PDA

View Full Version : Old Relay 2023



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10

pavalamani pragasam
20th July 2023, 04:51 PM
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே - உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு

NOV
20th July 2023, 08:04 PM
சித்தி சொல்லு சொல்லு
மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட

pavalamani pragasam
20th July 2023, 09:34 PM
எங்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா

வம்புக்கு இழுக்காதே

NOV
21st July 2023, 06:31 AM
தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

நந்தவனம் நனைஞ்சுபோச்சு இந்த மனம் கறஞ்சுப் போச்சு
தூண்டில் போட்டு என்னை இழுக்காதே
மாட்டிக்கொள்ள நானும் மீனல்ல
தொட்டுவிட்டா என்ன தப்பு சொல்லு
கட்டுப்பட்டு கொஞ்சம் தள்ளி நில்லு
மைனா எம்மைனா போனா துள்ளிப் போனா

pavalamani pragasam
21st July 2023, 07:51 AM
மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்

NOV
21st July 2023, 08:25 AM
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

pavalamani pragasam
21st July 2023, 12:20 PM
ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று
உருவாகுமா இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா

கல்வியா செல்வமா
வீரமா

NOV
21st July 2023, 02:41 PM
யாரது யாரது சிங்கமா
பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேனதன் சாரமா

pavalamani pragasam
21st July 2023, 03:26 PM
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம்

NOV
21st July 2023, 06:31 PM
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை

pavalamani pragasam
21st July 2023, 08:08 PM
நாளும் கிழமையும்
போட்டுக்க ஒரு நகைநட்டுண்டா
நேக்கு

எட்டுக்கல்லு
பேசரி போட்டா எடுப்பா
இருக்கும் மூக்கு

NOV
22nd July 2023, 07:10 AM
மொளச்சு மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் உலக அழகி மெடல

pavalamani pragasam
22nd July 2023, 08:06 AM
ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே

NOV
22nd July 2023, 08:58 AM
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

pavalamani pragasam
22nd July 2023, 11:46 AM
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை

NOV
22nd July 2023, 02:27 PM
பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ

pavalamani pragasam
22nd July 2023, 05:22 PM
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ நெஞ்சம் ஆலயம்

NOV
22nd July 2023, 07:39 PM
காம தேவன் ஆலயம் அதில்
காதல் தீபம் ஆயிரம்
இருவரின் தோளில்
மாலை இரவனில் ராஜ லீலை

pavalamani pragasam
22nd July 2023, 08:46 PM
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில்

priya32
23rd July 2023, 06:26 AM
வெண்நிற மேகம் வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தன காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா

NOV
23rd July 2023, 06:34 AM
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

priya32
23rd July 2023, 06:54 AM
இதழ் ஓரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட பாட
ஆயிரம் நிலவே வா

NOV
23rd July 2023, 07:19 AM
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே

pavalamani pragasam
23rd July 2023, 07:48 AM
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில் வந்த காதலியே

priya32
23rd July 2023, 07:59 AM
சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலனில்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலியே
தொடத்தொட இனி தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை

NOV
23rd July 2023, 08:28 AM
விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேலையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்

pavalamani pragasam
23rd July 2023, 10:07 AM
ஓ வந்தது பெண்ணா வானவில் தானா பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா காதலிலே என் மனதை

NOV
23rd July 2023, 11:43 AM
என் மனதை கொள்ளையடித்தவள
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விழும்

pavalamani pragasam
23rd July 2023, 01:18 PM
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும்

NOV
23rd July 2023, 03:44 PM
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை

pavalamani pragasam
23rd July 2023, 06:00 PM
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா தடா உனக்கு தடா
மேடை

NOV
24th July 2023, 06:39 AM
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

pavalamani pragasam
24th July 2023, 07:53 AM
முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத நம் உறவை ஊர்

NOV
24th July 2023, 08:50 AM
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா

pavalamani pragasam
24th July 2023, 10:18 AM
கண்களை தொலைத்து விட்டு.. கைகலால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்... கண் விழிப்பேன்..

