View Full Version : Karpu
P_R
21st August 2005, 05:59 PM
ஓரு வழியாக தமிழில் எழுதக் கற்றுக்கொண்டேன்.தமிழ் எழுதத் தெரிந்து கொண்ட ஒருவன் செய்யும் முதல் காரியம் என்ன: கதை எழுதுவது தான் !
P_R
21st August 2005, 06:02 PM
கற்பு
"ரியலி ? ஐ'ம் எ வெஜிடேரியன் டூ" என்று புன்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே கையை நீட்டினாள். சாண்ட்லியரின் மஞள் ஒளியில் இன்னும் வெள்ளையாகத் தெரிந்தது அவள் கை.
"டோன்'ட் ரஷ், இட்'ஸ் ஜஸ்ட் எ ஹாபிட்...நோ மொராலிடி நான்சென்ஸ்" என்றேன்.
பதிலிற்கு கை நீட்டாமல் ஸ்பூனைக் கொண்டு என் தட்டில் இருந்த அவித்த உருளையை கிளறுவது போல் பாசாங்கு செய்தேன்.ஆவளுக்கு முகமே விழுந்தது. மெதுவாக மஞ்சள் சிவப்பாக ஆரம்பித்தது. .
என்ன ஆச்சு எனக்கு ? அல்ப விஷயங்கள் கூட சந்தர்ப்பங்களாக மாறும் பொழுது அவற்றை புறக்கணிப்பது அசட்டுத்த்னமா கர்வமா ? கிழித்தது கர்வம். பார்ட்டிக்குப் பின் லண்டனின் இறவுக் குளிரில் வீட்டுக்குத் தனியாக நடை போடும் போது, 'சாதுர்யமான வாக்கியங்கள் எப்படி ஒரு இளைஞனின் இனிய வாழ்வை சாகடிக்கின்றன' என்று புஸ்தகம் எழுதலாம் என்று தோன்றியது.நல்ல வேளை, "வேருடன் பிடுஙப்படுவதால் நீ சாப்பிடும் காரட் கூடத் தான் சாகடிக்கப் படுகிறது" என்ற தர்க்கத்தில் எல்லாம் இறங்கவில்லை.அதுவரை பரவாயில்லை.
ஆனால் அதுவெல்லாம் ஒரு முறை யாரோ என்னிடம் சொன்னது: எட்டாம் வகுப்பிலேயே சகலத்தைப் பற்றியும் திடமான கருத்துக்கள் கொண்டிருந்த நண்பன் ஹரிவேல். காலிப்ளவர் என்று சொல்லி சிக்கனை கொடுத்துவிட்டான் என்று தெரிந்ததும் (இன மானம் காக்க ?) மூக்கில் குத்தினேன். கடுமை எல்லாம் தணிந்த பின் அவன் சொன்னது தான் இந்த காரட் தத்துவம்.
சிக்கன் குமட்டவில்லை என்பதாலும், ஹரிவேலின் வாதம் தண்ணீர் நுழைய இயலாதபடி இறுக்கமாக இருந்தததாலும் சைவமாகவே தொடர அவசரமாகக் காரணங்கள் தேவைப்பட்டன. நாஸ்திகன் (உபயம்: ஹரிவேல்) ஜாதிக்காரணங்கள் சொல்ல முடியாது என்பதால் ஒரு பெரிய கதவு அடைபட்டது. காந்தியை படுத்திய ஆடு போல இல்லாமல், கோழி , தாளித்த தயிர்சாதத்துடன் சமர்த்தாக ஐக்கியமாகி என்னை மேலும் பிரச்சனைக்குள்ளாக்கியது.
புத்லிபாவுக்கு காந்தி செய்த சத்தியம் , வள்ளுவரின் புலால் மறுத்தல் என்றெல்லாம் போனால் எனக்கே சிரிப்பு வரும்.
யோசனை செயலை ஒத்திப்போடவல்லது என்பதால் காலம் போனதே தெரியவில்லை, அதாவது போன காலத்தை செயல்களால் அளவிடும் பட்சத்தில்.
ஆனால் புத்லிபா-சத்தியம் வாதம் மிக மிக வலுவானது. பல வருடமாகியும் விடை கிடைக்காததால் மிக அழுத்தமான ஞாபகமாக இது தங்கிவிட்டது. தன் தம்பிகளில் ஒருவர் சிகரெட் பிடிப்பது தெரிந்த நாள் முதல் அவருடன் பேச்சு வார்த்தை நிறுத்திக்கொண்ட என் அம்மாவுக்கு புத்லிபா உவமானம் பொறுந்தும் தான்.
"பேசாவிட்டால் போ, என் வாழ்க்கை ஒன்றும் நின்றுவிடவில்லை" என்று சொல்வது போல ஐ.டி.சி யின் வளர்ச்சிக்கு இன்றும் உதவும் அந்த மாமாவின் வலு எனக்கில்லை.
"தட்'ஸ் பிகாஸ் யோர் மாம் இஸ் யோர் பாங்கர்" என்று ,லண்டன் குளிருக்கு இதமாக பிராந்தி அருந்தும் ரூம்-மேட் சேஷாத்ரி கொச்சைப்படுத்துவான்.
"வீட்டுக்கு எப்பிடிடா தெரியும்" என்று வாதிட்டு சிக்கன் தானம் செய்ய முற்பட்ட பள்ளி நண்பர்களிடம் "ஆப்பிடிப் பாத்தா பல விஷயம் பண்ணலாம்டா" என்று சொல்லி,குற்ற உணர்வுடன் அவரவர் சமீப சரித்தரங்கள் அவரவர் மனதில் ஒட, சப்தமற்று கழியும் உணவு இடைவேளைகளை நடத்தி இருக்கிறேன்.
காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேன்டியது தான். பேய்க்குளிர், கர்வம் தான் துணை.
"நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை பல வருடம் கடை பிடிப்பது பெருமாயா ? கஷ்டமான வித்தை தான், இல்லேங்கல. பெருமையா ?" என்று சேஷாத்ரியின் கொடூரக் கேள்விகள் ஒரு வாழ்க்கைப் போரை சில்லரை ஆக்கும்.
எனக்கு தெரிந்த வரை கஷ்டமான வித்தைகளை செய்து காட்டித் தான் மதுரையில் இருந்து லன்டன் வரை வந்தது.அதில் எனக்கு பெருமை தான்.அம்மாவுக்கும் தான்.
நன்றாக நடுங்க ஆரம்பிட்து விட்டது எனக்கு. பசி வேறு. சைவம் மட்டுமே சாப்பிடுகிறவர்களுக்கு இந்த ஊர் பார்டிகளில் முட்டைகோஸ் தழைகளும் , கீரையும் தான் கதி.
அதனால் முக்கால்வாசி 'டின்னர்'களுக்குப் பின் என் வீட்டருகே உள்ள இந்திய உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம்.இம்முறை சென்றதற்கு பிரதான காரணம் 'சென்ட்ரல் ஹீட்டிங்' தான். அந்த இதமான சூட்டில் உயிர் திரும்பியது போல் இருந்தது. 'மெனு'வை புரட்டினேன்.
ஒரு பக்கம் முழுவதும் சைவ வகைகள். வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால், புல் மேய்வதே சைவம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவளை கூட்டிவந்து அசத்தி இருக்கலாம். ஹும்.
அங்கு என்னை உபசரிக்கும் சர்தார்ஜி 'வெயிட்டர்' குசலம் விசாரித்தார் வாடிக்கையாக . "தி யூஷுவல் ஸர் ?" என்று கேட்டார்.அவரை நிமிர்ந்து பார்த்தேன். மறுப்பது போல் தலை ஆட்டினேன் " நோ, கெட் மீ அ சிக்கன் டிக்கா". சர்தார்ஜி பாதி ப்ரிடிஷ் பட்லர் என்பதால் அச்சர்யத்தில் விரிந்த கண்களை கட்டுப்படுத்திக்கொன்டார். " இட்'ஸ் க்லோசிங் டைம், வீ மே ஹாவ் ரன் அவுட் ஆப் ஸ்டாக். லெட் மீ செக் வித் த கிச்சென் என்று சொல்லி உள்ளே மறைந்தார்.
உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்.
pavalamani pragasam
21st August 2005, 06:38 PM
[tscii:218f348fe9]¦Ã¡õÀ ¾¡÷ò¾õ. ¿øÄ ¿¨¼ :D [/tscii:218f348fe9]
P_R
11th September 2005, 10:24 AM
[tscii:b24e125801]¦Ã¡õÀ ¾¡÷ò¾õ. ¿øÄ ¿¨¼ :D [/tscii:b24e125801]
[tscii:b24e125801]¿ýÈ¢. ¸¼ó¾ º¢Ä ¾¢Éí¸Ç¡¸ †ô Á¢¸ ¦ÁÐÅ¡¸ þÂí¸¢Â¾¡ø þó¾ ¾¡Á¾Á¡É ¿ýÈ¢[/tscii:b24e125801]
gragavan
22nd September 2005, 06:14 PM
[tscii:4693ebc43d]
«Õ¨Á À¢ÃÒáõ. Á¢¸ «Õ¨Á. ¯ñ¨Á¢§Ä§Â ¸ÕòÐûÇ º¢Ú¸¨¾. À¡Ã¡ðθû. þýÛõ ¿¢¨È ±ØÐí¸û.
«ýÒ¼ý,
§¸¡.þá¸Åý
[/tscii:4693ebc43d]
P_R
25th September 2005, 08:50 PM
[tscii:78ecaa77db]
«Õ¨Á À¢ÃÒáõ. Á¢¸ «Õ¨Á. ¯ñ¨Á¢§Ä§Â ¸ÕòÐûÇ º¢Ú¸¨¾. À¡Ã¡ðθû. þýÛõ ¿¢¨È ±ØÐí¸û.
«ýÒ¼ý,
§¸¡.þá¸Åý
[/tscii:78ecaa77db]
[tscii:78ecaa77db]¯í¸û °ì¸òÐìÌ Á¢ì¸ ¿ýÈ¢.[/tscii:78ecaa77db]
Shakthiprabha.
30th October 2005, 04:22 PM
Excellent! Classy!
Keep writing more. Perfect short story scene. :clap:
P_R
31st October 2005, 10:13 AM
Excellent! Classy!
Keep writing more. Perfect short story scene. :clap:
Thank You. Another story will be up in a few days from now.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.