View Full Version : Makkal thilagam mgr- part 25
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
[
16]
17
orodizli
26th April 2020, 11:15 PM
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?"
இந்த வரிகளுக்கு அன்றும் இன்றும் என்றும் பதிலாக நிற்கும் காலத்தை வென்றவன்...காவியமானவன்......இவர் ஒருவர்தான்.
எழுச்சிப் பாடல்.,சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் மனித இனத்தைத் தட்டி எழுப்பும் பாடல்.புரட்சித் தலைவரே வெளியே கிளம்பும் முன் ஒரு முறைக் கேட்டுச் செல்லும் பாடலாம்.....
ஒரு எழுச்சிப் பாடலோடு பயணிக்கிறேன்.கவியரசரின் வரிகள்...மெல்லிசை மன்னர்களின் இசை....ஏழிசை வேந்தனின் அற்புதக் குரலில்..
.மன்னாதி மன்னனின் டைட்டில் பாடல்.சம்பூர்ணமான சங்கராபரணத்தில் சுருதி சுத்தமாக "அச்சம் என்பது மடமையடா....அஞ்சாமை திராவிடர் உரிமையடா"கணீரென்று துவங்கும் இந்தப் பாடலின் துவக்கம்...குதிரைகளின் குளம்பொலி...திரையில் மாமன்னனாக கையில் சாரட்டின் கயிற்றோடு எம்.ஜி யார் அவர்கள், குலதெய்வம் ராஜகோபாலுடன்
"அச்சம் என்பது மடமையடா...அஞ்சாமை திராவிடர் உரிமையடா....ஆ ஆ ஆ ஆ .......ஆஹா...
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பதில் பெருமையடா....தாயகம் காப்பதில் பெருமையடா"....
பாடலின் துவக்கமே அமர்க்களம்...அஞ்சாமை.....அஞ்சுவது நம் மரபிலே இல்லையென்று சொல்லும் அஞ்சா.....மை.....
டி.எம்.எஸ்ஸின் முத்திரைப் பாடல் என்றெ சொல்லலாம்...
"கனக விஜயரின் முடித்தலை எரித்துக் கல்லினில் வடித்தான் சேரமன்னன்....ஆ ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆஹா ஹா...
இமயவரம்பிலே மீன் கொடி ஏற்றி இசைப் பட வாழ்ந்தான் பாண்டியனே......"ஒரு சரித்திரம் 2 வரியில்...
..பாடல் நடுவில் தென்றலாய் முகம் காட்டும் பப்பிம்மா..மறைந்த அஞ்சலி தேவிம்மா...
நாட்டிய பேரொளி பத்மினியும்...
.பாடலின் வரிகள் புரட்சித்தலைவருக்கென்றே தைக்கப் பட்ட சட்டை...கவியரசரின் தீர்கதரிசனம்"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்"....காலம் உள்ளவரை நிற்பவர் இவரே என்று அன்றே முத்திரைக் குத்தின கவிநயம்..."கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை..களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவன் பிள்ளை"இந்த வரிகளை உச்சச்தாயியில் இசை அமைத்திருக்கும் மெல்லிசை மன்னர்களின் இசை நயம்...தன் குரல்வளத்தால் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் நம் மெய்யெல்லாம் சிலிர்த்துப் போகும் டி.எம்.ஸ் அய்யாவின் குரல் வளம்...இவையெல்லாம் சேர்ந்து இந்தப் பாடலை காலத்தை வென்ற பாடலாக, என்றும் உச்சம் தொட்ட பாடல் ..,இன்று உங்களோடு.... Thanks...
orodizli
26th April 2020, 11:16 PM
#ஒருதாய்மக்கள்நாமென்போம்...
#உன்னையறிந்தால்நீஉன்னையறிந்தால்.
#ஏமாற்றாதேஏமாற்றாதேஏமாறாதேஏமாறாதே..
#இன்னொருவர்வேதனைஇவர்களுக்குவேடிக்கை..
#தொட்டுவிடதொட்டுவிடதொடரும்..
#தைரியமாகச்சொல்நீமனிதன்தானா..
#நான்பாடும்பாடல்நலமாகவேண்டும்..
மேற்கண்ட தலைவரின் பாடல்கள் இப்போதுள்ள கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக கருதுகிறேன்,
நண்பர்களே, உறவினர்களே எவ்வளவு முக்கிய காரணமாக இருந்தாலும் மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்திடுங்கள்,
உங்களையும், உங்கள் சந்ததிகளையும் காத்திடுங்கள், அனைவரும் அவரவர் இருப்பிடத்திலேயே இருந்துகொள்ளுங்கள்,
அலட்சியம் வேண்டாம்...... Thanks...
orodizli
26th April 2020, 11:17 PM
மாமனிதர் எம் .ஜி .ஆர் .
நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்
நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !
ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்
ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்
கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !
தோன்றின் புகழோடு தோன்றுக என்று
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !
மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்
மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !
நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி
நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !
ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்
ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !
ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை
ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !
வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்
வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !
என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்
என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !
நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்
நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !
பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்
பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !
விருதுகள் பல பெற்றபோதும் என்றும்
விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !
ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி
எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !
திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்
தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !
புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்
புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !
இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .
என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !
பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர் ! கவிஞர் இரா .இரவி
தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்
ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்
சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்
மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்
திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்
விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்
அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்
உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்..... Thanks...
orodizli
26th April 2020, 11:19 PM
எம்.ஐி.ஆரும், சரோஐாதேவியும் இணைசோ்ந்து சுமாா் 10 ஆண்டுகளில் 26 படங்களில் நடித்திருக்கின்றனா். இந்த இணை நடிப்பில் வெளிவந்த கடைசி சில படங்களில் ஒன்று பத்மினி பிக்சா்ஸ் சாா்பில் இயக்குநா் பந்தலு தயாாித்த 'நாடோடி'.
இப்படத்தில்தான் நடிகை பாரதி தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானாா். இப் படத்தில் பல பாடல்கள் நம் காதுகளுக்கு இனிமை சோ்த்தன.
கவிஞா் வாலி இப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றி மக்கள் திலகத்திடம் வாிகளை வாசித்து காட்டினாா்.
புரட்சி தலைவா் "இது என்ன சாித்திரப் பாடலைப் போலிருக்கிறது" எனறு சொல்லி பாடலை நிராகாித்தாா். ஆனால் அழகான அா்த்தமுள்ள அவ்வாிகளை வீணாக்காமல் இசையமைப்பாளா் கே.வி.மகாதேவனிடம் பாடி காட்டினாா் கவிஞா் வாலி.
இசையமைப்பாளருக்கு பிடித்துப் போக, அப்போது அவா் இசையமைத்துக் கொண்டிருந்த எம்.ஐி.சக்கரபாணியின் சொந்த தயாாிப்பான 'அரச கட்டளை' எனும் சாித்திர படத்தில் சோ்த்து கொண்டாா்.
'நாடோடி' படத்திற்கு எழுதப்பட்டு 'அரச கட்டளை' யில் சோ்த்துக் கொள்ளப் பட்ட அந்தப் பாடல் "புத்தம் புதிய புத்தகமே".......... Thanks...
orodizli
26th April 2020, 11:22 PM
நமது "ஆண்டவன்MGRகுடும்ப" தளத்தில் பயணிப்பவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்....!
புரட்சித்தலைவரின் புகழ்காக்க நாள் தோறும் உழைத்துக் கொண்டிருக்கும் விசுவாச ரத்த உறவுகளுக்கு அன்பு வணக்கம்.
நமதுஆண்டவன் MGR
குடும்ப தளமானது இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களை மட்டுமே, முதன்மை படுத்தி... நமது சுய விளம்பரங்களை ஓரங்கட்டி , காழ்புணர்ச்சி யின்றி நல்ல பல தகவல்களை பகீருகின்றவர்களை நாம் வாழ்த்தாமலும், வரவேற்க்காமலும் இல்லை.
அதே நேரம் தளத்தின் நலன் கருதி சில வேண்டதகாத பதிவுகளை பதிவிடுவோரை பலமுறை எச்சரித்தப் பிறகே, தவிர்க்கமுடியாத சூழலில் பலரை தளத்தை விட்டே வெளியேற்ற வேண்டிய நிலையும் உருவாகிறது. நமது இந்திய நாடு மட்டுமல்ல... அயல் நாடுகளில் வசிக்கின்றவர்களில் கூட , படிப்பறிவே இல்லாத பலரும் அவர்களால் முடிந்தவரை... தெறிந்தவரை நம் தலைவரின் புகைப்படங்கள், ஆடியோ /வீடியோ பதிவுகள், பத்திரிக்கை - தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற , அரும் பெரும் தகவல்கள், விழா தொகுப்புக்கள், மேடை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தோற்றத்தில் அசத்தும் கலைஞர்களின்... ஆடல் பாடல் , இசைக் கச்சேரியின் படைப்புகள், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கவிதை , புகழ் மணக்கும் விரல் பதிவுகளென ஏராளமாக பதிவுகள் செய்து... தங்களால் முடிந்த வரை நம் பொன்மனத் தலைவருக்கு புகழ்மாலை சூட்டிவரும் வேளையில்...
நமது தளத்தில் பயணிப்பவர்களில்,
கற்றறிந்த நல்லோர்கள், வல்லோர்கள்... மூத்தோர்கள், சகல திறன் கொண்ட விசுவாசமிக்க பற்றாளர்கள், தொண்டர்கள், பக்தர்கள்... எந்தவொரு பதிவுகளையும் பதிவிட முடியாது போனாலும், அசத்தலான, காணக் கிடைக்காத பல அறிய தகவல்களை நாள் தோறும் பதிவிட்டு , தளத்திற்கு பெருமை சேர்ப்பவர்களை உற்ச்சாகப் படுத்த நம்மாள் முடிந்த ஒரு கமெண்ட் கூட போட முடியாதென்றால்.....?
மன்னிக்கவும்,
தளத்தை விட்டு நீக்குவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.
குறுகிய நாட்களில் அசூர வளர்ச்சி பெற்று, ஏராளமான பக்தர்களின் வாழ்த்துக்களை நாள்தோறும் நம் இதயங்களில் ஏற்று... "கொடுத்து சிவந்தகரம் " "கொள்கைச்சுடர் " பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பூரண நல்லாசியுடன்... சாதனைத் தளமாக இயங்கி வரும் நமது "ஆண்டவன்MGRகுடும்ப தளத்தை மேலும் வலுப்படுத்த,
"உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்...ஆண்டவன்.
MGR குடும்பதளத்தை வலு படுத்துங்கள்....
பொய்யான தகவல் தந்து மேதாவி பேரெடுக்க, அணைக்கின்ற தளமல்ல நம்ம தளம்.
நான் என்ற அகந்தையிலே, கொரோனாப் போல் வலம் வந்து.... தற்பெருமை காட்டாது நம், ஆண்டவன்MGRகுடும்ப தளம்.
என்பதை பணிவோடு கூறி ,
புரட்சித்தலைவரின் புகழ்பாடுவோம்....
"ஒரு தாய் மக்கள் நாமென்போம் - ஒன்றே எங்கள் குலமென்போம்... தலைவர் ஒருவர் தாமென்போம் - சமரசம் எங்கள் வாழ்வென்போம்....!
நன்றியுடன் :
நமது வழிகாட்டி
வள்ளல்மகான்
பொன்மனச்செம்மலின்
செய்திசேகரிப்பாளன்
புரட்சிபக்தன்
அட்மீன்ஆர்.ஜி.சுதர்சன்
ஆண்டவன்
"MGR குடும்பம்தளம்
பெங்களுரு.... Thanks...
orodizli
26th April 2020, 11:23 PM
https://youtu.be/YU-UuBCn63w.... Thanks...
orodizli
26th April 2020, 11:29 PM
🙏🙏🙏நன்றிகள்🙏🙏🙏
***********************************
புரட்சித்தலைவரின் விசுவாச ரத்த உறவுகளுக்காகவும் ,
உலக மக்களின் பொழுது மகிழ்வுடன் புலருவதற்காகவும் நாள்தோறும் மலேசியா நாட்டின் பொன்மனச்செம்மல் இசைக்குழு தலைவர் ஐயா , திரு. மேகநாதன் அவர்கள் வழங்கி வரும்...... நமது மக்கள் அரசர்...மும்முறை தமிழகத்தை சிறப்பான முறையில் ஆண்டு பல நல்ல திட்டங்களை வகுத்து , ஏழை மக்களின் துயர் துடைத்த தூயவர் மகான் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் நடித்து , பட்டி தொட்டியெங்கும் பாமரர்களின் காவல்காரன், தொழிலாளி , விவசாயி , மீனவ நண்பன் , படகோட்டி என வணங்கப்பட்ட , நமது தெய்வத்தின் நடிப்பில் வெளிவந்த , படகோட்டி படத்திலிருந்து " இல்லையென்போர் இருக்கையிலே - இருப்பவர்கள் இல்லையென்பார்...மடி நிறைய பொருளிருக்கும் , மனம் நிறைய இருளிருக்கும்......என்பதை உணர்த்திய கருத்தாழம் நிறைந்த பாடலை கேட்போமே....
இது ,
உழைக்கும் குரல் தளத்தின் முயற்ச்சி
ஆலோசனை :
திரு. ஆர்.ஜி.சுதர்சன் அவர்கள்.
(ஆண்டவன் mgr குடும்பத்தள - அட்மீன்🙏)... Thanks...
orodizli
26th April 2020, 11:33 PM
" துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் "
**********************************
" துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்" என்பது இறைவனுக்கு மட்டுமல்ல; MGR கற்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும், தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு நஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி; எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பியிருந்தார். இது போன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.
நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது; அவர்களை, அந்த கயவர்களின்பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகைகளிடம் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
நன்றி : யாழ் பதிவு - யாழ் இணையம்...... Thanks...
orodizli
26th April 2020, 11:34 PM
எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும் எம்.ஜி.ஆர், இன்னமும் புரட்சி தலைவராகவே தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் நடிகர் என்பதால் மட்டுமல்ல. அதையும் தாண்டிய அவரின் மக்களோடு மக்களாக வாழ்ந்த இயல்புதான் காரணம் என்பதை பல சம்பவங்கள் மூலமாக நாம் தெரிந்து கொண்டிருக்கலாம். அதை மறுபடியும் நிரூபிக்கும் விதமாக எம்.ஜி,ஆர் பற்றிய ஒரு ஸ்வாரஸ்யா சம்பவத்தை கூறி இருககிறார் எம்.ஜி.ஆரின் "தாய்" பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார்.
"தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார் அந்த பத்திரிக்கையின் உரிமையாளரான எம்.ஜி.ஆர்.
ஆனால் அப்போதுதான் வலம்புரி ஜான் , அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.
அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:
‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.
‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’-அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’
‘’ நீங்க யார் பேசறது?’’
‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’
‘’உங்க பேரு என்ன?’’
’’லச்சுமி’’
‘’எந்த ஊரு?’’
’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’
’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’
’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’
‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’
‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’
’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’
’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’
‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’
’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’
‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’
’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’
’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’
‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’
‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’
‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’
‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’
’’மறுபடி சொல்லுங்க....’’
‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!
இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.
ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பி இருக்கிறாள்.
நன்றி: தாய் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார் அவர்கள் !..... Thanks...
orodizli
26th April 2020, 11:40 PM
நமது தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் எப்பேற்பட்ட ஞானசிற்பி என்பதை நீங்களே பாருங்கள்.
திரைப்பட வசனங்கள் மூலம் .... உலக மக்களுக்கு நல்வழிகாட்டிய உண்மை கடவுளே எம்ஜிஆர் அவர்கள் தான் என்றால்அவை மிகையல்ல...
அன்பன் :
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி.... Thanks...
orodizli
26th April 2020, 11:41 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .
20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ...... Thanks...
orodizli
26th April 2020, 11:43 PM
https://images.app.goo.gl/2EcLizXum3o5i9Zm7.... Thanks...
orodizli
26th April 2020, 11:53 PM
https://youtu.be/5kW3RZwwtUk..... Thanks...
orodizli
26th April 2020, 11:58 PM
புரட்சி தலைவரின் எண்ண கனவுகளை நினைவாக்குவதே பக்தர்களின் சேவை என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டு கடுமையான ஊரடங்கு உத்தரவால் அடுத்தடுத்து இருந்த தடுப்புகளையும் சுற்றி சுற்றி விடாது அரசு ஒப்புதல் பெற்ற திரு.லோகநாதன் அவர்களின் காரில் புளியந்தோப்பு வியாசர்பாடி சூளை ஓட்டேரி ஆயிரம் விளக்கு ராயப்பேட்டை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள இதுவரை வழங்கபடாத கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் (அறக்கட்டளை) இல்லங்களுக்கு நேரில் சென்று மளிகை பொருட்களை அட்சயநாளாகிய 26.4.2020 இன்று மயிலை திரு.R.லோக நாதன் V.S.ஷிவ பெருமாள் ஆகிய நான் மற்றும் பில்டர் K.N.ராஜ்ஆகிய மூவரும் வழங்கிவிட்டு வந்தது மனநிறைவை தந்தது*.இது மேலும் தொடர தலைவர் அருள் புரியட்டும்....... Thanks...
orodizli
27th April 2020, 12:01 AM
மனிதநேயம் காப்போம் மக்கள் திலகத்தின் வழி நடப்போம் இன்று எங்கள் வீட்டுக்கு அருகில் மரண சம்பவம் மரணித்தவர் ஒரு ஏழை பக்கவாத நோயினால் ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குச் சென்றோம் மருத்துவர்கள் கைவிட்ட பின்பு நேற்று நாலு மணி அளவில் மரணமடைந்தார் அடிப்படையில் ஏழை மனைவி மகள் மகன் தாயார் அனைவரையும் தவிக்கவிட்டு சென்றார் மனைவியோ தனது கணவரது இறுதிச்சடங்கை செய்வதற்கு வசதி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார் கேள்விப்பட்டவுடன் எங்களால் முடிந்த பண உதவியை ஏற்பாடு செய்து கொடுத்தோம், அதன் பிறகு அக்கம் பக்கம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த பொருளுதவி செய்ய அவரது இறுதிச்சடங்கு கான வேலை தற்போது நடந்து கொண்டிருக்கின்றது இதன் மூலம் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் மரண வீட்டிற்கு செல்பவர்கள் மாலை வாங்கி மரியாதை செலுத்துகிறேன் என்று வீணாக படத்தை செலவு செய்ய வேண்டாம் தங்களால் ஆன பணம் உதவி செய்வதன் மூலம் ஏழை எளியோரின் இறுதி சடங்குக்கு உதவி செய்வதாய் இருக்கும்
மனிதநேயம் காப்போம் மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் தான் எங்களுக்குத் தெரிந்த வரை இதற்கு எல்லாம் வழிகாட்டியாய் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறார் இவன் தேவராஜ் ராதிகா திருச்சி இன்றைய தினம்26.. 04.. 2020..... Thanks Groups...
orodizli
27th April 2020, 12:02 AM
இது போன்ற இன்னும் பல தலைவர் வீடியோக்களை காண Like,share செய்து subscribe செய்யவும்..!!
https://youtu.be/iIjXZm-82Lo..... Thanks...
orodizli
27th April 2020, 12:05 AM
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த நேரம். தஞ்சாவூரில் சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான சாந்தி, கமலா திரையரங்குகளைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது, சிவாஜி தனது சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைப்பு விடுத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் தனது சக அமைச்சர்கள், முக்கியக் கட்சிக்காரர்களுடன் சிவாஜியின் சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில், எம்.ஜி.ஆருடன் காரில் பயணித்த அமைச்சர்கள் சிலர், ''நாங்கள் உங்களுக்காக தனி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆனால் நீங்களோ, உங்கள் போட்டியாளர் சிவாஜி வீட்டுக்குச் செல்கிறீர்களே...'' என்று ஆதங்கப்பட்டிருக்கின்றனர்.
உடனே எம்.ஜி.ஆர், ''நானும் சிவாஜி யும் எப்படி அண்ணன், தம்பி போல் பழகு கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்களது போட்டி, கலை வாழ்க்கையில் மட்டும்தான். அது தனிப்பட்ட எங்களது நட்பு, பாசத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. வேண்டாத பகைமை கொண்டு எங்கள் ரசிகர்கள் மோதிக் கொள்வதிலும் அர்த்தம் இல்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை'' என்றார். அதோடு நிற்கவில்லை.
''சிவாஜியிடம் இப்போது இருக்கிற இந்த பண்ணையில் இருந்து சென் னைக்கு வைக்கோல் வழக்கமாக எடுத்து வரப்படுகிறது. அது, எனது சத்யா ஸ்டுடியோவில்தான் இறக்கி வைக்கப்படும். அந்த வைக்கோல்தான் எனது வீட்டில் இருக்கும் பசு மாடுகளுக்கும் சிவாஜி வீட்டுப் பசுக்களுக்கும் உணவு. நான் குடிக்கும் பால் சிவாஜி பண்ணையின் வைக்கோலைத் தின்று செரித்துக் கிடைக்கின்ற பால்தான்'' என்றாராம்.
நன்றி! இதயக்கனி S.விஜயன்.
ஆனந்த விகடன் இணைய பகுதியிலிருந்து........(வைக்கோல் விஷயம் எந்தளவுக்கு உண்மையா?! பொய்யா?!... விபரமறிந்தோர் விளக்கலாம்).... Thanks...
orodizli
27th April 2020, 12:06 AM
புரட்சிதலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே..!!✌ இது தலைவரின் புகழ் பாடும் யூடியூப் சேனல்..!! தலைவரின் படங்கள்,பாடல்கள்,வசனங்கள்,புகழ் வீடியோகள் இதில் தொடர்ந்து பதிவிடப்படும்..!! புரட்சிதலைவரின் பக்தர்கள் அனைவரும் இந்த யூடியூப் சேனலை subscribe செய்து கூடவே ️ bell பட்டனை அழுத்தி like,share செய்யவும்..!! இப்படிக்கு, புரட்சிதலைவரின் முரட்டு பக்தன் உங்கள் ✌ *சிவகாசி எம்.ஜி.ஆர்*
https://youtu.be/CUfa5n1BWOo........ Thanks...
orodizli
27th April 2020, 12:07 AM
https://youtu.be/FbU4FnCdHP8..... Thanks....
orodizli
27th April 2020, 12:09 AM
அதெல்லாம் சரி...
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் ஏன் மதிக்கணும் ?
ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க..
ஆனால் எம்ஜிஆர் வித்தியாசம்
யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதாரத்திருந்த வழிவகுக்கிறதோ..
பூத உடலை நீத்த போதும்,
இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ...
எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ.
அவர் தான் மக்களின் மனதில் நிலைத்து நிலைக்கமுடியும்...
இந்த வீடியோவைப் பாருங்க...
இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, நேரிலாவது பார்த்திருப்பவர்களா..? சிலர் பார்த்திருக்கவும் கூடும்
இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...
#வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்........ Thanks...
orodizli
27th April 2020, 12:10 AM
https://youtu.be/njDeby6qEdE..... Thanks...
orodizli
27th April 2020, 12:22 AM
"நவரத்தினம்" படம் பற்றி நாகை தருமன் கூறுகிறார்.......Vaidyanathan K ஏ. பி. நாகராஜன் மகனே சொன்னார். "நவரத்தினம்," இலாபம் கிடைத்தது ,என்று மேடையில் சொன்னார்...... Thanks.........
orodizli
27th April 2020, 12:25 AM
தலைவரைவைத்து படம் எடுத்த உப நடிகர்கள்
வீரப்பா
நாம் படத்தில் பங்குதாரர்
பட தோல்வி க்கு பிறகு அனைவரும். பிரிந்தனர்
ஆனால் வீரப்பா ஆனந்த ஜோதி எடுத்தார் ஆனால் சிவாஜியை வைத்து ஆலயமணி எடுத்தார்
கலைஞர் எங்கள் தங்கம் படம் எடுத்தார் படம் தாமதமாகி கொண்டு இருந்தது பிள்ளையோ பிள்ளை படத்தை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்
எம் *ஜி*சி அரசகட்டளை மட்டும் தயாரித்தார்
கண்ணாம்பா தாலிபாக்கியம தலைவர் எவ்வளவோ உதவினார்
கண்ணாய் பாலின கணவர். நாகபூஷணம் பிடிவாதமாக தான்தான். இயக்குநர் என்று அடம் பிடித்தார்
சந்திரபாபு துரதிஷ்டவசமாக. தயாரிப்பாளர் ஆனார் ஆரம்ப தயாரிப்பாளர் பரிசு பட தயாரிப்பாளர் சுப்பையாவும் இன்
னொருவர்.பாபு இயக்குநராக தான் இருந்தார. இரண்டு தயாரிப்பாளர்களும் பின் வாங்க எல்லா சுமையும் பாபுவின் தலையில் தலைவர் முன்பணம் வாங்கிய போதே சொன்னார். சிறிது தாமதமாகும் என்றார் பொறுமையில்லாமல் பாபு சத்யா ஸ்டூடியாவில் பெரியவருடன் நடந்த ச்சரவில் பாதிக்கப்பட்டார்
மேலும் பாபுவின் அதிமேதாவி போக்கும். வெளிநாட்டில் மூன்று திலகங்களை பற்றி கொடுத்த பேட்டி மூன்று பேரையும் பகையாளி ஆக்கி விட்டது
ராதா * நீதி மன்ற கூற்று படி பண பிரச்சினை பொறாமை இரண்டு காரணங்கள்
அசோகன் நேற்று இன்று நாளை படபாடல் கள் டூயுன். சரியில்லை என்று பலநாட்கள் கடத்தினார் தலைவர் கடைசியில் என்னிடம் கால்சீட் இல்லை அதனால்தான்
அப்படி. என்றார் அசோகன் தலைவரை விட்டு கொடுக்காமல் இருந்தார் விளைவு. ஒரு மினி. உ சு வா கிடைத்தது
சகுந்தலா வெள்ளிக்கிழமை ஷீட்டிங் நடந்து கொண்டிருந்த போது ஒருவரிடம் இருந்து போன் படம் தின்றது
நவரெத்தினம் தலைவர் எதிலும் தலையிடவில்லை படம் நல்ல விலைக்கு போனது படம் 60நாள்தான் ஓடியது வெள்ளி விழா ஓடும் என்று எதிர் பார்த்து போது.....By. mr.Elangovan Raja... Thanks...
orodizli
27th April 2020, 07:57 AM
எம்ஜிஆரின் உண்ணாவிரதம்!
மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி.
சில அரசியல் காரணங்களால், தமிழகத்துக்குக் கொடுத்து வந்த அரிசியை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியது.
இதைக் கண்டித்து 7 மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தார் எம்ஜிஆர். 1983, பிப்ரவரி 9ம் தேதி, காலை 10 மணிக்கு மெரினாவில் உண்ணாவிரதம் தொடங்கியது.
சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு, "வழக்கம்போல தமிழகத்துக்கு அரிசி வழங்கப்படும்" என்று அறிவித்தது..!!!.......... Thanks.........
orodizli
27th April 2020, 08:00 AM
இன்று (27/04/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் "உரிமைக்குரல்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது . காலை 7 மணிக்கு ஜெயா மூவீஸில் , "இதயவீணை"...... . ... Thanks...
orodizli
27th April 2020, 08:01 AM
https://youtu.be/hLpbQU2o15E..... Thanks...
orodizli
27th April 2020, 08:02 AM
https://youtu.be/FecFB877a9E.... Thanks...
orodizli
27th April 2020, 08:02 AM
https://youtu.be/xBqAHDrhn-M..... Thanks...
orodizli
27th April 2020, 08:03 AM
https://youtu.be/vWgWLvFlZso.... Thanks...
orodizli
27th April 2020, 08:04 AM
https://youtu.be/CStIbyxdTVg... Thanks...
orodizli
27th April 2020, 08:04 AM
https://youtu.be/m_jxNXpoN8k... Thanks...
orodizli
27th April 2020, 08:05 AM
https://youtu.be/JIwmleW1R3M... Thanks...
orodizli
27th April 2020, 08:10 AM
'#எம்ஜியார் ஆட்சி தருவேன்' என்று முழங்கிய ரஜினி, அதே #எம்ஜிஆர் ஆட்சியில்தான் கைது செய்யப்பட்டார். ஏன்?
ஆம் நண்பர்களே.. அது 1979-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். 8-ஆம் தேதி காலை '#ரஜினிகாந்த்கைது' என்ற செய்தி முக்கிய நாளிதழ்களில் கொட்டை எழுத்துகளில் இடம் பிடித்தன.
'எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த ரஜினியின் கைது செய்தியின் பின்னணி இதுதான்.
ரஜினியின் கைதுக்கு காரணமாக இருந்தவர் ஜெயமணி. வாரப் பத்திரிகை ஒன்றில், சினிமா செய்தியாளராக இருந்த ஜெயமணி, போலீஸில் அதிரடியாக அளித்த புகாரில்தான் ரஜினி கைதானார்.
''சென்னை மியூசிக் அகாடமி அருகில் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே காரில் வந்த ரஜினிகாந்த், என் மீது மோத முயன்றார். நான் சுதாரித்து நகர்ந்து கொண்டதால் தப்பித்தேன். என் மீது காரை ஏற்ற முயற்சித்ததோடு என்னை கொலை செய்துவிடுவதாகவும் ரஜினிகாந்த மிரட்டினார்.''
-என ஜெயமணி கொடுத்த புகாரில் 1979 மார்ச் 7-ம் தேதி இரவு ரஜினி கைது செய்யப்பட்டார்.
அப்போது ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும்,
சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் ஆகிய இருவரும்தான் ரஜினியை கைது செய்தவர்கள்.
ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு முதலில் ரஜினி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். நள்ளிரவு வரையில் விசாரணை நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இ.பி.கோ 506 (மிரட்டுதல்), 336 (மற்றவர்களுக்கு ஆபத்து உண்டாக்கக் கூடிய காரியத்தில் கவனக் குறைவாக ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது வாக்குமூலமும் கொடுத்திருந்தார் ரஜினி.
''கார் ஓட்ட எனக்கு லைசென்ஸ் இல்லை. டிரைவர் இல்லாததால் காரை நானே ஓட்டினேன். ஜெயமணி என்னை தாக்கி நிறைய செய்திகளை எழுதினார். வழியில் அவரைப் பார்த்ததும் இதுபற்றி கேள்வி கேட்க நினைத்து, காரை நிறுத்தி பின்னால் இயக்கினேன்.
மோதவில்லை. அவரைக் கொலை செய்யும் நோக்கமும் எனக்கில்லை. காரைவிட்டு இறங்கியதும், ஜெயமணி செருப்பை கழற்றினார். அதனால் அவரின் சட்டையைப் பிடித்தேன். அவ்வளவுதான் நடந்தது. அவரை நான் மிரட்டவில்லை.''
-என வாக்குமூலத்தில் சொல்லி இருந்தார் ரஜினிகாந்த்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரஜினிகாந்த் மீண்டும் கைதானார். இந்த கைது ஐதராபாத்தில் நடந்தது.
இதுபற்றிய செய்தியை 'மாலை முரசு' பதிவு செய்திருக்கிறது. அதில் வந்த செய்தி இதுதான்.
'சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றிருந்தார் ரஜினி. ஜூன் 20-ம் தேதி சென்னை திரும்புவதற்காக இரவு 11 மணி விமானத்துக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது ரஜினி மது அருந்தியிருந்தார்.
ஏர்போர்ட்டுக்கு வந்ததும் அங்கிருந்தவர்களுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டார். தன்னுடன் வந்த நண்பர்களிடமே ரஜினி சண்டை போட்டார்.
ஏர்போர்ட் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். அவரை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள் அதிகாரிகள். அங்கிருந்த கண்ணாடிகளை ரஜினி உடைத்தார்.
இதனால் போலீஸ் அவரைக் கைது செய்தனர். அவரது விமான டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது' என அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.'
- Vikatan Emagazine
இந்த மூஞ்சிதான் எம்ஜிஆ-ரின் நல்ல ஆட்சி தருமாம்.......... Thanks fb., Friends...
orodizli
27th April 2020, 08:12 AM
எம்.ஜி.ஆர்.தினமும் கேட்ட பாடல் !
'ஆண்டவன் கட்டளை', கே.சங்கர் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம். அதில் 'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு' என்ற கண்ணதாசன் எழுதிய பாடல் வரும். முருகனின் அறுபடை வீடுகளிலும் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சியில் நடிப்பதற்காக சிவாஜிகணேசன் சிகரெட் உட்பட எந்த பழக்கமும் இன்றி விரதமிருந்தாராம். ஒருவாரம் மேற்குறிப்பிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. சிவாஜியும்
செருப்பின்றி கடும் வெயிலில் நடித்திருக்கிறார்.
இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானது. தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் தான் அவருக்கு நிம்மதியும், மன அமைதியும் கிடைக்குமாம்.
"பாடல் கவிஞர் எழுதி, எம்.எஸ்* வி. இசையமைத்து, டி.எம். எஸ். பாடி,
சிவாஜி நடித்தது ஒரு சிறப்பு என்றால், இந்த பாடல் தெய்வாம்சம் கொண்டதாக இருக்கிறது. அப்படி ஒரு தன்மையுள்ள பாடல் இது. எனக்காக பாடலாக்கப்பட்ட மாதிரி இருக்கிறதே. இதில் நாம் நடித்திருக்கலாமோ என்று என்னை யோசிக்க வைக்கிறது " என்று எம்.ஜி.ஆர்., சங்கரிடம் சொன்னாராம்.
('இதயக்கனி' இதழுக்காக
திரு கொற்றவன், இயக்குனர்
திரு கே.சங்கர் அவர்களை சந்தித்து பேசி தொடராக எழுதியபோது விடுபட்டுப்போன விசயம் இது).
படம் : எம்.ஜி.ஆருடன் கே.சங்கர், உடன்
அவரது மகள் வயிற்று பேரன் சந்தீப்.
அண்மையில் காலமான அவரது மகள் விஜயலட்சுமி, பெரியவர்
திரு சக்ரபாணியின் மூத்த மகன்
திரு ராமமூர்த்தியை மணந்து கொண்டவர். ராமமூர்த்தி 'அரச கட்டளை'
படத்தின் தயாரிப்பாளர்.
Ithayakkani S Vijayan...... Thanks...
orodizli
27th April 2020, 08:14 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்து திரையிடப்பட்ட
24, 25, 26 வது படங்கள்
வரிசைப் பட்டியலில், ஒவ்வொரு பதிவிலும் சிறிது முரண்பாடு உள்ளது...
சிலர் எம்ஜிஆர் நடித்த சர்வாதிகாரி தெலுங்கு படத்தை, வரிசைப் பட்டியலில் கடைசியில் சேர்த்திருக்கிறார்கள்...
சிலர் அவர் நடித்த ஏக் தா ராஜா இந்தி படத்தை கடைசியில் சேர்ந்திருக்கிறார்கள்...
இந்த முரண்பாடு ஏன் வந்தது என்று தெரியவில்லை...
சர்வாதிகாரி தமிழ்படம் வெளிவந்த 14.09.1951 அன்றே தெலுங்கு சர்வாதிகாரி வெளிவந்தது என்று சிலரும்...
05.10.1951ல்தான் வெளிவந்தது என்று சிலரும்... பதிவு செய்துள்ளார்கள்...
ஏக் தா ராஜா இந்திபடம் வெளிவந்த நாள் 15.06.1951 என்று சிலரும்,
15.12.1951.என்று சிலரும் பதிவு செய்துள்ளார்கள்........ Thanks mr. SKRK.,
orodizli
27th April 2020, 08:21 AM
#கட்சி ஆரம்பித்து 47-ஆண்டுகள் அதில் 30-ஆண்டுகள் ஆட்சி பீடத்தில்
தமிழகத்தை அதிக முறை ஆண்ட, ஆளுகிற, ஆண்டு கொண்டே இருக்கப்போகும் ஒரே கட்சி
இந்தியாவில் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதல்வரை கொண்ட கட்சி
கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை பிடித்த கட்சி
இவற்றுக்கெல்லாம் மேலாக எந்தவித பிரதிபலனும் இல்லாமல் தலைமை மீது அளவில்லாத பாசம் கொண்ட கோடிக்கணக்கான விசுவாசமிக்க தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி
பொன்செம்மல் "புரட்சித்தலைவர்" ஆரம்பித்து, இதயதெய்வம் "புரட்சித்தலைவி" அவர்கள் வழி நடத்தும் கட்சி...
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்"........ Thanks CKS.,
orodizli
27th April 2020, 11:20 AM
எம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து!
"புதுமைப்பித்தன்' படத்தில் சந்திரபாபு எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இவர் நடிகர், புரட்சி நடிகர் என்று குறிப்பிடுவார். வசனம் கலைஞர்தான். வசனம் மட்டுமன்று அந்தப் பட்டத்தையும் கொடுத்தது கலைஞர்தான். இதனைப் பற்றி மணப்பாறை வசந்த கலா மன்றம் உறந்தை உலகப்பன் கூறுகிறார்: ""கலைஞரை எங்கள் நாடகம் ஒன்றிற்கு தலைமை வகிக்கக் கேட்டதுடன் எம்.ஜி.ஆரையும் முன்னிலை வகித்திட கூட்டிவரக் கோரினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் வருவதாக 3-4-1952-ல் தகவல் கார்டில் வந்தது. 5-4-52ல் திருச்சி தேவர் மன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், சினிமா நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிலையில் என அச்சிடப்பட்டு வெளியாகியது.
✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
எம்.ஜி.ஆருக்கு ஒரு பட்டம் அளித்து நோட்டீசில் போடுவோம். நாடக மேடையில் அறிவித்துவிடலாம் என நினைத்து புரட்சி நடிகர் என வழங்கலாம் என்று முடிவுசெய்தேன். எங்களது குழுவிலுள்ள ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர் என்ன புரட்சி பண்ணிவிட்டார். சினிமா நடிகர் என்றே போடுவோம் என்று தன் கருத்தைச் சொன்னார்.நான் பிடிவாதமாக என் எண்ணப்படியே செய்தேன். ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்தோம். மேக்கப்பைக் கூட சரியாகக் கலைத்திடாமல், கலைஞருடன் காரிலேயே 5-4-1952 மாலையே திருச்சி வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்...
✌..mgr.....✌
நாடகம் தொடங்கி இடைவேளையில் கலைஞர் அவர்களை, புரட்சி நடிகர் என எம்.ஜி.ஆரை கவுரவித்திட கோரிட, அவரும் தனக்கே உரிய பாணியில் பேசும்போது அன்பு என்பது மூன்றெழுத்து என்று சுமார் 33 மூன்று எழுத்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி முடிக்கும்போது, "அண்ணா' என்ற மூன்றெழுத்து, "தி.மு.க.' என்றமூன்றெழுத்து, ‘எம்ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்துக்காரருக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தினை இந்தத் நாடக நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்கிறேன்'' என்றபோது பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து நின்றார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.......... Thanks.........
orodizli
27th April 2020, 11:26 AM
தவறு.
புரட்சித்தலைவருக்கு புரட்சிநடிகர் பட்டத்தை கொடுத்தவர் திருச்சி மணப்பாறையைச்சேர்ந்த உலகப்பன்....... Feedback ...Manithaneyam Groups... Thanks.........
orodizli
27th April 2020, 11:27 AM
எம்.ஜி.ஆருக்கு 'புரட்சி நடிகர்' என்ற பட்டம் வழங்கியவர் மணப்பாறையை
சேர்ந்த உறந்தை உலகப்பன். அதற்காக
எம்.ஜி.ஆரையும், மு.கருணாநிதியையும்
மணப்பாறைக்கு வரவழைத்து விழா நடத்திய உலகப்பன், கருணாநிதியைக் கொண்டே மேடையில் 'புரட்சி நடிகர்'
என்று அறிவிக்கச் செய்தார்.
1952 ல் நடைபெற்ற விழா அது.
இந்த விபரங்களையெல்லாம் மணப்பாறைக்கு நேரில் சென்று
திரு உலகப்பனை சந்தித்து பேசி படங்கள் எடுத்து 'தேவி' வார இதழில்
'எம்.ஜி.ஆர். கதை' தொடரில் எழுதினேன்.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan........ Thanks........
orodizli
27th April 2020, 11:29 AM
மேடையில் வைத்து கருணாநிதியை அறிவிக்கச் செல்லலாமா அந்தாளு மலைமுமுங்கி நல்லவேளை இன்றாவது விவரம் தெரிந்ததே ... நாங்கள் கருணாநிதி கொடுத்ததாக நினைத்திருந்தோம் நன்றி...S.Kumar, Madurai... Thanks...........
orodizli
27th April 2020, 11:30 AM
Manithaneyam MGR:
Manithaneyam MGR: உண்மை இப்படி இருக்க
திமுக ஆதரவாளர்கள் கருணாநிதி தான் உங்க தலைவருக்கு புரட்சி நடிகர் பட்டத்தையே கொடுத்தார் என பொய்யாக பேசி வருகின்றனர் மேலும்
புரட்சித்தலைவரின் நினைவுநாள் சிறப்பு செய்திகளை சொல்லும் போது News 18 .Puthiya Thalaimurai and. News 7 ஆகிய சேனல்களும் அதையே திரும்ப திரும்ப பல வருடங்களாக சொல்லி வருவது பெரிய கொடுமை.......... Thanks...
orodizli
27th April 2020, 11:41 AM
"கணவன்", புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதை எழுதியத் திரைப்படம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் முழக்கத்தில் மதுரை எஸ் குமார் ... எம்ஜிஆர் மன்றம்...
Sundarajan MGR: கண்ணியமிக்க
காவியநாயகனின்
கலைத்தென்றல்
கருணையின் வடிவம்
"கணவன்" படம்
கண்டுகளித்தேன்.
காணக்கிடைக்காத
தலைவரின் காட்சி
கதையும் அவர்தானே....👌👍💐....... Thanks...
orodizli
27th April 2020, 11:45 AM
மதுரை- தங்கம் தியேட்டர் தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் என்போர் ,அப்படிப்பட்ட தியேட்டரில் தலைவரின் "கணவன்" படம் ரிலீசன்று கூட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்,ஞாபகம் இருக்கிறதா... மதுரை குமார் சார்,அந்தசம்பவத்தன்று நீங்கள் தியேட்டருக்குப் போனீர்களா?!......MKR, Erode... Thanks...
orodizli
27th April 2020, 11:46 AM
"நினைத்ததை முடிப்பவன்", சேலத்தில் ஜெயா தியேட்டரில் ரிலீஸ் ஆனது,முதல் நாள் அன்று கூட்ட நெரிசலில் நான்கு பேர் உயிரிழந்தனர்... Thanks...
orodizli
27th April 2020, 12:00 PM
சேலம் -அலங்கார் 5 வாரங்கள் ,ஜெயா 11வாரங்கள் "நினைத்ததை முடிப்பவன்" , அரங்குகள் நிறைந்து வெற்றிகரமாக நடைபெற்று ஒடியது. ஒரே நாளில் 2 அரங்கு திரையிடப்பட்டது.......இது போன்ற நிகழ்வுகள் நம் புரட்சிநடிகரை தவிர வேறு எந்த நடிகருக்கு , நடிகர்களுக்கு நடந்துள்ளதா??????!!!!!......... Thanks...
orodizli
27th April 2020, 12:03 PM
மறக்கமுடியாத சம்பவம்... நான் திரையரங்கு போகவில்லை... இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலைவர் நிதியுதவி செய்தார். அன்றைய தி.மு.க நிர்வாகிகளை நம்பி அவர்கள் மூலமாகக் கொடுத்தார். அன்றைக்கே தி.மு.க போர்ஜரி நிதியில் பாதியை ஏப்பம் விட்டனர்கள். தலைவர் மதுரை வந்தபோது எதிர்கட்சிகள் பஞ்சாயத்து செய்தனர். மறக்கமுடியுமா?!.........SK... Thanks...
orodizli
27th April 2020, 12:27 PM
எம்ஜிஆாின் தமிழ் உணா்வு எப்படி பட்டது அறிவோமா!.....
ஒ௫சமயம் இதயம் பேசுகிறது அலுவகத்திற்கு தொலைபேசியில் தொடா்பு கொண்டு மணியன் இ௫க்கிறாரா என்று விசாாித்து இ௫க்கிறாா் எம்ஜிஆா் போனை எடுத்த டெலிபோன் ஆப்ரேட்டா் குட் ஆஃபடா் நுான் சாா் நீங்கசாா்?என்று கேட்டி௫க்கிறாா் எம்ஜிஆா்
நான்யா௫ என்று சொல்கிறேன் நீங்க இப்ப என்னவோ சொன்னீங்களே என்ன? என்று கேட்டாா் எம்ஜிஆா்
குட் ஆஃப்டா் நுான் னு சொன்னேன் சாா்
அம்மா நீங்களும் தமிழில் பேசுறீங்க நானும் தமிழிலே பேசுறேன் இதுக்கு நடுவில் ஆங்கிலம் எதற்கு? வணக்கம் என்று தமிழில் சொல்லாமே என்று சொல்லி விட்டு நான் எம். ஜி. ராமச்சந்திரன் பேசுறேன் னு சொல்லும்மா என்று சொல்ல அதைக் கேட்டதும் அந்த ஆபரேட்டா் பெண் தடுமாறி வாா்த்தை களைத் தந்தி அடித்தி௫க்கிறாா் நீ. பதட்டப்படாதே இனிமேல் போன் எடுத்துப் பேசும்போது வணக்கம் என்று சொல்லும்மா என்றாராம் எம் ஜி ஆா் என்னே எம் ஜிஆாின் தமிழ் உணா்வு வாழ்க எம்ஜிஆா் பரவட்டும் எம்ஜிஆாின் தமிழ் உணா்வு
நன்றி: எம் ஜிஆாின் வெற்றி ரகசியம் என்ற நுாலிலி௫ந்தது ......... Thanks...
orodizli
27th April 2020, 12:55 PM
#எம்ஜிஆர் #விட்ட #குத்து
புரட்சித்தலைவர் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம்...சாண்டோ சின்னப்ப தேவர் நாள் தவறாமல் சென்று பார்த்து வந்தார்...
ஒரு நாள் மாலை தி.நகர் ராஜா தெருவில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தீஸ்வர் கோயிலில் எம்ஜிஆர் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதங்களுடன் பணமும் எடுத்துக்கொண்டு, வசனகர்த்தா ஆரூர் தாஸையும் அழைத்துக்கொண்டு எம்ஜிஆரைப்பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அறைக்குள் சென்றவுடன் விக்ரஹத்தின் மீது சாற்றப்பட்ட பூச்சரங்களை எம்ஜிஆர் கழுத்தில் போட்டு பிரசாதத்தையும் கொடுத்தார்.பணப்பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தார்.
எம்ஜிஆர் முற்றிலும் குணம் அடையாவிட்டாலும் முக்கால்வாசி உடல் நலம் தேறி, கழுத்துப்பகுதியில் முகவாய்க்குக் கீழே பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பட்டையுடன் இருந்தார். அன்றைக்கு மருத்துவமனை அறைக்குள் இருந்த எம்ஜிஆர் குத்துச்சண்டை-பாக்சிங் வீரனைப்போல தன் இடது காலை முன்னே நீட்டி வைத்து வலது காலைபின்னுக்கு வைத்த நிலையில் நின்றபடி வலது கை விரல்களை மடித்து அந்த 'முஷ்டி'யினால் தேவரண்ணனின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத தேவர் "அப்பா முருகா!" என்று கூறி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆருர் தாஸைப் பார்த்து "தாசு! அண்ணன் ஏன் இப்படி என் வயித்திலே குத்து விடுறாருன்னு புரிஞ்சிக்கிட்டியா? "
தாஸ்:--நல்லா புரிஞ்சுக்கிட்டேண்ணே. குண்டடி பட்டாலும் கூட, தன் பலம் தன்னை விட்டு போகலேங்குறதை உங்களுக்கு உணர்த்துறாரு. (எம்.ஜி.ஆரைப் பார்த்து) ஏண்ணே! அப்படித்தானே?
எம்.ஜி.ஆர்:-- அதேதான்...
அண்ணனுக்கு முழுக்குத்து.இதோ உங்களுக்கு(ஆரூர் தாஸுக்கு) ஒரு அரைக்குத்து என்று தன் கையை ஆரூர்தாஸின் வயிற்றை நோக்கி நீட்டினார். உடனே ஆரூர் தாஸ் தன் இரு கைகளையும் வைத்து வயிற்றை மூடிக்கொண்டு...."ஐயோ! அண்ணே! அவரு 'சாண்டோ' தாங்கிக்குவாரு.நான் வெறும் 'போண்டா' புட்டுக்குவேன், வேண்டாம். இதைக்கேட்டு இரு அண்ணன்களும் சிரித்தனர்.
தாஸ்:-- எப்பவுமே எச்சரிக்கை உணர்வோட இருக்குற நீங்க, அன்னிக்கு மட்டும் எப்படிண்ணே அவ்வளவு அலட்சியமா இருந்தீங்க?
எம்ஜிஆர்.:-- எப்பவுமே எச்சரிக்கையா இருந்தா எதுவுமே நடக்காது. எப்ப நாம் கொஞ்சம் கவனக்குறைவா இருக்கிறோமோ அப்பத்தான் ஏதாவது விபரீதம் நடக்கும்...அப்படி ஏற்கனவே நான் நிறைய அனுபவப் பட்டிருக்கேன்...ஆனாலும் நாம் சிலரிடம் வைத்திருக்கும் நம்பிக்கையினால் என்னையும் மீறி எது நடந்ததோ அது நடந்துதானே தீரும்...!!!???
அதை யாராலும் தடுக்க முடியாது இல்லியா?...... Thanks...
orodizli
27th April 2020, 12:56 PM
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்
செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்
பொன்மன தலைவரின் வாழ்வில் அவரின் தத்துவங்கள் தானே வென்றது..... Thanks...
orodizli
27th April 2020, 01:15 PM
MGR Filmography - Film 50 (1961) Poster
தலைவரின் 50வது படம் பிரமாண்ட சரித்திரபடமாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சமூக படமாகவும்இல்லாமல் அமைந்ததிரைப்படம் 1959ஆம் வருடம் தாய் மகளுக்குக் கட்டிய தாலி என்றொரு .சராசரி படத்திற்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் அண்ணாதுரை கதையில் எம்ஜியார் நடித்த படம் நல்லவன் வாழ்வான். இந்த முறை அண்ணாதுரை கதையோடு நிறுத்திக் கொள்ள வசனத்தை நா. பாண்டுரங்கன் எழுத, எம்ஜியாரின் அபிமான டைரக்டரான ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். அரசியலில் உச்சிக்குப் போனாலும், திரையுலகில் அண்ணாதுரை மகத்தான வெற்றிகளை ஈட்டவில்லை. டி.ஆர். பாப்பாவின் இசையில் பாடல்கள் பிரபலமடைந்தாலும், படம் ஆவரேஜாகத்தான் போனது.
எம்ஜியாரின் வழக்கமான ஜோடிகள் அல்லாமல், பல படங்களில் வாம்ப்பாக நடித்த ராஜசுலோசனா இதில் அவருக்கு ஜோடி சேர்ந்ததும் ரசிக்கப்படாமல் போனதும் ஒரு காரணம்.
இந்தப் படத்தின் விசேஷம்: 'குத்தால அருவியிலே' மற்றும் 'சிரிக்கின்றாய் இன்று சிரிக்கின்றாய்' ஆகிய இரண்டு பாடல்களையும் எழுதிய வாலிக்கு இந்தப் படம்தான் எம்ஜியார் யூனிட்டில் என்ட்ரி என்பதே....... Thanks...
orodizli
27th April 2020, 01:24 PM
வணக்கம் அன்பு நெஞ்சங்களே ! தற்போது சன் லைஃப்'ல் , புரட்சி தலைவரின் , *"உரிமைக்குரல் *" காவியம் . . இயக்குனர் ஸ்ரீதருக்கு மறுவாழ்வு தந்த படம். மெல்லிசை மன்னரின் முகப்பிசையே அதிரடி என்றால் பாடல்கள் அனைத்தும் சர வெடி. அதிலும் , *விழியே கதை எழுது , கல்யாண வளையோசை , ஒரு தாய் வயிற்றில்* . . பாடல்கள் இன்னும் நூறாண்டுகள் தாண்டியும் ஓங்கி ஒலிக்கும் . பின்னணி இசையிலும் புரட்சியே செய்திருப்பார் திரு. *எம்.எஸ்.வி* அவர்கள். குறிப்பாக தலைவர் ரேக்ளா வண்டியில் வரும்போதெல்லாம் ஒலிக்கும் அந்த *தீம் மியூசிக்* . . ஆஹா அருமை. ரிக்ஷா காரன் படத்துக்கு பின் மிகவும் சுறுசுறுப்பான , துள்ளலான மக்கள் திலகத்தை இப்படத்தில் நாம் காணலாம் . லதாவுடனான காதல் காட்சிகளில் இளமை துள்ளலான உற்சாகம் , அண்ணன் சஹஸ்ரநாமத்துடன் வரும் சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ச்சி , நம்பியாருடன் ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் ஆக்ரோஷம் . . தலைவர் பட்டையை கிளப்பியிருப்பார் . அதுவும் , அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்கு முன்பு வயல்காட்டில் அவர் பேசும் வீர வசனம் . .* இயற்கை நடிப்பில் தலைவரின் *விஸ்வரூபம்* . லதா அவர்களுக்கு அவரது திரை வாழ்வில் ஒரு முக்கியமான படம் இது. மக்கள் திலகத்துக்கு இணையான கதாபாத்திரத்தில் அவருக்கு ஈடு கொடுத்து மிக சிறப்பாக நடித்திருப்பார் . காமெடிக்கு நாகேஷ் இருந்தாலும் பஞ்ச் வசனங்களால் கலக்கியிருப்பவர் , தேங்காய் தான் . விறுவிறுப்பான திரைக்கதை , அழகான கிராமத்து இயற்கை காட்சிகள் , ஜனரஞ்சகமான இயக்கம் , இனிமையான பாடல்கள் & இசை , எல்லாவற்றுக்கும் மேலாக பொன்மனச் செம்மலின் இளமைத் துடிப்பான நடிப்பு . . இவை அனைத்தும் சேர்ந்து இப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை பரவசம் கொள்ள வைக்கின்றது . மொத்தத்தில் *உரிமைக்குரல்* தலைவரின் அன்பு ரசிகர்களுக்கு என்றென்றும் இனிய விருந்து . . ...... Thanks...
orodizli
27th April 2020, 01:33 PM
ஸ்ரீ MGR. வாழ்க
சித்திரை 13 ஞாயிறு
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் அருமை தலைவன் எம்ஜிஆரு க்குஅருகில் இருப்பவர் பெயர்
சைதை துரை சாமி
இவர் ராஜ விசுவாசி
எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலகட்டத்திலேயே எம்ஜிஆர் மன்றம் வைத்தவர்
1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தவுடன்
சென்னை நகரில் அண்ணா திமுகவின் முக்கிய பிரமுகராக வாழ்ந்தவர் இவர்
அண்ணா திமுகவின் மூத்த தலைவர்களில் முதல் கட்டத்தை சேர்ந்தவர்
1980/ 1984 ஆண்டுகளில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர்
எம்ஜிஆர் இறந்த பிறகு ஜானகி அம்மையாரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதற்காக முழுமூச்சில் இறங்கி பாடுபட்டவர் இவர்
ஜானகி அம்மையாருக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்
ஜானகி அம்மையார் முதலமைச்சராக பதவியேற்றார்
எம்ஜிஆர் குடும்பத்திற்கு துரோகம் செய்யாதவர்
எம்ஜிஆர் அவர்களைப்போல் ஏழை தொண்டர்களுக்கும்
ஏழை மக்களுக்கும் பண உதவி செய்து கொண்டு வருபவர்
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் சைதை துரைசாமி அவர்கள்தான்
இந்த அற்புதத்தை எம்ஜிஆர் நடத்திக் காட்டுவார்....... Thanks PM
orodizli
27th April 2020, 02:32 PM
மருதநாட்டு இளவரசி
14.04.1950
திருச்சி ஜூபிடரில் 133 நாட்கள் ஓடிய வெற்றிபடம்.
கதாபாத்திரமாக காண்டீபன்
ஜோடி வி.என்.ஜானகி
தலைவருக்கும் ஜானகி
அம்மாளுக்கும் காதல்
மலர்ந்தது வாழ்வில்.