ஹே ஹே சிநேகிதா
ஹே ஹே சிநேகிதா
ஹே ஹே சிநேகிதா

காற்றில் ஓர் வார்தை.. மிதந்து

NOV
24th July 2023, 10:51 AM
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்
காதலன் காதலி நாடகம் ஆடிடும் நாளெனான்று போனது இளமையிலே
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை

pavalamani pragasam
24th July 2023, 01:02 PM
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ

NOV
24th July 2023, 02:07 PM
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

pavalamani pragasam
24th July 2023, 03:59 PM
உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது

உள்ளத்தில் இருப்பதை
வார்த்தையில் மறைக்கும்
கபடம்

NOV
24th July 2023, 08:35 PM
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

pavalamani pragasam
24th July 2023, 09:25 PM
கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே

NOV
25th July 2023, 06:20 AM
போதை கணமே சிறகாகிடு நீ
நிஜமே நிஜமே நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்

pavalamani pragasam
25th July 2023, 08:39 AM
இனிமேல் எனக்கென்ன கவலை- என் இதயம் பார்ப்பது மகளை ! உறவே எனக்கு அவள் எல்லை

NOV
25th July 2023, 10:34 AM
வானம் எங்கள் எல்லை...எல்லை
ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை பிள்ளை

pavalamani pragasam
25th July 2023, 12:48 PM
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
கூந்தலில்

NOV
25th July 2023, 02:38 PM
பொண்டாட்டி ஒருத்தி வந்தா கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும்

pavalamani pragasam
25th July 2023, 05:07 PM
வானில் ஏணி போட்டு
ஹேய் கட்டு கொடி கட்டு..
சொர்க்கம் வந்ததென்று
ஹேய் தட்டு கை தட்டு..
மின்னல்

NOV
25th July 2023, 06:48 PM
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா

pavalamani pragasam
25th July 2023, 07:12 PM
சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா லேசா

ஊட்டி மலை ரோஜா ரோஜா
உன்னை பார்க்கலாமா

NOV
26th July 2023, 06:23 AM
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச் சொன்னால்

pavalamani pragasam
26th July 2023, 08:01 AM
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே

NOV
26th July 2023, 08:38 AM
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க சதுரிடு வா அமுதே

pavalamani pragasam
26th July 2023, 03:42 PM
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

NOV
26th July 2023, 07:23 PM
சக்கரை கட்டி ராஜாத்தி
என் மனசு வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக் கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்குவா சொல்லு மகராசி

pavalamani pragasam
26th July 2023, 09:02 PM
மக்களைப் பெற்ற மகராசிஈஈ
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி

ஒற்றுமை

NOV
27th July 2023, 06:31 AM
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

pavalamani pragasam
27th July 2023, 01:20 PM
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே

NOV
27th July 2023, 06:46 PM
அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே வான் நிலவு திரையே

pavalamani pragasam
27th July 2023, 09:07 PM
குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

நீ பேசும் நேரத்தில் கல்கண்டு

NOV
28th July 2023, 06:29 AM
மொளச்சு மூனு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா

சிரிப்பு கல்கண்டு உன் சினுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு

pavalamani pragasam
28th July 2023, 07:28 AM
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை

NOV
28th July 2023, 08:15 AM
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

pavalamani pragasam
28th July 2023, 10:00 AM
நீரிலே மூழ்கிடும்
வேதனை எனக்கும்
கடல் சேரும் நதியினிலே
கரை சேரும் படகு

NOV
28th July 2023, 10:41 AM
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே

pavalamani pragasam
28th July 2023, 01:32 PM
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்

NOV
28th July 2023, 05:03 PM
கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

pavalamani pragasam
28th July 2023, 08:40 PM
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

NOV
29th July 2023, 06:31 AM
என் உசுருக்குள்ள அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம்
என் மனசுக்குள்ள அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம்
கண்ணே கண்ணே என் heart'u பாடும் பாட்டு நீ அடி
கண்ணே கண்ணே என் சொத்து சுகம் மொத்தமும் நீ அடி

pavalamani pragasam
29th July 2023, 07:42 AM
ஹலோ டாக்டர்
ஹார்ட் திருட்டாச்சே
பல்ஸ பாத்தா பாஸ்டு
பீட் ஆச்சே

கேட்பரிஸ் கசக்குதே
காலேஜ்

NOV
29th July 2023, 08:01 AM
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதான் பிஏ படிப்பு பென்சு தொடைக்குதாம்

