PDA

View Full Version : Kavithaikku Kavithai (Meendum-Comments)



Pages : 1 2 3 [4]

chinnakkannan
9th February 2013, 01:35 AM
ஈனோ டைஜீன் என்னும் மருந்தெல்லாம் அந்தப் பொடி முன் ஜூ ஜூபி.. அதாவது அது தொலைந்து போன சகாப்தமில்லை..தொலைக்கப் பட்ட சகாப்தம்..,மாற்றங்களில் எனக்கு எப்போதும் உடன் பாடு உண்டு..ஆனால் சில விஷயங்கள் அப்படி அல்ல..
ஒரு முறை துபாயில் சென்றிருந்த போது(போன வருடம்) கால் கட்டை விரலுள் மண் புகுந்து விட்டது(ஷீ போட்டிருந்தும் எப்படி எனத் தெரியாது).. மதுரையில் இருந்த காலத்தில் கட்டை விரல் நக நுனியில் இரண்டு அல்லது மூன்று சொட்டு மண்ணெண்ணெய் விட்டால் பொசுக்கென்று மண்ணை வெளித் தள்ளி வலியும் குறைந்து விடும்..துபாயில் பெட்ரோல் தான்..அதில் பரீட்சை செய்ய உடன்பாடில்லை..டாக்டரிடம் சென்றால் கீறுவார்..ப்ளஸ் ஷீ போட முடியாது..ஆஃபீஸ் போவது சிரமம்..என்ன செய்ய என யோசித்துக் கொண்டிருக்கையில் - இருபத்திரண்டு வயது இளம்பெண் - அக்காவின் எதிர் வீட்டில் குடிவந்தவரின் மனைவி - கொஞ்சம காய்ச்சிய நல்லெண்ணெயை ஆற வைத்து விடுங்கள்..-எனச் சொன்னார்.. நம்ப மாட்டீர்க்ள் - ஒரு தடவை அன்றிரவே விட்டதில் சரியாகி மறு நாள் இங்கு வர முடிந்தது.. சில பழைய விஷயங்கள் அடுத்த ஜெனரேஷனுக்கு கண்டிப்பாய் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும்..
கையால் எழுதிக் கொண்டிருந்தோம்..தமிழ்த் தட்டச்சு கற்றோம்( நான் கற்கவில்லை) சுலபமாய் முரசு வந்தது கற்றோம்..இப்போது யூனிகோட்.. நாமும் மாறவில்லையா..என்ன.. (இன்ஃபேக்ட் கையால் எழுதிக் கொண்டிருந்தால் எனக்கு இவ்வளவு எழுத வருமா எனத் தெரியவில்லை- எழுதியது குறைவென்றாலும்)

pavalamani pragasam
9th February 2013, 09:39 AM
என்ன செய்வது? காலமெனும் காட்டாற்று வெள்ளம் கரையோர வளங்களை அடித்துச் செல்லத்தான் செய்கிறது; படிந்த வண்டல் நலத்தை மட்டும் எண்ணி ஆறுதல் பட்டுக்கொள்ளவேண்டியதுதான். ஒரு மிகச் சிறந்த மதி நுட்பம் கொண்ட பாட்டியின் செல்ல பேத்தியாய் வளரும் யோகம் பெற்றவள் நான். அவர்களிடம் எண்ணற்ற எளிய மருத்துவ யுத்திகள், தீர்வுகள் இருக்கும்; அஞ்சறை பெட்டிக்குள் இருக்கும் அத்தனையும் எத்தனையோ நோவு தீர்க்கும்; சின்ன குழந்தைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் வீரிட்டு அலறினால் கொஞ்சம் வெதுவெதுப்பான வெந்நீரை அந்த இடத்தில் விட்டால் உடனே நிவாரணம், ஆசுவாசம். இப்பொழுது உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி பல வித டெஸ்ட் பண்ணி பல வித இன்னல்களுக்கு பிறகு பணமும் ஆறாய் ஓடிய பிறகு அதே நிவாரணம் கிடைக்கும்; உயிர் பிழைக்காதென தெரிந்தும் நாட்கணக்கில் பிரக்ஞையில்லாதவரை ஐசியூவில் வைத்திருந்து கறக்க மட்டும் கறந்து உறவினரையும் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாக்கி- இதுவெல்லாம் நினைத்தாலே ரத்தக்கொதிப்பை வரவழைக்கும் விஷயங்கள். என் பிள்ளைகளிடம் நான் கறாராக சொல்லிவிட்டேன் - ஆசைப்பட்ட மாதிரி பொடுக்கென்று என் உயிர் போகாமல் தீவிர நிலை வர நேர்ந்தால் ஆஸ்பத்திரி மெஷினில் மட்டும் போட்டு கொல்லக்கூடாது என்று. அந்த காலத்தில் பெருசு இழுத்துக்கொண்டிருந்தால் ம்ம் பாலை விடுங்கள் என்பார்கள், விடுதலைதான்! மாறிவிட்ட நிறைய விஷயங்கள் வேப்பங்காயாய்த்தான் இருக்கிறது- இம்மாற்றங்கள் சுனாமி மாதிரி- வெறுங்கையால் அணையிட முடியாது என்ற விரக்தியில் வேதனையில் விலகி நிற்க வேண்டியதுதான். எவ்வளவு அழகாக பேறுகால பராமரிப்பை-பார்லி தண்ணி குடி, உலை நீரில் வெண்ணெய் போட்டு குடி, அப்படி படு, இப்படி எழு, பிள்ளை பெறுமுன்னும் பெற்றபின்னும் தினமும் தாம்பூலம், பிள்ளையை போஷாக்காய், புஷ்டியாய்-என் பிள்ளைகளுக்கு 'கொழுக் மொழுக்' என்று பட்டப்பெயர் உண்டு-வளர்க்க ஆயிரம் யோசனைகள் என முழுக்க முழுக்க பாட்டி அரவணைப்பில் வளர்ந்த என்னை விட யாரும் அதிகமாய் இக்கால மாறுதலுக்கு துக்கப்பட முடியாது!
சூடு படுத்திய தேங்காய் எண்ணெயை காதில் விட்டால் காது வலி போயே போச்! துரு பிடித்த ஆணி பாதத்தில் குத்திவிட்டால் எண்ணையை சூடாக்கி மிளகாய் பொடியில் குழப்பி வைத்து கட்டு போட்டால் போதும்; கண் சிவந்து நோகும் போது சில துளி பிள்ளைப்பால் விட்டால் போதும்-இப்படி கோடிக்கணக்கில் எளிய நம்பகமான வைத்தியங்கள். இவை இளந்தலைமுறையினருக்கு தெரியாது, சொன்னாலும் ஏற்காது!!! ஒரு ஸ்கான் எடுக்காமல் 3 பிள்ளை பெற்றேன், இத்தனை தடுப்பூசிகள் இல்லாமல் ஆரோக்கியமாய் அவர்களும் வளர்ந்தார்கள். இப்பொழுதுள்ள ஆரோக்கியமில்லா வாழ்கைமுறைகளில் ஊறியர்வர்களுக்கு முன்னோர்களின் ஆரோக்கியமான வழிமுறைகள் புரிவதேயில்லை. விளக்குவது வியர்த்தம். அன்றொரு நாள் முகநூலில் ஓவராக சானிடைஸ் செய்து உடல் எதிர்ப்பு சக்தியை குறைக்காதீர்கள் என்ற எச்சரிக்கை வந்தது மனதுக்கு இதமாய் இருந்தது. இந்த மாதிரி ஒன்றிண்டு குரல்கள் போதுமா? மஞ்சள் பூசி முக முடியை தவிர்த்து அழகு பேணாமல் பார்லருக்கு போய் கேடு வரவழைக்கவேண்டுமென்று முனைப்பாய் இருப்பவர்களிடம் எந்த பேச்சும் எடுபடுமா? ஆயாசமாய் இருக்கிறது.
ஆம், சுனாமி போல் மாறுதல் நம் நல்ல பாரம்பரியத்தை அழித்துவிட்டது.

chinnakkannan
9th February 2013, 02:00 PM
ஆதங்கத்தை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..ஏதாவது எளிமையான போன பரம்பரை வைத்திய முறைகள் என ஏதாகிலும் புத்தகம் வந்திருக்கிறதா..இல்லையெனில் நீங்கள் எழுத முயற்சிக்கலாம்

pavalamani pragasam
9th February 2013, 04:03 PM
அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் ஒருபோதும் எனக்கு வராது!!!

pavalamani pragasam
9th February 2013, 07:32 PM
அம்மி, உரல், திரிகல் போய் மிக்ஸி, கிரைண்டர் வந்த மாதிரி சுக்கு, மிளகு, திப்பிலி போய் மாத்திரைகள், மருந்துகள், களிம்புகள் வந்துவிட்டன. அன்று அல்லோபதி அவ்வளவாக அறியப்படாத காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அலமாரி தட்டொன்றில் எளிய மருத்துவ சாமான்கள் இருந்தன. ஜாதிக்காய், மாச்சக்காய், பேர் சொல்லாதது(சுட்ட வசம்பு) உரசி ஊட்டி வளராத குழந்தையில்லை. கையில் பூலாங்கிழங்கு கட்டி வைத்தோம், வாந்தி, மந்தம் கட்டுப்படுத்த. யாருக்கும் வாய்ப்புண் என்றால் மாச்சக்காயை உரசி தடவினோம். ஓமவல்லி செடியின் இலைகளை இருமலுக்கு மருந்தாக்கினோம். வாய் ஓயாத இருமலும் பனங்கல்கண்டுக்கு பயந்தது. அடிபட்டு ரத்தக்கட்டு, வீக்கம் என்றால் நாமக்கட்டியை அல்லது கரம்பல்(களிமண்) கட்டியை உரசி பூசினோம். ஓமமும் விரலி மஞ்சளும் தூளாக்கி சாம்பிராணியோடு சேர்த்து புகை பிடித்து தலையில் கோர்த்த நீரை வற்றச் செய்தோம். வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி லேசாக சூடு காட்டி வேனக்கட்டி மேல் வைத்து குணமாக்கினோம். நம் கையிலே எத்தனை எளிய மருந்துகள் இருந்தன. உங்கள் குடும்பத்தில் ஒவ்வாமை சரித்திரம் இருக்கிறதா அப்படியானால் நோ பூலாங்கிழங்கு, மஞ்சள் கலந்த குளியல் பொடி என்கிறார் குழந்தை வைத்திய நிபுணர். இன்று வெற்றிலை போடும் பழக்கம் இல்லை- அது புற்றுநோய் வரவழைக்குமென்று அந்த ஆரோக்கியமான பழக்கத்திற்கு தடா. இன்றும் என் மாமியார் வீட்டு அலமாரியில் வயிற்று உபாதைகளுக்கு ஒரு பாட்டிலில் சுக்குப் பொடியும் இன்னொன்றில் மங்குஸ்தான் தோல் பொடியும் இருக்கிறது. என் வீட்டு தோட்டத்தில் இன்றும் ஓமவல்லி செடி இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இவை தொடராது. பழைய பிரியத்தில் அவற்றை பழகியவர்கள் அவற்றை வைத்திருக்கிறோம். பழைய எளிய மருந்துப் பொருட்களை கண்ணாலும் கண்டிராத இளைய தலைமுறையினர் பாவம் என்ன செய்வார்கள். எத்தனை டாக்டர்கள், ஆஸ்பத்திரிகள், சோதனைக்கூடங்கள், மருந்துக்கடைகள்! எத்தனை விளம்பரங்கள், வலி நிவாரணிகள், எத்தனை அலர்ஜி எச்சரிக்கைகள்! இந்த மாற்றம் சரிதானா, பழையதை துறந்ததில் இழந்தது என்ன என்று சிந்திப்பது அடித்துப் போட்டுவிட்ட நவீன மாற்ற சுனாமிக்குப் பின் ஒரு வியர்த்தமான வேலையென்றே தோன்றுகிறது.

pavalamani pragasam
10th February 2013, 09:38 AM
அப்புறமாய் ஞாபகம் வந்தது: நிறைய உறவினர்களும் நண்பர்களும் கேட்டும் புத்தகம் பிரசுரிப்பதில் சுத்தமாய் ஆசை இல்லாமல் இருந்த எனக்கு அந்த யோகம் சமீபத்தில் தானாய் தேடி வந்தது ஒரு விந்தையான சம்பவம்! என்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை அறிந்த எனது மாமா மகள் எனக்கு ஒரு மொழிபெயர்ப்புப் பணி கொடுத்தாள். மின்னஞ்சலில் பகுதி பகுதியாக அவள் அனுப்பிய வாசகங்களை நான் மொழிபெயர்த்து அனுப்ப அவற்றை சரிபார்த்து கோர்த்து அவள் உறுப்பினராய் இருக்கும் அமைப்பின் தலைவரான பேராசிரியரிடம்(அவர் தான் வாசகங்களை எழுதியவர்) கொடுக்க அவரும் மிக்க மகிழ்ந்து பாராட்டினாராம். டிவிஎஸ் ஆதரவுடன் பிரசுரிக்கப்பட்ட இந்த சிறிய அழகிய வழுவழுப்பான தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தின் பின் அட்டையின் உள் பக்கம் அவள் பெயருடன் என் பெயரையும் தமிழாக்கம் செய்தவர்கள் என்று அச்சிடச் செய்துவிட்டார். தி ஹிந்துவில் அரைப் பக்க விமர்சனம் கிடைக்கப் பெற்ற இப்புத்தகம் மாநகரின் எல்லா இடங்களிலும் -முக்கியமாய் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் இருக்கும் பிரசாத விற்பனை செய்யுமிடங்களில் - தாராளமாய் விற்கப்பட்டும் விநியோகப்பட்டும் கொண்ட வண்ணம் இருக்கிறது. 'Rediscover Meenakshi Amman Temple Madurai(Self-Guided Tour with Temple Map) என்ற பெயர் கொண்ட இந்த புத்தகத்தில் மீனாட்சி கோவிலின் சில முக்கிய அழகிய சிற்பங்கள் ஓவியங்களின் புகைப்படங்கள் ஆங்கில தமிழ் விளக்கங்களுடன் இருக்கின்றன. விலை ரூ.20. அச்சில் என் பெயரைப் பார்த்து என்னை விட என் மக்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும்தான் அதிக மகிழ்ச்சி! எனக்கு தெரிந்தவர்கள் அதை படித்து விட்டு என்னை நேரில் பாராட்டும் போது நன்றாகத்தான் இருக்கு!:-D

venkkiram
10th February 2013, 09:47 AM
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி பிபி!

chinnakkannan
10th February 2013, 11:57 AM
வாழ்த்துக்கள் பி.பி. ஆமாம் அதோட சாஃப்ட் காபி கிடைக்குமா இங்கு எங்காவது பதிய இயலுமா..

pavalamani pragasam
10th February 2013, 12:34 PM
நன்றி, வெங்க்கிராம், சி.க.!
சாஃட் காப்பி? அதையெல்லாம் விசாரிக்க எனக்கு ஆர்வமேயில்லை! மதுரைக்கு அடுத்த முறை வரும் போது ஞாபகமாய் புத்தகத்தை வாங்கிவிடுங்கள்!

chinnakkannan
10th February 2013, 02:22 PM
வெங்கி ராம்.ரொம்ப டஃபா இறுதிவார்த்தை கொடுக்கறீங்க :) ஆமா ஃபோட்டோல்ல இருக்கறது யாரு..

venkkiram
11th February 2013, 06:40 AM
ஆமா ஃபோட்டோல்ல இருக்கறது யாரு.. http://www.espncricinfo.com/icc-womens-world-cup-2013/content/story/602947.html

chinnakkannan
12th February 2013, 10:58 AM
வெங்கி ராம்..ப. வீ.சு.மாமியிடம் காப்பிப் பொடி.. ரசித்தேன்.. இன்னும் இப்படி இருக்கிறார்களா என்ன.. கேட்பவர்கள் இருக்கலாம்..கொடுப்பவர்கள் குறைவு என நினைக்கிறேன்..

pavalamani pragasam
13th February 2013, 01:19 PM
வெங்க்கிராம், உங்கள் ஔடதக் கவிதை அருமை! பாராட்டுக்கள்!

சபா என்று ஒரு புதுக் கவிஞர் உயிர் பற்றி அழகாக, த்ரில்(தப்பாக முதலில் எதிர்பார்க்க வைத்து!) கலந்து எழுதியுள்ளார். அவரை ஊக்குவித்து இங்கே அழைத்து வாருங்களேன்!

venkkiram
13th February 2013, 10:15 PM
வெங்கி ராம்..ப. வீ.சு.மாமியிடம் காப்பிப் பொடி.. ரசித்தேன்.. இன்னும் இப்படி இருக்கிறார்களா என்ன.. கேட்பவர்கள் இருக்கலாம்..கொடுப்பவர்கள் குறைவு என நினைக்கிறேன்.. நன்றி சி.க. நீங்கள் சொல்வது சரியே. பழைய காலம்தான். என்ன செய்வது! நம் எண்ணங்களில் கடந்து வந்தவை இன்னும் மிச்சமிருக்கிறதே!

venkkiram
13th February 2013, 10:16 PM
வெங்க்கிராம், உங்கள் ஔடதக் கவிதை அருமை! பாராட்டுக்கள்!

சபா என்று ஒரு புதுக் கவிஞர் உயிர் பற்றி அழகாக, த்ரில்(தப்பாக முதலில் எதிர்பார்க்க வைத்து!) கலந்து எழுதியுள்ளார். அவரை ஊக்குவித்து இங்கே அழைத்து வாருங்களேன்! நன்றி. பி.பி.

சபாவின் கவிதை(ஆங்கிலத் தமிழில்) படித்தேன். நன்றாக இருந்தது.

pavalamani pragasam
14th February 2013, 09:08 AM
வெங்க்கிராம், கலையாய் கவலைப்படுபவர்களப் பற்றி எழுதிய கவிதையை நான் பதிவு செய்துவிட்டுப் பார்த்தால் உங்கள் நேர்மறை சிந்தனைகள் முந்தி வந்து பதிவாகியிருந்தன! எனக்குப் பிடித்த கருத்துக்கள்! அருமையான உவமானமும் கூட!

pavalamani pragasam
14th February 2013, 01:38 PM
சி.க. சிரிப்பு வந்துவிட்டது! ஆணும் பெண்ணும் இரு வேறு ஜாதி, வெவ்வேறு சிந்தனை தடங்கள், பார்வை கோணங்கள் கொண்டவர்கள் என்ற நிரூபணங்களில் ஒன்றாக சதிபதியின் சத்தமில்லா எண்ணவோட்டம் அமைந்திருக்கிறது! சும்மாவா சொன்னார்கள் இரு வேறு கிரகவாசிகளென்று! Men are from Mars and Women are from Venus!

chinnakkannan
14th February 2013, 03:48 PM
நன்றி பிபி.முன்பெல்லாம் கொஞ்சம் மனசுக்குள் ஓட்டிப் பார்த்துத் தான் எழுதுவேன்..இப்போது படக் கென இட்டு விடுகிறேன்..இன்னும் போக வேண்டும் தூர்ம்..மீ. ந.

pavalamani pragasam
16th February 2013, 09:18 PM
Sorry for the simultaneous post again!

chinnakkannan
16th February 2013, 10:52 PM
ithukkethukk sorry.. nallaa thaan irukku..purikirathaakku onnu eshuthalaamnu paarthEn..appuram paavam neengkannu vittuttEn..!

pavalamani pragasam
17th February 2013, 07:53 AM
ஏன் பாவம்??? :roll:

chinnakkannan
27th February 2013, 08:20 PM
ஏங்க அரசியல் பத்தில்லாம் எழுதறீங்க..?!!! :)

pavalamani pragasam
28th February 2013, 08:31 AM
புரியலை!:roll:
நான் ஒரு மக்கு அப்பாவி! என்னவாக உங்களுக்கு புரிந்தது?

chinnakkannan
28th February 2013, 10:14 AM
பெரியோர் கட்டிக் காப்பார் தர்மத்தை
பலனை அனுபவிப்பர் பின் சந்ததிகள்//?!

யாரையோ சொல்ற மாதிரி இல்லை.. தர்மம்னு சொல்ல முடியாது..ஒரு வேளை வினைப் பயன்?! கோடிகளில் புரளும் வாரிசுகள்லாம் படிக்கறோமே. பேப்பரில்..

pavalamani pragasam
28th February 2013, 01:27 PM
அடக் கடவுளே! தர்மம் செய்தால் சந்ததிகளுக்கு அந்த பலன் கிடைக்கும் என்றுதானே நினைத்தேன்! வினை ஒருவர் ஆற்றினாலும் பலன் வேறொருவருக்கு! நீங்கள் சொல்லும் செய்திகள் ரொம்ப சலித்துப்போய்விட்டது!

chinnakkannan
4th March 2013, 10:19 AM
காவேரி கண்ணன், ராகவேந்திரா கவிதைகள் அழகு.. என்ன ஒரு இடத்தில் இறுதிச் சொல்லில் எழுதவில்லை.. பரவாயில்லை..பிபி எதுவும் சொல்லவில்லை.. கா.க. நீங்க திருச்சிக் காரரா எனில் காவேரி அடை மொழியா..( நான் சின்னமனூர் இல்லை!!)

kaveri kannan
4th March 2013, 10:22 AM
சின்னக்கண்ணனே

காவிரிக்கரையில் பிறந்த அனைவருமே என் பொறாமைக்கு ஆளானவர்கள்..

செம்பருத்தி, மோகமுள் வாசித்த காலங்களில் முளைத்த பொறாமை..

உங்கள் வாசிப்புக்கு என் நன்றி!