இசை வி.எஸ்.ஞானமணி
வசனம்.கலைஞர்
இயக்குநர் ஏ.காசிலிங்கம்.
இரண்டு கைகளிலும்
கத்தி சண்டை சில
ஆட்களுடம் இரு கத்தியை சுழற்றும்
காட்சி காணக்கிடைக்காத காட்சி நம் தலைவர்
இந்த படத்தில் இருந்து தான்
வேகம் பிறந்தது....... Thanks...
orodizli
27th April 2020, 02:35 PM
ஜெனோவா 15.06.1953
ஓடிய நாட்கள் 133.
கதாபாத்திரமாக சிப்ரேஸா(நாட்டின் மன்னன்)
இது ஒரு கிறிஸ்துவ படம்.ஜோடி பி.எஸ்.சரோஜா
இசை முதன்முறையாக
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தது.இயக்குநர்.எப்.நாகூர்
வசனம். சுரதா இளங்கோவன் ... Thanks...
நெடுமாறன்.
orodizli
27th April 2020, 02:43 PM
சபாஷ் மாப்பிள்ளே 31.08.1961
கதாபாத்திரமாக வாசு
ஜோடி மாலினி
இயக்குனராக எஸ்.ராகவன்(மாலினி யின் கணவர்)
வசனம் ஏ.கோவிந்தன்.
சிறந்த நகைச்சுவை படம்.படம் பரவாயில்லை, வசூல் நன்றாக செய்தது.
ராகவன்,மாலினியின் நட்புக்காக நடித்து கொடுத்தார். படத்தில் எம்.ஜி.ஆரும், mr.ராதாவும் போட்டி போட்டுக்கொண்டு நகைச்சுவை காட்சிகளில் மிளிர்ந்தனர்......... Thanks...
orodizli
27th April 2020, 02:49 PM
#உறந்தைஉலகப்பன்...
எம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து!
"புதுமைப்பித்தன்' படத்தில் சந்திரபாபு எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இவர் நடிகர்,
புரட்சி நடிகர் என்று குறிப்பிடுவார். வசனம் கலைஞர்தான். வசனம் மட்டுமன்று அந்தப் பட்டத்தையும் கொடுத்தது கலைஞர்தான்.
இதனைப் பற்றி மணப்பாறை வசந்த கலா மன்றம் உறந்தை உலகப்பன் கூறுகிறார்: ""கலைஞரை எங்கள் நாடகம் ஒன்றிற்கு தலைமை வகிக்கக் கேட்டதுடன் எம்.ஜி.ஆரையும் முன்னிலை வகித்திட கூட்டிவரக் கோரினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் வருவதாக 3-4-1952-ல் தகவல் கார்டில் வந்தது. 5-4-52ல் திருச்சி தேவர் மன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், சினிமா நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிலையில் என அச்சிடப்பட்டு வெளியாகியது.
எம்.ஜி.ஆருக்கு ஒரு பட்டம் அளித்து நோட்டீசில் போடுவோம். நாடக மேடையில் அறிவித்துவிடலாம் என நினைத்து புரட்சி நடிகர் என வழங்கலாம் என்று முடிவுசெய்தேன்.
எங்களது குழுவிலுள்ள ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர் என்ன புரட்சி பண்ணி விட்டார். சினிமா நடிகர் என்றே போடுவோம் என்று தன் கருத்தைச் சொன்னார்.
நான் பிடிவாதமாக என் எண்ணப்படியே செய்தேன். ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்தோம். மேக்கப்பைக் கூட சரியாகக் கலைத்திடாமல், கலைஞருடன் காரிலேயே 5-4-1952 மாலையே திருச்சி வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்...
நாடகம் தொடங்கி இடைவேளையில் கலைஞர் அவர்களை, புரட்சி நடிகர் என எம்.ஜி.ஆரை கவுரவித்திட கோரிட, அவரும் தனக்கே உரிய பாணியில் பேசும்போது அன்பு என்பது மூன்றெழுத்து என்று சுமார் 33 மூன்று எழுத்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி முடிக்கும்போது, "அண்ணா' என்ற மூன்றெழுத்து, "தி.மு.க.' என்ற மூன்றெழுத்து, ‘எம்ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்துக்காரருக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தினை இந்தத் நாடக நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்கிறேன்'' என்றபோது பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து நின்றார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்...
💐 வளர்க புரட்சித்தலைவர் புகழ் 💐
#இதயதெய்வம்........ Thanks fb
orodizli
27th April 2020, 02:57 PM
MGR Filmography Film 51 (1961) Poster
"தாய் சொல்லை தட்டாதே"
ரகசிய போலிஸ் வேடத்தில் எம்ஜியார் நடிக்க, விருவிருப்பான சண்டைக் காட்சிகள், தாய்ப்பாசம், காதல் காட்சிகள், இனிய பாடல்கள், என்று ஒரு முழு எம்ஜியார் ஃபார்முலாவுடன் அமைந்த படம் வெற்றி பெற்றதில் வியப்பேதுமில்லை. ஏறத்தாழ, எம்ஜியாரின் எல்லா படங்களிலும் வெற்றி கதாநாயகியாக தோன்றிவந்த சரோஜாதேவி, எம்ஆர் ராதா, அசோகன் ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, ஆரூர்தாசின் கதை வசனம் எழுத, இயக்கம் வேறு யார், எம்ஏ திருமுகம்தான்.
கண்ணதாசனின் பாடல்களுக்கு தேவர் ஃபிலிம்சின் ஆஸ்தான ம்யூசிக் டைரக்டரான கேவி மகாதேவன் இசையமைத்தார். மொத்தம் எட்டு பாடல்கள்; அனைத்துமே பிரபலமாயின. அவற்றில் சிரித்துச் சிரித்து எனும் டிஎம்எஸ் சுசீலா டூயட் இன்றளவும் எவர்க்ரீனாகத் திகழ்கிறது. எம்ஜியார் சரோஜாதேவி ஜோடியை மேலும் பல படங்களில் தொடரும்படிச் செய்த பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு. கண்ணாம்பாவின் ஆவேச நடிப்பும் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று........ Thanks...
orodizli
27th April 2020, 03:04 PM
#தலைவர் முதல்வரான அன்று...
1977-ம் ஆண்டு ஜூன் 30 அன்று,
இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அது அரசியல் சட்ட ரீதியாகவும், சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட
பதவி ஏற்பு விழா!
ஆனால், சம்பிரதாய பதவி ஏற்பு முடிந்ததும் புரட்சித்தலைவர் அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார்.
சென்னை அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல, அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும்
20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடி வங்கக்கடலாய் ஆர்ப்பரித்தது. அப்போது புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார் அந்த சரித்திர நாயகன் இதயதெய்வம் புரட்சித்தலைவர்.
அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார் தலைவர். பின்னர் உரையாற்றினார்.
அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது, அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு, உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.
இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும்.
உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.
மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.
இதனை எங்கள் மனத்தில் இருத்தி, லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.
இந்த உயர்ந்த லட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுத்தேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று உறுதியிட்டுக் கூறினார், புரட்சித் தலைவர்.
அப்பொழுதும், அதற்குப் பின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!
அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.
இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார், புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.!!!
இதயதெய்வம் புரட்சித்தலைவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை. தலைவரை முகமுகமாய் தரிசித்த நம் போன்ற தலைவர் பக்தர்களும் பிறவிப்பயனை அடைந்தவர்களே...!!!
💐 புரட்சித்தலைவர் புகழ் வளர்க 💐
#இதயதெய்வம்....... Thanks...
orodizli
27th April 2020, 03:06 PM
[தலைவர் தான் ஒரு நாட்டின் “முதல்மந்திரி” என்ற தற்பெருமை இல்லாமல் எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார். மற்ற மந்திரிகளிடமும், 1960-ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார். இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக, தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார்.
இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார். அந்த காலத்தில் மனிதனை வண்டியில் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கை ரிக் ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விஷயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விஷயங்கள்..... Thanks...
orodizli
27th April 2020, 03:15 PM
கண்கணட தெய்வமாக எம்ஜிஆரை கொண்டாடும் மக்கள்
பாமர மக்கள் நல்வழி காட்ட திரையை ஆயுதம் ஆக்கி வென்றதால்
மது போதை நாடாமல் வாழவைத்தற்க்கு
ஒரு கடையில் ஒரு வீட்டில் எம்ஜிஆர் படம் பூஜிக்க படுகிறது என்றால் அங்கு மனிதநேயம் நிறைந்த இடம் என்று பொருள் இப்படி வாழவைத்ததால் வணங்கினர் எம்ஜிஆரை தெய்வமாக மக்கள்
வாழ்க எம்ஜிஆர் புகழ்..... Thanks...
orodizli
27th April 2020, 03:18 PM
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக்காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்துவாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக்கூறிவிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத்தாய்க்கு... எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின்நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். அந்த தாயின்வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார். சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின்கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவிசெய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார். நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர்... அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த நெகிழ வைக்கும் பதில் இது...!!! ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத்தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் தம்பியாக நினைத்துத்தான் உதவிசெய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். அந்த வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும் அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’ ‘ஆனந்த ஜோதி ' திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவரல்ல , அதன்படியே வாழ்ந்தவர்... நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல்....... Thanks...
orodizli
27th April 2020, 03:23 PM
திரை உலகின் சாதனை மன்னன் :::
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார். அவர் நடித்த படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தன. அவரை வைத்து படமெடுக்க படாதிபதிகள் போட்டி போடுவார்கள். அவர் நடிக்கும் படம் என்றால் பூஜை போடும் தினத்தன்று எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிடும்.
ஆனால் அத்தகைய இமாலய நிலையை அவர் எளிதில் அடைந்துவிடவில்லை. மிக மிகக் கடுமையாக போராடி படிப்படியாக உயர்ந்து தான் அந்த உன்னத நிலையை அடைந்தார் .
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதே அவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். எதிர்ப்பு ஏற்பட்டால் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். லட்சியத்தை அடையும் வரை சற்றும் ஓயக் கூடாது .
சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அதைத்தான் செய்தார்கள் மக்கள் திலகமாக விளங்கிய எம்ஜிஆரும் அதையே செய்தார்.
அவருடைய முகம் திரையில் தெரிந்ததுமே ஆயிரமாயிரம் ரசிகர்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி திரைப்படக் கொட்டகையிலேயே தங்கள் பக்தியை வெளிப்படுத்திய ரசிகர்களும் உண்டு.
ஆனால் ஆரம்பகாலத்தில் அதே முகம் திரையில் தோன்றுவதற்கு இலாயக்கானதாக இல்லை என்று அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த டைரக்டர் ஒருவர் சொன்னார் என்பதைக் கேட்கும்போது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம் ஆனால் அது உண்மை.
ஆரம்ப நாட்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை படங்களில் நடிப்பதற்காக சந்தர்ப்பம் கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு டைரக்டர் அவருடைய முகத்தை பார்த்துவிட்டு அவருடைய முகநாடி இரட்டையாக அமைந்திருப்பது போல் காணப்படுவதால் அவருடைய முகம் அழகாக தெரியாது என்று கூறி அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க மறுத்துவிட்டார்.
பொதுவாக வளரத் துடிக்கும் எந்த நடிகரும் அத்தகைய வார்த்தைகளை கேட்டதும் பெரிதும் மனமுடைந்து போவார்கள். நடிப்பு துறையில் இறங்க வேண்டும் என்னும் எண்ணத்தையே அவர்கள் கை விட்டு விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அந்த டைரக்டர் சொற்களைக் கேட்டு மனம் உடைந்து போகவில்லை நடிப்புத் துறையிலிருந்து ஒதுங்கிவிட நினைக்கவில்லை. தன்னுடைய முகம் திரையில் தோன்ற அதற்கு முற்றிலும் ஏற்ற வகையிலேயே இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
எதிர்காலத்தில் திரையுலகில் தான் மிகப் பெரிய புரட்சியை உண்டு பண்ணப் போகிறோம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்பது அவருக்கு மிக மிக நன்றாக தெரியும்.
எனவே அவர் அந்த டைரக்டர் வார்த்தைகளைக் கேட்டு ஒன்றும் சொல்லவில்லை அமைதியாகவும் மௌனமாக வீடு திரும்பிவிட்டார்.
உலகில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்தவர்களின் மனோநிலையைக் கூர்ந்து கவனித்தால் மற்றோர் உண்மை புலப்படும் . அவர்கள் தங்களைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். தங்களுடைய திறமையையும் எதிர்காலத்தையும் மிகமிக நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும். அப்படித்தான் திரையுலகில் நுழைவதற்குத் தான் சிரமப்பட வேண்டியிருந்தாலும் நுழைந்தபின் அத்துறையில் நிச்சயம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்று நம்பிக்கை அவருக்கு எப்போதும் இருந்து வந்தது. அது யாருடைய சொற்களை கேட்டும் குறைந்துவிடவில்லை.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....... Thanks...
orodizli
27th April 2020, 05:50 PM
உண்மை தலைவர்
கண்பட்டாலே புண்ணியம் அதிலும் அவரின் நேரடிபார்வை, அவரைதொட்டவர்கள்,அவர்தூக்கிய மழலைகள் அனைவரும் இன்று உயர்ந்த இடத்தில், தலைவர் ஒரு தெய்வபிறவி (இல்லை) தெய்வம். கல்விகண் திறந்த கடவுள். வாழ்க அவர் புகழ். அவரின் ரசிகனாக,தொண்டனாக, இன்று பக்தனாக இருப்பதற்கு நாம் பெருமைகொள்வோம். ....... Thanks...
orodizli
27th April 2020, 05:51 PM
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் .
நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்
புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்......... Thanks...
orodizli
27th April 2020, 05:51 PM
பாரத்,பாரத ரத்னா,புரட்சித்தலைவர்,மக்கள் திலகம்,Dr.MGR,காவியத் தலைவன்,வாத்யார்,இதயக்கனி.பொன்மனச் செம்மல்,இது தவிர கலையுலக சூப்பர் ஸ்டாா்,அரசியல் மெகா ஸ்டார்,எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்,தோல்வியையே எப்போதும் பரிசாக கொடுத்த சிங்கத் தலைவன்,மன்னாதி மன்னன்,ராஜராஜன்,அரசியலிலும்,சினிமாவிலும்ரோல் மாடல் மக்கள் மனதை விட்டு நீங்காதவர், நம் தலைவர்....... Thanks...
orodizli
27th April 2020, 05:55 PM
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!....... Thanks..
orodizli
27th April 2020, 05:57 PM
He is Sarithira Nayagan. That's MGR. He is a real Mass Hero of yester years not like now reel hero. Don't bother of the normal and down trodden people. He is still living in their hearts....... Thanks...
orodizli
27th April 2020, 06:02 PM
வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆர்
விருந்தோம்பல்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்க்கு.
பொருள் : அனுதினமும் தன்னை நாடிவரும் விருந்தினருக்கு விருந்திட்டு உபசரிப்பவனும் இனிவரும் விருந்தினரை எதிர்நோக்கி காத்திருப்பவனுமான ஒரு அற்புதமான மனிதனுக்கு விருந்திட்டு மகிழ்ச்சி அடைய வானத்திலிருக்கும் தேவர்களுமே காத்திருப்பார்கள்.
விளக்கம் : தன் வருமானத்தை விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்திற்காகவே சேர்த்து வைக்கும் உத்தம குணம் கொண்ட ஒருவன், யாரையும் வீட்டிற்கு வெளியில் காக்க வைத்து தான் மட்டும் உணவு உண்ண மாட்டான். தன்னை வாட்டும் பசியை போக்கும் வல்லமை இவருக்கு மட்டும்தான் இருக்கின்றது என்று நம்பி வருபவரை அன்னமிட்டு ஆதரிக்கப் மேன்மையானவனின் வீட்டில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ மகாலக்ஷ்மி மனம் விரும்பி நிரந்தரமாக தங்குவாள். அவனுடைய நிலத்தில் எதையும் விதைக்க வேண்டிய அவசியமில்லாமல் பயிர் செழித்து வளரும். எப்போதும் விருந்தினர்களை எதிர்பார்த்து அன்பு மனதோடு காத்திருக்கும் அந்த அற்புதமான உத்தமனுக்கு விருந்தளித்து மகிழ வானத்திலிருக்கும் தேவர்களே இருகரம் நீட்டிக் காத்திருப்பார்கள் !
இந்தக் குறளுக்கு பொருத்தமான ஒரு மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும்தான்.
விருந்தோம்பல் என்னும் அரிய பண்பு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் இளமைப் பருவத்திலேயே அவரிடம் காணப்பட்ட ஒன்று. திரைத்துறையில் நுழைந்த ஆரம்ப காலங்களில் மாடர்ன் தியேட்டர்ஸில் நடிக்கும் போதே தன்னோடு நாலு பேரையாவது சாப்பிட வைத்து மனம் மகிழ்ந்தவர் அவர்.
தன்னுடைய இளமைக் காலத்தில் உண்ண உணவில்லாமல் பசியால் பலநாள் துடித்ததை அவர் மறந்ததே இல்லை. பசி என்பது என்ன என்பதை உணர்ந்தவன் நான் என்று வெளிப்படையாக சொல்ல நாட்டிற்கே முதல்வரான போதிலும் அவர் தயங்கியதில்லை.
கொடைவள்ளல் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் அடுப்பில் முதன் முதலாக எந்த நேரத்தில் அக்னி தேவனை ஆராதித்து தீயை ஏற்றினார்களோ யாருக்கும் தெரியாது . ஏனென்றால் இரவும் பகலும் அது அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. அதனால் உண்டான உணவு தன்னை சாப்பிட்டவர்களின் வயிற்றுப் பசியை அனுதினமும் அழித்துக் கொண்டே இருந்தது.
தன்னைப் பார்க்க யார் வந்தாலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கேட்கும் முதல் கேள்வி, சாப்பிட்டாயா? என்பது தான். அடுத்த வார்த்தை போய் சாப்பிட்டுட்டு வாங்க .... என்று அனுப்பி வைப்பது தான். எத்தனை நாள் பட்டினியால் வாடி இருந்தாலும் அந்த ஒரு வார்த்தை, கேட்பவரை உயிர்ப்பித்து விடும்.
கொடைவள்ளல் எம்ஜிஆரின் வீட்டு சமையல் பாத்திரங்களை பார்த்தாலே பிரமிப்பு வரும். ஒரே நேரத்தில் அறுபது இட்லிகள் வேகு மளவு இருந்த இட்லி பாத்திரமே அதற்குச் சாட்சி.
அவருடைய வீட்டில் பாமரர் சாப்பிட்டாலும் பணக்காரர் சாப்பிட்டாலும் ஒரேவிதமான சாப்பாடே பரிமாறப்படும். தன்னோடு யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கும் அதே வகையான உணவே பரிமாறப்பட வேண்டும் என்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கட்டளை. படப்பிடிப்புத் தளங்களில் லைட்மேன் முதல் மற்ற உதவியாளர் வரை சாப்பிட்டார்களா என்பதில் அதிக அக்கறை காட்டுவார்.
ஒரு மனிதனுக்கு அளவிட முடியாத செல்வத்தைக் கொடுத்தாலும் மேலும் வேண்டும் என்றுதான் கேட்பான். ஆனால் எத்தனை அறுசுவை உணவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் சாப்பிட முடியாமல் போதும் என்று மறுத்து விடுவான். ஏனென்றால் மனிதனுக்கு திருப்தி தரும் ஒரே விஷயம் உணவுதான் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செல்வது வழக்கம்.
இன்னும் ஒரு அற்புதமான கருத்தையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். பணம் இருப்பது பெரிதல்ல . அதைப் பிறருக்காக செலவு செய்வதும் கூட பெரிதல்ல . பிறருடைய சுவைக்கு உணவு படைப்பது தான் மிகப்பெரிய காரியம் என்று சொல்வேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிக்கும் படப்பிடிப்புத் தளத்தில் கலைஞர்கள், அரங்க உதவியாளர்கள், லைட்மேன், உடை அமைப்பாளர் , துணை நடிகர் நடிகையர்கள் இவர்களோடு சேர்ந்து தான் சாப்பிடுவார். அவர்கள் வெட்கத்துடன் தயங்கினாலும் அவர்களுடன் வேடிக்கையாகப் பேசி சந்தோசப்படுத்துவாராம். தனக்கு ஏதேனும் ஸ்பெஷலாக உணவுப்பொருள் பரிமாறப்பட்டால், அது மற்றவர்களுக்கும் பரிமாறப்படுகிறதா என்று கவனிப்பார். அப்படி பரிமாறப்படாவிட்டால் பரிமாறுபவரை கூப்பிட்டு,
இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை இந்த தோழர்களுக்கும் பரிமாறுங்கள் இவங்க நல்லா இருந்தாத்தானே நாம நல்லா இருக்க முடியும் என்று சொல்லிச் சிரிப்பார்.
இது ஏதோ ஒரு படப்பிடிப்பில் நடந்த நிகழ்ச்சி அல்ல. எல்லா இடங்களிலும் எங்கெல்லாம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்னும் அன்னதாதா இருக்கிறாரோ அங்கெல்லாம் நடந்திருக்கும் உண்மை நிகழ்ச்சி.
பிறர் பசி பொறுக்காத மேன்மையானவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அவரை பழித்தும் இழித்தும் பேசியவர்களும் கூட அவருடைய விருந்தோம்பலின் மேன்மையை குறை சொல்ல மாட்டார்கள். விருந்தோம்பல் என்னும் உயரிய மாண்புக்கு கண்ணெதிர் சாட்சியாய் நம்மோடு வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மேலும் கோடிக்கணக்கான நல்ல இதயங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம் எம்ஜிஆர் தன் புகழுடலோடு வானுலகம் சென்ற போது வள்ளுவர் சொன்னது போலவே அந்த அன்னதாதாவுக்கு அங்கிருந்த தேவர்களும் அன்போடு இருகரம் நீட்டி வரவேற்று அன்பின் விருந்திடிருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை....
என்றும் என்றென்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க........... Thanks.........
orodizli
27th April 2020, 06:08 PM
#தலைவரின்_திரைப்பயணம்_சிறிய #தொகுப்பு_இன்றைய #தலைமுறைகளுக்காக
தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு எம்ஜிஆரின் திரையுலகப் பயணம் குறித்த சுவாரஸ்யமான சங்கதிகள் அனைத்தும் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல, எம் ஜி ஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக இந்த வாரம் எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
எம்ஜிஆர் கலையுலகில் இருந்து அரசியல் வானில் முதல்வாரன பிறகு ஒப்பந்தமான திரைக்காவியங்கள்...
உன்னைவிட மாட்டேன்
புரட்சிபித்தன்
உங்களுக்காக நான்
மக்கள் என் பக்கம்
நல்லதை நாடு கேட்கும்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
நானும் ஒரு தொழிலாளி
அண்ணா நீ என் தெய்வம்
தியாகத்தின் வெற்றி.
அண்ணா பிறந்த நாடு
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜ்
ஊரே என் உறவு
மீண்டும் வருவேன்
பைலட் ராஜ்
எல்லை காவலன்.
எம்ஜிஆர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும் - கம்பெனிகளும்...
ADVERTISEMENT
1. சதிலீலாவதி - மனோரமா பிலிம்ஸ்
2. இருசகோதரர்கள் - பரமேஸ்வர் சவுண்டு பிக்சர்ஸ்
3. தட்ச யக்ஞம் - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்ட
4. வீரஜெகதீஷ் - வி.எஸ்.டாக்கிஸ்
5. மாயாமச்சேந்தரா – - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்
6. பிரகலாதா - சேலம் சங்கர் பிலிம்ஸ்
7. சீதாஜனனம் - சியாமளா பிக்சர்ஸ்
8. அசோக்குமார் - முருகன் பிக்சர்ஸ்
9. தமிழறியும் பெருமாள் - உமா பிக்சர்ஸ்
10. தாசிப்பெண் - புவனேஸ்வரி பிக்சர்ஸ்
11. ஹரிசந்திரா - ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்
12. சாலிவாகனன் - பாஸ்கர் - பிக்சர்ஸ்
13. மீரா - சந்திரபிரபா சினிடோரியன்
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்...
நாடோடி மன்னன்
ராஜா தேசிங்கு
அடிமைப்பெண்
நாளை நமதே
குடியிருந்த கோயில்
ஆசைமுகம்
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
சிரித்து வாழ வேண்டும்
எங்கவீட்டுப் பிள்ளை
பட்டிக்காட்டுப் பொன்னையா
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
கலையரசி
நேற்று இன்று நாளை
ஊருக்கு உழைப்பவன்
எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் ஆசிரியர்கள்...
திரு. தஞ்சை ராமையாதாஸ்
திரு.மாயவநாதன்
திரு. பாபநாசம் சிவன்
திரு. கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி
திரு.கு.சா.கிருஷ்ணமுர்த்தி
திரு.ஆத்மநாதன்
திரு.கே.டி.சந்தானம்
திரு.ராண்டர்கை
திரு.உடுமலை நாராயணகவி
திரு.சுரதா
திரு.பட்டுக்கோடடை கல்யாணசுந்தரம்
திரு.லட்சுமணதாஸ்
திர.கு.மா. பாலசுப்பிரமணியன்
திரு.அ.மருதகாசி
திரு.முத்துக்கூத்தன்
திரு.கண்ணதாசன்
திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு
திரு.அவினாசிமணி
திரு.புலமைபிததன்
திரு.விந்தன்
திரு.நா.காமராசன்
திரு.முத்துலிங்கம்
ரோஷனரி பேகம்
திரு.பஞ்சு அருணாசலம்;
எம்ஜிஆர் நடித்த வண்ணப் படங்கள் 40 (இதில் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்ற காவியங்கள் 35) இது தவிர மற்ற காவியங்கள் 10 வாரங்களுக்கு கீழ் கிடையாது.
108 அடி உயர கட் - அவுட்...
உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின்என் அண்ணன் காவியத்திற்கு மட்டும் தான்.
திரைப்படம்: அரங்கு சேலம் அலங்கார்.
திரு.எம்.ஜி.ஆர் இயக்கிய திரைப்படங்கள்...
1. நாடோடி மன்னன்,
2. உலகம் சுற்றும் வாலிபன்,
3. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்...
செல்வி ஜெ.ஜெயலலிதா – 28 படங்கள்,
திருமதி சரோஜாதேவி – 26 படங்கள்,
எம் ஜி ஆரை அதிகப்படங்களில் இயக்கியவர்...
திரு.ப.நீலகண்டன் - 17 படங்கள்
திரு.எம்.ஏ.திருமுகம் - 16 படங்கள்
எம் ஜி ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம்...
தேவர் பிலிம்ஸ் - 16 படங்கள்
எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு அதிகம் இசை அமைத்தவர்...
திரு.எம்.எஸ்..விஸ்வநாதன் 49 படங்கள்
திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்
அதிக பாடல்கள் பாடியவர்கள்...
திரு.எ.எம்.சௌந்தரராஜன், திருமதி.பி.சுசிலா
வெற்றிவிழா கண்ட திரைப்படங்கள்...
100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை -86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை -12 படங்கள்
வண்ணப் படங்கள்(கலர்) -40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது -2 திரைப்படங்கள் ( என் தங்கை
உலகம் சுற்றும் வாலிபன்)
தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ் படம் - மலைக்கள்ளன்
தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யவப்பட்டவை - 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை - 9 படங்கள்.
முதன்முதலில்...
முதன் முதலில் தணிக்கையில் A சான்றிதழ் பெற்ற தமிழ் படம் - மர்மயோகி
முதல் பாதி கருப்பு & பாதி வண்ணப்படம் - நாடோடி மன்னன்
முழுநீள வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
இந்தியாவின் சிறந்த நடிகர் - ரிக்க்ஷாக்காரன்............... Thanks...........
orodizli
27th April 2020, 06:13 PM
எம்.ஜி.ஆரிடம் நமக்கு பிடித்தது என்ன?
எம்ஜிஆரிடம் எனக்கு மிகவும் பிடித்தது
1. கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தந்த மாண்பு .
2. நான் ...எனது ..என்ற வார்த்தையை ஒரு நாளும் கூறாத அடக்கம் .
3. அண்ணாவை என்றென்றும் மறக்காத பணிவு .
4. காலில் விழும் அடிமைத்தனத்தை அடியோடு வெறுத்த பிதாமகன் .
5. அரசாங்க சொத்திற்கும் மக்கள் வரிப்பணத்திற்கும் மரியாதை தந்தவர் .
6. பங்களா , எஸ்டேட் என்று அநியாய மாக வாங்கி சொத்து சேர்க்காதவர் .
7. குற்றவாளி என்று பெயர் வாங்காத ஒரே உன்னத தலைவர்
8.எதிரிகளையும் நண்பனாக்கி கொண்ட நல்லவர் - வல்லவர்
9. மக்கள் மனதில் நேற்றும் வாழ்ந்தார் . இன்றும் வாழ்கிறார் . நாளையும் வாழ்வார் எம்ஜிஆர்.
10. தன் வாழ்நாளுக்குப் பிறகு தன் சொத்துக்களின் பெரும்பகுதியை சமுதாயத்தில் நலிந்தவர்க்கு எழுதி வைத்தவர்.
11. தன் திரைப்படக் கருத்துக்கள் மற்றும் பாடல்கள் மூலமாக மக்கள் மனதில் வாழ்பவர்.
12. புகைப்பிடித்தல், மது, போன்ற தீய பழக்கங்களை தன் திரைப்படங்களில் கூட காட்டாமல் தனி மனித ஒழுக்கம் பேணியவர்.
13. தன் கொள்கைகளுக்கு ஒத்து வராத திரைப்படங்களில், பணம் பெரிதென நினைக்காமல் நடிக்க மறுத்தவர்.அதனாலேயே மற்ற சக நடிகர்களைப் போல படங்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாதவர். இருப்பினும் படங்கள் குறைவாக இருந்தாலும், வேறு எந்த நடிகர்களை விடவும் இன்றும் அவரது படங்களும், பாடல்களும் தொலைக்காட்சியிலும், திரையரங்குகளிலும் அதிக அளவில் திரையிடப்படுகின்றன.ரசிகர்களும், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் விரும்பி பார்த்தும், கேட்டும் மகிழ்கிறார்கள்.......... Thanks.........
orodizli
27th April 2020, 06:27 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 14 திங்கள்
MGR பக்தர்களே
எம்ஜிஆர் சரோஜாதேவி தோன்றுகின்ற இந்த பாடல்காட்சி
எங்க வீட்டுப் பிள்ளை என்ற சினிமா படத்திற்காக எடுக்கப்பட்டது
படத்தின் நீளம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்
++++++++++++++++++++++++++++++++
நன்றி நன்றி நன்றி
MGR அவர்களை திமுக வில்இருந்து
நீக்கிய
கருணாநிதி அவர்களுக்கு நன்றி
1949 ஆண்டு
தி.மு.க வை ஆரம்பித்தவர்அண்ணா
MGR தி.மு.க வில் சேர்ந்தது
1952 ம் ஆண்டு
+++++++++++++++++++++++++++++++++
முதல்வர் கருணாநிதி அவர்கள் 1970 1971 / ஆம் ஆண்டில் குமுதம் பத்திரிகை யில் நெஞ்சுக்கு நீதி என்று
தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்
நான் முதல் முதலில் எம்ஜிஆர் அவர்களை சந்தித்தது கோவையில் உள்ள சினிமா ஸ்டுடியோவில் நான்MGR அவர்களைசந்தித்தபோது
எம்ஜிஆர் அவர்கள் கதர் வேஷ்டி கதர் சட்டை போட்டு கழுத்தில் ருத்ராச்சக்கொட்டை அணிந்திருந்தார்
எம்ஜிஆர் அவர்களின் நிறம்
ரோஸ் கலந்த எலுமிச்சம்பழ கலர்
எம்ஜிஆர் அவர்களும் சினிமா உலகில் புதுமுகம் நானும் சினிமா உலகில்புதுமுகம்
எப்படியாவது எம்ஜிஆரை திமுகவில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்
அண்ணா எழுதிய புத்தகங்களை எம்ஜிஆரிடம் படிக்க கொடுப்பேன்
எம்ஜிஆர் அவர்கள் காந்திய புத்தகங்களை என்னிடம் கொடுப்பார்
MGR அவர்களை எப்படியாவது திமுகவில்
சேர்த்துவிடவேண்டும் என்று நீண்டநாள்
முயர்சி செய்து நான் அண்ணாவிடம்
அழைத்து செண்றேன் எண்று கட்டுரை
எழுதியிருந்தார்
++++++++++++++++++++++++++++++++++
அடுத்த நாள் தினசரி பேப்பரில்
நடிகர் S.S.R. அவர்களின் ( முதல்மனைவின் அண்ணன் நடிகமணி T.V .நாராயணசாமி அவர்கள் ஒருஅறிக்கை விட்டார்
MGR ரைபோன்ற அழகான. MGRயைபோல கத்தி சண்டை தெரிந்த. .
MGR. ரைபோல் சிலம்பாட்டம்தெரிந்த
எம்ஜிஆரை போல் இரக்கசுபாவம்உள்ள
MGR ரைபோன்றதர்ம சிந்தனையுள்ள
நடிகர் திமுகவிற்குதேவைஎண்று
நான்தான்
MGR அவர்களை அண்ணா விடம் அழைத்து சென்றேன் எண்று அவர்
ஒரு அறிக்கை விட்டார்
எம்ஜிஆர் பக்தர்களே
முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி வரலாற்றிலும்
நடிகமணி டிவி நாராயணசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும்
எம்ஜிஆர் அவர்களை அண்ணாவிடம் அழைத்துச்சென்று திமுகவில் சேர்த்தது
நான்தான் என்று இருவரும் அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்
இதிலிருந்து ஒரு செய்தி தெரிய வருகிறது
எம்ஜிஆர் அவர்கள் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று
ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் நமக்கு புகழ் கிடைக்கும் மாலை மரியாதை கிடைக்கும் என்று திட்டமிட்டு எம்ஜிஆர் அரசியலுக்கு வரவில்லை
எம்ஜிஆர் திமுகவில் சேர்ந்த பிறகு
அதனுடைய வளர்ச்சிக்கு கடுமையாகப் பாடுபட்டார்
தான் சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை திமுக தொண்டர்களுக்கும் திமுக தலைவர்களுக்கும் கொடுத்து உதவினார்
ஆனால் எம்ஜிஆர் துரோகம் செய்து
திமுகவை கைப்பற்ற நினைக்கவில்லை
எம்ஜிஆர் துரோகம் செய்து திமுக கொடி எனக்குத்தான் வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்ல வில்லை
எம்ஜிஆர் துரோகம் செய்து உதயசூரியன் சின்னம் எனக்குத்தான் வேண்டுமென்று
கோர்ட்டுக்கு செல்லவில்லை
எம்ஜிஆர் துரோகம் செய்து திமுகவின் தலைமை நிலைய கட்டிடம் எனக்குத்தான் வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்லவில்லை
திமுகவில் இருந்து கொண்டே முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு பக்கத்திலிருந்து கொண்டே
தனியாக டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை கொல்லைப்புற வழியாக சந்தித்து
முதலமைச்சர் கருணாநிதியை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கி விட்டு
தான் முதலமைச்சராக வருவதற்கு எம்ஜிஆர் முயற்சி எடுக்கவில்லை
+++++++++--++++++++++++++++++++?+++
எம்ஜிஆர் பல முதலமைச்சர்களை ஆட்சியில் அமர்த்தியவர்
இந்தியாவில் உள்ள நடிகர்களில் மக்கள் சக்தி அதிகம் உள்ளவர் MGR
ஆகவே தனிமனிதனாக அண்ணா திமுகவை உருவாக்கினார்
தன் மனைவி ஜானகி அம்மையாருக்கு சொந்தமான கட்டிடத்தை அண்ணா திமுக தலைமைக் கழகத்திற்கு இலவசமாக கொடுத்தார்
அண்ணா திமுகவிற்கு கொடியை உருவாக்கினார்
அண்ணா திமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை உருவாக்கினார்
தனிமனிதனாக மூன்று முறை முதலமைச்சராக வந்தார்
எம்ஜிஆரிடம் உள்ள பழக்கம் தான் சம்பாதித்த பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவுவது
பணத்தை மட்டும் கொடுக்கவில்லை முதலமைச்சர் பதவிகளையும் பல பேர்களுக்கு கொடுத்தவர் எம்ஜிஆர்
அவர் முதலமைச்சராக இருந்தபொழுது
யாருடைய சொத்துக்களையும் மிரட்டி எழுதி வாங்கவில்லை
கட்சியினுடைய மூத்த தலைவர்களை வாடா போடா என்று தரம் கெட்ட வார்த்தை யில்பேசவில்லை
அவர் மேல் ஊழல் விசாரணை கமிஷன் கிடையாது
அவர் மரணமடைந்த பிறகு கோர்ட் குற்றவாளி என்று அவருக்கு தீர்ப்பு கூறவில்லை
++++++++++++++++++++++++++++++++++
எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கிறோம்
என் தலைவன் தன்னுடைய சொந்த செல்வாக்கில் தான் முதலமைச்சராக வந்தாரே தவிர
சினிமா மார்க்கெட்டை இழந்து மரியாதை இழந்து
அடுத்தவர் கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றி என் தலைவன் எம்ஜிஆர் முதலமைச்சராக வரவில்லை
என் தலைவன் முதலமைச்சராக வந்தபிறகுபல லட்சம் கோடி கொள்ளை அடிக்கவில்லை
ஆகவே எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றோம்
+++++++++++++++++++++++++++++++++
MGR திமுகவில் சேர்ந்த பிறகு
1952 / 1957 / 1962/ 1967 / 1971. ஆகிய
ஆண்டுகளில் நடந்த சட்டமன்றபொது தேர்தல்களிலும்
பட பாராளுமன்ற தேர்தல்களிலும் பலஇடைத்தேர்களிலும் சென்னை மாநகராட்சி தேர்தலிலும் உள்ளாட்சி
தேர்தல் களிலும் MGR அவர்கள் திமுகவிற்கு தமிழ்நாடு முழுவதும் வேனில் சென்று பிரசாரம் செய்தார்
அந்த காலத்தில் இந்தியாவில் MGRஅவர்கள் தான்
வேனில் நின்றபடி படி பிரசாரம் செய்த
முதல் அரசியல் வாதி
MGR அவர்களை
திமுக வில் இருந்து நீக்கியபிறகுதான்
கருணாநிதி அவர்கள் வேனில்தமிழ்நாடுமுழுதும் சென்று பிரசாரம் செய்யும் நடைமுறைக்கு வந்தார்
+++++++++++++++++++++++++++++++++
கருணாநிதி அவர்கள் MGR ரை கட்சியிலிருந்து நீக்காமல் இருந்திருந்தால்
MGR அவர்கள் மரணம் அடையும் வரை திமுகவிற்கு பாடுபட்டு
பிரசாரம் செய்து
கருணாநிதி அவர்களை
தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சர்
பதவியில் அமர வைத்திருப்பார்
கருணாநிதி அவர்கள்
MGRரை கட்சியில்
இருந்து நீக்கிய காரணத்தால் தான்
MGR தனிக்கட்சி ஆரம்பித்து
தனிமனிதனாக மூன்று முறை
முதலமைச்சரானார்
அதன் பின் MGRன் புகள் உலகம்முழுதும்
பரவியது
ஆகவேதான்
MGR ரை கட்சியில் இருந்து நீக்கிய
கருணாநிதி அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
++++++++++++++++++++++++++++++++
தீயசக்திகருனாநிதியால்
செய்ய முடியாத காரியத்தை
நல்ல சக்திசெயலலிதா செய்து முடித்தார்
அது என்ன காரியம்
அதிமுக வில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியிலும்
அதிமுக ஆட்சி நிகழ்ச்சியிலும்
MGR பெயரை சொல்ல விடாமல் செய்தார்
எம்ஜிஆருக்கு கட்டவுட் கிடையாது
எம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு கிடையாது
கட்சி விளம்பரங்களில் எம்ஜிஆர் படங்கள் கிடையாது
தினசரி பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் எம்ஜிஆர் படம் கிடையாது
வால் போஸ்டரில் எம்ஜிஆர் படத்தை சிறிதாக போடுவது
அண்ணா திமுக மேடையில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசுவது கிடையாது
எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் கொடுப்பது கிடையாது
அண்ணா திமுக பொதுக் கூட்டத்தில் முன்பு எம்ஜிஆர் நடித்த சினிமா படத்தில் வருகின்ற கொள்கை பாடல்கள் ஒலிபரப்பு செய்வார்கள்
ஆனால் ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிய பிறகு ஜெயலலிதாவை புகழ்ந்து பாடிய பாடல்களை தான் அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் ஒலிபரப்பு செய்தார்கள்
அனைத்து அரசு திட்டங்களுக்கும் ஜெயலலிதா பெயரை வைத்துக் கொண்டார்
எம்ஜிஆர் பெயரில் ஒரு டிவி கூட ஆரம்பிக்காமல்
ஜெயலலிதா பெயரில் நான்கு டிவியை ஆரம்பித்தார்
எம்ஜிஆர் விசுவாசிகளை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார்கள்
எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியில் உட்கார்ந்துகொண்டு
எம்ஜிஆரால் கிடைத்த முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி
எம்ஜிஆருக்கு இவ்வளவு துரோகங்களையும் ஜெயலலிதா செய்தார்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது பழமொழி
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே என்பதும் பழமொழி
குரு துரோகம் செய்யாதே என்பதும் பழமொழி
இப்படிப்பட்ட துரோகத்தை நான் எடுத்துச் சொல்லும்போது
சில எம்ஜிஆர் ரசிகர்களுக்கு என் மீது மன வருத்தம் வருகிறது
எம்ஜிஆரின் உண்மையான ரசிகர்களே
இவ்வளவு துரோகத்தையும் இவ்வளவு கெடுதலையும் கருணாநிதி செய்தால் கருணாநிதி ஒருஅயோக்கியப் பயல் தீயசக்தி என்று கூறிஇருப்போம்
++++++++++++++-+++++/+++++++++++
தீய சக்தி கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபொழுது
சென்னை நகரில் புதிதாக. ஒரு எம்எல்ஏ தொகுதியை உருவாக்கினார் அதற்க்குஅண்ணா நகர் தொகுதி என்று பெயர் வைத்தார்
++++++++++++++++++++++++++++++++
நல்ல சக்தி ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தோம்
+++++++++++++++++++++++++++++++
சென்னையில் எழும்பூர் பூங்காநகர் என்று இரண்டு தொகுதிகள் உள்ளன
இதில் ஏதாவது ஒரு தொகுதிக்கு எம்ஜிஆர் சட்டமன்றத் தொகுதி என்று பெயர் வையிங்கள் எண்று
நல்ல சக்தி ஜெயலலிதாவிடம்
மனு கொடுத்தார்கள் MGR ரசிகர்கள்
அவர்களுக்கு
நெற்றியில் பட்டை நாமம்
போட்டார் ஜெயலலிதா
பாவம் MGR ரசிகர்கள்
+++++++++++++++++++++++++++++++++
MGR முதலமைச்சராக வருவதற்கு
MGR அவர்களை திமுகவிலிருந்து நீக்கிய
கருணாநிதி அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இப்படிக்கு
மன்றம் வைத்து
கட்சி ஆரம்பித்து கட்சி வளர்த்த
MGR பக்தன்
+++++++++++++++++++++++++++++++++
என்னைபோன்ற கோடிக்கணக்கான
MGR ரசிகர்கள் கட்சி வளர்த்த காரணத்தால் தான்
செயலலிதா வைப் போன்ற வர்கள்
குறுக்கு வழியில் கட்சிக்குள்
வந்து உல்லாசமாக பதவியை
அனுபவித்தார்
என்னைப் போன்ற கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் அடி உதை பட்டு வருமானத்தை இழந்து கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது....... Thanks to PM & KN
orodizli
27th April 2020, 06:31 PM
14.ரிக்சாக்காரன் பட வசனங்கள் பின்வருமாறு.
அசோகன்: உன்னை யார் இங்கே உள்ள விட்டது.
எம்ஜிஆர் :ஒரு கொலைகாரனுக்காக
வாதாட வேண்டாம் என வக்கீலிடம் சொல்லதான் வந்திருக்கிறேன்.
அசோகன் :ஒரு ரிக்சாக்காரனுக்கு இவ்வளவு திமிரா
எம்ஜிஆர் :ஊரார் சோற்றிலே உடம்பு வளர்க்கிற ஒரு கொலைகாரனுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது உழைச்சு பிழைக்கிற
ரிக்சாக்காரனுக்கு ஏன்
இருக்க கூடாது.
அசோகன்; என்னை மிருகமாக்காத
எம்ஜிஆர் :இனிமேல் தான் ஆகப்போறியா.
சுந்தர்ராஜன் :என்ன இங்கு கலாட்டா?
எம்ஜிஆர் :கலாட்டா ஒன்னும் இல்லீங்க
அனாதையாக இருக்கும்
இந்த பச்சிளங்குழந்தையைப்
பாருங்க
அசோகன் :ஓஹோ
இந்த குழந்தையைக் காட்டி 5 ,10 வாங்கலாமுன்னு வந்தியா
எம்ஜிஆர்:சே.!அது உன் புத்தி.
சுந்தர்ராஜன் :என்னப்பா எங்கவந்து என்ன
பேசுறே?
எம்ஜிஆர் :ஐயா கொலையை நேரிலே பார்த்த நீங்களே இப்படி பேசலாமா?
சுந்தர்ராஜன் :எல்லாம் எனக்கு தெரியும்
நீ போகலாம்.
அசோகன்:ஹா ..ஹா ..
எம்ஜிஆர்; இந்த சிரிப்பை உன்னை நெருப்பாகப் போகிறது.
உன்னை தூக்குமேடையிலே ஏத்துறவரைக்கும் நான்
ஓய மாட்டேன்
உறங்க மாட்டேன்.
இந்த குழந்தையின்......Rickshawkaran Conversations.....By KN... Thanks...
மீது ஆணை. என்பார்.
orodizli
27th April 2020, 07:50 PM
திரை உலகின் சாதனை மன்னன் :::
சரித்திரம், சகாப்தம் படைத்த சக்கரவர்த்திகளின், சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,......
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார். அவர் நடித்த படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தன. அவரை வைத்து படமெடுக்க படாதிபதிகள் போட்டி போடுவார்கள். அவர் நடிக்கும் படம் என்றால் பூஜை போடும் தினத்தன்று எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிடும்.
ஆனால் அத்தகைய இமாலய நிலையை அவர் எளிதில் அடைந்துவிடவில்லை. மிக மிகக் கடுமையாக போராடி படிப்படியாக உயர்ந்து தான் அந்த உன்னத நிலையை அடைந்தார் .
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதே அவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். எதிர்ப்பு ஏற்பட்டால் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். லட்சியத்தை அடையும் வரை சற்றும் ஓயக் கூடாது .
சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அதைத்தான் செய்தார்கள் மக்கள் திலகமாக விளங்கிய எம்ஜிஆரும் அதையே செய்தார்.
அவருடைய முகம் திரையில் தெரிந்ததுமே ஆயிரமாயிரம் ரசிகர்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி திரைப்படக் கொட்டகையிலேயே தங்கள் பக்தியை வெளிப்படுத்திய ரசிகர்களும் உண்டு.
ஆனால் ஆரம்பகாலத்தில் அதே முகம் திரையில் தோன்றுவதற்கு இலாயக்கானதாக இல்லை என்று அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த டைரக்டர் ஒருவர் சொன்னார் என்பதைக் கேட்கும்போது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம் ஆனால் அது உண்மை.
ஆரம்ப நாட்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை படங்களில் நடிப்பதற்காக சந்தர்ப்பம் கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு டைரக்டர் அவருடைய முகத்தை பார்த்துவிட்டு அவருடைய முகநாடி இரட்டையாக அமைந்திருப்பது போல் காணப்படுவதால் அவருடைய முகம் அழகாக தெரியாது என்று கூறி அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க மறுத்துவிட்டார்.
பொதுவாக வளரத் துடிக்கும் எந்த நடிகரும் அத்தகைய வார்த்தைகளை கேட்டதும் பெரிதும் மனமுடைந்து போவார்கள். நடிப்பு துறையில் இறங்க வேண்டும் என்னும் எண்ணத்தையே அவர்கள் கை விட்டு விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அந்த டைரக்டர் சொற்களைக் கேட்டு மனம் உடைந்து போகவில்லை நடிப்புத் துறையிலிருந்து ஒதுங்கிவிட நினைக்கவில்லை. தன்னுடைய முகம் திரையில் தோன்ற அதற்கு முற்றிலும் ஏற்ற வகையிலேயே இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
எதிர்காலத்தில் திரையுலகில் தான் மிகப் பெரிய புரட்சியை உண்டு பண்ணப் போகிறோம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்பது அவருக்கு மிக மிக நன்றாக தெரியும்.
எனவே அவர் அந்த டைரக்டர் வார்த்தைகளைக் கேட்டு ஒன்றும் சொல்லவில்லை அமைதியாகவும் மௌனமாக வீடு திரும்பிவிட்டார்.
உலகில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்தவர்களின் மனோநிலையைக் கூர்ந்து கவனித்தால் மற்றோர் உண்மை புலப்படும் . அவர்கள் தங்களைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். தங்களுடைய திறமையையும் எதிர்காலத்தையும் மிகமிக நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும். அப்படித்தான் திரையுலகில் நுழைவதற்குத் தான் சிரமப்பட வேண்டியிருந்தாலும் நுழைந்தபின் அத்துறையில் நிச்சயம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்று நம்பிக்கை அவருக்கு எப்போதும் இருந்து வந்தது. அது யாருடைய சொற்களை கேட்டும் குறைந்துவிடவில்லை.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புகழ் வாழ்க.......... Thanks.........
orodizli
27th April 2020, 07:57 PM
இதயக்கனி செய்தியில் சிவாஜி*கணேசன் நடித்து 1964ல் வெளியான ஆண்டவன் கட்டளை*படத்தின் ஆறு மனமே ஆறு என்கிற*பாடல் நாள் தவறாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கேட்டு வந்ததாகவும், அது மாதிரி பாடல் எனக்காக அமைந்தது*போல் உள்ளது. இதில்*தான் நடித்திருக்கலாமோ என்று யோசிக்க வைக்கிறது*என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இயக்குனர் சங்கரிடம் கூறியதாகவும், திரு.கொற்றவன்*என்பவர் , இயக்குனர் சங்கரை சந்தித்து*பேசி தொடராக*எழுத*முற்பட்டு விடுபட்டு போன விஷயம் என்று பதிவாகியுள்ளது .
இப்போது , எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன்,*இயக்குனர் சங்கர்*எவரும்*உயிருடன் இல்லை. இதுவரை எந்த எம்.ஜி.ஆர். பக்தரோ, ரசிகரோ*இதுபற்றி*அறிந்ததாக தெரியவில்லை.* எந்த பத்திரிகையிலும் வெளியான செய்தியாக தெரியவில்லை .* அனுமானத்தின் பேரில் வெளியாகிற தகவல்களுக்கு எந்த ஆதாரமும்*இருப்பதில்லை.**
நான் இதயக்கனி வாசகர் .* இதயக்கனி மாத இதழ் சார்பில்*நடைபெறும்*விழாக்களில்*பங்கேற்றுள்ளேன ். இதயக்கனி மாத இதழில்*பல நல்ல செய்திகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை புகழ்ந்து வெளியாகி வருவதில்*மகிழ்ச்சி. ஆனால் ஆண்டவன் கட்டளை*பாடல் பற்றிய செய்தி உண்மையல்ல என்று கருதுகிறேன்.* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 37ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்*, இப்படிப்பட்ட செய்திகள் அவருக்கு*புகழ் சேர்க்காது .* ஏனென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த*போது* வெளிநாட்டவர் அவரது*படங்கள்*சிலவற்றை பார்க்க முற்பட்டபோது* , நான் நடித்த*படங்களை மட்டுமல்லாமல், தம்பி சிவாஜி*கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களையும் பார்த்தால்தான் , தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்*என்று பேட்டி அளித்துள்ளதை நான் பத்திரிகைகளில் படித்துள்ளேன் .**
எனவே இதயக்கனி செய்திகளில் இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் இனியும்*வெளிவராது*என்று நம்புகிறேன் .........எழுத்தாக்கம் by. திரு லோகநாதன் Sir... Thanks......
orodizli
27th April 2020, 08:00 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 14 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவரின் பெயர்
A.C.சண்முகம்
1980 ஆண்டு / ஆரணி தொகுதிகளில் போட்டியிட்டு MLA பதவிக்கு வந்தார்
1984 ஆண்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு
M.P. பதவிக்கு வந்தார்
இவரை பத்திரிக்கையிலும் அரசியல்வாதிகளும் தொண்டர்களும்
ஆரணி சண்முகம்
என்று தான் அழைப்பார்கள்
இவர் சென்னை மதுராவயலில்
MGR பல்கலைக்கழகத்தை சொந்தமாக உருவாக்கினார்
எம் ஜி ஆர் மறைந்த பிறகு
ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த. M.P. .எம்பி களில் இவரும் ஒருவர்
இவர் உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
இவர் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்....... Thanks...
.
orodizli
27th April 2020, 08:01 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 14 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர்கள்
சரவணன் ராஜகோபால்
அவருடைய அன்புத் தந்தை
எம்ஜிஆர் பக்தர்களே
சரவணன் ராஜகோபால் அவர்கள்
சென்னையில் கனரா வங்கி உயர் அதிகாரியாக பணிபுரிகிறார்
எம்ஜிஆர் அவர்களின் மீது தீவிர அன்பும் பாசமும் கொண்டவர்
பல எம்ஜிஆர் பிறந்த நாள் விழாக்களுக்கு தன்னுடைய சொந்தப் பணத்தை வாரி வழங்கியவர்
தமிழ்நாட்டில் எந்த மூலையில் எம்ஜிஆர் பிறந்த தின விழா நடந்தாலும் அந்த விழாவில் கலந்து கொள்பவர்
நானும் ஒரு எம்ஜிஆர் விழாவில் தான் ஐயா சரவணன் ராஜகோபால் அவர்களை சந்தித்து பேசினேன்
அன்பானவர் பண்பானவர் பாசம் ஆனவர்
இன்று இவருக்கு இனிய பிறந்தநாள்
இவரும் இவருடைய குடும்பத்தினர் அனைவரும் இவருடைய குழந்தைகளும்
பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் பண செழிப்புடன் வாழ்க வாழ்க என்று உலகில் உள்ள அனைத்து எம்ஜிஆர் பக்தர்களின் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
/////////////////////////////////////?///////////?
