View Full Version : Makkal Thilagam MGR Part 26
Pages :
1
2
[
3]
4
5
6
7
8
9
orodizli
23rd August 2020, 01:47 PM
புரட்சித்தலைவரின் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நாடோடி மன்னன் திரைக்காவியம் ஒவ்வொரு வெளியீடுகள் எண்ணிலடங்காதது. ஒவ்வொரு வெளியீட்டிலும் பல வாரங்கள் பல நாட்கள் ஓடிய ஒரே காவியம்
நாடோடி மன்னன் மட்டுமே என்பது இன்றுவரை சாதனையாகும்.*
கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் நாடோடி மன்னன் ஓடியது போல் எந்த திரைப்படமும் இதுவரை ஓடி சரித்திரம் படைத்தது கிடையாது. நாடோடி மன்னன் காவியத்தின் 62 வது ஆண்டு ஆண்டை நிறைவு செய்து 63 வது ஆண்டை நோக்கி நிரந்தர வெற்றியுடன் 2021 ம்ஆண்டிலும் சாதனை படைக்கட்டும்.
தொடரும் பதிவுகள்.............
orodizli
23rd August 2020, 01:50 PM
மக்கள் திலகத்தின் மகத்தான வெளியீடு ! 1975 ஆம் ஆண்டு வெளியான "இதயக்கனி" திரைக்காவியம் "ரிக்க்ஷாக்காரன்" மாபெரும் வெற்றிக்குப் பின் வெளிவந்த சத்யா மூவிஸின் 2 வது வண்ணக்காவியம்.*
இதயக்கனி காவியம் வெளிவந்து 45 வருடங்கள் நிறைவு பெறுகிறது. வெற்றிகரமாக 46 ம் ஆண்டு துவங்குகிறது...
இதயக்கனி திரைக் காவியத்தின் சில சிறப்புக்கள் இங்கே குறிப்பிடப்படுகிறது.*
மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 காட்சிகள் அரங்கு நிறைந்து*
5 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலைக் கொடுத்து. தொடர்ந்து மற்ற திரையரங்கில் வெளியிடப்பட்டு 213 நாட்கள் ஓடிய வெற்றிக் காவியம் இதயக்கனி ஆகும்.
மதுரை மாநகரில் சாதனை என்று தம்பட்டம் அடித்த அனைத்து படங்களையும் குறுகிய நாட்களில் முறியடித்த காவியம் இதயக்கனி திரைப்படம். நடிகர் கணேசனின் பட்டிக்காடா பட்டணமா அதிக வசூல் படமாகத் திகழ்ந்தது அத்திரைப்படத்தின் வசூலை தொடர் ஒட்டத்தில் முறியடித்து வெற்றி கண்டது.*
இதயக்கனி திரைக்காவியம் நகரில் தொடர்ந்து ஓடி 7 லட்சத்தை வசூல் பெற்ற மூன்றாவது காவியம். இதயக்கனி ,உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் இதயக்கனி மூன்று திரைப்படங்களும் தொடர் வெளியீட்டில் மகத்தான சாதனை..........
orodizli
23rd August 2020, 01:50 PM
வேலூர்* கிருஷ்ணா அரங்கில் 100 நாட்கள் கடந்து.... நகரில் அதிக வசூல் பெற்ற திரைக்காவியம் ஆக இதயக்கனி திரைக்காவியம் 1978 ஆம் ஆண்டு வரை திகழ்ந்தது.
நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் மகத்தான சாதனை புரிந்த வெற்றித் திரைப்படமாக நூறு நாட்களை கடந்து ஓடிய மூன்றாவது திரைப்படமாக இதயக்கனி திகழ்ந்தது.*
அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி...... சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் திலகத்தின் சாதனையாகும்.
அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த இதயக்கனி திரைப்படத்தின் வரலாறு சென்னையிலும் மகத்தான வெற்றி படைத்தது.*
நான்கு திரையரங்குகளில் வெளிவந்து கிட்டத்தட்ட*
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்கு* அடுத்தாற்போல் 20 லட்சத்தை வசூல் நெருங்கியது.
முதல் வெளியீட்டில்**
44 திரையரங்குகளில் வெளிவந்து 38 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து மற்றும் பெங்களூர் மைசூர் சித்தூர் இலங்கை மாநகரிலும் ஒடியது. அதிகமான திரையரங்குகளில்*
50 நாட்களை கடந்து வீர சாதனைகள்* புரிந்தது இதயக்கனி திரைக்காவியம்..........( இயக்குனர்/ தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசன் மிகவும் ஆச்சரியமாக, அபூர்வமாக இப்படத்தின் அப்படியொரு வெற்றியை நிறைவாக சிலாகித்து புகழ்ந்து இப்பட வெற்றி விழாவில் பேசியது அனைவரையும் கவனிக்க வைத்தது...குறிப்பிடத்தக்கது அல்லவா...)
orodizli
23rd August 2020, 01:51 PM
இதயக்கனி திரைக்காவியம் நடிகர்* கணேசனின் 13 படங்களை முறியடித்தது.முடித்து ஒரு கோடியே 30* லட்சத்தை ஆறு மாத காலத்தில் தந்தது. ஆனால் அந்நடிகரின் 13 படங்கள் தோல்வி அடைந்தது.
தலைநகர் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் அதிகமான திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய திரைக்காவியம் ஆக*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைகுரல், இதயக்கனி*
திகழ்ந்தது.
இதற்குப் பிறகு எந்தப் படமும்*
1978 ஆம் ஆண்டு வரை 10 திரையரங்குகளில் 100 நாட்கள் நெருங்கவில்லை.... முடியவில்லை.
இதயக்கனி பல வெளியீடுகளில் சாதனை படைத்து இருந்தாலும் சென்னையில் 1988 ஆம் ஆண்டு இக்காவியம் ஈகா திரையரங்கில்*
14 நாட்கள் ஓடி 16 ஹவுஸ்புல் காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு லட்சத்து 46 ஆயிரத்து வசூலைக் கொடுத்தது.
அதேபோல் சென்னை சித்ரா திரையரங்கில் அகன்ற திரையில் முதன்முதலாக வெளியிடப்பட்டு*
4 காட்சிகள் திரையிடப்பட்டு இதயக்கனி திரைக்காவியம்*
ஒரே வாரத்தில் 28 காட்சிகளில்*
82 ஆயிரம்* ரூபாயை வசூலாக கொடுத்து 12 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
7 மாத இடைவெளியில் மீண்டும் பிளாசா திரையரங்கில் இதயக்கனி திரையிடப்பட்டு அங்கு 56 ஆயிரத்தை வசூலாக கொடுத்து 7 காட்சிகள் அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது..........
orodizli
23rd August 2020, 01:52 PM
1991 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாஸ்கோப்பில் சென்னை நகரில் திரையிடப்பட்ட காவியம் இதயக்கனி ஆகும். அலங்கார் திரையரங்கில் ஒரு வாரம் இருபத்தொரு காட்சிகளில் 8 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வசூலாக கொடுத்தது. அதுமட்டுமல்லாது அதே வாரத்தில் சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நேற்று இன்று நாளை திரைக்காவியம்*
ஏழு நாட்கள் ஓடி 73 ஆயிரத்தை வசூலாக கொடுத்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை இதயக்கணி திரைக்காவியம் செய்துள்ளது.*
பல வரலாறுகள் உள்ளது. இக்காவியம் நேற்றுடன் 45 ஆண்டுகள் நிறைவு பெற்று 46 வது ஆண்டில் அதாவது 2021 ஆம் ஆண்டில் மீண்டும் வெள்ளித்திரையில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பது திண்ணமாகும்.
தொடரும் பதிவுகள்.............
orodizli
23rd August 2020, 07:25 PM
#கேள்வி : அரசியல்வாதிகள் திருந்த ஒரு வழி சொல்லுங்கள் ?
#புரட்சித்தலைவரின் #பதில் : பிறரைத் திருத்துவதற்கு தான் அரசியல்வாதிகள். ஆனால், ஒரு சிலர் திருத்தப்பட வேண்டியவர்களாக தான் இருக்கிறார்கள் , அதனால் தான் நாட்டில் இத்தனை குழப்பங்களும் ! என்ன செய்ய ?
#கேள்வி : உங்களிடம் உள்ள நல்ல குணம் என்ன ? கெட்ட குணம் என்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : தெரியாது
#கேள்வி : தங்களைப் பற்றி இதுவரை திட்டி பேசாத ஒருவர் திட்டி பேசிவிட்டால் அவரைப் பற்றி தாங்கள் என்ன நினைப்பீர்கள் ?
#புரட்சித்தலைவரின் #பதில் : முதலில் என்னிடம் என்ன குறை புதிதாக உண்டாயிற்று என்று பார்ப்பேன். பிறகுதான் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று பார்ப்பேன். பிறகுதான் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று சிந்திப்பேன்.
#கேள்வி : ஜப்பானில் உள்ள ரசிகர்கள் நம்மை போல நேரத்தை வீணாக்குவது இல்லையே. அதுபோல தாங்களும் தங்கள் ரசிகர்களை கேட்டுக் கொள்வீர்களா ?
#புரட்சித்தலைவரின் #பதில் : உங்களுடைய அறியாமைக்கு அனுதாபப் படுகிறேன். அங்குள்ள பல ரசிகர்கள், நாம் ( தமிழர்கள் ) பார்க்கவே விரும்பாத , விரசமான படங்களையெல்லாம் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
#கேள்வி : வாழ்க்கையில் ஆரம்ப நிலையில் இருந்து துன்பப்பட்டு வரும் ஒருவர் மேலும் பல துன்பங்களை சமாளித்து வருகின்றார். இன்பம் என்பதன் தன்மையைப் பற்றி அறியாத அந்த மனிதரைப் பற்றி தங்கள் கருத்தென்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டும் தளராது தன் வழியில் முன்னேறிச் செல்ல முயலும் துணிவுமிக்க ஒரு நல்ல குடிமகன்.
#கேள்வி : ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதை காப்பி அடித்து நடித்து நம் நாட்டில் நடிப்பில் திலகம் என்று மக்களை நம்பும்படி செய்து வாழ்வது பொருந்துமா ? இயற்கையாக ஏன் பேசி நடித்து பெயர் வாங்க கூடாது ? இதற்கு தங்கள் விளக்கம் என்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : ஒவ்வொரு நடிகரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எந்த பாணியையும் கையாளலாம். ஆனால் முக அமைப்பு , குரல், உருவம் இவைகளுக்கு ஏற்ப நடித்தால்தான் அந்த நடிப்பு சோபிக்கும். யாருடைய நடிப்பாவது அப்படி சோபிக்கிறது என்றால் , இவை அத்தனையும் பொருந்தி இருக்கின்றன என்று பொருள். ஆகவே ஆங்கில பாணியா , சொந்த பாணியா என்ற பிரச்சினைக்கு அப்போது இடம் இல்லை என்றாகி விடுகிறது. மேலும் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப, பிறர் மனதில் பதியும் படியாக நடித்து விட்டால் அந்தப் பாத்திரத்தின் முழுமை உருவாக்கப்பட்டு விட்டது என்றே கொள்ள வேண்டும். அப்படியானால் அது எந்த பாணியானால் என்ன ?
#கேள்வி : உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன் உங்களுடைய சம்மதம் தேவை ?
#புரட்சித்தலைவரின் #பதில் : எனக்கு வாரிசாக வர விரும்புகிறவர்கள் என் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. என் லட்சியத்தை பின்பற்றுகிற அனைவருமே என் வாரிசுகள்தான்.
#கேள்வி : கலை உலகில் நீங்கள் யாரை பின்பற்றி நடக்கிறீர்கள் ?
#புரட்சித்தலைவரின் #பதில் : சில வழிகளில் கலைவாணரை.
#கேள்வி : கூட்டுறவு முறையில் படம் தயாரிப்பது சாத்தியமாகாது என சிலர் கருதுகிறார்கள். தாங்கள் அவர்களுக்கு கூறும் பதில் என்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : ஏழையாகப் பிறந்து ஒருவர் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்று சொல்லி, ஏழையாகவே இருக்க செய்தது இந்த நாட்டில்தான். ஏழையை கவனிக்கவில்லை என்றால் நாட்டில் புரட்சி செய்து நிலைமையை சீர்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுவதும் இந்த நாட்டில்தான்.
நடக்காதது எதுவும் இல்லை. நடத்துவதில் ஒழுங்குமுறை வேண்டும். சந்தேகத்தை நீக்கிவிட்டு தெளிவுடன் செயல்படும் மனப்பான்மை வேண்டும்
- நாடோடி மன்னன் ஜனவரி 1976
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
orodizli
23rd August 2020, 07:26 PM
#பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் #Dr_எம்ஜிஆர் ப*க்த*ர்க*ளின் அன்பு வேண்டுகோள்...
#கோடிக்க*ணக்கில் சொத்துக்க*ள் வைத்துள்ள அண்ணா திமுக*வோ அல்ல*து அமைச்ச*ர்க*ளோ அல்ல*து எம்ஜிஆரின் கோடீஸ்வ*ர* விசுவாசிக*ளோ மனம் வைத்தால் அவ*ர*து ப*ல ப*ழைய க*ருப்பு வெள்ளைப் ப*ட*ங்க*ளை முறைப்ப*டி உரிமை பெற்று க*லரில் வெளியிட* முடியும். அல்லது வினியோக*ஸ்த*ர்க*ளுக்கு நிதியுத*வி செய்து ப*ங்குதார*ர்க*ளாக ஆக*லாம். #மன*து_வைப்பார்க*ளா?...
#ஒன்றுக்கு நூறு மட*ங்கு ப*லன் அளிப்ப*வை Dr.எம்ஜிஆரின் பொக்கிஷ*க் காவிய*ங்க*ள்...
01. நாடோடி மன்ன*ன் (முழுவ*தும் க*ல*ரில்)
02.நாடோடி
03.காவ*ல்கார*ன்
04.க*லங்க*ரை விளக்கம்
05.குலேப*காவ*லி
06.மதுரை வீர*ன் ஆகிய ப*ட*ங்க*ளை முத*ல் முய*ற்சியாக செய்ய*லாம்...
#நாகேஸ்வ*ர*ராவ், என்.டி.ஆர் சாவித்திரி ந*டித்த மாயாப*ஜார் தெலுங்கு, த*மிழ் ட*ப்பிங்கில் அழ*கு வ*ண்ண*த்தில் வ*ந்தே விட்ட*து...
#ஹிந்தியிலும் சில ப*ட*ங்க*ள் க*ல*ராக்கி வெளியிட்டுள்ளன*ர். த*மிழில் இதுவ*ரையில்லை. த*லைவ*ரின் ப*ட*மே துவ*க்க*மாக இருக்கட்டும்!!............
fidowag
23rd August 2020, 08:10 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*(02/08/20 ) அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாமரர்களின் ,படிக்காதவர்களின் தலைவர் என்று பேசப்படுகிறது . எம்.ஜி.ஆர். என்பவருக்கு தெரிந்த*தத்துவம் என்பது*மிகப்பெரிய அரிய பொக்கிஷம்* அது மனிதகுலத்திற்கு மட்டுமே*புரிய க்கூடிய ஒரு பாஷை*ஏனென்றால், மனிதர்கள் வாழும்*இந்த உலகத்தில் தாங்க முடியாத*கொடுமை*என்னவென்றால் பசிக்கொடுமைதான் .அதை எம்.ஜி.ஆர். புரிந்திருந்தார் . வாழ்க்கையில் அறிந்திருந்தார் . அதனால்தான்* பலதரப்பட்ட**மனிதர்களோடு சுலபமாக* அவர் தொடர்பு கொண்டிருந்தார் . அவர்களுடைய மனங்களை*வெற்றிகொள்ள முடிந்தது.* உண்மை என்னவென்றால்* .அந்த மாபெரும்*கலைஞன் மனிதாபிமானி என்கிற வழங்கப்படாத பட்டத்தைபெற்ற மாபெரும்* தலைவர் .அவருக்கு என்னவெல்லாம் தெரியும்*என்றால் தொல்காப்பியம் தெரியும்*, நடன சாஸ்திரம் தெரியும்*.பல்வேறு விஷயங்கள் தெரியும்*.
ஒருமுறை பரதநாட்டியம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியபின் பேசும்போது*எனக்கு*இந்த நாட்டியம் பற்றி அவ்வளவாக தெரியாது*.ஆனால் ஒரு பெண் நாட்டியத்தின்போது குதிக்கிறாள் .அவள் குதிக்கும்போது ஐயோ*குதிக்கிறாளே என்று*** பாவம் பார்க்க கூடாது .அவள் நாட்டியம் ஆடும்போது*கையில்*ஒரு பூப்பந்து தரப்பட்டிருக்கும் . நடனம் முடியும் வரை கையில் உள்ள பூப்பந்தில் உள்ள பூவும்*கசங்க கூடாது, கையும்*நோகக்கூடாது, முகத்தில்*புன்னகை காட்டி, அந்த நடனத்தை பார்ப்பவர்களுக்கு* ஆடும்போது அவள் சிரமப்படுவதாக*முகத்திலோ, உணர்ச்சியிலோ, பாவனையிலோ,நடன அசைவுகளிலோ தெரியும்படி இருக்க கூடாது .அப்படிப்பட்ட ஒரு கலை*ஆர்வத்தோடு, தன்னை*பக்குவப்படுத்திக்கொண்டு* தன் திறமைகள் அனைத்தையும்*வெளிப்படுத்தும் வகையில்*நடனமாடி*பார்வையாளர்களை தன்வசப்படுத்த வேண்டும் .அப்படி நடனம் ஆடுபவர்கள் இந்த நாட்டில்*நிறைய பேர் தோன்ற வேண்டும் . நாட்டியக்கலைக்கு தங்களை*அர்பணித்துக்கொள்ள வேண்டும் .இன்று சிறப்பாக நடனமாடி*நாட்டியக்கலைக்கு பெருமை சேர்த்த*இந்த மாணவியை*நான் மனம் திறந்து பாராட்டுகிறேன் என்றார் .
அதே*போல மயில் பாவனை என்பார்கள்.* பொதுவாக ஒரு ஆணோ, பெண்ணோ, நடக்கும்போது கால்களை முன்னும்*பின்னுமாக வைப்பார்கள் . ஆனால் மயில் நடக்கும்போது ஒரு பக்கமாக*சாய்ந்து ,சாய்ந்து*நடக்கும் . அதனால்தான் ஒரு பெண் நடக்கும்போது மயில்போல*நடக்கிறாள் என்பார்கள் .மிக முக்கியமாக நாட்டிய சாஸ்திரத்தை*பற்றி சொல்கிறார் . அதாவது கண் பார்வை எங்கு இருக்கிறதோ அங்கு மனம் லயித்தால்தான் ,நாட்டியத்தில் ஜொலிக்க முடியும்*என்று ஒரு காட்சியை விவரிக்கிறார் .நாட்டியத்தில் வலது கண் எங்கே*உனது* வலது கையில்*எந்த இடத்தை*பார்க்கிறதோ* அதே நேரத்தில்**ஆடும்போது இடது கண் இடது கையை*பார்க்க வேண்டும். என்பது*சாத்தியமா*என்றால் பலபேருக்கு*சாத்தியம் இல்லை .ஆனால் தேர்ந்த நடனக்காரர்களுக்கு தன் வலது கண் பாவனையையும், இடது கண் பாவனையையும் ஒன்றாக பார்க்கும்அதை ஒன்றாக வெளிப்படுத்தும்**திறன் இருக்கும்*என்று எம்.ஜி.ஆர். மிக்*பெரிய*நுட்பத்தை*அந்த பாரத நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளது என்று குறிப்பிடுகிறார் .அதே*போல ஆடுகிறவர் , பாடல் பாடுகிறவர் யாருக்காக*ஆட*வேண்டும், யாருக்காக*பாட வேண்டும் என்பது* உலகிலே**காலம் காலமாய்*கேட்கப்படும் கேள்வி .என்றும் சொல்கிறார் .மேலும் பரத*நாட்டியம் ஆடும்போது இடுப்புக்கு கீழே*பலம் பொருந்திய உடற்கட்டு இருக்க வேண்டும் . இடுப்புக்கு மேலே உடலில் நடன அசைவுகள் நளினமாக தெரிந்தாக வேண்டும். உதாரணத்திற்கு* *பாம்பு ஆடும்போது எப்படி தன் உடலை*கீழே*கிடத்தி , மேலே தலையை*தூக்கி, படம் தெரிகின்றபோது படம் மட்டும் ஆடுவது*போல் காட்டுகிறது அல்லவா அதுபோல்*இருக்க வேண்டும் என்றும் பேசினார் .
முகலாய பேரரசர்*அக்பர்*சபையில்*பீர்பால்*இருந்தார் .அவருடைய இசையை அக்பர் பெரிதும் விரும்புவார் .பீர்பால் அக்பரிடம் சொன்னார் .ஒருநாள் என்னுடைய குருநாதர் தான்ஸேனை பார்க்க போகலாம் என்று .தான்ஸேன் வீணையை வாசித்தார் என்றால் எரியாத விளக்குகள் எல்லாம் எரியும். அப்படி ஒரு சக்திவாய்ந்த இசை கலைஞன் .தான்ஸேனை பார்த்துவிட்டு வந்த பிறகு*அக்பர் பீர்பாலிடம் ,இதுவரை உன்னைத்தான் மிக பெரிய இசை கலைஞன் என்று நினைத்திருந்தேன் . ஆனால் உன் குருநாதர் உன்னை மிஞ்சிவிட்டாரே எப்படி என கேட்க, பீர்பால் அக்பரிடம் ,அரசே,நான் வாசிப்பது உங்களுக்காக ,ஆனால் என் குரு கடவுளுக்காக வாசிக்கிறார் .ஆகவே நீங்கள் யாருக்காக வாசிக்கிறீர்கள், யாருக்காக ஆடுகிறீர்கள்,பாடுகிறீர்கள் என்பது முக்கியம் என்கிற அதே கருத்தை எம்.ஜி.ஆர். சுருக்கமாக சொல்கிறார் . அதாவது ஒரு பாடல் பாடுகிறவர் ,ஆடுகிறவர் முதலில் தன்னை திருப்தி படுத்திக்கொள்ள வேண்டும், தான் ரசிக்க வேண்டும் தனக்கு திருப்தியானதையே மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்*மிக பெரிய தத்துவமாக கலை கலைக்காகவா, மக்களுக்காகவா என்கிற வாதம் காலம் காலமாய் நடந்து வருகிறதே அதை கலைக்குரிய அம்சமாக எம்.ஜி.ஆர். எடுத்துரைக்கிறார் .இப்படி, நாட்டிய சாஸ்திரம், தொல்காப்பியம் ஆகியவற்றை பற்றி தன் கருத்துக்களை வெளியிட்டுளளார் .* தமிழிலே எட்டு ரசம்,பாகம் என்று சொல்லுவார்கள்,,அதிலே மோன* நிலை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் உண்டு .அந்த மோன நிலை ,நாட்டியக்கலையிலும் உண்டு . ஒரு மாபெரும் கலைஞன் என்கிற வகையில் தனது நுட்பமாக கவனிப்பை , தனக்கு தெரிந்ததை, அறிந்ததை கற்ற உண்மைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறையோடு இருந்துள்ளார் .என்பதை அவர் பரதநாட்டியக்கலை பற்றி பேசும்போது நாம் அறிந்து கொள்ளலாம் தொல்காப்பியத்தை பற்றிய அவரது கருத்துக்கள் அவரின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது .*.இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை,கவனம் ,இதுதான் வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் அந்த அக்கறை பிற மனிதனின் மீது இருக்கும்போது ,உங்களை அந்த பிற மனிதர்கள்மீது ஒருவராக, இருவராக,நூறாக, ஆயிரமாக, லட்சமாக ,கோடியாக ஆகும்போது நீங்கள் தலைவராகலாம் என்ற தத்துவத்தை உருவாக்கியவர்தான் அந்த மாமனிதர் எம்.ஜி.ஆர்.
நடிகர் ராஜேஷ் தனக்கு தெரிந்த செய்தியை பகிர்ந்து கொள்கிறார் . நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்த காலத்தில் ஒரு தயாரிப்பாளருக்கு தெரிந்த சோதிடர் எம்.ஜி.ஆரை சந்தித்து ,நீங்கள் வரும் காலத்தில் இந்த நாட்டை ஆளுகிற சக்தியாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று சொல்லும்போது , உங்களுக்கு பணம் வேண்டுமானால் சொல்லுங்கள் தருகிறேன் . அதற்காக இப்படியெல்லாம் சொல்லி என்னை திருப்திப்படுத்த வேண்டாம் .என்று அந்த காலத்தில் ரூ.500/- கொடுத்தாராம் . ஆனால் அந்த ஜோதிடர்* என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது நான் பணம் வாங்க தயாரில்லை என்று சொல்லிவிட்டு போனாராம் .இது நடந்து அடுத்த 20 ஆண்டுகளில் உண்மையிலேயே எம்.ஜி.ஆர். முதல்வராகிவிட்டார் . ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர்.தான் வசூல் சக்கரவர்த்தி, முடிசூடா மன்னன் , அவரது சில படங்கள் வெற்றியடையாவிட்டாலும் குறைந்த பட்ச வசூலை உறுதியாக வசூலித்துவிடும் ,தயாரிப்பாளருக்கு எந்தவகையிலும் நஷ்டம் ஏற்படாது என்கிற நிலை இருந்தது .அந்த காலத்தில் சிவாஜி கணேசன் நடித்த உத்தம புத்திரன் 100 வது நாள் விழாவிற்கு அவரை யானைமீது அமர்த்தி ,ஊர்வலமாக அழைத்து வந்தனர் .அதுபோல நாடோடி மன்னன் படத்தின் வெற்றிவிழாவிற்கு யானைமீது அல்லாமல்ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ,சற்று வித்தியாசமாக* தேரில் அமர்த்தி ,ஊர்வலமாக அழைத்து வரலாம் என்று யோசனை சொன்னார்கள் . ஆனால் தெய்வங்களை அலங்கரித்து அழைத்துவரப்படும் தேரில் தான் அமர தயாரில்லை என்று மறுத்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.என்றும் பதினாறு - கன்னித்தாய்*
2.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
3.ஆடல் காணீரோ ,விளையாடல் காணீரோ -மதுரை வீரன்*
4.அழகிய தமிழ் மகள் இவள் -ரிக்ஷாக்காரன்*
5.கடவுள் இருக்கின்றான் - ஆனந்த ஜோதி*
fidowag
23rd August 2020, 10:36 PM
தனியார் டிவிக்களில் நிருத்ய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்களின்*பட்டியல் (17/8/20 முதல் 23/8/20 வரை )
----------------------------------------------------------------------------------------------------------------------------
17/08/20 - வேந்தர் டிவி -காலை 10.30 மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * *பாலிமர் டிவி -பிற்பகல் 2 மணி -* நல்ல நேரம்*
18/08/20-சன் லைஃப் - காலை 11 மணி* - காவல்காரன்*
* * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் -* இரவு 7 மணி -* அடிமைப்பெண்*
19/08/20- மெகா டிவி* - மதியம் 12 மணி -சக்கரவர்த்தி திருமகள்*
* * * * * * * சன் லைஃப் -மாலை 4 மணி - திருடாதே*
* * * * * * *ராஜ் டிஜிட்டல் -இரவு 7மணி - உலகம் சுற்றும் வாலிபன்*
20/08/20- சன் லைஃப் - காலை 11 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி /இரவு 7* மணி -நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * *புதுயுகம் - இரவு 7 மணி* *-* குடும்ப தலைவன்*
21/08/20 -* ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*
22/08/20 - சன் லைஃப் -காலை 11 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி -இரவு 7 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * ஜெயா டிவி* - இரவு 10 மணி -* ஆயிரத்தில் ஒருவன்*
23/08/20 - சன் லைஃப் - காலை 11 மணி - சந்திரோதயம்*
* * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - தேர்த்திருவிழா*
**
orodizli
24th August 2020, 07:36 AM
#பாசப்பிணைப்பு
ஆள்பவன் படையைத் தனக்கு அணையாக வைப்பவன் அல்ல...
தன் மக்களை தனக்குத் துணையாக வைப்பவன்...
#புரட்சித்தலைவரின் #வெற்றிக்குக் #காரணம்...
மக்கள் அவர் மீது கொண்ட நேர்மையான நம்பிக்கை ...
#எனது #மக்களின் #ஆசிகளே #என்னைத்தாங்கிவருகிறது என்பது பொன்மனச்செம்மலின் அசைக்க முடியாத நம்பிக்கை ...
தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் வீட்டிலிருந்து கோட்டைக்குச் செல்லும்போதெல்லாம் அவருடைய காருக்கு முன்னால் பைலட் காரெல்லாம் போகாது...இப்போது போல்...
காரில் உதவியாளர், முதல்வர் பிறகு டிரைவர் அவ்வளவு தான்...
ஒருமுறை தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் வீட்டிலிருந்து கிளம்பும் போது அப்போதைய போலீஸ் சூப்பரண்ட் திரு. சுப்பையா, முதல்வர் எம்ஜிஆரைப் பார்த்துக்கேட்டார்...
ஐயா, நான் வேண்டுமென்றால் உங்களுக்கு செக்யூரிட்டியாக வரவா? எனக் கேட்க, சிரித்துக்கொண்டே முதல்வர்,
"எனக்குப் பாதுகாப்பாக இந்தத் தமிழ்நாட்டு மக்களே இருக்கும்போது தனியாக நீங்கள் எதற்கு???" என்றார்...
பொன்மனச்செம்மல் ஆட்சியில் மக்கள் மீது முதல்வருக்கும், முதல்வர் மீது மக்களுக்கும் அவ்வளவு பாசப்பிணைப்பு இருந்தது............
orodizli
24th August 2020, 07:37 AM
நாடோடி மன்னன் வரலாறு திருச்சி சில....
11 வது வெளியீடு....
1971 திருச்சி பத்மாமணி 21 நாள்
1974 ஜூபிடர் 28 நாள் 1977 திருச்சி ராக்ஸி
28 நாள்...
1985 திருச்சி பேலஸ்
21 நாள்
1992 மாரிஸ்போர்ட்
14 நாள்
1996 முருகன் 14 நாள்.
தகவல் திருச்சி கல்லுகுழீ செல்வராஜ்.
நெல்லையில் நாடோடி மன்னன் வரலாறு....1975 சிவசக்தி 35 நாள்
1978 பாப்புலர் 15 நாள்
1986 சென்ட்ரல் 14 நாள்
2005 லட்சுமி 30 நாள்
2007 சென்ட்ரல் 15 நாள்
2011 பூர்ணகலா 8 நாள்
சென்னையில்...
4 அரங்கில் வெளியிடப் பட்டு 4 அரங்கிலும் 4 வாரங்கள் ஒடியது.
100 காட்சி அரங்கு நிறைந்தது.
கெயீட்டி
பாலாஜி
பாண்டியன்
ராம்
மொத்தம் 112 நாள்...
தொடர்ந்து பல அரங்கில் சாதனையாகும்.
1988 பாரகன் 14 நாள்
1988 நடராஜ் 14 நாள்
2006 ஆல்பட் 21 நாள்
2018 ஆல்பட் 35 நாள்.
கிடைத்த தகவல்....
தொடரும்.........
orodizli
24th August 2020, 11:34 AM
'' நினைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்
மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .
நாடோடி மன்னன் ;-1958
காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
.[ 1977 உண்மையானது]
எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........
1977 - பாடல் வரிகள் நிஜமானது .
தெய்வத்தாய் -1964
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......
பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்
அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .
பணக்கார குடும்பம் -1964.
பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
2020 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .
அடிமைப்பெண் -1969.
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....
நிதர்சனமான உண்மை .
உலகம் சுற்றும்வாலிபன் -1973
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .
மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல
மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்
ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .
இது ஒன்று போதுமே .-எம்
மன்னவனின் புகழ்
அகிலமெங்குமே
முரசு கொட்டுமே.........
orodizli
24th August 2020, 11:34 AM
"முகராசி" தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த 10 வது படம். இந்த படத்தில் எம்ஜிஆரோடு ஜெமினி கணேசன் இணைந்து நடித்தது கூடுதல் சிறப்பு. படம் மிக குறுகிய காலத்தில் அதாவது தயாரிப்பில் இருந்த காலம் 13 நாட்கள்தான். பேசும் படம் கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி்: முகராசி வெற்றி படமா?
அதற்கு ஆசிரியர் சொன்ன பதில்
முகராசி தயாரிப்பில் இருந்தது 13
நாட்கள், ஆனால் திரையின் இருந்ததோ 100 நாட்கள். நீங்களே முடிவு சொல்லுங்கள் வெற்றிப்படமா என்று.
இதே போல் சிவாஜியும் அமெரிக்க பயணத்திற்காக அவசர அவசரமாக 26 நாட்களில் ஒரு படத்தை முடித்துக் கொடுத்தார். அதுதான் 1962 ல் வெளியான "பலே பாண்டியா".
ஆனால் அது திரையில் இருந்த காலம் மிக சொற்ப நாட்களே. இந்த மாதிரி செலவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம் 100 நாட்கள் ஓடுகிறதென்றால் அதற்கு காரணம் நிச்சயம் முகராசிதான், ஆம் எம்ஜிஆரின் முகராசிதான். முகத்தை காட்டி காட்டி 100 நாள் ஓட வைத்தது நியாயமா? ஒரு சிவாஜி ரசிகரின் ஆதங்கம் இது. 1966 பிப் 18 ல் வெளியான படம்.
அந்த நேரத்தில் காஸினோவில் "அன்பே வா" மிட்லண்டில் "நான் ஆணையிட்டால்"
கெயிட்டியில் "முகராசி". என்ற மூன்று எம்ஜிஆர் படங்களும் மவுண்ட் ரோட்டில் அருகருகே உள்ள திரையரங்குகளில் வெளியானது..
சனி,ஞாயிறு நாட்களில் மவுண்ட் ரோடு ஸ்தம்பித்து போய் டிராபிக் ஜாம் உண்டாகி விடும். தலைவரோட ஒரு படம் வந்தாலே தாங்காது, அதிலும் 3 படங்கள் என்றால் அதை பார்ப்பதே கண்கொள்ளா காட்சியாக
இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அந்த சமயத்தில் போட்டோகிராபர் கிளுக்கிய காட்சியைதான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். முகராசி கட்-அவுட்டுக்கு பின்னால் உயரத்தில் காஸினோவின் முகப்பு தெரிவதை பார்க்கலாம். அதுவும் "அன்பே வா"
வுக்கு காஸினோவில் குதிரை போலீஸ் வைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
"முகராசி" படத்துக்கு 5வது வார காலத்தில் தியேட்டர் போட்டு வந்த விளம்பரத்தை பார்த்தால் படம் நிறைய ஊர்களில் 50 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். அந்த விளம்பரத்தில் மதுரை, திருச்சி, மற்றும் nsc ஏரியா தியேட் டர்கள் சேர்க்கப்படவில்லை. அவைகளையும் சேர்த்தால் இன்னும் அதிகமான தியேட்டர்களில் ஓடியிருக்க வேண்டும். தெரிந்தவர்கள் பதிவிடலாம்.
திருநெல்வேலி பார்வதியில் 50 நாட்களை தாண்டி ஓடியது. தூத்துக்குடி சார்லஸில் 6 வாரம் ஓடியது. சென்னை கெயிட்டியில் 100
நாட்களும்,பிரபாத்தில் 70 நாட்களும் சரஸ்வதியில் 56 நாட்களும் ஓடியது. மேலும் கணிசமான ஊர்களில் 50 நாட்களை தாண்டி ஓடியது. "முகராசி"
தேவர் பிலிம்ஸிக்கு கடைசியாக 100
நாட்கள் ஓடிய கருப்பு வெள்ளை படம்
என்பது கூடுதல் தகவல்..........
orodizli
24th August 2020, 11:54 PM
நினைத்ததை முடித்தவன் எம்ஜிஆர் .
ஆச்சரியமாக உள்ளது இல்லயா ?
************************************************** **********
எம்ஜிஆர் தன்னுடைய இளம் வயதில் ஆங்கில திரைப்படங்களை பார்த்ததின் விளைவுதான்
நாடோடி மன்னன் படம் எடுக்க தூண்டியது . ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு
1958ல் திரைக்கு வந்து நாடு முழுவதும் ரசிகர்களால் மக்களால் ஏராளமான பாராட்டுக்களை பெற்று
சரித்திர சாதனை புரிந்தது .
எம்ஜிஆர் வெற்றி பெற்று நினைத்ததை முடித்தார் .
1967 தேர்தலில் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமயில் திமுக ஆட்சி அமைந்திட நினைத்தார் . அதற்க்காக உயிர் தியாகம் வரை சென்று உழைத்து தானும் வெற்றி பெற்று தன்னுடைய இயக்கத்தையும் வெற்றி பெற செய்து தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி அமரவைத்த எம்ஜிஆர் நினைத்ததை முடித்தார் .
1972ல் எம்ஜிஆரையே அழிக்க நினைத்த திமுகவின் கனவை 1973 திண்டுக்கல்தேர்தல் துவங்கி 1987 வரை அரசியல் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து வெற்றி மேல் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்தார்
.
சினிமாவில் எம்ஜிஆரின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று 1959, 1967, 1972 கால கட்டங்களில் நடந்த சோதனைகளை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் உருவாக்கிய திரை உலக சாதனைகள் வெற்றிகள் குவித்ததின் மூலம் தான் நினைத்ததை முடித்தார் .
1977 வரை எம்ஜிஆர் திரை உலகை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து திரை உலக வசூல் சக்ரவர்த்தி யாக திகழ்ந்தார் என்று திமுக தலைவர் திரு கருணாநிதி 1987 எம்ஜிஆர் மறைவு தினத்தன்று கூறியது நினைவிற்கு வருகிறது .
நினைத்ததை முடிப்பவன் - 1975ல் வெளியானது , தலைப்பிற்கு ஏற்ப எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்திலும் நினைத்ததை முடிப்பவன்
என்று சாதித்து காட்டினார்.
மறைந்த பின்னரும் 32ஆண்டுகளாக அரசியலிலும் சினிமா மறு வெளியீடுகளில் , புது தொழில் நுட்ப
மறு வெளியீடுகளிலும் எம்ஜிஆர் என்ற தனி
மனிதரின் வெற்றிகள் சரித்திர சாதனையை நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் எப்பொழுதும் பெருமை கொள்கிறோம் ..........
orodizli
24th August 2020, 11:55 PM
1964 இல் நம் இதயதெய்வம் நடித்த படகோட்டி இறுதி கட்ட காட்சிகள் கேரளாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்.
13 நாட்கள் மொத்தம்.
10 வது நாள் காலை நல்ல வெளிச்சத்தில் பட பிடிப்பு நடந்து கொண்டு இருந்து இடைவேளை நேரம்.
தலைவருடன் இருந்த ஐயா கே.பி.ஆர். அவர்கள் தோளை தட்டி ஒருவர் அங்கே பாருங்கள் என்று சொல்ல....அங்கே ஒரு முதியவர் ஏதோ சைகை செய்ய அவர் அருகில் செல்கிறார் அவர்...
அப்போது அந்த முதியவர் ஐயா நான் எம்ஜிஆர் அவர்களை சந்திக்க வேண்டும்.....
நான் அவரின் தந்தை உடன் பணி புரிந்தவன்.
பாலக்காடு என் சொந்த ஊர்....என்று தொடர நான் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த தொகை என் மகள் திருமணம் வேண்டி....அவளின் திருமணம் முடிவாகி அடுத்த கட்டம் நோக்கி நான் நகர...
நெடுங்காடு வங்கியில் இருந்து நான் சேமித்த வைத்து இருந்த பணம் ரூபாய் 20000 அதை எடுத்து கொண்டு வரும் வழியில் தலை சுற்றி நான் மயக்கம் அடைந்து சாலை ஓரம் வீழ்ந்து விட்டேன்....
மயக்கம் தெளிந்து அடுத்தவர் உதவியில் நான் கண் திறக்கும் போது....பேரிடி எனக்கு என் பண பையை காணவில்லை...இடிந்து போய் என் வீடு போய் சேர்ந்தேன்...
மொத்த குடும்பமும் செயல் இழந்து போக என் மகள் சொன்னாள்.
அப்பா நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் உடன் பணி புரிந்தவர் தானே...அவர் கூட நீங்கள் இருந்த நினைவுகள் சொல்லி அவர் பெற்ற மகன் இப்போது நம் ஊருக்கு பக்கத்தில் வந்து இருக்கிறார்...
நீங்கள் போய் நடந்ததை சொல்லி அவரிடம் உதவி கேளுங்கள்...அவரை பற்றி நான் நிறைய படித்து உள்ளேன் என்று மகள் விருப்பம் சொல்லி வந்த விவரம் சொல்ல...
கே.பி.ஆர்...கண்களில் கண்ணீர் முட்ட ஐயா பொறுங்கள் என்று சொல்லி சற்று நேரத்தில் தலைவர் இடம் விவரங்கள் சொல்ல...துடித்து போன தலைவர் அவரை வர வைத்து...
ஐயா உங்கள் விவரங்களை இவரிடம் சொல்லுங்க....ஒரு வாரம் கழித்து சென்னைக்கு வாருங்கள் என்று சொல்ல அதன் படி பெரியவர்...
சென்னை வந்து இறங்கி ஐயா கே.பி.ஆர். அவர்களை அந்த பெரியவர் சந்திக்க...அவர் தலைவர் இல்லம் அந்த பெரியவரை அழைத்து போக....
பெரியவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து அவரை சிறப்பிக்க நல்ல உணவு கொடுத்து வரவேற்று.
ஒரு சிறப்பு உடை பணம் வைக்க ஒரு ஜிப் வைத்து உடனே தயார் ஆகி அதற்கு மேல் ஒரு பெல்ட் வாங்கி கொடுத்து அதில் மொத்த பணம் 20000 ரூபாயை பத்திரம் ஆக வைத்து தைத்து.. மீண்டும் பணத்தை அவர் தவற விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில்...
கே.பி.ஆர்....அவர்களை சென்னை ரயில் நிலையம் வரை அந்த பெரியவருக்கு துணை ஆக அனுப்பி பாலக்காடு ரயிலில் அவரை பத்திரம் ஆக ஏற்றி விட்டு அவர் ஊர் சென்று பணத்துடன் பத்திரம் ஆக போய் சேர்ந்த விவரத்தை எனக்கு தெரிவியுங்கள் என்கிறார்..... கொடை வள்ளல் எம்ஜிஆர்..
பெற்ற தாய் தந்தைக்கே சோறு போடாத இந்த பொல்லாத உலகத்தில் தன் தந்தைக்கு தெரிந்தவர் என்றவுடன் அவர் சொன்னவை உண்மையா என்று கூட ஆராயாமல் அள்ளி கொடுக்கும் வள்ளல் இவர் போல யார் உண்டு..
பெரியவரை சுமந்து சென்ற அந்த விரைவு வண்டி பாலக்காடு போய் சேர்ந்து அவர் பணத்துடன் வீடு போய் நடந்தவை பற்றி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு பணத்தை இடுப்பில் இருந்து எடுத்து கொடுக்க..
அவர் மகள் அப்பாடா திருமணம் இருக்கட்டும் நான் எம்ஜிஆர் மீது வைத்து இருந்த என் நம்பிக்கை வீண் போக வில்லை என்று மனதுக்குள் மகிழ.
அவர்தான் தலைவர்.
அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்.
அன்று 20000 என்பது இன்றைய பணமதிப்பில் 20 லட்சம் பெறுமா. தாண்டுமா...இறைவா நன்றி.. நன்றி..
தொடரும்...நன்றி...
உங்களில் ஒருவன் ............
orodizli
24th August 2020, 11:56 PM
#மக்களை_பிளவுபடுத்தும் #மதவாதிகளை_அனுமதிக்க_மாட்டேன்
- தமிழக சட்டப்பேரவையில் எச்சரித்த முதல்வர் #எம்ஜிஆர்*
*"மதவாதிகள்-அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.*
*மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை- இந்த அரசு அனுமதிக்காது என்பதை தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.*
*இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்.*
*இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்*.... *"இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது"*
*குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகளும் நடந்து கொள்ள வேண்டுமே தவிர மற்ற வழிமுறைகளில் இறங்கக்கூடாது.*
*நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.*
*"அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே, அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது."*
*குறிப்பாகச் சொல்கிறேன்;*
*ஆர்.எஸ்.எஸ் தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும் *
*ஏற்கனவே என்.சி.சி, சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்."*
*ஆர் எஸ்.எஸ். சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை."* .
*மக்கள் நலனை காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன*
*மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள்*
*எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள்*
.
*எனவே, மதவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.*
*அரசு விதித்துள்ள*
*144 தடையை மீறுவோம்* *என்கிறார்கள்*
*தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால் , அரசு அதைச்
சமாளிக்கும்*
*அரசு அதற்குத் தயாராக இருக்கிறது."*
----------------
*29_03_1982 அன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியத்தின் மீதான* *விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து*
(திருத்தப்பட்ட பதிவு)
Ithayakkani S Vijayan.........
orodizli
25th August 2020, 08:08 AM
1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் செங்கல்பட்டு (தற்போதைய திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்க|ளை உள்ளடக்கியது) மாவட்டத்தில் உள்ள 17 தொகுதிகளில் நமது தலைவர் உருவாக்கிய கழகம் மொத்தம் 12 தொகுதிகளில் வென்றது; அவைகள் விவரம் வருமாறு :
கும்மிடிபூண்டி,
பொன்னேரி
திருவொற்றியூர்
ஆலந்தூர்
தாம்பரம்
செங்கல்பட்டு
அச்சரப்பாக்கம்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்
திருவள்ளூர்
திருத்தணி
sitting தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த திருவொற்றியூர் தொகுதி மா.வெ. நாராயணசாமியும், உத்திரமேரூர் தொகுதி கே.எம். ராசகோபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர். தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஒரே sitting தி.மு.க. எம்.எல்.ஏ. மதுராந்தகம் ஆறுமுகம். மற்ற தொகுதிகளில் தி.மு.க. தொகுதியில் பிரபலமான வெற்றி பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியது. அப்படியும் மண்ணைக் கவ்வியது.
இந்த மாவட்டத்தில், நான் சார்ந்திருந்த திருவொற்றியூர் தொகுதியில் நமது தலைவர் பெற்ற வெற்றி, மூன்று வகையில் குறிப்பிடத்தக்கது.
1. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த மா.வெ. நாராயணசாமி தோற்கடிக்கப்பட்டார். அவர் மாநில தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளராக விளங்கி வந்தார்.
இந்த திருவொற்றியூர் தொகுதியில்தான், பிரபலமான எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலேன்ட், என்பீல்ட் இந்தியா லிமிடெட், எண்ணூர் பவுண்டரிஸ், கே.சி.பி. நிறுவனம், எவரெடி நிறுவனம், கார்போரண்டம் யூனி வர்சல்ஸ், ஹாக்ப்ரிட்ஜ் ஹெவிட்டிக் ஈசன் குழுமம் மற்றும் எஸ்.வி.எஸ். ஆயில் நிறுவனம் போன்ற பிரபல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. .
மறைந்த மதிப்புக்குரிய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யுடன் கூட்டணி வைத்து, தொழிற்சங்க தலைவர் உழைக்கும் மக்கள் மாமான்ற தலைவர் சி.கே.மாதவன் அவர்களை வேட்பாளராக நிறுத்தியது.
2. திருவொற்றியூர் தொகுதியில் பெரும்பாலோர் என் போன்ற தெலுங்கு பேசும் இனத்தவர்கள் தான் வசிக்கிறார்கள். மற்ற மூன்று கட்சிகளும் (தி.மு.க., ஜனதா, மற்றும் காங்கிரஸ் கூட்டணி) தெலுங்கு இனத்தவரை, தங்கள் வேட்பாளராக நிறுத்திய போதிலும், நமது புரட்சித் தலைவர் அவர்கள் தெலுங்கு இனமல்லாத நாயக்கர் இனத்தை சார்ந்த மறைந்த சிகாமணி (இவர் இன்னிசை கச்சேரி நடத்தி வரும் திரு. லஷ்மண் சுருதி அவர்களின் மாமா) அவர்களை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.
3. மேலும், மறைந்த சிகாமணி அவர்கள் திருவொற்றியூர் தொகுதிக்கு முற்றிலும் புதியவர்.
இந்த தகவல்கள் மூலம் அறியப்படும் நீதி :
ஜாதி, மத இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்பட்ட ஒரே தலைவன் பொற்கால ஆட்சி வழங்கிய பொன்மனச் செம்மல் மட்டுமே.
பின்குறிப்பு : ஒவ்வொரு மாவட்டந்தோறும் இது போன்ற செய்திகள் அடங்கிய பதிவுகள் தொடரும்.
நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .........
orodizli
25th August 2020, 08:09 AM
மதுரை மாநகருக்கு அடுத்தபடியாக மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் சாதனை படைத்த இடங்கள் ஊர்கள் பல இருக்கின்றன..... அவைகளில் மக்கள் திலகம் படைத்த திரைப்படங்களின் வெற்றிகளை திண்டுக்கல், விருதுநகர், பழனி, காரைக்குடி, ராமநாதபுரம், தேனீ ஆகிய ஊர்களிலிருந்து இப்பொழுது பார்ப்போம்....
முதலில் திண்டுக்கல் நகரில் மக்கள் திலகத்தின் 6 திரைப் படங்கள் நூறு நாட்கள் ஓடி மகத்தான வெற்றியை படைத்துள்ளது.*
மக்கள் திலகம் கதாநாயகனாக வலம் வந்த. 115 திரைக்காவியங்களில் 65 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து நகரில் தலைவரே இன்று வரை சாதனை ஆவார்.இதில்**
20 திரைப்படங்கள் 70 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.**
நகரில் 100 நாட்களை கடந்த முதல் காவியம் மதுரைவீரன்*
அதன்பின்பு நாடோடி மன்னன் எங்க வீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோயில், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து வெற்றி பெற்றது.*
அதன் பின்பு 12 வாரங்கள்*
ஓடிய திரைப்படங்கள்....*
மலைக்கள்ளன்*
அலிபாபாவும் 40 திருடர்களும் சக்கரவர்த்தி திருமகள் குலேபகாவலி*
மக்கள் திலகத்திற்கு மட்டுமே உகந்த சாதனையாகும்.
திண்டுக்கல் நகரில் நடிகர் வி.சி கணேசனின் 100 நாள் ஓடிய திரைப்படம் பாகப்பிரிவினை மட்டுமே வேறு எந்த படமும் கிடையாது. அதே போல் 1965 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகளில் சிவாஜி கணேசனின் 7 படங்கள் மட்டுமே*
50 நாட்களை கடந்து உள்ளது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள்
சவாலே சமாளி சிவந்தமண்,*
வசந்த மாளிகை, தங்கப்பதக்கம் ஆகிய படங்கள் மட்டுமே....
தொடரும்.............
orodizli
25th August 2020, 08:10 AM
திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக மகத்தான சாதனைகளை படைத்த நகர் விருதுநகர்....ஆகும்.
புரட்சித்தலைவரின்*
பொன் போன்ற வெற்றிகளை.....*
1947ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை பற்பல சாதனைகளை படைத்துள்ளது.*
நகரில் மக்கள் திலகத்தின் காவியங்களே அதிக அளவில்*
50 நாட்களும், 75* நாட்களையும்* கடந்து சாதனையை பெற்றுள்ளது.
நகரில் முதன் முறையாக 100 நாட்களை கடந்து 114 நாட்கள்*
ஓடிய திரைக்காவியம்.*
புரட்சி நடிகரின் மதுரைவீரன் ஆகும்.*
அதன் பின்பு*
சக்கரவர்த்தி திருமகள் 99 நாட்கள் ஓடி வெற்றி நடை போட்டது.*
1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் 100 நாட்களை கடந்து வெற்றி கொண்டது.
மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், குலேபகாவலி, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை எழுபத்தைந்து நாட்களை கடந்து நகரில் வெற்றிநடை போட்டது.*
50 நாட்களை கடந்த மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்*
47 ஆகும். நகரில் இன்று வரை பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் ஒருவரே வசூல் சக்கர
வர்த்தியாக திகழ்கிறார்..........
fidowag
25th August 2020, 12:06 PM
அப்பாடா! ஆகஸ்ட் 22 தலைவரின் "நாடோடி மன்னன்", மற்றும் "இதயக்கனி" பிறந்த நாள் கொண்டாடி முடித்தவுடன் அடுத்து எதைப்பற்றி எழுதுவது என நான் சிந்திக்கையில் என் கண்ணில் பட்டது நெல்லையில் ஒரு திரைப்படத்தின் 100 நாட்கள் வசூல் என்னை திகைக்க வைத்தது.
என் வாழ்நாளில் அதுவும் .a சென்ட்டரில் இப்படிப்பட்ட ஒரு வசூலை நான் பார்த்ததே இல்லை.
அப்படியென்னப்பா! அந்த படத்தின் வசூல் சிறப்பு! என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நம்ம சன் டிவியில் தொண்டை கிழிய கத்துவார்களே அதை போல் கத்த வேண்டும் போல இருக்கிறது.
உலக திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படம் இவ்வளவு குறைந்த வசூலுடன் 100 நாட்கள் ஓட்டப்பட்டது இதுவே முதல் முறை. இ்ந்த பெருமையை பெற்று முதல் பரிசை
வென்ற "சொர்க்கம்" படத்தின் 100 நாட்கள் வசூல்தான் இது..
நெல்லை பாப்புலரில் 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 85,495.45 தான்.
-----------------------------'-------------------------------
நெல்லையில் தலைவர் படத்தின் வசூல் விபரம்
-------------------------------------------------------------
இப்படி ஒரு வசூலுக்கு 100 நாட்கள் ஓட்டப்பட்டால் எம்ஜிஆரின் அத்தனை படங்களுமே 100 நாட்கள் படம்தான்.
ர.போ.115 நாட்கள்54 ரூ 89132.16
கு.கோயில். 65. 97,929.75
ஒளி விளக்கு. 59. 1,01,686.54
காவல்காரன். 55. 84,855.52
நம்நாடு. 76. 1,35,631.01
என் அண்ணன். 71. 1,13,135.63
எங்கள் தங்கம். 66. 1,01,802.77
ப.பொன்னையா. 62. 1,02,000.00
இதயவீணை. 63. 1,02,078.25
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
தூத்துக்குடியில் கூட சிவந்த மண்ணை 100 நாட்கள் ஓட்டி சுமார் ரூ 1,06,200. வசூல் காண்பித்தார்கள். மதுரை தங்கத்தில் ஒரு "கர்ணன்" என்றால் நெல்லையில் ஒரு "சொர்க்கம்". இன்னும் பல ஊர்களில் இது மாதிரி சாதனை வைத்திருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. தேடிப் பார்த்து கின்னஸுக்கு அனுப்ப வேண்டியதுதான் பாக்கி.
இதைப்பார்க்கும் போது சிவாஜி ரசிகர்களின் ஆற்றலை நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு படத்தில் செந்திலிடம் கவுண்டமணி கேட்பாரே கப்பலில் என்ன வேலை? என்று.
உடனே செந்தில் கடலில் கப்பல் நின்று விட்டால் நடுக்கடலில் இறங்கி கப்பலை தள்ளவேண்டும் என்பாரே.
அதை நல்ல ஜோக்காகவே நினைத்திருந்த எனக்கு சிவாஜி ரசிகர்கள் அந்த கப்பலை தள்ளி கரை சேர்த்ததை பார்த்ததும். உண்மையிலேயே நான் திகைத்து விட்டேன்.
சிவாஜி ரசிகர்கள் அவருக்கு செய்த இந்த அரும்பணியை கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமை. இதை கின்னஸில் பதிவு செய்ய மறந்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். இந்த அரும் பணிக்கு பதில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்திருந்தாலாவது போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைத்திருக்கும். என்ன புரிந்திருக்குமே! போலி சிவனடியார்களுக்கு.
மீண்டும் அடுத்த பதிவில் மற்றொரு சாதனையை பார்ப்போம்.
fidowag
25th August 2020, 01:00 PM
மலேசியா*நாட்டில்*பல அரங்குகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ஆயிரத்தில் ஒருவன் 27/08/20 முதல் தினசரி ஒரு காட்சியில் வெளியீடு .
----------------------------------------------------------------------------------------------------------------
2014ல் சென்னையில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி ஆல்பட் காப்ளக்சில் 190 நாட்களும் சத்யம் காம்ப்ளக்சில் 161 நாட்களும் ஓடி மகத்தான சாதனை புரிந்த*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன்* வெற்றி பயணம்**தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தாக்கம் தீவிரம் அடையும் வரை தொடர்ந்தது .
தற்போது மலேசியா நாட்டில் இதுவரை வெளிவராத அளவில் பழைய படங்களின் மறு வெளியீட்டில்மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க* *lfs* திரையரங்குகளில்* டிஜிட்டல் வடிவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் கீழ்கண்ட 11 அரங்குகளில் வரும் வியாழன் முதல் (27/08/20)தினசரி இரவு காட்சியில் மட்டும் (இரவு 8.30 மணி காட்சி )வெற்றி பயணத்தை தொடர உள்ளது .
Theater* * * * * - city---------------* * * * * *------
lfs state cinemaa* - pj*
lfs coliseum - kl*
lfs seri intan - kilang
lfs capitol* *- selayaang
lfs plaza metro - kajang*
lfs tasek central* -* jb
lfs skudai parade* * -jb*
lfs seri kinta -* * * *ipoh
lfs butterworth*
lfs sitiawan*
lfs sun rawang*
விளம்பரம் செய்தி : மக்கள் ஓசை,மலேசியா* தினசரி -25/08/20
தகவல் உதவி ;: திரு.மேகநாதன்,,*மலேசியா -செல் :+6018-397 3720
இந்த செய்தியை வெளியிட்ட திரு.மேகநாதன்,மலேசியா* அவர்களுக்கு*தமிழ்நாட்டின்* அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு*சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்*
orodizli
25th August 2020, 02:18 PM
1964 ஆம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை நடிகர் வீ. சி கணேசன் நடித்த திரைப்படங்களில் 7 படம் மட்டுமே நகரில் 50 நாள் ஓடியுள்ளது.
கை கொடுத்த தெய்வம் திருவிளையாடல் , சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் சிவந்தமண், வசந்தமாளிகை தங்கப்பதக்கம் ஆகியவையாகும்.*
அடுத்து திண்டுக்கல் விருதுநகருக்கு பிறகு பழனி நகரில் மக்கள் திலகத்தின் சாதனை காவியங்கள் இன்றுவரை முன்னணி வகிக்கிறது....
நகரில் 100 நாட்களை கடந்து ஓடிய ஒரே திரைப்படமாக மதுரை வீரன்* திகழ்ந்துக்கொண்டு வருகிறது.* எங்க வீட்டுப் பிள்ளை 83 நாட்களும், நாடோடி மன்னன் 80 நாட்களும், மலைக்கள்ளன், குலோபகாவலி அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படங்கள்* 75 நாட்களும் ஓடியுள்ளது.*
நகரில் மக்கள் திலகத்தின் 48 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து 2020 ஆம் ஆண்டு வரை மக்கள் திலகத்தின் காவியமே சாதனையில் முன்னணியாக திகழ்கின்றது.
நடிகர் வீ.சி கணேசனின் சில படங்கள் மட்டுமே 50 நாட்கள் ஓடியுள்ளது. அதில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் தில்லான மோகனம்பாள் சிவந்தமண், வசந்தமாளிகை தங்கப் பதக்கம் ஆகியவை ஆகும்.
அடுத்து மதுரை ஏரியாவில்* முக்கிய நகரான காரைக்குடி நகரில் மக்கள் திலகத்தின் காவியங்கள்.... அதிகமாக*
50 நாட்களும், எழுபத்தி ஐந்து நாட்களும் ஒடி மகத்தான வரலாற்றை படைத்துள்ளது. நகரில் அதிக நாள் ஓடிய திரைப்படங்கள் மதுரைவீரன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் 75 நாட்களை கடந்து இன்று வரை சாதனையாகும். மக்கள் திலகத்தின்*
38 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் சில படங்கள் மட்டுமே 50 நாட்கள் திருவிளையாடல், வசந்த மாளிகை 2 படம் மட்டுமே 50 நாட்கள்..........
orodizli
25th August 2020, 02:19 PM
அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ராம்நாட் என்று சொல்லக்கூடிய இந்நகரில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களை தவிர மற்ற நடிகர்களின் சாதனைகளை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.* அடிமைப்பெண் சண்முகா திரையரங்கில் 84 நாட்கள் ஓடி ஒரு அசுர சாதனையை படைத்தது. அதேபோல் நாடோடி மன்னன் மதுரை வீரன் 75 நாட்கள் ஓடியது இத்திரைப்படம் மகத்தான வெற்றியாகும்....
நகரில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் கிட்டத்தட்ட 22 திரைப்படங்கள் 50 நாட்கள் கடந்து ஒடி உள்ளது.*
ஆனால் நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1977 வரை எந்த படமும் 50 நாள் கிடையாது.
தேனி நகரில் மக்கள் திலகமே சாதனையில் முன்னணி.*
நாடோடி மன்னன்*
மதுரைவீரன் திரைப்படங்கள்*
70 நாட்களும்.... அதன் பின்பு 12 ஆண்டுகள் கழித்து வெளிவந்த மாட்டுக்கார வேலன் திரைக்காவியம் லட்சுமி டூரிங் தியேட்டரில் 70 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. மற்றும் மக்கள் திலகத்தின் 12 திரைப்படங்கள் தேனி மாநகரில் 50 நாட்களைக் கடந்து ஓடி உள்ளது. வேறு எந்த நடிகரின் படமும் 1977 வரை 50 நாட்கள் ஒரு படம் கூட கிடையாது..
ராஜபாளையம் நகரில் மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில் 18 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து ஓடிய உள்ளது.*
அலிபாபா, நாடோடி மன்னன், மதுரைவீரன் மலைக்கள்ளன் திருடாதே, எங்க வீட்டுப் பிள்ளை, மாட்டுக்கார வேலன், குடியிருந்த கோயில், என் அண்ணன், நம் நாடு, நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் 50 நாட்களை கடந்துள்ளது.
வேறு எந்த நடிகரின் திரைப்படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகர் சிவாஜி கணேசனின் சவாலே சமாளி படம் மட்டும் 44 நாட்கள் ஒட்டப்பட்டது மிகப் பெரிய போராட்டத்திற்கு இடையில்.............
orodizli
25th August 2020, 02:20 PM
கம்பம் நகரில் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் திரை காவியம் தான் முதன் முறையாக 100 நாட்கள் ஓடியது. நகரில் மக்கள் திலகத்தின் 7 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்துள்ளது.வேறு எந்த நடிகருக்கும் சாதனை என்ற பேச்சுக்கு இடமில்லை.
பரமக்குடி நகரில் புரட்சி நடிகரின் மகத்தான காவியமான மதுரைவீரன் 105 நாட்கள் ஓடி முதன் முறையாக 100 நாட்கள் ஒடிய சாதனையாகும்.*
நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன்* மாட்டுக்கார வேலன், உரிமைகுரல் 50 நாட்கள் ஒடியுள்ளது.
சிவகாசி நகரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்*
75 நாட்களும், மதுரைவீரன் 63 நாட்களும் ஓடி உள்ளது. அதன் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 50 நாட்களை கடந்து வீறுநடை போட்டு உள்ளது.*
உரிமை குரல் திரைப்படம் 43 நாட்கள் ஓடி நகரில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாகும்.
போடி நகரில் பொன்மனச் செம்மலின் மதுரை வீரன் திரை காவியம் 100 நாள் ஓடிய ஒரே சாதனை காவியமாக இன்று வரை திகழ்கிறது.*
நாடோடி மன்னன்,அலிபாபா எங்கவிட்டுபிள்ளை,*
ஒளிவிளக்கு, நம் நாடு, நல்ல நேரம், திரைப்படங்கள் 50 நாட்கள் ஓடி சாதனையை பெற்றுள்ளது.*
அருப்புக்கோட்டை மாநகரில் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் அலிபாபா திரைப்படங்கள் அதிக நாள் அதாவது 70 நாட்கள் ஓடி சாதனை ஆகும். 7 திரைப்படங்கள் இங்கு 50 நாட்கள் ஓடியுள்ளது. எங்க வீட்டுப் பிள்ளை,*
ஆயிரத்தில் ஒருவன், மதுரைவீரன் குலேபகாவலி, உலகம் சுற்றும் வாலிபன், மாட்டுக்கார வேலன் ஆகியவையாகும். வேறு எந்த நடிகருக்கும் 50 நாள் கிடையாது.*
சிவகங்கை நகரில் நாடோடி மன்னன், மதுரைவீரன் திரைப்படத்திற்குப் பின் 12 ஆண்டுகள் கழித்து 50 நாள் ஓடிய ஒரே திரைப்படம் நம் நாடு ஆகும் அதன் பிறகு நல்லநேரம் திரைப்படம் 44 நாட்கள் ஓடியது.* வேறு எந்த நடிகரின் படமும் எங்கு இரண்டு வாரம் தாக்குப் பிடிப்பதே ரொம்பவும் கஷ்டமாகும்..........
orodizli
25th August 2020, 02:23 PM
மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் 50 நாள்* ஒடிய திரைப்படம் நாடோடி மன்னன் மட்டுமே.... அதன் பின்பு அடிமைப்பெண், நம் நாடு, உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள்*
5 வாரங்களை கடந்து வெற்றி நடைபோட்டு உள்ளது. வேறு எந்த நடிகரின் படமும் பத்து நாட்கள் ஓடுவது இங்கு கஷ்ட காலம் ஆகும்.
வத்தலகுண்டு நகரில் மக்கள் திலகத்தின் காவியங்களில் பல சாதனைகள் புரிந்து உள்ளது
நாடோடி மன்னன் திரைக்காவியம் 50 நாட்களும், மதுரை வீரன் திரைப்படம் 50 நாட்களும் அதன் பின்பு எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல்* திரைப்படங்கள்**
40 நாட்களும் ஒடி நகரில் வேறு எந்த படமும் ஒரு வாரம் இரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காது.*
பெரியகுளம் ரஹீம் அரங்கில்
மதுரைவீரன் நாடோடி மன்னன் எங்கவீட்டுப்பிள்ளை* 50 நாட்கள் ஒடி சாதனையாகும்.
மதுரை ஏரியா இன்னும் பல ஊர்களை கொண்டது....
அங்கெல்லாம் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே சாதனையாகும்.
மதுரையை தவிர சி.கணேசனின் படங்களின் நிலவரம் உட்பட ஏனைய நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் வசூல், ஓட்டம் மட்டமானதாகும்..... நீயூ சினிமாவை வைத்து டிக்கட் கிழித்து தன் படங்களை மட்டமாக ஒட்டியது கேவலமாக இன்று வரை உள்ளது....
தொடரும் பதிவுகள்..............
orodizli
25th August 2020, 02:25 PM
கதாநாயகனாக
மக்கள் திலகம் வலம் வந்த 115 திரைப்படங்களில்
முதல் வெற்றியை அனைத்து ஏரியாவிலும் பெற்றக்காவியங்கள்.....
ராஜகுமாரி
மந்திரி குமாரி
மர்மயோகி
சர்வாதிகாரி
மலைக்கள்ளன்
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களூம்
மதுரை வீரன்
தாய்க்குப்பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமைப்பித்தன்
நாடோடி மன்னன்
திருடாதே
தாய்சொல்லைத் தட்டாதே
தாயைக்காத்த தனயன்
பெரிய இடத்துப்பெண்
பணக்கார குடும்பம்
எங்கவீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
அன்பேவா
காவல்காரன்
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என்அண்ணன்
ரிக்க்ஷாக்காரன்
நல்லநேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க
நீதிக்குத்தலைவணங்கு
மீனவ நண்பன்.
இப்படங்கள் முதல் வெளியீட்டில்
40 அரங்குகளுக்கு மேல் தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான திரைப்படங்கள்
35 முதல் 40 திரையரங்குகளில்
முதல் சுற்றில்
50 நாட்களை கடந்து சாதனையாகும்.
குறிப்பாக...
மலைக்கள்ளன்
குலேபகாவலி
அலிபாபா
மதுரைவீரன்
தாய்குப்பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமைப்பித்தன்
நாடோடி மன்னன்
திருடாதே
எங்க வீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்
ரிக்ஷாக்காரன்
நல்லநேரம்
உலகம் சு.வாலிபன்
உரிமைக்குரல்
இதயக்கனி
மீனவ நண்பன்
தமிழகத்தில் திரையிட்ட 38,40,42,44 திரையரங்குகளில்
50 நாட்களை கடந்து சாதனையாகும்.
இதுப்போல் ஒரு சாதனைகள்....
எந்த நடிகருக்கும்
கிடையாது.....
நடிகர் சி.கணேசனுக்கு
மனோகரா
கட்டபொம்மன்
பாகபிரிவினை மட்டுமே....
நடிகர் ஜெமினி
வஞ்சிக். வாலிபன்
கணவனே கண் கண்ட தெய்வம்
கல்யாணபரிசு
2020 வரை மக்கள் திலகத்திற்கே அதிக திரைப்படங்களின் வெற்றியாகும்.... இச்சாதனையாகும்....
அடுத்த இரண்டாவது ரவுண்டிலும் மக்கள் திலகமே முன்னனி ஆவார்..........
fidowag
25th August 2020, 06:36 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மறைந்தும் மறையாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் எத்தனையோ படங்களில், நகரங்களில், ஊர்களில் ,விழாக்களில், வெற்றி கண்ட நாயகனின்*சாதனை தொடர் சகாப்தம் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .* நாம் ஒவ்வொரு நாளும் ஒரு படிப்பினையை, பாடத்தை வாழ்க்கையில்* தெரிந்து வைத்து வருகிறோம்*
நான் சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றி வரும் சமயம்*அ .தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தான் முதன்முதலாக எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்தேன் .அன்று மாலையே அரசு பொது மருத்துவமனையில் வெள்ளை உடை அணிந்த செவிலியர்* இருபுறமும்**ரோஜாபூக்களை தூவி வர ,நடுவில் தலை குனிந்தவாறு, இருகரம் கூப்பி வணங்கியபடியே ,தங்கநிறம் கொண்ட திரையுலகின் தலைமகன் அழகாக நடந்துவந்த காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது .
அன்பே வா திரைப்படத்தில் அறிமுக காட்சியில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து புத்துணர்ச்சியுடன், அழகுற இறங்கி வருவார் . முக்கிய விருந்தினர்கள்,நண்பர்கள்,பத்திரிக்கை நிருபர்கள், பொதுமக்கள் மாலைகள், பூச்செண்டுகளுடன் விமான நிலையத்தில் குவிந்து இருப்பார்கள் . கோடி மாலைகள் தாங்கியவை* எம்.ஜி.ஆரின் தோள்கள்* இந்த காட்சியிலும் ஏராளமான மாலைகள் சூட, அவற்றை ஒவ்வொன்றாக கழற்றியவாறே ,நிருபர்களுக்கு பேட்டியும் அளித்து வருவார் . அதில் களைப்போ, அசதியோ , சோர்வோ தெரியாத வகையில் மிகவும் சுறுசுறுப்பாக அந்த காட்சியில் நடித்திருப்பார் . பொதுவாக 24 மணி நேரத்தில் சுமார் 12 மணி நேரம் படப்பிடிப்பில், வீட்டில், பொது நிகழ்ச்சிகளில், கட்சி பொது கூட்டங்களில் அவருக்கு மாலைகள் விழுந்து கொண்டே இருக்கும் .அதனால்தான் கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் என்று*குறிப்பிடப்படுகிறார் . இப்போது எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தால் எப்படி பேட்டி அளித்திருப்பார் என்பதற்கு கற்பனையாக திரு.துரை பாரதி நிருபரை போல* சில கேள்விகள்**கேட்க* அதற்கு எம்.ஜி.ஆர். பதில் அளித்த விதம் பின்வருமாறு*
கேள்வி ;தமிழ்நாட்டில் தற்பொது பெருகியுள்ள கல்லூரிகளின்* கல்வி தந்தையரை பற்றி என்ன சொல்கிறீர்கள் ?* * *பதில் : முழுக்க முழுக்க வியாபாரம்*
கேள்வி : தமிழகத்தின் அடுத்த பொது தேர்தலில் இ .பி.எஸ்./ ஓ.பி.எஸ். அணியினர் இடையே முதல்வர் பதவி குறித்து போட்டி நிலவுகிறதே அது பற்றி*பதில்: அது என்னை கேட்க வேண்டிய கேள்வி அல்ல ,அங்கே என்று வானில்*ஆண்டவனிடம்கேள்வி :அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் தேர்வு பெற வாய்ப்புண்டா ?பதில்:* .தர்மசங்கடமான கேள்வி. இப்படியெல்லாம் கேட்கக்கூடாது .
இப்படியான வாழ்க்கையில் வரும்* பல கேள்விகளுக்கு தன் திரைப்படங்களில் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் மூலம் தகுந்த பதில் அளித்திருக்கிறார் .**குறிப்பாக இன்றைக்கு நீங்கள் கேட்டால்கூட நெகிழ்ந்து போகிற ஒரு கேள்வி , நீங்கள் யார், எதற்காக வருத்தப்படுகிறீர்கள் ,எதற்க்காக மகிழ்ச்சி அடைகிறீர்கள்*என்று* அடுக்கு அடுக்காக*கேட்டால்கூட தகுந்த பதில் அளித்திருப்பார்***
ஒவ்வொரு படத்திலும்* கருத்துக்களாக பதிந்து வைத்துள்ளார் .இன்றைக்கும்*அந்த பாடல்கள், படங்கள்*ஏழை மக்களின்*நம்பிக்கை நட்சத்திரமாக*ஏன் பலருக்கு*வாழ்க்கையின் ஒளிவிளக்காகவே தெரிந்து கொண்டிருக்கிறது .சத்யபாமா அம்மையாருக்கு ஐந்தாவது குழந்தையாக எம்.ஜி.ஆர். அவர்கள்* பிறந்ததற்கு பின்னால் ,சந்தர்ப்ப சூழ்நிலை*,தந்தையாரின் மறைவு ,பொருளாதார*பிரச்னை*ஆகிய காரணங்களால் குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடியதோடு*,வீழ்ச்சியை*நோக்கி சென்றது .அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த எம்.ஜி.ஆர். அவர்கள் இப்படிப்பட்ட இந்த தமிழகத்தையே ஆளுகின்ற மன்னனாக*திகழ்ந்தார் என்றால் அவருக்கு*நேர்ந்த*எத்தனை அவமானங்கள் , தோல்விகள் ,தடைகள் ,பிரச்னைகள் ,சிக்கல்கள் எப்படியெல்லாம் வந்திருக்கும் ..இவற்றையெல்லாம் கடந்து* அவர் வெற்றி எனும்*சிகரத்தை அடைந்தார்***என்பது*ஒரு படிப்பினை ,பாடம் அல்லவா*அவர்தானே*நமக்கு முன்னோடியாக திகழும் ஒரு பல்கலை*கழகம் .ஒவ்வொரு நாளும்*அவர் வாழ்வதற்கான அர்த்தமிழந்த நாட்களாக*கழிந்து*கொண்டேயிருந்தது .தனது*இளமை பருவத்தில் அழகு, திறமை எல்லாம் இருந்தும்கூட பட வாய்ப்புகளுக்காக ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் அலைந்து*இளமை பருவத்தின்*பெரும்பகுதியை கழிக்க வேண்டியதாயிற்று .முதல் படத்தில்*போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம், மற்ற படங்களில் துணை தளபதி போன்ற சிறு*வேடங்களில் நடித்தும்*கூட*சுமார்*11 ஆண்டுகள்*கதாநாயகன் வேடத்திற்கு காக்க*வேண்டியதாயிற்று .அவருடைய முகம் எந்த சுவரொட்டியிலாவது இடம் பெறாதா, டைட்டிலில் முன்வரிசையில் தன் பெயர் இடம் பெறுவது*எப்போது என்று அவர் துடித்த*துடிப்பானது*ஏழு வயதில்*இருந்தே*ஆரம்பித்தது .* படிப்பதற்கு வசதியில்லை .,நல்ல பள்ளியில்*சேர்ந்து*படிக்க பணம் செலவழிக்க வழியில்லை . பட்டினியை*வெல்வதற்கும் முடியவில்லை*இப்படியொரு வாழ்க்கை நிலையில்*இருந்துதான்*நாடக*உலகத்தில் நடிக்க தள்ளப்படுகிறார் .*
தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றுவது எப்படி என்று* நீங்கள் நூலகத்தில்*பெரிய புத்தகங்களை படிக்க தேவையில்லை . எம்.ஜி.ஆர். எனும்*வாழ்க்கை சரித்திரத்தை புரட்டினாலே போதும் .ஏனென்றால் அப்படி அவர் வாழ்ந்து காட்டியுள்ளார் .படிப்பதற்கு வழியில்லை. பட்டினியில்*இருந்து மீள முடியவில்லை . தந்தையை*இழந்து*தாய் நிர்கதியாக*குடும்ப வருமானத்தை எதிர்பார்த்து*காத்து*கொண்டிருக்கும் சமயம்*,ஏதாவது வீட்டு வேலைக்கு சென்றால் தான் குழந்தைகளுக்கு உணவளிக்கவாவது முடியும் .இப்படிப்பட்ட மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் நடிப்புஎன்பது அவர் தானாக* விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்தது*அல்ல. இயற்கையாகவே திணிக்கப்பட்டது .ஒருவருக்கு*எதை*நீங்கள் பாரமாக*தலையில்*சுமத்துகிறீர்களோ, அதையே*வாழ்க்கையில்*வெற்றிபடிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த உதாரணம் .நாடக மேடையில்*பாடவேண்டும், நடிக்க வேண்டும் ஆட*வேண்டும் .என்று* நிர்பந்திக்கப்பட்டபோது ,பசியையும், வறுமையையும் வெல்வதற்காக* அவர்* பல படிப்பினைகளை கற்று கொண்டார்*அதுவே*அவருக்கு*நாட்டை ஆளக்கூடிய*சிம்மாசனத்தை தந்தது என்றால்*ஒருபோதும், பிரச்னைகள், கஷ்டங்களுக்காக வாழ்க்கையில்*பயந்துவிடாமல்*எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்ள*முயலவேண்டும்*என்பதற்கு எம்.ஜி.ஆர். ஒரு சிறந்த*உதாரணம் .*மற்றவை*அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். பேசும் காட்சி*- சங்கே முழங்கு*
2.வெற்றிமீது வெற்றி வந்து* என்னை சேரும்*- தேடிவந்த மாப்பிள்ளை*
3.சின்னப்பயலே,சின்னப்பயலே- அரசிளங்குமரி*
4.எங்கே, என் இன்பம் எங்கே ,என் இதயம் எங்கே -நாடோடி மன்னன்*
5.கண்ணை*நம்பாதே உன்னை ஏமாற்றும்*-நினைத்ததை முடிப்பவன்*
6.உன்னை அறிந்தால்*-வேட்டைக்காரன்*
7.நினைத்ததை நடத்தியே முடிப்பவன்*- நம் நாடு*
1.
fidowag
25th August 2020, 08:54 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*05/08/20 அன்று சொன்ன*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் மலைக்குகையில் கிடைக்கும் புதையல் போல ,ஜீபூம்பா விளக்கை தேய்த்தால் தோன்றும் அற்புதங்கள் போல , எம்.ஜி.ஆர் என்கிற ரகசிய புதையல், அற்புத புதையல், மானிட குலம் எப்படி வாழ வேண்டும் . எப்படி வாழ்ந்தால் எப்படி ஜெயிக்கலாம் என்பதற்கு தன்னம்பிக்கை விதை எம்.ஜி.ஆர். என்கிற வரலாறு*
அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் நடித்திருந்தார் . ஒரு காட்சியில் அவர் கோழிக்கறி சாப்பிடுவது போல இருந்தது .ஆனால் அவர் சுத்த சைவம் . கோழிக்கறி கொண்டுவந்து வைத்தாகிவிட்டது. ஆனால் அதை தொடவோ ,பார்க்கவோ அவருக்கு பிடிக்காது என்பதால் ,மசாலா கோழியை போல தோற்றமுள்ள சைவ கேக்கை எம்.ஜி.ஆரின் வேண்டுகோளின்படி ஏ.வி.எம்.நிறுவனத்தினர் தயார் செய்தனர் . .அதற்காக ஒருநாள் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது .இதுகுறித்து எம்.ஜி.ஆர். பேசியதாவது, ஒரு காலத்தில் அவர் கதாநாயகனாக நடித்தபோது அவர் பெயருக்கு முன்னால்* என் பெயரை சொல்லவே தயங்கியவர் .அப்படி ஒரு இக்கட்டான நிலைமை .குறிப்பாக ஒரு மனிதனின் குணம், தாய்,மொழி,மதம் ,தெய்வம் போன்றவற்றில் யாரும்* கருத்து சொல்வதோ, அல்லது மாற்று கருத்தை திணிப்பதோ கூடவே கூடாது என்கிற மிக உன்னதமான கொள்கையை எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார் என்பதற்கு உதாரணம் கோழியின் தோற்றத்தை போலவே சைவ கேக் ,நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனுக்கு செய்துதர உதவினார் என்பதுதான் .
ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தை பார்த்து, அலங்கரிக்கப்பட்ட உலோகம் ,குதிரை முகம் ,ராசியில்லாதவர், முதல் படமான சாயாவில் கதாநாயகனாக நடித்து வெளிவரவில்லை என்பது போல கிண்டல்களும்* கேலிகளும்* அந்த கால இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் போன்ற சிலர்*பரிகாசாம் செய்தனர் .* ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராகி கோட்டையில் இருந்தபோது அதே பழைய இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன்* ஊட்டியில் தனக்கு இருந்த ஒரு சொத்து பிரச்னைக்காக அவரை சந்தித்து முறையிட்டார் . எம்.ஜி.ஆர். பழைய நிகழ்ச்சிகள் , தன்னை பரிகாசம், கிண்டல், கேலி செய்தது எதை பற்றியும் ஆலோசிக்காமல் அவருடைய பிரச்னையை உடனடியாக தீர்த்து வைத்தார் என்பது வரலாறு .அதற்கு இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் கண்ணீர்* பெருக்குடன் நன்றி தெரிவித்துக்கொண்டார் ..அதுதான் எம்.ஜி.ஆரின் சிறந்த குணம் .எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் சேர்ந்து , கட்சி கொள்கைகளை திரைப்படங்களில் பரப்புவதையும்,அதை மக்கள் அளித்த வரவேற்பையும் அறிந்த, உணர்ந்த பேரறிஞர் அண்ணா உன் முகத்தை காட்டு ,கட்சிக்காக லட்சக்கணக்கில் ஒட்டு விழும் ,என்று பேசினார் என்றால் அவரை பார்ப்பதற்காக, அவர் குரலை கேட்பதற்காக லட்சோப லட்சம் மக்கள் விடிய விடிய காத்திருந்தார்கள் என்று* சொல்வார்களே அப்படியான முகம்தான் ஆரம்ப காலங்களில் பரிகாசம் செய்யப்பட்டது .திரையிலே காட்டுவதற்கு கூட யோசித்தார்கள் .கதாநாயகன் ஆனபின்பு கூட மந்திரி குமாரி படத்தில் தாடையில் குழி உள்ளதை சரிசெய்ய சிறிய தாடி ஒன்று* இயக்குனர் எல்லீ ஸ் ஆர். டங்கனால்* ஒட்டப்பட்டது . ஆனால் பிற்காலத்தில் அந்த தாடையில் உள்ள குழிதான் அவர் முகத்திற்கு அழகு சேர்த்தது .இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவர் வெகு சுலபமாக வெற்றி எனும் சிகரத்தை அடைந்துவிடவில்லை .படிப்படியாக வெற்றிக்கான படிகளை அமைத்து முன்னேறினார் . தனக்கு எதிர்ப்பட்ட தோல்விகள், அவமானங்கள் ,பரிகாசங்கள் ஆகியவற்றை துச்சமாக எண்ணி, எதிர்நீச்சல் போட்டு,கூடுதல் அக்கறையுடன் கவனமாக செயல்பட்டு சிகரத்தை அடைந்து வாழ்ந்து காட்டிதன்னை எதிர்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார் எம்.ஜி.ஆர்.*
உலகின் தலைசிறந்த நடிகர்களாக மார்லன் பிராண்டோ, ஏரால்* பிளைன்*போன்றவர்கள் இருந்தார்கள் .தமிழ் திரையுலகில் கூட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என்று எம்.ஜி.ஆர். பேசியுள்ளார் .ஆனால் உலகத்திலேயே தான் இட்ட கட்டளையை தயாரிப்பாளர்கள் திரையுலகில் செயல்படுத்த வேண்டும் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்தான் . மார்லன் பிராண்டோவுக்கு அவரது படங்களுக்கு* முதல் தயாரிப்பாளர் எம்.ஜி.எம். நிறுவனம் என்றால் இரண்டாவது தயாரிப்பாளர் அவரே என்று அந்த காலத்தில்* ஒப்பந்தம் போடுவார்களாம்*அதாவது இதுதான் பட்ஜெட், நடிகர், நடிகர்களுக்கான சம்பளம் , இத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும்* ஆனால் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில்*நிரந்தர கதாநாயகன் ஆன பிறகு அவர்தான் முதல் தயாரிப்பாளர் . பட நிறுவனத்தார் இரண்டாவது தயாரிப்பாளர் .அது மட்டுமல்ல. ஒவ்வொரு படத்தின் ஒப்பந்த பத்திரத்தின் பின்னால் , இந்த படத்தின் கதையில், வசனங்களில், காட்சிகளில், பாடல்களில் ஏதேனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் அதை மாற்றக்கூடிய உரிமை எனக்குள்ளது என்ற நிபந்தனையுடன்*கையெழுத்திடுவாராம் .எந்த திரையுலகத்தில் சிலரால் பரிகாசம் செய்யப்பட்டாரோ ,அதே திரையுலகின் லகானை லாவகமாக பிடித்து தன்* கைவசம் வைத்து சவாரி செய்து வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர்*
பல துறைகளில் வெற்றி பெற்றவர்கள் ஊடக துறையில் தோல்வி அடைந்துள்ளார்கள்* பல ஊடக துறை ஜாம்பவான்கள் கூட திரைத்துறையில் ,அரசியல் துறையில்*தோல்வி அடைந்துள்ளனர் .ஆக யார் எப்படி எந்த துறையில் வெற்றி பெறுவார்கள், தோல்வியுறுவார்கள் என்று கணிக்கமுடியாத பட்சத்தில்தான் தொட்ட ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்றதோடு, உச்சத்தை அடைந்தவர்தான் எம்.ஜி.ஆர். என்பதற்கு ஒரு வாழ்ந்து மறைந்த சாட்சி, நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிற சாட்சி, அவருடைய* அந்த சாட்சியை நமது வாழ்க்கை* துணையாக வைத்து**வழி நடப்போம், வென்று காட்டுவோம் .மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .......
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.ஏன் என்ற கேள்வி, கேட்காமல் வாழ்க்கை இல்லை -ஆயிரத்தில் ஒருவன்*
2.முகத்தை பார்த்ததில்லை - அரச கட்டளை*
3.கட்டான கட்டழகு கண்ணா - குடும்ப தலைவன்*
4.மந்திரி குமாரி படத்தில் வசனம் பேசும் எம்.ஜி.ஆர்.
5.தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
6.அச்சம் என்பது மடமையடா* - மன்னாதி மன்னன்*
orodizli
26th August 2020, 07:51 AM
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .
எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
எம்ஜியாருக்கு அழ தெரியாது
எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....
1950 முதல் 1960 வரை வந்த படங்களில்
மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
எம்ஜியாரை ஒரு
சரித்திர நாயகனாக
வீரத்தின் திருமகனாக
சாகச நாயகனாக
கொள்கை வேந்தனாக
நடிக பேரசராக
கட்டழகு வேந்தனாக
மக்கள் திலகத்தை
தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை
புரட்சி நடிகர்
வசூல் சக்கரவர்த்தி
பாரத் எம்ஜியார்
என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .
இது வரலாறு .
ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .
இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .
மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .
என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார்.........
orodizli
26th August 2020, 03:00 PM
எம்.ஜி.ஆர்.
பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.
‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.
எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.
படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.
தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.
அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.
தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.
கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.
தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.
‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.
தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.
திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.
எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...
.........
courtesy -கோவி.லெனின்.
orodizli
26th August 2020, 03:01 PM
"கணவன்". 1968 ஆக 15 ம் தேதி வெளியான கருப்பு வெள்ளை படம்.
கணவனுக்கு கதை எம்ஜிஆர் என்றவுடன் ரசிகர்களின் ஆர்வம் அதிகமாகி மதுரை தங்கத்தில் இரண்டு தலைவர் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி உயிரை இழந்த சோகம் முதல் நாளன்று அரங்கேறியது. அதன்பிறகு கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை உதவியுடன் காட்சிகள்
நடந்தேறியது.
எல்லா ஊர்களிலும் முதல் நான்கு நாட்கள் கட்டுக்கடங்காத கூட்டம். ஆக 15ல் வந்த கணவன் அடுத்து செப் 20 ல் வெளியான தலைவரின் 100 வது படம் பெரும் வரவேற்பை பெற்றதால் அதன்பிறகு கூட்டம் ஒரளவு குறைந்து விட்டது. அதையும் தாண்டி சென்னை மதுரை போன்ற ஊர்களில் தீபாவளி வரை ஓடியது.
அக் 21 ல் தீபாவளி அன்று வெளிவந்த தேவர் பிலிம்ஸின் "காதல் வாகனம்" படத்திற்கு பல ஊர்களில் 6 காட்சிகள் நடைபெற்றது. அனைத்து காட்சிகளும் ரசிகர்களின் பேராதரவோடு அரங்கம் நிறைந்து காணப்பட்டது. 1968 ம் ஆண்டு வெளியான அனைத்து படங்களுமே வெற்றி அடைந்ததால் மிகவும் எதிர்பார்த்த "காதல் வாகனம்" அதுவும். தலைவர் கையில் சவுக்கையை வைத்திருந்ததால் ஒரு சில ரசிகர்களுக்கு எங்க வீட்டு பிள்ளை ஞாபகம் வந்து விட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யாமல் போனதால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த "ஒளிவிளக்கு" மீண்டும் பிரகாசமாக எரிய தொடங்கி வெற்றியின் எல்லைக்கோட்டை விரைவாக தாண்டியது.
"கணவன்" அதிகபட்சமாக 67 நாட்கள் வரை சென்னை மற்றும் மதுரை போன்ற a சென்ட்டரில் ஓடினாலும், 50 நாட்களை தாண்டி நெல்லை உட்பட பல ஊர்களில் ஓடியது. தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்த படம். தூத்துக்குடியில் கணவன் 37 நாட்கள் வரை ஓடி வெற்றி பெற்றது. C. சென்ட்டரில் கணவன் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது..........
orodizli
26th August 2020, 03:04 PM
எம்ஜிஆர் அடிப்படையில் ஏழைகளான தனது ரசிகர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பார்.
உலகம் சுற்றும் வாலிபன் படப் பாடல்களை எம் எஸ் விஸ்வநாதன் ஒரு விலை உயர்ந்த நவீன ஒலிக் கருவியில் போட்டுக் காட்டியபோது, எம் ஜி ஆர் அதை கிராமபோனில் போட்டுக் காட்டச் சொன்னார் .
காரணம் கேட்டபோது என் ரசிகன் இதை இப்படித்தானே கேட்பான் . அதான் நானும் அவனுக்குரிய வசதியில் இருந்தே கேட்கிறேன் ‘ என்று பதில் சொன்னார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்*ஷாக்காரன்’ திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம். வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து.
1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே ‘ரிக்*ஷாக்காரன்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திர பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாப்பத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின.
இந்த படத்தில் நடித்ததற்காக 1971 ஆம் ஆண்டின் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் பாரத் விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததோடு, பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற புகழையும் அவருக்கு பெற்று தந்தது..........
fidowag
26th August 2020, 08:25 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
முன்னாள் சென்னை பெருநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் அன்றாடம் சகாப்தம் நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய பல அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .அவருடைய ஆதரவாளர்களுக்கு எல்லாம் இந்த செய்திகள் கொண்டு போய் சேர்ப்பதற்காக 10,000 சி.டி.க்கள் தேவை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் .அவரால் என்னென்ன தகவல்கள் திரட்டி தரமுடியுமோ அவற்றை பல்வேறு அலுவல்களுக்கு* இடையே நமக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார் .இப்படியான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது .தேனீ பிரேமலதா, மும்பை புலவர் ராமச்சந்திரன், சென்னை திரு.சைதை துரைசாமி போன்றவர்கள் ஒரு முன்மாதிரியானவர்கள் . எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாபெரும் தலைவரால் ஈர்க்கப்பட்ட கோடிக்கணக்கான பக்தர்களின்* முன்மாதிரிகள்*
திருச்சியில் இருந்து திரு.மஜீத் எனும் பக்தர் ,இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்புங்கள். நாங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகிறோம் என்று கடிதம் எழுதியுள்ளார் .இந்த காலத்தில் குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ் அப் செய்திகள், இ மெயில் என்று பல வசதிகள் உருவான* காலத்திலும் எம்.ஜி.ஆரின் பக்தர் ஒருவர் மிகவும் சிரத்தை எடுத்து கடிதம்* வாங்கி தன கைப்பட எழுதி அதை தபாலில் அனுப்பும் அளவிற்கு செயல்படுகிறார் என்றால் எம்.ஜி.ஆரின் சிறப்புக்கும், புகழுக்கும், பெருமைக்கும்* காரணமாய் திகழுகிறார்கள் என்பதுடன்* இதுபோன்ற பக்தர்கள் இந்த காலத்திலும் இருந்து கொண்டிருப்பது எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த பாக்கியம்தான் என்று சொன்னால் மிகையாகாது .மும்பை தாராவி பகுதியில் இருந்து திரு.புலவர் ராமச்சந்திரன் , அவர் மகன் பானு முருகேசன், மகள் அன்னபாக்கியம் ஆகியோர் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து ஊக்கப்படுத்தியும், உற்சாகம் அளித்தும் வருகிறார்கள் .
தேனியில் இருந்து திருமதி பிரேமலதா என்பவர் தொடர்பு கொண்டு , சகாப்தம் நிகழ்ச்சியில் தொடரின் எண்ணிக்கையை 90,91 என்று* சொல்லிக்கொண்டே*போகிறீர்கள்* எங்கே அவருடைய வயதைமட்டும்* குறிப்பிட்டு பேசுவீர்களோ*என்று பயமாக இருக்கிறது . தயவு செய்து அப்படி பேசிவிடாதீர்கள் நான் வாழும் காலம் வரை* என்று கூறி அழுதார் . அவர் திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளாரே தவிர, நேரில் பார்த்ததே இல்லையாம் .ஆனாலும் கூட , நீங்கள் சொல்லுகிற தகவல்கள் ,அளிக்கின்ற செய்திகளை பார்த்தால் இப்படி ஒரு நல்ல மனிதர்* ஏன் இவ்வளவு சீக்கிரம் மறைந்தார் என்று நினைக்கும் போது, மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது .நாங்கள் குடும்பத்துடன் தொடர்ந்து பார்த்து வருகிறோம் .அவரை பொறுத்தவரை*மறைவு, இறுதி என்பது இல்லை .அதை மட்டும் குறிப்பிட்டு சொல்லிவிடாதீர்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டார் .நிச்சயமாக சொல்கிறேன் . திருமதி பிரேமலதா அவர்களே, உங்களை போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான உள்ளங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .அவர் மனிதகுலம் மறையும்வரை அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் .அவருக்கு மறைவு,இறுதி என்பதேயில்லை. அப்படிப்பட்ட அரிய வகையான ஒரு மாமனிதர்* எம்.ஜி.ஆர்.*
நீங்கள் எங்கு படித்தீர்கள் என்றால் நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்பார்*என்ன படித்தீர்கள் என்றால் சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா என்பார்*கடவுள் பற்றி உங்கள் அபிப்பிராயம் கேட்டால்* கடவுள் இருக்கின்றார் ,அதுஉன் கண்ணுக்கு தெரிகிறன்றதா* என்பார் ஏழைகளின் சிரிப்பில் கடவுள் இருக்கின்றார் என்றும் பேசியிருக்கிறார் . கடவுள் ஏன் கல்லானான் .மனம் கல்லாய் போன மனிதர்களாலே என்றும் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் .
தியாகம் என்பதற்கு ஒரே ஒரு உதாரணமாக தாயை தான் குறிப்பிட முடியும் என்று கூறுகிறார் .பெற்றெடுத்த தன குழந்தைக்கு முன்னால் தன பெயரை இனிஷியலாக போடுவதற்கு தன்* கணவனுக்கு விட்டு கொடுக்கும் அவள் உண்மையில் ஒரு தியாகிதான் என்று இதயவீணை படத்தில் ஒரு காட்சியில் விளக்கி இருப்பார் .காந்தீய கொள்கைகளை கூடுமான அளவில் அதிக திரைப்படங்களில் போதித்து உள்ளார் .மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை அவர் கடைபிடித்தார் என்பதை அவரது பல்வேறு படங்களில், ,காட்சிகளில், வசனங்களில், பாடல்களில் நாம் கண்டறியலாம் .நான் ஏன் சண்டை போட வேண்டும், எதற்காக போர் பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டும் ,எதிரிகள் என்றால் யார் ,கடமை என்றால் என்ன என்று பல கேள்விகளுக்கு விடை அளித்திருப்பார் அடிமைப்பெண் படத்தில் .இப்படி ஒரு அகிம்சாவாதியாக நிஜ வாழ்க்கையிலும், திரை உலகிலும், அரசியல் உலகிலும் வாழ்ந்து காட்டிய ஒரு மகான், மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். அவர்கள் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.சிரிக்கிறாள் இன்று சிரிக்கிறாள் - நல்லவன் வாழ்வான்*
2.அன்பு மலர்களே, நம்பியிருங்களேன் நாளை நமதே*- நாளை நமதே*
3.நீங்க நல்லா*இருக்கோணும்*நாடு முன்னேற - இதயக்கனி*
4.ஹலோ, ஹலோ*சுகமா*- தர்மம் தலைகாக்கும்*
5.அச்சம் என்பது*மடமையடா*- மன்னாதி மன்னன்*
6.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - நல்லவன் வாழ்வான்*
7.காஷ்மீர்*பியுட்டிபுல் - இதய வீணை*
8.நாடு அதை நாடு* - நாடோடி*
9.பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர்.*
10.தாய் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
11.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*
12.நாளை உலகை* ஆள வேண்டும் - உழைக்கும் கரங்கள்*
13.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*
fidowag
27th August 2020, 01:07 PM
மேடையில் நன்கொடை தருவதை தவிர்த்த #எம்ஜிஆர். !
ஒருமுறை ஒடிசா மாநிலத்தில்
(அப்போது ஒரிசா) பெரும் வெள்ளம் ஏற் பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவித்தனர். சென்னையில் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த ஒடிசா மாணவர்கள், தங்கள் மாநிலத்துக்கு நிவாரண நிதி திரட்டித் தர விரும்பினர்.
அதற்காக, நடிகை
வைஜெயந்திமாலாவும், நடிகர் கிஷோர் குமாரும் நடித்து அப்போது வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ என்ற இந்திப் படத்தை சென்னை அசோக் திரையரங்கில் (இந்த திரை யரங்குதான் பின்னர் சிவசக்தி என்று பெயர் மாற்றப்பட்டது) காலைக்
காட்சியாக திரையிட முடிவு செய்தனர். அது 1956-ம் ஆண்டு. அப்போதே திமுகவில் எம்.ஜி.ஆர். முக்கிய பிரமுகராகவும், திரை உலகில் முதல் நிலையிலும் இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டுமென்றும் அவர் வந்தால் வசூல் அதிகமாக கிடைக்கும் என்றும் ஒடிசா மாணவர்கள் கருதினர். திரையிடப்படுவதோ இந்திப் படம். திமுகவோ இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கம். இதனால், எம்.ஜி.ஆரை அழைத்தால் அவர் நிகழ்ச்சிக்கு
வருவாரா என்று மாணவர்களுக்கு சந்தேகம். இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் என்று எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
ஒருவர் துன்பப்படுகிறார் என்றால், அவர்கள் தன்னை எதிரியாக நினைப்பவர்களாக இருந்தாலும் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.! நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார். ஒடிசாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த சமயத்தில் திடீரென ஒரு சிக்கல் முளைத்தது.
வட மாநிலங்களில் ஓடிக்கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ திரைப்படம் சென்னை யிலும் வெளியானது. படத்தில் ஒரு காட்சியில் தமிழர் ஒருவரின் தலையில் செருப்பை வைத்து கதாநாயகன் கிஷோர் குமார் ஆடிப்பாடி வருவார். அருகே கதாநாயகி
வைஜெயந்திமாலாவும் இருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘‘ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் தமிழர்களை இழிவு படுத்துவது போன்ற காட்சி எப்படி இடம் பெற்றது? இது தமிழர்களை அவமதிக்கும் செயல். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கலாமா?’’ என்று கண்டனக் குரல்கள் கிளம்பின. ‘நியூ டெல்லி’ படத்தை திரையிட ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு பயத்தோடு கவலையும் சேர்ந்துகொண்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா? என்று கவலைப்பட்டனர்.
படத்துக்கு எழுந்த எதிர்ப்பு எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு சென்றது. அவருக்கும் தர்மசங்கடம்.
‘‘தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட
படத்துக்கு நான் எப்படி தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது என்று என்னிடம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை?’’ என்று விழா
ஏற்பாட்டாளர்களிடம் கடிந்துகொண்டார். தாங்கள் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்றும் தெரிந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறிது நேரம் நிதானமாக யோசித்த எம்.ஜி.ஆர்., ‘‘நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆனால், எனது எதிர்ப்பைத்
தெரிவிப்பேன்’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கிடையே, எம்.ஜி.ஆரை விமர்சிப்பவர்கள் ஒருபக்கம், ‘‘தமிழர்களை இழிவு படுத்தும் படம் திரையிடும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். எப்படி கலந்து
கொள்ளலாம்?’’ என்று கேள்வி எழுப்பினர்.
இந்த அமர்க்களங்களுக்கிடையே, குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார்.
திரையரங்கம் இருந்த பகுதியில் நுழையவே முடியாதபடி மக்கள் வெள்ளம். மாணவர்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வசூல் கிடைத்தது. படம் திரையிடப்பட்டு இடைவேளையின்போது, எம்.ஜி.ஆர். பேச அழைக்கப்பட்டார்.
‘‘திரைப்படம் என்பது சக்தி வாய்ந்தது. பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியக்கூடியது. மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்பையும் வேற்றுமையையும் ஏற்படுத்தக் கூடாது. இந்தப் படத்தில் ஒரு தமிழரின் தலையில் செருப்பு வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் மிகவும்
வேதனைப்பட்டேன். என்னைப் போலவே தமிழ் மக்களும் வேதனை அடைந்துள்ளனர். நாட்டின் எந்த பகுதி மக்களின் உணர்வுகளையும் பாதிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெறச்
செய்யக்கூடாது.’’ என்று தனது எதிர்ப்பை எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.
அதே நேரம், மாணவர்களின் நாட்டுப் பற்றையும் நல்ல நோக்கத்தையும் பாராட்டுவதாகவும், அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறினார். அவரது பேச்சை ஆமோதித்து கூட்டத் தினர் பலத்த கரகோஷம் செய்தனர்.
நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, ‘‘நாளை என்னை வந்து சந்தியுங்கள்’’ என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார். மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்று மாணவர்கள் சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘உங்கள் நோக்கம் உயர்வானது. ஆனால், நீங்கள் திரையிட தேர்ந்தெடுத்த படம் பற்றி என்னால் அப்படி சொல்ல முடியாது. உங்களின் நற்பணிக்கு எனது சிறிய காணிக்கை’’ என்று கூறி, மாணவர்களிடம் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.
இதை எதிர்பார்க்காத மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தன்னை வந்து சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். கூறியது இதற்குத்தான் என்பதையும் புரிந்து கொண்டனர். ‘இந்த நன்கொடையை நேற்று மேடையிலேயே கொடுத்திருக்கலாமே?’ என்று மாணவர்களுக்கு சந்தேகம். அதற்கு விடையளிப்பதுபோல எம்.ஜி.ஆர். சொன்னார்…‘‘நேற்று நான் நன்கொடை கொடுத்திருந்தால் அதற்குத் தான் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். என் எதிர்ப்பின் வலிமை குறைந்து போயிருக்கும்’’ என்றார்.
ஒடிசா வெள்ள நிவாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் உதவி வெளியே தெரிய வில்லை. ஆனாலும், விளம்பரத்தை விரும்பாத அவரது உதவும் உள்ளம் ஒடிசா மாணவர்களுக்குத் தெரிந்தது!
சிறுகுறிப்பு:
‘நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை! (இந்த பாடலை எழுதியவர் இந்திப்படவுலகில்
பிரபலமாக இருக்கும் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் தந்தை
சந்தோஷி)
(திருத்தப்பட்டது)
வி.டி.எஸ். ராஜ்வேலு, பெரியகுளம்.
இந்த விபரங்களெல்லாம் 'பொம்மை' சாரதி எழுதிய புத்தகத்திலிருந்து, இது
போன்ற முக்கிய விசயங்களை பத்து
ஆண்டுகளுக்கு முன் '#இதயக்கனி'
இதழில் சிறு தொடராக எழுதியவர்
திண்டுக்கல் திரு டி.எம்.அர்ஜுனன்.
சாரதியின் பெயருடனேயே அந்த தொடர் இடம்பெற்றது.
fidowag
27th August 2020, 01:30 PM
மலேசியாவில் மெர்டேக்காவை முன்னிட்டு*பி.ஜெ.ஸ்டேட் திரையரங்கில்*
இன்றிரவு 8.30 மணிக்கு*ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியீடு*
------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஜி.ஸ்டேட் திரையரங்கில் இன்று ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளியேறும் .* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா , நாகேழ் ,நம்பியார் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது .
இத்திரைப்படத்தைக் காண தாமரை குழும தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் , நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர் .மேலும் மலேசிய எம்.ஜி.ஆர்.* சுரேஷ், விஜய்சேகரும் வருகை புரிவர் .மெர்டேக்காவை முன்னிட்டு* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்படுவதாக லோட்டஸ் பைவ் ஸ்டார்* கருணாமூர்த்தி தெரிவித்தார் .
fidowag
27th August 2020, 01:30 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்*ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இன்று வெளியீடு*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா*நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைபடம் லோட்டஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது . பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் திரையரங்கில் இத்திரைப்படம் இரவு 8 மணிக்கு திரையிடப்படுகிறது*
இதில் மலேசிய எம்.ஜி.ஆர்களான விஜய் சேகர் , டாக்டர் எம்.ஜி.ஆர். சுரேஷ்,ராம் மற்றும் பல உள்நாட்டு கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் .*
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இத்திரைப்படம் திரையிடப்படுகிறது .அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற ரசிகர்களும்* கலந்து கொள்ளுமாறு லோட்டஸ் பைவ் ஸ்டார் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது .
orodizli
27th August 2020, 03:02 PM
என்ன பெயர் வைப்பது
அந்தப் பல்கலைக் கழகத்துக்கு..?
ரொம்பவே யோசித்தார் எம்.ஜி.ஆர்.
அது 1984.
கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க , அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு .
எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
.
தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்..?
ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல ..
சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல...
இன்னும் சிலர் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர். தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் –
அன்னை தெரசா !
ஆம்... அப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.
Mother Teresa Women's University !
விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!
அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.
பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ,
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட ,
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...
# அப்படி ஒரு காலத்தில் வாழ்ந்த நாம் ...
இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நிற்கிறோம்.
.
# இந்த வேளையில் எம்.ஜி.ஆர்.ஒரு மேடையில் பேசியது நினைவுக்கு வருகிறது :
“நான் கைலி கட்டாத முஸ்லிம்,
சிலுவை அணியாத கிறிஸ்துவன்,
திருநீறு அணியாத இந்து...”
.
# எனக்கு ஒரு சந்தேகம்..?
எந்தப் பல்கலைக்கழகம் சொல்லிக் கொடுத்தது
எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடத்தை...?.........
orodizli
27th August 2020, 03:03 PM
ஒரு சில சிவாஜி ரசிகர்கள் முகநூலில் சிவாஜி படங்களின் வெற்றியை பற்றி தாறுமாறாக பதிவிடுகிறார்கள் சம்பந்தபட்ட தயாரிப்பாளர்கள் உயிரோடு இல்லாத காரணத்தை
பயன்படுத்தி. உதாரணமாக 'நவராத்திரி' "முரடன் முத்து "படகோட்டி மூன்று படத்தின் வெற்றியை பற்றி. அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
"நவராத்திரி" அப்படி ஒரு வெற்றிப் படமாகயிருந்தால் பாவம் A P நாகராஜன் இப்படி கடனாளி ஆகியிருக்க மாட்டார். கூட வெளிவந்த "முரடன் முத்து" தயாரிப்பாளர் பந்துலுக்கு சிவாஜியுடன் அதுதான் கடைசிபடம்.
இன்னும் ஒரு படம் சிவாஜியை வைத்து எடுத்திருந்தால் இன்னும் 10 வருடங்கள் வாழ்நாளை அவர் இழந்திருக்கக் கூடும். ஏனென்றால் கடன்பட்டார் நெஞ்சம் கலங்கினால்
உயிரையே பலி வாங்கி விடும்.
எம்ஜிஆருக்கு ஏன் 8 மடங்கு சிவாஜியை விட சம்பளம் அதிகம் கொடுக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டாமா?
எந்த சூழ்நிலையிலும் உயிருக்கும் மானத்துக்கும் பங்கம் வராமல் இருக்க வேண்டும், என்பதற்காகத்தான் எம்ஜிஆரை
நம்பி வருகிறார்கள். A சென்ட்டரை
தவிர B & C யில் எம்ஜிஆர் படத்தின் முதல் வார வசூலை சிவாஜியின் படங்கள் மொத்த வசூலாக கூட
பெறமுடியாமல் போவதை பல இடங்களில் பார்க்கலாம்.
நீங்கள் A சென்ட்டரில் அதாவது மதுரையில் மிகப் பெரிய அரங்கமான தங்கத்தில் வெளியான எதிரொலி மொத்தம் 4 வாரம் கூட ஓட முடியாமல் 19 நாளிலே பகல்காட்சியை நிறுத்தி விட்டு தினசரி 2 காட்சிகள் போட்டு 28
நாட்கள் ஓட்டியும் தங்கத்தில் வெளியான எம்ஜிஆர் படத்தின் முதல் வார வசூலை மொத்த வசூலாக பெறமுடியாமல் போன கதை சிவாஜி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
சிவாஜி படங்களை பெரும்பாலும் தீபாவளி பொங்கல் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் பார்த்துதான் திரையிடுவார்கள். பண்டிகை காலத்தில் மக்கள் சினிமா பார்ப்பதற்காக வருவார்கள், எம்ஜிஆர் படம் பார்க்க முடியாமல் போனவர்களை ஏமாற்றி அதை வைத்து 4 நாட்களாவது கல்லா கட்டலாம் என்று பண்டிகை நாள் பார்த்து ரிலீஸ் பண்ணுவார்கள்.
அதனால்தான் பல சிவாஜி படங்கள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இரண்டிரண்டு படங்களாக திரைக்கு வருவதை பார்த்திருக்கிறோம். எ.வ.,சொர்க்கம், Dr.சிவா,வைரநெஞ்சம், இருமலர்கள் ஊ.வ.உறவு, ப்ராப்தம்,சு.எ.சுந்தரி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எம்ஜிஆர் படங்கள் எந்த நாளில் ரிலீஸானாலும் அன்றுதான் ரசிகர்களுக்கு பண்டிகை நாள். அன்றிலிருந்து தினமும் தீபாவளிதான். படகோட்டி முதல் வெளியீட்டில் 32 திரையரங்குகளில் 50 நாட்களும் 10 திரையரங்குகளில் 10 வாரங்களும். (அதுவும் பொங்கல் குறுக்கீட்டால் எ.வீ.பிள்ளையின் வருகையால்) ஓடி வெற்றியை பதிவு செய்தது. ஆனால் நவராத்திரி மொத்தமே 11 தியேட்டரில் 50 நாட்களை ஓட்டி 4 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டியது ஊரறியும்.
வரலாறு தெரியாத ஒரு சிவாஜி ரசிகர் கனடா நாட்டிலிருந்து கரடி விடுகிறார். அதை கேட்டு இங்குள்ள குள்ள நரிகள் ஊளையிடுகின்றன. "நவராத்திரி" 6 தியேட்டரில் 100 நாட்கள் ஓடியதாம்.
"படகோட்டி" ஒரே தியேட்டரில் தான் ஓடியதாம். அதையும் RMV ஓட்டச்சொல்லி ஓட்டினார்களாம். அப்படியானால் எம்ஜிஆரின் 100 வது படமான "ஒளிவிளக்கை" 92 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே. "உழைக்கும் கரங்கள்" சேலத்தில் 96 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே? அது மட்டுமா?
R M V யின் சொந்த படம் "கண்ணன் என் காதலனை"சிந்தாமணியில் 93 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே? கரடி விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அதை தான் சென்ற பதிவில் குறிப்பிட்டேன். "சொர்க்கத்தை" நெல்லை பாப்புலரில் 100 நாட்கள் ஓட்டி ரு85000 வசூலாக காண்பித்து என்ன பயன்?
தயாரிப்பாளர் தலையில் துண்டுதான். ஒரு வார தியேட்டர்
வாடகை ரு4000 என்று எடுத்துக் கொண்டாலும் 15 வாரத்துக்கு தியேட்டர் வாடகையே ரூ 60000 ஐ
தாண்டி விடும். மீதமுள்ள ரூ25000 ல்
வரி, தியேட்டர்காரர் பங்கு, இதெல்லாம் போக விநியோகஸ்தர்கள் கையில் என்ன கிடைக்கும். மீண்டும் திரும்பி பார்ப்பானா சிவாஜி நடித்த படத்தை.
