PDA

View Full Version : Old Relay 2021



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13

priya32
12th November 2019, 06:46 AM
பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார சக்தி
ஆசை அடங்காதையா
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி

NOV
12th November 2019, 06:50 AM
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

priya32
12th November 2019, 07:04 AM
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச் சங்கம் பூங்குயில் பண்பாடுது

NOV
12th November 2019, 07:13 AM
பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

priya32
12th November 2019, 07:29 AM
கோடி கோடியாய் பெண் கூட்டம்
கடந்து போய் வரும் வீதியிலே
இதயம் உனக்கு முன்னால்
படுத்து மறியல் பண்ணுதே

NOV
12th November 2019, 07:36 AM
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் நின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
யார் யார் சிவம், நீ நான் சிவம்

priya32
12th November 2019, 07:41 AM
சத்யம் சிவம் சுந்தரம்
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

NOV
12th November 2019, 07:57 AM
கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை

raagadevan
12th November 2019, 02:40 PM
சின்னஞ் சிறு கூட்டுக்குள்ளே
சொர்க்கம் இருக்கு
அட சின்ன சின்ன அன்பில் தானே
ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு
பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை...

NOV
12th November 2019, 05:11 PM
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடி
நெஞ்சம் ஊஞ்சலாடுதே

Shakthiprabha
15th November 2019, 01:47 PM
தென்னங்கீற்று ஊஞ்சலிலே...தென்றலில் ஆடிடும் போதினிலே சிட்டுக் குருவி

NOV
15th November 2019, 05:08 PM
Shoot the குருவி shoot the குருவி
Sorry, it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my God damn குருவி
My போர்க்குருவி my God my
ஏ புள்ள நீ இல்லாம
மனசுல ரெண்டு நாளா நோவு
ஏன்டி

raagadevan
16th November 2019, 11:15 PM
அடி ஏன்டி புள்ளே
என் மனசுக்குள்ளே
நீ வீசிப் போற
ஓர் வானவில்லை...

rajraj
17th November 2019, 01:11 AM
pattu oNNu naan paadattumaa paal nilavai kettu
vaarthaiyile vaLaikkattumaa vaanavillai serthu

raagadevan
18th November 2019, 12:15 AM
உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க் கோடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக
நாமும் நடந்தால் என்ன
என் நெஞ்சில் தீயே...

rajraj
18th November 2019, 02:02 AM
thee thee thiththikkum thee
theeNda theeNda sivakkum

raagadevan
18th November 2019, 07:06 PM
தெற்கே பிறந்த கிளி செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ...

NOV
18th November 2019, 07:55 PM
இளம் நெஞ்சில், காதல் விதை தூவு
இல்லை எனில் நீ தன்னம் தனி தீவு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th November 2019, 02:33 AM
அந்தமானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்...

NOV
20th November 2019, 07:04 AM
நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூ வாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

தடுமாறிப் போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்

Shakthiprabha
21st November 2019, 09:32 PM
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா..அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா.....தினம் தினம் ஏன் கோபம்

NOV
21st November 2019, 09:40 PM
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்

Sent from my SM-G935F using Tapatalk

Shakthiprabha
21st November 2019, 09:52 PM
சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல் போனதேன்....சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்..மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் போவதேன்....மங்கையே உன் கண்கள்

rajraj
21st November 2019, 10:16 PM
kaNgaL reNdum vaNdu niram
Kannam rojaa cheNdu niram

raagadevan
21st November 2019, 11:13 PM
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ...

NOV
22nd November 2019, 07:00 AM
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி

raagadevan
22nd November 2019, 08:03 AM
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி...

NOV
22nd November 2019, 08:06 AM
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை

priya32
23rd November 2019, 08:31 AM
நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை
மெய்யா? பொய்யா? மெய்தான் ஐயா!
பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே

NOV
23rd November 2019, 08:43 AM
ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு
ஒரு காடு சிறு மேடு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
23rd November 2019, 09:09 AM
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு
ஓ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே அது நங்கையின் குணமே

NOV
23rd November 2019, 09:16 AM
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்

priya32
25th November 2019, 05:44 AM
நீ விஷயம் உள்ள ஆளு
அட உனக்கு ரொம்ப லொள்ளு
நீ போடும் ஆட்டம் தூளு
அட எங்க போச்சு வாலு

NOV
25th November 2019, 05:55 AM
வாலு செம வாலு விளையாடும் கத கேளு
ரீலு புது ரீலு இது ஓடும் பல நாலு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
25th November 2019, 06:05 AM
அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க