இந்தப் படத்தில் சரவணன் ராஜகோபால் அவர்கள்
தன்னுடைய தந்தையை அரவணைத்து கொண்டுள்ளார்
இந்த வயதான தந்தை தன் மனதுக்குள் என்ன நினைக்கிறார் தெரியுமா
இந்தக் காலத்தில் திருமணம் நடந்தவுடன் தாய் தந்தையரை ஒதுக்கி விடுகிறார்கள்
ஆனால் நமது மகன் சரவணன் ராஜகோபால் அவர்கள்
நம் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்துள்ளாரே என்று அந்த தந்தை பெருமைப்படுகிறார்
தாய் தந்தையரின் ஆசிர்வாதத்துடன்
சரவணன் ராஜகோபால் அவர்கள் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.......PM.,. ... Thanks...
orodizli
27th April 2020, 08:04 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 13 ஞாயிறு
முகநூல் எம்ஜிஆர் பக்தர்களே
1969 ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது
அருமைதலைவர் எம்ஜிஆருக்கு பக்கத்தில் அமைச்சர்
K.ராஜாராம்
சேலம்
இவர் திமுகவின் ஆரம்ப காலகட்ட தலைவர்
இவர் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்
1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த பொழுது
கருணாநிதி மந்திரிசபையில் இவர் அமைச்சராக பணிபுரிந்தார்
கருணாநிதி அவர்களின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்த பிறகு
இவர் அண்ணா திமுகவில் சேர்ந்தார்
1984 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது
இவர் / பனைமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
1984 எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார்
எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சராக உருவாக்கிய எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்
இவர் நம் கட்சிக்கு இடையில் வந்தாலும்
எம்ஜிஆர் மரணமடையும் வரை எம்ஜிஆருக்கு விசுவாசமாக இருந்தார்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்... Thanks...
orodizli
27th April 2020, 08:05 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 13 ஞாயிறு
அருமை தலைவரோடு
வளர்மதி /பிடி சரஸ்வதி
இந்தப் படம் 1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த பொழுது எடுத்த படம்
++++++++++++++++++++++++++++++++
இந்தப் படத்தில் பிஸ்கட் கலர் சேலை அணிந்து முதலாவது நபராக நிற்பவர் பெயர்
வளர்மதி
இவர் ஒரு பயங்கரமான முரட்டு எம்ஜிஆர் ரசிகை
1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தவுடனேயே இவர் கட்சியில் சேர்ந்து கொண்டார்
இவர் தமிழ்நாடு முழுவதும் சென்று அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் பேசி கட்சி வளர்த்த எம்ஜிஆர் ரசிகை
1984 ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சர் ஆகிய எம்எல்ஏக்களிள் இவரும் மிக மிக மிக முக்கியமானவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு இவர் ஜானகி அணியில் இருந்தார்
தமிழ்நாடு முழுவதும் ஜானகி அணி பொதுக்கூட்டங்களில் பேசினார்
எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்பொழுதே ஒரு துரோகி ராஜீவ்காந்தியின் மூலமாக எம்ஜிஆரை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்க முயற்சி செய்தார்
இந்த சதிச் செயல்களை தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி எல்லாம் சென்று பொதுக் கூட்டத்தின் வாயிலாக மக்களிடம் எடுத்துக் கூறினார்
அந்த துரோகியை இவர்திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்தை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை வன்னைஸ்டெல்லா என்ற திமுக பேச்சாளரை விட கேவலமாக பேசினார்
அந்தத் துரோகியை இவர் திமுக பேச்சாளர் கோடம்பாக்கம் குமாரை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்
வெற்றிகொண்டான் அவர்களைவிட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் நன்னிலம் நடராஜனை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்
முரசொலி அடியார் அவர்களை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் கேரளா சுந்தரம் அவர்களை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் கோவை ராமநாதனை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் நெல்லை நெடுமாறனை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் இளம்வழுதியைவிட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்
ராதாரவியை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகி யைஇவர் திமுக பேச்சாளர் சினிமா நடிகர் எஸ் எஸ் சந்திரனை விட கேவலமாக பேசினார்
இவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடி முழக்கத்தை போல் கைதட்டல் விண்ணைப் பிளக்கும்
எம்ஜிஆர் குடும்பத்தின் உண்மையான விசுவாசி இவர்...... Thanks...
orodizli
27th April 2020, 08:07 PM
ஸ்ரீ MGR. வாழ்க
சித்திரை 12 சனி
எம்ஜிஆர் பக்தர்களே
நம் அருமை தலைவன் எம்ஜிஆருக்கு அருகில் இருப்பவர் பெயர்
J. பங்க ராஜ்
இவரை ஜேப்பியார் என்றுதான் அழைப்பார்கள்
J. P. R.
மாவீரன் J. P. R.
இவர் ஒரு போலீஸ்காரர்
இந்த பெயர் தமிழ்நாட்டு மக்கள்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
அண்ணா திமுக தொண்டர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர்
///////////////////////////////////////////////////
1988 எம்ஜிஆர் அவர்கள் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்
ஜானகி அம்மையார் பதவியேற்ற பிறகு முதல் முறையாக
சட்டசபை கூடியது
ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்
அப்பொழுது ஜானகி அணி எம்எல்ஏக்களுக்கும் ஜெ அணி எம்எல்ஏக்களுக்கு ம் கைகலப்பு ஏற்பட்டது
சட்டசபை காவலர்கள் வந்து அனைத்து எம்எல்ஏ களையும் வெளியேற்றினார்கள்
சட்டசபைக்கு வெளியே உலக நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும்
வந்திருந்த
T.V. மற்றும் பத்திரிகை நிருபர்களும் குவிந்து இருந்தார்கள்
அவர்களிடம் சென்று ஜெ அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள்
எங்களை ஜானகி அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடித்து விட்டார்கள்
வேஷ்டி சட்டையை எல்லாம் கிழித்து விட்டார்கள்
இதோ பாருங்கள் இந்த எம்எல்ஏ டவுசருடன் நிற்கிறார் இவருடைய வேஷ்டியை காணவில்லை
இதற்கெல்லாம் காரணம்
J.P.R. அவர்கள்தான்
J P R அவர்கள் தன்னுடைய
அடியாட்களைவிட்டு
எங்கள் அணி எம்எல்ஏக்களை எல்லாம் அடித்து உதைத்து விட்டார்கள்
சட்டை வேஷ்டி எல்லாம் கிழித்து விட்டார்கள்
சில எம்எல்ஏக்களுக்கு வேஷ்டி கிடையாது
டவுசர் ரோடு நிற்கின்றார்கள்
ஆகவே நாங்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு சென்று
எங்கள் நிலைமையை எடுத்து கவர்னரிடம் கூறுவோம்
என்று பத்திரிகை நிருபர்களிடம் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள்
அடிபட்ட எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒரு பஸ்சில் ஏற்றி கவர்னர் மாளிகைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்கள்
அந்தப் பஸ்சை கவர்னர் மாளிகைக்கு ஓட்டிச் சென்றவர் ஒரு எம்எல்ஏ
அவருடைய பெயர் மேட்டூர் நாச்சிமுத்து M.L.A.
+++++++++++++++++++++++++++++++++
அன்று டிவியிலும் மாலை பத்திரிக்கைகளிலும்
2 செய்திகள் முக்கிய செய்திகளாக வெளிவந்தது
1. ஜேப்பியாரின் ஆட்கள் சட்ட சபைக்குள் நுழைந்து ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை அடித்து உதைத்தனர்
2. அடி வாங்கிய ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை
கவர்னர் மாளிகைக்கு பஸ்சில் அழைத்து சென்றபோது
அந்த பஸ்சை ஓட்டி யவர் ஒரு எம்எல்ஏ
அவருடைய பெயர் மேட்டூர் நாச்சிமுத்து
இப்படித்தான் இந்தியா முழுவதும் உள்ள தினசரி பத்திரிக்கைகளிலும் செய்தியை வெளியிட்டார்கள்
இந்தியா முழுவதும் உள்ள டிவி களிலும் இந்த செய்தியைக் கூறினார்கள்
+++++++++++++++++++++++++++(++++(+(
அடுத்து சில மாதங்களில்
எந்த ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஜானகி அம்மையாரின் ஆட்சியைக்கவிழ்க்க துணை போனாரோ அந்த நாச்சிமுத்து வை
எந்த ஜெயலலிதாவிற்காக சட்டசபையில் அடி உதை வாங்கினாரோ அந்தநாச்சிமுத்துவை
எந்த ஜெயலலிதாவிற்காக கவர்னர் மாளிகைக்குபஸ்சைஓட்டிச் சென்றாறோ
அந்த நாச்சி முத்துவை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கிவிட்டார்
++++++++++++++++++++++++++++++
கழகத் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
எனக்கு எதிராக துரோகச் செயலில் ஈடு பட்ட காரணத்தினால்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
மேட்டூர் நாச்சிமுத்து
அவர்கள் இன்றுமுதல் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்
அவருடன் கழகத் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
என்று பொன்மனம் பத்திரிக்கை யில்
ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்
ஜெ அணியின் அதிகாரப் பூர்வ நாளேடு பொன்மனம் பத்திரிக்கை
இதன் முதலாளி திருநாவுக்கரசு
++++++++++++++++(++++++++++++++++++
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உதவிய ஜே பி ஆர் வாழ்க
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காத. ஜே பி ஆர் வாழ்க...... Thanks...
orodizli
27th April 2020, 08:10 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 10. வியாழன்
MGR பக்தர்களே
நம் அருமைத்தலைவன்
MGR அவர்களுக்குப்பின்னால் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பவர்
பெயர்
ஜெமினி S.S. வாசன்
MGR. அவர்கள் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமான
திரைப்படம் / சதிலீலாவதி
சதிலீலாவதி சினிமாவிற்க்கு வசனம்
எழுதியவர் / S.S. வாசன்
பிறகு இவர் / ஆனந்தவிகடன் / என்றபத்திரிக்கையை / தொடங்கினார்
இந்த நேரத்தில் சென்னையில் இ ருந்தஒரு
சினிமா ஸ்டுடியோ நஸ்டத்தில் இயங்கிய
காரணத்தினால் அதைவிற்பதற்க்கு முடிவெடுத்தார்கள்
அந்த ஸ்டுடியோவை / S.S. வாசன்
விலைக்கு வாங்கினார் / அதற்க்கு
ஜெமினி ஸ்டுடியொ என்று பெயர்
வைத்தார்
அந்தக்காலத்தில் தமிழ் நாட்டில் தயாரிக்கின்ற. கலர் சினிமா படங்களை
கழுவி பிரிண்ட் எடுப்பபதற்கு பம்பாயிலுள்ள
பிலிம் செண்டர் / கலர் லேப்பபிற்குத்தான் தமிழ் நாட்டைச்சேர்ந்தவர்கள் செல்வார்கள்
இதையரிந்த / S.S.வாசன் அவர்கள்
சென்னையில் / ஜெமினி கலர்லேப்
ஆரம்பித்தார். அது ஈஸ்ட்மென் கலர்லேப்
அடுத்து MGR நடித்த 100 படம் ஒளிவிளக்கு
இந்த படத்தை S.S.வாசன் ஜெமினி ஸ்டுடியோ சார்பில் தயாரித்தார்
இவர் மரணம் அடைந்தபிறகு இவருடையமகன்
S.S.பாலன்
ஸ்டுடியோநிர்வாகத்தைபார்த்தார்
MGR நடித்த / சிரித்து வாழவேண்டும்
சினிமா படத்தை S.S.பாலன் இயக்கினார்
இவர் ஆரம்பித்த பத்திரிக்கைதான்
ஜூனியர் விகடன்
++++++++++++++++++++++++++++++++++
MGR இறந்தபிறகு ஜூனியர்விகடன் / தராசு / இந்த
இரண்டுபத்திரிக்கைகளும்
போட்டி போட்டுக்கொண்டு
மணம் திறந்த பேட்டி / என்று MGR கட்சியைசேர்ந்தவர்களிடம்பேட்டிஎடுத்து
வெளியிட்டார்கள்
ஜூனியர்விகடன் வெளிவந்து மூண்றுநாட்களுக்குப்பிறகு
தராசு பத்திரிக்கைவெளிவரும்
சியாம் / என்பது தராசு பத்திரிக்கை
ஆசிரியர் பெயர்
++++++++++++++++++++++++++++++++++
S.S.பாலன் / சியாம் / இப்பொழுது
உயிரோடு உள்ளார்கள்
அவர்கள் ஆபிசுக்கு போன் போட்டு இந்த செய்தி உண்மையா பொய்யா என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
/////////////////////////////////?////////////////////
1988
எம்ஜிஆர் அவர்கள் மரணம் அடைந்த பிறகு
மனம் திறந்த பேட்டி என்று வெளிவந்தது
அதை இப்பொழுது நான் பதிவிடுகிறேன்
///////////////////////////////////////////////////?
1972 MGR அண்ணா திமுகவை ஆரம்பித்த நாளிலிருந்து
1977 ஆண்டுவரை அண்ணா திமுக மேடைகளில் பேசிக் கொண்டிருந்தவர் பெயர்
ஜி கே சுப்பிரமணியன்
இவர் சிறுவயதில் இருந்தே எம்ஜிஆர் ரசிகன்
இவருடைய பொதுக்கூட்டம் நிறைய வித்தியாசமாகவே இருக்கும்
இவர் மேடைக்கு வரும் பொழுது சினிமா நடிகரை போல்முகத்திற்க்கு மேக்கப் போட்டுக் கொண்டு தான் வருவார்
கையில் தப்பு
என்ற ஒரு இசைக்கருவியை வைத்திருப்பார்
மேடையிலே பேசிக்கொண்டிருப்பார்
திடீரென்று இடையிலே எம்ஜிஆர் பட பாடல்களை டேப் அடித்துக்கொண்டே பாடுவார் ஆடுவார்
இவருடைய பொதுக்கூட்டத்தை
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கெம்பட்டி காலனியில்
ராமர் கோயில் வீதியில் கேட்டேன்
அதன் காரணமாக இவருடைய பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் நிறைய பேர் வருவார்கள்
இந்த செய்தி எம்ஜிஆர் அவர்களுக்கு நீண்ட நாட்களாகவே தெரியும்
சட்டசபை பொதுத் தேர்தலின்போது எம்ஜிஆர் அவர்கள் திடீரென்று
1980 ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது
பவானிசாகர்
தொகுதி சட்டமன்ற அண்ணா திமுக வேட்பாளராக
G.K. சுப்ரமணியன் அவர்களை எம்ஜிஆர் வேட்பாளராக அறிவித்தார்
சுப்பிரமணியன் வெற்றிபெற்றார்
இவரை சுப்பிரமணியன் எம்எல்ஏ என்றால் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது
G.K.S. நவரசம் என்றால்தான் கட்சித் தொண்டர்களுக்கும் தெரியும் பொது மக்களுக்கும் தெரியும்
இவர் எம்ஜிஆரின் குடும்பத்திற்கு ரெண்டகம் நினைக்காதவர்
உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்துக் கொண்டிருந்தவர்
எம் ஜி ஆர் மறைந்த பிறகு ஜானகி அணியில் இருந்தார்
+++-+++++++-++++++++++++++++++++++
ஜானகி அணியும் ஜெஅணியும் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து விட்டது
ஆனால் இவர் அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலேயே இருந்தார்
அப்பொழுது அண்ணா திமுக வில் இருந்த எஸ்டி சோமசுந்தரம் எஸ்எஸ்ஆர்
இவர்கள் எல்லாம் பதவிக்காக மாமா வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்
ஜே அணியில் இருந்தவர்
கோவை தம்பி / சினிமா தயாரிப்பாளர்
இந்த நேரத்தில் கோவைத்தம்பி அவர்கள்
முன்னாள் எம்எல்ஏ நவரசம் அவர்களை சந்தித்து
கட்சி ஒன்று சேர்ந்து விட்டது
ஆகவே நீங்கள் சென்னை வந்து ஜெயலலிதாவை சந்தியுங்கள் என்று அழைத்துள்ளார்
அதற்கு நவரசம் அவர்கள்
எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே எம்ஜிஆரை முதலமைச்சர் பதவியிலிருந்துஇறக்குவதற்கு ஜெயலலிதா திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்
எம்ஜிஆர் இறந்த பிறகும்
ஜெ அணி சார்பில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும்
ஜெ அணி சார்பில் கொடுக்கப்படுகிற பத்திரிக்கை விளம்பரங்களிலும்
எம்ஜிஆர் உருவத்தை சிறிதாக போட்டார்கள் எம்ஜிஆர் பெயரை இருட்டடிப்பு செய்தார்கள்
ஆகவே நான் வந்து ஜெயலலிதாவை சந்திக்க விரும்பவில்லை என்று கூறி யிருக்கிறார்
கோவைத்தம்பி அவர்கள் நவரசம் அவர்களை அடுத்து அடுத்து சந்தித்து ஜெயலலிதாவிடம் அழைத்து சென்றுள்ளார்
கோவைத்தம்பி அவர்களும் நவரசம் அவர்களும் இப்பொழுது ஜெயலலிதா வீட்டிற்கு உள்பகுதியில் அமர்ந்து உள்ளார்கள்
ஜெயலலிதா அறையிலிருந்து வெளியில் வந்து ஒருவர்
வரிசைப்படி ஒவ்வொருவரையும் அறைக்குள் அனுப்பி கொண்டு இருப்பார்
அவர் இப்பொழுது நவரசம் அவர்களுக்கு அருகில் வந்து
நீங்கள் பொதுச்செயலாளர் அறைக்குள் செல்லும் பொழுது
உங்கள் கையில் உள்ள மோதிரத்தை கழட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்
பொதுச் செயலாளருக்கு இது பிடிக்காது என்று கூறியுள்ளார்
தமிழ்நாட்டிலுள்ள எம்எல்ஏக்களில்
தாமரைக்கனி / நவரசம் / இவர்கள்தான் எம்ஜிஆர் படத்தை பெரிதாக பதித்து மோதிரம் அணிந்துள்ள எம்எல்ஏக்கள்
உடனே நவரசம் அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்காமல் ஜெயலலிதாவின் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்
பின்னால் ஓடிவந்த கோவைத்தம்பி அவர்கள்
இவ்வளவு தூரம் வந்துவிட்டு ட பொதுச் செயலாளரை பார்க்காமல் போகக்கூடாது வாருங்கள் வாருங்கள் என்று கையை பிடித்து இழுத்து இருக்கிறார்
அதற்கு நவரசம் அவர்கள் சொன்ன பதில்
என் உடம்பில் ஓடுவது எம்ஜிஆர் ரத்தம்
மேடையில் பேசிக் கொண்டிருந்த என்னை சட்டசபையில் பேச வைத்தவர் எம்ஜிஆர்
எனக்கு விழுந்த மாலை மரியாதையும் நான் உண்ணும் உணவும் எம்ஜிஆர் கொடுத்தது
எம்ஜிஆர் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு ஜெயலலிதாவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறிவிட்டு வந்துவிட்டார்
அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோவை தம்பியும் நானும் சந்தித்துக் கொண்டோம்
அப்பொழுது கோவைத்தம்பி என்னிடம் கூறினார்
நீங்கள் சென்ற பிறகு நான் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சென்றேன்
ஜெயலலிதா அவர்கள் என்னை பார்த்து
யாரையோ நீங்கள் கூட்டி வருகிறேன் என்று கூறி இருந்தீர்களே எங்கே அவர் என்று கேட்டார்
நான் மோதிரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஜெயலலிதாவுடன் கூறினேன்
ஜெயலலிதா மிகவும் கோபமாக என்னைப் பார்த்து
உன்னை போன்றவர்களை கட்சியில் வைத்துக் கொண்டு என்னால் மாறடிக்க முடியாது
என்று கூறி தன் கையிலுள்ள ஒரு புத்தகத்தை எதிர்புறம் உள்ள ஜன்னல் மீது வீசி எறிந்தார்
நானும் வெளியே வந்து விட்டேன்
எனக்கு ம்அரசியல் தேவை இல்லை இனிமேல் மீண்டும் நான் சினிமா தயாரிக்க திட்டமிட்டு உள்ளேன்
என்று கோவைத்தம்பி அவர்கள் என்னிடம் கூறினார்
எம்ஜிஆர் இறந்த பொழுது ஜானகி அம்மையாரை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு கோவைத்தம்பி கடுமையாக முயற்சி செய்தவர்.... Thanks...
orodizli
27th April 2020, 08:11 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 11 வெள்ளி
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் நம் அருமை தலைவனை
வணங்குபவர் பெயர்
வி பி பாலசுப்பிரமணியன். இவர் ஒரு வழக்கறிஞர்
துணை சபாநாயகர்
வேடசந்தூர் தொகுதி
++++++++++++++++++++++++++++++++++
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை
,இந்தத் தொகுதியில்
நஞ்சுண்டையா
. என்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான்
தொடந்து எம்எல்ஏவாக வருவார்
இந்த சூழ்நிலையை மாற்றி அமைத்தவர் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
1977. ஆண்டு வாசன் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தார் MGR
1980 ஆண்டு வி பி பாலசுப்ரமணியன் என்பவரை வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்
வி.பி. பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்
1984 ஆண்டு மீண்டும் அதிமுக வேட்பாளராக பாலசுப்பிரமணியனை
வெற்றிபெற வைத்தார் MGR
உப்பிட்ட MGR குடும்பத்திற்கு உறுதுணையாக இருநதவர்
உண்டவீட்டிற்கு ரெண்டகம்
நினைக்காதவர்
ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்தவர்
இவர் சிறந்த பேச்சாற்றல் உடையவர்
இவர் சட்டசபையில் பேசும்பொழுது
மயான அமைதியாக இருக்கும் சட்டசபை
அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் இவருடைய பேச்சை உன்னிப்பாக கவனிப்பார்கள்
வேடசந்தூர் மிகவும் வறச்சியானதொகுதி அந்தததொகுயில்பலமில்களை உருவாக்கியவர் இவர்
வேடசந்தூரில் இருந்து கரூர்
செல்லும் ரோட்டில் பல மில் / பல. தொழிற்சாலைகளை
இவர் காலத்தில் உறுவாக்கினார்
இவரைபோன்ற. MGR ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான் ஜெயலிதா எடப்பாடி முதல்வராக. வர முடிந்தது
இவரைப்போன்ற எம்ஜிஆர் ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது... Thanks...
orodizli
27th April 2020, 08:14 PM
அடேங்கப்பா இன்றாவது அவர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது என்றீரே !
ஆனாலும் ,, காங்கிரஸ் , கட்சிகூட காமராசர் கக்கன் போன்ற தலைவர்களால் , வேறு பல தொண்டர்களால் வளர்க்கப்பட்டதே. ஆனால் அதெல்லாம் அந்ததந்த காலகட்டத்தில் அவ்வளவே . அதையும் கட்சி சார்பற்ற மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
ஆக திரு எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு , அவர் கட்சி பல்வேறு புதுப்புது தொண்டர்களால் தான் காப்பற்றப்பட்டு வருகிறது . அவர் கட்சி ஆட்சியும் தொடர்கிறது.
இங்கே தொடர்வதற்கு யார் காரணமாகிறார்களோ அவர்களின் உழைப்பே காரணமாகிறது. காலத்துக்கு காலம் தொண்டர்கள் வேறுபடுகிறார்கள் . புதுப்புது இரத்தம் கட்சியில் பாய்வதால்தான் கட்சி அழிவின்றி சாதிக்க முடியுமேயன்றி வேறில்லை.
அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த தலைமைக்கு விசுவாசிகளால் மட்டுமே கட்சி உயிர்ப்போடு இருக்கிறதே அன்றி , முன்னர் ஒரு தலைமைக்கு விசுவாசமாக இருந்தவரால் மட்டும் அடுத்தடுத்த தலைமைகளை வெற்றி கொள்ளச் செய்ய இயலாது.
எத்தலைமைக்கும் , எத்தகைய விசுவாசி இருப்பினும் , மக்கள் ஏற்று வாக்களித்து வெற்றி காணச் செய்யாவிடில் ( காங்கிரஸ் போல ) அத்தலைமையாளோ , அவர் விசுவாசிகளாலோ எவ்வித பிரயோஜனமும் இல்லை.......Fb... Thanks...
orodizli
27th April 2020, 08:15 PM
உண்மை உரக்க சொல்கிறேன் இவரை போன்ற தொண்டா்கள் இ௫ந்தால்தான் கட்சி ஆலமரமாக வளா்ந்து இ௫க்கிறது அதை கட்டி காக்க எம்ஜிஆா் பெயரை உரக்கச் சொல்லுங்கள் வெற்றி மேல் வெற்றி வ௫ம் வாழ்க எம்ஜிஆா்...... Thanks...
orodizli
27th April 2020, 08:17 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 8 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் முதல் முதலாக எம்ஜிஆர் முதல்வர் பதவி ஏற்றார்
அவரது அமைச்சரவையில் கோவை மாவட்டத்தின் சார்பாக அமைச்சராக பதவியேற்றவர்
சுப்புலட்சுமி
அமைச்சரவை பட்டியலில் சுப்புலட்சுமியின் பெயரை பார்த்தவுடன் எங்களைப் போன்ற ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் மன்றம் வைத்து அண்ணா திமுகவை வளர்த்தவர் களுக்கு அதிர்ச்சியாக இருந்தன
காரணம் கட்சியில் புதுமுகமாக இருந்தார்
சுப்புலட்சுமிக்கு எம்ஜிஆர் அமைச்சர் பதவி கொடுத்து இருந்தார்
சுப்புலட்சுமி ஆசிரியர் தொழில் பார்த்தவர்
1980 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்தன
சிவகாசி /கோபிசெட்டிபாளையம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் தான் அண்ணா திமுக வெற்றி அடைந்தது
அதன் காரணமாக அண்ணா திமுக ஆட்சியை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்தார்
இந்த சோதனையான காலகட்டத்தில் நாஞ்சில் மனோகரனும் சுப்புலட்சுமியும் அண்ணா திமுகவை விட்டு ஓடிவிட்டார்கள்
அடுத்த மூன்று மாதங்களில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார்
தனி மனிதனாக பம்பரமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எம்ஜிஆர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் மீண்டும் ஆட்சியை பிடித்தார்
இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களைப் பார்த்து கேட்ட கேள்வி
என்ன காரணத்திற்காக என் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்கள்
என்னுடைய ஆட்சி ஊழல் ஆட்சியா
நான் ஊழல் செய்து சொத்து சேர்த்தேனா
அடுத்தவர்களுடைய சொத்துக்களை நான் மிரட்டி எழுதி வாங்கினேனா
என் அண்ணன் குடும்பமோ என்னுடைய உறவினர்கள் குடும்பமோ அரசியலில் தலையிட்டு பலகோடி ரூபாய் சம்பாதித்தார்களா
தமிழ்நாட்டு மக்களளே அதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்
அந்தப் பதில் உங்கள்வாக்குசீட்டு மூலமாக இந்த உலகிற்கு தெரிய வேண்டும்
இவ்வாறு ஊழல் செய்யாத. நம் உத்தமத் தலைவன்
அடுத்தவருடைய தோட்டம் காடுகளை பங்களாக்களை மிரட்டி எழுதி வாங்காத
வள்ளல் எம்ஜிஆர் மேடையில் முழங்கினார்
/////?///////////////////////////////////?????/?
1980 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில்
அமைச்சர் காளிமுத்து அவர்கள் பேசியதாவது
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்திரா காங்கிரசு கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட்டது
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை இந்தியா முழுவதும் வெற்றியடைய செய்து உள்ளார்கள்
திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்
இந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆரிடம் சிக்கி
திமுக காங்கிரஸ் கூட்டணி
தேர் சக்கரத்தில் சிக்கிய. தேங்காயை போல் சிதறி விடும்
இதோ என் தலைவர் புறப்பட்டுவிட்டார்
தரங்கெட்ட வர்களிடமிருந்து தாய்நாட்டை காக்க. புலி என புறப்பட்டுவிட்டார் புரட்சித்தலைவர்
என் தலைவன் எம்ஜிஆர் அமைதியாக இருக்கிறார் என்பதற்காக
அவரை இளக்காரமாக நினைத்து விடாதீர்கள்
எம்ஜிஆர் அவர்கள்
அலைகள் இல்லாத. பசிபிக் மகா சமுத்திரத்தை போன்றவர்
ஆரவாரம் இல்லை என்பதற்காக அந்தக் கடலுக்கு சக்தி இல்லை என்று நினைத்து விடாதீர்கள்
ஏனென்றால் உலகத்திலேயே மிகவும் ஆழமான கடல் பசிபிக் மகா சமுத்திரம்
அந்தக் கடலை போன்றவர்தான் எங்கள் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
இந்தியாவிலேயே மக்கள் சக்தி கொண்ட ஒரே தலைவன் எங்கள் எம்ஜிஆர் அவர்கள் தான்
இன்னும் சில நாட்களில் என் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறை ஆட்சியில் அமரப் போகிறார்
இவ்வாறு காளிமுத்து பேசினார்
///////////////////////////////////////////////////
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இவர் எப்படி எம்எல்ஏ ஆனார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட எம்ஜிஆரிடம் மனு கொடுத்திருந்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனாரை எம்ஜிஆர் அண்ணா திமுக வேட்பாளராக அறிவித்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்
வேட்பு மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் அதில்சில தவறு இருந்த காரணத்தினால் அவர் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள்
இப்பொழுது எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது
வேட்பு மனுவில் டம்மி வேட்பாளராக சுப்புலட்சுமி அவர்கள் மனு கொடுத்திருந்தார்
இதை அறிந்த எம்ஜிஆர் அவர்கள் சுப்புலட்சுமி அவர்களை அண்ணா திமுக வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதிக்கு அறிவித்தார்
இப்படி குறுக்கு வழியில் எம்எல்ஏ ஆனவர் சுப்புலட்சுமி
பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டு ஓடி விட்டார்...... Thanks...
orodizli
27th April 2020, 08:18 PM
1980 புதுவை சட்டமன்ற பொது தேர்தலுக்கு இந்த அம்மாவைத்தான் தலைவர் அனுப்பி வைத்தார் ! சிறப்பாகத்தான் பணியாற்றினார் ! மது விலக்கு - தமிழகத்தோடு புதுவை இணைப்பு என்ற கோஷத்தால் தோல்வியை தழுவ வேண்டியதாகிவிட்டது ! மந்திரக்கோல் மைனரோடு தி மு காவில் தஞ்சம் பிறகு ! ..... Thanks
orodizli
27th April 2020, 08:20 PM
Purachi thalaivar ponmana semmal endrum makkala vazavaidhavar makkalin kadawol avarudaiya kodikannan sothukalai makkalluku varri vazavaidhavar makkalin kadawol adharkku pirrakku vandha varkal athanayum kollaiyadichi vaikkara arrashiyal vadhi Kal adhikkam endrum kodikanakkana thondarkallil nannum orvan Dr MGR thalaivar pukal marayadhu kodiyel oruvar purachi thalaivar Ennum 1000varusam annallum Dr MGR thalaivar pukal marayadhu kodiyel oruvar.......Fb.... Thanks...
orodizli
27th April 2020, 08:21 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 7 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
1980 ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது
அடுத்து மூன்று மாதங்களில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது
1980 ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்
அப்பொழுது கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது
அப்பொழுது எடுத்த படம்
1977 / 1980/ 1984 / ஆண்டுகளில் 3 முறை எம்ஜிஆர் முதல்வராக பதவி ஏற்றார்
அப்பொழுது எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்கள் யார் / அவர்களுடைய பெயர் என்ன
,இன்று நான் அந்த. கால. நிகழ்ச்சி களை நினைத்துப் பார்த்தேன்
1980 அருமை தலைவர் எம்ஜிஆர் உடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது
கட்சியில் இருந்து பல அமைச்சர் பயல்களும் பல எம்எல்எ பயல்களும்
பல மாவட்டச் செயலாளர் பயல்களும்
பல நகரச் செயலாளர் பயல்களும்
துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள்
அப்பொழுது எங்களைப் பார்த்து எதிர்கட்சி காரர்கள் கிண்டல் செய்வார்கள்
எம்ஜிஆரின் கூடாரம் காலியாகி விட்டது என்று எங்களை கிண்டல் செய்வார்கள்
அவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்
MGR. கட்சியை விட்டு எந்த தொண்டனும் போகவில்லை
வயித்து சோத்துக்கு வந்த எம்எல்ஏபயல்களும் மந்திரி பயல்களும் ஓடிவிட்டார்கள்
மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்ஜிஆர் வருவார் என்று நாங்கள் பதிலடி கொடுப்போம்
இந்த சோதனையான காலகட்டத்தில்
மார்க்கெட் இழந்த எந்த நடிகையும் எம்ஜிஆர் கட்சிக்கு வரவில்லை
எம்ஜிஆர் தனிமனிதனாக
மூன்று முறை முதல் அமைச்சராக
வந்தார்
எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அவர்களின் பெயர்
/////////////////////////////////?//////////????
தமிழ்நாட்டின் முதலமைச்சர்
எம்ஜிஆர்
கே ஏ கிருஷ்ணசாமி
ஆர் எம் வீரப்பன்
எஸ் ஆர் ராதா
நாராயணசாமிமுதலியார்
பொன்னையன்
காளிமுத்து
குழந்தைவேலு
ராகவா னந்தம்
டாக்டர் ஹண்டே
விஜயலட்மி / வீரபாண்டி / கொலைசெய்யப்பட்ட பூலாவாரி
சுகுமாரனினன் தங்ஙை
P.T. சரஸ்வதி
ராஜாமுகமது
ஆனூர் ஜெகதீசன்
அரங்கநாயகம்
எட்மண்ட்
V.V. சாமிநாதன் / புவனகிரி
முத்துச்சாமி / ஈரோடு
திருநாவுக்கரசு
எஸ் என் ராஜேந்திரன்
விஜயசாரதி / அரக்கோணம்
கோமதி சீனிவாசன் / வலங்கைமான்
நல்லுசாமி / திருச்சி/ 2. வது தொகுதியில் போட்டியிட்டவர்
எம் ஆர் கோவேந்தன் / பேராவூரணி
ஒரத்தநாடு வீராச்சாமி
திருச்சி சௌந்தரராஜன்
எஸ் டி சோமசுந்தரம்
பண்ருட்டி ராமச்சந்திரன்
நெடுஞ்செழியன்
ராஜாராம் / பனைமரத்துப்பட்டி
பா.உ. சண்முகம்
Y.S.M.யூசுப்
கிருஷ்ணராயபுரம் சௌந்தர பாண்டியன்
கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
நாஞ்சில் மனோகரன்
மொடக்குறிச்சி சுப்பு லட்சுமி
இவர்கள் அனைவரும் அமைச்சராக பதவி வகித்தவர்கள்
எம்ஜிஆர் என்ற ஒரு தனி மனிதன் உருவாக்கிய அமைச்சரவையில்
இவர்களெல்லாம் அமைச்சராக இருந்தவர்கள்
இந்த அமைச்சர்களில்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பல அமைச்சர் பயல்கள் இருக்கிறார்கள்
எம்ஜிஆரால் பதவி பெற்றவர்கள்
எம்ஜிஆருக்கு துரோகம் செய்தால்
ஊழல் விசாரணை கமிஷனில்சிக்கி
வாய்தா வாய்தா வாய்தா வாய்தா வாய்தா என்று 18 வருடம் வாய்தா வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்
அடிபட்டு உதைபட்டு நல்ல மரணம் அடைய மாட்டார்கள்....... Thanks...
orodizli
27th April 2020, 08:23 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 6. ஞாயிற்றுக்கிழமை
எம்ஜிஆர் பக்தர்களே
இந்தப்படத்தில் இருப்பவர்கள்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி
அவருடைய மனைவி மீனாட்சி அம்மாள்
அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
ராமாயணத்தில் வருகின்ற. ராமர் லட்சுமணனை போல் நம் கண் முன்னால் வாழ்ந்தவர்கள்
சக்கரபாணி எம்ஜிஆர் அவர்கள்
///////////////;///////////////////////////?////////
இந்திய சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் யார் சென்னை வந்தாலும்
சென்னை ஸ்டுடியோக்களில் நுழைந்து
பெரியவர் இருக்கிறாரா என்று கேட்டால் அது எம் ஜி சக்கரபாணி அவர்களைத்தான் குறிப்பிடும் வார்த்தை
சென்னை சினிமா ஸ்டுடியோக்களில் நுழைந்து
சின்னவர் வந்துவிட்டாரா என்று கேட்டாள்
அது எம்ஜிஆர் அவர்களைத்தான் குறிக்கும்
அண்ணன்-தம்பி இருவரையுமே
பெரியவர் / சின்னவர் / என்ற அடைமொழியோடு தான் சினிமா உலகில் அழைப்பார்கள்
///////////////////;/;;///////////////;/////////;//////
நாம் எம்ஜிஆர் குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்
பெரியவர் சக்கரபாணி அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி அவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள்
7. ஏழு ஆண் குழந்தைகள்
3 மூன்று பெண்குழந்தைகள்
++++++++++++++++++++++++++++++++++
சத்தியபாமா என்ற மணி
ராமமூர்த்தி
பிரபாகர்
சந்திரன்
சுகுமார்
லீலாவதி
விஜயலட்சுமி
ராஜேந்திரன்
பாலு
விஜயகுமார்
இந்த 10 குழந்தைகளுக்கும் பெயர் வைத்தவர் நம் அருமை தலைவன் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
சத்யபாமா
சுகுமார்
பாலு
இந்த மூன்று பேரும் இறந்து விட்டார்கள்
++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவில் உள்ள நடிகர்களில் எம்ஜிஆரை போல் சினிமா உலகை கொடிகட்டி ஆண்டவர் யாரும் கிடையாது
இந்தியாவில் உள்ள முதலமைச்சர் களிலே எம்ஜிஆரை போல் மக்கள் செல்வாக்கு உடையவர்கள் யாரும் கிடையாது
எம்ஜிஆர் தமிழ் நாட்டில் பல ஆட்சியை உருவாக்கியவர்
பல
முதலமைச்சர்களை உருவாக்கியவர்
தான் முதலமைச்சராக கொடிகட்டி வாழ்ந்தபோதும்
தன் அண்ணன் தம்பி மாமன் மச்சான் குடும்பத்தினரே அரசியல் பக்கம் அண்டவிடாமல் செய்தவர் எம்ஜிஆர்
,முதலமைச்சரின் அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாம் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்கள்
ஆனால் பெரியவர் சக்கரபாணியின் குடும்பத்தினர் அரசியலிலோ ஆட்சி அதிகாரத்திலோ தலையிட்டவர்கள் கிடையாது.... Thanks...
orodizli
27th April 2020, 08:24 PM
உறவினர்கள் யாரும் தலையிட கூடாது என்று பொது அறிக்கையே வெளியிட்டவர் நம் தலைவர் ! அருமை ! வாழ்த்துகள் !... Thanks...
orodizli
27th April 2020, 08:28 PM
இருவரும் மாணிக்க கற்கள், அண்ணன்தம்பி பாசத்திற்கு எடுத்துக்காட்டு, ஆட்சி, அதிகாரத்தில் எம்ஜிஆர் குடும்பத்தினர் எந்த பலனும், சலுகையும் அடையாதவர்கள்... உயிர்காத்த
லீலாவதிக்கே எதுவும் செய்யவில்லை, ஒரு வார்டு மெம்பராக பதவி வகிப்பவன் என்ன வழியில் சம்பாரிக்கிறான், மக்கள்செல்வாக்கில்உச்சத்தில்இருந்தவள்ளல்எப்படிதன்ன டக்கத்தோடுஆட்சிசெய்தார், சிலதறுதலைகள்முதல்வராகபதவியில்இருந்துஆடிய, ஆட்டம்தான்என்ன, சம்மந்தமேஇல்லாதநாயைதன்னோடுசுயலாபத்திற்குசேர்த்துக் கொண்டுஅவளும், இவளும்சேர்ந்துஉடல்முழுக்கநகை, நட்டுக்கள்அணிந்துபோஸ்கொடுப்பது, உறவுப்பிள்ளைகளைஉதரிதள்ளிவிட்டுநாய்ஒருவனைவளர்ப்பமகன ்என்றுநாடகம்ஆடி, பலகோடிசெலவுசெய்துஅசிங்கப்பட்டு, இறப்பில்தெளிவின்மை, இப்படிப்பட்டநாயைஉத்தமர், தெய்வம்எம்ஜிஆர்நினைவுஆலயத்தில்புதைத்துதலைவரின்புகழ ைகெடுத்துவிட்டான்களே, இதுஎன்னடாஉலகம்,....... Thanks...
orodizli
27th April 2020, 08:29 PM
அன்னை சத்தியத்தாய் பெற்ற மாணிக்கங்கள் தலைவர் MGR அவர்அண்ணன்சக்ரபானியும் வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்கள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.... Thanks...
orodizli
27th April 2020, 08:31 PM
அனைத்திலும் அவர் மக்களின் முன்னோடிதான், மனிதர்கள் இப்படி இருக்க வாய்ப்பு இல்லை, அவர் தெய்வத்தின் தெய்வம், அதாவது தெய்வத்திற்கு மேலானவர்...... Thanks...
orodizli
27th April 2020, 09:48 PM
https://youtu.be/58SjCwGZiqU.... Thanks...
orodizli
27th April 2020, 09:50 PM
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக்காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்துவாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக்கூறிவிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத்தாய்க்கு... எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின்நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். அந்த தாயின்வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார். சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின்கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவிசெய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார். நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர்... அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த நெகிழ வைக்கும் பதில் இது...!!! ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத்தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் தம்பியாக நினைத்துத்தான் உதவிசெய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். அந்த வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும் அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’ ‘ஆனந்த ஜோதி ' திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவரல்ல , அதன்படியே வாழ்ந்தவர்... நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல். ...... Thanks...
orodizli
27th April 2020, 09:55 PM
https://youtu.be/1ZQhbhO_Df8.... Thanks...
orodizli
27th April 2020, 09:56 PM
https://youtu.be/UJe6I8WZ058.... Thanks...
orodizli
27th April 2020, 09:59 PM
நான் முன்பு படித்தது,உறந்தை உலகப்பன் நிகழ்ச்சிக்கு தலைவர் மட்டும்தான் அழைக்கப் பட்டிருந்தார்,அங்கு தலைவருக்குப் புரட்சி நடிகர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்,தலைவர் தன்னோடு கருணாநிதியையும் அழைத்து வந்து விட்டதால்,கருணாநிதிக்கு மரியாதை செய்யும் விதமாகத்தான் அவர் கையில் புரட்சிநடிகர் என்று எழுதிய பேழையைக் கொடுத்து தலைவரிடம் அதை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர் என்றுதான் படித்துள்ளேன்....... Thanks SDN
orodizli
27th April 2020, 10:07 PM
சென்னை - அண்ணா சாலை ''தேவி பாரடைஸ் '' 70 MM., A/C திரை அரங்கு பொன்விழா ஆண்டு 1970 - 2020
21.07.1970 தேவிபாரடைஸ் - துவக்க தினம் . 49 ஆண்டுகள் நிறைவு . பொன்விழா துவக்கம்
.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் மலரும் நினைவுகள்
1970ல் திரை உலக ரசிகர்களால் கவரப்பட்ட மிக சிறந்த குளிர்சாதன திரை அரங்கு ''தேவி பாரடைஸ் ''
1. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் ''தேவி பாரடைஸ் அரங்கில் 29.05.1971 அன்று வெளிவந்தது, முதல் நாள் சிறப்பு காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் முன்னலையில் எம்ஜிஆர் திரை நட்சத்திரங்கள் , அரசியல் பிரபலங்கள் ஏராளமான எம்ஜிஆர் மன்றங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . முதல் முறையாக இத்திரை அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் , 125.காட்சிகள் 151 காட்சிகள் அரங்கு நிறைந்து 147 நாட்கள் ஓடி வசூலில் பிரமாண்ட சாதனை நடைபெற்றது .
2. தீபாவளி விருந்தாக 18.10 .1971 அன்று மக்கள் திலகத்தின் '' நீரும் நெருப்பும்'' திரைக்கு வந்தது . சிறப்புக்காட்சிகள் நடந்தது .9 வாரங்கள் படம் ஓடியது .
3. பரப்பரப்பான சூழ் நிலையில் 11.05.1973 அன்று வெளிவந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''. முன்பதிவில் 7.05.1973ல் ரசிகர்களின் கூட்டமே சாட்சி .63 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 182 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
4. மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' 9.05.1975 வெளியானது . தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கம் நிறைந்து வசூலில் சாதனை .12 வாரங்கள் ஓடியது .
5. மக்கள் திலகத்தின் லட்சிய படைப்பான ' பல்லாண்டு வாழ்க '' 31.10.1975ல் திரைக்குவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது .
6. '' தேவிகலா '' அரங்கில் முதல் முறையாக 18.03.1976 எம்ஜிஆரின் '' நீதிக்கு தலை வணங்கு '' தினசரி 4 காட்சியுடன் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
7. எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்வு செய்வதற்கு முன்னர் 5.05.1977 ல் வெளி வந்து 100 நாட்கள் ஓடியது . 100 வது நாள் விழா நேரத்தில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது .
8. தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆன பின்னர் 14.08.1977 அன்று திரைக்கு வந்த படம் ''மீனவ நண்பன் '' 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
9. மக்கள் திலகம் எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் '' 14.01.1978 திரைக்கு வந்து 50 நாட்கள் மேல் ஓடியது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமா துறை விட்டு விலகிய பின்னர் அவருடைய பல படங்கள் ''தேவி பாரடைஸ் ' அரங்கில் வைகுண்ட ஏகாதசி நள்ளிரவு சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டது .
எம்ஜிஆரின் நாடோடிமன்னன் , படகோட்டி , மாட்டுக்கார வேலன் படங்கள் 1977-1989 இடைப்பட்ட காலங்களில் தேவி பாரடைஸில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது .
எம்ஜிஆரின் டிஜிட்டல் படங்கள்
2014- 2018 கால கட்டத்தில்
ஆயிரத்தில் ஒருவன்
ரிக் ஷாக்காரன்
அடிமைப்பெண்
எங்கவீட்டுப்பிள்ளை
நினைத்ததை முடிப்பவன்
போன்ற படங்கள் தேவி வளாகத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .
49 ஆண்டுகள் கடந்தாலும் தேவிபாரடைஸ் பெயரும் எம்ஜிஆர் படங்கள் திரைக்கு வந்த இனிய நாட்களும் ரசிகர்கள் கொண்டாடிய விழாக்கோலங்களும் என்றென்றும் மறக்க முடியாது .
விரைவில் இதே அரங்கில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிட்டல் படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது .
''தேவி பாரடைஸ் '' திரை அரங்கு உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எங்களது அன்பு கலந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறோம்
எம்ஜிஆர் படங்கள் விளம்பரங்களை . இணைத்துள்ளோம் .
அன்புடன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் ....... Thanks WA., Groups..........
.
orodizli
27th April 2020, 10:18 PM
தலைவர் 1962 இல் ராமாவரம் தோட்டத்தில் குடியேறினார்..14.06.1962 அன்னை ஜானகி அவர்களை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
கன்னிதாய், முகராசி, குடியிருந்த கோவில், ரகசிய போலீஸ் 115 படங்களை அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போது கவனிக்கவும். தலைவர் தன் ஆட்காட்டி விரலில் ஒரு மோதிரம் போட்டு கொண்டு இருப்பார். அந்த மோதிரம் ஒரு தீவிர ரசிகரால் தலைவருக்கு பரிசாக அளிக்க பட்டது.
அதை எப்போதும் கழற்ற கூடாது என்ற அந்த ரசிகரின் கோரிக்கை...குண்டடி பட்ட போது கழற்ற பட்ட அந்த மோதிரத்தை பிறகு அணிந்து பின் பத்திரமாக காத்து வந்தார்.
14.06.1987 இல் அந்த மோதிரத்தை மற்றும் அன்னை சத்தியா அம்மா உருவம் பொதிந்த டாலர் கொண்ட நகைகள் மற்றும் அன்னை ஜானகி அவர்களும் நகைகள் போட்டு கொண்டு தன் திருமண நாள் அன்று. கீழே இருக்கும் படமே கடைசியாக இருவரும் விரும்பி சேர்ந்து எடுத்து கொண்ட கடைசி புகைப்படம் ஆகும். அப்புறம் வந்த படங்கள் மற்றவர்கள் எடுத்தது ஆகும்.
தலைவர் அமெரிக்க சிகிச்சை முடிந்து மீண்டும் வந்து முதல்வர் ஆகி தன் கடைசி டிசம்பர் மாதத்தில் அடிக்கடி
அண்ணா அவர்கள் தலைவருக்கு முதன்முதலில் போட்ட சால்வயை எடுத்துவர சொல்லி அதை முகத்தில் போட்டு கொண்டு கதறி கண்ணீர் சிந்தி இருக்கிறார்.
குண்டடி பட்டு கழுத்தை சுற்றி போடப்பட்ட அந்த கட்டு துணியை எடுத்து அதை பார்த்து கண்ணீருடன் இருந்து இருக்கிறார்.
தன் தாயின் படத்தை வெறித்து பார்த்து கொண்டு இருக்கும் போது அவர் கண்களில் இருந்து அருவியார் கண்ணீர் கொட்டுமாம்.
ஒரு நாள் கடைசிவரை தன்னுடன் இருந்த மாணிக்கத்தை அழைத்து கொண்டு அவர் கையை பிடித்து கொண்டு தோட்டத்தில் நடக்கும் போது ஒரு பெரியவர் பேத்திக்கு பேச்சு வரவில்லை என்று சொன்னதால் அந்த குழந்தையை தன் வீட்டில் தங்க சொல்லி தனக்கு பேச்சு பயிற்சி கொடுத்த மருத்துவர் கொண்டு சிகிச்சை அளிக்க பட்டு கொண்டு இருந்த அந்த பெண் குழந்தை தன் எதிரே வர....
கொஞ்ச நாட்கள் சிகிட்சையில் அந்த குழந்தை முன்னேற்றம் அடைந்து அன்று தலைவரை பார்த்து நன்கு பேச துவங்க அன்று இரவு அவர் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தனக்கும் அப்படி வரவேண்டும் என்று நினைத்து கலங்கி இருக்கலாம்.
விரைவில் விடை பெற போகும் உணர்வு அவருக்குள் மேலோங்கி இருந்தது என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் காட்டியதோ என்னமோ...இன்னும் வரும்...கடைசி நாட்களில் நடந்தவை.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்....... Thanks.........
orodizli
27th April 2020, 10:20 PM
Nellaimani Admk அண்ணா... தயவுசெய்து குறைத்து கொள்ள வேண்டாம்...
என்னைப் போன்ற பலர் தலைவரை நேரில் சந்திக்கும் பாக்கியத்தைத்தான் பெறவில்லை உங்களைப் போன்ற உண்மை பக்தர்கள் சிலர் மூலம் தான் நாங்கள் அற்புதமான ,
எதிர்பாராத நிதழ்வுகள் ஆகியவைகளை இதுபோன்ற பதிவுகள்மூலம் தான்
தெரிந்து கொள்கிறோம்...
ஆகையால் தயவுசெய்து எதையும் குறைத்து கொள்ளாதீர்கள் அண்ணா...... Thanks...
fidowag
27th April 2020, 10:26 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் - 25/04/20 அன்று வின் டிவியில்*வெளியான*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு சொந்தக்காரர் .குற்றால*, குறவஞ்சி பாடல் ஆகியவற்றிற்கு ஆதரவு காட்டிய எட்டாவது வள்ளல். கவிஞர்களுடன் எம்.ஜி.ஆருக்கு இருந்த உறவு என்பது மிக பெரிய* இலக்கியத்தோடு அமைந்த நாடக தன்மை வாய்ந்தது .குறிப்பாக கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் கவித்துவம் கொண்டதாகவும், தமிழின் பெருமையை உணர்த்துவதாகவும் இருந்தன.* ஆகவே எம்.ஜி.ஆர். அவர்கள் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் பற்றிய விவரம் அறிந்து அவற்றை தன்னுடைய திரைப்படங்களில் புகுத்தி , அவருக்கு புகழ் சேர்ப்பதோடு, மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தான பாடல்களை அறிமுகப்படுத்தினார் .* சந்திரோதயம் படத்தில் எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆசிரியராக நடித்தார் .* ஒரு பத்திரிகையானது மக்களுக்கு எந்த மாதிரி செய்திகளை பிரசுரம் செய்து வெளியிட வேண்டும். எந்த மாதிரி செய்திகளை வெளியிடக்கூடாது என்ற கருத்தை மேம்படுத்தி சொல்லியிருப்பார் . பத்திரிகை என்பது என்ன ? அதன் குணாதிசயங்கள் என்ன என்பதை விளக்கும் டைட்டில் பாடலாக புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று பாடல் அமைந்திருக்கும் .
கவிஞர் பாரதிதாசன் , கவிஞர் பாரதியாருக்கு தாசனாக , எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற திரைப்பட பாடலில் அறிமுகம் ஆனார் .கவிஞர் பாரதிதாசன் இயற்றிய சித்திர சோலைகளே, உமை இங்கு திருத்த இப்பாரினிலே என்ற பாடல் நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் இடம் பெற்றது .* இந்த பாடலில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் கவிஞருக்கும் உள்ள**ஈடுபாட்டை உணர்த்துவதாகவும் தொழிலாளர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்கிற அற்புதமான வரிகள் அமைந்திருக்கும் .. இந்த பாடலை விரும்பி ஏற்று, பட தயாரிப்பாளரான காமாட்சி ஏஜென்சிஸ் (நடிகை கே.ஆர். விஜயாவின் நிறுவனம் ) நிறுவனத்திடம் வலியுறுத்தி , வெள்ளை உடையில் , இயல்பான தன் நடிப்பில்*அசத்தியிருப்பார் .**
1965ல் வெளியான கலங்கரை விளக்கம் என்ற படத்தில் முதன் முதலாக கவிஞர் பாரதிதாசன் பாடலான சங்கே முழங்கு பாடலை இடம் பெற செய்தார் .* படத்தில் ஒரு காட்சியில் தன் காதலியை இழந்து சோகமாக இருக்கும்போது ,தன்* நண்பரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த பாடல் காட்சியை நாடக அரங்கில் காண்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.* இந்த பாடலில் வரும் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற வரிகள்* இன்றைக்கும் மேடைகளில் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில்*இந்த வரிகளை பேச்சாளர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த பாடல்.* தமிழுக்கு எதிராக இந்தி எதிர்ப்பு என்கிற மொழி போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்த சமயம்* தமிழனின் உணர்ச்சிகளை விவரிக்கும் இந்த பாடலை தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின்* அனுமதியோடு இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர்.*. இந்த பாடலில் கவிஞர் பாரதிதாசன்*, உருவம் இரு பக்கமும் அடங்கிய புத்தகம் ஒன்றுசுழன்று கொண்டே* இரண்டாக பிளந்து அதில் இருந்து நடிகை சரோஜாதேவி சங்கு முழங்கியபடி தோன்றும் காட்சி இடம் பெற்றிருக்கும் .**
மன்னாதி மன்னன் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற , தமிழன் உணர்ச்சியும், திராவிடர் எழுச்சியும் நிறைந்த பாடலை அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். 1960ல் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அந்த காலத்தில்* ஒலிக்காத தி.மு.க. மேடைகளே இல்லை .* அ தி.மு.க. வை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின்னரும் ,அ. தி.மு.க. மேடைகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன .எம்.ஜி.ஆர் தன் காரில் பயணிக்கும்போது ஒலிக்காத நாளே இல்லை எனலாம் .*
பொதுவுடமை கருத்துக்களை தனது திரைப்பட பாடல்களில் புகுத்துவதற்கு பிரத்யேக கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். அதன்படி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்* பாடல்கள் பலவற்றை* தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார் . இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் மாட்டு வண்டியில் பயணித்தபடி வயக்காட்டில் பாடும் காடு வெலெஞ்சு* என்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற பாடலில்* பட்ட துயர் இன்னும் மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம், நானே போட போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம். நாடு நலம் பெறும் திட்டம் , என்ற வரிகளின்படி , தனிக்கட்சி ஆரம்பித்து, முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பல நல்ல திட்டங்களை தீட்டினார் . தான் முதல்வராவதற்கு 20 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட பாடல்.**இதில் இருந்து எம்.ஜி.ஆர். எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்து கொள்ளலாம் .* பாடலில் பானுமதி மாடாய் உழைப்பவன் வாழ்க்கையில் பசி வந்திட காரணம் என்ன மச்சான் என கேள்வி கேட்க , அங்கு சேரக்கூடாத இடத்தில செல்வம் சேருவதால் அவனுக்கு* வரும் தொல்லையடி என்று எம்.ஜி.ஆர். பதிலளிப்பார் .**
1975ல் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் , கவிஞர் பாரதிதாசன் பாடலான*புதியதோர் உலகம் செய்வோம் , கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் .* இதே வரிகள் சந்திரோதயம் டைட்டில் பாடலிலும் இடம் பெற்றிருக்கும்.* ஆனால் அதே வரிகள் இந்த படத்தில் வேறு ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுவுடமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் .புனிதமாக அதை எங்கள் உயிர் என்று காப்போம் என்று வரிகள் வரும்படி*புதிய விளக்கத்தை பொதுவுடைமை பற்றி* கவிஞர் பாரதிதாசன் எளிதாக எழுதினார். எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து, வளர்ந்து வந்த சமயத்தில் மிக சரியான வகையில் , மக்களை கவரும் வண்ணம் பயன்படுத்திக் கொண்டார் .*
***
எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் தன்னை பாட்டாளிகளின் தோழனாக, மீனவ சமுதாயத்தின் காவலனாக, ஏழை எளியோரின் துயர் துடைப்பவனாக நடித்த*படங்களின் எண்ணிக்கை அதிகம் .* குறிப்பாக படகோட்டி படத்தில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான் , எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் , கரைமேல் இருக்க வைத்தான், பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் .என்ற பாடலில் ஒருநாள் போவார், ஒருநாள் வருவார் , ஒவ்வொரு நாளும் துயரம். ஒரு ஜான் வயிறை , வளர்ப்பவர் துயரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற கவிஞர் வாலியின் பாடலில் மீனவ சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை துயரத்தை அடக்கி , தனக்கே உரிய பாணியில், சோகத்தோடு நடித்து அசத்தினார் .தொடர்ந்து* கொடுத்ததெல்லாம் கொடுத்தான், பாடலில் உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை .* படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன்மேல் பாவமில்லை, கிடைத்தவர்கள் பிழைத்துக் கொண்டார் . உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.* இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். மடி நிறைய பொருளிருக்கும் . மனம் நிறைய இருள் இருக்கும் .* என்றகவிஞர் வாலியின்* வைர வரிகள்*எம்.ஜி.ஆரின் இமேஜுக்கு பெரும் பலம் சேர்த்தன . இந்த பாடல்கள் மூலம் கவிஞர் வாலி உச்சத்தை தொட்டார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் ஆனார் வாலி .* ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். நாடக துறையில் இருந்த சமயத்தில் ஆர்வத்தின் காரணமாக இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டதால், பிற்காலத்தில் அந்த திறமையை தன்* பாடல்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்தது .* அதன் காரணமாக அவரது பாடல்கள்* காலத்தால் அழியாமல் , இன்றும் மக்களால் ரசிக்கப்படுகின்றன .
எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 1977ல் வெளியான**படம் மீனவ நண்பன்*தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானதும், ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக சில நாட்கள் மீனவ நண்பன் படத்திற்கான தன்னுடைய* காட்சிகளில் நடித்து முடித்துதான் பதவி ஏற்றார். இந்த படத்தில் மீனவ சமுதாயத்தின் குறை தீர்க்கும் தலைவனாக நடித்திருப்பார் .* இந்த படத்தில்*அப்போதைய எதிர் கட்சியான தி.மு.க.வை சாடும் வகையில் பட்டத்து ராஜாவும், பட்டாள சிப்பாயும் ஒன்றான காலமிது* என்ற பாடல் அமைந்திருக்கும் . இந்த பாடலில் கோட்டை கட்டி கும்மாளம் போட்ட கூட்டங்கள் என்னானது . பல ஓட்டை விழுந்து தண்ணீரில்**மூழ்கும் ஓடங்கள் போலானது என்ற வரிகள் வரும்இந்த பாடல்கள் வரிகள்*எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் அப்போது பலத்த வரவேற்பை பெற்றது .***.
1974ல் வெளியான,நடிகர்*அசோகன்*சொந்தமாக தயாரித்த* நேற்று இன்று நாளைதிரைப்படத்தில்* அரசியல் நெடி மிகுந்த வசனங்கள் இருந்தன* தனது கட்சியின்*கொள்கைகள், எதிர்க்கட்சியின் ஊழல்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக*எம்.ஜி.ஆர். பயன் படுத்தி வெற்றியும் பெற்றார் .**நான் படித்தேன்*காஞ்சியிலே நேற்று என்ற பாடலில், மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் , தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் .வீதிக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே.* ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார். தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்.* இந்த வரிகள்*தி.மு.க. கட்சியை*நேரடியாக தாக்குவது போலிருக்கும்.**
1971ல் வெளியான ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில்* கவிஞர் வாலியின்*அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் . அது ஆணவ சிரிப்பு என்கிற*பாடல் வரும் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தபோது வெளியான படமாக இருப்பினும் , பாடலிலுள்ள வரிகள்*, கருத்துக்கள்*, அவர் அ தி.மு.க.வை தொடங்கியபின்* பார்க்கும்போது*தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்கள், எம்.ஜி.ஆர். கணக்கு கே*ட்டது*குறித்த*எழுப்பிய* கேள்விகள்**போன்று பாவித்து ரசிகர்கள் இந்த பாடலுக்கு*நல்ல வரவேற்பை அளித்தனர் .*.**
தேர்தல் பிரச்சாரங்கள், பொது கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும்போது*எதிர்க்கட்சியினர் எம்.ஜி.ஆரைதிரைமறைவாக இருந்து**தாக்க முற்படுவதாக அவ்வப்போது தகவல்கள் அவருக்கு கிடைக்கும் . எப்போதும்*தன்னுடன் சில*ஸ்டண்ட் நடிகர்கள் பாதுகாப்பிற்கு உடன் வைத்துக் கொள்வார் .* காவல்துறையினரை விட அவர்களையே அதிகம் நம்புவார் .* ஒருமுறை திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மணப்பாறை அருகிலே உள்ள கிராமத்தில் ஒரு ஓலை குடிசையில் வயதான பெண்மணி தயார் செய்த சாப்பாட்டை*சாப்பிட்டு*அங்கேயே தங்கியுள்ளார் . பின்னர் திண்டுக்கல் வெற்றிக்கு பிறகு மறுமுறை மணப்பாறை சென்றபோது அதே ஓலை குடிசைக்கு*சென்று தனக்கு*உணவளித்த அந்த தாயை சந்தித்து ஒரு தூக்கு வாளியில் பணக்கட்டுகளை அடுக்கி*பரிசளித்தார்* வள்ளல் எம்.ஜி.ஆர்.*.இந்த சம்பவம் பின்னர் அந்த ஊர் முழுவதும் பரவி,அந்த பெண்மணி பிரபலம் ஆனார் .** இதே போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வரலாறு உண்டு. சொல்லிக் கொண்டே*போகலாம் . தான் ஆட்சிக்கு வந்ததும்* ஏழை எளியோர் தங்கும் ஓலை குடிசைகளுக்கு இலவசமாக ஒரு விளக்கு என்ற திட்டத்தை*உருவாக்கி*ஏழை மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தார் .**
ஒரு தொண்டனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் பயணித்து*பின்னர் சாலைகளில் கார்*செல்லமுடியாத தருணத்தில்*, குறுகலான பாதைகளில்*நடந்தே சென்று*பங்கேற்று , மணமக்களுக்கு பரிசளித்து அவர்களை*ஆசிர்வதித்து வந்தார் . இந்த மாதிரி சம்பவங்கள் கூட நிறைய உண்டு .நீதிக்கு தலைவணங்கு படத்தில் நான் பார்த்தா பைத்தியக்காரன் பாடலில்*ஜாதி, மதம் ,இனம்,மொழி***பார்ப்பவன் நானில்லை. நான் நெருப்பினால் நடப்பவன்டா* ஆனால் நீதிக்கு பயந்தவன்டா , தர்மத்தை அழிக்க வந்தால்*உயிரை தந்தேனும் காப்பவன்டா*,* ஊருக்குள் நீ செய்யும் அநியாயம் நான் உள்ளவரை*நிச்சயம் நடக்காது .இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டத்தை நான் முடித்து வைப்பேன்*என்ற பாடல் வரிகள்*தி.,.மு.க.வின் அராஜக ஆட்சிக்கு எதிராக*எழுதப்பட்டு அரங்குகளில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் அபார வரவேற்பை பெற்றது .
தேடி வந்த மாப்பிள்ளை என்ற படம் 1970ல் வெளிவந்தது .அதில் வரும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடல் மிக பிரபலம் . தேர்தல் பிரச்சாரங்களில் , அ, தி. மு.க. பொது கூட்டங்களில் இந்த பாடல் அதிகம் உபயோகத்தில் இருந்தது .* இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சில அமைச்சர்கள்,*எம்.ஜி.ஆர். அபிமானிகள் தங்களது செல்போனில் ரிங்க்டோனாக வைத்துள்ளனர் .தாயின் பெருமைகள், சிறப்புகள் இந்த பாடலில் அழகாக வடிவமைத்து இருப்பார்கள் . பெற்றெடுத்து பேர் தொடுத்த அன்னை அல்லவோ, நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ . தாய் பாலில் வீரம் கண்டேன் . தாலாட்டில் தமிழை கண்டேன் .அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் பிள்ளையினால் பன்னீர் ஆகும்.* ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால்தான்* நனவுகள் ஆகும் என்ற வரிகள் பாராட்டை பெற்றன .
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று எடுப்பதற்காக செங்கல்பட்டு அருகில் ஒரு இடத்தில ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து மூலம் செட்* அமைத்தார்கள் . அந்த செட் அமைப்பை* பார்வையிட அடிக்கடி செங்கல்பட்டு சென்று வந்தார் எம்.ஜி.ஆர்.*ஒருமுறை சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள கிராமத்தில் சென்று ஏதாவது வாங்கி வருமாறு இருவரை பணித்து ரூ.100/- கொடுத்து அனுப்பினார் .* அவர்கள் வேகவைத்த வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கி வந்தனர் . அதை தானும் உண்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தார் .மீண்டும் மீண்டும்* தான் செங்கல்பட்டிற்கு செல்லும்போதுதன்னுடன் வருபவர்களுக்காக* தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அந்த பெண்மணியிடம் வேர்க்கடலை, சீனிக்கிழங்கு* வாங்கிவிட்டு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணித்துள்ளார் .எம்.ஜி.ஆர். முதல்வரானபின்பு , அந்த வயதான பெண்மணி இறந்து போன தகவல் யார் மூலமோ* எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது ,உடனே எம்.ஜி.ஆர். கார் மூலம் செங்கல்பட்டு சென்று அந்த குடிசைக்கு சென்று அந்த பெண்மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது வரலாறு . இந்த மாதிரி யாரும் எதிர்பார்க்காத, கனவிலும் காணாத சம்பவங்கள்,ஏழைகளுக்கு செய்த உதவிகள்* எம்.ஜி.ஆர். விஷயத்தில் ஏராளம் உண்டு. இந்த செயல்களும் மனித இதயங்களில் ஆழமாக பதிந்தனால்தான்* எம்.ஜி.ஆர் வாக்கு வங்கி என்பது கணிசமான அளவில் கிராமப்புற பகுதிகளில் பெருகி உள்ளது என்று சொல்வதுண்டு .**
நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன*
1. சங்கே முழங்கு* *- கலங்கரை விளக்கம் .
2.சித்திர சோலைகள்* - நான் ஏன் பிறந்தேன்*
3.அச்சம் என்பது மடமையடா*- மன்னாதி*மன்னன்*
4.காடு வேலன்ச்சு என்ன மச்சான் - நாடோடி மன்னன்*
5.தரை மேல் பிறக்க வைத்தான்* - படகோட்டி*
6.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
7.புத்தன்*இயேசு காந்தி பிறந்தது*- சந்திரோதயம்*
8.பட்டத்து ராஜாவும் பட்டாள* சிப்பாயும் - மீனவ நண்பன்*
9.நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று - நேற்று இன்று நாளை*
10.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் -ரிக்ஷாக்காரன்*
11.நான் பார்த்தா*பைத்தியக்காரன்*- நீதிக்கு தலை வணங்கு*
12.வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை*
* *
orodizli
27th April 2020, 10:28 PM
மலேசியா நாட்டில் தைப்பிங் என்கிற இடத்தில் மிக பிரமாண்டமான அய்யனார் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் மக்கள்திலகம் அவர்களுக்கும் கோவில் உள்ளது. மலேசியா அரசாங்கம் இந்த கோவில் வளாகத்தை சுற்றுலா மையமாக அறிவித்து உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மக்கள்திலகத்தை வணங்கி வழிபட்டு பின்னர் அய்யனாரை வழிபட செல்லுகின்றனர்...... Thanks...
orodizli
27th April 2020, 10:32 PM
எம்.ஜி.ஆர் பிறந்ததினம் ஏழைமக்களின் மறுவாழ்வு தினமாக வோ அல்லது ஏழைக்குழந்தைகளின் மறுவாழ்வு தினமாக பள்ளிகளில் கொண்டாடப்படவேண்டும்..... Thanks...
orodizli
27th April 2020, 10:33 PM
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது...
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உணர்வைத் தெரிவிக்க, அப்போது சென்னைக்கு வரவிருந்த நேருவுக்கு, விமான நிலையத்தில் மிகப் பெரும் அளவில் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என கழகத்தின் முடிவை அண்ணா தெரிவித்திருந்தார்.
அப்போதெல்லாம் கழகத்திற்கு அதிக நிதி வசதி கிடையாது. இது போன்ற நிலைமைகள் ஏற்படும்பொது எம்.ஜி.ஆரும், நானும் தான் அதற்கான முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ், எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் ஆகிய சினிமா கம்பெனிகளுக்குச் சொந்தமான தையல் மிஷின்கள், இரவு பகலாக கறுப்புக் கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன.
அண்ணாவும் மற்ற முன்னணி தலைவர்களும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். போலீஸ் என்னையும் எம்.ஜி.ஆரையும் கண்கானித்தது.
மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் எனக்கு போன் செய்து "இன்னும் சிறிது நேரத்தில் உங்களைக் கைது செய்ய வரப்போகிறோம், தயாராக இருங்கள்" என்றார். அதன்படி நான் கைது செய்யப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன்.
அங்கே போனவுடன், எனக்கு முன்பாக எம்.ஜி.ஆரைக் கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்ற தகவல் தெரிந்தது. நான், அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "என்னையும் அவர் கூடவே இருக்கும்படி சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பிவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். இரு காவல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம். இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் நிலைமை சமாளிக்க முடியாது எனக் கூறி எங்கள் இருவரையும் அன்றிரவு முழுக்க வெவ்வேறு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
மறுநாள் காலை என்னை மத்திய சிறைக்கு அழைத்துப்போனார்கள். அங்கு முதல் மாடியில் முதல் அறையில் கொண்டு போய்விட்டார்கள்.
அங்கே ஆச்சரியம். எனக்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர் இருந்தார். இருவருக்கும் ஒரே அறை என்றதும் எனக்கு சிறைச்சாலைக் கூடமே சித்திரக்கூடமாகத் தெரிந்தது. மிகச் சிறிய அந்த அறையில் பயன்படுத்துவதற்கு திண்ணை போல ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் அழுக்கடைந்த, மூட்டைப்பூச்சிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மெத்தை, அதில் படுப்பதும் தூக்குமேடையில் தொங்குவதும் ஒன்றுதான். அதைக் கீழே தூக்கிப் போட்டோம்.
எங்கள் இருவருக்கும் கைகள்தான் தலையணை. வெறும் தரையில் படுத்துக் கொண்டோம். பேச்சுவாக்கில் மனம் திறந்து அவர் தன்னுடைய இளமை கால பருவத்தை நினைவு கூர்ந்தார்.
"கும்பகோணத்தில், என்னுடைய அம்மா அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டுவேலை செய்பவர். அங்கிருந்துதான் சோறும் குழம்பும், பொரியல் எல்லாம் கொண்டு வருவார். எனக்கு அதுவரை பசி தாங்க முடியாது. இடுப்பில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி படுத்திருப்பேன்" என்று அவர் சொன்ன போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்த் துளிகள். இளம் வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர் அவர் என்ற விபரம் அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
பகல் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு உணவு தரப்பட்டது. வட்ட அலுமினியத் தட்டில் சிவப்பு அரிசி சோறு. சிரமப்பட்டு சாப்பிட்டபடியே எம் ஜிஆரைப் பார்த்தேன். அவர் எவ்வித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுமாதிரி சாப்பாட்டை நான் சாப்பிட்டது இல்லை. என் நிலையை புரிந்து கொண்ட அவர், "சிறு வயதிலேயே சாப்பிட்டுப் பழகி விட்டேன். அதனால் இது எனக்கு புதிது கிடையாது" என்றார்.
அங்கு ஒரு மண்பானை இருந்தது. அருகில் ஒரு தகர டப்பா. அதில் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொள்ளவேண்டும். அந்த மண்பானைக்கருகில் இரு மண்சட்டிகள் இருந்தன. 'அவை எதற்கு?' என்று அண்ணனிடம் கேட்டேன்.
" அவை இரவு கழிப்பிட வசதிக்காக.." என்றார்.
" எப்படி இதையெல்லாம் பயன்படுத்துவது.." என தர்மசங்கடத்துடன் அவரைக் கேட்க,
"வேறு வழி? இது மாதிரி ஒரே அறையில் ஐந்தாறு பேர் கைதிகளாக இருக்கிறார்களே அவர்களது நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்" என என்னைச் சமாதானப் படுத்தினார்.
நாங்கள் சிறையிலிருப்பது தெரிந்து பல பட அதிபர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் எங்களைக் காண வந்தனர். வந்தவர்கள் கூடை கூடையாகப் பழங்கள் வாங்கி வந்தனர். எல்லாவற்றையும் சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து கொடுத்தோம்.பெரும்பாலான கைதிகளுக்கு நாங்கள் யாரென்றே தெரியவில்லை. அவர்கள் அனைவரும், தியாகராஜ பாகவதரும, என்.எஸ்.கிருஷணனும் சிறைச் சாலையில் இருந்த காலத்தில் உள்ளே வந்த ஆயுள் கைதிகள்.
பிரதமர் நேருவுக்கெதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு பத்து மணியளவில் அண்ணாவையும் மற்ற பிரமுகர்கள் பலரையும் போலீஸ் விடுதலை செய்தது. அடுத்த நான் காலையில் என்னையும் எம்.ஜி்ஆரையைம் விடுதலை செய்தனர். அன்றைய தினம் பகல் உணவை எங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டுத்தான் ராயப்பேட்டையில் உள்ள வீட்டுக்குப் போனார் அண்ணன். சிறையில் அவருடன் இருந்த அந்த வித்தியாசமான அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று....... Thanks...
orodizli
27th April 2020, 10:34 PM
ஸடைல் டிரஸிங் எந்த நிறம் போட்டாலும் தனி கலை
ஷூ பல வித மாடலை காட்டியது கூலிங் கிளாஸ் அழகு கூடியது எம் ஜிஆரிடம்
ஸடைலுக்கு ஒர் பல்கலை கழகம்........ Thanks...
orodizli
27th April 2020, 10:35 PM
எம்.ஜி.ஆர்-ஐ கீழே விழ வைக்க முயன்ற நம்பியார்! நடிகர் ராஜேஷ் பகிரும் பொக்கிஷம்
முழு வீடியோ: https://youtu.be/660wXsZGhKU
#Rajesh #Pokkisham #MGR #Nambiyar #Jeppiar...... Thanks...
orodizli
27th April 2020, 10:39 PM
Blossom Terry இதில் திரு.ராஜேஷ் சொன்னதில் எந்த இடத்தில சினிமாவை தூக்கி பிடிக்கிறார்னு நீங்க இவ்வளவு கடுமையா விமர்சிக்கிறீங்க ! புரட்சித்தலைவரின் நல்ல பண்புகளை ,அவர் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருந்த போதும் அவருடைய அந்தபணிவும் ,கனிவும் ,கருணையும் அவரிடம் பரிணமளித்ததுஎன்பதை நீங்கள் புரிந்து கொள்ள மறுப்பதுதான் உங்களை போன்ற அறிவுஜீவிகளின் அதிமாதாவித்தனமா ? உங்களைப்போன்ற போலி அறிவுஜீவி பைத்தியாகாரத்தனம் இன்னுமா உங்களுக்கு தெளியவில்லை!..... Thanks...
orodizli
27th April 2020, 10:40 PM
Blossom Terry sir,please try to understand me! MrRajesh could not be told for Mr.MGR's cini field imagination ! And then he had toldabout the real life's habits of our hounarable puratchithalaivar Dr.MGR! If let your argument there is the eligible for politics what about that ?I have told surely Your's soul is full fill of the bad thinking only! Please ,change your arquments and thinking about our MGR!........ Thanks...
orodizli
27th April 2020, 10:48 PM
என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்.
M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.
என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.
உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.
தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.
என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.
‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.
என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..
‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’
பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...
‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”
உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.
புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை உலகிலேயே எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு....... Thanks........
orodizli
27th April 2020, 10:51 PM
1977 தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ::::
முதல்ல சஸ்பென்ஸை உடைச்சுட்டு, எம்ஜிஆரோட தேர்தல் பிரச்சாரத்துக்கு கிளம்பலாம்! இல்லேன்னா தம்பி பொன்னுவேல் ரொம்ப கோவிச்சுக்குவாரு!
எம்ஜிஆரின் முகவாட்டத்தை அறிந்த எம்.எஸ்.வி ஒரு தீர்வு சொன்னார்! அது, எம்ஜிஆர், மக்களிடம் ஓட்டுக்கேட்கும் பிரச்சாரத்தையும், அத்தோடு ஐந்து பாடல்களையும் இணைத்து அப்போதுதான் வந்திருந்த L. Pரிக்கார்டுகளா தயார் பண்ணி, எல்லா கிளைக்கழகங்களுக்கும் அனுப்பிச்சிடலாம் என்பதே அவர் ஐடியா!
எம்ஜிஆர் அசந்து போனார்! விஸ்வநாதனுக்கு இசையைத்தவிர வேறெதுவும் தெரியாது என்பதே எம்ஜிஆர் எண்ணமாக இருந்தது!
அப்போதுதான் பெரிய சைஸ் அரக்கு ரிக்கார்டுகள் முடிவுக்கு வந்து, சிறிய சைஸ் சின்தெடிக் ரிக்கார்டுகளும், சாவி கொடுக்க தேவையில்லாத நவீன கிராமபோன் பெட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தது! அதனால் குரல், இசையெல்லாம் துல்லியமாக, இனிமையாக மக்களை சென்றடைந்தது! இதுவும் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய அனுகூலம்!
சத்யா ஸ்டுடியோ ரிக்கார்ட் தியேட்டரில் "என் தாய்மார்களே "எனத்துவங்கும் எம்ஜிஆர் பேசும் பேச்சும், இரட்டை இலை வெற்றி இலை என TMS பாட்டும், அதோடு சுசீலா, வாணிஜெயராம் குரல்களில் நான்கு பாடல்களுமாக இரண்டே நாளில் ரிக்கார்ட் ஆனது!
எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர்கள் வாலி, புலமைப்பித்தன் பாடல்களை எழுதினர்! இதற்கான தொகையை எம்ஜிஆர் தந்த போது கண்ணீர் சிந்த எம்.எஸ்.வி "என்னையும் உங்களையும் பிரித்துப்பார்த்து விட்டீர்களே அண்ணா" என்று உறுதியாக வாங்க மறுத்து விட்டார்! கவிஞர்கள் தொட்டு, பாடகர்கள், இசை அமைப்பாளர் என்று யாரும் ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை!
கிளைக்கு ஒரு ரிக்கார்ட் இலவசமாக தர வந்த போது நான் உள்பட பெரும்பான்மை கிளைச்செயலாளர்கள் வாங்க மறுத்து, நான்கைந்து ரெக்கார்டுகளை கடையில் பணம் தந்து வாங்கிக்கொண்டோம்!
இன்றளவும் அண்ணா திமுக மேடைகளில் அந்தப்பாடல்களும், எம்ஜிஆரின் உரையும் தேர்தல் காலங்களில் ஒலிப்பரப்பப்பட்டே வருகிறது!
மூன்று மாதத்துக்கு முன் எம்.பி தேர்தல் பிரச்சாரத்துக்கு போன இடங்களாக இல்லாமல், புதிய பாதைகளில் புதிய இடங்களில் எம்ஜிஆர் பயணம் அமைவதாக பார்த்துக்கொள்ளப்பட்டது!
அப்படித்தான் அயோத்தியாப்பட்டிணம் --பேளூர் மார்க்கமாக படையாச்சியூர், ஏத்தாப்பூர் வழியாக ஆத்தூர் போவதாக பயணத்திட்டம் வகுக்கப்பட்டது! இன்றைக்கு 23,18 அடி அகலத்தில் நவீன எந்திரங்களை வைத்து சற்று குதிப்பது கூட இல்லாமல், நெகுநெகு என்று இருக்கும் அந்த சாலை அன்றைக்கு மாட்டு வண்டியில் கூடப்பயணிக்க தகுதியற்ற, பத்தடி அகலமுள்ள குண்டும் குழியுமான சாலை!
இன்றைக்கு தலைவர்கள் வந்தால் நான்குவழிச்சாலையில் கூட எங்காவது ஒன்றாக இருக்கும் வேகத்தடைகளை முழுக்க அப்புறப்படுத்தி விடுகிறார்கள்! இத்தனைக்கும் நவீன ஏர்பலூன் வைத்த இம்போர்டெட் வண்டிகள்! பெரிய குழிகளில் விட்டால் கூட ஜெர்க் ஆகாது!
அவர் குளிர் வசதியில்லாத தூக்கி தூக்கி போடும் ஸ்டான்டேர்ட் வேனைத்தான் பயன்படுத்தினார்! ஒரு மர ஸ்டூல் அசையாமல் போல்ட்டுகள் போட்டு இருக்கும்! மூன்று பேர் நிற்கும் அளவு மேல் மூடி திறந்து, அதில் அவர், வேட்பாளர், பாதுகாவலர் இரண்டு பேர் என நெருக்கிப்பிடித்து நிற்பார்கள்! கட்சியினர் வண்டிக்குள் ஏழெட்டு பேர் இருப்பார்கள்!
அவ்வளவுதான் அந்த காலத்தில், அந்த வண்டியில் அதிகப்பட்ச வசதி!
குண்டும் குழியும் சாலையில், தூக்கித்தூக்கிப்போடும் வண்டியில், மூச்சு விடக்கூட காற்றின்றி, நெருக்கிக்கொண்டு, நேரத்துக்கு நேரம் சோறு தூக்கமின்றி எம்ஜிஆர் தமிழகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களை, சிரித்த முகத்தோடு சந்தித்தார்!
காத்திருப்பதில் மக்கள் பட்ட துன்பத்தை விட, பயணப்பட்டு எம்ஜிஆர் அடையும் வேதனை அதிகமாகத்தான் இருந்தது! இருந்தும் பெரும்பாலும் பயணத்தை ரத்து செய்ய மாட்டார்! ஓய்வுக்கு ஒதுக்கிய நாளையும் பிரச்சாரத்துக்கே பயணப்படுத்துவார்! அவ்வளவு துன்பங்களும் மக்களைப்பார்த்தால் பஞ்சு பஞ்சாக பறந்து போய் முன்னிலும் உற்சாகமாவார்!
மக்களின் அன்பு மழையில் நனைந்து விட்டு, வண்டியில் பயணிக்கும் போது கட்சியினரிடம் "இந்த மக்களின் அன்புக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேன்" என கண்கலங்குவார்!
எம்ஜிஆரின் வெற்றி, ஏதோ சுகவாசிக்கு கிடைத்த குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி அல்ல! இருபதாண்டுகளுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் ஒன்றிப்பழகி. அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த, ஒரு கடின உழைப்பாளியின் வெற்றி!!
இந்த தொடரை எந்த ஆராய்ச்சி மாணவராவது படித்துக்கொண்டிருந்தால் என் பணிவான வேண்டுகோள்!
1958யில் நாடோடிமன்னன் வெளியானதிலிருந்து, 1987ல் அவர் மரணிக்கும் வரையிலான அவரது தமிழ்நாட்டு சுற்றுப்பயணங்களை நெடிய ஆராய்ச்சி செய்து, டாக்டரேட் பெறுங்கள்! வெறும் நடிகன் என்பதால்தான் வெற்றி எனும் அறிவிலிகளின் வாய் அடைபடட்டும்!!!........ Thanks...
orodizli
27th April 2020, 10:52 PM
[# “வேட்டைக்காரன் வருவான் ...ஏமாந்து விடாதீர்கள்”
காமராஜர் , கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம்...,
தி.மு.க.விற்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசி விட்டு முடிவில் கூட்டத்தினரை இப்படி எச்சரித்தாராம்..!
அதன் காரணம்.. அவருக்கு அடுத்து அந்த ஊருக்கு எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்காக வருகிறார் என்று தகவல் வந்ததாம்..!
ஆனால் காமராஜர் எவ்வளவு எச்சரித்தும் மக்கள் வேட்டைக்காரனைத்தான் வெற்றி பெற வைத்து கொண்டாடினார்கள்..
கடைசியில் கோட்டைக்கும் அனுப்பி வைத்தார்கள் ..!
# சரி..அந்த வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர்.,
தி.மு.க.வில் இருக்கும்போது , காமராஜரைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தை , மிகப் பெரும் கலகத்தை , கழகத்தில் உண்டாக்கி விட்டது...!
அப்படி என்னதான் சொன்னார் எம்.ஜி.ஆர்...?
“காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி..”
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும் எரிமலையாய்க் கொந்தளித்துப் போன ஒரு கூட்டம் , நேராக அண்ணாவிடம் போய்.. “எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்ல , அண்ணா அமைதியாகச் சொன்னாராம்.. “ ராமச்சந்திரனைப் பற்றி எனக்குத் தெரியும்..அமைதியாக இருங்கள்..”
அப்புறம்தான் அமைதியானர்களாம் அந்தத் தொண்டர்கள்..!
# அதன் பின்.....
1969 ல் நடைபெற்ற நாகர்கோவில் எம்.பி. இடைதேர்தலில் , காமராஜர் போட்டியிட்டபோது ..அவரை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்திற்காக , அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே.போகவில்லையாம் எம்.ஜி.ஆர்...!
அது மட்டுமா..?
1972 ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். , தன் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்புடன் இட்ட கட்டளை :
“காமராஜரை எந்த மேடையிலும் , எவரும் தாக்கிப் பேசக் கூடாது..!”
# நாமும் அமைதியாக இருந்து , ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்...
இன்றைய காங்கிரஸ்காரர்களை விட ,
காமராஜரை அதிகமாக மதித்தவர் ,
அன்றைய எம்.ஜி.ஆர்.தான் என்றே தோன்றுகிறது....... Thanks...
orodizli
27th April 2020, 10:53 PM
1980ல் திமுக கூட்டணியில் இராமநாதபுர மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் (இப்போது சிவகங்கை மாவட்டம்) காங்.வால்மீகி MLA ஆனார்.அவர் 1981ல் இறந்து விட்ட பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் காங்.கட்சிக்கு விட்டுக்கொடுத்து இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் வந்து காங்.கட்சி அருணகிரியை வெற்றி பெற செய்தார் மக்கள்திலகம்...... Thanks...
orodizli
27th April 2020, 10:55 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் சிறப்பு !
ஒரு துறையில் மிகப் பெரிய, பிரம்மிப்பூட்டும் சாதனைகளைச் செய்தவரை அச்சாதனைகளின் நினைவு என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்தவரை சரித்திரம் போற்றுபவர் என்று குறிப்பிடுகிறோம்.
அப்படிப் பார்த்தால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பல சரித்திரங்களை படைத்தவர் என்றுதான் குறிப்பிட வேண்டும். தவிர தமிழக மக்களின் ஏழை எளிய மக்களின் இதயங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்து மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர் என்றும் குறிப்பிட வேண்டும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதாக இருந்தால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எத்துறையில் எல்லாம் அடி எடுத்து வைத்தாரோ அத்துறை அனைத்திலும் சரித்திரத்தை படைத்திருக்கிறார்.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றில் இடம் பெறத்தக்க சாதனைகள் புரிந்தவர்கள் அனைவரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான குண நலன்களைப் பெற்றிருக்கிறார்கள்.
மன உறுதி எதையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுதல் மனம் தளராமல் தீவிரமாக எதிர்த்துப் போராடுதல் பதட்டமின்மை போன்ற குணநலன்கள் சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அனைவரிடமுமே காணப்படுகின்றன.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த குணநலன்கள் அனைத்தும் அவரிடம் அபரிதமிகமாகவே குடிக்கொண்டிருந்தனவென்று சொல்லலாம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க...... Thanks...
orodizli
27th April 2020, 10:56 PM
[
#கர்மவீரர் #காமராஜருக்கும் #புரட்சித்தலைவர் #எம்ஜிஆருக்கும் ஆரம்பம் தொட்டே நல்ல உறவு இருந்து வந்தது. காமராஜரை உயிரென நேசித்தவர் மக்கள்திலகம்.
காரணம் மக்கள்திலகம் ஆரம்பகாலத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தே இதற்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
ஹீரோவாக உயர்ந்து அண்ணாவின் நட்பு கிடைத்த பின்னர் தான் திமுக வில் சேர்ந்தார்.
ஆனாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் காமராஜரை தரிசித்து வந்தார்.
காமராஜருக்கு திமுக வைப் பிடிக்காது. ஆனால் அண்ணாவின் அறிவும், எம்ஜிஆரின் கொடைத்தன்மையும், வசீகரமும் மிகவும் பிடிக்கும்.
கர்மவீரருக்கு அரசியல் நிகர்வுகளைப் பற்றிய "தீர்க்கதரிசனம்" எப்போதும் உண்டு. இது குறித்து பேரறிஞர் அண்ணாவே பலமுறை ஆச்சரியப்பட்டுள்ளார்.
ஒரு சந்திப்பில் கர்மவீரர் எம்ஜிஆரிடம் "#ராமச்சந்திரா ! #எல்லோருக்கும் #பசி #ஆற்றும் #நீ...#ஏழை #மாணவ #மாணவிகளுக்கும் #சோறு #போடணும்..."
"#கல்விக்கு #உன்னால #முடிஞ்சஅளவு #உதவணும்...#நாடு #மாறணும்னா #கல்வி #ஒன்று #தான் #ஒரேவழி...#இல்லைன்னா #தமிழ்நாடு #மாறவே #மாறாது..."
அதற்கு #மாணவமாணவிகள் பசியில்லாம இருக்கணும்...அதுக்கு உனக்கு ஒரு காலம் கண்டிப்பா வரும்...அப்படி வரும்போது செய்வியா??? எனக் கர்மவீரர் வாக்கு கேட்க ஆடிப்போய்விட்டார் எம்ஜிஆர்...
"எனக்கு எப்படி, அப்படி ஒரு காலம் வரும்??? " என குழம்பினாலும் கர்மவீரரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத எம்ஜிஆர், வாக்குக் கொடுத்தார்.
தன் இளமைப்பருவத்தில் ஒருவேளை உணவிற்கே தவித்ததாலும், தான் பட்ட கஷடங்களை அடுத்தவர் படக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனையாலும் கர்மவீரர் சொன்னதை செய்வதாக சத்தியம் செய்தார் எம்ஜிஆர்...
பின்னர் எம்ஜிஆர் முதல்வரானதும், மந்திரிசபையைக்கூட்டினார்..."பள்ளிக்குழந்தைங்க சாப்பிடணும்...சத்துணவுத்திட்டம் கொண்டுவரப்போறேன்" என்று கட்டளையே இட்டுவிட்டார்...
"நிதிநிலைமை மோசமாக உள்ளது " என அதிகாரிகள் தடுத்தும், 'அதெல்லாம் எனக்கு தெரியாது...செயல்படுத்தணும்னு" ஒரே வரிகளில் கூறி முடித்துவிட்டார்...
சத்துணவுத்திட்டம் பிறந்தது. கர்மவீரரின் லட்சியமும், தீர்க்கதரிசனமும் பலித்தது.
எம்ஜிஆர் ஒருவரால் தான் செயல்படுத்தமுடியும் என கர்மவீரர் நினைத்தாரோ என்னவோ!!!
சத்துணவால் பள்ளிக்குழந்தைகள் படித்து உயர்ந்தார்கள். அவர்களுக்கு நோட்டு புத்தகம், பள்ளிச்சீருடை, காலணிகள் என இலவசத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினார் மக்கள்திலகம்.]........ Thanks...
orodizli
27th April 2020, 11:01 PM
இவர்களா? அப்படியா??
-----------------------------------
அசோகன்!!
கலிங்கத்து பரணியின் கருத்துச் செறிவாய்
போரில்லா வாழ்வில் பொருதிக் கொண்ட
அசோக சக்கரவர்த்தியின் இன்னொரு அம்சம்!
பத்திரிகை விருட்சத்தின் வேர்ப் பகுதியை
கரையான் அரித்து,, சீரை கெடுக்க முயலும்போது-கரையான் எந்தத் தோல்வியிலும்? என ஆர்த்தெழுந்த இலக்கிய உலகின் இனிய மகவு!!
|பட்டப் படிப்பின் பந்தாவால் ஒரு பெருமையுமில்லை!
பல முதலாளிகளால் பந்தாடப்பட்டு பாதி உயிரை தொலைப்பது தான் மிச்சம் என்ற உண்மையை உண்மையாக்கப் புறப்பட்டு,,அதற்கு உண்மையாக உழைத்தவர்,,உழைத்துக் கொண்டிருப்பவர் இவர் என்பதே உண்மை!!
சாதாரண பழைய பேப்பர் கடையை,,மூலதனமாக இவர் தந்தை இவருக்குக் கொடுக்க--
இவரது முன்னேற்றமும் ஒரு பரமபத விளையாட்டானது!!
பாக்கட் நாவல் அசோகன் என்றால் எள்லோருக்கும் தெரியும் என்றாலும்,,இவருக்கு சுவாரஸ்யம் சேர்த்தது க்ரைம் நாவல் அசோகன் என்ற அடை மொழி தான்!!
கவனிக்கவும்!
இலக்கணத்தை மீறிய மெய் எழுத்தில் ஆரம்பம்-க்ரைம்!!
இலக்கணத்தை மீறாத அசுர உழைப்பு!!
இன்று இவர் பல வார--மாத இதழ்களின் அதிபதி!!
இங்கே தான் அசோகன் நம்மிடம் வருகிறார்!
அசோகன் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்!!
அவரது ஆரம்பக்கால இதழ்களில் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு விதமாக எம்.ஜி.ஆர் போற்றப் பட்டிருக்கிறார்!
சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆரின் வீரம் என்ற தொடரே இவரது பாக்கட் நாவலில் பல வாரங்கள் பவனி வந்தது!!
ஏற்றம் இல்லாத பேச்சு! அதில் எவரையும் எப்போதும்
இறக்கம் தராத கண்ணியம் கொட்டிக் கிடக்கும்!
ஒருவரது குறையை அவருக்கு சுட்டிக் காட்ட வேண்டுமா?
நான் அடித்துச் சொல்வேன்!!
இவரது பதில்களைப் படியுங்கள்!!
கலைஞரை இவர் விமர்சிப்பது தெரியாமல் விமர்சிப்பார்!
கத்தி இறக்கினார் என்பது --
எதிரியின் உடலில் உதிர முத்து பூக்கும் போது தான் தெரியும்!
எப்போது,,எந்த இடத்தில் கத்தியை இறக்கினார் என்பது எதிரிக்கேத் தெரியாது??
அவ்வளவு லாவகமாக,,எதிரியின் நிறைகளைப் பட்டியல் இட்டுக் கொண்டே வந்து,,ஒரு இடத்தில் காயப்படுத்தி இருப்பார்??
தேவருக்கு ஒரு எம்.ஜி.ஆரைப் போல-
அசோகனுக்கு ஒரு ராஜேஷ்குமார்!!
35 வருடங்களாக நாவல் உலகில் ஒரு பதிப்பாசிரியரும் ஒரு எழுத்தாளரும் கைக் கோர்த்தது அசோகன்--ராஜேஷ்குமார் கூட்டணி தான்!!
ராஜேஷ்குமாரும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரே!
எம்.ஜி.ஆர் பற்றி,,பத்திரிகைகளில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களைத் தனியாகப் பதிவிடுவேன்!!
பாக்கெட் நாவல் அசோகன்,,ராஜேஷ்குமாருடன் இணைந்து ஐம்பதாம் ஆண்டு பொன் விழாக் கொண்டாடுகிறார்கள்!!
அசோகன்!
|------------------
மூலதனம் என்பது வெறும் கரன்ஸி இல்லை!
மூல--தனமாக முயற்சிப்பது இருக்குமானால்???
ராஜேஷ்குமார்!
--------------------------
இறங்கினார் எழுத்துலகில்!! ஆனால் இன்றும்--
ஏறிக் கொண்டே இருக்கிறார்??
இவர்கள் காணும் பொன் விழா உத்ஸவத்தில்-
ஊருக்கு உழைப்பவரின் உள்ளம் தொட்ட இவர்களின்-உழைக்கும் கரங்களுக்கு வாழ்த்து முத்தம் வழங்கி மகிழ்வோமா தோழமைகளே???.... Thanks...
orodizli
27th April 2020, 11:31 PM
சில திருத்தங்கள்....By mr.Loganathan Sir...
--_--------------------------
தேவி பாரடைஸ் - ரிக் ஷாக்காரன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 163.ஓடிய நாட்கள் தேவி பாரடைஸ் ஸ்ரீ கிருஷ்ணா-142 நாட்கள்
உ.சு.வாலிபன் - தேவி பாரடைஸ் தொடர் அரங்கு நிறை காட்சிகள்-227(76 நாட்கள்)ஓடிய நாட்கள் -182. அகஸ்தியா-175.
உமா-112 வில்லிவாக்கம் ராயல்-100. பல்லாவரம் லட்சுமி -64 ......... Thanks...
7. இன்று போல் என்றும்
வாழ்க திரைப்படம்- 101 நாட்கள்.
8.மீனவ நண்பன்-104 நாட்கள்.
orodizli
27th April 2020, 11:56 PM
புரட்சித்தலைவரின் சரித்திர வெற்றிகள் :.........
1977 ஜூன் 12, 14, தேதிகளில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது இதில் புரட்சித்தலைவரின் அதிமுக 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புரட்சித்தலைவர் பெற்ற வாக்குகள் 43,065. ஓட்டு வித்தியாசம் 29,378
30.06.1977 அன்று மேதகு தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் புரட்சித் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
1980 ஜூன் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 128 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாகை சூடியது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் 57,019 வாக்குகள் பெற்று 21000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
9.06.1980 இல் அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மேதகு ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி இரண்டாம் முறையாக புரட்சித் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
24.12.1984 இல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் 60,510 வாக்குகள் பெற்று 31,484 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
உடல் நலமின்றி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த புரட்சித்தலைவர் மக்களின் அன்பு பிரார்த்தனையால் உடல்நலம் தேறி மீண்டும் முதல்வராக தமிழகம் திரும்பினார்.
10.02.1985 மேதகு ஆளுநர் எஸ்.எல்.குரானா அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்து 3வது முறையாக புரட்சித் தலைவர் பதவியேற்றுக் கொண்டார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க......... Thanks.........
orodizli
28th April 2020, 08:21 AM
https://youtu.be/TQZoHpLyues......... Thanks.........
orodizli
28th April 2020, 08:22 AM
ஆயிரம் விமர்சனம் கூறுபவர் கூட எம்ஜிஆரின் கருணை மனதை விமர்சிக்க மாட்டார்கள்
எதிரி துரோகி நல்லவன் கெட்டவன் என பாராமல் பொழியும் மழை போல் எம்ஜிஆர் மனிதநேய கருணை மனம் காத்து நின்றது இக்கட்டான நேரங்களில் எல்லோர்க்கும் அதனால் தான் இன்று பொன்மனசெம்மல் எம்ஜிஆரை எவ்வளவு புகழ்ந்தாலும் தெய்வமாக கொண்டாடியபோதும் எவருக்கும் விமர்சிக்க முடியவில்லை
கலியுக கடவுளாய் கொணடாடுகிறார்கள் மக்கள் எம்ஜிஆரை
வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks AM.,.........
orodizli
28th April 2020, 08:23 AM
#குரு #பார்க்க #கோடி #நன்மை.........
நாகேஷ்….
தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் உச்சத்தில் தெரியும் கலைஞன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.
நாடகங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலைமைதாங்க நம்ம வாத்தியார் வந்திருந்தார். நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில காட்சிகளில் தோன்றியிருப்பார் அந்த குண்டுராவ் @ நாகேஷ். அதில் தனது கதாபாத்திரமான வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்துவிட்டார்.
நம்ம வாத்தியாரு நாகேஷ் தோன்றும் காட்சிகளிலெல்லாம் சிரிச்சு சிரிச்சு ஓய்ந்தே போயிட்டாருன்னா பாருங்களேன்.
அப்புறம் நாகேஷை மேடைக்கு அழைத்து
ஒரு கோப்பை வழங்கினார் வாத்தியார்.
அப்ப நாகேஷ் நம்ம வாத்தியரப் பாத்து கேட்டாரே ஒரு கேள்வி...
“அண்ணே எல்லார் முன்னாடியும் கோப்பை குடுக்குறீங்க, அப்புறமா புடுங்கிற மாட்டீங்களே, ஏன்னா நான் அவ்வளவா ஒண்ணும் நடிக்கல!” ன்னாரு.
அதைக் கேட்ட வாத்தியாருக்கு சிரிப்பு தாங்கல..."நீ தாம்பா உண்மையான காமெடியன்" னு மனசார வாழ்த்தினாரு.
தமிழகத்திற்கு நாகேஷ் எனும் சிறந்த கலைஞனை அடையாளம் காட்டினார் நம்ம வாத்தியாரு....... Thanks...
orodizli
28th April 2020, 08:25 AM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் - 25/04/20 அன்று வின் டிவியில் வெளியான தகவல்கள்
--------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு சொந்தக்காரர் .குற்றால , குறவஞ்சி பாடல் ஆகியவற்றிற்கு ஆதரவு காட்டிய எட்டாவது வள்ளல். கவிஞர்களுடன் எம்.ஜி.ஆருக்கு இருந்த உறவு என்பது மிக பெரிய இலக்கியத்தோடு அமைந்த நாடக தன்மை வாய்ந்தது .குறிப்பாக கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் கவித்துவம் கொண்டதாகவும், தமிழின் பெருமையை உணர்த்துவதாகவும் இருந்தன. ஆகவே எம்.ஜி.ஆர். அவர்கள் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் பற்றிய விவரம் அறிந்து அவற்றை தன்னுடைய திரைப்படங்களில் புகுத்தி , அவருக்கு புகழ் சேர்ப்பதோடு, மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தான பாடல்களை அறிமுகப்படுத்தினார் . சந்திரோதயம் படத்தில் எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆசிரியராக நடித்தார் . ஒரு பத்திரிகையானது மக்களுக்கு எந்த மாதிரி செய்திகளை பிரசுரம் செய்து வெளியிட வேண்டும். எந்த மாதிரி செய்திகளை வெளியிடக்கூடாது என்ற கருத்தை மேம்படுத்தி சொல்லியிருப்பார் . பத்திரிகை என்பது என்ன ? அதன் குணாதிசயங்கள் என்ன என்பதை விளக்கும் டைட்டில் பாடலாக புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று பாடல் அமைந்திருக்கும் .
கவிஞர் பாரதிதாசன் , கவிஞர் பாரதியாருக்கு தாசனாக , எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற திரைப்பட பாடலில் அறிமுகம் ஆனார் .கவிஞர் பாரதிதாசன் இயற்றிய சித்திர சோலைகளே, உமை இங்கு திருத்த இப்பாரினிலே என்ற பாடல் நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் இடம் பெற்றது . இந்த பாடலில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் கவிஞருக்கும் உள்ள ஈடுபாட்டை உணர்த்துவதாகவும் தொழிலாளர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்கிற அற்புதமான வரிகள் அமைந்திருக்கும் .. இந்த பாடலை விரும்பி ஏற்று, பட தயாரிப்பாளரான காமாட்சி ஏஜென்சிஸ் (நடிகை கே.ஆர். விஜயாவின் நிறுவனம் ) நிறுவனத்திடம் வலியுறுத்தி , வெள்ளை உடையில் , இயல்பான தன் நடிப்பில் அசத்தியிருப்பார் .
1965ல் வெளியான கலங்கரை விளக்கம் என்ற படத்தில் முதன் முதலாக கவிஞர் பாரதிதாசன் பாடலான சங்கே முழங்கு பாடலை இடம் பெற செய்தார் . படத்தில் ஒரு காட்சியில் தன் காதலியை இழந்து சோகமாக இருக்கும்போது ,தன் நண்பரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த பாடல் காட்சியை நாடக அரங்கில் காண்பதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலில் வரும் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற வரிகள் இன்றைக்கும் மேடைகளில் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த வரிகளை பேச்சாளர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த பாடல். தமிழுக்கு எதிராக இந்தி எதிர்ப்பு என்கிற மொழி போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்த சமயம் தமிழனின் உணர்ச்சிகளை விவரிக்கும் இந்த பாடலை தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின் அனுமதியோடு இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர். . இந்த பாடலில் கவிஞர் பாரதிதாசன் , உருவம் இரு பக்கமும் அடங்கிய புத்தகம் ஒன்றுசுழன்று கொண்டே இரண்டாக பிளந்து அதில் இருந்து நடிகை சரோஜாதேவி சங்கு முழங்கியபடி தோன்றும் காட்சி இடம் பெற்றிருக்கும் .
மன்னாதி மன்னன் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற , தமிழன் உணர்ச்சியும், திராவிடர் எழுச்சியும் நிறைந்த பாடலை அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். 1960ல் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அந்த காலத்தில் ஒலிக்காத தி.மு.க. மேடைகளே இல்லை . அ தி.மு.க. வை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின்னரும் ,அ. தி.மு.க. மேடைகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன .எம்.ஜி.ஆர் தன் காரில் பயணிக்கும்போது ஒலிக்காத நாளே இல்லை எனலாம் .
பொதுவுடமை கருத்துக்களை தனது திரைப்பட பாடல்களில் புகுத்துவதற்கு பிரத்யேக கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். அதன்படி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பலவற்றை தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார் . இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் மாட்டு வண்டியில் பயணித்தபடி வயக்காட்டில் பாடும் காடு வெலெஞ்சு என்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற பாடலில் பட்ட துயர் இன்னும் மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம், நானே போட போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம். நாடு நலம் பெறும் திட்டம் , என்ற வரிகளின்படி , தனிக்கட்சி ஆரம்பித்து, முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பல நல்ல திட்டங்களை தீட்டினார் . தான் முதல்வராவதற்கு 20 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட பாடல். இதில் இருந்து எம்.ஜி.ஆர். எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்து கொள்ளலாம் . பாடலில் பானுமதி மாடாய் உழைப்பவன் வாழ்க்கையில் பசி வந்திட காரணம் என்ன மச்சான் என கேள்வி கேட்க , அங்கு சேரக்கூடாத இடத்தில செல்வம் சேருவதால் அவனுக்கு வரும் தொல்லையடி என்று எம்.ஜி.ஆர். பதிலளிப்பார் .
1975ல் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் , கவிஞர் பாரதிதாசன் பாடலான புதியதோர் உலகம் செய்வோம் , கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் . இதே வரிகள் சந்திரோதயம் டைட்டில் பாடலிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் அதே வரிகள் இந்த படத்தில் வேறு ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுவுடமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் .புனிதமாக அதை எங்கள் உயிர் என்று காப்போம் என்று வரிகள் வரும்படி புதிய விளக்கத்தை பொதுவுடைமை பற்றி கவிஞர் பாரதிதாசன் எளிதாக எழுதினார். எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து, வளர்ந்து வந்த சமயத்தில் மிக சரியான வகையில் , மக்களை கவரும் வண்ணம் பயன்படுத்திக் கொண்டார் .
எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் தன்னை பாட்டாளிகளின் தோழனாக, மீனவ சமுதாயத்தின் காவலனாக, ஏழை எளியோரின் துயர் துடைப்பவனாக நடித்த படங்களின் எண்ணிக்கை அதிகம் . குறிப்பாக படகோட்டி படத்தில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான் , எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் , கரைமேல் இருக்க வைத்தான், பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் .என்ற பாடலில் ஒருநாள் போவார், ஒருநாள் வருவார் , ஒவ்வொரு நாளும் துயரம். ஒரு ஜான் வயிறை , வளர்ப்பவர் துயரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற கவிஞர் வாலியின் பாடலில் மீனவ சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை துயரத்தை அடக்கி , தனக்கே உரிய பாணியில், சோகத்தோடு நடித்து அசத்தினார் .தொடர்ந்து கொடுத்ததெல்லாம் கொடுத்தான், பாடலில் உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை . படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன்மேல் பாவமில்லை, கிடைத்தவர்கள் பிழைத்துக் கொண்டார் . உழைத்தவர்கள் தெருவில் நின்றார். இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். மடி நிறைய பொருளிருக்கும் . மனம் நிறைய இருள் இருக்கும் . என்றகவிஞர் வாலியின் வைர வரிகள் எம்.ஜி.ஆரின் இமேஜுக்கு பெரும் பலம் சேர்த்தன . இந்த பாடல்கள் மூலம் கவிஞர் வாலி உச்சத்தை தொட்டார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் ஆனார் வாலி . ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். நாடக துறையில் இருந்த சமயத்தில் ஆர்வத்தின் காரணமாக இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டதால், பிற்காலத்தில் அந்த திறமையை தன் பாடல்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்தது . அதன் காரணமாக அவரது பாடல்கள் காலத்தால் அழியாமல் , இன்றும் மக்களால் ரசிக்கப்படுகின்றன .
எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 1977ல் வெளியான படம் மீனவ நண்பன் தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானதும், ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக சில நாட்கள் மீனவ நண்பன் படத்திற்கான தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்துதான் பதவி ஏற்றார். இந்த படத்தில் மீனவ சமுதாயத்தின் குறை தீர்க்கும் தலைவனாக நடித்திருப்பார் . இந்த படத்தில் அப்போதைய எதிர் கட்சியான தி.மு.க.வை சாடும் வகையில் பட்டத்து ராஜாவும், பட்டாள சிப்பாயும் ஒன்றான காலமிது என்ற பாடல் அமைந்திருக்கும் . இந்த பாடலில் கோட்டை கட்டி கும்மாளம் போட்ட கூட்டங்கள் என்னானது . பல ஓட்டை விழுந்து தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது என்ற வரிகள் வரும்இந்த பாடல்கள் வரிகள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் அப்போது பலத்த வரவேற்பை பெற்றது . .
1974ல் வெளியான,நடிகர் அசோகன் சொந்தமாக தயாரித்த நேற்று இன்று நாளைதிரைப்படத்தில் அரசியல் நெடி மிகுந்த வசனங்கள் இருந்தன தனது கட்சியின் கொள்கைகள், எதிர்க்கட்சியின் ஊழல்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக எம்.ஜி.ஆர். பயன் படுத்தி வெற்றியும் பெற்றார் . நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலில், மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் , தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் .வீதிக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே. ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார். தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். இந்த வரிகள் தி.மு.க. கட்சியை நேரடியாக தாக்குவது போலிருக்கும்.
1971ல் வெளியான ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் . அது ஆணவ சிரிப்பு என்கிற பாடல் வரும் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தபோது வெளியான படமாக இருப்பினும் , பாடலிலுள்ள வரிகள் , கருத்துக்கள் , அவர் அ தி.மு.க.வை தொடங்கியபின் பார்க்கும்போது தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்கள், எம்.ஜி.ஆர். கணக்கு கே ட்டது குறித்த எழுப்பிய கேள்விகள் போன்று பாவித்து ரசிகர்கள் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பை அளித்தனர் . .
தேர்தல் பிரச்சாரங்கள், பொது கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும்போது எதிர்க்கட்சியினர் எம்.ஜி.ஆரைதிரைமறைவாக இருந்து தாக்க முற்படுவதாக அவ்வப்போது தகவல்கள் அவருக்கு கிடைக்கும் . எப்போதும் தன்னுடன் சில ஸ்டண்ட் நடிகர்கள் பாதுகாப்பிற்கு உடன் வைத்துக் கொள்வார் . காவல்துறையினரை விட அவர்களையே அதிகம் நம்புவார் . ஒருமுறை திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மணப்பாறை அருகிலே உள்ள கிராமத்தில் ஒரு ஓலை குடிசையில் வயதான பெண்மணி தயார் செய்த சாப்பாட்டை சாப்பிட்டு அங்கேயே தங்கியுள்ளார் . பின்னர் திண்டுக்கல் வெற்றிக்கு பிறகு மறுமுறை மணப்பாறை சென்றபோது அதே ஓலை குடிசைக்கு சென்று தனக்கு உணவளித்த அந்த தாயை சந்தித்து ஒரு தூக்கு வாளியில் பணக்கட்டுகளை அடுக்கி பரிசளித்தார் வள்ளல் எம்.ஜி.ஆர். .இந்த சம்பவம் பின்னர் அந்த ஊர் முழுவதும் பரவி,அந்த பெண்மணி பிரபலம் ஆனார் . இதே போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வரலாறு உண்டு. சொல்லிக் கொண்டே போகலாம் . தான் ஆட்சிக்கு வந்ததும் ஏழை எளியோர் தங்கும் ஓலை குடிசைகளுக்கு இலவசமாக ஒரு விளக்கு என்ற திட்டத்தை உருவாக்கி ஏழை மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தார் .
