PDA

View Full Version : Makkal thilagam mgr part 22



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

fidowag
31st December 2017, 11:54 PM
ராயபுரம் மார்க்கெட்
http://i63.tinypic.com/dxiw5w.jpg

fidowag
31st December 2017, 11:55 PM
http://i65.tinypic.com/5p2yop.jpg

fidowag
31st December 2017, 11:57 PM
ஆசிர்வாதபுரம், பிராட்வே
http://i65.tinypic.com/10ym5vn.jpg

fidowag
31st December 2017, 11:58 PM
http://i68.tinypic.com/5wxwnp.jpg

fidowag
31st December 2017, 11:58 PM
http://i66.tinypic.com/jrcjgg.jpg

fidowag
1st January 2018, 12:00 AM
பிராட்வே தியேட்டர் அருகில்
http://i66.tinypic.com/m9a9m9.jpg

fidowag
1st January 2018, 12:00 AM
http://i64.tinypic.com/wj6exw.jpg

fidowag
1st January 2018, 12:01 AM
, பிராட்வே சாலை
http://i65.tinypic.com/29fcqpc.jpg

fidowag
1st January 2018, 12:02 AM
http://i63.tinypic.com/fv8jy8.jpg

fidowag
1st January 2018, 12:03 AM
http://i63.tinypic.com/333e2o2.jpg

fidowag
1st January 2018, 12:05 AM
காமராஜர் சாலை (அண்ணா -எம்.ஜி.ஆர். சமாதி அருகில் )
http://i64.tinypic.com/20r5v7l.jpg

fidowag
1st January 2018, 12:05 AM
http://i67.tinypic.com/9h6xds.jpg

fidowag
1st January 2018, 12:06 AM
http://i65.tinypic.com/dzujvl.jpg
முற்றும் ................

oygateedat
1st January 2018, 06:23 AM
நமது
திரியில்
19000
பதிவுகள்
பதிந்து
குறிப்பாக
தலைவர்
நூற்றாண்டு
விழா
நிகழ்வுகள்
குறித்த
பத்திரிக்கைச்
செய்திகளை
மிக அழகாக
பதிந்த
திரு லோகநாதன்
அவர்களுக்கு
நன்றி !

oygateedat
1st January 2018, 06:25 AM
https://s9.postimg.org/a4bsz1dcv/IMG_7222.jpg (https://postimages.org/)

Richardsof
1st January 2018, 06:48 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் மிக குறுகிய காலத்தில் 19,000 பதிவுகளை வழங்கி சாதனை புரிந்திருக்கும் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் 30 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளியான பத்திரிகை செய்திகள் , போஸ்டர்கள் அணிவகுப்பு மிகவும் அருமை .

Richardsof
1st January 2018, 06:56 AM
பெங்களுர் சிவில் ஏரியாவில் மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் திரு லக்ஷ்மணன் என்பவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 31.12.2017 அன்று காலை 10 மணியளவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் 100 பேர கலந்து கொண்ட இனிய சந்திப்பு மிகவும் அருமையாக இருந்தது . மக்கள் திலகத்தின் புகைப்பட கண்காட்சி கண்ணை கவர்ந்தது . எம்ஜிஆர் படப்பாடல்கள் இன்னிசை மனதிற்கு நிறைவு தந்தது .மக்கள் திலகத்தின் நூற்றாண்டு முன்னிட்டு சிறப்பு மலர் பல அபூர்வ படங்கள் செய்திகளுடன் இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது .

Richardsof
1st January 2018, 07:08 AM
http://i63.tinypic.com/xdd0qs.jpg

1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன். ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம்.
படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி – நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள்.
ஜி. ராமநாதன் ஆச்சரியப்படுத்திவிட்டார். அவரது எல்லா படங்களிலும் கர்நாடக சங்கீதம் ஒரு அடி நாதமாக இருந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்தில் முக்கால்வாசி குத்து, கிராமப்புற மெட்டுக்கள்.
முதலில் நான் இதற்கு முன் கேட்டிராத, என்னை கவர்ந்த பாடல்கள்.
“ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் வழியிலே” – வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. துரதிருஷ்டவசமாக பாட்டு நெட்டில் எங்கும் கிடைக்கவில்லை. வரிகளை வைத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். பாடிய குரல்களில் டிஎம்எஸ் தவிர மற்ற குரல்கள் தெரியவில்லை. எம்ஜிஆரும் ராஜசுலோசனாவும் பார்க்க அழகாக இருந்தார்கள்.
“தூண்டிலிலே மாட்டிக்கிச்சு” – துடிப்பு நிறைந்த பாட்டு. இதுவும் நெட்டில் கிடைக்கவில்லை. ஒரு நாடகம் மாதிரி காட்சி அமைக்கப்பட்டிருந்தது – பார்க்க சுவாரசியமாக இருந்தது.
அடுத்த இரண்டும் நான் முன்னால் கேட்டு, எனக்கு பிடித்த பாட்டுக்கள்
“சின்னப் பயலே சின்னப் பயலே” மாஸ்டர்பீஸ். பட்டுக்கோட்டையின் ஸ்பெஷாலிடியே எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துகளை எழுதுவதுதான். டிஎம்எஸ் பிய்த்து உதறிவிட்டார்.
“தாரா அவர் வருவாரா” கு.மா. பாலசுப்ரமணியம் எழுதி எஸ். ஜானகி பாடியது. நல்ல பாட்டு. இதுதான் ராமநாதனின் முத்திரை உள்ள ஒரே பாடல். க்ளாசிக்கல் சங்கீதத்தின் தாக்கம் தெரிகிறது.
மிச்ச பாட்டுக்களை நான் கேட்டதில்லை.
“ஏற்றமுன்னா ஏற்றம்” பட்டுக்கோட்டை எழுதி சீர்காழியும் டிஎம்எஸ்ஸும் பாடியது. இரண்டு முறை கேட்டால் பிடித்துவிடும் என்று நினைக்கிறேன்.
இதை தவிர “தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்” கண்ணதாசன் எழுதி சுசீலா பாடியது. “அத்தானே ஆசை அத்தானே”
இந்த படத்தின் பாட்டு கிடைக்காது அதிசயம்தான்.
சின்னப் பயலே பாட்டு சமீபத்தில் திருட்டுப் பயலே படத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
கதை எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்க வசதியாக அசோகன் எம்ஜிஆரின் காவலில் சுலோவை விட்டுவிட்டு போகிறார். அவர்களும் பாட்டு எல்லாம் பாடிக்கொள்கிறார்கள்.

நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப் பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாட்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!

எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
கவுண்டருக்கு இந்த படம் என்ன இன்ஸ்பிரேஷனா? எம்ஜிஆரும் தங்கவேலுவும் ஒருவரை ஒருவர் “தேங்காய்ப்பூ தலையா” என்று கூப்பிட்டுக்கொல்கிறார்கள்.
எம்ஜிஆரும் சுலோவும் ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்கிறார்கள். ஆனால் திரும்பி முட்டிக்கொள்ளவில்லை.

டென்ட் கோட்டையில் பார்த்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது –

அபூர்வமாக எனக்கு நம்பியாரின் நடிப்பு பிடித்திருந்தது. அவருடைய பாத்திரமும் one-dimensionalதான், ஆனால் நம்ப முடியாமல் இல்லை.
அசோகனை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.
பாட்டுக்களுக்காகவும், சண்டைகளுக்காகவும் பார்க்கலாம்.

Richardsof
1st January 2018, 07:14 AM
மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “அரசிளங்குமரி’ பற்றிய ஒரு சிறு தொகுப்பு :

நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு புத்தாண்டு தினம் என்றால் அது தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாள். அன்றுதான், அனைவரையும் அழைத்து அவர்களுடன் சிற்றுண்டி மற்றும் உணவருந்தி, அன்பளிப்புக்களையும் அளித்து மகிழ்வார்.

எனவே அவரது காவியங்கள் பெரும்பாலும் தமிழர் திருநாளன்றுதான் வெளியாகும். இதில் சற்று வித்தியாசமாக, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று (01-01-1961) வெளியான, பொன்மனசெம்மலின் ஒரே காவியம் “ அரசிளங்குமரி ”.



இதற்கு முன்பு வாள் சண்டைகளில் அபாரமாக நடித்திருந்தாலும், இந்த காவியத்தின் இறுதி கட்டத்தில் இடம் பேற்ற வாள் சண்டை காட்சி பிரசித்தம் பெற்றது. அது மட்டுமல்லாது, நம் எழில் வேந்தனுக்கு, “ வாள் வீச்சில் வல்லவர் “ என்ற பெயர் நிரந்தரமாக நிலைக்கச் செய்த காவியம்தான், அரசிளங்குமரி
இந்த காவியத்தின் மற்றொரு சிறப்பு ... நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் இரு வேறு தோற்றங்களில் காட்சியளிப்பார். அறிவழகன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார் நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் சத்தான கதை வசனத்தில், முத்தான எட்டு பாடல்கள். இவைகளை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கு. மா. பாலசுப்ரமணியம், முத்துக்கூத்தன், கே. எஸ். கோபாலகிருஷ்ணன் முதலானோர் எழுதியிருக்கின்றனர்.

இதில் பிண்ணனி பாடியிருப்பவர்கள் : வழக்கமான டி. எம். எஸ்., சீர்காழி, பி. சுசீலா, ஜானகி ஆகியோர் தவிர, எஸ்..சி. கிருஷ்ணன், சூலமங்கலம் ஜெயலட்சுமி, ஜமுனா ராணி, பி. லீலா போன்றோர்.

ஜுபிடர் சோமு தயாரிப்பில், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் உருவான இக்காவியம், புரட்சித்தலைவரின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் மாணிக்கக் கல் !

“அரசிளங்குமரி” காவியத்தில் இடம் பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
பாடல் 1 : தில்லாலங்கடி : தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்
(கவியரசு கண்ணதாசன்)

பாடல் 2 : ஏற்றமுன்னா ஏற்றம் – இதிலேயிருக்குது முன்னேற்றம்
(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

பாடல் 3 அத்தானே, ஆசை அத்தானே – அன்பே உன்னை
(கே. எஸ். கோபாலகிருஷ்ணன்)

பாடல் 4 நந்தவனத்திலோர் ஆண்டி – அவன் வந்த இடத்திலோர்
மங்கையை வேண்டி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

பாடல் 5 கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா – கழுகு மலை, பழனி
மழை கால்நடையாப் போக வேணும் (பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்)

பாடல் 6 சின்னப்பயலே சினப்பயலே சேதி கேளடா
(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

பாடல் 7 தூண்டியிலே மாட்டிக்கிட்டு துடிக்குது – மீனு
துடிக்கிறதை பார்த்து கண்ணு ரசிக்குது
(முத்துக்கூத்தன்)

பாடல் 8 தாரா அவர் வருவாரா – கண்கள் தவிப்பதை தான்
அறிவாரா (கு. மா. பலசுப்ரமனியம்)

Richardsof
1st January 2018, 07:18 AM
அரசிளங்குமரி... சில நினைவுகள்

, வாள் வீச்சில் வல்லவர் என்ற பெயரை தலைவருக்கு நிலையாக பெற்றுக் கொடுத்த படம் அரசிளங்குமரி. மற்ற படங்களை காட்டிலும் இதில் நம்பியாருடனான தலைவரின் வாள் வீச்சு மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்.

அது எந்த அளவுக்கு ஆக்ரோஷம் என்றால், படப்பிடிப்பில் நம்பியாரால் தலைவருக்கு காயம் ஏற்படும் அளவுக்கு. சகோதரர்கள் அனைவருக்குமே இது தெரிந்திருக்கும். என்றாலும், இதை எல்லாரும் அறிந்து கொள்ளும் வண்ணம் திரியில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தலைவரும் நம்பியாரும் வாள் சண்டையிடும்போது நம்பியாரின் வாள் தலைவரின் இடது கண்ணுக்கு மேலே புருவத்தில் ஆழமாக கிழித்து விட்டது. இந்த தழும்பு தலைவரின் இடது புருவத்தில் கடைசி வரை இருந்தது. குளோசப்பில் இருக்கும் சில புகைப்படங்களில் இந்தத் தழும்பை காணலாம்.

தன்னால்தான் தலைவருக்கு இந்த காயம் ஏற்பட்டது என்பதை திரு.நம்பியார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதை எல்லாரும் படித்திருக்கலாம். அதோடு, திரு.நம்பியார் எப்போதுமே நகைச்சுவை உணர்வு கொண்டவர். புருவத்தில் தலைவருக்கு அடிபட்டவுடன் நடந்ததையும் நம்பியாரே விவரித்திருக்கிறார்.

நம்பியாரைப் பார்த்து தலைவர், ‘என்னய்யா என் மேலே கோபம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு நம்பியார், ‘‘தயாரிப்பாளர் குத்த சொன்ன இடம் வேறு’ என்று பதிலளித்துள்ளார்.

அதற்கு தலைவர், ‘‘அவர் எங்கே குத்தச் சொன்னார்?’ என்று கேட்டதும் ‘மார்பில்’ என்று அதிரடியாக நம்பியார் கூறியதைக் கேட்டு தலைவரே வலியையும் மறந்து சிரித்தாராம். இதை தெரிவித்த நம்பியார், அந்த பேட்டியிலேயே ‘சர்வாதிகாரி’ படப்பிடிப்பில் வாள் சண்டையின்போது தலைவரின் கத்தி தனது கட்டை விரலில் இந்தப் பக்கம் புகுந்து அந்தப் பக்கம் வந்ததாகவும் கூறியிருந்தார். சகோதரர்களிடம் அந்தப் பேட்டியும், புருவத்தில் தழும்புடன் இருக்கும் தலைவரின் புகைப்படமும் இருந்தால் தயவு செய்து பதிவிடவும். ஆதாரபூர்வமாக இருக்கும்.



பாடல்களும், தலைவரின் நடிப்பு + சண்டைகளும் அற்புதமாக இருக்கும்.

பல்வேறு பிரச்னைகள் காரணமாக நீண்ட தயாரிப்பில் (5 ஆண்டுகள்) இருந்த படம். ஒரு கட்டத்தில் தலைவரே படத்தை இயக்கியுள்ளார். இந்த தகவலும் கூட, தேவி வார இதழில் எம்.ஜி.ஆர்.கதை என்ற பெயரில் வந்த தொடரில் வெளியானது. அது பின்னர் புத்தகமாகவும் வந்தது.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் ‘சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா...’ மிகவும் கருத்துள்ள பாடல்.



அரசிளங்குமரி படப்பிடிப்பில் தலைவருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக நம்பியாரின் பேட்டியில் இருந்து 4 விஷயங்கள் நமக்கு புலனாகின்றன.

1. அட்டை கத்தி வீரர் என்றெல்லாம் அந்தக் காலத்தில் கேலி பேசப்பட்டாலும், தலைவர் உண்மையிலேயே வாள் சண்டை போட்டிருக்கிறார். தொழிலில் உண்மையாக உழைத்திருக்கிறார்.

2. உயிரைப் பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இடது புருவத்தை கிழித்த வாள் 2 அங்குலம் கீழே பாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நினைத்தாலே பதறுகிறதே.

3. நம்பியாருக்கு இருந்த நகைச்சுவை உணர்வு. தன்னால் காயம் பட்ட நேரத்திலும் தலைவரை கிண்டல் செய்யும் அளவுக்கு இருவருக்கும் இருந்த நெருக்கம்.

4. நம்பியாரின் வாள் புருவத்தை கிழித்தாலும், அவர் மீது கோபமோ காழ்ப்புணர்ச்சியோ இல்லாத தலைவரின் பெருந்தன்மை குணம். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனையும் தாண்டி, அவசர போலீஸ் 100 ஆக வெளிவந்த அண்ணா நீ என் தெய்வத்திலும் நம்பியார் நடித்ததே மனிதப் புனிதராம் நம் தலைவரின் பெருந்தன்மைக்கு சான்று.

Richardsof
1st January 2018, 07:53 AM
2018 லும் தொடரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் சாதனை

உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகரின் ரசிகர்கள் உயிர்ப்புடன் 70 ஆண்டுகள் தொடர்ந்து பயணித்து வருகிறார்கள் என்றால் அந்த பெருமைக்குரியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவரே . எம்ஜிஆரின் புகழ் , செல்வாக்கு போன்று இனி எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்க போவதில்லை . சினிமா , அரசியல் , ஊடகங்கள் , பத்திரிகைகள் எல்லாமே எம்ஜிஆர் என்ற பெயரை தினமும் உச்சரிக்காத நாட்களே இல்லை . எம்ஜிஆர் படங்களும் இன்னமும் திரை அரங்குகளில் பவனி வந்த வண்ணம் உள்ளது .
http://i65.tinypic.com/30bii2s.jpg
2018ல் மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை , உலகம் சுற்றும் வாலிபன் , காவல்காரன் நாடோடி மன்னன் , படங்கள் டிஜிட்டல் வடிவில் புதுப்பொலிவுடன் வெளிவர உள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாம் அன்றும் பெருமையுடன் வாழ்ந்தோம்
இன்றும் அவருடைய புகழை பரப்பி பெருமையுடன் வாழ்கிறோம் .
நாளைய சரித்திரமும் எம்ஜிஆர் புகழ் தொடரும் என்பதை எண்ணி பூரிப்படைகிறோம் .

Richardsof
1st January 2018, 12:35 PM
மக்கள் திலகம் அவர்கள் நடித்து வெளிவந்த ஜனவரி மாத படங்கள் .


ஹரிச்சந்திரா

அலிபாபாவும் 40 திருடர்களும்

சக்கரவர்த்தி திருமகள்

அரசிளங்குமரி

ராணி சம்யுக்தா

பணத்தோட்டம்

வேட்டைக்காரன்

எங்க வீட்டுபிள்ளை

அன்பேவா

தாய்க்கு தலை மகன்

ரகசிய போலீஸ் 115

மாட்டுக்கார வேலன்

குமரிக்கோட்டம்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

fidowag
1st January 2018, 11:07 PM
http://i67.tinypic.com/zuni48.jpg
எனது 19000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்த நெறியாளர் திரு.ரவிச்சந்திரன், நண்பர்கள் திரு.வினோத்,(பெங்களூரு ), திரு.ராஜா (நெல்லை )
திரு.எஸ்.குமார் (மதுரை ),திரு.சாமுவேல் (சத்தியமங்கலம் ), திரு.பி.எஸ். ராஜு,
திரு.சுரேந்திரபாபு, திரு.இளங்கோவன், திரு.வெங்கடேசன், திரு.வீரராகவன் ,
திரு.ஆதவன் (மெகா டிவி ) ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பார்வையாளர்கள், பதிவாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இதர நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .



ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு .

fidowag
1st January 2018, 11:08 PM
http://i68.tinypic.com/fomwbn.jpg

fidowag
1st January 2018, 11:09 PM
http://i66.tinypic.com/1z6u6v.jpg

fidowag
1st January 2018, 11:10 PM
http://i67.tinypic.com/1zegx1z.jpg

fidowag
1st January 2018, 11:11 PM
http://i64.tinypic.com/2i8vzat.jpg

fidowag
1st January 2018, 11:12 PM
http://i66.tinypic.com/2ytv6up.jpg

fidowag
1st January 2018, 11:13 PM
http://i66.tinypic.com/2vhum3o.jpg

fidowag
1st January 2018, 11:13 PM
http://i63.tinypic.com/2csf53p.jpg

fidowag
1st January 2018, 11:14 PM
http://i63.tinypic.com/292ppc1.jpg

fidowag
1st January 2018, 11:15 PM
http://i66.tinypic.com/1q03s7.jpg

fidowag
1st January 2018, 11:16 PM
http://i67.tinypic.com/2mdjasn.jpg

fidowag
1st January 2018, 11:17 PM
தினத்தந்தி =01/01/2018
http://i68.tinypic.com/2dse346.jpg

fidowag
1st January 2018, 11:20 PM
http://i68.tinypic.com/x1kaz5.jpg

fidowag
1st January 2018, 11:24 PM
கடந்த வாரம் (22/12/17) மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமைப்பெண் " ஒரு வார வசூலாக
ரூ.1.25.000/-க்கு மேலாக ஈட்டி அரிய சாதனை புரிந்துள்ளது என்று தகவல் அளித்துள்ளார் மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

http://i67.tinypic.com/10mk6s2.jpg
குறிப்பு : கணிசமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,மதுரை சென்ட்ரல் சினிமாவில் தற்காலிகமாக திரைப்படம் பார்ப்பதை புறக்கணித்து வரும் நிலையில் , பொதுமக்கள் ஆதரவோடு மட்டுமே இந்த வசூல் சாத்தியம் ஆகியுள்ளது . அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஆதரவு இருந்தால் இதைவிட கூடுதல் வசூல் ஈட்டிஇருக்கும் என்று நண்பர் திரு.குமார் . மேலும் தகவல் அளித்தார் ..

fidowag
1st January 2018, 11:33 PM
தின செய்தி -01/01/2018
http://i63.tinypic.com/xn99qe.jpg

fidowag
1st January 2018, 11:34 PM
http://i65.tinypic.com/rmtrn8.jpg

fidowag
1st January 2018, 11:36 PM
மாலைமலர் -01/01/2018
http://i66.tinypic.com/25uslyv.jpg
http://i65.tinypic.com/9t1j04.jpg
உள்ளனர்

fidowag
1st January 2018, 11:37 PM
http://i67.tinypic.com/ou4ieo.jpg

fidowag
1st January 2018, 11:38 PM
மாலைமுரசு -01/01/2018
http://i67.tinypic.com/10dzlap.jpg

fidowag
1st January 2018, 11:39 PM
http://i65.tinypic.com/34y4ksn.jpg

fidowag
3rd January 2018, 02:12 PM
மக்கள் குரல் -01/01/2018
http://i68.tinypic.com/2213eg.jpg
http://i68.tinypic.com/2im9z6d.jpg
http://i65.tinypic.com/1twidz.jpg

fidowag
3rd January 2018, 02:20 PM
தினத்தந்தி -02/01/18
http://i63.tinypic.com/20ap5io.jpg

fidowag
3rd January 2018, 02:21 PM
மாலை முரசு -02/01/18
http://i68.tinypic.com/25zscva.jpg

fidowag
3rd January 2018, 02:23 PM
மாலை மலர் -02/01/18
http://i63.tinypic.com/34ss1hy.jpg

fidowag
3rd January 2018, 02:24 PM
தமிழ் இந்து -02/01/18
http://i68.tinypic.com/2qn9jf5.jpg

fidowag
3rd January 2018, 02:25 PM
தினச்செய்தி -03/01/2018
http://i67.tinypic.com/1p6v6b.jpg

fidowag
3rd January 2018, 02:26 PM
http://i66.tinypic.com/1z48wic.jpg
தமிழ் இந்து -03/01/2018

fidowag
3rd January 2018, 02:28 PM
தினமலர் -03/01/2018
http://i67.tinypic.com/2nb4z9e.jpg

Richardsof
3rd January 2018, 07:01 PM
1948ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்

அபிமன்யு
ராஜமுக்தி
மோகினி

1958ல் மக்கள் திலகத்தின் படம்

நாடோடிமன்னன்

1968ல் மக்கள் திலகத்தின் படங்கள் 8

ரகசிய போலீஸ் 115
தேர்த்திருவிழா
குடியிருந்தக்கோயில்
கண்ணன் என் காதலன்
புதிய பூமி
கணவன்
ஒளிவிளக்கு
காதல் வாகனம்


1978ல் மக்கள் திலகத்தின் படம்

மதுரையை மீட்ட சுந்தரப்பானடியன்
மதுரை மாநகராட்சியை மீட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர்


1988

மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தொடர்ந்து வெளிவந்தது .

1998

மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தொடர்ந்து வெளிவந்தது .
1998 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி .

2008

மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தொடர்ந்து வெளிவந்தது .


2018

மக்கள் திலகத்தின் சினிமா அரசியல் மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடரும் ....

Richardsof
3rd January 2018, 07:36 PM
உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர்... எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது.

திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம்! என்று சொல்லும் அதே நேரத்தில்; அரசியலிலும் அவர்... யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராகவே விளங்கினார். சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் கட்டங்கள் ஒரு சரித்திரமாகவே அமைந்து விட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்லியல்புகளை உணர்வு வயத்துடன் நினைவு கூர்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 53 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று 'தெய்வத்தாய்' படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போலத்தான் அவரது வாழ்க்கையும் அமைந்துவிட்டது.

இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917- ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி...

ஆக, இந்த ஆண்டு 2017, ஜனவரி 17 ஆம் தேதியோடு அவருக்கு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. எம்ஜிஆரின் வாழ்நாள் சாதனைகளைப் போற்றும் வகையில், தமிழக அரசு, இந்த வருடம் முழுவதையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றி பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகமே எம்ஜிஆர் நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இன்றைய இளையதலைமுறையினரும் கூட மறைந்த முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த நடிகருமான எம்ஜிஆரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு; எம்ஜிஆரின் ஆரம்பகால சினிமா மற்றும் அரசியல் பிரவேஷம், அதில் அவரடைந்த வெற்றிகள், எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நாடு போற்றும் திட்டங்கள், தங்கள் மொத்த வாழ்க்கையையும் எம்ஜிஆரை ரசிப்பதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவரது அதி தீவிர ரசிகர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை எம்ஜிஆர் 100 எனும் தலைப்பில் தொடராக வெளியிடவிருக்கிறது தினமணி.

வேடிக்கையாக ஒரு விஷயம் சொல்வார்கள்,

இந்தியாவில் தவழும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் பார்வையில் படுமாறு இந்தியப்பிரபலங்கள் சிலரது புகைப்படங்களைப் பரப்பி சில விஞ்ஞானிகள் ஒரு புது விதமான ஆராய்ச்சியில் இறங்கினார்களாம்.

அந்த ஆராய்ச்சியின் நோக்கம் எந்த பிரபலம் அறியாக் குழந்தைகளைக் கூட கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவர் என்பதை அறிவது தான்.

ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக 'தானாய் சேர்ந்த கூட்டம்'!

orodizli
4th January 2018, 10:25 PM
மக்கள் திலகம் ஆவணங்கள் 19001 மகத்தான பதிவுகள் கடந்து வழங்கி கொண்டிருக்கும் திரு லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...

orodizli
5th January 2018, 10:49 PM
தந்தி தொலை காட்சியில் இரவு 9.30 மணியளவில் ஓளி பரப்பாகும் புரட்சி தலைவரின் "வாத்தியார்" நிகழ்ச்சி அருமை...

fidowag
5th January 2018, 11:41 PM
மக்கள் திலகம் ஆவணங்கள் 19001 மகத்தான பதிவுகள் கடந்து வழங்கி கொண்டிருக்கும் திரு லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...

நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி .

fidowag
5th January 2018, 11:43 PM
தின இதழ் 30/12/17
http://i64.tinypic.com/295pq28.jpg

fidowag
5th January 2018, 11:44 PM
மக்கள் குரல் -03/01/18
http://i66.tinypic.com/2zpi9m0.jpg

fidowag
5th January 2018, 11:47 PM
மக்கள் குரல் -04/01/18
http://i63.tinypic.com/34rsyl5.jpg

fidowag
5th January 2018, 11:48 PM
மாலைமுரசு -04/01/18
http://i64.tinypic.com/9b9fsk.jpg

fidowag
5th January 2018, 11:50 PM
தினச்செய்தி -04/01/18
http://i67.tinypic.com/2wqzp1u.jpg

fidowag
5th January 2018, 11:52 PM
மாலை முரசு =05/01/18
http://i64.tinypic.com/289d4ra.jpg

fidowag
5th January 2018, 11:53 PM
மக்கள் குரல் -05/01/18
http://i67.tinypic.com/mafjw7.jpg

fidowag
5th January 2018, 11:54 PM
தின இதழ் -05/01/18
http://i65.tinypic.com/2lkrb7r.jpg

fidowag
5th January 2018, 11:57 PM
http://i63.tinypic.com/1dy6m8.jpg

fidowag
6th January 2018, 12:11 AM
கல்கண்டு வார இதழ் -10/01/18
http://i65.tinypic.com/2z5npjr.jpg

fidowag
6th January 2018, 12:13 AM
தினமலர் -05/01/18
http://i68.tinypic.com/5tv39t.jpg

Richardsof
6th January 2018, 04:50 PM
எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த விஜயகாந்த்
Jan 04, 2018Thimiran0Like



தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது.

இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா, லதா, பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, அமிர்தம், கவிஞா் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், ஸ்டில்ஸ் சங்கா்ராவ், ஆரூா்தாஸ், சொர்ணம், காஸ்டியுமா் முத்து, எடிட்டா் எம்.ஜி.பாலுராவ், ஏவிஎம். ஆா்.ஆா்.சம்பத் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடிகா் சங்க செயலாளரும், தயாரிப்பாளா் சங்க தலைவருமான விஷால் முன்னிலையில் புரட்சிக் கலைஞா் விஜயகாந்த் அவா்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆா். அவா்களின் திருஉருவசிலையை திறந்து வைத்தார்.

இவ்விழாவில் தயாரிப்பாளா் சங்க தலைவரும், நடிகா் சங்க செயலாளருமான விஷால், பெப்ஸி தலைவா் ஆா்.கே.செல்வமணி தமிழ்நாடு திரைப்பட இயக்குனா் சங்க தலைவா் விக்கிரமன், பிலிம் சேம்பா் தலைவா் ஆனந்தா எல்.சுரேஷ், தமிழ்த் திரைப்பட வா்த்தக சபை தலைவா் அபிராமி ராமநாதன், கில்டு செயலாளா் ஜாக்குவார் தங்கம், டிஜிட்டல் பிலிம் அசோசியேஷன் தலைவா் கலைப்புலி ஜி.சேகரன், விநியோகஸ்தா் சங்க தலைவா் டி.ஏ.அருள்பதி, விநியோகஸ்தா் சங்க கூட்டமைப்பு தலைவா் செல்வின்ராஜ், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளா் சங்க செயலாளா் ஆா்.பன்னீா்செல்வம், தயாரிப்பாளா் எஸ்.தாணு, நடிகா் சத்யராஜ், இயக்குனா்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, பாண்டியராஜன், ஆா்.பார்த்திபன், நடிகா் விஜயகுமார், எஸ்.வி.சேகா், விக்ரம்பிரபு, டி.பி.கஜேந்திரன், ஆா்.வி.உதயகுமார், கே.ராஜன், இயக்குனா் பேரரசு, நடிகை அம்பிகா, தயாரிப்பாளா் ஹேமா ருக்மணி, சித்ரா லட்சுமணன், சிவஸ்ரீ சீனிவாசன், சிவஸ்ரீ சிவா, நடன இயக்குனா் சுந்தரம், ருக்மாங்கதன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். விழாவில் டாக்டா் சங்கா் கணேஷ் இன்னிசை கச்சேரி நடந்தது. எம்.ஜி.ஆரின் பாடல்கள் மட்டும் பாடப்பட்டது.

விழாவிற்கு வந்தவா்களை தலைவா் டைமண்ட்பாபு, செயலாளா் பெருதுளசி பழனிவேல், பொருளாளா் விஜயமுரளி மூவரின் தலைமையில் அனைத்து பி.ஆா்ஓக்களும் வரவேற்றார்க

Richardsof
6th January 2018, 05:00 PM
ACTRESS KANCHANA RECEIVES MGR SHIELD

http://i66.tinypic.com/2nqy4xu.jpg

Richardsof
6th January 2018, 05:05 PM
http://i64.tinypic.com/2q1xco4.jpg

Richardsof
6th January 2018, 05:08 PM
http://i63.tinypic.com/6tn768.jpg

Richardsof
6th January 2018, 05:10 PM
KOONDUKILI HEROINE SAROJA MADAM
http://i64.tinypic.com/2m5c5fm.jpg

Richardsof
6th January 2018, 05:15 PM
ACTRESS L. VIJAYALAKSHMI
http://i68.tinypic.com/1ifixi.jpg

Richardsof
6th January 2018, 05:16 PM
ACTRESS VYJAYANTHIMALA
http://i67.tinypic.com/29w8yz8.jpg

Richardsof
6th January 2018, 05:45 PM
மக்கள் திலகம் எம்ஜிஆருடன் இணைந்து பணியாற்றியவர்களை நினைவு கூர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நேரில் அழைத்து எம்ஜிஆர் நினைவு பரிசை வழங்கினார்கள்

பி.எஸ்.சரோஜா - புதுமைப்பித்தன் மற்றும் கூண்டுக்கிளி
சௌகார் ஜானகி - ஒளிவிளக்கு மற்றும் பணம் படைத்தவன்
வாணிஸ்ரீ - கண்ணன் என் காதலன் மற்றும் ஊருக்கு உழைப்பவன்
கீதாஞ்சல-, அன்னமிட்டகை மற்றும் ஆசைமுகம்
ஷீலா - பாசம் மற்றும்புதியபூமி
பவானி - உழைக்கும் கரங்கள்
ரமாபிரபா - புதியபூமி மற்றும் ராமன் தேடிய சீதை
சச்சு - மாட்டுக்காரவேலன் மற்றும் கலையரசி
குட்டிபத்மினி- நம்நாடு மற்றும் நான் ஏன் பிறந்தேன்
காஞ்னா - பறக்கும் பாவை மற்றும் நான் ஏன் பிறந்தேன்
ஏ.சகுந்தல - பல படங்கள்
ஜெயசித்ரா - நவரத்தினம்
சாரதா - நினைத்ததை முடிப்பவன்
பேபி இந்திரா - நான் ஏன் பிறந்தேன்
வெண்ணிறாடை நிர்மலா - ரகசிய போலீஸ் 115 மற்றும் ஊருக்கு உழைப்பவன்
எல்.விஜயலட்சுமி - கொடுத்து வைத்தவள் மற்றும் குடியிருந்த கோயில்
ரோஜாரமணி - நீதிக்கு தலை வணங்கு
பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா ஜெயா - மூவரும் நடித்த படம் நவரத்தினம்
லதா - பல படங்கள் ,
எம்.என்.ராஜம் - நாடோடிமன்னன்
ராஜஸ்ரீ - கலையரசி மற்றும் குடியிருந்த கோயில்
வைஜெயந்தி மாலா - பாக்தாத் திருடன்
பி.எஸ்.சீதாலட்சுமி - பல படங்கள்
ஜமுனா -தாய் மகளுக்கு கட்டிய தாலி
அமிர்தம் - - நேற்று இன்று நாளை ஒளிப்பதிவாளர்

கவிஞா் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், - பல படங்கள் பாடல் இயற்றியவர்கள்
ஆரூா்தாஸ், சொர்ணம் - பல படங்கள் வசனகர்தாக்கள்
காஸ்டியுமா் முத்து,
எடிட்டா் எம்.ஜி.பாலுராவ்,
ஏவிஎம்.
ஆா்.ஆா்.சம்பத் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

Gambler_whify
6th January 2018, 07:27 PM
புரச்சித் தலவர் வாழ்க

பொன்மணச் செம்மல வாழ்க

தெய்வம் வாழ்க

என் தலவன் வாழ்க்க

எல்லரும் நல்லா இருக்க வேண்டும்

உலகத்தை நடத்தும் மகாசக்தி என் தலைவன் புகழ்ச்சி வாழ்க.

Gambler_whify
6th January 2018, 07:43 PM
ரஜினி காந்த்த் கூட புரச்சித் தலவர பாராட்டி பேசித்தான் கட்சி தொடக்கப் போறார்.

யாரா இருந்தாலயும் நம் தலவன் பேர் சொன்னால்தான் வெர்றி ெபற்றுவார்கள்.



ரஜினி காந்த் பேச்சு... கீழ..





சென்னை: ''பணம், புகழ், பதவியை விட, எம்.ஜி.ஆரை போல் நல்ல குணத்தோடு வாழ்ந்து, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்,'' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர்.,MGR, நடிகர் ரஜினி,actor Rajini, சச்சிதானந்தர்,Satchidananda, தயானந்த சரஸ்வதி,Dayananda Saraswati,ரஜினி ரசிகர்கள், Rajini fans, ஆன்மிகம், spiritual,சிவாஜி,Shivaji, நல்ல குணங்கள், Good qualities, Good characters ,


சென்னையில், தன் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, நேற்று நான்காவது நாளாக, கோவை, திருப்பூர், வேலுார் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.

ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது: இன்னும், இரண்டு நாளில் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என, ரசிகர்களாகிய உங்களுக்கு, நான் வாழ்த்து கூறுகிறேன். கோவை, எனக்கு மிகவும் முக்கியமான ஊர்.

என் குரு, சச்சிதானந்தர், மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர்.அவர் தான், எனக்கு மந்திர உபதேசம் செய்தார்.


அவர் சொல்லி தான், பாபா படம் எடுத்தேன். சச்சிதானந்தரின் குரு, அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி, ஆன்மிகத்தை பரப்பு என்றார்.இன்று, பல நாடுகளில் சச்சிதானந்தரின் ஆசிரமங்கள், ஆன்மிகத்தையும், யோகாவையும் கற்றுத் தருகின்றன. சச்சிதானந்தர் இறக்கும் போது, நான் தான் கடைசியாக, அவரை பார்த்தேன். அந்த பாக்கியம், எனக்கு கிடைத்த பெருமை. அதேபோல், தயானந்த சரஸ்வதியும், எனக்கு ஒருகுரு.

கோவை விமான நிலையம் வரும்போது, ஒரு சம்பவம், அப்போது, அண்ணாமலை படம் வெளியான நேரம்; குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக, நான் விமானத்தில் கோவை சென்றிருந்தேன்.உடன் சிவாஜியும் இருந்தார். விமான நிலையம் சென்றதும், ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து, 'வாழ்க' கோஷமிட்டனர். சிவாஜி உடன் இருக்கும்போது, எனக்கு சங்கடமாக இருந்தது.