NOV
25th November 2019, 06:10 AM
இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே
அடியெடுத்து கொடுக்கும் இசைப் பாடலே
இனி அரங்கில்

priya32
25th November 2019, 06:12 AM
ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

NOV
25th November 2019, 06:22 AM
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில்

priya32
25th November 2019, 06:34 AM
ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை

NOV
25th November 2019, 06:42 AM
வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா

priya32
25th November 2019, 06:54 AM
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்பச் சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்துச் சொல்லும் காதல் தேவன்

NOV
25th November 2019, 07:02 AM
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்

priya32
25th November 2019, 07:09 AM
எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணில் ஓர் ஓவியம் நெஞ்சில் ஓர் ஞாபகம்

NOV
25th November 2019, 07:11 AM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே.

priya32
26th November 2019, 07:05 AM
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது

NOV
26th November 2019, 07:18 AM
தங்கச்சுரங்கம் போவது எந்தத் தட்டானைப் பார்க்க
சந்தனக் கிண்ணம் போவது எந்தக் கல்யாணம் பேச

priya32
26th November 2019, 07:26 AM
சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்

NOV
26th November 2019, 07:30 AM
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

priya32
26th November 2019, 07:37 AM
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண்பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கைபட பாடுகிறேன்

NOV
26th November 2019, 07:39 AM
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன்

priya32
26th November 2019, 07:58 AM
நாம் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெற வேண்டும்
ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை

NOV
26th November 2019, 08:00 AM
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா

priya32
26th November 2019, 08:05 AM
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசுர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

NOV
26th November 2019, 08:12 AM
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும்

raagadevan
28th November 2019, 07:50 AM
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்
செய்த தர்மம்...

NOV
28th November 2019, 08:04 AM
அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்

raagadevan
29th November 2019, 07:19 PM
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை
அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…

NOV
29th November 2019, 07:24 PM
காக்கி சட்ட போட்ட மச்சான் கழவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வெச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசே பத்த வெச்சான்
எங்க வீட்டு திண்ணையில இதுக்கு தான குத்தவெச்சான்

raagadevan
30th November 2019, 07:12 AM
காரை வீட்டு திண்ணையில
கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே
மஞ்சளை அரைக்கும் முன்னே
மனசை அரைச்சவளே
கரிசைக் காட்டு ஓடையிலே
கண்டாங்கி தொவைக்கையிலே...

NOV
30th November 2019, 07:32 AM
அடி போடி கள்ளி நீ தாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுர கட்டி கொல்லுரியே கொல்லுரியே

priya32
2nd December 2019, 04:00 AM
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில்
உயிரைக் குடிக்காதே

NOV
2nd December 2019, 05:07 AM
அலையே அலையே அழகால் என்னைக் குடிக்காதே
ஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
2nd December 2019, 05:17 AM
ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம்
அங்ஙன நிக்குறா ராசம்மா
யாருக்கும் சொல்லாம மாமனும் வாரான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா
இழுத்துக் கிண்டுன கேப்பக்களி போல
மனசு கிண்டுது தன்னால
அட இருட்டுக்குள்ளாற பேசுற சங்கதி
இங்ஙன வருது முன்னால

NOV
2nd December 2019, 05:20 AM
ஏ குட்டி முன்னால
நீ பின்னால நான் வந்தால
ஏதோ எம்மனசுதான் படப்படங்குது

Sent from my SM-G935F using Tapatalk

priya32
2nd December 2019, 05:28 AM
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பாத்தாயோ
இசை கேட்டாயோ

NOV
2nd December 2019, 06:01 AM
தந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
2nd December 2019, 06:11 AM
தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னைப் பின்னிக்கொண்டது
பின்னிக்கொண்ட பூங்கொடி தேனைத் தந்தது
தேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்தது
ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல

NOV
2nd December 2019, 06:15 AM
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
2nd December 2019, 06:19 AM
கள்ளூறப் பார்க்கும் பார்வை உள்ளூறப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே

NOV
2nd December 2019, 07:12 AM
செந்தூரா சேர்ந்தே செல்வோம்
செந்தூரா செங்காந்தள் பூ உன் தேரா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாய்யா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd December 2019, 07:10 PM
அடியே வனிதா எய்தாய் அம்பு
அடியே லலிதா செய்தாய் வம்பு
உலக நடப்ப பார்த்து
என்ன அதிலே சேர்த்து
தவறான கேள்விகள...