ஒரு தொண்டனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் பயணித்து பின்னர் சாலைகளில் கார் செல்லமுடியாத தருணத்தில் , குறுகலான பாதைகளில் நடந்தே சென்று பங்கேற்று , மணமக்களுக்கு பரிசளித்து அவர்களை ஆசிர்வதித்து வந்தார் . இந்த மாதிரி சம்பவங்கள் கூட நிறைய உண்டு .நீதிக்கு தலைவணங்கு படத்தில் நான் பார்த்தா பைத்தியக்காரன் பாடலில் ஜாதி, மதம் ,இனம்,மொழி பார்ப்பவன் நானில்லை. நான் நெருப்பினால் நடப்பவன்டா ஆனால் நீதிக்கு பயந்தவன்டா , தர்மத்தை அழிக்க வந்தால் உயிரை தந்தேனும் காப்பவன்டா , ஊருக்குள் நீ செய்யும் அநியாயம் நான் உள்ளவரை நிச்சயம் நடக்காது .இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டத்தை நான் முடித்து வைப்பேன் என்ற பாடல் வரிகள் தி.,.மு.க.வின் அராஜக ஆட்சிக்கு எதிராக எழுதப்பட்டு அரங்குகளில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் அபார வரவேற்பை பெற்றது .
தேடி வந்த மாப்பிள்ளை என்ற படம் 1970ல் வெளிவந்தது .அதில் வரும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடல் மிக பிரபலம் . தேர்தல் பிரச்சாரங்களில் , அ, தி. மு.க. பொது கூட்டங்களில் இந்த பாடல் அதிகம் உபயோகத்தில் இருந்தது . இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சில அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். அபிமானிகள் தங்களது செல்போனில் ரிங்க்டோனாக வைத்துள்ளனர் .தாயின் பெருமைகள், சிறப்புகள் இந்த பாடலில் அழகாக வடிவமைத்து இருப்பார்கள் . பெற்றெடுத்து பேர் தொடுத்த அன்னை அல்லவோ, நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ . தாய் பாலில் வீரம் கண்டேன் . தாலாட்டில் தமிழை கண்டேன் .அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் பிள்ளையினால் பன்னீர் ஆகும். ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால்தான் நனவுகள் ஆகும் என்ற வரிகள் பாராட்டை பெற்றன .
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று எடுப்பதற்காக செங்கல்பட்டு அருகில் ஒரு இடத்தில ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து மூலம் செட் அமைத்தார்கள் . அந்த செட் அமைப்பை பார்வையிட அடிக்கடி செங்கல்பட்டு சென்று வந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள கிராமத்தில் சென்று ஏதாவது வாங்கி வருமாறு இருவரை பணித்து ரூ.100/- கொடுத்து அனுப்பினார் . அவர்கள் வேகவைத்த வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கி வந்தனர் . அதை தானும் உண்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தார் .மீண்டும் மீண்டும் தான் செங்கல்பட்டிற்கு செல்லும்போதுதன்னுடன் வருபவர்களுக்காக தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அந்த பெண்மணியிடம் வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கிவிட்டு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணித்துள்ளார் .எம்.ஜி.ஆர். முதல்வரானபின்பு , அந்த வயதான பெண்மணி இறந்து போன தகவல் யார் மூலமோ எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது ,உடனே எம்.ஜி.ஆர். கார் மூலம் செங்கல்பட்டு சென்று அந்த குடிசைக்கு சென்று அந்த பெண்மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது வரலாறு . இந்த மாதிரி யாரும் எதிர்பார்க்காத, கனவிலும் காணாத சம்பவங்கள்,ஏழைகளுக்கு செய்த உதவிகள் எம்.ஜி.ஆர். விஷயத்தில் ஏராளம் உண்டு. இந்த செயல்களும் மனித இதயங்களில் ஆழமாக பதிந்தனால்தான் எம்.ஜி.ஆர் வாக்கு வங்கி என்பது கணிசமான அளவில் கிராமப்புற பகுதிகளில் பெருகி உள்ளது என்று சொல்வதுண்டு .
நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன
1. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் .
2.சித்திர சோலைகள் - நான் ஏன் பிறந்தேன்
3.அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன்
4.காடு வேலன்ச்சு என்ன மச்சான் - நாடோடி மன்னன்
5.தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி
6.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி
7.புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்
8.பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் - மீனவ நண்பன்
9.நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று - நேற்று இன்று நாளை
10.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் -ரிக்ஷாக்காரன்
11.நான் பார்த்தா பைத்தியக்காரன் - நீதிக்கு தலை வணங்கு
12.வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை........ Thanks...
orodizli
28th April 2020, 08:35 AM
வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் :::
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதலானது. அதைப்போல ஆதிபகவன் என்னும் தெய்வமே உயிர்களின் முதலானது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
ஆனால் அறிஞர்களின் சிலரின் கருத்துப்படி. திருவள்ளுவரின் தாய் ஆதி என்றும் , பகவான் என்பவர் அவருடைய தந்தை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் தாயும் தந்தையுமே உலகத்தில் உயிர்களுக்கும் முதல் என்றும் பொருள் ஆகிறது. வாழும் மனிதர் ஒவ்வொருவரும் இதை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் தாய் திருமதி சத்தியபாமாவை தெய்வத்துக்கு நிகராகவே வைத்திருந்தார் என்பது உலகறிந்த உண்மை. தான் வாழ்ந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் தன் தாய்க்கு ஒரு கோயிலே கட்டியிருந்தார் அந்த உத்தம மகன். ஒவ்வொரு நாளும் அவர் வெளியில் செல்லும்போதும் கார் ஒரு நிமிடம் அந்தக் கோயிலின் முன் நிற்கும். வலதுபக்கம் திரும்பி தன் தாயின் திருவுருவத்தை அவர் வணங்கிய பிறகே கார் முன்னோக்கி நகரும்.
எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போதும் தாயே துணை என்று சொல்வார் . அதைப்போலவே எதையாவது எழுதும்போதும் தாயே துணை என்று காகிதத்தின் மேலே எழுதுவார். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது அதன் தொடர்பான முன் குறிப்புகளை எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் மீதும் தாயே துணை என்று தமிழ்நாட்டு முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எழுதிய முப்பத்தாறு குறிப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை.
நினைவழியா இரண்டரை வயதில் இறந்து விட்ட தந்தையாரின் திருவுருவப் படத்தையும் பூஜை அறையில் தாயின் படத்தோடு வைத்து வணங்கினார்.
தாயையும் தந்தையையும் சேர்த்து வணங்கியதால் தான் அவர் மக்களின் தலைவராக உயர்ந்தார். மற்றவர்களுக்கும் அவருடைய முக்கியமான அறிவுரை, தாயைப் பெருமைபடுத்துங்கள். தாயின் வயிறு எரியாமலும் தனது செய்கையால் தாயின் மனம் புண்படாமல் இருக்கும்படி நடந்து கொள்வது தான் ஒரு மகனுடைய மிகப்பெரிய கடமையாகும் என்பது தான்.
அதனால்தான் தன் தாயை பற்றி ஒரே வரியில் சொன்னார். நான் காணாத கடவுளை விட காணும் கடவுளைத்தான் கண்ணால் கண்ட என் தாயை தான் பெரிதும் மதிக்கிறேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க......... Thanks...
orodizli
28th April 2020, 08:36 AM
நமது...
**மக்கள் திலகம் **குழு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
**முன்னேற என்ன வேண்டும் நல்எண்ணம் வேண்டும், தன் உழைப்பாளே உண்ணவேண்டும் **
**மக்கள் திலகம் **
ஓங்குக #பொன்மனச்செம்மல் #புகழ்...... Thanks...
orodizli
28th April 2020, 08:37 AM
புரட்சித் தலைவருக்கு தற்பெருமை பிடிக்காது. ஆனால் பெருமைக்கு புரட்சித் தலைவரை பிடிக்கிறது . ஏனென்றால் மக்களுக்கு அவரை பிடிக்கிறது. அதனால் உலகத்தில் இருக்கும் எல்லா நல்லனவற்றுக்கும் அந்த மனிதப் புனிதரை பிடிக்கிறது ...
நன்மை செய்வதையே தன் கடமையாக வாழ்ந்து காட்டியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்... நம் அனைவருக்குமே முன்னோடி என்றால் புரட்சித்தலைவர் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களே ... !
கொடை வள்ளல் எம்ஜிஆர் புகழ் வாழ்க.... Thanks...
orodizli
28th April 2020, 08:38 AM
நன்றி மறவாத
நல்ல மனம் வேண்டும்
அதுவே என் மூலதனம்
ஆகும் தலைவர் பாடல் வரிகள்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் காலை வெற்றி வணக்கம் நம்வாழ்வு நம் கையில் வீட்டில் உள்ளே இருப்போம் நல்லது நடக்கும்..... Thanks...
orodizli
28th April 2020, 08:50 AM
#எம்ஜிஆர் #ஆட்சி #சாதனைகள் #நூறு...
1.சத்துணவு திட்டம் 01-07-1982 முதல் அமுல்படுத்தப்பட்டது.
2.பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்
3.கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்
5.பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.
6.புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
7.குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.
8.காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
9.பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.
10.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆரின் ஆட்சி சாதனைகள் 100 தொடர்ச்சி-
11.கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
12.சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.
13.அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
14.அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.
15.பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.
16.பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.
17.நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
18.முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.
19.தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.
20.மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.
நாளை தொடர எம்ஜி.ஆர்.ஆட்சி சாதனைகள் 100
பகுதி 3 தொடர்ச்சி
31.பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.
32.ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.
33.திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.
34.அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.
35.அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
36.தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.
37.தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.
38.தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.
39.தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
40.தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.
நாளை தொடரும்...
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி5
41.நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
42.பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
43.வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.
44.கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
45.விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)
46.நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.
47.மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
48.கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.
49.காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
50.உலக வங்கி உதவியுடன்விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
தொடரும் எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்100
பகுதி6
51.ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்திட்டத்தின்கீழ் ரூபாய் 10000வழங்க உத்தரவிட்டார்
52.விதவை மறுமணத்திட்டத்தின் கீழ் தம்பதியர்களுக்கு ரூ.5300 வழங்க உத்தரவிட்டார்.
53.கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்டோரை மற்ற இனத்தவர்கள் மணம் புரிந்து கொண்டால் தலா ரூ.4300 வழங்க உத்தரவிடப்பட்டது.
54.10000 ஏழை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
55.மதுரை மாநகரில்ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழறிஞர்களை கவுரவப்படுத்தினார்.
56.நக்சலைட்டுகளை அறவே ஒழித்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழச்செய்தார்.
57.Encounters இல்லாமல்தமிழகத்தில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார்.
58.புதிய தொழிற்கொள்கையை ஏற்படுத்தி அன்னிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.
59.தமிழறிஞர்கள் திரைப்பட கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தொடர்ந்து வழங்கிடச்செய்தார்.
60.ஆஸ்தான அரசவைக் கவிஞர் பதவி நாமக்கல் கவிஞருக்குப்பிறகு நீண்ட காலம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தகுதியான ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படவேண்டும் என கருதி கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி ஒரு அமைச்சருக்குரிய சலுகைகளையும் அளித்து அழகு பார்த்தார்.
நாளை தொடருமஎம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி7
61.சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் wholesale steel market ஐ மிகப்பெரிய அளவில்திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
62.ஆசியாவிலேயே பெரிய அங்காடி கோயம்பேட்டில நிறுவிட திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்தார்.
63.சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் புதிய கட்டிடம் கட்டிட ஏற்பாடு செய்தார்.
64.தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார்.
65.சென்னை கோட்டுர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்தபோது முழங்கால் அளவு நீரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என இபபோதும் போற்றப்படுகிறார்.
66.சென்னை திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந் தேரோட்டத்தை நடைபெறச்செய்தார்.
67.முறையான நிர்வாகமில்லாமல் நன்கு பராமரிக்கப்படாமல் பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவந்து அவைகளை சீரமைத்தார்.
68.நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைபடுத்திய இருபது அம்ச திட்டத்தின் கீழ் ஒரு அம்சமான கொத்தடிமை ஒழிப்புத் திட்டத்தை முழுயைாக செயல்படுத்தினார்.
69.அறிஞர் அண்ணாவன் பவள விழா மூதறிஞர் இராஜாஜி எழுச்சி கவிஞர் பாரதியார் மற்றும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுப்பகவலன் பெரியார் ஆகியோரின் நூற்றாண்டுவிழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி சிறப்பு செய்தார்.
70.அரசு விழாக்களில் ஆடம்பரத்தை தவீர்த்து சிக்கனத்தைக் கடைபிடித்தார்.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆர் சாதனைகள்100
பகுதி8
71.தமிழக அரசின் சார்பில் அளித்த முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து சொந்த காரிலேயே பயணித்து அனைவருக்கும் முன்னோடியாய் விளங்கினார்.
72.1977 முதல் 1983 வரைபெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 449 தமிழகத்தில் அமைக்கப்பட்டன.இவற்றின் மொத்த மூலதனம் ரூ850 கோடி ஆகும்.
73.தொழிலாளர நலவாரியம் மூலம் தொழிறசாலைகளில் தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து கிளர்ச்சி வேலைநிறுத்தங்கள் இன்றி உற்பத்தி திறன் பாதிக்கப்படாவண்ணம் செயலாற்றினார்.
74.சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினரல்ஸ் தொழிற்சாலையை நிறுவினார்.1979ல் தமிழகத்தின தொழில் வளர்ச்சி 5.2சதவீதத்திலிருந்து 1982ல் 12.1சதவீதமாய் உயர்ந்தது.
75.இது தவிர மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தைப பிடித்தது.
76.1977-78ல் தமிழகத்தில் 2124 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 1983-84 ஆம் வருடத்தில்3344 மெகாவாட்டாக உயர்ந்தது.
77.20000 இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
78.கடுமையான வெள்ளத்தின்போது ரேஷன் கடைகளில் அரிசி விலையை ரூ1.75ஆக குறைக்க உத்தரவிட்டார்.
79.அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட ஆணை பிறப்பித்தார்.
80.பெயர் பலகை விளம்பர பலகைகளில் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
நாளை தொடரும்-: எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி 9
81.தமிழ் சான்றோரகளின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாட வழிவகுத்தார்.
82.வறுமையில் வாடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார்.
83.திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார்.அதற்கு திருக்குறள் முனுசாமி என்ற அறிஞரை தலைவராக நியமித்தார்.திருவள்ளுவர்
திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
84.தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.
85.சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திரு.வி.க..விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
86.மதுரையில் சங்கப் புலவர்களை கௌரவிக்க நினைவுத்தூண் ஒன்று நிறுவினார்.
87.மேலும் அதே மதுரை மா நகரில் தமிழன்னை சிலையையும் நிறுவினார்.
88.காவலர்கள் சீருடையில மாற்றங்கள் கொண்டு வந்தார்.
89.சென்னை வெப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலை கழகம் நிறுவ அடித்தளமிட்டார்.
90.பல்வேறு புதிய அரசுக் கட்டிடங்களை தானே திறக்காமல் தன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் எளிய மேஸ்திரிகளைக் கொண்டு திறக்கச் செய்து எளியவர்களையும் கௌரவித்தார்.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆரின ஆட்சி சாதனைகள்100
நிறைவுப்பகுதி 10
91.திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்து அதற்கான வேலைகளை தொடங்குமுன்னர் எப்போதும் முட்டுகட்டை போடும் சில தலைவர்களின் போராட்டம் காரணமாக அவருடைய மனதுக்குகந்த முடிவை தள்ளி போடவேண்டியதாயிற்று.பின்னர் அவரின் உடல்நலக்குறைவால் திட்டம் நடைபெறவில்லை.இன்றும் பல கருத்தாய்வளர்களால் அத்திட்டம் மட்டு்ம் நிறைவேவறியிருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.
92.மற்றொரு அவரது முடிவாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கிடு அமுல்படுத்தப்பட்டது.இதுவும் அவரது எதிர்ப்பாளர்களால் முடக்கப்பட்டது.அதன் காரணமாக இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு கடைக்க வேண்டிய சலுகைகள் பெற முடியாமற போயிற்று.
93.சத்துணவுத்திட்டம் இந்தியாவுக்கும் முன்னோடீத்திட்டமாக இன்று உள்ளது.ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்கு பல பிணிகள் நீங்கியுள்ளதை ஆவணப்படுத்தி உள்ளன.
94.பூரண மது விலக்கு 1977 முதல் 1980 வரைஅமுல்படுத்தினார்.அதன் பிறகு அமுல் படுத்த முடியாமைக்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.
95.பெண்களுக்கென பேரூந்துகள் அவரது ஆட்சியில்தான் முதன்முதலாக இயக்கப்பட்டன.
96.சுற்றுலாத்துறை மேம்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
97.குடிசைகளுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டத்தினை அமுல்படுத்தினார்.
98.மின்சாரத்தேவையை மனதில் கொண்டு குந்தா போன்ற நீர் மின்நிலையங்களை அமைத்தார்.காற்றாலைகள் அமைத்திட அரசு உதவி அளித்தார்.
99.தமிழக மக்களின் நலனை மனதிற்கொண்டு மத்தியில் அமையும் மாற்று கட்சிஅரசுடனும் சுமுக உறவு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டுவர ஏற்பாடு செய்தார்.
100.பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கிட அன்றைய பிரதமர் ராஜிவிடம் உதவி வேண்டினார்.முதலில் மறுத்த ராஜிவ் பின்னர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள அன்பின் காரணமாக சம்மதித்தார்.இத்திட்டங்களையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லவில்லை.எம்.ஜி.ஆர் சொன்னதை செய்தார்.சொல்லாததையும் செய்தார்.முக்கியமாக செய்ததை சொல்ல மாட்டார்
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
அவரது மனித நேயத்தைப் போற்றுவோம்.
அடுத்து எம்.ஜி.ஆரின் திரைப்பட சாதனைகள் 100 -தொடரும்.
நன்றி:அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச்சங்கம் ,தமிழ்நாடு மற்றும் தி இந்து(தமிழ்)............ Thanks VN.,....
orodizli
28th April 2020, 08:52 AM
திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தி.நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.
'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.
இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.
'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த
விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார்.
நான் விடைபெற்றுக்கொண்டேன்.
அடுத்த 2 தினங்களில் திரையரங்கு கட்ட
அனுமதி வந்தது அரசிடமிருந்து !
- நான் நாகேஷ் நூலிலிருந்து .
( படம் ; எம்ஜிஆர் - ஜானகி அம்மையாருடன்
உணவருந்தும் நாகேஷ் , மனைவியுடன் )....... Thanks...
orodizli
28th April 2020, 08:53 AM
எம்.ஜி.ஆர். படங்களில் 'திருடாதே' முதல் 50 க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணி புரிந்தவர் ஷியாம் சுந்தர். நல்ல தோற்றமுடைய இவர் நடிப்பதற்காக சினிமாவிற்கு வந்தவர். ஆனால் சண்டைப் பயிற்சியாளராகிவிட்டார்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின்
ஷியாம் சுந்தர் படிப்படியாக சினிமாவைவிட்டு விலகி பெங்களூரு போய்விட்டார்.
ஒரு நாள் புகைப்படக் கலைஞர்
திரு ஆர். என். நாகராஜராவ் அவர்களிடமிருந்து எனக்கு போன்
வந்தது, "உங்களுக்கு ஒரு அதிசயம்
காத்திருக்கிறது. உடனே வாருங்கள்" என்று.
அதன்படி நேரில் சென்றால், அங்கு
திரு ஷியாம் சுந்தர் எனக்காக காத்திருந்தார். ராவ் அவரது நீண்ட கால
நண்பர்களில் ஒருவர். ஏற்கனவே அவரிடம் ஷியாம் சென்னை வந்தால், தெரிவிக்கும்படி சொல்லியிருந்தேன்.
திரு ஷியாம் சுந்தர், எம்.ஜி.ஆரது
ஆஸ்தான சண்டை பயிற்சியாளரல்லவா, பழகும் தன்மையில் மனதை நெகிழ வைத்தார்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது உறவினர் இல்லத்தில் சந்தித்து பேசி
படங்கள் எடுத்து 'தினமலர்' தீபாவளி மலரில் எழுதினேன்.
ஷியாம் சுந்தர், சிவாஜி நடித்த
'சிவந்த மண், தியாகம் படங்களிலும்
பணி புரிந்திருக்கிறார் எம்.ஜி.ஆரின்
அனுமதி பெற்றே.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan...... Thanks...
orodizli
28th April 2020, 08:56 AM
ஒரு முறை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார் வேனில் ரோட்டின் இரு மறுங்கிளும் மக்கள் திரளாக நின்று கோஷமிட மாலை போடவும் ஆராவாரமாக வந்து கொண்டிருந்தார் ஏழுமலை என்ற கிராமத்தை அடைந்தவுடன் திடீரென வேன் நின்றது ஏன்? என்று பார்க்கையில் ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் வழியை மறைத்து படுத்துக்கொண்டார் உடனே வேனை விட்டு எம்ஜிஆர் இறங்கி விட்டார் குழந்தைகள் மற்றும் வயதான மூதாட்டிகளுக்கு முதலிடம் கொடுப்பார் எல்லோரும் அறிந்ததே!
என்ன வேண்டும் எழுந்திரியுங்கள் என்றதும் எம்ஜிஆரை முதன் முதலில் அருகில் பார்த்த பாட்டிக்கு கண்ணீர் பொங்குகிறது வாய் வார்த்தை வரவில்லை பின் தளத்த குரலில் நீ நல்லா இருக்கனும் ராசா சரிம்மா என்னனு சொல்லுங்க ஒன்னும் இல்லப்பா என் வயலு ரெண்டு வருசமா விளச்சலே இல்ல ஓ பாதம் பட்டா விளையும் னு சொன்னாங்க... அதா நல்ல மழை பெய்தால் தானா விளையும் அம்மா சரி வாங்க எங்கே? இருக்கு என்றார் தலைவர் அந்தா தெரியுது பாருப்பா என்றதும் கூட்டத்தில் விசில் பறக்குது கூட்டம் பின் தொடர எம்ஜிஆர் யாரும் என் பின்னே வரக்கூடாது வயல் கெட்டு விடும் என்று கட்டளையிட்டவாரே வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு ஐந்து நிமிடத்தில் சென்று தன் செருப்பை கழட்டி விட்டு வயலை தொட்டு வணங்கி விட்டு திரும்பினார் தலைவர்
பச்சை பசேலான வயலில் வெள்ளை ஜிப்பா வேஷ்டியில் வெள்ளை கலர் தொப்பி கருப்பு கண்ணாடி தங்கமான நிறத்தில் அவர் முகம் நேரடியாக அன்று அவரை பார்த்த கண்கள் தூங்கி இருக்கவே முடியாது
பின்பு அந்த பாட்டி தயாராக வைத்திருந்த குண்டு சோடாவை கொடுக்க தன் பெருவிரலால் ஒரே அமுக்கு அமுக்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டியை கட்டி பிடித்து விட்டு கை ஆட்டிக் கொண்டே வேனில் ஏறி பறந்தார் எம்ஜிஆர் இது தான் கூட்டத்தில் எல்லோரும் பார்த்தது
ஆனால் பாட்டியின் முந்தானை கொசவத்தில் பேப்பரில் சுற்றிய பணக்கட்டு யார் கண்ணுக்கும் தெரிய வில்லை அதை கட்டிப்பிடிக்கும் போதே தனது ஜிப்பாவில் இருந்து மாற்றி விட்டார் தலைவர் சென்ற பின் அந்த பாட்டியை கட்டிப்பிடித்த பெண்கள் எத்தனை பேர்? அவ்வளவு சந்தோஷம்
பின் தன் உதவியாரிடமும் ஓட்டுனரிடமும் என்னை எவ்வளவு தூரம் நம்பி இருக்கும் இந்த மக்கள் எல்லோருக்கும் எப்படி நான் உதவ போகிறேன் என்று தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கர்சிப்பால் கண்ணை தொடைத்து கொண்டே பயணமானார் #பொன்மனச்செம்மல்
நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற....
என்ற பாடல் தூரத்தில் ஒலித்த வண்ணமே இருந்தது
மீண்டும் வருவேன் நண்பர்களே!
#எல்லாபுகழும்எம்ஜிஆர்கே... Thanks...
orodizli
28th April 2020, 08:57 AM
வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியக்கூடாது என நினைப்பவர் எங்கள் தங்கம் ஏழைகளின் இதய தெய்வம்...... Thanks...
orodizli
28th April 2020, 08:58 AM
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"
# இது எப்போதோ ஒருமுறை நான் எழுதியது...!
ஆனால் இப்போதும் , எம்.ஜி.ஆர்.பற்றி என் கண்ணில் படும் ஒவ்வொரு செய்தியும் , நான் எழுதியதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன..!
# இதோ , ஒரு வெண்பொங்கல் செய்தி..!
# அந்தக் கால தேர்தல் பிரச்சார சமயங்களில் , அண்ணா - காமராஜர் – கருணாநிதி - எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் தலைவர்கள் , முக்கியமான நகரங்களில் , ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போவார்களாம்..!
அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக அன்று மாலை முதலே பக்கத்து கிராமங்களில் இருந்து , மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து , கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பார்களாம் !
ஒரு வழியாக நள்ளிரவில்தான் தலைவர்கள் மேடைக்கு வந்து சேருவார்களாம்..!
அவர்கள் பேசி முடித்து விட்டுப் போன பிறகு , அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அங்கேயே....அந்த பிரச்சார திடலிலேயே துண்டை விரித்துப் போட்டுத் தூங்கி விடுவார்களாம்..! வேறு என்ன செய்வது..? விடிந்த பிறகுதான் ஊருக்குப் போக முதல் பஸ் வரும்..!
எந்தத் தலைவர் வந்து பேசி விட்டுப் போனாலும் , இதுதான் நிலைமை..!
வருவார்கள்...பேசுவார்கள்...செல்வார்கள்..!
ஆனால் ..ஒரே ஒரு தலைவர் மட்டும் , நள்ளிரவில் வந்து பேசி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போகும் முன் , தன் கட்சியை சேர்ந்த அந்த ஏரியாவின் பொறுப்பாளரைக் கூப்பிட்டு , திடலில் தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் , காலை எழுந்தவுடன் சுடச்சுட சாப்பிட வெண்பொங்கல் கொடுத்து அனுப்ப ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு , அதற்கான செலவையும் கொடுத்து விட்டுத்தான் போவாராம்..!
அவர்.....வேறு யாராக இருக்க முடியும்..?
எம்.ஜி.ஆர்.!
சில வேளைகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட , எம்.ஜி.ஆரின் இந்த வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு , எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிய அனுபவங்களும் உண்டாம்..!
# எண்ணிப் பார்க்கிறேன்...!
என்ன அவசியம் வந்தது எம்.ஜி.ஆருக்கு...?
மற்ற தலைவர்களைப் போலவே ..வந்தோமா..? பேசினோமா..? புறப்பட்டுப் போனோமா? என்று இல்லாமல் , எதற்காக அங்கே இருக்கும் மக்களின் அடுத்த நாள் காலை பசியைப் பற்றி கவலைப்பட வேண்டும்..?
அதனால்தான் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்..!
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"........ Thanks...
orodizli
28th April 2020, 08:58 AM
சகோ அந்த ஒரே ஒரு நல் இதயத்தை வைத்து கொண்டு பல கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை அடித்து விட்டார் நம் தலைவர்....... Thanks...
orodizli
28th April 2020, 09:00 AM
பகவானின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரம் மற்றும் கூர்ம அவதாரம் மிகவும் முக்கியமானது மச்ச அவதாரம் குறிப்பிடுவது மீன்கள் இந்த மீன்கள் குஞ்சு பொறித்து கண்ணும் கருத்துமாக தன் மீன் குஞ்சுகளை வளர்க்கும் அது போல பகவான் அவனது படைப்பில் மனித ஜீவராசிகளை கண்ணும் கருத்துமாக சதாசர்வகாலமும் பாதுகாப்பார் என்பது உணர்த்தும் மச்ச அவதாரம் அது போல் கூர்ம அவதாரம் ஆமைகள் தன் முட்டைகளை கடற்கரை மணலில் ஆழத்தில் குழி தோண்டி தன் முட்டைகளை இட்டு திரும்பவும் கடலுக்குள் சென்று விடும் ஆனால் அந்த ஆமைகளின் எண்ணம் எல்லாம் அந்த முட்டைகள் மேல் தான் இருக்கும் முட்டைகளை மற்ற விலங்குகள் அழித்து விடுமோ என்ற அச்சத்துடன் காலத்தை ஓட்டும் அது போல் பகவானும் மக்களுக்கு துன்பம் நேராமல் மக்களை பற்றியே சதா சர்வகாலமும் நினைத்து க்கொண்டிருப்பார் இந்த இரண்டு அவதாரங்களின் குணங்கள் தலைவர் திரு எம் .ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கு அமைந்தது தெய்வ கடாட்சம் என்று சொன்னால் மிகையாகாது.......... Thanks.........
orodizli
28th April 2020, 09:03 AM
Well said! We are lucky enough for living in his period and He stays with us! We thank the God!...... Thanks...
orodizli
28th April 2020, 09:04 AM
நண்பர் முத்துசாமி சொன்னது போலவே அவரின் கடைசி காலங்களில் ஒரு நல்ல தாயே போன்றே மனிதாபிமான முறையில் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தார் என்பது தான் உண்மை அவர் நல்லவர் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிலைத்து வாழ் கிரார் அவர் தான்..... Thanks...
..
orodizli
28th April 2020, 09:05 AM
தாய் மனம் உலகில் போற்றுதற்குரியது மக்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் திகழும் அம்மையப்பன் கலியுகத்தில் தன் பணியைத் தொடர அவரால் படைக்கப்பட்டவர் தான் தாயுள்ளம் கொண்ட பொன்மனச்செம்மல்.... Thanks...
orodizli
28th April 2020, 09:07 AM
தினமும்..திரு.எம்.ஜி.ஆர்..
திரை காவியங்களை சின்னதிரையில் ஒளிபரப்பி
தமிழ் மக்கள் அனைவரையும்
இந்த ஊரடங்கும் காலத்தில் வெளியே வராமல்..தடுத்து மன.
நிம்மதியை கொடுத்த..
அனைத்து சின்னதிரை
சேனல்களுக்கு.நன்றி.நன்றி.. நன்றி...... Thanks...
orodizli
28th April 2020, 12:47 PM
#எதிரிகள்னா #யாரு???
எஸ் எஸ் சிவசங்கர் என்ற திமுக பிரமுகரின் எம்ஜிஆர் பற்றிய நினைவலைகள்...
ஆட்டோவில் போகும் போது பார்த்தேன், சாலை ஓரத்தில் ஒரு நாற்காலி. நாற்காலி மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் படம். மாலை போடப்பட்டிருந்தது. நாற்காலி அருகே பிளாட்ஃபார்ம் மீது ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். கண்களில் லேசான கலக்கம். “விழியே கதை எழுது” கனவுப் பாடலாகக் கூட இருக்கலாம்...
1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது.
பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.
1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.
இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை விரும்பி ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்ஜிஆரை தீவிரமாக விமர்சித்தவன்.
1987... அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்களுடன்... திடீரென ஊரே மயான அமைதி. எம்ஜிஆர் மறைவுச் செய்தி.
நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.
நினைவுகளிலிருந்து மீண்டேன்...
அந்தப் பாட்டியை பார்த்தவுடன், இப்படியான எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகள்...
என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம்.
“எப்படி தெரியும்பா?”...இது நான்
“என்னாப்பா எம்ஜிஆர எனக்குத் தெரியாதா?”
என்று அசால்ட்டா கூறிய என் மகனை வியப்புடன் பார்த்தேன்........ Thanks.........
orodizli
28th April 2020, 12:48 PM
தலைவரே பாடி இருக்கிறார்! தாய்வழி வந்த தங்கங்கள் யாவரும் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! எனவே தாய்வழி உறவை அழிக்கமுடியாது! தாய்வழி உறவு இருக்கும் வரை நாளை இருக்கும் வரை நம் தலைவர் இருப்பார்! புகழ் மிளிரும்!..... Thanks...
orodizli
28th April 2020, 12:49 PM
எங்க வீட்டில் என்தாய் என்னுடைய 7ம் வயதில் தலைவரை போட்டோவில் காட்டி எங்களிடம் சொன்னார்"இவருதான் எம்.ஜி.ஆர்.மக்களுக்கு நிறைய நல்லது செய்கிறார்"என்று.நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னோம்"இவர்தான் நம்ம எம்.ஜி.ஆர் தாத்தா.அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சொல்கிறார்கள்"எம்.ஜி.ஆர் தாத்தா.அவர் நம் குடும்ப உறவு........ Thanks...
orodizli
28th April 2020, 12:50 PM
ஆம் ! வழி வழியாக நம் பக்தர்கள் குடும்பங்களில் இப்படித்தான் சின்னஞ் சிறு பிள்ளைகள் கூட தலைவரை பற்றி அறிந்து மகிழ்கிறார்கள் ! அடுத்தடுத்த தலைமுறைக்கு தலைவர் புகழ் பயணமாகிறது ! ......... Thanks...
orodizli
28th April 2020, 12:53 PM
என் அப்பாவுக்கு அவர் தந்தை சொன்னார் தலைவரை பற்றி
என்* அப்பா *எனக்கு சொன்னார் தலைவரை பற்றி...
நாளை நான் என் குழந்தைக்கு சொல்லுவேன் தலைவரை பற்றி...
ஆம்*
#அதிமுக என்பது
#இயக்கம் அல்ல
எங்கள்
#இதயம்....
பல தலைமுறைகளுக்கும் அணையாமல் துடிக்கும்... எப்பொழுதும் அவர் படம் பார்க்கும் முழு ரசிகன்...
இவன்
அஇஅதிமுக
அடிமட்ட
தொண்டன்
அருண்.......... Thanks.........
orodizli
28th April 2020, 12:54 PM
மறக்க முடியாத மாணிக்கம் தான் அருமையான பதிவு செய்து இருக்கிறார் வாழ்க வளமுடன் கண்களில் கண்ணே சேர்ந்து கொண்டு அழுகிறது அருமையான பதிவு பாராட்டுகள்....... Thanks...
orodizli
28th April 2020, 12:56 PM
நம் புரட்சி தலைவரின் அருமைகளை, பெருமைகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். என்றும் ஒரே தலைவர் என்றால் அது நம் தலைவரே. சத்தியம் தவறாத, ஒப்பற்ற தலைவர் ஆவார். மக்களே மனம் திரும்பி வாருங்கள் தலைவர் பக்கம். உங்களுக்காக நல்ல, பல அரிய வாய்ப்புகள் காத்து கிடக்கின்றன.......... Thanks...
orodizli
28th April 2020, 12:57 PM
கண்ணுக்குள் பட்ட அத்தனை மக்களும்
கன்னத்தை தொட்டு முத்தம் இடுபவர்களே
மிச்சம் மீதி வைக்காத சுத்தமான தங்கமகனே
எப்படியும் எந்தவிதத்திலேயும் ஒவ்வொருக்கும்
புரிய வைத்த மஹான் என்பது .... காலம் செல்ல செல்ல தெய்வமாகியது எந்த விதமான ஆச்சர்யமில்லையே.....
யாரொருவன் தனக்கென வைத்துக் கொள ளாமல் பிறருக்காக வாழ்ததே.....இன்றும் தெய்வமாக இருக கிறார் என்பதில் ......உண்மையே அதிகம்
உறவுகள் சொல்வதில் உறுதியானதே......
வாழ்த்துகள் பதிவிற்கு....... Thanks to Keshavkumar
orodizli
28th April 2020, 01:02 PM
இன்றும் தொலைக்காட்சி மூலம் அனைவரையும் கவரும் மன்னாதி மன்னன், இதயம் கவரும் மனிதநேய சக்கரவர்த்தி, மஹான், சித்தர் மக்கள் திலகம் புகழ் என்றென்றும் நீடூழி வளர்க, வாழ்க......... Thanks...
orodizli
28th April 2020, 01:06 PM
படத்தில் இருப்பவர்களுடன் புரட்சி தலைவர் சந்திப்பு ஏன் என்று யூகிக்க முடிகிறதா? அவர்கள் அனைவரும் நேஷனல் சர்க்கஸ் கலைஞர்கள். மக்கள் திலகம் பார் விளையாடும் கலைஞராக "பறக்கும் பாவை"யில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடித்த பார் விளையாடும் கலைஞர்கள் தலைவரை காண பேராவல் கொணடதை தெரிந்து கொண்டு தலைவரே அவர்களை நேரில் சர்க்கஸ் கூடாரத்திலேயே சந்தித்து அளவளாவினார். சுமார் 15 நாட்கள் அவர்கள் சர்க்கஸ் கூடாரத்தில் படப்பிடிப்பு நடந்ததை நினைவு கூர்ந்தார்கள்.
ஒரு தடவை தலைவரை சந்தித்து விட்டால் போதும் வாழ்நாளில் அது ஒரு மறக்கமுடியாத நினைவுகளாக மாறி விடுகிறது. ம்.ம் கொடுத்து வைத்தவர்கள் நேஷனல் சர்க்கஸ் கலைஞர்கள்.......... Thanks...
orodizli
28th April 2020, 01:16 PM
MGR Filmography Film 52 (1962) Poster
1961ஆம் ஆண்டின் முதல் எம்ஜியார் படம் ஒரு ராஜா ராணி காஸ்ட்யூம் படமாக (அரசிளங்குமரி) வெளியாகி சராசரி ஆனது. பின்னர் ஒரு சமூகப்படம் (திருடாதே) அவரை மீண்டும் வசூல் சக்ரவர்த்தியாக்கியது.
1962ஆம் ஆண்டு . அந்த ஆண்டின் முதல் படமாக வெளியானது இந்திய வரலாற்றில் ஒரு பாகமாக அமைந்து விட்ட ப்ரிதிவிராஜ் சம்யுக்தாவின் காதல் கதை.
கண்ணதாசன் திரைக்கதை வசனம் பாடல்கள் அனைத்தையும் மேற்கொள்ள, எம்ஜியாரின் ஃபேவரிட்டான மாமா (கேவி மகாதேவன்) இசையமைக்க டி.யோகானந்த் இயக்கிய இப்படம் 1962ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியானது. மொத்தம் எட்டு பாடல்கள்; எட்டும் ஹிட் ஆகின. ஆனால் படம் ஹிட் ஆகவில்லை. வணிக ரீதியாக ஆவரேஜ் எம்ஜியார் படங்கள் என்ற லிஸ்ட்டில் இது சேர்ந்துவிட்டது.
ஓரளவு கச்சிதமான திரைக்கதை, எம்ஜியாருக்கான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள், பத்மினிக்குத் தேவையான அளவு செண்டிமெண்ட் சீன்கள் எல்லாம் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெறாததற்கு, காஸ்ட்யூம் டிராமாக்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு குறைந்து விட்டது பிரதான காரணமாக இருக்கலாம் இல்லையேல் எம்.ஜி.ஆர் மரணிக்கும் முடிவு கொண்ட படம் திரும்ப திரும்ப ரசிகர்களால் ரசிக்கபடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்
எம்ஜிஆர் இறப்பதாக நடித்த எந்த படமாவது வெற்றி பெற்றிருக்கிறதா?
சின்ன அண்ணாமலை எழுதிய நம்ப மாட்டீர்கள் என்ற புத்தகத்தில் அவர் ஒரு அனுபவத்தை சொல்கிறார். ஒரு பயணத்தின் போது இரவு வேளையில் ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தாராம். நைட் ஷோ முடிந்து மக்கள் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். என்ன படம் என்று இவர் கேட்டிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்தும் பலர் பேசினார்களாம், ஆனால் ஒருவர் இதெல்லாம் ஒரு படமா என்ற தோரணையில் பேசி இருக்கிறார். இவர் ஏன் உங்களுக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் சொன்னாராம், “நடிப்பெல்லாம் கிடக்குதுங்க, இதுவே எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் ஒரு போடு போட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடி சூட்டிக்கிட்டிருப்பாரு!” என்றாராம். தமிழனான கட்டபொம்மனே எம்ஜிஆர் நடித்தால் தோற்கமாட்டார் என்றால் அவ்வளவாக தெரியாத ப்ரித்விராஜின் கதி என்ன? இது உண்மைக் கதை என்றே நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.
ஓ வெண்ணிலா, நிலவென்ன பேசும் போன்ற டூயட் கானங்களுக்காகவும், ஜமுனா ரராணியின் சித்திரத்தில் பெண்ணெழுதி எனும் சோக கீதத்திற்காகவுமே நினைவில் கொள்ளத் தக்கதாகி விட்டது இப்படம்.......... Thanks...
orodizli
28th April 2020, 01:29 PM
ஒரு திரைப்படத்தின் தாக்கம் சமுதாயத்திலும் எதிரொலிக்குமா என்றால், ஆம் எதிரொலிக்கும். சமூக அவலங்களைப் பேசும் சினிமா அரசியலையும் பேசித்தானே ஆக வேண்டும். ஆளும் ஆட்சியாளர்களை இந்த சினிமா தான் அடையாளம் காட்டியது.
அது அறுபதுகளின் பிற்பகுதி. பரபரப்பான தேர்தல் நேரம். வீதிக்கு வீதி மேடை போட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். பெருந்தலைவர் மத்தியப் பணிக்காக டெல்லியில் இருந்தார். இங்கே ஆண்டுகொண்டிருந்தது பக்தவத்சலம். அவரால் நிர்வாகத்தை சரியாக கவனிக்க முடியவில்லை. அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாட அதையே பிரச்சாரமாக்கி படியரிசித் திட்டத்தை முன் மொழிந்தார் அண்ணா. காங்கிரஸை கழகம் வறுத்தெடுத்துக்கொண்டிருந்த நேரம்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கேட் அன்று ஃபேமஸ். மூடினால் அவ்வளவு சீக்கிரம் திறக்காது. மக்கள் திலகத்தின் கார் அதில் சிக்கிக்கொண்டது. மக்கள் கூட எதிரே ஒரு கருப்பு அம்பாஸிடர். சபாபதி அது பெரியவர் காரா பாரு என உதவியாளரிடம் கேட்க ஆமங்க அவரு கார் தான். உள்ளே இருக்காரு என்றார். சட்டென கதவைத் திறந்து காரை நோக்கி நடந்தார் மக்கள் திலகம்.
காரின் உள்ளே அமர்ந்திருந்தது பெருந்தலைவர். மேடைக்கு மேடை அவரை திட்டித் தீர்த்த கழகத்தவர்களில் அவரை விமர்சிக்காத ஒரே பிரபலம் மக்கள் திலகம்தான். எம்.ஜி.ஆரைக் கண்ட பெரியவர் கதவைத் திறந்து வெளியே வரமுயல வேண்டாம் வேண்டாம் உள்ளேயே உட்காருங்க என சொல்லிக்கொண்டே குனிந்து அவரிடம் உரையாடத் தொடங்கினார். டெல்லி வாசம் பற்றி விபரம் கேட்டுவிட்டு ஏன் தனியா வந்திருக்கீங்க செக்யூரிட்டி கூட இல்லாம எனக் கேட்டதும் எனக்கெதுக்கு செக்யூரிட்டி. என் மக்களாள எனக்கெப்படி ஆபத்து வரும்.?. ஈசியாகச் சொன்னார் தலைவர். அதற்குள் கேட் திறக்க அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு காருக்குத் திரும்பினார் மக்கள் திலகம்.
காரில் அமர்ந்திருந்த ரவீந்தரைப் பார்த்து உரையாடலைச் சொல்லி விட்டு நம்ம அடுத்த படத்துக்கு கதைக்கரு கெடச்சிருச்சு ரவீந்தர். ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாரு தெரியுமா?. கத்தியில்லாம பாதுகாப்பு இல்லாம சவால் இல்லாம யாரு மக்கள் மத்திய எளிதா வர்ராங்களோ அவங்க தான் உண்மையான அரசன். நம்ம பிரச்சாரத்துக்கு ஏத்த மாதிரி இதை வெச்சு ஒரு கதை பண்ணு. நம்ம ஏ.கே.வேலன் கதை ஒண்ணு படமாகாம நின்னு போச்சில்ல.?. எது பவானியா?. அந்தக் கதையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணிக்கலாம். அண்ணன் ஃபேமிலிக்காக இந்தப் படத்தை எடுக்கலாம் அவரே டைரக்ட் பண்ணட்டும் என்றார். அப்படிப் பிறந்த படம் தான் அரச கட்டளை. பொம்மை இதழுக்காக ரவீந்தர் அளித்த தொடரில் இந்தச் செய்தி இருந்தது.
சக்கரபாணியின் மகனான ராமமூர்த்தி மகளான சத்தியபாமா பெயரில் உருவான பட நிறுவனம் தான் சத்திய ராஜா பிக்சர்ஸ். பெரியவரே படத்தை இயக்க முழுக்க முழுக்க கதை திரைக்கதை வசனங்களை மேற்கொண்டது ரவீந்தர். வழக்கம்போல் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என டைட்டில் கார்டு வந்தது கூடப் பரவாயில்லை. சம்பந்தமே இல்லாமல் இலாகாவிற்குக் கீழே மூன்று பெயர்கள் இருந்தது. ஆர்.எம்.வீரப்பன் , வித்வான் லட்சுமணன்,மற்றும் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பங்குதாரர் ஏ.டி.கே.சாமி. மூவருமே நிர்வாகத்தில் இருந்தவர்கள். வரவு செலவு கணக்குகளை கவனித்துக்கொண்டவர்கள் கதை திரைக்கதையில் உள்ளே நுழைந்தது எங்குமே நடக்காத அதிசயம்.
படத்தை விரைவாக முடிக்க இரவு பகல் பாராது விழித்திருந்து வசனம் எழுதிய ரவீந்தர் வசனங்கள் தான் படத்தில் வந்தவை. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் இந்தப் பாவிகளின் நாக்கை துண்டு துண்டாக வெட்டுவேன். கலைச் செல்வி பொங்க அதற்கு மக்கள் திலகம் மறு மொழியாக அதனால் தான் அதிகாரம் உன் கையில் இல்லை என்பார். மதனா!. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல் படி. அரசியல் அகராதிப்படி. அப்படியா!.. இன்னும் எத்தனை படிகளோ!.. அதற்குள் உருப்படியாக ஓடிவிடுவோம் வாருங்கள்.
ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்று தான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும் வரை. ஆட்சியில் ஆபத்து நிறைந்திருந்தாலும் எவ்வளவு சுகமாக இருக்கிறது பார்த்தீர்களா!.. அந்த சுகத்திலே தான் பதவி வெறியே பிறக்கிறது மதனா. இதில் மயங்கித் தான் ஆட்சியிலே இருப்பவர்கள் மக்களை மறந்தார்கள். துன்பத்தை விதைத்தார்கள் துயரத்தை வளர்த்தார்கள். அட்டகாசமான வசனங்கள் அத்தனையும் ரவீந்தர் கை வண்ணம். உன் உயிரைப் பறித்துவிடுவேன் என நம்பியார் எச்சரிக்க செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர் நீங்கள் நினைத்த உடன் கை நீட்டிப் பறிப்பதற்கு என்பார் மக்கள் திலகம்.
கழகத்தவர் பலர் திரைத் துறையில் கோலோச்சக் காரணம் அவர்களது எழுத்து வலிமை. அறிஞர் அண்ணாவும் கலைஞரும் மாறனும் பல படங்களில் தங்களை நிரூபித்தவர்கள். அவர்கள் பெயரும் பிரபலமானது. அதைப் பின்பற்றித்தான் சொர்ணமும் உள்ளே நுழைந்தார். ஆனால் அவர் எழுதிய அநேக எம்.ஜி.ஆர்.பட வசனங்களை கூடவே இருந்து எழுதியது ரவீந்தர். நாடோடி மன்னனில் டைட்டில் கார்டில் கவியரசோடு இணைந்து வந்ததோடு சரி.அதற்குப் பிறகு எங்குமே அவரது பெயரைக் காண முடியவில்லை. அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி. சொன்னது ரவீந்தர்.அதை அவரே ஒரு கட்டுரையில் சொன்னார்.யாருமே மறுக்கவில்லை.
மக்கள் திலகத்தைப் பொறுத்தவரை பாடல் வரிகளை உற்றுப் பார்ப்பார். காரணம் ரெக்கார்டிங் போனால் மாற்றுவது கடினம்.வசனங்கள் ஆன் த ஸ்பாட்டில் மாற்றிப் பேசலாம். அதனால் அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார். அவருக்கு ஆழமான தமிழறிவு உண்டு. கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவதோடு சரி. அவரது டேஸ்டிற்கு வசனம் எழுத அவர் கூட இருப்பவர்களுக்குத் தெரியும். பாய்ஸ் கம்பெனி காலம் தொட்டே அவர் தமிழோடு விளையாடியவர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்கள் அப்போதே அவருக்கு மனப்பாடம். ஆன் த ஸ்பாட்டில் குறைகளைக் கண்டுபிடித்துவிடுவார்.
இதே அரச கட்டளைக்காக வாலியிடம் அவர் பாடல் கேட்க பல்லவியைப் பார்த்த மாத்திரத்திலேயே கோபமானார். வாலி எழுதியிருந்த பல்லவி தொடங்கும்போதே அந்த ஆண்டவன் கட்டளை முன்பு உன் அரசகட்டளை என்னாகும். நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை ஓடிக்கொண்டிருக்கிறது . அரச கட்டளை ரிலீஸாகப் போகிறது. பல்லவியே படத்தை டேமேஜாக்கிவிடும் என்பதை சட்டென புரிந்து வாலியிடம் சொல்ல ஏகப்பட்ட பாடல்கள் எழுதிய வாலிக்கே அப்போது தான் அந்த விபரீதம் புரிந்தது. நீங்க வேற சிச்சுவேஷனுக்கு எழுதுங்க என இன்னொரு பாடல் கொடுக்க பயந்து போன வாலி பாட்டாலே அவரைக் குளிர்வித்தார். அந்தப் பாடல் தான் என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன் தான் தலைவன். அவர் மிஸ் பண்ணிய சிச்சுவேஷனுக்கு வந்த பாடல் தான் ஆடிவா ஆடிவா ஆடிவா.
எல்லாப் பாடல்களுமே ஹிட்டாகக் காரணம் திரையிசைத் திலகம். அவசர அவசரமாக தேர்தலுக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் உணர்ச்சிப்பூர்வமான வரிகளுக்கு அதே உணர்வோடு அவர் மெட்டமைத்திருந்தார். ஆடிவா பாடலின் ஊடே ஒரு சண்டைக் காட்சியும் இருக்கும். அதற்கேற்ப இடையிசை தந்திருப்பார். தடை மீறிப் போராட சதிராடி வா செந் தமிழே நீ பகை வென்று முடி சூட வா என ஐயா அழைத்தது அறிஞர் அண்ணாவை. மயிலாட வான் கோழி தடையா?. குயில் பாட கோட்டான்கள் தடையா?. முயற் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ என ஏகப்பட்ட கேள்விக் கணைக்கள் அரசை நோக்கி இந்தப் பாடலில் அவர் வைத்தார்.
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு ஒரு அருமையான பாடல். குறும்பையாடு முந்தாதே குள்ள நரியை நம்மாதே என ஒரு பாடலில் அட்வைஸ்.பண் பாடும் பறவையே என்ன தூக்கம் என கண்மணிகளை எழுப்பி விட்டது இன்னொரு பாடல்.நீ தாயற்ற கன்று போல ஆகலாமா?. ஆண்டாண்டு காலம் நாமாண்ட நாடு.தூங்கித் தூங்கி சோர்ந்துவிட்டதிந்த நாடு. பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் அவர் பரம்பரையின் கால்கள் மீது மலர்களை வீசும் பயந்து வாழும் அடிமைகளை பூனையும் ஏசும் அவர் பால் குடித்த தாயைக் கூட பேயெனப் பேசும். ஆஹா ஆஹா என புகழ்ந்தார் அதே வாலியை மக்கள் திலகம்.
புத்தம் புதிய புத்தகமே உனை புரட்டிப் பார்க்கும் புலவன் நான். அந்தப் புலவனே வியந்த பாடல் இதே வாலியின் கற்பனைச் சிறகு விரிந்த பாடல். அஞ்சு விரல் பட்டால் என்ன அஞ்சுகத்தை தொட்டால் என்ன?. தொட்ட சுகம் ஒன்றா என்ன துள்ளும் உள்ளம் பந்தா என்ன?. செவ்விதழை கண்டால் என்ன தேனெடுத்து உண்டால் என்ன?. கொத்து மலர்ச் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன?. மக்கள் திலகத்தை அசரடிப்பதில் வாலி என்றுமே சளைத்ததில்லை. குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட பேர்கள் உழைத்தார்கள். அதன் பலனை அனுபவிக்கும் முன்பே அங்கொரு குண்டு வெடிக்க இந்தப் படம் தப்பிக்க ரவீந்தர் உழைத்த காவல்காரன் மாட்டிக்கொண்டது ஒரு ஆன்ட்டி க்ளைமாக்ஸ்.......... Thanks.........
orodizli
28th April 2020, 01:33 PM
சார் அட்டாகசமான அலசல். எம்.ஜி.ஆர் சுடப் பட்டதால் இந்தப் படம் பாதியில் நின்று விட்டது. பிறகு அவர் உயிர் பிழைத்து, குண்டடி தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தபின் வெளி வந்த முதல் படம். அதனால்தான் இந்தப் படத்தில், "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை,ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை" எங்கிற விருத்தமே வந்தது என்று சொல்லுவார்கள். இதில் பல பேர் கவனிக்காத ஒரு விசேஷம் இருக்கிறது. காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ எங்கிற பாடலில் கடைசி வரிக்குப் பின் இசை மட்டும் வரும். அந்த சமயத்தில் ஜோதிலக்ஷ்மி ஆடிக் கொண்டே தன் இரு கால்களையும் கைகளை விரிப்பது போல விரித்து அமர்வார். இது சாதாரணமாக யாராலும் முடியாது. இந்தப் பாடலைப்போட்டு இப்பொழுது பாருங்கள். நான் சொல்வது புரிய வரும்....... Thanks...
orodizli
28th April 2020, 01:34 PM
தலைவரைப் பற்றி திரு. நாகேஷ் அவர்கள் !
எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!
இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.
ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!
எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!
நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?........ Thanks.........
orodizli
28th April 2020, 02:01 PM
தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது.
எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது.
குதிரை சவுக்கால் அடி வாங்கி நொந்துபோகும் சாது எம்.ஜி.யார் வீட்டைவிட்டு ஓட, இன்னொரு எம்.ஜி.ஆர். தற்செயலாக அதே வீட்டுக்கு வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். ....
அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.
இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.
தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடியோபதேசம் பிற்காலத் திரைப்படங்களில் பல வழிகளில் காட்டப்பட்டாலும் ‘அசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான்.
இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் இந்தத் திரைப்படம்தான் வழிகாட்டிப் படமாக இருக்கும்.
தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட,
அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.
நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் பாருங்கள்.
ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது. எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த இந்தப் படத்திற்குத் தெளிவான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம். ......!
நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான்.
இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.
இதெல்லாம் இருக்கட்டும். காவியத் தன்மை பெற்றுவிட்ட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை எப்படி முடியும்?
ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை.
காரணம், சவுக்கு கையில் வந்ததும் இளங்கோ எம்.ஜி.ஆராகிவிடுகிறார்.
பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று எம்.ஜி.ஆர். சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.
எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக ஆக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.
- இந்து டாக்கீஸ்....... Thanks...
orodizli
28th April 2020, 03:09 PM
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்", 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்..
1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது.
Audio time: 2:18:21
இப்படத்தின் தொடர்ச்சியாக மாய பின்பம் குழுமம் ''புரட்சித்தலைவன்''' என்ற முப்பரிமாணப் படம் ஒன்றை அமைப்பதாக இருந்தது........... Thanks...
orodizli
28th April 2020, 03:16 PM
இது அரசியல் பதிவல்ல... ஆன்மிக பதிவு...
1977ல்
ஈரோட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தார் கலைஞர்.