( கங்கை அமரன் சொன்ன
சின்னமனூர் வாய்க்கா சேலக்கெண்ட மீனு...
அந்த ஊரா ?/??)

pavalamani pragasam
4th March 2013, 03:13 PM
தவறை கவனித்தேன் கண்டுகொள்ளவில்லை! ஆர்வத்தை குறைக்கக்கூடாதென்றுதான்!:noteeth:
காவேரி கண்ணன் சின்னக்கண்ணனுக்கு இளைத்தவர் இல்லை என்பது அவரது சளைக்காத பதிலில் தெரிகிறது! திரியில் கலகலப்புக் கூடுகிறது!:-D

pavalamani pragasam
4th March 2013, 03:19 PM
வாயும் வாயிலும் வேறு வேறு அல்லவா?:roll:
Literally taken it may be correct!:sigh2:

kaveri kannan
6th March 2013, 12:28 PM
சின்னக்கண்ணரே

நேற்றிருந்தார் இன்றில்லை எனும் பெருமை படைத்த இவ்வுலகை
அழகாய்ச் சிலாகித்த உங்கள் அண்மைக்கவிதைக்கு சபாஷ்!

( பதில் கவிதை சில நொடிகளில்..
துண்டு போட்டு இடம் பிடிப்பதில் எக்*ஷ்பேட்டுல்ல....)

chinnakkannan
6th March 2013, 01:43 PM
தாங்க்ஸ் காவேரி கண்ணன்.... அது சரி.. இப்ப நானும் எழுதிட்டேன்ல..

pavalamani pragasam
6th March 2013, 05:23 PM
போல்ட்டுகளின் புலம்பலாய் இருக்கிறது என்று யாராவது அடிக்க வரப்போகிறார்கள்!

chinnakkannan
6th March 2013, 07:32 PM
அதே அதே தான் நானும் எழுத வந்தேன்..என்ன இன்னிக்கு ஒரே ஆத்ம விசாரமாய் இருக்கிறது என.. நீங்கள் எளிமைத் தமிழில் சொல்லி விட்டீர்கள்!!

kaveri kannan
7th March 2013, 02:34 AM
போல்ட்டுகளின் புலம்பலாய் இருக்கிறது என்று யாராவது அடிக்க வரப்போகிறார்கள்!

அடிக்கத்தான் நினைக்கிறேன் இன்று.. தயங்கினேன்
என் கையும் நடுங்குதே என்று!

pavalamani pragasam
7th March 2013, 06:39 AM
:rotfl::noteeth:

venkkiram
7th March 2013, 09:38 AM
மன்னிக்கவும் பிபி. நதிகள் என்ற வார்த்தையில் தொடங்கி.. மு...டி..த்..து.. பதிவேற்றினால் உங்களுடையது அதற்கு முன்பாகவே..

chinnakkannan
7th March 2013, 10:11 AM
பரவாயில்லை வெங்க்கிராம்.. நானும் உங்களுடையதைத் தொடர்ந்து விட்டேன்..!

kaveri kannan
9th March 2013, 01:48 PM
நான் சின்னக்கண்ணரின் ரசிகனாகி விட்டேன்..

கவிதைக்குள் ஒரு கதையைப் பொதித்துவிட்டால் என்னைப்போல் எளியோருக்கும் எளிதில் புரிந்து 'அட, சொல்ல அத்தனை வசதி..

கணவன் மனைவி கதை
அப்பா அவர் சொன்ன பாடம் கதை
இன்று அந்த பாட்டி தண்டட்டி ---> வளையல் கதை..

நுணுக்கமான மனச்சித்திரங்களை எளிய தூரிகையால் வரைவது ஒரு கலை..
வாழ்த்துகிறேன் கவி ஓவியர் சின்னக்கண்ணனை!


-

chinnakkannan
9th March 2013, 02:55 PM
காவேரி கண்ணன்..வெட்கமா இருக்கு.. இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.. நன்றி

kaveri kannan
9th March 2013, 03:02 PM
இன்னும் வெகுதூரம் போகவேண்டும்..



The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep


Robert Scott நினைவாடல் உங்கள் பதிலில்..
இலக்கு எட்டுவது மட்டுமன்று..
பயணமும் சுகமானதே!

வாழ்த்துகள்..

pavalamani pragasam
9th March 2013, 04:08 PM
பேஷ்! பேஷ்!:clap:

pavalamani pragasam
9th March 2013, 04:13 PM
அப்புறம்...தண்டட்டி வளையலான கதை...என்ன ஜன்மங்கள்!:curse:

chinnakkannan
11th March 2013, 10:14 AM
நன்றி மறுபடியும் பிபிகா. அண்ட் கா.க.

**
வெங்க்கி ராம் நன்றாகச் சொன்னீர்கள் கடைசி வரி.. மனிதமற்ற் சமுதாயத்தில்..

venkkiram
15th March 2013, 12:11 AM
நன்றி திரு சின்னக்கண்ணன்!

அனைவரும் வருக
என்ற
பொதுக்கூட்ட அழைப்பிதழ் பழைய சுவரொட்டி
கிழிந்து தொங்க
உள்ளேயும்
பழைய போஸ்ட்ர்
யாரோ தொண்டனின்
கண்ணீர் அஞ்சலி...

நீங்க ஒரு கவிதை ராட்சசன்! சின்னச் சின்ன வார்த்தைகளில் பெரிய பெரிய அளவுக்கு காட்சிகளை மனதில் ஓட விடுகிறீர்கள்.

chinnakkannan
15th March 2013, 01:30 AM
//திருட்டுத் தொழில் பலரைப் பாதிக்கிறது என்பது
திருடனுக்குத் தெரியவேயில்லை// வெங்க்கி ராம்..ஹி ஹி எனச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறீர்கள் எனச் சொல்ல வந்தால். நீங்கள் என்னைச் சொல்லியிருக்கிறீர்கள்..

நன்றி..இன்னும் எழுதணும் நன்றாய்.

pavalamani pragasam
15th March 2013, 08:11 AM
நிதர்சனம் உணர்த்தும் தத்துவம் அருமை!

pavalamani pragasam
16th March 2013, 07:55 AM
அழகான உவமானம், வெங்கிராம்!

chinnakkannan
16th March 2013, 09:15 PM
வெங்க்கி ராம் உவமை வெகு அழகு.

**
பிபிக்காவ். நான் இந்த ஆட்டைக்கே வரலை..இவ்ளோ ஸ்பீடா இருந்தா.. என்னால எல்லாம் இப்படி க்கவிதைல ஐக்கியமாக்றது கொஞ்சம் கஷ்டம்..

venkkiram
16th March 2013, 09:46 PM
நன்றி பிபி, சிக.

உங்களின் கவிதைவரிகளைக் பார்க்கையில் கத்துக்குட்டியான எனக்கு மலைப்பாக இருக்கு. என்னால் முடிந்தவரை நீந்தப் பார்க்கிறேன்.

pavalamani pragasam
17th March 2013, 08:21 PM
இத்தனை நாளாய் எங்கே போயிருந்தீர்கள், கிறுக்கன்?

chinnakkannan
17th March 2013, 10:12 PM
கிறுக்கரே.உங்களது இடுகையைப்படிக்கமுடியவில்லையே.. நலமாக இருக்கிறீர்களா

pavalamani pragasam
18th March 2013, 08:05 AM
கிறுக்கனின் இடுகை:

பாட்டி சொன்ன கதைகள்
நெட்டில் உண்டு
கதை சொன்ன பாட்டிகள்தான்
வீட்டில் இல்லை.

The trick is to click seetings at the top of the page->Tools->encoding->unicode

venkkiram
18th March 2013, 08:08 AM
PP.. excellent one. Request you to post this in that thread so that everyone can view and read the poem without any hassle of browser.

pavalamani pragasam
18th March 2013, 01:06 PM
பிருந்தாவன காதலர்களை 'லோக்கலான' பாத்திரங்களாக்கியது ரசிக்கும்படி உள்ளது!

chinnakkannan
18th March 2013, 02:56 PM
இது பாராட்டா திட்டா :)

kirukan
18th March 2013, 04:38 PM
கிறுக்கரே.உங்களது இடுகையைப்படிக்கமுடியவில்லையே.. நலமாக இருக்கிறீர்களா

மிக்க நலம்!!!
இப்போது இகலப்பையில் டைப் செய்துள்ளேன் ...எழுத்துக்கள் தெரியும் என நம்புகிறேன்.

chinnakkannan
18th March 2013, 06:04 PM
nhm writer யூஸ் பண்ணுங்க..எங்க அம்மா பாட்டில்லாம் அதைத் தான் யூஸ் பண்றாங்க..:) எழுத்தும் தெரிகிறது..உங்கள் திறமையும்..

pavalamani pragasam
18th March 2013, 08:06 PM
இது பாராட்டா திட்டா :)

திட்ட வேண்டுமென்றால் நேரடியாக செய்யமாட்டேனாக்கும்?

chinnakkannan
18th March 2013, 08:42 PM
நன்றிங்கோவ்.. கண்ணா சாக்ரதையா எழுதுப்பா..( நான் என்னைச் சொன்னேன்...!)

venkkiram
18th March 2013, 08:45 PM
இது வேலைக்கு ஆகாது. நாமளும் எதோ கிறுக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ள இரண்டு மூன்று கவிதை கைகுலுக்கல்கள் நடந்து முடிந்து விடுகிறது. என்ன செய்ய!

chinnakkannan
18th March 2013, 08:46 PM
அப்படிஎல்லாம் விட்டுடலாமா..வாங்க வாங்க..

pavalamani pragasam
19th March 2013, 01:38 PM
கூட்ஸ் வண்டி எக்ஸ்பிரஸ் ஆகி புல்லெட் ஆகிவிட்டதில் பரவசமாயிருக்கிறது!

chinnakkannan
19th March 2013, 01:45 PM
திருஷ்டி சுத்திப் போடுங்க..

pavalamani pragasam
19th March 2013, 01:58 PM
ஆமாமா! எத்தனை தடவை ஏமாந்துவிட்டேன் எனக்கு முன்பே பதிவாகிவிட்டதைப் பார்த்து! ஆத்தாடி இந்த ஜெட் வேகத்தில் முழி பிதுங்கிவிட்டேன்!

chinnakkannan
19th March 2013, 08:50 PM
மிஸ்டர் ஒட்டகச் சிவிங்கியை நினச்சா தான் பாவமா இருக்கு:)

pavalamani pragasam
20th March 2013, 08:03 AM
தோப்பனாரும் ஆத்துக்காரரும் பகிர்ந்துக்கிற பாரம்தானே! ரெண்டு பேரா சமாளிக்க முடியாதா என்ன?

chinnakkannan
12th April 2013, 09:54 PM
MS welcome..நல்லா இருக்கு..தைர்யமா எழுதுங்க

pavalamani pragasam
13th April 2013, 08:40 AM
Ms, நாம எழுதுனா அது கவித! வேற இலக்கணமெல்லாம் இல்ல!

Madhu Sree
13th April 2013, 12:23 PM
Thx a lot for the encouragement ck & pp mam :bow:

Madhu Sree
15th April 2013, 05:47 PM
@srini, very nice one... :clap: :bow: loved it... :D

pavalamani pragasam
15th April 2013, 06:47 PM
நல்ல சவுக்கடி, srini! திருந்துமா தவறுகின்ற ஆணினம்?

chinnakkannan
17th April 2013, 12:37 PM
தாங்க்ஸ் ஸ்ரீனி

Iunffx
18th April 2013, 07:00 PM
@srini, very nice one... :clap: :bow: loved it... :D

Thanks Madhu :) கண்ணால பார்க்கின்ற விசயம். இப்படி ஒரு சூழ்நிலை வந்தா அந்த வலி சம்பந்தபட்டவங்களுக்கு மட்டுமே தெரியும். எதுவுமே கொஞ்சம் நம்மகிட்ட இருக்கற திடத்த பொறுத்தும் இருக்குல்ல. யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்பது கருத்து.


நல்ல சவுக்கடி, srini! திருந்துமா தவறுகின்ற ஆணினம்?


நன்றி PP Madam :) எங்க திருந்தறாங்க. எத்தன குடும்பம் ஆழிஞ்சாலும் யாருக்கும் புத்தி வரது இல்ல. மனிதனிடம் தாராளமாய் கொட்டி கிடக்கும் அலட்சியம், குடியில் விழவைக்கும் பல சந்தர்பங்கள். கலைவது அரிது :neutral:


தாங்க்ஸ் ஸ்ரீனி

Thanks for the likes Chinnakannan :) am a newbie to this hub, just noticing we have a separate comments section :) வீட்ட எதிர்த்து கல்யாணம் சென்சுட்டு போன மகளை கூட மகள்-னு பார்க்காம பலவேறு விதமா ஒரு குடும்பம் உதாசின படுத்தரத நீங்க எழுதிய விதம் சாட்டை அடி. எனக்கு தெரிஞ்ச சில ஆசாமிகள் இருக்காங்க இந்த காரியத்த பண்ணிட்டு. I have noted that poem, to make them read :hammer: இனி எனக்கு கிடைக்காம இருந்த சரி சாட்டை அடி :-D

chinnakkannan
26th April 2013, 07:41 PM
நிஜமாகவே அந்த்க் கொடூரர்களுக்கு என்ன தண்டனை கொடுப்ப்தென் தெரியவில்ல பிபிக்கா.. நெஞ்ச்ம் பொங்குகிறது

pavalamani pragasam
26th April 2013, 08:09 PM
:twisted::curse::argh::-x:angry2:........

chinnakkannan
29th May 2013, 09:14 PM
My hearty condolences PPkka..உங்கள் மாமனாரின் ஆன்மா சாந்தியடையட்டும்..

chinnakkannan
29th May 2013, 09:16 PM
ஸாரி..இதுஇப்போது நிகழ்ந்ததா..அல்லது கவிதைக்காக முன் நிகழ்ந்தவற்றை எழுதினீர்களா..

pavalamani pragasam
30th May 2013, 07:19 AM
கடந்த ஞாயிறன்று சிவனடி சேர்ந்தார். 84 வயதான அத்தைக்கு ஆறுதலாக நாங்கள் கூட இருந்து அவரது மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.

pavalamani pragasam
20th August 2013, 01:11 PM
அது என்ன ஜந்து? நான் கேட்டதே இல்லை! வேறு பெயர் இருக்கிறதா?

chinnakkannan
20th August 2013, 01:36 PM
cockroach thaan..karappu..:)

chinnakkannan
24th August 2013, 10:36 PM
தாணாக்காரன்னு கொடுத்தா எங்கிட்டு இருந்து எழுதறதாம்..கண்ணா பாயைப் பிறாண்டு

pavalamani pragasam
25th August 2013, 06:47 AM
தாணாக்காரன் ரோந்து போனான் ரோட்டிலே
அழுத்த பிள்ளை பயந்து வாயை மூடுமாம்
....

இப்படி உங்களுக்கா வராது?

chinnakkannan
5th September 2013, 11:27 AM
பவளமணிக்கா..ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

pavalamani pragasam
5th September 2013, 12:50 PM
நன்றி, தம்பி! நாம் ஆசிரியர்கள் இல்லையே!:roll:ஆயின் ஆசிரியர் பெரும்பங்கை உணர்ந்தவர்கள், பலனடைந்தவர்கள்:-D

chinnakkannan
5th September 2013, 12:54 PM
நீங்கள் ஆசிர்யராக - பேராசிரியராக இருந்தவர் தானே.. நான் தான் எப்போதும் எல்லாருக்கும் சிஷ்யன்..சின்னவன்..!

pavalamani pragasam
11th September 2013, 07:41 AM
நீங்கள் ஆசிர்யராக - பேராசிரியராக இருந்தவர் தானே.. நான் தான் எப்போதும் எல்லாருக்கும் சிஷ்யன்..சின்னவன்..!
இதென்ன கூத்து? நானாவது ஆசிரியராவது? பேராசியராவது?

pavalamani pragasam
11th September 2013, 07:43 AM
அச்சச்சோ! 'போச்சுபோச்சு'ன்னு நான் பதறலியே கதறலியே! எத்தனை வயதில் முதுமை வரும்?:roll:

chinnakkannan
11th September 2013, 09:57 AM
நீங்கள் கல்லூரியில் வேலை செய்ததாகச் சொன்னதாக நினைவு?


இதென்ன கூத்து? நானாவது ஆசிரியராவது? பேராசியராவது?

pavalamani pragasam
11th September 2013, 02:01 PM
அப்படி நான் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை! முதுகலை பட்டம் இருந்த போதிலும் உத்தியோக ஆசை வரவேயில்லை!

chinnakkannan
11th September 2013, 02:17 PM
ஓ,.. மன்னிக்க..ஏனாம்??

pavalamani pragasam
11th September 2013, 07:02 PM
ரெட்டை குதிரை சவாரி பிடிக்கவில்லை! என் 'களம் வேறு பெண்ணே' கவிதை படித்திருக்கிறிர்களா? ஹோம் டிபார்ட்மெண்ட் பெண்கள் சாம்ராஜ்யமாய் இருப்பது நாட்டுக்கு சுபிட்சம் என்பது என் கொள்கை! வஞ்சனையில்லாமல் 'திறமை' காட்ட பஞ்சமில்லா களம் மட்டுமல்ல சுயநலமும் கலந்த-நோகாத-கொள்கை!

chinnakkannan
12th September 2013, 12:04 AM
//முக நூலில் பள்ளியெழுச்சிப் பாட்டுக்கு எழுதிய இண்ட்ரோ//

//இணையத்தில் இன்னொரு இழையில் எனது உடன் பிறவா சகோதரி திருமதி பவளமணி பிரகாசம் என்பவர் பள்ளியெழுச்சி என ஆரம்பித்து எழுதப் பணித்தார்

.பள்ளியெழுச்சி விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் இருக்கிறது..அம்பிகைக்கு இருக்கிறதா என நான் அறியேன்..

எனில் மரபுப் பாடல்கள் சொல்லித் தந்த எனது குருமார்கள் ஹரிகி,பசுபதி அனந்தர், இலந்தையார்,, ஆசாத் இன்னும் பலரின் பாதம் மனதிலிறுத்தி இங்கு சற்றே முயன்றிருக்கிறேன்..இதில் ஏதும் பிழையிருப்பின் அம்பிகையே பொறுப்பு! ;) //

pavalamani pragasam
12th September 2013, 07:53 AM
'சின்னதாய் எழுதிய'??? மாணிக்கவாசகர் தோற்றார்! (அவர் திருப்பள்ளியெழுச்சி மட்டுமே பரிச்சயம்).

chinnakkannan
8th October 2013, 03:45 PM
கொடுமை தான் இது..ம்ம் ஒன்றும் இல்லையே..அதுவரை இறைவனுக்கு நன்றி சொல்லி இருக்கவேண்டியது தான்.

pavalamani pragasam
9th October 2013, 07:42 AM
ஆம்..ஆம்.

pavalamani pragasam
2nd November 2013, 08:15 AM
சி.க,உருக்கிவிட்டது கவிதை!

chinnakkannan
2nd November 2013, 10:20 AM
நன்றி பிபி க்கா.. ஹேப்பி தீபாவளி.. கங்கா ஸ்னானம் ஆச்சா..ஒங்க தீபாவளி- சின்ன வயசு, கல்யாணம் ஆன பின், குழந்தைகள் பிறந்த பின், பேரக் குழந்தைகள் என எல்லாம் க்லந்து கட்டு ஒரு பதிவு இடுங்கள் பார்க்கலாம்..சி.க் உங்களிட்ம் இருந்து பெற விரும்பும் ஸ்வீட் இது...::)

chinnakkannan
2nd November 2013, 10:24 AM
நன்றி ராஜேஷ்..

pavalamani pragasam
2nd November 2013, 12:30 PM
ஆச, தோச, அப்பள வட!

pavalamani pragasam
14th May 2014, 07:13 PM
தாத்தாவின் ஆழமான அன்பும் ஏக்கமும் மனதை தொட்டுவிட்டது! அனாயாசமாக எப்படி அழகாக உணர்ச்சிகளை வடிக்க முடிகிறது, சி.க?

chinnakkannan
14th May 2014, 08:55 PM
நன்றி பி.பிக்கா.. எல்லாம் உங்களால தான்..உங்க ஆசிகளால தான்

pavalamani pragasam
15th August 2014, 07:30 PM
முட்டாள் பெட்டியின் நிகழ்ச்சி நிரல் வண்டவாளத்தை பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள், சி.க.!

chinnakkannan
31st January 2015, 09:46 PM
மன நிறைவாய் உறங்கிய முடிவுரை //இது மட்டும் யாருக்கும் தெரியாது... ம்ம் நல்ல கவிதை.

pavalamani pragasam
17th February 2015, 06:31 PM
என்னாச்சு சி.கவுக்கு? :roll:இளநீர் பேசுகிறது என்று தெளிவாய் புரிகிற மாதிரிதானே வருகிறது?

Russellhni
20th February 2015, 03:22 PM
கவிதை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு என் தமிழ் . இங்கு தான் என் முதல் முயற்சியே, ஒரு வாரம் முன்பு. இரண்டு மூன்று கிறுக்கலுக்கு பிறகு, ஏதேனும் தெரிந்து கொள்ளலாம் கவிதை எழுதுவது பற்றி என தேடினேன். இந்த திரி கிடைத்தது. படித்தேன்.

http://www.eegarai.net/t91128-topic

சிறப்பாக இருந்தது. ஆனால், நிறையவே புரியவில்லை. அதனால் படிக்க வில்லை. :idontgetit:
இந்த திரி பற்றி உங்கள் கருத்தென்ன ? தெரிந்து கொள்ள ஆவல். படிக்க முயற்சிக்கலாமா?

இல்லை, வேறு ஏதேனும் கவிதை பற்றி திரி இருந்தாலும் சொல்லவும் ....நன்றி

In case you could not access that thread, here is another link :
http://www.penmai.com/forums/2951

chinnakkannan
20th February 2015, 03:46 PM
தெளிவாய்//ஆரம்பத்துல புரியலீங்க அதான்.

முரளீதரன்..இங்கேயே கவிதை இயற்றிக் கலக்கு என அர்கைவ்ஸில் இருக்கும்.எனது குரு பேரா.பசுபதியுடையது.. இருங்கள் தேடிப் பார்க்கிறேன்.இல்லையேல் ஏதேனும் சந்தேகம் எனில் கேளுங்கள் ..தெரிந்ததைச் சொல்கிறேன்..

chinnakkannan
20th February 2015, 03:54 PM
http://s-pasupathy.blogspot.com/2010/09/1.html

முரளிதரன்.அவருடைய ப்ளாகே கிடைச்சுடுச்சு.. ஜமாயுங்க.. ரொம்ப சுலபமா இருக்கும் ஏதேனும் சந்தேகம் எனில் சொல்லுங்கள்..

chinnakkannan
20th February 2015, 03:56 PM
ரமணீயனும் நல்ல நண்பர்..நன்றாகச் சொல்லியிருப்பார் என்ன கொஞ்சம்கடினமாக இருக்கும். யாப்பிலக்கணத்தை அப்படியே எடுத்துக்கொண்டிருப்பார்..

விருத்தம் எழுத வருத்தம் எதற்கு - கவிமாமணி இலந்தை ராமசாமி எழுதியிருப்பதையும் பாருங்கள்..

Russellhni
22nd February 2015, 11:26 AM
கொஞ்சம் படித்தேன் சி கே. நிறைய இருக்கிறது. நன்றாக இருக்கிறது. எனக்கு உபயோகமாக இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது. நன்றி

Russellhni
22nd February 2015, 06:24 PM
உங்கள் உதவி வேண்டும் . எனது கவிதைகளில் என்ன குறையிருந்தாலுமே,
நேரம் கிடைக்கையில் இந்த திரியில் சொல்லவும். திருத்திக் கொள்ள உதவியாயிருக்கும் . நன்றி மீண்டும்

kalnayak
4th March 2015, 04:56 PM
சி.க,

வெண்பான்னா இன்னா-ன்னு இங்கதானே சொல்லித்தாரேன்னீங்க!!!

chinnakkannan
4th March 2015, 05:01 PM
ஆமாங்க.. வர்றேன்.. ஆனா இங்கயும் இந்த க்விதை இயற்றிக்கலக்கு லிங்க்ல பாருங்க டைம் கிடைச்சா..டுடே ஐ வில் ட்ரை டு கம்..:)

chinnakkannan
4th March 2015, 05:21 PM
வெண்பா என்பது சுலபம் தான் கல் நாயக் பட் கொஞ்சம் பேஸிக்ஸ் இலக்கணம் தெரிய வேண்டும்..வெண்பா கொஞ்சம் கஷ்டமான வகையும் கூட (அட ஒரே வாக்கியத்தில் முரண் படுகிறேனே..)

சரி கவிதை எழுத கற்பனை வேண்டும்.. மொழி அறிவு..தமிழ் வேண்டும் இருக்கிறது..இருந்தாலும் ஒரு ஒழுங்கில் இருந்தால் படிப்பவருக்கும் இனிமையாக இருக்குமே..இல்லியோ..

சொற்களைப் பிரிக்கக் கற்றால் சுலபம்..
அது என்ன சொற்களைப் பிரித்தல்..

சொற்+கள் ஒற்று வந்தால் பிரிக்க வேண்டும்.. ஸோ இந்த சொற், கள் அசை எனப்படும்..

இந்த அசை யே இரண்டு வகை..சரி ஃபர்தராகப் போவதற்கு முன்:

ஒரு வெண்பா..


அமலா நயன்தாரா அம்பிகா ராதா
சுமலதா ரோஜா சுபஸ்ரீ - அமலாபால்
ராதிகா ஊர்வசி ரஞ்சிதா சங்கீதா
ஜோதிகா எல்லோரும் ஜோர்

(இது நான் எழுதியதில்லை..ஒரு டாக்டர் ராமானுஜம் கோவிந்தன் தன் வலைத்தளத்தில் எழுதியிருந்தது..கடைசி வரி மட்டும் நான் மாற்றியிருக்கிறேன்..)

//ஓவியப் பாவையென ஓராள்தான் உண்டதுவும்
தேவிகா என்றே தெளிவு..

நாயகனாய் தோழனாய் நல்லமனம் கொண்டவரும்
சாய நினைக்கின்றார் சந்தத்தில் - நேயமாய்
நாடினால் நாமகள் நாவிலே கற்பனைகள்
கூட்டித் தருவாளே கொள்..// இது என் முயற்சி :)

ஸோ .. இப்போ அசை..

chinnakkannan
4th March 2015, 05:23 PM
அசையில ரெண்டு அசை நேரசை நிரையசை (இதுவும் அந்த டாக்டர் பக்கத்திலிருந்து தான்)

சொற்களைப் பிரித்தால் வருபவற்றை அசைகள் என்று அழைகிறோம்.syllables என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல். அசைகள் நேர் அசை என்றோ நிரை என்றோ அழைக்கப் படுகின்றன.

நெடில், நெடில்+ ஒற்றெழுத்து, குறில் + ஒற்றெழுத்து, கடைசி எழுத்தாக இருக்கும் குறில் = நேர் அசை . உதாரணம் ரோஜா = இரண்டு நெடில்கள் எனவே இரண்டு நேர் அசைகள் அதாவது நேர்நேர்.
ரேஷ்மா = ரேஷ் +மா என்று பிரிக்கவும் ரேஷ் என்பது நெடில்+ ஒற்றெழுத்து ஆகவே இது நேர் அசை, மா என்பது நெடில் ஆகவே இதுவும் நேர் அசை ஆகவே இதுவும் நேர் நேர்.
நக்மா = நக்+ மா முதல் அசை குறில்+ ஒற்றெழுத்து ஆகவே நேர் அசை, மா =நெடில்= நேர் அசை ஆகவே இந்தச் சொல்லும் இரண்டு நேர் அசையால் ஆனது
குஷ்பு = குஷ்+பு குஷ் = குறில்+ ஒற்றெழுத்து ஆகவே நேர் அசை. பு = இறுதியாக இருக்கும் குறில் ஆகவே அதுவும் நேர் அசை .ஆகவே இதுவும் நேர் நேர்.

இதே போல் ராதா, ரேகா, நேஹா, ஆர்யா, சூர்யா, பாபு, செந்தில் ,சேரன் ,நாகேஷ், எல்லா வார்த்தைகளுமே இரண்டு நேர் அசைகளால் ஆனவை ( நன்றி: டாக்டர் ராமானுஜன் கோவிந்தன்)

chinnakkannan
4th March 2015, 05:24 PM
இரண்டு குறில்கள் மட்டும் வந்தால் நிரை அசை . முதலில் குறில் வந்து பிறகு நெடில் வந்தால் நிரை, இரண்டு குறில்+ ஒற்றெழுத்து வந்தாலும் , குறில்+நெடில் + ஒற்றெழுத்து என்று வந்தாலும் நிரை அசை
உதாரணம் கலகல = கல+கல = இரண்டு குறில்கள் வந்ததால் கல என்பது நிரை அசை, கலகல என்னும் சொல் இரண்டு நிரை அசைகளால் ஆனது
கமல் என்ற சொல் ஒரே அசையால் ஆனது. அதுவும் நிரை அசைதான் இரண்டு குறில்கள் + ஒரு ஒற்றெழுத்து.
நிலா என்ற அசையில் முதலில் குறிலும் பின்பு நெடில் வருகிறது ஆகவே இது நிரையசை. கலா, லதா எல்லாச் சொற்களும் நிரையசை தான்
அதேபோல் குறிலுகுப் பின் நெடிலும் ஒற்றெழுத்தும் வந்தால் அதுவும் நிரை அசைதான் விரால், இரால், கமால், ஹலால்,ஹராம்

"அழகிய தமிழ்மகள் இவள் இரு
விழிகளில் எழுதிய மடல் " -இந்த இரண்டு வரிகளில் இருக்கும் எல்லாமே நிரை அசைதான் ( நன்றி டாக்டர் ராமானுஜன் கோவிந்தன்)

chinnakkannan
4th March 2015, 05:25 PM
இப்போது இரு அசைகள் சேர்வதைப் பார்க்கலாம்

இரு நேரசைகள் வருவது தேமா எனப்படும். அதாவது தே மா என்ற வார்த்தையே இரண்டு நேரசைகளால் ஆனது ரோஜா, ஆர்யா ,சூர்யா, நக்மா, குஷ்பு, கன்னல், பாம்பு, பாபு என்று எல்லாச் சொற்களும் தேமா ஆகும்.

நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்தால் அதன் பெயர் கூவிளம் கூ=நேர் விளம் = நிரை . அம்பிகா, சங்கவி, அங்கவை, சங்கவை, ராதிகா, ஜோதிகா, பூமிகா, பால்நிலா, காய்கறி, மாங்குயில், வேர்ப்பலா,கன்னிகை,கண்ணகி, எல்லாமே கூவிளம் தான்.

நிரை அசைக்குப் பின் நேர் அசை வருவது புளிமா . புளி= நிரை மா=நேர். உதாரணம் கனகா, கவிதா, பபிதா,ஷகீலா, பமீலா,விசித்ரா சுனந்தா, படைப்பு, மகிழ்ச்சி, அடங்கு, வணங்கி, அடாது, விடாது, அராத்து

( நன்றி டாக்டர் ராமானுஜன் கோவிந்தன்)

chinnakkannan
4th March 2015, 05:28 PM
இரண்டு நிரை அசைகள் வருவது கருவிளம் ஆகும்.ரஜினிகாந்த்,(ரஜி+நிகாந்த்) விஜயகாந்த் , கயல்விழி, கனிமொழி,சுராங்கனி, சுமலதா, கலகல, அடிதடி, பலாக்கனி, விடாப்பிடி, நடத்திய, இவை எல்லாம் கருவிளம் எனப்படும் (உதாரணம் என்பதே கருவிளம்)
இப்போது மூன்று அசைகள் சேர்வதைப் பார்க்கலாம் (கண்ணைக் கட்டுகிறதென்றால் கொஞ்ச நேரம் இங்கு குறிப்பிட்டுள்ள நடிகைகள் நடித்த படங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவும்.)( நன்றி டாக்டர் ராமானுஜன் கோவிந்தன்)

chinnakkannan
4th March 2015, 05:29 PM
கொஞ்சம் தேமா, புளிமா கருவிளம், கூவிளத்துக்கு எக்ஸாம்பிள்ஸ் கொடுங்க கல் நாயக் (வீபாடம்)

chinnakkannan
4th March 2015, 05:31 PM
இப்போது மூன்று அசைகள் சேர்வதைப் பார்க்கலாம்

தேமா+ நேர் = தேமாங்காய் (உதா :சங்கீதா, பண்புள்ள, சொல்லாதே)
தேமா+நிரை= தேமாங்கனி (உதாரணம் பச்சைக்கிளி, முத்துச்சரம், ராமானுஜம்)
புளிமா +நேர்= புளிமாங்காய் (உதாரணம் நயன்தாரா, கமல்ஹாசன்,ஹரிதாஸ்பாய் , அமலாபால், பயனுள்ள, தமிழன்னை,)
புளிமா+நிரை=புளிமாங்கனி (உதாரணம் திருப்பாற்கடல், வனிதாமணி, வனமோகினி)
கூவிளம்+நேர் =கூவிளங்காய் (உதாரணம் நீலவானம்(நீ+லவா+னம்) மோதிவிடு (மோ+திவி+டு) , செய்திடுவாய், சென்றிடுவாய்)
கூவிளம்+நிரை = கூவிளங்கனி ( உதாரணம் சொல்லியபடி, எண்ணியபடி)
கருவிளம்+நேர்=கருவிளங்காய் (உதாரணம் தமிழரசி,புளிமிளகாய் )
கருவிளம்+நிரை=கருவிளங்கனி (உதாரணம் -விழிகளில்வரும்,பழமுதிர்மரம், துடிக்குதுபுஜம், ஜெயிப்பதுநிஜம்)

( நன்றி டாக்டர் ராமானுஜன் கோவிந்தன்)

chinnakkannan
4th March 2015, 05:34 PM
மேற்சொன்ன தேமாங்காய் தேமாங்கனி புளிமாங்காய் புளிமாங்கனி, கூவிளங்காய் கூவிளங்கனி கருவிளங்காய் கருவிளங்கனிக்கு எக்ஸாம்பிள் சொல்லுங்க..டைம் கிடைக்கறச்சே..

chinnakkannan
4th March 2015, 05:36 PM
கல்நாயக்
சின்னக் கண்ணன்
முரளிதரன்
பவளமணி பிரகாசம்


பிரிச்சு ச் சொல்லுங்க..

chinnakkannan
4th March 2015, 05:37 PM
ஒன்ஸ் இதுல ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டீங்கன்னா...அப்புறம் எதுகை மோனை..அப்புறம் கண்டிப்பா வெண்பா முதலில் இல்லை..முதலில் விருத்தம் எழுதிப் பார்க்கலாம்.. சரியா..

kalnayak
5th March 2015, 12:53 PM
கல்நாயக் = கல் + நா + யக் = நேர் + நேர் + நேர் = தேமாங்காய் - மூவசை
சின்னக்கண்ணன் = சின் + னக் + கண் + ணன் = நேர் + நேர் + நேர் + நேர் - நாலசை (இப்பிடி சொல்லிக்கொடுக்காத பாடத்திலிருந்து கேட்கிறீங்களே? இதை )தேமாங்காய்பூ-ன்னு சொல்லலாமா?)
முரளிதரன் = முர +ளித + ரன் = நிரை + நிரை + நேர் = கருவிளங்காய் - மூவசை
பவளமணி பிரகாசம்= பவ + ளம + ணி + பிர + காச + ம் = நிரை + நிரை + நேர் (கருவிளங்காய்) + நிரை + நிரை + நேர் (கருவிளங்காய்) - இரட்டை கருவிளங்காய்

தப்பிருந்தா உடனடியா சொல்லுங்க திருத்திக்கறேன்.

kalnayak
5th March 2015, 01:03 PM
கொஞ்சம் தேமா, புளிமா கருவிளம், கூவிளத்துக்கு எக்ஸாம்பிள்ஸ் கொடுங்க கல் நாயக் (வீபாடம்)

வீபாடம் 1.
-------------------
தேமா - கூகுள் = கூ + குள் - நேர் + நேர்
புளிமா - கணித்து = கணித் + து - நிரை + நேர்
கருவிளம் = நிரை + நிரை - வேண்டிய = வேண் + டிய
கூவிளம் = நேர் + நிரை - தேடினேன் = தே + டினேன்

chinnakkannan
5th March 2015, 01:46 PM
தாஸ் தாஸ் நீர் இப்ப பாஸ் பாஸ் :) அவ்ளோ தாங்க விஷயமே..

சின்னக்கண்ணன் நு எடுத்துக்க வேண்டியதில்லை சின்னக் கண்ணன்.. தேமா தேமா அம்புட்டு தேன்..

பிரகாசம் பிரிச்சதில தப்பு இட் ஷூட் பி பிர+கா+சம் புளிமாங்காய்..

chinnakkannan
5th March 2015, 02:10 PM
நான் மதுரைக்காரன் என்று உங்களுக்குத் தெரியும்.. மதுரையில் ஃபேமஸ் என்ன.. மீனாட்சி கோவில், மஹால்..அப்ப்புறம்..

உலகமெங்கும் எக்ஸ்போர்ட் ஆகிக் கொண்டிருக்கிற மல்லிகைப் பூக்கள்..

கள்ள மிலாமல் களிகொண்டே தான்சிரிக்கும்
மல்லிகைப் பூக்களு மாம்..

இல்லியோ..

இந்த மல்லிகைப் பூக்கள் இருக்கே அதை அப்படியே பெண்கள் தலையில் சூடிக் கொள்ள் முடியுமோ..

முடியாதே..

ஏன்..எல்லாம் உதிரிப் பூக்கள் (அப்புறம் மகேந்திரனை த் தான் கூப்பிடணும்)

அப்போ என்ன செய்யணும்.. வெண்டைக்காய் விரல்களைக் கொண்டு பெண்கள் வெகு அழகாகத் தொடுப்பார்கள்.. இல்லியோ

ஸோ தொடுத்தா தான் மல்லிகை மாலை அழகா இருக்கும் பார்க்கும் வண்ணம் எழிலார்ந்து கூந்தலில் அமர்ந்து கொள்ளும் இல்லீங்களா..

மல்லிகை மாலை தொடுக்கறதுக்கு நார் தேவைப் படறது

தமிழ்ல பாமாலை தொடுக்கறதுக்கு என்ன தேவைப்படறது..அதற்குப் பெயர் தொடை (ஷ்ஷூ.. ரம்பாவான்னுல்லாம் கேக்கப் படாது!)

chinnakkannan
5th March 2015, 02:23 PM
தொடை என்றால் என்ன?

தொடு என்னும் ஏவல்வினையுடன், ”ஐ” விகுதி சேர்ந்து செயப்படுபொருள் பெயர் உருவாகும் போது, தொடை எனப்படுகிறது. தொடை என்பது ’தொடுக்கப்படுவது.’

அதாவது தடுக்கப்படுவது தடை; மடுக்கப்படுவது மடை; நிறுக்கப்படுவது நிறை; எடுக்கப்படுவது எடை என்பதுபோலத் தொடுக்கப்படுவதைத் தொடை என்கிறோம்.

மீன்ஸ் தொடைங்கறது டைட்டில்.. அதுல்ல சப் டிவிஷன்ஸா இதெல்லாம் வரும் எதெல்லாம்..

தொடை என்பது

1)எதுகை,
2)மோனை,
3)இயைபு,
4)முரண்,
5)அளபெடை
என்று ஐந்தாக வகைப்படும்

குரு.. இதுக்கு முன்னால சீர் பத்திச் சொன்னேனா என்ன.. ஐ நோ நீங்க ஒண்ணும் பிள்ளை வீட்டுக்காரரில்லை.. நான் சொல்றது இன் டாமில்..

ஒண்ணும் பிரம்ம வித்தை இல்லை.. -- என்னும் இந்த வாக்கியமே நாலு சீர் - அப்படின்னு சொன்னா புரியறதா

ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சீர் என்பார்கள்..

சின்னக் கண்ணன் இரு சீர்

ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஓரசைச் சீர்
ஜீவன் ஈரசைச் சீர்
அழைத்தது மூவசைச் சீர்..

ஓரசைச் சீர் வாய்ப்பாடு நாள் வந்து நேர்க்கு மலர் வந்து நிரைக்கு.. மிச்சவெல்லாம் சொல்லிட்டோமில்லையா.. ( நாலசைச்சீர்லாம் வேண்டாம்..இப்போதைக்கு... கன்ஃபீஷன் ஆகிடும்!) ஈரசை தேமா புளிமா கருவிளம் கூவிளம் மூவசை தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்.. ஹை இதெல்லாம் பார்த்தாச்சே..எனில் நெக்ஸ்ட் போஸ்ட் எதுகைக்குப் போகலாமா..

chinnakkannan
5th March 2015, 02:27 PM
சின்னக்கண்ணன் = சின் + னக் + கண் + ணன் = நேர் + நேர் + நேர் + நேர் - நாலசை (இப்பிடி சொல்லிக்கொடுக்காத பாடத்திலிருந்து கேட்கிறீங்களே? இதை )தேமாங்காய்பூ-ன்னு சொல்லலாமா?) - யாப்பிலக்கணப் பிரகாரம் தேமாந்தண்பூ ந்னு வரும்.. நாலசையே இப்ப வேண்டாம்.. வெட்டிக்கலாம் ரெண்டா பாட் எழுதறதுக்கு என்னங்கறீங்க..

kalnayak
5th March 2015, 02:47 PM
மேற்சொன்ன தேமாங்காய் தேமாங்கனி புளிமாங்காய் புளிமாங்கனி, கூவிளங்காய் கூவிளங்கனி கருவிளங்காய் கருவிளங்கனிக்கு எக்ஸாம்பிள் சொல்லுங்க..டைம் கிடைக்கறச்சே..
வீபாடம் 2.
-----------------
தேமாங்காய் = தேமா+ நேர் = நேர் + நேர் + நேர் = மாளாது, மீளாது, மல்யுத்தம், தேடாதே,
தேமாங்கனி = தேமா+நிரை = நேர் + நேர் + நிரை = மண்மீதிலே ( மண் + மீ + திலே), மண்வாசனை (அப்பாடா, ஒரு வழியா திரைப் பட பெயரில் ஒரு வார்த்தை கண்டு பிடித்துவிட்டேன்.) அஞ்சாதே= தேமாங்காய் திரைப் பட பெயர்.
புளிமாங்காய் = புளிமா +நேர் = நிரை + நேர் + நேர் = தாகவூற்று*( தாக + வூற் + று), மரியாதை (மரி + யா + தை), திருடாதே (அப்பாடா, இதற்கும் ஒரு வழியா திரைப் பட பெயரில் ஒரு வார்த்தை கண்டு பிடித்துவிட்டேன்.), பராசக்தி, ஸ்ரீவள்ளி, அருட்செல்வர் (அருட்+ செல் + வர்)
புளிமாங்கனி = புளிமா + நிரை = நிரை + நேர் + நிரை = தவிர்த்தானிதை ( தவிர்த் + தா + னிதை), தவிர்த்தானெனை (தவிர்த்+ தா+ னெனை)
கூவிளங்காய் = கூவிளம்+நேர் = நேர் + நிரை +நேர் = சாரதியா (சா + ரதி + யா), எய்தலாயின் (எய் + தலா + யின்) அஞ்சமாட்டாய் (அஞ்+சமாட்+டாய்), அஞ்சமாட்டேன் (அஞ்+சமாட்+டேன்)
கூவிளங்கனி = கூவிளம்+நிரை = நேர் + நிரை + நிரை = தாறுமாறென ( தா + றுமா + றென ), சார்புடைத்ததால் (சார் + புடைத்+ ததால்)
கருவிளங்காய் = கருவிளம்+நேர் = நிரை +நிரை +நேர் = தவப்புதல்வன் = தவப் + புதல் + வன், சிவக்குமாரன் (சிவக் + குமா + ரன்)
கருவிளங்கனி = கருவிளம்+நிரை = நிரை +நிரை +நிரை = திருவினையினால் (திரு + வினை + யினால்),

தாவுகழண்டுபோச் (தா+வுக+ ழண் +டுபோச்)இதைத்தான் பின்னால பாததுக்கலாமுன்னு சொல்லிட்டீங்களே

chinnakkannan
5th March 2015, 02:53 PM
ஸாரி கல் நாயக்..படுத்திட்டேனா :) வெரி குட்..

இதெல்லாம் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும்.. கொஞ்சம் ரெஃப்ரஷ் பண்ணிக்கிட்டா ஈஸியா இருக்குமில்லையா.. நானும் உங்களை வச்சுக் கத்துக்கிட்டேன்..:)

தாவுகழண்டுபோச் (தா+வுக+ ழண் +டுபோச்) :) வாய்ப்பாடு.. கூவிளந்தண்நிழல்.. (உதைக்கப் போறீங்க) :)

chinnakkannan
5th March 2015, 02:54 PM
ஸ்ரீவள்ளி - தே மாங்காய்..

kalnayak
5th March 2015, 03:14 PM
தொடையை பற்றி எப்போது சொல்லித்தரப்போகிறீர்கள். ரம்பாவிற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இப்ப சீர் பத்தி சொல்லிக்கொடுக்கறீங்க. நன்றி. காத்திருக்கேன்.

ஸ்ரீவள்ளி தேமாங்காயா நன்றி.

chinnakkannan
5th March 2015, 03:14 PM
சரி.. இப்ப ஒண்ணு செய்யலாம்..

ரொம்பப் படிச்சாச்சுல்லியா சரி கொஞ்சம் வெளியே போய்ப் பார்ப்போம்..

சர் சர்ருனு சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன..அதில் இது என்ன

ஒரு அழகிய ப்ளாக் பி.எம்.டபிள்யூ..அதுக்குள்ள ஒரு காரிகை..

என்ன டிரஸ். ப்ளாக் லெக்கின்ஸ் பிங்க் கலர் டாப்ஸ்.. கண்ணில பார்ஷே க்ளாஸஸ்.. கூந்தல் பாத்தீங்கன்னா அப்பத்தான் அம்மணி நல்ல சன்ஸில்க் எக்*ஷாம்ப்பூ போட்டுட்டு க் குளிச்சு ஹேர் ட்ரை பண்ணியிருப்பாங்க போல..அந்த க்கரு கரு கூந்தல் பஃப்புனு நெளி நெளியா ப் பறக்கறது..ரொம்பப் பறக்காம இருக்கறதுக்குப் பின் கூந்தல்ல குட்டியா ஒரு பிங்க் ரப்பர் பேண்ட்..

சர்ருன்னு சீறும் பாம்பு போல சீறிப்பறந்த கார், காரிகை ஓரு செகண்ட்ல போய்ட்டாலும் மனசுக்குள்ள காலிங்க்பெல் அடிக்காமயே ஒக்காந்துட்டா பாஸ்..


கார்கால மேகமாய் கார்கூந்தல் தான் பறக்க
கார்தன்னை ஓட்டியவள் காண்

(இது வெண்பா மாதிரி இருக்கும் ஆனா இல்லை..ஏனெனில் ஆங்கிலக் கலப்பு வந்திருக்கே..)


இதுல முதல் வரில வர்ற கார் இரண்டாவது வரில வர்ற கார்.. இந்த இரண்டு ர் ருமே எதுகை..

முதல் வரில முதல் வார்த்தை கார்கால மூன்றாவது வார்த்தை கார்கூந்தல் இந்த ரெண்டின் முதலெழுத்து கா கா மோனை
இரண்டாவது வரில்ல கார்தன்னை , காண் இந்த முதல் வார்த்தை மூன்றாவது வார்த்தை மோனை..

இதுவே அந்தக்கால இளவரசி கருப்பு நிறப் பட்டில் சேலையுடுத்தி தேரில் கூந்தல் பறக்கப் போகிறாள் எனப் பார்த்தால்

கார்கால மேகமென கார்கூந்தல் தானலைய
தேர்கொண்டு சென்றாளே தேன்..!

இதுல தே தே மோனை

விளக்கமா அப்புறமா வாரேன்..

chinnakkannan
5th March 2015, 03:16 PM
மீன்ஸ் தொடைங்கறது டைட்டில்.. அதுல்ல சப் டிவிஷன்ஸா இதெல்லாம் வரும் எதெல்லாம்..

தொடை என்பது

1)எதுகை,
2)மோனை,
3)இயைபு,
4)முரண்,
5)அளபெடை
என்று ஐந்தாக வகைப்படும்

//தொடையை பற்றி எப்போது சொல்லித்தரப்போகிறீர்கள். ரம்பாவிற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?// அந்தக் காலத்துல அவங்களுக்கு அது தான் அழகுன்னு பத்திரிகையில போட்டிருப்பாஙக்..!:)

kalnayak
5th March 2015, 03:20 PM
எதுகையும் மோனையும் அடுத்தடுத்த வரிகளில் வரவேண்டுமா, இல்லை ஒரே வரியின் எந்தெந்த வார்த்தைகளில் வரவேண்டும்.

வரிகளுக்கும் அடிகளுக்கும் என்ன வித்தியாசம்?

கார்-ங்கறது தமிழ் இல்லையா? எல்லாரும் பேசறதுனால இதுவும் தமிழ்தானே!!! வேறு மொழி கலப்பிருந்தா வெண்பா இல்லையா? இப்பிடியே போச்சுன்னா யாரும் வெண்பா எழுத முடியாதே.

chinnakkannan
5th March 2015, 03:31 PM
இப்போதைக்கு என்று ஆரம்பிப்பதற்கு முன்னால்.. ரொம்ப வருடங்கள் முன்னால் நடந்த சமாச்சாரம்..

என் நண்பரும் அவர் மனைவியும் தனது ஒரு அல்லது இரண்டு (சரியாய் நினைவிலில்லை)வயது மகனுக்கு ஆங்கிலத்தில் எதையாவது சொல்லித் தரவேண்டும் என தலையைப் பிய்த்துக் கொண்டு கடைசியில் ஒரு வார்த்தை சொல்லிக் கொடுத்தார்களாம்..அதை என்னிடம் ஃபோன் பண்ணிவேறு சொன்னார்கள்.. என்ன வார்த்தை extinguisher.! ஏன்னாக்க நண்பர் ஒரு நாளைக்கு முன்னால் அப்படி ஒரு பொம்மை வாங்கி வந்திருந்தாராம்..!

அது போல நானெழுதிப் பார்த்த எண்சீர் விருத்தத்தை வைத்துச் சொல்கிறேன்..


புரியு மெனநினைத்தால் புருவத்தை உயர்த்தித்தான்
...பூவை முகமாறி பல்வாறாய்க் கேள்விகளை
விரியும் பார்வையதன் மூல்மாகக் கேட்டிடுவாள்
...விழிகள் சிவந்திருக்கும் வேடிக்கை மறைந்துவிடும்
சரிதான் காத்திருப்பின் கஷ்டமென நானறிவேன்
..தங்கம் சின்னப்பூ ஜிஞ்சும்மா என்றாலோ
சுழிப்பாள் உதட்டினையும் பின்னங்கே வெடித்திடுமே
..சூறா வளியாகச் சொற்றொடர்கள் திட்டல்கள்..

இதுல் புரி விரி சரி சுழி இதுல வர ரி ரி ரி ழி எதுகைகள்

புரியும் - பூவை பு பூ

விரியும் விழிகள் வி வி

சரிதான் தங்கம் ச த

சுழிப்பாள் சூறா சு சூ இவையெல்லாம் மோனை..

(ஏதாச்சும் புரிஞ்சுதா :))

chinnakkannan
5th March 2015, 03:35 PM
எதுகை அடுத்தடுத்த வரின்னு இப்போதைக்கு வச்சுக்கலாம்
மோனை அதே வரி முதல் முன்றாவது சீர்ல அதாவது முதல் மூன்றாவது வார்த்தையில்..

kalnayak
5th March 2015, 03:40 PM
நன்னாப் புரியறது. நான் இவ்ளோ நாளும் ஒரே எழுத்து திரும்ப வாரதுதான் எதுகை மோனை-ன்னு நம்பிகிட்டு இருந்தேன். ர-வும் ழ-வும் எதுகையா வரும், ச-வும் த-வும் மோனைக்கு வரும்-னு நெனச்சது இல்லை. இந்த க்ரூப் என்னன்னு முழுசா சொல்லிடுங்கோ.

வல்லின எழுத்துக்களுக்குள்ளே எதுகை மோனைகள் வருமா? ச-வும் த-வும் வந்திருக்கிறது. ர-வும், ழ-வும் வருவதுபோல் எல்லா மெல்லின எழுத்துக்களுக்குள்ளும் இதுபோல எதுகை மோனைகள் எடுத்துக்கொள்ளலாமா? வாட் அபௌட் இடையினம்?

நன்னி

chinnakkannan
5th March 2015, 04:21 PM
வர்றேன் வர்றேன்.. ரொம்ப அவசரப் படறீங்க.. நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லியே..

**

என் குரு நாதர் பேராசிரியர் பசுபதி அவர்கள் தந்ததைக் கீழே தந்திருக்கிறேன்..

*

எதுகை – பேரா. பசுபதி.

எதுகை என்பது இருசீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது எனச் சொல்லலாம். காட்டுகள்: கற்று-பெற்று, பாடம்-மாடம், கண்ணன்-வண்ணன்.

ஆனால் எதுகைக்கு இரண்டாம் எழுத்து ஒன்றினால் மட்டும் போதாது. முதல் எழுத்துகளும் அளவில் ஒத்துப் போக வேண்டும். அதாவது முதல் எழுத்து குறிலானால், எதுகைச் சீரிலும் முதல் எழுத்துக் குறிலாக வேண்டும். நெடிலாக இருப்பின், எதுகைச் சீரிலும் நெடிலாக வேண்டு. (இது பலரும் செய்யும் தவறு). (எ-கா) தட்டு-பட்டு… எதுகை; ஆனால் தட்டு-பாட்டு எதுகையல்ல.

சிலசமயம், மூன்றாம் எழுத்து ஒன்றினால்தான் ஒத்த ஓசை கிடைக்கும் (எ-கா) பண்டு- உண்ண ஓசையினிமை இல்லை. பண்டு, கண்டு, உண்டு இவை மிகச்சரியான எதுகைகள். அதனால் முதல் எழுத்து அளவில் ஒன்றி, முடிந்தவரை மற்ற எழுத்துகள் ஒன்றுவது சிறப்பு; குறைந்தபட்சம் இரண்டாவது எழுத்தாவது ஒன்ற வேண்டும்.

சில சிறப்பில்லா எதுகைகளும் உண்டு. இவற்றில் முக்கியமானவை வருக்க எதுகை, இன எதுகை, ஆசிடை இட்ட எதுகை.

வருக்க எதுகை

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே!

மேலே ல-விற்கு லை-எதுகையாக வந்திருக்கிறது. இப்படியே ல,லி,லு,லெ, லோ இவையும் வரலாம். ல-குறிலாதலால் குறிலாகவே வருதல் சிறப்பு. லை-நெடிலானாலும், லய் என்பது போலவே குறிலாக ஒலிக்கிறதல்லவா? ல-விற்கு அதன் வருக்க எழுத்துகளில் ஒன்று எதுகையாக வருவது வருக்க எதுகை.

இன எதுகை

இரண்டாம் எழுத்துகள் ஒரே இனமாக இருப்பது.

(எ-கா) வல்லின எதுகை
தக்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சதாற் காணப் படும் (திருக்குறள்)

அதே போல அன்பு, நண்பு மெல்லின எதுகை
வரவு,செலவு இடையின எதுகை

ஆசிடை இட்ட எதுகை

ஆசு என்றால் பற்றுக் கோடு. எதுகையாக வரும் எழுத்துக்கு முன் ய், ர், ல், ழ் என்ற எழுத்துகள் நான்கில் ஒன்று வந்தால் ஆசிடை இட்ட எதுகை எனப்படும். இந்த விதியினால், வாய்மை-தீமை, மாக்கொடி-கார்க்கொடி, ஆவேறு-பால்வேறு, வாழ்கின்ற-போகின்ற என்ற சொற்கள் ஆசிடை எதுகை பெற்று விளங்குகின்றன. இந்த எழுத்துகள் நடுவில் வந்தாலும் ஓசை கெடுவதில்லை என்பது இந்த விதியின் உட்பொருள். (வாய்மை-தூய்மை, மாக்கொடி-பூக்கொடி, வாழ்கின்ற-தாழ்கின்ற… இவை முதல்தரமான எதுகைகள். ஆனால் கருத்தைச் சொல்ல, முதல்தர எதுகைகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், ஆசிடை இட்ட எதுகை போன்ற சிறப்பில்லா எதுகைகளைப் பயன்படுத்தலாம் என்பதே இந்த விதிகளின் பொருள்.

சொற்புணர்ச்சி செய்தபின் தான் எதுகை சரியாவென்று பார்க்க வேண்டும். மின்னியல் பொன்தகடு எதுகை அல்ல. ஏனென்றால் பொன்+தகடு = பொற்றகடு.

ஒரு எடுத்துக் காட்டு.
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
…..வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
…..கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
…..தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
…..வாழும் சொர்க்கம் வேறுண்டா? (கவிமணி தே.வி. பிள்ளை)

இது அறுசீர் விருத்தம்; நாலு அடிகள் எட்டு வரிகள். முதல் நான்கடிகளின் முதற்சீர்களில் ஒரே எதுகை (வெய்யி, கையி, தெய்வ, வையம்)

வரிகளுக்குள்ளே மோனை (வே-வீ, கை-க, தெ-தெ, வை-வா) – இங்கு ஐ-சீரின் முதலிலும் அய் என்று குறிலாக ஒலித்து எதுகைக்குப் பயன்படுவதைப் பாருங்கள். பொதுவாக எதுகை மரபுக் கவிதையில் அடிகளைப் பிரிக்க உதவும். அடிகளுக்குள் பொதுவாக மோனை நயம் இருக்கும். ஓசை அழகிற்காக, படிக்காதவர்களும் எதுகையை ஆள்வதைப் பார்க்கலாம். எதுகை-மோனை= எகனை-மொகனை என்றாகும். ஆட்டம்-பாட்டு=ஆட்டம்-பாட்டம் ஆகும். விதையொன்று போட்டால் சுரையொன்று காய்க்குமா என்பது வெரை ஒண்ணு போட்டா சொரை ஓண்ணு காய்க்குமா என்றாகும்.

**

இன்னும் விளக்கம் நான் தருவதற்கு கேன் வி வெய்ட் டில் ஈவ்னிங்க்..:)

chinnakkannan
5th March 2015, 04:23 PM
மோனை – பேரா.பசுபதி

மோனை: ஒரு சொல்லுக்கும்
இன்னொரு சொல்லுக்கும் முதலில் உள்ள எழுத்துகள் ஒத்த ஓசையுடன் இருப்பது மோனை.

(கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாயே! என்ற சொற்றொடரில் க-க-கா)

உயிரெழுத்தில் மோனை

அ,ஆ, ஐ, ஔ – ஓரினம்

இ, ஈ, எ, ஏ – ஓரினம்

உ,ஊ,ஒ,ஓ – ஓரினம்

காட்டுகள்:

அகல உழுவதை ஆழ உழு (1-3 சீர்கள் பொழிப்புமோனை)

இருதலைக் கொள்ளி எறும்பு போல (1-3)

ஓட்டைச் சங்கால் ஊத முடியுமா? (1-3)

உயிர்மெய்யில் மோனை

க,கா, கை, கௌ – ஒரே இனம்

கி,கீ, கெ, கே – ஒரே இனம்

கு,கூ, கொ, கோ – ஒரே இனம்

ப,பா, பை,பௌ – ஒரே இனம்

…. இப்படியே

சில விசேஷ இனங்கள்:

ச-த ஒரே இனம். (எ.கா) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் (தொ-சு -மோனை)

ம-வ ஒரே இனம். (எ-கா) வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது (வ-மா- மோனை)

ந-ஞ ஒரே இனம்.(எ-கா) நலிந்தோர்க்கில்லை ஞாயிறும் திங்களும் (ந-ஞா- மோனை)

பழம் நூல்களில் யா-விற்கு – இ, ஈ, எ, ஏ மோனை என்பர்.

தற்காலத்தில் – யாவிற்கு அ, ஆ, ஐ, ஔ-வும் சொல்லலாம்.

ஜ-ச, த – ஓரினம்; ர-ல — இ, ஈ, எ, ஏ மோனை இனம்.

ஒரு பழம் வெண்பா மோனை வாய்பாடினை நினைவுறுத்த:

அகரமொடு ஆகாரம் ஐகாரம் ஔகான்

இகரமொடு ஈகாரம் எஏ – உகரமொ(டு)

ஊகாரம் ஒஓ; ஞந, மவ தச்சகரம்

ஆகாத அல்ல அநு.

கோல மலருக் குள்ளே மணமுண்டு! (மோனையா?) – பார்த்தால் கோ-கு மோனை போல
இருக்கிறது. ஆனால் இது மோனை இல்லை. ஏனென்றால், அங்கே இருக்கும் சொல் – உள்ளே:
ஆதலால் கோ-உ மோனை இல்லை.

நாலு நீர் அடிகளில் 1-3 சீர்களில் பொழிப்பு மோனை இருப்பது சிறப்பு.

மேற்கூறியவற்றிலிருந்து தொகுத்த மோனை
அட்டவணை:

அ,ஆ,ஐ, ஔ, யா (தற்காலம்)

க,கா, கை, கௌ

ச,சா, சை, சௌ, த,தா, தை, தௌ, ஜ, ஜா

ந, நா, நை, நௌ, ஞ, ஞா

ப,பா, பை, பௌ

ம,மா, மை, மௌ, வ, வா, வை, வௌ

இ, ஈ, எ, ஏ, ர, ல (யா, பழம் நூல்களின் படி)

கி, கீ, கெ, கே

சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே, ஜி, ஜீ, ஜெ, ஜே

நி, நீ, நெ, நே, ஞி, ஞீ, ஞெ, ஞே

பி, பீ, பெ, பே

மி, மீ, மெ, மே, வி, வீ, வெ, வே

உ, ஊ, ஒ, ஓ

கு, கூ, கொ, கோ,

சு, சூ, சொ, சோ, து, தூ, தொ, தோ, ஜு, ஜூ, ஜொ, ஜோ

நு, நூ, நொ, நோ

பு, பூ, பொ, போ

மு, மூ, மொ, மோ

இக்காலத்தில் இப்படியும் வரலாம் (யயாதி..)

மற்றவையும் அப்படியே லாடம், இத்யாதி.

(பேரா.பசுபதி)

chinnakkannan
5th March 2015, 04:24 PM
மோனை பாடல்களில் எங்கே வரவேண்டும்?

பதில்: பொதுவாகச் சொன்னால், நான்கு சீர் அடிகளில் 1-3 மோனை சிறப்பு. ஐந்து சீர் அடிகளில் 1-5 சிறப்பு; 1-3-5 இன்னும் சிறக்கும். ஆசிரிய விருத்தங்களில், அந்தந்த விருத்தத்திற்குரிய சீர் வாய்பாடினைப் பொறுத்து வரும்.

( நன்றி. பேரா. பசுபதி)

chinnakkannan
5th March 2015, 04:25 PM
பட் ஒன் திங்க் கல் நாயக் முக்கியமா தளை என்பதை நாம் டச் பண்ணலை.. நாளைக்கு அல்லது ஈவ்னிங்க் பார்க்கலாம்..

kalnayak
5th March 2015, 04:59 PM
கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்

ம-வ ஒரே இனம். (எ-கா) வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது (வ-மா- மோனை) என்பது முரணாக உள்ளதே? (ம- மெல்லினம்; வ - இடையினம்)

chinnakkannan
5th March 2015, 05:04 PM
அது யாப்பிலக்கணத்தில் வருகிறது. ஓசை மாறுபடாததால் இருக்கலாம்..

chinnakkannan
6th March 2015, 01:33 PM
இரு சீர் – தேமா புளிமா கருவிளம் கூவிளம்
முச்சீர் தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் தெரிந்தாகி விட்டது.. இப்போது தளை..

டபக்குன்னு வைரமுத்தோட பாட்டுக்குப் போவோமா

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு ( இதுக்குச் சீர் வாய்ப்பாடு போட்டுப் பாருங்க கல் நாயக் (விஷயம் இருக்கு))

ஸோ வைரமுத்து பொறுத்தவரைக்கும் இர்வும் பகலும் உரசிக் கொள்வது அந்திப் பொழுது.. இல்லியோ

இந்த ஒரு வார்த்தை (இருசீரோ முச்சீரோ நாற்சீரோ) அடுத்த வார்த்தையோட எப்படி உரசறதுங்கறத த் தீர்மானிப்பது தளை..

இப்போது தளைகளின் வகைகள் பற்றி என் குரு நாதர் பசுபதி சொல்லியிருப்பதிலிருந்து :
(1) ஈரசையான இயற்சீர் நான்கு(தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்)- இவை ஆசிரிய உரிச்சீர்கள் எனப்படும். பெரும்பான்மை அகவற்பாவிலும், வெண்பாவிலும் பயின்று வரும். தேமா/புளிமா தவிர்த்து விளச்சீர்கள் சிலநேரம் கலிப்பாவிலும் பயின்று வரும்.

(2) மூவசையான காய்ச்சீர் நான்கு (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) இவை வெண்பா உரிச்சீர்கள் எனப்படும். இவை வெண்பாவில் அதிகம் பயின்று வரும்.
(3) மூவசையான கனிச்சீர் நான்கு (தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி) இவை வஞ்சி உரிச்சீர்கள் எனப்படும். இவை வஞ்சிப்பாக்களில் அதிகம் பயின்றுவரும்.
(4) நான்கசையான பூச்சீர் எட்டு (தேமாதண்பூ, புளிமாதண்பூ, கூவிளந்தண்பூ, கருவிளந்தண்பூ, தேமாந்நறும்பூ, புளிமாந்நறும்பூ, கூவிளந்நறும்பூ, கருவிளந்நறும்பூ)
(5) நான்கசையான நிழற்சீர் எட்டு (தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், தேமாந்நறுநிழல், புளிமாந்நறுநிழல், கூவிளந்நறுநிழல், கருவிளந்நறுநிழல்)
இனி தளைகளைப் பற்றி பார்ப்போம். தளைகள் மொத்தம் ஏழு வகைப்படும். அவையாவன: (1) நேரொன்றிய ஆசிரியத் தளை, (2) நிரையொன்றிய ஆசிரியத் தளை, (3) இயற்சீர் வெண்டளை, (4) வெண்சீர் வெண்டளை, (5) கலித்தளை, (6) ஒன்றிய வஞ்சித்தளை, (7) ஒன்றாத வஞ்சித்தளை. ஒவ்வொரு தளையினைப் பற்றி விளக்கங்களைக் கீழே வரிசையாகத் தந்திருக்கிறேன்.
1) நேரொன்றாசிரியத் தளை : (மா முன் நேர்) அதாவது தேமா, புளிமா அமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நேரசை ஒன்றி வருவதாகும்.
(எ-கா) எடுத்துக்காட்டாக முழுவதும் தேமாச்சீர் வரும்படி நான் இயற்றிய நிலைமண்டில ஆசிரியப்பா கீழே:-

தங்கத் தட்டும் சங்காய் மின்னும்
மங்காப் பட்டும் மங்கை நல்லாள்
கன்னம் என்னும் காந்தம் முன்னே
என்றும் நேரோ சொல்வீ ரிங்கே!
2)நிரையொன்றாசிரியத் தளை : (விள முன் நிரை) அதாவது கருவிளம், கூவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாவது சீரின் முதலான நிரையசையுடன் ஒன்றி வருவதாகும்
(எ-கா) எடுத்துக்காட்டாக முழுவதும் கருவிளச்சீர் வரும்படி நான் இயற்றிய நிலைமண்டில ஆசிரியப்பா கீழே:-
மதுநிகர் கவிதையை மயக்கிடும் வகையிலே
செதுக்கிடும் சிலையென சிறப்புடன் வனைந்திடும்
புதுமையின் கவிஞரே! புதுக்கவி புனைந்திடும்
புதுவையின் கவிஞனை புலவனாய் உணர்கவே!
3) இயற்சீர்வெண்டளை : (மா முன் நிரை – விள முன் நேர்) அதாவது தேமா, கூவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நிரையுடன் ஒன்றுவதும், கூவிளம், கருவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாவது சீரின் முதலான நேரசையும் ஒன்றுவதும் இயற்சீர் வெண்டளை எனப்படும்.
(எ-கா) எடுத்தக் காட்டாக ஒரு குறள்வெண்பா கீழே:-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
4) வெண்சீர் வெண்டளை : (காய் முன் நேர்) அதாவது காய்ச்சீர் அல்லது பூச்சீர் இவைகளில் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நேரசையுடன் ஒன்றுவது. இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டியது பூச்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நேரசையால் காயெனக் கொள்ளபடுதல் வேண்டும்.
(எ-கா) எடுத்துக் காட்டாக ஒரு குறள்வெண்பா கீழே:-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
5) கலித்தளை : (காய் முன் நிரை) அதாவது காய்ச்சீர் அல்லது பூச்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நிரையும் ஒன்றுவது. இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டியது பூச்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நேரசையால் காயெனக் கொள்ளபடுதல் வேண்டும்.
(எ-கா) எடுத்துக் காட்டாக வெண்கலிப்பா ஒன்று கீழே:-
ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
தார் வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து
6) ஒன்றிய வஞ்சித்தளை : (கனி முன் நிரை) அதாவது கனிச்சீர் அல்லது நிழற்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாம் சீரின் முதலான நிரையசையுடன் ஒன்றுவது. இங்கு நினைவிற் கொள்ளப்பட வேண்டியது நிழற்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நிரையசையால் கனியெனக் கொள்ளபடுதல் வேண்டும்.
7) ஒன்றாத வஞ்சித்தளை : (கனி முன் நேர்) அதாவது கனிச்சீர் அல்லது நிழற்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாம் சீரின் முதலான நேரசையுடன் ஒன்றுவது. இங்கும் நினைவிற் கொள்ளப்பட வேண்டியத்உ நிழற்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நிரையசையால் கனியெனக் கொள்ளபடுதல் வேஎண்டும்.
(எ-கா)ஒன்றிய/ ஒன்றாத வஞ்சித் தளைகளுக்கு எடுத்துக்காட்டாக குறளடி வஞ்சிப்பா ஒன்று கீழே:
மந்தாநிலம் வந்தசைப்ப (ஒன்றாத வஞ்சித்தளை – கனி முன் நேர்)
வெண்சாமரை புடைபெயர்தரச் (ஒன்றிய வஞ்சித்தளை -கனி முன் நிரை)
செந்தாமரை தாள்மலர்மிசை (ஒன்றாத வஞ்சிதளை – கனி முன் நேர்)
எனவாங்கு (தனிச்சொல்)
இனிதிருந் தோங்கிய இறைவனை (ஆசிரிய சுரிதகம்)
மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே! (ஆசிரிய சுரிதகம்)

Russellhni
6th March 2015, 01:53 PM
இவ்வளவு விஷயம் இருக்கு கவிதை எழுதுவதில் !
இது ஒண்ணுமே தெரியாமல், என்னமாய் கிறுக்கியிருக்கிறேன் நான் ! :banghead:

chinnakkannan
6th March 2015, 01:59 PM
குட்டிக் குட்டி வெண்பாஸ் லாம் பாக்கலாமா

இப்போ வெண்பான்னா எந்தத் தளை வரணும்

நேரொன்றாசிர்யத் தளை நிரையொன்றாசிரியத் தளை நோ..

இயற்சீர் வெண்டளை மா முன் நிரை எக்ஸாம்பிள்ஸ் கண்ணன் கவிதா
அஜீத் அமலா
கனவு வனிதை

வெண்சீர் வெண்டளை – காய் முன் நேர்

கல்நாயக் கல்பனா
முரளிதரன் – மோனாலிசா..

சரியோ.

மகாகவி காளிதாஸ் படத்துல வந்த வெண்பா
அன்னையே எம்மில் அரும்புலவர் யாரென்று
இன்னமுத வாயால் இயம்பு

சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (திருக்குறள்)

வெண்பா ஆக்சுவலா நாலடில வரும்.. இரண்டடில வர்றது குறள் வெண்பா..
எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
கண்ணன் கழல்களே காப்பு

மேற்கண்ட பாட்டுல என்ன மிஸ்டேக்..

எ க்கு உ மோனை கிடையாது –
எண் சின் வண் கண் எதுகை ஓகே
இப்போ நாலு வரி இருக்குது இதில..கடைசி அடி மூணு சீர்ல இருக்கு இல்லியா..

சரி அந்தக் கடைசி வரி மூணுசீர்ல கடைசிச் சொல் இருக்கில்லியோ அது வந்து இந்த ஃபார்முலால இருக்கணும்.எந்தஃபார்முலா. நாள், மலர், காசு பிறப்பு

இந்த வெண்பால கடைசிச் சொல் காப்பு ப் சைலண்ட் ஸோ காசு வாய்ப்பாடுல சேர்த்துக்கலாம்

சரி வெண்பாவோட இலக்கணம் ஓகேயா இருக்கா

எண்ணுகையில் நெஞ்சுள்ளே கூவிளங்காய் தேமாங்காய் (ஆக்சுவலா கூவிளங்காய் வெண்பால அலோவ்ட் கிடையாது..பட்கொஞ்சம் அப்ப்ப ஓசை குறையாம இருந்துச்சுன்னா வெச்சுக்கலாம். அட் த டிஸ்க்ரீஷன் ஆஃப் கவிஞர் ( நாம தான் எக்சாம்லாம் எழுதப் போறதில்லையே))
அதாவது எண்ணுகையில் நெஞ்சுள்ளே காய் முன் நேர்.
உற்சாகம் தான் பிறக்கும் இதுவும் காய் முன் நேர் தான்
சின்னக் குழவியவன் – சின்ன தேமா குழவியவன் கருவிளங்காய் பட் இப்போ சின்ன ந்னா இன்னா தேமா மா. குழ நிரை..ஸோ மா முன் நிரை
இப்படியே எல்லாத்துக்கும் செக் பண்ணுங்க.. சரியா இருக்கான்னு சொல்லுங்க
மேலே எழுதிப் பார்த்தது இன்னிசை வெண்பா . அப்படின்னா நாலு வரிகளுக்கும் ஒரே எதுகை தான் வரணும் எண் சின் வண் கண் எதுகை

புரியலை.. நேரிசை வெண்பான்னு இன்னொன்னு இருக்கு.. அதப் பார்த்தா இது புரிஞ்சுடும்..

chinnakkannan
6th March 2015, 02:00 PM
முரளி.. கைவசம் தமிழ் இருக்கு கற்பனை இருக்கு.. என்ன கொஞ்சம் பாத் தான் போடணும் அதான் இங்க இருக்கே.. ஈஸியாப் போட்டுடலாம்.. முட்டிக்கல்லாம் வேணாம்..

Russellhni
6th March 2015, 02:10 PM
இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் ! உங்கள் B +ve attitude !

நான் தயார் ! நீங்க தயாரா? :shoot:

அடடா ! சந்தோஷத்திலே நன்றி கூட சொல்ல மறந்திட்டேனே ! :ty::ty:

chinnakkannan
6th March 2015, 02:18 PM
ooh yes..ஆனாக்க நான் கற்றதே கைம்மண்ணளவு தான்.. எனக்குத் தெரிஞ்சதச் சொல்றேன்.. :)

chinnakkannan
6th March 2015, 02:36 PM
நேரிசை வெண்பா வென சில தினங்கள் முன்பு எழுதிப் பார்த்தவை..

காணி நிலங்கேட்டேன் கண்டுவந்தே தந்தனை,
நாணி வணங்கி நலமுடன் - வாணியுனைப்
பக்குவமாய்த் தாழ்ந்துவுன் பாதம் பணிகின்றேன்
சொக்கும் எழுத்தெனக்குச் சொல்..

*
நாணும் பலசெயல்கள் நற்புவியில் செய்திருந்து
காணும் காட்சிகளே உண்மையெனப் - பேணித்
தானிருந்தேன் நீக்கினாய் தக்கபடி வாணிநீ,
ஆணியே ஆயிற் றது..

*
நற்றமிழில் பாட்டெழுத நாட்டமுடன் தாளெடுத்தால்
கற்பனையோ ஓடுதே காதத்தில் - உன்பதத்தில்
வாணியே வீழ வரந்தந்தாய் இங்கெனக்கு
ஆணியே சொல்லுக் கது..

**

இரண்டாவது அடில ஈற்றுச் சீர் அதாவது கடைசிச் சீர் தனிச்சொல்லாகவும் எதுகையோடும் இருந்தால் அதற்கு அடுத்த இரண்டு அடிகளுக்குவேறு எதுகை மாற்றிக்கொள்ளலாம்..இது நேரிசை வெண்பா.. புரியலை?

chinnakkannan
6th March 2015, 02:50 PM
மேலும் சில நேரிசை வெண்பாக்கள் முன்பு எழுதிப் பார்த்தது..

இது ஒரு புதிர்..இது என்ன பழம் + ஏதாவது மிஸ்ஸிங்க் இருக்கா வெண்பா இலக்கணம் சொல்லுங்க..

வண்ண மெதுவென்றால் வஞ்சியரின் மெல்லிதழில்
திண்ணமாய் நின்றே சிரித்திடும் - தன்மையில்
நெஞ்சப் பிணிநீக்கி நேர்படச் செய்வதில்
விஞ்சிடும் இப்பழம் தான்..

கூட ஒருவார்த்தை கொண்டாலே இப்பழமும்
நாடத்தான் வைக்கும் நாயகரை - பூடகமாய்
உள்சிரிக்கும் நங்கை உதடுகளில் தானுறையும்
பற்களுக் கீடாகும் பார்..

kalnayak
6th March 2015, 03:33 PM
சி.க,
இட் இஸ் டூ ஹெவீ ஃபார் மி.
ஈரசையான இயற்சீர் நான்கு சொன்னவுடனே எனக்கு ஃப்ரென்ச் படிச்சா மாதிரி இருக்கு. ரொம்ப நேரம் எடுத்து புரிந்து கொண்டேன். உங்களின் ஒரு பதிவில் உள்ள சரக்கை புரிந்து கொள்ள எனக்கு இரண்டு வாரமாவது வேணும். நான் லீவ் போட்டுடலாம்னு இருக்கேன். ஆமாம் வகுப்புக்கு மட்டம் போடும்படி கஷ்டமா இருக்கே. கொஞ்சம் நாள் குடுங்க. அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா படிச்சு தேற பார்க்கிறேன்.

kalnayak
6th March 2015, 03:52 PM
//முச்சீர் தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் தெரிந்தாகி விட்டது..
முச்சீர் எட்டல்லவா? தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி பயன்படாதா? ஓ!!! இவைகள் வஞ்சிப்பாக்களில் உபயோகப் படுத்தப் படுவதாக பின்பு சொல்லி இருக்கிறீர்கள்.*அய்யோ கண்ணை கட்டுதே!!!

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு =
இர/வும்/ - நிரை நேர் - புளிமா
பக/லும்/ - நிரை நேர் - புளிமா /// தளை: இரவும் பகலும் - நேர் நிரை
உர/சிக்/ - நிரை நேர் - புளிமா /// பகலும் உரசிக் - நேர் நிரை
கொள்/ளும்/ - நேர் நேர் -தேமா /// உரசிக் கொள்ளும் - நேர் நேர்
அந்/திப்/ - நேர் நேர் - தேமா /// கொள்ளும் அந்திப் - நேர் நேர்
பொழு/தில்/ - நிரை நேர் - புளிமா /// அந்திப் பொழுதில் - நேர் நிரை
வந்/துவி/டு/ - நேர் நிரை நேர் - கூவிளங்காய் /// பொழுதில் வந்துவிடு - நேர் நேர்

இங்கே தளைகளை பார்த்தோமானால் நேர்-நிரை மும்முறையும், நேர்-நேர் இருமுறையும் வந்துள்ளன. இவைகளை எந்த தளையில் வைப்பது. என் தலையே சுற்றுகிறது.

chinnakkannan
6th March 2015, 04:01 PM
அந்த வரில்ல தளைல்லாம் சொல்லலை.. ச்சும்மா என்ன வாய்ப்பாடு

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு

தேமா புளிமா புளிமா தேமா தேமா புளிமா கூவிளங்காய்

இதையே ரெண்டு அடியாப் பிரிச்சா

தேமா புளிமா புளிமா தேமா
தேமா புளிமா கூவிளங்காய்

அதாவது

மா மா மா மா

மா மா காய்...

இது எழுசீர் விருத்தத்தின் ஒரு வகை.. அது வர்றச்சே பார்க்கலாம்.. (அறுசீர் எழு சீர் எண்சீர்.....பன்னிரு சீர் வரைக்கும் தளை பார்க்க வேண்டியதில்லை..அதான் விருத்தம் முதல்ல செய்யலாம்னு சொன்னேன்..)

நோ ப்ராப்ளம்..மெல்லவே படிங்க..

chinnakkannan
6th March 2015, 04:02 PM
மெய்னா சீர்கள் , எதுகை மோனை தெள்ளத் தெளிவாப் படிச்சுடுங்க

தளை தானே வரும்..அதைக் கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம்.. அப்புறம் எழுத எழுத வந்துடுங்க...

chinnakkannan
6th March 2015, 04:04 PM
இட் இஸ் டூ ஹெவீ ஃபார் மி.// ஆரம்பத்துல நான் இருசீருக்கும் முச்சீருக்குமே புரியாம ஸ்ட்ரெய்ட்டா வெண்பா எழுத ஆரம்பிச்சுட்டேனாக்கும்.. அப்புறம் ஒரு அம்பது பாட் எழுதிப் பார்த்ததுக்கப்புறம் தான் குன்சா புரிஞ்சது எனக்கு.. நீங்க இப்போதே புரிஞ்சுக்கிட்டீங்க (ரெண்டே நாள்ல்) ஸோ கவலைப் படேல்..

kalnayak
6th March 2015, 04:24 PM
//(1) ஈரசையான இயற்சீர் நான்கு(தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்)- இவை ஆசிரிய உரிச்சீர்கள் எனப்படும். பெரும்பான்மை அகவற்பாவிலும், வெண்பாவிலும் பயின்று வரும். தேமா/புளிமா தவிர்த்து விளச்சீர்கள் சிலநேரம் கலிப்பாவிலும் பயின்று வரும்.////

//(2) மூவசையான காய்ச்சீர் நான்கு (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) இவை வெண்பா உரிச்சீர்கள் எனப்படும். இவை வெண்பாவில் அதிகம் பயின்று வரும்.////

அப்போ ஈரசை சீர்கள் நான்கும், மூவசை காய் சீர்கள் நான்கும் மட்டும் பயன்படுத்தும் பாடல் வெண்பாவில் சேருமா?*

chinnakkannan
6th March 2015, 04:33 PM
தே மா புளிமா
கருவிளம் கூவிளம்
தேமாங்காய் புளி மாங்காய்.. இவை மட்டும் தான்.. கனிச்சீர் வெண்பால்ல வராது (தேமாங்கனி புளிமாங்கனி)

chinnakkannan
6th March 2015, 04:34 PM
அதே போல காய் முன் நேர் தான் வரும்..

kalnayak
6th March 2015, 04:37 PM
தங்/கத்/ தட்/டும்/ சங்/காய்/ மின்/னும்/
மங்/காப்/ பட்/டும்/ மங்/கை/ நல்/லாள்/
கன்/னம்/ என்/னும்/ காந்/தம்/ முன்/னே/
என்/றும்/ நே/ரோ/ சொல்/வீ/ ரிங்/கே!/

எல்லாமே ஈரசை சீர்கள்தான். அதுவும் நீங்கள் சொன்னதுபோல் எல்லாம் தேமா-தான். அதாவது இங்கே முதல் சீரின் (வார்த்தையின்) கடைசி அசையும் நேர்-தான், அதற்கடுத்த சீரின் முதல் அசையும் நேர்-தான். இதை நீங்கள் நேரொன்றாசிரியத் தளை(???எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது?) : (மா முன் நேர்) என்று சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்.

இது முதல் வார்த்தை புளிமா-வாக இருந்தால் மட்டுமே சாத்தியம் அல்லவா. இடையில் ஒரு புளிமா சீர் வந்தால் பிரச்சினை வருமே. அப்போது பொதுவாக நாம் 'தேமா, புளிமா அமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நேரசை ஒன்றி வருவதாகும்.' என்று சொல்ல முடியாதே!!!

அதுமட்டுமல்ல, அப்போது*நேரொன்றாசிரியத் தளை யின் கீழ் இரண்டு வகை பாடல்கள் மட்டுமே இருக்கும். அவைகளை முதல் வார்த்தையை வைத்தே பிரித்து விடலாம். அதாவது முதல் சீர் தேமா அல்லது புளிமாவாக இருக்கும். மற்ற எல்லா சீர்களும் தேமா-வாகவே இருக்க வேண்டும்.*

chinnakkannan
6th March 2015, 04:41 PM
யாகாவா ராயினும் நாகாக்கக் காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு..

ஸீ முதல் ரெண்டெழுத்து தேமாங்காய் கூவிளம் மீன்ஸ் காய் முன் நேர்
ராயினும் நாகாக்க - விளம் முன் நேர் யினும் நா..
நாகாக்க காவாக்கால் காய் காய் மீன்ஸ் காய் முன் நேர்
காவாக்கால் சோகாப்பர் காய் காய் மீன்ஸ் காய் முன் நேர்
சோகாப்பர் சொல்லிழுக்கு அகெய்ன் காய் காய் மீன்ஸ் காய் முன் நேர்
சொல்லிழுக்குப் பட்டு இது கடைசியில் மூன்று சீர்களில் கடையிரண்டு சீர் எனில் கடைச்சீர் கடைசி வார்த்தை காசு போல பட்டு என முடிந்திருக்கிறது


கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

இதுல கண்ணே வந்து தேமா உள நிரை ஒற்றை வார்த்தை.. தனிச்சொல் எனலாம்..

ஃபர்ஸ்ட் லைன் எல்லாமே காய்ச் சீர்..

இன்னொன்னு..வெண்பாவோட ஓசை செப்பலோசை என்பார்கள்..பாடும் போதே அதோட டோன் tone தெரியும் உங்களுக்கு..

கொஞ்ச்ம் திருக்குறள்ஸ் படிச்சுப்பாருங்க..அண்ட் ட்ரை டு பிரிச்சுஃபை த சீர்ஸ் அண்ட் ஐடண்டிஃபை த தளை.. (டேக் யுவர் ஓன் டைம் :) ) (ஒன்லி டூ டேஸ்..ஓகேயா :) )

chinnakkannan
6th March 2015, 04:48 PM
எதுக்கு முதற்சீர் புளிமாவா வரணுங்கறீங்கன்னு புரியலை.. அதை எழுதினது எனதுஆசிரியர்

இப்போ வெண்டளை மட்டும் பார்ப்போம்..அப்புறம் ஆசிரியப் பாவிற்கு வருவோம்.. அது ரொம்ப ஈஸி..

kalnayak
6th March 2015, 04:53 PM
Ok. *வெண்பாவிற்கு *
தே மா புளிமா
கருவிளம் கூவிளம்
தேமாங்காய் புளி மாங்காய் மட்டும் பயன்படுத்தலாம். வெண்பா நான்கு அடிகளை கொண்டிருக்க வேண்டுமா? மொத்தம் எத்தனை சீர்களை கொண்டிருக்க வேண்டும் என்று வரைமுறை உள்ளதா? தெரிவிக்கவும்.

kalnayak
6th March 2015, 05:02 PM
எதுக்கு முதற்சீர் புளிமாவா வரணுங்கறீங்கன்னு புரியலை.. அதை எழுதினது எனதுஆசிரியர்

.

இல்லை எல்லா தளைகளும் நேருக்கு நேராய் வரணும் என்றால் எல்லா சீர்களும் நேர்-ல் முடிய வேண்டும் (கடைசி சீர் தவிர.) அதே போல முதல் சீர் தவிர எல்லா சீர்களும் நேர்-ல் ஆரம்பிக்க வேண்டும் அல்லவா? முதல் சீர் நேர்-லோ அல்லது புளி-யிலோ ஆரம்பிக்கலாம். அப்போது முதல் சீர் தேமா-வாகவோ அல்லது புளிமா-வாகவோ இருக்கலாம் என்று சொன்னேன்.*

chinnakkannan
6th March 2015, 05:11 PM
வெண்பா இரண்டடி மூவடி நான்கடி பஃறொடை என வரும்

இரண்டடி என்றால் குறள் வெண்பா

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மீன்ஸ்
முதலடியில் நான்கு சீர் ப்ள்ஸ் வெண்டளை மாமுன் நிரை விள முன் நேர் காய் முன் நேர் ப்ளஸ் எதுகை மோனை
இரண்டாமடியில் மூன்று சீர் அதே வெண்டளை


மூன்றடி சிந்தியல் வெண்பா

முதல் ரெண்டடி நான்கு சீர்கள்
மூன்றாவது மூன்று சீர்

நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
அறநாட்டுப் பெண்டி ரடி

நான்கு அடிகளில் வருவது நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா..என் பாட்டுக்களையே உதாரணமாக முன்பு போட்டிருக்கிறேனே கொஞ்சம் பாருஙக்ள்

மூன்று அடிகளில் நான்கு சீர்கள்
நான்காம் அடியில் மூன்று சீர்கள் வித் எண்டிங்க் அஸ் நாள் அல்லது மலர் அல்லது காசு அல்லது பிறப்பு

நான்குக்கும் மேற்பட்டு ஆறு எட்டு பத்து என அடிகள் கொண்டவை பஃறொடை வெண்பா..

chinnakkannan
6th March 2015, 05:16 PM
897; 901; 902 பாருங்க

அவர் முற்றிலும் தேமாச் சீர்களில் எழுதியிருக்கிறார்.. நீங்கபுளிமாவிலும் ஆரம்பித்து தேமா கொண்டுவரலாம்.. ஆனாக்க அடுத்த லைன்ல தேமா தான் வரணும்.. மீன்ஸ் ஒரு அடியோட இறுதிச் சீரும் மறு அடியோட முதல் சீரும் ஆசிரியத் தளைல இருக்கணும்! ஸோ அந்தப் புளிமான்னு பேச்சே வராதில்லையா..

chinnakkannan
6th March 2015, 05:19 PM
//அதுமட்டுமல்ல, அப்போது*நேரொன்றாசிரியத் தளை யின் கீழ் இரண்டு வகை பாடல்கள் மட்டுமே இருக்கும். அவைகளை முதல் வார்த்தையை வைத்தே பிரித்து விடலாம். அதாவது முதல் சீர் தேமா அல்லது புளிமாவாக இருக்கும். மற்ற எல்லா சீர்களும் தேமா-வாகவே இருக்க வேண்டும்.* //

தங்/கத்/ தட்/டும்/ சங்/காய்/ மின்/னும்/
மங்/காப்/ பட்/டும்/ மங்/கை/ நல்/லாள்/

கல் நாயக்ங்க்ணா முதல் சீர் புளிமாவாப் போட்டீங்கன்னா இரண்டாவது அடிலையும் எதுகைக்காக புளிமா தானே வரும்.. அப்போ நேரொன்றாசிரியத் தளை போய்டுமே..

kalnayak
6th March 2015, 05:23 PM
//அதுமட்டுமல்ல, அப்போது*நேரொன்றாசிரியத் தளை யின் கீழ் இரண்டு வகை பாடல்கள் மட்டுமே இருக்கும். அவைகளை முதல் வார்த்தையை வைத்தே பிரித்து விடலாம். அதாவது முதல் சீர் தேமா அல்லது புளிமாவாக இருக்கும். மற்ற எல்லா சீர்களும் தேமா-வாகவே இருக்க வேண்டும்.* //

தங்/கத்/ தட்/டும்/ சங்/காய்/ மின்/னும்/
மங்/காப்/ பட்/டும்/ மங்/கை/ நல்/லாள்/

கல் நாயக்ங்க்ணா முதல் சீர் புளிமாவாப் போட்டீங்கன்னா இரண்டாவது அடிலையும் எதுகைக்காக புளிமா தானே வரும்.. அப்போ நேரொன்றாசிரியத் தளை போய்டுமே..

அப்போ நேரொன்றாசிரியத் தளையில் கடைசி சீர் தவிர்த்து எல்லா சீருமே தேமா-தான் வரணும்-ங்றீங்க?

chinnakkannan
6th March 2015, 05:36 PM
யெஸ் கல் நாயக்..
நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை ஆகிய இரண்டும் ஆசிரியப்பாவுக்குச் சிறப்பாக உரியவை.


(எ-டு) போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னு வாரே

(யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)


இப்பாவில் உள்ள தளைகள் அனைத்தும் மாமுன்நேர் என அமையும் நேரொன்றாசிரியத் தளைகளே ஆகும். (நேர் ஒன்று ஆசிரியத் தளை) நேர் - நேர் என ஒன்றுவதால் இத்தளை இப்பெயர் பெற்றது.


போ|து

சாந்|தம்

தேமா தேமா

மாமுன் நேர் - நேரொன்றாசிரியத் தளை


இவ்வாறே, எஞ்சிய அனைத்துச் சீர்களின் இடையிலும் இத்தளை அமைந்திருப்பதை நீங்களே அலகிட்டுப் பொருத்திக் காணுங்கள்.


(எ-டு) அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே
(யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)


இப்பாவில் உள்ள தளைகள் அனைத்தும் விளம் முன் நிரை என அமையும் நிரையொன்றாசிரியத் தளைகளே ஆகும். (நிரை ஒன்று ஆசிரியத் தளை) நிரை - நிரை என ஒன்றுவதால் இத்தளை இப்பெயர் பெற்றது.


அணி|நிழல் அசோ|கமர்ந்
கருவிளம் கருவிளம்

விளமுன் நிரை - நிரையொன்றாசிரியத் தளை


ஏனைய சீர்களின் தளைப் பொருத்தத்தைக் கண்டு கொள்ளுங்கள்.

chinnakkannan
6th March 2015, 05:38 PM
தாங்க்ஸ் கல் நாயக் எனக்கே இப்ப தான் தெரியும் :)

chinnakkannan
7th March 2015, 02:00 PM
புதுசா வெண்பா எழுதலாம்னு பார்த்தேன்.. வரமாட்டேங்குது..வாழ்க்கையே வெறுத்துப் போச்சு..

அட பட்டினத்தாருக்கும் ஏற்பட்டுருச்சு இதே விஷயம்..

மனித வாழ்க்கைச் சுழல் என்ன பண்றது சுத்திச் சுத்தி பிறப்பு, இறப்பு மறு பிறப்பு

மறுபிறவி என்பது உண்டு தான்.. ஏழேழ் ஜன்மம்னு வரும்.. அது ஏழேழ் நாற்பத்தொன்பது (மல்டிப்ளிகேஷன் கரெக்ட் தான்!) ஜன்மமா இல்லை..

எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்னு சொல்லலாம்..சில பிறவிகள் போனவுடன் அடுத்த ஜென்மாக்கு வந்துடுமாம்..சில பிறப்புக்கள் டிலே ஆகுமாம்..ஆனா மறு பிறப்புங்கறது உண்டாம்.. ஸோ என்ன பண்றது.. ஆண்டவன் கிட்டக்கயே சரண் அடஞ்சோம்னா.. அம்புட்டு தான்மறுபிறப்பே இல்லாமப் பண்ணிடுவான்

இதையே ரெக்வஸ்டா வைக்கறார்..

மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே- நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!

வேதாங்கறது பிரம்மன்..நம்மள மறுபடி மறுபடி பிறக்க வச்சு வச்சு கைசலிக்க வச்சுடறானாம்.

ம்ம் நான் என்ன பண்ணினேன்.. கண்ணு கொஞ்சம் பவர் குறைஞ்சுடுத்தா கண்ணாடி கொடுத்திருந்தேன்.. அதை வாங்கிட்டு வந்தனா..ஹை..இதையே வெண்பாவா - குறள் வெண்பாவா எழுதிப்பார்த்தா என்ன..

கண்ணாடி மாற்றுதற்கு கண்ணன் விரைந்துசென்று
கண்டுவந்தான் கண்டுவந்தான் காண்..

கண்டு உவந்தான்னும் வெச்சுக்கலாம்.. எதைக் கண்டு உவந்தேன்..வர்றச்சே ஒரு பிங்க் சுடிதார் போட்ட ஒரு பொண்ணு க்ராஸ் பண்ணாளா..புதுக்கண்ணாடில பிரகாசமாத் தெரிஞ்சுது.. . ம்ம் எனக்கு நிச்சயமா மறுபிறப்பு உண்டோ..:)

Russellhni
7th March 2015, 08:21 PM
அப்பாடா ! இவ்வளவு நாள் நீங்க எழுதறதை படிச்சிகிட்டே வந்தேன். இது மட்டும் தான் கொஞ்சம் புரிந்தது. யப்பா யப்பா, நீங்களும் கல்நாயக்கும் விவாதம் பண்ணியது, ஒன்னும் புரியலேன்னாலும் சூப்பர். நான் கொஞ்சம் நிதானமா படிச்சி புரிஞ்சிகிட்டு வரேன். சரியா ! தேங்க்ஸ் .....ரெண்டு பேருக்குமே !

kalnayak
9th March 2015, 02:20 PM
சி.க. பொருளை பார்க்காதீர்கள், நேர்ஒன்றிய ஆசிரியத் தளையில் ஒரு பாடல்முயற்சித்தேன்.மதுரைக்காரங்கதான் நீங்க. நக்கீரராகாம சரியான்னு சொல்லுங்களேன்.

வள்ளல் இங்கே வந்தால் கூட
எள்ளல் ஏக்கம் கொண்டால் தங்கம்
கள்ளன் அங்கே கன்னம் வைப்பான்
தள்ளல் ஏனோ தையல் பக்கம்


நிரை ஒன்றிய ஆசிரியத் தளை (விநாயகரைப் பற்றித்தான் ஆரம்பித்தேன். சொல்லமுடியவில்லை.)
---------------------------------------------
முதலாகி முடிவாகி முனைத்தவா
புதல்வனாய் புகுந்திடு புரவலா
வதங்கொடு வாதத்திலா வெகுசதை
ரதமோடு பொருவரை ரகளையாய்

அறிமுகமான பாடல்களில் இதை தேடிக்கொண்டிருக்கிறேன்.

kalnayak
9th March 2015, 03:05 PM
நேர் ஒன்றிய மற்றும் நிரை ஒன்றிய ஆசிரியத் தளைகளில் ஒரு சிறு சந்தேகம்: எல்லா அசைகளும் ஈரசைகளாகத்தான் இருக்க வேண்டுமா? எல்லா அசைகளும் மூவசைகளாக அல்லது ஈரசை மற்றும் மூவசைகளாக இருந்து எல்லாத் தளைகளும் நேர்-நேர் மற்றும் நிரை-நிரை என்று அமையக்கூடாதா?

kalnayak
9th March 2015, 03:19 PM
இயற்சீர்வெண்டளை:

கற்/க/ கச/டறக்/ கற்/பவை/ கற்/றபின்/
நிற்/க/ அதற்/குத்/ தக/

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா நிரை

தளைகள்: நேர்-நிரை, நிரை-நேர், நிரை-நேர், நிரை-நேர், நேர்-நிரை, நேர்-நிரை; அட எல்லா சீர்களும் ஈரசைகளே. வெரி குட் வள்ளுவரே!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

புளிமா புளிமா புளிமாங்காய் தேமா
புளிமா புளிமா புளிமா

தளைகள்:நேர்-நிரை, நேர்-நிரை, நேர்-நேர், நேர்-நிரை, நேர்-நிரை, நேர்-நிரை -
புளிமாவில் திருக்குறளையே ஆரம்பித்த வள்ளுவர் இந்த பாடலில் இரு சீர்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் புளிமாவாகவே வைத்துவிட்டார். ஒரு சீரை புளிமாங்காய் மற்ற ஒன்றை தேமாவாக வைத்த காரணம் எதுவும் உண்டோ? இந்த பாடல் வென்பாவை மட்டுமின்றி எந்த தளை வகைகளில் சேர்த்தி? இவைகளை சற்றே கவனித்து இருந்தால் இதுவும் இயற்சீர்வெண்டளை ஆகியிருக்கும். வள்ளுவருக்கு நாம சொல்லிக் கொடுக்க முடியாது. எதுனாச்சும் காரணம் இருக்கா?
-----------------------------------------------------------------------------------------------------------

சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

கூவிளம், தேமா, புளிமா, புளிமா
கூவிளம், தேமா, *நிரை

தளைகள்:*விளம் முன் நேர், மா முன் நிரை,*மா முன் நிரை,*மா முன்*நேர்,*விளம் முன் நேர்,*மா முன் நிரை

chinnakkannan
9th March 2015, 03:31 PM
//வள்ளல் இங்கே வந்தால் கூட
எள்ளல் ஏக்கம் கொண்டால் தங்கம்
கள்ளன் அங்கே கன்னம் வைப்பான்
தள்ளல் ஏனோ தையல் பக்கம்//

நாலு நாலு இருசீர் மா முன் நேர். குட் ஆசிரியத் தளை தான்..

இதையே கொஞ்சம் செதுக்கினா நிலைமண்டில ஆசிரியப் பா ஆகிடும்

வாட் இஸ் நிலைமண்டில ஆசிரியப்பா..

chinnakkannan
9th March 2015, 03:33 PM
பா வகைகள் – ஆசிரியப்பா
நெடும் பாடல்களைப் பாட ஏற்றது.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
ஓசை: அகவல் ஓசை;
அடி: 3 அடிகளுக்கு குறையாமல் வரும்.
சீர்: அடிதோறும் 4 சீர்கள்; ஈற்றுச்சீர் ஏ,ஓ,ஈ,ஆய், என், ஐ என்பவனற்றுள் ஏதேனும் ஒன்று பெற்று வரும். (ஏகாரத்தால் முடிவதே ஆசிரியப் பாவிற்குச் சிறப்பு)

*
தளை: ஆசிரிய உரிச்சீர் (மாச்சீர், விளச்சீர்); நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத் தளையும் மிக்கு வரும்; வஞ்சி உரிச்சீர்கள் வராது( கருவிளங்கனி, கூவிளங்கனி).

ஆசிரியப்பாவின் வகைகள்: ( நான்கு வகை)

நேரிசை ஆசிரியப்பா

இணைக்குறள் ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியாப்பா

அடிமறி மண்டில ஆசிரியாப்பா

நேரிசை ஆசிரியப்பா:

ஈற்றடிக்கு(கடைசி அடிக்கு) முன் அடியில் 3 சீர்கள் வரும்;மற்ற அடிகளில் 4 சீர்கள் வரும்.
உ.ம்
” நாடா கொன்றோ; காடா கொன்றோ; – 4 சீர்
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ; – 4 சீர்
அவ்வழி நல்லவர் ஆடவர் – ஈற்று அயல்ஸ்டியில் 3 சீர் வந்தது.
அவ்வழி நல்லை வாழிய நிலனே! - 4 சீர்

இணைக்குறள் ஆசிரியப்பா;

முதலடியும், ஈற்றடியும் 4 சீர்கள்; இடையே 2 அல்லது 3 சீர் கொண்ட அடிகள் வரும்.
உ.ம்:

“நீரின் தன்மையும் தீயின் வெம்மையும் – முதல் அடியில் 4 சீர்
சாராச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாவே” – எற்றடியில் 4 சீர். மற்ற உள்ளடிகளில் 2 (அ) 3 சீர்.

நிலைமண்டில ஆசிரியாப்பா:

எல்லா அடியும் நாற்சீராய் வரும். ( சிலப்பதிகாரம், மணிமேகலை – நிலைமண்டில ஆசிரியாப்பாவால் இயற்றப்பட்டது)

அடிமறி மண்டில ஆசிரியாப்பா:

இதுவும் எல்லா அடிகளிலும் 4 சீர் பெற்று வரும். எந்த அடிகளை எங்கே மாற்றிப் பொருத்தினாளும் பொருள் மாறாது.

ஆசிரியப்பாவின் இனங்கள்:
ஆசிரியத் துறை
ஆசிரியத் தாழிசை

ஆசிரிய விருத்தம்.

ஆசிரிய விருத்தம் ஆறு சீர் முதல் எத்தனை சீர் ஆனாலும் தம்முள் அளவொத்து வரும்

4 சீர்களுக்கு மேல் போனால் கழிநெடிலடி

6 சீர் இருந்தால் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனப் படும். சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளது.

கொஞ்சம் உள்வாங்குங்க படிச்சு :)

chinnakkannan
9th March 2015, 03:42 PM
//நேர் ஒன்றிய மற்றும் நிரை ஒன்றிய ஆசிரியத் தளைகளில் ஒரு சிறு சந்தேகம்: எல்லா அசைகளும் ஈரசைகளாகத்தான் இருக்க வேண்டுமா? எல்லா அசைகளும் மூவசைகளாக அல்லது ஈரசை மற்றும் மூவசைகளாக இருந்து எல்லாத் தளைகளும் நேர்-நேர் மற்றும் நிரை-நிரை என்று அமையக்கூடாதா?// அப்படி இல்லை மா முன் நேர்

கண்ணனைக் கண்டுவந்த கண்களுக்கு என்னடி
வண்ணமாய்ச் சிரிக்குதே வளமுடன் துள்ளுதே
எண்ணந் தன்னில் கொள்ளை கொண்ட
அண்ணலைப் பார்த்ததால் ஆசையாய்த் தாவுதே

இது ஜஸ்ட் லைக் தட் எழுதிப் பார்த்தது.. இது நிலைமண்டில ஆசிரியப் பா முயற்சி எனலாம்.. பார்த்தீங்கன்னா விளமுன் நிரையும் வந்திருக்கும் விள முன் நேரும் ( வெண்டளை) ம் வந்திருக்கு.. கண்டுவந்த கண்கள் காய் முன் நேர் ( வெண்டளை) வந்திருக்கு

பொதுவா இந்த ஆசிர்யப் பா வந்து அகவலோசை மேல பாருங்க.. அட பாட்டச் சொன்னேங்க

கண்ணனைக் கண்டுவந்த கண்களுக்கு என்னடி பாட்டில கொஞ்சம் அகவலோசை வருதில்ல

ஸோ முச்சீர் எப்போ வருதோ அதாவது ஓசை தட்டாமல் இருப்பின் போட்டுக்கலாம்.. இது ஆசிரியப்பாவின் விதி..

இதோட எக்ஸ்டென்ஷன் தான் ஆசிரிய விருத்தம் ( வெண்பாக்கு முன்னால ஆசிரிய விருத்தம் போகலாம்னு சொன்னது இதுக்குத் தான்..

chinnakkannan
9th March 2015, 03:48 PM
//முதலாகி முடிவாகி முனைத்தவா
புதல்வனாய் புகுந்திடு புரவலா
வதங்கொடு வாதத்திலா வெகுசதை
ரதமோடு பொருவரை ரகளையாய்// இதுல புதல்வனாய் புகுந்திடு விள முன் நிரை வருது வதங்கொடு வாதத்திலா என்றால் விள முன் நேர்

முச்சீர்ல முழுக்க எழுதியிருக்கீங்க அதான் முழிக்கிறீங்க :)

chinnakkannan
9th March 2015, 03:57 PM
இந்தத் திரைப்பாட்டைப் பாருங்க.. இதுல சில இடங்கள்ள எதுகை வருது சில இடங்கள்ள மோனை வருது.. ஆனா கடைசியில
//ஈற்றுச்சீர் ஏ,ஓ,ஈ,ஆய், என், ஐ என்பவனற்றுள் ஏதேனும் ஒன்று பெற்று வரும்// இப்படி வாராததால ஆசிரியப் பான்னு சொல்ல முடியாமல் புதுக்கவிதையா ஆகிடுச்சு கொஞ்சம் செதுக்கி எதுகை மோனை கொண்டுவந்திருக்க முடியும் கவிஞரால்..ஆனால் செய்யலை.. :)

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசிய மில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

chinnakkannan
9th March 2015, 04:04 PM
தளை வந்து பேஸிக்ஸ் மா்திரி..அதை வைச்சு பாவகைகள்ல ட்ரை பண்ணனும்..

ஜோரா ஒரு நேரிசை ஆசிரியப்பா எழுதுங்க.. ( 4 6 8 10 வரிகள்ல தான் எழுதணும்)

Russellhni
11th March 2015, 08:21 AM
கவிதைக்கும் எனக்கும் காத தூரம் ! நன்றாக புரிந்து விட்டது !

kalnayak
11th March 2015, 11:38 AM
முரளிதரன்,

உங்கள் கவிதைகளை படித்ததால் சொல்லுகிறேன். உங்களுக்கும் கவிதைக்கும் காத தூரம் என்றால், எனக்கும் கவிதைக்கும் பலப்பல காத தூரம் இருக்க வேண்டும். ஏதோ சின்னக் கண்ணன் மற்றும் உங்களைப் போன்றவர்களை நம்பி நானும் கவிதைக் குளத்தில் இறங்கி விட்டேன். சி.க. இப்படிதான் நீந்த வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார். நாம் ஓரத்தில் அமர்ந்து குளித்து விட்டு மட்டும் சென்றால் எப்படி? இறங்கி வாருங்கள் தைரியமாக!!!

மூழ்கினாலே சாகமாட்டோம். முத்தெடுத்தால் நன்று. இல்லையென்றால் புதுக்கவிதையென தப்பிக்கலாம்.

kalnayak
11th March 2015, 11:59 AM
நேரிசை ஆசிரியப்பாவில் எனது முதல் முயற்சி. தவறையும், தவறை திருத்தும் முறையும் சொல்வீர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருவின்றி களமே புகுமெனை கவியாக்க
திருவிடமே திரட்டித் தருக திரவியமே
கேட்க தெய்வமே தந்தது
கேட்பதையே எழுத வைத்தது எண்ணமாய்

chinnakkannan
11th March 2015, 12:15 PM
:clap:

முயலும் மனமும் முயலும் குணமும்
புயலாய் மாறிப் பொலியுங் காலம்
பயமும் இன்ன பிறவும் ஓட
உயர்ந்தே உளத்தில் பிறந்தது கவிதை

chinnakkannan
11th March 2015, 12:25 PM
இதுல பவுக்கு பி மோனை கிடையாது!

pavalamani pragasam
17th March 2015, 08:35 AM
:omg: ஆத்தாடி! படு பயங்கரமா வகுப்பு நடக்குது! அழுது கரைந்து கையை காலை உதைத்து பள்ளிக்கு செல்ல மறுக்கும் பிள்ளையை பார்த்திருக்கிறீர்களா? என்னை பாருங்கள்! அடமாய் கற்க மறுத்த பாடங்கள்! என் பிரத்தியேக வித்தியாசமான குணாதிசியங்களில் ஒன்று-ஒன்றை வேண்டாம் என்று நினைத்துவிட்டால் வேண்டாம்தான்; படைத்தவனே வந்தாலும் பலிக்காது! இவ்வளவு அறிவுசெழிப்பு கொண்ட ஒரு முனைவர் நம்மிடை இருப்பதை அறிந்து பெருமையாய் இருக்கிறது! தொடரட்டும் அவரது வழிகாட்டல் பணி!:-D

chinnakkannan
17th March 2015, 10:21 AM
யக்கோவ் வாங்க வாங்க :) விடுமுறைல்லாம்முடிந்ததா..என்சாய் பண்ணினீங்களா..

சரி கொஸ்டீன் இஸ்:

நீங்கள் சென்று மகிழ்ந்தவிடங்களைப் பற்றி ஒரு பாராவுக்குக் குறையாமல் சுவை குறையாமல் சுருக்கமாக ட்ரா பண்ணுக! :)

pavalamani pragasam
17th March 2015, 01:39 PM
சாரி, தம்பி! விடுமுறை குளிரூட்டப்பட்ட மருத்துவமனை அறையில் என்னவருக்கு சிகிச்சையும் ஒய்வுமாய் இருந்த நாட்கள்!!! சுற்றிலும் சாவு, வலி, வேதனை, துக்கம், குடும்ப சிக்கல்கள் என கவனிக்க முடிந்தது ஒவ்வொன்னும் ஒரு கதைக்கு கரு-மிகவும் வித்தியாசமான அனுபவம். ம்ம்ம்...மறக்கவே விரும்புகிறேன்!

chinnakkannan
17th March 2015, 04:48 PM
ஸாரி.. இப்ப தேவலையா உங்களவருக்கு.

pavalamani pragasam
17th March 2015, 07:51 PM
ம்ம்ம்...பூரணமாய் தேறி விட்டார்.

Russellhni
23rd March 2015, 06:46 PM
சி கே . நான் என்ன தவறு செய்தேன், நற நற வென்று ஏன் என்னை ? :)

chinnakkannan
24th March 2015, 11:53 AM
ச்சும்மாங்க்ணா..:) சிலப்பதிகாரத்தல்லாம் எடுக்க வச்சுட்டீங்களே !

kalnayak
24th March 2015, 06:11 PM
முரளி, அப்ப அந்த தப்பை அடிக்கடி பண்ணுங்க!!!

pavalamani pragasam
29th March 2015, 08:56 AM
கோபால், மிகவும் அருமை உங்கள் கவிதை! :clap::clap::clap:

pavalamani pragasam
1st April 2015, 08:36 AM
கோபால், அருமை! வரிகள் அத்தனையும் எரிமலையிலிருந்து வழியும் கந்தகக் குழம்பு! நம் பாரதி சொன்ன 'ரௌத்திரம் பழகு' நினைவுக்கு வருகிறது! அக்னி குஞ்சுகள் அழகானவை!:clap::clap::clap:

Gopal.s
1st April 2015, 10:00 AM
தலைகளா,



கமெண்ட் பகுதியை இப்போதுதான் பார்த்தேன். பார்த்தவுடன் பிரகாசம். சற்றே இளைப்பாறினேன் கற்றவர் சபையில். தொற்றியிருக்கலாம் சிறிதே புலமை.

chinnakkannan
1st April 2015, 11:15 AM
நவீன கவிதை கொஞ்சம் தலை சுத்தத் தான் வைக்கிறது கோபால்..எனக்குப் புரிவதற்கு க் கொஞ்சம் நாளாகும்..:) கண்டிப்பாக புணர்ச்சி, கலவி, சோரம் போதல் படாரென தமிழில் முகத்தில் அடிக்கும் சொற்பிரயோகங்கள்..வார்த்தைகளின் வ்ன்மைத் தன்மை - எல்லாம் நவீன கவிதையில் வரவேண்டுமென்பது மரபா.. என்னால் எவ்வளவு சமாதானமோ -அறிவில்லாதவன் நான் என்று சொன்னாலும் கூட - இந்த சொற் பிரயோகங்களை ஏற்க முடிவதில்லை..

chinnakkannan
1st April 2015, 11:22 AM
//சுழற்சி செய்து இயற்கையை காக்காமல் சுழர்ச்சியால்

அழற்சியில் மானுடம் கொய்யும் நவீன செயற்கையே

விழலுக்கு இறைத்த நீராக அனைவரின் வாழ்வும்

நிழலுக்கும் ஒளியின்றி நிழல் வாழ்வு ,செல்வர்கள் ஐநூருக்காய் .//


சாமி சத்தியமாக இந்த முழுக்கவிதையும் கொஞ்சம் புரிவதற்கு க் கடினமாக இருக்கிறது..சில எக்ஸாம்பிள் கேட்டா திட்டுவீங்களான்னு தெரியலை கோபால்.. நிழலுக்கும் ஒளியின்றி நிழல்வாழ்வு- செல்வர்கள் ஐநூறுக்கான்ய்ன்னா..ஸாரிங்க்ணா.. புரியலை..

Gopal.s
1st April 2015, 12:28 PM
//சுழற்சி செய்து இயற்கையை காக்காமல் சுழர்ச்சியால்

அழற்சியில் மானுடம் கொய்யும் நவீன செயற்கையே

விழலுக்கு இறைத்த நீராக அனைவரின் வாழ்வும்

நிழலுக்கும் ஒளியின்றி நிழல் வாழ்வு ,செல்வர்கள் ஐநூருக்காய் .//


சாமி சத்தியமாக இந்த முழுக்கவிதையும் கொஞ்சம் புரிவதற்கு க் கடினமாக இருக்கிறது..சில எக்ஸாம்பிள் கேட்டா திட்டுவீங்களான்னு தெரியலை கோபால்.. நிழலுக்கும் ஒளியின்றி நிழல்வாழ்வு- செல்வர்கள் ஐநூறுக்கான்ய்ன்னா..ஸாரிங்க்ணா.. புரியலை..




இது அச்சாணி பொருத்தி வடியோட்டி கொண்டிருந்த ஆதார மனிதன், முன்னேற்றத்திற்கு கொடுத்த விலையை குறிப்பது.சுழர்சசி செய்து இயற்கையை காக்காமல் -Recycling . சுழற்சி அழற்சியால் மானுடம் கொய்வது - செய்வதையே செய்ய சொல்லி மனிதனை யந்திரமாக்கிய நவீனம்.



நிழல் காண ஒளி வேண்டும்.அந்த ஒளி கூட தராமல் இருட்டிலேயே வாழ்வது நிழல் வாழ்வு. top 500 பணக்காரர்களுக்காக உலகமே இந்த வாழ்வில் உழல்வது குறித்தது. இதில் அக படும் நடுத்தர மனிதர்களின் வாரிசு சங்கிலி குறித்து இந்த கவிதை.



அவ்வளவு கடினமில்லையே?

Gopal.s
1st April 2015, 12:36 PM
நவீன கவிதை கொஞ்சம் தலை சுத்தத் தான் வைக்கிறது கோபால்..எனக்குப் புரிவதற்கு க் கொஞ்சம் நாளாகும்..:) கண்டிப்பாக புணர்ச்சி, கலவி, சோரம் போதல் படாரென தமிழில் முகத்தில் அடிக்கும் சொற்பிரயோகங்கள்..வார்த்தைகளின் வ்ன்மைத் தன்மை - எல்லாம் நவீன கவிதையில் வரவேண்டுமென்பது மரபா.. என்னால் எவ்வளவு சமாதானமோ -அறிவில்லாதவன் நான் என்று சொன்னாலும் கூட - இந்த சொற் பிரயோகங்களை ஏற்க முடிவதில்லை..

நான் மரபு கவிஞன்தான் சின்ன கண்ணரே.ஆனால் படிமங்கள், வடிவ மாற்றம், சொற்சிக்கனம், தாண்டி சென்று வாசக யூகத்திற்கும் ,கற்பனைக்கும் இடமளிப்பது என்பது நவீன கவிதையில் என்னை கவர்ந்தவை.



Shock Value க்காக புணர்ச்சியை கொணரவில்லை. இலக்கணம் படிக்கும் போதே புணர்ச்சி விதிகள் படித்து, அது பிடித்து போனது. மற்ற படி இன்னொருவரை பார்த்து நான் சூடு போட்டு கொள்வதேயில்லை.



ரொம்ப கஷ்டமாவா இருக்கு?

chinnakkannan
1st April 2015, 12:58 PM
புரிதலுடன் கூடிய விளக்கத்திற்கு மிக்க நன்றி கோபால்.. எனக்குப் புரியக் கஷ்டமாத்தான் இருக்கு..:)

Gopal.s
1st April 2015, 01:12 PM
சரி சின்ன கண்ணரே ,



உங்களை ரொம்ப சோதிக்காமல் ,சுலபமான அழகுணர்ச்சி கவிதைகள் இனி .



நல்ல வேலை அக்கினி குஞ்சு என்று சொன்னதற்காக "குஞ்சு"வை திட்டாமல் விட்டீர்களே?(கம்பன் அல்குல் என்று பெண்ணின் பிறப்புறப்பை குறித்தது நவீன கவிதையா? காளிதாசன் ,ஆற்றில் மேலுடை இழந்து கைகளால் மறைத்து கொண்ட பெண்ணை ,காளிதாசனால் இரண்டு கைகளாலும் நீண்டு விட்ட உறுப்பை முழுதும் மறைக்க முடியவில்லையே என்று புலம்பியது நவீனமா? இது எப்பவுமே உண்டுங்காணும்.)



பிறந்த நாளும் அதுவுமாய் நான் திட்டுவேனா என்ன? இனி நான் எப்பவுமே சமர்த்துதான்.

chinnakkannan
1st April 2015, 02:35 PM
கோபால் ஐயா..இலக்கியங்களில் எப்போதுமே உண்டு..ஆனால் கொஞ்சம் கூடுமானவரை இலை மறை காய்தான்.. கூளப்ப நாயக்கன் காதலில் கூட எனக்குக் கிடைத்த ப்ரிண்ட்டட் வெர்ஷனிலேயே சிலவற்றை நீக்கிவிட்டிருக்கிறோம் என்று கூறியே செய்திருந்தார்கள்..கலிங்கத்துப் பரணியிலும் நிறைய வரும்..ஆனால் பொருள் புரிந்தவர்கள் தானதைப் புரிந்து கொள்ள இயலும்.. நான் உங்களைத் தவறு என்று சொல்லவேஇல்லை..


நவீன இலக்கியக் கவிதைகள், டி.வி.தமிழ் சீரியல்கள் இரண்டும் பார்த்தாலோ படித்தாலோ உடலில் கொப்பளம் வரும் எனக்கு :) ந. இ. க படித்தவரை -முக்கால் வாசி வேண்டுமென்றே புகுத்தப் பட்ட அதீத பாலியல் பற்றிய சிந்தனைகள்..எங்கிருந்தாவது வருமாறு பிடித்து எழுதிவிடுவார்கள்.. சிற்சில பெண்கவிஞர்களும் அப்படியே என்பது என் அபிப்ராயம்.... எனக்கு அது ஒத்துக் கொள்வதில்லை.அவ்வளவே..

எவ்வளவு தடுமாறித் தடுமாறி எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது பாட்டிற்கு நீங்கள் எழுதினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள் (மீன்ஸ்.. வார்த்தைகளில் வேறு எதுவும் விரசம் ஆகிவிடக் கூடாது என்ற கவனக் கோர்ப்பில் மிக யோசித்து ஆழமாக - என “தடுமாறித் தடுமாறி” க்கு அர்த்தம் :) )

பழைய நிகழ்வு தான்.. இவனே கொஞ்சம் திருத்திக் கொள்ளப்பா எனச் சொல்வது ஒரு முறை.. ஆனால் என்ன செய்தீர்கள்..ஒரு பெரிய அறிவு ஜீவி என்பது போன்ற ஒரு எழுத்தாளரின் பெயரைச் சொல்லி அவர் இந்த மாதிரி குழந்தை பற்றி எழுதியிருக்கிறார் என்றீர்கள்.அது உங்கள்முறை..(படித்த போது என் முகத்தில் அறைந்தாற்போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது..)கோபால்..மறுபடி சா.ச (சாமி சத்தியமாக :) ) ஆண்குழந்தை என்றால் எனக்கு கண்கள், கன்னம் பொ.வா.சிரிப்பு போட்டிருக்கும் உடை என்று தான் பார்க்கத் தோன்றும்..

ஆனால் சில நிகழ்வுகள்மனித உடலில் நடப்பதை கவிதை கதைகளில் பச்சையாக வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டுமா.. பச்சையாக உடலிச்சையைத் தூண்டும் எழுத்துக்களுக்கு வேறு பெயர் இல்லியோ..சாண்டில்யன் சிருங்கார ரசம் தூண்ட எழுதுவதற்கு சமஸ்க்ருத ஸ்லோகங்களைக் கைக்கொண்டிருப்பார்.. பட் வரம்பு மீறியதில்லை..

//கம்பன் அல்குல் என்று // இது பற்றி என் மூத்த குரு நாதர் எழுதிய விளக்கம் கீழே..


https://www.facebook.com/haranprasanna/posts/512391125448928


மறுபடியும் என் மனச் சிதறல்களை (உங்களோட பழகி இப்படி எழுத வருது..ஸாரி) மனச் சிந்தனைகளைப் பற்றித் தான் எழுதியிருக்கிறேன்..திட்டாதீங்க..:)

pavalamani pragasam
1st April 2015, 04:55 PM
அருமையான கருத்துப் பரிமாற்றங்கள்! விகாரமில்லாமல், வக்கிர புத்தியில்லாமல் எழுதுவதே அழகான கலையாக கருதப்படும். தற்கால பெண்பாற்புலவர்கள் எழுதுவது முகம் சுளிக்கவே வைக்கிறது- சந்தேகமேயில்லாமல். தொடரட்டும் நமது வெளிப்படையான வாத விவாத விளக்கங்கள்!

Gopal.s
4th April 2015, 09:00 AM
கூடல்-கலவி கூடி செய்வதே. இதில் என்ன ஆண் பெண் பேதம்?பெண் கவிஞர்கள் இதை சொல்லலாம் செய்யலாம் என்ற கட்டு பாடுகள்? சமீபத்தில் ஆச்சே என்ற மாநிலத்தில் பெண்கள் சத்தமாக வாயு பிரித்தால் ,ஐந்து கசையடி, ஐந்து மாத தண்டனை என்ற சட்டம் ஷாரியா பெயரால். இதை கேட்கும் போதே ஒரு மாதிரி இல்லை? அதே உணர்வுதான் கலை-இலக்கியங்களில் ஆண் பெண் பேதம்.



அதியமானுடன் கள் க்ளாஸ் உடன் cheers சொல்லி பெண் நண்பியாக இருந்தவர் நம் ஒவ்வையார். உடன் போக்கு,கைக்கிளை ,பெருந்திணை ,வரை மகளிர் என்று இலக்கணம் வகுத்த இனம் நாம். திருமணத்திற்கு முன்பு தடையற்ற உறவு , பெண்ணின் காமத்தை உரக்க வெளியிடும் அகத்திணை நூல்கள் என்று முன்னேறி வாழ்ந்த இனம் தமிழினம்.நாம் கொண்ட மதமோ பெருமையுடன் காம சாத்திரம் கண்டது.



இன்றிருக்கும் மனத் தடைகள் ஆண் -பெண் உறவின் கூச்சம் எல்லாம் ,இதை முதல் பாவம் என்று சொன்ன மதம் கொண்ட ஆங்கில ஆட்சி, உறவு பிறப்பிற்க்காகவே என்று கண்ட மதம் கொண்ட முகமதிய ஆட்சியாளர்கள் நமக்கு தந்தது.இது தமிழ் மரபல்ல.



இலக்கியத்தில் புகுருங்கள் அண்ணா. தமிழ் மரபு வெளிச்சம் காட்டும். நாம்தான் இன்று மாறி விட்ட ஆங்கில மரபின் பழமையை பிடித்து தொங்கி கொண்டு ,தமிழ் மரபென்று கதைக்கிறோம்.

chinnakkannan
4th April 2015, 09:14 AM
// தொடரும் ... இது விஷ்ணு பற்றி அல்ல ராமனின் புகழ் சொல்ல :: எனது கிறுக்கல்கள் // முரளி ..தொடருங்கள். ரசிக்கிறோம் நாங்கள்..

Russellhni
4th April 2015, 11:24 AM
மிக்க நன்றி சி கே. :ty: எனது சிறுகதைகள் பற்றியும் உங்கள் கருத்து சொல்லவும்.

pavalamani pragasam
4th April 2015, 06:54 PM
ஔவையார் அரசருடன் சமமாய் குடித்ததெல்லாம் இருக்கட்டும், திருமண பேச்சு எழுந்ததும் பிள்ளையாரிடம் ஓடிச்சென்று பாட்டுப் பாடி வயோதிகம் வாங்கிக்கொண்டது என் வியப்பான பல சிந்தனைகளிலிருந்து விலகவேயில்லை!!! ஏன்? ஏன்? ஏன்? என்ன மாறிவிட்டது இன்று? என்ன மாறவில்லை இன்னும்?

Gopal.s
6th April 2015, 07:01 PM
மிக்க நன்றி சி கே. :ty: எனது சிறுகதைகள் பற்றியும் உங்கள் கருத்து சொல்லவும்.

I will read and pen my opinion for sure?(What happened to your original request?)

Russellhni
7th April 2015, 08:16 AM
Thanks Gopal. It is a long story. Chinna kanan used to read and comment earlier to my short stories . A bit classic comments and useful for my improvement.

On an impulse, I made request to other Kavithaikku kavithai contributors , you and Kalnayak also in this link.

Since I felt a bit embarrassed to request readers to comment, I edited it . As usual, editing is an after thought. I thought it is not fair to request others to read mine! . Each one has a right to ignore. :( Right ?

Honestly I enjoy the comments and unforced reviews ...... and please do pen your opinions. :ty:

pavalamani pragasam
11th April 2015, 07:00 PM
முந்தைய கவிதையில் திருத்தம் செய்தேன் -யாரும் கன்பீஸ் ஆயிடக்கூடாதுன்னு!:noteeth:

chinnakkannan
11th April 2015, 08:47 PM
நானும் ஒரு நவீன கவிதை மதுர கானங்கள்ல போட்டிருக்கேன் :) உங்க கவிதை ஏற்கெனவே புரிஞ்சுடுத்து இன் த ரைட் வே.. அமெரிக்காவா..ஜமாய்ங்க்க...

Gopal.s
13th April 2015, 08:39 AM
எனக்கொரு விடை தெரிஞ்சாகணும்.



இந்த அந்தாதி விளையாட்டில் மற்றோர் கவிதையை எல்லோரும் படிக்கிறோமா ? (பங்கு பெறுவோர்)



அல்லது இறுதி வரி மட்டும் படித்து ஜல்லியா?(நான் எல்லாத்தையும் படிச்சு புரிஞ்சிக்கிறேன் சாமி.)



சி.க. -உங்களுக்கு இப்போதாவது என் கவிதை புரிகிறதா?இதற்கு மேலும் என்னால் தரை காண முடியாது.

pavalamani pragasam
13th April 2015, 09:08 AM
இதென்ன இப்படி ஒரு சந்தேகம்? அபாண்டமான குற்றசாட்டா இருக்கே! வேண்டாம் கோபால்! நாமெல்லாம் நுனிப்புல் மேய்பவர்கள் அல்ல!

chinnakkannan
13th April 2015, 10:28 AM
கோபால் உங்கள் இந்தக் கவிதையை இப்போது தான் பார்த்தேன்

//தளமிடுவதோ கனவோ கற்பனையோ அல்ல வாழும் கணம் வாழும் விதம் சூழும் எண்ணம் // இது புரியுது

//உலகை மாற்றி வளம் காணும் வித்தகனாய் விடலை பருவத்தில் இருந்தவன் அதே விடலையாய் // இது புரியுது

//கலக்கி வருகிறேன் மாற்ற மனதுடன் மண் புழுவையும் மாற்ற இயலாமல் அங்கீகரித்து சக வாழ்வில்.// இது புரியலை

ஜெனரலா பார்த்தீங்கன்னா நெத்திச் சுருக்க வச்சு பலவரிகள் புரியாம சிலவரிகள் புரிஞ்சு தான் இருக்குது உங்கள் கவிதைகள், சிந்தனைகள்.. அதைக் கேட்டால் கோபிப்பீர்களோ என்று கேட்பதில்லை..அதற்காகப் படிக்காமலும் இருப்பதில்லை ( சிலசமயம் நெம்ப நெம்ப கோபம் வரும்..அது உண்மை..அந்த திட்டமும் இலக்கும் கவிதை ரொம்ப புரியாமல் எதற்காக இப்படி என்று கோபம் தான் வந்தது..பட் இட்ஸ் யுவர் நேச்சர் யுவர் விஷ்.. உங்களுக்கு வரும் விதமாய் எழுதுகிறீர்கள்)

இப்பவும் கூட ஸேஃபா இதற்கு மேலும் தரையிறங்க முடியாதுஎனச் சொல்லியிருக்கிறீர்கள்.. நான் என்ன கேட்க இயலும் ஐயா :)

chinnakkannan
13th April 2015, 10:45 AM
//கழிசடை சமூகம் கொள்ளை காரர்களுக்கும் கந்து வட்டியாருக்கும் கற்பழிப்போர்க்கும் கருணை
பொழிந்து கம்பளம் விரிக்கும் திட்டமிடா நடுத்தரர் தூக்கிற்கு தயார் எனினும் அதனிலும் கொடிய

வாழும் தண்டனை அனு தினமும் இன்னுமா வாழ்கிறாய் என்ற ஏளன பார்வை ஆறுதல்
சூழும் கணங்கள் பெற்றோரை இல்லம் சேர்த்த சுற்றம் பேசும் பட்டி மன்றங்கள் முதியோரை மதியுங்கள்//

முதியோரை மதியுங்கள்னு முழுக்க முழுக்க இந்தக் கவிதையில சொல்ல வர்றீங்கன்னு புரியுது...அதுக்காக எதுக்கு சமூகத்தை கழிசடைன்னு திட்டணும் அப்புறம் கற்பழிப்பு இ.டிசி.. எல்லாம் கவிதையில கொண்டு வரணும்.. ஜெனரலா நவீன கவிதைகள்ல செக்ஸ் இஸ் எ ம்ஸ்ட்டா...அல்லது நீங்கள் எழுதுகிற கவிதைகள்ல மட்டும் அப்படியா..

இளம்மனதில்..அப்ப்டின்னா அபிஷேக் ஐஸ்வர்யா ராயை இழுத்துத் தான் ஆகணுமா.. பலப் பல கனவுகள் அபிலாஷைகள்னு போட்டா மத்தவங்களுக்குப் புரியாதா.. பச்சையா கடுமையா செக்ஸ் கலந்து எழுதறது தான் நன்மை பயக்கும் விஷயமா..

மனுஷ்ய புத்திரன் என்பவர் நான் எழுதும் கவிதைகள் புரியவில்லை எனில் அது உங்களுக்காக எழுதப் பட்டது இல்லைஎன்று அர்த்தம் என எழுதியிருந்தார். அதிலிருந்து அவரைப் படிப்பதில்லை. எந்துக்கு?

chinnakkannan
13th April 2015, 10:51 AM
//இறுதி வரி மட்டும் படித்து ஜல்லியா?// இது எதுக்குங்க.. நாங்க ஜல்லி அடிக்கிறோமா.. நல்லா இல்லையா.. எங்களைப் பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே..திட்டக் கூட இல்லை எனில் வருத்தம் தான்..ஆனால் ஒருவிதத்தில் பச்சையாக நீங்கள் ஜல்லியா என்று கேட்டது கூட உண்மை தான்.. இங்கு இருப்பவர் கள் எல்லாருமே ப்ராக்டீஸ் தான் செய்து கொண்டிருக்கிறோம்.. நான் பி.பிக்கா , கிறுக்கர், தற்போது இணைந்த முரளி, கல் நாயக்.

2011இல் இருந்து மறுபடி எழுத வ்ருமா என யோசித்து இங்கு வந்த போது வாங்க வாங்க என்று வரவேற்றவர் பவளமணிப் பிரகாசம் அக்கா..யாரும் கமெண்ட்ஸ் போடவில்லையே என வருத்தப் பட்டு ஒருமுறை எழுத..எவ்வளவு பேர் படிக்கறாங்க தைரியமா எழுதுங்க தம்பி என உற்சாகமூட்டியவர்..இன்றும் இங்கு கொஞ்சம் மரபு , புதுசில் முயன்று கொண்டிருக்கும் மாணவனாகத் தான் இருக்கிறேன்..எனது குருமார்களில் உங்களையும் சேர்த்துவிட்டேன்..நவீன கவிதைக்கு.. அதிலும் முயலப் போகிறேன்..உங்கள் பாஷையில் ஜல்லி..கொஞ்சம்பார்த்து ப் போட்டு வழி நடத்துங்கள் ஐயா..

Gopal.s
13th April 2015, 10:55 AM
கோபால் உங்கள் இந்தக் கவிதையை இப்போது தான் பார்த்தேன்

//தளமிடுவதோ கனவோ கற்பனையோ அல்ல வாழும் கணம் வாழும் விதம் சூழும் எண்ணம் // இது புரியுது

//உலகை மாற்றி வளம் காணும் வித்தகனாய் விடலை பருவத்தில் இருந்தவன் அதே விடலையாய் // இது புரியுது

//கலக்கி வருகிறேன் மாற்ற மனதுடன் மண் புழுவையும் மாற்ற இயலாமல் அங்கீகரித்து சக வாழ்வில்.// இது புரியலை

ஜெனரலா பார்த்தீங்கன்னா நெத்திச் சுருக்க வச்சு பலவரிகள் புரியாம சிலவரிகள் புரிஞ்சு தான் இருக்குது உங்கள் கவிதைகள், சிந்தனைகள்.. அதைக் கேட்டால் கோபிப்பீர்களோ என்று கேட்பதில்லை..அதற்காகப் படிக்காமலும் இருப்பதில்லை ( சிலசமயம் நெம்ப நெம்ப கோபம் வரும்..அது உண்மை..அந்த திட்டமும் இலக்கும் கவிதை ரொம்ப புரியாமல் எதற்காக இப்படி என்று கோபம் தான் வந்தது..பட் இட்ஸ் யுவர் நேச்சர் யுவர் விஷ்.. உங்களுக்கு வரும் விதமாய் எழுதூகிறீர்கள்)

இப்பவும் கூட ஸேஃபா இதற்கு மேலும் தரையிறங்க முடியாதுஎனச் சொல்லியிருக்கிறீர்கள்.. நான் என்ன கேட்க இயலும் ஐயா :)

சின்ன கண்ணன்,



உங்கள் நேர்மையான பதிலுக்கு மிக நன்றி.



கவிதைகள் சில கூறல்களை தாண்டி, சக வாசகனின் இட்டு நிரப்பும் ஆற்றலை வேண்டுவது. நவீன கவிதை சில சூட்சம தளங்களில் பயணிக்க வேண்டும். சில நேரம் கவிஞனே எண்ணாதவை மற்றோர் மனதில் உதிக்க வேண்டும்.



நீங்கள் கேட்ட வரிக்கு விடை- சிறு வயதில் எல்லாவற்றையும் மாற்ற எண்ணியவர்கள், தங்களால் ஒரு சாதா மண்புழுவை கூட மாற்ற இயலாது என்ற உண்மை புரிந்து, அதை அங்கீகரித்து வாழ்ந்தால் மட்டுமே இளமனது முதுமையிலும் சாத்தியம் என்ற சூட்சும வரிகள்.



நீங்கள் எதை கேட்கவும் அஞ்ச வேண்டியதில்லை.

kirukan
20th April 2015, 09:45 AM
நகரம் நழுவி நரகமானதோ இல்லை
கண்ணன்களின் ரகளை நரகமாக்கியதோ....

pavalamani pragasam
20th April 2015, 06:07 PM
நகரம் நழுவி நரகமானதோ இல்லை
கண்ணன்களின் ரகளை நரகமாக்கியதோ....

:lol::lol::lol:

pavalamani pragasam
21st April 2015, 08:04 AM
கோபாலின் கவிதையில் எதுகை அருமை! எத்தனை சங்கதிகள்! எவ்வளவு ஆற்றாமை, ஆத்திரம்! ம்ம்ம்ம்....

chinnakkannan
21st April 2015, 10:26 AM
போய்விட்டு வந்தால் ஏகக் கவிதைகள்..எல்லாமே அழகு.. ஐ திங்க் தி லாஸ்ட் லைன் ஷீட் பி ஆஸ்திகர்.. இதுலருந்து ஆரம்பிக்கணும்..

chinnakkannan
21st April 2015, 10:27 AM
//கோபாலின் கவிதையில் எதுகை அருமை! // கடைசியில் அயல் நாட்டுக்குப் பார்க்க ப் போன அம்மா பதினெட்டு மாதம் இருந்துவிட்டு சமைத்துப் போட்டுவிட்டு வருகிறார்- இது தான் கருவா.. கொஞ்சம் குழப்பம் தான் எனக்கு..:)

pavalamani pragasam
21st April 2015, 07:47 PM
ஆமாம், 'ஆஸ்திகர்' தான் அடுத்த சொல். சி.க.வுக்கு ஏன் குழப்பம்? கோபால் சரியாய்த்தான் வர்ணித்திருக்கிறார் யதார்த்தத்தை. ஆனால் பல பெற்றவர்கள் தெரிந்து, விரும்பி அப்படி இருந்துவிட்டு வருகிறார்கள்!

Gopal.s
21st April 2015, 10:38 PM
//கோபாலின் கவிதையில் எதுகை அருமை! // கடைசியில் அயல் நாட்டுக்குப் பார்க்க ப் போன அம்மா பதினெட்டு மாதம் இருந்துவிட்டு சமைத்துப் போட்டுவிட்டு வருகிறார்- இது தான் கருவா.. கொஞ்சம் குழப்பம் தான் எனக்கு..:)

சி.க,

கவிதையின் அடிநாதம் .... வயதான பிறகு ஆசை அதிகரிக்கும் ஒரு தலைமுறை. இளைய தலைமுறையின் நிழலில் அபிலாஷை நிறைவேறுமா என்று அலைந்தாலும், சொந்தத்தை சுயநலத்துக்கு பயன் படுத்தி தூக்கி எரியும் இளைய தலைமுறையால் ஆசைகள் அறுந்து ,பற்றற்று இருக்க விரும்பினாலும் ,அடுத்த அழைப்புக்காய் ஏங்கும் முடிவில்லா சுழற்சி.

chinnakkannan
21st April 2015, 10:47 PM
நன்றி கோபால்.. விளக்கத்திற்கு..புரிகிறது இப்போது தெளிவாக..என்னாமாதிரி கரு..நைஸ் அண்ட் தாங்க்ஸ்..சிறுவனுக்கும் புரியும்படி எழுதியதற்கு..

பட் வயசானா அப்படித்தான் ஆகும்னு நினைக்கறேன்கோபால்.( நீங்கள் கூறிய வகையில் இருப்பவர்கள் இந்தக்காலத்தில் மிகச் சிலரே..).என்ன தான் காசு பணம் துட்டு மணி மணின்னு சேர்த்து வச்சாலும்.. இட்ஸ் நாட் மணி.. ஆர் இடம் அப்படியாவது புள்ளையோட பொண்ணுங்களோட சேர்ந்து இருந்துட்டு வரலாம்னு நினைக்கறவங்க அதிகம்..அதுலயும் சில பேர் ( எனக்குத் தெரிந்த) இங்க மஸ்கட்ல கூட பையனோ பொண்ணோ அவங்களோட முதல் ப்ரசவத்துக்கு வருவதோடு சரி..வெளியவா..இந்த ஊர்லயா எதுக்குங்க கண்ணன் சார்..இந்தக் காம்பெளண்ட் இருக்கு வாக் பண்ண..வந்தது குழந்தையைப்பார்த்துக்க.. அவ்ளோ தான்..தென் நமக்கு மடிப்பாக்கம் தான் சாஸ்வதம் எனத் தெளிவாகச் சொன்னவர்களும் உண்டு..அடுத்த பிரசவத்துக்கு அப்பாவைக் கூப்பிடலையாம்மா.. இல்ல அங்க்கிள்..அவருக்கு வெயில் ஒத்துக்கலையாம் பாருங்க.. பையனுக்குத்தங்கத்துல சங்கிலி வாங்கிவச்சுருக்காராம்.. வர்றச்சே போடுவாராம்..யாருக்கு வேணும்.. அவர் வந்து என் கூட இருந்தா போதும் எனச் சொன்ன மகள்களும் உண்டு..

chinnakkannan
21st April 2015, 10:51 PM
//என்று வேண்டுமானாலும் திருமண பத்திரிகை வரும் மொய்யுடன்
சென்று கண்டு பொய்யுடன் வாழ்த்து தந்து வெறுமையாய் நான்// ச்ச் வருத்தப்படாதீங்க சார்..உங்க நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் :)

pavalamani pragasam
1st May 2015, 06:43 PM
பாவ புண்ணிய கவிதையும் பொருத்தமான படமும் சூப்பர்!!!

Russellhni
5th May 2015, 10:01 AM
பாவ புண்ணிய கவிதையும் பொருத்தமான படமும் சூப்பர்!!!


:ty: :pink:

chinnakkannan
20th May 2015, 10:15 AM
//யார்மனதும் புண்படாவண்ணம்
ஆழம் அகலம் புரிந்து
விவரமாகக் கேட்டு
விடைக்காக காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்//

வெங்க்கிராம் தூள்..

பா.ராகவனின் ‘புவியிலோரிடம்’ என்ற நாவல் தான் நினைவுக்கு வருகிறது..ஃபார்வர்ட் கேஸ்ட் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளப்படும் கதானாயகன் சிங்கப்பூர் சென்று பல உயரஙக்லை எட்டுவான்.. அவவவிற்கும் காரணம் பணிவு+கடும் உழைப்பு..ம்ம்

venkkiram
20th May 2015, 07:03 PM
//யார்மனதும் புண்படாவண்ணம்
ஆழம் அகலம் புரிந்து
விவரமாகக் கேட்டு
விடைக்காக காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்//

வெங்க்கிராம் தூள்..

பா.ராகவனின் ‘புவியிலோரிடம்’ என்ற நாவல் தான் நினைவுக்கு வருகிறது..ஃபார்வர்ட் கேஸ்ட் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளப்படும் கதானாயகன் சிங்கப்பூர் சென்று பல உயரஙக்லை எட்டுவான்.. அவவவிற்கும் காரணம் பணிவு+கடும் உழைப்பு..ம்ம்

நன்றி சிக ஐயா!

Gopal.s
24th May 2015, 10:05 AM
//கோ..



மிக ச் சிறப்பாக இருந்தது கவிதை..ஒரு முறைக்கு இரு முறை படிக்க வேண்டியிருந்தது.. உங்கள் தமிழ் ஆழம் தான்..

ஆனால் எனக்கு ஒரு குறை உங்களிடம் எப்போதும் உண்டு.. எளிமையாக எழுதக் கூடாது என்று கங்கணம் கட்டி, வெறுப்பு, நெகட்டிவ் தாட்ஸ், கொஞ்சம் கூட புன்முறுவல் கூடாது என்று நினைத்த படி ந.தி அல்லாத விஷயங்களை எழுதுவதாகப் படுகிறது எனக்கு..ஏன் இந்த வரையறை..

கொஞ்சம் ஸிம்ப்பிளாக எழுதினால் சர்வ நிச்சயமாக நிறைய ஃபாலோயர்கள் உங்களுக்கு வருவார்கள் (இப்போதும் இருப்பார்கள் இல்லையெனச் சொல்லவில்லை)

கொஞ்சம் ஸாஃப்டாகவும் எழுதலாமே.. சொன்னது தவறென்றால் மன்னிக்க..//

Chinna kannan .//

சின்ன கண்ணன்,

உங்களுக்கு மிக நன்றி. உங்கள் அக்கறை புரிகிறது. என் அன்னை கவிதை புரிய நான் எழுதிய முன்னுரையே போதுமே?

எப்போதுமே உன்னத விஷயங்கள் பிறர் கவன ஈர்ப்பை ஆழமாக கோருபவை. நாம் தர வேண்டிய விஷயங்களை நம் புலமைக்கும்,ஞானத்திற்கும் ,கருத்தியலுக்கும் ஏற்ப தந்தேயாக வேண்டும். நான் எழுத விரும்புபவை ஆழமான விஷயங்களை இன்னும் ஆழமான அழுத்தமான எழுத்துக்களை கொண்டு. புலி வேட்டைக்கு கொக்கு சுடும் துப்பாக்கி எடுத்து போக கூடாது. எல்லாவற்றையும் புன் முறுவலுடன் அணுக முடியாது. அணுகவும் கூடாது.

நான் எழுதிய பதிவுகளில் ஏராள பதிவுகள் குசும்பு,வம்பு,நகைசுவை கொண்டதுதானே? எனக்கு கலப்பு பிடிக்காது. சாப்பிடும் கறிகளில் கூட உருளை,வெங்காயம்,காரட் ,என்று எல்லாம் கலந்தால் பிடிக்காது. நாம் மட்டும் கொடுக்க முடியும் என்பவற்றையே நான் தீவிரத் துவத்துடன் எழுதுவேன். ரசிகர்கள் எவ்வளவு என்பதை எண்ணி பார்த்தது கிடையாது. இன்னும் இருபது வருடம் தள்ளி போற்றுவார்கள். சுஜாதா(கிச்சு கிச்சு மூட்டும் வெகுஜன எழுத்து ) போன்ற சராசரிகளை விட அசோக மித்திரன்,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் போன்றோர் காலம் கடந்தும் போற்ற படுவார்கள்.

Gopal.s
1st June 2015, 04:42 AM
முரளி,

ஒன்பது பெண்களுடன் இணைவது குழந்தைக்காக இல்லை ஏற்கெனெவே குழந்தையை சுமக்கும் மனைவியை துன்புறுத்த வேண்டாமே என்று நன்னோக்கில் செய்ய படும் தியாகம்.
(ஒரு நகைச் சுவை- எவ்வளவு மாதம் வரை உறவு கொள்ளலாம் என்று மருத்துவரிடம் கேட்க, அவர் பதில்- எவ்வளவு மாதம் வேண்டுமானாலும்- ஆனால் குழந்தை வெளியே வர வழி கேட்கும் போது விலகி வழி விடவும்.):-d

Russellhni
2nd June 2015, 06:01 AM
Gopal,

I used a quote from Waaren Buffet.

“No matter how great the talent or efforts, some things just take time. You can't produce a baby in one month by getting nine women pregnant.”- Warren Buffet. He is an authority on Investment,finance and Venture Capital.

I tired to emulate his saying in this Pattukku Pattu. I thought it would make an impact on the readers about haste.

I am sorry it kindled different nefarious thoughts in you. I regret for adapting that. However, Brighter side, It is a good lesson to me, what to publish and what not to , in a decent group.

Gopal.s
4th June 2015, 04:22 AM
Murali,

I am well aware of the purpose of your poem and Warren Buffet Quote. The best way of appreciation is thru lighter vein humour. I also remember my Math teacher word. He used to explain us in the class that if 50 men can finish the job in 30 days ,100 men can do it in 15 Days and if 1000 men are put it can not be done in a day. Logic and math fail at certain places. Just I want to show my appreciation for your poem in a devious way.

Russellhni
4th June 2015, 11:00 AM
Gopal. Thank you ! Very nice of you to appreciate my average amateurish scribbling. I feel very encouraged. !

pavalamani pragasam
20th October 2015, 06:47 AM
மனநோயாளி கவிதை மனதை தொட்டுவிட்டது, முரளிதரன்!

pavalamani pragasam
21st October 2015, 11:00 PM
அட பாவமே! அல்வா குடுக்கப்போறது மாதிரி கொஞ்சிட்டு கடைசில புருசன் நெசமாவே அல்வா குடுத்துட்டாரு!

Russellhni
28th October 2015, 08:10 AM
" பாடம் படித்தது பள்ளியறையில்" - நல்ல சிலேடை :-)

pavalamani pragasam
28th October 2015, 09:03 AM
சினிமாபாட்டுலயெல்லாம் வந்ததுதானே?

pavalamani pragasam
28th October 2015, 11:13 PM
கண்ணதாசனின் கருத்து அற்புதம்!