View Full Version : Makkal thilagam mgr- part 25
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
[
14]
15
16
17
orodizli
19th April 2020, 01:29 PM
தங்கத்தில் நிறமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று
வந்திருக்கும் மலரோ
மீனவ நண்பன் பட பாடல்
உருவான விதம்
உங்கள் பார்வைக்கு
சில பாடல்கள் உருவான விதம் பாடல்களைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கும்.அது மீனவ நண்பன் படப்பிடிப்புத் தளம்.ஷாட்டின் இடைவேளையில் ஓய்வில் இருக்கிறார் மக்கள் திலகம்.பாடலாசிரியர் முத்துலிங்கம் அவரைக் காண வருகிறார்.
வணக்கம் தலைவரே.அவர் அப்படித் தான் அழைப்பார்.வாப்பா பேமெண்ட் எல்லாம் வந்துச்சா?.என்ன பேமெண்ட் தலைவரே.?.இந்தப் படத்திற்கு பாட்டெல்லாம் நான் எழுதலையே.?.
பாட்டில்லையா?. உனக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே? .யாரு தயாரிப்பு நிர்வாகி? .கூப்பிடு அவரை.நிர்வாகி வருகிறார்.ஐயா நான் சொல்லீட்டேங்க.படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சிங்க.பாட்டுக்கு சிச்சுவேஷன் இல்லைன்னுட்டாங்கையா.
யார் சொன்னது?. ஸ்ரீதரைக் கூப்பிடுங்க. சானா இருக்காரா பாருங்க.ரெண்டு பேருமே இருக்காங்க.கூப்பிட்டேண்ணு சொல்லுங்க.
இருவரும் வருகிறார்கள்.ஏங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே ஏன் குடுக்கல.?.
அது வந்துங்க படம் ஏறக்குறைய முடிஞ்சு போங்சுங்க.ரெக்கார்டிங் மட்டும் பாக்கி.ஏம்பா ஸ்ரீதர் பாட்டுக்கு ஏதாவது சிச்சுவேஷன் இருக்கா என்ன?.ஸ்ரீதர் இல்லை என்கிறார்.
ஏன் இருக்காது?.முத்துலிங்கத்துக்கு ஒரு ட்ரீம் சாங் கொடுங்க? .அதுக்கும் இடமில்லைங்களே.சிச்சுவேஷன் எங்கேயும் இல்லைங்களே.
ஏங்க எனக்கே சொல்லித் தர்ரீங்களா?.அதுவே ட்ரீம் சாங்.அதுக்கு எதுக்கு சிங்சுவேஷன்.அன்பே வாவில ராஜாவின் பார்வை பாட்டுக்கு எங்கே சிச்சுவேஷன் இருந்தது.ரெண்டு பேரும் பார்த்தாலே ட்ரீம் சாங் தானே.
சானா என்ற சடையப்ப செட்டியார் நெளிந்தார்.இவர் நம்மை சடையப்ப வள்ளலாக்க முடிவு செய்துவிட்டார்.இன்னொரு செலவு வைக்கப்போறார் என்ற முடிவோடு ஸ்ரீதரைப் பார்க்க ஸ்ரீதரோ போட்டுறலாங்க என்கிறார்.சரிங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுத்துரலாங்க என இருவரும் அங்கிருந்து நகர போப்பா போய் பாட்டெழுதி பேமெண்ட் வாங்கிக்க என முத்துலிங்கத்தை அனுப்பி வைக்கிறார்.
மக்கள் திலகத்தின் தனிப் பண்பே அது தான்.தம்மை நம்பியிருக்கும் கலைஞர்களை அவர் கைவிட்டதே இல்லை.சிறு பங்காவது அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் வீட்டில் அடுப்பெரிக்க வைப்பார்.முத்துலிங்கத்திற்கு இனிமேல் தான் தலைவலியே.
இயக்குநர் சொல்லி எம்.எஸ்.வி. பாட்டுக்கு அழைக்கிறார்.வாத்தியாரைய்யா பல்லவி குடுங்க என்கிறார்.முத்துலிங்கத்தை அப்படித் தான் அழைப்பார்.முத்துலிங்கம் பல்லவி போடுகிறார்.
அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்
அங்கங்களோ மன்மதனின் படைக்கலம்.
ஸ்ரீதருக்கு இந்தப் பல்லவி பிடிக்கவில்லை.அடைக்கலம் நல்லாயிருக்கு இந்த படைக்கலத்தை கொஞ்சம் மாத்திக்குடுங்களேன் என்கிறார்.படைக்கலம்னா போர்க்களம்தானே.இதெப்படி இங்கு வரும்.
சார் படைக்களம் அப்படீன்னா தான் போர்க்களம்.இது படைக்கலம்.பண்டங்கள் அப்படீண்ணு அர்த்தம்.அங்கங்களை மன்மதனின் பண்டங்களாக....
என்ன சார்.ஈசியா போட்டுக்குடுங்க சார் என்கிறார் ஸ்ரீதர்.மெல்லிசை மன்னரோ படைக்கலம் கூட பரவாயில்லைங்க.இந்த அடைக்கலத்தை மாத்தியே ஆகணும்.முத்துலிங்கத்திற்கு தலையே சுற்றியது.இவர் படைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.அவர் அடைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.மன்னர் அதற்கு சொன்ன காரணம் தான் முத்துலிங்கத்திற்கு சிரிப்பை வரவழைத்தது.
முத்துலிங்கம் நொந்தேபோனார்.இப்படியெல்லாமா சிந்திப்பார்கள்.ரெண்டு கலமும் வேண்டாம் புதுசாவே போட்டுத் தாரேன் என்று எழுதிய பாடல் தான்
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ
மக்கள் திலகம் பரபரப்பான அரசியல் களத்தில் ஈடுபட்டு மாநில முதல்வராகப் போகும் 77ல் வெளியான மீனவ நண்பன் ஒரு வெற்றிப்படம்.மீனவர்களின் துயர் துடைக்கும் குமரனாக பணக்கார லதாவின் காதலனாக நாயகி காணும் கனவில் வந்து போகும் பாடலிது.கடைசி நேரத்தில் இணைத்த பாடலில் ஜேஸூதாஸ் வாணி ஜெயராம் குரலில் மெல்லிசை மன்னர் போட்ட அருமையான பாடலிது.இலக்கியத்தரமான வரிகளைப் போட்டு பாடலை அழகாக்கியிருப்பார் முத்துலிங்கம்.
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ?.
முழுக்க முழுக்க மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பாடல்.நாயகியின் கனவு நாயகனை மயக்கும் வரிகள்.
வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் களைமானும் நானல்லவோ
அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கி அமிழ்தாகவோ
அட்டகாசமான மெட்டில் அசத்தும் இரு குரல்கள்.சரண முடிவில் அருமையான வாணியம்மாவின் ஆலாபனை.
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடை தாங்குமா? .
இந்த இடை தாங்கவே அந்தக் கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது.
எளிமையான அதே நேரம் இலக்கியத்தரமான பாடலைத் தருகிறார் முத்துலிங்கம்.
மலர்ந்து கனிந்து சிரித்துக் குலுங்கி கனியாகவோ.?.
அடுத்த சரணமும் இதே இலக்கியமாக ஜொலித்த பாடல்.சடையப்ப செட்டியார் தான் பாவம்.டீரீம் சாங் ஏகப்பட்ட பேர்களின் வீட்டிற்கு அடுப்பெரிய உதவியது அவருக்கு எங்கே தெரியப்போகிறது.இந்த மகத்தான சேவைக்குப் பின்னால் மக்கள் திலகமென்னும் மனிதாபிமானி இருப்பது நமக்கல்லவா தெரியும்........... Thanks.........
orodizli
19th April 2020, 01:33 PM
எம்ஜிஆர் மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்.
M.G.R. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.
முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.
1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!
இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.
எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.
‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.
‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.
‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.
‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.
நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.
அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.
‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.
தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …
‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’.......... Thanks...
orodizli
19th April 2020, 01:38 PM
' படம் போட்டாச்சா...டைட்டில் போட்டாச்சா?' என்ற படபடப்புடன் காட்சி நேரம் 5 நிமிடம் கடந்த பின் டிக்கெட் எடுத்துக் கொண்டு ஓடியபடியே செல்லும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். ' அய்யோ எம்ஜிஆர் பெயர் போட்டிருப்பாங்க' அடுத்தக் காட்சி பார்க்கலாம்' என கூறி டிக்கெட் கவுண்டரிலிருந்து வெளியே வந்த அனுபவமும் உண்டு.இன்றைய நடிகர் ஒருவரின் படத்தின் ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கு ஆர்எம் வீரப்பன் மாலை அணிவிப்பார். தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளக்கிறது. டிக்கெட் கவுண்டருக்குள் விட்டிருந்த கையை வெளியே எடுத்து நகருகிறேன். ' ஏம்பா படம் பார்க்கலையா?' கேட்டவர் திக்கென ஆச்சரியப்படும் அளவில் எனது பதில்...' புரட்சித்தலைவர் வரும் சீன் கடந்துவிட்டது,அவர் முகத்தை இன்றைய இளைய ரசிகர்களின் ஆரவாரத்தோடு கண்டுகளிக்க நினைத்தேன், முடியாமப் போச்சு' என்றேன். இத்தனைக்கும் அது ரிலீசான முதல் நாள்.அந்தப் படம் பாட்சா. இப்படி மக்கள் திலகம் டைட்டிலைப் பார்த்தால்தான் தலைவர் படம் பார்த்த திருப்தி ஏற்படும். தலைவர் மீனவ நண்பன் படத்தில் அறிமுகமாகும் காட்சியில் வில்லன் கண்ணனின் கையை கர்ச்சிப் கட்டிய இரும்புக்கரம் தடுக்கும். பின் பெல்ஸ்பாட்டம் பேண்ட் அணிந்த தலைவர் காலிலிருந்து காமிரா மேலே செல்லும். படம் பார்த்துவிட்டு ஊரில் வந்து சிறுவர்களிடம் சொல்லிச் சொல்லி மாளாது. 'இ.போ.எ.வாழ்க படம் பார்த்திருக்கிறாயா? தலைவர் பெயர் டைட்டிலில் எத்தனை தடவை வரும்?' எனக் கேட்டு என்னை மடக்கியவர்கள் உண்டு. ' ச்சே... தலைவர் படத்தை எத்தனை தடவை பார்த்திருக்கேன். 3 தடவை டைட்டிலில் தலைவர் பெயர் வருவதை பார்த்தும் மறந்துவிட்டோமே' என வருந்துவேன். நினைத்ததை முடிப்பவன் படத்தில் தலைவர் இந்த கலர் பேண்ட் சர்ட்டுக்கு இந்த கலரில் சாக்ஸ் மற்றும் ஷூ அணிந்து வருவார் என கூறுபவர்களையும் பார்த்திருக்கிறேன். தலைவர் படப் பட்டியலை அகர வரிசையிலும் எந்த தேதியில் என்ன படம் ரிலீஸ் என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும் விஜய் டிவி மன்னாதி மன்னன் பொங்கல் நிகழ்ச்சி புகழ் அய்யா ஆழ்வை ராஜப்பா சாமி வரை இன்றளவும் எண்ணற்ற மக்கள் திலகம் பக்தர்களுடன் தலைவர் காவியங்களை சென்னை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, கோவை போன்ற ஊர்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. படம் சீன் பை சீன் நான் அறிந்திருந்தாலும் சில நண்பர்கள் நம் அருகில் இருந்து கொண்டு அடுத்தடுத்து காட்சியில் என்னென்ன நிகழ்வு வரும் என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மனதுக்குள் எரிச்சல் வந்தாலும் காட்டிக் கொள்வதில்லை. அன்று 1985 களில் தலைவர் படம் மறுரிலீஸ் என்றாலும் ரசிகர்கள் நோட்டீஸ் அடித்து விநியோகித்துள்ளனர் என்பதை 1995 களில் அறிந்தேன். அப்போ ரிலீஸ் சமயத்தில் தலைவர் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எப்படி இருந்தது என மூத்தவர்களிடம் கேட்பேன்.' தம்பி 1965 ல எங்கவீட்டுப் பிள்ளை படம் ரிலீஸ் எப்படி ஆரவாரமா இருந்ததோ அதைவிட ஆரவாரம் இன்றுவரை எப்போதெல்லாம் மறுவெளியீடு செய்கிறார்களோ தலைவர் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்துவருவதைப் பார்த்து வருகிறேன்' என்கிறார்கள். இந்த சாதனையை இன்றைய நடிகர்களோ, அவரது ரசிகர்களோ வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பே இல்லை. தலைவர் படம் பிரமாண்டம் என உணர்த்த போஸ்டரில் பிரமீடு அமைப்பில் படத்தின் பெயர் இருக்கும். திரையில் அந்த பெயர் சாதாரணமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் போன்ற போஸ்டர்கள் 1985 களில் இப்படிப் பார்த்திருக்கிறேன். (இவை தற்போது டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யும்போது திரையிலும் டைட்டில் பிரமாண்டமாக மாற்றம் செய்திருந்தனர்.) ஆனால் அரசகட்டளை டைட்டில் போஸ்டரிலும் திரையிலும் ஒரே மாதிரியாக இருக்கும். குடியிருந்த கோயில் முதன்முதலாக பார்க்கும்போது என்னை படத்திற்கு அழைத்துச் சென்ற என் மாமாவிடம் ' எம்ஜிஆர் பெயர் டைட்டிலில் எப்ப வரும் எப்ப வரும் ?' என நச்சரித்துக் கொண்டே இருந்தேன். புலி, பசுவும் கன்றுடன் தலைவர் பெயர் திரையில் வரும்போது எழுந்த ரசிகர்கள் தலைவர் வங்கி கூரையில் ஓடுகளைப் பிரித்து இறங்கி சண்டை போடுவதுவரை துள்ளிக் குதித்தபடியே இருந்தனர். நானும் மீனவ ரசிகர்கள் கூட்டத்தினுள் சிக்கி அவ்வப்போது தலைவர் முகத்தை பார்க்க படாதுபாடு பட்டேன். முகநூல், வாட்சப் தளங்களில் எண்ணற்ற தலைவர் புகைப்படங்களை பதிவிட்டுவிட்டேன். நண்பர்கள் பதிவிட்ட புகைப்படங்களையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களும் வீடியோ clipகளும் சேமித்தாச்சு. மற்றவர்களிடமிருந்து எனது பதிவு மாறுபட்டிருக்க வேண்டும் என யோசித்தேன். தலைவரைப் பற்றி செய்தி சொல்லும் போது ஓவியத்துடன் சொன்னேன். தலைவர் பற்றி சித்திரக்கதை பதிவிட்டேன். ம்கூம் தலைவர் புகைப்படத்தை ஒரிஜினலாவே பதிவிட்டால் ஒழிய எனது ஓவியம் சார்ந்த தலைவர் பற்றிய பதிவுகளுக்கு வரவேற்பு இருப்பதில்லை. என்றாலும்....'சரி இப்ப என்ன சொல்ல வருகிறீர்?' எனத்தானே கேட்கிறீர்கள். தலைவர் பெயர் டைட்டிலில் அறிமுகமாகும் தொகுப்பு பதிவிட நினைத்து தயார் செய்தபோது ....முன்னுரை வேண்டாமா? அதான் இத்தனை ஆதங்கம்.......... Thanks.........
orodizli
19th April 2020, 01:53 PM
MGR அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் நடிப்பும் சொல்லிக்கொடுத்து அவர் வறுமையில் வாடிய போது தன் வீட்டில் பல நேரம் சாப்பாடு போட்டவர் காளி.என்.ரத்தினம்.(சபாபதி படத்தில் காமடியனாக கலக்கியவர்) தலைவரை பெரிய ஆளாக வருவாய் என சாமான்யராக இருந்தபோதே கணித்தவர்.. MGR முதன் முதலாக ராஜகுமாரி படத்தில்1947ல் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த போது அவரை சந்தித்து ஆசி பெற்றார். படம் வெற்றி பெற்றது.திரும்ப அவர் வீட்டுக்கு சென்றபோது அண்ணே நீங்க சொன்னமாதிரியே நா பெரிய ஆளாயிட்டேன். அதற்கு காளி.என்.ரத்தினம் சொல்கிறார். "நான் சொன்ன பெரிய ஆள் என்ற இலக்கு வேறு. இதெல்லாம் அதில் 10சதவீதம் கூட வராது. நா சொன்ன மாதிரி பெரிய ஆளா நீ இருக்கும் போது நா இருக்கமாட்டேன். "
1950ல் காளி ரத்தினம் மறைந்தார். அவர் மனைவி ராஜகாந்தத்துக்கு எம்ஜிஆர் மகன் போலவே இருந்தார். பல சூழல்கள் மாறின... எம் ஜி ஆர் முதல்வரானார். அப்போது அவர் சொன்ன வார்த்தை. "என்னை இந்த இடத்தில் கொண்டு வந்தது கலைத்துறை. அதுதான் வேர். அந்த வேருக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்தது காளியண்ணன்."
அவர் வீட்டுக்கு சென்றார் எம்ஜிஆர். அவருடைய படத்துக்கு மாலை போட்டார். ராஜகாந்தம் அம்மாவிடம் ஆசி வாங்கி விடைபெற்ற போது ராஜகாந்தம்"சாப்பிட்டு விட்டு போ ராமச்சந்திரா"என்றார். அதற்கு தலைவர் பதில். "நீங்க போட்ட சாப்பாடு இன்னமும் என் வயித்துல அப்படியே இருக்கு அம்மா!! நா சாகுற வரைக்கும் அது கரையாது"
இறந்து 33 ஆண்டுகளாகியும் அவர் புகழ் மங்காமல் கூடிக்கொண்டே இருக்க காரணம். "வந்தவழி மறவாத ஒருவரை எந்தவழியும் மறக்காது.."....... Thanks.........
orodizli
19th April 2020, 01:55 PM
#தெய்வமாக #வலம்வந்த #தலைவன்
தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்து இரவு இரண்டு மணிக்குப் புறப்பட்டு வீட்டுக்குப் போகிறார் புரட்சித்தலைவர்... கார் கிண்டி வழியாகச் சென்று கொண்டு இருக்கும் போது, ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒருவன் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தான்.
மக்கள்திலகம் அதைப் பார்த்து விட்டார். அவன் குழந்தையைக் கடத்திக் கொண்டு ஓடுகிறான் என்று நினைத்துக் காரை நிறுத்தச் சொன்னார். அவனுக்கு முன்பாகக் காரை நிறுத்தி இறங்கி ஓடுபவனைத் தடுத்து நிறுத்தினார். காவலர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
‘யார் நீ? இந்தக் குழந்தை யாருடையது? எதுக்காக இந்த நேரத்துல தூக்கிட்டுப் போற?’ என்று கேட்டார்.
‘ஐயா இது என் குழந்தைதாங்க. காய்ச்சல் நெருப்பாக் கொதிக்குதுங்க. விடியற வரைக்கும் தாங்குமான்னு தெரியல. அதான் டாக்டர் கிட்டக் காட்டலாம்னு போய்க் கிட்டு இருக்கேன்’ என்றான்.
குழந்தையைத் தொட்டுப் பார்த்தார் வாத்தியார்... அவன் சொன்னது உண்மைதான். ‘என் வண்டியில ஏறு. டாக்டர்கிட்ட நானே அழைச்சிட்டுப் போறேன்’ என்றார்.
‘#தலைவா...!' என்று அவன் காலில் விழப்போனான். காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன், ஐயா முதல் அமைச்சர் என்கிற முறையில் உங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு என்றார் அதிகாரி.
‘#ஒரு #குழந்தை #காய்ச்சலால் #உயிருக்குப் #போராடிக்கொண்டு #இருக்கும்போது #நான் #வீட்டுக்குப் #போறதுதான் #முக்கியமா? நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன்’ என்று சொல்லிவிட்டு, அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
‘எந்த டாக்டர் ?’ என்று கேட்டு அங்கே போனார். டாக்டரை எழுப்பி வைத்தியம் செய்தார். அதன்பிறகு குழந்தையின் தந்தை கையில் 10000 ஐக் கொடுத்து, போலீசார் வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.
#மகராசன் #வாழ்க என்று நன்றியோடு விடை பெற்றார் அந்தத் தந்தை...
தலைவர் நினைத்திருந்தால் தனது உதவியாளர்களை அனுப்பி அக்குழந்தைக்கு வைத்தியம் பார்த்திருக்கலாம்....
அப்படிச் செய்யவில்லை...
ஏனெனில் #அக்குழந்தையைத் #தன் #குழந்தையாகவே #பாவித்ததன் விளைவு தான்...இது...
இதைப்போல...பல கற்பனைக்கும் கூட எட்ட முடியாத செயல்களைப் புரிந்தவர் தான் நம் பொன்மனச்செம்மல்...
தலைவர்கள் தெய்வமாவதுண்டு...
ஆனால்...!!!
#தெய்வமே #தலைவராக #வந்து #மக்களை #வழிநடத்தியது
என்றால் அது நம் #இதயதெய்வம் #பொன்மனச்செம்மலைத் தவிர வேறுயாராக இருக்கமுடியும் ???....... Thanks...
orodizli
19th April 2020, 03:08 PM
திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக அதிமுக போட்டியிட்டது. கட்சி தோன்றி 7 மாதங்களுக்குள் நடைபெற்ற முதல் தேர்தல். இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிமுகவின் எதிர்காலம் அந்த தேர்தல் முடிவை பொருத்துதான் அமையும் என்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் பரபரப்புடனும் பதைபதைப்புடனும் காணப்பட்டார்கள். முதலில் தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் வெளியிடுவதில் பிசியாக இருந்தார் படம் மே 11 ல் வெளியான பின்பு தேர்தல் களத்தில் இறங்கினார். படம் வெளியாகி 10 நாட்களில் இடைத்தேர்தல். கருணாநிதியோ தேர்தலுக்கு பல மாதங்கள் முன்னாடியே தேர்தல் வேலையை தொடங்கி விட்டார். அவரின் மந்திரிகள் அத்தனை பேரும் திண்டுக்கல்லில் டேரா போட்டிருந்தனர். எதற்கு! தர்மதேவனை தோற்கடிப்பதற்கு. பல தேர்தலை கண்டவர் கருணாநிதி. சகல யுக்திகளையும் அறிந்தவர். மாநில ஆட்சி அதிகாரம் அத்தனையும் கையில் வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் மத்தியில் ஆட்சி அதிகாரத்துடன் இ.காங்கிரஸ் மூணாவது அணியாக காமராஜ் தலைமையில் இயங்கும் ஸ்தாபன காங்கிரஸ் என்று மூன்று அணியாக
தேர்தல் களத்தில் மோதியது.அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை எம்ஜிஆர் அறிமுகப் படுத்தினார் திமுக சார்பில் பொன்முத்துராமலிங்கமும் இ.காங்கிரஸ் சார்பில் N S V சித்தனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
புரட்சி தலைவரின் அதிமுகவுக்கு முதல் தேர்தல். ரசிகர்களுக்கு அரசியல் அனுபவம் எதுவும் கிடையாது. திமுகவின் பொன்முத்துராமலிங்கம் பழுத்த அரசியல்வாதி.
தேர்தல் பிரசாரத்தின் போதே திண்டுக்கல் அருகே ஒரு பாலத்தை கடக்கும் போது எம்ஜிஆர் பிரசார வாகனத்தை எதிர்பார்த்து குண்டு வைத்து விட்டனர். எம்ஜிஆர் சமயோசிதமாக வேறு வாகனத்தில் வந்ததால் உயிர் தப்பினார். உடனேஅவர் கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் மைக்கை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்த படியே சிங்கத்தின் சீற்றத்துடன் இந்த காரியத்தை செய்தவர்கள் தைரியமிருந்தால் மேடைக்கு வாருங்கள் நேருக்கு நேராக மோதலாம், கோழைத்தனமாக மறைந்து கொண்டு தாக்குவதை விட்டு விட்டு நேரடியாக வாருங்கள் இங்கேயே வைத்துக் கொள்ளலாம் நான் தயார் என்று அறைகூவல் விடுத்தார். கூட்டம் ஆவேசத்துடன் கொந்தளித்தது. காமராஜர் ஒரு பக்கம் திமுக,அதிமுக இரண்டுமே
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தாக்கி பேசினார்.
தேர்தலில் திமுக ஜெயிப்பது கடினம்
என்று தெரிந்தவுடன் பெண்கள் ஓட்டை செல்லாத ஓட்டாக மாற்றும் நோக்கத்தில் இரட்டை இலையில் இரண்டு இலைகளிலும் முத்திரை குத்துங்கள் என்று தவறான பிரசாரம் செய்தார்கள். ஆனால் பெண்களோ மிகத்தெளிவாக ஓட்டு போடும் நாளான 20-5-1973 அன்று காலையிலேயே
வாசலிலே இரட்டை இலை கோலம் போட்டது மட்டுமின்றி அவர்கள் இரட்டை இலை சின்னத்தையும் தலையிலே சூடி கூட்டம் கூட்டமாக
வாக்களித்து விட்டு வந்தனர்.மறுநாள் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்குகள் எண்ணும் நாளன்று ஆங்காங்கே வதந்திகள் தலைவிரித்தாடின. ரேடியோவை சுற்றி கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முதல் அறிவிப்பில் அதிமுக முன்னணி நிலவரம் வெளியான உடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புரட்சி தலைவர் வாழ்க கோஷம் ஆங்காங்கே காணப்பட்டது. வெடிச்சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டே. இருந்தது. அன்று நாங்கள் கொண்ட மகழ்ச்சி விவரிக்க முடியாதது. வெற்றி வித்தியாசம் கிட்டத்தட்ட 142000 வாக்குகள். தேர்தலில் இரண்டாவதாக வந்தது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்.
அதுவும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.கள்ள ஓட்டுகளை மட்டும் கட்டுப்படுத்தியிருந்தால் பிரதான கட்சி தனது டெப்பாசிட்டை இழந்திருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதுவரை திமுக பெற்ற வெற்றிக்கு புரட்சி தலைவர் தான் காரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.
செல்லாத வாக்குகள் அளவுக்கு அதிகமாக சுமார் 8000க்கும் அதிகமாக காணப்பட்டது அவர்கள் முயற்சி ஓரளவு பயனளித்தது என்றே சொல்லலாம்.ராஜதந்திரி என்று அழைத்துக் கொண்டவர்களின் ராஜதந்திரம் தர்மத்தின் முன்னே வெட்கித் தலை குனிந்ததை மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்கள். எங்கள் காதுகளில் நம்நாடு படப்பாடல் பொய்யும்,புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க மூலைக்கு மூலை தூக்கி எறிந்தோம் தலைகுனிவாக ஆனாங்க பாடலும் நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் உலகம் பாராட்டும் என்ற உலகம் சுற்றும் வாலிபனின் டைட்டில் பாடலும் ஒலித்து கொண்டிருந்தது. நம்மை ஏய்ப்பவர் கைகளில் இருந்து
அதிகாரம் நழுவும் காட்சி நம் மனக்கண்ணுக்குள் தெரிய ஆரம்பித்தது. ஆண்டவன் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை மென்மேலும் வளர ஆரம்பித்தது. இருண்டிருந்த தமிழகத்தின் வானில் ஒரு விடிவெள்ளி தோன்றி விடியலை நோக்கி சென்று கொண்டிருந்தது.......... Thanks.........
orodizli
19th April 2020, 03:14 PM
அன்புத் தம்பி
;;;;;;;;;;;;;/;;;;;;;;;;;;;;;
எம்.ஜி.சக்கரபாணி
"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி.......... Thanks...
orodizli
19th April 2020, 03:20 PM
"வாத்யார்"
தமிழகத்தை பொருத்தவரை "எம்.ஜி.ஆர்" என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ, ஏன், வெறும் பெயர்கூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதை சாதித்து இப்படியொரு உயரத்தை தொட்டார் என்று, எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா..? காமராஜ் செய்ததுதானே? பொக்கை வாய் கிழவிகளைக் கட்டி பிடித்து அன்பை தெரிவித்ததாலா..? அதுவும் அரசியலில் புதிதல்லயே?
எம்.ஜி.ஆர் என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்று வரை நீடித்தது வாழ்கிறார்.
சினிமாவில் இருந்தவரை அவரை முந்த இன்னொருவர் கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை, அவரை எந்த தேர்தலிலும் தோற்க்கடிக்க முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி, அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சரித்திரம் சொல்கிறது.
பொது வாழ்வில் அவரது பிரமாண்ட வெற்றி ஒரு இரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம்.
வெற்று தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த வாழ்க்கையை போல வாழ்ந்து, அவரைப்போல் உழைப்பாளியாக, வள்ளலாக, ஒழுக்கமுள்ளவராக திகழ்ந்தால், எந்த நடிகரும் மக்களின் இதயத்தில் இடம்பிடிக்கலாம்.
by : M.G.Nagarajan
Updated : 18 April 2020 - 3:54 AM....... Thanks...
orodizli
19th April 2020, 05:09 PM
மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டும் பார்க்கவில்லை, இதயத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். திரையில் நல்ல பல விஷயங்களைச் சொன்னதாலேயே இன்றளவும், நாளையும், ‘வாத்தியார்’ என்று மக்களால் போற்றப்படுபவர் அவர். 1965ஆம் ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்". தமிழ்நாட்டின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த படம்.
எம்.ஜி.ஆர் தனது நெய்தல் நாட்டில் மருத்துவராக இருப்பார். அந்நாட்டு மன்னன் சர்வாதிகார எண்ணம் கொண்டவன். சர்வாதிகாரத்துக்கு அடிபணியாத மக்கள் மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்வார்கள். புரட்சியாளன் ஒருவனுக்கு உதவி செய்கையில், மன்னரின் படையிடம் சிக்கிக் கொள்வார் எம்.ஜி.ஆர். கோபமடைந்த மன்னன் எம்.ஜி.ஆரைப் புரட்சிக் கூட்டத்துக்குத் தலைவர் என்று தீர்மானித்து எம்.ஜி.ஆர் அண்ட் டீமைக் கன்னித்தீவில் அடிமைகளாக விற்று விடுவான். தன் குழுவோடு, அத்தீவை மேம்படுத்தக் கடுமையாக உழைப்பார் எம்.ஜி.ஆர். ஆயினும் சரியான அங்கீகாரமோ விடுதலைக்கான வாய்ப்போ கிடைக்காது. கோபப்படும் குழுவினரை சமாதானப்படுத்தப் பல வழிகளைக் கையாளுவார். நல்ல அறிவுரைகளைப் பாடலாகப் பாடிப் புரிய வைப்பார். “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” எனத் தொடங்கும் பாடல் வரிகள் அதிகார ஆணவத்தில் ஆடும் பலருக்குச் சவுக்கடி தருவது போல இருக்கும்.
இப்பாடலில் வரும் “ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே! நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே! வரும் காலங்களில் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே” என்ற வரிகளைக் கேட்கும்பொழுது, இன விடுதலைக்காகப் பல்வேறு நாடுகளில் போராடும் மக்கள் நம் மனக்கண் முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியாது. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் ஒரு நாளில், சில மாதங்களில் எட்டுவதற்குரிய விஷயம் அல்ல. தொடர் போராட்டம்! நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்துளிகளின் விளைவாகக் கிடைத்தது சுதந்திரம் என்பதை நமக்கு நன்கு புரிய வைக்கும் இந்தப் பாடல்.
படத்தில் நாகேஷின் உடல்மொழி பல காட்சிகளில் மிகப் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக, கூட யாருமே இல்லாமல் வெறும் மண்டையோட்டைக் கையில் வைத்துக்கொண்டு அவர் செய்யும் காமெடி அவருடைய மாஸ்டர் பீஸ்களில் ஒன்று!
நம்பியார் கடற்கொள்ளைக் கூட்டத்தலைவனாக மிரட்டி இருப்பார்! கிளைமேக்ஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் போடும் கத்திச் சண்டை ஹாலிவுட், சீனப் படங்களுக்கு இணையாக இருக்கும்!
இந்திய சினிமாவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன். இந்திய அளவில் மட்டுமில்லை, உலக அளவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று!
அப்போதைய தொழில்நுட்ப வசதிகளுடன் ஈஸ்ட்மென் கலரில், அழகிய கேமரா கோணங்கள் மற்றும் நேர்த்தியான கேமரா நகர்வுகளோடு பிரம்மாண்டத்தின் மகுடமாக இந்தப் படம் திகழ்ந்தது என்பதைத் திரையில் கண்டவர் அறிவர். டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் செய்து 2014-இல் மீண்டும் வெளியிடப்பட்ட இப்படம், 175 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது! புதிதாக வெளியாகும் பல படங்கள் ஓரிரு நாட்களில், வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடும் சூழலில் ஆண்டுகள் ஐம்பது ஆனாலும் இந்தப் படம் வெள்ளி விழா வெற்றியைக் கொண்டாடுவதிலிருந்தே எம்.ஜி.ஆருக்கு இன்றும் மக்கள் மீதுள்ள செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிக்கு இணங்கக் காலம் உள்ள வரை தமிழ் சமூகம் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.
*எம்.ஜி.ஆர்* *ஆயிரத்தில்* *ஒருவரில்லை* , லட்சத்தில் ஒருவரில்லை, *கோடியில் ஒருவர்!* ✍............. Thanks.........
orodizli
19th April 2020, 05:11 PM
அகவை திருநாள்
வாழ்த்துக்கள்💐💐💐
******************************
மலேசியா நாட்டின் மேடைப் பாடகர் டி.எம்.எஸ். குரல்வழி பாடகர் பாசமிகு சகோதரர் திரு. டி.எம்.எஸ். சித்திரன் அவர்களுடைய பிறந்தநாள் இன்று.
புரட்சித்தலைவரின் பற்றுமிகு பக்தரான திரு. சித்திரன் அவர்கள் ஏராளமான மேடை நிகழ்வுகளில் அதாவது , மலேசியா , சிங்கப்பூர் , இந்தியா உட்பட பல மேடை நிகழ்ச்சிகளில்... சரித்திர நாயகர் , பொன்மனத் தங்கம் , ஏழைகளின் இதயத் தலைவன் , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த பல திரைப்படத்தின் பாடல்களை , மேடையில் பாடி இதயத்தில் பதிந்தவர்.
மலேசியா நட்டில் 2019 ம் ஆண்டு மாத கடைசியில் நடந்த இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் புகழ்பாடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள , நானும் ஆண்டவன் mgr குடும்பத் தளத்தின் அட்மீன் சகோ.ஆர்.ஜி.சுதர்சன் அவர்களும் கலந்து கொள்ள சென்றபோது ...
நாங்கள் தங்கியிருந்த ரெஷ்ட்ராண்ட்டுக்கு நேரில் வந்து சந்தித்து ,
மரியாதை , கௌரவத்துடன் அருமையான விருந்தும் கொடுத்து எங்ஙளை மகிழ்வித்த திரு.டி.எம்.எஸ். சித்திரன் சகோதரர் அவர்களுடைய பிறந்த நாளுக்கு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" "உழைக்கும் குரல்" மாத இதழ் மற்றும் ஆண்டவன் mgr குடும்பத்தளத்தின் சார்பாகவும்...
பல்லாண்டு காலம் சந்தோஷம் பொங்க வாழ , மனிதக்கடவுள் இறைவன் எம்ஜிஆர் அவர்களை வேண்டுகிறோம்.
வாழ்க..வாழ்க ,
நோய்நொடியின்றி என்றும் சீறோடும்...சிறப்போடும்🎂💐
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி (அட்மீன்)
&
ஆர்.ஜி.சுதர்சன்
(அட்மீன்)
ஆண்டவன் mgr குடும்பத் தளம்
🙏........... Thanks...
orodizli
19th April 2020, 05:56 PM
மர்மப் புன்னகை!!
-----------------------------------
என்றைக்கோ நாம் இட்டிருக்க வேண்டிய பதிவு இது!
ஒரு தகவலின் ஆதாரத்துக்காகக் காத்திருந்ததால் இவ்வளவு தாமதம்!!
காஞ்சி மகா முனி!
அன்பையே ஆயுதமாக்கிய பெரிய-வாள்--
காஞ்சிப் பெரியவாள்!
கண்டபடி அலையும் மனதைத் தாம்
கண்ட-படி அங்கேயே நிற்கச் செய்பவர்!!
அவல் மட்டுமே உண்ட அவாள்?
ஏவல் படை ஏதுமில்லா அந்த ஞானப் பழம்-
தூவல் தம் புன்னகையையே-
காவல் என நமக்கு அனுப்புபவர்!!
அது --
நாகை தர்மன்--பத்திரிகையாளருக்கும்
ஈகை தர்மன் எம்.ஜி.ஆருக்குமான ஒரு சம்பாஷணை!!
ஆத்திரத்தை எவ்வளவு நம் மனம் கொண்டாலும்-
பாத்திரத்தை அருளால் நிரப்பிய அவரது விழியெனும்
நேத்திரத்தைக் கண்டுவிட்டால் போதும்!
சாத்திரத்தை மீறிய சாந்தி நம் மனதுக்குக் கிடைத்துவிடும் என்று தம் காஞ்சி முனி பற்றிய கருத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கியவர் கேட்கிறார்-
அண்ணே நீங்க அவரை முதன் முதலில் தரிசனம் செய்தபோது அவரிடம் எதுவுமே கேட்காமல் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தீர்களாமே?
எம்.ஜி.ஆர்,,ஏனோ ஆழமாக சில நிமிடங்கள் மௌனம் காத்து,,பிறகு சொல்கிறார்-
அவரை நான் பார்க்கும்போது எதையுமேக் கேட்கவில்லை என்று சொல்வது தவறு?
நல்லதையே செஞ்சுக்கிட்டு எல்லோர்க்கும் நல்லவனாகவே சாகணும்ன்னு வேண்டிகிட்டேன்.
|நாகை தர்மன் முகம் சற்றுக் கலங்குவதை கவனித்த எம்.ஜி.ஆர் தொடர்கிறார்--
சாவு ஒண்ணும் கெட்ட விஷயம் இல்லே. எல்லோருக்கும் நிரந்தர ஓய்வுன்னு அதை எடுத்துக்கணும். அதற்குள் நம்மால முடிஞ்சதைப் பிறருக்கு செஞ்சுடணும்!
காஞ்சிப் பெரியவரைப் பார்க்கும்போது நான் நினைச்சதெல்லாம்--
|இத்தனை காலமும் இவரைப் பார்க்காம இருந்துட்டோமேன்னு தான் இருந்தது!
நாம எதுவுமேக் கேக்கத் தேவையில்லே--அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம்மக் கேள்விக்கெல்லாம் உரிய பதில்கள் கிடைச்சுடுது. சொல்லப் போனால்,,ஒரு துறவிங்கறவர் எப்படி இருக்கணும்ன்னு நான் மனசுல நினைச்சிருந்தேனோ,,அப்படியே அவர் இருந்தார்!!
எம்.ஜி.ஆரின் இந்த விளக்கம் மட்டுமே அன்று நாகை தர்மனின் வியப்புக்குக் காரணமில்லை??
இதே கேள்வி,,அங்கே மடத்தில் சீடர்களால் கேட்கப் படுகிறது-
அவர் உங்களையேப் பார்த்துண்டிருந்தார். நீங்களும் அவரையே புன் சிரிப்போடு பார்த்துண்டிருந்தேளே??
காஞ்சி முனி புன்னகையோடு கூறுகிறார்--
அவன் எல்லாருக்கும் ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும்ன்னு ஆசைப் படறான்?
அவனோட அந்த மனசுக்கு மட்டும் நான் சந்தோஷப்பட்டு சிரிக்கலே--
இந்த ராஜியத்தையே ஒரு நாள் ஆளப் போறவன் நம்மளாண்ட இப்படிக் கேக்கறானேன்னு நினைச்சேன். சிரிச்சேன்??
வார்த்தைகளை விரயம் செய்யாமலேயே--
அவர்கள் இருவரும் தான் எத்தனை ஆழமாக-
வாதம் செய்திருக்கிறார்கள்??
காஞ்சியில் அன்று அந்தப் பழத்தின்--
மெய் சிரிக்க--
நடக்கப் போவதும் அது தான் என்று-
மெய்யும் சிரிக்க--
நமக்கோ இங்கே-
மெய் சிலிர்க்கிறது!!!......... Thanks to mr.VT
orodizli
19th April 2020, 06:00 PM
ஒரு சாமான்யனின் புகழாரம்
மதிநுட்பம் நிறைந்த மந்திரிகள், சட்ட வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே திட்டங்களும், சட்டங்களும் நிறைவேற்றப்பட்ட இலக்கணத்தை உடைத்தெறிந்து ஒரு அடிமட்டத்தொண்டனின் விருப்பத்தையும் கூட சட்டமாக்கியவர் தான் நம் பொன்மனச்செம்மல்...
ஒன்பது வயது பாலகனின் குமுறலுக்கு அரசாணை பிறப்பித்த அதிசயம் தான் இது. இதோ அந்த மழலையின் குரல்...
என் பிரச்சனையை யாரிடம் சொல்வது...
எங்கள் கிராமத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்காக என் தாய் தினசரி கஷ்டப்பட்டு 2கிமீ நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரும் கொடுமையை யாரிடம் கூறுவது...?
மிக முக்கியமாக நாங்கள் வசிக்கும் பெரம்பலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலைபார்த்து வந்த எனது தந்தையாருக்கு வெகு தொலைவில் "டிரான்ஸ்பர்" ஆகியதால், அவரை வாரத்தில் ஒரு நாள் தான் பார்க்கமுடியும் என்ற எங்களின் மனக்குமுறலை யாரிடம் சொல்வது ?
எங்களின் கண்ணீர் கதையைக்கேட்க யாருக்கு நேரம் இருக்கப் போகிறது ???
எம்ஜிஆர் அப்போதைய முதல்வர். என் பிரச்சனையை அவர் செவிசாய்ப்பாரா? சினிமாவில் எல்லோருக்கும் உதவும் எம்ஜிஆர் நமக்கு உதவமாட்டாரா ???
ஒரு பேனாவை எடுத்து மேற்கண்ட அனைத்து துன்பங்களையும் எழுதிவிட்டேன். அது உடைந்த பேனாவாகையால் லெட்டர் முழுவதும் 'மை பொட்டுக்கள்...'
எம்ஜிஆர் சார்...
நான் சௌக்கியம் நீங்க சௌக்கியமா? உங்க கிட்ட ஒரு உதவி கேட்கணும்...இப்படி ஆரம்பித்தது லெட்டர்...
இப்படிக்கு...
தங்களுக்கு கீழ்ப்படிந்துள்ள மாணவன்
சு.செந்தில்குமரன்
பெறுநர் விலாசத்தில் "எம்ஜிஆர். , கோட்டை - சென்னை"
ஒரு வாரமிருக்கும். இரவு தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பிய என் அப்பா "இந்தா பிடி" என மறுபடியும் எங்கள் சொந்த ஊரான அரும்பாவூர் கிளைக்கே டிரான்ஸ்பர் ஆன அரசாணை...
"உங்கள் மகன் சு.செந்தில் குமரன், தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு எழுதிய கடிதம் காரணமாக "பணிமாறுதல் உத்தரவு"
அம்மாவும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அப்பா கண்ணீரில் திணறிக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்ல...எங்கள் ஊரிலுள்ள எல்லாக்கிணறுகளும் தூர் வாரப்பட்டு தண்ணீர் பஞ்சமும் குறைந்தது.
எப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதர் எம்ஜிஆர் ...!!!
அந்த இறைவன் கூட எங்களின் துன்பத்திற்கு இத்தனை விரைவாக செவிசாய்ப்பாரா? ன்னு கூட தெரியவில்லை.
சகிக்கமுடியாத மைக்கறைகளைக் கொண்ட அக்கடிதத்தையும் படித்து அதை சரியாக புரிந்துகொண்ட புண்ணிய ஆத்மா எம்ஜிஆர்..
எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வந்த ஒரு ஒழுங்கில்லாத, பாலகனின் கடிதத்தைக் கூடப் படித்துப் பார்த்து நடவடிக்கை எடுத்த அந்த தாய்மனம் கொண்ட தலைவனை, முதல்வரை உலகம் பார்த்ததுண்டா ???........ Thanks...
orodizli
19th April 2020, 06:04 PM
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் .
நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்
புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்.......... Thanks...
orodizli
19th April 2020, 06:08 PM
தலைவரை தவிர வேறு யாருக்கு வரும் இந்த தாராள குணம் ? ஜெமினிகனேசனையும்
பெருமை படுத்திய தவைர் !
. இவ*ர் ந*மது புன்னகை மன்ன*னுட*ன் ந*டித்த ஒரே ப*ட*ம் முக*ராசி.
இந்த* ப*ட*ம் வெளியானபோது மவுண்ட்ரோட்டில் க*ட் அவுட் மற்றும் பேனர்க*ள் திரை அர*ங்கில் வைக்க*ப்பட்ட*து. அதில் எம்ஜிஆர் க*ட் அவுட் பெரிய*தாக*வும், ஜெமினியின் க*ட் அவுட் ஒற்றைக்காலுட*ன் சிறிய*தாக*வும் இருந்தது. ஜெமினி இதை பெரிதுப*டுத்த*வில்லை. ஆனால், இதை அறிந்த த*லைவ*ர் வினியோக*ஸ்த*ருக்கு போன் செய்து த*ன் கட் அவுட் உய*ரத்திற்கே ஜெமினியின் க*ட் அவுட் வைக்கவேண்டும். அதுவும் அவ*ர் ப*டத்தில் இருகால்க*ளுட*ன் வ*ரும் காட்சியின் உருவ*மே இட*ம்பெற வேண்டும். அதை தான் மறுநாள் வ*ந்து பார்ப்பேன் என்றும் க*ண்டிப்பாக கூறிவிட்டார். பின் அவ்வாறே மாற்ற*ப்ப*ட்ட*து. இத*னை ஜெமினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்......... Thanks...
orodizli
19th April 2020, 06:11 PM
#இனி #உங்களை #பார்க்கமாட்டோம்
அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...
கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.
ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...
"ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.
இது நித்தமும் தொடர...
ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.
மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....
ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...
அருகே சென்று...
"ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்
நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.
"ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...
பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.
அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...
"இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....
இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
...பள்ளியில் இதான் பேச்சு...
வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்......... Thanks...
orodizli
19th April 2020, 06:13 PM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அஇஅதிமுக அல்லது அனைத்திந்திய அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்...
இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் அக்டோபர் 17,1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க தனது முதல் தேர்தலை 1973-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்...
அதைத் தொடர்ந்து 1977-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிளும் மாபெரும் வெற்றி பெற்றது...
தலைவர் 1984-இல் மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.
கொடியின் வரலாறு...
அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது...
மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது...
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள்...
அதன் பிறகு தலைவர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார்...
அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை தலைவர் உருவாக்கினார்...
பெயர் மாற்றம்...
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தலைவர் மாற்றினார்.......... Thanks...
orodizli
19th April 2020, 07:58 PM
நேற்றய பதிவில் நம் தலைவர் ரசிகர்கள் பலர் கண்கள் குளம் ஆனதால் இன்று ஒரு நகைச்சுவை தலைவர் பதிவு.
பணமா பாசமா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் திரு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நவாப் நாடக கம்பெனியில் இருந்து விலகி சக்தி நாடக சபா ஒன்றை உருவாக்கி நடத்தி வந்தார்.
மதுரையில் எழுத்தாளன் என்ற நாடகத்தை நடத்தி முடித்து 100 பேர் கொண்ட அவர் குழு பாண்டிச்சேரிக்கு வந்து அந்த நாடகத்தை போட ஆரம்பிக்க.
நாடகத்துக்கு கூட்டம் வரவில்லை. 100 பேருக்கு சாப்பிட சம்பளம் கொடுக்க வழி இல்லை...உடனே சென்னைக்கு கிளம்பி யாராவது நடிகர்கள் தலைமை தாங்கி நாடகம் நடந்தால் அன்று வரும் கூட்டத்தை வைத்து அந்த வாரம் முழுவதும் ஓட்டி விடலாம் என்று அவர் நடிகர் எம்.என். நம்பியாரை பார்க்க அவர் வீட்டுக்கு வர அங்கே நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களும் இருக்க.
அவர்களிடம் குழுவின் நிலை குறித்து கே.எஸ்.ஜி...வருந்தி சொல்லி கொண்டு இருக்க முதலில் சாப்பிடுவோம் என்று எம்.என்.அவர்கள் சொல்ல.
சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது புரட்சி நடிகர் நம்பியார் வீட்டுக்கு தற்செயல் ஆக வர அவரிடம் கே.எஸ்.ஜி...அவர்களை நம்பியார் அறிமுக படுத்த.
உங்கள் போஸ்ட்மேன் எழுத்தாளன் நாடகங்கள் பற்றி நான் கேள்வி பட்டு இருக்கிறேன் என்றவுடன் நம்பியார் கண் அசைக்க உடனே கே.எஸ்.ஜி...வந்த விவரம் சொல்ல.
ஏற்கனவே நாடக குழு அனுபவம் இருந்ததால் ஒண்ணு செய்வோம் சனிக்கிழமை நம்பியார் நாடகத்துக்கு தலைமை மறுநாள் ஞாயிரு அன்று நான் வருகிறேன் என்னால் ஒரு 100 பேருக்கு உதவி ஆக இருக்கும் என்று அவரே சொல்ல.
என்ன இது நாம் அவரை கேட்கவே இல்லை அவராக வருகிறேன் என்று ஒப்பு கொண்டு விட்டாரே இனி நம் குழு பிழைத்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் எம்.என்.அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார் கே.எஸ்.ஜி.
அந்த நாளும் வர மதியம் கிளம்பி சுமார் 5 மணி அளவில் பாண்டிச்சேரிக்கு நம் தலைவர் போய் சேர்ந்து அந்த குழு இருக்கும் இடத்தை அடைய.
புரட்சிநடிகர் வருகிறார் நாடகத்துக்கு என்ற வுடன் காலை முதலே அரங்கம் வாசலில் கூட்டம் சேர துவங்குகிறது. ஓடி வந்து வரவேற்ற கே.எஸ் ஜி.அவர்களிடம் நேற்று நம்பியார், உடன் எஸ்.வி சுப்பையா வர எப்படி வசூல் என்று தலைவர் கேட்க பாதி கிணறு தாண்டி விட்டோம் நீங்கள் இன்று வந்து இருப்பதால் இனி இந்த மாதம் முழுவதும் எங்கள் குழு பிழைத்து கொள்ளும் என்று அவர் சொல்ல.
சற்று நேரத்தில் அங்கு வந்த நாடக குழு மேனேஜர் அரங்க வாசலில் மக்கள் வெள்ளம் போல் நின்று எம்ஜியார் எம்ஜியார் என்று மொய்க்கிறார்கள் என்ற தகவல் சொல்ல
வாசல் வழியா கண்டிப்பாக நாம் உள்ளே போக முடியாது என்றவுடன் தலைவர் நான் தலையில் முண்டாசு கட்டி கொண்டு அடையாளம் தெரியாமல் உள்ளே போய் விடலாமா என்று கேட்க.
உங்களை வெளியே மக்கள் பார்த்து விட்டால் உள்ளே எவரும் வர மாட்டார்கள் அது வீணாக போய்விடும்.
கூட்டம் தெரிந்து நான் ஒரு மாற்று யோசனை வைத்து இருக்கிறேன்.அரங்கின் பின்னால் ஒரு குறுக்கு சந்து இருக்கு அதன் வழியாக ஒரு 15 அடி உள்ளே போனால் அந்த அரங்கின் பின் வாசல் வழியாக நாம் உள்ளே போய் விடலாம் என்று கே.எஸ். ஜி...சொல்ல பாவம் போல இருந்த அவர் முகம் கண்டு நம் மன்னர் ஒத்துக்கொள்ள.
இரவு 9 மணிக்கு நாடகம் ஆரம்பம்..ஒரு 7.30 மணி அளவில் அந்த குறுக்கு சந்து அருகில் கார் வந்து நிற்க இருவரும் இறங்கி முதலில் வழி காட்டி கொண்டு கே.எஸ்.ஜி போக பின்னால் நம் தலைவர் முழு ஒப்பனையுடன் தொடர.
ஒரு பத்தடி தூரம் போனதும் எதிரே இருந்து ஒரு பெண் ஆஜானுபாகுவான உடல் கொண்டு வர.
வடிவேல் பட காமெடியில் ஒரு பெண்ணை பிடிக்க போக அந்த பெண் வடிவேல் போலீஸ் உடையை பறித்து கொண்டு போட்டு கொண்டு ஓடுபவர் போல உடல் கட்டு அந்த பெண்ணுக்கு இருக்க ஒரு உதாரணம் கொண்டு.
எதிரே வந்த அந்த பெண்...கே.எஸ்.ஜி யை தாண்டி பின்னால் வந்த நம் தலைவரை உற்று பார்த்து அவர் எம்ஜியார் போல இருக்கே என்பதை உறுதி செய்து கொண்ட பின்.
ராசா நீ எங்கே இங்கே இந்த சந்தில வந்தே என்று தலைவரை கட்டி சேர்த்து பிடித்து கொள்ள.... தலைவர் அட... விடும்மா...விடும்மா என்று குரல் கொடுக்க
கே.எஸ்.ஜி அந்த பெண்ணின் தோற்றம் கண்டு பயந்து நிற்க உடனே சுதாகரித்து கொண்ட எம்ஜியார் விடும்மா நான் ஒரு நிகழ்ச்சிக்கு போறேன் என்ற உடன் அந்த பெண் சந்தில என்ன ராசா நிகழ்ச்சி என்று கேட்க... தலைவர் தன் பலம் பொருந்திய கைகளால் அந்த கட்டி பிடித்து இருந்த அந்த பெண்ணின் கைகளை பிடித்து விலக்கி கொண்டு ஒரே துள்ளலில் அருகில் இருந்த அந்த ஒரு ஆள் நுழையும் அந்த கேட் வாசல் வழியா அரங்கின் பின் புறம் நுழைந்து விட.
அதிர்ச்சியில் உறைந்து போன கே.எஸ்.ஜி...திகைத்து நிற்க..... அங்கே அரங்கின் உள்ளே இருந்து பறந்த விசில்கள் சத்தம் எம்ஜியார் மேடைக்கு சென்று விட்டார் என்பதை உறுதி படுத்த.
நாடகம் இரவு 1 மணி அளவில் முடிய மேடையில் தலைவர் அருகில் கூட வர பயந்து ஓரம் ஆக நின்ற கே.எஸ்.ஜி....குழு தங்கி இருக்கும் இடத்துக்கு வந்த பொன்மனம் இரவில் நேரம் ஆகி விட்டதால் அங்கேயே தங்க.
மறுநாள் விடிந்த உடன் சற்று நேரம் கழித்து எங்கே கே.எஸ்.ஜி.என்று தலைவர் கேட்க..
அவர் இரவு சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டேன் இப்ப நேரில் பார்த்து என்ன நடக்குமோ என்று பயத்துடன் செல்ல.
அவரை பார்த்த தலைவர் முதலில் கடுமை காட்டும் முகம் கொண்டு அடுத்த நொடியில் முகம் மாறி என்ன பயமா சொல்லுங்க என்று சிரித்து கொண்டே வரவேற்க மறுபடியும் இந்த உலகில் பிறந்தது போல உணர்ந்தார் கே.எஸ்.ஜி..
நடந்ததை விடுங்க அது முடிந்து விட்டது...வசூல் போதுமா என்று கேட்க 2 மாதம் குழு முழு பலத்துடன் இனி செயல் படும் என்று கண்ணீருடன் கே.எஸ்.ஜி...கை கூப்ப.
அவர் கண்ணீரை துடைத்து கிட்டு நான் புறப்படுகிறேன் என்று தலைவர் கிளம்ப.
பின் ஒரு காலத்தில் கற்பகம் என்ற படத்தின் கதையை முதலில் தலைவருடன் கதை சொல்ல கே.எஸ்.ஜி போன போது என்ன அந்த.....சந்து கதை நினைவுக்கு வருதா என்று தலைவர் கேட்க வாய் விட்டு சிரிக்கிறார் கே.எஸ்.ஜி...அவர்கள்.
தலைவர் கதை கேட்டு அவர் பின் சிவாஜி நடிப்பதாக இருந்த அந்த படம் பின்னால் ஜெமினி நடித்து வெற்றிகரமாக ஓடியது பின்னால் நடந்தவை.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி.... தொடரும் நாளை..உங்களில் ஒருவன் நெல்லை மணி......... Thanks...
orodizli
19th April 2020, 08:08 PM
# “வேட்டைக்காரன் வருவான் ...ஏமாந்து விடாதீர்கள்”
காமராஜர் , கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம்...,
தி.மு.க.விற்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசி விட்டு முடிவில் கூட்டத்தினரை இப்படி எச்சரித்தாராம்..!
அதன் காரணம்.. அவருக்கு அடுத்து அந்த ஊருக்கு எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்காக வருகிறார் என்று தகவல் வந்ததாம்..!
ஆனால் காமராஜர் எவ்வளவு எச்சரித்தும் மக்கள் வேட்டைக்காரனைத்தான் வெற்றி பெற வைத்து கொண்டாடினார்கள்..
கடைசியில் கோட்டைக்கும் அனுப்பி வைத்தார்கள் ..!
# சரி..அந்த வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர்.,
தி.மு.க.வில் இருக்கும்போது , காமராஜரைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தை , மிகப் பெரும் கலகத்தை , கழகத்தில் உண்டாக்கி விட்டது...!
அப்படி என்னதான் சொன்னார் எம்.ஜி.ஆர்...?
“காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி..”
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும் எரிமலையாய்க் கொந்தளித்துப் போன ஒரு கூட்டம் , நேராக அண்ணாவிடம் போய்.. “எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்ல , அண்ணா அமைதியாகச் சொன்னாராம்.. “ ராமச்சந்திரனைப் பற்றி எனக்குத் தெரியும்..அமைதியாக இருங்கள்..”
அப்புறம்தான் அமைதியானர்களாம் அந்தத் தொண்டர்கள்..!
# அதன் பின்.....
1969 ல் நடைபெற்ற நாகர்கோவில் எம்.பி. இடைதேர்தலில் , காமராஜர் போட்டியிட்டபோது ..அவரை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்திற்காக , அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே.போகவில்லையாம் எம்.ஜி.ஆர்...!
அது மட்டுமா..?
1972 ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். , தன் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்புடன் இட்ட கட்டளை :
“காமராஜரை எந்த மேடையிலும் , எவரும் தாக்கிப் பேசக் கூடாது..!”
# நாமும் அமைதியாக இருந்து , ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்...
இன்றைய காங்கிரஸ்காரர்களை விட ,
காமராஜரை அதிகமாக மதித்தவர் ,
அன்றைய எம்.ஜி.ஆர்.தான் என்றே தோன்றுகிறது ..!........ Thanks.........
orodizli
19th April 2020, 08:17 PM
வாய்ப்புகளை வாரி வழங்கிய வள்ளல்...
மயிலை வடக்கு மாடவீதியில் ஒரு திருமண மண்டபம்...
டப்பிங் கலைஞர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி... இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார் அந்த இளம் பெண் ...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்...' போன்ற பாடல்கள்... வித்தியாசமான குரலில் பாடிக் கொண்டிருந்தார்... ஒரே எம்.ஜி.ஆர். பாட்டு மயம்...
முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !
அப்போது அவர் முதலமைச்சராக இல்லை. அ.தி.மு.க தலைவர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த இளம் பாடகியின் தாயார் அழைத்ததின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் மக்கள் திலகம். காரணம்...
அந்த தாய் ஒரு காலத்தில் பாய்ஸ் நாடகக் குழுவில் நடிகை! பாலமுருகன் பாய்ஸ் கம்பெனி, ஜோதி நாடக சபா என்று நடித்துக் கொண்டிருந்தவர். திருமணமான பின் நாடகத்தை விட்டு விட்டு சினிமாவில் நடித்தார். கண்ணன் என் காதலன், கணவன், என் அண்ணன், இதயக்கனி, நீரும் நெருப்பும் என்று பல எம்.ஜி.ஆர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். பின்பு 'டப்பிங்' கலைஞராக விளங்கினார். நாடக நடிகையாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு அவரை நன்றாகத் தெரியும். அதனால், பழைய, புதிய
சக நாடகக் கலைஞர்கள் யார் அழைத்தாலும் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் அழைப்பை ஏற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கொள்கையாகவேக் கொண்டிருந்த மக்கள் திலகம், அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
படப்பிடிப்பின்போது அந்தப் பெண் தனது தாயாருடன் வருவதை எம்.ஜி.ஆர் பலமுறை பார்த்திருக்கிறார்.
ஆனால், அவர் இந்த அளவுக்குப் பாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த செய்திகளையெல்லாம் நான் அறிந்துகொள்ள உதவியாக இருந்த அந்த பாடகியின் பேட்டியிலிருந்து ஓரு பகுதி...
" மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு இசை ரசிகரைப் பார்க்க முடியாது. அந்தக் கல்யாணத்தில் என் கச்சேரியை நீண்ட நேரம் அமர்ந்து ரசித்தவர், ‘‘உனக்கு இப்படி பாடக்கூடிய பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்லையே’’ என்றார் அம்மாவிடம். அப்படியே கத்தையாகப் பணத்தை அள்ளிக் கொடுத்து வாழ்த்தினார். அப்போ எனக்கு 15 வயசுதான் இருக்கும்.
அவருடைய பாராட்டையே விருதாக நினைத்த எனக்கு, வரம் போல இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தார். ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஒரு பாடலைப் பாட திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனிடம் சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ஜேசுதாஸுடன் சேர்ந்து பாடிய,
கவிஞர் நா.காமராசன் இயற்றிய அந்தப் பாடல்தான், ‘போய்வா நதி அலையே...’....
இப்போது தெரிந்திருக்குமே அந்தப் பாடகி யாரென்று ! அவர்தான் பாடகி டி.கே.கலா. அகத்தியர் திரைப்படத்தில் 'தாயிற்சிறந்த கோவிலும் இல்லை...' என்ற பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பாடி, முதல் பாட்டிலேயே பலரது கவனத்தையும் கவர்ந்தவர். அவரது தாயார்
நாடக மற்றும் திரைப்பட நடிகையாக, டப்பிங் கலைஞராக விளங்கிய
காலஞ்சென்ற சண்முகசுந்தரி.
ரெக்கார்டிங் முடிந்ததும் கே.வி.மகாதேவன், ‘‘இதுவரை இப்படி ஒரு குரலை நான் கேட்டதில்லை. உனக்கு தனித்துவமான வாய்ஸ்’’ என்று டி.கே.கலாவை வாழ்த்தினாராம்.
அந்த பேட்டியில் மேலும் தொடர்கிறார் டி.கே.கலா...
"ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில், ‘புதுசா ஒரு சின்னப் பொண்ணு பாடின பாட்டு இது. அருமையா பாடி இருக்கு... கேளுங்க’ என்று எல்லோருக்கும் இந்தப் பாடலை போட்டுக் காட்டி சில படங்களுக்கு சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘வாரேன் வழி பார்த்திருப்பேன்...’ என்ற பாடலை மெல்லிசை மன்னர் இசையில் பாடினேன். எம்.ஜி.ஆர் படங்களில் நிறைய பாடவில்லை என்றாலும், என் பாடலை அவர் டேப் ரெக்கார்டரில் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் போட்டு காட்டியது யாருக்கும் கிடைக்காத ஒரு கொடுப்பினைதானே!’’
இப்படி பரவசத்தோடு பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார் பாடகி டி.கே.கலா அவர்கள்.
தன்னோடு பழகிய சக கலைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் வாரிசுகளுக்குக் கூட நல்ல வாய்ப்புகளை அளிக்கத் தவறியதில்லை மக்கள் திலகம்! வெறுமனே வாய்ப்பளிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களின் திறமையை மற்றவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி சிபாரிசு செய்யவும் தயங்கியதில்லை!...... Thanks.........
orodizli
19th April 2020, 08:20 PM
தலைவர் அதிசயம்,அவரைப்பற்றி ஆய்வுக்கு ஓய்வு கிடையாது,எந்த விஷயத்தில் அவரை ஆராய்ச்சி செய்தாலும் தனிப்பிறவியாகத்தான் திகழ்வார்.
உலகத்திரைப்பட வரலாற்றில் கதாநாயகர்களுடன் இணையாக நடிக்கும் காமெடி நடிகர்களால் படத்தில் வாடா,போடா என்று அழைக்கப்படாத ஒரே ஒரு கதாநாயகன் நம் புரட்சி தலைவர் மட்டும்தான்........👌👍💐
orodizli
19th April 2020, 08:27 PM
தலைவா மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் உங்களுடைய பழைய திரைப்படங்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது இன்றும் உங்களை பற்றி நிறைய புத்தகங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது தினசரி நாளிதழ்களிலும் வார புத்தகங்களிலும் உங்களை பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது இன்றும் நீங்கள் ஆரம்பித்த கட்சிதான் ஆட்சி நடத்துகிறது இவ்வளவு சிறப்புகள் பெற்ற உங்ளுடைய புகழை பெற ஒரு நடிகர் அல்ல ஓராயிரம் நடிகர்கள் வந்தாலும் உங்கள் நிழலை கூட தொட முடியாது....... Thanks...
orodizli
19th April 2020, 08:29 PM
புர*ட்சித்த*லைவ*ர் த*ன*து ஆட்சிகால*மான 1977 ஜூன் 30 முத*ல் 1987 டிச*ம்ப*ர் 24 வ*ரை த*மிழ*க*த்தின் முத*ல்வ*ராக இருந்த*வ*ரை பிர*புதாஸ் ப*ட்வாரி, மு.மு.இஸ்மாயில் (த*ற்காலிக*ம்), சாதிக் அலி, எஸ்.எல்.குரானா ஆகிய நான்கு ஆளுந*ர்க*ள் க*வ*ர்ன*ராக* இருந்த*ன*ர்.
அவ்வாறே மொர்ராஜி தேசாய், ச*ர*ண்சிங், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய நான்கு பிர*த*ம*ர்க*ள் ப*த*வி வ*கித்த*ன*ர்.
மேலும் முத*ல்முறை 962 நாட்க*ளும், இர*ண்டாம் முறை 1620 நாட்க*ளும், மூன்றாம் முறை 1042 நாட்க*ளும் முத*ல்வ*ராக ப*த*வி வ*கித்துள்ளார் புர*ட்சித்த*லைவ*ர். மொத்த*ம் 3624 நாட்க*ள் ப*த*வி வ*கித்தார்.
குறிப்பிட*த்த*க்க சாத*னைக*ளில் சில..
* ச*த்துண*வு திட்ட*ம்
* பொது விநியோக* ரேஷ*ன் க*டைக*ளை அதிக*ப்ப*டுத்தி பொருட்க*ள் த*டையின்றி கிடைக்க*ச் செய்தார்.
* தெலுங்கு க*ங்கை திட்ட*த்தின் மூலம் கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டுவ*ர* ஒப்ப*ந்த*ம் போட்டு இரு த*வ*ணைக*ள் ப*ணமும் அளித்தார்.
*மகளிர் காவ*ல் நிலைய*ம் முத*லில் அமைத்தார்.
* இல*வ*ச* ஆம்புல*ன்ஸ் சேவையை அறிமுக*ப்ப*டுத்தினார்.
*மாண*வ*ர்க*ள் இடை நிற்ற*லை குறைக்கும் பொருட்டு பி.யூ.சி.யை ர*த்து செய்து 10+2 முறையை கொண்டுவ*ந்தார்.
* அர*சு ஊழிய*ர், ஆசிரிய*ர்க*ள் ச*ம்ப*ள*த்தை க*ணிச*மாக* உய*ர்த்தினார்.
*மதுவில*க்கை மூன்ற*ரை ஆண்டுக*ள் அம*ல்ப*டுத்தினார். பின்ன*ர் க*ள்ளச்சாராய*, விஷ*ச்சாராய சாவுக*ளை த*டுக்க வேறுவ*ழியின்றி மதுக்க*டைக*ளுக்கு குறைந்த* அள*வில் அனும*தி அளித்தார்.
*முல்லைப்பெரியார் அணையை ப*ல*ப்ப*டுத்தி சீரமைத்தார்.
*கிராம*ங்க*ளில் ப*ர*ம்ப*ரை க*ர்ண*ம் முறையை ஒழித்து கிராம* நிர்வாக* அலுவ*ல*ர் ப*த*வியை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் த*மிழ*க*த்தில் உருவாக்கினார்..
*அன்னை தெர*சா மக*ளிர் ப*ல்க*லைக்க*ழ*க*த்தை உருவாக்கினார்.
* இன்றைக்கு இருக்கின்ற* 133 அடி உய*ர* வ*ள்ளுவ*ர் சிலை, கோய*ம்பேடு புர*ட்சித்தலைவ*ர் பேருந்து நிலைய*த்திற்கு அடிக்க*ல் நாட்டினார்.
*த*னியார் பாலிடெக்னிக், பொறியிய*ற் க*ல்லூரிக*ளை மாவ*ட்ட*ந்தோறும் திற*க்க*ச் செய்தார். அத*னால் க*ல்விப்புர*ட்சியை உருவாக்கினார்.
* மினி பேருந்து முறையை அறிமுக*ப்ப*டுத்தினார்.
*விலைவாசியை க*ட்டுக்குள் வைத்தார். குறிப்பாக* அரிசி விலை க*ட்டுக்குள் இருந்த*து
*த*மிழ்நாடு காகித* ஆலையை புக*ழூரில் ஏற்ப*டுத்தினார்.
*வித*வைக*ளுக்கும், ஏழைத்தாய்மார்க*ளுக்கும், ப*டித்து வேலையில்லாத* இளைஞ*ர்க*ளுக்கு உத*வித்தொகை அளித்தார்.
*த*ஞ்சையில் த*மிழ்ப*ல்க*லைக் கழ*க*ம் உருவாக்கினார்.
* த*மிழ் ஆசிரிய*ர்க*ளும் த*லைமை ஆசிரிய*ர் ஆக*லாம் என உத்த*ர*விட்டார்.
* அர*சு ம*ருத்துவ* ம*னைக*ளில் சிறுநீர*க* மாற்று அருவை சிகிச்சை, இலவ*ச* ட*யாலிசீஸ் வ*ச*தியை ஏற்ப*டுத்தினார்.
* புதிய மாவட்ட*ங்க*ளை உருவாக்கினார்.
*காவ*ல*ர்க*ளுக்கு அரைக்கால் ச*ட்டை முறையை மாற்றினார். கூம்பு போன்ற* தொப்பியையும் மாற்றி ந*வீன*ப்ப*டுத்தினார்.
*ம*த*க்க*ல*வ*ர*ம், வ*குப்பு க*ல*வ*ர*ம் இல்லாமை, ர*வுடியிச*ம் ஒழிப்பு
*ப*ராம*ரிப்பு இல்லாம*ல் இருந்த* அனைத்து கோயில்க*ளிலும் ஒரு நேர* பூஜையை அமல்படுத்தினார்.
* விவ*சாயிக*ளுக்கு இல*வ*ச* மின்சார*ம், மின்சார*ம் இல்லாத* வீடுக*ளுக்கு ஒரு விள*க்கு இலவ*ச* மின்சார* திட்ட*த்தை அமல்ப*டுத்தினார்.