NOV
2nd December 2019, 07:23 PM
ஒரே கேள்வி உனைக் கேட்பேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

priya32
3rd December 2019, 07:50 AM
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே
கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா

ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை

NOV
3rd December 2019, 07:56 AM
ஏறாத போதை இன்றேறி விட்டதாலே
முன் பாராத பார்வை
நீ பார்ப்பதென்ன வேலை

priya32
3rd December 2019, 08:06 AM
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

NOV
3rd December 2019, 08:20 AM
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்

raagadevan
3rd December 2019, 01:50 PM
வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன...

NOV
3rd December 2019, 03:53 PM
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
காதல் மலர் கூட்டம்

Madhu Sree
4th December 2019, 12:01 PM
Kootathilae kovil pura
yaarai ingu theduthamma
kolusu satham ketkaiyilae manam
thanthi adikuthu thanthi adikuthu

NOV
4th December 2019, 06:09 PM
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே
கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு

Madhu Sree
6th December 2019, 02:27 AM
ithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii
Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii

eh attaku pattaku alaradikudhu
Police kaaran gypsy

NOV
6th December 2019, 06:17 AM
உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி
உலகம் என் புகழை பாடட்டுமே

raagadevan
6th December 2019, 06:31 PM
முத்துப் புகழ் படைத்து
மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலை மிகுத்த தாயகமே
கத்துங் கடல் மீது...

NOV
6th December 2019, 06:44 PM
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்

raagadevan
7th December 2019, 07:30 AM
தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும்
கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்...

NOV
7th December 2019, 07:51 AM
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ

உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும்


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
8th December 2019, 02:57 AM
நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது
மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடலிது கட்டி வந்த கனவிது
அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்...

NOV
8th December 2019, 06:15 AM
பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல்

priya32
9th December 2019, 05:52 AM
என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ

NOV
9th December 2019, 06:23 AM
ஜெயிச்ச தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு

ஒத்தகடை ஒத்தகடை மச்சான்
இவன் ஒத்த கண்ணை ஒருத்தி மேல வச்சான்
அவ பிச்சிகிட்டு பிச்சிகிட்டு போனா
இவன் பித்துக்குளி பித்துக்குளி ஆனான்

priya32
9th December 2019, 06:38 AM
ஒத்த மழைத்துளி பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பூக்கும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

NOV
9th December 2019, 06:41 AM
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்

priya32
9th December 2019, 06:50 AM
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் நித்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

NOV
9th December 2019, 06:56 AM
ஏற்றுக தீபம் போற்றுக தீபம்
வாழிய தீபம் கார்த்திகை தீபம்

Tomorrow is Kaarthigai Deepam!

priya32
9th December 2019, 07:08 AM
கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே

NOV
9th December 2019, 07:17 AM
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

raagadevan
9th December 2019, 10:10 AM
அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா
........................................

சஹாரா குளிர்கிறதே
டார்ஜிலிங் சுடுகிறதே...

NOV
9th December 2019, 10:14 AM
குற்றாலம் புடிக்கல கொடைகானல் புடிக்கல
கோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல
டார்லிங் உன்னை புடிக்குது
மனம் டாவடிக்க

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th December 2019, 08:25 AM
அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய் சிவக்க தந்தாலே
ஒரே போரானது அந்த காலேஜ் தான்
ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான்

NOV
14th December 2019, 08:29 AM
அடி கண்ணே தப்பா எண்ணாதே
வாய்சிவக்க தந்தாலே
ஒரே போரானது அந்த காலேஜ் தான்
ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான்
இன்ப சரித்திரம் படித்திட பரிட்சையை

Sent from my SM-G935F using Tapatalk

priya32
16th December 2019, 08:03 AM
காதல் எனும் பரீட்சை தானே
எழுத்திடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பெயரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்

NOV
16th December 2019, 08:07 AM
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா கண்ணா
ஆலாபனை*

Sent from my SM-G935F using Tapatalk

priya32
16th December 2019, 08:12 AM
ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தேகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு

NOV
16th December 2019, 08:15 AM
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
16th December 2019, 08:21 AM
கருமாரி கோயிலில
நீ நின்னு பாக்கையில
ஒரு மாறி ஆகுதடி அடியே

NOV
16th December 2019, 08:24 AM
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது
தூரல் ஏன் அடியே என் கனவைக் கலைக்கிறது
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்

Shakthiprabha
16th December 2019, 10:04 PM
kannaalE pesi pesi kollaadhE ... kaadhaale

raagadevan
16th December 2019, 10:18 PM
முன்பு ஒரு பயணத்தில்
விண்மீன் உறங்கும் நேரத்தில்
புடவை ஒன்றை பார்த்தேனே
தங்கப் புடவை ஒன்றை பார்த்தேனே
.................................................. .