இந்த சம்பவம் நடந்து ஓரிரு வாரங்களில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன் பின்பு நடந்த தேர்தலில் ஒருவர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார்.
அவர் பெயர் M.G.இராமச்சந்திரன் என்கின்ற M.G.R.நம் பொன்மனச்செம்மல்.
எந்த ராமரை இழிவு படுத்தினாரோ அதே ராமன் பெயர் கொண்ட நம் மக்கள் திலகத்திடம் தோற்றார் கலைஞர்.
எம்.ஜி.ஆர்.தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
அதாவது கலைஞரை 14 ஆண்டுகள் அரசியலில் வனவாசத்திற்கு அனுப்பினார் ஸ்ரீ ராமச்சந்திர ப்ரபு.
யாராக இருந்தாலும் கர்மா தப்பாது......... Thanks...
.
.
orodizli
28th April 2020, 03:18 PM
மகா சக்தியுடன் இன்றும் வாழும் தெய்வம்...10.4.2020 அன்று கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாக எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என்றதலைப்பில் இலங்கையில் பிறந்து தமிழகத்தை ஆட்(சி) கொண்டு கேரளாவில் திருமணம் புரிந்த மும்மூர்த்திகளின் அவதாரமாகிய மூன்றெழுத்து தெய்வத்திடம் ஒரு சில சிறிய கோரிக்கை வைத்தோம். மறுநாளே திரு.பெரியாண்டவர் அவர்கள் 15 பைகளில் மளிகை பொருட்களும் அதற்கு அடுத்தடுத்த நாளில் கலைவேந்தன் பக்தர்கள் பாஸ்கர் ரூ 1500.. லோகநாதன் ரூ 1000... மற்றும் 2 மூட்டை அரிசி ஆட்டோ கார் லைசென்ஸ் வினியோக செலவு. ஷிவபெருமாள் ரூ 1000 மற்றும் வினியோக செலவு சாந்தகுமார் ரூ 1000 ஆயிரம்விளக்கு ரகுகுணா ரூ 1000 யும் சைதை கோபாலகிருஷ்ணன் 20 பை மளிகை பொருட்களும் அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம் சார்பாக *ஹயாத் அண்ணன் மூலமாக. ரூ 3000. அண்ணன் முருகு பத்மநாபன் பிரான்ஸிலிருந்து MTCN வழியாக ரூ 5005ம் சத்தியமங்கலம் வாத்தியார் சாமுவேல் ரூ 1500 இதயகனி திரு விஜயன் 1 மூட்டை அரிசி பூக்கடை சக்தி 1 மூட்டை அரிசியும் வழங்கி உதவி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டு இதுவரை 45 பக்தர்களுக்கு மளிகை பொருட்களும் 6 நபர்களுக்கு சேர்த்து 5000 ரூபாய் வங்கி கணக்கிலும் நேரிலும் வழங்கி மொத்தம் 51 நபர்கள் சிறிய பலன் பெற்றார்கள் என்றால் தலைவரின் சக்தி இன்றும் உள்ளது நிஜம் தானே......என்பதை நிருபிக்கவே இந்த பதிவு.... அடுத்த வாரம் மீதி உள்ள பணத்தில் ஒருசிலருக்கு அரிசி காய்கறி வழங்கி விடலாம் என்று மயிலை திரு லோகநாதன் ஆலோசனை வழங்கி உள்ளார். இனி பெரிய மனது படைத்து யாரேனும் உதவினால் அதையும் பெற்று அமைப்பின் பொறுபாளர்கள் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என்பதை இதன் மூலம் தெரிய படுத்தப்படுகிறது.இவன் ஷிவபெருமாள்....... Thanks...
orodizli
28th April 2020, 03:21 PM
https://youtu.be/TQZoHpLyues.... Thanks...
orodizli
28th April 2020, 03:22 PM
என் பார்முலாவே இல்லையேனு எம்ஜிஆர் சொன்னார்’’ - ஏவிஎம்.சரவணன் ’அன்பே வா’ ஃப்ளாஷ்பேக்...
அன்பே வா’ படத்து கதையைக் கேட்டுட்டு, ‘என் பார்முலாவே இல்லையேன்னு எம்ஜிஆர் சொன்னார். ஏவிஎம் எந்த ஹீரோவுக்காகவும் கதை பண்ணினதே இல்லை. எம்ஜிஆர் நடிச்ச ‘அன்பே வா’ படம்தான், ஹீரோவுக்காக ஏவிஎம் கதை பண்ணின முதல் படம்’’ என்று ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.
ஏவிஎம்.சரவணன் தனியார் இணையதள சேனலுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
அப்பா (ஏவி.மெய்யப்பச் செட்டியார்) எப்போதுமே முதல்ல கதையைத்தான் ரெடி பண்ணுவார். கதைக்கான டிஸ்கஷன் போயிக்கிட்டே இருக்கும். கதைல எந்தக் குழப்பமும் இல்ல, எல்லாருக்கும் திருப்தியா வந்திருக்குன்னு முடிவான பிறகுதான் ‘சரி, யார்யாரையெல்லாம் நடிக்கவைக்கலாம்’னு பேச்சு வரும். அப்படித்தான் ரொம்ப வருஷமாவே படம் பண்ணிட்டிருந்தோம்.
ஒருநாள் அப்பா கூப்பிட்டார். ‘என்னப்பா, டிஸ்டிரிபியூட்டர்கள் எல்லாரும் ஏவிஎம் இன்னும் எம்ஜிஆரை வைச்சுப் படமே பண்ணலியேனு கேக்கறாங்க’ன்னு சொன்னார். ‘எங்களுக்கும் அந்த எண்ணம்தான். ஆனா உங்ககிட்ட சொல்றதுக்கு தயக்கமா இருந்துச்சு. டைரக்டர் திருலோகசந்தர் (ஏ.சி.திருலோகசந்தர்) ஒரு கதைப் பண்ணிவைச்சிருக்கார். கேட்டுட்டுச் சொல்லுங்கப்பா’ன்னு சொன்னேன்.
இதுக்கு நடுவுல, நடிகர் அசோகன், எப்பப் பாத்தாலும் ‘எம்ஜிஆரை வைச்சு ஒரு படம் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அதேபோல எம்ஜிஆர்கிட்ட, ‘ஏவிஎம்க்கு ஒரு படம் பண்ணுங்களேன்’ன்னும் சொல்லிக்கிட்டே இருந்தார் அசோகன்.
அப்பா கதையைக் கேட்டாரு. ‘சரி, சின்னவர்கிட்ட (எம்ஜிஆர்) கதையைச் சொல்லுங்க’ன்னாரு அப்பா. நான், திருலோகசந்தர், ஆரூர்தாஸ் எல்லாரும் போய், கதையைச் சொன்னோம். முழுக்கதையையும் கேட்ட எம்ஜிஆர், ’இது என் படம் இல்ல. என் பார்முலா எதுவுமே இந்தப் படத்துல இல்ல. அம்மா கேரக்டர் இல்ல. தங்கச்சி இல்ல. சண்டைக்காட்சிகள் கிடையாது. இது ஏ.சி.திருலோகசந்தர் படம்’னு சொன்னார். ஆனா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார்.
ஆனா, இதுவரைக்கும் எந்தவொரு நடிகருக்காகவும் ஏவிஎம் கதை பண்ணினது இல்ல. கதை பண்ணுவோம்; அதுக்கு யாரு பொருத்தமோ, அவரை ஹீரோவாப் போடுவோம். இத்தனைக்கும் ‘அன்பே வா’ படத்து கதையை எம்ஜிஆருக்காகத்தான் யோசிச்சோம். ‘ஒருவேளை எம்ஜிஆருக்கு கதை பிடிக்கலேன்னா, ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் வைச்சு எடுக்கறதா முடிவு பண்ணிருந்தோம். ஆனா, எம்ஜிஆர் நடிக்க சம்மதிச்சாரு.
ஏவிஎம் தயாரிப்புலயும் சரி, எம்ஜிஆரோட கேரியர்லயும் சரி... ‘அன்பே வா’ திரைப்படம், வித்தியாசமான வெற்றிப்படம்.
இவ்வாறு ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.... Thanks...
orodizli
28th April 2020, 03:31 PM
100-ஐக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆர்..!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் ஆகிய சிறப்புப் பெயர்களால் சினிமா உலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் அழைக்கப்பட்டவர்.
எம்.ஜி.ஆரின் மக்கள் தொண்டு அரசியல் உணர்வால் துவங்கப்பட்ட அதிமுக., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. காமராசரால் கொண்டு வரப்பட்டு, எம்ஜிஆரால் நிறைவேற்றப்பட்ட சத்துணவுத் திட்டத்தால் மாணவ மாணவியர் பலர் பசி இன்றி, இன்று கல்வி பயின்று வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வருடம்தோறும்... பலர் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் இன்று அவரது புகைப்படம் வைத்து, மைக் செட் கட்டி, அவர் நடித்த சினிமாப் பாடல்களைப் போட்டு, அவருடைய பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.
வறுமையில் பிறந்து, வள்ளலாக உயர்ந்து, நடிகர், அரசியல்வாதி, மூன்று முறை முதல்வர் என பல்வேறு பரிமாணங்களை எடுத்த இவரின் புகழ் என்றும் அழியாதது.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் தலைசிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில் நடிப்பும், அரசியலும் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, நாடகக் குழுக்கள் பலவற்றில் பிரபலமாகத் திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுடையவராக இருந்ததால், இளம்வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
எம்.ஜி.ராமச்சந்திரன், தனது சொந்தக் கட்சியாக, அ.தி.மு.கவை உருவாக்கினார். வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையை அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கியக் காரணம், அவர் ஏழைகளின் மீது வைத்த அன்பும் பரிவும்தான். அதனால்தான் அவர் ஏழைகளின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்த முதல் இந்தியத் திரையுலகப் பிரமுகர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் சிறுவனாக இருந்த போது, தந்தை காலமானார். அதனால், அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் காரணமாக நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தினார்.
1960ல், எம்.ஜி.ஆருக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ விருது’ அறிவித்தது. ஆனால், அரசின் மீதான பற்றற்ற நடத்தையின் காரணமாக அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த விருதில் பாரம்பரிய ஹிந்தி சொற்களுக்குப் பதிலாக தமிழில் அவை இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்........ Thanks.........
orodizli
28th April 2020, 03:38 PM
ஒரு முதலாளிக்கு உண்மையாக வேலைசெய்யும் தொழிலாளியை, வேலை சரியாக செய்யாத தொழிலாளி "முதலாளியிடம் காக்கா பிடிக்கிறார்" என்று கிண்டல*டிக்கிறார். அதற்கு தலைவரின் பதில்: காக்காய் என்றால் ஈனப்பிறவி அல்ல! விடியற்காலையில் எழுந்திருக்கிறது. தன் இனத்தோடு சேர்ந்து வாழுது. கிடைக்கும் இரையை பகிர்ந்து உண்ணுது. தன் இனத்தில் ஏதோ ஒரு காகம் இறந்துவிட்டால் ஒன்று சேர்ந்து ஈமக்கடன் செய்யுது! இவற்றில் ஏதாவது ஒரு நல்லகுணம் உன்னிடம் இருக்கா? என்று சோம்பேரி வேலையாளுக்கு அறிவுரை கூறும் "இதயக்கனி" ப*ட*க்காட்சியுட*ன் மதிய ஊர*ட*ங்கு வணக்கம்......( இந்த சிறிய அளவிலான காட்சியில் கூட போதனை, விளக்கங்கள். அதனால் தானே "வாத்தியார்".....)..... Thanks...
orodizli
28th April 2020, 03:41 PM
இலங்கைத் தமிழர் துயர் துடைக்க முதலமைச்சரின் வேண்டுகோள் :
இலங்கைத் தமிழர் நலத்திலும் நல் வாழ்விலும் தமிழ்நாட்டு மக்களின் பரிவும் பாசமும் அனைவரும் அறிந்துள்ளனர். அவர்கள் துயருற்று வாடி நிற்கும் இந்த வேளையில் நம் நெஞ்சங்கள் புண்ணாகி இருப்பதும் யாவரும் அறிந்ததே. நாடுகள், நாடுகளின் எல்லைகள், கடல்கள் போன்ற பூகோளப் பிரிவுகள் நம்மிடையே இருக்கும் அன்பையும், பாசத்தையும் பிரித்துவிட முடியாது. சர்வதேச சட்ட மரபுகள் காரணமாக அவர்கள் நாட்டுப் பிரச்சினையில் நம்மால் தலையிட இயலாது என்றாலும் அவர்கள் மானத்தோடும், கௌரவத்துடன் வாழ நாம் அனைவரும் அகமும் புறமும் வேண்டிக் கொண்டேயிருக்கின்றோம். அமைதியாக அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று கொண்டேயிருக்கின்றோம்.
எனினும், திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னும் இலங்கைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுருக்கின்ற கொடுமையான சம்பவங்கள் நம் மனதை வருத்துகின்றன. இந்த சம்பவங்களை கண்டிக்கும் வகையிலும் இலங்கை தமிழ்ச் சகோதரர்கள் பால் நமது உள்ளக் கிடக்கையை காட்டும் வழியிலும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் 24.09.1985 அன்று ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பது என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி செய்த முடிவை தமிழ்நாட்டு மக்களின் முன் வைக்க நான் விழைகிறேன்.
வீடிழந்து, நாடிழந்து அகதிகளாக வந்த வண்ணம் உள்ள இலங்கை தமிழ் குடும்பங்களின் மறுவாழ்வுக்கென இந்த உண்ணா நோன்பு நாளில் நம்மால் இயன்ற நிதி உதவியை கொடையாக செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடும் நண்பர்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற உண்டியல்களை எடுத்துக் கொண்டு 24. 09. 1985 லிருந்து தங்களை அணுகும்போது தாராளமாக தங்கள் உதவியை நல்குமாறு வேண்டுகிறேன். மாவட்ட ஆட்சித் தலைவரின் பெயரிலான காசோலை மூலமாகவும் தங்கள் உதவியைத் தரலாம். இந்த நற்பணிக்கு தாராளமாக உதவ வேண்டி தங்களை விரும்பி அழைக்கின்றேன்.
தங்கள் அன்புள்ள,
எம்.ஜி.இராமச்சந்திரன்,
முதலமைச்சர்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க........ Thanks...
orodizli
28th April 2020, 03:43 PM
இலங்கைத் தமிழருக்காக கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தவர் நம் இதயதெய்வம் புரட்சித் தலைவர்.....இதில் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் சிவாஜி கணேசன் வள்ளுவர் கோட்டம் அப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒரு தடவை நடிகர் திலகம் வள்ளுவர் கோட்டம் அப்படி ஒவ்வொரு இடத்திலும் உண்ணாவிரதம் இருந்தார்கள்..... Thanks...
orodizli
28th April 2020, 03:52 PM
தங்கம்.....
மனசு தங்கம்.
உடல் தங்கம்
எண்ணம் தங்கமா
உண்மையில் தலைவர் சம்பாதித்த பணத்தில், எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் சென்னையை விலைக்கு வாங்கி இருக்க முடியும். தலைவருக்கு அம்மாதிரியான எண்ணம் இல்லை.
காரணம்...அவர் வள்ளல்...... Thanks...
orodizli
28th April 2020, 03:57 PM
அவர் கட்சி தொடங்கி அடுத்த நாளே தேர்தல் வந்திருந்தாலும் அவர் புரட்சி தலைவர் தான் ஜெயித்திருப்பார். 4. ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை......Well said. Absolutely true...... Thanks...
orodizli
28th April 2020, 04:00 PM
கருணாநிதி பதவில் இருந்தஅதிகாரத்தை கையில் வைத்து சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி.பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அன்றே சொன்னார்கள் புரட்சி தலைவர் வென்று விடுவார் என்று.அது தானே நடந்தது.வெட்டிவீரன் துரை முத்துவும் மண்டியிட்டது தலைவரிடம் தான்.மன்னிக்கும் குணம் இருந்ததால் அவர் மக்களின் தலைவரானார்.மெடக்குறிச்சி சுப்பம்மா போன்ற முகவரி இல்லாதவரை அமைச்சராக்கினார்.மந்திரக்கோல் அங்கே மந்திரம் செய்தது...... Thanks...
orodizli
28th April 2020, 04:01 PM
நான் தலைவரை நேரில் பார்த்தது இல்லை ஆனால் நினைவு தெரிந்த காலம் முதல் எம்ஜிஆர் என்றால் இனம் புரியாத பாசம் இன்று வரை!.....கண்கள் பனிக்கின் றது கண் கொள்ளா தலைவரைநினைக்கும் பொழுது ....இதுபோல் ஒரு மாசற்ற மானிக்கம் இனி கிடைக்குமா .நான் இரண் மூன்று முறை ஐந்து அடி தூரத்தில் பார்த்து இருக்கிறேன் .அதுபோதும் எனக்கு...... Thanks...
orodizli
28th April 2020, 04:11 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15. செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
1984 ஆண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டது
துரோகி எஸ்டி சோமசுந்தரம் அண்ணா திமுக வில் இருந்து கொண்டேதனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கினார்
ஜெயலலிதா கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை மதிப்பது கிடையாது
என்று கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நகரச் செயலாளர்கள் பல ஒன்றியச் செயலாளர்கள் சில மாவட்டச் செயலாளர்கள் 15 எம்எல்ஏக்களை ஆதரவு திரட்டி விட்டார்
அதில் 15 எம்எல்ஏக்களுக்கு மேல் இருந்தார்கள்
இந்த 15 எம்எல்ஏக்களுடன் தான் வெளியே சென்று கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார்
எம்ஜிஆர் அவர்கள் பொதுக்குழுவைக் கூட்டி சோமசுந்தரத்தைகட்சியில் இருந்து நீக்கி விட்டார்
அப்பொழுது 5 எம்எல்ஏக்கள் தான் எஸ்டி சோமசுந்தர த்துடன் வெளியே சென்றார்கள்
அப்பொழுது 15 எம்எல்ஏக்கள் எஸ்டி சோமசுந்தரத்துடன் வெளியே சென்றிருந்தாள்
அண்ணா திமுக ஆட்சி கவிழ கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கும்
எஸ் டி சோமசுந்தரம் போட்ட கணக்கு தவறியது
எஸ்டி சோமசுந்தரம் எந்தந்த எம்எல்ஏக்களை தன்னுடன் வருவார்கள் என்று நினைத்தாரோ அவர்கள் யாரும் அவர் பின்னால் செல்லவில்லை
ஒரு மாதத்திற்குப் பிறகு எம் ஆர் .கோவேந்தனை எம்ஜிஆர் அமைச்சராக நியமித்தார்
++++++++++++++++++++++++++++++++++
கல்கி பத்திரிகையில் வந்த பேட்டியை
பதிவிடுகிறேன்
எம் ஆர் கோவேந்தன் எம்எல்ஏ அவர்களிடம்
கல்கி பத்திரிகை நிருபர் கேள்வி கேட்கிறார்
நீங்கள் அமைச்சர் ஆவீர்கள் என்று எதிர் பார்த்தீர்களா
எம் ஆர் கோவேந்தன் பதில்
நான் எனது ஊரில் இருந்து பஸ் ஏறி வெளியூருக்கு சென்று கொண்டிருந்தேன்
என்னுடைய பஸ்ஸை முந்திக்கொண்டு ஒரு அரசாங்க ஜீப் ஒன்று வந்து
நான் சென்று கொண்டிருந்த பஸ்சை நிறுத்தினார்கள்
பஸ்ஸிற்குள் சில அதிகாரிகள் உள்ளே வந்தார்கள்
என்னை கண்டுபிடித்து என் அருகில் வந்தார்கள்
எம்ஜிஆர் உங்களை அமைச்சராக அறிவித்துள்ளார்
உங்களைப் புறப்பட்டு சென்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார் என்று தகவல் கூறினார்கள்
என்னால் நம்ப முடியவில்லை
நான் அமைச்சராவேன் என்று எந்தக் காலத்திலும் நான் நினைக்கவில்லை
சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த என்னை எம்ஜிஆர் அமைச்சர் ஆக்கினார்
இவ்வாறு கல்கி பத்திரிக்கைக்கு எம்எல்ஏ எம்ஆர் கோவேந்தன் பதிலளித்தார்
++++++++++-++++++++++++++++++++++++
இந்தப் படத்தில் அருமை தலைவன்எம்ஜிஆர் அவர்கள்
எம்ஆர் கோவேந்தன் அமைச்சர்
பதவிஏற்றவுடன்
அவருக்கு மாலை அணிவிக்கிறார்
+++++++++++++++++++++++++++++++++
அமைச்சர் எம் ஆர் கோவேந்தன்
பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
எம்ஜிஆர் மறைந்தவுடன் ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த அமைச்சர்களில் எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்...... Thanks PM...
orodizli
28th April 2020, 05:41 PM
பல்லாண்டு வாழ்க!!
----------------------------------
கார்த்திகேயன்!!
இந்தப் பெயரில் ஒரு எம்.ஜி.ஆர் இளைஞன்!!
சிவனின் நெற்றியில் இருந்து வந்த பொறி!-முருகன்!
அவனின் அழகை உள்ளத்திலும் உடலிலும் கொண்ட
இவனின் சீருக்கு இது ஒன்று போதாதா?-வேறு
எவனின் தயவு இவனுக்குத் தேவை? என்றாலும்-
விமனின் ஒட்டு மொத்த ஆதரவு பெற்று
எமனின் ஆட்டத்தையே அசைத்துப் பார்த்த
எம்.ஜி.ஆரின் அருள் அதிர்வும் இந்த இளைஞன் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கி வருகிறது!!
நாம் பலமுறை ஒரு விஷயம் குறித்துப் பெருமைப் பட்டு வருகிறோம்!!
இளைஞர்களின் புதிய ரத்தங்கள் பொய்கையாகிப் பொழிகின்றன! எம்..ஜி.ஆர் பெயரைச் சொல்லி!!
இளைஞர்கள்,,குறிப்பாக முக நூல்-வாட்ஸ்-அப் ஊடகங்களில் வரிசையாக வரத் துவங்கி,,
தரிசையாக அரசியல் களத்தில் இருந்த வெற்றிடத்தை
நிரப்பத் தொடங்கியுள்ளனர்!
சென்னை,பள்ளிக் கரணை அருகில் ஜல்லடன்பேட்டைப் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயனும் அந்த வரிசையில் ஒருவர்!
இவரது சித்தப்பா மாணிக்கம்!
அப்பகுதி முன்னாள் கவுன்சிலர்!
திரு மாணிக்கமும்,,கார்த்திகேயனை உரமேற்றி,,தரமேற்றி அதிலே எம்.ஜி.ஆரை உருவேற்றிக் கருவேற்றி உலா வரச் செய்வதில் உள்ளம் பூரிக்கிறார்!!
வேக ரத்தம் கொண்ட இளையவர் கார்த்திக்கின் செயல்களில்,,எண்ணங்களில் உள்ளத்தில் இப்படி எல்லாப் புறத்திலும் அடக்கம் கொப்பளிக்கிறது!
பெரியோர்களை மதிப்பதில் ஆகட்டும்,,
அவர்களது அனுபவங்களை உள் வாங்குவதில் ஆகட்டும் அசாத்திய அமைதி காக்கிறார்!
அமைதி ஒருவனது எண்ணங்களை நிதானப் படுத்தும். பின்னர் அவற்றை நேர்ப்படுத்தும். அதற்கு அடுத்ததாக தரமான செயல்களாக வெளிப்படுத்தும்!!
தன் வீட்டில் ஆளுயர எம்.ஜி.ஆர் படத்தை வைத்துத் தொழுது வரும் கார்த்திக்,, இந்த வகை சூட்சுமத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்!
பொறியியல் படித்துள்ள கார்த்திக்கின் விருப்பப்
பொரியல்--ஜெ வின் திரு நாமம்!!
வளமானஃ எதிர் காலத்தை நோக்கிப் பயணிக்கும்--
கார்த்திகேயனை,,அவரது இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்வோமா???!......... Thanks...
orodizli
28th April 2020, 05:45 PM
[என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்.
M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.
என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.
உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான்........ Thanks...
orodizli
28th April 2020, 05:57 PM
Cont-2
என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..
‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’
பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...
‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”
உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.
புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை சர்வதேச அளவில் எம்.ஜி.ஆரு.க்கு மட்டுமே உண்டு....... Thanks...
orodizli
28th April 2020, 06:00 PM
புரட்சித் தலைவர் முதல்வர் ஆவதற்கு முன்பு ஆனந்தவிகடனில் நான் ஏன் பிறந்தேன் என்ற தொடர் எழுதினார்கள் அந்த தொடரை தற்போது முழுவதுமாக வெளியிட வேண்டும் என தாங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என் போன்று பலபேர் அந்த தொடரை படிக்க விரும்புகின்றோம் ஏனென்றால் ஆனந்த விகடன் வார இதழ் அந்த தொடரை மறுபதிப்பு செய்யவில்லை ஆகையால் அந்த பணியை தாங்கள் செய்து புரட்சித் தலைவர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்த வேண்டும் செய்வீர்களா?...... Thanks Sakthi Ananthan...
orodizli
28th April 2020, 07:25 PM
https://youtu.be/uxZkYagWfCA... Thanks...
orodizli
28th April 2020, 07:25 PM
https://youtu.be/SscBxm4PdBs.... Thanks......
orodizli
28th April 2020, 07:29 PM
https://youtu.be/sCTaN4mKCus....... Thanks...
orodizli
28th April 2020, 07:35 PM
தலைவர் வராமல் தாலி கட்ட மாட்டேன் என்ற தொண்டர்கள் மத்தியில் அன்று தலைவர் வராமல் முதலிரவு கிடையாது என்றவர்.....படியுங்கள்.
கோவை உடுமலை பேட்டை பகுதி சார்ந்த அடுக்கு மொழி பேச்சாளர் திரு. லியாகத் அலிகான் தலைவருக்கு பிடித்தவர்....தலைவரே 1 மணி நேரம் அமர்ந்து மேடையில் இவரை பேச விட்டு ரசித்தவர்.
இவர் திருமண தேதி கேட்டு முதல்வர் தலைவர் வீட்டுக்கு போக அங்கே கூட்டம்...வந்த விஷயம் கேட்க சொன்னார் முதல்வர் என்ற உடன் ஒரு சாதாரண துண்டு சீட்டில் தனக்கு திருமண தேதி நீங்கள் நடத்தி வைக்க தரவேண்டும் என்று எழுதி அவர் கொடுக்க.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். அவரை வீட்டுக்குள் போய் பாயாசம் சாப்பிட்டு போக சொல்லுங்கள் என்கிறார் மன்னவர்.
அதன் படி அதே வருடம் செப்டம்பர் 13 மதுரையில் திருமணம் அடுத்த நாள் உடுமலையில் வரவேற்பு ஏற்பாடுகள் முடிந்தன....மதுரையில மணம் முடித்து மாலை உடுமலை வந்த அவருக்கு மாவட்ட ஆட்சியர் மொயினுதீன் அவர்கள் இடம் இருந்து இரவு 7 மணிக்கு தகவல்...நாளை முதல்வர் வர முடியாதாம்...வேறு தேதியில் வரவேற்பு வைத்து கொள்ள சொன்னார் உங்களிடம் என்று சொல்ல.
அதற்கு அவர் எப்ப வேண்டுமானாலும் வரட்டும் அதுவரை எனக்கு முதலிரவு இல்லை...இதை தலைவரிடம் சொல்லிவிடுங்கள் என்று லியாகத் அவர்கள் சொல்ல.
இது என்ன வம்பு என்று ஆட்சியர் முதல்வர் அலுவலகத்தில் சொல்ல மீண்டும் தொலை பேசி அழைப்பு இரவு 11 மணி அளவில் வர...இவர் போஸ்ட் ஆபீஸ் ஓட அதற்குள் அது கட் ஆகி விட.
இவர் அங்கேயே காத்து இருக்க அதிகாலை 5 மணி அளவில் தலைவரின் உதவியாளர் வீரையா IAS மறுபடி பேசி நீங்கள் உங்கள் முதலிரவை முடியுங்கள் தலைவர் வரும் 19 அன்று காலை உடுமலை வருகிறார் என்று சொல்ல...இனி எங்கே முதல் இரவு மணி காலை 5.30 மணி சரி என்று தலைவரிடம் சொல்லுங்கள் என்று இவர் சொல்ல.
செப்டம்பர் 19 அன்று காலை ஒரு பதவியும் இல்லாத அந்த தொண்டன் வீட்டுக்கு 600 கிலோமீட்டர் பயணம் செய்து நிகழ்ச்சி நடைபெற்ற உடுமலை தாஜ் திரை அரங்குக்கு வருகிறார் முதல்வர் எம்ஜியார்.
வந்து மேடை எறியவுடன் லியாகத் அவர்கள் போட்ட மாலையை வாங்கி கொண்ட முதல்வர் அவர் காதில் என்ன எல்லாம் முடிந்ததா என்று கேட்க இல்லை என்று இவர் சொல்ல.
அவரை கையை பிடித்து கொண்டு நாற்காலியில் அமர வைக்கிறார் பொன்மனம்...அன்று கோவை மாவட்டம் சார்ந்த குழந்தைவேலு, கோவை தம்பி, திருப்பூர் மணிமாறன், மருதாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய பின் தலைவர் இவரை பற்றி புகழ்ந்து பேசி என் வாழ்வில் இது ஒரு புது அனுபவம் என்று சொல்லி.
எங்கே மணப்பெண் என்று கேட்க அதற்கு லியாகத் அவர்கள் அண்ணா எங்கள் மார்க்க ஜமாத் படி மணப்பெண்ணை மேடையில் அமர வைக்க கூடாது என்று முடிவெடுத்து இருந்தாலும் நான் அவரை அழைத்து வந்து அரங்க மேலாளர் அறையில் அமர வைத்து இருக்கிறேன் கூப்பிடவா என்று கேட்க.
அதற்கு தலைவர் வேண்டாம் நீ ஆண்மகன் பரவாயில்லை ஆனால் பெண் வந்துவிட்டால் அவர்களை பற்றி தவறாக பேச கூடாது உங்கள் ஜமாத் விருப்பத்தை மீற வேண்டாம்...
பின்னால் தோட்டத்துக்கு அழைத்து வா என்று சொல்லி மீண்டும் காதில் ஏதோ சொல்லி கை கூப்பி விடை பெறுகிறார் முதல்வர் வாத்தியார்.
என்ன ஒரு நாகரீகமாக நடத்தை தலைவரிடம் என்று அவையோர் முணுமுணுத்த படி வெளியேற அதுதான் மக்கள் முதல்வர் அவர்.
படத்தில் தலைவர் பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இருப்பவர் லியாகத் அலிகான் அவர்கள்.
அவர் மாணவர் பிரிவு மாநில செயலர் ஆக இருந்த போது நாங்கள் நெல்லையில் நடத்திய மாணவர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட படம் அடுத்தது.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்........ Thanks...
orodizli
28th April 2020, 07:38 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல்:
இன்று 17-ம் தியதி
தலைவர் நடிப்பில் வெளிவந்த 136 படங்களில் ஜெனோவா ( மலையாளம் ) மட்டுமே 17-ம் தியதி வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்.
ஜெனோவா ( மலையாளம்)
17-04-1953
ஜெனோவா மலையாளம்
மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது, மலையாள படம் வெளியாகி 6 வாரங்களுக்கு பிறகு தான் தமிழில் 01--06-1953-ம் தியதி வெளியிடப்பட்டது.
மலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம்
இதன் மலையாள பதிப்பில் பி.எஸ்.வீரப்பா நடித்த வில்லன் கேரக்டரில் மலையாள வில்லன் நடிகர் ஆலப்பி வின்செண்ட் நடித்தார்.
இதன் மலையாள பதிப்பில் எம்.ஜி.ஆருக்கு பதில் வேறொருவர் டப்பிங் பேசினார். எம்.ஜி.ஆருக்கு சரியாக மலையாளம் பேச வரவில்லை என்று அதன் தயாரிப்பாளர் அப்படிச் செய்தார். இதை எதிர்த்து எம்.ஜி.ஆர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றார்.
MGR நடித்த ஒரே ஒரு மலையாள படம் இது தான். 1953 -ம் ஆண்டு ஈஸ்டர் அன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும், இது ஈஸ்டருக்கு 13 நாட்களுக்கு பின்னர் 17-04-1953-ம் தியதி தான் திரையரங்குக்கு வந்தது. ஈஸ்டருக்கு பின்னர் வெளியான போதிலும், ஜெனோவா பெரிய வெற்றி பெற்றது.
ஜெனாவா -
"ஜானோவா நாடகம்" மற்றும் "ஜானோவா பர்வம்" ஆகியவற்றின் கீழ் கேரளாவில் பிரபல நாடக குழுவால் நடத்தப்பட்ட ஒரு இசை நாடகம் (சங்கீகா நாடகம்) தழுவலாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் - 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மலையாள இசை நாடகங்களில் ஒன்றான டி.சி.அச்சுத மேனனின் வேடங்களில் ஒன்றான இந்த இசை நாடகம் மிகவும் பிரபலமானது.
இயக்கம் :- ஈச்சப்பன்
தயாரிப்பு :- ஈச்சப்பன்
கதை :- சுவாமி பிரம்ம வரதன்
இளங்கோவன் (உரையாடல்)இசை :- விஸ்வநாதன்
ஞானமணி கல்யாணம்
ஒளிப்பதிவு :- G.விட்டல்ராவ்
நடிப்பு :- எம். ஜி. இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்ரபாணி
டி. எஸ். துரைராஜ்
பி. எஸ். சரோஜா , கண்ணம்பா,
ராஜமணி
@ வெளியிடூ : 17th April, 1953
( மலையாளம்)
@ வெளியீடு : 1st June, 1953
( தமிழில் )
நன்றி ...
என்.வேலாயுதன் , திருவனந்தபுரம்........ Thanks...
orodizli
28th April 2020, 07:40 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய " வணக்கம்"
தட்சயக்ஞம். - 31-03-1938 (Dakshayagnam) இது ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 31-03-1938-ல் வெளிவந்த 3-வது எம் ஜி ஆர் படம்
நடிப்பு
வி.ஏ.செல்லப்பா, சி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.நடராஜ பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், கே.கே.பெருமாள், எம்.எம்.ராதாபாய், கே.ஆர்.ஜெயலட்சுமி, டி.ஏ.மதுரம், டி.என்.சந்திராம்மாள்
கதை
ராஜா சந்திரசேகர்
இசை
என்.எஸ்.பாலகிருஷ்ணன்
இயக்கம்
ராஜா சந்திரசேகர்
தயாரிப்பு நிறுவனம்
மெட்ரோபலிடன் பிக்சர்ஸ்
வெளியீடு
31 மார்ச் 1938
தட்சயக்ஞம், ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வி.ஏ.செல்லப்பா, சி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.நடராஜ பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், கே.கே.பெருமாள், எம்.எம்.ராதாபாய், கே.ஆர்.ஜெயலட்சுமி, டி.ஏ.மதுரம், டி.என்.சந்திராம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தட்சயக்ஞம் என்ற பெயரில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அவற்றில் இப்படம் தான் முதல் பேசும் படமாகும்.
பிரம்மன் வழி வந்த தட்சணின் மகளான சதி, தன் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக, சிவபெருமானை (வி.ஏ.செல்லப்பா) திருமணம் செய்கிறார். இதனால் சிவனை அவமானப்படுத்த யாகம் செய்யும் தட்சன், அனைத்து கடவுள்களையும் அழைக்கிறார். ஆனால் சிவபெருமானை மட்டும் அழைப்பதில்லை. அந்த யாகத்தில் கலந்து கொள்ள கணவன் சிவனின் விருப்பத்திற்கு மாறாக வருகிறார் சதி. ஆனால் சதியை அவள் தந்தை அவமானப்படுத்துகிறார். அவமானம் தாங்காத சதி தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். வீரபத்ரர் மூலமாக சிவபெருமான், தட்சனின் யாகத்தை தடுத்து, அவன் தலையை வெட்டி, ஆட்டுத் தலையை அவ்விடத்தில் பொருத்தச் செய்கிறார். பின்னர் சிவபெருமான் சதியின் உடல் முன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதனால் உலகம் அழியும் நிலை ஏற்படுகிறது. அப்போது பிற கடவுள்கள் அங்கு தோன்றுகின்றனர். விஷ்ணுவின் சக்கரம், சதியின் உடலை பல பாகங்களாக வெட்டுகிறது. அவை இந்தியாவின் பல பகுதிகளில் விழுந்து சக்தி பீடங்களாக மாறுகின்றன. இது தான் இப்படத்தின் கதை.
@@@@@
பாடல்கள் :-
ஸ்ரீகணேச பாஹிமாம் சந்ததம்
தனியாய் எனை விடுத்தாய் சதியே நீ
வருவாயே தின்பம் தருவாயே
ஸ்ரீமந்நாராயண கோவிந்தா
மழையில்லா சீமையில் மாடுகள் பூட்டி
ஆதியில் பாற்கடல் விஷத்தினை உண்டு
பரமானந்த சுபதினம்
மனமோகனாங்க சுகுமாரா
மனதிற்கிசைந்திடாத மணத்தினாலே
ஹர ஹர ஹர ஹர அகிலாதிபனே
சிவானந்த ரசம் இதுவே
பெறும் புவிதனிலே மாந்தர் பெருநெறி
ஹா மாதர் மனோகர வாழ்க்கை
அஞ்சி உன் கட்டளைக்கே
அதிரூப லாவண்ய சுந்தரா
மாதருக்கெல்லாம் குணம்
பவாநீ பவாநீ பவாநீ
வாருங்கள் எல்லோரும் தட்சன்
இருவரும் ஒன்றாய் கூடி வாழலாம்
பார்வதியாக ஜனிப்பாய்
இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக தோவியை தழுவியது
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்......... Thanks...
orodizli
28th April 2020, 07:42 PM
சதிலீலாவதி : 28-03-1936
@ நமது தங்க தலைவரின் முதல் திரைப்படம் "சதிலீலாவதி " இப்படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் தான் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் கதாநாயகன்.
@ இந்த படம் எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ். பாலையா, கே.ஏ.தங்கவேலு, சகஸ்ரநாமம் ஆகியோருக்கும் கூட முதல் படம்
சதிலீலாவதி : 28-03-1936
தயாரிப்பு : - மனோரமா ஃபிலிம்ஸ்
கதாபாத்திரம் : - ஆய்வாளர் ரெங்கையா நாயுடு ( சிறு வேடம்)
இயக்குனர் : - எல்லீஸ் R. டங்கன்
கதை : - எஸ்.எஸ் வாசன்
இசை : - சுந்தர் வாத்தியார்
கதாநாயகன் : - M.K.ராதா
கதாநாயகி. : - M.R.ஞானம்மாள்
வெளியான தியதி :- 28 -03-1936
ஆனந்த விகடன் இதழில் சுப்பிரமணியம் சீனிவாசன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். 1935ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், வழக்கின் காரணமாக இந்தத் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது. பின்னர், 28 மார்ச் 1936 ஆம் தேதி படம் வெளியானது.
கதைச்சுருக்கம்:-
சென்னையில் செல்வந்தர் கிருஷ்ணமூர்த்தி தன் மனைவி லீலாவதி மற்றும் மகள் லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். தன் நண்பன் ராமநாதன் மூலமாக மது மற்றும் சூதாட்டத்திற்கு அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் மோகனாங்கி என்ற பெண் வாசம் ஆசை கொள்வதால் அவளுக்கு ரூபாய் 50000 தருவதாக வாக்கு கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தியின் நண்பன் பரசுராமன் அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார். அந்த ஆடம்பரமான வாழ்க்கைக்காக கிருஷ்ணமூர்த்தி வாங்கிய கடனை கட்ட இயலாததால் மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார். அதன் பின்விளைவாக தன் மனைவி லீலாவதியை சந்தேகிக்கிறார்.
பின்னர் ஒரு சமயம் குடிபோதையில் கிருஷ்ணமூர்த்தி இருக்கும்பொழுது, தன் நண்பன் பரசுராமனை தான்தான் கொன்று விட்டதாக தவறாக நினைத்து, மனைவி மற்றும் மகளை கோவிந்தனிடம் விட்டுவிட்டு ஸ்ரீலங்காவிற்கு தப்பிச் சென்று, ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி. லீலாவதி மற்றும் லட்சுமி இருவரும் வறுமையில் வாடுகிறார்கள்.
தலைவரின் முதல் படமான " சதிலீலாவதி" வெளியான அந்த பொன்னான நாளை குறிக்கும் ( 28-03-36 ) குறிக்கும் ஒரு ரூபாய் நோட்டு மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் பார்வைக்கு..........
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்..... Thanks...
orodizli
28th April 2020, 07:46 PM
" Special cover " released on Centenary celebration of Dr.M.G.Ramachandran by Chief Postmaster General, Tamil Nadu Circle
*Marudur Gopalan Ramachandran, popularly known as MGR was an Indian actor and politician who served as Chief Minister of Tamil Nadu for eleven years between 1977 and 1987.
M.G.Ramachandran (1917-1987) popularly known as MGR dominated like no other, the film's and politics of Tamilnadu. A Charis matic actor and philanthropist, he commanded the idolatrous adulation of millions of Tamilians. His achievements in 3 fields, viz, films, phianthrophy and politics were remarkable considering his humble origins.*
( * These are the words written on the back of the cover )
Design approved by :
Chief Postmaster General,
Tamilnadu Circle Chennai -600 002
Special cover :
Concept And Design By
South India Philatelists' Association
Price 75 Rupees
By. N.Velayudhan
Trivandrum
தமிழில்:-
சிறப்பு அட்டை "டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் தமிழக வட்டத்தின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டார்
எம்.ஜி.ஆர் என்று பிரபலமாக அழைக்கப்படும் மருதுர் கோபாலன் ராமச்சந்திரன் ஒரு இந்திய நடிகரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1977 முதல் 1987 வரை பதினொரு ஆண்டுகள் தமிழக முதல்வராக பணியாற்றினார்.
எம்.ஜி.ஆர். ஒரு கவர்ச்சியான நடிகரும், பரோபகாரியுமான அவர் பல லட்ச கணக்கான தமிழர்களின் இதய தெய்வம் ஆனார். திரைப்படங்கள், பரோபகாரம் மற்றும் அரசியல் ஆகிய 3 துறைகளில் அவர் செய்த சாதனைகள் பல அவரது தாழ்மையான தோற்றத்தை கருத்தில் கொண்டு குறிப்பிடத்தக்கவை. *
சிறப்பு கவர் விலை 75 ரூபாய்.......... Thanks...
orodizli
28th April 2020, 07:49 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
12 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 12- ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 3 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). பிரகலாதா - 12-12-1939
2). நேற்று இன்று நாளை - 12-07-1974
3). ஊருக்கு உழைப்பவன் - 12-11-1976
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்....... Thanks...
orodizli
28th April 2020, 07:52 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
இன்று 8 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் 136 -ல் ஒரு படம் கூட 8-ஆம் தியதியில் வெளிவந்த தில்லை என்பது தான் உண்மை.
மற்ற எல்லா தியதிகளிலும் படம் வெளியானது உண்டு.
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்.
* நண்பர்களே திண்டுக்கல்லில் நடைபெறும் நமது தலைவரின் 103-வது பிறந்தநாள் விழாவில் சந்திப்போம் *........ Thanks...
orodizli
28th April 2020, 07:54 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / தொண்டர்கள்/பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய மாலை வணக்கம்...
திண்டுக்க*ல்லில் மனித*நேய* மாணிக்க*ம் எம்.ஜி.ஆர் ப*க்த*ர்க*ள் குழு சார்பாக* 103-வ*து பிற*ந்த*நாள் விழா சிறப்பாக கொண்டாட*ப்ப*ட்ட*து. கேரள, கர்நாடக, பாண்டிச்சேரி, மற்றும் த*மிழ*க*ம் முழுவ*தும் ப*ல்வேறு மாவ*ட்ட*ங்க*ளில் இருந்தும் திர*ளான* ரசிகர்கள்/ ப*க்த*ர்க*ள்/தொண்டர்கள் பலரும் க*லந்துகொண்டனர்.
ந*ன்றி..... நன்றி..... நன்றி....
விழாவினை சிறப்பாக தொகுத்து வழங்கிய நண்பர் திரு. சென்றாய பெருமாள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....
விழா முடிவில் விழாவில் கலந்து கொண்ட 103 நண்பர்களுக்கு
நானும் நண்பர் பொள்ளாச்சி சிவநடராஜனும் இணைந்து தலைவர் தபால் தலை உள்ளடங்கிய ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது....
நன்றி..
என்.வேலாயுதன் (February 2020 post)...... Thanks...
திருவனந்தபுரம்.
orodizli
28th April 2020, 07:58 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
5 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 5 - ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 4 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). சர்வாதிகாரி (தெலுங்கு) - 05-10-1051
2). நாம் - 05-03-1953
3). நவரத்தினம் - 05-03-1977
4). இன்று போல் என்றும் வாழ்க - 05-05-1977
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்..... Thanks...
orodizli
28th April 2020, 08:01 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
4 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 4 - ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 4 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1).ஸ்ரீமுருகன் - 04-06-1946
2). நான் ஆணையிட்டால் - 04-02-1966
3). சங்கேமுழங்கு - 04-02-1972
4). நாளை நமதே - 04-07-1975
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்..... Thanks...
orodizli
28th April 2020, 08:04 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
3 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 3 - ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 3 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). ஜோதிமலர் ( அல்லது) தாசிப்பெண் - 03-03-1943
2). மீரா - 03-11-1945
3). படகோட்டி - 03-11-1964
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்..... Thanks...
orodizli
28th April 2020, 08:06 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
2 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 2- ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 4 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). மருதநாட்டு இளவரசி - 02-04-1950
2). மர்மயோகி - 02-02-1951
3). புதுமைப்பித்தன் - 02-08-1957
4). ராஜா தேசிங்கு - 02-09-1960
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்...... Thanks...
orodizli
28th April 2020, 08:08 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
1 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 1- ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 4 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). ஜெனோவா ( தமிழ்) 01-06-1953
2). அரசிளம்குமரி - 01-01-1961
3). விவசாயி - 01-11-1967
4). அடிமைப் பெண் - 01-05-1969
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்...... Thanks...
orodizli
28th April 2020, 08:10 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய மதிய வணக்கம் நண்பர்களே....
* எம்.ஜி.ஆர் - காலவரிசை*
* 1917 முதல் 2019 *
1917. * இலங்கையில் கண்டியில் உள்ள நாவலப்பிட்டி. என்ற இடத்தில் 1917 -ம் ஆண்டு
ஜனவரி 17 -ம் தேதி நமது எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்தார்.
1920 * எம்.ஜி.ஆரின் தந்தை
மருதூர் கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார்.
1922 * எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் உள்ள ஆனையடி பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில் என்று பள்ளி ஏட்டில் உள்ளது.
1923. * எம் ஜி ஆர் அவர்கள் முதன்முதலாக "லவகுசா"
நாடகத்தில் "குசன்" வேஷம் தான் போட்டார்* இது அவரது 6-வது வயதில்.
1925 * ஆனையடி பள்ளியை விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்று பள்ளி ஏட்டில் உள்ளது.
1930. * ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில்* இருந்து விலகி
மொய்தீன் கம்பெனி குழுவுடன் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்குப் புறப்பட்டார்.
1932 * சென்னை வருகை : சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் யானைகவுனி சென்னையில் முதலில் வசித்த இடம் பங்காரம்மாள் வீதி.
1936. * " சதிலீலாவதி "என்ற திரைப்படத்தின் மூலம் எம் ஜி ஆர் வெள்ளித்திரையில் 28-03-1936-ல் அறிமுகமானார்.
1938. * சிறு வேடங்களில் நடித்த "தட்சயக்ஞம்" 31-03-1938 - லும் "வீரஜெகதீஷ்" 28-08-1938- லும் ஆக இரு படங்கள் வெளிவந்தது.
1939. * "மாயாமச்சீந்திரா" படம் 22-04-1939 - லும் மற்றும் "பிரகலாதா" 12-12-1939 - லும் வெளிவந்தது.
1940. * தனது 23 வயதில் தன்னைக் காட்டிலும் 5 வயது குறைவான 18 வயது தங்கமணியை அவர் பிறந்த பூர்வீக ‘தெக்கின்கூட்டில்’ இல்லத்திலேயே வைத்து திருமணம் புரிந்து கொண்டார்.
1941 ** "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு 10-07-1941-ல் வெளிவந்த "அசோக்குமார்" படத்தின் மூலமாக எம் ஜி யாருக்கு கிடைத்தது.
1942. * எம் ஜி ஆரின் முதல் மனைவி தங்கமணி இறப்பு -
@ * எம்.ஜி.ஆர். சதானந்தவதி திருமணம் 1942ம் ஆண்டு ஆனி மாதம் 16-ம் தேதி நடந்தது.
1943. * தலைவரின் " ஜோதிமலர்" அல்லது "தாசிப்பெண்" என்ற படம் 03-03-1943 -ல் வெளிவந்தது.
1944 * பி.யு.சின்னப்பாவுடன்
எம் ஜி ஆர் நடித்த முதல் படம்
" ஹரிச்சந்திர" - 14-01-1944-ல் பொங்கல் அன்று வெளிவந்தது.
1945. * எம் ஜி ஆர் வில்லனாக நடித்த முதல் படமான
" சாலிவாகனன்" 16-02-1945 அன்று வெளிவந்தது.
1946. *. திரையுலகில் பின்னணி பாடும் முறை கண்டு பிடிக்கப்பட்டதுடன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் புதிய திருப்பம் ஏற்பட்டது.
1947 * கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த
‘" ராஜகுமாரி "' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது.
இப்படம் 11-04-1947 அன்று
வெளியானது.
1948 * வி.என்.ஜானகியுடன்
எம் ஜி ஆர் ஜோடியாக நடித்த முதல் படம் - " மோகினி " 31-10-1948-ல் வெளிவந்தது.
1949 * "ரத்னகுமார்" படம் 15-12-1949 -,ல் வெளிவந்தது.
1950 *. மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படம் " மந்திரிகுமாரி"
24-06-1950 -ல் வெளிவந்தது.
1951 * எம்.ஜி.ஆர். நடிப்பில்
02-02-1951 -ல் வெளிவந்த 'மர்மயோகி' " A". சர்டிபிகேட்
வாங்கிய முதல் எம் ஜி ஆர் திரைப்படம்.
1952. * "புரட்சி நடிகர்" என்ற பட்டம் உறந்தை உலகப்பன் என்பவர் ஏற்பாடு செய்த விழாவில் கலைஞர் கருணாநிதியால், 05-06-1952 அன்று வழங்கப்பட்டது.
1953. * தலைவர் நடித்த " முதல் மலையாள படம் " ஜெனோவா" 17-04-1953 -ல் வெளிவந்தது., பின்னர் அதன் தமிழ் பதிப்பு 01-06-1953 -ல் வெளிவந்தது.
1954 * முதல் தேசிய விருது தமிழில் எம் ஜி ஆரின் "மலைகள்ளனுக்கு* மத்திய அரசு வழங்கி சிறப்பித்தது.
@ * எம் ஜி ஆர், சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரேயொரு படமான" கூண்டுகிளி" 26-08-1954 அன்று வெளிவந்தது.
1955. * எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் 'குலேபகாவலி' 22-07-1955-ல் வெளிவந்தது.
@ *. M.S.விஸ்வநாதன் - ராமமூர்த்தி * சேர்த்து இசையமைத்த முதல் எம் ஜி ஆர் திரைப்படமும் " குலோபகவாலி" தான்.
1956. * ஆம் ஆண்டு 13-04-1956 அன்று வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான வெற்றி படம்.
@ * தமிழில் முதல் முழு நீள வண்ண படமான (கோவா கலர்)
" அலிபாபாவும் 40 திருடர்களும் " 14-01-1956 -ல் வெளிவந்தது.
1957 * *ப.நீலகண்டன் இயக்கத்தில் எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படமான
" சக்ரவர்த்தி திருமகள் " படம் 18-01-1957 அன்று வெளிவந்தது.
1958. **. நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் 05-01-1958-ல் அடைக்கப்பட்டனர்.
@ * (1) எம் ஜி ஆரின் முதல் தயாரிப்பும், முதல் இரட்டை வேடமும், சரோஜாதேவியுடன்
இணைந்து நடித்த முதல் படமும்,
தலைவரின் 136 படங்களில் மிகவும் நீளம் கூடிய படமும், மதுரையில் தங்கவாள் வழங்கப்பட்டதும்மான "நாடோடி மன்னன்" திரைப்படம் 22-08-1958 அன்று வெளியானது.
1959. * "நடிகப்பேரரசர்" என்ற பட்டம் "நாடோடி மன்னன்" பட வெற்றி விழாவில் அளிக்கப்பட்டது.
@ *. எம் ஜி யாருடன் ஜமுனா நடித்த ஒரேயொரு படமான " தாய் மகளுக்கு கட்டிய தாலி " 31-12-1959 அன்று வெளிவந்தது.
@ * சீர்காழியில் நடைபெற்ற
" இன்பக்கனவு" நாடகம் நடைபெறும் சமயம் எம்.ஜி.ஆர். அவர்கள் முழங்கால் எலும்பு முறிந்துவிட்ட நாள் 16-06-1959.
1960 * * எம் ஜி யாருடன் வைஜயந்திமாலா இணைந்து நடித்த ஒரேயொரு படமான " பாக்தாத் திருடன் " 06-05-1960 -ல் வெளியானது.
@ *. அசோகன் முதல் முதலாக அறிமுகம் ஆன படம் எம் ஜி ஆரின் " பாக்தாத் திருடன் ". தான் வெளிவந்த நாள் 06-05-1960
@ * எம் ஜி யாரும் எஸ் எஸ் ஆரும் இணைந்து நடித்த முதல் திரைப்படமான " ராஜா தேசிங்கு" 02-09-1960-ல் வெளிவந்தது.
1961. * "மக்கள் திலகம்" என்ற பட்டம் தமிழ் வாணன் அவர்களால் எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்டது.
@. * எம்.ஜி.ஆர். படத்தில்தான் முதல்முதலாக நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் '"அரசிளங்குமரி'." 01-01-1961-ல்
@ ** எம் ஜி ஆர் நடிப்பில் 23-03-1961 -ல் வெளிவந்த முதல் சமூக திரைப்படம் " திருடாதே "
@ * அறிஞ*ர் அண்ணாவின் க*தையில் உருவான ப*ட*மும்,
@ *க*விஞ*ர் வாலி த*லைவ*ர் ப*ட*த்திற்கு முத*ன்முத*லில் பாட*ல் எழுதினபடமும்,
@ * தமிழில் எம் ஜி ஆரின் 50-வது படமான " நல்லவன் வாழ்வான்" 31-08-1961- அன்று வெளியானது.
1962. *. 25-02-1962 எம் ஜி ஆரின் இரண்டாவது மனைவி சதாந்தவதி மரணம்.
@ *. 14-06-1962 -ல்
திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணம் நடந்தது.
@ * சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
@ *. யுத்த நிதி அளித்தற்க்கு பிரதமரே கைபட எம் ஜி ஆருக்கு நன்றி கடிதம் எழுதினார்
@ * செருப்பு அணியாமல் மக்கள் திலகம் நடித்த ஒரே பாடல்
" உலகம் பிறந்தது எனக்காக "
1963 * K.சங்கர் இயக்கத்தில் எம் ஜி ஆர் அவர்கள் நடித்த முதல் திரைப்படமான " பணத்தோட்டம்" 11-01-1963 அன்று வெளிவந்தது.
@ * மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் 'பெரிய இடத்துப் பெண்'. 10-05-1963-ல் வந்தது.
@ * எம் ஜி ஆர் தேவிகாவுடன் இணைந்து நடித்த ஒரேயொரு படம் " ஆனந்த ஜோதி " 28-06-1963 அன்று வெளிவந்தது.
1964. * " கலைமன்னர் " என்ற பட்டம், அப்போதைய பிரதம நீதிபதி பி.வி. ராஜ மன்னார் அவர்களால், வழங்கப்பட்டது.
@ * எம் ஜி ஆர் நடித்த முதல் ஈஸ்ட்மன் கலர் திரைப்படமான
" படகோட்டி " 03-11-1964-ல் வெளிவந்தது.
@ * தலைவருடன் பாலாஜி நடித்த ஒரேயொரு படமான "என் கடமை" 13-03-1964- ஆன்று
வந்தது.