இப்படித்தானே, சிவாஜி மார்க்கெட் இழந்ததோடு கூட நடித்தவர்களின் மார்க்கெட்டையும் காலி பண்ணியதால் சிவாஜியை துணை நடிகராக்கினார்கள். அதையும் தாங்க முடியாமல் சினிமாவை விட்டே ஓரங்கட்டிய கதை ஊரறிந்த கதை. அதை போல் ஒவ்வொரு ஊரிலும் 1 லட்சத்திக்கும் 1.25 லட்சத்துக்கும் 100 நாட்கள் ஓட்டி அவர்கள் அடைந்த நஷ்டத்துக்கு அளவேது.
இன்று 70 வயதில் ரஜினி
கமல் எல்லாம் பல கோடி சம்பளம் பெறும்போது சிவாஜி அந்த வயதில் Y G யோடு மல்லாந்து படுத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
"நவராத்திரி" சென்னை நகர வசூலை வெளியிடுங்கள்,பார்த்து விடுவோம்.
4 திரையரங்குகளிலும் சேர்த்து 6 லட்சத்தை கூட பெறமுடியாமல் விநியோகஸ்தர்கள் கதறிய கதை தெரியாமல் உளறுகிறார்கள். இன்றும் "படகோட்டி" உரிமை கோடியை தாண்டி விலை பேசியும் தேவி பிலிம்ஸ் அதிபர் தர மறுக்கிறார். இதோ படகோட்டி பலமுறை சென்னையில் வெளியாகியும் 4 தியேட்டர்களில் திரையிட்டு அதற்கு ரிசர்வேசன் நடந்து ஓடியது. நவராத்திரியை சும்மா கொடுத்தாலும் எவனும் வாங்க மாட்டான். வாங்கி திரையிட்டால் கரண்ட் பில் கட்டக்கூட
படம் ஓடாது என்பதை நன்கு அறிவார்கள்.
ஆனால் 100 நாட்களில் "எங்க வீட்டு பிள்ளை" "காவல்காரன்" பெற்றால்தான் பிள்ளையா போன்ற படங்கள் 9 லட்சத்தையும் தாண்டி வசூல் செய்தது தெரியுமா? சிவாஜி ரசிகர்களுக்கு.
RV உதயகுமார்,அமீர்,பழ.கருப்பையா
மயில்சாமி போன்றோருக்கு இன்னும் தெளிவாக தெரியும். ஏனென்றால் இவர்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள் அல்லவா?
அவர்கள் மட்டுமல்ல
சினிமா தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர் ஓனர்கள் அத்தனை பேரும் அறிவார்கள். "கண்ணன் என் காதலன்" ரிலீஸுக்காக "கலாட்டா கல்யாணத்தை" 13 நாட்களில் தூக்கி எறிந்தனர் திருநெல்வேலி ரத்னா தியேட்டர்காரர்கள். எம்ஜிஆர் பட வெளியீட்டுக்காகத்தான் அத்தனை சிவாஜி படங்களையும் மற்ற படங்களையும் கேப்பில் போடுவார்கள் என்பதை தியேட்டர் காரர்களும் விநியோகஸ்தர்களும் நன்கு அறிவார்கள்.
இதை நன்றாக தெரிந்து கொண்ட ஒருவன் கனடாவில் இருந்து கதையடித்தால் நம்புவதற்கு
இங்குள்ளவர்கள் என்ன இளிச்சவாயர்களா?. சிவாஜிக்கு அப்படி ஒரு வசூல் பண்ணும் திறமையிருந்தால் பாவம் எம்ஜிஆர் 10 லட்சம் வாங்கும் போது 1லட்சத்திற்கே உயிரைக் கொடுத்து கத்தி கதறி அதை நடிப்பென்று நம்ப வைக்க அடிப்பொடிகளை ஏவி விட்டு கூவி கூவி வியாபாரம் பார்த்தாலும் எத்தனை படங்கள் போணி ஆகாமல் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு அந்த படத்தயாரிப்பாளர்கள் பஸ் ஸ்டாண்டிலும், கோயில்களிலும் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட கதை(புனர் ஜென்மம்) தெரிந்திருந்தும் வாய் கூசாமல் பொய் பேசும் சிவாஜி ரசிகர்களே ஐயோ! பாவம், நீங்களும் உங்க ஐயனும்.
அது மட்டுமா? நடிப்பு போட்டிக்கு எம்ஜிஆரை அழைத்தாராம். ஏற்கனவே நடிப்பு போட்டியில் சிவாஜியை வென்று 'பாரத்' விருதை வாங்கியதோடு நடிப்பில் சிவாஜியை
குப்புற தள்ளி நட்சத்திரத்தை எண்ண வைத்த கதை மறந்து விட்டதா? இந்தியாவிலேயே தலை சிறந்த நடுவர்களால் சிறந்த நடிகர் என்று தேர்ந்தேடுக்கப்பட்ட எம்ஜிஆர் எங்கே? நீங்க எங்கே? இன்னொரு போட்டி எதற்கு? நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் நடுவர்களாக சின்ன அண்ணாமலை, சித்ரா லட்சுமணன், Y G மகேந்திரன் போன்ற அரைவேக்காடுகள் நடுவராக இருந்தால்தான் முடியும்.
இறுதியில் எம்ஜிஆர் பாணியில் "புதியவானம்" படத்தில் கையை எம்ஜிஆர் போல் தூக்கி புரட்சி தலைவா என்று பாடவைத்தோமே?
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் காசுக்காக எதையும் செய்யக்கூடியவர் கணேசன் என்று. சரி, சினிமாவில் எம்ஜிஆரிடம் தோற்று புறமுதுகு காட்டியவர் அரசியலிலாவது வென்றாரா? வயது குறைந்த ஒரு பெண்ணிடம் தோற்று
புறமுதுகு காட்டிய கதை சிவாஜி ரசிகர்களின் கண்ணீரால் எழுதப்பட வேண்டியது. அவரிடம் அரசியலில் மட்டும் தோற்கவில்லை, நடிப்பிலும் தோற்றதை அன்றைய பத்திரிகைகள் சுட்டிக்காட்ட தவறவில்லை(எ.வந்தாள்,ப.பட்டணமா,சவாலே சமாளி).
இப்படி சாதனை எதுவும் செய்ய முடியாத சிவாஜி ரஜினி, கமல் படங்களின் வெற்றியில் குளிர்காய ஆரம்பித்து உள்ளது கேவலமாக உள்ளது. அதுவும் பாரதிராஜாவும் கமல்ஹாசனும் தங்கள் படத்தில். சிவாஜியை நடிக்க வைப்பதற்கு அவர்கள் பட்ட பாட்டை T V பேட்டியில் கூறியிருப்பதை கவனிக்கவும். கொஞ்சம் விட்டிருந்தால் படத்தையே கெடுத்து குட்டி சுவராக்கி இருப்பாராம் நம்ம சிவாஜி. அவருடைய கத்தலையும் கதறலையும் 10 மடங்குக்கு மேல் குறைத்து படமெடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லியிருப்பதை பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஒரு கத்தி குத்துக்கு படப்பிடிப்பு தளத்தையே உலுக்கியவராயிற்றே நம்ம ஆளு.
இப்படி திரையிலும் அரசியலிலும் தோற்று புறமுதுகு காட்டி ஓடியவரை பச்சைத்தமிழன் என்று எப்படி ஏற்பது? தோல்வியை பரிசாக பெறுபவன் தமிழனா? தோல்வியை எதிரிக்கு பரிசளிப்பவன் தமிழனா?
இவரை தோற்க வைத்து விட்டு இப்போது கொடி பிடிக்க துவங்கியிருக்கும் சிவாஜி ரசிகர்களை என்னவென்று அழைப்பது என்றே தெரியவில்லை..........
orodizli
27th August 2020, 03:33 PM
இதயக்கனி!!
---------------------
எம்.ஜி.ஆர் சினிமாவை அலசி ரொம்ப நாளாச்சு!!
இதயக்கனி!
குண்டு துளைக்க முடியாத இதயத்தில்-
வண்டு துளைக்குமா??
எப்படியோ,,
கருணாவுக்கு அன்று இருந்த வெறியில்,,அவரது-
கரு நாவுக்குள் வந்த வார்த்தையினால் நமக்கு-
எம்.ஜி.ஆர் ஆட்சி கிடைத்தது?
அது சத்தியா மூவீஸ் இதயக்கனி படம்!
இந்தப் படத்தைப் பற்றிய மூன்று விஷயங்களே இன்றையக் கரு!!
அந்த நடிகை தான் அந்தப் படத்துக்கு ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பது?
மேக்கப் டெஸ்ட் முடிந்து,,படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்ட நிலையில்,,
திருமணம் நிச்சயமாகிவிடவே,,,,அவரது கணவரின் தந்தை,,எம்.ஜி.ஆரிடம் நிலைமையை விளக்க,,
அந்த நடிகை பெற்றுக் கொண்ட முன் பணத்தை,,அவரது திருமணப் பரிசாக வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு--
தோரஹா படப் புகழ்,,நாயகி,,ராதாசலூஜாவைக் கதா நாயகி ஆக்கினார் எம்.ஜி.ஆர்!
முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த நடிகை??
நீத்துசிங்!
ரிஷி கபூரின் மனைவி!
ரிஷிகபூரின் தந்தை ராஜ்கபூர் தான் எம்.ஜி.ஆரிடம் பேசியது!!
சாதாரணமாக எல்லாத் திரைப்படங்களிலும் தொழில் நுட்ப விஷயங்களில் எம்.ஜி.ஆரின் கை வண்ணமும் கலந்திருக்கும்!
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ பாடலுக்குப் பொருத்தப் பட்டிருந்த கேமரா ஆங்கிள்,,எம்.ஜி.ஆருக்கு திருப்தியைத் தரவில்லை?
டைரக்டர் ஜெகன்னாதனுக்கோ எம்.ஜி.ஆரை வைத்து முதன் முதலில் இயக்குவதால்,,மனிதருக்கு ஏக டென்ஷன்?
எம்.ஜி.ஆர் ஒரு யோசனையைக் கூற-
யூனிட் முழுதும் உற்சாகத்தில்??
ஆம்! அந்தப் பாடல் காட்சி முழுவதற்கும் எம்.ஜி.ஆர் தான் முழு ஒளிப்பதிவாளர்??
படத்தைப் பார்த்தால்--
இயற்கை சூழலோடு பனிப் பொழிவை வெகு தத்ரூபமாகக் காட்டியிருப்பார் எம்.ஜி.ஆர்!!
இன்பமே பாடலின் படப்பிடிப்பு!--இயக்குனரோ-
டென்ஷனில் படபடப்பு??
காரணம்??
காட்சிப்படி கதா நாயகி ஓடி வர வேண்டும்!
ஓடி வரும் ஹீரோயின்,,,,ஓடி வரும் ஹீரோவுடன் முட்டிக் கொண்டு நிற்க வேண்டும்!
பின்னணி இசையுடன் பாடல் ஆரம்பமாகும்!
எம்.ஜி.ஆர் ஓடி வந்தவர்,,அப்படியே ரா.சலூஜாவைத் தூக்கிவிட்டார்??
எல்லோரும் பிரமிப்புடன் பார்க்க--
கடைசி வினாடிக் காட்சி மாற்றத்துக்கு எம்.ஜி.ஆர் விளக்கம் சொன்னாராம் இப்படி--
ஒரு மாதக் காத்திருப்புக்குப் பின் இருவரும் ஓடி வந்து நிற்பதை விட,,இப்படிச் செய்வது காட்சியின் துள்ளல் ஓட்டத்துக்குத் துணை சேர்க்கும்!!
தூக்கியதோடு ஒரு சின்ன ஜெர்க் அசைவு காட்டுவார் எம்.ஜி.ஆர்!
இப்போதும் இந்தப் பாடல் காட்சியில் ஆரவாரம் அள்ளும்!
ஹீரோயின் ராதாசலூஜா இக்காட்சியில் போதை தரும்
ஹெராயின்??
எம்.ஜி.ஆர் படத்தின் ஹைலைட்டு சமாச்சாரங்கள்-
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல???!!!.........
orodizli
27th August 2020, 07:00 PM
பழைய நினைவுகள்...
அந்நாட்களில் வீரப்பாவின் சிரிப்பை வைத்து குழந்தைகளை அச்சுறுத்துவார்களாம். அந்த அளவிற்கு வீரப்பா திரையில் சிரித்தால், அரங்கிலுள்ள குழந்தைகள் அலறி அழுதுவிடுமாம்.
சக்கரவர்த்தி திருமகனில் தொடங்கிய அந்த வெற்றிச் சிரிப்பு அதன்பிறகு அவரது தனித்த பாணியாகி விட்டது. ஒவ்வொரு படத்தில் கதையின் சூழலுக்கு ஏற்றபடி தனது அக்மார்க் சிரிப்பை பயன்படுத்த தவறவில்லை வீரப்பா. முருகன் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார் வீரப்பா. அந்தப் படத்திலிருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை தொடர்ந்தது. பொன்மனச் செம்மல் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர், தான் நடிக்கும் படங்களில் தனக்கு எதிர்நாயகனாக வீரப்பாவையே போடும்படி கேட்டுக் கொள்வாராம். கே.பி.சுந்தராம்பாள் அறிமுகப்படுத்த, எம்.ஜி.ராமச்சந்திரன் வழிநடத்த, பி.எஸ்.வீரப்பாவின் திரைவாழ்க்கை தலைநிமிர்ந்து பயணித்தது.
மக்களிடையே இந்தக் கூட்டணி அமோக வரவேற்பையும் பெற்றது. எம்.ஜி. ஆருக்கு சரி சமமான வில்லன் நடிகர் வீரப்பாதான் என்று எழுதினர் அன்றைய திரை விமரிசகர்கள். காரணம் ஒரு நாயகனுக்கு தக்கபடியாக, அவனை எதிர்கொண்டு அவனுடன் சமர் செய்ய அதே அளவு சக்திவாய்ந்த வில்லன் இருந்தால்தான் நாயகனின் சாகஸங்கள் எடுபடும். வீரப்பாவின் உடற்கட்டும் முகவெட்டும், வில்லனாக நடிக்கும்போது அவர் அப்பாத்திரமாகவே மாறிவிடும் மாயமும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு படத்திலும் பிரத்யேகமாக ஒரு பாணியை முயற்சி செய்து அவரது ரசிகர்களை திருப்திபடுத்தும் வழக்கமும் வீரப்பாவிடம் இருந்துவந்தது. அதனால் தன்னிடம் வந்த எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார் வீரப்பா. காலப்போக்கில் தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக் கொண்டார்.
வீரப்பாவும் எம்.ஜி.ஆரும் படப்பிடிப்பில் இருக்கும் சமயத்தில் அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர்தான் வீரப்பாவிற்கு வாள் வீச்சு கற்றுக் கொடுத்தவர். திரையில் இருவரும் அதி அற்புதமாக கனல் தெறிக்க சண்டையிடுவதன் பின்னணியில் இருவரும் எடுத்த தீவிர பயிற்சிகள்தான் காரணம். ஒருமுறை படப்பிடிப்பின் போது வீரப்பாவுக்கும் எம்.ஜி.ஆரும் நடிக்கும் வாள் சண்டை படக்காட்சியை எடுத்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலை மறந்து திடீரென்று பள்ளத்தில் உருண்டு விழப் போனார் வீரப்பா. எம்.ஜி.ஆர் மட்டும் அச்சமயத்தில் கவனித்து காப்பாற்றா இருக்காவிட்டால், விபத்துக்குள்ளாகி வீரப்பா எனும் கலைஞரை திரைத்துறை இழந்திருக்கும். அடிக்கடி இவ்விஷயத்தை நினைவுகூரும் வீரப்பா எம்.ஜி.ஆர் ஒரு மாமனிதர், தனக்கு திரைவாழ்க்கையில் கைகொடுத்தது மட்டுமின்றி, உயிரைக் காப்பாற்றவும் செய்தார். தோள் கொடுப்பான் தோழன் எனும் பதத்துக்கு உதாரணமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர் என நெகிழ்ச்சியாகக் கூறி மகிழ்வார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் வீரப்பா ஜோடி பல படங்களில் நடித்து வெற்றிக் கூட்டணியாக வாகை சூடிக் கொண்டிருந்தது திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் அவருக்கு வீரப்பாதான் வில்லன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனோவா, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி நண்பன், மீனவ நண்பன், ராணி லலிதாங்கி, பத்தினி தெய்வம், பதிபக்தி, நாடோடி மன்னன், ராஜராஜன், யார் நீ, நவரத்தினம், நீலமலை திருடன், பார்த்திபன் கனவு, கைதி கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பாற்றலால் கதாநாயகன் அளவிற்கு, அதிலும் சில படங்களில் நாயகனை விட வில்லன் கதாபாத்திரத்தை வியந்தோகிப் பேசச் செய்தவர் வீரப்பா.
வீரப்பா பேசும் அனல் தெறிக்கும் வசனங்களும் அந்நாட்களில் மிகவும் பிரபலம். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில், எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த மகாதேவி என்ற படத்தில் வீரப்பா பேசிய வசனங்கள் காலம்கடந்தும் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்த ஒன்று. அப்படத்தில் நடிகை சாவித்திரியின் பெயர் மகாதேவி. வீரப்பா சாவித்ரியை காதல் பொங்க பார்க்கும் பார்வையும், ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி’ என்று பேசும் வசனமும் காலத்தால் அழிக்க முடியாத வல்லமை பெற்றது. அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் இந்த வசனத்திற்கு கைதட்டல்களையும் விசில்களை பலத்த கரகோஷத்தையும் திரை அரங்குகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் காதலிக்கும் இளைஞர்கள், தங்கள் காதலியின் பெயரை சேர்த்து ‘மணந்தால் மீனாட்சி, இல்லையேல் மரணதேவி’ என்று கூறி மகிழ்வார்களாம்.
1956-ம் ஆண்டு வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பி.எஸ்.வீரப்பா தலைமையில் திருடர்கள் அனைவரும் அணிவகுத்து குதிரையில் வரிசையாக வரும் காட்சி, அழகியலுடனான ஒரு திரை அனுபவத்தை அள்ளித் தரும். ‘அண்டா காகசும் அபு காகசம் திறந்திடு சீசே’ என்று அவர் ஒரு மந்திரத்தைக் கூறி அந்தக் குகைக் கதவைத் திறக்கச் செய்யும் காட்சி அன்றைய ரசிகர்களை சொக்கிப் போகச் செய்தது. ‘கொள்ளையடிப்பதும் ஒரு கலைதான்’ என்று வீரப்பா பேசிய வசனமும் பெரிதும் சிலாகிக்கப்பட்டது. கதாபாத்திரம்.........
orodizli
27th August 2020, 07:01 PM
#மக்கள் திலக*த்துட*ன் நாகேஷ் ப*லப*ட*ங்க*ளில் ந*டித்து பிஸியாக இருந்த காலம்!
அப்போதெல்லாம் எம்ஜிஆர் ப*ட*ங்க*ளில் ந*டிப்ப*தாயின் முத*லில் அவ*ர் ச*ம்ப*ந்த*ப்ப*ட்ட* காட்சிக*ளை முடித்து அனுப்ப* சொல்லிவிடுவார் எம்ஜிஆர்.
காஷ்மீரில் சித்ரா ப*வுர்ணமி ஷூட்டிங்கின்போது ச*ரிவ*ர உண*வு கிடைக்காம*லும், வ*யிற்றுவலியாலும் நாகேஷ் அவ*திப*ட்ட*போது எம்ஜிஆர் அப்போது காஷ்மீரில் நேற்று இன்று நாளை, நினைத்த*தை முடிப்ப*வன் ப*ட*ப்பிடிப்பில் இருந்தார். விஷ*ய*ம் அறிந்த* எம்ஜிஆர் நாகேஷின் ரூமிற்கே நேரில் வ*ந்து ந*ல்ல* ம*ருத்துவ* வ*ச*தி, உண*வு ஏற்பாடு செய்து கொடுத்து கையில் 30 ஆயிரம் ப*ணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தார்.
வெளிநாட்டில் உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*ப்பிடிப்பின்போது நாகேஷே எதிர்பாராத வ*கையில் அவ*ரின் பிற*ந்த* நாளை சிற*ப்பாக கொண்டாடி த*ங்க* மோதிர*ம் அணிவித்தார் எம்ஜிஆர்.
நாகேஷ் திரைய*ர*ங்க*ம் க*ட்டும் வேளையில் இருந்த சிக்க*ல்க*ளை நீக்கி தானே முன்னின்று தீர்த்து வைத்து திற*ந்தும் வைத்தார். அப்போது பாண்டி ப*ஜாரில் நாகேஷ் தியேட்ட*ருக்கு எதிரே பிர*ப*ல
மான த*னியார் ப*ள்ளி ஒன்று இருந்த*து.. தியேட்ட*ர் உருவானால் மாண*வ*ர்க*ள் க*ட் அடித்துகொண்டு ப*ட*த்திற்கு செல்வார்க*ள் என்ப*து அவ*ர்க*ள் வாத*ம்..என*வே கார்ப்ப*ரேஷ*னில் ப*ர்மிஷ*ன் கிடைப்ப*தில் இழுப*றியாக* இருந்த*து.. எம்ஜிஆர் அந்த* ப*ள்ளி முத*ல்வ*ரை அழைத்து உங்க*ள் ப*ள்ளிக்குதான் இர*ண்டு வ*ழி உள்ளதே. ம*ற்றொரு வாச*லை உப*யோகியுங்க*ள்..தியேட்ட*ர் எதிர்புற* வாச*லை அவ*சிய*த்திற்கு மட்டும் உப*யோகியுங்க*ள்..மேலும் க*ட் அடித்து ப*ட*ங்கள் செல்ல வேண்டும் என ஒரு மாண*வ*ன் நினைத்தால் எதிரில் உள்ள தியேட*ருக்கு எப்ப*டி செல்வான்..பாண்டி ப*ஜார் அருகில் வேறு தியேட்ட*ர்க*ளே இல்லையா? என*வே ந*ம்மையெல்லாம் சிரிக்க* வைத்த* நாகேஷ் அவ*ர்க*ளை நாம் அழ*விட*லாமா? என்று அன்போடு கேட்க* அப்போதே அந்த* பிர*ச்ச*னை தீர்க்க*ப்ப*ட்ட*து.
1980ல் நாகேஷ் உட*ல் ந*லிவுற்று உயிருக்கு ஆப*த்தான நிலையில் ம*ருத்துவ*ம*னையில் இருந்தார். எம்ஜிஆர் மருத்துவ*ம*னைக்கு சென்று வெளிநாட்டிலிருந்து ம*ருந்துக*ளை உட*னே வ*ர*வ*ழைத்து நாகேஷை காப்பாற்றினார்.
நாகேஷ் எம்ஜிஆரைப்ப*ற்றி கூறிய*து " எம்ஜிஆருக்கு அவ*ரே ஒரு விள*ம்ப*ர*ம்தான்! த*னியாக வேறு விளம்ப*ர*ம் தேவையில்லை என்று".........
orodizli
27th August 2020, 07:01 PM
#கேள்வி : தாங்கள் வரி பாக்கிக்காக மத்திய அரசிடம் தங்களுடைய வீட்டை அடகு வைத்திருக்கிறீர்கள். தாங்கள் ஒரு வார்த்தை கூறினால் தங்களுடைய ரசிகர்கள் நொடிப்பொழுதில் அந்தக் கடனை அடைத்து விடுவார்கள் தாங்கள் இதற்கு ஆவன செய்வீர்களா ?
#புரட்சித்தலைவரின் #பதில் : எனக்கு என் உடம்பில் இன்னும் உழைக்கும் சக்தி இருக்கிறது. வேலையும் கிடைக்கிறது. பணமும் வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என் கடனைத் தீர்க்க வரும் நீங்கள், தமிழக அரசின் கடன்காரர்களாக லட்சக்கணக்கான நெசவாளர்கள், விவசாயிகள் துன்பச் சூழ்நிலையில் உழன்று கொண்டிருக்கிறார்களே , அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டாமா ? அதற்கு என்ன செய்வது என்பது பற்றி, என் உடன்பிறப்புகளோடு ஆலோசித்து வருகிறேன். விரைவில் நற்காலம் மலரும் அவர்களுடைய கடனை தீர்ப்போம்.
நான் தமிழகத்திலே மூன்று, நான்கு பருவத்திலே அடியெடுத்து வைத்தபோது இத்தகைய வீடும் இல்லை. காரும் இல்லை. வேறு எந்த வசதியும் எனக்கில்லை. எனக்கு இருப்பதாக சொல்லப்படுகின்ற வீட்டையோ, சொத்துக்களையோ இந்தியப் பேரரசு எடுத்துக்கொள்ளுமானால் , அந்த வீடு அலுவலகமாக மாறி, அதில் குடியேறுபவர்களோ , வசிப்பவர்களோ தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியுண்டு. எனவே ஏமாற்றம் அடையும் நிலையில் நானில்லை.
- நாடோடி மன்னன், ஆகஸ்ட் 1975
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
orodizli
27th August 2020, 07:02 PM
நன்றி மறவா நல்ல மனம் போதும் அதுவே என் மூலதனம் ஆகும்
எம்ஜிஆர்
சத்தியா தாய் ஈன்றாள்
தமிழ் தாய் ஆளாக்கினாள்
அந்த தமிழ் தாய்க்கு ஒரு பல்கலை கழகம் வேண்டும் என தமிழ் அறிஞர்கள் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பதாம் ஆண்டு முதலே கோர எவ்வளவோ ஆட்சிகள் வந்தன எத்தனையோ முதல்வர்கள் வந்தார்கள் வரவில்லை தமிழுக்கு பல்கலைகழகம் தமிழ் அன்னை வளர்த்த எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வர் ஆகிறார் அழைக்கிறார் அறிஞர்களை உடனே அமையுங்கள் தமிழ் அன்னைக்கு பல்கலைகழகம் ஐநூறு ஏக்கர் வேண்டும் என கேட்க அன்னைக்கு ஆயிரம் ஏக்கரில் மிகபிம்மாண்டமாக கட்டுங்கள் மேல் பார்வைக்கு தமிழ் நாடு என குறிக்கும் வகையில் கட்டங்கள் கட்டுங்கள் என கட்ட வைத்து திறக்கிறார் எம்ஜிஆர்
பெண்களை தெய்வமாக தன்னை வாழவைத்த பெண்களுக்கு தனியாக ஒரு பல்கலை கழகம் வேண்டும் என அமைக்கிறார் அதற்க்கு தன் தாய்யின் பெயரை சூட்டவில்லை எம்ஜிஆர் ஏழைக்காக வாழும் அன்னை தெரசா பெயர் சூட்டி அவரையே திறக்க வைக்கிறார் அதில் காஷ்மீர் முதல்வர் கலந்து கொள்ள் மதம் தாண்டி ஒரு மனிதநேய சங்கமத்தில் அன்னை தெரசா பல்கலை கழகம் தொடங்கியது எம்ஜிஆரால்
கன்னியாகுமாரியில் ஐயன் வள்ளுவனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க அன்றைய பிரதமர் மொராஜி தேசாயயை கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் எம்ஜிஆர்
ஆண்டுகள் பல ஆனதால் எம்ஜிஆருக்கு பின் கருணாநிதி முதல்வர் ஆகி திருவள்ளுவர் சிலை திறக்க எம்ஜிஆர் கல்வெட்டை நீக்கி விட்டு
சுயநலம் இல்லாமல் தற்ப்பெருமை இல்லாமல் மனிதநேயத்தோடு ஒரு பொற்கால ஆட்சியை எம்ஜிஆர் தந்ததால் இன்றும் உலகம் எங்கும் எம்ஜிஆர் புகழ் பாடபடுகிறது
வாழ்க எம்ஜிஆர் புகழ்.........
orodizli
27th August 2020, 07:04 PM
தமிழக அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு சட்டமன்ற பொது தேர்தலிலும் எதிர்க் கட்சியை தொடர்ந்து பலமிழக்க செய்த ஒரே தலைவர் என்ற பெருமையை நம் மக்கள் திலகம் அவர்கள் பெற்றுள்ளார்.
1977 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 48 இடங்களை கைப்பற்றியது.
1980 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 37 இடங்களை கைப்பற்றியது.
1984 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 28 இடங்களை கைப்பற்றயது.
புரட்சித் தலைவர் அவர்கள் ஆட்சி செய்த போழ்து, எதிர்க் கட்சியாக இருந்த தி.மு.க. பலம் வாய்ந்ததாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !.........
orodizli
27th August 2020, 07:12 PM
#புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார்.
சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார்.
அவர்கள் திறமையாளர்களாக இருந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
மக்கள் திலகம் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘#ஆயிரத்தில்_ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல்.
அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று #எம்ஜிஆர் கூறியதில்லை.
'எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன்' என்று அந்த கவிஞரும் சொன்னதில்லை.
மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர்.
அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘#ஆயிரத்தில்_ஒருவன்’ படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது.
படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘#மாட்டுக்கார_வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமையான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
-என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
-என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன்.
நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார்.
இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார்.
‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘#அரசவைக்_கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன்,
‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது.
கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார்.
கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்.,
‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர்.
என்றாலும்கூட கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
-என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘#நீதிக்குப்_பின்_பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல் ‘#மன்னாதி_மன்னன்’ படத்தில் அவர் எழுதிய
‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்.
காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்..........
fidowag
27th August 2020, 11:39 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*07/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சி உங்களுடைய பேராதரவுடன்**மனமார்ந்த , நெஞ்சார்ந்த பாராட்டுக்களுடன் தொடர்கிறது .சென்னையில் ஒரு காலத்தில் நாடகப்புலி என்று பேசப்பட்ட திரு.கே.பி.கேசவன் நடித்த படம் திரை அரங்கில் வெளியானது .அதை பார்க்க செல்கிறார் .படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டு, கைகளை பிடிக்கிறார்கள், கன்னத்தை கிள்ளுகிறார்கள் .ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட ,எம்.ஜி.ஆர்*அவரை தன் தோளில் சுமந்து கொண்டு வெளியே வந்து, ஒரு டாக்சியை பிடித்து*அவரை பாதுகாப்பாக ஏற்றி அனுப்புகிறார் .எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி திரைப்படம் சில வருடங்கள் கழித்து வெளியாகிறது .எம்.ஜி.ஆருடன், கே.பி.கேசவன் படம் பார்க்க செல்கிறார் . இடைவேளையில் ரசிகர்கள் எம்.ஜி.ஆரை பார்த்ததும் மொய்த்துவிடுகிறார்கள் .அவரை கட்டிப்பிடிக்கிறார்கள்,கன்னத்தில் கிள்ளுகிறார்கள்,கைகளை தொட்டு பார்க்கிறார்கள் .அன்பு தொல்லையால் அவதிப்படுகிறார் . ஆனால் அதே ரசிகர்கள் கே.பி.கேசவனை கண்டு கொள்ளவேயில்லை .எம்.ஜி.ஆர். அருகில் இருந்த கேசவனை பார்த்து ,பழைய நினைவுகளை நினைத்து சிரித்துக் கொண்டாராம் .வாழ்க்கையில் யாருக்கும்* எந்த விஷயமும், எப்பொழுதும் நிரந்தரம் இல்லை .எந்த புகழும், பெருமையும், பெயரும் யாருக்கும், எப்பொழுதும் கிடைத்துக் கொண்டு இருக்காது .எப்பொழுது வரும்,நிலைக்கும்* எப்பொழுது போகும் ,என்பது நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து* தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்கிற தொடரில் எழுதியவர் மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வையும், தாழ்வையும் சமமாக பாவிக்க தெரிந்த அதிசயிக்கத்தக்க திறன், அனுபவத்தை பெற்றவர் எம்.ஜி.ஆர்.
1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழகத்தில் மத்திய அரசான காங்கிரஸ் அரசால்*தி.மு.க. வின் நிர்பந்தத்தால் கலைக்கப்படுகிறது . அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.*ராமாவரம் தோட்டத்தில் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி திரைப்படம்*பொதிகை டிவியில் ஒளிபரப்பானதை பார்த்துக் கொண்டிருந்தார் .அரசு அதிகாரிகள் மெல்ல தயங்கி தயங்கி எம்.ஜி.ஆரிடம் சென்று அவர் காதில் விவரத்தை தெரிவிக்கிறார்கள் .பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்த ஆட்சியை கலைத்துவிட்டார்களா, வீட்டில் என்ன இனிப்பு இருக்கிறது .உடனே*அனைவருக்கும் இனிப்பு வழங்குங்கள். கூடிய சீக்கிரத்தில் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி மீண்டும் அமையும் .என்று கூறி தொடர்ந்து படம் பார்க்கிறார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால் எப்பொழுதும்*அதில் இருந்து பின் வாங்க மாட்டார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் .உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக குன்னக்குடி வைத்யநாதனை இசை அமைக்க ஒப்பந்தம் செய்துவிட்டார் .படத்திற்கு பாடல்கள் எழுத கவிஞர் கண்ணதாசன் வரவழைக்கப்படுகிறார் .பாடல்கள் எழுதுவது பற்றியும் ,இசை அமைப்பாளர் பற்றியும் எம்.ஜி.ஆருடன் பேசி கொண்டிருந்த கண்ணதாசன்*வீட்டுக்கு போய் எழுதி கொண்டுவருகிறேன் என்று புறப்பட்டார் . கண்ணதாசனுக்கு எப்பொழுதும் வெள்ளை மனம் .அதாவது உள்ளதை உள்ளபடியே சொல்லும் குணம் உண்டு . வீட்டுக்கு சென்ற கண்ணதாசன் எம்.ஜி.ஆரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தின் பாடல்கள் ,இசை அமைப்பு குறித்து உங்களிடம் தனியே பேசவேண்டும் என்று கேட்டு கொண்டார் .இருவரும் சந்தித்தனர் .அப்போது கண்ணதாசன் எம்.ஜி.ஆரிடம் ,நீங்கள் எடுக்கப்போகும் படம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது . மேலைநாட்டு இசைக்கு* முன்னுரிமை தரவேண்டியது அவசியம், அதற்கு குன்னக்குடி வைத்யநாதன் சரிப்பட்டு வரமாட்டார் . தமிழ் திரைஉலகில் உச்சத்தில் உள்ள இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால்தான் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியும் .ஆகவே என் கருத்தை நன்றாக யோசித்து*முடிவு செய்யுங்கள். உங்களது படம் நன்றாக வரவேண்டும் .இசை, பாடல்கள் நன்றாக அமையவேண்டும் என்கிற எண்ணத்தில் சொல்கிறேன் குன்னக்குடி வைத்யநாதனுக்கு வேண்டுமென்றால் வேறொரு படத்திற்கு வாய்ப்பு அளியுங்கள் .என் மனதில் பட்டதை வெளிப்படையாக, உங்களின் நன்மைக்காக சொல்கிறேன் .தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார் .*.அதன்பிறகு இருவரும் ஒரு மாதகாலம் சந்திக்கவேயில்லை . கண்ணதாசனின் நண்பர்கள் கண்ணதாசனை கடிந்துகொண்டார்கள் .இவருக்கு இது வேண்டாத வேலை.எம்.ஜி.ஆர். யாரையாவது வைத்து இசை அமைக்கட்டும் .கவிஞருக்கு*இந்த படத்தில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைக்க போவதில்லை என்று பேசி கொண்டார்கள் . ஆனால் ஒரு மாத காலத்திற்கு பிறகு கவிஞர் கண்ணதாசனை*தொலைபேசியில் அழைத்து எம்.ஜி.ஆர். பேசினார் . நீங்கள் அளித்த யோசனைகளை பற்றி சிந்தித்து பார்த்தேன் . உங்களின் கருத்தும், வாதமும் சரிதான் .நல்ல நேரத்தில் அளித்த யோசனைக்கு நன்றி என்று கூறி பாடல்களை விரைவாக எழுதும்படியும் , இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை அழைத்து உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார் . ஏற்கனவே ஒப்பந்தம் செய்த இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதனை அழைத்து ,உங்களுக்கு வேறு படத்திற்கு கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் .இந்த படத்திற்கு எம்.எஸ்.வி. இசை அமைக்கட்டும் என்று கூறி ,சில ஆண்டுகள் கழித்து ஏ.பி.என்.தயாரித்த நவரத்தினம் படத்திற்கு வாய்ப்பு அளித்தார் .உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தக்க சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு யோசனை தெரிவித்தார் கண்ணதாசன் .அதே சமயத்தில் தான் ஒப்பந்தம் செய்த இசை அமைப்பாளரை மாற்ற மனமில்லாமல் வேறொரு படத்திற்கு வாய்ப்பு அளித்ததோடு , கவிஞர் கண்ணதாசன் அளித்த சரியான*யோசனையையும் நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது .
அண்ணா பத்திரிகை நாராயணன் மற்றும் சில பத்திரிகையாளர்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறார் எம்.ஜி.ஆர். அவர்கள் எல்லோரும் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்தனர் .சிறிது நேரம் பேசிய பிறகு யாருடைய கையிலும் அண்ணா உருவம் பொறித்த பச்சை குத்தப்படாததை எம்.ஜி.ஆர். அறிந்து கொள்கிறார் .நீங்கள் எல்லாம், ஒருவரும்* பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் கொள்வதில்லை போலும் . அப்படித்தான் பத்திரிகையாளர்கள் இருக்க வேண்டும் என்று பாராட்டினாராம் . பத்திரிகையாளர்கள் யாவரும்* எந்த விஷயத்திலும், எந்த நேரத்திலும் ஒரு சார்பு நிலையில் இருக்க கூடாது . நடுநிலையில்தான் இருக்கவேண்டும் என்று அறிவுரை சொன்னாராம் .
எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான ஒரு மூத்த அமைச்சர் அவருடைய பேச்சுக்கள் அண்ணா பத்திரிகையில் பிரசுரம் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் .இந்த செய்திகள் வெளிவர சில நாட்கள் தாமதம் ஆவதால் அமைச்சருக்கு கோபம் வருகிறது .ஒருநாள் ஒரு கூட்டத்தில் அண்ணா பத்திரிகையை சார்ந்த சில ஊழியர்கள் முதல் வரிசையில் அமர்ந்துள்ளார்கள்*அந்த சமயம் அந்த மூத்த அமைச்சர் ,பத்திரிகை ஊழியர்களிடம் ,இப்போதெல்லாம் உங்கள் பத்திரிகையில் வரும் செய்திகள் நன்றாக இல்லையாமே என்றாராம் .எந்த பத்திரிகை என்று ஊழியர்கள் கேட்க, அண்ணா பத்திரிகை பற்றித்தான் சொல்கிறேன் என்றாராம் பலர் முன்னிலையில். ஊழியர்கள் முகம் வாட்டம் கொள்கிறது .இந்த சம்பவம் பற்றி எம்.ஜி.ஆர்**எப்படியோ .தகவல்களை அறிந்து கொள்கிறார் . மறுநாள் அந்த மூத்த அமைச்சர்* பத்திரிகை அலுவலகம் வரும்போது எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார் ..எம்.ஜி.ஆரை பார்த்ததும் அமைச்சர் அதிர்ச்சியடைந்து, நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் நமது நண்பர்கள்தானே என்று கொஞ்சம் ஜாலியாக பேசி விட்டேன் என்றுவருத்தம் தெரிவித்தாராம் .அப்போது எம்.ஜி.ஆர். கூறியதாவது,பத்திரிகையாளன் பத்திரிகையாளன்தான் எந்த கட்சியிலே, எந்த பத்திரிகையிலே,எந்த ஊடக அலுவலகத்தில்**வேலை பார்க்கிறான்* என்பது முக்கியமல்ல பத்திரிகையாளனுக்கு ஒரு மரியாதை இருக்கிறது .மரியாதைக்காவது இப்படி நீங்கள் பேசியிருக்க கூடாது என்று சொன்னவுடன் அமைச்சர் மிகவும் வருத்தப்பட்டாராம் .ஆகவே, எம்.ஜி.ஆருக்கு விஷயம் தெரிந்து, தன் கட்சி பத்திரிகை அலுவலகத்தில் , தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மீது அபாண்டம் கற்பிப்பதை அனுமதிக்க முடியாது என்கிற வகையில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள்,திறமை வாய்ந்தவர்கள், உண்மை ஊழியர்கள் ,நல்ல செய்திகளை பிரசுரம் செய்யக்கூடிய புத்திசாலிகள்,என்பதை மதித்து, அமைச்சரிடம் வலியுறுத்தி சொல்லி ,ஊழியர்களிடம் வருத்தம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதுதான் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் சிறந்த பண்புகளில் ஒன்று .
*.ஆகாயத்தில் இருந்து ,விழுந்து கிடைக்கப்பெற்ற ஒரு சூரிய சிதறல்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் .அந்த சூரிய சிதறல்களில் இருந்து நாம் சில நட்சத்திரங்களை பொறுக்கி நம்பிக்கை வாசல்களை திறந்து வைக்கிறோம்.*அந்த நம்பிக்கை வாசல்களில் இருந்து நடந்துகொண்டு, நாம் வெற்றியை நோக்கி பயணப்படுவதற்கான வழிகாட்டியாகத்தான் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சியை* தொடர்ந்து வருகிறோம் . தொடர்ந்து மற்ற செய்திகளை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.வீரமகன் போராட, - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்*
2.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் - நினைத்ததை முடிப்பவன்*
3.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*
4.லில்லி மலருக்கு கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன்*
5.எம்.ஜி.ஆர்.-எம்.ஆர்.ராதா உரையாடல் - சந்திரோதயம்*
6.நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர்.பேட்டி - அன்பே வா*
7.பேசுவது கிளியா ,இல்லை பெண்ணரசி மொழியா-பணத்தோட்டம்*
.**
orodizli
28th August 2020, 02:24 PM
முதலாவதாக, " மாடி வீட்டு ஏழை " படத்திற்கான காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே படம் பிடிக்கப்பட்டன.
இரண்டாவதாக, படத்தில் நடிக்க கதா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அவர் சரியாக நடிக்க வில்லை என்ற காரணத்துக்காக படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்க முடியாது. வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்க வாய்ப்புண்டு.
மூன்றாவதாக நடிகர் சந்திரபாபு தனது சொந்தப் பணத்தில் படம் எடுக்க வில்லை. நிதியுதவி அளித்த ஒரு முதலீட்டாளர் அளித்த பணத்தில் தான் படம் எடுத்தார்.
இது குறித்து, நடிகர் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ரவீந்திரன் என்பவர் தெரிவித்த கீழ்க்கண்ட தகவல் :
"மாடி வீட்டு ஏழை" படத்துக்கு நிதியுதவி செய்த முதலீட்டுதாரரின் குடும்பத்தாருடன் சந்திரபாபு கொண்ட தொடர்பினால், அந்த முதலீட்டுதாரர் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நிகழ்ந்தது. விஷயம், நமது பொன்மனச்செம்மல் அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்த போது, சந்திரபாபுவை கண்டித்தார். சந்திரபாபு அதை அலட்சியபடுத்தியதின் விளைவே - ஒன்றிரண்டு காட்சிகளுடன் எடுக்கப்பட்ட "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் கைவிடப்பட்டது.
சந்திரபாபுவின் சொந்த சகோதரர் ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்கட்சியில் தெரிவித்த தகவல் வருமாறு :
"ஒரு கிருஸ்துமஸ் திருநாளன்று, நடிகர் சந்திரபாபு பட வாய்ப்புக்கள் இன்றி சோகத்தில் தனிமையில் வாடிய போது, மக்கள் திலகம் அவர்கள் தன் உதவியாளர் மறைந்த குஞ்சப்பன் அவர்கள் மூலம், ஒரு பெரிய பார்சலை நடிகர் சந்திரபாபுவுக்கு கொடுத்தனுப்பினார். பொன்மனசெம்மலின் வாழ்த்துக்களுடன் கூடிய அந்த கிருஸ்துமஸ் தின அன்பளிப்பாகிய பெரிய பார்சலை பிரித்து பார்த்ததில் புத்தாடையுடன், கேக் மற்றும் இனிப்புக்களுடன், பெருமளவு ரொக்கத் தொகையும் காணப்பட்டது.
சந்திரபாபு, அந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அடைந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அன்றையை கிறிஸ்துமஸ் தினமே, சில மணி நேரம் கழித்து, தயாரிப்பாளர் - இயக்குனர் ராமண்ணா அவர்கள், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது "பறக்கும் பாவை" படத்துக்கு, சின்னவர் (எம். ஜி. ஆர்.) சிபாரிசின் பேரில் அவரை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும், அதற்கு சம்பளமாக, சின்னவரின் ஏற்பாட்டின்படி ரூபாய் ஒரு லட்சம் (இத்தொகை அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தொகை) தரவிருப்பதாகவும் கூறி, மேலும் அவரை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.
இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
================================================== ==== ===============
நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.
ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.
நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
================================================== ==============================
சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.
ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்..........
orodizli
28th August 2020, 02:25 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 100 படங்களின் நெகடிவ் பத்திரமாக தமிழக அரசின் பெட்டகத்தில உரிய பாதுகாப்புடன் வைக்கப்படும் .
.
1957 முதல் 1987 வரை மக்கள் திலகம் பங்கேற்ற அரசியல் கூட்டங்களின் நிழற் படங்கள் , கலந்து கொண்ட விழாக்களின் நிழற் படங்கள் அனைத்தும் பிரமாண்ட ஸைசில் டிஜிட்டல் படங்களாக மாற்றி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் .
தமிழக அரசின் செய்தி துறை வசம் உள்ள மக்கள் திலகத்தின் 11 ஆண்டு அரசியல் விழாக்கள் வீடியோ பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு மக்களுக்கு காணொளியாக காண்பிக்கப்படும் .
மக்கள் திலகத்தின் படங்கள் தினமும் பொது மக்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படும் .
அதி நவீன வசதிகள் கொண்ட ''மக்கள் திலகம் எம்ஜிஆர் ''இலவச மருத்துவ மனை 234 சட்ட மன்ற தொகுதிகளிலும்
நிறுவப்படும் .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெகா சிறப்பு மலர்
இப்படிப்பட்ட அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து அறிவிப்பு நாளே மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கனவு நிறைவேறும் நாள் .
கனவு நிறைவேறுமா ?!.........
orodizli
28th August 2020, 02:27 PM
நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!
‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!
நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.
அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.
பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை.
- தி இந்து ..........
orodizli
28th August 2020, 02:28 PM
MGR the legend..
இவர்கள் #எதிர்காலத்தூண்கள்
தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...
போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...
டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!
'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...
உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.
பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...
அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...
முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???
அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...
மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...
வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்..................
orodizli
28th August 2020, 02:29 PM
புரட்சித்தலைவர் அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமில்லாமல் மறைந்த பிறகும் பல சாதனைகள் படைத்தவர் .இந்த சாதனைகள் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது .அவைகள் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கபட வேண்டும். கின்னஸ் சாதனைக்கு எடுத்து செல்லபட வேண்டும் .கின்னஸ் சாதனைக்கு கீழ்க்கண்ட தலைப்புகளில் முயற்சி செய்யலாம்
1 தலைவர் மறைந்த பிறகு பல புத்தகங்கள் அவர் புகழ் பாடி வந்துவிட்டன ,இன்னும் வந்து கொண்டிருக்கன்றது .இவைகளை முறை படுத்தி கின்னஸ் சாதனைக்கு எடுத்து செல்லலாம் .
2 தலைவரின் நூற்றாண்டு இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்றது .உலகெங்கும் தலைவரின் பக்தர் விழா கோண்டாடினர் .அவ்வாறு சுமார் 200 விழாக்களுக்கு மேல் நடைபெற்றது .இந்த நிகழ்வு உலகில் வேறு எந்த தலைவருக்கும் நடக்காத சாகனை.இதையும் கின்னஸ் ரெக்கார்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் .
3 திரைபடம் என்பது mass media .ஒரு கருத்தை ஒரே சமயத்தில் உலகின் எல்லா ஊரிலும் பரப்பலாம் .அந்த media வை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்து சொன்னவர் உலகிலேயே நம் தலைவர் ஒருவர் தான் .படிப்பினை சொல்லும் பாடல்களை மொழிபெயற்புடன் தொகுத்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம் .
4 திரைபடங்களில் தலைவர் பல விதமான சண்டை காட்சிகளில் நடித்திருக்கறார் .ஒவ்வொரு விதமான சண்டை காட்சிகளையும் வர்ணனையுடன் தொகுத்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம் .
மேற்கூறியவை சில மட்டும் தான் .வேறு ஏதாவது விடுபட்டிருந்தால் தெரிக்கும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் .
கினன்னஸ் சாதனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பணியை ஒருவராக செய்ய முடியாது , பேரவை மூலமாக நடவடிக்கை எடுக்கலாம்...........
fidowag
28th August 2020, 04:45 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*08/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நிறைய ராஜா ராணி, படங்களில்,சரித்திர படங்களில் நடித்து கத்தி சண்டை, வாள் சண்டை போட்டு பிரபலம் ஆகியிருந்தார் .அப்போது நடிகர்* சிவாஜி கணேசன்* சில சரித்திர படங்கள், சமூக படங்கள் என்று நடித்திருந்த காலம் . ஒருமுறை இருவரும் சந்திக்க நேர்ந்தபோது ,அண்ணே,கத்தி சண்டை, வாள் சண்டை போட்டு நடிப்பது போல் சமூகப்படங்களில் கோட் சூட் அணிந்து நடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று கிண்டலாக* ஒரு கருத்தை வெளியிட்டார் .ஆனால் எம்.ஜி.ஆர். தன்னால் சமூகப்படங்களிலும் திறம்பட நடிக்க முடியும் என்று முதன் முதலில் திருடாதே படத்தில் நடித்து அமோக வரவேற்பை பெற்றார் .தொடர்ந்து தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலை காக்கும், குடும்ப தலைவன் ,நீதிக்கு பின் பாசம் என* தனது ஆத்ம நண்பர்* தேவரின் படங்களில் கோட் சூட் அணிந்து நடித்து நடிகர் சிவாஜி கணேசனே வியந்து போகும் அளவிற்கு பிரமிப்பை ஏற்படுத்தினார் .தொடர்ந்து இயக்குனர் ராமண்ணா படங்கள், நாகிரெட்டியின் எங்க வீட்டு பிள்ளை, ஏ.வி.எம்மின் அன்பே வா, சத்யா மூவிஸ்,சரவணா பிலிம்ஸ்* படங்கள் ஆகியவற்றில்பிரத்யேக உடைகள் அணிந்து* நடித்து, அந்த கால கட்டத்தின் ட்ரெண்ட் செட்டராக எம்.ஜி.ஆர். இருந்துள்ளார் .ராமன் தேடிய சீதை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன், சங்கே முழங்கு போன்ற பல படங்களில் தொப்பி,உடைகள்,ஷூ என்று அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருக்கும்படி அணிந்து , புதுமையை புகுத்தி, ரசிகர்களை பரவசம் அடைய செய்தார் . பல வண்ணப்படங்களில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வண்ண உடைகள் ,பார்ப்பதற்காகவே, பல்லாயிரம்* ரசிகர்கள் படங்களை பலமுறை பார்த்து ரசித்த காலம் உண்டு .*
தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அவமானங்கள், கஷ்டங்கள்,பிரச்னைகள், பசிக்கொடுமை, பட்டினி என்று அவதிப்பட்டு,அவற்றையெல்லாம் சாதனைகளாக மாற்றுவது குறித்து சிந்தித்து செயல்பட்டதால்தான் திரைப்படங்களின் ஒவ்வொரு பிரேம்களையும், தனக்கான வாழ்க்கையின் படிக்கட்டுகளாக கட்டமைத்தார் . மற்றவர்களெல்லாம் திரைப்படம் என்பது*பணம்,புகழ்,பெயர் போன்றவற்றிற்கு என்று* மதிப்பளித்து நடித்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் நடிப்பது தொழிலுக்காக மட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை, சாதனைகளாக மாற்றி ,வெற்றியின் சிகரத்தை அடைவதில் முனைப்புடன் திட்டமிட்டு செய்தார் .அவரது ஒவ்வொரு படத்தில் இருந்தும் பாடங்களாக கற்று கொண்டவர்கள் ,பல்லாயிரம் நபர்கள், பல உயர் பதவிகளில், குறைந்த பட்சமாக ஒரு கிராம நிர்வாக அதிகாரியாகவோ, அரசு அலுவலகங்களில் குமாஸ்தாவாகவோ ,அதிகாரியாகவோ இருக்கிறார்கள் என்பது அவர் கற்று தந்த பாடங்களின் சான்று .
நல்லவனாக வாழ்வதால்,என்ன தீமைகள் உண்டாகும், என்ன எதிர்ப்புகள் உண்டாகும் எந்த தடைகள் வந்தாலும் சரி, எந்த தோல்விகள் வந்தாலும் சரி,நல்லவனாக வாழ்வதால் என்றைக்காவது ஒரு நாள் உங்களுக்கு மிக பெரிய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு மிக பெரிய உதாரணமாக அவர் வாழ்ந்து காட்டினார் . அவர் படாத அவமானங்களோ, சந்திக்காத பிரச்சனைகளோ* இல்லை .,எல்லா எதிர்ப்புகளையும் தன்னுடைய சாதனைகளுக்கான* படிகளாக *மாற்றுவதற்கு அவர் துணிந்து எடுத்துக்கொண்ட ஒரே லட்சியம் நல்லவனாக வாழ்வது, நல்லதை செய்வது, அவ்வை சொன்ன* அறம் செய்ய விரும்பு என்கிற* வரிகளின்படி அறம் செய்பவராகவே வாழ்ந்து காட்டியதால்தான் காலம் கடந்து*மறைந்தும் மறையாத நிலையில் மக்கள் அவரை நேசிக்கிறார்கள் .
1980ல் எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்படுகிறது அது நியாயமற்றது என்பதை எம்.ஜி.ஆர்.உணர்கிறார் .திரைப்படங்கள் தயாராகி வெளியிடுவதில் பிரச்னைகள் ஏற்பட்டால் நான் வெளிநாடு சென்றுவிடுகிறேன் என்று சொன்ன சில நடிகர்கள் மத்தியில் அந்த கால கட்டத்தில் ஆட்சியை கலைத்ததற்கு, நான் வேண்டியவர்களுக்கு அரசு அதிகாரம் மூலம்* தவறான வகையில்* உதவிகள் செய்தேனா,,பதவிகள் அளித்தேனா லஞ்சம் வாங்கினேனா ,ஊழல் செய்தேனா ,எந்த வகையில் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள்* நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது என்று வாக்காளர்களுக்கு அறிக்கை விட்டார் .அடுத்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வரும்போது நான் ,குற்றவாளியா, நிரபராதியா என்று தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் உள்ளது .அதன்பிறகுதான் என் வாழ்க்கை நிலை, அரசியல் நிலை குறித்து நான்*முடிவு எடுப்பேன் என்று மக்களிடம் துணிந்து நேரடியாக வேண்டுகோள்வைத்து வாக்கு கேட்ட ஒரே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.தான் .ஒரு பொது கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.பேசியதாவது : நான் உங்களிடம் கேட்க விரும்புவது, தாய்மார்களிடம்*கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான்* நான் என்ன குற்றம் செய்தேன். ஏன் என்னை பதவியில் இருந்து இறக்கினார்கள்* நான் லஞ்சம் வாங்கினேன் என்று சொல்கிறார்களா, இல்லை ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா , இல்லை*இந்திரா காந்தி அம்மையார் சமீபத்தில் தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்கள் .அப்போது* ஒரு வார்த்தை அதுபற்றி சொல்லவில்லை.ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் .நீதியில் நான் குறுக்கிட்டதாக சொல்கிறார்களா இல்லை. நிர்வாகத்தில் நான் தலையிட்டேனா இல்லை .என் நண்பர்களுக்கு ஏதாவது முறைகேடாக பதவிகள் ,உதவிகள் அளித்தேனா இல்லை.பின் எதற்காக நீங்கள்* வாக்களித்து**தேர்ந்தெடுத்த மந்திரிசபையை, சட்டமன்றத்தை கலைத்தார்கள் .காரணங்கள் இருந்து, நான் குற்றவாளி என்று சந்தேகித்து ,விசாரணை கமிஷன் அமைத்து,அதன்மூலம்* குற்றவாளி என்று தீர்மானித்து* அதற்கு போதிய ஆதாரங்கள் இருந்து கலைத்து இருந்தால் நான் நிச்சயமாக மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கவலைப்பட்டிருக்க மாட்டேன் .
அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா, என்மீது அன்பை காட்டிய தாய்மார்களே, பெரியோர்களே,நண்பர்களே* உங்கள்மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள் கடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு எங்கள் வேட்பாளர்களை தோற்கடித்தீர்களாம் .நீங்கள் அவர்களை ஆதரித்து தேர்ந்தெடுத்து உள்ளீர்களாம்*எங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையாம் ஆகவே சட்டமன்றத்தை கலைத்து விட்டார்களாம் .எங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பதை வரும் பொது தேர்தலில் நீங்கள் வாக்களித்து பதில் சொல்லியாக வேண்டும் .நானும் தெரிந்து கொண்டாக வேண்டும் . இந்த ராமச்சந்திரன் மீது எந்த குற்றத்தையும் காணாமல் இருக்கிற நிலையில் ஆட்சியில் இருந்து இறக்கிய பிறகு ,நான் குற்றவாளி என்கிற நிலையில் இல்லாத போது* குற்ற தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட அவமானத்தில் இருந்து*விடுவிக்கப்படுவதோடு எனக்கு சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும் என்ற வகையில்*.நான் நிரபராதியா இல்லையா என்று நிரூபிப்பதற்கு நீங்கள் வரும் தேர்தலில் அளிக்க போகும் வாக்குகள் தான் முடிவு செய்யும் , நல்ல தீர்ப்பை தரும். பேரறிஞர் அண்ணா அவர்கள் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள் .பிரச்னைகள் வரும்போது நான் மக்களை சந்திப்பேன் . ஏனென்றால் மகேசன் தீர்ப்பே மக்களின் தீர்ப்பு என்று அமரர் அண்ணா சொல்லியிருக்கிறார் .அந்த உங்களின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, தீர்ப்பை எதிர்பார்த்து ,சில காலம் காத்திருப்பேன் . ஜூன் மாதம் முதல் வாரம் இதே பவானி நகருக்கு நான் வந்து உங்களிடம் பேசுவேன் .நீங்கள் அளிக்கும் தீர்ப்பை பொறுத்துதான் ,என் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல ,தமிழகத்தில் நான் எப்படி வாழ்வது என்பது பற்றி முடிவு எடுப்பேன் என்று சொல்லி ,அனைவரும் நமது வெற்றி சின்னமாகிய இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வீர்கள், நான் நிரபராதி என்று நிரூபிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ,அண்ணா நாமம் வாழ்க, என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி ,வணக்கம் .*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.அன்று வந்ததும் அதே நிலா* - பெரிய இடத்து பெண்*
2.எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி உரையாடல் -நீதிக்கு பின் பாசம்*
3.திருவளர்செல்வியோ* - ராமன் தேடிய சீதை*
4.பாடும்போது நான் தென்றல் காற்று -நேற்று இன்று நாளை*
5.நல்ல நேரம் படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.
6.எம்.ஜி.ஆர்.- எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம்நாடு*
.
orodizli
28th August 2020, 04:59 PM
29.8.1970
flash back.
முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. \பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போதுரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்பு
சோ வின் காமெடி கலக்கல் என்று செல்லும் வேலையில் மக்கள் திலகம் -விஜயஸ்ரீ
சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .
அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .
மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை அமைந்தது.........
orodizli
28th August 2020, 05:06 PM
இனிய காலை வ*ண*க்க*ம் ந*ண்ப*ர்க*ளே.. நேற்று நாகேஷிற்கு காஷ்மீரில் புர*ட்சித்த*லைவ*ர் செய்த* உத*வியைப்ப*ற்றி ப*திவிட்டேன்..உட*னே சிவாஜி க*ணேச*ன் ரசிக*ர்க*ள் சில*ர் ந*ல்ல
க*ற்ப*னை..நான் நினைச்சேன் என்று கிண்ட*ல*டித்துள்ளன*ர். அவ*ர்க*ளுக்கான* பின்னூட்ட*மே இது..யூடியுப்க*ளில் சித்ரால*ட்சும*ண*ன் பேட்டி ம*ற்றும் நாகேஷின் நேர*டி பேட்டி ஒன்றிலும் இன்றும் தேடினால் க*ட்டாய*ம் கிடைக்கும்..
முத**லில் இந்த* விவ*ர*ங்க*ள் தின*ம*ல*ர் நாழித*ழில் க*ட்டுரை வ*டிவிலும், நாகேஷ் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியிலும் அளித்துள்ள*தை பார்த்து, ப*டித்து ப*கிர்ந்துள்ளேன். எந்த* க*ற்ப*னை விஷ*ய*த்தையும் சேர்த்து த*லைவ*ருக்கு கொடி பிடிக்க* வேண்டிய* அவ*சிய*ம் யாருக்குமில்லை. காஷ்மீரில் ஒரே நேர*த்தில் வெவ்வேறு இட*ங்க*ளில் சித்ரா ப*வுர்ண*மி, நினைத்த*தை முடிப்ப*வ*ன், நேற்று இன்று நாளை, இத*ய*வீணை ப*ட*ப்பிடிப்பு ந*டைபெற்ற*து..எம்ஜிஆரை பொருத்த*வ*ரை லோக்க*ல் ஷூட்டிங் அல்ல*து வெளிப்புற* ப*ட*ப்பிடிப்பு எதுவானாலும் த*ன்னுட*ன் ந*டிக்கும் இணை ந*டிக*ர்க*ள் முத*ல் துணை ந*டிக*ர்க*ள் வ*ரை அவ*ர்க*ளுக்கு வ*ழ*ங்க*ப்ப*டும் உண*வு, ச*ம்ப*ள*ம், பாதுகாப்பு போன்ற*வ*ற்றில் முக்கிய* க*வ*ன*ம் செலுத்துவார்..அதில் ஏதேனும் பிசிறு த*ட்டினால் அவை ச*ரிப்ப*டுத்த*ப்ப*டும்வ*ரை ப*ட*ப்பிடிப்பே ந*ட*க்காது. என*வே அவ*ர் ந*டிக்கும் ப*ட*ங்க*ளின் முத*லாளிக*ள் ம*ற்ற* ந*டிக*ர்க*ளின் விஷ*ய*த்திலும் ந*ல்ல*வித*மாக*வே ந*ட*ப்பார்க*ள்..இதில் சிவாஜி ந*டித்த சித்ரா ப*வுர்ண*மி தொட*ர்பான ச*ம்ப*வ*ம் ஆன*தால் உங்க*ளுக்கு க*ற்ப*னையாக* தோன்றுகிற*து..இதே வேறு ஒரு ப*ட*த்தின்போது ந*ட*ந்த* ச*ம்ப*வ*ம் என்றால் ந*ம்புவீர்க*ள்..
மேலும் சித்ரா ப*வுர்ண*மி ப*ட*ம் சிவாஜியின் ஆடிட்ட*ர்க*ள் த*யாரித்த* முத*ல்ப*ட*ம். என*வே அவ*ர்க*ளுக்காக குறைந்த* ச*ம்ப*ள*ம் பெற்றுக்கொண்டு சிவாஜி ந*டித்தார். மேலும் அவ*ர் ப*ட*ங்க*ளில் ந*டிக்கும் பிற* ந*டிக*ர்க*ளின் ந*டிப்பு தொட*ர்பான விஷ*ய*ங்க*ள் அன்றி பிற*ருக்கு ஏற்ப*டுத்த*ப்ப*ட்டுள்ள வ*ச*திக*ள், ச*ம்ப*ள*ம் போன்ற*வ*ற்றில் சிவாஜி த*லையிட*மாட்டார். இதுவும் அனைவ*ரும் அறிந்த*தே..
சிவாஜி, க*மலா அம்மாள் ம*ற்றும் ஜெய*ல*லிதாவிற்கு ந*ல்ல ஓட்ட*ல்க*ளிலும் பிற* ந*டிக*ர் ந*டிகைக*ளுக்கு சாதார*ண* லாட்ஜுக*ளையும் ஏற்பாடு செய்திருந்த*ன*ர் ஆடிட்ட*ர்க*ள்..நாகேஷும் ஏதோ 4 நாட்க*ளில் த*ன் ப*குதி முடிந்துவிடும் என்றே ந*ம்பி வ*ந்தார். ஆனால், த*யாரிப்பாள*ரின் சிக்க*ன* ந*ட*வ*டிக்கை, ப*ட*ப்பிடிப்பிற்கு போதிய* வெளிச்ச*மின்மை ஆகிய* கார*ண*த்தால் ப*ட*ப்பிடிப்பு தாம*த*மாகிக்கொண்டே போன*து..நாகேஷ் இய*ல்பாக*வே த*யாரிப்பாள*ரே எல்லாம் பார்த்துக்கொள்வார் என்ற* நிலையில் முன்னேற்பாடுக*ளின்றியே செல்வார். இங்கு த*லைகீழாக* போன*து. நாகேஷுக்கு ஏற்க*ன*வே இருந்த* அல்ச*ர் தொந்த*ர*வுட*ன் உண*வும் ச*ரியில்லாம*ல் போக*வே உட*ல்நிலை மோச*ம*டைந்த*து..ரூமிலேயே முட*ங்கிப்போனார்.. எம்ஜிஆருக்கு இந்த* விவ*ர*ங்க*ள் செவிவ*ழிச் செய்தியாக* வ*ந்த*து. பிற*குதான் எம்ஜிஆர் நேராக* நாகேஷ் இருந்த* லாட்ஜுக்கே உரிய* ம*ருத்துவ*ருட*ன் வ*ந்து சிகிச்சை அளிக்க* வைத்தார். ந*ல்ல* உண*விற்கும் ஏற்பாடு செய்துகொடுத்தார். கையில் ப*ண*ம் 30000த்தையும் கொடுத்து ப*ட*ப்பிடிப்பில் உன்ப*குதியை விரைவில் முடிக்க*ச்சொல்லிவிட்டு விமான*ம் பிடித்து விரைவில் ஊர் போய்ச்சேரும்ப*டி அறிவுறுத்தினார் எம்ஜிஆர்..மேற்சொன்ன* நிக*ழ்வு முற்றிலும் உண்மை..........( இது போன்ற பல உண்மை விடயங்களை சிலர் மறுத்து நம்பாமல் அவர்களாகவே ஆறுதல் அடைந்து கொள்கின்றதை நாமெல்லாம் அறிந்ததுதானே).........
orodizli
28th August 2020, 05:07 PM
#எம்ஜிஆர்_தொண்டர்கள்_நலன்
m.g.r. மக்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கைக் கொண்டு அரசியலில் உயர்ந்தாரே தவிர, ரசிகர்களையும் தொண்டர்களையும் தனது சுயநலத்துக்காக அவர் பயன்படுத்திக் கொண்டது இல்லை. அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்துப் போய்விடுவார். அவர்களது குடும்பம் அதிலிருந்து மீள உதவும்வரை ஓயமாட்டார்.
எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச் சிகள் என்றால் அதில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வருவார்கள். ஒருமுறை மதுரையில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். கூட்டத் துக்கு வெளியூரில் இருந்து வந்த சில தொண்டர்கள், இரவு திரும்பிச் செல்லும் போது வாகன விபத்தில் பலத்த காய மடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பு வதாக ஏற்பாடு. ஆனால், விபத்து பற்றி கேள்விப்பட்டு தனது பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். காயமடைந்த தொண்டர்களை சந்திக்க மறுநாள் காலை யில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வருவது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. திடீரென மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர். வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொண்டர் ஒருவர் படுத்திருந்த இடத் துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். படுக்கை யில் கிடந்த அந்த தொண்டரின் அருகே உதவிக்கு அவரது மனைவி மட்டும் இருந்தார். அந்தப் பெண்மணியின் கோலமே அவர்களது குடும்ப நிலை மைக்கு கட்டியம் கூறியது.
எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சி, கண வனின் நிலையால் துயரம், அந்தத் துயரை சமாளிக்க தோள் கிடைத்த நிம்மதி என எல்லாம் கலந்த உணர்ச்சிக் குவியலாய் அந்தப் பெண்மணி அழ ஆரம்பித்துவிட்டார். ‘‘ஐயா, எப்பப் பார்த் தாலும் உங்க பெயரையும் பெருமையை யும் சொல்லிக் கொண்டிருப்பாரய்யா. அவருக்கு இப்படி ஆகிவிட்டதே’’ என்று சொல்லிக் கதறினார். கிழிந்த ஆடை யுடன் பரிதாபமாகக் காட்சி அளித்த அந்தப் பெண்மணியின் கதறலைக் கண்டு எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின.
‘‘கவலைப்படாதே அம்மா. உன் கணவருக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் சரியாகிவிடும். நான் இருக்கிறேன்’’ என்று ஆறுதல் கூறினார். அந்த வார்டில் இருந்த டாக்டரிடம் தொண்டரின் உடல் நிலை குறித்து விசாரித்து, அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டரிடம் பேசிவிட்டு அந்த தொண்டர் படுத்திருந்த கட்டில் அருகே சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தலையைத் தடவிக் கொடுத்து கையை இறுகப் பற்றி, ‘‘நீ எதுக்கும் கவலைப்படாதே. டாக்ட ரிடம் சொல்லியிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நீ வீடு திரும்பலாம். தைரிய மாய் இரு’’ என்றார். தனது அபிமான தலைவர் தன் கையைப் பிடித்து பேசு வதைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் பதில்கூட சொல்லமுடியாமல், அந்த தொண்டரின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அந்தத் தொண்டர் உட்பட காயமடைந்த தொண்டர்களின் உடல்நலம் தேறும் வரை, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும்போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.
முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்துபோன தொண் டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.
சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்து போன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கைபோட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்த னர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள் வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!
அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். ஆறுதலாய் பேசினார். அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!
எம்.ஜி.ஆர். நடித்த ‘புதியபூமி’ திரைப் படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அந் தப் படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் சூப்பர் ஹிட் பாடல் இது…
‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை!’
அதிமுகவின் முதல் உறுப்பினர் எம்.ஜி.ஆர்.தான். கட்சியின் பெயரி லும் கொடியிலும் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவுக்கு முக்கியத் துவம் அளித்தார். கட்சி உறுப்பினர் அட்டையிலும் தனது படத்தைவிட அண்ணாவின் படமே பெரிதாக இருக்கும்படி செய்து, தலைவரை மதிக்கும் தொண்டர் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்தார்!.........
orodizli
28th August 2020, 05:09 PM
1944ல் மிக தைரியமாக அதாவது வெள்ளையன் ஆட்சியில் ஈரோட்டு ராம்சாமி அழிச்சாட்டிய ஆட்டம் போட்டு பெரிய புராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என ஆட்டம் போட்ட காலங்களில் "நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது" என பொதுவாக சொன்னார்
நச்சு ஆறு என்பது தாங்களே என உண்மையினை ஏற்று கொண்ட திக தரப்பு பொங்கி எழுந்தது, அண்ணா டுரை என்பவர் "கீலாசேபம்" என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார்
ஈ.வெ.ரா விடுதலையில் தலையங்கம் எழுதினார். ‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார், தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார்.
அண்ணாவுக்கும் கிருபானந்தவாரிக்கும் எழுத்துபோர் நடந்தது, அது தீவிரமாகவும் நடந்தது , வாரியாரின் தாக்குதல் முன் பேரறிஞன் பதுங்கினார்
அதே நேரம் மணியம்மையுடன் ராம்சாமி இரண்டாம் திருமணம் , ராம்சாமியுடன் மனகசப்பு என காட்சிகள் வந்ததால் டிராக் மாற்றினார் அண்ணா
வாரியார் சுவாமிகள் தன் இயல்பில் அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார், அவ்வப்போது திமுக வாரியார் மோதல் நடந்து கொண்டே இருந்தது
வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்காமல் தன் அடிபொடிகள் மூலம் எழுதி தாக்கி கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக மு. கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார்.
1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார் , அப்பொழுது வாரியார் சுவாமிகள் நெய்வேலி பக்கம் ஆன்மீக கூட்டங்களில் பேசினார் அப்பொழுது "கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது, மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது" என்றுதான் பொதுவாக சொன்னார்
ஆனால் அவர் அண்ணாதுரையினை சொல்லிவிட்டார் என திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர், மக்கள் கூட்டம் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டது, காயமின்றி வாரியார் தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன*
ஆம், அவர் பூஜை அறையில் புகுந்து உடைத்தார்கள் விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையெல்லொம் உடைத்தார்கள் , ஆனால் அன்று ஊடகம் என்பது செய்திதாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கபட்டது.
அதை செய்தது திமுக அரசு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல*
வாரியார் தாக்கபடும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்து கொண்டிருந்த பெயர் திராவிட பகுத்தறிவு
விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தது, வாரியாருக்கு இருந்த மிகபெரும் நற்பெயரை தமிழகம் கண்டது, மக்கள் அபிமான கிருபானந்தர் திமுகவினரால் தாக்கபட்டது மிகபெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திற்று
ராஜாஜி மனம் வருந்தி எழுதினார், தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர்
முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரி அனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள்
ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.
நிலமை எல்லை மீறி சென்றதை அவதானித்த கருணாநிதி அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கியிருந்த mgr சரியாக பழிவாங்கினார்
ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்
ஆனால் அதுதான் அவரின் வாழ்வில் மிகபெரும் தவறு, கடைசிவரை அவர் தலையில் அடித்து அடித்து அழுத தவறு,
தெய்வத்தின் தண்டனை அப்படி சரியாக இருந்தது.
வாரியாரை நேரில் சந்தித்து உண்மையினை விளக்கினார் mgr, வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக* தலைவர் அவர்தான், அப்பொழுதுதான் அவரை வாழ்த்தி அனுப்பினார் வாரியார்
அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் mgr, அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது
வாரியாரால் mgr ஆசீர்வதிக்கபடும் காட்சியே mgrக்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது
"பொன்மன செம்மல்" என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே ராமசந்திரனுக்கு அடையாளமாகி, மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது
சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு ரmgr மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது, அத்தோடு போலி நாத்திக அடையாளம் இங்கு ஒழிய ஆரம்பித்தது
அதன் பின்பே அம்மா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார், இன்று முதல்வர் பழனிச்சாமி அனுதினமும் தான் ஒரு இந்து என்பதை பகிரங்கமாக சொல்கின்றார்
வாரியாருடன் மோதியதில்தான் திமுகவின் அழிவு தொடங்கிற்று, முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த அரக்க கூட்டத்தை சரித்து போட்டார்
ஆம் வாரியார் மேலான தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை, முருகபெருமானின் அடி அப்படி இருந்தது
வரலாற்றின் மிக பெரிய சான்று இது, ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் கோவில் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட பெரும் வரலாறு அது
அந்த தோல்விதான் கந்த சஷ்டி கவசம் வரை திமுகவின் முதுகில் சாத்தி கொண்டிருக்கின்றது, இன்னும் சாத்தும்
இப்பொழுது முருகனுடன் பிள்ளையாரும் சேர்ந்து திமுகவினை சாத்த தொடங்கியிருக்கின்றார்
(இன்றுவரை வாரியார் தாக்கபட்டதற்கு திமுக தரப்பில் விளக்கமுமில்லை, மன்னிப்பு கோரவுமில்லை )........
orodizli
29th August 2020, 07:09 AM
திருமிகு .
*கிருபாணந்த*
*வாரியார்*
ஏற்பாட்டில்*
கட்டப்பட்டுவந்த *முருகன் கோவில் ஒன்றின்* *திருப்பணிக்காக*
*புரட்சித் தலைவர்*
*எம். ஜீ. ஆரை சந்தித்து*
*நன்கொடை கேட்க* *வந்தார் வாரியார்.*
*புரட்சித் தலைவர், உடனே "பிளாங்க் செக்" ஒன்றினை வாரியாரிடம் கொடுத்தார்.*
பிளாங்க் செக்கை பார்த்த வாரியார்
*தொகை எதுவும் எழுதாமல் தருகிறாரே ?*
என *வியப்புடன்*
*எம். ஜீ. ஆர் முகத்தை பார்த்தார்!*
அப்போது வாரியாரிடம்
எம்ஜிஆர்,
*நான் எவ்வளவு தொகை என எழுதாமல் பிளாங்க் செக் தந்தது ஏன் என நினைக்கிறீர்களா ?*
*என்னை தேடி உதவி கேட்டுவந்த, நீங்கள்*
*மக்களுக்கு நல்ல ஒழுக்கமான விசயங்களை சொல்லி வரும் உண்மையான ஆன்மீக வாதி*
*என்பது எனக்கு தெரியும்.*
*நீங்கள் என்னிடம் உதவி கேட்டு வந்த பின் ,வேறு யாரிடமும் சென்று சிரமப்பட கூடாது.*
*"நீங்கள் கட்டும் ஆலயத்துக்கு*
*உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ"*
*அவ்வளவு தொகையையும் எனது வங்கி கணக்கில் இருந்து தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்*
*அதற்காக தான் பிளாங்க் செக் தருகிறேன்*
*மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்லி கொடுத்து அவர்களை நல்லவர்களாக மாற்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்*.
என கூறியதை கேட்டதும் வாரியார் ஆச்சரியமடைந்து நன்றி கூறினார்.
*(வாரியார் பேரன்* *சொன்ன தகவல்*)
------------
*சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் வாரியார்*
, காரணம்
*அவர் மதவாதியல்ல*
*உண்மையான*
*ஆன்மீக வாதியாக வாழ்ந்து மறைந்தவர்*
mgr tv ஹமீது.........
orodizli
29th August 2020, 10:59 AM
"கண்ணன் என் காதலன்" 1968 ஏப் மாதம் 25 ம் தேதி வெளியான சத்யா மூவிஸாரின் மூன்றாவது படம்.
முதல் படம் "தெய்வத்தாய்" இரண்டாவது படம் "நான் ஆணையிட்டால்". இரண்டு நாயகிகளில் ஒருவர் ஜெயலலிதா மற்றவர் வாணிஸ்ரீ. எற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட்டான "குடியிருந்த கோயில்" வெளியாகி 40 நாளிலே வெளியான படம்.
நாங்கெல்லாம் "குடியிருந்த கோயில்" பார்த்த வியப்பே இன்னும் அடங்காமல் இருக்கும் போது "கண்ணன் என் காதலன்" உடனடி வரவை அவ்வளவாக விரும்பவில்லை. அது "குடியிருந்த கோயிலி"ன் வெற்றியை பாதிக்கும் என்று நினைத்து ஒதுங்கி இருந்தோம். "குடியிருந்த கோயில்" ஓடாமலிருந்தால் "கண்ணன் என் காதலன்" ஒரு சில ஊர்களில் 100
நாட்கள் ஓடியிருக்கும்.
இருப்பினும் தமிழகத்திலேயே அதிகமாக மதுரை சிந்தாமணியில் 93 நாட்கள் ஓடி ரூ 2,07,112.60. வசூலாகி கணேசனின் பல 100 நாட்கள் படங்களை துவம்சம் பண்ணியிருந்தது. கர்ணன், ராமன் எத்தனை ராமனடி, என் மகன்,மோட்டார் சுந்தரம் பிள்ளை இன்னும் நிறைய சிவாஜி படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
சிங்கம் குட்டியாக இருந்தாலும்
சிங்கம் சிங்கம்தானே.
அடுத்து ஜீலை 27 ல் வெளியான "தில்லானா மோகனாம்பாளு"க்காக படத்தை எடுத்து விட்டார்கள். "தில்லானா" ஒரு வாரம் லேட்டாக வந்திருந்தால் நிச்சயம் "கண்ணன் என் காதலன்" 100 நாட்கள் ஓடியிருக்கும்.
மேலும் 60 நாட்களிலே அடுத்த படமான "புதியபூமி" ஜீன் 27 ல் வெளியானதால் அதுவும் படத்தின் நீடித்த ஓட்டத்தை தடை செய்தது.
தூத்துக்குடியில் "குடியிருந்த கோயில்" ஓடிய அதே பாலகிருஷ்ணா தியேட்டரில்தான் வெளியாகியது கண்ணன் என் காதலன். அதனால் ரிலீஸ்
தேதிக்கு வெளியாகவில்லை..
"குடியிருந்த கோயில்" 70 நாட்கள் ஓடிய பிறகு "பணமா பாசமா" வை திரையிட்டார்கள்.
அதுவும் 71 நாட்கள் ஓடிய பிறகுதான்
அதே திரையரங்கில் "கண்ணன் என் காதலன்" வெளியானது. தலைவரின் அடுத்த. படமான புதியபூமி. ஜீன்27ல்.
வெளியாகி காரனேஷனில் ஓடிக்கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு மேல் லேட் ரிலீஸ். ரசிகர்கள் நெல்லையில் சென்று பார்த்ததால் படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைந்து காணப்பட்டது. திருநெல்வேலியில் ஏப் 13 ல் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த "கலாட்டா கல்யாண"த்தை 13 நாளில் தூக்கி விட்டு "கண்ணன் என் காதலனை" திரையிட்டார்கள். சென்னையில் ஸ்டார் பிரபாத் மேகலா நூர்ஜஹானில் வெளியாகி அதிக பட்சமாக 56 நாட்கள் ஓடி (மொத்தம் 224 நாட்கள்) நல்ல வசூலுடன் திரை மாற்றம் செய்யப் பட்டது. மொத்தத்தில் "கண்ணன் என் காதலன்" சத்யா மூவிஸுக்கு முதல் ரவுண்டிலேயே லாபத்தை கொடுத்த
தொடர் வெற்றிப்படமாக அமைந்தது.
நெல்லையில் அதன்பின் "கலாட்டா கல்யாண"த்தை தொடர்ச்சியாக ஷிப்டு பண்ண முடியாமல் "குடியிருந்த கோயில்" பார்வதியில் ஓடி முடித்தபின் மீண்டும் திரையிட்டார்கள் என்றாலும் "கலாட்டா கல்யாணம்" ஓடிய கணக்கு நெல்லையில் 13 நாட்கள்தான். 1968 தலைவருக்கு ஒரு திரைத்திருவிழாதான்.
அந்த ஆண்டு முழுவதுமே தலைவர் படம் ஏதாவது ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டேயிருந்தது ரசிகர்களுக்கு ஒரு இன்பத்திருவிழா
என்றே சொல்லலாம். மீண்டும் கிடைக்குமா அது போல் ஒரு வசந்த காலம். ஆனால் கணேசனுக்கு சக நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பால் ஓடிய தில்லானாவை தவிர மீதி எல்லா படங்களுமே அவரது ரசிகர்களுக்கு கசந்த காலம்தான்..........
orodizli
29th August 2020, 10:59 AM
எம்.ஜி.ஆர்., போல மனிதாபிமானி யாருமில்லை!
எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி கணேசன் பற்றி, அவர்களுடன் சின்னக் குழந்தையாக நடித்துள்ள, குட்டி பத்மினி:
எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி கூட, நிறைய படங்களில் நடித்துள்ளேன். எம்.ஜி.ஆர்., நடிக்கும் படத்தின் ஷூட்டிங் என்றால், யாருக்கும் வயிறு காயவே செய்யாது. தடபுடல் விருந்து தான் நடக்கும்.
அவர் நடிக்கும் படத்தின் இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் போது, லைட் பாய் முதல், படத்தின் துணை இயக்குனர் வரை, அனைவருக்கும் சம்பளம் சென்றடைந்து விட்டதா என, அவருக்கு நெருக்கமான நபரிடம், கண் பார்வையில், கண்ணை அசைத்து கேட்பார்.
இல்லை, கொஞ்ச பேருக்கு பாக்கி இருக்கிறது என தெரிய வந்தால், கிளைமாக்ஸ் காட்சியை நடித்து கொடுக்காமலேயே, காரில் ஏறி கிளம்பி போய் விடுவார். உடனே, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு புரிந்து விடும். 'யாரோ நம்மை போட்டுக் கொடுத்து விட்டனர்' என்பதை அறிந்து, சம்பள பாக்கியை செட்டில் செய்வார். அதை அறிந்ததும், மீண்டும் படப்பிடிப்பில், எம்.ஜி.ஆர்., கலந்து கொள்வார்.
அவர் ஷூட்டிங்கில் பங்கேற்கும் போது, பை நிறைய பணத்துடன் அவரின் அசிஸ்டென்ட், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருப்பார். அங்கே இருக்கும் ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன் என, யாருக்காவது பணக்கஷ்டம் என்றால், அசிஸ்டென்ட் இடம் வாங்கி கொடுப்பார்.அந்த அளவுக்கு மனிதநேயம் மிக்க ஒருவரை, நான் இதுவரை பார்த்ததே இல்லை.
'பங்சுவாலிட்டி' எனப்படும் நேரம் தவறாமைக்கு, சிவாஜி கணேசன் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு, நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவர். 7:00 மணிக்கு ஷூட்டிங் என்றால், 6:00 மணிக்கே, ஸ்பாட்டிற்குள் நுழைந்து விடுவார். படத்தின் காட்சிக்கு ஏற்ப, மேக்கப் போட்டு, 7:00 மணிக்கு தயாராக இருப்பார்.
படப்பிடிப்புக்கு இடையே ஓய்வு நேரத்தில், என் அருகே வந்து உட்கார்ந்து கொள்வார். பக்கத்து செட்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் - நடிகையர் பற்றி ஆர்வமாக கேட்பார். யார் யாருடன் சண்டை போட்டனர்; என்ன கிசுகிசு என்பதை கிண்டலாக கேட்பார். நானும், சின்னப் பிள்ளையாக இருந்ததால், அந்த ஹீரோயின், அந்த ஹீரோவிடம் இப்படி சண்டை போட்டார்; அதற்கு அவர் இப்படி பதிலளித்தார் என, நடந்ததை நடந்தபடி அப்படியே சொல்வேன்.
நான் சொன்ன நடிகர் - நடிகையருடன் இணைந்து அவர் நடிக்கும் காட்சிகள் வரும் போது, அந்த கிசுகிசு விஷயங்களை சொல்லி, அவர்களை கிண்டல் செய்வார்; செட்டே கலகலப்பாக இருக்கும்!✌✌.........
orodizli
30th August 2020, 07:59 AM
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வுகளில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை அவர் ஒருவருக்கே கிடைத்துள்ளது .
1988 முதல் 2019 எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த பெருமைகள் - சாதனைகளின் சிகரம் .
1988ல் மத்திய அரசின் ''பாரத ரத்னா '' விருது .
மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம்.
மெரினாவில் எம்ஜிஆர் அருங்காட்சியகம் .
மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தூண்.
அண்ணா சாலையில் எம்ஜிஆர் சிலை
எம்ஜிஆர் நினைவு இல்லம் .
ராமாவரம் எம்ஜிஆர் தோட்டம் . சென்னையில் எம்ஜிஆர் ஆலயம்.
சென்னை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷன் .
சென்னை - கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் .
சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டி .
சென்னை - எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம் .
சென்னை - மாதவரம் எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகம் .
சென்னை போரூர்- பூந்தமல்லி எம்ஜிஆர் சாலை .
எம்ஜிஆர் ஸ்டாம்ப் வெளியீடு .
எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
1989ல் ஒன்று பட்ட அதிமுக - இடைத்தேர்தலில் வெற்றி.
1989ல் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி .
1991ல் அதிமுக ஆட்சி .
2001ல் அதிமுக ஆட்சி.
2011ல் அதிமுக ஆட்சி .
2016ல் அதிமுக ஆட்சி .
2019ல் அதிமுக ஆட்சி தக்க வைத்தது .
2000ல் ராஜ் டிவி நடத்திய 2000ல் ஒருவன் - எம்ஜிஆர் நிகழ்ச்சி .
2016ல் விஜய் டிவி நடத்திய மன்னாதி மன்னன் எம்ஜிஆர் நிகழ்சி .
பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை .
எம்ஜிஆர் புகழ் பாடும் இதயக்கனி மாத இதழ்.
எம்ஜிஆர் புகழ் பாடும் எம்ஜிஆர் தொடர் விழாக்கள் .
ஆல்பர்ட் அரங்கில் நடந்த நாடோடிமன்னன் விழாவில் பங்கு பெற்ற முன்னணி அந்த கால நடிகர்கள் - நடிகைகள் .
கலைஞர் டிவி நடத்திய மறக்க முடியுமா ? எம்ஜிஆர் சிறப்பு ஒளி பரப்பு .
டிஜிட்டல் - ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் வெள்ளிவிழா .
டிஜிட்டல் - அடிமைப்பெண் 300 அரங்கில் வெற்றி பவனி .
டிஜிட்டல் - ரிக் ஷாக்காரன் .
டிஜிட்டல் - நினைத்ததை முடிப்பவன் .
டிஜிட்டல் - எங்கவீட்டுப்பிள்ளை . டிஜிட்டல் ரகசிய போலீஸ் 115,
எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் முதலிடம் - கோவை .
2வது இடம் - மதுரை . 3வது இடம் - சென்னை .
எம்ஜிஆரின் 73 பழைய படங்கள் மறு வெளியீடுகளில் வெற்றி பவனி தொடர்கிறது.
புதிய தமிழ் படஙக்ளில் எம்ஜிஆர் பாடல்கள் - எம்ஜிஆர் காட்சிகள் இடம் பெற்றது .
திரை உலக பிரமுகர்கள் எம்ஜிஆரை நினைவு கூர்ந்து வருகிறார்கள் .
ஜெயா டிவியில் தினமும் எம்ஜிஆர் பாடல்கள் 1 மணி நேரம் ஒளிபரப்புகிறார்கள் .
உலகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது .
திராவிடர் கழகம் - எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது .
மதிமுக வைகோ - காமராஜர் அரங்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார் .
வேலூர் வி ஐ டி கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
எம்ஜிஆர் உலக பேரவை மாநாடு வேல்ஸ் வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
எம்ஜிஆர் சிலையை ஏ.சி. சண்முகம் நடிகர் ரஜினி வைத்து எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகத்தில் திறந்தார் .
பி ஆர் ஓ -பொன்விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்ஜிஆரை பாராட்டிய நடிகர்கள் - நடிகைகள் .
டிஜிட்டலில் வெளிவர தயாராக உள்ள எம்ஜிஆர் படங்கள் அன்பே வா , அலிபாபாவும் 40 திருடர்களும் , மாட்டுக்கார வேலன் . குறிப்பாக காவல்காரன் படம் வண்ணத்தில் உருவாக உள்ளது .
டாக்டர் பெரியசாமி - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
டாக்டர் ஹண்டே - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
இந்து பத்திரிகை வெளியிட்ட காலத்தை வென்ற எம்ஜிஆர் புத்தகம் . 25000 புத்தகங்கள் விற்று சாதனை .
பம்மல் சாமிநாதன் வெளியிட்ட எம்ஜிஆர் பட ஆல்பம் .
சத்யா வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் ,
31 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள் .
பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமயில் நடிகை சௌகார் ஜானகி ஜானகி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
பெங்களூரில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
சமூக வலை தளங்களில் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் முதலிடம் வகிக்கிறது .
வல்லமை - இனணய தளத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டுரை போட்டி - மிகவும் அருமை .
எம்ஜிஆர் - remembered தொடர் கட்டுரை 7 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது .
தமிழகத்தில் எல்லா ஊடகங்களும் ,பத்திரிகைகளும் எம்ஜிஆர் -100 சிறப்பித்தார்கள் .
அமெரிக்கா , இங்கிலாந்து , சவூதி ,மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை போன்ற நாடுகளில் எம்ஜிஆர் -100 கொண்டாட்டம் .
மய்யம் இணைய தளத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தலைப்பில் விரைவில் ஒரு லட்சம் பதிவுகளை கடக்க போகிறது .
எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலை முறைகள் கடந்து புதிய தலை முறை எம்ஜிஆர் ரசிகர்களளோடு இணைந்து எம்ஜிஆரை நேசித்து கொண்டாடி வருகிறார்கள் .
டிஜிட்டல் -எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரையிட தயார் நிலையில் உள்ளது.
சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் பெயர் சுழன்று கொண்டு வருகிறது .
எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை ஒட்டு வங்கி நிலைத்து விட்டது .
எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 2022ல் பொன்விழாவை நிறைவு செய்கிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அன்றும் வெற்றி . இன்றும் வெற்றி . என்றென்றும் வெற்றி.........
orodizli
30th August 2020, 08:03 AM
மக்கள் திலகத்தின்
திரைப்பட வரலாற்றில்....
சில முக்கிய தகவல்கள்..........
115 திரைப்படங்களில் தனிப்பெரும் கதாநாயகனாக நடித்து.....
அக்காவியங்களில்
அதிக திரைப்படங்கள்
அதிக அரங்குகளில் 100 நாட்களை கடந்தவைகளில்
மக்கள் திலகம் முன்ணனி ஆவார்....
தமிழ்நாடு... பெங்களுர்..
இலங்கை.... உட்பட
மதுரை வீரன்
35 அரங்கு 100 நாள்
உ. சுற்றும் வாலிபன்
25 அரங்கு 100 நாள்
எங்க வீட்டுப்பிள்ளை
17 அரங்கு 100 நாள்
அடிமைப்பெண்
16 அரங்கு 100 நாள்
நாடோடி மன்னன்
15 அரங்கு 100 நாள்
மாட்டுக்கார வேலன்
14 அரங்கு 100 நாள்.
ரிக்க்ஷாக்காரன்
12 அரங்கு 100 நாள்
உரிமைக்குரல்
12 அரங்கு 100 நாள்
இதயக்கனி
12 அரங்கு 100 நாள்
குடியிருந்த கோயில்
10 அரங்கு 100 நாள்.
10 திரைப்படங்கள் மட்டும்
தமிழகத்தில் ....
கர்நாடகத்தில்....
இலங்கையில்.....
100 நாளை கடந்த திரையரங்குகள்...
158 திரையரங்குகளில்
100 நாட்கள்....
(நாடோடி மன்னன்
இலங்கை எத்தனை அரங்கு 100 நாள் என்பது சரியான தகவல்கள் வரவில்லை)
சி.கணேசனின் படங்கள்
திருவிளையாடல்
13 அரங்கு 100 நாள்
தங்கப்பதக்கம்
14 அரங்கு 100 நாள்
வ.மாளிகை
13 அரங்கு 100 நாள்
பா.மன்னிப்பு
12 அரங்கு 100 நாள்
4 படங்கள் மட்டும்
தமிழகம்..
இலங்கை....
மொத்தம் அரங்குகள்
100 நாள்.... 52 மட்டுமே...
அடுத்தது 75 நாள் .....
orodizli
30th August 2020, 08:05 AM
அரிதிலும் அரிதான புகைப்படத்தின் வரலாறு வடபழனியில் இருந்த, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில், முன்பு சவுண்டு இன்ஜினியராக பணியாற்றியவர் ரவிசங்கர். கேரள மாநிலம், எர்ணாகுளம், திருப்பூணித்தரா, என்ற ஊரில் பிறந்தவர். ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பணியாற்றியபோது, இவருக்கு கிடைத்த கறுப்பு - வெள்ளை பிலிம் சுருள் ஒன்று, கடந்த, 40 ஆண்டுகளாக இவரிடம் பத்திரமாக இருந்தது. அதில், பதிவாகி இருப்பது ஒரு பிரபலமான மனிதரின் படங்கள் என்று அறியாமலேயே அதை பாதுகாத்து வந்துள்ளார்.
இந்த பிலிம் சுருளில், இதுவரை யாரும் பார்க்காத அரிய புகைப்படம் பதிவாகி இருக்கிறது என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பின், அதை, 'டெவலப்' செய்த போது, அதிலிருந்த புகைப்படத்தை பார்த்து அவர் உணர்ச்சிவசப்பட்டார். அப்புகைப் படத்தில் இருந்தவர், எம்.ஜி.ஆர். பிப்., 17, 1970ல், ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் அந்த கறுப்பு - வெள்ளை பிலிமில் இருந்தது. எம்.ஜி.ஆர்., நடித்து, ஜனாதிபதி விருது பெற்ற, ரிக் ஷாக்காரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, இடைவேளையில் படப்பிடிப்பு குழுவினர் எல்லாரும் ஓய்வில் இருந்தனர். படத்தில் எம்.ஜி.ஆர்., ஓட்ட வேண்டிய ரிக் ஷா, அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. ரிக் ஷா ஓட்டத்தெரியாத எம்.ஜி.ஆர. ஓட்டி பழகினால் தேவலை என்று தோன்றியதால் ரிக் ஷாவில் ஏறி, ஓட்டத் துவங்கினார். ஸ்டுடியோ வளாகத்தில் அவர் சைக்கிள் ரிக் ஷா ஓட்டுவதை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்தனர். சிறிது நேரம் ரிக் ஷா ஓட்டியவர், யாரையாவது உட்கார வைத்து ரிக் ஷா ஓட்டினால், படத்தில், இயல்பாக அமையுமே என்று நினைத்தவர், படப்பிடிப்பு குழுவினரை பார்த்து, யாராவது இருவர் ரிக் ஷாவில் வந்து அமரும்படி கூறினார். பல முறை அழைத்தும், யாரும் ரிக் ஷாவில் உட்கார தயாராக இல்லை. மதிப்பிற்குரிய, வாத்தியார் ரிக் ஷா ஓட்டும்போது, நாங்கள் எப்படி உட்காருவது என்ற கூச்சத்தால், ஒதுங்கி நிற்பதை கண்டு எம்.ஜி.ஆர்., நொந்து போனார். பரிதாபமாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் நாயரை பார்த்தார்; அவர் உடனே தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை பார்த்திருக்கிறார். உடனே, இருவரும் ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்தனர். குஷியான எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டே, ரிக் ஷா ஓட்டத் துவங்கினார். அங்கிருந்த பிரபல புகைப்பட கலைஞர் நாகராஜ் ராவ், இந்த காட்சியை, தன் கேமராவில் பதிவு செய்தார். எம்.ஜி.ஆர்., நடித்த, 132 படங்களின் காட்சிகளை புகைப்படமாக எடுத்தவர் இவர். நாகராஜ் ராவ், ரவிசங்கரின் தாய் மாமனின் நண்பர்.
கடந்த, 1965ல், 12 வயது ரவிசங்கர், சென்னையில் உள்ள மாமன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் நாகராஜ் ராவ் வீட்டில் தான் தங்கியிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்து, ஐ.டி.ஐ., படித்து, சான்றிதழ் காட்டி, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் சவுண்டு இன்ஜினியராக சேர்ந்தார். அங்கே, 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
இதற்கிடையில், புகைப்படக்காரர் நாகராஜ் ராவ், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட பிலிம் சுருளை, ரவிசங்கரிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். அந்த பிலிம் சுருளை வீட்டில் வைத்தவர், அத்துடன் அதைப்பற்றி மறந்து போனார் ரவிசங்கர். நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டன.
பாலகாட்டில் எம்.ஜி.ஆர்., குடும்பத்துக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீடு, நினைவுச் சின்னமாக ஆக்கப்பட்டது. அங்கே வைப்பதற்காக, எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் தேவைப்பட்டன. இதுபற்றி ரவிசங்கரிடம் கேட்டு இருக்கின்றனர். அப்போது தான் அவருக்கு, அந்த பிலிம் சுருள் பற்றிய ஞாபகம் வந்தது. அவர், அவசர அவசரமாக, அந்த, பிலிம் சுருளை தேடி கண்டுபிடித்திருக்கிறார். அதை, 'டெவலப்' செய்தபோது, அதில் இருந்த காட்சிகள், அவரை வியக்க வைத்தன. இயக்குனர் கிருஷ்ணன் நாயரையும், ஆர்.எம்.வீரப்பனையும் உட்கார வைத்து, ரிக் ஷா ஓட்டும் புகைப்படம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக இருந்தது. அந்த புகைப்படத்தை, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில் வைக்க, சந்தோஷமாக கொடுத்துள்ளார், ரவிசங்கர்..........
orodizli
30th August 2020, 11:56 AM
நம்நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் நாட்டு மக்களின் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஊர்ப்பெரியவர்கள்,தனவந்தர்கள்,
ஜமீன்தார்கள் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது.
கிராமங்களில் இவர்கள்
வைத்ததுதான் சட்டம். புரட்சி நடிகரும்
அந்த காலக்கட்டத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை கோட்பாடுகளில் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் எப்போதும் கதர்சட்டை அணிந்த படிதான் காட்சியளிப்பார்.
அறிஞர் அண்ணா தி.க.விலிருந்து பிரிந்து திமுகவை 1949 செப் 19 ல் தொடங்கும் போது அண்ணாவுடன்
சம்பத், மதியழகன், நெடுஞ்செழியன், n v நடராஜன் போன்றோர்கள் இருந்த போதிலும்
புரட்சி நடிகரும்,கட்சியின் நீண்டகாலமாக தலைவராக இருந்தவரும் திமுக வில் இல்லை.
கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்தவர், பெரியாரோடு தங்கி விட்டாலும் சமயம் பார்த்து யார் வளர்கிறார்கள் என்று பார்த்து 1952
வாக்கில் திமுகவில் நுழைந்து தனது அடித்தொண்டை பேச்சு மூலமாகவும்
கூழாங்கற்கள் வசனம் மூலமாகவும் கட்சியில் தன்னை ஒரு பெரிய ஆள் போல காண்பிக்க துவங்கினார்.
அதன்பிறகு அண்ணாவின் கொள்கை அவரது மேடைப்பேச்சு மூலமாக எம்ஜிஆர் திமுகவில் 1954 ல். தன்னை இணைத்துக்
கொண்டார்.
அண்ணாவின் மூலமாக
நடிப்பு வாய்ப்பை பெற்ற கணேசன்
பஞ்சப் பராரிகளாக இருந்த திமுகவிடம் இருந்து தன்னையும் தன் பணத்தையும் காத்துக்கொள்ள திருப்பதி சென்று திருப்பதி கணேசா என்ற அடைமொழியுடன் முதல் படத்தில் வாய்ப்புக்காக தெய்வத்தை பழித்து "அது பேசாது கல்" என்று வசனம் பேசி விட்டு பின்னர் காங்கிரஸில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதனால் காங்கிரஸின் உதவியுடன் "கெய்ரோ படவிழா" மற்றும்இந்திய அமெரிக்க "நல்லெண்ண தூதரா"க அமெரிக்க பயணத்திற்கும் அவருக்கு
பாதை வகுக்கப்பட்டது.
ஆனால் சிவாஜியோ அது தனது திறமைக்கு கிடைத்த பரிசாக பறைசாற்றிக் கொண்டு கர்வத்தோடு நடந்து கொண்டது விஷயம் தெரிந்தவர்களுக்கு முக சுழிப்பை தந்தாலும் அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
ஒரு கட்டத்தில் சிவாஜியால் எந்த அரசியல் லாபமும் இல்லை என்று புரிந்து கொண்ட காங்கிரஸ் சிவாஜியை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கியது.
சிவாஜியும் ஏதோ தன்னால்தான் காங்கிரஸ் வளர்ந்தது என்று நினைத்துக்கொண்டு தான் தனிக்கட்சி தொடங்கி தான் ஒரு டம்மி பீஸ் என்பதை அவரே உணர்ந்து கொண்டார்.
உலகத்திலேயே தன்னுடைய நடிப்புதான் சிறந்தது என்ற அடிப்பொடிகளின் பேச்சை கேட்டு ஏமாந்ததோடு தனக்கு ஒரு அவார்டும் கிடைக்கவில்லையே என மனம் நொந்து அரசியல் சினிமா இரண்டிலிருந்தும் துறவறம் பூண்ட கதை நாம் அறிந்ததுதான்.
திருப்பதி சென்றவுடன் திமுகவின் வெறுப்புக்கு ஆளான புதுப்பணக்காரரான கணேசனை காங்கிரஸும் இரு கரம் நீட்டி வரவேற்றது. அந்த காலக்கட்டத்தில் யாராவது திமுகவில் இருந்தால் அவர்களை கறுப்பு சட்டைக்காரன் என்றுதான் அழைப்பார்கள். அவர்களை சமூக விரோதி போல் தள்ளியே வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் ,
தொழிலாளர்கள், உழைப்பாளிகள்,
விவசாயி,ரிக்ஷாக்காரன்,பரிசல்காரன், மீனவர்கள் இப்படி பல வேடங்களில் ஏழைப்பங்காளனாக நடித்து அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றினார்.
ஆனால் சிவாஜி மிட்டா, மிராசு தனவந்தர், பண்ணையார் போன்ற வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை மிகை நடிப்பின் மூலம் காட்டிக் கொண்டிருந்தார். எம்ஜிஆருடைய அநேக படங்களில்
முதலாளிகளையும் மிட்டா மிராசுகளையும் எதிர்த்து ஏழை மக்களுக்கு ஆதரவாக அவர்கள் முகத்திரையை கிழிப்பது போல் காட்சியமைப்பை வைத்திருப்பார்.
அவர்கள் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் ஊர் மக்களுக்கு
எடுத்துரைத்து முடிவில் அவர்கள் திருந்துவதாக அல்லது சட்டத்தின் பிடியில் ஒப்படைப்பது போல காட்சியை அமைத்து ஏழை மக்களுக்கு பண முதலைகளிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார்.
அதனால் பணக்காரர்களின்(காங்கிரஸ்காரர்கள்) அராஜகத்தையும்
அகம்பாவத்தையும்
கொஞ்சம் கொஞ்சமாக மக்கனிடம் எடுத்துக் கூறினார்.
இதனால் கிராமங்களில் ஆலமரமாக இருந்த காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக சிதறியதுடன் ஏழை மக்களின் கட்சியாக திமுக
உருமாற துவங்கியது. இப்படிப்பட்ட கதையமைப்பு உள்ள படங்களாக
(நல்லவன் வாழ்வான் பெரிய இடத்துப் பெண் நம்நாடு உரிமைக்குரல்) போன்ற படங்களில் நடித்து திமுக வை
வளர்க்க பெரு முயற்சி எடுத்ததால்
பெரும் பணக்காரர்கள், தியேட்டர் ஓனர்கள், மில் ஓனர்கள் இதுபோன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.
மலைபோல் இருந்த காங்கிரசை தனது திரைப்படம் என்ற சிறு உளியால் சிறுக சிறுக உடைத்து கற்குவியலாக மாற்றி அதன்மேல் திராவிட கொடியை ஏற்றி திமுகவை ஆட்சிபீடம் ஏற வைத்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு. அதனால் கோபமுற்ற காங்கிரஸ் தனவந்தர்கள் எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல தியேட்டர் கிடைக்காமலும் அப்படி கிடைத்த தியேட்டரில். எம்ஜிஆர் படங்களை 50 அல்லது 100 நாட்கள் ஓட விடாமலும் பார்த்து கொண்டனர்.
அவர்கள் பெரும்பாலும் சிவாஜி ரசிகர்களாக இருந்து சிவாஜியின் மிகை நடிப்பை புகழ்ந்தும் எம்ஜிஆரின் நடிப்பை இகழ்ந்ததுடன் நில்லாமல் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு "விசிலடிச்சான் குஞ்சுகள்" என்ற பட்டத்தையும் கொடுத்து கிண்டல் செய்து வந்தனர். இவர்களோடு சேர்ந்து பத்திரிகை முதலாளிகளும் எம்ஜிஆருக்கு எதிராக பனிப்போர் தொடங்கி எம்ஜிஆர் செய்திகளை இருட்டடிப்பு செய்தனர்.
பத்திரிகை காரர்கள் ஆங்கில படங்களையும், சிறந்த அவார்டு படங்களையும், வங்கப் படங்களையும் பார்ப்பவர்கள். இயற்கையான நடிப்பை அறிவார்கள். ஆனாலும் எம்ஜிஆரின்
நடிப்பை சிறுமைப்படுத்துவதாக எண்ணி சிவாஜியின் மிகை நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து அவரை மிகை நடிப்புக்கே அடிமை ஆக்கி விட்டார்கள்.
எம்ஜிஆர் ஒரு படத்தில் சொல்லுவார். என்னை அதிகமாக புகழ வேண்டாம், புகழ்ச்சியைப் போல ஒரு மனிதனுக்கு வேறு எதிரி எதுவும் கிடையாது என்பார். அது எவ்வளவு உண்மை என்று சிவாஜியின் வாழ்க்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சிவாஜி அவர்களோடு சேர்ந்து கொண்டு பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஏழை எளியவர்களின் ஆதரவை முற்றிலுமாக சிவாஜி இழக்க நேரிட்டது.
ஆனால் அவருடைய படங்கள் பார்வையாளர்கள் குறைந்த நிலையிலும் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓட்டி தங்களது(கட்சி) முதலாளித்துவ மனப்பான்மையை வெளிப்படுத்தினார்கள். எம்ஜிஆர் தனது படத்தின் ஓட்டத்தை பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை.
ஆனாலும் மக்களின் பேராதரவோடு ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று படத்தை தூக்கி விட்டு வேறு படத்தை திரையிடுவது திரையரங்க உரிமையாளர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மதுரை சென்ட்ரல்,மற்றும் நியூசினிமாவில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த பல படங்களை 100 நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டு வேறு படங்களை திரையிடுவார்கள்.
அதன்பின்பு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த மாதிரி எம்ஜிஆர் வளர்த்த திமுகவை தான் வளைத்துக் கொண்டு எம்ஜிஆர் படங்களுக்கு மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்த தீயசக்தியை எதிர்த்து போராடி அதிலும் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல தியேட்டர் கிடைக்க விடாமல் பல நெருக்கடி கொடுத்தாலும் நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெற்றார்.
ஆனால் திமுகவை வனர்த்தது தான்தான் என்று நினைத்த "கட்டமரம்" மக்களின் வெறுப்பாற்றில் மிதந்து கரை ஒதுங்கிய காட்சியைத்தான் நாம் பார்த்தோமே!. ஆனாலும் கணேசனுக்கு எப்போதும் சினிமாவில் சிவப்பு கம்பள வரவேற்புதான். என்ன செய்து என்ன பயன்?. புரட்சி(நடிகர்)தலைவரை வெல்ல யாராலும் முடியவில்லை என்பதே உண்மை நிலை..........
orodizli
30th August 2020, 12:13 PM
கலைவாணரின் நினைவு நாள் இன்று...30-08-1957
தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம் வாய்த்திருக்கிறார். இல்லை; தப்பிதம். சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்தது போல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். இது தமிழ்நாட்டின் பாக்கிய-மாகும்” - 1943-ம் ஆண்டிலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா.'கலைவாணர் என்.எஸ்.கே.' என்று தமிழக மக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் 'நாகரீகக் கோமாளி' என்பதாகும்.''நாட்டுக்குச் சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்லஅழகான ஜதையோடு வந்தான் அய்யா!”
என்று தமது சொந்தப் படமான 'நல்ல தம்பி'யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர். ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் 'என் கடன் களிப்பூட்டல்' என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது; முதன்மையானது.கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும்
சில சுவையான நிகழ்ச்சிகள்
சுவை 1: உண்மையில் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், நாகம்மைக்கும் நாகர்கோயிலில் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. ஆனால் டி.ஏ. மதுரத்திடம் தமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி அவரது கரங்களைப் பற்றினார் கலைவாணர். இந்தப் பொய் மிக விரைவிலேயே அம்பலமாகி மதுரம், கலைவாணருடன் சண்டை போட்டார்; “ஏற்கனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கலைவாணரைக் கோபமாகக் கேட்டார். அப்போது கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்:“ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய் என்பார்கள். நான் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற ஒரே ஒரு பொய்யைத்தானே சொன்னேன்?”
சுவை 2: 'மதுரை வீரன்' திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:'அத்தே!' என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரை வீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: “நீ செத்தே!” திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரை மாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையான உரையாடல்: “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?”“வை அண்டான்னானா? குண்டான்னானா? 'வை', 'கை'ன்னு தானே சொன்னான்?”
சுவை 3: 1956-ல் இந்தியப் பேசும் படத்தின் 25-ம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது.“லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்!” என்று கலைவாணர் பேச்சைத் தொடங்கினார்.'கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார்' என்று பலரும் நினைத்தனர்.“அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்” என்று கூறிவிட்டு தமிழில் பேசினார்.
சுவை 4: ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை” எனச் சொன்னார்.“அதற்கு நான்கு 'மை' வேண்டுமே?” என்றார் கல்கி.“என்னென்ன கலர்களில்?” - இது என்.எஸ்.கிருஷ்ணன்.“பேனா மை, திறமை, தனிமை, பொறுமை” எனக் கல்கி சொன்னதும் உடனடியாக, “நீங்கள் சொன்னது மிக அருமை…” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!
சுவை 5: என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சரித்திர நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார். “வங்க ராஜா தங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள் கட்டினார்” என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, “சோழராஜா என்ன கட்டினார்?” என்று கேட்க, வசனம் மறந்த மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் “வேஷ்டி! வேஷ்டி!” என்று சொல்லி விட்டுப் போக, அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.திரைப்பட ஆய்வாளரான அறந்தை நாராயணன் 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' என்ற கலைவாணரைப் பற்றிய நுாலின் முடிவில் எழுதியிருக்கும் வரி இது:“
1936 முதல் 1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்”.அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர் அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை; “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது 29; பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ 49-ம் வயதில் காலமானார். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நகைச்சுவைக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்த கலைவாணரை சிறப்பிக்கும் விதத்தில் அவரது பிறந்த நாளை (நவம்பர் 29) 'நகைச்சுவை நாள்' என்று அறிவிக்கலாமே!
-முனைவர் நிர்மலா மோகன்,
எழுத்தாளர்
இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் .
மதுரை - சிரித்து வாழ வேண்டும்
கோவை -ஆயிரத்தில் ஒருவன்
கோவை -புதுமைபித்தன்
சென்னை -ஆயிரத்தில் ஒருவன் - தர்மம் தலைகாக்கும் .
நல்லவான் வாழ்வான் -31.8.1961
53 ஆண்டுகள் நிறைவு நாள்...