புடவை வாங்கவும் காசில்லை
பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை
புடவைக்காரனை கொன்று விட்டு
கையில் எடுத்து வந்து விட்டேன்
காதல் நெஞ்சில் வந்து விட்டால்
காசும் பணமும் தேவை இல்லை...

raagadevan
16th December 2019, 10:23 PM
Shakthi, now we're even! :) My song is dismissed too!!!

Shakthiprabha
16th December 2019, 10:26 PM
lol....what a song rd!!! Spooky lyrics! haha

raagadevan
16th December 2019, 10:36 PM
kannaalE pesi pesi kollaadhE ... kaadhaale

காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ...

NOV
17th December 2019, 05:10 AM
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட

priya32
17th December 2019, 08:02 AM
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்

NOV
17th December 2019, 08:24 AM
காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

raagadevan
18th December 2019, 04:11 PM
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால் என்னாகும் என்று
நினைத்து தான் பாரு நெஞ்சத்தை கேளு
முள்ளில் ஆடும் பறவை நான் தானே...

NOV
18th December 2019, 05:07 PM
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம்

(சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே)

raagadevan
21st December 2019, 07:30 AM
உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்...

NOV
21st December 2019, 07:38 AM
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

raagadevan
22nd December 2019, 12:06 AM
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய்முகங்கள்...

NOV
22nd December 2019, 05:48 AM
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல்லே
நம்ம கண்ணே நம்மாலே நம்ப முடியல்லே

priya32
5th January 2020, 08:27 AM
ராசாவே உன்ன நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டிங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவ
இவ நெஞ்சோட வளர்த்தா
அது தப்பான கருத்தா

NOV
5th January 2020, 08:39 AM
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

priya32
5th January 2020, 09:00 AM
என் அன்பே நாளும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே

NOV
5th January 2020, 09:09 AM
ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே

priya32
5th January 2020, 09:43 AM
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
மாமனோட ஹேய்

NOV
5th January 2020, 09:48 AM
வாங்கனா வணக்கங்கனா my songக நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling-னா
ஹேய் ஆனனா உன்னனா ஓன் ஆல தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
6th January 2020, 07:44 AM
தேவதாஸ் கதைய போல என் கதையாச்சு
ஒரு தேரை போல எனது வாழ்க்கை தெருவில் நின்னாச்சு

NOV
6th January 2020, 07:55 AM
தெற்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி

priya32
12th January 2020, 11:40 PM
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

rajraj
13th January 2020, 05:44 AM
aasai koLLum meesai uLLa aambaLaiya paarthiyaa
adaiyaaLam sollammaa
avardhaanunga aththai......

thamiz
15th January 2020, 03:05 AM
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா

NOV
15th January 2020, 03:39 AM
நான் காதல் செய்ய போறேன் கண்ண மூடு கையாலே
உன்னை தூக்கி கொஞ்ச போறேன் கையை தூக்கு நீ மேலே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
19th January 2020, 08:27 AM
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா

rajraj
19th January 2020, 08:33 AM
maamaa piLLai maappiLLai maalai ittaan thoppile
saadhi sanam paarkkalai thadai irundhum ketkalai...........

priya32
19th January 2020, 08:50 AM
காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்

NOV
19th January 2020, 08:54 AM
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்

priya32
19th January 2020, 09:05 AM
இன்பம் கட்டிலா?
அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ?
ஊடலா? கூடலா ?
அவள் மீட்டும் பண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

NOV
19th January 2020, 09:08 AM
வாழ்க்கையில் வெல்லவே Take it easy policy
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு fantasy
ஊர்வசி ஊர்வசி Take it easy ஊர்வசி

priya32
21st January 2020, 05:28 AM
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓர் அழகைக் கண்டதில்லையே
காவியத்தில் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி

NOV
21st January 2020, 05:33 AM
மேலாடை மாங்கனி
அசைந்தாடும் வேளையில்
பல கோடிகள் ஆசையே வந்து
மோதுதே

Shakthiprabha
16th February 2020, 05:21 PM
ஒரு கல், ஒரு கண்ணாடி...
உடையாமல் மோதிக் கொண்டால்
ஒரு சொல், சில மௌனங்கள்

NOV
16th February 2020, 06:39 PM
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மண மாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி

priya32
24th February 2020, 06:18 AM
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