*இல*ங்கை அக*திக*ளுக்கு புக*லிட*ம், விடுத*லைப்புலிக*ளுக்கு நிதியுத*வி அளித்தார்.
இன்ன*மும் சொல்லிக்கொண்டே போக*லாம்...
இனிய மதிய வ*ணக்கத்துட*ன்........ Thanks...
orodizli
19th April 2020, 08:35 PM
#இதுவன்றோ #பக்தி !!!
எங்க அப்பாவுக்கு ஹார்ட்ல ஓட்டை...எவ்வளவோ மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தும் பயனில்லை...கடைசி முயற்சியாக சி.எம்.சி.மருத்துவமனை போகச்சொல்லி எங்க சர்ச் பாதிரியார் ஒரு லெட்டர் கொடுத்தனுப்பினாரு. அங்கே போனா, ஒரு லட்சம் ஃபீஸ் கட்டணும் ...இந்த சிகிச்சைக்கு இலவச மருத்துவம் இல்லைன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க...
எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல... அப்ப எங்க நண்பர் ஒருவர், 'நீ புரட்சித்தலைவரிடம் உதவிகேட்டு சி.எம். செல்லுக்கு கடிதம் போடு...கண்டிப்பாக உதவி புரிவார்'னு சொல்ல, நானும் எங்க மாவட்ட செயலாளர் மூலம் கடிதம் அனுப்பினேன்...
வெறும் மூன்றே நாளில் ரூ.150000/- அப்ரூவ் ஆகி புரட்சித்தலைவரிடமிருந்து ஆணை வந்தது. அதாவது ஒரு லட்ச ரூபாய் மருத்துவமனைக்கும் ரூபாய் ஐம்பதாயிரம் எங்களின் குடும்பத்திற்கும் வழங்கச்சொல்லி அந்த உத்தரவில் இருந்தது...
வாரி வழங்கி என் தந்தையார் உயிரைக் காப்பாற்றி எங்களின் குடும்பத்தையே வாழவைத்த தெய்வம் புரட்சித்தலைவர்....
சில ஆண்டுகள் கழிந்தன...டிசம்பர் ஆண்டு...கிறிஸ்துமஸ் கொண்டாட எங்கள் வீட்டில் எல்லோரும் ஆயத்தமாக...
ஒரு செய்தி 'இடி போல' எங்களனைவரின் இதயங்களில் இறங்கியது...
அது, 'புரட்சித்தலைவர் மறைந்துவிட்டார்' என்ற செய்தி...
இதைக் கேள்விப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் எனது தந்தையார் இறந்துவிட்டார்...
எப்பேர்ப்பட்ட பக்தி...!
புரட்சித்தலைவர் இல்லாத உலகில் எனது தந்தையாருக்கு வாழ விருப்பமில்லை...அவருடனேயே சென்றுவிட்டார்...
எங்களைப் போல எத்தனையோ பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த தெய்வம் அவர்...! அதெல்லாம் வெளிய தெரியாது...!!!
#நகைச்சுவை #நடிகர் #பெஞ்சமின் அவர்களின்
கண்ணீர் மல்கிய பேட்டி....... Thanks...
orodizli
19th April 2020, 08:38 PM
புரட்சித் தலைவரின் நடிப்பிற்கும் மற்ற நடிகர்களின் நடிப்பிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு ...காரணம் மற்ற நடிகர்களுக்கு உடல் மட்டும் தான் நடித்தது ஆனால் புரட்சித் தலைவர் ஒருவருக்கு மட்டும் தான் உடலோடு சேர்த்து உள்ளமும் நடித்தது ...தன் படத்தை கான வரும் ரசிகர்கள் எக்காரணத்தை கொண்டும் தீய வழியில் செல்ல கூடாது என்ற காரணத்தால் தான் தன் படங்களில் தாய்மையையும் நீதி நேர்மை தர்ம சிந்தனை குடி பழக்கம் போதை சிகரெட் என தன் படங்களில் காட்சி தொகுப்போடு அனைத்தும் ஒருங்கினைந்து கொள்கை பிடிப்புடன் செயல் பட்ட காரணத்தால் தான் முதன் முதலில் முதலமைச்சர் என்ற தங்க , வைர, நவரத்தினங்கள் அடங்கிய கீரிடத்தை தமிழக மக்கள் புரட்சித் தலைவருக்கு வழங்கினார்கள் வாழ்க தமிழ் வளர்க MGR புகழ் அன்பே சிவம்...... Thanks...
orodizli
19th April 2020, 08:51 PM
வணக்கம் நண்பர்களே .....
நேற்று சென்னையில் நடந்த ஒரு
கலை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் ....
புரட்சித்தலைவரை தவிர்த்து
அனைத்து நடிகர்களை ஆகா ஓகோ
என்று புகழ்ந்து தள்ளியதை கண்டேன்...
சிவாஜி கணேசனை அண்ட புளுகு
ஆகாச புளுகு என்று வாய்க்கு வந்தபடி
தள்ளு தள்ளு என்று தள்ளுவதை
பார்த்தேன் ....
இந்த பதிவு சிவாஜியை மட்டம்
தட்டுவதற்கான பதிவு இல்லை.....
ஆனால் இரண்டு மணிநேரமாக
அப்படி பாடினார் இப்படி ஆடினார்
இரத்த வாந்தி எடுத்தார்...
நொண்டி ஆகி நடந்தார்....
சுடுகாட்டில் அழுதார்....
ஆண்டியாக கோயில் கோயிலாக
அலைந்தார்....... இப்படியே
சென்றது நிகழ்ச்சி....
ஆனால் .....
தலைமை
அரசியல்
கட்சி
தொகுதி
தேர்தல்
சின்னம்
மக்கள்
செல்வாக்கு
வெற்றி
பதவி
அரசாங்கம்
ஆட்சி
தர்மம்
வள்ளல் தன்மை
வாரி கொடுப்பது
மக்களை நேசித்தது
மக்கள் நலம்
நல திட்டம்
மக்கள் பணி
நல்ல எண்ணம்
பாராளுமன்றம்
நாடாளுமன்றம்
சட்டசபை
மேல்சபை
பிரதமர்
ஜனாதிபதி
அமைச்சர்கள்
முப்படை தளபதிகள்
ஐஏஎஸ்
ஐபிஎஸ்
கலெக்டர்கள்
அதிகாரிகள்
சாதனை திரைப்படம்
இன்றும் வசூலை குவிக்கும் படம்
இன்றும் கைத்தட்டல் விழுவது
இன்றும் அழுவது
நினைவிடம் .........
இதில் ஒன்றையாவது இணைத்து
பேசுவார்கள் என்று நினைத்தால்
நான் முட்டாளவதை யாராலும்
தடுக்க முடியாது ......
ஆனால் நான் மேற்கோள்
காட்டிய அனைத்துக்கும்
சொந்தக்காரர் .....உரியவர்
யாரென்று நான் சொல்லித்தான்
தெரிய வேண்டுமா
நண்பர்களே.........( 2018 நடந்த நிகழ்ச்சியில்... இப்போது Share செய்த நண்பர்) ... Thanks to mr.SK
orodizli
19th April 2020, 08:56 PM
*"அணுவளவும் கவலைப்படல் வேண்டாம் அன்புக்கினிய தம்பி *SK.,"*!!! *"அனைத்துலகமுமே அறிந்துதெளிந்த அரும்பெரும் மாமனிதமேதையாம், **புரட்சிக் கலைஞானி**
மேதகு **எம்.ஜி.ஆர்**அவர்களை, இத்தகைய "அறிவிலிகள்" கண்டுகொண்டாலெ
ன்ன?? கண்டுகொள்ளாவிட்டாலென்ன?? *"எம்.ஜி.இராமச்சந்திரச் *சூரியனை"* இத்தகைய "அற்ப முகில் கும்பலா" மறைத்துவிடும்?!? ஆனால் ஒன்று:- *"உலகமகா நடிப்புக்கலை நாயகன்"*சிவாஜி கணேசன்** எனும் *"நடிகர் திலகமும்"* *"நம் புரட்சிக் கலைஞானி"* **மேதகு மாமனித மேதை"** **எம்.ஜி.ஆர்"** எனும் *"மக்கள் திலகமும்"* தங்களின் *வாழ்வியல்நிறைவுக் காலம்*வரையிலும், எப்பேர்ப்பட்டதொரு **பாசப் பெரும்பிணைப்போடும்** **தோழமை உணர்வுரிமையோடும்** **உண்மைஉறுதிமிகு அண்ணன்+தம்பி உறவுப்பிணைப்
போடும்** வாழ்ந்தனர் என்பதை, "இத்தகையோர்" அறிவாரோ??? அவ்வண்ணமாக அறிந்துதெளிந்திரு
ப்பின், "இவ்வண்ணமாக" *"மேதகு புரட்சிக் கலைஞானி எம்.ஜி.ஆர்"*அவர்களைப் புறந்தள்ளி ஒதுக்கி இருப்பார்களா "அறிவிலிகள்"?!?....... Thanks to mr. Jaya rajasingam, SriLanka...
orodizli
19th April 2020, 09:08 PM
*"நாடோடி மன்னன்"*!!! இதோ!! இப்போதுதான் பத்தாவதோ, பதினோராவதோ முறையாகப் *பார்த்துச் சுவைத்துக் களிவெறி*கொண்டேன்!!! அடடா!!! அடடா!!! எப்பேர்ப்பட்டதோர் ஈடிணையேஇல்லாத் திரைப்படக்காவிய ஓவியம்இது"*!!! *"வெண்திரையிலே செதுக்கப்படும் சினிமாச் சிற்பம்"*ஆக அல்லவா, *"*நாடோடி மன்னன்*"*ஐ *"புரட்சிக் கலைஞானி"* எம்.ஜி.ஆர் அவர்கள் தன் *"நெறியாளுகை உளி"*யால் அருமையாகச் செதுக்கிவைத்துள்ளார்!!! இவ் *"அரும்பெருந் திரைப்படச் சிற்போவியத்தை"* இன்றைய இளந்தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தும்வண்ணமாக, *இலவசமாகவே* திரைக்காட்சிப்படுத்தலாமே!!! அப்போது தெரியும், *"எம்.ஜி.ஆர்"* யார்?!? எத்தகைய *"பேராற்றலாளன்"*?!? *"அம் மாபெருங் கலைஞானச் சக்கரவர்த்திக்கு"* ஈடிணை எவருமே இலர்!!! *"எம்.ஜி.ஆருக்கு"* நிகர், *"எம்.ஜி.ஆர்"*மட்டுமே என்பது!!!....... Thanks...
orodizli
19th April 2020, 11:33 PM
சோவின் ரசிகர்
எம்.ஜி.ஆர். நடித்த “என்
அண்ணன்” படத்தை இயக்கிய ப.நீலகண்டன், சோவிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தார்.
பேச்சுவாக்கில் “உங்களுடைய துக்ளக் பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று கேட்டார் நீலகண்டன்.
அதற்கு சோவும், “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...” என்றார்.
நீலகண்டன் தொடர்ந்து கேட்டார், “கலைமகள் பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று.
[ கலைமகள் ஒரு தரமான இதழ் ]
சோவும், “அது சுமாராகத்தான் போகிறது” என்று சொல்ல.... நீலகண்டன் நீண்ட பெருமூச்சுடன் கேட்டாராம்...“துக்ளக்கைப் போன்ற பத்திரிகையெல்லாம் நல்லாப் போகுது...! ஆனால் தரமான கலைமகள் போன்ற பத்திரிகையெல்லாம் சுமாராகத்தான் போகுது... இது எப்படி..?” என்று.
பட்டென்று சோ சொன்னபதில்: “ பாருங்க சார்... எத்தனையோ நல்ல படங்கள் வந்து ஓடாமல் போகுது! ஆனா ‘என் அண்ணன்' எப்படி நல்லா ஓடுது பாருங்க! அதைப் போலத்தான்னு வச்சுக்குங்களேன்.”
அதிர்ந்து போனாராம் நீலகண்டன்...ஏனென்றால், சோ இப்படிச் சொல்லும்போது அருகில் இருந்தவர் யார் தெரியுமா..?
எம்.ஜி.ஆர்.!
பக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். என்ன செய்தார்..?
விலா நோக விழுந்து விழுந்து சிரித்தாராம்....
சிரித்துக் கொண்டே நீலகண்டனிடம் எம்.ஜி.ஆர். கேட்டாராம்..
“சோ கிட்ட ஏன் வாயைக் கொடுக்கறீங்க..?”
என்ன ஒரு தைரியம் சோவுக்கு!
அதை எளிதாக ஏற்றுக் கொள்ள என்ன ஒரு தெளிவான பக்குவம் எம்.ஜி.ஆருக்கு!....... Thanks...
orodizli
19th April 2020, 11:33 PM
எம்.ஜி.ஆர் உண்ணவில்லை??
--------------------------------------------------
எம்.ஜி.ஆரின் மாம்பலம் அலுவலகம் அன்று ஏக பரப்பில்??
மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகியும்,,எம்.ஜி.ஆர் மதிய உணவுக்கு வர மறுத்ததால் எழுந்த பதட்டம்??
உதவியாளர் முத்துவுக்கோ,,எம்.ஜி.ஆர் அறைக்குச் சென்று அவரை வற்புறுத்தும் துணிவு இல்லை??
அப்போது அலுவலகம் வருகிறார் திரு சோலை!!
அப்போது வந்து கொண்டிருந்த --அண்ணா--பத்திரிகை பொறுப்பாசிரியர்!!
அவரிடம் விபரம் சொல்கிறார் முத்து!
எம்.ஜி.ஆரின் அறைக்குள்,,சோலை நுழைய--எம்.ஜி.ஆரோ மும்முரமாக தொலைபேசியில் யாருடனோ பேசியபடி??
தயங்கியபடியே எம்.ஜி.ஆரை உணவுக்கு அழைத்த சோலையிடம் இப்படி பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்??
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி--
திருச்செந்தூர் முருகன் கோயிலில் களவு போன வேலுக்காக நீதி கேட்டு பாத யாத்திரை என்ற பம்மாத்து வேலையை தொடங்கியிருந்த நேரம்??-அதாவது
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில்-
இத்தை செய்தாலாவது விளம்பரம் கிட்டுமா என்று
சொத்தை விஷயத்தில் விஷமத்தைக் கலந்த தருணம்??
சோலையிடம்,,எம்.ஜி.ஆர் விளக்குகிறார்?
பாத யாத்திரை சென்ற கருணா நிதிக்கு காலில் ரத்தம் வழிகிறதாம்?? மருத்துவர் குழுவை அனுப்பட்டுமா என்று,,அவரைப் பலவிதங்களில் முயற்சி செய்து தொடர்பு கொண்டு கேட்டேன்!! இல்லை,,என்னுடைய மருத்துவர் குழுவே போதும் என்று கூறிவிட்டார். அவரைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களிடம் இருந்து பதிலை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்??
மற்றவர்கள்,,பசி தாங்க மாட்டார்கள் என்று நான் தான் அவர்களை உண்ணச் சொல்லி விட்டேனே???
தமக்குக் கெட்ட பெயர் வாங்கித்தர,,தமக்கு எதிராக ஒருவர் செய்யும் போராட்டத்தில் கூட,,அவருக்கு துன்பம் ஏற்பட்டதுடன் துடித்துப் போன முதல்வரை நான் இது வரைக் கேள்வியுற்றதில்லை!! நீங்கள்???
அன்றைய சட்டமன்றக் கூட்டம் முடிந்த நிலையில் லிஃப்ட் மூலம் கருணா இறங்க வேண்டிக் காத்திருக்க--
எம்.ஜி.ஆரோ லிஃப்டில் ஏறி வந்தபடி??
அது சரி!! 1973 இல் இருந்து,,அவருக்கு இறங்கும் வேலையையும்,,எம்.ஜி.ஆருக்கு ஏறும் வேலையையும் தானே மக்கள் கொடுத்த வண்ணம் இருந்தார்கள்??
எம்.ஜி.ஆர்,,ஏறி வந்த லிஃப்ட் மேலே நிற்கவும்,,படிக்கட்டு மூலம் கருணா இறங்க முற்படவும் சரியாக இருக்கிறது??
ஓடிச் சென்ற எம்.ஜி.ஆர்,,கருணாவிடம்,,குடும்ப நலன் பற்றிப் பேசி--குறிப்பாக,,அவரது மகளின் மகப்பேறு பற்றி அறிந்து அவரை லிஃப்டிலேயே இறங்கும்படிச் செய்தாராம்???
எம்.ஜி.ஆரின் இந்த மாண்புக்கும்--
1985இல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது,,எம்.ஜி.ஆரைப் பற்றி கருணா உதிர்த்த முத்துக்களுக்கும்--இடையில்-நம் நினைவில் வருவது--மலையும்--மடுவும் தான்?? உங்களுக்கு????....... Thanks...
orodizli
19th April 2020, 11:36 PM
பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் பக்தர்கள் அணைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .
எனது பெயர் வ.ராஜவேல். திருவண்ணாமலை மாவட்டம். சாணானந்தல் கிராமம்.
நான் ஒரு எம்ஜிஆர் பக்தன்.
எனது பாட்டனார் முதல் எனது தந்தை வரை புரட்சி தலைவர் மீது தீராது அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அந்த வழியில் வந்த மூன்றாம் தலைமுறையில் பிறந்தவன் நான்.
எனது தந்தைக்கு புரட்சி தலைவரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் தலைமையில் எங்கள் தாத்தா ஏற்பாட்டில் ராமவர தோட்டத்தில்தான் திருமணம் நடைபெற்றது.
எனது தாதா அவர்கள் எம்ஜிஆரின் ரசிகனகாக மட்டுமல்லாமல் பக்தியும் இருந்த காரணத்தால் ராமவர தோட்டத்தில் கிடையாய் கிடந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக திருமதி ஜானகி அம்மையாருக்குதான் சொந்தம் என்றுசொந்தம் கொண்டாடிய சமயத்தில் அம்மையார் கோஷ்டியில் இருந்தார்.
பிறகு 1989ஆம் ஆண்டு திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்திற்க்கு அழைத்து வந்து எம்ஜிஆர் நினைவாகவும் அவரது புகழை வளர்க்க எம்ஜிஆர் பெயர் பொறித்த பெயர் பலகையை அம்மையார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அந்த இடத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இறந்த நாள் அஞ்சலி மற்றும் அம்மையாரின் மறைவுக்கு பிறகு அவர்களின் இறந்த நாள் அஞ்சலி செலுத்தி வந்தோம்.
தற்போது என்ன பிரச்சனை என்றால்.
தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக புரட்சி தலைவர் பெயர் பொறித்த பலகையை அகற்றிவிட்டு புதிதாக ஆளும் கட்சியினர் பெயர்களை பொறித்து வரும் 28 ம் தேதி அன்று திறப்பு விழா நடத்த உள்ளனர்.
திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மற்றொரு கல்வெட்டை திறந்து வைக்க மாவட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர்களும் கல்வெட்டை திறந்து வைக்க வரவுள்ளனர்.
எனது ஆதங்கம் என்ன வென்றால் அதே இடத்தில் மீண்டும் புரட்சி தலைவர் மற்றும் ஜானகி அம்மையார் அவர்களின் பெயர் மட்டுமல்லாமல் புரட்சி தலைவரின் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என அந்த பெயர் பலகை நீக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நொடியும் என் மனம் குமுறி கொண்டு இருக்கிறது.
புரட்சிதலைவர் வெறும் அரசியல்வாதி மட்டும்மல்ல கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்று நான்காம் தலைமுறைக்கு உணர்த்த கடைமைப்பட்டுள்ளேன்.
இதனை பற்றி சில கருத்துகள் மற்றும் உதவிகள் தேவைகப்படுகிறது ஐயா.
நன்றி.
எனது தொடர்பு எண். 9884165867
எம்ஜிஆர் புகழ் வாழ்க வளர்க...... Thanks...
orodizli
19th April 2020, 11:40 PM
' அய்யா இப்படி கையைக் கொடுங்க...நான் தூக்கி விடுகிறேன்' என கையை நீட்டுகிறேன். கனத்த உருவம், அழுக்கான உடை, தோளில் தோல்பை, ஒருகால் இல்லாத அந்த முதியவர் கைப்பிடி உதவியுடன் பஸ்சில் ஏற முடியாமல் தடுமாறி நிற்க சிரமப்பட்டு கைத்தாங்கலாக பஸ் இருக்கையில் அமர வைக்கிறேன். ' என்ன தம்பி பஸ்ல கூச்சல் போட்டுட்டு வர்றானுங்களே இந்தப் பசங்க குடிச்சிருக்கானுங்க அப்படித்தானே...ம்... நான் நடிச்ச காலத்திலேருந்து எம்ஜிஆர் மது அருந்தக்கூடாதுனு பேசி அறிவுரை கூறுவார்...இப்ப எல்லாம் அப்படி சொல்ல யாரு இருக்கா?' என்றாரே பார்க்கனும். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ' என்னது நீங்க நடிகரா?' என்றேன் அவரை வேடிக்கையாகப் பார்த்தபடி. ' ஆமாம்பா நான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துல எம்ஜிஆருடன் புத்த துறவி வேஷத்துல நடிச்ச கெம்பையா நான்தானப்பா' என்றார் சத்தமாக. பஸ்சே அவரைத் திரும்பிப் பார்க்க...என் உடல் சிலிர்த்தது. ' அய்யா நம்பவே முடியல...' என இழுத்தபடியே அவரை நன்றாகப் பார்த்தேன். ம்கூம் 100 சதவீதம் அவரில்லையே என அதிருப்தியானேன். ' இருக்கலாம்...புத்த துறவி மொட்டைத் தலையுடன் புத்த துறவி வேடத்துடன் இருப்பார்.1970-73 களில் இளம் வாலிபன். இப்போது வயது முதிர்ந்துவிட்டது. நிறம் தக்காளி பழ நிறம். மூக்கு முழி....ஓ...அவரேதான்!!!! ' அய்யா சத்தியமங்கலத்திற்கு 2009 ல் பணி நிமித்தமாக வந்த நாளிலிருந்து( இதயக்கனியில் திருப்பூர் ரவிச்சந்திரன் இவரை பேட்டி கண்டு வந்த முதல் செய்தியின்படி இவர் இந்த ஊரில் இருப்பதை நினைவில் வைத்திருந்தேன்) உங்களைத் தேடிகிட்டிருந்தேன். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை இப்படி ஒரு நிலையிலா சந்திக்க வேண்டும்!' என எண்ணியபடியே பஸ் நிலையம் வந்து சேர்ந்தோம். ' தம்பி கொஞ்ச நேரம் உட்காரலாம்' என்றவரைச் சுற்றி மொய்த்தது மக்கள் கூட்டம். ' இவர்தான் எம்ஜிஆருடன் உ.சு.வாலிபன் படத்துல நடிச்சவர், எனக்கு இவரை ரொம்பவே தெரியும், படத்துல இவரோட சீன் பரபரப்பா இருக்கும்' என ஆளாளுக்குப் பேச அந்த புகழ்மழையில் நனைந்து ஆர்வமாக இருந்தார். ' அய்யா உங்க வீடு...???' என்பதற்குள் ' நான்தான் வழக்கமாக இவரை கூட்டிட்டுப் போவேன்' என ஒருவர் முன் வந்தார். அவரை அழைத்துச் செல்வதில் பலர் போட்டிப் போட... அவர்களைத் தடுத்த கெம்பையா,' தம்பி ஆட்டோ வரச் சொல்லுங்க, நீங்க வீட்ல கொண்டு என்னை விட்டுட்டுப் போங்க' என்றார். வீட்டில்.....' அய்யா நான் போயிட்டு வர்றேன்' என்றேன். ' இந்தாங்க தம்பி...400 ரூபாய்' என என் சட்டைப் பையில் திணித்தார். ' ஏன்,எதற்கு?' என்றேன் அதிர்ச்சியுடன். ' வழக்கமாக என்னை வீட்ல கொண்டு வந்து சேர்க்கிறவங்களுக்கு நான் கொடுப்பது' என்றார். ' ஓ...அப்படியா, எனக்கு இதுபோல பணம் வேண்டாம் அய்யா, நான் ஒரு ஆசிரியர், அதிலும் என் தெய்வத்துடன் நடித்தவர் நீங்கள்' எனக் கூறியபடி வலுக்கட்டாயமாக அவரது பணத்தை அவர் கையில் திணித்தேன். அடுத்த கணம் அவர் போட்ட சத்தம் அந்த பங்களாவிலிருந்த அனைவரையும் ஓடோடி வரச் செய்தது. ' என்ன தம்பி சொன்னீங்க...வாத்தியாரா நீங்க? வாத்தியார் ரசிகரா நீங்க?' என்றவர் ' கடவுளே இத்தனை வருசத்துக்கப்புறம் இப்படி ஒரு எம்ஜிஆர் ரசிகரை சந்திக்க வெச்சிருக்கிறியே' என அவர் போட்ட சத்தம் அவர் புரட்சித் தலைவருடன் மீண்டும் சேர்ந்துவிட்ட பின்பு இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது........ Thanks...
orodizli
19th April 2020, 11:42 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 6. ஞாயிற்றுக்கிழமை
எம்ஜிஆர் பக்தர்களே
இந்தப்படத்தில் இருப்பவர்கள்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி
அவருடைய மனைவி மீனாட்சி அம்மாள்
அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
ராமாயணத்தில் வருகின்ற. ராமர் லட்சுமணனை போல் நம் கண் முன்னால் வாழ்ந்தவர்கள்
சக்கரபாணி எம்ஜிஆர் அவர்கள்
///////////////;///////////////////////////?////////
இந்திய சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் யார் சென்னை வந்தாலும்
சென்னை ஸ்டுடியோக்களில் நுழைந்து
பெரியவர் இருக்கிறாரா என்று கூறினால் அது எம் ஜி சக்கரபாணி அவர்களைத்தான் குறிப்பிடும் வார்த்தை
சென்னை சினிமா ஸ்டுடியோக்களில் நுழைந்து
சின்னவர் வந்துவிட்டாரா என்று கேட்டாள்
அது எம்ஜிஆர் அவர்களைத்தான் குறிக்கும்
அண்ணன்-தம்பி இருவரையுமே
பெரியவர் / சின்னவர் / என்ற அடைமொழியோடு தான் சினிமா உலகில் அழைப்பார்கள்
///////////////////;/;;///////////////;/////////;//////
நாம் எம்ஜிஆர் குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்
பெரியவர் சக்கரபாணி அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி அவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள்
7. ஏழு ஆண் குழந்தைகள்
3 மூன்று பெண்குழந்தைகள்
++++++++++++++++++++++++++++++++++
சத்தியபாமா என்ற மணி
ராமமூர்த்தி
பிரபாகர்
சந்திரன்
சுகுமார்
லீலாவதி
விஜயலட்சுமி
ராஜேந்திரன்
பாலு
விஜயகுமார்
இந்த 10 குழந்தைகளுக்கும் பெயர் வைத்தவர் நம் அருமை தலைவன் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
சத்யபாமா
சுகுமார்
பாலு
இந்த மூன்று பேரும் இறந்து விட்டார்கள்
++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவில் உள்ள நடிகர்களில் எம்ஜிஆரை போல் சினிமா உலகை கொடிகட்டி ஆண்டவர் யாரும் கிடையாது
இந்தியாவில் உள்ள முதலமைச்சர் களிலே எம்ஜிஆரை போல் மக்கள் செல்வாக்கு உடையவர்கள் யாரும் கிடையாது
எம்ஜிஆர் தமிழ் நாட்டில் பல ஆட்சியை உருவாக்கியவர்
பல
முதலமைச்சர்களை உருவாக்கியவர்
தான் முதலமைச்சராக கொடிகட்டி வாழ்ந்தபோதும்
தன் அண்ணன் தம்பி மாமன் மச்சான் குடும்பத்தினரே அரசியல் பக்கம் அண்டவிடாமல் செய்தவர் எம்ஜிஆர்
,முதலமைச்சரின் அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாம் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்கள்
ஆனால் பெரியவர் சக்கரபாணியின் குடும்பத்தினர் அரசியலிலோ ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டவர்கள் கிடையாது..... Thanks......
orodizli
19th April 2020, 11:48 PM
வணக்கம் நண்பர்களே!! புரட்சித்தலைவரின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பலித்தன...(எனக்கொரு மகன் பிறப்பான் தவிர...அதன் விளக்கம் அப்புறம்) ஒரு சிறிய உதாரணம்....
எம் ஜி ஆர் திமுக வில் இருந்து நீக்கப்படுகிறார்.உலகம் சுற்றும் வாலிபன ரிலீசாக போகிறது. 1973ல் திமுக சார்பில் மதுரையில் மணிநகரம் பகுதியில் திமுக பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க இரும்பு மனிதர் என அழைக்கப்படும் மதுரை முத்து அவர்களும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கமும் எஸ்எஸ்ஆர்...ஆற்றிய உரை...
மதுரை முத்து: "அடேய் ராமச்சந்திரா... நீ சினிமாவுல தான் சண்ட போடுவ... ஆனா நா நிஜத்துல சண்டியர்... கலைஞரையா கணக்கு கேக்குற... உன்னை வாழவே விடமாட்டேன். உன் படம் ரிலீஸ் ஆனா நா சேலைய கட்டிக்குறேன்". டேய் ரசிக குஞ்சுகளா. உங்காளு கையில வச்சு சண்ட போடுறது ஒரிஜினல் கத்தி இல்லடா. வெறும் அட்டக்கத்தி. இனியாவது திருந்துங்கடா.. "(எம் ஜி ஆர் கட்சியை விட்டு விலகும்போது திணமணி கார்ட்டூன்... எம் ஜி ஆர் அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு இனி இதற்கு இங்கு வேவையில்லை. என்கிறார். கருணாநிதி பக்கத்தில் இருந்த மதுரை முத்துவை காட்டி"இந்த அண்ணா என்னை காப்பார் "என்பது போல இருந்தது. மதுரை முத்து அந்த அளவு செல்வாக்கானவர்)
எஸ்எஸ்ஆர்: "அன்றைய தினம் ராஜாதேசிங்கு படத்தில் பத்மினியுடன் நான் நெருங்கி நடிக்க கூடாது என எம்ஜிஆர் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா? "
(மறுநாள் சோ தன் 'துக்ளக்' புத்தகத்தில் "எஸ்எஸ்ஆர் சார். நீங்களும் பத்மினியும் நெருங்கி நடிப்பதை எம்ஜிஆர் தடுத்தாரா? எப்பேர்ப்பட்ட துரோகம் இது.இதனால் இந்த நாட்டுக்கே பேராபத்து வந்துவிடுமே!! இதை இந்த நாடு மறந்தால் இந்த நாட்டுக்கு விமோச்சனம் ஏது?"என கிண்டலடித்தார்)
திண்டுக்கல் எம். பி. ராஜாங்கம் :எனதருமை நண்பர் எஸ்எஸ்ஆரை சினிமாவில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜிஆர் தான். எங்களை பகைத்துக் கொண்டதால் இனி எம்ஜிஆர் அரசியலில் மட்டும் அல்ல. சினிமாவிலும் வாழ முடியாது...
இதே ராஜாங்கம்எ இந்த கூட்டத்தை முடித்து திண்டுக்கல் திரும்பிப் செல்லும்போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிறது.அதிமுக மாயத்தேவரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்று திமுக வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை(வேட்பாளர் தேர்ந்தெடுத்தது மதுரை முத்து) டெபாசிட் இழக்க செய்தது. எந்த ராஜாங்கம் எதிர்த்தாரோ அவரே எம்ஜிஆரின் முதல் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்.
கருணாநிதி எம் ஜி ஆர் செல்வாக்கு காரணமாக அதிமுக வென்றது என்பதை மறைக்க "மதுரை மாவட்ட தலைமை வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது". என மேயர் முத்துவை பழிபோடுகிறார். முத்துவுக்கு கோபம் வருகிறது. "தேர்ந்தெடுத்த போது மறுப்பு சொல்லாமல் தோற்றவுடன் என் மீது பழி போட்டால் என்ன நியாயம் "என பகிரங்கமாக கேட்டார். உடனே கருணாநிதி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் சொல்வதை கேட்க வேண்டாம் என செக் வைக்க நொந்து போன மேயர் முத்து எம் ஜி ஆரிடமே சரணடைகிறார். தலைவரும் முத்தண்ணணை கட்டித் தழுவி வரவேற்கிறார். அதிமுகவிலும் மதுரை முத்துவே மேயரானார். எஸ்எஸ்ஆரும் தன் மனைவி விஷயத்தில் கருணா நடந்து கொண்டதை பார்த்து மனம் நொந்து எம் ஜி ஆர் இடம் சரணடைகிறார். 1977 கழகம் வெற்றி பெற அதே மதுரைமணிநகரத்தில் மேயர் முத்து தலைமையில் கூட்டம்.மேயர் முத்துவே இந்த தகவல்களை எல்லாம் கூறி "சென்ற கூட்டத்தில் இதே இடத்தில் நாங்கள் மூவருமே(ராஜாங்கம்,முத்து,எஸ்எஸ்ஆர்) எம்ஜிஆரை வாழ விட மாட்டோம் என முழங்கினோம். காலத்தின் கட்டளை படி நாங்க மூணுபேருமே எம்ஜிஆரிடம் சரணடைந்தோம்"
தர்மம் தலைகாக்கும் படத்தில் "நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்"என்ற எம்ஜிஆர் வார்த்தை இப்படி பலித்தது.(நன்றி. ராஜநாயகம்) ...
இந்த தகவல் பல வருடங்களுக்கு முன் என் தந்தை சொன்னது.......... Thanks fb
orodizli
19th April 2020, 11:52 PM
கஷ்டப்பட்டதை மறக்காதவர்!
அரச அவையில் சில திட்டங்களை மன்னனாக இருந்து நாடோடி வீராங்கன் அறிவிக்கின்றான். அதில் தொலைநோக்கு பார்வை கொண்ட வசனம் :–
“ஐந்து வயது ஆனவுடனே குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு, பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரையில் மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.”
எம்.ஜி.ஆர். மூன்றாவதுக்கு மேல் படிக்க முடியாத வறுமைச் சூழலில் இருப்பது போன்ற பிள்ளை செல்வங்கள் படித்து நாளைய உலகை உருவாக்கும் நல்லவர்களாக உயர்வதற்கான திட்டமிடல் இந்த வசனங்களில் புதைந்திருப்பதை அறியலாம்.
”தான் நடித்த காட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் படம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.
குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும்படியாக படம் எடுக்க வேண்டும், பொழுதுபோக்குப் படத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்பார். இந்த கருத்து சின்னவருடைய மனதில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சின்னவர் நடித்த ’வீரஜெகதீஷ்’ என்ற பழைய படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த படத்தில் ஒரு காட்சியில் புகை பிடிப்பவனுக்கு சின்னவர் அறிவுரை சொல்வதுபோல வசனம் இருக்கும். ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையை சந்தித்து வாழ்ந்தவர். காலில் செருப்பு கூட இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவர், அந்த வறுமை தந்த பாடமே வாழ்க்கைத் தத்துவத்தை அவருக்கு உணர்த்தியது எனலாம். புகழும் பெருமையும் வந்த காலத்தில், இளைமையில் வறுமையில் தான் பட்ட கஷ்டங்களை மறந்து இருக்க முடியும். ஆனால், அவர் கடைசி வரையிலும் அதை மறக்கவில்லை. அது அவரது சிறப்பு” என்பது இயக்குநர் கே. சங்கரின் அனுபவம்.
எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?
சின்னவரின் படங்களில் பாடல்கள் புகழ்பெற, வாழ்க்கையில் அவர் அனுபவித்து அறிந்ததை பாடல்களில் சொன்னதும் ஒரு காரணம்.
பாடல் பதிவின் போது ஒரு பாடலை அவர் ஓ.கே. செய்தால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அப்பாடா மறு ஜென்மம் என்று சொல்வார்கள். (அந்த அளவுக்கு பாடலில் கவனம் செலுத்தி வேலை வாங்குவார்) சின்னவருக்காக ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 25 டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.
’இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘அன்புக்கு நான் அடிமை’ பாடல் காட்சியை இரவு ஒன்பது மணிக்கு ஷூட் பண்ண ஏற்பாடு, அதற்கு ஒரு வாரமாகவே முயற்சித்தும் பாடல் சரியாக அமையவில்லை.
அந்தக் காட்சியை படமாக்க இரண்டு மணி நேரத்திற்கு முன் மாலை 7 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுத பாடல் ஓ.கே. ஆனது” என்கிறார் இயக்குநர் கே. சங்கர்
'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கவிஞர் மருதகாசியை ஒரு பாடல் எழுத வைத்தார்.
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடலின் சரணத்தை
“பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்துவிட்டு
தன்வழியே போகிறவர் போகட்டுமே!”
என்று கவிஞர் எழுதி காட்டினார்.
“தன் வழியே என்று சொல்கிறீர்களே… அது ஏன் ஒரு நல்ல வழியாக இருக்கக்கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவன் ஏன் தன் வழியில் போகக்கூடாது? அதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று புரட்சித்தலைவர் சொல்ல, ’தாங்கள் விரும்புவது என்ன? இந்த இடத்தில் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றீர்கள்?” என்று கவிஞர் கேட்கிறார்.
“தீய வழி என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்கிறார் மக்கள் திலகம்.
‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’
என்ற வரிக்குப் பதிலாக
‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’
என்று எழுதி கவிஞர் சொல்ல,
“ஆகா… பொருத்தமான வரி! அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்.ஜி.ஆர். “ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர்களோடு பணிபுரிவது பெரும் பாக்கியம்” என்று தன்னிடம் கவிஞர் மருதகாசி மொழிந்ததை வழிமொழிகிறார் பத்திரிகையாளர் நாகை தருமன்.
“எந்தக் காட்சியும் படமாக்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெறும், எந்த விதத்தில் படமாக்கினால் நன்றாக அமையும் என்றெல்லாம் விவாதித்த பிறகுதான் ஒப்புக் கொள்வார். அவருககுத் தெரியாத எந்தப் பிரிவுமே இந்தத் துறையில் கிடையாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேங்காய் சீனிவாசன்.
நன்றி : திரு. விஜயபாஸ்கர் - தினமலர்....... Thanks..........
orodizli
20th April 2020, 08:10 AM
எம்.ஜி.ஆரால் மழையா??
--------------------------------------------
மேற்கண்ட கேள்விக்கு--
ஆம்! என்று பதில் சொல்வது அடியேனில்லை! திருவள்ளுவன்??
நல்லார் ஒருவர் உளரேல்-அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!!!
ஆம்!! அது 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரம்!
லஞ்சம் லாவண்யம் அதிகார துஷ்பிரயோகத்தால்
இயற்கை--
வஞ்சம் கொண்டு தன் சினத்தைக் காட்டிய வேளை--
மக்கள்---
தஞ்சம் என எம்.ஜி.ஆரைத் தலைவனாக ஏற்ற்தால்
பஞ்சம் இன்றிக் கொட்டித் தீர்த்த மழையின் மகிழ்வு??
நீர் நிலைகள் எல்லாக் குளங்களிலும் ஏரிகளிலும் நிரம்பி வழிந்த நிலையில் புழல் ஏரி உடையக் கூடிய அபாயத்தில் நீரை உள் வாங்கியிருக்கிறது??
அமைச்சர்,,காளிமுத்து,,முதல்வர் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டு,,நிலைமையை விளக்க--
அந்த இரவில் சில அதிகாரிகளுடன் புழல் அணைக்கு விரையுமாறு காளிமுத்துவைப் பணிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
நள்ளிரவில்,,கொட்டும் மழையில்,,சில அதிகாரிகளுடன் காளிமுத்து அங்கே விரைகிறார்??
மழையின் தீவிரத்தால்,,தன் செயல்பட்டை நிறுத்திக் கொள்கிறது மின்சாரம்??
சுற்றிலும் சூழ்ந்து கொண்ட இருளில்--அதிகாரிகளுடன் டார்ச் லைட் சகிதம்,,,அமைச்சர் காளிமுத்து,,நிலைமையை ஆராய்ந்து கொண்டிருக்க--சக்தி வாய்ந்த டார்ச் லைட் சகிதம்,,ஒரு கும்பல் எதிர் திசையிலிருந்து அந்த இடத்துக்கு வருகிறது??
பொது மக்கள்,,,தங்கள் பணிக்கு இடையூறாக அங்கே கும்பல் சேருகிறார்களே என்ற எரிச்சலில் காளிமுத்து ஏறிட்டு நோக்க--
அந்த கும்பலின் தலைவனாக முதல்வர் எம்.ஜி.ஆர்???
உங்களைப் போகச் சொல்லிட்டேனே தவிர,,பிறகு தான் சிந்தித்துப் பார்த்தேன்! உங்கள் குழுவுக்கு,,வெள்ள அபாயத்தால் ஏதேனும் துன்பம் நேரிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் நான் சில அதிகாரிகளுடன் வந்தேன்???
முதல்வரே இந்த இருட்டில் இப்படி வருகை புரிந்ததும்,,அதற்கு அவர் சொன்ன விளக்கமும்,,அங்கே இருந்த அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் கூடிய இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது!!
அங்கே நடைபெற வேண்டிய வேலைகளும் தடை இன்றியும் துரிதமாகவும் நடந்தேறுகிறது!!!
இருள் சூழ்ந்த அந்த இக்கட்டான சூழலில்
அருள் சூழ்ந்த இந்த முதவனின் செயலைப் போல் வேறு எங்கேனும் நாம் கண்டதுண்டா????.......... Thanks.........
.
orodizli
20th April 2020, 08:12 AM
கழகத்தை விட்டு, விலகிச் சென்ற கவியரசர்; கழகத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் அடைய விரும்பிய திராவிட நாடு கொள்கை பற்றியும், திராவிட நாடு கொள்கையை அவர்கள் கைவிட்டது பற்றியும்; நாட்டையாளும் நிலையில் நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்தால் நேரக்கூடிய அவலங்கள் பற்றியும் ஏராளமாக எழுதினார், மேடை முழக்கங்களும் செய்தார்.
இவற்றையெல்லாம் தனது இதயத்தின் ஒரு பகுதியில் இருத்திக் கொண்ட மக்கள் திலகம்; தனது படங்களில் கண்ணதாசன் பாடல்கள் எழுதக்கூடாது என்று, எந்தத் தயாரிப்பாளரிடமும் கட்டளை பிறப்பித்ததில்லை.
இதனால்தான் தேவர் பிலிம்ஸ் தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த அனைத்துப் படங்களுக்கும் (ஒன்றிரண்டு தவிர) கண்ணதாசனே பாடல்களை எழுதிக் குவித்தார்.
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர். ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார்.
இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.
திராவிட இயக்கத்தில் இருந்தபோது கண்ணதாசன் எழுதிய
‘அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!’
என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.
இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!
(வலைதளத்தியிருந்து பெற்றவை)......... Thanks...
orodizli
20th April 2020, 08:23 AM
தலைவரின் உதவியாளர் திரு.மகாலிங்கம் அவர்கள் தலைவர் பற்றி எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் திரு.கு.பிட்சாண்டி (இந்திய ஆட்சி பணி ஓய்வு) அவர்கள் பேச்சு...
ஒரு ஞாயிறு அன்று விடுமுறை தினத்தில் தலைவர் வீட்டில் முதல்வர் அவருடன் ஒரு ஆட்சி பற்றி ஆய்வு முடிந்து மாலை வீட்டுக்குப் புறப்படும் நேரம் அப்போது தூர்தர்சனில் மட்டும் படங்கள் ஒளிபரப்பு செய்யும் நேரம்.
அன்று நம் நாடு படம் வீட்டில் ஹாலில் உள்ள கலர் டி.வி.யில் நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து பார்க்க தொடங்கினோம்.
விடுமுறை அன்றாவது வீட்டுக்கு நேரம் செலவிட விரும்பி தலைவர் என்ன எல்லோரும் கிளம்பி விட்டார்களா என்று மாடியிலிருந்து கேட்டார்.
எல்லோர் வீட்டிலும் கருப்பு வெள்ளை டி.வி.இன்று உங்கள் படம் கலரில் கீழே பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்ன உடனே என்னை மேலே அழைத்து நமது குழுவில் எத்தனை பேர் லிஸ்ட் கொடுங்கள் என்று கேட்டார்.
நான் அரசுத்துறை சார்ந்த 16 மற்றும் 11 பேர் என்று கொடுத்தேன். பொன்மனம் உடனே அப்போது வெளியே நிற்கும் வாட்ச்மேன் கிருஷ்ணன், பூக்காரி அம்மா எல்லோரும் எங்கே போய் டி.வி பார்ப்பார்கள் என்று சொல்லி லிஸ்டை 36 பேர் என்று திருத்தினார்.
நாங்கள் முதல்வர் வீட்டில் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே ஒரு ஒரு மணிநேரம் கழித்து என் மனைவி என்னை ஹாலில் உள்ள தொலைபேசியில் அழைத்து என்னங்க வீட்டுக்கு சீக்கிரம் வாங்க நம்ம வீட்டில் கலர் டி.வி வந்துள்ளது ஆட்கள் (அக்காலத்தில்) ஆண்டென்னா மாட்டி கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.
அன்று வீட்டில் இருந்து பணி புரிந்த 36 குடும்பங்களுக்கும் கலர் டி.வி பொருத்தி கொடுத்த நிகழ்வை அவரை தவிர இந்த உலகில் யார் செய்ய முடியும்.
ஆட்சியரும் சாமானியரும் ஒன்றே என்று பார்த்த நம் தலைவர் புகழ் எந்நாளும் காப்போம்......... Thanks...
orodizli
20th April 2020, 11:20 AM
இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை...
கொண்டுவந்தது ..
தாங்கள்தான் என்று திமுகவும்,
இந்த திட்டத்தை ...
அன்புமணி தான் .. கொண்டுவந்ததாகவும் ...
மாறிமாறி உரிமை கொண்டாடுகின்றன!
பழய டப்பாவிற்கு
புதுபெயிண்ட் அடித்து புதியது என்று மார்கெட்டில் விற்பதுபோல் ..
1979 நவம்பரில் .....
தனது முதலாம் ஆட்சிகாலத்திலேயே ...
எம்ஜிஆர் ....
கொண்டு வந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டமே 108 ஆக உருமாறியுள்ளது.
அதற்கு அச்சாரமே எம்ஜிஆர்தான்!
முதல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் டாக்டர் நடராசன்,
விபத்து மற்றும் மருத்துவ சேவை உதவிக்கான வரைவு திட்டத்தை திட்டக்குழுவிடம் சமர்ப்பித்தார்.
முதல்வர் எம்ஜிஆர் உடனே அதற்கு ஒப்புதல் அளித்து ரூ50 லட்சத்தை ஒதுக்கி செயல்படுத்தினார்.
முதல்கட்டமாக ..
ரூ. 60 ஆயிரம் வீதம் ....
50 ஆம்புலன்ஸ்களும்,
உயிர் காக்கும் மருந்துகள், கருவிகள்,
உபகரணங்களும் வாங்கப்பட்டன.
திட்டம் சிறப்பாக செயல்பட அப்போதைய காவல்துறை ஆணையர் ஸ்ரீபால்,
மெட்ராஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன்,
சென்னை மருத்துவகல்லூரி முதல்வர் லலிதா காமேஸ்வரன், முன்னாள் மருத்துவகல்லூரி முதல்வர்கள் மரு. நடராசன், மரு.சொக்கலிங்கம் ஆகியோரைக் கொண்ட கண்காணிப்பு குழுவையும் எம்ஜிஆர் அமைத்தார்.
மேலும் 140 ஆம்புலன்ஸ்களும்,
39 தகவல் மையங்களும், ஒயர்லஸ் கருவிகளுடனும் ..
1980ல் விரிவுபடுத்தினார்.
அனைத்து அரசு மருத்துவமனைகளுடன் 30 பெரிய தனியார் மருத்துவ மனைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன.
மொத்தத்தில் 1979 நவம்பரில் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலாக இந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது பொன்மனச்செம்மலே!
புரட்சித்தலைவர் கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு, திமுக உரிமை கொண்டாடுகின்றது
எம்ஜிஆர் காலத்தில் ...
அவர் மூளையில் உதித்து செயல்படுத்தியதுதான் ...
இந்த இலவச ஆம்புலன்ஸ் வசதி திட்டம்..
ஆதாரம்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஜுனியர் விகடன் 17/4/2011 இதழ் !!!........ Thanks...
orodizli
20th April 2020, 11:21 AM
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி"
தமது கடுமையான உழைப்பால்
வெற்றியின் எல்லையை எட்டியவர்
எழுச்சி ஏந்தல் எம்ஜிஆர்.
பாட்டால் புத்தி சொன்ன
பாட்டுடைத் தலைவருக்கு,
தமிழ் நாட்டை ஆண்ட,
தங்கத் தலைவருக்கு,
மிகவும் பிடித்த பாடலின் வரிகள்
எவை தெரியுமா?
"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
"பாசவலை" படத்தில் எழுதிய....
"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்
குள்ள நரி தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்"
உனக்கெது சொந்தம்?
எனக்கெது சொந்தம்?
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா?
-இந்த பளிங்கு வரிகளும்,
பவழ வார்த்தைகளும்தான்,
எம்ஜிஆர் மனதில்,
குடியிருந்த கோயிலில் பதிந்த கல்வெட்டு எனலாம்............ Thanks.........
orodizli
20th April 2020, 11:22 AM
உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர்... எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது.
திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம்! என்று சொல்லும் அதே நேரத்தில்; அரசியலிலும் அவர்... யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராகவே விளங்கினார். சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் கட்டங்கள் ஒரு சரித்திரமாகவே அமைந்து விட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்லியல்புகளை உணர்வு வயத்துடன் நினைவு கூர்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று ‘தெய்வத்தாய்’ படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போலத்தான் அவரது வாழ்க்கையும் அமைந்துவிட்டது.
இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917- ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி... ஆக, இந்த ஆண்டு 2017, ஜனவரி 17 ஆம் தேதியோடு அவருக்கு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. எம்ஜிஆரின் வாழ்நாள் சாதனைகளைப் போற்றும் வகையில், தமிழக அரசு, இந்த வருடம் முழுவதையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றி பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகமே எம்ஜிஆர் நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இன்றைய இளையதலைமுறையினரும் கூட மறைந்த முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த நடிகருமான எம்ஜிஆரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு; எம்ஜிஆரின் ஆரம்பகால சினிமா மற்றும் அரசியல் பிரவேஷம், அதில் அவரடைந்த வெற்றிகள், எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நாடு போற்றும் திட்டங்கள், தங்கள் மொத்த வாழ்க்கையையும் எம்ஜிஆரை ரசிப்பதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவரது அதி தீவிர ரசிகர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை எம்ஜிஆர் 100 எனும் தலைப்பில் தொடராக வெளியிடவிருக்கிறது தினமணி.
வேடிக்கையாக ஒரு விஷயம் சொல்வார்கள்,
இந்தியாவில் தவழும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் பார்வையில் படுமாறு இந்தியப்பிரபலங்கள் சிலரது புகைப்படங்களைப் பரப்பி சில விஞ்ஞானிகள் ஒரு புது விதமான ஆராய்ச்சியில் இறங்கினார்களாம். அந்த ஆராய்ச்சியின் நோக்கம் எந்த பிரபலம் அறியாக் குழந்தைகளைக் கூட கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவர் என்பதை அறிவது தான்.
ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!....... Thanks.........
orodizli
20th April 2020, 11:59 AM
"கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…
கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…
கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.
அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான்.
ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.
கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர்.
கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!
20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது.
மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.
அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.
முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.
எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது.
பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.
மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை,
‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’
எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.
அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.
அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.
‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.
தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.
‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’
நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!
அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…
பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…
ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…
ஏன் தெரியுமா?
இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, 'சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம்' வாங்குமளவுக்கு படிக்க முடியும்.
அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!
இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்…
மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்…
முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல்...
இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.
வாழ்க நீ எம்மான்…!"
- டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D......... Thanks...
orodizli
20th April 2020, 12:02 PM
வணக்கம் நண்பர்களே!! சென்ற பதிவில் நண்பர் Sankaralingam ஒரு அருமையான கேள்வி கேட்டிருந்தார். SSR எம்ஜிஆர் அவர்களை எதிர்த்ததை நம்ப முடியவில்லை என்று... SSR மட்டுமல்ல அந்த மேடையில் பேசிய மூவருமே எம்ஜிஆர் உடன் நெருக்கமாக இருந்தவர்களே!!
இந்த கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்கள் இதே கேள்வியை மூவரிடமும் கேட்டதற்கு மூவரின் பதில்.
Ssr: "ஆம் எம்ஜிஆர் எனக்கு அண்ணன் மாதிரி. நான் எம்ஜிஆரை நேசிக்கிறேன் அதைவிட அதிகமாக கழகத்தை நேசிக்கிறேன் "
மதுரை முத்து: "நீங்க சொல்றது உண்மைதான். பல்பு நல்லாத்தான் எரிஞ்சது. இப்போ பியூஸ் போயிருச்சு. தூக்கி போட்டுட்டோம்."
ராஜாங்கம் எம்பி: நான் எம்ஜிஆரை மதிக்கிறேன். அவர் திமுகவை மதிக்கும் வரை... அண்ணாவுக்கு இருந்த பெருந்தன்மை எங்களுக்கு இல்லை...
(இந்த இடத்தில் அண்ணா பற்றி கூற வேண்டும். ஒருமுறை எம்ஜிஆர் "காமராசர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி " என்றார். திமுகவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. "எம்ஜிஆர் எப்படி இதை சொல்லலாம்? அண்ணா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? "
பத்திரிகையாளர்கள் சந்திப்பு அண்ணாவுடன்.
பத்திரிகை :எம்ஜிஆர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா:(நகைச்சுவையாக) எதிர்க்கட்சிகளை கூட மதிப்பது எப்படி என எம்ஜிஆர் இடம் பாடம் படி என தம்பிகளிடம் சொல்லப் போகிறேன்.
பத்திரிகை: சம்பத், கண்ணதாசன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கியிருந்தீர்களே!! எம்ஜிஆர் இடம் மட்டும் ஏன் கரிசனம்?
அண்ணா :அவர்கள் வைர கடுக்கன் போன்றவர்கள். காது புண்ணானதால் கழற்றி வைத்திருக்கிறேன். ஆனால் எம்ஜிஆர் என் இதயக்கனி. இதயத்தை எப்படி கழற்ற முடியும்?
இதுதான் அண்ணாவுக்கும் தலைவருக்கும் உள்ள புரிதல். அண்ணாவுக்கு ஈகோ என்பதே கிடையாது. கருணாநிதிக்கு அவருடைய ஈகோவே வினையானது.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு சத்தியவாணி முத்து அம்மா சமாதானம் பேச போகிறார். தலைவர் கோபமாக" சமாதானம் என்பது நடுநிலைமையாளர் பேச வேண்டும். என்னை நீக்கும் பாரத்தில் கையெழுத்து போட்ட உங்களுக்கு அந்த தகுதியில்லை"என்றார்.பிறகு அதே சத்தியவாணி மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க தன் முதல் அமைச்சரவையில் 1977ல் சேர்த்துக்கொண்டார்.
1972-1974 தலைவருக்கு மிகச் சோதனையான காலகட்டம். அவருடன் இருந்த, அவரால் பிழைத்த பலரும் பதவிக்காக அவரை விட்டு பிரிந்தனர்.
நினைத்ததை முடிப்பவன் படத்தில்"பொன் பொருளை கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே!! என் மனதை நானறிவேன் என் உறவை நான் மறவேன். எதுவான போதிலும் ஆகட்டுமே.நன்றி மறவாத நல்ல மனம் போதும். என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் "என அவர்களை மனதில் வைத்தே பாடினார். அப்போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தது ரசிகர்கள் மட்டுமே!!
1973ல் திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே அவருடைய "மாஸ்"புரிந்து பல தலைவர்கள் எம்ஜிஆர் இடம் வந்து சேர்ந்தனர். தலைவர் பாடல் வரியும் பலித்தது.
கண்ணதாசன் சொன்னது: "சம்பத்தும் நானும் திமுக வை விட்டு விலகி சென்ற போது எங்களுடன் பல தலைவர்கள் வந்தார்கள். ஆனால் தொண்டர்கள் வரவில்லை. எம் ஜி ஆர் பிரிந்த போது தலைவர்கள் செல்லவில்லை. ஆனால் தொண்டர்கள் அவருடன் சென்றுவிட்டனர். அதனால்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது."........ Thanks.........
orodizli
20th April 2020, 12:06 PM
சந்திரதோயம்
________________
ஒரளவு அறிவு நூல்கள் ,
ஆன்மீக நூல்கள் படித்துள்ளேன் சொற்பொழிவுகளும் கேட்டுள்ளேன் இதை உள் வாங்கி உண்மை உணர்வது கடினம்
இந்த பாடல் காட்சியை பாருங்கள் படம் தான் . என்ன சுலபாக உள்ளத்தை நெகிழவைக்கிறது வாழ்நாள் முழவதும் புத்தகங்கள் படித்தாலும் இந்த பாதிப்பு ஏற்படாது
மனம் என்னும் கோவில் திறக்ககின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
இந்த வரிகளை கவனியுங்கள் கோபுரத்தின் மீது மழை
மக்கள் திலகத்தின் முகத்தில் தெய்விக களை ஆத்மார்த்தமாக உச்சரிப்பதால் தான் இந்நிலை !
இதை உங்கள் பிள்ளைகளுக்கு காட்டுங்கள் மனிதநேயம் வளர மணித்துளிகள் மிச்சம்
மனம் தூய்மை நிச்சயம் !
ஹயாத் #GOD #MGR 🌱✌🏻🌱......
Thanks...
orodizli
20th April 2020, 12:11 PM
எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்
MGR's Anbe Vaa Tamil Review 1
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.
ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'.
MGR's Anbe Vaa Tamil Review 2
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.
ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
MGR's Anbe Vaa Tamil Review 3
கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
MGR's Anbe Vaa Tamil Review 4
'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது எனவும் பேசப்பட்டது....... Thanks...
orodizli
20th April 2020, 12:14 PM
எம்.ஜி.ஆர் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
#விருதுகள்
1,பாரத் விருது - இந்திய அரசு
2,அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
3,பாரத ரத்னா விருது - இந்திய அரசு
4,பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5,சிறப்பு முனைவர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), 6,சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
7,வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
#திரைச்சேவைக்கான_பட்டங்களும் #வழங்கியவர்களும்
1,இதயக்கனி - அறிஞர் அண்ணா
2,புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
3,நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
4,மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
5,பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
6,மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
7,கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
8,கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
9,கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
10,கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
11,கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
12,திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
#பொதுச்சேவைக்கான_பட்டங்களும் #வழங்கியவர்களும்
1,கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
2,கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
3,நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
4,பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
5,மக்கள் திலகம் - தமிழ்வாணன்
6,வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
7,புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
8,இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
9,மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
10,ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
#எம்ஜிஆர்_பற்றிப்_பிரபாகரன்
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர்.
ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலகட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார்.
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.
#எம்ஜிஆரின்_ஈழக்கனவுப்_பற்றி #ஆன்டன்_பாலசிங்கம்
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.
#thankswikipediya
#(இந்த பதிவில் ஏதாவது தவறு இருப்பின் கமெண்ட் பண்ணினால் சரி செய்யப்படும்)....... Thanks...
orodizli
20th April 2020, 12:17 PM
கலைவாணர் அவர்களுக்கும் நம்ம தலைவருக்கும் இருந்த நட்பு நாம் அறிந்ததே.
கொடுக்கும் குணம் அவரிடம் இருந்து நான் கற்று கொண்ட பாடம் என்று பலமுறை சொல்லி இருக்கிறார் நம் வாத்தியார்.
1977 இல் நம் நாடோடிமன்னன் நாடாள புறப்படுகிறார். நிருபர்கள் கூட்டம் கேள்வி மேல் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அன்று தன் கூட இருந்த அரசியல், மற்றும் திரைத்துறையினரை நினைவு கூர்ந்து பதில் சொல்லுகிறார் பொன்மனம்.
ஒரு நிருபர் இப்போது உங்கள் நண்பர் கலைவாணர் அவர்கள் இருந்து உங்கள் இயக்கத்தில் இணைந்து வெற்றி பெற்று இருந்தால் அவருக்கு என்ன இலாகாவை ஒதுக்கி அவரை மந்திரி ஆக்கி இருப்பீர்கள் என்று கேட்க.
ஒரு நிமிடம் யோசித்த நம் தலைவன் சுற்றும் முற்றும் பார்க்க அனைத்து நிருபர்களும் திகைக்க நல்ல கேள்வி இது...
இன்று அவர் இருந்து இருந்தால் அவர்தான் முதல்வர் நான் அவருக்கு கீழே ஒரு அமைச்சர் ஆக இருந்து பணியாற்றி இருப்பேன் என்கிறார் எம்ஜியார்.
எப்படிப்பட்ட எம்ஜியார் நமக்கு நாட்டுக்கு தலைவர்.
முதல்வராக ஒரு நாள் கலைவாணர் சிலைக்கு ஒரு சிறப்பான மலர் மாலையை அவரே வடிவமைக்க சொல்லி அந்த மாலையை அவருக்கு அணிவித்து விட்டு மரியாதை செய்து அடுத்த நிகழ்ச்சிக்கு போய் திரும்பும் போது அந்த மாலை அவர் கழுத்தில் இல்லை.
உடனே காரை விட்டு இறங்கி இப்போ ஒரு 20 நிமிடம் கூட ஆகவில்லை எங்கே போச்சு அந்த மாலை எனக்கு உடனே தகவல் வேண்டும் என்று சொல்ல.
சுற்றி இருந்த அதிகாரிகள், காவல்துறையினர் விரைவாக செயல் பட்டு அந்த மாலையை ஒரு மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவர் கழற்றி சென்றதை அருகில் இருந்தவர்கள் சொன்னத்தின் படி அந்த நபரை அவர்கள் சொன்ன வழியில் தேடி போய் பார்க்க.
அந்த தெருவில் ஒரு வீட்டு வாசலில் வயதான ஒரு அம்மாவின் உடலுக்கு அந்த மாலை போட பட்டு இருந்தது.
தகவல் தலைவருக்கு தெரிந்து அவரே நடந்து அந்த தெருவுக்குள் போய் பார்க்க இறந்தவர் மகன் ஐயா என்னை மன்னித்து விடுங்கள்...என் தாயாரின் உடலுக்கு மாலை போட கூட இப்போது என்னிடம் பணம் இல்லை.. உறவினர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கதறி அழ அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து உடனே தன் ஜிப்பாவுக்குள் கை விட்டு இருந்த பணத்தை அள்ளி கொடுத்து அவர் தோள்களில் தட்டி கொடுத்து ஆக வேண்டிய வேலைகளை பார் என்று சொல்லிவிட்டு திரும்ப
உடன் இருந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினர், கட்சிக்காரர்கள் அனைவரிடமும் இருந்தும் கொடுத்தார் இப்போது இறந்தும் கொடுக்கிறார்....அந்த மாலையை எடுத்து கொண்டு போனவரை ஒன்றும் செய்ய வேண்டாம்..இது அவர் எனக்கு சொல்லும் செய்தி. என்கிறார் புரட்சிதலைவர்.......... Thanks...
orodizli
20th April 2020, 03:08 PM
எம்ஜிஆர் - ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’!
M.G.R. தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கூட நன்மை செய்யும் எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர், தனக்கு உதவி செய்தவருக்கு நன்மை செய்யாமல் விடுவாரா? அப்படி எம்.ஜி.ஆருக்கு உதவி செய்ததோடு, அவரால் உயரத்துக்குச் சென்றவர்களில் முக்கியமானவர் மணியன்.
ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றி வந்த மணியன், 1968-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி ஒரு கட்டுரை வேண்டி எம்.ஜி.ஆரை அணுகினார். அந்த நட்பு தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு சென்று வந்து பயணக் கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதிக் கொண்டிருந்தார் மணியன். அந்த அனுபவத்தால் வெளிநாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு. அந்த சமயத்தில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.
வெளிநாடுகளில் படம் எடுப்பதற்காக எம்.ஜி.ஆர். செல்வாரா? மாட்டாரா? ஏறத் தாழ ஒன்றரை மாதம் எப்படி எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருக்க முடியும்? இங்கு எவ்வளவு படங்கள் நடிக்க வேண்டியுள் ளது? அரசியல் வேறு இருக்கிறது; எம்.ஜி.ஆர். போகமாட்டார் என்று சந்தேகங்கள், வதந்திகள் றெக்கை கட்டி பறந்த நிலையில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக வெளிநாட்டுக்கு பறக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து விட்டார்.
1970-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் வாழ்த்துக்களுடன் எம்.ஜி.ஆர். ஜப்பா னுக்குப் புறப்பட்டுவிட்டார். இங்கே பல்வேறு பணிகள் இருந்தாலும் இனி யும் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் எக்ஸ்போ 70 கண்காட்சி. செப்டம்பர் 15-ம் தேதி யுடன் அந்த மகத்தான கண்காட்சி முடியப் போகிறது என்று செய்தி வந்தது. அதற் குள் அங்கு சென்று காட்சிகளை படமாக்கி தமிழக மக்களின் கண்களுக்கு விருந் தாக்க வேண்டும் என்ற துடிப்புதான் எம்.ஜி.ஆரை புறப்பட வைத்தது.
எக்ஸ்போ -70 கண்காட்சி உட்பட, கீழ்திசை நாடுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புகள் நடப்பதற்கு உதவியவர் மணியன். தனது குழுவின ரோடு செப்டம்பர் 5-ம் தேதி டோக்கியோ நகரின் ஹனீதா விமான நிலையம் சென்று இறங்கினார் எம்.ஜி.ஆர்.! அவரை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். அவர்களோடு ஜப்பா னின் தேசிய உடையான ‘கிமோனோ’ அணிந்த பெண்கள் கையில் மாலையுடன் எம்.ஜி.ஆரை வரவேற்க காத்திருந்தனர்.. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘பன்சாயி...’ பாடலின் ஆரம்பத்தில் நடிகை சந்திரகலா வித்தியாசமான உடை அணிந்திருப்பாரே? அதுதான் ‘கிமோனோ'.
டோக்கியோவில் எம்.ஜி.ஆரை பார்த் தவர்களுக்கு வியப்பு. தனது வழக்கமான தொப்பி, கண்ணாடி, வேட்டி, சட்டையுட னேயே டோக்கியோவில் எம்.ஜி.ஆர். கால் பதித்தார். வரவேற்பை ஏற்றுக் கொண்டு டோக்கியோவின் பிரபல இம்பீரியல் ஓட்டலில் இரவு ஒரு மணிக்கு தான் சென்று தங்கினார் எம்.ஜி.ஆர்.
அசதி, சோம்பல், நீண்ட ஓய்வு இதெல் லாம் எம்.ஜி.ஆர். அறியாத ஒன்று. இரவு ஒரு மணிக்கு ஓட்டலுக்கு சென்று படுத் தாலும் மறுநாள் அதிகாலையிலேயே எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டார். செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எக்ஸ்போ கண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எட்டு லட்சம் பேர் உள்ளே போய் விட்டார்கள். இனிமேல் உள்ளே வர இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கண்காட்சிக்கு உள்ளே செல்லும் நுழைவாயில்கள் மூடப்பட்டன.
முக்கியமான அதி காரிகளை சந்தித்து கண்காட்சிக்கு உள்ளே செல்ல அனுமதி பெற்றுத் தந்தார் மணியன். அதிகாரிகளி டம் ‘இந்தோகா ஹிதேகி தகஹாஷி’ என்று ஜப்பானிய மொழி யில் ஒரு அஸ்திரத்தை வீசினார் மணியன். உடனே அனுமதி கிடைத்தது. ஜப்பானில் மக்களால் விரும்பப்படும் புகழ் பெற்ற நடிகரின் பெயர் ஹிதேகி தகஹாஷி. ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’ என்று எம்.ஜி.ஆர். பற்றி மணியன் கூறியது தான் அனுமதிக்கு காரணம்.
மணியனால் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இன்னொரு பெரும் புதையலும் கிடைத் தது. ஆனந்த விகடன் இதழில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். தனது வாழ்க்கை வரலாற்றை எழுதக் காரணமாக இருந்த வர் மணியன். வெளிநாடு களில் படப்பிடிப்பு நடத்த தனக்கு உதவி செய்த மணிய னுக்கு, பதிலுக்கு உதவ முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
ஒருநாள் மாலை. சென்னை தியாக ராய நகரில் மணியன் வீட்டு வாசலில் எம்.ஜி.ஆரின் கார் சென்று நிற்கிறது. திடீரென தனது வீட்டுக்கே வந்துவிட்ட எம்.ஜி.ஆரை பார்த்து மணியனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அந்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்பே, அவருக்கு அடுத்த இன்ப அதிர்ச் சியை எம்.ஜி.ஆர். அளித்தார். ‘‘வித்வான் லட்சுமணனுடன் சேர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்குங்கள், நான் நடிக்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
பேப்பரும் பேனாவும் கேட்டு வாங்கி, தனது கையாலேயே படக் கம்பெனியின் பெயரை யும் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆரால் உதய மானதுதான் ‘உதயம் புரொடக் ஷன்ஸ்’ பட நிறு வனம். அந்நிறுவனம் தயாரித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயவீணை’. பின்னர், படத் தயாரிப்பாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் உயர்ந்தார் மணியன்.
‘இதயவீணை’ படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கட்சி நிர்வாகிகளின் சொத்து விவரம் கேட்டதையடுத்து, 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திமுகவில் இருந்து நீக்கப் பட்டார். அதுவரை புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சித் தலைவரானார். அப்போது, ‘இதயவீணை’ படப்பிடிப்பில் இருந்தார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஷ யத்தைக் கேள்விப்பட்டு, பாயசம் கொண்டு வரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்து, தானும் குடித்துவிட்டு, ‘‘இப் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றார். படத்தில் கார் விபத்து காட்சி ஒன்று வரும். அன்று அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். சிறப்பாக எடுத்து முடித்தார்.
‘இதயவீணை’ படம் முதலில் 1972 அக்டோபர் 6-ம் தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்தது. இடையில் அரசியல் பரபரப்புகள் காரணமாக படம் ‘ரிலீஸ்’ தள்ளிப் போய் அக்டோபர் 20-ம் தேதி படம் வெளியானது. இடைப்பட்ட நாட் களில் அப்போதைய சூழலுக்கேற்ப அரசியல் பொடிவைத்து எழுதப் பட்ட பாடல் காட்சியைப் படமாக்கி, பொருத்தமான இடத்தில் படத் தில் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.
திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் போது, ரசிகர்களின் அலப்பறையால் தியேட்டரே ஆடிய அந்தப் பாடல்:
‘ஒரு வாலும் இல்லே, நாலு காலும் இல்லே; சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே....’
‘இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்றன........ Thanks.........
orodizli
20th April 2020, 03:18 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#பதிவு_தபால்
எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்........ Thanks...
orodizli
20th April 2020, 03:19 PM
MGR-கவிஞர் வாலி
கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.
சென்னையில் நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நட்பு கிடைத்தது. வி.கோபாலகிருஷ்ணன் மூலம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எதுவும் பலன் தராததால் துவண்டு போய் மறுபடியும் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே பயணமாக முடிவு செய்தார். அப்பொழுதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று காற்றினிலே கலந்து வந்து கவிஞர் வாலியின் காதில் நுழைந்தது மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து மீண்டும் போராடுவதற்கான நம்பிக்கையை வாலிக்கு கொடுத்தது.
அந்தப் பாடல் ‘மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'
சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்' படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது.
‘நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா' என்று பாடல் எழுதிக் கொடுத்தார். இந்தப்பாடலை ப.சுசிலா தனது இனிமையான குரலில் பாடி கொடுத்தார்.
எந்த கண்ணதாசன் பாடல் கேட்டு நம்பிக்கை பெற்று மறுபடியும் திரையுலகில் போராடி நுழைந்தாரோ அதே கண்ணதாசனுக்குப் போட்டியாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார் வாலி. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
முக்தா சீனிவாசன் தனது ‘இதயத்தில் நீ' படத்தில் பாடல் எழுத அழைத்தார். கவிஞர் வாலியை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பாடல் எழுதும் ஆற்றலைப் பார்த்துவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டார். ‘இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்' என்று.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது ‘கற்பகம்' படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதச் சொன்னார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் வெற்றிப் பெற்றது. ‘கற்பகம்' பெயரிலேயே ஸ்டுடியோவை வாங்கி நடத்தத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் பி.சுசிலாவே பாடினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்' படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை டைரக்டர் ப.நீலகண்டன்தான் பெற்றுத் தந்தார். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆரிடம அறிமுகப்படுத்தியதும் ப.நீலகண்டன்தான்.
எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சரவண பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி எழுதச் சொன்னார். ‘படகோட்டி' படத்தின் முழு கதையை வாலி கேட்டதால் அவரையே அந்தப் படத்திற்கு ஒரு பெயரை சூட்டச் சொன்னார்கள். அவரும ‘படகோட்டி' என்று பெயர் வைத்தார்.
இப்படி எம்.ஜி.ஆருக்கு 61 படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரின் பாராட்டுக்களை பெற்றார் கவிஞர் வாலி.
அதே போல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘அன்புக் கரங்கள்' படம் மூலம் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. சிவாஜிக்கு 60 படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் நிழற்படங்களிலும் ஒலித்தன. நிஜவாழ்க்கையிலும் அவை பிரதிபலித்தன.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததை எதிரொலித்தது. அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகும் அவரது மூன்றெழுத்து பெயரும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...' இந்தப் பாடல் வரிகளும் நிஜமாகின. சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றியது. அவரும் தனது ஆட்சியில் ஏழை எளியோரை வேதனைப்படாமல் பார்த்துக் கொண்டார்.
ஜெமினியின் ‘ஒளிவிளக்கு' படத்தில் கதைப்படி தீ விபத்துக்குள்ளான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி ஊர்மக்கள் பிரார்த்தனை செய்து பாடுவதுபோல் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் வாலி.
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'
இந்தப்பாடல் படத்தில் ஒலித்து பாராட்டுக்களை பெற்றது.
இதேப் போன்று எம்.ஜி.ஆர் நிஜமாகவே உடல்நலம் சரியில்லாத போது அவர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் மக்கள் இந்தப்பாடலைப் பாடித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘தலைவன்' என்றொரு படம். நீண்ட காலமாகவே முடிக்கப்படாமல் கிடப்பிலிருந்த படம். எதனால் இந்தப்படம் எடுத்து முடிக்க தாமதமாகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியை அழைத்து, 'இந்தப்படம் தாமதமாவதற்கு நீங்கள்தான் காரணம்,' என்று கூறினார். வாலியும் 'நான் எப்படி காரணமாவேன்?' என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர். நீங்கள் எழுதி கொடுத்த பாடல் வரிகளை திரும்பவும் சொல்லிப்பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
‘நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருக்க...' இப்படி பாடல்வரிகளை எழுதி கொடுத்தால் எப்படி படம் முடியும் வெளியே வரும் என்றார் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியை அழைத்து ‘அடிமைப் பெண்' படத்தில் அம்முவை (ஜெயலலிதா) சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடச் சொல்லப் போகிறேன். அதற்கான ஒரு பாடலை எழுதுங்கள் என்றார். வாலியும் ‘அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். அதை செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடினார்.
ஒரு நாள் கவிஞர் வாலி எம்.ஜி.ஆரிடம், ‘அண்ணா நீங்கள் பின்னாளில் அவரைப் (ஜெயலலிதா) பாட வைக்கப் போறீங்க என்று தெரிந்ததான் அன்றே ஒரு பாடலை எழுதிவிட்டேன். அந்தப் பாடல்
‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன் தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் கோயில் இல்லாத இறைவன்''
இதை ‘அரசகட்டளை' படத்தில் செல்வி ஜெயலலிதாவே பாடி நடித்திருப்பார். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர் தன்னை மறந்து சிரித்துவிட்டார்.
அதே போன்று ‘அன்னமிட்டகை' படத்தில்
‘அன்னமிட்ட கை இது ஆக்கிவிட்ட கை'
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம்
வாழவைத்த அன்னமிட்ட கை'
என்று எழுதியிருந்தார் வாலி. இந்தப் பாடலின் கருத்துப்படி எம்.ஜி.ஆர். முதல்வரானதும் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டார். அவருடைய கை எத்தனையோ பேருக்கு அன்னமிட்ட கையாகத் திகழ்ந்தது.
‘பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' என்று ஒரு பாடலை எழுதினார் வாலி. எம்.ஜி.ஆர் புதிய கட்சி ஆரம்பித்ததும் நல்ல நல்ல பிள்ளைகள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். அவரை நாடாள வைத்தார்கள். ‘காவல்காரன்' படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது, கேட்டேன் தந்தாய் ஆசை மனது...' என்ற பாடலை எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அப்பொழுது எம்.ஜி.ஆர் குண்டடிப்படிருந்தார். அவர் உடல் நலம் பெற்று வந்து இந்தப் பாடல் காட்சியில் பாடி நடித்தார்.
இப்படி பதினாறாயிரம் பாடல்களுக்கு மேல் ஓய்வின்றி எழுதி சாதனைப் புரிந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு மட்டும் நான்காயிரம் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி.
எல்லா தலைமுறையினருக்கும் பாடல்கள் எழுதிய ஒரே பாடலாசிரியர் கவிஞர் வாலி மட்டும்தான். இவர் ஒரு முருக பக்தர் அதனால் தான் இவர் எழுதிய பாடல் வரிகளிளெல்லாம் சக்திப்பெற்று நிஜங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
பாடலாசிரியராக மட்டுமல்ல.. ஒரு எழுத்தாளராக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவர்.
நடிகராக அவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். பொய்க்கால் குதிரையில் நடித்ததோடு, கதை வசனத்தையும் எழுதினார்.
1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் கவிஞர் வாலி. சொந்தப் பெயர் ரங்கராஜன். இவருக்கு வாலி என்று புனைப்பெயர் வைத்தவர் பாபு என்ற பள்ளி நண்பர்........ Thanks...
orodizli
20th April 2020, 03:22 PM
கொடுத்துக் ,கொடுத்துச் சிவந்த கைக்கு...! அனைத்தையுமே கொடுத்து விட்டோம்...!! என்ற நிம்மதிப் பெருமூச்சில் சிரித்தமையால் புரட்சித் தலைவரின் முகமும் சிவந்து...!!!
இவ்வளவும் நடந்தும். அவரது வலது கை கொடுத்ததை அவரது இடது கைக்கு இதுவரை தெரியாது. இவ்வாறாக வாழ்ந்த தலைவர் அப்போதும், இப்போதும், எப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்...
இது காலத்தின் கட்டாயம்......... Thanks...
orodizli
20th April 2020, 03:23 PM
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் .
நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்
புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்........... Thanks...
orodizli
20th April 2020, 05:16 PM
#சட்டம் #பொதுதானே
ஒருநாள் மாலை வடபழனி முருகன் கோவில் அருகில் போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட சில கார்களை மடக்கி நிறுத்திக்கொண்டிருந்தனர். அப்போது படப்பிடிப்புக்கு போவதற்காக அந்தப்பக்கம் வந்த எம்ஜிஆர் காரையும் போலீசார் நிறுத்தினர்...
ஆனால் காரினுள் இருந்த எம்ஜிஆர் அவர்களைப் பார்த்ததும் திகைத்து சட்டென்று சல்யூட் அடித்துவிட்டு "நீங்கள் போகலாம்" என்றனர்.
உடனே, உள்ளே இருந்த எம்ஜிஆர் "எதற்கு வண்டியை நிறுத்தினீர்கள்? " என்று கேட்க, அதற்கு 'ஒன்றுமில்லை சார்...கார் விளக்குகளில் பாதி கறுப்பு வர்ணம் பூசியிருக்கப்பட வேண்டும்...அப்படிப் பூசாத கார்களை நிறுத்தி, கறுப்பு வர்ணம் அடித்து அனுப்புகிறோம்...என்றனர்...
இந்த வண்டியில் கறுப்பு வர்ணம் பூசாமல் இருந்தால் உங்கள் கடமையைச் செய்யவேண்டியது தானே ? என்று எம்ஜிஆர் கேட்க, "#பரவாயில்லை #சார், #உங்கள் #கார் #என்றால் #நிறுத்தியிருக்க #மாட்டோம்..." என்று போலீசார் தயங்கியபடி கூறினர்...
"#சட்டம் #எல்லோருக்கும் #ஒன்று #தான்...#நான் #வெயிட்பண்றேன்...#என் #காருக்கும் #வர்ணம் #பூசுங்கள்" என்றார் எம்ஜிஆர்.......... Thanks...
orodizli
20th April 2020, 05:16 PM
#எம்ஜிஆர் அ.தி.மு.க வை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அவருக்கும், தி.மு.கழகத் தலைமைக்கும் இடையில் கடைசி நேர சமரச முயற்சி ஒன்று நடந்தது. முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் அது சம்பந்தமாக சத்யா ஸ்டுடியோவில் எம்ஜிஆரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
#அப்பொழுது எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன், எம்ஜிஆரைப் பார்ப்பதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். அவரைக் கடற்கரைச் சாலையில் வழிமறித்துச் சைக்கிள் செயினால் தாக்கினார்கள் திமுகவினர்.
#அந்த நிமிடம் வரை தி.மு.க.வோடு சமாதானமாக போய்விடலாம் என்றுதான் எம்ஜிஆரும் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இரத்த வெள்ளத்தில் தம் முன்னால் நின்ற முசிறிப்புத்தனைப் பார்த்தார் எம்ஜிஆர்.
#சமாதானம் பேச வந்தவர்களைப் பார்த்து, ” ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறீர்கள்; இன்னொருபக்கம் என் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்களை ஏவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்! இது என்ன நாடகம்? இனி மேல் உங்களோடு சமரசத்திற்கே இடமில்லை!” என்றார்.
#அதற்குப் பின்னர்தான் சமரச முயற்சி தோற்றது.
#இவ்வாறு அ.தி.மு.க. தோன்றுவதற்கு முன்னும் பின்னும் நடந்த, கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித் தாக்குதல்கள் கணக்கிலடங்காதவை ஆகும்.
#HBDAiadmk48........... Thanks...
orodizli
20th April 2020, 05:23 PM
பிரம்மாண்டமான படங்களின் இயக்குனர் திரு. B.R.பந்துலு அவர்கள் சிவாஜியை விட்டு புரட்சித் தலைவர் பக்கம் வந்த கதை:-
பி.ஆர்.பந்துலு தமிழகத்தின் சிசில் பி டிமிலி என்று அறியப்பட்ட இயக்குனர். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர். சிவாஜிக்கும் இவருக்குமான நட்பு வித்தியாசமானது . அந்த நெருக்கம் காரணமாக கொஞ்சம் ஓவராகவே சிவாஜியிடம் நடந்து கொள்வார்.
பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,பலே பாண்டியா படங்களுக்கு பிறகு-
ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார். மேக் அப்புடன் ஒரு மரத்தடியில்,சுற்றிலும் சில கைத்தடிகள் நிற்க, சிகரட்டை பற்றவைக்கும்போது பந்துலு காரில் வந்து இறங்குகிறார்.
சிவாஜி பார்க்கிறார். பக்கத்திலுள்ளவர்களிடம் கேட்கிறார்
” டேய் , என்னடா பாப்பான் இங்கே வர்றான். காரணமில்லாமல் பாப்பான் வர மாட்டானே டா.”
சிவாஜி எப்போதும் எல்லோரையும் ஏகாரத்தில் தான் குறிப்பிடுவார்.அதோடு ஜாதியை குறிப்பிட்டே பேசுவார். பாப்பாரப்பய , யோவ் செட்டி , ரெட்டி எங்கேடா, வாய்யா நாயுடு , டேய் கவுண்டபயலே , கூப்புடறா முதலியார, டே துளுக்கப்பயலே – இப்படித்தான், இது தான் சிவாஜி.
(கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில் சிவாஜி ஒரு மூன்று பிராமணர்களுடன் உற்சாகபானம் – ஸ்காட்ச் விஸ்கி – அருந்திக்கொண்டிருந்திருக்கிறார் . விஸ்கி கூட ஒரு பிராமணர் உபயம் தான். சிவாஜி அவ்வப்போது ” டே பாப்பான் நீ என்ன சொல்றே… ” பாப்பாரப்பயல்களா ” இப்படி வார்த்தைகளை பிரயோகம் செய்துகொண்டே இருந்திருக்கிறார்.
சுயமரியாதையுள்ள ஒரு பிராமணர்
( விஸ்கி உபயம் செய்தவர் தான் ) எழுந்து இந்த அநாகரீகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுகிறார். அதன் பிறகு சிவாஜியை அந்த உத்தமப்பிராமணர் சந்திக்கவேயில்லை. பலவருடங்களுக்குப் பின் யதேச்சையாய் இருவரும் சந்திக்க நேர்ந்தபோது சிவாஜிக்கு அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அல்லது அடையாளம் தெரிந்ததாக காட்டிக்கொள்ள விருப்பமில்லை.)
பக்கத்தில் பந்துலு வருகிறார்.
‘ யோவ்! என்ன அத்திப்பூத்தாப்பலே…. காத்து இந்தப்பக்கம் அடிக்குதா… ‘
பந்துலு ‘ பவ்யம் பாவ்லா ‘ எதுவும் செய்ய மாட்டார். மரக்கிளை ஒன்றில் பார்வை நிலைத்துள்ள நிலையில் சிரித்துக்கொண்டே உட்கார்வார்.
பந்துலு மெதுவாக வேறுபக்கம் பார்த்துக்கொண்டே சொல்வார்
”புதுசா ஒரு படம் பண்ணப்போறேன் . ”
சிவாஜி ” என்ன கதை ”
பந்துலு ” மகாபாரதத்திலே இருந்து ”
சிவாஜி ” படத்து பேர் என்னவோ ”
பந்துலு ” கர்ணன் ”
சிவாஜி கொஞ்சம் முகத்தை சுருக்கி கொஞ்சம் இடைவெளி விட்டு ” யாரு ஹீரோ ?”
பந்துலு வானத்தை தற்செயலாக பார்த்தவாறு விட்டேத்தியாக ” சிவாஜி கணேசன் யா ”
சிவாஜி கண்ணை விரித்து , மூக்கை விடைத்து , குரலை செருமி விட்டு ஒன்றும் சொல்லாமல் இருக்கும்போதே பந்துலு எழுந்து விடுவார் .
” நாளைக்கு பூஜை .”
சிவாஜியைப் பார்க்காமலே அவருடைய மேக் அப் மேன் , உதவியாளர், கார் டிரைவர் ஆகியோரிடம் பேசி ( நாளைக்கி எந்த ஸ்டுடியோவில் பூஜை, மேக் அப் எப்படி …இப்படி …இப்படி …) விட்டு பந்துலு காரில் ஏறி கார் கிளம்பிப்போவதை வைத்த கண் வாங்காமல் சிவாஜி பார்த்துக் கொண்டிருப்பார்.
எரிமலையாய் வெடிப்பார்
” டேய், பாப்பான் என்னடா நினைச்சுக்கிட்டிருக்கான். வந்தான், நாளைக்கு பூஜைங்கிறான்.நான் தான் ஹீரோங்கிறான்.
யாரிட்டயாவது சொல்லியிருக்கானா .
சண்முகத்தை கூப்பிடுறா .”
தம்பி சண்முகம் வந்து தன்னிடமும் பந்துலு இது பற்றி முன்னதாக பேசவேயில்லை என்கிற விஷயத்தை சொல்வார் .
சிவாஜி கடுமையான கோபத்துடன் Abusive languageல் கண்டபடி திட்டுவார்.”பாப்பான் என்னை ரொம்ப ஆழம் பாக்கராண்டா.இவனுக்கு ரொம்ப துளுர் விட்டுப்போச்சி ”
ஸ்டுடியோ பூரா செய்தி பரவும். சினிமாவுலகம் பூரா அரை மணி நேரத்தில் பேசும்.
” அவ்வளவு தான். சிவாஜிக்கும் பந்துலுவுக்கும் முட்டிக்கிச்சி”.”
இனி கடும் பகை தான்.” ”
“இருந்தாலும் பந்துலு ரொம்ப ஓவரா உரிமை எடுக்கறதெல்லாம் சரியில்லே ..” “சிவாஜி இனி அந்த ஆளு மூஞ்சிலேயே முழிக்க மாட்டருய்யா ”
………….
மறு நாள் அதிகாலை,
சூரியன் உதிப்பதற்கு முன்பே
முழு மேக் அப்புடன்
பந்துலு பட பூஜையில் சிவாஜி ஆஜர் !
பந்துலு -சிவாஜி நட்பும் தொழில் பங்களிப்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் ‘ முரடன் முத்து’ படத்துடன் இருவரின் காவியத்தொடர்பு முற்றுபெற்றது என்றே ஆகி விட்டது. ” முரடன் முத்து தான் சிவாஜியின் நூறாவது படம் ” என்று பந்துலு லூஸ் டாக் செய்தார் .
சிவாஜி தன்னுடைய நூறாவது படம் என்ற அந்தஸ்தை ஏ.பி.நாகராஜனின் ” நவராத்திரி ” படத்துக்கு கொடுத்தார்.
பந்துலு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் தற்செயலாக எம்ஜியாரை சந்திக்க நேர்ந்தது. எம்ஜியார் எழுந்து நின்று
” பந்துலு சார்!”-கட்டிப்பிடித்துக்கொண்டார்
இந்த சந்திப்பு கண் காது மூக்கு வைக்கப்பட்டு வேறொரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த சிவாஜி காதுக்கு போனது.
“போதும்டா இந்த பாப்பான் சங்காத்தம்.”
எம்ஜியாருடன் ”ஆயிரத்தில் ஒருவன் ” படத்தில் பந்துலுவின் தொழில் தொடர்பு துவங்கியது. தொடர்ந்து “நாடோடி ” ” ரகசிய போலீஸ்115 “, “தேடி வந்த மாப்பிள்ளை ” ……..
“மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” படம் இயக்கிக்கொண்டிருந்தபோது பி.ஆர். பந்துலு மறைந்தார். மீதிப்படத்தை எம்ஜியாரே இயக்கினார் என்று விளம்பரப்படுத்தப் பட்டது- பட டைட்டில் ‘இயக்கம்-பி ஆர் பந்துலு – எம்ஜிஆர் ‘ என்றாலும் ப.நீலகண்டன் தான் இயக்கம் சம்பந்தப்பட்ட வேலைகளைப் பார்த்துக்கொண்டார்....... Courtesy by: fb.,
orodizli
20th April 2020, 05:26 PM
வாழ்நாள் முழுவதும், தன் மனசாட்சிப்படியும், தர்மத்தின்படியும் வாழ்ந்து வெற்றிக்கொடி நாட்டிய உத்தமத்தலைவர் புரட்சித்தலைவர், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை துவக்கிய நாள், இன்று. நாம் பிச்சை கேட்காமலேயே, இந்திய நாட்டின் உயர் விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு மனமுவந்து தனக்கு அளிக்கும் அளவுக்கு, தன் கலையுலக மற்றும் அரசியல் உலக எதிரிகள் ஆச்சரியப்படும்படி, வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.
அந்த மாபெரும் தலைவரை வணங்கி, அவருடைய தம்பிகளாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
நன்றி.
எம் ஜி ராமகிருஷ்ணன் கோவை........ Thanks...
orodizli
20th April 2020, 05:27 PM
#வாயிலே #பூட்டு
தனது திரைப்ப(பா)டங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டிய தேசபக்தி , சமூக முன்னேற்றம் , மக்களுக்கு விடுதலை
வேட்கை ,என்று பல படங்கள் மூலம் இடம் பெற செய்தவர்...புரட்சித்தலைவர்
மக்கள் திலகம் தன்னுடைய படங்களில் சுதந்திர உணர்வு - உரிமை போராட்டம் - நேர்மை - நீதி -சமூக நலனில்
அக்கறை - மக்களுக்கும் , இளம் வயதினருக்கும் , குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் வாழ்வில் முன்னேற
பல அருமையான பாடல்கள் தந்துள்ளார் .
தர்மத்தின்சாவி!
“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”
கேட்டீர்களா …. பாட்டு?
பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் நம்ம வாத்தியார்...
இனி அவர் என்ன சொல்கிறார்?
“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
(உம்முனு, கம்முனு, ஜம்முனு ன்னு சபையில் 'மறை கழண்டது' போல் உளறிக்கொட்டும் ஒரு அரைவேக்காட்டிற்கும், , தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாத 'சிஸ்டமுக்கும்', அதிமேதாவித்தனமாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு தான் பேசுவது மக்களுக்கே புரியாத 'மய்யத்திற்கும்' இந்த வரிகள் பொருந்தும்...)
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக்கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு!”
சரிதானே!...... Thanks...
orodizli
20th April 2020, 05:28 PM
எம்ஜிஆர் - அப்படியேதான் இருந்தார்
M.G.R. ரசிகர்களில் நடிகர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்ட ரசிகரான ஒரு நடிகர் காமெடி வேடங்களில் கலக்கியவர். பொதுவாக நகைச்சுவை நடிகர் என்றாலே அவர்கள் தோற்றமே சிரிப்பை வரவழைக்கும். ஆனால், நகைச்சுவை நடிகர்களிலேயே அழகான தோற்றம் கொண்டவர் அவர். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த அந்த நடிகர் தேங்காய் சீனிவாசன்!
எம்.ஜி.ஆர். மீது தீவிரமான அன்பு கொண்டவர் தேங்காய் சீனிவாசன். வெறிபிடித்த ரசிகர் என்றுகூட சொல்லலாம். ‘கல் மனம்’ என்ற நாடகத் தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் சீனிவாசன் என்ற இவரது பெயருக்கு முன்னால் ‘தேங்காய்’ சேர்ந்து கொண் டது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின், கட்சியிலும் சேர்ந்தார். எம்.ஜி.ஆருக்கும் தேங்காய் சீனிவாசன் மீது மிகுந்த அன்பு.
மனதில் எந்த களங்கமும் இல்லாமல் எல்லோரிடமும் வேடிக்கையும் விளையாட்டுமாக பழகு பவர் தேங்காய் சீனிவாசன். அவரது விளையாட்டு குணம் எம்.ஜி.ஆருக்கும் தெரியும். அதனால், தவறாக நினைக்க மாட்டார். அதேநேரம், அவரது உடல்நலம் குறித்தும் பொருளாதார நிலை குறித்தும் உரிமையுடன் கோபித்துக் கொள்வார்.
எம்.ஜி.ஆருடன் ‘கண்ணன் என் காதலன்’, ‘நம்நாடு’, ‘என் அண்ணன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக் குரல்’ உட்பட அவரது கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் தேங்காய் சீனி வாசன் நடித்துள்ளார். ‘நான் ஏன் பிறந் தேன்’ படத்தின் படப்பிடிப்பு சத்யா ஸ்டுடி யோவில் நடந்து கொண்டிருந்தது. ‘ரிக் ஷாக்காரன்’ படத்தை இயக்கிய எம்.கிருஷ்ணன், இந்தப் படத்தையும் இயக்கினார்.
ஒருநாள் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர். வருகைக்காக குழுவினர் காத்திருந்தனர். அப்போது, இயக்குநர் கிருஷ்ணனிடம் தேங்காய் சீனிவாசன் வேடிக்கையாக, ‘‘டைரக்டர் சார், ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் வாத்தியா ருக்கு (எம்.ஜி.ஆருக்கு) ‘அழகிய தமிழ் மகள் இவள்..’ பாடல் வெச்சது மாதிரி இந்த படத்தில் எனக்கும் ஒரு பாட்டு வெச் சுடுங்களேன்’ என்றார். சுற்றி இருந்தவர் களுக்கு அதிர்ச்சி. ‘என்ன இவர் இப்படி பேசுகிறாரே?’ என்று நினைத்தனர்.
படப்பிடிப்புக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அவர் காதுக்கு தேங்காய் சீனிவாசன் சொன்ன விஷயம் சென்றது. அவரை எம்.ஜி.ஆர். அழைத்தார். வேகமாக ஓடிவந்தார் தேங்காய் சீனிவாசன். அவ ரிடம், ‘‘உன் ஆசைப்படியே இந்தப் படத் தில் உனக்கு ஒரு பாட்டு வைச்சுடலாம்!’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். தேங்காய் சீனிவாசனுக்கு பயம் வந்துவிட்டது. ‘‘தலைவரே, நான் சும்மா விளையாட் டுக்கு சொன்னேன்’’ என்றார். அவரது தோளைத் தட்டி சிரித்தபடியே எம்.ஜி.ஆரும், ‘‘அட! நானும் விளை யாட்டுக்குத்தாம்பா சொன்னேன்’’ என்றதும் படப்பிடிப்பு தளமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.
தனக்கு நெருக்கமானவர்கள் தவ றான பழக்கங்களுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்துக் கொள்வதையோ, அநாவசியமாக செலவு செய்வதையோ எம்.ஜி.ஆர். அனுமதிக்க மாட்டார். ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட வர் நகைச்சுவை நடிகர் ஐசரி வேலன். ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது அவர் எம்.ஜி.ஆரிடம், ‘‘அண்ணே, எனக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கச் சொல்லுங்க. குடும்ப செலவை சமாளிக்க முடியலை’’ என்றார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘வரும் சம்பளத் தில் குடும்ப செலவை சமாளிக்க முடி யலை என்று சொல்லாதே. இந்த வருடத் தில் நீ எத்தனை படங்களில் நடித்தாய்? அதற்கு மொத்தமாக எவ்வளவு சம்பளம் வாங்கினாய்? உன் குடும்பத்துக்கான செலவினங்கள் என்ன?’’ என்று கேட்டு அறிவுரை கூறினார். எம்.ஜி.ஆர். சொல் வதில் உள்ள நியாயத்தை ஐசரி வேலன் உணர்ந்து கொண்டார். இவரும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். பின்னர், அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். இணை அமைச்சர் அந்தஸ்துக்கு இணை யான ‘பார்லிமென்டரி செக்ரட்டரி’ பதவியி லும் ஐசரி வேலனை எம்.ஜி.ஆர். நியமித்தார்!
தேங்காய் சீனிவாசன் சொந்தமாக படம் எடுக்க ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆலோசித்தார். ‘‘சொந்தப் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேண் டாம்’’ என்று எம்.ஜி.ஆர். தடுத்தார். ஆனால், அதையும் மீறி படத் தயாரிப் பில் தேங்காய் சீனிவாசன் ஈடுபட்டார். அவர் கையில் இருந்த பணம் படப் பிடிப்பு செலவுகளுக்காக கரைந்துவிட் டது. பணமும் புரட்ட முடியவில்லை. மேற் கொண்டு என்ன செய்வதென்று தெரியா மல், ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து நிலைமையைச் சொன்னார்.
‘‘நான்தான் ஆரம்பத்திலேயே சொன் னேனே, கேட்டியா? பட்டால்தான் புத்தி வரும். போ… போ…’’ என்று எம்.ஜி.ஆர். கோபமாகப் பேசி அவரை அனுப்பிவிட் டார். இருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்துபோன நிலையில், ஏமாற்ற மும் சோகமுமாய் நெடுநேரம் கழித்து இரவில் வீடு திரும்பினார். அங்கே தேங்காய் சீனிவாசனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது உதவியாளர்கள் மூலம் பெரும் தொகையை அவர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பியிருந் தார். விஷயம் அறிந்து, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கோரியதுடன், உதவிக்காக கண்களில் நீர்மல்க நன்றியும் தெரிவித்தார் தேங்காய் சீனிவாசன்!
‘நினைத்ததை முடிப்பவன்’ படத் தில், கிராமத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆர்., தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள மற்றவரைப் போல நடிக்க வேண்டிய நிலை. அடுக்கு மாடி ஒன்றில் இருந்து கீழே பார்க்கும் எம்.ஜி.ஆர்., அங்கு சுக்கு காப்பி விற்றுக் கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனை மேலே அழைப்பார். படத்தில் இருவருக் கும் ஏற்கெனவே அறிமுகம். தனக்கு ஆரம் பத்தில் காசே வாங்காமல் சுக்கு காப்பி கொடுத்த தேங்காய் சீனிவாசனுக்கு 500 ரூபாய்க்கு காசோலை கொடுக்கு மாறு நடிகை லதாவிடம் சொல்வார் எம்.ஜி.ஆர்.! அப்போது அது பெரிய தொகை.
பணம் கிடைத்த மகிழ்ச்சியில் வியா பாரம் செய்யும் சுக்கு காபி வைத்திருக் கும் தூக்கை மறந்துவிட்டு செல்லும் தேங்காய் சீனிவாசனிடம், ‘‘பணம் வந்த தும் பழசை மறந்துட்ட பாத்தியா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார். தனது தவறை ஒப்புக்கொள்ளும் தேங்காய் சீனிவாசன், எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. அடுக்குமாடிக்கு வந்தாலும் பழசை மறக் காம ஸ்டெடியா இருக்கே. இப்படியே இரு துரை’’ என்று வாழ்த்துவார்.
அப்படியேதான் இருந்தார் எம்.ஜி.ஆர்.!....... Thanks...
orodizli
20th April 2020, 05:29 PM
எவராலும் வெல்ல முடியாத தனித்தன்மை வாய்ந்த ஒரேயொரு தலைவர் என்றால் அது நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான்
புரட்சித் தலைவர் அவர்களை
எவருமே வென்றது இல்லை இல்லவே இல்லை
அந்த தனிப் பெருமை நம் வாத்தியார் மக்கள்திலகம் பொன்மனச்செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே தான் உண்டு ✌️ நன்றி ........ Thanks...
orodizli
20th April 2020, 05:33 PM
1987ம் வருடம் இறுதியாக தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அதோடு தனது ஆரம்ப கால மெய்காப்பாளர்களையும் இறுதி வரை தனக்கு அருகிலேயே இருக்குமாறு புரட்சித் தலைவர் பார்த்து கொண்டதற்கான புகைப்படமும் கூட. காவல் துறை பாதுகாப்பு இருப்பினும் ஆரம்பகால தனது கரடு முரடான அரசியல் பயணத்தில் தோள் கொடுத்து துணை நின்ற மெய்காப்பாளர்களை இறுதி வரை மறவாது தன்னுடனேயே இருக்குமாறு பார்த்து மனித நேயத்தின் மறுபதிப்பு ஆக திகழ்வதால் தானே அவர் மனித புனிதர் எம்ஜிஆர். காரணம் பிறரை போன்று பின்னர் தனக்கு கிடைக்கும் உயர் அந்தஸ்தை மனதிற் கொண்டு வந்த வழியை மறப்பவர்கள் போல் அல்லாது தனது ஆரம்பகால வழி தடத்தை மறவாதவர் அல்லவா புரட்சித் தலைவர்.
நன்றி : Kp. கோவிந்தராஜ்......... Thanks...
orodizli
20th April 2020, 05:38 PM
எம் ஜி ஆர் ஒரு நடிகன் மட்டுமே என்றிருந்தால் மற்ற சிவாஜி கணேசன் கமல் ரஜினி விஜய் ஆஜித் போல் என்றால் என்றோ வேறு ஒரு ஆக்ஸன் ஹீரோ வின் ரசிகனாக மாறி இருப்போம்
முப்பது ஆண்டுகள் கழிந்தும் அவர் ரசிகர்கள் மாறாமல் பக்தர்கள் ஆகினதும் புது புது எம் ஜி ஆர் பக்தர்கள் உருவாகுவதும் ஏன் என்றால்
எம் ஜி ஆர் ஒரு வள்ளல்
எம் ஜி ஆர் ஒரு மனிநேயகடல்
எம் ஜி ஆர் கருணையாளன்
எம் ஜி ஆர் ஒரு மாவீரன்
எம் ஜி ஆர் ஒரு சிறந்த முதல்வர்
எம் ஜி ஆர் ஒரு அதிசயபிறவி
எம் ஜி ஆர் ஒரு சகலகலாவல்லவன்
எம் ஜி ஆர் ஒரு சக்தி எவராலும் வெல்ல முடியாத சக்தி
எம் ஜி ஆர் ஒரு ஆக்க சக்தி
எம் ஜி ஆர் தனது எல்லாம் தமிழர்க்கு என வாழ்ந்தததால்
இப்படி சிறப்பு சக்தி உள்ளதாலே மற்ற நடிகர்கள் ரசிகர்களை விட எம் ஜி ஆர் பக்தர்கள் வேறுபட்டு எம் ஜி ஆரை கொண்டாடுகிறார்கள் உலகம் எங்கும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்........ Thanks...
orodizli
20th April 2020, 05:42 PM
#எது #நடந்ததோ #அது #நன்றாகவே #நடந்தது
"புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்"
"PURATCHI THALAIVAR DR.M.G.RAMACHANDRAN CENTRAL RAILWAY STATION"
யானைக்கவுனியில் (வால்டாக்ஸ் ரோடு) ஆரம்ப காலத்தில் வசித்துவந்த புரட்சித்தலைவர், அருகிலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தை தினசரி கடந்து சென்றாகவேண்டும்.
விடியற்காலையில் ரயில்களில் ஒலிக்கும் ஹாரன்கள் தான் வாத்தியாருக்கு, அலாரமாக இருந்திருக்கும்...
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வாத்தியார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டு தான் தனது திரையுலகப் பயணத்தைப் பற்றி கற்பனையில் செதுக்கியிருக்கிறார்...
முக்காலமும் உணர்ந்த வாத்தியாருக்கு, வருங்காலத்தில் தனது பெயரில் இந்த ரயில்வே ஸ்டேஷன் அழைக்கப்படப்போவது தெரியாமலா இருந்திருக்கும்...???......!!!....... Thanks...
orodizli
20th April 2020, 05:44 PM
#Vaathiar's #Workout
உடற்பயிற்சி என்றால் அது
வாத்தியார் தான்...
வாத்தியார் என்றால் அது
உடற்பயிற்சி தான்...
தன் இளம்பிராயத்திலிருந்து கடைசிவரை உடற்பயிற்சியில் அக்கறை செலுத்தினார்...
பட்டிக்காட்டுப் பொன்னையா என்ற இந்தத் திரைப்படத்தில் நடிக்கும்போது வாத்தியாருக்கு 56 years...
Awesome performance by our
#ULTIMATE #VAATHIYAR........ Thanks...
orodizli
20th April 2020, 05:45 PM
புரட்சி தலைவர் முதல்வராக இருந்த சமயத்தில் ,கோட்டை அலுவலக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பணி செய்ய லிப் டுக்காக காத்திருந்தனர் , லிப்ட் வந்தவுடன் அனைவரும் ஏறினர் புறப்பட தயாராகும் போது புரட்சி தலைவர் வந்து விட்டார் , மரியாதைக்காக அனைவரும் வெளியே வந்தனர் , அவர்களை நோக்கி தலைவர் "ஏன் நின்று விட்டீர்கள்" என்றார்
அதற்கு அவர்கள்" நீங்கள் போங்கள் , நாங்கள் பின்னர் வருகிறோம்" என்றனர் தயக்கத்துடன் , அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட தலைவர் "நானும் அரசு ஊழியன் தான் மக்கள் என்னை ஐந்து வருஷம் ஆள உத்தரவிட்டிருக்கிறார்கள் , ஆனால் நீங்களோ58 வயது வரை அரசு ஊழியர்கள் , வாருங்கள் அனைவரும் லிப்டில் செல்வோம்" என அனைத்து ஊழியர்களுடன் லிப்டில் சென்றார் புரட்சி தலைவர் .(இந்த செய்தியை சொன்னவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற , இன்றளவும் திமுக கட்சிக்காரர் )....... Thanks...
orodizli
20th April 2020, 05:48 PM
அழகு கலையே..
அன்பின் நிலையே..
தர்மத்தை காக்கவே
தரணியில் மலர்ந்த எங்கள்
தர்ம தேவனே..
பாரோர் போற்றி வணங்கும் எங்கள்
பரங்கிமலையாரே..
மக்களோடு மக்களாய்
மக்களின் தொண்டராய்
மத்தியில் பவணி வந்த எங்கள்
மன்னாதி மன்னனே..
ஒவ்வொரு உள்ளத்திலும்
ஒளிரும் திருவிளக்கே..
அன்னையின் அரவணைப்பு போல்
அகிலத்தாரையும் உம் அன்பால்
அணைத்துக்கொண்டு , எங்களின்
இதயத்தில்
ஆளும்
ஆளவந்தாரே..
புவி மயங்கும்
புதல்வரே.. எங்கள்
புரட்சித்தலைவரே.. எங்களின்
இதயத்தை ஆளும்
நிரந்தர முதல்வரே..
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காணலாம் என்றார் உம் அண்ணன்..
ஆனால்., எங்கள்
மன்னவன் சிரிப்பிலே தான்
மக்கள் மகிழ்ச்சி ஆழியில் நீந்தினார்கள்..
எங்களின்
உள்ளத்தில் வாழும்
உலகாளும் காவலரே..
உள்ளம் மகிழ்ந்து
உமது கொள்கைகளை போற்றுவோம்..
எத்தனை தலைமுறை வந்தாலும்
எங்கள் தானைத்தலைவன் வாத்தியாரின்
புகழினை போற்றுவோம்..
என்றும் எங்கள் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் புகழ் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கும்..!!!
#புரட்சித்தலைவரின்
பக்தன்..
#Subash_KmsBoss............ Thanks...
orodizli
20th April 2020, 05:58 PM
அப்படிப் போடு!!
--------------------------
இது எம்.ஜி.ஆரின் ஒரு புதிய கோணத்தைக் காட்டும் பதிவு!!
அது 1982!!
ஏ.வி.எம்மில் ஒரு பேட்டியை முடித்துக் கொண்டு அடியேன் கிளம்பும்போது அந்த நடிகரை சந்தித்தேன். நாடகம் வசனம் திரைப்படம் என்று அப்போது பட்டையைக் கழட்டிக் கொண்டிருந்த அந்தப் பிரபல நடிகருடன் உரையாடினேன்.
கோடம்பாக்கத்தில் உங்களை இறக்கி விடுகிறேன் என்று சொன்ன அந்த நடிகர்,,தம் காரில் என்னை ஏற்றிக் கொண்டார்!!
காரில் பல விஷயங்களுக்கு இடையில் எம்.ஜி.ஆர் பற்றிப் பேச்சு வந்தது!!
உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்திருக்கிறீர்களா என்று அந்த நடிகர் என்னிடம் கேட்டார்.
அதைப் பார்க்காதவங்க இருக்க முடியுமா? எனக் கேட்ட என்னிடம் அந்தப் படத்தின் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு அவர் சொன்னதை இங்கு அப்படியே தருகிறேன்.
ரூங் மேட்டா ராக் என்ற அந்த அயல் நாட்டு நடிகை எம்.ஜி.ஆருடன் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலை பாடிவிட்டு,,,தமது காதலை எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்க வருபவர்--எம்.ஜி.ஆருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை அறிந்து கேவி அழுவார்!!
அப்போது அந்த நடிகையைத் தேற்றும் எம்.ஜி.ஆர் வசனம் தான் இந்தப் பதிவின் ஹீரோ??
அம்மா! இந்த உலகத்துலே நாம் எதிர்பார்க்கறது எல்லாமே நடந்துடும்ன்னு நாம எதிர்பார்க்கக் கூடாது. அதற்காகக் கவலைப்பட்டோ கண்ணீர் விட்டோ ஒரு பயனும் இல்லை.
இயற்கையின் முடிவுக்கு நாம எல்லோருமே கட்டுப்பட்டுத் தான் தீரணும்!!
எப்பவுமே முடிந்து போன ஒண்ணில் தொடக்கத்தை நாம் தேடக் கூடாது!!
இப்போது அந்த நடிகர் இப்படிக் கூறி முடிக்கிறார்!
ஒரு காதல் ஸீன்! அதுலே எல்லாருமே காதலைப் பத்தி தான் அந்த இடத்துலே குறிப்பிடுவாங்க! அது தான் லாஜிக் கும் கூட!!
அந்த இடத்துலே கூட நம்ம வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவுரையை எம்.ஜி.ஆர் சொன்னது எப்பேர்ப்பட்ட விஷயம் சார்!! அதிலேயும் அதைச் சொல்லும்போது ரொம்ப நிதானமாகவும் இயல்பாகவும் எம்.ஜி.ஆர் சொல்லற விதம் என்னை ரொம்பவேக் கவர்ந்துடுத்து!!
அந்த நடிகர் சொன்ன பிறகு நான் அந்தப் படத்தில் அந்த ஸீனைப் பார்த்தபோது அவர் சொன்ன விளக்கத்தின் நிதர்சனம் எனக்குப் புரிந்தது!!
அந்த நடிகர்??
திரு எஸ்.வி.சேகர்!!
ஒரு நடிகரை நமக்குப் பிடிக்கும் என்பதாலேயே எல்லா ஸீன்களிலும் கூச்சல்--கைத்தட்டல் -விசில் சகிதம் நாம் உற்சாகப் படுவதைக் காட்டிலும் ஒவ்வொரு ஸீனையும் நுணுக்கமாக உள் வாங்க வேண்டும் என்ற படிப்பினையையும் நான் கற்றுக் கொண்டேன்.
நம் எஸ்.வி.சேகரின் இப்போதைய செல் ஃபோன் ரிங்--டோன்??
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்!!!
திரு எஸ்.வி சேகர் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் என்பது நமக்குக் கொள்ளை இன்பமல்லவா??
அவர் எம்.ஜி.ஆர் பற்றி இப்படி ஆய்ந்து சொன்ன விஷயங்களை அவ்வப்போது அடியேன் பதிவிடுவேன்!
இன்றைய ஹீரோக்கள்--
பன்ச் டயலாக் பேசுகிறார்கள்!1
ஆனால் எம்.ஜி.ஆர் மட்டுமே--அவர் பேசிய--
டயலாக் எல்லாமே பன்ச் ஆக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்??
உண்மை தானே உறவுகளே???......... Thanks...
orodizli
20th April 2020, 05:58 PM
லண்டனில் எம் ஜி ஆர் விழா
உலகம் எங்கும் எம் ஜி ஆர்
பொன்மன செம்மல் அல்லவா எம் ஜி ஆர்
பொற்க்கால ஆட்சி தந்த மன்னன் அல்லவா எம்ஜிஆர்
சத்தான சத்துணவு தந்த முதல்வர் அல்லவா எம் ஜி ஆர்
தனகென எதுவும் சேர்க்காதவர் அல்லவா எம் ஜி ஆர்
மனிதநேயம் மிக்கவர் அல்லவா எம் ஜி ஆர்
எட்டாம் வள்ளல் அல்லவா எம் ஜி ஆர்
வீரமிக்க வெற்றி வீரன் அல்லவா எம் ஜி ஆர்
தனதெல்லாம் தமிழனுக்கு தந்ததவர் அல்லவா எம் ஜி ஆர்
சேரகுலத்தில் உதித்து தமிழர் தங்க நிலவானர் அல்லவா எம் ஜி ஆர்
ஜாதி மதம் கடந்தவர் அல்லவா எம் ஜி ஆர்
தங்கமேனி காந்தமாக மக்களை கவர்ந்தவர் தங்கம் காந்தம் ஆன அதிசயம் நிகழ்த்தியவர் அல்லவா எம் ஜி ஆர்
தமிழன் அடையாளம் தமிழன் வீரம் தமிழன் வெற்றி எல்லாம் எம் ஜி ஆர் எனும் மூன்று எழுத்தில் காட்டியவர் அல்லவா எம் ஜி ஆர்
அதனால் உலகம் எங்கும் எம் ஜி ஆர் புகழ் கொடி பறக்குகிறது
வாழ்க எம் ஜி ஆர் புகழ்........ Thanks...
orodizli
20th April 2020, 05:59 PM
உலகிலுள்ள
எந்த நடிகருக்கும் கிடைக்காத அரிய பெருமை நம் தலைவருக்கே.
நம் தலைவருக்கு மட்டுமே நூற்றாண்டுகள் முடிந்து இன்றும் பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.
இதற்கு காரணம் மக்கள் தலைவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக நேசித்து வந்த ஒரே காரணம்தான்......... Thanks...
orodizli
20th April 2020, 06:00 PM
எங்களின் இதயத்தில் வாழும் வாத்தியாரே...!
மன்னா - வா...!!
எழுந்து - வா...!!!
எங்களின் இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடும்
உன் நினைவுகளை...!
உயிருக்குள் அடக்கிவைத்து
ஊமையாக அழுகிறோம்...!
சுவையின்றி
சுவைக்கும் நாவினைப்போல் நீயின்றி
திகைக்கும் நாங்கள் இங்கே...!
எங்களின்
நெஞ்சுக்குள் உம் பிரிவின் நினைவு
நெருப்பாய் எரிகிறது வாத்தியாரே...!
கண்ணுக்குள் எங்களின்
கண்ணீர் உப்பாய் கரிக்கிறது வாத்தியாரே...!
உள்ளத்துக்குள் எங்களின்
உண்மையுணர்வு வலிக்கிறது
வாத்தியாரே...!
எனக்குள்
எத்தனை ஆயிரம்
இன்பங்கள்
இருந்தபோதும் ...!
உம்மை காணாத என்
இருவிழிகள்
இருந்தும் ஓர் குருடனாகவே உணர்கிறேன் வாத்தியாரே..!
கணவை சுமக்கும்
கண்கள் தான்
கண்ணீரையும் சுமக்கிறது...!
உம் கொள்கைகளை சுமக்கும்
எம் இதயம்
உம் பிரிவை சுமக்க மறுக்கிறது
மன்னாதி
மன்னா - வா..!!!
என்றும் நாம் வணங்கும் இதய தெய்வம்
பொன்னார் மேனியன்
பொன்மனச்செம்மலின் புகழ்
ஓங்கி
ஒலித்துக் கொண்டு இருக்கும்..!!!....... Thanks...
orodizli
20th April 2020, 06:01 PM
#Women's #Day #Special 2
#புதுமுகம்...#புகழ்முகம்
ஒரு துறையில் அறிமுகமாகி, புகழ் பெற்று விளங்குபவரை, 'இவர் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்':என்று கூறுவதுண்டு...
ஆனால் நம்ம லதாம்மா அப்படியல்ல...
உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியத்தில் #பொன்மனச்செம்மலின் #பொற்கரங்களினாலேயே #குட்டப்பட்ட #பேறுபெற்றவர்...
உ.சு.வா வில் புதுமுகமாக அறிமுகமாகி...
வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில் புகழ்முகமாக மிளர ஆரம்பித்தவர்...
கடந்த ஆண்டு அறிமுகமான நடிகைகளில், நடிப்பால் நம்மை மிகவும் கவர்ந்த லதாவை 'பேசும்படம்' 1973 ம் ஆண்டின் சிறந்த புதுமுகமாக அறிவித்துக் கௌரவிக்கிறது...
"லதாவிற்கு வந்த வாய்ப்பும் வரவேற்பும் இவரது திறமையின் உயர்வினால் தான்...பண்போடு பழகவும், பொறுப்போடு பேசவும் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்ட லதா அவர்கள் 74ன் புகழ்முகமாக ஒளிவீச வாழ்த்துகிறோம்..." என்றும் தமது வாழ்த்துக்களில் பிரசுரித்தது...
இன்றளவும் அதே பண்பை கடைபிடித்துவரும் நம்ம லதாம்மாவைப் பாராட்ட வார்த்தைகளேது...!!!
புரட்சித்தலைவர் #வாத்தியாரின் #மாணவின்னா சும்மாவா!! .......... Thanks...
orodizli
20th April 2020, 06:02 PM
#வாழ்வாதாரத் #திட்டங்கள்
பொன்மனச்செம்மலின் திட்டங்கள் யாவுமே தொலைநோக்குப் பார்வையுடனும், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரத்தையும் மனதில் கொண்டு அமைக்கப்பட்டன... என்பதை இளைய சமுதாயத்தினர் இக்காணொளியைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்...
வாழ்க்கையில் தான் சந்தித்த இன்னல்களையும், தானே நேரில் சென்று மக்களின் குறைகளை ஆராய்ந்தும், அத்திட்டங்களை செயல்படுத்தும் போது, தான் மக்களோடு மக்களாக இணைந்தும் செயலாற்றியவர் நமது புரட்சித்தலைவர்...
பொன்மனச்செம்மலின் உணர்வுப்பூர்வமான இந்த அரிய காணொளியை அவசியம் காணவும்.......... Thanks...
orodizli
20th April 2020, 06:03 PM
#கருணையின் #எல்லை...
துன்பப்படுவோரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு உடனே உதவுவது பொன்மனச்செம்மலின் சிறந்த பண்பாகும்...
எம்ஜிஆர், தானே வலியப் போய் உதவிகள் செய்வார் என்பதால், திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு #பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கினார்.
பொன்மனச்செம்மல் அவர்களின் கருணை மனிதர்களிடம் மட்டுமல்ல...ஓரறிவு ஜீவன்களிடமும் எந்தளவு இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்றே சான்று...
ஒருநாள் தேவர் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, மேக்கப் அறையிலிருந்து எம்ஜிஆர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. தேவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, நேரே எம்ஜிஆரைத் தேடிப்போய்விட்டார்.
அங்கே, எம்ஜிஆர், பாத்ரூமுக்குள் இருந்தார். வெகு நேரம் காத்திருந்துவிட்டு, பின்பு கதவைத் தட்டிவிட்டார். சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் சிரித்தபடி ஏதோ சாதித்துவிட்டதைப் போல வெளியே வந்தார்.
தேவரைப் பார்த்து, “ஒரு வண்டு தண்ணிக்குள்ள விழுந்துகிடந்தது. எவ்வளவோ முயற்சிபண்ணியும் அதை வெளியே கொண்டுவர முடியல. கடைசியில் கையைவிட்டு எடுத்து வெளியில் விட்டுட்டேன். பாவம்ண்ணே அது. இப்பப் பறந்துபோயிருச்சு என்றார்.
தேவர் நொந்துகொண்டார். எத்தனை பேர் அங்கே காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் வண்டைப் பிடித்து வெளியே விட்டேன் என்கிறார்’’ அவர் ஒன்றும் சொல்லவில்லை. போய்விட்டார்.
இதுதான் #மனிதர்களுக்கும் #பொன்மனச்செம்மலுக்கும் உள்ள உள்ள வேறுபாடு.
எம்ஜிஆருக்கு அந்த வண்டு சாகக் கூடாது என்பது தான் மிக முக்கியமாக இருந்தது...
மற்ற விஷயங்களை விட.......... Thanks...
orodizli
20th April 2020, 06:04 PM
#மொய் #விளக்கம்
1967 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு மக்கள்திலகம் சென்றிருந்தார். மணமக்களை வாழ்த்திப் பேசும் போது ஒரு கேள்வியைக் கேட்டார்...
"எல்லோரும் மொய்ப்பணம் எழுதும் போது 11, 21, 51, 101 என்று பக்கத்தில் ஒன்று கூட்டி எழுதுகிறார்கள்..."
ஏன் தெரியுமா ? என்று கேட்டார்...
பல பேர் பலவிதமான விளக்கங்களைக் கூறினாலும் யாரும் சரியான விளக்கத்தைக் கூறவில்லை...
இதனால் மக்கள்திலகமே தொடர்ந்தார்..
"10, 20, 50, 100 என்று எழுதும் போது கடைசியில் பூஜ்யம் வருகிறது. வாழப்போகும் தம்பதியினர் #வாழ்க்கையும் #பூஜ்யமாக #ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒன்றைக் கூட்டிக்கொள்கிறோம்...
திருமணத்திற்கு முன் பூஜ்யமாக இருந்திருந்தால், திருமணம் ஆன பின் ஒன்று கூடி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே ஒன்று என்ற எண்ணைச் சேர்க்கிறோம்...
வாழ்க்கை என்பது முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்காகவே 11,21,51,101 என்று நாம் மொய்ப்பணம் எழுதுகிறோம்..." என்றார்.
சின்ன விஷயமாக இருந்தாலும்...அதை வாத்தியார் சொல்லும் போது...அடடா...! என்ன ஒரு இனிமை...
அந்த விஷயத்துக்கே தனி அந்தஸ்து வந்துடுதுல்ல...
#கலக்குற #வாத்தியாரே....... Thanks...
orodizli
20th April 2020, 06:05 PM
#தெய்வத்திற்குத் #தெரியாததா
மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பு ... சிவாஜி, காளிதேவி சிலையின் முன் அமர்ந்து பாடுவதாகக் காட்சி...பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது...
மும்மரமாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத மின் கசிவினால் "செட்" தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. குழுவினர் அனைவரும் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பரிதாபமாக, அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த ஐந்து டெக்னீஷியன்கள் தீக்கு பலியாயினர்.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது... அவர்களது மனைவிமார்களும், முக்கிய உறவினர்களும் ஸ்பாட்டுக்கு வந்திருந்தனர்..குடும்பத்திற்காக கஷ்டப்படுபவர் போயிட்டாரேன்னு கதறினர்...சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்...புள்ள குட்டிங்களை எப்படி கரைசேர்ப்போம்னு புலம்பினர். இதைப் பார்த்து வருத்தமுற்ற உடனிருந்த டெக்னீஷியன்களும், குழுவினரும் தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவினர்...
இந்த ஸ்பாட்டுக்கு சிறிது தூரத்தில் எம்ஜிஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நடந்ததை விசாரித்தார். எல்லோருக்கும் இந்த துக்கத்திலும் சிறிது மகிழ்ச்சி...ஏனெனில் எம்ஜிஆர் வந்துட்டார்...கண்டிப்பாகணிசமான தொகையைக் கொடுத்து உதவுவாரென்று. ஆனால் #எம்ஜிஆர் #ஒரு #பைசா #கூடத்தராமல் கிளம்புகிறார். அனைவருக்கும் அதிர்ச்சி... 'கேட்காமலே உதவி செய்யற வள்ளலாச்சே...' மனிதநேயமிக்க எம்ஜிஆரா இப்படி...
ஏன் இப்படி நடந்துகொண்டார்..."
என்று அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த வருத்தம்...
மறுநாள் காலை, பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து அவர்களின் மனைவிமார்களுக்கும், முக்கிய உறவினர்களுக்கும் ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டு...
என்ன ஏதென்றறியாமல் அங்கு செல்கின்றனர்...
எம்ஜிஆர் அவர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் சிறுதொழில் தொடங்குவதற்காக கருவிகளையும், அதற்கான இடத்தையும், மூலதனத்தையும் அளிக்கிறார்...
வந்திருந்தவர்கள் உறைந்துபோய், 'அண்ணே! நீங்க நேத்து பணம் தராததுனால உங்கள தப்பா நெனச்சுட்டோம். எங்கள மன்னிச்சுடு சாமி' ன்னு கதறினர்... 'நீங்க நல்லா இருக்கணும் மவராசா' ன்னு வாழ்த்தினர்...
அப்ப கூட பொன்மனச்செம்மல் வாயைத் திறக்கவில்லை...வழக்கம் போல தன் (பொ)புன்சிரிப்பையே பதிலாக அளித்தார்...
#நம் #இறைவன் #இதயதெய்வத்துக்குத் #தெரியாதான்ன! #யாருக்கு #என்ன #செய்யணும்னு...?!?!?!........... Thanks...
orodizli
20th April 2020, 06:06 PM
#உலகம் #சுற்றும் #வாலிபன்... வெளியான நாள் இன்று...
46 ஆண்டுகள் ஆகிறது..கிட்டத்தட்ட என் வயது...
நவீனத் தொழில்நுட்பத்தில்...
விரைவில் தமிழகமெங்கும்...
#VAATHIYAR #RETURNS
அதென்னெமோ தெரியல...
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யுது...அதையெல்லாம் மீறி,
அந்தக் கஷ்டங்களின் தீவிரத்தைக் குறைத்து, அதை மறக்கச்செய்ய வாத்தியாரின் படங்களால் மட்டுமே முடியுது...
எப்படி வெயிலின் உக்கிரத்தை குடை குறைக்கிறதோ அதுபோல...
உ.சு.வா திரைக்காவியம் வந்து 45 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை நூற்றுக்கணக்கான முறை இதைப் பார்த்தபின்னரும் நமக்கெல்லாம் என்ன ஒரு எதிர்பார்ப்பு...
தியேட்டர்களில் இந்தப்படம் போடும்போது பாருங்க...
அமர்க்களத்தை...
வயதான எம்ஜிஆர் பக்தர்கள் கூட, இன்றைய இளைஞர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேக மாகவும், உற்சாகமாயிருப்பதையும் கண்கூடாகக் காணத்தானே போகிறோம்...
ஒவ்வொரு பக்தருக்கும் #அந்தளவு #உணர்வுப்பூர்வமான #பக்தி...
இப்பல்லாம் இதைபோல நெனச்சுக்கூடப் பார்க்கமுடியாது...
தனது ரத்தத்தின் ரத்தமான பக்தர்களை எந்தளவு சந்தோஷமா வெச்சுருக்காரு பாருங்க...கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் ... காலங்கள் கடந்தாலும் இது போன்ற உணர்வை, இந்த உலகில் வாத்தியாரைத் தவிர யாராலும் கொடுக்கவே முடியாது...
நெனச்சாலே புல்லரிக்குது...
STICKERS உபயம் : அதிதீவிர எம்ஜிஆர் பக்தர் திரு Chandrasekar Iyer...Thank u so much sir
-------------------------------------------------------------------
இந்த ஸ்டிக்கரை சந்திரசேகரன் சார் எடுத்து வரும் போது நாங்கள் myself and Gopala Krishnan sir அவரை சந்தித்தோம்.
அதை நாங்கள் கண்டு ரசித்து கொண்டிருந்தபோது
அருகில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து விட்டார்.
உடனடியாக அதில் ஒரு ஸ்டிக்கரை வாங்கி சென்று ஆட்டோவில் ஒட்டிச்சென்றார் .
ஆனால் அப்போது தான் தூறல் போட்டதால் ஆட்டோ கண்ணாடி ஈரமாக இருந்ததால் பிறகு ஒட்டிக்கொள்வதாக கூறிவிட்டார்.
என்ன அருமையான சந்திப்பு...
தலைவருக்கு பக்தர்கள் எங்கும் பரவி உள்ளார்கள்.
வாத்யாரே உந்தன் புகழை என்னவென்பது............... Thanks...
orodizli
20th April 2020, 06:07 PM
மக்கள் திலகத்தின் மாண்பு
'எங்க வீட்டுப் பிள்ளை' நூறாவது நாள் வெற்றி விழா மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டரில் நடந்தது.
அந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை சிறுவன் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ஆர்வத்தில் எம்.ஜி.
ஆரின் கையை பிடித்து விட்டான்.
எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்காக பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அந்த பையனின் கையைத் தட்டி விட்டார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். அவரை முறைத்து பார்த்து விட்டு, அந்த சிறுவனை அருகில் அழைத்து அவனுடைய கையைப் பிடித்து குலுக்கி விட்டு திரும்பினார்.
அந்த பையன் தன் கையை பார்த்த போது அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தது.சுற்றியிருந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர் அப்பையனின் கையை குலுக்கியது மட்டும் தான் தெரிந்தது.அருகில் நின்று கொண்டு இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை புரிந்தது.
('இரு பெரும் திலகங்கள்' என்ற நூலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் வி.என்.சிதம்பரம் எழுதியது.)........ Thanks...
orodizli
20th April 2020, 06:08 PM
அருமையான பதிவு HM Sir. பெண் குழந்தைகள் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் என்பது அவர் தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி அவர்கள் கல்வித்துறையில் அரசு மானியம் பெரும் பள்ளி கூடம் மற்றும் கல்லூரியை நடத்துவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு நீச்சல் தற்காப்பு கலையாக சிலம்பம் ஆகியவற்றை அவரே கற்றுக் கொடுத்திருக்கிறார். இதை இதய தெய்வத்தின் வளர்ப்பு மகள் மதிப்பிற்குரிய திருமதி கீதா மேடம் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்த போது அவர்களே கூறியது. யாருக்கும் இதுவரை தெரிந்திருக்காத ஒன்றையும் கூறினார். ஷுட்டிங் வெளியூர் செல்லாம் இருந்தாலும் விருந்தாளிகள் யாரும் வரவில்லை என்றால் ஞாயிறு அன்று ராமாவரம் தோட்டத்தில் இதய தெய்வம் சமையல் தானாம். அவர் சமையல் செய்யும் முறையை கேட்டவுடன் நானே அசந்து போனேன் ஏனென்றால் என் அம்மா எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறார். அதற்கேற்ற பதிவு வரும் போது பிறகு கூறுகிறேன்......... Thanks...
orodizli
20th April 2020, 06:12 PM
ஒவ்வொரு இரசிகர் நிலையில் தன்னை ஆட்படுத்தி அவர் அன்பை உணர்ந்து மகிழ்விக்கும் மகான் தான் எம். ஜி.ஆர் அவர்கள்,,,,.... புகழின் உச்சியில் இருந்த போதும் மற்றும் முதல்வர் ஆக இருந்த போதும் மாறாதவர்.......... Thanks...
orodizli
20th April 2020, 06:13 PM
#தாயாகி #நின்றாய்
பெரியார் நூற்றாண்டு விழா...
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெற்றது...
அந்த விழா ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் ஒரு பெண்மணி தன் குழந்தைக்குப் பெயர் வைக்க எம்ஜிஆர் அருகில் வர அந்த நேரம் பார்த்து தேசியகீதம் ஒலித்தது...குழந்தை 'வீல்' என்று அழ ஆரம்பித்து விட்டது...
உடனே எம்ஜிஆர் சமயோசிதமாக அந்தப் பெண்ணிடமிருந்து அவசரமாக குழந்தையை வாங்கி அந்தம்மாவிடமிருந்த பால்புட்டியை குழந்தையின் வாயில் வைத்து தன் கைகளில் ஏந்தியவாறு தேசியகீதம் முடியும் வரை நின்றார்...
அதுவரை குழந்தையும் அழாமல்
சமத்தாக இருந்தது...
அந்தக் குழந்தையாக நான் இருந்திருக்கக் கூடாதா ...! ......... Thanks...
orodizli
20th April 2020, 06:14 PM
#வாத்தியார் #பண்ணிய #மெர்சல்
கலைவாணர் மறைந்தபோது சென்னை தி.நகரில் இருந்த அவரது வீட்டில் ஏராளமான மக்கள் கூடிவிட்டனர்...
நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது...
அப்போது அங்கு பொதுவுடமை சிங்கம், இலக்கிய மன்னன் என்று போற்றப்பட்ட ஜீவா என்கிற திரு.ப.ஜீவானந்தம் இறுதி மரியாதை செலுத்தவந்தார்...
அளவுக்கதிகமான கூட்டம். ஜீவா அவர்களால் உள்ளே வரமுடியவில்லை. என்ன செய்வதென்றறியாமல் தத்தளித்தார்...
இதைக் கவனித்த, கலைவாணரின் உடலுக்கு அருகே இருந்த #எம்ஜிஆர் #ஓடிப்போய் #காம்பவுண்டு #சுவர் #மேல் #அசால்ட்டா #ஒரு #ஜம்ப்... அப்படியே நின்று ஜீவாவை, தன் ஒரு கையால் சும்மா அலாக்காகத் தூக்கி, உள்பக்கமாக இறக்கிவிட்டார்...
அதைப்பார்த்த மக்கள் துக்கவீடு என்பதையும் சிலவிநாடிகள் மறந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்...
சினிமாவில் மட்டுமல்ல, "நிஜவாழ்விலும் ஹீரோ நம்ம வாத்தியாரு..."
வாத்தியார்னா சும்மாவா !!!
#நீ #க்ரேட் #வாத்தியாரே...!!!
......... Thanks...
orodizli
20th April 2020, 07:51 PM
அதிமுக எம்ஜிஆர் எனும் எஃகுனால் கட்டிய கோட்டை அதனால் தலமைமையில் எவர் என்று பாராமல் ஜெயிக்கிறது அன்று ஜெயலலிதா ஊழல் வழக்கு போல் இல்லாமல் இன்று ஆட்சி நடக்கிறது ஜெயலலிதா தலைமை இலாலாமல் அன்று ஒற்றுமையாக இருந்திந்தால் இன்னும் நல்ல பெயரோடு கட்சி இருந்திருக்கும் ...... Thanks...
oygateedat
20th April 2020, 07:51 PM
From 20.3.2020 to 20.4.2020
Sunlfe
Murasu
Jaya
Mega
Vasanth TV channels.
MGR's 62. MOVIES TELECASTED.
1. Adimaipenn
2. Namnadu
3. Mattukkaravelan
4. En Annan
5. Thedi vantha mappillai
6. Engal thangam
7. Kumarikottam.
8. Rikshakaran
9. Neerum neruppum.
10.oru thai makkal.
11.sange muzhanku.
12.Nalla neram
13.Raman thediya seethai
14.Naan yen PIRANTHEN.
15.Idhaya veenai
16.ulagam sutrum valiban
17.pattikattu ponniah
18.urimai kural
19.Ninaiththai mudippavan
20.Naalai namadhe.
21.Idhayakani
22.Pallandu VAZHGA.
23.Neethikku thalai vananku.
24.uzhaikkum karangal
25.oorukku uzhaippavan.
26.Navarathinam.
27.kadhal vaganam
28.kanavan
29.Puthiya bhoomi
30.kannan en kadhalan
31.Ther tiruvizha
32.kudiyiruntha koil
33.Ragasiya police 115
34.vivasayi
35.kavalkaran
36.Arasakattalai
37.Thaikku thalaimagan
38.Petralthan pillaya
39.Thanipiravi
40.Chandrothayam
41. Mugarasi
42. Naan anayittal
43.Anbe vaa
44.Enga veettu pillai
45.Ayirathil oruvan
46. Kalangarai vilakkam
47. Kannithai
48. Thazhampoo
49. Thayin madiyil
50. Padakoti
51.Thozhilali
52.Deiva thai
53.panakkara kudumbam
54.vettaikaran
55.Dharmam thalai kakkum
56.Periya idathu penn
57.Neethikku pinpasam
58.Thayaikathathanayan
59.Tirudathe
60.Thai solla thattathe
61. NALLAVAN VAZHVAN
62.qulebagavali
63 anandha jothi
64 koduthu vaithaval
65 vikramathithan
Mannadhi mannan
Alibabavum 40 tirudargalum
Nadodimannan
Mahadevi
Total 69 movies.
Thanks to MR.Vinod, Bangalore
orodizli
20th April 2020, 07:55 PM
எம்ஜிஆர் எனும் எழுத்து மீது மை சிந்தினாலே தாங்க மாட்டார்கள் எம்ஜிஆர் பக்தர்கள் இப்படி பட்ட பக்தர்கள் கோடிகணக்கில் அன்றும் இன்றும் இருப்பதால் தான் எம்ஜிஆர் ஒரு தனிப்பிறவி , அபூர்வப்பிறவி, பேரற்புதப்பிறவி...........என்பது... Thanks.........
orodizli
20th April 2020, 08:01 PM
இந்த உலகத்தில் நம் புரட்சிதலைவருக்கு போல உண்மை ரசிகர்கள் வேறு எந்த நடிகருக்கும் இல்லை.
அவரின் வரலாற்று வெற்றிகளுக்கு அன்று முதல் இன்றுவரை அவரின் தடம் மாறாத ரசிகர்களே காரணம்.
இன்று அளவும் அவர் புகழ் நிலைத்து நிற்க தலைவரின் நல்ல பண்புகளும் அவரின் தன்னலம் அற்ற செயல்களும் அவருக்காக எதையும் இழக்க துணிந்த ரசிகர்கள் காரணம் ..
எம்ஜியார் ரசிகர்கள் என்று தலை நிமிர்ந்து சொல்லுவோம்.
வாழ்க எம்ஜியார் புகழ். வாழ்க அவர் ரசிகர்கள்
நன்றி...தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி....
இன்றைய செய்தி.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.. அவர்கள் எப்பவும் உபயோகிக்கும் ஹார்மோனிய பெட்டி இசை கருவியை அவருக்கு பரிசாக அளித்தவர் நம் புரட்சிதலைவர் என்பது இதுவரை அறியாத புதிய செய்தி ஆக இருக்க கடவது...நன்றி
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு...No man can serve to his masters.... என்று...அதாவது ஒரு மனிதன் இரண்டு துறைகளில் பிரபலம் ஆவது நடக்காத செயல் என்று பொருள்.
ஆனால் சினிமா அரசியல் இரு துறைகளிலும் அவர் வெற்றி அடைய அவரின் உழைப்பும் உண்மை தன்மையும் அவரின் ரசிகர்களின் உழைப்பும் , அதோடு இறைவன் அருட்பார்வையும்
இந்த பழமொழியை தகர்த்து எறிந்தது வரலாறு............ Thanks.........
orodizli
20th April 2020, 08:17 PM
1963 ம் வருடம் மக்கள் திலகத்திற்கு மொத்தம் 9 படங்கள் வெளியானது. அதில் 3 படங்கள்
ஜனவரி,பிப்ரவரியில் வெளியானது. ஜனவரி 11ல் பணத்தோட்டம், பிப் 9 ல் கொடுத்து வைத்தவள், பிப் 22 ல்
தர்மம் தலைகாக்கும் முதலானவை.
இந்த மூன்று படங்களும் சென்னையில் 9 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த போது வெளியான விளம்பரம்தான் இது.. இந்த மூன்று படங்களுமே சென்னையில் எம்ஜிஆர் பிக்சர்ஸ் வெளியீடுகள்.
ஒன்றன்பின் ஒன்றாக வந்தாலும் மூன்று படங்களுமே வெற்றிக்கொடி நாட்டின.
பணத்தோட்டம் சென்னையில் 84 நாட்களும், கொடுத்து வைத்தவள் சென்னையில் 91 நாட்களும், தர்மம் தலைகாக்கும் சென்னையில் 70 நாட்களும் இலங்கையில் 100 நாட்களும் ஓடி.யது.
எம்ஜிஆருக்கு ஒன்றன்பின் ஒன்றாக படங்கள் வந்தால் எந்தப்படமும் ஓடாது என்று கூறியவர்கள் வாயடைத்துப் போனார்கள். மாற்று நடிகர் படம் ஏதாவது ஒரு தியேட்டரில் 75 நாட்கள் ஓடினால் போதும் , ரசிகர்கள் ஒன்று கூடி படத்தை 100 நாட்கள் ஓட்டி முழுபக்க விளம்பரம் கொடுத்து விடுவார்கள்.
அவர்கள் படம் 100 நாட்கள் பெறும் வசூலை எம்ஜிஆர் படங்கள் 5 வாரங்களிலே பெற்று விடும் என்பதே விநியோகஸ்தர்கள சொல்லும் உண்மை.
ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய படங்களை தவிர்த்து பார்த்தால் 100 நாட்கள் ஓடிய படங்கள் மிகசொற்பமே. எத்தனை நாட்கள் தியேட்டரில் படம் இருந்தது என்பது முக்கியமில்லை. அது எப்படி ஓடியது என்பதை உணர்ந்தால் படத்தின் வெற்றி புரிந்து விடும்......... Thanks SKR.,
orodizli
20th April 2020, 08:19 PM
அது தெரிந்தது தானே சகோ. புரட்சி நடிகர் படங்கள் இயற்கையான முறையில் ஓடிய விபரங்களை எல்லோரும் அறிவர். மாற்று நடிகர் படங்கள் 50 நாட்கள் ஓடி விட்டால் போதும். அதை எப்பாடுபட்டாவது டிக்கெட்டுகள் கிழித்தே 100 நாட்கள் ஓட்டுவதற்கு எதுவாக மவுண்ட் ரோட்டில் தியேட்டரேயே அவர்கள் வாங்கி ஓட்டியதே அனைவரும் அறிந்த ஒன்று தானே?!...... Thanks...
orodizli
20th April 2020, 08:44 PM
மக்களின் நேரடி தொடர்பாளர், மக்களின் நேசக்கரம், மக்களின் ஏழைப்பங்காளன், மக்களின் இதய தொடர்பாளர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் பற்றாளர், மக்களின் தேவையை புரிந்தவர், மக்களின் பசியைப் போக்க துடித்தவர், மக்களின் துன்பத்தை போக்க நினைத்தவர், மக்களின் கண்ணீர் துடைக்க வந்தவர், மக்களின் எண்ணத்தை புரிந்தவர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் தேவையை அரிந்தவர், மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர், மக்களுக்காக வருபவர், மக்களோடு மக்களாக வாழ துடிப்பவர், மக்களுக்காக சேவை செய்தவர், சதா மக்களை நினைப்பவர், மக்களோடு மக்களாக உறைந்துச் செல்பவர், மக்கள்திலகம் ஆனவர், மக்கள் என்ற சொல்லுக்குச் சொந்தமானவர், உலகையே காக்க துடிப்பவர், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர், புரட்சித் தலைவர் என்று போற்றப்பட்டவர்.... நம் குலதெய்வம் ஆனவர், முற்றுப்புள்ளி அற்றவர், நம்மோடு எப்போதும் பயணம் செய்பவர், நாம் வாழும் வாழ்க்கைக்கு அழகு சேர்த்தவர், நாம் வாழும் வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர், நம்மை புரிந்து கொண்டவர், நம்மை தெரிந்து கொண்டவர், நம்மில் கலந்தவர், இவையெல்லாம் தற்போது வரை நடந்தவை........... Thanks.........
orodizli
20th April 2020, 09:00 PM
வரலாற்றில் 15 நவம்பர் 1983 முதல்வர் #எம்ஜிஆர். சட்டமன்ற விவாத்தில் அளித்த பதில்..
பழ.நெடுமாறன் 1000 பேருடன் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில்..
"நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிதான் இருக்கிறதா?
ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.
அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?
அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்;
ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது;
வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.
உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம்"
நன்றி துரை வேலுமணி.......... Thanks...
orodizli
20th April 2020, 09:54 PM
டைரக்டர் K சங்கர் இயக்கத்தில்,ஒரே சமயத்தில், சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணியும், தலைவர் நடித்த பணத்தோட்டம்,படப்பிடிப்பும் நடைபெறுகின்ற சூழல் ஏற்பட்டது.
காலை7 மணியில் இருந்து 1 மணி வரை ஆலயமணி படப்பிடிப்பு, மதியம் 2 மணியில் இருந்து இரவு 9, மணிவரை பணத்தோட்டம் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது,
ஒரு நாள் காலை ஆலயமணியின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மதியம் 2 மணிக்கு பணத்தோட்டம் படப்பிடிப்பிற்கு வந்த K சங்கர் அவர்கள்,படப்பிடிப்பை ஆரம்பித்தார், எம் ஜி ஆர் நடிக்க ஆரம்பித்தார், ஏனோ தலைவர் நடித்த நடிப்பில் இயக்குனர் சங்கருக்கு திருப்தியில்லை, டேக் 1,2,3, என்று 5 டேக்குகள் போய்க்கொண்டு இருந்தது,சாதாரணமாக தலைவர் படத்தில் ரெண்டாவது டேக்குக்கு மேல் எடுக்க எந்த டைரக்டரும் துணிய மாட்டார்கள், பெரும்பாலும் முதல் டேக்கே ஓகே ஆகி விடும்,அபூர்வமாக ரெண்டாவது டேக் அமையும். மூன்றாவது நான்காவது டேக் என்பதெல்லாம் எம் ஜி ஆர் அவர்களின் படங்களை பொறுத்த வரை நடந்ததே இல்லை, அப்படி இருக்க இவர் 5 டேக் எடுத்தும் திருப்தி அடையாத நிலையில் ஒன்ஸ் மோர் என இயக்குனர் கேட்க சுற்றி உள்ள அனைவரும் இயக்குனர் கே சங்கரையும் எம் ஜி ஆர் அவர்களையும் மாறி மாறி பார்க்க, புரட்சி தலைவர் புன்சிரிப்புடன் இயக்குனர் சங்கரை அழைத்து அவர் தோளில் கை போட்டு செட்டிற்கு வெளியே கூட்டி சென்று, என்ன பா காலையில் ஆலயமணி படப்பிடிப்பு நல்லபடியாக நடந்ததா?, என்று கேட்டவாறே, ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன் கேட்டுக்குங்க சங்கர், காலையில் அவர் கிட்ட எதிர்ப்பார்த்த நடிப்பெல்லாம் என்கிட்ட எதிர்ப்பார்த்தீங்கன்னா, கண்டிப்பா கிடைக்காது, அது மாதிரி சீன் எடுக்கணும்னு நீங்க நெனச்சீங்கன்னா இன்னிக்கு முழுக்க நீங்க எடுத்துட்டு இருக்க வேண்டியது தான், ஏன்னா நடிப்பில் என் பாணி வேறு,அவர் பாணி வேறு, முதல்ல அத புரிஞ்சுக்குங்க என்றார்.
எம் ஜி ஆரின் பலமே தான் யார் என்பதை அவர் சரியாக உணர்ந்திருந்தது தான் பல நுணுக்கங்களை சரியாக புரிந்து கொண்டு அவர் கையாளும் விதமே அலாதி. அன்று அவர் மனம் விட்டு பேசிய பிறகு தான் நான் செய்த தவறே எனக்கு புரிந்தது, அன்று அவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் தான் அடுத்தடுத்து எம் ஜி ஆரை வைத்து நான் எடுத்த படங்கள் வெற்றி அடைய காரணம் என்றுK சங்கர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
அதனால்தானோ என்னவோ,
தலைவரின் இரண்டாவது வெற்றித் தயாரிப்பான,
அடிமைப்பெண் படத்தை
டைரக்டர் சங்கரே இயக்கினார்---!
படம் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தது--!
அந்தப் படத்தில் இடம்பெற்ற
சூப்பர் பாடல் இது---!........... Thanks...
orodizli
20th April 2020, 10:00 PM
வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் :::
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதலானது. அதைப்போல ஆதிபகவன் என்னும் தெய்வமே உயிர்களின் முதலானது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
ஆனால் அறிஞர்களின் சிலரின் கருத்துப்படி. திருவள்ளுவரின் தாய் ஆதி என்றும் , பகவான் என்பவர் அவருடைய தந்தை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் தாயும் தந்தையுமே உலகத்தில் உயிர்களுக்கும் முதல் என்றும் பொருள் ஆகிறது. வாழும் மனிதர் ஒவ்வொருவரும் இதை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் தாய் திருமதி சத்தியபாமாவை தெய்வத்துக்கு நிகராகவே வைத்திருந்தார் என்பது உலகறிந்த உண்மை. தான் வாழ்ந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் தன் தாய்க்கு ஒரு கோயிலே கட்டியிருந்தார் அந்த உத்தம மகன். ஒவ்வொரு நாளும் அவர் வெளியில் செல்லும்போதும் கார் ஒரு நிமிடம் அந்தக் கோயிலின் முன் நிற்கும். வலதுபக்கம் திரும்பி தன் தாயின் திருவுருவத்தை அவர் வணங்கிய பிறகே கார் முன்னோக்கி நகரும்.
எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போதும் தாயே துணை என்று சொல்வார் . அதைப்போலவே எதையாவது எழுதும்போதும் தாயே துணை என்று காகிதத்தின் மேலே எழுதுவார். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது அதன் தொடர்பான முன் குறிப்புகளை எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் மீதும் தாயே துணை என்று தமிழ்நாட்டு முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எழுதிய முப்பத்தாறு குறிப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை.
நினைவழியா இரண்டரை வயதில் இறந்து விட்ட தந்தையாரின் திருவுருவப் படத்தையும் பூஜை அறையில் தாயின் படத்தோடு வைத்து வணங்கினார்.
தாயையும் தந்தையையும் சேர்த்து வணங்கியதால் தான் அவர் மக்களின் தலைவராக உயர்ந்தார். மற்றவர்களுக்கும் அவருடைய முக்கியமான அறிவுரை, தாயைப் பெருமைபடுத்துங்கள். தாயின் வயிறு எரியாமலும் தனது செய்கையால் தாயின் மனம் புண்படாமல் இருக்கும்படி நடந்து கொள்வது தான் ஒரு மகனுடைய மிகப்பெரிய கடமையாகும் என்பது தான்.
அதனால்தான் தன் தாயை பற்றி ஒரே வரியில் சொன்னார். நான் காணாத கடவுளை விட காணும் கடவுளைத்தான் கண்ணால் கண்ட என் தாயை தான் பெரிதும் மதிக்கிறேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க... Thanks...
orodizli
20th April 2020, 10:42 PM
புரட்சி நடிகர் நடித்த "குலேபகாவலி",திருச்சி - பிரபாத் தியேட்டரில்1974 வரை ஓடிய படங்களில் அதிக நாட்கள் பெரும் வசூலுடன் 166 நாட்கள் சாதனை கண்டது புரட்சி நடிகர் நடித்த "குலேபகாவலி". 25 வாரங்கள் வெள்ளிவிழா கொண்டாடினால் போனஸ் தரவேண்டி எடுக்கப்பட்டது.இணைந்த 5 வாரங்கள் தொடர்ந்து ராக்சி தியேட்டரில் ஓடி 201 நாட்கள் ஓடியது. மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.........
orodizli
20th April 2020, 10:54 PM
MGR filmography Film 19 (1948) Poster
1948ஆம் ஆண்டு வெளிவந்த எம்ஜியாரின் மூன்றாவது படம். ஜூபிடரின் தயாரிப்பில். பின்னாளில் ரிலீசாகியிருந்தால், டிஎஸ் பாலையாவுடன் புரட்சித் தலைவர் இணைந்து மிரட்டும் என்றெல்லாம் விளம்பரித்திருக்கக் கூடும். இதில் ஹீரோ பாலையாவா எம்ஜியாரா என்றே தெரியாத அளவில் இருக்கும். டைட்டில் லிஸ்டில் முதலாவதாக பாலையாதான்...... Thanks...
orodizli
20th April 2020, 10:56 PM
MGR filmography Film 20 (1949)
எம்ஜியார் திரையில் தோன்றி 13 ஆண்டுகளாகிவிட்டன; ஆனால், இன்னமும் முழுநீளக் கதாநாயகனாகவில்லை. இருந்தாலும் படத்தின் டைட்டிலில் பி.யூ.சின்னப்பாவுக்கு அடுத்து அவரது பெயர் பெரிய எழுத்தில் காணப்படுகிறது.
ஆக்சுவலி, இந்த போஸ்டர் பிற்காலத்தில் ரீரன்களின்போது உருவாக்கப்பட்டிருக்கலாம். '49ல் அவர் புரட்சிநடிகராகவில்லை; அவர் பெயரும் எம்.ஜி.ராமச்சந்திரன்தான்....... Thanks...
orodizli
20th April 2020, 10:57 PM
MGR filmography (Film 21) Poster (1950)
நடிக்கத்துவங்கி 14 ஆண்டுகள் கழிந்தபின் தனது 33ஆவது வயதில் எம்ஜியாருக்குக் கிடைத்த முதல் ஸோலோ ஹீரோ படம்! வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதற்குப் பிறகு அவர் சிறுபாத்திரங்களில் நடிக்கவில்லை. அவரது முழுத் திரைவாழ்க்கையிலும், கௌரவ வேடங்களிலும் கௌரவ வேடங்களிலும் நடிக்கவில்லை........ Thanks...
orodizli
20th April 2020, 10:59 PM
MGR Filmography Film 22 (1950) Poster
1950 ம.நா.இளவரசியைத் தொடர்ந்து எம்ஜியாருக்கு கதாநாயகனாகப் புலர்ந்த இரண்டாவது படம். ஆனாலும், உண்மையில் இதில் ஹீரோ என்றால் எஸ்ஏ நடராஜனைத்தான் சொல்லவேண்டும். இந்தக் கால பிரயோகப்படி நெகடிவ் ஹீரோ!
இதில் இன்னொரு சுவாரசியம்: பின்னாளில் எம்ஜியாருக்கு மேலும் அழகூட்டியதாக எண்ணப்பட்ட மோவாய்ப் பள்ளம் ஹீரோ ரோலுக்கு சரிப்பட்டு வராது என்று எண்ணி வேறு ஹீரோவுக்கு முயன்று, பிறகு அதை மறைக்க ஒரு சிறுதாடி ஒட்டி எம்ஜியார் ஓகே ஆனாராம்..... Thanks.........
orodizli
20th April 2020, 11:15 PM
1967-ம் ஆண்டு தி.மு.க முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. கிட்டத்தட்ட அதே ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் முக்கியமான படம், `விவசாயி’. இது, அவரை விவசாயிகளின் தலைவனாக்கியது. அவரின் சிறந்த பாடல்களை யார் பட்டியலிட்டாலும் அதில் இடம் பெறக்கூடிய பாடல்களில் ஒன்று
``கடவுள் என்னும் முதலாளி,
கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி'' என்னும் பாடல். கிராமப்புறங்களில் இன்னும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள் என எம்.ஜி.ஆரின் பாடல்கள் ஒலிக்காத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு அவர் அடித்தட்டு மக்களிடையே புகழ்பெற்றிருந்தார். இந்தப் பாடலின் காட்சி அமைப்பு முழுவதும் டிராக்டர் ஓட்டியபடியே ஒரு விவசாயி பாடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும்.
அந்தப் பாடலில்,
``பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக் கொடி - அது,
பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி... ’ என்ற வரிகள் வரும்போது, அப்போது எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.க-வின் கறுப்பு, சிவப்புக் கொடி திரையில் காண்பிக்கப்படும்........ Thanks...
orodizli
21st April 2020, 07:27 AM
திருநெல்வேலியில் 1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் #புரட்சித்தலைவர் முதல்வர் #எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது.
அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது.
அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர்,
அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார்.
அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது.
அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார் புரட்சித்தலைவர்..
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து.......... Thanks.........
orodizli
21st April 2020, 07:29 AM
எப்போதும் #எம்ஜியார் விரும்பிய திருச்சி..
தலைவர் தனிக்கட்சி தொடங்கக் கோரி முதல்முறையாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடந்தன. எம்.ஜி.ஆர். அனுமதி இல்லாமலேயே, தி.மு.க. கொடிகள் இறக்கப்பட்டு கறுப்பு சிவப்பு தாங்கிய திமுக கொடியின் இடையில் தாமரைப் பொறித்த கொடிகளை எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் ஏற்றி திமுக மீதான தங்கள் கோபத்தையும், #மக்கள்திலகத்தின் மீதான அன்பையும் வெளிப்படுத்தினர்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சற்று தயக்கத்தோடு இருந்தார். ஆனால் திருச்சி ஆரம்பித்த ரசிகர்களின் ஆர்வம் தமிழகம் முழுவதும் பரவியது. இதனை பார்த்த எம்.ஜி.ஆர் நம்பிக்கையுடன் முடிவெடுத்து கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.
எம்.ஜி.ஆர் கட்சி ஆரமிக்க முதன்முதலில் ஆர்பாட்டம் நடத்தியதுபோல் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆருடன் திருச்சியில் இருந்து கே.சவுந்தர்ராஜன், தேவதாஸ், கரு.அன்புதாசன், குழ.செல்லையா, வடிவேலு, பாப்பாசுந்தரம், முசிறி புத்தன் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க.வில் இருந்து விலகினார்கள்.
அதிமுகவை துவங்கிய எம்.ஜி.ஆர் முதன் முறையாக 1972-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மன்னார்புரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பல ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.சவுந்தர்ராஜன், சவுந்தர பாண்டியன், தேவதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சில் அனல் தெரிந்தது.
அடுத்து கடந்த 1973-ம் ஆண்டு அதிமுக போட்டியிட்ட முதல் தேர்தலான திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலுக்காக நிதி திரட்ட திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
அந்தகூட்டத்தில் எஸ்.எம்.என்.அமிர்தீன் எம்.ஜி.ஆரிடம் முதன்முதலில் தேர்தல் நிதியை வழங்கினார். அடுத்து தி.மு.க. அரசை எதிர்த்து எம்.ஜி.ஆர். அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் மெயின்கார்டுகேட் காமராஜ் வளைவில்தான் நடந்தது. இதுமட்டுமல்ல எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. உருவாகிய பிறகு நடந்த முதல் பொதுக்குழுவும், முதல் மாநில மாநாடும் திருச்சியில்தான் நடந்தது.
கடந்த 1974-ம் ஆண்டு ஏப்ரல் 23,24 ஆகிய இரு நாட்கள் பாப்பாக்குறிச்சி காட்டூரில் நடந்த இந்த மாநில மாநாடு தமிழகத்தில் அ.தி.மு.க.வின் மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மாநாடு என்று சொல்லலாம்.
இம்மாநாட்டிற்கு பிறகுதான் எம்.ஜி.ஆர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை செண்டிமெண்டாக எடுத்துக்கொண்ட எம்.ஜி,ஆர் அவர் உருவாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க “கைக்குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தை, மாநாடு நடந்த அதே பாப்பாக்குறிச்சி காட்டூரில் கடந்த 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரே நேரில் வந்து துவக்கி வைத்தார்.
அதேபோல் கடந்த 1977-ம் ஏற்பட்ட வெள்ளத்தில் திருச்சி நகரம் மட்டுமல்லாமல், சுற்றுப்புற கிராமங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், சேதமடைந்த பயிர்களையும், ஹோலிகிராஸ் கல்லூரியில் ஏற்பட்ட சேதங்களையும், முதல்வர் எம்.ஜி.ஆர். பார்வையிட்டு உடனடியாக நிவாரணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முதலில் கலந்துகொண்ட கூட்டம் திருச்சி ஒத்தக்கடையில் நடந்தது.
தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி திருச்சியில் நடத்த இருந்த பச்சை துண்டனிந்த விவசாயிகளின் பேரணி முதல்வர் எம்.ஜி.ஆரின் கடுமையான நடவடிக்கைகளால் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள போதிய வருவாய் இல்லாத சிறு கோயில்களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் இந்து அறநிலையத் துறையின் சார்பில் நிதியுதவி அளித்து ஒரு கால பூஜைக்கு வகைசெய்யும் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை சமயபுரத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார்.
இதேபோல் தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வர தமிழகத்தின் நடுமையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983-ம் ஆண்டு திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதையும் மீறி, திருச்சியை தலைநகராக்குவதில் எம்.ஜி.ஆர்., உறுதியாக இருந்தார். திருச்சி அண்ணாநகர் நவல்பட்டிலும், திருச்சி முசிறி அருகேவும் தலைமைச் செயலகம் அமைக்க இடம் பார்க்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் தனது இறுதிகாலத்திலும் திருச்சியில் தங்கவேண்டும் என ஆசைப்பட்டார்.
அதற்காக திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரிக்கரையில் இருந்து உறையூர் செல்லும் சாலையில் சுமார் 2-ஏக்கர் தோட்டங்களுடன் பங்களா வீட்டை சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடம் கிரையத்துக்கு வாங்கினார்கள். அந்த பங்களாவை நேரில் பார்த்த எம்.ஜி.ஆர் சில மாற்றங்களைச் செய்யச்சொன்னார். அவர் சொன்னபடி மாற்றம் செய்யப்பட்டது.
"இதை பார்வையிட வந்த எம்.ஜி.ஆர் எல்லாத்தையும் சரியா பார்த்துக்கங்க. திருச்சியை தலைநகராமாக மாற்றினால் மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்" என தனது திருச்சி சகாக்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.
அதன்பிறகு மாறிய அரசியல் சூழ்நிலை, இந்திராகாந்தி மரணம், திடீர் தேர்தல் போன்ற காரணங்களினால், திருச்சியை தலைநகராகும் திட்டம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., நினைத்து, அது நிறைவேறாத மாபெரும் திட்டம் என்றால் திருச்சி தலைநகர் திட்டம் மட்டும் தான் இருக்கும் என்கிறார்கள் திருச்சி மாவட்ட அ.தி.மு.கவினர்.
சாகும் வரை திருச்சி மீது மட்டுமல்லாமல் திருச்சி மக்கள் மீதும் பிரியம் உள்ளவராக வாழ்நாள் முழுக்க வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்........ Thanks...
orodizli
21st April 2020, 07:37 AM
தலைவர் பற்றிய பதிவுகளுக்கு தாங்கள் தரும் வரவேற்பு என்னை பிரமிக்க வைத்துள்ளது.
#அவர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் ஒவ்வொருவரின் இதயத்திலும் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
#இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் ஒரே தலைவர் நம் தலைவர்.
#பல செய்திதாள்கள், இணைய செய்திகள். பல புத்தகங்களின் தொகுப்புகளையே பதிவாக தந்துள்ளேன்.
பதிவுகளில் பல பிழைகள் இருக்கலாம். அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தவறு இருப்பின் சுட்டுக் காட்டுங்கள். திருத்திக்கொள்வோம்.
மேலும் நம் தலைவர் பற்றி தெரிந்து கொள்ள என் தேடல் தொடரும். நன்றி அன்புடன். MJ., ........ Thanks.........
orodizli
21st April 2020, 05:17 PM
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 8 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் முதல் முதலாக எம்ஜிஆர் முதல்வர் பதவி ஏற்றார்
அவரது அமைச்சரவையில் கோவை மாவட்டத்தின் சார்பாக அமைச்சராக பதவியேற்றவர்
சுப்புலட்சுமி
அமைச்சரவை பட்டியலில் சுப்புலட்சுமியின் பெயரை பார்த்தவுடன் எங்களைப் போன்ற ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் மன்றம் வைத்து அண்ணா திமுகவை வளர்த்தவர் களுக்கு அதிர்ச்சியாக இருந்தன
காரணம் கட்சியில் புதுமுகமாக இருந்தார்
சுப்புலட்சுமிக்கு எம்ஜிஆர் அமைச்சர் பதவி கொடுத்து இருந்தார்
சுப்புலட்சுமி ஆசிரியர் தொழில் பார்த்தவர்
1980 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்தன
சிவகாசி /கோபிசெட்டிபாளையம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் தான் அண்ணா திமுக வெற்றி அடைந்தது
அதன் காரணமாக அண்ணா திமுக ஆட்சியை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்தார்
இந்த சோதனையான காலகட்டத்தில் நாஞ்சில் மனோகரனும் சுப்புலட்சுமியும் அண்ணா திமுகவை விட்டு ஓடிவிட்டார்கள்
அடுத்த மூன்று மாதங்களில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார்
தனி மனிதனாக பம்பரமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எம்ஜிஆர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் மீண்டும் ஆட்சியை பிடித்தார்
இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களைப் பார்த்து கேட்ட கேள்வி
என்ன காரணத்திற்காக என் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தீர்கள்
என்னுடைய ஆட்சி ஊழல் ஆட்சியா
நான் ஊழல் செய்து சொத்து சேர்த்தேனா
அடுத்தவர்களுடைய சொத்துக்களை நான் மிரட்டி எழுதி வாங்கினேனா
என் அண்ணன் குடும்பமோ என்னுடைய உறவினர்கள் குடும்பமோ அரசியலில் தலையிட்டு பலகோடி ரூபாய் சம்பாதித்தார்களா
தமிழ்நாட்டு மக்களளேஅதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்
அந்தப் பதில் உங்கள்வாக்குசீட்டு மூலமாக இந்த உலகிற்கு தெரிய வேண்டும்
இவ்வாறு ஊழல் செய்யாத. நம் உத்தமத் தலைவன் பேசினார்
/////?///////////////////////////////////?????/?
1980 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில்
அமைச்சர் காளிமுத்து அவர்கள் பேசியதாவது
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்திரா காங்கிரசு கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட்டது
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை இந்தியா முழுவதும் வெற்றியடைய செய்து உள்ளார்கள்
திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்
இந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆரிடம் சிக்கி
திமுக காங்கிரஸ் கூட்டணி
தேர் சக்கரத்தில் சிக்கிய. தேங்காயை போல் சிதறி விடும்
இதோ என் தலைவர் புறப்பட்டுவிட்டார்
தரங்கெட்ட வர்களிடமிருந்து தாய்நாட்டை காக்க. புலி என புறப்பட்டுவிட்டார் புரட்சித்தலைவர்
இன்னும் சில நாட்களில் என் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறை ஆட்சியில் அமரப் போகிறார்
இவ்வாறு காளிமுத்து பேசினார்
///////////////////////////////////////////////////
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இவர் எப்படி எம்எல்ஏ ஆனார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட எம்ஜிஆரிடம் மனு கொடுத்திருந்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனாரை எம்ஜிஆர் அண்ணா திமுக வேட்பாளராக அறிவித்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்
வேட்பு மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் அதில்சில தவறு இருந்த காரணத்தினால் அவர் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள்
இப்பொழுது எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது
வேட்பு மனுவில் டம்மி வேட்பாளராக சுப்புலட்சுமி அவர்கள் மனு கொடுத்திருந்தார்
இதை அறிந்த எம்ஜிஆர் அவர்கள் சுப்புலட்சுமி அவர்களை அண்ணா திமுக வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதிக்கு அறிவித்தார்
இப்படி குறுக்கு வழியில் எம்எல்ஏ ஆனவர் சுப்புலட்சுமி
பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டு ஓடி விட்டார்......... Thanks PM
orodizli
21st April 2020, 05:18 PM
#மக்கள்திலகத்தின் நடவடிக்கைகளை கண்டு அலறிய ஜெயவர்தனே.. #எம்ஜிஆர் அவர்களுக்கு எதிராக சிங்கள மாணவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1987 ஏப்ரல் 27 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை சட்டமன்றத்தில் வெளியிட்டார்.
“சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த்தியாகம் செய்து வருகிறார்கள்.
பொதுவாக, ஆண்கள் செந்நீரை சிந்து வார்கள். பெண்கள் கண்ணீரை சிந்துவார்கள். ஆனால், இலங்கைத் தமிழ்ப் பகுதியைப் பொறுத்தவரையில் பெண்களும் ஆண்களோடு சேர்ந்து செந்நீரைச்சிந்துகிறார்கள்.
ஆண்களும், பெண்களும் சேர்ந்து இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்யக்கடமைப் பட்டு இருக்கிறோம்.
இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களுக்கு நாம் நம்முடைய ஆதரவையும்,உதவியையும் செய்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற வகையில், நான்கு கோடி ரூபாய் வழங்குவதற்கு இந்த அரசு
முடிவு செய்துள்ளது.”
சட்டமன்றத்தில் அறிவித்தவாறு நான்கு கோடி ரூபாயில் விடுதலைப்புலிகள்
இயக்கத்திற்கு மூன்று கோடி ரூபாயும், பாலகுமாரனின் ஈராஸ் இயக்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நேரிடையாக அளிக்கப்பட்டது.
புலிகள் தலைவர் #பிரபாகரன், 1987 மே தின செய்தியில்,
“தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் எமது விடுதலை இயக்கத்திற்கு அங்கீகாரம் அளித்தது, எமது இலட்சியத்திற்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பது எமது போராட்டத்தின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பம் ஆகும்” என்று எம்ஜிஆர். அரசுக்கு நன்றி கூறினார்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளைக் கண்டு அலறிய ஜெயவர்த்தனே, பிரதமர்
ராஜீவ்காந்தியிடம் எம்.ஜி.ஆர். மீது புகார் கூறினார்.
மேலும், “இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து பொருள்களை வழங்கப்போவதாக தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
நாங்களே உணவு அளிக்க முடியும். அதற்கு இந்தியப்பணம் தேவை இல்லை. உணவுப் பொருள்கள் என்றால், எம்.ஜி.ஆரின் பாஷையில் ஆயுதங்கள் என்று பொருள். விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆ தனிப்படை”
-என்று கூறிய ஜெயவர்த்தனே, கொழும்பு நகரில் புத்தர் ஆலயத்திற்கு எதிரே பத்தாயிரம் சிங்கள மாணவர்களைக் கூட்டி எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினான்........ Thanks CKS
orodizli
21st April 2020, 05:21 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#புகைப்படம்
எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.
எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.......... Thanks.........
orodizli
21st April 2020, 05:35 PM
தன் உடல் நல குறைவையும் பொருட்படுத்தாமல் ஈழதமிழர் மீதான விமான தாக்குலை கண்டித்து உண்ணா நோன்பு இருந்த #மக்கள்திலகம்..
பிரதமர் இராஜீவ்காந்தி வற்புறுத்தலின் பேரில் 1985 ஆகஸ்டில் போராளி இயக்கங்கள் திம்புவில், சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது இலங்கையில் விமானங்கள் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றான் ஜெயர்வர்த்தனே.
இலங்கை அரசின் இச்செயலைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக தலையிடக்கோரியும் 1985 செப்டம்பர் 24 -ஆம் நாள் உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டிருந்த நிலையிலும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் எம்.ஜி.ஆர்........ Thanks.........
orodizli
21st April 2020, 07:10 PM
இவர் போல யாரென்று--
-----------------------------------------
கோவித்துக் கொண்ட இயற்கை
கோவிட்டாக?
கோவிட்19 என்னும் கொரானா வைரஸ் குறி பார்த்துக் குவலயத்தைக் குதறி எடுக்க--
மனித நேயம் என்னும் மருத்துவத்தால் மல்லுக்கட்டியபடி நம்மவர்கள்?
எதிர்ப்போர் எவராயினும் ---
எதிர்ப் போர் செய்யும் இந்தியர்கள்--
இரக்கத்திலும் உச்சம் தொடுபவர்களே!!
அந்த வகையில் கோபால கிருஷ்ணன் அவர்கள்!!
75 வயது அகவை காணும் இந்த முக நூல் இளைஞரை தம் வசம் கொண்டார் எம்.ஜி.ஆர்!
இவரை மட்டும் அவர்க் குடுப்பத்திலிருந்து பிரித்து எடுக்கவில்லை எம்.ஜி.ஆர்?
தாய்,, தந்தை, மனைவி,அண்ணன் தம்பி என-
குடும்பமே குடியிருந்த கோயிலைக் குத்தகை எடுத்திருக்கிறார்கள்??
அது 1967!
அன்றையக் காலக் கட்டங்களில்-
வடகம்,,வத்தல்,அப்பளம் என்று வீட்டிலேயே தயார் செய்வார்கள் அந்தணர் இல்லங்களில் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம்!
குடும்பமே வட்டமாக உட்கார்ந்து கொண்டு--
கட்சிக் கொடியை தயாரிப்பதிலும்,,ஒட்டும் பசையைக் காய்ச்சுவதிலும் ஈடுபட்டிருப்பதை அகல விரிந்தக் கண்களுடன் அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்தோடு தானே பார்ப்பார்கள்??
அதுவும் பார்ப்பனர்களுக்கு விசேஷமான உதயசூரியன் கொடி??
எங்கள் எம்.ஜி.ஆர் ஒருவரைத் தான் அன்று தி.மு.கவில் பார்த்தோம் என்கிறார் கோபாலகிருஷ்ணன்!!
1980இல் தாம் எப்படி வெற்றி பெறுவோம் என்று எம்.ஜி.ஆரே இவரிடம் கேட்டு,,இவரது பதில் விளக்கத்தால் பரவசம் அடைந்ததை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்!!
75 வயது இளைஞர் இவர் இப்படியென்றால்--இன்றும் இவரது மூத்த சகோதரரும்--
90 வயதில் இவரது அன்னையும் எம்.ஜி.ஆர் படம் பார்க்கவென்றே டிவி பெட்டியின் முன்பாக??
கோபலகிருஷ்ணனின் மகள் வெளி நாட்டிலிருந்து ஃபோன் செய்வாள்--
அப்பா நாளைக்கு டிவியில ஆயிரத்தில் ஒருவன் படம் போடறான். பெரியப்பா,,பாட்டிக்கும் சொல்லுங்கோ???
இவர்களும் உடனே டிவியை நோக்கி ஓடுவார்கள்?
முதன் முதலாகப் பார்ப்பது போல??
சரி,,எம்.ஜி.ஆரை இதயத்தில் இந்த அளவு வைத்திருக்கும் இவர்கள் எம்.ஜி.ஆரின் மனித நேயத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
எல்லோரும் வெளியில் வேலைக்குப் போகும்போது இவர்கள் வீட்டிலேயே இருக்க--
இன்றோ--
எல்லோரும் கொரோனாவால் வீட்டிலேயே இருக்க-
இந்த முதியவர்களோ--
வேலையாக வெளியில்??
ஆம்!1 இதுவரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகத் தேர்வு செய்து,,அந்த மக்களுக்கு உணவும்,,உணவுப் பொருள்களும் வழங்குவதை ஒரு தவமாகவே செய்து வருகிறார்கள் இவர்கள்!!
பல்லாவர மலைக் கல்லுடைப்போர்கள்,,நங்க நல்லூர் ,,அடையாறு சேரிப்பகுதி என்று இதுவரை 12 இடங்களுக்கு மேலே இவர்கள்,,தாமே நேரில் சென்று உதவுவது நிச்சயம் பெரிய விஷயம் தானே?
சுமார் இரண்டரை லட்ச ரூபாய் வரை இதற்காகவே இதுவரை செலவழித்திருக்கும் இவர்களது சேவை இன்னமும் தொடர்ந்த வண்ணம் உள்ளது!!
இதற்காக,,நெருங்கிய உறவுகளிடமும்,,வெளி நாட்டில் இருக்கும் தம் வாரிசுகளிடம் மட்டுமே உதவி வாங்கும் இவர்கள் ,,அக்கம் பக்கத்தினர் எவரையும் தொல்லை நன்கொடைக் கேட்டு நச்சரிப்பதில்லை!!
கோபாலகிருஷ்ணன் அவர்களின் தாயார்,,இறைவன் அளித்துள்ள தேக ஆரோக்கியத்துடன் சென்று,,தம் கையால் உதவி வழங்கி மகிழ்கிறார்!!
மக்கள் திலகத்தை மனதில் வைத்தவர்களால்-
மனித நேயம் மரித்துப் போவதே இல்லை!!
இனி எம்.ஜி.ஆரா இங்கே நேரில் வரணும்?--
இவர்கள் வாயிலாகத் தான் தினமும் நம்முடன் உரையாடுகிறாரே??
அழும் உள்ளங்களை அரவணைத்து ஆற்றும் இவர்களைத்
தொழும் பேறு நம் மனதுக்குக் கிடைத்ததற்காக சந்தோஷப் படுவோமா சொந்தங்களே???........ Thanks..........
orodizli
21st April 2020, 07:22 PM
1979 ஆம் ஆண்டு நம் தானை தலைவர் முதல்வர் ஆகி நல்லாட்சி நடத்தி கொண்டு இருந்த 2 ஆம் ஆண்டு.
அகில உலக எம்ஜியார் மன்ற தலைவர் உயர்திரு முசிறிப்பித்தன் அவர்களின் மகன் முருகேசன் அவர்கள் திருமணம் சேலத்தில் நடைபெற இருந்தது.
முதல்வர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள ஏற்காடு விரைவு ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... இரவு புறப்படும் ரயில் மறுநாள் காலை சேலம் போய்சேரும்.
வேறு சில அவசர பணிகள் காரணம் ஆக தன் பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து விடுகிறார் நம் மன்னர்.
அன்று இரவு அவர் செல்ல இருந்த ஏற்காடு விரைவு ரயில் வாணியம்பாடி அருகில் மிக பெரிய விபத்துக்கு உள்ளானது.
வண்டியின் என்ஜின் மற்றும் அதை தொடர்ந்த குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்ட பெட்டிகளும் நம் முதல்வர் பயணம் செய்ய இருந்த பெட்டியும் தடம் புரண்டு அந்த விபத்தில் பலர் பலி ஆனார்கள்.
கேள்விப்பட்ட அரசு அதிகாரிகள், தலைவரின் குடும்பம் சார்ந்தோர்க்கு மிக பெரிய அதிர்ச்சி ஆக அந்த நிகழ்வு அமைந்தது.
வாணியம்பாடி ரயில் விபத்து என்று அந்த நேரத்தில் பேசப்பட்ட பரபரப்பு நிறைந்த ஒரு சோக நிகழ்வு அது.
நம் தலைவர் மட்டும் அன்று தன் பயணத்தை மாற்றி அமைக்காமல் இருந்து இருந்தால் நினைக்கவே நெஞ்சம் பதறும் நிகழ்ச்சி அது.
இதே போல சென்னையில் இருந்து அலுவல் காரணம் ஆக ஒருமுறை தலைவர் முதல்வர் செல்ல வேண்டிய டெல்லி பயண விமானம் புறப்பட தாமதம் ஆனதால் அவர் சென்னை விமான தளத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பின் புறப்பட்டு சென்ற அந்த விமானம் ஹைதிராபாத் அருகே விபத்துக்கு உள்ளானது.
தர்மம் தலை(வரை) காத்தது என்பதும் நிஜம் ஆனது.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன் நெல்லை மணி...தொடரும் நாளை...புதிய செய்திகளுடன்............ Thanks.........
orodizli
21st April 2020, 07:31 PM
1980-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ...
" முடிந்தார் எம்ஜிஆர்...
என் ராஜதந்திரத்துக்கு முன்னால்
இந்த எம்ஜிஆர் எம்மாத்திரம்."
என்று கொக்கரித்தார்... திரு. கருணாநிதி அவர்கள்.
நடந்தது என்ன...? திரு. கருணாநிதியின் கனவு பலித்ததா ...?
திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து, மொத்த சட்டமன்ற இடங்களில் சரிபாதியாக இடங்களை பகிர்ந்து கொண்டு போட்டியிட்டன.
தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டன.
தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு என்ன தெரியுங்களா....?
மீண்டும் புரட்சித் தலைவர் தான், தமிழ் நாட்டை ஆளவேண்டும்... ஆட்சியில் அமரவேண்டும் என்று நல்லதொரு தீர்ப்பை தமிழக மக்கள் வழங்கினார்கள்.
மீண்டும் மக்கள் முதல்வரானார், #புரட்சித்தலைவர்.
திரு.கருணாநிதியின் கூட்டம் கூனிக்குறுகி ஓடி ஒளிந்து கொண்டது.
புரட்சித் தலைவர் உயிரோடு இருக்கும் வரை
திரு.கருணாநிதி செய்த போராட்டங்கள்,
பொய் பிரச்சாரங்கள்,, ராஜதந்திரம் என அனைத்தையும் தமிழக மக்களின் ஆதரவோடு முறியடித்தார்..
" #புரட்சித்தலைவர் "
*******************
........ Thanks...
orodizli
21st April 2020, 09:47 PM
கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!
அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.
நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!
இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.
தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!
"இருந்தாலும் மறைந்தாலும்,
பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"
போர்!!!
போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.
எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!...... Thanks...........
orodizli
21st April 2020, 10:14 PM
MGR Filmography - Film 17 Poster
தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் வாய்ப்பளித்தாலும், 1947ஆம் ஆண்டின் இரு படங்களில் இரண்டாவதான இதிலும் எம்ஜியாருக்குச் சிறு வேடம்தான். அர்ஜுனனாக வேடமேற்றிருந்தார். ஒரு அந்தணரைத் தற்கொலையிலிருந்து மீட்கும் காட்சி யூட்யூபில் கிடைக்கிறது. கருணாநிதி இதிலும் உதவி வசனகர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார்....... Thanks...
orodizli
21st April 2020, 10:22 PM
MGR Filmography Film 23 (1951) Poster
"மர்மயோகி"
எம்ஜியார் ஸோலோ ஹீரோவாக நிலைபெற்று விட்டார்; 1951ஆம் வெளியான இரண்டு படங்களுமே வெற்றியடைந்தன.
இந்தப் படத்தின் சுவாரசியம், இது தமிழ்ப்படங்களில் முதன் முதலாக ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது! பிறகு அது நீக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. ஏன் ஏ என்றால், செருகளத்தூர் சாமா ஆவியாக நடமாடும் சீக்வன்ஸ்கள் சிறு பிராயத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் இருந்தனவாம். பஞ்ச் டயலாக் புரட்சி நடிகர் முதன்முதலாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராபின் ஹூட் கதாப்பாத்திரம் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னொரு சுவாரசியம், பல படங்களில் மாதர்குல மாணிக்கமாகவே தோன்றும் அஞ்சலிதேவி இதில் ஏறத்தாழ ஒரு வேம்ப் ரோலில், அரசனை ஒழித்துக்கட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றும் அவன் இளையராணியாக தோன்றுகிறார்.
தமிழில் முதல் கலர்ப்படம் போல, முதல் ஏ படமும் ஏம்ஜியாருடையதுதான்! A trend setter always! ... Thanks...
orodizli
21st April 2020, 10:23 PM
MGR filmography Film 24 (1951) Poster
மாடர்ன் தியேட்டர்சின் இந்த வெற்றிப் படம் எம்ஜியாரை கதாநாயக நாற்காலியில் திட்டவட்டமாக அமர்த்தி விட்டது. எம்ஜியாரின் ஆக்ஷன் ஹீரோ ஃபார்முலா ஏறத்தாழ உருவாகி விட்டது.
இந்தப் படத்தைப் பற்றிய சுவாரசியம்: இது வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பின் எம்ஜியார் தனிக்கட்சி உருவாக்கி, எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை ஆதரித்தபோது, அதாவது கிட்டத்தட்ட 1976ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி ஒரு பொன்விழா ஆண்டுக்காலம் முடிந்த பிறகு, அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்சியை எதிர்த்த இரண்டு பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்த சோ, இந்தப் படத்தில் சர்வாதிகாரிக்கு எதிராக எம்ஜியார் செய்யும் வீர சாகசங்களை எல்லாம் விலாவரியாக எழுதி வரிக்கு வரி, 'சர்வாதிகாரியை எம்ஜியார் படத்தில் இப்படி எதிர்த்துப் போராடுகிறார், படத்தில்தான். புரிந்து கொள்ளுங்கள் வாசகர்களே புரிந்து கொள்ளுங்கள்!' என்று வரிக்கு வரி அடிக்கோடிட்டார். ப்ரெஸ் சென்சார்ஷிப்புக்கு டேக்கா கொடுக்க சோ கண்டுபிடித்த பல வழிகளில் ஒன்றாக அப்போது அது மிகவும் பரபரப்பானது...... Thanks...
orodizli
21st April 2020, 10:25 PM
MGR filmography Film 25 (1952) Poster
"அந்தமான் கைதி"
1947ஆம் ஆண்டு பைத்தியக்காரனுக்குப் பிறகு ஐந்து வருடம் ராஜா ராணி காஸ்ட்யூம் ட்ராமாக்களில் ஸ்தாபிதம் ஆகிவிட்ட எம்ஜியார் மீண்டும் சோஷியல் ட்ராமாவுக்குத் திரும்பிய படம். ஏறத்தாழ தங்கைக்காக வாழும் பாசமலர் டைப்.
இந்தப் படத்தில் சிஎஸ் ஜெயராமனின் குரலில் காணி நிலம் வேண்டும் என்ற பாரதியாரின் அருமையான பாடல் இடம்பெற்றது, கோவிந்தராஜுலுவின் இசையமைப்பில்.
இந்தப் படம் வெளியான வருடம் சிவாஜியின் திருமணம் நடந்தது. திருமணவிருந்தில் சிவாஜி எம்ஜியாரைப் பார்த்து, 'நீங்க கத்தியச் சுழட்டினா ஆயிரமாயிரம் ரசிகர்கள் உண்டே அண்ணே! எதுக்கு பாண்ட் சொக்கா போட்டு நடிக்கிறீங்க' என்று கேட்டதாக ஒரு செய்தி உண்டு! அவர் விளையாட்டாகத்தான் கேட்டிருப்பார்; ஆனால், எம்ஜியார் 'தம்பி என்ன வார்த்தை சொல்லிருச்சு' என்று தங்கவேலுவிடம் வேதனைப்பட்டுக் கொண்டாராம்!
ஒரு எம்ஜியார் ரசிகரின் ப்ளாகில் இந்தப் படம் 125 நாள் ஓடியதாகக் குறிப்பிடுகிறார். சந்தேகம்தான். எம்ஜியாரை சக்சஸ்ஃபுல் சோஷியல் ஹீரோவாக்கிய படம் 61ஆம் வருடத்துத் திருடாதே......... Thanks...
orodizli
21st April 2020, 10:30 PM
MGR filmography Film 27 (1952) Poster
"என் தங்கை", அண்ணன், தங்கை சென்டிமென்டில் வந்த முதல் வெற்றி படம்.
பெரும் உணர்ச்சிப் பிரவாகமாக அமைந்த எம்ஜியாரின் அடுத்த சோஷியல் படம் . கண்பார்வை இழந்த தங்கை (ஈ.வி.சரோஜா), அவளது சடலத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தானும் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் கதாநாயகனாக எம்ஜியார்! எம்ஜியார் தற்கொலை செய்து கொள்வதைப் போல நடித்த இரண்டே படங்களில் இது ஒன்று; மற்றொன்று: போரில் தான் கொன்றது தன் சகோதரன் என்று அறிந்து வாளை மேலே தூக்கிப் போட்டு அதற்குத் தானே இரையாகும் ராஜாதேசிங்கு!
எம்ஜியார் இறந்தால் படம் ஓடாது என்ற செண்டிமெண்ட் இன்னும் உருவாகாகதால், இந்தப் படம் ஹிட்டானது. இதைப் பற்றி ராண்டார் கை சொல்கிறார்: 'Remembered for its emotion drenched storyline and MGR’s role as a loving brother, considered by critics as one of his best performances ever.'
சிலோனில் ஏறத்தாழ ஒரு வருடம் ஓடியதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியம்: முதலில் இதில் நடிக்கத்துவங்கியவர், பாடகர் திருச்சி லோகநாதனாம். ஒரு ஷெட்யூல் முடிந்தபின்னர் அவர் பாடகர்தான், நடிகரல்ல (ஜி.என்.பி. அல்லது பிற்காலத்திய டி.என்.சேஷகோபாலன் போல!) என்று படக்குழுவினருக்குத் தெளிவு ஏற்பட, அவர் விலக்கப்பட்டு எம்ஜியார் ஒப்பந்தமானார். இந்தப் படத்தோடு எம்ஜியாருக்கு ஒரு பர்சனல் ஈக்வேஷனும் உண்டு; அவரது குழந்தைப் பருவத்தில் மருத்துவத்திற்கான வசதி இல்லாது அவரது சொந்தச் சகோதரி மாண்டு போனது, இந்தப் படத்தின் கதையோடு அவரை மிகவும் ஒன்ற வைத்ததாம்!........ Thanks...
orodizli
21st April 2020, 10:34 PM
MGR filmography Film 30 (1953) Poster (malayalam)
MGR filmography Film 31 (1953) Poster(tamil)"ஜெனோவா"
மீண்டும் எம்ஜியார் காஸ்ட்யூம் ட்ராமாவுக்குத் திரும்பிய இந்தப் படம் தமிழ், மலையாளம் இரண்டிலும் பை லிங்குவலாக எடுக்கப்பட்டு, மலையாள ரிலீஸுக்குப் பல நாட்களுகுப் பிறகு தமிழில் ரிலீசானதாம். எம்ஜியார் நடித்த ஒரே மலையாளப் படம் இது. அநேகமாக எம்ஜியார் நேரடியாக நடித்த பிறமொழிப்படமும் இதுவாகவே இருக்கலாம். அவரது படங்களில் சில தெலுங்கு இந்தியில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் அவர் அந்த மொழிகளில் நேரடியாக நடித்ததில்லை. பொதுவாக எம்ஜியார் படங்களில் மதக்குறியீடுகள் இருக்காது என்றாலும் கழுத்தில் சிலுவையணிந்து எம்ஜியார் காட்சியளிப்பார் இப்படத்தில்! ராமன் தேடிய சீதை போல சிலவற்றில் ஓரிரு காட்சிகளில் நெற்றியில் குங்குமத்தோடு தோன்றுவார்.எங்கள் தங்கம் படத்தில் பாகவதர் ரோலில் நெற்றியில் பட்டையுடனும், ஒரு தேவர் படத்தில் கான்ஸ்டபிள் கெட்டப்பில் நாமத்துடனும் வருவார்!
அவர் கிறித்துவக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரே படம் இதுதான். ராஜா தேசிங்கு, சிரித்து வாழ வேண்டும் போன்றவற்றில் இஸ்லாமியக் காரெக்டராகத் தோன்றியிருக்கிறார்.
இந்தப் படத்தில் எம்எஸ்வியைப் போடவேண்டாமென்று எம்ஜியார் சொல்லி, ப்ரொட்யூசர் ம்யூசிக் டைரக்டரை மாற்ற முடியாது; வேணுமானால் ஹீரோவை மாற்றுகிறேன் என்று சொன்னதாக ஒரு கதை உண்டு! ஆனால், மிக அதிகமான எம்ஜியார் படங்களுக்கு இசை அமைத்தவர் எம்எஸ்விதான்! அரசியலைப் போலவே திரையுலகிலும் கூட்டணிகளின் நோக்கம் வெற்றிதானே ஒழிய, சொந்த விருப்புவெறுப்புகள் அல்ல என்பதற்கு ஒரு உதாரணம்.
வெற்றிப் படமாக அமைந்த இதன் கதையையே 1957ஆம் வருடம் மகாதேவி என்ற பெயரில் இந்துப் பின்னணியில் தயாரித்தார்கள். அதுவும் வெற்றிப்படமாகவே அமைந்தது...... Thanks...
orodizli
21st April 2020, 10:36 PM
MGR filmography Film 28 (1953) Poster
"நாம்"
புதுவருடம் ஒரு சமூகப்படத்துடன் துவங்குகிறது. எம்ஜியாரை வைத்துத் தொடர்ந்து படமெடுக்கும் ஜூபிடர் பிக்சர்சுடன் இந்த முறை மேகலா பிக்சர்சும் இணைந்து தயாரிக்கிறது. கருணாநிதி குடும்பத்தினருடன் எம்ஜியார், பி.எஸ்.வீரப்பாவும் அதன் பாகஸ்தர்களாக இருந்த காலகட்டமாக இருக்கலாம். கருணாநிதியின் திரைக்கதை வசனம் பாடல்களுடன் சிதம்பரம் ஜெயராமனின் இசையில் காசிலிங்கம் இயக்கிய இந்தப் படம் வெற்றி பெறவில்லை. எம்ஜியார், ஜானகி ஆகியோரின் சிறந்த நடிப்பை விழலுக்கிரைத்த நீராக்கி, எம்ஜியார் சமூகப்படங்களுக்குத் தோதில்லை என்ற கருத்து மீண்டும் உருவாக வழிவகுக்கிறது.
அதே போல் ஏஎம் ராஜா பாடிய பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும், சிஎஸ்சுக்கும் இசை அமைப்பாளராகா பெரிதும் உதவவில்லை இந்தப் படம்....... Thanks...
orodizli
21st April 2020, 10:41 PM
MGR filmography Film 29 (1953) Poster
"பணக்காரி"
எம்ஜியார் காலை மீண்டும் இடறி விட்ட ஒரு சோஷியல் ட்ராமா. டி.ஆர்.ராஜகுமாரியுடன் இணைந்து எம்ஜியார் நடித்த இந்தப் படத்தை எஸ்வி வெங்கட்ராமன் இசையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார் (பணமா பாசமா கேஎஸ்ஜி அல்ல).
நல்ல தயாரிப்பு, சிறந்த நடிப்பு, இசை ஆகியவற்றைக் கொண்டிருந்தும், லியோ டால்ஸ்டாயின் ஆனா கரினாவைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை அக்கால முறைமைகளில் ஆன்டி செண்டிமெண்ட் ஆகி, படம் தோல்வியைத் தழுவியது.
ஒரு சுவாரசியம்: இதற்கு முன்னால் வெளியான பிச்சைக்காரி என்ற படம் வெற்றியடைந்ததால், பிச்சைக்காரி பணக்காரியானாள்; பணக்காரி பிச்சைக்காரி ஆனாள் - என்று ஜோக் அடித்தார்களாம் இந்தப்படம் பற்றி!
இந்தப் படத்தின் கதி குறித்து எம்ஜியார் வருந்தினாரா தெரியவில்லை; ஆனால், எம்ஜியார் ரசிகர்கள் வருந்த வேண்டாம் - அடுத்த படம் அவரை ஸ்டார் ஸ்டேட்டசுக்கு உயர்த்தவிருக்கிறது....... Thanks...
orodizli
21st April 2020, 10:44 PM
MGR film poster Film 32 (1954) Poster
"மலைக்கள்ளன்"
திரையில் தோன்றி ஒண்ணரை மாமாங்க காலத்திற்குப் பிறகு, முப்பது படங்களுக்கு மேலாக நடித்த பிறகு, எம்ஜியாரை A Star to reckon with எனும்படியான நட்சத்திர அந்தஸ்துக்கு, உயர்த்திய படம். இதன் பிறகு MGR had never to look back.
ராபின் ஹூட் போல எளியார்க்கு நல்லானான கொள்ளைக்காரன் கதையாக நாமக்கல் கவிஞர் எழுதிய கதைக்கு, தொடர்ந்து எம்ஜியாரின் தோழராகவும், அவர் படங்களுக்கு கதை வசனகர்த்தாவாகவும் இருந்து வந்த கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத, எஸ்எம் சுப்பையா நாயுடுவின் இசையில் வெளியானது.
படத்தின் நீளம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக என்றாலும், (அந்தக் காலகட்டத்தில் சிறிய படம் என்றாலே குறைந்தது இரண்டே முக்கால் மணி நேரம் இருக்க வேண்டும்!) விருவிருப்பான சண்டைக் காட்சிகளும், இனிமையான பாடல் காட்சிகளும் அந்த வருடத்தின் மிகப் பெரும் வெற்றிப்படமாகி எம்ஜியாரை வசூல் சக்ரவர்த்தியானார்; தன் திரையுலக வாழ்க்கை முழுதும் அந்தப் பட்டத்தை இழக்காமலேயே தொடர்ந்தார்!
இந்தப் படத்தை பஷிராஜா ஸ்ரீராமுலு நாயுடு தமிழ் (எம்ஜியார்), தெலுங்கு (என்டிஆர்) மலையாளம் (சத்யன்), கன்னடம் (கல்யாண் குமார்) இந்தி (திலீப் குமார்) சிங்களம் (சூரசேனா) ஆகிய ஆறு மொழிகளில் தயாரித்தார். அனைத்தும் வெற்றிப்படங்களாயின. இந்திப் படத்திற்கு (ஆசாத்) சி.ராமச்சந்திரா (வஞ்சிக்கோட்டை வாலிபன் இசையமைப்பாளர்) இசையமைக்க, மற்ற அனைத்திலும் எஸ்எம்எஸ் நாயுடுவே இசையமைப்பாளர். இதைப் போல ஐந்து மொழிகளில் ஒரு படத்திற்குப் பணியாற்றிய இசையமைப்பாளர் அநேகமாக அவராகவே இருக்கலாம், இன்றுவரை!
திரைப்படங்களுக்குத் தேசியவிருதுகள் வழங்கப்படத் துவங்கியதன் இரண்டாவது வருடம் வெளியான இப்படம், அந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப்படமாக வெளியானது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமைக்கு உரித்தானதும் எம்ஜியாரின் படமாகவே அமைந்தது. இதைப் போல பல எம்ஜியார் படங்கள் 'முதலாவது' என்னும் பெருமையைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...... Thanks..........
orodizli
21st April 2020, 10:48 PM
MGR Filmography - Film 34 (1955) Poster
"குலேபகாவலி"
கூண்டில் அடைத்து வைத்து இரு கிளிகளின் சிறகையும் வெட்டியதற்குப் பரிகாரமாக, அடுத்த வருடமே ஒரு கிளியை வானில் பறக்க விட்டு ராமண்ணா வெற்றி கண்ட படம்! ஆயிரத்தோரு அராபிய இரவுகள் கதைகளில் ஒன்றை எடுத்தார் ராமண்ணா என்றால், தமிழையே உயிர் மூச்சாகக் கொண்ட திராவிட இயக்கத்தைச் சார்ந்து விட்ட எம்ஜியார் உருதுமொழிச் சொல்லை தலைப்பாகக் கொண்ட படத்தில் நடித்தது ஜாலியான ஆச்சரியம்! இன்று வரை, அந்தப் படத்தின் தலைப்பை யாரும் கேள்வி கேட்டதாகக் கூடத் தெரியவில்லை.
இனிமையான பாடல்கள், அற்புதமாக அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் என்று ஜனரஞ்சகமாக உருவாகி, 150 நாட்களைத் தாண்டி ஓடியது. அது மட்டுமன்றி, எப்போது ரீ ரன்னாக வந்தாலும் வசூலைக் குவிக்கும் எம்ஜியார் படங்களிலும் ஒன்றானது. முந்தைய படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்ட மயக்கும் மாலை பாடல் இதில் இடம் பெற்று எவர்க்ரீன் ஹிட்டானது.
மலைக்குகையில் காட்டுவாசிகளுடனான சண்டையில் சந்திரபாபு, ராஜகுமாரி எல்லாம் எம்ஜியார் வெளியில் வந்தவுடன் குகையை பாறையைப் போட்டுச் சாத்தி விடலாம் என்று முயன்றிருக்க, வெளியே வரும் எம்ஜியார் மீண்டும் மீண்டும் குகைக்குள் நுழைந்து வாட்போரிட, இவர்கள் தவித்திருப்பது அழகான காட்சியாக்கம். இது போல பல சுவாரசியங்களுடன், அம்மா செண்டிமெண்ட்+ உண்மையே வெல்லும் + விருவிருப்பான சண்டைக்காட்சிகள்+ இனிய இசை இத்யாதி என்று முழுமையான எம்ஜியார் ஃபார்முலாவில் உருவான படம் வெற்றியடைந்ததில் வியப்பென்ன!..... Thanks...
orodizli
21st April 2020, 10:51 PM
MGR filmography Film 33 Poster
"கூண்டுகிளி"
சிகரத்தை நோக்கி விரையும்போது ஒரு சின்ன சறுக்கல் புவிமாந்தர் அனைவருக்கும் பொதுவானதுதானே, புரட்சித் தலைவர் மட்டும் விதிவிலக்காகி விடமுடியுமா!
ஒரு மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பின்னர் எம்ஜியாருக்கு மட்டுமல்ல, தன் முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று விட்ட சிவாஜி கணேசனுக்கும் ஒரு சறுக்கலாகவே அமைந்து விட்ட படம் கூண்டுக்கிளி. அவரவர் பாதையில் உயரத்துவங்கி விட்ட இரு நட்சத்திரங்களும் ஒன்றாகத் தனது படத்தில் பிரகாசிக்க வேண்டும் என்ற ராமண்ணாவின் விருப்பத்துக்கு உடன்பட்டதால் வந்த வினை! சிவாஜி படமாகவும் இல்லாமல் எம்ஜியார் படமாகவும் இல்லாமல், சொல்லப் போனால் எவர் நடித்திருந்தாலும் சவசவ என்றே போயிருக்கக் கூடிய படமான அதில் அவ்விருவரும் நடித்தது அவர்கள் விதிப்பயன்தான்! இரு திலகங்களும் இணைந்து நடித்த ஒரே படம் என்பதைத் தவிர வேறேதும் பெருமையில்லாத இந்தப் படம் வந்த சுருக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது.
ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. இந்த இரண்டு திலகங்களும் தீவிரமாக அரசியலிலும் ஈடுபட்ட பின்னர் ஒரு முறை மீண்டும் ரிலீஸ் செய்ததாகவும், அப்போது வசூல் ஓரளவு கண்டபோதும், இருவரது ரசிகர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலைக் கையாள முடியாமல் திரையரங்குகள் தாமாகவே படத்தைத் தூக்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இப்போது இந்தப் படம் யூட்யூபில் கிடைக்கிறது. திலகங்களின் ரசிகர்களாக இல்லாதவர்கள் பார்க்க முயற்சி செய்யலாம்; ரசிகர்களுக்கோ இன்றும் அது அயர்ச்சிதான்!
இந்தப் படத்தின் இன்னொரு சுவாரசியம்: இதற்காக கேவி மகாதேவன் இசையில் ஏ.எம்.ராஜா-ஜிக்கி குரலில் உருவான, 'மயக்கும் மாலைப் பொழுதே' பாடல் இதில் இடம் பெறவில்லை. சிலகாலம் பின்னர் ராமண்ணா எம்ஜியாரை வைத்துத் தயாரித்த அரேபிய இரவுகள் கதையில் உருவான சூப்பர் ஹிட் படமான குலேபகாவலியில் இடம் பெற்று அமரத்துவம் பெற்றுவிட்டது அப்பாடல்! ஆனால், படத்தின் டைட்டிலில் மட்டுமன்றி, இசைத் தட்டுகளிலும் கேவிஎம் பெயர் அல்லாது, குலேபகாவலிக்கு இசையமைத்த இரட்டையர் விஸ்வநாதன் ராமமூர்த்தி பெயரே இப்பாடலுக்கும் இசையமைப்பாளராகக் கொடுக்கப்பட்டு விட்டது!..... Thanks...
orodizli
21st April 2020, 10:53 PM
MGR Filmography Film 26 (1952) Poster
"குமாரி"
மருத நாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மர்மயோகி போன்ற வெற்றிகளுக்குப் பிறகு வெளியான இந்த காதல்&காஸ்ட்யூம் ட்ராமா வெற்றிப் படமாகவும் அமையவில்லை; எம்ஜியாரின் கெரியருக்கு எந்த வகையிலும் உதவமுமில்லை. எம்ஜியார் நாயகனாக நடித்த அவரது ஆரம்பகாலப் படங்களுள் ஒன்று என்பதைத் தாண்டி வேறு சுவாரசியங்கள் ஏதும் இது கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை...... Thanks.......
orodizli
21st April 2020, 10:55 PM
MGR filmography - Film 14 Poster (1946)
"ஸ்ரீ முருகன்"
ஹொன்னப்ப பாகவதரின் இந்தப் படத்தில் சிவபெருமான் வேடம் தாங்கியிருந்தார் எம்ஜியார். அவர் செய்த சிவதாண்டவ ஸ்டில் பின்னாளில் பாபுலரானது! முப்பதாண்டுகள் கழித்து உழைக்கும் கரங்கள் படத்தில் மீண்டும் சிவதாண்டம் ஆடினார்!...... Thanks...
orodizli
21st April 2020, 10:56 PM
MGR filomography - Film 15 Poster Boyjbm
"ராஜகுமாரி"
திரையில் பிரவேசித்துச் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஜியாருக்குக் கிடைத்த கதாநாயகன் ரோல். இந்தப்படத்தில் ஒரிஜினலாக சின்னப்பா நடிக்கவிருந்து, இதற்கு முந்தைய படமான ஜூபிடர் பிக்சர்ஸின் ஸ்ரீ முருகனில் எம்ஜியாரும் கே.மாலதியும் செய்த சிவதாண்டவம் பரபரப்பாகப் பேசப்படவே டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமியின் சிபாரிசின் பேரில் அவர்களே இதில் நாயகன் நாயகி ஆயினர். அப்போது ஜூபிடர் பிக்சர்சின் மாதச் சம்பளத்தில் எம்ஜியார் இருந்தாராம்; பின்னாளில் அந்தக் கம்பெனியின் பங்குதாரராகவே அவரை ஆக்கியது காலம்! திரைக்கதை வசனத்தில் உதவி செய்தவர் - கருணாநிதி!...... Thanks...
orodizli
21st April 2020, 10:59 PM
MGR filmography - Film 16 - Poster
"பைத்தியக்காரன்"
1946ஆம் வருடம் ஒரு படத்தில் நாயகனாக நடித்து விட்டாலும் அடுத்த ஆண்டு மீண்டும் துணை நாயகனாக எம்ஜியார் நடித்த இந்தப் படத்தில் இரண்டு சுவாரசியங்கள்:
ஒன்று, பின்னாளில் குணசித்திர வேடதாரியான எஸ்வி சகஸ்ரநாமம் இதில் கதை திரைக்கதை எழுதி, ஹீரோவாகவும் நடித்தார்.
இரண்டாவது: டி.ஏ.மதுரம் டபுள் ரோல் செய்தார்; அதில் ஒன்று எம்ஜியாரின் ஜோடியாக!
போனஸ் சுவாரசியம் : போஸ்டரில் படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில்! அந்நாளில் பலபடங்கள் இவ்வாறுதான் விளம்பரமாயின!..... Thanks...
orodizli
21st April 2020, 11:04 PM
MGR Filmography Film 35 (1956) Poster
"அலி பாபாவும் நாற்பது திருடர்களும்"
ஏ சர்ட்டிஃப்கேட் பெற்ற முதல் தமிழ்ப்படம் (மர்மயோகி), தேசிய விருது வாங்கிய முதல் தமிழ்ப்படம் (மலைக்கள்ளன்) என திரைத்துறையில் பல விஷயங்களில் எம்ஜியார் படமே முன்னோடி, ட்ரெண்ட் செட்டர் என்பதைப் பார்த்தோம்; அந்த வரிசையில் இன்னொரு முதன் முதலாக எனச் சேர்கிறது, தமிழில் முதன் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.
1954ஆம் வருடம் வெளியான மஹிபால் நடித்த அலிபாபா சாலிஸ் சோர் என்னும் இந்திப்படத்தின் மறுவாக்கமே என்றாலும், அதன் காட்சிகள், இசை அனைத்தும் அப்படியே இதில் பயன்படுத்தப்பட்டன என்றாலும் ஒரிஜினல் போல கருப்பு வெள்ளையில் அன்றி இதைக் கலரில் எடுக்கத் தீர்மானித்த மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் ஆர்வம் மட்டுமன்றி அவரது மார்க்கெட்டிங் திறனும் கவனிக்கத்தக்கது. வண்ணப்படம் என்றால் காண்பதற்கு எப்படி இருக்கும் என்று மக்கள் அறிவதற்காகப் படம் வெளியாவதற்கு முன்னர் ஒரு சிறிய வண்டியில் படத்தில் சில நிமிடங்களை மட்டும் ஒரு சிறிய ப்ரொஜெக்டர் வழி ஊர் ஊராக அனுப்பித் திரையிட வைத்தாராம். படத்துக்குக் கிடைத்த கோலாகலமான வரவேற்பைக் கூற வேண்டியதில்லை!
வெற்றிக்கு அது மட்டும் காரணமல்ல; இந்திப் படத்தில் நடித்திருந்த மஹிபாலும் ஷகிலாவும் பி கிரேடு நடிகர்களே; மாறாக, தமிழில் உச்ச நட்சத்திரமாகி விட்ட எம்ஜியாரும், அவருக்கு சீனியராக ஏற்கனவே பாகவதர் காலத்திலிருந்து கதாநாயகியாக நிலை பெற்று விட்ட பானுமதியும், இப்போது சொல்கிறோமில்லையா அதைப் போல அவர்களிடையே பாடல் காட்சிகளில் காணப்பட்ட கெமிஸ்ட்ரியும், அபு ஹசன் ரோலில் இந்தியில் சவசவா என்று செய்திருந்த வ்யாஸ் போல அல்லாது நடுங்க வைக்கும் ஆர்பாட்டச் சிரிப்பு கொண்ட பி.எஸ்.வீரப்பாவும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியில் இல்லாத வண்ணமும் (இந்தியில் தேக்கோஜி சாந்த் நிக்கலா என்ற பாடல் மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. தமிழில் இது அழகான பொண்ணுதான்). படத்தை முற்றிலும் வேறு தளத்திற்குக் கொண்டு சென்று விட்டன. சுந்தரத்தின் இன்னொரு இன்னோவேஷன், குகையின் வாசல் திறப்பதை மாயாஜாலமாக்காமல் 'அண்டா கா கசம் அபு கா ஹுக்கம்' என்பதைக் கேட்டு உள்ளிருக்கும் அடிமைகள் விசையைச் சுற்றிக் கதவைத் திறப்பதைப் போல அமைத்தது! (யாருமில்லாத அந்தக் குகையில் சங்கிலியால் கட்டப்பட்ட அந்த அடிமைகளுக்கு சோறு தண்ணி எப்படி கிடைத்தது; ஒன் டூ காரியங்களுக்கு என்ன செய்வார்கள் என்றெல்லாம் அப்போதென்ன இப்போது பார்க்கையிலும் கேள்வி எழாது! :) )
இது முதல் கலர்படமல்ல; 1955ஆம் வருடத்து ஜெமினி கணேசன் நடித்த கணவனே கண்கண்ட தெய்வத்தின் ஒரு பகுதி கலரில் எடுக்கப்பட்டது என்பார் உண்டு; இந்தப் படத்தைப் பற்றிப் பல சுவாரசியமான கதைகளும் உண்டு - அல்லா என்ற சொல்லை அப்போது பகுத்தறிவுக் கட்சியச் சார்ந்து விட்ட எம்ஜியார் சொல்ல மறுத்ததாகவும், சுந்தரத்தின் கட்டாயத்தின் பேரில் சொன்னதாகவும் சொல்வார்கள்; அதைப் போல, படம் முடிவடையும் தருவாயில் எம்ஜியார் வேறு படங்களில் பிசியாகி விட, காத்திருத்தல் என்பதை அறியாத சுந்தரம், கரடிமுத்து என்னும் நடிகரை டூப் போட வைத்துப் படத்தை முடித்து விட்டதாகவும், அந்த மனக்கசப்பினால்தான் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் எம்ஜியார் நடிக்கவில்லை
பல எம்ஜியார் படங்களைப் போல, இதுவும் ஆக்கத்திலும் வசூலிலும் சரித்திரம் படைத்து விட்ட ஒன்று!......... Thanks...
orodizli
21st April 2020, 11:08 PM
MGR filmography Film 36 (1956) Poster
"மதுரைவீரன்"
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகளைச் சுவைக்கத் துவங்கிய எம்ஜியாரின் திரையுலக வாழ்க்கையை ஒரு கையாக உச்சக்கட்டத்துக்கு மிக அருகில் அழைத்துச் சென்றது, 1956ஆம் வருடம் தமிப்புத்தாண்டு தினத்தன்று ரிலீசாகி 36 தியேட்டர்களில் நூறு நாட்களும் மதுரையில் சில்வர் ஜூபிளியும் கொண்டாடி மொத்த வசூல் அன்றைய தேதியில் ஒரு கோடியைக் கடந்த இந்தப் படம்!
இரு கதாநாயகியரில் முன்பே எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்திருந்த பானுமதியுடன், முதன் முறையாக அவருக்கு ஜோடி சேர்ந்தார் நாட்டியப்பேரொளி பத்மினி இந்தப் படத்தின் வெற்றி காரணமாக வேறு பல படங்களிலும் அந்த ஜோடி தொடரலானது.
இதன் மாபெரும் வெற்றிக்கு நடிப்பு, பட ஆக்கம், இசை என்று அனைத்தும் துணை நின்றன. பிரதான நடிகர்கள் மட்டுமல்லாது துணைப்பாத்திரங்களிலும் பாலையா, என்எஸ்கே, மதுரம், ஓஏகே தேவர் என்று மிகச் சிறப்பான பங்களிக்க, ஜி. ராமநாதனின் இசையில் நாட்டுப்புற இசை கர்நாடக இசை இரண்டும் மிக அருமையாக கையாளப்பட்டு இனிய பாடல்கள் உருவாக, வசனங்களை கவிநயத்தோடு கண்ணதாசன் கையாண்டார். 'வானகமே! வையகமே! ஆராய்ச்சி மணி கட்டி ஆண்டு வந்த தென்னகமே!' என்பன போன்ற பல வசனங்கள் மனப்பாடம் போல உருப்போடப்படலாயின! இதன் வெற்றியால், நாடோடி மன்னன், மன்னாதி மன்னன் போன்றனவற்றிற்கும் கண்ணதாசன் வசனகர்த்தா ஆனார்.
ஒரு சின்ன கான்ட்ரவர்சி உண்டு, இந்தப் படத்தைப் பொறுத்து.
மலைக்கள்ளன், அலிபாபாவைத் தொடர்ந்து ஏழைகளின் நாயகனாகவும் புரட்சி வீரனாகவும் மட்டுமன்றி சாதி வேறுபாடுகளை தடைகளைத் தாண்டிச்செல்லும் சமூக வீரனாகவும் எம்ஜியாரை நிலைநிறுத்தியது இப்படம். ஆனாலும், அந்நாளைய சமூக எண்ணங்களுக்கொப்ப மதுரைவீரன் அரசகுலத்தில் பிறந்து, ஹரிஜன தம்பதியால் வளர்க்கப்பட்டான் என்று திரைக்கதையில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டாலும், அது பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை, எவராலும்!....... Thanks.........
orodizli
21st April 2020, 11:09 PM
MGR Filmography Film 37 (1956) Poster
"தாய்க்கு பின் தாரம்"
எம்ஜியாரின் திரைவாழ்க்கையில் பொன்னான ஆண்டாக மலர்ந்தது 1956ஆம் வருடம். அந்த வருடம் வெளியான அவரது மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாயின. அது மட்டுமல்ல, மூன்றும் மூன்று வெவ்வேறு களங்களைக் கொண்டிருந்தன. அலிபாபா அராபிய ஃபாண்டஸி கதையாக இந்தியிலிருந்து மறுவாக்கம் செய்யப்பட்டது. அடுத்து வந்த மதுரைவீரன் தமிழர்களின் காவல் தெய்வத்தின் கதையைச் சொன்னது; மூன்றாவதான தாய்க்குப்பின் தாரம் தமிழ்நாட்டு கிராமத்தின் இயல்பான தன்மையைச் சித்தரித்து எம்ஜியாருக்கு சமூகப்படங்கள் சரிப்பட்டு வராது என்ற தவறான கருத்தை முறியடித்து வெற்றிவாகை சூடியது.
எம்ஜியார் பானுமதி ஜோடி இதிலும் தொடர, இப்படம். முதல் முறை மட்டுமன்றி, ரீரிலீஸ்களின்போதும் வசூலை அள்ளிக்குவித்த வகையில் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் தேவர் ஃபிலிம்ஸ் கம்பெனிக்குப் அஷயபாத்திரமாகவே அமைந்தது. இதை அடுத்து எம்ஜியார் நாயகனாக நடிக்க கேவி மகாதேவன் இசையமைக்க, தேவரின் தம்பியும் எடிட்டருமான எம்ஏ திருமுகம் இயக்க தேவர் ஃபிலிம்ஸ்15 படங்களைத் தயாரித்தது; அவற்றில் பெரும்பாலும் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜியாருக்கும் தேவருக்கும் அவ்வப்போது சிறுசிறு பிணக்குகள் வந்ததுண்டு என்றாலும், இருவருடம் பரஸ்பரம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். இன்னொருவரை ஹீரோவாகப் போட்டு தேவர் ஃபிலிம்ஸ் படம் எடுக்காது என்று சின்னப்பா தேவர் எம்ஜியாரிடம் கூறியதாகச் சொல்வார்கள். வேறு நாயகர்கள் நடித்த தேவரின் தமிழ்ப்படங்கள் தேவர் ஃபிலிம்ஸ் அல்லாமல் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் என்ற பேனரில் தயாரிக்கப்பட்டன.
எம்ஜியாரின் அம்மா செண்டிமெண்ட் ஏற்கனவே குலேபகாவலியில் இருந்தாலும், அழுத்தமாக எம்ஜியாரின் பிராண்டட் மார்க்கெட்டிங் டெக்னிக்காக அது மாறத்துவங்கியது இந்தப் படம் துவங்கித்தான். தாய் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தே வரிசையாகப் படங்கள் தயாராகத் துவங்கின.
எம்ஜியாரின் அரசியல் பிரசாரமும் இந்தப் படத்தில் தொடர்ந்தது. ஏற்கனவே மலைக்கள்ளனில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!' என்று பிரசாரித்ததைப்போல, இதிலும் அழுத்தமாக, 'மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே!' என்று சமூக, அரசியல் நிலைகளைச் சாடி ஒரு பாடல் அமைந்தது தற்செயல் அல்ல! இதற்குப்பின் அநேகமாக ஒவ்வொரு எம்ஜியார் படத்திலும் இதைப்போல ஒரு பாடல் இடம்பெறலானது....... Thanks...
orodizli
21st April 2020, 11:11 PM
MGR filmography Film 38 (1957) Poster
"சக்கரவர்த்தி திருமகள்"
1957ஆண்டு ஒரு வெற்றியோடு எம்ஜியாருக்குத் துவங்குகிறது. அதுதான் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் ப. நீலகண்டன் இயக்கி ஜி.ராமநாதன் இசையில் உருவாகிப் பல தியேட்டர்களில் 150 நாட்களைத் தாண்டி ஓடிய படமான சக்ரவர்த்தித்திருமகள். படத்தின் அமோக வெற்றிக்குக் காரணம் பல சம்பவங்களால் கோர்க்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக எந்த இடத்திலும் தொய்வு நேராதவண்ணம் மிக அழகாக அமைக்கப்பட்ட அதன் வெகு சுவாரசியமான திரைக்கதை. ஃபேரி டேல் பாணியில் சேடியின் சூழ்ச்சியால் அநாதியாக்கப்படும் இளவரசி, அவள் மீது காதலால் சேடிக்கு துணைபோகும் தளபதி, திருமணத்திற்கு முன்னரே இளவரசியைச் சந்தித்து விட்டதால் சேடி போடும் நாடகத்தை அறிந்தாலும் நிரூபிக்க முடியாத இளவரசன் என்று பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமன்றி, என்எஸ்கே, மதுரம், தங்கவேலு போலப் பலரும் மிக அருமையாகத் தங்கள் பங்கைச் செய்ததும் படத்தின் பெரு வெற்றிக்குக் காரணம்.
பொதுவாக எம்ஜியார் டப்பாங்குத்து ஆடியதில்லை. ஆனாலும், இருபடங்களில் அவர் அதைச் செய்ததுண்டு; ஒன்று இந்தப்படத்தின் 'ஆடவந்த அம்மாளு'; மற்றொன்று தேர்த்திருவிழாவின் 'ஏ குட்டி என்னா குட்டி'!
எம்ஜியாரின் அரசியல் நிலைப்பாடு அவர் படங்களின் மூலமாக பிரசாரிக்கப்படுவது வழக்கமாகி இந்தப்படத்திலும் தொடர்கிறது; நாயகன் பெயர் உதயசூரியன்!
இந்தப்பட ஷூட்டிங்கில் நீலகண்டனுக்கும் எம்ஜியாருக்கும் ஒரு சிறு உரசல் உருவாகிப் பின்னர் சமன்பட்டதாகச் சொல்வார்கள். எம்ஜியாரின் படங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் இயக்கியவர் என்ற பெருமை நீலகண்டனுக்கு உண்டு! பின்னாளில் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு எம்ஜியாரே இயக்குனர் என்றாலும், நீலகண்டன் அதில் செகண்ட் யூனிட் டைரக்டராகப் பணியாற்றினார் டைட்டிலில் அவர் பெயரும் தனியாக இடம்பெறும். தமிழ்வாணன் இதைக் கண்டு, படத்தின் டைரக்டர் நீலகண்டன்தான்; எம்ஜியார் தன்னுடைய இயக்கம் என்று சொல்லி ஏமாற்றுகிறார் - என்று கொஞ்சகாலம் சொல்லி வந்ததும் உண்டு! ஆனால், எம்ஜியார் தன் வழக்கப்படி இவை போன்ற எதையும் பொருட்படுத்திப் பதில் சொன்னதும் இல்லை!...... Thanks...
orodizli
21st April 2020, 11:40 PM
மனிதர் இறந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டன !! அவரின் படங்கள் வந்து ஐம்பது வருடங்கள் உருண்டோடி விட்டன !! சன் டிவிக்காரன்விளம்பரம் செய்து ஒரு வாரம்தான் ஆகிறது !! ஆனால் அவரின் ரசிக கண்மணிகளுக்கு !! இந்த கொரானாவிலும் !! புது பட ஜுரம் தொத்தி கொண்டது !! இன்று இரவு அன்பேவா படமும் !! நாளை மறுநாள் இரவு எங்கள் வீட்டு பிள்ளை படமும் !! தலைவர் ரசிகர்கள் !! பக்தர்கள் இடையே !! புதிய உற்சாகத்தை !! புதுப்படம் ரீலீஸ் போன்ற மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது !! இதுதான் தலைவரின் புகழ் ரகசிய விந்தை !! ஓங்குக நமது தலைவர் புகழ் பார் உள்ள வரை !!!......... Thanks...
orodizli
21st April 2020, 11:43 PM
எம்ஜிஆருக்கு வசூல் ராஜா பட்டம்; அதிக ரசிகர் மன்றங்கள்; மார்க்கெட்டை உயர்த்திய ‘மதுரை வீரன்’ ரீலிஸாகி 64 வருடங்கள்!
வி. ராம்ஜி
தி இந்து, ஏப்ரல் 17, 2020
முன்னதாகவும் படங்கள் ஓடியிருக்கின்றன. வசூல் குவிந்திருக்கின்றன. ஆனால் அப்படியொரு வசூலை அதற்கு முன்பு வேறு எந்தப் படங்களும் கொடுத்ததில்லை எம்ஜிஆருக்கு. அதேபோல், அவரை ரசிக்கத் தொடங்கிய கூட்டம் முன்னமே இருந்ததுதான். ரசிகர் மன்றங்களும் கூட முன்பே வைக்கத் தொடங்கிவிட்டார்கள்தான். ஆனால், அந்தப் படம் வந்த பிறகுதான், எம்ஜிஆரின் திரை வாழ்வில், பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது சின்னவரின் கொடி. அந்தப் படம்... ‘மதுரை வீரன்’.
இன்றைக்கும் தென்மாவட்டங்களில் பலராலும் வணங்கப்பட்டு வரும் தெய்வம்... மதுரை வீரன். தமிழ் கூறும் நல்லுலகில், மதுரை வீரன் குறித்தும் அவருடைய மனைவியர் குறித்தும் கர்ண பரம்பரைக் கதை உண்டு. அந்தக் கதையையே ஆதாரமாகக் கொண்டு, மிகப்பெரும் தயாரிப்பாளரான லேனா செட்டியார், எம்ஜிஆரின் கால்ஷீட்டை வாங்கி, ‘மதுரை வீரன்’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கினார்.
அநேகமாக, எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டும் ‘யாரது எம்.ஜி.ராமசந்திரன்?’ என்று எல்லோரும் வியந்து கொண்டாடியதுமான முதல் படம், முக்கியமான படம் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாகத்தான் இருக்கும். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.
இதையடுத்து மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படமும் செம ஹிட்டைச் சந்தித்தது. ‘அண்டாகா கஸம், அபூக்கா குகும், திறந்திடு சீசேம்’ என்கிற வசனத்தைச் சொல்லாத தமிழ் ரசிகர்களே இல்லை. தமிழின் முதல் கேவா கலர்ப் படத்தில் நடித்த பெருமையும் இதனால் எம்ஜிஆருக்கு வந்து சேர்ந்தது.
எம்ஜிஆரின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் முக வசீகரத்தையும் முக்கியமாக அவரின் தெள்ளுதமிழ் வசன உச்சரிப்பையும் கண்டுணர்ந்த டி.ஆர்.ராமண்ணா, ‘குலேபகாவலி’ திரைப்படத்தை எடுத்தார். எம்ஜிஆரை சாகசக்காரனாக்கினார்.
இந்த சமயத்தில்தான் லேனா செட்டியாரின் ‘மதுரை வீரன்’ படத்துக்கு ஒப்பந்தமானார் எம்ஜிஆர். யோகானந்த் இயக்கிய இந்தப் படத்தில், பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, ஓஏகே.தேவர், ஈவி.சரோஜா, எம்.ஆர்.சந்தானலட்சுமி முக்கியமாக என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்தனர்.
படத்தின் பாடல்களை கண்ணதாசன், உடுமலையார் (உடுமலை நாராயண கவி), தஞ்சை ராமையாதாஸ் முதலானோர் எழுத, படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதினார் கண்ணதாசன். வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விசில் பறந்தன. கைதட்டலால் அரங்கையே அதிரவைத்தார்கள் ரசிகர்கள்.
அட்டகாசமான சினிமாதான், மதுரை வீரன் கதை. பிறக்கும் போதே குழந்தையின் கழுத்தில் மாலை. இது தேசத்துக்கு ஆகாது என்கிறார் அரச ஜோதிடர். தேசத்தையும் ராஜ்ஜிய பதவியையும் காப்பதற்காக குழந்தையைக் காட்டில் விட்டுவிடுகிறார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியான என்.எஸ்.கே.வும் அவரின் மனைவி மதுரமும் குழந்தையைப் பார்க்கிறார்கள். வளர்க்க முடிவு செய்கிறார்கள். ‘வீரன்’ எனப் பெயர் சூட்டுகிறார்கள். இந்த வீரன் என்கிற சூரன் தான், எம்ஜிஆர். இந்தக் குழந்தையால் தேசத்துக்கே ஆபத்து என்று சொல்லப்பட்ட கதை, நிஜத்தில் பொய்யானது. எம்ஜிஆரின் அரசியலும் அவரின் ஆட்சியும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்தது என்பது நிஜ சரித்திரம்.
காமெடியுடன் நகரும் திரைக்கதை, படத்துக்குப் பலம் சேர்த்தது. ஜி.ராமனாதனின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நாடகமெல்லாம் கண்டேன்’, ‘வாங்க மச்சான் வாங்க’ என்று எல்லாப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்தப் படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைக் கடந்து, இருநூறு நாட்கள், அதற்கும் மேலே என்றோடியது. மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. ’மதுரை வீரன்’ திரைப்படம், முக்கியமாக மதுரை சிந்தாமணி தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, 200 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படத்தின் மூலமாக எம்ஜிஆருக்கு மூன்றுவிதமான வெற்றி கிடைத்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதாவது, எம்ஜிஆருக்கு இந்தப் படம் வெளிவந்த கையோடு, தமிழகமெங்கும் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு எம்ஜிஆரின் மார்க்கெட்டும் சம்பளமும் திரையுலகில் கூடியது.
இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அந்த அந்தஸ்தை எம்ஜிஆர் ஸ்டார் அந்தஸ்து எகிறியது. எம்ஜிஆர் நடித்தால், அந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்று பைனான்சியர்கள் நம்பினார்கள். தயாரிப்பாளர்கள் அவரைப் படையெடுத்தார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் பணப்பையோடு வந்து, அவரின் படங்களை பூஜை நாளின் போதே, வாங்கத் துடித்தார்கள். மூன்றாவதான விஷயம்... அப்போது எம்ஜிஆர், திமுகவில் இருந்தார். ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு திமுகவில் அவரின் செல்வாக்கு உயர்ந்தது. மெல்ல மெல்ல, திமுகவில் பலரும் எம்ஜிஆர் ரசிகர்களானார்கள்.
1956-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸானது ‘மதுரைவீரன்’. எம்ஜிஆரை, மாறு கால் மாறு கை வாங்குவதுடன் படம் முடியும். துக்கத்தோடும் அழுகையோடும் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு எம்ஜிஆர், வேறு எந்தப் படத்திலும் தன் ரசிகர்களை அழவைக்கவே இல்லை.
எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்றும் வசூல் ராஜா என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் உயருவதற்குக் காரணமாக இருந்த ‘மதுரை வீரன்’ வெளியாகி, 64 வருடங்களாகிவிட்டன! இன்றும் எவர்கிரீன் ஹீரோவாக மக்களின் மனங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ‘மதுரை வீரன்’ எம்ஜிஆர்!........(மதுரை- சென்ட்ரல், சிந்தாமணி அல்ல)..
............ Thanks.........
orodizli
22nd April 2020, 07:50 AM
வணக்கம் நண்பர்களே!! பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் நடந்து கொள்ளும் விதமே அலாதியானது. முத்தான இரண்டு நிகழ்வுகள். பலருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்கு....
அண்ணா முதல்வர். 1971 பொதுதேர்தல்.அண்ணா உயிரோடு இல்லை. ராஜாஜி யின் சுதந்திரா கட்சியும், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும் கூட்டணி. கண்டிப்பாக வெல்லும் என இணைக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணி காமராஜருக்கு ஆதரவாக சிவாஜி. கருணாநிதிக்கு ஆதரவாக எம்ஜிஆர்.
ஒரு கட்டத்தில் இது எம்ஜிஆர் - சிவாஜி மோதலாக பார்க்கப்பட்டது.
சென்னை தீவுத்திடலில் நடந்த பிரம்மாண்டமான காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சிவாஜி ,எம்ஜிஆரை தாக்கி பேசினார்." நடிப்பில் சந்திப்போமா? இல்லை வீரத்தில் சந்திப்போமா?என சவால் விட்டார்.
அடுத்த வாரம் அதே தீவுத் திடலில் திமுக கூட்டம். எம்ஜிஆர் பேசுகிறார். "தம்பி கணேசன் என்னை நடிப்பில் சத்திப்போமா? என கேட்கிறார். நடிப்பில் அவருடைய பாணி வேறு என்னுடைய பாணி வேறு என அவரே சொல்லியிருக்கிறார். என்னுடைய நடிப்பு உடல்மொழி நடிப்பு. அவர் நடிப்பு முகமொழி நடிப்பு. அது தெரிந்தும் ஏன் இப்படி கேட்டார் என தெரியவில்லை. ஒருவேளை சிவந்தமண் படத்தில் நண்பர் முத்துராமன் மிகச் சிறப்பாக நடித்ததால் கணேசனுக்கு தன் நடிப்பில் சந்தேகம் வந்துவிட்டதோ என்னவோ?" சிறிது பேச்சை நிறுத்திவிட்டு எம்ஜிஆர் மறுபடி தொடர்கிறார்... "வீரத்தில் சந்திப்போமா என கேட்கிறார்.ஐயோ பாவம்"
கூடியிருந்த மக்களின் சிரிப்பும் ஆரவாரமும் விண்ணைப் பிளந்தது. ஓ. ஏ. கே. தேவர். அடுத்து பேசினார்"கணேசா நீ முதலில் நடிப்பில் என்னுடன் மோதிப்பார். அப்புறம் எம். ஜி. ஆர் உடன் மோதலாம்" என பதில் சவால் விட்டார். அந்த தேர்தலில் எம்ஜிஆர் என்ற ஒற்றை ஆளுமை காமராஜர் ராஜாஜி சிவாஜி என மூன்று பெரும் மலைகளை வீழ்த்தி கருணாநிதி யை உயரத்தில் அமர்த்தியது. தமிழக வரலாற்றிலேயே ஒரு கட்சி203இடங்களில் போட்டியிட்டு 184 இடங்களில் வென்று சாதனை படைத்த கட்சியாக திமுக ஆனது. அந்த சாதனை இன்றுவரை எந்த கட்சியாலும் முறியடிக்கப்படவில்லை...
1980 எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு பொதுதேர்தல். மதுரை மேற்கு தொகுதியில் தலைவர் போட்டியிடுகிறார். பிறகு நடந்த மாபெரும் பொதுக்கூட்டம். மதுரை சித்திரை திருவிழா போல இருந்தது. தாய்மார்கள் கைக்குழந்தை யுடன் கணக்கிலடங்காது கலந்து கொள்கிறார்கள்.ஆட்சி கலைக்கப்பட்ட வேதனையில் அனைவரும் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். நெரிசல் மிகுந்து உள்ளது. எம்ஜிஆர் பேசி முடிக்கிறார்.கடைசியாக"ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்.நான் இங்கு பெண்களிடம் தனியாக பேச விரும்புகிறேன். தயவுசெய்து நீங்கள் கலைந்து செல்லுங்கள் "என்றார். ஆண்கள் கூட்டம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அமைதியாக கலைந்து செல்கிறது. ஆண்கள் எல்லோரும் போய் விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட எம்ஜிஆர் மைக்கை பிடித்து பேசினார்"இப்போது பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக கலைந்து செல்லலாம்"
தன்னை தேடி வரும் மக்களை அடிமைகளாக நினைக்காமல் தன் குடும்பத்தில் ஒருவராக நினைப்பவருக்கே இது போன்ற பாதுகாப்பு உணர்வு வரும்.
அதே 1980ல் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்.(பதிவு பெரிதாக இருப்பதால் மன்னிக்கவும்) .கருணாநிதி இந்திரா வுடன் கூட்டணி வைக்கிறார். அவர் இரண்டே நிபந்தனை வைக்கிறார். "எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். நான் முதல்வராக பதவியேற்கும் போது இந்திரா வரணும். "
இந்திரா காந்தி அலையின் காரணமாக எம்.பி. தேர்தலில் அதிமுக இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் திமுக கூட்டணி அபார வெற்றி. ஆட்சி கலைக்கப்படுகிறது. தேர்தல் முடிந்து விட்டது. மறுநாள் வாக்கு எண்ணிக்கை. கருணாநிதி ஏக மகிழ்ச்சியில் உள்ளார். பத்திரிகை சந்திப்பு...
பத்திரிகை: இந்த தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?
கருணா: உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வள்ளுவர் கோட்டம் போய் பாருங்கள். அங்கு பிரம்மாண்டமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் என் பதவியேற்பு விழாவில் பிரதமர் இந்திரா கலந்து கொள்ள உள்ளார். நீங்களும் தவறாது கலந்து கொள்ளுங்கள். (நகைச்சுவையாக) வடக்கும் தெற்கும் ஒன்றிணைகிறது. ஆம். சுவையான வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் பரிமாறப்படும். அந்த அளவுக்கு நான் வெற்றி பெறுவது உறுதி. என் கவலையெல்லாம் நாளை என்பது சீக்கிரம் வர வேண்டுமே என்றுதான்.
மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மக்கள் மறுபடி எம்ஜிஆர் அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அதே நிருபர் எம்ஜிஆர் இடம் பேட்டி.
பத்திரிகை :கருணாநிதி அவர்கள் நேற்று பேட்டியில் வெற்றி பெற்று விடுவேன். என மிகுந்த நம்பிக்கை யுடன் இருந்தாரே... ஆனால் வெற்றி உங்கள் பக்கம். இது எப்படி சாத்தியமானது?
எம்ஜிஆர் : கருணாநிதி அதிகாரத்தையும் ஜோசியத்தையும் நம்பினார். நான் மக்களை நம்பினேன்..இந்திராவிடம் என் ஆட்சியை கலைக்க சொன்ன கருணாநிதிக்கு நன்றி சொல்கிறேன். மக்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்திய நண்பர் கருணாநிதிக்கு நன்றி!!
அதுதான் எம்ஜிஆர்............ Thanks.........
orodizli
22nd April 2020, 07:54 AM
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது
04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா ஆளுயர செங்கோல் வழங்கினார்.
05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.
06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.
07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.
08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.
09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.
10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.
11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் பெயர்….மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்........ Thanks.........
orodizli
22nd April 2020, 07:56 AM
#எட்டுத்திக்கும்...
புரட்சித்தலைவர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சை பெற்றுக் கொண்டிருந்தபோது உலகமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். வாத்தியாருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் வாத்தியாரு குணமாகி நாடு திரும்பினார்.
புரூக்ளின் மருத்துவமனையில்
வாத்தியாருக்கு சிகிச்சை செய்ய அங்குள்ள #டாக்டர் #எலிப்டரீட்மேன் வரும்போது வீடியாவில் எம்ஜிஆர் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதை பார்த்துப் பார்த்து
அந்த டாக்டர் வாத்தியாரோட தீவிர ரசிகராகிவிட்டார்.
வாத்தியார் சென்னை
வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எலிப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகளை திரு.ஏ.வி.எம் சரவணன் தான் செய்துகொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்க அப்போது அவர், ‘‘ ‘#அன்பே #வா' படத்தில் எம்ஜிஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றாரே பார்க்கலாம்.
வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்ஜிஆர் பெயர் பெற்றிருந்தார். அவரது விருப்பத்தை சரவணன் நிறைவேற்றினார்.
மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!!!....... Thanks.........
orodizli
22nd April 2020, 07:57 AM
#எம்ஜிஆர் #லதா
எனக்கு, 'கலையரசி', 'கலைமாமணி' என எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும்.....
#எம்ஜிஆர் #லதா என மக்கள் அழைப்பதைத் தான் நான் மிகவும் உயர்ந்ததாக நினைக்கிறேன்...
ஆஸ்கர் விருதையெல்லாம் விட மிக உயரிய விருதாக 'எம்ஜிஆர் லதா' என்று என்னை அழைப்பதைக் கருதுகிறேன்..!
எனக்குக் கிடைத்திருக்கும் அனைத்து புகழுக்கும் புரட்சித்தலைவர் தான் காரணம்...
புரட்சித்தலைவரையும், என்னையும் தேவையில் லாமல் ட்வீட் செய்த நடிகை கஸ்தூரிக்கு கண்டனங்கள் தெரிவித்த என் பாசத்துக்குரிய எம்ஜிஆர் பக்தர்களை நினைத்து பூரிப்படைகிறேன்...
புரட்சித்தலைவரை யாரும் 'டச்' பண்ணக்கூடமுடியாது...
எந்த கொம்பனாலயும் அவரிடத்தைப் பிடிக்கவே முடியாது...
ஒரே ஒரு சூரியன்
ஒரே ஒரு சந்திரன்
ஒரே ஒரு இராமச்சந்திரன்...
நேற்று சென்னையில் மிகச் சிறப்பாக நடந்த அடிமைப்பெண் 50 ஆவது ஆண்டு விழாவில் எம்ஜிஆர் லதாம்மாவின் உருக்கமான, நெகிழ்ச்சியான, அதிரடியான உரை..
......... Thanks...
orodizli
22nd April 2020, 08:01 AM
#பட்டங்களுக்குப் #பெருமை
கல்மனம் நிறைய உண்டு...நன்மனம் பார்ப்பது அரிது...அதிலும் அரிது #பொன்மனம் #தரம் #குறையாதது...பெண்ணும் பொன்னும் மாற்றுக்குறையாமல் இருக்கவேண்டுமென்பது விதி..அந்த நன்மனம், பொன்மனம் எப்படி நெகிழ்ந்தது...மகிழ்ந்தது ...!!!
பொன்மனச்செம்மல் பட்டம், தமிழ் வளர்த்த பெரியார் வாரியார் அவர்களால் வழங்கப்பட்டதை அறிவோம்...
#வாரியார் #என்ற #பெயருக்கே பொன்மனச்செம்மல் அளித்த விளக்கம் : "தமிழ்ச்சுவையை வாரி வாரி வழங்குவதால், அப்பெரியார்க்கு அப்பெயர்" என்றார்.
பொன்மனச்செம்மல் #நகைச்சுவை #உணர்வு மிகுந்தவர்...
ஓர் முறை ராமாவரத்திலிருந்து வரும் போது நல்ல மழை. கார் போரூரை நோக்கி கார் போய்க்கொண்டிருந்தது...அப்போது ஒரு கார் வேகமாகக் கடந்து சென்றது. வேகத்தில் சேற்றை அவரது காரின் மீது இறைத்தது...
அப்போது மக்கள்திலகம் சிரித்துக்கொண்டே சொன்னார்:
"பாரி வள்ளல் வாரிக்கொடுத்தான் அக்காலத்தில்...
காரில் போகிறவர்களும் வாரியடிக்கிறார்கள் இக்காலத்தில்...இவர்களையும் "வாரியார்" என்றே சொல்லலாம்...
உலகில் ஒருவர் மற்றவரை மதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த நபர் '#கொடுக்கிறார்' என்றே பொருள். அதாவது மதிப்புக்கும் விலை கொடுக்கவேண்டும். ஆனால் பொன்மனச்செம்மல், வாரியார் அவர்களை நமக்கு பட்டம் தரவேண்டும் என்பதற்காக மதிக்கவில்லை...
இதற்கு ஒரு சிறு உதாரணம் :
வாரியார் சுவாமிகள் பிரபலமாகாமலிருந்த போதே அவரது தமிழ்ச்சேவைக்காக மக்கள்திலகம் மதித்தார்.
1954- ல் பொருட்காட்சியில் "இன்ப கனவு" நாடகம் நடந்து கொண்டிருந்தது. பெருங்கூட்டம். அந்நாடகத்தில் வில்லன் வேடமேற்று நடித்த சேதுபதி என்பவர் ஒரு கட்டத்தில் "கிருபானந்த வாரியார் காலட்சேபத்துக்கு சுண்டல் வாங்கப் போனேன்" என்று சொல்வதற்கு பதில் '#கிருக்கானந்தவாரியார்' #உம்ஹும் '#கிருபானந்தவாரியார்' என்று கிண்டலடிப்பார். கூட்டத்தில் பலர் சிரித்தனர்...
மேடை மேல் ஓரமாக நின்ற மக்கள்திலகம் முகம் சிவந்தார். நாடகம் முடிந்ததும் கண்டிக்கப்பட்டார்.
"மன்னிச்சுக்கங்க அண்ணா. சும்மா தமாசுக்கு சொன்னேன். ஜனங்களை சிரிக்கவைக்க" ன்னார் சேதுபதி.
அப்ப மக்கள்திலகம், "அப்ப அண்ணா பேரு, காந்தி பேரு, காமராசர் பேரு வந்தாக்கூட இப்படித்தான் கிண்டல் பண்ணுவியா??? #மத்தவங்களை #சிரிக்கவைக்க #மகான்களின் #பெயரை #இழுக்கக்கூடாது...அது மிகவும் #இழிவான #செயல்" என்று பொட்டிலடித்தாற் போலக் கூறினார்.
பட்டங்களால் சிறப்பு பெறுபவர் பலர் உண்டு...!!!
அந்தப் #பட்டங்களே #சிறப்புபெறுவது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலுக்கு சூடியதால் மட்டுமே என்பதை யாரால் மறுக்கமுடியும் !!!......... Thanks...
orodizli
22nd April 2020, 08:04 AM
திரு.சோ அவர்கள் குறிப்பிட்டார்
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் தான் இருக்கிறார்கள்.
ஆனால் புரட்சி தலைவர் ஒருவருக்குதான் பக்தர்கள் இருக்கிறார்கள் என்றார்.
அதனால் தான் இன்றும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் மனதில் குடியிருக்கும் தெய்வமாக தலைவர் திகழ்கிறார்.
இனிய காலை வணக்கம் ... Thanks......
orodizli
22nd April 2020, 08:15 AM
[கலைமாமணி கே. ரவீந்தர் எழுதிய "விழா நாயகன் எம்.ஜி.ஆர்" என்ற புத்தகத்தில் இருந்து]
#எம்ஜிஆரின் #தசாவதாரம்
கலைமாமணி ரவீந்தர் திரைக்கதை எழுதி எம்ஜிஆர் நடிக்க ' தசாவதாரம்' என்ற படம் எடுக்க முயற்சித்தபோது தலைவர் எம்ஜிஆர் கூறியதாக ரவீந்தர் எழுதியது.
டி.ஆர்.நாயுடு என்ற கன்னட கதையாசிரியர் எழுதிய 'அவதார மகிமைகள்' என்ற கதையின் தமிழ் மொழியாக்கத்தை செம்மலிடம்(எம்ஜிஆர்) கொண்டு சென்றேன். படித்தார். மூக்கை கசக்கினார். அவர் சிந்திக்கிறார் என்பதற்கு அறிகுறி அச்செயல். செம்மல் தந்த விளக்கம் நாத்திகர் மூளையையும் உலுக்கும்.
செம்மல் கூறினார்-- இந்த பத்து அவதாரமும் நமக்குள்ளே இருக்கிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய குணங்கள்.
சுறுசுறுப்புக்கு மீன்,
அடக்கத்திற்கு ஆமை,
முயற்சிக்கு கூர்மம்,
ருத்ரத்திற்கு நரசிம்மம்,
வைராக்கியத்திற்கு பரசுராமர்,
கடமைக்கு ராமன்,
காதலுக்கும், அரசியலுக்கும் கண்ணன், கடைசியிலே கல்கி. மனிதன் புத்தியாலே வாழ முடியாது.கத்தியாலேதான் வாழ முடியும்னு காட்டுகிறது.இது ஆயுத முகம்.இதை சொல்லவே அந்த அவதாரத்தின் தோற்றமே கையில் கத்தியுடன் இருக்கும்.
இந்த குணங்களை சிச்சுவேஷன் மூலம் வெளிப்படும் அளவுக்கு ஹீரோ இருக்கட்டும்.கடைசியில் பலர் அவனுக்கு கொடுத்த தொல்லைகள் தாங்காமல் ஆயுதத்தை தூக்கினான் என்பதை க்ளைமாக்ஸாக வச்சு தசாவதாரத்தை முடியும்" என்றார்.
சரியென சொல்லி எழுதினேன். ஆனால் படமாகவில்லை........ Thanks VN.,
orodizli
22nd April 2020, 08:20 AM
சொந்தப் படமெடுத்து சொத்தை இழந்தவர்களில் நடிகை சாவித்திரி அவர்களும் ஒருவர்.
சென்னை ஹபிபுல்லா சாலையில் இருந்த சாவித்திரியின் பெரிய மாளிகையும் ஏலத்தில் போனது. இப்படி தன்னிடமிருந்த ஒவ்வொரு பொருளும் கைவிட்டு போய் மிகவும் வருமை நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் ஒரு நாள் எம்ஜிஆரின் மாம்பலம் அலுவலகத்திற்குச் சென்று தலைவரை சந்தித்தார் சாவித்திரி. தலைவரோ சாவித்திரி வசம் ஒருபையில் பணத்தை வைத்துக் கொடுத்ததுடன், சாவித்திரி தங்குவதற்கு ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.
அந்தப் பையில் இருந்ததோ பணம் ஒரு லட்சம். ஆனால் சாவித்திரி அதை வைத்து முன்னேறப்போவது கிடையாது. சாவித்திரி எப்படி செலவழிப்பார் என்பதும் தலைவருக்கு நன்றாகவே தெரியும்.
இருப்பினும் மாபெரும் நடிகை வந்துக் கேட்கும்போது உதவாமல் இருக்கவும் முடியாது, உதவினார். இது தலைவரின் மனித நேயத்தை காட்டுகிறது......... Thanks...
orodizli
22nd April 2020, 12:19 PM
தமிழகத்தில் பக்தவத்சலம் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது சிறந்த சினிமா கலைஞர்களுக்காக கொடுக்கப்படும் N S K விருது மக்கள் திலகத்திற்கு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
பாரத் பட்டம் சிபாரிசின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதாக புலம்பும் மாற்று அணி ரசிகர்கள்
காமராஜர் ஆட்சி காலத்தில் யாருடைய சிபாரிசில் எம்ஜிஆருக்கு விருது கிடைத்தது. அந்த பட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதும் அதை தூக்கி எறிந்தார். பாரத் பட்டத்தை உதறித்தள்ளிய எம்ஜிஆர் என்ற புதிய பட்டம் அவருடன் சேர்ந்து கொண்டது.
பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது யாருடைய சிபாரிசில் எம்ஜிஆருக்கு கிடைத்தது. அப்படி சிபாரிசில் கிடைத்திருந்தால் அதுவும் ஊழல் ஆட்சியா? ஒரு படம் நடிப்பு,இசை,ஒளிப்பதிவு. இப்படி எல்லா அம்சங்களும் சிறந்து இருந்தால்தான் சிறந்த படமாக தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் அகில இந்தியாவிலும் சிறந்த படமாக மலைக்கள்ளனை தேர்ந்து எடுத்த மைய அரசு வெள்ளி பதக்கம் பரிசாக கொடுத்ததும் சிபாரிசின் அடிப்படையிலா?
இந்த கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். 1967 ல் காவல்காரனுக்கு கிடைத்த தமிழக அரசு விருது 1968 ல். குடியிருந்த கோயிலுக்கு கிடைத்த தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது
மக்கள் திலகத்தின் இயற்கையான
நடிப்புக்கு கிடைத்த விருது.
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் நமது மக்கள் திலகம்.
அதனால்தான் அவரை நடிகப்பேரரசர் என்று நாம் அழைத்து பெருமைபடுகிறோம்.
நேற்று சன் டிவியில் திரையிடப்பட்ட
"அன்பேவா" படம் பார்த்திருப்பீர்கள்.
அந்த J B பாத்திரத்துக்கு மக்கள் திலகத்தை விட பொருத்தமானவர் யார் இருக்கிறார்கள். சும்மா அநாயசமாக மிக இயல்பாக நடித்து அந்த பாத்திரத்துக்கே மெருகேற்றியிருப்பார்......... Thanks.........
orodizli
22nd April 2020, 01:59 PM
தலைவரின் இரத்தத்தின்
இரத்தமான அன்பு
உடன்ப்பிறப்புகளுக்கு
வணக்கம் ....
கவிஞர் மருதகாசி அவர்கள்
பத்தாண்டு இடைவெளிக்கு
பிறகு தலைவருக்கு
எழுதிய பாடல்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
என்ற பாடல்....
குள்ளநரி கூட்டம்
வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை
தந்து மடக்கிடும்
என்ற பாடல் வரிகள்
ரஞ்சனுக்காக எழுதிய
காரணத்தினால்
தலைவரை கோபப்படுத்தியது.....
மருதகாசி பாடல்
எழுத வாய்ப்பு இல்லாமல்
போன காரணத்தினால்
வறுமையில் வாடினார்...
நினைத்ததை முடிப்பவன்
பட தயாரிப்பாளர்
அவர்கள்
தலைவரிடம் தெரியப்படுத்தாமல்
மருதகாசிக்கு வாய்ப்பு
தருகிறார்.....
மன்னரின் இசையில்
பாடல் பதிவு முடிந்து
தலைவருக்கு பாடலை
போட்டு காண்பிக்க
தயாரிப்பாளர்
மற்றும் மெல்லிசை மன்னரும்
தோட்டத்திற்கு செல்கின்றனர்
தலைவர் பாடலை கேட்டவுடன்
இந்த பாடலை
எழுதியது மருதகாசியா என்று
கேட்டு அசத்திவிட்டார்...
திகைத்துப்போன தயாரிப்பாளரும்
மெல்லிசை மன்னரும்
பாடல் பிடிக்கவில்லை என்றால்
மாற்றிவிடலாம் என்று கூற
தலைவர் பாடல்
படத்தில் இருந்து போகட்டும்
கூறி மருதகாசியை தன்னை
வந்து பார்க்குமாறு கூறினார்...
வித்வான் வே லட்சுமணனனோடு
தலைவரை பார்க்க வந்த
மருதகாசி ஒரு ஈர துணிப்பையை
தலைவருக்கு கொடுத்தார்
அதை வாங்கி பார்த்த
தலைவர்
பக்கத்தில் வைத்துக்கொண்டார்...
வெளியில் வந்த
வித்வான் வே லட்சுமணன்
என்னையா தலைவருக்கு
கொடுத்தாய் என்று
கேட்க
மருதகாசி அவல் பொட்டலத்தை
கொடுத்தேன் என்றார்....
மகாபாரதத்தில் குசேலன்
கண்ணனுக்கு அவல் கொடுத்து
அடுத்த கணமே
குபேரனானதை படித்துள்ளோம்..
ஆனால் நிச வாழ்க்கையில்
மருதகாசியின் அனைத்து
கடன்களையும் அடைத்து
அவரின் வாழ்க்கை தரத்தை
உயர்த்தியவர்
புரட்சித்தலைவர்....
இப்போது பாடலுக்கு
வருகிறேன்....
1973 இல் மிகப்பெரிய செட்
போட்டு எடுத்த பாடல்
கண்ணை நம்பாதே என்ற
பாடல்....
ரோமாபுரி அரசன் அரசி.....
கிரேக்க அரசன் அரசி.....
முகலாய அரசர் அரசி.....
சீன அரசர்...
இங்கிலாந்து அரசர் அரசி...
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்...
கடற்கொள்ளைக்காரன்...
அரபு நாட்டு சேக்...
ஜப்பானிய பெண்...
ஆப்கானியர்...
அலெக்ஸாண்டர்...
சாமியார்...
பிச்சைக்காரன்.....
மராத்தி
குஜராத்தி
ஆந்திரா
கர்நாடகா
கேரளா பெண்கள்....
பிலிப்பைன்ஸ் சிகரெட் விற்கும் பெண்கள்...
மேற்க்கத்திய தீவு பெண்கள்...
கோட் சூட் அணிந்த
இசைக்கலைஞர்கள்
என
பல தரப்பட்ட வேடங்களை
இப்பாடலில் சேர்த்திருப்பது
தனி சிறப்பு....
பாடல் முடியும் வரை
தலைவர் முழு செட்டையும்
தனது ஆடலில்
ஓடி ஆடி
அசத்தியிருப்பது
கூடுதல் சிறப்பு....
பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண் முன்னே
போகிறவர் போகட்டுமே
என்ற வரிகளில்
தலைவர் ஓடி வந்து
உட்காரும் சோபா
கறுப்பு சிவப்பு நிறத்தில்
இருக்கும்..
தலைவரின் அறிவு சார்ந்த
அரசியல் கூர்மை இது...
இறுதியில் நான் கூற வந்தது
மருதகாசி அவர்கள்
தலைவருக்கு தந்த
ஈர துணிப்பையை
தலைவர் மறக்காமல்
இப்பாடலில் தனது
இடுப்பில் கட்டி
ஆடியிருப்பது
தலைவரின் மாசு மருவற்ற மாண்பு அது..
கணனி மூலம் மெருகேற்றுப்பட்ட
பாடல்...
நன்றி...
பொன்மனம் பேரவை...
சென்னை........... Thanks.........
orodizli
22nd April 2020, 02:00 PM
எழுகவே!!
----------------
முன்பே அறிவித்து விட்டேன்!
இன்றைய எம் எழுத்துப் போருக்கு-எமக்கு-
எம்.ஜி.ஆரே சாரதி!!
கொரானாவுடன் ஒரு குருஷேத்திரப் போர்!
குவலயம் முழுதும் ஒரே சமயத்தில்-
குறிப் பார்த்து நடத்தும் போர்!!
இங்கே நமது பெருமையைக் கொஞ்சம் பீற்றிக் கொள்ளலாமா?
உலகத்திலேயே வெறும் கவர்ச்சியாலோ,,டிஷ்யும் டிஷ்யும் சண்டையாலோ-ஓங்கி அழும் நடிப்பாலோ ஒருவருக்கு ரசிகர்கள் ஆகாதவர்கள்?
எம்.ஜி.ஆர் ரசிகர்களான நாம் தான்!!
எந்த அம்சத்தில் நாம் அவர் ரசிகர்களாகியிருந்தாலும்-
1977க்குப் பிறகோ அல்லது-
1987க்குப் பிறகோ நம் சிந்தையை வேறு திசை நோக்கிச் செலுத்தியிருப்போம்!!
கொள்கை சார்ந்த மாண்புகள் சார்ந்த மனிதம் சார்ந்த அவரது மகத்துவம் நமக்கு ஆனது மருத்துவம்!!
எம்.ஜி.ஆர் மூன்று முறை காலனை ஜெயித்தார்!!
ஒரு தடவை புதிய எம்.ஜி.ஆராக ஜனித்தார்?
அவரது பெருமையைப் பறை சாற்ற மட்டும் இல்லை அந்த நிகழ்வுகள்?
நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ளவும் தான்??
1958இல் கால் முறிவு!
நாம் சமூகப் படம் கொடுத்த தோல்வியில் நாம் மீண்டும் ஜெயிப்போமா என்ற எண்ணச் சிதறலில் இருந்தவரது காலில் அடி?
எம்.ஜி.ஆருக்கு சரித்திரப் படங்கள் மட்டுமே சாத்தியமா? சமூகப் படங்களையும் சந்திப்பாரா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கும்போதே-
அவரது தனித்தன்மையாம்--சண்டை காட்சிகட்கும்,,
ஓடிப் பாடும் காதல் காட்சிகளுக்கும் உலை வைக்கிறது இந்த விபத்து?
ஓய்ந்தாரா இல்லை சாய்ந்தாரா?
வருடாதே துன்பமே என் சிந்தையை என-
திருடாதே படத்தின் வெற்றி மூலம் தீர்ப்பு சொன்னார்?
1967!
தொண்டையின் அண்டையில் ஒரு குண்டு?
தன் பிழைப்பு மட்டுமன்றி ஒரு கட்சியின் எதிர்காலத்தையே தம்முள் அவர் தேக்கிக் கொண்டிருந்த நிலை?
இத்தோடு தீர்ந்தான் ராமச்சந்திரன்?--இனி-
பத்தோடு ஒன்றாகும் அவன் கட்சி??
எதிரிகளின் ஏகடியம் இது என்றால்--
கணீர் குரல் போவது ஒரு புறமிருக்க--
இனி குரலே வருமா? என்ற நிலையல்லவா அன்று எம்.ஜி.ஆருக்கு??
கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் போதுமே அவர்?
வஞ்சம் கொண்டோரைத் தஞ்சம் கொண்டிருக்காதா வெற்றி??
நான் குணம் பெறுவேன் என்று--
சொல்லி எழுந்தார்1 முன்னைக் காட்டிலும் வேகமாய்-
துள்ளி எழுந்தார்!!
1972!
சினிமாவில் புதிதாக இளைய நடிகர்களின் இறக்குமதி. சிறக்கு மதி சிவாஜியின் போட்டி ஒரு புறம்--இடையில்-
கிறுக்கு மதி கருணாவால் தூக்கி வீசப்படுகிறார்?
நடித்தது போதும் நாடாள வா என்று காலம் தம்மை அழைப்பதை சூட்சுமமாக அவர் ஒருவரால் தானே அனுமானிக்க முடிந்தது??
1984!
அரசியல் உலகமே அன்று-
எம்./ஜி.ஆரை வைத்துத் தானே சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தது?
மாயம் என்ன செய்தாரோ,,இவர் கட்சிக்குத் தானே-
தாயம் விழுந்து கொண்டிருந்தது?
காயம் பட வைத்த காலனின்
சாயம் தானே வெளுத்தது?
ஆக--அவர் சந்தித்த விபத்துக்கள் எல்லாமே மிகக் கடுமையானவை மட்டுமல்ல--மிக இக்கட்டான சந்த்ர்ப்பங்களில் என்பது நமக்கு விளங்குகிறதல்லவா?
எம்.ஜி.ஆரின் இறவாப் புகழுக்கு இலக்கணமான அவரது அத்தனை சிறப்புக்களையும் விட-
மனோதைரியம் என்ற அவரது மா பெரும் தனித்தன்மை தானே இந்த ரயிலை தண்டவாளத்தில் இருந்து தடம் புரளாமல் காத்தது?
நாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!
அவரது அடிச்சுவடை நமது அரிச்சுவடியாய் ஆக்கிக் கொள்ள என்ன தடை?
கொரானா--
வரவழைத்துக் கொண்டது நாம் தானே-அதை
வரவேற்று சமர் புரிந்து வெற்றி காண்பதைத் தானே சரித்திரம் விரும்புகிறது?
மரணம் எப்போது வரும்?--தெரியாது!
மரணத்துக்குப் பின் என்ன??--தெரியாது!
இடைப்பட்ட காலத்தில் ஏன் இந்த அவஸ்தை?
மரணத்தை எண்ணி மருகுவதை விட-
மரணத்தை மறுதலிக்க வேண்டிய மார்க்கத்தை சிந்திப்போமே??
விண் இரக்கம் கொண்டாலும்--
மண் இரக்கம் கொண்டாலும்-
மனித குலம் செழிக்கும்!--எப்போது தெரியுமா?
தன்னிரக்கம் என்னும் தற்கொலையை நம் உள்ளம் நாடாதிருந்தால்!!
உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு--இங்கு-
உன்னைவிட்டால் பூமி ஏது கவலை விடு
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து-அதில் நீதி உன்னைத் தேடிவரும் மாலைத் தொடுத்து!!!....... Thanks...
orodizli
22nd April 2020, 02:02 PM
யார் தலைவன்?
----------------------------
ரஸமான பதிவு மட்டுமல்ல! மனதின்-
வசமான பதிவும் கூட!
சமர்க் களம் கண்டு எதிரியை வீழ்த்தி-மக்களிடம்-
அமர்க் களம் என்று பாராட்டு வாங்கித் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
கண்ணியத்தின் அடி தொட்டு-
விண்ணியத்தின் முடி தொடுதல் ஒரு வகை!!
மெய் வாய் அதன் மூலம், நல்லனவற்றை பரப்பி-
வாய் மை காத்தலின் மூலம் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
சொல்வாக்கு ஒன்றினாலேயே பல்லாக்கு ஏறியவன்-
மல்லாக்க விழுந்து மண் தொடலாம்!
செல்வாக்கு சீரிய முறையில் பெற்றவனோ-தம்-
உள்வாக்கு ஒன்றினாலேயே தலைவன் ஆவது ஒரு வகை!!
எம்.ஜி.ஆர் இதில் எதில் சேர்த்தி?
பதிவுக்குள் புகுவோமா??
பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்!!
எம்.ஜி.ஆரின் உள்ளம் தொட்ட அதிகாரிகளில்; ஒருவர்!
இவர்,,தம் வீட்டை விட ராமாவரம் தோட்டத்திலேயே அதிக நேரம் உலா வந்தவர்!
அது,,கொடைக்கானல் மலைப் பகுதிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முறையான அரசு வருகை!!
முதல்வருடன் வழக்கம் போல் பிச்சாண்டி!!
இருவரையும் பார்த்த மலைவாழ் மக்கள்-
அரவம் கண்டது போல் அலறி ஓடுகிறார்கள்??
காவலர்களை அனுப்பி விஷயத்தை அறிகிறார் முதல்வர்!!
மலைவாழ் மக்கள்,,அங்கே சாலையில் விழும் சுள்ளிகளை மூட்டைக் கட்டி விற்பார்களாம்! வனத் துறையினர் அவர்களைத் தடை செய்வார்களாம்!
கேட்ட மாத்திரத்தில் அங்கேயேஅரசாணை பிறப்பிக்கிறார் எம்.ஜி.ஆர்--
இனி இந்த மக்களை வனத் துறையினர் தொல்லை செய்யக் கூடாது! அவர்கள் சுதந்திரமாக சுள்ளிகளைப் பொறுக்கிக் கொள்ளலாம்!!
கூடவே,,அவர்களது வேறு சில குறைபாடுகளையும் குறிப்பெடுத்துக் கொள்ள சொல்கிறார் பிச்சாண்டியிடம்!
அந்த நேரம் பார்த்து அணி திரண்ட மேகங்களின் அவசர கதி மழை!!
அடை மழைக்கு அறிகுறியெனக் கண்டு-அந்த மக்கள் குடை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்!
குளத்தில்--
சேறு தழுவிய நீர் செந்தாமரையை சீண்டும்!
இங்கோ--
செந்தாமரையை சிலுப்பிய மழை நீர்,,கீழே சேறைத் தொடுகிறது??
நனையும் எம்.ஜி.ஆரிடமிருந்து நிலமகள் நீர் வாங்குகிறாள்!
அப்போது எம்.ஜி.ஆர் செய்த அந்தக் காரியம்??
ஆம்! கொடுக்கப்பட்ட குடை,,
பிச்சாண்டி தலைக்கு விரித்தபடி!!
எம்.ஜி.ஆர் அதைப் பிடித்தபடி!!
பதறி நிமிர்கிறார் பிச்சாண்டி!
ஒரு முதலமைச்சர் இப்படி எல்லோர் முன்னாலும் தமக்கு ஊழியம் செய்வதா?
பரிவுடன் அவரை தேற்றுகிறார் எம்.ஜி.ஆர்--
நான் சும்மா தானே நிக்கறேன். நீங்களோ அவுங்க குறைகளை எழுதிக்கிட்டிருக்கீங்க! நீங்க நனைஞ்சா,,உங்களால கவனமா எழுத முடியாது. அப்படி எழுதினாலும் இந்தப் பேப்பர் நனைஞ்சா என்னாகறது???
வணக்கம் வைத்தால் வாங்கிக் கொள்வது மட்டும் தலைவன் வேலையல்ல!
இணக்கம் கொண்டோருக்கு ஒரு இடையூறு எனில்-சுணக்கம் காட்டுவதும் அவன் வேலையே என்பதை-மணக்கும் இந்த மனித நேயத்தினால் காட்டுவதாலோ-கனக்கும் புகழ் மாலைகள் தினக்கும் அவன் தோள்களைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன இன்று வரை???......... Thanks..........
orodizli
22nd April 2020, 02:04 PM
இது எம்.ஜி.ஆர் வழி!!
---------------------------------
அமானுஷ்ய செயல்களின் ஆன்மிக அதிர்வுகளை அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். உணர இயலும்!! அதை,,இன்றையப் பதிவின் நிகழ்வு உறுதி செய்கிறது!
திண்டுக்கல் மலரவன்,,தழுதழுக்கும் குரலில் நம்மிடம் சொன்ன நிகழ்வு இதோ,,உங்களுக்காக!
பிப்ரவரி 9ஆம் தேதி திண்டுக்கல்லில் மலரவன் குழுவினர் நடத்தவிருக்கும் (நடந்தேறிய பின்பு பதிந்தது) எம்.ஜி.ஆர்103 நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்!
அந்த விழாவின் முக்கியஸ்தர்கள்--
வி.வி.ஐ.பி--எம்.ஜி.ஆர்!
வி.ஐ.பி--கலந்து கொள்ளும் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களும்!!
விழாவுக்கான ஏற்பாடுகள் வினயமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,,அன்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்--
சேலத்தில் ஒருவருக்கு அழைப்பு அனுப்பப் படுகிறது!
அழைப்பிதழைக் கண்ணுற்ற அந்த அன்பர் முகம் சுளிக்கிறார்??
எம்.ஜி.ஆர் நிகழ்ச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
எனக்கு எதற்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்காங்க?
வாய் விட்டே சலித்துக் கொள்கிறார்?
உண்மையில்,,முக நூல் மூலம் பெறப்பட்ட முகவரியில் அவர் முகவரிக்கு தவறாக அந்த அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருக்கிறது!
சார் உங்களுக்கு வேணாம்ன்னா நான் எடுத்துக்கட்டுமா??
அந்த நபரிடம் இப்படிக் கேட்டது--
அதை அவரிடம் சேர்ப்பித்த தபால் ஊழியரே தான்??
தபால் ஊழியரின் ஆவலுக்கு முன்னே அந்த நபரின் சலிப்பு அடிபட்டுப் போக--
அந்த ஊழியர் வசமே அந்த அழைப்பிதழைக் கொடுக்கிறார் அந்த நபர்!!
மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பிதழை வாங்கிக் கொண்ட அந்தத் தபால் துறை ஊழியர்--கண்ணன்,, மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகராம்!!
அடுத்தது,,அந்தக் கண்ணன் செய்த காரியம் தான் ஹை லைட்??
அழைப்பிதழில் உள்ள மலரவனிடம் ஃபோனில் தொடர்பு கொண்டவர்--
அடக்கத்துடன் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு,,விபரங்கள் கூற--
உண்மையான ஒரு எம்.ஜி.ஆர் ரசிகரிடம் அந்த அழைப்பிதழ் சென்றிருப்பதை அறிந்த மலரவன் அகம் பூரிக்க--
மலரவனை மேலும் திகைக்க வைக்கிறார் கண்ணன்?
என்னோட சக்திக்கு இப்போ 500 ரூபாய் உங்களுக்கு மணியார்டர் செஞ்சுருக்கேன்
நிகழ்ச்சிக்கு வரும்போது இன்னமும் என்னால் முடிந்ததைத் தர்றேன்???
ஒரு அக்மார்க் ரசிகரை நமக்கு அடையாளம்` காட்டியதோடு,,`
அழைப்பிதழை அவர் பெற்றுக் கொண்ட முறையில் இருந்த நேர்மை--
அழைப்பிதழை கண்ணுற்ற மாத்திரத்தில் அவர் காட்டிய கொடைத் தன்மை--`
ஆனந்தக் கண்ணீரை அருவியென கொடுக்கிறது மலரவனுக்கு!!
என் பாலிஸி இது தான்!
உழைத்துப் பிழைக்கும் சராசரி மனிதர்கள் தான் எனக்கு எப்போதுமே வி.ஐ.பிக்கள்! அதனால் அப்படிப்பட்ட ஒருவரையே உனக்கும் கொடுத்திருக்கேன் என்று எம்.ஜி.ஆரே,,மலரவனுக்கு உரைப்பது போல் இருக்கிறது எனக்கு!
உங்களுக்கு???....... Thanks...
orodizli
22nd April 2020, 02:07 PM
இது எப்படி இருக்கு??
-------------------------------
இன்றையப் பதிவு கொஞ்சம் அபூர்வமானது!
அனேகமாக பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க நியாயமில்லை!!
எம்.ஜி.ஆர் விசுவாசிகள் வெறும் புன்னகையோடும்-ஜெ அபிமானிகள் வாய்க் கொள்ளா சிரிப்போடும் நிச்சயம் இந்தப் பதிவை எதிர்க் கொள்வார்கள்??
ஆம்! இது செல்வி ஜெ பற்றியதே!!
புத்தகப் புழு என்று சொல்லப்படும்--
அண்ணா--நேரு--வரிசையில் இவர் இளைய சகோதரி!!
அடுத்தவர் தாள் தொடாமல் இருந்திருக்கலாம். ஆனால் தாள் தொடாமல் இருந்ததில்லை!!
மொத்த -கமும் இவர் விரும்பித் திணிப்பது-
புத்தகம் ஒன்றில் தான்!!
இவர் கட்டும் சேலையும்--
கையில் இருப்பதும்--நூல் தான்!!!
சரி! சிறிய நிகழ்வு ஒன்றைப் பார்ப்போம்!!
ராஜா கண்ணப்பன் என்றொருவர்.
சிவகங்கை அ.தி.மு.க செயலாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தவர். ஜெ காலத்தில் யூனியன் மினிஸ்டராக நெடுஞ்சாலைத் துறையை கவனித்தவர்.
இவர் இன்று எந்தக்கட்சியில் இருக்கிறார் என்று எமக்குத் தெரியாது. ஆகையினால் இவரது ரிஷி மூலம் குறித்த வாள் சண்டை தேவையில்லை?
நமக்குத் தேவை நிகழ்வு மட்டுமே!!
அவ்ர் ஒரு மானிய கோரிக்கையில் கண்ணப்பன் பெயரைக் குறிப்பிடும்போது--கலைஞர் குறுக்கிட்டு,,-
அம்மையார் வாய் தவறி என்னப்பன் என்று குறிப்பிடுகிறார் என்று அருகில் ஆற்காடு வீராசாமியிடம் விஷமம் தொனிக்கக் குறிப்[பிட--
சரேலென்று பதில் சொல்கிறார் ஜெ---
வயது காரணமாக நான் கண்ணப்பன் என்று குறிப்[பிட்டது உங்கள் காதில் என்னப்பன் என்று விழுந்திருக்கலாம்!
தஞ்சை மண்ணில் இருந்த உங்களுக்கு என்னப்பன் அருள் தான்--[சிவன்]--கிடைக்க்வில்லை அவர் பெயரையாவது சொல்வோமே என்ற் உங்கள் எண்ணத்தைப் பாராட்டலாம் என்று பதில் கூற--அருகில் இருந்த வீராசாமி--
கலைஞர் ஆட்சியிலே திருவாரூர் தேர் ஓடியதை சுட்டிக் காட்ட--
இருக்கும் இடத்தில் இருந்தால் இவர்கள் ஆட்சியில் நம்மைக் கூட இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் என்று அந்த தேருக்கே பயம்?? என்று அம்மையார் கொடுத்த மின்னல் வேக பதிலடி???
ஸ்ரீ முருகன் படத்தில் ருத்ர நடனம் ஆடியதன் மூலம் ஹீரோவாக ஆன எம்.ஜி.ஆரின் அரசியல் மாணவி அல்லவா???....... Thanks...
orodizli
22nd April 2020, 02:47 PM
#நெஞ்சம்மறப்பதில்லை
எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்! - ஏவிஎம் சரவணன்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஏவிஎம் நிறுவன அதிபர் ஏவி மெய்யப்பன். அதிலும் ஏவிஎம்மின் புதல்வர்களான எம் முருகன், எம் குமரன், எம் சரவணன், எம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அவரது ரசிகர்கள். எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள். எம்.ஜி.ஆர். அவர்களின் படம் ரிலீஸ் ஆகும் அன்றைக்கு முதல்நாள் முதல் காட்சிக்கே போய் படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள்.
அப்போதெல்லாம் எம்ஜிஆர் படங்கள் முதலில் தாம்பரத்தில் ரிலீசாகி, பிறகுதான் சென்னை நகரில் ரிலீசாகும். "இங்கே சிட்டியில் ரிலீசாகமாலா போகும்? அப்பபோய் பாருங்களேன்,' என்பார் ஏவிஎம் மெய்யப்பன். ஆனால், "முதல் நாளே அவர் படம் பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தியா இருக்கும்.
MGR and AVM
அதனால்தான் எம்.ஜி.ஆர் தயாரித்து, தானே இயக்கி நாயகனாக நடித்த 'நாடோடி மன்னன்' படம் வெளியானதும் நானும் என் சகோதரர்களும் (முருகன் & குமரன்) தாம்பரம் ஜி.ஆர்.தியேட்டரில் (இப்போது எம்.ஆர். தியேட்டர் என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) முதல் நாளே படத்தைப் பார்த்தோம். அந்த த்ரில் இன்றும் எங்கள் நினைவிலிருக்கிறது," என்றுஎம்.ஜி.ஆர் பற்றியான பசுமையான நினைவுகளைக் கூறுகிறார் ஏவிஎம் சரவணன்.
"அவர் கத்தி சண்டை போடும் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். 'சண்டை போடும்போது ஒரு பறவையை பிடிப்பது போல் லாவகமாக கத்தியைப் பிடிக்க வேண்டும் என்பார்கள். ரொம்ப அழுத்தினால் பறவை காலி. ரொம்பவும் லேசாகப் பிடித்தால் தப்பிப் போய்விடும்.
அதுபோலத்தான் கத்தியும். ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தந்து பிடித்தால்தான் அதை அழகாகச் சுழற்றி சண்டை போட முடியும்,' என்பார் எம்.ஜி.ஆர்.
MGR and AVM
இப்படி சிறிய வயதிலிருந்தே எம்.ஜி.ஆரைஎனக்கு மிகவும் பிடித்துப் போனதாலோ என்னவோ எங்கள் ஏவிஎம் பேனரில் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் வளர்ந்து கொண்டே வந்தது.
எனது நண்பர் நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களும் அடிக்கடி என்னைச் சந்திக்கும்போதெல்லாம் 'எம்.ஜி.ஆரை வைத்து நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார். எங்கள் விநியோகஸ்தர்களும் இதே கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கத் தயாரானோம். டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தரிடம் எம்.ஜி.ஆருக்கான ஒரு கதையை தயார் செய்யச் சொன்னோம். இதைஎங்கள் தந்தையிடம் சொல்வற்கு போனோம். எங்களுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஏனென்றால் எங்களது நிறுவனத்தில் கதைக்குதான் ஹீரோவைத் தேடுவோம்.
ஹீரோவுக்காக கதை கிடையாது. முதலில் நல்லகதையை முடிவு செய்தபிறகுதான் ஹீரோ பற்றியே பேசுவோம். அதனால் தான் முதலில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரை எம்.ஜி.ஆருக்கு ஒரு கதையை தயார் செய்ய சொன்னோம். எங்களது தந்தையும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அடுத்து எம்.ஜி.ஆர்.ஒப்புக்கொள்ள வேண்டுமே.
நாங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு விரைந்தோம். அவருக்குள்ளும் எங்கள் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. கேட்டதும் 'ஓ.எஸ்....
பண்ணிடுவோம்' என்றுமகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
ஏ.சி.திருலோகசந்தர் கதை சொன்னார். அப்போது பிரபலமாக ஓடிய 'கம்செப்டம்பர்' என்ற ஆங்கிலப் படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை அது.
கதையைச் சொன்னார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது.1965ஆம் ஆண்டு ஜனவரியில் 'எங்க வீட்டு பிள்ளை' ரிலீசாகியது.1966 ஜனவரி பொங்களுக்கு நாங்கள் 'அன்பே வா' என்ற பெயர் சூட்டியிருக்கும் இந்தப் படத்தை வெளியிட ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரைக் கேட்டோம்.
அவர், "அது முடியாது வீரப்பாவுக்கு (ஆம்.எம்.வீரப்பன்) 'நான் ஆணையிட்டால்' படத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு உங்கள் படம் ரிலீசாகட்டும்.
எதற்கும் வீரப்பாவிடம் பேசிவிட்டு பதில் சொல்கிறேன்," என்றார்.
'அன்பே வா' படத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். ஒப்புக் கொண்டோம். ஆனால் ஜனவரி பொங்கலுக்கு (1966) 'அன்பேவா' ரிலீசாக 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கேட்டார். இந்தப் படத்திற்காக அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது மூன்றே கால் லட்சம் ரூபாய்.
'அன்பே வா' படத்தை நாங்கள் சொன்னப்படி 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலன்று ரிலீஸ் செய்தோம்.
'அன்பே வா' படத்தின் முக்கிய காட்சிகள் சிம்லாவில் படமாக்கப்பட்டன. சிம்லாவில் பயங்கர குளிர். அங்கே போர்முனையில் காயம் அடைந்த இந்திய படையினருக்கான நிதி திரட்டும் நிகழச்சி அங்கே நடந்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் படப்பிடிப்பு முடிந்த மாலை நேரத்தில் போய் கலந்துக் கொண்டார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ அதற்கு சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக இந்த நிதிக்கு வழங்குகிறேன் என்ற ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்காமல் வெளியிட, அனைவரின் கைதட்டல்களை பெற்றார் எம்.ஜி.ஆர்.
அந்தத் தொகை எவ்வளவு என்று தெரிந்ததும் தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எங்களிடமிருந்து அந்தப் பணத்தை வாங்கி நிதிக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். அதற்காகத்தான் கூடுதலாக பணம் கேட்டிருந்தார் எம்ஜிஆர்.
அவ்வளவுதான்... ஒரே இரவில் சிம்லா மக்களின் ஹீரோவாகிப் போனார் எம்.ஜி.ஆர். சிம்லாவில் சோலன் என்ற ஒரு இடம். அங்கே எல்லா வண்டிகளும் நிற்கும். எங்கள் வண்டியும் நின்றது. அங்கிருந்து சற்று மேடான பகுதியில் நல்ல ஹோட்டல் இருந்தது. சுமார் ஐம்பது, அறுபது படிகள் மேலே ஏறிப்போக வேண்டும். எம்.ஜி.ஆர்.உட்பட அனைவரும் மேலே ஏறிப் போனார்கள். நான் மட்டும் கீழே காரிலேயே இருந்து விட்டேன். கடுமையான குளிர் காரணமாக கோட்டைக் கழற்றி போர்த்திக் கொண்டேன். எனக்கு தொண்டை கட்டிக் கொண்டு பயங்கரமான வலி. காரின் கதவை ஏற்றிவிட்டுக் கொண்டு படுத்துவிட்டேன்.
களைப்பு மிகுதியில் சிறிது நேரத்தல் தூங்கிவிட்டேன். யாரோ காரின் கதவைத் தட்டுவது போலிருந்தது திடுக்கிட்டு எழுந்து திறந்து பார்த்தேன். எம்.ஜி.ஆர் நின்றிருந்தார். கையில் சூடான பால் கோப்பையை ஒரு மஃப்ளரால் சுற்றி வைத்துக் கொண்டிருந்தார். எனக்கு திக்கென்றது. என்ன இது எம்.ஜி.ஆரே, பால் கொண்டு வந்திருக்காரே என்று சங்கடமாகிவிட்டது.
"இந்தாங்க சரவணன்... சூடா பால் குடிங்க தொண்டைவலிக்கு இதமாக இருக்கும்," என்றார்.
பதற்றத்துடன், "என்ன சார் நீங்களே கொண்டு வந்திருக்கீங்க' என்றேன். 'என் உதவியாளர் மலையப்பனிடமோ, எஸ்.பி.முத்துராமன், திருலோகசந்தரிடமோ கொடுத்தனுப்பியிருக்கலாமே சார்' என்றேன். அவர்கிட்ட கொடுத்தனுப்பியிருந்தா 'நீங்க குடிச்சிருக்க மாட்டீங்க. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வேண்டாம்னு சொல்லியிருப்பீங்க. இந்தப்பாலை இப்பநீங்க குடிக்கிறீங்க காலிகப்பை எடுத்துக் கொண்டுதான் நான் போவேன்," என்று அடம்பிடித்தார். அதேபோல் செய்தார்.
என் மேல் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட பாசத்தை உணர்ந்த நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.
தமிழ்த் திரையுலகம் எம்.ஜி.ஆர் என்ற பெயரை எப்படி எந்த நாளும் மறக்க முடியாதோ அப்படியே என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் என்னால் அவரை மறக்க முடியாது. என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தவர் அவர். 1985ஆம் ஆண்டு எனக்கு சென்னை மாநகர ஷெரீப் பதவியைத் தந்து கௌரவித்தார். நான் சற்றும் எதிர்பார்க்காத வாய்ப்பாக அது அமைந்தது.
'சம்சாரம் அது மின்சாரம்' வெற்றி விழாவுக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சிறப்புவிருந்தினராக அழைத்திருந்தேன். வருகிறேன் என்று ஒப்புதல் தந்தார்.
கலைஞர்கள் ஒவ்வொருக்கும் அவர் கையால் கேடயம் தரவேண்டும் என்று நான் கேட்டேன். அதற்கும் சரி என்றார்.
இதற்கிடையில் பிற்பகலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டு பரபரப்பானது. முதல்வருக்கு அதை உடனடியாகக் கவனித்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம்.
இதுவிஷயமாக என் மதிப்பிற்குரிய பெரியவர் நாகி ரெட்டியார் என்னை அழைத்து நிலைமையைப் பார்த்தால் எம்.ஜி.ஆர் அநேகமாக இன்று நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது என்றார்.
எனக்கு அப்போதும் நம்பிக்கை தளரவில்லை. இல்லை சார் நிச்சயம் வருவார் பாருங்கள் டெக்னிஷீயன்ஸ் லிஸ்ட் கூட கேட்டார். அனுப்பியிருக்கிறேன் என்றேன்.
அனைவரும் வியக்க சரியான நேரத்தில் எம்.ஜி.ஆர் வந்திறங்கினார். ஒவ்வொரு கேடயமும் கிட்டதட்ட எட்டரை கிலோ அளவில் இருந்தன. அத்தனைக் கேடயங்களையும் அவர் ஒருவரே எல்லோருக்கும் வழங்கினார். ஒரு கேடயத்தின் அடிப்பாகத்தில் இருந்த கூரானபகுதி அவர் கையைக் கிழித்து ரத்தகூடவந்தது.
நான் 'போதும் சார்' என்று அதிர்ச்சியோடு சொன்னதும் மற்ற டெக்னிஷியன்களுக்கும் ஆசை இருக்காதா என்னிடமிருந்து கேடயம் பெற வேண்டும் என்று சொல்லி அத்தனை பேருக்கும் கேடயம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கே.பாக்யராஜ் இயக்கத்தில் நாங்கள் தயாரித்த 'முந்தானை முடிச்சு' படத்தின் வெள்ளி விழாவிலும் கலந்துக் கொணடு கேடயங்களை வழங்கினார்.
எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் டைக்ரடர் பாரதிராஜா 'புதுமைப் பெண்' என்றபடத்தை இயக்கினார். அந்தப் படம் நல்ல கதையமைப்புக் கொண்டப்படமாக
இருந்தாலும் பெரிய வெற்றியை எட்டமுடியாத நிலை. அதனால் முதல்வர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசினோம். 'புதுமைப் பெண்'
படத்திற்கு வரிவிலக்கு அளித்தார். படம் பார்க்க மக்கள்கூட்டம் தியேட்டருக்கு வந்தது. 'புதுமைப் பெண்' எம்.ஜி.ஆர் செய்த உதவியால் பெரிய வெற்றிப் படமானது.
எங்கள் நிறுவனத்துக்கு 'அன்பே வா' என்ற ஒரே ஒரு படம்தான் எம்.ஜி.ஆர் செய்து கொடுத்தார். என்றாலும் என் தந்தையார் காலத்திலிருந்து ஏவிஎம் நிறுவனம் மீது அவர் கொண்டிருந்த அபிமானமும் என் தந்தையார் மீதும் அவரைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்தின் மீதும் அவர் காட்டி வந்த உண்மையான பாசமும்,
அன்பும் எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாதவை. எம்.ஜி.ஆர் என்றும் எனக்குள் இருப்பார்," என்றார் நெகிழ்ச்சியுடன்....... Thanks...
orodizli
22nd April 2020, 02:48 PM
அருமையான பதிவு இதில் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் எம்ஜியார் எப்போதும் பெரிய நிறுவனங்களுக்கு அதிகமாக படம் நடித்து கொடுத்தது இல்லை ஏனெனில் சிறு தயாரிப்பாளர்களை மேல் ஏத்தி விடவேண்டும் என்பதே அவருடைய நோக்கம் அதேபோல் இப்போது நடிகர் அஜித் குமார் அவர்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொடுப்பது இல்லை கஷ்டப்படும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே படம் நடிக்கிறார் எப்போதும் இல்லாதவரை வாழ வைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது அன்று எம்ஜிஆர் இன்று அஜித். வாழ்க........ Thanks...
orodizli
22nd April 2020, 02:50 PM
ஒரே படம் AVM ல் நடித்திருந்தாலும் இன்றைக்கும் பெயர் சொல்லும்படி அமைந்து விட்டது.அது மட்டுமா, கிராமங்களில் AVMபடம் என்று விளம்பரம் வந்தாலே, எம்.ஜி.ஆர்., நடித்த "அன்பே வா "எடுத்தவர்கள் படமா? எனமக்கள் பேசிக்கொண்டு AVM படம் அனைத்தையும் வெற்றி படமாக்கினார்கள்......... Thanks...
orodizli
22nd April 2020, 02:57 PM
"மிகச்சரியாக 55-ஆண்டுகளுக்கு முன்பு....
அன்று தீபாவளி பண்டிகை. 23-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1965-ஆண்டு.
கொழும்பு, 'இரத்மலானை' விமான நிலையம் விழா கோலம் பூண்டிருந்தது.
கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம்.
இந்திய வம்சாவளி-மலையகத் தமிழர்கள் ஏராளமான பேர் அங்கு குழுமியிருந்தனர்.
எல்லோர் பார்வையும் விமான ஓடு பாதையை நோக்கியே இருந்தது.
சிறிது நேரத்தில்.. வின்னில் மிதக்கும் 'சந்திரனை'-யே அழைத்து வருவது போல் ஒரு அலுமினிய பறவை மெதுவாக தரையிறங்க....
மக்களிடம் ஆர்வம், பரபரப்பும் தொற்றிக்கொள்ள... அத்தனை கண்களும் விமானத்தின் கதவுகளையே உற்று நோக்க...
திடீரென மின்னல் கீற்று போல அந்த #சந்திரன் ஆம் நம் #இராமசந்திரன் விடுவிடுவென வேகமாக விமானத்திலிருந்து இறங்கி வருகிறார்.
பின்னாலே அவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரோஜாதேவி...
அவர் பயணம் மேற்கொண்ட 'கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி' மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது...
அவ்வழியே பாராளுமன்றம் சென்று கொண்டிருந்த அன்றைய இலங்கை பிரதமர் 'டட்லி சேனநாயகா' வாகனமும் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது.
எம்ஜியாரின் இலங்கை வருகைக்கு முக்கிய காரணம்..
இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ் வார இதழ் சார்பில்
'மலை நாட்டு லட்சுமி' எனும் அழகு ராணிப்போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள தென்னிந்திய பிரபல நடிகரான எம்.ஜி.ஆர். சரோஜாதேவியையும் அழைத்திருந்தனர்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும்..
அவரின் ஆழ் மனதில்... தன்னுடைய பழைய நினைவுகள் மேலோங்க, தான் பிறந்த மண்ணையும், அந்த மக்களையும் காண வேண்டும் என்ற ஆவல் கூட இருந்திருக்கலாம்.
விழா நடந்த 'நுவரெலியா'-விற்கும் எம்ஜியார் பிறந்த இடமான 'கண்டி-நாவலபிடியா' வுக்குமான தொலைவு வெறும் 66-கி.மீ. தான்.
அவர் பிறந்த மண்ணிலிருந்து, மக்கள்திலகத்தை காண, தன் மண்ணின் மைந்தனை காண, மாட்டு வண்டிகளில் ஏராளமானோர் வந்து குவிந்திருந்தனர்.
விழா நடக்கும் குதிரை பந்தய திறந்த வெளி திடல் முழுவதும் மனித தலைகள்.
அந்நிலப்பரப்பில் அப்படியொரு கூட்டத்தை, இலங்கையில் இதுவரை யாருமே பார்த்ததில்லை, கண்டதில்லை.
விழா அன்று மாலை 'திவொளி' திரையரங்கில் #எம்ஜிஆர், சரோஜாதேவி இருவரும், மக்களோடு மக்களாக அமர்ந்து #எங்கள்_வீட்டுப்பிள்ளை படம் பார்த்ததை அம்மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
விழாவில் 'மலை நாட்டு இலட்சுமி' பட்டத்தை வென்ற செல்வி.இராசம்மாவுக்கு ரூ.5,000 பரிசும், கிரிகிடமும், விருதும் வழங்கப்பட்டது.
அத்தோடு எம்.ஜி.ஆரின் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமும் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. இராசம்மா நடித்தாரா? என்பது தெரியவில்லை.
அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பைனாகுலர் மூலமாக பார்த்த #மக்கள்_திலகம்....
தொலைவில் கால் ஊனமுற்ற ஒரு ரசிகர் தம்மை பார்த்து கையாட்டியதை கண்டு... உடனே அவரை மேடைக்கு அழைத்து வர சொன்னார்.
மேடையில் ஏற்றப்பட்ட அந்த இளைஞர் திடீரென #எம்ஜிஆர் காலில் விழுந்து
"ஹனே மகே தெய்யோ" (என் மகா தெய்வமே) என்று கூற..
அதன் பின்புதான் தெரிந்தது அவர் #சிங்களவர் என்று...
பின்னர் அவர் தோளில் கைபோட்டு படம் எடுத்ததோடு மட்டுமல்லால் பணமுடிப்பும் கொடுத்தனுப்பினார்.
"பின்னாளில் அந்த முடமான அந்த சிங்கள சகோதரரை ஒரு முறை 'வட்டகொடை' வந்த போது அடையாளம் கண்டுகொண்ட நானும் எனது நண்பர்களும் உபசரித்தோம்.
மக்கள் திலகத்திடம் பெற்றதாக கருப்பு நிற துண்டு ஒன்றையும் காட்டினார்"
- என்கின்றனர் அன்று நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட, இலங்கை மலையகத்திலிருந்து #SuppaiahRajasegaran கனடாவிலிருந்து #ShanChandrasekar சென்னையிலிருந்து #SukumarShan ஆகியோர்...
இன்றும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரேனும் ஒருவர் அவரின் நினைவுகளை அசை போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்களின் திலகமாக
#நேற்று மட்டுமல்ல..
#இன்று-ம்... ஏன்
#நாளை-யும்...
அவர் மக்கள் மத்தியில் திலகமாகவே
#வாழ்ந்தார்...
#வாழ்கிறார்....
#வாழ்வார்....
*முதல் படம் கொழும்பு 'இரத்மலானை' விமான நிலையத்திலிருந்த வெளியே வரும் எம்ஜிஆர்-சரோஜாதேவி
*இரண்டவது படம் 'நுவரெலியா' விழாவில் எடுத்தது........ Thanks...
orodizli
22nd April 2020, 02:59 PM
சன் டிவி பார்க்க கூடாது என நினைச்சாலும் பார்க்க வச்சுறுதானுங்க. ........
நேற்று இரவு 9.30 க்கு தலைவர் நடித்த "அன்பே வா"
#இதே போல் நாளை இரவு 9.30 க்கு "எங்க வீட்டு பிள்ளை" என்ன பண்ண? எங்கள் தலைவனின் முகம் காண பார்க்க வேண்டி இருக்கு.......
# 1965ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் நம்பர் ஒன் ஆனது. தலைவர் இரட்டை வேடத்தில் தோன்றி இருப்பார்.
#எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிப்பு தட்டாத திரைப்படம். இந்த படத்தில்
#நான் ஆணையிட்டால்...
#நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..
#கண்களும் காவடி சிந்தாகட்டும்..
#பெண் போனாள்...இந்த பெண் போனால்..
#மலருக்குத் தென்றல் பகையானால்..
#குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
போன்று எவர்கிரீன் பாடல்கள் அமைந்துள்ள ஒரு ஒப்பற்ற காவியம்.
விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.
#கடந்த, 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான, எங்க வீட்டுப் பிள்ளை தான் முறியடித்தது........ Thanks...
orodizli
22nd April 2020, 03:01 PM
நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
எம்,ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.
நினைத்தை முடித்தவர் உங்களை தேடி வருகிறார் கண்டு மகிழுங்கள்.
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)
குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி ‘பொன் பொருளைக் கண்டவுடன் …’என்று வரும் இடத்தில ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து ‘கண் மூடி போகிறவர் போகட்டுமே ……’என்று மாற்றி எழுதினாராம்.
தொடரும்......... Thanks...
orodizli
22nd April 2020, 03:12 PM
MGR Filmography Film 39(1957) Poster
"ராஜராஜன்"
முந்தைய வருடத்தைப் போல, 1957 முழுதுமே ஏறுமுகமாக அமையவில்லை, எம்ஜியாருக்கு. சக்ரவர்த்தித் திருமகளின் வெற்றியைத் தொடர்ந்து வந்த ராஜராஜன் கச்சிதமான திரைக்கதை, இளங்கோவனின் கூரான வசனம், தேர்ந்த நடிகர்களின் பங்களிப்பு, கேவி மகாதேவனின் இனிய பாடல்கள், எம்ஜியாரின் வாள்வீச்சுப் படங்கள் அனைத்திலும் சண்டைக்காட்சிகளை கம்போஸ் செய்த ஆர்என் நம்பியாரின் அற்புதமான வாள்வீச்சு அமைப்புகளும் இருந்தும், சுமாராகவே ஓடியது.
எம்ஜியாருக்கு ஜோடியாக பத்மினி நடிக்க, அவர் மீது ஒருதலைக் காதலுடன் லலிதா தோன்ற, லலிதா மீது ஒருதலைக் காதலுடன் நம்பியார் தோன்றினார். இந்தப் படக்கதையில் ஒரு சுவாரசியம் 'நீங்க நல்லவரா கெட்டவரா' என்று நம்பியாரைப் பார்த்துக் கேட்கும் அளவு அந்தப் பாத்திரப்படைப்பு சனலங்கள் மிகக் கொண்டதாக அழகாக அமைக்கப்பட்டிருந்தது........ Thanks...
orodizli
22nd April 2020, 03:16 PM
MGR Filmography Film 40(1957) Poster
"புதுமைப்பித்தன்"
ராஜராஜனைத் தொடர்ந்து, குலேபகாவலியை இயக்கிய ராமண்ணாவின் இயக்கத்தில், அந்தப் படத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, ஈ.வி.சரோஜா பி.எஸ்.சரோஜா ஆகியோரும் பங்களிக்க கருணாநிதியின் வசனத்துடன் உருவான புதுமைப்பித்தன், குலேபகாவலி அளவு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ராஜராஜனுக்கு மேலாக பெரிய வெற்றி பெற்று நூறு நாட்களைத் தாண்டினான்.
பகலில் பைத்தியக்கார இளவரசன், இரவில் ராபின்ஹூட் போன்ற சாகசவீரன் என்று எம்ஜியார் வேடம்தாங்க, அவரது சூழ்ச்சிக்கார சித்தப்பாவாக பாலையா நடித்தார். ஜி.ராமநாதனின் இசையில் பாடல்கள் பல ஹிட் ஆகின (மொத்தம் 14 பாடல்கள்!).
தந்தையாரின் சடங்கு மரியாதைகளைப் பார்வையிடும் எம்ஜியார் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டிருக்க, பி.எஸ்.சரோஜா ரகசியமாக ஒரு சிறு காகிதத்துண்டை அதில் திணிக்கையில் எம்ஜியாரின் முகத்தில் ஓடும் ஒரு லேசான அதிர்ச்சி வெகு அழகு; அதைப் போல ஈவி சரோஜாவின் நடனத்தின்பாதியில் பைத்தியக்காரன் போல தான் ஆடிப்பாடத் துவங்கி ஒரு மேஜை மேல் பாய்ந்து ஏறி நடராஜா போஸ் கொடுத்து நிற்பதும் அழகு; வில்லனிடமிருந்து தப்பிக்க பெண் வேடமிட்டுக் கொண்டு நடனமாடத் தெரியாமல் தடுமாறுவதும் ஹிலேரியஸ்.
எம்ஜியாரின் இதைப் போல நுணுக்கமான நடிப்பு பாராட்டுப் பெறாமல், அவரது வாள்வீச்சும் ரொமான்சுமே பெரிய அளவில் அவரது ரசிகர்களைச் சென்றடைந்தது. ஒரு ஸ்டாராக அவரை உருவாக்கிய அவரது ரசிகர்கள் அவருக்குள் இருந்த படாடோபமில்லாத இயல்பான ஒரு நடிகனை வெளிக்கொணரும் முயற்சிகளுக்கு ஆதரவு தரவில்லை. இதைப் பின்னாளில் இதே ராமண்ணா தயாரிப்பிலான பாசம் படமும் நிரூபித்தது........ Thanks...
orodizli
22nd April 2020, 03:18 PM
MGR Filmography Film 41 (Poster)
"மகாதேவி"
1957ஆம் ஆண்டின் முதல் படத்தைப் போல, அந்த ஆண்டின் இறுதிப் படமும் எம்ஜியாருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஊமைப்படங்களின் காலத்தில் நடிகனாக, இயக்குனராகத் துவங்கிய சுந்தர் ராவ் நட்கர்னியின் இயக்கத்தில் சாவித்ரி எம்ஜியாருக்கு முதல் முறையாக ஜோடியாகச் சேர்ந்தார்.
மதுரை வீரனுக்குப் பிறகு கண்ணதாசனின் அழகான வசனங்களைத் தாங்கி விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய பாடல்களுடன் வெளியான இப்படம் ஓரு வகையில் ஜெனோவா படத்தின் மற்றொரு பதிப்பு என்றே இதைச் சொல்லலாம்; நண்பனின் மனைவியின் மீது ஆசை கொள்ளும் ஒரு காமுகன் அதை எதிர்த்துப் போராடி வெல்லும் ஒரு கற்புக்கரசி என்பதாகத்தான் இந்தப் படத்தின் கதையும்; ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் தோல்வி அடைந்த கூண்டுக்கிளியின் கதையும் இதுவே! ஆனால், அந்த சோஷியல் தோல்வி அடைந்தாலும் இந்த இரண்டு காஸ்ட்யூம் ட்ராமாக்களும் வெற்றி பெற்றன. அதிலும் மகாதேவி பெரும் வெற்றி பெற்றது. அதற்கு ஒரு காரணம், முதலிரண்டில் இல்லாத ஒரு விஷயம்: சாவித்ரியின் ஹை பவர் பர்ஃபாமன்ஸ்.
உண்மையில், இந்த படத்தில் சாவித்ரி - பிஎஸ் வீரப்பா நடிப்பு அபாரம் என்று சொல்ல வேண்டும்.சாவித்ரிக்கு ஈடாக கொடுஞ்சிரிப்பு வில்லன் வீரப்பா படம் முழுதும் விரவியிருப்பார். 'அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரணதேவி!' என்ற அவரது பஞ்ச் டயலாக் சாகாவரம் பெற்று விட்டது!
ஆனாலும், தன் பாத்திரத்தை மிக அழகாகத் தெளிவாகச் செய்திருந்தார் எம்ஜியார்.நாகம் தீண்டி மயங்கிக் கிடக்கும் இளவரசனை அதே பாம்பு தீண்டி விஷத்தை உறிஞ்சினால்தான் பிழைப்பான் என்று பாம்பாட்டிகள் முயன்று தோற்று இனிமேல் முடியாது என்று கை விரிக்க, அடிபட்டு கட்டுகளோடு இருக்கும் எம்ஜியார் ஒரு வார்த்தை பேசாது எழுந்து வந்து அந்தப் பாம்பாட்டியின் கையில் இருக்கும் மகுடியை வாங்கித் தான் ஊதத்துவங்குவாரே, அப்போது அந்த நடையிலும், கண்களிலும் வெளிப்படும் உறுதி - certainly a piece of classic acting. யூ ட்யூபில் படம் இருக்கிறது. பாருங்கள்........ Thanks...
orodizli
22nd April 2020, 03:21 PM
MGR Filmography Film 42 (1958) Poster
"நாடோடிமன்னன்"
எம்.ஜி. ராமச்சந்திரன் என்னும் ஒரு நடிகனை வருங்காலத்தில் ஒரு மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் முதலமைச்சராக உயர்த்துவதற்கு முடிவு செய்த விதி, அதற்கு முதற்படியாகப் பயன்படுத்திக் கொண்டது: நாடோடி மன்னன் என்ற பெயரில் ஒரு சொந்தப்படத்தைத் தயாரிக்கும்படி அவர் மனதில் எண்ணத்தைப் புகுத்தியதுதான்! 'நானே போடப்போறேன் சட்டம்!' என்று வீராங்கன் பாடியது பத்தொன்பதே ஆண்டுகளில் மெய்யப்பட்டது!
நீண்ட நாட்களாக ஒரு சொந்தப்படம் எடுத்துத் தன் விருப்பப்படி தன் இமேஜை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முயன்று கொண்டிருந்த எம்ஜியாரும் அவரது தமையன் எம்ஜி சக்ரபாணி மற்றும் ஆர்எம் வீரப்பன் ஆகியோர் If I were king, The Prisoner of Zenda ஆகிய படங்களைப் போல, அவற்றின் loosely based thread என்பதாக விவாதித்து உருவாக்கிய கதை நாடோடிமன்னன். இதன் விளம்பரங்களில் Prisoner of Zenda வைத் தழுவிய படம் என்றே விளம்பரங்களில் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
எம்ஜியார் திமுகவின் பிரசார ஊடகமாக தன் சினிமாவைப் பயன்படுத்தத் தொடங்கியதும் இப்படம் துவங்கியே. ஒரு ஆணும் பெண்ணுமாக கருப்பு சிவப்புக் கொடியை ஏந்தியதாக EMGEEYAAR PICTURES லோகோ உருவானது. அவரது அடுத்த சொந்தப்படமான அடிமைப்பெண்ணுக்கும் அதுவே லோகோ. மூன்றாம் படமான உலகம் சுற்றும் வாலிபனில் அது அதிமுக கொடியாக மாற்றம் கண்டது!!!......... Thanks.........
........... to be contd....
orodizli
22nd April 2020, 03:22 PM
MGR Filmography Film 42 (1958) Poster (Contd..)
இப்போது பாலிவுட் படங்களில் 1000 மிலியன் கிளப் என்று சொல்கிறார்கள் இல்லையா? முதன் முதலாக ஒரு கோடி வசூலித்த படம் என்ற பெருமையைப் பெற்றது எம்ஜியாரின் மதுரை வீரன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பெருமையைப் பெற்றதும் எம்ஜியார் படமான நாடோடி மன்னன்.
தமிழ்நாட்டின் நகரங்கள் மட்டுமல்லாது, பெங்களூர் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் மற்றும் இலங்கையில் பல இடங்களிலும் நூறு நாட்களைத் தாண்டிய பெருமை நாடோடி மன்னனுக்கு உண்டு. சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகியவற்றில் ஐம்பது நாட்கள் ஓடிய படம். மொத்ததில் எம்ஜியாரின் திரைவாழ்க்கையில் மட்டுமன்றி, தமிழ்த் திரை வரலாற்றிலும் மாபெரும் வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது இப்படம்.
படத்தின் நீளம் 226 நிமிடங்கள் என்று விக்கி சொல்கிறது: அதாவது 3 மணி நேரம் 46 நிமிடங்கள்.பின்னாட்களில் இது ஏறத்தாழ மூன்றரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கலாம். இப்போது யூட்யூபில் கிடைக்கும் வர்ஷன் 3 மணி 20 நிமிடங்களாக உள்ளது.
பிரம்மாண்ட தயாரிப்புகள் மூன்று மணி நேரத்தைத் தாண்டுவதாகவே அந்நாளில் அமைந்திருந்தன. 1956ஆம் வருடம் செசில் பி டெமில் இயக்கத்தில் வெளியான டென் காமாண்ட்மென்ட்ஸ் 220 நிமிடங்கள்;1962ல் வெளியான டேவிட் லீனின் லாரன்ஸ் ஆஃப் அரேபியா 222 நிமிடங்கள்; 1964ல் வெளிவந்த ராஜ்கபூரின் சங்கம் 238 நிமிடங்கள்.
மேலும், பிரம்மாண்டம் அல்லாது சாதாரணக் குடும்பக் கதை கொண்டிருந்த பல தமிழ்ப் படங்களும் அந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ 3 மணி நேரத்திற்குக் குறையாமல்தான் இருந்தன. ஜெமினி கணேசனின் சூப்பர் ஹிட்டான கல்யாணப் பரிசு (1959) 198 நிமிடங்கள்; சிவாஜி கணேசனின் பாசமலர் (1961) 180 நிமிடங்கள்.
படத்தின் நீளம் அதிகம் என்றாலும், எந்த இடத்திலும் தொய்வு விழாதபடி அமைக்கப்படும் திரைக்கதையே ஒரு படத்தின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
நாடோடி மன்னன் படத்தை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். சுமார் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் வரும்; தொடர்ந்து ஒரு ஆக்ஷன் பிளாக்; ஒரு நகைச்சுவைக் காட்சி; ஒரு செண்டிமெண்ட் சீன்; ஒரு அழுத்தமான வசனக்கோர்வை. படத்தின் இறுதிவரை இந்தக் கட்டுக்கோப்பு மாறாமல் தொடரும்! பர்ஃபெக்ட் பேக்கேஜிங் என்று சொல்லக் கூடிய தகுதி பெற்ற மிகச்சில மசாலா படங்களுள் நாடோடி மன்னனும் ஒன்று. இதைப் போன்ற சிறப்பு பெற்ற மற்றொரு எம்ஜியார் படம்: எங்க வீட்டுப் பிள்ளை.
...................... to be contd........... Thanks...
orodizli
22nd April 2020, 03:23 PM
MGR Filmography Film 42 (1958) Poster (3)
நாடோடி மன்னனில் வீராங்கன் என்ற கதாபாத்திரத்துக்கு டிசைன் செய்யப்பட்ட காஸ்ட்யூம் சுவாரசியமானது. இதற்கு இரண்டாண்டுகள் முன்னதாக வெளியான டென் கமாண்ட்மெண்ட்ஸ் என்னும் படத்தில் யூத அடிமைகளை எகிப்திய மன்னனிடமிருந்து காப்பாற்றிச் செல்லும் மோசஸ் என்னும் பழைய ஆகமப் பாத்திரமாக நடித்த சார்ல்டன் ஹெஸ்டனின் காஸ்ட்யூமை ஏறத்தாழ ஒத்திருக்கும் அது! கையில் கம்புடன் எம்ஜியார் நிற்பது மக்கள் மந்தையை நல்வழி நடத்திச் செல்லும் ஒரு மேய்ப்பனைப் போன்ற பிம்பத்தை உருவாக்கப் பெரிதும் உதவியது. மோசஸ் போன்றே இப்படத்திலும் எம்ஜியாரின் வீராங்கன் கொடுங்கோல் மன்னர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக சாதாரண மக்களைத் திரட்டிப் போராடுவதாகத் துவங்குவது குறிப்பிடத்தக்கது.
நாடோடி மன்னன் எந்த அளவு தமிழ்த்திரை வரலாற்றில் பெரிய இடம் பெற்றதோ அந்த அளவு, அந்தப் படத்தின் நடிகர்கள், படப்பிடிப்பின்போதான சம்பவங்கள் போன்று பலவும் அவரவர் கற்பனைக்கேற்றவாறு இன்றளவும் பேசப்படுவனவேயாக உள்ளன. அவற்றுள் பிரதானமானது எம்ஜியாருக்கும் பானுமதிக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு அதன் காரணமாக இந்நாளைய சீரியல் பாணியில் பானுமதியைக் கழற்றி விட்டு சரோஜாதேவியை நுழைத்தார் என்பார்கள். உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், அது உண்மையாக இருந்தால் அந்த மாற்றம் வேண்டுமென்று செய்யப்பட்டது போல அல்லாது மிக இயல்பாக ஒன்றிய திரைக்கதையின் பெருமையையே உரைக்கும்!
எம்ஜியாருடன் சரோஜாதேவி இணைந்த முதல் படம். அப்போது அவர் ஏறத்தாழ புதுமுகம் என்பதால் அவர் பகுதியை கலரில் எடுத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறியதுண்டு. என்னென்ன செய்தால் படத்தின் வெற்றியை மேலும் சிறக்க வைக்க முடியுமோ அத்தனையும் இதற்காகச் செய்தார் எம்ஜியார் என்பார்கள். 'இது வெற்றி பெற்றால் நான் மன்னன்; இல்லாவிட்டால் நாடோடி' என்று எம்ஜியார் கூறியதாகச் சொல்வார்கள். ஒருவேளை இது ஆவரேஜாகப் போயிருந்தால் கூட, எம்ஜியாருக்கான பிற்காலத்தை திரையுலகில் மட்டுமல்ல, அரசியலிலும் விதி மாற்றி எழுதியிருக்கலாம். படத்தின் வெற்றி விழாவுக்காக எம்ஜியார் எழுதி வெளியிட்ட ஒரு சிறு புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தில் தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் எம்ஜியார் மனம் திறந்து பாராட்டியுள்ளார். (லிங்க் முதல் காமெண்ட் பாக்சில் காணலாம்).
....concluded........... Thanks.........
orodizli
22nd April 2020, 05:12 PM
அவரை மாதிரி பல லட்சம் , பல கோடி தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார் புரட்சித்தலைவர்..
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து.
“தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார்.
ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை.
ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!
தன்னை விமர்சித்தவர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்த பெரும் வள்ளல் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.......... Thanks.........
orodizli
22nd April 2020, 05:22 PM
[திருநெல்வேலியில் 1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் #புரட்சித்தலைவர் முதல்வர் #எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது.
அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது.
அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர்,
அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார்.
அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது.
அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
Cont...] ( கடந்த பதிவின் முந்தைய பதிவு)... Thanks...
orodizli
22nd April 2020, 05:33 PM
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், #MGRபேஷன்டெயிலர் என்று கடை நடத்தி வந்தார் . புரட்சித்தலைவர் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பபூர் மக்களிடையே பிரபலமானார் .
அவர் புரட்சித்தலைவரை காண இந்தியா வந்தார். "காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன். ஒரு சூட் "என்று கொடுத்தார்..
"அளவு ஏது ? நாயுடு கொடுத்தாரா ? " என்று கேட்டார் மக்கள் திலகம்.
"இல்லை ,ஒரு உத்தேசம் தான் .என் மனக்கனக்கால் பார்த்து வெட்டிச் தச்சேன் " என்று போடச் சொன்னார் , அத்தோடு 20000 பணம் கொடுத்தார் .
" எதற்கு ? " என்று புரட்சித்தலைவர் கேட்க.. உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன் , நூத்துக்கு ஒரு டாலர் வீதம் , உங்க பங்குக்கு சேர்ந்த பணம் . இதுவும் என் காணிக்கை .. என்றார் அந்த சிங்கப்பூர் டெயிலர் ...
புரட்சித்தலைவர் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு , தனது பெட்டியிலிருந்து 5000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20000 ரூபாய்க்கு மேல் வைத்து , "என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி என்றார்"..
அது தான் புரட்சித்தலைவர் ...
பிறந்த நாளுக்கு வாசலில் பண மாலையுடனும் , பணத்தாலான கிரீடத்துடனும் அமர்ந்து உண்டி குலுக்கி ... ஏழை தொண்டர்களிடம் ஏதாவது பீராயலாமா என்று 90 வயதிலும் பல லட்சம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் பொழுதும் அலைந்திடும் ஜென்மங்கள் வாழ்ந்த இதே நாட்டில் தான் நம் மக்கள் திலகமும் பிறந்துள்ளார் ....
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே ... அது எம்ஜிஆர் ஆவதும் கருணாநிதி ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே...
புரட்சித்தலைவர் புகழ் சிலப்பதிகாரம் ஆக வாழ்க......... Thanks...
#MGR103
orodizli
22nd April 2020, 05:34 PM
எங்கள் MGR..
..
எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136.
முதல் படம் : சதிலீலாவதி(1936).
கடைசிப் படம் : மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி.
இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்.!
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’. இப்ப....!!!
பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன்.
இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் என்னை போன்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.
முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !..
இது சில மட்டுமே. அவரின் பெருமைகள் இன்னும் பல இருக்கிறது..
....
Sai Subramanian............ Thanks...
orodizli
22nd April 2020, 05:40 PM
‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலதுகையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி........ Thanks...
orodizli
22nd April 2020, 05:41 PM
M.G.R. தனது அண்ணன் சக்ரபாணியைப் போலவே மேலும் மூன்று பேரை தனது உடன்பிறவா அண்ணன்களாகவே கருதினார். தனது ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடித்து கஷ்டப்பட்டு, பட வாய்ப்புக்களுக்காக காத்திருந்தபோது உதவி செய்தவர்களை எம்.ஜி.ஆர். பின்னர் கவுரவிக்கத் தவறியதில்லை.
1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜ குமாரி’ திரைப்படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க காரணமாக அமைந்து, எம்.ஜி.ஆரின் திறமை பற்றி உயர்ந்த அபிப்ராயம் ஏற்படுத்திய படம் அதற்கு முந்தையதாக வெளிவந்த ‘ஸ்ரீ முருகன்’. இப்படத்தில் சிவனாக நடித்த எம்.ஜி.ஆர். அற்புதமாக சிவ தாண்டவம் ஆடுவார். அதற்காக கடுமை யான பயிற்சிகளும் மேற்கொண்டார். இந்த முயற்சியும் உழைப்பும் திறமையும் தான் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக உயர்த்தியது.
‘ஸ்ரீ முருகன்’ படத்தின் கதாநாயகனாக முதலில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. விளம்பரம் வந்ததுடன் சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலையில் பாகவதர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவர் சிறை செல்லவேண்டி வந்தது. அதனால், தியாகராஜ பாகவதருக்கு பதிலாக இன்னொரு பாகவதர் கதா நாயகனாக நடித்தார். அவர் கர்நாடகா வைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர். கர்னாடக இசையில் திறமை மிக்க இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற படத்தை தயாரித்தவர். கன்னடத்தில் பல படங்களை தயாரித்து நடித்துள்ளார். பின்னாளில், ஒரு நிகழ்ச்சியில் இவரை எம்.ஜி.ஆர். கவுரவித்தார்... Thanks...
orodizli
22nd April 2020, 05:44 PM
M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.
பெற்றால்தான் பிள்ளையா?’ படத் தில் ‘நல்ல நல்ல பிள்ளை களை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும். ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.
அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார். வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.
இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகை யாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந் தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை...’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார். படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்........ Thanks...
orodizli
22nd April 2020, 05:45 PM
அனைத்து எம்ஜிஆர் நெஞ்சங்களுக்கும் வணக்கம்...
முந்திய பதிவின் தொடர்ச்சியாக தலைவரின் நண்பர் மறைந்த அசோகன் அவர்களுடைய புதல்வர் வின்சென்ட் அசோகன் அவர்களின் தொடர் பதிவு.
என் தந்தை முதலில் சினிமாவில் வாய்ப்பு கேட்டு நடிக்க போன இடம் ஜெமினி அவர்களின் வாசன் ஸ்டூடியோ...அப்போது அவர்கள் நடித்து காண்பிக்க சொல்ல அப்பா நடித்து காட்டிய காட்சிகள் மருதநாட்டு இளவரசி படத்தில் இருந்து சில காட்சிகள்.
அப்பாவும் தலைவரும் இணைந்து பல வெற்றி படங்களில் பின் நடிக்க அப்பா ஒரு படம் தயாரிக்க விரும்பி அதில் அப்போது மிக பெரிய ஸ்டார் ஆன எம்ஜிஆர் அவர்களை வைத்து ஆரம்பிக்க பட்ட படம் நேற்று இன்று நாளை.
1969..70..களில் துவக்க பட்ட இந்த படம் அருமையாக வந்து கொண்டு இருக்க சட்டென அரசியல் சூழ்நிலைகள் மாறிவிட படம் தாமதம் ஆனது.
72 இல் எம்ஜிஆர் அவர்கள் தனிக்கட்சி துவங்க படத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டிய சூழல்.
கதை, பாடல்கள், வசனம் எல்லாம் சிறந்து வர முதலில் அதிமுக கட்சி கொடி எம்ஜியார் படத்தில் வந்தது இதே படத்தில் மட்டுமே.
கட்சி வேலைகளில் எம்ஜிஆர் அவர்கள் மூழ்கி போக படம் தாமதம் ஆக வதந்திகள் பரவ தொடங்கின.
ஒரு கட்டத்தில் அப்பா அவர்களே மனம் சோர்ந்து போகும் அளவுக்கு செய்திகள் பரவின....ஆனால் புரட்சிதலைவருக்கும் அப்பாவுக்கும் ஆன நட்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை...
இந்த விஷயம் அவர்கள் இருவர் சம்பந்தப்பட்டது....இந்த படம் வர கூடாது என்று ஒருசிலர் முயற்சிக்க
ஒரு நாள் என் அப்பாவை கூப்பிட்டு நீங்கள் இந்த படத்தை எடுத்தவரை போதும் எங்களிடம் விற்று விடுங்கள்...நீங்கள் செலவு செய்தது போக ஒரு மிகப்பெரிய தொகையை உங்கள் பட நிறுவனத்துக்கு நாங்கள் தருகிறோம் என்று சொல்ல
என் அண்ணன் அமல் ராஜ் பெயரில் அப்பா இந்த நிறுவனைத்தை ஆரம்பித்து இருந்தார்.
அவர்கள் சொன்ன வற்றுக்கு ஒப்பு கொள்ளாத அப்பா படம் வந்தால் வரட்டும் யாருக்கும் உரிமையை விற்பதில்லை என்று சட்டுனு கிளம்பி வெளியே வருகிறார்.
அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொண்ட எம்ஜிஆர் அவர்கள் அப்பாவை அழைத்து நடப்பது நம் இருவருக்கு மட்டுமே தெரியும்.. படம் தொடரும் என்று சொல்லி ஒரு அடுத்து வர இருந்த ஒரு கனவு காட்சி பாடலை அடுத்து வர விருந்த வாங்கி இந்த படத்தில் இணைத்து. ( அந்த பாடல் நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்.)
அத்துணை தடைகள் தாண்டி 12.07.74.இல் இந்த படம் வெளியானது...வியாபார ரீதியாக இந்த பெரும் வெற்றி பெற்றது...இந்த படத்தினால் அப்பாவுக்கு ஒரு நட்டமும் இல்லை..படம் தாமதம் ஆனது ஒன்றே தவிர வேறு ஒரு குறை இல்லை .
நான் எங்கு போனாலும் இந்த கேள்வி கேட்காதவர் இல்லை.. அப்பாவுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் என்ன பிரச்சனை என்று.
அவர்கள் இருவரும் இன்று நம்மிடையே இல்லை...ஆனாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை ஆகும்.
கோவையில் என்ஜினீயர் பட்ட படிப்பில் நான் சேரும் போது ஒரு வருடம் மட்டுமே அங்கு படிப்பேன்...பின் சென்னையில் படிப்பை தொடருவேன் என்று சொல்ல...முதல் வருடத்தில் நான் ஒரு பாடத்தில் தோற்க படிப்பை சென்னையில் தொடரமுடியவில்லை.
அப்பா பின் சில நாட்களில் அம்மா இருவரும் மறைய என் அப்பாவின் அக்கா அத்தை தான் எல்லாம் எங்களுக்கு.
என்னை சென்னையில் படிக்க தொடர முடியாமல் போனதில் வருத்தம் எனக்கு...முதல்வர் எம்ஜிஆர் நினைத்து இருந்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்த புரியாத வயது அது.
என் தாய், என் அத்தை, நான் எல்லோரும் என் சிறுவயதில் தலைவர் வீட்டுக்கு செல்ல எனக்கு விளையாட்டு பருவம்..பல முறை அங்கு சென்று விளையாடி மகிழ்ந்து உள்ளேன்.
நான் என்ஜினீயர் ஆகி ஒரு நாள் அவரிடம் நான் ஆசி வாங்க என் அத்தை ஜானகி அம்மாவிடம் கேட்டு அனுமதி வாங்க.
அனுமதி கிடைத்த அன்று காலையில் நான் தூங்கி விழிக்க 9 மணி ஆக...என் அத்தை புறப்படு இன்று நாம் முதல்வர் எம்ஜிஆர் வர்களிடம் சென்று நீ ஆசி வாங்க வேண்டும் என்று சொல்ல.
அன்று பார்த்து எங்கள் வீட்டு கார் ஓட்டுநர் வரவில்லை.... எனக்கும் புரியவில்லை...சரி விடுங்கள்...இன்னும் ஒரு முறை போகலாம் என்று நான் சொல்ல.
அன்று காலை 10 மணி அளவில் கோட்டைக்கு கிளம்பிய முதல்வர் அத்தை எங்கள் குடும்பம் வருவதாக சொல்ல சரி என்று.
ஒரு 10 நிமிடம் காத்து இருந்து சரி விடு ஜானு நம்ம வீட்டு பிள்ளை தானே இன்னும் ஒரு முறை பார்த்துக்கொள்வோம் என்று கிளம்பிவிட.
எனக்கு மீண்டும் ஒரு நாள் அந்த மனித புனிதரை பார்க்க தேதி கொடுக்க பட்டது.
அந்த தேதி 1987 டிசம்பர் மாதம் 25 கிருத்துமஸ் அன்று காலை..
அப்போது தான் நான் என்ன ஒரு விளையாட்டு தனம் நான் படிப்பில் ஒரு பாடத்தில் தோற்க அதனால் சட்டம் மீறி அவர் எனக்கு உதவி செய்ய முடியாத நிலையில்...ஒரு முதல்வர் காத்து இருந்தும் முன்பு நான் அவரை சந்திக்க
என்று பேசி கண் கலங்குகிறார் வின்சென்ட் அசோகன் அவர்கள்.
இதுதான் விதி என்பதா எம்ஜிஆர் நெஞ்சங்களே...நேற்று இன்று நாளை படம் வர கூடாது...அந்த பாடல் தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்று அன்று திரை அரங்குகளில் ஒலிக்க கூடாது என்று திரை போட்டவர்கள் சதியே மேற்படி நிகழ்வுகளுக்கு காரணம் என்று நமக்கு தெரியும்...நாட்டுக்கும் தெரியும்.
பொருளாதார ரீதியாக மாபெரும் வெற்றி படமே அது...இன்றும் ஆங்கிலத்தில் yesterday today tomorrow... என்று அடிக்க பட்ட போஸ்டர்கள் கண் முன் வர.
நன்றி வின்சென்ட் அசோகன் சார்....என்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் நெஞ்சில் உங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு நிரந்தர இடம் உண்டு.
உங்கள் திரைத்துறை பயணம் வெற்றி பெற வாழ்த்தும் அனைத்து உலக எம்ஜிஆர் ரசிகர்கள்...நன்றி.
வாழ்க எம்ஜிஆர் புகழ்.. தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி ..நன்றி......... Thanks...
orodizli
22nd April 2020, 05:47 PM
என் நண்பனை தேடி அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவன் குடும்பம் ஒரு பிராமின் குடும்பம். அவன் தாயாரை பார்த்து ஏம்மா கிச்சா வீட்டிலே இல்லையா என்று கேட்டேன். இல்லடா பக்கத்தில் தான் போயிருக்கான் இப்போ வந்துடுவான் என்றார்கள். இல்லம்மா அவன் எங்கேன்னு சொல்லுங்க நான் போய் கூட்டிட்டு வர்ரேனு சொன்னேன். ஆத்துக்கு பின்னால் ஏதோ எம்ஜிஆர் படம் வருகிறது வால் போஸ்டர் ஒட்டியிருக்கான். அதை எல்லோரும் கூட்டமா நின்னு பாத்துண்டிருக்கா இவனும் அதை பார்க்கத்தான் அங்கே போயிருக்கிறான் நீ சித்த இரு இப்போ வந்துடுவான் என்றதும் இருங்கம்மா நானும் பார்த்துட்டு வாரேன் என்று கிளம்பி விட்டேன் போஸ்டரை பார்ப்பதற்கு. 1969 ம் வருடம் நவம்பர்
2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன் ஒரு பெருங்கூட்டம் நின்று நம்நாடு வால்போஸ்டரை பார்த்துக் கொண்டிருந்தது. என் நண்பன் நடுநாயகமாக நின்று போஸ்டரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான். எம்ஜிஆர் வாங்கையா வாத்தியாரய்யா பாட்டில் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு போஸ் கொடுத்திருப்பார். வருகிறது என்று மேல் பகுதியிலும் தூத்துக்குடி சார்லஸில் என்ற சிலிப்புடனும் ஒட்டியிருந்தார்கள். அனைவரும் சிவந்த மண் கூட வருகிறது எது ஜெயிக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். (நம்நாடு நவம்பர் 7ம்தேதியும் சிவந்த மண் நவம்பர் 9ம்தேதியும் வெளியானது. ஆனால் தீபாவளி நவம்பர் 8ம்தேதி கொண்டாடப்பட்டது) என் நண்பன் எல்லோரிடமும் நம்நாடு தான் ஜெயிக்கும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது நான் அங்கே வந்ததும் வால்போஸ்டர் பிரமாதம்டா உங்க ஏரியாவில் ஒட்டிட்டானா என்று கேட்டான். நானும் அதை பார்த்து விட்டுத்தான் உன்னை பார்க்க வருகிறேன் என்றேன் தயாரிப்பு யார் தெரியுமா எங்க வீட்டு பிள்ளை,மாயாபஜார்,மிஸ்ஸியம்மா
தயாரித்த விஜயா வாகினி நாகிரெட்டி சக்கரபாணி தான் அது. படம் நிச்சயம் சில்வர் ஜூப்லிதான்.
வந்த அன்றைக்கே பாக்கணும். எங்க அப்பாகிட்டே சொல்லி காசு வாங்கணும் என்றான். அவன் அப்பா அந்த காலத்திலேயே 4 டிஜிட் சம்பளம் வாங்க கூடிய ஒரு பேங்க் ஆபிஸர். அவன் அப்பா டேய் அம்பி 2வது வாரத்தில் போகலாம்.முதல் வாரத்தில் கூட்டம் கன்னா பின்னான்னு. இருக்கும்னு சொல்லிட்டார். முதல் நாள் படம் பார்த்தவர்களிடம் படம் எப்படினு நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தான். படம் பிரமாதம்னு அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று ஒவ்வொரு காட்சியையும் படம் பார்க்காமலே எல்லோரிடமும் விவரித்தான். அப்படி அந்த சின்ன வயதிலேயே நாங்கள் எம்ஜிஆர் மீது மிகவும் அதிகமான பற்று வைத்திருந்தோம். இவ்வளவுக்கும் அவன்SSLCயில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறி முதல் பரிசு வாங்கினான். நான் கல்லூரியில் முதல் மாணவனாக வென்று முதல் பரிசை பெற்றேன். ஏன் சொல்கிறேன் என்றால் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றவுடன் படிப்பு வராது என்று நினைப்பவர்கள் அந்தக்காலத்தில் அதிகம். அவனும் தேசிய வங்கியில் மிக உயரதிகாரியாக வேலை செய்து ரிடையர் ஆகி விட்டான். நானும் தேசிய வங்கியில் வேலை செய்து VRSல் வந்து விட்டேன். அவனுடைய தாயார் தற்போது நினைவு இழந்து கொண்டு வருகிறார்கள். சென்ற வாரம்KTV யில் நம்நாடு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது அவர்கள் படத்தை பார்த்தவுடன் என்னை நினைத்து டேய் உன் பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லுடா அவனும் படம் பார்க்கட்டும் அந்தக் காலத்தில் நம்நாடு வால்போஸ்டரை பார்ப்பதற்கு என்ன அலைச்சல் அலைந்தீர்கள் என்றார்களாம். அவர்களுக்கு 85 வயதுக்கு மேல் ஆகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவை இழந்து கொண்டு வந்தாலும் நம்நாடு போஸ்டர் நினைவை இழக்காததை என் நண்பன் சொல்லும் போது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
என் நண்பனும் நானும் போனில் பேசினால் குறைந்தது 1மணி நேரம் பேசுவோம். கடந்த கால எம்ஜிஆர் நினைவுகளை பகிர்ந்து கொள்வோம். மற்ற நினைவுகளை இழந்தாலும் தன் மகன் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றினை இன்னமும் ஞாபகம் வைத்திருக்கும் அந்த தாயின் தாய்மை உள்ளம் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்தது..... Thanks...
orodizli
22nd April 2020, 05:51 PM
#நண்பர்கள்_அனைவரும்
#இனிய_மதியவேளை_வணக்கம்
கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.
கொஞ்சம் பெரிய படிப்புதான்.
எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.
1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !
யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?
#ஒரே_ஒருவர்_நினைவுதான்_அவனுக்கு #உடனே_வந்தது.
தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.
அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.
#மறுநாள்_பணத்தை_எதிர்பார்த்து #சென்ற_அந்த_மாணவன்_கையில்
#ஒரு_காகிதத்தை_கொடுத்தார்_அந்த #மனிதர்_புரியாமல்_அந்த_காகிதத்தை #புரட்டிப்_பார்த்தான்.
#அது_ஒரு_ரசீது_1000_ரூபாயை
#அந்த_கல்லூரியில்_தன்_பெயரிலேயே #செலுத்தி_அதற்கு_ரசீது_வாங்கி #வைத்திருந்தார்_அந்த_மனிதர்.
ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.
கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.
சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?
இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.
காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.
அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.
ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
கட கடவென்ற ஓசைக்குப் பின்...
#பணத்தை_கொடுப்பது_எல்லோரின் #கண்களுக்கும்_எந்திரமாக_தெரிகிறது.
#சம்பந்தப்பட்ட_இந்த_மனிதருக்கு
#மட்டும்_அது_எம்ஜிஆராக_தெரிகிறது.
ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.
#இதோ_நல்லதம்பி_அவர்களே
#சொல்லும்_அந்த_நன்றிக்_கதை..
"1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
அதை Laminate செய்து வைத்துள்ளேன்.
கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "
#கலைவாணர்_பல #கோடிகள்_சம்பாதித்தார்_ஆனால் #அதையெல்லம்_தர்மம்_செய்துவிட்டு #அழியாத_புகழை_விட்டு_சென்றுள்ளார்.
#எனவே_செல்வம்_அழிந்து_போகும்.
ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.
#படித்து_வேலை_செய்து_ஓய்வு
#பெற்றுவிட்டேன்_இன்றும்_ATM_சென்று #ஓய்வூதியம்_பெறும்போது_அரசாங்கம்
#கொடுப்பதாக_எனது_கண்களுக்கு
#தெரியவில்லை
#தலைவர்எனக்கு_கொடுப்பதாக #நன்றியோடு_நினைத்துக் #கொள்கிறேன்."
நன்றி நல்லதம்பி அவர்களே !
உங்கள்
நல்ல மனம் வாழ்க !
நன்றி மறவாத
அந்த தெய்வ குணம்
வாழ்க !
#நன்றி_மறவாத_நல்ல_மனம்_போதும்
#என்றும்_அதுவே_என்_மூலதனம்_ஆகும்
#எனப்_பாடிய_வரிகளுக்கும்
#அது_போல_வாழ்ந்து_காட்டிய
#மன்னாதி_மன்னன்
#பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்_புகழ்...
#என்றென்றும்
#வாழ்க_வாழ்க... !
அண்ணன் நல்லதம்பி அவர்கள் கல்லூரியில் சேர்ந்துவிட்டு,
#மக்கள்திலகம் அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார்...
கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார் நம் #வள்ளல் அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
#நம்_இறைவன்_சொன்னார்_மாதா #மாதம்_செலவுக்கு_இங்கு_வந்து_பணம் #பெற்றுக்கொள்_என்கிறார்.
அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது #தலைவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் நல்லதம்பி யோசிக்க...
இவரை பார்த்த #பொன்மனச்செம்மல் #ஜானகி_அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். ஜானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........ Thanks...
orodizli
22nd April 2020, 10:27 PM
ஜெயா மூவிசி ல் தினசரி காலை 7 மணிக்கு
ஒளிபரப்பாகும் படங்கள்
----------------------------------------
21/04/20- ஊருக்கு உழைப்பவன்
22/04/20- ஒரு தாய் மக்கள்
23/04/20- குமரிக் கோட்டம்
தொடரும் சாதனைகள் !
_________________________
கொரோனா காலகட்டத்திலும் மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடர்வது
வியப்பின் விளிம்பிற்கே நம்மை அழைத்து செல்கிறது சன் தொலை காட்சியில் இன்று இரவு 9-30 மணிக்கு அன்பேவா
நாளை இரவு 9-30 மணிக்கு எங்க வீட்டுப் பிள்ளை இது இல்லாமல் மற்ற தொலைகாட்சியிலும் நம் மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்து தொலைகாட்சியினருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !
ஹயாத் !....... Thanks...
orodizli
22nd April 2020, 10:29 PM
நன்றி: மதுரை ராமகிருஷ்ணன்....From 20.3.2020 to 20.4.2020
Sunlfe
Murasu
Jaya
Mega
Vasanth TV channels.
MGR's 62. MOVIES TELECASTED.
1. Adimaipenn
2. Namnadu
3. Mattukkaravelan
4. En Annan
5. Thedi vantha mappillai
6. Engal thangam
7. Kumarikottam.
8. Rikshakaran
9. Neerum neruppum.
10.oru thai makkal.
11.sange muzhanku.
12.Nalla neram
13.Raman thediya seethai
14.Naan yen PIRANTHEN.
15.Idhaya veenai
16.ulagam sutrum valiban
17.pattikattu ponniah
18.urimai kural
19.Ninaiththai mudippavan
20.Naalai namadhe.
21.Idhayakani
22.Pallandu VAZHGA.
23.Neethikku thalai vananku.
24.uzhaikkum karangal
25.oorukku uzhaippavan.
26.Navarathinam.
27.kadhal vaganam
28.kanavan
29.Puthiya bhoomi
30.kannan en kadhalan
31.Ther tiruvizha
32.kudiyiruntha koil
33.Ragasiya police 115
34.vivasayi
35.kavalkaran
36.Arasakattalai
37.Thaikku thalaimagan
38.Petralthan pillaya
39.Thanipiravi
40.Chandrothayam
41. Mugarasi
42. Naan anayittal
43.Anbe vaa
44.Enga veettu pillai
45.Ayirathil oruvan
46. Kalangarai vilakkam
47. Kannithai
48. Thazhampoo
49. Thayin madiyil
50. Padakoti
51.Thozhilali
52.Deiva thai
53.panakkara kudumbam
54.vettaikaran
55.Dharmam thalai kakkum
56.Periya idathu penn
57.Neethikku pinpasam
58.Thayaikathathanayan
59.Tirudathe
60.Thai solla thattathe
61. NALLAVAN VAZHVAN
62.qulebagavali
Plus 7 movies
Aanantha jothi
Koduthu vaithaval
Vikkiramathithan
Mannadhi mannan
Alibabavum 40 tirudargalum
Nadodimannan
Mahadevi Total 70 movies.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சிகளில் கடந்த ஒரு மாதத்தில் எம்ஜிஆரின் 70 திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.......... Thanks.........
orodizli
22nd April 2020, 10:37 PM
அய்யா ......
காங்கிரஸ் ஆட்சியிலே .. கடுமையான அரிசிப் பஞ்சம் ஏற்பட்டது.
அரசி பஞ்சத்தை நீக்குவதற்கு காங்கிரஸ் அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
அண்ணா ஆட்சி அமைத்தார். ஓராண்டு காலமே உயிர் வாழ்ந்தார். இதில் அண்ணாவை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
திரு, கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். அரசி பஞ்சத்தை நீக்கினாரா..? இல்லை.. அவருடைய பஞ்சத்தை நீக்குவதற்கே அவருக்கு நேரம் போதவில்லை.... இதில் மக்களுடைய அரிசி பஞ்சத்தை எப்படி போக்குவார்...? அதனால் அவரும் ஆட்சியை இழந்தார்.
நாங்கள், இட்லியை சாப்பிட விரும்பினால்... எங்கள் வீட்டில் தீபாவளிக்கு அல்லது பொங்கலுக்கு தான் இட்லியை தருவார்கள். இதுதான் அன்றைய நிலை.
புரட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தவுடன் தான்... அரிசிப் பஞ்சம் போனது.
ஏழைகள் வயிறார அரிசி உணவுவை அருந்தினார்கள்.
எங்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாள் இட்லி கிடைத்தது.
நாங்களும் மனமகிழ்ந்து இட்லி சாப்பிட்டோம்.
இப்படி எங்களை வாழ வைத்த தலைவரை நாங்கள் மறக்க முடியுமா ...?
........ Thanks...
orodizli
22nd April 2020, 10:44 PM
[வரலாற்றில் 15 நவம்பர் 1983 முதல்வர் #எம்ஜிஆர். சட்டமன்ற விவாத்தில் அளித்த பதில்..
பழ.நெடுமாறன் 1000 பேருடன் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில்..
"நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிதான் இருக்கிறதா?
ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.
அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?
அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்;
ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது;
வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.
உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம்"
]........ Thanks...
orodizli
22nd April 2020, 10:51 PM
[கஷ்டப்பட்டதை மறக்காதவர்! (பாகம் 1)
அரச அவையில் சில திட்டங்களை மன்னனாக இருந்து நாடோடி வீராங்கன் அறிவிக்கின்றான். அதில் தொலைநோக்கு பார்வை கொண்ட வசனம் :–
“ஐந்து வயது ஆனவுடனே குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு, பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரையில் மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.”
எம்.ஜி.ஆர். மூன்றாவதுக்கு மேல் படிக்க முடியாத வறுமைச் சூழலில் இருப்பது போன்ற பிள்ளை செல்வங்கள் படித்து நாளைய உலகை உருவாக்கும் நல்லவர்களாக உயர்வதற்கான திட்டமிடல் இந்த வசனங்களில் புதைந்திருப்பதை அறியலாம்.
”தான் நடித்த காட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் படம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.
குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும்படியாக படம் எடுக்க வேண்டும், பொழுதுபோக்குப் படத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்பார். இந்த கருத்து சின்னவருடைய மனதில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சின்னவர் நடித்த ’வீரஜெகதீஷ்’ என்ற பழைய படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த படத்தில் ஒரு காட்சியில் புகை பிடிப்பவனுக்கு சின்னவர் அறிவுரை சொல்வதுபோல வசனம் இருக்கும். ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையை சந்தித்து வாழ்ந்தவர். காலில் செருப்பு கூட இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவர், அந்த வறுமை தந்த பாடமே வாழ்க்கைத் தத்துவத்தை அவருக்கு உணர்த்தியது எனலாம். புகழும் பெருமையும் வந்த காலத்தில், இளைமையில் வறுமையில் தான் பட்ட கஷ்டங்களை மறந்து இருக்க முடியும். ஆனால், அவர் கடைசி வரையிலும் அதை மறக்கவில்லை. அது அவரது சிறப்பு” என்பது இயக்குநர் கே. சங்கரின் அனுபவம்.
எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?
சின்னவரின் படங்களில் பாடல்கள் புகழ்பெற, வாழ்க்கையில் அவர் அனுபவித்து அறிந்ததை பாடல்களில் சொன்னதும் ஒரு காரணம்.
பாடல் பதிவின் போது ஒரு பாடலை அவர் ஓ.கே. செய்தால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அப்பாடா மறு ஜென்மம் என்று சொல்வார்கள். (அந்த அளவுக்கு பாடலில் கவனம் செலுத்தி வேலை வாங்குவார்) சின்னவருக்காக ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 25 டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.
’இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘அன்புக்கு நான் அடிமை’ பாடல் காட்சியை இரவு ஒன்பது மணிக்கு ஷூட் பண்ண ஏற்பாடு, அதற்கு ஒரு வாரமாகவே முயற்சித்தும் பாடல் சரியாக அமையவில்லை.
அந்தக் காட்சியை படமாக்க இரண்டு மணி நேரத்திற்கு முன் மாலை 7 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுத பாடல் ஓ.கே. ஆனது” என்கிறார் இயக்குநர் கே. சங்கர்
'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கவிஞர் மருதகாசியை ஒரு பாடல் எழுத வைத்தார்.
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடலின் சரணத்தை
“பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்துவிட்டு
தன்வழியே போகிறவர் போகட்டுமே!”
என்று கவிஞர் எழுதி காட்டினார்.
“தன் வழியே என்று சொல்கிறீர்களே… அது ஏன் ஒரு நல்ல வழியாக இருக்கக்கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவன் ஏன் தன் வழியில் போகக்கூடாது? அதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று புரட்சித்தலைவர் சொல்ல, ’தாங்கள் விரும்புவது என்ன? இந்த இடத்தில் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றீர்கள்?” என்று கவிஞர் கேட்கிறார்.
Cont...]....... Thanks....
orodizli
22nd April 2020, 10:53 PM
“ (பாகம் 2) தீய வழி என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்கிறார் மக்கள் திலகம்.
‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’
என்ற வரிக்குப் பதிலாக
‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’
என்று எழுதி கவிஞர் சொல்ல,
“ஆகா… பொருத்தமான வரி! அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்.ஜி.ஆர். “ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர்களோடு பணிபுரிவது பெரும் பாக்கியம்” என்று தன்னிடம் கவிஞர் மருதகாசி மொழிந்ததை வழிமொழிகிறார் பத்திரிகையாளர் நாகை தருமன்.
“எந்தக் காட்சியும் படமாக்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெறும், எந்த விதத்தில் படமாக்கினால் நன்றாக அமையும் என்றெல்லாம் விவாதித்த பிறகுதான் ஒப்புக் கொள்வார். அவருககுத் தெரியாத எந்தப் பிரிவுமே இந்தத் துறையில் கிடையாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேங்காய் சீனிவாசன்.......... Thanks...
orodizli
22nd April 2020, 10:54 PM
Con-1
சிவாஜிக்கு 60 படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் நிழற்படங்களிலும் ஒலித்தன. நிஜவாழ்க்கையிலும் அவை பிரதிபலித்தன.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததை எதிரொலித்தது. அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகும் அவரது மூன்றெழுத்து பெயரும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...' இந்தப் பாடல் வரிகளும் நிஜமாகின. சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றியது. அவரும் தனது ஆட்சியில் ஏழை எளியோரை வேதனைப்படாமல் பார்த்துக் கொண்டார்.
ஜெமினியின் ‘ஒளிவிளக்கு' படத்தில் கதைப்படி தீ விபத்துக்குள்ளான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி ஊர்மக்கள் பிரார்த்தனை செய்து பாடுவதுபோல் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் வாலி.
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'
இந்தப்பாடல் படத்தில் ஒலித்து பாராட்டுக்களை பெற்றது.
இதேப் போன்று எம்.ஜி.ஆர் நிஜமாகவே உடல்நலம் சரியில்லாத போது அவர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் மக்கள் இந்தப்பாடலைப் பாடித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘தலைவன்' என்றொரு படம். நீண்ட காலமாகவே முடிக்கப்படாமல் கிடப்பிலிருந்த படம். எதனால் இந்தப்படம் எடுத்து முடிக்க தாமதமாகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியை அழைத்து, 'இந்தப்படம் தாமதமாவதற்கு நீங்கள்தான் காரணம்,' என்று கூறினார். வாலியும் 'நான் எப்படி காரணமாவேன்?' என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர். நீங்கள் எழுதி கொடுத்த பாடல் வரிகளை திரும்பவும் சொல்லிப்பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
‘நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருக்க...' இப்படி பாடல்வரிகளை எழுதி கொடுத்தால் எப்படி படம் முடியும் வெளியே வரும் என்றார் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்........ Thanks...
orodizli
22nd April 2020, 10:55 PM
எனது அரசுப்பணி வரலாற்றில் எனக்குப் பிடித்த உன்னதர்களில் ஒருவர் திரு.பிச்சாண்டி IAS அவர்கள்.அவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிரதம உதவியாளராக கடைசிவரை பணிபுரிந்தவர்.1995ல் அம்மையார் அவரை திண்டுக்கல் கலெக்டராக நியமித்தார்.நானும் அவரும் இணைந்து 1995ல் மாநிலம் தழுவிய கொடைக்கானல் கோடைவிழாவினை நடத்தினோம்.அதன் நினைவாக ஒரு வீடியோ...... Thanks...
orodizli
22nd April 2020, 11:00 PM
ஊருக்கு வெளியே பஸ் நிறுத்தம். பயணிகள் காத்திருக்கும் அந்த கட்டிடத்தின் பின்புற சுவரில் அண்ணா, எம்ஜிஆர் அவுட்லைன் ஓவியங்கள். வரைந்தவர் எனது மாமா. இந்த கோட்டோவியங்கள் எப்போதெல்லாம் சேதாரமாகிறதோ அப்போதெல்லாம் கரித்துண்டு கொண்டு அவற்றைப் புதுப்பித்தேன். தேர்தல் நேரம்...ஊருக்கு வெளியே 'ரெட்டை இலை வெற்றித்தந்த இலை' ' இதோ புரட்சித்தலைவர் பேசுகிறார்' என ஒலிபெருக்கி சத்தம் கேட்கிறது.வீட்டிலிருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்து செல்கிறோம். தேர்தல் ஜீப் வாக்கு கேட்டபடி தெருவுக்குள் நுழைகிறது. உங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என்ற வாசகத்துடன் இருவிரல் காட்டி எம்ஜிஆர் நிற்கும் அரைமுழ நீள நோட்டீஸ்களை ஜீப்பில் தொங்கி கொண்டு வாங்கிய பிறகே சிறுவர்கள் கீழே இறங்குகிறோம். (அப்போது ஜீப்பை ஸ்டார்ட் செய்ய ' ட ' வடிவில் வளைந்த இரும்பு கம்பியை ஜீப்பின் முன்புறம் செருகி சுழற்றுவார்கள்) அன்று..திருமண வீட்டில் அதிகாலையிலேயே பக்தி பாடல் ஒலிபரப்பிவிட்டு 'பூ மழை தூவி' இசைத்தட்டை அதற்கான பிளேயரில் பொருத்தி அந்த இசைத்தட்டுல் சரியாக அந்த ஊசிமுனை கைப்பிடியை எடுத்து வைக்கிறார் சவுண்ட் சர்வீஸ்காரர். இசைத்தட்டில் பாட்டுப் போட அனுமதி கிடைத்ததில் பேரானந்தம் எனக்கு. இசைத் தட்டு சுழல...ஸ்பீக்கர் முகப்பில் நாய்க்குட்டி முகம்பார்த்து குந்தவைத்து இருக்க அந்த கொலம்பியா இசைத்தட்டை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு எம்ஜிஆர் பாடல்களை மட்டுமே ஆசைதீர ஒலிபரப்ப ஒரு சந்தர்ப்பம். இரவில் மதுரை வீரன், உரிமைக்குரல் கதை வசன ஒலி கேட்டு ஊரே இன்புற்று தூங்குகிறது. திருமண விசேஷம் முடிந்து வாழை மரம் பந்தலிலிருந்து தூக்கி வீசப்பட்டுக் கிடக்க கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளின் ஏக்கம் தணிக்க, சிறுவர்கள் சவுண்ட் சர்வீஸ் விளையாட்டு விளையாடுவோம். பிளாஸ்டிக் புனலை ஸ்பீக்கராக பயன்படுத்தி தெருவில் உள்ள பூவரசு, வேப்ப மரங்களில் ஏறி கிளைகளில் கட்டி வைப்போம். களிமண்ணால் செய்த இசைத்தட்டு பிளேயரில் சோடா பாட்டில் மூடியை வட்ட வடிவமாக்கி இசைத்தட்டாக பயன்படுத்துவோம். வயர் வேண்டுமே...வாழை நாரை பயன்படுத்துவோம். டியூப் லைட் வேண்டுமே...வாழைத் தண்டை பயன்படுத்துவோம். சிறுவர்கள் மரத்திற்கு மரம் ஏறி உட்கார்ந்து 'அய்ங்...அய்ங்... நேத்து பூத்தாளே' பாட்டுப் பாடி கத்திக் கொண்டிருப்போம். பொங்கல் வாழ்த்து எங்க வீட்டுக்கு வருகிறது. பளபள வழவழப்பான தாளில் இதயக்கனி எம்ஜிஆர் கைகூப்பி நிற்கிறார். பின் அது துணிகள் வைக்கும் பெட்டியினுள்... பெட்டியைத் திறந்தால் அந்த படமே முகமலர்ச்சியை தரும். தேர்தல் பரப்புரை...மெஞ்ஞானபுரத்தில் திமுக பேச்சாளர் எம்ஜிஆரை திட்டுகிறார். பெண்கள் காதைப் பொத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடுகிறார்கள். ஏன் எம்ஜிஆரைத் திட்டுபவர்கள் திட்டு வாங்கிய காலம் அது.( இப்போதும் கூடத்தான்) தியேட்டர் பக்கம்...ரஜினி,கமல் படம் ரிலீஸ். மறுவாரம் எம்ஜிஆர் படம் மறுவெளியீடு. புதிய படத்தைவிட இரண்டு மடங்கு கூட்டம். உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் மாட்டு வண்டியில் பயணித்து உரிமைக்குரல் பார்க்க கிராமவாசிகள் சிரமம் பார்க்கவில்லை. மர்பி, பிலிப்ஸ் ரேடியோக்களில் இலங்கை வானொலியில் எம்ஜிஆர் பாட்டு ஒலிபரப்பப்படும்போது மட்டும் அதிக சப்தம் - (வால்யூமை அதிகரிக்க) செய்து கேட்பது. திடீரென ஒருநாள் எம்ஜிஆர் முதலமைச்சராகிவிட்டார் என்ற ஆரவாரம் தமிழ்நாட்டில்.
பாடப்புத்தகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சர் புகைப்படம் பார்த்து நெகிழ்கிறேன். இன்று கற்பித்தலில் பாடப்புத்தகம் தவிர்த்து வீடியோ clips காண்பிக்கும் வழக்கம் உள்ளது. அன்று வகுப்பறையில் கற்பிக்கப்படும் கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும் எம்ஜிஆர் சினிமா காட்சிகள். தாயை வணங்குவதே கடவுளை வணங்கியது போல என்றும் சான்றோர்கள் நல்வழிக்கு வழிகாட்டியவைகளையெல்லாம் காட்சிப்படுத்தி சிறுவயதிலயே நம் மனதில் எளிமையாக பதியும்படி பாடல்கள் மற்றும் நடிப்பு மூலம் எம்ஜிஆர் தனது கலையை அர்ப்பணித்திருந்தார்.( திரையில் பாடம் நடத்திய வாத்தியார் என்பதால் எம்ஜிஆருக்கு நான் ரசிகனாக... பக்தனாக மாறியதற்கு காரணம் இது ஒன்றே என்பதை கோடிட்டுக் காட்டுகிறேன்)
அன்று தெருவின் மைய பகுதியில் இரவு 9 மணிக்குமேல் சைக்கிளில் எடுத்து வந்து ஜவுளி ஏலம் விடுவது வழக்கம். ஜவுளி வியாபாரி ஒரு தீபந்தத்தை எரிய விட்டிருப்பார். லுங்கி, வேட்டி, புடவை என ஒவ்வொன்றாக ஏலம் விட்டுக் கொண்டிருப்பார் வியாபாரி. சில பெற்றோர் அண்ணா நீ என் தெய்வம் எம்ஜிஆர் படம் போட்ட பனியன் சிறுவர்களுக்கு வாங்கி கொடுப்பார்கள். அதை அணிந்து கொண்டு தூங்கி மறுநாள் பலருக்கு தெரியும்படி ஊரில் வலம் வருவோம்.
ஊரில் கோயில் பண்டிகை காலங்களில் உறவினர் வருகை தருவது வழக்கம். விழா முடிந்ததும் உறவினர் தங்கள் ஊருக்கு புறப்படுவதை தடுத்து அவர்களை இன்னும் இரண்டொரு நாள் தங்க வைக்க ஆசைப்படுவோம். ஏதாவது காரணம் சொல்லும்போது 'நம்ம ஊரில் இன்று இரவு எம்ஜிஆர் படம் திரையில் போடுறதா இருக்கு. பாத்துட்டு நாளைக்குப் போகலாம்' என்போம். திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களில் சவுண்ட் சர்வீஸ்காரரிடம் பந்தலில் உட்கார்ந்து கொண்டு சில பெருசுகள் எம்ஜிஆர் பாட்டைப் போடு என அதிகாரம் செய்துகொண்டிருப்பார்கள். 16 எம்எம்மில் தெருவில் சினிமா திரையிட்டால் எம்ஜிஆர் படம் இல்லாமல் சிவாஜி படம் இருக்காது. முதலில் எம்ஜிஆர் படம் திரையிட்டால் இரண்டாவது சிவாஜி படம் பார்க்க ஆள் இருக்காது.
80 களில் புதிய படங்கள் பார்க்க தியேட்டருக்குப் போவோம். கோழி கூவுது, மௌன கீதங்கள், அன்னை ஓர் ஆலயம் படங்களில் எம்ஜிஆர் படங்களின் பாடலோ, சண்டைக் காட்சிகளோ இடம்பெற்றிருக்கும். வீடு வந்தபின்புன் எம்ஜிஆர் காட்சிகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக கோழி கூவுது படம் பார்த்த பின்பு குடியிருந்த கோயிலும் மௌன கீதங்கள் பார்த்த பின்பு மீனவ நண்பனும் பார்க்க துடித்தேன். 87 ம் வருடம்தான் அந்த ஆசை நிறைவேறியது.பில்லா, வாழ்வே மாயம் புதிய படங்கள் இரவு காட்சி பார்க்க போவோம். இடைவேளை நேரத்தில் வணிக மற்றும் பிற வியாபார பொருட்களின் கடை விளம்பரம் நடிகர்களின் புகைப்படத்துடன் சிலைடில் காட்டப்படும். எம்ஜிஆர் புகைப்பட சிலைடு போடும்போது கைத்தட்டல் விசில் சத்தம் மற்றதைவிட அதிகமாகவே கேட்கும். அன்று 'ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க' என போஸ்டர் ஒட்டுவார்கள். நீதிபதி படம் அப்போது ரிலீசான காலக்கட்டம். அது மேட்னி உள்பட 3 காட்சி படம். அத்துடன் ஒருவாரமாக மாட்டுக்கார வேலன் காலை 10.30 காட்சியாக திரையிட்டிருந்தனர். சிவாஜி படம் இடைவேளையில் 'பூ வைத்த பூவைக்கு' என்ற பாடலை காட்டி 'தினசரி காலைக் காட்சி காணத்தவறாதீர்கள்' என சிலைடு போடுவார்கள். அப்போது எம்ஜிஆரைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரமாக அடங்க வெகு நேரம் பிடித்தது. நீதிபதி படம் ஒரே வாரத்தில் தூக்கப்பட்டு மாட்டுக்கார வேலன் 2 வது வாரமாக ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க என 4 காட்சியாக்கப்பட்டது. அந்த 2 வது வார ஞாயிறு மேட்னி மீனவர்களின் ஆர்ப்பரிப்பால் உடன்குடி அமளி துமளிப்பட்டது.
இதயக்கனி படம் பார்த்துவிட்டு வந்தவுடன் கறுப்புக் கண்ணாடி அணிவித்து என்னை 'எம்ஜிஆர் போல இருக்கிறாய்' என கூறி உறவினர் கலகலப்பூட்டிய நிகழ்வே எம்ஜிஆர் என்னைக் கவர்ந்த முதல் அனுபவம். மனித முகம் வரையும் போதெல்லாம் எம்ஜிஆர் மூக்கு, கண்கள், புருவம், அரும்பு மீசை, தாடையில் சிறு குழி, நல்லநேரம் ஹேர் ஸ்டைலிலேயே வரைவேன். ஆண் உருவம் வரைந்தால் எம்ஜிஆர் சாயலில்தான் வரைகிறேன். அன்று ஒருநாள்...மாலை 4 மணிக்கு 'எம்ஜிஆர் நம்ம ஊருக்கு வருகிறாராம்' என்ற செய்தி கேட்டு பள்ளிக்கூடத்தில் இருக்க முடியவில்லை. பள்ளி கடைசி மணி அடித்ததும் மின்னலாக வந்து மேடை முன்பு அமருகிறேன். சற்று நேரத்தில்..புரட்சித்தலைவர் வருகிறார்...வாழ்க..வாழ்க கோஷம் ஆர்ப்பரிக்கிறது. சந்தன நிறத்தில் சந்திரன் மேடையை அலங்கரிக்கிறார். அனைத்து கண்களும் நிலைகுத்தி நிற்கிறது.மேடை காலியாகிறது. அன்று எம்...ஜி...ஆர் என் கண்ணுக்குள் நுழைந்தார்... இதயத்தில் இன்றும் ....( நண்பர்களே இங்கு சுட்டிக்காட்டப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் விரிவாக கூற ஆயுள் போதாது)....... Thanks mr. Samuel...
orodizli
22nd April 2020, 11:03 PM
பெரியவாளும்
எம்.ஜி.ஆரும்....
ஒரு சோம்பலான மதியம் மூன்றரை மணி!!
அதாவது மதியத்தின் முடிவு--மாலைப் பொழுதின் ஆரம்பம் என்ற இரண்டுங்கெட்டான் பொழுது??
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது!!
காரிலிருந்து இறங்குபவரைப் பார்த்ததும்
மடம் -தீ பிடித்துக் கொண்டதைப் போல் ஆகிறது??
ஆம்!! காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்!!
எந்தவித முன் அறிவிப்பும் இல்லை. அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை.
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள்.காரணம்?
அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை!! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்.
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்!!
ஏன் இந்தப் பரபரப்பு?
அவரிடம் தயங்கியபடியே விபரம் சொல்லப்படுகிறது!!
மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.இவ்வளவு தானே.அங்கேபோய்அவரைதரிசித்துக்கொள்கிறேன்பதட்டம ில்லா பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்??
மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கிநம் மனதிலோ பிரமிப்பில் நெடிலை நோக்க.
இப்படி வருத்தப் படுகிறது முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி.
உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை.
அதனால் என்ன?இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!! என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.
இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்!! அந்த ஒரு சிலரில்
எம்,ஜி,ஆரும் ஒருவர்!!!
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!!
நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி--திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு!! அதுக்கு தேக சிரமம்--கால விரயம்--பணச் செலவுன்னு ஆகிறது!!
ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்!!
இவ்வளவு தானே?இந்த சின்ன விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே?
நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்தசங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்கஉன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை,, என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.
நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா!! அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்!! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து!! நீ கிளம்பு என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி!!
இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!!!!
எம்,ஜி,ஆர்,அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்காட்சியும்,அரசாட்சியும் அருமையாக அமைந்து விட்டால்---அரசனும்--ஆண்டவனும் ஒன்றே என்பது நமக்கு விளங்குகிறது அல்லவா நன்றே.......... Thanks...
orodizli
22nd April 2020, 11:04 PM
வசனகர்த்தாவோ, பாடலாசிரியரோ எழுதுகின்ற ,சொல்லுகின்ற எந்த கருத்தும் ,அவர்களின் ஏட்டிலே இருக்க்கின்றவரை தெருவில் பாடுகின்ற குரலாகத்தான் இருந்தது ! எம் புரட்சித்தலைவரின் கைகளில் வந்த பிறகுதான் அது திருக்குறளாய் மாறியது ! ஆமாம்! ஆட்சிபீடத்திற்கு உரியவர்கள் ஆண் பெண் என்ற பேதமில்லை! யாராக இருந்தாலும் மக்களின் உதவி என்னும் நூலை கொண்டுதான் பதவி என்னும் பட்டம் வானமளாவி பறக்கவேண்டும் ! நேர்மையான செங்கோல் ,நிம்மதியான ஆட்சி இதுதான் ஒரு ஆட்சிக்கு அளவுகோல் ! என்ன ஒரு சத்தியமான வார்த்தை ! அதை சாத்தியமாக்கிய சரித்திர நாய்கர் !....... Thanks...
orodizli
22nd April 2020, 11:09 PM
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.
உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன் என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.
கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.
பிறப்பு என்பது தற்செயலாக நடக்கும் இயற்கை நிகழ்வு. இதில் பெருமை படவோ அல்லது சிறுமை கொள்ளவோ எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான மன நோய
கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது.(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள் ) அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.
அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,
‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.
மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,
எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.
கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.
அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!..... Thanks...
orodizli
22nd April 2020, 11:13 PM
பத்திரிகை: இந்த தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?
கருணா: உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வள்ளுவர் கோட்டம் போய் பாருங்கள். அங்கு பிரம்மாண்டமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் என் பதவியேற்பு விழாவில் பிரதமர் இந்திரா கலந்து கொள்ள உள்ளார். நீங்களும் தவறாது கலந்து கொள்ளுங்கள். (நகைச்சுவையாக) வடக்கும் தெற்கும் ஒன்றிணைகிறது. ஆம். சுவையான வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் பரிமாறப்படும். அந்த அளவுக்கு நான் வெற்றி பெறுவது உறுதி. என் கவலையெல்லாம் நாளை என்பது சீக்கிரம் வர வேண்டுமே என்றுதான்.
மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மக்கள் மறுபடி எம்ஜிஆர் அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அதே நிருபர் எம்ஜிஆர் இடம் பேட்டி.
பத்திரிகை :கருணாநிதி அவர்கள் நேற்று பேட்டியில் வெற்றி பெற்று விடுவேன். என மிகுந்த நம்பிக்கை யுடன் இருந்தாரே... ஆனால் வெற்றி உங்கள் பக்கம். இது எப்படி சாத்தியமானது?
எம்ஜிஆர் : கருணாநிதி அதிகாரத்தையும் ஜோசியத்தையும் நம்பினார். நான் மக்களை நம்பினேன்..இந்திராவிடம் என் ஆட்சியை கலைக்க சொன்ன கருணாநிதிக்கு நன்றி சொல்கிறேன். மக்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்திய நண்பர் கருணாநிதிக்கு நன்றி!!
அதுதான் எம்ஜிஆர்......... Thanks...
orodizli
22nd April 2020, 11:14 PM
[#பட்டங்களுக்குப் #பெருமை
கல்மனம் நிறைய உண்டு...நன்மனம் பார்ப்பது அரிது...அதிலும் அரிது #பொன்மனம் #தரம் #குறையாதது...பெண்ணும் பொன்னும் மாற்றுக்குறையாமல் இருக்கவேண்டுமென்பது விதி..அந்த நன்மனம், பொன்மனம் எப்படி நெகிழ்ந்தது...மகிழ்ந்தது ...!!!
பொன்மனச்செம்மல் பட்டம், தமிழ் வளர்த்த பெரியார் வாரியார் அவர்களால் வழங்கப்பட்டதை அறிவோம்...
#வாரியார் #என்ற #பெயருக்கே பொன்மனச்செம்மல் அளித்த விளக்கம் : "தமிழ்ச்சுவையை வாரி வாரி வழங்குவதால், அப்பெரியார்க்கு அப்பெயர்" என்றார்.
பொன்மனச்செம்மல் #நகைச்சுவை #உணர்வு மிகுந்தவர்...
ஓர் முறை ராமாவரத்திலிருந்து வரும் போது நல்ல மழை. கார் போரூரை நோக்கி கார் போய்க்கொண்டிருந்தது...அப்போது ஒரு கார் வேகமாகக் கடந்து சென்றது. வேகத்தில் சேற்றை அவரது காரின் மீது இறைத்தது...
அப்போது மக்கள்திலகம் சிரித்துக்கொண்டே சொன்னார்:
"பாரி வள்ளல் வாரிக்கொடுத்தான் அக்காலத்தில்...
காரில் போகிறவர்களும் வாரியடிக்கிறார்கள் இக்காலத்தில்...இவர்களையும் "வாரியார்" என்றே சொல்லலாம்...
உலகில் ஒருவர் மற்றவரை மதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த நபர் '#கொடுக்கிறார்' என்றே பொருள். அதாவது மதிப்புக்கும் விலை கொடுக்கவேண்டும். ஆனால் பொன்மனச்செம்மல், வாரியார் அவர்களை நமக்கு பட்டம் தரவேண்டும் என்பதற்காக மதிக்கவில்லை...
இதற்கு ஒரு சிறு உதாரணம் :
வாரியார் சுவாமிகள் பிரபலமாகாமலிருந்த போதே அவரது தமிழ்ச்சேவைக்காக மக்கள்திலகம் மதித்தார்.
1954- ல் பொருட்காட்சியில் "இன்ப கனவு" நாடகம் நடந்து கொண்டிருந்தது. பெருங்கூட்டம். அந்நாடகத்தில் வில்லன் வேடமேற்று நடித்த சேதுபதி என்பவர் ஒரு கட்டத்தில் "கிருபானந்த வாரியார் காலட்சேபத்துக்கு சுண்டல் வாங்கப் போனேன்" என்று சொல்வதற்கு பதில் '#கிருக்கானந்தவாரியார்' #உம்ஹும் '#கிருபானந்தவாரியார்' என்று கிண்டலடிப்பார். கூட்டத்தில் பலர் சிரித்தனர்...
மேடை மேல் ஓரமாக நின்ற மக்கள்திலகம் முகம் சிவந்தார். நாடகம் முடிந்ததும் கண்டிக்கப்பட்டார்.
"மன்னிச்சுக்கங்க அண்ணா. சும்மா தமாசுக்கு சொன்னேன். ஜனங்களை சிரிக்கவைக்க" ன்னார் சேதுபதி.
அப்ப மக்கள்திலகம், "அப்ப அண்ணா பேரு, காந்தி பேரு, காமராசர் பேரு வந்தாக்கூட இப்படித்தான் கிண்டல் பண்ணுவியா??? #மத்தவங்களை #சிரிக்கவைக்க #மகான்களின் #பெயரை #இழுக்கக்கூடாது...அது மிகவும் #இழிவான #செயல்" என்று பொட்டிலடித்தாற் போலக் கூறினார்.
பட்டங்களால் சிறப்பு பெறுபவர் பலர் உண்டு...!!!
அந்தப் #பட்டங்களே #சிறப்புபெறுவது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலுக்கு சூடியதால் மட்டுமே என்பதை யாரால் மறுக்கமுடியும் !!!]....... Thanks...
orodizli
22nd April 2020, 11:20 PM
பல வருடங்களுக்கு முன்னால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஏற்பட்ட கட்சி மோதலில் மாணவர் பாலசுந்தரம் சில தீயசக்தி கும்பலால் வெட்டி சாய்க்கப்பட
அவர் அருகில் இருந்த ஒரு மாணவர் அவரை தன் மடியில் சாய்த்து கொண்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்ற முனைகிறார். அதிக ரத்தம் வெளியேற அந்த மாணவர் பாலு அவர் சக தோழர் மடியில் உயிர் நீக்கிறார்.
இதை கேள்விப்பட்ட நமது தலைவர் அந்த மாணவர் பாலு உயிரை காக்க கடும் முயற்சி செய்தவர் பற்றி விவரம் சேகரிக்க அவர் தச்சு வேலை செய்யும் ஒரு ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் அந்த மாவட்டம் முழுவதும் அறிய பட்ட தனது தீவிர ரசிகர் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.
அடுத்து அந்த மாணவரை அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆக்குகிறார்.
அவருக்கு தன்னை எப்பொழுது சந்திக்க வந்தாலும் தோட்டத்தில் சிறப்பு அனுமதி கொடுக்கிறார் பொன்மனம்.
பின்னாளில் அவரை அவர் சார்ந்த மாவட்ட ஆட்சியர் வசம் கட்டுப்பாட்டில் இருந்த cooptex சொசைட்டியை பிரித்து புதிதாக சேர்மன் என்ற பதவியை உருவாக்கி அவருக்கு கொடுக்க சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு இடுகிறார்.
மாவட்ட ஆட்சியர் யாரோ பெரிய கட்சிக்காரர் போல இவர் என்று நினைத்து கொண்டு தலைவர் சொன்ன படி அந்த பொறுப்பை கொடுக்க அவர் வீட்டுக்கு சென்று அரசு முறைப்படி பதவி ஏற்பு நிகழ்வு விவரம் சொல்ல போக.
அங்கே அவர் கண்ட காட்சி அவரை உறைய வைத்தது....சாதாரண ஓட்டை ஓலை குடிசை வீட்டு வாசலில் வந்து நிற்கிறார் ஆட்சியர்.
வீட்டு வாசலில் தலைவர் நலம் பெற வேண்டி அவர் வகுத்த தீக்குண்டம், அவரின் எளிமையான இனிமையான குணம் கண்டு மிகவும் கண்டிப்பான அந்த ஆட்சியர் உடன் இவர் வீட்டை அடையாளம் காட்ட வந்த மேனேஜர் வேலாயுதம் ஆச்சர்யம் அடைகின்றனர்.
உண்மையான தொண்டனை தலைவர் ஒரு நாளும் கை விட்டது இல்லை.
சரி இவ்வளவு நேரம் பதிவில் அவர் பெயரை நான் குறிப்பிடவில்லை
அவர் யார் என்றால் கடலூர் மாவட்டம் சேர்ந்த அந்த தொண்டரின் பெயர் முருகுமணி.
சரித்திரம் படைத்த மதுரையில் நடந்த எம்ஜியார் மன்ற மாநாட்டுக்கு தலைமை வகித்தவரும் இதே முருகுமணியே.... அன்று நடைபெற்ற ஊர்வலத்துக்கு தலைமை நெல்லை ...ப.இளமதி ஆகும்.
மாநாட்டு மேடையில் அம்மையார் ஒரு வெள்ளி செங்கோலை தலைவர் அவர்களிடம் கொடுக்கும் படம் வரலாற்று புகழ் பெற்றது.
அந்த நினைவு பரிசை கொடுக்கும் போது தலைவர் மாநாட்டு தலைவர் முருகுமணியை அழைத்து அந்த நிகழ்வில் நிற்க அந்த செங்கோலை பிடிக்க சொல்லும் படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது.
அந்த மூன்றாம் நபர் தொண்டன் கடலூர் முருகுமணியே ஆகும்.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி..
நாளை சந்திப்போம்....... Thanks...
orodizli
22nd April 2020, 11:25 PM
இரண்டு மணி நேரம் பொறுமையாய் படம் பார்க்கும் நம் மக்கள் எண்ட் கிரெடிட் டைட்டில்ஸ் ஓடுகையில் ஏதோ திரையரங்கில் தீப்பிடித்துக் கொண்டது போல ஓட முற்படுவார்கள். அத்தனை பொறுமை!!
இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்துக்கொண்டு மூன்றுமணி நேரம் ஓடுகிற படத்தில், அதுவும் க்ளைமாக்ஸ் காட்சி முடிந்தபின் ஒரு பாடல் வைக்கலாம் என்று எந்த இயக்குநராவது யோசிப்பாரா..? ஏ.சி.திருலோகசந்தர் யோசித்தார், வைத்தார்.
நாலு நிமிடம் ஓடுகிற அந்த ‘அன்பே வா’ ஹேப்பி ஸாங் முடிகிற வரையில் ஒருத்தராவது எழுந்து வெளியே போகணுமே... அப்படி ஈர்த்தது எம்ஜிஆரின் ஆகர்ஷண சக்தி. வேறு எந்த ஹீரோவுக்கும் அப்படியொரு கட்டிப் போடுகிற பவர் இருந்ததில்லை என்றும். இன்று காணலாம் அத்திரைப்படத்தை மீண்டும்.
நன்றி கணேஷ்பாலா........ Thanks.........
orodizli
22nd April 2020, 11:28 PM
உண்மை. சிறுவயதில் அந்த அனுபவம்நிறைய உண்டு.டீ.வி இல்லாத .காலம்.பற்பல தடவைகளுக்கு மேல் பார்த்து இருக்கிறேன்.....பிரமித்தேன் .....அன்று எம்ஜிஆர்........ ஒரு பிரம்மாண்டம்........ Thanks...
.
orodizli
22nd April 2020, 11:34 PM
#எம்_எஸ்_வி_பற்றி #புலவர்_புலமைப்பித்தன் -
வீட்டில் இருந்து காலையில் ஏழு மணிக்கு எல்லாம் ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நாங்கள் அவர் வருவதற்கு முன்பே கூடிவிடுவோம். அவர் வரும்போது பத்து பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கி அடுக்கி இட்லி கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். ‘வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க... இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துடும்’ என என்னிடம் சொல்லிவிட்டு ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படிச் சிரிப்பார். எல்லாமே அவருக்கு விளையாட்டுத்தான். அப்படி ஒரு பிள்ளை மனசு.
உலக விஷயங்கள் எதுவும் தெரியாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது அவரிடம் சொன்னால், ‘அப்படியா... எப்ப வந்தார்?’ எனக் கேட்கும் அளவுக்கு வேட்டி சட்டை அணிந்த வெள்ளந்திப் பிள்ளை அவர்.
ஒருநாள் ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ‘வாத்தியார் அய்யா... நேத்து ஒரு கனவு கண்டேன். நீங்க எழுதிக்குடுத்த பாட்டுக்கு நான் போட்ட மெட்டு நல்லா வரலைன்னு, நீங்க என் கையை நீட்டச் சொல்லி அடி பின்னிடுறீங்க. அப்புறம் நான் முழிச்சுக்கிட்டேன்... பார்த்துக்கங்க’ எனக் கைகளை முன்னே காட்டி, முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார். பக்கத்தில் இருந்த எல்லோரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டோம். நான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் கண்டிப்பான தமிழ் வாத்தியார். கீழ்படியாத மாணவர்களைப் பிரம்பெடுத்து விளாசிவிடுவேன். மெல்லிசை மன்னரின் இரண்டு பிள்ளைகள் என் மாணவர்கள் என்பதால், அந்த விஷயம் அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு அப்படி ஒரு கனவு வந்தது என்றார்
‘குடியிருந்த கோயில்’ படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் நான் எழுதின பாடல்தான் என் திரையுகல வாழ்வின் முதல் பாடல். கோவையில் இருந்து சென்னைக்கு என்னை அழைத்துவந்த கே.சங்கர்தான் இயக்குநர். ஏற்கெனவே இரண்டு மூன்று பேர் அந்தப் பாடல் சூழலுக்கு எழுதியும் திருப்தியாக வராத நிலையில்தான், என்னை எழுதச் சொன்னார்கள். சூழலைச் சொல்லிவிட்டு மேற்கு மாம்பலம் பவர் ஹவுஸ் பக்கத்தில், காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார் கே.சங்கர். காரில் வரும்போதே மனசுக்குள் பாடல் முழுவதும் வந்துவிட்டது. பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்கலாம் எனப் போனால், சட்டைப்பையில் பேப்பர் வாங்கக்கூட காசு இல்லை. கையில் வைத்திருந்த பேப்பர் ஃபைலைத் திருப்பி, அதில்தான் எழுதினேன் ‘நான் யார்... நீ யார்... நாலும் தெரிந்தவர் யார்... யார்?’ அன்று மாலையே அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு. பாடல் எழுதின பேப்பரைக் கையில் எடுத்த எம்.எஸ்.வி., ஒரே மூச்சில் முழுப் பாட்டையும் பாடி மெட்டமைத்த அதிசயத்தை, அன்றுதான் நேரில் பார்த்தேன். அந்தப் பாடல் எழுதுவதற்கு முன்பே எனக்கு எம்.எஸ்.வி. பழக்கம் என்றாலும் அந்தப் பாடலுக்குப் பிறகு எங்களுக்கு நட்பின் பிணைப்பு இன்னும் இறுக்கமானது.
தமிழ்த் திரையுலகில் எம்.எஸ்.வியைப் போல குருபக்தி கொண்டவர்களைக் காண்பது அரிது. தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை, தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றியவர் எம்.எஸ்.வி. சுப்பையா நாயுடுவின் கடைசிக்காலம் வரை அவரிடம் எம்.எஸ்.வி காட்டிய நன்றி விசுவாசம் எல்லையற்றது. எம்.எஸ்.வியின் ஒவ்வொரு பிறந்த நாளும் ஏற்காட்டில் உள்ள அவரது பங்களாவில் நடக்கும். அவரோடு வேலைபார்க்கும் முக்கியமனவர்களை மட்டும் அழைப்பார். பிறந்த நாள் அன்று காலை குளித்து முடித்ததும் அவரது அம்மா நாராயணி அம்மாள், குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருவரின் கால்களிலும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவார். சுப்பையா நாயுடுவின் காலில் விழுந்து வணங்கி எழுந்திருக்கும்போது எம்.எஸ்.வியின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடும். அத்தனையும் நன்றிக்கடனுக்காக சிந்தும் கண்ணீர் என்பது என்னைப் போல எம்.எஸ்.விக்கு நெருக்கமாக இருந்த நண்பர்களுக்குத் தெரியும். சுப்பையா நாயுடு இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளைப் பிள்ளையின் ஸ்தானத்தில் இருந்து செய்து முடித்தார் எம்.எஸ்.வி.
எம்.எஸ்.வி., ஒரு பாடலுக்கு மெட்டு போட்டால் கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரஞ்சரமாகக் கொட்டும். ‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலை நான்தான் எழுதினேன். எம்.ஜி.ஆருக்கு எழுதிய காதல் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அந்தக் காலத்தில் பட்டிதொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலித்தது. இந்தப் பாடலுக்கு அடுத்தடுத்து பத்து மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார் எம்.எஸ்.வி. இந்தப் பாடல் வெளியாகி பிரபலமாகி இருந்த சில நாட்களுக்குப் பிறகு, சிவாஜி பிலிம்ஸ் தாயரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்கு சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று எம்.எஸ்.வி&டமும் அப்படியே பேசியிருக்கிறார். ‘என்னடா... அண்ணனும் (எம்.ஜி.ஆர்) மலையாளி... நீயும் மலையாளி... அதனால அண்ணனுக்குத்தான் நீ நல்ல பாட்டா போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ என, ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலைச் சொல்லிக் கேட்டார். பதறிப்போன எம்.எஸ்.வி. உடனே, ‘எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டுதான் நானு... பாட்டு எழுதினதெல்லாம் வாத்தியார் அய்யாதான்... நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க...’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்துவிட்டு எம்.எஸ்.வியைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
வாஹிணி ஸ்டுடியோவில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்துக்கான பாடல் பதிவு. ‘தீர்த்தக்கரையிலே தெற்கு மூலையிலே செண்பகத் தோட்டத்தினிலே...’ என்ற பாரதியார் பாடலை எடுத்துக்கொண்டு வந்துகொடுத்து இசையமைக்கச் சொன்னார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அது சிந்து வகைப் பாடல். மெட்டுக்குள் கட்டுப்படாமல், ஒரு குழந்தையைப் போல நழுவி நழுவி ஓடும் தன்மை கொண்டது. பாடலைக் கையில் வாங்கிய எம்.எஸ்.வி., ஏற்கெனவே பத்து முறை பாடி பயிற்சி எடுத்ததுபோல படபடவென்று பாடி முடித்துவிட்டார். எங்களுக்கெல்லாம் பெருத்த ஆச்சர்யம். பாடி முடித்ததும் என்னைப் பார்த்து ‘வாத்தியார் அய்யா பாட்டு எப்படி?’ என்று கேட்டார். நான் ‘பாரதியார் நேரில் வந்து மெட்டமைத்திருந்தால்கூட இப்படி அமைத்திருக்க மாட்டார்’ எனச் சொல்ல, எம்.எஸ்.வியின் கண்களில் தாரைத்தாரையாகக் கண்ணீர்... அவர் மிகவும் உணர்ச்சிவசப் பட்ட தருணம் அது.
எம்.எஸ்.வி., மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதையெல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். தமிழ்த் திரையுலகில் இப்படிப்பட்ட பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்களா என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார் எம்.எஸ்.வி. உதாரணமாக மூன்று சம்பவங்களைச் சொல்கிறேன்...
அப்போது தேவர் பிலிம்ஸ் கம்பெனியின் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்தான். ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, ‘தம்பி... நம்ம கம்பெனியோட புதுப்படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க...’ எனச் சொல்லிப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., ‘மாமா (கே.வி.மகாதேவன்) இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவு பண்ணிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர் எம்.எஸ்.வியின் அம்மா நாராயணி அம்மாளிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் ‘என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி... அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். அடுத்து...
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த ‘வியட்நாம் வீடு’ படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை. அப்போது அவர்கள் தயாரிக்கவிருந்த ‘கௌரவம்’ படத்துக்கான கதை விவாதம் முடிந்து இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை இசையமைக்கும்படி சொல்லி, கதை சொன்னார்கள். கதையைக் கேட்டு முடித்த கே.வி.எம்., எழுத்துபோயிருக்கிறார். ‘ஏன் கதை பிடிக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை... இந்தக் கதை கொஞ்சம் முற்போக்கானது. இதற்கு என்னைவிட எம்.எஸ்.வி பொருத்தமாக இருப்பார். அவரை இசையமைக்கச் சொல்லுங்கள்’ எனச் சொல்லிவிட்டார் கே.வி.எம்.
எம்.எஸ்.வியிடம் சொன்னால், ‘மாமா இசையமைப்பதாக இருந்த படத்த்துக்கு நான் இசையமைக்க மாட்டேன்’ எனச் சொல்லிவிட, கே.வி.எம்மே போன் போட்டு, ‘நீயே இசையமைத்துக் கொடு எனக்கு அந்தப் படம் சரிவராது’ எனச் சொன்னபிறகுதான், கௌரவம் படத்துக்கு எம்.எஸ்.வி. இசையமைத்தார். இதேபோலத்தான்... உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க இரண்டு பாடல்களும் பதிவாகிவிட்டன. எம்.ஜி.ஆரை அந்தப் பாடல்கள் ஈர்க்கவில்லை. குன்னக்குடி வைத்தியநாதனை அழைத்து, ‘நான் எடுக்கவிருக்கும் ஒரு சரித்திரப் படத்தில் உங்களுக்கு நான் வாய்ப்புத் தர்றேன். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி., இசையமைச்சா பொருத்தமா இருக்கும்’ எனச் சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டார். குன்னக்குடி வைத்தியநாதனும் சம்மதித்துவிட்டார். ஆனால், வழக்கம்போல எம்.எஸ்.வி., ‘குன்னக்குடி அவர்கள் இசையமைத்த படத்துக்கு நான் எப்படி இசையமைப்பது முறை இல்லை...’ எனச் சொல்லி மறுக்க, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே நேரில் வந்து சொன்னப் பிறகுதான் எம்.எஸ்.வி. ஒப்புக்கொண்டு இசையமைத்துத் தந்தார். இதுதான் தமிழ்த் திரையிசை வரலாறு. வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அதிலும் பண்பாடு காத்து பாடல் போட்டவர் எம்.எஸ்.வி. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையில் மயங்கிப்போய் எம்.ஜி.ஆர்., 50000 ரூபாய் சம்பளம் தந்தார். அதுவரை எம்.எஸ்.வி. இசையமைக்க வாங்கியத் தொகை 25ஆயிரம்தான்.
ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘இதயக்கனி’ படத்துக்காக எம்.எஸ்.வி. இசையில் ஒரு மெட்டுக்கு பாடலும் எழுதிவிட்டேன். இடைவேளையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தட்டைக் கீழே வைத்துவிட்டு, ஒரு மெட்டை பாடிக்காட்டி, ‘வாத்தியார் அய்யா இந்த மெட்டுக்கு ஒரு பாட்டு கொடுங்க... அந்தப் பாட்டு வேண்டாம்...’ என்றார். நானும் அப்போதே எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடல்தான் இன்பமே உந்தன் பேர் பெண்மை... அப்போது பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான காதல் பாடல் இது. ஆனால் பிறந்தது என்னவோ ஒரு சாப்பாட்டு இடைவேளையில். அதே படத்துக்காக ‘நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...’ பாடலுக்கு முன்புவரும் தொகையறாவில், ‘காவிரியையும் எம்.ஜி.ஆரையும் இணைத்துப் பாடல் எழுத முடியுமா?’ என ஆர்.எம்.வி கேட்டார். ‘ஏன் முடியாது?’ எனச் சவாலாக எடுத்துக்கொண்டு எழுதிய
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே,
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி, எங்கள் இதயக் கனி இதயக்கனி..
தொகையறாவை உடனே மெட்டமைத்துப் பாடிக்காட்டி அசத்தியவர் எம்.எஸ்.வி.
பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் காலைப் பிடித்துப் பாராட்டுவார் எம்.எஸ்.வி. ‘வரம்’ படத்தில் ஒரு பாடலில் ‘அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா’ என ஒரு வரி எழுதிவிட்டேன். அதை இசையமைக்கும்போது படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் என் காலைத் தொட்டுப் பாராட்டினார். ‘இப்படி நீங்கள் செஞ்சா நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், ‘வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜம்’ என்றார். ஒரு பாடலுக்கு நன்கு இசையமைத்துவிட்டால், அதுக்கான கிரெடிட்டை ‘வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனதுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு துட்டு வாங்கியது கிடையாது. பத்தாயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, 25 ஆயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, அதே இசைதான்.
டி.எம்.எஸ் போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது. அப்போதெல்லாம் அவர் ட்யூனைக் கற்றுக்கொள்ளும் வரை விடமாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும் அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார்.
கௌரவம் படத்தில் ‘பாலூற்றி வளர்த்த கிளி’ பாடலை முதலில் பாடியது எம்.எஸ்.விதான். படத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடலாக வரும் என்றுதான் முதலில் எடுத்தார்கள். அப்படியே எம்.எஸ்.வியும் பாடிமுடித்துவிட்டார். பாடலை கேட்ட சிவாஜி ‘இதற்கு நான் வாயசத்து நடித்துவிடுகிறேன்’ எனச் சொல்லி நடித்தும்விட்டார். ரீ ரிக்கார்டிங்கில்தான் எம்.எஸ்.வி&க்கு இந்த விஷ்யம் தெரியவந்தது. ‘சிவாஜிக்கு என் குரலா? இல்லை இல்லை டி.எம்.எஸ்ஸைக் கூப்பிடுங்கள்’ என்றார். நான் ‘உங்கள் குரல் சிவாஜிக்கும் சூழலுக்கும் பொருத்தமாதானே இருக்கு...’ என வற்புறுத்தினேன். உடனே எம்.எஸ்.வி. அவர்கள் ‘இல்ல வாத்தியார் அய்யா... சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடினால்தான் பொருத்தமா இருக்கும்’ என தனக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றவருக்கு விட்டுத்தந்த மாமேதை எம்.எஸ்.வி.
பாட்டுக்கு மெட்டு போட்டு விட்டு நேரம் கிடைத்தால் ‘வாத்தியார் அய்யா வாங்க சீட்டு போடுவோம்’ என்பார். எம்.எஸ்.வி., இயக்குநர் ஆர்.சி.சக்தி, நான்... மூவரும் இணைந்தால் அங்கே சீட்டாட்டம் நிச்சயம் இருக்கும். எம்.எஸ்.விக்கு சீட்டாடுவதிலே அவ்வளவு பிரியம். ஆனால், அவரைப் போல தோற்பவர்களைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவருக்கு சீட்டு விளையாடவே தெரியாது. சமயத்தில் ஜோக்கரையே கீழே இறக்கிவிடுவார். ‘அய்யோ... இது ஜோக்கர் எடுத்து உள்ள வைங்க’ என்று சொன்னால் அப்பாவிப் போல முகத்தை வைத்துக்கொண்டு, நாக்கைத் துருத்திச் சிரிப்பார். அவ்வளவு அப்பாவி.
‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளையடித்தவன் நீதான் என் உள்ளத்தை, கொட்டி வைத்தவன் நீதான் இன்பத்தை’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி., 80 மெட்டுக்கள் போட்டார்; நான் 120 பல்லவிகள் எழுதினேன். அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்த இடிச்சபுலி செல்வராஜ், இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொல்ல... ‘எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் உங்களை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்’ என்றார். இல்லை தலைவரே இது ஒருவகையான பயிற்சி. இனி எந்தச் சூழலுக்கும் நான் பாட்டு எழுதிவிடுவேன்’ என்று சொல்லிச் சமாளித்தேன்.
அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். ‘மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்.... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்’ பாடலை அழுதுகொண்டே மெட்டமைத்துப் பாடியது எம்.எஸ்.வியின் ஈர மனதுக்கு எடுத்துக்காட்டு.
திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல. நாங்கள் இருவரும் இணைந்து... எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அதிமுக பிரசாரப் பாடல்களும் தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரமபலம். அதிமுக முதன்முறையாக தேர்தலில் நின்ற 1977ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி. இசையமைக்க நான் எழுதிய ‘வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல் ஒலிக்காத ஊரே கிடையாது. 1984ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு மணி நேரத்தில் 9 பாடல்களை இரண்டே நாட்களில் மெட்டமைத்து பதிவு செய்து அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி.
தான் கண்ட கனவு ஒன்றை 30 வருடங்களுக்கு முன்பு சொன்னார் எம்.எஸ்.வி.... ‘வாத்தியார் அய்யா நேத்து ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவுல நான் செத்துப் போயிட்டேன். இறுதி ஊர்லவத்துல என்கூட பழகினவங்கள்ல யாரெல்லாம் வர்றாங்கனு மேல போத்திருந்த துணியை விளக்கிப் பார்த்தேன்... அப்புறம் முழிச்சுக்கிட்டேன். என்னங்க வாத்தியார் அய்யா இப்படி ஒரு கனவு’ என்றார். நான் ‘உங்களுக்கு ஆயுசு நூறு இப்போ உங்களுக்கு சாவு கிடையாது’ என்றேன். எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்திருக்கலாம். ஆனால், அவரது நாதம் காற்றை இன்றும் என்றும் உயிர்பித்துக்கொண்டிருக்கிறது. தமிழர் என்ற ஒரு இனம் இருக்கும்வரை அவர்களது சுக துக்கங்கள் இருக்கிறவரைக்கு எம்.எஸ்.வியின் பாடல் ஒலிக்கும். அவை ஒலிக்கிற வரைக்கும் எம்.எஸ்.வி இருப்பார்! ஏனெனில் அவர் விஸ்வரூபம் எடுத்த நாதம்!........ Thanks...
orodizli
22nd April 2020, 11:40 PM
#அனைத்துலக##எம்ஜிஆர்##பொதுநல##சங்கம்#
--------------------------------------
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
அன்பார்ந்த
புரட்சிதலைவர் விசுவாசிகளே கழகநட்புகளே என் தனிப்பட்ட நட்புக்களே அனைவருக்கும் வணக்கம் கொரோனாவின் தாக்கம் வறியோருக்காக உங்களிடம் கையேந்துகிறேன்
எல்லோரும் வருந்தும் ஏழை மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுள்ளோம் நான் என்னுடைய பார்வையில் எம் ஜிஆர் விசுவாசிகளின் வேதனைகளை கண்டறிந்தேன் வேலைக்கு போனால்தான் சோறு என்றநிலையில் நிறையபேர் முதியோர் அடுத்த வேளை எப்படி என்று காலம் கழிக்கின்றனர் தீடிரென கொரோனாவின் தாக்கம் நிலைகுலைய செய்துள்ளது அவர்கள் பசியாற மளிகை பொருட்கள் வாங்கி தருவோம் வாருங்கள்
நாம் சாப்பிடும் சாப்பாட்டை கொடுக்கவும் முடியாத நிலை ஊரடங்கு சட்டம் அவர்களின் வறுமையை ஓரளவு சரி செய்ய ஏதாவது செய்யனும் நினைச்சேன் சங்கத்தினரை தொடர்பு கொண்டேன் அவர்களும் உதவலாம் என்றனர் மேலும் எம் ஜிஆர் கலைவேந்தன் பக்தர்கள் குழு V.s shiva perumal அவர்களும் பதிவிட்டு இருந்தார் இந்த உதவிகள் சார்பாக மேலான ஆலோசனையும் தந்திருந்தார்
இப்பொழுது உங்களின் மேலான உதவி தேவைபடுகிறது தங்களால் இயன்ற தொகையை இந்த மக்களுக்கு உதவிட கருணையுள்ளத்தோடு தருமாறு மிக்க தயைகூர்ந்து கேட்கிறேன் உங்கள் மனிதநேயத்தை இந்த நேரத்தில் வெளிபடுத்துங்கள் உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தோர் என்பதை மெய்ப்பியுங்கள் மனித தெய்வங்கள்தான் இப்பொழுது அருள் புரியனும் இருகை கூப்பி கேட்டு கொள்கிறேன் உங்களால் முடிந்ததை தாருங்கள்.
அனைத்துலக எம் ஜி ஆர் சங்க பொருளாளர் பாபு அவர்களின் அக்கவுண்ட் நம்பரை இதோடு இணைக்கிறேன் அதில் உங்களால் இயன்றதை சேர்ப்பிக்கவும் அப்படி அனுப்பும் தொகையை இங்கே பதிவிடவும்
K Babu
S B AC No 01111000107625
Madipakkam Branch
H D F C bank
இப்படிக்கு
அனைத்துலக எம் ஜி ஆர் பொதுநல சங்கம்
கலைவேந்தன் எம் ஜி ஆர் அறக்கட்டளை.... Thanks.......
orodizli
22nd April 2020, 11:43 PM
#சுந்தர்ராஜன் #அண்ணா #எனது #பெருமை
சுந்தர்ராஜன் அண்ணா!
தூய, நேர்மையான, சுயவிளம்பரப் படுத்திக்கொள்ளாத எம்ஜிஆர் பக்தர்...!
அநேக சினிமா பாடல் வரிகளையும் (முக்கியமாக எம்ஜிஆர் பாடல்கள்) இசையையும் கரைத்துக்குடித்தவர் ராகங்கள் உட்பட...!
பல்கலை விற்பன்னர்...!
வெறும் பதிவுகள் போடாமல் இசைவடிவில் பல வித்தியாசமான, புதுமையான முயற்சிகளைப் புகுத்த மிகவும் மெனக்கெடுபவர்...!
மிகவும் பாராட்டுக்குரிய செயல் இது...! சிலர் அவரைப் பற்றி நக்கலாகவும், கிண்டலாகவும் செய்கிறார்கள்...இது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்...!
ஆனால், அண்ணா அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசமாட்டார்...! அப்பேர்ப்பட்ட பெருந்தன்மை குணமுடையவர்...
நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், இதுபோன்று விமர்சனம் செய்பவர்களால், அவரைப் போல
ஒரு சதவீதம் கூட செய்ய இயலாது என்பது சத்தியமான உண்மை...
அண்ணாவின் இசைஞானத்தைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகுபவர்கள் அறிவர், அடியேன் உட்பட...!
இன்னொரு விஷயம், வீட்டில் பொழுதுபோகாமல் சும்மா உட்கார்ந்து கொண்டு டைம்பாஸ் க்காக பாடுபவரல்ல...
அண்ணா அவர்கள் Provident Fund மத்திய அரசுப்பணியில் உயர்அதிகாரியாக பணியாற்றுபவர்... மிகுந்த வேலைப்பளுவிலும், வீட்டிற்குச் சென்று ரெஸ்ட் எடுக்காமல், Gossyps போன்ற அநாவசிய விஷயங்களில் ஈடுபடாமல், புரட்சித்தலைவரின் மேல் தனக்குள்ள அளவில்லா பற்றுதலால், இசையில் பல புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்...!
புரட்சித்தலைவரின் மீதான தனது பக்தியை இதுபோன்ற செயல்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் அப்பழுக்கில்லாத எம்ஜிஆர் பக்தர்...!
அண்ணாவை கிண்டல் செய்து விமர்சனம் செய்பவர்கள் காலணாவிற்குப் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்பது தான் உண்மை...!
புதுமையான முயற்சிக்குத் தலைவரின் ஆசீர்வாதங்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு...!
வீணர்கள் பற்றிக் கவலைப்படவேண்டாம்...!
எதையும் எதிர்பாராமல் செய்யும்
தங்களின் முயற்சிகளுக்குக் கண்டிப்பாக பலன் உண்டு...!
தங்களின் அற்புதமான ஞானத்திற்கு கட்டாயம் காலம் பதில் சொல்லும்...!
👍👍👍💪💪💪🙏🏻🙏🏻🙏🏻...... Thanks...
orodizli
22nd April 2020, 11:45 PM
குலேபகாவலி !
__________________
ஆஸ்கார் எனும் அரைவேக்காடுத்தனத்தை கையாள்பவர் இதை உற்று நோக்குங்கள் .
அடுக்கடுக்கான கேள்விகளில் அறிவுத் திறனை அடக்கி ஆளும் மக்கள் திலகம் .
அவரின் பதில்களால் ராணி அவர்கள் மக்கள் திலகத்தின் திறம்பட பதில்களை படிப்படியாக உள் வாங்கும் பாங்கு அதை கண்களால் நம்மையும் உணரவைக்கும் தன்மை !
இறுதியில் ராணி அவர்கள் மெய்மறந்து மக்கள் திலகத்தை நோக்க நிதானமாக நின்று ராணியை , ராஜபார்வை பார்க்கும் நம் மக்கள் திலகம் .
தலை சிறந்த நடிப்பு என்பது யதார்தத்தின் வெளிப்பாடு இதை லாவகமாக கையாள்வார் மக்கள் திலகம் .
இதை முழவதுமாக உற்றுப் பாருங்கள் .
யதார்த்தத்தின் இலக்கணம் இந்த கேள்வி பதில் காட்சி தான் .
ஹயாத் !
Ahayath A........ Thanks...
orodizli
22nd April 2020, 11:51 PM
வாத்தியார் வைத்தியராக வாழ்ந்து புதிய பூமி படைத்த காவியத்தில் இருந்து புகைப்படத்தோடு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியன்று பதிவிட...
உலகளாவிய அளவில் 4'7' ஆராய்ச்சிகள் நடந்து வந்த சூழலில் "இரண்டே இரண்டு" ஆராய்ச்சிகள் மட்டும் அடுத்த நிலை அதாவது இறுதி நிலை ஆராய்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது உலக சுகாதார அமைப்பின் மூலம்...
அதனில் இந்தியாவில் இருந்து இறுதி நிலைக்கு தேர்வாகி உள்ள ஆய்வு
நமது தாய்த் தமிழகத்தில் நமது வாத்தியார் பெயரில் இருக்கும் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு...
#வாத்தியார்_வாழ்கிறார்
#covid_19
#mgr........ Thanks.........
orodizli
22nd April 2020, 11:52 PM
டாடா அண்ணன் பரணிதரன் அவர்களுக்கு ஒரேயொரு காவியத்தின் மூலமாக பாடம் எடுத்தாகி விட்டது...
மனைவிக்கு...
குடியிருந்த கோயில்
தர்மம் தலை காக்கும்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
எங்க வீட்டுப் பிள்ளை
அடிமைப்பெண்
மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்
ஏ...ஏ... என்னப்பா... இது கேள்வி கேட்ட மனைவி...
இரு இரு இன்னும் இருக்கு...
அதெல்லாம் வேணாம் மேட்டர் புரிஞ்சுது...
என்ன புரிஞ்சுது...
உங்க தலைவர் தான் பெஸ்ட்... போதுமா...
அது......
அப்பறம் என்ன...
நல்ல படம்
நல்ல டைட்டில்
நல்ல க்ளீன் அன்ட் க்ளியர் கான்செப்ட்
அதை அப்படியே சொல்ற டைட்டில் இதுலல்லாம் இல்லையா என்ன...
தெய்வமா நடிச்சதுக்கும்...
மனித தெய்வமா வாழ்ந்து காட்னதுக்கும்...
வித்தியாசம் வேணாம்...
கேள்வி நாமலும் கேப்போம்ல...
ஓகே தானே...
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்..... Thanks...
orodizli
23rd April 2020, 08:15 AM
என்ன உறவோ ...
என்ன பிரிவோ...
அட்டகாசமான பாடல்..
நம் புரட்சித் தலைவரை மட்டுமே கவனிக்கிறது என் கண்கள்...?
அவரை மட்டுமே வைத்துத் தான் அவரின் எல்லாப் படங்களும் வெற்றி அடைந்தது..
வசீகரிக்கும் முகம்..புன்னகை.. சுறுசுறுப்பு.. படங்களில் வீரம் .. அன்பு.. காதல்.. பாசம்..கருணை.. நடை..உடை..பாவனை..மனிதநேயம்..
அன்றய ரசிகர்கள்.. அவரின் பண்புகளால் தொண்டர்களானார்கள்.இன்றும் அவரின் பொற்கால ஆட்சியை ... நம் தலைவரை மறக்க இயலாமல் இதயதெய்வமாக நெஞ்சில் சுமக்கும் பக்தர்களானார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?
வாழ்க நம் புரட்சித் தலைவரின் புகழ் என்றும்.இனிய அதிகாலை வணக்கம் அன்புள்ளங்களே........... Thanks.........
orodizli
23rd April 2020, 08:17 AM
1966 நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்
1969 நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன்
1971 எம்ஜிஆரரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக தொண்டராக மாறினேன்
1972 அதிமுக இயக்கத்தில் இணைந்து பயணித்தேன்
1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை கண்டு வியந்தேன்
1977 நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் கண்ட இமாலய வெற்றி கண்டு மகிழ்ந்தேன்
1977 சட்டசபை தேர்தலில் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினத்தில் நானும் மக்களோடு மக்களாக கலந்து கொண்டேன்
1977- 1987 பத்து ஆண்டுகள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பொற்கால ஆட்சியை கண்டு இன்புற்றேன் .
1972 -2020
48 ஆண்டுகள் தொடர்ந்து எம்ஜிஆருக்கு மட்டும் விசுவாசியாக தொடர்கிறேன் . தொடர்வேன் .
எம்ஜிஆரை மறந்தவர்களை நான் என்றுமே நினைத்து பார்ப்பதில்லை
எம்ஜிஆர் பெயரும் புகழும் எங்களது சொத்து .
எம்ஜிஆர் படங்கள் எங்களுக்கு பாடங்கள் .
எந்த திரையில் பார்த்தாலும் எம்ஜிஆர் மட்டுமே எங்கள் கண்களுக்கு விருந்து
எங்கள் மனத்திரையில் நிரந்தரமானவர் எம்ஜிஆர் ஒருவரே .
மாதா - பிதா பிறகு குருவும் எம்ஜிஆரே ..... தெய்வமும் எம்ஜிஆரே
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் .......... Thanks WA., Friends...
orodizli
23rd April 2020, 08:18 AM
#கருணையில்லா #நிதி
தமிழகத்தில் ஒரு குடும்பக்கட்சி விளைவித்த இன்னல்கள் வெகு அதிகம்..... இலட்சாதிபதி, கோடீஸ்வரர் என்ற கணக்கை எல்லாம் தள்ளிவிட்டு, மில்லினியர் பில்லினியர் குடும்பத்தை உருவாக்கி மாபெரும் சாதனையைப் படைத்த கட்சி.....
ஆனால், புரட்சித்தலைவரோ #ஏழைப்பங்காளன் என்ற பெயரோடு, பெரிதாக தனக்கென்று சொத்து சுகம் வைத்துக் கொள்ளாமல், கட்சிக்கும், மக்களுக்கும் பல நன்மைகளைச் செய்துவிட்டுப் போன தெய்வம்...!........ Thanks...
orodizli
23rd April 2020, 08:29 AM
[#மக்களுக்கு மக்கள்திலகம் எழுதிய நன்றிக் கடிதம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் துப்பாக்கியால் நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு உயிர் பிழைத்து மருத்தவ சிகிச்சைப் பற்றுக் கொண்டு 100 நாட்கள் ஓய்வில் இருந்தார்.குணமாகி அதன் பின்னர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.அப்போது பத்திரிகைகள் வாயிலாக எல்லோருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
"பேரன்பு கொண்டோரே!
100 நாட்கள் கழித்து 21-04-1967 வெள்ளிக்கிழமை முதல் சத்யா ஸ்டுடியோவில், அரசக்கட்டளை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.
நாள்தோறும் 12 மணி நேரத்திற்கு மேல் உழைத்துக் கொண்டிருந்த என்னை கொடுமையின் தாக்குதல் 100 நாட்களாக உழைப்பிடமிருந்து பிரித்து வைத்திருந்தது.
ஜனவரி 12 ம் நாள் அந்தி சாயும் நேரத்திலிருந்து இலட்சோப லட்ச உள்ளங்கள் நான் பிழைப்பேனா மீண்டும் எந்த குறையுமில்லாமல் வெளி வருவேனா? படங்களில் நடிப்பேனா? என்று தங்களுடைய ஏக்கங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தன.எப்படியும் பிழைத்து முன்போல் நான் நலம் பெற்று வரவேண்டும் என்பதற்காக இந்திய துணைக்கண்டத்திலும், கடல் கடந்த நாடுகளில் இருந்தெல்லாம் என்னை வாழ்த்தியும், ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தியும் எனக்கு உயிர்சக்தி அளித்து வந்தார்கள்.
என்னைப் பெற்ற தாய் இப்போது இல்லை-- ஆனால் நாடெங்கும் உள்ள தாய்மார்கள் என்னை தான் பெற்ற பிள்ளையாகக் கருதி என்னுடைய மறுபிழைப்புக்காக தாய்மை உணர்வோடு வேண்டிக் கொண்டார்கள்.
என்னுடைய நலத்துக்காக வேண்டிக்கொண்டிருகும் அன்னையரே, அருமை நண்பர்களே, ஆயிரமாயிரம் சகோதரர்களே உங்கள் நல்வாழ்த்தால் நான் பூரண நலம் பெற்று என் கலைப் பணியைத் துவக்கும்போது தங்களின் பாதங்களில் என் சிரம் தாழ்த்தி நன்றியையும் வணக்கத்தையும் காணிக்கையாக்குகிறேன்.
அன்பன்:
எம்.ஜி.ராமச்சந்திரன்]......... Thanks...
orodizli
23rd April 2020, 08:30 AM
[MGR-கவிஞர் வாலி
கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.
சென்னையில் நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நட்பு கிடைத்தது. வி.கோபாலகிருஷ்ணன் மூலம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எதுவும் பலன் தராததால் துவண்டு போய் மறுபடியும் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே பயணமாக முடிவு செய்தார். அப்பொழுதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று காற்றினிலே கலந்து வந்து கவிஞர் வாலியின் காதில் நுழைந்தது மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து மீண்டும் போராடுவதற்கான நம்பிக்கையை வாலிக்கு கொடுத்தது.
அந்தப் பாடல் ‘மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'
சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்' படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது.
‘நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா' என்று பாடல் எழுதிக் கொடுத்தார். இந்தப்பாடலை ப.சுசிலா தனது இனிமையான குரலில் பாடி கொடுத்தார்.
எந்த கண்ணதாசன் பாடல் கேட்டு நம்பிக்கை பெற்று மறுபடியும் திரையுலகில் போராடி நுழைந்தாரோ அதே கண்ணதாசனுக்குப் போட்டியாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார் வாலி. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
முக்தா சீனிவாசன் தனது ‘இதயத்தில் நீ' படத்தில் பாடல் எழுத அழைத்தார். கவிஞர் வாலியை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பாடல் எழுதும் ஆற்றலைப் பார்த்துவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டார். ‘இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்' என்று.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது ‘கற்பகம்' படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதச் சொன்னார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் வெற்றிப் பெற்றது. ‘கற்பகம்' பெயரிலேயே ஸ்டுடியோவை வாங்கி நடத்தத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் பி.சுசிலாவே பாடினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்' படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை டைரக்டர் ப.நீலகண்டன்தான் பெற்றுத் தந்தார். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆரிடம அறிமுகப்படுத்தியதும் ப.நீலகண்டன்தான்.
எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சரவண பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி எழுதச் சொன்னார். ‘படகோட்டி' படத்தின் முழு கதையை வாலி கேட்டதால் அவரையே அந்தப் படத்திற்கு ஒரு பெயரை சூட்டச் சொன்னார்கள். அவரும ‘படகோட்டி' என்று பெயர் வைத்தார்.
இப்படி எம்.ஜி.ஆருக்கு 61 படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரின் பாராட்டுக்களை பெற்றார் கவிஞர் வாலி.
அதே போல் சிவாஜிகணேசன் நடித்த ‘அன்புக் கரங்கள்' படம் மூலம் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது.
Cont...]......... Thanks...
orodizli
23rd April 2020, 08:31 AM
[கலைவாணர் அவர்களுக்கும் நம்ம தலைவருக்கும் இருந்த நட்பு நாம் அறிந்ததே.
கொடுக்கும் குணம் அவரிடம் இருந்து நான் கற்று கொண்ட பாடம் என்று பலமுறை சொல்லி இருக்கிறார் நம் வாத்தியார்.
1977 இல் நம் நாடோடிமன்னன் நாடாள புறப்படுகிறார். நிருபர்கள் கூட்டம் கேள்வி மேல் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அன்று தன் கூட இருந்த அரசியல், மற்றும் திரைத்துறையினரை நினைவு கூர்ந்து பதில் சொல்லுகிறார் பொன்மனம்.
ஒரு நிருபர் இப்போது உங்கள் நண்பர் கலைவாணர் அவர்கள் இருந்து உங்கள் இயக்கத்தில் இணைந்து வெற்றி பெற்று இருந்தால் அவருக்கு என்ன இலாகாவை ஒதுக்கி அவரை மந்திரி ஆக்கி இருப்பீர்கள் என்று கேட்க.
ஒரு நிமிடம் யோசித்த நம் தலைவன் சுற்றும் முற்றும் பார்க்க அனைத்து நிருபர்களும் திகைக்க நல்ல கேள்வி இது...
இன்று அவர் இருந்து இருந்தால் அவர்தான் முதல்வர் நான் அவருக்கு கீழே ஒரு அமைச்சர் ஆக இருந்து பணியாற்றி இருப்பேன் என்கிறார் எம்ஜியார்.
எப்படிப்பட்ட எம்ஜியார் நமக்கு நாட்டுக்கு தலைவர்.
முதல்வராக ஒரு நாள் கலைவாணர் சிலைக்கு ஒரு சிறப்பான மலர் மாலையை அவரே வடிவமைக்க சொல்லி அந்த மாலையை அவருக்கு அணிவித்து விட்டு மரியாதை செய்து அடுத்த நிகழ்ச்சிக்கு போய் திரும்பும் போது அந்த மாலை அவர் கழுத்தில் இல்லை.
உடனே காரை விட்டு இறங்கி இப்போ ஒரு 20 நிமிடம் கூட ஆகவில்லை எங்கே போச்சு அந்த மாலை எனக்கு உடனே தகவல் வேண்டும் என்று சொல்ல.
சுற்றி இருந்த அதிகாரிகள், காவல்துறையினர் விரைவாக செயல் பட்டு அந்த மாலையை ஒரு மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவர் கழற்றி சென்றதை அருகில் இருந்தவர்கள் சொன்னத்தின் படி அந்த நபரை அவர்கள் சொன்ன வழியில் தேடி போய் பார்க்க.
அந்த தெருவில் ஒரு வீட்டு வாசலில் வயதான ஒரு அம்மாவின் உடலுக்கு அந்த மாலை போட பட்டு இருந்தது.
தகவல் தலைவருக்கு தெரிந்து அவரே நடந்து அந்த தெருவுக்குள் போய் பார்க்க இறந்தவர் மகன் ஐயா என்னை மன்னித்து விடுங்கள்...என் தாயாரின் உடலுக்கு மாலை போட கூட இப்போது என்னிடம் பணம் இல்லை.. உறவினர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கதறி அழ அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து உடனே தன் ஜிப்பாவுக்குள் கை விட்டு இருந்த பணத்தை அள்ளி கொடுத்து அவர் தோள்களில் தட்டி கொடுத்து ஆக வேண்டிய வேலைகளை பார் என்று சொல்லிவிட்டு திரும்ப
உடன் இருந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினர், கட்சிக்காரர்கள் அனைவரிடமும் இருந்தும் கொடுத்தார் இப்போது இறந்தும் கொடுக்கிறார்....அந்த மாலையை எடுத்து கொண்டு போனவரை ஒன்றும் செய்ய வேண்டாம்..இது அவர் எனக்கு சொல்லும் செய்தி. என்கிறார் புரட்சிதலைவர்........... Thanks...
orodizli
23rd April 2020, 08:34 AM
நம்
தெய்வம்
புரட்சி
மக்களின் தலைவர்
எம்ஜிஆர்...
அவருடைய
பொன்மொழிகள்
கூறுவது....
நாடு என்ன செய்தது நமக்கு என்ற கேள்வி
கேட்பது எதற்கு.
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை
""உனக்கு...உனக்கு...""""
"""" உனக்கு....""""......... Thanks...
orodizli
23rd April 2020, 08:40 AM
10,000 எதிர்பார்த்து வந்தவருக்கு 50,000 கொடுத்து, 15,000 சம்பளத்தில் வேலையும் கொடுத்த #பாரிவள்ளல் #எம்ஜியார்
//சங்கரய்யா பெரியாரின் #குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
#எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை.
தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும்.
அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.
சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே? அவரை சந்தித்து உதவி கேட்பதா? எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?"
அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ.50,000 ஐ சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது......... Thanks...
orodizli
23rd April 2020, 01:11 PM
உலகம் சுற்றும் வாலிபன் !
____________________
மக்கள் திலகத்தின் இந்த சண்டை காட்சியை நன்கு உற்றுபாருங்கள் இப் படம் வெளியான காலகட்டத்தில் கராத்தே என்ற ஒன்று இல்லை !
இதில் ரெஸ்லிங்கில் பயன் படுத்தபடும் லாக்குகள் , கராத்தேயில் மாவாசி கிக் ஒன்று உண்டு இது மிகவும் கடினமான கிக் இதில் மக்கள் திலகம் என்ன அநாயசமாக மாவாசி கிக் ,சைட் மாவாசி கிக் ,பிளையிங் கிக் அனைத்தையும் கையாள்கிறார் பாருங்களேன்
ஹயாத் !......... Thanks..........
..
orodizli
23rd April 2020, 01:22 PM
#இரத்தத்தின் #இரத்தமான #உடன் #பிறப்புகளுக்கு #ஓர் #அறிவுரை
1971 மேடையில் பேசிய பேச்சில்...!
என் ரத்தத்தின் ரத்தமான
உடன் பிறப்புகளே ... !
இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும்...
மேலும்...
ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது.
அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள்.
#வாரிவாரிக் #கொடுத்த #இந்த #வள்ளலை #யார் #தான் #மறக்கமுடியும் !!!
♥♥........... Thanks.........
orodizli
23rd April 2020, 01:25 PM
இன்று டிவியில் (23/04/20) ஒளபரப்பாகும் தலைவர் படங்கள்..........
...
----------------------------------------
காலை 7 மணி ஜெயா மூவிஸ்- குமரிக் கோட்டம்
காலை 10 மணி- ஜெயா டிவி- குலே பகா வலி
பிற்பகல் 2 மணி- முரசு டிவியில் - கொடுத்து வைத்தவள்
இரவு 9.30 மணி- சன் டிவி- எங்க வீட்டு பிள்ளை........ Thanks..........
orodizli
23rd April 2020, 01:37 PM
1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம் வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.
1937 ஆம் ஆண்டு வெளியான “சதி அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.
திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.
திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.
நேரடியாக திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...
நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன.
திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது. அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.
1947-இல் வெளியான “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.
1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.
பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...
பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)
இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)
முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.
எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.
“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா
சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”
அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க
என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.
காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.
முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)
ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்.
அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.
இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.
சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் முக்கிய உழைப்பும் உண்டு.......... Thanks.........
orodizli
23rd April 2020, 01:44 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் , "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா நாட்டின் "சுபாங்" (Subhang Airport - Malaysia) விமான நிலையத்திற்கு வந்த போது ,
நமது திரையுலகச் சக்கரவர்த்தி... என்றும் திரையுலகை ஆளும் ஈடு இணையில்லா வசூல் சக்கரவர்த்தி , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ,
நேரில் வரவேற்க "சுபாங்" விமான நிலையத்திற்கு .... வருகை புரிந்தார் மலேசியா நாட்டின் புகழ்பெற்ற , மலாய் நடிகர் திரு. P. ரமலி அவர்கள்.
அந்த கண்கொள்ளா காட்சியின் போது , மலேசிய நகர மக்கள் அனைவருமே... விமான நிலையத்தை மூச்சடைக்க வைத்தார்கள் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஆம் ,
புரட்சி நடிகராக "உலகம் சுற்றும் வாலிபன் " படப்பிடிப்பை நடத்த வந்தவர்... எவ்வளவோ முயன்றும் முண்டியடித்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், தான் நினைத்தபடி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாத சூழலில் ஒருவழியாக ,
"லில்லி மலருக்கு கொண்டாட்டம்" பாடலில் விமானம் விட்டு இறங்குவதிலிருந்து , டாடாடா... டா..டா..ட..டா என்று ஒலிக்கும் குரலோசை மற்றும் அதன் BGM முடியும் வரை மட்டும் ,படப்பிடிப்பை முடித்து கொண்டு.... அந்நாட்டின் புழ்பெற்ற நடிகர் p.ரமலி அவர்கள் கொடுத்த விருந்து உபச்சாரங்களில் கலந்து கொண்டு பிரியாவிடை பெற்று தாய்நாடு திரும்பினார் நமது இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்கள்.
இல்லையென்றால் ஆராய்ச்சி குறிப்பின் ஒரு பகுதி மலேசியாவில் எடுக்கப்பட இருந்ததாக ,
கடந்த 2018 டிசம்பர் மாதம் நான் மலேசியா சென்ற போது , மலேசியா நாட்டின் பிரபல தொழிலதிபரும் , சமூக தொண்டருமான திரு. சன் - வே சுகுமாறன் ஐயா அவர்கள் , சுபாங் விமான நிலையத்திற்கு எதிரில் உள்ள சீனர்களின் , "கடல் உணவு " ரெஸ்ட்ராண்டில் கொடுத்த விருந்தின் போது தகவல் அறிந்தேன்.
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் , மலேசிய நாட்டின் பொன்மனச்செம்மல் கலைக்குழுத் தலைவர் ஐயா மேகநாதன் அவர்கள்.
இத்தகவலை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை.
நன்றியுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி (அட்மீன்)
மலேசியா நாட்டில் எடுக்கப்பட்ட "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்பின் போது , மக்கள் வெள்ளம் சூழ்ந்த அரிய புகைப்படத்துடன்....
அந்நாட்டின் புகழ்பெற்ற நடிகர் திரு. P. ரமலி அவர்களுடன் நமது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் அன்றைய அரியப் படம் நமது
"உழைக்கும் குரல்" தளத்தில்.......... Thanks.........
orodizli
23rd April 2020, 02:02 PM
' ' அடேயப்பா...இத்தனை எம்ஜிஆர் புத்தகங்களா?' ' ஆமா காசையெல்லாம் எம்ஜிஆர் புத்தகம் வாங்குறதிலேயே கரைச்சிடுவாய் போலிருக்கே?' ' இதென்ன பெட்டி நிறைய எம்ஜிஆர் பட சிடிக்களா ( குறுந்தகடு) இருக்கு?' ' எம்ஜிஆர் மீது பைத்தியமா இருக்கானே!' ' எம்ஜிஆரை ஒரு தடவையாவது பார்த்திருக்கிறாயா?' ' நீ வரைந்ததிலேயே எம்ஜிஆரைத்தான் அதிகமாக வரைந்திருப்பாய் போலிருக்கு?' ' சிறுவயசிலேருந்து இவன்கிட்ட எம்ஜிஆரைப் பற்றி யார் தப்பா பேசினாலும் ரொம்ப கோபப்படுவான்' ' ஏம்பா எம்ஜிஆர் மேல இப்படி பைத்தியமா இருக்கியே, எம்ஜிஆர் உனக்கு என்ன செய்தார்?' ' எம்ஜிஆர்னா போதும், இவனுக்கு சாப்பாடே வேண்டாம்' ' ஏம்பா ஏழு நாளா தினமும் எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தை பார்க்கணுமா?, தினமும் நாலைஞ்சு பேரை இந்தப் படத்துக்கு அழைச்சிட்டுப் போறியாமே?' ( கேட்டவருக்குத் தெரியாது 14 நாட்கள் தொடர்ந்து பார்த்தேன்- 1998 ல் ) ' எதற்கெடுத்தாலும் கோபப்படுறியே எம்ஜிஆரு இதைத்தான் உனக்கு சொல்லிக் கொடுத்தாரா?' 'எம்ஜிஆர் செத்துப் போயிட்டாருன்னு ( 1984 ல்) ஊரு புல்லா பேசிக்கிட்டாலும் இவன் நம்பவே மாட்டேங்கிறானே?' ' இந்த எம்ஜிஆர் போட்டோ, எம்ஜிஆர் கேசட், சிடி( குறுந்தகடுகள்), எம்ஜிஆர் புத்தகங்கள் எல்லாம்தான் உனக்கு சோறு போடுதா?' 'எலேய்... இப்படி கதவு பூராவும் எம்ஜிஆர் படத்தை ஒட்டி வெச்சிருக்கியே ஏன்?' ' எலேய்...சுவருல ஒரு இடம் பாக்கி இல்லாம எம்ஜிஆர் உருவத்தை கரித்துண்டால வரைந்து கிறுக்கி வெச்சிருக்கியே ஏன்?' ' எலேய்... ஊருல எப்ப பாரு எம்ஜிஆரை தப்பா பேசினான்னு யாரிடமாவது சண்டை போட்டுட்டு வந்து நிக்கிறியேடா, எம்ஜிஆரை குறை சொன்னா உனக்கென்ன?, எம்ஜிஆரை தப்பா பேசினா நீ கோபப்படுவேனு தெரிஞ்சுகிட்டு உன்னை கிண்டல் பண்ணியிருப்பாய்ங்க, அதுதெரியாம டென்சனாயிட்டியா?' ' தம்பி எம்ஜிஆர் இறந்துட்டதால( 1987 டிசம்பர் 24) இவனை( சாமுவேலை) கவனமா பாத்துக்க, நேற்றிலேருந்து சாப்பிடாம இருக்கான், இவன் எங்கே போறான் என்ன பண்ணுறான்னு கண்காணிச்சிக்க' ' அடேயப்பா...எம்ஜிஆர் படம் பார்க்க மெட்ராஸ் வரைக்கும் போகணுமா?( ஒளிவிளக்கு- நடராஜ் தியேட்டர்) அந்தப் படத்தை இங்க ( கோயம்புத்தூர்) உள்ள தியேட்டர்ல பார்த்தா போதாதா?' 'எம்ஜிஆர் படம்னா நல்லாத்தான் இருக்கும், அதற்காக ஐம்பது தடவையா பார்க்கணும்?' 'பத்து வார்த்தை பேசினாலும் எட்டு வார்த்தை எம்ஜிஆரைப் பற்றியே பேசுறாம்பா' ' ஆமா வீட்டிலேயும் எம்ஜிஆர் ...எம்ஜிஆர்தானா? எப்படி உன்னையெல்லாம் சகித்துக் கொள்கிறார்கள்?' ' ஏம்பா நீதான் எம்ஜிஆர் மீது பைத்தியம், அந்தப் புள்ளய ( என் மனைவி) கல்யாணம் முடிந்த உடனே முதல் படமா நாடோடி மன்னன் படம் பார்க்க( 2001ல்) தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போயிருக்கே, பழைய படத்தைப் பார்க்க வெச்சு கொடுமைபடுத்திருக்கியே?'( இன்றுவரை என் மனைவிக்கு பிடித்த ஒரே படம் நாடோடி மன்னன்) 'எல்லா எம்ஜிஆர் ரசிகர்களிடமும் நல்லா பழகிட்டு அவன் சரியில்ல... இவன் சரியில்லனுட்டு பலபேரிடம் இப்ப பேசுறதில்லையாமே, ஏன்?' ' நீதான் பெரிய உண்மையான எம்ஜிஆர் ரசிகனா?, எம்ஜிஆர் ரசிகரா இருக்க தகுதி இல்லாதவன், எம்ஜிஆர் பெயரைச் சொல்லி புகழ் அடையப் பார்க்கிறாய்' 'எம்ஜிஆர் பக்தன்னு சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கு?' ' ஏம்பா சாமுவேலைத் தெரியுமா?' ' எந்த சாமுவேல்?' ' அதான் எம்ஜிஆர் எம்ஜிஆர்னு ...' ' ஓ..அவரா?... அய்யோ கொஞ்ச நேரம் பேசிட்டா போதும் நம்மை எம்ஜிஆர் ரசிகரா மாத்திடுவார்'' 'எம்ஜிஆரை மட்டுமேதான் புடிக்குமா? அரசியல் கட்சி, வேற அரசியல் தலைவர்களை பிடிக்காதா? ஆச்சரியமா இருக்கே?' ' நீங்க எம்ஜிஆர் ரசிகரா? நடை, உடை பாவனை எல்லாத்தையும் பார்த்தாலே தெரியுதே!' ....'என்னடா இது? நான்ஸ்டாப்பா போயிட்டே இருக்கு?' என உங்கள் மனதில் கேள்வி எழுவதை உணருகிறேன். 'எனக்கும் உன்னைப் போன்ற இதே அனுபவம் இருக்கு' என நீங்கள் சொல்வதும் புரிகிறது. மேலே நான் குறிப்பிட்டுள்ள அத்தனையும் என் அம்மா, மனைவி, மகன்கள், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் என்மீது அன்பாக, வேடிக்கையாக, கோபத்துடன் உதிர்த்த வார்த்தைகள்! ( சரி அப்படியே வீடியோ- புகைப்படத் தொகுப்பையும் பாருங்க)........ Thanks...
orodizli
23rd April 2020, 02:04 PM
#காவல்துறையைப் #போற்றியவர்
புரட்சித்தலைவர், காவல்துறையின் மீதுள்ள மதிப்பினால், தான் காவல்துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து மேலும் பெருமை சேர்த்தார்.
தனது முதல் படமான சதிலீலாவதியில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக என் கடமை, காவல்காரன், பல்லாண்டு வாழ்க மேலும் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து அவர்களின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியிருப்பார்.
இவற்றில், பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில், இதுவரை திரையுலகில் யாருமே செய்யாத அருஞ்செயலை செய்து காவல்துறையை உச்சத்தில் வைத்திருப்பார். இப்படத்தில்,
காவல்துறையை பொறுமையின் சிகரமாகவும், கொடூரமான கொலையாளி கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு நல்வாழ்வினை அளித்திடும் ஒரு #மகானாகவே காண்பித்திருப்பார்.
காவல் அதிகாரி வேடத்தை ஏற்றுப் பல நடிகர்கள் கம்பீரமாக நடித்திருக்கலாம். பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் புரட்சித்தலைவர் இப்படி நடித்ததோடு நிற்கவில்லை.
ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை அறிந்தவர் புரட்சித்தலைவர்.
தான் காவல்துறையின் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியதற்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திரு. பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை முதல்வர் எம்ஜிஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் '#இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
மேலும் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் ஒரு பெரிய தொகையையும், ஒரு கணிசமான தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்தும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது............ Thanks...
orodizli
23rd April 2020, 08:32 PM
தேர்தல் களத்தில் ...
ஆளுங்கட்சியை வீழ்த்தி.! ஆட்சியை பிடிக்க எதிர்கட்சி என்ன செய்யும்...?
ஆளும் கட்சியின் கொள்கையை விமர்சனம் செய்யும்.
ஆளுங்கட்சி ஊழல் செய்திருந்தால் அதைப்பற்றி விமர்சனம் செய்யும்.
ஆளும் கட்சியால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டிருந்தால் அதை பற்றி விமர்சனம் செய்யும்.
ஆளும் கட்சியால் விலைவாசி உயர்ந்து இருந்தால் அதைப் பற்றி விமர்சனம்
செய்யும்.
இதுதானே யதார்த்த நடைமுறை.
ஆனால்.......
புரட்சித் தலைவர் அவர்கள். நோய்வாய்ப்பட்டு....
அமெரிக்க நாட்டில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில்....
1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்த....
1984-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். எவ்வாறு வாக்கு சேகரித்தார் தெரியுங்களா.....?
"தமிழர்களே.! தமிழர்களே.! தமிழர்களே.!
என்னிடம் ஆட்சியை தாருங்கள்.
என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் எம்ஜிஆர் அவர்கள் நலமுடன் வந்தவுடன், நான் அவரிடம்இந்த ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன். " என்றார்..
திரு. கலைஞர், கருணாநிதி அவர்கள்.
ஆனால், மக்கள்.!! திரு.கருணாநிதியின் பேச்சில் மயங்காமல்....
புரட்சித்தலைவரின் பக்கத்திலேயே விசுவாசமாக நின்றார்கள். வெற்றியும் தேடித் தந்தார்கள். மீண்டும் ஆட்சியும் அதிகாரத்தையும் தந்தார்கள்.
திரு.கருணாநிதியின் ராஜதந்திரம் தோற்றுப்போனது. திமுக படுதோல்வியை சந்தித்தது.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ...
முதலமைச்சர் பதவிக்காகவும் .. ஆட்சி அதிகாரத்திற்காகவும் ... யாசகம் கேட்ட ஒரு தலைவர் இந்தியாவில் இருந்தார் என்றால்.. அவர் கலைஞர், கருணாநிதி அவர்கள் தான்........... Thanks.........
orodizli
23rd April 2020, 08:35 PM
[மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது
04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா ஆளுயர செங்கோல் வழங்கினார்.
05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.
06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.
07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.
08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.
09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.
10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.
11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் ....பெயர்….மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.].......
...... Thanks.........
orodizli
23rd April 2020, 08:38 PM
நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
எம்,ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.
நினைத்தை முடித்தவர் உங்களை தேடி வருகிறார் கண்டு மகிழுங்கள்.
தொடரும்.......... Thanks...
orodizli
23rd April 2020, 08:39 PM
[உழைக்கும் வர்க்கத்தின் இருட்டை கழுவிய சூரியன்.. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று. மொத்த வாழ்க்கை 29 ஆண்டுகளே. திரையுலக ஆட்சி 6 ஆண்டுகளே. படங்களின் வரிசை வெறும் 57, தான் வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய பணம் ஒரு லட்சத்து சொச்சம். இதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சுவடு. திரையுலக இசையின் அறிவுசுடர்களாக, ஜாம்பவான்களான உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் போன்றோர் நடுவே புயலாய் உள்ளே நுழைந்தவர் பட்டுக்கோட்டையார். மொழி சிறப்பு, காதல், வீரம், பக்தி, என்றிருந்த பாடல்களின் இடையே, புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு, போன்றவற்றினை புகுத்தி பாடல்களின் தடத்தையே மாற்றி காட்டியவர் பட்டுக்கோட்டையார். விரட்டிய வறுமை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற சின்ன கிராமத்தில் ஏப்ரல் 13, 1930ல் பிறந்தார் கல்யாணசுந்தரம். வறுமையின் பிடியில் சிக்கி, விவசாயம், மாடு மேய்ப்பது, மாம்பழம் விற்பது, உப்பளத் தொழில் என செய்தும் பொருளீட்ட வழி வழியின்றி, பாடல் எழுத எண்ணி சென்னை நோக்கி ஒரு பயணம். பட்டிதொட்டி புகழ் பல இன்னல்களுக்கு பின், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் 1955-ஆம் ஆண்டு வெளிவந்த மகேஸ்வரி என்ற திரைப்படத்தில் முதல் பாடல் வெளிவந்தது.
"பாசவலை" என்ற திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்கள் இவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. தொடர்ந்து குல தெய்வம், ரங்கோன் ராதா, சக்கரவர்த்தி திருமகள், புதையல், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், கல்யாணப்பரிசு, நல்ல தீர்ப்பு உட்பட 57 திரைப்படங்களுக்கு 182 திரை இசைப் பாடல்களை எழுதினார் சிந்தனை சிதறல் கல்யாண சுந்தரம். கம்யூனிச இயக்கத்தின் மேலிருந்த காதலால் ஒரு பக்கம் கட்சி பணி மற்றொரு பக்கம் பாடல் எழுதுவது.
இவரது பாடல்கள் அனைத்தும் எளிய நடை, இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, காதல் என வஞ்சனையில்லாமல் அனைத்தும் நிறைந்தே தென்பட்டன. தெருக்களிலும் திண்ணைகளிலும் வாசிக்கப்பட்டன-நேசிக்கப்பட்டன.
''நான்காவது நாற்காலி மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக உருவெடுக்க காரணமாக இருந்தது பட்டுக்கோட்டையார்தான் என்று அவரே சொல்லியிருக்கிறார். தன்னுடைய நாற்காலியில் ஒருகால் பட்டுக்கோட்டை என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்வது உண்டாம்''
'உழைப்பின் மேன்மை சொன்ன பாடல்,"காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்'. மூட நம்பிக்கைக்கு எதிராக பறைசாற்றிய பாடல், "வேப்பமர உச்சியில் நின்னு பேயோன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க...
வேலயற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பிவிடதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே" அன்றே அம்பலம் மேடு பள்ளமற்ற சமுதாயம் உருவாக செதுக்கப்பட்டதே, "வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா-தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா-தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" இன்றுவரை சமுதாயத்திற்கு பொருந்தி போககூடிய பாடல்,
‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' தனிமனித நம்பிக்கை சமுதாய அவலத்தின் செவிற்றில் ஓங்கி அறைய, "குறுக்குவழியில் வாழ்வுதேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம் திருந்த மருந்து சொல்லடா".
Cont..]........... Thanks...
orodizli
23rd April 2020, 08:40 PM
[10,000 எதிர்பார்த்து வந்தவருக்கு 50,000 கொடுத்து, 15,000 சம்பளத்தில் வேலையும் கொடுத்த #பாரிவள்ளல் #எம்ஜியார்
#சங்கரய்யா பெரியாரின் #குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
#எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை.
தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும்.
அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.
சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே? அவரை சந்தித்து உதவி கேட்பதா? எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?"
அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ.50,000 ஐ சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது......... Thanks...
orodizli
23rd April 2020, 08:41 PM
6.11.1984 இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் அமெரிக்க மருத்துவமனை ப்ருக்ளீன் வந்து சேர்ந்தார் நம் பொன்மனசெம்மல்.
மீண்டும் எமனுடன் போராடி வெல்ல தயார் ஆனார் மன்னவர்.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து நடிகை மஞ்சுளா ஏதோ ஒரு விஷயம் ஆக அமெரிக்காவில் இருந்தவர் தலைவர் அங்கு இருப்பதை தெரிந்து அவரை பார்க்க மருத்துவனை செல்ல.
அங்கே வரவேற்பறையில் நீங்கள் யார் அவரை பார்க்க என்று கேட்க அவர் அவருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் என்று சொல்ல மேலும் கீழும் பார்த்த அவர்கள் அவர் வயது என்ன இவர் வயது என்ன என்று யோசித்து மேலே இருந்த அன்னை ஜானகி அவர்களிடம் கேட்க.
அவர் அனுமதிக்க மேலே தலைவர் இருந்த அறைக்குள் சிறப்பு பார்வையாளர் நேரத்தில் போக.
அங்கே தலைவர் இருந்த நிலை பார்த்து நிலைகுலைந்து போனார் மஞ்சுளா .
அன்னை ஜானகி அவர்கள் மஞ்சுளா அவர்களை அறிமுகம் செய்ய தலைவருக்கு ஜானகி அம்மா குடும்ப மருத்துவர் பி.ஆர்.எஸ்.. தவிர யாரையும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
மஞ்சுளா அவர்கள் பல ஜாடைகள் செய்து காட்டியும் தலைவருக்கு புரியவில்லை.
அந்த வாரத்தில் தலைவர் இருதயம் தவிர மற்ற உறுப்புக்கள் செயல்பாடுகள் குறைந்து இருந்தது.
கோடி நெஞ்சங்கள் வேண்டியதால் அவர் இருதயம் மட்டும் எதையும் தாங்கும் சக்தியுடன் இருந்தது.
கொஞ்ச நேரம் கழித்து மஞ்சுளா அவர்கள் புறப்பட தயார் ஆன போது ஜானகி அம்மா சரி என்று சொல்ல தலைவரை நோக்கி அவர் கை கூப்ப..
வெளியே நோக்கி நடக்க முயன்ற அவரை அன்னை ஜானகி மீண்டும் அழைக்க தலைவர் தன்னிடம் யாரோ உதவி கேட்டு வந்து இருக்கிறார்கள் என்று நினைத்து தலையணை கீழே இருந்த அமெரிக்க டாலர் கட்டு பணத்தை எடுத்து மஞ்சுளா பார்த்து நீட்ட.
பொங்கிவரும் கண்ணீரை அடக்கி கொண்டு மஞ்சுளா வெளியேற.
அனைத்து உடல் பாகங்களும் ஒத்து உழைக்க மறுத்த நேரத்திலும் அவரின் கொடை நெஞ்சம் மட்டும் செயல் பட்டது மிகவும் அறிய செயலே.
விழியில் வழியும் நீருடன் விடை பெறும்.......உங்களில் ஒருவன் நெல்லை மணி...
நன்றி வாழ்க எம்ஜியார் புகழ்.....தொடரும்... Thanks............
orodizli
23rd April 2020, 08:43 PM
[#காவல்துறையைப் #போற்றியவர்
புரட்சித்தலைவர், காவல்துறையின் மீதுள்ள மதிப்பினால், தான் காவல்துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து மேலும் பெருமை சேர்த்தார்.
தனது முதல் படமான சதிலீலாவதியில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக என் கடமை, காவல்காரன், பல்லாண்டு வாழ்க மேலும் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து அவர்களின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியிருப்பார்.
இவற்றில், பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில், இதுவரை திரையுலகில் யாருமே செய்யாத அருஞ்செயலை செய்து காவல்துறையை உச்சத்தில் வைத்திருப்பார். இப்படத்தில்,
காவல்துறையை பொறுமையின் சிகரமாகவும், கொடூரமான கொலையாளி கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு நல்வாழ்வினை அளித்திடும் ஒரு #மகானாகவே காண்பித்திருப்பார்.
காவல் அதிகாரி வேடத்தை ஏற்றுப் பல நடிகர்கள் கம்பீரமாக நடித்திருக்கலாம். பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் புரட்சித்தலைவர் இப்படி நடித்ததோடு நிற்கவில்லை.
ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை அறிந்தவர் புரட்சித்தலைவர்.
தான் காவல்துறையின் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியதற்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திரு. பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை முதல்வர் எம்ஜிஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் #'இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
மேலும் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் ஒரு பெரிய தொகையையும், ஒரு கணிசமான தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்தும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.]............ Thanks...
orodizli
23rd April 2020, 08:54 PM
சிறந்த நிர்வாகி:-
M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.
காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.
அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.
ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.
அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.
அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற
‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’
பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .
எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்
‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’
என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...
‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், விஐபி என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு.
1975-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’. சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில் என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்’’ என்று விழாவில் முக்தா சீனிவாசன் பாராட்டிப் பேசினார்.............. Thanks..........
orodizli
23rd April 2020, 08:55 PM
இனிய மாலை வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#புதியவர்களுக்கு_வாய்ப்பு
முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.
மாடர்ன் தியேட்டர்ஸ்ன் தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'........ Thanks...
orodizli
23rd April 2020, 08:58 PM
வேலூர் நேஷனலில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட மாட்டுக்கார வேலன். வேலூரில் எங்க வீட்டு பிள்ளை, அடிமைப்பெண்ணை தொடர்ந்து மாட்டுக்கார வேலனின் 100 நாட்கள் வெற்றி சாதனை........ Thanks...
orodizli
23rd April 2020, 09:02 PM
மதுரை சிந்தாமணியில் மாட்டுகாரவேலன் 175 நாட்கள்,தொடர்ந்து அடிமைபெண்175 நாட்கள் இரண்டும் கூட்டி ஒருவருடத்தில் ஒரே தியேட்டரில் ஒரே கதாநாயகன் தலைவர் படம் வெள்ளிவிழா RECORDBRAKE...அதாவது 1969 மே - 1970 ஜுலை..... Thanks.........
orodizli
23rd April 2020, 09:09 PM
ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு குடியேறிய போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்தார். ஆம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வீட்டு கிரகபிரவேசத்தில் கலந்துக் கொள்ளவில்லை, அவர் அளித்த பரிசு பொருள் மட்டும் தான் சென்றது...குருஜி....... Thanks...
orodizli
23rd April 2020, 09:10 PM
அதற்கு ஒரு காரணம் இருந்தது குருஜி ஆம், எம்.ஜி. ஆர், தன்னை ஆளுமை செய்கிறார், தன் சுதந்திரத்தில் தலையிடுகிறார் என்று ஜெயலலிதா அப்போது நினைத்தார். அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தினால் தான் எம்.ஜி.ஆர், அந்த விழாவில் பங்கேற்காமல், அதே நேரம் மனம் கேட்காமல் பரிசுப் பொருளை மட்டும் அனுப்பி வைத்தார். ஆனால், அடுத்த நாளே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.
ஜெயலலிதா தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அடுத்த நாள் , காஷ்மீரில் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக விமானத்தில் முன் பதிவும் செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதா விமானம் ஏறிய பிறகு தான் பார்த்தார். தன் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் எம்.ஜி.ஆர். இது ஏதேச்சையாக நடந்தது., எம்.ஜிஆருக்கும் காஷ்மீரில் படப்பிடிப்பு இருந்தது. அதனால், அவரும் அதே விமானத்தில் பயணமானார். ஜெயலலிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை... கடலின் மேற்புறத்தில் காதைக் கிழிக்கும் சத்தம் கேட்டாலும், ஆழ்கடலில் ஒரு அமைதி நிலவுமே...? அது போல, விமானத்தின் சிறகுகள் சத்தத்தை கடந்து இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது. விமானம் மேலே பறக்க பறக்க, அமைதியின் இறுக்கம் குறைந்தது. இருவரும் மீண்டும் பேசத் துவங்கினார்கள். காஷ்மீரில் விமானம் இறங்கியபோது, முற்றாக சகஜ நிலைக்கு திரும்பினார்கள்......... Thanks...
orodizli
23rd April 2020, 09:10 PM
யாருக்குமே கிட்டாத அரசியல் வாய்ப்பு ஜெவுக்கு எம்.ஜி.ஆர் மூலம் கிடைத்தது. அவர் மட்டும் சரியானபடி அதை உபயோகித்திருந்தால்,,எம்.ஜி.ஆரே,தம் அரசியல் வாரிசாக ஜெவை அறிவித்திருப்பார். ஜெ இந்தியாவின் பிரதமராகவே ஆகியிருப்பார்......... Thanks.........
orodizli
23rd April 2020, 10:23 PM
#MGR_sSuccess_movies
MGR started his career in acting (small roles) from 1937. By 1947 his leading role movie Rajakumari was released. From 1948 to 1950 he has acted as Hero and as well as Second Hero character, then from 1950 to 1977 (or 1978) he was the Hero.
Total films released up to 1978 is 136, Hero acted movies are 117. In this 117, one movie is Telugu movie Sarvathikari and one Malayalam movie Jenovah. Both these movies are released in Tamil version also. The Tamil movies only taken into account that is 115. His success rate follows:
350 plus days - En Thangai – 1952
301 to 349 days – Nil
251 to 300 days – Nil
----------------------------------
#200 to 250 days –
Nadodi Mannan – 1958
Enga Veetu Pillai – 1965
Ulagam Sutrum Valiban – 1973
Urimai Kural – 1974
------------------------------------
#175 to 199 days –
Madurai Veeran – 1956
Anbay Vaa – 1966
Oli Vilakku – 1968
Adimai Penn – 1969
Mattukara Velan - 1970
Rickshawkaran – 1971
------------------------------
150 to 174 days –
Rajakumari – 1947
Manthiri Kumari – 1950
Marmayogi – 1951
Malai Kallan – 1954
Kulabaghavali – 1955
Alibabavum Narpathu Thirudargalum – 19556
Thaiku Pin Tharam – 1956
Thirudathae – 1961
Kavalkaran – 1967
Neethiku Thalaivangku – 1976
-----------------------------
125 days to 149 days:
Mohini 1948
Maruthanattu Illavarasi 1950
Sarvathikari 1951
Andaman Kaithi 1952
Jenovah 1953
Chakravarthi Thirumagal 1957
Thai Sollai Thattathae 1961
Thayai Katha Thanaiyan 1962
Vettaikaran 1964
Panakara Kudumbam 1964
Deiva Thai 1964
Ayirathil Oruvan 1965
Kudieruntha Kovil 1968
Nam Nadu 1969
Ithaya Veenai 1972
Nallai Namathae 1975
Ithayakani 1975
-----------------------------
110 days to 124 days:
Kumari 1952
Puthumai Pithan 1957
Mahadevi 1957
Baghdad Thirudan 1960
Kudumba Thalaivan 1962
Dharmam Thalaikakum 1963
Ragisya Police 115 1968
En Annan 1970
Engal Thangam 1970
Kumarikottam 1971
Nalla Neram 1972
Netru Indru Nalai 1974
Ninaithathai Mudipavan 1975
Pallandu Vazhga 1975
Indru Pol Endrum Vazhga 1977
Meenava Nanban 1978
---------------------------------
100 days to 109 days
Periya Idathu Penn 1963
Nithiku Pin Pasam 1963
Parisu 1963
Padagotti 1964
Mugarasi 1966
Petral Than Pillaiya 1966
Thedi Vantha Mapillai 1970
Neerum Nerupum 1971
Raman Thediya Seethai 1972
Sirithu Vazha Vendum 1974
Uzhaikum Karangal 1976
Uruku Uzhaipavan 1976
-------------------------------
90 days to 99 days:
Mannathi Mannan 1960
Arasilangkumari 1961
Koduthu Vaithaval 1963
Chandrodayam 1966
Kannan En Kadalan 1968
Nan En Piranthan 1972
-------------------------------
80 days to 89 days:
Nam 1953
Thai Magaluku Katiya Thaali 1959
Nallavan Vazhvan 1961
Pasam 1962
Panathottam 1963
Kalangarai Vilakkam 1965
Parakum Pavai 1966
Thaiku Thalai Magan 1967
Vivasahi 1967
-----------------------
70 days to 79 days:
Panakari 1954
Kundukili 1954
Rajarajan 1957
Raja Desingh 1960
Sabash Mapillai 1961
Rani Samyuktha 1962
Madapura 1962
Vikramadityan 1962
Ananda Jothi 1963
Kanchi Thalaivan 1963
En Kadamai 1964
Thozhilalli 1964
Thayin Madiyil 1964
Panam Padaithavan 1965
Kannithai 1965
Thazhampoo 1965
Asai Mugam 1965
Nadodi 1966
Thanipiravi 1966
Arasakattalai 1967
Puthiya Bhoomi 1968
Kanavan 1968
Thalaivan 1970
Oru Thai Makkal 1971
Sangay Muzhangu 1972
Annamittakai 1972
Pattikattu Ponniah 1973
Madurai Meeta Sundarapandiyan 1978
-----------------------------
60 days to 69 days:
Kalai Arasi 1963
Nan Aanai Ittal 1966
Thalibaghayam 1966
Theru Thiruvizha 1968
Navarathinam 1977
----------------------
50 days to 59 days:
Kadhal Vaghanam 1968
Info: Number days for this movie is 56.
30 days to 49 days: NIL
10 days to 29 days: NIL
---------------
Days
Number of Movies
350 plus days 1 Movie
200 days to 250 days 4 Movies
175 days to 199 days 6 Movies
150 days to 174 days 10 Movies
125 days to 149 days 17 Movies
110 days to 124 days 16 Movies
100 days to 109 days 12 Movies
90 days to 99 days 6 Movies
80 days to 89 days 9 Movies
70 days to 79 days 28 Movies
60 days to 69 days 5 Movies
50 days to 59 days 1 Movie
#blogspot.com இணைய தகவல். உங்களுக்காக.... மேலும் தலைவரின் எந்த படமும் 50 நாட்களுக்கு கீழ் ஓடியதில்லை என்பது கூடுதல் தகவல்............ Thanks.........Mr.RSM
orodizli
23rd April 2020, 10:28 PM
1972யில் புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்தார் திமுக எனும் தீய்ய சக்திக்கு அழிவு ஆரம்பித்தது
2020யில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் வெற்றி
திமுகவும் கொரோனாவையும் வீழ்த்தும் சக்தி புரட்சி தலைவருக்கு உண்டென்பதில் பெருமை கொள்வோம்💕💕💕
2021யில் தமிழகத்தில் திமுகவும் இருக்காது கொரோனாவும் இருக்காது💪💪💪
#திருகை_பவர்_அருண்...... Thanks...
orodizli
23rd April 2020, 10:29 PM
எம்.ஜி.ஆரால் மழையா??
--------------------------------------------
மேற்கண்ட கேள்விக்கு--
ஆம்! என்று பதில் சொல்வது அடியேனில்லை! திருவள்ளுவன்??
நல்லார் ஒருவர் உளரேல்-அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!!!
ஆம்!! அது 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரம்!
லஞ்சம் லாவண்யம் அதிகார துஷ்பிரயோகத்தால்
இயற்கை--
வஞ்சம் கொண்டு தன் சினத்தைக் காட்டிய வேளை--
மக்கள்---
தஞ்சம் என எம்.ஜி.ஆரைத் தலைவனாக ஏற்ற்தால்
பஞ்சம் இன்றிக் கொட்டித் தீர்த்த மழையின் மகிழ்வு??
நீர் நிலைகள் எல்லாக் குளங்களிலும் ஏரிகளிலும் நிரம்பி வழிந்த நிலையில் புழல் ஏரி உடையக் கூடிய அபாயத்தில் நீரை உள் வாங்கியிருக்கிறது??
அமைச்சர்,,காளிமுத்து,,முதல்வர் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டு,,நிலைமையை விளக்க--
அந்த இரவில் சில அதிகாரிகளுடன் புழல் அணைக்கு விரையுமாறு காளிமுத்துவைப் பணிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
நள்ளிரவில்,,கொட்டும் மழையில்,,சில அதிகாரிகளுடன் காளிமுத்து அங்கே விரைகிறார்??
மழையின் தீவிரத்தால்,,தன் செயல்பட்டை நிறுத்திக் கொள்கிறது மின்சாரம்??
சுற்றிலும் சூழ்ந்து கொண்ட இருளில்--அதிகாரிகளுடன் டார்ச் லைட் சகிதம்,,,அமைச்சர் காளிமுத்து,,நிலைமையை ஆராய்ந்து கொண்டிருக்க--சக்தி வாய்ந்த டார்ச் லைட் சகிதம்,,ஒரு கும்பல் எதிர் திசையிலிருந்து அந்த இடத்துக்கு வருகிறது??
பொது மக்கள்,,,தங்கள் பணிக்கு இடையூறாக அங்கே கும்பல் சேருகிறார்களே என்ற எரிச்சலில் காளிமுத்து ஏறிட்டு நோக்க--
அந்த கும்பலின் தலைவனாக முதல்வர் எம்.ஜி.ஆர்???
உங்களைப் போகச் சொல்லிட்டேனே தவிர,,பிறகு தான் சிந்தித்துப் பார்த்தேன்! உங்கள் குழுவுக்கு,,வெள்ள அபாயத்தால் ஏதேனும் துன்பம் நேரிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் நான் சில அதிகாரிகளுடன் வந்தேன்???
முதல்வரே இந்த இருட்டில் இப்படி வருகை புரிந்ததும்,,அதற்கு அவர் சொன்ன விளக்கமும்,,அங்கே இருந்த அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் கூடிய இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது!!
அங்கே நடைபெற வேண்டிய வேலைகளும் தடை இன்றியும் துரிதமாகவும் நடந்தேறுகிறது!!!
இருள் சூழ்ந்த அந்த இக்கட்டான சூழலில்
அருள் சூழ்ந்த இந்த முதவனின் செயலைப் போல் வேறு எங்கேனும் நாம் கண்டதுண்டா????...... Thanks.........
orodizli
23rd April 2020, 10:31 PM
எம்ஐிஆர்உயிருடன்இருக்கும்போது என்னைஇப்போது புகழ்வதில் எந்தநன்மையும்வரபோவதில்லை நானஇறந்தபின் என்தொண்டுகளைநினைவுகூர்வதில்தான்இருக்கிறது நான்ஆற்றியகடமைகள் மக்களுக்கு எந்தஅளவில் உபயோகப்பட்டிருக்கிறது என்பதைகூறும்போதுதான் நான்ஆற்றியசேவைக்கும்புகழ்கிடைக்குமெனகூறினார் ஆனால்உறவுகள்பதிவைபார்க்கும் போதுஉயிருடன் இருக்கிரார் எனும் எண்ணம்மலர்ந்துக்கொண்டேஇருக்கிறது பதிவுகளுக்கு நன்றிநலவாழ்த்துக்கள் உறவுகளே........ Thanks...
orodizli
23rd April 2020, 10:38 PM
அனுப்பிய குழுவினர் மற்றும்
மக்கள் நிலைக்
குறித்து அந்த நடுநிசியில் தலைவர்
தவிர* வேறு எவர்க்கு
'தில்'லுடன் வர முடியும்.
மக்கள் சேவையே
மகேசன் சேவை
என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட புரட்சித்
தலைவரை தவிர
யாரால் முடியும்?
அந்த நல்லவரை
யாரால் மறக்க
முடியும்?........Fb feedback... Thanks...
orodizli
23rd April 2020, 10:39 PM
நமது தலைவர் அவர்கள் உயிர் துறந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் பல சர்வேயில் மக்களின் உள்ளம் கவர்ந்த தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்றால் அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி சினிமா துறையிலும் சரி முதல்வராக ஆன பிறகும் சரி மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு தனது வாழ்க்கையை அப்படியே அமைத்துக் கொண்ட காரணத்தால் இன்னும் இந்த உலகம் உள்ளளவும் அவர் புகழ் மறையாது ஓங்கும் என்பது இப்பவே நமக்கு நன்றாக தெரிகிறது பேஸ்புக்கில் அவரைப்பற்றி எவ்வளவு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது என்னைப்போன்ற எத்தனையோ பக்தர்கள் அதையெல்லாம் படித்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார்கள் இதற்கெல்லாம் காரணம் மனிதநேயம் ஒன்றே மகத்தானது என்று தலைவர் அவர்கள் கடைப்பிடித்து தான்........ Thanks...
orodizli
23rd April 2020, 10:40 PM
உண்மைதான் அந்தபுண்ணியவான் ஆட்சியில் நல்ல மழை பெய்யும் விளைச்சல் அமோகம் விலைவாசி ஏற்றம் இல்லை விவசாயிகள் தற்கொலை இல்லை பஞ்சம் பட்டினியில்லை மொத்ததில் சொல்லபோனால் அவர் ஆட்சி தமிழகத்தில் பொற்காலம் அப்படிப்பட்ட புன்னியவானை தமிழகம் இழந்துவிட்டது ஐய்யா......... Thanks...
orodizli
23rd April 2020, 10:43 PM
அந்த ஆண்டு நல்லமழை காரணமாக வடசென்னை நீரில்மூழ்கியது முதல்வர் MGR பாதிக்கபட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு நிவாரணம் ஆகிய பணிகளைமேற்கொண்டார்..... Thanks...
orodizli
23rd April 2020, 10:51 PM
வணக்கம் நண்பர்களே!! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிறப்பு குணங்கள் என கேட்டால் பெரும்பாலானவர்கள் அவருடைய வள்ளல் தன்மை, தொழில் பக்தி, பெரியவர்களை மதித்தல்,பகைவர்களை மன்னித்தல், தொண்டர்களிடம் பாசம் என நிறைய கூறுவார்கள்... பலரும் கூறத்தவறிய இன்னொரு சிறப்பு தகுதி அவருக்கு உண்டு, அது....
ஒருவருடன் பழகிய சில தினங்களிலேயே பிற்காலத்தில் அவர் என்னவாக வருவார் என சக மனிதர்களின் திறமையை கண்டறிவது.... சில சுவாரசியமான நிகழ்வுகள்
பல ஆண்டுகளாக அன்னை சத்யா ட்ரஸ்ட் மூலம் எம்ஜிஆர் படிக்க வைத்த ஆளாக்கிய நபர்களின் எண்ணிக்கை அதிகம். 1950களில் தொடங்கிய இந்த சேவை அவர் மறைவுக்குப் பின்னும் எம்ஜிஆர் ட்ரஸ்ட் மூலம் தொடர்கிறது....
அப்படி அவரால் படித்தவர்கள் தங்கள் படிப்பு முடிந்ததும் நேராக அவரிடம் சென்று ஆசி வாங்குவார்கள்... "நீ என்னவாக போகிறாய்?"என்று கேட்பார் அவர்....
அவர்கள் சொல்லும் வழி தனக்கு சரியெனப்பட்டால் அதற்கு அந்தந்த துறையில் உள்ள தன் நண்பர்கள் மூலம் ஆவண செய்வார்... வழிமாறி செல்ல நினைப்பவர்களை செல்லமாக கண்டித்து ஒரு குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுக்க செய்வார்... அதிலும் அவர்கள் வெற்ற பெற உதவுவார்... அவர் சொல்லி தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் அனைவரும் வாழ்வில் ஜெயித்துவிடுவார்கள். பலர் பெரு வெற்றி பெற்று மிகப்பிரபலங்களாக மாறிவிட்டார்கள்.... சில சம்பவங்கள்... ...( பதிவு கொஞ்சம் விரிவாக இருக்கும்.. இதைவிட சுருக்க முடியாது. மன்னிக்க...)
1950களில் முரசொலி மாறனை படிக்க வைக்கிறார். படிப்பு முடிந்ததும் மாறன் எம்ஜிஆர் இடம் வருகிறார்.
எம்ஜிஆர் :படிச்சு முடிச்சாச்சு, அடுத்து என்ன பண்ண போறதா உத்தேசம்?
மாறன்: எனக்கு ஒரு வழியும் தெரியலை.. நீங்கதான் நல்ல வழி சொல்லனும்..
எம்ஜிஆர் :.உனக்கு நல்ல நிர்வாக திறமை இருக்கு... என் பார்வையில் உன் திறமைக்கு தொழில் துறையில புகுந்து சாதிக்கலாம்...
மாறன் : எந்த தொழில்....
எம்ஜிஆர் :உதைப்பேன் ,(தலைவர் செல்லமாக அடிக்கடி சொல்லும் வார்த்தை )அது உன் சாய்ஸ்... ஒரு வருஷம் எடுத்துக்கோ நல்லா ஆராய்ந்து உனக்கு எந்த தொழிலில் ஆர்வம், திறமை இருக்குன்னு என தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு... அதுல நா என்ன உதவி செய்யமுடியுமோ செய்றேன்.
(..அந்த முரசொலி மாறன் பிற்காலத்தில் அவருடைய நிர்வாக திறமையால் கவரப்பட்டு கருணாவே தன் முரசொலி நிர்வாக தலைவர் பொறுப்பளித்ததும் இந்திய மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனதும் வரலாறு...அவர்தான் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பாளர்... அவருக்கு தான் தலைவர் சம்பளம் வாங்காமல் "எங்கள் தங்கம்" நடித்துக் கொடுத்தார்... )
அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து இளைஞன் ஒருவன் படிப்பை எம்ஜிஆர் மூலம் முடித்து ஆசீர்வாதம் வாங்க வருகிறான்.
எம்ஜிஆர் :படிப்பை நல்லபடியா முடிச்சாச்சு.. அடுத்து என்ன செய்ய உத்தேசம்...
இளைஞன்:நா சினிமாவுல புகுந்து நடிக்கப்போறேன்.
எம்ஜிஆர் :உதைப்பேன். உனக்கு சினிமா செட்டாகாது. உனக்கு கேட்பவரை கவர்ந்து இழுக்கும் நகைச்சுவையான பேச்சு திறமை இருக்கு.நல்ல பீல்டு ஒர்க்கர் நீ.. அரசியலில் நீ ஜொலிக்க அதிக வாய்ப்பு இருக்கு... நானே அதற்கு வழி செய்கிறேன்.நாளை அண்ணா விடமே நேரடியாக உன்னை அறிமுகம் செய்றேன்... (அந்த இளைஞனை அண்ணாவிடம் அறிமுகம் செய்து சிறிய பொறுப்பு வாங்கி தருகிறார். இந்த இளைஞன் தான் 9 முறை MLA 4முறை அமைச்சர் ஆன பிற்காலத்தில் எம்ஜிஆர் முதுகில் குத்திய திமுக துரைமுருகன்.)
அடுத்து 1980ல் அவரால் ஒரு பெண் படிப்பை முடித்து ஆசி வாங்க வருகிறார்.
எம்ஜிஆர் :அடுத்து என்ன செய்றதா உத்தேசம்?
பெண்: அரசியலில் உங்க கட்சியில சேர போறேன்.
எம்ஜிஆர் :உதைப்பேன்.உனக்கு அரசியல் வேண்டாம். அதுக்கேத்த கள்ளம் கபடம் உனக்கு இல்லை.. ஆழகான வட்டார வழக்கு பேச்சு நகைச்சுவை டயலாக்டெலிவரி முகபாவனை திறமை இருக்கு. சினிமாவுல நடிச்சா பெரிய ஆளா வருவ...(கையோடு பாக்யராஜ்க்கு போன் போடுறார். முந்தானை முடிச்சு படப்பிடிப்பு இருந்து பாக்யராஜ் எம்ஜிஆர் வீட்டுக்கே வந்து இந்தம்மா எதிர்காலத்தில் பெரிய நகைச்சுவை நடிகையா வரப்போறாங்க. என சொல்லி தன் படத்தில் அறிமுகப்படுத்துறார்... அந்த பெண்தான் இன்று பிரபலமான நடிகை கோவை சரளா...)
1998 திமுக ஆட்சியில் கருணாநிதி துரைமுருகன் முன்னிலையிலேயே கோவை சரளா இந்த தகவல்களை தெரிவித்து "ஒருவேளை அண்ணன் துரைமுருகன் சினிமாவிலும் நா அரசியலிலும் சேர்ந்திருந்தா இப்போ எங்க இருந்திருப்போம்னே தெரியாது. அண்ணன் துரைமுருகன் இன்றுவரை தன் முகத்தில் புல் மேக்கப் போட்டு தன் அரிதார ஆசையை தீர்த்துக்கொள்கிறார். ஆனால் தலைவர் சொன்னதால பல அரசியல் கட்சிகள் அழைத்தும் நா அரசியலுக்கே போகல"என பட்டென்று போட்டு உடைத்தார்... கருணா துரை இருவரும் குனிந்து சிரித்து கொண்டனர்....
அதே போல அவர் பேச்சை மீறி நாசமா போன வரலாறும் ஒன்று இருக்கு.... கருணா மகன் முக முத்துவையும்( ஆரம்ப காலத்தில்) எம்ஜிஆர் தான் படிக்க உதவி செய்தார்.
படிப்பு முடிந்ததும் எம்ஜிஆர் சொன்ன வார்த்தை "இவனுக்கு இன்டஸ்ட்ரியலிஸ்ட் அக வர பிரமாதமான வாய்ப்பு இருக்கு".கருணா தன் ஈகோ காரணமாக அதை புறக்கணித்து வீம்புக்கு எம்ஜிஆர் மாதிரி ஆகனும்னு சினிமாவில் நடிக்க வைத்து நாசமாக்கினார். முக முத்து குடிகாரனாக மாறிப்போனார். ஒருமுறை எம்ஜிஆர் முதல்வர் கருணா எதிர்க்கட்சி... முக முத்து அப்பாவிடம் சண்ட போட்டு எம்ஜிஆர் வீட்டுக்கு வந்துவிட்டார்... எம்ஜிஆர் அவரை சமாதானப்படுத்தி "அப்பாகிட்ட நா பேசுறேன். நாங்க எதிரியா இருக்கும் இந்த நேரத்துல நீ அப்பாவை விட்டுக்குடுத்து என்னிடம் வந்துட்டா அதை உன் அப்பனால தாங்க முடியாது.தாயும் தந்தையும் தான் முதலில் முக்கியம்"என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அப்போது கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு போன் போட்டு வேதனையுடன் எம்ஜிஆர் சொன்ன விஷயம்"லூசுப்பயல்.தன் ஈகோவை தீர்த்துக்கொள்ள தன் மகன் வாழ்க்கையை பலிகடா ஆக்கி நாசமாக்கிட்டான். அந்த அக்கா (முக முத்து தாயார்) உயிரோட இருந்திருந்தா இந்த கொடுமையெல்லாம் நடந்திருக்குமா "
ஆரம்ப காலத்தில் கருணாநிதிக்கு எம்ஜிஆர் பண உதவிகள் உட்பட பல உதவிகள் செய்தபோது முக முத்து ,முக அழகிரி இருவருக்கும் விவரம் தெரிந்த வயது. அதனாலேயே அவர்கள் எம்ஜிஆர் க்கு ஆதரவாக தன் தந்தையிடமே பலமுறை வாக்குவாதம் செய்தார்கள். அதனாலேயே கருணாநிதி இளம் வயதிலேயே இருவரையும் ஒதுக்கி வைத்தார்.கருணாநிதி பிள்ளைகளாக இருந்தாலும் இருவருமே எம்ஜிஆர் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். . அழகிரி இன்றும் தனது காரில் எம்ஜிஆர் பட பாடல் கேசட்டுகளை மட்டுமே வைத்திருப்பார்....
சிவாஜி இறந்த அன்று மதுக்கடை களை சென்னையில் அடைத்திருந்தனர். அடைக்கச் சொன்னது முதல்வர் கருணா... அப்போது முக முத்து செய்த அலப்பறை...
"ஏண்டா சிவாஜி செத்தா உலகமே அழிஞ்சிருச்சா?செத்தா கடைய அடைக்க இவரு என்ன பெரிய எம்ஜிஆரா? நிறைய படத்துல குடிகாரனாத்தானேடா நடிச்சிருக்காரு...கடைய தொறங்கடா டேய்"
இந்த படத்தில் எம்ஜிஆர் கையில் இருக்கும் குழந்தை கருணாநிதி மகளும் இன்றைய எம்பி யும் ஆன கனிமொழி.......... Thanks...
orodizli
23rd April 2020, 10:57 PM
திரையுலகின் மன்னாதி மன்னன் படப்பிடிப்புக்காக வடநாடு வருகிறார் என்று கேள்விப்பட்டு நேபாள நாட்டு அரசர் தனது துணைவி அரசியுடன் மன்னனை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வு "அன்பே வா" படப்பிடிப்பில்.
அவர்களுடன் இருப்பவர்கள் ஏ.சி.திரிலோகச்சந்தர், ஏ.வி.எம். சரவணன், ஏ.வி.மெய்யப்ப செட்டியார், நேபாள அரசர், அரசி, சரோஜாதேவி மற்றும் கடைசியில் இருப்பவர் மெய்யப்ப செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரி அம்மாள்.
அனைவருமே நடிகப்பேரரசர் எம்ஜிஆருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட தருணத்தை நினைத்தாலே...... Thanks...
நெஞ்சம் இனிக்கும்!
orodizli
23rd April 2020, 11:02 PM
[வாய்ப்புகளை வாரி வழங்கிய வள்ளல்...
மயிலை வடக்கு மாடவீதியில் ஒரு திருமண மண்டபம்...
டப்பிங் கலைஞர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி... இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார் அந்த இளம் பெண் ...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்...' போன்ற பாடல்கள்... வித்தியாசமான குரலில் பாடிக் கொண்டிருந்தார்... ஒரே எம்.ஜி.ஆர். பாட்டு மயம்...
முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !
அப்போது அவர் முதலமைச்சராக இல்லை. அ.தி.மு.க தலைவர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த இளம் பாடகியின் தாயார் அழைத்ததின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் மக்கள் திலகம். காரணம்...
அந்த தாய் ஒரு காலத்தில் பாய்ஸ் நாடகக் குழுவில் நடிகை! பாலமுருகன் பாய்ஸ் கம்பெனி, ஜோதி நாடக சபா என்று நடித்துக் கொண்டிருந்தவர். திருமணமான பின் நாடகத்தை விட்டு விட்டு சினிமாவில் நடித்தார். கண்ணன் என் காதலன், கணவன், என் அண்ணன், இதயக்கனி, நீரும் நெருப்பும் என்று பல எம்.ஜி.ஆர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். பின்பு 'டப்பிங்' கலைஞராக விளங்கினார். நாடக நடிகையாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு அவரை நன்றாகத் தெரியும். அதனால், பழைய, புதிய
சக நாடகக் கலைஞர்கள் யார் அழைத்தாலும் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் அழைப்பை ஏற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கொள்கையாகவேக் கொண்டிருந்த மக்கள் திலகம், அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
படப்பிடிப்பின்போது அந்தப் பெண் தனது தாயாருடன் வருவதை எம்.ஜி.ஆர் பலமுறை பார்த்திருக்கிறார்.
ஆனால், அவர் இந்த அளவுக்குப் பாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த செய்திகளையெல்லாம் நான் அறிந்துகொள்ள உதவியாக இருந்த அந்த பாடகியின் பேட்டியிலிருந்து ஓரு பகுதி...
" மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு இசை ரசிகரைப் பார்க்க முடியாது. அந்தக் கல்யாணத்தில் என் கச்சேரியை நீண்ட நேரம் அமர்ந்து ரசித்தவர், ‘‘உனக்கு இப்படி பாடக்கூடிய பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்லையே’’ என்றார் அம்மாவிடம். அப்படியே கத்தையாகப் பணத்தை அள்ளிக் கொடுத்து வாழ்த்தினார். அப்போ எனக்கு 15 வயசுதான் இருக்கும்.
அவருடைய பாராட்டையே விருதாக நினைத்த எனக்கு, வரம் போல இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தார். ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஒரு பாடலைப் பாட திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனிடம் சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ஜேசுதாஸுடன் சேர்ந்து பாடிய,
கவிஞர் நா.காமராசன் இயற்றிய அந்தப் பாடல்தான், ‘போய்வா நதி அலையே...’....
இப்போது தெரிந்திருக்குமே அந்தப் பாடகி யாரென்று ! அவர்தான் பாடகி டி.கே.கலா. அகத்தியர் திரைப்படத்தில் 'தாயிற்சிறந்த கோவிலும் இல்லை...' என்ற பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பாடி, முதல் பாட்டிலேயே பலரது கவனத்தையும் கவர்ந்தவர். அவரது தாயார்
நாடக மற்றும் திரைப்பட நடிகையாக, டப்பிங் கலைஞராக விளங்கிய
காலஞ்சென்ற சண்முகசுந்தரி.
ரெக்கார்டிங் முடிந்ததும் கே.வி.மகாதேவன், ‘‘இதுவரை இப்படி ஒரு குரலை நான் கேட்டதில்லை. உனக்கு தனித்துவமான வாய்ஸ்’’ என்று டி.கே.கலாவை வாழ்த்தினாராம்.
அந்த பேட்டியில் மேலும் தொடர்கிறார் டி.கே.கலா......... Thanks...
orodizli
24th April 2020, 12:25 AM
ஹிந்து தமிழ் திசை...23-04-2020...’மறுபடியும் முதல்லேருந்தா...’ எம்ஜிஆர் பட டயலாக்! அங்கே என்.டி.ஆர் - ராமுடு பீமுடு’; இங்கே எம்.ஜி.ஆர். - எவர்கிரீன் "எங்கவீட்டுபிள்ளை"
இங்கிருந்து ஆந்திராவுக்கும் ஆந்திரத்தில் இருந்து இங்கேயுமாக வந்தவர்களும் இருக்கிறார்கள். வந்து ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் வந்த படமும் உண்டு. வந்து வெற்றிப் படமாக அமைந்ததும் இருக்கிறது. அந்த வகையில்... எங்க வீட்டுப்பிள்ளை, தனி ரகம். காரணம், படம் பார்த்த பலரும் எங்க வீட்டுப்பிள்ளை என்றே எம்ஜிஆரைக் கொண்டாடினார்கள். எம்ஜிஆரை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில், இந்தப் படத்துக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு!
1965ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, பொங்கலன்று ரிலீஸான இந்தப் படம், எம்ஜிஆர் ரசிகர்களுக்குத் தீபாவளிக் கொண்டாட்டமாகவே அமைந்தது. ‘ராமுடுபீமுடு’ என்று தெலுங்கில் வந்த படத்தை, தமிழில் எடுக்க முடிவு செய்த விஜயா புரொடக்*ஷன்ஸ், எந்த டிஸ்கஷனும் இல்லாமல் இவர்தான் ஹீரோ என்று எம்ஜிஆரை டிக் அடித்தது. படத்தைப் பற்றி அறிந்துவைத்திருந்த எம்ஜிஆர், டபுள் ஓகே சொல்ல, பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது படம்.
அப்புறம் ஒரு விஷயம்... அந்த தெலுங்குப் படமான ‘ராமுடுபீமுடு’ செம ஹிட்டு. படம் பார்த்துவிட்டு, வணக்கம் போட்டதும் வெளியே வந்த கையுடன், அப்படியே க்யூவில் நின்று, டிக்கெட் வாங்கிப் பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்கம். அப்படியொரு வெற்றியைத் தந்த இந்தப் படத்தின் நாயகன் என்டிஆர் என்று சொல்லாமலேயே தெரிந்திருக்குமே உங்களுக்கு?
ராமுடுபீமுடுவை ரசித்துக் கொண்டாடியவர்கள்தான், பின்னாளில் என்டிஆரை கிருஷ்ண பரமாத்மாவாகவே பார்த்துச் சிலிர்த்தார்கள். அதேபோல், இங்கே, எங்கவீட்டுபிள்ளை எம்ஜிஆரை, அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்று ஆராதித்தார்கள்.
இப்போது கூட, தமிழ் சினிமாவில் ஏதேனும் டபுள் ஆக்ட் படங்களில், ‘என்னய்யா எங்கவீட்டுபிள்ளை மாதிரில்ல இருக்கு’ என்று ஜாலியாய் அவர்களே படத்தில் கமெண்ட் டயலாக் வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
படம் வருவதற்கு முன்பே எம்ஜிஆர் ரசிகர்கள் பேசிப்பேசி மகிழ்ந்து திளைத்தார்கள். நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு, ஏழு வருடங்கள் கழித்து, அடுத்த இரட்டைவேடப் படமாக எங்கவீட்டுப்பிள்ளை அமைந்ததுதான் காரணம்.
விஜயா கம்பைன்ஸ் புரொடக்*ஷன்ஸ் நாகிரெட்டி - சக்ரபாணி தயாரித்த ஈஸ்ட்மென் கலர் படம் இது. மிகப் பிரமாண்டமான முறையில் எடுத்திருந்தார்கள். வீடுகள் செட்டெல்லாம் அவ்வளவு கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது.
‘டபுள் ஆக்ட்டு. ஆள் மாறாட்டக் கதைதானே...’ என்று ஒற்றைவரியில் சொன்னீர்களென்றால், உம்மாச்சி வந்து உங்கள் கண்களைக் குத்தும். அப்படியெல்லாம் சர்வசாதாரணமாக டீல் செய்து சொல்லிவிடமுடியாதபடி நரஸராஜூவின் மூலக்கதையும் இருக்கும். அதை அதி அற்புதமாக, தெளிவாகத் திரைக்கதையும் ஆக்கியிருப்பார்கள்.
இன்னும் சொல்லப்போனால், எம்ஜிஆருக்கே இது புதுமாதிரியான படம்தான். காரணம்... அப்பாவி எம்ஜிஆர், தமிழ் சினிமாவுக்கும் புதுசு. ரசிகர்களுக்கும் விருந்து. அந்த அப்பாவி முகம் கொண்ட எம்ஜிஆரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு பாந்தமாக இருக்கும், அந்தக் கேரக்டர்.
அத்தனை சொத்துக்களுக்கும் அதிபதி அப்பாவி எம்ஜிஆர். ஆனால், மாமா நம்பியாரின் பிடியில் சொத்தும் இருக்கும். அவரும் இருப்பார். மிரட்டலான பேச்சு, உருட்டலான பார்வை, விளாசித்தள்ளும் சாட்டையைக் கொண்டு, எம்ஜிஆரை பம்பரமாக்கியிருப்பார் நம்பியார்.
அங்கே இன்னொரு எம்ஜிஆர். நாகேஷுடன் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துகொண்டு, நடிக்க முயற்சி செய்துகொண்டு, ஜாலியாகப் பொழுதைக் கழிப்பார். அப்பாவி பெயர் ராமு. இவரின் பெயர் இளங்கோ.
ராமு எம்ஜிஆருக்கு ஒருகட்டத்தில் செத்துவிடலாம் என்று நினைத்து முயற்சி செய்ய, அக்காவின் மகளான சிறுமி தடுத்துவிடுவாள். அடியும் உதையும் வாங்கிக்கொண்டு இங்கே இருக்கமுடியாது என்று வீட்டை விட்டே, ஊரை விட்டே கிளம்பிவிடுவார் ராமு.
இதற்கிடையே செல்வந்தரான எஸ்.வி.ரங்காராவின் மகள் சரோஜாதேவியை அப்பாவி ராமுவிற்கு மணமுடித்து, வரதட்சணைப் பணமும் பெற்றுவிடத் திட்டம் போட்டிருப்பார் நம்பியார்.
ஒருவழியாக, ராமு எம்ஜிஆர், இளங்கோ எம்ஜிஆரின் கிராமத்துக்குச் சென்று அவரின் வீட்டுக்குச் செல்ல, இங்கே இளங்கோ எம்ஜிஆர், சரோஜாதேவியின் கண்ணில் பட்டு, வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கே நம்பியார் வந்து, அவரை அழைத்துச் சென்றுவிட... அப்புறமென்ன? அப்புறம் என்ன... என்பதுதான் படத்தின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்கள்.
கிராமத்தில் இளங்கோ எம்ஜிஆரின் முறைப்பெண் ரத்னா. ராமு எம்ஜிஆருக்குப் பார்த்த சரோஜாதேவி. இப்படி ஆள்மாறாட்டக் கதையில், காதலும் இடம் மாறும். அந்தக் காதலால் குழப்பமும் பிரிவும் சோகமும் வரும். ஆனால் படம் முழுக்க எல்லாமே இருந்தாலும் சோகத்தை சட்சட்டென்று நல்ல மூடுக்குக் கொண்டு வந்துவிடுகிற திரைக்கதையைக் கையாண்டார்கள்.
வீட்டில் அடைபட்டிருந்த வீரன் எம்ஜிஆர், ஹோட்டலுக்குச் சென்று இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஃபுல்கட்டு கட்டிவிட்டு, பில் தராமல் வெளியேறிவிடுவார். அதேநேரம், அதே டேபிளுக்கு அப்பாவி எம்ஜிஆர் வந்து உட்காருவார். சர்வர், வேறென்ன வேணும் என எரிச்சலாகக் கேட்பார். ரெண்டு இட்லி என்றதும் மறுபடியும் முதல்லேருந்தா என்பார் சர்வர். இந்த மறுபடியும் முதல்லேருந்தா... என்பது ஞாபகம் இருக்குதானே!
சரோஜாதேவி ஒரு பக்கம் வர, இன்னொரு பக்கத்தில் ரெண்டு எம்ஜிஆரும் இருப்பார்கள். சரோஜாதேவியின் ஹேண்ட்பேக்கை ஒருவன் தூக்கிக்கொண்டு ஓட, திருடன் திருடன் என்று கத்துவார். உடனே வீர எம்ஜிஆர், திருடனை நோக்கி ஓடுவார். இது வழக்கமான சீன். ஆனால் திருடன் என்றதும் அப்பாவி எம்ஜிஆர் தன் பர்ஸை பத்திரப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து ஓடுவார். சின்னக்காட்சிதான். ஆனாலும் அத்தனை நகாசு காட்டியிருப்பார்கள்.
இப்படி படம் நெடுக, அங்கங்கே காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை ரொம்பவே ஈர்த்திருப்பார்கள். படத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் ஒவ்வொன்றுமே ஷார்ப். அதிலும் நாகேஷ் உளறுவாயனாக அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. ‘என்னண்ணே... அவங்களைக் கடிச்சிட்டே... ச்சீ... அடிச்சிட்டே’, ‘தப்பு பண்ணிட்டோம். நீங்கதான் துரத்தணும்... சாரி திருத்தணும்’, ‘அண்ணே, அவங்க காலை ஒடி சீச்சீ காலைப் புடி’, ‘டைரக்டர் சார், எனக்கொரு டான்ஸ் கொடுங்க சார். மன்னிக்கணும் சான்ஸ் கொடுங்க சார்’ என்று படம் முழுவதும் நாகேஷ் இப்படியேதான் பேசுவார்.
சரோஜாதேவியை இன்னும் அழகாகவும் எம்ஜிஆரை இன்னும் இன்னும் அழகாகவும் மொத்தப் படத்தை அழகுக்கு அழகாகவும் வின்சென்ட் - சுந்தரத்தின் ஒளிப்பதிவு மெருகேற்றிக்கொண்டே இருக்கும்.ன்விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள் அள்ளிக்கொண்டு போகும். பாடலின் உள்ளூடாக வரிகிற இசைகளும் அமர்க்களப்படுத்தும். பின்னணி இசையும் பிரமாதம்.
கண்களும் காவடிச் சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாட்டு ஸ்டேஜ் டான்ஸ். அதற்கேற்றாற்போல டியூன் போட்டிருப்பார். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல், நம்மையும் ஆடவைக்கும்.
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரலாமா பாட்டு, செம லவ் ஸாங்.
அதேபோல,
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டும் என்றான் பாடல், கிராமத்துச் சங்கதிகளைச் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்து குத்துப்பாட்டு. எம்ஜிஆரும் ரத்னாவும் பிரமாதம் பண்ணியிருப்பார்கள்.
‘பெண் போனாள்... இந்தப் பெண் போனாள்
இவள் பின்னாலே என் கண் போகும்’ என்ற டூயட் பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் பின்னிப்பெடலெடுத்திருப்பார்.
‘மலருக்குத் தென்றல் பகையானால் என்றொரு சோகப்பாடல். இங்கே சரோஜாதேவியும் அங்கே ரத்னாவுமாகப் பாடுவார்கள். பொதுவாக, பரபரவென போய்க்கொண்டிருக்கும் படத்துக்கு இப்படி சோகப்பாட்டு முட்டுக்கட்டை போடும் என்பார்கள். ஆனால் அப்படி எந்தச் சேதாரமும் நிகழாதபடி, பாடலையும் அமைத்திருப்பார்கள். கில்லாடித்தனமான எடிட்டிங்.
படத்திலும் எம்ஜிஆரின் திரையுலக மற்றும் அரசியலிலும் முக்கியப்பங்கு வகித்த ‘நான் ஆணையிட்டால்’ பாட்டுதான் படத்துக்கே ஹைலைட். பாட்டு ஆரம்பிக்கும் முன்பிருந்தே ஆரம்பித்துவிடுகிற கைத்தட்டல், பாட்டு முடிந்தும் கூட ஓயாதிருப்பதுதான் எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் அந்தச் சவுக்குக்கும் கிடைத்த மெகா வெற்றி. முக்கியமாக, கவிஞர் வாலிக்குமான வெற்றி இது.
ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, பண்டரிபாய் என பலரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். முக்கியமாக, படம் நெடுக, நாகேஷ் தப்புத்தப்பாகச் சொல்லும் ஒற்றை வரிகள், சரவெடிக் காமெடி.
இந்த எம்ஜிஆரும் அந்த எம்ஜிஆரும் அண்ணன் தம்பி என்கிற முடிச்சு அவிழ்வதும் நம்பியாரை வெளுத்தெடுப்பதும் பண்டரிபாய் அக்கா என அறிந்து உருகுவதும் என கடைசி இருபது நிமிடங்கள் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய், சுபம் கார்டுடன் முடியும்.
ஆனால் எம்ஜிஆரின் அடுத்தடுத்த இன்னிங்ஸ் அங்கிருந்துதான் ஆரம்பமானது. அங்கிருந்தும் ஆரம்பமானது.
மனசில் வலியோ வேதனையோ, துக்கமோ வருத்தமோ... ஏதேனும் ஓர் சூழ்நிலையில் கொஞ்சம் டல்லாக இருக்கும் போது, எங்க வீட்டு பிள்ளையைப் பாருங்கள். டல்லான மனசு எம்ஜிஆர் மாதிரியே சுறுசுறுவென ஆகிவிடும். ஏதோவொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா.
65ம் வருடம் வெளியான படம். 55 வருடங்களாகிவிட்ட படம். ஆனால், இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற எம்ஜிஆரைப் போலவே, ’எங்கவீட்டுபிள்ளை’யும் நீடூழி வாழ்வான்....... Thanks.........
orodizli
24th April 2020, 08:03 AM
https://youtu.be/QjlwnCFbl04......... Thanks.........
orodizli
24th April 2020, 08:04 AM
https://youtu.be/V__g68Jf51M....... Thanks...
orodizli
24th April 2020, 08:04 AM
https://youtu.be/mgKSbtvDpks..... Thanks...
orodizli
24th April 2020, 08:05 AM
https://youtu.be/75P26FYBmeo... Thanks...
orodizli
24th April 2020, 08:06 AM
https://youtu.be/gmK9Gfap5Rw... Thanks...
orodizli
24th April 2020, 08:07 AM
https://youtu.be/XtkIpDkZVss... Thanks...
orodizli
24th April 2020, 08:07 AM
https://youtu.be/gEaMIW2g-y0.... Thanks...
orodizli
24th April 2020, 08:08 AM
https://youtu.be/YW0j9mSenP0... Thanks...
orodizli
24th April 2020, 08:09 AM
https://youtu.be/drmruFmbekc.... Thanks...
orodizli
24th April 2020, 08:14 AM
எம்.ஜி.ஆர்., அவர்கள் வித்தியாசமாக நன்றாக நடித்திருந்தார். மக்கள் திலகம் எம்ஜிஆர் சரோஜாதேவி நாகேஷ் அசோகன் நடித்த குடும்பச்சித்திரம் "பணக்கார குடும்பம்" 24-04-1964 வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
மெல்லிசை மன்னர்கள் இசையில் பாடல்களை புதுமையாக படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா........... Thanks...
orodizli
24th April 2020, 08:16 AM
"Panakkara Kudumbam" (Tamil: பணக்கார குடும்பம், English: Rich Family) is a Tamil language film starring M. G. Ramachandran in the lead role. The film was released in 1964 and was a commercial hit. It ran more than 100 days in all theatres in Chennai and other major cities. The climax features MGR and R. S. Manohar fighting in a moving jeep............ Thanks...
..
orodizli
24th April 2020, 08:16 AM
https://youtu.be/O98bLpYUOl4... Thanks...
orodizli
24th April 2020, 08:17 AM
https://youtu.be/vh56xKbN9Eo... Thanks...
orodizli
24th April 2020, 08:17 AM
https://youtu.be/G3tTtVnFD8E... Thanks...
orodizli
24th April 2020, 08:18 AM
https://youtu.be/DsyCv1RaTEc... Thanks...
orodizli
24th April 2020, 08:19 AM
https://youtu.be/jQLYeYqXP1E... Thanks...
orodizli
24th April 2020, 08:19 AM
https://youtu.be/u84XO7cwrnU... Thanks...
orodizli
24th April 2020, 08:20 AM
https://youtu.be/OVsncWv63FE... Thanks...
orodizli
24th April 2020, 08:21 AM
Athai Magal" Kannadasan P. Susheela 3.39
2. "Ithuvarai Neengal" Kannadasan T. M. Soundararajan 5.06
3. "Ondru Engal" Kannadasan T. M. Soundararajan, L. R. Eswari 4.26
4. "Pallakku Vanga" Kannadasan T. M. Soundararajan 4.31
5. "Parakkum Panthu" Kannadasan T. M. Soundararajan, P. Susheela 4.20
6. "Vaadiamma Vaadi" Kannadasan L. R. Eswari, P. Susheela, L. R. Anjali 5.05
7. "Athai Magal Rathinathai" Kannadasan T. M. Soundararajan *
8. "Unnai Nambinal" Kannadasan P. Susheela.... Thanks
orodizli
24th April 2020, 08:21 AM
The film was remade in Hindi in 1970 as Humjoli,[1] in Kannada in 1978 as Bhale Huduga,[2] and in Telugu in 1984 as Intiguttu. All versions except Intiguttu were directed by the same director, T. R. Ramanna.
The triple role played by Nagesh was essayed by Mehmood in the Hindi version and Dwarakish in the Kannada version. Later on, the dual roles played by Nagesh in Anubavi Raja Anubavi went on to be essayed by Mehmood in its Hindi version (Do Phool) and Dwarakish in its Kannada version (Kittu Puttu).... Thanks...
orodizli
24th April 2020, 08:22 AM
Directed by
T. R. Ramanna
Produced by
T. R. Ramanna
Written by
Sakthi T. K. Krishnasamy
Starring
M. G. Ramachandran
B. Saroja Devi
Music by
Viswanathan Ramamoorthy
Cinematography
M. A. Rahman
Edited by
M. S. Mani,
P. L. Mani
Production
company
RR Pictures
Release date
24 April 1964
Language
Tamil... Thanks......
orodizli
24th April 2020, 08:24 AM
நடிகர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் சாணக்கிய சபதம் சூரபத்மன் சிசுபாலன் இந்திரஜித் போன்ற இதிகாச வரலாற்று நாடகங்கள் பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்றிய போது தலைமை வகித்து நாடகக்காவலர் என்ற பட்டத்தை வழங்கினார் புரட்சித்தலைவர். மக்கள் திலகம் அவர்களுடன் பணக்கார குடும்பம் முதல் பல்லாண்டு வாழ்க வரை 23 படங்கள் நடித்தார். அதில் ஆயிரத்தில் ஒருவன் அரசகட்டளை அடிமைப்பெண் ,உலகம் சுற்றும் வாலிபன், ரிக்க்ஷாக்காரன் போன்ற படங்களில் தனி முத்திரை பதித்தார்!..... Thanks...
orodizli
24th April 2020, 08:26 AM
MGR Filmography Film 37 (1956) Poster
எம்ஜியாரின் திரைவாழ்க்கையில் பொன்னான ஆண்டாக மலர்ந்தது 1956ஆம் வருடம். அந்த வருடம் வெளியான அவரது மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாயின. அது மட்டுமல்ல, மூன்றும் மூன்று வெவ்வேறு களங்களைக் கொண்டிருந்தன. அலிபாபா அராபிய ஃபாண்டஸி கதையாக இந்தியிலிருந்து மறுவாக்கம் செய்யப்பட்டது. அடுத்து வந்த மதுரைவீரன் தமிழர்களின் காவல் தெய்வத்தின் கதையைச் சொன்னது; மூன்றாவதான தாய்க்குப்பின் தாரம் தமிழ்நாட்டு கிராமத்தின் இயல்பான தன்மையைச் சித்தரித்து எம்ஜியாருக்கு சமூகப்படங்கள் சரிப்பட்டு வராது என்ற தவறான கருத்தை முறியடித்து வெற்றிவாகை சூடியது.
எம்ஜியார் பானுமதி ஜோடி இதிலும் தொடர, இப்படம். முதல் முறை மட்டுமன்றி, ரீரிலீஸ்களின்போதும் வசூலை அள்ளிக்குவித்த வகையில் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் தேவர் ஃபிலிம்ஸ் கம்பெனிக்குப் அஷயபாத்திரமாகவே அமைந்தது. இதை அடுத்து எம்ஜியார் நாயகனாக நடிக்க கேவி மகாதேவன் இசையமைக்க, தேவரின் தம்பியும் எடிட்டருமான எம்ஏ திருமுகம் இயக்க தேவர் ஃபிலிம்ஸ்15 படங்களைத் தயாரித்தது; அவற்றில் பெரும்பாலும் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜியாருக்கும் தேவருக்கும் அவ்வப்போது சிறுசிறு பிணக்குகள் வந்ததுண்டு என்றாலும், இருவருடம் பரஸ்பரம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். இன்னொருவரை ஹீரோவாகப் போட்டு தேவர் ஃபிலிம்ஸ் படம் எடுக்காது என்று சின்னப்பா தேவர் எம்ஜியாரிடம் கூறியதாகச் சொல்வார்கள். வேறு நாயகர்கள் நடித்த தேவரின் தமிழ்ப்படங்கள் தேவர் ஃபிலிம்ஸ் அல்லாமல் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் என்ற பேனரில் தயாரிக்கப்பட்டன.
எம்ஜியாரின் அம்மா செண்டிமெண்ட் ஏற்கனவே குலேபகாவலியில் இருந்தாலும், அழுத்தமாக எம்ஜியாரின் பிராண்டட் மார்க்கெட்டிங் டெக்னிக்காக அது மாறத்துவங்கியது இந்தப் படம் துவங்கித்தான். தாய் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தே வரிசையாகப் படங்கள் தயாராகத் துவங்கின.
எம்ஜியாரின் அரசியல் பிரசாரமும் இந்தப் படத்தில் தொடர்ந்தது. ஏற்கனவே மலைக்கள்ளனில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!' என்று பிரசாரித்ததைப்போல, இதிலும் அழுத்தமாக, 'மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே!' என்று சமூக, அரசியல் நிலைகளைச் சாடி ஒரு பாடல் அமைந்தது தற்செயல் அல்ல! இதற்குப்பின் அநேகமாக ஒவ்வொரு எம்ஜியார் படத்திலும் இதைப்போல ஒரு பாடல் இடம்பெறலானது...... Thanks...
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.