பிறரை கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொள்ளுதலை Vicarious Learning என்கிறோம் உளவியலில். தாயைப் போலவே மகள் பாத்திரம் பிடிப்பதும், அப்பா கோபத்தில் திட்டும் வார்த்தை வெளியில் மகனுக்கு சுலபமாக வருவ தும் இதனால்தான். பிரபு தேவா நடனத்தை பொடிசுகள் டி.வி பெட்டி முன் ஆடுவதும் இதனால்தான்.
வேலையில் பாஸ் உடல் மொழியும் வார்த்தைகளும் இதனால்தான் மிக எளிதாக உள் செல்கிறது. அதனுடன் அவர்களின் நிர்வாக நெறிமுறைகளும் திறன்களும் துணைக்குச் செல்கின்றன.
இதில் முக்கியமானது பேசும் வார்த்தைகளும் பேசாத ஒழுக்கமும் முரண்படுகையில் அங்கு பேசாத ஒழுக்கம்தான் பின்பற்றப்படுகிறது. “எல்லாத்தையும் ப்ராஸஸ் மீறாம செய்யணும்பா” என்று சொல்லிக்கொண்டே “எப்படியாவது இதை இன்னிக்கு முடி!” என்று உணர்த்தினால், அங்கு வழிமுறைகள் மீறப்பட்டு அன்றே அது அவசரமாக நடந்து முடியும்! இப்படித்தான் நாம் அனைவரும் நெறிமுறைகள் கற்கிறோம்.
நெறிமுறையும் நம்பிக்கை போலத்தான். ஆயிரம் வார்த்தைகள் புரிய வைக்காததை ஒரு செயல் புரிய வைக்கும். ஒவ்வொரு மேலாளரும் விழுமியம் கற்றுத் தரும் ஆசான். ஆனால், அது வகுப்பறைகளில் நடைபெறுவதில்லை. அன்றாட அலுவல் பணியில் கற்றுக் கொள்ளப்படுகின்றன!
நாம் காணும் அனைத்து மக்களின் ஒழுக்கமும் நேர்மையும் நம் வாழ்வு சார்ந்த மதிப்பீடுகளை மாற்றுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள் என நாம் பெரிதும் மதிக்கும் நபர்களே தவறுகள் செய்யும் பொழுது அதன் தாக்கம் நமக்குள்ளும் ஏற்படுகிறது.
அதுபோல, ஒரு நிறுவனம் அரசாங் கத்தையோ, வாடிக்கையாளரையோ, தொழிலாளரையோ யாரை மோசம் செய்தாலும் அது பொது மக்கள் பார்வையில் நம்பிக்கை இழக்கிறது. Corporate Fraud என்று கூகுள் செய்து பார்த்தால் இன்றைய தூக்கத்தை நீங்கள் இழப்பது நிச்சயம்!
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல்தான் சர்வ ரோக நிவாரணி போல இந்த கார்ப்பரெட் எதிக்ஸ் பயிற்சியை வைத்துக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியம் என்றால் ஏன் எம்.பி.ஏ வில் முக்கிய பாடமாக இல்லை? பள்ளிகளில் மாரல் சயின்ஸ் பாடத்தையே தவறவிட்ட நிலையில் இதை எதிர்பார்ப்பதே தவறுதான்!
இந்த கேள்விகள் கிளப்பிய சூட்டின் தன்மை உணர்ந்து என் அமர்வின் நெறியாளர் என் மென்னையைப் பிடித்து என்னை திசை திருப்பினார். இந்த புனித பசுவைத் தொடுவதாவது? அதுவும் மாணவர்கள் மத்தியில் எப்படி? அமர்வு முடிந்து நெருப்பு கனன்று கொண்டிருந்தது.
அகத் தூய்மை தலைமைப் பண்பிற்கும் நிறுவன நெறிகளுக்கும் எவ்வளவு முக்கியம் என தேனீர் இடைவெளியில் மாணவர்களிடம் பேசினேன். அப்போது நிறுவன மோசடிகளின் விலை பற்றி ஒரு பேராசிரியர் பிரமாதமாக பட்டியல் போட்டுக் காண்பித்தார். கைகுலுக்கல்களும் ‘கட்டிப்பிடி’ வைத்தியமுமாய் விடைபெற்ற பின்னும் மனம் பேசாத அம்சங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆர் படங்களின் தலைப்பு களை வைத்தே Value Clarification பற்றி கருத்தரங்கம் நடத்தலாம் என்று தோன்றியது. நல்லவன் வாழ்வான். நீதிக்குப்பின் பாசம். திருடாதே. தாய்க் குப்பின் தாரம். நீதிக்கு தலை வணங்கு.
எங்கோ தவறவிட்ட அடிப்படைப் பாடங்களை அவசரமாக அடுத்தத் தலைமுறைக்கு கடத்த வேண்டும். யாரை மிதித்து ஓடினாலும் கடைசியில் பணம் சம்பாதித்து ஜெயிக்கணும் என்கிற அவசர பாடத்தை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். அரசியல்வாதியும் தலைவனும் நம் விழுமியங்களிலிருந்து தோன்றியவர்கள் என்று புரிய வைக்க வேண்டும்.
கெட்ட செய்தி கொடுப்பவர்களுக்கு ஒரு வியாபார நோக்கம் உள்ளது; அதை உதறி விட்டு நல்ல செய்திகளை உருவாக்கலாம் வா என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மை என்பது யாரும் பார்க்காத போது நீ செய்யும் செயலில் இருக்கிறது என்பார்கள். நெறி முறைகளை புகட்ட சிறந்த வழி அதற்கு நாம் முன் மாதிரியாகத் திகழ்வதே. எல்லா காலத்திலும் இருட்டு இருந்திருக்கிறது. எல்லா காலத்திலும் வெளிச்சமும் வந்திருக்கிறது.
சூது கவ்வும் என்று அரை குறையாக சொன்னதற்கு பரிகாரமாய், அதன் பின் தருமம் வெல்லும் என்பதையும் சேர்த்துச் சொல்வோம்
1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,
" உதயசூரியன் உதிக்கும் போது
உள்ளத் தாமரை மலராதோ;
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ "
- என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்
courtesy - thinnai
" நான் ஆணையிட்டால்..."
பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.
தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.
இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.
கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.
----------
' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :
" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;
கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)
எம்ஜிஆரின் அடையாளப் படம் படகோட்டி. (typical mgr film) அதில்
ஒரு காதல் ஜோடிப் பாடல் (தொட்டால் பூ மலரும்)
ஒரு காதல் ஜோடி சேரும் பாடல் (பாட்டுக்குப் பாட்டெடுத்து)
ஒரு காதல் பிரிவுப் பாடல் (என்னை எடுத்து தன்னைக் கொடுத்து)
ஒரு எதார்த்தப் பாடல் (தரைமேல் பிறக்க வைத்தான்)
ஒரு தத்துவப் பாடல் (கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)
ஒரு கவர்ச்சிப் பாடல் (அழகு ஒரு ராகம்) நம்பியார் பார்வையில் நாயகி சரோஜா தேவியே வந்து கிளப் டான்ஸ் ஆடுவார் -அப்றம் எப்டி மீனவப்படத்துல கவர்ச்சி காட்றது?)
ஒரு ஜாலிப் பாடல் (கல்யாணப் பொண்ணு) (எம்ஜிஆர் மாறுவேடம்னா ஒரு மீசை அல்லது ஒரு –ரிகஷாக்காரன் படத்துல வர்ர மாதிரி- பெரிய மரு ஒண்ண எடுத்து மூஞ்சியில ஒட்ட வச்சிக்கிறது அவ்ளோதானே? அவ்ளோதான், அடையாளம் தெரியாதுல்ல?)
ஒரு பூடகப் பாடல் (நானொரு குழந்தை)
என்று வகைக்கு ஒன்றாகப் போட்டுத் தாக்கியிருப்பார் எம்ஜிஆர்.
அனைத்துப் பாடல்களும் வாலியே எழுதியன என்பது குறிப்பிடத்தக்க செய்தி
பின்னர் வந்த பெரும்பாலான படங்களில் அனேகமாக “எம்ஜிஆர்-ஃபார்முலா“பாடல்களை எழுதும் வாய்ப்புகள் வாலிக்கே வழங்கப்பட்டன என்பது திரைப்படத்துடன் கலந்த தமிழகத்தின் அரசியல் வரலாறு.........
fidowag
30th August 2020, 02:07 PM
மலேசியாவின் மக்கள் ஓசை, மற்றும் தமிழ் மலர் நாளிதழில் வெளியான செய்திகள் -29/08/20
----------------------------------------------------------------------------------------------------------------------
பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*ஆயிரத்தில் ஒருவன் படத்தை காண 200 ரசிகர்கள் திரண்டு வந்தனர்*
--------------------------------------------------------------------------------------------------------------
டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நேற்று முன்தினம் பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் அரங்கில் இரவு 8.30 மணி சுதந்திர தின சிறப்பு* காட்சியாக திரையிடப்பட்டது*
லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ, ரெனா , ராமலிங்கம் ,மலேசிய இந்திய விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு , கிள்ளானைச் சேர்ந்த தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ மோகன், மலேசிய எம்.ஜி.ஆர். விஜயசேகர், எம்.ஜி.ஆர். ஹரி, எம்.ஜி.ஆர். சுரேஷ்,,எம்.ஜி.ஆர். தேவா, எம்.ஜி.ஆர். குணா , தொழிலதிபர் ஜெயபாரதி, ஓம்ஸ் ப. தியாகராஜன் , ஆகியோரும் சிறப்புக் காட்சியைக் காண வருகை புரிந்தனர் .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா நடித்து வெற்றிக்கொடி நாட்டிய ஆயிரத்தில் ஒருவன் தற்போது லோட்டஸ் பைவ் ஸ்டார் வெளியீடாக 11 அரங்குகளில் திரையிடப்படுகிறது .* *மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இன்னிசையில் அனைத்து பாடல்களும் இன்னமும் சூப்பர் ஹிட்டாக இருக்கின்றது . என்று ரசிகர்கள் தெரிவித்தனர் .**
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்ட திரைப்படமாக*ஆயிரத்தில் ஒருவன் விளங்கிக்கொண்டிருக்கிறது .என்பது குறிப்பிடத்தக்கது .
fidowag
30th August 2020, 02:08 PM
மக்கள் ஓசை நாளிதழ் -30/08/20
-----------------------------------------------------
மெர்டேக்காவை முன்னிட்டு காஜாங் திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன்*
திரைப்படம் வெளியீடு - எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள் உற்சாகம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மெர்டேக்காவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் எல்.எப்.எஸ்.திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது*
காஜாங் எல்.எப்.எஸ். அரங்கில் எஸ்.ஓ.பி.விதிமுறைகளின் கீழ் லோட்டஸ் பைவ் ஸ்டார் திரையரங்கின் பணியாளர்களின் முறையான ஒத்துழைப்புடன் இத்திரைப்படம் திரையிடப்பட்டது* என இதன் நிர்வாகி விமல் முனியாண்டி தெரிவித்தார் .**
இயக்குனர் பி.ஆர். பந்துலு* இயக்கத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இன்னிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா , நாகேஷ் ,நம்பியார் , மனோகர்* மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . மாபெரும் (claasic*evergreen dijital )திரைப்படத்திற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உற்சாகமான ஆதரவை வழங்கினர்*
fidowag
30th August 2020, 05:45 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*10/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற பெயருக்கு வீரம்,வள்ளல்***கருணை, பண்பு, ,அன்பு ,இரக்கம் ,*மனிதநேயம், மனிதாபிமானம் என்று பலவகைகளில் அர்த்தம் கொள்ளலாம் . எம்.ஜி.ஆர்.அவர்கள் ஒருமுறை பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக சபாநாயகர் மாநாட்டில் பங்குபெற* அப்போதைய சபாநாயகர்**திரு.பி.எச் பாண்டியன் அவர்களை தகுதி, திறமை, ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில்* அனுப்பியுள்ளார் . மாநாட்டில் பங்குற்று வெற்றிகரமாக தாயகம் திரும்பிய திரு.பி.எச்.பாண்டியனை சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தன் சக அமைச்சர்களுடன் சென்று காத்திருந்து* கட்டியணைத்து வரவேற்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். தன் சக அமைச்சர்களையும், சகாக்களையும் எப்படி அரவணைத்து வரவேற்றார், மதிப்பளித்தார் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த இன்ப கனவு என்கிற நாடகம் நடைபெறுகிறது .ஒருமுறை அவருடைய நாடகத்திற்கு அப்போது நண்பராக பழகி வந்த திரு.மு.கருணாநிதி நாடகத்திற்கு தலைமை தாங்கினார் .* அந்த மேடையில் ,முத்தமிழ், முக்கனி என்று பேச ஆரம்பித்த அவர் , எம்.ஜி.ஆர். அவர்கள் இன்று முதல் புரட்சி நடிகர் என்று அழைக்கப்படுவதாக விருது வழங்கினார் . எம்.ஜி.ஆர்.-கருணாநிதி இருவருக்கும் ஆழமான நட்பு இருந்தது .* என்றைக்கு சுயநலம், சொந்த பிள்ளை, சொந்த குடும்பம் என்று ஆரம்பித்ததோ ,அப்போதுதான் பிரிவினை என்கிற விரிசல் ஆரம்பமானது .எம்.ஜி.ஆர். தனது அரசியல் விவகாரத்தில் ஒருபோதும் இவற்றை அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம் . 1958ல் தனது சொந்த தயாரிப்பான நாடோடி மன்னனில் இரட்டை வேடம் ஏற்று நடித்து இயக்கி**பிரம்மாண்ட வெற்றியடைந்து படத்தை பற்றி தவறான பிரச்சாரம்,*செய்தவர்கள் வாயடைக்கும்படி செய்தார் . வெற்றிவிழாவின்போது அனைத்து கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பரிசளித்தார் .* மதுரை தமுக்கம் மைதானத்தில்* லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மாபெரும் கூட்டத்தின் நடுவில் எம்.ஜி.ஆர். யானைமீது அமர்ந்து வந்தார் .* விழாவில் எம்.ஜி.ஆருக்கு 110 சவரன் தங்கவாள் பரிசளிக்கப்பட்டது .நாடோடி மன்னன் படத்தில் மன்னனாக முடிசூட்டியபின் ,ஏழை எளியோருக்கு, பெரியோர்களுக்கு, தாய்மார்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்களை அறிவித்தார் .* மக்களிடம் இருந்து பெறும் வரிப்பணத்தில் மக்களுக்காக திட்டங்கள் தீட்டப்படும் .மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர வேண்டும் .*வயோதிகர்களுக்காகவும்,மாற்று திறனாளிகளுக்காகவும்,கல்வி நிலையங்கள் அமைக்கவும், தொழில் அபிவிருத்திக்காகவும்,வேலையில்லாத திண்டாட்டத்தை போக்கவும்* என் சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன்*என்பார்* இந்தப்படம்*.வெளியானபோது யாரும் கனவில்கூட எம்.ஜி.ஆர். முதல்வராகி இந்த திட்டங்களை நிறைவேற்றுவார் என்று நினைத்திருக்கமாட்டார்கள் .ஆனால் 20 ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆர். முதல்வரானதும் தான் படத்தில் அறிவித்த திட்டங்களை படிப்படியாக காலத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார் . படத்தில் தான்*அறிவிக்காத சில திட்டங்களையும் நிறைவேற்றினார் .*
வாரிசு அரசியலை எம்.ஜி.ஆர். வெறுத்தார் என்பதற்கு ஒரு சம்பவம் உதாரணம் .ஒருமுறை பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சுகுமார் போட்டியிடுவதாக இருந்தது .எம்.ஜி.சுகுமார் ஒரு குங்குமம் கதை சொல்கிறது போன்ற சில படங்களில் நடித்துள்ளார் . இவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் ஏராளமான சுவரொட்டிகள் அந்த பகுதியில் ஒட்டப்பட்டன .இந்த தகவல்கள் அறிந்த எம்..ஜி.ஆர். உடனடியாக அண்ணா பத்திரிகை அலுவலகம் சென்று ,ஒரு செய்தியை வெளியிட ஏற்பாடு செய்தார் .என்னுடைய அரசியல் வாரிசு என்று யாரும் இருக்க முடியாது . நான் யாரையும் அறிவிக்கவில்லை .என் அனுமதியில்லாமல் என் வாரிசு என்று விளம்பரம் செய்து தேர்தலில் நிற்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்கிற செய்தியை பகிரங்கமாக வெளியிட்டு ,தன்னுடன் பிறந்த அண்ணன் மகன் என்றும் பாராமல்**அறிவிக்க செய்தவர் எம்.ஜி.ஆர். எப்படி நாடோடிமன்னன் படத்தில், அறிவித்தாரோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவர்தான் ஆட்சியில் அமரவேண்டும் என்று சொன்னாரோ, வாரிசு அரசியல் கூடாது என்று வாதிட்டாரோ, அதை செயலில் , உலக அளவில், நிரூபித்துக்காட்டிய ஒரே மாமனிதர், ஈடு இணையற்ற மக்கள் தலைவர்* இன்றுவரை எம்.ஜி.ஆர். தான் .
எம்.ஜி.ஆர்.தி.மு.க.வில் இருந்தபோது தேர்தல் பிரச்சார குழுவிற்கு தலைவராக நியமிக்கப்படுகிறார் . ஒருமுறை தஞ்சை பகுதியில் காரில் மெதுவாக* செல்லும்போது* ஒரு குடிசை* வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது .உடனே காரை நிறுத்தச்சொல்லி, குழந்தையின் அழுகுரல் வந்த வீட்டிற்கு தான் மட்டும் நடந்தே சென்று ,குடிசையில் புகுந்து ,அழுகின்ற குழந்தையை வாஞ்சையுடன் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள, அந்த சமயத்தில் ,குடிசையின் பின்புறம் இருந்த குழந்தையின் தாய் ஓடோடி வந்து பார்க்கிறாள் .குழந்தையின் அழுகுரல் நின்றதும், யாரோ ஒருவர் குழந்தையை தூக்கியிருப்பதை பார்க்க வந்தவர் எம்.ஜி.ஆரை பார்த்ததும், திடுக்கிட்டு, ஆச்சர்யத்துடன், கைகால்கள் நடுங்க ,பயத்தோடு பார்க்கிறார் . ஆனால் ஒரு கணம் எம்.ஜி.ஆர். அந்த குழந்தையை ஆசுவாசப்படுத்தி ,அழாமலிருக்க,தாலாட்டி*,கொஞ்சுகிறார் .சற்று தூரத்தில் குழந்தையின் தந்தை குடித்துவிட்டு* படுத்து கிடக்கிறார் .*அவரை எழுப்பி, இனிமேல் குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லி,*உங்கள் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீர்கள்.குடும்பத்தை நன்றாக கவனியுங்கள் என்று கூறி, குழந்தையின் கையில் ரூ.1,000/- கொடுத்து, வாழ்த்திவிட்டு வந்தார் .*அன்றுமுதல்* எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெரிய பட முதலாளிகளுக்கு ஒருபோதும் அடிபணிந்து போனதில்லை .பெரிய பட முதலாளிகளுக்கு நிறைய படங்கள் ஒப்பந்தம் செய்து நடித்ததில்லை. உதாரணத்திற்கு ஏ.வி.எம்.குக்கு அன்பே வா,நாகிரெட்டிக்கு எங்க வீட்டு பிள்ளை, நம்நாடு, ஜெமினி வாசனுக்கு ஒளி விளக்கு,ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபைக்கு மாட்டுக்கார வேலன் , வீனஸ்* கிருஷ்ணமூர்த்திக்கு என் அண்ணன் ,ஊருக்கு உழைப்பவன் ,ஸ்ரீதருக்கு உரிமைக்குரல், மீனவ நண்பன் , எம்.ஜி.ஆர். உருவாக்கிய சிறிய பட தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் . குறிப்பாக தனது ஆத்ம நண்பர்*சின்னப்பா தேவருக்கு மட்டுமே 16 படங்களில் நடித்துக்கொடுத்தார் .தன்னை மட்டுமே நம்பி,கோவையில் இருந்து சென்னை வந்த தேவரை மிக பெரிய தயாரிப்பாளர் ஆகவும், தேவர் பிலிம்ஸ் என்கிற பெரிய நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர் தான் .
ஒவ்வொரு திசையில் இருந்து வரும் செய்திகளை தன்வசப்படுத்திக்கொண்டு,அதை ஒரு மாய சக்தியாக, மாய வில்லாக தனக்கேற்றபடி மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவர் எம்.ஜி.ஆர். அந்த வல்லமையோடு, தன் வாழ்க்கையின்*அடிச்சுவடுகளை காட்டிக்கொண்டு செல்லும் பக்கங்கள் வெளிச்ச பக்கங்களாக*மாறவேண்டும் என்பதற்காகத்தான் நாம் சகாப்தம் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி வருகிறோம் .இன்னும் சொல்ல போனால், ராமாயணம், மகாபாரதம்,சங்க இலக்கியங்களை படிக்காதவர் ,வாழ்க்கையில்* நெருக்கடிகள், பிரச்னைகள் சந்தித்து, அதிலிருந்து மீண்டு,வெற்றிகண்டு* இருப்பவர் எங்கோ உள்ளவர் அல்ல*சமீப காலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.அவர்கள்தான்*அந்த சாகச மனிதனின் சரித்திரம் நம்மை போன்ற சாமானியருக்கு எல்லாம் ஒரு பாடம் , படிப்பினை ,அந்த படிப்பினையை நாமும்,தொடருவோம்,வெல்வோம் ,வெற்றிப்பாதையை அடைவோம் . மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும்
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.சிரித்தாலும் போதுமே, செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*
2.உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -* பாசம்*
3.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து - நேற்று இன்று நாளை*
4.எம்.ஜி.ஆர். - பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*
5. மன்னனாக எம்.ஜி.ஆர்.அறிவிக்கும் திட்டங்கள் -நாடோடி மன்னன்*
6.குலேபகாவலியில் எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகள்*
6.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*
7.தர்மம் தலைகாக்கும் பாடல்* - தர்மம் தலைகாக்கும்*
.**
fidowag
31st August 2020, 09:22 AM
வடசென்னையில் அகஸ்தியா திரையரங்கு நிரந்தரமாக மூடப்படுகிறது*
---------------------------------------------------------------------------------------------------------------------தினத்தந்தி -31/08/20
சென்னை தண்டையார்பேட்டை யில் இருக்கும்* பழமையான அகஸ்தியா தியேட்டர் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக நாளை* முதல்*(01/09/20) நிரந்தரமாக மூடப்படுகிறது . என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது .* இந்த தியேட்டர் 1967ல் 1004 இருக்கைகளுடன் திறக்கப்பட்டது .முதல் படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டது . எம்.ஜி.ஆரின் காவல்காரன் முதல் முதலாக 100 நாட்கள் ஓடிய படம் .உலகம் சுற்றும் வாலிபன் தினசரி 3காட்சிகளில் 25 வாரம் ஓடியது .* பல்லாண்டு வாழ்க 104 நாட்கள் .மீனவ நண்பன்*88 நாட்கள் - நினைத்ததை முடிப்பவன் 84 நாட்கள் ஓடியுள்ளன . அதிக அளவில் எம்.ஜி.ஆர். படங்கள் திரையிடப்பட்டன .* சிவாஜி கணேசனின் சிவந்தமண்,சொர்க்கம் ,ராஜா படங்கள் திரையிடப்பட்டு உள்ளன . ரஜினியின் அபூர்வ ராகங்கள், பைரவி , ப்ரியா ,படிக்காதவன் , கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், குருதிப்புனல் ,தேவர் மகன் ,விஜய்யின் குஷி, கில்லி , அஜித்தின் அமராவதி, தீனா, சூர்யாவின் காக்க காக்க உள்பட பல வெற்றி படங்கள் இங்கு திரையிடப்பட்டு உள்ளன .* சினிமா ரசிகர்கள் சங்கத்திடம் இருந்து குளிர்சாதன* வசதி இல்லாத சிறந்த திரையரங்கம்* விருதை பல தடவை பெற்றுள்ளது* .**வடசென்னை மக்களின் பொழுது போக்கோடு இரண்டற கலந்துவிட்ட அகஸ்தியா தியேட்டர் மூடப்படுவது அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது .* 3 மாதங்களுக்கு முன்பு கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள மகாராணி, வடபழனியில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அரங்குகள் மூடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டன .* சென்னையில் ஏற்கனவே, சாந்தி, வசந்தி, நடராஜ், காமதேனு, பைலட் , ஆனந்த், பாரகன் , பிளாசா, ராக்சி, ராஜகுமாரி, நாகேஷ், ஸ்டார், கிரவுன், கிருஷ்ணா,பிரபாத், பிராடவே, பாண்டியன் ,சித்ரா, அலங்கார, மிட்லண்ட்,கெயிட்டி*உமா, புவனேஸ்வ்ரி சயானி உள்பட 50க்கு மேற்பட்ட தியேட்டர்களை மூடி வணிக வளாகங்கள், அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டி உள்ளனர் .
fidowag
31st August 2020, 09:24 AM
எம்.ஜி.ஆர்.பக்தர்களுக்கு மிகவும் வருத்தமா ன
செய்தி.வடசென்னையில் இந்த ஒரு அரங்கில்தான் தலைவர் படங்கள் வெளியாகி வந்தன. முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் காவல்காரன்.ஒளிவிளக்கு 35 நாட்கள். பிராட்வே யி ல் கூடுதலாக திரையிடப்பட்டு 92 நாட்கள் ஓடியது.
தேடிவந்த மாப்பிள்ளை 61 நாட்கள். உலகம் சுற்றும் வாலிபன்- தினசரி 3 காட்சிகளில் 175 நாட்கள். மற்ற சில படங்கள் ஒரு காட்சியில் வெள்ளிவிழா ஓடின.
நினைத்ததை முடிப்பவன் நல்ல வசூலுடன் 84 நாட்கள் ரகசிய போலீஸ் 115- 64 நாட்கள் ஓடியது
பல்லாண்டு வாழ்க-104 நாட்கள்.மீனவ நண்பன் 88 நாட்களில் 4 லட்சம் வசூல். சாதனை புரிந்து ம் தீபாவளி வெளியீடு க்காக எடுக்கப்பட்டது
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 49 நாட்கள்.
இவை தவிர படகோட்டி,ஒளி விளக்கு
போன்ற சில படங்கள் மறு வெளியீட்டில் 2 வாரங்கள் ஓடின
orodizli
31st August 2020, 09:29 AM
நாடோடி மன்னன் படத்தில் முதன்முதலில் திமுக கட்சிக் கொடியை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் லோகோவாக வைத்திருந்தார் அதனால் படத்தை வெளியிட சென்ஸார் அனுமதி வழங்கவில்லை ஆனால் தலைவர் கொடியின்றி படத்தை திரையிடப்போவதில்லை என்று கூறி மும்பை சென்ஸாரில் அனுமதி பெற்று கட்சிக் கொடியுடன் படத்தை திரையிடச் செய்தார் திமுக வளர்ச்சிக்கு தலைவர் பெரும் பங்காற்றினார். மேலும் அண்ணா மறைவிற்குப்பின்பு நாவலர் அவர்களே முதல்வராக தேர்வு செய்ய இருந்தார்கள் ஆனால் கருணாநிதி சூழ்ச்சி செய்து நம் தலைவரின் உதவியை நாடினார் தலைவரும் நண்பருக்கு உதவிட நினைத்து தனது ஆதரவு எம் எல் ஏ க்களை கருணாநிதிக்கு ஆதரவளிக்க வேண்டிக் கொண்ட காரணத்தால் அன்று கருணாநி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் தலைவர் ஆதரிக்கவில்லையென்றால் கருணாநிதி முதல்வர் ஆகியிருக்க முடியாது. இதுதான் உண்மை.........
orodizli
31st August 2020, 09:30 AM
சில திமுகவினர் கூறுவதுண்டு தலைவர் திரைப்படத் துறையில் வளர்ச்சியடைய கருணாநிதிதான் காரணம் என்று ஆனால் உண்மை அதுவல்ல திரைப்படத்துறையில் கருணாநிதியை அறிமுகப் படுத்தியதும் தலைவர்தான் தலைவர் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அப்போது மிகவும் பிரபலமான கதாசிரியராக இருந்த திரு இளங்கோவன் அவர்கள் அந்தப் படத்திற்கு கதைவசனம் எழுத ஒப்பந்தம் ஆகியிருந்தார் ஆனால் இயக்குநரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் படத்திலிருந்து விலகினார் அதனால் இயக்குநர் இளங்கோவனைப்போல் எழுதக்கூடியவர் இந்தப் படத்திற்கு தேவை என்று கூறினார் உடனே தலைவர் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரது எழுத்து இளங்கோவனைப்போல் இருக்கும் என்று கூறவே சரி நான் சொல்லும் காட்சிக்கு வசனம் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார் கருணாநிதியும் அந்தக் காட்சிக்கு வசனத்தை கடிதம் மூலமாக எழுதி அனுப்பினார் அது இயக்குநருக்கு பிடித்துப் போகவே கருநாநிதியை அந்தப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள் கருணாநிதிக்கு அதுவே முதல் திரைப்படம் ஆனால் தலைவரோ அதற்கு முன்பே திரைப்படத்தில் நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்தார் இதே படத்திற்கு சாண்டோ சின்னப்பத் தேவரை ஸ்டன்ட் மாஸ்டராக சிபாரிசு செய்து அவருடைய வாழ்வில் வளம் சேர்த்தவரும் நம் தலைவர்தான்..........
orodizli
31st August 2020, 09:42 AM
#பதவிதேவையில்லை
******** பேரறிஞர் அண்ணா ஆட்சியை பிடித்ததும் அமைச்சர் பட்டியல் தயார் செய்தார். அதில் எம்ஜிஆர் பெயரும் இடம் பெற்று இருந்தது இதை அறிந்த எம்ஜிஆர் எனக்கு பதவி தேவையில்லை என்றார் காரணம் நான் ஒரு நடிகன் என்னை நம்பி ஒரு சினிமா உலகம் காத்திருக்கு தியேட்டரில் முறுக்கு விற்பவர் முதல் போஸ்ட் ஒட்டும் அந்த தொழிலாளர்கள் வரை அவர்களின் நன்மைக்காக* சினிமாவை துறக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் அப்படி பட்ட பதவி தேவையில்லை மக்களிடம் நல்ல பழக்கத்தை சொல்லி கொடுக்க சினிமா சிறந்த ஏடு என் ரசிகர்களை ஏமாற்ற நான் ஒரு போதும் விரும்ப வில்லை என்று தன் விருப்பத்தை முன் வைத்தார் எம்ஜிஆர்*
********* கட்சிக்காக பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்க எனக்கு பதவி வேண்டாம் என்பது அண்ணாவை உதாசினப்படுத்து போல் என்று பலர் முனுமுனுத்தாலும் அவர் மனநிலையை உணர்ந்த அண்ணா பதவி கிடைக்கவில்லை என்றதும் கட்சி தாவும் உலகில் தம்பி இராமசந்திரன் நம் கட்சிக்கு கிடைத்த வரம்
******* ❤பதவிக்காக பகையை தேடுபவர்களும் உண்டு தம்பி இராமசந்திரன் தன் உழைப்பு அனைவருக்கும் பதவி அவரால் கிடைத்தது அதை மறந்து விடக்கூடாது நாம் ஆயிரம் மேடை போட்டு சொல்வதை தம்பி ஒரு காட்சியில் காண்பித்து விட்டு சென்று விடுவார்
******** தம்பி உழைப்பை கூட கட்சிக்காக காணிக்கை ஆக்கிய உத்தமர் அவருக்கு அனைவரும் நன்றி கடன் பற்றிருக்கிறோம் அவர் திரை உலக சக்கரவர்த்தி அவரையும் ரசிகர்களையும் பிரிப்பது பாவம் அவர் இஷ்டபடியே உழைப்பையும் தர்மம் செய்யலாம் என்று உணர்த்திய என் அன்பு தம்பிக்கு என் இதயத்தில் பதவி தந்திருக்கிறேன் அவருக்கு மக்கள் தந்த இதய சிம்மாசனத்தை எவரும் பறித்து விட முடியாத உயரத்தில் இருப்பவர்
******** எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு என்றால் அண்ணாவுக்கு அலாதி பிரியம் இருவரும் ஒன்றாக சாப்பிடும் போது அண்ணா சொன்னார் தம்பி உன்னை பற்றி சிலர் அவதூர் பேசுகின்றனர் நீ சரியாக கட்சி மீட்டிங் பின்பு சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை எப்பவும் சினிமா தான் என்று இருக்கிறதாக சொன்னார்கள் நீ அந்த துறையில் மன்னாதி மன்னனாக இருப்பதால் தான் நான் நாட்டுக்கு மன்னன் ஆகி உள்ளேன் யார் என்ன? சொன்னாலும் உனது இலட்சியம் தொடரட்டும் நீ ஒரு வானத்து சந்திரன் அனைவருக்கும் ஒளி கொடுப்பவன் மற்றவர்கள் கைவிளக்கு போல் ஒளி தருவர்கள் என்று வாழ்த்தி மகிழ்ந்தார் அண்ணா*
எம்ஜிஆர் பிறந்த நாளில்
******* அண்ணாவுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் நல்ல புரிதல் இருந்த தால் தான் எம்ஜிஆர் அண்ணாவை ஒரு வினாடி கூட மறந்ததில்லை*.........
orodizli
31st August 2020, 09:45 AM
பாச சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் தெரிவித்த அகஸ்தியா திரையரங்க செய்தி மிகுந்த மன கவலைப்பட வைத்துள்ளது...எல்லாம் காலம், நேரத்தின் கைகளில்... வேறொன்றும் சொல்வதற்கில்லை...
orodizli
31st August 2020, 11:34 AM
"தலைவன்". புரட்சி நடிகரின் வித்தியாசமான திரைப்படம். தயாரிப்பில் நெடுநாள் இருந்த படம்.
படத்துக்கு ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு இறுதியில் 1970 ஜீன் 24 அன்று வெளியாகி முதல் சுற்றில் சுமாரான வெற்றியை பதிவு செய்தாலும் b & c யில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட படம். மாற்று அணியினர் எந்தவிதத்திலும் "தலைவன்" தோல்விப் படம் என்று சொல்லியே வந்தனர்.
அதிலும் படம் பார்த்த மாற்று அணி ரசிகர்கள் எம்ஜிஆர் ஜோதிலட்சுமியை மடியில் வைத்துக் கொண்டு பறப்பதை கிண்டல் செய்து பேசினார்கள். இப்படி செய்வார்கள் என்று தெரிந்துதான் எம்ஜிஆர் முதல் காட்சி ஆரம்பத்திலேயே யோகா கலைகளின் பெருமைகளையும்
அந்த கலைகள் மூலமாக பல சக்திகளை பெற்று சாதித்து காட்டியவர்களின் கூற்றுகளையும்
க்ளிப்பிங்ஸாக காட்டுவார். அதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காலகட்டம் அல்ல அது.
அந்தக் காலகட்டத்தில்தான் விட்டலாச்சார்யாவின் டப்பிங் மாயாஜாலப் படங்கள் சக்கை போடு போட்டன. டைட்டிலில் வந்த எலும்புக்கூடுகளை பார்த்ததும் டப்பிங் படம் பார்ப்பது போல் ஒரு எண்ணம் எல்லோருக்கும் வந்தது
தவிர்க்க முடியாதது. பாடல்கள் எஸ்எம்.எஸ். "ஆசைமுக"த்துக்கு பின்னர் அவர் இசையமைத்த படம்.
வித்தியாசமான வேகமான மெட்டுக்களுடன் பாடல்களும் டப்பிங் பட மனநிலைக்கு கொண்டு சென்றதை மறக்க முடியாது.
ஆயினும் பாடல்கள் அருமையான மெட்டுக்கள். திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும். படத்தை பற்றிய விமர்சனம் சுமார் ரகத்தை சேர்ந்தாலும் படத்தின் வெற்றி ஒரு
ஆச்சர்யமானது. எம்ஜிஆர் நடிக்காமல் வேறு யாராவது நடித்திருந்தால் படம் ஒரு வாரம் கூட ஓடியிருக்காது என்பதே உண்மை. தூத்துக்குடி ஜோஸப்பில் வெளியாகி படம் 21 நாட்களை அனாயசமாக கடந்தது. ஜோஸப்பில் வெளியான நிறைகுடம் 18 நாட்களும் சிவாஜி ரஜினியுடன் நடித்த கலர் படமான ஜஸ்டிஸ் கோபிநாத் 18 நாட்களும்தான் ஓடியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சேலத்தில் அதிகபட்சமாக 63 நாட்களும் திருச்சியில் 50 நாட்களும்
ஆத்தூரில் 42 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. "தலைவன்" வெளியாகி 35 நாட்களுக்குப் பின் ஆக 29 ல் வெளியான "தேடி வந்த மாப்பிள்ளை" தலைவனின் ஓட்டத்தை கட்டுப்படுத்தியது எனலாம். ஆனாலும் "தலைவன்" எம்ஜிஆர் படத்திற்குக்குரிய வெற்றியை பெற தவறவில்லை. படத்தின் ஒரு சில இடங்களின் வசூலை நாம் பார்க்கலாம்.
கும்பகோணம்
------------------------
தலைவன். 35 நாள் 57,481.80
எ.வந்தாள். 50. " 50605.61
தே.வ.மாப். 50. " 82353.69
சொர்க்கம். 50. 72281.23
ஆத்தூர்
--------------
தலைவன் 40 நாள். 45314.87
சொர்க்கம் 26. " 36147.09
எ.வந்தாள் 21. " 32980.80
வியட். வீடு 27 " 35900.04
தலைவரின். B சென்டர் வசூலை பார்த்தால் தெரிகிறதா? ஒரு தலைவனை கூட மிஞ்ச முடியவில்லை சிவாஜியின் 100 நாட்கள் வெற்றிப் படங்கள். அதேபோல் a சென்டரான மதுரையில் தங்கத்தில் வெளியாகி சிவாஜியின் "எதிரொலி" படத்தின் மொத்த வசூலையும் 10 நாட்களில் தூக்கியெறிந்தது குறிப்பிடத்தக்கது..........
orodizli
31st August 2020, 11:37 AM
உண்மையான பதிவு. நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸில் இல்லாமல் திமுகவில் நீடித்திருந்தால் அவருக்கு அகில இந்திய பெருமைகள் கிடைத்திருக்காது. அவர் திமுக ஆதரவு நிலையில் இருந்து வெளியேறிய பிறகு (அவர் திமுகவில் உறுப்பினராக இருந்ததே இல்லை) காங்கிரஸ் ஆதரவாளர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் அவரை தூக்கிவிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தமிழகத்தில் வெளியாகும் முன்பே லண்டனில் பிரதமர் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டுக்கு போட்டு காட்டி ஆதரவு திரட்டினார்கள். நாடோடி மன்னன் படத்தை சர்வதேச விழாவுக்கு முதலில் கேட்டு புரட்சித் தலைவர் அதை எடிட் செய்து சுருக்கி கொடுத்த பிறகு படவிழாவுக்கு போக விடாமல் தடுத்தார்கள். இதை பாரத் விருதுக்காக சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் தலைவரே தெரிவித்தார்.
பட முதலாளிகள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலும் அதிகாரிகள் மேல்தட்டு காங்கிரஸ் ஆதரவாளர்கள். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களது பெயர்களை சினிமாவில் காட்டலாம், சொல்லலாம். ஆனால், திமுக, உதய சூரியன், அண்ணா ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது என்று சென்சார் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டனர். சிவாஜி கணேசனுக்கு இருந்ததைப் போல சென்னையில் சாந்தி தியேட்டர், கிரவுன், புவனேஸ்வரி குத்தகை தியேட்டர், திருச்சியில் பிரபாத் பினாமி தியேட்டர் போன்று சொந்த தியேட்டர்கள் புரட்சித் தலைவருக்கு இல்லை. மன்னவன் வந்தானடி போன்ற மொக்கை படங்களை சொந்த தியேட்டரில் ஓட்டிக் கொண்டார்கள். சொந்த தியேட்டரில் ஓட்டப்பட்ட 100 நாள் படங்களை கழித்தால் அவரது 100 நாள் படங்கள் இன்னும் குறையும். தியேட்டர்காரர்களும் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள். பத்திரிகைகளும் காங்கிரஸ்காரர்கள், மேல்தட்டினர் கையில் இருந்ததால் புரட்சித் தலைவருக்கும் திமுகவுக்கும் எதிராகவே எழுதி சிவாஜி கணேசனை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். இத்தனை இருட்டடிப்புகளையும் மீறி புரட்சித் தலைவர் இமயமாக உயர்ந்து சினிமாவிலும் அரசியலிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இதில் இன்னொரு பொய் வேறு சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்கள். தமிழக காங்கிரசுக்கு சிவாஜி கணேசன்தான் ஆணிவேராக இருந்தார். அவரால்தான் காங்கிரசுக்கு ஓட்டு விழுந்தது என்று பொய் அள்ளிவிடுவார்கள். காங்கிரசில் இருந்து சிவாஜி கணேசன் பிரிந்ததால் காங்கிரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. 1989 சட்டசபை தேர்தலில் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் 26 இடங்களில் வெற்றிபெற்றது. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசன் தோற்றுப்போனார் என்பது வரலாறு. கோபுரத்தை பொம்மை தாங்கியதாம்..........
fidowag
31st August 2020, 05:51 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*12/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------, குலேபகாவலி ,மர்மயோகி, மந்திரிகுமாரி ,நாடோடிமன்னன் ,புதுமை பித்தன், மகாதேவி,என்று ஆரம்பித்து ஆயிரத்தில் ஒருவன் வரையில் ஆளுகின்ற அரசின் எதேச்சார போக்கு, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்து இறுதியில்*
போராடி வெற்றி பெறுபவராக நடித்தார்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக சொல்ல போனால், தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் , வாழ்க்கையின் நோக்கம் ஆகியவற்றை*இலக்கண இலக்கியங்களோடு சொன்ன படம் நாடோடி மன்னன் .இந்த படத்தில்தான் பல்வேறு திட்டங்களை தான் மன்னனாக முடிசூட்டியதும் அறிவிக்கிறார் . முதியோருக்கான பென்சன், விவசாயிகளுக்கான பென்சன் ஆதரவற்றவர்களுக்கான திட்டங்கள், ஜாதிகள் ஒழிப்பு பற்றிய சட்டங்கள் ,ஒடுக்கப்பட்டவர்களை கோயிலில் அனுமதிப்பது, ஒடுக்கப்பட்டவர்களை தொட்டால் தீட்டு என்பதில் இருந்து விலக்கு ,பெண்களை கற்பழிப்பவருக்கு முன்* ஜாமீன் இல்லாத தூக்கு தண்டனை போன்ற சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை நாடோடி மன்னனில் தான் ஆட்சிக்கு வருவதற்கு 20 ஆண்டுகள் முன்பே அறிவித்துவிட்ட ஒரு முன்னோடி ஆவார் .நாட்டிலே சட்டதிட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விஞ்ஞான வளர்ச்சி, தொழில் புரட்சி, தொழில்நுட்பம் ஆகியன இல்லாத காலத்தில் படத்தில் அறிவித்தார் .அவற்றை ஒரு பாடலாகவே பாடியிருப்பார்* அவர் .பட்ட துயர் இனி மாறும் , ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்* .**நானே போட போறேன் சட்டம். பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்,நாடு நலம் பெறும் திட்டம்* .என்கிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாயிலாக அந்த பாடல் இடம் பெற்றாலும் ஒவ்வொரு பிரேமிலும்,ஒவ்வொரு கருத்திலும்,நடிப்பிலும் பாடலிலும்* எம்.ஜி.ஆர்.தான் நிற்கிறார் .* அதே சமயம் ஒருபோதும் திரைப்படங்களில், புகை பிடிக்காதவராக, மது அருந்தாதவராக ,. , பெண்களுக்கு தீங்கு இழைக்காதவராக ,நடிப்பில் வில்லத்தனம் இல்லாதவராக தான் நடிப்பது என்ற கொள்கையில் இருந்து மாறாதவராக இறுதிவரையில் கடைபிடித்தார் .*சாதித்தும் காட்டினார் .
அ.தி.மு,க கட்சிக்காக ஒரு பத்திரிகையை ஆரம்பிப்பது, தனக்கு தெரிந்த பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பது* என்று முடிவெடுத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார் . அப்போது எல்லோரும் புரட்சி வணக்கம், புரட்சி காலை, புரட்சி மலர், புரட்சி நடிகர் என்றெல்லாம் யோசனை தெரிவிக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அதற்கு மறுப்பு தெரிவித்து, என்னை பொறுத்தவரையில் கட்சியின் பெயரில் அண்ணா, பத்திரிகையின் பெயரும் அண்ணாதான் .அண்ணா பெயரில் தொழிற்சங்கம் என்று எங்கும், எதிலும் அண்ணா என்று உறுதியாக இருந்தார் .அவர் எடுத்த முடிவின்படி தோன்றியதுதான் அண்ணா பத்திரிகை .என்ற நாளிதழ் .
அதே சமயத்தில் ஒரு செய்தியை* எப்படி கிராஸ் செக் செய்வது என்பதற்கு*பல்வேறு பத்திரிகைகளில் ஒரு குழு அமைத்து அதற்கு குரூப் லீடர் ஒருவர் இருப்பார் .ஆனால் எம்.ஜி.ஆர். என்ன செய்வாரென்றால்** காலையில் எல்லா பத்திரிகைகளை காரில் வைத்து ,அதை பத்திரிகையாளர் சோலை என்பவரை படிக்க வைத்து ,ஒவ்வொரு செய்திக்கும்/தலைப்புக்கும்* என்ன கருத்து,எப்படி சொன்னீர்கள்* இதை ஏன் இப்படி பார்க்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு கோட்டைக்கு சென்றுவிடுவார் .மதியம் தி.நகர் அலுவலகத்திற்கோ,அல்லது வீட்டிற்கோ திரும்பும்போது அதே பத்திரிகைகளை காரில் வைத்து , அண்ணா பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கார்த்தியை உடன் அழைத்து சென்று, பத்திரிகைகளில் உள்ள தலைப்புகளில் ,செய்திகள் பற்றி ,ஏன் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று கூறி* அவருடைய கருத்தை/விமர்சனத்தை***கேட்பது வழக்கம் .இப்படி இருவேறு கோணங்களில் இருவேறு* ஆட்கள் மூலமாக, ஒரே விஷயத்தை இரண்டு பார்வைகளில்**அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்வாராம் .*
எம்.ஜி.ஆர்.அவர்கள்* மக்களில் ஒருவனாக**வாழ்க்கையின் ஒவ்வொரு படிக்கட்டுகளையும் கடந்து வந்தவர் .* அதனுடைய அவமானங்கள், பிரச்னைகள், கஷ்டநஷ்டங்கள், தோல்விகள் ஆகியவற்றை சந்தித்து ,சந்தித்து ,அவற்றை படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டவர் என்பதற்கு திரைப்படங்களிலே வருகின்ற வசனமாகட்டும் , பாடல்களாகட்டும், காட்சிகளாகட்டும் ஏதாவது ஒன்றை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள், அதன்மூலம் சிலர் விவரமறிநது* வாழ்க்கையில் முன்னேற் அது வாய்ப்பாக அமையட்டும் என்று குறிக்கோளுடன்*திரைப்படங்களில் நடித்தார் எம்.ஜி.ஆர்.*
மிக பெரிய ஜாம்பவான்களாக இருந்த எந்த பெரிய திரைப்பட நிறுவனங்களுக்கும் அவர்களது* திரைப்படங்களில் நடிப்பதற்கு உடனடியாக* பரிபூரண* சம்மதம் தெரிவிக்கவில்லை.தனக்கேற்ற சிறு தயாரிப்பாளர்கள், பட நிறுவனங்களை*நிறைய அளவில் ஊக்குவித்தார் ,உருவாக்கினார் என்பதுதான் அவரது திரைப்பட சரித்திரம் .* அதே போல சாமானியர்கள், அரசியலில் இருந்து மிக பெரிய ஜாம்பவான்களாக பேச்சாற்றல், எழுத்தாற்றல் இல்லாதவர்களை, சாதாரண சைக்கிள் கடைக்காரர்* ,தேநீர் கடைக்காரர்கள்* போன்றோரை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்கள் எப்போதும் உற்சாகம் நிறைந்தது .உலகம் பிறந்தது எனக்காக , உன்னை அறிந்தால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ,புதிய வானம் புதிய பூமி, நான் உங்கள் வீட்டு பிள்ளை, நான் ஆணையிட்டால் போன்ற பாடல்களில் அவர் ஓடி வருகின்ற அந்த துள்ளலும் ,நடன அசைவுகளும் ,உணர்ச்சிகரமான முகபாவங்களும் ,பாவனைகளும் ,அனைவருக்கும் உற்சாகத்தையும்,புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது .அதே போல சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு, வேகம், விவேகம், லாவகம் ,ஸ்டெப்புகள், பன்ச்கள் அனைத்திலும் கரை கண்டவர்*கத்தி சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, சிலம்பம், கம்பு சண்டை, ஜூடோ,வில்வித்தை, மல்யுத்தம் ,அனைத்திலும் தேர்ச்சி பெற்ற* ஒரே நடிகர் இந்திய அளவில் எம்.ஜி.ஆர். ஒருவரே .* சண்டை காட்சிகளில் படத்திற்கு படம் புதுமை,*வித்தியாசம் நுட்பம் ஆகியன புகுத்தினார் .* எதிரிகளை பந்தாடும்போது சிரித்துக் கொண்டே அவர்களை வீழ்த்துவதில் வல்லவர் . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கூட ஒரு சண்டை காட்சியில் ஜெயலலிதா தடுக்கும்போது, இரு பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன் என்று உற்சாகமாக புறப்படுவார் .
நடனத்தை பற்றி அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை .எவ்வளவோ சொல்வார்கள் .தொல்காப்பியம், நடனம் ,அந்த காலத்தில் இலக்கியத்தில் கொடி கட்டி பறந்த மணிக்கொடி* எழுத்தாளர்களுடன் எம்.ஜி.ஆர். தொடர்பு வைத்திருந்தார் .எழுத்தாளர் திரு.பி.எஸ்.ராமையாவுடன் நட்பில் இருந்தார் .இப்படி எல்லா இலக்கியவாதிகளை பற்றி அறிந்து வைத்திருந்தார் . தொல்காப்பியத்தில் சிலர் நவரசம் உண்டு என்பார்கள். நவரசம் இல்லை . எட்டு ரசம்தான் உண்டு என்பதையும் எம்.ஜி.ஆர். அறிந்து இருந்தார் .எம்.ஜி.ஆர். தன*வீட்டில் அமைத்திருந்த ஒரு பெரிய அரிய நூலகம்* போல**வேறு எங்கும் பார்த்ததில்லை என்று பலரும் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன் .**
தாயன்பு, சகோதர பாசம், பெண்களை மதிப்பது ,ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பது, அநியாயத்தை தட்டி கேட்பது ,அடிமைகளை வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து மீட்பது* என்று பல விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நடித்து மக்கள் மனதில் பதிந்து*ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன் முழு பரிமாணத்தை காட்டினார் .அவர் ஒரு கேள்வி எழுப்பினார் . சிறைச்சாலைகளுக்கு சென்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு இப்போதெல்லாம் அவ்வளவாக கூட்டம் கூடுவதில்லை ஏன் .அவர்களுடைய தியாகங்கள் மக்கள் கண்களில் இருந்து மறைந்துவிட கூடாது .ஒருமுறை கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்கு சிலை வைக்க ஏற்பாடுகள் நடந்தன .நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது ,எம்.ஜி.ஆரை சந்திக்க ஒரு யோசனை இருந்தது .ஆனால் பாலதண்டாயுதம் என்பவர் மேடைக்கு மேடை, எம்.ஜி.ஆர் பற்றி மிக கடுமையாக விமர்சித்தவர் . ஒரு சினிமா நடிகரிடம் போய் நின்று அவரிடம் நிதி கேட்பதற்கு அவருக்கு முகமில்லை தயக்கமும் .சங்கடமும் கூட .ஆனால் திரு.தா பாண்டியன் அவர்கள் பால தண்டாயுதத்தை வலிய அழைத்து ,எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதுவும் பேசவேண்டாம் .சும்மா வாருங்கள் என்று அழைத்து சென்றார் .பாலா தண்டாயுதத்தின் விமர்சன பேச்சுக்களை அறிந்த எம்.ஜி.ஆர். அதை பற்றி பேசுவதை தவிர்த்து , நேரடியாக தா. பாண்டியனிடம் கேட்கிறார். சிலை அமைக்க எவ்வளவு செலவாகும் .நீங்கள் எல்லாம் வழக்கத்தையும்,பழக்கத்தையும் மறந்துவிட்டீர்கள் . இவற்றையெல்லாம் மறந்துவிட்டால் தலைவர்களின் தியாகங்கள் மக்கி போய் மண்ணோடு மண்ணாகிவிடும் .தலைவர் ஜீவாவுக்கு சிலை அமைக்க நான் பொறுப்பு ஏற்று* கொள்கிறேன் .* அந்த சிலை வைக்கும் செலவிற்கான முழு தொகையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பரந்த மனப்பான்மையுடன் சொன்னதும் பால தண்டாயுதம் ஒரு கணம் ஆடி போய்விட்டார் . இதை அவர் எதிர்பார்க்கவில்லைஎம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு போக்குவரத்து கழகங்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டபோது ஜீவா பெயரில் போக்குவரத்து கழகம் ஒன்றை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது . எம்.ஜி.ஆர். பிரிவினை வாதத்தை ஆதரித்தவரில்லை தேசியத்திற்கு எதிராக பேசியவரில்லை .* ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனி உடைமைக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருக்கிறார் .* பொது உடைமையை நேசித்து, ரசித்து பேசியும் இருக்கிறார் . அவர் கண்ட தத்துவம்தான் அண்ணாயிசம் .அதாவது வாழுகின்ற மக்களுக்கு*.எல்லாம் அவர்கள் வாழ வழி செய்வது .அவர்களின் பசிக்கு உணவிட வேண்டும் .என்கிற தத்துவதைத்தான் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்து நடைமுறை படுத்திகிற உலகத்திற்கே சொன்ன திட்டமாக சத்துணவு திட்டத்தை ,இளமையில் கல்வி* என்பது எவ்வளவு முக்கியமோ , அதே போலஇளமையில்* வறுமை* பசி கொடுமை* கொடியது* என்பதை உணர்ந்துதான் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார் .இப்படி பல சரித்திர சாதனைகள் செய்வதற்கு தன்* வாழ்க்கையை பாடமாக்கி கொண்டார் .மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம் ...
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.வாங்கய்யா வாத்தியாரய்யா - நம் நாடு*
2.நாடோடி மன்னன் படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.*
3.மன்னனாக முடி சூட்டியதும் அறிவிக்கும் திட்டங்கள் -நாடோடி மன்னன்*
4.எம்.ஜி.ஆர். -கண்ணாம்பா -எஸ்.வி.ரங்காராவ்-நீதிக்கு பின் பாசம்*
5.கேளம்மா சின்ன பொண்ணு கேளு - கன்னித்தாய்*
6.எம்.ஜி.ஆர்.-வி.கோபாலகிருஷ்ணன்* உரையாடல் -கலங்கரை விளக்கம்*
*.**
fidowag
31st August 2020, 11:32 PM
தனியார் டிவிக்களில் நடிக பேரரசர்*எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள்*ஒளிபரப்பா கிய பட்டியல் (24/08/20 முதல் 31/08/20 வரை )
------------------------------------------------------------------------------------------------------------
24/08/20- சன் லைப் - காலை 11 மணி -ரிக்ஷாக்காரன்*
* * * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7மணி - விவசாயி*
* * * * * * * வேந்தர் டிவி -இரவு 11 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி - நவரத்தினம்*
25/08/20- மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - விவசாயி*
* * * * * * * * *சன் லைப் - மாலை* 4 மணி - கண்ணன் என் காதலன்*
* * * * * * *புது யுகம் டிவி -இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*
26/08/20- சன் லைப் - காலை 11 மணி - உரிமைக்குரல்*
* * * * * * * *மெகா டிவி* - மதியம் 12 மணி - திருடாதே*
27/08/20 -சன் லைப் - மாலை 4 மணி - தெய்வத்தாய்*
* * * * * * * *புது யுகம் டிவி - இரவு 7 மணி - கன்னித்தாய்*
28/08/20 - சன் லைப்* - காலை 11மணி -பல்லாண்டு வாழ்க*
29/08/20 - மெகா டிவி -மதியம் 12 மாய் - பணத்தோட்டம்*
* * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - முகராசி*
* * * * * * *வெளிச்சம் டிவி _ பிற்பகல் 2 மணி - கலங்கரை விளக்கம*
* * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - கன்னித்தாய்*
* * * * * * * மீனாட்சி டிவி - இரவு* 9.30 மணி - வேட்டைக்காரன்*
30/08/20-மெகா டிவி - மதியம் 12 மணி - படகோட்டி*
* * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி/இரவு 7 மணி -தாயை காத்த தனயன்*
31/08/20 -சன் லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * * மீனாட்சி டிவி - இரவு 9.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * *
orodizli
1st September 2020, 11:19 AM
1965 ல் "எங்க வீட்டு பிள்ளை" "பணம் படைத்தவன்" "ஆயிரத்தில் ஒருவனை" தொடர்ந்து வெளியான படம்தான் "கலங்கரை விளக்கம்". இதனையடுத்து வெளியான "கன்னித்தாய்" படத்தின் வெற்றியையும் கடந்து தொடர்ந்து வெற்றி நடை போட்ட படம். இயக்குநர் k.சங்கர் புரட்சி நடிகருடன் இணைந்த இரண்டாவது படம். அருமையான சஸ்பென்ஸ் "த்ரில்லர்" நிறைந்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக செல்லும் படம். எம்ஜிஆரின் நடிப்பு பிரமிப்பாக இருக்கும்.
ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையான நடிப்பில் கலக்குவார்..நாகேஷ் வீரப்பன் காமெடி நிறைவோடு இருக்கும். சரோஜாதேவி
இரண்டு வேடங்களில் நடித்து
பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியளித்திருப்பார். பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுக்கள். முதல்தடவை
தூத்துக்குடி காரனேஷனில் பார்க்கும் போது மிகவும் த்ரில் ஆக இருந்தது.
M.s.விஸ்வநாதன்,
ராமமூர்த்தியிடமிருந்து பிரிந்து தனியாக இசையமைத்த
முதல் படம் என்று நினைக்கிறேன்.
பாடல்களில் அத்தனை இனிமை.
"பொன்னெழில் பூத்தது" பாடலை பஞ்சு அருணாசலம் எழுதியிருப்பார். அந்தப்பாடலில் சிவகாமியின் நடனம் மட்டும் சற்று அதிர்ச்சியை கொடுத்தாலும் பாடல் காட்சி ரசிக்கும்படி இருக்கும்.
கண்ணதாசனை மிஞ்சியிருப்பார் பஞ்சு.
"காற்று வாங்கப் போனேன்" பாடல் ரொம்ப ரொம்ப பாப்புலர் ஆன பாடல். அந்த காலத்தில் இந்த பாடலை பாடாத வாயே இருந்திருக்க
முடியாது என்று சொல்லலாம். சென்னையில் வெலிங்டன் ஸ்ரீமுருகன் ராக்ஸி சீனிவாசாவில் வெளியாகி சென்னையில் 83 நாட்களும் மற்ற ஊர்களிலும் அதிகபட்சமாக 83 நாட்களும் ஓடியது.
அடுத்து வந்த "குழந்தையும் தெய்வமும்" நவ 19 ல் அதே திரையரங்குகளில் சீனிவாசாவை தவிர மற்ற. திரையரங்குகளில்
வெளியாகும்வரை ஓடியது. தூத்துக்குடி காரனேஷனில் 35 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. 35 நாட்கள் என்பதை சாதாரணமாக எண்ண வேண்டாம்.
தூத்துக்குடியில் "ராஜா" 21 நாட்களும் "ஞானஒளி" 18 நாட்களும் "தியாகம்" 21 நாட்களும் இதே திரையரங்கில் வெளியான "மனிதனும் தெய்வமாகலாம்" 13 நாட்களும் "அஞ்சல் பெட்டி 520", 13 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது. மற்ற படங்கள் ஓடியதை பார்த்தால் "கலங்கரை விளக்கத்தி"ன் வெற்றியின் வீரியத்தை புரிந்து கொள்ளலாம். அந்த காலத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட வித்தியாசமான படம்தான் "கலங்கரை விளக்கம்"..........
orodizli
1st September 2020, 11:22 AM
கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயம்!!
Mgr முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம் வடபழனியில் உள்ள பிரபல மண்டப்பத்தில் நடக்கிறது,அது காலை நிகழ்ச்சி.அதே சமயம் காலையில் கோட்டைக்கு சென்றிருந்த mgr, தலைவர்(mgr) கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது.
மண்டபத்தில் இருந்தவர் மத்தியில் mgr வருகிறார் என்ற பரபரப்பு ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் கிட்டே வந்தவுடன் பாலத்தில் செல்லாமல் உஸ்மான் ரோடு திரும்பி தி நகர் வழியாக தலைவரின் கார் பயணிக்கிறது.சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலது புறமாக சலவைத் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு செல்கிறது mgr கார்.ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்தப் பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது.இருப்பினும் தலைவரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச் சொல்லி வேட்டியை மடித்துக்கொண்டு வேகமாகச் சென்றார், அங்கே நடந்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளியின் வீட்டு திருமணத்தில் கலந்துக் கொண்டார்.அந்த தொழிலாளியோ சிலையாய் நின்று பின்னே நாற்காலி ஒன்றை தேடி ஏற்பாடுச் செய்து பொன்மன செம்மலை உட்கார வைக்கிறார்.தலைவர் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு வழக்கம்போல பெருந் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார்.முக்கியமான விசயம் இந்த தொழிலாளி தலைவரின் துணிகளை சலவை செய்பவர்.மேலும் சின்ன பிளாஸ்பேக்! அந்த சலவை தொழிலாளி தன் வீட்டு திருமண பத்திரிக்கையை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார்,அம்மையாரும் அதை வாங்கிக் கொண்டு அப்போதே ஒரு தொகையை கல்யாண சீதனமாக கொடுக்கிறார்.முடிந்தால் மட்டுமே தலைவர் வருவார் எனக் கூறுகிறார்.அந்த தொழிலாளி அம்மையாரிடம் தலைவர் முதலமைச்சர்,வேலை பளு காரணமாக வருவது அரிது!தாங்கள் தலைவரிடம் பத்திரிக்கை காண்பித்தால் போதுமானது என்றார்,அம்மையாரும் காண்பிப்பதாக உறுதி கூறி அனுப்பி வைக்கின்றார்.அம்மையார் தலைவரின் டைரியில் அந்த தேதியின் பக்கத்தில் பத்திரிக்கையை வைத்துவிடுகிறார்.அவராக அதைப் பார்த்துதான் கல்யாணத்திற்கு போயிருக்கிறார்.
தலைவரின் புகழ் ஓங்குக!!!.........
orodizli
1st September 2020, 11:23 AM
"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்.
தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா.
தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:
அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...
ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.
வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.
திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.
இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.
அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை
அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.
எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.
விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.
சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.
சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.
எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.
எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.
எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்..........
orodizli
1st September 2020, 11:26 AM
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை பட்டியலில் 1977ம் ஆண்டு வெளியான "மீனவ நண்பன்", " இன்று போல் என்றும் வாழ்க", "நவரத்தினம்" திரைப்படங்கள், காவியங்கள் மாபெரும் தொடர் சாதனைகள் புரிந்துள்ள வரலாறு சில...........
சென்னை நகரில் மீனவ நண்பன் திரைப்படம் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு தேவி பாரடைஸ் திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து அகஸ்தியா 88 நாட்களும், உமாவில் 88 நாட்களும் கமலா அரங்கில் 40 நாட்களும் ஒடி 18 லட்ச ரூபாயை நெருங்கியது வசூலில் மீனவ நண்பன்...
சென்னை நகரில் அடுத்த இரண்டாவது வெளியீடாக கிட்டத்தட்ட 15 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்ட மீனவ நண்பன் குறிப்பாக முருகன், சீனிவாசா,கபாலி, ராம், நேஷனல், லஷ்மி, வீனஸ் திரையரங்குகளில் மூன்று வாரங்களை கடந்து அவ்வாண்டில் மிகப்பெரிய வசூலை ஏற்படுத்தி 23 லட்ச ரூபாயை ஆறு மாத காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்த காவியம் மீனவ நண்பன் ஆகும்.
மதுரை சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 140 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து 117 நாட்கள் ஓடி 4 லட்சத்து 46 ஆயிரத்து வசூலில் கொடுத்த வெற்றிகரமான காவியம் மீனவ நண்பன் ஆகும்.
மற்றும் கணேசா சிடி சினிமா வெள்ளை கண்ணு திரையரங்குகளில் இரண்டு மூன்று வாரங்கள் திரையிடப்பட்டு அங்கும் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த காவியம் மீனவ நண்பன் திரைப்படம் ஆகும்..........
orodizli
1st September 2020, 11:28 AM
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல், குமாரபாளையம் ,கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் திரையிடப்பட்ட திரைக்காவியம் மீனவ நண்பன் ஆகும். மீனவ நண்பன் திரைக்காவியம் 50 நாட்களில் மிகப்பெரிய சாதனையை இவ்வரங்கில் நிகழ்த்திக் காட்டி சரித்திரம் படைத்தது.*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல் , இதயக்கனி திரைப்படத்திற்குப் பின் மீனவ நண்பன் திரைக்காவியம்*
6 திரையரங்கிலும் 6 ஊர்களிலும் 50 நாட்களை கடந்து வெற்றி கொண்டு சாதனையாகும்.
கோவை மாநகரில் ராயல் திரையரங்கில் 68 நாட்களில்*
3 லட்சத்து 65 ஆயிரத்து வசூலாக கொடுத்து தொடர்ந்து சண்முகா திரையரங்கில் 4 வாரங்கள் ஓடி 4லட்சத்து 40 ஆயிரத்தை வசூலாக பெற்று மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திய காவியம் மீனவ நண்பன் ஆகும் .
அதே போல இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம் ராஜா, முருகன் இரண்டு திரையில்*
திரையிடப்பட்டு 102 நாட்கள்*
ஓடி 4 லட்சத்து 15 ஆயிரத்தை வசூலித்து சாதனை ஏற்படுத்தியது..*
ஈரோடு மாநகரில் மீனவ நண்பன் திரைப்படம் 78 நாட்கள் ஓடி*
3 லட்சத்து 15 ஆயிரத்தை வசூலாக கொடுத்து சாதனையை ஏற்படுத்தியது. மக்கள் திலகத்தின் இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 68 நாட்கள் ஓடி*
2 லட்சத்து 95 ஆயிரத்து வசூலைக் கொடுத்து மிகப்பெரிய சாதனையை தக்க வைத்து, தங்கப்பதக்கம் உட்பட மற்ற அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து முன்னணி... நவரத்தினம் 42 நாட்களில் 1,,85,304.00 வசூலை பெற்றது..........சேலம் நவரத்தினம்.....
47 நாள் பெற்ற வசூல் மட்டும்.
2,17,850.81ஆகும்.
ஒடி முடிய அல்ல....
6 காட்சி... 5 காட்சி திரையிடப்பட்டது.
இது தான் சரியான வசூல்..............
orodizli
1st September 2020, 11:30 AM
மதுரையில் "மீனவ நண்பன்"*
"இன்று போல் என்றும் வாழ்க*"
100 நாட்களை கடந்து வெற்றி கொண்டது.
மீனவ நண்பன் திரைப்படம் முதல்வெளியீட்டில் ஒரு கோடியே 15 லட்சத்து 5 மாத காலத்தில் வசூலாக கொடுத்தது.*
முதல் வெளியீட்டில் 44 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 36 திரையரங்குகளில்*
50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டது, அதேபோல இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 42 திரையரங்குகளில் வெளிவந்து*
26 திரையரங்குகளில் 50 நாளை கடந்து சரித்திரம் படைத்தது.*
ஆனால் தீபம் திரைப்படம் 12 தியேட்டர்களிலும், அண்ணன் ஒரு கோயில் திரைப்படம் 15 தியேட்டர்களில் மட்டுமே 50 நாட்களை கடந்தது.*
அண்ணன் ஒரு கோயில் திரைப்படம் மீனவ நண்பன் திரைப்படம் பெற்ற வசூலில் பாதி கூட பெறாமல் 9 தியேட்டரில் ஓட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1977ல் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் 3 வெளிவந்தது. முதலில் நவரத்தினம் அடுத்து இன்று போல் என்றும் வாழ்க அதன்பின் மீனவ நண்பன் 14 .8.1977 ல் வெளியான மீனவ நண்பன் திரைப்படத்திற்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்* முதல்வராக பதவியேற்ற பின் புதிய திரைப்படங்கள் அவ்வாண்டில் வெளிவரவில்லை தீபாவளிக்கு வெளிவந்த அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தை சாந்தி கிரௌன் புவனேஸ்வரி மற்றும் சில ஊர்களில் நூறு நாட்களை குறைவான வசூலில் ஒட்ட செய்த அதிசயங்கள் அரங்கேறியது.
தொடரும் சாதனைகள் வசூல்கள்.............
orodizli
1st September 2020, 11:33 AM
கோவை மாவட்டத்தில் கோவை ,ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, உடுமலை ,தாராபுரம், நகரங்களில் 50 நாட்கள் கடந்து சாதனை ஏற்படுத்தியது மீனவநண்பன் திரைக்காவியம் ஆகும். கோவை ஈரோடு மட்டுமே அ.ஒ.கோவில்
50 நாள் ஆகும்.
வட ஆற்காடு ,தென்னாற்காடு மாவட்டங்களில் இன்று போல் என்றும் வாழ்க மீனவ நண்பன் மாபெரும் புரட்சியை, எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவதாக நவரத்தினம் திரைப்படமும் பல இடங்களில் 5 வாரம் ஆறு வாரங்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை படைத்துள்ளது.*
மீனவ நண்பன் திரைக்காவியம்*
13 திரையரங்குகளில் திரையிடப்பட்டு* சாதனையை ஏற்படுத்தியது.*
ஆம்பூர் மாநகரமே கண்டிராத வகையில் 50 நாட்களை கடந்து வெற்றி படைத்தது.
வசூல் : 1,10,457.61 ஆகும்.
வேலூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருப்பத்தூர், ஆம்பூர், விழுப்புரம், விருத்தாச்சலம்,
குடியாத்தம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தின்டிவனம் , தாம்பரம், ஆகிய நகரங்களில் இக்காவியம் வெற்றியை தந்தது.
மதுரை மாவட்டத்தில் மக்கள் திலகத்தின் மீனவ நண்பன்*
இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம் திரைப்படங்கள் சரித்திர சாதனைகள் படைத்துள்ளது.**
மீனவ நண்பன் திண்டுக்கல், விருதுநகர், பழனி, காரைக்குடி, ராம்நாட் , ராஜபாளையம், தேனி* பகுதிகளில் 50 நாட்களை கடந்து சாதனை.**
இன்று போல் என்றும் வாழ்க*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்துள்ளது. திண்டுக்கல், விருதுநகர் ,பழனி, காரைக்குடி, ஆகும்..........
fidowag
1st September 2020, 01:46 PM
குமுதம் வார இதழ் -09/09/20
-----------------------------------------------
மகனே, மனோகரா -
சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆருக்கு 40 வயது .தமிழ் சினிமா என்ற பத்திரிகையின் ஆசிரியர் கரீம் என்பவர் ,தன பத்திரிகையில்*எம்.ஜி.ஆரை கிழட்டு நடிகர் என்று குறிப்பிட்டார் .
அதை படித்த எம்.ஜி.ஆர். கோபப்படவில்லை .* மாறாக, கரீம் எழுதியதில் உண்மை உள்ளது .* மனோகரா நாடகத்தில் பம்மல் சம்பந்த முதலியார் நடிப்பார் .அந்த நாடகத்தில் நானும் சிறிய வேடத்தில் நடிப்பேன் .* ஒரு* காட்சியில் அம்மா .... இந்த* 16 வயது பாலகனைப் போருக்கு அனுப்புங்கள். வென்று வருகிறேன் என்பார் .* அப்போது அவருக்கு வயது* *40. துணிந்து பொய் சொல்கிறாரே என்று நினைப்பேன் .* அதை மக்கள் ஏற்றுக் கொண்டனர் .* அதுவேதான் என் விஷயத்திலும் . அதனால் கரீம் கவலைப்பட வேண்டாம் என்றார் .
எஸ்.எம்.உமர் எழுதிய கலை உலக சக்கரவர்த்திகள் நூலில் இருந்து*
orodizli
2nd September 2020, 11:34 AM
ஸ்ரீதர் ஒரு மிகச்சிறந்த இயக்குநர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
"யானைக்கும் அடி சறுக்கும்" என்பதை போல சிவாஜியிடம் சிக்கி சின்னாபின்னமாக ஆகி விட்டார்.
ஸ்ரீதர் ஒரு யதார்த்த இயக்குநர்.
அவருடைய படத்துக்கு ஒரு இயல்பான நடிகர்தான் அவருடைய எண்ணத்தை போல நடிப்பை வெளிப்படுத்த முடியும். சிவாஜி ஒரு மிகை நடிகர். அவர் எப்படி ஸ்ரீதர் படத்துக்கு பொருந்த முடியும்.
அதேபோல் பாலசந்தரும் சிவாஜியை வைத்து தோல்வி கண்டவர்தான். எவ்வளவு பெரிய இமயத்தையும் சாய்த்து விடும் ஆற்றல் பெற்றவர் சிவாஜி. "சந்திரலேகா" "ஒளவையார்"
"வஞ்சிக்கோட்டை வாலிபன்" "வாழ்க்கைப் படகு" & "ஒளிவிளக்கு" போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த ஜெமினி பட நிறுவனமே "விளையாட்டு பிள்ளை" என்ற கலர் படத்தை தயாரித்து நிலை குலைந்து போனார்கள். அவர்கள் மட்டுமா? கோமதிசங்கர் பிக்சர்ஸ், ஜேயார் மூவிஸ், v k ராமசாமி, தேங்காய் சீனிவாசன் இது போன்ற எத்தனையோ கம்பெனிகள் முடிவில்
ஒன்றும் இல்லாமல் போய் விட்டதே?
ஒரு காலத்தில் தமிழ்ப்படவுலகின் ஜாம்பவான்கள் என்றழைக்கப்பட்ட பீம்சிங், பந்துலு, a p நாகராஜன், ஸ்ரீதர், p.மாதவன், k.விஜயன் அத்தனை பேரையும் நிர்மூலம் ஆக்கிய பெருமை சிவாஜியையே சாரும். "முடி சூடிய மன்னரும் முடிவில் பிடிசாம்பலாவார்"
என்று "அரிச்சந்திரா"வில் பேசிய வசனம் சிவாஜிக்கு கனகச்சிதமாக
பொருந்தி வரும். அனைவரையும் முடித்து விட்டு தன்னை படமெடுக்க ஆள் இல்லாததால் அவரும் ஓய்ந்து போனார்.
லாபமில்லாமலா இத்தனை படம் அவரை வைத்து எடுத்தார்கள் என்று ஒருவர் கேட்டிருந்தார். பத்மினி பிக்சர்ஸ் 15 படங் களுக்கு மேலே சிவாஜியை வைத்து எடுத்து முடிவில் கடனாளி ஆனார்களே? இது போல்தான் எத்தனை படங்கள் எடுத்தாலும் முடிவு நம்மவர் கையில்தான் என்பதை காலம் கடந்து உணர்ந்து என்ன பயன்?.
எம்ஜிஆரை வைத்து படமெடுத்தவர்கள் இறுதிவரை மீண்டும் மீண்டும் படம் எடுக்க துடித்தார்கள். எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகும் போது 10 க்கும் மேற்பட்ட படங்கள் அவர் கை வசம் இருந்தது. ஆனால் இங்கோ பிரபுவை புக் பண்ண வந்தவர்கள்கூட எங்கே சிவாஜி தன்னையும் போட சொல்லி வற்புறுத்துவாரோ என்ற பயத்தில் இருந்ததாக பல தயாரிப்பாளர்கள்
சொன்னது பல பத்திரிகைகளில் வந்த விஷயம்தான்.
மீண்டும் ஸ்ரீதரை கவனிப்போம். "நெஞ்சிருக்கும் வரை" மேக்கப் இல்லாமல் என்ற புதுமையுடன் சிவாஜியை வைத்து எடுத்த படம்.
இருவரும் இணைந்ததால் மாபெரும் வெற்றி என்று நம்பியிருந்த ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த படம். அதோடு விட்டிருந்தால் கூட ஸ்ரீதர் பிழைத்திருப்பார். "காதலிக்க நேரமில்லை" யில் நடித்த பெரும்பாலான நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த "ஊட்டி வரை உறவு". காமெடியால் ஓரளவு ஓடினாலும் தயாரிப்பாளரின் கையை கடித்த கதையை சிவாஜியே கூறியிருக்கிறார்.
அது தயாரிப்பு 'கோவை செழியன்'. அதனாலும் ஸ்ரீதருக்கு எந்த வித பாதிப்புமில்லை.
அடுத்து அவர் எடுத்த "சிவந்த மண்" அவர் தலையில் பேரிடியை இறக்கிய படம். கண்மண் தெரியாமல் கணேசனை நம்பி கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த படத்தை கண்டு சினிமா உலகமே அதிர்ச்சி அடைந்தாலும் ஸ்ரீதர் எந்த கணக்கும் பார்க்காமலே தாராளமாக செலவு செய்தார். தன்மீது அவ்வளவு நம்பிக்கை வைத்த போதிலும் அங்கேயும் விளையாடி விட்டார் சிவாஜி
சிவாஜி ரசிகர்கள் அப்போது பெருமையாக "சிவந்த மண்ணு"க்கு இப்போதே 1 1/2 கோடி செலவு என்று பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால் படம் படுதோல்வி அடைந்த பின்பு இந்தி படத்துக்குத்தான் அதிக செலவு, "சிவந்த மண்" தோல்வியில்லை என்று
சப்பை கட்டு கட்டுகின்றனர். சரி அதை விடுவோம். எம்ஜிஆருக்கு 'பாரத்' பட்டம் கிடைத்ததை பாராட்டும் போது ஸ்ரீதர் அளித்த பேட்டியை பாருங்கள்.
எம்ஜிஆரை வைத்து 'உரிமைக்குரல்' தயாரிக்கும் முன்பே
எம்ஜிஆர் தான் அகில இந்தியாவிலும் சிறந்த நடிகர் என்றும் உலக பெரும் விருதுக்கும் தகுதியானவர் என்றும் உண்மையை ஒப்புக்கொண்டு அவரை பாராட்டியிருக்கிறார். எம்ஜிஆரின் படங்கள் உலகம் முழுவதும் பெரிய அளவில் வெற்றி பெற்று ஓடுவதே அதற்கு சாட்சி என்றும் எடுத்துரைக்கின்றார்.
'சிவந்த மண்ணி'ல் சிக்காமல் 'அன்று சிந்திய ரத்தத்தை' எடுத்திருந்தால் அலைகடலின் சிறிய தோணி பெரிய கப்பலாக மாற இருந்த வாய்ப்பை இழந்ததோடு இருக்கிற சிறிய தோணியும் நடுக்கடலில் தத்தளிக்க
விட்டு விட்டார்.
எம்ஜிஆருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை "அன்று சிந்திய ரத்தத்தி"ன் படப்பிடிப்பு தளத்திலே தான் உணர்ந்து கொண்டதாக அவர் கூறியிருந்தார். எம்ஜிஆரிடம் மனம் திறந்து பேசி படத்தை கலரில் எடுத்திருந்தால் அந்தப்படம் நல்ல முறையில் வளர்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எம்ஜிஆர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தும் படம் மேற்கொண்டு வளராமல் போனது ஸ்ரீதரின் துரதிர்ஷ்டமே..........
fidowag
2nd September 2020, 03:29 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*13/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் நேர்ந்த துன்பங்கள், பிரச்னைகள்,சிக்கல்கள் ஆகியவற்றை களைந்து ,வாழும் காலத்தில் வெற்றி படிக்கட்டுகளை தானே* வடிவமைத்த சிற்பியாக திகழ்ந்தவர் .என்பதற்கு வேறு எங்கும் உதாரணத்தை தேடவேண்டாம் . இந்த உலகத்திலே தேடினாலும் கிடைக்காத அற்புதமான* ஒரு அரிய பொக்கிஷமாக எம்.ஜி.ஆர். எனும் தனி நபர் வாழ்க்கை உள்ளது .அந்த வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்வதற்கான பாடங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன**
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது ,ஜப்பானில் இருந்து வந்த டாக்டர் கானு* என்பவர் தகுந்த சிகிச்சை அளித்து ,அவர் குணமடைய பல யோசனைகள், கருத்துக்கள் தெரிவித்து இருந்தார் .எம்.ஜி.ஆர். பரிபூரண குணமடைய டாக்டர் கானுவின் சிகிச்சை முறைகள் பெரிதும் பலனளித்தன.அதற்கு நன்றி செலுத்தும் வகையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது .அப்போது தங்கத்தில் யானை பொம்மை பரிசு அளிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார் .அதை வடிவமைத்த பிறகு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு வந்தபோது , யானையின் துதிக்கையும்,வாயும் அளவில் ஒரே வடிவத்தில் உள்ளது .அதை மாற்றி அமைக்க சொல்லி உத்தரவிட்டார் .பரிசு பொருளாக இருந்தாலும் அதன் வேலைப்பாடில் உள்ள குறைகளை வெகு நுட்பமாக கண்டுபிடித்து அதை சரிசெய்ய சொன்னார் .அதன்பின் அந்த தங்கயானையை* டாக்டர் கானுவுக்கு பரிசளித்தார் . எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவற்றை நுட்பமாக கவனிப்பது, அற்புதமாக கண்காணிப்பது என்று எம்.ஜி.ஆருக்கு சிந்தனை இருந்ததன் காரணமாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வெற்றிக்கான பாதையை கண்டறிய முடிந்தது என்பதற்க்கு சிறந்த ஒரு சான்றுதான் இந்த தங்கையானை பரிசளிப்பு சம்பவம் .
1974ல் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது .அப்போது நடிகை லதாவை அழைத்து* நீ கான்வென்டில் ஆங்கிலத்தில் படித்ததனால், நான் தமிழில் பேசும்போது மொழிபெயர்த்து சொல்லவேண்டும்*என்று கூறி லண்டனுக்கு உடன் அழைத்து சென்றார்* அங்கு ஒரு கூட்டத்தில் பேசும்போது, அன்புள்ள தாய்மார்களே, பெரியோர்களே, என் ரத்தத்தின் ரத்தமே என்று பேசும்போது* ஆங்கிலத்தில் நடிகை லதா ரத்தத்தின் ரத்தங்களே என்பதற்கு சகோதர,சகோதரிகளே என்று மொழி பெயர்த்தார்.அதை கவனித்த* எம்.ஜி.ஆர்.* .உடனே . குறுக்கிட்டு,அது பொருத்தமான மொழி பெயர்ப்பு அல்ல ஒரு கணம் யோசித்து பொருத்தமாக மொழி பெயர்க்கசொன்னதற்கு பிறகு நடிகை லதா தவறை உணர்ந்து சரியாக பேசினார் .அதாவது எம்.ஜி.ஆர். ஆங்கிலம் முறையாக பயிலாவிட்டாலும் .ஓரளவு எளிமையாக ஆங்கிலம் பேசும் அளவிற்கு ஆசிரியர் வைத்து கற்று கொண்டதோடு ,மற்றவர்கள் தவறாக பேசினால் அதை திருத்தும் அளவிற்கு ஆங்கிலத்தில் அவருக்கு புலமை இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம் .
1956ல் ஒரிசாவில் புயல் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன .அந்த நேரத்தில் சென்னையில் படித்து கொண்டிருந்த ஒரிசா மாணவர்கள் ஒரு இந்தி திரைப்படத்தை வெளியிட்டு ,அத்துடன் ஒரு நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர். தலைமையில் நடத்தினால் நல்ல வசூல் கிடைக்கும்*அந்த நிதியை ஒரிசாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்று கருதினர் . அதன்படி சென்னை அசோக் (சிவசக்தி ) தியேட்டரில் சிறப்பு காலை காட்சி எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற முடிவு செய்து சம்மதம் பெறபட்டது ,அந்த கால கட்டத்தில் தமிழ் நடிகை வைஜயந்தி மாலாவும் நடிகர்*திலீப்குமாரும் நடித்து நியூ டெல்லி என்கிற இந்தி படம் சில தியேட்டர்களில் வெளியாகி இருந்தது .அதில் ஒரு காட்சியில் தமிழன் தலையில் செருப்பு வைத்தபடி கதாநாயகன் ஆடுவது, அருகில் கதாநாயகி இருப்பது போல் ஒரு காட்சி இருந்தது .இந்த காட்சி பற்றி பரபரப்பாக அப்போது பேசப்பட்டது .விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். தர்மசங்கடத்திற்கு உள்ளானார் . தி.மு.க. இந்தி எதிர்ப்பு பற்றி முழங்கி வந்த நேரம் .ஆனால் எம்.ஜி.ஆர். இந்தி மொழிக்கு எதிரானவரல்ல .இந்தி மொழியை திணிப்பதைத்தான் எதிர்த்தார் அந்த குறிப்பிட்ட காட்சி பற்றி விவரம் அறிந்த*. மாணவர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டது .எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிக்கு வருவது சந்தேகம் என்று நினைத்தனர் .*ஆனால் எம்.ஜி.ஆர்.கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்திற்கு நடுவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . இடைவேளையின்போது எம்.ஜி.ஆர். பேசியதாவது ,தமிழ்நாட்டில் ஒரு இந்தி படம் திரையிடப்பட்டுள்ளது .அதில் தமிழன் ஒருவர் தலையில் செருப்பு வைத்து கதாநாயகன் ஆடும் காட்சி கண்டு நான் மிகவும் வேதனைப்பட்டேன். மனம் வருந்தினேன் .இதுபற்றி மாணவர்கள் ஏன் முன்கூட்டி எனக்கு தகவல் அளிக்கவில்லை .மாணவர்களின் பரந்த மனப்பான்மை, மக்களுக்கு* *உதவும் திட்டம் என்று கருதிதான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் .இருப்பினும் என்னுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். மாணவர்கள் என்னை நாளை வீட்டில் வந்து சந்தியுங்கள் என்று கூறி புறப்பட்டார் .* மறுநாள் மாணவர்கள் சென்றதும் அவர்களை வரவேற்ற எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் வெளியிடும்போது அதன் கருத்துக்கள், காட்சிகள் மக்களால் வரவேற்கப்பட வேண்டுமே தவிர , அவர்கள் மனம் புண்படும்படியோ, வேதனைப்படும் படியோ இருக்க கூடாது .அந்த காட்சி எனது மனதை மிகவும் பாதித்தது .நான் சார்ந்த தி மு.க. கட்சியில் கூட என்னை பற்றி தவறாக நினைக்கும் வாய்ப்பு உள்ளது .இந்த நிகழ்ச்சியை நான் தவிர்த்து இருக்கலாம் என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம் . ஆனால் நான் வந்ததற்கு காரணம் ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் உதவ ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அதற்கு என்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் .நான் ஒருவேளை வராமலிருந்தால் பகிரங்கமாக என் எதிர்ப்பை தெரிவிக்க முடியாமல் போயிருக்கும் . அந்த எதிர்ப்பின் வலிமையை மற்றவர்களும் உணராமல் போயிருப்பார்கள் . அதுமட்டுமல்ல அங்கு நிதி அளிக்க முன்வராததற்கு இதுவும் ஒரு* காரணம் .மேலும் நான் நிதி அங்கு அளித்து இருந்தால் ,கணிசமாக நிதி சேர்ந்துவிட்டது என்று எண்ணி நிதி தரக்கூடியவர்கள் தராமல் போக வாய்ப்புள்ளது . எனவேதான் என் எதிர்ப்பையும், கருத்தையும் தனிப்பட்ட முறையில் உங்களிடம் தெரிவிப்பதோடு ,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரிசா மாநில மக்களுக்கு உதவ நீங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு என்னால் முடிந்த அளவில் உதவுகிறேன் என்று கூறி 1956ல் ரூ.10,000/- நிதி அளித்து மாணவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .பின்பு அவர்களை நன்கு உபசரித்து அனுப்பினார் .
எம்.ஜி.ஆர். அவர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர் அல்ல.இந்தி மொழி திணிப்பைத்தான் எதிர்த்தார் என்பதற்கு உதாரணம் . நவரத்தினம் படத்தில்*ஆரம்பத்தில் வரும் ஒரு இந்தி பாடலுக்கு நடிகை ஜரினா* வகாப்புடன் நடித்திருப்பார் .அந்த காலத்தில் ஒரு கட்டத்தில் கச்சா பிலிம் ரோல் தட்டுப்பாடு ஏற்படுகிறது . பிலிம்ரோல் வாங்கும் இடத்தில உள்ள ஒரு அதிகாரி, நல்ல உடற்கட்டு, முகவெட்டு உள்ளவர் .அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை.*எம்.ஜி.ஆரின் பட தயாரிப்பாளர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு ஏற்படுகிறது .தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் அவரை பற்றி சொல்லி ,இவரை நாம் பயன்படுத்தி கொண்டால் கச்சா பிலிம் ரோல் கொஞ்சம் தாராளமாக கிடைக்கும் என்று சொல்கிறார் .எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ஏனென்றால் இந்த திரைப்பட தொழிலையே நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் உழைத்து* பிழைத்து* வருகிறார்கள் . ஆனால் அவருக்கோ நிலைமை அப்படியில்லை.*சர்க்கார் சம்பளம் வாங்குகிறார் . 60 வயதுக்கு பின்பும் அவருக்கு ஒய்வு ஊதியம் கிடைக்கும் .திரைப்பட தொழிலாளர்கள் நிலை அப்படியில்லை. எனவே அப்படிப்பட்ட நிரந்தர வருவாய் பெற்று வரும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தாதீர்கள்.அத்துடன் இங்குள்ள தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பது போல் ஆகிவிடும் அந்த எண்ணத்தை அடியோடு விட்டுவிடுங்கள் என்று அறிவுரை கூறினார் .
மாற்றாருடைய பசி உணர்வும், மாற்றார் கேட்காமலேயே உதவும் மனப்பான்மை*கொண்ட மாண்புடையவர் எம்.ஜி.ஆர். அந்த மாண்புதான் மறைந்தும் மறையாத நிலையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது .* அந்த மகானுடைய*வாழ்க்கை பாடங்கள், படிப்பினைகள் நமக்கு வழிகாட்டி கொண்டிருக்கும் .அதை தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*
நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பான காட்சிகள்/பாடல்கள் விவரம்*
------------------------------------------------------------------------------------------
1.மஞ்சள் முகமே வருக* - வேட்டைக்காரன்*
2.நேரம் நல்ல நேரம் - தனிப்பிறவி*
3.ஆகட்டுண்டா தம்பி ராஜா ,நடராஜா - நல்ல நேரம்*
4.பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ -சிரித்து வாழ வேண்டும்*
5.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க .
6.தமிழில் அது ஒரு இனிய கலை - சங்கே முழங்கு*
7.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல்- நேற்று இன்று நாளை*
8.லடுக்கேசீ மிலி லடுக்கி-இந்தி பாடல் -நவரத்தினம்*
9.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக் காரன்*
10.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*
orodizli
3rd September 2020, 07:51 AM
1963 ஆம் ஆண்டு மக்கள் திலகம் திரையில் வலம் வந்த திரைப்படங்கள் ஒன்பது ஆகும்.அவ்வாண்டில் அதிக வசூலை படைத்து தமிழகமெங்கும் பெரிய நகரம் முதல் சிறிய கிராமங்கள் வரை மிகப்பெரிய வெற்றியை உருவாக்கிய முதல் திரைக்காவியம் அதிக வசூலை படைத்த வெற்றிக் காவியம் பெரிய இடத்துப் பெண் திரைப்படமாகும்.
பெரிய இடத்துப் பெண் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திக் கொடுத்து அவ்வாண்டில் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் கொடுத்தது.
1963 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் 9 திரைப்படங்களும் மாபெரும் வரலாற்றைப் படைத்தது.
பெரிய இடத்துப் பெண்,
கொடுத்து வைத்தவள், நீதிக்குபின் பாசம், பரிசு, தர்மம் தலைகாக்கும், பணத்தோட்டம், ஆனந்த ஜோதி, காஞ்சித்தலைவன், கலையரசி திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்தது.
பெரிய இடத்துப் பெண் திரைப்படம் சென்னையில் சித்ரா,கிரவுன் திரையரங்கில் 100 நாட்களும் மதுரை திருச்சி சேலம் கோவை யில் 92 நாட்களும் ஓடியது.
33 திரையரங்குகளில் 50 நாளை வெற்றி கொண்ட ஒரே திரைப்படமாக
பெரிய இடத்துப்பெண் திகழ்ந்தது.1963 ல் அதிக வசூலை ஏற்படுத்திய ஒரேபடமாகும்.
வித்தியாசமான கதையமைப்பில் இரு வேடங்கள் தாங்கிய கதாபாத்திரத்தில் முருகப்பன் அழகப்பன் என்ற மகத்தான தோற்றத்தில்.... பாடல்கள், சிறப்பான கதை அமைப்புடன் கூடிய காவியமாக வெளிவந்தது.
கிராமத்திலும் நகரத்திலும் வெற்றியை பதித்த திரைக்காவியம் பெரிய இடத்துப் பெண்.
சென்ற ஆண்டு வரை இக்காவியம் ஓய்வில்லாது திரையில் வெற்றிக் கொடியை நாட்டி வந்துள்ளது சுமார் 57 ஆண்டுகள் கழித்தும் இத்திரைப்படம் இன்றும் வெள்ளித்திரையில் உலா வருவது சிறப்பாகும்.
தொடரும்.............
orodizli
3rd September 2020, 07:51 AM
சிவாஜி கணேசன் ஸ்ரீதரை வைத்து சிவந்த மண் படம் எடுத்து தர்த்தி இந்திப் படத்தையும் சேர்த்து எடுத்து தயாரிப்பு செலவுக்கு ஏற்ற பணம் வசூலாகவில்லை. அவளுக்கென்று ஒரு மனம் படமும் தோல்வி. சிவாஜி கணேசனை வைத்து ஹீரோ 72 என்று ஆரம்பித்தார். சிவாஜி கணேசன் ரசிகர்கள் 1972 என்றால் துள்ளுவார்கள். அத்திப்பூத்தாற்போல அந்த ஒரு ஆண்டுதான் அவர்களுக்கு அதிக படங்கள் வெற்றி. ஆனாலும், பாரத் விருது, திமுகவில் இருந்து நீக்கம், அதிமுக உதயம், தமிழகம் முழுவதும் ஆதரவு அலை, புரட்சி நடிகர் புரட்சித் தலைவர் ஆனது என்று அந்த ஆண்டு உண்மையான ஹீரோ 72 ஆக மக்கள் திலகம்தான் வெற்றிபெற்றார். சிவாஜி கணேசன் நடித்த ஹீரோ 72 படமும் பணப் பிரச்சினையால் பாதியில் நின்றது. அதை முடித்துக் கொடுக்க
ஸ்ரீதருக்கு சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும் ஸ்ரீதர் கால்ஷீட் கேட்டதற்கு சிவாஜி கணேசன் தம்பி பிடிகொடுக்காமல் இழுத்தடித்து, (சிவாஜி கணேசனின் கால்ஷீட்களை கவனித்து வந்த அவரது தம்பி சண்முகம் அண்ணனை விட கஞ்சன். பணம் வந்தால்தான் சிவாஜியை நடிக்க போகலாம் என்று சொல்வார்) சிவாஜி கணேசனும் சிங்கப்பூர் சென்று விட்டார். இதை ஸ்ரீதரே சொல்லி இருக்கிறார். அந்த நிலையில்தான் சிவாஜி கணேசனால் கைவிடப்பட்டு கடனில் இருந்த ஸ்ரீதருக்கு உரிமைக்குரல் படம் மூலம் மக்கள் திலகம் மறுவாழ்வு கொடுத்தார். ஸ்ரீதர் படங்களிலேயே அதிக வசூல் அள்ளிக் கொடுத்த படம் உரிமைக்குரல்.
உரிமைக்குரல் அடைந்த பிரம்மாண்ட வெற்றியால் சிவாஜி கணேசன் பொறாமைப்பட்டு ஸ்ரீதருக்கு ஹீரோ 72 படத்தை ஏனோதானோ என்று முடித்துக் கொடுத்தார். அதுதான் வைரநெஞ்சம் என்று வெளியானது. எந்த அளவுக்கு சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு இல்லை என்றால் ஒரு இடத்தில் சிவாஜி கணேசன் டப்பிங் பேசவே இல்லை. அந்தப்படத்தில் பாலாஜியின் பிறந்தநாள் அன்று ஷோபா ராமநாதனாக வரும் சிஐடி சகுந்தலாவுடன் சிவாஜி கணேசன் கைகோர்த்து ஆடியபடி பேசுவார். அப்போது சிவாஜி கணேசன் குரலுக்கு பதிலாக ரேடியோ விளம்பரங்களில் பேசியவர் (அவர் பெயர் சுந்தர் என்று நினைவு) பேசுவார். ஒரு தமிழ் படத்தில் சிவாஜி கணேசனுக்கு தமிழ் வசனத்தில் டப்பிங் குரல் கொடுக்கப்பட்ட ஒரே படம் வைரநெஞ்சம். இதை விவரம் தெரிந்த எந்த சிவாஜி கணேசன் ரசிகரும் மறுக்கமாட்டார்கள். அந்த அளவு பொறாமையால் சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் டப்பிங் கொடுக்கும் முன்பே ஸ்ரீதர் அவசரப்பட்டு வெளியிட்டார் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் சப்பைகட்டு கட்டி பொய்சொல்வார்கள். 72ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 75ல் வெளியானது. இதுதான் அவசரமா? கடைசியில் வைரநெஞ்சம் படமும் டாக்டர் சிவா படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டும் டப்பாவுக்குள் போய் நஷ்டம் ஏற்படுத்தியது தனிக்கதை. இதுவும் ஒரே நாளில் 2 படம் வெளியாகி சிவாஜி கணேசன் ஏற்படுத்திய சாதனை..........
orodizli
3rd September 2020, 07:52 AM
புரட்சித் தலைவரை வைத்து அன்று சிந்திய ரத்தம் படம் கறுப்பு வெள்ளையில் ஸ்ரீதர் எடுத்தார். அதேநேரம் ரவிசந்திரன் என்ற புதுமுகம் நட்சத்திர அந்தஸ்து இல்லாத முத்துராமனை வைத்து காதலிக்க நேரமில்லை படத்தை கலரில் எடுத்தார். இது சம்பந்தமாக விளம்பரமும் வந்தது. இதுபற்றி ஸ்ரீதர் சொன்னது இதுதான்: மக்கள் திலகத்திடம் யாரோ தவறாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. அவருக்கு அவரே விளம்பரம் என்று நினைத்தேன். அதனால் அவர் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்தேன். ஒரு சில காட்சிகள் எடுத்த பிறகு மீண்டும் படப்பிடிப்புக்காக அவரை பார்க்கப் போனேன். ஆனால், அவர் அப்போது என்னிடம் ஒரு பெரிய பட்டியலை காண்பித்து இவ்வளவு படக்கம்பெனிகளுக்கு நடித்து தர வேண்டியிருக்கிறது என்றார். ஆமாம், இவ்வளவு கம்பெனிகள் இருக்கும்போது எனக்கு நீங்கள் நடிப்பது கஷ்டம்தான் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவரை வைத்து கறுப்பு வெள்ளையில் எடுப்பதை அவரிடம் விளக்கமாக சொல்லியிருந்தால் அவரும் புரிந்து கொண்டிருப்பார். அவரிடம் விளக்காததை நினைத்து வருந்தினேன்’..
என்று ஸ்ரீதர் தனது அனுபவத்தை சொல்லியிருந்தார். பிறகும் ஸ்ரீதர் கடனில் சிக்கியபோது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மக்கள் திலகம் அவருக்கு உரிமைக் குரல் படத்தை செய்து கொடுத்து மறுவாழ்வு அளித்தார். அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக ஸ்ரீதரிடம் அட்வான்ஸாக வாங்கிய 25 ஆயிரம் ரூபாயை உரிமைக்குரல் பட சம்பளத்தில் மக்கள் திலகம் பெருந்தன்மையைாக கழித்துக் கொண்டார் என்றும் ஸ்ரீதர் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் ஸ்ரீதருக்கு ஒத்துழைக்காதது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். ...........
orodizli
3rd September 2020, 07:52 AM
வீடியோவில் எம்.ஜி.ஆர்., வரலாறு!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்க்கை வரலாற்றை, வீடியோ ஆவணமாக மாற்றியுள்ளார்,நடிகரும், தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர். ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்., என்ற பெயரில், மொத்தம், 25 வீடியோக்கள், இதில் இடம் பெற்றுள்ளன.இது குறித்து, அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., மீது, என் தந்தை கொண்ட அளவு கடந்த பற்று காரணமாக, அவரது படங்களில், உடை அலங்கார நிபுணராக பணியாற்றினார்.
எனக்கு, எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், அப்பா மூலமாக, அவர் குறித்து கேட்டபடியே, எம்.ஜி.ஆர்., ரசிகனாகவே வளர்ந்தேன்.வரும் இளைய தலைமுறைக்கு, இதை தெரியப்படுத்தும் விதமாக, எம்.ஜி.ஆர்., வரலாற்றை வீடியோக்களாக உருவாக்கி உள்ளேன். இந்த கொரோனா காலத்தில், மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி, தன்னம்பிக்கை அளிப்பவையாக, இந்த வீடியோக்கள் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்........
எம்.ஜி.ஆர் வாழ்க்கை
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை 25 வீடியோக்களில் வெளியிட்டுள்ளார், பஷீர். எம்.ஜி.ஆர் பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்' என்ற தலைப்பில் 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில் இவர் பதிவேற்றியுள்ளார்.
எட்டாவது வள்ளல்
பத்திரிகையாளர் மணவை பொன்.மாணிக்கம் எழுதிய எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புகழ்மன செம்மல் எம்.ஜி.ஆர் ஆகிய புத்தகங்களில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை படித்து நெகிழ்ந்த பஷீர், அவற்றை வீடியோக்களாக உருவாக்கி இருக்கிறார்.
உடையலங்கார நிபுணர்
இதுபற்றி ஜெ.எம்.பஷீர், கூறும்போது, 'என் தந்தை ஜமால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்று காரணமாக, அவரது படங்களில் உடையலங்கார நிபுணராக பணியாற்றினார். எனக்கு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவிலையே தவிர, அப்பா மூலமாக அரைப்பற்றி கேட்டபடி எம்.ஜி.ஆர் ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அவரை பார்த்துதான் மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் வளர்த்துக் கொண்டேன்.
தன்னம்பிக்கை
அந்த புத்தகங்களை படித்த போது தெரிந்து கொண்ட விஷயங்கள் மற்றும் எம்ஜிஆர் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்ட விஷயங்களை வைத்து வீடியோவாக உருவாக்கி இருக்கிறேன். இந்த வீடியோக்களை சுமார் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை அளிப்பவையாக இந்த வீடியோக்கள் இருக்கும் என்கிறார் பஷீர்.........
orodizli
3rd September 2020, 12:22 PM
அடுத்து நாம் சிவாஜி பட வசூலில் உள்ள தில்லுமுல்லுகளைப் பற்றி பார்க்கலாம். நமது மீது அபரிமிதமான பாசம் காட்டும் ஒரு சில அன்பர்கள் இதை பார்த்து என்ன பிரயோஜனம்? என்றும் வேறு உருப்படியான வேலையை பார்க்கும் படியும் கேட்கிறார்கள். நமது தளத்தில் வேறு என்ன உருப்படியான வேலை? என்று எனக்கு தெரியவில்லை.
சரி, அவர்கள் தளத்தில் என்ன உருப்படியான வேலை செய்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் தளத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சியையும்
GDP ரேட்டையும் ஏற்றுவதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைப்பதை கவனித்தேன்.. சிவாஜி நடித்த இந்த காட்சி எந்தப் படத்தில் வருகிறது?
'ப' வரிசையில் மொத்தம் எத்தனை படம்? 'கு' வரிசையில் மொத்தம் எத்தனை?.
சிவாஜி இந்த நடிகையுடன் எத்தனை படங்களில் நடித்தார்?. சிவாஜி பேசும் இந்த வசனம் எந்த படத்தில் இடம் பெற்றது? இது போன்ற தொழில் வளர்ச்சி வேகமாக நடைபெறுவதை
பார்க்கும் போது எனக்கும் தேசப்பற்று சற்று அதிகம் பீரிட ஆரம்பித்து விட்டது. ஆகவே நாமும் தேசப்பற்றுடன் சிவாஜி பட வசூலில்
நடைபெற்ற ஊழலை பற்றி பார்க்கலாம்.
'ராஜா', 'நீதி' இரண்டும் சுஜாதா சினி ஆர்ட்ஸின் பாலாஜி படங்கள்.. இரண்டு படங்களும் தொடர்ந்து 100 காட்சிகள்HF என பேப்பரில் முழு பக்க விளம்பரம் வந்ததை பார்த்திருப்பீர்கள். அதை தொடர்ந்து வந்த வசூல் விபரங்களில் உண்மை, நேர்மை இருக்கிறதா? இல்லை மக்களை ஏமாற்ற கொடுத்த பொய் விளம்பரமா? என்பதை பார்க்கலாம்.
'நீதி' படத்தின் 28 நாட்கள் வசூலை பார்த்தால் ரூ 2,45,817.60. அதாவது 28 நாட்களில் மொத்தம் 84
காட்சிகள் HF . ஒரு காட்சியின் வசூல்
ரூ 2,926.40. 'திரை மன்னன்' பத்திரிகையில் 'ராஜா'வின் 10 நாட்கள் அதாவது 30 காட்சிகளின் வசூல் சுமார்ரூ 1,08,000. அதாவது ஒரு காட்சியின் வசூல் ரூ 3,600. 'ராஜா'வுக்கு பின்தான் 'நீதி'.
இரண்டும் 1972ல் வந்த படங்கள்.'ராஜா' ஜன 26 'நீதி' டிச 7
"ரிக்ஷாக்காரன்" 1971 ல் வெளியான படம். தொடர்ந்து 100 காட்சிகள் HF வசூல்ரூ 2,72,200. அதாவது ஒரு காட்சியின் வசூல் ரூ 2,722. "ரிக்ஷாக்காரனு"க்கு பின்னால் கட்டணங்களை மாற்றி அமைத்ததில் கூடியிருக்கலாம். 'ராஜா' தொடர்ந்து 107 காட்சிகள் HF விளம்பரம் வந்ததை நாம் அறிவோம். 107 காட்சிகளின் HF வசூல் 313124.80 .
அப்படியானால் ஒரு காட்சியின் வசூல் ரூ 2926.40 . சரி HF கணக்கு சரியாக வருகிறது. அப்படியென்றால் 50 நாட்கள் 150 காட்சிகள்HF ஆனால் என்ன வசூல் வரும். மொத்தம் ரூ 4,38,960. வரவேண்டும். ஆனால் ராஜா' படத்தின் 50 நாட்கள் வசூல் ரூ 4,64,457.80. என்று விளம்பரம் செய்திருக்கிறார்களே அதெப்படி? 50 நாட்களும் தொடர்ந்து எல்லா காட்சிகளும் HF என்று வைத்தாலும் ஒரு காட்சி வசூல் ரூ 3,096.38 வருகிறது. அதற்கு வாய்ப்பில்லை.
ஆனால் 'ராஜா'50 நாட்கள் தொடர்ந்து H F ஆகவில்லை. அப்படியானால் வசூல் இதைவிட சற்று குறைவாகத்தான் வந்திருக்க முடியும்.சுமார் ரூ 25,497.80 அதிகம் வருகிறதே? சிவாஜி படங்கள் மட்டும் 50,100,175 நாட்களை ஒட்டி. வசூல்
பிச்சிகிட்டு போகும் மர்மத்தை இதற்கு முன்னால்"திருவிளையாடல்"
"தங்கப்பதக்கம்" போன்ற படங்களில்
பார்த்திருக்கிறோம்.ஆனால் "ராஜா"வும் அப்படித்தானா?. அப்படி முயற்சி செய்தும் 1971 ல் வெளியான "ரிக்ஷாக்காரன்" வசூலை நெருங்க முடியவில்லை. ரிக்ஷாக்காரன் 51 நாட்கள் மொத்த வசூல் ரூ9,15,000. ஆனால் ராஜா 50 நாட்கள் மொத்த வசூல் ரூ 8,66,000.
"ரிக்ஷாக்காரன்" ஓடி முடிய மொத்த வசூல் ரூ 16,84000 ஆனால் ராஜா ஓடி முடிய 12 லட்சத்திற்குள் முடங்கி விட்டது. 50 நாட்களிலும்,ஓடி முடியவும் ரிக்ஷாக்காரனின் மொத்த வசூலை ராஜாவால் நெருங்க முடியவில்லை என்பதே உண்மை. சில பேர் 100 மீ ஓட்டப்பந்தயம் ஓடுவான். ஆனால் 1000 மீ அவனால் ஓட முடியாது.
அது போலதான் நம்ம ராஜா வும்.
50 நாளை வேகமாக ஓட்டிய "ராஜா" 100 நாட்களை ஓட்ட முடியாமல் 100 வது நாளன்று 2 காட்சிகளோடு படத்தை நிறுத்தி விட்டார்கள். அன்று இரவு 10 மணி இரண்டாவது காட்சிக்கு ஆளே வரவில்லையா? எவ்வளவு உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பது தெரியாதா? சிவாஜி ரசிகர்களுக்கு.
்
ஆனால் 'நீதி' ஒரு காட்சி வசூல் ரூ 2,926.40 என்று வருகிறது. அதையே 'திரை மன்னனி'ல் ரூ 3,600 என்று வருகிறது.
ஆக மூன்று செய்திகளில் ஒரு H F
காட்சிக்கு மூன்று விதமான வசூல் வருவதை நீங்கள் பார்க்கலாம்.
'நீதி'யும் தொடர்ந்து 100 காட்சிகள் HF
இந்த கண்கட்டு வித்தை சிவாஜி படங்களுக்கு மட்டும் வருவதை நாம்
சிவாஜி ரசிகர்களின் பாசம் என்பதா?
இல்லை அவர்கள் செய்யும் மோசம் என்பதா?.
இது எல்லா சிவாஜி படங்களுக்கும் அவர்கள் காட்டும் மோடி மஸ்தான் வேலைதான். எம்ஜிஆர் ரசிகர்கள் எங்கே கணக்கு பார்க்கப் போகிறார்கள் என்று கள்ளக்கணக்கை காண்பித்தார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு நாள் நேரம் இன்மையால் இதை கவனிக்கவில்லை. சற்று ஓய்வு கிடைத்தவுடன் எடுத்த முதல் கணக்கே கோணல். எனவே அவர்கள் கணக்கு முற்றிலும் கோணலாகத்தான் இருக்கும் என்பதில் எள்முனையும் சந்தேகமும் இல்லை.
"ரிக்ஷாக்காரன்" 51 நாட்கள் வசூலை
தேவி பாரடைஸில் எளிதில் முந்திய "ராஜா"வுக்கு 100 நாட்கள் வசூலை ஏன் முந்த முடியவில்லை. 50 நாட்களுக்கு பிறகு படம் ஓடாமல் உட்கார்ந்து விட்டதா? என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்களுக்கு தெரியும் அந்த வித்தை. எப்போதெல்லாம் வசூல் குவிக்க வேண்டுமோ அப்போதெல்லாம் சரியாக வசூல் குவிக்கின்றன சிவாஜியின் படங்கள் அவர்கள் நினைத்தபடி.......... Courtesy: Mr.Shankar, Rtd., SBI., Tuticorin...
orodizli
3rd September 2020, 12:45 PM
எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் r.s.மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். ‘காவல்காரன்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக மனோகர் நடித்திருப்பார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும் மனோகருக்கும் குத்துச்சண்டை நடக்கும்.
படப்பிடிப்பின்போது மனோகரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு குத்துச்சண்டை தெரியுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘ஏதோ கொஞ்சம் தெரியும்’’ என்றார் மனோகர். இரண்டு மூன்று ஷாட்கள் முடிந்ததும் மனோகரின் பஞ்ச், தான் குத்துவதை தடுப்பது ஆகியவற்றை கவனித்த எம்.ஜி.ஆர். மனோகரிடம், ‘‘ஏன்யா பொய் சொல்றே? பெரிய சாம்பியன் மாதிரி ஃபைட் பண்றே’’ என்று கூறியபடியே அவரை செல்லமாகக் குத்தினார்.
‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்ப தற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாட கத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட் களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம். மனோ கரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாட கங்களுக்கு தேவையான பொருட்களை எவ் வளவு வேண்டு மானாலும் வாங் கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னு டைய செலவு’’ என்றார். மகிழ்ச் சியில் திக்கு முக்காடிப் போய்விட்டார் மனோகர். தனது நாடகங் களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.
‘அடிமைப்பெண்’ படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, படிகளில் உருண்டு விழ இருந்த மனோகரை எம்.ஜி.ஆர். சரியான நேரத் தில் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.
நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வத்துக்கு ஒரு உதார ணம். ஒருமுறை சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் மனோகரின் நாடகங்கள் பதின்மூன்று நாட் களுக்கு தொடர்ந்து நடந்தன. எல்லா நாட்களும் எம்.ஜி.ஆர். வந்து நாடகங்களைப் பார்த்தார்.
அடாது மழை பெய்தாலும் விடாமல் நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்ததும் உண்டு. அதே என்.கே.டி. கலா மண்டபத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் சார்பில் ‘சத்திய தரிசனம்’ என்ற நாடகம் நடந்தது. அது திறந்தவெளி அரங்கம். தனது மனைவி ஜானகி அம்மையாருடன் வந்து நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் அருகே இருந்த கட்டிடங்களில் போய் ஒண்டிக் கொண்டனர். எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் மழையில் நனைந்தபடியே அமர்ந்திருந்தனர்.