1965 * M.S.V. தனித்து இசை அமைத்த முதல் எம் ஜி ஆர் படம்
" கலங்கரை விளக்கம் " 28-08-1965 வெளிவந்தது.
@ * எம் ஜி யாரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படமான " "ஆயிரத்தில் ஒருவன் " 09-07-1965- அன்று வெளிவந்தது.
@ * அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு "‘நிருத்திய சக்கரவர்த்தி"’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
@ * மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பத்மஸ்ரீ பட்டம் கிடைத்ததால் அதை தலைவர் ஏற்க மறுத்து விட்டார்.
1966. *. இந்திய பிரதமர் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அந்தமானில் எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தை திறந்து வைத்தார்.
@ * A.V.M.-ன் முதல் வண்ண படமும் , எம் ஜி ஆர் AVM-க்காக நடித்த ஒரேயொரு படமும் அன்பே வா 14-01-1966-ல் வெளியானது.
@ * "சமநீதி" பத்திரிகையின் பொறுப்பாசிரியரானார் நமது தங்க தலைவர்.
@. * எம்.ஜி.ஆர். நடித்து, தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கை எதிர்த்து எடுக்கப்பட்ட படம் தான் 'சந்திரோதயம்' 27-05-1966-ல் வந்தது.
@ * எம் ஜி ஆர், எம் ஆர் ராதா வுடன் நடித்த கடைசி படமான
" பெற்றால் தான் பிள்ளையா " 09-12-1966 அன்று வெளியானது.
1967 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக எம் ஜி ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
@ * தமிழ் நாட்டின் சிறுசேமிப்பு துணைத்தலைவராக எம் ஜி ஆர் நியமிக்கப்பட்டார்.
@ * எம் ஜி ஆர் 12-01-1967-ல் எம் ஆர் ராதா அவர்களால் சுடப்பட்டார்.
1968. * "பொன்மனச்செம்மல்" என்கின்ற பட்டம், திரு. முருக கிருபானந்த வாரியார் அவர்களால், கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்டது.
@ * எம் ஜி ஆரின் 100-வது தமிழ் படமான "ஒளி விளக்கு". 20-09-1968 அன்று வெளிவந்தது
@ * எம் ஜி ஆர் அவர்கள் நடித்து வெளிவந்த 136 படங்களில் மிகவும் நீளம் குறைந்த படம்
" புதிய பூமி "
மொத்த நீளம். : 3961 meter
27-06-1968-ல் வெளியானது.
1969 * எம் ஜி ஆரின் சொந்த தயாரிப்பில் இரண்டாவதாக வெளிவந்த படம் "அடிமைப் பெண்" 01-05-1969-அன்று வெளிவந்தது. இதன் பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. இதில் ஒத்த கால் சண்டை பரபரப்பாக பேசப்பட்டது. தெழிலாளர் தினத்தில் வெளிவந்த ஒரே ஒரு எம் ஜி ஆர் திரைப்படம் *அடிமைப் பெண்*
1970 * எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம் பெற்ற படம், 'தலைவன்'.
@ * உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின் "என் அண்ணன்" படத்திற்கு அரங்கு : சேலம் அலங்கார்.
1971 * மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளரானார்
@ * "பாரத்" என்ற இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பட்டத்தை இந்திய அரசாங்கம் வழங்கியது.
@ * எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்த குதிரைப்படை வரவழைக்கப்பட்டது.
1972. * "கலை வேந்தன்" என்கின்ற பட்டம் மலேசிய அரசாங்கம் அளித்து கவுரவித்தது.
@ * 10-10-1972 அன்று திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து எம் ஜி ஆர் நீக்கப்பட்டார்*. -
@ * 17-10-1972 அன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் புதிய அரசியல் கட்சியை எம் ஜி ஆர் துவங்கினார்.
@ * 29-10- 1972-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி "புரட்சி நடிகர்' அல்ல, *புரட்சித்தலைவர் * என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.
1973.* எம் ஜி ஆரின் மூன்றாவது சொந்த தயாரிப்பில் வெளிவந்த படம் "உலகம் சுற்றும் வாலிபன்" 11-05-1973 அன்று வெளியானது.
1974. * கெளரவ டாக்டர் பட்டம் -
அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா.
1975 * TMX 4777 இந்த நம்பர் காரை தலைவர் 1975 - லேயே பதிவு செய்யப்பட்டது. இந்த எண் அவருக்கு இயற்கையாவே தான்
தமிழ்நாடு முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்து முதல் கையெழுத்து இட்ட நாளை ஞபகபடுத்த கூடியது ஆகியது...
@ * சத்யா மூவிஸ் வெற்றி படமான "இதயகனி" 22-08-1975 அன்று வெளிவந்தது.
1976 * 23-05-1976 அன்று வெளியான "உழைக்கும்கரங்கள் "
படத்தில் வரும் மான்கொம்பு
சண்டை எந்த ஒரு திரைபடத்திலும் , திரையுலக வரலாற்றிலேயே இடம்
பெற்றதில்லை !!
1977 * " நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை!
A.P நாகராஜன் எம் ஜி ஆரை வைத்து எடுத்த முதல் படமும்
A.P.நாகராஜனின் கடைசி படமும் நவரத்தினம் தான் - 05-03-1977
@ * 30-06-1977 -அன்று தமிழக முதல்வராக முதல் முறையாக எம் ஜி ஆர் அவர்கள் பதவியேற்றார்
1978. * எம் ஜி ஆர் நடித்த கடைசி படமான " மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" 14-01-1978 பொங்கல் அன்று வெளிவந்தது
@ * தேவ*ர் தன*து 64-ஆம் வ*யதில் செப்டம்பர் மாதம் 8-ஆம் தியதி மார*டைப்பு கார*ண*மாக இறந்தார். தேவ*ரின் இறுதி ஊர்வ*ல*த்தில் எம் ஜி ஆர் க*ல*ந்துகொண்டார்.
1979. * " டாக்டர்" பட்டம், முதலில் அமெரிக்க அரிசோனா பல்கலை கழகம், வழங்கி கவுரவித்தது.
@ * இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். 05-11-1979 அன்று
இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.
1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது ( பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக) தமிழகத்தில் நடந்த
மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை பிடித்து 03-06-1980
ஆம் தேதி மக்கள் திலகம் இர*ண்டாம்முறையாக தமிழக முத*ல்வ*ராக ப*த*வியேற்றார்.
1981. * மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 * தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முதலமைச்சா் புரட்சித் தலைவா் அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்று உருவாக்கப்பட்டது.
1983. * மீண்டும், "டாக்டர்" பட்டம் சென்னை பல்கலைக் கழகம் மூலம் பெற்றார்.
1984 * நாகேஷ் அவர்கள் தான் கட்டிய "தியேட்டர் நாகேஷ்" திரையரங்கை 27-06-1984 -ல், முதல்வர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் திறந்து வைத்தார்.
@ * தலைவர் உடல் நிலை பாதிப்பு அக்டோபர் மாதம்** 5-ம் தியதி வெள்ளிக் கிழமை இரவு 11-30 மணிக்கு எம் ஜி ஆர் அவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரில் சேர்க்கப்பட்டார்.
@ * தலைவர் உடல் நிலையில்
முன்னேற்றம் இல்லாததினால்
அமெரிக்க தலைநகரான
நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவ மனையில். 05-11-1984-ல் அனுமதிக்கப்பட்டார்.
1985. * 10-02-1985-ல் எம் ஜி ஆர் அவர்கள் தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் -
@ * எம்ஜிஆர் தனக்களிக்கப்பட்ட சிசிக்சைக்க அரசு செலவு செய்த தொகையான ரூ.96 இலட்சத்து 90 ஆயிரத்து 376ஐ 30-06-85 ஆம் தேதியன்று அரசுக்கு திருப்பிச் செலுத்தினார்
@ * ஏவிஎம் சரவணனை* சென்னை நகர ஷெரீப் ஆக புரட்சித்தலைவரால் நியமனம் செய்த விழா ராஜ்பவனில் நடந்தது.
1986.* புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடத்த திட்டமிட்டார்.
அதன்படி மதுரையில் 1986-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது இவ்விழாவில்தான்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு ஆறடி உயரமுள்ள செங்கோலை பரிசாக வழங்கினார் அம்மா.
புரட்சித்தலைவருக்கு வழங்கப்பட்ட இந்த வெள்ளி
செங்கோலை தயார் செய்தவர்
முசிறிப்புத்தன்.
1987. * இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார். -
@ *. பெருந்த*லைவ*ரின் சிலைக்கு 1987 ஜூலை 15 அன்று புர*ட்சித்த*லைவ*ர் மாலை அணிவித்து ம*ரியாதை செய்தார் .
@ கடைசியாக எம் ஜி ஆர் அவர்கள் கலந்து கொண்ட விழா ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழா. 1987 டிசம்பர் 21
@ * எம் ஜி ஆர் தமிழக முதல்வராக இருந்த போது 24-12-1987 அன்று காலை 3-30 மணி அளவில் முதல்வராகவே மரணம் அடைந்தார்.
@ * இந்தியாவிலே பிரதமர் ஜெனாதிபதி துணை ஜெனாதிபதி இவர்வர்கள் மூவரும் ஒரே நேரம் தலைநகரை விட்டு வெளி செல்லகூடாது இது மரபு எம் ஜி ஆருக்கு இறுதி மரியாதை செய்ய இந்த மரபுகளை மீறி மூவரும் வந்து மரியாதை செய்தது எம்ஜிஆர் ஒருவருக்கே
1988. * " பாரத ரத்னா" என்ற நமது இந்திய நாட்டின் உயரிய விருது அவரது மறைவுக்குப் பின் 26-01-1988
அன்று மனைவி வி.என்.ஜானகி அம்மையார்யிடம் அளிக்கப்பட்டது.
1990. * இந்திய தபால் துறை எம் ஜி ஆர் அவர்களின் 60 ps தபால் தலை 17-01-1990-ல் வெளியிட்டு கெளரவித்தது.
2017 * இந்திய தபால் துறை எம் ஜி ஆர் அவர்களின் 15 ரூபாய் தபால் தலை 17-01-2017 அன்று வெளியிட்டு கெளரவித்தது.
2019 * இந்திய அரசாங்கம் 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயத்தை 17-01-2019-ல் வெளியிட்டு கெளரவித்தது.
@ * சென்னை மத்திய ரயில் நிலையத்தை * புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்று மத்திய அரசு மாற்றி நம் தலைவரை மேலும் கெளரவித்தது......
2020*. 100 ரூபாய் மற்றும் 5ரூபாய் நாணயத்தின் முன் பதிவு 21-01-2020 அன்று துவங்கி 29-02-2020 அன்று முடிவடைகிறது...
* வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ் *
இது ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே.......
தவறான தகவல் இருந்தால் தயங்காமல் தெரியப்படுத்தவும் அது இதில் உடனே திருத்தபடும்....
ரசிகர்களுக்கு / பக்தர்களுக்கு எப்போதும் சரியான தகவலை தான் கொண்டு செல்ல வேண்டும்
என்பதே என் தாழ்மையான கருத்து........
நன்றி.....
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்.......... Thanks...
orodizli
28th April 2020, 08:11 PM
இந்த சரித்திர நிகழ்வை தேதி வாரியாக வெளியிட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க வைத்த நண்பருக்கு இனிய வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு சகல சௌக்கியங்களுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்...... Thanks...
orodizli
28th April 2020, 08:14 PM
14-01-66. பொங்கல் திருநாள்:
அன்பே வா 1966 ஆம் ஆண்டு ஜனவரி 14 -ம் தியதி பொங்கல் திருநாள் அன்று நமது தங்க தலைவர் எம் ஜி யாரின் நடிப்பில் வெளியான திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த இப்படத்தில் சரோஜாதேவி, நாகோஷ, அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வெளிப்புறப்படப்பிடிப்பு அரிதாக இருந்த அந்நாட்களில் பெரும்பகுதி சிம்லாவில் படமாக்கப்பட்டது இதன் சிறப்பம்சம்.
தனது படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் இதுவென்றும், எப்போது பார்த்தாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும் என்றும் எம். ஜி. ஆர் கூறியதாகச் சொல்வர்.
மெல்லிய நகைச்சுவை இழையோடும் காதல் கதையாக உருவாகிய இத்திரப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏவி. எம். நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ஒரே திரைப்படமும் இதுவே.
வில்லனாக அன்றி குணசித்திர வேடத்தில் அசோகன் நடித்திருந்தார்.
அன்பே வா வெளியான 14-01-66 என்ற தியதியை குறிக்கும் பத்து ரூபாய் நோட்டு உங்கள் பார்வைக்கு மிக்க மகிழ்ச்சியுடன்....... Thanks VL
orodizli
28th April 2020, 08:17 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 17-,ம் தியதி தினத்தில் 1972-ம் ஆண்டு தான் நமது தங்க தலைவர் அண்ணா திமுகவை துவங்கினார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள்.
வரலாறு
சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கொடியின் வரலாறு
அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது. மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.
எம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார்.
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்....... Thanks...
orodizli
28th April 2020, 08:20 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 9-ம் தியதி
உலக அஞ்சல் தினம் (World Post Day) கொண்டாடப்படுகிறது
அக்டோபர் 9, 1874 -ல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன்
நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய அஞ்சல் துறை 1764இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.
இந்திய தபால் துறை நமது தலைவரை கெளரவ படுத்தும் வகையில் இரண்டு முறை தபால் தலை வெளியிடப்பட்டது.
நன்றி
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்...... Thanks...
orodizli
28th April 2020, 08:21 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 10
1972ஆம் ஆண்டு அக்டோப*ர் 10 ஆம் தேதியான தான் மக்கள் திலகத்தை திமுக*விலிருந்து நீக்கினார் க*ருணாநிதி. திமுக அமைச்ச*ர்க*ளும், செய*ற்குழு, பொதுக்குழு உறுப்பின*ர்க*ளும் த*ங்க*ள*து சொத்து க*ணக்கை மக்களிட*ம் ப*கிர*ங்க*மாக* வெளியிட* வேண்டும் என்று கேட்ட*த*ற்காக* இந்த* ந*ட*வ*டிக்கை.
ஆனால், உண்மையான கார*ணம் க*ட்சியை த*ன் முழுக்க*ட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், த*ன*து வாரிசுக*ளின் அர*சிய*ல் எதிர்கால*த்திற்கு எம்ஜிஆர் முட்டுக்க*ட்டையாக இருந்துவிட*க் கூடாது என்ற* க*ருணாநிதியின் சுய*ந*லமே ஆகும்......
திமுகவிற்கு தலைவரின் கடைசி கும்பிடு....
நன்றி Santhanam ADMK அவர்களே....
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்...... Thanks...
orodizli
28th April 2020, 08:23 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 9-ம் தியதி
இதே தினத்தில் தான் 1948-ம் ஆண்டு ராஜமுக்தியும் , 1970-ம்
ஆண்டு *எங்கள் தங்கமும்* வெளிவந்தது...
"எங்கள் தங்கம்" திரைபடத்தின் 100வது நாள் விழா 16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அந்த விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் கலந்து கொண்டனர்..
அந்த விழாவில் பேசிய முரசொலி மாறன்:
முரசொலி பத்திரிக்கை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் மேலும் தொடர்ந்து எங்கள் படங்கள் தோல்வி அடைந்த காரணங்களாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. குடும்பமே தற்கொலை
செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது..இந்த நிலைமையை புரட்சிதலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன் உடனே புரட்சித்தலைவரும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த "எங்கள் தங்கம்" படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தது மட்டுமில்லாமல் படத்தை மிகப் பெரிய வெற்றி அடைய செய்து அணைத்து சொத்துக்களையும் மீட்டு கொடுத்துள்ளனர். எங்கள்
சொத்துக்களை மட்டுமல்லாது எங்கள் மானத்தையும் மீட்டு தந்தவர்கள் புரட்சிதலைவர் மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்,...
அதே விழாவில் திரு கருணாநிதி..
மாறன் பேசும் போது புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை குறிப்பிட்டு பேசினார்..குடுத்து குடுத்து சிவந்த கரம் கர்ணன். அனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகர் குடுத்து குடுத்து மேனியே சிவந்து விட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வாழ்கின்ற காரணத்தினால் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என பெயர் வந்தது நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழி மொழிகிறேன்..
நன்றி
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்..... Thanks...
orodizli
28th April 2020, 08:24 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
செப்டம்பர் 26-ம் தியதி
இதே தினத்தில் தான் 1947-ம் ஆண்டு
என்.எஸ்.கே.பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் இரண்டாவது கதாநாயகனாக நடித்த திரைப்படமான
"பைத்தியக்காரன் "
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்தது.
இயக்குனர்கள் - கிருஷ்ணன் பஞ்சு
தயாரிப்பாளர் - டி.ராமசுவாமி என்.எஸ்.கே பிலிம்ஸ்
கதை - எஸ்.வி.சஹஸ்ரணாமம்
இசை - சி.ஆர்.சுப்புராமன் , எம்.எஸ்.ஞானமணி
நடிப்பு - எஸ்.வி.சஹஸ்ரணாமம்
என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், டி.பாலசுப்ரமணியம்
டி.ஏ.மதுரம், எஸ் *.டி.காந்தா,எஸ்.ஆர.ஜானகி
வெளியீடு - செப்டம்பர் 26,1947
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்....... Thanks...
orodizli
28th April 2020, 08:25 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
செப்டம்பர் 25-ம் தியதி
இதே தினத்தில் தான் 1964-ம் ஆண்டு
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த திரைப்படமான " தொழிலாளி " வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின்
பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
திரைப்பட சூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர்,
‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும்.
‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா,
‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார்.
இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார்.
இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா தேவர்.
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்....... Thanks...
orodizli
28th April 2020, 08:38 PM
பாலாஜி வாங்கிய பட்டம்: சிவாஜி,கமல், ரஜினியை வைத்து நிறைய படங்களை
தயாரித்த பாலாஜிக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டாம் அதாவது நமது மக்கள் திலகத்தை வைத்து ஒரு படத்தையாவது எடுத்திட வேண்டும் என்பதே அது. அப்போது இந்தியில் ஷோலே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் அதை தமிழில் தலைவரையும், சிவாஜி யையும் வைத்து எடுக்க ஏற்பாடு செய்த நேரத்தில் நமது தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டதாம். தனது சினிமாவுலக வாழ்க்கையில் நிறைவேறாமல் போனது இது ஓன்று தான் எனக் கூறுவாராம். பாலாஜி நாடகக் குழு திண்டுக்கல் சென்று கொண்டிருந்த நேரத்தில் மலைப்பாதயில் தீடீரென்று ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாது நின்று போக சுற்றிமுற்றி பார்த்து விட்டு ஒரு குடிசை வீட்டில் சென்று தண்ணீர் கேட்டிருக்கிறார் ஒரு குடம் தண்ணீர் கொடுத்து யாரென்று விசாரிக்கும் பொழுது நாங்கள் எல்லாம் சினிமாக் காரங்க மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறி காலி குடத்தையும் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் கொடுத்துள்ளார் அதைப் பார்த்ததும் நீ நல்லாருப்பே எம்.ஜி.ஆரு .என்று பாட்டி சொல்ல என்னை எம்.ஜி.ஆர் ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என பாலாஜி கேட்க எல்லோருக்குமே அள்ளிக்கொடுக்கிறவர் அவர் ஒருவர் தானேப்பா எனக்கூற சிரித்துக்கொண்டே காரில் ஏறிய பாலாஜியை நாகேஷ் இது உனக்குத் தேவையா எனக் கிண்டல் செய்துள்ளார். சினிமாவையும் சினிமா நடிகர்களைப் பற்றியும் தெரியவில்லை என்றாலும் M.G.R.ன்னு ஒரு வள்ளல் இருக்கிறார். அவர் நடிகராகத் தான் இருக்கிறார் அவர் தான் எல்லோருக்கும் கொடுப்பார் என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளார். அவரது நினைப்பை கெடுக்கக் கூடாது அது மட்டுமல்ல இது ஒரு ரசிகராக இருந்து நான் எம்.ஜி.ஆருக்குச் செய்யும் மரியாதை என்று பாலாஜி நாகேஷிடம் சொல்லி இருக்கிறார்.
"தரணி கண்ட தனிப்பிறவி", என்ற புத்தகத்திலிருந்து தொகுத்தது.
இன்றும் வாழ்கிறார் மக்கள் இதயத்தில் நம் இதயக்கனி.......... Thanks CKS.,
orodizli
28th April 2020, 08:40 PM
உலகத்தில், மொத்தம் (7) கடை ஏழு வள்ளல்கள் இரூந்தார்கள். தற்போது எட்டாவது வள்ளல். டாக்டர்:எம்.ஜி*.இராமச்சந்திரன் அவர்கள் ஆவர்.
(1) பாரி
(2) ஆய்
(3) எழினி
(4) நள்ளி
(5) மலையன்
(6) பேகன்
(7) ஓரி
(8) எம்.ஜி.இராமச்சந்திரன்.
வாழ்க கடை எட்டு வள்ளல்கள்......... Thanks.........
orodizli
28th April 2020, 08:43 PM
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி,
தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.
அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.
இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
- மக்கள்திலகம் பற்றி நாகேஷ்...... Thanks...
orodizli
28th April 2020, 08:49 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
இசையமைப்பாளர் கங்கை அமரனின் பங்களாவை மிரட்டி எழுதி வாங்காத
அருமைதலைவன்
எம்ஜிஆருக்கு பக்கத்தில்
அமர்ந்திருப்பவர்
P.H. பாண்டியன்
1977. / 1980. / 1984. /
ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில்
சேரன்மாதேவி
தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தவர்
இவருடைய அறிவாற்றலை தெரிந்துகொண்ட எம்ஜிஆர் அவர்கள் இவரை சட்டசபை சபாநாயகராக நியமித்தார்
எம்ஜிஆர் மறைந்த பிறகு
எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டு வந்தவர்களில்
இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்...... Thanks...
orodizli
28th April 2020, 08:53 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருக்கும் துரோகியின் பெயர்
நவநீதகிருஷ்ணன்
மதுரை மாநகராட்சியின் துணை மேயர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்துக்கு துரோகம் செய்தவர்
1++++++++++++++++++++++++++++++
எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலகட்டத்திலேயே
மதுரை நகரிலே எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தவர் பெயர்
தங்கம்
இளவரசன்
மதுரை நகர் முழுவதும் இவர்கள் இரண்டு பேருடைய பெயரைத்தான் எம்ஜிஆர் மன்ற தோழர்களுக்கு நன்றாக தெரியும்
MGR அவர்கள் அதிமுகவை
ஆரம்பித்தபின் தங்கம் இளவரசன் இருவரும் கட்சி வளர்ச்சிக்கு பயங்கரமாக பாடுபட்டார்கள்
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு
எம்ஜிஆர் மன்ற பொறுப்புக்கு வந்தவர் தான் நவநீதகிருஷ்ணன்
தங்கம் இளவரசன்
இவர்களைப்போல் ஆதிகாலத்திலிருந்து
எம்ஜிஆர் மன்றத்தை வைத்து அதன் வளர்ச்சிக்கு
பாடுபடாதவர்
நவநீதகிருஷ்ணன்
காலக்கொடுமை பெருக்கான் காவடி எடுத்து ஆடியது என்று பழமொழி
நவநீத கிருஷ்ணனுக்கு பதவி கிடைத்தது
தங்கம் இளவரசன் போன்றவர்கள்
மதுரை மாநகராட்சி மேயராகவே வரக்கூடிய
தகுதிபெற்றவர்கள்
ஆனால் துரோகி நவநீதகிருஷ்ணன் துணை மேயராக வந்தார்
ஜெஅணியில் இருந்து கொண்டு ஜானகி அம்மையாருக்கு எதிராக செயல்பட்டார்
இவர்களெல்லாம் எம்ஜிஆரிடம் பதவி பெறாமல் இருந்துவிட்டு
ஜானகி அம்மாவிற்கு துரோகம் செய்திருந்தால் தவறு இல்லை
MGR எம்ஜிஆரிடம் பதவிகள் அனுபவித்துவிட்டு
MGR எம்ஜிஆர் மனைவிக்கு துரோகம் செய்தார்கள்
/////////////////////////////////////?////////?///?.... Thanks...
++++++++++++++++++++++++++++?++++(?
fidowag
28th April 2020, 08:55 PM
தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு விவரம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------
25/04/2020* - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* *-* பாசம்*
* * * * * * * * * *சன் லைப்* *- காலை* 11 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * * * * முரசு டிவி - காலை 11 மணி /இரவு 7 மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * * * * புதுயுகம் டிவி* *- இரவு 7 மணி* * -கன்னித்தாய்*
26/04/20* * * * * சன் லைப்* *- காலை 11 மணி* -* கணவன்*
27/04/20* * * ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* - இதய வீணை*
* * * * * * * * * *-* * சன்* லைப்* - காலை 11 மணி* - உரிமைக்குரல்*
* * * * * * * * * * * * மீனாட்சி டிவி - இரவு 11 மணி* - விவசாயி*
28/04/20* * * - பெப்பர்ஸ் டிவி -காலை 4 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * * - ஜெயா மூவிஸ் -காலை 7 மணி* -பணக்கார குடும்பம்*
* *முரசு டிவி _காலை 11 மணி /இரவு 7 மணி -*அலிபாபாவும் 40திருடர்களும்*
* * * * * * * * * * * வானவில் டிவி* -பிற்பகல் 2 மணி* - நீரும் நெருப்பும்***
மூன்* டிவி* *-இரவு 7.30 மணி* -தாய்க்கு*தலை மகன்*
29/04/20* * * சன் லைப்* * - காலை 11 மணி* - அரச கட்டளை*
* * * * * * * * * *
orodizli
28th April 2020, 08:58 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15. செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி
அடுத்தவர் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்காத. அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்களுக்கு
நினைவுப்பரிசு வழங்குபவர்
விஜயபாலன் எம் எல் ஏ
1980. + 1984 ஆண்டுகளில் நடைபெற்றசட்டசபை பொதுத் தேர்தலில்
பூம்புகார்
சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்....... Thanks...
orodizli
28th April 2020, 09:43 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பார்த்து விட்டு வந்த எம்ஜிஆர் ரசிகர்கள் இருவர் இப்படிப் பேசிக் கொண்டார்களாம்.
“ என்னய்யா சிவாஜியை கடைசியில் தூக்கில தொங்கவிட்டுட்டாங்க.
இதே படத்துல வாத்தியாரு நடிச்சிருந்தா அந்தத் தொரையைப் புடிச்சு தூக்கில தொங்கவிட்டிருப்பாரு”......
இப்படி அடிக்கடி மேடையில் நகைச்சுவையாகச் சொன்னவர்
சிவாஜி ரசிகர் மன்றத் தலைவராக இருந்த திரு.சின்ன அண்ணாமலை.
அதே சின்ன அண்ணாமலை
எம்ஜிஆர் முதல்வரான பிறகு
இதே நகைச்சுவைத் துணுக்கை மேடையில் சொல்லிவிட்டு
“இப்படி வரலாற்றையே புரட்டிப் போடக்கூடிய வல்லமை படைத்தவர்தான் நமது முதல்வர் எம்ஜிஆர்” என்று பேசியதும் உண்டு.
......”திரைத்தமிழ்”......... Thanks...
orodizli
28th April 2020, 09:44 PM
https://youtu.be/lLHO7W5XCoo...... Thanks...
orodizli
28th April 2020, 09:58 PM
ஸ்ரீ MGR. வாழ்க.
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர்
வேலாயுதம் நல்ல சிவா
திருவாங்கூர் ஸ்டேட் பாங்க் அதிகாரி
அவரைப் பற்றி
நான்கு மணி நேரத்திற்கு முன்பாக நான் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன்
அவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி எந்த அளவுக்கு வெறி பிடித்து
எம்ஜிஆர் அவர்களுடைய வரலாறுகளை சேகரித்து வைத்துள்ளார் என்பதற்கு இந்தப்பதிவு சாட்சி
//////////////////////////////////////////
வேலாயுதம் நல்ல சிவா / ஆகிய
என்னிடம் நமது தலைவரின் பிறந்தநாளை குறிக்கும் எண்கள் உள்ள ரூபாய் 1 முதல் 500 வரையிலும் மற்றும் கால் முறிவு அடைந்தநாள், ஜானகி அம்மாளை மணம்புரிந்தநாள், குண்டடி பட்ட நாள், திமுகவில் இருந்து நீக்க பட்ட நாள், அதிமுக தொடக்க நாள், முதல் அமைச்சரான நாள், சட்டசபை பதிவேட்டில் கையொப்பம் இட்டநாள், கார்நம்பர், அரசு டிஸ்மிஸ் ஆன நாள், சத்துணவு துவக்க நாள், அப்போலோவில் அட்மிட் ஆனநாள், பூருகிளினில்இருந்த நாள்கள், மறைந்த நாள், பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டநாள், பாலக்காட்டில் உள்ள நினைவு இல்லம் திறந்த நாள் ஆகியவையும் குறிக்கும் 10 ரூபாய் நோட்டுகள் உள்ளது..
நன்றி அய்யா......... Thanks...
orodizli
28th April 2020, 10:01 PM
இதயதெய்வம் புரட்சித் தலைவரின் தொண்டர்களில் மிக வித்தியாசமானவர் திரு.வேலாயுதம் ஆவார்கள்.தலைவரின் மீது அவர் கொண்டிருக்கும் பக்தி அபாரமானது.தொண்டர்தம் இதயங்களில் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.தலைவரின் இதயத்தில் தொண்டர்கள் வாழ்ந்தனர்.இதுவே நம் வரலாறு! இப்படிப்பட்ட உலகிலேயே யாருக்கும் இல்லை.. மூன்று வகையான சிறப்பு நம் தலைவருக்கே உண்டு.(1) அன்றும்-இன்றும்-என்றும் மாறாத பாசமும்,அன்பும் கொண்டு இதயதெய்வம் புரட்சித் தலைவரின் புகழைப் பாடும் தொண்டர்கள்.(2)எந்தவித உழைப்பும் இல்லாமல் புரட்சித் தலைவரின் கட்சியில் -ஆட்சியில் இருந்து கொண்டு-அவர் படத்தை மறைத்து பிழைப்பு(துரோகிகள்) நடத்துபவர்கள்.(3)தீய எண்ணம் கொண்ட எதிரிகள்-அரிதாரம் பூசினால் போதும்-அரியணை ஏறிவிடலாம் என ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களை முட்டாளாக நினைக்கும் எத்தர்கள்..எவராக இருந்தாலும் புரட்சித்தலைவரை சொல்லாமல் வெளியே நடமாட முடியாது. இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்பது மாபெரும் சக்தி.திரு.வேலாயுதம் அவர்களுக்கு தலைவரின் ஆசி நிச்சயம் உண்டு.வாழ்த்துக்கள்! நன்றி!!!... Thanks...
orodizli
28th April 2020, 10:08 PM
கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அது
யாருக்காக கொடுத்தார்.
ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை
ஊருக்காக கொடுத்தார்.
புரட்சித்தலைவர் நல்ல காரியங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சரி; நாட்டுக்கும், மொழிக்கும் உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதிலும் சரி, முதல் ஆளாக நிற்பார். அப்படி உதவுவதில் அரசு நடைமுறைகளால் தாமதமோ, விதிமுறைகள் மீறலோ இல்லாமல் பார்த்துக் கொள்வார்!
வெள்ளையருக்கு சிம்ம சொப்பன மாகத் திகழ்ந்த லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு புனேயில் வெண்கல சிலை வைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. தேசியத் தலைவரான திலகரின் சிலை நிறுவ மற்ற மாநிலங்களின் பங்களிப் பும் இருக்க விரும்பி, எல்லா மாநிலங்களிடமும் மகாராஷ்டிர அரசு நிதி கோரியது.
திலகரின் பேரன் அந்த மாநிலத்தின் சட்ட மேலவைத் தலைவராக இருந்தார். சிலை அமைக்க நிதி கோருவதற்காக அவர் தமிழகம் வந்தார். அப்போது, தமிழக சட்ட மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.க்கு முன்கூட்டியே கடிதம் எழுதிவிட்டு, குறிப்பிட்ட நாளில் வந்து அவரை சந்தித்தார். அன்று தமிழக சட்டப்பேரவை மற்றும் மேலவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
மேலவைத் தலைவரான ம.பொ.சி- யின் அறையில் அவரை சந்தித்த திலக ரின் பேரன், முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அதை அறிந்து, பேரவை நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் ம.பொ.சி.யின் அறைக்கு வந்துவிட்டார். திலகருக்கு சிலை அமைக் கப்பட இருப்பதையும் தமது வருகைக் கான நோக்கத்தையும் அவரிடம் திலகரின் பேரன் தெரிவித்தார். உடனே, தனது செயலாளரை அழைத்த எம்.ஜி.ஆர்., அவரது காதில் ஏதோ சொன்னார்.
செயலாளர் வெளியே சென்று முதல்வரின் அறையிலிருந்து காசோலை புத்தகத்தைக் கொண்டு வந்தார். காசோ லையில் ரூ.50 ஆயிரம் தொகையை எழுதி கையெழுத்திட்டு ‘‘திலகர் சிலை அமைக்க இது என் நன்கொடை’’ என்று கூறி திலகரின் பேரனிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.! இவ்வளவு பெரிய தொகையை, அதுவும் முதல்வர் தனிப் பட்ட முறையில் தருவார் என்று எதிர் பார்க்காத திலகரின் பேரன், அவருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். காசோலையைப் பெற்றுக் கொண்ட அவருக்கு மனதில் ஒரு சந்தேகம்.
‘‘அரசிடம் இருந்துதான் பணத்தை எதிர்பார்த்தேன். நீங்கள் சொந்தப் பணத் தில் இருந்தே கொடுத்து விட்டீர்களே?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ‘அரசு மூலம் கொடுக்காமல் நீங்களே கொடுத் தது ஏன்?’ என்ற அவரது சந்தேகம் அந்தக் கேள்வியில் தொக்கி நின்றது. அது எம்.ஜி.ஆருக்குப் புரியாமல் போய் விடுமா? ‘‘அரசாங்க நிதியில் இருந்து கொடுப்பதென்றால் நான் எழுதும் கடிதம் முறைப்படி ஒவ்வொரு துறையாகச் சென்று ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும். அதைத் தவிர்க் கவே என் சொந்தப் பணத்தைக் கொடுத் தேன். மேலும், திலகரின் சிலை அமைய நானே நன்கொடை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி!’’ என்று புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். சொல்ல, நடைமுறைக்கேற்ப முடிவெடுக்கும் அவரது திறனையும் தேசப்பற்றையும் கண்டு சிலிர்த்தார் திலகரின் பேரன்!
நன்றி:ஶ்ரீதர் சுவாமி நாதன்.......... Thanks...
orodizli
28th April 2020, 10:14 PM
இன்று கவிஞர் வாலி...
ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனைப் புரிந்தவர் கவிஞர் வாலி. அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவை.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என அனைத்து தலைமுறை கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதி இறக்கும்போது கூட பிஸியான பாடலாசிரியராகவே இருந்தவர் கவிஞர் வாலி.
எம்.ஜி.ஆரின் படங்களுக்கு அதிகமாக பாடல்களை எழுதி புகழிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்த அவர், எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்கள், தத்துவப் பாடல்களை என்று எழுதி அவரது அரசியல் வாழ்க்கைக்கே உறுதுணையாக இருந்தார். தான் நடிக்கும் படங்களுக்கெல்லாம் வாலி பாடல்களை எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆரால் சிபாரிசு செய்யப்பட்டவர்.
இதே வாலிதான் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடல் எழுதப் போய், அந்தப்பாடலை ஒகே சொல்ல வைப்பதற்கும், படமாக்கப்படுவதற்கும் படாதபாடுபட்டுவிட்டார். எம்.ஜி.ஆருக்காக வாலியால் எழுதப்பட்ட அந்த முதல் பாடல் பெரும் சோதனைக்குள்ளானது. இந்த அனுபவங்களை அவர் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார்.
கவிஞர் வாலிக்கு பாடல் எழுதுகின்ற முதல்வாய்ப்பு கெம்புராஜ் அர்ஸ் தயாரித்து இயக்கி நடித்த 'அழகர் மலைக்கள்ளன்' (1958) படம் மூலம் கிடைத்தது. நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் இந்த வாயப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப்படத்தில் நடிகர் கே.பாலாஜி 'சபாஷ் மீனா', மாலினி, வி.கோபாலகிருஷ்ணன், விஜயகுமாரி, ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு கோபாலம் என்பவர்தான் இசையமைப்பாளர். வாலி முதல் பாடலை இப்படி எழுதிக் கொடுத்தார்... 'நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒருநாள் உனதம்மா...'
இந்தப் படத்திற்கு பிறகு சில படங்களில் பாடல் எழுத வாய்ப்புகளை தேடிப் பெற்றார் வாலி. ஆனாலும் வாலியும் ஒரு பாடலாசிரியர் என்ற அங்கீகாரம் சரியாக அமையவில்லை. போராட்டம் தொடர்ந்தது.
ஒருநாள் அரசு பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பாடல் எழுதும் வாய்ப்பு தேடி வந்தது... ஓடிப் போய்ப் பார்த்தார் வாலி. அங்கே டைரக்டர் ப நீலகண்டன், இசையமைப்பாளர் டிஆர் பாப்பா ஆகியோர் இருந்தார்கள்.
"நீங்க நல்லா பாட்டு எழுதுவீங்கனு மா.லட்சுமணன் சிபாரிசு பண்ணார். அதனால்தான் உங்களை அழைத்திருக்கிறோம்," என்று சொன்னபடி வாலியை வரவேற்றார் டைரக்டர் ப.நீலகண்டன். மா.லட்சுமணனுக்கு மனதிற்குள் நன்றி சொன்னார் வாலி. ஏற்கனவே இசையமைப்பாளர் டிஆர் பாப்பா மீது கவிஞர் வாலிக்கு ஒரு மரியாதை உண்டு. இவருடைய இசையில் பல பாடல்கள் பிரபலமாகியிருக்கின்றன.
"இந்தப் படத்தின் கதாசிரியர் யார் தெரியுமா? கதாநாயனாக நடிக்க போகிறவர் யார் தெரியுமா?," என்று கேள்விமேல் கேள்விகேட்டுக் கொண்டிருந்தார் டைரக்டர் ப.நீலகண்டன்.
"தெரியாது சார்..." என்று மெல்ல தலையாட்டினார் கவிஞர் வாலி. ப.நீலகண்டன் தொடர்ந்தார்.
இந்தப் படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணா, கதாநாயகன் எம்.ஜி.ஆர், இயக்குநர் நான்தான் ப.நீலகண்டன்," என்று சொல்லி முடித்ததும் கவிஞர் வாலிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி ஒரு பெரிய வாய்ப்பு வரும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. 'பேரறிஞர் அண்ணாவின் கதைக்கு, எம்.ஜி.ஆர். நாயகராக நடிக்கும் படத்திற்கு பிரபல இயக்குvர் ப.நீலகண்டன் இயக்கத்தில் நான் பாடல் எழுதுவேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை'. மனதிற்குள் துள்ளி குதித்தார்.
ப.நீலகண்டன் தொடர்ந்து, "இந்தப் படத்தின் பெயர் 'நல்லவன் வாழ்வான்', இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராஜ சுலோச்சனா நடிக்கிறாங்க. அவர்கள் இரண்டுபேரும் இணைந்து பாடும் டூயட் பாடலை எழுதத்தான் உங்களை கூப்பிட்டிக்கிறோம்," என்று பாடல் காட்சிக்கான சூழ்நிலையை விளக்கினார் ப.நீலகண்டன். வாலி எழுதிக் கொடுத்தார்.
'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே...'
ப.நீலகண்டனுக்கு வாலி எழுதிய பாடல் பிடித்துவிட்டது. அடுத்து படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணாவிடம் வாலியின் பாடல்போனது. அதைப் படித்துப் பார்த்த அண்ணா சிலவரிகளைக் குறிப்பிட்டு சொல்லி அவற்றை மாற்றாமல் அப்படியே பாடலாக்குங்கள் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி அனுப்பினார். அண்ணாவின் பாராட்டு பெற்றதில் கவிஞர் வாலிக்கு மகிழ்ச்சி. 'நல்லவன் வாழ்வான்' (1961) படத்தின் படப்பிடிப்பு சாரதாஸ் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிந்தது. எம்.ஜி.ஆர் - ராஜசுலோக்சானா நடித்துக் கொண்டிந்தார்கள். படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆர். பாடலை கேட்க சாரதாஸ் ஸ்டுடியோவின் ஏ.ஸி.அறைக்கு வந்தார். வாலியும், டி.ஆர்.பாப்பாவும் காத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆரை ப.நீலகண்டன் அழைத்து வந்தார்.
"இவர்தான் பாடலாசிரியர் வாலி" என்று எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
உடனே எம்.ஜி.ஆரும் "நான்தான் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகர்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லையே... என்னண்ணே?" என்றார் வாலி.
"உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய டைரக்டர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே... அதனால்தான் என்ன அறிமுகப்படுத்திக் கொண்டேன்," என்றார் எம்.ஜி.ஆர்.
டி.ஆர். பாப்பா பாடி காட்டினார். எம்.ஜி.ஆருக்கு பாடல் பிடித்துவிட்டது. வாலிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, கடவுளை வேண்டிக் கொண்டார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இந்தப் பாடல் ஒ.கே. ஆகிவிட வேண்டும் என்று. பாடலுக்கான ரிக்கார்டிங் வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாடலைக் கேட்டார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை. சிலமாற்றங்கள் செய்ய வேண்டும் என்றார். மாற்றங்கள் செய்ய வேண்டியதற்கான நேரம் போதுமானதாக இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் சாரதா ஸ்டுடியோவில் பாடல் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் இந்தப் பாடலை பாடவேண்டிய பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு உடல நலம் சரியில்லாமல் போனது. ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. வந்த இந்த பெரிய வாய்ப்புக்கு இப்படி சோதனைகள் வருகின்றதே என்று வாலிக்கு வேதனை அதிகமாகிவிட்டது.
பிறகு ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராஜனின் சாரீரம் உதவும்படியாக இல்லை என்று கூறி ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
இறுதியில் இந்தப்பாட்டு ராசியில்லாத பாட்டு அதனால் மருதகாசியை வரவழைத்து வேறு பாட்டு எழுத வைத்து ஒலிப்பதிவு செய்வோம் என்று டைரக்டர் ப.நீலகண்டன் முடிவெடுத்தார். மருதகாசி வரவழைக்கப்பட்டார்.
மருதகாசியும் வாலியின் பாடலை வாங்கி படித்தார். "இந்தப் பையன் நல்லாதான் பாடலை எழுதியிருக்கிறான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை. இந்தப் பாட்டையே வைத்துக் கொள்ளுங்கள்... பாப்புலராகும்," என்று சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு வழியில்லாமல் வாலியின் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்கு போனார்கள்.
நியூட்டன் ஸ்டுடியோடிவில் பாடலை முழுவதுமாக படம் பிடிக்க பிரம்மாண்டமான செட் போட்டார்கள். ஒருமலை, வழியும் அருவி, அருவி வந்து விழும் தடாகம் என அழகான செட். எம்.ஜி.ஆர், ராஜசுலோச்சனா ஆடிப் பாடுவதுபோல நடன இயக்குநர் ஒத்திகைப் பார்த்தார்.
முதல் ஷாட். எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு ஏற்ப வாயசைத்துக் கொண்டே கரையிலிருந்து தடாகத்திற்குள் இறங்கினார். கரை உடைந்து ஃப்ளோர் முழுவதும் வெள்ளக்காடாயிற்று. படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டது. வாலி துவண்டு போனார்.
'இந்த பாடலுக்கே இத்தனை தடங்கள் என்றால் நம் எதிர்காலம் என்னாவது?'
நல்லவேளை செட்டு சீர் செய்யப்பட்டு பாடல்காட்சியும் நல்லவிதமாக படமாக்க்கப்பட்டது. படத்திலும் இடம் பெற்றது. இந்தப்படம் சென்சாருக்குப் போனபோது இறுதியில் வரும் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாக இருப்பதாக சரணத்தில் உள்ள சிலவரிகளை சென்சார் வெட்டியது.
இத்தனை வேதனை, சோதனைகளுக்குப் பிறகுதான் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் இடம் பெற்று படமும் வெளிவந்தது.
'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தின் தலைப்பின் படி எத்தனை சோதனை, வேதனை வந்தாலும் 'நல்லவன் வாழ்வான்' என்பது வாலியின் வாழ்க்கையில் உண்மையானது.
'நல்லவன் வாழ்வான்' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆருக்காக அதிகமான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் வாலிதான் என எம்ஜிஆர் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
நன்றி
பெரு துளசிபழனிவேல்........ Thanks...
orodizli
28th April 2020, 10:18 PM
கவியரசு அவர்கள் எம் ஜி ஆரின் 48 படங்களில் 218 பாடல்களும் ,வாலி 51 படங்களில் 182 பாடல்களும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதி உள்ளனர்
அருமையான பதிவு.
அதற்கு உகந்த பாடல்..... நன்றி நண்பரே...
கவிஞர் வாலி இவரது இயற்பெயர்
டி. எஸ். ரங்கராஜன், இவர் 29-10-1931-ல்
பிறந்தார்.
2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது....... Thanks VN
orodizli
28th April 2020, 10:19 PM
வாலியைப் பற்றி கவிதைப் பதிவிடுவதாக இருந்தேன். கண்ணதாசனுக்கு இணையாகக் கடை விரிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை!! எம்.ஜி.ஆரால் தான் ஊருக்கு இவர் முகவரி தெரிந்தது என்றாலும்--அதைத் தன் திறமையால் தக்க வைத்துக் கொள்வது பெரிய விஷயம்!!
முத்துலிங்கம்--புலமைப் பித்தன்-- நா.காமராசன் போன்றோர் கூட எம்.ஜி.ஆரால் திரைக்கு வந்தவர்கள் தான். ஆனால் அவர்களால் காலத்துக்கு ஏற்றார் போல் எழுத முடியவில்லை!!
மாதவிப் பொன் மயிலாள் எழுதிய கை தான்
முக்காபுலாவும் இயற்றியது!!
ஒப்பனைக்கும் விற்பனைக்கும் எழுதினாலும்
கற்பனைக்குப் பஞ்சம் இருந்திருந்தால்-
சொற்-புனைக்கும் சொக்கட்டான் ஆட்டம் எப்படி ஆடியிருக்க முடியும்??
கண்ணதாசனுக்கு இணையாகவே வலம் வந்த இந்தத் தமிழுக்கு என் அஞ்சலி!..... Thanks...
orodizli
28th April 2020, 10:21 PM
ஜுலை 15 கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
தலைமை செயலகம் தலை நிமிர்ந்து பெருமை கொள்ள காரணமான இரு தனிப் பெருந்தலைவர்கள்...... Thanks...
orodizli
28th April 2020, 10:23 PM
July 15, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா.கல்விக் கண் திறந்த காமராஜர் புகழ் வாழ்க வளர்க.
இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்
எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்....... Thanks...
orodizli
28th April 2020, 10:24 PM
தமிழகத்தில் புரட்சித் ததலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சா் புரட்சித் தலைவா் அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்று உருவாக்கப்பட்டது.
சத்துணவுத் திட்டத்தின் நோக்கம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்
ஊட்டசத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ மாணவியா்களுக்கு ஊட்டசத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்
பள்ளி பயிலும் மாணவ, மாணவியா் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்.
சத்துணவுத்திட்டத்தை இன்று சிலாகித்துப் பேசினாலும் எம்.ஜி.ஆர் அதை அமல்படுத்தியசமயம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அன்றைய எதிர்கட்சியான திமுக அந்தத் திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என வர்ணித்தது. எம்.ஜி.ஆர் குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்குகிறார். பெற்ற பிள்ளைக்குச் சோறு போட பெற்றவர்களால் முடியாதா...” என விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் சத்துணவுத்திட்டத்தை அவர் கைவிட விரும்பவில்லை. சத்துணவுத்திட்டத்துக்கு ஆகிற செலவு வருமானமில்லாத அதிகப்படியான செலவு என ஓர் ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைக் கூட்டம் முடிந்தபின் வறுத்தெடுத்தார் எம்.ஜி.ஆர். என்ன செலவானாலும் சத்துணவுத்திட்டத்தைக் கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக நின்றார் அவர். அடுத்த சில வருடங்களில் அதன் அருமையை உணர்ந்தனர் தமிழக மக்கள். பள்ளிகளில் சேர்க்கை விகிதம் உயர்ந்தது. எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
ஐ.நா நிறுவனம், சத்துணவுத்திட்டத்தின் செயல்பாட்டை அறிந்து அதுபற்றிய விரிவான அறிக்கையை தமிழக அரசிடமிருந்து கேட்டுப்பெற்றதோடு தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுத் தெரிவித்தது. அந்த வருடத்தில் நடந்த ஐ.நா சபையின் ஒரு கூட்டத்தில் தமிழகம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வரைவு, சத்துணவுத்திட்டம் பற்றியது. அதில் கலந்துகொள்ள தனது அமைச்சரவையிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆர்.
பல லட்சம் குழந்தைகளைப் பள்ளிக்கூட வாசலைத் தொட வைத்த இந்த மகத்தான திட்டம் 35 ஆண்டுகளாகத் தொய்வின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொலை நோக்கு திட்டத்தைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரின் புகழும் அவர் மறைந்து 32 ஆண்டுகளுக்குப் பின்னும் மங்காது உள்ளது.
சத்துணவுத்திட்டத்திற்கு தமிழக அரசியலில் இன்னொரு பெருமையும் உண்டு. ஒரு கட்சி தன் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரும் திட்டத்தை, அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி மூடுவிழா நடத்துவது என்பது தமிழக அரசியலில் இன்றுவரை தொடர்ந்துவரும் சாபக்கேடான ஒரு விஷயம். இதில் கடந்த 35 ஆண்டுகளாக மூடுவிழா நடத்தப்படாமல் அடுத்துவரும் ஆட்சியாளர்களாலும் நிதி ஒதுக்கப்பட்டு மேம்படுத்துப்பட்ட ஒரே திட்டம் என்ற பெருமை சத்துணவுத்திட்டத்துக்கு மட்டுமே உண்டு. இந்த வெற்றி சத்துணவு திட்டம் தந்த சத்தியத்தாய் பெற்றேடுத்த தவப்புதல்வனின் வெற்றி....... Thanks
orodizli
28th April 2020, 10:28 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக கையில் மனுக்களு டன் ஓரமாக நின்றனர். காவல்துறையினர் அவர் களை போகச் சொல்லியும் மறுத்தனர். ‘‘மனுக் களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. ‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.
மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அதிகாரிகளிடம் விவரம் கேட்டார். ‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார். தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்து பெற்றுக் கொண்டார்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண் டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்;
இத்தகைய மனித நேயமுள்ள இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வர் ஆன தினம் மகத்தானது, மகோதன்னமானது... Thanks.........
orodizli
28th April 2020, 10:32 PM
சென்னை கடற்கரையில் இரவு நடந்த. பொது கூட்டத்தில் தலைவர்கலந்து கொண்டார். கண்கொள்ளா காட்சி நானும் சென்னையில் தான் இருந்தேன் . அந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து வியந்து போனேன் . இனி அப்படியான சேர்ந்த கூட்டத்தை என் வாழ்நாளில் பார்பேனா?! என்று தெரியாது ... வாழ்க நம் இதயதெய்வத்தின் புகழ்... Thanks...
orodizli
28th April 2020, 10:38 PM
எம்ஜிஆர் முதலமைச்சராக வர வேண்டுமென வெளிப்படையாகவே விருப்பம் தெரிவிக்கும் பாடல் ஒன்றுக்கு உற்சாகத்துடன் வாயசைத்தார் படத்தின் கதாநாயகன் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர்...
" ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா..
நீ நாடாள வரவேண்டும் ராமச்சந்திரா
தருமம் ஜெயிக்குமென சொன்னவனே ராமச்சந்திரா.
ஒரு தவறும் புரியாமல்
பதவி விட்டு சென்றாய் - பொருந்தாத
பரதர்களிடம் கொடுத்துச் சென்றாய்.
சூரிய வம்சத்தில் வந்தவன் நீயே
வாரி வாரி தந்தவனும் நீயே.
சத்தியத் தாய் பெற்றெடுத்த பிள்ளையல்லவா - நீ
சத்தியத்தின் வழி நிற்பவன் அல்லவா.
மாதம் மும்மாரி பொழிய வேண்டும் ராமச்சந்திரா - அதற்கு
நீ வரவேண்டும்- வழி செய்ய வேண்டும் ராமச்சந்திரா "
- தேர்தலில் ஜெயித்து எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1976ல் வெளியான ' பணக்காரப் பெண்' என்ற படத்தில் இடம் பெற்றது தான் மேற்படி பாடல். 1977 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் ஒலிபரப்புமளவுக்கு 'அரசியல் பிராண்டு' பெற்றிருந்தது இப்பாடல்.
தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.
“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார்....... Thanks.........
orodizli
28th April 2020, 10:40 PM
இனிய மாலை வணக்கம்
."எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது"
-ஆசை ஆசையாய் கேட்ட அன்புத்தலைவர் எம்ஜியார்..
பழனி ஜி.பெரியசாமி பெரிய தொழிலதிபர், சென்னை கிண்டியிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டல் அதிபர்,
அவர்தான் நம் தலைவர் எம்.ஜி.ஆர். நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தலைவருக்கு பல வகையிலும் உதவிகரமாக இருந்து எம்.ஜி.ஆரின்இதயத்தில் இடம் பெற்றவர்.
1984 நவம்பர் -1985 பிப்ரவரி காலகட்டம்.எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு உடல் நலம் தேறிவரும் சமயம். அவருடன் பழனி ஜி.பெரியசாமி, அவருடைய தனி மற்றும் அரசு செயலர்கள், அவருயை மனைவி ஜானகி மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் அனைவரும் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தலைவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அவர் பழனி பெரியசாமியை பார்த்து,
"இப்போது எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது" என யாரும் எதிர்பார்க்காத ஆசையை வெளியிட்டார் தலைவர்.
அனைவரும் சிறிது நேரம் அதிர்ச்சியாய் நின்றனர். காரணம் தலைவருக்கு நீரழிவு நோய் இருந்து சிகிச்சையில் இருக்கிறார். 'இப்போது போய் இப்படி கேட்கிறாரே!!' என ஆச்சரியம்.
ஆனால் கேட்பது எம்.ஜி.ஆர் ஆயிற்றே!! வேறுஎன்ன செய்வது? உடனே பழனி பெரியசாமி தன்னுடன் எம்.ஜி.ஆரின் தனி செயலர் பிச்சாண்டியை அழைத்துக்கொண்டு ஒரு டாக்ஸியில் ஜாங்கிரி வேட்டைக்கு புறப்பட்டனர்.
ஆனால் அந்த சமயம் பார்த்து ஜாங்கிரி எங்குமே கிடைக்கவில்லை. விட முடியுமா? நியூயார்க் கடை த்தெரு இந்தியன் ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் தேடுகின்றனர். ஜாங்கிரி லேசில் கிடைக்கவில்லை.
கடைசியில் ஒரு வழியாக ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டில் கண்டு பிடித்தனர். ஆனால் பரிதாபம். நான்கே நான்குதான் இருந்தன. கிடைத்ததை வாங்கிக் கொண்டு வெற்றி வீரர்களாய் மருத்துவ மனைக்கு திரும்பினர்.
ஆனால் என்ன பத்து டாலர் ஜாங்கிரி வாங்கி வர அறுபது டாலர் செலவு!
எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்த்து "என்ன? ஜாங்கிரி கிடைத்ததா?"
"ம்ம்.. கிடைத்தது.ஆனால் நான்குதான் கிடைத்தது." இவர்கள் பதில். இதன் பிறகுதான் ஒரு ஆச்சரியம்.
எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா??? மருத்துவமனையின் அந்த அறையில் இருந்தவர்களை எண்ணத் தொடங்கினார். செவிலியர்களையும் சேர்த்து பதினொன்று வந்தது.