NOV
24th February 2020, 06:24 AM
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா

nboqawekumec
17th April 2020, 09:14 PM
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மந்திரம் இது மந்திரம்

NOV
18th April 2020, 08:49 AM
நாராயண மந்திரம்
அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்

priya32
2nd June 2020, 08:50 PM
வேணாம் பொன்னி
இந்த காதல் ரொம்ப தொல்ல
பொன்னி அருள் சொன்னா
அந்த வாக்கு பலிக்கும் கேளு

raagadevan
3rd June 2020, 03:14 AM
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு...

priya32
3rd June 2020, 04:41 AM
ஒல்லிக்குச்சி உடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் பிட்டுபிட்டா
ஏ கானாங்குளத்து மீனே

NOV
3rd June 2020, 05:25 AM
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

Sent from my SM-N770F using Tapatalk

priya32
3rd June 2020, 06:03 AM
குத்து விளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே

NOV
3rd June 2020, 06:05 AM
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமை போல
கானம்

Sent from my SM-N770F using Tapatalk

priya32
3rd June 2020, 06:11 AM
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன்
கானம்...கானம் ஜீவ கானம் பிறக்காதோ
இங்கே ஏழிசை கீதமே

NOV
3rd June 2020, 06:14 AM
என் காதல் கீதமே சொல்லு
ஒரு வார்த்தை ஒரு பார்வை பார்த்திடு

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
3rd June 2020, 07:24 AM
ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்
முதல் முறை உனைக்
கண்ட நொடியினில் வாழ்கிறேன்
அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்...

NOV
3rd June 2020, 07:26 AM
எண்ணி எண்ணி உள்ளம் ஏங்கினேன்
அந்த எண்ணத்தாலே கண்ணும் தூங்கிலேன்*

Sent from my SM-N770F using Tapatalk

priya32
3rd June 2020, 08:16 AM
வெண்ணிலவே உனைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக்கவிதைகள்

NOV
3rd June 2020, 08:19 AM
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

Sent from my SM-N770F using Tapatalk

priya32
4th June 2020, 12:26 AM
பூங்கோதை மௌனம்தான் பரிபாஷையோ
புரியாத ஜாடை என்ன மரியாதையோ
துடிப்பிலே பிள்ளைதானோ தோகையின் bhaavamO

raagadevan
4th June 2020, 04:51 AM
பாட்டும் நானே பாவமும் [bhaavamum] நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
...............................................

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம்...

NOV
4th June 2020, 10:20 AM
ஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம்
நாம் கண்டோம் புதிய இயக்கம்
இது கண்ணீர் துளியை ஒழிக்கும்
நாம் காணும் கனவு பலிக்கும்


Sent from my SM-G935F using Tapatalk

priya32
6th June 2020, 07:02 PM
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
நினைச்சது பலிச்சதம்மா எனக்கது கிடைச்சதம்மா
என்னம்மா சொல்லமா கண்ணம்மா கையத்தொட்டு

NOV
6th June 2020, 07:04 PM
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

Sent from my SM-N770F using Tapatalk

priya32
6th June 2020, 07:18 PM
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

NOV
6th June 2020, 07:26 PM
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும்

Sent from my SM-N770F using Tapatalk

priya32
6th June 2020, 07:33 PM
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேர வேண்டும்

NOV
6th June 2020, 07:40 PM
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை

Sent from my SM-N770F using Tapatalk

priya32
6th June 2020, 07:46 PM
உரிமை இழந்தோம் உடைமையை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா

NOV
6th June 2020, 07:51 PM
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க

Sent from my SM-N770F using Tapatalk

priya32
6th June 2020, 07:57 PM
சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ

NOV
6th June 2020, 08:02 PM
பச்சை மரம் ஒன்று
இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க

Sent from my SM-N770F using Tapatalk

priya32
6th June 2020, 08:14 PM
நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது

NOV
6th June 2020, 08:19 PM
தாகம் தீர்ந்ததடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே

Sent from my SM-N770F using Tapatalk

priya32
7th June 2020, 06:09 AM
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்

NOV
7th June 2020, 06:12 AM
அச்சம் என்னை நெருங்காது
ஆளைக் கண்டு மயங்காது

Sent from my SM-N770F using Tapatalk

priya32
7th June 2020, 06:41 AM
தெனமும் சிரிச்சி மயக்கி
என் மனச கெடுத்த சிறுக்கி
கனவ தடுத்து நிறுத்தி
அவ கனிஞ்சு வெடிச்ச பருத்தி

NOV
7th June 2020, 06:43 AM
வெடிச்சி நிக்கிற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

Sent from my SM-N770F using Tapatalk

priya32
7th June 2020, 06:57 AM
நந்தவனம் பூத்திருக்குது
அடி அம்மாடி வண்டு வந்து
ஆடிப் பாடத்தான்

NOV
7th June 2020, 06:58 AM
பூந்தென்றல் இசை பாட
புகழ் பாணர் கவி பாட
சான்றோர்கள் மடி தன்னில்
விளையாடும் தமிழ் வாழ்க

raagadevan
7th June 2020, 10:16 AM
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க

பூவுலகின் லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம்...