இதைப் பார்த்துவிட்டு சகஸ்ரநாமம், ‘‘மழை காரணமாக நாடகத்தை நிறுத்திக் கொள்கிறோம். இன்னொரு நாள் இதை நடத்துவோம்’’ என்று அறிவித்தார். நனைந்த உடையுடன் மேடையேறிய எம்.ஜி.ஆர்., ‘‘அடாது மழை பெய்தாலும் நாடகம் பார்க்கத் தயாராக இருந்தேன். நீங்கள்தான் நிறுத்திவிட்டீர்கள். பார்த்தவரை நாடகம் சிறப்பாக இருந்தது. மீண்டும் நடத்தும்போது சொல்லுங்கள் வருகிறேன்’’ என்று பேசினார்.
அதன்படியே, பெரம்பூர் ஐ.சி.எஃப். திடலில் மறுபடியும் ‘சத்திய தரிசனம்’ நாடகம் நடந்தபோது எம்.ஜி.ஆர். சென்று பார்த்து கலைஞர்களை கவுரவித்தார்.
#படத்தில் தலைவருடன் s.v, சகஸ்ரநாமம் , t.k. பாலச்சந்திரன் , கள்ளபார்ட் நடராசன் , பக்கிரிசாமி
ஆகியோர் ..........
fidowag
3rd September 2020, 01:24 PM
கோகுலம்*கதிர்*-செப்டம்பர் -2020
------------------------------------------------------
என் காசுல* உன்கட்சி கொள்கை*
---------------------------------------------------
நாடோடி மன்னன் படத்தை*முதன் முதலாக டைரக்ட்*செய்கிறார் எம்.ஜி.ஆர்.*யார் யாரையோ*வைத்து பாட்டு எழுதுகிறார் .* ஆனாலும் திருப்தி இல்லை .கடைசியில் பட்டுக்கோட்டையாரிடம் ,உன்கிட்ட*பாட்டு இருந்தா*குடு கல்யாணம் என்று கேட்டதுமே*ஒரு பாட்டை நீட்டுகிறார் .
அதில்*சும்மா*கிடந்த*நிலத்தை*என்று ஆரம்பித்து*மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே, பசி வந்திட காரணம்*என்ன மச்சான் ?* அவன் தேடிய*செல்வங்கள் வேறு இடத்திலே*சேர்வதினாலே வரும் தொல்லையடி ,தினம் கஞ்சி கஞ்சி*என்றால் பானை நிறையாது*.சிந்திச்சு முன்னேற வேணுமடி*என்ற வரிகளை*படித்து பார்த்தார்*எம்.ஜி.ஆர். பிறகு சிரித்துக் கொண்டே*,நீ ரொம்ப விவரம்* கல்யாணம் ,என் காசுல உன் கட்சி*கொள்கையை எழுதிடலாம்னு பார்க்கிறியா*? என்று கிண்டலாக கேட்டார் .
ஆனால் கடைசிவரை*எம்.ஜி.ஆர். இந்த கவிஞனை மறக்கவே இல்லை .என்னுடைய நாற்காலியில் நான்கு கால்களில் 3 கால்கள் யாருடையது என்று எனக்கு தெரியாது*. ஆனால்* அதில் ஒரு கால்*என் தம்பி பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரத்துடையது என்று புகழ்ந்து கொண்டே இருந்தார் .
fidowag
3rd September 2020, 03:48 PM
பாத்தாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 14/08/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.ஒரு பெரிய நடிகராக, தமிழக முதல்வராக இருந்த போதிலும் இப்போது பேசுகிறார், எனக்கு இவ்வளவு மன்றங்கள் இருக்கின்றது .லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் .அது ஒரு பெரிய விஷயம் அல்ல .ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது, பல்வேறு காரணங்களுக்காகவும்*பலரும் கூட்டம் கூட்டமாக சேர்ந்து அவரை சொந்தம் கொண்டாடுவது உண்டு .ஆனால் அவன் இறந்த பிறகு ,என்னையே நான் எடுத்துக் கொள்கிறேன் .,எவ்வளவு பேர் அவனை நினைவில் வைத்திருக்கிறார்கள் எவ்வளவு பேர் அவனது நினைவை போற்றுகிறார்கள் .என்பதில்தான் ஒரு மனிதன் வாழ்ந்ததற்கான அர்த்தம் இருக்கிறது .அப்படி எனது மறைவிற்கு பின்னால் எனது மன்றங்கள் செயல்படுமேயானால் அதுதான் எம்.ஜி.ஆர். என்கிற மனிதன் வாழ்ந்ததற்கு ஏதாவது* நியாயமான காரணம் இருக்கிறது என்று நினைப்பதற்கு அது உதவியாக இருக்கும் ஆமாம். அது உண்மைதான் .இப்போதும்கூட எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மன்றங்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவிற்கு அவருடைய பெயரில் மன்றங்கள் இருக்கிறது .* அதே போல எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள், விசுவாசிகள், அபிமானிகள் ,மக்கள் திலகம் ,புரட்சி நடிகர், புரட்சி தலைவர் ,வாத்தியார் எம்.ஜி.ஆர். என்று பல்வேறு அமைப்புகள் சமூக வலை தளங்களில் போட்டி போட்டு கொண்டு அவர் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள் .* அவருடைய புகழை இன்றைக்கும் நிலை நிறுத்திக் கொண்டு ,அவருக்காக தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் நேரத்தை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் .என்பதுதான் அவர் கேட்டாரே ஒரு கேள்வி ,என் மறைவிற்கு பின்னாலும் என்னை வாழ செய்யபோகிறவர்கள் நீங்கள்தான் என்று ,அதை அவருடைய மன்றங்களை சார்ந்தவர்கள்* நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் .
காவலர்களுக்கு, காவல்துறைக்கு பயிற்சி அளிப்பதற்கு காவலர்கள் பயிற்சி கல்லூரி சென்னையில் இயங்கி கொண்டிருக்கிறது .* காவல்துறை அதிகாரியாக உள்ள வால்டர் தேவாரம் அதில் முதல்வராக பணியாற்றுகிறார் .அவர் ஒருநாள் வகுப்பில் பேசும்போது ,ஒரு காவலர் பணியில் இருக்கும்போது எப்படி இருக்க வேண்டுமென்றால் ,என் கடமை படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் அறிமுக காட்சியில் எப்படி செயல்படுகிறார் என்று பாருங்கள் என்று சொல்லி அந்த காட்சியை அவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கிறார் .* அந்த காட்சியில் ஒரு பெண் தன்னந்தனியாக ஒரு குழந்தையுடன் நள்ளிரவில், இருள் சூழ்ந்த பகுதியில் வந்து கொண்டிருக்கிறார் .திடீரென நான்கைந்து முரடர்கள் தோன்றி ,அவள் கையில் உள்ள குழந்தையையும், அவள் அணிந்திருந்த ஆபரணங்களையும் பறிக்க முயற்சிக்கின்றனர்* *அந்த சமயத்தில் காவல்துறை அதிகாரியான எம்.ஜி.ஆர்.ஒரு பைக்கில்* ரோந்து வரும்போது இதை பார்த்து விடுகிறார்*பைக்கில் இருந்து இறங்கும் நேரம்தான் தெரியும். மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து அந்த முரடர்களை அடித்து, உதைத்து, துவைத்து எடுத்து ,அந்த பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றுகிறார் .அந்த காட்சியை பார்க்கிறவர்கள் திடுக்கிட்டு போவார்கள். என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள்* அந்த காட்சி நடந்து முடிந்துவிடும் .அவ்வளவு வீரம், வேகம், விவேகம், சுறுசுறுப்பு, விறுவிறுப்பு கொண்ட காட்சி அது .காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் இந்த காட்சியை பாடமாக தன் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதற்காக காவலர் பயிற்சி கல்லூரியில் திரையிட்டு காண்பித்ததாக அதிகாரி வால்டர் தேவாரம் தானே பலமுறை நிகழ்ச்சிகளில் சொல்லி பெருமை படுத்தியுள்ளார் .
நல்ல விஷயங்களை செய்வதற்கு நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் உங்களை* தேடி 9 அடிகள் தாண்டி* நன்மைகள் வரும் .என்று பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர். கூறியுள்ளார் .* இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் .* கடந்த 24/12/2019* *அன்று எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளன்று மதுரையை சார்ந்த பக்தர் ஒருவர் அன்னதானம் அளிப்பது என்று திட்டமிடுகிறார் .* 23ந்தேதி, அதற்கான ஏற்பாடுகள், பொருட்கள் எல்லாம் வாங்கி வைத்து, சமையற்காரரை,வரவழைத்து ,ஆலோசித்து,தன் வீட்டு பக்கத்தில் ஒரு இடத்தில பந்தல் அமைத்து* நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்தார் . என்ன பிரச்னை என்றால் 23ந்தேதி மதியம் இவர் வீட்டுக்கு அருகில் ஒரு முதிய பெண்மணி இறந்து போகிறார் . இப்படி* ஒரு தடை வந்துவிட்டதே. நாளை நிகழ்ச்சியை நடத்தலாமா ,வேண்டாமா என்று குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார் .* நடந்தது என்னவென்றால் அன்று மாலையே இறந்தவரின் சடலத்தை கொண்டு போய் எரித்து இறுதி சடங்குகளை முடிக்கிறார்கள் .*பிறகு அன்னதான நிகழ்ச்சி குறித்த பணிகள் மீண்டும் துரிதமாக*தயார் செய்கிறார் . மறுநாள் ,24ந்தேதி, குறிப்பிட்ட நேரத்தில் அன்னதான நிகழ்ச்சி தொடங்குகிறது . வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் மழை வருவது போல அறிகுறி. சிலர் இவரிடம் மழைவரும் போல தெரிகிறது . எப்படி நிகழ்ச்சியை நடத்துவது . சிலர் நனைந்துவிடுவார்கள் . நமது திட்டம் நல்லபடியாக நிறைவேறுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் . ஆனாலும் நிகழ்ச்சி, பொறுமையாக,ஆரம்பித்து, முடிவில் சற்றே வேகமாக அனைவரும்*சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள் .மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுறுகிறது*5.15க்கு* அடைமழை பொழிய ஆரம்பித்து கொட்டி தீர்த்துவிடுகிறது . அத்தனை தடைகளையும் கடந்து* நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்த அந்த மதுரை பக்தர் ,தலைவர் எம்.ஜி.ஆர். கூறியபடி நல்லதை செய்வதற்கு ஒரு அடி எடுத்து வைத்தால்* உங்களை தேடி 9* அடிகள் தாண்டி*நன்மைகள் வந்து சேரும் என்பது நிதர்சனமான உண்மை ,. இது வாத்தியார் சொன்னது என்று***சமூக வலை தளத்தில் பதிவு செய்தார் .*
நல்லதை செய்ய நினைக்கும்போது பல தடைகள் வருவது போல தோன்றினாலும் கூட* அந்த தடைகள்*.தடம் தெரியாமல் போகும் நிச்சயம்*உங்களுக்கு பலன் கிடைக்கும் என்பது ,எம்.ஜி.ஆர். அவர்கள் அவ்வையின் சொல்லான* அறம் செய்ய விரும்பு என்பதை தன் வாழ்நாள் எல்லாம் கடைபிடித்தார் அல்லவா,அதனால்தான் மக்கள் இதயங்களில் அவர் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார் .
வென்றாரும், வெல்வாரும் இல்லாத நிலையில் ஒளிவீசும் தலைவா ,முடியரசருக்கு இல்லாத செல்வாக்கெல்லாம் முழுமையுடன் வெற்றிபெறும் முழுமதியே ,குன்றடைய புகழ் கொண்ட குணக்குன்றே தென்னாடும், தென்னவரும் உள்ளவரை* *.மன்னா உன் திருநாமம் துலங்கவேண்டும்*உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர், உள்ளங்கள் அதை கேட்டு மகிழ வேண்டும் .நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழாவில் இந்த கவிதை வாழ்த்தி எழுதி வாசிக்கப்பட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதியால் என்பது வியப்பான செய்தி .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ....
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.உன்னை அறிந்தால்* - வேட்டைக்காரன்*
2.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
3.காவல் துறை அதிகாரியாக எம்.ஜி.ஆர். - என் கடமை*
4.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக் காரன்*
5.நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*
6.நான் அளவோடு ரசிப்பவன் - எங்கள் தங்கம்*
orodizli
3rd September 2020, 05:45 PM
28வது நினைவு நாள்:
அமைச்சர் பதவியை மறுத்த ப.நீலகண்டன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த சக்ரவர்த்தி திருமகள், ராமன் தேடிய சீதை, சங்கே முழுங்கு, குமரிகோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், காவல்காரன், கொடுத்து வைத்தவள், திருடாதே, படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். ரஜினியின் அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் மாதிரி, எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் ப.நீலகண்டன்.
எந்த விஷயத்தில் சந்தேகம் இருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் ப.நீலகண்டனிடம் தான் ஆலோசனை கேட்பார் எம்.ஜி.ஆர். அவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவரை தனது இணை இயக்குனராக வைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கமர்ஷியல் ஹீரோவாக்கியதில் நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு.
கடைசிவரை எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்த நீலகண்டன், அவரிடம் எந்த உதவியையும் கேட்டு பெற்றதில்லை. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆன பிறகு தன்னை வளர்த்த ப.நீலகண்டனுக்கு ஏதாவது செய்ய நினைத்தார். திரைப்படம் உள்ளிட்ட கலைத் துறைக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கி அதற்கு ப.நீலகண்டனை அமைச்சராக்க விரும்பினார். ஆனால் நீலகண்டன். உங்கள் அன்பு ஒன்றே போதும் என்று அதை மறுத்து விட்டார். அவரின் 28வது நினைவு தினம் இன்று..........
orodizli
3rd September 2020, 05:48 PM
புதுக்கோட்டை நகரில் எங்கவிட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மகத்தான சாதனை மற்றும்... திரைப்பட பட்டியல்கள் எங்கவீட்டுப்பிள்ளை
82 நாட்களும், ஒளிவிளக்கு
67 நாட்களும் அடிமைப்பெண்
66 நாட்களும் ஆயிரத்தில் ஒருவன்
60 நாட்களும் குடியிருந்த கோயில்
62 நாட்களும்
நம்நாடு
60 நாட்களும், காவல்காரன்
52 நாட்களும் ரகசியபோலிஸ்115
50 நாட்களும்
ஓடி சாதனை பெற்றது. இந்த சாதனையில்
50 நாள் கூட ஓடாத சிவாஜியின் சிவந்தமண் திரைப்படம் 41 நாட்களில் எடுக்கப்பட்டு விட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாடோடி மன்னனுக்கு பின் 50 நாள் ஓடிய திரைக்காவியம் எங்கவிட்டுப்பிள்ளை அதன் பின்பு நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான நம் நாடு திரைப்படம் தேவகோட்டை நகரில் உள்ள லட்சுமி திரையரங்கில் சனி ஞாயிறு 4 காட்சியும்
மற்றும் 13 நாட்கள் மூன்று காட்சியும் ஓடி 50 நாட்கள் கடந்து சாதனையைப் படைத்தது. இங்கு உள்ள சரஸ்வதி திரையரங்கில் சிவந்தமண் 18 நாட்கள் மட்டுமே வசூல் இல்லாது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்
தக்கது..........
orodizli
3rd September 2020, 05:49 PM
மதுரை சிந்தாமணி திரையரங்கில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் சாதனைகள்...*
அரங்கில் வெள்ளிவிழா ஓடி சரித்திரம் படைத்த காவியங்கள்*
அடிமைப்பெண் 176 நாள்
வசூல் : 4,34,643. 75*
மாட்டுக்கார வேலன்* 177 நாள்
வசூல் : 4,33,744.54
*
அரங்கில் 200 காட்சிகள் அரங்கு நிறைந்த முதல் திரைக்காவியம் இதயக்கனி.
அரங்கில் 150 காட்சிகள் அரங்கு நிறைந்த திரைக்காவியம்*
மீனவ நண்பன்.
அரங்கில் நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த காவியங்கள்*
அடிமைப்பெண்*
மாட்டுக்கார வேலன்*
நேற்று இன்று நாளை
அரங்கில் அதிக வசூலை உருவாக்கிய திரைக்காவியம் இதயக்கனி
வசூல் : 5,52,218.33
அரங்கில் 20 வாரங்களை கடந்த திரைக்காவியங்கள்*
அ.40 திருடர்களும்*
141 நாட்கள்*
அன்பே வா*
147 நாட்கள்*
இதயக்கனி*
146 நாட்கள்.
100 நாட்களை வெற்றி கொண்ட திரைப்படங்கள் ....
ராஜகுமாரி 112 நாள்
மர்மயோகி* 104 நாள்
காவல் காரன் 126 நாள்
வசூல் : 3,01,950.76
எங்கள் தங்கம்* 107 நாள்
வசூல் : 2,75,920.91
குமரிக் கோட்டம் 105 நாள்
வசூல் : 2,51,983.08
நேற்று இன்று நாளை 119 நாள்
வசூல் : 4,05,967,78
மீனவ நண்பன் 117 நாள்
வசூல் : 4,46,814. 11
12 வாரங்களுக்கு மேல் ஓடிய திரைக்காவியங்கள்.....*
மன்னாதி மன்னன்*
84 நாட்கள்.
கண்ணன் என் காதலன்*
93 நாட்கள்*
ரகசிய போலீஸ் 115*
92 நாட்கள்**
வசூல் : 2,66,722.25
ராமன் தேடிய சீதை*
84 நாட்கள்*
வசூல் : 2,64,700.42
மற்றும் அரங்கில் திரையிடப்பட்ட திரைப்படங்கள்*
சங்கே முழங்கு 69 நாட்கள்*
மகாதேவி 63 நாட்கள்
(இரண்டு அரங்கில் வெளியிடப்பட்டது
சந்திரா 41 நாள் )
ராஜராஜன் 50 நாட்கள்*
நாம் 70 நாட்கள்*
கலங்கரை விளக்கம் 73 நாட்கள்.
அரங்கில் அதிக அளவில்*
மக்கள் திலகத்தின் காவியங்களே
100 நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்துள்ளது.*
தொடரும் சாதனைகள்..............
orodizli
3rd September 2020, 05:55 PM
1954 ல் மகத்தான...
மாபெரும் சாதனைகள் பல படைத்து அவ்வாண்டில் வெளியான
"மலைக்கள்ளன்".... மனோகரா படத்தை வென்ற
வரலாறு ....காணீர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கதாநாயகனாக வலம் வந்து மிகப் பெரிய தாக்கத்தையும் வெற்றியையும் ஏற்படுத்திய வெற்றி காவியமாக பட்சிராஜா தயாரிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை படைத்த ஒரே திரை காவியமாக மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் உருவெடுத்தான்!
மலைக்கள்ளன் திரைப்படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்......
ராஜகுமாரி , மருத நாட்டு இளவரசி மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி, என் தங்கை, ஜெனோவா திரைப்படங்களுக்கு பின் மிகப்பெரிய எழுச்சியை தென்னக திரைப்பட உலகில் ஏற்படுத்திய திரைக்காவியம்...... ஒரே ஒப்பற்ற காவியம் புரட்சி நடிகரின் வெற்றி பவனில் வெளியான மலைக்கள்ளன் ஆகும்.
"கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான் தவறுமாயின் குறி வைக்கமாட்டான்" என்று மர்மயோகியில்* மக்கள் திலகம் சொன்ன கருத்துக்கு பின்.... மலைக் கள்ளனில் மக்கள் திலகம் பதித்த ஒரு வெற்றி தலைப்புதான் "மலைக்கள்ளன் வந்தான் மக்கள் உள்ளங்களை வென்றான்" என்ற கருத்துடன் மலைக்கள்ளன் பவனி வந்தான் !
1954 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் வெளியான அத்தனை படங்களுக்கும் மகுடமாக ஜொலித்த ஒரே ஒப்பற்ற திரைக்காவியம் மக்கள் பேரரசு எம்.ஜி.ஆரின் மலைக்கள்ளன் ஆகும்.
மர்மயோகி திரைப்படத்திற்குப் பின் இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
48 திரையரங்குகளில் வெளிவந்து தமிழகத்தில் மட்டும் 38 திரையரங்கில் திரையிடப்பட்டு அத்தனை திரையரங்குகளிலும்*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த ஒரே காவியம்
மலைக்கள்ளன் மட்டுமே.
புரட்சி நடிகர் திரைப்பட வரிசையில் 32 வது காவியமாக மலைக்கள்ளன் ஜொலித்தான் ! மக்கள் திலகம் தனிப்பெரும் கதாநாயகனாக வலம் வந்த பதிமூன்றாவது திரைப்படமாக மலைக்கள்ளன் மகுடம் சூட்டினான்.
1954 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் வெளியான அத்தனை படங்களுக்கும் மகுடமாக ஜொலித்த ஒரே ஒப்பற்ற திரைக்காவியம் மக்கள் பேரரசு எம்.ஜி.ஆரின் மலைக்கள்ளன் ஆகும்.
மர்மயோகி திரைப்படத்திற்குப் பின் இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
48 திரையரங்குகளில் வெளிவந்து தமிழகத்தில் மட்டும் 38 திரையரங்கில் திரையிடப்பட்டு அத்தனை திரையரங்குகளிலும்*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த ஒரே காவியம்
மலைக்கள்ளன் மட்டுமே.
புரட்சி நடிகர் திரைப்பட வரிசையில் 32 வது காவியமாக மலைக்கள்ளன் ஜொலித்தான் ! மக்கள் திலகம் தனிப்பெரும் கதாநாயகனாக வலம் வந்த பதிமூன்றாவது திரைப்படமாக மலைக்கள்ளன் மகுடம் சூட்டினான்!
சென்னையில் 3 திரையரங்குகளில் திரையிடப்பட்டு கேசினோவில் 100 நாட்களை வெற்றி கொண்ட முதல் காவியமாக மலைக்கள்ளன் திகழ்ந்தான். பிரபாத் 12 வாரங்களும், சரஸ்வதியில்*
11 வாரங்களும்* வெற்றி கொண்டான் மலைக்கள்ளன்.
மதுரை தங்கம் திரையரங்கில் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் மாபெரும் சாதனையை... வசூலை படைத்து 1954 ஆம் ஆண்டு 2 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்த ஒரே திரைப்படமாக மலைக்கள்ளன் திகழ்ந்தான்..........
orodizli
3rd September 2020, 05:56 PM
மதுரை மாநகரில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி திரைப்படங்களுக்கு பின் ஐந்தாவதாக 100 நாளை கடந்தது திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
நெல்லை மாநகரில் ராஜகுமாரி திரைப்படத்திற்கு பின் மலைக்கள்ளன் 100 நாட்களை கடந்து வெற்றி கொண்டு சாதனையைப் பதித்தான்.
1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக ஊர்களில் நூறு நாட்களை வெற்றிகொண்ட திரைக்காவியம் புரட்சிப் பேரரசின் மலைக்கள்ளன் ஆகும். சென்னை, மதுரை, திருச்சி கோவை, சேலம், நெல்லை, இலங்கை 100 நாட்களை வெற்றிகொண்ட வேந்தனாக மலைக்கள்ளன் முடிசூடினான்.
இந்திய திரைப்பட உலகில் ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஆறு மொழிகளில்.....*
(தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், உருது ,இந்தி , சிங்களம்) தமிழைத் தவிர மற்ற 5 மொழிகளில் நடித்த கதாநாயகன்களை விட மக்கள் திலகம் இயற்கையாக திரையில் பவனி வந்து ஜொலித்த காட்சிகள் சிகரம் போல் ஒளிவீசியது* மலைக்கள்ளன் காவியத்தில்...*
வெள்ளித்திரையில் மலைக்கள்ளன் காவியத்தில் மக்கள் திலகம் 4* விதமான கதாபாத்திரத்தில் பல விதமான தோற்றத்தில் சாதனை படைத்தார் மலைக்கள்ளன்... ஆக குமாரதேவன் ஆக .....அப்துல் ரஹீம் ஆக .....வயோதிகராக நான்கு வேடத்தில் வந்து வெள்ளித் திரையில் தன் இயற்கை பரிமாணத்தை பதித்தார்..........
orodizli
3rd September 2020, 05:58 PM
"ம" -* வரிசை திரைப்படத்தில் நான்காவது மிகப்பெரிய வெற்றி காவியமாக மலைக்கள்ளன் உருவெடுத்தான். மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மர்மயோகி, மலைக்கள்ளன்*
4 காவியங்களில் முதன்முறையாக தமிழ் சினிமா வரலாற்றில் "ம" வரிசையில் வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படங்கள் ஆகும்.
தமிழகத்தில் மலைக்கள்ளன் திரைக்காவியம் முதல் வெளியீட்டில் 38 திரையரங்கில் 50 நாட்களை கடந்து மறு வெளியீட்டில் 27 திரையரங்கில் 50 நாட்களை கடந்தது.... இதில் 10 திரையரங்குகளில் 12 வாரங்களுக்கு மேல் ஒடி சாதனை படைத்தது.10 திரையரங்குகளுக்கு மேல் 10 வாரங்களை கடந்து வெற்றிக்கொடி நாட்டியது.*
தமிழகம் கர்நாடகா கேரளா சித்தூர் சேர்த்து மொத்தம் 75 திரையரங்குகளுக்கு மேல்**
50 நாளை முதன் முதலில் வெற்றி கொண்ட திரைக்காவியம்.... தமிழ் சினிமாவில் மலைக்கள்ளன் ஆகும்.
கோவை கர்னாடிக் 20 வாரங்கள் திருச்சி வெலிங்டன் 19 வாரங்கள் சேலம் ஓரியண்டல் 17 வாரங்கள் நெல்லை ரத்னா 105 நாட்கள் இலங்கை சென்ட்றல் 105 நாட்கள்.
மற்றும் ஈரோடு 92 நாட்கள் திண்டுக்கல் 96 நாட்கள் விருதுநகர் 91 நாட்கள் வேலூர் 84 நாட்கள் தஞ்சை 86 நாட்கள் குடந்தை 84 நாட்கள் புதுச்சேரி 85 நாட்கள் பெங்களூர் 12 வாரங்கள்.
இந்திய கலைத்துறையில் 1954 ம் ஆண்டின் சிறந்த. படமாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தென்னிந்திய காவியம் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் ஆகும்.
எந்த நடிகரும் தன் மொழியின் புகழை திரையில் பதித்த வரலாறு கிடையாது. ஆனால் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைப்படத்தில்....* டைட்டிலில் வரும் பாடலான "தமிழன் என்றொரு இனம் உண்டு" என்ற பாடல் தமிழுக்குப் பெருமை சேர்த்து தமிழ் இனத்தின் முதல் மகனாக தமிழ்த்தாயின் தலைமகனாக* மலைக்கள்ளன் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பெயர் பெற்றார்.
எல்லாக் காலத்திலும் ஏற்றதொரு பாடலாக எங்கும் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் வெற்றிப் பாடலாக "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் சாகாவரம் பெற்ற பாடலாகும். அன்று முதல் இன்று வரை என்றுமே திகழும் ஒப்பற்ற பாடலாகும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் நடிகை பானுமதி* நாயகியாக நடித்த முதல் திரைப்படமாக மலைக்கள்ளன் திரைப்படம் வெளிவந்தது.
1958 ல் நாடோடி மன்னன் திரைப்படம் தென்னக மெங்கும் திரையிடப்பட்ட பொழுது மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைக்காவியம் அந்த நேரம் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு நான்கு ஐந்து வாரங்கள் கடந்தது*..........
orodizli
3rd September 2020, 05:59 PM
குறிப்பாக 1958 ஆம் ஆண்டு வரை வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் நாடோடி மன்னன் ஓடிய சமயத்தில் நூற்றுக்கண க்கான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது மிகப்பெரிய சாதனையாகும்.
மலைக்கள்ளன் திரைக்காவியம் சமீபத்தில் 2018 ல் மதுரை, கோவை ஈரோடு என பல ஊர்களில் திரையிடப்பட்டது.* மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 7 நாட்கள் ஓடி ஒரு லட்சத்திற்கும் மேல்* வசூலை வாரிக் கொடுத்தது.
1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே பொன் போன்ற சாதனைகளை எப்பொழுதும் பதித்துக்கொண்டு வரும் ஒரே காவியம்.... மக்கள் பேரரசின் மலைக்கள்ளன் மட்டுமே ஆகும்.
மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைப்படம் கடந்த 66 ஆண்டு களுக்கு மேல் பல சாதனைகளை படைத்து வந்து உள்ளது.*
இது போன்ற ஒரு திரைப்படம் 1954 ஆம் ஆண்டுக்கு முன்* சாதனைகளை செய்ததில்லை. அது வரை எந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தும் சாதனைகள் தொடரும்..........
fidowag
3rd September 2020, 08:13 PM
கலக்குது*எம்.ஜி.ஆர். வீடியோ*
-------------------------------------------------
திரை மலர் - வாட்ஸ் அப் செய்தி*
----------------------------------------------------
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை 25 பாகங்கள் கொண்ட வீடியோ* ஆவணமாக மாற்றி* , யூ ட்யூப்* உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்* ஜெ.எம்.பஷீர் என்பவர் .* இவர் எம்.ஜி.ஆரிடம் உடையலங்கார கலைஞராக பணியாற்றிய எம்.எம்.ஜமாலின் மகன் .
பஷீர் பகிர்ந்த தகவல்*
-------------------------------------
எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை .* ஆனால் அவரை பற்றி அப்பா நிறைய* சொல்வார் .* அதை கேட்டு கேட்டு, எம்.ஜி.ஆர்.ரசிகனாகவே வளர்ந்தேன் .* இதனால், எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை விரும்பும் வகையில் வீடியோ*ஆவணமாக மாற்ற ஆசை வந்தது .**
எம்.ஜி.ஆர். பற்றிய பல புத்தகங்களை படித்தேன் . மணவை* பொன் மாணிக்கம் எழுதிய எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். , புகழ் மன செம்மல் எம்.ஜி.ஆர். என்ற இரு புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சுவாரஸ்ய சம்பவங்கள் என்னை கவர்ந்தன .அவற்றைத் தொகுத்து 25 பாகங்கள் கொண்ட எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று*வீடியோ ஆவணத்தை 60 நாட்களில் தயாரித்தேன் .* மொத்தம்* 5 லட்சம் ருபாய் செலவு .
ஹிஸ்டரி ஆப்* லெஜெண்ட்* எம்.ஜி.ஆர். என்ற தலைப்பில்* இந்த வீடியோ ஆவணத்தை சமூக வலை தளங்களில் வெளியிட்டேன் .* அமோக வரவேற்பு வந்திருக்கிறது .* பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருக்கிறது .எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்களும் , பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன .* இலங்கை, சிங்கப்பூர், மலேசியா , ஜப்பான் , துபாய், அமேரிக்கா என பல வெளிநாடுகளில் இருந்தும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்* எனக்கு போன் செய்து வாழ்த்துகிறார்கள் .கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள மனசோர்வை நீக்கவும் , நம்பிக்கை உற்சாகத்தை பெறவும் எம்.ஜி.ஆர். ஆவண வீடியோக்கள்* உதவுவதாக கூறுகிறார்கள்.* இது எனக்கு மிகுந்த மன நிறைவையும் சந்தோஷத்தையும் தருகிறது .
orodizli
3rd September 2020, 09:07 PM
எம்.ஜி.ஆர் மற்றும் மம்மூட்டியின் இந்த படம் சி.ஜி.டி.யுவின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை துவக்க எம்.ஜி.ஆரின் வருகையின் போது நான் எடுத்தது. (கொச்சின் துரைமுக தொழிலாளி யூனியன்). மட்டஞ்சேரியில் தொழிற்சங்கம் மிகவும் பிரபலமாக இருந்தது. மம்மூட்டியின் மாமனார் அந்த சுயாதீனமான தொழிற்சங்கத்தின் முக்கிய முன்னணி அதிகாரிகளில் ஒருவர்.
நான் எம்.ஜி.ஆரின் பெரிய ரசிகன். எம்.ஜி.ஆரை நான் சந்திப்பது இதுவே முதல் முறை. அவர் சென்னை (சென்னை) இலிருந்து கொச்சின் (பழைய விமான நிலையம்) வந்தார். பெரும்பாலான பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அவரது வருகையின் படங்களை எடுத்து மற்ற வேலைகளைச் செய்ய முன்வந்தனர். அந்த நேரத்தில் நான் ஒரு சுயாதீனமான புகைப்படக் கலைஞராக இருந்தேன், எம்.ஜி.ஆருடன் இருக்க இந்த வாய்ப்பைப் பெற்றேன், இந்த புராணக்கதையைப் பார்த்து அங்கே நின்றேன். அவர் வந்தவுடன், அமைப்பாளர்கள் அவரை வெலிங்டனில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். எம்.ஜி.ஆருடன் விருந்தினர் மாளிகைக்குச் சென்றேன். விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில், விமான நிலையத்திற்கு முன்னால் இருந்த தங்கள் குடியேற்றத்திற்கு முன்னால் கூடியிருந்த தமிழ் தொழிலாளர்களை பார்த்து அவர் கை அசைத்தார்.
சுற்றியுள்ள ஒரே நபர் நான், அவருடன் தமிழில் தொடர்பு கொள்ள முடியும், அது "எனக்கு தெரிந்த அளவுக்கு தான் தமிழ்". எனவே, அவர் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். எனக்கு என்ன புரிந்ததோ ...பதிலளித்தேன். அவர் ஒரு மென்மையான கவனமுள்ள மனிதர்… சில மணிநேர அறிமுகத்திற்குப் பிறகு, அவரின் வெள்ளை ஃபர் தொப்பியை மற்றும் அவரது கண்ணாடியையும் அகற்ற முடியுமா என்று நான் பணிவுடன் கேட்டேன்… அவரது சுருள் முடிகளையும் கண்களையும் பிடிக்க எனக்கு ஆர்வமாக இருந்தது… அவருடைய அரசியல் படங்கள் பெரும்பாலானவை இந்த சின்னமான சின்னங்கள். அவருள் இருக்கும் கலைஞரை புகைப்படம் எடுப்பதே எனது கனவு… அவர் சிரித்தார்… ஒரு சிறிய மௌனத்திற்கு பிறகு , “சென்னைக்கு வாருங்கள்” என்றார். நான் ஒருபோதும் சென்னைக்குச் செல்லவில்லை அவரை மீண்டும் பார்க்கவில்லை.
புகைபட கலைஞர் : அப்துல் காலம் ஆசாத்.........
orodizli
3rd September 2020, 09:11 PM
புரட்சி நடிகரின் புரட்சித் தயாரிப்பான முதல் காவியம் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நாடோடி மன்னன்* திரைப்படத்திற்குப் பின் எந்ததொரு திரைப்படமும் வெளிவந்து நாடோடி மன்னன் பெற்ற மகத்தான வெற்றியை . ஆறு ஆண்டுகள் (1958 - 1964) வரை எந்தப் படமும் தமிழ் திரைப்பட உலகில் வென்றது கிடையாது.*
அதன் பின்பு 1965 ஆம் ஆண்டு எங்க வீட்டுப் பிள்ளை வெளிவந்து தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய. வெற்றியை அரங்கேற்றியது.*
1956 ஆம் ஆண்டு மதுரை வீரன் திரைப்படம் 35 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சரித்திரம் படைத்தது. அதன் பின்பு 1958 ல் நாடோடி மன்னன் திரைக்காவியம் 13 திரையரங்குகளில் விழா கொண்டாடியது...
திருவண்ணாமலை நகரில் இரண்டாம் வெளியீடாக நாடோடி மன்னன் திரைக்காவியம் 113 நாட்கள் ஓடி 14 திரையரங்கில் நாடோடி மன்னன் சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல கரூர் நகரில் 99 நாட்களும், கடலூர் நகரில் 96 நாட்களும், சித்தூர் நகரில் 98 நாட்களும், தாம்பரம் எம். ஆர் .திரையரங்கில் 97 நாட்களும்,
குடந்தையில் 96 நாட்களும்.. நாடோடி மன்னன் 100 நாளை நூலிழையில் தவறவிட்ட திரைப்படமாகும்.*
நாடோடி மன்னன் காவியத்தை வென்றதாக.... வசூலை மிஞ்சியதாக எந்தத் திரைப் படத்திற்கும் ஆறு ஆண்டு காலம் வெற்றி வாய்ப்பில்லை ..**
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கால் முறிவு ஏற்பட்டு 9 மாத இடைவெளிக்கு பின்பு தாய் மகளுக்குக் கட்டிய திரைப்படம்*
31.12 .1959யில் வெளியீட்டார்கள்.
ஆனால் சில நடிகர்கள் தாங்கள் தான் தமிழ் திரைப்பட உலகில் தான் தான் பெரிய நடிகர் என்ற* ஆணவத்துடனும், அகம்பாவத் துடனும் உலா வந்தனர் .*
சில படங்களில் நடித்து**
பெருமை அடித்துக் கொண்டனர்.
அதன் பின்பு 1961 ஆம் ஆண்டு வெளியான திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே திரைப்படங்களில் புரட்சித் தலைவர் தனிப்பெரும் கதாநாயகனாக.... தனியாக நின்று மீண்டும் தன் இயற்கை பரிமாணத்துடன்..
[வெற்றிக்
கொடியை பறக்கவிட்டார்....
அகம்பாவத்தின் சின்னமாக போலி நடிப்பை....ஆங்கில நடிகரின் பாணியை வைத்து நடித்த நடிகரின் சாயம் வெளுத்தது...
மீண்டும் தமக்கு அடுத்தபடியான நடிக, நடிகையை தன் படங்களில் போடசொல்லி அதற்கேற்ப கதையை உருவாக்க சொன்னார்
அந்த 30 வயது பாலகன் நடிகர்.
தனியாக மக்கள் திலகத்தை வெல்ல அந்த 30 வயதுடைய பாலகன் நடிகனுக்கு தெம்பில்லை... தீராணியில்லை....
45 வயதான புரட்சித்தலைவரை கண்டு தொடை நடுங்கி கூனி குருகி நின்ற 30 வயது நடிகன்.
பல நடிக,நடிகையர் பட்டாளத்தை கொண்டு அவர்களின் நடிப்புடன் தன்* போலி நடிப்பையையும் சேர்த்து.... படத்தின் வெற்றியை தனக்கு சதகமாக்கி கொண்ட ஒரே இளைய பாலகன் நடிகர் ... மூர்த்தி ஒருவர் தான்....
திருடாதே, தாய்சொல்லைத் தட்டாதே சமூகப் படங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்தார் மக்கள் திலகம்.*
பேண்ட், சர்ட் என வித விதமான அலங்காரம் தொப்பி
கண்ணாடி... கோட்... டி சர்ட் என பிரமிக்க வைக்கும் அளவுக்கு திரையில் தோன்றினார் மக்கள் திலகம்.*
பாலகன் நடிகர் வயதான தாத்தா வேடத்தில் நடிக்க தொடங்கினார்... கிழிந்த சட்டையும் தாடியுமாக*
60 வயது தாண்டிய கிழவனாக நடித்ததாவது சினிமாவில் நிற்க முடிவு செய்தார் அந்த பாலகன்....*.........
orodizli
3rd September 2020, 09:14 PM
இந்த மூன்று திரைப்படங்களையும் வெல்ல.....* அன்று அது வரை அத்தனைப் படங்களிலும் நடித்த எந்த நடிகராலும் இத்திரைப்பட* வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை என்றால் ஒரு திரைக் காவியத்தின் வசூலை மிஞ்சி எழுச்சி பெற்று முதன்மை பெற்றால் தான் அந்த திரைப்படத்தின் சாதனை என்று சொல்லவேண்டும்.**
படத்தையும் கதாபாத்திரத்தையும் வைத்துக் கொண்டு ஓலமிட்டாள் அப்படம் வெற்றிக்கு அறிகுறி கிடையாது என்பது பொருளாகும்..
அன்றைய சினிமா உலகில் முன்னணி நடிகர்களையும் இரண்டாம் பட்ச கதாநாயகர்களை வைத்து தன்னுடைய படங்களை உயர்த்திக் காட்டிய சில நடிகர்களின் அகம்பாவம் சில படங்களில் அரங்கேறியது. கட்டபொம்மன், பாகப்பிரிவினை பாசமலர், நவராத்திரி, கை கொடுத்த தெய்வம், பச்சை விளக்கு, ஆலயமணி, பாவமன்னிப்பு போன்ற படங்களும் புராண படங்களில் பல நடிகர்களை ஒன்று கூட்டி வைத்து கதை அமைத்து திருவிளையாடல் சரஸ்வதி சபதம் கந்தன் கருணை
தில்லாணா.. போன்ற படங்களைக் கொடுத்தும் பின்னாளில் இப்படங்கள் திரையரங்குக்கு வராமல் ஓய்வு எடுத்த காலம் இன்று வரை தொடர்கதை தான்.*
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் அனைத்து ஏரியாக்களிலும் சாதனை படைக்கும் என்பது முக்கிய சரித்திரமாகும். மற்ற நடிகர்கள் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் சாதனை என்று பீற்றிக் கொண்டு 90 சதவீத ஊர்களில் வசூலில் கோட்டை விட்டனர் .*
கிழட்டு பாலகனாக பல படங்களிலும்,.சாமியார் வேடத்திலும் வந்தும்
அதிக* வயதுடைய பெண்ணுக்கு இந்த பாலகன் நடிகர் அப்பாவாக. தாத்தாவாக நடித்தார்...
அதன் பின் திரையில் நிற்க எந்த கதாபாத்திரத்தை தன் வளமான வாழ்வுக்கு பணம் ஒன்றே போதும் என நடித்தார்....100 ரூபாய்க்கு நடித்தால் போதும்... கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொள் என்றால்...1000 ரூபாய்க்கு* கட்டி பிரண்டு நடித்து ...கண்ணீர் விட்டு அழுதபின் கொடுப்பதை கொடுங்கள் என வாங்கிய 30.வயது கீழபாலகன் நடிகர்.
நாடோடி மன்னன் பெற்ற வசூலை
1965 ஆம் ஆண்டு வெளியான*
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம்*
வெளியாகி வென்று புதிய வெற்றியை.. வசூலை படைத்தது.
16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தும்*
15 திரையரங்கில் முதல் வெளியீட்டில்.... 100 நாள் ஆகும். தர்மபுரி நகரில் இரண்டாம் வெளியீட்டில் 100 நாட்களும் கொண்டாடி..... மூன்றாவது அதிக ஊர்களில் 100.நாட்களை கடந்த திரைப்படமாக தமிழ் திரை உலகில் சாதனை படைத்தது.*
ஈரோடு நகரில் 100 நாட்கள்.... விளம்பரத்தில் சேர்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப கோணத்தில் 98 நாட்கள் ஒடியது.*
1965 ஆண்டு வரை மிகப்பெரிய வெற்றியை பெற்ற காவியங்கள் மூன்று மட்டுமே.*
மதுரை வீரன் .... 35 அரங்கு
நாடோடி மன்னன்... 14 அரங்கு*
எங்க விட்டுப்பிள்ளை ... 17 அரங்கு.
மக்கள் திலகத்தின திரைப்படங்களுக்கு அடிபணிந்து வசூல் இல்லாமல் எடுக்கப்பட்ட காலங்கள் பல....*
சினிமா உலகம் என்றாலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒருவர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பெயரால் தான் பல ஆண்டுகள் நிலைத்து நின்றது. அதன் பின்பு பல திரைப்படங்கள்.... பல வெளியீடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் வாழ்வாதாரம் பெற்ற வந்துள்ளது. மற்ற நடிகர்களின் குப்பை படங்கள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்தது. இது தான் கடந்த கால வரலாறு....
முதல் வெளியீட்டிற்கு பின் மண்ணோடு மண்ணாக*
மக்கி போன படங்களை தூசி தட்டி அலங்காரம் செய்து... முகநூலில் பொய் என்னும் பதிவில்..
சாதனை என பிதற்றுகிறார்கள்* சிலர்.....
தொடரும்............
orodizli
3rd September 2020, 10:03 PM
கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் வந்து ' விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே 'என்று வேண்டினார்
அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்று பதில் கூற. கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார்.........
orodizli
3rd September 2020, 10:04 PM
கொரோனா சூழ்நிலை காரணமாக ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதங்களில்
'இதயக்கனி' இதழைக் கொண்டுவர முடியவில்லை என்பதன் பாதிப்பை தினமும் வாசகர்களின் அழைப்பின் மூலம் உணர்கின்றேன்.
இன்று மாலை 'இதயக்கனி' கோவை முகவர் திரு சண்முகராஜா தொடர்பு கொண்டு பேசினார். "நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் கோவை காந்திபுரம்
மத்திய பேருந்து நிலைய பகுதி கடைகள் திறக்கப்பட்டன.
"நான் வழக்கம் போல புத்தக கடைகளுக்கு சென்றபோது,
இன்று மாலை அங்குள்ள கடையொன்றுக்கு தலையில் சுமையுடன் வந்த ஒரு பெண்மணி, 'இதயக்கனி' இதழ் அங்கிருப்பதறிந்து
ஆர்வத்துடன் வாங்கி அட்டை முகப்பிலிருக்கும் எம்.ஜி.ஆர். உருவத்தை வணங்கி முத்தமிட்டு,
"மூன்று மாதமாக இதயக்கனி புத்தகம் பார்க்க முடியாமல் தவித்துப் போனேன்.
என் தெய்வத்தை இன்று பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது"
என்றவர், இதற்கு முன் மாதம் தவறாமல் அந்த கடையில் தான் புத்தகம் வாங்கி செல்வாராம். அவரது ஆர்வத்தை கண்ட மகிழ்ச்சியில் பெயரைக் கேட்க மறந்து போனேன்" என்றார்.
20 ம் ஆண்டிலும் இப்படியொரு நிகழ்வு அதிசயம்தான்.
Ithayakkani S Vijayan...........
orodizli
3rd September 2020, 10:05 PM
1972 - #அண்ணா_திராவிட_முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - #புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - #புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - #தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - #மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - #மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - #அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - #இலங்கைத்_தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
24•12•1987 -புரட்சித்தலைவர் தெய்வம் ஆனார்
புரட்சி தலைவர்,&
அம்மாவின் தொண்டன் .........
செஞ்சி #முனியப்பன்.........
orodizli
3rd September 2020, 10:07 PM
இந்த புகைப்படம் குறித்து சில நாட்களுக்கு முன் நம் தளத்தில் பதிவு வர பல தலைவர் நெஞ்சங்கள் ஆளுக்கு ஒரு முறையில் பதில் சொல்ல.
ஐம்பெரும் திமுக தலைவர்கள் அப்போது இருந்த நேரம்..சென்னையில் அப்போது இப்போது மாநகராட்சி தேர்தல் என்று அப்போது கார்ப்பரேஷன் தேர்தல் என்பர் அதை..
அதில் திமுக வெற்றி.
தலைவர் வழக்கம் போல கடும் பிரச்சாரம்.
வெற்றி அடைந்த பின் நன்றி அறிவிப்பு கூட்டம்.... எல்லா தலைவர்களும் மேடையில் இருந்து ஒருவர் பின் ஒருவர் பேசி நன்றி சொல்ல.
அமரர் அண்ணா அவர்கள் பேச துவங்கி சற்று நேரத்தில் இந்த தங்க மோதிரத்தை இந்த தேர்தல் வெற்றிக்கு பாடு பட்ட அவருக்கு உங்கள் முன் அணிவிக்கிறேன் என்று சொல்லி அணிவிக்க...
அவர் பெயர் இங்கே சொன்னால் கூட பாவம்......அனைவருக்கும் அதிர்ச்சி நாம் எல்லோரும் வெற்றிக்கு பாடு பட அண்ணா அவர்கள் அவருக்கு மட்டும் தங்க மோதிரம் போடுவது சரியா என்று மேடையில் சலசலப்பு.
தீயசக்தி மகிழ்ச்சி அடைந்தது...மறுநாள் அனைவரும் அண்ணா அவர்களை சந்தித்து என்ன எப்படி என்று கேட்க.
அண்ணா அவர்கள் சிரித்து கொண்டே தேர்தல் நிதி என்று பணம் வசூல் பண்ணி அதில் மீதி இருந்த பணத்தில் அவரே கட்சி பணத்தில் ஒரு மோதிரம் வாங்கி கூட்டம் நடக்கும் காலை வீட்டுக்கு வந்து..
இன்று மாலை நான் மேடையில் ஒரே வேண்டுகோள் வைப்பேன் அதை நீங்கள் தட்டாமல் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ள.
நானும் இந்த மோதிர விஷயம் தெரியாமலே ஒப்புக்கொள்ள அப்புறம் தெரிந்தது அவரின் உண்மை முகம்.
அடுத்த கூட்டத்தில் நீங்க வேணா பத்து மோதிரங்கள் வாங்கி கொண்டு வாங்க உங்க பத்து விரல்களுக்கும் போட்டு விட நான் தயார் என்கிறார் அமரர் அண்ணா சிரித்து கொண்டே..
முகம் காட்டி வாக்குகள் சேகரித்து கொடுக்கும் என் தம்பி ராமச்சந்திரன் அவர்களிடம் இந்த சம்பவம் சொல்லி நானும் சிரிக்க அவரும் சிரிக்க அதுவே இந்த படம்...
அண்ணா அவர்களையே மேடையில் அடகு வைத்த அப்படி பட்ட ஒருவரை தலைவர் மட்டுமே அடக்கி ஒடுக்கியது காலத்தின் கட்டாயமே..
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்..
உங்களில் ஒருவன் நன்றி............
orodizli
3rd September 2020, 10:14 PM
இலங்கையில் "நீரும் நெருப்பும் "...திரைக்காவியம் ஓடிய சாதனைகள்* சில!
01.01 1972 ல் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரு வேடங்களில் பவனி வந்த நீரும் நெருப்பும் திரைக்காவியம் கொழும்பிலுள்ள ஜெயின்ஸ்தான் திரையரங்கில் 84நாட்களும் ஈரோஸ் திரையில் 45 நாட்களும் நவா திரையில் ஏழு நாட்களும் காண்பிக்கப்பட்டு மொத்தம் 136 நாட்கள் கொழும்பில் முதல் கட்டமாக ஓடிய திரைப்படம் நீரும் நெருப்பும்.
01.01 1972 ல் யாழ்ப்பாணம் நகரில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. தொடர்ந்து ஆறு காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை. இரண்டாவது நாளில் 5 காட்சி நடைபெற்றது 5 காட்சியும் அரங்கு நிறைந்து சாதனை. தொடர்ந்து நான்கு காட்சிகள் வீதம் காண்பிக்கப்பட்டு மொத்தம் ராஜா திரையரங்கில் 65 நாட்கள் ஓடியது நீரும் நெருப்பும்.
16 .02 .1972 திரிகோணமலை சரஸ்வதி தியேட்டரில் திரையிடப்பட்ட நீரும் நெருப்பும் திரைப்படம் 50 நாட்களை கடந்து சாதனை படைத்தது. இலங்கையில் நீரும் நெருப்பும் திரைப்படம் பல பகுதியில் திரையிடப்பட்டு சாதனையாகும்.
அடுத்து இலங்கையில் ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் 18.2 .72 ல் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. கொழும்பில் 4 திரையில் திரையிடப்பட்டது மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன். கொழும்பு கேப்பிட்டல், கிங்ஸ்லி பிளாசா, சபையர் ஆகிய நான்கு திரைகளில் .....
கிங்ஸ்லி அரங்கில் 20 நாட்களும், பிளாசா திரையில் 35 நாட்களும், சபையர் திரையில் 12 நாட்களும், கேப்பிட்டல் திரையில் 78 நாட்களும் ஓடி கொழும்பில் மொத்தம் 145 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.
யாழ் நகரில் வெலிங்டன் திரை மற்றும் லிடோ திரையரங்கில் திரையிடப்பட்ட ரிக்க்ஷாக்காரன் லிடோ அரங்கில் 29 நாட்களும், வெலிங்டன் தியேட்டரில் 72 நாட்களும் வெற்றி முரசு கொட்டி முதல் வெளியீட்டில் 101 நாட்கள் ஒடியது. ஒரே நாளில் ஆறு காட்சிகள்
காண்பிக்கப்பட்டு 12 காட்சிகளும் அரங்கு நிறைந்து அதன் பின்பு ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது....
இலங்கையில் தொடர்ந்து இடைவெளி இல்லாது வந்து மகத்தான சாதனையை படைத்த இரண்டு காவியங்கள்...
நீரும் நெருப்பும்
ரிக்க்ஷாக்காரன்...
கணேசனின் இரண்டு படங்கள்
ராஜா... ச.சமாளி* சாதனையின்றி கிடந்தது....
மேலே மக்கள்திலகம் செய்த சாதனையை பார்த்து முக்காடிட்டு மூலையில் ஒதுங்கி நின்றனர்.*
தகவல்
அ.டேவிட்
57,டேவிட் ரோட்,
யாழ்பாணம்
இலங்கை.........
orodizli
3rd September 2020, 10:16 PM
இலங்கையிலுள்ள திரிகோணமலையில் "நீரும் நெருப்பும்"... திரைக்காவியம் 50 நாட்களை கடந்து மாபெரும் வசூலை உருவாக்கியது அதே அரங்கில் அதன் பின்பு திரையிட்ட நடிகர் சிவாஜி கணேசனின் சவாலே சமாளி திரைப்படத்திற்கு கணேசன் ரசிகர்கள் ஒலிபெருக்கியில் நெருப்பை அணைக்க வரும் சவாலே சமாளி* என்று விளம்பரம் செய்தார்கள் ஆனால் நீரும் நெருப்பும் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடியது. சவாலே சமாளி திரைப்படம் 33 நாட்களில் தூக்கி எறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திரிகோணமலை ஜோதி அரங்கில் சவாலே சமாளி 33 நாளில் 19 ஆயிரத்து 555 பைசா வசூலை கொடுத்தது. அதற்கு முன் வெளியான காவல்காரன் திரைப்படம் அதே திரையரங்கில் 22 நாளில் 21 ஆயிரத்து 190 வசூலை*
3 ஆண்டு முன்னே கொடுத்தது.* நீரும் நெருப்பும் திரைப்படம் ஆறு ஆண்டுகளுக்குப் பின் திரிகோணமலையில் 50 நாளை கடந்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது..........
orodizli
3rd September 2020, 10:19 PM
எம்ஜிஆர் பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.
‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.
அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.
‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக்கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.
‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.
- தி இந்து ..........
orodizli
3rd September 2020, 10:32 PM
"உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் புகைப்பட கலைஞர் ஏ.சங்கர்ராவ் சொல்கிறார். அந்த ஜப்பான் எக்ஸ்போ 70யில் நாள் ஓன்றுக்கு 10 லட்சம் பேர் இருப்பார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தில் தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அன்று லதா மேடத்துக்கு அன்று ஷாட் இல்லாததால் ஜானகியம்மாவை அழைத்துக் கொண்டு எக்ஸ்போ 70 ஐ சுற்றிப்பார்க்கச் சென்று விட்டார். ஷுட்டிங் பிரேக்கில் மஞ்சுளாவும், சந்திரகலாவும் தனித் தனியாக சேரிலும் ஒரு 10 அடி தள்ளி தலைவரும் நானும் , நாகேஷும் ஒரு சேரில் அமர்ந்திருந்தோம் சண்டை பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தர் தூரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜப்பான் கராத்தே ஸ்கூல் வேன் வர அதிலிருந்த கராத்தே மாணவர்கள் இறங்கியவர்கள் மஞ்சுளாவும் ,சந்திரகலாவும் புடவை கட்டிக் கொண்டிருந்த தைப் பார்த்து வேற்று மொழிக் காரர்கள் எனத் தெரிந்து கொண்டு அவர்கள் அருகில் நின்று ஜப்பானிய மொழியில் ஏதோ பேசி சிரித்து கமெண்ட் அடித்து வந்ததைப் பார்த்த நாகேஷ் என்னிடம் ஏதோ நடக்கப் போகிறது நம்மாளு (தலைவர்) கூலிங்கிளாஸ் வழியே அந்த கராத்தே ஸ்டுடண்ஸ் பார்த்துக் கொண்டே இருக்கிறார் எனக் கூறினார்.அப்போது தான் நானும் கவனித்தேன் . கேலியாக பேசிய மாணவர்களில் இரண்டு பேர் மஞ்சுளாவின் தோளில் கை வைத்து விட்டார்கள். உடனே கோட்டை கழற்றி வைத்தவர் முழுக்கை சட்டையை மடித்து விட்டு பத்தடி தூரத்தில் உட்கார்ந்திருந்த மாணவர்கள் மீது பாய்ந்து விட்டார் ஒரே பாய்ச்சலாக நானும் நாகேஷும் அரண்டு போய் ஓரத்தில் ஒதுங்கி விட்டோம் சினிமாவில் வருவது மாதிரி 2 பேரும் 5 அடி தூரத்தில் போய் விழுந்தார்கள். இது எல்லாமே ஒரு சில விநாடிகள் தான் புல்லட் கூட லேட்டாத்தான் போயிருக்கும் அதை விட ஸ்பீடூ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் , நாகேஷ் பேயறைந்த மாதிரி நிற்க இங்க உட்கார்ந்திருந்த மனுஷன் அதற்குள் எப்படிப்பா அங்க போனார் என்று ஆச்சரிய்பட அதற்குள் கராத்தே ஸ்டூடண்ட்ஸ் தாங்கள் செய்தது தவறு தான் என்பது போல நின்றுவிட்டு கிளம்பி போனார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தருக்கு ஒரு பக்கம் பயம் ஒரூ பக்கம் ஆச்சரியம் 10 லட்சம் பேர் இருக்கிற இந்த கூட்டத்தில எம்.ஜி.ஆரோ 1 ஆள் ஸ்டுடண்ட் 40 பேர் நாம வெளிநாட்டினர் அவங்களோ உள்நாட்டுக் காரங்க எவ்வளவு துணிச்சலா அடிச்சிருக்காரு இந்த மாதிரி துணிச்சல் வேகமும் யாருக்கும் வராதுப்பா என்றார்..........
orodizli
3rd September 2020, 10:35 PM
எம்.ஜி.ஆரின் பெயருக்குள்ள மதிப்பு !
*தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள்?*
"நான் தீவிர எம்.ஜி. ஆர். ரசிகன். அவரது படங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரே தலைவர் அவர்தான். அவரோடு நெருக்கமாக இருந்தவர்களைப் பார்த்தாலே தலைவரைப் போல்தான் பார்ப்பேன்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரிடம் கேட்ட தகவல்கள் என்னை எம்.ஜி.ஆர். மீது அதிக பற்று கொள்ள வைத்தது. ஒரு முறை சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் படப்பிடிப்புக்குப் போயிருந்தேன் அங்கு ஒரு ‘ரிக்சா ஸ்டாண்ட்’. ‘ரிக்சாக்காரன்’ படப் பெயரிலேயே இருந்தது.
அங்கே நான்கு ரிக்சாக்களில் இரண்டில் ஓட்டுபவர்கள் இல்லை. அவர்கள் எங்கே என்று விசாரித்தபோது... 'இருவரும் மது அருந்திவிட்டார்கள். அதனால் தொழிலுக்கு வரமாட்டார்கள்' என்றார்கள். அவர்களை யாரும் வர வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்களாகவே வரவில்லை. இதுதான் தொழில் மீது வைத்திருக்கும் பக்தி" என்றார் நடிகர் மயில்சாமி.
26-7-2020 ராணி இதழிலிருந்து
ப. இசக்கிபாண்டியன், திருநெல்வேலி
('இதயக்கனி' யின் ஜூலை/ஆகஸ்ட் 2020 இதழில் பிரசுரமான தகவல்)
Ithayakkani S Vijayan.........
orodizli
3rd September 2020, 10:36 PM
புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.
ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.
இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.
சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.
கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.
வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.
எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.
பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.
கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!
பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.
மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...
‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’
- தி இந்து ............
orodizli
3rd September 2020, 10:42 PM
வசூல் விவரம் பற்றி பதிவு போட்டால் வேறு வேலை இல்லையா என்று அலுத்துக் கொள்பவர்கள் அப்படி கஷ்டப்பட்டு இந்தப் பக்கத்தை படிப்பானேன்? அவர்கள் வேறு வேலையை பார்க்கலாமே? யார் அவர்களை தடுத்தது? இதெல்லாம் தேவையா? என்றும் சில நண்பர்கள் அங்கலாய்க்கிறார்கள். இன்னும் சிவாஜி கணேசன் குழுக்கள், தளங்கள், தனிப்பட்ட சிவாஜி கணேசன் ரசிகர்களின் முகநூல் பக்கங்களில் பாருங்கள். எவ்வளவு பொய்களை அவிழ்த்து விட்டு புரட்சித் தலைவரைப் பற்றியும் அவர் படங்களைப் பற்றியும் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று தெரியும். சிவாஜி கணேசன் புகழை பரப்புவதை விட (???????!!!!! புகழ் இருந்தால்தானே பரப்புவதற்கு? வாழும் காலத்திலேயே செல்லாக் காசாகிப் போனவர் அவர்) புரட்சித் தலைவரையும் அவர் படங்களையும் மோசமாக விமர்சிக்கின்றனர். செல்லாக் காசை விமர்சிப்பானேன்? என்று கேட்கலாம். செல்லாக் காசை தங்கக் காசு என்று பொய் சொல்லி ஏமாற்ற நினைப்போருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
எங்க வீட்டுப் பிள்ளையை திருவிளையாடல் வசூலில் வென்றது.... உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தங்கப் பதக்கம் வசூலில் வென்றது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய மகா கேவலமான பொய்களை கூறி சிவாஜி கணேசன் ரசிகர்கள் தங்களுக்கு தாங்களே சொறிந்து கொண்டு சுகம் தேடுகிறார்கள். அது உண்மை என்றால் விநியோகஸ்தர்கள் கொடுத்த பத்திரிகை விளம்பரத்தை அவர்கள் வெளியிடலாமே. ரிக்ஷாக்காரன் 51 நாட்களில் 50 லட்சம் வசூல் செய்தது என விநியோகஸ்தர் கொடுத்த பத்திரிகையில் வந்த விளம்பரம் கொடுத்துள்ளோம். உலகம் சுற்றும் வாலிபன் விளம்பரமும் இருக்கிறது. அதை முறியடித்ததாக தங்கப்பதக்கம் படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரம் அவர்களிடம் உள்ளதா? அதை வெளியிடலாமே? இருந்தால்தானே வெளியிடுவார்கள். வெறும் புளுகுமூட்டைகள். அவர்களுக்கு இதுபோன்று பதிலடிகள், விளக்கங்கள் கொடுத்தால்தான் இளைஞர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்வார்கள். இல்லாவிட்டால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். அதை அனுமதிக்கக் கூடாது. நாட்டின் வளர்ச்சி, திட்டங்கள் என்று ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கவும் ராணுவம் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட ராணுவம்தான் நடிகப் பேரரசர் எம்ஜிஆர் பக்கம். இதை புரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து சிவாஜி கணேசன் ரசிகர்களின் பொய்கள் தோலுரிக்கப்படும். அடுத்த பதிவில் சொல்கிறேன்..........
orodizli
3rd September 2020, 10:47 PM
லால் பகதூர் சாஸ்திரியிடம் போர் நிதியாக சிவாஜி கணேசன் 100 பவுன் தங்கப் பேனாவையும் 400 பவுன் நகைகளையும் கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள் புளுகுவார்கள். சிவாஜி கணேசன் ஏதோ கொஞ்சம் கொடுத்துள்ளார் என்பதை மறுக்கவில்லை. சிவாஜி கணேசன் மட்டுமல்லாமல் சாவித்திரி, ஜெயலலிதா உட்பட எல்லா நடிகர், நடிகைகளும் நகைகள், பணம் கொடுத்தார்கள். அவர்களைப் போலத்தான் சிவாஜி கணேசனும் கொடுத்துள்ளார். ஆனால், சிவாஜி கணேசன் கொடுத்த தங்கப் பேனா முதலில் 200 பவுன் என்றார்கள். இப்போது 100 பவுன் என்கிறார்கள். இதில் குறைத்துவிட்டார்களே என்று பார்த்தால் அதைத் தவிர 400 பவுன் கொடுத்தார் என்று லாரி லாரியாக பொய்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.
இந்தப் படத்தைப் பாருங்கள். அந்தப் பேனாவை சிவாஜி கணேசன் எப்படி பிடித்திருக்கிறார் என்று பாருங்கள். ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் அதுவும் மிகவும் லேசாக பிடித்துள்ளார். ஒரு பவுன் தங்கம் 8 கிராம். 100 பவுன் என்றால் 800 கிராம். முக்கால் கிலோவைவிட 50 கிராம் கூடுதல். ஒரு கிலோவுக்கு 200 கிராம் குறைவு. முக்கால் கிலோவுக்கும் மேற்பட்ட எடையை இப்படி இரண்டு விரலால் லேசாகப் பிடிக்க முடியுமா? அவர் பிடித்திருப்பதைப் பார்த்தால் பேனா 100 கிராம்தான் இருக்கும் போலிருக்கிறது. இதைத்தான் 100 பவுன் என்று புளுகுகிறார்கள். 400 பவுன் நகைகள் வேறு கொடுத்தாராம். இதில் விளம்பரம் தேடா வள்ளல் என்று போலி விளம்பரம் வேறு. புரட்சித் தலைவரை கலாய்க்கிறார்களாமாம். இதில் அவர்களை அறியாமல் உண்மையை சொல்லி இருக்கிறார்கள். இந்தப் பேனா சிவாஜி கணேசனுக்கு அன்பளிப்பாக பி.ஆர்.பந்துலு கொடுத்ததாம். இவர்கள் என்னதான் பொய் சொன்னாலும் சிவாஜி கணேசன் கஞ்சன் என்ற பெயர் மக்களிடம் மாறப்போவது இல்லை. இதேபோலத்தான் அவரது படங்களின் வசூல் சாதனைகள் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் புளுகி வருகிறார்கள். அந்தப் பொய்கள் தகர்க்கப்படும்..........
orodizli
3rd September 2020, 10:53 PM
தமிழக ஊடக விவாதங்கள் இன்றுஒரு பார்வை !! இன்று மக்கள் இயக்கமாம் எங்கள் இதய தெய்வங்கள் வளர்த்த , மாபெறும் தொண்டர்கள் இயக்கம் !! அ.இ.அண்ணாதி.மு.கழகம் " இதனை முன்னிறுத்தியே தினமும் ஊடக விவாதங்கள் இதுவே எங்கள் பலம் !! எங்களை எந்த ஒரு அரசியல் சக்தியும் அல்லது எந்த ஒரு தனி நபரும் அசைத்துகூட பார்க்க முடியாது* !! இதுவே நேற்றும் , இன்றும் , நாளையும் எங்களின் அரசியல் பலம் , இது தொண்டர்கள் தலைமையில் உள்ள மாபெறும் மக்கள் இயக்கம் !! நன்றி ,, போத்தனூர் பாலு அரசியல் செய்தி சமூக கட்டுரையாளர் , சென்னை 28 !!!.........
orodizli
4th September 2020, 09:07 AM
'எம்ஜிஆர்' அது வெறும் பெயர் அல்ல... தமிழகத்தின் அரை நூற்றாண்டுக்கான வரலாறு
.....
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள், நாடக கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகளை கொண்டவர், அரசியலிலும், சினிமாவிலும் யாரும் தொடாத உச்சத்தை தொட்டார். கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களில் ஆட்சியை பிடித்த என்.டி ராமாராவ் தனக்கு குருநாதர் எம்ஜிஆர் தான் என்று கூறியதே அரசியலில் இந்திய அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சை புரிந்துகொள்ள போதுமானது. அத்தகைய ஆளுமையை அவர் ஒரே இரவிலோ அல்லது ஒரு படத்தின் வெற்றியிலோ அவருக்கு கிடைத்துவிடவில்லை. அளவிட முடியாத கடினமான உழைப்பே அவர் சினிமாவில் சாதிக்க உதவியது என்றால், தமிழக மக்களின் கனிவான பார்வை அவர் அரசியலில் சாதிக்க ஏதுவாக இருந்தது. 40-களின் ஆரம்பத்தில் திரையில் உதவி நடிகராக தலைகாட்டிய அவர், 50-களில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆனார் என்றால் அவர் அதற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம்.
நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் காட்டிய அந்த கடின உழைப்பை தன் உயிர் மூச்சு இருக்கும் வரையில் தொடர்ந்த காரணத்தால் தான், தமிழக மக்கள் அவரை மூன்று முறை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தனர். தனக்கு வாய்ப்பு தேடி அலைந்த அந்த நாட்களிலும், வாய்ப்புக்கள் வந்து குவிந்து கைநிறைய சம்பாதித்த அந்த நாட்களிலும் அவரிடம் மாறாதது, இல்லை என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று சொல்லாத அந்த கருணை உள்ளம்தான். சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்தத போதும், பிறகு முதல்வராக பதவி வகித்த போதும் அவரிடம் மாறாதது தனக்கு ஆரம்ப காலத்தில் உதவியவர்கள், நண்பர்கள் என யாரையும் அவர் மறக்காததும், அவர்களின் இன்ப துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்வது என்று அதில் உறுதியாக இருந்தார். எதுகை மோனைகளில் அவருக்கு பேச தெரியாவிட்டாலும், நம்பியவர்களை நட்டாற்றில் விடும் பழக்கம் இல்லாதவர் அவர், என்பதை பல சமயங்களில் அவரே நிரூபித்து உள்ளார்.
1977ம் ஆண்டு அவர் முதல்வர் ஆன சமயம், அவர் உதவியால் படித்து பட்டம்பெற்ற துரைமுருகன் அப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் அரை மணிநேரத்திற்கு மேலாக மூச்சுவிடாமல் பேசுகிறார். அதிமுக உறுப்பினர்கள் எம்ஜிஆரின் கண்ணசைவுக்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் அவர், துரைமுருகனை பார்க்கிறார், ரசிக்கிறார். இதை துரைமுருகனும் கவனிக்கிறார். ஒரு கட்டத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுகிறார், கீழே விழுந்த அவரை ஒருசில வினாடி இடைவெளியில் ஒரு கை தாங்கி பிடிக்கிறது. அந்த கை வேறு யாரும் அல்ல. யாரை தாக்கி பேசி அவர் மயக்கமடைந்தாரோ அந்த வார்த்தை தாக்குதலுக்கு உள்ளான எம்ஜிஆர் தான் அவரை தாங்கி பிடித்தார். தன்னால் வளர்க்கப்பட்டு வாழ்க்கை கொடுத்த ஒருவரின் தாக்குதலை தாயை சீண்டும் குழந்தையிடம் தாய் காட்டும் கோவத்தை கூட அவர் காட்டவில்லை என்பதே அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் காட்டிய நேசத்துக்கு ஒரு சிறிய உதாரணம். தன்னை வாழ்நாள் எல்லாம் எதிர்ப்பதையே கடமையாக வைத்திருந்தவர்களை கூட முதலாளி என்று கூப்பிட்டு முதல் நபராக மதித்தார். தன்னை எதிர்த்தவர்கள் மீதே இந்த அளவு நேசம் காட்டினார் என்றால், தன்னை வாழ வைத்த தமிழக மக்கள் மீது அவர் காட்டிய நேசம் என்றும் அளப்பரியது யாராலும் அளவிட முடியாதது. முதல்வராக அவர் பதவி வகித்த நேரம் நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் சிவகாசிக்கு செல்கிறார். உச்சி வெயில் முகத்தில் அடித்த அந்த மதிய நேரத்தில் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய்மார்கள் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களை கண்ட அவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி குழந்தைகளிடம் உணவருந்தினீர்களா? என்று கேட்டுள்ளார். அவர்கள் தங்களின் அம்மாவை பார்க்கவே,நிலைமையை புரிந்துகொண்ட எம்ஜிஆர் அவர்கள் உடனடியாக தொடங்கியதே சத்துணவு திட்டம்.
பள்ளிக் குழந்தைகளின் நலன்களில் அவர் காட்டிய அக்கறை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்பொடி வழங்குவதில் தொடங்தி காலுக்கு காலணி வழங்கும் வரை அது தொடர்ந்தது. அவரின் இந்த மக்கள் நலத்திட்டங்களே அவரை பட்டிதொட்டி வரை கொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல. கடவுளாக, கடவுளக்கும் மேலாக அவரை இன்றும் பொதுமக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கான விதை, அவர் போட்ட மக்கள் நலன் கொண்ட திட்டங்களே ஆகும். அதனால்தான் என்னவோ மண்ணில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் தோன்றி மறைவது இயற்கை என்றாலும், மக்களுக்காக வாழ்ந்த அவரின் இறப்பை அதனால்தான் என்னவோ இன்றும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். உயிர் வேண்டுமானால் அவரை விட்டு போயிருக்கலாம், ஆனால் அவரின் புகழை கூட இதுவரை யாரும் நெருங்கவில்லை, நெருங்க போவதும் இல்லை,தலைவா உனக்கு நிகர் நீ மட்டுமே இருக்க வேண்டும் என்று தான் இறைவன் உனக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டாரோ, எம்ஜிஆர் எனும் கலியுக தெய்வம் வாழ்ந்த காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்தோம் என்பதே நம் பாக்கியம்❤️❤️.........
orodizli
4th September 2020, 09:08 AM
வட சென்னையை
கலக்கிய
வாத்தியார் ...........
___________________
எல்லாப் பகுதியிலும் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்கள் படையெடுப்பது வழக்கம் என் பதிவு வடசென்னையை பற்றியது...
வட சென்னையில் பெரும் பகுதி திரையரங்குகளை எம் ஜி ஆர் படங்களே ஆட் கொள்ளும்.
முருகன் திரையரங்கம் எங்களுக்கு பாடசாலை
இத் திரையரங்கில் பூத்த சின்ன சின்ன மலர்கள் நாம்.
சமிபத்தில் இத் திரையரங்கம் இடிக்கப் பட்ட செய்தியறிந்த எனக்கு ஒரு கனம் செய்வதறியாது நின்றேன் .
அங்கு சென்று இடிந்த தூண்களை தொட்டுப் பார்த்தேன் .
எங்களின் விழுதுகள்,
மக்கள் திலகத்தின் கல்வெட்டுக்களல்லவா அத் தூண்கள் .
"மந்திரி குமாரி", படம் மாலை காட்சி அரங்கம் நிறைந்திருந்தது வாராய் நீ வாராய் பாடல் காட்சியில் மக்கள் தன்னை மறந்திருந்தினர் படம் முடிய இன்னும் இருபது நிமிடங்களே உள்ள தருணத்தில் மின்சாரம் தடைபட்டது .
அப்பொழது ஜெனரேட்டர் கிடையாது அரை மணிநேரம் கடந்தும் மின் தடை தொடர்ந்தது பின் செயவதறியாது மக்கள் .
திரையரங்கின் உரிமையாளர் பரமசிவ முதலியார் அனைவரையும் அழைத்து மேனஜர் அறையில் அமர்ந்தவாறே டிக்கெட்டுக்களின் பின்னால் கையொப்பமிட்டு நாளை காலை 11 மணியளவில் வாருங்கள் படம் திரையிடுகிறேன் இப்பபொழது கலைந்து செல்லுங்கள் என்றார் .
அதிசயம்
ஆனால் உண்மை !
அடுத்த நாள் சரியாக 11 மணியளவில் நேற்றைய கூட்டம் மீண்டும் அரங்கு நிறைந்திருந்தது வாராய் நீ வாராய் பாடல் காட்சியிலிருந்து படம் தொடங்கி இருபது நிமிடங்களில் படம் நிறைவடைந்தது !
இது உனக்கு எப்பிடி தெரியும் ? என்ற வினா ? தோன்று கிறதல்லவா !
அக்கூட்டத்தில்
நானும் ஒருவன் ..........
orodizli
4th September 2020, 09:10 AM
ஜோடியில் ஜெ.வுக்கு அடுத்தபடியாக இருப்பவர் சரோஜாதேவி.
1.இந்த அபிநய சரஸ்வதி கன்னடத்துப்
பைங்கிளி தலைவருடன் 26 படங்கள் நடித்துள்ளார்.
2.நாடோடி மன்னனிலிருந்து ஆரம்பித்த இவர் அரசகட்டளை வரை
நடித்த இவர் தீவிர தலைவர் ரசிகை.
3.இவர் எம்ஜிஆருடன் 5
கலர் படம் நடித்துள்ளார்.
அத்தனையும் ஹிட்.
1.நாடோடி மன்னன் படம் பகுதி கலர்.
தலைவர் இயக்கிய படம்
வாழ்வின் திருப்புமுனை ஆக்கியது.
2.எங்க வீட்டுப் பிள்ளை
இந்த படத்தின் வசூல்
விஜயா நர்சிங் ஆஸ்பத்திரி கட்டினார்.
வெள்ளிவிழா படமாகும்.
3.அன்பே வா என்ன அற்புதமான நகைச்சுவைப் படம்.
இதில் நடித்த அனைவருக்கும் எம்ஜிஆர் தன் சொந்த செலவில் சிம்லாவில்
கம்பளி போர்வை
உணவு ஏற்பாடு செய்து
கொடுத்தார்.
தலைவர் வாங்கிய சம்பளம் அன்று 3 இலட்சம்.உடனே செலவு.
மீதி தனது அண்ணன்
குடும்பம் தன் செலவு
மற்றும் திராவிட கழகத்திற்கு தர்ம காரியத்திற்கு
செலவு செய்வதுதான்
தலைவரின் கடமையாகும்.
அப்போது சரோஜாதேவி வாங்கிய சம்பளம் 90000.00ரூபாய்
அவர் குடும்பம் காங்கிரஸ்காரர்கள்.
4.அடுத்து படகோட்டி
மீனவ சமுதாயத்தை
அப்படியே உள்வாங்கி
நடித்தார் செருப்புகூட
அணியாமல் படம் முழுவதும் நடித்திருப்பார்.
பாடல்கள் வாலி.அனைத்தும் ஹிட்
ஆனதால் அவருக்கு
தலைவர் கையிலிருந்த
தங்க மோதிரத்தை பரிசளித்தார்.
மிகவும் அருமை என பாராட்டினார் வள்ளல்.
5.பறக்கும் பாவை
இப்படமே சர்க்கஸ் உலகம்.
தத்ருபமாக இருந்தது.
தலைவர் படத்தில் தான்
நடிப்பார் என்றில்லை
நேரிலேயே தர்மம்
செய்வதலிம்
மக்களை நல்வழிப்படுத்தலும்
தாயை தெய்விம வழிபடுதல்
தமிழ் மொழியை
பாராட்டுதல் இப்படி
எண்ணற்ற காரியங்களகளை
செய்வதில்
அகாய சூரர்.
6.சரோஜாதேவி
தலைவருடன்
மீதி21 படமும் கருப்பு
வெள்ளைதான்.
ஒரு சில படங்கள்
கதை முடிவு சரியில்லாததால் தோல்வி அடைந்தது.
மற்றபடி அனைத்தும்
வெற்றியே.
அப்படியே தோல்வி
என அவருக்கு தெரிந்தால் உடனே
நஷ்ட ஈடு கொடுப்பதும்
தானே சம்பளம் வாங்க மாட்டார்.
நன்றி.........
orodizli
4th September 2020, 09:25 AM
நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., திரி 100001 பதிவுகள் வெற்றிகரமாக கடந்ததற்கும், நீண்டகால சாதனைகளை நீடுழி படைக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கும் பார்வையாளர்களுக்கு மிக்க நன்றிகள்... இத்தகைய சாதனை படைக்க வாய்ப்பளித்த மையம் உரிமையாளர்கள்/ நிர்வாகிகள் மற்றும் நெறியாளர் உட்பட சக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.............
orodizli
4th September 2020, 01:03 PM
சினிமா உலகை தாக்கிய சுனாமி.
உரிமைக்குரல்.
------------------------------------------------------------
இத்தனை காலம் எம்ஜிஆர் நடித்த சாதாரண வெற்றிப் படங்களை பார்த்தோம். ஆனால் மகத்தான வெற்றி பெற்ற ஒரு படத்தை தற்போது பார்க்கலாம். சுனாமி, பிரளயம் இது போன்ற நிகழ்வுகளை பற்றி நாம் ஓரளவு புரிந்து வைத்திருப்போம். ஆனால் ஸ்ரீதர் ஒரு பெரும் சுனாமியில் சிக்கி மகிழ்ந்த கதை தெரியாமா? ஆம்.
அந்த சுனாமிதான் ஸ்ரீ தர் எம்ஜிஆரை வைத்து எடுத்த "உரிமைக்குரல்" படம்.
திரையுலகில் யாரும் இப்படி ஒரு வெற்றியை கண்டிருக்க முடியாது.
சிவாஜியை வைத்து தான் இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்க எத்தனை படங்கள் எடுத்தாலும் அது வட்டிக்கே கட்டாது. அந்த சூழ்நிலையில் அவர் தயாரித்த "உரிமைக்குரல்" சினிமா உலகத்தையே தாக்கிய சுனாமி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஸ்ரீதரின் புதுமையும் எம்ஜிஆரின் திறமையும் ஆற்றலும் ஒன்று சேர்ந்து உருவானதுதான் "உரிமைக்குரல்" என்று சொன்னால் அது மிகையாகாது. அதுவரை வெளிவந்த அத்தனை தமிழ் தெலுங்கு இந்திப்படங்கள் அனைத்தையும் வாரி சுருட்டி கொண்டு போய் குப்பைகளாக கொட்டிய படம்தான் "உரிமைக்குரல்".
சுனாமியால் பேரழிவை சந்தித்தது உலகம். ஆனால் ஸ்ரீதர் தயாரித்த "உரிமைக்குரல்" எழுப்பிய சுனாமி ஸ்ரீதருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் யாரும் ஸ்ரீதர் பக்கத்திலேயே வராத போது அத்தனை தயாரிப்பாளர்களும் ஸ்ரீதரை சுற்றிக் கொண்டு எம்ஜிஆரை வைத்து எங்களுக்கு ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்ட அதிசயத்தை கண்டு அவர் பூலோகத்திலேயே சொர்க்கத்தை அனுபவித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதே காட்சியை சற்று பின்னோக்கி பார்க்கிறார். "சிவந்த மண்" வெளியான போது நடைபெற்ற காட்சி அது. கடன்காரர்கள் அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டதுடன் நில்லாமல் பணம் எப்போது எங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று அனைவரும் ஸ்ரீதரை சுற்றி நெருக்கடி கொடுக்கும் சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
அந்த மரணவேதனையை
அனுபவிக்கும் போது யாரும் அவருக்கு கைகொடுக்க முன் வரவில்லை. ஆனால் தன்னை கரையேற்ற ஒரு அற்புதமான மனிதன் வருவான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அதை நினைத்துதான் தலைவரை அண்ணனாக நினைத்து தனது அடுத்த படத்துக்கு "அண்ணா நீ என் தெய்வம்" என்ற பெயரை வைத்து
நிம்மதி அடைந்தார்.
படம் வெளிவருவதற்குள் அண்ணன் தன் குறையை தீர்த்தது போல். அனைத்து தமிழக மக்களின் குறை தீர்க்க தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆனந்த கணணீர் வடித்து நின்றார் ஸ்ரீதர்.
இனி அந்த சுனாமியின் ரிக்டர் அளவுகளைப் பற்றி பார்க்கலாம்.
இந்த சுனாமியை பொறுத்தவரை ஊர் ஊருக்கு வெவ்வேறு ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
முதல் சுற்றில் 44 திரையரங்குகளில்
வெளியாகி கிட்டத்தட்ட ஒரு கோடியை வசூலாக பெற்றது. அதன்பிறகு வெளியான இரண்டாவது சுற்று மட்டும் முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 3
கோடியை வசூலாக பெற்று இந்திப் படங்களின் வசூலையும் தாண்டி புதிய ரிக்கார்டை உருவாக்கியது.
ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கும் ஸ்ரீதருக்கும் ஒத்து வராது, சீக்கிரம்
இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்தவர்கள் "உரிமைக்குரலி"ன் வெற்றியை கண்டு திகைத்து நின்றார்கள்.
அவர்களில் முக்கியமான சிலர் அவரது ஏற்கனவே பாதி நின்று போன படத்தை தொடர விடாமல் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். எம்ஜிஆர் தன்னோடு இருந்தும் ஸ்ரீதர் அடக்கமாக மேற்படி நடிகரிடம் படத்தை முடிக்க முயற்சி செய்தும்,
பல விதத்தில் இடைஞ்சல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் ஒழுங்காக நடித்துக் கொடுத்தாலே வரும் நஷ்டத்துடன் இந்த நஷ்டமும் சேர்ந்து கொண்டது.
ஏற்கனவே மூன்று படங்கள் மூலம் அவர் அடைந்த இழப்புடன் நாலாவதாக ஒரு டோட்டல் லாஸ் சேர்ந்து கொண்டது. ஆனால் இப்போது ஸ்ரீதர் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. மாறாக புது உத்வேகத்துடன் மீண்டும் களமிறங்கி தன்னை தவிக்க விட்டவர்களுக்கு பெரிய கலக்கத்தை உண்டு பண்ணினார் எப்படியோ பெரும் சிரமத்துக்கு இடையில் அந்த படத்தை முடித்து மீண்டும் நஷ்டத்தை அடைந்தார். குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்த கதையாக முடிந்தது.
அந்த படத்தை முடிக்காமல் இருந்திருந்தால் பிரிண்ட் செலவு மற்றும் விளம்பர செலவாவது மிச்சமாகியிருக்கும். எம்ஜிஆர் அருகில் இருக்கும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் போராடி அதில் வெற்றி பெற்று மீண்டும் அனைவரும் விரும்பும் இயக்குநரானார். கோவையில் "உரிமைக்குரலி"ன் வசூல் யாரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு இமாலய அளவில் இருந்தது..
மொத்தம் 8,69 000 ஐ
வசூலாக பெற்றதை கண்டு சிவாஜி ரசிகர்கள் கொஞ்ச நாட்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் முக்காடுடன் சென்றதாக ஒரு சிலர்
தகவல் சொன்னார்கள். மதுரையில் 200 நாட்கள் ஓடி இதுதான் சாதனை என்று சாதனைக்கு ஒரு புதிய அளவுகோல் நிர்ணயித்தது
என்றே சொல்ல வேண்டும்..
இது போல் நெல்லையில் வெள்ளிவிழா ஓடி நெல்லையில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது.
பல ஊர்களில் புது புது சாதனைகளை உருவாக்கி சினிமா உலகை வியப்பில் ஆழ்த்தியது. தமிழ்ப்படங்கள் இவ்வளவு வசூலை பெற முடியும் என்று உலகுக்கு
உணர்த்திய படம் "உரிமைக்குரல்" என்றால் அது மிகையாகாது..
ஈரோடு ராயல். திரையரங்கில்
155 நாட்கள் ஓடி புதிய சாதனையை உருவாக்கியது..அதன்பிறகு அப்படி ஒரு சுனாமியை திரையுலகில் சந்திக்கவேயில்லை என்று சொல்லலாம். மொத்தத்தில்.
ஸ்ரீதரின் வாழ்வை கவ்விய சூது விலகி தர்மம் வென்று மீண்டும் திரையுலகில் தர்மம் வலம் வந்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வே..........
fidowag
4th September 2020, 05:38 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*17/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதரின் புற வாழ்க்கையின் ஆன்மாவிற்கு இருந்த துடிப்பு என்னவென்றால், பிறரை நேசி, பிறருக்கு உதவு, பிறருக்கு உன்னால் முடிந்ததை செய் என்பதுதான் .அப்படியான செயல்பாடுகளில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள்* வாழ்க்கையில்**தங்களை இன்றும் அர்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் .என்பதை கேட்கும்போது எம்.ஜி.ஆரின் ஆன்மா உண்மையிலேயே வென்றிருக்கிறது .உயிருடன் இருக்கிறது .
எம்.ஜி.ஆர்.அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும்போது ,நெடுஞ்செழியன் நிதி அமைச்சராக* இருக்கிறார் . அப்போது கடுமையான ரேஷன் அரிசி பற்றாக்குறை* வருகிறது .நெடுஞ்செழியன் ,சக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுடன்* அரிசி விலை உயர்வு பற்றி**ஆலோசனை நடத்துகிறார் .*ஆர்.எம்.வீரப்பன் ,பதில் அளிக்கும்போது முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருபோதும்**ஏழைகளுக்கு வழங்கும் ரேஷன் அரிசிமீது விலை உயர்வு அளிப்பதை விரும்பமாட்டார் .* அது இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கை முடிவு அதில் மாற்றங்கள் செய்ய கூடாது என்றார் .ஆகவே விளிம்புநிலை மக்கள் மற்றும் ஏழைகள் மீது கருணை உள்ளம் கொண்டவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த செய்தி தெரிவிக்கிறது .
ஒரு தந்தை ,5 வயதுள்ள தன் மகனை தோளில் சுமந்தபடி எம்.ஜி.ஆர். காரில் புறப்படும் சமயம் ஓடி வருகிறார். அதை கண்ட எம்.ஜி.ஆர். யார் நீங்கள்.எதற்காக*இவ்வளவு பெரிய பையனை சுமந்தபடி ஓடி வருகிறீர்கள் என்று விசாரிக்கிறார் .நீங்கள் இவனுக்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக என்கிறார் தந்தை .பெரிய பையனாக இருக்கிறான்.இன்னுமா இவனுக்கு பெயர் வைக்கவில்லை. வீட்டில் என்ன பெயர் வைத்து அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மலைக்கள்ளன் என்று தந்தை சொன்னார் .வியந்து போன எம்.ஜி.ஆர். இப்படியா ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது .என கேட்டதற்கு என் மனைவி மலைக்கள்ளன் படம் பார்க்கும்போது இவன் பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயர் வைத்தோம் என்றார் தந்தை ..சரி என்று சொல்லி அந்த குழந்தையின் கையில் ரூ.100/- கொடுத்தார் எம்.ஜி.ஆர். சுமார் பத்தாண்டுகள் கழித்து , அந்த குழந்தை மாணவனாக வளர்ந்த பின்* அந்த மாணவனுடன் தந்தை ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திற்கு வருகிறார் . எம்.ஜி.ஆர். கோட்டைக்கு காரில் புறப்படும் சமயம் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நூறு ருபாய் நோட்டை கண்ணாடிக்குள் வைத்து ,பிரேம் செய்து எம்.ஜி.ஆர். கண்ணில் படும்படி நிற்கிறார்கள்**. எம்.ஜி.ஆர். இதை கவனித்து ,காரை நிறுத்தி,யார் நீங்கள், தினமும் இப்படி நிற்கிறீர்கள்* ,என்ன வேண்டும் என கேட்கிறார் உங்களுக்கு நினைவிருக்கிறதா*.நான்தான் மலைக்கள்ளன் .பத்தாண்டுகளுக்கு முன்பு நீங்கள் எனக்கு அளித்த பணம்தான் இந்த ரூ.100/-என்கிறான். என்னை என் தந்தை நன்றாக படிக்க வைத்து நல்ல மார்க் வாங்கியுள்ளேன். எனக்கு மருத்துவம் படிக்க ஆசை. ஆனால் ,எனக்கு போதிய மார்க் இல்லை.அதனால் கிடைக்காது ,வாய்ப்பில்லை என்கிறார்கள் .நீங்கள் தமிழகத்தின் முதல்வராயிற்றே. அதனால் உங்கள் உதவி நாடி வந்துள்ளேன் என்றான் . உடனே,எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனையும் அவன் தந்தையையும் பின்னால் வரும் காரில் ஏற சொல்கிறார் .தமிழ்நாட்டில் மருத்துவத்திற்காக இருக்கைகள் நிரம்பிவிட்டதால்*கர்நாடகத்தின் முதல்வர் குண்டுராவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார் .எனக்கு ஒரு மருத்துவ சீட் இடம் வேண்டும் என கேட்க,நீங்கள் கேட்டு நான் இல்லை என்று சொல்ல முடியுமா* யாருக்கு அண்ணா என்று குண்டுராவ் என்று சொல்ல ,என் மகனுக்குத்தான் என்று எம்.ஜி.ஆர். சொன்னாராம் குண்டுராவ் எம்.ஜி.ஆரின் பரம ரசிகர் . இந்த பதிலை சொன்னதும் ,மலைக்கள்ளனின் தந்தை ,ஐயா என் மகனை, உங்கள் மகன் என்று அறிமுகப்படுத்தினீர்கள் அதுவேபோதும் . எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று புளகாங்கிதம் அடைந்தாராம் ..
மலைக்கள்ளன் பெங்களுருவில் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார் .தொடர்ந்து பல்வேறு துறைகளில் நிபுணராக விளங்கினார் .* ஜப்பானில் இருந்து எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் கானு வந்தபோது அவரது உதவியாளராக ஒரு மருத்துவர் வந்து இருந்தார் . அவர் யார் என்று* எம்.ஜி.ஆர்.தரப்பில்*வினவியபோது* *அவர்தான் மலைக்கள்ளன் என்று கூறப்பட்டது .
சென்னை பல்கலை கழகத்தில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதற்கு முடிவு எடுக்கப்பட்டது .சிண்டிகேட் உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும் .அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன . இதுபற்றி சிண்டிகேட் உறுப்பினராக உள்ள திரு.துரை முருகன் அவர்களுக்கு தகவல்* தெரிவிக்கப்படுகிறது .உடனே, துரைமுருகன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து. எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதற்கு சென்னை பல்கலை கழகத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்த முடிவை நான் ஆதரிப்பதா, அல்லது எதிர்ப்பதா என்று ஆலோசனை கேட்கிறார் .* ஒருபோதும் எதிர்க்க கூடாது .வேறு யாராவது எதிர்க்கலாமே தவிர, நீ கண்டிப்பாக எதிர்க்க கூடாது .* நீ சட்ட கல்லூரியில் படிக்கும்போது மாதா மாதம் ரூ.500/- பணம் அனுப்பியவர் .அதுமட்டுமல்ல நீ படித்து பட்டம் வாங்கி நல்லமுறையில் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை காட்டியவர் . உன் நலனில் எப்போதும் விருப்பம் உள்ளவர் .உன் திருமணத்திற்கு மும்பையில் இருந்து தனி விமானத்தில் வந்து ,திருமண பரிசாக 25 பவுன் தங்க சங்கிலி கொடுத்தவர் .**அவருடைய தயாள குணத்தை வாழ்த்தி, சிண்டிகேட் உறுப்பினர் என்கிற வகையில் நீதான் அவருக்கு பட்டமளிப்பதை வரவேற்று ஆதரிக்க வேண்டும்*என்று கருணாநிதி யோசனை சொன்னாராம் . உங்களுடைய அரசியல் வாழ்க்கை வரலாறில் ஏதாவது தவறிவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா என்று கருணாநிதியை விகடன் நிருபர்கள் கேட்டதற்கு ,ஆமாம், எம்.ஜி.ஆர். என்கிற ஒரு உற்ற நண்பரை நான் இழந்துவிட்டேன் என்று வருத்தத்துடன் சொன்னாராம் .அப்படி எம்.ஜி.ஆருக்கும் ,கருணாநிதிக்கும் இடையே,அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு ஆழமான நட்பு இருந்திருக்கிறது .
மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
---------------------------------------------------------------------------------
1.ஏய் நாடோடி, போகவேண்டும் ஓடோடி - அன்பே வா*
2..கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
3.ஆண்டவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி*
4.எம்.ஜி.ஆர். பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*
5.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
6.எம்.ஜி.ஆர். -எம்.ஜி.சக்கரபாணி உரையாடல் - மலைக்கள்ளன்*
7.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*
orodizli
4th September 2020, 08:05 PM
செப்டம்பர் மாதத்தில் நடந்த மக்கள் திலகத்தின் ...... திரை உலகத்தின் மலரும் நினைவுகள் .
1956
*********
மக்கள் திலகம் எம்ஜிஆர் - சின்னப்பா தேவர் கூட்டணியில் உருவான முதல் வெற்றி காவியம்
''தாய்க்கு பின் தாரம் ''
21.9.1956ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி .
1960
**********
மக்கள் திலகத்தின் ''ராஜா தேசிங்கு '' திரைப்படம் 2.9.1960ல் வெளிவந்தது .
மக்கள் திலகத்தின் இரட்டைவேட நடிப்பு மிகவும் அருமை .
மக்கள் திலகம் & பத்மினி நரிக்குறவ நடனம் பிரமாதம் .
1964
********
25.9.1964 அன்று ''தொழிலாளி '' திரைப்படம் வெளிவந்தது .
மக்கள் திலகம் தொழிலாளியாக அறிமுகமாகி பின்னர் உயர் பதிவிற்கு சென்று உழைக்கும் தொழிலாளருக்கு பல நன்மைகள் செய்யும் அருமையான காட்சிகள் படத்தின் சிறப்பாகும் .
1966
********
18.9.1966 அன்று வெளிவந்த திரைப்படம் ''தனிப்பிறவி ''
உழைப்பின் நோக்கத்தை எடுத்துரைத்த சிறப்பான காவியம் .
1967
*******
7.9.1967 அன்று வெளிவந்த ''காவல்காரன் '' பிரமாண்ட வெற்றி படம் .
1967ல் தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட படம் .
1968
*******
மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ''ஒளிவிளக்கு ''
20.9.1968ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ஜெமினியின் முதல் வண்ணப்படம் ,
1969
********
சென்னை கிருஷ்ணா
மதுரை - சிந்தாமணி
சேலம் - சாந்தி
அடிமைப்பெண் திரைப்படம்
19 வது வாரம் ஓடிக்கொண்டிருந்தது .
நம்நாடு - படத்தின் பாடல்கள் ரிக்கார்ட் அமோக விற்பனையானது .அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். ரசிகர்கள் படம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள் .
1970
*********
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்க்காக ஜப்பான் பயணம் செய்தார் .
1971
********
ரிக் ஷாகாரன் 100 வது நாள் வெற்றி விழா. மக்கள் திலகம் பல ஊர்களில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டார் .
1972
********
மக்கள் திலகத்தின் ''அன்னமிட்டகை '' 15.9.1972அண்ணா பிறந்த நாளில் திரைக்கு வந்தது .
படத்தின் துவக்க காட்சிகளில் எம்ஜிஆர் கணீர் குரலில் [ 1966ல் படமாக்கப்பட்டது ] பேசும் காட்சிகள் மிகவும் அருமை .
1973
*******
உலகம் சுற்றும் வாலிபன் 150 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
பட்டிக்காட்டு பொன்னையா படமும் 50 வது நாள் கண்டது .
மக்கள் திலகம் மாஸ்கோ பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பினார் .
1974
*******
நேற்று இன்று நாளை வெற்றிகரமாக 11 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது ,
அதிமுக இயக்கம் அபார வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருந்தது .
1975
********
இதயக்கனி படம் தென்னாடெங்கும் வசூலில் புரட்சியை உருவாக்கியது .6 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது ,
1976
********
மக்கள் திலகம் பல படங்களில் மும்மரமாக நடித்து கொண்டிருந்தார்
1977
********
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வரானார் .
மீனவ நண்பன் - 50 வது நாளில் நெருங்கியது ,தமிழகம் முழுவதும் வெற்றி ..........
orodizli
4th September 2020, 08:07 PM
ஜாக்கிசானிடம் எம்.ஜி.ஆர். புத்தகம் அளித்த நடிகர் பில்லி வாங் !
இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் உருப்படியாக செய்து கொண்டிருக்கும் வேலைகளில் ஒன்று எனது பழைய சேகரிப்புகளை ஒழுங்குபடுத்துவது. அப்படி செய்த போது 1994 ம் ஆண்டின் 'பொம்மை' இதழ் ஒன்றில் தாய்லாந்து நடிகர், நமது நண்பர், எம்.ஜி.ஆர். ரசிகரான பில்லி வாங், உலகப்புகழ்
பெற்ற நடிகர் ஜாக்கிசானிடம்
'வேத நாயகன் எம்.ஜி.ஆர்.' புத்தகத்தினை பரிசாக அளித்த படம் இடம் பெற்றிருந்தது.
கதாசிரியர், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான, கதை ஆலோசனை குழுவிலுள்ள வசனகர்த்தா (நாடோடி மன்னன் உட்பட)
ரவீந்தர் எழுதிய புத்தகம் இது. இந்த விபரங்களை பில்லி வாங்கிடம் சொன்ன போது, "என்னிடம் கூட இந்த புத்தகம் இல்லை. என் கவலையை போக்கிவிட்டீர்கள்" என்று தன் மகிழ்ச்சியை, நன்றியை தெரிவித்தார்.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.........
orodizli
4th September 2020, 08:12 PM
சென்னையில் மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம் கடந்த 30 ஆண்டுகளில்...
35 திரையரங்கில்..
மாறி.. மாறி திரையீட்டு
சாதனை படைத்தது.
பாரகன் .. 3
பிளாசா...1
சித்ரா... 4
ஸ்டார்.... 3
காமதேனு... 3
கபாலி... 1
ராம்... 2
லிபர்ட்டி... 3
சீனிவாசா ...5
ஜெயராஜ் ...2
நேஷனல் ... 1
பத்மனாபா.. 3
பிராட்வே.... 2
சிவசக்தி... 2
பாரத் ... 1
மேகலா....5
சரஸ்வதி...1
சரவணா.... 13
பாலாஜி.... 6
முரளி கிருஷ்ணா.. 2
லஷ்மி.. 1
கோல்டன் ஈகின் ..2
ராஜோந்திரா.. 2
விருகை நேஷனல்.. 2
பழனியப்பா..2
செலக்ட்..... 6
தங்கம் .... 3
பிரைட்டன்... 3
பாட்சா.... 4
முருகன்... 4
கிரவுன்...1
நடராஜ்....5
நாகேஷ்...2
கிருஷ்ணவேனி... 2
சன்...1
கோபிகிருஷ்ணா ..1
ராதா...2
சயானி...1
மெலோடி... 1
பாலமுரளீ... 3
பாண்டியன் 2
எம்.எம். தியேட்டர்...1
கடந்த 30 ஆண்டில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட கறுப்பு வெள்ளை காவியம்.
வசூல் பேரரசின்
கலங்கரை விளக்கம்.
எந்த நடிகரின் கலர்படங்கள் கூட வாழ்நாள் திரை ஒட்டத்தில் செய்யாத சாதனையில்..
கறுப்பு வெள்ளைபடமான காவியம் கலங்கரை விளக்கம் ஆகும்.
இன்னும் உள்ள 50 க்கும் மேற்பட்ட கறுப்பு வெள்ளை படங்கள் சென்னை மட்டுமே சாதனை இவ்வளவு... என்றால்... தென்னக வெளியீடு... மலைப்பாகவும், மிக வியப்பாகவும் இருக்கும்...........
orodizli
4th September 2020, 08:19 PM
தமிழ்ப்பட உலகில் மக்கள் திலகத்தின் சாதனை திரைக் காவியங்களின்* வெற்றிகள்...
தொடர்ந்து வெளியான.....*
102 வது காவியமான*
புரட்சியாரின் "அடிமைப்பெண்*"
103 வது காவியமான ......
மக்கள் திலகத்தின் நம் நாடு*
104 வது காவியமான கலைப்பேரரசின்....*
மாட்டுக்கார வேலன்*
105 வது காவியமான....*
நடிகப்பேரரசின் என் அண்ணன்*
ஆகிய நான்கு திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து சரித்திரம் படைத்த வெற்றிகள் சில.
நான்கு திரைப்படங்களும் தொடர்ந்து ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும்* நான்கு தொடர் வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய சாதனையை தக்க வைத்த வரலாறு இன்று வரை கிடையாது.
அடிமைப்பெண் திரைக்காவியம்..
பற்றிய சிறப்புகள் சில......*
1) தமிழகத்தில் முதல் வெளியீட்டில் திரையிடப்பட்ட 40 திரையரங்கு களிலும் 50 நாட்களை கடந்தது.
2) இரண்டாம் வெளியீட்டில் 16 திரையரங்கில் 50 நாட்களை கடந்தது. கர்நாடாவில் 5 அரங்கு
சித்தூர், கேரளா 2 அரங்கு
இலங்கை 4 அரங்கு*
மொத்தம் 68 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை.
3) சென்னையில் நான்கு திரையரங்கில் 100 நாட்களை கடந்த முதல் வண்ணப்படமாக* வெற்றி கொண்டது.
4 ) சென்னையில் நான்கு அரங்கில் 100 காட்சிகள் விதம் 444 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
5) திருச்சியில் 154 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்திய முதல் தென்னிந்திய காவியம் அடிமைப்பெண்.
6) மதுரையில் 116 காட்சிகளும் சேலத்தில் 112 காட்சிகளும் கோவையில் 117 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை....*
7) தமிழகத்தில் 15 திரைப்பட அரங்குகளில் 100 நாட்களை கடந்து மதுரை சிந்தாமணி அரங்கில் வெள்ளிவிழாவை கடந்து சாதனையாகும் . இலங்கையில் 100 நாட்களை வெற்றிக்கொண்டது.....
8) 32 திரையரங்குகளில் 75 நாட்களை கடந்து வெற்றி கொண்ட திரைக்காவியம் அடிமைப்பெண்....
9) ஆறு மாத காலத்தில் ஒரு கோடியே 10 லட்சத்தை கடந்து வசூலை உருவாக்கிய திரைக்காவியம்..........
orodizli
4th September 2020, 08:24 PM
10) சென்னை ஸ்ரீ கிருஷ்ணா, சேலம் சாந்தி, திருச்சி ஜுபிடர்.....ஆகிய அரங்கில்*
19 வாரங்கள் நடைபெற்றது அடிமைப்பெண் திரைக்காவியம்....
11) நெல்லையில் மிகப் பெரிய அரங்கான சென்ட்ரல்* அரங்கில் முதன் முறையாக அடிமைப்பெண் திரைக்காவியம் 100 நாட்களை கடந்து.... இரண்டு லட்சத்தை வசூலாக கொடுத்த முதல் காவியம்
12) சென்னையில் எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்குப் பின் 13 லட்சத்திற்கும் மேல் வசூல் கொடுத்த இரண்டாவது திரைக் காவியம் அடிமைப்பெண் ஆகும்.
13 ) தூத்துக்குடி நகரில் முதன் முதலில் 100 நாளை கொண்டாடிய காவியம் அடிமைப்பெண் ஆகும்.
14) பெங்களூர் நகரில் முதன் முறையாக 5 திரையரங்கில் வெளியிடப்பட்டு மூன்று திரையரங்கில் 11 வாரங்கள் அதாவது முப்பத்தி மூன்று வாரங்கள் வெற்றி கொண்ட திரைக்காவியம் அடிமைப்பெண்.
15) இலங்கையில் 5 அரங்குகளில் வெளியிடப்பட்டு சென்ட்ரலில் 100 நாட்களை வெற்றிகொண்ட திரை காவியமாக அடிமைப்பெண் திகழ்ந்தது.
16) அடிமைப்பெண் காவியம் ஈரோடு, கோவை, தஞ்சை,காஞ்சி குடந்தை, வேலூர், கடலூர், மைசூர்
சித்தூர், பாண்டி என பல ஊர்களில் இரண்டு தியேட்டர் வெளியிடப்பட்டு சாதனையாகும்.
17) தஞ்சை, ஈரோடு இரண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 100 நாள் ஓடிய முதல் காவியம் அடிமைப்பெண்.
18) திருவண்ணாமலை நகரில் மூன்று திரையரங்கில் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டு சாதனை ஏற்படுத்திய காவியம் அடிமைப்பெண் ஆகும்.
19)தென்னகமெங்கும் 1969 ல் மாபெரும் வசூலை ஏற்படுத்திக் கொடுத்து அதிக திரையரங்கு களில் 100 நாட்கள், எழுபத்தைந்து நாட்கள், 50 நாட்களை கடந்து வெற்றி கொண்ட முதல் காவியம்*.
20) சென்னையில் 2ம் வெளியீட்டில் 18 திரையரங்கில் வெளியிடப்பட்டு
33* வாரங்கள் ஒடி நகரில்* 6 மாத காலத்தில் 18 லட்சத்தை பெற்ற காவியம் அடிமைப்பெண் ஆகும்.
21) வடசென்னை பகுதியில் எந்தபடமும் செய்யாத சாதனையில் 133 நாளில் 4லட்சத்து 77 ஆயிரத்தை கடந்து பல வெள்ளிவிழா படங்களின் வசூலை
முறியடித்தது அடிமைப்பெண்.
22) அடிமைப்பெண் இந்தியில் டப் செய்யப்பட்டு பல லட்சங்களை வடநாட்டில் குவித்த முதல் தமிழ்படம்.
23)அடிமைப்பெண் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு பல ஊர்களில் சாதனை படைத்தது.
24)* ஆங்கில பத்திரிக்கையான பிலிம் பேர் பத்திரிக்கை அடிமைப்பெண் படத்திற்கு சிறந்தபடம் என்ற பரிசை வழங்கியது.
25) அடிமைப்பெண் போன்ற படத்தை* இந்தியாவில் யாரும் தயாரித்ததில்லை... சர்லதேச படங்களுக்கு ஆறைகூவல் விடும் ஒரே படமாக திகழ்கின்றது என பல முன்னனி பத்திரிக்கைககள் பாராட்டிய ஒரே காவியமாக அடிமைப்பெண் திகழ்ந்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த வண்ண காவியம் மக்கள் திலகத்தின் இரண்டாவது காவியம்* அடிமைப்பெண் ஆகும்.
அகிலம் போற்றிய அடிமைப்பெண் காவியத்தின் வரலாற்றை வெல்லமுடியுமா..
அடுத்து....அவ்வாண்டில் வெளியான புரட்சிப்பேரரசின்
நம் நாடு திரைப் படத்தைப் பற்றி பார்ப்போம்............
orodizli
4th September 2020, 08:31 PM
"அன்பிருந்தால் , ஆண்மையும் தாய்மையடையும்"
- இதை அன்றே நிரூபித்தவர் அன்னை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர்...!
.
இதோ ...எம்.ஜி.ஆருடன் கதாசிரியர் ஆரூர்தாசுக்கு ஏற்பட்ட அன்பு அனுபவங்கள்...
ஆரூர்தாசின் வார்த்தைகளில் :
"எம்.ஜி.ஆரின் ஒப்பனைஅறைக்குள் நுழைந்தேன்.
சுழல் நாற்காலியில் அமர்ந்து மேக்-அப் போட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். , எதிர்க்கண்ணாடியில் என்னைப்பார்த்து திடுக்கிட்டுத் திரும்பி என் முகத்தைக் கையால் பிடித்துக்கொண்டு கண்களைக் கவனித்து ...
எ ம்.ஜி.ஆர் : "என்ன, கண் இப்படி ரத்தக் கோளமா இருக்கு ... சிவாஜி பிலிம்ஸ் படம் ராத்திரியில கண்ணு முழிச்சி எழுதுறீங்களா?"
நான்: "ஆமாண்ணே."
எம்.ஜி.ஆர்:- "சரி. என் குடும்ப டாக்டர் வி.ஆர்.எஸ்.கிட்டே போறீங்களா? போன் பண்ணி சொல்லட்டுமா?"
நான்:- "வேண்டாண்ணே....எனக்கு அப்படி ஒண்ணும் இல்லே. நல்லாத்தான் இருக்கேன். தூக்கம் இல்லே. அவ்வளவுதான். தூங்கினா சரியா போயிடும். "
.
மதிய வேளை வழக்கம்போல் மேக்-அப் அறையில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து சாப்பிட்டேன். "குழம்பைக் குறைச்சிக்கிட்டு நிறைய தயிர் போட்டுக்குங்க. தினமும் காபி, டீக்குப் பதிலா மோர் நிறைய குடிங்க. கெட்டித்தயிர்ல சர்க்கரை கலந்து சாப்பிடுங்க. இளநீர் குடிங்க. உஷ்ணம் குறைஞ்சிடும்.."
"சரிண்ணே.."
சாப்பிட்டு முடித்ததும் எம்.ஜி.ஆர். வழக்கம்போல் ’பாக்கெட் ரேடியோ’வில் மாநிலச் செய்திகள்கேட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தார். நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.
வயிறார சாப்பிட்டது ... ஏற்கனவே இருந்த களைப்பு! இரண்டுமாகச் சேர்ந்து என் கண்களைச் சொக்கிச் சுழல வைத்தன. அதை மட்டுந்தான் நான் உணர்ந்தேன். பின்னர் உணர்விழந்தேன்...!
.
எவ்வளவு நேரம் என்று தெரியாத நிலையில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். இப்பொழுது என் தலை எம்.ஜி.ஆரின் மடி மீது இருந்தது ..!
மிரள மிரள விழித்தபடி "அண்ணே.." என்றேன். ஏதோ கனவு கண்டதுபோல ...!
எம்.ஜி.ஆர். என் முதுகைத்தடவியபடி சொன்னார் :
"தூக்கத்திலே அப்படியே சோபாவுலே சரிஞ்சி விழுந்து ஒரு பக்கமா சாஞ்சிட்டிங்க. தலை தொங்குச்சி. சுளுக்கிக்கும் இல்லியா? அதனால ஒங்க தலையை என் மடியிலே வச்சிக்கிட்டேன். அதுகூட தெரியாத அளவுக்கு அடிச்சிப்போட்டதுபோல ஆயிட்டிங்க. பரவாயில்லே. இன்னும் நேரம் இருக்கு. அப்படியே என் மடியில படுத்து தூங்குங்க..."
.
ஆரூர்தாசின் இந்த அனுபவங்களைப் படிக்கும்போது , மீண்டும் என் நினைவுக்கு வரும் வார்த்தைகள் :
"அன்பிருந்தால் , ஆண்மையும் தாய்மையடையும்"...........
orodizli
4th September 2020, 09:52 PM
தனிப்பிறவி நெல்லை பார்வதி திரையரங்கில் 1966 செப்டம்பரில் வெளியானது. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் முதன் முறையாக 52 நாட்கள் மாட்னி ஷோ நடைபெற்று
பெரிய வெற்றியை பெற்ற படம்.
தேவரின் குறுகிய கால தயாரிப்பான
தனிப்பிறவியின் வெற்றி அனைவரையும் வியப்படைய செய்தது. 1968 ஏப் 13 ல் வெளியான
கலாட்டா கல்யாணம் வெறும் 13 நாளில் எடுக்கப்பட்டு கண்ணன் என் காதலன் ஏப் 25 ல் திரையிடப்பட்டது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம் தனிப்பிறவியின் வெற்றியின் வீரியத்தை. அதனால் தேவர் படம் என்றாலே வெற்றி உறுதி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இதே திரையரங்கில் தான் புரட்சி நடிகரின் திருடாதே மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது..........
orodizli
4th September 2020, 09:59 PM
எம.ஜி.ஆர் 100/ 1.
"அறிஞர் அண்ணா குறிப்பிட்ட கவிதை".
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.
1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’
எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.
பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.
அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!
Publisher :
அதி உயர் தகவல் களஞ்சியம்.........
orodizli
4th September 2020, 10:19 PM
தமிழகத்தில் வருகின்ற 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி நாம் ஒரு பதிவை வருங்கால சந்ததிகளுக்கு உதவுமே என்று பதிவிடுகிறோம் டாக்டர் புரட்சித்தலைவர் வாழ்ந்த வாழ்க்கை தொகுப்பை இட்டாள் பல ஆண்டுகள் பதிவிடலாம். ஆனால் மிகச் சுருக்கமாக இப்பதிவு இடுகிறோம். காரணம் வரக்கூடிய சந்ததிகளுக்கு சுருக்கமாக பதிவிட்டால் அதைப்பற்றி அவரிடம் பல கேள்விகள் உருவாகும், அதைப்பற்றி தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம் உருவாகும் ஆகையால் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு இப்பதிவை ஒரு கதையாக சொல்லி அவரவர் தன் குழந்தைகளின் மனதில் பதியவைத்து, இவ்வாறான ஒரு மாமனிதன் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை விளக்கிச் சொல்லி நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக பெற்றோர்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்து இந்த சிறு விடுமுறை நாட்களை புரட்சித் தலைவரோடு இப்பதிவை பதிவிடுகிறோம்.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.
பிறந்த தேதி: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை
இறந்த தேதி: டிசம்பர் 24, 1987
தொழில்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
குடியுரிமை: இந்தியா
திரையுலக வாழ்க்கை
எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.
இறப்பு
எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.
காலவரிசை
1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.
1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : திமுக பொருளாளராக மாறினார்.
1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது..........
orodizli
5th September 2020, 07:41 AM
நெல்லையில் ஸ்ரீலட்சுமி திரையரங்கில் ரிலீஸ் ஆனது. நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
நூறாவது நாள் முடிந்தும் கூட்டம் அலைமோதும். பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள்.
தலைவர் குதிரை வண்டியில
திரையில் தோன்றியவுடன் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.
கடைசி பைட் சீன். நம்பியாருடன் மணல்மேட்டில் நடக்கும் சிலம்பு சண்டை சாட்டையை லாவகமாக தலைவர் கையாளும் விதம் என்ன ஒரு
ஆர்ப்பாட்டம் தியேட்டரில் நடக்கும் தெரியுமா?
இன்றைய சண்டைக்காட்சி கள் அனைத்தும் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். அனுபவித்து ரசித்து பார்த்த படம் பாடல்களும் இனிமைதான்.............
orodizli
5th September 2020, 07:42 AM
1974-ம் ஆண்டு சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், நெல்லை, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் 12 தியேட்டர்களில் 100 நாள் கொண்டாடி மதுரை, நெல்லையில் வெள்ளிவிழாவும் கொண்டாடி அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது உரிமைக்குரல். உண்மையில் மதுரையில் 7 லட்சமும் கோவையில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவாக ரூ.8 லட்சமும் வசூல் சுனாமியாக சுழன்றடித்து உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சியது. ஆனால், சிவாஜி கணேசன் ரசிகர்கள் தங்கப்பதக்கம் வசூலில் சாதனை செய்தது என்று மனசாட்சியே இல்லாமல் புளுகுவார்கள். நம்மிடம் உரிமைக்குரலுக்கும் உலகம் சுற்றும் வாலிபனுக்கும் விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் விளம்பரம் இருக்கிறது. ஆனால், அதை தங்கப்பதக்கம் மிஞ்சியதாக விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் விபரம் எதுவும் இல்லை. இருந்தால் அதை அவர்கள் வெளியிடுவார்களே. எல்லாம் வாய் பொய் வசூல்தான்..........
orodizli
5th September 2020, 11:07 AM
மக்கள் திலகம் எம் ஜி ராமசந்திரன் முதலமைச்சர்
பொற்கால ஆட்சி சாதனைகள்
எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு இலவச சத்துணவு திட்டம் கொண்டு வந்தார்.
தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமை எப்படிப் பட்டது என்பதை முழுமையாக உணர்ந்து, துன்புற்ற அனுபவத்தை எப்பொழுதும் மறவாமல் நினைவில் கொண்டிருந்தார். புரட்சித்தலைவர். அவர் தமிழகத்தின் முதல் அமைச்சரானதும், பசிக்கொடுமையால் அவதியுறக் கூடாது. சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்பதற்காக எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வாராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத முதலமைச்சர் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார். ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் 2 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் மதியம் ஒரு வேளை பள்ளிகளிலேயே சமைத்து வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, சத்துணவுக் கூடங்களில் உணவு சமைத்து பரிமாற ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ.100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது. பெண்களின் வேலையில்லாத்த் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந்தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ.200 கோடியாகும்.மக்கள் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
அரிசி விலை குறைப்பு
தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்படிருந்த போதிலும் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்தார். ஒரு கிலோ அரிசியை இலவசமாகவும் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.
சென்னைக்கு குடிநீர் திட்டம்
சென்னை நகருக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசுகளாலும், மக்களாலும் பேசப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர், ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவுடன் கலந்து பேசி நனவாக்கினார். அதற்கான தொடக்க விழாவைப் பிரதமர் இந்திராகாந்தி, என்.டி.ஆர். ஆகியோரை சென்னைக்கு அழைத்து விழாவை நடத்தினார்.
இலவச காலணி, இலவச வேலை வாய்ப்பு வழங்கினார். நாட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், வீட்டு வசதி, திருமண நிதி உதவி, நதி நீர் திட்டம், 20 அம்சத் திட்டம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, தொழிலாளிகளுக்கு உதவி, அரிசி விலை குறைப்பு போன்ற திட்டங்களை நடைமுறை படுத்தினார்.
மேலும் எம்.ஜி.ஆரின் ஆட்சிகால திட்டங்களின் சாதனை பட்டியல்!
குழந்தைகளுக்கான திட்டங்கள்
1.முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு பணியாற்றுவோர்- 1,98,990,
பயன்பெறும் குழந்தைகள்-62,43,662,பாலர் மற்றும் பள்ளி சத்துணவுக் கூடங்கள் 60,000.
2. இலவச சீருடை
3. இலவச பாடநூல்
4. இலவச பற்பொடி
5. இலவச காலணி
முதியோருக்கான திட்டங்கள்
1. மாத உதவித் தொகை
2. நாள்தோறும் மதிய உணவு
3. ஆண்டிற்கு இருமுறை இலவச உடை
வேலை வாய்ப்புக்கான திட்டங்கள்
1. வீட்டுக்கொருவருக்கு வேலைவாய்ப்பு
2. படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை
3. கைவினைஞர்களுக்கான கருவிகள்
4. சுயவேலை வாய்ப்பு
மகளிருக்கான திட்டங்கள்
1. விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி
2. தாலிக்கு தங்கம் வழங்குதல்
3. மகளிருக்கு சேவை நிலையங்கள்
4. பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்
5. தாய் சேய் நல இல்லங்கள்
ஏழைகளுக்கான திட்டங்கள்
1. நலிந்தோருக்கான மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டுதல்
2. ஏழை ஏளியவர்களுக்கு இலவச மின்சாரம்
தன்னிறைவு திட்டங்கள்
1. குடியிருப்புகள் கட்டுதல்
2. குடிநீர் வசதி
3. சிறுபாசன ஆதாரங்கள்
4. இணைப்புச் சாலைகள்
5. சிறு பாலங்கள்
6. ஊரக மருந்தகங்கள்
7. ஆதி திராவிடர் மயான சாலைகள்
விவசாயிகளுக்கான திட்டங்கள்
1. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
2. இதர விவசாயிகளுக்கு குறைந்த மின் கட்டணம்
3. கடனை அடைக்கமுடியாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபதி
4. பயிர் பாதுகாப்பு
5. இடுப்போருள்கள் மற்றும் விதைகள் மான்யம்
தொழிலாளர்களுக்கான திட்டங்கள்
1. விபத்து நேரிட்டால் உதவுதல்
2. ஈட்டுறுதியுடன் இணைந்த ஓய்வூதியம்
3. தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம்
4. மீனவர் மற்றும் நெசவாளர் வீட்டு வசதி
5. நெசவாளர், பனையேருவோர், தீப்பெட்டி தொழிலாளர் விபத்து உதவி திட்டம்
6. சேமிப்பு மற்றும் நிவாரணம்
7. கட்டிட தொழிலாளர், கிராமக்கை வினைஞர் வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்குவோர் ஆகியோருக்கு ஆயுள் காப்புறுதி மற்றும் பணி ஓய்வு பலன் திட்டம்..........
orodizli
5th September 2020, 11:21 AM
1970 -2020
மக்கள் திலகம் எம்ஜிஆர்
.
பொன்விழா - மலரும் நினைவுகள் .
1969ல் வெளிவந்த நம்நாடு - திரைப்படம் 100 வது நாள் வெற்றிவிழா 1970 பிப்ரவரியில் மதுரை , சேலம் , திருச்சி நகரங்களில் கொண்டாடப்பட்டது ..மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .
1970ல் வெளிவந்த மக்கள் திலகம் திரைப்படங்கள் .
1. மாட்டுக்காரவேலன்
2. என் அண்ணன்
3. தலைவன்
4. தேடிவந்த மாப்பிள்ளை
5. எங்கள் தங்கம் .
மாட்டுக்காரவேலன் - சென்னை மற்றும் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடியது .
சென்னை நகரில் 4 திரை அரங்கிலும் தொடர்ந்து 444 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை .
இப் படத்தின் வெள்ளிவிழா மற்றும் 100வது நாள் விழாக்கள் சென்னை மற்றும் மதுரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..
என் அண்ணன்
சென்னை , மதுரை , திருச்சி , சேலம் நகரங்களில் 100 நாட்கள் ஓடியது ,
எங்கள் தங்கம்
சென்னை , மதுரை , திருச்சி 100 நாட்கள் ஓடியது
சென்னை நகரில் எங்கள் தங்கம் 100.வது நாள் வெற்றிவிழா நடந்தது .மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்
1969ல் வெளிவந்த அடிமைப்பெண் படத்திற்கு சிறந்த படத்திற்கான பிலிம் பேர் விருது.கிடைத்தது ,மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..
1970ல் மக்கள் திலகம் எழுதிய சுய சரிதம் - ஆனந்தவிகடனில் '' நான் ஏன் பிறந்தேன் '' தலைப்பில் தொடர்கட்டுரை தொடங்கியது .
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்காக ஜப்பான் மற்றும் கீழ் திசை நாடுகள் பயணம் .
டிசம்பரில் ராமன் தேடிய சீதை படத்திற்காக முதல் முறையாக காஷ்மீர் பயணம் .
மறக்க முடியாத இனிமையான நாட்கள் ................
orodizli
5th September 2020, 01:27 PM
1964 ஜூலை 18 ல் வெளியான வெற்றிப் படம்தான் "தெய்வத்தாய்".
சத்யா மூவிஸின் முதல் படமாக இருந்தாலும் தயாரிப்புக்கு பல்வேறு வகையில் துணையாக இருந்தவர்கள்தான் தென்காசி pkv
சங்கரன், ஆறுமுகம் மற்றும் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியார் ஆகியோர்.
இந்த படத்திற்கு கதை வசனம் எழுதியவர் k பாலசந்தர்.
படத்தை இயக்கியவர் p மாதவன் .
இவர்கள் இருவரும் எம்ஜிஆர் படத்தின் மூலமாக உருவாகி பாலசந்தர் தனித்தன்மையுடன் தனியாகவும், p மாதவன்
சிவாஜியிடமும் ஒட்டிக் கொண்டவர்கள். சிவாஜியுடன் சேர்ந்து விட்டால் போதும் இவர்களுக்கும் எம்ஜிஆர் மீது வன்மம் உண்டாகி விடுகிறது.
இவருடைய சொந்த கம்பெனி அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "ராமன் எத்தனை ராமனடி" படத்தில் சிவாஜி ஓரங்க நாடகம் எம்ஜிஆரை
தாக்குவதற்கென்றே வைத்து சிவாஜி தனது இயலாமையை
உறுமிக்கொண்டே
புலம்புவதை பார்க்கலாம். "தெய்வத்தாயில்" எம்ஜிஆர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறனாகவே வாழ்ந்திருப்பார்.
எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெருக்கிய படம்.
அருமையான பாடல்கள், அழகான கதாநாயகி, தெள்ளுத்தமிழ் வசனம், தெளிந்த நீரோடை இயக்கம், திட்டமிட்ட தயாரிப்பு சிறப்பான ஒளிப்பதிவு என அனைத்திலும் தனி முத்திரையை பதித்த படம்.
சென்னையில் பிளாசா, கிரவுன், புவனேஸ்வரியில் வெளியாகி மூன்றிலும் 108 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. "தெய்வத்தாயை" தொடர்ந்து "படகோட்டி" நவ 3 தீபாவளி அன்று அதே மூன்று தியேட்டர்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த பிளாசாவுடன் கிரவுன், புவனேஸ்வரி என்ற காம்பினேஷன்
"படகோட்டியு"டன் நின்று போனது.
"திருவிளையாடல்" படத்தில்தான் சாந்தியுடன் சேர்ந்து கொண்டது கிரவுனும் புவனேஸ்வரியும். அதன்பின்பு அந்த காம்பினேஷன் தொடர்ச்சியாக பல சிவாஜி படங்களுக்கு நீடித்தது. இதில் ஒரே ஒரு தடவை மட்டும் புவனேஸ்வரி, குளோப், கிருஷ்ணாவுடன் சேர்ந்து "குடியிருந்த கோயிலை" திரையிட்டது. "தெய்வத்தாய்"
மதுரையில் 93 நாட்களும் சேலத்தில் 93 நாட்களும் திருச்சியில் 86 நாட்களும் கோவையில் 84 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
ஈரோடு, நெல்லை, பாண்டிச்சேரி,
தஞ்சாவூர் குடந்தை ஆகிய ஊர்களில் 10 வாரங்களை கடந்து ஓடியது. மேலும் 18 ஊர்களில் 50 நாட்களை கடந்தும் ஓடியது. 1964 ல் பிளாக்பஸ்டர் வெற்றி "படகோட்டி" தான். 44 அரங்குகளில் வெளியாகி 32 அரங்குகளில் 50 நாட்களும் 15 திரையரங்குகளில் 10 வாரமும் பிளாஸாவில் மட்டும் 101 நாட்கள்
ஓடி வசூலில் மிகப் பெரிய
வெற்றியை பெற்றது.
தொடர்ந்து வந்த "எங்க வீட்டு பிள்ளை"க்காக மாபெரும் வெற்றியை "படகோட்டி" தியாகம் செய்ததென்றாலும் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது. கூட வந்த படத்தை ராத்திரி கண்விழித்து ஓட்டினாலும் 100 நாட்கள் ஓட்ட முடிந்ததே தவிர வசூலில் அவர்களால் சாதிக்க முடியவில்லை. அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் "பணக்கார குடும்பம்." "வேட்டைக்காரன்" அதற்கு அடுத்தபடியாக வசூலை குவித்தது. "தெய்வத்தாய்" 4வதாக அந்த ஆண்டு வசூலில் வெற்றி பெற்றது..........
orodizli
5th September 2020, 01:28 PM
நமது புரட்சித் தலைவர் கண்ட இயக்கத்தில் சிலருக்கு புதிதாக காமராசர் மீது பாசம் பொங்கி வழிகிறது. ஒரு சிலர், காமராஜர் ஆட்சியை நமது தலைவர் வழங்கிய பொற்கால ஆட்சி போல் இருந்தது என கூக்குரலிடுகின்றனர் நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். அவர்களை விட காமராஜர் எந்த விதத்திலும் சிறப்பாக ஆட்சி செய்ய வில்லை என்று கீழ்கண்ட குறிப்புக்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே தயவு செய்து மீண்டும் அவ்வாறு ஒப்பிடாதீர்கள்.
பெருந்தலைவர் காமராசர் மதிய உணவு திட்டத்தை, மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே அமல் படுத்தினார். அதிலும், எல்லா மாணவர்களும் பயன் பெற வில்லை. மதிய உணவு என்பது ஒரு கலவை சாதமாகவே இருந்தது. அதுவும் நல்ல அரிசியில் சமைக்கப் பட வில்லை. ஆனால், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலோ மாநிலம் முழவதும், மதிய உணவுத் திட்டத்திலிருந்து பெருமளவில் மாறுபட்டு, புதுமையான சத்துணவு திட்டத்தை அமல் படுத்தி, உலக நாடுகள் சபையால் பாராட்டப் பட்டார்.
காமராசர் ஆட்சி காலத்தில் இயற்கை வளம் மிகுந்து, மக்கள் தொகை சிறிய அளவில் இருந்தது. நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த போது இயற்கை வளம் குன்றி, மக்கள் தொகை பெருகி இருந்தது. இருப்பினும், பொற்கால ஆட்சியை வழங்கினார் பொன்மனச் செம்மல்.
காமராசர் ஆட்சி செய்த பொழுது அவரது காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சி புரிந்து வந்தது. இதனால், திட்டங்களை தமிழகத்துக்கு பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், புரட்சித் தலைவர் ஆண்ட போது மத்தியில் ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்தது. தமிழக மக்களின் நல் வாழ்விற்கான திட்டங்களை போராடி போராடித் தான் பெற்றார், சமதர்ம சமுதாய காவலன் எம்.ஜி.ஆர்.
நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, எந்த கட்சி ஆட்சி செய்திருந்தாலும், திட்டங்கள் பல தீட்டப்பட்டுதான் இருக்கும். இதில் ஒரு விந்தையும் கிடையாது. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை போன்றவற்றைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தான் ஒரு குடும்பத தலைவனின் கடமை. அது போன்றது தான் இதுவும். ஆனால், அதை மிகைப்படுத்தி கூறும் பொழுது, இந்த குடும்பத்தலைவன் பொறுப்புக்கள் தான் நினைவுக்கு வருகிறது. தன் மனைவி மக்களுக்கு உணவளித்து, இடமளித்து, உடைகள் வாங்கி கொடுத்தது பற்றி பெருமை பீற்றிக் கொள்வது ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகா ?
காமராசர் ஆட்சி செய்த காலத்தில், குறைந்த அளவில் மக்கள் தொகை இருந்த காரணத்தால், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு அரசு ஓரளவு செயல்பட்டது. ஆனால், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்பட்டதன் காரணத்தால், கிருஷ்ணா நதி நீர் திட்டம் தீட்டப்பட்டு, அதன் மூலம் தலைநகர் வாழ் மக்களுக்கு குடிநீர் எளிதாக கிடைக்க வழி காணப் பட்டது. அரசு கஜானாவை தீயசக்தியும் காலி செய்தது வரலாற்று உண்மை. அண்டை மாநில அரசுகளுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக காவிரி நீர் தமிழகத்துக்கு தங்கு தடையின்றி கிடைத்தது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் பயனடைந்தனர். (அப்போது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவிலும், தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு அப்போதே தீர்வு கண்டிருக்கலாம் என்பது வேறு விஷயம். அது போன்றே முல்லைப் பெரியாறு ஒரு பூதாகரமான பிரச்சினையாகி உள்ளது. - இப்போது காவிரி நீர் பிரச்சினையும், முல்லைப் பெரியாறு பிரச்சினையும் ஒரு தொடர்கதையாகி வருகிறது).
நமது மக்கள் திலகம் ஆட்சியில்தான், மேட்டூரிலிருந்து ஈரோடு வரை 4 தடுப்பணைகள் கட்டப்பட்டு, விவசாய பாசன வசதிகள் பெருகின.
அது மட்டுமல்லாமல், வால்பாறை அருகே காடம்பாறை நீரேற்று மின் நிலைம் உருவாகி மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் காமராஜர் ஆட்சி புரிந்த பொழுது ஏன் செயல்படுத்தப் பட வில்லை. அது பற்றி ஏன் யோசிக்க வில்லை என்பதே நம் கேள்வி ?
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்கள் ஏன் உரிமை கொண்டாட வில்லை. அந்த பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்ததே இந்த காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில் தான்.
பள்ளிக் கல்வியை மட்டுமே பிரதானமாக கொண்டு கல்விச் சாலைகள் பல காமராசர் காலத்தில் திறக்கப் பட்டாலும், உயர் கல்வி (பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த கல்வி) நிறுவனங்கள். மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஆட்சியில் பல தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் இன்று தமிழ் நாட்டில் இலட்சக் கணக்கான, கோடிக்கணக்கான பட்டதாரிகள் உருவாக காரணகர்த்தாவாக விளங்கியவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.
நம் இதய தெய்வத்தின் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்கள் 1963ல் காமராசர் அவர்களை என் தலைவர் என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களை என் வழிகாட்டி என்றும் , தி.மு.க.வில் இருந்த போதே தைரியமாக அன்புடன் கூறினார். ஆனால், பெருந்தலைவரோ, 1964ல் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில், "வேட்டைக்காரன்" வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று வெறுப்புடன் கூறினார்.
சொந்த விருதுநகர் தொகுதியிலேயே மக்களால் நிராகரிக்கப் பட்டார் காமராசர். தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும், வெற்றியே கண்டு, தமிழகத்தின் தொடர் முதல்வராக விளங்கி பெருமையை பெற்றார். நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். இந்த 1967 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புதான் தமிழ் நாட்டில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது, கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, எலிக்கறி சாப்பிடச் சொனனதுதான் இந்த காங்கிரஸ் அரசாங்கம். இதனாலே காமராசர் தோற்ற சம்பவமும் அரங்கேறியது.
நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிதில், காமராஜரிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காழ்ப்புணர்ச்சி கொண்டு கூறியது நாகரீகமானதா ?
தேசிய அளவில் எலியும் பூனையுமாக இருந்த இந்திரா காந்தியும், காமராஜரும், தங்கள் கொள்கைகளை கைவிட்டு, பொன்மனச் செம்மலின் வளர்ந்து வரும் செல்வாக்கை தாங்க முடியாமல், 1974 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். இதை விட வெட்கக்கேடான செயல் இருக்குமா ?
காமராஜார் ஆட்சி சிறப்பானது என்று சொன்னால், நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ததையும் அவர் ஆதரித்த விதத்தையும் ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள் படும். எனவே இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இன்னொரு முறை காமராஜர் பெருமைகளை பற்றி பேசாதீர்கள். அது காங்கிரஸ் கட்சிக்காரன் பேசட்டும். நம் தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் இருந்து கொண்டு, காமராஜரை புகழ்வது என்பது ஏற்புடையது அல்ல !
இவ்வாறு பல ஒப்பீடுகள் செய்யப்படும் போது, என் கண்களுக்கு தமிழகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, பொற்காலத்தை வழங்கியவர் புரட்சித் தலைவர் ஒருவரே என்றுதான் புலப்படுகிறது.
இறுதியாக ஒன்று .... என் தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். ஜாதி, இனம், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினராலும் எங்கள் வீட்டு பிள்ளை என ஏற்றுக் கொள்ளப் பட்டவர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !
என்றென்றும் என் தங்கத் தலைவன் எம்.ஜி.ஆர். புகழ் மட்டுமே பாடும்,
தங்கள் உண்மையுள்ள ..... சௌ. செ...........
orodizli
5th September 2020, 01:32 PM
பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.
அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!
திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.
எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர். "எங்கள் தங்கம்" திரைப்படத்தில் ஒரு பாடலில் முழு பகுத்தறிவு பிரச்சாரமே செய்து நடித்தார்.
அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்...........
fidowag
5th September 2020, 08:40 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யம்*(இணைய*தளம் ) -1,00,000 சாதனை*பதிவுகள்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்,பக்தர்கள், விசுவாசிகள்,அபிமானிகள்*அனைவருக்கும் மகிழ்ச்சியான , இனிப்பான, வியப்பான செய்தி என்னவென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யத்தில்* (இணைய தளத்தில் ) 1,00,000* பதிவுகள் என்கிற இமாலய சாதனையை* (26 பாகங்கள் மூலம் - ஒரு பாகம் என்பது 400 பக்கங்கள் கொண்டது )*நமது எம்.ஜி.ஆர். பக்தர்கள் சிலரின் சீரிய முயற்சியால் செய்யப்பட்டு சாதனை என்கிற எவரெஸ்ட்* சிகரத்தை அடைந்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் பதிவாளர் என்கிற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன் .
கீழ்கண்ட எம்.ஜிஆர். பக்தர்கள்* செய்த பதிவுகளின் எண்ணிக்கை பின்வருமாறு :
------------------------------------------------------------------------------------------------------------------------------
1.* திரு. ஆர். லோகநாதன்* ,சென்னை* * * ----------------- 27,365
2 திரு..எஸ்.வினோத், பெங்களூரு* * * * * -------------------15,120
3.மறைந்த திரு.முத்தையன் ,சேலம்* * --------------------11,302
4.திரு.சைலேஷ் பாசு, அபுதாபி* * * * * * *---------------------- 7,154
5.திரு.ரவிச்சந்திரன், திருப்பூர்* * * * * * -----------------------* 6,291
6.திரு.யுகேஷ் பாபு , சென்னை* * * * * -----------------------* 5,135
7.திரு.சுஹாராம், மன்னார்குடி* * * * * ----------------------* 4,925
8.திரு.ராமமூர்த்தி , வேலூர்* * * * * * *------------------------ 4,383
9.திரு.கலியபெருமாள், பாண்டிச்சேரி ------------------- 3,153
10.திரு.ரூப் குமார், சென்னை* * * *-------------------------* 2,962
11.திரு.செல்வகுமார், சென்னை* * -----------------------* 2,555
12. திரு.* ஜெய்சங்கர், சேலம்* * * * *------------------------* 1,821
13.திரு.சி.எஸ்.குமார், பெங்களூரு* * -------------------* *1,385
14.திரு.வி.பி.சத்யா* ,சென்னை* * * * *----------------------1,209
15.திரு.ஸ்ரீதர் (தமிழ் இந்து நாளிதழ் ),சென்னை --- 1,113
16.திரு. பாஸ்கரன், இலங்கை* * * * * * *----------------* * * *921
மேற்கண்டவர்களை தவிர, திருவாளர்கள் சுந்தர பாண்டியன், ராமலிங்கம் மூப்பனார், மஸ்தான் சாஹிப் போன்ற சிலரும் நூற்று கணக்கில் பதிவுகள் செய்துள்ளார்கள் .மேற்படி இமாலய சாதனை படைக்க காரணமாக இருந்த அனைத்து பதிவாளர்கள், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு*சார்பில் கோடான கோடி நன்றிகள் .
குறிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யம் (இணைய தளம் ) 20/10/2005 அன்று*திரு.பயிரா (bayera* )என்பவரால் துவக்கப்பட்டது .மேற்கண்ட தகவல்களை*பகிர்ந்த திரு.எஸ்.வினோத், பெங்களூரு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .
ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை .
* * * ***
orodizli
5th September 2020, 10:00 PM
தன்னை கடினமாக வருத்திக்கொண்டு தன் ரசிகர்களை மகிழ்விக்கவேண்டும் என்பதற்காக, குறுகிய காலத்தில் அதிக படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தவர் எம். ஜி. ஆர்.
இன்றைக்கு கிராபிக்சில் செய்வதை
50 ஆண்டுகளுக்கு முன்பே 'மிட்சல்' கேமரா மூலம் படமாக்கத்திலும்,
எம். ஜி. ஆரது அயராத உழைப்பிலும் இரட்டை வேட படங்கள் மூலம் சாதனை படைத்திருக்கிறார்கள்.
'நாடோடி மன்னன்' படத்தில் நாடோடியும் மன்னனும் கை குலுக்கி கொள்வதும், 'ராஜா தேசிங்கு' படத்தில் இருவரும் கட்டிப்பிடித்து அழுவதும், 'குடியிருந்த கோயில்' படத்தில் ஆனந்தும் பாபுவும் கடைசியில் (காண்க படம்) கட்டித் தழுவுவதும், 'மாட்டுக்கார வேலன்'
படத்தில் வேலனைச்சுற்றி ரகு வருவதும் என்று அனைத்தும் 'ஹெட் மாஸ்க்'
(head mask) மூலம்
(மாற்று நடிகரின் உருவத்தில்
அசல் நடிகரின் தலையைப் பொருத்துவது) படமாக்கப்பட்டுள்ளது.
இதில் சிறு பிசிறு கூட இல்லாமல் படமாக்கப்பட்ட சாதனை எம். ஜி. ஆரால்
மட்டுமே நிகழ்த்தப்பட்டதாகும். அதற்கு அவரது உழைப்பு அசாத்தியமானது.
இது பற்றி 2019 செப்டம்பர் மாத
'இதயக்கனி' யில், 'எல்லாம் அறிந்த
எம். ஜி. ஆர்.' தொடரில்
விரிவாக எழுதியுள்ளேன்.
மீள்பதிவு
...
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..........
.
orodizli
5th September 2020, 10:01 PM
#வாத்தியாரை ம*தித்த வாத்தியார்#
அது 1976 பாராளுமன்ற தேர்த*ல் நேர*ம். நான் 9ஆம் வ*குப்பு திருச்சி பேட்டைவாய்த்தலை த*னியார் ப*ள்ளியில் ப*டித்து வ*ந்தேன். ப*ள்ளி முடிந்து வீட்டிற்கு ந*ட*ந்து செல்கிறேன். எனக்கு பின்னால் ஒரு 100 அடி இடைவெளியில் எங்க*ள் ப*ள்ளியின் த*மிழ் வாத்தியாரும் வ*ருகிறார். (ந*ம்நாடு ப*ட* வாத்தியார் நாகைய்யா போல் தோற்ற*ம் உள்ளவ*ர்).
ச*ற்று தூர*ம் ந*ட*ந்த*தும் எதிர்திசையில் வேக*மாக இர*ண்டு கார்க*ளும் அத*ற்கு பின்னால் திற*ந்த* ஜீப் ஒன்றும் வ*ந்த*ன. அந்த* ஜீப்பில் வெள்ளை வெளேறென ஒளிபிம்ப*ம் போல் தெரிந்த*து. யாரென பார்த்தால் ந*ம்ம வாத்தியார் புன்னகை முக*த்துட*ன் இருக*ர*ம் கூப்பியும் கை அசைத்த*வாரும் அதில் வ*ந்து கொண்டிருந்தார். நான் "த*லைவ*ரே" என்று க*த்த என்னைப்பார்த்தும் கைகாட்டி விட்டு சென்றார். பிற*கு என் பின்னால் ச*ற்று தொலைவில் வ*ந்த* த*மிழாசிரிய*ர் அருகே வ*ண்டி சென்ற*தும் திடீரென நின்ற*து. ந*ம் த*லைவ*ர் அவ*ருக்கு ஜீப்பில் நின்ற*வாரே வ*ணக்கம் செலுத்திவிட்டு உத*வியாளரிட*ம் ஏதோ கூற சில ஆப்பிள் ப*ழ*ங்க*ள் அவ*ர் கைக்கு வ*ந்த*ன. அதை ஒரு பையில் போட*ச்சொல்லி பின் அதை அப்ப*டியே த*லைவ*ர் அந்த ஆசிரிய*ருக்கு வ*ழ*ங்கி மீண்டும் வ*ணக்கம் சொல்லி உட*ன் புற*ப்ப*ட்டு சென்றார். இவையெல்லாம் ஒரு 20 நொடிக*ளில் நிக*ழ்ந்த*ன. அந்த த*மிழாசிரிய*ரோ பிர*ம்மை பிடித்த*வ*ர்போல் வாய*டைத்து நின்றார். மறுநாள் முத*ல் சாமான்ய*ரான த*ன்னையும் ம*தித்து வ*ணக்கம் சொல்லி த*லைவ*ர் ப*ழ*ங்க*ளை அளித்த*தை அனைவ*ரிட*மும் கூறி அக*மகிழ்ந்தார்.
" ஆசிரிய* பெரும*க்க*ளுக்கு இந்த* வாத்தியார் நேச*னின் அன்பு வாழ்த்துக்க*ள்............
orodizli
5th September 2020, 10:02 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மறைந்த போது கவிஞர் வாலி எழுதிய இரங்கட் பா.....இனி நான் யாரை பாடுவேன்...
பொன்மனச்செம்மலே !என் பொழுது
புலரக் கூவிய சேவலே !
உனக்கென்று நான் எழுதிய முதல்
வரியில்தான் உலகுக்கு என் முகவரி
தெரிய வந்தது !
என் கவிதா விலாசம் உன்னால்தான்
விலாசமுள்ள கவிதையாயிற்று!
இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே
என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ !
என்னை வறுமைக் கடல் மீட்டு
வாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே !
கருக்கட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகு
தான் நாடு பாடியது
ஏழை எளியவயர்களின் வீடு பாடியது !
இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன்
இன்று இல்லையென்று போனான்
இனி நான் யாரை பாடுவேன்...?
புரட்சித் தலைவனே !நீ இருந்த போது உன் அடக்கத்தைப் பார்த்து நாடு
தொழுதது....
இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து நாடு அழுதது !
வைகை ஆறும் பொன்னி ஆறும் வற்றிப்போகலாம் !
நீ வற்றாத வரலாறல்லவா !
கலைத்தாயின் தலை மகனே !
கோட்டையில் கொழுவிருந்ததால்
மட்டும் நீ 'சி எம்'அல்ல கோடம்பாக்கத்திலும் கர்ஜித்துக்
கொண்டிருந்த சீயம் தான் !
இன்று படத்தை நிரப்பப் பலர் இருக்கிறார்கள் !
உன் இடத்தை நிரப்பத்தான் எவரும் இல்லை !
நான் மனிதர்களில் நடிகர்களைப்
பாரத்திருக்கின்றேன் ஆனால் நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன்
நீதான் !
அதனால்தான்...நீ நோயுற்ற போது ..தங்களது வாழ்நாட்களின்
மிச்சத்தை உன் கணக்கில் வரவு வைத்து விட்டு எத்துணையோ பேர் தங்கள்
கணக்கை முடித்துக்கொண்டு தீக்குளித்தார்கள் !
என் இதய தெய்வமே! உன் இறப்பில் நான் இரண்டாவது முறையாக என் தாயை இழந்தேன் !
இனி நான் யாரை பாடுவேன்...?..........
orodizli
5th September 2020, 10:20 PM
சென்னை நகர சாதனைகளில்
மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்கள்.
முன்பும்..... நேற்றும்....
அரங்கு : பாரகன்
*******************
1950 : மந்திரி குமாரி
112 நாட்கள்...
1958 : நாடோடி மன்னன்
133 நாட்கள்.....
50 நாட்கள்...
ஜெனோவா
தாய் மகளுக்கு க.தாலி
56 நாட்கள்...
மன்னாதி மன்னன்
70 நாட்கள்
பாசம் 84 நாட்கள்
ஆனந்த ஜோதி
56 நாட்கள்
ஆசைமுகம்
56 நாட்கள்
தாழம்பூ
56 நாட்கள்
பறக்கும் பாவை
63 நாட்கள்
தேடி வந்த மாப்பிள்ளை
61 நாட்கள்
அரசகட்டளை
35 நாட்கள்
* அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து 133 நாளை கடந்து ஒடி அதிக வசூலை பெற்ற காவியம்.. நா.மன்னன்!
133 நாள் ஒடி முடிய
வசூல் : 2,56,758.07.
தேடி வ.மாப்பிள்ளை
61 நாள் 1, 98,365.00
நன்றி : திருவல்லிகேணி
எம்.ஜி.ஆர். மன்றத்தின் ரி.காரன் மலர் .............
orodizli
5th September 2020, 10:21 PM
வண்ணப்பட வரலாற்றில் கலைப்பேரரசின் சாதனைகள் காணீர்...
*************************
* அலிபாபா
மதுரை 141 நாள்
சேலம் 154 நாள்
திருச்சி 147 நாள்
* நாடோடி மன்னன்
சென்னை கிருஷ்ணா
147 நாள்....
திருச்சி
161 நாள்...
சேலம்
147 நாள்....
கோவை
140 நாள்....
* அன்பே வா
சென்னை காஸினோ
154 நாள்...
சென்னை கிருஷ்ணா
147 நாள்....
மதுரை 147 நாள்
* ஒளி விளக்கு
இலங்கை ஜெயின்ஸ்தான்
162 நாள்....
ராஜா 161 நாள்
மதுரை 147 நாள்
* மாட்டுக்கார வேலன்
சேலம் 156 நாள்
திருச்சி 150 நாள்
கோவை 144 நாள்
ஈரோடு 142 நாள்
நெல்லை 140 நாள்
இலங்கை 141 நாள்
* ரிக்க்ஷாக்காரன்
மதுரை 161 நாள்
சென்னை
தேவிபாரடைஸ்
142 நாள்...
ஸ்ரீகிருஷ்ணா
142 நாள்....
திருச்சி 142 நாள்,,..
ஈரோடு 140 நாள்....
உரிமைக்குரல்
ஈரோடு 155 நாள்
கோவை 150 நாள்
இதயக்கனி
மதுரை 146 நாள்
இலங்கை 141 நாள்...
இப்படி 2,3,4,5,6....
திரைகளில்...
20 வாரங்களை கடந்த காவியங்கள் இதுப்போல் ஒடியுள்ளதா....
மற்றும்
எ.வீ.பிள்ளை
நெல்லை 149 நாள்.
உ.சு.வாலிபன்
கோவை 152 நாள்
நாளைநமதே
இலங்கை 140 நாள்
ஆ.ஒருவன்
சென்னை சத்யம்
161 நாள் (2014)
இப்படி சாதனையில் தலைவரின் வண்ணப்படங்கள்...
தொடரும்.........
orodizli
5th September 2020, 10:23 PM
சேலம் மாநகரில் புரட்சி!
********************************
வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் காவியங்கள்*
1961 முதல் 1977 வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களை வெற்றி கொண்டு சாதனையை பெற்று வந்துள்ளது.*
1961 தாய் சொல்லைத் தட்டாதே 1962 தாயைக் காத்த தனயன்
1963 நீதிக்குப் பின் பாசம்*
1963 பரிசு
1964 வேட்டைக்காரன்*
1964 பணக்கார குடும்பம்
1965 எங்க வீட்டுப் பிள்ளை*
1965 ஆயிரத்தில் ஒருவன்
1966 அன்பே வா*
1967 காவல்காரன்
1968 ரகசிய போலீஸ் 115
1969 அடிமைப்பெண்*
1969 நம்நாடு
1970 மாட்டுக்கார வேலன்*
1970 என் அண்ணன்
1070 எங்கள் தங்கம்*
1971 குமரிக்கோட்டம்*
1971 ரிக்க்ஷாக்காரன்*
1972 நல்ல நேரம்
1973 உலகம் சுற்றும் வாலிபன்*
1974 உரிமைக்குரல்
1975 இதயக்கனி
1975 பல்லாண்டு வாழ்க*
1976 நீதிக்குத் தலைவணங்கு*
1977 மீனவ நண்பன்*
இப்படி தொடர்ந்து ஒவ்வொரு*
ஆண்டும் 100 நாட்களை கடந்து மகத்தான வெற்றியை படைத்தவர் மக்கள் திலகம் ஒருவரே.............
orodizli
5th September 2020, 10:27 PM
1969 ம் ஆண்டு அடிமைப்பெண் திரைப்பட வெற்றிக்குப் பின் வெளியான நம் நாடு திரைக்காவியத்தை பற்றி சில முக்கிய தகவல்கள்.
எளிய முறையில் தயாரிக்கப்பட்டு மகத்தான சாதனையை உருவாக்கி சிறந்த* கருத்துக்களை திரைப்படத்தில் புகுத்தி... இன்றுவரை வெள்ளித்திரையில் வெற்றி பெற்று வரும் காவியம் மக்கள்திலகத்தின் நம் நாடு ஆகும்.
1969 -* தீபாவளி தினத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பணம் கொட்டி வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு.... தமிழகத்தில் திரையிடப்பட்டு வசூலில் தோல்வியைத் தழுவிய படங்களுக்கு மத்தியில் நம் நாடு காவியம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ...தென்னகத்தில் அனைத்து ஏரியாக்களிலும்* சாதனையாக நிமிர்ந்து* நின்றது.
சென்னையில் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு பின்* 4 திரையர ங்குகளில் வெளியிடப்பட்டு மூன்று திரையரங்கில் 100 நாட்களை கடந்து மொத்தம் 392 நாட்கள் ஓடிய காவியம் நம் நாடு ஆகும்.
சென்னை சித்ரா, மதுரை மீனாட்சி, சேலம் பேலஸ், திருச்சி வெலிங்டன் திரையரங்குகளில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனையை ஏற்படுத்திய இரண்டாவது காவியம் நம் நாடு ஆகும்.
அடிமைப்பெண் திரைக் காவியத்திற்கு பின் ஐந்து மாத காலத்தில் ரூபாய் 70 லட்சத்திற்கு மேல் முதல் வெளியீட்டில் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த மாபெரும் காவியம் நம் நாடு ஆகும்.
முதல் வெளியீட்டில் 39 திரையரங்கில் 50 நாட்களும், அடுத்து வெளியீட்டில் 11 திரையரங்கில் 50 நாட்களும், பெங்களூரில் 3 திரையரங்கில் 50 நாட்களும், மைசூர் சித்தூர் திருவனந்தபுரத்தில் 50 நாட்களுக்கும் கடந்து....... மொத்தம் 56 திரையரங்கில் வெற்றி வாகை சூடியது நம்நாடு காவியம்.
இலங்கை கொழும்பிலுள்ள ஒரே ஏரியாவில்....கேப்பிட்டல் 98, பிளாசா 60* திரையரங்குகளில் நம்நாடு தொடர்ந்து 158 நாட்கள் ஓடியது. யாழ்நகரில்... வெலிங்டன் திரையரங்கில் 100 நாட்களை கடந்தது..........
orodizli
5th September 2020, 10:27 PM
தமிழகத்தில் 19 திரையரங்கில்*
75 நாட்களை கடந்து மகத்தான சாதனை புரிந்த அடிமைப் பெண்ணுக்கு பிறகு 2 வது நம் நாடு ஆகும்.
புதுச்சேரி, பொள்ளாச்சி, தேனி, கம்பம், சிவகங்கை என சில ஊர்களில் அடிமைப் பெண்ணை விட அதிக வசூலை நம்நாடு திரைக்காவியம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சித்ரா, கிருஷ்ணா, சரவணா, மதுரை மீனாட்சி, திருச்சி வெலிங்டன், சேலம் பேலஸ், கோவை ராஜா, குடந்தை விஜயலட்சுமி, இலங்கை வெலிங்டன் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிய காவியம் நம் நாடு.
இலங்கை கெப்பிட்டல் 98 நாள், பட்டுக்கோட்டை 96 நாள், மயிலாடுதுறை 96 நாள், தஞ்சை 85 நாள்,* ஈரோடு 85 நாள், கரூர் 85 நாள், வேலூர் 83 நாள், புதுச்சேரி 80 நாள் ஆகிய ஊர்களில் நூறு நாளை நெருங்கிய காவியம்.
நம்நாடு திரைப்படம் நெல்லை 76 நாள், நாகர்கோவில் 76 நாள், திண்டுக்கல் 76 நாள், சென்னை சீனிவாசா 77 நாள் ஒடி சாதனை.
சென்னை சரவணா திரையரங்கு திறந்து 100 நாள் ஓடிய முதல் காவியமாக நம் நாடு காவியம் திகழ்ந்தது.
கும்பகோணம் நகரில் 1969 ல் 100 நாள் ஓடிய ஒரே திரைக்காவியம் ஆக நம் நாடு திரைக்காவியம் வெற்றி பவனி வந்தது.
மதுரையில் மகத்தான தொடர் சாதனை புரிந்த நம்நாடு காவியம் மதுரை மீனாட்சியில் 133 நாட்களும், வெள்ளைக்கண்ணு 21 நாட்களும் , ஸ்ரீ கணேசா திரையரங்கில் 21 நாட்களும் ஓடி மொத்தம் 175 நாளில் 4 லட்சத்தை* கடந்து* காவியம் நம் நாடு ஆகும்..........
orodizli
5th September 2020, 10:28 PM
சேலம் பேலஸில் 119 நாட்களும், ஜங்ஷன் ராம் திரையரங்கில் 40 நாட்களும், பிரபாத் திரையரங்கில் 35 நாட்களும் ஆகமொத்தம் தொடர் வெளியீட்டில் 196 நாட்கள் நடைபெற்றது.
1969 ல் அடிமைப்பெண், நம் நாடு திரைக்காவியங்கள் இரண்டும் சேர்ந்து தென்னக சினிமா வரலாற்றில் ரூபாய் 2 கோடிக்கு மேல் வசூலை வாரிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அடிமைப்பெண் 16 திரையரங்கில் 100 நாட்களும், நம் நாடு இலங்கை உட்பட 9 திரையரங்கில் 100 நாட்களும் மொத்தம் ஒரே ஆண்டில் 25 திரையரங்கில் 100 நாளை கடந்தது சாதனை.
மதுரையில் தொடர்ந்து அடிமைப்பெண் 176 நாட்களும் நம்நாடு திரைக்காவியம் தொடர்ந்து மூன்று திரையரங்கில் திரையிடப்பட்டு 175 நாட்கள் ஒடி மதுரையில் 69 ல் சாதனையாகும்.
தொடர்ந்து வெளியான அடிமைப்பெண் திரைக்காவியம் நம்நாடு திரைக்காவியம் சென்னை மதுரை திருச்சி சேலம் கோவை இலங்கை என 6 ஏரியாக்களில் 100 நாட்களை கடந்து முதன்மை சாதனையாகும்.
சென்னையில் அடிமைப்பெண் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 438 நாட்கள் ஓடியது. அதனைத் தொடர்ந்து நம்நாடு திரைக் காவியம் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 392 நாட்கள் ஓடியது. ஆக மொத்தம் இரண்டு காவியங்களும் சென்னை நகரில் 830 நாட்கள் ஓடி அசுர சாதனை புரிந்தது..........
orodizli
5th September 2020, 10:29 PM
சென்னையில் அடிமைப்பெண்*
13 லட்சத்திற்கு மேலும்,நம்நாடு திரைக்காவியம் 10 லட்சத்திற்குமேலும்* கடந்து..... இரண்டாம் வெளியீட்டில் 2 திரைக்காவியங்களும்
*7 லட்சத்திற்கு மேல் வசூலை பொழிந்து மொத்தம் 32 லட்சத்தை கடந்து...... வசூலை கொடுத்த காவியமாக பவனி வந்தது.*
தமிழகத்திலும், இலங்கையிலும்
1969 ல் வெளியான இரண்டு காவியங்களும் 100 நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்தது.
தமிழகத் திரை உலகில் மட்டுமல்ல தென்னிந்திய வரலாற்றில் தொடர்ந்து வெளியான இரண்டு வண்ண காவியங்கள் அடிமைப்பெண்... நம்நாடு மிகப்பெரிய வரலாற்று சாதனை புரிந்துள்ளது.*
125 க்கும் மேற்பட்ட ஊர்களில் இரண்டு காவியங்களும் 50 நாட்களை கடந்து சாதனை....
வேறு எந்த நடிகரின் திரைப்படங்களும் 1969 ல் இப்படிப்பட்ட தொடர் சாதனையை செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது-...
மேலும் அடிமைப்பெண், நம் நாடு திரைக்காவியங்களை தொடர்ந்து வெளியான மாட்டுக்காரவேலன் மிகப்பெரிய வெற்றியை மூன்றாவதாக பார்ப்போம்*
நன்றி , வணக்கம்..........
fidowag
5th September 2020, 11:17 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*அவர்கள் 17/8/20அன்று சொன்ன*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------
திருச்சியை சார்ந்த திரு.மஜீத் அவர்கள் சகாப்தம் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி அளிக்கும் தகவல்கள் கேட்டு தினம் தினம் பூரிப்பு அடைந்து வருவதாக சொல்கிறார் .* நாங்கள் எல்லாம் இன்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு எம்.ஜி.ஆர். என்கிற லட்சிய தலைவர்தான் காரணம் . என்று மும்பை தாராவி புலவர் ராமச்சந்திரன் போன்றவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் . எப்படி இப்படி ஒரு மனிதனால் இவ்வளவு பெரிய சக்தியை பெற முடிந்தது என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போமானால் நமக்கான வெளிச்ச பாதைகள் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது .**
பொது வாழ்க்கையில் பிரச்னைகளை தட்டி கேட்க ஆளில்லை. அநியாயங்களை சுட்டி காட்ட ஆளில்லை . என்கிறபோது அந்த அநீதிகளை தட்டி கேட்கவோ, அநியாயங்களை சுட்டி காட்டவோ , யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருக்காமல் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஊருக்குள் தயார் செய்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .அநீதிகளை தட்டி கேட்கவும், அநியாயங்களை சுட்டி காட்டவும் அரசியல் பண்பாட்டையே வளர்த்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ஒவ்வொரு பாடல் வரிகளிலும்* சக மனிதர்களின் மீதுள்ள அக்கறையை தெரிவிக்கும் வகையில் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே, இது மாறுவதெப்போ , தீருவதெப்போ நம்ம கவலை . என்று சொன்னவர் . பட்ட துயர் இனி மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்* என்று சொன்னவர், தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்று சொன்னவர் .ஆக இதையெல்லாம் மாற்றி காட்ட வேண்டிய பெரிய சக்தி என்பது இன்றைய இளைஞர்களிடம் தான் உள்ளது அந்த இளைஞர்களுக்கு ,சென்னை மாநகரத்திலே ரூ.15/-க்கு மாத வாடகைக்கு குடி இருந்தவர் தமிழகத்திலே முதல்வராக பத்தாண்டு காலத்திற்கு மேல் ஆண்டார்* என்பது வெறும் செய்தி அல்ல .அது நமக்கு ஒரு படிப்பினை, பாடம் .அவர் சொல்லிவிட்டு சென்ற பல விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒரு பாடமாக , படிப்பினையாக தொடர்ந்து பார்த்து வருகிறோம் .
தமிழ் திரைப்பட உலகில் ஆரம்ப காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் , பி . யு . சின்னப்பா போன்றவர்கள் தமிழகத்தையே கட்டி போட்ட சூப்பர் ஸ்டார்களாக இருந்தார்கள் .* அந்த சூப்பர் ஸ்டார்களெல்லாம் பிடிக்க முடியாத இடத்தை எம்.ஜி.ஆரால் பிடிக்க முடிந்தது என்றால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதால் மட்டுமல்ல ஏனென்றால் அவர்களுக்கு அப்பால் ஒரு விஷயம் மக்களை நேசிப்பது ,மக்களுடன் நெருங்கி பழகுவது ,மக்களின் தேவைகளை அறிந்து உதவுவது போன்ற ஒரு பாலம் இருந்தது*.**
அந்த கால நடிகர்களான எம்.கே.தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும்*மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும்,புகழின் உச்சியில் இருந்தாலும் கூட*, தங்களுக்குரிய மக்களுடைய ஆதரவை, அன்பை, செல்வாக்கை தக்கவைத்து கொள்வதற்காக பல்வேறு உதவிகளை செய்து வந்தவர்களாக* இருக்கவில்லை .அவர்கள் வெறுமனே நடிகர்களாக மட்டுமே இருந்தார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். நடிப்பு என்பது ஒரு தொழில். அந்த தொழிலின் மூலமாக பலருக்கு நாம் அறிமுகம் ஆகிறோம் .அந்த அறிமுகத்தால் பலர் நம்மை அணுகுகிறார்கள் .அப்படி அணுகும்போது மக்கள் நம்முடன் பாசமாக இருக்கிறார்கள் . அந்த பாசத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் . அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் .அப்படி சம்பாதித்ததில் ஒரு பங்கைவாரி வாரி, வள்ளல் தன்மையோடு* மக்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்து தான் கற்றதாக ,எம்.ஜி.ஆர். அவர்களே பலமுறை மேடைகளில் பேசியுள்ளார் .*.மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1..ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -குடும்ப தலைவன்*
2.யாரது யாரது தங்கமா* - என் கடமை*
3.எம்.ஜி.ஆர்.-எம்.ஆர். ராதா உரையாடல் - நல்லவன் வாழ்வான்*
4.புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க*
5.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக்காரன்*
6.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன் போட்டி பாடல்-சக்கரவர்த்தி திருமகள்*
7.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*
orodizli
6th September 2020, 10:52 AM
தென்னிந்தியாவின் கிங் மேக்கர் !
எம்ஜிஆர்- என் டி ஆர் இடையிலான நெருக்கம் என்பது குருவுக்கும் சீடனுக்கும் இடையிலான பந்தம் கொண்டதாகும். சினிமா துறையிலும் சரி ...அரசியல் தளத்திலும் சரி, எம்ஜிஆர் தான் அவருக்கு பிரண்டு, கைடு, பிலாஸபர் என்ற நிலையில் இருந்தார்.
என்.டி. ஆர்., கட்சியைத் தொடங்கிய போது தெலுங்கு என்ற பெயரோடு கூடிய கட்சிப் பெயரை வைக்குமாறு ஆலோசனை சொன்னவரும் எம்ஜிஆர் தான்.
எம்ஜிஆர் இரட்டை இலை பெற்றார் என்றால், என்.டி.ஆர் இரட்டை சக்கரம் கொண்ட சைக்கிளைச் சின்னமாகப் பெற்றார். தேர்தலின்போது சென்னையிலுள்ள டி.ஐ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சைக்கிள்களை ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தவரும் எம்ஜிஆர் தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆந்திராவில் முதலமைச்சர் பொறுப்பில் என்.டி. ராமராவ் இருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று தமிழக விழா ஒன்றில் கலந்து கொள்ள என்டிஆர் வந்திருந்தார்.
விழா மேடையில் எம்ஜிஆர் வீற்றிருக்க...
என்டிஆர் பேச்சை தொடங்கியபோது, "கிங் மேக்கர் ஆப் சவுத் இந்தியா" என்று ஆங்கிலத்தில் எம்ஜிஆரைத் குறிப்பிட்டவாறு உரையாற்றினார்.
அவரின் ஆங்கில உரையைத் தமிழாக்கும் பணி அவ்வை நடராசனுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அப்போது அவ்வை நடராசன் மொழிபெயர்த்த அந்த வாசகத்தால் எம்ஜிஆரின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்கள் பளிச்சென ஒளிர்ந்தன. அந்த ஒரு வாசகமே அவ்வை நடராசனை ஏந்திச் சென்று எம்ஜிஆர் இதயத்தில் அமரவைத்து விட்டது. அது நீண்ட காலம் வரை நீடித்தது. அவ்வை சண்முகம், தஞ்சை தமிழ் பல்கலை கழக
துணை வேந்தரானது அப்படித்தான்.
அந்த மொழிபெயர்ப்பு வாசகம் இதோ...
" தென்னகத்தின் மன்னாதி மன்னனே"
-ஆர்.நூருல்லா- மூத்த ஊடகன்.
திருத்தப்பட்ட பதிவு
Ithayakkani S Vijayan.........
orodizli
6th September 2020, 10:56 AM
பூனை விஜய் #சின்னவாத்தியாரே என்று பேனர் போட்டுக்கொண்டால்? எம்ஜிஆர் என்ற புலியாகிவிடுமா?..........."#குறுக்கு_வழியில்_வாழ்வு_தேடிடும்_திருட்டு_உலக மடா"-எம்ஜிஆர்!
2021_தேர்தலில் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுபவர்கள் எவரும், தான் உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை எம்ஜிஆர் போல ஏழைகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களா என்ன?
பூனை தன்னுடம்பில் கோடுகளை போட்டுக் கொண்டால் புலியாகி விடுமா?
#திருடர்கள்_ஜாக்கிரதை_போர்டு_வைத்து_விட்டார்கள ்..!
இனிய ஞாயிறு காலை வணக்கங்கள்!...........
orodizli
6th September 2020, 10:57 AM
ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க
ஆவணி 18 வியாழக்கிழமை
எம்ஜிஆர் ரசிகர்களே எம்ஜிஆர் பக்தர்களே
நீங்கள் பார்க்கும் இந்த வீடியோ காட்சி
ஆந்திரவில் தயாரித்ததெலுங்கு படத்தில் இடம்பெற்றது
புகழ்பெற்ற கதாநாயகன் மகேஷ்பாபு நடித்த படம்
இது ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் ஆந்திராவில் தயாரிக்கின்ற படங்களில்
என்டி ராமராவ் படங்களையோ போட்டோக்களையோ காண்பிப்பது கிடையாது
ஆனால் தமிழ்நாட்டில் தயாரிக்கின்ற
பெரும்பாலான தமிழ் படங்களில்
எம்ஜிஆரின் அழகிய திருமுகத்தை யோ
எம்ஜிஆர் சினிமா பட பாடல்களையோ படம் பார்க்கும்
மக்கள் முன்பாக காட்டுவார்கள்
எம்ஜிஆர் தனி மனிதனாகஆரம்பித்த கட்சி அண்ணா திமுக
எம்ஜிஆர் தனிமனிதனாக அரசியல் போர்க்களத்தில் நின்று மூன்று முறை வெற்றி பெற்று முதலமைச்சராக வந்தார்
எம்ஜிஆர் மறைந்த பிறகு. எம்ஜிஆர் பெயரை சொல்லி ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார்
எம்ஜிஆர் காக ஜெயலலிதாவை எம்ஜிஆர் ரசிகர்கள்ஏற்றுக் கொண்டார்கள்
அவர் முதலமைச்சராக அமர்ந்த நாளில் இருந்து அவர் மரணமடையும் வரை
எம்ஜிஆர் பெயரை சொல்ல விடாமல் செய்தார்
ஆட்சி இயந்திரத்தைப் பயன்படுத்தி
எவ்வளவு தூரம் எம்ஜிஆர் பெயரை மறக்கடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நன்றி இல்லாமல் எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்தார் ஜெயலலிதா.
ஆனால் ஆந்திரா சினிமா உலகின் புகழ்பெற்ற கதாநாயகன் நடித்த இந்த திரைப்படத்தில்
எம்ஜிஆர் அவர்கள் t'v.யில் பேசுகின்ற காட்சியை எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பதிவு செய்துள்ளார்கள்
ஜெயலலிதாவை போன்றவர்கள் எம்ஜிஆர் பெயரையோ எம்ஜிஆர் படத்தையோ இருட்டடிப்பு செய்தாலும்
எம்ஜிஆரின்நீதி நேர்மை சத்தியம் ஏதாவது ஒரு வழியில் எம்ஜிஆரின் படங்களை எம்ஜிஆரின் பாடல்களை. எம்ஜிஆரின் திருவுருவத்தையும்
தற்போது தயாரிக்கின்ற சினிமா படங்கள் மூலம்
ஏதாவது ஒரு காட்சியில் வெளிப்படுத்தி விடுகிறது.........
orodizli
6th September 2020, 05:36 PM
"பணக்கார குடும்பம்" r.r. பிக்சர்ஸ் எம்ஜிஆரை வைத்து எடுத்த 5 வது திரைப்படம். R.r. பிக்சர்ஸ் எம்ஜிஆரை வைத்து மொத்தம் 7 படம் எடுத்தார்கள். முதல் படம் "குலேபகாவலி" 2வது படம் "புதுமைப்பித்தன்". 3வது படம் "பாசம்". நான்காவது படம்
"பெரிய இடத்துப் பெண்". 5வது படம் தான் "பணக்கார குடும்பம்". தமிழகத்தில் 1964 ஏப் 23 ம் தேதி வெளியான படம். ஆனால் சென்னையில் மட்டும் ஏப் 24 ம் தேதி வெளியீடு. "வேட்டைக்காரன்" ஏப் 23 அன்று 100 நாட்கள் ஓடியதும் அதே தியேட்டர்களில் வெளியான படம்.
சித்ரா பிராட்வே மேகலா ஆகிய தியேட்டர்களில் வெளியாகி 101 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது எம்ஜிஆர் குடும்ப
கதைகளில் நடித்து அதையும் மாபெரும் வசூல் வெற்றி படமாக்க முடியும் என்பதை நிரூபித்த படம்தான் "பணக்கார குடும்பம்".
தலைவர் எத்தனையோ குடும்ப படங்களில் நடித்தாலும் அதிலும்
கொள்ளை கூட்டம், கள்ளக்கடத்தல் போன்ற காட்சிகளை புகுத்தி. பாதிக்கு மேல் ஆக்ஷன் காட்சிகளாக மாற்றியிருப்பார்.
ஆனால் இதில் முழுக்க முழுக்க குடும்ப படமாகவே எடுத்து படத்தை வெகு சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பார் t.r. ராமண்ணா. படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பாடல்கள் அத்தனையும் மிக அருமையான மெட்டுக்கள். எம்ஜிஆரின் இயல்பான நடிப்பால் "பணக்கார குடும்பம்" பெண்களை மிகவும் கவர்ந்து திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக்கோலம்தான்.
அதிலும் 6 மணிக் காட்சிக்கு பெண்கள் கூட்டத்தை பார்த்தால் பெண்களுக்கென்று தனிக் காட்சி போடலாம் போலிருக்கும். மற்ற நடிகர்களின் குடும்ப படத்தை ஒரு தடவை பார்த்தாலே போதுமடா! குடும்ப வாழ்க்கை, என்று அனைவரும் கேவிக்கேவி அழ ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ஒரு சராசரி நேர்மையான, தன் உழைப்பால் வாழுகின்ற ஒரு ஆண்மகனாக
தலைவர் வாழ்ந்திருப்பார்.
எந்த இடத்திலும் முகத்தை அஷ்ட கோணலாக மாற்றவோ, அதிகமாக கத்தி நடிக்கவோ மாட்டார். முதன் முதலாக குடித்தவர் போல நடித்து ஒரு அருமையான பாடலை பாடும் காட்சி மிகவும் வரவேற்பை பெற்றது.
முதல் பாடல் காட்சியிலேயே சைக்கிளில் பாடும் போது சம உரிமையை பாடி தனி முத்திரை பதித்து விடுவார். "இதுவரை நீங்கள் பார்த்த பார்வை" ஆகா! எத்தனை இனிமையான பாடல். பல நாள் இரவு நேரத்தில் ரேடியோவில் இந்தப் பாடலை கேட்டால் என்னை மறந்து தூங்கி விடுவேன்.
பூ பந்து விளையாடி பாடுவதும் பின்னர் பந்தை, பயன்படுத்தி சண்டையிடும் காட்சியிலும் விசில் சத்தத்தில் தியேட்டரில் தூள் பறக்கும். இன்று இதைப்போன்று காட்சிகள் ஏராளம் இருந்தாலும்
புது யுக்திகளை முதலில் கையாள்வதில் தலைவரை மிஞ்ச
ஆள் கிடையாது. இந்தியில் கலரில் வந்தாலும் தமிழின் இனிமை, அதை
இயல்பான நடிப்பால் வெளிப்படுத்திய விதம், மெல்லிசை மன்னர்களின் பாடல்கள், t.r. ராமண்ணாவின் திறமையான இயக்கம் என்று ஒவ்வொரு அம்சமும் படத்தின் வெற்றியை வெகுவாக உயர்த்தி சென்றது.
இதையெல்லாம் விட கதையோடு இணைந்த நாகேஷின் பரம்பரை காமெடி வெகுவாக ரசிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இந்தக் காமெடியை பற்றி பேசி, ரசித்து சிரிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். முதல் சண்டை காட்சி இசை காமெடியுடன் நீச்சல் குளத்தின் அருகே வெகு இயல்பாக மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். சரோஜாதேவி தோழியருடன் விளையாடும் சடுகுடு என் பேத்தி மிகவும் விரும்பி பார்க்கும் பாடல்.. இதற்கு இணையான, இயல்பான குடும்ப படம் அதுவரை வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மற்ற குடும்ப படங்கள் எல்லாம் ஒரு நடிகரின் பின்னாலேயே கதை காட்சியமைப்பு பின்னப்பட்டு 'மோனோ ஆக்டிங்கை' அதிகமான குளோஸப் காட்சிகள் மூலம்
திணித்திருப்பார்கள். பார்ப்பவர்களுக்கு சற்று நேரத்தில் அலுப்பு தட்டி விடும். ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் தித்திக்கும் தேன் பாகை சுவைத்த இன்பம் அனைவருக்கும் கிட்டும் என்று உறுதியாக கூறலாம்.
சென்னையில் மூன்று தியேட்களிலும் 101 நாட்கள் ஓடி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. மதுரை தேவியில் சித்திரை மாதத்தில் வெளியாகி 126
நாட்கள் ஓடி தனி முத்திரை பதித்தது. மேலும் திருச்சி, கோவை, சேலம் என அத்தனை a சென்டர்களிலும் 100 நாட்களை கடந்தது. தலைவரின் குடும்ப படங்களில் "பணக்கார குடும்பம்" ஒரு குதூகலமான வெற்றியை பதிவு செய்தது. அநேக ஊர்களில் 50 நாட்களை எளிதில் கடந்து எக்காளமிட்டது..
வேலூர் தாஜ் திரையரங்கில் 70 நாட்களை விரைவில் கடந்தது.. தூத்துக்குடி சார்லஸில் வெளியாகி 53 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடி தியேட்டரில் நினைவு பரிசு வைக்கப்பட்டது. சார்லஸில் 50 நாட்கள் ஓடுகிறதென்றால் அந்த படம் வெள்ளி விழா ஓட தகுதியான படம் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் "பணக்கார குடும்பம்" ஏழை எளியவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும். வெற்றிப்
படம் என்றே சொல்ல வேண்டும்..........
orodizli
6th September 2020, 05:55 PM
#உலகம் சுற்றிய எம்ஜியார்#
எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார் மக்கள் திலகம்..ந*டிக*ரான ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
#ர*ங்கூன்
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.
#இலங்கை
1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டுமல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
இலங்கை பிரதமர் டட்லி சேனநாயகாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
#சிங்க*ப்பூர்
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
#மாஸ்கோ
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!
#லண்ட*ன்
பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.
#பாரீஸ்
அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்..
#கிழ*க்கு ஆப்பிரிக்கா
பின்ன*ர் லண்ட*னிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!
#மொரீஷிய*ஸ்
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
#அமெரிக்கா
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!
இனிய மாலை வ*ணக்கத்துடன்............
fidowag
6th September 2020, 07:29 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 18/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் சித்தர்கள் கூறும் அருள் வாக்கு ,பகைவர்களுக்கு அருள்வது என்றால் என்ன என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாழ்க்கையில் நடத்தி காட்டி இருப்பார் .
சாயா என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன்* ஜோடியாக டி.வி.குமுதினி என்கிற நடிகை நடித்தார் .* அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏதோ குடும்ப சிக்கல். ஒரு காட்சியில் நடிக்கும்போது சரியாக அமையாததால், ஒரு டேக், இரண்டு டேக்,முடிந்து ஆறு டேக் ஆகிவிட்டது .* குமுதினி மடியில் சாயும்போது எல்லாம் அவரது கணவர் ஏன் வேண்டுமென்றே இப்படி செய்கிறார், இப்படியெல்லாம் நடிக்க ஒத்துழைப்பு கொடுக்க முடியாது* என்று கூறி,அவர் தன் மனைவியை அழைத்து கொண்டு போய்விடுகிறார் . படத்தின் இயக்குனர் எம்.ஜி.ஆர். ஏகப்பட்ட டேக் வாங்குகிறார்*இது சரிப்பட்டு வராது* என்று கூறி அத்துடன் படத்தை நிறுத்தி விடுகிறார் .அந்த நிலையில் சாயா படம் நிறுத்தப்பட்டாலும் ,நடிகை குமுதினிக்கு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் . சாயா படம் வெளிவரவேயில்லை . அதன் பிறகு நடிகை குமுதினி பிரபலம் ஆகிவிட்டார் .இந்த படத்தில் கெட்டபெயர் ஏற்பட்டதால் அவர் கதாநாயகன் வேடத்திற்கு நடிப்பதற்கு ஏற்றவரில்லை . அவரை மேற்கொண்டு நடிக்க வைக்க முடியாது என்று,அவதூறு கிளப்பப்பட்டு* திரை துறையில் முடிவு செய்ததால் ,சுமார் 6 ஆண்டு காலம் கதாநாயகன் வேடம் ஏற்க அவர் போராட வேண்டியிருந்தது .அந்த கட்டத்தில் சிறு வேடங்கள், துணை வேடங்களில் நடிப்பது கூட சிக்கலாக இருந்த நேரம் .*
எம்.ஜி.ஆர். முதல்வராகி கோட்டையில் அமர்ந்துள்ளார் . ஒருநாள் நடிகை குமுதினி* தன கணவருடன்* வந்து எம்.ஜி.ஆரை சந்தித்து ,தனது வீடு ஒன்று பிரச்னையால் ஏலம் விடப்படுகிறது,நீங்கள்தான் தகுந்த உதவி செய்யவேண்டும் என்கிறார் . .விவரங்களை கேட்டறிந்த எம்.ஜி.ஆர்.*சாயா படத்தில் நடந்த சம்பவங்கள் எதையும் காட்டி கொள்ளாமல், கவலைப்படாதீர்கள் என்று சொல்லி,அவர்களுடைய வீட்டை ஏலத்தில் இருந்து மீட்டு கொடுத்தார் . வேறு ஏதாவது உதவிகள், தேவைப்பட்டாலோ, பிரச்னைகள் இருந்தாலோ மனதில் எந்த சலனமும் இல்லாமல் என்னை அணுகுங்கள் . நான்*உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அனுப்பினாராம் .
பழம்பெரும் நடிகை கண்ணாம்பா பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு தாயாராக நடித்தவர் . ஒருமுறை சொந்த படம் எடுக்க துணிந்தபோது தன் சொத்துக்களை விற்கவேண்டிய சூழ்நிலை . இருந்த ஒரு வீட்டையும் அடமானம் வைத்த பின் ஏலத்திற்கு வருகிறது . இதை அறிந்த எம்.ஜி.ஆரின் நண்பனான சாண்டோ சின்னப்ப தேவர் ,எம்.ஜி.ஆரிடம், கண்ணாம்பாவின் வீடு அடுத்த வாரம் ஏலத்திற்கு விடப்படுகிறது என்று தகவல் தெரிவிக்கிறார் .* உடனே எம்.ஜி.ஆர். விரைந்து செயல்பட்டு, அந்த வீட்டின் அடமானத்திற்கான பணத்தை கட்டி ,வீடு ஏலத்தில் போகாமல் காப்பாற்றி, பத்திரங்களை பெற்று, கண்ணாம்பாவிடம் ஒப்படைக்கிறார் . கண்ணாம்பா* எம்.ஜி.ஆரிடம் இந்த வீடு உங்களின் பெயரில் மாற்றி விடுகிறேன் .உங்கள் பொறுப்பிலேயே இருக்கட்டும் என்கிறார் . அதை ஏற்க மனமில்லாமல் எம்.ஜி.ஆர். கண்ணாம்பாவிடம் நீங்கள் உயிருடன் இருக்கும்வரையில் இந்த வீட்டில் இருந்து சுதந்திரமாக பயன்படுத்துங்கள் . எப்போது உங்களுக்கு தேவையில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்போது நான் பயன்படுத்தி கொள்கிறேன் என்று கூறினார் . அவருடைய செலவிற்கு சிரமப்படாமல் இருக்க சில படங்களில் நடிக்க சிபாரிசு செய்தார் .*அவரது சொந்த படம் ஒன்று முடிக்கும் தருவாயில் இருந்ததற்கு பண உதவி செய்து அதை முடித்து வெளியிடவும் ஏற்பாடு செய்தார் .
ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வீடு ஏலத்திற்கு வந்ததை அறிந்து பணத்தை கட்டி, பத்திரங்களை மீட்டு வாருங்கள் என்று தன் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனிடம் சொல்லி,அவற்றை கலைவாணரிடம் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று உத்தரவிடுகிறார் .எனக்கு எவ்வளவோ உதவிகள் தம்பி ராமச்சந்திரன் செய்துவிட்டார். செய்தும் வருகிறார் .தொடர்ந்து அவரை* தொந்தரவு செய்வது எனக்கு கஷ்டமாக இருக்கிறது .எனவே இந்த பணத்தை அவரிடமே கொடுத்துவிடுங்கள் . இந்த வீடு ஏலம்* போனாலும் பரவாயில்லை என்கிறார் கலைவாணர் .இதை கேட்ட எம்.ஜி.ஆர். ,மனதில் சஞ்சலத்தோடு ,ஆர்.எம்.வீரப்பனிடம், இந்த வீடு உங்கள், பொறுப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கட்டும் . வேண்டுமானால் நீங்களே தங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றாராம் . அந்த வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன் என்று சமீபத்தில் கூட*ஒரு பேட்டியில் ஆர். எம்.வீரப்பன் கூறியுள்ளார் .
கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி எம்.ஜி.ஆரை சந்திக்க வரும்போதெல்லாம்* ,அலுவலகமாக இருந்தாலும், ராமாவரம் தோட்டமாக இருந்தாலும், அனைவரையும் வரவேற்று* எவ்வளவு பேர் வந்தாலும் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து ,அவர்களை நன்கு உபசரித்து அவர்களுடைய கோரிக்கைகளில் எதைஎல்லாம் நிறைவேற்றலாம்*என்று பின்னர் ஓ.கே. செய்வாராம் . ஒரு நாள் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாண சுந்தரம் இந்த எம்.ஜி.ஆர். எப்போது அவரை சந்தித்து கோரிக்கைகள் பற்றி பேசினாலும், அலுவலகமாக இருந்தாலும், ராமாவரம் தோட்டமாக இருந்தாலும் முதலில் சாப்பிட வைத்து நன்கு உபசரிக்கிறார் . இதனால் நாம் கோபமாக,உணர்ச்சி பூர்வமாக எதையும் பேச முடிவதில்லை .நாம் சிறிய கூட்டத்தினராக செல்வதால்தானே அப்படி செய்கிறார் . பெரிய கூட்டமாக செல்வோம் என்று முடிவு செய்கிறார் வீட்டுக்கு சென்றால்தான் சாப்பிட சொல்கிறார் . நாம் 500 பேராக திரண்டு கட்சி அலுவலகத்திற்கு செல்வோம்*அப்போதுதான் கோரிக்கைகள் நிறைவேற்ற சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் போராட்டம் அறிவிக்கவும், போராடவும் நமக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணி, அ .தி.மு.க. கட்சி அலுவலகம் செல்கிறார் .அங்கிருந்து எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.அதாவது கம்யூனிஸ்ட் தலைவர் சுமார் 500 பேர்களுடன் கோரிக்கைக்கு மனு அளிக்க வந்துள்ளார் .கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்துள்ளதாக*சொல்லப்படுகிறது .இன்னும் 30 நிமிடங்களில் நான் அங்கு வந்துவிடுவேன் .அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் காவல்துறை பாதுகாப்புடன்* தங்கவைத்து உணவளியுங்கள் என்கிறார் .அனைவர்க்கும் தடபுடலாக உணவு ஏற்பாடு செய்து தரப்படுகிறது .எம்.ஜி.ஆர். நேராக கல்யாண மண்டபத்தில் நுழைகிறார்* *நீங்கள் உணவருந்தியபின் பேசலாம் என்றுதான் சற்று தாமதமாக வந்தேன் என்கிறார் எம்.ஜி.ஆர். உடனே கல்யாண சுந்தரம் இது என்ன உங்களின் போர் தந்திரமா ?எங்கு,எப்போது சந்தித்தாலும், எத்தனை பேர் வந்தாலும் ,500 பேர் வந்தாலும் விருந்தோம்பல் செய்து எங்களை சாந்தமாக்கி விடுகிறீர்கள் ,எங்களது கோரிக்கைகள் பற்றி உரிய முடிவு எடுப்பதில்லை என்று கூறுகிறார் . தமிழக முதல்வர் என்கிற வகையில் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை*நிறைவேற்ற* வேண்டியது என் கடமை . அதை நான் நிச்சயம் செய்வேன் . அனால் என்னை பார்க்க வருபவர்கள் யாரும் உணவருந்தாமல் போக கூடாது .இங்குள்ளவர்கள் அனைவரும் தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர்*அவர்கள் அனைவரையும் உபசரிப்பது இந்த ராமச்சந்திரனின் முதல் கடமை .என்று கூறியதும் கல்யாண சுந்தரம் கண் கலங்கியவாறு எம்.ஜி.ஆரின் கைகளை பற்றி கொண்டாராம் .
எம்.ஜி.ஆர். ஒருநாள் ஸ்டுடியோவிற்கு வருகிறார் .அங்கு,படத்தொகுப்பாளர்கள்*காமிராமேன், திரைக்கதை ஆசிரியர் , ஒளி /ஒலி* பொறியாளர்கள் , ஆர்ட் டைரக்டர், இயக்குனர் ,தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் உள்ளனர் .அங்குள்ள கருவிகளை எம்.ஜி.ஆர். சுற்றி பார்த்துவிட்டு ,அனைவரிடமும் பேசி விட்டு வருகிறார் . ஒரு பிரம்மாண்ட மாளிகை செட் போடப்பட்டுள்ளது . அதை பார்த்துவிட்டு, இங்குள்ளவர்கள் எல்லாம் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள்*உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன் .இந்த பிரம்மாண்ட மாளிகையில் ஒரு குறை இருக்கிறது .யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் என்கிறார் .யாருக்கும்* *சொல்ல* தெரியவில்லை. ,உடனே எல்லா விளக்குகளையும் ஒரு நிமிடம் அணையுங்கள் என்றார் .மீண்டும் விளக்கை ஏற்றுங்கள் என்கிறார் .அவர் ஒரு திசையை காட்டி ,தென்பகுதியில் ,ஒரு விரிசல், லைட்டிங் மாறுபாட்டால் தென்படுகிறது . இந்த லைட்டிங் சரி செய்தால் அந்த விரிசல் தெரியாமல்*மாளிகை செட் படமாக்குவதற்கு எளிதாக இருக்கும் என்கிறார் . மாளிகையின் வனப்பு நன்றாக இருக்கும் என்று மிக நுட்பமாக கண்டுபிடித்து சொல்லி அங்குள்ள திரைப்பட கல்லூரி மாணவர்களையும் ஆச்சர்யப்படுத்தி வாத்தியாராக திகழ்ந்தார் .***
எம்.ஜி.ஆர் ஒருமுறை வெள்ள நிவாரண பணிகள் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் .ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 50பேர் கூடியுள்ளனர் .அங்கு எம்.ஜி. ஆருடன்* தலைமை செயலாளர் ,மாவட்ட ஆட்சியர் , சுகாதார துறை அதிகாரிகள்*செல்கிறார்கள் . அங்குள்ளவர்களிடம் எம்.ஜி.ஆர் கேட்கிறார் . உங்களுக்கு என்னென்ன குறைகள் உள்ளன* , என்ன உதவிகள் வேண்டும் இதுவரை அதிகாரிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரிக்கிறார் . அந்த கூட்டத்தில் இருந்து நால்வர் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை, பட்டா தரவில்லை என்று சத்தமாக தொடர்ந்து பேசுகிறார்கள் . சிறிது நேரம் கழித்து ,காவல்துறையினரிடம் அந்த நால்வரை மட்டும் தனியே அழைத்துவர சொல்கிறார் .* உங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்று சொல்கிறீர்களே .நீங்கள் யாரை ,எங்கு சந்தித்து மனு அளித்தீர்கள் என்று கேட்க*நாங்கள் அதிகாரிகளிடம் கூறினோம், ஏன் ,மாவட்ட ஆட்சியரை கூட* சந்தித்தோம் ஒன்றும் பலனில்லை என்றனர் .ஆட்சியர் என்ன சொன்னார் என்று எம்.ஜி.ஆர். கேட்க, அவர் எங்களுக்கு கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்று பதில் கூறினர் . அந்த ஆட்சியர் இந்த கூட்டத்தில் இருக்கிறாரா பாருங்கள் .இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று எம்.ஜி.ஆர். கூற ,அவரை காணோம் .இங்கு வரவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். எம்.ஜி.ஆர். உடனே,இதோ இவர்தான் உங்கள் மாவட்ட ஆட்சியர் ..நீங்கள் வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக இங்கு பிரச்னை செய்கிறீர்கள். உங்களை 15 நாட்கள் காவலில் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றவுடன்,உடனே எம்.ஜி.ஆர். காலில் விழுந்து ஐயா எங்களை மன்னித்து விடுங்கள் ,கட்சிக்காரர்கள் பேச்சை நம்பி தவறாக நடந்து கொண்டோம் என்று புலம்பினார்கள் . ஆட்சியரையோ, அதிகாரிகளையோ முறையாக சந்தித்து மனு அளித்து உங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு விரைவில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்* , அரசியல்வாதிகள் பேச்சை நம்பி, மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொல்லை கொடுக்க கூடாது என்று எச்சரித்து அனுப்பினார் எம்.ஜி.ஆர்.*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*
2.அன்று வந்ததும் இதே* நிலா - பெரிய இடத்து பெண்*
3.பல்லாக்கு வாங்க போனேன் - பணக்கார குடும்பம்*
4.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*
5.எம்.ஜி.ஆர்.-கரி கோல் ராஜு உரையாடல் - நல்ல நேரம்*
6. எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - படகோட்டி*
7.அன்னமிட்டகை நம்மை ஆக்கி விட்ட கை- அன்னமிட்டகை*
8. என்னை தெரியுமா* - குடியிருந்த கோயில்*
orodizli
7th September 2020, 09:11 AM
பூனை விஜய் #சின்னவாத்தியாரே என்று பேனர் போட்டுக்கொண்டால்? எம்ஜிஆர் என்ற புலியாகிவிடுமா?..........."#குறுக்கு_வழியில்_வாழ்வு_தேடிடும்_திருட்டு_உலக மடா"-எம்ஜிஆர்!
2021_தேர்தலில் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுபவர்கள் எவரும், தான் உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை எம்ஜிஆர் போல ஏழைகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களா என்ன?
பூனை தன்னுடம்பில் கோடுகளை போட்டுக் கொண்டால் புலியாகி விடுமா?
#திருடர்கள்_ஜாக்கிரதை_போர்டு_வைத்து_விட்டார்கள ்..!
இனிய திங்கள் காலை வணக்கங்கள்!.........
orodizli
7th September 2020, 01:56 PM
தலைவரை நாடி வந்த பந்துலுவுக்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடித்தந்த படம்தான் "தேடி வந்த மாப்பிள்ளை".
1970 ம் ஆண்டு ஆக 29 ல் வெளியான வெற்றிப் படம்தான் "தேடி வந்த மாப்பிள்ளை". அந்த ஆண்டு வெளியான நான்காவது படம். முதல் படமான "மாட்டுக்கார வேலன்" வெள்ளி விழாப் படம். 2வது படமான "என் அண்ணன்" 100 ஓடி வெற்றி பெற்ற படம்.
அடுத்து வந்த கருப்பு வெள்ளை படமான "தலைவன்" சுமாரான வெற்றி. நான்காவது வந்த படம்தான் "தே.வ.மாப்பிள்ளை". இதுவும் சராசரிக்கு மேல் வெற்றியை பதிவு செய்ய தவறவில்லை. படத்தின் சிறப்பே r k சண்முகத்தின் வசனம்.
எல்லாம் எதுகை மோனையில் எழுதி அசத்தியிருப்பார். தோட்டா-பேட்டா
பேட்டா-டாட்டா என்று ஒவ்வொரு வசனத்திலும் எதுகை மோனையில் காமெடியை தூவியிருப்பார்.
சோலைமலை பெயரையே ஏசி பண்ணியிருக்கான் என்ற வசனங்கள் அருமை. "ஆயிரத்தில் ஒருவனு"க்கு பிறகு இந்த படத்தின் வசனத்தில் மீண்டும் பளிச்சிடுகிறார்
மிகவும் பிரபலமான 'வெற்றி மீது வெற்றி வந்து' பாடலே ஆரம்ப காட்சியின் வேகத்தை முடுக்கி விடுகிறது . அதன் பின் சென்னை சென்ற பிறகு ஒவ்வொரு காட்சியும் மின்னல் வேகத்தில் நகரும். 'மாணிக்க தேரில்' பாடல் காட்சி மிகவும் அருமையாக இருக்கும்.
சோவின் காமெடி ரசிக்கும்படி இருக்கும். ஜஸ்டினுடன் ஒரு சண்டை காட்சி மிகவும் நேர்த்தியாக படமாக்கப் பட்டிருக்கும்.
அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்த இந்தப் படம் பெரு வெற்றி பெற வேண்டிய ஒரு படம். ஆனால் காரணம் புரியவில்லை ஏன் அந்த வெற்றியை தவற விட்டதென்று.
அந்த நேரத்தில் சென்னை பாரகனில் வெளியான தலைவர் படங்கள் "நாடோடி மன்னனு"
க்கு பிறகு 100 நாள் வெற்றியை பெறவில்லை. பாரகனில் தலைவர் படம் வெளிவருகிறது என்றாலே நம்ம ரசிகர்கள் சோர்ந்து
விடுவார்கள். அதன்பிறகு
பல தலைவர் படங்கள்
வெளியானாலும் எதுவும் 100 நாட்கள் ஓடவில்லை. அதேபோல் மதுரை தங்கத்தில் "நாடோடி மன்னனு"க்கு பிறகு தலைவருக்கு
மிகப் பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் வரவில்லை.
தங்கத்தில் ஏதாவது ஒரு வெற்றிப் படம் வெளியாகியிருந்தால் அவ்வளவுதான் வசூலில் மிக பெரிய ரிக்கார்டு உருவாகியிருக்கும்.
இருப்பினும் தலைவரின் சாதாரண வெற்றிப் படங்களே பிரமிக்கத் தக்க வசூலை கொடுக்க தவறவில்லை.
தங்கத்தில் 69 நாட்கள் ஓடி சுமார் 2,17,000 ஐ வசூலாக பெற்று சாதனை படைத்தது.
சென்னை பாரகனில் 61 நாட்களில் 198365.00 வசூலாக பெற்றது. சென்னை பாரகன் அகஸ்தியா சரவணா வில் 61 நாட்களும் திருச்சி 84 சேலம் 71 கோவை 68 நாட்களும் ஓடியது. ஈரோட்டில் 64, நெல்லை 53 நாகர்கோவில் 50 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. மொத்தம் 22 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது. 100 நாட்கள் ஓட்டப்பட்ட பல சிவாஜி படங்களின் 50 நாட்களை காட்டிலும் கூடுதல் அரங்குகளில் 50 நாட்கள் ஓடியது.
சென்னையில் முதல் வெளியீட்டிலே சுமார் 7 லட்சத்தை வசூலாக பெற்றது. முதல் வெளியீட்டிலேயே சுமார் 4 மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி அதிரடி நிகழ்த்தியது. ஒரு படத்தின் சாதனை என்பது ஏதாவது ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டினால் போதும் என்பது சிவாஜி ரசிகர்களின் நினைப்பு. ஆனால் திரையிடும் தியேட்டர்களில் பெருவாரியான திரையரங்கத்தில் 50 நாட்கள் ஓடினால்தான் படத்துக்கு வெற்றி என்பது விநியோகஸ்தர்களின் கணிப்பு.
தலைவர் படத்தை பொருத்தவரை அடுத்த தலைவர் படம் வரும்வரை எத்தனை படங்கள் வந்தாலும் வசூலில் அசைக்க முடியாது. ஆனால் அடுத்த தலைவர் படம் வந்து விட்டால் ரசிகர்கள் புது படத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதில் சிக்கி கொண்ட இரண்டு படங்கள் பத்மினி பிக்சர்ஸ் கலர் படங்களான "ரகசிய போலீஸ் 115" மற்றொன்று "தேடி வந்த மாப்பிள்ளை".
"ரகசிய போலீஸை" பொறுத்தவரை
"தேர்த்திருவிழா" சுமாரான படம் என்பதால் பிரச்னை இல்லை.அடுத்து வந்த "குடியிருந்த கோயில்" மெகா பிளாக்பஸ்டர் படம்.
ஆயினும் "குடியிருந்த கோயிலை" தாண்டி ஒரு சில ஊர்களில்100 நாட்கள் ஓடியது. வசூலில் "குடியிருந்த கோயிலி"ன் வசூலில் 80 சதவீதத்துக்கு மேலே வசூலை குவித்தது. அதேபோலதான்
"தேடி வந்த மாப்பிள்ளை"யும். முதல் 40 நாட்கள் வரை அசைக்க முடியாத
வசூலை பெற்ற படம்.
அடுத்து வந்த "எங்கள் தங்க"த்தால் 100 நாட்களை
எட்ட முடியாமல் போனாலும் நல்லதொரு வெற்றியை பதிவு செய்தது எனலாம். பரீட்சையில் ஒரு பாடத்தில் வெற்றி பெற்றால் பாஸாக முடியாது. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்ச மார்க்கை பெற வேண்டும் என்பதை அறியாதவர்களா? சிவாஜி ரசிகர்கள்.
எங்கோ ஒரு இடத்தில் முக்கி முனகி 100 நாளை ஓட்டி விட்டு வெற்றி வெற்றி என்று கதறுவதை பார்த்தால் நமக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா உலகத்துக்கே சிரிப்புத்தான் வருகிறது..........
orodizli
7th September 2020, 03:22 PM
சென்னை: "அதென்ன, அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருக்குமே எம்ஜிஆர்தான் கிடைத்தாரா?" என்கிறது ஒரு தரப்பு.. "ஏன், அவர் ரசிகர்கள் நாங்கள் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக்கூடாதா" என்று கேட்கிறது இன்னொரு தரப்பு!
வழக்கத்துக்கு மாறாக இந்த முறை விஜய் பட போஸ்டர்களில் எம்ஜிஆர் தென்படுகிறார்.. விஜய்யை எம்ஜிஆராக சித்தரித்ததையே மக்கள் ஜீரணித்து கொண்டார்களா என்று தெரியவில்லை, ஆனால் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா கெட்டப்பில் சித்தரித்துள்ளனர்.
இன்னும் அரசியலுக்கு விஜய் வரவில்லை.. ரசிகர் மன்றம் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.. அதை மறுப்பதற்கில்லை.. ஆனால், "எம்ஜிஆரின் மறுஉருவமே" என்று சொல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? விஜயகாந்த் செய்யாததையா விஜய் செய்துவிட்டார்? என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது.
"2021-ல் தமிழகம் தலையேற்க வாங்க தலைவா!" என்றுகூட விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இப்படித்தான் முக அழகிரியையும் போஸ்டர் அடித்து கொண்டு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸையும் கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இருக்கிற ஒரு தமிழ்நாட்டுக்கு எத்தனை பேர்தான் தலைமை ஏற்க முடியும்? இதெல்லாம் ரசிகர்களின் உச்சக்கட்ட அன்பும், அபரிமிதமான பாசமும், ஆதரவாளர்களின் எல்லையற்ற நம்பிக்கையும் என்றே கூட நாம் வைத்து கொள்வோம்!!
ஆனால், எம்ஜிஆரை இவர்கள் இழுத்து கொண்டு வருகிறார்கள்? விஜய்யை விஜய்யாகவே காட்ட வேண்டியதுதானே? அதென்ன எம்ஜிஆரை டார்கெட் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டுவது என்பது அதிமுக தரப்பின் முணுமுணுப்பாக உள்ளது.. இதற்குதான் அமைச்சர் ஜெயக்குமார் "மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது, செஞ்சிக்கோட்டை ஏறியவர்களெல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது" என்று சுடச்சுட ஒரு பஞ்ச் சொல்லி உள்ளார்.
இதுபோலவே கமல்ஹாசனும் "நாளை நமதே" என்ற ஒருவார்த்தையை மய்யத்தில் சொல்கிறார்.. நாளை நமதே படத்தில் சிறுவனாக கமலும் நடிக்க வேண்டி இருந்தது.. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகவும் கமல் அளவுகடந்த வருத்தம் அடைந்துள்ளார்.. இந்த ஆதங்கம் இருக்கவே செய்யும்.. எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அது முடியாமல் போனால் ஆற்றாமைதான்... ஒப்புக் கொள்வோம்.. அதற்காக இவ்வளவு காலம் நாளை நமதே என்ற வார்த்தையை தன் சினிமா டைட்டில்களிலும், படங்களிலும், பயன்படுத்தாதவர், இப்போது திடீரென நாளை நமதே என்று பிரச்சாரத்துக்கு கிளம்ப போகிறார் என்றால், இதை அரசியலின் ஆதாயமாகத்தானே பார்க்க தோன்றுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஆனால் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கும், ஆட்சிக் கட்டிலில் அமலரத் துடிக்கும் நடிகர்களுக்கும் கண்டிப்பாக எம்ஜிஆர் மட்டுமே ரோல் மாடலாக இருக்க முடியும். காரணம் அவர்தான் திரையுலகில் இருந்த கையோடு அரசியலில் புகுந்து அதே வேகத்தில் மக்கள் மனதையும் கவர்ந்து ஆட்சியைக் கைப்பிடித்த முதல் நடிகர். பின்னால் இதே பாணியில் ஆட்சியைப் பிடித்த என்டிஆருக்கே கூட எம்ஜிஆர்தான் ரோல் மாடல்.. அப்படி இருக்க நம்ம ஊர் நடிகர்கள் எம்ஜிஆரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
"சினிமாவில் நடித்து, மக்கள் மனசில் இடம் பிடிச்சிட்டால் ஆட்சியிலும் உட்கார்ந்துடலாம் என்பதற்கு, உலகத்துக்கே 'வெளிப்படுத்தியவர் எம்ஜிஆர்தான்.. அதனால் அவரோட ரசிகர்களான நாங்கள், அவரது ரூட்ல போறதுல என்ன தப்பு?" என்று கேட்கிறார்கள் பிற கட்சி தொண்டர்களும் பிற நடிகர்களின் ரசிகர்களும்! அதுவும் நியாயமானதுதான்.
"வர்றேன்.. வந்துருவேன்.. வந்தே தீருவேன்" என்று பல காலமாக சொல்லிக் கொண்டே இருக்கும் ரஜினிகாந்த் முதல் வந்துட்டேன் மாற்றம் தராமல் போக மாட்டேன் என்று கூறி வரும் கமல் வரை அனைவருக்குமே எம்ஜிஆர் ஆகும் ஆசைதான் இருக்கிறது. இவர்கள் என்றில்லை எந்த சினிமாக் கலைஞராக இருந்தாலும் கூட எம்ஜிஆராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். காரணம் எம்ஜிஆர் சென்ற உயரம், பெற்ற வெற்றி!
அவரை போலவே திரையுலகிலும் மக்கள் மனதிலும் வெல்ல வேண்டும் என்பதே அனைத்து சினிமாக்காரர்களின் கனவாகும்... விஜயகாந்த் அப்படித்தான் நினைத்தார் வந்தார் ஓரளவு வெல்லவும் செய்தார். தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூட சொல்ல வைத்தார்.. ஆனால், அவரது விளம்பரங்களிலும் அவரது கட்சித் தொண்டர்கள் மூலமாகவும்தான் கருப்பு எம்ஜிஆர் என்ற வார்த்தை விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர, பொதுமக்கள் யாருமே விஜயகாந்தை அப்படி அழைத்ததே இல்லை. காரணம் அவர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர்தான்.. கருப்பு, சிவப்பு, பச்சை எம்ஜிஆர்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
அவர் மட்டுமல்ல, அவருக்கு பிறகு வந்த எத்தனையோ பேர் எம்ஜிஆர் பெயரை அரசியல், சினிமாவில் பயன்படுத்தி கொள்ளதான் செய்தனர்.. ஆனால் எம்ஜிஆருக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தது ஒரே ஒருவர்தான். அவர் ஜெயலலிதா மட்டுமே. எனவே அடுத்த எம்ஜிஆர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய முடியுமே தவிர வேறு எந்த சக்தியாலும் அதை தீர்மானிக்க முடியாது.. ஏன் சம்பந்தப்பட்ட நடிகர்களின் செல்வாக்கே கூட அதை தீர்மானிக்க முடியாது என்பதே நிதர்சனம்.. அப்படி இருந்திருந்தால் ரஜினிக்கு இருந்த செல்வாக்குக்கு இன்னேரம் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு அவர் முதல்வராகியிருக்க மாட்டாரா என்ன.. ஆனால் மக்களிடம் எழுச்சி வர வேண்டும் என்று ரஜினியே சொல்லியும் கூட அது சுத்தமாக வராமல் இருக்கிறது என்பதுதான் இங்கு முக்கியமானது!
இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.. இறுதிவரை அரசியலிலும் சரி, ஆட்சியிலும் சரி, தன் உறவினர்கள் யாரையும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட அனுமதிக்காதவர் எம்ஜிஆர்.. அதனால்தான் எம்ஜிஆரின் செல்வாக்கு இன்று வரை அப்படியே உள்ளது. அவரை மிகப் பெரிய இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் மக்கள். ஆனால் அவரைப் பின்பற்றத் துடிப்போரில் 99 சதவீதம் பேர் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதை மக்கள் கண் கூடாக கண்டு வருவதால்தான் எம்ஜிஆர் இடத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் ஓரம் கட்டி வைத்துள்ளனர்.
எம்ஜிஆர் படங்களையே எடுத்து கொண்டாலும், அவரது கேரக்டர்களை பார்த்தாலும் சரி, எம்ஜிஆர் நல்லவர்.. தண்ணி அடிக்க மாட்டார்.. சிகரெட் பிடிக்க மாட்டார்.. தன் மனைவியையோ, காதலியையோ தவிர பிற பெண்களை தாயாக கருதுவார்.. ஏழைகளை பாதுகாப்பார்.. நாளைய எம்ஜிஆர் என்று சொல்லி போஸ்டர் ஒட்டுபவர்கள் தங்கள் ஆதர்ச தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
விஜயகாந்த்
இவரைப் பற்றி தெரிந்து கொள்க
விஜயகாந்த்
அரசியல் வாழ்க்கைநிகர மதிப்புதொடர்பு
அதுமட்டுமல்ல, எம்ஜிஆரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைபவர்கள், அவரது கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ பின்பற்ற தயாராக இருக்கிறார்களா என்பதையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஒருவேளை அப்படி அறிவிக்கும் சூழல் வரும்வரை, யார் வேண்டுமானாலும் தன்னை எம்ஜிஆராக நினைத்து கனவு காணட்டும்.. ஏனென்றால், கனவு காணும் எல்லாருக்குமே உரிமை உண்டு.. கலாமே கனவு காணுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே.. கனவு காண்பதில் தவறே இல்லை..........
orodizli
7th September 2020, 07:31 PM
காவிய தலைவன்--
-----------------------------------
எம்.ஜி.ஆருக்கு இரு புறங்களிலும்--
கண்ணதாசன்--வாலி என கவி இருவர் இருந்தாலும்-
கண்ணதாசன் வரைந்தவை சற்று ஓங்கியே இருக்கும்!
எம்.ஜி.ஆர்ப் பற்றிக் கவிஞர் வரைந்துள்ள இக்கவிதை கொஞ்சம் அபூர்வமானது!
படித்துப் பரவசப்பட மட்டுமன்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ஆகும்!
எம்.ஜி.ஆரைத் தமிழர் இல்லை என்றால்??
கவிதையின் கடைசியில் நச் சென்று நவின்றிருக்கிறார் நற்றமிழியின் நாயகன்!
படித்துத் தான் பாருங்களேன்--
கல்லூரிப் படியேறிக்
கல்லாத போதினிலும்
சொல்லும் மொழியெல்லாம்
சுவையான செந்தமிழாய்
வெல்லும் படி சொல்லும்
வீரனை நாம் பெற்றுள்ளோம்!
மன்னர் இவரொரு நாள்
மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான்
அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில்பேசு எனக்
கேட்டார்கள் தோழரெலாம்--
ஓரளவும் பேசேன் நான்--
உயிர்படைத்த நாள்முதலாய்
உண்ணும் உணவும் உலவுகின்ற வீதிகளும்
எண்ணும் பொருளும்
ஏற்றதொரு தொழில் நலமும்
செந்தமிழால் வந்த
திரு வென்றே பெற்றவன் நான்
அந்தமொழி இன்றி
அடுத்த மொழி பேசுவதோ?
என்று பதிலுரைத்தார்
இவர் பெருமை யார்க்கு வரும்?
பொன்மனத்துச் செல்வர்
புரட்சித் தலைவரிவர்
தமிழரிலை என்றால்
தமிழுக்கேக் களங்கம் வரும்!!!.........
orodizli
7th September 2020, 07:33 PM
தலைவர் பொது கூட்டம் என்றாலே பொங்கு கடல் என கூட்டம் தானே திரளும்.....
கோவை மேற்கு தொகுதியில் நடந்த தொகுதி பிரச்சாரம்....திறந்த வேனில் நின்று கொண்டே தலைவர் சூறாவளி பிரச்சாரம்..
எங்கு வாகனம் நின்றாலும் அங்கே மக்கள் வெள்ளம்... அப்போது ஒரு தொண்டர் தன் குழந்தையை கையில் தூக்கி கொண்டு கடும் கூட்டத்தில் முண்டி அடித்து முன்னேற துடிக்க...
தலைவர் அவர் குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று அவருக்கு விருப்பம்... எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் ஒரு அளவுக்கு மேல் முன்னேறி செல்ல முடியவில்லை..
திடீர் என்று யாரும் எதிர்பாராவண்ணம் அந்த குழந்தையை தூக்கி புரட்சிதலைவர் நோக்கி வீசி விடுகிறார்.
மொத்த கூட்டமும் உறைந்து போய் நிற்க குழந்தை பறந்து தலைவர் அருகில் வர ஒரு லாவகம் ஆக அந்த குழந்தையை தாவி இரு கைகளால் பிடித்து விடுகிறார் தலைவர்.
சற்று நேரம் அமைதி..அந்த தொண்டனை கை காட்டி அழைக்க மொத்த கூட்டமும் வழி விட என்ன இப்படி செய்து விட்டாய் குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் அந்த அன்னைக்கு என்ன பதில் சொல்வாய் என்று கேட்க.
ஐயா நீங்க பெயர் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அப்படி செய்து விட்டேன் என்று சொல்ல தலைவர் சகஜம் ஆகி இனி இப்படி கூடாது என்று சொல்லி பெயரை மைக்கில் சொல்லி ஜிப்பாவில் இருந்து பணம் கட்டு எடுத்து குழந்தை அப்பா கையில் கொடுத்து குழந்தைக்கு முத்தம் ஒன்றை கொடுக்க.
அப்போது எழுந்த விசில் சத்தம் அடங்க பல நிமிடங்கள் ஆயின.
அதுதான் தலைவர் தன்னை சுற்றி நடப்பதை நன்கு அறிவார்...
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்... உங்களில் ஒருவன்...
மறுநாள் காலையில் அனைத்து நாள் இதழ்களில் இந்த சம்பவமே முக்கிய செய்தியாக வந்தது..........
orodizli
8th September 2020, 08:17 AM
#பாசப்பிணைப்பு
22.05.73 ல் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்த திண்டுக்கல் பாராளுமன்றத்தேர்தல்...
பிரச்சாரத்துக்குச் சென்ற புரட்சித்தலைவரைக் கொல்ல திட்டமிட்டிருந்தது கயவர் கூட்டம்...#தலைவருக்குத் #ரிஸ்க் #எடுக்கிறது #தான் #ரஸ்க் #சாப்பிடுற #மாதிரியாச்சே. அதனால் தொண்டர்கள் "போகவேண்டாம்" என்று வற்புறுத்தியும் தன் உயிரைத் துச்சமாக எண்ணிக் கிளம்பிவிட்டார்...
இருப்பினும் சமயோசிதமாக ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் தான் செல்லும் வழியையும், வாகனத்தையும் மாற்றி மாற்றிப் பயணம் செய்தார். இப்படி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்ததால்
கயவர்கள் ஏமாந்தனர்...
இப்படியே நள்ளிரவாகிவிட்டதால் விடியற்காலையில் பயணத்தைத் தொடரலாம் என்று தனது வேனை அடரந்த புதருக்குள் நிறுத்தச் சொல்லி நடுக்காட்டில், உடனிருப்பவர்களுடன் அப்படியே பாய் விரித்துப் படுத்துவிட்டார்...
அதிகாலை ஐந்து மணியளவில் ஒரு மூதாட்டி இரு அலுமினியச்சட்டியுடன் தன் கால்மாட்டுக்கருகில் இருப்பதைக் கண்டு திகைத்தார். எப்படி தன் இருப்பிடமிருந்து வந்தார் ? ஏன் வந்தார்? என்று அவர் மனதினில் கேள்விகள் !!!
"தாயே ! உங்களுக்கு என்ன வேண்டும்? என கேட்ட எம்ஜிஆரிடம்,
"எனக்கு ஒன்றும் வேண்டாம். இதுல சோறு இருக்கு. உனக்குப் புடிச்ச வெடக்கோழிக் குழம்பு இருக்கு. சாப்பிடு மகராசா ! என்றார் அந்த மூதாட்டி.
குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அந்த மூதாட்டியை அப்படியே வாரி அணைத்த எம்ஜிஆர் ..." தாயே ...! இங்கே நானிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் ? என்று கேட்டார்.... அதற்கு அந்த மூதாட்டி... "ராசா ! என் பேரன் தான் நீ இங்கு தங்கியிருக்கும் விஷயத்தை இட்டறைப்பாதையில் நின்னு பாத்துட்டு வந்து பயந்து போய் என்னிடம் சொன்னான்! அதான் உனக்கு சோறாக்கிக் கொண்டாந்தேன் "
நீ எதுக்கு ராசா பதுங்கியிருக்கணும் ? #உன்ன #தொட்டுமீள #இந்த #உலகத்துல #எவன் #பொறந்திருக்கான்? ஏன்ய்யா...#எங்காச்சும் #நெருப்பைக் #கரையான் #அரிச்ச #அதிசயம் #உண்டாய்யா ? #உன் #நிழலை #நெருங்கக்கூட #எவனுக்கு #தைரியம் #இருக்கு ? என்று மூதாட்டி ஆவேசமாகப் பேச கண்கலங்கிவிட்டார் எம்ஜிஆர். அந்த சாப்பாட்டை காலையில் சாப்பிடுவதற்காக அப்படியே பாத்திரங்களை வேனில் ஏற்றிவிட்டார்.
பிறகு அந்த மூதாட்டியின் விலாசத்தை வாங்கிக்கொண்டார்.... "நீ இந்தப் பக்கம் எப்ப வந்தாலும் ஒரு குரல் கொடுத்தாப் போதும் ஓடியாந்துருவேன் " என்ற மூதாட்டியை வணங்கிப்புறப்பட்டார் எம்ஜிஆர்.
திண்டுக்கல்லில் பிரச்சாரம் முடித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர் காரை நிறுத்தச் சொல்லி விறுவிறுவென நடந்தார். உடனிருந்தவர்கள் திகைத்தனர்.
நேராக அந்த மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற எம்ஜிஆர், திண்ணையில் குளிரில் வாடிக்கொண்டிருந்த. அந்த மூதாட்டியின் உடலில் தான் மதியம் வாங்கிய கம்பளிப்போர்வையை போர்த்தினார்.
அந்த மூதாட்டியைத் தட்டியெழுப்பி ஆயிரம் ரூபாயை சாதாரணமாகக் கொடுக்கவில்லை... அன்பால் திணித்தார். மூதாட்டியினால் பேசமுடியாமல் கண்கள் பனித்தது.
கண்ணீர் மல்க விடைபெற்றார் புரட்சித்தலைவர்.
#இப்பேர்ப்பட்ட #பாசப்பிணைப்பு #என்னும் #சந்தனம் #மணத்தது...
#அன்று ............
orodizli
8th September 2020, 08:18 AM
மக்கள் திலகத்தின் தொடர் வெளியீடான நான்காவது வண்ணப்படம் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் வழங்கும் "என் அண்ணன்" திரைப்படம் ஆகும்.
என் அண்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் 46 ஊர்களில் 58 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை தமிழக சினிமாவில் பெறுகிறது.
திரையிடப்பட்ட 46 திரையரங்குகளிலும் முதன்முறையாக எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை தமிழகத்தில் என் அண்ணன் 48 அரங்கில் 50 நாட்கள் ஆகும்.
முதன்முதலில் பெற்று சரித்திரம் படைத்தது.
மதுரை ஏரியாவில் முதன்முறையாக 8 ஊர்களிலும் 50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த முதல் திரைப்படம் என்ற பெருமையை என் அண்ணன் பெறுகிறது.
வேலூர் கடலூர் புதுச்சேரி இப்பகுதியில் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்ட பெருமைக்குரிய காவியம்
என் அண்ணன் திரைப்படம் ஆகும்.
இரண்டாம் வெளியீட்டில் 8 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி மொத்தம் 56 திரையரங்கில் என் அண்ணன் திரைப்படம் 50 நாளை கொண்டாடி மகிழ்ந்தது.
முதல் ஆறு மாதத்தில் இக்காவியம் 60 லட்சத்தை வசூலாக பெற்று சரித்திரம் படைத்தது.
இந்திய வரலாற்றில் தமிழகத்தில் 108 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை என் அண்ணன் திரைப்படம் பெறுகிறது ...
சேலம் அலங்கார்.
15 திரையரங்குகளில் 10 வாரங்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை படைத்த இரண்டாவது காவியம். சென்னை, மதுரை, திருச்சி, சேலம் தொடர்ந்து வெளியாண நான்காவது படம் 100 நாள் என்ற பெருமையை பெறுகிறது என் அண்ணன் காவியம்.
சென்னை மிட்லண்ட் திரையரங்கில் புதுமைப்பித்தன் ஆயிரத்தில் ஒருவன் அடிமைப்பெண் திரைப்படத்திற்குப் பின் நான்காவதாக 100 நாட்களை கண்ட காவியம் என் அண்ணன் ஆகும்..........
orodizli
8th September 2020, 08:19 AM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் திலகத்தின் அண்ணன் திரைக்காவியம் 100 நாளில் மூன்று லட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்து புதிய வெற்றியைப் படைத்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த என் அண்ணன் திரைக்காவியம் அன்று முதல் இன்று வரை வெள்ளித்திரையில் தொடர் பவனி வந்து சாதனையை பதித்தது சிறப்பானதாகும்.
ஒரே ஆண்டில் அதாவது 1969 மே மாதத்தில் வெளியான அடிமைப்பெண் காவியம் முதல் தொடர்ந்து நம்நாடு , மாட்டுக்கார வேலன் 1970 - மே மாதம் வந்த என் அண்ணன் திரைப்படம் வரை நான்கு திரைப்படங்கள் பதித்த சாதனையை இதுவரை திரைப்பட உலகில் ஒரே ஆண்டிற்குள் பதித்த வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது என்பது மகத்தானதாகும்.
நான்கு திரைக்காவியங்கள் சிறப்புகள் சில.---...
அடிமைப்பெண்
16 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது. மாட்டுக்காரவேலன்
14 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது.
நம் நாடு
9 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது.
என் அண்ணன்
4 திரையரங்கில்
100 நாட்கள் ஒடி ..... மொத்தம் 43 திரைகளில் நூறு நாட்கள் ஓடி சரித்திரம் படைத்துள்ளது .
அடுத்து நான்கு திரை காவியங்களும் சென்னை மதுரை திருச்சி சேலம் 100 நாட்களை வெற்றி கொண்டுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாகும்.
நான்கு காவியங்களும் 50 க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளுக்கு மேல் 50 நாளை கடந்து வெற்றியை பதித்துள்ளது.என்பது மிகப்பெரிய சாதனையாகும்
நான்கு திரைப்படங்களும் சென்னையில் ஓடி முடிய கிட்டத்தட்ட 45 லட்சத்திற்கு மேல் வசூலை கொடுத்து சாதனையாகும்.
அதிகபட்சமாக மாட்டுக்கார வேலன் சென்னை, மதுரை வெள்ளி விழா ஆகும்.
அடிமைப்பெண் மதுரையில் வெள்ளிவிழா...
நம்நாடு மதுரையில்133 நாட்களும்,
என் அண்ணன் சேலத்தில் 112 நாட்களும் ஒடியது.
இப்படி அடுக்கடுக்கான சாதனையில்...
4 காவியங்கள் மகத்தான வெற்றி ஆகும்.
அடுத்து...
தொடர் வெற்றி...
3 வண்ணப்படங்கள் வரலாறு...
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
ரிக்க்ஷாக்காரன்
சாதனை பற்றி...............
orodizli
8th September 2020, 08:21 AM
சென்னை மாநகரில் தொடர் வெளியீட்டில் இப்படியும் ஒரு மகத்தான சாதனையா.......*
மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி.....
தொடர்ந்து வெளியான பட வரிசையில்........
சென்னை நகர வரலாற்றில் தொடர்ந்து வெளியான இதயவீணை,**
உலகம் சுற்றும் வாலிபன்* இரண்டும் சேர்ந்து அளித்த தொகை 34 லட்சத்தை கடந்தது....
*
1974 - நேற்று இன்று நாளை உரிமைக்குரல்*
சிரித்து வாழவேண்டும்*
3 திரைப்படங்களின் வசூல்*
33 லட்சத்தை கடந்தது.
1975 - நினைத்ததை முடிப்பவன்*
நாளை நமதே, இதயக்கனி பல்லாண்டு வாழ்க*
நான்கு திரைப்படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் சென்னை நகரில் வசூலில்* அதிக தொகையான* 56 லட்சத்தை பெற்றது.*
அடுத்து*
1976 - மூன்று திரைப்படங்களான நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும் கரங்கள்*
ஊருக்கு உழைப்பவன்*
3 திரைப்படங்களின் வசூல்*
35 லட்சத்தை கடந்தது.
1977 - நவரத்தினம்*
இன்று போல் என்றும் வாழ்க*
மீனவ நண்பன்*
மூன்று திரைப்படங்களும்*
40 லட்சத்திற்கும் மேல் வசூலைக் கொடுத்து அசுர சாதனை புரிந்தது.
1978 ல் மக்கள் திலகத்தின் கடைசி திரைப்படமான*
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் வெறும் 8 வாரங்களில் மட்டும் 12 லட்சத்தை நெருங்கியது.*
வசூலில் இப்படி எந்த நடிகர் திரைப்படமும் தொடர்ந்து இவ்வளவு பெரிய தொகையை தொடர்ந்து வசூலிக்கவில்லை என்பது தென்னிந்திய சினிமா சரித்திரத்தில் முக்கிய சாதனையாகும்.
இப்படிப்பட்ட மகத்தான சாதனைகளை வசூலில் தக்கவைத்த தொடர் கதாநாயகன் தனிப்பெரும் கதாநாயகன்*
மக்கள் திலகம் தவிர வேறு எவரும் தென்னிந்திய சினிமா வரலாற்றில் மட்டுமல்ல இந்திய சினிமா வரலாற்றில் தனி ஒரு நகரில் இப்படி ஒரு வெற்றியைப் அளித்ததாக வரலாறு இல்லை.
தொடர்ந்து வெளியான 14 திரைப்படங்கள் இப்படிப்பட்ட சாதனையை உருவாக்கி உள்ளது என்றால் அது மக்கள் திலகம் ஒருவருக்கே உருவான சாதனையாக போற்றப்படுகிறது.
தொடர்ந்து வெளியான பத்து வண்ணப்படங்கள் படுதோல்வி அடைந்த நடிகர்கள் மத்தியில்*
14 படங்கள் தொடர் வெற்றியில்**
முதல் வெளியீட்டில் மட்டும் சென்னை நகரில் பதித்தது...... மக்கள் திலகத்தின் வரலாறு மட்டுமே சாதனையாக இன்றும் போற்றப்படுகிறது.
தொடரும்..............
orodizli
8th September 2020, 08:22 AM
"இதயவீணை" காவியம் 10 லட்சத்திற்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்தது*.
வசூல் : 10,12,765.80
உலகம் சுற்றும் வாலிபன் அதுவரை இல்லாத சாதனையில்*
3 திரையரங்கில் ஓடி 23 லட்சத்தை கடந்தது.
வசூல் : 23,40,064.61.*
*
நேற்று இன்று நாளை சாதாரண திரையரங்குகளில் திரையிடப்பட்டு 10 லட்சத்திற்கு மேல் வசூல் : 10,65,105.45
உரிமைக்குரல் திரைக்காவியம் சாதாரண திரையரங்குகளில வெளியிடப்பட்டு
வசூல் : 11,95,891.32
சிரித்து வாழவேண்டும் திரைக்காவியம் 100 நாட்கள் ஓடாமலேயே
வசூல் : 10,55,974.05.
நினைத்ததை முடிப்பவன்*
12 வாரத்தில் சாதனை.
வசூல் : 12,87,490.51
நாளை நமதே திரைக்காவியம்*
9 வாரத்தில் மட்டும்.. வசூல் : 8,82,734.79
இதயக்கனி..... சரித்திரம் படைத்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பின் அதிக. சாதனை.
வசூல் : 19,87,651.90
பல்லாண்டு வாழ்க
100 நாட்களில் படைத்த
வசூல் : 14,53,287.36.
நீதிக்குத் தலைவணங்கு மிகப்பெரிய சாதனை..
வசூல் : 13,10,697.30
உழைக்கும் கரங்கள் திரைப்படம்*
12 வாரத்தில் பெற்ற
வசூல் : 12,42,050.33
ஊருக்கு உழைப்பவன் 50 நாளில் கொடுத்த
வசூல் : 9,13,395.88
நவரத்தினம்
நகரில் 50 நாளில்....
வசூல் : 9,06,378.00
இன்று போல் என்றும் வாழ்க.
வசூல் : 15,29,371.65
மீனவ நண்பன்
வசூல் : 17,76,518.45
மதுரையை மீட்ட சுந்தரப்
பாண்டியன் 58 நாள்
வசூல் : 11,56,560.52...
இப்படி தொடர் காவியங்களை வெளியீட்டு சரித்திரம் படைத்த வசூல்களை தந்த ஒரே திலகமாக...
மக்களின் மாணிக்க திலகமாக திகழ்ந்தவர்...
திரைப்படவுலகின் பேரரசர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே...
இப்படி எல்லாம் சாதனையை படைக்க முடியும் என நீருபித்து காண்பித்தவர்...
இது தவிர மிகப்பெரிய நகாரங்களில் படைத்த இக்காவியங்களின் வசூல் புள்ளி விபரங்கள் மலைபோல் குவிந்துள்ளது....
இன்றைய டிக்கட் விலையில் பார்த்தால்...
சிகரம் போல் மலைப்பாக இருக்கும்..
மக்கள் திலகத்தின் திரைப்படங்களை எந்த நடிகர் படத்துடனும் 1977 வரை நாம் ஒப்பிட முடியாத ஒன்றாகும்.
மேலும்...
பல நகர சாதனைகள் தொடரும்....
இது தான் வெற்றி...
இது தான் வசூல்......
இது தான் புள்ளி விபரங்கள்.......
இவை தான் உண்மையின் ஆதாரங்கள்.....
பெயருக்கு ஏதாவது ஒரு படத்தை வசூல் என தம்பட்டம் கொள்ளாது...
தொடர் வெற்றி தான் ஒரு கதாநாயகனின் நிரந்தர வெற்றியாகும்...
மேலே குறைந்த நாளில் அதிக வசூலை பெற்ற காவியங்கள்...
மக்கள் திலகத்தின்
அரும்பெரும் காவியமாகும்.....
தொடரும் வெற்றிகள்.............
.
orodizli
8th September 2020, 12:32 PM
இதே முரளி ஸ்ரீனிவாஸ் மையம் திரியில் சென்னையில் ராஜா 3 தியேட்டரில் 100 நாள் ஓடியது என்று தவறான தகவல் பதிவிட்டார்.2 தியேட்டரில் தான் ராஜா திரைப்படம் 100 நாள் ஓடியது. விளம்பர ஆதாரமும் உள்ளது. அதை எல்லாரும் சுட்டிக்காட்டியும் தவறு தெரிந்துவிட்டதால் ஒரு மரியாதைக்கோ, குற்ற உணர்ச்சியாலோ அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. தகவல்களை சரிபார்க்காமல் அடித்துவிடுபவர் முரளி ஸ்ரீனிவாஸ் என்பதற்கு சாட்சியாக மையம் திரியில் இன்னமும் ராஜா திரைப்படம் சென்னையில் 3 தியேட்டரில் 100 நாள் ஓடியது என்ற தவறான தகவல் இடம் பெற்றுள்ளது. அவர் சொன்ன தவறை நம்பி எத்தனை பேர் வீண் வாதம் செய்கிறார்களோ தெரியவில்லை. பாவம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்.....
orodizli
8th September 2020, 12:41 PM
புரட்சித்தலைவரின் திரைப்பட சாதனைகளின் பதிவு.... நாம் உண்மையை தான் வெளியிடுகிறோம்.
1965 முதல் 1977 வரை வெளியான எம்.ஜி.ஆர் மன்றங்கள் வெளியீட்ட என்னிடம் உள்ள 50 க்கும் மேற்பட்ட மலர்கள் மற்றும் பல ஊர்களில் 50,75,100,175, 200 சம்பந்தப்பட்ட வெற்றிகள் வசூல்கள்...
திரையுலகம் இதழ்கள்,
திரைச்செய்தி
இன்னும் பல செய்திகளை திரட்டி கடந்த 1985 முதல் ....
பல தலைவர் அபிமானிகளின் தொடர்ப்பு... அதன் மூலம் கிடைத்த தகவல்கள்...
அன்று வந்த மலரை வைத்து போட்டுள்ளோம்...
சரியான தகவலின் படி மாற்றியும் வந்துள்ளோம்...
விரைவில் அடுத்த ஆண்டு நாம் வெளியீடும்
தலைவரின் 115 திரைப்படங்கள்
பற்றிய
உண்மையாக
எங்கு 100 நாள் 50,75,மற்றும்
வசூல் விபரத்தை தொகுத்து...
எல்லோர் கைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய உள்ளோம்...
மற்ற நடிகரின் கோல்மால் படங்கள், வசூல்கள் பற்றி நமது மலரில்
ஒரு துளி கூட வராது....
ஆகையால்.. பெரிய நகரங்களில் தலைவர் காவியங்கள் உண்மை தகவல்களோடு ஒடியதை பதிவிடவும்... அறியாதவர்களுக்கு தெரிவிக்கவும் நண்பர்களே.........
50,100 அதற்கு மேல் உள்ள தலைவரின் திரைப்பட விளம்பரங்களுடன் வெளியிடப்படும்.
அடுத்த வருடம் 2021 ஏப்ரல் மாதம் அல்லது பொது தேர்தல் முடிந்தவுடன்
கொராணா காலம் முடிந்தப்பின்....
மக்கள்திலகத்தின்
"ரிக்க்ஷாக்காரன்"
காவியத்தின் பொன்விழாவில்
(1971 - 2021)
இம்மலர் சிறப்புடன் வெளியிடப்படும்.
நன்றி :
உரிமைக்குரல் ராஜூ.& நண்பர்கள் குழுவினர்.........
oygateedat
8th September 2020, 07:08 PM
நமது மக்கள் திலகம் திரி 1,00,000 பதிவுகள்
கடந்து சாதனை புரிய ஒத்துழைப்பு நல்கிய
மையம் நிர்வாகிகள் - பதிவாளர்கள் - பார்வையாளர்கள்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறேன்.
இப்படிக்கு
எஸ் ரவிச்சந்திரன்
குறிப்பு - எனது அலுவலக தொடர் பணி காரணமாக காலதாமதமாக இன்றுதான் திரிக்கு வந்தேன்
fidowag
8th September 2020, 09:52 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள் ஒளிபரப்பான விவரம் (01/09/20 முதல்* 08/09/20 வரை)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------01/09/20* * - முரசு டிவி* *- பிற்பகல் 3.30 மணி* - கொடுத்து வைத்தவள்*
* * * * * * * * * * *சன் லைப்* - மாலை 4 மணி* *- நீரும் நெருப்பும்*
* * * * * * * * * *புதுயுகம் டிவி -* இரவு* 7 மணி* - தேர் திருவிழா*
02/09/20* * - சன் லைப் -* * காலை 11 மணி* - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * * * முரசு டிவி - மதியம் 12 மணி / இரவு 7மணி -அலிபாபாவும் 40திருடர்களும்*
* * * * * * * * * மூன் டிவி* - இரவு* 8 மணி* * *- நீதிக்குப்பின் பாசம்*
* * * * * * * * *பாலிமர் டிவி -இரவு* 11 மணி* - தொழிலாளி*
03/09/20 -* *சன் லைப்* *-* மாலை 4 மணி* - எங்கள் தங்கம்*
* * * * * * * * * *புதுயுகம் டிவி* -இரவு 7 மணி - நவரத்தினம்*
04/09/20 -சன் லைப் -* * காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல்* *- இரவு 7 மணி* - குடியிருந்த கோயில்*
05/09/20 -மெகா டிவி - மதியம் 12 மணி - சந்திரோதயம்*
* * * * * * * மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - விவசாயி*
* * * * * * * *மெகா 24 -* *பிற்பகல் 2.30 மணி - நீதிக்குப்பின் பாசம்*
06/09/20-ஜீ திரை -காலை 5.30 மணி - பறக்கும் பாவை*
* * * * * * * * *-சன் லைப்* - காலை 11 மணி - முகராசி*
* * * * * * * *புதுயுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி -ராமன் தேடிய சீதை*
* * * * * * * * பூட்டோ டிவி (உள்ளூர் கேபிள்)-இரவு 8 மணி -அன்பே வா*
07/09/20 -சன்* லைப் - காலை 11 மணி* - குடியிருந்த கோயில்*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -நல்ல நேரம்*
* * * * * * * பாலிமர்* டிவி -பிற்பகல் 2 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி* *- பாசம்*
* * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி* - கன்னி தாய்*
08/09/20 -சன்* லைப் -* மாலை 4 மணி - என் அண்ணன்*
* * * * * * * புதுயுகம் டிவி -* இரவு* 7 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * எம்.எம்.டிவி (உள்ளூர் கேபிள்*) இரவு 8 மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * ஜெயா மூவிஸ்* - இரவு 10 மணி - மீனவ நண்பன்** * * * * * *
* * * * * * * * *
orodizli
8th September 2020, 10:09 PM
சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு நிகழ்ச்சி...தலைவர் முதல்வர் அப்போது..
இசை மேதை பால முரளி கிருஷ்ணா அவர்கள் தெலுங்கு மொழியில் அவர் பாடி இருந்த தியாகராஜர் கீர்த்தனைகளை தமிழ் மொழியில் அவர் பாடி அதை வெளியிடும் விழா...
மொத்தம் 6 கீர்த்தனைகள் அதாவது பாடல்களை அவர் தமிழ் மொழியில் பாடி இருந்தார்...விழாவில் இசை மேதைகள் செம்மங்குடி ஸ்ரீனிவாசன் லால்குடி ஜெயராமன் மற்றும் தமிழ் புலவர்கள் உடன் பலர் கலந்து கொண்டனர்..நடிகர் கமலும் உண்டு விழாவில் ரொம்ப தாமதம் ஆக வந்தார் இவர்...
பாடல்கள் வெளியிடப்பட்டு அனைவரும் பாலமுரளி அவர்களின் முயற்சியை பாராட்டி கொண்டு இருந்த நேரம் விழாவில்...
தலைவர் கண் அசைவில் உதவியாளர் மாணிக்கம் தலைவர் சொன்ன படி அவர் காருக்குள் போய் பார்க்க ஒரு பெட்டி அதில் கட்டு கட்டாக பணம்...எல்லாம் 100 ரூபாய் கட்டுக்கள்.
ஒரு பாடலுக்கு 10000 வீதம் 6 பாடலுக்கு தனி தனி கவரில் 60000 பணம் போட்டு எடுத்து வர சொல்லி அனுப்பினார் தலைவர்.
உடன் பாடல்கள் காப்பி செய்யப்பட்ட தாள்கள் இருக்க அது ஒரு செட்டுக்கு பதில் 2 செட்டுகள் இருக்க 6 பாடல்கள் 12 பாடல்கள் என்று நினைத்து 12 கவர்களில் 120000 ரூபாய் பிரித்து போட பட்டு கொண்டு வர பட..
நம் தங்க தலைவர் அவரை வாழ்த்தி பேசி பொன்னாடை அணிவித்து மகிழ்ந்து மொத்த கவர்களையும் அவர் கையில் கொடுக்கிறார்.. அந்த கவர்களில் பணம் இருக்கும் விவரம் ஐயா பாலமுரளி அவர்களுக்கும் தெரியாது...விழாவில் பங்கு கொண்ட யாருக்கும் தெரியாது.
அதுதான் நமது தலைவர்...கொடுத்த பணம் பற்றி மூச்சு கூட விடவில்லை...புறப்பட்ட பாலமுரளி அவர்கள் மாலைகள் சால்வைகள் உடன் அந்த கவர்களையும் தான் வந்த பியட் காரின் பின் சீட்டில் தூக்கி போட கார் புறப்படும் முன் சொல்லப்பட்டது அவரிடம் கவர் உள் அனைத்தும் தலைவர் கொடுத்த பணம் என்று.
பதறி போனார் பாலமுரளி...கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. 1986 களில் அந்த தொகை இன்றைய மதிப்பில் எவ்வளவு இருக்கும் என்பதை தலைவர் நெஞ்சங்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சரி இது ஒரு புறம் 6 பாடல்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய இடத்தில் 12 பாடல்களுக்கு பணம் கொடுத்து அது பாலமுரளியார் வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டது.
தலைவர் மறுநாள் கணக்கு கேட்பார்..கணக்கு கேட்பதில் கில்லாடி அவர் தானே ...எல்லோருக்கும் பதட்டம்...அவ்வளவு தான் தொலைந்தோம் நாம் என்று..
ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அதிகம் கொடுக்க பட்ட 60000 பணத்தை சரி செய்து விடுவோம் என்று தயங்கி தயங்கி தலைவரிடம் சொல்ல.
அவரோ தமிழ் மீது நான் கொண்டு இருந்த பற்றுக்கு வந்த சோதனை போல இது உண்மையில் அந்த பணமே 120000 நான் கொடுத்து இருக்க வேண்டும் போல என்று சிரித்து கொண்டே அதை கடந்து சென்றார்.
எப்படி பட்ட சிந்தனை உள்ள ஒரு மாமனிதர் அவர்...மற்றவர் என்றால் கூச்சல் போட்டு அலறி இருப்பார்கள்...
அவர் தான் தலைவர்..
அன்னை சத்தியாவின் புதல்வர்...
வாழ்க அவர் புகழ்..நன்றி.... தொடரும்...உங்களில் ஒருவன்.............
orodizli
8th September 2020, 10:11 PM
அர்த்தமுள்ள அறிமுகம்!!
-------------------------------------------
எம்.ஜி.ஆரின் ஆல விழுதுகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம்! ரசித்திருக்கிறோம்! ஆனால்--வியக்கும் விழுதுகள் பட்டியலில் இந்த விழுது சேர்கிறது!
சுஜீத்குமார்!
முக நூலில் இந்த இளைஞரை அறியாதவர் இருக்க முடியாது!
இளையோர்க் கூட்டத்தைச் சேர்ந்த இந்த இளவல் பல விதங்களில் என்னைப் பாதித்திருக்கிறார்!
ஜாலி மேனாக முக நூலில் உலா வரும் இந்த இளவலின் விஷய ஞானம் கண்டு நான் உள்ளுக்குள் பலமுறை ஆனந்தித்திருக்கிறேன்!
எனது எந்தப் பதிவாயினும் சரி,,அதற்கேற்றாற் போல் ஒரு விஷயத்தைத் தேடி எடுத்து அதைப் பின்னோட்டமாக வடிப்பார்!
ராமாவரம் தோட்டத்திற்குப் பின் பகுதியில் இருந்து படிப்பை முடித்த இவரது ஒரே தீராத வருத்தம்--
அவ்வளவு அருகில் இருந்தும் ராமாவரக் கலைக் கோயிலை உரிய முறையில் தரிசிக்காமல் விட்டு விட்டோமே?
பயங்கர எம்.ஜி.ஆர் பக்தனான,,. பி.ஈ.மெக்கானிக்கல் இஞ்சினீயரான நம் சுஜீத்குமார்,,தஞ்சையில் தம் தந்தை நிறுவிய மிகப் பெரிய மேனிலைப் பள்ளியை,,தம் அண்ணாவோடும்,,தந்தையோடும் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்!
அந்த கால தொழிற்படிப்பை முடித்துள்ள இவர் தந்தை அடிப்படையில் ஒரு விவசாயி!
தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம் தான் என்றக் கொள்கையுடையவர்,,இரண்டாம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியை நிறுவி,,பின்னர் தமது அயராத உழைப்பினால் அதை மேனிலைப் பள்ளி ஆக்கியிருக்கிறார்!
6500 மாணவர் படிக்கும்,,தஞ்சையிலேயே பெரிய பள்ளி இவர்களது max well hr Sec மேனிலைப் பள்ளி தான்!
சுஜீத்தின் பாட்டனாரோ அந்த காலத்தில் பெரிய வேட்டைக்காரர். சரபோஜி மகாராஜாவின் நண்பர்!
இன்றளவும்,,தஞ்சையில் நன்கொடை வசூலிக்காத ஒரே மேனிலைப் பள்ளி இவர்களோடது தானாம்!!
300 மாணவர்களுக்கு வருடந்தோறும் ஃபீஸ் வாங்காமலும்--
60 மாணவர்களுக்குத் தங்குமிடம்,,உணவு போன்ற எந்த செலவுமில்லாமல் முற்றிலும் இலவசமாகக் கல்வியை ஈந்து வருகிறது இவர்களது குடும்பம்!
கொரோனா பாதிப்பாளர்கள் 5000 பேர்களுக்கு மேல் மூன்று வேளை உணவு வழங்கி பெருமை அடைந்துள்ளார்கள்!
ஃபோர்ஸ் டெம்போ வண்டிக்கு,,கும்பகோணம்,,புதுக்கோட்டை,,மாயவரம் உள்ளிட்ட ஐந்து பகுதிகளுக்கு டீலராக இருக்கும் இவர்களது இன்னுமொரு செயற்கரிய சேவை--
கொரோனா பாதிப்பின் போது ஆம்புலன்ஸ் 108 வண்டிகள் பழுது பார்த்தலையும்,,வண்டிகளுக்கான சர்வீஸ்களையும் இலவசமாகவே செய்து கொடுப்பது தான்!
இவர்கள் குடும்பம் உட்பட,,இவர்களது ஒட்டு மொத்தப் பணியாளர்களுமே இரவு பகலாக இந்தச் சேவையை செய்து வருகிறார்கள்!!
சுஜீத்தின் பாட்டனார்,,தொழில் மேதை ஜி.டி.நாயுடுவின் மாணவர்!
மேலை நாட்டில் இறந்து,,கரை ஒதுங்கிய அறுபதடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்றைத் தம் சொந்தப் பொறுப்பில் பதப்படுத்தி தஞ்சை மியூசியத்துக்கு அளித்துள்ளார் சுஜீத்தின் தாத்தா!
இன்றும் அவர் பெயர் பொறித்து அந்தத் திமிங்கலம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது!
தன் குடும்பமும்,,தம் சகோதரர் குடும்பமும் ஒன்றாகத் தங்கள் தந்தையுடன் வசித்து வந்து,,கூட்டுக் குடும்பத்தின் மாண்பை மங்காது காத்து வருகிறார்கள்!
ஒவ்வொரு மாதமும் இவர்கள் பள்ளியில் இவர்களது சொந்தப் பொறுப்பில்,, மது மற்றும் போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது!
தன் மகன்களைப் படிக்க வைத்த இவரது தந்தை,,அவர்களை லட்சங்களில் மிதக்க விடாமல் லட்சியங்களில் குளிக்கச் செய்திருப்பது குறிப்பிட வேண்டிய--கும்பிட வேண்டிய ஒன்றே!!
எம்.ஜி.ஆர் நம் உள்ளங்களில் நிறைந்திருக்கிறார்! ஆனால்--
இவரது பாட்டனார் வடிவில் வேட்டைக்காரனாக--
இவர் தந்தை வடிவில்==விவசாயியாக--
அன்னமிடும் இவர்களது ஈகையில்--அன்னமிட்டக் கையாக--
இலவசக் கல்வியில்--புதிய பூமியாக--
கூட்டுக் குடும்ப ஒற்றுமையில்--பணக்கார குடும்பமாக-
108 ஆம்புலன்ஸ் இலவச பழுது பார்த்தலில்--ஆனந்தஜோதியாக--
இப்படிப் பல எம்.ஜி.ஆர்கள் இணைந்திருந்து நிறைந்திருப்பது இவர்கள் குடும்பம் ஒன்றில் தான்!!
எம்.ஜி.ஆரை விரும்பும் நம் போன்றவர் மத்தியில்--
எம்.ஜி.ஆரே விரும்பும் குடும்பமாக
சுஜீத்குமார்,,மற்றும் அவரது குடும்பம் திகழ்கிறது என்பது உண்மை தானே உறவுகளே???.........
orodizli
8th September 2020, 10:12 PM
#புரட்சிதலைவர்
#இதயதெய்வம்
#பாரத_ரத்னா_டாக்டர்
#பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும்_அன்பான
#இனிய_செவ்வாய்க்கிழமை
#காலை_வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜியார் மீது மக்கள் அன்பை பொழிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைத்ததற்கு வெறும் சினிமாக் கவர்ச்சி மட்டுமே காரணமல்ல; அதையும் தாண்டிய அவரது மனிதநேய செயல்பாடுகள்தான் காரணம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு அவற்றில் ஒன்றை இங்கு பதிவிடுகின்றேன்...
எம்.ஜி.ஆர். நடித்த ‘பரிசு’ படம் 1963-ம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிகை சாவித்திரி நடித்திருந்தார். படத்தின் கதையை எழுதிய கே.பி. கொட்டாரக்கரா, படத்தின் இயக்குநர் டி.யோகானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ‘பரிசு’ படத்தின் சில காட்சிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டன.
தேக்கடியில் நடந்த படப்பிடிப்பின் போது ஒருநாள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வேகமாக வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது இரு பெண் குழந்தைகளும் பரிதாபமாக அருகே நின்றன. அவரை எழுந்திருக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., ‘‘என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. ‘‘என் கணவருக்கு குடிப் பழக்கம் உண்டு. வனத்துறையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சரியாக போவதில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு சென்ற என் கணவர் காட்டு யானை தாக்கி இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரவில்லை. எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் அழுதவாறே முறையிட்டார் தேவகி.
அதோடு, ‘‘இரண்டு பெண் குழந்தை களை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் என் குடிசைக்கு இரவு
நேரங்களில் சிலர் தவறான நோக்கத்தோடு வந்து வாசலில் நின்று கலாட்டா செய்கிறார்கள்’’ என்று சொல்லிக் கதறினார். எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கிவிட்டன.
தேவகியிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அழா தேம்மா. உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்குத் தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா. உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து உனக்குத் தெரிந்த டீச்சரையும் கூட்டிக் கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.
அதேபோல, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒரு வரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு தேவகி அழைத்து வந்தார். அவரது அதிர்ஷ்டமோ என்னவோ, அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து மீளவே அவருக்கு வெகுநேரம் பிடித்தது. அவரிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.
‘‘பலமுறை எச்சரித்தும் குடிப் பழக்கத்தால் தேவகியின் கணவர் சரியாக பணிக்கு வருவதில்லை. அவரது சாவுக்குக் கூட குடிதான் காரணம். தெளிவாக இருந்திருந்தால் யானையிடம் இருந்து தப்பித்து இருக்கலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் வனத்துறை அதிகாரி கூறினார்.
அவரிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அது இருக்கட்டும். இப்போது இவர்கள் நிலை ரொம்ப பரிதாபமாக உள்ளது. உங்கள் அலுவலக விதிமுறைகள்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகள் யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் நானே பேசுகிறேன்’’ என்றார்.
அந்த அதிகாரியும், ‘‘நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்றார்.
மேலும், ‘‘இப்போது குடிசையில் இருக்கும் இவர்கள் கவுரவமாக தங்கும் வகையில் வாடகைக்கு சிறிய வீட்டை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?’’ என்றும் வனத்துறை அதிகாரியிடம் கேட்ட எம்.ஜி.ஆர்., அதோடு நிற்கவில்லை. ‘‘தேவகிக்கு ஏதாவது வேலை வாங்கித்தர முடியுமா?’ என்றும் கேட்டார்.
எம்.ஜி.ஆரே கேட்கும்போது அதுவும் அவரது ரசிகரான அதிகாரி மறுப்பாரா? இரண்டுக்கும் ஒப்புக் கொண்டார். வீடு ஏற்பாடு செய்து தருவதுடன் தனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் தேவகியை வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும் கூறினார்.
தேவகியைப் பார்த்து, ‘‘என்னம்மா? வீட்டு வேலை செய்ய உனக்கு சம்மதமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தேவகியும் சம்மதித்தார்.
பின்னர், அவரது பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் டீச்சரை அழைத்து, இரண்டு பிள்ளைகளும் படிப்பதற்கான செலவுகளை எம்.ஜி.ஆர். விசாரித்தார். தயாரிப்பாளர் கொட்டாரக்கராவிடம் தனியாகப் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கினார். அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அந்தத் தொகையை அப்படியே தேவகியிடம் எம்.ஜி.ஆர். கொடுத்தார்.
ஒருவாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அந்த வனத்துறை அதிகாரி வந்தார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் தேவகிக்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும் எனவும் கூறினார். இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சி
அடைந்தார். 1963-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது பெரிய தொகை.
இப்போதும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழுதார் தேவகி. இந்த முறை அவரது கண்களில் இருந்து வந்தது, நன்றிப் பெருக்கால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்...!
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம்
வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டார் நம் வள்ளல் பொன்மனச்செம்மல் ...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
orodizli
8th September 2020, 10:15 PM
*MGR பற்றி இதுவரை வெளியான நூல்கள் பற்றிய தொகுப்பு இங்கே...*
தமிழ் நூல்கள்:
****************
1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977)
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980)
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் புலவர். கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978)
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985)
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983)
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979)
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)
12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984)
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985)
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987)
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975)
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984)
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983)
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986)
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986)
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985)
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985)
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985)
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)
27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985)
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984)
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988)
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984)
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988)
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985)
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985)
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988)
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981)
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986)
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988)
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985)
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988)
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987)
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988)
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981)
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985)
51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985)
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987)
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988)
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985)
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985)
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987)
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987)
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984)
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961)
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987)
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989)
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985)
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978)
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987)
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985)
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985)
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991)
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982)
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986)
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988)
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993)
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993)
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991)
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991)
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993)
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992)
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978)
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985)
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991)
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986)
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982)
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010)
88.வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993)
89.தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
90.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967)
91.ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
92.இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967)
93.தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
94.எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
95.அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
96.அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
97.அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)
98.எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
99.எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
100.வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
101.வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
102.புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
103.யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
104.தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
105. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்
106.எம்.ஜி.ஆர். பதில்களின் தொகுப்பு-கண்ணதாசன் பதிப்பகம்
107.எம்.ஜி.ஆர். திரைப்படக்கருவூலம்-இதயக்கனி வெளியீடு
108.எம்.ஜிஆரின் வசன முத்துக்கள்-இதயக்கனி வெளியீடு
109.எம்.ஜி.ஆர்.ஒரு சகாப்தம்-தொகுப்பாசிரியர் ஆர்.பி.சங்கரன்
110.கோட்டையும் கோடம்பாக்கமும்-ஆரூர் தாஸ்
111.எம்.ஜி.ஆர். 100-சபீதா ஜோசப்
112.வாத்யார்-ஆர்.முத்துக்குமார்
113.எம்.ஜி.ஆர்-நடிகர் முதல்வரானது எப்படி--அருணன்
114.நான் ஆணையிட்டால்--எஸ்.கிருபாகரன்.
115.இருவரின் கதை-எஸ்.திருநாவுக்கரசு
116.இதய ஒலி-பழனி ஜி.பெரியசாமி
117.எம்.ஜி.ஆர் 100-காலத்தை வென்ற தலைவர்-இந்து வெளியீடு
118.விழாநாயகன் எம்.ஜி.ஆர். -கே.ரவீந்தர்
119.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
120.அதிர்ந்தது பூமி -எம்.பி.உதயசூரியன்
121.என் நினைவுத்திரையில்-பி.நாகிரெட்டி
122.வள்ளல் எம்ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு-எம்.ஜி.ஆர்.முத்து
123.எல்லாம் அறிந்த எம்.ஜி.ர்.-எஸ.விஜயன்
124.மறக்க முடியாத மக்கள் திலகம்--என்.சங்கர்.
125.மக்கள் திலகமும் மனித நேயமும்-எம்.ஜி.ஆர்.முத்து
126.மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்-ரங்க வாசன்
127.எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்-மணவை பொன்.மாணிக்கம்
128.மறக்க முடியாத மாமனிதர்-மணவை பொன்.மாணிக்கம்
129..சுட்டாச்சு சுட்டாச்சு-சுதாங்கன்
130.எம்.ஜி.ஆர். பேட்டிகள்--எஸ்.கிருபாகரன்
131.மனிதப் புனிதர்-எம்.ஜி.ஆர்-கே.பி.ராமகிருஷ்ணன்
132.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
133.சொக்கத்தங்கம் எம்.ஜி.ஆர்--பா.அங்கமுத்து
134.தரணி கண்ட தனிப்பிறவி எ.
135..மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்-இயக்குநர் மகேந்திரன்
136.எனக்குள் எம்.ஜி.ஆர். -கவிஞர் வாலி
ஆங்கில நூல்கள் (English Books)
***********************************
1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984)
2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984)
3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984)
4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990)
5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978)
6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992)
7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (
8.Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
9.C.M. Speech's
*வாழ்க புரட்சி தலைவர்*.........
orodizli
8th September 2020, 10:21 PM
அன்பு தோழர்களுக்கு இனிய வணக்கம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு செய்கிறேன்.காரணம்...வேலை பணிகள்.
அதுவும் பத்திரிக்கை செய்திகளை சேகரித்து அனுப்பி வருவதால் தளத்திற்கு வர முடிய வில்லை.
நிற்க...என்னுடைய ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட நமது இதய தெய்வத்தின்...புரட்சி தலைவரின் மாபெரும் வெற்றிகாவியமான காவல் காரன் திரைக்காவியம் நேற்று அதாவது 07.09.1967 அன்று வெளி வந்து தமிழக மெங்கும் திரை அரங்குகளை ஒரு கலக்கு கலக்கிய நாள்.
புரட்சி தலைவரின் சண்டைக்காட்சிகள் நா ன் கிலும் தனி.முத்திரை பதித்து இருப்பார்.பாடல் காட்சிகளில் அவரது வழக்கமான துள்ளல்..துடிப்பு...இளமை அனைத்து வெளிப்பட்டு இருக்கும்.
6 திரை அரங்கில் 100 நாட்களை கடந்து அந்த ஆண்டின் அமோக வசூலை அள்ளி குவித்த காவியம் காவல் காரன்.படத்தின் முக்கிய அம்சம் அதன் விறு விறுப்பு.
சஸ்பென்ஸ்..... திரைக்கதை..மற்றும் தலைவரின் அற்புதமான சண்டை காட்சிகள்.
முதல் அறிமுக காட்சியிலேயே பாக்ஸிங் வீரராக வந்து திரை அரங்கில் கரவொலியை அதிர செய்து இருப்பார்.
அடுத்து உச்ச கட்ட காட்சியில் ஒரு இடத்தில் அசோகனிடம்........ரோஷமிருந்தால் நாக்கை பிடுங்கி கொண்டு ........போயேன்.என்று மிக இயல்பாக அதே நேரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்று பேசி நடித்து இருப்பார்.
அருமையான காட்சி அது....
நினைத்தேன் வந்தாய்...பாடலில் மாவீரன் அலெக்சாண்டரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.
குண்டடி பட்ட பின்பும் அதற்கு முந்தைய காட்சிகளில் அவரது ஆண்மை கலந்த குரலும் தெளிவாக வெளிப்படும்.
வாழ்க..புரட்சி தலைவர் புகழ். முகநூலில் A.Rajahவின் பதிவு............
orodizli
8th September 2020, 10:28 PM
#எம்ஜிஆர் #பதில்
கேள்வி - நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் நாடோடி மன்னன் சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?
எம்.ஜி.ஆர். பதில் – நான் விரும்புவதை என் தொழிலில் செய்து கட்டவேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் தவறாகவும் இருந்து விடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்ததில் படம் எடுக்க இதுதான் காரணம்.
கேள்வி - பழைய உங்களது படம் ஒன்றை பார்த்தேன். அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள். ஏதேனும் ஜெபம் செயது கொண்டிருந்தீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொணடிருந்தேன. இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம் அது ருத்ராடசை மாலை அல்ல. தாமரை மணி மாலை. திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.
கேள்வி – பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
……… குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர், அறியாத்தனத்தால் அல்ல, தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.
சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும் அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதானால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர் என்று நினைக்கிறேன்.
கேள்வி – நடிப்பு கருவூலம் ராஜ்கபூர் நடித்த சங்கம் படம் போல் சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் சிறந்த பாடல்கள் அமைந்த ஒரு படத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அளிப்பீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – அவருடைய பெயர் ராஜ்கபூர், என்னுடைய பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஒருவரைப் போல் இன்னொருவர் ஆக முடியாது. கூடாது. ஒவ்வொருக்கும தனக்கென்று ஒரு பாணி, தனக்கென்று ஒரு பாதை இருந்தே
கேள்வி – நீங்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – அது நான் விரும்பாத பதவி. நான் விரும்பி இருந்தால், அண்ணா காலத்திலேயே மந்திரி ஆகி இருப்பேன். மந்திரி பதவியை நான் ஏற்க மறுத்ததால்தான், மந்திரி பதவிக்குரிய அந்தஸ்து கொண்ட சிறுசேமிப்பு துணைத் தலைவர் பதவியை எனக்கு கொடுத்தார்.
கேள்வி – உங்களுக்கு சேரும் கூட்டமெல்லாம் நீங்கள் பிரபல சினிமா நடிகர் என்பதால் இருக்கலாம அல்லவா?
எம்.ஜி.ஆர். பதில் – நான் நடிகன், ஆனால் என்னைப்போல எத்தனையோ நடிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் என் போலவே இயக்கம் ஆரம்பித்தால் ஒவ்வொருவருக்கும் இப்படிக் கூட்டம் சேரும் என்று சொல்ல முடியுமா?
கேள்வி – 12.1.1973 அன்று வேலுரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சிவாஜி கணேசன், அண்ணா தி.மு.க.வைச் சாக்கடை என்று ஏளனமாகப் பேசினார். அவருக்கு தாங்கள் கூறும் பதில் என்ன?
எம்.ஜி.ஆர். பதில் – நான் படித்த ஏடுகளில் அப்படிப் பேசியதாக எந்தச் செய்தியும் தெரியவில்லை.
கேள்வி – பிலிமாலயா பத்திரிகையில் சந்திரபாபு எழுதும் கதைக்குத் நீங்கள் ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை?
எம்.ஜி.ஆர். பதில் – கதைக்குப் போய் யாராவது மறுப்பு தெரிவிப்பார்களா.
கேள்வி – தங்களுக்கு அரசியல் தெரியாது என்று தமிழ்வாணனும் சிவாஜி கணேசனும் சொல்லி இருக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
எம்.ஜி.ஆர். பதில் – கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்னைப் பொறுத்தவரையில் இது பொருந்தும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கேள்வி – உங்களது கட்சி நாளிதழில் சிவாஜி கணேசனைப் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றனவே?
எம்.ஜி.ஆர் பதில் – சிவாஜி கணேசன் எதிர்கட்சியிலிருந்து கொண்டு அண்ணாவின் தி.மு.கழகத்தை எதிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அமரர் அண்ணா அவர்கள் ஒரு நாள் சிவாஜி கணேசன் அவர்களின் நாடகத்திற்கு தலைமை தாங்கிப் பாராட்டியதை மறந்துவிட்டீர்களா?
எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா வாழ்த்தவில்லையா? அவருடைய தம்பிகளான நாங்கள் அவரைப் பின்பற்றி நமது கடமையை நாம் செய்வோம். (அண்ணா நாளிதழ் 10.11.1976)
கேள்வி – புரட்சித் தலைவர் அவர்களே 1976-க்கு பிறகு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடுவீர்களா? அல்லது கலைத்துறையில் இருந்து பணியாற்றுவீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – உங்கள் தீர்ப்பும் சட்டத்தின் தீர்ப்பும் என்ன கட்டளை இடுகிறதோ அப்படி நடப்பேன். .........
orodizli
9th September 2020, 08:50 AM
நெல்லையில் மக்கள் திலகத்தின் தொடர் வண்ணக்காவியங்கள் படைத்த எழில்மிகு சாதனைகள் சில.
1972 இதயவீணை 62 நாட்கள்
1973 உ. சு. வாலிபன் 119 நாட்கள்*
1973 ப.பொன்னையா 62 நாட்கள்.
1974 நேற்று இன்று நாளை 119
1974 உரிமைக்குரல் 180 நாட்கள் 1974 சி.வா.வேண்டும் 62 நாட்கள்
1975 நி. முடிப்பவன் 77 நாட்கள்*
1975 நாளை நமதே 62 நாட்கள்*
1975 இதயக்கனி 100 நாட்கள்*
1975 ப . வாழ்க 100 நாட்கள்*
1976 நீ.த.வணங்கு 79 நாட்கள்*
1976 உ.கரங்கள் 62 நாட்கள்*
1976 ஊ. உழைப்பவன் 50 நாட்கள்.
1977 நவரத்தினம் 38 நாட்கள்*
1977 இ.போ.எ.வாழ்க 77 நாட்கள் 1977 மீனவநண்பன் 77 நாட்கள்
1978 மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் 62 நாட்கள்*
இப்படி தொடர்ந்து வெளியான காவியங்களில் நவரத்தினம் திரைப்படத்தை தவிர்த்து அனைத்து திரைப்படங்களும்*
50, 75, 100, 175 நாட்களை கடந்து அசுர சாதனையை படைத்த ஒரே திரையுலக சக்கரவர்த்தி*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டுமே.
இப்படி எந்த நடிகரும் நெல்லை மாநகரில் இதுவரை தொடர் காவியங்கள் மூலம் சாதனைகள் படைத்ததில்லை............
orodizli
9th September 2020, 08:51 AM
மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சாதனைகள்......*
1968 முதல் 1977 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களின் வரலாறு....
1968 ...*
ஒளிவிளக்கு 147 நாட்கள் குடியிருந்த கோயில் 133 நாட்கள் ரகசியபோலிஸ்115... 92 நாட்கள்*
1969.....*
மாபெரும் சாதனை படைத்த அடிமைப்பெண் 176 நாட்கள் நம்நாடு 133 நாட்கள்.
1970......*
மாபெரும் சரித்திரம் படைத்த மாட்டுக்கார வேலன் 177 நாட்கள் என் அண்ணன் 105 நாட்கள்*
எங்கள் தங்கம் 109 நாட்கள்.
தேடி வந்த மாப்பிள்ளை 70 நாள்.
1971......*
மாபெரும் சரித்திரத்தை ஏற்படுத்தி வசூலில் புரட்சி கண்ட ரிக்க்ஷாக்காரன் 161 நாட்கள் குமரிக்கோட்டம் 105 நாட்கள்*
நீரும் நெருப்பும் 84 நாட்கள்.
1972......*
மாபெரும் வெற்றியில்...*
இரண்டு அரங்கில் வெளியீட்டு ஒன்றில் ......*
நல்லநேரம் 112 நாட்கள் இதயவீணை 110 நாட்கள்*
நான் ஏன் பிறந்தேன் 70 நாட்கள் ராமன் தேடிய சீதை 84 நாட்கள் சங்கே முழங்கு 70 நாட்கள்.
1973 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சரித்திரத்தையும் வசூலையும் ஏற்படுத்திக் கொடுத்த உலகம் சுற்றும் வாலிபன்*
217 நாட்கள் ஓடி வெற்றியைப் படைத்தது.
பட்டிக்காட்டுப் பொன்னையா பதினோரு வாரங்கள் ஓடியது..........
orodizli
9th September 2020, 08:52 AM
நாஞ்சில் மாநகரமான நாகர்கோயில் நகரில்*
இதயவீணை முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை தொடர்ந்து வெளியான வண்ணக் காவியங்கள் படைத்த வெற்றி சாதனைகள் சில.
இதயவீணை 55 நாட்களும்*
1973 உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 112 நாட்களும், பட்டிக்காட்டு பொன்னையா*
50 நாட்களும் ஒடியது.
1974 நேற்று இன்று நாளை*
77 நாட்களும்,**
உரிமைக்குரல் 83 நாட்களும்,*
சிரித்து வாழவேண்டும்*
50 நாட்களும் ஓடியது.
1975 நினைத்ததை முடிப்பவன்*
70நாட்களும், இதயக்கனி*
61 நாட்களும், பல்லாண்டு வாழ்க*
70 நாட்களும், நாளை நமதே*
40 நாட்களும் ஓடியது.
1976 நீதிக்கு தலைவணங்கு*
62 நாட்களும்,*
உழைக்கும் கரங்கள் 61 நாட்களும், ஊருக்கு உழைப்பவன்*
38 நாட்களும் ஒடியது.*
1977 நவரத்தினம் 35 நாட்களும், இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 60 நாட்களும்,*
மீனவ நண்பன் திரைப்படம்*
60 நாட்களை கடந்தும் ஒடியது.
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 62 நாட்களும்*
ஒடி சரித்திரம் படைத்தது.
நாகர்கோவில் மாநகரில் தொடர்ந்து இப்படி 50 நாட்களையும் 75 நாட்கள் , 100 நாட்களையும்* கடந்து அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களாக தொடர்ந்து சாதனை படைத்துள்ளது............
orodizli
9th September 2020, 01:09 PM
"கப்பலோட்டிய தமிழன்" "பலே பாண்டியா" "கர்ணன்" "முரடன் முத்து" போன்ற தொடர் தோல்விகளால் துவண்டு போன பந்துலு "ஆயிரத்தில் ஒருவன்" மூலம் மீண்டு கொண்டிருந்த கால கட்டத்தில் முழுமையாக மீள வேண்டி குறைந்த
செலவில் ஒரு படம் தயாரித்து அதன்மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள விரும்பினார்.
ஏனென்றால் அவர் மிகுந்த செலவில் தயாரித்த "கப்பலோட்டிய தமிழன்" "கர்ணன்" முதலான படங்களை செலவே இல்லாமல் தயாரித்த "தாய் சொல்லை தட்டாதே" "வேட்டைக்காரன்" போன்ற படங்களின் மூலம் நிர்மூலம் ஆக்கிய "ஆயிரத்தில் ஒருவன்" அருகிலேயே இருந்து கொண்டு அதைப் போலவே செலவே செய்யாமல் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க விரும்பி பந்துலு தயாரித்த படம்தான் "நாடோடி".
படத்தில் எந்த விதமான ஆடம்பர காட்சிகளோ பெரிய செட்டிங்ஸ் போட வேண்டிய அவசியமோ இல்லாமல் எம்ஜிஆர் என்ற தனி முத்திரையை மட்டும் பயன்படுத்தி தான் எதன் மூலம் பணத்தை இழந்தோமோ அதன்மூலமே தன்னை மீட்க வேண்டி "நாடோடி" படத்தை தயாரித்து நினைத்தை முடித்தவர்தான் பந்துலு.
1966 ல் வெளியான படங்கள் மொத்தம் 9..எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையில் அதிக பட்சம் வெளியான படங்கள் வெளியான ஆண்டுகள் 1963 ம் 1966 ம். இரண்டு ஆண்டுகளிலும் தலா 9 படங்கள் வெளியானது. அதில் 1966 ம் ஆண்டு ஏப் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான வெற்றிப் படம்தான் "நாடோடி". ஜன 14 பொங்கலன்று வெளியான "அன்பேவா" இன்னும் ஓடிக் கொண்டிருக்க அடுத்தடுத்து வெளியான 4 வது படம்தான் "நாடோடி".
இன்றும் நிலை பெற்றுக் கொண்டிருக்கும் அருமையான பாடல்கள் ஒன்றே போதும் வெற்றிக்கு என்று நினைத்து எடுத்த படம். காலத்தை வென்ற பாடல்கள் மூலம் காலத்தை வென்றவனின் துணை கொண்டு குபேரனின் பொக்கிஷத்தை கவர்ந்து தான் இழந்ததை மீட்ட படம்தான் "நாடோடி". "நாடோடி"யின் மூலம் பந்துலுவின் இந்த முயற்சி அவரை ''பலே பந்துலு'' என்று சொல்ல வைத்தது.
ஒரு தயாரிப்பாளர் தன்னிறைவு அடைய வேண்டும் என்றால் அவர் தயாரித்த படத்தை அவரே தியேட்டர் வாடகை கட்டி ஓட்டுவதை விட நான்கு வாரங்கள் கூட்டத்தோடு ஓடினால் போதுமானது என்பதை உணர்ந்து தயாரித்த
படமே "நாடோடி". அவர் நினைத்தை விட மிகப்பெரிய வெற்றியை தலைவரின் முகத்தை காட்டி வென்றார் "நாடோடி"யின் மூலம்.
ஒவ்வொரு தயாரிப்பிலும் அவர் பட்ட
பாடுகளை நினைத்தால் கை சிவந்து கொடுத்த "கர்ணன்" கூட கலங்கி விடுவான் அடுத்து கொடுக்க பணமில்லாமல். படம் தீண்டாமையை ஒழித்து வள்ளல்தன்மையாலும் நல்ல மனதாலும் மக்கள் உள்ளங்களை வென்ற கதை.
தீண்டாமை நல்லவனை(நம்பியார்) கூட கெட்டவனாக்கி விடும் என்பதையும் 'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்பதை போல் நல்ல குணங்கள் தீண்டாமையை ஒழித்து கெட்டவரையும் நல்லவராக மாற்றும் என்பதையும் திரைக்கதை மூலம் எடுத்து சொன்ன விதம் அற்புதம். எம்ஜிஆர் இயல்புக்கு ஏற்ற அருமையான கதையம்சம் கொண்ட படம். நல்லவனை வில்லனாக காட்டியதால் அவர் செய்யும் வில்லத்தனம் எடுபடாமல் போனதில் ஆச்சரியமில்லை. படத்தின் வேகத்தை அது குறைப்பதோடு வில்லன் மீது பரிதாப உணர்வும் ஏற்பட செய்கிறது...
"ஆயிரத்தில் ஒருவனி"ல் ஆர்ப்பாட்டமான வசனத்தின் மூலம் புகழ் பெற்ற r.k.சண்முகம் நாடோடியில் ஆழமான வசனத்தின் மூலம் அதை தக்க வைத்துக் கொண்டார். திரையிட்ட இடங்களில் எல்லாம் முதல் 4 வாரங்கள் வெற்றி கொடி கட்டி பறந்தது.'உலகமெங்கும் ஒரே மொழி('ஒரே மனித ஜாதி) 'உள்ளம் பேசும் காதல் மொழி' என்று உடனே இரட்டுர மொழிதல் மூலம் தன்னுடைய கவித்துவத்தை பறை சாற்றும் விதம் கவிஞருக்கே உரிய தனித்துவம். எங்கு பார்த்தாலும் "நாடோடி"யின் பாடல்கள் காதுக்கு இனிமை சேர்த்ததோடு மக்களின் நாட்டுப் பற்றையும் வளர்த்தது.
'நாடு அதை நாடு' 'அன்றொரு நாள்' 'ரசிக்கத்தானே இந்த வயது" 'திரும்பி வா' போன்ற பாடல்கள் மக்களை தன் பக்கம் திரும்ப வைத்த படம்தான் "நாடோடி". முதல் பாடல் காட்சியை தவற விட்டவர்கள் மன்றலில் தென்றலை இழந்ததை போல உணர்வார்கள். அந்தப் பாடலுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பாடல் இனிமையிலும் இனிமை, அதனினும் இனிமை இசை, அதனினும் இனிமை எம்ஜிஆர் புதுமுகம் பாரதியின் இளமை தோற்றம். இப்படி. அடுக்கிக் கொண்டே போகலாம்.
"நாடோடி"யாய் மாறிய பந்துலுவை மீண்டும் நாடு போற்றும் செல்வந்தராக மாற்றிய படம்தான் "நாடோடி" என்று சொல்லலாம்.
சென்னை பிளாசா பிராட்வே உமாவில் 57 நாட்களை கடந்தது. தமிழகத்தில் மற்ற ஊர்களிலும் 50 நாட்களை எளிதில் கடந்து சாதனை செய்தது. . மதுரை திருச்சி கோவை சேலத்தில் 10 வாரங்கள் ஓடி வெற்றி கொடியை உயர்த்தி பிடித்தது.
'c' சென்ட்டரில் அடிக்கடி வெளியாகி வெற்றி பெற்ற உன்னதமான படம்தான் "நாடோடி"..........
orodizli
9th September 2020, 01:13 PM
#அதனால் #தான் #அவர் #கடவுள்
புரட்சித்தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது...
தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.
அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போதும் அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.
மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள்தருவார்.
"ஒருபுறம் பகுத்தறிவு பேசிக்கொண்டு, மறுபுறம் சமாதியில் பாலூற்றுபவர்களுக்குக்கூட ஆன்மசுகத்தை அருளுகிறார். அவர் எல்லாவற்றையும் கடந்தவர்... அதனால்தான் அவர் கடவுள்...".........
orodizli
9th September 2020, 01:15 PM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். செய்த சாதனைகள் எல்லாம் தெரியுமா?
எம்.ஜி.ஆர். என்றால் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அவர் காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா..?
1972– ம் ஆண்டு அக்டோபர் 8 – ம் தேதியன்று. பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;
”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றி கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. லஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.*
கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பபணியாய் இருக்கும்.*
இதையும் படிங்க
அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்றுஎம்.ஜி.ஆர். முழக்கமிட்டார். லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்றஎம்.ஜி.ஆரின் எண்ணம்தான் அதிமுகவாக உருவெடுத்தது.*
அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்திபுதுமை செய்தார்.தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனைகடைசிவரை காப்பாற்றவும் செய்தார்.**
1977 முதல் 1987 வரைஎம்.ஜி.ஆர். ஆட்சி – மூன்று முறை வெற்றி.* அறம் சார்ந்த அரசியல்அரங்கேறியது. குடும்ப அரசியல்கிடையாது
கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவிபறிக்கப்படலாம்,என்பதால் தவறு செய்யப் பயந்தனர்.
அதிகாரிகளுக்கு முழுஅதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – கார்டனுக்கு சொல்லிவிடுவோம்– என்றனர்.
ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறுசெய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார்.
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு.
மக்கள் நலன்
நாடோடி மன்னன்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய மக்களாட்சியை, தனது ஆட்சியில்கொடுத்தார். தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே,ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்பட்டது.
பசிப்பிணியைஉணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுசத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான் தமிழகத்தின் கல்வித்தகுதியைவானளவுக்கு உயர்த்தியுள்ளது.
சத்துணவுத்திட்டத்தில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயாக்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனால்ஆயிரக்கணக்கான குடும்பத்தில் வறுமை விலகியது.
- ரேஷன்கடைகளில் அரிசி விற்பனையை சீர்படுத்தினார். அரிசி விலையை 1.75 ரூபாய்க்குகட்டுப்படுத்தினார். ரேசன் கடையில் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்தஎம்.ஜி.ஆர். தமிழ்நாடெங்கும் 20 ஆயிரம் ரேஷன் கடைகளைத் திறந்து 20,000 பேருக்குவேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால்தான் என்றென்றும் ஏழைகள் இதயத்தில் எம்.ஜி.ஆர்.வாழ்ந்தார்.
ஒரு விளக்குத் திட்டம்எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டது. குடிசையில் வாழும் மக்களும் மின்சாரம் பெறவேண்டும்என்பதற்காக ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு இலவச மின்சார விளக்கு பொருத்துவதைலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இதுவே பின்னர் இருவிளக்கு திட்டமாக மாற்றம்அடைந்தது.
பள்ளிமாணவர்களுக்கு படிப்பில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர்.உறுதியாக இருந்தார். அதனால் இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், இலவச காலனி,இலவசபற்பொடி என்று ஏகப்பட்ட உதவிகள் செய்து படிக்கவைப்பதில் அக்கறை செலுத்தினார்.
முதியோர் மீதுஎம்.ஜி.ஆருக்கு உள்ள அக்கறை அளப்பரியது. அதனால் முதியோருக்கு நாள்தோறும் மதியஉணவு, ஆண்டுக்கு இரண்டு முறை இலவச உடை, மாத உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, ஒவ்வொருவீட்டுக்கும் தலைமகனாக எம்.ஜி.ஆர். விளங்கினார்.
விவசாயிகள்,நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்பு, விதை மானியம்போன்றவையும் புரட்சித்தலைவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
படித்து வேலையில்லாதஇளைஞருக்கு ஊக்கத்தொகை எம்.ஜி.ஆர். காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டுக்குஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை எம்.ஜி.ஆர். லட்சியமாகக்கொண்டிருந்தார். இதற்காகவே மாதம் 9,000 வருமானத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று சட்டம் போட்டார். ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புதோன்றவே, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து சட்டத்தை வாபஸ் பெற்றார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு31% என்ற அளவில் இருந்த இட ஒதுக்கீட்டை 50% என உயர்த்தியவர் புரட்சித்தலைவர். இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டும் என்று வரையறை செய்திருந்தபோதும், மக்கள் தொகைகணக்கிட்டு 50% பிற்படுத்தப்பட்டோர், 18% தாழ்த்தப்பட்டோர் என 68% இட ஒதுக்கீடுகொண்டுவர காரணமாக இருந்தார். இதனை பின்னர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம்இயற்றி சட்டபூர்வமாகக் கொண்டுவந்தார்.
மக்கள் மனம் அறிந்தவர்
எம்.ஜி.ஆர். காலத்தில்41 கிளாஸ் என்ற சந்தேக கேஸ் போடும் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதன்படி சைக்கிளில் டபுள்ஸ் செல்பவர்களை மடக்கி கை ரேகை பதிந்து, ரிமாண்ட் செய்துவந்தனர்.இதனால் கிராமத்து ஏழைகள்தான் பாதிக்கப்பட்டனர். கணவனுடன் மனைவி சைக்கிளில் செல்ல முடியவில்லை,அப்பாவுடன் மகன் சைக்கிளில் செல்ல முடியவில்லை. இந்த சட்டத்தை நீக்கினார்புரட்சித்தலைவர். இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்கவேமுடியாது.
* தமிழர்நலன் பாராட்டுவதில் எம்.ஜி.ஆரை எவரும் விஞ்சமுடியாது. ஈழத்தில் விடுதலைப்புலிகள்வலிமை பெறவும், வளர்ச்சி அடையவும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் ஏராளம். அதனால்தான்உலகமெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் வீட்டில் இன்றும் எம்.ஜி.ஆர். படம்தொங்குகிறது. பிரபாகரனுக்குக் கொடுக்கும் மரியாதையை எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தனர்.தமிழ் ஈழம் உருவாகவேண்டும் என்பதற்காக எதையும் செய்துகொடுக்கும் துணிச்சல்காரராகஎம்.ஜி.ஆர். இருந்தார்.
காரியம் சாதிப்பதில் வல்லவர்
பல அரசுகளால்பேசப்பட்டுவந்த கிருஷ்ணா நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கியவர் எம்.ஜி.ஆர்.சாதுர்யமாக என்.டி.ராமாராவுடன் பேசி ஒப்பந்தம் போட்டு காரியம் சாதித்தார்.
ரேஷன் அரிசி தருவதில்மத்திய அரசு சுணக்கம் காட்டுவது தெரிந்ததும் 1983-ம் ஆண்டு மெரினா பீச்சில்உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்தார்.
விமர்சனங்களை மதிப்பவர்
மதுவை தமிழகத்தில்இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கடுமையான சட்டங்களைக்கொண்டுவந்தார் முதல் முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை… இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, மூன்றாவது முறைபிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவசர சட்டம் கொண்டுவந்தார். ஆனால்மக்களும் எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் மதுவிலக்கைரத்து செய்தார்.
தனியார்களுக்கு கல்லூரிவழங்கியபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் எதிர்காலத்தில் தமிழர் நலனுக்கு இதுதான் சரியான திட்டம் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தீர்க்கதரிசனம் இன்றுஉண்மையாகிவிட்டது. உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் தமிழர்கள் சாதனை புரிந்துவெற்றிகரமாகத் திகழ்வதற்குக் காரணம் இந்த தனியார் பொறியியல் கல்லூரிகள்தான்.*.........
orodizli
9th September 2020, 01:16 PM
இலங்கை திருநாட்டில் மக்கள் திலகம் திரைப்படங்கள் படைத்த மகத்தான வெற்றிகளை பல விதமாக பிரிக்கலாம்.....* 1950 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களின் சாதனை ஒட்டம்....
இலங்கை நாட்டில் இரண்டு பிரிவுகளான கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட்டு 95 சதவீதமான வெற்றிகளை 1977 ஆம் ஆண்டு மீனவ நண்பன் திரைப்படம் வரை பெற்றுள்ளார்.
பழைய திரைப்படங்களில் பல திரைப்படங்கள் 50 நாள்* 5 வாரம்*
6 வாரம் கடந்தும் 100 நாட்களை வெற்றிகொண்டும்....உள்ளது.
பல ஏரியாக்களில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே அதிக அளவில் 100 நாட்கள் ஓடி இரண்டு திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்று சரித்திரம் படைத்துள்ளது.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மூன்று ஏரியாக்களில் வெவ்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. தலைநகர் கொழும்பில் உள்ள கேப்பிட்டல் உலகம் சுற்றும் வாலிபன் 203 நாட்களும், அதன் பின்பு விஜயா அரங்கில் 116 நாட்களும் ஒடியுள்ளது..
எந்த நடிகரின் நூறாவது திரைப்படமும் இங்கே 50 நாட்கள் கூட வெற்றி பெறவில்லை ஆனால் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு திரைப்படம் இலங்கை கொழும்பில் 162 நாட்களும், யாழ்ப்பாணம் ராஜாவில்* 161 நாட்கள் ஓடி சாதனை பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல நான்காவது வெளியீட்டில் 1979 ல் இக்காவியம் 100 நாளை கடந்தது சாதனையை பெற்றுள்ளது...........
orodizli
9th September 2020, 01:17 PM
இப்படி இலங்கை நாட்டில் பல விதமான வெற்றிகளை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பெற்றுள்ளதை அடுத்து வரும் பதிவுகளில் விபரமாக பதிவிடுவோம்.*
நாட்டில் 100 நாட்களை உண்மையாக* வெற்றி கண்ட திரைப்படங்கள் பற்றிய பட்டியல்...
மந்திரிகுமாரி ,மர்மயோகி*
100 நாளை கடந்தது.
என் தங்கை 100 நாளை கடந்து ஓடியது.*
மலைக்கள்ளன் 100 நாட்களை கடந்து ஓடியது*
அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்.
100 நாளை கடந்தது.
நாடோடி மன்னன்*
திரைப்படம் பல அரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு 5 திரையரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியதாக தகவல்கள். இந்த தகவல்கள் கிடைத்தவுடன் பதிவிடப்படும்.
1961 ல் திருடாதே**
தாய் சொல்லை தட்டாதே 100 நாள்*
1965-ல் எங்க வீட்டு பிள்ளை* ஆயிரத்தில் ஒருவன்... 100 நாள்**
1967- ல் காவல்காரன் திரைப்படம் இரண்டு திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை பெற்றது.
1968 ல் ஒளிவிளக்கு திரைப்படம் இரண்டு மிகப்பெரிய அரங்குகளில் 150 நாட்களை*
கடந்து சாதனை.*
1969 ல் அடிமைப்பெண், நம் நாடு* 1970 ல் மாட்டுக்கார வேலன்* இரண்டு திரையரங்குகளில்*
100 நாட்களை வெற்றி கொண்டது.
1972 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் மூன்று திரைப்படங்கள் 100 நாட்களை வெற்றி கொண்டு சாதனை படைத்துள்ளது*
நல்லநேரம் திரைப்படம்*
5 அரங்கில் 50 நாட்களை கடந்து 100 நாட்களை செல்லமகால் அரங்கில் ஓடி வெற்றி கொண்டது.*
அடுத்து ராமன் தேடிய சீதை திரைப்படம் கெப்பிட்டலில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது.*
இதயவீணை திரைப்படம் நவா திரையரங்கில் 100 நாள் ஓடியது..........
orodizli
9th September 2020, 01:19 PM
எம் ஜி ஆர் திமுக வில் இருந்து நீக்கப்படுகிறார். உலகம் சுற்றும் வாலிபன ரிலீசாக போகிறது. 1973ல் திமுக சார்பில் மதுரையில் மணிநகரம் பகுதியில் திமுக பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க இரும்பு மனிதர் என அழைக்கப்படும் மதுரை முத்து அவர்களும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கமும், எஸ்எஸ்ஆரும்...ஆற்றிய உரை...
மதுரை முத்து: "அடேய் ராமச்சந்திரா... நீ சினிமாவுல தான் சண்ட போடுவ... ஆனா நா நிஜத்துல சண்டியர்... கலைஞரையா கணக்கு கேக்குற... உன்னை வாழவே விடமாட்டேன். உன் படம் ரிலீஸ் ஆனா நா சேலைய கட்டிக்குறேன்".
டேய் ரசிக குஞ்சுகளா. உங்காளு கையில வச்சு சண்ட போடுறது ஒரிஜினல் கத்தி இல்லடா. வெறும் அட்டக்கத்தி. இனியாவது திருந்துங்கடா.. "(எம் ஜி ஆர் கட்சியை விட்டு விலகும்போது திணமணி கார்ட்டூன்... எம் ஜி ஆர் அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு இனி இதற்கு இங்கு வேவையில்லை என்கிறார். கருணாநிதி பக்கத்தில் இருந்த மதுரை முத்துவை காட்டி"இந்த அண்ணா என்னை காப்பார் "என்பது போல இருந்தது. மதுரை முத்து அந்த அளவு செல்வாக்கானவர்)
எஸ்எஸ்ஆர்: "அன்றைய தினம் ராஜாதேசிங்கு படத்தில் பத்மினியுடன் நான் நெருங்கி நடிக்க கூடாது என எம்ஜிஆர் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா? "
(மறுநாள் #சோ தன் 'துக்ளக்' புத்தகத்தில் "எஸ்எஸ்ஆர் சார். நீங்களும் பத்மினியும் நெருங்கி நடிப்பதை எம்ஜிஆர் தடுத்தாரா? எப்பேர்ப்பட்ட துரோகம் இது. இதனால் இந்த நாட்டுக்கே பேராபத்து வந்துவிடுமே!! இதை இந்த நாடு மறந்தால் இந்த நாட்டுக்கு விமோச்சனம் ஏது?" என கிண்டலடித்தார்)
திண்டுக்கல் எம். பி. ராஜாங்கம் :" "எனதருமை நண்பர் எஸ்எஸ்ஆரை சினிமாவில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜிஆர் தான். எங்களை பகைத்துக் கொண்டதால் இனி எம்ஜிஆர் அரசியலில் மட்டும் அல்ல. சினிமாவிலும் வாழ முடியாது"...
இதே ராஜாங்கம் அந்த கூட்டத்தை முடித்து திண்டுக்கல் திரும்பிப் செல்லும்போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிறது. அதிமுக மாயத்தேவரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்று திமுக வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை (வேட்பாளர் தேர்ந்தெடுத்தது மதுரை முத்து) டெபாசிட் இழக்க செய்தது. எந்த ராஜாங்கம் எதிர்த்தாரோ அவரே எம்ஜிஆரின் முதல் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்.
கருணாநிதி எம் ஜி ஆர் செல்வாக்கு காரணமாக அதிமுக வென்றது என்பதை மறைக்க "மதுரை மாவட்ட தலைமை வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது". என மேயர் முத்து மீது பழிபோடுகிறார். முத்துவுக்கு கோபம் வருகிறது. "தேர்ந்தெடுத்த போது மறுப்பு சொல்லாமல் தோற்றவுடன் என் மீது பழி போட்டால் என்ன நியாயம் என பகிரங்கமாக கேட்டார். உடனே கருணாநிதி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் சொல்வதை கேட்க வேண்டாம் என செக் வைக்க நொந்து போன மேயர் முத்து எம் ஜி ஆரிடமே சரணடைகிறார். தலைவரும் முத்துவை கட்டித் தழுவி வரவேற்கிறார். அதிமுகவிலும் மதுரை முத்துவே மேயரானார். எஸ்எஸ்ஆரும் தன் மனைவி விஷயத்தில் கருணா நடந்து கொண்டதை பார்த்து மனம் நொந்து எம் ஜி ஆர் இடம் சரணடைகிறார். 1977 கழகம் வெற்றி பெற அதே மதுரைமணிநகரத்தில் மேயர் முத்து தலைமையில் கூட்டம். மேயர் முத்துவே இந்த தகவல்களை எல்லாம் கூறி "சென்ற கூட்டத்தில் இதே இடத்தில் நாங்கள் மூவருமே(ராஜாங்கம்,முத்து,எஸ்எஸ்ஆர்) எம்ஜிஆரை வாழ விட மாட்டோம் என முழங்கினோம். காலத்தின் கட்டளை படி நாங்க மூணுபேருமே எம்ஜிஆரிடம் சரணடைந்தோம்"
தர்மம் தலைகாக்கும் படத்தில் "நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்"என்ற எம்ஜிஆர் வார்த்தை இப்படி பலித்தது.
படித்தேன். பகிர்ந்தேன்...........
orodizli
9th September 2020, 01:23 PM
#காட்டாற்று #வெள்ளத்திற்கு #மணலால் #அணைகட்டமுடியுமா???
ஒரு மனிதரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டுமென்றால் ஏதோ அவரின் ஒரு குணத்தையோ, கண்டுபிடிப்பையோ, தேசப்பற்றையோ, கொடைத்தன்மையையோ, வீரத்தையோ, அரசியலையோ, கவித்தன்மையையோ, நடிப்புத்திறனையோ... Etc... இப்படி ஏதேனும் ஒரிரு குணங்களைப் பற்றித்தான் எழுதமுடியும்...
ஆனால் மேற்கூறிய அனைத்து நற்குணங்களைப் பற்றி தனித்தனியாக நூல்கள் எழுத இயலுமென்றால் அதை, உலகிலுள்ள ஒட்டுமொத்த நற்குணங்களின் பிறப்பிடமாகத் திகழ்ந்த நம்ம வாத்தியாரைப் பற்றி மட்டும் தான் எழுதமுடியும்...
வாத்தியாரைப் பற்றி 1000 புத்தகங்களோ, அல்லது அதற்கு மேற்பட்ட புத்தகங்களோ எழுதலாம் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும்.
பொன்மனச்செம்மலைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்!
‘#புரட்சித்தலைவர், #பொன்மனச்செம்மல், #மக்கள்திலகம்’, #வாத்தியார்'! என்ற இவருக்குரிய முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!
பாலசுப்பிரமணியன்,
சென்னை!............
fidowag
9th September 2020, 07:20 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/08/20அன்று சொன்ன*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------
பழம்பெரும் நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றவர்கள் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தாலும் கூட , தங்களுக்கான மக்களின் ஆதரவை திரட்டிக் கொண்டோ, அந்த ஆதரவை தக்க வைத்து கொள்வதற்காக பலவித மான வியூகங்கள் எதுவும் வகுக்கவில்லை . அவர்களெல்லாம் நடிகர்கள் என்ற நிலையில் மட்டுமே* இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் ,நடிப்பு என்பது ஒரு தொழில், அந்த தொழில் மூலம் பலரோடு அறியப்பட வேண்டும்* . பலபேர் நம்மை அறிந்து கொள்வதால் நம்மீது பாசம் கொள்கிறார்கள் . அந்த பாசத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் சம்பாதிக்க வேண்டும் .அந்த சம்பாதித்ததை யெல்லாம் பலருக்கு தானங்கள், தருமங்கள் செய்ய வேண்டும் என்கிற வள்ளல் தன்மையை* கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம் தான் கற்று அறிந்ததாக பல மேடைகளில் பேசியுள்ளார் .*
எம்.ஜி.ஆர். அவர்கள்* ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நன்கு அறிமுகம் ஆகி இருக்கும்போது வெளியூருக்கு ரயிலில் 3 வது வகுப்பில் பயணம் செய்யும் போது*தனது அடர்த்தியான பாகவதர் கிராப் வைத்த தலைமுடி மூலம் தன்னை யாரும் அறிந்து கொள்ளாத வகையில் தலையையும், முகத்தையும் மறைத்தவாறு துணியால் மூடிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார் .செம்பை பாகவதர் அவர்கள் ஏன் ஒரு கலைஞன் தன் முகத்தை மூடி மறைத்து ஓடி ஒளிந்து* பயணிக்க வேண்டும் கலைஞன் என்பவன் மக்களுக்கான சொத்து .மக்களோடு பழகினால்தான அவர்களுடைய ரசனை தெரியும் மக்களுடைய ஆதரவை பெற முடியும் நீங்கள் இப்படி ஓடி ஒளிந்து கொள்ள கூடாது .முகத்தை மறைத்துள்ள* துண்டை எடுங்கள் . நன்றாக உட்காருங்கள்*,மக்களிடம் நன்றாக பேசுங்கள் .இங்குள்ளவர்களை நன்றாக பாருங்கள். நீங்கள் பார்ப்பதால் அவர்கள் உங்களை பார்ப்பார்கள், பேசுவார்கள் .அதனால் ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே ,அந்த சந்தோசம் மக்களுக்கு தருபவராக நீங்கள் இருப்பீர்கள் என்று கூறி மக்களுடன் சகஜமாக பழகுங்கள்*என்று அந்த தயக்கத்தில் இருந்து விலகி, வெளியே வருமாறு செய்தவர் செம்பை பாகவதர் .
பொதுவாக ஒரு படத்திற்கு பெயர், தலைப்பு வைப்பது, நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுப்பது, வசன ஆசிரியர், ஒளிப்பதிவாளர் , எடிட்டர் ,கவிஞர்கள், இசை அமைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும் எம்.ஜி.ஆர். தலையிடுவதாக குற்றச்சாட்டு இருந்தது என்று சொல்வார்கள். எம்.ஜி.ஆர். தலையிட்டார் .காரணம் .இவ்வளவு பெரும் பொருட்செலவில் நாம் தயாரிக்கும் படம் மக்களுக்கு சென்றடையும் போது ,ஏதாவது ஒரு வகையில்*அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தரக்கூடிய**நல்ல கருத்துக்கள், நல்ல பாடல்கள் ,, படிப்பினைகள்,*.செய்திகள் இடம் பெற்றிருக்க வேண்டும் . வெறும் பொழுது போக்கு அம்சங்கள் மட்டும் இருந்தால் போதாது என்பதில் தீர்மானமாக இருந்தார் .* அதனால்தான் அவரது ஒவ்வொரு படமும் ஒரு பாட புத்தகமாக திகழ்கிறது .ஒரு நோயாளி படுக்கையில் இருந்தால் கூட அவரது படத்தை பார்த்ததும் எழுந்து உற்சாகமாக நடமாட முடிகிறது .
முன்பெல்லாம் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் துவங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைத்தட்டில் இருந்து ஒலிக்கும் . ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர்* பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ செல்லும்போது இசைத்தட்டை போட வேண்டாம் . இங்குள்ள மாணவ மாணவியரை சொந்த குரலில் பாட சொல்லுங்கள் என்று கூறி* ரசிப்பார் .* அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து பொறுத்தவரையில் மாணவ பருவத்தில் அவர்கள் சொந்த குரலில் பாடும்போது அந்த வாழ்த்து செய்தி அவர்களின் மனதில் நன்றாக பதியும், என்று அந்த வாழ்த்து செய்திக்கு*மதிப்பு அளித்தவர் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் மலையாளி என்று பேசப்பட்டது .அவர் தமிழ் நாட்டை* ஆள விடக்கூடாது .நாட்டை விட்டு விரட்ட வேண்டும்*என்று எதிர்க்கட்சியினர் பேசினர்* அந்த நேரத்தில்*பத்திரிகை நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பேட்டியில் என்னை மலையாளி என்று சொல்கிறார்கள் .இதை கேட்ட எனக்கு சிரிப்புத்தான் வருகிறது .* பஞ்சாபில் வாங்கிய மாடு ஒன்று, இங்குள்ள தமிழர்கள் வீட்டில் வளரும்போது இங்குள்ள புல்லை தின்று வாழ்கிறது .பால் தருகிறது .அந்த பசு மாடு பஞ்சாபில் சென்றா பால் கறக்கிறது*அதுபோல தான் இந்த ராமச்சந்திரன் .தமிழர்களூக்கான பசும்பால் தருவதுபோல்*இங்கு வாழ்கிறேன் .* அப்படி தமிழர்களுக்கு பயன்படும் ஒரு கருவியாக* உதித்தவர் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கும் முன்பு* அவருக்கு கொள்கை இல்லை.கோட்பாடு இல்லை .கட்சி நடத்தும் நிர்வாக திறமை இல்லை .அதனால்தான் கட்சி தொடங்க தயக்கம் காட்டுகிறார் என்று புகார்கள் எழுந்தன .* கட்சி ஆரம்பித்த பின்னர் வெளியான நேற்று இன்று நாளை படத்தில் ஆளும் கட்சியை சாடியவாறு கடுமையான வசனங்கள், பாடல்கள் இருந்தன . நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து என்ற பாடலில் ,ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட்ட பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே .மக்கள்* நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்* தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்*ஊருக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் .தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார் இந்த படத்தின் வசனங்கள், பாடல்கள் , தி.மு,க. கட்சியை பாதிக்கும் என்பதால் அப்போதைய முதல்வர் கருணாநிதி படத்திற்கு பலவிதமான இடையூறுகள் ஏற்படுத்தினார் . சயானி அரங்கில் வெள்ளித்திரை கிழிக்கப்பட்டது அரங்குகளில்* *டிக்கட் வாங்க நிற்பவர்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது .சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன .அரங்குகளை மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது .ஜெனெரேட்டர் மூலம் படங்கள் ஓடின . இந்த படத்தை குறிப்பாக பொதுமக்கள் பார்க்க கூடாது என்பதில் அரசு இயந்திரம் பல வழிகளில் முடுக்கி விடப்பட்டது .அனைத்தையும் மீறி அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்குகளில் முதல் இரண்டு நாட்களில் இரண்டு வாரங்களுக்கான டிக்கட்டுகள் விற்று தீர்ந்தன . சென்னை பிளாசா, மகாராணி அரங்குகளில் 105 நாட்களும், மதுரை சிந்தாமணி , நெல்லை பார்வதி அரங்குகளில் 119 நாட்களும் ஓடின . சுமார் 35 அரங்குகளில் 50 நாட்களும், 10க்கு மேற்பட்ட அரங்குகளில் 75 நாட்களுக்கு மேலும் ஓடி வசூல் சாதனை படைத்தது .இந்த விஷயத்தில் ஆளும் தி.மு.க.விற்கு முற்றிலும் தோல்வி ஏற்பட்டதோடு, இந்த படத்தின் வசனங்கள் பாடல்களால் ஆளும் கட்சிக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது .
நேற்று இன்று நாளை படத்திற்கு தி.மு.க.கட்சியும், மாநில அரசும் ஏற்படுத்திய இடையூறுகள், பொதுமக்கள், ரசிகர்களை தாக்கியது,காயப்படுத்தியது குறித்து எம்.ஜி.ஆர். மிகவும் வருந்தினார் .* ஆனாலும் மனம் தளராமல் ஆளும் கட்சிக்கு எதிராக தன் கட்சி தொண்டர்களுக்கு விரைவில் நல்ல ஒரு விடிவுகாலம் அமையும் .ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று* *பொது கூட்டங்களில் எம்.ஜி.ஆர். முழங்கினார் .அதற்கு பொதுமக்கள் கூடிய திரளான கூட்டமே சாட்சி .எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபிறகு பல கூட்டங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை .தொண்டர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டனர் .சிலர் கொல்லப்பட்டனர் . இந்த தியாகிகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் .என்னையே* நம்பி கட்சியில் ஈடுபட்டுள்ள இந்த மாதிரி தொண்டர்களின் நலத்திற்காகவும், ஊழலை ஒழிக்கவும், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி வெகுவிரைவில் அமையும் என்று சூளுரைத்தார் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் தொடரும்*
---------------------------------------------------------------------------------------
1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*
2.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*
3.முகத்தை காட்டி காட்டி மூடி கொண்டது நியாயமா - முகராசி*
4.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*
5.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*
6.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற -- இதயக்கனி*
7.தாய் மேல் ஆணை , தமிழ் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
8.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்* *- ரிக்ஷாக்காரன்*
9.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க .
orodizli
10th September 2020, 07:57 AM
மக்கள் திலகம் !
புரட்சித் தலைவர் !!
மக்கள் முதல்வர் !!!
MGR சிலை திறப்பு ...
புரட்சித்தலைவி அம்மா
தலைமையில் ,
கம்யூட்டர் நாயகன் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை திறந்தார் ...
அன்று பத்திரிகையில் ஒரு செய்தி ,
சிலை திறப்பு விழாவில் மக்கள் கடல் ,
75 வயது பெரியவர் மக்கள் கூட்டத்தை பார்த்து பேட்டி கொடுக்கின்றார் !
Had seen nothing like it ,
My Fifty Five years Long Political Innings ,
என்னுடைய 55 ஆண்டு கால அரசியல் வரலாற்றில்
இப்படிபட்ட மக்கள் கூட்டத்தை நான் என் வாழ்நாளில் பார்க்கவில்லை !
அப்பொழுது சிறியவனாக மக்கள் கூட்டத்தோடு நானும் வருகின்றேன் ,
நடந்து வருகின்றோம் மறைமலை அடிகளார் பாலம் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது ,
சிலை திறப்பு இடம் ,
ஸ்பென்சர் கார்னர் பக்கம் வருவதற்கு எவ்வளவு நேரம் கடந்து இருக்கும் ,
அந்த கூட்டத்தில் நான் (24-11-1990 ) பார்த்த காட்சி ,
தலைவரிடம் பேசுகிறேன் !
மன்னாதி மன்னனே !
மவுண்ட் ரோடா அது
இல்லை ! மக்கள் கடல் !
மன்னாதி மன்னனே !
உன் திருவருவ சிலை திறப்பு விழாவின் போது ,
மவுண்ட் ரோடா அது ,
இல்லை மக்கள் கடலா !
என்று வியக்கும் அளவில் இருந்தது ,
நீ என்ன அதிசய தலைவனோ !
எங்கள் தலைவியை இயக்குகின்ற இந்திர தலைவனோ !!
வாழையடி வாழையாய்
புகழினை பெற்றவரே !
நீ தானே அண்ணாவுக்கு உண்மையான உலகறிந்த பாரத் ரத்னா தம்பி !
கழகத்தை ஒப்படைத்து விட்டார்கள் உன் இதயக்கனி " யை நம்பி !!
அதனால் வாழ்கின்றனர் தமிழ் நாட்டில் சிலர் மனம் வெம்பி !!!
அவர் பெற்ற வெற்றி மக்கள் பெற்றது அன்றோ !
கொதிக்கின்றது கொடியவர்கள் நெஞ்சம் !
ஏற்றுகின்றார்கள் மனதிலே வஞ்சம் !
அதற்கா எங்கள் தலைவி மனம் அஞ்சும் !!
படைக்கின்ற , இனிமேல் படைக்க போகின்ற வெற்றிகள் தானே மிஞ்சும் !
புரட்சிதலைவா உங்கள் புகழ் இருக்கிற வரையில் , இனிமேலும் வெற்றிக்கு ஏது பஞ்சம் !!
என்று கூறி எங்கள் கண்களில் உதிர்ந்த நீரால் வங்க கடல் தாலாட்ட தூங்குவாய் பல்லாண்டு !
உங்கள் இதயக்கனி யின் கீழ் உங்கள் புகழ்பாடுவதே எங்கள் எஞ்சிய ஆண்டு !!
உறங்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்,
எங்கள் தலைவியை ஆசிர்வதியுங்கள் ,
அன்று எழுதிய
11 கட்டுரை தொடரும்,
மலரும் நினைவுகள்.........
orodizli
10th September 2020, 07:59 AM
எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின.
வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ, வாலியையோ உணர்வோம்.
எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.
தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக் ஷன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.
ரசிகர் மன்றம்
முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.
தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்
Courtesy
DINAMANI... Newspaper......
fidowag
10th September 2020, 02:37 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/08/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இதுவரை எட்டு* திக்கிலும் இருந்து பாராட்டுக்களை கொண்டுவந்து குவித்து கொண்டிருக்கிறது .ஒவ்வொரு நாளும் ரசிக பெருமக்கள் தொலைபேசி ,குறுஞ்செய்திகள் மூலமாகவும், இவ்வளவு காலத்திற்கு பின்னால் கடிதங்கள் மூலமாகவும் தங்களுக்கு தெரிந்த பல்வேறு* தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகிறார்கள் .*
ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது அவனுடைய மன்றங்கள் மூலம் எப்படி, எவ்வளவு பாராட்டுக்கள் கிடைக்கும் என்பது பெரியதல்ல .ஒரு மனிதன் மறைந்த பிறகு* என்னையே நான் எடுத்துக் கொள்கிறேன் , நான் மறைந்த பிறகு ,எத்தனை அமைப்புகள், மன்றங்கள்,பொதுமக்கள்* என்னை பற்றி நினைக்கின்றன ,நற்பணிகள் செய்து கொண்டிருக்கின்றன* என்பதை பொறுத்து* தான் நான் வாழ்ந்ததற்கு ஏதாவது நியாயமான காரணம் இருந்திருக்கிறது என்று நினைப்பதற்கு அது உதவியாக இருக்கும் . -தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பேசிய கருத்துக்கள் .
திருச்சி மிளகு பாறையில் உள்ள திரு.மஜீத் அவர்கள் அதாவது* மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். அரே மஜீத் சாய் லாவோ என்று கூறுகிறாரே அந்த பெயரை கொண்ட மஜீத் அவர்கள் சகாப்தம் நிகழ்ச்சியின் 100 வது தொடர் அன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவச்சிலைக்கு* மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார் .
கள்ளக்குறிச்சியில் இருந்து ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.சங்கரன் ,எம்.ஏ.,பி.இ டி ., மற்றொரு ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்* திரு.சேரன் , எம்.ஏ. பி.இ டி ,**திரு.டி.கோபால் ,எம்.ஏ. ,திரு.ராமலிங்கம் எம்.ஏ. பி.இ டி.திரு.கோ.விஸ்வநாதன் மற்றும் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,இந்த தபால் அட்டையை அனுப்பி உள்ளார்கள் .* நீண்ட காலத்திற்கு பிறகு இந்த தபால் அட்டையை காண்பது என்பது இந்த டிஜிட்டல் யுகத்தில் சந்தோசமான விஷயம் . அந்த அளவிற்கு எம்.ஜி ஆர் மீது அளவற்ற அன்பும், பாசமும், மதிப்பும், மரியாதையும் அவர்கள் வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது .* *எம்.ஜி.ஆர். பாமரர்களின் கடவுள் என்றெல்லாம் பல வகைகளில்* விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .. இவர்களெல்லாம் சாதாரண மக்கள் அல்ல. ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் .* இவர்கள் எத்தனை மாணவர்களை உருவாக்கி இருப்பார்கள் .அதில் எத்தனை மாணவர்கள் இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதற்கு இந்த கள்ளக்குறிச்சியில் உள்ள ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களே உதாரணம் .
பொதுவாக மேடைகளில் பேசுபவர்கள் எதுகை, மோனையிலும் ,அடுக்கு மொழியிலும் பேசுவார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அப்படி எந்த திட்டமுமில்லாமல்*தனக்கு அந்த நேரத்தில் தோன்றியதை பேசுவார் .* அப்படியான உண்மை என்பது மக்களை சென்றடைந்தது என்பது 1973ல் திண்டுக்கல் தேர்தலில் அவர் மேற்கொண்ட பிரச்சாரமே சாட்சி .அந்த ஒளிப்பதிவு இன்றைக்கு கூட சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது .* இன்றைக்கும் எம்.ஜி.ஆர். பேசப்பட்டு வருகிறார் என்பது அந்த சாதனை வாழ்க்கைக்கு சாட்சியாக உள்ளது .**
பேரறிஞர் அண்ணா அவர்கள் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று நாவலரை அழைத்தது போல அழைக்க* முடியாவிட்டாலும் , நண்பரே வா, என் உறவே வா, என் ரத்தத்தின் ரத்தமே வா என்று நான் அழைக்க தயங்க மாட்டேன் . நான் நிச்சயமாக சொல்லுவேன் . நாங்கள் தனித்தன்மையாக தேர்தலில் போட்டியிட்டு* மக்களின் பேராதரவை பெற்று நாங்கள் சுயமாக அமைச்சரவை அமைக்க கூடிய அளவிற்கு நாங்கள் பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு யார் ஒத்துழைப்பு தருகின்றார்களோ .அந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொள்வேனே தவிர, நிச்சயமாக எங்கள் உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் பிறர்க்கு சந்தேகம் வருகிறது . பேசிக் கொள்கிறார்கள் எம்.ஜி.ஆர். ஒருவேளை வீட்டுக் கொடுத்திருப்பார் . அதனால் கூட்டு சேருகிறார்கள் என்று. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன் .பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாகிய நான்*விவரம் அறியாதவன் அல்ல. அண்ணா தி.மு.க.வை அரியணை ஏற்றியபிறகு தான் நான் ஒய்வு பெறுவேனே* தவிர, அதுவரையில் எனக்கு ஒய்வு என்பது இல்லை .அண்ணா தி.மு.க ஆட்சியின் மூலம் அண்ணாவின், லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்றுவதில்தான் நான் சந்தோசம் அடைவேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் . சிலர் நினைக்கின்றார்கள் எம்.ஜி.ஆரை ஒழித்துவிட்டால் அண்ணா தி.மு.க. இருக்காது .அவர்கள் பைத்தியக்காரர்கள். இந்த ராமச்சந்திரன் இறந்த பிறகும் ஆயிரம் ஆண்டு காலம்*அண்ணா தி.மு.க. உயிர்ப்புடன் இருக்கும் அண்ணாவின் உருவம் ,அந்த கருப்பு சிவப்பு கலந்த கொடியின் மத்தியில் வெள்ளை நிறத்தில் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கும் . எங்களுக்கு வாய்த்த தொண்டர்கள் அப்படிப்பட்டவர்கள்*--எம்.ஜி.ஆர். பொது கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் ..
எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் மிக பிரபலமாக இருந்த நேரம் . மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி வரும்போது செங்கல்பட்டில்** ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு காவலர் நின்று கொண்டிருக்கிறார் .எம்.ஜி.ஆர் காரை நிறுத்த சொல்லி , அந்த காவலரை காரில்* ஏறிக் கொள்ளுங்கள் .உங்கள் இருப்பிடம் அருகில் இறக்கிவிடுகிறேன் என்றார் . வேண்டாம் ஐயா ,நான் பேருந்தில் சொல்கிறேன் என்று காவலர் கூற, பரவாயில்லை .நீங்கள் வாருங்கள் என்று சொல்லி காரில் ஏற்றிக்* கொள்கிறார் . சிறிது தூரம் சென்றதும்,*எம்.ஜி.ஆர். கேட்கிறார் காவலரிடம் ,நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா என்று . தெரியவில்லை என்கிறார் காவலர் . நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்க, செங்கல்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறேன் என்றார் .அப்படி என்றால் ஏன் நீங்கள் சொந்தமாக வாகனம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை .என்று கேட்க ,நான் ஒரு சைக்கிள் வைத்துள்ளேன் .இன்று அது பஞ்சர் ஆகிவிட்டது .வேறு வழியில்லாமல் வேறு வாகனத்தை பிடித்து பணிக்கு சென்று திரும்புகிறேன் .என்றார் காவலர் .அதற்குள் அவரது இருப்பிடம் வந்துவிடுகிறது . நான் இறங்கி கொள்கிறேன் என்கிறார் காவலர் . ஆனால் எம்.ஜி.ஆர். பொறுங்கள் ,உங்கள் வீட்டுக்கு அருகில் விட்டுவிடுகிறேன் என்கிறார் . ஆனால் காவலர் அதை மறுத்து, வேண்டாம் ஐயா ,இந்த ஊரில் உள்ளவர்கள் பார்த்தால் என்னை தவறாக நினைப்பார்கள் நான் யாருடைய காரிலும், யார் வாகனத்திலும் பயணிப்பதில்லை .காவல்துறையில் உள்ள என்னை பற்றி தவறான அபிப்பிராயம் வந்து விட கூடாது .நான் இங்கேயே இறங்கி கொள்கிறேன் . நன்றி ஐயா என்று சொல்லி இறங்கிவிடுகிறார் .இந்த காலத்திலும் இப்படி ஒரு காவலரா என்று ஒரு கணம் யோசித்து எம்.ஜி.ஆர். புறப்பட்டு சென்னை வந்து சேருகிறார் . இந்த சம்பவத்தால் எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியும் இல்லை மகிழ்ச்சியும் ஏற்படவில்லை . மறுநாள் செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த காவலர் பற்றி* பெயரை சொல்லி*விசாரிக்கிறார் .அவர் இங்குதான் பணிபுரிகிறார் என்றவுடன் .நான் ராமாவரம் தோட்டத்தில் இருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் .அவரை என் வீட்டில் வந்து சந்திக்க சொல்லுங்கள் என்கிறார் .* காவல் நிலையத்தில் உள்ளவர்கள் பரவசம் அடைந்து , அந்த காவலரிடம் விஷயத்தை சொல்லி ,அவசியம் ராமாவரம் தோட்டம் சென்று முதலில் எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்துவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார்கள் .காவலரும் வந்து சந்திக்கிறார் .இந்த காலத்தில் இப்படியும் ஒரு காவலரா எனக்கு ஆச்சர்யமாக* உள்ளது .உங்களுக்கு என்ன உதவி தேவை,சொல்லுங்கள் செய்கிறேன் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் காவலர் எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் அழைத்தீர்கள் என்பதற்காகத்தான் வந்தேன் .அது மட்டுமல்ல , நீங்கள் ஒரு நடிகர் ,சட்டமன்ற உறுப்பினர் , ஆளும் கட்சியின் மிக முக்கிய பிரமுகர் என்று .சொன்னார்கள் அதனால் மரியாதை நிமித்தம் வந்து சந்தித்தேன் .நன்றி என்று சொல்லி புறப்பட்டு சென்றார் . இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் எம்.ஜி.ஆர். முதல்வராகியதும் காவலர் வீட்டு வசதி வாரியத்தை உருவாக்கினார் .
எம்.ஜி.ஆர். தனது கட்சி வேட்பாளர் ஒருவரின் வேட்பு மனுவை வாபஸ் பெற செய்வித்தவர் எதற்காக, யாருக்காக என்றால் .1967ல்* பேரறிஞர்*அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சிபீடத்தில் அமர்ந்தபோது அண்ணாவுக்கு முதல்வராக பதவி ஏற்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தவர் பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையா தேவர் . 1957 முதல் 1977 வரை தொடர்ந்து உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் மூக்கையா தேவர் .1977ல் உசிலம்பட்டி தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் . அந்த தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்தவர் மூக்கையா தேவர் என்பது மட்டுமின்றி, நான் யார் பெயரில் கட்சி நடத்துகிறேனோ, கட்சி கொடியில் அவரது உருவத்தை* வைத்துள்ளேனோ, அந்த அண்ணாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர் மூக்கையாத்தேவர் .எனவே இந்த தொகுதியில் அவருக்கு எதிராக* அ.தி.மு.க போட்டியிடுவது சரியல்ல என்று அரசியலில் ஒரு நிலைஎடுத்து* ஆரம்பித்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.*
பாண்டிச்சேரி அஜந்தா அரங்கு அருகில் உள்ள பஜார் தெருவில் கடைகளுக்கு அருகே கூட்டி பெருக்கி சுத்தம் செய்து கோலமிடும் பணியை செய்து வந்தார் ஒரு வயதான மூதாட்டி .நான் வறுமையில் உள்ளேன் . வாழ்க்கையை நடத்துவது கஷ்டமாக உள்ளது . எனக்கு குழந்தைகள் கிடையாது என்று ஒரு கடிதம் எழுதுகிறார் எம்.ஜி.ஆருக்கு .இதை அறிந்த எம்.ஜி.ஆர். தன் உதவியாளர் மூலம்*மாதாமாதம் ரூ.100/- உதவித்தொகை அனுப்பி வந்தார் . இதை அந்த மூதாட்டி*தான் பணிபுரியும் கடைகளில் சொல்லி மகிழ்ந்தார் .* அது முதல் அந்த பகுதியில் அந்த மூதாட்டி எம்.ஜி.ஆர். அம்மா என்று அழைக்கப்பட்டு பிரபலமானார் .பாண்டி அஜந்தா அரங்கில் எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் 100 வது நாள் விழா நடக்கிறது .இதை அறிந்த அந்த மூதாட்டி தனக்கு எம்.ஜி.ஆர். அனுப்பும் மணி ஆர்டர் ரசீதை காட்டி ,என்னை எப்படியாவது எம்.ஜி.ஆர். வரும்போது தயவுசெய்து அறிமுகம் செய்து வைய்யுங்கள் . நான் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அரங்கு மேலாளரை கேட்டு கொள்கிறார் .விழா நாளன்று*அரங்கு மேலாளர் எம்.ஜி.ஆரிடம் நீங்கள் மாதாமாதம் அனுப்பும் பணம் பெறும் மூதாட்டி ஒருவர் உங்களை காண விருப்பப்படுகிறார் என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். வர சொல்கிறார் . அந்த மூதாட்டி தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் இருந்து ஒரு பெரிய மாலை வாங்கி வந்து எம்.ஜி.ஆர். கழுத்தில் அணிவித்து மகனே என்று உருகி போனார் .* பாண்டிச்சேரியில் மட்டுமல்ல .தமிழ்நாட்டில் பல நகரங்களில், கிராமங்களில் பல எம்.ஜி.ஆர். அம்மாக்கள் அந்த காலத்தில் உருவாகி*இருந்ததாக தகவல்கள் சொல்லப்படுகிறது .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஒன்றும் அறியாத பெண்ணோ* - இதயக்கனி*
2.எம்.ஜி.ஆர்.-சிறுவன் கமல்ஹாசன் உரையாடல் - ஆனந்த ஜோதி*
3.போலீஸ் அதிகாரியாக* எம்.ஜி.ஆர். -என்கடமை*
4.சிறை* துறை அதிகாரியாக எம்.ஜி.ஆர்.- பல்லாண்டு வாழ்க*
5.எம்.ஜி.ஆர். - தங்கவேலு உரையாடல்* - நம் நாடு*
6.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
7.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*
orodizli
10th September 2020, 05:45 PM
இலங்கை நாட்டில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் அப்படி ஓடிய வரலாறுகள் கிடையாது. 1950 முதல் 1977 வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் அதிகமாக கிட்டத்தட்ட 35 திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் பெரும்பாலும்*
1967 வரை எந்தப் படம் எப்படி ஓடியது என்பது எந்த ஒரு விபரமும் விளம்பரமும் சாதனையும் இல்லை என்பது முக்கியமானதாகும்.
குறைந்த வசூலை காண்பித்து அதன் மூலம் ஓடிய திரைப்படங்களை 100 நாள், 200 நாள் என மார்தட்டி தம்பட்டம் அடிக்கிறார்கள்.
*உலகம் சுற்றும் வாலிபன் ஏற்படுத்திய வசூலை எந்த சிவாஜி கணேசனின் திரைப்படமும் வென்றதாக சரித்திரமில்லை.*
தில்லானா, சிவந்தமண், சவாலே சமாளி, வசந்த மாளிகை, பட்டணமா, ராஜா, எ.தங்க ராஜா,* தங்கப்பதக்கம், அவன் தான் மனிதன், உத்தமன், தீபம்,*
அ.ஒரு கோயில்* உட்பட
12 படங்கள் தான்*
1977 வரை ஒடியுள்ளது.
ஆனால் மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில்*
1965 முதல் 1977 வரை கிட்டத்தட்ட*
16 திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது.*
எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், நம்நாடு, மாட்டுக்கார வேலன்,*
நல்ல நேரம், இதயவீணை, ராமன் தேடிய சீதை, உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, நாளை நமதே, நீதிக்கு தலைவணங்கு, ஊருக்கு உழைப்பவன், மீனவ நண்பன் ஆகிய* படங்கள் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பல படங்கள் ஓடியதாக அவர்களே விளம்பரத்தை தயார் செய்து போலியாக வெளியிடுகிறார்கள் திரிசூலம் படம் இலங்கையில் திரையிடவே இல்லை. அந்தப் படம் வெள்ளிவிழா கூறியதாக தகவல் கொடுக்கிறார்கள். இப்படி பல படங்களை கோல்மால் வித்தை காண்பித்து பொய் சொல்லி பதிவிடுகிறார்கள்....
இலங்கையில் திரையிடாத திரிசூலம் இரண்டு தியேட்டரில் வெள்ளிவிழா ஒடியதாக தகவல் போட்ட கணேசன் ரசிகனின் ஜகதால வித்தைகள்.....
இப்படியெல்லாம் பொய்யை போட்டு. ... மாற்று நடிகர் ... ...ன் க்கு என்ன மோசடியான புகழ் சேர்க்க போகிறார்கள்?!..
இலங்கை திரைப்பட மோசடி மகா ஊழல்கள்* ஆகும்.............
orodizli
10th September 2020, 05:53 PM
இலங்கை புரட்சித்தலைவரின்
உலகம் சுற்றும் வாலிபன் படைத்த வசூல்கள்..... வெல்ல முடியாத ஒரே காவியமாக திகழ்ந்தது......
கொழும்பு - கெப்பிட்டல்
203 நாள் : 9,84,588.75
கிங்ஸிலி 40 நாள்
வசூல் : 2,03,545.50
ட்ரியோ 35 நாள்
வசூல் : 1,69,185.75
கொழும்பில் மட்டும் முதல் ரவுண்டில் பெற்ற
278 நாள் ஒடி முடிய வசூல் :13,57,289.75
அடுத்து.....
யாழ் நகரில்
மனோகரா 80 நாள்
வசூல் : 3,01,351.75
ஸ்ரீதர் 48 நாள்
வசூல் : 1,56,281.70
யாழ் நகரில் பெற்ற
128 நாள் : 4,57,633.45
அடுத்து...
மட்டுநகர் விஜயா
116 நாள் ஒடி சாதனை.
திருமலை - சரஸ்வதி
72 நாட்கள் ஒடியது.
கட்டுகஸ்தோட்டா
நியூசிகீரி - 63 நாள்
வவுனியா
ராயல் - 57 நாள்
அக்கரைபற்று
சாரதா - 50 நாள்
கல்முனை
தாஜ்மகால் 43 நாள்
தெகிவளை
ரீயோ ...36 நாள்
மாணிப்பாய்
வெஸ்லி ....31
சங்காளை
சாந்தி....40 நாள்
சாவகச்சேரி
வேல்......23 நாள்
உலகம் சுற்றும் வாலிபன் இலங்கையில் முதல் ரவுண்டில் மட்டும்
25 லட்சத்தை கடந்து வசூலில் ...... சாதனை
நன்றி : திரு டேவிட்
யாழ் - பிரான்ஸ்
உரிமைக்குரல் மலர்
(1976 - 1977)
தகவல் பதிவு
UR.
உங்கள் பார்வைக்கு..
வ.மாளிகை
கொழும்பு - 250 நாள்
கெப்பிட்டல் : 6,56,858.00
பிளாசா 75 நாள்
வசூல் : 2,89,058.00
யாழ்நகர்
வெலிங்டன் 78 நாள்
லிடோ 28 நாள்
மொத்தம் 116 நாள்
இதை தான் அந்த ரசிகனுங்க பொய்யாக
பிளாசா 175
வெலிங்டன் 200
லிடோ 100 என போடுகிறாங்க....
நம்பர் ஒன் பிராட் (fraud) க......ரசிகன்
கனடா ..என்ற சி....ன் ஆகும்.....
orodizli
10th September 2020, 05:53 PM
புரட்சித் தலைவர் நடித்து முதலில் ‘லலிதாங்கி’ என்ற படத்தை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் தயாரித்தார். ஆனால், பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று கதாநாயகன் சொல்வது போல கதை அமைப்பு இருந்ததால் அதில் நடிக்க புரட்சித் தலைவர் மறுத்துவிட்டார். இதை புரட்சித் தலைவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். உடனே, அந்தப் படத்தை ராணி லலிதாங்கி என்று பெயரை மாற்றி சிவாஜி கணேசனை நடிக்க வைத்து வெளியிட்டனர். சிவாஜி கணேசனுக்கு பணம்தான் முக்கியம், வேறு எந்தக் கொள்கையும் கிடையாது என்பது தெரிந்ததே. புரட்சித் தலைவர் நடித்த படத்தில் தான் நடிக்கிறோமே? நீங்கள் நடித்து பாதியில் நிற்கும் படத்தில் நான் நடிக்கலாமா? என்று மரியாதைக்குக் கூட தலைவரிடம் அவர் அனுமதி கேட்கவில்லை. படம் வந்தால் போதும், பணம் வந்தால் போதும் என்ற கொள்கையின்படி ராணி லலிதாங்கி படத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். பெண்களை விபச்சாரிகள் என்றும் வசனம் பேசுவார். கடைசியில் அந்தப் படமும் ஊத்திக் கொண்டது.
சிவாஜி கணேசன் மாதிரி கொள்கைகளை விட்டுக் கொடுத்து பணத்துக்காக புரட்சித் தலைவர் நடித்திருந்தால் பன்றி குட்டி போடுவது போல 300 படங்கள், 400 படங்களில் நடித்திருப்பார். ஆனால், கொண்ட கொள்கைக்காக படம் போனாலும் பரவாயில்லை வருமானம் வராவிட்டாலும் பரவாயில்லை என்று இதுபோன்ற படங்களை தவிர்த்தார். நடிப்பது தொழிலாக இருந்தாலும் பணத்துக்காக கண்டபடி நடிக்காமல், தன் படங்களில் நல்ல கொள்கைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று செயல்பட்ட கொள்கைக் குன்று புரட்சித் தலைவர்..........
orodizli
10th September 2020, 05:54 PM
#இவர்கள் #எதிர்காலத்தூண்கள்
தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...
போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...
டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!
'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...
உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.
பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...
அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...
முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???
அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...
மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...
வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்............
orodizli
10th September 2020, 05:57 PM
1963 மே 10 ந்தேதி வெளியான வெற்றிப் படம்தான் r r பிக்சர்ஸ் தயாரிப்பான "பெரிய இடத்துப் பெண்'. அந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகமான வசூலை குவித்த படம் இதுதான். . அருமையான கிராமிய கதையும் மேல் நாட்டுப் பாணியையும் சரியான அளவில் கலந்து அதற்கு அருமையான வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத ராமண்ணாவின் சிறப்பான நேர்த்தியான இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம்.
கோயிலில் சம உரிமையை நிலை நாட்ட தலைவர் பேசும் வசனம் ஏழை மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.
சரோஜாதேவியின் கோபமான வசனங்கள் கோபத்தை உண்டு பண்ணினாலும் பின்னர் அவரை அடக்கும் விதம் மக்களை வெகுவாக கவர்ந்தது. M.r.ராதா திமிர், ஜாதி வெறி பிடித்த பணக்காரனாக வருவார். அவர் வசனத்தை
டெலிவரி செய்யும் விதம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
பாடல்களை பொறுத்தவரை ராமண்ணா படங்களுக்கு மெல்லிசை இரட்டையர்கள் போடும் மெட்டு காலத்தை கடந்தும் கதை பேசுகிறது.
நாகேஷின், படத்தை ஒட்டிய காமெடி
ரசிக்கும்படி அமைவதுடன் படத்தின் முக்கியமான திருப்பத்திற்கும் காரணமாக இருப்பது சிறப்பானது.
'அன்று வந்ததும் அதே நிலா' பாடலுக்கு எம்ஜிஆர் ஆடும் நடனம் மேல் நாட்டு கலைஞர்களையும் மிரள வைக்கும். தியேட்டரில் கரகோஷம் அடங்க நெடுநேரம் ஆகும். 'பாரப்பா பழனியப்பா' பாடலுக்கு எம்ஜிஆர் மாட்டுவண்டி ஓட்டும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கட்டோட குழலாட' பாடலுக்கு கிராமத்து பெண்களின் கனவுகளையும் அவர்கள் அத்தை மகன் மீது வைத்திருக்கும் அன்பையும் அத்தான் அவர்களிடம் உரிமையோடு சொல்லாடும் விதமும் அருமையிலும் அருமை. 'அவனுக்கென்ன தூங்கி விட்டான்' போன்ற தத்துவப் பாடல்கள் புண்பட்ட மனதிற்கு இதமாக ஒத்தடம் கொடுப்பது போல இருக்கும்.
வண்டி மாடுகளை தலைவர் குளிப்பாட்டும் விதம் ஆகா என்ன அருமையான காட்சி அதை காண இரண்டு கண்கள் போதாது. எடுத்த
சபதத்தை முடிக்கும் பாங்கு வெகு நேர்த்தியானது. T r. ராஜகுமாரி
தலைவருக்கு அக்காவாக தலைவருடன் நடித்த கடைசி படம்.
சிலம்பு சண்டை காட்சிகள் நேரிலே நடப்பதை போல பார்த்து நாமே உணர்ச்சி வசப்பட்டு விடுவோம். அசோகனுக்கு அருமையான வேடம். வெளுத்து வாங்குவார். பிற்காலத்தில் இதே கதையை உல்ட்டா பண்ணி அளவுக்கு அதிகமான மசாலாவை ஆபாசத்தோடு தூவி எடுக்கப்பட்ட 'சகல கலா வல்லவன்' வெள்ளி விழா ஓடியது குறிப்பிட தக்கது.
சென்னையில் சித்ரா கிரவுன் மகாலட்சுமியில் வெளியாகி சித்ரா கிரவுனில் 102 நாட்களும் மகாலட்சுமியில் 71 நாட்களும் ஓடி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
8 வாரங்களில் அடுத்து வந்த 'ஆனந்த ஜோதி'யை தாண்டி வெற்றியை பதிவு செய்தது குறிப்பிட தக்கது. மதுரை திருச்சி கோவை சேலம் ஆகிய ஊர்களில் 92 நாட்கள் ஓடியது.
தமிழகத்தில் சுமார் 33 சென்ட்டரில் 50 நாட்களை கடந்து ஓடி வெற்றியை பதிவு செய்தது. தூத்துக்குடி சார்லஸில் வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம். மறுவெளியீட்டில்
நெருங்க முடியாத அளவு வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிட தக்கது..........
orodizli
10th September 2020, 06:03 PM
தமிழ் திரைப்பட உலகில் மக்கள் திலகத்தின் காவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சாதனைகளை பலவிதமான அரங்குகளில் படைத்துள்ளது. அதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிகப் பெரிய வெற்றிப்படங்கள் ஆனாலும் சரி.... சாதாரண கருப்பு-வெள்ளை படங்கள் ஆனாலும் சரி மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் மிகுந்த வசூலையும் மிகுந்த சாதனையையும் படைத்துள்ளது என்பது முக்கியமான ஒன்றாகும்.
1965 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட உலகை மகிழ்வித்த... தென்னிந்திய திரை உலகை சிறப்பித்த... தமிழ் பட உலகை வாழவைத்த....*
எங்க வீட்டுப் பிள்ளை*
இமாலய சாதனையை படைத்தது.
அதே ஆண்டில் மற்றொரு சரித்திரப் படமான ....
ஆயிரத்தில் ஒருவன் அதுவும் ஒரு மிகப்பெரிய மகுடத்தை சூட்டியது தமிழ் படவுலகில்......
இன்று... "கன்னிதாய்" 10-09-1965 ---10-09-2020 வெளியான திருநாள்... குறைந்த நாட்களிலேயே அதிகளவில் வசூல் வேட்டை புரிந்த காவியம்...
இந்த இரண்டு மிகப்பெரிய காவியங்களுக்கு மத்தியில் கருப்பு வெள்ளை திரைப்படமான "கன்னித்தாய் "திரைப்படம் 18 நாட்களில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் ஏற்படுத்தியது.*
கன்னித்தாய் திரைப்படம் வெளியான நாள் தான் இன்று*
(10.09.1965. - 10.09.2020 ) அதே நாளில் அந்தக் காவியத்தை நினைவு கூறும் சில நிகழ்ச்சிகள் மட்டும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கன்னித்தாய் திரைக்காவியம் சென்னை மாநகரில் 4 காட்சிகள் திரையிடப்பட்டு சரித்திரத்தை உருவாகிய முதல் காவியம்.*
முதல் வார வசூல் எந்தப் படமும் நெருங்க முடியாத சாதனையில் சபையர் திரையரங்கில்*
4 காட்சியில் அத்தனை காட்சியும் அரங்கு நிறைந்து வசூல் கொடுத்த தொகை மிகப்பெரிய வசூல் ஆகும். வெற்றியாகும்.
7 நாள் : 49 ஆயிரத்தை கடந்தது.
சென்னை நகரில் சபையர்*
அசோக் பிரைட்டன் சயானி திரையரங்குகளில் திரையிடப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிக் குவித்தது. திருச்சி மாநகரில் 11 வாரங்கள் ஓடி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அதேபோல பெரிய ஊர்களிலும் 50 நாட்கள்.........
orodizli
11th September 2020, 07:57 AM
எம்.ஜி.ஆரை தொட முயன்று அடித்து வீசப்பட்டேன் - ஜேப்பியார்.
" 1954 ஆம் ஆண்டில் நான் S S L C படித்து முடித்திருந்தேன்.பெண்களை தொட்டுப் பார்க்க துடிக்கும் வயது அது. ஆனால் நான் தொட்டுப் பார்க்க விரும்பியதோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை. அப்படி ஒரு அழகு, தேஜஸ் அவரிடம். 'இன்பக்கனவு' நாடகம் நடந்தபோது மேடைக்கே போய் விட்டேன். நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அருகில் போய்விடலாம் என்று முயன்றால் அடித்து தொலைதூரம் வீசப்பட்டேன்.அப்படி யொரு அடியை அதற்கு முன் நான் வாழ்வில் பெற்றதில்லை. அடிக்கு பயந்து எம்.ஜி.ஆரைத் தொடும் ஆசையை விட்டுவிடவில்லை.'நாடோடி மன்னன்' வெற்றி விழாவிலும் எம்.ஜி.ஆரைத் தொட முயன்று முன்பைவிட வலுவான அடி, உதை கிடைத்தது.
1962ல் எனக்குத் திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எம். ஜி.ஆரைக் காண பாலர் அரங்கம் (கலைவாணர் அரங்கம்) சென்றேன். குழந்தையோடிருந்தால் எப்படியும் அங்கு நடைபெறும் விழாவுக்கு வரும் அவரை நெருங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு. அது வீண் போகவில்லை. என்னைப் பார்த்ததும் அருகில் வரச் சொன்ன எம்.ஜி.ஆர். 'உன் குழந்தைக்கு பெயர் சூட்டத்தானே கொண்டு வந்திருக்கிறாய் ? ' என்று கேட்டார். நானும் ஆமாம் என்று தலையாட்டினேன். "என்ன பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறாய் ? " என்று கேட்டார். "நீங்களே ஒரு பெயர் சூட்டிவிடுங்கள் " என்றேன். "இல்லை பெற்றோர் கருத்து தெரிந்து தான் சொல்வேன்" என்றார். விடாமல் நானும் "ராஜேஸ்வரி" என்ற பெயரைச் சொன்னேன். "விஜய ராஜேஸ்வரி" என்று பெயர் சூட்டினார். அதற்கு பின் எம்.ஜி.ஆரிடம் வந்துவிட்டேன். எனது வாழ்க்கையே அவரோடுதான் என்றானது" - AVM நினைவு அறக்கட்டளை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சொற்பொழிவில் 'சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசியதிலிருந்து - "
'#இதயக்கனி' ஆகஸ்ட் 2008 இதழிலிருந்து .
18 -06 -2020 திரு ஜேப்பியாரின்
4 ம் ஆண்டு நினைவு நாள்.
Ithayakkani S Vijayan.........
orodizli
11th September 2020, 07:57 AM
MGR News with Unseen Images
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.
விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.
உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.
நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.
மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.
சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.
‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.
‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.
‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’
எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.
- தி இந்து ..........
orodizli
11th September 2020, 07:59 AM
30.11.1968 ‘தீர்ப்பு நாடகப் பொன்விழாவில்...
நான் ஒரு நாத்திகனா? இல்லவே இல்லை. என்னைப் பற்றி பலர் தவறாக இப்படி புரிந்து கொண்டு தவறாகவும் எழுதி வருகிறார்கள்.
உண்மையாக நான் நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை உடையவன் நான். நம் சக்தியை எல்லாம் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தான் நாம் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம்.
பலர் இந்தச் சக்திக்கு பல உருவம் கொடுத்துப் பெயர்கள் கொடுத்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள். நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோவிலுக்கு போனது கிடையாதா? போயிருக்கிறேன். ’மர்மயோகி’ படம் கோவை சென்ரலில் நடைபெற்ற போது நான் பழனி மலைக்குப் போய் முருகனை தரிசித்து வந்திருக்கிறேன்..........எம்.ஜி.ஆர்.,........ .
orodizli
11th September 2020, 08:01 AM
மக்கள் திலகம் "ராஜகுமாரி" திரைப்படம் பின்னாளில் மகத்தான பல வெற்றிகளை படைத்துள்ளது. 1950 ஆம் ஆண்டுக்குப் பின் இக்காவியம் பல ஊர்களில் 4 வாரங்கள் 5 வாரங்கள் ஓடி பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.
1995 ஆம் ஆண்டு வரை இத் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டு வந்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றோம்.
புரட்சி நடிகர் நடித்த முதல் படமான ராஜகுமாரி பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது போல் எந்த நடிகரின் படமும் இது போன்று ஒடியதில்லை.எந்த முதல் கதாநாயகனின் வெற்றியும்* இது* போன்று சாதனையை பெற்றது இல்லை.. தொட்டதில்லை.
1991...1992...
சென்னையில் திரையிட்ட அரங்குகள்!
1991 ல் மதுரை சி.டி.சினிமாவில் ராஜகுமாரி 21 நாள் ஒடியது.
சென்னை ...1991
பிளாசா 7 நாள் : 57,980.55
பிராட்வே 7 நாள் : 20,761.00
(பகல் காட்சி ஆகும்)
காமதேனு 7 நாள் 40,940.80
1992. ல் முருகன் 7 நாள் ஒடியது.
மற்றும்...
பழனியப்பா, தங்கம்,*
சரவனா, நேஷனல் (3 காட்சி)*
லிபர்ட்டி ,ஜெயராஜ்...பகல் காட்சி....
பிரிண்ட் சரியில்லை பல கலாட்டாக்கள் திரையரங்குகளில் நடந்தது.
ஆனால் ஒரு நடிகரின் முதல் படம் இன்று வரை புத்தம் புதிய பிரிண்டு
மற்றும் டிஜிபீட்டா ஏவி.எம்மில்*உரிமை உள்ளது. அதை வாங்கி சென்னையில் திரையிட 1980 முதல் (40 ஆண்டுகள் மட்டுமின்றி) 2020 வரை ஆள் இல்லை...
தொடரும் ....
Ur.........
*
orodizli
11th September 2020, 08:04 AM
தலைவரின் திரைஉலக வாழ்வில் சரித்திரம் & சாதனை திருப்புமுனை படைத்த காவல்காரன் திரைக்காவியம்
சுடப்பட்ட எம்ஜிஆரின் குரல் மாறி வந்த முதல் படம் ‘காவல்காரன்’; அழுது அழுது, திரும்பத் திரும்ப பார்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் - ‘காவல்காரன்’ வெளியாகி 53 ஆண்டுகள்
1967ம் ஆண்டு, தமிழக அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் மறக்கமுடியாத ஆண்டாக, பரபரப்பான ஆண்டாக அமைந்தது. திரையுலகையே பதறவைத்த ஆண்டாகவும் அமைந்தது. அரசியலில், திமுகவின் ஆட்சி அந்த வருடம்தான் அமைந்தது. அண்ணா முதல்வரானார். திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆரை, வருடத்தின் தொடக்கத்தில், ஜனவரி 12ம் தேதி எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். 13ம் தேதி ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை. சுடப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து, ‘காவல்காரன்’ வெளியானது. துக்கமும் அழுகையுமாக வந்து படம் பார்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றியை விட, இரண்டு மூன்று மடங்கு வெற்றியைத் தந்தார்கள். அதுதான் எம்ஜிஆர் மேஜிக்.
67ம் ஆண்டு ‘தாய்க்கு தலைமகன்’ வந்தது. மே மாதம் 19ம் தேதி ‘அரசகட்டளை’ வந்தது. அது தேவர்பிலிம்ஸ். இந்தப் படத்தை இயக்கியவர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி. இந்தப் படங்களெல்லாம் 66ம் ஆண்டிலேயே வேலை தொடங்கி, 95 சதவிகிதம் முடித்துக் கொடுக்கப்பட்டது. அதாவது எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன்பே நடித்துக் கொடுத்திருந்தார். மீதமுள்ள ஐந்து சதவிகிதம் ‘அரசகட்டளை’யில் குரல் மாறிய நிலையில் டப்பிங் செய்யப்பட்டது. ஆனாலும் அவ்வளவாகத் தெரியவில்லை. இதுவும் எம்ஜிஆரின் மேஜிக்தான்.
ஆனால், 67ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி எம்ஜிஆர் சுடப்பட்டு, அதன் பின்னர், நடிக்கப்பட்டு, டப்பிங் பதிவு செய்யப்பட்டு முழுமையாக குரல் மாறிய நிலையில் வந்த முதல் படம்... ‘காவல்காரன்’. சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்க, ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், அசோகன், பண்டரிபாய், மனோகர், சிவகுமார் முதலானோர் நடித்திருந்தனர்.
67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. முதல்நாள் படம் பார்த்துவிட்டு, அழுதுகொண்டே வந்தார்கள். கதறி கண்ணீர்விட்டபடியே வந்தார்கள். ‘வாத்தியார் குரலே மாறிப்போச்சே’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு, அடுத்த காட்சிக்கு அப்படியே நின்றார்கள். முதல் ஷோ பார்த்துவிட்டு, இரண்டாவது ஷோவும் பார்த்தார்கள். எம்ஜிஆரின் குரல் மாறியிருக்கும் விஷயம், தமிழகம் முழுவதும் தீயாய்ப் பரவியது. கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள். பார்த்தவர்கள் எல்லோரும் அழுதுகொண்டே பார்த்தார்கள். சுடப்பட்டு குரலே மாறிப் போய்விட்ட எம்ஜிஆர், வசனம் பேசப்பேச, ‘தலைவா தலைவா’ என்கிற கோஷங்கள், எம்ஜிஆரின் லாயிட்ஸ் சாலை வீட்டிலும் தி.நகர் வீட்டிலுமாக எதிரொலித்துக் கதறியது.
எம்ஜிஆர் போலீஸ் அதிகாரி. நம்பியார் வில்லன். அவரின் மகள் ஜெயலலிதா. அங்கே ஒரு பங்களாவில் நடக்கும் கொலை குறித்து துப்பறிய எம்ஜிஆர், நம்பியார் வீட்டு கார் டிரைவராக வருவார். அவர் போலீஸ் என்பது அம்மாவுக்கு கூட தெரியாது. கொலை செய்தது யார், நம்பியார், அசோகன், மனோகரின் வேலைகள் என்னென்ன என்பதையெல்லாம் எப்படிக் கண்டறிந்தார் என்கிற முழுக்க முழுக்க எம்ஜிஆர் ஃபார்முலா கதைதான் ‘காவல்காரன்’. அதை தனக்கே உரிய பாணியில், எம்ஜிஆரின் மனமறிந்து இயக்கி அசத்தினார் ப.நீலகண்டன்.
எம்ஜிஆருக்கு தேவர் பிலிம்ஸும் சத்யா மூவீஸும் ரொம்பவே ஸ்பெஷல். 67ம் ஆண்டில் சுடப்பட்ட சம்பவம் நடந்த மறுநாள் தேவர் பிலிம்ஸ் படம் வெளியானது. சுடப்பட்டதால் குரல் மாறிய நிலையில் வெளியானது சத்யா மூவீஸின் ‘காவல்காரன்’. நடுவே, எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணி இயக்கிய ‘அரசகட்டளை’ வெளியானது. ‘தாய்க்கு தலைமகன்’ படத்தில் நடித்த சரோஜாதேவியும் ‘காவல்காரன்’ படத்தில் நடித்த ஜெயலலிதாவும் ‘அரசகட்டளை’யில் நடித்திருந்தார்கள்.
’கட்டழகு தங்கமகள்’ என்றொரு பாடல். ‘மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ’ என்றொரு பாடல். ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ என்றொரு பாடல். ‘அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன்’ என்றொரு பாடல். ‘காது கொடுத்து கேட்டேன் குவாகுவா சத்தம்’ என்றொரு பாடல். எல்லாப் பாட்டுகளும் செம ஹிட்டு. என்றாலும் ‘காது கொடுத்து கேட்டேன்’ பாடலும், ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வாலியின் பாடல்கள். எம்.எஸ்.வி.யின் இசை. அட்டகாச கூட்டணியில் அற்புதப் பாடல்கள்.
இப்போது மூடப்பட்டுள்ள அகஸ்தியா, குளோப், மேகலா, நூர்ஜஹான் முதலான திரையரங்கிலும் தமிழகத்திலும் வெளியாகி சக்கைப்போடு போட்டான் ‘காவல்காரன்’. எம்ஜிஆரின் முகமும் எம்ஜிஆரின் படமும் எம்ஜிஆர் பட பாடல்களும் மிகப்பெரிய எனர்ஜியைத் தரவல்லவை; ஊக்கத்தைக் கொடுக்கக்கூடியவை; உற்சாகத்தை வழங்குபவை; உத்வேகத்தை ஊட்டுபவை என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. இன்றைக்கும் அவையெல்லாம் நிஜம். ஆனால், ‘காவல்காரன்’ படம், அழுதுகொண்டே ரசிகர்கள் பார்த்த படம். பெண்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அழுதபடியே வந்தார்கள். படம் பார்த்தார்கள். இன்னும் வெடித்து அழுதார்கள்.
சென்னை குளோப் தியேட்டரில், பெண்களுக்காகவே தனிக்காட்சி திரையிட்டதெல்லாம் உலக சாதனை. இலங்கையில் இந்தப் படம் 170 நாட்களைக் கடந்து ஓடியது. மிகப்பெரிய வசூலை பெற்றுத்தந்தது.
67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, வெளியானது ‘காவல்காரன்’. எம்ஜிஆரின் குரலே மாறிப்போயிருந்த நிலையில் வந்த முதல் படம். ஆனாலும் தன் பலவீனத்தையே பலமாக்கிக் காட்டினார் எம்ஜிஆர். அப்படி பலமாக்கிக் காட்டினார்கள் எம்ஜிஆரின் ரசிகர்கள். இதுவும் எம்ஜிஆர் மேஜிக் தான்!
படம் வெளியாகி, 53 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் எம்ஜிஆர் சுடப்பட்ட வரலாறுடன், "காவல்காரன்" படமும் இணைந்துகொண்டது. சகாப்தமாகிவிட்டது.........
orodizli
11th September 2020, 08:10 AM
"இதயக்கனி*" காவியம்...
மருதானை மனோகரா
136 நாள்* : 3,98,105.00
யாழ்நகர்* சென்ட்ரல்
102 நாள் : 4,30,024.75
மட்டு நகர் ரீகல்*
70 நாள் : 1,15,701.70
பாமன் கடை ஈரோஸ்
50* நாள் : 2,04,341.50
வவுனியா முருகன்
54 நாட்கள்....
நெல்லியடி லஷ்மி 44 நாள்
கல்முனை ராஜ்* 41 நாள்
திருமலை சரஸ்வதி 45 நாள்
மற்றும் 10 இடங்களுக்கு மேல் 4,5,வாரங்களை கடந்து சாதனை.
நாளை நமதே
கொழும்பு.... சமந்தா
140 நாள் : 5,06,955.50
யாழ்நகர் ராணி
102 நாள்* : 4,05,786.75
பாமன்கடை ஈரோஸ்
88 நாள் : 3,43,310.50
கல்முனை ராஜ்*
61 நாள் : 1,67,089.90
நெல்லியடி லஷ்மி 52 நாள்
மற்றும் சந்திரா 47 நாள்,
இந்திரா 40 நாள்...
பல இடங்களில்
நாளைநமதே 5,6,வாரங்களை கடந்து சாதனையாகும்....
"நினைத்ததை முடிப்பவன்" காவியம்...
யாழ் வின்சர் 80 நாள்
வசூல் : 2,82,945.00
கொழும்பு சென்ட்ரல்
75 நாள் : 3,01,398.60
மட்டு நகர் விஜயா 56 நாள்
மற்றும் பல இடங்களில்*
சாதனைகள்....
"பல்லாண்டு வாழ்க" காவியம்...
யாழ்நகர் 84 நாள் ஒடியது...
கொழும்பு நிலவரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம் ...
இலங்கையில் என்றுமே
நிரந்த வசூல் பேரரசர் என்றால்
மக்கள் திலகம் என்ற மாணிக்கச்சுடர்
எம்.ஜி.ஆர். ஒருவரே!*
நம் பதிவில் என்றும் பொய்யும் பித்தலாட்டமும் கிடையாது... அதற்கு எந்தவித அவசியமுமில்லை...
நன்றி!
திரு. ராஜசிங்கம்
திரு. டேவிட்
திரு. சதானந்தன் இலங்கை... கனடா...
யாழ்நகர் - பிரான்ஸ்
தொடரும் .....
*
இலங்கை திருநாட்டில் 1975 ல் புரட்சித்தலைவரின் மகத்தான காவியங்கள் படைத்த சாதனைகளின் வரலாறு.....
"இதயக்கனி", " நாளை நமதே" இரண்டு திரைப்படங்கள் இரண்டு திரையரங்குகளில் ஓடி மொத்தம் நான்கு திரையரங்குகளில்*
100 நாட்களை வெற்றிகொண்ட ஆண்டாக 1975 ஆம் ஆண்டு மக்கள் திலகத்திற்கு அமைந்தது ஆகும்.
இதயக்கனி திரைக்காவியம் மனோகரா திரையரங்கில் 132 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதன் பின் சென்ட்ரல் திரையரங்கில் 105 நாட்கள் ஓடி வெற்றி சாதனை புரிந்தது.
நாளை நமதே திரைக்காவியம் சமந்தாஅரங்கில் 140 நாட்களும், ராணி அரங்கில் 102 நாட்களும் ஈராஸ் திரையரங்கில் அடுத்து வெளியீடாக 88 நாட்களும் ஓடி வசூலில் மிகப்பெரிய சரித்திரத்தை ஏற்படுத்தியது.
மற்றும் அதே ஆண்டில் வெளியான நினைத்ததை முடிப்பவன்*
வின்ஸர் அரங்கில் 80 நாட்களை கடந்தும்.... பல்லாண்டு வாழ்க* செல்லமகாலில் 12 வாரங்கள் ஓடி மிகப்பெரிய தாக்கத்தை வசூலை ஏற்படுத்தி.... மிகப்பெரிய வெற்றியையும் படைத்தது.........
*
orodizli
11th September 2020, 08:12 AM
மதுரையில் அதிசயம்...
4 வாரங்களில் 1 லட்சத்தை வசூலில் கடந்த காவியங்களில்...
1968 வரை.... 15 படங்கள்.... அதில்..
கலையுலக சக்கரவர்த்தின் காவியங்கள்
மட்டும் -11 ஆகும்.....
நாடோடி மன்னன்
தங்கம் : 1,37,530.95
காவல்காரன்
சிந்தாமணி : 1,25,316.25
ரகசிய போலிஸ்115
சிந்தாமணி : 1,24,326.46
குடியிருந்த கோயில்
நீயு சினிமா : 1,16,081.15
ஆயிரத்தில் ஒருவன்
சென்ட்ரல் : 1,12,232.53
ஆசைமுகம்
தங்கம் :.1,08,453.72
அன்பே வா
சிந்தாமணி : 1,06,357.44
எங்க வீட்டுப்பிள்ளை
சென்ட்ரல் : 1,05,832.51
மற்றும்
மதுரைவீரன்
பறக்கும் பாவை
ஒளி விளக்கு....
1968 வரை மக்கள்திலகத்தின் சாதனையே அனைவரும் போற்றும் படி முதன்மை ஆகும்.
தொடரும்...ur.,.........
orodizli
11th September 2020, 12:43 PM
#தமிழ்_சினிமாவில் #எம்ஜிஆர்_செய்த #முதல்_சாதனைகள்!.........
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்
* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.
* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.
* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அணுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்க்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ், இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்க்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து "பாரத்" இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.
எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்தினம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.
எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).
எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி 100 நாட்கள், வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.
எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த பானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.
எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.
எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.
எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.
எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.
'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.
அ முதல் அஃகு வரை..........
orodizli
11th September 2020, 12:46 PM
சென்னை நகரில் திருவல்லிக்கேணி ஸ்டார் அரங்கிலும்,வடசென்னை பகுதி திரையரங்கான கிரவுன் அரங்கிலும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1947 ல் ஜூபிடர் நிறுவனம் தயாரித்த திரைப்படம்மான "கஞ்ஜன்" தோல்வியைத் தழுவியது. அதே நிறுவனத்திற்கு பல வெற்றியையும், சாதனை யையும், வசூலையும் பெற்று தந்த* முதல் கதாநாயகன் மக்கள் திலகமே! ராஜகுமாரி திரைப்படம் மூலம் ஜூபிடர் நிறுவனம் தலை நிமிர்ந்து நின்றது.
1947 ல் தமிழ் பட உலகில் புதிய கதாநாயகனாக புரட்சி நடிகர்*
எம் ஜி ஆர் வலம் வந்த ராஜகுமாரி மாபெரும் வெற்றி என எங்கும் முரசு கொட்டியது.
மதுரை சிந்தாமணி திரையரங்கில் 112 நாட்கள்... திருச்சி வெலிங்டன் திரையரங்கில் 147 நாட்கள் மற்றும் வேலூர், சேலம், கோவை, நெல்லை நகரங்களில் 100 நாட்களை கடந்து பெங்களூரில் நகரிலும் 100 நாட்களை வெற்றிகொண்ட திரைப் படமாக ராஜகுமாரி காவியம் திகழ்ந்தது.
சிறந்ததொரு திரைப்படமாக ராஜகுமாரி தென்னக மெங்கும் பவனி வந்தது. தமிழக திரை உலக வரலாற்றில் 30 திரையரங்குகளில் முதன் முறையாக திரையிடப்பட்டது அதன் பின்பு 18 திரையரங்குகளில அதிகமான பிரிண்டுகள் போடப் பட்டு மொத்தம் 48 திரையரங்கு களில் ராஜகுமாரி திரைப்படம் வெற்றிகரமாக ஒடியது.*
எவருடைய சிபாரிசும் இல்லாமல் தனிப்பெரும் கதாநாயகனாக தனித்து நின்று வெற்றியைக் கண்ட முதல் கதாநாயகன்.... சுதந்திர இந்தியாவின் முதல் கதாநாயகன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரே !
தான் நடித்த முதல் திரைப்படத்தி லேயே வீரத்தையும், கருத்தையும், நல்ல காட்சிகளையும், நல்ல பாடல்களையும், கொள்கைப்படி விதைத்த முதல் கதாநாயகன் மக்கள் திலகம் எம். ஜி.ஆர் ஒருவரே.........
orodizli
11th September 2020, 12:47 PM
எம்.ஜி.ஆரை தொட முயன்று அடித்து வீசப்பட்டேன் - ஜேப்பியார்.
" 1954 ஆம் ஆண்டில் நான் S S L C படித்து முடித்திருந்தேன்.பெண்களை தொட்டுப் பார்க்க துடிக்கும் வயது அது. ஆனால் நான் தொட்டுப் பார்க்க விரும்பியதோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை. அப்படி ஒரு அழகு, தேஜஸ் அவரிடம். 'இன்பக்கனவு' நாடகம் நடந்தபோது மேடைக்கே போய் விட்டேன். நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அருகில் போய்விடலாம் என்று முயன்றால் அடித்து தொலைதூரம் வீசப்பட்டேன்.அப்படி யொரு அடியை அதற்கு முன் நான் வாழ்வில் பெற்றதில்லை. அடிக்கு பயந்து எம்.ஜி.ஆரைத் தொடும் ஆசையை விட்டுவிடவில்லை.'நாடோடி மன்னன்' வெற்றி விழாவிலும் எம்.ஜி.ஆரைத் தொட முயன்று முன்பைவிட வலுவான அடி, உதை கிடைத்தது.
1962ல் எனக்குத் திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எம். ஜி.ஆரைக் காண பாலர் அரங்கம் (கலைவாணர் அரங்கம்) சென்றேன். குழந்தையோடிருந்தால் எப்படியும் அங்கு நடைபெறும் விழாவுக்கு வரும் அவரை நெருங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு. அது வீண் போகவில்லை. என்னைப் பார்த்ததும் அருகில் வரச் சொன்ன எம்.ஜி.ஆர். 'உன் குழந்தைக்கு பெயர் சூட்டத்தானே கொண்டு வந்திருக்கிறாய் ? ' என்று கேட்டார். நானும் ஆமாம் என்று தலையாட்டினேன். "என்ன பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறாய் ? " என்று கேட்டார். "நீங்களே ஒரு பெயர் சூட்டிவிடுங்கள் " என்றேன். "இல்லை பெற்றோர் கருத்து தெரிந்து தான் சொல்வேன்" என்றார். விடாமல் நானும் "ராஜேஸ்வரி" என்ற பெயரைச் சொன்னேன். "விஜய ராஜேஸ்வரி" என்று பெயர் சூட்டினார். அதற்கு பின் எம்.ஜி.ஆரிடம் வந்துவிட்டேன். எனது வாழ்க்கையே அவரோடுதான் என்றானது" - AVM நினைவு அறக்கட்டளை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சொற்பொழிவில் 'சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசியதிலிருந்து - "
'#இதயக்கனி' ஆகஸ்ட் 2008 இதழிலிருந்து .
18 -06 -2020 திரு ஜேப்பியாரின்
4 ம் ஆண்டு நினைவு நாள்.
Ithayakkani S Vijayan.........
orodizli
11th September 2020, 01:05 PM
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது ... பாடலில் நடன அசைவுகளில் புரட்சித் தலைவர் கலக்கியிருப்பார். இன்னொன்று முக்கியமாக கவனிக்க வேண்டியது தலைவரின் அற்புதமான நடிப்பு. சண்டைக் காட்சிகள், இயக்கம், கேமரா கோணம், இசையறிவு ஆகிய அவரது பன்முகத்தன்மைகைள் பேசப்பட்ட அளவுக்கு அவரது நடிப்பு பேசப்படவில்லை. இந்தப் படத்தில் முருகப்பனாக வரும்போது கிராமத்தானாகவே வாழ்ந்திருப்பார். பெரும்பாலான நடிகர்கள் கைகளை என்ன செய்வதென்று, எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல், அல்லது ஸ்டைல் காட்டுவதாக நினைத்து கோமாளித்தனம் செய்வார்கள். ஆனால், இதில் கிராமத்தானாக வரும்போது பல காட்சிகளில் தோளில் கிடக்கும் துண்டின் நுனியை இரு பக்கத்திலும் தலைவர் பிடித்திருக்கும் அழகே அழகு. நவநாகரிக அழகப்பனாக மாறியபிறகு அதற்கேற்ற நடை, உடை, பாவனை ஸ்டைல், அன்று வந்ததும் இதே நிலா பாடலில் நளின அசைவுகள், சரோஜா தேவி வீட்டில் வந்து அமரும் கெத்து என்று வித்தியாசத்தில் அமர்க்களப்படுத்தியிருப்பார். மறுபடியும் கண்ணென்ன... பாடலில் குடுமி வைத்தபடி கிராமத்தானின் நடன அசைவுகளை காட்டியிருப்பார். இவ்வளவையும் மிகையில்லாமல், அலட்டல் இல்லாமல், ஆ... ஓ... ஊ.... என்று கத்தாமல் வித்தியாசம் என்ற பெயரில் முகத்தைக் கோணாமல் இயற்கையாக நடித்திருப்பார். .........
orodizli
11th September 2020, 01:51 PM
பொன்மனச் செம்மலின் காவியங்களின் மகத்தான சாதனையில் சென்னை நகரம்..
1964 ஆம் ஆண்டு வரை சென்னையில் அதிக வசூல் பெற்ற ஒரே படமாகத் திகழ்ந்தது. எம்.ஜி.யார். பிக்சர்ஸின்*
புரட்சி நடிகர் எம் ஜி ஆர் வழங்கும் நாடோடி மன்னன்*
திரைக்காவியம் ஆகும்.
அதன் பின் 1965 ஆம் ஆண்டு எங்கவிட்டுப்பிள்ளை திரைக்காவியம் முதன் முறையாக 10 லட்சத்தை கடந்து 13 இலட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்க வீட்டுப் பிள்ளையை தொடர்ந்து 1969 ல் எம் .ஜி.யார் பிக்சர்ஸின் இரண்டாவது தயாரிப்பான அடிமைப்பெண் காவியம் 13 லட்சத்திற்கும் மேல் வசூலைக் கொடுத்த இரண்டாவது காவியமாக திகழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் திரைப்படமும் 13 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது.**
மூன்று திரைப்படங்களும்*
13 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது மக்கள் திலகத்திற்கு மட்டுமே.
1971ம் ஆண்டு வெளியான ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் சென்னை நகரின் 20 வாரத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்து தென்னக ரீதியில் முதன்மை பெற்ற காவியமாக திகழ்ந்தது..........
orodizli
11th September 2020, 01:54 PM
மக்கள் திலகத்தின் மூன்றாவது தயாரிப்பான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் தென்னக திரைப்பட உலகில் 23 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்து........
1978 ஆம் ஆண்டு வரை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாத சாதனையாக உலகம் சுற்றும் வாலிபன் காவியம் திகழ்ந்தது.
1978 ஆம் ஆண்டு வரை சென்னை நகரில் முதன்மை பெற்ற திரைப்படங்கள்*
உலகம் சுற்றும் வாலிபன்*
23 லட்சத்தை கடந்தது.....
இதயக்கனி திரைக்காவியம்*
100 நாளில் 20 லட்சத்தை நெருங்கியது.
மூன்றாவது 100 நாளில்*
மீனவ நண்பன் திரைக்காவியம்*
18 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.
நான்காவதாக ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 17 லட்சத்தை நெருங்கி வெற்றியைத் தொட்டது.
அடுத்து.....*
இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம் 100 நாளில்*
16 லட்சத்தை தொட்டு சாதனை படைத்தது.
அடுத்து*
பல்லாண்டு வாழ்க திரைக்காவியம் 100.நாளில்*
15 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.
மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் வசூலில் பெரும் ஊழல் நடந்தது.*
2 இலட்சம், 3 இலட்சம் அதிகமாகக் கூட்டி பொய்யான வசூலைக் கொடுத்து பொய்யான தகவல்களை தந்து விளம்பரப்படுத்தி போலியான வாழ்க்கையை தன் திரைப்படங்களில் நிரூபித்த நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் மக்கள் திலகமே என்றும் வசூல் சக்கரவர்த்தியாக உண்மையாக திகழ்கின்றார்..
மேலும் தலைநகர் சென்னையில் குறைந்த நாளில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திய காவியங்கள்*
நீதிக்கு தலைவணங்கு*
உழைக்கும் கரங்கள்*
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் போன்றவையாகும்.
* மக்கள் திலகத்தின் உண்மையான நிலவரத்தை எடுத்துரைப்போம்!*
*பொய்யர்களின் முகமூடியைக் கிழித்தெறிவோம்!*
*பொன்மனச் செம்மலின் காவியங்களின் புகழை பட்டொளி வீசி பறக்க விடுவோம்!
இந்தியா திரையுலகில்
அசைக்க முடியாத சாதனையில்
ஒரே ஒரு உண்மையான*
நிஜ ஹீரோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே!.........
orodizli
11th September 2020, 06:57 PM
#தமிழகத்தின்_தனித்தன்மை:
Behind woods சேனலுக்காக Anchor கோபிநாத் தொழிலதிபர் சுரேஷ் சம்மந்தம் அவர்களை நேர்காணல் செய்த வீடியோ ஒன்றை கண்டேன்!
தமிழகத்தின் தனித்தன்மை பற்றி
அவர் சொன்ன 4 விஷயங்கள்:-
1.தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலை கள் அதிகம்! (குஜராத்திலோ, மஹாராஷ்டிராவிலோ அல்ல?)
இங்கு 38,000 தொழிற்சாலைகள் உள்ளன! 23-லட்சம்பேர் பணியாற்றி
வருகின்றனர்!
2-வது இடம் மஹாராஷ்டிரா 28,000/அவற்றில் 18லட்சம்பேர்தான்
வேலை செய்கின்றனர்!
(தமிழகத்தில் பத்தாயிரம் அதிகம்! அந்தத் தொழிற்சாலைகள் சிறிய தொழிற் சாலைகளுமல்ல!
23-லட்சம் பேர் அவற்றில் வேலை செய்கின்றனர்!)
எட்டு விமான நிலையங்கள் உள்ள ஒரே மாநிலமும் தமிழகம்தான்!
2.தமிழகத்தில் காமராஜர்காலத்தில் 40 கல்லூரிகள் என்றால்? இப்போது 1000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன!
கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள தேனி மாவட்டத்திலேயே 30கல்லூரி கள் உள்ளன!
உயர்கல்வி பயிலுவோர் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்-49% (மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சில யூனியன் பிரதேசங்களின் சதவீதத் தை தமிழகத்துடன் ஒப்பிட கூடாது)
2030-ல் இந்திய அரசு எப்பாடுபட்டாவது அடைய வேண்டும் என்று நினைக்கிற இலக்கை,5ஆண்டுகள் முன்பாகவே தமிழகம் சர்வ சாதாரணமாகத் தொட்டிருக்கிறது!
நாம் 15 ஆண்டுகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருக்கிறோம்!
3.சுகாதாரத்தை ஒப்பீடு செய்தால்? அதற்கான அளவீடு குழந்தைகளின் இறப்பு விகிதம் தான்! இந்தியாவில் சராசரியாக1000-க்கு 34 குழந்தை கள் இறந்தால், இங்கே 1000-க்கு 17 குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன!
நாட்டின் தலைநகரமானடெல்லியை விட இந்த சதவீதம் குறைவு!
4.மனிதர்களின் மகிழ்ச்சிகுறியீட்டிற் கான அளவீடாக பொருளாதார நிபுணர்கள் கருதுவது தனிநபர் பொருளாதார வேறுபாடுகள் தான்!
இந்திய அளவில் ஒப்பீடே இல்லாது தமிழ்நாடு முன்னணியில் உள்ளது! இங்குதான் நடுத்தர மக்கள் 80% பேர் உள்ளனர்!
கல்வி மற்றும் தொழில்துறையில் நிகழ்ந்த துரித வளர்ச்சியினால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது!
எல்லோருடைய வாழ்க்கைத் தரமும் கூடியிருப்பதால்தான் இங்கு சாதாரண வேலைகளைச் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை!
ஹிந்தி படித்தவர்கள் (பள்ளிக்கு சென்று படிக்க இயலாதவர்கள்) இங்கே கூலி வேலை செய்ய வருகின்றனர்!
கண்டிப்பாக இதற்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நான்கு முதல்வர்களும், இங்கு நிலைபெற்றிருக்கிற சமூக நீதிக் கொள்கையும்தான் காரணம்!
அண்ணா விதைத்த சிந்தனைகள், அதன் தொடர்ச்சியாகவே, தமிழக அரசியல் சூழலை சரியான திசை யில் கலைஞர் நகர்த்திச் சென்றது, வரலாற்றின் அதிசயம் தான்!
#எம்ஜிஆர்_ஒருபடி_மேலே_சென்று_நூற்றுக்கணக்கான_தொழிற ்கல்வி (என்ஜினியரிங்) கல்லூரிகளுக்கு அனுமதியளித்தார்!
ஜெயலலிதாவும், அரசு நிர்வாகம் மற்றும் கொள்கைகளில் அதே பாட திட்டத்தையே பின்பற்றினர்!
காமராஜரை மட்டுமே உயர்வாகப் பேசி விட்டு, பிறரை எந்த ஆதாரமும் இல்லாமல் தவறாகச் சித்திரிப்பது உள்நோக்கம் கொண்ட திரிபு!
சொல்லப்போனால் #காமராஜர் காலத்தில் மிகச்சிறிய அடித்தளம் மட்டுமே போடப்பட்டிருந்தது!
#மாபெரும்_மாளிகையைக்_கட்டி_எழுப்பியது_திராவிட_இயக் கங்களே!
தமிழ்நாட்டை ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும்!
இவ்வளவு தெளிவான புள்ளி விவரங்களுக்கு பிறகும் இளைஞர் கள் சிலர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்புவது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்!
"#காமராஜர்_ஆட்சி_அமைப்போம்"
"#திராவிடத்தால்_வீழ்ந்தோம்"
''#சிஸ்டம்_சரியில்லை”
"#மாற்று_வேண்டும்"
"#திராவிடக்கட்சிகளே_50ஆண்டுகளாக_ஆண்டுகிட்டு_இருக்கா ங்க",
"#நான்_வலதும்_இல்லை_இடதும்_இல்லை_மய்யமா_சிந்திப்போம ்"
என்று ஒரு பம்மாத்து!
இவையெல்லாமே, அறிவும், விழிப்புணர்வும் நிரம்பிய இந்த மண்ணில் கால் பதிக்கவே துப்பில்லாத ஒரு பாடாவதி கம்பெனி மாறுவேடத்தில் அனுப்பி உள்ள டம்மி நடிகர்களின் குரல்கள் தான்!
நீட் தேர்வு, இட ஒதுக்கீட்டைக் காலி செய்தல், ஹிந்தித்திணிப்பு, மதவாத அரசியல், புதிய கல்விக் கொள்கை ஆகிய அனைத்துமே தமிழகத்தை வடமாநிலங்களைப் போல் மாற்றி விடும்!
அன்பார்ந்த இளைஞர்களே! வரலாற்றையும்,புள்ளிவிபரங்களை சரியாக தெரிந்து கொண்ட பிறகு அரசியல் பேசுங்கள்!
#வாட்ஸ்அப்_வதந்திகளை_நம்பாதீர்
மிகப்பெரிய வளர்ச்சி கண்ட மாநிலத்தின் எதிர்காலத்தை சாதி- மத உணர்வுகளில் சிக்கி வீணாக்கி விடாதீர்கள்!
தமிழகத்தின் அரசியல் இதுவரை ஆக்கப்பூர்வமான அரசியலாகவே இருக்கிறது!
#மாற்று_என்பதே_மிகப்பெரிய_வலை
அதில் சிக்கிக் கொண்டால் இன்னொரு உத்திரபிரதேசமாக நாம் மாறி விடுவோம்!
தமிழக அரசியலே, இந்தியாவின் வழக்கமான அரசியலுக்கெதிரான மாற்று அரசியல்தான் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்!
இனியும் திராவிட ஆட்சிமுறையைப் பற்றியே, குறைசொல்லி திரியாமல் ஊழலற்ற ஆட்சியைத் தரக்கூடிய, நிர்வாகத் திறமை மிகுந்த, சுயநலம் அற்றதோர் அரசியல் தலைமையை கண்டுபிடியுங்கள் இளைஞர்களே!
#நன்றி: D L Nadarajan, Chennai.........
orodizli
11th September 2020, 07:06 PM
1967ல் திராவிட முன்னேற்ற கழகம்
179 தொகுகளை வென்று
ஆட்சியை பிடித்தது ......
பரங்கிமலை தொகுதி வெற்றி வீரர் ஆனார் எம்ஜிஆர்
பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைத்து முதலமைச்சர் ஆனார்
இயற்கையின் அழைப்பை ஏற்று 1969ல் அண்ணா வின்னுலகம் சென்றார்
1971 ல் அண்ணாவின் மறைவிற்க்கு பின்நடைபெற்ற பொதுத் தேர்தலில்
184 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்து திமுகழகம்
அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது எம்ஜிஆர்
காலங்கள் மாறியது காட்சிகள் மாறியது
அண்ணாவின் அரசு
கலைஞர் அரசாங்கமாக மாறியது
சர்வாதிகாரபோக்கு திமுகவில் நிலவியது
கருத்து வேறுபாடுகள் தோன்றியது.
எதிர் கட்சிகள்
ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறின.
எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள்
தி.மு.கழகத்தினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்.
தங்கள் கை சுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் பேசினார்
இதனால்
1972ல் தூக்கி எறியப்பட்டார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரை நீக்கியது மட்டுமின்றி அவரின் ரசிகர்கள் நாடு முழுவதும் தாக்கப் பட்டார்கள்
ரசிகர்மன்றங்கள் பிய்த்து எறியப்பட்டது ...
எம்ஜிஆர் மன்றங்கள் தீக்கிரையானது...
எம்ஜிஆரை அச்சுறுத்தி பார்த்தார்கள் ...
தனது ரசிகன் தக்கப்படும் செய்தி கேட்டு கவலையடைந்தார் ...
வெகுண்டு எழுந்தார் எம்ஜிஆர்...
உருவானது அண்ணா திமுக
திமுகழத்திற்க்காக உழைத்து அண்ணாவை அரியணையில் அமர்த்தியது எம்ஜிஆர்
எம்ஜிஆரின் மக்கள் சக்தியை உணர்ந்து இருந்தார் பேரறிஞர் அண்ணா .
திமுகழகத்திற்க்காக தன் உயிரையும் கொடுக்க தயார் என்று முழங்கியவர் எம்ஜிஆர்
நான் இறந்து போனாலும் என் மீது கருப்பு சிவப்பு இரு வண்ணக் கொடிதான் போர்த்தப்பட வேண்டும் என்று உணச்சி பொங்க பேசியவர் எம்ஜிஆர்
அப்படிப்பட்ட எம்ஜிஆரை தூக்கிஎறிந்ததுதோடு
ரசிகர்கள்மீது தாக்குதல் நடைபெற்றதால்தான்
அண்ணாவின் பெயரில்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவானது
இன்று வரை புரட்சித் தலைவர் mgr என்கிற மூன்று எழுத்து நாயகனால் வலுவான இயக்கமாக இருக்கிறது என்றால் ...
அதற்கு mgr என்கிற மூன்று எழுத்து மந்திரம் தான் காரணம்............
orodizli
11th September 2020, 07:11 PM
அதிகம் படிக்காதவர் என்று சொல்லப்பட்ட
இவர்தான் மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிமுறைகளை அதிகம் போதித்தவர்....
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பர்த்தவுடன் முதல் வணக்கம் வைப்பதுடன்
வணங்கி அன்போடு பேசக்கூடியவர்....
அடுக்கு மொழியில் பேசமாட்டார் ஆனால்
மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அடக்கமாக பேசி நெஞ்சத்தை அள்ளுவார்....
வக்கீல்களிடம் என் மகன் எம்.ஜி.ஆர் ரசிகன் தவறுசெய்திருக்கமாட்டான் என்று தாயே
வாதாடி ஜெயித்த வரலாறு இவருக்கு
மட்டுமே உண்டு...
அந்த பாரதரத்னா எம்.ஜி.ஆருடைய ரசிகர் என்று சொல்வதைவிட எங்களுக்கு பெரிய
கௌரவம் இல்லை.....
அவரைத் தவிர வேறு எவரையும் நாங்கள்
நினைப்பதுகூட இல்லை.....
வாழ்க புரட்சித் தலைவர் புகழ் .............
orodizli
11th September 2020, 07:14 PM
தொண்டனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படியும் ஒரு தலைவரா..!?
சென்னை- திருச்சி சாலையில் எம்ஜிஆரின் 4777 அம்பாசிடர் கார் விரைந்துகொண்டு இருக்கிறது. வழக்கம்போல ஓட்டுனர் அருகே முன்சீட்டில் அமர்ந்திருக்கும் எம்ஜிஆருக்கு ஒரே ஆச்சரியம்!.காரணம் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் மூன்று பிரமுகர்களும் திடீரென ஊமையாகி விட்டார்கள்.
எம்ஜிஆர் நீண்ட தூரப்பயணங்களில் வழக்கமாக உடன் வரும் நண்பர்கள்தான் அவர்கள்.கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள் , பல ஆண்டுகளாக அவரோடு இரவு பகல் பாராமல் பயணித்துக்கொண்டு இருப்பவர்கள்தான்.
அன்றும் அவர்களை வழக்கம்போல வீட்டுக்கு அழைத்திருந்தார். எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள்,சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போதுதான் எம்ஜிஆர் அறைக்குள் போய் ஒரு பணகட்டும் சிறு நகைப் பெட்டி ஒன்றுமாக எடுத்துக்கொண்டு வந்து 'வாங்க ஒரு கல்யாணத்துக்கு போகலாம்' என்று மூவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார்.கார் தாம்பரம் வரும் வரை எல்லோரும் சாதாரணமாக பேசிக்கொண்டுதான் வந்தார்கள். எம்ஜிஆர், திடீரென நினைத்துக் கொண்டவராக,' ஆமா,நாம யார் வீட்டுக் கல்யாணத்துக்குப் போறோம் தெரியுமா? என்று பின் சீட்டில் இருந்தவர்களைப் பார்த்து கேள்வியையும் கேட்டுவிட்டு ,பதிலையும் அவரே சொன்னார் '............!' திருச்சி அருகில் இருக்கும் ஒரு ஊரைச்சேர்ந்த பிரமுகரின் பெயரைச்சொல்லி, அவர் வீட்டுக்கு கல்யாணத்துக்குத்தான் போய்கிட்டு இருக்கோம்' என்றார். அதுவரை கலகலப்பாக பேசிக்கொண்டு வந்த மூவரும், அந்த விநாடி முதல் அவர்கள் மூவரும் ஊமயாகி விட்டார்கள்.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்,ஆனால் வார்த்தையும் வரவில்லை,மனதிலுள்ளதை தலைவரிடம் சொல்லும் தைரியமும் வரவில்லை.
இதை உணர்ந்து கொண்ட எம்ஜிஆர், என்ன விசயம் என்று கேட்க,மூவரும் வண்டி விழுப்புரம் போகும்வரை அந்தக் கல்யாண வீட்டுக்காரரின் மேல் அடுக்கடுக்காய் குற்றம் சாட்டுகிறார்கள்.
எம்ஜிஆர் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி கையைக் கட்டிக்கொண்டு சிந்திக்கிறார். அப்போதெல்லாம் அது சிங்கிள் ரோடு பெரும்பாலான வாகனங்கள் எல்லாம் போய்விட்டிருந்த நேரம்.அப்போதே மணி இரண்டாகிவிட்டது. சில் வண்டுகளின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அன்றைய பிரமுகர் வீட்டுக் கல்யாணத்திற்கு போகக் கூடாது என்று நண்பர்கள் சொல்வதில் நியாயமிருக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கையில்,சாலையின் இடதுபுறம் தூரத்தில் ஒரு இரட்டை இலை சீரியல் லைட்டுகள் எரிவது எம்.ஜிஆரின் கண்ணில் படுகிறது.
எம்ஜிஆர் காரில் ஏறிக்கொண்டு இரட்டை இலை வெளிச்சம் தெரிந்த இடத்தை நோக்கி காரை செலுத்தச் சொல்கிறார்.எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருக்கிறார்கள். கொஞ்ச தூரம் போனதும் இடது புறமாக பிரியும் ஒரு கிராமத்து சாலை பிரிகிறது. எம்ஜிஆர் அந்தச் சாலையில் காரைத் திருப்பச் சொல்கிறார்.மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் கண்கள் மட்டும் அந்த இரட்டை இலை சீரியல் செட்டையே பார்த்துக்கொண்டே இருக்கின்றன.
நேரம் ஆக ஆக அந்த இரட்டை இலை பிரகாசமாகிக்கொண்டே வருகிறது. இப்போது சாலையின் வலதுபுறத்தில் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் இருந்து அந்த இரட்டை இலை மட்டுமல்ல ' வெல்கம்' என்கிற சீரியல் செட்டும் தெரிகிறது. எம்ஜிஆர் காரை அங்கே விடச்சொல்கிறார்.கார் அந்த ஊருக்குள் நுழைகிறது. தெருநாய்கள் கூட உறங்கிவிட்ட நேரம். கார் அமைதியாகப் போய் நிற்கிறது. யாரோ ஒரு எளிய அ.தி.மு.க தொண்டனின் வீடு என்று தெரிகிறது,சின்னஞ்சிறு தென்னை ஓலை பந்தல்.அங்கங்கே சுருண்டு தூங்கும் கல்யாண விருந்தினர்கள். எதிர் வீட்டு பக்கத்து வீட்டு தின்னையில் உறங்கும் சொந்தங்கள்.
எம்ஜிஆர் காரை விட்டு இறங்குகிறார்.ஒரே ஒரு கட்டில் வாசிலில் போடப்பட்டு இருக்கிறது.அதில் ஒரு ஒல்லியான இளைஞன் தூங்கிக்கொண்டு இருக்கிறான். அவன் கையில் கட்டப்பட்டு இருக்கும் காப்பு அவன்தான் மணமகன் என்று காட்டுகிறது.எம்.ஜி.ஆர் குனிந்து அவன் கன்னத்தை தட்டுகிறார்,கண்விழித்துப் பார்த்த அவன் போட்ட ' தலைவரே' என்கிற கூச்சலில் அந்த ஊரே விழித்துக்கொள்கிறது.
அடுத்த விநாடி எல்லா விளக்குகளும் எரிகின்றன.யாருக்கும் என்ன நடக்கிறது என்றோ என்ன செய்யவேண்டும் என்றோ புரியவில்லை.ஓரமாக அடுக்கப்பட்ட இரும்பு மடக்கு சேர்களில் இருந்து ஒன்றை எடுத்து வந்து யாரோ போட எம்.ஜி.ஆர் அதில் அமர்ந்துகொள்கிறார்.அங்கிருந்த அனைவருக்கும் நடப்பது அத்தனையும் கனவா அல்லது நிஜமா என்று ஒரு பக்கம் குழப்பமாக இருந்தாலும் சிலர் 'தலைவரே. என்றும் 'எந்தெய்வமே..' என்று பரவசத்தில் பெருங்குரலெடுத்து கத்துகிறார்கள்.
அவர்களை மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள விடுகிறார். சற்று நேரத்தில் அமைதியாகிறது அந்த இடம்.ஒருவர் மட்டும் எம்.ஜி.ஆர் அருகில் வந்து "அய்யா இப்படித் திடுதிப்புன்னு வந்திட்டிங்க..!? என்கிறார் பிரமிப்பு விலகாமல்." முகூர்த்தம் எத்தனை மணிக்கு ?" என்கிறார் எம்.ஜி.ஆர். " எங்க சாமியே வீட்டுக்கு வந்திருக்கு. இனி எல்லா நேரமும் முகூர்த்த நேரந்தானே " என்கிறார் பவ்வியம் காட்டியவர்.அப்புறம் என்ன?... திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களும்,மணமக்களும் உடனடியாக குளித்து அலங்கரித்துக்கொள்ள, அப்போதே திருமணம் நடைபெற்று முடிகிறது.
தன்னை கனவிலும் எதிர்பார்க்காத ஒரு தொண்டன் வீட்டில் அழையாத விருந்தாளியாக நுழைந்து,அதிர்ச்சி விலகாத மணமக்கள் தாலிகட்டும் வரைக் காத்திருந்து,திருச்சி பிரமுகருக்குத் தர கொண்டுவந்த சங்கிலிகளை இருவருக்கும் பரிசளித்து,மணமகன் கைகளில் அந்தப் பணக்கட்டையும் தினித்துவிட்டு கிளம்பினாராம் எம்ஜிஆர்.அதனால்தான் அவர் 'புரட்சித்தலைவர். 'பொன்மன செம்மல்'!.........
orodizli
11th September 2020, 07:54 PM
#எம்ஜிஆர்_சுளிர்_பதில்கள்...
#ஒரு_ஃப்ளாஷ்பேக்
நீங்கள் நடிக்க வந்தது ஏன்?
வறுமைதான்.
நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?
வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.
முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?
ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை.
மேடையில் எப்படி அனுபவம்?
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.
பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?
பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.
உங்களுக்கு பாட வருமா?
பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.
சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?
வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லே
நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?
நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.
நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.
பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?
நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே' என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.
உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?
சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.
ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?
இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்
மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?
தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.
கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?
நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.
உங்களுக்கு குல தெய்வம் உண்டா?
காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.
உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.
நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.
அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?
கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.
ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.
தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?
சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.
சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்.
சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?
இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது.
ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?
ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும். மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி. அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.
சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?
ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.
பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?
தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.
வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?
விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.
உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?
வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.
கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?
அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்.
பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?
படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.
திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?
அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்' என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.
வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?
தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு' என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.
சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?
என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.
எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?
இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது.
சினிமாவுக்கு புதுசு புதுசாக நடிகர் நடிகைகள் வருவது நல்லதா?
நிசயம் நல்லது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பயிற்சி பெறாதவர்கள் வந்தால் நீடிக்க முடிவதில்லை. இப்படியே போனால் நடிகனுக்கு பஞ்சம் வந்து விடும்.
அதற்காக நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?
செய்ய வேண்டும். 1948-ம் ஆண்டிலேயே இது பற்றி ஜூபிடர் சோமுவுடன் பேசி இருக்கிறேன். புதிதாக நாடக கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் அவ்வப்போது நாடகத்திலும் நடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டேன். அது நடக்கவில்லை.
அதோடு விட்டு விட்டீர்களா?
நடிகர் சங்கத்தில் இதை விவாதித்தோம். சிறந்த எழுத்தாளர்களை அழைத்து நாடகம் எழுத சொல்வோம். அமெச்சூர் நாடக நடிகர்களை அதில் நடிக்க சொல்வோம். பட முதலாளிகள் அந்த நாடகங்களை பார்த்து திறமையானவர்களை தேர்வு செய்யட்டும். அவர்களுக்கு சினிமா வய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சங்கத்தில் தீர்மானமே போட்டோம்.
அதுவும் நடக்கவில்லையா?
நடக்கவில்லை. பிறகு பட முதலாளி என்ற வகையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு யோசனை சொன்னேன். ஒரு நடிகனை ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது. அப்படி உச்சவரம்பு வைத்தால் புது நடிகர்கள் வர வழி கிடைக்கும் என்று சொன்னேன். இப்படி பல யோசனைகள் சொல்லியும் ஏனோ நடக்கவில்லை.
நடிகர் சங்கம் மூலமாக நடிப்பு பயிற்சி அளிக்கலாமே?
அதையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் நாடக போட்டி நடத்தி, அதில் முக்கியமான வேடங்களை புதுமுகங்களும் சின்னச் சின்ன வேடங்களை பிரபல நடிகர்களும் ஏற்று நடிக்க வேண்டும். புதிய நடிகர்களின் திறமையை அதில் வெளிப்படுத்தி சினிமா உலக முக்கியஸ்தர்கள் அதை அங்கீகரிக்க செய்ய் வேண்டும் என்று முயற்சி செய்தேன். பலரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் சில முக்கிய புள்ளிகள் இடையூறாக இருந்து திட்டத்தையே நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். நடிப்புக்கென்று தனியாக பள்ளிகள் இல்லாததால் சங்கம்தான் அதை எடுத்து செய்ய வேண்டும்.
உங்களை போல மற்ற நடிகர்கள் ஏன் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லை?
வாரியெல்லாம் நான் வழங்குவதில்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லாருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கு ஏற்ப கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?.........
orodizli
11th September 2020, 08:00 PM
1000 பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் முத்துலிங்கம்
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த படங்களுக்கு பாடல் எழுதியவர், கவிஞர் முத்துலிங்கம்.
இவருடைய சொந்த ஊர் சிவகங்கை. பெற்றோர்: சுப்பையா சேர்வை - குஞ்சரம் அம்மாள்.
சிவகங்கையில் உள்ள அரசர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.
சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சுரதா நடத்திய "இலக்கியம்'' என்ற கவிதை இதழில், இவருடைய முதல் கவிதை பிரசுரமாயிற்று.
1958-ல் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்'' படம் வெளிவந்தது. அந்த படம் பற்றி, சுரதா ஒரு கவிதைப்போட்டி நடத்தினார். "நாடோடி மன்னன் போல் நல்ல திரைப்படமும் ஓடோடி வாரா உயர் தமிழில்...'' என்று தொடங்கும் கவிதை எழுதி பரிசு பெற்றார், முத்துலிங்கம்.
இந்தப் பாடலைப் பார்த்த முத்துலிங்கத்தின் நண்பர்கள், "கவிதை நன்றாக இருக்கிறது. சுரதா மூலம் எம்.ஜி.ஆரை சந்தித்தால், நீயும் சினிமாவுக்குப் பாடல் எழுதலாம்'' என்று கூறினார்கள். நண்பர்கள் கொடுத்த ஆர்வம்தான், திரைப்பட பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசையை முத்துலிங்கத்தின் உள்ளத்தில் வளரச் செய்தது.
படிப்பு முடிந்தது, திரைப்படக் கவிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் முத்துலிங்கம் சென்னைக்கு வந்தார். ஆனால், உடனடியாக அந்த ஆசை நிறைவேறவில்லையென்றாலும், "முரசொலி'' பத்திரிகையில் துணை ஆசிரியர் ஆனார்.
அப்போது கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்தக் கட்டத்தில், வசனகர்த்தா பாலமுருகனின் நட்பு கிடைத்தது. அவர் முயற்சியால், டைரக்டர் மாதவனுக்கு சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' என்ற படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு, முத்துலிங்கத்துக்கு கிடைத்தது.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது இளையராஜா அவரிடம் உதவி இசை அமைப்பாளராக இருந்தார்.
இளையராஜா போட்டுக்காட்டிய மெட்டுக்கு, முத்துலிங்கம் "தஞ்சாவூருச் சீமையிலே - கண்ணு தாவி வந்தேன் பொண்ணியம்மா'' என்ற பாடலை எழுதி, திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
இந்தப் படத்தில் சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா, விதுபாலா ஆகியோர் நடித்தனர். விஜயகுமாருக்கு இது முதல் படம்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி, அ.தி.மு.க.வை தொடங்கியபோது, முத்துலிங்கம் அ.தி.மு.க.வில் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்துக்கு முத்துலிங்கம் சென்றார். எம்.ஜி.ஆர். மாடியில் இருந்தார். அவருடன் `இன்டர்காம்' டெலிபோனில் முத்துலிங்கம் பேசினார்.
"நீங்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகிறீர்கள். மானேஜர் குஞ்சப்பனிடம் சொல்லி உங்களுக்குக் கொஞ்சம் பணம் தரச் சொல்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதற்கு முத்துலிங்கம், "பணம் வேண்டாம். எனக்கு வேலை கொடுங்கள்'' என்றார். "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறியும், முத்துலிங்கம் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.
முத்துலிங்கத்தின் மனதைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., தொடர்ந்து தன் படங்களில் பாட்டு எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த "உழைக்கும் கரங்கள்'' (1976) படத்துக்கு, முத்துலிங்கம் இரண்டு பாடல்கள் எழுதினார்.
"கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்'' என்று தொடங்கும் பாடலை வாணி ஜெயராம் பாடினார்.
"முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார்?'' என்று இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் எம்.ஜி.ஆர். கேட்டபோது, "முத்துலிங்கம் பாடலில் மீட்டரும் சரியாக இருக்கிறது; மேட்டரும் சரியாக இருக்கிறது'' என்றார், விஸ்வநாதன்.
எம்.ஜி.ஆர். நடித்த "இன்றுபோல் என்றும் வாழ்க'' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல் எழுதிக் கொண்டிருந்தார், முத்துலிங்கம். "ஏர்கண்டிஷன்'' அறையில் அவருக்கு சிந்தனையோட்டம் தடைபட்டது. எனவே, அறைக்கு வெளியே வந்து, அங்கிருந்த சவுக்குக் கன்றுகளை தொட்டபடி, பாடலுக்கான கருத்தை சிந்தித்துக் கொண்டே நடந்தார்.
அதைப்பார்த்த பட அதிபர், "என்னய்யா இவன்! மரத்தைப் பிடிக்கிறான், மட்டையைப் பிடிக்கிறான்! பல்லவியை படிக்கமாட்டேன் என்கிறானே!'' என்று கூறினார்.
இது, முத்துலிங்கத்தின் காதில் விழுந்தது. "ஆம். நான் அதைப் பிடிப்பேன், இதைப்பிடிப்பேன். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து, உங்களுக்குப் பிடித்தபடி பல்லவியை எழுதிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு, கோபமாக வெளியேறினார்.
பின்னர் டைரக்டர் கே.சங்கரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் அவரை சமாதானப்படுத்தினார்கள். "சினிமா உலகில், பலரும், பலவிதமாகப் பேசுவார்கள். அதற்காகக் கோபப்பட்டால் முன்னுக்கு வரமுடியாது. பாடல் எழுதுவதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்'' என்றார்கள்.
அதன்பின் முத்துலிங்கம் எழுதிய பாட்டு, "சூப்பர்ஹிட்'' பாடலாக அமைந்தது.
அன்புக்கு நானடிமை - தமிழ்ப் பண்புக்கு நானடிமை - நல்ல கொள்கைக்கு நானடிமை - தொண்டர் கூட்டத்தில் நானடிமை - இதுவே அந்தப் பாடல்.
எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். இசைக்கேற்றபடி கருத்துக்கள் வரவில்லையென்று கருதினால், பாடலை எழுதச்சொல்லி அதற்கேற்ப மெட்டமைக்கச் சொல்வார்.
``மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' படத்திற்குப் பாடல் எழுதும்போது, ஒரு காட்சிக்கான பாடலை, அவருக்கு மன நிறைவு ஏற்படும்வரை எழுத பலநாட்களாகி விட்டன.
"இதில் கவித்துவம் இருக்கிறது; கருத்துக்கள் இல்லை. இதில் கருத்துக்கள் இருந்தாலும், வன்முறையைத் தூண்டுவதுபோல் இருக்கிறது. இதில் எல்லாம் இருக்கிறது என்றாலும், நான் நினைப்பது போல் இல்லை'' என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் குறை கூறிக் கொண்டே இருந்தார். `நான் நினைப்பதுபோல் இல்லை'யென்றால், என்ன நினைக்கிறார் என்று அவர் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லமாட்டார்.
அவர் சொல்லாமலேயே அவர் நினைப்பதை யார் புரிந்து கொண்டு எழுதுகிறார்களோ அவர்கள்தான் அவர் படத்தில் தொடர்ந்து பாடல்கள் எழுதமுடியும். அப்படிப் புரிந்து கொண்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்.
ஒரு நாள் அந்தப் படத்திற்குப் பாடல் எழுத வேண்டிய அந்தக் காட்சிக்கு சில மெட்டுக்களைப் போட்டு அதற்குப் பல்லவியும், அனுபல்லவியும் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள் என்னை எழுதச் சொன்னார். எழுதிய பிறகு அதை `டேப்'பில் அவரே பாடிப் பதிவு செய்து, மைசூரில் இதே படத்திற்காகப் படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று காண்பித்து ஒப்புதல் வாங்கி வாருங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார்.
அதை எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு "எல்லாமே நன்றாக இருக்கிறது. இதை இப்படியே ஒரு பாட்டாக்கி ஒலிப்பதிவு செய்து விடுங்கள்'' என்றார். அந்தப்பாடல் இதுதான்:
"தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்''
இந்தப் பாடல், உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்பக்கூடிய பாடல். அதே நேரம், இலங்கை வானொலியில் 1983-க்குப்பிறகு தடை செய்யப்பட்ட பாடல்! இந்தப்பாட்டின் இறுதியில் "வீரம் உண்டு வெற்றி உண்டு; விளையாடும் களம் இங்கே உண்டு; வா வா என் தோழா; பூனைகள் இனம் போலப் பதுங்குதல் இழிவாகும்; புலியினம் நீயெனில் பொருதிட வாராய்'' என்று எழுச்சியோடு சில வரிகள் வரும்.
இதனால் தடை போட்டார்களோ என்னவோ தெரியவில்லை.''
இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்..........
fidowag
11th September 2020, 09:46 PM
இரங்கல் செய்தி*
-------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*சகோதரர்*திரு.எம்.ஜி.சக்கரபாணி அவர்களின்*மகன் திரு.சந்திரன் உடல் நல குறைவால்*மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை*பலனின்றி உயிர் இழந்தார்*என்ற செய்தி கேட்டு*மிகுந்த துயரமுற்றேன் . அன்னாரின் ஆன்மா சாந்தி*அடைய*இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்*. திரு.சந்திரன் அவர்கள் பிரிவால்*வாடும்*அவரது*குடும்பத்தினர் ,நண்பர்கள் அனைவருக்கும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சென்னை சார்பில்*ஆழ்ந்த இரங்கலையும் ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
orodizli
11th September 2020, 09:49 PM
இலங்கையில் "நீரும் நெருப்பும்" திரைக்காவியம் ஓடிய சாதனைகள்* சில!.........
01.01 1972 ல் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரு வேடங்களில் பவனி வந்த நீரும் நெருப்பும் திரைக்காவியம் கொழும்பிலுள்ள ஜெயின்ஸ்தான் திரையரங்கில் 84நாட்களும் ஈரோஸ் திரையில் 45 நாட்களும் நவா திரையில் ஏழு நாட்களும் காண்பிக்கப்பட்டு மொத்தம் 136 நாட்கள் கொழும்பில் முதல் கட்டமாக ஓடிய திரைப்படம் நீரும் நெருப்பும்.
01.01 1972 ல் யாழ்ப்பாணம் நகரில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. தொடர்ந்து ஆறு காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை. இரண்டாவது நாளில் 5 காட்சி நடைபெற்றது 5 காட்சியும் அரங்கு நிறைந்து சாதனை. தொடர்ந்து நான்கு காட்சிகள் வீதம் காண்பிக்கப்பட்டு மொத்தம் ராஜா திரையரங்கில் 65 நாட்கள் ஓடியது நீரும் நெருப்பும்.
16 .02 .1972 திரிகோணமலை சரஸ்வதி தியேட்டரில் திரையிடப்பட்ட நீரும் நெருப்பும் திரைப்படம் 50 நாட்களை கடந்து சாதனை படைத்தது. இலங்கையில் நீரும் நெருப்பும் திரைப்படம் பல பகுதியில் திரையிடப்பட்டு சாதனையாகும்.
அடுத்து இலங்கையில் ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் 18.2 .72 ல் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. கொழும்பில் 4 திரையில் திரையிடப்பட்டது மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன். கொழும்பு கேப்பிட்டல், கிங்ஸ்லி பிளாசா, சபையர் ஆகிய நான்கு திரைகளில் .....
கிங்ஸ்லி அரங்கில் 20 நாட்களும், பிளாசா திரையில் 35 நாட்களும், சபையர் திரையில் 12 நாட்களும், கேப்பிட்டல் திரையில் 78 நாட்களும் ஓடி கொழும்பில் மொத்தம் 145 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.
யாழ் நகரில் வெலிங்டன் திரை மற்றும் லிடோ திரையரங்கில் திரையிடப்பட்ட ரிக்க்ஷாக்காரன் லிடோ அரங்கில் 29 நாட்களும், வெலிங்டன் தியேட்டரில் 72 நாட்களும் வெற்றி முரசு கொட்டி முதல் வெளியீட்டில் 101 நாட்கள் ஒடியது. ஒரே நாளில் ஆறு காட்சிகள்
காண்பிக்கப்பட்டு 12 காட்சிகளும் அரங்கு நிறைந்து அதன் பின்பு ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது....
இலங்கையில் தொடர்ந்து இடைவெளி இல்லாது வந்து மகத்தான சாதனையை படைத்த இரண்டு காவியங்கள்...
நீரும் நெருப்பும்
ரிக்க்ஷாக்காரன்...
கணேசனின் இரண்டு படங்கள்
ராஜா... ச.சமாளி* சாதனையின்றி கிடந்தது....
மேலே மக்கள்திலகம் செய்த சாதனையை பார்த்து முக்காடிட்டு மூலையில் ஒதுங்கி நின்றனர்.*
தகவல்
அ.டேவிட்
57,டேவிட் ரோட்,
யாழ்பாணம்
இலங்கை.........
orodizli
11th September 2020, 09:52 PM
இந்த ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியிடும் திரைப்படங்களின் வெற்றி, வசூல், நாட்கள் யாவும் மீண்டும் மீண்டும் பல விநியோகஸ்தர்களையும்*
பல திரையரங்குகள் வெளியீட்டை அதிகபடுத்தியுள்ளது.*
"கலங்கரை விளக்கம்" திரைக்காவியம் மாபெரும் வெற்றியை படைத்த மூன்றாவது காவியமாகும்.* இத்திரைப்படம் அடுத்தடுத்து வெளியீட்டில்.....சாதனைகள்* சென்னையில் குறிப்பாக 1995 ஆம் ஆண்டு வரை பகல் காட்சியே இந்த திரைப்படம் திரையிட்ட சரித்திரம் கிடையாது. எப்பொழுதும்* 3 காட்சியில் தான் திரையிடப் பட்டுள்ளது என்பது இத்திரைப் படத்தின் சாதனையாகும்.*
கலங்கரை விளக்கம் திரைக்காவியம் பலமுறை தொடர் வெளியீட்டில் சென்னையில் மட்டும் 100 நாட்களை இணைந்த நாட்களாக கடந்த 50 வருடங்களாக சாதித்துக் காட்டியிருக்கிறது.
1990 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கில்* திரையிடப்பட்டு*
14 காட்சிகள் அரங்கு நிறைந்து அப்பொழுது 77 ஆயிரத்தை வசூலாக கொடுத்த வெற்றி காவியமாக..... கருப்பு வெள்ளை திரைப்படமாக..... கலங்கரை விளக்கம் திகழ்கின்றது.
இப்படி வெற்றிக்கு மேல் வெற்றியை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பல சாதித்துள்ளது.
வரலாறு படைத்த கருப்பு வெள்ளை திரைப்படங்களின் சாதனைகள் மகத்தானது... ...
குலேபகாவலி*
சக்கரவர்த்தி திருமகள் , புதுமைப்பித்தன் மதுரைவீரன் தாய்க்குப்பின் தாரம் நாடோடி மன்னன் மன்னாதி மன்னன்
பாக்தாத் திருடன் விக்கிரமாதித்தன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை கடந்த ஆண்டுகளில் பெற்றுள்ளது.
எந்த நடிகரின் சரித்திரப் படங்களும் இப்படி தொடர் சாதனை புரிந்தது இல்லை.*
1950 லிருந்து 60 காலகட்டம் வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் தென்னக திரை உலகில் பல வெளியீடுகளை சந்தித்து சரித்திரம் படைத்த உள்ளது. ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்* சாதனை செய்தது .
ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்* சாதனை செய்தது என்பது நமக்கு எட்டிய தூரம் வரை எதுவும் தெரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் புதிய சாதனையை படைத்துள்ளது. ஒவ்வொரு திரையரங்கிலும் விதவிதமான சாதனைகளையும் கணித்து வந்துள்ளது.*
மக்கள் திலகம் திரைப்படங்களை வைத்தே பல திரையரங்குகள் வாழ்ந்த காலங்கள் பல...*
1995 முதல் 2019 வரை ...சென்னை மகாலட்சுமி, மேகலா, அகஸ்தியா, சரவணா பாலாஜி காமதேனு, பிராட்வே, ஸ்டார் சீனிவாசா , பாட்சா, கிருஷ்ணவேணி என பல அரங்கில் பல திரைப்படங்கள் சாதனை ஆகும்.....* *
மக்கள் திலகத்தின் திரைப்படங்களை நம்பியே கடந்த பல ஆண்டுகளாக திரையரங்குகள் வாழ்வு பெற்று வந்துள்ளது.
1988 முதல் 2019 வரை....
31 ஆண்டுகளில்.....*
சென்னையில் மட்டும் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே
1988 முதல் 1995 வரையிலான காலத்தில்....* ஆண்டு தோறும்*
40 முதல் 50 திரையரங்கு வரை ...
75 படம் முதல் 90 படம் வரை வந்ததுள்ளது....
அடுத்து....
1996 முதல் 2005 வரை..
10 ஆண்டில் ....20 முதல் 30 திரையரங்கு வரை....
60 முதல் 70 படம் வரை*
திரையிடப்பட்டுள்ளது.
அடுத்து....
2006 முதல் 2018 வரை...
15 திரையரங்கில் இருந்து 20 திரையரங்கு வரை .....
50 திரைப்படம் முதல் 60 திரைப்படம் வரை திரையிடப்பட்டுள்ளது.
2019.....
அகஸ்தியா சரவணா பாலாஜி
மாறி... மாறி திரையிட்ட படங்கள்...
42 ஆகும்.
அலிபாபா, குலேபகாவலி,
தா.பின் தாரம், தா.சொ.தட்டாதே
பா.திருடன், த.தலை.காக்கும் , பெ.இ.பெண், தனிப்பிறவி
கா.காரன், வே.காரன், நீ.பின் பாசம்
எ.வீ.பிள்ளை,* ப.படைத்தவன் தொழிலாளி, ப.குடும்பம் ஆ.ஒருவன்,* க. விளக்கம்,* முகராசி
நான் ஆணையிட்டால், ப.பாவை
அ.கட்டளை,* விவசாயி, கு.கோயில்
ஒ.விளக்கு, தே.வ.மாப்பிள்ளை,
அடிமைப்பெண் , ரி.காரன்,*
நீ.நெருப்பும், ரா.தே.சீதை
ச.முழங்கு,* ந.நேரம்,* இ.வீணை,
நே.இ.நாளை, உ.குரல், சி.வா.வேண்டும்,* நி.முடிப்பவன்
நா.நமதே, ப.வாழ்க,* நீ.த.வணங்கு
உ.கரங்கள்,* ஊ.உழைப்பவன்
இ.போ.எ.வாழ்க.....
2020 ல் மார்ச் வரை
14 படங்கள் ..... திரைக்கு வந்துள்ளது.
தொடரும்.............
orodizli
11th September 2020, 09:58 PM
எம்ஜிஆர் ஒரு கிங் மேக்கர்
எம்ஜிஆர் எங்கோ அங்கே வெற்றி
சுதந்திரம் காண காங்கிரஸ்வாதியாக எம்ஜிஆர் சதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் எம்ஜிஆர் அப்போது காங்கிரஸில்
மேல்வர்க்கத்தின் கைபாவையாக காங்கிரஸ் பாமரன் கஷடத்தில் நாடு பஞ்சத்தில் எம்ஜிஆர் மனம் விடியலை காண ஏங்க
அண்ணாவின் எழுத்து கொள்கை கவர்ந்ததால் எம்ஜிஆர் தி மு க கட்சியில் சேர வெற்றி தி மு க வை நாடியது அண்ணாவை முதல்வர் ஆக்கினார் எம்ஜிஆர்
அண்ணாவுக்கு பின் கருணாநிதியை முதல்வர் ஆக்குகிறார் எம்ஜிஆர்
ஊழலில் முங்கிய கட்சியை காக்க கணக்கு கேட்க வெளியேற்ற பட்டார் எம்ஜிஆர்
அதிமுக உதயம் வெற்றி தேவதை எம்ஜிஆரை முதல்வர் ஆக்கியது
பின் எம்ஜிஆர் புகழால் ஜெயலலிதா பன்னீர்செல்வம் எடப்பாடி என வெற்றி எம்ஜிஆரால் தொடர்கிறது
எம்ஜிஆர் எங்கோ வெற்றி அங்கே
காமராஜ் காங்கிரஸ் ஆட்சியை விட எம்ஜிஆர் ஆட்சி சிறப்பானது
பாமரனுக்கு
காமராஜ் ஆட்சியில் கம்புகழியும் பஞ்சமும் அரசி விலை வானளவு
எம்ஜிஆர் ஆட்சியில் அரசி ரேஷனில் குறைந்த விலையில் தரமாக நிரந்தரமாக வழங்க பட்டது
போக்குவரத்து பஸ் வசதி எல்லா கிராமத்துக்கும் கிடைக்க வைத்தார் எம்ஜிஆர்
சத்துணவு ஒரு விழக்கு மேற்கல்வி எட்ட ு அரசுபல்கலைகழகங்கள்
தொழில் பயிற்சி கூடங்கள்
என பலதிட்டங்கள் எம்ஜிஆரால் தமிழகம் சிறப்படைந்தது
எம்ஜிஆர் ஆட்சியில் தான் போராடாங்கள் அதிகம் நடந்தது அரசுக்கு பல இடையூறுகள் கொடுத்தார்கள் அதையும் வென்று பொற்க்கால ஆட்சி தந்தார் எம்ஜிஆர்
எம்ஜிஆரை மற்றவர்களை விட சிறந்தவர்என கூற காரணம்
தன் உழைப்பால் ஈட்டிய பணத்தை மக்களுக்கு அளவில்லாமல் அள்ளி கொடுத்த்தால்
தனஷ்கோடி புயல் மக்கள் துயர் போக்க முதல் ஆளாக ஒரு லட்சம் ரூபா இன்றைய மதிப்பு பலகோடி கொடுத்தது எம்ஜிஆர்
சைனா யுத்த நிதியாக முதல் ஆளாக எழபத்தி ஐந்தாயிரம் கொடுத்தது எம்ஜிஆர்
இலங்கையில் தமிழ் படைக்கு பலகோடிகள் கொடுத்து போராட வைத்தது எம்ஜிஆர்
தன் சொத்துக்கள் எல்லாம் மக்களுக்கு என வாழ்ந்த எம்ஜிஆர் எவரை விடவும் சிறந்தவர் நிகரற்ற தலைவர் எம்ஜிஆர்
வாழ்க எம்ஜிஆர் புகழ்.........
orodizli
11th September 2020, 09:59 PM
ஒருமுறை இரண்டு நாட்கள் பயணம் ஆக மதுரை சென்ற தலைவர் பாண்டியன் ஹோட்டலில் தங்குகிறார்.
ஹோட்டலை சுற்றி ஒரே பரபரப்பு..கூட்டம்.. அதே ஹோட்டலில் லிப்ட் பாய் ஆக வேலை செய்யும் ஒரு வாலிபருக்கு தலைவர் மீது மிகுந்த அன்பு பாசம் இருந்தது.
அவன் தன்னுடன் வேலை செய்யும் சக நண்பர்களுடன் தலைவர் பற்றி பெருமையா பேசுவது வழக்கம்...அவரே தன் கண் முன்னே அந்த ஹோட்டலில் தங்கி இருப்பது அவருக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்க..
அன்று இரவு வெளியில் சென்று வந்த தலைவர் ஹோட்டல் வந்து லிப்ட் வழியாக மேலே ஏற போகும் போது அந்த வாலிபன் தலைவர் அருகே ஓடி சென்று அண்ணா உங்களுடன் ஒரு போட்டோ எடுத்து கொள்ளவேண்டும் என்று சொல்ல சுற்றி இருந்தவர் தடுக்க தலைவர் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு பதில் ஏதும் சொல்லாமல் மேலே சென்றுவிட்டார்.
விடுதி மேலாளர் என்னடா இது இப்படி செய்துவிட்டாய் என்று கோவம் கொள்ள உடன் வேலை செய்தவர்கள் என்னப்பா உன் எம்ஜிஆர் பதில் கூட சொல்லாமல் போய் விட்டாரே என்று கேலி செய்ய அன்று இரவு முழுவதும் கண்ணீரில் குளித்தான் அந்த ரசிகன்..
மறுநாள் மதியம் சாப்பாடு வேளை முடிந்து தான் அங்கு இருந்து கிளம்பும் பயண ஏற்பாடுகளை தலைவர் செய்ய் மீண்டும் ஹோட்டல் பரபரப்பு கொண்டது.
தன் அறை பெல்லை அடித்து கீழே இருந்த மேலாளராக இருந்தவரை வர சொல்லி உங்கள் ஹோட்டலில் பணி புரியும் அனைத்து லிப்ட் பாய்கள் மற்றும் அறை சர்விஸ் பணியாளர்களை உடனே என் அறைக்கு வர சொல்லுங்கள் என்றவுடன் ஆடி போன அவர் அதன் படி செய்ய.
அனைவரும் மேலே வர நேற்று யார் என்னுடன் படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று உங்களில் கேட்டது என்று கேட்க தயங்கிய படி மேற்கண்ட வாலிபர் வர தலைவர் சிரித்து கொண்டே அவனை அருகில் அழைத்து அவன் தோள் மீது கையை போட்டு கொண்டு..... தயார் ஆக காத்து இருந்த புகைப்பட நிபுணரை அழைத்து தம்பி அவரை பார் சிரி அப்போதான் படம் நல்லா வரும் என்று சொல்ல அவனுக்கு எல்லை இல்லா மகிழ்வுடன் நான் எம்ஜிஆர் ரசிகன்டா என்ற திமிருடன் போஸ் கொடுத்து புகை படம் எடுத்து கொண்டான்.
அதன் பின் அங்கு அறையில் இருந்த மற்ற பணியாளர்கள் அணைவருடன் தலைவர் நடுவில் நின்று கேமரா பளிச் பளிச் என்று தன் கண்களை வெட்ட துவங்கியது..
அதோடு இல்லாமல் தன் ஜிப்பாவில் இருந்து ஒரு கட்டு பணம் எடுத்து அந்த வாலிபன் கையில் திணித்து அனைவரும் சமமாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி நான் புறப்படுகிறேன் வரவா என்று கேட்டார் எம்ஜிஆர்..
இவர் புகழ் பாடாமல் வேறு எவர் புகழை பாட நாம் போய் தேட.
நன்றி... தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி...
படத்தில் நீ தானே அந்த பையன் என்று கேட்பது போல தலைவர் நன்றி.........
orodizli
11th September 2020, 10:02 PM
புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..
57 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.
இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...
1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..
2....அதி ரூப அமராவதி.
(தலைவர்..பானுமதி)
3....குமாரதேவன்...
(ஜமுனா கதாநாயகி)
4 ...பவானி....
(பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)
5...வெள்ளிக்கிழமை.
(தீயசக்திப்படம்)
6....இணைந்த கைகள்.
(எம்ஜிஆர் நிறுவனம்)
7.....தபால்காரன் தங்கை...
(தேவிகா உடன்)
8....மாடி வீட்டு ஏழை.
(சாவித்திரி. )
9....கேரள கன்னி.
( பால சூரியா நிறுவனம்)
10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.
11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.
12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..
13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..
14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.
15...பரமபிதா.
16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..
17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..
18...கண்ண தாசனின்
ஊமையன் கோட்டை.
19...பாகன் மகள்..
20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
21 ....ரிகஷாரங்கன்.
22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.
23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.
24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.
25......தேனாற்றங்கரை..
26...உடன்பிறப்பு.
27...புரட்சி பித்தன்.
28....வேலுத்தேவன்..
29...ஏசுநாதர்..
30....மண்ணில் தெரியுது வானம்.
31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.
32..உன்னை விட மாட்டேன்.
33...எல்லை காவலன்.
35...கேப்டன் ராஜு.
36....தியாகத்தின் வெற்றி..
37...இதுதான் பதில்.
38.....வேலு தம்பி...
39.. ஊரே என் உறவு.
40..உதயம் நிறுவனம் .
போட்டோகிராபர்..
41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...
43...இன்ப நிலா.
44.. வாழ்வே வா..
45...காணிக்கை.
46....அண்ணா பிறந்தநாடு.
47....அண்ணா நீ என் தெய்வம்..
48...நல்லதை நாடு கேட்கும்..
49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.
50....மரகத சிலை.
51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..
52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..
53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..
54....உங்களுக்காக நான்...
55...வீனஸ் நிறுவனம்.
எங்கள் வாத்தியார்.
56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
ஆளப்பிறந்தவன்..
57.....இமயத்தின் உச்சியிலே..
வாழ்க எம்ஜிஆர் புகழ்.
நன்றி..உங்களில் ஒருவன்.......தொடரும்.
பின் குறிப்பு.
வெளிவராத படங்களில் ஸ்டில்கள்... விரைவில் வெளியிடப்படும்............
orodizli
11th September 2020, 10:04 PM
கஷ்டப்பட்டதை மறக்காதவர்!
அரச அவையில் சில திட்டங்களை மன்னனாக இருந்து நாடோடி வீராங்கன் அறிவிக்கின்றான். அதில் தொலைநோக்கு பார்வை கொண்ட வசனம் :–
“ஐந்து வயது ஆனவுடனே குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு, பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரையில் மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.”
எம்.ஜி.ஆர். மூன்றாவதுக்கு மேல் படிக்க முடியாத வறுமைச் சூழலில் இருப்பது போன்ற பிள்ளை செல்வங்கள் படித்து நாளைய உலகை உருவாக்கும் நல்லவர்களாக உயர்வதற்கான திட்டமிடல் இந்த வசனங்களில் புதைந்திருப்பதை அறியலாம்.
”தான் நடித்த காட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் படம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.
குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும்படியாக படம் எடுக்க வேண்டும், பொழுதுபோக்குப் படத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்பார். இந்த கருத்து சின்னவருடைய மனதில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சின்னவர் நடித்த ’வீரஜெகதீஷ்’ என்ற பழைய படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த படத்தில் ஒரு காட்சியில் புகை பிடிப்பவனுக்கு சின்னவர் அறிவுரை சொல்வதுபோல வசனம் இருக்கும். ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையை சந்தித்து வாழ்ந்தவர். காலில் செருப்பு கூட இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவர், அந்த வறுமை தந்த பாடமே வாழ்க்கைத் தத்துவத்தை அவருக்கு உணர்த்தியது எனலாம். புகழும் பெருமையும் வந்த காலத்தில், இளைமையில் வறுமையில் தான் பட்ட கஷ்டங்களை மறந்து இருக்க முடியும். ஆனால், அவர் கடைசி வரையிலும் அதை மறக்கவில்லை. அது அவரது சிறப்பு” என்பது இயக்குநர் கே. சங்கரின் அனுபவம்.
எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?
சின்னவரின் படங்களில் பாடல்கள் புகழ்பெற, வாழ்க்கையில் அவர் அனுபவித்து அறிந்ததை பாடல்களில் சொன்னதும் ஒரு காரணம்.
பாடல் பதிவின் போது ஒரு பாடலை அவர் ஓ.கே. செய்தால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அப்பாடா மறு ஜென்மம் என்று சொல்வார்கள். (அந்த அளவுக்கு பாடலில் கவனம் செலுத்தி வேலை வாங்குவார்) சின்னவருக்காக ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 25 டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.
’இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘அன்புக்கு நான் அடிமை’ பாடல் காட்சியை இரவு ஒன்பது மணிக்கு ஷூட் பண்ண ஏற்பாடு, அதற்கு ஒரு வாரமாகவே முயற்சித்தும் பாடல் சரியாக அமையவில்லை.
அந்தக் காட்சியை படமாக்க இரண்டு மணி நேரத்திற்கு முன் மாலை 7 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுத பாடல் ஓ.கே. ஆனது” என்கிறார் இயக்குநர் கே. சங்கர்
'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கவிஞர் மருதகாசியை ஒரு பாடல் எழுத வைத்தார்.
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடலின் சரணத்தை
“பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்துவிட்டு
தன்வழியே போகிறவர் போகட்டுமே!”
என்று கவிஞர் எழுதி காட்டினார்.
“தன் வழியே என்று சொல்கிறீர்களே… அது ஏன் ஒரு நல்ல வழியாக இருக்கக்கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவன் ஏன் தன் வழியில் போகக்கூடாது? அதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று புரட்சித்தலைவர் சொல்ல, ’தாங்கள் விரும்புவது என்ன? இந்த இடத்தில் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றீர்கள்?” என்று கவிஞர் கேட்கிறார்.
“தீய வழி என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்கிறார் மக்கள் திலகம்.
‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’
என்ற வரிக்குப் பதிலாக
‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’
என்று எழுதி கவிஞர் சொல்ல,
“ஆகா… பொருத்தமான வரி! அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்.ஜி.ஆர். “ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர்களோடு பணிபுரிவது பெரும் பாக்கியம்” என்று தன்னிடம் கவிஞர் மருதகாசி மொழிந்ததை வழிமொழிகிறார் பத்திரிகையாளர் நாகை தருமன்.
“எந்தக் காட்சியும் படமாக்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெறும், எந்த விதத்தில் படமாக்கினால் நன்றாக அமையும் என்றெல்லாம் விவாதித்த பிறகுதான் ஒப்புக் கொள்வார். அவருககுத் தெரியாத எந்தப் பிரிவுமே இந்தத் துறையில் கிடையாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேங்காய் சீனிவாசன்.
நன்றி : திரு. விஜயபாஸ்கர் - தினமலர்..............
orodizli
11th September 2020, 10:09 PM
இன்று தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம். ஜி .ஆர் .படங்கள் ஒளி பரப்பு விபரங்கள்... (11/09/2020)...
_______________________
ராஜ் டிஜிட்டல் பிளஸ் - காலை 9.30 மணி- "மாட்டுக்கார வேலன்"
சன் லைஃப்- காலை 11 மணி- "இதயக்கனி"
மெகா24- பிற்பகல் 2.30 மணி- "வேட்டைக்காரன்"
ஜெயா மூவிஸ்- இரவு 10 மணி- "ஊருக்கு உழைப்பவன்".........
orodizli
11th September 2020, 10:14 PM
#புரட்சிதலைவர்
#இதயதெய்வம்_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_என்_இனிய #புதன்கிழமை_காலை_வணக்கங்கள்..
புரட்சி தலைவர் போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்.
நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.
படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.
டைரக்டர் ஸ்ரீதர் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை வைத்து எடுக்க இருந்த படம் தான் அன்று சிந்திய ரத்தம்
ஆனால் அந்த படம் தொடக்கத்திலேயே மநின்று விட்டது பிறகு அந்த படத்தை சிவந்த மண் என்று நடிகர் சிவாஜி கணேசனை வைத்து எடுத்தார் ஸ்ரீதர்..
ஸ்ரீதருக்கும் தலைவருக்கும் அதன் பின் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போய்விட்டது... சில காலங்கள் கழிந்தது ஸ்ரீதர் அவர்கள் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனதால் மிகவும் கடனில் சிக்கி கொண்டார் அவர் நிலை அறிந்து அவருக்கு உதவ வேண்டும் என்று ஆரம்பித்த படம் தான் ‘உரிமைக்குரல்’..
படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம்.
அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.
பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.
‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.
ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் ஸ்ரீதரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீதருக்கு பயம் வந்து விட்டது.
‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது? அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே?’ என்று
ஸ்ரீதர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர்.
‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் ஸ்ரீதர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு ஸ்ரீதரை நெகிழ வைத்தது.
போட்டி என்றால் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்...
‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பெக்டர் ராமு, அப்துல் ரஹ்மான் என இரட்டை வேடங்கள். அப்துல் ரஹ்மானாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான், அவனே அப்துல் ரஹ்மானாம்…’ என்ற கருத்துள்ள பாடல் இடம்பெறும். அந்தப் பாடலில் வரும் வரிகள் இவை…
‘ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும்போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை’
‘உரிமைக்குரல்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் வண்டலூர் அருகே நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் படமாக்கப்பட்டன. வில்லனின் ஆட்கள் பயிர்களுக்கு நெருப்பு வைப்பதுபோல காட்சி.
படத்துக்காக பயிர்களுக்கு நெருப்பு வைக்கப் போவதை அறிந்த எம்.ஜி.ஆர்., ‘‘மக்களுக்கு உணவாக பயன்படும் நெற்பயிரை கொளுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். பின்னர், வைக்கோல்களுக்கு தீ வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது...
அன்புடன்
படப்பை rtb.,.........
orodizli
11th September 2020, 10:18 PM
42வது நினைவு நாள்:
எம்.ஜி.ஆர். - ஜானகி திருமணத்தை நடத்திய சின்னப்பா தேவர்.........
சண்டை கலைஞர், சிலம்ப கலைஞர், வாள் வீச்சு வீரர் என்று பெயர் பெற்ற சாண்டா சின்னப்பா தேவருக்கு படம் தயாரிக்கும் ஆசை வந்தது. படத் தயாரிப்புக்கான பணத்தை தயார் செய்து விட்டார் யாரை ஹீரோவாக போடுவது என்று யோசித்தவருக்கு உதித்தவர் எம்.ஜி.ஆர். அவர் மீது கொண்ட நட்பு காரணமாக அவரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித்தார். தேவர் பிலிம்ஸ் உருவானது. முதல் படம் தாய்க்குப்பின் தாரம். பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து அந்த காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். அதனால் தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், ஆண்டவனே..! என்றும், எம்.ஜி. ஆர், தேவரை, முதலாளி... என்றும் அழைத்துக் கொள்வார்கள். சில பிரச்சினைகளுக்கு இடையே நடந்த எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்தை நடத்தி வைத்து, சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் உயிர் நண்பருக்கு நேற்று 42வது நினைவு நாள்..........
orodizli
12th September 2020, 08:10 AM
மக்கள் திலகத்தின் இந்த சொக்கவைக்கும் போஸ் "கண்ணன் என் காதலன் "படத்தில். இந்தப் படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அந்தக் காலத்திலேயே இப்போதைய இளைஞர்கள் அணிந்திருப்பதுபோல கழுத்தை ஒட்டிய மெல்லிய செயின். பூ டிசைன் போட்ட பிரிண்டட் சட்டை. அந்த சட்டை கையில் நுனியில் கத்தரித்து உள்ளது. அதன் மேலே சிறிய பட்டனும் இருக்கிறது. 52 ஆண்டுகளுக்கு முன் 1968லேயே இந்த பேஷன்களை எல்லாம் மக்கள் திலகம் அறிமுகப்படுத்தி விட்டார். அதனால்தான் இன்றும் இளைஞர்கள் இவரை விரும்புகிறார்கள். இந்த அழகும் ஸ்டைலும் கலரும் கவர்ச்சியான புன்னகையும் உலகத்திலேயே அவர் ஒருத்தருக்குத்தான் வரும்..........
orodizli
12th September 2020, 08:10 AM
மக்கள் திலகம் அவர்களின் தோற்றத்தை கண்டேன் பரவசம் அடைந்தேன் மக்கள் திலகம் சிறந்த உடற்பயிற்சி வீரர் மிகச் சிறந்த கலைஞன் அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு மிகச் சிறந்த சிந்தனை வளம் கொண்ட கலை ஞானம் கொண்ட ஒரு படைப்பாளி ஒரு தெய்வீக பேரழகு ஒரு தெய்வீக கவர்ச்சி மக்களை காந்தம் போல் ஈர்க்கக்கூடிய ஒருவிதமான முக அமைப்பு செதுக்கி வைத்த சந்தனச் சிலை போல அழகிய தோற்றம் மக்கள் திலகத்திற்கு மட்டுமே உரியவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவர் போன்ற ஒரு மனிதன் தோன்றுவது அரிது அவர் முகம் மட்டுமல்ல அவருடைய குணமும் அழகானதே ஈவு இரக்கம் உள்ள ஒரு மனிதர் சினிமா ஷூட்டிங் களிலும் மற்றும் அரசியல் பொது நிகழ்ச்சிகளிலும் யாரேனும் பசியுடன் இருந்தால் அவரால் தாங்கவே முடியாது அந்த நல்ல இதயத்திற்கு தான் அவர் இன்னமும் மக்களின் இதயத்தில் வாழ்கிறார் என் இதயத்திலும் கூட.........
orodizli
12th September 2020, 08:11 AM
அதிகம் படிக்காதவர் என்று சொல்லப்பட்ட
இவர்தான் மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிமுறைகளை அதிகம் போதித்தவர்....
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பர்த்தவுடன் முதல் வணக்கம் வைப்பதுடன்
வணங்கி அன்போடு பேசக்கூடியவர்....
அடுக்கு மொழியில் பேசமாட்டார் ஆனால்
மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அடக்கமாக பேசி நெஞ்சத்தை அள்ளுவார்....
நீதிபதியிடமும் வக்கீலிடமும் என் மகன் எம்.ஜி.ஆர் ரசிகன் தவறுசெய்திருக்கமாட்டான் என்று தாயே
வாதாடி ஜெயித்த வரலாறு இவருக்கு
மட்டுமே உண்டு...
அந்த பாரதரத்னா எம்.ஜி.ஆருடைய ரசிகர் என்று சொல்வதைவிட எங்களுக்கு பெரிய
கௌரவம் இல்லை.....
அவரைத் தவிர வேறு எவரையும் நாங்கள்
நினைப்பதுகூட இல்லை.....
வாழ்க புரட்சித் தலைவர் புகழ் .............
orodizli
12th September 2020, 11:27 AM
"பணம் படைத்தவன்' R R பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளிவந்த படம். ஒரு மாபெரும் வெற்றிப் படமான "எங்க வீட்டு பிள்ளை" (all time block buster)
க்கு அடுத்து வந்த படம். "பணம் படைத்தவன்" வெளிவந்த பின்னும் "எங்க வீட்டு பிள்ளை"யின் ஓட்டம் சற்றும் தளர்வடையாமல் ஓடிக்கொண்டிருந்த கால கட்டம்.
1965 மார்ச் 27 ம் தேதி வெளியான படம். நல்ல கதை, அருமையான பாடல்கள்,மக்கள் திலகத்தின் அருமையான பங்களிப்பு அனைத்தும் இருந்தும் படம் பெரிய வெற்றியை பெறாமல் போனதற்கு காரணம் அரசனை பார்த்த கண்ணுக்கு புருஷனை பார்த்தா பிடிக்காது என்று சொல்வார்கள்.
ஒரு மிகப் பெரிய வெற்றி படத்துக்கு அடுத்து வரும் படங்கள் அதே மாதிரி பெரிய வெற்றியை பொதுவாக பெறுவதில்லை.
ஆனாலும் "பணம் படைத்தவன்" ஓரளவு நல்ல வெற்றியை பதிவு செய்தது எனலாம்.
அந்த காலகட்டத்தில் படத்தில் காபரே காட்சிகள் இடம் பெற்றதை அடுத்து பெண்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு காபரே காட்சிகள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி விளம்பரம் செய்யப்பட்டது. அதை பார்த்தால் காபரே மாதிரியே தெரியாது.
சிவாஜியின் 'மெளனம் கலைகிறது' பாடலின் நடனம் காபரே காட்சிகளையும் மிஞ்சும் விதத்தில் அமைந்திருக்கும். 'கண் போன போக்கிலே' போன்ற எவர்கிரீன் பாடல்கள் நிறைந்த படம். மேலும் 'பவளக்கொடியிலே" 'மாணிக்கத் தொட்டில்' போன்ற பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.'எனக்கொரு மகன் பிறப்பான்' எம்ஜிஆரின் துள்ளல் நடையுடன் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று பாடும்போது நமக்கே ஆட வேண்டும் போலிருக்கும்.
'பருவத்தில் கொஞ்சம்' பாடலில் செளகாரும் K R விஜயாவும் மாறி மாறி தோன்றும் காட்சியில் ஒளிப்பதிவு சிறப்பு. 'தன்னுயிர் பிரிவதை பார்த்தவர் இல்லை' பாடலிலும் கேமரா கோணங்கள் ரசிக்கும்படி இருக்கும். MSV இசை பலா பழத்தை தேனிலே குழைத்தது போலிருக்கும். பாலையாவின் நடிப்பு நாகேஷின் நகைச்சுவை குணசித்திர நடிப்பு நன்றாக இருக்கும்.
நாகரீகத்தால், நவநாகரீக நங்கைகள் சீரழிவதை காட்டும் சமுதாய சீர்திருத்த கருத்தை
பொழுது போக்கு அம்சங்களுடன் சேர்த்து கொடுத்திருந்தார்கள். R R
பிக்சர்ஸிக்கு மிதமான வெற்றியை பதிவு செய்த படம். பிந்தைய வெளியீடுகளில் முந்தைய வசூலையும் சேர்த்து பணமழை கொட்டிய படம் என்று சொல்லலாம்.
தூத்துக்குடி ஜோஸப்பில் வெளியாகி 5 வாரங்கள் நடைபெற்றது. முதல்முறை பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. அடுத்தடுத்த வெளியீடுகளில் பார்த்துக் கொண்டே இருந்தேன். சென்னையில் பிளாசா, கிரவுன், மகாலட்சுமியில் வெளியாகி 11 வாரங்கள் ஓடியது. அநேக ஊர்களில் 50 நாட்களை கடந்து வெற்றியை பதிவு செய்தது..........
fidowag
12th September 2020, 08:29 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 25/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
கொரியா நாட்டை சார்ந்த ஒரு பெண் எங்க வீட்டு பிள்ளை படத்தின் நான் ஆணையிட்டால் என்ற பாடலுக்கு அதே உடல் மொழி ,பாவனைகளுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்தது போல நடித்து அசத்தியுள்ளது* வாட்ஸ் அப் வீடியோக்களில் வைரலாகி வருகிறது .
சக்கரவர்த்தி திருமகள் படத்திற்காக எம்.ஜி.ஆரும், அவர் மனைவி வி .என்.ஜானகியும், கதாசிரியர் ரவீந்திரனும் மைசூரில் ஒரு விடுதியில் தங்குகின்றனர் .அந்த பகுதியில் கொஞ்சம் விலையுர்ந்த வாடகை விடுதி. அதற்குண்டான தொகையை பட தயாரிப்பாளர் ராமநாதன் செட்டியார் கொடுக்க முன்வரும்போது ,விடுதி உரிமையாளர் வாங்க மறுத்து ,ஏற்கனவே எம்.ஜி.ஆர். அவர்கள் பணத்தை செலுத்தி விட்டார் என்று கூறுகிறார் .* பதறிப்போய் பட தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் நீங்கள் என்னுடைய படத்தில் நடிக்க வந்துவிட்டு எதற்காக விடுதி வாடகை பணத்தை செலுத்த வேண்டும் என்று கேட்கிறார் .உங்கள் படத்தில் நடிப்பதற்கான ஊதியத்தை நீங்கள் அளித்து விட்டீர்கள். அது உங்கள் நிர்வாகம் சம்பந்தப்பட்டது .நான் அழைத்து வந்திருக்கும் என் மனைவி, கதாசிரியர் ஆகியோர் என் சொந்த வேலைக்காக வந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு நீங்கள் செலவு செய்வது முறையாகாது . மேலும் உங்கள் மூலமாக திரு.பி. நீலகண்டன் எனும் ஒரு நல்ல இயக்குனர் எனக்கு அறிமுகம் ஆகியுள்ளது மகிழ்ச்சியான விஷயம் என்று எம்.ஜி.ஆர். கூறினார் .
நான் ஒரு காலத்தில் பட வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கும்போது, நியூடோன் ஸ்டூடியோ திறந்த வெளியில்* நின்று கொண்டிருந்தேன் .கடுமையான வெயில் நேரம் .ஒரு மர நிழலில் ஒரு நாற்காலி இருந்தது .அதில் உட்காருவதற்கு தயக்கம் இருந்தது .அங்கு வந்து என்னை கண்ட பட தயாரிப்பாளர் ராமநாதன் செட்டியார் ,ஏன் வெகுநேரம் நிற்கிறீர்கள் அந்த நாற்காலியில் அமருங்கள் என கேட்டு கொண்டதன் பேரில் ஒரு* மணி நேரம்*இளைப்பாற அனுமதித்ததற்காக அந்த தயாரிப்பாளருக்கு பிற்காலத்தில் மறக்காமல்* உதவி செய்திருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர். கதாசிரியர் ரவீந்தரிடம் கூறினார் .*.
திரைப்படங்களில் வெற்றியை குவித்து வரும் நேரத்தில் ,ஒவ்வொரு படத்திலும் அரசியல் நெடியுடன் கூடிய வசனங்கள், காட்சிகள் அமைக்க எம்.ஜி.ஆர். தவறவில்லை .சின்னப்பா தேவரின் தாய்க்கு பின் தாரம் தேவர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் முதல் படமாக நட்பின் அடிப்படையில் எம்.ஜி.ஆரை வைத்து எடுக்கப்பட்டது . இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு காளையை அடக்கும் காட்சி ஒன்று உள்ளது . அது வெறும் காட்சியாகத்தான் மக்களால் பார்க்கப்பட்டது .ஆனால் ரசிகர்கள் /பக்தர்கள் அன்றைக்கு காங்கிரசின் சின்னம் காளையாக இருந்த காரணத்தால் எம்.ஜி.ஆர். காளையை (காங்கிரசை ) அடக்குவதாகத்தான் எடுத்து கொண்டார்கள் . 1957 தேர்தலில் உதயசூரியன் சின்னம் தி.மு.க.விற்கு*கிடைக்குமா என்கிற ஒரு கேள்வி இருந்தபோது சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். தன் கதாபாத்திரத்தின் பெயரை உதயசூரியன் என்று*அறிமுகம் செய்து மக்களிடம் பிரபலமடைய* செய்தார் .**
1967 தேர்தலில் தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமருவதற்கு மிக முக்கிய காரணமாக எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் சுடப்பட்டு மருத்துவமனையில் கழுத்தில் மாவு கட்டுடன் அமர்ந்து மக்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தி.மு.க. வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்**என்கிற வாசகத்துடன் கூடிய* தோற்றத்தின் சுவரொட்டியே அமைந்தது .இந்த சுவரொட்டிதான் தி.மு.க.விற்கு*மிக பெரிய வாக்கு வங்கியை எம்.ஜி.ஆர். பெற்று தந்தார் என்று பேசப்பட்டது .அதனால்தான் தி.மு.க.வின் வெற்றி செய்தி அறிவித்ததும்,பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க வந்த தி.மு.க. தலைவர்கள், தொண்டர்களிடம் இந்த சரித்திர வெற்றிக்கு காரணமானவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் . அவருக்குத்தான் நீங்கள் மாலையிட்டு மரியாதை செய்ய வேண்டும்*என்று உணர்வுபூர்வமாக பேரறிஞர் அண்ணா தெரிவித்தார் . அது மட்டுமல்லாமல் அமைச்சரவை பட்டியல் தயாரானதும், அதனை எம்.ஜி.ஆருக்கு*அனுப்பி அவரது யோசனை, கருத்து, முடிவு ஆகியவற்றை எதிர்பார்த்து காத்திருந்தார் பேரறிஞர் அண்ணா. அந்த அளவிற்கு அண்ணாவிற்கு எம்.ஜி.ஆர். மீது அளவற்ற அன்பும், மதிப்பும் , மரியாதையும் இருந்தது . பதிலுக்கு எம்.ஜி.ஆரும்* அண்ணாவை**தன உயிரினும் மேலாக மதித்தார் .தி .மு.க.விற்காக எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட வாக்கு வங்கி எனும் அரசியல் வரலாறு* அ .தி.மு.க. வின் இந்த காலம் வரை இன்னும் நீண்டு கொண்டு தானிருக்கிறது .
நினைத்ததை முடிப்பவன் படத்தில் வரும் கண்ணை நம்பாதே பாடலில் கவிஞர் மருதகாசி ஒரு சரணத்தில் பொன்பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே என்று எழுதினார் . அதை கண்ட* எம்.ஜி.ஆர். இந்த வரிகளின் அர்த்தம் சரியில்லை. அதை கண்மூடி போகிறவர் போகட்டுமே என்று மாற்றி எழுதி தாருங்கள் என்று கேட்டு கொண்டார் .அதாவது ஒரு கவிஞரின் பாடலையே திருத்தும் அளவிற்கு பள்ளி படிப்பை சரியாக தொடரமுடியாவிட்டாலும்* தமிழில் அறிவுத்திறமை, புலமை பெற்றிருந்தார் என்பது மட்டுமல்ல,எம்.ஜி.ஆர்.மொழி அறிவிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் .மேலும் கூடுதலாக ஒரு சரணம் எழுதி தர சொன்னார் .அதாவது என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேன் ,ஏதுவானபோதிலும் ஆகட்டுமே. நன்றி மறவாத நல்லமனம் போதும் .என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் என்பது .. அதனால்தான் பலரும் அவரை* வாத்தியார் என்று அழைக்கின்றனர் .கண்ணை நம்பாதே பாடல் மட்டும் யூ ட்யூப் மூலம் லட்சக்கணக்கான நபர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன காரணம் இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு ,பாடியவரின் குரல் ,அனைத்திற்கும் மேலாக எம்.ஜி.ஆரின் உணர்ச்சி பூர்வமான நடிப்பு, நடன அசைவுகள்,அழகான* அபிநயங்கள்,வசீகரம்* ஆகியன .கவிஞர்கள் மற்ற எல்லா நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதுகிறார்கள், பாடகர்களும் பாடுகிறார்கள் .அனைத்தும் இந்த அளவிற்கு பிரபலம் அடைவதில்லை* ஆனால் எம்.ஜி.ஆர்.*என்கிற மாபெரும் கலைஞன்* முகம்**வாயிலிருந்து வெளிப்படுவதனால்**அந்த பாடல் பன்மடங்கு பிரபலம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
கவிஞர்கள் எழுதும் பாடல்களில் அவர் பெரும்பாலும் தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு .* அப்படி தலையிட்டதால்தான் ஒவ்வொரு பாடலும் இன்று படிப்பினையாக உள்ளது . ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையின் சூழலுக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதற்கு காரணம் அந்த அளவிற்கு* ஒவ்வொரு வார்த்தைக்கும் ,மிகுந்த அக்கறை எடுத்து கொண்டதோடு ஒரு பல்கலை கழகமாகவே திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர்.-அஞ்சலிதேவி உரையாடல் -சக்கரவர்த்தி திருமகள்*
2.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர்.-சங்கே முழங்கு*
3.எம்.ஜி.ஆர்.-காக்கா ராதாகிருஷ்ணன் உரையாடல் -தாய்க்கு பின் தாரம்*
4.எம்.ஜி.ஆர். -அசோகன் உரையாடல் - நல்ல நேரம்*
5.கண்ணை நம்பாதே - நினைத்ததை முடிப்பவன்*
6.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது -அடிமை பெண்*
orodizli
12th September 2020, 08:39 PM
தலைவரின் 100 வது படம் ஒளிவிளக்கு..
இந்த ஒளிவிளக்கு..
அவரச விளக்காகி..
அலாவுதீன் விளக்கு ஆக மாறிய உண்மை சம்பவம்..
ஒளிவிளக்கு படம் தயார் ஆகி முடிந்து ஜெமினி அரங்கில் படத்தின் அறிமுக காட்சி நடந்தது...100 வது படத்தில் வாசன் தயாரிப்பில் சாணக்கியா அவர்கள் இயக்கத்தில் தலைவர் மிகவும் அற்புதமாக நடித்த படம்.
சிறப்பு காட்சி முடிந்தவுடன் தலைவர் சௌகார் ஜானகி அவர்களை அழைத்து அருமையாக வந்து இருக்கிறது உங்கள் நடிப்பு...அதுவும் நான் தீக்காயங்கள் உடன் படுத்து இருக்கும் நேரத்தில் நீங்கள் இறைவனை வேண்டி பாடும் பாடல் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருந்தீர்கள் என்கிறார்.
ஆம் அதில் என்ன சந்தேகம்...பின் அந்த பாடல் காட்சி தலைவர் உடல் நலம் குன்றி இருந்த போது அப்போது தமிழக கீதமாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்ததை நாம் மறக்க முடியுமா..
அந்த சிறப்பு காட்சி முடிந்தவுடன் தான் வெளிநாட்டில் இருந்து வாங்கி வைத்து இருந்த ஒரு எமெர்ஜென்சி விளக்கை வரவழைத்து இது என் பரிசு உங்களுக்கு என்று கொடுக்கிறார் வள்ளல் சவ்கார் அவர்களிடம்.
அவரும் பல ஆண்டுகள் ஆக அதை பராமரித்து உபயோகித்து வந்த நிலையில் ஒரு நாள் அந்த அவரச விளக்கு பழுதாகி விட தன் வீட்டில் எப்போதும் எலெட்ரிக் வேலை செய்யும் ஒருவரை அழைத்து அவர் இது எம்ஜிஆர் எனக்கு பரிசாக கொடுத்த விளக்கு...சரி செய்து கொடுங்கள் என்று சொல்ல...
விளக்குடன் அன்று போன அவர் போனதுதான்... சவுக்கார் ஜானகி அம்மா மனதில் ஏதோ ஒன்றை வாழ்க்கையில் இழந்து விட்டதை போல துடிக்கிறார் அவர்..எங்கு தேடியும் அந்த நபர் கண்ணில் படவில்லை..
7 ஆண்டுகளுக்கு பின் ஒரு நாள் பாண்டி பஜாரில் காரில் சென்று கொண்டு இருக்கும் போது அந்த நபரை பார்த்து விடுகிறார் அவர்...உடனே காரை விட்டு இறங்கி என்ன இப்படி செய்து விட்டீர்கள் ...எங்கே அந்த அவசர விளக்கு என்று கேட்க அவர் கை கால் நடுங்கி அம்மா என்னை மன்னித்து விடுங்கள்....வீட்டில் ஒரு அவசர சிகிச்சை செலவுக்கு அதை 300 ரூபாய்க்கு ஒருவரிடம் அதை விற்று விட்டேன் என்று சொல்ல.
அவரோ பதறி ஐய்யோ என்னிடம் வந்து அந்த பணத்தை கேட்டு இருந்தால் நானே கொடுத்து இருப்பேனே அது அவர் விளக்கு என்று உன்னிடம் சொல்லியும் இப்படி செய்து விட்டாயே...சரி விடு என்னுடன் காவல் நிலையம் வா...உனக்கு ஒரு ஆபத்தும் வராது நான் பொறுப்பு அந்த விளக்கை யாருக்கு விற்றாய் என்று விவரத்தை மட்டும் சொல்...என்று சொல்ல.
அவரும் மறுக்க முடியாமல் சைதை காவல் நிலையத்தில் விவரம் சொல்லி முடிக்க....மறுநாள் காவல் நிலையத்தில் இருந்து தகவல் சவுக்கார் ஜானகி அம்மா அவர்களுக்கு நீங்க உடன் காவல் நிலையம் வாருங்கள் அந்த ஒளிவிளக்கு கிடைத்து விட்டது என்று சொல்ல.
ஆயிரம் மின்சாரம் ஒரே நேரத்தில் உடலில் செலுத்த பட்டத்தை போல உணர்ந்து காவல் நிலையம் நோக்கி பறக்கிறார் சவுக்கார் ஜானகி அம்மா.
அங்கே அந்த விளக்குடன் ஒரு நபர் இருக்க அதிகாரி இதுவா உங்கள் விளக்கு என்று கேட்க ஆமாம் ஆமாம் என்று அவர் மகிழ்ச்சியில் துடிக்க...
அவரச ஒளிவிளக்கை வாங்கிய அந்த நபரிடம் மிக்க நன்றி இதோ நீங்கள் கொடுத்த விலை 300 க்கு பதில் எவ்வளவு கேட்டாலும் தருகிறேன்....ஐயா அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் எனக்கு அந்த ஒளிவிளக்கு மட்டும் போதும் அவரை விட்டு விடுங்கள் என்று சொல்ல.
அந்த நபர் அம்மா ஆயிரம் ஆயிரம் இருள் சூழ்ந்த இல்லங்களில் தன் கரங்கள் கொண்டு ஒளிவிளக்கை ஏற்றி வைத்த அந்த மனித புனிதர் அவர் உங்களுக்கு பரிசாக கொடுத்த இந்த விளக்கு என்னிடம் இவ்வளவு ஆண்டுகள் இருந்தது நான் செய்த புண்ணியம்... எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்..இதை எடுத்து செல்லுங்கள் என்று சொல்ல..
காவல் ஆய்வாளரும் அம்மா சவுக்கார் ஜானகி அவர்களும் என்ன ஒரு விந்தை இது என்று அதிசயித்து பார்க்க..
அந்த தலைவரின் அவசர ஒளிவிளக்கு அலாவுதீன் கண்ட அதிசய விளக்காக மாறி மீண்டு ஆண்டுகள் பல சென்று மீண்டும் அவரை தேடி சென்று அடைந்த அற்புதம் வேறு இனி எங்கு காண முடியும்.
இறுதியில் தன் தலைவர் நினைவுகளை சொல்லி முடிக்கும் போது சவுக்கார் ஜானகி அம்மா சொல்கிறார் அந்த அபூர்வ அவரச ஒளிவிளக்கு தன்னிடம் வேலை செய்ய வந்த ஒருவருக்கும் அன்று அவர் அவசர அவசிய தேவைக்கும் உதவி இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறார்.
ஒளிவிளக்கின் புகழ் என்றும் அணையாமல் கண் என காப்பது நமது கடமை...
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்.....
உங்களில் ஒருவன் ...நன்றி.
அந்த விளக்கை மீண்டும் திருப்பி கொடுத்த அந்த நல்ல உள்ளதுக்கு நன்றி..நன்றி..நன்றி..
இன்றும் நடிகை சவுக்கார் அம்மா வீட்டு பூஜை அறையில் அந்த விளக்கு உள்ளது...
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு....தலைவா உங்கள் காலடியில் எங்கள் நம்பிக்கையின் ஒளிவிளக்கு... என்ன ஒரு பொருத்தம் வரிகளில்..இல்லையா..........
orodizli
12th September 2020, 08:43 PM
தமிழ் திரைப்பட உலகம்*
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் தான் கடந்த ஆண்டுகளில் சிறப்பு பெற்றது. அவர் நடிக்கின்ற திரைப்படங்கள் மேலும் அதிகமாக வந்து திரையரங்குகளை வாழவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்..
இப்படி ஒரு கட்டுரை 1976 ஆம் ஆண்டு 'பிலிமாலயா' பத்திரிக்கையில் வெளிவந்தது.*
1974, 75, 76 ஆண்டுகளில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மூலம் தான் சினிமா உலகமும்* திரையரங்களும் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது பழைய திரைப்படங்கள் பல்வேறு திரையரங்குகளில் பல பிரிண்டுகள் போடப்பட்டு அதிகமாக விற்பனைக்கு வந்து அதிகமான திரையரங்குகளில் வாரம்தோறும் திரையிடப்பட்டு வருவது விநியோகஸ்தர் மற்றும் திரையரங்குகள், தயாரித்த தயாரிப்பாளர்கள் என பலர் வாழ்ந்து வருகிறார்கள்.
"உரிமைக்குரல்", " இதயக்கனி", "நினைத்ததை முடிப்பவன்", "பல்லாண்டு வாழ்க" , "நீதிக்குத் தலைவணங்கு", " உழைக்கும் கரங்கள்" திரைப்படங்களே அதிகமாக விற்பனையாகி விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர் களுக்கும் லாபம் ஈட்டித் தந்துள்ளது.*
அதுமட்டுமல்லாது கடந்த காலத்தில் மக்கள் திலகம்*
எம்.ஜி.ஆரி.ன் திரைப்படங்களே
ஏ, பி ,சி , (a,b,c,) என்று சொல்லும் அத்தனை சென்டர்களிலும் அவரது பழைய திரைப்படங்களே மீண்டும்,மீண்டும் திரையிடப்பட்டு மேலும் வசூலை வாரி குவித்து திரையரங்குகளை வாழவைத்து வந்துள்ளார்.
3000 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகள் கொண்ட தமிழ்நாட்டில் 1000 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் படங்களே திரையிடப்படுகிறது.
குறிப்பாக அரசுக்கு அதிக பணம் செலுத்தும் திரைப்படமாகவும் மக்கள் அதிகமாக வந்து படம் பார்க்கும் திரைப்படமாகவும் மக்கள் திலகம் எம் ஜி ஆரின் திரைப்படங்களே திகழ்ந்து வருகின்றன.**
1976 ல் 70 படங்களில் 65 படங்கள் தோல்வியை தழுவியுள்ளது. இருந்த
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மகத்தான வெற்றியை படைத்து சாதனை பெறுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து அனைத்து நடிகர்களின் படங்களும் வெற்றி அடைய வேண்டும். தமிழ் சினிமா உலகம்
இந்தி, ஆங்கில படங்களை விட அதிகமாக மக்கள் பார்க்க முன் வரவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களின் படமும் ஆண்டிற்கு 5,6படங்கள் கண்டிப்பாக வரவேண்டும்...
அரசியலிலும் அவரின் வேகம் மக்களிடமே அதிகமாக செல்கிறது..
தமிழ்ப்பட உலகை காக்க மக்கள்திலகமே
முன்நிற்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்....
நன்றி 1976 பிலிமாலயா
சுறுக்கமாக.....
(2 பக்க கட்டுரை இது).........
orodizli
12th September 2020, 08:45 PM
ஒருபடம் தான் நடித்தார்.
மேட்டா ரூங்ரூட்டா
இன்றும் இவர் எம்ஜிஆர் ரசிகை
தாய்லாந்து நகரில்
ks.,.
உ.சு.வாலிபன் படத்தின்
சிறப்புகள் கணக்கில் அடங்கா.
வசூல் வாரிக்குவித்த படம் 4.5கோடி.
1973 ல் வந்த படம்.
இப்படம் வெளிவந்தால்
சேலை கட்டிக்கொள்கிறேன்
என்றார் மதுரை முத்து.
கருணாநிதி அப்போது
முதல்வர்.
போஸ்டர் ஒட்டக்கூடாது.
வரி அதிகம் கட்டணும்
என்றார்.
பலதடகளைமீறி வெற்றி
வாகை சூடினார்.எம் ஜி ஆர்.
தண்ணீருக்கடியில் காமிராஷாட்.
அவள் ஒரு நவரச நாடகம் பாடல்.
உலகம் அழகு கலைகளில்பாடலில்
எக்ஸ்போ70 இவ்வளவு
அழகாக எந்த படமும்
எடுக்கவில்லை.
தங்கத்தோணியிலே பாடலும் அப்படித்தான்.சந்திரகலா வாழ்நாளிலே இத்தனை ஊர்களை
பார்த்ததில்லை என்றார்.புற்றுநோயால்
அவர் இறந்தார்.
இசை எம்.எஸ்.வி.
இதுவரையில் எதற்கும்
இந்த சம்பளம் பெற்றதில்லை எனக்கூறினார்........
orodizli
12th September 2020, 08:46 PM
"என்னண்ணே... இப்படி பண்ணீட்டீங்க...?" -வடியும் ரத்தத்துடன் எம்.ஆர்.ராதாவை கேட்ட எம்.ஜி.ஆர்!
நடிகர் ராஜேஷ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்வு குறித்து பேசுகையில் அதில் முக்கிய சம்பவமான எம்.ஜி.ஆர். மீதான துப்பாக்கிச்சூடு குறித்து பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம்.
"திராவிடர் கழக தொண்டர்கள், நெருங்கிய நண்பர்கள் என யார் பண உதவி கேட்டு கடிதம் எழுதினாலும் தயங்காமல் மணி ஆர்டர் அனுப்புவார் எம்.ஆர்.ராதா உதவி என்று வீட்டிற்கு தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறவே மாட்டார்.
அவருடைய தோட்டம் ராமாவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வீட்டிற்கு எதிரே இருந்தது. அங்கே மாமரம், தென்னை மரம் நிறைய இருக்கும். அங்கே காய் பறிக்கிற நாளில் பறித்து முடித்தவுடன் வேலை பார்த்தவர்களை எல்லாம் அழைத்து பை நிறைய காய்களை அள்ளிக் கொடுப்பார்.
அந்த அளவிற்கு நல்ல மனிதர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கெல்லாம் தனித்தனியே ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே எம்.ஆர்.ராதாவுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அனைவரையுமே நையாண்டி செய்வார். பக்திமான், பணக்காரன் என பாரபட்சமே பார்க்க மாட்டார்.
அப்படிப்பட்ட ஒருவருக்கு துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுடக்கூடிய மனப்பான்மை எப்படி வந்தது என்பதை அறிய அவரது வாழ்க்கையை நான் பல்வேறு கோணங்களில் ஆய்வுபடுத்தி பார்த்தேன். இந்த சம்பவத்துக்கு முன்பே ஒரு முறை கிட்டு என்ற ஒரு நாடக நடிகருடன் எம்.ஆர்.ராதாவுக்கு முரண் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகரின் உடைகள் இருந்த பெட்டியினுள் ஆசிட்டை ஊற்றி விட்டார்.
அன்று அவரால் நாடகத்தில் நடிக்க முடியவில்லை. அடுத்த முறை அவருடன் பிரச்சனை வந்தவுடன் அவரது முகத்திலேயே ஆசிட்டை ஊற்றி விட்டார். அதைப் பிரதிபலிப்பது போலத்தான் பாவமன்னிப்பு திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும்.
இதே போல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உடன் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு உளுந்தூர்பேட்டையில் சென்று துப்பாக்கி வாங்கி வந்து அவரை சுடச் சென்றார். 'நீ சுட்டால் நல்லது தான்.. வாடா..' என என்.எஸ்.கிருஷ்ணன் நெஞ்சை நிமிர்த்தி காட்டினார்.
பின் எப்படியோ இருவரும் சமாதானம் ஆகிக்கொண்டனர். நடிப்புக்கும், வாழ்வுக்கும் வித்தியாசம் உண்டு. பலர் அதை புரிந்துகொள்வார்கள். சிலர் தாங்கள் நடிக்கும் பாத்திரத்திலிருந்து வெளியே வராமல் ஊறிப்போய்விடுவார்கள்.
எம்.ஆர்.ராதா அண்ணன் நடித்த பல பாத்திரங்கள் அவர் மனதில் ஆழமாக பதிந்து அவரை இது போன்ற செயல்களைச் செய்யத் தூண்டியிருக்கலாம்.
'நமக்கு எதிராக ஒருவன் இருக்கிறான். அவனால்தான் நம் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது' என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் உங்கள் கண்களுக்கு அவர் எதிரியாகத்தான் தெரிவார். அதைத்தான் காமாலைக்காரனுக்கு கண்ணில் படுவதெல்லாம் மஞ்சள் என்பார்கள்.
தன்னுடைய மன உலகத்திலும், சினிமா உலகத்திலும் எம்.ஜி.ஆரை ஒரு வில்லனாக நினைத்து கொண்டதால் அவரை சுடும் அளவுக்கு செல்லும் நிலை வந்து விட்டது என்று நினைக்கிறேன்.
'பெற்றால் தான் பிள்ளையா' படம் தொடர்பான பண விஷயங்களும் காரணம் என சொல்வார்கள். ஆனால் உளவியல் அடிப்படையான காரணம் இதுதான்.
எம்.ஜி.ஆர். வீட்டிற்கு எதிரேதான் இவரது தோட்டம் இருக்கும். துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு அங்கேயே காத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். கார் வீட்டிற்குள் போனதும் சிறிது நேரம் கழித்து இவர் போயிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். யார் வந்தாலும் நான் இல்லையென்று சொல்... நான் ஓய்வெடுக்க போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனதால் காவலாளி அவர் இல்லை என்று சொல்லியிருக்கிறார். 'இப்போது உள்ளே போனதை நான் பார்த்தேனே... ஒரு முக்கியமான விஷயம்' என்று கூறி விட்டு உள்ளே சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து சுட முயலும் போது சுதாரித்து விலகி விடுகிறார். அதனால் அது காயத்தோடு போனது.
திரைப்படங்களில் அதுபோன்ற காட்சிகளில் நடித்திருந்ததால் அது எம்.ஜி.ஆருக்கு ஒரு அனிச்சை செயலாகவே பழகிப்போனது. அவர் சுட்டவுடன் எம்.ஜி.ஆர் வழியும் ரத்தத்தை கையில் பிடித்துக்கொண்டே
"என்னண்ணே... இப்படி பண்ணீட்டீங்க?" என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்பு அந்த வழக்கு நீண்ட நாள் நடந்தது.
எம்.ஆர்.ராதாவிற்காக என்.டி.வானமாமலை என்ற வழக்கறிஞர்தான் வழக்கு நடத்தினார்.
ஒரு நாள் எம்.ஜி.ஆர். அவரை தன்னுடைய ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து சென்று இது போன்றுதான் எம்.ஆர்.ராதா என்னை சுட்டார் என தத்ரூபமாக விளக்கி இருக்கிறார். ஒரு விழாவில் என்.டி.வானமாமலை அவர்களை நான் சந்திக்க நேர்ந்த போது அவர் இதை என்னிடம் கூறினார்..........
orodizli
12th September 2020, 09:50 PM
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு
m g rமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய
தகப்பனார் வழி பூர்வீகம்
மக்கள் திலகம் அவர்களுடைய தந்தை கோபாலன் அவர்களுடைய தந்தை பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துர் என்ற கிராமம். அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்று சொல்லப்படுகிறது.
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவருடைய தாய் தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எப்படி கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. எப்படி இருந்தாலும் கோபாலன் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. இப்போது என்னுடைய ஆய்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜி.ஆர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்விகம் தமிழ்நாடு இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது. செந்தமிழ்நாடு கும்பகோணம் ஆரம்பம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைதான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
இது மக்கள் திலகம் அவர்களுடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் கேராளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் கேரளா வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனுர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம் கோபாலன் அவர்கள் பட்ட படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது. இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டு அது ரொம்ப பெரிய விஷயமாக பெரிய தகராறுகள் பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிறீர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும். வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் அவர்கள் மிக ரகசியமாக இந்த விஷயத்தை வைத்து கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.
Mgrகோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி உங்க்ள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் கோபாலன் அவர்களுக்கு உண்டு. அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துகொண்டு இலங்கைக் செல்கிறார். இலங்கை கண்டிக்கு சென்றவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டி என்பது ஒரு பெரிய நகரம் அங்கு 100க்கு 50 சதவிதம் பேர்கள் தமிழர்கள். இதே போல் இலங்கையில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாடுதான் ஈழநாடு இலங்கை மறுபெயர் ஈழநாடு என்று சொல்லப்படுகிறது. இது உலகம் அறிந்த விஷயம்.
இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு பிறக்கிறார். 5வது குழந்தையாக தாய் தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையாக சக்கரபாணிக்கும் எம்.ஜிண.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜிண.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டி பிடித்து கொஞ்சுவாராம்.
இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட நீதி மன்றம் ஆங்கிலத்தில் முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை அவர்கள் ஆறுதல் சொல்லி செல்கிறார்கள். அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா அவர்கள் தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்க பட்ட சொந்த வீடு சேர்த்து வைத்து இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.
Mgrஏற்கனவே தன் கணவரை பறிக்கொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமா அவர்களுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் mgr தன் தாயின் கழுத்தை கட்டி பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம். ஐந்தாவது குழுந்தையாக நீ பிறந்த பிறகு தான்னடா. பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று mgrரை கட்டி பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபானியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளை அவர்களின் உதவியை நாடுகிறார்கள். அது சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது ஆகும். அது சமயம் சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அது சமயம் தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமா அவர்களுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்திய பாமா அவர்கள் தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார். அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பபோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
சத்தியபாமா அவர்கள் நாராயணன் அவர்களுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று திரு. நாராயணன் அவர்களிடம் சத்தியபாமா அவர்கள் சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளி கூடத்தில் சேர்த்து விட்டார்க்ள. மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சனை உண்டாகிறது. இந்த நேரத்தில் சத்தியபாமா அம்மா அவர்கள் மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.
Mgrஇந்த நிலையில் mgr அவர்களும், சக்கரபானி அவர்களுக்கும் 3வயதுதான் வித்தியாசம். சக்கரபானி, தம்பியை ராமசந்திரா என்று அழைப்பார். பள்ளிகூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம். நேர்மை, நீதி பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர் நீதிபதியாகவம். பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைகக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். தன் தாயினுடைய உழைப்பாள் நாம் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. இந்த இருவருடைய பள்ளி வாழ்க்கையின் சில சம்பவங்களை இங்கே கூறுகிறேன்.
பத்து வயதில் கணக்கு கேட்டார்!
Mgrஎம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்து கொண்டு இருக்கும் காலத்தில் ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு மண்பாணையில் தண்ணீரும், பக்கத்தில் ஒரு அலுமினிய டம்பளரும் வைத்து இருப்பார்கள். தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வருகிற பிள்ளைகள் வரிசை பிரகாரம் இந்த மண்பானை சுத்தமாக கழுவி தண்ணீர் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதுமுறை. இந்த பள்ளிகூடத்தின் விதிமுறை
இப்படி இருக்கும் போது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வரபோகும்போது பானை உடைந்து விடுகிறது. இதற்கு மறு பானை வாங்கி தண்ணீர் வைக்க வேண்டும். ஆனால் இதற்கு காசு யார் கொடுப்பது என்ற விஷயத்தில் வாத்தியார் தலையிட்டு பிள்ளைகளிடம் ஆளுக்கு 1/4 அணா போட்டு பானையை வாங்கி வரவேண்டும் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இப்போது வருடம் “1925” 1/4 அணா என்பது இந்த காலத்தில் 100 பைசா கொண்டது ஒரு ரூபாய். அந்த காலத்தில் 16 அணா கொண்டது ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாயை வசூல் செய்து கொண்டு அருகாமையில் உள்ள சந்தைக்கு (மார்க்கெட்) சட்டாம்பிள்ளையும் மூன்று மாணவர்களும் பானை வாங்க செல்கிறார்கள். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர் பானை 3/4 ரூபாய்க்கு வாங்கியது போக மீதி 1/4 ரூபாய் சட்டாம்பிள்ளை கைவசம் உள்ளது. இந்த பானையை வாங்கி எம்.ஜி.ஆரிடமும் இன்னொரு பையனிடமும் கொடுத்து நீங்கள் முன்னால் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டு சட்டாம்பிள்ளையும் மற்றொரு பையனும் மீதி 1/4 ரூபாயிற்கு பொறி உருண்டையும், முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவதை முன் சென்ற எம்.ஜி.ஆரும் மற்றொரு பையனும் மறைவான ஒரு இடத்தில் நின்று அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கின்றார்கள்.
அந்த நேரத்தில் பின்வரும் சட்டாம்பிள்ளையும் சாப்பிட்டு வருவதை பார்த்து மீதம் உள்ள காசுக்கு இவர்கள் நமக்கு கொடுக்காமல் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறார்கள் என்று எம்.ஜி.ஆரும் நண்பரும் பேசி கொண்டு வருகிறார்கள். அங்கு சட்டாம்பிள்ளையும் கூட வந்த சட்டாம்பிள்ளை நண்பனை பார்த்து எம்.ஜி.ஆர் கேட்கிறார் பானை வாங்கி விட்டு மீதம் உள்ள காசுக்கு நீங்கள் ரெண்டு பேரும் பொறி உருண்டையும் முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்ட வருகிறீர்களே பானை வாங்கியது போக மீதம் உள்ள காசு எவ்வளவு என்று கேட்டு இருவருக்கும் வாதம் நடக்கிறது. அப்போது நீ யார்டா என்று சட்டாம்பிள்ளை வாய் வித்தியாசமாக தகாத வார்த்தைகளை பேசும் போது எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து சட்டாம்பிள்ளையை அடிக்கின்றார். இதை அறிந்த மற்ற பிள்ளைகள் எல்லோரும் கூக்குரல் போட்டு கொண்டு வாத்தியாரிடம் சென்று இந்த சம்பவத்தை சொல்லுகிறார்கள். உடனே வாத்தியார் வந்து இருவரையும் சமாதனப்படுத்தி நாளை தலைமை வாத்தியாரிடம் சொல்லி ராமச்சந்திரன் நடந்த சம்பவத்தை முழுமையாக சொல்கிறார். இதை கேட்ட தலைமையாசிரியர் சட்டாம்பிள்ளையிடம் கேட்ட போது சரியான பதில்களை சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நேரத்திலிருந்து சட்டாம்பிள்ளைக்கு பதிலாக எம்.ஜி.ஆரை சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியர் நியமித்தார். முதல் நாள் பானைக்காக கணக்கு கேட்டு பள்ளிக் கூட வாசலில் சண்டை போட் கொண்டு இருக்கும் போது பள்ளிக்கூட பையன்கள் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி அவரிடம் தகவல் சொல்லி அழைத்து வருகின்றார்கள். அப்போது சக்கரபாணி வந்து ஏன் சண்டை போடுகிறாய் என்று சொல்லி தம்பியை கண்டிக்கிறார். அண்ணா உங்களுக்கு ஒன்றும் தெரியாது நான் அப்புறம் சொல்கிறேன் என்ற சொல்லிவிட்டார். பிறகு பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன் சக்கரபாணி அவர்கள் சண்டை நடந்த விபரத்தை பற்றி கேட்கிறார். அண்ணனிடம் தம்பி நடந்த விபரத்தை சொல்லி முடிக்கிறார். உடனே சக்கரபாணி சொல்லுவதும் சரிதாண்டா. நீ சட்டாம்பிள்ளையை அடித்துவிட்டே. நாளைக்கு நம்மல பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் நாம் என்ன பன்றது இதை அறிந்தால் அம்மாவின் மனநிலமை எப்படி இருக்கும் என்று சொல்லி தம்பியை கோபப்படுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீங்க. நாளை என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று சொல்லி அண்ணனை சமாதப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.
அதன்படி மறுநாள் பள்ளிக்கூடத்துக்கே சட்டாம்பிள்ளையாகிவிட்டார். இதை அறிந்து சக்கரபாணி ஆனந்தப்படுகிறார். அன்று வீட்டுக்கு திரும்பும்போது தம்பி நேற்றுக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் இரவில் நினைத்து என்க்கு தூக்கம் வரவில்லை. இந்த விசயத்தை உடனே அம்மாவிடம் சொல்லப்போகிறேன் இந்த நல்ல செய்தியை என்று தம்பியிடம் சொல்லுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே எதுவானாலும் நம்ம இருவரோடு இருக்கட்டும். அம்மா இதை நம்பமாட்டார்கள். ஏன், எதற்கு என்று துருவி துருவி கேட்பார்கள்.
நடந்த சம்பவத்தை சொல்லி விடுவீர்கள் அது அம்மாவுக்கு தவறாகத்தான் தோந்றும் இது இப்போ நமக்கு தேவையா,
இதை போல் இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் லீவுநாள் அன்று காலையில் இவர்களுடைய உடைகளை எல்லாம்எடுத்து கொண்டு காவேரி ஆற்றுக்கு சென்று உடைகளை துவைத்து குளித்து வருவது வழக்கம்.
அண்ணனிடம் கோபம் கொண்டார்
mgrஇது ஒரு பொதுவான விஷயம். இதே போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்கு குளிக்க சென்று இருக்கும் போது அண்ணன் தம்பி இருவருக்கும் வாய் தகராறு வந்து விட்டது. காரணம் இவர்கள் கொண்டு போன ஆடைகளை எல்லாம்துவைத்து காயபோட்டுவிட்டு, ஆற்றில் நீந்தி விளையாடி கொண்டு இருக்கும் போது மற்ற பையன்களோடும் குளித்துவிட்டு கரை ஏறும் போது அண்ணன் சக்கரபாணி கட்டி இருந்த கோமணம் இடுப்பில் இல்லை உடனே சக்கரபாணி தம்பியை பார்த்து ஏய். ராமச்சந்திரா என் கோமணம் தண்ணீர்ல் போயிடுச்சி என்று சொல்லி உன்னுடைய கோமணத்தை கொடுடா என்று தம்பியிடம் கேட்கிறார். அந்த நேரத்தில் கரையில் நின்று கொண்டு சிரித்து துள்ளி குதித்து ஆடி கொண்டு, நான் தரமாட்டேனே என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நேரத்தில் அண்ணன் தம்பியிடம் கோமணத்தை கேட்டு செஞ்சுகிறார். தம்பியோ தன் கோமணத்தை கொடுக்க மறுக்கிறார்.
கோமணம் இல்லாமல் அறிந்த mgr உடன் துவைத்து போட்ட டவுசரே போட்டுகிட்டு தன்னுடைய கோமணத்தை தண்ணீரில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்த அண்ணன் வசம் கோமணத்தை கொடுக்க, வேறுவழி இல்லாமல் கோபத்தோடு கரைக்கு வந்து துவைத்து போட்டு இருக்கும் டவிசரை எடுத்து மாட்டிக் கொண்டு தம்பியிடம் பேசாமல் கோபமாக வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் என் கோமணம் தண்ணீரில் போய்விட்டது. தம்பியின் கோமணத்தை கேட்டேன் தர மறுத்துவிட்டான். பிறகு நான் வாதாடிய பிறகு கரையில் காயிந்து கொண்டிருந்த டவுசரை போட்டு கொண்ட பிறகு அந்த கோமணத்தை கேலி செய்து கொண்டு தண்ணீருக்குள் நிற்கும் என்னை பார்த்து தூக்கி போட்டான். நான் அந்த கோமணத்தை எடுத்துக் கட்டிக் கொண்டு கரை வந்தேன். இதை அம்மாவிடம் கோபமாக சொல்லுகிறார் இதை கேட்ட அம்மா mgrரை பார்த்து நீ ஏன்டா இப்படி செய்தாய் என்று கோபப்படுகிறார்.
அம்மா கோபமாக பேசி முடித்த உடனேயே mgr பதில் சொல்கிறார். அம்மா ஆற்றிலே நானும் அண்ணனும் மட்டும் குளிக்கவில்லை எங்களை போல் எவ்வளோ பையன்கள் குளிக்கின்றார்கள் அவ்வளவு பேரும் கோமணத்தை கட்டி கொண்டுதான் குளிக்கின்றார்கள். தன்னுடைய கோமணத்தை தண்ணீரிலேயே போயிடிக்சே என்று சொல்லி அடுத்தவங்க கோமணத்தை யாரும் கேட்பதில்லை, அப்படி இருக்கையில் அண்ணன் தன் கோமணம் போவது கூட தெரியாமல் குளித்து இருக்கிறார். கரைக்கு வரும் நேரத்தில் தன்னிடம் கோமணம் இல்லையே என்ற வெட்கப்பட்டு கொண்டு என் கோமணத்தை அவிழ்த்து கொடும்கும்படி கேட்டார். நான் தண்ணீர்லிருந்து கரைக்கு ஏறும் நேரத்தில், ராமசந்திரா என் கோமணத்தை அவிழ்த்து கொடுடா என்று சத்தம் போட்டு கேட்கிறார். நான் உடனே என் கோமணத்தை அவிழ்த்து கொடுத்து விட்டேன். அம்மனகுண்டியோடு துணி காயிக்கின்ற இடத்திற்கு எப்படி போவேன். அதனாலே நான் காயும் என்னுடைய டவுசரை தண்ணீரில் நிற்கும் அண்ணன்கிட்டே கொடுத்தேன். நான் அதை கட்டிகொண்டு தான் கரைக்கு வந்தார். இது அவரோட தவறு இந்த விஷயம் ஆற்றோடு முடிந்து விட்டுது. அம்மா இதை வந்து ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டு உங்களிடம் குறை கூறுகிறாரே இது என்ன நியாயம். சற்று கோபத்தோடு அம்மாவை பார்த்து இந்த நியாத்தை கேட்கும்போது அந்த தாயினுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும்? இப்படி இருக்கும் காலத்தில் மகன்கள் இருவரும் நான்காம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் தன்னுடைய குழந்தைகள் 10 வயதுக்கு மேற்பட்ட தன் ஒரு மகன்களுக்கும் மூன்று நேரமும் வயிறார சாப்பாடு கொடுக்க முடியவில்லையே என்று அந்த தாய் மனம் வேதனை படுவதை அறிந்து இவர்களோட மன வேதனையே தன் தாயிடம் சொல்லாமல் நாங்கள் இருவரும் படித்தது போதும் என்று கெஞ்சி கேட்கின்றார்கள். இந்த வார்த்தையை கேட்ட தாய் மகன்களிடம் என்ன பதிலை சொல்லுவார்? ஆனாலும் தன் தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகன்கள் தன்படும் கஷ்டத்தை அறிந்து அவர்களே வேலைக்கு போவதாக சொல்லுகின்றார்களே என்று நினைத்து வேதனை படுகிறார்.
பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார்
இந்த கால கட்டத்தில் சத்தியபாமா அவர்களின் குடும்ப நண்பர் (கேரளா) திரு. நாராயணன் என்பவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் முக்கியஸ்தராக பணிபுரிந்து வருகிறார். தற்செயலாக சத்தியபாமா அவர்கள் வீட்டிற்கு வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்கள் நாராயணனிடம் தன்னுடைய பையன்களை பற்றி விபரமாக சொல்லுகிறார். எல்லா விபரத்தையும் கேட்ட நாராயணன் இவ்வளவு கஷ்டத்தில் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது. அதனாலே பையன்கள் இருவரும் நல்லா அழகாக இருக்கின்றார்கள். இவர்களை நாடக கம்பெனியில் நான் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி செல்கின்றார். ஒரு வாரம் கழித்து பையன்களை கம்பெனியில் சேர்க்க அழைத்து செல்ல வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்களிடம் கம்பெனியின் விதிமுறைகளை விளக்கமாக எடுத்து செல்லுகிறார். கம்பெனியின் விதிமுறை யார் எந்த வேலைக்கு சேர்ந்தாலும் கம்பெனியிலே அவர்களுக்கு சாப்பாடு, துணிமணிக்ள, தங்குவதற்கு இடம் கொடுப்பார்கள். சம்பளம் உடனே போடமாட்டார்கள். பையன்களுடைய திறமையை அறிந்து அவர்கள் நடப்புக்கு உள்ளவர்களா, அல்லது எடுபடி வேலைக்கு தகுதி உள்ளவர்களா என்பதை அறிந்து கம்பெனியால் சம்பளம் கொடுக்க முடிவுக்கு வருவார்கள். எனவே நீங்கள் எதற்கும் தயங்காமல் பையன்களை உடனே என்னுடன் அனுப்புங்கள், இப்போது அவர்கள் நல்லா சாப்பிட்டு உடல் வளர்ச்சி அடைய கூடியவர்கள் அவர்களுக்கு இப்போது முக்கியம் உணவு தான் எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நாராயணன் பையன்கள் இருவரையும் அழைத்து இந்த விவரத்தை சொல்லுகிறார். இதை கேட்ட பையன்கள் இருவரும் அம்மாவுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறார்கள்.
உடனே நாராயணன் சத்தியபாமா அவர்களை அழைத்து அம்மா உங்கள் பையன்களை அழைத்து உங்க சம்மதத்தை சொல்லுங்கள் என்கிறார். இதை கேட்ட சத்தியபாமா அவர்கள் பையன்களை அழைத்து மகன்களே நீங்கள் வேலைக்கு போவதாக சொன்னீர்கள் இப்போது உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கிறது. உங்களோட அபிப்ராயம் என்ன மகன்களே என்று கேட்கின்றார்கள். அம்மா நாங்கள் வேலைக்கு செல்ல விரும்புகின்றோம். நாராயணன் மாமா சொன்ன விவரங்களை நாங்கள் நன்றாக கேட்டு கொண்டோ ம். ஆனால் நாங்கள் உங்களை தனியாக விட்டு விட்டு எப்படி போவது என்று எங்களுக்கு வருத்தமாக இருக்கின்றது. இந்த வார்த்தையை கேட்ட தாய் இரு மகன்களையும் கட்டி கொண்டு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார். எதுவுமே சொல்லாமல் பிள்ளைகளும் அம்மாவை கட்டி பிடித்து அழுகின்றார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த நாராயணன் அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லி இருவரையும் அழைத்து செல்கின்றார். பாண்டிச்சேரியை சேர்ந்த காரைக்கால் என்ற ஊரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரின் நாடகங்கள் நடந்து கொண்டு வருகிறது. இந்த கம்பெனியால் நடத்தும் நாடகங்களில் நடிப்பவர்கள் பெரும்பகுதி சிறுவர்கள்தான் இந்நிலையில் நாராயணன் அழைத்துச் சென்ற இந்த இரு சிறுவர்களையும் கம்பெனி முதலாளி பார்த்து விட்டு பையன்கள் நன்றாக நல்ல நிறமாக, அழகாக இருக்கின்றார்கள் இவர்களை நடிக்க வைக்கலாம் என்று சொல்லி நடிகர்களுக்கான பயிற்சி கூடத்திற்கு அனுப்புகிறார்.
குழப்பத்தில் ஆழ்ந்த சத்திய தாய்
mgrஇதை கேட்ட சத்தியபாமா அவர்களுக்கு மிக குழப்பமாகி விட்டது. மகன்களுடைய வளர்ச்சி முக்கியமா, தன்னுடன் வீட்டில் வந்து தங்கி செல்வது முக்கியமா என்ற குழப்பத்தில் உள்ள போது மீண்டும் நாராயணனை சந்தித்து விபரத்தை சொல்லி இதற்கு என்ன வழி என்று கேட்கும்போது வாரத்தில் நாடகங்கள் இல்லாத நாட்களில் ஒரு நாள் அல்லது இரு நாள் என்னுடன் என் பிள்ளைகள் வந்து தங்கி செல்ல வழி வகுத்து கொடுங்கள் என்று நாராயணனிடம் அவர் மிக அன்போடு கேட்கிறார். அதன்படி நாராயணன் அவர்களும் முதலாளியை சந்தித்து இந்த விவரத்தை தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை கேட்ட முதலாளி இந்த இரு பையன்களும் நமக்கு முக்கியமாக நாடகத்திற்கு வேண்டும் என்ற நினைப்போடு இந்த பையன்களுக்கு ஒரு சலுகை, நாடகங்கள் இல்லா காலத்திலும் பயிற்சிகள் இல்லாத நாட்களிலும் ஒரு, இரு நாட்களுக்கு தங்கி வரலாம் என்று கம்பெனி முதலாளி சொல்கிறார். இதுவே பெரிய தெய்வ வாக்காகக் கொண்டு சத்தியபாமா அவர்களிடம் விவரத்தை சொல்கிறார் திரு. நாராயணன் அவர்கள், அதன்படி mgrக்கும் சக்கரபாணி அவர்களுக்கும் நாடகங்கள் இல்லாத நாட்களில் லீவு நாட்களில் அம்மாவுடன் தங்கியிருந்து கம்பெனி முதலாளி அனுமதித்தை அறிந்து இருவரும் ஆனந்தம் அடைகிறார்கள். அதன் படி அந்த நாட்களில் இருவரும் ஓரிரு நாட்களில் தங்கி இருந்து தன் அம்மா கையினால் சாப்பாடு சாப்பிடுவதை நினைத்து பூரிப்பு அடைகின்றார்கள். அதே நேரத்தில் சத்தியபாமா அவர்கள் தன் இளைய மகன் சாப்பாட்டை மிக குறைத்து சாப்பிடுவதையும் மிக மெலிந்து இருப்பதையும் கவனிக்கிறார்.
என்ன மகனே மிகவும் மெலிந்து இருக்கிறாய் சாப்பாடும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்கிறார். உடனே செல்ல மகன் mgr அவர்கள் மிகதுடிப் போடு செல்லத்தோடு அம்மாவோட கண்ணத்தை வருடி அம்மா நான் மெலிந்து போனால் நான் என்ன செய்ய முடியும். நான் என்னால் முடிந்த வரைதான் சாப்பிடமுடியும் முன்போல் இப்போது எல்லாம் சாப்பிடமுடியவில்லை அம்மா. அதை கேட்ட தான் மகனை தொட்டு தழுவி மேலும் கீழுமாக பார்க்கிறார். அடுத்த நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன் இளைய மகனுடைய உடல் மெலிவை பற்றியும், உணவு குறைவாக உன்னுவதை பற்றியும், இதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா என்று கேட்கிறார். இதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதில் ஒருவர் பெரியதாக வைத்தியம் செய்ய வேண்டாம் நான் சொல்வது போல் சீரகம், கொஞ்சம் வெந்தயம், தண்ணீர், போட்டு நன்றாக சுடவைத்து அதோடு மேலும் கொஞ்சம் பச்சை தண்ணியை கலந்து ஒரு சொம்பில் குடிப்பது போல் ஊற்றி வைத்து அந்த தண்ணீரை குடிக்க சொல்லு, அதோடு வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாவாக்காய் சமைத்து கொடு வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் செத்துவிடும். அப்புறம் அவனுக்கு முடிந்த வரைக்கும் பால், பழங்கள் ஏதாவது கொடுத்து வா இதோடு சேர்த்து முடிந்தால் ஒரு கோழி முட்டை கொடு என்று ஒரு வயதான பாட்டி சொல்லுகிறார். இந்த நிலையில் கம்பெனியில் நாடகம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து நாடகத்தில் நடிப்பவர்கள் அத்தனை பேரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடுத்து நாடகத்தில் நடிக்கிற முக்கியமானவர்கள் நடனம் பயிற்சியும், சண்டை பயிற்சியும் பாட்டு பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்காக கம்பனெ தனித்தனியாக வாத்தியர்களை நியமித்து உள்ளர்கள். இப்படி இருக்கும்போது mgrக்கும் சக்கரபாணியும் அம்மாவுடன் இருந்தால் எப்படி என்று நாராயணன் அவர்கள் கேட்டு சத்தியபாமா அவர்களிடம் சொல்லி மீண்டும் ஒரு வார காலத்தில் அழைத்து சொல்கிறார். மீண்டும் தொடர்ந்து எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.
உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்கிறார்
mgrஇதில் mgr அவர்கள் அண்ணனைவிட எல்லா பயிற்சிகளையும் கற்று கொள்கிறார். இப்படி இருக்கும் போது பாட்டுக்கு குரல் அமைப்பு சரியாக அமையவில்லை. சரி இப்போதைக்கு mgr அவருக்கு என்ன கற்று கொள்ள வருகின்றதோ அதை கற்று கொடுங்கள் என்று சொல்லுகிறார்கள். முதலாளி mgrக்கு உடற்பயிற்சி செய்வதும், அடுத்து சண்டை பயிற்சியையும் செய்வதிலும் மிக வேகமாக, கவனமாகவும் வாத்தியார் அவர்களிடம் பிரம்பு அடி வாங்காமல் செய்வார், நடன பயிற்சியும் சற்று குறைவுதான் ஆயினும் அதை விடாமல் செய்து கொண்டுவந்தார். எப்படியாவது நாம் சொந்த குரலில் பாட வேண்டும் என்று முயற்சி செய்து அதற்கு குரல் வலம் சரியாவரவில்லையே என்று வேதனைப்பட்டு கொண்டார்.
இந்த விஷயத்தில் அண்ணனிடம் எனக்கு பாட வரவில்லையே என்ன செய்யலாம் என்று கேட்கிறார். அதற்கு அண்ணன் சொல்கிறார் தம்பி இதை தவிர மற்றதெல்லாம் உனக்கு சரியாக வருகிறது. அவைகளை விடாமல் ஒழுங்காக கற்று கொள். அதோடு அவர் நிறுத்தாமல் இந்த மாதிரி சின்ன விஷயங்களை எல்லாம் நினைத்து வருத்தப்பட கூடாது. எனக்கு எல்லா கலைகளும் சரியாக வரவில்லை அதை பற்றி நான் என்ன கவலைபட்டு கொண்டா இருக்கின்றேன். காலைக்காலில் தொடர்ந்து வாரத்தில் இரண்டு மூன்று விதமான நாடகங்கள் நடந்து கொண்டு வரும், ஒரு நாள் நல்லதங்காள் நாடகம் அன்று முதல் முதலாக நடைபெற இருக்கிறது. அந்த நாடகத்தில் நல்லதங்காலுக்கு 7 பிள்ளை அதில் கடைசி மகனாக mgrக்கு மட்டும் தான் நடிப்பும், வசனமும் உண்டு இது தினமும் mgr அவருக்கு பயிற்சி அளித்து வந்தார்கள்.
7வது மகனாக நாடகத்தில்
இந்த நாடகம் இந்த தேதியில் இந்த கிழமையில் நடைபெறும் விளம்பரம் செய்யபட்டு வந்தது. அந்த காலத்தில் சினிமாவைவிட நாடகங்கள் தான் அதிகம், ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு நாடகங்கள் நடத்தி வந்தார்கள். சில ஊர்களில் சில கிராமங்களில் இம்மாதிரி நாடகங்கள் நடக்கும்போது, நாடக கொட்டைகளில் மின்சார வசதி இருக்காது, மைக் இருக்காது பெட்ரோமாஸ் லைட்களும் மண்ணென்யை லைட்களும் தான் எங்கும் இருக்கும் நாடகத்தில் நடிப்பவர்கள் வசனங்களையும் பாடல்களையும் மிக சத்தமாக பேச வேண்டும் நாடகம் நடக்கின்ற அன்று நாடகத்தை பார்க்க வந்த மக்கள் கூட்டம் மிக மிக அதிகம், நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் தூக்கி போட்டு கொள்ளும் காட்சி மேடைக்கு வருகிறது. ஏழு குழந்தைகளையும் மேடையில் அமைக்கப்பட்ட கிணற்று பக்கத்தில் நிற்க வைத்து விட்டு கிணற்றில் தண்ணீர் இருக்கின்றதா கிணற்றில் போட்டால் குழந்தைகள் செத்து போய்விடுமா என்று கிணற்றை நோக்கி பார்க்கிறார்.
கதையில் அமைப்பின் படி வாழ்க்கையில் தோல்வி அடைந்த நல்லதங்காள் தான் பெற்ற மனம் வெறுத்து 7 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் சாக வேண்டும் என்ற முடிவோடு கிணற்றை பார்க்கின்றார் அதன் படி தன்னுடைய குழந்தைகளை கட்டி அழுகிறார். இந்த நேரத்தில் நாடகத்தை பார்க்கின்ற பொது மக்களிடமிருந்து ஒரு சிறிய சத்தம்கூட கேட்கவில்லை. இது ஒரு முக்கியமான பெரிய அம்சமான காட்சி, மேடையின் திரையின் உள்பகுதியில் நாடகத்தில் அமைப்பாளரும் முதலாளியும் மற்ற திரைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளிகளும் மிக கவனத்தோடு தயாராக இருக்கிறார்கள், இப்போது நல்லதங்காள் ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போடுகிறார். 7வது குழந்தையாக mgr தூக்கி கிணற்றில் போட வேண்டும். தனக்கு முன் 6 குழந்தை கிணற்றில் போட்டு கொண்டு இருக்கும் காட்சியை பார்த்த mgr தன்னிடம் அந்த தாய் வரும் போது தாயின் பிடியில் அகப்படாமல் அங்கம் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டார் இதை அறிந்த கம்பெனி முதலாளியும் நாடக இயக்குனரும் திரைக்கு மறைவில் நின்று கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போய் பையனை எப்படியாவதும் அழ வைக்க வேண்டும் என்ற என்னத்தோடு பையன் ஓடி திரை அருகே வரும் போது தன் கையில் இருந்த பிரம்பால் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார்கள். அந்த அடியில் பலி தாங்க முடியாமல் mgr அம்மா, அம்மா என்று பலத்த குரலில் கிணற்றை சுற்றி சுற்றி வரும்போது தன் தாயான நல்லதங்காள் இவனை பிடித்து விடுகிறாள். பிடித்தவுடனே அந்த பையன் அம்மா என்னை கொன்றுவிடாதீர்கள் என்னை கொன்று விடாதீர்கள் என்று பலத்த குரலில் கத்துகிறான்.
பிரம்பால் தலையில் அடித்த வாத்தியார்
இந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்த பொதுமக்கள் மிக ஆரவாரத்தோடு கை தட்டினார்கள். அதில் சில பெண்கள் மிக உணர்ச்சி வசப்பட்டு இந்த பையனை கொன்றுவிடாதேடி என்று உணர்ச்சிவசபட்டு கதறினார்கள். பிரம்பால் தலையில் அடித்த வாத்தியார் உடனே mgrரை அழைத்து கொண்டு உள்ளே சென்று செல்லமாக கட்டி அனைத்து கொண்டு ராமசந்திரா நீ ரொம்ப நன்றாக நடித்து விட்டாய் என்று தான் பிரம்பால் அடித்த இடத்தை கையில் தடவி கொண்டு மிக மிக சந்தோஷபடுகின்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் மிக அற்புதமாக நடித்து பொதுமக்களிடம் நல் மதிப்பை பெற்று கம்பெனிக்கு ஒரு நல்ல பெயரை எடுத்தது கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய மதிப்பு ஏற்பட்டது.
இலங்கை சிங்கள நாட்டிலே பிறந்து இந்திய நாட்டிற்கு தமிழ்நாட்டிற்கு வந்து கல்வி பயின்று (ஆங்கிலேயர் காலத்தில்) பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாண்டிச்சேரி, காரைக்காலில் மிக அருமையாக நடித்த எம்.ஜி.ஆருக்கு பொதுமக்களின் கைதட்டலும், ஆசியும் கிடைத்தது. அதோடு மதுரை பாய்ஸ் ஒரிஜினல் நாடக கம்பெனியாரின் பாராட்டும் கிடைத்தது. இந்த செய்தியை கேட்ட தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகனின் வளர்ச்சியை பார்த்து அளவற்ற அளவுக்கு சந்தோஷப்பட்டு தான் 10 மாதம் சுமந்த பெற்ற தாய் அந்த மகனின் வளர்ச்சி நினைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி மிக பெருமைபடுகிறார். இப்படி இருக்கையில் ஒரு நாள் நாராயணன் வழியாக தான் இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைக்கின்றார். வீட்டிற்கு வந்த மகன்களை பார்த்து சத்திய தாய் மகன்களை அனைத்து கட்டி பிடித்து ஆனந்தப்படுகிறார். அடுத்த நாள் தன் இளைய மகன் ராமச்சந்திரனை பார்த்து ஏன் அப்பா இன்னும் மெலிந்து போய் இருக்கிறாய் என்று சொல்லி கவலைப்படுகிறார், இதை எம்.ஜி.ஆர் பொருட்படுத்தவில்லை.
ஒரு மாதம் வைத்தியம் செய்ய வேண்டும்
இந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் நாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டுமுதலாளி பெயர் ஆறுமுக நாடார் இவர் வயதானவர் அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுகடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன. இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம்.ஜி.ஆரை பார்த்து கொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம். நீங்கள் கவலைபடாதீர்கள் இதற்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல்வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி 1 மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்து கொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த விஷயத்தை சத்தியதாய் எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். எம்.ஜி.ஆர் அதை கேட்டு நான் நல்லாதான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்றீர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு 1 மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள்.
சத்தியபாமா அம்மா அவர்கள் கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம்தன் மகன் எம்.ஜி.ஆர் உடல்நிலையைப் பற்றி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியே பார்த்து பேசலாம் என்று நாராயணன் சொல்லுகீறார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார். ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேச வேண்டும் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்தியபாமா அம்மா அவர்களை அழைத்து சென்று பேச வைக்கிறார். முதலாளியை பார்த்த சத்தியபாமா அவர்கள் பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொல்லுகின்றார். எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசிக்கிறார்.
பிறகு, சத்தியபாமா அம்மாவை பார்த்து, அம்மா நீங்க சொல்கிறபடி ராமச்சந்திரன் அவனுக்க உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியா கொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். அம்மா, பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து செயல்களின் நான் ஈடுபடும்போது கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும், உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்.
முதலாளியை பார்த்து கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டி கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்த உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பொருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும். உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பொருத்து இருப்பது நல்லது. அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து 1 மாதத்திற்கு நீ உன் உடல்நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்ய தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்து கொண்ட இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைக்கிறார்.
போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம்நாடார் சத்தியபாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார். நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லிட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
தினமும் பனங்கள்ளை சாப்பிட வேண்டும்
இது வரையிலும் எம்.ஜி.ஆருக்கு தன் உடம்பு என்ன செய்கிறது, எதற்தாக தனக்கு மருந்து கொடுக்கின்றார்கள். அதுவும் ஒரு மாத காலத்திற்கு என்று நினைத்து கொண்டு இருக்கிறார், ஆறுமுக நாடார் நேராக கல் இறக்கும்தோப்புக்கு செல்கிறார். அங்கு முக்கியமான ஒரு நபரை அழைத்து தினமும் காலையில் 7 மணிக்கு ஒரு மரத்து பணமரத்து கள் ஒரு முட்டியோடு (சிறிய மண் குடுவை) பனங்கள்ளை, சத்தியபாமா அவர்கள் வீட்டில் இது மருந்துக்காக மிக கவனமாக எச்சரிக்கையாக எடுத்து சென்று கொடுக்கவேண்டும். அதன்படி மறுநாள் காலையில் 7 மணிக்கு ஒரு மண் குடுவையுடன் சத்தியபாமா வீட்டில் கதவை தட்டி அம்மாவை அழைத்து அம்மா தோப்புக்கார அய்யா அவர்கள் இதை தங்களிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். இது போல் தினமும் காலை 7 மணிக்கு கொண்டு வருவேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அடுத்து குடுவையில் கொண்டு வந்த பனங்கள்ளை சுத்தமாக ஒரு துணியில் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொண்டு காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது தன் மகனை அழைத்து ராமச்சந்திரா வைத்தியற் கொடுத்து அனுப்பிய மருந்த ரெடி. இதை உடனடியாக வந்து சாப்பிட்டு விடு தன்மகனை அழைக்கிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் முகபாவம் கசப்பு அடைந்து போய் வேண்டா வெறுப்போடு, இதை வாங்கி குடித்த எம்.ஜி.ஆர் சற்று நேரத்தில் என்ன இனிப்பாக இருக்கிறதே இது என்ன மருந்து என்று தாயிடம் கேட்கிறார்.
உடனே தாய், நீ சாப்பிடுவது மருந்து அது இனிப்பா இருக்கா கசப்பா இருக்கா என்று கேட்க கூடாது. கொடுத்ததை குடித்து விடவேண்டும். இதே போல் தினம் 7 மணிக்கு குடிக்க வேண்டும். இதை கேட்ட mgr அவர்கள் அம்மா சொல்லை தட்டாமல் பயபக்தியோடு நடந்து கொள்ளுபவர். ஒரு நாள் காலையில் உடற்பயிற்சிக்கு செல்லாமல் வீட்டு வாசலிலே வெளியே நின்று கொண்டு மருந்து எடுத்து கொண்டு வரும் நபரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் மருந்து கொண்டு வரும் அவரும் ஒரு துணி பையில் ஒரு சிறிய மண் குடுவையில் நிறைந்த பனை மரத்து கள்ளை கொண்டு வருகிறார். இதை mgr அவர்கள் அம்மா உள்ளே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதை என்னிடம் கொடுங்கள் கொடுத்து விடுகிறேன் என்று கேட்டு வாங்கி கொண்டார், குடுவையே பிரித்து பார்க்கிறார். அந்த குடுவையில் உள்ள கல்லில் தேன் ஈக்கள் செத்து மிதப்பதோடு நூங்கு நொறையோடு இருப்பதை பார்க்கிறார். இது என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, வீட்டில் உள்ளிருந்துகள் குடுவை இன்னும் வரவில்லையே என்று நினைத்து கொண்டு வெளியே வருகிறார்கள் சத்தியபாமா அம்மா அவர்கள். கள் குடுவை mgr கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியோடு மண் குடுவையை கையில் வாங்கி கொள்கிறார். உடனே mgr அம்மாவை பார்த்து அம்மா இது என்ன இதிலே பூச்சி புழுவும் பொங்கும் நுறையாக இருக்கிறதே இது என்ன என்று அம்மாவிடம் சற்று கோபத்தோடு கேட்கிறார். உடனே அம்மா! ராமசந்திரா இது உனக்கு தேவையில்லை, நான் இதை சுத்தம் செய்து கொண்டு வருகிறேன். நீ குடித்துவிட வேண்டும் என்று அம்மா சொன்னவுடன் அவர் குடித்து விட்டார்.
இருந்தாலும் mgrக்கு குடிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அன்னைக்கு குடுவையைப் பார்க்கும்போது பூச்சி புழுவும்இ பொங்கும் நுறையாக இருந்தது இது என்ன மருந்து என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு mgr அவர்கள் இந்த பிரச்சனையை விட்டு விட்டு ஒரு நாளைந்து நாள் கழித்து அந்தகல் குடுவை கொண்டு வரும் நபரிடம் ஐயா, இந்த மருந்து குடிப்பதற்கு நல்ல சுவையாக இருக்கிறது. முன்னைவிட என் உடம்பு நல்ல தெம்பாக, வலுவாக இருக்கின்றது. இது என்ன மருந்து எங்கே இருந்து எடுத்து வருகிறீர்கள். பொங்கும் நுறையாக இருக்கிறது என்று அவரிடம் அன்போடு கேட்கின்றார். உடனே கள் குடுவையை கொண்டு வந்தவர் இந்த கள்ளுடைய விவரத்தையும் மகிமையையும் விவரமாக சொல்லி விடுகிறார். இதை அறிந்து கொண்ட mgr அடுத்து ஒரு இரண்டு நாளில் மதிய நேரத்தில் சாப்பாட்டு நேரத்தில் தன் தாயிடம் அம்மா எனக்கு கொடுத்து வருகிறீர்களே அதற்கு பெயர் என்ன என்று அம்மாவிடம் கேட்கிறார். அம்மா நீங்கள் சொன்னால்தான் மருந்தை சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறார். ராமசந்திரா இதற்கு பெயர் பனங்கல் வைத்திய முறைபடி இதை வைத்தியர் ஆறுமுக நாடார் ஏற்பாட்டில் நான் உனக்கு தினமும் நான் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். இதை கேட்ட mgr சற்று யோசிக்கிறார். கம்பெனியில் வேலை செய்கின்ற வாத்தியார்கள் மற்றும் பெரிய ஆட்கள் கள் குடிப்பதை பற்றி பேசி கொண்டு இருப்பதை mgr சில நேரங்களில் கேட்டு இருக்கிறார்.
அந்த கள்ளுதானே இது என்ற முடிவோடு தன் தாயிடம் அம்மா நீ இதை மருந்து என்று நினைக்கிறாய். அம்மா இது மருந்து அல்ல இது போதை பொருள் இதை இப்போ குடிப்பவர்கள் நாளடைவில் ஒரு பெரிய குடிகாரனாக ஆகிவிடுவார்கள். இப்படிப்பட்ட பொருளை எனக்கு கொடுத்து என்னை ஒரு குடிகாரனாக்கி விடாதே நாளையிலிருந்து குடிக்கமாட்டேன் என்று கடுமையாக சற்று கோபத்தோடு சொல்கிறார். உடனே சற்றும் தயங்காமல் அம்மா படபடவென்று மகனே என்ற பொருள் நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது நமது மனநிலையை பொருத்தது. நீ சொல்வது போல் மற்றவர்களுக்கு போதை பொருளாக இருக்கலாம், ஆனால் இது உனக்கு மருந்து, எனவே நீ இதை மருந்தாக நினைத்து 30 நாட்களுக்கு குடித்தாக வேண்டும். இது மாதிரி குடிபொருள்களையோ, போதை பொருள்களையோ, குடிப்பர்களை என் வீட்டுக்குள் கூட நுழையவிடமாட்டேன் இதை மிக கண்டிப்பாக சொல்கிறார். இது உங்களுக்கும் தான் என்று சொன்னவுடனே இதை கேட்ட mgr அவர்கள் தாயின் அறிவுரைகளை கேட்டு மெளனமாக இருந்து விட்டார். அதோடு சத்திய தாய் சில அறிவுரைகளை கூறினார்க்ள. கம்பெனியில் உடல்நிலை வளர்ச்சிக்காக பனங்கல் வாங்கி கொடுத்தார்கள் என்று அண்ணன் சக்கரபாணி உள்பட யாருக்கும் தெரியகூடாது. அதற்கு பதிலாக ஏதோ கசாயம் கொடுத்தார்க்ள என்றுதான் நீ சொல்ல வேண்டும். இப்படி ஒரு மாதத்திற்குள் ஓர் அளவு உடல் சற்று, உடல் வளர்ச்சியடைந்து இருந்தது. ஒரு மாதம் ஆகிவிட்டது, நான் வரும்போது இருந்த உடல் நிலை எனக்கே கொஞ்ச நல்லா வந்து இருக்கிற மாதிரி தெரியுது, நல்லா பசிக்குது நல்லா சாப்பிடுகிறேன். கம்பெனிக்கு சென்ற பிறகு கம்பெனியில் எல்லோருக்கும் கொடுக்கும் உணவைதான் உண்ணமுடியும் எனக்கு என்று தனியாக கேட்க முடியாது.
மேலும், காலையிலேயே உடற்பயிற்சி, சண்டை பயிற்சி, மாலையில் நடன பயிற்சி, நடிப்பு பயிற்சி இப்படி எனக்கு தினமும் பயிற்சிகள் இருக்கும் இந்த மாதிரி பயிற்சி எடுத்து கொள்ளும் காலத்திலே உடல் சற்று மெலியலாம் அதை பார்த்துவிட்டு மகனை சரியாக சாப்பிடுவது இல்லையா என்று கேட்க கூடாது. அம்மா எனக்கு உடல் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசையில்லை. அதற்கு பதிலாக உடல் வளர்ச்சியை மன வளர்ச்சி, திடம் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, நான் தொழிலில் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், அதோடு அண்ணனும் தொழிலில் வளர்ச்சி அடையவேண்டும் என்பது என்னுடைய நோக்கம், என்று சொல்லி முடித்தவுடனே சத்தியதாய் தன்மகனை கட்டி பிடித்து, உச்சி முகர்ந்து மிக ஆனந்தப்படுகிறார். மகனே உங்கள் தொழிலில் மேலும் மேலும் உயரவேண்டும் எந்த குறையும் இல்லாமல் வளர்ச்சி அடையவேண்டும் என்று கடவுளை நான் வணங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி மகனை கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறார்கள். கம்பெனி சென்ற mgrரை பார்த்து எல்லோரும் இப்போது உன் உடல்நிலை நல்லா இருக்கு, ஓரளவு உன் உடம்பு நன்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று சொல்லி அண்ணன் சக்கரபாணி உள்பட எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.
அவர்களிடம் விடைபெற்று கம்பெனி முதலாளியைப் பார்த்து வணங்குகிறார். என்னாடா ராமசந்திரா மருந்துகளை எல்லாம் ஒழுங்காக சாப்பிட்டியா இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு என்று கேட்கிறார். உடனே mgr ஐயா எங்க அம்மா கொடுத்த மருந்துகளையும், உணவுகளையும் ஒழுங்காக சாப்பிட்டேன், இப்போ என் உடம்பு எப்படி இருக்குது நீங்கள் சொல்லுங்கள், இதை கேட்ட முதலாளி இவன் அழகன் மட்டுமல்ல, மிக அறிவிலும் கூட என்று நினைத்து கொண்டு ராமசந்திரா நீ முன்னைவிட நல்லாதான் இருக்கிறாய் என்று கம்பெனி முதலாளி வாழ்த்துகிறார். பிறகு mgr அவர்கள் தொடர்ந்து தன் பணிகள் எந்த குறைகளும் ஏற்படகூடாது என்ற எண்ணத்துடன், அடுத்து நமக்கு என்ற வேஷத்தில் நடிப்பு பாத்திரம் கிடைக்கும் அதில் நாம் எப்படி புகழ் அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டு தன் பணிகளை தொடர்கிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்துடன் கம்பெனியில் பல நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும்போது ஒரு நாள் தனக்கும் அண்ணன் சக்கரபாணிக்கும் சரியான சம்பளம் போடவில்லை. ஏதோ அப்போ அப்போ அம்மாவிக்கு அனுப்பி வைப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள் தனக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்பதை பற்றி யோசிக்கிறார்கள்.
நாடக கம்பெனியில் சேர்ந்து கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் பணியாற்றியும் நமக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்று நினைத்து கவலைபடுகிறார்கள். இவர்கள் இருவரும் நாடக கம்பெனியில் பயிற்சி கற்றுக் கொள்ளும்போது முக்கிய நாடக நடிகர்கள் p.u. சின்னப்பா, காளி.என். ரத்தினம், மற்றும் பல முக்கிய நடிகர்கள், நாடக வாத்தியர் t.s. பாலையா, m.கந்தசாமிபிள்ளை, mgr, சக்கரபாணிக்கும் நாடக பயிற்சியாளராக இந்த நாடக கம்பெனியில், mgrக்கும் mgcக்கும் தினம் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அந்த கால கட்டத்தில் mgrக்கு சண்டை பயிற்சி மிக கடுமையாக இருக்கும், mgr மிக சுறு சுறுப்பாகவும் கற்றுக் கொண்டார். கம்பெனியின் முதலாளி பெயர் சச்சிதானம் பிள்ளைக்கு mgr இவ்வளவு சிறிய வயதில் புத்தி கூர்மையுடன் பயிற்சிகளை இவ்வளவு பெரிய அறிவுள்ளவனாக இருக்கிறானே என்று பெருமை அடைந்தார்.
முதன் முதலில் பேசிய வசனம்
இந்த பயிற்சிகளை தனக்கு சொல்லி தரும் வாத்தியார்களிடம் mgr மிகவும் பயபக்தியாக இருப்பார், இவைகளில் mgrக்கு நடனம் கற்று கொள்வதில் சற்று கடினமாக இருந்தது. அந்த காலத்தில் நாடகங்களில் ஆண்கள் தான் பெண் வேடம் போட வேண்டும். ஆகவே நாடகத்தில் நடிக்க வசனம் பேச பாட தெரியனும். Mgrக்கு பாட்டும் நடனமும் சரியாக வரவில்லை நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு என்பவர் மிக கோபக்காரர் இவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்போது அடியும் வாங்குவாராம் எப்படியோ மிக சிரமப்பட்டு நடனத்தை கற்று கொண்டார். இந்த நடன கலை பிற்காலத்தில் சினிமாவுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. Mgr சிறு சிறு வேடங்கள்தான் கம்பெனியில் கிடைத்தது, இந்த கம்பெனியில் ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் ஆண்கள் உள்ளனர். கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் நடிகர்களுக்கு சாப்பாடு தங்கும் இடம், உடை, சம்பளம், இவைகள் அதிகமாக இருக்கும். இப்படி முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் மற்ற சக நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். இப்படிபட்ட பெரிய நடிகர்களுடன் நல்லா பேசவேண்டும் என்ற ஆசை mgrக்கு உண்டு. என்ன செய்வது mgr சின்னபையன் கம்பெனிக்கு புதுசு ஆயினும் அந்த ஆசையை அவர் விடவில்லை. அதோடுதான் நாமும் இவர்களைபோல் நடித்து பெரிய அளவில் புகழ் பெறவேண்டும் அப்போதுதான் நாம் அம்மாவுக்கு அதிகமாக பணம் அனுப்பமுடியும் என்ற எண்ணமும் உண்டு. அவர் நடித்த முதல் நாடகம் “மகாபாரதம்” முதல் நாடக மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1924. Mgrக்கு முதல் வசனம் அய்யயோ பாம்பு காப்பாற்றுங்கள் என்று பலமுறை அலறி அடித்துக்கொண்டு ஓடும்போது அர்சுணன் மீது மோதி கீழே விழுந்து விட்டார் தவறுதளாக, ஆனால் அது பொது மக்களிடம் இருந்து பெரிய அளவில் கை தட்டல் கிடைத்தது.
Mgrக்கு எதிர்பாராமல் இப்படியொரு கைதட்டல் கிடைத்தது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் மற்ற நடிகர்களுக்கு இந்த சின்னபையன் ராமசந்திரனுக்கு முதல் நாடகம் முதல் நாளிலேயே இப்படி ஒரு கை தட்டலா என்று ஒரே ஆச்சரியம் ஏற்பட்டது. இப்படியாக பல நாடகங்களில், பல சிரமமான காட்சிகளில்நடித்து வந்தார். Mgrக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த கம்பெனியில் p.u. சின்னபா, காளி.என், ரத்தினம் இவர்களுடன் மிக சிரமபட்டு mgr தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களும் mgr மீது அன்பாக இருந்தார்கள். நாடகமும் பல ஊர்களுக்கு சென்று கொண்டு இருந்தது. கோயம்பத்தூரில் நாடகம் அமைக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில், ஒரு நாள் mgr, p.u. சின்னப்பாவிடம் தன் விருப்பத்தை சொன்னார், சின்னப்பாவும் mgrக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று சொல்லி நாடகத்திலேயே நடித்து நல்ல தேர்ச்சி பெறு என்று சொல்லிவிட்டார்.
ஒரு நாள் தசவதாரம் நாடகம் இதில் p.u. சின்னப்பாவுக்கு தொண்டை சரியில்லை, உடல்நிலை சரியில்லை, அவருக்கு பதிலாக mgrரை அந்த வேடத்தில் போட்டு பரதனாக நடிக்க சொன்னார் முதலாளி, mgrக்கு மிகபெரிய சங்கடமாக ஆகிவிட்டது. காரணம் அது பெரிய சீன் எப்படியோ தைரியத்துடன் மேக்கப் முடித்து mgr அவர்கள் மேடைக்கு வந்தார். அன்று இந்த நாடகத்தை பார்க்க கிட்டப்பா வந்து முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதை mgr பார்த்துவிட்டார். Mgrக்கு ஒரே சந்தோஷம் ஒரு பிரபல நடிகர் நம்ப நாடகத்தை பார்க்க வந்து இருக்கிறார், அதுவும் நாம் இந்த சின்னப்பாவுக்கு பதிலாக இந்த பையன் நடிக்கிறானே என்று ஆச்சரியப்பட்டார். அன்று mgr முடிந்தவரை சிரமப்பட்டு நல்லாவே நடித்து விட்டார். Mgr நடித்த சீன் இடைவேளையோடு முடிந்துவிட்டது. கம்பெனியில் மற்ற நடிகர்களும், முதலாளியும் ஆழுசு p.u. சின்னப்பாவை போல் எதுவும் குறையும் இல்லாமல் வசனம் பேசி நடித்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். நாடக இடைவேளையில் கிட்டப்பா மேடை கொட்டைக்குள் வந்து காளி.என். ரத்தினத்தை அழைத்து எங்கே p.u. சின்னப்பா என்று கேட்டார். அவருக்கு தொண்டை கட்டி போச்சு அதனாலே அவர் வரவில்லை என்று சொன்னார்கள். அடுத்து கிட்டப்பா உள்ள வந்ததை அறிந்த mgr மிகவும் பதட்டம் அடைந்துவிட்டார்.
தன்னை பற்றி எதுவும் குறை சொல்ல வந்து இருப்பாரோ என்று நினைத்து கிட்டப்பா காளியிடம் p.u. சின்னப்பாவுக்கு பதிலாக நடித்த பையன் யார், பெயர் என்ன என்று கேட்டார், காளி இவன் பெயர் ராமசந்திரன் நல்ல பையன், நல்ல குணம் உள்ளவன், அறிவாளி கொடுத்த வேளையை சரியாக செய்வான் என்றார் காளி உடனே கிட்டப்பா mgrரை பார்த்து, கிட்ட வரும்படி அழைத்தார் mgr தயங்கினார். உடனே காளி அடவாப்பா அண்ணன் கூப்பிடுராங்க வந்து அண்ணன் கிட்ட ஆசிர்வாதம் பெற்றுக்கொள் என்று சொன்னதும் mgr ஆனந்த கண்ணீருடன் கிட்டப்பாவின் காலை தொட்டு வணங்கினார். கிட்டப்பாவும் mgrரை கட்டி தழுவி முதுகில்தட்டிக் கொடுத்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் நீ நல்லா முன்னுக்கு வருவாய் என்று வாழ்த்தி சென்றார். இப்படியாக ஊர் ஊராக சென்று நாடகங்களை நடத்தி வந்த அந்த கம்பெனிக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து. இதில் சிங்கப்பூர் மலேசியா, ரங்கூன், பர்மா போன்ற ஊர்களுக்கு சென்று நாடக கம்பெனி நல்ல பெயரை எடுத்தது, முதலில் பர்மா தமிழ்ர்கள் சார்பில் நாடக கம்பெனியை அழைக்கப்பட்டது. அதில் பெரிய நடிகர்களோடு mgrருக்கும், சக்கரபாணிக்கும் பர்மாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து கப்பல் வழியாக பர்மாவுக்கு புறப்பட்டார்கள். கப்பலில் mgr அவர்களுக்கு தாயாரை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றோமே இனி எப்போ தமிழ்நாட்டிற்கு திரும்புவோம் எப்போ நம் தாயை பார்ப்போம் என்ற பெரும் கவலை அண்ணனிடம் இதை சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். அண்ணனும் மற்ற நடிகர்களும் mgrரை சமாதானப்படுத்தினார்கள். கப்பலில் 3வது நாள் mgrக்கு குமட்டல், வாந்தி, ஏற்பட்டது, மிகவும் சிரமப்பட்டார். இது முதலாளிக்கும் மற்ற பெரிய நடிகர்களுக்கும் தெரிந்தது கம்பெனியில் நிர்வாக பொறுப்பில் உள்ள கந்தசாமியின் மகன் m.k. ராதா அவர்களும் mgrக்கு மாத்திரை மருந்துகளை கொடுத்து சமாதானப்படுதினார்கள்.
முதன் முதல் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இப்படிதான் சில கோளாறுகள் வரும் என்று சொல்லி சென்றார்கள். கப்பல் பர்மா ரங்கோன் சென்று அடைய 7 நாட்கள் ஆச்சு, பர்மா ரங்கோன் சென்று அடைந்ததும் இவர்களை வரவேற்று அழைத்து சென்று ஒரு பெரிய பள்ளிகூடத்தில் தங்க வைத்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் ரங்கோன் தமிழ் சங்க தலைவர். ரங்கோன் பர்மா தமிழர்களின் வரவேற்யும், உபசரிப்பும் mgr அவர்களுக்கு இதை எல்லாம் பார்த்து மிக சந்தோஷமும் ஆனந்தமும் அடைந்தார். பர்மா ரங்கோனில் 15 நாட்கள் மிக சிறப்பாக நாடகம் நடந்தது. 15 நாட்கள் இதில் mgr நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிகவும் வரவேற்பும் கை தட்டலும் கிடைத்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. சில சமயங்களில் ஆங்கிலம் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சக்கரபாணி சொல்லி பேச சொல்லுவார்கள். அவர் ஏற்கனவே ஆங்கிலம் நன்கு கற்று கொண்டவர் இந்த விசயத்தில் சக்கரபாணிக்கு கம்பெனியில் நல்ல மதிப்பும் இருந்தது. 15 நாள் கழித்து சென்னைக்கு திரும்புகின்ற நேரத்தில் எல்லோருக்கும் வெளிநாடு நாடகங்களை மிக சிறப்பாக முடித்து வெற்றி நடைபோட்டு கொண்டு தாய்நாட்டிற்கு போகிறோமே என்ற மகிழ்ச்சியோடு கப்பலில் வாந்தி, மயக்கம், கவலைஇன்றி சந்தோஷமாக சென்னை வந்து சேருகிறார்கள். சென்னையிலிருந்து தாயை சந்திக்க கும்பகோணம் சென்று தாயை சந்தித்து பர்மா ரங்கோனில் தனக்கு கிடைத்த மரியாதையை பர்மா தமிழர்களின் வாழ்த்துக்கள், ரங்கோனில் கிடைத்த அதிக சம்பளம் இவை அனைத்தும் சொல்லி இருவருடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்து அம்மாவின் காலில் வழிந்து ஆசிர்வாதம் பெற்றார்கள்.
வெளிநாடு சென்று வந்த மகன்களை கண்ட அந்த தாய் அளவற்ற அளவிற்கு ஆனந்தம் அடைந்தார். அப்போது mgrக்கு 14 வயது ஆகிவிட்டது பிறகு தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியிலே இருக்க வேண்டியதாகியது.
Mgr அவர்களும் p.u. சின்னப்பாவும், காளியும் மிக மிக உதவியாக நாடக கம்பெனியில் இருந்தார்கள். அண்ணன், தம்பி இருவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை எப்படியும் இந்த கம்பெனியில் இருந்து வெளியே போக வேண்டும். அப்போதுதான் நாம் முன்னுக்கு வரமுடியும் என்ற முடிவுக்கு வந்த mgr, அவர்களும் சக்கரபாணி அவர்களும் இந்த யோசனையை, p.u. சின்னப்பாவிடம் சொன்னார்கள்.
P.u.c. கம்பெனியை விட்டு ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் சக்கரபாணிக்கு மட்டும் எல்லா விபரங்களையும் சொல்லிவிட்டு, பெட்டி, சில உடைகளை மட்டும் விட்டுவிட்டு பணம் நகைகள் மற்றும் சில பொருள்களோடு வெளியேறி விட்டார்.
நாடக கம்பெனி சென்னை விஜயம்
பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து தேசம்காக்கும் என்ற நாடகத்தை ஆரம்பித்து (நடத்த) ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் 1930ல் இதில் நடிக்க mgr, mgcக்கும் முக்கிய வேடங்கள் கொடுக்கப்பட்டது. நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது தேசபக்தி என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள், காங்கிரஸ்காரர்களும் பெரும் அளவில் ஆதரவு ஏற்பட்டது. இந்த நாடகத்தில் mgrக்கு தேசபக்தர் ஒரு சாமியார் வேசம். 17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது. இந்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒற்றவாடை என்ற நாடகக் கொட்டகையில் நடந்தது.
17 வயது பையன் பழுத்தபழம் போல் சாமியார் வேடத்தில் mgr மிக சிறப்பாக நடித்து இருந்தார். இந்த நாடக கம்பெனி பல ஊர்களுக்கு சென்று கடைசியாக சென்னைக்கு வந்தது. இதில் இந்த நாடகத்தில் அரசியல் காங்கிரஸ் இருந்தது. Mgr 17 வயதில் அரசியலில் (காங்கிரஸில்) சுபாஷ்சந்திரபோஸ் பக்தன் ஆகிவிட்டார். இந்த நிலையில் சென்னையில் எப்படியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆர்வம் ஏற்பட்டு விடவே அம்மா அண்ணன் இவர்களிடம் தெரியபடுத்தினார். அவர்களும் சினிமாவில் நடிக்க எப்படி சான்ஸ் கிடைக்கும் யாரை போய் பார்த்து, எப்படி பார்ப்பது நமக்கு சினிமா ஆசை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் எம்.ஜி.ஆர். சினிமா மோகத்தை விடவில்லை. சென்னை வால்டாக்ஸ்ரோடு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ரோடு சந்திப்பில் பழைய நண்பர் உதவியுடன் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து கொண்டு சென்னையில் ஏற்கனவே தங்கி இருந்து சினிமாவில் நடிக்கும் நாடக கம்பெனி முதலாளி கந்தசாமியும் p.u. சின்னப்பா, m.k. ராதா போன்றவர்களிடம் தினமும் அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார். 18வது வயதில் நல்ல உடல் கட்டு, கதர் வேட்டி, ஜிப்பா, சாப்பாடு இவைகளைப்பற்றி கவலைபடுவதில்லை, உடை மிக சுத்தமாக இருக்கணும், உள்ளமும் சுத்தமாக இருக்கணும் என்று நினைத்து கொண்டு காலையும் மாலையும் அவர்களை சென்று பார்த்து வந்தார்.
மேலும், இந்திய சுதந்திர போராட்டம் மிகவும் வலுவாக இருந்தது மகாத்மா காந்தியின் தலைமையில் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஆங்கிலேயேருடைய முதல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. இந்த மாதிரி விஷயங்களை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தானும் ஏன் அரசியலில் ஈடுபடகூடாது. நம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் பல விதமான போராட்டங்களை நடத்தித் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் ஏன் காந்தியவாதியாக இருக்கக்கூடாது என்று நினைத்து இவரை ஒரு கதர் ஜிப்பா ஒரு கதர் பைஜாம்மா யாருக்கும் தெரியாமல் வாங்கி தைத்து போட்டு கொண்டார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் கம்பெனி முதலாளியைப் பார்த்து இத்தனை வருடங்களாக எனக்கும் என் அண்ணனுக்கும் நாடகங்களில் நடிக்க எங்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து எங்களுக்கு பல வேஷங்களை கொடுத்து நடிக்க வைத்து நாடகத்தில் எங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்படி எங்களை ஒரு நல்ல நாடக நடிகனாக வளர்த்துவிட்ட உங்களை நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை என்றென்றும் மறக்க மாட்டோ ம். ஐயா நானும் என் அண்ணனும் சினிமாவில் நடிக்க ஆசைபடுகிறோம். எங்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புங்கள் என்று சொன்னவுடன், கம்பெனி முதலாளி இதற்கு ஏதும் பதில் சொல்லமுடியாமல் சற்று மெளவுனமாக இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் காலில் விழுந்து, என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். கோபம் இல்லாமல் என்னை சந்தோஷமாக அனுப்பி வையுங்கள் என்று சொன்னதும் இந்த சொல்லை கேட்ட முதலாளி பதில் ஏதும் சொல்ல முடியாமல் எம்.ஜி.ஆரின் தோள்பட்டையும் தட்டிகொடுத்து நீ, சினிமாவில் சேர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன். இந்த செய்தியை கேட்ட எம்.ஜி.ஆர் மிகுந்த மன மகிழ்ச்சியோடு தன் பெட்டிகளை எடுத்துகொண்டு தன்னுடைய சக நடிகர்களிடம் பிரியாவிடை சொல்லி ஆனந்த கண்ணீரோடு வெளியே வரும்போது அந்த இடத்தில் கம்பெனி முதலாளி நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே, முதலாளி எம்.ஜி.ஆரிடம் வந்து கைபிடித்து எம்.ஜி.ஆரிடம் ரூ. 100அனுப்பிவைகொடுத்து வழி அனுப்பிவைக்கிறார்.( தொடரும்).........
orodizli
12th September 2020, 10:08 PM
மதுவிலக்கு - தமிழ்நாட்டுக்குப் பாராட்டு!
மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் பிரதாப் சந்திர சுந்தர் - அவர்கள் , நான்கு ஆண்டுகளில் , பூரண மதுவிலக்கை அமல் செய்வதற்கு ஒத்துழைக்குமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார்.
மூன்று நாள் "மதுவிலக்கு"' கருத்தரங்கு ஒன்றினைத் துவக்கி வைத்துப் பேசுகையில் , மதுவிலக்கை அமல் செய்ததற்குத் தமிழ் நாட்டைப் பாராட்டியதோடு , ஏனைய மாநிலங் களும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டு மென்று வலியுறுத்தினார்.
மதுவிலக்கினை அமல்படுத்துவதில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல் வருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி கூற - தாம் கடமைப்பட்டிருப்பதாகவும் மத்திய கல்வி - அமைச்சர் குறிப்பிட்டார்.
சில புதிய சட்டங்களைத் தமிழக முதல்வர் ' நிறைவேற்றியிருப்பதன் மூலம் மதுவிலக்கு அமல் செய்யப்படுவதை மேலும் தீவிரப்படுத்தி -யிருப்பதை மத்திய கல்வி அமைச்சர் சுட்டிக் கொட்டினார்.
நன்றி : ' வெஸ்கோஸ்ட் டைம்ஸ் ' 30.03.1979.........
orodizli
13th September 2020, 09:06 AM
அரசு ஊழியர்க்குப் புதிய சலுகைகள்!
அரசுப் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பு 28 ஆக உயர்த்தப்படுகிறது.
வருங்கால சேமிப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் - ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அரசு ஊழியர்களின் வருங்கால சேமிப்பு நிதிக்கு இப்போது ஏழரை சதவீதம் வட்டி தரப்படுகிறது. இப்போது முதல், 25 ஆயிரம் ரூபாய் வரையில் இந்தப் பணத்திற்கு 8 சதவீத வட்டி அளிக்கப்படும்.
தானாக ஓய்வு பெற விரும்பும் ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை எதுவும் இன்றி அவர்களுக்குச் சேர வேண்டிய ஓய்வு ஊதியத்தின் மொத்தத் தொகைபில் மூன்றில் ஒரு பங்கு பணத்தை உடனடியாக அளிப்பது என்றும் அரசு முடிவு செய்திருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட வீடுகள் வாங்கு வதற்காக இருந்தால் தான் கடன் கொடுக்கப்படும் என்பது மாற்றப்படுகிறது . இனி, முப்பது ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட முதல் தரமான வீடுகளுக்கும் கடன் கொடுக்கப்படும்.
மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவர்
(20-09-1979- ல் , தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசியது.).........
orodizli
13th September 2020, 09:07 AM
நம்பிக்கை விடியல் கீதம்
ஏழையரின் இதய வானில் ஒளி
ஏற்றி வைத்த சூரியன் நீ !
வாழையென வைத்திழந்தும் நானும்
வளர் பிறை தான் ; சந்திரன் நீ !
காளையரின் வழிப்பயணம் ; திசை
காட்டுவதால் துருவ விண்மீன் !
நாளையவர் வாழ்வினுக்கோர் நல்ல
நாள்; நம்பிக்கை விடியல் கீதம்!
விதைத்தவன் ; அறுத்துச் சேர்த்தே
விளைச்சலால் உள்ளம் சோர்ந்தோன்
சிதைத்திடும் கடனின் பின்னல்
சிக்கலைத் தீர்த்தாய் வாழி !
கதைப்பவர் கதைத்துப் பார்த்தார்;
கலகமும் மூட்டிப் பார்த்தார்!
நினைத்ததை முடிப்பவன் நீ!
பெரு நெருப்பினைச் சருகா மூடும்?
நடை பயிலக் காலிரண்டு. உலகை
நலம் பார்க்கக் கண்ணிரண்டு!
உடை கூட அணிகையிலே இரண்;
உழைப்பதற்கோ கையிரண்டு!
தடையெதற்கு சைக்கிளிலே இருவருக்கு?
தக்க வழிப் பயண மன்றோ ஏழையர்க்கு?
விடை யெதற்கு ? கேள்விக்கே;
ஆட்சி வினாக்குறிகள் நிமிர்வதற்கே ! ....
குளிருக்குப் போர்வை யானாய், விழி
குருடர்க்குப் பார்வை யானாய்!
நலிவிற்குச் செல்வ மானாய்; இந்நாட்டிற்கே
முதல்வனானாய் ! பொலிவுக்குப் புதையலானாய் ; உயர்
புரட்சிக்கோ தலைவனானாய்!
அழிவிற்கோர் ஆக்கமானாய்;
நல்ஆட்சிக் கோ வாழி ! வாழி ! ...
---கவிஞர் முத்துலிங்கம் .........
orodizli
13th September 2020, 11:55 AM
"எம்.ஜி.ஆரின் அக்கறை"
m.g.r. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.
ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.
அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாக பார்த் தார். ஜெயலலிதாவின் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் எம்.ஜி.ஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்போம் என்று ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்.ஜி.ஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியிலும் திரை யுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணி நடித்த திரைப்படம் ‘கண்ணன் என் காதலன்’. படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல நடிப்பார். ஒரு நாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும்போது இயக்குநரிடம் ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி...‘‘இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம்.ஜி.ஆர். இறங்கிவிட்டார். ‘‘அது ரிஸ்க்கான காட்சி. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்து விட்டால் என்ன ஆவது?’’ என்று கூறி வந்துவிட்டார்.
படியில் உருள்வது டூப்தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும். சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே, முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாத படி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.
ஒத்திகையின்போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர். தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்குமேல் நாற்காலி உருண்டுவிடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு 10 முறை உறுதி செய்த பின்னர்தான் ஜெயலலிதா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.
1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:
‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.
மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’
ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.
எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை யில் வெளியான அந்தப் படம் சென்னையில் வெள்ளிவிழாவை கடந்து 190 நாட்கள் ஓடி மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது. வெள்ளிவிழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘எனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படம்’’ என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்..........
orodizli
13th September 2020, 12:04 PM
எம்.ஜி.ஆர் நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.
எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.
அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.
இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.
அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.
இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்..........
orodizli
13th September 2020, 12:16 PM
எம்ஜிஆரின் வெற்றியை சகிக்க முடியாத ஒரு சில சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆருக்கு நடிக்க தெரியாது என்ற விஷத்தை பலருக்கும் விதைத்து கொண்டிருந்த காலத்தில் என்னிடமும் அதை சொன்ன போது அருகிலிருந்த ஒரு பெரியவர் அவருக்கா நடிக்க தெரியாது போடா! போய் "பாசம்" படத்தை பார்த்து விட்டு சொல்! என்றார்.
அவர் என்னிடமும் தம்பி "பாசம்" படத்தை பாருங்கள். அவர் நடிப்பின் ஆழத்தை உணர்ந்து
கொள்ளலாம் என்றார்.
எனக்கு அப்போதே "பாசம்" படத்தின் மீது ஒரு வித லயிப்பு உண்டாகி விட்டது. ஆனால் அச்சமயம் "பாசம்" சிறிது காலமாக திரையிடாமல் இருந்தார்கள். திடீரென்று 1967 வாக்கில் மேளம் அடித்து கொண்டு ஒரு விளம்பர வண்டி வருவதை பார்த்தவுடன் ஏதோ புதிய படம் வெளியாகிறது போலும் என்று நினைத்து வாசலுக்கு ஓடினேன்.
வாசலை பார்த்தால் ஜோஸப் தியேட்டர் விளம்பர வண்டி மேள தாள சத்தத்துடன் நோட்டீஸையும் விநியோகித்துக் கொண்டு சென்றதை கண்டவுடன் என்ன படம் என்று பார்த்தால் "பாசம்".
மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டேன். உடனே பார்த்து விடலாம் என நினைத்து நண்பர்களை அழைத்தேன். அவர்கள் இரவுக் காட்சிக்கு போகலாம் என்றனர்.
அன்று சனிக்கிழமை என்னடா புதுப்படத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று சிரமப்பட்டு டிக்கெட்டை எடுத்து தியேட்டருக்குள் அமர்ந்து படத்தை பார்த்தோம். எந்தப் படத்திற்கும் கலங்காத நான் முதன்முதலாக "பாசத்தை" பார்த்து மனம் கனத்து வெளி வந்தேன். அப்படியொரு படம்
வேறு எந்த நடிகனாயிருந்தாலும் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்த இயலாது.
சில நடிகர்கள் கத்தி கதறி மிகை நடிப்பின் விளிம்புக்கே நம்மை அழைத்து சென்று எல்லையில்லா தொல்லை கொடுத்திருப்பார்கள். மிகை நடிப்புக்கு வாய்ப்பிருந்தும் இயற்கையான நடிப்பின் மூலம் நம்மை கசக்கி பிழிந்திருப்பார் புரட்சி நடிகர். எம்ஜிஆரின் சோகத்தை நம்மால் சகிக்க முடியுமா? அதுவும் எம்ஜிஆர் பெண் கேட்டு அசோகன் மறுக்கும் போது நமக்குள் இனம் புரியாத வேதனை புகுந்து விடும்.
ஆனால் மற்றவர்களுக்கு
குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு அனாதைகளுக்கு அவர் உதவும் பாங்கு, சொன்ன சொல்லை காப்பாறுவது இது போன்ற அவரின் நற்குணங்கள் நமக்கும் சற்று ஊடுருவ ஆரம்பித்து விடுகின்றன. பாடல்களில் அப்படியொரு இனிமை. அதிலும் "ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி". பாடல் "சிங்கார வேலனுக்கு" அடுத்தபடியாக என்னை மிகவும் கவர்ந்த பாடல்.
"உறவு சொல்ல ஒருவனின்றி வாழ்பவன்" சுசீலா குரலில் ஜொலித்தது. தேர் ஏது! சிலை ஏது! பாடல் சோகமயமாக தொடங்கினாலும் தலைவரைக் கண்டதும் வருகின்ற உற்சாகம் நாயகிக்கு மட்டுமல்ல நமக்கும் தொற்றிக் கொள்கிறது. "பால் வண்ணம்" பாடல் இன்று வரை எவர்கிரீன் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பாடலின் இனிமையை பறை சாற்றுகிறது.
"உலகம் பிறந்தது எனக்காக" பாடல் ஒரு புதிய உற்சாகத்தை நமக்குள் விதைத்ததை கண்டேன். அந்த அருமையான பாடலுக்கு தலைவரின்
முகபாபம் அற்புதமாக இருக்கும். "மாலையும் இரவும்" பாடல் இப்ப கேட்டாலும் அனைத்தையும் மறந்து பாடலின் இனிமையில் மூழ்கி விடுவேன். கிளைமாக்ஸ் காட்சியில்
எம்ஜிஆர் உயிர் பிரிவது தாளாத சோகத்தை நமக்குள் ஊன்றி விடுகிறது. அதனால் மீண்டும் பார்க்கும் எண்ணம் வராவிட்டாலும் முதலில் பார்த்த காட்சியே இன்று வரை கண்களை விட்டு அகல மறுக்கிறது.
"பாசம்" படத்தின் கதையை எம்ஜிஆரிடம். ராமண்ணா சொன்னதும் எம்ஜிஆர் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை படத்தின் கதை அற்புதமாக இருந்தாலும் இறுதி காட்சியில் நான் இறப்பது போல நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரித்தார். ஆனால் ராமண்ணா விடவில்லை எனக்கு நம்பிக்கை இருக்கிறது கதையின் மேல் என்றார். உடனே தலைவர் உங்களுக்காக நடித்து கொடுக்கிறேன் ஆனால் படத்தின் வெற்றி தோல்விக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லி நடித்தார்.
வேறு சில நடிகர்களின் மரண காட்சியை பார்த்து ரசித்த ரசிகர்கள் எம்ஜிஆர் படத்தில் மட்டும் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் படத்தையே கை விட்டு விடுகிறார்கள். இருப்பினும் ஒரு தடவை அவர்கள் பார்த்ததே படத்தின் சுமாரான வெற்றிக்கு வித்திட்டது. மறு வெளியீட்டிலும் ஓரளவு வெற்றி பெற்று ரசிகர்கள் மனதிலும் நிரந்தரமான இடம் பிடித்தது எனலாம்.
1962 ஆக 31 ம் தேதி வெளியான படம். பெண்களை மிகவும் ஈர்த்த படம் என்றுதான் சொல்ல வேண்டும்.படத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகம் வந்ததாக சொன்னார்கள். படம் சென்னையில் பாரகன் மகாராணி மகாலட்சுமியில்
வெளியாகி 84 நாட்கள் ஓடியது. தமிழகத்தின் மற்ற ஊர்களிலும்
அதிகபட்சமாக 84 நாட்கள் வரை ஓடி மிதமான வெற்றியை பதிவு செய்தது..........
orodizli
13th September 2020, 03:08 PM
கேரளாவின் சூப்பர் ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆர்.! -பிரபல ஒளிப்பதிவாளர் புகழாரம் !
மணிரத்தினம் இயக்கிய ரோஜா, இருவர், ராவணன், உயிரே (இந்தியில்
'தில்சே') மற்றும் விஜய் நடித்த 'துப்பாக்கி', ரஜினி நடித்த 'தர்பார்' உட்பட
தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட படங்களை ஒளிப்பதிவு செய்தவர், சில படங்களை இயக்கியவர் என்று பன்முகம் கொண்டவராய் தேசிய அளவில் புகழ் பெற்ற, விருதுகள் பல பெற்றவர் சந்தோஷ் சிவன்.
இன்று (13 -09 -2020) சந்தோஷ் சிவனின் பேட்டி 'டைம்ஸ் ஆப் இந்தியா' (Times of India) நாளிதழில் இடம் பெற்றுள்ளது. அதில் எம்.ஜி.ஆர். படங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.
"நான் 70' களில் எம்.ஜி.ஆரது பல படங்களை பார்த்து ரசித்தது இன்றும் நினைவில் இருக்கின்றது.
அன்றைக்கு மலையாளத்தில் சூப்பர் ஹீரோ படங்கள் கிடையாது. அன்றைய மலையாளத்தின் பெரும்பகுதி ரசிகர்களின் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே"
Ithayakkani S Vijayan.........
orodizli
13th September 2020, 03:09 PM
#புரட்சி_தலைவர்
#ஏழைகளின்_இதயம்
#இதயதெய்வம்
#பாரத_ரத்னா
#டாக்டர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுகிழமை_காலை_வணக்கம்...
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் திரைப்படத் துறையில் இருந்தபோதும் சரி, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தனக்கு உள்ள செல்வாக்கை தனது குடும்பத்தார் தவறாகப் பயன்படுத்த அனுமதித்தது இல்லை. அரசு நிர்வாகத்தில் அவர்களது குறுக்கீட்டை விரும்பியதும் இல்லை. தனது உதவியாளர்கள் தவறு செய்தபோதும் அதற்கு பரிகாரம் கண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு நாள் கோட்டைக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவிக்கவும் மனு கொடுக்கவும் அவரது ராமாவரம் தோட்ட வீட்டில் எப்போ தும் கூட்டம் இருக்கும். காரில் எம்.ஜி.ஆர். ஏறும் சமயத்தில், கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென ஓடிவந்து அவரது காலில் விழுந்தார். பதற்றமடைந்த உதவியாளர்கள் அந்த நபரை தூக்கிப் பிடித்தனர். அவரை விட்டுவிடும்படி கூறிய எம்.ஜி.ஆர். அந்த நபரைப் பார்த்து, ‘‘என்ன விஷயம்?’’ என்றார்.
‘‘நான் ஈரோட்டைச் சேர்ந்தவன். உங்களைப் பார்த்து என் குறையை சொல்ல வந்தேன்’’ என்றார் அந்த நபர். ‘‘என்ன குறை?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
அங்கே நின்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘‘இந்த ஆளு என்னை 45 ஆயிரம் ரூபாய் ஏமாத்தி விட்டாருங்க’’ என்று அந்த நபர் விசும்பலுடன் சொன்னார்.
எம்.ஜி.ஆர். சற்று நம்ப முடியாமல் கேட்டார்… ‘‘யாரு?’’
‘‘இதோ இங்கே நிக்கிறாரே, இவர்தாங்க’’ என்று மீண்டும் அந்த உதவியாளரை காண்பித்து சொன்னார் வந்த வர். தொடர்ந்து, ‘‘இன் ஜினீயரிங் காலேஜ்லே சீட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு 45 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு ஏமாத் திட்டாருங்க’’ என்றார்.
கோபத்தில் ரத்த நிற மாக மாறிய முகத்துடன் உதவியாளரை எம்.ஜி.ஆர். பார்த்தார். கருப்புக் கண்ணாடியையும் மீறி அவரது கண்கள் தகிப்பது தெரிந்தது. உண்மையை மறுக்க முடியாததோடு, எம்.ஜி.ஆரின் கோபமும் சேர, உதவியாளர் சப்தநாடியும் ஒடுங்கி சிலை போல நின்றார்.
புகார் சொன்னவரை பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘சொன்ன மாதிரி சீட் கிடைச்சிருந்தால் என்கிட்ட வருவீங்களா? இல்லை, பணம் கொடுக்கும் போது என்னைக் கேட்டுவிட்டு கொடுத்தீங்களா?’’ என்று கோபம் அடங்காமல் கேட்டார். பதிலளிக்க முடியாமல் வந்தவர் மவுனமானார். ‘‘உங்க அட்ரஸை கொடுத்துவிட்டு போங்க’’ என்று அவரை அனுப்பிவைத்தார். பொது மக்கள் எல்லாரும் சென்றபிறகு அந்த உதவியாளரை எம்.ஜி.ஆர். அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். ‘‘ஏன் இப்படி செஞ்சே? உன்னாலே எனக்கில்லே கெட்ட பேரு. நீ பண்ணின காரியத்தாலே என்னை இல்லே வந்து கேட்கிறான்’’ என்று சத்தம்போட்டு அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டார்.
அப்போது, சட்டப்பேரவை நடந்து
கொண்டிருந்த சமயம். எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி. அவருக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது. மறுநாளே இந்தப் பிரச் சினையை சட்டப்பேரவையில் எழுப்பினார். ‘‘முதல்வரின் உதவியாளர் ஒருவர், இன்ஜினீயரிங் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாராமே?’’ என்று கேட்டார்.
முதல்வர் எம்.ஜி.ஆர். எழுந்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியைப் பார்த்து, ‘‘நீங்கள் கூறுவது உண்மைதான். சம்பந்தப்பட்ட உதவியாளரை நேற்றே பணியில் இருந்து நீக்கிவிட்டேன். பணத்தை இழந்தவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தாகிவிட்டது.’’ என்று கூறினார்.
தனது வீட்டில் நடந்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டதே என்று எம்.ஜி.ஆர். நினைக்கவில்லை. குற்றச்சாட்டை மறுக் கவோ, சப்பைக்கட்டு கட்டவோ இல்லை. நடந்த விஷயத்தையும் அதற்கு பரிகாரம் காணப்பட்டதையும் தெளிவாக சொல்லி விட்டார்.
தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையில், தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.
சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.
உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந்தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை.
பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் இப்போதைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!
‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு 2014-ல் அறி வித்தது. பிரதமர் மோடி, டெல்லியில் தெருவை சுத்தம் செய்தார். இதை ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்திலேயே எம்.ஜி.ஆர். கூறியிருப்பார். சேரிப் பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர்., சுகாதாரத்தையும் தூய்மையை யும் வலியுறுத்தி அந்தப் பகுதியில் தெருவை கூட்டி சுத்தம் செய்வார். அப்போது, ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ பாடல் இடம் பெறும். அந்தப் பாடலில் வரும் அர்த்தம் நிறைந்த வரிகள் இவை…
‘தெருத் தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...’
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அமல்படுத்தினார். மீனவர்களுக்கும் நெசவாளர் களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தார்.
#பதவி_வரும்போது_பணிவும்
#வரவேண்டும்_துணிவும்_வரவேண்டும்.. #பாதை_தவறாமல்_பண்பு_குறையாமல் #என்ற_வரிகள்_மூலம்_வாழ்ந்து #காட்டியவர்_நம்_தலைவர்...
அன்புடன்.........
fidowag
13th September 2020, 08:36 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*26/08/20அன்று சொன்ன*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போது ,ஒரு முறை தனது பழைய நாடக துறை நண்பரான டி.வி.நாராயணசாமியை இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமிக்கிறார் . எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்தபோது ,அவரது நாடகங்களில் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா என்பவர் தி.மு.க.வின் தீவிரமான தொண்டர் அதனால் .அவர் அ தி.மு.க.வில் சேரவில்லை . ஆனாலும் அவர் நலிந்து போய் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். இயல் இசை நாடக மன்ற தலைவரான டி.வி.நாராயணசாமியிடம் ,கிருஷ்ணாவிற்கு தமிழக அரசின் குடும்ப கட்டுப்பாடுபிரச்சார* விளம்பர நாடகங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிக்க சொல்லி அவரது குடும்பத்தை வாழ வைத்தார் .* அது மட்டுமல்ல திரு.கிருஷ்ணா அவர்கள் சேலம் அருகே ஒரு நாடகத்தில் நடிக்கும்போது மாரடைப்பால் காலமானார் . இந்த செய்தியை அப்போது மதுரையில் இருந்த எம்.ஜி.ஆர். அறிந்து டி.வி.நாராயணசாமியை தொடர்பு கொண்டு அவர்* உடலை**நல்லபடியாக* அடக்கம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டு கொண்டார் .அதன்பின் திரு.கிருஷ்ணாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு* எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறியதோடு ,அவரது மகனுக்கு அரசு மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை கூட டெக்னீஷியன் வேலை ஒதுக்கி தந்தார்* என்பதுதான் மாற்று கட்சி தோழராக இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை மதித்து மரியாதை செய்ததோடு ,அவர் குடும்பத்தை வாழ வைத்து வழிகாட்டிய தெய்வமானார் .
ஒரு நாள் எம்.ஜி.ஆர். காரில் கிண்டி பகுதியில் செல்லும்போது கார் டயர் பஞ்சர் ஆகிவிடுகிறது . காரை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் பஞ்சர் ஓட்டும் கடையை தேடும் சமயம் , தானாகவே ஒரு நபர் வந்து பஞ்சர் ஆனா டயரை மாற்றிவிட்டு பழுது பார்த்து சரி செய்கிறார் . வேலை முடிந்ததும் எம்.ஜி.ஆர். அவரை பற்றி விசாரிக்கிறார் .நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள். உங்கள் கடை எங்குள்ளது என்று கேட்க ,அவர் நான் இந்த பகுதியில்* சைக்கிள் பஞ்சர்* கடை வைத்துள்ளேன்.உங்கள் காரை கண்டதும் உங்கள் அவசரத்தை கருதி பழுது பார்க்க உடனே வந்துவிட்டேன் என்றார் . .நாளை என்னை ராமாவரம் தோட்டத்தில் வந்து பார் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் எம்.ஜி.ஆர்.*.அந்த நபர் மறுநாள் தோட்டத்தில் சென்று எம்.ஜி.ஆரை பார்க்கிறார் . அவருக்கு 20 சைக்கிள்கள் வாங்கி தந்து உதவுகிறார் எம்.ஜி.ஆர். அந்த நபர் எம்.ஜி.ஆரிடம் உங்கள் பெயரில் எம்.ஜி.ஆர். சைக்கிள் மார்ட் என்று ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்ல ,அதற்கு எம்.ஜி.ஆர். மறுப்பு தெரிவித்து என் பெயரில் கடை நடத்த கூடாது,அப்படியானால் தான் உங்களுக்கு இந்த உதவி கிடைக்கும் என்று*திட்டவட்டமாக சொல்லி அனுப்பி வைத்தார்*
எம்.ஜி.ஆர். மலையாளி, தமிழனல்ல என்றும், இந்தி திணிப்பு பற்றியும் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரம் போன்ற செய்திகள் தலை தூக்கிய காலம் .ஆனால் எம்.ஜி.ஆர். இந்தி மொழி திணிப்பைத்தான் எதிர்த்தார் . இந்தி படங்களில் நடித்த நடிகர் நடிகைகள் சென்னைக்கு வரும்போதெல்லாம் நல்ல வரவேற்பு*அளிக்க தயங்கவில்லை .இந்தி பட நடிகர் நடிகைகள் நடிப்பை பெரிதும் மதித்தார் இப்படி பல சம்பவங்கள் உண்டு . எம்.ஜி.ஆர்.* ஒரு மொழி திணிப்பைத்தான் எதிர்த்தாரே தவிர மொழியை எதிர்க்கவில்லை என்பதற்கு சாட்சியாக நவரத்தினம் படத்தில் அவரே நடிகை ஜெரினா வகாப்புடன்* ஒரு இந்தி மொழி பாடலில் நடித்துள்ளார் .* .
புதிய பாடகர்கள், வேற்று மொழி பாடகர்களுக்கு எம்.ஜி.ஆர். எளிதில் வாய்ப்பு கொடுக்கமாட்டார் .அதற்கு பல காரணங்கள் உண்டு .குரல் ஒத்துபோகவேண்டும் .ரசிகர்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்று பல விஷயங்கள் . ஒருமுறை ஒரு இசை அமைப்பாளர் ஒரு பாடகரை அறிமுகப்படுத்தி ,இவரை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் ,உங்கள் படங்களில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார் .* அவரை பற்றி நன்கு விசாரித்துவிட்டு,அந்த இசை அமைப்பாளர் சென்ற பிறகு* எம்.ஜி.ஆர். ஒப்பனை அறைக்கு செல்கிறார் .*பின் தொடர்ந்து சென்ற அந்த பாடகர் ,எம்.ஜி.ஆரிடம், நான் ஒரு மலையாளி, நீங்கள் தயவுசெய்து என்னை ஆதரிக்க வேண்டும் .எனக்கு வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று சொன்னதும் , உடனே இந்த இடத்தை விட்டு ஓடி போய்விடுங்கள் .திரும்பி இந்த பக்கம் வந்துவிடாதீர்கள் .என்று எச்சரித்து அனுப்பினார் எம்.ஜி.ஆர். . மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.தர்மம் தலை காக்கும் பாடல்* - தர்மம் தலை காக்கும்*
2.வாங்கய்யா வாத்தியாரய்யா* - நம் நாடு*
3.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*
4.எம்.ஜி.ஆர்.- மனோகர் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*
5.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். -ரிக்ஷாக்காரன்*
6. எம்.ஜி.ஆர்.-ஜெரினா வஹாப்* - நவரத்தினம்*
7.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*
orodizli
14th September 2020, 08:35 AM
தெரியுமா உங்களுக்கு தலைவர் நெஞ்சங்களே......
தலைவர் குண்டடி பட்டு கழுத்தில் கட்டுடன் படம் தமிழகம் முழுவதும் ஒட்ட பட....
வறண்டு கிடந்த திமுக அரசியல் களத்தில் வசந்தம் வீச காரணம் ஆன படம் இது.
அந்த படத்துக்கு அந்த பிரஸ் வாசலில் காத்து இருந்து 2000 படம் வாங்கி முதல் முதலாக தமிழகத்தில் தான் போட்டி இட்ட தொகுதி முழுவதும் ஒட்டி ஐய்யோ பாருங்கள் என்று அனுதாபம் தேடி கொண்ட முதல் நபர் வேறு யாரோ இல்லை அவர்தான்.
அன்று இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர்... இது என்ன படம் ஏதோ பாகிஸ்தான் நாட்டு போரில் ஈடுபட்டு ஏற்பட்ட குண்டு காயமா இது என்று கேலி செய்ய.
அமரர் அண்ணா அவர்கள் பதிலடியாக ஆமாம் இதுக்கு முன் எம்ஜிஆர் அவர்களை தெரியாதா... இந்த படம் மூலம் தான் விளம்பரம் எங்களுக்கு அவசியமா.
நீங்கள் சொன்ன படி ஒருவேளை அப்படி ஒரு யுத்தத்தில் அவர் இருந்து இருந்தால் அவர் கையில் துப்பாக்கி கொடுக்க பட்டு இருந்தால் அப்போதும் அவரே வெற்றி பெற்று இருப்பார் என்றார்.
ராதா அவர்கள் சுட்ட வழக்கில் அவர் சார்பில் ஆஜர் ஆனவர் என்.டி வானமாமலை என்ற அக்காலத்தில் புகழ் பெற்ற வக்கீல் ஆவார்.
அவர் என்ன சமுதாயம் ஜாதி என்று தேடமாட்டோம்.
தெரியுமா தலைவர் நெஞ்சங்களே...அரசு தரப்பு வக்கீல் ராதா அவர்கள் உபயோகித்து லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி என்று சொல்ல.
ராதா அவரே குறுக்கிட்டு ஆமாம் சுட்ட நானும் சுடப்பட்ட அவரும் சாகாத போது இந்த மானம் கெட்ட துப்பாக்கிக்கு லைசென்ஸ் ஒரு கேடா என்றார்..
வழக்கு முடிந்து 7 ஆண்டுகள் தண்டனை தீர்ப்பில்...
அப்போது இருந்த ஒரு யாரிடம் நிருபர்கள் என்ன இப்படி ஒரு சம்பவம் என்று கேட்ட பொழுது அவர் சொன்னார்.
கூத்தாடியை கூத்தாடி ஒருவன் சுட்டு இருக்கான்..இதில் என் கருத்து என்ன வேண்டி கிடக்குது என்றார்..
அந்த கருத்தில் சுட்ட அவருக்கு மிகவும் வருத்தம்...அட இவரும் இப்படியா என்று சிறையில் இருந்த போது சிந்தனைகள் என்ற அவர் எழுதிய புத்தகத்தில் வருத்த படுகிறார்.
தெரியுமா உங்களுக்கு
இன்னும் தொடரும்.நன்றி..
அவர் துப்பாக்கி கொண்டு தலைவரை மட்டும் அல்ல அதற்கு முன்னால் என்.எஸ்.கே அவர்களிடமும் துப்பாக்கி காட்டி மிரட்ட அவர் சுதாகரித்து சமாதானம் ஆக அது ஒரு தனி சம்பவம்...........
orodizli
14th September 2020, 08:36 AM
பாவங்க கருணா நிதி!!
-----------------------------------
எம்.ஜி.ஆரிடம் அப்படியென்ன ஜோக்கடித்தார் கண்ணதாசன?
கருணா நிதிக்காக அப்படியென்ன பரிந்து பேசினார் எம்.ஜி.ஆர்??
பதிவுக்குள்ளே போனால் தெரிஞ்சுடப் போகுது--
கலைமாமணி வலம்புரி சோமனாதன்!
அந்த காலத்தில் பல படங்களுக்கு வசனம் எழுதியவர்!
துணையிருப்பாள் மீனாட்சி--லலிதா--சிகப்புக் கல் மூக்குத்தி--இப்படிப் பல படங்களுக்கு எழுதியவர் நாடகங்களும் எழுதியிருக்கிறார்--
அது எம்.ஜி.ஆர்,,தி.மு.கவில் சேர்ந்த காலக் கட்டம்!
அரசியலும்--திரையும் ஆரத் தழுவியிருந்த அக் காலக் கட்டத்தில்--
எம்.ஜி.ஆர்,,கருணா நிதி ,,கண்ணதாசன் மூவரும் ஒன்றாக இருந்த பீரியட்!
வலம்புரி சோமனாதனின் புதுமனைப் புகு விழாவுக்கு மூவரும் செல்வதாகப் பேசிக் கொண்டனர்.!
வலம்புரி சோமனாதனின் பொருளாதார நிலை அறிந்து,,ஆளுக்கு இரண்டாயிரம் என போட்டு,,மூவரும் ஒன்றாக அவரிடம் அளிக்க முடிவு செய்தனர்!
கவிஞர் கண்ணதாசன் முன்னாலேயே வந்துவிட,,எம்.ஜி.ஆரும் கருணா நிதியும் ஒன்றாக வருகின்றனர்!
கவரில் தன் பங்கு பரிசாக 2000 ரூபாயைப் போட்டுக் கொண்டே,,மற்ற இருவரிடமும் கவிஞர் கேட்க--
கருணா நிதிக்கும்,,தமக்குமாகச் சேர்த்து 4000 ரூவை எம்.ஜி.ஆர் நீட்ட--
விஷயத்தைப் புரிந்து கொண்ட கண்ணதாசன்,,நறுக்கென்றும் சுருக்கென்றும் கருணாவிடம் கேட்கிறார்--
ஏய்யா? தன் கையிலிருந்து ஒத்த ரூபா தவறிக் கூடக் கொடுத்துடக் கூடாதுன்னு,,வேலை மெனக்கெட்டு தோட்டத்துக்குப் போய் இவரோட ஒட்டிக் கொண்டு வந்தியா??
தன்னை மறந்து எம்.ஜி.ஆர் சிரித்து விடுகிறார்!
அப்போது இவர்களை வரவேற்க வந்த நம் சோமனாதன்,,எம்.ஜி.ஆரைப் பார்த்து--
காலையில் பெரியவர் சக்கரபாணி வந்து,,உங்க சார்புல பரிசு கொடுத்துட்டு வாழ்த்திட்டுப் போனதாலே நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சேன் என்று கூற--
இது வேறயா? என்று அடிக்குரலில் எம்.ஜி.ஆரிடம் கண்ணதாசன் கேட்கவும்--
சங்கடத்தில் தவிக்கிறார் எம்.ஜி.ஆர்??
அதாவது,,காலையிலேயே தன் அண்ணா மூலம் 10000 பரிசுப் பணம் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்!!
தனிமையில் எம்.ஜி.ஆர்,,கண்ணதாசனிடம்--
என்னதான் காமெடி என்றாலும்,,முகத்துக்கு நேராக இப்படி சொல்லிட்டீங்களே,,கலைஞருக்கு வருத்தமாக இருக்காதா என்று கேட்க--
அதற்குக் கவிஞர் சொன்ன பதிலால் மீண்டும் பலமாக சிரிக்கிறார் எம்.ஜி.ஆர்---
அட அப்படி வருத்தப்பட்டு,,ரோஷம் வந்து அவரு கொடுக்கற புத்திய வளர்த்துக்க மாட்டாரு.,,நீங்க பயப்பாடாதீங்க????
எனக்குத் தெரிந்து ஒரு பிச்சைக்காரனுக்கு நாலணா கூட தர்மம் செஞ்சதில்லை கருணா நிதி--
இது,,பின்னால்--1976இல் கவிஞர் ,,கருணா நிதி பற்றி பகிரங்கமாக உரைத்தது
மற்றபடி--
கருணா நிதி மாற மாட்டார் என்று கவிஞர் அடித்துச் சொல்லிவிட்டதால்--
நகைச்சுவை--அதற்கு-
நகைச்சு---வை!!!.........
orodizli
14th September 2020, 04:58 PM
எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்
MGR's Anbe Vaa Tamil Review 1
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.
ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.
ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
MGR's Anbe Vaa Tamil Review 4
'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது.
என்றும் அன்புடன்
N.H. Narasimma Prasad
Thava:
@@ கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி @@
நல்ல பார்வை....
இந்த படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல், சில வருடங்களுக்கு முன்பு பாடல்களை கேட்ட போதே உருவாகியது..படத்தை டவுன்லோடு போட்டு இதுவரை ஏறக்குறைய 4 முறை பார்த்திருப்பேன்.அதுவரை என்னக்கவர்ந்த உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் வரிசையில் இந்த படத்தையும் சேர்த்துவிட்டேன்..ரொம்ப அழகான படம்..நான் பார்த்த சிறந்த ரொமாண்டிக் காமெடி படங்களில் இதற்கும் ஒரு இடம் உண்டு.அருமையான விமர்சனம்.மிக்க நன்றி.
திண்டுக்கல் தனபாலன்:
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்... பாடல்களும் அப்படியே... அறியாத தகவல்களுக்கும் நன்றி...
Good citizen:
விமர்சனம் அருமை, சில தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டோம்,, ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை நான் மட்டுமல்ல மற்றவர்களும் உள்ளே உள்ள லிங்கில் அதன் ஒரிஜினலை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்
http://www.youtube.com/watch?v=Cb_xsOGMtiE
ராஜ்:
மற்றும் ஒரு வித்தியாசமான பதிவு உங்களிடம் இருந்தது. அதற்கு என் நன்றி....நீங்கள் ஏற்கனவே "Come Septembe" படத்தை பற்றி வேறு எழுதி உள்ளீர்கள். அதையும் படித்து உள்ளேன்.
"அன்பே வா" எவர்கிரீன் மூவி. எனக்கு நினைவு தெரிந்து உடன் எனது அப்பாவுடன் பார்த்த முதல் திரைப்படம். மறக்க முடியாத படம்..
நீங்கள் தீவிர எம்.ஜி.யார் ரசிகர் போல் தெரிகிறது. படத்தை அனுபவித்தது எழுதி உள்ளீர்கள். அந்த காலத்தில் தலைவர் ஆடிய டான்ஸ் ரசித்து பார்த்தேன்.
வருண்:
To me, the movie was dragged after 80% completion. The last "anbe vaa" repeated song in a "fast tune" was intolerable to me. And the climax was boring. Other than that that was a good entertainer, great songs and comedy was good. I could not appreciate the fights in this movie as this movie supposed to be a love story
@ராஜ்:
எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும்.
அன்றைய கதாநாயகர்கள் யாருக்குமே சரியாக நடனம் ஆட வராது. அந்த வகையில் புரட்சித் தலைவர் ஆடும் நடனம் எவ்வளவோ தேவல.
@வருண்:
Thanking for Visiting my Blog Varun. Whatever it is, MGR's Anbe vaa Movie is a Best Romantic Comedy Movie Which i ever seen.
sajirathan:
தலைவர் பற்றிய ஒரு பதிவு எழுதி எங்களை(தலைவரின் இக்கால இளம் ரசிகர்களை) சந்தோசப்படுத்திட்டீங்க.. நன்றி பிரசாத். எத்தனை தடவை வேணும்னாலும் இந்த படத்தை பார்க்கலாம்.. எல்லா பாடல்களுமே அருமை.. இதில் வரும் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற பாடலை மிகுந்த கஷ்டப்பட்டு இசையமைத்ததாக ஒருமுறை எம்.எஸ்.வி சொன்னாராம்..........
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.