அதன் பிறகு தலைவர் அந்த நான்கு ஜாங்கிரிகளையம் பிட்டு பதினொரு துண்டுகளாக்கினார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டு ஒவ்வொரு சிறு ஜாங்கிரித் துண்டையும் வழங்கினார்.
தானும் ஒரு துண்டை வாயில் போட்டுக் கொண்டு குழந்தை போல் சிரித்தார். அங்கிருப்பவர்களின் கண்களில் ஈரம் கசிந்தது.
அவர் நினைத்திருந்தால், ஜாங்கிரிகளை வைத்திருந்து பின்னர் சாப்பிட்டிருக்கலாம். அவர்தான் அன்னதான பிரபுவாயிற்றே! முடியுமா?
அவர் அன்னை ஊட்டி வளர்த்த அந்த பண்பு அவர் ரத்தத்தில் ஊறியதாயிற்றே!! எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரைப் போன்ற கொடைத்தன்மை, மனிதாபிமானம் கொண்ட மனிதர் இவ்வுலகில் உள்ளனரா?
தேடிக்கொண்டேயிருப்போம்!!!! அவர் இன்னொறு முறை பிறக்கும் வரை........... Thanks...
orodizli
28th April 2020, 10:43 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!
கொடுத்து கொடுத்து நம்மை சிறையிலிட்டார்.......... Thanks...
orodizli
28th April 2020, 10:46 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கக்கனை போல் ஒரு அமைச்சரை இனி என்றுமே பார்க்க முடியாது என்று சொல்லலாம். இன்றைய தலைமுறைக்கு அவரது பொதுவாழ்க்கை தெரியப்போவதில்லை.
1980லேயே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்தவர்களுக்கே அந்த மாமனிதரை தெரிய வில்லையே.
சாதாரண மக்களுடன் மக்களாக மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் கக்கன். மதுரை முத்துவை நலம் விசாரிக்க சென்ற அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதை கேள்விப்பட்டு அவர் தங்கி இருந்த வார்டுக்கு ஓடோடி சென்றார்.
அவரது நிலைமையை பார்த்து தவித்த எம்.ஜி.ஆர். இவர் யார் என்று தெரியுமா? சுதந்திரத்துக்கு போராடிய வரும் தமிழகத்தில் அமைச்சராகவும் இருந்த கக்கன் என்றதும் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
உடனே மருத்துவர்களிடம் அவருக்கு தனி அறை ஏற்பாடு செய்து உயர் சிகிச்சை வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஆனால் கக்கன் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். பின்னர் அவரை எம்.ஜி.ஆர். வலுக் கட்டாயமாக சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் சில நாட்களில் அவர் இறந்து போனார்.
அரசியலில் அவர் எப்படி வாழ்ந்து இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும்.
நேரம் வரும்போது இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பெருமை பட்டுக் கொள்ளலாம்.
கக்கன் மாசற்ற மனிதனாக வாழ்ந்திருக்கிறார்.புரட்சித்தலைவரோ மனித நேயமுள்ள மாமனிதராய் திகழ்ந்துள்ளார்....... Thanks...
orodizli
28th April 2020, 10:50 PM
முக நூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....
அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
ஒரு நாள் அதிகாலை ஒலி பெருக்கியில் உலகம் பிறந்தது எனக்காக-- மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் --புத்தன் ஏசு காந்தி பிறந்தது --தாய் மேல் ஆனை -- என்னதான் நடக்கும் நடக்கட்டுமே தொடர்ந்து தலைவர் பாடல்களாய் ஒலிக்கிறது என் மனதில் ஒரு சந்தேகம்... இன்று என்ன விஷேசம்... சந்தேகத்திற்கு இடையே நினைவு வருகிறது ...ஆகா ...இன்று ஜெ.பிறந்த நாள் என.அடுத்த நிமிடம் என் நினைவில் ஜெ.பிறந்த நாளுக்கு தலைவர் பாடல்கள் தான் ஒலிபரப்ப வேண்டிய கட்டாயம்.
தலைவரை மறக்க நினைப்பவர்களே சற்று யோசித்து பாருங்கள்.ஜெ பிறந்த நாள் என்பதற்காக ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி --பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா-- கட்டழகு தங்க மகள் திருநாளாம்-- கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ -- என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ போன்ற பாடல்களை ஒலி பரப்ப முடியுமா?அப்போது மட்டும் தலைவர் தேவைப்படுகிறார் அல்லவா? தற்போது தலைவரை புறம் தள்ளி ஜெ.வை முன்னிலை படுத்தும் நபர்களே சற்று மனசாட்சிக்கும் இடம் கொடுங்கள்.
தலைவர் அண்ணாவின் அரசு என்றார். ஜெ வோ எம்.ஜி.ஆரின் அரசு என்று கூறவில்லை மாறாக என்னோட அரசு என்றார். அவர் வழி வந்தவர்களோ அம்மாவின் அரசு என்கிறீர்கள். அப்ப எது தலைவரின் அரசு இது ஒன்று போதாதா தலைவரின் புகழை மறைக்கிறீர்கள் என்பதற்கு உதாரணம்.
எந்த பண சுகமும் பதவி சுகமும் அனுபவிக்காத கடைக்கோடி தொண்டன் தூக்கத்தில் கூட சொல்லிக்கொண்டிருக்கிறான் இது புரட்சி த்தலைவர் அரசு என்று அந்த பலவீனம் தான் பதவியில் இருப்பவர்களுக்கு பலம்.
தலைவர் ஆசியால் மக்களின் தீர்ப்பில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நிச்சயம் நம்புவோம். அப்படி வாய்ப்பு கிடைத்தது என்றால் இனிமேலாவது தலைவர் புகழ் பாடுங்கள். தடுமாற்றம் வராது.இனிமேலும் மாறவில்லை என்றால் மாற்றம் ஒன்றே உங்களை மாற்றும்.
மாறாத நன்றி மறவாத நல்ல மனம் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் மனதில் தலைவர் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்...... Thanks...
orodizli
28th April 2020, 10:56 PM
அருமை சகோ
M Sivanatarajan Poonmanam
அவர்களே தாங்களின் கருத்து அருமை
புரட்சித்தலைவர் தான் அஇஅதிமுக & இரட்டை இலை என்பதை எல்லாம் மறந்து விட்டார்கள்
அவரின் பாடல்களை பயன்படுத்தினால் தான் ஒட்டே
புரட்சித்தலைவர் அவரின் "குரு அண்ணா" அவர்களை கடைசிவரை மறக்கமால் கொடியிலும் அவரின் (புரட்சித்தலைவரின்) கையிலும் என்னை போன்ற உண்மை விசுவாசிகள் கையிலும் அண்ணா கொடியை பச்சைக்குத்தி விட்டார் அனால்
தற்போது எல்லாம் நம்முடைய குரு புரட்சித்தலைவர் படத்தை போடுவதில்லை போட்டாலும் Stamp அளவுக்கு தான் போடுக்கிறர்கள்
நானும் டெல்லியில் பாரளுமன்றத்தில் துனை சபாநாயகர் திரு தம்பித்துரை அலுவலகத்தில் அவர் உட்காரும் டேபிளில் தலைவர் அம்மா படத்தை
பார்த்து மகிழ்ச்சி கொண்டேன் .
ஆனால் தமிழக அமைச்சர்கள் டேபிளில் அம்மா படம் மட்டும் தான் உள்ளது. இது நியாயமா ?
இனிமேலாவது புரட்சித்தலைவரின் புகைப்படத்தை பெரியதாக போட வோண்டுக்கிறேன
நானும் மதுரைக்கு போய் இருக்கிறேன்
சின்ன சின்ன ஒட்டலில் கூட சாமி படம் பக்கத்தில் புரட்சித்தலைவர் படம் இருக்கும் பூஜை செய்வதையும் பார்த்து உள்ளேன்
புரட்சித்தலைவரின் இரட்டை இலையை மறக்கமால் தேனி தொகுதியில் இரட்டை இலையை யாரும் அசைக்கமுடியவில்லை
தயவுச்செய்து புரட்சித்தலைவரை மறக்கவோண்டாம்...
இனி தலைவர் அம்மா ஆட்சி என்று சொல்ல வேண்டுகிறேன்...
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்....... Thanks...
orodizli
28th April 2020, 11:02 PM
நமக்கெலாம் தலைவர்
அரசுதான்! அதை தொடர்ந்து அவர் பெயரைச்சொன்னதால் அம்மாவின்அரசு அதைமறைத்து அம்மாவின் அரசு என்றால்தான் பிழைக்கமுடியும் என்றகூட்டம் எல்லோருக்கும் தெரியும் அது வேறு ஒரு கூட்டம் அதனால்தான் அவரையும் இழந்து!!!!!!!... எப்பொழுதும் தலைவர் அரசு என்று சொல்லி கொண்டே இருப்பார்கள் எனில் எந்த பிரச்சினையும் பறந்தோடும்...... Thanks...
fidowag
28th April 2020, 11:04 PM
கல்கி வார இதழ் -03/05/20
-------------------------------------------
கேள்வி*: மற்ற நாடுகளிலும்*நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உண்டா*?
* * * * * * * * * பிரதீபா*ஈஸ்வரன், சேலம்*
தராசு பதில்கள்*:* ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்கள் என்ற கலாச்சாரத்தை உலகத்திற்கே* அறிமுகப்படுத்திய*வர்கள்* தமிழர்கள்தான் .* எம்.ஜி.ஆர்.* சிவாஜி*கணேசன் தொழிற்போட்டி உச்சமடைந்து காலத்தில்தான் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன .*
கடல்*கடந்து*ரசிகர் மன்றங்களை வென்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான் .அந்தமான்*தீவில்*பணத்தோட்டம்*எம்.ஜி.ஆர். மன்றத்தை*திறந்து வைத்தவர்*அன்றைய இந்திய*பிரதமர் லால்*பகதூர்*சாஸ்திரி*.இது வரலாறு .இன்று ஹாலிவுட்*நடிகர்களுக்கு முகநூல்*பக்கமிருக்கிறது .* ஆனால் மன்றங்கள் கிடையாது . அதுபோல்*கட் அவுட், பால் அபிஷேகம் கிடையாது .
orodizli
28th April 2020, 11:06 PM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்
வணக்கம் .
நமது ஒளிவிளக்கின் குலவிளக்கு ஜானகி அம்மையாரின் நனைவு நாளான அன்று(19.05.2019)ஆனந்த விகடனில் நடிகை விஜயகுமாரியின் கருத்து.....
எம்.ஜி.ஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஜொலித்த காலங்களில், அவருக்கு நிழலாக இருந்து கவனித்துக்கொண்டவர், அவரின் துணைவியார் வி.என்.ஜானகி. அரசியலில் நாட்டமில்லாதவர் ஜானகி. ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, சிலகாலம் முதல்வர் பதவியை வகித்தார் ஜானகி. எனவே, தமிழக அரசியல் வரலாற்றில் இவரின் பெயரும் நிலைத்துவிட்டது. வி.என்.ஜானகியின் நினைவு தினமான இன்று (மே 19), அவருடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை விஜயகுமாரி.
``எம்.ஜி.ஆர் என் உடன்பிறவா அண்ணன் என்பது பலருக்கும் தெரியும். அவர் துணைவியார் ஜானகியை நான் அக்கானுதான் கூப்பிடுவேன். எம்.ஜி.ஆர் உச்ச நடிகராகவும் முதல்வராகவும் ஜொலித்த காலங்களில் மிக எளிமையாகவே வாழ்ந்தார் ஜானகி அக்கா. வீட்டு வேலைக்குப் பணியாளர்கள் இருந்தாலும், அக்காவும் நிறைய வேலைகளைச் செய்வாங்க. எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் பணிகள்ல அக்கா தலையிடவே மாட்டாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், எம்.ஜி.ஆர் மற்றும் குடும்பம் மட்டுமே!
ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் என் கணவரும் நானும் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போவோம். அவர் எங்களுக்கு 100 ரூபாய் கொடுப்பார். ஜானகி அக்கா எனக்கு ஒரு புடவை கொடுப்பார். நானும் அக்காவுக்குப் புடவை கொடுப்பேன். எம்.ஜி.ஆர் குடும்பத்தில் நானும் ஓர் அங்கமா இருந்தேன். ஒருநாள் அதிகாலையில 5 மணிக்கு எனக்குப் போன் பண்ணினார் எம்.ஜி.ஆர். வழக்கத்துக்கு மாறாக, `சம்பந்தி... என்ன பண்றீங்க? மீதி விஷயத்தை அக்கா சொல்வாங்க'னு சொல்லிட்டு போனை ஜானகி அக்காகிட்ட கொடுத்திட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்புறம் பேசிய ஜானகி அக்கா, `உன் பையனுக்கு எங்க பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம்னு ஆசைப்படறோம்'னு சொன்னார். அது சரிவராதுனு நான் சொன்னதும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி இருவருமே என் சூழ்நிலையைக் கனிவோடு புரிஞ்சுகிட்டாங்க.
எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோதும், பல வருடங்களுக்குப் பிறகு அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோதும். தினமும் ஜானகி அக்காவுக்குச் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துட்டு, சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் அண்ணனைப் பார்த்துட்டு வருவேன். ஜானகி அக்காவுக்கு ஆன்மிகத்துல அதிக ஆர்வம். அவங்க என்னை நிறைய கோயில்களுக்குக் கூட்டிப்போவாங்க. அவர் வீட்டுக்கு நான் அடிக்கடிப் போவேன். அவங்க என் வீட்டுக்கும் அடிக்கடி வருவாங்க. நேரம் போவதே தெரியாம, நிறைய விஷயங்களைப் பத்திப் பேசுவோம். ஆனால், எங்க உரையாடலில் சினிமா, அரசியல் விஷயங்கள் அதிகம் இடம்பெறாது.
நான் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போனால், `வா! சாப்பிடலாம்'னு சொல்லுவாங்க ஜானகி அக்கா. `அக்கா, கருவாடு சமைச்சிருக்கீங்களா'னு கேட்பேன். `நீயும் உன் அண்ணனும் கருவாடு இல்லைன்னா சாப்பிட மாட்டீங்களா'னு கேட்பாங்க. எனக்காக ஸ்பெஷலா சமைச்சுப் பரிமாறுவாங்க. அக்காவுக்கு அப்போ நடிப்பில் ஆர்வமில்லைனாலும், சினிமா பார்க்க ரொம்ப ஆசைப்படுவாங்க. `நாளைக்குப் புதுப்படம் ரிலீஸாகுது. நீ கண்டிப்பா வரணும்'னு என்னை வலியுறுத்திக் கூப்பிடுவாங்க. என் ஷூட்டிங் பணிகள் பாதிக்காத வகையில், முதல்நாள் முதல் காட்சினு அக்காவும் நானும் நிறைய படங்களுக்குத் தோழிகளுடன் போவோம். சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தாமல், நாங்களே வரிசையில் நிண்ணு டிக்கெட் வாங்கித்தான் சாதாரண மக்கள்போல படம் பார்ப்போம்.
எந்தப் பாதுகாப்பும் இல்லாம, அக்காவும் நானும் அடிக்கடி கார்ல பயணம் செய்வோம். சினிமா, கட்சிப்பணினு எம்.ஜி.ஆர் அண்ணன் தன் வேலைகளை முடிச்சுட்டு பலநாள்கள் வீட்டுக்குத் தாமதமா வருவார். அப்போ ஜானகி அக்கா, எனக்கு போன் பண்ணுவார். `எனக்குத் தூக்கம் வருது'னு சொன்னாலும், அடம்பிடிச்சு எம்.ஜி.ஆர் வரும்வரை என்கிட்ட மணிக்கணக்கில் கதை பேசுவார். . எம்.ஜி.ஆர் கடைசி காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாம இருந்தார். அப்போ குளிப்பாட்டிவிடுறதுல இருந்து அவரைக் குழந்தைபோல கவனிச்சுகிட்டாங்க ஜானகி அக்கா.
கருத்து வேறுபாடு காரணமாக என் கணவரைப் பிரிஞ்சு வந்த பிறகு, நான் தனிமையில் ரொம்பவே வேதனையிலும் கஷ்டத்திலும் இருந்தேன். அப்போ எனக்குப் பக்கபலமா இருந்தார் ஜானகி அக்கா. எனக்கு வழிகாட்டியாக இருந்து, மீண்டும் நான் நடிக்கிறதுக்கு ஊக்கம் கொடுத்தார். பிறகு, எனக்கு ஒரு தாய்போல அரவணைப்புடன் இருந்தார். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு போன் பண்ணிப் பேசுவார் ஜானகி அக்கா. அவரின் கஷ்ட காலத்தில் நானும் ஆறுதலாக இருந்தேன். அக்கா ரொம்ப இரக்கக் குணம் கொண்டவங்க. யார் உதவினு கேட்டாலும், முன்வந்து உதவி செய்வார்" என்கிறார் விஜயகுமாரி.
வி.என்.ஜானகி வழங்கிய நிலத்தில்தான் தற்போதைய அ.தி.மு.க அலுவகம் செயல்படுகிறதாம். ``என் அண்ணன் அரசியல் இருந்த காலகட்டம். அப்போ தன் சொந்த நிலத்தை, கட்சி அலுவலகம் கட்ட எம்.ஜி.ஆர் கிட்ட இலவசமா கொடுத்தாங்க ஜானகி அக்கா. அந்த இடத்துலதான், இப்போ சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்திருக்கு. அக்காவுக்கு துளிகூட அரசியலில் ஆர்வமில்லை. ஆனா, சூழ்நிலையால் சில நாள்கள் முதல்வராக இருந்தாங்க. அப்போ அடுத்தடுத்த அரசியல் சூழல்களால், அவங்க கவலைப்பட்டாங்க. அதனால, `ஏன் அக்கா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை'னு கேட்டேன். `என் தலையெழுத்து. நான் ஒரு சூழ்நிலைக் கைதி'னு சொல்லி வருத்தப்பட்டாங்க. முதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு.
ஜானகி அக்காவின் தம்பியின் பேத்திக்குப் பிறந்த நாள் நிகழ்ச்சி. மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரச்சொல்லி என்னைக் கூப்பிடிருந்தார் அக்கா. நான் போறதுக்கு ஒருமணிநேரம் தாமதமாகிடுச்சு. அதுக்குள் நிகழ்ச்சி முடிந்துடுச்சு. அப்போ, சாப்பிட்டு முடிச்ச உடனே அக்காவின் தலை தொங்கி, இறந்துட்டாங்க. நான் அவங்க வீட்டுக்குள் போகும்போது, `அம்மா இறந்துட்டாங்க'னு காவலாளி சொன்னார். பதறிப்போய் வீட்டுக்குள் போனேன். முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அங்க வந்து, அரசு மரியாதையுடன் அக்காவின் உடல் அடக்கத்துக்கு ஏற்பாடு செய்தார்.
அக்காவின் உடல் அடக்கம் நடந்தபோது. என் விரலில் இருந்த மோதிரம் ஒன்றைக் கழற்றி அக்காவின் உடல்மீது போட்டுட்டு என் வீட்டுக்கு வந்தேன். பிறகு, இதுவரை ராமாவரம் தோட்டத்துக்கு நான் போகவேயில்லை. ஒவ்வொரு நாளும் என் அண்ணனையும் அக்காவையும் நினைச்சுப் பார்ப்பேன். அவங்க என் மனதில் நீங்கா புகழுடன் இருப்பாங்க" என்று உருக்கமாகக் கூறுகிறார் விஜயகுமாரி.
நன்றி --ஆனந்த விகடன்........ Thanks...
orodizli
28th April 2020, 11:10 PM
உருக்கமான நினைவுகள்... பதிவு மூலம் புது புது விவரங்கள் அறிய முடிகிறது...... நன்றி நண்பரே.... இனிய இரவு வணக்கம்.....
விஜயகுமாரியை தலைவர் தன் தங்கை போல் நினைத்ததால் அவர்களுடன் ஜோடியாக நடிக்க ஒரு போதும் சம்மதிக்கவில்லை........ Thanks...
orodizli
28th April 2020, 11:26 PM
புரட்சித்தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெள்ளித்திரைக்கு வந்த நாள் (11.05.1973).
உலகம் சுற்றும் வாலிபன் பெரும் நெருப்பாறுகளைக் கடந்து திரையைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் வேறு எந்த ஒரு மாநிலமொழி படத்துக்கும் இப்படி ஒரு முட்டுக்கட்டை கிடையாது திரும்பிய திசைகளிலெல்லாம் நெருக்கடி பெற்ற படம் .படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கும் பொழுது டப்பிங் மிக்சிங் ரீ ரிக்கார்டிங் பிரிண்ட் போடுதல் என எந்த பணிகளில் எப்போது எம்ஜிஆர் ஈடுபட்டாலும் மின்சாரம் அறவே இருக்காது எம்ஜிஆருக்கு எப்படி எல்லாம் தொல்லை தரலாம் என்பதில் முழு கவனம் செலுத்தியது கருணாநிதி யின் ஆளுங்கட்சி மேலும் சுவரொட்டிகளின் வரியை உயர்த்தியது.
படம் வெளியான அன்று சென்னையிலே மின் வினியோகம் இல்லை இனிமேலும் மின்விநியோகம் அறவே வராது என்ற நிலைமையை புரிந்த தேவிபாரடைஸ் சொந்தக்காரர்கள் சக்திமிக்க ஜெனரேட்டரை வைத்து திரையில் உலகம் சுற்றும் வாலிபனை திரையிட்டு காட்டினார்கள்.
*'மேலே ஆகாயம் கீழே பூமி' இதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வைத்த முதல் டைட்டில் .
*அயல்நாட்டு படப்பிடிப்புக்கு அதிகம்பேர் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், விஎன் ஜானகி அம்மையார், ஆர் எம் வீரப்பன், மஞ்சுளா ,சந்திரகலா, லதா ,அசோகன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, இயக்குனர் பா .நீலகண்டன் ,வசனகர்த்தா கே.சொர்ணம் நடன இயக்குனர் கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .
*உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் .பின்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பாளர் ஆனார்.
*உலகம் சுற்றும் வாலிபன் வட ஆற்காடு தென் ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கான வினியோக ஒப்பந்தம் முதன்முதலாக ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரோடு கையெழுத்தாகியது .
*பட்டிக்காட்டு பொன்னையா இயக்குனர் பி எஸ் ரங்கா அவர்களின் உதவியாளர் ஹரி அவர்கள் எக்ஸ்போவில் படம் எடுப்பதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் .
*முப்பத்து ஆறாயிரம் பல்புகளில் வெளித்தோற்றத்தில் சுவிஸ் பெவிலியனில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் ஆடிப்பாடும் நிகழ்ச்சிக்கு விசேஷஅனுமதி வழங்கப்பட்டது.எக்ஸ்போ 70 கண்காட்சியில் மொத்தம் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .
*காமபுரா புத்தர் சன்னதி ஜப்பானின் புகழ்பெற்ற புராதான கோவில் அங்கு வீற்றிருக்கும் பிரம்மாண்ட சித்தார்த்தர் சிலைக்கு அருகில் எம்ஜிஆர் புத்தி தெளிந்து அவர் பைத்தியமாக தோன்றும் காட்சியை எடுத்தனர் .
*லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்ற பாடலில் எம்ஜிஆர் மஞ்சுளா கப் அண்ட் சாசரில் தோன்றும் காட்சி நாராவில் டரீம் லேண்டில் எடுக்கப்பட்டது
.
*அன்னப்பட்சி போன்ற சிறிய கப்பலில் எடுக்கப்பட்ட பன்சாயி பாடல் காட்சி டோக்கியோவில் உள்ள யுமூரிலேண்டில் எடுக்கப்பட்டது .
*டால்ஃபின் ஷோ மற்றும் தீ வளையத்தில் நாய் மற்றும் புலிகள் தாவும் காட்சியை மக்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேரடியாக படமாக்கினார்.
*லதாவின் முதுகில் அசோகன் துப்பாக்கியை நீட்டியவாறு பின்தொடரும் சீன் டோக்கியோவில் பரபரப்பான கின்சா அங்காடித்தெருவில் எடுக்கப்பட்டது .
*நிலவு ஒரு பெண்ணாகி பாடல் ஹாங்காங்கில் உள்ள பெல்ஸ் கடற்கரை யில்படமாக்கப்பட்டது .
*குழந்தைகளோடு எம்ஜிஆர் லதா பங்கேற்கும் சிக்குமங்கு பாடல்டைகர் பார்ம் கார்டனில் படமாக்கப்பட்டது .
*ஹாங்காங்கின் இந்திய வம்சாவளி
மிஸ்டர் ஹரி லீலாவின் விசைப்படகில் தங்கத் தோணியிலே பாடல் எடுக்கப்பட்டது .
தங்கத் தோணியிலே பாடல் கே.ஜே.யேசுதாஸ் எம்ஜிஆருக்காக பாடிய முதல் பாடல் .
*புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற முதல் வெளிநாட்டு நடிகை ஆவார்.அந்த பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.
*அவள் ஒரு நவரச நாடகம் பாடல் காட்சி சில மேட்சிங் ஷாட்டுகளை சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான நீச்சல் தொட்டியில் எடுக்கப்பட்டது.
*சென்னை தேவிபாரடைஸில்
தொடர்ந்து 225 காட்சிகள்
மதுரை மீனாட்சியில்
தொடர்ந்து சுமார் 300 காட்சிகள்
அரங்கு நிறைந்த காட்சிகளாக, திரையரங்கில் ஓடியது... உலக திரைப்படத் துறையில் இனியும் யாரும், எவரும் நெருங்க முடியாத, நினைத்து பார்க்க முடியாத பிரம்மாண்டமான சரித்திரம் படைத்த, சகாப்தம் உருவாக்கிய சாதனையின் உச்சம் பெற்ற வெற்றி எது தெரியுமா???!!! சென்னை நகரில் சுவரொட்டிகள் (Wall Posters) ஒட்டப்படாமலேயே வெள்ளிவிழா கொண்டாடிய அபூர்வமான, பேரற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான இணையே இல்லாத அட்டகாச வெற்றி பெற்றது மிகவும் குறிப்பிட தக்கதாகும்....... Thanks.........
orodizli
28th April 2020, 11:32 PM
அடிமைப் பெண் - பொன் விழா
50 -வது ஆண்டு. 01-05-1969 to 01-05-2019
அடிமைப் பெண் 1969 ஆம்
ஆண்டு இதே தொழிலாளர் தினத்தில் ( மே 1 -ஆம் ) வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாஇருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார்.
அடிமைப் பெண்:-
இயக்குனர் : கே.சங்கர்
தயாரிப்பு : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
கதை : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
நடிப்பு : எம். ஜி. இராமச்சந்திரன்,
ஜெயலலிதா, சோ , சந்திரபாபு
S.A. அசோகன் , R.S. மனோகர் ,
ஜோதிலட்சுமி , பண்டரிபாய் ,
ஜஸ்டின் , பேபிராணி , ராஜசிரி
ஒளிப்பதிவு : ராமமூர்த்தி
வசனம் : சொர்ணம்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : வாலி, சோமூ, புலமைப்பித்தன்
வெளியீடு : 01.05.1969
கதைச்சுருக்கம் :-
வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா (எம்.ஜி.ஆர்). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார்தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா (ஜெயலலிதா) என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடுதிரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற பாடல் : -
@ . ஆயிரம் நிலவே வா -
@. தாயில்லாமல் நானில்லை
@. காலத்தை வென்றவன் நீ
@. ஏமாற்றதே.. ஏமாற்றதே..
@. உன்னை பார்த்து இந்த
@. அம்மா என்றால் அன்பு
சிறப்பு :
@. வெளியானது தொழிலாளர் தினத்தில்
@ புரட்சி நடிகர் நடித்த 102 வது படம்
@. புரட்சி நடிகர் கதாநாயகனாக வலம் வந்த 82-வது படம்.
@. புரட்சி நடிகர் 2 வேடத்தில் பங்கு கொண்ட 7-வது படைப்பு
@. மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா நடித்த 17-வது படம்
@. தலைவரின் 11-வது வண்ண படம்
@. மக்கள் திலகத்துடன் ராஜசிரி நடித்த 4-வது படம்.
@. மக்கள் திலகத்துடன் K.V.மகாதோவன் இசை அமைத்த 22-வது படம்
@. அதிகமான இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த பட்ட படம்
@. K.சங்கர் தலைவருக்க இயக்கிய 5-வது படம்.
@ வெள்ளி விழா படம் 25-வாரம் - மதுரை சிந்தாமணி
@. அதிகமான பொருட்செலவில் உருவானது
இந்த பதிவை எனக்கு தந்து உதவிய
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம் அவர்களுக்கு நன்றி........ Thanks...
orodizli
28th April 2020, 11:38 PM
MGR Filmography Film 53 ( Poster )
1962ஆம் ஆண்டின் முதல் திங்களில் வெளியான காஸ்ட்யூம் ட்ராமா ராணி சம்யுக்தாவைப் போலவே அடுத்த மாதம் வெளியான சோஷியல் ட்ராமா மாடப்புறாவும் எம்ஜியாருக்கு சராசரி வெற்றியைத் தந்து
தன் சகோதரனைக் காப்பாற்றக் கொலைப்பழியை தான் சுமந்து, போலிசிடமிருந்து தப்பித்து உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் எம்ஜியாரின் வழக்கமான த்ரில்லர் + செண்டிமெண்ட் கதையை எஸ்.ஏ சுப்பராமன் இயக்கினார். இந்தக் காலகட்டத்தில் எம்ஜியாரின் நிரந்தர திரைஜோடியாக நிலைத்துவிட்ட சரோஜாதேவியுடன் வசந்தியும் நடிக்க, நல்லவன் ரோலில் எம்ஆர் ராதாவும் வில்லனாக நம்பியாரும் தோன்றினர். கேவி மகாதேவனின் இசையில் மருதகாசியின் சிரிக்கத் தெரிந்தால் போதும், ஊருக்கும் தெரியாது, மனதில் கொண்ட ஆசைகளை ஆகிய பாடல்கள் பிரபலமாயின.
கட்டுக்கோப்பில்லாத திரைக்கதை இந்தப் படத்தின் தோல்விக்குப் பிரதான காரணமாக அமைந்திருக்கலாம். எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் க்ரிஸ்ப்பான கதை அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், ஆவரேஜ் எம்ஜியார் படங்களுடன் இதுவும் இணைந்து விட்டது.
இந்தப் படத்தின் சுவாரசியம் இருவர் இசைப்பணி புரிந்தனர் என்பதே; பாடல்களுக்கு கேவி மகாதேவன் இசையமைக்க, வயலின் மகாதேவன் பின்னணி இசைக்குப் பொறுப்பேற்றார்.அ.மருதகாசி அனைத்து பாடல்களையும் எழுதினார்...... Thanks......
orodizli
28th April 2020, 11:44 PM
நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேனுமா நான் ஒரு கை பார்க்கிறேன்.....இல்லாதவர்கள் குறைவது நன்மை... இருப்பவர்கள் நிறைவது தீமை... என்று ஒரு திரைப்படத்தில் இதய தெய்வம் வசனம் பேசி நடித்திருப்பார். இது "படகோட்டி" படத்தில் வரும் பாய். அருமை நல்வாழ்த்துக்கள்...... Thanks...
orodizli
28th April 2020, 11:48 PM
மதுரைவீரன் படத்தில் தலைவர் இறந்து போனாலும்,படம் இமாலய வெற்றி....Paul Raj அண்ணா, மதுரை வீரன் படம் தான் தலைவர் அவர்களின் முகவரியை உலகத்திற்க்கு வெளிப்படுத்தியது ...Paul Raj அண்ணா மதுரைவீரனில் முடிவில் மதுரைவீரன் சாமியாக தலைவரை காட்டுவார்கள்...... Thanks...
orodizli
28th April 2020, 11:50 PM
அருமையான படம்.
தலைவர் இறப்பது போல் படம் என்பதால் நானே ஒரு முறைதான் பார்த்தேன்.
அதுபோல் ராஜா தேசிங்கு, பாசம் படங்களும் ஒரு முறை தான் பார்த்தேன்.
சாதாரணமாக தலைவரின் ஒவ்வொரு படத்தையும் பத்து தடவை முதல் எண்ணற்ற முறை பார்ப்பது வழக்கம்.
பெரும்பாலும் தலைவர் பட டிவிடி அனைத்தும் (கிடைத்தது ) சேர்த்து வைத்துள்ளேன்....... Thanks Hameed Bai...
orodizli
28th April 2020, 11:52 PM
"ராணி சம்யுக்தா", பாடல்கள் அருமை படமும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது... ஆனால் நீங்கள் சொன்னது போல் இறப்பு காட்சிதான் பிடிக்கவில்லை இருந்தாலும் படம் சூப்பர்.......... Thanks...
orodizli
28th April 2020, 11:54 PM
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற புரூக்ளின் மருத்துவமனையைப் பார்த்த நிகழ்ச்சியை எழுதும் போது, எம்.ஜி.ஆரின் அன்பில் திளைத்த அனுபவங்கள் என் நினைவில் அலை மோதுகின்றன.
அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றின் மேல் ஒரு நீளமான பாலம் இருக்கிறது. ரயில்கள் செல்வதற்கான இருப்புப் பாதை. சாலைப் போக்குவரத்திற்காக இரண்டு பாதைகள் என்று மூன்று அடுக்குகளைக் கொண்டது அந்தப் பாலம். ஆனாலும் இதைத் தாங்கி நிற்க பில்லர்கள் கிடையாது. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று என் புரோகிராம் ஆபிசர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்படியா? பார்க்கலாமே. அந்தப் பாலத்தின் பெயர் என்ன என்றேன் நான்.
புரூக்ளின் பாலம் என்று அவர் பதில் சொன்னார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் ஒரு கணம் என் இருதய ஆழத்தில் சில ரத்தக்குழாய்கள் அதிர்வுற்றன. அப்படியானால் புரூக்ளின் மருத்துவமனை இங்கே தானே இருக்கிறது என்று கேட்டேன் தவிப்போடு.
ஆம் என்றார் அந்த அதிகாரி. என்னை அளவுக்கு மீறி நேசித்த, என்னால் அளவுக்கு மீறி நேசிக்கப்பட்ட அந்த மகாமனிதனைக் காப்பாற்றி, மறுபடியும் நமது தரிசனத்திற்கு அனுப்பி வைத்தது அந்த இடம் தானே.
அதைப் பார்க்க வேண்டும் அதற்கு நன்றி வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த அதிகாரியும் அதற்கு உடனே ஏற்பாடு செய்தார்.
கார் மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. நான் கண்களில் ஈரங்கசிய என் ஞாபக வாசல்களை மெல்லத் திறந்தேன்.
அல்லி நகரத்தின் அந்ப் பாமரத்தனமான வாழ்க்கை நாட்களில், வெள்ளித் திரை நிழலாய் மட்டுமே அந்த மனிதனைச் சந்தித்திருக்கிறேன். எனது கிராமத்திலிருந்து வீட்டிற்குத் தெரியாமல் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பர்க்ளோடு டபுள் பெடல் போட்டபடி, நாற்பத்தியெட்டு மைல்களை தாண்டிப் போய் மதுரை மாநகரில் நாடோடி மன்ன்ன் படம் பாக்க வியர்வை கசகசப்போடு அமர்ந்த நாட்களும் உலக உருண்டை இரண்டாகப் பிளக்க கொடிபிடித்தபடி இரு உருவங்கள் திரும்பும் எம்.ஜிஆர் பிக்சர்ஸ் பட நிறுவன எம்பளம் பார்த்து கைதட்டிய நிமிடமும் அந்த மனிதன் திரையில் தோன்றிய முதல் காட்சியில் ஒலித்த விசில்களில் வியந்த வினாடியும் இப்போதும் என்னுள் காயாத சிமெண்ட் தரையில் பதித்த குழந்தையின் காலடிச் சுவடுகளாய் இருக்கின்றன.
அந்த மனிதன் தான் என் தனி மனித வாழ்க்கையிலும் நுழைந்து, என் கலைத் திறமைகளுக்குத் தட்டிக் கொடுத்து, என் சோகங்களுக்குக் கண்ணீர் துடைத்து, என் இடறல்களுக்குத் தோள் கொடுத்து, என்னால் என்றுமே மறக்க முடியாத என் இரண்டாவது தாயாகிப் போனார் …
அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு அந்த மனிதர் என்னைக் கட்டித் தழுவி பாராட்டிய போதும், வேதம் புதிது படத்திற்கு டெல்லி அதிகாரிகள் அனுமதி மறுத்த போது ஆறுதுல் கூறி உடனே அனுமதி வாங்கித் தந்த போதும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளின் மீது இறக்கி வைக்க முடியவில்லை.
அரசியலுக்கெல்லாம் வந்துவிடாதே. நீ ஒரு உண்மையான கலைஞன். உனது கலைக்கு நீ உண்மையாக இரு. அது போதும் … என்று தான் அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார்.
ஒரு முறை உடல் நிலை சரியில்லாத சூழலில் ஓய்வெடுப்பதற்காக அவர் ஊட்டிக்கு வந்திருந்தார். ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பிற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.
அவர் தமிழ்நாடு ஹவுசில் தங்கியிருக்கிறார் என்றுகேள்விப்பட்டதும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன இங்கே? என்று கேட்டார்.
ஷுட்டிங்கிற்காக வந்தேன். நீங்க வந்திருக்கீங்க என்று சொன்னாங்க அதான் என்றேன் நான். ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …
நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான். யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்.
மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார். இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன். அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார்.
அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா....... Thanks...
orodizli
28th April 2020, 11:58 PM
ஒரு முறை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார் வேனில் ரோட்டின் இரு மறுங்கிளும் மக்கள் திரளாக நின்று கோஷமிட மாலை போடவும் ஆராவாரமாக வந்து கொண்டிருந்தார் ஏழுமலை என்ற கிராமத்தை அடைந்தவுடன் திடீரென வேன் நின்றது ஏன்? என்று பார்க்கையில் ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் வழியை மறைத்து படுத்துக்கொண்டார் உடனே வேனை விட்டு எம்ஜிஆர் இறங்கி விட்டார் குழந்தைகள் மற்றும் வயதான மூதாட்டிகளுக்கு முதலிடம் கொடுப்பார் எல்லோரும் அறிந்ததே!
என்ன வேண்டும் எழுந்திரியுங்கள் என்றதும் எம்ஜிஆரை முதன் முதலில் அருகில் பார்த்த பாட்டிக்கு கண்ணீர் பொங்குகிறது வாய் வார்த்தை வரவில்லை பின் தளத்த குரலில் நீ நல்லா இருக்கனும் ராசா சரிம்மா என்னனு சொல்லுங்க ஒன்னும் இல்லப்பா என் வயலு ரெண்டு வருசமா விளச்சலே இல்ல ஓ பாதம் பட்டா விளையும் னு சொன்னாங்க... அதா நல்ல மழை பெய்தால் தானா விளையும் அம்மா சரி வாங்க எங்கே? இருக்கு என்றார் தலைவர் அந்தா தெரியுது பாருப்பா என்றதும் கூட்டத்தில் விசில் பறக்குது கூட்டம் பின் தொடர எம்ஜிஆர் யாரும் என் பின்னே வரக்கூடாது வயல் கெட்டு விடும் என்று கட்டளையிட்டவாரே வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு ஐந்து நிமிடத்தில் சென்று தன் செருப்பை கழட்டி விட்டு வயலை தொட்டு வணங்கி விட்டு திரும்பினார் தலைவர்
பச்சை பசேலான வயலில் வெள்ளை ஜிப்பா வேஷ்டியில் வெள்ளை கலர் தொப்பி கருப்பு கண்ணாடி தங்கமான நிறத்தில் அவர் முகம் நேரடியாக அன்று அவரை பார்த்த கண்கள் தூங்கி இருக்கவே முடியாது
பின்பு அந்த பாட்டி தயாராக வைத்திருந்த குண்டு சோடாவை கொடுக்க தன் பெருவிரலால் ஒரே அமுக்கு அமுக்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டியை கட்டி பிடித்து விட்டு கை ஆட்டிக் கொண்டே வேனில் ஏறி பறந்தார் எம்ஜிஆர் இது தான் கூட்டத்தில் எல்லோரும் பார்த்தது
ஆனால் பாட்டியின் முந்தானை கொசவத்தில் பேப்பரில் சுற்றிய பணக்கட்டு யார் கண்ணுக்கும் தெரிய வில்லை அதை கட்டிப்பிடிக்கும் போதே தனது ஜிப்பாவில் இருந்து மாற்றி விட்டார் தலைவர் சென்ற பின் அந்த பாட்டியை கட்டிப்பிடித்த பெண்கள் எத்தனை பேர்? அவ்வளவு சந்தோஷம்
பின் தன் உதவியாரிடமும் ஓட்டுனரிடமும் என்னை எவ்வளவு தூரம் நம்பி இருக்கும் இந்த மக்கள் எல்லோருக்கும் எப்படி நான் உதவ போகிறேன் என்று தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கர்சிப்பால் கண்ணை தொடைத்து கொண்டே பயணமானார் #பொன்மனச்செம்மல்
நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற....
என்ற பாடல் தூரத்தில் ஒலித்த வண்ணமே இருந்தது
மீண்டும் வருவேன் நண்பர்களே!
#எல்லாபுகழும்எம்ஜிஆர்கே....... Thanks... Repost...
orodizli
29th April 2020, 12:02 AM
கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா (இரு வேடங்கள்) நடித்த 'குமரிக்கோட்டம்' படத்திற்காக படமாக்கப்பட்ட முதல் காட்சி எது ?
"நாம் ஒருவரையொருவர் சந்தித்தோமென்று" என்ற வாலி எழுதிய பாடலில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா (கிரீடம் வைத்து) நடிக்க படமானது. நாளிதழ் விளம்பரங்களிலும்
இதன் புகைப்படம் தான் இடம் பெற்றது.
Ithayakkani S Vijayan....... Thanks...
orodizli
29th April 2020, 12:04 AM
ஸ்ரீMGR வாழ்க
சித்திரை 14 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
இந்தப்படத்தில் நின்று கொண்டு இருக்கும் மீசைக்கார அமைச்சர்
ஈரோடு முத்துச்சாமி
,அடுத்து அமைச்சர் விஜயசாரதி அவர்கள்
அடுத்த அமைச்சர் எஸ் என் ராஜேந்திரன் அவர்கள்
++++++++++++++++++++++++++++++++++
இந்த படத்தில் நின்றுகொண்டிருக்கும்
பெண் அமைச்சரின் பெயர் கோமதி சீனிவாசன்
வலங்கைமான் சட்டமன்ற தொகுதி
இவருடைய கணவர் ஒரு வழக்கறிஞர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையார் அவர்களை முதலமைச்சர் ஆக்கியவர்களில்
அமைச்சர் கோமதி சீனிவாசனும் ஓருவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்
கோமதி சீனிவாசன்...... Thanks...
orodizli
29th April 2020, 12:09 AM
புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் :
சென்னை பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டுவிழா 20.09.1983 இல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட 11 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது அறிவிக்கும்போது, மனித குலத்திற்கு அவர் ஆற்றிவரும் சேவைக்காகவும் கொடுமைகளை தீர்த்து இடைவிடாமல் அவர் நடத்தும் போராட்டத்திற்காகவும் கலைத்துறை சேவைக்காகவும் வள்ளல் தன்மைக்காகவும் இந்த பட்டம் வழங்கப்படுவதாக துணைவேந்தர் சாந்தப்பா தெரிவித்தார்.
விழாவிற்கு தமிழக கவர்னர் எஸ்.எல்.குரானா தலைமை தாங்கினார் . ஜனாதிபதி ஜயில்சிங் பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டத்தை கவர்னர் குரானா வழங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் கைகுலுக்கி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி திரையுலகம் சார்பில் சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி நடிகர்- நடிகைகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள காயிதேமில்லத் கல்லூரி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊர்வலத்தைப் பார்வையிட்டார்.
பிறகு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் விழா நடந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தார். சத்துணவுத் திட்டத்திற்கு திரையுலகின் முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்தை பாரதிராஜா வழங்கினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..... Thanks.........
orodizli
29th April 2020, 12:10 AM
நேரு ஸ்டேடியம்! என் தந்தை துணையோடு டீனேஜ் பாயக நானும் என் நண்பர்களும் கலந்து கொண்டோம்.
தலைவர் மேடைக்கு வந்து சேரச் சற்று காலதாமதம் ஆனது, அதுவரை மேடையிலிருந்தநடிகர்கள் கார்த்திக், சுரேஷ், மோகன், சிவகுமார், தியாகராஜன், கமல், ரஜினி, பாக்யராஜ், ராதா, அம்பிகா, ரேவதி என பல நடிகர் நடிகைகள் வரிசையாக அமர்ந்திருந்தனர், நானும் எனது நண்பர்களும் அமர்ந்திருக்கும் நடிகர்களில் யார் அழகு என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருந்தோம்!
அன்றலர்ந்த தாமரை மலராக தேவலோகத்தின் இந்திரன் போல் காரைவிட்டு இறங்கி நம் தலைவர் மேடை ஏறியது தான் தாமதம்! அழகு அழகு என்று நாங்கள் இதுவரை யார் யாரையோ வர்ணித்து இருந்தோம், அவர்கள் அனைவரும் இவரது அழகிற்கும் நிறத்திற்கும் கிட்ட கூட நெருங்க முடியாத நிலையில் இருந்தார்கள்! அங்கு அழகின் மொத்த உருவம், அது என் தலைவர் மட்டுமே தான்!...... Thanks...
orodizli
29th April 2020, 12:14 AM
மனிதாபிமானத்தின் மறுஉருவம் புரட்சி தலைவர்.
********************************************
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
நமது மக்கள் திலகம் முதல்வராக பதவியேற்ற புதிதில் 1977 ல் சென்னை கன்னிமாரா ஓட்டலலில் சில வெளிநாட்டு பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து தலைவர் வீட்டுக்கு புறப்பட இரவு 11 மணி ஆகிவிட்டது. காரில் போய்க்கொண்டிருக்கும் போது டிரைவரிடம் " நீ சாப்பிட்டியா " என கேட்க அவரும் சாப்பிட்டேனய்யா என பதில் கூற அவர் சொன்ன பதிலால் சந்தேகம் வரவே என்ன சாப்பிட்ட சொல்லு என கேட்க டிரைவர் சில உணவுகளைச் சொல்ல .இந்த உணவு இன்றைய டின்னரில் பரிமாறவே இல்லையே உண்மையைச் சொல் சாப்பிட்டாயா இல்லையா என சற்று கோபத்துடன் கேட்க இல்லிங்கய்யா சாப்பிடலை எனக் கூற மற்ற டிரைவர்கள் சாப்பிட்டார்களா எனக்கேட்க "யாருமே சாப்பிடலய்யா "ஏன் அதற்கு பாதுகாப்பு அதிகாரி அரசு சார்பில் விழா நடந்தால் டிரைவர்களுக்கு சாப்பாடு கிடையாது எனக்கூற அவ்வளவு தான் முகம் கோபத்தில் ரத்த சிவப்பாகி மறுநாள் காலை தலைமச் செயலகம் வந்து எல்லா அலுவல்களையெல்லாம் ஒத்திப் போட்டு பொதுத்துறை, நிதித்துறை அதிகாரிகளை கூப்பிட்டார். முக்கிய பிரமுகர்கள். அதிகாரிகள். விருத்தினர்களுக்கு மட்டும் தான் வயிறு இருக்கிறதா? டிரைவர்களுக்கு இல்லையா ? அவர்களுக்கு பசிக்காதா? இது என்ன உத்தரவு ? யார் போட்டது? எனக் கேட்க அதிகாரிகள் விளக்க நேற்றைம விருந்தின்படி நபர் 1க்கு ரூ 256 மட்டுமே அனுமதி விருந்துக்கு வந்தவரை தவிர மற்றவர்கள் சாப்பிட முடியாது என தயங்கியபடியே சொல்ல இதை கேட்டும் சமாதானமடையாமல், இனி இதுமாதிரி விழா நடந்தால் டிரைவர்களுக்கும் உணவுக்கு வழி செய்திட வேண்டும் இந்தச் செலவுகளை அரசின் கணக்கில் எழுத முடியாதென்றால் கூறிவிடுங்கள் எனது சொந்த பணத்திலிருந்து கொடுக்கிறேன் இது முடியாதென்றால் என்னை அழைக்காதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் இந்த சம்பவத்துக்கு பின் அரசாங்க டிரைவர்கள் விருந்துக்கு வந்தால் அவர்கள் தனியே சாப்பிடலாம் எனவும் அவ்வாறு சாப்பிடலைன்னா அந்த உரிய தொகை படியாக வழங்க முடிவு செய்யப்பட்டது. தங்களுக்காக முதல்வரே வாதாடினார் எனக் கேட்ட டிரைவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லேயே இல்லை.
[நாளை போடப் போறேன் சட்டம் பாரு அது நாடு புகழும் திட்டம்] .
எவ்வளவு தீர்க்கதரிசி நமது தலைவர்....... Thanks...
orodizli
29th April 2020, 12:19 AM
[தமிழ் திரைப்படத்தில் எத்தனை காதல் சோக கீதங்கள் வந்தாலும் இந்த பாடலை முதன்மையாக இருக்கும் சரவணா பிலிம்ஸ் ஜி என் வேலுமணி அவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படம் படகோட்டி மக்கள் திலகம் நடித்து வெற்றி அடைந்த மாபெரும் திரைப்படம் வாலி முதன்முதலாக எம்ஜிஆர் திரைப்படத்திற்கு முழுமையாக பாடல் எழுதிய வெற்றி திரைப்படம் தமிழ் சிம்மக்குரலோன் செந்தமிழ் பாடகர் டி எம் சௌந்தரராஜன் குரலிலும் எத்தனை பெண் குயில் வந்தாலும் எங்கள் பெண் குயில் இசை மிகைப்படுத்த முடியாது என்று பெருமை வாய்ந்த அம்மா பி சுசிலாவின் குரலிலும் எங்கள் புரட்சித் தலைவருக்கு என்றே பிறந்த மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உருவான மிக அருமையான பாடல்..... Thanks...
orodizli
29th April 2020, 12:23 AM
[விஜயாபுரோடக்சன் பிரமாண்டமான தயாரிப்புநமது மக்கள் திலகம் நடித்த வெற்றிப் படமான எங்க வீட்டுப் பிள்ளை அன்று தினத்தந்தி நாளிதழில் ஒரு பக்கம் விளம்பரத்தில் இன்றைக்கும் நாளைக்கும் என்றைக்கும் ஒரு புதுமைப் படைப்பு என்று விளம்பரம் பட்டிருப்பார்கள் ஒருபுறம் புரட்சித்தலைவர் சாட்டை எடுத்து கொண்டு நிற்பார் இன்னொரு பக்கம் அமைதியின் சின்னமாக மக்கள்திலகம் இருப்பார் இந்த திரைப்படத்திற்கு இது திரைப்படமாக மாற்று நடிகர் நடித்த பிரம்மாண்டமான தயாரிப்பு. ஆனால் அதை மிஞ்சக்கூடிய அடிப்படையில் வெற்றி பெற்றது நமது மக்கள் திலகத்தின் திரைப்படம் படத்தின் சிறப்பு முதலில் நிதியானது டைட்டில் "எங்கவீட்டுப்பிள்ளை" மக்கள் திலகம் என்றும் எங்கள் வீட்டுப்பிள்ளை பிறகு இந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைப்பு இசையமைப்பு எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் நமது தலைவர் படத்துக்கு இசையமைத்தார் என்றால் அது வெற்றியே வெற்றியே வெற்றியே மற்றொரு நடிகர் தனது கையில் சாட்டையை எடுத்து வற்றினாலும் என் தலைவன் போல் சுழற்ற முடியாது அப்படி ஒரு ஸ்டைல் எவருக்கும் வராது அப்படி ஒரு ஆளுமையான முகமும் எவருக்கும் கிடையாது கவிஞர் வாலியின் எம்ஜிஆர் மீது கொண்ட ஈடுபாட்டின் வெறித்தனமான வார்த்தைகள் நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இந்த இரண்டு வரி எந்த நடிகனுக்கு பொருந்தும் திருந்துவதற்கு அமைப்பும் கிடையாது அதற்கு சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்காது இன்றைக்கும் இளைஞர்கள் இந்த பாட்டை கேட்டால் துள்ளி எழுவார்கள் வீர நடையோடு....... Thanks...
orodizli
29th April 2020, 12:28 AM
நமது பெருமை மிகு மக்கள் திலகம் பாகம் 25 வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டு வருகிறது... அடுத்து துவங்கவிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 26 பகுதியில் தொடர்ந்து ஏனைய தோழர்கள் தங்கள் பங்களிப்பை நல்கி பொன்மனச்செம்மல் புகழ் பாடிக்கொண்டே இருப்போம்.........
orodizli
29th April 2020, 07:44 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பற்றி சொல்ல வேண்டுமானால்
பல வருடங்கள் சொல்லவும், எழுதவும் அவ்வளவு கணக்கில்லாத தகவல்கள், விடயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அதிசயம் உலகளவில் யாருக்குமே அமையவில்லை என்பதே அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட பெருமை, பெருமிதம். முதலி அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள், ஆசிர்வாதம் மிகவும் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது.
அவர் நடித்த படங்கள்
136 தான்.
அவர் கற்றுக் கொடுத்த
வாழ்கைக்கு தேவையான கருத்துக்கள் கணக்கில்
அடங்காது............. Thanks mr.SR.,
orodizli
29th April 2020, 07:46 AM
தமிழக முதல்வர்களில்
தலை சிறந்தவர் எம்ஜிஆர்.
கடலில் நல்முத்து கிடைக்கும்.
காற்றில் தென்றல் வீசும்.
இசையால் அனைவரும்
மயங்க வைக்கும்.
நீர் நிலம் காற்று ஆகாயம் மழை எப்படி
உலகிற்கு முக்கியமோ
அதுபோல் எம்ஜிஆர்
வாழ்ந்த வாழ்க்கை
சாமான்யனாக பிறந்து
சரித்திரத்தில் இடம்
பெற்றவர்
எனக்கு தெரிந்த
ஒரே தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே..... Thanks...
orodizli
29th April 2020, 07:47 AM
எனக்கு (சுந்தர்ராஜன் )
தெரிந்தவற்றை சொல்கிறேன்.
1.உலகமே பாராட்டும்
சத்துணவு திட்டம்..
2.தனது சொத்துக்கள்
பெரும்பகுதியை
காது கேளாதோர்
வாய் பேச முடியாத வர்கள் கண் தெரியாத வர் மாணவ மாணவிகளுக்காக
இல்லம் கட்டி இன்றுவரை
வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால் இதன் காரணம் எம்ஜிஆர்
ஒருவரே....... Thanks...
orodizli
29th April 2020, 07:48 AM
3.அவர் இறந்து 33 வருடங்கள் ஆகிவிட்டன.
இன்றும் நாளையும் என்றும் மக்களின் தெய்வமாக வழிபடுகிறார்கள்
இந்த ஒரு புகழ் போதும்
தங்கத் தலைவரைக்கு..... Thanks...
orodizli
29th April 2020, 07:49 AM
4.தமிழக மக்களைப்பற்றி 24 மணிநேரமும் வாழ்நாளில் சிந்தித்து
அவர்களுக்கு ஏதாவது
செய்யணும் எண்ணம்
கொண்ட உத்தமர்...... Thanks...
orodizli
29th April 2020, 07:49 AM
5.தமிழுக்காக தமிழ் நாட்டிற்காக
தமிழ் அறிஞர்களை போற்றும்விதமாக
நல்ல தலைவர்களின் வழியில் நடந்தவர்
எம்ஜிஆர் ஒருவரே...... Thanks...
orodizli
29th April 2020, 07:51 AM
6.திராவிட பாரம்பரியம்
தமிழகத்தில் நிலைத்து
நிற்பதற்கு எம்ஜிஆர்
செய்த தொண்டுகள் தான்
என என்னால் அடித்து
கூற முடியும்........ Thanks...
orodizli
29th April 2020, 07:53 AM
7. தமிழ்நாடு முதல்வர் ஆனதும்
ஏழைகளுக்கு உதவி செய்தல் ...
நாட்டிற்கு என்னென்ன நல்ல திட்டங்கள்...
கொண்டு வருவது.... அவற்றை எல்லாம் எப்படி திறம்பட நிறைவேற்றுவது...
"நினைத்ததை முடித்தவர்".......... Thanks...
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.