ஆனால், சிவாஜி, என்னை தட்டிக் கொடுத்து, 'எங்கடா நழுவுற... வா முன்னாடி வா...
Advertisement

இது, .உன் காலம்; நன்றாக உழை; நல்ல படங்களை கொடு... என் காலம் போய் விட்டது' என்றார்.என் காரை முதலில் வரவழைத்து, என்னை அனுப்பி வைத்தார். நடிப்பை தாண்டி, நல்ல குணங்களை கொண்டவர், சிவாஜி.பணம், புகழால் மதிப்பு தான் வரும்; மரியாதை வராது. நல்ல குணாதிசயங்களை கொண்டதால் தான், எம்ஜிஆர்., இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

நாம் அனைவரும், நல்ல குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கோவை விமானநிலையம் சென்றபோது, என்னை சிலர் தடுத்து, 'இப்போது வெளியே வர வேண்டாம்; ஒரு நடிகர் வந்திருக்கிறார்.'அவரை பார்க்க, ஆயிரக்கணக் கான ரசிகர்கள் கூடியுள்ளனர். அவர் போன பின், நீங்கள் வரலாம்' என்றனர்.


அப்போது தான் சிவாஜி கூறியது, ஞாபகம் வந்தது. அந்தந்த காலத்தில் அனைத்தும் மாறும். மாற்றம் வருவதை, யாராலும் தடுக்க முடியாது. சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரும். காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ரஜினியிடம், 'தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளை எதிர்த்து போட்டி இடுவீர்களா?' என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் கூற, ரஜினி மறுத்து விட்டார்.


-----------

இந்த பேச்சுக்கான தினமலர் பேப்பர் நெட் லிங்கி ---- http://www.dinamalar.com/news_detail.asp?id=1928882


புரட்சித்தலவன் வாழ்க
சுப்பர் ஸ்டர் ரஜனி காந்த் வாழ்க்க


புரட்சித் தலவரிடம் ஆசீர் பெறும் ரஜினிகாந்த். கால்ல விழப்போகும் ரஜினி காந்ைத புரட்ச்சித் தலவர் தடுக்கின்றார். என்ன மாதிரி ஒரு பெரிய குணம் பாருங்கள்

http://i64.tinypic.com/ml7cd2.jpg


அதெ நிகள்ச்சியில் வேற போஸ்கள்

http://i65.tinypic.com/111jqsx.jpg

http://i64.tinypic.com/e9u1xl.jpg

இதற்கான வீடிேயா பதிவு லிங்கி..

https://www.youtube.com/watch?v=Se8Y0sUPjpY


ஒரு விழாவில் ரஜினிக்கி புரச்சித் தலவர் பரிசு குடுக்கிறார்.

http://i68.tinypic.com/izc9j7.jpg

Gambler_whify
6th January 2018, 07:57 PM
உலகத்தில் அவர வெஞ்சவர்களுக்கு கூட நல்லது செஞ்ச ஒரே நல்ல மனிதன் ஒரே தலைவன் புரச்சித் தலவர்.

எல்லாரும் புரச்சித் தலவைைரப் பாராட்டகிறார்கள். ஆனால், அவர இன்னம் புரிஞ்சுக்காதவர்கள் கொஞ்சம் பேர் இுருக்கிறார்கள் என்பது சமயத்திலே கோவமாய் வருகின்றது. சமயத்தில் அவர்கைளைப் பார்த்தால் பாவமாய் இருக்கிறத. எந்த ந்ம்பிக்கையில் இருக்கிறார்கள்.

புரச்சித் தலவர் மாதிரியான நல்லவர்களை எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து ஆதரிச்சு வாழ்த்தினால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கும்.

புரச்சித் தலவைர புரிஞ்சவர்கள் புரியட்டும். புரியாதவர்கள் போகட்டும். என்னிக்காவது ஒருநாள் புரிஞ்சுப்பார்கள்.

புரச்சித் தலவர் வாழ்க

என் தெய்வம் வாழ்க

எல்லாரும் வாழ்க.

Gambler_whify
6th January 2018, 08:20 PM
http://i65.tinypic.com/6pq5q9.jpg

Richardsof
7th January 2018, 11:22 AM
எம்.ஜி.ஆர்

நிஜத்திலும் நிழலிலும் தன்னை ஒரே பிம்பத்தில் பொருத்திக்கொண்டு காலம் முழுவதும் தன்னை வெளிப்படுத்துவது என்பது எந்த ஒரு தனி மனிதனாலும் முடியாத காரியம். இதை வெற்றிகரமாக சாதித்தவர் எம்.ஜி.ஆர். ஒரு நாடக நடிகராக தன் சினிமா வாழ்க்கை துவக்கி தனக்கென தனிப்பட்ட குணாதிசயங்களோடு திரைப்படத்தில் பணியாற்றி அதை தன் பொதுவாழ்க்கைக்கு வெற்றிகரமாக முதலீடாக்கிய ஒரு நபர் எம்.ஜி.ஆர். நாம் கொண்டாடும் எம்.ஜி.ஆரின் பிரத்யேக அடையாளங்கள், அவரது சாம்பல் நிற புஸ் புஸ் தொப்பியும், கருப்புக்கண்ணாடியும்.

இயல்பான வாழ்வில் இந்த அடையாளங்களோடு நம் தெருவில் ஒருவர் நடந்துசெல்தைப் பார்த்தால் நிச்சயம் அவர் நம் கண்ணுக்கு கேலிப்பொருளாகத்தான் தெரிவார். ஆனால் இந்த அடையாளங்களோடு ஒரு மனிதர் நம்மிடையே நடமாடிச் சென்றிருக்கிறார் என்பது ஆச்சர்யம். சினிமாவுக்காகக் கூட சிகரெட், மதுவைத் தொடுவதில்லை, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட கதைகளில் நடிப்பதில்லை, பெண்களை அவமதிக்கும் காட்சிகளை ஒப்புக்கொள்வதில்லை என சினிமாவில் அவர் கடைபிடித்த விஷயங்கள் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை தந்தது. தனிப்பட்ட வாழ்வில் அவரது கொடுக்கும் குணம் இன்னும் அவர் மேல் மதிப்பைக் கூட்டியது. தமிழ்சினிமாவில் ஏழை எளியவர்களுக்கென இலவச மருத்துவமனை நடத்திய முதலும் கடைசியுமான நடிகர் அவர்தான். நடிகராக இருந்து நாடாளும் வாய்ப்பு கிடைத்தபின்னும் அவர் சித்தாந்தங்கள் வழி தன் ஆட்சியை நடத்தவில்லை. தன் அனுபவங்களில் எதிரொலியாகவே அவரது சட்டங்கள் இருந்தன. பற்பொடியும் கால்செருப்பும் சத்துணவும் அவருக்கு உதித்தது அப்படித்தான்.

எம்.ஜி.ஆர்மறைந்து 30 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் அவர் மக்களால் போற்றப்படுகிறார். தமிழர் குடும்பங்களில் அவர்கள் வணங்கும் தெய்வம், உறவினர்களைத்தவிர்த்து மூன்றாவது ஒரு நபர் அவர்களின் புஜையில் இடம்பெற்றிருந்தால் அது எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். கட்சி மாச்சர்யமின்றி அன்றும் இன்றும் போற்றப்படுகிறார் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தின் வழிவந்து கருணாநிதியின் ஆகச்சிறந்த தொண்டனாக ஒரு காலத்தில் பணியாற்றிய வைகோ, அவரது நுாற்றாண்டுவிழாவை கொண்டாடுகிறார். 'யாரை அதிகம் மிஸ் செய்ததாக வருந்துகிறீர்கள்' என கருணாநிதியிடம் கேட்டால் எம்.ஜி.ஆர் என அவர் உருகுகிறார்.

கருணாநிதியின் அமைச்சரவையில் அதிகாரத்தில் இருக்கும்போதே, 'எனக்கு தந்தையைப்போன்றவர்' என கண்கலங்கி கட்டுரை எழுதுகிறார் துரைமுருகன். எம்.ஜி.ஆர் இருக்கையில் மேடையில் அவரை வறுத்தெடுத்து டி.ராஜேந்தர், 'அந்த மனிதனை திட்டியதற்காக இன்னமும் வெட்கப்படுகிறேன்' என ஒரு மேடையில் அழுது தீர்த்தார். இவர்களின் இந்த பண்பை எடைபோட எம்.ஜி.ஆர்தான் எடைக்கல். தான் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் தன்னைப்பற்றிய பிம்பத்தை ஆழமாக பதியவைத்தது எம்.ஜி.ஆரின் சாதனை.




இறந்து இத்தனை ஆண்டுகளானபின்னும் ஒருவருக்கு 10க்கும் மேற்பட்ட இதழ்கள் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் அவர் புகழ்பாடும் அமைப்புகள் உருவாகிக்கொண்டே இருப்பது உலகளவில் வேறு யாருக்காவது உண்டா என்பது சந்தேகமே. வெளியாகும் இந்த இதழ்கள் வணிக பத்திரிகைகளுக்கு ஈடாக வரவேற்பு பெற்றிருப்பதும் ஆச்சர்யம். அவரைப்பற்றி இன்னமும் ஆய்வு நோக்கில் தொடர்ந்து நுால்கள் வெளியிடப்படுகின்றன. திராவிட இயக்கத்தின் பண்பாட்டுத்தளத்திலிருந்து விலகி உருவான தலைவர் என அவரைச் சொல்வார்கள். ஆனால் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் வரிசையில் அதிகம் நுால்கள் வெளியானது இன்றுவரை அவர் ஒருவருக்குத்தான் என்பது ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் முன்னாள் டி.ஜி.பி மோகன்தாஸ் எழுதிய 'எம்.ஜி.ஆர், தி மேன் அன் தி மித்', எம்.எஸ். பாண்டியன் எழுதிய 'தி இம்பேக்ட் ஆஃப் எம்.ஜி.ஆர் ', உள்பட ஆங்கிலத்திலும் எம்.ஜி.ஆர் குறித்த நுால்கள் வெளியாகி உள்ளன.

வார மாத பத்திரிகைகள் என எடுத்துக்கொண்டாலும் இன்றைக்கு புகழ்பெற்றுவிளங்கும் விஜய் அஜித் போன்ற உச்சநட்சத்திரங்களைவிடவும் எம்.ஜி.ஆர் பெயரில்தான் இதயக்கனி, உரிமைக்குரல், எம்.ஜி.ஆர் ரசிகன் என பல பத்திரிகைகள் வெளியாகி வருகின்றன.

Richardsof
7th January 2018, 04:43 PM
SOWKAR JANAKI MADAM AT MGR FUNCTION 3.1.2018 AT CHENNAI

http://i68.tinypic.com/307sshx.jpg

Richardsof
7th January 2018, 04:45 PM
ACTRESS SANGEETHA

http://i65.tinypic.com/2mcyhbl.jpg

Richardsof
7th January 2018, 04:47 PM
ACTRESS P.R.VARALAKSHMI
http://i64.tinypic.com/ab36nc.jpg

Richardsof
7th January 2018, 04:48 PM
ACTRESS VENNIRA ADAI NIRMALA
http://i68.tinypic.com/effp5g.jpg

Richardsof
7th January 2018, 04:50 PM
ACTRESS VYJAYANTHIMALA
http://i64.tinypic.com/98cy6e.jpg

Richardsof
7th January 2018, 04:52 PM
ACTRESS L. VIJAYALAKSHMI
http://i63.tinypic.com/73no8i.jpg

Richardsof
7th January 2018, 04:53 PM
ACTRESS LATHA
http://i67.tinypic.com/153mvwi.jpg

Richardsof
7th January 2018, 04:55 PM
ACTRESS SHEELA
http://i67.tinypic.com/345gfhv.jpg

Richardsof
7th January 2018, 04:56 PM
ACTRESS JAMUNA
http://i65.tinypic.com/k1sw8k.jpg

Richardsof
7th January 2018, 04:57 PM
ACTRESS SACHU
http://i66.tinypic.com/a1nuae.jpg

Richardsof
7th January 2018, 04:59 PM
ACTRESS VANISHREE
http://i66.tinypic.com/opvdpx.jpg

Richardsof
7th January 2018, 05:00 PM
ACTRESS KANCHANA
http://i63.tinypic.com/3038cwx.jpg

Richardsof
7th January 2018, 05:01 PM
ACTRESS JAYANTHI
http://i66.tinypic.com/2mcsw0j.jpg

Richardsof
7th January 2018, 05:03 PM
ACTRESS RAJASHREE
http://i64.tinypic.com/wkmdc9.jpg

Richardsof
7th January 2018, 05:05 PM
SINGER AND ACTOR A.L.RAGAVAN AND ACTRESS M.N.RAJAM
http://i66.tinypic.com/6zvpxj.jpg

Richardsof
7th January 2018, 05:06 PM
ACTRESS KUTTI PADMINI
http://i65.tinypic.com/103anom.jpg

Richardsof
7th January 2018, 05:08 PM
ACTRESS BHAVANI
http://i66.tinypic.com/15ogr36.jpg

Richardsof
7th January 2018, 05:09 PM
ACTRESS SARADHA
http://i64.tinypic.com/30mbhx3.jpg

Richardsof
7th January 2018, 05:10 PM
ACTRESS C.I.D. SAKUNTHALA
http://i68.tinypic.com/16bhe76.jpg

Richardsof
7th January 2018, 05:20 PM
எம்.ஜி.ஆர்.எங்கும் உள்ளார்
மறைந்தவர்கள் அனைவருமே மறைந்தா போனார்
மக்களுக்கு உதவியவர் இன்றும் உள்ளார்
இறந்து விட்டார் என்றவரைச் சொல்லுவது
இழி மொழியாய் ஆகி விடும் நிறுத்திக் கொள்வீர்
சிறந்தவராய் அனைவருக்கும் உதவி செய்து
சேர்த்தெதையும் வைக்காமல் கொடுத்து வாழ்ந்த
பரந்த மனம் கொண்டோர்கள் என்றும் உள்ளோர்
பார்க்கின்றோம் எம்.ஜி.ஆர். எங்கும் உள்ளார்
கொடுப்பதிலே சுகம் கண்டு விட்டவர்கள்
கொடுப்பார்கள் கொடுப்பார்கள் போதையேறி
அடுத்தவர்க்கு இன்பம் வர அளிப்பதிலே
அவர் கொள்ளும் இன்பமதோ கோடி கோடி
தடுப்பதற்கு முயல்கின்ற உறவைக் கூட
தள்ளி வைத்தே கொடுப்பார்கள் அவர்க்கும் கூட
சிறப்பிதனைக் கைக் கொண்டார் மட்டும் இங்கே
செத்தொழிவதில்லை என்றும் வாழ்ந்தே வென்றார்

அடுப்பதனைப் பற்ற வைத்து விட்டுச் சென்று அங்கே
அய்யா என்றழைத்தாலே போதும் உடன்
பருப்பு வரும் அரிசி வரும் பல சரக்குப்
படையெடுத்து ஒடி வரும் அதன் விளைவாய்
தொடுத்து வரும் உதவியினால் அக் குடும்பம்
தொல்லையில்லா வாழ்க்கையதைத் துய்த்திடுமே
கொடுத்ததனால் வாழ்கின்றார் இன்றும் கூட
கொற்றவராய் எம்.ஜி.ஆர்.என்னும் மன்னர்

எழுதியது நெல்லை கண்ணன்

Richardsof
7th January 2018, 05:22 PM
எம்.ஜி.ஆர்.
ஏழைகளின் மனத்தினிலே ஒரு தலைவன்
இன்றைக்கும் என்றைக்கும் இருக்கின்றானே
கோழைகளாய் அசிங்கமாக அவனைப் பேசி
கொலு வீற்றிருந்தார்கள் தன்னையெல்லாம்
மோழைகளாய் வீழ்த்தி அவர் தம்மின் முன்னால்
முதல்வரென ஏழைகளால் அவன் இருந்தான்
நாளை எந்த நாளும் அந்த எம்.ஜி.ஆராம்
நாயகனே ஏழைகளின் ஒரே தலைவன்
எழுதியது நெல்லை கண்ணன்

Richardsof
8th January 2018, 06:52 PM
எம்.ஜி.ஆர் தன் படங்களில் வித்தியாசமான நடனக்காட்சிகள் அமையவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆகவே அவருடன் நடிக்கும் நடிகையாரும் நடனப்பயிற்சி உடையவர்களாக இருக்க வேண்டும். மந்திரிகுமாரி பட நாயகி சரோஜா (உதயசங்கரின் மாணவி) முதல் பத்மினி, ஜெயலலிதா, லதா எனப் பலரும் நடனத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். சரோஜாதேவி ‘குரூப் டான்சராக’ இருந்து கதாநாயகி ஆனவர். கே.ஆர். விஜயா ‘ஸ்ட்ரீட் டான்சராக’ இருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் ‘சினிமா டான்ஸ்’ ஆடுவதில் வல்லவர்களாக இருந்தனர். இவர்கள் தவிர சிறந்த நாட்டியக்காரர்களான e.v. சரோஜா, எல் விஜயலட்சுமி, ஹெலன் (ஹிந்தி) ஆகியோரையும் எம்.ஜி.ஆர் தனது பாடல் காட்சிகளில் பயன்படுத்தினார். நடனக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் தனது உடையும் நடையும் வெகுப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.





கதாநாயகியின் தகுதி

கதாநாயகியாக நடிக்க விரும்புவோர் நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழைத் தெளிவாகப் பேசவேண்டும் என்று ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆர் நடனத்தை அடிப்படைத் தகுதியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஞ்சுளாவை ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது அவருக்குத் தனி ஆசிரியர் வைத்து நடனம் கற்பிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். நடனப்பயிற்சியே கதாபாத்திரத்தின் உணர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு கண்களாலும் முகபாவத்தாலும் உடல்மொழியிலும் அவற்றைப் பிரதிபலிக்க உதவும் என்பதில் எம்.ஜி.ஆர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் நடிப்பில் அவர் தன் உடல்மொழியோடு நயனபாஷையையும் பொருத்தமாகச் சேர்த்திருப்பார். பாடல் காட்சிகளில் அவர் கண் அசைவு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

காவல்காரன் படத்தின் காவல்நிலையக் காட்சியில் நம்பியார்தான் நிரபராதி என நிரூபிக்க முயலும் போது எம்.ஜி.ஆருக்கு அதிக வசனமே இருக்காது. அவரது கண் அசைவும் தலை அசைவும் அவர் பேசவேண்டிய வசனங்களைப் படம் பார்ப்போருக்கு உணர்த்திவிடும். திரை அரங்கில் ரசிகர் இக்காட்சியை மிகவும் ரசித்துப் பார்ப்பர்.

சினிமாவில் நடனக்காட்சி

எம்.ஜி.ஆர் தன் படங்களில் பல வகையான நடனங்களை இடம்பெறச் செய்தார். அவர் ஒவ்வொரு ரசிகரும் அந்த நடனத்தை ரசிக்கும்படி மாற்றியமைத்தும் இருப்பார். நடனத்தில் இலக்கணம் நடன மேடையில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்குப் பொருந்தும். ஆனால், திரைப்படக்கலை மக்களின் ரசனை சார்ந்தது என்பதால் நடன இலக்கணத்தை விட படம் பார்ப்போரின் ரசனையோ முக்கியமாகும். அவர்கள் திரையரங்கை விட்டு வெளியே செல்லும்படி நடனக்காட்சி அமையக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார்.