NOV
7th June 2020, 10:20 AM
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
8th June 2020, 07:43 AM
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம்...

NOV
8th June 2020, 07:45 AM
மேகங்கள் எங்கே போனாலும்
பூமிக்கு ஒன்றே ஆகாயம்
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
நாடோடி மன்னா… போகாதே
நீரின்றி மீனும


Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
8th June 2020, 08:04 AM
வலைக்கு தப்பிய மீனு... மாமு
ஓலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்றல்லவோ
அந்த ஞானம்...

https://www.youtube.com/watch?v=15_kVPHwr5E

rajraj
8th June 2020, 08:12 AM
dhesam gnaanam kalvi eesan poosai ellaam
kaasu.........

raagadevan
8th June 2020, 10:03 PM
யம்மா உனக்கும் வேணும்
எனக்கும் வேணும்
கட்டு கட்டா காசு வேணும்
டப்பு மாலு துட்டுக்கு தானே
டெய்லி நம்ம திரியிறோமே

கட்டிலுக்கும் தொட்டிலுக்கும்
காசு வேணும்
காலேஜ்க்கும் மாரியேஜ்க்கும்...

priya32
9th June 2020, 04:09 AM
ஏ பாப்பா என் சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
ஏ லூஸு நீ பூட்ட போட்டு
சிங்கிளா ஏன் தூங்குற
மப்புல மறக்கடிக்க வச்ச
பப்புல சரக்கடிக்க வச்ச
கிளப்புல கீழ படுக்க வச்ச
சொம்புல தண்ணி குடிக்க வச்ச
மேரேஜ்ஜூ மச்சான் கலீஜ்ஜுன்னு
கஜா சொன்னான்

rajraj
9th June 2020, 05:08 AM
kaNNan vandhu paadugindraan kaalam ellaam
kaNNil enna kobam endraan kaadhal sonnaan
kaatril kuzhalosai.....

vaNakkam priya ! :)

raagadevan
9th June 2020, 05:53 PM
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான்
உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும்
தலையாட்டும்...

NOV
9th June 2020, 06:37 PM
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம்

raagadevan
11th June 2020, 06:41 AM
இந்த கடல் பல கங்கை நதி
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்

என்னுடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
நன..நன..நன...நனன...
அடி என்னடி உனக்கின்று அவசரம்
நன.. நன... நன... நன...நன..நன..நனன...

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல்...

NOV
11th June 2020, 06:44 AM
கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
16th June 2020, 03:08 PM
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகரில்லையே
இசையா இசையும் என் இசையால் அசையும்
அசையா மனமும் என் இசையால் இசையும்...

NOV
16th June 2020, 04:29 PM
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில்

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
17th June 2020, 03:15 PM
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில்...

NOV
17th June 2020, 03:47 PM
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்



Sent from my SM-N770F using Tapatalk

priya32
18th June 2020, 04:59 AM
அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்

NOV
18th June 2020, 05:18 AM
தந்தம் இளம் புன்னகை தேன்மகரந்தம் வலம்புரி சங்கென கழுத்து
அவள் வளைக்கரம் வாழையின் குருத்து தளிர்க்கொடி இடை

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
18th June 2020, 06:32 AM
ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம்...

NOV
18th June 2020, 06:34 AM
சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

raagadevan
18th June 2020, 03:50 PM
சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி,
பட்டக் காயத்துக்கு மருந்தென்னடி
என் தாயைத் தந்த தாயும் நீயடி
என்னதான் சொல்ல ஒன்னும்கூட இல்ல
மன்னவன்...