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

pavalamani pragasam
29th July 2023, 11:10 AM
எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்கமாகி போச்சு கணக்கு

NOV
29th July 2023, 02:14 PM
கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
நீ நினைப்பாய் ஒன்று அட

pavalamani pragasam
29th July 2023, 05:24 PM
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல்

NOV
29th July 2023, 08:39 PM
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன்

pavalamani pragasam
29th July 2023, 10:30 PM
ஒரு வண்ணது பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல்

NOV
30th July 2023, 06:43 AM
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

pavalamani pragasam
30th July 2023, 02:05 PM
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு
ஆவணித் திங்கள்

NOV
31st July 2023, 06:10 AM
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா

pavalamani pragasam
31st July 2023, 07:30 AM
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் அவனிடம் சொன்னேன்

NOV
31st July 2023, 08:20 AM
Once a pappa met a mamma in a little tourist bus
என்னடி பாப்பா சொன்னது டூப்பா கன்னம் சிவந்தது what is this
My dear pappa thalaiyil topa what about the hair oil
Evening beauty என்னடி duty meet me in the boat mail

pavalamani pragasam
31st July 2023, 10:20 AM
மீச பியூட்டி…
இவன் தில்லாலங்கடி பார்ட்டி…
நாட்டி லூட்டி…
இவன் அல்வா

NOV
31st July 2023, 01:56 PM
திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா
திருப்பதிக்கே
லட்டு

pavalamani pragasam
31st July 2023, 04:30 PM
பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு

நாளும் கிழமையும் போட்டுக்க

ஒரு நகைநட்டுண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகைநட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரி போட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு

NOV
31st July 2023, 04:59 PM
மொளச்சு மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய்

pavalamani pragasam
31st July 2023, 09:10 PM
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை

NOV
1st August 2023, 06:26 AM
மாலை சூட வந்த மங்கை அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர்ப் போன்ற உன் கை அதில் அள்ளிக் கொடுத்தாள் என் பங்கை

pavalamani pragasam
1st August 2023, 03:46 PM
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம்

NOV
1st August 2023, 08:07 PM
போடா உலகமெல்லாம் வெறும் வேஷம்
காசு பணத்துக்கு தான் இங்கு பாசம்

pavalamani pragasam
1st August 2023, 10:51 PM
சிறு சிட்டிகை பாசம் பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர
மழைத்தரியா உள்ளம் பிசுபிசுப்பை பேண
எதர்க்கடி திண்டாட்டம்

NOV
2nd August 2023, 06:14 AM
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும்
திண்டாட்டம் திண்டாட்டம் திண்டாட்டம்
சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்

pavalamani pragasam
2nd August 2023, 07:47 AM
அடுத்தாத்து
சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி

NOV
2nd August 2023, 11:12 AM
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதி பாதி
கழகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதெ மதி மயங்காதே

pavalamani pragasam
2nd August 2023, 01:09 PM
முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள்

NOV
2nd August 2023, 03:53 PM
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே

pavalamani pragasam
2nd August 2023, 07:38 PM
மிதமிதம்மா
வாட் ஆ டேப் மேல பாயுதே
தலை காலு புரியாம
வாய்

NOV
3rd August 2023, 06:27 AM
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்

pavalamani pragasam
3rd August 2023, 07:05 AM
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள்

NOV
3rd August 2023, 09:26 AM
பூமாலையே தோள் சேர வா
ஏங்கியது இளைய மனது இணையும் பொழுது
பூஜை மணி யோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

pavalamani pragasam
3rd August 2023, 10:08 AM
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ ...
பாஞ்சாலி

NOV
3rd August 2023, 11:34 AM
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்

pavalamani pragasam
3rd August 2023, 02:02 PM
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான் கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு

NOV
3rd August 2023, 03:29 PM
Thani paadal illaiyo?

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து

pavalamani pragasam
3rd August 2023, 07:04 PM
Sorry!

கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம்

NOV
4th August 2023, 06:20 AM
உன்னை பார்த்ததும் ஊரைவிட்டு ஆங்கிலம் ஓடி போனதென்ன
Sealight செம்மொழி செந்தமிழ்தான் என் மொழி என்றே ஆனதென்ன

நங்காய் நிலாவின் தங்கை மங்கை நீதானே செங்கை
பாவ்வாய் என் தோழி ஆவாய் பூவாய் நிற்காதே தீவாய்

pavalamani pragasam
4th August 2023, 10:19 AM
தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை

NOV
4th August 2023, 11:44 AM
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள்

pavalamani pragasam
4th August 2023, 01:10 PM
கண்ணாடி
இவள் பார்த்தால்
கவிதை என்று
சொல்லும் வேறாரும்
பார்க்கும் முன்னே
கண்ணை மூடி கொள்ளும்

ஒரு கோடி
பூக்கள் கொய்து
அதில் தேனை
ஊற்றி

NOV
4th August 2023, 03:30 PM
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே
கள்ளம்

pavalamani pragasam
4th August 2023, 07:24 PM
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

NOV
4th August 2023, 08:50 PM
Taxi taxi...
என் தவறை நீ மறைத்தாய் எனக்காய் அர்ச்சனை

pavalamani pragasam
5th August 2023, 07:49 AM
என் பேரை சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
ரயில் நிலையத்திலே என்னை வலை அனுப்பி
ஜன்னல் ஓரம்

NOV
5th August 2023, 08:32 AM
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

pavalamani pragasam
5th August 2023, 10:28 AM
துளசிச்செடிய அரளிப்பூவு
தூரமாதான் பாக்கனும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா
என்னென்னவோ கேக்கனும்

ஓ பட்டப்பகல் வெட்ட வெயில்

NOV
5th August 2023, 11:09 AM
நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி

pavalamani pragasam
5th August 2023, 03:38 PM
ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது
இறக்கை முளைக்கிறது
இதயம்

NOV
5th August 2023, 06:56 PM
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம்

pavalamani pragasam
6th August 2023, 10:12 AM
பூஜ்யத்துக்குள்ளே ஒரு

ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

NOV
6th August 2023, 05:35 PM
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்

pavalamani pragasam
6th August 2023, 08:19 PM
மோகம் கொண்ட போதும்.தாகம் வந்த போதும்.ஆண்மை தானே காவல்

NOV
7th August 2023, 06:53 AM
உடலுக்கு உயிர் காவல் உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை

pavalamani pragasam
7th August 2023, 08:43 AM
அன்பென்றாலே அம்மா என் தாய்
போல் ஆகிடுமா

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி

NOV
7th August 2023, 11:36 AM
வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்

pavalamani pragasam
7th August 2023, 12:37 PM
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம்
சிறு துன்பம்

NOV
7th August 2023, 03:38 PM
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே

pavalamani pragasam
7th August 2023, 03:48 PM
இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

நான் ஆராரோ

NOV
7th August 2023, 06:02 PM
பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ
வாராமல் வந்த செல்வம் வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூ

pavalamani pragasam
7th August 2023, 06:24 PM
தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது அது காமன்

NOV
7th August 2023, 07:35 PM
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

pavalamani pragasam
7th August 2023, 09:12 PM
கும்பகோணமே கோணம்
இந்த குமரி சொன்னதே வேதம்
அடி ராமர் விட்டதே பாணம்
இந்த மாமனுக்கு எங்கே

NOV
8th August 2023, 06:39 AM
மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ தளிருடல் தொடலாமோ

pavalamani pragasam
8th August 2023, 07:42 AM
காத்து குளிர் காத்து என்ன தாக்குது குறி

NOV
8th August 2023, 08:10 AM
வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்

pavalamani pragasam
8th August 2023, 01:35 PM
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை

NOV
8th August 2023, 04:38 PM
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன்

pavalamani pragasam
8th August 2023, 06:09 PM
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள

NOV
8th August 2023, 07:15 PM
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது

pavalamani pragasam
8th August 2023, 09:25 PM
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ என்ன ஜாலமோ ராத்திரி நடு ராத்திரி
இரு உள்ளம் பொங்கும் வெள்ளம்

NOV
9th August 2023, 06:13 AM
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு ஏனிந்த சிரிப்பு

pavalamani pragasam
9th August 2023, 07:30 AM
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகனவே உனையே
பார்த்தேன் கண்ணேய்

புதை மணலில்

NOV
9th August 2023, 08:01 AM
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

pavalamani pragasam
9th August 2023, 10:04 AM
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம்

NOV
9th August 2023, 12:19 PM
உனைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம் உனக்கே உச்சம் உச்சம்

pavalamani pragasam
9th August 2023, 12:39 PM
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

NOV
9th August 2023, 02:41 PM
மச்சமே நுவ்வையா அச்சமே லேதையா
இச்சமே நேனையா மிச்சம் ஏமையா

வா நூ காவலையா நூ காவலையா
ரா ரா ரா ரா ரா

pavalamani pragasam
9th August 2023, 03:33 PM
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு

NOV
9th August 2023, 06:28 PM
சன்த்ரமதியை காட்டில் விட்டு பாட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா

கேட்டுக்கோடீ உருமி மேளம்

pavalamani pragasam
9th August 2023, 09:26 PM
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்

NOV
10th August 2023, 06:47 AM
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம் என்ன கல்யாணமடி கல்யாணம்

pavalamani pragasam
10th August 2023, 07:55 AM
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது

NOV
10th August 2023, 10:01 AM
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க

pavalamani pragasam
10th August 2023, 01:21 PM
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு

NOV
10th August 2023, 04:46 PM
ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு

pavalamani pragasam
10th August 2023, 06:41 PM
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி

NOV
10th August 2023, 08:01 PM
முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப்

pavalamani pragasam
11th August 2023, 01:42 PM
நான் செக்க செவந்த சுந்தரி…
சேர நாட்டு முந்திரி…
எக்கசக்க ரசிகரோட…
மனிசில் நிக்கும் மந்திரி

NOV
11th August 2023, 09:03 PM
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதி பிரிவுமில்லை

pavalamani pragasam
11th August 2023, 09:57 PM
தன்னுயிர் பிரிவதை
பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதை
பார்த்து நின்றேன்

NOV
12th August 2023, 07:14 AM
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்

மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்

rajraj
12th August 2023, 08:07 AM
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்

I think it is ‘puLLinangaaL’. :)

pavalamani pragasam
12th August 2023, 09:12 PM
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்தை கேக்கலயே..
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே

NOV
13th August 2023, 05:15 AM
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே

pavalamani pragasam
13th August 2023, 10:34 AM
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..



என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி

NOV
13th August 2023, 03:09 PM
கண்ணுக்குள்ள மின்னும் மையி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி

pavalamani pragasam
13th August 2023, 05:49 PM
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண்ணழகு

NOV
13th August 2023, 07:40 PM
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று

pavalamani pragasam
14th August 2023, 07:26 AM
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை

NOV
14th August 2023, 10:00 AM
ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே
என் காதலி யார் என்று நான் காற்றில் அலைந்தேனே
ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே

pavalamani pragasam
14th August 2023, 02:31 PM
என் பே நீதான்னு…
ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்…
தள்ளி

NOV
14th August 2023, 06:23 PM
காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே

pavalamani pragasam
14th August 2023, 07:43 PM
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே

NOV
15th August 2023, 06:13 AM
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

pavalamani pragasam
15th August 2023, 07:25 AM
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை

NOV
15th August 2023, 07:58 AM
உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான்

pavalamani pragasam
15th August 2023, 10:32 AM
எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம்
விதைக்கிற கை எல்லாம் சேத்துலதான் முக்கனுமே சோத்துல கை வைக்க வரிசையிலே நிக்கனுமே

NOV
15th August 2023, 11:56 AM
உச்சத்துல கத்துறேனே நானும்
ஸ்ருதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்
என் வாழ்க்கையத்தான் காணம் இப்போ வந்துருச்சு ஞானம்

pavalamani pragasam
15th August 2023, 12:49 PM
என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக

மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக

சீர் செனத்தையோட
வந்து சீமையில

NOV
15th August 2023, 05:16 PM
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில
கல்யாணம்

pavalamani pragasam
15th August 2023, 05:38 PM
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