நடனப்பயிற்சி

எம்.ஜி.ஆர் சாஸ்திரீயக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். அதனால், நாடகங்களில் நடிக்கும் போது கர்நாடக சங்கீதப் பயிற்சி பெற்றார். அவர் காரில் போகும்போது தியாகராஜ பாகவதர் பாபனாசம் சிவன், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் பாடல்களை விரும்பிக் கேட்பார். அதுபோல நடனப் பயிற்சியும் பெற்றார். குமாரன் ஆசான் என்பவரிடம் முறைப்படி நடனம் பயின்றார். ஸ்ரீ முருகன் படத்தில் நடிகை மாலதியோடு இணைந்து சிவதாண்டவம் ஆடினார்.

நாடகங்களில் பெண்வேஷம் ஏற்று நடித்து வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தனது மேக்கப்மேனாக வைத்துக்கொண்ட ராம்தாஸ் என்பவருடன் இணைந்து ஒரு நாடகத்தில் இருவரும் ஊர்வசியும் மேனகையுமாக நடனம் ஆடினர். மேடையில் மக்கள் முன்னிலையில், (சினிமாவில் இருக்கும் ‘ரீடேக்’ வசதிகள் இன்றி) நேரடியாக அழகாக நடனம் ஆடத் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். பின்னர் சினிமாவிலும் நடனக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத் தேவைப்படும்போது உரிய நடனப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

வழுவூர் ராமையாபிள்ளை ஒரு பேட்டியில் சிறந்த”எம்.ஜி.ஆர் நடனக்கலைஞர் அவரது நடனங்களை அவரே பெரும்பாலும் அமைத்துக் கொள்வார். நாங்கள் சொல்லித்தர வேண்டிய தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நடன வகைகள்



எம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி எழுப்பி பாட்டு வடிவில் பதில் அளிப்பதாகும். இதை என் அண்ணன் படத்தில் ஒரு நடனக்காட்சியாக அமைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன் படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் பாடல் காட்சியாக அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நடனப் போட்டியில் (ஆடவாங்க அண்ணாத்தே) இ.வி. சரோஜா மற்றும் சகுந்தலாவுக்கு இணையாக ஆடி வெற்றி பெறுவார்.

குடியிருந்த கோயில் படத்தில் பங்க்ரா நடனமும் மன்னாதி மன்னனில் பரதமும், தாயின் மடியில் படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் (ராசாத்தி காத்திருந்தா ரோசா போலே பூத்திருந்தா), ரிக்ஷாக்காரன் படத்தில் உறுமி கொட்டுக்கான ஆட்டமும், பெரிய இடத்துப் பெண்ணில் மேலைநாட்டு நடனமும், எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தோனேஷியா நடன உடையில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாட்டில் டபுள் எக்ஸ்போஷர் காட்சியில் நடன காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

மதுரை வீரன், ராஜா தேசிங்கு, ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மதுரை வீரன் மற்றும் ராஜா தேசிங்கு படங்களில் பத்மினிக்கு இணையாக எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். ஒளிவிளக்கு படத்தில் ஜெயலலிதாவுடன் சிங்கா சிங்கி என்று அழைத்தபடி ஆடுவார். திமுக அரசின் சாதனை விளக்கமாக இந்நடனக்காட்சி அமைந்திருந்தது. மூன்றுமே மாறுவேடக் காட்சிகளாகப் படத்தில் இடம் பெற்றன.

நடனத்தில் வீரவிளையாட்டு அசைவுகள்



எம்.ஜி.ஆருக்கு நடனத்திலும் சண்டையிலும் சம அளவு ஈடுபாடு இருந்ததால் நடனக்காட்சிகளில் வீரவிளையாட்டு நடைகளை இணைத்திருப்பார். பறக்கும் பாவை படத்தில் முத்தமோ, மோகமோ என்ற கனவுப் பாடலில் காஞ்சனாவோடு ஆடும் போது அவர் கையில் “கலர் ரிப்பனைச் சுற்றுவது போலிருக்கும். அது சுருள்வாள் சுற்றுவதாகும். சுருள்வாள் என்பது இருபுறமும் கூர்மையான சுருள் சுருளாக உள்ள பல அடி நீளம் உடைய கத்தி இதைச் சுற்றும் போது தரையில் படாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் வேகமாகவும் தடங்கல் இல்லாமலும் சுற்ற முடியும். இதை லாவகமாக எம்.ஜி.ஆர் அப்பாட்டில் சுற்றுவார். இதுவும் ஒரு நடனம் போலவே தோன்றும்.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாட்டில் சாட்டையை வீசியும் சொடுக்கியும் பாடும்போது சிலம்பாட்ட முறைப்படி அவர் கால்களை அடி வைத்து ஆடுவார். இந்தக் கால்வைப்பை சிலம்பாட்டக்காரர்கள் ‘சவடு’ (காலடிச்சுவடு) வைத்தல் என்பர், பின்னும் முன்னும் அடி வைத்து அவர் கையில் சவுக்கை வீசி ஆடி வருவது இரண்டு கால்களைப் பொருத்தமான இணைப்பாகும்.

நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று’ பாட்டுக் காட்சி முழுக்கவும் சிறுவர்களின் வீரவிளையாட்டுப் பயிற்சிப் பாடலாக அமைந்தது.

பொய்க்கால் குதிரை ஆட்டம்

‘தாயின் மடியில்’ படத்தில் எம்.ஜி.ஆர் ரேஸ் குதிரை ஜாக்கியாக நடித்திருப்பார். அதில் ஒரு மேடைக் காட்சியில் இவரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவார்கள்.

“ராசாத்தி பூத்திருந்தா, ரோசாபோலே காத்திருந்தா
ராசாவும் ஓடிவந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி “

என்ற பாட்டும் நடனமும் அந்தப் படத்தை அக்காலத்தில் ஓடவைத்தது. அந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்காததால் படம் நூறுநாள் ஓடவில்லை. ஆனால், இந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவி நாட்டுப்புறக் கலைஞர்களைப் போலவே முகபாவமும் உடலசைவும் காட்டி நடித்திருப்பார். இதைக்கண்டு ரசிக்க ரசிகர்கள் விரும்பினர். திரையரங்கிற்குச் சென்றனர்.

பங்க்ரா நடனம்



பஞ்சாபியர் அறுவடை முடிந்த பின்பு ஆடும் மகிழ்ச்சியான நடனம் பங்க்ரா நடனம் ஆகும். இந்த நடனத்தைக் குடியிருந்த கோயில் படத்தில் அமைத்தபோது சிறந்த நடனக் கலைஞரான எஸ்.விஜயலட்சுமிக்கு இணையாக தான் ஆடவேண்டும்’ என்ற அக்கறையில் அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். படத்தில் அவரது தோற்றமும் நடன அசைவும் துள்ளலும் எல்.விஜயலட்சுமியை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. அது மிக நீண்ட பாடல் என்பதால் ‘டபுள் சைட்’ ரெக்கார்டு என்பார்கள்.

மேலை நாட்டு நடனம்

பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆர் பட்டிக்காட்டு முருகப்பனாக இருந்து படித்த அழகப்பனாக மாறிய அறிமுகக் காட்சியில் சரோஜாதேவியைக் கவர்வதற்காக ஒரு மேலை நாட்டு நடனக்காட்சி அமைக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் ஆட வேண்டும் என்று இயக்குநர் ராமன்னா கூறியபோது அவர் மிகவும் தயங்கினார். “என் ரசிகர்கள் நான் மேலை நாட்டு நடனம் ஆடுவதை விரும்புவார்களா? என்று கேட்டார்.” நிச்சயம் விரும்புவார்கள். இந்த நடனக் காட்சியைப் பிரமாதமாக எடுப்போம் என்று இயக்குநர் கூறவும் எம்.ஜி.ஆர் ஆட சம்மதித்தார். அந்தப் பாட்டும் நடனமும் ரசிகர்களின் மறக்கமுடியாத பெட்டகக் காட்சியாக அமைந்துவிட்டது.

அன்று வந்ததும் இதே நிலா - சச்சச்சா
இன்று வந்ததும அதே நிலா - சச்சச்சா

என்று இருவரும் பாடிய ஜோடிப் பாட்டும் சச்சச்சா நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

புலியூர் சரோஜா பாராட்டிய “பிரேம்’ டான்ஸ்



டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் காலத்தில் டான்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்தார். பின்பு, கமல் ரஜினி காலத்தில் மாஸ்டர் ஆகிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரின் மேலைநாட்டு நடனத் திறமையைப் பாராட்டி “அன்பே வா” படத்தில் நாடோடி, நாடோடி, போகவேண்டும், ஓடோடி, ஓடோடி” என்ற பாட்டில் எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் இன்றைய ‘பிரேக்’ டான்சை விட சூப்பராக இருக்கும்”, என்றார்.

டான்ஸ் மாஸ்டர்கள்

எம்.ஜி.ஆர் தன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்கள் தூய்மையான பழக்க வழக்கங்களோடு எளிமையான செயற்பாடுகளுடன் தொழில்பக்தி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தன் குழுவினருடன் பம்பாய் போன போது அங்குக் குடித்துவிட்டு வந்த டான்ஸ் மாஸ்டரை டிக்கெட் எடுத்துக் கொடுத்து உடனே சென்னைக்கு அனுப்பிவிட்டார். குடித்து விட்டு வந்து தொழில் செய்வது தொழிலின் மீதான மரியாதையைக் கெடுத்துவிடும் என்று எம்.ஜி.ஆர். நம்பினார்.

ஓர் இளம் டான்ஸ் மாஸ்டர் ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு கேட்க பெரிய ‘ஒசி’ கார் ஒன்றில் வந்தார். எம்.ஜி.ஆர் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் அந்த டான்ஸ்மாஸ்டர் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோவில் போய்ப் பார்த்தார். தன் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பாக நடனக்காட்சிகளை அமைத்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரே அவருக்கு ஒரு பெரிய கார் வாங்கி பரிசளித்தார். அதன்பிறகு அவர் தன் சொந்த பெரிய காரில் வலம் வந்தார். அவர்தான் டான்ஸ் மாஸ்டர் சலீம்.



எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஒரே மாதிரி இரண்டு பாடல் / நடனக் காட்சிகள் அமைக்காமல் வித்தியாசங்களைப் புகுத்தியதால்தான் ரசிகர்கள் விசிலடித்து கை தட்டி அனைத்துக் காட்சிகளையும் ரசித்தனர்.
Courtesy - vikadan.com

Richardsof
9th January 2018, 05:36 PM
எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை!


மாநில அரசில் கிரகங்கள் கால்வைத்த பின் ஹிந்துக்களை ஒடுக்க ஹிந்து சமயத்தை ஹிந்துப் பண்பாட்டை இழிவுபடுத்துவதே ஆட்சி பீடத்தார் தொழிலாகி விட்டது. வாய்த்த தலைமை அப்படி. கஞ்சாத் தோட்டத்தில் ரோஜாமலராக வந்தார் எம்.ஜி.ஆர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் ஹிந்து சமுதாயம் அந்த நல்ல ஹிந்துவை நினைத்துப் பார்க்கிறது.

தமிழக முதல்வராக பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற சிறப்பு எம்.ஜி.ஆர்ருக்கு மட்டுமே உண்டு. 1977 முதல் 1987ஆம் ஆண்டு அவர் மறையும் வரை வேறு யாரும் முதல்வர் பதவியை நெருங்க முடியவில்லை.

எம்.ஜி.ஆர். வெறும் கூத்தாடிதான் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். அவருக்கு படிப்பறிவு கிடையாது, நிர்வாக அனுபவம் துளியும் இல்லை. சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார் என்றெல்லாம் கணைகள் வீசப்பட்டன.

எம்.ஜி.ஆர். மெத்தப்படித்த மேதாவி அல்லர் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால்தான் மக்கள் திலகம் என்ற பெயர் இன்றுவரை அவருக்குப் மட்டுமே பொருத்தமாக உள்ளது. பொருளாதாரம் மிகவும் நுட்பமானது. நிதி சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க நிபுணர்களே தடுமாறுவது உண்டு. ஏனெனில் பொருளாதார ரீதியான விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை யாராலும் துல்லியமாக முன்கூட்டியே அவதானிக்க முடியாது.mgr

பொருளாதார பிரச்சினையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இதை நன்கு உணர்ந்திருந்தார். அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை அவர் கட்டுக்குள் வைத்திருந்தார்.

சிறுவயதில் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அவர் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார். தன்னைப்போல யாரும் எதிர்காலத்தில் பட்டினி கிடக்கக் கூடாது, பசிப்பிணியால் வாடக்கூடாது என்ற உணர்வு அவர் நெஞ்சில் வலுவாக இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. காமராஜர் ஆட்சி காலத்திலேயே மதிய உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற போதிலும் அதை செம்மைப்படுத்தி மெருகேற்றியது எம்.ஜி.ஆர். தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

குழந்தைகள் வயிறார உணவு உண்டால்தான் படிப்பில் அவர்களால் கவனத்தை செலுத்த முடியும் என்பதை கல்வியியல் வல்லுனர்கள் உறுதிபட உரைக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் சேர்ந்த மாணவர்கள் வெவ்வேறு காரணங்களால் இடையிலேயே நின்றுவிடுவது உண்டு. இப்போது இந்த இடைநிற்றல் பெருமளவு குறைந்துள்ளதற்கு சத்துணவும் ஒரு முக்கிய காரணம். இப்போது இத்திட்டம் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

எம்.ஜி.ஆர். திரையில் நடித்தவரே தவிர, பொதுவெளியில் தன்னால் யாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்த காலக்கட்டத்தில் கூட தன்னை நாத்திகன் என்று அவர் ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை.

பிரபல படத் தயாரிப்பாளரும் நடிகருமான சாண்டோ சின்னப்ப தேவர், மருதமலை முருகன் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். பக்தர்களின் வசதிக்காக மருதமலையில் விளக்கு வசதியை சின்னப்ப தேவர் ஏற்பாடு செய்தார். இதை தனது நண்பரான எம்.ஜி.ஆர்.தான் திறந்து வைக்க வேண்டும் என்பதில் சின்னப்பா தேவர் இருந்தார்.

கோயில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமோ அக்கறையோ காட்டக்கூடாது என்று திமுக பிரமுகர்கள் சிலர் எம்ஜிஆருக்கு முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரையிடம் எம்.ஜி.ஆர். இது குறித்து பேசியி பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலம் வாக்கை ஏற்ற தி.மு.க. மறுக்க முடியவில்லை.

எம்ஜிஆரைப் பொறுத்த வரை தான் இறைநம்பிக்கை உடையவர் என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயங்கியது இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை எம்ஜிஆர் வெளிப்படுத்தியுள்ளார்.

கிருபானந்தவாரியார் ஆற்றிய சொற்பொழிவு காரணமாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது கல்வீசும் அளவுக்கு நிலைமை மோசமானது. இது பல்லாயிரக்கணக்கானோருக்கு மன வேதனையை அளித்தது. எம்ஜிஆரும் மன உளைச்சலால் தவித்தார். எம்ஜிஆர் நேரடியாகத் தலையிட்டு மோதலை தணித்தார். இதன்வாயிலாக, பொன்மனச் செம்மல் என்ற மகுடத்துக்கு பொருந்தமானவர் என்பதை அவர் நிரூபித்தார்.

எம்ஜிஆரின் இஷ்ட தெய்வம் கொல்லூரில் வீற்றிருக்கும் மூகாம்பிகை அம்மன். வாய் பேச முடியாத அசுரனை அம்மன் வதம் செய்த இடம்தான் கொல்லூராகும். இதனால்தான் அம்மனுக்கு மூகாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவர் கொல்லூரில் அமர்ந்து தியானம் செய்தார். ஆதிசங்கரர் தியான பீடம் இப்போதும் பக்தர்களை ஈர்த்துவருகிறது.

திரைப்படம் ஒன்று அமோக மதுரையில் எம்ஜிஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. இது சுமார் அரை கிலோ எடை கொண்டது. இந்த தங்க வாளை மூகாம்பிகையம்மன் கோயிலுக்கு எம்ஜிஆர் காணிக்கையாக அளித்தார்.

இப்போதும் இந்த தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கோயிலை அலங்கரிக்கிறது. திமுகவில் சிவாஜி கணேசன் இருந்தபோது அவர் திருப்பதிக்குச் சென்றதை பிரச்சினை ஆக்கினார்கள். இதைப்போல மூகாம்பிகை கோயிலுக்கு எம்ஜிஆர் சென்றதையும் சிலர் பிரச்சினை ஆக்க முற்பட்டார்கள். ஆனால் மூகம்பிகையை நான் என் தாயாகக் கருதுகிறேன். என் தாயையும் மூகம்பிகையையும் என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை என்று எம்ஜிஆர் ஆணித்தரமாக கூறியதையடுத்து, பிரச்சினையை எழுப்பியவர்கள் செல்லாக்காசுகளாகிவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகும் மத பாரபட்சத்தை அண்டவிட்டதில்லை. பெரும்பான்மையினர் என்பதற்காக ஹிந்துக்களை ஒதுக்கி தள்ளவேண்டும் என்றோ, சிறுபான்மையினர் என்பதற்காக முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும் என்றோ எம்ஜிஆர் ஒருபோதும் நினைத்தது இல்லை.

வேலூர் கோட்டையில் உள்ள ஆலயத்தில் மூலவர் இல்லாமல் இருந்தது மிகப் பெரிய குறையாக விளங்கியது. எப்படியாவது ஆலயத்தில் மூலவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்பதில் ஹிந்து அமைப்புகள் முனைப்பு காட்டின. இரவோடு இரவாக ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மூலவரை ஹிந்து அமைப்பைச் சேர்ந்த காரியகர்த்தர்கள் ஸ்தாபித்தனர். இதை ஹிந்து மத துவேஷிகள் ஊதிப் பெரிதாக்க முயன்றனர். ரத்தக்களரியைத் தூண்டிவிட்டனர். ஆனால் இப்பிரச்சினையில் ஹிந்துக்களின் செயல்பாடு நியாயமானதுதான் என்பதை நன்கு உணர்ந்த எம்.ஜி.ஆர்., பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவருக்கு குந்தகம் எதுவும் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என காவல்துறையைப் பணித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ வெறியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. மாவட்டத்தின் பெயரையே கன்னிமேரி என்று மாற்றவேண்டும் என்று எல்லாம் அவர்கள் குரல் எழுப்பினார்கள். மண்டைக்காட்டில் கடலில் நீராடிய ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். இதையடுத்து கலவரம் வெடித்தது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் எம்ஜிஆர் முன்னிலையில் ஹிந்துக்களின் உண்மையான நிலையை தாணுலிங்க நாடார் எடுத்துரைத்தார். கிறிஸ்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டனர். பொய்யான விவரங்களைத் தெரிவித்தனர் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் இதற்கு பிராயச்சித்தம் தேட முடிவு செய்தார்.

மத கலவரத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பதற்காக நீதிபதி வேணுகோபால் தலைமையில் ஆய்வு குழுவை எம்ஜிஆர் அமைத்தார். இக்குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலனை செய்தது. வெவ்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கிடையே குறிப்பிட்ட தொலைவு இடைவெளி இருக்கவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஜெபக்கூடங்கள் என்று தொடங்கி அவற்றை சர்ச்சுகளாக மாற்றும் கலையில் வித்தகம் பெற்றிருந்தார்கள். நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரை இந்த மோசடியை நிர்மூலமாக்கியது.

கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கும் இஸ்லாமிய மசூதிகளுக்கும் அரசு பணத்தை எம்ஜிஆர் அநாவசியமாக வாரி வழங்கியதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகமும் சம்புரோக்ஷணமும் தங்குதடையின்றி நடைபெற அவர் வழிவகை செய்தார். ஹிந்து ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே ஹிந்து ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளவேண்டியது அரசின் தலையாய கடமை.

சர்ச்சுகளையும் மசூதிகளையும் பாதுகாக்கவேண்டிய, பராமரிக்க வேண்டிய பணி அரசைச் சார்ந்தது அல்ல. ஏனெனில் இவற்றுக்கு கோடிக்கணக்கில் சொத்து உண்டு. இந்த வருவாயைக் கொண்டே சர்ச்சுகளையும் மசூதிகளையும் செம்மையான முறையில் நிர்வகிக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் மதப் பாரபட்சமின்மை சார்ந்த உறுதிப்பாடு இன்றியமையாதது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத பாரட்சம்தான் தலைதூக்கியுள்ளது. ‘ஹிந்துக்களை நிந்திப்பவர்கள் முற்போக்கு வாதிகள். ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் பிற்போக்கு வாதிகள்’ என்ற மாயை எம்ஜிஆரிடம் இல்லை. இப்போதைய அரசியல்வாதிகள் பலர் இந்த மாயையின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர். போன்ற ஒரு முதல்வர் அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்களுக்கு வாய்க்கவில்லை.





எம்.ஜி.ஆர் என்ற ஹிந்து…

* பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில், ‘தோமையார் மலை’ என்று அதைப் பெயர்மாற்றம் செய்துவிடும் சர்ச் விஷமத்தை முறியடித்தார்.

* ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற தனது ‘ஆனந்த விகடன்’ தொடரில் ஹிந்துக்கள் போற்றும் பசுவை பாதுகாப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.

* மண்டைக்காட்டில் கிறிஸ்தவ வெறியர்கள் பகவதி அம்மனின் பக்தைகள் கடலில் நீராடப் போனபோது மானபங்கம் செய்ததைக் கேள்விப் பட்டு கொதித்துப் போன எம்.ஜி.ஆர். தமிழனை தமிழ்நாட்டில் தடுப்பதா?” என்று கர்ஜித்தார்.

* சென்னை கதீட்ரல் சாலை பெயர் மாற்றப்பட்டபோது சர்ச் அமைப்புகள் பெரிய ரகளை நடத்தி தடுத்தன. அதை சுட்டிக்காட்டிய எம்.ஜி.ஆர். ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக கண்டனக் குரல் எழுப்ப வேண்டும், மனுக்கள் குவிய வேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வழிவகை சொல்லிக் கொடுத்தார்.

* வேலூர் ஆலயத்தில் ஜலகண்டேஸ்வரர் மீண்டும் எழுந்தருளியதற்கு காரணமானவை ஹிந்து அமைப்புகள். சட்டமன்றத்தில் ஹிந்து விரோத கூச்சல் எழுந்தது. மற்ற மதத்தினருக்கு அமைப்பு இருக்கலாமானால் ஹிந்துக்களுக்கு அமைப்பு இருக்கக் கூடாதா?” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் எழுப்பிய கேள்விக்குப் பின் அடங்கினார்கள்.

COURTESY - NET

orodizli
10th January 2018, 10:46 PM
மக்கள் திலகம் அவர்கள் சம்பந்தமான பதிவுகள் வழங்கும் திரு வினோத் அவர்தம் முயற்சி அபாரம், மற்றும் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு "தர்மம் தலை காக்கும்" டிஜிட்டல் 6 இடங்களில் திரையிட படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...

fidowag
10th January 2018, 11:11 PM
தினத்தந்தி -10/01/2018
http://i66.tinypic.com/2cx8c47.jpg

fidowag
10th January 2018, 11:26 PM
இன்று (10/01/2018) பிற்பகல் 3 மணியளவில் நடிகை லதாவுடன் திரு.சங்கரன் (கவிஞர் கண்ணாதாசனுடன் நெருங்கி பழகியவர் )-நிருபர் பேட்டி எடுத்தார் .
உடன் இருந்தவர்கள் திரு.ஒம்பொடி பிரசாத், திரு.ஆர். லோகநாதன்
http://i67.tinypic.com/oqip1j.jpg

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தன்னை அறிமுகம் செய்த விதம் பற்றியும், அவருடன்
நடித்த அனுபவங்கள், பழகிய விதங்கள், அவருடைய எளிமை, பண்புகள், குணநலன்கள் ,தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் செய்த உதவிகள் , கலை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி 1976ல் சுமார் ரூ.35 லட்சம் வசூல் செய்து
கட்சிக்கு நிதி சேர்த்ததையும் , தனது குடும்ப பாரம்பரியத்தையும் ,தன்னுடைய பெயர், புகழ், பணம், எல்லாவற்றிற்கும் பெரும் பங்காற்றியவர் என்றும் , அவரால்தான் இன்று தனக்கு எந்த ஊர் , நகரம், நாடு, அயல்நாடு சென்றாலும் சிறப்பான வரவேற்பு , மரியாதை, கௌரவம் எல்லாம் கிடைக்கிறது .என்று பெருமையுடன் குறிப்பிட்டார் .
அ.தி.மு.க. கட்சி தலைமை முறைப்படி அழைத்தால் என்னால் முடிந்த அளவு
உதவ தயார் . எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி இன்னும் பல காலம் நீடித்திருக்க வேண்டும் என்பது எனது அவா .என்றும் தெரிவித்தார்
.
அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

fidowag
10th January 2018, 11:29 PM
http://i65.tinypic.com/j6rezd.jpg
நடிகை லதாவுடன், திரு.சங்கரன் (நிருபர் )

fidowag
10th January 2018, 11:31 PM
நடிகை லதாவுடன், திரு.ஆர். லோகநாதன்

http://i68.tinypic.com/aev09x.jpg

திரு.ஒம்பொடி பிரசாத், திரு.சங்கரன், திரு.லோகநாதன் ஆகிய அனைவருக்கும்
பேட்டியின் இறுதியில் தேனீர் ,மற்றும் சாக்லெட்டுகளை வழங்கி மகிழ்வித்தார் .

fidowag
10th January 2018, 11:34 PM
http://i64.tinypic.com/2is76s7.jpg

fidowag
10th January 2018, 11:35 PM
http://i63.tinypic.com/2zjkhvl.jpg

fidowag
10th January 2018, 11:36 PM
http://i66.tinypic.com/2gvojtj.jpg

fidowag
10th January 2018, 11:36 PM
http://i66.tinypic.com/10q9p29.jpg

fidowag
10th January 2018, 11:37 PM
http://i67.tinypic.com/2luqfeu.jpg

fidowag
10th January 2018, 11:38 PM
http://i65.tinypic.com/24edjkg.jpg

fidowag
10th January 2018, 11:38 PM
http://i63.tinypic.com/33xkaxw.jpg

fidowag
10th January 2018, 11:39 PM
http://i68.tinypic.com/6giedc.jpg

fidowag
10th January 2018, 11:42 PM
சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
நண்பர்களின் பார்வைக்கு -10/01/18-மாலை 5 மணி
http://i67.tinypic.com/r9jwoh.jpg
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் திரு.சைதை துரைசாமி

fidowag
10th January 2018, 11:44 PM
http://i65.tinypic.com/35d7okz.jpg

fidowag
10th January 2018, 11:45 PM
http://i64.tinypic.com/1zv936e.jpg

fidowag
10th January 2018, 11:45 PM
http://i64.tinypic.com/f23pcz.jpg

fidowag
10th January 2018, 11:48 PM
திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்
திரு.ராமச்சந்திரன் (திருமதி சுதா விஜயனின் இளைய மகன் ) அருகில் திரு.ஒம்பொடி பிரசாத் .
http://i65.tinypic.com/pwu2s.jpg

fidowag
10th January 2018, 11:49 PM
திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்
திரு.ராமச்சந்திரன் (திருமதி சுதா விஜயனின் இளைய மகன் ) அருகில் திரு.ஒம்பொடி பிரசாத் . திரு.வெங்கடராமன் தியாகு .
http://i64.tinypic.com/2bcntk.jpg

fidowag
10th January 2018, 11:51 PM
திரு.சைதை துரைசாமியுடன் திரு.ஆர். லோகநாதன், திரு.ஒம்பொடி பிரசாத் .
http://i68.tinypic.com/xdxn3r.jpg

fidowag
10th January 2018, 11:52 PM
திரு.சைதை துரைசாமியுடன் திரு.பாண்டியராஜ் திரு.ஆர். லோகநாதன், .
http://i68.tinypic.com/iohhjt.jpg

fidowag
10th January 2018, 11:54 PM
http://i65.tinypic.com/2r57ndt.jpg

fidowag
10th January 2018, 11:55 PM
http://i66.tinypic.com/m7dk4n.jpg

fidowag
10th January 2018, 11:56 PM
http://i65.tinypic.com/5yfcb4.jpg

fidowag
10th January 2018, 11:57 PM
http://i64.tinypic.com/2vwhilh.jpg

fidowag
10th January 2018, 11:58 PM
http://i67.tinypic.com/1z3nubd.jpg

fidowag
11th January 2018, 12:04 AM
உரிமைக்குரல் மாத இதழ் -ஜனவரி 2018
http://i66.tinypic.com/t7es5k.jpg

fidowag
11th January 2018, 12:05 AM
http://i66.tinypic.com/11bnq0p.jpg

fidowag
11th January 2018, 12:06 AM
http://i67.tinypic.com/15chkiw.jpg

fidowag
11th January 2018, 12:08 AM
http://i68.tinypic.com/2e5nont.jpg

fidowag
11th January 2018, 12:09 AM
http://i68.tinypic.com/fomwbn.jpg

fidowag
11th January 2018, 12:11 AM
http://i65.tinypic.com/5yrvxw.jpg

fidowag
11th January 2018, 12:11 AM
http://i68.tinypic.com/rgwdhk.jpg

fidowag
11th January 2018, 12:13 AM
http://i66.tinypic.com/9u24g4.jpg

fidowag
11th January 2018, 12:15 AM
எம்.ஜி.ஆர். அரசியல் பாதை நூல் வெளியீட்டு விழாவிற்கு விஜயம் செய்த திரு.சேர்மக்கனி ( எங்க வீட்டு பிள்ளை -டிஜிட்டல் ) விநியோகஸ்தருடன் திரு.
ஆர். லோகநாதன் (செல்பி புகைப்படம் )
http://i67.tinypic.com/2rcyh35.jpg
தொடரும் ;;;;;;;;;;;;;;;!!!!!!!!

Richardsof
12th January 2018, 06:06 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறுபிறவி கண்ட தினம் இன்று 12.1.1967

51 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட தினம் .
உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மிகவும் அதிர்ச்சியாகவும் கவலையுமாக நிகழ்ந்த தினம் .
தர்மம் தலைகாக்கும் என்பதை எம்ஜிஆர் நிரூபித்து மறுபிறவி எடுத்த தினம் .
தமிழ் திரை உலகிலும் அரசியல் களத்திலும் எம்ஜிஆர் எடுத்த விஸ்வருபம் நாடே வியந்தது .
தொடர்ந்து சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆர் வெற்றி மேல் வெற்றி பெற்றார் .
1967ல் திமுக ஆட்சி அமைந்திட எம்ஜிஆர் காரணமானார் .
1977ல் எம்ஜிஆரே தமிழக முதல்வரானார் .
எம்ஜிஆர் என்ற மாமனிதரின் ஆளுமைகள் பற்றி இன்றளவும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது .

Richardsof
12th January 2018, 06:10 PM
கோயில்களுக்குச் செல்லுவேன்' என்று பகிரங்கமாகக் கூறி உள்ளொன்று வைத்து
>புறமொன்று பேசாமல் செயல்பட்டவர். அதேநேரத்தில், தான் ஏற்றுக்கொண்ட தலைவர்
>பெரியாரின் ஏனைய பல கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பெருமையும் >எம்.ஜி.ஆரைத்தான் சாரும். எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த >பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தானே தவிரத் தாங்கள் பெரியாரின் பாசறையிலிருந்து >வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் அல்லவே.
Courtesy - dinamani

Richardsof
12th January 2018, 06:12 PM
மறைந்தும் மறையாத மாமனிதர்!

கா.இர. குப்புதாசு

தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக எம்.ஜி.ஆர். இருந்து
வருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அவர் மறைந்து 30
ஆண்டுகளுக்குப் பின்னும், தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரை
எல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு
என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.

நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித
நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது
தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாய
சிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், மனித நேயத்துடன் தனது தனிமனித
வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!

எம்.ஜி.ஆரின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும்
அற்புதப் பண்பு எது என்று கேட்டால், தெய்வத்தைக் காண முடியாத மனிதப்
பிறவிகளுக்கு வாழும் தெய்வமாகப் பெற்ற தாயையே சுட்டிக்காட்டி, ஏற்று
வணங்கி, அதன்மூலம் மற்றவர்களையும் தாயை வணங்கிப் போற்ற வைத்தது எனலாம்.

அவரது கடந்தகால நிகழ்வுகளில் உண்மையான தொண்டனாகப் பங்கேற்றது ஒரு சில
நிகழ்ச்சிகளில் மட்டுமே என்றாலும் அந்த நிகழ்வுகள் இன்றுவரை எனது
நெஞ்சில் நீங்காத தாக்கமாகத் தொடர்கிறது.

1972-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட
காலகட்டம். இதனை ஜீரணிக்க முடியாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாள்தோறும்
அவரைச் சந்திக்க சென்னை நோக்கி வந்தனர். அனைவரையும் அவர் அடையாறு சத்யா
ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த தொண்டர்களை
நூறு நூறு பேர்கள் கொண்ட குழுவாக அழைத்து சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்
சொல்லி அனுப்புகின்ற விசித்திர நிகழ்வை தமிழக அரசியல் அப்போதுதான்
பார்த்தது. இப்படி ஒரு தனிமனிதருக்காக அதற்கு முன்னும் சரி, பின்னாலும்
சரி மக்கள் கொதித்தெழுந்து தங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்ததுபோல மனம்
நொந்த சம்பவம் நிகழ்ந்ததில்லை.

அவ்வாறு சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்ட குழுவில் ஒருவனாக நானும் இருந்தேன்.
எங்களிடம் எம்.ஜி.ஆர். பேசும்போது அன்றைய மதுரை மேயரும், திமுகவின்
முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான மதுரை முத்துவைப் பற்றிய பேச்சு
வந்தது. மதுரை முத்து அப்போது திரையிடப்படவிருந்த "உலகம் சுற்றும்
வாலிபன்' படத்தை மதுரை மாநகரில் திரையிட விடமாட்டேன் என்று ஆவேசத்துடன்
கூறி வந்த நேரம் அது.

மதுரை முத்துவை குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பேசும்போது முத்தண்ணன் என்று
குறிப்பிட்டுப் பேசினார். ஆவேசத்துடன் இடைமறித்த நான் "அந்த துரோகியை
அண்ணன் என்று சொல்லாதீர்கள்' என்று பலம்கொண்ட மட்டும் கத்தினேன்.
எம்.ஜி.ஆர். தன் பேச்சை நிறுத்திவிட்டு என்னை நோக்கி, "நீ நம்
கட்சிக்காரனா? அல்லது வேற்றுக் கட்சிக்காரனா?' என்று கோபமாகக் கேட்டார்.
"நான் எந்தக் கட்சியும் கிடையாது. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகன். இதோ
பாருங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற அடையாள அட்டை' என்று
எடுத்துக்காட்டினேன். கோபம் தணிந்த அவர் என்னை அருகில் அழைத்துத் தட்டிக்
கொடுத்தார்.

""தம்பி இன்று முத்தண்ணன் என்னை தாக்கி பேசுகிறார் என்பதற்காக திராவிட
இயக்க வளர்ச்சிக்காக அவர் ஏற்றுக்கொண்ட தியாகத் தழும்புகளை மறந்துவிட
முடியுமா? ஏன் அவரே நாளை நம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து
நம்மோடு வந்து சேரமுடியாது?'' என்று கேட்டார். நானும் என்னைப் போன்று
ஆவேசமடைந்த ரசிகர்களும் அமைதியானோம். அவரது கூற்றின்படியே முத்தண்ணன்
பின்னாளில் எம்.ஜி.ஆரிடம் வந்து இணைந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆரின் பண்பட்ட
அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்க தரிசனத்தையும் எங்களுக்கு
உணர்த்தியது.

செஞ்சி நகரச் செயலாளராக இருந்த என் நண்பர் கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.

முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். நான் ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென
முன்மொழிகிறேன் என்று சொன்னேன்.

எம்.ஜி.ஆர். என்னை இடைமறித்து, ""பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.

""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்.

எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.

என்னைப் போலவே என் தம்பி கண்ணனும் ராகு காலத்தில்
நம்பிக்கையில்லாதவர்தான். ஆனால், அவருக்கு பெண் கொடுக்கும் பெற்றோர்களும்
எங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க
முடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் மனம் சஞ்சலமடைய நானோ, என் தம்பி கண்ணனோ காரணமாக
இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.

தன்னுடைய கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை.

தன்னுடைய இளம் வயதில் தன் தாயார் மற்றவர்கள் வீட்டில் அரிசி புடைக்கும்
கூலி வேலை செய்து, அதற்கு கூலியாக கிடைத்த நொய் அரிசியை கொண்டு தனக்கும்
தன் தமையனாருக்கும் கஞ்சி காய்ச்சி தருவார்கள் என்றும், அந்த
கொடுமையிலும் கொடுமையான இளமையின் வறுமையால்தான் தாமும் தம் தமையனாரும்
கல்வி கற்க இயலாமல் போனது என்பதனையும் பகிரங்கமாக எடுத்துச் சொல்லி இந்த
அவலநிலை வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாது என்று எண்ணத்தோடுதான்
காமராஜ் பொதுமக்கள் பங்களிப்பில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை
அரசின் முழு பங்களிப்பாக மாற்றி சத்துணவுத் திட்டமாக அமலுக்குக் கொண்டு
வருவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதிலிருந்த மனிதநேயமும், சமுதாய
சிந்தனையும் தான் இன்றும் அவரை தமிழ்ச் சமுதாயம் அன்புடனும் பாசத்துடனும்
புரட்சித்தலைவர் என்று நினைவுகூர்வதன் அடிப்படைக் காரணம்.

"நான் பகுத்தறிவு வாதி, ஆதலால் கோயில்களுக்கு போகமாட்டேன்' என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு வந்தவர்கள் மத்தியில், "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
கோயில்களுக்குச் செல்லுவேன்' என்று பகிரங்கமாகக் கூறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமல் செயல்பட்டவர். அதேநேரத்தில், தான் ஏற்றுக்கொண்ட தலைவர்
பெரியாரின் ஏனைய பல கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பெருமையும்
எம்.ஜி.ஆரைத்தான் சாரும். எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக்
கொண்டுவந்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தானே தவிரத் தாங்கள் பெரியாரின்
பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் அல்லவே.

