View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu
P_R
5th February 2010, 01:07 PM
Digression...sorry for breaking the chain here.
It seems appropriate now to quote a poem by மகுடேஸ்வரன் which I enjoyed
சிற்றின்பம்
சிறிது காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்
என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய
எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்
pavalamani pragasam
5th February 2010, 03:28 PM
That is a great poem with deep sense and truth!
Hubbers are kindly requested to use this thread exclusively to post kavithai and enjoy commenting in the comments thread!
pavalamani pragasam
5th February 2010, 03:59 PM
மனிதன் வளர்ந்தான்
காடு திருத்தி
நாடு பிரித்து
மொழி பழகி
தொழில் பெருக்கி
அறிவுடன் ஆராய்ந்து
செறிவுடன் சீரமைத்து
கலைகள் வளர்த்து
கண்டங்கள் கடந்து
எல்லைகள் விரித்து
இயற்கையை அடக்கி
விலங்கினம் ஒடுக்கி
மனிதம் நிரூபித்து
சிகரங்கள் தொட்டு
மிளிர்கின்ற வேளையில்
விளைநிலத்தில் களைகள்
கண்டு களையாதிருப்பானோ
kirukan
5th February 2010, 11:34 PM
களையாதிருப்பானோ!!!
கவலையாய் இருக்கிறது
உயிரில் கலந்த ஊழலை
பிறர்க்கு
உலை வைக்கும் உணர்வை
பழி தீர்க்கும் பண்பை
களையாதிருப்பானோ.
-
கிறுக்கன்
pavalamani pragasam
6th February 2010, 10:05 AM
களையாதிருப்பானோ சட்டையை
காத்திருக்கிறாள் பெண்டாட்டி
கமுக்கமாய் கொஞ்சம் காசெடுக்க
அடுத்த வீட்டு அக்காவின் கொலுசு
எதிர் விட்டு மாமியின் ஜாக்கெட்டு
மாடி வீட்டு மாணவியின் செருப்பு
அவள் கண்ணுக்கு எத்தனை அழகு
கொடாகண்டன் குடிகாரன் முரடன்
அவனா தருவான் இந்த அன்பளிப்பு
அவளுக்கென இப்படி ஒரு சேமிப்பு
kirukan
6th February 2010, 03:12 PM
சேமிப்பு இல்லா வாழ்வும் பிடிப்பு
இல்லா படிப்பும் ஒன்று.
-
கிறுக்கன்
pavalamani pragasam
6th February 2010, 07:58 PM
ஒன்று போதும் என்றனர் சில காலமாய்
அரசு இரண்டை அனுமதித்த காலத்திலும்
அந்தோ இன்று அந்த ஒன்றும் ஈர்க்கவில்லை
இன்றைய 'இளம்'தம்பதியர் வாழ்வினிலே
இப்படியே தாலி, குழந்தை, குடும்பம்
ஒவ்வொன்றாய் வழக்கொழிந்து போகலாமோ
kirukan
6th February 2010, 09:13 PM
போகலாமோ
உடல் உருக்கி
உயிர் குடித்து
குடி கெடுத்து
மதி மயக்கும்
மதுவை நாடி
போகலாமோ!!!
-
கிறுக்கன்
pavalamani pragasam
6th February 2010, 09:45 PM
போகலாமோ மாய்ந்து போகலாமோ
தன் வினை தன்னை சுடுகிறதே என்று
தன் வார்த்தை தன்னிடம் வந்து
தான் மட்டுமோ என மாயம் காட்டினும்
மறுபக்க ஆட்டத்தை மறைக்காமல்
சவாலை சமாளிக்க அழைத்தால்
சளைக்காது சமர் செய்யலாமே
பூப்பந்தை திருப்பி வீசலாமே
kirukan
6th February 2010, 10:58 PM
வீசலாமே
வேல் விழி கொண்டு
வீணர்களை வீழ்த்தாது
தன்
விழி கொண்டு
வழி காட்டும்
வழுவா விழி
வீசலாமே!!
-
கிறுக்கன்
pavalamani pragasam
6th February 2010, 11:23 PM
வீசலாமே தங்கக்காசை கடைவீதியில்
அள்ளலாமே அனைத்து இன்பங்களையும்
அத்தனை புலன்களுக்கும் உண்டு சுகங்கள்
அமுங்கிப்போகும் ஆன்மாவின் குரல்கள்
kirukan
7th February 2010, 07:37 PM
குரல்கள் கூக்குரலாய் மாற
கூக்குரல்கள் அலறலாய் மாற
அலறல்கள் ஓலமாய் மாற
ஓலங்கள் ஒடுங்கி ஒப்பாறி ஆனதே.
-ஹைடி ....
-
கிறுக்கன்
pavalamani pragasam
7th February 2010, 08:00 PM
ஆனதே ஆனந்த வெள்ளம்
களிப்பில் மிதக்கும் உள்ளம்
ஆசையாய் வளர்த்த கொடி
தன்னிகரில்லா அழகுச்செடி
உச்சி மாடி வரை ஏறி நின்று
கொத்துகொத்தாய் பூத்திருக்கு
வெள்ளையும் வெளிர் சிகப்புமாய்
காகித மலரெனும் போகன்வில்லா
தோட்டத்து அரசனாம் அவன்
எக்காள சிரிப்பில் அழைப்பினில்
அக்கம்பக்கமெல்லாம் அடிமை
அழகின் ஆராதனை இதுதானோ
ஆவியை இதமாய் வருடிடுமோ
இயற்கை செய்யும் மாயந்தானோ
kirukan
7th February 2010, 10:52 PM
மாயந்தானோ மாய
கண்ணனின் ஆட்டமும்
மாரிசனின் மாய
மான் ஓட்டமும்
கண்ணனின் ஆட்டம்
கபட நாடகம்
மாரிசனின் ஓட்டம்
நாடக கபடம்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
7th February 2010, 10:59 PM
கபடம் எதுவென்று குழந்தை அறிந்திட
அறிவுள்ள பஞ்சதந்திர கதைகளுண்டு
பின்னாளில் புரிந்து நடந்திட பாடம்
அதுவே நாம் வயலுக்கு இடும் உரம்
kirukan
7th February 2010, 11:17 PM
உரம் செயற்கையாக
உற்பத்தி செயற்கையாக
விதையும் செயற்கையாக
மண்ணும் செயற்கையாகுமோ....
-
கிறுக்கன்
pavalamani pragasam
8th February 2010, 09:44 AM
செயற்கையாகுமோ சீரான மானிட வாழ்வுதான்
உதட்டில் ஒட்டவைத்த ஒரு பொய்யான சிரிப்பு
மேனிதனில் பூசிய ஒவ்வாத ரசாயன ஒப்பனை
சோதனை குழாயிலே உருவாக்கும் கரு தாண்டி
ஆண் பெண்ணை சேராமல் உயிர் உருவாகும் காலம்
kirukan
9th February 2010, 07:41 PM
காலம் மாற ஞாலம் மாற
நாமும் மாறலே நலம்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
9th February 2010, 07:56 PM
நலம் விரும்பி என்ற கையொப்பம்
நம்பிக்கை தராத ஒரு பொய்யுரை
நயவஞ்சகத்தின் அணுகுமுறை
நஞ்சென வெறுத்து ஒதுக்கிவிடு
kirukan
10th February 2010, 07:01 PM
விடு... விடு.... என
அலறல் ஒலிக்க
கிடு கிடுவென
நானும் நடக்க
பட படவென
உள்ளம் பதைக்க
...
ஏன்...ஏஏன்...
குழந்தைனா குளிக்க
களேபரம் புரிவது
புதிதல்ல
பதர கூடாது
புன்னகையுடன் புரிய
வைத்தால் பத்தினி.
(ஏன்டா... ஏன்... முடில....)
-
கிறுக்கன்
pavalamani pragasam
10th February 2010, 07:25 PM
பத்தினி என பட்டம் கொடுத்து
பத்திரமாய் வீட்டில் அடைத்து
பயந்து கிடக்கும் ஆணினமே
பளிங்கு போன்ற பெண் மனதில்
பார்க்க முடியுமா களங்கத்தை
பார் முழுக்க அவள் ஆட்சியடா
பதராய் அவளை எண்ணாமல்
பாசாங்கின்றி போற்றி உய்திடு
P_R
10th February 2010, 07:26 PM
பத்தினித் தெய்வங்கள் நகரெரிக்க - இனி
எத்தனித்தால் அதனைத் தடுக்க
முத்தினைப் போலொரு குறளுமுண்டே:
புத்தனோ பித்தனோ கொண்ட கொழுநன் - தனை
நித்தம்நித்தம் வணங்கும் துதிக்கும்
பத்தினித்தாய் மழைக்கப் பணித்தால்
பொத்திட்டு பெய்திடுமே கார்முகில்தால்
இத்திட்டம் சரிதானே, சொல்வீர் சனமே.
pavalamani pragasam
10th February 2010, 08:05 PM
சனமே புது யுகத்து சனமே
சோறு தண்ணி இறங்காம
சுரம் வந்து ஆட்டுதோ
சுத்தத் தங்கம் வாங்கவும்
சொத்தெழுதி வைக்கவும்
சொல்லாம சொல்லுதே
சத்தமான விளம்பரம்
சாரமில்லா அமர்க்களம்
சந்தடியான காதலர் தினம்
சம்பந்தமில்லா ஆரவாரம்
சரிதானா சனமே என் சனமே
சந்தையிலா விக்குது அன்பு
kirukan
10th February 2010, 11:04 PM
அன்பு எங்க கிடைக்குமுனு
அங்கிங்கு அலஞ்சு திரிய
ஆத்தோரம் கிடைக்குமுனு
அறவேக்காடு சொல்ல
அங்க போய் பாத்தா
அறமணி நேரம்
அறுநூறு ருவாவாம்
அரண்டு போய்
அடுத்த எடம் தேட
தெரு தெருவா
திரிஞ்சதுக்கு அப்புறமா
தான் தெரிஞ்சது
அன்பு
வாங்குர பொருளில்ல
கொடுக்குர அருளுன்னு.
-
கிறுக்கன்
pavalamani pragasam
11th February 2010, 07:58 AM
அருளுன்னு நினைச்சேன்
அதிகாலை பொழுதிலே
காக்கை கரைந்து பறக்க
பாலும் பத்திரிக்கையும்
வாசலில் காத்துக் கிடக்க
நாளினிதாய் துவங்குவதை
kirukan
11th February 2010, 12:05 PM
துவங்குவதை துவங்காது துவங்கிய துவக்கங்கள்
துவங்கிய பின்னும் துவங்குவதில்லை.
-
கிறுக்கன்
pavalamani pragasam
11th February 2010, 03:23 PM
துவங்குவதில்லை பெரிய வினைகள் பெரிய விதத்திலே
சிறு பொறியில் துவங்கும் வீட்டை காட்டை அழிக்கும் தீ
சிறு சிரிப்பில் உதித்த சினந்தானே பாரதப் போரானது
சிறு குறும்பு கூனியின் வன்மத்தால் காட்டுக்கு துரத்தியது
சிறுமைகள் வெடித்து புரட்சியில் ரத்த ஆறாய் ஓடுவதுண்டு
சிறு விதைக்குள் பெரிய விருட்சம் வளர துவங்குவதுண்டு
சிறு துளிகள் திரண்டு பெரு வெள்ளம் பெருகி வருவதுண்டு
சிற்றடியில் துவங்கி பெரும்பயணம் தொடர்வதை காணீரோ
kirukan
12th February 2010, 01:28 PM
காணீரோ எம்மக்காள்
கண்ணீரும் செந்நீரும்
களையும் காட்சிகளை
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையாய்
சவ சாட்சியாய்
இருந்து என்ன பயன்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
12th February 2010, 05:43 PM
பயன் எண்ணாத பாவை
படைக்கின்றாள் அமுது
பரிவுடன் சமைத்து
பதமான உப்புமா
பூரியோடு குருமா
பளீரென சாதம்
பக்குவமாய் குழம்பு
பதார்த்தங்கள் பல
பச்சடியும் உண்டு
பாயசமும் செய்து
பாசமும் கலந்து
பரிமாறிய விருந்து
பசியாறிய முகத்தில்
பார்க்கின்ற திருப்தி
பரிசாகும் அவளுக்கு
புருஷனும் பிள்ளைகளும்
புசிக்கின்ற ரசனைக்கு
பெண் இருப்பாள் தவம்
kirukan
13th February 2010, 12:27 AM
தவம் நிதம் செய்யினும் பதம்
இல்லா மனம் பாழ்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
13th February 2010, 11:43 AM
பாழ் நெற்றி பார்க்க
பிடிக்காது எனக்கு
புரட்சி வந்தது
பொட்டுண்டு கைம்பெண்ணுக்கு
வட்ட நிலவை
வெட்டி எடுத்த
வடிவான நெற்றிக்கு
வைப்பதில்லை பொட்டு
விளம்பர யுகத்தில்
விலைபோகும் நாகரிகம்
விபரீத ரசனை
விலகுமா கிரகணம்
kirukan
13th February 2010, 08:18 PM
கிரகணம் வருவதும் போவதும் வானில்
மட்டுமல்ல வாழ்விலும் தான்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
13th February 2010, 09:14 PM
வாழ்விலும் தான் ஏற்ற இறக்கங்கள்
மாறுகின்ற சக்கரத்தின் சுழற்சிகள்
ஏற்றிவிடும் ஏணிகள் எத்தனையோ
கொத்தும் பாம்புகள் அத்தனையே
இரண்டிலும் உண்டு சாதகங்கள்
ஊக்கம் தரும் இனிய வெற்றிகள்
உரத்தை வளர்க்கும் தோல்விகள்
kirukan
14th February 2010, 10:42 PM
தோல்விகள்
உரமாவதும் உண்டு
அந்த உரமே
விஷமாவதும் உண்டு
கல்வியில் தோல்வி
கவலை இல்லை
காலன் வரும்வரை
கற்று தேரலாம்
வேலையில் தோல்வி
வேதனை இல்லை
வேறு வேலையில்
வெற்றி பெறலாம்
ஆனால்
மணத் தோல்வி
உரமல்ல
மற்ற வெற்றிகளையும்
மண்ணோடு மண்ணாக்கி
மனதை புண்ணாகும்
விஷம்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
15th February 2010, 07:05 AM
விஷம் நின்றுவிட்டது தொண்டையில்
நீலகண்டரின் பத்தினி கைப்பிடியில்
முடியாத காரியமுண்டோ மூவுலகில்
அனைத்தும் இயங்குது அவள் சக்தியில்
kirukan
16th February 2010, 04:40 PM
சக்தியில் சாதித்தலும் இயலும்
சதித்தலும் இயலும்
சக் தீ கொண்டு
பொன்னை
மிண்ணியவரும் உளர்
பொசுக்கியவரும் உளர்
தீயில் வெந்து வீழ்வேனோ
இல்லை மிண்ணி வாழ்வேனோ
சொல்லடி பராசக்தி.
-
கிறுக்கன்
pavalamani pragasam
16th February 2010, 05:54 PM
பராசக்தி போலொரு அரிய திரைப்படம்
காதுக்கும் கருத்துக்கும் விருந்தாய்
வெள்ளித்திரையிலின்று காண்கிலோமே
பாரதிக்கும் அவர்க்கு முன்னும் பின்னும்
பல பக்தர்க்கும் காது கொடுப்பவளே
பெரிய சக்தியே தயை காட்டும் தாயே
கன்றெமக்கு பசுவாய் பால் வார்ப்பவளே
குறையிதை முறையிட்டேன் உன்னிடமே
kirukan
18th February 2010, 06:02 PM
உன்னிடமே உன்னிடமே
தென்றலும் உன்னிடமே
புயலும் உன்னிடமே
இனிவும் உன்னிடமே
கசப்பும் உன்னிடமே
எதுவாகிலும்
இனியும் உன்னிடமே.
-
கிறுக்கன்
pavalamani pragasam
18th February 2010, 06:17 PM
உன்னிடமே இருக்கும் நிம்மதியை
எங்கே வெளியே தேடுகிறாய்
கரையிலே அலையடிக்கும்தான்
ஆழத்தில் அமைதி நிலவுமே
சந்தடியான ஒரு சதுக்கம் கூட
உள்மன நிச்சலனம் தடுக்குமோ
ஆரவார அவசரங்கள் நடுவிலும்
அதிராத தனி தடத்தில் செல்லும்
மனம் ஒரு பழக்கிய வித்தைக் கரடி
mgb
18th February 2010, 08:09 PM
கரடி போல் காத்திருந்தேன், அவள் கவனிக்கவில்லை :x
கரடி போல் பின் தொடர்ந்தேன், அவள் கண்டுக்கொள்ளவில்லை :evil:
கரடியாய் கத்தினேன் காதலிக்கிறேன்று :P
கடுப்பாய் கூறினாள்.....
என் வாழ்க்கை சிவபூஜையல்ல கரடி நுழையவென்று :(
pavalamani pragasam
18th February 2010, 08:25 PM
நுழையவென்று ஒரு பாதை
வெளியேறவென்று ஒரு பாதை
இருந்தால் ஒழுங்கிருக்கும்
ஒருவழிப் பாதையாயிருப்பின்
சிறையாயிருக்கும் வாய்ப்புண்டு
சொர்க்கமோ நரகமோ விதித்தபடி
kirukan
18th February 2010, 09:48 PM
விதித்தபடி வாழ்வென வாழாது நீ
வித்திட்டபடி வாழ்தல் வலிவு.
-
கிறுக்கன்
pavalamani pragasam
19th February 2010, 11:41 AM
வலிவு வேண்டி வணங்கினான்
வேதனையில் அமிழ்ந்தபோது
நலம் தர தேவி சக்தியினை
நல் வீணை நம் கவி பாரதி
தாழாது உழைத்து ஊழ் வெல்ல
திருவினையாக்கும் முயற்சியே
நெஞ்சில் நீதி நிலைத்திருக்க
அஞ்சாது அவனியில் துலங்கி
அமரனாய் அவன் வாழ்கிறான்
அமுதமான தமிழ் வரிகளிலே
kirukan
19th February 2010, 12:21 PM
வரிகளிலே தன்
வலி தெரியாது
வார்த்தைகளில் வெறும்
ஒலி இல்லாது
பிறர் வாழ்வில்
ஒளி வார்த்ததாலேயே
அவன் மகாகவி.
-
கிறுக்கன்
pavalamani pragasam
19th February 2010, 01:26 PM
கவியாகிறான் காதலன்
கற்பனையில் மிதப்பவன்
வாத்தெல்லாம் அன்னமே
உவமான அருவியிலே
குளித்துச் சிலிர்க்கிறான்
றெக்கையின்றி பறக்கிறான்
இரவு பகல் அறியாது
நிஜம் நிழல் தெரியாது
மயங்கித் திரிந்த பின்
தரைக்கு இறங்குவான்
kirukan
19th February 2010, 02:15 PM
இறங்குவான் என்று இறுமாப்பாய் இல்லாது
இறங்கலே இறுக்கம் இறக்கும்.
-
கிறுக்கன்
19thmay
19th February 2010, 02:22 PM
இறக்கும் தருவாயில்
இறைவனை பார்த்து கேட்டது கோழி
எம் பிறப்பே இதற்க்காக தானா?
pavalamani pragasam
19th February 2010, 06:12 PM
இதற்காகத்தானா?
ஆஹா! அருமையான பதம்!
வினாவில் வழிவது என்ன ரசம்?
பரிதாபம்? பச்சாதாபம்?
வேதனை? விரக்தி?
ஏமாற்றம்? தடுமாற்றம்?
களிப்பு? எக்களிப்பு?
காத்திருத்தலின் முடிவு?
வியப்பின் விழி விரிப்பு?
எத்தனை சாத்தியம்?
சந்தர்ப்பம் சூழல்
கலைஞன் தூரிகை
வரையப்போகும் காட்சியோ?
எல்லையுண்டோ கற்பனைக்கு?
mgb
19th February 2010, 09:03 PM
கற்பனையில்லா வாழ்க்கை
ஒப்பனையில்லா நடிகை :shaking:
pavalamani pragasam
19th February 2010, 09:17 PM
:rotfl3:
நடிகை இவளை வெல்ல முடியுமோ
பால் போல் முகம் பளிங்குக் கண்கள்
பாவங்கள் நொடிக்கு ஒன்று தோன்ற
ஆட்டுவிக்கிறாள் என் சின்னப் பேத்தி
19thmay
19th February 2010, 11:46 PM
பேத்தி கேட்டாள்
எனக்கு ஏன் இல்லை நீலமான முடி?
வெட்கத்தில் நான், சிவந்து, கதவடைத்து
கழட்டினேன் என் சவுரியை.
pavalamani pragasam
20th February 2010, 10:23 AM
சவுரியை மாட்டியிருப்பாள் கதாநாயகி
அவளை துரத்தி மரங்களை சுற்றி
ஓடி விளையாடி கையை எட்டி சடையை
ஆவலாய் பிடித்திழுப்பான் கதாநாயகன்
அந்தோ! அது அவன் கையோடு வந்துவிட
அன்று ரசித்து நகைத்தோம் வெகுளியாக
முடியை பிடாரியாய் பறக்கவிட்டிருக்கும்
இன்றைய குமரியிடம் இயலாத குறும்பு
kirukan
20th February 2010, 09:09 PM
குறும்பு செய்த குழந்தையை
குட்டி விட்ட குமரியே
குழந்தையின் குறும்பு கண்டு
கோப படலாகுமோ
குறும்பிலிருந்து அரும்பும்
குணங்கள் பலவிதம்
குறைகளை மட்டுமே
குட்டி நீயும் காட்டாது
சுட்டி மட்டும் காட்டிடு
நிறைகளை நிறையவே
போற்றி போற்றி புகழாது
தட்டி மட்டும் கொடுத்திடு.
-
கிறுக்கன்
pavalamani pragasam
20th February 2010, 09:23 PM
கொடுத்திடு கண்ணே
பெருக்கிக் கொடுத்திடு
சேமிப்பை செல்வத்தை
சந்ததியை நிம்மதியை
என் நிழலில் நீயிருந்து
எங்கள் நிழலாய் குளிர்ந்திரு
இல்லத்தில் இல்லாததில்லை
இனியவளே நீயிருக்கையிலே
kirukan
20th February 2010, 09:41 PM
கையிலே காசில்லை
அறிவும் தேவையில்லை
பெட்டியை திறந்திடு
மற்றதை மறந்திடு
ஒரே வாற்த்த
ஓஹோனு வாழ்க்க
-
கிறுக்கன்
pavalamani pragasam
20th February 2010, 10:20 PM
வாழ்க வளமுடன் எனும் வாசகம்
நேர்மறை சிந்தனை பரப்பிடும்
வெறும் சம்பிரதாயமும் பழகப் பழக
ஆழமாய் பதியும் அனுபவமாகும்
நம் எண்ணங்கள் சிறக்கட்டும்
வானில் சிறகுகள் விரியட்டும்
19thmay
20th February 2010, 11:17 PM
விரியட்டும் பலரின் மனது
நிலையாக இவ்வுலகத்தில் இருப்பிடம் ஏது?
கேள் மனிதா...
ஆணவம், அகங்காரம், அட்டுழியம்
செருக்கு, சுயநலம், வஞ்சம் இவை அனைத்தும்
வாழா நாட்களாக ஆயுளில் சேரும்! தெரிந்தே
இவைகளை ஒழித்த ஆடு, மாடுகள் சிறந்த ஞானி என்பேன், நான்!
pavalamani pragasam
21st February 2010, 11:02 AM
நான் என்றதும் வியந்து போகிறேன்
ஒன்றா இரண்டா என் பரிமாணங்கள்
பல கோணத்தில் பளீரிடும் மணியோ
பிறந்தது ஓர் மகளாய் பேத்தியாய்
மலர்ந்தது சகோதரியாய் தோழியாய்
மணந்தது மருமகளாய் மனைவியாய்
மற்றும் நாத்தியாய் ஓரகத்தியாய்
மகிழ்ந்தது தாயாராய் மாமியாராய்
மகுடமணிந்தது முதிய பாட்டியாய்
அவதாரம் இங்கு இத்தனை எடுத்து
அரிதாரம் சரியாய் குழைத்துப் பூசி
நாடக மேடைதனில் நடமாடும் 'நான்'
பங்குபெற்றிட எத்தனை காட்சிகள்
V.Annasamy
2nd March 2010, 11:15 AM
மனத்திடை விளைந்த கவினுரும் கருத்தை
தினமொறு கவிதையாய் தீட்டி மின்வலையில் - 'உன்னைப்போல்
நானுமோர் கவியென 'ப்ரகாசமாய்' விளங்கிடும்
நன்னெறியும் நல்லதோர் பரிமாணமே.
pavalamani pragasam
2nd March 2010, 11:45 AM
இதை இட்டிருக்க வேண்டிய திரி இதுவல்லவோ?
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=279&start=345
:D
கடைசி இடுகையின் கடைசி வார்த்தையிலிருந்து ஒரு கவிதையை துவங்கி தூங்கும் இந்த திரியை தட்டி எழுப்புங்களேன்!
V.Annasamy
2nd March 2010, 12:53 PM
காட்சிகளை வெளிப்படுத்த சொற்றொடர் புனைந்தேன்.
வேட்கை இன்னும் அடங்க வில்லை. - ஆட்கொள்ளும்
தமிழன்னை அருமையாய் வந்து உதவினாளே.
அமிழ்துண்ண அழுவாரோ சொல்லுங்களேன்.
pavalamani pragasam
2nd March 2010, 02:38 PM
சொல்லுங்களேன் நியாயத்தை
கூட்டுக் குடியிருப்பின் பொது
சிமிட்டி பாதையிலே காணும்
சிவப்புக்கம்பள விரிப்பின் மேல்
மலர் தூவிய வரவேற்பொத்த
அழகிய காட்சியாய் விரியும்
றெக்கையில்லா பட்டாம்பூச்சியாய்
மெல்லிய எடையில்லா பூவிதழ்கள்
வெள்ளையும் இளம் சிகப்புமாய்
உருண்டு மிதந்து செல்வதை
அடுத்த வீட்டு பாட்டி வெறுக்கிறாள்
என்னருமை போகன்வில்லா கொடியை
வெட்டச் சொல்லி கட்டளையிடுகிறாள்
அவளது நியாயமில்லா ஆணைக்கு
அலைந்து ஆதரவு தேடுகிறாள்
ஒட்டும் உறவும் இன்றி வாழும்
ஒத்தை கிழவி அவள் நிதமும்
அக்கம் பக்கம் வம்பிழுக்கிறாள்
பொல்லா குசும்பும் செய்கிறாள்
பொறுத்துக் கொள் பொங்கிவிடாதே
என்கிறார் அன்பான என் துணைவர்
ஐயோ பாவம் என்றே தோன்றும்
மன நோய் பிறவிகள் இவர்கள்
V.Annasamy
2nd March 2010, 03:04 PM
இவர்கள் பிறந்த பயனை நாமறிவோம்
அவனியில் 'அவன்' நமக்கிட்ட பணியினை செவனே
முடித்து இலக்கை கலக்கமின்றி அடைவோம்.
தொடர்வார்கள் தம்மையும் அறியாமலே.
அறியாமலே நமக்கோர் வழித் தோன்றல்.
நெறிமுறை நன்றானால் என்றும் வெற்றி. சிறிதும்
தயங்காமல் மயயங்காமல் சீர்மிகு சிந்தனையுடன்
அயராது துயரின்றி உழைப்போம்.
pavalamani pragasam
2nd March 2010, 05:16 PM
உழைப்போம் உறக்கம் வரும்
சிரிப்போம் சஞ்சலம் போகும்
வளர்வோம் அனுபவம் வரும்
வளைவோம் ஆனந்தம் பெருகும்
அணைப்போம் அன்பு வளரும்
மறப்போம் உறவு நிலைக்கும்
மன்னிப்போம் மாமனிதராவோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
V.Annasamy
2nd March 2010, 05:34 PM
வாராதென நினைத்த கற்பனை கடல்மடைபோல்
சீராய் வந்து நின்றதுவே. எங்கும் யாராகினும்
முயன்றால் முடியாதும் உண்டோ? முயலாமையினால்
முயல் ஆமையிடம் தொற்றதே.
V.Annasamy
2nd March 2010, 05:35 PM
வாராதென நினைத்த கற்பனை கடல்மடைபோல்
சீராய் வந்து நின்றதுவே. எங்கும் யாராகினும்
முயன்றால் முடியாதும் உண்டோ? முயலாமையினால்
முயல் ஆமையிடம் தோற்றதே.
_________________
pavalamani pragasam
2nd March 2010, 09:19 PM
தோற்றதே இல்லை என்பதில் பெருமை இல்லை
தோற்றாலும் துவழாமல் எழுவதுதான் சாதனை
அயராமல் அறுந்து விழும் இழையை இழுத்து
வலையை கட்டி முடித்த சிலந்தியிடம் கற்றான்
விடாமுயற்சியின் அருமையை ஓர் மன்னன்
பல முறை மோதி கோட்டையை பிடிப்பதுண்டு
விழாதவர் அறிவரோ வெற்றியின் ருசியை
விடாது விரட்டியவரறிவர் அதன் அருமையை
V.Annasamy
4th March 2010, 10:26 AM
அருமையை உணர்ந்தவர் அருமையாய் 'மைய'த்தின்
கருத்தினை, கருத்தின் வித்தினை வைத்தனரே. - பெருமையைச்
சேர்த்தனரே. தமிழின் தெவிட்டா இன்பம்
வார்த்தனரே. மொழிவோம் என்னாளுமே.
kirukan
4th March 2010, 10:40 AM
என்னாளுமே பொன்னாளாக விண்ணாள எண்ணாது
உனையாள உள்ளம் உறுதிசெய்.
-
கிறுக்கன்
V.Annasamy
4th March 2010, 10:57 AM
உற்திசெய் உள்ளமே என்றேன். தோழர்
கிறுக்கனின் உட்கருத்தே 'ஆளப்பார்'. வீறுகொண்ட
எனுள்ளம் அதன் போக்கிலெனை இழுத்ததே.
தேன்கவிச் சுவையும் தொலைந்ததே.
pavalamani pragasam
4th March 2010, 11:44 AM
தொலைந்ததே சபை நாகரிகம்
தலைவிரித்தாடுதே அநாகரிகம்
தொலைகாட்சியின் அட்டகாசம்
நடு வீட்டுக்குள் வரும் அசிங்கம்
அழுக்குத் துணியை பலர் பார்க்க
அலசும் வெட்கமில்லா பழக்கம்
அடக்கி வாசிக்காமல் தேடுவது
நியாயத்தையா விளம்பரத்தையா
காவியும் கதாநாயகியும் லீலை
உலகத்தின் தலையாய கவலை
kirukan
4th March 2010, 12:03 PM
கவலை மறக்க
கதவை திற
காற்று வரட்டும் என்றார்
எந்த கதவை
என அறிய
அவர் கதவை திறக்க
புயலே வந்தது.
-
கிறுக்கன்
pavalamani pragasam
4th March 2010, 12:10 PM
:lol:
வந்தது வெடிச்சிரிப்பு
விந்தையான நிகழ்வு
குட்டைக்குள் சலசலப்பு
கூடிக் கூடி விசாரிப்பு
வாதத்தில் பல தரப்பு
மொத்தத்தில் பரபரப்பு
kirukan
4th March 2010, 12:39 PM
பரபரப்பு வேண்டி
பிரச்சனையை பெரிதாக்கி
பிழைப்பு நடத்துவோர்
பிரச்சனை இல்லையெனில்
பிரச்சனையும் செய்வாரோ...
-
கிறுக்கன்
pavalamani pragasam
4th March 2010, 01:10 PM
செய்வாரோ தீவினை
சுடும் தன்வினை தனை
என்று நன்றுணர்ந்தவர்
நாலும் தெரிந்த நல்லவர்
kirukan
2nd April 2010, 05:19 PM
நல்லவராய் நடித்து நல்லவரை நடுத்தெருவில்
நிறுத்தும் நிதி நிறுவனஙள்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
5th April 2010, 08:11 PM
நிறுவங்கள் பல முளைத்தன வளர்ந்தன
கனி தரும் நிழல் தரும் மரங்கள் ஆயின
கூட்டு வாழ்வின் நலன்கள் பெருகி மகிழ
அறிவு அறன் அக்கரை கொண்ட பெரியோர்
அளந்து வகுத்த சட்டங்கள் கட்டங்கள்
இன்று பரிதாப நிலையிலே தள்ளாடுது
பரிகாசம் செய்யும் 'பரந்த நோக்கு' கண்டு
ஒழுக்கம் பிறண்டு மண முறை துவழுது
பொறுப்பை மறந்து நீதியும் பிதற்றுது
நாகரிக நிறுவனங்களை தரைமட்டமாக்கி
திரும்புவோம் கற்கால வாழ்க்கைமுறைக்கு
மனம்போல் வேட்டையாடி விருந்துண்டு
பெரும் போகங்கள் சுய பலத்தில் வென்று
kirukan
8th April 2010, 12:21 PM
வென்று விட
ஒன்று தேவை
கையில் இருப்பதும்
ஒன்று
மீதம் இருப்பதும்
ஒன்று
திக் திக் திக்
வந்த ஒன்று
ஒய்டாகி போக
இலவச ஒன்றால்
வென்றது அணி...
-
கிறுக்கன்
IPL SPL
pavalamani pragasam
8th April 2010, 08:38 PM
அணிமணிகள் அலங்காரம்
அழகான நெற்றிப்பொட்டு
அள்ளி முடிந்த கருங்குழல்
அநாகரிகம் ஆனதே இன்று
kirukan
10th April 2010, 03:34 PM
இன்றை நிராகரித்து நேற்றால் நொந்தலும்
நாளைகண்டு நடுங்கலும் இழிவாம்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
10th April 2010, 11:37 PM
இழிவாம் இன்று அடக்கம்;
கர்வம், அகங்காரம், ஆணவம்:
ஆண்மை, அறிவின் அடையாளம்-
இது என்ன புது இலக்கணம்?
janakijanar
12th April 2010, 02:52 AM
இலக்கணம் இல்லாமல் ஓடுது வாழ்க்கை,
இயந்திரம் போல் ஆனது வாழ்க்கை;
இயற்கையை ரசிக்க பொழுதில்லை,
மனம் விட்டு சிரித்தது எப்போது நினைவில்லை,
கடந்த்ததை அசைபோட நேரமில்லை,
அன்றாட பிரச்சனைகளில் நகருது நாட்கள்;
கனவுகளை துரத்துவதை நிறுத்திவிட்டு,
சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடினால்,
குழந்தையை போல் குதூகலமாய் இருக்கலாமே...
pavalamani pragasam
12th April 2010, 08:19 AM
இருக்கலாமே இந்த இக்கட்டும் ஒரு படிக்கட்டாய்
சிறு தோல்வியும் மறு முயற்்சிக்கு ஒரு சவாலாய்
இதை இழந்தது இன்னும் பெரியதை பெறத்தானோ
துவளாமல் தொடரும்போது துன்ப நினைவுண்டோ
kirukan
30th April 2010, 04:06 PM
உண்டோ உண்டு உண்டிமட்டும் பெருக்கி
உழலும் மனிதரிடம் மதி.
-
கிறுக்கன்
pavalamani pragasam
30th April 2010, 08:26 PM
மதியை மறைக்கும் மேகம் மழை தரும்
மனிதர் மதியை மறைக்கும் வீண் மோகம்
பலாபலன் பற்றி சிந்திக்காது பரபரக்கும்
விவகாரம் வளர்த்து விவேகமின்றி வாதிடும்
kirukan
30th April 2010, 09:54 PM
வாதிடும் வக்கீல்கள்
வாதியின் வளம்பார்த்து
விதி மாற்றல்
விதிமீறலோ
இல்லை
மதியாற்றலோ
--
கிறுக்கன்
pavalamani pragasam
30th April 2010, 10:46 PM
ஆற்றலோ ஆடல் கலையோ அழகிய வித்தையோ
அகன்ற விழியுடன் ரசிக்கத் துவங்கினேன் அன்று
அதையே தொடர்கிறேன் அரை நூற்றாண்டு தாண்டி
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடும் ஜோடிகள் அற்புதம்
கை தட்டி இடம் மாறி கை பற்றி பறக்கும் அதிசயம்
கண்ணை விட்டு அகலாத ஆனந்த சர்க்கஸ் சாகசம்
janakijanar
1st May 2010, 06:04 AM
சாகசம் செய்துவிட்ட பூரிப்பு குழந்தையின் முகத்தில்,
படுக்கையில் கரணம் அடித்த கணத்தில்,
கூறான முனையில் தப்பியது பிஞ்சு தலை ஒரு இன்ச்சில்,
இதயமே உறைந்தது அன்னைக்கு அச்சத்தில்,
ஒன்றறை பல் சிரிப்பை கண்டு அள்ளி அணைத்தாள் ஆனந்தத்தில்...
pavalamani pragasam
1st May 2010, 07:10 AM
ஆனந்தத்தில் அருள் பொங்கும் முகம்
உள்ளிருக்கும் இருள் நிறைந்த மனம்
அவருக்கில்லையே ஏதும் அவமானம்
அது அவர் பின்னே சென்ற பக்தர்க்கு
suvai
2nd May 2010, 09:53 AM
--
suvai
2nd May 2010, 09:55 AM
--
kirukan
27th June 2010, 12:29 AM
பக்தரின் பக்தி பழுதானால் பரிசுத்த
பகவானை பழுப்பென பழிப்பான்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
27th June 2010, 09:31 AM
பழிப்பான் பாமரன்
பொருள் உணராமல்
பெரியோர் கூட்டும்
பெரிய கூட்டம்
பார் வியக்கும்
பளபள திருவிழா
பசி மறந்து
பிணி மறைத்து
பிணக்கு மூடி
பிடிக்கும் கொடி
பெருமை தேடி
பிதற்றும் மொழி
பிறழும் வழி
பணத்தை இறைத்து
படைத்த விருந்து
பெருமை தமிழுக்கு
பொறுமை இலார்க்கு
பொறாமை ஏதுக்கு
kirukan
2nd July 2010, 04:31 PM
பொறாமை ஏதுக்கு
இல்லாமையால்
இல்லாமை ஏதுக்கு
இயலாமையால்
இயலாமை ஏதுக்கு
கல்லாமையால்
கல்லாமை ஏதுக்கு
அறியாமையால்
அறியாமை ஏதுக்கு
தெளியாமையால்
தெளியாமை ஏதுக்கு
பணமுதலைகளால்!!!!!!!!!!!!!!!!!!!
-
கிறுக்கன்
pavalamani pragasam
2nd July 2010, 07:40 PM
பணமுதலைகளால்
பொருளாதாரம் ஆடுது
பொதுநலன் பதுங்குது
பாரெங்கும் ஏற்றதாழ்வு
பார் எங்கும் போராட்டம்
பேராசை தணியாமல்
பசியோடு அலைகிறார்
பாவந்தான் பாமரன்
பயந்திருக்கும் சிறுமீன்
பசிக்குது அவனுக்கும்
kirukan
2nd July 2010, 09:47 PM
அவனுக்கும் பசிக்குது
பழயதும் ருசிக்குது
கந்தலும் ஜொலிக்குது
காய்ந்தபூவும் மணக்குது
கட்டாந்தரையும் கிறக்குது
கவலையும் மறக்குது
தனிமைபடுத்தும் போது-மட்டும்
கண்கள் பனிக்குது.
-
கிறுக்கன்
pavalamani pragasam
2nd July 2010, 10:00 PM
கண்கள் பனிக்குது
நெஞ்சம் விம்முது
வாழைக் குருத்து
தலை சாயும் நாற்று
மங்கல விளக்கு
மஞ்சள் மணக்க
பூமாலை சுமந்து
மறுவீடு செல்கையில்
kirukan
2nd July 2010, 10:24 PM
செல் கையில்
சாலையில்
செல்கையில்
செல்லோடு
சொல்லாடல்
செல்லோடு
பயணம்
நொடியில்
மரணம்
-
கிறுக்கன்
pavalamani pragasam
2nd July 2010, 10:44 PM
மரணம்
உறக்கம்
விடுதலை
தீர்வு
நிம்மதி
நிச்சலனம்
நிர்வாணம்
நிவாரணம்
ஓய்வு
அமைதி
அமுதம்
pavalamani pragasam
13th July 2010, 09:41 AM
அமுதம் உண்ட களிப்பு
வெற்றி தந்த உவப்பு
அதிலே ஒரு வேடிக்கை
நமக்கும் உள்ள வாடிக்கை
குருவி உட்கார விழும் பனம்பழம்
நெல்மணிக்கு சீட்டெடுக்கும் கிளி
ஆக்டொபஸ் காட்டும் சமிக்ஞை
ஆரூடம் சொல்லும் உயிரினங்கள்
புதிது புதிதாய் உருவாகுது
உற்சாகம் கரை புரண்டோடுது
janakijanar
11th August 2010, 11:22 AM
கரை புரண்டோடும் எண்ணங்கள் எண்ணிலடங்காது
சூடான நினைவுகள் சுனாமியாய் தாக்குது
சுகத்தை சுவைத்தபின் தனிமை தணலாய் கொதிக்குது
ஏக்கத்தின் வலியில் இரவு நீண்டு கொண்டே போகுது
கனாகாணும் கண்களில் உறக்கம் என்பதேது?
kirukan
11th August 2010, 11:46 AM
உறக்கம் என்பதேது
உண்பதேது என்று
அறியாது தின்றபோது!!!
pavalamani pragasam
11th August 2010, 10:50 PM
தின்றபோது தெரியாது
அது கடைசி முறையென்று
கண் மூடி தூங்கியபின்
கணப்பொழுதில் விடுதலை
கோர ரயில் விபத்தென
கூறும் தலைப்புச் செய்தி
GP
17th August 2010, 11:40 AM
தலைப்புச் செய்தி ஆகும் அவளின் தலை பூ,
அவளிடம் எப்போதும் இருப்பது சிரிப்பு,
அவளை பார்த்தால் மனதில் ஒரு பாதிப்பு,
அவள் தவிர்த்தால் ஏற்படும் தவிப்பு,
அவளை மணந்தால் எனக்கு வரும் மதிப்பு,
அவள் மறுத்தால் அது எனக்கு இழப்பு.
pavalamani pragasam
17th August 2010, 02:18 PM
இழப்பு என்று எதை எண்ண
இரு கையில் கொண்டு வந்தோமா
இறுதியிலே கொண்டு செல்ல
இருக்கும் கணமெல்லாம் சொத்து
Shakthiprabha
17th August 2010, 02:35 PM
சொத்து சுகமெல்லாம் போன பின்பும்
சொந்தமென்று எதை கொண்டு செல்வேன்?- நல்
வித்து விளைத்திடும் சிந்தனையும்
பரந்தாமன் மேல் நான் கொண்ட காதலுமே!
pavalamani pragasam
17th August 2010, 03:02 PM
காதலுமே எந்திரனின் வசமானது
கற்பனையின் எல்லையில்லா வளமோ
கலிகாலத்தின் இன்னொரு கோலமோ
காணத்தான் கண்ணிரண்டு போதுமோ
Shakthiprabha
17th August 2010, 04:20 PM
போதுமென்று பொங்கி வழிந்தும்
புது ஊற்றாய் பெருகும் ஆசை - சலனம்
ஏதுமின்றி திகழும் புத்தனுக்கும்
போதிமரமொன்றும் கிடைப்பதில்லை
கலிகாலப் பேரிருளில்
கால் தடுக்கும் இடமெங்கும் மின்னொளி சுரந்தும் (மன)
வலி-யிருள் நீங்க ஒளிகூட்டி
போதிக்கும் குரு-சாமிக்கும்
ஜோதியொன்றும் ஒளிர்வதில்லை.
pavalamani pragasam
17th August 2010, 08:43 PM
இல்லை என்றும் இல்லை
நிறைந்த உள்ளத்தில்
இல்லை ஒரு தொல்லை
பற்றை ஒழித்துவிட்டால்
இல்லை இனி கவலை
இரண்டாம் பாலபருவத்தில்
இல்லை ஒரு இடர்
துணிவுள்ள நெஞ்சில்
இல்லை ஒரு இருள்
தெளிவே வாழ்வின் ஒளி
Shakthiprabha
17th August 2010, 09:50 PM
ஒளிகீற்றின் முதல் முத்தம்
சலனத்துடன் அணுகும் முன்பே
பதறியடிக்கும் அவசரமில்லை.
வெளிக்காற்றின் குளிர்ச்சிக்கு
வெதுவெதுப்பாய் பதுங்கி
நிலா முகத்திற்கு முக்காடு பூட்டி
உலா வரும் கோடூரத்திற்கு
இன்று மட்டும் விடுமுறை.
கதிரவனின் அலறல் கட்டில் வரை ஒலித்தாலும்
அலட்சியமாய் உதறித் தள்ளி
துயில் கலைந்த பின்னும் முரண்டு பிடித்து
புரண்டு சுகித்து
காதல் கணவன் கையில்
காபியுடன் சிரிக்கும் வரை
எழாமல் இருப்பதே
சுகமானதொரு காலையின் அகராதி விளக்கம்.
pavalamani pragasam
17th August 2010, 10:17 PM
விளக்கம் தேட அகராதி வேண்டுமோ
வார்த்தை எதுவும் உதிராமல் புரியும்
விழியின் விரிப்பும் சிகப்பும் சிரிப்பும்
வாயின் குவிப்பும் சுழிப்பும் பழிப்பும்
வெட்டும் கழுத்தின் சாடையும் அழைப்பும்
விரல்கள் பத்தின் சேட்டையும் சைகையும்
வளைந்த இடையும் புருவமும் பாதமும்
வளையாத வகிடும் நாசியும் நடையும்
வண்ண மயிலவள் ஒவ்வொரு அசைவும்
வடிப்பதெல்லாம் எழுத்தில்லா காவியம்
Sudhaama
17th August 2010, 10:33 PM
.
எழுத்து-இல்லா காவியமே வாழ்க்கை
எழுத்து-இல்லா காவியமே வாழ்க்கை எழுவாய் மனத்தால்
பழுதிலா பண்பு இன்றி பயனிலை பார்-வாழ்க்கை வாழவே
தொழுது மேலோன் உணர்வாய் மாந்தே செயப்படுபொருள்
அழுகையற எழுவாய் பயனிலை செயப்படுபொருள் தெளி
தெளிவே வாழ்வின் ஒளி என்றால் பொருள் யாது.?
தெளிவு மிகு தென்றலாய் தேனமுதாய் தெவிட்டாத
தெளிவுறு தமிழ்-கவிதை சிற்சிலவும் இங்கு முன்னம்
தெளிவில்லா சுக்கு நூறு சிதறலும் அந்தாதி பற்பலவாய்.?
பற்பலவே பால் கருத்து பார் விருந்து இக்கனி மேடையிலே
நற்கவிஞர்காள் நவில்கின்றேன் விண்ணப்பம் கேட்டருளீர்
பொற்பெரும் தமிழ் அமுது படைக்கின்றீர் பாராட்டு நன்றி
சொற்கவிதை அந்தாதியாய் முன்பின் தொடர்பில்லா துணுக்கோ.?
தொடர்பில்லா சிதறலாய் இதுகாறும் அந்தாதி நொந்தேன்
அடர் நிறை ஆழ்பொருள் கருத்து பல படைத்தும் சங்கிலியாய்
தொடர் சொற்-பொருள் அந்தாதி அன்றோ பல்லோர் சிந்தனை
சுடர் மிகு உங்கள் மன-வளம் அறிவாற்றல் இணை சுவையே.!
சுவை-மிக அரிதே முதன்-முதலாய் இன்று கண்டேன் அன்பர்காள்
சுவைபட சொற்பொருள் கூடி இணை அந்தாதி இரு வகையும்
கவை இட்டார் "ஜானகிஜனர்" அன்பர், தொடர்கின்றீர் சங்கிலியாய்
இவையே தொடர்க ஆழ்பொருள் சொற்-கருத்து மாலை அந்தாதி
.
pavalamani pragasam
17th August 2010, 10:54 PM
அந்தாதி தொடருது
பந்து கைமாறுது
கூடுது விறுவிறுப்பு
உண்டோ முடிவிதற்கு
Sudhaama
21st August 2010, 01:09 AM
[tscii:3bb34e9eed]
-
.
- எழுத்து-இல்லாக் காவியமே.!
உண்டோ முடிவு இதற்கு விந்தை இது சொல் மட்டும் அந்தாதி.?
வண்டமிழ் விருந்து படைத்து-வரும் தமிழினியோரே கேட்டருளீர்
செண்டுகள் பலவோ இது காறும் நீவிர் எறிந்தது எங்கேங்கோ
தண்டமிழ் கவிதை ஒவ்வொன்றும் காட்டில் காயும் நிலவோ.?
நிலவிதுவோ சிதறலோ? குருடர் மேல் பாயும் வீண் ஒளியோ.?
பலப்பலவே ஆழ்கருத்து படைக்கின்றீர் எனினும், பின் தொடர்வோர்
கலப்படமோ முன் கவி கருத்து தொடராது ஏனையோர் காணாது
புலப்படா துண்டு துண்டாய் கருத்துச்-சங்கிலி அந்தாதி தொடர்பறவே.?
தொடர் முன்-பின் மலராய் அடுத்தடுத்து தொடுப்பதே பூமாலை
அடர் பொருள் முந்தைய கவிமலரது் கருத்தின் மேல் கருத்தாய்
சுடர்-ஒளியாய் மன வளமும் கவியமுது அறிவாற்றல் மிக்கோரே
குடத்தினுள் ஒளி-விளக்காய் நற்கருத்தை சிறை-இருளில் அடைக்காதீர்.!
அடைவோம் நாம் யாவருமே கூடி ஆனந்தம் தமிழ் அமுதே
தடையில்லா தங்கு தடுப்பில்லா சொற்பொருள் மாலை அந்தாதி
படைப்பீரா இனியேனும் துண்டுபடா தொடர் மாலை கருத்து இசைய
விடை பலவாய் பல கருத்து ஒரு தலைப்பு அந்தாதி மாலை மலை.?
மலை மாலை முதல் பூ இதோ தந்தார் பவளமணியார் பின் தொடர்ந்தேன்
தலைப்புக்குப் பொருத்தமாய் கவிதைக்கு கவிதை, பாட்டுக்குப் பாட்டு
சிலை ஒன்றின் பல கோணக் கருத்து-அமுதாய் படைப்போமே நாம் கூடி
மலைக்காதீர் அன்பர்காள் உம்மாலும் இயலும் தகு விருந்து தந்து பெற
நிலைத்த ஒரே தலைப்பு ஒரு வாரம் எழுத்து-இல்லாக் காவியமே
================================================== =================
.[/tscii:3bb34e9eed]
pavalamani pragasam
21st August 2010, 09:43 AM
காவியமே பிறக்கும்
கற்பனையும் கவிநயமும்
சொல்வளமும் அணியழகும்
அருவியாய் கொட்டும்
உருப்படியாய் படியாத
எழுத்தாற்றல் இல்லாத
இளவயது மாந்தர்தாம்
காதல் வயப்பட்டபோது
Sudhaama
22nd August 2010, 06:12 AM
-
போது விடிஞ்சிருச்சு ராவெல்லாம் ஒறக்கம் இல்லே
காது குளிர்ஞ்சிருமோ கனிச் சேதி தாங் வருமோ.?
தோதுப்படலை ஆத்தா வேளை வரலை சாமி
ஏது நிம்மதி என் மச்சாங் எப்போ வாரானோ?
வாராதெ வந்த மச்சாங் எங்க ஊர் மருதை
பாராதே தலை தூக்கி நாங் குனிஞ்சவ நிமிராமே
சீராளா எங் கழுத்து தாலி முடிஞ்சாயெ
ஆராரோ நம் குஞ்செ பாக்க வா பாடிக்கிட்டு
பாடிக்கிட்டே வா, பாடி கிட்டே வா,
ஆடி விளையாடி பாட்டுக்குப் பாட்டெடுத்து
கோடி புண்ணியமாம் யாராச்சும் சொல்லுங்க
ஓடி ஒடி ஒழச்சதெல்லாம் போதும் ஐயா பணம்
பணம் சேக்க நாடு விட்டு நாடு தேங் ஏதுக்கு.?
கொணம் ஒன்னெப்போலே கொழந்தெ மொகம் நீயே
மணம் வாழ்க்கை எளமை மீண்டு தேங் வந்திடுமா.?
ரணம் போலெ வேதனையெ மறக்கேன்யா பாட்டாலே
பாட்டுக்குப் பாட்டெடுத்து நீயும் நானும் பாடுறதெ
வீட்டுக்கு வீடு சனம் கூடியெ ஆடுறதெ
காட்டுவமே நம் குஞ்சுக்கு சிரிப்பே ஆனந்தங்
நாட்டுவமே குடும்ப சொகம் எழுத்தில்லாக் காவியமே
.
.
pavalamani pragasam
22nd August 2010, 07:06 AM
காவியமே கவிநயமே
கனிரசமே கன்னல்சாறே
சித்திரமே சிங்காரமே
செதுக்காத சிற்பமே
தவமென்ன செய்தேன்
தேனான வாரிசுக்கு
kirukan
23rd August 2010, 02:14 PM
சுக்கு அளவு சிறிதாயின் சுகம்
பெருகின் பண்டம் பாழ்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
23rd August 2010, 03:52 PM
பாழ் ஆனது பொன் மாலைப் பொழுது
பகல் போல் காய்ந்த முழு நிலவு
பஞ்சணையும் மல்லிகை பூமணமும்
பனிப்போராய் ஊடல் உலவியதால்
Sudhaama
24th August 2010, 02:40 AM
-
.
உலவு தென்றல் தண் காற்றும் கூட தணலாய் வெம்மையாமா.?
நல-உல்லாச மணம் பூஞ்சோலை ஊடலால் ஏறு மாறலாமா.?
நில சந்தன நன்மணமும் கூட கெடு நாற்றம் மாறுபடலாமா.?
பலமே காதல் ஓங்க மென்மேல் ஊடலால் நெருக்கம் கூடுமாமா.!
உலக இயல்பு அன்பு கொடுக்கல் வாங்கல் எதிர்-பார்ப்பு பரிமாற்றமா.?
வலமே உயர் காதல் பக்தி நட்பு பண்பும் ஒரு வகையே மாந்தர் ராமா.!
இலமே நினைவு வேறு உனது உடைமை என்னைக் கொள் காதல் ஆ.! மா.!
உலகில் ஊடல் எங்கும் உண்டு காதலர் இடையில் மட்டும் தானா சும்மா?
அலர் காமத்துக்கும் இன்பம் ஊடலால் ஆடவர் நட்பு சேமத்திற்குமே மா மா
நல கருத்து-ஒருமித்து ஆதரவு பட்டது இன்பம் ஆண் நட்பிலும் வேண்டாமா.?
மல-மனமுடைய மாக்கள் அல்லோம் மக்கள் மாந்தர் மாண்புறு பிறவியரே மா.!
சில தருணம் ஒருவரொருவர் புரிந்திடா நிலை மௌன கோபம் ஊடலாகுமாமா
திலக நண்பர் இடையும் கூட நட்பு ஊடல் கண்டதில்லையோ சுதாமா.?
புலமை-பண்பர் பவளமணி கிறுக்கர் உனை-எதிர் சேம்-சைடு கோல் போடலாமா.?
பலபல வகை ருசி கொள்கை நாட்டம் அறிவாற்றல் கொண்டோர் பூ மா
கலகம் போல கருதி உந்தன் நோக்கம் கவனியார் கண்டு நீ புண்படலாமா.?
நலமே ஒன்றே நானில மாந்தர் சால்பு கருதும் நீயே வருந்தலாமா.?
உலகம் அனைவர் இன்ப நோக்கம் அல்லாது வேறு-ஒன்றும் நினையா சுதாமா
நலம்-உள்ளதே சொல்லி நல்லது செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் தாமா
நல-காலம் கனியும் பொறு புரிவர் நண்பர் பண்பர் அறிவாளி இங்குளரே ஆ மா
பலபல பணி நமது கவலைக்கிடையே காலம் பொன்னை வீணே கழிக்கலாமா.?
உலக மன்றம் இங்கு வந்தோம் கூடி குளிர அனைவர் ஓங்க பயன் கை கூடுமா.?
புலர் புதுமை இன்பம் மாந்த உள்ளுவதெல்லாம் உயர் நினைவே கொள்ளுவோமா.?
பலகை ஒன்றில் பல கை கூடி பாட்டுக்கவிதை தமிழ் இன்சுவையே வரைவோமா.?
நலமுறவே நண்பர் நாம் அனைவர் பொலிக வாழ இறையருள் நிறைவேறுமா.?
.
.
.
pavalamani pragasam
24th August 2010, 09:09 AM
நிறைவேறுமா பொல்லாத ஆசைகள்
நிறமில்லாத சாரமில்லாத கனவுகள்
சூரியன் மேற்கே உதிக்காது
கடல்நீர் கரிக்க மறக்காது
கோழி கூவிட முடியாது
கருவை ஆணும் சுமப்பானா
வரம்பில்லா ஆசைகள் தீது
வரைமுறையோடு விளையாடு
Sudhaama
24th August 2010, 04:39 PM
.
.
விளையாட்டே வாழ்க்கை என்றான் மனோதத்துவ விஞ்ஞானி
இளைஞர் உணர்வு செய்யும் எவ்வயதிலும் மனதால் விளையாட்டு
துளைக்காத இன்பம் வேண்டின் அன்புறு வாழ்-நெறியே செயல்பாட்டு
கிளைவிட்டு கிளை தாவும் குரங்கு மாந்தர்க்கு எடுத்துக்காட்டு
திளைத்து-இன்பம் விளையாடுவோர் காண்போர் இரு பாலார்க்குமே
வளைத்து வரம்பு-இட்டார் வகை வகையாய் பெயர் கேம் ஸ்போர்ட்சாம்.!
அளைந்து நீரில் குதித்து நீந்தி இன்பம் மாந்த வயது ஓர் வரம்பாமோ.?
களை கட்டும் வாழ்க்கையிலே பயன் பொழுது போக்க கவலை தீர்க்க
தளை நீக்கும் தரணியிலே உல்லாசம் எவரெவரோ புது நண்பர்
விளைவு இன்பம் புத்துணர்ச்சி அறிவுக்கும் உடலுக்கும் மனதிற்கும்
முளை விடும் முத்தே முதிர் இன்பம் கணவர் மனைவி படுக்கையிலே
சுளை சுளையாய் உள் மறைந்த முள்-பழத்தை உரித்தாலே பலா
இளைக்காத உடல் வேண்டின் ஆரோக்கியம் மாந்தர்காள்
விளையாடு என்றாரே வைத்தியரும் நடந்து ஓடி பல்வகையாய்
சளைக்காத லீலை என்றே பெயரிட்டு ஈசரும் புவி பிறந்தார்.!
விளையாட்டே வாழ்க்கை என்றார் இறைவர் ஞான-நெறியுமே
.
pavalamani pragasam
24th August 2010, 07:37 PM
நெறியுமே நேரான கோலோ
முறியுமோ ராமன் வில்லாய்
நடத்துமோ நல்வழியினில்
மதித்து நடந்த மக்களை
Sudhaama
26th August 2010, 06:56 AM
.
நெறியுமே நேரான கோலோ
முறியுமோ ராமன் வில்லாய்
நடத்துமோ நல்வழியினில்
மதித்து நடந்த மக்களை
மக்களை மதித்து நடந்து காட்டினான் ராமன் மன்னன்
தக்க மானிட நெறியதுவே தகைமைக்கு இலக்கணமாகும்
பக்கபாதம் ஏதும் இல்லா பாங்காய் தன்னடக்க முன்னோடி
எக்காலத்தும் ஏற்ற சால்பே மாந்தர் வாழ் வள நல்வழியே
நல்வழி நடத்தும் பிறரும் பெற்றதே பிரதியாய் விழைய
வெல்வழி வேந்தன் எனினும் கொடுத்து வாங்கு சால்பு வசமே
செல்வழி எங்கும் செயிக்கும் சேல்விழியாளையும் மயக்கும்
பல்வழி அனைத்தின் சீராய் எதிரியரையும் எளிதே முறிக்கும்
முறியுமே ராமன் வில்லாய் சவாலின் எல்லையும் மீறி
குறியுமே தப்பாது எங்கும் இயல்வது கரவா திறமை
செறிவுறு-வலமை பிறர்-முன் மன்னனாய் தலை-நிமிர் நடையே
நெறியே தன்னைத் தானே பிறரையும் நேராய் ஆளும் கோலே.
.
pavalamani pragasam
26th August 2010, 09:00 AM
கோலே ஆட்டுவிக்குது குரங்கை
வீட்டுப்பாடம் எழுதும் குழந்தையை
இசைக்கின்ற ஒரு வாத்திய குழுவை
இடையர் மேய்க்கும் கால்நடையை
காவலரிடம் மாட்டிய கயவாளியை
கோலே வழி நடத்துது குருடரை
கூடிப் பாடி மகிழும் குமரியரை
உண்டோ அது போல் நல்ல கருவி
Sudhaama
27th August 2010, 06:05 AM
.
கோலே ஆட்டுவிக்குது குரங்கை
வீட்டுப்பாடம் எழுதும் குழந்தையை
இசைக்கின்ற ஒரு வாத்திய குழுவை
இடையர் மேய்க்கும் கால்நடையை
காவலரிடம் மாட்டிய கயவாளியை
கோலே வழி நடத்துது குருடரை
கூடிப் பாடி மகிழும் குமரியரை
உண்டோ அது போல் நல்ல கருவி
நல்ல கருவி கோலால் சைகை-மொழி கோல்மொழியே பல்வேறு
சொல்லாது உணர்த்தும் மௌனமொழி குரங்கு, குழந்தை, இசைக்குழுவும்
புல் மேயும் கால்நடை, காவலர், குருடர், குமரியர் எழுவகையாம் பாரினிலே
எல்லா நலம் பயிற்சி பயன் ஆள்பவர் எளிதே குறிப்பாய் காட்டு பொருள்
பொருள் சைகை-ஆணை ஆட்டுவிக்கும் வாயில்லாப்பிராணி குரங்கையே
அருமை கல்வியின் அறியாத குழந்தைக்கு கண்டிப்பு காட்டி பாடம் ஊட்ட
திருடர் தீயரை அடித்து பயம்-உறுத்தி அடக்கி இருத்தி உண்மை கறக்க
குருடர்க்கு மூன்றாம் கால் கையுமே கைக்கோல் நடை-துணை வழிகாட்டி
காட்டி-வழி அன்பால் தட்டி ஆயர் கால்-நடை மேய்க்க வரம்பு மீறா செலுத்த
ஆட்டு-மொழியே கோல் லயம் இசைக்குழுவின் ஒருங்கு-இணை சைகை-குறி
பாட்டுத்துணையே தாளம் கோலாட்டம் மாதர் குழு கூட்டு கொண்டாட்டம்
நாட்டு மொழியே நீதி காக்கும் மன்னன் செங்கோல் செலுத்து மாண் கருத்தே
.
.
.
pavalamani pragasam
27th August 2010, 08:27 AM
கருத்தே இல்லாத கதைகள்
கற்பனை வற்றிய புனைவுகள்
குணம்கெட்ட பல போக்குகள்
காண்பீர் காகிதக்குப்பைகள்
Sudhaama
27th August 2010, 08:58 AM
.
கருத்தே இல்லாத கதைகள்
கற்பனை வற்றிய புனைவுகள்
குணம்கெட்ட பல போக்குகள்
காண்பீர் காகிதக்குப்பைகள்
குப்பையிலும் குந்துமணி குடும்பத்தின் தலைநிதியே
தொப்பைக் கருவிலே திருவுடையாய் தாயே கருத்தாயே
.
.
pavalamani pragasam
27th August 2010, 09:19 AM
தாயே உன் தலையில் அணிய தொப்பிகள் எத்தனை
தாரமானாய் கணவனானான் உன் முதல் குழந்தை
பதவி உயர்வுகள் பல பெற்றபின்னும் வளர்கிறாய்
தோழியாய் தாதியாய் ஆசானாய் ஆலோசகனாய்
ஆலமரமாய் நீ குடை விரிக்கிறாய் அந்நிழலிலே
சுற்றம் மொத்தமும் அங்கே சுகமாய் சுவாசிக்குதே
Sudhaama
27th August 2010, 03:52 PM
.
கவிதைக்கு கவிதை மற்றும் பாட்டுக்குப் பாட்டு.
இழைத் தலைப்பின் கருத்துக்கும், நோக்கத்திற்கும் பொருத்தமாக...
--- எளிய நடை சொல்-கருத்து அந்தாதி.
(யாப்பு இலக்கண-மரபு வரம்புக்கு உட்பட்டது அல்ல)
கவிதைத்-தலைப்புக்கள் ஒவ்வொன்றும் பல்வேறு கருத்துக்களாய் ---
--- ஆறு வெவ்வேறு வகை உதாரணங்கள்.
இன்னும் எத்தனை வேண்டும் கூறுங்கள் அன்பர்களே.!
ஆழ்பொருள் மிக்க மேற்குறித்த கவிதைக்கு மேல் கவிதையாக இன்னும் நூறு வகை கவிதைகள் உங்களாலும் இயலும்.!
பல்வகை நுண்-கருத்து பொதிந்த பல்சுவையாய் பற்பல கவை தந்த--
--திருமதி பவளமணியார்க்கு மிக்க நன்றி.! பாராட்டுக்கள்.!!!!
தாயே உன் தலையில் அணிய தொப்பிகள் எத்தனை
தாரமானாய் கணவனானான் உன் முதல் குழந்தை
பதவி உயர்வுகள் பல பெற்றபின்னும் வளர்கிறாய்
தோழியாய் தாதியாய் ஆசானாய் ஆலோசகனாய்
ஆலமரமாய் நீ குடை விரிக்கிறாய் அந்நிழலிலே
சுற்றம் மொத்தமும் அங்கே சுகமாய் சுவாசிக்குதே
(1)
வாசிக்கும் பாடம் இது தாயே தான் முதல் தெய்வம்
காசி ராமேஸ்வரம் போய் வேண்டிச் சுமந்து பெற்று
போசித்து சேய் வளர்த்து ஊண் உறக்கம் தனை துறந்து
நேசிக்கும் வாழ்-நெறி அன்பே தாய் தரும் முதல் பாடம்
பாடமே பகுத்தறிவு கொண்டோர் மாந்தரே உயர் பிறவி
லாடமே கட்டிக் கொண்டு குடும்பத்தின் மாடாய் உழைக்கும்
சேடராய் அனைவர்க்கும் தொண்டு புரியும் மாண் தாயே
ஓடமாய் வாழ்-நதி குடும்பம் தாங்கும் உனை கணவன் ஓட்ட
ஓட்டுகின்றார் தாயே இவ்வுலகத்தோர் உன்னையே மாடாக
வாட்டுகின்றார் தாய்மை பெண்மையே அடிமை ஆக்கி அடக்கி
ஆட்டுகின்றாரே ஆண் கைப்பொம்மையோ போகக்-கருவியோ நீ
காட்டு நீ தாயே தரணியர்க்கு நீயும் வாழப்பிறந்த மாந்தர் என்றே
என்றென்றும் எவரெவர்க்கோ உடல் காட்டி நாணம் விட்டு
கொன்று மானிடப்பண்பு தற்கொலை மாக்களினும் இழி வாழ்வு
தின்று கொழிக்க ஆண்கள் உன் கௌரவம் மரியாதை மாமிசமோ.?
வென்று தலை நிமிர்ந்து வாழ வா மங்கை நாற்-பண்பு நெறியாலே
================================================== ================
(2)
சிக்குதே மனிச சீலமோ சீராளா பகுத்தறிவு மிகு பிறவி
விக்குதே விக்கு விக்கு பல தொப்பி பொய்-முகம் பெருத்து
விக்கு பொய்-முடியாலே வழுக்கைத்-தலை மறைத்து தீயொழுக்கம்
திக்குத் தெரியாதே திரிகின்றாயே தின்று கொன்று தாழ்ந்து மாந்தே
சிக்கிக்கிட்டாயோ தானேயே செஞ்ச தற்கொலை வாழ்-நெறியாலே.?
================================================== ===============
(3)
சுவாசமே பாரதத்தாய் மூச்சாய் சுதேச விடுதலைக்கே
விவாதத் தலைப்பு பல மானிடத் தமிழ்ப்-பண்பின் வடித்தாயே
அவா மிகக்கொண்டு புது ஆத்திச்சூடி படைத்தாயே பாலர்க்கு
குவா குவா பருவத்து முன்னே கருவிலே திருவுடையாய்
கருவிலே திருவுடையார் தமிழ் நான்முக கவிஞர் யார்.?
சிறு வயதில் காசி வளர்ந்து வாழ்-பொருள் கற்றது ஒருமுகமே
திருவருள் கீதைப் பொருள் இறை பலர் போற்றியது ஒரு முகமே
அரும் தமிழ் எளிமை பாரத தேச பக்தி பாடியது ஒரு முகமே
வறுமை மிகு கொடுமை மனைவியுடன் கண்டது மறு முகமே
செறுமையுறு உலக மாந்தன் மாண்பரே மகா கவி பாரதியார்.
================================================== =============
(4)
சுவாசமோ தற்கால மாந்தர்க்கு மூச்சோ உலகு-எங்கும் இதே பேச்சோ.?
திவாகரன் கதிரவன் ஒளி போல இன்றியமையா வாழ்-துணையோ.?
துவாரகைக் கண்ணனோடும் கண்காணா தொலைத்தொடர்பு முன்னேற்றம்.?
அவா அனைவர்க்கும் சிறுவர், காதலர் அலுவலக பணியாளர் நல்ல கருவி
நல்ல கருவி ஐயா நானிலத்தோர் பேசியே பொழுது-போக்க இராப்பகலாய்
வல்ல விஞ்ஞானம் தந்தது இந்த கை-பேசி பேச்சு மட்டுமா எங்கெங்கும்.?
சொல்லவொண்ணா தொல்லை-பேசி இந்தத் தொலை-பேசி அம்மம்மா
எல்லையில்லா பல வசதி எவரையும் படம்பிடிக்க மறைந்திருந்தே
செல்லமாட்டா இடத்தும் ஒளிந்திருந்தே வெடியால் பாழ் செய்யவுமே
கொல்லவும் கண்காணாதே பணம் பறிக்க கொடியோர் துணை- கருவி
பொல்லாக்கருவி இது போதும் சாமி முன்னேற்றம் பெயரால் மாநரகம்.!
================================================== ===============
(5)
சுவாசிக்கத் தெரியும் முன்னே என்னெ வயத்துலே சொமந்தாயே
சிவான்னு வேண்டி என்னே பெத்தாயோ நீ தான் தாயோ.?
குவா கத்தற கொழந்தைக்கும் அம்மேன்னு கூவுற எனக்கும்
திவாகரன் உதிக்கும் முன்னே பசி தீர்க்கும் கருத்தாயோ.?
கருவிலே சொமந்ததாலே என் தாய் நீயோ அம்மே
உருவிலே என்னெப்போல் இருப்பதாலே தான் தாயோ.?
தருவதாலே பாலூட்டி நீ தான் தாயோ தெரியல்லையே.!
அருமையா தேனுன்னு கொஞ்சும் அம்மா என் தாயோ.?
சிறு குரலே ஒரு ராவுலே ஞான் கத்தினேனே அம்மேன்னு
அறுத்து கட்டுத்தறி ஓடிவந்து பால் ஊட்டினயே நீ தாயோ.?
புருபுருன்னு உறிஞ்சி மிதமிஞ்சி குடிச்சாலும் பொறுக்காதெ
விறுவிறுன்னு ஒடிவந்து பிரிச்சுக் கட்டி வெச்சா அவ தாயோ.?
மறு நிமிசம் வயறு-ஊதி உயிர் ஊசலாட கிடந்தேனே மூச்சு முட்டி
ஒரு நொடியும் ஒறங்காதெ மருந்து- ஊட்டி பிழைக்க வெச்சவ தாயோ.?
திருட்டுத்தனமா எனக்கு பால் கொடுத்து நோய் செஞ்ச நீ தாயோ.?
அருத்தம் இப்போ புரிஞ்சிக்கிட்டேன் அம்மே தாயின்னா என்னான்னு
பொறுமையா ராப்-பகலா காக்கும் எசமானி அம்மா தான் என் தாயே.!!!
================================================== ==================
(6)
தேரு வடம் பிடிக்க வீட்டிலே ஆள் இல்லே
சோறு போட வருமானம் ஈட்ட ஒரு நாதியில்லே
ஊரு வாழ குடும்பமோ தாயோ ஒரு கருவில்லே
கருவடையவில்லே கருவுறும் மாது இல்லே
மருமக வரவில்லே திருமணமே ஆகவில்லே
கருப்பாயி பேத்தி பெயர் இட்டாரே முதல் முன்னம்.!
================================================== ====================
.
pavalamani pragasam
27th August 2010, 08:05 PM
முன்னம் பார்த்த முகங்களா இவை
முதிர்ச்சியின் அடையாளம் எத்தனை
மூப்பின் தப்பாத பல அறிகுறிகள்
மூக்குக்கண்ணாடி நரைத்த தலை
மறைந்துவிட்டனவே கொடியிடைகள்
மறக்கவில்லை நளின நடை உடை
மனம் திறந்த கள்ளமில்லா கதைகள்
மடைதிறந்த வெள்ளமாய் வார்த்தைகள்
மலரும் நினைவுகளில் அருவிக்குளியல்
மாதங்கள் போலாயின வருடங்கள்
மாயையாய் திரும்பிய பள்ளிநாட்கள்
மணந்தது நாற்பத்தியெட்டாண்டாகியும்
மறுபடியும் தோழியர் சந்தித்தபோது
மீண்டுமொரு வசந்தம் அன்று பூத்தது
Sudhaama
28th August 2010, 05:31 PM
.
தாயே உன் தலையில் அணிய தொப்பிகள் எத்தனை
தாரமானாய் கணவனானான் உன் முதல் குழந்தை
பதவி உயர்வுகள் பல பெற்றபின்னும் வளர்கிறாய்
தோழியாய் தாதியாய் ஆசானாய் ஆலோசகனாய்
ஆலமரமாய் நீ குடை விரிக்கிறாய் அந்நிழலிலே
சுற்றம் மொத்தமும் அங்கே சுகமாய் சுவாசிக்குதே
முன்னம் பார்த்த முகங்களா இவை
முதிர்ச்சியின் அடையாளம் எத்தனை
மூப்பின் தப்பாத பல அறிகுறிகள்
மூக்குக்கண்ணாடி நரைத்த தலை
மறைந்துவிட்டனவே கொடியிடைகள்
மறக்கவில்லை நளின நடை உடை
மனம் திறந்த கள்ளமில்லா கதைகள்
மடைதிறந்த வெள்ளமாய் வார்த்தைகள்
மலரும் நினைவுகளில் அருவிக்குளியல்
மாதங்கள் போலாயின வருடங்கள்
மாயையாய் திரும்பிய பள்ளிநாட்கள்
மணந்தது நாற்பத்தியெட்டாண்டாகியும்
மறுபடியும் தோழியர் சந்தித்தபோது
மீண்டுமொரு வசந்தம் அன்று பூத்தது
வசந்தம் அன்று பூத்தது ஐயா ஒன் பிஞ்சுப் பருவத்திலே
வசமே உந்தன் கையில் வாய்ப்பு பல கொண்டதனால்
அசந்தே ஒரு நொடியும் இங்கங்கே திசை மாறாதெ வளர்த்தாரே
ஒசந்தே இன்னெக்கு நீ தலெ நிமிந்து ஒன்னே பெத்தவங்களாலே
பெத்தவங்க ஒன்னே வளர்க்கவும் நல்லா தெரிஞ்சவங்க
மத்தவங்களை போலேயோ அதுக்கும் மேலேயோ நீ ஒசர
பெத்துப்புட்டா மட்டும் போதுமா பேரு சொல்ல புள்ளையின்னு
செத்துப்பொழச்சேனும் பொறுப்பா வளர்த்தாத் தான் நீ மனிசன்
மனிசனாவே வாழத்தெரியாதே நாட்டு சனம் எத்தனையோ இங்கே
குனிஞ்சே குந்திக்கிட்டு தாழ்ந்தே தானே தன்னை அடிமை போலெ
இனிதா வாழப்பல வாய்ப்புக்கள் பல இருந்தும் மிருகமா வாழறவங்க
கனியான வாழ்நாளே தானே கெடுத்துக்கிட்டு தன் குஞ்சையும் செறகு பிச்சு
பிச்சு-ஒதறி வாழ்வெ பாழ் செஞ்ச பூமாலே கொரங்கா ஐயா அந்த பெத்தவங்க.?
அச்சு பிச்சுன்னு அடிச்சு பயமுறுத்தி பள்ளிக்கு அனுப்பாமே படிக்கவும் விடாமே
பிச்சைக்கார புள்ளே கூலியா எடுபிடி இன்னெக்கு கதி பாரு தப்பு யாரு மேலே.?
இச்சைப்படி ஒசத்தி வளத்தவங்க ஒன்னே பெத்தவங்க புள்ளே சுவாசிக்கிறே சுகமே
.
pavalamani pragasam
28th August 2010, 07:44 PM
சுகமே தனிமை
கையில் புதினம்
கொறிக்க பக்கோடா
குடிக்கத் தேனீர்
பின்னணியில் இசை
பதமான வானிலை
பதறாத சூழ்நிலை
ஓய்வும் சொர்க்கம்
Sudhaama
29th August 2010, 08:14 AM
.
சுகமே தனிமை
கையில் புதினம்
கொறிக்க பக்கோடா
குடிக்கத் தேனீர்
பின்னணியில் இசை
பதமான வானிலை
பதறாத சூழ்நிலை
ஓய்வும் சொர்க்கம்
- எளிய நடை சந்தக் கவிதை.
- சொர்க்கமே எங்கே.? எங்கே.?
- (யாப்பு-இலக்கண வரம்புக்கு உட்பட்டது அல்ல}
சொர்க்கமே எங்கே எங்கே என்று ஏங்கியே அலைந்து மனித
வர்க்கமே எளிதாய் சுகமே புவியினில் தீங்கு இல்லா வாழ்வு;
தர்க்கமே செய்வர் பலவாய் காரணம் மூலாதாரம் நாடித் தேடி:
சொர்க்கம் கிட்டுமோ, உழைக்காது சோம்பி ஓய்ந்து கிடந்தால்.?
ஓய்வினால் சொர்க்கம் என்பார், மெய்-வருத்தம் சிறிதும் இல்லா!
தேய்ந்து உடல், ஈட்டம் எதற்கு கல்வி தொழில் வாட்டம் தானோ.?
காய்க்கும் கனி-மரமோ எளிதாய் எட்டிப் பறிக்கப் பாரில் பணமோ.?
மாய்க்கும் படுக்கை கிடந்தால் அலுங்காது பக்கோடா கொறித்தே.!
கொறி சிறு-தீனி அடிக்கடி ஏதோ சொர்க்கமோ கொழுக்கத் தடித்தால்.?
வெறியரே ஏதேதோ போதை பானம் குடித்துக் கெட்டுத் தானே வீணே
அறிவிழந்து நோயே கொள்வார் சுகமோ ஆரோக்கியம் அற்றால்.?
சிரித்தே புவி வாழும் கலை அறியார் பிறர் நகைக்கத் தாழும் நோயர்!
நோயரே மனதொடு அறிவு உடல் உறவு பல வேசி மங்கையர் தாசி!
காயமே புத்தகமோ புரட்டப் பூவையர்.? புதினம் இழி மிருக காமம்;
பேயரே ஏ.சி. வீட்டுச்-சிறை, பேரிடி-இசை தனை மறந்த பேயாட்டமே!
மாய மயக்கும் புவி ஆளலாமோ, வாங்கலாமோ எதுவும் பணத்தால்.?
பணத்தால் மட்டும் புவியில் கிட்டுமோ சுக சொர்க்கம்? அல்ல போலி:
ரணமாக்கும் பணம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சே, நிம்மதி அற்றே:
குணம் தரும் சுகம் சொர்க்கம் தலை நிமிர் ராஜ-வாழ்வு புவிப் பயன்:
பணம் மிதமிஞ்சிக் கொண்டால் காவல்-பூதமாய் அடிமையாக்கி ஆளும!்
ஆளலாம் பணமும் துணையாய் பண்பு வழுவா புவி வளமும் ஈட்டி,
ஏளன நிலை துயர் துன்பம் கேடு நீக்கி, குடிசை-ஏழ்மை தாழ்வே இல்லா;
மாள வகையற வரம்புறு தண்ணீர் பணத்தில் புறம் மிதந்து நீந்த இன்பம்!
தாளவே மாட்டா செல்வம் தண்ணீரை உள்-விட்டால் போக்கும் உயிரே.!
உயிர் உயர் பிறவி மனிதா புவி ஆளப்பிறந்தாய் சொர்க்கமே இங்கே காண;
பயிர் வாழ்வு, உந்தன் பணிப்பங்கொடு பகவன் பங்கும் அருளே நாடி:
துயில் இன்றி ஐம்பொறி இயற்கை இறைவன் ஓயா உழைப்பே வாழ்க்கை.!
கையிலே உன் புவி-சொர்க்கம் திண்ணம்: வேண்டாம் மாடி-வீட்டு ஏழ்மை.!!!
.
.
.
pavalamani pragasam
29th August 2010, 09:21 AM
ஏழ்மையறியா இந்திரலோகம் படைத்தேன்
தங்கக்காசு அங்கே கொட்டுது மழையாய்
மாடி வீடுகள் கேளிக்கைகள் பூங்காக்கள்
காய்த்துத் தொங்கும் கனிமரங்கள் காணீர்
எத்தனை பூக்கள் தாவரங்கள் குளிர்ச்சியாய்
வழுக்கும் தார் சாலைகள் மாநகரந்தன்னிலே
எந்நேரமும் மக்கள் கூட்டமாய் நடமாட
அவர்களையெல்லாம் அன்பாய் நான் வரவேற்க
உற்சாகம் பெருக மேலும் மேலும் வளர்கிறது
கற்பனை கலந்து உருவாகும் அழகோவியமாய்
காலம் போவது தெரியாமல் மூழ்கினேன்
பொய்யுலகின் பொழுதுபோக்குகள் அற்புதம்
இணையத்தில் விளையாடும் சிறுமியானேன்
Sudhaama
1st September 2010, 07:45 AM
- .
ஏழையர் அல்லோம் நாமே மானிட-சால்பே ஏணியாய்ப் பிடித்து உயர்வோம் ..........
.
pavalamani pragasam
1st September 2010, 01:28 PM
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
:notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway:
Sudhaama
1st September 2010, 05:15 PM
.
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
:notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway: :notthatway:
நாட் தட் வே என்பதே உமது கருத்தானால் அம்மையே பவளமணியே
ஹேட்ஸ் ஆஃப் உமக்கு கூறுவேன் கூறுங்கள் சிறியேன் என் தவறு?
ஹாட் எவரும் என்மேல் கொள்ள வேண்டாம் நாம் அனைவர் கூடியே
சாட் பட் வே வெட்டியாய் இங்கு கூடவில்லை தமிழ்-மேடை கூடி மாந்த
லேட் ஆகாது நற்கருத்து இந்த மேடை நோக்கம் நம் அனைவர் வாழ் நலமே
வாட் தட் வே என்று உமக்குத் தோன்றுவதோ அவ்வாறே தொடர்வீரே
ஹேட் என்னை வேண்டாம் மொழியுங்கள் தாயே உம் விருப்பம் போல்.
.
pavalamani pragasam
1st September 2010, 08:26 PM
கடைசியாக பதிவு செய்யப்பட்ட கவிதையின் கடைசி வார்த்தையில் அடுத்த கவிதை துவங்கவேண்டியதுதானே முறை? அதற்கு முன்பு பதிவு செய்த கவிதையை தொடர தவறிவிட்டால் அதை நிவர்த்தி செய்ய கருத்துக்கூறும் திரி கை கொடுக்குமே? தொடர்பை காப்பாற்றவேண்டியதுதான் முக்கியம்!
Sudhaama
1st September 2010, 10:31 PM
,
கடைசியாக பதிவு செய்யப்பட்ட கவிதையின் கடைசி வார்த்தையில் அடுத்த கவிதை துவங்கவேண்டியதுதானே முறை? அதற்கு முன்பு பதிவு செய்த கவிதையை தொடர தவறிவிட்டால் அதை நிவர்த்தி செய்ய கருத்துக்கூறும் திரி கை கொடுக்குமே? தொடர்பை காப்பாற்றவேண்டியதுதான் முக்கியம்!
அன்பர்ந்த பவளமணியாரே
நான் செய்ததில் தவறு ஏதும் இல்லை. இருப்பினும் உங்களையும் குறைப்படவிடாது மகிழ்விப்பதே எனது நோக்கம்.
எனவே இதோ திருத்தி வழங்கி-விட்டேன். திருப்தி தானே.?
அன்புடன்,
சுதாமா
ஆதலால் காதல் செய்வீர் ஆண்டவனையே.!!!
சொத்து சுகமெல்லாம் போன பின்பும்
சொந்தமென்று எதை கொண்டு செல்வேன்?- நல்
வித்து விளைத்திடும் சிந்தனையும்
பரந்தாமன் மேல் நான் கொண்ட காதலுமே!
(Sudhaama: எனது கவிதைகள் யாவும் யாப்பு-இலக்கண வரம்புக்கு உட்பட்டது அல்ல)
பணத்தால் மட்டும் புவியில் கிட்டுமோ. சுக சொர்க்கம்? அல்ல போலி
ரணமாக்கும் பணம்; அளவுக்கு மிஞ்சினால் நஞ்சே நிம்மதி அற்றே
குணம் தரும் சுகம் சொர்க்கம் தலை நிமிர் ராஜ-வாழ்வு தரணி பயன்
பணம் மிதமிஞ்சி கொண்டால் காவல்-பூதமாய் அடிமையாக்கி ஆளும்
ஆளலாம் பணமும் துணையாய் பண்பு வழுவா புவி வளமும் ஈட்ட
ஏளன நிலை துயர் துன்பம் கேடு நீக்கி குடிசை-ஏழ்மை தாழ்வு இல்லா
மாள வகையற வரம்புறு தண்ணீர் பணத்தில் புறம் மிதந்து நீந்த இன்பம்
தாளவே மாட்டா செல்வம் தண்ணீரை உள்-விட்டால் போக்கும் உயிரே.
உயிர் உயர் பிறவி மனிதா புவி ஆளப்பிறந்தாய் சுக-போகம் இங்கே காண
பயிர் விளைச்சல் உந்தன் பணிப்பங்கொடு பகவன் பங்கும் அருளே நாடி
துயில் இன்றி ஐம்பொறி இயற்கை இறைவன் ஓயா உழைப்பே வாழ்க்கை
கையிலே உன் புவி-சொர்க்கம் திண்ணம்: வேண்டாம் மாடி-வீட்டு ஏழ்மை
ஏழ்மையறியா இந்திரலோகம் படைத்தேன்
தங்கக்காசு அங்கே கொட்டுது மழையாய்
மாடி வீடுகள் கேளிக்கைகள் பூங்காக்கள்
காய்த்துத் தொங்கும் கனிமரங்கள் காணீர்
எத்தனை பூக்கள் தாவரங்கள் குளிர்ச்சியாய்
வழுக்கும் தார் சாலைகள் மாநகரந்தன்னிலே
எந்நேரமும் மக்கள் கூட்டமாய் நடமாட
அவர்களையெல்லாம் அன்பாய் நான் வரவேற்க
உற்சாகம் பெருக மேலும் மேலும் வளர்கிறது
கற்பனை கலந்து உருவாகும் அழகோவியமாய்
காலம் போவது தெரியாமல் மூழ்கினேன்
பொய்யுலகின் பொழுதுபோக்குகள் அற்புதம்
இணையத்தில் விளையாடும் சிறுமியானேன்
ஆனேனே ஏழையாக வாழத்-தெரியாது வைய-நெறி அறிய முயலாதே
தேனே போல் நல்-வாய்ப்பு கொண்ட புவிப்பிறவி உன்னத மானிடனாய்
வானே உறைந்து மறைந்து ஆளும் இறைவா, தாழ்த்திக்கொண்டோமே
கோனே புவியோர் இரு வகை குடிசைவீட்டு ஏழை, மாடிவீட்டு ஏழை.
ஏழையர் அல்லோம் நாமே மானிட-சால்பே ஏணியாய்ப் பிடித்து உயர்வோம்
வாழையடி வாழையாக நம் முன்னோர் பொழிந்த செல்வ வாழ்-நெறி வழியே
தாழையாய் தமிழ்-மணமே தரணி மாந்தர்க்கே ஒப்புயர் வாழ்-வழி காட்ட வல்ல
பேழைக்-கருத்து உமது கோலப்பொடி சிதறல் ரத்தினத்-திரட்டுப் பொலிவால்
வால்-ஆட்டும் தீமை வாழ்க்கை விளையாட்டுச் சவால்கள் எதிர் வெல்லறி
வால் உண்மை புரிந்தே வளமை கொள வகை தெரிந்தே, தமிழ் தரு தெளி
வால்-கவி சொல்-அந்தாதியால் வானில் மட்டுமே வானூர்தி-வாலின் பின்
வால் பிடித்தே திரியவோ.? தரணி கருத்துப்-பூங்கா தமிழ் உலா விடுத்தே.!
விடுத்துச் செல்வதே நமது புவி ஆட்சி சொத்து சுகம் சொந்த பந்தம்
எடுத்துச்-செல்வது நற்புகழ் புண்ணியம் பாவம் மட்டுமே ஈட்டம் உலகில்
கொடுத்த இயற்கை கோ இறைவனுக்கு நன்றி மறவா காதல் செய்தால்
தொடுத்த இன்பமே இப்பிறவி இம்மை சொர்க்கம் இங்கே திண்ணம்.!!!
.
.
pavalamani pragasam
1st September 2010, 11:13 PM
திண்ணம் மனதின் குணம்
எண்ணம் கவரும் மணம்
வண்ணம் பலவும் கூடும்
கிண்ணம் வழியும் தேன்
Sudhaama
18th September 2010, 10:50 PM
.
SHIFTED.
.
pavalamani pragasam
18th September 2010, 11:19 PM
மீனாச்சிக்காக ஊரெங்கும் திருவிழா
மல்லியப்பூ மணக்கும் சித்திரையிலே
மாசி வீதியிலே தினமும் ஊர்கோலம்
மனசெல்லாம் நிறைஞ்சிருக்கும் காலம்
அன்புத் தங்கச்சிக்கு சீரோடு வர்ராரு
அண்ணன் அழகரு வைகை ஆத்தோட
கொட்டிக் கிடக்கு பவுர்ணமி நிலா
கூடிக் கிடக்கு பல ஊரு சனம்
பந்தல் போட்டு அன்னமும் பானமும்
பரிமாறும் பஞ்சமில்லா பக்தியிருக்கு
வெள்ளந்தியா திரியுது மக்கள் கூட்டமிங்கு
வெல்லமா இனிக்குது ஆத்தாவோட ஆட்சி
Sudhaama
18th September 2010, 11:47 PM
.
திண்ணம் மனதின் குணம்
எண்ணம் கவரும் மணம்
வண்ணம் பலவும் கூடும்
கிண்ணம் வழியும் தேன்
கிண்ணம் வழியும் தேன் மலர் நாடி வானவில் பறவையர்
வண்ணம் பலவும் கூடும் பல்லினத்தார் பேதம்-இல்லார்
எண்ணம் கவரும் மணம் மலர் வசியம் தேன் நுகர்ச்சி
திண்ணம் மனதின் குணம் அன்பே வாழ்வு இன்பமே இரு
இருக்கலாமே இந்த இக்கட்டும் ஒரு படிக்கட்டாய்
சிறு தோல்வியும் மறு முயற்்சிக்கு ஒரு சவாலாய்
இதை இழந்தது இன்னும் பெரியதை பெறத்தானோ
துவளாமல் தொடரும்போது துன்ப நினைவுண்டோ
உண்டாய்யா யோவ் எங்காச்சும் எம் மவளேப் போல ஒலகத்துலெ.?
கண்டவங்க பின்னாலெ பேஜாரா திரியரவளா மத்தவங்களப்போலெ
வண்டாச் சுத்தறவங்க எத்தனையோ சீமாங்க எம் பொண்ணு பின்னே
சிண்டு-பிடிச்சு ஆட்டுறவ, வாலாட்டுறவங்களெச் சீறி முளிமுளிச்சு
முளிச்சிக்கிட்டா எம்-மவ ரதியளகி முச்சூடும் கலிகாலம் இப்பிடிக்-கீது
கொளிச்ச பணத்தாலே வலெ வீசி வஞ்சகமா கொத்திக்கிட்டுக் கிளியெ
களிச்சிக்-கட்டுமின்னு வயத்துலெ சொமக்க வச்சு நாய்-போல பின்னே
பளிச்சுப் பேசுமே மேனா-மினுக்கியவ எவ(ங்)-கிட்டேயோ இன்னு
இன்னெக்கி தலெ நிமிந்து ராணியா வாளணுமின்னு பொகளோடே
அன்னெக்கே பேர்-வெச்சேன் மீனாச்சி நீ ஆளணுமின்னு மங்களமா
சின்னப்புள்ளே பிஞ்சு வயசு-மொத பொத்திப்-பொத்தி வளி- ஊட்டி
என்னெக்கும் அவ-கையிலே சொல்லி-வளத்தேங், தாளே வம்புண்ணு
புண்ணு பட்ட வாள்வு தங்கக்-கத்தியாலெ குத்தி, முள்-கிரீடம் வெச்சு
கண்ணு படுமோண்ணு மயக்குற சொக்கி ஒன்னெப்பாத்து சொக்கி
துண்ணு முளுங்க வர்ற கஸ்மாலங்களெ அப்பாலெ வெரட்டிப்புடு
பொண்ணு பூவம்மா சொக்கநாதன் வருவாங் ஒன்னே தலைலே சூட
சூடம்-காட்டி எவன் பத்தினியா பொம்புளே தாய்மெ மதிக்கறவங்
ஓடமா வாள்க்கையெ ஓட்டத்தெரிஞ்சவனாப் பாத்து நீ கட்டிக்கொ
லாடம் கட்டி ஒன்னே ஓட்டப்-பாத்தா நீ தலெ நிமிந்து முளிச்சு
மாடம் கட்டி வாளவே படிக்க வச்சேன் நடை போட மாலயோடெ
மாலயொட கண்ணாலம் கட்டிக்கிட்டு மங்களமா வாளணுமின்னு
காலங்காத்தால எளுப்பி அவ படிக்க வச்செங் அதனாலெ இப்போ
மாலயோட எப்பவும் திரியறாய்யா டெதாசுக்கோப்பு டாக்டருன்னு
வேல-ரிக்சா இஸ்து என் பொளப்புப் போதும் நான் மீனாச்சிக்காக
மீனாச்சிக்காக ஊரெங்கும் திருவிழா
மல்லியப்பூ மணக்கும் சித்திரையிலே
மாசி வீதியிலே தினமும் ஊர்கோலம்
மனசெல்லாம் நிறைஞ்சிருக்கும் காலம்
அன்புத் தங்கச்சிக்கு சீரோடு வர்ராரு
அண்ணன் அழகரு வைகை ஆத்தோட
கொட்டிக் கிடக்கு பவுர்ணமி நிலா
கூடிக் கிடக்கு பல ஊரு சனம்
பந்தல் போட்டு அன்னமும் பானமும்
பரிமாறும் பஞ்சமில்லா பக்தியிருக்கு
வெள்ளந்தியா திரியுது கூட்டமிங்கு
வெல்லமா இனிக்குது ஆத்தா ஆட்சி
.
pavalamani pragasam
19th September 2010, 09:50 AM
:roll:
Sudhaama
24th September 2010, 08:48 PM
.
. Shifted.
pavalamani pragasam
24th September 2010, 11:15 PM
மாதரே ஆதாரம் என்றும்
மரத்தின் ஆணிவேராவார்
சகடம் சுழல அச்சாணியே
மக்களைப் பெறுவதாலும்
வணிகம் வளரச் செய்வதாலும்
சேலை நகை முகப்பூச்சு
கடைச் சரக்கு அத்தனையும்
விற்றுப் போவது அவராலே
Sudhaama
24th September 2010, 11:36 PM
.
கவிதைக்கு-கவிதை...
... மற்றும் பாட்டுக்குப் பாட்டு
இழைத் தலைப்பின் கருத்துக்கும், நோக்கத்திற்கும் பொருத்தமாக...
--- எளிய நடை சொல்-கருத்து அந்தாதி.
பல்வேறு இணை-கருத்து சங்கிலித்-தொடர் கவிதை-நதி
(யாப்பு இலக்கண-மரபு வரம்புக்கு உட்பட்டது அல்ல)
குடும்பத்தை முன்னேற்ற...
... பெரும்-பங்கு வகிப்பவர்.?
தந்தையா.?. தாயா.?
[html:a61e5fcba3]
<img src=http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/Rickshaw-wala1.jpg width=300 height=400>
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/Woman1A.jpg
[/html:a61e5fcba3]
மாலயொட கண்ணாலம் கட்டிக்கிட்டு மங்களமா வாளணுமின்னு
காலங்காத்தால எளுப்பி அவ படிக்க வச்செங் அதனாலெ இப்போ
மாலயோட எப்பவும் திரியறாய்யா டெதாசுக்கோப்பு டாக்டருன்னு
வேல-ரிக்சா இஸ்து என் பொளப்புப் போதும் நான் மீனாச்சிக்காக
மீனாச்சிக்காக ஊரெங்கும் திருவிழா
மல்லியப்பூ மணக்கும் சித்திரையிலே
மாசி வீதியிலே தினமும் ஊர்கோலம்
மனசெல்லாம் நிறைஞ்சிருக்கும் காலம்
அன்புத் தங்கச்சிக்கு சீரோடு வர்ராரு
அண்ணன் அழகரு வைகை ஆத்தோட
கொட்டிக் கிடக்கு பவுர்ணமி நிலா
கூடிக் கிடக்கு பல ஊரு சனம்
பந்தல் போட்டு அன்னமும் பானமும்
பரிமாறும் பஞ்சமில்லா பக்தியிருக்கு
வெள்ளந்தியா திரியுது கூட்டமிங்கு
வெல்லமா இனிக்குது ஆத்தா ஆட்சி
ஆட்சி ஆண்டு குடும்பம் மீனாச்சியெ ஆளாக்கினது-ஆரு சொல்லுங்க ஐயா
ஏட்டுப்படிப்பு ஏதுக்கு பொண்ணுக்குன்னு பேச்செக் கேட்டு தலையாட்டிப்புட்டு
வீட்டு-வேலை போதுமின்னு அன்னெக்கு சொன்ன எம் புருசன் இப்ப வீராப்பு.!
நாட்டுப்புற கைநாட்டு என்-விதி ரிக்சா, மவளெ சாணி-தட்டிக் கிட விதின்னவுக.!!
விதித்தபடி வாழ்வென வாழாது நீ
வித்திட்டபடி வாழ்தல் வலிவு.
வலி- வயத்து வேதனை ரெண்டு, பசி-பட்டினி இவளயும் சொமந்து பெத்தேங்
கலிகாலம் சாமி தலை-விதி குத்தம்-சொல்லித் தன்னையே ஏமாத்திக்கலாமா.?
நலிஞ்ச தற்கொலை மனப்-போக்காலெ தானே கூட்டிக்கிடுர தாள்வு ஏதுக்கு.?
பொலிவா நாந்தேங் வாளலே எம்-குஞ்சுக்கும் வேணாம் சாமி குருட்டு-ஓட்டம்
குருட்டு-ஓட்டம் வால்-பிடி சனம் இது நாடு-இல்லே காடு ஒலக-இருளென்னு
திருட்டுத்தனமா கொத்திக்க பல கழுகு, நரி ஓநாய், பாம்பும் மனிச-உருவுலெ
சுருட்டிக்கிட்டு ஓடற கொள்ளைக் கூட்டம் ஒன்னெய சமயம்-பாத்து பிடிக்க
உருட்டுப்-பெரட்டு பித்தலாட்டம், அளகு எளம்-பூவெ சூறையாட ஒளிஞ்சு
ஒளிஞ்ச எதிரி வஞ்சக-கூட்டம் சுத்தி ஒனக்கு பிஞ்சு-பொண்ணே உத்துப் பாரு
வெளி-ஒலகம் ஆபத்துன்னு பயம்-காட்டத் தானே முடிஞ்சுச்சு எம்-புருசனுக்கு.?
முளிச்சிக்கிட்டா எம்-மவன்னு இவுக பீத்திக்கிடரதெ பாருங்க, மீனாச்சி-தானா
முளிச்சிக்கிட்டாளா இல்லே இவுரு முளிக்க-வெச்சாரா வளி காட்டி ஓட்ட.?
ஓட்டமே வாள்க்கை-நதி அறிவு-ஊட்டி சொட்டுச்சொட்டா ஊத்தி வளத்தேங்
நாட்டமா பிள்ளப்-பிஞ்சு வயசுலயே எம் மீனாச்சி புத்திசாலி கேள்வி கேப்பா
ஆட்டம் பாட்டம் ஏதுக்கு, நம்ம கோவில்-சாமியே தெருவுக்கு ஏன் வரணும்.?
கூட்டமா கூடி வேல வெட்டி விட்டுப்புட்டு துட்டு வரும்படி கெடுத்துக்கிட்டு.?
கெடுத்துக் குட்டிச்-சொவரா பாளாகாமே வளி-காட்டுறா நமக்கு மீனாச்சி தாயி
நடுத்-தெரு வந்து தலைகுனியாமே வாளணுமின்னா மனுசா ஊர் கூடி இன்பம்
குடும்பமா சமுதாய-நெனவோடே ஊரோடெ பளகு தன்னலம் போல பெறரும்
கெடுகால பயமா? நாங்-ஒருத்தி இருக்கேங் ஒளியுமோ அன்பே பண்பு-ஆட்டம்
ஆட்டம்-போடுறாங்க ஆம்பளெங்க அப்பாவி பொம்பளெ மட்டம் தட்டித்-தட்டி
காட்டம் எனக்கு ரொம்ப, அநியாயம் பொண்ணு பொறந்தா கொளந்தே-கொலெ
ஓட்டுறதே சைக்கிளு வாள்க்கை, காட்டுலெ சுள்ளி கட்டிட-வேலெ செஞ்சேங்
வாட்டமா ஆத்தாவ வேண்டிக்கிட்டேன், பொண்ணு தேங் பொறக்க தவமா
தவம் நிதம் செய்யினும், பதம் இல்லா மனம் பாழ்.
பாளாப்போன பெறவி பொம்பளெ ஆம்பளெயெ சாந்து-தான் வாளளுமா.?
ஆளா ஒசத்திக்-கிட்டேன் ராவுலெ முதியோர் கல்வி லைப்ரேரி படிச்சேன்
வேளா வேள சோறு பொண்ணு மனப்-பதம் ஊட்டி ஒசர படிக்க அட்மிசன்
மாளா அலெ-அலெஞ்சு நல்லவுக கெஞ்சி, மவ மீனாச்சி படிக்க வச்சேங்
வச்ச-புள்ளி தவறாமெ திட்டம் போட்டு பயிரு வளத்தது-ஆரு வளி காட்டி.?
பச்சப்புள்ளே பயிரெ மிருகம் மேயாமெ வேலியா-இவுக அம்முட்டுத்தேங்
துச்சமா பொண்ணே மிதிச்ச அந்தக்-காலம் சின்ன வயசு மொத தைரியமா
அச்சமில்லாமே தலே நிமிந்து வாள, ஊக்கம்-போட்டி வளத்தேங் ராணியா
ராணி-அளகு பாக்க மட்டுமா பளகவும் கொணம் தாம்மா சிம்மாசன-அளகு
ஏணியா முன்னவக சொல்லு இப்பக்-காலத்து நல்லவக பேச்சு நெனச்சு
சாணி-தட்டி குப்பைலெ கெடந்த அந்த-காலத்து பொம்பளே நான் மன்னாடி
நாணிக்-குனிஞ்சு பயந்து-ஒளிஞ்சவள முன்னோடியா நடந்து புரிய-வச்சேங்
புரிஞ்சுக்கிட்டா ஒலகம் மனுசியா மதிக்கும் இல்லேன்னா தூசியா மிதிக்கும்
அறிஞ்சுக்கிட்டா ஆண்டாளா ஆளலாம் ஆம்பளெயேயும் அன்புக்கு அடிமை
தெரிஞ்சுக்கிட்டு தெரை-பின்னே ஒளிஞ்ச உண்மய பாரு தாயி சாக்கிரதெ
திரிஞ்சு வீணா காலம்-களிக்காதெ தக்க புத்திமதி ஊட்டி அப்பப்ப புத்தம்-புது
புத்தம்-புது வாடா-பூமாலெ பொம்பளெ ஆம்பளெக்கு சூட்டினது அந்தக்-காலம்
பித்தரா ஆம்பளெ இன்னமெ அளகரு ரங்கரு திருமலெ பெருமாள்-கணக்கா
பத்தரா ஆண்டாள்-மாலெ போல போட்டுக்-களிச்சத கேட்டு-வாங்கி சூடுவாங்க
பத்தாம்-பசலி பளங்-காலம் இன்னமே மாறும் நம்ம ராச்சியம் தேங் மாதரே
.
மாதரே ஆதாரம் என்றும்
மரத்தின் ஆணிவேராவார்
சகடம் சுழல அச்சாணியே
மக்களைப் பெறுவதாலும்
வணிகம் வளரச் செய்வதாலும்
சேலை நகை முகப்பூச்சு
கடைச் சரக்கு அத்தனையும்
விற்றுப் போவது அவராலே
.
Sudhaama
30th September 2010, 07:05 PM
.
Shifted.
pavalamani pragasam
30th September 2010, 08:28 PM
அமெரிக்காவால் நிலாவுக்கு ஆளை அனுப்ப முடிந்ததிப்போ
ஆனா எங்க ஊரு பாட்டி அங்கே எப்பவோ குடியேறியாச்சே
வெள்ளிக்கிண்ணத்தில் பாலன்னம் உண்ணும் பாலகர் பார்த்திட
கண்ணுறங்கும் முன் கேட்டு கிறங்கிட நாம் சொல்லும் கதை
அன்று வந்த அதே நிலவு இன்று காணும் காட்சி வேறென
கவிதை வரிகள் படைக்கும் பழைய உறவு நமக்கு நிலவோடு
Sudhaama
30th September 2010, 08:48 PM
.
Shifted
kirukan
1st October 2010, 10:36 PM
நிலவோடு ஒப்பிட்டு
உனை பார்க்க
இரவில் தெரியும்
உன்னழகு எனக்கு
பகலில் தெரிவதில்லை
அதனால் தான்
கோவத்தில் சிலநேரம்
மேகத்தில் மறைந்தாயோ
மாதம் ஒருமுறை
தேய்ந்து இருள்கிறாய்
என்னருகே வாராது
மறைந்து போகின்றாய்
தேய்வதும் வளர்வதும்
உன் இயல்பு
என்னாலும் இருளினில்
ஒளிதரும் உன்னன்பு..
-
கிறுக்கன்
Sudhaama
1st October 2010, 11:25 PM
-
தமிழ்ப்-பண்பு நால்-வழி மாதர்-நெறி
காலத்திற்கு ஒவ்வாதோ.?
[html:ee3741d6bd]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/Woman1A.jpg
[/html:ee3741d6bd]நாணம்-இல்லா காமக்-களியாட்டம்...
...மிருக-நெறியா மானிட-நெறியா.?
மானிட-நாகரிக முன்னேற்றமா...
... மாதர் தம்மை இழிவு.?
மங்கை ஓர் கடைச்-சரக்கா?
கற்பும் கொள்ளையா.?
குருட்டு-ஓட்டம் வால்-பிடி சனம் இது நாடு-இல்லே காடு ஒலக-இருளென்னு
திருட்டுத்தனமா கொத்திக்க பல கழுகு, நரி ஓநாய், பாம்பும் மனிச-உருவுலெ
சுருட்டிக்கிட்டு ஓடற கொள்ளைக் கூட்டம் ஒன்னெய சமயம்-பாத்து பிடிக்க
உருட்டுப்-பெரட்டு பித்தலாட்டம், அளகு எளம்-பூவெ சூறையாட ஒளிஞ்சு
மாதரே ஆதாரம் என்றும்
மரத்தின் ஆணிவேராவார்
சகடம் சுழல அச்சாணியே
மக்களைப் பெறுவதாலும்
வணிகம் வளரச் செய்வதாலும்
சேலை நகை முகப்பூச்சு
கடைச் சரக்கு அத்தனையும்
விற்றுப் போவது அவராலே
கடைச்சரக்கு அத்தனையும் விற்றுப்போகும் விளம்பரத்தாலே விலை கூட
கடைச்-சரக்கோ விளம்பரச் காட்சிப்-பொருளோ மங்கையர் விற்பனைக்கோ?
கடையரோ உத்தமப் பிறவி மாந்தர் நாகரீக முன்னேற்றம் பெயரால் மாதை
படைத்தானோ இறைவன் ஆண்களின் காமப்பசி வேட்டைக்கே இரையாக.?
இரையாகவோ மங்கை தம்மைத்தாமே மாமிசக்-கொழிப்பு வளம் திறந்து காட்டி
சிறையாகவோ தற்கொலையுறு மனப்-போக்கால் வா வா இங்கே விளையாட
திரை மறை செயல்களை நாணம் இன்றி வெளிச்சம் போட்டுக் காட்டி வசியம்
வரையிலா இழி-மோகம் ஆண் பெண்களே வெள்ளையர் அமெரிக்கா-வால்
அமெரிக்காவால் நிலாவுக்கு ஆளை அனுப்ப முடிந்ததிப்போ
ஆனா எங்க ஊரு பாட்டி அங்கே எப்பவோ குடியேறியாச்சே
வெள்ளிக்கிண்ணத்தில் பாலன்னம் உண்ணும் பாலகர் பார்த்திட
கண்ணுறங்கும் முன் கேட்டு கிறங்கிட நாம் சொல்லும் கதை
அன்று வந்த அதே நிலவு இன்று காணும் காட்சி வேறென
கவிதை வரிகள் படைக்கும் பழைய உறவு நமக்கு நிலவோடு
நிலவோடு ஒப்பிட்டு
உனை பார்க்க
இரவில் தெரியும்
உன்னழகு எனக்கு
பகலில் தெரிவதில்லை
அதனால் தான்
கோவத்தில் சிலநேரம்
மேகத்தில் மறைந்தாயோ
மாதம் ஒருமுறை
தேய்ந்து இருள்கிறாய்
என்னருகே வாராது
மறைந்து போகின்றாய்
தேய்வதும் வளர்வதும்
உன் இயல்பு
என்னாலும் இருளினில்
ஒளிதரும் உன்னன்பு..
- கிறுக்கன்
.
pavalamani pragasam
2nd October 2010, 09:21 AM
அன்பு என்ன மனதில் ஊற்றோ
இறைக்க இறைக்க ஊறுமோ
குறையாது தினம் வளருமோ
வருந்தாது பாரம் தாங்குமோ
உறங்காது இமைக்குள் காக்குமோ
தேடாது தானாய் வந்த வரமோ
kirukan
2nd October 2010, 02:10 PM
வாரமோ சாபமோ
உடல் வருத்தி
உயிர் தந்து
அவன் வளர
தான் தேய்ந்து
அவன் உயர
தான் ஓய்ந்து
ஓய்வை தேட
கொஞ்சம்
அன்பை நாட
உபத்திரம் என
உதைக்கும் பிள்ளை
வரமோ சாபமோ!!!
-
கிறுக்கன்
pavalamani pragasam
2nd October 2010, 03:14 PM
சாபமோ வரமோ
நீண்டுவிட்ட ஆயுள்
நரைத்த முடியும்
உதிர்ந்த பல்லும்
உளறும் சொல்லும்
சுருங்கிய தோலும்
வற்றிய முகமும்
அழகின் அழிவே
அதைவிட பெரிதே
நோயும் வலியும்
தேய்ந்த எலும்பில்
குறுகிவிட்ட குடலில்
மங்கிய பார்வையில்
மந்தமான செவியில்
முடங்கிய நிலையில்
வெறித்த அமைதியில்
ஒருவித வெறுமையில்
உள்மன தனிமையில்
வைத்திய செலவில்
வேற்றிட நிழலில்
விளங்காத கலக்கத்தில்
வரமா ஆயுள் நீழ்வது
Sudhaama
2nd October 2010, 06:36 PM
.
Shifted
pavalamani pragasam
2nd October 2010, 07:42 PM
ஏது பண்டிகை என்று
என்னுள்ளே குழப்பம்
வழியெங்கும் வாழைமரம்
வீதியெல்லாம் குதூகலம்
அதற்குள் சித்திரையா
திருவிழா வந்துவிட்டதா
மெல்ல உறைத்தது அது
எந்திரன் வெளியிட்ட நாள்
ரசிகர்கள் கொண்டாட்டம்
வியப்பின் விளிம்பில் நான்
kirukan
2nd October 2010, 08:11 PM
நான் என்பது
நெஞ்சில் புகாததால்தான்
நாடிதளரும் வயதிலும்
நாடுகள் கடந்து
நேசத்தை வென்றார்-நம்
சிறப்பு நட்சத்திரம்.
pavalamani pragasam
2nd October 2010, 08:29 PM
நட்சத்திரம் என்றால் வைரம்
குழந்தை பாடும் பாட்டிலே
பாரதிக்கோ வெறும் வைரமல்ல
கருநீலப் பட்டுப் புடவையில்
பதித்த நல் வைரமாம் அது
கண்ணம்மாவின் கரிய விழி
அதன் சுடர்தான் சூரியசந்திரர்
என்னே மயக்கமது மயக்குது
கவியின் உவமை மயக்கம்
தருதே தனிக் கிறக்கம்
Sudhaama
2nd October 2010, 09:07 PM
.
[html:2f915b078f]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/gandhi-india.jpg
[/html:2f915b078f]
வரமா ஆயுள் நீள்வது பொக்கை-வாய் கிழவனாய் மாந்தர், கம்பு ஊன்றி
தரமா வீண் பாரமா குடும்பம் சமுதாயத்திற்குமே பாரதத்-தந்தை காந்தியே
உரமே வழுக்கைக் கிழவனுக்கு இறைவன் தந்த தங்கச்-சீப்பு, பயன் கொள
பிறர் பிந்தையர்க்கே அனுபவ வாழ்-பாடம் முந்தையர் கொள் உன் அன்பே
உன் அன்புக்கு இணையுண்டோ உன்னுள்ளே தோன்றி உதித்தேன் வித்தாக,
உன் அரவணைப்போடு மௌன-மொழி வழி-காட்டலால் முதிர்ந்தேன் முத்தாக
உன் உதிரம் தந்த ஊணே ஊட்டப் பெற்றதால் உடல், மனம், அறிவு சத்தாக
உன் வழி வளர்ந்தேன் மானிட-நெறி மேன்மை முன்னோடி தாயே பித்தாக
பித்தாக ஒரு முதிய பாட்டி தொட்டில்-இட்டுத் தாலாட்டி ஆத்ம-நாதம் புகட்டி
மத்தாக மனம் கதைகள் இன்னோர் பாட்டி நிலாச்- சோறு-ஊட்டி கால் நீட்டி
நித்தியமாய் நான் ஓங்க என்னை ஆளாக்கிய என் பாட்டிகளே என் வழிகாட்டி
சத்தியமே முதியோர் சூடு-பட்ட பசுவினர் பிந்தையர் வாழ்க்கைப் பத்திரமே
பத்திரமாய் தொடர்-துணை அன்பார் உடன் விளையாடு இணை சகோதரியாய்
பத்தினி, வாழ்வு-பங்கர் உடல்,பொருள்,ஆவி: தண்-மதி இருள்-ஒளி துணைவி,
நித்திலமாய் என்-மடி தவழ்ந்து விளையாடி மழலை-மொழியால் மகிழ்வித்த
சித்திர-மகள், கன்னியாய் என் விருப்பம் போல் மருமகன் கொள்ள வாய்ப்பு
புத்திரனாய் என் மேல் இறைவனால் திணிக்கப்பட்ட மகனுக்கு இணையாக
புத்திரியும், நானே தேர்ந்து-எடுத்த மாட்டுப்-பெண் என் மாட்டே மருமகளும்
பத்தராய் பணி அலுவலக மங்கைச் செயலாளர் என் ஆணை செயல்படுத்தும்
வித்தகர்காள் பல்லுரு மாது-இனமே உனையன்றி இன்பம் வாழ்-பொருள் ஏது.?
நட்சத்திரம் என்றால் வைரம்
குழந்தை பாடும் பாட்டிலே
பாரதிக்கோ வெறும் வைரமல்ல
கருநீலப் பட்டுப் புடவையில்
பதித்த நல் வைரமாம் அது
கண்ணம்மாவின் கரிய விழி
அதன் சுடர்தான் சூரியசந்திரர்
என்னே மயக்கமது மயக்குது
கவியின் உவமை மயக்கம்
தருதே தனிக் கிறக்கம்
.
kirukan
3rd October 2010, 02:20 PM
கிறக்கம் மயக்கம்
சேர்ந்தே வருகுது
கிறுக்கும் எனக்கு
இத்திரியின்
தர்கம் புரியாது!!!!!!!!!
Sudhaama
3rd October 2010, 10:24 PM
.
கிறக்கம் மயக்கம்
சேர்ந்தே வருகுது
கிறுக்கும் எனக்கு
இத்திரியின்
தர்கம் புரியாது!!!!!!!!!
தர்க்கம் புரியவில்லை எனக்குமே ஏன் இங்கு வீண் தர்க்கம் எனும் வாதம்.?
தர்க்கம் என்பது, தானே ஓர் முடிவை எடுத்துக்கொண்டு போர்-பிடிவாதம்.?
தர்க்கமாய் துவங்கி பின்னர் குதர்க்கமாய் விரிந்து, விகற்பமாய் விரோதம்.?
சொர்க்கம் தமிழ்-பூங்கா காண வந்தோம் அன்பர்கள் கூடி மகிழ விவாதம்.!
அற்பன் அல்லேன் சிறியேன் அன்பர்காள் உம்மோடு போட்டி வெட்டி போதம்.?
தற்புகழ்ச்சியாய் தன் பெருமை காட்ட எனது நோக்கம் அல்ல சிந்திப்பீரா.?
பொற்பரும் தமிழ்ப்-பண்பு உம் அனைவர் படை-விருந்து ருசிக்க வந்தேன்
நற்தமிழ் இலக்கியக்-கலை பல்லறிஞர் இளைஞர் முதியோர் கூட்டம் கும்மி
வெற்பனை இங்கு தலைப்புக் கருத்து-இசைய கூடி-ஆட அன்பால் இன்பமே.!!!
.
pavalamani pragasam
3rd October 2010, 10:46 PM
இன்பமே என் வீட்டில்
காதல்பறவைகள் காட்சி
வித வித வண்ணங்கள்
சளசள பேச்சுக்கள்
துருதுரு பார்வைகள்
அழகான கொஞ்சல்கள்
ஊஞ்சல் ஆட்டங்கள்
பல வித சப்தங்கள்
சின்னஞ்சிறு கிளிகள்
கூண்டுச் செல்லங்கள்
[html:2ae015fb9c]
http://farm5.static.flickr.com/4126/5053378645_f6f7accd6e_z.jpg
[/html:2ae015fb9c]
kirukan
4th October 2010, 02:10 PM
செல்லங்கள் எனசொல்லி
இல்லங்களில் செல்லில்
அடைத்தல் நியாயமோ
காதல் காட்சிகள்
திரையில் அன்றி
நேரில் காணலும்
தகுமோ!!!
pavalamani pragasam
4th October 2010, 04:36 PM
தகுமோ என்று யோசிக்கவில்லை
தைரியமாய் இரு முதிய தோழிகள்
அங்காடித் தெருவில் அலைந்து
அதையும் இதையும் வாங்கி
மனம் போல் உல்லாசமாகவே
பொழுதையும் காசையும் கரைத்து
பை நிறைய பொருள் சுமந்து
வீடு திரும்புகையில் களைப்பில்லை
ஆண்களோடு செல்வது தொல்லை
அனுபவம் இனிதாய் இருப்பதில்லை
புரியாத உண்மையிது அனைத்து
பெண்களும் ஒருமனதாய் சொல்வது
kirukan
6th October 2010, 04:53 PM
சொல்லுவது சுலபம்
அள்ளுவது கடினம்
இன்சொல் கூட
வன்சொல் ஆயின்
புண்ணாகும் மனது.
Sudhaama
6th October 2010, 07:13 PM
சொல்லுவது சுலபம்
அள்ளுவது கடினம்
இன்சொல் கூட
வன்சொல் ஆயின்
புண்ணாகும் மனது.
மனதிற் பட்டதைச் சொல்வது அவரவர் தனி வகை
வினயமாய் தன்னடக்கம் மிக்கோராய் தகையோரும்
தனக்கு நேரும் விளை-எதிர்ப்பைக் கருதாது கூவ
சினமே நலமோ நோக்கி நல-விரும்பியோரையே.?
.
pavalamani pragasam
6th October 2010, 09:04 PM
நல-விரும்பியோரையே முதலில் பார்க்கலாம்
விபத்து இயற்கை சீற்ற அழிவு கொடிய இழப்பு
ஏற்பட்ட அடுத்த கண்மே சடுதியில் களமிறங்கி
களைப்பின்றி உழைக்கும் அந்த நல்ல இனம் வாழ்க
Sudhaama
9th October 2010, 08:51 PM
Shifted.
pavalamani pragasam
9th October 2010, 09:24 PM
நல்லோரால் நாடும் வீடும் சிறக்கும்
எல்லா கிழமையும் பண்டிகை ஆகும்
அவரோ மிக அரிதாகவே அவதரிப்பர்
அதிசய நிகழ்வாக அவர் தோன்றுவர்
நாள் மாதம் வருடம் மூன்று எண்ணும்
பத்தென அழகாய் அரிதாய் நாட்காட்டியில்
நாளை நாம் காணும் அபூர்வம் போலவே
Sudhaama
9th October 2010, 11:46 PM
.
வாழ்க எல்லோர்-நலம் விரும்பியோரே கழனி நெல்லோரே.!
ஆழ்பொருள் மாந்தர் புரிந்தால் வாழத்தெரிந்த வல்லோரே.!
ஏழ்மையே பிறர் கெடுத்து இன்புறு தீயர் மாடி புல்லோரே.!!
தாழ்மையற மானிடம் நெல்லால் புல்லும் பயன் நல்லோரால்.!!!
நல்லோரால் நாடும் வீடும் சிறக்கும்
எல்லா கிழமையும் பண்டிகை ஆகும்
அவரோ மிக அரிதாகவே அவதரிப்பர்
அதிசய நிகழ்வாக அவர் தோன்றுவர்
நாள் மாதம் வருடம் மூன்று எண்ணும்
பத்தென அழகாய் அரிதாய் நாட்காட்டியில்
நாளை நாம் காணும் அபூர்வம் போலவே
.
Sudhaama
12th October 2010, 10:06 PM
.Shifted
.
pavalamani pragasam
12th October 2010, 10:45 PM
வாழ்கிறாயா நலமாய்
தண்ணீர் போதுமா
வெளிச்சமும் நிழலும்
சரியாய் கிடைக்கிறதா
காலையில் விழித்ததும்
பாசமாய் கேட்கிறேன்
வாசலில் வளர்க்கும்
அத்தனை செடியிடமும்
பச்சை முகங்களிலே
எத்தனை பரவசம்
Sudhaama
12th October 2010, 11:12 PM
.
நாளை நாம் காணும் அபூர்வம் போலவே அதோ சுவர்க்கம் என மயங்கி வீணே
வேளைக்கு-ஒரு கொள்கை அறிவிற்கு-ஒவ்வா வாழ்-நெறி உயர்-பிறவியனே
காளை வயதிலேயே பிற்கால நல்வாழ்வுக்கும் உகந்த அஸ்திவாரம் இடவே
ஆளை வேலை படைத்தான் மனிதனாய் பிறந்த நீ, மனிதனாய் வாழ்கிறாயா.?
.
.
வாழ்கிறாயா நலமாய்
தண்ணீர் போதுமா
வெளிச்சமும் நிழலும்
சரியாய் கிடைக்கிறதா
காலையில் விழித்ததும்
பாசமாய் கேட்கிறேன்
வாசலில் வளர்க்கும்
அத்தனை செடியிடமும்
பச்சை முகங்களிலே
எத்தனை பரவசம்
.
.
Sudhaama
14th October 2010, 08:55 PM
Shifted.
pavalamani pragasam
14th October 2010, 10:26 PM
சிதறாட்டம் பெண்ணின் சிந்தனையில்
சிரித்தால் ஏன் சிரித்தாய் என்கிறாள்
சினந்தால் முகம் கருத்து வாடுகிறாள்
சந்தேகம் பேயாய் அவளை ஆட்டிட
மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவ
மணவாளன் பாடுதான் திண்டாட்டம்
Sudhaama
14th October 2010, 11:00 PM
[tscii:2e5f5ca883]
-
.
பரவசமே ஆகா பேரின்பம் தனை மறந்த நிறை ஆனந்தம் புவி மாந்தர்
தரம்-என உயர்-பிறவியர் எனத்-தகு அறிவிற் சிறந்த ஞாலத்து-மிக்கானே
உரம் உறு உண்மையில் உலகில் உயர்வற உயர்நலம் உடையவா உத்தம
பிறவியே நிறை-ஆனந்தம் முழுமை அனுபவிக்கத்-தெரிந்தவன் நீ மட்டுமே
பிற பிறவியர் எதற்கும் இல்லா வகையில் நான்கு மா வல்லமைகள் கொண்ட
சிரமார் பிறவியனே அறிவு, உடல்,மனம், ஆத்மா உன்னிலும் மேலோர் உண்டோ.?
வர-மைந்தா இறைவன் மிருகம் இடைப்பிறவி தெய்வ-மிருகம் நீ மாத்திரமே
நர மனிதனாய் நிறை பேரின்பம் எது இதுவென புவி-சுவர்க்கம் கொள இயலும்
பரன் இறைவன் படைத்தான் உன்னை மட்டும் ஆனந்தம் நால் வகை வளமே
திறம் உனது நினைந்தாயோ உடல், அறிவு மனம் அறம் அன்பால் ஆத்மானந்தம்
பெற வல்லவன் நீ மட்டுமே மனிதா அதுவே பரவசம் என்னும் நிறை ஆனந்தம்
அறமும் அன்பும் பண்பும் அறிந்த மனிதரே எனினும் மனிதராய் வாழ்கிறோமா.?
பரவசமோ பசுமை இயற்கை நோய்-செய்து அழி-ஆட்டம் தற்கொலை இலவசமே
பரவசமோ மது-குடித்து மாது-பிடித்து நிலை-மறந்த நாணம் இலா குதியாட்டம்.?
கரகாட்டம் பெயரிட்டு இங்கு சிலர் கரகக்-குடமே இல்லா வெறும் கையாட்டம்?
கரகக்-குடம் கை-ஏந்தி தடுமாறி தாறுமாறு திசை குதி அந்தாதியோ சிதறாட்டம்.?
சிதறாட்டம் பெண்ணின் சிந்தனையில்
சிரித்தால் ஏன் சிரித்தாய் என்கிறாள்
சினந்தால் முகம் கருத்து வாடுகிறாள்
சந்தேகம் பேயாய் அவளை ஆட்டிட
மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவ
மணவாளன் பாடுதான் திண்டாட்டம்
.[/tscii:2e5f5ca883]
Sudhaama
25th October 2010, 06:41 PM
,
Shifted.
.
pavalamani pragasam
25th October 2010, 09:33 PM
அந்தாதி பாடிக் களிப்பது
அந்தி மாலை பொழுதுக்கு
அத்தனை உவப்பானது
அவ்வப்போது நாங்கள் கூடி
அற்புதமான பாட்டுக்களை
அள்ளி விடுவது குதூகலம்
அங்கே வயது வரம்பின்றி
அழகிய நிலவொளி நிரம்ப
அரங்கேறும் கொண்டாட்டம்
அன்பான குடியிருப்பிலுண்டு
Sudhaama
25th October 2010, 10:00 PM
.Shifted.
pavalamani pragasam
25th October 2010, 10:13 PM
கருத்தே ஏன் மறைந்தாய்
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கவிதையை மறந்தாய்
கதையை துறந்தாய்
காட்டுக்குள் போனாயோ
கருமேகம் புகுந்தாயோ
கருவாய் வளர்வாயே
காத்திருப்பேன் நான்
Sudhaama
25th October 2010, 10:24 PM
[tscii:ead8bccd2b]
-
திண்டாட்டம் எங்களுக்கு தமிழ்-கூறும் நல்-உலகோர் இந்த மன்றம்
கொண்டாட்டம் தமிழ் கவிதை-இன்பம் காண வந்தோம், நீங்களோ
சிண்டு-ஆட்டம் பிடிவாதம் ஏனம்மா பவளமணி, கிறுக்கர் பிறரும்.?
செண்டு-ஆட்டமே தலைப்புப்-படி அவரவர் நோக்கிலே கருத்து-அந்தாதி.!
குடியிருப்பில்-உண்டு கூடிக்-களிக்கும் சமுதாய பரந்த-நோக்கம் தமிழர் பண்பின்
படியே உலகோர்க்கே உதாரணமாய் அன்பே தலையாய அறம் வாழ்-நெறி கேளீர்
குடி-கொள் வீட்டுக்-குடும்பம், தெரு, ஊர், நாடு மட்டும் இன்றி மானிட-நெறியின்
அடிப்படை யாதும் ஊரே யாவரும் கேளிர் வையத்தோர் கூடி-ஒங்கு கருத்தே!
கருத்தே ஏன் மறைந்தாய்
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கவிதையை மறந்தாய்
கதையை துறந்தாய்
காட்டுக்குள் போனாயோ
கருமேகம் புகுந்தாயோ
கருவாய் வளர்வாயே
காத்திருப்பேன் நான்
.[/tscii:ead8bccd2b]
kirukan
26th October 2010, 04:27 PM
நானென்று இருத்தல் என்றும் நலிவு
நாமென்று இருத்தலே வலிவு.
-
கிறுக்கன்
Sudhaama
26th October 2010, 05:55 PM
.
Shifted.
pavalamani pragasam
26th October 2010, 07:59 PM
நானே இதை நம்பவில்லை
நினைத்தே பார்த்ததில்லை
நிகரில்லா இணைய தளம்
நித்தம் எனை ஈர்க்குமென்று
நீண்டு விரிந்ததிந்த வலை
நீர் நிலம் தாண்டிய நட்பலை
நன்மை தீமையின் கலவை
நல்லதை அறிவது கலை
Sudhaama
26th October 2010, 09:22 PM
.
நானென்று இருத்தல் என்றும் நலிவு
நாமென்று இருத்தலே வலிவு.
வலிவே எனக்கு, ஏனெனில் நான் தனியன்-அல்லேன் என் குடும்பத்தின் அங்கம்
எலி போல் ஒளியும் தனியொரு குடும்பமோ அல்ல, எங்கள் தெருவின் அங்கம்
கிலியால் தவிக்கும் தனியொரு தெருவோ அல்ல, எங்கள் தெரு ஓர் ஊரின் அங்கம்
புலியே புகினும் ஊரார் கூடியே விரட்டும் ஊரும் தனியோ, அல்ல நாட்டின் அங்கம்
நலிவோ நாடே தனியோ அல்ல, இயற்கை வாட்டம் இல்லா பண்டப்-பரிமாற்றம்
பொலிவுறு பொன்-உலகு போற்று-பிறவி மானிட சமுதாய அங்கம் நானும் நானே.!
.
நானே இதை நம்பவில்லை
நினைத்தே பார்த்ததில்லை
நிகரில்லா இணைய தளம்
நித்தம் எனை ஈர்க்குமென்று
நீண்டு விரிந்ததிந்த வலை
நீர் நிலம் தாண்டிய நட்பலை
நன்மை தீமையின் கலவை
நல்லதை அறிவது கலை
.
kirukan
28th October 2010, 05:31 PM
கலை தந்த சிலை
சிலையின் விலை
கலைக்கு சேருவதில்லை
கண்காட்சி கூடத்தில்
சிற்பங்கள் யாவும் சிரித்திருக்க
சிற்பி மட்டும் பசித்திருக்கிறான்....
-
கிறுக்கன்
Note: Kindly use Kavithaikku Kavithai (Meendum-Comments) thread for quoting this article.
pavalamani pragasam
28th October 2010, 06:04 PM
பசித்திருக்கிறான் கனவுகளுடன்
ரசித்திருக்கிறான் கண்களிரண்டால்
காத்திருக்கிறான் கனி பழுப்பதற்கு
பாத்திருக்கிறான் பொல்லாத பாசாங்கு
kirukan
28th October 2010, 07:00 PM
பாசாங்கு பகல்வேசம் பரிகாசம் இவையாவும்
அன்பை அறுக்கும் பண்புகளாம்.
-
கிறுக்கன்
Note: Kindly use Kavithaikku Kavithai (Meendum-Comments) thread for quoting this article.
pavalamani pragasam
29th October 2010, 09:22 AM
பண்புகளாம் நறுமணங்களாம்
பரிமாணங்களாம் வண்ணங்களாம்
பூவனங்களாம் உள்ளங்களாம்
பார்த்து பார்த்து வளர்ப்போம்
GP
29th October 2010, 06:20 PM
valaRum vayasu vandhuduchu
vaazhkai ippO maariduchu
kuzhandhayaai seidha kuRumbugal
paLLi paruva pazhakangal
kalloori galaattaakkal
yellAm ippa marandhucuhu
kaasu paNam sErkkanum
gouravamA irukkanum
yenakku kidaikaadha athanayum
yen kuzhandhaiku kudukanum
//sorry for posting in English.//
pavalamani pragasam
29th October 2010, 07:58 PM
//No problem, GP! :) //
குடுக்கணும் வாங்கிய கடனை வட்டியோடு
வானம் நினைத்தது மிக்க கரிசனத்தோடு
நீண்டன நீர்க்கோடுகள் வெள்ளிச் சரம் சரமாய்
நெளியாத நேர்கோடுகள் அத்தனையும் அம்பாய்
நளினமான வயலின் இசையாய் வருட சாரலாய்
நந்தியின் கை மத்தளமாய் சண்டமாருதமாய்
மண்ணும் குளிருது மனமும் சிலிர்க்குது
மறுபடியும் மறுபடியும் நிகழும் மாயமிது
Miss Kavya
29th October 2010, 08:20 PM
Maayam Idhu....Enna Maayam Idhu...
Kaalangal Kanavodu Karainthalum
Un Ninaivugal Nenjodu Puthainthalum
Maayam Idhu....Enna Maayam Idhu...
Oviyum Pola Pathinthai En Manathinil
Kattru Pola Karainthaei En Uyirinil
Maayam Idhu ...Enna Maayam Idhu...
Enrum Malarai Otti Vazhum Niram Pola
Un Ninaivai Otti Vazhum Naan
Maayam Idhu ...Enna Maayam Idhu...
Kan Mudi Paarthaal Un Chithirangal
Kan Mudithanamana Un Ninaviugal
Maayam Idhu ...Enna Maayam Idhu...
Unnai Paarthalum Urakkam illai Paaravittalum Urakkam Illai Kaaranam Enna?
En Kallamillatha Ullathil Unkanavugal Vara Kaaranam Enna?
Maayam Idhu ...Enna Maayam Idhu...
Nee Nirkkum Idam Sorkkamaka Theriya Kaaranam Enna?
Un Poovithalil Oru Punnagai Ennull Puyalaga Veesa Kaaranam Enna?
Maayam Idhu ...Enna Maayam Idhu...
Naan Nanakathan Irunthen Enakkul Nee Vanthathum
Ennai Naan Maranthen!
Indru Thaan En Idayathil Irukkum Thudipai Unmaiyanathu
Endru Therinthu Konden .....Unnakkavum Adhu Serthu Thudipathaal..!
Maayam Idhu ...Enna Maayam Idhu...
Maayam Idhu ...Enna Maayam Idhu...
kirukan
30th October 2010, 12:16 AM
இது அதுவிலிருந்து
இவன் அவள்
ஆன பின்னும்
இது அதுவாகவே
உள்ளது மனது.
-
கிறுக்கன்
Miss Kavya
30th October 2010, 01:38 AM
இது அதுவிலிருந்து
இவன் அவள்
ஆன பின்னும்
இது அதுவாகவே
உள்ளது மனது.
-
கிறுக்கன்
Very Nice! :D
pavalamani pragasam
30th October 2010, 06:39 AM
Welcome, Miss Kavya! Please use 'kavithaikku kavithai-comments; thread for posting your comments.
pavalamani pragasam
30th October 2010, 06:44 AM
மனது குதிக்கிறது குரங்காய்
குதூகலிக்கிறது குழந்தையாய்
குழந்தைகளுடன் கும்மாளந்தான்
காவேரிக்கரையில் இயற்கை மடியில்
களிக்கும் திட்டமிருக்கு நாளைக்கு
kirukan
30th October 2010, 11:18 PM
நாளை பொழுது விடியும்
என நம்பும் நீ
உன்னால் எதுவும் முடியும்
என நம்பினால்
பேர் இடியும் தாங்கும்
இதயம் பெறுவாய்...
-
கிறுக்கன்
pavalamani pragasam
31st October 2010, 07:03 AM
பெறுவாய் பேறுகளென்று
பிறக்கும் போது சொன்னது
பொன்னான தேவதை ஒன்று
பின்னால் தொடரும் நிழலாய்
பொறுமையாய் அதை கவனி
பெருமையே பறிக்கும் கனி
kirukan
31st October 2010, 01:45 PM
கனியான பின்னாலும் இனிவில்லை எனில்
தரமில்லை என்றே தள்ளிவைப்பர்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
31st October 2010, 06:26 PM
தள்ளிவைப்பர் தள்ளாத வயதை
தவிர்க்க முடிந்த தயங்கங்களை
தொடர்ந்து இளமை காக்குமிவர்கள்
துளிர்களுடனிசையும் முதுமரங்கள்
kirukan
31st October 2010, 11:34 PM
மரத்தை வெட்டினால்
அது சாய்ந்து
காய்ந்து விறகாகும்
மனதை வெட்டினால்
உயிர் ஓய்ந்து
உடல் உறைந்து
விறகொடு இரையாகும்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
1st November 2010, 08:22 AM
இரையாகும் துளி சத்தமும் துண்டு காட்சியும்
ஐம்புலன் வழி செல்லும் அத்தனையும் மேலும்
கூரான இளம் மூளைத்திறனும் கற்பனாசக்தியும்
விழுங்கும் நம் சிறு மழலை செல்வங்களுக்கே
kirukan
1st November 2010, 10:48 PM
செல்வமே செல்லமாய் எண்ணி
செல்லும் வழியில் பல
இல்லங்கள் இல்லாது
தொலைகின்றன!!!!
-
கிறுக்கன்
pavalamani pragasam
2nd November 2010, 09:28 AM
தொலைகின்றன அலுப்பும் அசதியும்
பின்னணி இசையாய் சாரல் கேட்க
மெல்ல உறக்கம் இமைகளை அழுத்த
கண்விழிக்கும் காலை மெத்த சுகமே
bis_mala
2nd November 2010, 06:59 PM
சுகமே
சுகமே ...............
அகமே மகிழென்று
..........................
உகமே மிகுதீப ஒளிகூரக் கவிபடைப்பீர்.
உகமே =உலகமே.
தீபஒளித் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும்.
pavalamani pragasam
3rd November 2010, 09:29 AM
படைப்பீர் அறுசுவை உணவு
பலகார வகைகள் ஒரு நூறு
பரிமாறும் பாங்கும் ஓர் அழகு
பாலகரை வளர்க்கும் அன்னையரே
பாசமெனும் நெய் விட்ட விளக்காய்
பரிமளிக்கச் செய்தீரே உயிரையூட்டி
பரவசமாய் பல்சுவை கதை சொல்லி
பகலவனாய் பலவானாய் திருமகவை
பிரகாசிக்க வைக்கும் வித்தகரே
பல கோடி தீபங்களாய் ஒளிருங்கள்
bis_mala
3rd November 2010, 10:17 PM
ஒளிருங்கள் உயருங்கள் தம்கை
உலர்வின்றி ஒருநூறு பலகாரம் வைத்து
உண்டாடிக் கொண்டாடும் உணர்வு காண்பீர்.
pavalamani pragasam
4th November 2010, 08:12 AM
காண்பீர் தெளிவாய்
உமது முகத்தை
உலகக் கண்ணாடியில்
உணர்வீர் உண்மையை
kirukan
4th November 2010, 06:17 PM
தீபாவளி திருநாள்
உண்மையை உணர்ந்த
நேரம் உயிர் பிரிந்தது
உயிர் பிரிந்த நாள்
உயிருடன் உள்ளது....
அனைவருக்கும் கிறுக்கனின் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
4th November 2010, 07:50 PM
உள்ளது ஒளி கண்ணில்
ஊற்றாக உள்ளத்தில்
உற்சாக வெள்ளத்தில்
உலகம் உருள்கின்றது
Kajan
8th November 2010, 08:45 AM
உருளும் உடலிங்கில் ஒட்டும் அழுக்கெல்லாம்
பொருளில் கண்ணேறிப் பொய்யில் வாழ்வதனால்
கருகும் விறகாய் கலியுக மானிடம்
மிருகமே மேன்மையாம் மெய்தான் தெரியுமோ
அன்புடன் கஜன்
pavalamani pragasam
8th November 2010, 09:01 AM
:)
தெரியுமோ சொர்க்கம் லேசாய்
தூறல் தொடர்ந்து கேட்கையில்
இதமான இனிய நினைவுகளில்
சுகமாய் போர்த்திய போர்வைக்குள்
Kajan
9th November 2010, 02:06 AM
போர்வையாய் இருளிங்கு பொழுது விடிந்தாலும்
ஊர்கின்ற ஆமைகளாய் உத்தமத்தை தொலைத்தவராய்
பார்மீது என்றென்றும் பாவங்கள் செய்பவராய்
நார்மீது நாட்டியமோ நல்லவர்தான் எங்குண்டு?
pavalamani pragasam
9th November 2010, 11:06 AM
எங்குண்டு நல்ல குதூகலம்
கண்ணனின் கோகுலம் எது
களியாட்டங்களின் களம்
குழந்தைகள் வாழுமிடமது
kirukan
12th November 2010, 08:26 PM
மது உண்டு மதி கெட்டபின்
விதி நொந்தென்ன பயன்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
12th November 2010, 08:59 PM
பயனில்லா ஓட்டம்
பொருளில்லா ஆட்டம்
இங்கிருந்து அங்கே
அங்கிருந்து இங்கே
மாற்றி மாற்றி உதைக்க
மைதானம் முழுக்க ஓடி
களைக்கும் பந்தல்ல பெண்
பந்தயத்தில் வெல்லவோர்
பகடைக்காயுமல்ல அவள்
வாசலில் கிடக்குமோர்
மிதியடியுமல்ல அவள்
தன்னைத் தேய்த்து மணக்கும்
சந்தனந்தான் ஆனாலும்
தன்னை எரித்து ஒளியாகும்
மெழுகுவத்தியேயானாலும்
தகதக்கும் தங்கத் தகமை
தன்னிகரில்லாத தாய்மை
கொண்டவளை குலவிளக்கை
கொண்டாடுவாயா பந்தாடுவாயா
கொக்கரிக்கும் மூட ஆணினமே
kirukan
14th November 2010, 02:06 PM
(அடக்கி ஆளுதலில்)
ஆணினம் 50%(முன்பு 85%) எனில்
இதில் இப்போது
பெண்ணினம் 40%(முன்பு 5%)
சமனிலை அன்றும் இன்றும் 10%
ஆணாதிக்கம் தேய
பெண்ணாதிக்கம் வளர
ஆணாதிக்கம் எதிர்ப்போர்
பெண்ணாதிக்க வளர்ச்சி
சரி என்பாரோ
ஓரினம் செய்தல்
தவறெனில்
அதையே மறு இனம்
செய்தல் தவறன்றோ!!!
-
கிறுக்கன்
pavalamani pragasam
14th November 2010, 07:22 PM
தவறன்றோ மேற்கில் சூரிய உதயம் தேடல்
கருத்த பாறாங்கல்லில் நார் உரிக்க எண்ணுதல்
வஞ்சகர் நெஞ்சில் ஈரம் சுரக்கக் காத்திருத்தல்
தீர்வுகள் காலத்தே வருமென நம்பாதிருத்தல்
kirukan
21st November 2010, 04:11 PM
நம்பாதிருத்தல் நலமே
நகை பணம் காட்டி
நய வஞ்சகத்துடன்
நளினம் சேர்த்து
நஞ்சாய் வரும்
மின்னஞ்சலை!!!!!
-
கிறுக்கன்
suvai
21st November 2010, 09:02 PM
:thumbsup:
pavalamani pragasam
21st November 2010, 09:30 PM
மின்னஞ்சலை கற்பனை கூட பண்ணவில்லை
காசிக்கு தொலைபேசி தொடர்பையே அதிசயமாய்
களிப்புடன் யோசித்தான் முண்டாசுக் கவிஞன்
தீர்க்கதரிசியென்கின்றோம் அதில் உண்மையுளதோ
ஐயோ பாவம் அப்பாவி பாரதி அவனுந்தான்
மனதில் எதை நினைத்தானோ ஏன் சொன்னானோ
அச்சமும் நாணமும் பெண்டிர்க்கு வேண்டாமென்று
பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனதே
முட்டிக்கு மேலே குட்டை பாவாடை
தோள்பட்டைக்கு கீழே மேலாடை
வளை தொலைத்து மூளியாய் கைகள்
வெறிச்சென்ற பொட்டில்லா பாழ் நெற்றிகள்
பிடரி மயிர் சிலுப்பும் காட்டுக் குதிரைகள்
பிறன் மனை நோக்கும் சிவந்த சேல் விழிகள்
கடிவாளம் போட்டிட வேண்டாமிவர்க்கு
கட்டுப்பாடென்பது வேம்பாய் போனதின்று
ஆணைப் போல் அவளும் இங்கே சிரைக்கிறாள்
வாகனமோட்டி சாலைகளில் விரைந்து பறக்கிறாள்
இச்சைகளின் பின் சென்றிழிந்து கொண்டிருக்கிறாள்
இலக்கணம் புதிதாய் எழுதிடத் துவங்குகிறாள்
கைப்பாவையாய் கைதியாய் இருந்தவள் கையில்
விளையாட்டுப் பொம்மையாகின்றான் ஆடவனின்று
பழி வாங்கும் படலம் துவங்கிவிட்டதோ
பாட்டன் பூட்டன் பாவம் பேரன் மேலோ
மேளதாளத்தோடு உறவுசனத்தோடு சென்று
மணமகன் பரிசம் போடுவான் விமரிசையாய்
மறுநாள் அவனை அழைத்து நீயாய் விலகிவிடு
எனக்கொரு காதலன் இருக்கின்றான் என்பாள்
அவளை நல்லவளாக்குகிறாள் இன்னொருத்தி
ஆண்பாவத்திற்கு அஞ்சாத அஞ்சன விழியாள்
மணவறை வரை அழைத்து வந்து மாலை சூடி
பள்ளியறையில் அவனுக்கு பெப்பே காட்டுகிறாள்
மாற்றானை மனதில் வரித்தவள்
விடுதலை தந்துவிடு என்கிறாள்
விலையாய் லட்சங்கள் கேட்கிறாள்
பாதகி இவளோ கொல்லிப்பாவை
அவளைப் பெற்றவளோ பெரும் பாதகி
பரப்புவாள் சேதி ஆண்மையில்லையென
சட்டமும் சுற்றமும் சாதகமாகிவிட
சதிராடும் அரக்கிகளை கண்டோமே
முட்டையிட வெறுக்கும் இக்கோழிகள்
பதறாது பகல் கொள்ளை அடிக்கையிலே
ஒன்றின் பின் போடும் முட்டைகள் ஏராளம்
மனத்துணிவில் துணி துறத்தலில் தாராளம்
இல்லத்தரசி பட்டம் வேண்டாமடா
இல்லிலிருந்து நீயே இனி நடத்தடா
புதிய வேடம் ஏற்க பொறுப்பாய் வாடா
உன் பால் மனம் எனக்கு வசதியடா
பகலில் உழைத்த களைப்பைக் களைய
இரவில் பப்பில் களித்து வருவேனடா
விசையுறும் பந்தாய் நான் ஆனேனடா
வெளியூரும் வெளிநாடும் அழைக்குதடா
விரல் நுனியில் உலகை ஆள்வேனடா
வேண்டிய சுகமெல்லாம் காண்பேனடா
என் வழி தனி வழியென உணர்வாயடா
தலையிட்டால் உன் தலை இருக்காதடா
கண்ணும் காதும் கூச வேண்டாம்
பார்த்துக் கேட்டுப் பதற வேண்டாம்
மடிந்து போகட்டும் பழைய மகிமைகள்
மரத்துப்போகட்டும் மனித உணர்வுகள்
இன்றைய உண்மை நிலவரம் இதுதானே
ஊடகங்களதை உரக்கச் சொல்கின்றனவே
விளக்கின்று கொடிய விலங்கானது
நாடும் திக்குத்தெரியாக் காடானது
மன்றத்தில் வீச மறந்த தென்றலும்
கூட்டில் கூவ மறுத்த குயிலும்
இயற்கை விதி தாண்டிய விளைவுகளே
இதனால் கதி கலங்கும் பூலோகமே
GP
23rd November 2010, 11:50 AM
[tscii:01f15dedc0]பூலோகமே புதிதாக
புதிதாக பூக்கல் பூக்க
பூ போல பிறந்தாய் பாலகனே
பாலகனை பார்த்தால் பரவசமும் பாசமும் பொங்கிடுதே
//I have tried this poem (???) such that
all the words starts with same letter,
ending word of a sentence becomes starting word for next sentence, and
number of words in each sentence gets incremented for each sentence (2 words in 1st sentence till 5 words in last sentence)//
Is my tamil font readable to you all?
This is what I have written.
poologamE pudhidhaaga
pudhidhaaga pookkal pooka
poo pOla piRandhaai paalaganE
paalaganai paarthaal paravasamum paasamum pongidudhE[/tscii:01f15dedc0]
pavalamani pragasam
23rd November 2010, 03:50 PM
[tscii:1628d60757]பொங்கிடுதே பாலும் கவனம் சிதறினால்
தீய்ந்த வாடை அபாய மணியாய் அழைக்க
அணைந்த அடுப்பும் வீணாய் போன பாலும்
சவாலாய் வெருட்ட பாலை மறுபடி காய்ச்சி
அடுப்பைக் கழுவி துடைத்து இடுப்பொடியுமே
விசிலடிக்கும் பால் குக்கர் நல்ல மாற்றாகுமே [/tscii:1628d60757]
kirukan
25th November 2010, 12:02 PM
மாற்றாகும் மாற்றங்கள(பெரும்பாலும்) மன மகிழ்வுதரும்
உடல் மழுங்க வைக்கும்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
25th November 2010, 12:36 PM
வைக்கும் இடத்தில் வைக்கும்
வகையும் வழியும் மறக்கலாமோ
விழ மறுக்கும் காய்ந்த சருகினை
வைத்தனர் முதுமக்கள் தாழிக்குள்
வேண்டும் அந்த விவேகம் நமக்கும்
வருமா அந்த விடுதலை மீண்டும்
kirukan
3rd December 2010, 11:51 AM
இருதய அடைப்பு
மீண்டும் மீண்டும் மீண்டு வர
மூன்றாம் முறை இறந்தாரே.
-
கிறுக்கன்
pavalamani pragasam
3rd December 2010, 12:56 PM
இறந்தாரே இருந்தும் இல்லாதாரே
இயற்கையை ரசிக்க தெரியாதார்.
kirukan
9th December 2010, 09:55 AM
தெரியாதார் தெரியலாம் தெரிந்தும் தெளியாதார்
தெரிந்ததால் திரிந்து துயருறுவர்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
9th December 2010, 01:24 PM
துயருறுவர் சிறு வயதில் சிறு தடங்கலுக்கும்
தொடராய் வரும் சவால்களும் சறுக்கல்களும்
தாமரை இலை தண்ணீராய் தள்ளாத வயதினில்
தன்மையை மாற்றிடும் மாயமென்ன மாயமோ
kirukan
9th December 2010, 02:26 PM
மாயமோ மந்திரமோ மாற்றுமோ மக்களை
முட்டாளாக்கி முடக்கும் மந்திரிகளை.
-
கிறுக்கன்
pavalamani pragasam
9th December 2010, 08:42 PM
மந்திரிகளை அரசவையில் மட்டுமா காணலாம்
சீட்டுக்கட்டில் இருப்பர் நால்வர் கருப்பாய் சிகப்பாய்
இல்லத்தரசியாய் இருப்பர் குட்டையாய் நெட்டையாய்
பார்லிமென்ட்டிலும் இருப்பர் கொள்ளையர் இனமாய்
kirukan
22nd December 2010, 06:57 PM
இனமாய் வாழ்ந்தும் இணக்கமாய் வாழாதோர்
சினமே சூழ்ந்து சிதைந்திடுவர்.
-
கிறுக்கன்
pavalamani pragasam
22nd December 2010, 07:18 PM
சிதைந்திடுவர் சுனாமியில் சிக்கிய கடற்கரையாய்
செம்மையாய் தன் வாழ்வை செதுக்க மறந்தவர்
சீராய் கோட்பாடுகள் தினமும் கடைபிடிக்காதவர்
சிற்றின்ப கடலில் திளைத்து தரம் தாழ்ந்தவர்
kirukan
23rd December 2010, 01:43 PM
தாழ்ந்தவர் உயர்ந்தவர் தகுதி தரத்தினால்
அன்றி வளத்தினால் அல்ல.
-
கிறுக்கன்
pavalamani pragasam
23rd December 2010, 03:53 PM
இங்கே தொடருங்கள்:
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=2324359#2324359
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.