மாப்பிளைகள் செலவு செய்ய
மாமனார்த்தான் வரவு வைக்க
கல்யாணப் பந்தல்

NOV
15th August 2023, 07:46 PM
வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ
பதினாறும் பெற்று தலைவா நீயும்
பெருவாழ்வு காண

pavalamani pragasam
15th August 2023, 08:57 PM
ஊர் காணும் வண்ணம்
இனி நேர் காண மாட்டோம்
பூவோடு தூங்கும்
சிறு தேன்

NOV
16th August 2023, 06:31 AM
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா

pavalamani pragasam
16th August 2023, 07:35 AM
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம்

NOV
16th August 2023, 12:31 PM
ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி

pavalamani pragasam
16th August 2023, 12:46 PM
தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்

NOV
16th August 2023, 03:53 PM
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன்

pavalamani pragasam
16th August 2023, 04:51 PM
விஸ்வநாதன் வேலை
வேண்டும்

பொண்ணுங்க
பேச்சுக்கு புத்தியை
மாத்திக்கும் மூளை

NOV
16th August 2023, 06:28 PM
முந்தியிருந்தவங்க மூளை நிறைஞ்சவங்க
முடிவாய் போட்டு வச்சக் கணக்கு

pavalamani pragasam
16th August 2023, 09:20 PM
போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…
பல கிறுக்கு

NOV
17th August 2023, 06:25 AM
Tera tera tera byteடா காதல் இருக்கு
நீயும் bitட்டு bitட்டா bite பண்ணா ஏறும் கிறுக்கு
Insta gramத்தில வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்
அந்த Facebookக்கில் பிச்சிக்கிடும் like share தான்

Let's take a selfie புள்ள
Give me a உம்மா

pavalamani pragasam
17th August 2023, 07:23 AM
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு
இந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா

NOV
17th August 2023, 08:06 AM
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு
இந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா

பிச்சி?

pavalamani pragasam
17th August 2023, 10:08 AM
Oops! Becoming very dumb!!!

ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்
அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா
இவன் பித்துகுழி

NOV
17th August 2023, 11:14 AM
வெட்டி விட்டு போனா அவ வெட்டு கிளி போல
நானு இப்போ ஆனேனடா பித்துகுழி போல
கண்ட மீன பொரிச்சி வெச்சு
சென்னா குன்னி கொழம்பு வெச்சு
மாமா உனக்கு ஊட்டி விடவா

வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே
கண்ணாலே சொன்னாளே அவ காதல சொன்னாளே

pavalamani pragasam
17th August 2023, 06:32 PM
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில

NOV
18th August 2023, 06:17 AM
எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வைச்சோம்
எஜமான் அவர் சொல்லுக்கு தான்
நாங்க தினம் கட்டுப்பட்டோம்

pavalamani pragasam
18th August 2023, 07:49 AM
கட்டகம்பி தூக்கிகிட்டு…
கண்ட படி நான் திரிஞ்சேன்…
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால

NOV
18th August 2023, 08:29 AM
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால

pavalamani pragasam
18th August 2023, 10:17 AM
இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன்

NOV
18th August 2023, 03:06 PM
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத

pavalamani pragasam
18th August 2023, 04:59 PM
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

NOV
18th August 2023, 08:52 PM
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

priya32
19th August 2023, 07:08 AM
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு புதுமையை போலே
பூங்கொடி இடையாளே

NOV
19th August 2023, 07:13 AM
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ
உன்ன நெனச்சொன்னும் உருகள போடி
சோகத்தில் ஒண்ணும் வழக்கலத் தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

pavalamani pragasam
19th August 2023, 07:43 AM
உன் பின்னழகை காட்டி இந்த சின்ன பையனை வாட்டி

NOV
19th August 2023, 07:53 AM
கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மனவாட்டி

pavalamani pragasam
19th August 2023, 01:40 PM
ஈர வாடை காத்து வீசுது சூடு கொஞ்சம் ஏறும்போது ஆற வைக்குது. மின்னல் தேவதை

NOV
19th August 2023, 06:14 PM
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு

pavalamani pragasam
19th August 2023, 08:10 PM
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு
அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண்கிளி அதனிடம் ஆண்கிளி
இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே ...ஆருயிரே ...என் அத்தான்

NOV
20th August 2023, 06:15 AM
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

pavalamani pragasam
20th August 2023, 07:47 AM
மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