NOV
18th June 2020, 05:27 PM
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா

priya32
19th June 2020, 06:55 AM
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்

NOV
19th June 2020, 06:58 AM
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை

Sent from my SM-N770F using Tapatalk

priya32
19th June 2020, 07:03 AM
இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

NOV
19th June 2020, 07:05 AM
என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி

Sent from my SM-N770F using Tapatalk

priya32
19th June 2020, 07:11 AM
ஊட்டி குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்லே
போர்த்திப்படுக்க நீ வந்தா போர்வையும் தேவையில்லே
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும் வந்த குளிரும் ஓடி ஒடுங்கும்

NOV
19th June 2020, 07:13 AM
வாடை காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போலே தழுவிக்கொண்டு
மார்பின் மீது கண்கள் மூடி


Sent from my SM-N770F using Tapatalk

priya32
19th June 2020, 07:22 AM
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

NOV
19th June 2020, 07:24 AM
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்து
இன்று நரகமாக

Sent from my SM-N770F using Tapatalk

priya32
19th June 2020, 07:30 AM
விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரச கலையை பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்

NOV
19th June 2020, 07:32 AM
அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான்
தொட மாட்டேன்

Sent from my SM-N770F using Tapatalk

priya32
19th June 2020, 07:38 AM
மாட்டேன் மாட்டேன்
ஏதும் கேக்க மாட்டேன்
சொல்லச் சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகப் போறேன்

NOV
19th June 2020, 07:46 AM
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே

Sent from my SM-N770F using Tapatalk

priya32
19th June 2020, 07:53 AM
தேனூறுதே ஆசையோ மீறுதே
தேகம் தானே போராடுதே
நானே புது ரோஜா
நீயே தொடு ராஜா

NOV
19th June 2020, 07:59 AM
ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
20th June 2020, 06:17 AM
This is a wonderful song with the word "தேசம்" in it!!

https://www.youtube.com/watch?v=NCmP30oiL74

இந்தியா... இந்தியா...
இந்தியா... இந்தியா...

எங்கள் தேசம் இந்தியா
இந்தியா... இந்தியா...

எங்கள் தேசம் இந்தியா
வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
வசந்த தேசம் இந்தியா...
இந்தியா..... இந்தியா....

கோடுகளால் வரைகின்ற தேசமல்ல இந்தியா
கொள்கைகளால் வரைகின்ற தேசமடா இந்தியா
மூன்று பக்கம் கடல் கொண்ட தேசமல்ல இந்தியா
நான்கு பக்கம் புகழ் கொண்ட தேசமடா இந்தியா
இந்தியா....

வேறு வேறு மொழிகள் கூடி இங்கு விரிந்து நின்ற போதிலும்
நூறு கோடி நாவில் பேசும் நல்ல ஒற்றை வார்த்தை இந்தியா
இந்தியா...இந்தியா... இந்தியா.... இந்தியா...

ஸாரே ஜஹா(ன்)ஸே அச்சா
ஹிந்து சிதா(ன்) ஹமாரா ஹமாரா
ஸாரே ஜகா(ன்)ஸே அச்சா

மேற்கு நாடு வேட்டையாளர் கல்லெடுத்த காலையில்
கல்குடைந்து சிலை வடித்த கலையின் தேசம் இந்தியா
ஏனை மக்கள் மொழி படைக்க இதழ் குவித்த வேளையில்
வான் வரைக்கும் இலக்கியங்கள் வரைந்த தேசம் இந்தியா
காந்தி தேசம் இந்தியா
கற்பின் தேசம் இந்தியா
அக்கினி தேசம் இந்தியா
அஹிம்சை தேசம் இந்தியா

மானம் வீரம் கல்வி காத்த
ஞான பூமி இந்தியா

நளிர் மணி நீரும் நயம்பட கனிகளும்
குளிர் பூ(ந்)தென்றலும் கொழும் பொழிற் பசுமையும்

மானம் வீரம் கல்வி காத்த
ஞான பூமி இந்தியா

இமயமாக உயரமாக
எழுந்து நிற்கும் இந்தியா

கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை
அண்டமாளும் இந்தியா!

வந்தே மாதரம் சுஜலாம் சுபலாம் மலைய ஜஸீத்தலாம்
ஸஸ்ய ஸ்யாமலாம் மாதரம் - வந்தே மாதரம்!

இந்தியா... இந்தியா...

எங்கள் தேசம் இந்தியா
இந்தியா... இந்தியா...

வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
வசந்த தேசம் இந்தியா... இந்தியா...
ஆ....ஆ.... ஆ...