தமிழுக்குப் பல்கலைக் கழகம் எடுத்த பெருமையும், அண்ணாவுக்குப் பிறகு
உலகத் தமிழ் மாநாடு நடத்திய பெருமையும் எம்.ஜி.ஆரைத்தானே சாரும்!

மக்களை நேசித்தவர் - மனிதநேயத்தைப் போற்றியவர் - மக்களால் மறுபிறவி
கண்டவர் என்ற நிலையில் மக்களின் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்
என்கிற பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர். என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க வழியில்லை.

எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய நெருக்கம்
அமைந்துவிட்டது. "எனது இதயக்கனி' என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருப்பது வரை அண்ணா நாமம் வாழும். அண்ணாவின்
நாமம் வாழுமட்டும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும். அதனால்தான் தாம்
மறைந்தும் கூடப் பிரியக்கூடாது என்று சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச்
சமுதாயத்தின் இரண்டு தலைசிறந்த தலைவர்களும் அருகருகே மீளாத் துயிலில்
ஆழ்ந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!

Richardsof
12th January 2018, 06:18 PM
http://i63.tinypic.com/2d0nrsy.jpg
1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார். மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன், ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.

fidowag
13th January 2018, 08:11 AM
12/01/18 முதல் சென்னை அகஸ்தியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான "அடிமைப்பெண் " தினசரி 3 காட்சிகள்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்த நாள் ,மற்றும் பொங்கல் திருநாளை
முன்னிட்டு நடைபெறுகிறது .

அகஸ்தியாவில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு புதிய படம் வெளியாகி வரும் நிலையில் முதல் முறையாக பழைய படம் தினசரி 3 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது .
http://i68.tinypic.com/5pqvqq.jpg

fidowag
13th January 2018, 08:11 AM
http://i64.tinypic.com/14izl6w.jpg

fidowag
13th January 2018, 08:12 AM
http://i64.tinypic.com/2jfahdf.jpg

fidowag
13th January 2018, 08:13 AM
http://i63.tinypic.com/soppvp.jpg

fidowag
13th January 2018, 08:14 AM
http://i65.tinypic.com/jb2slh.jpg

fidowag
13th January 2018, 08:14 AM
http://i66.tinypic.com/1etb8z.jpg

fidowag
13th January 2018, 08:16 AM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாள் /பொங்கல் திருநாளை முன்னிட்டு
சென்னை பாலாஜியில் 12/1/18 முதல் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்த " நாளை நமதே " தினசரி 3 காட்சிகள் திரையீடு .

http://i67.tinypic.com/rcvc7d.jpg

fidowag
13th January 2018, 08:17 AM
சென்னை ஸ்ரீநிவாஸாவில் 12/1/18 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " தினசரி பகல் காட்சி நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/21o9ahe.jpg

fidowag
13th January 2018, 12:46 PM
தினத்தந்தி -12/01/18
http://i65.tinypic.com/2dlrt5e.jpg

fidowag
13th January 2018, 12:48 PM
தினமலர் -12/01/18
http://i65.tinypic.com/6ia51v.jpg

fidowag
13th January 2018, 12:59 PM
தினகரன் -12/01/18
http://i65.tinypic.com/21ccv8x.jpg

fidowag
13th January 2018, 01:11 PM
தின இதழ் -07/01/18
http://i66.tinypic.com/zjfc01.jpg

fidowag
13th January 2018, 01:12 PM
http://i65.tinypic.com/w8srvl.jpg

fidowag
13th January 2018, 01:17 PM
மாலை சுடர் -08/01/18
http://i68.tinypic.com/1qmujl.jpg

fidowag
13th January 2018, 01:19 PM
தின இதழ் 09/01/18
http://i67.tinypic.com/2hpq3gn.jpg

fidowag
13th January 2018, 01:23 PM
மாலை மலர் -06/01/18
http://i63.tinypic.com/30usr5i.jpg

fidowag
13th January 2018, 03:43 PM
மக்கள் குரல் -12/01/18
http://i68.tinypic.com/smx6zd.jpg

fidowag
13th January 2018, 03:46 PM
http://i64.tinypic.com/14cv85i.jpg

fidowag
13th January 2018, 03:47 PM
http://i67.tinypic.com/346xlb8.jpg

fidowag
13th January 2018, 03:48 PM
http://i68.tinypic.com/35bgto8.jpg

fidowag
13th January 2018, 04:00 PM
மதுரை அலங்காரில் 12/01/18 முதல் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாள் /பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
பிரம்மாண்ட வெற்றி சித்திரமான "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள்
திரையிடப்பட்டுள்ளது .

http://i67.tinypic.com/2rfsr4y.jpg

தகவல் உதவி :மதுரை நண்பர் திரு. .எஸ். குமார் .

fidowag
13th January 2018, 04:02 PM
http://i66.tinypic.com/hvuwrm.jpg

fidowag
13th January 2018, 04:03 PM
http://i67.tinypic.com/295tqm9.jpg

fidowag
13th January 2018, 04:04 PM
http://i68.tinypic.com/20g1f90.jpg

fidowag
13th January 2018, 04:05 PM
http://i64.tinypic.com/2copw8z.jpg

fidowag
13th January 2018, 04:07 PM
http://i67.tinypic.com/24b7yc0.jpg

fidowag
13th January 2018, 04:07 PM
http://i65.tinypic.com/k9sy02.jpg

fidowag
13th January 2018, 04:10 PM
http://i64.tinypic.com/51910i.jpg

fidowag
13th January 2018, 04:10 PM
http://i65.tinypic.com/2daevlx.jpg

fidowag
13th January 2018, 04:11 PM
http://i65.tinypic.com/zv6anp.jpg

fidowag
13th January 2018, 04:12 PM
http://i67.tinypic.com/2uz5lcz.jpg

fidowag
13th January 2018, 04:14 PM
http://i65.tinypic.com/1zzng9w.jpg

fidowag
13th January 2018, 04:14 PM
http://i66.tinypic.com/34qtwz7.jpg

fidowag
13th January 2018, 04:19 PM
கோவை ராயலில் கடந்த மாதம் வெளியான "நினைத்ததை முடிப்பவன் " படத்திற்கு
வருகை புரிந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i67.tinypic.com/33ku435.jpg

தகவல் உதவி : நண்பர் திரு.சாமுவேல்

fidowag
13th January 2018, 04:19 PM
http://i64.tinypic.com/65yjnm.jpg

fidowag
13th January 2018, 04:25 PM
http://i64.tinypic.com/5wi9g4.jpg

fidowag
13th January 2018, 04:25 PM
http://i66.tinypic.com/nofyog.jpg

fidowag
13th January 2018, 04:28 PM
சினிக்கூத்து மாதமிருமுறை இதழ்
http://i68.tinypic.com/4hv4ap.jpg
http://i68.tinypic.com/2eztu9w.jpg
http://i68.tinypic.com/2ni48pf.jpg
வெற்றி பெற்ற்றவனாவான்

fidowag
13th January 2018, 04:30 PM
http://i67.tinypic.com/11m703m.jpg

fidowag
13th January 2018, 04:32 PM
http://i66.tinypic.com/14jp16p.jpg

fidowag
13th January 2018, 04:33 PM
http://i65.tinypic.com/2dsina0.jpg

fidowag
13th January 2018, 04:34 PM
http://i64.tinypic.com/2w6a03m.jpg

fidowag
13th January 2018, 04:35 PM
http://i68.tinypic.com/4ptnbt.jpg

fidowag
13th January 2018, 04:36 PM
http://i64.tinypic.com/2mzz31s.jpg

fidowag
13th January 2018, 04:36 PM
http://i66.tinypic.com/9fpo40.jpg

fidowag
13th January 2018, 04:37 PM
http://i64.tinypic.com/xbe978.jpg

Richardsof
13th January 2018, 07:41 PM
மக்கள் திலகத்தின் பொங்கல் படங்களும் பாடல்களும் நிஜ வாழக்கையில் எம்ஜிஆரின் சாதனையாகிவிட்ட சரித்திரம் .

1962
ராணி சம்யுக்தா
இதழ் இரண்டும் பாடட்டும் ...
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும்..........

புதிய காலம் பிறந்ததென்று
போர் முகத்தில் ஏறி நின்று
பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
நீயும் பழம் பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே
இதழ் இரண்டும்........

வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
வெற்றித் துணிவோடு தாய் நாட்டின் புகழ் பாடுவோம்
கண்ணே இதழ் இரண்டும்...........

வீறு கொண்ட வேங்கை போல வெற்றி கொள்ளுவார்
தான் வென்று வந்த சேதி எல்லாம் உனக்கு சொல்வார்
மாறி மாறி முத்தம் இட்டு வார்த்தை உரைப்பார் இன்று
மாலை இட்ட மங்கைப்போல என்னை அணைப்பார்


கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்

1963
பணத்தோட்டம்
பேசுவது கிளியா ...
பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.


பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
(பாடுவது)


கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா -
இல்லைகச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
வில்லேந்தும் காவலன்தானா
வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா
(பேசுவது)


மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா -
உள்ளம்வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஓய்
செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா

1964
வேட்டைக்காரன்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் .......
பாடல் வரிகள் மூலம் மக்கள் மனதில் எம்ஜிஆர் நிறைந்து விட்டார் .

1965
எங்க வீட்டு பிள்ளை

நான் ஆணையிட்டால் .. அது நடந்து விட்டால்
பாடல் வரிகள் .... நிச்சயம் எம்ஜிஆர் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை உணர்வு மக்களுக்கு உண்டானது .

1966

அன்பே வா
புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா
உங்கள் ஊர் எந்த ஊர்
அந்த ஊர் எனது ஊர்
நான் யார் தெரியுமா
எடுத்து சொன்னால் புரியுமா
கண்ணெடுத்து பாருங்கள்
காதெடுத்து கேளூங்கள்
நல்லவருக்கு நல்லவன்
கெட்டவருக்கு கெட்டவன் நான்
ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்
ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்
டெஸ்ட் மாட்ச் வாருங்கள்
நானும் அன்று மாணவன்
நாலும் கற்று தெரிந்தவன்
பறவை போல் பறந்தவன்
கவலைகள் மறந்தவன் நான்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

Richardsof
13th January 2018, 07:44 PM
1972

இந்திய திரைப்பட வரலாற்றிலும் அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய ஆண்டு என்றால் அது மிகையல்ல .
46 ஆண்டுகள் ... தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழும் செல்வாக்கும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பது மூலகாரணமாக ஆண்டு 1972 .

இந்தியாவின் சிறந்தநடிகருக்கான பாரத் - விருது மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ரிக் ஷாக்காரன் படத்தின் மூலம் கிடைத்து நாடெங்கும் பாராட்டு நிகழ்ச்சிகள் நடந்தது . எம்ஜிஆரின் சாதனைகளை ஜீரணிக்க முடியாத தமிழ் திரை உலகில் ஒரு சிலரும் , சில பத்திரிகை யாளர்களும் , சில நடிகர்களின் தீவிர ரசிகர்களும் தங்கள் எதிர்ப்பை வார்த்தைகளாலும் , அநாகரீகமான போக்கினாலும் தங்களை வெளிப்படுத்தி தாங்களே இழிவு படுத்தி கொண்டார்கள் . காலப்போக்கில் தங்களுடைய ஆதங்கத்தை மனதில் அடக்கி கொண்டு நேரம் வரும்போதெல்லாம் வெளிப்படுத்தி தங்களை இன்னமும் வருத்தி கொண்டு வருவதுதான் 1972ன் சிறப்பு

+

1972ல் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்றியதும் முடிந்தது எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை என்று மீண்டும் ஆத்திரத்துடன் அற்ப மகிழ்ச்சியுடன் இருந்தவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது .புரட்சி நடிகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற அவதாரம் எடுத்தார் .


எம்ஜிஆர் திரை உலக வெற்றி
எம்ஜிஆரின் அதிமுக இயக்கம்
பல லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் ஒருமித்த பேராதரவு
மக்களின் ஏகோபித்த ஆதரவு

1972 முடிவில் எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வளர்ச்சி கண்டு துவண்டு போனவர்கள் இன்னமும் அதையே நினைத்து சுழன்று வருவது சரித்திரத்தில் மறக்க முடியாத ஆண்டு 1972 .

Richardsof
13th January 2018, 07:54 PM
நான் சினிமா பார்க்கத் தொடங்கிய காலம் முதல், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகும் படங்களை மட்டும் தவற விட்டதே கிடையாது. அவரது படங்களை, வெளியாகும் முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள், தாம்பரத்தில்தான் முதலில் ரிலீசாகும். அதன்பிறகுதான் சென்னை நகரில் வெளியிடுவார்கள்.

‘இங்கே சிட்டியில் ரிலீசாகாமலா போய்விடும்? அப்போ போய் பாருங்களேன்’ என்பார் அப்பச்சி. ஆனால் எங்களுக்கு எம்.ஜி.ஆரின் படத்தை முதல் நாள் பார்த்தால்தான், படம் பார்த்த திருப்தி கிடைக்கும். ‘நாடோடி மன்னன்’ படம் வெளியானபோது, நானும், எனது சகோதரர்கள் முருகன், குமரன் ஆகியோரும், தாம்பரம் எம்.ஜி.ஆர். தியேட்டரில்போய், முதல் நாளே படம் பார்த்த திரில் அனுபவம் இன்னும் நினைவில் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடும் பாவனைக்கு ரசிகன் நான். சண்டை போடும்போது ஒரு பறவையைப் பிடிப்பதுபோல, லாவகமாக கத்தியைப் பிடிக்க வேண்டும் என்பார்கள். மிகவும் லேசாகப் பிடித்தால் பறவை தப்பிவிடும். அதே நேரம் அழுத்திப் பிடித்துவிட்டால் இறந்து விடும். அதுபோலத்தான் கத்தியும். ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தந்து பிடித்தால்தான், கத்தியை அழகாகச் சுழற்றி சண்டை போட முடியும். அந்த லாவகம் எம்.ஜி. ஆருக்கு கை வந்த கலை.

இப்படிச் சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆரை மிகவும் பிடித்துப் போனதாலோ.. என்னவோ, அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது.

நான் சொன்னதன் பேரில் ஏ.சி.திருலோகசந்தர், எம்.ஜி.ஆருக்காக ஒரு கதையைக் கூட தயார் செய்து விட்டார். அப்போது மிகவும் பிரபலமாக ஓடிய ‘கம் செப்டம்பர்’ என்ற ஆங்கிலப் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் கதையை திருலோகசந்தர் எழுதியிருந்தார். இவ்வளவும் முடிந்த பிறகும் கூட, எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கப் போகிறோம் என்று அப்பச்சியிடம் சொல்ல எங்களுக்கு தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது.

ஏனென்றால் எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஹீரோவுக்கு ஏற்றபடி கதை தயார் செய்யும் வழக்கம் கிடையாது. ஒரு கதையை தேர்வு செய்து, அதற்கு நன்றாக திரைக்கதை அமைத்து முடித்த பிறகுதான் ஹீரோவைப் பற்றிய பேச்சே வரும். ஆனால் திருலோகசந்தரோ, எம்.ஜி.ஆருக்காகவே அந்தக் கதையை எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்காக கதை தயார் செய்திருக்கிறோம் என்று சொன்னால் அப்பச்சி ஒப்புக் கொள்ள மாட்டார். இது தெரிந்தும் அவரிடம் போய் சொல்லி எதற்காக வீணாக திட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு.

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆகையால் எங்களது வினியோகஸ்தர்கள் அனைவரும் ‘எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுங்க’ என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். என் நண்பர் எஸ்.ஏ.அசோகனும் கூட, ‘நீங்க எம்.ஜி.ஆரைக் கேட்டால் உடனே ஒப்புக்கொள்வார். அவருக்கும் உங்க கம்பெனியில நடிக்க வேண்டும்னு ஆசை இருக்கு’ என்று வற்புறுத்தினார்.

எனவே ‘அப்பச்சியிடம் போய் கேட்டு விடலாம்’ என்று, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போனேன். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே சாதாரணமாக இந்த வி*ஷயத்தைக் காதில் போட்டேன்.

அதைக் கேட்டவர், ‘ஏம்பா.. ஏன் இதை முன்னாடியே சொல்லலே?’ என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி.

அப்பச்சியின் ஒப்புதல் கிடைத்து விட்டது. அடுத்து எம்.ஜி.ஆர். ஒப்புக்கொள்ள வேண்டுமே.

நானும், என் சகோதரர்களும் ராமாவரம் தோட்டத்திற்குப் போனோம். வி*ஷயத்தைச் சொன்னதும், ‘அதுக்கென்ன.. பண்ணிடுவோம்’ என்று ஒப்புக்கொண்டார் எம்.ஜி.ஆர். படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோதே, 3 லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படம், 1965–ம் ஆண்டு ஜனவரியில் வெளியானது. நாங்கள் எடுக்கப்போகும் படத்தை 1966–ம் ஆண்டு ஜனவரியில் பொங்கல் அன்று வெளியிட ஆசைப்பட்டோம். அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்டதற்கு, ‘அது முடியாதே. ஏன்னா வீரப்பாவுக்கு, ‘நான் ஆணையிட்டால்’ படம் ஒப்புக் கொண்டிருக்கிறேன். அவர் படத்துக்கு பிறகுதான் உங்க படம் ரிலீசாக முடியும்’ என்றார். (எம்.ஜி.ஆர். வீரப்பா என்று குறிப்பிட்டது ஆர்.எம்.வீரப்பனை. அவரை எப்போதும் வீரப்பா என்றுதான் எம்.ஜி.ஆர். அழைப்பார்)

நான் விடுவதாக இல்லை. ‘நாங்க இப்போதான் உங்களை வைத்து முதன் முதலாக படம் எடுக்கிறோம். அது பொங்கலுக்கு வந்தாதான் நல்லாயிருக்கும்’ என்று சற்று பிடிவாதம் பிடித்தேன்.

சற்று நேரம் யோசித்தவர், ‘நான் வீரப்பாவைக் கேட்டுப் பார்க்கிறேன்’ என்று கூறி எங்களை அனுப்பிவைத்தார்.

நாங்கள் எங்களுடைய அலுவலகத்திற்கு திரும்பிவிட்டோம். நாங்கள் வந்த சற்று நேரத்தில் அலுவலகத்திற்கு ஆர்.எம்.வீரப்பன் நேரில் வந்து என்னைச் சந்தித்தார்.

‘சின்னவரைப் பார்த்தீங்க போலிருக்கு’ என்றார். (தமிழ்த் திரையுலகில் பெரியவர் என்றால் எம்.ஜி.சக்கரபாணி; சின்னவர் என்றால் எம்.ஜி.ஆர்.)

நான் ‘ஆமாம்’ என்றேன்.

‘நீங்க சந்தித்துப் பேசியதைப் பற்றிச் சொன்னார். என்னை விட்டுக் கொடுக்கும்படி கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அடுத்த பொங்கலுக்கு உங்க படம்தான் ரிலீஸ்’ என்றார்.

எனக்கு மகிழ்ச்சி. அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

‘அப்புறம்... சின்னவர் உங்கக்கிட்ட இன்னொரு வி*ஷயத்தைச் சொல்லச் சொன்னார்’ என்றார் ஆர்.எம்.வீரப்பன்.

‘சொல்லுங்க..’ என்றேன்.

‘மூணு லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டாராமே.. அதை மூணேகால் லட்சமா தந்துடச் சொன்னார். அடுத்த பொங்கலுக்கு படம் வர்ற மாதிரி முடிச்சுக் கொடுத்திரத் தயாரா இருக்கார்’ என்றார்.

அப்பச்சி கூட ‘என்னப்பா இது.. இந்த அட்ஜெஸ்ட்மென்டுக்குப் போய் இருபத்தையாயிரம் ரூபாய் அதிகமாக கேக்கிறாரே’ என்று சற்று வருத்தப்பட்டார். நான் அவரை சமாதானம் செய்தேன்.

‘அன்பே வா’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு மூணேகால் லட்சம் ரூபாய் சம்பளம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஏ.சி.திருலோகசந்தர் சொன்ன கதை எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போய்விட்டது. படப்பிடிப்பு வெகு வேகமாக வளர்ந்தது. நாங்கள் எடுத்த முதல் வண்ணப்படம் ‘அன்பே வா’. 14.1.1966 அன்று வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படம் 23 வாரங்கள் ஓடிய பிறகுதான், நாங்கள் நூறாவது நாள் விழாவையே கொண்டாடினோம்.

அதில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘இந்தப் படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க இயக்குனர்தான் காரணம். என்னைப் பொறுத்தவரை ‘அன்பே வா’, என் படங்களிலேயே ஒரு வித்தியாசமான படம். எப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும், அந்த வித்தியாசம் தெரியும்’ என்றார்.

உண்மையும் அதுதான். இத்தனை வருடங்கள் கழித்து ‘அன்பே வா’ படத்தை, இப்போது பார்த்தாலும் எம்.ஜி.ஆர். படங்களிலேயே அது வித்தியாசமாக இருப்பதை உணரலாம்.

அடுத்த வாரம்: ‘அன்பே வா’ படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள்.


‘இனி என்னை பார்க்க வராதீர்கள்’

சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரை, எனக்கு மிகவும் பிடிக்கும். ஏவி.எம்.மில் அவரது படத்தின் ஷூட்டிங் எப்போது நடைபெற்றாலும், தவறாமல் என் அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போவார். அதே போல நானும் அவர் படத்தின் ஷூட்டிங் வேறு இடங்களில் நடைபெறும்போது, குறிப்பாக எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்றால், அந்த படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று வருவேன். படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் கொஞ்ச நேரம் பேசி அரட்டை அடித்து விட்டு வீடு திரும்புவேன். இது எனக்கு ரொம்ப நாள் பழக்கமாக இருந்தது.

எம்.ஜி.ஆர். எங்கள் நிறுவனத்துக்காக ‘அன்பே வா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு ஒரு நாள், தேவர் பட ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆரை வழக்கம் போலவே போய் சந்தித்தேன்.

அப்போது அவர் என்னிடம், ‘உங்களிடம் ஒரு வேண்டுகோள். இனிமேல் நான், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது நீங்கள் என்னை வந்து பார்க்க வேண்டாம்’ என்றார்.

நான் ‘எதற்காக அப்படிச் சொல்கிறார்?’ என்பது புரியாமல், குழப்பத்துடனேயே அவர் முகத்தைப் பார்த்தேன்.

எம்.ஜி.ஆர். தொடர்ந்தார். ‘நமது நட்பு பற்றியோ, நான் உங்கள் படத்துக்கு ஒழுங்கா கால்ஷீட் தேதிகள் கொடுத்திருப்பது பற்றியோ யாரும் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் அடிக்கடி நான் நடிக்கும் வேறு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து என்னைப் பார்த்தால், ‘பாரு... எம்.ஜி.ஆர்., ஏவி.எம். நிறுவனத்துக்கே சரியாக தேதி தரவில்லை போலிருக்கு.. சரவணனை இப்படி அலைய விடறாரே..’ என்று பேசக்கூடும். அதுக்கு நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரணும்?. உங்களுக்கு என்னைப் பார்த்து பேசணும்னு இருந்தா, தோட்டத்துக்கு வாங்க. எப்ப வேணும்னாலும் வாங்க. அரட்டை அடிப்போம். இல்லையா... போன் பண்ணுங்க, நான் உங்க இடத்துக்கு வர்றேன்’ என்றார்.

நான் அசந்து போய்விட்டேன். அவரது கோணம், எனக்குத் தோன்றவே இல்லை. அந்தக் கோணம், எம்.ஜி.ஆரின் பிம்பத்தை எனக்குள் மேலும் உயரச் செய்தது.

Avm saravanan

fidowag
13th January 2018, 09:33 PM
மக்கள் குரல் -13/01/18
http://i64.tinypic.com/2bsjnr.jpg

fidowag
13th January 2018, 09:34 PM
தின செய்தி -13/01/18
http://i63.tinypic.com/x0tes5.jpg

fidowag
13th January 2018, 09:35 PM
http://i66.tinypic.com/sqgnev.jpg

fidowag
13th January 2018, 09:37 PM
மாலைமுரசு பொங்கல் மலர் -13/01/18
http://i68.tinypic.com/14uexvq.jpg

fidowag
13th January 2018, 09:38 PM
கல்கி வார இதழ் 21/01/18
http://i67.tinypic.com/258ciok.jpg
http://i66.tinypic.com/2ykz9k1.jpg

fidowag
13th January 2018, 09:45 PM
மாட்டுப் பொங்கல் தினத்தன்று (15/01/18) சென்னை தி. நகரில் நடைபெற உள்ள
இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i63.tinypic.com/2qcye.jpg

fidowag
13th January 2018, 10:42 PM
புதிய தலைமுறை வார இதழ் -11/01/18
http://i68.tinypic.com/n2ftky.jpg
http://i63.tinypic.com/34fjsdt.jpg
http://i67.tinypic.com/2nal9ft.jpg
http://i67.tinypic.com/xdh161.jpg
http://i66.tinypic.com/fy0ebs.jpg

fidowag
13th January 2018, 10:45 PM
http://i64.tinypic.com/14y8ym8.jpg
http://i64.tinypic.com/vd05kz.jpg

fidowag
13th January 2018, 10:47 PM
புதிய தலைமுறை வார இதழ் - 18/1/18
http://i66.tinypic.com/34ns9ec.jpg
http://i68.tinypic.com/2yy2hrp.jpg
http://i63.tinypic.com/2ecgidx.jpg

fidowag
13th January 2018, 10:50 PM
http://i64.tinypic.com/1zz16l5.jpg

தகவல் உதவி : நண்பர் திரு.சாமுவேல் , சத்தியமங்கலம்

fidowag
13th January 2018, 10:55 PM
http://i68.tinypic.com/20hu5as.jpg

fidowag
13th January 2018, 10:55 PM
http://i68.tinypic.com/28ck8dh.jpg

fidowag
13th January 2018, 10:58 PM
http://i67.tinypic.com/2qncidd.jpg

fidowag
13th January 2018, 11:02 PM
பழனி சந்தானகிருஷ்ணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "ராமன் தேடிய சீதை " 12/01/18 முதல் தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .

http://i63.tinypic.com/1iemwi.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
13th January 2018, 11:07 PM
கோவை ராயலில் 12/01/18 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்னக ஜேம்ஸபாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"ரகசிய போலீஸ் 115" தினசரி 4 காட்சிகள் திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது .
http://i66.tinypic.com/9i4tqp.png


தகவல் உதவி : நண்பர் திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

fidowag
13th January 2018, 11:10 PM
கோவை சண்முகாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் "
12/01/18 முதல் வெற்றி நடை போடுகிறது .
http://i64.tinypic.com/2hns8rl.jpg

தகவல் உதவி : நண்பர் திரு. சத்தியமங்கலம்

fidowag
13th January 2018, 11:12 PM
http://i63.tinypic.com/16lgqqp.jpg

fidowag
13th January 2018, 11:13 PM
http://i64.tinypic.com/34dizhs.jpg

fidowag
13th January 2018, 11:13 PM
http://i67.tinypic.com/fkta8w.jpg

fidowag
13th January 2018, 11:14 PM
http://i63.tinypic.com/2mqjhfq.jpg

fidowag
13th January 2018, 11:15 PM
http://i65.tinypic.com/308v7tx.jpg

fidowag
13th January 2018, 11:15 PM
http://i68.tinypic.com/1zf4guv.jpg

fidowag
13th January 2018, 11:16 PM
http://i67.tinypic.com/rcjzit.jpg

fidowag
13th January 2018, 11:17 PM
http://i68.tinypic.com/332xtmh.jpg

fidowag
13th January 2018, 11:18 PM
http://i64.tinypic.com/2hwkw2p.jpg

fidowag
13th January 2018, 11:18 PM
http://i64.tinypic.com/ephblw.jpg

fidowag
13th January 2018, 11:20 PM
http://i65.tinypic.com/vookt5.jpg

fidowag
13th January 2018, 11:21 PM
http://i68.tinypic.com/23hx160.jpg

fidowag
13th January 2018, 11:22 PM
http://i64.tinypic.com/2r7ak40.jpg

fidowag
13th January 2018, 11:23 PM
http://i64.tinypic.com/65q0eh.jpg

fidowag
13th January 2018, 11:24 PM
http://i67.tinypic.com/2n6yo78.jpg

oygateedat
14th January 2018, 09:42 AM
https://s10.postimg.org/cfqnrexmx/1515869517568.jpg (https://postimg.org/image/s17zbd9l1/)

Richardsof
14th January 2018, 09:59 AM
மய்யம் திரியின் நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் இனிய நல் பொங்கல் வாழ்த்துக்கள் .

Richardsof
14th January 2018, 06:33 PM
மக்கள் திலகத்தின் 101 வது பிறந்த நாளில் 17.1.2018 அன்று மாலை சென்னை நகரில் இரண்டு விழாக்கள் நடை பெற உள்ளது .

1. ராமாவரம் தோட்டத்தில் மக்கள் திலகத்துடன் பணியாற்றியவர்களுக்கு எம்ஜிஆர் விருது வழங்கும் விழாவில் பல திரைப்பட நடிக நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

2. ஐசரி கணேஷ் அவர்களின் தயாரிப்பில் மக்கள் திலகத்தின் ''கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு '' -அனிமேஷன் படமாக தயாரிக்க உள்ளதாகவும் சத்யா ஸ்டுடியோவில் படத்திற்கான பூஜை துவங்க உள்ளதாகவும் விளம்பரம் வந்துள்ளது .

Richardsof
14th January 2018, 07:13 PM
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது//

எப்படி பட்ட உயர்ந்த பண்பு உண்மையிலேயே இந்த சமூகத்திற்கு நீங்கள் ஒரு வாத்தியார் தான் அய்யா இன்றைய காலகட்டத்தில் இரட்டை அர்த்த வசனங்களும்,பீப் பாடல் எழுதிப்பாடும் பாடக புலவர்கள் செய்யும் அளப்பரைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

உங்களுக்கு இருந்த பொறுப்புணர்வும்,சமூக அக்கறையும்,இவர்களுக்கு இல்லாததின் விளைவே இந்த சமூக சீரழிவுக்கு காரணம்.என்ன செய்வது தாங்கள் இல்லாத தமிழ் சினிமா சீரழிவை சந்தித்தே தீரும்.
நாம பாடுற பாட்டும்,ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும் நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும் .

இருந்தாலும்,மறைந்தாலும்,
பேர்சொல்ல வேண்டும்.
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

வாழ்க என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ் – நன்றி.

அன்புடன்
ஸ்ரீகாந்த்.ப
courtesy - net

Richardsof
14th January 2018, 07:15 PM
இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!



திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் பரந்த அறிவு கிடைக்கும் என்ற காரணம் காட்டி மாநிலக் கல்லூரியில் சேர்த்துவிட்டார் என் சகோதரி (தூயநெஞ்சக் கல்லூரியிலேயே இருந்திருக்கலாம். ஏதோ தெரிந்ததை வைத்து நிம்மதியாக வாழ்க்கையைக் கழித்திருக்கலாம்..).

வேண்டா வெறுப்போடு சென்னை வந்தாலும், மிகுந்த விருப்போடு நான் முதலில் பார்த்த இடங்கள் ராமாவரம் தோட்டம்… அடுத்து புரட்சித் தலைவரின் ஆற்காடு இல்லம். அப்போது அவர் முதல்வர். அவரைப் பார்க்க எங்கள் ஊர் எம்எல்ஏ அன்பழகனுடன் ராமாவரம் தோட்டத்துக்குப் போயிருந்தோம். சூரிய தரிசனம் என்பதற்கு நிகரான தரிசனம் அது!

அவரை ஒரு அரசியல் தலைவர் என்று சொல்வது மன்னிக்க முடியாதது. அரசியல் தலைவருக்கான வரையறைகள் அனைத்தையும் தாண்டிய அவதார புருஷன்தான். என் வாழ்நாளில் நான் பார்த்த ஒப்பில்லாத மனிதர். அந்த சந்திப்பு, ராமாவரம் தோட்டம், பின்னொரு நாளில் அவரை கோட்டையில் சந்தித்தது பற்றி பின்னொரு நாளில் எழுதுகிறேன்.

எம்ஜிஆர் மறைந்த சில மாதங்கள் கழித்து, நினைவில்லமாக மாறிவிட்ட ஆற்காடு இல்லத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணீருடன் சுற்றிப் பார்த்த ஒரு மழை நாள் இன்னும் மனதில் இருக்கிறது. இல்லத்தின் காவலர் முத்து அடிக்கடி சொல்வது, ‘கடவுள் இருந்தார், எம்ஜிஆர் உருவில்’!

அரசியல், சினிமா, சமூக மதிப்பீடுகள் என அனைத்திலும் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய இடம் எம்ஜிஆருக்கு உண்டு. வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு, நூறு சதவீதம் உயிர் கொடுத்த பெருந்தகை இந்த புரட்சித் தலைவர்!

தனிப்பட்ட மாச்சரியங்கள், அரசியல் மாறுபாடுகளால் அவர் பற்றி பதிவு செய்யப்பட்ட விமர்சனங்களை நான் இப்போதும் பொருட்படுத்துவதில்லை.

பத்திரிகையாளனான பிறகு, கிட்டத்தட்ட இருபது முறை நான் பார்த்தது அமரர் எம்ஜிஆர் இல்லத்தைத்தான். அவரது ஒவ்வொரு நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் என்னையும் அறியாமல் என் கால்கள் தேடிச் செல்வது அவர் சமாதியை அல்ல… இந்த ஆற்காடு இல்லத்தைத்தான்.. அந்த வீட்டை முழுசாய் பார்த்து முடித்து வெளியில் வரும்போதும், அத்தனை தன்னம்பிக்கை!

சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்கள். தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் இடது பக்கமாக ஆற்காடு சாலையில் தலைவரின் இல்லம்.

தமிழ் சினிமாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமை வாழ்ந்த இல்லம் இது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாராலும் நம்ப முடியாத எளிமையான இல்லம்.

1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தாலும், அதற்கு முன்பிருந்தே எம்ஜிஆர் ரசிகர்கள் திரளாக வந்து தரிசித்து சென்ற இல்லம் இது. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த பல முடிவுகள் பிறந்த இடமும் இதுதான்.

எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இல்லத்துக்கு வந்து கண்ணீர் மல்க அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதைப் பார்க்க முடிகிறது.

இனி இல்லத்தைச் சுற்றி வருவோம்…

நினைவு இல்லத்தின் தரை தளப் பகுதியில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வைக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா கேடயமும் நினைவுப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள். கீழ் தளத்தின் மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே மைக்குகள், செயற்கைக் கோள் ரேடியோ வசதி. இப்போதும் நல்ல கண்டிஷனுடன் இருக்கும் கார் இது என்றார்கள் பாதுகாவலர்கள். இது மக்கள் திலகத்தின் சொந்தக் கார். கடைசி வரை அவர் அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தவில்லை!


முதல் தளத்தில் எம்ஜிஆர் பெற்ற பரிசுகள், டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள், கூலர்ஸ், அந்த பிரத்யேக ஷூ என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் பெருமளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தலைவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடலைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது.


பெருந்தலைவரைப் போலவே இந்த புரட்சித் தலைவரும் ஒரு படிக்காத மேதைதான். அவரது நூலகம் இன்னொரு ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஐயாயிரம் நூல்கள்… பெரும்பாலும் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில நூல்கள் இடம்பெற்ற அந்த நூலகம், எம்ஜிஆரின் அறிவுப் பசிக்கு சின்னமாக நிற்கிறது.

எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அந்த சிறிய அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது தொப்பி, கண்ணாடிகள், பேனாக்கள்.



அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வந்தால், அங்குள்ள அறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக – சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் தமிழ் சினிமாவில் அவர்தான் ராஜாதி ராஜா. பெரும்பான்மையான படங்கள் நூறு நாட்கள் அல்லது வெள்ளி விழா அல்லது அதற்கும் மேல் நிறைந்த மக்கள் திரள், குறையாத வசூலுடன் ஓடியவை.

வெளியில் வந்தால், புரட்சித் தலைவர் பற்றிய புத்தகக்கள், சிடிக்கள், கேசட்டுகள், டிவிடிக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் அவரது மணிக்குரலில் வெளியான பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள், டிவிடிக்களுக்கு அத்தனை மவுசு… இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!

குறிப்பு: சென்னையில் என் மனம் லயித்த இடங்களைப் பற்றி ‘மெட்ராஸ் தினங்கள்’ எனும் தலைப்பில் தொடர்ச்சியாக எழுத ஒரு விருப்பம். முடிந்த வரை பெரிய இடை வெளி விடாமல் எழுத முயற்சிக்கிறேன். இஷ்ட தெய்வத்தை வணங்கி முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற வழக்கை நானும் மீற விரும்பவில்லை. அமரர் எம்ஜிஆரை வணங்கி முதல் பகுதியை எழுதியுள்ளேன்!!

–வினோ
net

Richardsof
14th January 2018, 07:19 PM
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஓஹோவென்று கொண்டாட வேண்டும் என அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் ரசிகர்களும் பெரிய அளவில் திட்டமிட்ட விழா இது. ஆனால் ஜெயலலிதாவின் மரணம், அதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்களில், பெரிதாகக் கண்டு கொள்ளப்படாத விழாவாக மாறிப் போனது.

பிரேக்கிங் செய்திகளே ஊடகத்தை முற்றாக ஆக்கிரமித்ததில், எம்ஜிஆர் நூற்றாண்டு செய்திகள், கட்டுரைகளைப் பார்க்க முடியவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க இதோ சில கட்டுரைகள்...



தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.

* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.

* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.

* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.

* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.

* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.

* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.

* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.

* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.

* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.

எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.

எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.

எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.

எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.

எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.

எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.

எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.

எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.

எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).

எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.

எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.

அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.

எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.

எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.

எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.

எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.

எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.

எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.

'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.

Richardsof
14th January 2018, 07:25 PM
இதயங்கனிந்த எம்.ஜி.ஆர். -இரா.செழியன்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வேதனைகளும் சோதனைகளும், அவற்றை மீறி அவர் அடைந்த வெற்றிகளும், காட்டிய வற்றாத வள்ளல் தன்மையும் பற்றிக் குறிப்பிட அவருடைய வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் நினைவு கூர்கிறேன்.

எம்ஜிஆரை நான் நேரடியாகச் சந்தித்தது 1953 ஆகஸ்டு மாதத்தில். அப்பொழுது தி.மு.கழகம் மும்முனைப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. மூன்று வகையான போராட்டங்கள் ஜூலை 14 முதல் நடைபெறுமென தி.மு.கழகச் செயற்குழு ஜூலை 13 முடிவெடுத்தது.

(1) அப்பொழுதையக் காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தியக் "குலக் கல்வி' திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் இல்லத்தின்முன் அறப்போர்.

(2) டால்மியாபுரம் என்பதைக் கல்லக்குடி என்று பெயர் மாற்றிடப் போராட்டம்.

(3) தமிழ்நாட்டில் கழகம் எடுத்த போராட்டங்களை "நான்சென்ஸ்' - முட்டாள்தனமானது என்று பிரதமர் நேரு கூறியதைக் கண்டித்து ரயில் நிறுத்தப் போராட்டம் ஆகியவையே அந்த மும்முனைப் போராட்டம்.

கழகச் செயற்குழு 1953 ஜூலை 13 கூடி இந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாகவே போராட்ட காலத்தில் முக்கியமானவர்களுக்கு பொறுப்புகள் பிரித்துத் தரப்பட்டன. வட சென்னைச் சூரியநாராயணச் செட்டித்தெருவில் "அறிவாலயம்' இடத்திலிருந்து வெளிவந்த கழக "நம் நாடு' நாளேட்டை நடத்திடும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. ஆயினும் செயற்குழு கூடிய ஜூலை 13 இரவே அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், மதியழகன், என்.வி. நடராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

சென்னை, டால்மியாபுரம் இவைகளை மையமாகக் கொண்ட போராட்டங்கள் மீது போலீஸாரின் கடுமையான அடக்குமுறை தாண்டவமாடியது. அத்துடன், தமிழ்நாடெங்கும் ஆங்காங்கு ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தோழர்கள் தடியடி தர்பாருக்கு ஆளான செய்திகள் வந்தபடி இருந்தன. இரவு பகலாக "நம் நாடு' அச்சகத்திலேயே நான் தங்கிவிட்டேன், வரும் விவரங்களுக்குப் பதில் தரவும், செய்திகளை வரிசைப்படுத்தி வெளியிடவும். சென்னை மத்திய சிறைச்சாலையில் அண்ணாவிடம் நாள்தோறும் சென்று விவரங்களைச் சொல்லி, மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனை பெறுவதற்கே எனக்கு நேரம் சரியாக இருந்தது.

ஒரு நாள் காலை 11 மணி அளவில் எம்.ஜி.ஆர். கீழே வந்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். தமிழ்ப் படவுலகில் அவர் வேகமாகத் தலையெடுத்துவரும் காலம். அவருக்கு முன்னதாக நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி ஆகியோர் கழகத்தில் தீவிரப் பங்கு வகித்தனர். ஆனால் அவர்கள் யாரும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அண்ணா கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அதற்குக் காரணம், நடிகர்களுக்குப் பலவகைகளில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் பொறுப்பும் இருக்கும். போராட்டத்தில் இறங்கினால் அவை பாதிக்கப்படும்.

ஆயினும் எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரி குமாரி' என்ற திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். அந்தப் படம் 1950-இல் வெற்றிகரமாக ஓடியது. அது முதல் கழகத்துடன் எம்.ஜி.ஆருடைய தொடர்பு ஆரம்பித்தது எனலாம். அதற்கு முன்பு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடுடையவராக இருந்த எம்.ஜி.ஆர். அண்ணாவின் பேச்சிலும் எழுத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டு 1952-இல் கழக உறுப்பினராகவும் ஆனார். திரையுலகில் மிகவும் சிறப்பான எதிர்காலம் அவருக்கு இருப்பதை அண்ணா உணர்ந்துகொண்டார்.

எம்.ஜி.ஆரும் அண்ணாவிடம் தனிப்பட்ட மரியாதையுடன். கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், கழகத்தின் தீர்மானங்கள், கோட்பாடுகள் எல்லாவற்றிலும் மிகவும் உறுதியான ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

"நம் நாடு' அலுவலகத்தில் கீழ்ப்பகுதியில் அச்சடிக்கும் வேலை நடைபெற்றது. மேல் தளத்தில் ஒரு நீண்ட அறையும், கீற்றுக் கொட்டகையும் இருந்தன. பெரும்பாலும், எழுதும் வேலைகள் மேல் தள அறையில் நடைபெறும். எம்ஜிஆர் வந்ததும் என்னருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, "மத்திய சிறையில் இருக்கும் அண்ணாவை நான் பார்க்கலாமா? அண்ணாவை ஒரு வாரத்துக்கு முன்பு பார்த்தபொழுது பேசிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது அவர், ஏதாவது முக்கியமானதாக இருந்தால் - அநேகமாக நாங்கள் சிறையில் இருந்தாலும் - செழியன் வெளியில்தான் இருப்பார். அவரைக் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அதனால்தான் உங்களிடம் வந்தேன்' என்றார்.

"சிறையிலிருக்கும் அண்ணாவைப் பார்க்கச் செல்வது சற்று சிக்கலான பிரச்னை; அண்ணா குடும்பத்தினரும் நெருங்கிய கழகத்தினரும் பார்ப்பதற்கே மிகவும் நெருக்கடி இருக்கும். உடனடியாக என்னால் அதை நிர்ணயிக்க முடியாது. அண்ணாவுடன் இதுபற்றிப் பேசிவிட்டு உங்களிடம் தெரிவிக்கிறேன். ஆனாலும் நீங்கள் மீண்டும் இங்கு வரவேண்டாம். அண்ணாவின் பதிலை நான் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்' என்றேன்.

என் மனதில் முதலில் உண்டான தயக்கம், கழகப் போராட்டத்தில் எம்ஜிஆரும் பங்கு பெறுவதாகப் போலீஸார் நினைத்துவிடக்கூடாது என்பதுதான். சிறிது நேரமே அவர் பேசிக்கொண்டிருந்தாலும், அவரிடம் ஒருவகைப் பெருந்தன்மையும் பொறுமையும் இருந்தன. எம்ஜிஆர் வந்ததை இரண்டு நாள்களில் அண்ணாவிடம் தெரிவித்துவிட்டேன். அண்ணா, "நீ நினைப்பதுதான் சரியானது; போலீஸ் நடவடிக்கைகள் நம்மீது பாய்வதை விட அவர்மீதும் கடுமையாகப் பாயும். அதை நாம் தவிர்க்க வேண்டும். அதனால்தான் கழகத்தில் உள்ள நடிகர்களை இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முன்னதாகவே நான் சொன்னேன்' என்றார்.

அண்ணா கூறியதை என் நண்பர் ஒருவர் மூலம் எம்ஜிஆருக்குத் தெரிவித்தேன். அண்ணா விடுதலையானதும் அவரைப் பார்க்க எம்.ஜி.ஆர். அடிக்கடி வருவார். அப்பொழுதெல்லாம் என்னிடமும் பேசுவார்.

திரைப்பாடல்களிலும் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சிகளிலும் அண்ணா பற்றிய குறிப்புகள் இருக்கும், அண்ணாவின் படமும் அவருக்கு அருகில் நேரடியாகத் தெரியும். "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்று திரையில் அவர் பாடினால், கொட்டகை அதிரும்; அந்த வரி அண்ணா, திமுக ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது என்று கழகத்தினர் ஆரவாரம் செய்வார்கள்.

1962 மக்கள் சபைக்கான பொதுத்தேர்தலில் அண்ணா திருச்சி பெரம்பலூர் தொகுதியில் கழகத்தின் வேட்பாளராக என்னை அறிவித்துவிட்டார். தேர்தலில் - அதுவும் நாடாளுமன்றத்துக்கு - போட்டியிட வேண்டிய அளவுக்கு நான் தயாராக இல்லை. அந்தத் தொகுதியில் எனக்கு அதற்கு முன் எத்தகைய தொடர்பும் பழக்கமும் கிடையாது.

ஆயினும் தேர்தல் துவக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எம்ஜிஆரைச் சந்தித்தபொழுது. அவர் மிக உற்சாகத்துடன் என்னிடம் பேசினார். "உங்கள் தொகுதியில் உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நாள்களில் நான் அங்கு வந்து விடுகிறேன். அப்பொழுது கூட்டங்களை மண்டபங்களில் வைத்து ஒவ்வொருவருக்கும் ரூ. 5 என்று கட்டணம் போட்டு கழகத்துக்கான நிதிகளைச் சேர்ப்போம்' என்றார்.

அந்த வகையில் அவர் வந்ததும் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ரூ.1,000 அல்லது 1,200 கிடைத்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. கிடைத்த பணத்தை அந்தந்தத் தொகுதி சட்டசபை வேட்பாளரிடம் தந்துவிட்டேன். எம்ஜிஆர் வந்ததால் நல்ல பிரசாரமும் பண உதவியும் கிட்டின. மக்களிடமும் கழகச் செயலாளர்களிடமும் பெருத்த வரவேற்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கின.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு கழகத்திலிருந்து எனக்குத் தரப்பட்ட பணம் ரூ.2,500 தான். அது ஒரு வாடகைக் காரை நாளொன்றுக்கு ரூ. 30-க்கு அமர்த்தவும் அதற்கான பெட்ரோல் செலவுக்கும் பயன்பட்டது. மற்ற வகைகளில் கூட்டங்கள் போடுவதையும் சைக்கிள் ஊர்வலம் வைப்பதையும் கழகத்தினரே செய்தனர். காங்கிரஸ் சார்பில், அங்கு இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனியாண்டி மீண்டும் போட்டியிட்டார், அதற்கு உட்பட்ட ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள்தாம் 1957 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்கள். இவை போதாதென்று டால்மியா சிமென்ட் தொழிற்சாலை முதலாளியின் பணமும் செல்வாக்கும் காங்கிரஸுக்குப் பெரும் உதவியாக இருந்தன.

முதலில் எம்ஜிஆர் ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் செய்த பிரசாரமும் பிறகு அண்ணாவின் பிரசாரமும் தொகுதியில் வேகமாகப் பரவின. கழகத் தோழர்களும், பொதுமக்களும், படித்த இளைஞர்களும் மிகவும் உறுதியுடனும் உற்சாகத்துடனும் தொகுதியில் எங்கும் தேர்தல் பணிகளைச் செம்மைப்படச் செய்தார்கள்.

1962 தேர்தல் முடிவுகள் எல்லோருக்கும் தெரிந்ததே. நான் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி அடைந்தனர். ஆயினும் காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோற்றுவிட்டது எங்களுக்குப் பேரிடியாக இருந்தது.

தேர்தலுக்குப் பிறகு அண்ணாவைச் சந்தித்தபொழுது என்னால் பேசமுடியவில்லை. என் துயரம் கண்களிலிருந்து நீராகச் சொரிந்தது. அண்ணா என்னைத் தட்டிக் கொடுத்து, "நீ பெற்ற வெற்றியை நான் பெற்ற வெற்றியாக நினைக்கிறேன். கவலைப்படாதே' என்றார். 1962 சட்டசபைத் தேர்தலில் அண்ணா தோல்வியடைந்தாலும் அது ஒருவகையில் நன்மையையே தந்தது; அவரை மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தது. அங்கு அவருடைய வெளிப்படையான பேச்சு பிறரைக் கவர்ந்தது மட்டுமல்ல, அவர் ஐந்தாண்டு காலம் நான் இருந்த இல்லத்திலேயே தங்கியிருந்தார், அவருடைய நெருங்கிய உறவும் வாழ்வும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எனக்கு ஒரு முதல்தரமான வழிகாட்டியாக இருந்தன.

1967 தேர்தல் காலத்தில் எம்ஜிஆர் குண்டடிபட்டு சென்னை மருத்துவமனையில் படுத்திருந்தார். சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற கழக மாநாட்டில் - அங்குதான் ராஜாஜி, காயிதே மில்லத், பி. ராமமூர்த்தி ஆகியவர்களை வைத்து அண்ணாவினால் காங்கிரஸ் எதிர்ப்பு அணியை தமிழ்நாட்டில் உண்டாக்க முடிந்தது - கலந்துகொண்ட ராஜாஜி சொன்னார்: "படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். படுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் இந்தத் தடவை ஜெயிக்கமுடியாது' என்று அவருக்குரிய அமைதியுடன் கூறியது மாநாட்டில் பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது. அந்தத் தேர்தல் போட்டியில் "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' எம்ஜிஆர்தாம்.

"திரையுலகின் சிங்கம் எம்ஜிஆர்' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மலர் 1997- இல் வெளியிடப்பட்டது. அதை அண்மையில் கண்ணுற்றேன். அதில் எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அந்த மலரில் தரப்பட்டுள்ள அண்ணாவின் ஒரு கருத்து, " எம்ஜிஆர் கழகத்தின் கண்மணி, கலை உலகத்தின் நன்மணி; குணத்தில் தங்கம், கொதித்தெழுந்தால் சிங்கம்' என்பதாகும்.

சிங்கம் பீடு நடையுடன் வந்த வழியை திரும்பிப் பார்க்குமாம் - அதை அரிமா நோக்கு என்பார்கள். அதைப்போல் எம்ஜிஆர் திரையுலகில் புரிந்த சாதனைகளை சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் நடித்த படங்கள் 138. அதில் கதாநாயகனாக இருந்த படங்கள் 117. அவற்றில் 100 நாள்கள் விழா கண்ட படங்கள் 66. வெள்ளிவிழா (25 வாரங்கள்) கொண்டாடிய படங்கள் 17. என் தங்கை படம் 350 நாள்களுக்கு மேலும் வெற்றிப் படமாக விளங்கியது.

எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:

1954 - மலைக் கள்ளன் - இந்திய அரசாங்க விருது.

1956 - அலிபாபா நாற்பது திருடர்கள் - பிலிம் ரசிகர்கள் விருது 1967.

1967 - காவல்காரன், தமிழ்நாடு அரசாங்க விருது.

1968 - குடியிருந்த கோயில், தமிழ்நாடு அரசாங்க விருது.

1969 - அடிமைப் பெண், தமிழ்நாடு அரசாங்கப் பரிசு, பிலிம்பேர் விருது.

1972 - ரிக்ஷாகாரன், சிறந்த நடிகர் -தேசிய விருது.

1978 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிறந்த படம்- தமிழ்நாடு அரசாங்க விருது.

கெüரவ டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்.

கெüரவ டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகம்.

1988 - (இறந்தபின்) பாரத் ரத்னா விருது.

மேலும் 1960-இல் இந்திய அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ விருதை ஏற்றுக்கொள்ள எம்ஜிஆர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "அந்த விருது தமிழில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தியில் இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளவில்லை'.

நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.

""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''

அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.

வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.

எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.

மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

Richardsof
14th January 2018, 07:42 PM
http://i68.tinypic.com/j8gu2r.jpg

fidowag
14th January 2018, 11:24 PM
http://i67.tinypic.com/desak8.jpg

fidowag
14th January 2018, 11:25 PM
தினமலர் -14/01/18
http://i68.tinypic.com/22fiwp.jpg

fidowag
14th January 2018, 11:26 PM
தினகரன் -14/01/18
http://i63.tinypic.com/mku63k.jpg

fidowag
14th January 2018, 11:28 PM
மாலை முரசு -11/01/18
http://i66.tinypic.com/1ficuw.jpg

fidowag
14th January 2018, 11:30 PM
http://i68.tinypic.com/venlz9.jpg
http://i65.tinypic.com/bvbl3.jpg

fidowag
14th January 2018, 11:33 PM
தினத்தந்தி -14/01/18
http://i66.tinypic.com/24c63x4.jpg
http://i68.tinypic.com/11sme8g.jpg

fidowag
14th January 2018, 11:36 PM
தின இதழ் -14/01/18
http://i66.tinypic.com/t8unwl.jpg
http://i67.tinypic.com/eank8w.jpg
http://i63.tinypic.com/34xpds5.jpg

fidowag
14th January 2018, 11:39 PM
கோவை ராயலில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ரகசிய போலீஸ் 115"திரைப்படத்திற்கு திரண்ட ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i63.tinypic.com/kqf12.jpg

fidowag
14th January 2018, 11:39 PM
http://i64.tinypic.com/1256igw.jpg

fidowag
14th January 2018, 11:40 PM
http://i68.tinypic.com/bfpcl.jpg

fidowag
14th January 2018, 11:41 PM
http://i64.tinypic.com/2dmgt1c.jpg

fidowag
14th January 2018, 11:42 PM
http://i68.tinypic.com/raxcag.jpg

fidowag
14th January 2018, 11:42 PM
http://i65.tinypic.com/ruyz52.jpg

fidowag
14th January 2018, 11:47 PM
சென்னை சத்யா ஸ்டுடியோவில் வரும் 17/01/18 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ள நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் நண்பர்களின் பார்வைக்கு
http://i64.tinypic.com/2d1pm38.jpg
http://i67.tinypic.com/96jgi0.jpg

http://i63.tinypic.com/2q00vfa.jpg

fidowag
14th January 2018, 11:47 PM
http://i66.tinypic.com/2zo9r44.jpg

fidowag
14th January 2018, 11:52 PM
சென்னை ராமாவரம் தோட்டத்தில் வரும் 17/01/18 அன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். விருது வழங்கும் விழா பற்றிய விளம்பரம்
நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/eguygy.jpg

fidowag
15th January 2018, 12:01 AM
விழா பற்றிய அழைப்பிதழ் சில முக்கிய சிறப்பு விருந்தினர்கள் ஆகிய முன்னாள் நடிகை லதா, பின்னணி பாடகி பி.சுசீலா நடிகை சச்சு ஆகியோருக்கு நேரில் வழங்கி திருமதி சுதா விஜயன் அவர்களுடன் இணைந்து திரு.ஒம்பொடி பிரசாத், திரு.ஆர். லோகநாதன் ஆகியோர் வரவேற்ற காட்சிகள் புகைப்படங்களுடன் நண்பர்களின்
பார்வைக்கு .

மேலும் , நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி ,
பின்னணி பாடகர் திரு.டி.எம்.எஸ். செல்வகுமார், வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார்
வாரிசு, நகைச்சுவை நடிகர் நாகேஷ் வாரிசு, நடிகை ராஜஸ்ரீ ஆகியோருக்கும் நேரில்
அழைப்பு விடுக்கப்பட்டது .
http://i68.tinypic.com/35cpicz.jpg

fidowag
15th January 2018, 12:02 AM
http://i64.tinypic.com/a9sdnk.jpg

fidowag
15th January 2018, 12:04 AM
http://i65.tinypic.com/6zndqx.jpg

fidowag
15th January 2018, 12:05 AM
http://i68.tinypic.com/2utpwg8.jpg

fidowag
15th January 2018, 12:06 AM
http://i66.tinypic.com/33wv51f.jpg