015/10/27/images/KV.jpgகே.வி.ஆனந்த் அடுத்து இயக்கப்போவது ஜீவாவைத்தான் என்று இப்போது சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட கோ மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனால் மீண்டும் அவர்களிருவரையும் இணைத்து படமெடுக்கப்போவது கோ படத்தைத் தயாரித்த எல்ரெட்குமார்தான் என்றும் சொல்கிறார்களாம்.

இதுதொடர்பான பேச்சுகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஜீவா இப்போது திருநாள், போக்கிரிராஜா ஆகிய இரண்டுபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவற்றின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

balaajee
28th October 2015, 12:21 PM
பாலாவின் 'தாரை தப்பட்டை'- பொங்கலுக்கு வெளியிட திட்டம்

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. ஐங்கரன் நிறுவனம், உரிமையை கைப்பற்றி இருக்கிறது.

இறுதிகட்டப் பணிகள் முடித்து, இசை வெளியீடு உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் முடித்து படத்தை 2016ல் பொங்கலின்போது வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது ஐங்கரன் நிறுவனம்.
சூர்யா நடிப்பில் தயாராகி வரும் '24' படத்தைத் தொடர்ந்து 'தாரை தப்பட்டை' படமும் தங்களது பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
28th October 2015, 04:36 PM
'குக்கூ' ராஜூமுருகனின் அடுத்த படம் தொடங்கியது

'குக்கூ' இயக்குநர் ராஜூமுருகன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தர்மபுரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினேஷ், மாளவிகா உள்ளிட்ட பலர் நடிக்க ராஜூமுருகன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் 'குக்கூ'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருந்தார். தி நெக்ஸ்ட் பிக் பிலிம் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்தனர்.

'குக்கூ' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ராஜூமுருகன் எங்களது நிறுவனத்துக்கே அடுத்த படத்தையும் இயக்கவிருக்கிறார் என்று தெரிவித்தார்கள். ராஜூ முருகனும் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது 'காஷ்மோரா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜூமுருகன். ஆயுத பூஜை தினத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரியில் நடைபெற்று வருகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து 'குக்கூ' தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ராஜூமுருகன்.

balaajee
29th October 2015, 01:38 PM
நடிகர் விஷால், கார்த்திக்கு வருத்தம் தெரிவிப்பதாக: சேரன் உருக்கமான கடிதம்

சமீபத்தில் நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியை விமர்சனம் செய்து பேசினார் இயக்குநர் சேரன். அப்போது நடிகர் விஷால், கார்த்தி இருவரும் முதலில் நடிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் விமர்சித்து பேசினார். இதற்காக நடிகர் விஷால், கார்த்திக்கு வருத்தம் தெரிவிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் கடிதம் எழுதியிருக்கிறார்.


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-10/29/full/1446076648-9181.jpg



இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கடிதம் அவர் எழுதியிருக்கிறார்: சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் திரு.சரத்குமார் அவர்களுக்கு ஆதரவாக பேசிய போது, திரு.விஷால் அணியிரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது. சில நேரங்களில் சில விஷயங்களை நாம் பதிவு செய்யாமலோ அல்லது புறந்தள்ளியோ போனோம் என்றால், அது நம்மை வளர்த்த சமூகத்திற்கு செய்யும் கேடு என்று நினைப்பவன் நான்…

அப்படியாகத்தான் நான் சரத்குமாரை ஆதரித்ததும், விஷால் அணியில் சிலர் மீது சாடியதும். 1990களில் இருந்து சரத்குமார் அவர்களை நன்கு அறிந்தவன் நான். அவசரஉதவி எதுவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் அவரை நடுசாமத்தில் எழுப்பியிருக்கிறேன். ஒருமுறை பிரகாஷ் என்ற சிறுவனுக்கு இருதய ஆபரேசனுக்கு, இன்னொருமுறை சம்பத்குமார் என்ற உதவி இயக்குனரின் இருதய ஆபரேசனுக்கு, பலநேரங்களில் கல்வித்தொகை வேண்டியும். இதுமட்டும் இல்லாமல் அவரின் உழைப்பு அறிந்தவன்.

நடிகர் சங்க வேலைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விதம், அவரது தொலைநோக்கு சிந்தனை இவையெல்லாம் தீர ஆராய்ந்தபோதும் தான். அதேநேரம் எதிர்முனையில் அவர்களைப் பற்றியும் சிந்திக்காமல் இல்லை. திரு.நாசர் எனக்கு நண்பர்தான், நிறைய முறை அவரோடு எங்கள் திரையுலகம் தொடர்பாக பேசியிருக்கிறேன். அவர்மீதோ, சகோதரர் பொண்வண்ணன் மீதோ அல்லது நண்பர் கருணாஸ் மீதோ எனக்கு எந்த கருத்து வேறுபாடோ, சிந்தனை தொடர்பான சந்தேகங்களோ இல்லை.

அப்படியிருக்க திரு.விஷால், திரு.கார்த்தி இவர்கள் மீது மட்டும் எனக்கு கோபம் வரக்காரணம் என்ன என்பதையும் இங்குநான் பதிவு செய்தாக வேண்டும். இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள். நான் இவர்களுக்கு முன் இயக்குனராகி 7, 8 திரைப்படங்கள் முடித்த நிலையில் இவர்களை நடிகர்களாக பார்க்கிறேன். எந்த நடிகரையும் இவர் கண்டிப்பாக என் படத்தில் நடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால், இவர் இந்த திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும், இந்த திரைப்படம் நிறைய மக்களை போய் சேரும் என ஒவ்வொரு இயக்குனரும் நினைப்பது இயல்புதானே.

நானும் அப்படி நினைத்தது சரிதானே. பலமுறை விஷால் அவர்களை தொடர்பு கொண்டு கதை சொல்ல முயன்று ஒருவழியாக ஒருமுறை தாஜ் ஹோட்டலில் அவரையும், அவர் அண்ணனையும் சந்தித்து கதைசொல்ல, கேட்ட அவர்கள் கதை நன்றாக உள்ளது பண்ணலாம் என்று போனார்கள். ஒருவாரம் ஆகியும் பதில் இல்லை. திடீர் என “பாலா படத்தில் விஷால்” என்ற செய்தியை பார்த்தேன். என்னிடம் உங்கள் படம் வேண்டாம் என்று சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அதை சொல்லியிருக்கவேண்டும்.

அல்லவா. இரண்டு மணிநேரங்கள் உயிர் வருத்தி கதை சொன்னவன் முட்டாள் அல்லவே. பிறகு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறேன். ஒரு நான்கு நாட்களுக்கு பிறகு எனக்கு அவரது அண்ணன் பதில் அனுப்பினார், நாங்கள் இப்போது பாலா சார் படம் பண்ணுகிறோம் பிறகு பார்க்கலாம் என… சரி, இன்று நம்மைவிட பாலா அவர்களுக்கு மார்க்கெட் உள்ளதால் அதை தேர்ந்தெடுப்பது சரியே என நான் உணர்ந்து அமைதியாகிவிட்டேன். அந்த படம் வெளியான பின்பும் எந்த தகவலும் இல்லை. திரையுலகம் இப்படித்தான் என நானே நினைத்துக்கொண்டு எனது அடுத்த படங்களில் என்னை நுழைத்துக் கொண்டேன்.

அதற்கு பின்பும், அவர் சமீபத்தில் காரைக்குடியில் ஒரு லோக்கல் சேனல் அலுவலகத்தில் திருட்டு விசிடியை எதிர்த்து நியாயமான முறையில் தட்டிக் கேட்டபின்பு அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினேன். ஆனால், அதே செயல்தான் C2H. நான் இரண்டு வருடம் என்னை தொலைத்து திருட்டு விசிடி ஒழிப்புக்காக உருவாக்கிய திட்டம். கிட்டத்தட்ட 3000 இளைஞர்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்டது, எங்கள் திரைத்துறையின் நன்மை கருதி…

அன்று ஒரு வீடியோ கடைக்காரரை உதைத்த விஷால் இன்று இவ்வளவு பெரிய முயற்சிக்கு ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை. ஆனால் நான் விஷால் கண்டிப்பாக அழைத்து வாழ்த்துசொல்லுவார் என எதிர்பார்த்தேன். அப்போது அவருக்குள் உள்ளது உண்மையான சமூக சிந்தனையா என்ற கேள்வி எழுந்தது.


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-10/29/full/1446076840-9807.jpg


அதேபோல திரு.கார்த்தி நல்ல பையன், எனக்கு மிகவும் பிடித்த நண்பர் திரு.சூர்யா அவர்களின் தம்பி. அவர் அறிமுகமான சமயம் ஒருமுறை சந்தித்து கதை சொல்லியிருக்கிறேன், அதை அவர் விரும்பவில்லை. ஆனால் அது நமது கலாச்சாரம் பற்றிய வாழ்வியல் சொல்லும் அண்ணன் தங்கை கதை. சரி காலம் கனிந்து வரும், நல்ல திரைப்படங்களும் பண்ணவேண்டும் என்று உணர்த்தும் என காத்திருந்தேன். நல்ல நடிகர் சில கமர்ஷியல் படங்களில் நடித்து தன் திறமையை வேஸ்ட் பண்றாரே என எண்ணி, மீண்டும் அவரை தொடர்புகொள்கிறேன் அவரது மேலாளர், உறவினர் திரு.பிரபு மூலமாக. என்ன காரணமோ தெரியவில்லை, சந்திக்கவோ, கதை சொல்லவோ முடியவில்லை…
என்னுடைய கேள்வி எல்லாம் நீங்கள் எனது படத்தில் நடிக்க வேண்டாம். உங்கள் பார்வையில் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய இயக்குனராக இல்லாமல் இருக்கலாம். வெறும் நான்கே நான்கு தேசியவிருதுகள் மட்டும்தான் வாங்கியுள்ளேன். மேலும், நம் தமிழ் சமூகம் சார்ந்த கதைகளை மட்டுமே எடுக்கத் தெரிந்த ஒரு மட்டமான இயக்குனர்தான்.

ஆனால் எந்த மனிதனாக இருந்தாலும் அவனை மதித்து, அவனை சந்தித்து அவன் மனம் நோகாமல் பதிலளித்தால் தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் கூட எழுந்து நடக்கத்துணிவார்கள் என்ற நல்ல சிந்தனை உங்களுள் வராமல் போனதே உங்கள் சமூகப்பணி தொடர்பாக என் மனதில் எழுந்த முதல் கேள்வி. இப்படியிருக்க, மூத்த கலைஞர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது எந்த வகையில்!! என எனக்கு புரியவில்லை.

அவர்களின் மன உணர்வுகளைப் பற்றி புரியாமல் நீங்கள் எப்படி உதவுவீர்கள் என்பது எனது அடுத்த கேள்வி. இப்படியாக அவர்கள் மீது எனக்கு இருந்த வருத்தமே அன்று அந்தமேடையில் எனது கோபமாக அவ்வாறு வெளிவந்தது. தவிர, அவர்கள் மீது குறிவைத்து தாக்க வேண்டும் என எண்ணவில்லை. சினிமாவை நேசித்து, அதற்காகவே வாழ்க்கையை தொலைத்து வாய்ப்பு கிடைக்கும்போது வியாபாரம், மார்க்கெட் என்ற பெயரால் ஒருவரின் வாழ்க்கை இழக்கப்படும்போது தான் அந்த வலி தெரியும்…

அதேபோல திரு.JK.ரித்தீஸ் அவர்களை பற்றியும் பேசிவிட்டேன். அதுகூட அவர் விஷால் அணி வீடியோவில் திரு.ராதாரவி அவர்களைப் பற்றி தவறாக மிகவும் மரியாதைக் குறைவாக சொல்லியிருந்தார். என்னதான் எதிரணியாக இருந்தாலும் 35வருடம் சினிமாவில் அனுபவம் உள்ள ஒரு மூத்தகலைஞனை அப்படி சொல்வது தவறு என எனக்கு தோன்றியது.

மேலும் அந்த வீடியோவை அவர்கள் அணியில் உள்ள அனைவரும் பார்த்த பின்புதான் வெளியிட்டிருப்பார்கள், யாராவது அதை தடுத்து அல்லது மாற்றியிருக்கலாம். அதனால்தான் என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். மற்றபடி யாரையும் குறிவைத்து தாக்கி ஓட்டு சேகரிக்க அப்படி சொல்லவில்லை. நான் எந்த அரசியல் சார்பும் இல்லாதவன்.

என்மீது அக்கறை உள்ள எனது ரசிகர்களும், அபிமானிகளும் எடுத்துச் சொல்லும்போது அதை நான் மறுத்தால் நல்லது இல்லை. என் சொந்த பிரச்சனையின் போது அரவணைப்பாக இருந்தவர்கள் இப்போது அதட்டி சொல்லும்போது கேட்கத்தான் வேண்டும்.

தம்பி விஷால், தம்பி கார்த்தி, அண்ணன் JK.ரித்தீஸ் உங்க மனசு வருந்தும்படி பேசியமைக்கு, காயப்பட்டிருந்தால் இந்தசபையில் வருத்தம் தெரிவிக்கிறேன், மனப்பூர்வமாக.. (இதை அவர்களின் அடுத்த பட தேதிக்காக, என கமெண்ட் போட்டு கொச்சைப்படுத்த வேண்டாம்) நன்றியுடன் சேரன்". என்று அவர் கூறியுள்ளார்.

balaajee
29th October 2015, 02:56 PM
எஃப்.டி.ஐ.ஐ. போராட்டம்: 10 சினிமா படைப்பாளிகள் தேசிய விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவிப்பு

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02600/return_2600248f.jpg

புணே திரைப்பட, தொலைக்காட்சித் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரி (எஃப்.டி.ஐ.ஐ.) மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக, முக்கிய சினிமா படைப்பாளிகள் 10 பேர் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பி அளித்தனர்.
அந்தத் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களது 136 நாள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்று, அமைதிப் போராட்டத்தைத் தொடருவதாக அறிவித்த நிலையில், சினிமா படைப்பாளிகளின் இந்தப் புதிய முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

படிப்பைக் கருத்தில்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருந்தாலும், கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதற்கு எதிரான தங்களது போராட்டமானது அமைதியான வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில்தான், திவாகர் பானர்ஜி, ஆனந்த பட்வர்தன், பரேஷ் கம்தார், நிஷிதா ஜெயின், கீர்த்தி நக்வா, ஹர்ஷவர்தன் குல்கர்னி, ஹரி நாயர், ராகேஷ் சர்மா, இந்திரநீல் லாஹ்ரி மற்றும் லிபிகா சிங் தாராய் ஆகிய படைப்பாளிகள் தங்கள் படங்களுக்காக பல்வேறு காலங்களில் பெற்ற தேசிய விருதுகளைத் திருப்பி அளித்து, இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துள்ளனர்.

சாகித்ய விருது திருப்பி அளிப்புப் போராட்டத்தைப் பின்பற்றி...
தேசிய விருதுகளைத் திருப்பி அளித்த படைப்பாளிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், "நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்துரிமையையும் காத்திடுவதற்கு உறுதியேற்க வேண்டியது இந்திய அரசின் உடனடி கடமையாகும்.
தேசத்தின் உயரிய இலக்கிய விருதைத் திருப்பி அளித்த படைப்பாளிகளின் வழியை நாங்களும் பின்பற்றி, எங்களது தேசிய விருதுகளைத் திருப்பித் தருகிறோம்.
திரைப்படப் படைப்பாளிகளாக, திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பின்னால் உறுதியுடன் நின்று, அவர்களின் போராட்டச் சுமையை உறுதியுடன் கைவிடாமல் இருக்க துணை நிற்கிறோம். அவர்களது சரித்திரப் போராட்டங்களை முன்னெடுக்க துணைபுரிகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினை என்ன?
சுயாட்சி அதிகாரம் கொண்ட இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டார். இவர் பி.ஆர். சோப்டா தயாரித்த ‘மகாபாரதம்’ நெடுந்தொடரில் தருமபுத்திரனாக நடித்தவர் என்றாலும், திரைப்படத் துறையின் எல்லாத் துறைகளிலும் அனுபவம் பெற்றவர் என்றோ நிபுணர் என்றோ பெயரெடுத்தவர் அல்ல.
இவர் மத்திய அரசை ஆளும் பாஜகவின் உறுப்பினர். சுயாட்சி அதிகாரம் உள்ள பதவிகளுக்குத் தலைவர்களை நியமிக்கும்போது, அத்துறையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று பரிசீலித்து, பொருத்தமானவர்களை நியமிப்பதுதான் முறை.
இதற்கு முன்னர் இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் சிறந்து விளங்கியவர்கள். அரசியல் சார்பு இருப்பது ஒரு குறையல்ல; ஆனால், அது மட்டுமே தகுதியாகிவிடக் கூடாது. இதைச் சொல்லித்தான் போராட்டம் வெடித்தது

balaajee
29th October 2015, 02:59 PM
அஜித்தை பாராட்டினாரா விஜய்? விஷமிகள் செய்த லீலை!

சமீபகாலமாக நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்கள், படங்கள் என ஒரு பக்கம் சுற்றிவர இன்னொரு பக்கம் நடிகர்களைக் குறித்து அவதூறு செய்திகளும், செய்யாத ஒரு வேலையைச் செய்தது போலவும் இணையவாசிகள் பரப்பத் துவங்கியுள்ளனர்.

அப்படித்தான் அடிக்கடி அஜித் வராத ஒரு நிகழ்ச்சிக்கோ அல்லது திரையுலகின் முக்கியஸ்தர்களின் மரணத்திற்கோ என அஜித் வந்ததாக ஏற்கனவே வந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சை உருவாக்குவார்கள். அதே போல் அஜித்துக்குக் குழந்தை பிறந்த போது விஜய் மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததாக ஒரு புகைப்படம் உலாவியது.


http://img.vikatan.com/cinema/2015/10/29/images/collage.jpgதற்போது அஜித்துக்கு மாரடைப்பு என்ற வதந்தி, இந்தப் பிரச்னையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்ததாக விஜய், அஜித்தின் வேதாளம் படத்தின் டீஸரைப் பார்த்து பாராட்டியதாகக் கூறி இன்னொரு புகைப்படம் சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அந்தப் புகைப்படத்தில் விஜய் டேப்லெட்டுடன் காட்சியளிப்பது சென்ற வருடம் வெளியான சதுரங்க வேட்டை படத்தின் டிரெய்லரை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும். சதுரங்கவேட்டை படக்காட்சி இருந்த இடத்தில் வேதாளம் படத்தின் புகைப்படத்தை இணைத்து தங்களது கற்பனைத் திறனைக் கொட்டித் தீர்த்துள்ளனர் இணையவாசிகள்.

மேலே இடதுபக்கம் உள்ள உண்மையான புகைப்படம் தான் அந்த ஒரிஜினல் புகைப்படம். மனோபாலா புகைப்படம் எடுப்பதும் கண்ணாடியில் விழுந்திருக்கும். இடதுபக்கம் இருப்பது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம்.
செய்யாத ஒன்றை செய்ததாகக் கூறி இப்படி ஹீரோக்களை வம்பில் மாட்டிவிடும் அளவிற்கா ரசிகர்கள் தங்களது ஹீரோக்களை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்குவார்கள் என சினிமா தரப்பும் புலம்பத் துவங்கியுள்ளது.

balaajee
29th October 2015, 03:05 PM
மொட்டசிவா உச்சம் தொட்டசிவா- ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை!

பிறருக்கு உதவுற மாதிரி எதையாவது செய்யணும் என்று நினைப்பதற்கும், நினைச்சதை செஞ்சுகாட்டுவதற்கும் வித்தியாசம் அதிகம். அந்த வகையில் "டு சம்திங், டு சம்திங்" என்று சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜவாழ்க்கையிலும் நினைத்ததைச் செய்து கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். தற்போதை இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் அவரைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு :

==> சென்னை ராயபுரம் குடிசைப்பகுதியில் உள்ள கூரை வீட்டில் பிறந்து வளர்ந்த இவருக்கு, சிறுவயதிலேயே ப்ரைன் டியுமர். அதனால் பள்ளிக்கூடத்துக்கு போனதை விட ஹாஸ்பிடலில் இருந்த நாட்களே அதிகம். படிப்புல கவனம் செலுத்த முடியவில்லை. இப்பவும் தமிழை எழுத்துக்கூட்டி பொறுமையாகத்தான் வாசிப்பேன் என சொல்லும் இவருக்கு, படிக்காதவர்களின் வலியும், படிப்போட முக்கியத்துவமும் நன்றாகவே தெரியும். அதனால்தான் தரமான கல்வியை எல்லாருக்கும் கொடுத்துட்டா, இந்தியா, தானா வல்லரசாகிடும்னு அடிக்கடி சொல்லுவார்.

==> சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் இவர் சிறுவயதிலிருந்தே தன்னோட எல்லாச் செயல்களிலும் ரஜினியை தீவிரமாக பாலோ பண்ணுபவர். ராகவேந்திரர் செண்டிமெண்ட்டும் தலைவரிடம் இருந்து வந்ததுதான்.

==> நீண்ட நாட்கள் தீராமல் இருந்த ப்ரைன் டியுமர், ராகவேந்திரசுவாமி கோவிலுக்கு சென்று வந்தபோது சரியாகிவிட சென்டிமென்ட்டாக தனது பெயருடன் ராகவாவையும் இணைத்து "ராகவா லாரன்ஸ்" என மாற்றிக்கொண்டார். சென்னை அருகேயுள்ள திருமுல்லைவாயிலில் ராகவேந்திரர் திருக்கோவில் ஒன்று கட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://img.vikatan.com/cinema/2015/10/29/images/Raghava%20Lawrence%20at%20Ganga%20Press%20Meet%20_ 9_.jpg
==> நடனத்தை பெரிதாக மதிக்கும் இவர், ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்' படத்தின் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு பாடல் மூலம் டான்சராக 1993-ல் திரையுலகில் அறிமுகமானார்.

==> தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சுமார் 32 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகப் பணியாற்றியுள்ள லாரன்ஸ், கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் இவர் இயக்கி நடித்த முனி, காஞ்சனா ஆகிய படங்கள் 6 முதல் 60 வரை உள்ள அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் இவர் பக்கம் இழுத்ததோடு, பாலிவுட்டிலும் இவருக்கு சிவப்புக்கம்பளம் விரிக்க வைத்தது.

==> தன்னைப்போல் சிறுவயதில் படிக்க முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவ 'டு சம்திங்' என்ற அறக்கட்டளையை நிறுவி கடந்தவருடம் 25 குழந்தைகளுக்கு சொந்த செலவில் உதவியுள்ளார். இதுதவிர நாகார்ஜுனா, சீமான், விஜய் சேதுபதி, ஜெய், தமன்னா, டாப்ஸி, லட்சுமிராய், 'காஞ்சனா’வின் இந்தி தயாரிப்பாளர்கள், தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லங் கொண்ட சுரேஷ்னு நிறைய பிரபலங்களுடன் இணைத்து கிட்டத்தட்ட 250 குழந்தைகளின் படிப்புக்கு உதவியுள்ளார்.

==> தன்னை வாழவைக்கும் தமிழ் மண்ணுக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஊருக்கு நல்லது செய்ய விரும்புகிற 100 இளைஞர்கள் மூலம், விகடன் குழுமத்துடன் இணைந்து "கலாமின் காலடிச் சுவட்டில்...... அறம் செய்ய விரும்பு" திட்டத்தின் மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.

==> நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா, சாய்ரமணி இயக்கத்தில் ஒருபடம் என அடுத்தடுத்து படங்களில் படு பிசியாக உள்ள இவர் ரீசன்ட்டாக 6 மாத குழந்தையின் இதயத்தில் ஏற்பட்ட வால்வு பிரச்சனை அறுவை சிகிச்சைக்காக உதவி செய்துள்ளார்.

Adox
29th October 2015, 04:34 PM
Actor Vivekh's son passes away

Veteran actor and comedian Vivekh's son Prasanna Kumar (13) has passed away today at a private hospital in Chennai, where he was admitted due to brain fever.

Vivekh who debuted as an actor with the Tamil film 'Manadhil Urudhi Vendum' in 1987 has acted in more than hundreds of films. He was married to Arulselvi and the couple has two daughters Amirthanandhini and Tejaswini and the son Prasanna Kumar.

Indiaglitz conveys its condolences for Vivekh and his family members who are currently undergoing the harshest agony of life. We also pray the almighty for the departed young soul to Rest in Peace.

http://www.indiaglitz.com/actor-vivekh-son-prasanna-kumar-passes-away-tamil-news-145731.html

PARAMASHIVAN
29th October 2015, 04:57 PM
Oh dear RIP

mexicomeat
29th October 2015, 05:48 PM
http://www.newtamilcinema.com/this-is-the-respect/

how true is this news about thilana moganambal? lots of conflicting opinions in the comments section. can some seniors clarify.

irir123
29th October 2015, 07:04 PM
mexicomeat - I would not be surprised if it is true - look at the way, the nadigar sangams ineptness was recently exposed…

unless one happens to be a big star or a star's offspring, everyone including drama artists suffer..

stunt artists do not have insurance cover (someone can correct me if am wrong)..

so writers condition - it is not entirely surprising..

when ppl like Kalai eli Dhanu rule the roost, manipulating things right, left and center - thats symptomatic of whats going on - its a system level problem..

balaajee
30th October 2015, 05:11 PM
லக்ஸ் மல்டிபிளக்ஸை ஜாஸ் சினிமாஸ் வாங்கியது அம்பலம்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02603/TH-LUXE_CINEMAS__1_2603028f.jpg
தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம், வேளச்சேரியில் உள்ள "ஃபீனிக்ஸ்" வணிக அரங்கத்தில் உள்ள தங்களுடைய பதினோறு திரையரங்குகளையும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து 'தி இந்து' ஆங்கில நாளிதழ் பெற்ற தகவலின்படி, முன்னர் "ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் தான் தற்போது "ஜாஸ் சினிமா நிறுவனம்" என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. ஹாட்வீல்ஸ் இஞ்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2005-ம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது.

கடந்த 2014 ஜூலை 14-ல் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் ஜெ.இளவரசி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று மாற்றம் செய்வது பற்றி முடிவெடுக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற அடுத்தக்கட்ட கூட்டத்துக்கு, ஜெ.இளவரசி தலைமை வகித்தார். அக்கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை சசிகலா வழிமொழிந்துள்ளார்.
கீழே பகிரப்பட்டுள்ள குறிப்பானது இளவரசி தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:

http://tamil.thehindu.com/multimedia/archive/02603/hw_2603039a.jpg
மேலும், மத்திய அரசு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தை ஆராயும்போது, "ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு, விநியோகம், திரையிடல் என அனைத்து தொழில்களிலும் ஈடுபடலாம்" என நிறுவன இணைப்பு கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது" தெரியவந்துள்ளது.

பதினோறு திரையரங்குகள் கொண்ட லக்ஸ் சினிமாஸ் நிறுவனம் சான்றிதழ்களைப் பெறுவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. அவற்றையெல்லாம் சரிசெய்து, கடந்த மார்ச் மாதம்தான் திரைப்படங்களைப் பொது மக்களுக்குத் திரையிடத் தொடங்கியது.

இதற்கிடையில், லக்ஸ் சினிமாஸ் நிறுவனத்தை ஜாஸ் சினிமாஸ் வாங்கிவிட்டதாக பேச்சுகள் சலசலக்கப்பட்டது. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. எஸ்.பி.ஐ. சினிமாஸ் இணையதளத்தில் லக்ஸ் சினிமாஸ் அரங்கில் திரையிடப்படும் காட்சிகளை காண டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற வாடிக்கையாளர்கள் ஜாஸ் சினிமாஸ் இணையதளத்துக்கு மாற்றிவிடப்பட்டனர். அப்போதுதான், ஜாஸ் சினிமாஸ், லக்ஸ் சினிமாஸுக்கு கைமாறியது அதிகாரபூர்வமாக அம்பலமானது.

இது குறித்து மேலும் தகவலறிய எஸ்.பி.ஐ., சினிமாஸ், ஜாஸ் சினிமாஸ் நிர்வாக அதிகாரிகளை 'தி இந்து' தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால், யாரும் அழைப்புகளை ஏற்கவில்லை.

கோலிவுட் வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, இந்த ஒப்பந்தம் ஆண்டு முற்பகுதியிலேயே போடப்பட்டுவிட்டது. லக்ஸ் சினிமாஸில் 11 திரையரங்குகள் இருப்பதால் அதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு இணையதளத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சில விஷயங்களை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. அது, கார்த்திகேயன் கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் கூத்தப்பார் சத்தியமூர்த்தி ஆகியோர் "ஜாஸ்" சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான இவர்களே "மிடாஸ்" நிறுவனத்தின் இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே அது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சென்னையிலுள்ள பி.வி.ஆர். திரைப்பட நிறுவனம், இந்த லக்ஸ் சினிமாஸ் திரைப்பட அரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை விலைக்கு வாங்க பேசப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் முறியடித்து ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு கைமாறியிருக்குறது லக்ஸ் சினிமாஸ்.

thamiz
2nd November 2015, 11:40 PM
http://www.newtamilcinema.com/this-is-the-respect/

how true is this news about thilana moganambal? lots of conflicting opinions in the comments section. can some seniors clarify.

I would not believe that guy luckylook kicha aka yuvakrishna or whatever. Yeah he writes what he hears here and there. Will there be any truth in it? I doubt very much!

balaajee
17th November 2015, 05:21 PM
சென்னை ஐமேக்ஸில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

ஐ-மேக்ஸ் சினிமாவின் காட்சி அனுபவத்தை அடுத்த உச்சத்துக்குக் கொண்டு செல்கிறது. இதற்குமுன் 3டி படங்களைப் பார்ப்பதும் அதில் திரையைத் தாண்டி உங்களை தாக்க வந்த பொருட்களைப் பார்த்து வியந்ததும் இப்போது அதுக்கும் மேலே செல்லவிருக்கிறது.

http://s23.postimg.org/e0rcjfrvf/imaxchennai.jpg

அது என்ன ஐ-மேக்ஸ்?

வழக்கமாக இதுவரை நீங்கள் பார்த்த திரைகளை விட இது மிகவும் பெரியது. ஸ்க்ரீன் அளவு மட்டுமல்ல, அதன் துல்லியமும், தொழில்நுட்பமும் கூட பல படிகள் மேலே இருக்கும். I-max என்பதே Image MAXIMUM என்பதன் சுருக்கம். அதனால் ஜுராசிக் பார்க் பார்க்கும்போது டைனோசர்கள் உங்கள் தோளுக்குப் பின் உலவும் உணர்வைக் கொடுக்கும்.

சென்னையின் முதல் ஐ-மேக்ஸ் எப்படி இருக்கும்?

நவம்பர் 20-ம் தேதி சென்னை, வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில் ஐ-மேக்ஸ் திரையிடல் ஆரம்பம். வழக்கமான ஐ-மேக்ஸ் தியேட்டரின் அனைத்து வசதிகளும் இருக்கும் இந்த தியேட்டரில், 428 பேர் அமரலாம். மெகா நீள திரை, அதிரடிக்கும் ஒலி என தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய திரை அனுபவம் நிச்சயம்... உலகத் தரமாக இருக்கும். அந்த திரை அனுபவத்தை வாசித்தோ, கேட்டோ புரிந்து கொள்ள முடியாது. நேரில் பார்த்துதான் அசந்துபோக வேண்டுமாம். ஆனால், ஐ மேக்ஸ் திரையிடல் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்படும் படங்கள் மட்டுமே இங்கு அந்த ஸ்பெஷல் அனுபவத்தைக் கொடுக்கும். வரும் வெள்ளிக் கிழமை வெளியாகும் ஜேம்ஸ்பாண்ட் படமான 'ஸ்பெக்டர்' அந்த அட்டகாச அதிரடி பரவசத்தைக் கொடுக்கும்.

எல்லாம் சரி... டிக்கெட் விலை எவ்வளவாம்? 360 ரூபாயாம். 3டி கண்ணாடிக்கு கூடுதல் 30ரூபாய் கட்டணம். இணைய தளத்தில் பதிவு செய்தால் இன்னும் கூடுதல் கட்டணமாகும், ஊப்ஸ்..!
120 ரூபாய் கொடுத்து பார்க்கிற படத்துக்கே, விமர்சனம்னு கழுவிக் கழுவி ஊத்துவாங்க நம்ம பசங்க. இதுல 360 ரூபாய் கொடுத்துப் பார்த்து சொதப்புனா, காசு வெட்டியே போட்ருவாய்ங்களே..!

balaajee
19th November 2015, 11:39 AM
சென்னையில் முதல் ஐமேக்ஸ் திரையரங்கு

சென்னையில் முதல் ஐமேக்ஸ் (IMAX (http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=http://tamil.webdunia.com&q=Imax)- IMAGE MAXIMUM) திரையரங்கு வரும் 20 -ஆம் தேதி முதல் செயல்பட தொடங்குகிறது.


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-11/19/full/1447911094-005.jpg


வழக்கமான திரையை விட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை பிரமாண்டமாக்குவதுதான், ஐமேக்ஸ். திரை அனுபவத்தின் இன்னொரு மைல்கல்.

டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஐமேக்ஸ் திரையரங்குகள் உள்ளன. சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கு இல்லாதது ஒரு குறையாக இருந்தது. அது இப்போது தீர்ந்தது.

சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும் வாங்கியுள்ள பீனிக்ஸ் மாலின் லக்ஸ் திரையரங்கில் புதிதாக ஐமேக்ஸ் திரையரங்கு செயல்பட உள்ளது. முதல் படமாக ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் திரைப்படத்தை திரையிடுகின்றனர். வரும் 20 -ஆம் தேதி முதல் ஐமேக்ஸ் அனுபவத்தை சென்னைவாசிகள் பெறலாம். டிக்கெட் கட்டணம் கொஞ்சம் அதிகம். 360 ரூபாய்கள்.



http://img.vikatan.com/album/2015/11/nziyja/large/127390.jpghttp://img.vikatan.com/album/2015/11/nziyja/large/127389.jpg

http://img.vikatan.com/album/2015/11/nziyja/large/127391.jpg





http://img.vikatan.com/album/2015/11/nziyja/large/127387.jpg

balaajee
19th November 2015, 02:27 PM
SUN TV VJ in love

கயல் நாயகன் சந்திரன், சன்டிவி அஞ்சனா காதல்கதை

கயல் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சந்திரன். இவருக்கும் டிவி தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் என தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவரிடமே பேசினேன்..
”செம ஹேப்பியா இருக்கு, நான் சொன்னேன்ல நீங்களே எனக்கு திரும்ப கூப்டுவீங்கன்னு. நான் தான் முதல்ல சொன்னேன் என ஹேப்பியாக பேசுகிறார்”.

http://img.vikatan.com/cinema/2015/11/19/images/IMG-20151119-WA0003.jpg”பொண்ணு பார்க்கறதா சொன்னீங்க...அஞ்சனானு சொல்லி இப்போ ஷாக் குடுத்தீட்டீங்களே?”
”ஆமா...நான் சூரியன் எஃப்.எம்ல சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்வா இருந்தேன். அப்போ அஞ்சனா நல்ல ஃப்ரண்ட். ஆனாலும் அடுத்தடுத்து நான் வேலை அப்பறம் சினிமாவுல ஹீரோனு வந்துட்டேன். டச் இல்ல. அப்பதான் ஒரு அவார்ட் ஹோஸ்டிங்ல பார்த்தேன், பார்த்தோன பிடிச்சுப்போச்சு. அம்மா கிட்ட சொன்னேன் இந்த மாதிரி பொண்ணு பாரும்மான்னு. அம்மா இவளையே பார்க்கலாமான்னு கேட்டாங்க!”
”நீங்கதான் முதல்ல லவ் சொன்னேனு சொன்னீங்களே?”
”என்னைக்குங்க பொண்ணுங்க லவ்வ சொன்னாங்க.. அந்த ஃபங்ஷனுக்கு அப்பறம் சேட்டிங், திரும்ப ஃப்ரண்ட்ஷிப், அப்பறம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ’ஐ லவ் யூ’ அப்படியெல்லாம் சொல்லல.அந்த வார்த்தை சொல்லணும்னா கொஞ்சம் டீப்பா ஃபீல் பண்ணனும். அதனால ரிஸ்க் வேணாம்னு எடுத்தோன கல்யாணம் பண்ணிக்கறியானு கேட்டேன். அப்படியே ஷாக் ஆகிட்டாங்க.. அப்பறம் ஓகே சொல்லிட்டாங்க.

http://img.vikatan.com/cinema/2015/11/19/images/IMG-20151119-WA0002.jpgஎப்போ கல்யாணம்?
நிச்சயதார்த்தம் இந்த மாசம் 29ம் தேதி. கல்யாணம் மார்ச் 10ம் தேதி!”
வாழ்த்துகள் சந்திரன் - அஞ்சனா

balaajee
24th November 2015, 11:17 AM
'174' மூலம் மீண்டும் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா

புதுமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் '174' படத்தில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா 'இசை' படத்தை இயக்கி, நடித்ததைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இறைவி' படத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மேலும், விஜய்யை வைத்து படம் இயக்க கதை ஒன்றையும் தயார் செய்திருந்தார்.

விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயரும் இடம்பெற்றது. தற்போது, அப்படத்தை பரதன் இயக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது மீண்டும் நாயகனாக நடித்து, படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. செல்வராகவனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கவிருக்கும் '174' படத்தில் நடித்து, தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒரு மரணம் நிகழ்ந்தவுடன் போலீஸார் இது கொலை என்று சந்தேகிக்கும் போது, '174' சட்டத்தை பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள். இச்சட்டத்தைக் பின்புலமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் மணிகண்டன்.

PARAMASHIVAN
24th November 2015, 04:20 PM
'174' மூலம் மீண்டும் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா


Marupadiyum muthalla iruntha

:frightened: :skull:

thamiz
24th November 2015, 06:41 PM
Marupadiyum muthalla iruntha

:frightened: :skull:

ஒரேயடியாப் போயிட்டாருனு நிம்மதியா இருந்தா..:(

balaajee
25th November 2015, 01:49 PM
ஹாரிஸூக்கு படங்கள் கிடைக்க இதுதான் காரணமா?

இந்தஆண்டு வெளியான என்னைஅறிந்தால், அனேகன், நண்பேன்டா ஆகிய மூன்று படங்களுக்கு ஹாரிஸ்ஜெயராஜ்தான் இசை. அந்தப்படங்களுக்கு அடுத்து, உதயநிதியின் கெத்து படத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டிருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ். அதுவும் முன்பே செய்த ஒப்பந்தம் என்பதால் அவர் வசம் இருந்ததென்று சொல்லப்பட்டது. அதன்பின்னர் வேறு எந்தப்படமும் அவரிடம் இல்லை.

http://img.vikatan.com/cinema/2015/11/25/images/Harris.jpgஅவருடைய இந்தஆண்டுப்படங்களில் அவர் பாடல்களுக்குச் சிக்கல் இல்லை என்றாலும் படங்கள் பெரிதாகப் போகாதது அவரையும் பாதித்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. மற்றொன்று அவருடைய சம்பளம். அவர் சுமார் மூன்றுகோடி சம்பளம் வாங்குகிறார் என்று சொன்னார்கள். அவ்வளவு சம்பளம் கொடுக்க எல்லோரும் தயாராக இல்லை என்பதால் அவர் பக்கம் யாரும் போகவில்லை என்று சொன்னார்கள்.

ஆனால் மிகஅண்மையில் அவர் மூன்று பெரியபடங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் புதியபடம், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சிங்கம் 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியபடம் ஆகியனவற்றில் அவர் இசையமைப்பதாகச் சொல்லப்படுகிறது.

இம்மூன்று படங்களும் அவருக்குக் கிடைக்க முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறதாம். அவர் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார் என்பதுதான் அந்தக்காரணமாம். படத்தின் வேலைகளைப் பொறுத்து தன்னுடைய சம்பளத்தில் ஐம்பதுஇலட்சித்திலிருந்து ஒருகோடிவரை குறைத்துக்கொள்ள அவர் முன்வந்ததே அவருக்கு வரிசையாகப் படங்கள் கிடைக்கக் காரணம் என்று சொல்கிறார்கள். உண்மைதானா?

balaajee
26th November 2015, 05:24 PM
சர்வதேசத் திரைப்படவிழாவுக்குப் போகும் இன்னொரு தமிழ்ப் படம்!


அரவிந்த் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் தமிழ்ப் படம் “கர்மா”. இப்படம் ஹாலிவுட்டின் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

http://img.vikatan.com/cinema/2015/11/26/images/karma%201.jpg
வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இப்படம் த்ரில்லர் கதையம்சமுள்ளது. இத்திரைப்படம் ஹாலிவுட்டில் நடைபெறவிருக்கும் “ ஹாலிவுட் ஸ்கை” திரைப்பட விழாவில்
திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முன்னர், கேரளாவில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அமெரிக்காவிலும் திரையிடப்படவிருக்கிறது.

balaajee
29th November 2015, 10:39 PM
Actor @dhanushkraja (https://twitter.com/dhanushkraja) has donated Rupees #5lakhs (https://twitter.com/hashtag/5lakhs?src=hash) Cheque for Chief Ministers relief fund through #nadigarsangam (https://twitter.com/hashtag/nadigarsangam?src=hash) today
https://pbs.twimg.com/media/CU6kvB-U8AAb0nC.jpg

balaajee
30th November 2015, 05:19 PM
SPI Cinemas ‏@SPIcinemas (https://twitter.com/SPIcinemas) The newest addition to the SPI Family is now open! To book tickets at Palazzo.....

balaajee
2nd December 2015, 03:18 PM
https://pbs.twimg.com/profile_images/671038593465344000/i921Ypk4_bigger.jpg Premgi amaren ‏@Premgiamaren (https://twitter.com/Premgiamaren) 2h2 hours ago (https://twitter.com/Premgiamaren/status/671956577121800192)
ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம்- ( கோடம்பாக்கம் ) மழையால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

balaajee
2nd December 2015, 03:21 PM
Actor @superstarrajini (https://twitter.com/superstarrajini) donates Rs 10 lakhs to flood relief in Tamilnadu through #NadigarSangam (https://twitter.com/hashtag/NadigarSangam?src=hash)


https://pbs.twimg.com/media/CVIhNG7UwAAxmgP.jpg

balaajee
2nd December 2015, 03:22 PM
@shankarshanmugh (https://twitter.com/shankarshanmugh) @superstarrajini (https://twitter.com/superstarrajini) meet @LycaProductions (https://twitter.com/LycaProductions) chairman #SubaskaranAllirajah (https://twitter.com/hashtag/SubaskaranAllirajah?src=hash) in LA

(https://t.co/OWpH2PZt3k)

https://pbs.twimg.com/media/CVHlYZwUYAEu_Bh.jpg

balaajee
7th December 2015, 01:33 PM
வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது

http://tamil.filmibeat.com/img/2015/12/07-1449469521-sandhyaweddingphoto.jpg
திருவனந்தபுரம்: சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்து மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த நடிகை சந்தியாவின் திருமணம் ஒருவழியாக கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனவர் நடிகை சந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் சந்தியாவுக்கும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் சென்னையில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கெடுத்தது. சந்தியா சென்னையில் உள்ள வீட்டில் சிக்கிக் கொண்டார். வெள்ளத்தால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை. சந்தியாவின் குடும்பத்தாரால் மாப்பிள்ளை வீட்டாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தான் அவர்களின் செல்போன் வேலை செய்து மாப்பிள்ளை வீ்ட்டாரை தொடர்பு கொண்டு திருமணத்தை கேரளாவில் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதயடுத்து கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சந்தியா, வெங்கட் திருமணம் நேற்று நடைபெற்றது. சென்னையில் நிலைமை சரியான பிறகு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

balaajee
7th December 2015, 03:51 PM
நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள்- கமல் உருக்கம் - VIKATAN

அண்மையில் கமல் வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கமலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கமல் வெளியிட்டிருக்கும் விளக்கம்.....
நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிகையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.
என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று? என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.

http://img.vikatan.com/cinema/2015/12/07/images/kamal-1.jpgன் வீட்டிற்க்கு சில நாட்களாகச் செய்தித்தாள் விநியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான்.
பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன். என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்ப்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்புக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இது திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.
பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வாதப்பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்கவேலையில் முன் போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவணம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும் தான்" இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

balaajee
7th December 2015, 08:46 PM
வெள்ள நிவாரணம்... நடிகர் ஷாரூக்கான் ரூ 1 கோடி அறிவிப்பு

http://tamil.oneindia.com/img/2015/12/07-1449500226-shah-rukh88.jpg


மும்பை: சென்னை வெள்ள நிவாரணத்துக்காக ரூ 1 கோடியைத் தருவதாக நடிகர் ஷாரூக்கான் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சென்னை மாநகரம் சமீபத்திய புயல் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைகிறேன். அதே நேரம், இந்த சோதனையும் துயரமும் மிக்க தருணத்தில் சென்னை மக்களின் அமைதியும், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு கடுமையான சூழலிருந்து மேலெழுந்து வரும் பாங்கும் எங்களை பெருமைப்பட வைக்கிறது. இந்தத் துயரிலிருந்து மக்களைக் காக்க உங்கள் அரசும் பிறரும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். சென்னை மக்களின் துயர் துடைக்க எங்கள் ரெட் சில்லி நிறுவனம் மற்றும் தில்வாலே படக்குழுவின் சார்பாக ரூ 1 கோடியை வழங்குகிறோம். தயவு செய்து இந்தத் தொகையை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய நடிகர்களில் இதுவரை யாரும் வழங்காத பெரும் தொகையை ஷாரூக்கான் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Actor @iamsrk (https://twitter.com/iamsrk) gave 1cr to TN flood relief...!
https://pbs.twimg.com/media/CVoRpJZUAAQjbRz.jpg

balaajee
8th December 2015, 09:57 AM
Freaked out after losing home for first time: Actor Siddharth to NDTV
https://www.youtube.com/watch?v=oUumlt1MXaw&feature=youtu.be

balaajee
8th December 2015, 10:57 PM
வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/music/illayaraja/001.jpg


தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ஆறுதல் கூறி வருகிறார்.
தற்போது இரண்டாவது நாளாக நேற்றும் சென்னையில் உள்ள பல தெருக்களுக்கு வீதி வீதியாக சென்று மக்கள் குறை கேட்டு அதை பூர்த்தி செய்து வருகிறார்.
இந்நிலையில் 1 லட்சம் போர்வைகளை இளையராஜா வழங்கியுள்ளார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் அவரை மனதார பாராட்டியுள்ளனர்.
வசூலில் ரஜினியை நெருங்கிய அஜித்- முழு விவரம்
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/couples/ajith_rajini003.jpg

தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்கள் என்றால் ரஜினி, விஜய், அஜித் தான். இவர்களின் சாதனையை இவர்களே உடைத்தால் தான் உண்டு.
அந்த வகையில் விஜய், அஜித்திற்கு மேல் என்றும் எதிலும் நம்பர் 1ஆக இருப்பது சூப்பர் ஸ்டார் தான். அந்த இடத்தை அடைய தான் இருவரும் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் வேதாளம் மலேசியா பாக்ஸ் ஆபிஸில் தற்போது வரை MYR 8,063,792 வசூல் செய்து 3ம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் சிவாஜி MYR 8,589,800 வசூல் செய்துள்ளது.
இன்னும் சில வாரங்கள் இதே வசூல் நீடித்தால் வேதாளம் சிவாஜியை பின்னுக்கு தள்ள வாய்ப்பிருக்கின்றது. ஆனால், எவரும் எட்ட முடியாத இடத்தில் எந்திரன் தான் இன்றும் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தியமாக யாராலும் முடியாது- சித்தார்த்
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/actors/siddharth/006.jpg

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவியவர் சித்தார்த். இவர் இன்று கடலூர் சென்றுள்ளார்
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வரால் தான் இத்தனை சீக்கிரம் இயல்பு நிலைக்கு வர முடிந்தது.
வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஆகியிருந்தால் இத்தனை சீக்கிரம் மீண்டிருக்க முடியாது, என தமிழக முதல்வரை புகழ்ந்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அள்ளிக்கொடுத்த ரகுமான்
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/music/arrahman/010.jpg

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் சமீபத்தில் சென்னை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகவும் வருந்தி ஒரு சில கருத்துக்களை வெளியிட்டார்.
சமீபத்தில் வந்த தகவலின்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரகுமான் ரூ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாராம்.
இதுமட்டுமின்றி பல பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கடலூர் முழுவதும் சிவகார்த்திகேயன் பேச்சு தானாம்
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/actors/sivakarthikeyen/sivakarthikeyan005.jpg

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவர் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த உயரத்தை அடைந்தார்.
இந்நிலையில் சென்னை மட்டுமின்றி கடலூரிலும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தற்போது தான் கடலூரை கவணிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலேயே பல உதவிகளை செய்துள்ளாராம். இதை டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘என்ன சார் கடலூரில் எங்கு சென்றாலும் உங்களை பற்றி தான் பேச்சு’ என்று கூறியுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அதை மட்டும் செய்யாதீர்கள்- ஜெயம் ரவி வேண்டுக்கோள்
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/actors/jeyam_ravi/005.jpg

தனி ஒருவன் 100வது நாள் வெற்றியெல்லாம் ஓரங்கட்டி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்தார். அதில் அவர், ஒரு செய்தியை குறிப்பிட்டுயிருந்தார்.
அது என்னவென்றால், 'உதவி செய்யுங்கள், ஆனால், அவர்களிடம் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளாதீர்கள்' என கூறியிருந்தார்.
மக்களுக்காக இப்படி இறங்கினாரா பார்த்திபன்? படம் உள்ளே
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/actors/parthiban/002.jpg

எப்போதும் தன் படங்களில் தொடர்ந்து புரட்சிகரமான களத்தை தொடுபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் பல உதவிகளை செய்தார்.
இதில் ஒரு படி மேலே சென்று தானே தண்ணீரல் இறங்கி மக்களுடன் இணைந்து வேலை பார்த்தார்.
இதைக்கண்ட மக்கள் அனைவரும் சினிமாவில் மட்டுமில்லை நிஜத்திலும் பார்த்திபன் ஹீரோ தான் என்று கூறியுள்ளனர்.
http://img.zoftcdn.com/albums/photos/cinema/tamil/others/2015/12/parthibanrain001.jpg
ஹன்சிகாவிற்கு நன்றி தெரிவித்த டிடி
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/actress/others/dd002.jpg

தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் டிடி. இவர் தான் சின்னத்திரை பெண் தொகுப்பாளர்களில் நம்பர் 1.
இவர் சென்னையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இது மட்டுமின்றி தன் சமூக வலைத்தள பக்கத்தில் பல விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை நிவாரணத்திற்கு ஹன்சிகா ரூ 15 லட்சம் கொடுத்துள்ளார். இதற்கு பிரபலங்களில் முதல் ஆளாக தன் நன்றியை டிடி, ஹன்சிகாவிற்கு கூறியுள்ளார்.

balaajee
9th December 2015, 02:19 PM
Mana Madras Kosam - Fundraising Event By Film Stars Stills





http://image.noelshack.com/fichiers/2015/50/1449649618-mana-madras-kosam-fundraising-event-by-film-stars-photos-01.jpg



http://image.noelshack.com/fichiers/2015/50/1449649619-mana-madras-kosam-fundraising-event-by-film-stars-photos-02.jpg



http://image.noelshack.com/fichiers/2015/50/1449649620-mana-madras-kosam-fundraising-event-by-film-stars-photos-03.jpg

balaajee
10th December 2015, 12:12 PM
Director @shankarshanmugh (https://twitter.com/shankarshanmugh) has donated Rupees 10 Lakhs for flood relief to CM's Relief Fund through RTGS


Directors / Actors Cheran & Ameer cleared the trashes in streets with the help of Govt workers
https://pbs.twimg.com/media/CVykNC8VAAAY1GS.jpg

balaajee
10th December 2015, 12:13 PM
Jiiva joined a Medical Camp organized by #SurgicalAvenue (https://twitter.com/hashtag/SurgicalAvenue?src=hash) today...
https://pbs.twimg.com/media/CVyifsQU4AArM1K.jpg




Actress Sri Divya donates Rupees 10 Lakhs for flood relief to CM's Relief Fund through Nadigar Sangam!

https://pbs.twimg.com/media/CVxxVAlU4AAwLFh.jpg

PARAMASHIVAN
10th December 2015, 04:14 PM
Only possible in India !

http://www.bbc.co.uk/news/world-asia-india-35059007

balaajee
11th December 2015, 09:32 PM
போர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களை பட்டியலிட்டு வெளியிடுவர். தற்போது இந்த வருடத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ் நடிகர்களான தனுஷிற்கு 37வது இடமும், ரஜினிகாந்திற்கு 69வது இடமும், சூர்யாவிற்கு 71வது இடமும் ஆர்யாவிற்கு 80வது இடமும் கிடைத்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் அஜித், விஜய் இடம்பெறவில்லை.

ajaybaskar
11th December 2015, 09:33 PM
Lol. Arya above Ajith and Vijay and has earned 29 crores in this year. He shud be a happy chap :)

Sent from my SM-G531F using Tapatalk

balaajee
11th December 2015, 09:34 PM
தனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்

http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/couples/sivakarthikeyan_mohan_raja001.jpg தனிஒருவன் படம் மூலம் வெற்றியின் உச்சிக்கு சென்றவர் மோகன் ராஜா. இவருடைய அடுத்த படத்தை எதிர்ப்பார்ப்போர் பலர்.
இந்நிலையில் இவர் Rd ராஜா 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்க இருக்கிறாராம். அதோடு இப்படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக கைகோர்க்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மே 2016ல் தொடங்கி அவ்வருடத்திலேயே முடித்து வெளியிட முடிவு செய்துள்ளனர். மற்றபடி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

balaajee
12th December 2015, 01:25 PM
இந்திய அளவில் சந்தானத்திற்கு கிடைத்த
கௌரவம்

http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/actors/santhanam/006.jpg தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாகவும் களம் இறங்கி கலக்கி வருகிறார்.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கை போர்ப்ஸ் வெளியிட்ட டாப்-100 பிரபலங்களில் தனுஷ், ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களுடன் நடிகர் சந்தானமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில் விஜய், அஜித் இல்லாதது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

balaajee
14th December 2015, 02:36 PM
தாரைதப்பட்டைக்கு முன்பாக சசிகுமாரின் அதிரடி

பாலா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் தாரைதப்பட்டை படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15 ஆம் தேதி முடிவடைந்தது. இடையில் ஒருநாள் விட்டு செப்டம்பர் 17 முதல் அடுத்தபடத்தில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.
வசந்தமணி என்பவருடைய இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் வெற்றிவேல் படத்தின் படப்பிடிப்பு விநாயகர்சதுர்த்தியன்று தொடங்கியது தஞ்சாவூரில் தொடங்கிய அந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தாராபுரம் பகுதிகளில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் மூன்றுநாயகிகள் இருக்கிறார்களாம். மியாஜார்ஜ் முதன்மைநாயகியாக நடிக்கும் அந்தப்படத்தில் இரண்டு புதுமுகங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்களாம். செப்டம்பர் 17 இல் தொடங்கிய அந்தப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 30 ஆம் தேதியோடு நிறைவடையும் என்று சொல்கிறார்கள்.
பாலா இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் தாரைதப்பட்டை படம் ஜனவரியில் வெளியாகவிருக்கிறது. அந்தப்படம் வெளியாகுமுன்பே இன்னொரு படத்தை முழுமையாக நடித்துமுடித்துவிடுவார். சசிகுமாரின் இந்த வேகத்தைக் கண்டு எல்லோரும் வியப்பில் இருக்கிறார்களாம்.

balaajee
15th December 2015, 05:30 PM
1 கோடி நிவாரண நிதி அளித்த அக்*ஷய் குமார்

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சினிமா நடிகர்களாக சித்தார்த், நடிகர் சங்கம், பார்த்திபன், மயில்சாமி, தெலுங்கு நடிகர்கள் ராணா, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, பவன் கல்யாண் உட்பட பலரும் உதவிக்கரம் கொடுத்து வருகிறார்கள்.

http://img.vikatan.com/cinema/2015/12/15/images/Akshay-Kumar.jpgஇந்நிலையில் பாலிவுட் டாப் நடிகர் ஷாருக்கான் ஒரு கோடி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து அக்*ஷய் குமாரும் சென்னை நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயைக் கொடுத்துள்ளார். இயக்குநர் பிரியதர்ஷன் மூலமாக சுஹாசினி மணிரத்னத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

http://img.vikatan.com/cinema/2015/12/15/images/Pics%20(4).jpgசுஹாசினி மணிரத்னம் வழிகாட்டுதலில் ஜெயேந்திரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ருபாய் 1 கோடி ருபாய் காசோலையை அக்*ஷய் குமார் அளித்துள்ளார். பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது. தற்போது அக்*ஷய் குமார் கத்தி படத்தின் இந்தி ரீமேக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

balaajee
16th December 2015, 03:37 PM
விக்ரம் - ஆனந்த் ஷங்கர் படப் பணிகள் துவக்கம் - HINDU TAMIL

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02659/vikram_2659081f.jpg
புதிய படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், இயக்குநர் ஆனந்த் ஷங்கர், விக்ரம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்

ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்துக்கு பூஜையோடு இன்று பணிகள் துவங்கப்பட்டது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தயாரிக்கும் பொறுப்பில் இருந்து ஐங்கரன் நிறுவனம் விலகிவிட்டதைத் தொடர்ந்து ஷிபு தமீன்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

திட்டமிடப்பட்ட தேதியில் படம் தொடங்கப்படாததால் காஜல் அகர்வால், பிந்து மாதவி ஆகியோர் இப்படத்தில் இருந்து விலகினார்கள். அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மலேசியா, பாங்காக், லடாக் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

balaajee
16th December 2015, 03:42 PM
ஆஸ்கர் தாமதமாகக் கிடைத்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானைப் புகழும் ஹைதர் இயக்குநர் - VIKATAN
ஷிஃபாலி புஷன் இயக்கத்தில் உருவாகிவரும் பாலிவுட் படம் ‘ஜுக்னி’. இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் புரமோஷன் சந்திப்பில் பேசிய பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குநர் விஷால் பரத்வாஜ் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து புகழ்ந்துள்ளார்.

இந்திய இசையின் சூழலில் ஒரு பெரிய மாற்றம் உண்டானது எனில் அது ஏ.ஆர்.ரஹ்மான் வரவுக்குப் பிறகே. எனக்கும் நன்றாக நினைவு இருக்கிறது ரோஜா படத்தின் பாடல்கள் வெளியான போது ஏற்பட்ட இசை மாற்றங்களை நன்கு அறிவேன்.


http://img.vikatan.com/cinema/2015/12/16/images/501439058.jpg
அவருடைய திறமைக்கும் , இசையறிவுக்கும் ஆஸ்கர் விருது தாமதமாகக் கிடைத்துவிட்டது என்றே கூற வேண்டும். இந்திய சினிமாவில் சர்வதேச தரத்தைக் கொண்டு வந்தவர் கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானே என புகழ்ந்துள்ளார் விஷால் பரத்வாஜ். இவர் புகழ்பெற்ற ஹைதர், காமினீ, இஷ்க்யா, உள்ளிட்ட படங்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

mexicomeat
19th December 2015, 06:45 PM
வெள்ள பாதிப்பிற்கு அரசு காரணமல்ல, மக்கள் தான் காரணம் - விவேக்

Read more at: http://tamil.filmibeat.com/heroes/government-is-not-the-cause-flood-victims-vivek-038004.html

அண்ணனுக்கு ஒரு கலைமாமணி அவார்ட் பார்சல்...

balaajee
19th December 2015, 11:33 PM
அண்ணனுக்கு ஒரு கலைமாமணி அவார்ட் பார்சல்...
he already have one i think...

balaajee
20th December 2015, 06:17 AM
Nenje Ezhu Concert's First Look Poster


https://pbs.twimg.com/media/CWlJWGNUEAA3zQo.jpg

balaajee
20th December 2015, 06:49 AM
Bala's Tharai Thappattai Business Started...!

https://www.youtube.com/watch?v=YISMDLdN-ME

balaajee
23rd December 2015, 01:02 PM
சந்தானம் இல்லாமல் உருவாகும் ராஜேஷின் புதிய படம்- tamil hindu

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'சிவா மனசுல சக்தி' படத்தில் இருந்து 'வாசுவும் சரவணும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரை தொடர்ச்சியாக சந்தானத்துக்கு பிரதான பாத்திரம் அளித்து வந்தவர் இயக்குநர் ராஜேஷ். சந்தானத்தின் ஒருவரி வசனங்கள் எல்லாம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவையாக அமைந்திருக்கிறது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக வைத்து புதிய படமொன்றை அடுத்தாண்டு முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சந்தானம் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக பால சரவணன் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'கடவுள் இருக்கான் குமாரு' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கவிருக்கிறார். தற்போது நாயகி மற்றும் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிப்பவர்களுக்கான தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

balaajee
31st December 2015, 12:41 PM
கத்தரிக்கு பாலா மறுப்பு: 'தாரை தப்பட்டை'க்கு 'ஏ' சான்றிதழ்


'தாரை தப்பட்டை' படத்தில் சில வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் என்பதை ஏற்க பாலா மறுத்து விட்டார்.
பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம், இப்படம் பொங்கலுக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கிறது.

'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினார்கள்.
படத்தின் சண்டைக் காட்சிகளில் வன்முறை அதிகமாக இருந்ததாலும், சில வசனங்களை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் என்று சென்சார் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் பாலா ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

தனது கதையமைப்பில் உறுதியாக இருந்ததால், பாலாவின் முடிவுக்கு தமிழ் திரையுலக இயக்குநர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருக்கிறது.

balaajee
31st December 2015, 12:42 PM
பெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யாமேனன், கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காஞ்சனா – 2 மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்கவிருந்த படங்கள் “மொட்ட சிவா கெட்ட சிவா” மற்றும் “நாகா”.


ஆனால் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு கொடுத்துவிட்டார் லாரன்ஸ். அதனால் அவர் இயக்கி நடிக்கும் அந்தப் படத்திற்கு பைரவா என்ற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

http://img.vikatan.com/cinema/2015/12/31/images/motta-siva.jpg
எனவே, ராகவாலாரன்ஸ் நடித்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் அன்று வெளியிடவிருக்கிறார்கள். இவ்விரு படங்களைத் தொடர்ந்து தான் நாகா படம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

balaajee
5th January 2016, 02:27 PM
சந்தானம், ஜி.வி.பிரகாஷ், ஹாரீஸ் ஜெயராஜுக்கு கோடிகளில் நஷ்டம்! ஏன்..?

மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர்பார்க்க முடியாது; அதேநேரம் ஏழை-பணக்காரர்; வி.ஐ.பி-காமன்மேன் என்ற பாகுபாடும் வெள்ளத்துக்குக் கிடையாது. கடந்த டிசம்பரில் சென்னையையே புரட்டிப் போட்ட வெள்ளம், சினிமா செலிபிரிட்டிகளையும் விட்டு வைக்கவில்லை. ‘‘எனது டாய்லெட்டில் கழிவுநீர் கலந்துவிட்டது.

http://img.vikatan.com/cinema/2016/01/05/images/J-V-Prakahs.jpgஎனக்கே இப்படி என்றால், ஏழை மக்களின் நிலை?’’ என்று பரிதாபப்பட்டு களத்தில் இறங்கி, ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார் நடிகர் சித்தார்த். பல நடிகர், நடிகைகளும் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவக் களமிறங்கினார்கள். ஆனால், சினிமா பிரபலங்கள் சிலரும் வெள்ளத்தினால் கோடிக்கணக்கில் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இசையமைப்பார்கள் ஜி.வி.பிரகாஷும் ஹாரீஸ் ஜெயராஜும் அந்தப் பட்டியலில் அடக்கம்.

http://img.vikatan.com/cinema/2016/01/05/images/santhanam.jpg‘‘வீட்டுக்குள்ள தண்ணி புகுந்தாகூட பரவாயில்லை; காருக்குள்ள தண்ணி புகுந்துடுச்சே!’’ என்று புலம்பி வருகிறார்கள் இருவரும். இருவரிடமும் கோடிகள் மதிப்புள்ள ஹம்மர், ஜாகுவார், பிஎம்டபிள்யூ, மினிகூப்பர் மற்றும் லம்போகினி போன்ற கார்கள் இருக்கின்றன. டிசம்பர் வெள்ளம், இவர்களின் காஸ்ட்லி கார்களுக்குள்ளும் புகுந்து, மிதக்க ஆரம்பித்து விட்டன.

http://img.vikatan.com/cinema/2016/01/05/images/Harish.jpgவெள்ளம் வடிந்து ஒரு மாதம் ஆனாலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இன்னும் பாதிக்கப்பட்ட கார்கள் என்ட்ரி ஆகிக் கொண்டே இருக்கின்றன. இதுவரை சென்னையில் இருந்து மட்டும் ஒரு லட்சம் கார்களுக்கு மேல் இன்ஷூரன்ஸ் க்ளெய்முக்காக, ஸ்டார்ட் ஆகாமல் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே விழி பிதுங்கிய நிலையில் இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், காஸ்ட்லி கார்களைக் கண்டுகொள்ளாமலே இருந்து வருகின்றனவாம். இதனால், இன்ஷூரன்ஸுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள் செலிபிரிட்டிகள். இதில் சந்தானமும் ரேஞ்ச்ரோவர் காரும் அடக்கம்!

- VIKATAN

balaajee
6th January 2016, 09:46 AM
karthik subbaraj ‏@karthiksubbaraj (https://twitter.com/karthiksubbaraj) 3m3 minutes ago (https://twitter.com/karthiksubbaraj/status/684588101272915974) #Iraivi (https://twitter.com/hashtag/Iraivi?src=hash) title first look will be unveiled at 10 am today :)

mexicomeat
6th January 2016, 03:49 PM
santosh narayanan was born in 1983 (according to wikipedia). how can he have such a big daughter?

https://www.youtube.com/watch?v=5hnhqaYOR8w

balaajee
7th January 2016, 04:54 PM
'பசங்க - 2 வெற்றி'- பாண்டிராஜுக்கு சூர்யா கார் பரிசளிப்பு - TAMIL HINDU

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02686/CSi57KDUkAAoPrX_2686700f.jpg


’பசங்க 2’ படத்தின் வெற்றியைப் பகிர்ந்துகொள்ளும் விதமான
பாண்டிராஜுக்கு சூர்யா கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால், பிந்து மாதவி,
முனீஸ்காந்த், கார்த்திகுமார் உட்பட குழந்தைகள் நடிப்பில் வெளியான படம் 'பசங்க 2'.


குழந்தைகளை மையமாகக் கொண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும்,
வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் விதமாக சூர்யா,
இயக்குநர் பாண்டிராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.

இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரிக்கும் போது நெகிழ்ச்சியான
சம்பவங்களை அடுக்கினர்.

''சூர்யாவுக்கு இந்தப் படம் நிறைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்
பெற்றுத் தந்திருக்கிறது. அதைவிட அவர் அப்பா சிவகுமார் படம் பார்த்து
கண்கலங்கிவிட்டார். அம்மா படம் முடிந்து எழுந்து நின்று கை தட்டினார்.

பொதுவாக சூர்யா அம்மா இந்த அளவுக்கு வேறு எந்தப் படத்தைப் பார்த்தும்
நெகிழ்ந்ததில்லை. அதனால், அப்பா, அம்மாவை நடிகனாக திருப்திப்படுத்திய மகிழ்ச்சியைப்
பகிர்ந்துகொள்ள இயக்குநர் பாண்டிராஜுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார்.


படம் பார்த்த ஜோதிகாவும் இப்படத்தை மிஸ் செய்ததற்காக
வருத்தப்பட்டார்'' என்று சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

balaajee
9th January 2016, 04:32 PM
karthik subbaraj ‏@karthiksubbaraj (https://twitter.com/karthiksubbaraj) 13m13 minutes ago (https://twitter.com/karthiksubbaraj/status/685774646508044288) Thank you all for giving sema super response to #Iraivi (https://twitter.com/hashtag/Iraivi?src=hash) teaser https://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.pnghttps://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.png https://youtu.be/LmiaxIxDrFQ (https://t.co/iXpaIQh0VC)
https://pbs.twimg.com/media/CYRcZ-kUEAU6GEI.jpg

balaajee
9th January 2016, 04:41 PM
no-tickets-required-for-children-below-10-years-to-watch-pasanga-2

(https://t.co/hjdbUBXn0t) https://pbs.twimg.com/media/CYQ3yN2UQAADqdo.jpg

balaajee
11th January 2016, 02:17 PM
முடிவடைந்தது 'வெற்றிவேல்' படப்பிடிப்பு
வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த 'வெற்றிவேல்' படத்தின்
படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது.

சசிகுமார் நடிப்பில் ஜனவரி 14ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'தாரை
தப்பட்டை'. பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை சசிகுமார்
தயாரித்திருக்கிறார். ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்ட போது
சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. 'வெற்றிவேல்'
என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மியா ஜார்ஜ், பிரபு, தம்பி ராமையா
உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் வசந்தமணி இயக்கி
இருக்கிறார். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து
வருகிறார்.

தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக
முடித்திருக்கிறார்கள். 'தாரை தப்பட்டை' படத்தின் வெளியீட்டு பணிகள் முடிந்தவுடன்
இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட
இருக்கிறார்கள்.

'சுந்தரபாண்டியன்' பாணியிலான அனைத்து தரப்பினரையும் கவரும் கதை
'வெற்றிவேல்' என்கிறது படக்குழு.

balaajee
13th January 2016, 03:29 PM
Anirudh Ravichander ‏@anirudhofficial (https://twitter.com/anirudhofficial) Jan 12 (https://twitter.com/anirudhofficial/status/686812847360192513) https://pbs.twimg.com/media/CYgMnunUwAAI4W_.jpg

balaajee
13th January 2016, 09:52 PM
Winners List of 13th Chennai International Film Festival
https://pbs.twimg.com/media/CYm75EYUMAAE62b.jpg

balaajee
13th January 2016, 09:53 PM
Actress Nayanthara won Amitabh Bachchan Award @ 13th Chennai International Film Festival
https://pbs.twimg.com/media/CYm53rfU0AIIDvW.jpg

balaajee
21st January 2016, 11:27 AM
சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி - விஷ்ணு


http://tamil.thehindu.com/multimedia/dynamic/02703/CZJC70zUkAAvboJ_2703244f.jpg

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், மஞ்சிமா
மோகன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.


'கெத்து' படத்தை அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் 'மனிதன்' படத்தில்
நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் உள்ளிட்ட
பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

'மனிதன்' படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு
தேதிகள் ஒதுக்கினார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தில் உதயநிதி உடன் யாரெல்லாம் நடிக்க
இருக்கிறார்கள் என்பதற்கான தேர்வு நடைபெற்று வந்தது.

தற்போது அப்படத்தில் உதயநிதிக்கு நண்பராக விஷ்ணுவிஷால், நாயகியாக
மஞ்சிமா மோகன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று
காலை நடைபெற்றது. படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் துவங்கும் என்று
தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

balaajee
21st January 2016, 02:23 PM
'அரண்மனை 2'-க்கு 'யு' சான்றிதழ்: ஜன. 29-ல் படம் ரிலீஸ்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02675/aranmanai22_2675033f.jpg


'அரண்மனை 2' படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து
ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா
உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அரண்மனை 2'. குஷ்பு
தயாரித்திருக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி
இசையமைத்திருக்கும் இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்
கைப்பற்றி இருக்கிறது.

பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இப்படம், கிராபிக்ஸ் பணிகள்
முழுமைபெறாத காரணத்தால் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததைத் தொடர்ந்து படத்தை
சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். 'யு' சான்றிதழ்
வழங்கியிருக்கிறது சென்சார் குழு.

அதனைத் தொடர்ந்து இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என்று தனது
ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார் தயாரிப்பாளர் குஷ்பு.

balaajee
21st January 2016, 02:28 PM
சென்னையில் 'ப்ரேமம்' படத்துக்கு வரவேற்பு: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நெகிழ்ச்சிப் பதிவு
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02704/premam_2704571f.jpg


சென்னையில் 'ப்ரேமம்' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால்
மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்ட
பலர் நடிப்பில் வெளியான மலையாள படம் 'ப்ரேமம்'. ஓர் இளைஞனின் வாழ்வில் பல்வேறு
கட்டங்களில் வரும் காதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

இப்படம் மலையாளத் திரையுலகில் வசூல் சாதனையைப் படைத்தது. கடந்த மே
மாதம் வெளியான இந்தப் படம், இன்றும் சில அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு
வருகிறது. சென்னையிலும் ப்ரேமம் பல்வேறு திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக
ஓடியது.

சென்னையில் எஸ்கேப் திரையரங்கில் இப்போதும் இரவு நேரக் காட்சியாக
திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தின் 222 நாள் காட்சியில் நிவின் பாலி கலந்து
கொண்டு, ரசிகர்களோடு படத்தைக் கண்டு களித்தார்.

தான் உதவி இயக்குநராக வாய்ப்பு தேடிய சென்னையிலும் இப்படத்துக்கு
பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "சத்யம் சினிமாவில் 7 மாதம் 24 நாட்களாக ஓடிக்
கொண்டிருக்கிறது 'ப்ரேமம்'. ஜனவரி 22-ல் இருந்து மீண்டும் மாயாஜாலில் திரையாகிறது.
உங்கள் அன்புக்கு நன்றி சென்னைவாசிகளே." என்று நெகிழ்ச்சியுடன்
பகிர்ந்திருக்கிறார்.

balaajee
24th January 2016, 12:41 PM
@rajsekarpandian (https://twitter.com/rajsekarpandian)
https://pbs.twimg.com/media/CZbQo_EUYAAe74G.jpg

balaajee
25th January 2016, 12:57 PM
ஆஸ்கார் விருது பெறும் கோவை தமிழர்! - VIKATAN

கோவை நகரத்தைச் சேர்ந்த பொறியியலாளர் கோட்டலாங்கோ லியோன். இவர் இந்த ஆண்டிற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சாதனைக்கான ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்.
சினிமா துறையில் இந்த ஆண்டு பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டறிந்து பெரும் பங்காற்றியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசை, நடிப்பு ஆகியவற்றை கவுரவிக்க ஆஸ்கார் அவார்ட் விருதுகள் வழங்கப்படுகின்றன.

http://img.vikatan.com/cinema/2016/01/25/images/Oscar.jpgஅந்த வரிசையில் சினிமா துறையில் அறிவியல் , பொறியியல் தொழில்நுட்பம் போன்ற துறையிலும் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதுகள் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை தனது தாயகமாகக் கொண்ட கோவைக்காரரான இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாதனையை செய்ததற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னர்அறிவிக்கப்பட்ட போது இந்த தொழில்நுட்ப விருது, இந்தியாவை சேர்ந்த ராகுல் தாக்கர் என்பவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அவருடன் சேர்த்து நம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தேர்வு பெற்றுள்ளார்.அவர்தான் கோட்டலாங்கோ லியோன் ஆவார்.வெளிநாடு வாழ் இந்தியரான இவர் அமெரக்காவின் கலிபோர்னியா நகரத்தில் மனைவி,குழந்தைகள் என தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் " நான் வழக்கம்போல் எனது வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.இத்தகவல் எனக்குக் கிடைத்ததும் அடைந்த மகிழ்ச்சியை என்னால் அடக்க முடியவில்லை.இதற்காக என் மேல் அக்கறை கொண்ட எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் வெளிச்சம் விரும்பவில்லை.இருப்பினும் எனது மகிழ்ச்சியை தெரிவிக்கவே இந்த பதிவு".

என தனது மகிழ்ச்சி மற்றும் நன்றியை பகிர்ந்து உள்ளார்.அடுத்த மாதம் 13 ஆம் தேதி இந்த தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட உள்ளன.மற்றும் பல முக்கிய விருதுகள் அடுத்த 28 ஆம் நாள் வழங்கப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.

mexicomeat
25th January 2016, 05:04 PM
@balaji, anegan poster had more twists than this

balaajee
25th January 2016, 05:55 PM
மாடர்ன் டே மணிரத்னம்...பிரபல இயக்குநருக்கு எஸ்.ஜே.சூர்யா புகழாரம்!

எஸ்.ஜே.சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்து கூறியுள்ளார். பீட்சா, ஜிகர்தண்டா படங்களையடுத்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இறைவி படத்தை இயக்கி வருகிறார்.
சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்தப் படம் குறித்து எஸ்.ஜே,.சூர்யா பேசுகையில், எனது கேரக்டர் குறித்தோ படத்தின் கதை குறித்தோ இப்போது பேசுவது சரியல்ல.


http://img.vikatan.com/cinema/2016/01/25/images/sjsuryairaivi-23-1453541465.jpg

எனது கேரக்டர் குறித்து கார்த்திக் கூறுகையில், அந்தப் பாத்திரத்தை எழுதும் போதே என்னை மனதில் வைத்து தான் எழுதியதாகக் கூறினார், எனக்கு இதுதான் சந்தோஷம், ஒரு இயக்குநர் என்னை மனதில் வைத்து ஒரு கேரக்டரை உருவாக்கியது நடிகராக எனக்கு மகிழ்ச்சி.

கார்த்திக் சுப்புராஜ் என் வாழ்வில் புது நெருப்பை உருவாக்கிவிட்டார், அவரை நான் மாடர்ன் தின மணிரத்னம் என்றே சொல்வேன் என்று பெருமை பொங்கப் பேசுகிறார் எஸ்/ஜே.சூர்யா.