ஆளுக்கொரு பாதைடா
வாழ்க்கை

NOV
20th August 2023, 09:25 AM
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

பகுத்தறிவு

pavalamani pragasam
20th August 2023, 03:43 PM
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்து

NOV
20th August 2023, 08:47 PM
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மறக்க

pavalamani pragasam
21st August 2023, 07:31 AM
மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை

நினைக்கும் நிலையிலும் நான் இல்லை
உன்னை நெருங்கும்

NOV
21st August 2023, 10:54 AM
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

pavalamani pragasam
21st August 2023, 01:19 PM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்
வந்துவிடு
அலைகள்

NOV
21st August 2023, 06:11 PM
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை

pavalamani pragasam
21st August 2023, 09:49 PM
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை

NOV
22nd August 2023, 06:22 AM
இந்த காதல் இல்லையேல் இசை ஏன்
இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன்
இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால்
இந்த பூமி கோவிலே அக்காதல் தோன்றினால்

pavalamani pragasam
22nd August 2023, 07:30 AM
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்

NOV
22nd August 2023, 08:15 AM
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்

என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்

pavalamani pragasam
22nd August 2023, 10:12 AM
இனி பிரிவே இல்லை அன்பே, உன்
உளறலும் எனக்கு இசை

NOV
22nd August 2023, 11:15 AM
சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா இதயம் துடிப்பதே

pavalamani pragasam
22nd August 2023, 12:37 PM
மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே

NOV
22nd August 2023, 04:10 PM
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே

pavalamani pragasam
22nd August 2023, 05:43 PM
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக

NOV
22nd August 2023, 08:31 PM
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி

pavalamani pragasam
22nd August 2023, 09:58 PM
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!
பட்டுத் துகிலென லாமோ?-அதிற்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று

NOV
23rd August 2023, 06:19 AM
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

pavalamani pragasam
23rd August 2023, 07:13 AM
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை

NOV
23rd August 2023, 08:21 AM
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

pavalamani pragasam
23rd August 2023, 12:37 PM
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை

NOV
23rd August 2023, 03:20 PM
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா
Mommyயிடம் சொல்லிவிடுவாளா
சொல்லிவிட்டு வம்பில்

pavalamani pragasam
23rd August 2023, 03:24 PM
நாங்க வம்புச்சண்டக்கு
போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா
எங்க உறைய விட்டு
வாள்

NOV
23rd August 2023, 04:44 PM
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும்

pavalamani pragasam
23rd August 2023, 08:52 PM
ஆஹா என்பார்கள்
அடடா என்பார்கள்
அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி
அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

NOV
24th August 2023, 06:31 AM
நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீக் கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே

pavalamani pragasam
24th August 2023, 07:41 AM
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே

NOV
24th August 2023, 09:17 AM
கண்களும் கவி பாடுதே உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு

pavalamani pragasam
24th August 2023, 04:50 PM
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம்

NOV
25th August 2023, 06:27 AM
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது கன்னி கழிகின்றது

pavalamani pragasam
25th August 2023, 07:33 AM
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை

NOV
25th August 2023, 08:45 AM
இடை என்னும் கொடியாட நடமாடி வா
குழல் இசை கொஞ்சி விளையாட நீ ஆடி வா
தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா

pavalamani pragasam
25th August 2023, 12:17 PM
திங்கள் முடி சூடும் மலை தென்றல் விளையாடும் மலை பொங்கருவி வீழும் மலை

NOV
25th August 2023, 03:09 PM
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

pavalamani pragasam
25th August 2023, 06:39 PM
சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி

NOV
25th August 2023, 08:11 PM
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
என் சோட்டு செண்டுகளே

pavalamani pragasam
25th August 2023, 08:55 PM
ஆளான பொண்டுகளே அலங்கார செண்டுகளே
நம்மூரு வீரனுக்கு ஆலங்கா சுத்துங்கடி
வாடாத மல்லியப்பூ

NOV
26th August 2023, 06:25 AM
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

pavalamani pragasam
26th August 2023, 08:02 AM
கோயில் யானை காவல் இருக்கு கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு ஆசைதான் என்ன தூண்டுது ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது வாம்மா