இந்தியா..... இந்தியா....
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...

priya32
20th June 2020, 06:47 AM
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்

NOV
20th June 2020, 06:51 AM
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம் வந்தே மாதரம்
நொந்தே*போயினும் வெந்தேம் ஆயினும்

Sent from my SM-N770F using Tapatalk

priya32
20th June 2020, 06:53 AM
:banghead:

NOV
20th June 2020, 06:56 AM
Lol... very confusing

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…



Sent from my SM-N770F using Tapatalk

priya32
20th June 2020, 07:00 AM
Well, I was able to remember only one song with vandhE maadharam from Bharatha Vilas. That happens to have 'vandhE maadharam' as last word...so I thought I'd highlight the word blue for you to sing!

priya32
20th June 2020, 07:01 AM
நீயின்றி நானோ நானின்றி நீயோ
நிலவின்றி வானோ
இதை நினைவில் கொள்ளாயோ
ஏனிந்த கோபம் இதிலென்ன லாபம்

raagadevan
20th June 2020, 07:13 AM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...

NOV
20th June 2020, 07:13 AM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
20th June 2020, 07:14 AM
Haha, copycat!!! :)

priya32
20th June 2020, 07:26 AM
ஒரு ஊரில் ஒரு மஹராணி
அவள் உல்லாச கலையில் கலைவாணி
சிலை கோவில் மலர் போலே
நல்ல சிங்கார வடிவம் அவள் மேனி

raagadevan
20th June 2020, 07:39 AM
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா வா
சிங்கார வேலனே தேவா
செந்தூரில் நின்றாடும் தேவா
திருச்செந்தூரில் நின்றாடும் தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அருள் சிங்கார வேலனே...

NOV
20th June 2020, 07:45 AM
Haha, copycat!!! :)Lol...

வள்ளிமலை மான்குட்டி
எங்கே போறே
வந்திருக்கும் வேலன
பார்க்க போறேன்

Sent from my SM-N770F using Tapatalk

priya32
20th June 2020, 07:50 AM
சாத்திக்கடி போத்திக்கடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசி வெடி
போடப் போறேன்
வாய நல்லா மூடிக்கிட்டேன்

NOV
20th June 2020, 08:00 AM
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

priya32
21st June 2020, 03:54 AM
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன்
கண்டதும் நழுவியதே

NOV
21st June 2020, 04:58 AM
காதல் என்றும் தும்மல் போல
காமன் என்றும் விக்கல் போல
தழுவ தழுவ இதயம்
நழுவியதே வைக்காதே
மை மை

priya32
21st June 2020, 05:11 AM
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

NOV
21st June 2020, 05:12 AM
நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம்

Sent from my SM-N770F using Tapatalk

priya32
21st June 2020, 05:38 AM
நீ என்னை எடுத்துக்கிட்டு
உன்னை எனக்கு கொடு
ஒண்ணா கலந்து பறப்போம்

அடி பஞ்சு மெத்தை கனியே
பஞ்ச வர்ண கிளியே

NOV
21st June 2020, 05:43 AM
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணீரு ஒண்ணா சேர்ந்து
ஆறாப் போகுதே

Sent from my SM-N770F using Tapatalk

priya32
21st June 2020, 05:50 AM
போன போகுது பொடவ பறக்குது புடிக்கிறேன்
தானா கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்குறேன்
மோகம் இங்கே ஏறிப்போச்சு

NOV
21st June 2020, 05:53 AM
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது

Sent from my SM-N770F using Tapatalk

priya32
21st June 2020, 06:37 AM
உன்னையும் என்னையும் கட்டி
இழுக்குதடி ஒரு அன்புக்கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளி
கொடுக்குதடி அந்த வம்புக்கயிறு
மாட்டி விட்டத்தாரோ
மாட்டிக்கொண்டதாரோ
சேர்த்து வைத்தாரோ
மன்மத வில்லுக்குள்

NOV
21st June 2020, 06:44 AM
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
21st June 2020, 06:47 AM
நின்னயே ரதி என்று
நினைகிறேனடி கண்ணம்மா
தன்னையே சகி...

NOV
21st June 2020, 06:48 AM
வா சகி வா சகி
வள்ளுவன் வாசுகி
எனக்கு தெரியாமல் என்னை படித்த

Sent from my SM-N770F using Tapatalk

priya32
21st June 2020, 07:05 AM
நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான்

NOV
21st June 2020, 07:06 AM
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை

Sent from my SM-N770F using Tapatalk

priya32
21st June 2020, 07:12 AM
எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண் விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்துப் பார்க்க விரைந்து வா

NOV
21st June 2020, 07:14 AM
அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

Sent from my SM-N770F using Tapatalk

raagadevan
21st June 2020, 07:17 AM
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே...

NOV
21st June 2020, 07:19 AM
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகிகளித்த தோழர்களே

priya32
22nd June 2020, 04:17 AM
கங்கையும் தெற்கே பாயாதா
காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா