PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

fidowag
31st October 2016, 11:22 PM
http://i64.tinypic.com/wtbnp.jpg

fidowag
31st October 2016, 11:25 PM
http://i64.tinypic.com/2qtit0y.jpg

fidowag
31st October 2016, 11:28 PM
http://i67.tinypic.com/152i06x.jpg

fidowag
31st October 2016, 11:34 PM
http://i64.tinypic.com/11hs64x.jpg

fidowag
31st October 2016, 11:37 PM
http://i63.tinypic.com/2cqd10g.jpg

fidowag
31st October 2016, 11:40 PM
http://i63.tinypic.com/x25m3r.jpg

Richardsof
1st November 2016, 07:45 AM
பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.



இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.



தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.



கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.




‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...

courtesy -கோவி.லெனின்.

okiiiqugiqkov
1st November 2016, 11:57 AM
http://i68.tinypic.com/f1ihl4.jpg


நன்றி .கனகராஜா ஆண்டியாபிள்ளை முகநூல்

fidowag
1st November 2016, 08:15 PM
தமிழ் இந்து -31/10/2016
http://i63.tinypic.com/a5bzn4.jpg

fidowag
1st November 2016, 08:18 PM
துக்ளக் வார இதழ் -09/11/2016
http://i65.tinypic.com/3150ax1.jpg
http://i68.tinypic.com/iz3gie.jpg

fidowag
2nd November 2016, 06:53 PM
இன்று (02/11/2016) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/5o7e9v.jpg

fidowag
2nd November 2016, 06:58 PM
இன்று இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "என் கடமை " ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/2zqhpmw.jpg

fidowag
2nd November 2016, 10:21 PM
இன்று பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை , ஹலோ எப் எம்.106.4ல் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாகியது
http://i68.tinypic.com/eg7c69.jpg

fidowag
2nd November 2016, 10:30 PM
http://i66.tinypic.com/iwoob5.jpg
http://i67.tinypic.com/2qiuwbo.jpg
http://i64.tinypic.com/2nhp98g.jpg

fidowag
2nd November 2016, 10:32 PM
http://i64.tinypic.com/67sb9u.jpg
http://i67.tinypic.com/2pq5nxu.jpg
http://i64.tinypic.com/ff49p5.jpg

fidowag
2nd November 2016, 11:22 PM
'சிம்பிள் ஸ்டார் ' விஜய் ஆண்டனி பதில்கள் - குமுதம் வார இதழ்
http://i67.tinypic.com/dq6geu.jpg

Richardsof
3rd November 2016, 07:04 PM
மக்கள் திலகத்தின் ''படகோட்டி ''
http://i67.tinypic.com/29g0d48.jpg
3.11.1964 தீபாவளி அன்று வெளிவந்த வண்ணக்காவியம் . இன்று 53 வது ஆண்டு துவக்கம் . மெல்லிசை மன்னர்களின் இனிய இசையில் பாடகர் திலகம் - இசைக்குயில் - இருவரின் குரல்களில் மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் நடிப்பில் திரை உலக ரசிகர்களை மயக்கிய படம்
.
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - நவ ரசங்களை காட்ட வேண்டிய இடத்தில ,கச்சிதமாக காட்டி மிகவும் தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கண்டார் நம் மக்கள் திலகம் . மாறு வேடத்திலும் , சண்டை காட்சிகளிலும் , காதல் காட்சிகளிலும் , ஏக்கமான , துயரமான காட்சிகளிலும் தன்னுடைய சிறந்த நடிப்பால் வெளுத்து கட்டியிருந்தார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் . படம் முழுவதும் காலணி இல்லாமல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

.மக்கள் திலகம் எம்ஜிஆர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய ஆளுமைகள் மிகவும் நேர்த்தியாக இருந்தது .

1. தரை மேல் பிறக்க வைத்தான் - மக்கள் திலகம் அமர்ந்த இடத்திலேயே சோகத்துடன் பாடிய காட்சி என்றென்றும் மறக்க முடியாது . அத்தனை உணர்ச்சி பிழம்பு .

2..கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அருமையான தத்துவ பாடல் .

3. நான் ஒரு குழந்தை - மக்கள் திலகத்தின் இளமை , பேரழகு நம் கண்களுக்கு தித்திக்கும் விருந்து
.
4. கல்யாண பொண்ணு ...மாறு வேடத்தில் மக்கள் திலகம் ஜொலித்த காட்சி .

5. படகு சவாரி காட்சியில் மெல்லிசை மன்னர்களின் அட்டகாசமான இசையில் நம் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடிப்பு காட்சி
6. தொட்டால் பூ மலரும் - 52 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கும் உன்னதமான காதலர்களின் உணர்வை பிரதிபலித்த காதல் கீதம் . எல்லாவற்றிக்கும் மேலாக மக்கள் திலகத்தின் காதல் உணர்வும் , துடிப்பும்
நடிப்பும் பிரமாதம் .
7.பாட்டுக்கு பாட்டெடுத்து ---காதலர்களின் ஏக்கத்தை நம் கண் முன் நிறுத்திய மக்கள் திலகம் -சரோஜாதேவி இருவரையும் மறக்க முடியுமா ?
http://i63.tinypic.com/2myt4z7.png

படகோட்டியின் பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் .. 52 ஆண்டுகள் ஆனாலும் இன்றைய மக்கள் திலகத்தின் படகோட்டியின் விநியோக உரிமை ரூ 2 கோடி என்ற தகவல் கிடைத்துள்ளது . இதன் மூலம் நம் மக்கள் திலகத்தின் புகழ் , அவருடைய நடிப்பின் தாக்கம் - உலக திரைப்பட வரலாற்றில் இன்னமும் அவருடைய மார்க்கெட் முதலிடத்திலேயே உள்ளது என்பதை அறிய முடிகிறது .

திரை உலகத்தில் ஒரு வரலாற்றை உருவாக்கினார் - தென்னிந்திய வசூல் சக்கரவர்த்தி - பாரத் எம்ஜிஆர்
அரசியல் உலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார் - அதிமுக நிறுவனர் - பாரதரத்னா எம்ஜிஆர்
மறைந்தும் மக்களின் நாயகனாக சகாப்தம் படைத்து கொண்டு வருகிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

fidowag
3rd November 2016, 08:52 PM
நாளை (04/11/2016) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " திரைப்படம் தினசரி 3 காட்சிகள் வெள்ளித்திரைக்கு வருகிறது .

http://i65.tinypic.com/bewxj.jpg

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
3rd November 2016, 08:54 PM
நாளை (04/11/2016) முதல் மதுரை மாநகர் மீனாட்சியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " மீண்டும் வெற்றி விஜயம் .-தினசரி 4 காட்சிகள் .

http://i65.tinypic.com/b5p0jk.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
3rd November 2016, 08:57 PM
நாளை (04/11/2016) முதல் நெல்லை கணேஷாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " இணைந்த 6 வது வாரமாக தொடர்கிறது .

http://i66.tinypic.com/2ed5j47.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

oygateedat
3rd November 2016, 09:00 PM
https://s21.postimg.org/ycghmiao7/IMG_1224.jpg
Courtesy - Mr.jayababu, Chennai

oygateedat
3rd November 2016, 09:16 PM
வெற்றிகரமாக இரண்டாவது வாரம்

கோவை - ராயல் - ஆயிரத்தில் ஒருவன்

கோவை - டிலைட் - இதயவீணை

oygateedat
3rd November 2016, 10:11 PM
மதுரை - மீனாட்சி தியேட்டரில்

நாளை முதல்

ஆயிரத்தில் ஒருவன்

orodizli
4th November 2016, 06:17 PM
வெற்றிகரமாக இரண்டாவது வாரம்

கோவை - ராயல் - ஆயிரத்தில் ஒருவன்

கோவை - டிலைட் - இதயவீணை

Wonderful & Greatest Achievements by Our Makkalthilagam MGR next follows Regularly...

Richardsof
4th November 2016, 06:32 PM
நவம்பர் மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள்

1. விவசாயி - 01.11-1967

2. படகோட்டி - 03.11.1964

3. தாய் சொல்லை தட்டாதே - 07.11.1961

4. நம்நாடு - 07.11. 1969

5. உரிமைக்குரல் . 07.11.1974

6. பறக்கும் பாவை - 11.11.1966

7. ஊருக்கு உழைப்பவன் 12.11.1976

8. பரிசு . 15.11-1963

9. மகாதேவி - 22.11.1957

10. சிரித்து வாழ வேண்டும் - 30.11 .1974

oygateedat
5th November 2016, 03:21 AM
https://s17.postimg.org/zfledfsv3/IMG_1227.jpg
Courtesy: Mr.jayababu, chennai

oygateedat
5th November 2016, 07:28 AM
https://s21.postimg.org/6mipf7lo7/IMG_1245.jpg
Courtesy - facebook

Richardsof
5th November 2016, 04:40 PM
http://i66.tinypic.com/t5q14j.jpg
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

முகநூலில் திரு ஜெய பாபு பதிவிட்ட மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழ வேண்டும்'' - வரவேற்பு நோட்டீஸை திரியில் பதிவிட்டமைக்கு நன்றி .

மலரும் இனிய நினைவுகள் - சிரித்து வாழ வேண்டும்
*****************************************
பெங்களுர் நகரில் இந்த படம் சற்று தாமதமாக 31.1.1975 அன்றுதான் வெளிவந்தது . .பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அன்பர்கள் சார்பாக நாங்கள் இந்த வரவேற்பு நோட்டீஸை வேலூரில் அச்சடித்து படம் வெளிவந்த தினத்தன்று ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் விநியோகித்தோம் . நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த நோட்டீஸை மீண்டும் காணும் இந்த வாய்ப்பை தந்த ஜெயபாபுவிற்கும் தங்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்

மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் நவம்பர் -1974ல் வெளிவந்து 50 நாட்கள் கடந்த பின்னர் .சிரித்து வாழ வேண்டும் அதே அரங்குகளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .

Richardsof
5th November 2016, 04:47 PM
FLASH BACK
1974
BANGALORE - BALAJI THEATER

URIMAIKURAL

http://i67.tinypic.com/2vdsfn4.jpg

oygateedat
5th November 2016, 07:18 PM
https://s17.postimg.org/a65m25vm7/IMG_1259.jpg (https://postimg.org/image/3sgiywqq3/)

fidowag
5th November 2016, 08:10 PM
மாலை மலர் -04/11/2016மற்றும் திருநெல்வேலி கணேசா (தினசரி 4 காட்சிகள் )
http://i67.tinypic.com/2w7o4et.jpg

fidowag
5th November 2016, 08:15 PM
புதிய தலைமுறை வார இதழ் -10/11/2016
http://i67.tinypic.com/2mdnt78.jpg
http://i66.tinypic.com/r04gih.jpg
http://i67.tinypic.com/2i0eqg4.jpg
http://i68.tinypic.com/14o59xd.jpg

fidowag
5th November 2016, 08:28 PM
04/11/2016 முதல் மதுரை மீனாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது . அதன் சுவரொட்டிகள் திரியில்
பதிவிட அனுப்பி உதவிய நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி .
http://i65.tinypic.com/10dtwdt.jpg

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் ஆகும் நிலையில் , இன்னும் அவருடைய உருவம், பிம்பம் , சுவரொட்டி, பேனர் ,இமேஜ் , சினிமா
கண்டு எதிர் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் பயப்படும் சூழ்நிலை தொடர்கிறது .
அதன் எதிரொலியாக , மதுரையில் வருகின்ற சட்டமன்ற இடை தேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை கருத்தில் கொண்டு , ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட சுவரொட்டிகள், மற்றும் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய சுவரொட்டிகள் கிழிக்கப்படுகின்றன./நீக்கப்படுகின்றன . மதுரை மீனாட்சி அரங்கு வளாகம் தவிர மற்ற இடங்களில் சுவரொட்டிகள் தென்படவில்லை என்று மதுரை நண்பர் திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .

fidowag
5th November 2016, 08:29 PM
http://i68.tinypic.com/rura5y.jpg

fidowag
5th November 2016, 08:30 PM
http://i67.tinypic.com/ff6zns.jpg

fidowag
5th November 2016, 08:31 PM
http://i63.tinypic.com/2lkd1fp.jpg

fidowag
5th November 2016, 08:32 PM
http://i67.tinypic.com/2ro71jb.jpg

fidowag
5th November 2016, 08:33 PM
http://i63.tinypic.com/zyef7m.jpg

fidowag
5th November 2016, 08:48 PM
http://i66.tinypic.com/10dfuqu.jpg

கடந்த வாரம், தீபாவளி வெளியீடாக மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே வா " , பல முறை திரை அரங்குகளில்
திரையிடப்பட்டும், பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டும் , மீண்டும்
வசூலை வாரி குவித்துள்ளது . ஒரு வார வசூல் ரூ.1,02,000/-
தகவல் உதவி : நண்பர் திரு. எஸ். குமார், மதுரை.
http://i67.tinypic.com/2m76z6c.jpg

fidowag
5th November 2016, 08:53 PM
04/11/2016 முதல் சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
(பேரறிஞர் அண்ணாவின் ) " இதயக்கனி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
அதன் சுவரொட்டிகளை காண்க .
http://i67.tinypic.com/2u6ntj8.jpg


16/09/20/16 முதல் சென்னை மகாலட்சுமியில் தினசரி 2 காட்சிகள் நடைபெற்று
ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .

fidowag
5th November 2016, 08:54 PM
http://i67.tinypic.com/huglea.jpg

fidowag
5th November 2016, 08:56 PM
http://i64.tinypic.com/2ebsv80.jpg

fidowag
5th November 2016, 08:58 PM
http://i67.tinypic.com/4jqg4j.jpg

fidowag
5th November 2016, 08:59 PM
http://i63.tinypic.com/24w9g08.jpg

fidowag
6th November 2016, 11:16 AM
கோவை ராயலில் -ஆயிரத்தில் ஒருவன் மற்றும்

கோவை -டிலைட்டில் - இதய வீணை - வெற்றிகரமான 2 வது வாரம்

தகவல்கள் அளித்த நண்பர் திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

http://i67.tinypic.com/34gtxzt.jpg

சென்னையில் மறுவெளியீட்டில் 190 நாட்கள் ஆல்பட் காம்ப்ளக்ஸிலும்
160 நாட்கள் சத்யம் காம்ப்ளக்ஸிலும் ஓடி சாதனை புரிந்த படம் , மீண்டும் கோவையில் சாதனையை தொடர்வது மகிழ்ச்சியான செய்தி .

fidowag
6th November 2016, 11:19 AM
இன்று (06/11/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த " அரச கட்டளை " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/zjjln8.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

oygateedat
6th November 2016, 02:22 PM
அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு,

சென்னை மற்றும் மதுரை நகர்களில் தலைவரின் தொடரும் சாதனைகள் - படங்களுடன்

தொலைக்காட்சிகளில் நம் இதயவேந்தனின் காவியங்கள் நிகழ்த்தி வரும் சாதனைகள்

நமது இதயதெய்வத்தைப்பற்றி பத்திரிக்கைகளில் வெளி வரும் செய்திகள்

இவை அனைத்தையும் அழகுற பதிவிட்டு வரும்

தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

- எஸ் ரவிச்சந்திரன்
திருப்பூர்

Richardsof
6th November 2016, 06:27 PM
7.11.2016............
தீபாவளி தினத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்

7.11.1961
மக்கள் திலகத்தின் ''தாய் சொல்லை தட்டாதே '' ..... 55 ஆண்டுகள் நிறைவு .

7.11.1969
மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' 47 ஆண்டுகள் நிறைவு

7.11.1974

மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' 42 ஆண்டுகள் நிறைவு

fidowag
6th November 2016, 10:50 PM
http://i66.tinypic.com/iemt6e.jpg

புகைப்பட உதவி : நண்பர் திரு. சாமுவேல்



என்னுடைய பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து ஊக்கமளிக்கும்
அருமை நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி.

fidowag
6th November 2016, 10:56 PM
சென்னை கிருஷ்ணவேணி அரங்கில் இன்று (06/11/2016) நடைபெற்ற மாலை காட்சியின்போது பக்தர்கள் திரண்டு வந்து
காட்சியை கண்டுகளித்தனர் .

http://i64.tinypic.com/10z20r8.jpg

fidowag
6th November 2016, 10:59 PM
http://i65.tinypic.com/n33g5l.jpg

fidowag
6th November 2016, 11:02 PM
http://i67.tinypic.com/317d5ie.jpg
வருகை தந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

fidowag
6th November 2016, 11:05 PM
http://i66.tinypic.com/qx53ea.jpg

fidowag
6th November 2016, 11:08 PM
http://i67.tinypic.com/fbc3uo.jpg

fidowag
7th November 2016, 10:57 PM
தினகரன் நாளிதழ் -07/11/2016
http://i67.tinypic.com/29xyv4l.jpg

fidowag
7th November 2016, 11:07 PM
மதுரை மீனாட்சியில் ஞாயிறு மாலை (06/11/2016) காட்சியில் எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் -உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i67.tinypic.com/r1zoew.jpg

orodizli
7th November 2016, 11:17 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அருமையான தகவல்கள் சூப்பர்... நன்றி திருவாளர்கள் வினோத் லோகநாதன்...

orodizli
8th November 2016, 10:55 PM
Evergreen Makkalthilagam presents several ways to reach the public... It's a so miracle one... This gift only add every time to Poan mana chemmal...

fidowag
9th November 2016, 10:50 PM
இன்று (09/11/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/x244nc.jpg

fidowag
9th November 2016, 11:01 PM
இன்று இரவு 7 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " தெய்வத்தாய் "
சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது
http://i66.tinypic.com/25zlfeu.jpg

fidowag
9th November 2016, 11:06 PM
இன்று இரவு 7 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " தெய்வத்தாய் "
சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது
http://i66.tinypic.com/25zlfeu.jpg

fidowag
9th November 2016, 11:08 PM
தற்போது ஜெயா மூவிஸில் (இரவு 10 மணி முதல் ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "அன்னமிட்டகை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/t020sx.jpg

fidowag
9th November 2016, 11:09 PM
தின இதழ் -09/11/2016
http://i66.tinypic.com/qzkig0.jpg

fidowag
9th November 2016, 11:10 PM
மாலை சுடர் -09/11/2016
http://i66.tinypic.com/a288q1.jpg

Richardsof
11th November 2016, 05:45 AM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''பறக்கும் பாவை ''. நேற்று பொன்விழா ஆண்டை நிறைவு செய்தது .
11.11.1966 தீபாவளி விருந்தாக வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற இன்னிசை சித்திரம் .

Richardsof
11th November 2016, 05:49 AM
12.11.1976
to day 40 years completed.

ஊருக்கு உழைப்பவன்-1976

பொன்மனச்செம்மல் எம்ஜிஆர், வாணிஸ்ரீ, வெண்ணிறஆடை நிர்மலா, எம்.என்.ராஜம், குமாரி பத்மினி, பேபி ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முகசுந்தரி, ஆஷாத் பயில்வான், ஷெட்டி, ஜஸ்டின், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.

இசையமைப்பு:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

பாடல்கள்:-"புரட்சித்தலைவரின் அரசவைக்கவிஞர்"புலவர்.புலமைப்பித்தன் & "கவிஞர்"முத்துலிங்கம் & "கவிஞர்"நா.காமராசன் & வாலி & "கவிஞர்"ரெண்டார்கை ஆகியோர்.

மூலக்கதை:-பூவை கிருஷ்ணன் அவர்கள்.

உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.

தயாரிப்பு:-எஸ்.கிருஷ்ணமூர்த்தி & டி.கோவிந்தராஜன் ஆகியோர்.

இயக்கம்:-எம்.கிருஷ்ணன்அவர்கள்.


இதயத்தை வருடும் இன்பகானங்கள்...


1. இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி!
தலைவா கொஞ்சம் பொறுத்திரு
வெட்கம் போனபின் என்னைச் சேர்த்திரு!

2. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்-நெஞ்சில்
இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல்க் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்.

3. அழகெனும் ஓவியம் இங்கே-அதை
எழுதிய ரதிவர்மன் எங்கே?
இலக்கிய காவியம் இங்கே-அதை
எழுதிய பாவலன் எங்கே?

4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்-ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும்
மழலைக்காகப் பாடுகிறேன்! நான் பாடுகிறேன்

Richardsof
11th November 2016, 05:51 AM
பறக்கும் பாவை - 1966

மக்கள் திலகத்தின் பொழுது போக்கு சித்திரம் .

சர்க்கஸ் மையமாக கொண்ட புதமை கதை .

படத்தின் ஆரம்ப காட்சியில் சரோஜாதேவி ஆண் வேடமிட்டு வீட்டை விட்டு ஓடிவந்து மக்கள் திலகத்தின் பார்வையில் சிக்கி தப்பிக்க நினைக்கும் நேரத்தில் அறிமுக பாடல் - பட்டு பாவடை எங்கே ? என்ற அப்பாடல் சூப்பர் .
மக்கள் திலகத்தின் அருமையான நடனம் -இனிமையான பாடல் .இன்று பார்த்தாலும் மன நிறைவு தருகிறது .

மக்கள் திலகம் -நடராஜன் முதல் சண்டை காட்சி படு அமர்க்களம் . அருமையான ரீ-ரெகார்டிங் .வித்தியாசமான ஸ்டைல் சண்டை .
மக்கள் திலகம் ,சர்க்கஸ் சேர்ந்த பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது .
நிலவென்னும் ஆடை கொண்டாளோ .... குரூப் பாடல்
tms - சுசீலா குரலில் மெய்மறக்க செய்கிறது .அழகான romance பாடல் .மக்கள் திலகம் மிகவும் இளமையாக அழகாக தோன்றி தாளம் போடவைப்பர் .

காஞ்சனாவின் கனவு பாடல் .

முத்தமோ --மோகமோ .......

பாடகர் திலகம் - இசை அரக்கி ஈஸ்வரி குரலில் கண்ணுக்கும் செவிக்கும் தித்திக்கும் விருந்தாக அமைந்த எவர்க்ரீன் பாடல் .

மக்கள் திலகத்தின் சூப்பர் நடன அசைவுகளும் அவருக்கு இணையாக காஞ்சனாவின் நடனமும் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொள்கின்றது .

சர்க்கஸ் வலையில் மக்கள் திலகமும் சரோவும் படும்

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ...... இனிய பாடல் படமாக்க பட்டவிதம் அருமை .

மக்கள் திலகம் அவர்கள் தன்னை தாக்க வரும் புலியின் சீற்றத்தை அடக்கும் அந்த புல்லரிக்கும் கட்சி அவரது வீரத்தை காட்டுகிறது .

அசோகன் - மனோகர் இருவருடன் மக்கள் திலகம் மோதும் காட்சி - புதுமையான சண்டை .

பாடலில் புதுமை காட்டும் ராமண்ணாவின் கை வண்ணம்
.
உன்னைத்தானே .....ஏய் ... உன்னைத்தானே ......

குளியல் அறை .. பாடல் ... மக்கள் திலகம் - சரோ ரசித்து நடித்திருப்பார்கள் .

... யாரைத்தான் ,, நம்புவதோ .... சுசீலாவின் இனிமையான குரலில் சூப்பர் சாங் .

ஹோட்டல் ... குரூப் டான்ஸ் ...

மக்கள் திலகம் - சந்திர பாபு - சரோஜதேவி -மூவரும் நடனமாடும் பாடல் .
சுகம் எதிலே ...மது ரசமா .... கண்ணாடி கின்னம்மா ...

கிளைமாக்ஸ் .... யாருமே எதிர் பார்க்காத திருப்பமாக காஞ்சனா மூலம் படம் முடிவுக்கு வருவது ...suspence .


மொத்தத்தில் பறக்கும் பாவை ...

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவான பொற் காவியம்

Richardsof
11th November 2016, 06:25 AM
புதிய தமிழ் படங்களில் இன்றய நடிகர்கள் -நடிகைகள் பாடல் காட்சிகள் காணும் போது மிகவும் அபத்தமாக இருக்கிறது .புரியாத பாடல் வரிகளும் , தொடர்பே இல்லாத இசை அமைப்பும் ,அசிங்கமான முக பாவங்களும் , அரைகுறை உடைகளும் ,காட்சி அமைப்பும் , நடிகை -நடிகைகளின் முகமும் காண சகிக்கவில்லை என்பதுதான் உண்மை .
http://i63.tinypic.com/2pskrbs.jpg
தமிழ் பட உலகின் பொற்காலம் [ 1950-1975 ] எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி மற்ற கதாநாயகர்கள் நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள் சாகாவரம் பெற்றவை . இன்று பார்த்தாலும் மனதிற்கு நிறைவு தருகிறது . குறிப்பாக எம்ஜிஆர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் . எம்ஜிஆர் பாடல்களின் வரிகள் , இசை , காட்சி அமைப்புகள் , எம்ஜிஆரின் அற்புதமான தோற்றம் , புதுமையான நடனங்கள் , 50 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் பிரமிப்பாக உள்ளது .பாடல்கள் மூலம் எம்ஜிஆர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் . தான் சேர்ந்திருந்த திமுக மற்றும் தான் உருவாக்கிய அதிமுக இரண்டு கட்சிகளின் பிரச்சாரமாக எம்ஜிஆர் கையாண்ட யுக்தி அபாரம் .

எம்ஜிஆரின் சமுதாய சீர்திருத்த பாடல்கள் இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தது . எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம் பெற்ற ''நான் ஆணையிட்டால் '' பாடல் மற்றும் நம்நாடு படத்தில் இடம் பெற்ற ''நினைத்ததை நடத்தியே முடிப்பவன் '' இரண்டு ப்பாடல்கள் மூலம் எம்ஜிஆரின் புகழும் அரசியல் செல்வாக்கும் இமயத்தின் உச்சிக்கே சென்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆரின் தனிப்பட்ட முகராசியும் , நம்பிக்கையும் , உழைப்பும் , எம்ஜிஆரின் ரசிகர்களின் அதீத ஆதரவும் மக்களின் செல்வாக்கும் தான் என்பது நிதர்சனம் .

நன்றி . செங்கோட்டை - இணையதளம்

oygateedat
11th November 2016, 08:33 PM
திருச்சி கெயிட்டியில்

ராமன் தேடிய சீதை

oygateedat
11th November 2016, 08:56 PM
https://s22.postimg.org/i1fjs72up/IMG_1324.jpg (https://postimg.org/image/5msrrvbcd/)

fidowag
11th November 2016, 11:11 PM
இன்று இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "மகாதேவி " ஒளிபரப்பாகியது
http://i65.tinypic.com/15wb321.jpg

fidowag
11th November 2016, 11:22 PM
http://i66.tinypic.com/27yzfcw.jpg
http://i63.tinypic.com/315hlk3.jpg
http://i66.tinypic.com/2d26rn6.jpg

fidowag
11th November 2016, 11:27 PM
http://i65.tinypic.com/2j0jadx.jpg
http://i65.tinypic.com/2hd5tv4.jpg
http://i63.tinypic.com/rsexht.jpg

fidowag
11th November 2016, 11:34 PM
மாலை சுடர் -09/11/2016
http://i64.tinypic.com/9uoeo8.jpg

fidowag
11th November 2016, 11:43 PM
நக்கீரன் வார இதழ் -08/11/2016
http://i63.tinypic.com/2pzmd7k.jpg
http://i64.tinypic.com/25qztwj.jpg
கின்றன.

fidowag
12th November 2016, 12:01 AM
http://i67.tinypic.com/a0upn7.jpg
http://i63.tinypic.com/2dje4ig.jpg
http://i66.tinypic.com/23wpv2a.jpg
http://i65.tinypic.com/s2drww.jpg
வேலை .

fidowag
12th November 2016, 12:09 AM
புதிய தலைமுறை வார இதழ் -17/11/2016
http://i65.tinypic.com/dxgxes.jpg
http://i65.tinypic.com/2upv33m.jpg
http://i65.tinypic.com/2roqbt2.jpg

fidowag
12th November 2016, 12:43 AM
வெள்ளி முதல் (11/11/2016) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) இதயக்கனி- திரைப்படம் , தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.

இந்த ஆண்டில் ,(2016) சென்னை சரவணாவில் இணைந்த 17 வது எம்.ஜி.ஆர். வாரம்.

கடந்த 16/10/2016 முதல் சென்னை மகாலட்சுமியில் தினசரி 2 காட்சிகளிலும் ,
04/11/2016 முதல் சென்னை கிருஷ்ணவேணியில் தினசரி 3 காட்சிகளிலும்
நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
http://i67.tinypic.com/2z6trgh.jpg

fidowag
12th November 2016, 12:44 AM
http://i68.tinypic.com/16bypky.jpg

fidowag
12th November 2016, 12:45 AM
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரும் ஞாயிறு அன்று (13/11/2016) நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர பேனர் .
http://i66.tinypic.com/2isgoyo.jpg

fidowag
12th November 2016, 12:47 AM
http://i64.tinypic.com/2wob1fr.jpg

fidowag
12th November 2016, 12:51 AM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த திரு.குணசேகரன் அவர்களின் மகன் திருமணம் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அருள் மற்றும் நல்லாசியுடன் சென்னை கோவூரில் 11/11/2016 அன்று நடைபெற்றது
http://i67.tinypic.com/2r7278h.jpg

fidowag
12th November 2016, 12:53 AM
http://i64.tinypic.com/2guchky.jpg
திருமண நிகழ்ச்சியில், மணமக்களுக்கு, ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது .

fidowag
12th November 2016, 01:02 AM
.
எம்.ஜி.ஆர். ரிதம்ஸ் இன்னிசை அமைப்பாளர் , மற்றும் இயக்குனர் திரு. ரகுநாத்
அவர்களின் புதல்வியின் திருமணம் 11/11/2016 அன்று காலை , சென்னை பெசன்ட் நகர் அறுபடைவீடு முருகன் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது .

சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .

சிறப்பு அழைப்பாளர்களாக, நடிகர் சக்கரவர்த்தி, நடிகர் வெளுத்துக்கட்டு அப்பு,
பெங்களூரு கா. நா. பழனி, கோவை, திரு. வி.கே. எம். , திரு.நீலகண்டன் (திரைப்பட விநியோகஸ்தர் ) கலைவேந்தன் பக்தர்கள் குழு தலைவர் திரு. பெருமாள் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர் .பக்தர்கள் குழு தலைவர் திரு. பாண்டியராஜ், திரு. லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

http://i64.tinypic.com/55gkmr.jpg

fidowag
12th November 2016, 01:05 AM
நடிகர் .வெளுத்துக்கட்டு அப்பு, திரு. கா. நா. பழனி (உழைக்கும் குரல் ஆசிரியர்),
திரு. சந்திரசேகர் -உணவு அருந்தும்போது
http://i65.tinypic.com/2ekq4wg.jpg

fidowag
12th November 2016, 01:06 AM
கோவை திரு. வி.கே. எம். மற்றும் நடிகர் சக்கரவர்த்தி.
http://i66.tinypic.com/ruqx3n.jpg

fidowag
12th November 2016, 01:07 AM
http://i68.tinypic.com/9i8qxe.jpg

fidowag
12th November 2016, 01:09 AM
திருமண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்களில் சிலர்.
http://i68.tinypic.com/29ekdci.jpg

Richardsof
12th November 2016, 07:56 PM
என்னை வியப்பில் ஆழ்த்திய நடிகர் எம்ஜிஆர் .

தமிழ் திரை உலகில் எத்தனையோ நடிகர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருந்தாலும் அந்தந்த கால கட்டங்களில் மக்களின் ரசனைக்கு ஏற்ப மாறுதல்கள் நிகழ்ந்தது . பெரும்பாலான நடிகர்கள் தங்களின் இளம் வயதில் நடித்தது குறுகிய காலத்தில் நடிப்பு தொழிலில் இறங்கு முகமாகி அடையாளம் இன்றி காணாமல் போனார்கள் .
1940 களில் மிகவும் பிரபலமான நடிகர்கள் தியாகராஜபாகவதர். பி யு .சின்னப்பா , ரஞ்சன் , எம் கே ராதா போன்றவர்கள் சில படங்களே நடித்து புகழ் அடைந்து மக்களால் மறக்கப்பட்டார்கள் .

1936ல் தன்னுடைய 19 வது வயதில் நடிக்க துவங்கிய எம்ஜி ராமச்சந்தர் என்ற எம்ஜிஆர் சதிலீலாவதி படத்தில் அறிமுகமானார் .11 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தன்னுடைய 30 வயதில் ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார் .

1947-1960 வரை எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்கள் சரித்திர படங்களே . .மன்னராக , தளபதியாக , போர் வீரராக , புரட்சி வீரராக , எல்லா சாகசங்களும் வல்லமை பெற்றவராக ,வீராதி வீராக அவர் நடித்த படங்கள் அனைத்தும் காவியங்களே . இன்றைய இளம் வயதினர் நிச்சயம் அன்றைய சரித்திர படங்களை பார்த்தால்தான் எம்ஜிஆரின் நடிப்பு , வீரம் , சாமர்த்தியம் , வித்தியாசமான நடிப்பு , புதுமையான சண்டை காட்சிகள் , தெள்ளு தமிழ் வசனங்கள் , சமுதாய சீர்திருத்த புரட்சி கருத்துக்கள் , புரட்சி பாடல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் .

ராஜகுமாரி
மந்திரிகுமாரி
மருத நாட்டு இளவரசி
மர்மயோகி
சர்வாதிகாரி
ஜெனோவா
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மலைக்கள்ளன்
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
புது மைப்பித்தன்
ராஜராஜன்
மகாதேவி
நாடோடி மன்னன்
அரசிளங்குமரி
பாக்தாத் திருடன்
மன்னாதி மன்னன்
ராஜாதேசிங்கு
ராணி சம்யுக்தா
விக்கிரமாதித்தன்
காஞ்சி தலைவன்
ஆயிரத்தில் ஒருவன்
அரசகட்டளை
அடிமைப்பெண்
மதுரையை மீட்டசுந்தர பாண்டியன்

மேற்கண்ட 26 படங்களை இன்று பார்த்தாலும் மனதிற்கு அளவில்லாத ஆனந்தத்தை தருகிறது . தனியார் தொலைக்காட்சிகளில் இந்த படங்களை அடிக்கடி காணும் வாய்ப்பு கிடைக்கிறது .
தான் ஏற்று கொண்ட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக புரட்சி நடிகராக எம்ஜிஆர் நடிப்பு தொழிலில் இருந்த நேரத்தில் அவரைப்பற்றி பலவிதமான எதிர்மறையான தாக்குதல்கள் , அவர் நடிப்பை பற்றி கிண்டல்கள் , வயதான நடிகர் என்று தனிப்பட்ட விமர்சனங்கள் என்று எதிரிப்புகள் எல்லாவற்றையும் முறியடித்தது எம்ஜிஆரின் சாதனை.

எம்ஜிஆரை தாக்கியவர்கள் பிற்காலத்தில் எம்ஜிஆர் தோற்றத்தை இளமை என்று வாரி வரிந்து கொண்டு எழுதினார்கள் . எம்ஜிஆரை எவர் கிரீன் ஹீரோ , கட்டுக்கோப்பான தேகம் கொண்ட பேரழகன் , பொன்னின் நிறம் திரை உலக வசூல் மன்னன் ,இயற்கையான நடிகர் என்றும் எழுதினார்கள் .

எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தி [1977] அரசியலில் அதிமுக ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடித்து திரை உலகிலும் , ஆட்சியிலும் , அரசியலிலும் உலக அரங்கில் புகழ் பெற்ற மனித நேய தலைவராக எம்ஜிஆர் அவர்கள் புகழுடன் வாழ்ந்தது இன்னமும் மக்கள் இதயங்களில் நிலையாக இருப்பது கண்டு வியந்து நிற்கிறேன்
என்ன ஒரு அதிசய மனிதர் எம்ஜிஆர்
நிச்சயம் அவர் ஒரு தனிப்பிறவி

courtesy - sange muzhangu .- kalarasigan .

okiiiqugiqkov
12th November 2016, 08:56 PM
என்னை வியப்பில் ஆழ்த்திய நடிகர் எம்ஜிஆர் .

தமிழ் திரை உலகில் எத்தனையோ நடிகர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருந்தாலும் அந்தந்த கால கட்டங்களில் மக்களின் ரசனைக்கு ஏற்ப மாறுதல்கள் நிகழ்ந்தது . பெரும்பாலான நடிகர்கள் தங்களின் இளம் வயதில் நடித்தது குறுகிய காலத்தில் நடிப்பு தொழிலில் இறங்கு முகமாகி அடையாளம் இன்றி காணாமல் போனார்கள் .
1940 களில் மிகவும் பிரபலமான நடிகர்கள் தியாகராஜபாகவதர். பி யு .சின்னப்பா , ரஞ்சன் , எம் கே ராதா போன்றவர்கள் சில படங்களே நடித்து புகழ் அடைந்து மக்களால் மறக்கப்பட்டார்கள் .

1936ல் தன்னுடைய 19 வது வயதில் நடிக்க துவங்கிய எம்ஜி ராமச்சந்தர் என்ற எம்ஜிஆர் சதிலீலாவதி படத்தில் அறிமுகமானார் .11 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தன்னுடைய 30 வயதில் ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார் .

1947-1960 வரை எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்கள் சரித்திர படங்களே . .மன்னராக , தளபதியாக , போர் வீரராக , புரட்சி வீரராக , எல்லா சாகசங்களும் வல்லமை பெற்றவராக ,வீராதி வீராக அவர் நடித்த படங்கள் அனைத்தும் காவியங்களே . இன்றைய இளம் வயதினர் நிச்சயம் அன்றைய சரித்திர படங்களை பார்த்தால்தான் எம்ஜிஆரின் நடிப்பு , வீரம் , சாமர்த்தியம் , வித்தியாசமான நடிப்பு , புதுமையான சண்டை காட்சிகள் , தெள்ளு தமிழ் வசனங்கள் , சமுதாய சீர்திருத்த புரட்சி கருத்துக்கள் , புரட்சி பாடல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் .

ராஜகுமாரி
மந்திரிகுமாரி
மருத நாட்டு இளவரசி
மர்மயோகி
சர்வாதிகாரி
ஜெனோவா
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மலைக்கள்ளன்
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
புது மைப்பித்தன்
ராஜராஜன்
மகாதேவி
நாடோடி மன்னன்
அரசிளங்குமரி
பாக்தாத் திருடன்
மன்னாதி மன்னன்
ராஜாதேசிங்கு
ராணி சம்யுக்தா
விக்கிரமாதித்தன்
காஞ்சி தலைவன்
ஆயிரத்தில் ஒருவன்
அரசகட்டளை
அடிமைப்பெண்
மதுரையை மீட்டசுந்தர பாண்டியன்

மேற்கண்ட 26 படங்களை இன்று பார்த்தாலும் மனதிற்கு அளவில்லாத ஆனந்தத்தை தருகிறது . தனியார் தொலைக்காட்சிகளில் இந்த படங்களை அடிக்கடி காணும் வாய்ப்பு கிடைக்கிறது .
தான் ஏற்று கொண்ட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக புரட்சி நடிகராக எம்ஜிஆர் நடிப்பு தொழிலில் இருந்த நேரத்தில் அவரைப்பற்றி பலவிதமான எதிர்மறையான தாக்குதல்கள் , அவர் நடிப்பை பற்றி கிண்டல்கள் , வயதான நடிகர் என்று தனிப்பட்ட விமர்சனங்கள் என்று எதிரிப்புகள் எல்லாவற்றையும் முறியடித்தது எம்ஜிஆரின் சாதனை.

எம்ஜிஆரை தாக்கியவர்கள் பிற்காலத்தில் எம்ஜிஆர் தோற்றத்தை இளமை என்று வாரி வரிந்து கொண்டு எழுதினார்கள் . எம்ஜிஆரை எவர் கிரீன் ஹீரோ , கட்டுக்கோப்பான தேகம் கொண்ட பேரழகன் , பொன்னின் நிறம் திரை உலக வசூல் மன்னன் ,இயற்கையான நடிகர் என்றும் எழுதினார்கள் .

எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தி [1977] அரசியலில் அதிமுக ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடித்து திரை உலகிலும் , ஆட்சியிலும் , அரசியலிலும் உலக அரங்கில் புகழ் பெற்ற மனித நேய தலைவராக எம்ஜிஆர் அவர்கள் புகழுடன் வாழ்ந்தது இன்னமும் மக்கள் இதயங்களில் நிலையாக இருப்பது கண்டு வியந்து நிற்கிறேன்
என்ன ஒரு அதிசய மனிதர் எம்ஜிஆர்
நிச்சயம் அவர் ஒரு தனிப்பிறவி

courtesy - sange muzhangu .- kalarasigan .

http://i68.tinypic.com/10ns3gk.jpg

okiiiqugiqkov
12th November 2016, 09:00 PM
கோவை ராயலில் -ஆயிரத்தில் ஒருவன் மற்றும்

கோவை -டிலைட்டில் - இதய வீணை - வெற்றிகரமான 2 வது வாரம்

தகவல்கள் அளித்த நண்பர் திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

http://i67.tinypic.com/34gtxzt.jpg

சென்னையில் மறுவெளியீட்டில் 190 நாட்கள் ஆல்பட் காம்ப்ளக்ஸிலும்
160 நாட்கள் சத்யம் காம்ப்ளக்ஸிலும் ஓடி சாதனை புரிந்த படம் , மீண்டும் கோவையில் சாதனையை தொடர்வது மகிழ்ச்சியான செய்தி .

http://i65.tinypic.com/2hzlb8o.png

okiiiqugiqkov
12th November 2016, 09:06 PM
http://i66.tinypic.com/10dfuqu.jpg

கடந்த வாரம், தீபாவளி வெளியீடாக மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே வா " , பல முறை திரை அரங்குகளில்
திரையிடப்பட்டும், பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டும் , மீண்டும்
வசூலை வாரி குவித்துள்ளது . ஒரு வார வசூல் ரூ.1,02,000/-
தகவல் உதவி : நண்பர் திரு. எஸ். குமார், மதுரை.
http://i67.tinypic.com/2m76z6c.jpg

http://i67.tinypic.com/wltwxs.jpg

fidowag
12th November 2016, 10:54 PM
நாளை (13/11/2016) மாலை 6 மணியளவில் , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர சுவரொட்டி
http://i64.tinypic.com/fcjgr8.jpg

fidowag
12th November 2016, 10:55 PM
http://i64.tinypic.com/6zsojl.jpg

fidowag
12th November 2016, 11:00 PM
.கடந்த வாரம் , மதுரை மீனாட்சியில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போட்டது . அதன்
சுவரொட்டிகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i65.tinypic.com/2qwotir.jpg

fidowag
12th November 2016, 11:01 PM
http://i64.tinypic.com/260pmw7.jpg

fidowag
12th November 2016, 11:02 PM
http://i66.tinypic.com/2zf1spj.jpg

fidowag
12th November 2016, 11:04 PM
அரங்கத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது .
http://i67.tinypic.com/2d7hvk6.jpg

fidowag
12th November 2016, 11:04 PM
http://i63.tinypic.com/359zg5k.jpg

fidowag
12th November 2016, 11:05 PM
http://i65.tinypic.com/2rr7za8.jpg

fidowag
12th November 2016, 11:06 PM
http://i68.tinypic.com/rura5y.jpg

fidowag
12th November 2016, 11:07 PM
http://i67.tinypic.com/ff6zns.jpg

fidowag
12th November 2016, 11:08 PM
http://i65.tinypic.com/10dtwdt.jpg

fidowag
12th November 2016, 11:09 PM
http://i63.tinypic.com/107rjgl.jpg

fidowag
12th November 2016, 11:10 PM
http://i63.tinypic.com/2lkd1fp.jpg

fidowag
12th November 2016, 11:30 PM
நாளை (13/11/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " ஒளிபரப்பாகிறது .

http://i68.tinypic.com/2u431ty.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

Richardsof
13th November 2016, 06:20 PM
எம்.ஜி.ஆர் என்ற கர்மயோகி


ஒளி படைத்த கண்களையும், உறுதி கொண்ட நெஞ்சையும், தலை சிறந்த வாய்மை, தூய்மை, நேர்மை நிறைந்த கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் ஏழைப்பங்காளரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தாயை வணங்காத பொழு தில்லை, ராமாவரம் தோட்ட இ;ல்லத்தில் கோயில் கொண்டுள்ள அன்னை சத்யாவின் திருஉருவத்தை வணங்கி விட்டுத்தான் நாள் தோறும் வெளியே கிளம்புவார்.
ஈராயிரம் ஆண்டுகள் அன்னை தமிழ் கலைத்தாய் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன் வைரம் பாய்ந்த தேக்குமர உடலமைப்புக் கொண்டு பளபளக்கும் தங்க மேனித்தோற்றமும், சிங்க நடையும், புன்னகை பூக்கும் புன் முறுவலும்,இனிய குரல் வளமும், அனைவரையும் அன்பால் பாசமுடன் ஈர்க்கும் நேசமும் ஒருசேரஇருந்தவர். ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை ஈர்க்கும் கோமான்.


குடும்பச் சூழ்நிலை காரணமாக நாடகங்களில் நடித்தார். பின்னர் அதில் அனுபவம் பெற்ற அவர் திரைப்படங்களில் நடித்தார். யாருடைய அடிச்சுவட்டையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியை (ஸ்டைலை) பின்பற்றி நடிக்கத் தொடங்கினார். காதல் காட்சிகளில்-நடனக்காட்சிகளில், சண்டைக்காட்சிகளில், புதிய டிரெண்டை உருவாக்கி, அமைத்து திரைப்படங்களில் மக்கள் மனதில் இடம் பெற்று மக்கள் திலகம் ஆனார்.


இதன் விளைவாக எம்.ஜி.ஆர் நாடக மன்றம் அமைத்து இன்பக்கனவு, அட்வகேட் அமரன் நாடகங்களில் நடித்ததின் மூலம்-நாடக விரும்பிகள் மட்டுமல்ல, நாட்டு மக்களும் எம்.ஜி.ஆரை தெரிந்து கொள்ள முடிந்தது.

எம்.ஜி.ஆரின் இயல்பான நடிப்பைக் கண்டு பட்சிராஜா ஸ்டூடியோவின் அதிபரான எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு தமிழின் மட்டுமல்ல, மற்ற இந்திய மொழிகளில் மலைக்கள்ளன் படத்தில் நடிக்க வைத்து, தயாரித்து இயக்கவும் செய்தார்.
அவரது நடிப்பு சகநடிகர்களுக்கு ஆச்சர்யத்தை விளை வித்தது. அவரது கடினமான உழைப்பால், சிலம்பம், வாள் சண்டை, நடனம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்து மக்கள் கலைஞனாக, இந்த நூற்றாண்டின் வசூல் நடிகனாக தமிழகமெங்கும் வெற்றிக் கொடி ஏற்றி பவனி வந்தார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்; திலையுலகில் நுழைந்து நடிப்புலகில் கொடிகட்டிப்பறந்த காலத்திற்கு முன்பும், அவரது மறைவுக்கு பின்பும் அவரது நடிப்பாற்றலை பின்பற்றி மற்ற நடிகர்கள் நடிக்க முயல்கிறார்களே தவிர, அவர்களால் முடியவில்லை என்பதை விட மக்கள் அந்த நடிப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பN;த உண்மை. அதுமட்டுமல்ல அவர் நடித்த படங்களின் தலைப்பு கொண்ட பெயர்கள் அவருக்கே சொந்தம் என்ற வகையில் மற்ற நடிகர்கள் அந்த பெயரில் வெளியான படங்களுக்கு இன்றும் ஆதரவு தரவில்லை. அந்த வகையில் ரகசிய போலீஸ், ராமன் தேடிய சீதை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், வேட்டைக்காரன் மக்களிடையே பேசப்படவில்லை. அவரது நடிப்பு சாதனை அவருக்கு மட்டும் சொந்தம் என்று மக்கள் அசைக்க முடியாத தனி முத்திரை குத்திவிட்டார்கள்.
எப்போது திரையிட்டாலும் சளைக்காமல் பார்க்கத் தோன்றும் படங்கள் எம்.ஜி.ஆர் படங்கள் தான்.


தன்னலமற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் இயல், இசை, நாடகம், அரசியல் ஆன்மீகம் என பன்முகம் கொண்ட மருதூர் கோபலாமேனன் இராமச்சந்திரன், அனைவராலும் ஒட்டு மொத்தமாக வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். அவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும், நடைமுறையிலும் செயல்பட்டவர் என்பது அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கும், தொடர்புடையவர் களுக்கும், ரசிகர்களுக்கும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் நன்றாகவே தெரியும்.

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் சுருக்கமாக எம்.ஜி.ஆர் தமிழக நடிகர்களில் மூம்மூர்;த்திகளில் ஒருவர். எதையும் திட்டமிட்டு செய்வதில் வல்லவர் என்பதை விட ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை திரைப்படங்கள் வாயிலாக எடுத்துரைத்து அதில் வெற்றிகரமாக நடந்து தமிழகத்தின் முதல்வரானார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் ஒரு மிக நல்ல பழக்கம் இருந்தது. யார் கடிதம் எழுதினாலும் தம் கைப்பட பதில் எழுதி வருவார். தவிர்க்க முடியாத சில நேரங்களில் அவரது நேர்முக செயலாளராக இருந்த சாமி அவர்கள் பதில் எழுதி எம்.ஜி.ஆர் கையெழுத்திடுவார். இதற்கு அவர் கூறும் காரணம.; யாராவது நேரில் வந்தால் பேசாமல் இருக்கோமா? டெலிபோனில் கூப்பிட்டால் உடனே பதில் சொல்லாமல் இருப்போமா? நேரில் வரவோ, டெலிபோனில் தொடர்பு கொள்ளவோ வசதிப்படாதவர்களும், வாய்ப்பில்லாத வர்களும் கடிதம் போடும் பொழுது, அதையும் நேரில் வந்ததாக பாவித்து பதில் சொல்வது தானே நியாயம் என்றார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.


அடிமைப்பெண் பட ஷ_ட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர் குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தாhர்.

முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல என்பாராம்.
இவருக்கு புரட்சி நடிகர் என்று முதல்வர் கலைஞர் கருணாநிதியும், பொன்மனச்செம்மல் என்று கிருபானந்த வாரியாரும், கொடுத்து சிவந்த கரம் என்று கும்பகோணம் ரசிகர்களும், வாத்தியார் என்று திருநெல்வேலி ரசிகர்களும், எட்டாவது வள்ளல் என்று எம்.ஜி.ஆர் பக்தரான ‘பாக்யா” சினிமா பகுதி ஆசிரியரும், எழுத்தாளரும், நூலாசிரியரும், பத்திரிக்கையாளருமான மணவை பொன்.மாணிக்கம் ‘எட்டாவது வள்ளல்” என்று அவர் எழுதிய எம்.ஜி.ஆர்; அருமை பெருமைகள் விளக்கி வெளியிட்ட நூலின் மூலம் ‘எட்டாவது வள்ளல்” என்று பெருமைப்படுத்திய புத்தகத்தின் மூலமும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்று பெயர் சூட்டி கலைப்பூங்கா சினிமா செய்திகளில் வெளியிட்டதை மேலும் பெருமைபடுத்தும் வகையில் மெருகேற்றி அவர் அதிமுக ஆரம்பித்த காலகட்டத்தில் புரட்சித்தலைவர் என்று கலைப்பூங்கா பெருமைப் படுத்தியதை தொடர்ந்து தென்னகம் நாளிதழில் முன்னால் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி தொடர்ந்து புரட்சி தலைவர் என்று பிரபலபடுத்தி வழங்கி மகிழ்ந்தார்.

மன்னவன் ஆனாலும் மாடு ஓட்டும் சின்னவனானாலும் மண் குடிசையில் வாழும் குசேலனானாலும் மற்ற யாரையும் சந்திக்கச் சென்றாலும், வேறு யாராவது தன்னை சந்திக்க வந்தாலும் முதலில் வணக்கம் சொல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். சில சமயங்களில் வந்தவர்கள் முந்திக் கொண்டு வணக்கம் சொல்லிவிட்டாலும், வணக்கம் சொல்லிய அவர்களுக்கு ஒரு வணக்கமும், தன் சார்பில் ஒரு வணக்கம் சொல்வதையும் பழக்கமாக கொண்டிருந்தார். அதே நேரம் அவர்கள் எதிரிலோ, அல்லது பொது மேடைகளில் கால் மேல் கால் போட்டு உட்கார மாட்டார். ஒரு நாளும் வாக்கிங் போகாமல் இருந்ததில்லை.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்; தொட்டது துலங்கும். கைபட்டது மணக்கும் என்பார்கள். ராசியான கரங்களுக்கு சொந்தக்காரர் அவர். திரையுலகமாகட்டும், அரசியலாகட்டும் மாபெரும் வெற்றி நடைதான் போட்டிருக்கிறார். தோல்விக்கும் அவருக்கும் தூரம்தான். எப்போதாவது சில சமயங்களில் தோல்வி நெருங்குவது போலிருக்கும். அது கானல் நீராகவே தோன்றும். அதுவும் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும். வெற்றி மீது ‘வெற்றி வந்து என்னைச் சேரும் “என்று பாடிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரே எதிரிகளை வீழ்த்துவதிலும் ஏழைகளை உயர்த்துவதிலும்,ஏழையின் கண்ணீர் குமுறும் எரிமலையின் நெருப்பு என்று உணர்ந்து வாழ்ந்து காட்டிய கர்மயோகி.

பொதுவாக எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் தனது இமேஜுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதில் படு ஜாக்கிரதையாக இருந்தார். திரைப்படங்களில் சிகரெட் பிடிக்க மாட்டார். மது அருந்த மாட்டார். தாய்க்குலத்தைப் போற்றி புகழுபவராக இருந்ததால் மக்கள்மனதில் அவருக்கு நீங்கா இடத்தைப் பிடித்து மக்கள் திலகமானார்.

மதுவிலக்கு கொள்கையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காட்டிய தீவிரமும், ஏழை எளிய மக்கள் மீது அவர் கொண்ட பரிவும், பாசமும், நேசத்தையே காட்டுவதாக அமைந்தது. சட்டசபையில் மதுவிலக்கை ரத்து செய்யக் கூடாது என்று கடுமையாக எதிர்த்து வாதிட்டார். ஆனால் அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் செவி சாய்க்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மேடைகள் தோறும் மது விலக்கு ரத்தை எதிர்த்து முழக்கமிட்டார்.

30-8-1972ல் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு நாள் விழாவில் தலைமை வகித்து பேசும் போது மதுவிலக்கு ரத்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

1972-ஆம் டிசம்பர் 2ஆம் தேதி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஒலிபெருக்கி இல்லாமலேயே நீண்ட நேரம் பேசினார். இந்த சட்டசபை செத்து விட்டது என்று முழங்கி அன்று சபையை விட்டு வெளியேறினார். சட்டசபையை விட்டு படி இறங்கிய போது எம்.ஜி.ஆரை ஆளும் கட்சியினர் ஆபாசமான வார்த்தைகளால் இழிவாகப் பேசி எம்.ஜி.ஆர். மீது செருப்பை வீசினார்கள்.பின்னர் முதல்வராகத்தான் சட்டசபைக்கு திரும்பினார்.


பொதுவாக அவரது இயல்பான குணம் முன்பின் அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து நான் எம்.ஜி.ராமச்சந்திரன்-சினிமா நடிகர் என்று அறிமுகம் செய்து கொள்வார்.ரொம்பவும் நெருக்கமான வர்களை ஆண்டவனே என்று தான் அழைப்பார்.
அவரை எதிர்ப்;பவர்கள் அவரை மலையாளி என்று விமர்சித்தப் போதிலும் தமிழன் என்று காட்டிக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார். பொதுவாக மலையாள பத்திரிகையாளர்களை பார்க்கும்போது மலையாளத்தில் பேசமாட்டார். தமிழிலேயே தான் பேசுவார். அந்த விஷயத்தில் கூட தனது இமேஜுக்கு களங்கம் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

அதிமுகவை ஆரம்பித்த புதிதில், தேர்தல் பிரச்சாரத்திற்காக பாண்டிச்சேரி மாநிலம் மாஹிக்கு எம்.ஜி.ஆர் சென்றார். அங்கு பெரும்பான்மையான மக்கள் மலையாளம் பேசுபவர்கள். அவர்கள் எம்.ஜி.ஆரிடம் மலையாளத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கு எம்.ஜி.ஆர் நான் வளர்ந்தது, புகழ்பெற்றது என அனைத்துக்குமே காரணம் தமிழ்நாடுதான். எனக்கு தெரிந்தது தமிழ் மட்டுமே. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் பேசும் தமிழில் என் பேச்சைக் கேளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கலைந்து செல்லலாம் என்றார். கூட்டத்தினர் வாயடைத்துப்போய் எம்.ஜி.ஆரின் தமிழ் பேச்சை ரசித்தனர்.

எம்.ஜி.ஆர் அரசியலில் வருவதற்கு திரையுலகை திட்டமிட்டே பயன்படுத்தினார். கச்சிதமாக வியூகம் வகுத்து சரியான நேரத்தில் அரசியலில் இறங்கி அங்கேயும் பல அற்புதமான சாதனைகளை நிகழ்த்தினார்.
எம்.ஜி.ஆர் உடல் எந்த அளவு வலிமையானதோ அந்த அளவு அவர் உள்ளம் மென்மையானது. அவர் குடும்பத்தினர் மீது மட்டுமல்ல தனது ரசிகன், தொண்டர்கள் மீது வைத்திருக்கும் பாசமும், நேசமும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வானது.
எம்.ஜி.ஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக் கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன? என்பது தான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும் கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும் போது ஒரு முறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.
ஒருவன் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலே போதும் எந்த தவறும் செய்ய மாட்டான். இப்பொழுது எந்த நடிகருக்கும் இந்த பண்பும், அன்பும், பாசமும் இல்லை.
யாரையும் பாராட்ட வேண்டுமென்றால், அவர்களுடைய திறமையைப் பாராட்டுவதோடு பணமும் கொடுத்து அவர்களுக்கு உற்சாகப்படுத்துவது எம்.ஜி.ஆரின் தனிச் சிறப்புகளில் ஒன்று.
உலகமெங்கும் வியாபாரத்திற்கும் தமிழ் பெருங்குடி மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அவர்களது இதயத்தில் தங்கச்சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் சக்கரவர்த்தித்திருமகன். சிந்தை ஒவ்வொன்றையும் சிலிர்க்க செய்யும் வகையில், அவரது வழித்தோன்றல்களை விழியின் பார்வையால் இனிய கம்பீரமான இனிய குரலில் இரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று அழைத்திட்ட பொன் ;மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சி நடிகர், வாத்தியார், என்று எல்N;லாராலும் அன்போடு அழைத்திட்ட புரட்சித் தலைவர் தீர்க்கதரிசி – பாரத் ரத்னா எம்.ஜி.ஆர்; நம்மை விட்டு பிரிந்து வங்க கடலோரம் தங்கத்தலைவர் மீளாத் துயிலில் ஆழ்ந்திருக்கிறார்.

courtesy - indrajith - net

Richardsof
13th November 2016, 06:23 PM
அன்னைத் தமிழே!
அன்னமிட்டவரின் முகமோ
'ஆசைமுகம்'
அவர்!
மண்ணைவிட்டு விண்ணை அடைந்தாலும்,
உன்னை,
என்னை,
தமிழ் மண்ணை மறவாத...
உலகத் தமிழ் ரசிகர்கள் உதிரத்தில்
இரண்டறக் கலந்துவிட்ட
உயிரினும் மேலான...
இரத்தத்தின் இரத்தம்.


"உழைக்கும் தோழர்களே ஒன்றுக் கூடுங்கள்!
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்" - என்று

உலகத்தை தமிழர்களின்
திலகமாக்கி மகிழந்தவர்
இறவாப் புகழ் 'இதயக்கனி'
எம்ஜிஆர்!


மகிழ்ச்சி!!!
மக்கள்...
'திலகம் இடுகையிலே'
மகிழ்ச்சி.


மகிழ்ச்சி!
மக்கள் திலகம் -புகழ்
கவி பாடுகையிலே!
மட்டற்ற மகிழ்ச்சி!


தமிழ் உறவுகளே!
தரணியில்...
சிறகுகள் இல்லாமல்
பறவைகள் இல்லை!

திறமைகள் இல்லாமல்
திரை உலகில்
எவர் தொடுவார் வெற்றியின் எல்லை?


"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி"

தமது கடுமையான உழைப்பால்
வெற்றியின் எல்லையை எட்டியவர்
எழுச்சி ஏந்தல் எம்ஜிஆர்.


பாட்டால் புத்தி சொன்ன
பாட்டுடைத் தலைவருக்கு,
தமிழ் நாட்டை ஆண்ட,
தங்கத் தலைவருக்கு,
மிகவும் பிடித்த பாடலின் வரிகள்
எவை தெரியுமா?


"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
"பாசவலை" படத்தில் எழுதிய....

"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்

குள்ள நரி தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம்

தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்

சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்"

உனக்கெது சொந்தம்?
எனக்கெது சொந்தம்?
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா?

-இந்த பளிங்கு வரிகளும்,
பவழ வார்த்தைகளும்தான்,
எம்ஜிஆர் மனதில்,
குடியிருந்த கோயிலில் பதிந்த கல்வெட்டு எனலாம்.







கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!

அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.

நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!

இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.

தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!

"இருந்தாலும் மறைந்தாலும்,
பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"

போர்!!!
போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.

எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!

ஆரம்ப நாட்களில்...
திரைவானில் மின்னிய
எம்ஜி ராம் சந்தர் - என்னும் நட்சத்திரத்தை
எம்ஜி ராமச்சந்திரன் -என்று
பெயர் மாற்றம் செய்தவர் யார் தெரியுமா?

அறிஞர் அண்ணாவின்,
ஓர் இரவு/ வேலைக்காரி கதைகளை,
நாடகமாக்கிய "நடிப்பிசைப் புலவர்"
கே.ஆர். ராமசாமி அவர்கள்.

அதனால்தன்,
சென்னையில் உள்ள பதினொரு மாடி
அரசுக் கட்டிடத்துக்கு,
கே.ஆர். ராமசாமி மாளிகை என்று பெயர் சூட்டினார் எம்ஜிஆர்!

தனது பெயரை மாற்றியமைத்தவருக்கு,
பெயரை சூட்டி மகிழ்ந்த
சுந்தர புருஷர் எம்ஜிஆர்!


பிறர் துன்பம் கண்டால்
தூணாக துணை நிற்பார்
தூமணி மாடத்து மணிபுறா
'மாடப் புறா' எம்ஜிஆர்.

நாகர்கோயிலில் கலவாணர் என் எஸ் கே,
சென்னையில் நடிகை கண்ணாம்பா / நாகேஷ்
சுருளிராஜன், எஸ்.வி.சுப்பையா, கவியரசு கண்ணதாசன்,
டி.ஆர். ராமண்ணா, ஐசரி வேலன் போன்ற
சக நட்சத்திரங்களின் வீடுகள்
ஏலம் போனபோது அவைகளை மீட்டுத் தந்த
'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியர்'
எம்ஜிஆர்.


இவர்!
கேட்டு கொடுப்பதைவிட,
கேளாது கொடுக்கும் கொடை மகன்.

மடை திறந்து ராஜ நடை போடும் மகாநதி!

கடைக் கண்ணால் காரியம் ஆற்றும்
காவிய த் தலைவர்.

நட்டாற்றில் நிற்கும் நலிந்தவரை கரை சேர்க்கும்
'படகோட்டி'


செம்மொழியாம்....
செந்தமிழை செதுக்கி
கவி புனைந்த "பாரதிக்கு"
சிலை எடுத்த கலை சாரதி,
கலவாணியின் அருள் பெற்ற சாரதி
எம்ஜிஆர்.

வறுமையின் பிடியில் வளர்ந்து,
படிப்படியே உழைப்பால் உயரந்த,
'தொழிலாளி'.

அயல்நாட்டில் இருந்தபடியே
தனது,
வெற்றி மயிலை
தமிழகத் தேர்தலின்போது
தோகை விரித்தாடச் செய்த மாயவர்.

துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தாலும்
மீண்டும்
துளிர்விட்டு பூத்த முல்லைப் பூ!
மறு அவதாரப் புருஷர்
'மர்மயோகி' எம்ஜிஆர்.

பரங்கிமலையை...
வெற்றி கிரிவலம் வந்த
பௌர்ணமி நிலவு எம்ஜிஆர்.

பருவங்கள் பல வந்தாலும் -வாழ்வு
பயனற்றே போகும்,
வள்ளல் குணம் போற்றாவிடில்!!!

சருகான பயிரும் தழைக்கும்
உருகாத பொன்மேனியார் சதிராடும்
எம்ஜிஆர் விழிபட்ட ஒருபோதிலே!!

முயற்சிக்கு வெற்றி
முப்பொழுதும் உண்டு - அதை
அயற்சி அடையாது...
பயிற்சியாக பருகுவோர் -தம்
'உழைக்கும் கரங்களில்' தழைக்கும்
வெற்றி என்னும் மலர்ச் செண்டு!
எடுத்துக் காட்டி வாழ்ந்த
வீழாத வித்தகர் எம்ஜி ஆர்!






ஆட்சிப்பீடம் என்பது,
எப்படி இருக்க வேண்டும்
-என்பதை....
அன்றே!
"குலே பகாவலியில்"
படம் பிடித்துக் காட்டிய
'ஒளி விளக்கு' எம்ஜிஆர்.

இதோ!
மக்களின் உதவி என்னும் நூலைக் கொண்டுதான்
பதவி என்னும் பட்டம் வானாளவப் பறக்க வேண்டும்

நிலையான செங்கோல்!

நேர்மையான ஆட்சி!

இவைதான் முழுமையான ஆட்சிப்பீடம் என்றும்,

ஆண்/பெண் வித்தியாசம் ஆட்சிப் பீடத்துக்கு இல்லை
(புரட்சித் தலைவியின் ஆட்சிக்கு அன்றே ஆருடம் சொல்லி விட்டார் எம்ஜிஆர் போலும்)

அர்த்தமுள்ள ஆட்சிக்கும் மாட்சிமை பொருந்திய விளக்கம் காட்டிய...
'கலங்கரை விளக்கம்' எம்ஜி ஆர்.

அதியமான் ஔவைக்கு தந்ததோ
அரிய சிறப்புடைய நெல்லிக்கனி
அதுபோல்!
தன்னிடமிருந்த 'இதயக்கனி'யான
தமிழ் கலைக் களஞ்சியத்தை
தஞ்சை 'ராமையா தாஸ்'க்கு வழங்கிய
எட்டாவது வள்ளல் எம்ஜிஆர்!

கல்விக் கூடங்களில்
பசி பட்டினியோடு
இனி!
கல்லாமை இல்லை என்று நல்லாண்மையோடு,
நாட்டுக்கு சத்துணவுத் திட்டம் போன்றவற்றை
பாடத் திட்டங்களாக்கித் தந்தவர்,
சென்னைப் பல்கலைக் கழகத்தின்
சிறப்பு
டாக்டர் பட்டம் பெற்ற எம்ஜி ஆர்.


வாத்தியார் எம்ஜிஆர்

கவியரசர் கண்ணதாசன் பாடல்களில்
சில வார்த்தைகளை...
மாற்றம் செய்ய வேண்டி எம்ஜிஆர் கேட்பதுண்டு
அப்பொழுது கண்ணதாசன் அவர்களோ!
வாத்தியார் ஆயிற்றே அவர் திருத்தம் செய்யத் தான் செய்வார் என்றும்,
வாத்தியார் என்று மக்கள் எம்ஜிஆரை அழைப்பதற்கான காரணத்தையும் அவர் வேடிக்கையாக சொன்னதுண்டு.


இதய தெய்வம் எம்ஜிஆர் - இவர்
தாய்மையின் சிறப்பை பொய்மை கலவாது....
மெய்யுரைத்த...
பொதிகை மலைத் தென்றல்
அதியமான் வழித் தோன்றல்.

பாரத ரத்னா எம்ஜிஆர் குறித்து
பிரபல எழுத்தாளர்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
பகிர்ந்தளித்த செய்தி!

"ஒருமுறை திருப்பத்தூரில் மாபெரும்
பொதுக் கூட்டம் திரும்பிய பக்கமெல்லாம்
மக்கள் வெள்ளம்.

ஆண்களும், பெண்களும் அலை கடலென திரண்டு வந்திருந்தனர்.

அப்போது தன்னை தரிசனம் காண வந்த மக்கள் மீது எம்ஜிஆர் கரிசனம் கொண்ட காட்சி
அப்பப்பா!
அது கண்கொள்ளா கவின்மிகு காட்சி என்கிறார்.

அதாவது கூட்டம் முடியும் நேரத்தில், பொதுமக்களை பார்த்து, எம்ஜிஆர் அவர்கள்,
ஆண்களுக்கு மட்டும் நான் ஒரு செய்தி சொல்ல போகிறேன். ஆகையால் ஆண்கள் மட்டும் நில்லுங்கள். தயவுசெய்து பெண்கள்
(தாய்க் குலங்கள்) கூட்டத்திலிருந்து வெளியேறி விடுங்கள் என்றார்.

பிறகு ஆண்கள் மட்டும் அங்கேயே இருப்பதை பார்த்த எம்ஜிஆர்.
காத்திருந்தமைக்கு மிக்க நன்றி!
இப்போது நீங்களும் இங்கிருந்து செல்லலாம். கூட்டம் முடிந்து விட்டது என்றார்.

பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்,
அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அல்லல்
படக் கூடாது என்பதை எண்ணிப் பார்த்து
எம்ஜிஆர் அவ்வாறு சொல்லியதை
பார்க்கும்போது, தாய்மைக்கு அவர் தரும் முக்கியத்துவம் தெரிகிறது.

எம்ஜிஆரின் தொலை நோக்குப் பார்வை:-

வருங்காலம் வாழ்வாதாரம் நதி தானய்யா
(காவிரி)
வரும் காலம் தமிழகத்துக்கு எப்போதய்யா?
கர்நாடகம்!
தரும் காலம் வருமோ? இனி சொல்லுமய்யா!
அரும்பாட்டில் அன்றே அமரர் அருளினாராய்யா!

"காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது!
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது!
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே!
பிரிவு மாறி உலகில் ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே"

"நதிநீர் இணைப்பு"க்கு
'உரிமைக் குரல்' தந்தவர்
குறள் போற்றும் குணமுடைய,
எம்ஜிஆர் அவர்கள்.

அழகின் சிரிப்பே!
உழவின் சிறப்பை....
பொன் விளையும் பூமிக்கு
விதைத்த விவசாயி!

மக்காளின் பசிப் பட்டினியை
போக்கியதாலோ?
மாற்றுக் கிட்னி - உமக்கு
மருந்தாய் கிடைத்தது.


தர்மம் தலைக் காக்கும் என்பதை,
தாய் சொல்லை தட்டாது சொன்ன,
தாயைக் காத்த தனையனே!
நீங்கள்!
இராமாவரம் தோட்டத்தின் ...
இறவாப் புகழ் மலர்.

தற்போது "புனிதராக" மாண்பினை அடைந்த அன்னை தெரேசா அவர்களுக்கு,
அவர்கள் பெயரில் "பல்கலைக் கழகம்" உருவாக்கிய உன்னத உள்ளம் கொண்டவர் எம்ஜிஆர்.

தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம்

தஞ்சை பெரிய கோவிலை சீரமைத்த சீராளர்!

உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் அரங்கேற்றிய அறங்காவலர்.

ஒருவர் மட்டுமே ஓட்டிச் செல்வதாய் இருந்த
மிதி வண்டியை...
(டபுள்ஸ்)
இருவர் செல்ல அனுமதி அளித்து
அதனை
'காதல் வாகனம்' ஆக்கிய கருணை வேந்தர்.

வாடிய உள்ளங்களுக்கு,
தான் தேடிய செல்வத்தை,
அவர்களை நாடி அளித்த 'நாடோடி மன்னன்'.

இலவச சீருடை/இலவசக் காலணி
இரண்டையும் மாணவ/மாணவியருக்கு
"பரிசு" அளித்த மக்கள் முதல்வர்.

கர்மவீரர் காமராஜர் பெயரில்,
அவரது பிறந்த நாளில்,
விருது நகரை தலை நகராக கொண்டு ,
"காமராஜர் மாவட்டம்"
என்று புதியதாய்,
ஒரு மாவட்டத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்.


வெள்ளிதிரையில் புரட்சி நடிகருக்கு,
உதட்டின் கீழ் குருதி கண்ட பின்புதான்
கூண்டுக்கிளியாய் அடைப் பட்டிருந்த
அவரது குரோதம் கூண்டை விட்டு வெளியேறி
பறக்கும்/ சிறக்கும்.


நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கும் உதவக் காணீர்!
புழுவுக்கும் உதவக் காணீர்!
புகழ் வேந்தர் எம்ஜிஆர் புகழ்
"புதிய பூமி"யில் ஒளிரக் காணீர்!


யாதும் ஊரே யாவரும் கேளீர்!

"மதுவும் புகையும் மறத்தல் நன்று!

சூது கவ்வாத வாழ்வே சான்று!


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)

உலகில் பிறந்தோம், இறந்தோம் என்றிராது,
இறந்தும் இறவாப் புகழுடன்,
இறவாத இலையில்...
இரட்டை இலையில்,
இறைவனாய் வாழ்கிறார்
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்!





"பற்றுக பற்றற்றார் பற்றினை"

பற்றுவோம் பரமனை வேண்டியே!!!

நூற்றாண்டு நாயகர் எம்ஜிஆர்
புகழினை போற்றுவோம்!

"இன்று போல் என்றும் வாழ்க"
மனிதப் புனிதரின் மங்காத புகழ்!

பல்லாண்டு வாழ்க!!! வளர்க!!!


courtesy -புதுவை வேலு

Richardsof
13th November 2016, 06:31 PM
HAPPY BIRTH DAY TO P.SUSEELA MADAM TODAY.

P. S SONGS IN MAKKAL THILAGAM MGR MOVIES

1962 Rani samyuktha oh! Vennila oh! Vennila vanna KVM TMS
1966 petrAldhAn piLLaiyA chellakkiLiyE mellap pEsu MSV
1963 Periya idathup penn thulli odum kAlgalenge MSV-TKR TMS
1963 Periya idathup penn ragasiyam parama ragasiyam MSV-TKR
1963 periya idathup penn kattOdu kuzhalAda Ada, Ada MSV-TKR LRE
1963 Periya idathup penn antu vanthathum ithe nila MSV-TKR TMS
1963 Periya idathup penn antru vanthathum ithe nila(sad) MSV-TKR TMS
1973 pattikkAttu ponnaiAh pottupOle ponnai konjam thottup KVM
1973 pattikkAttu ponnaiAh oru varusham oru varusham KVM TMS
1973 pattikkAttu ponnaiAh e machchAn en ponnu machchAn KVM TMS
1973 pattikkAttu ponnaiAh alaiparthu (ayyayya mella thattu) KVM
1961 pAsam uravu solla oruvarintri vAzhbavan MSV-TKR Saroja Devi
1961 pAsam thEr yEdhu silai yEdhi thirunAl MSV-TKR Saroja Devi
1961 pAsam pAl vannam paruvam kandu MSV-TKR PBS MGR, Saroja Devi
1963 parisu ponnulagam nOkki pOgintrOm KVM TMS
1963 parisu koondhal kaRuppu kungumam KVM TMS
1966 petrAldhAn piLLaiyA kaNNan piRandhAn engaL kaNNan MSV TMS
1966 petrAldhAn piLLaiyA koyilai thEdi deivam(nalla nalla-sad) MSV
1962 Rani samyuktha nilavenna pesum KVM TMS
1962 Rani samyuktha mannavar kulam pAramma KVM
1972 rAman thEdiya sEthai porumayilE poomagalAi MSV
1972 rAman thEdiya sEthai nalladhu kaNNE kanavu MSV TMS MGR, JJ
1972 rAman thEdiya sEthai thiruvalarchelviyo MSV TMS MGR, JJ
1968 ragasiya police 115 unnai enni ennai marnthEn MSV MGR, JJ
1968 ragasiya police 115 santhanam kungumam konda MSV JJ
1968 ragasiya police 115 kaNNE kaniyE muththE maNiyE MSV TMS MGR, JJ
1968 ragasiya police 115 ennap poruththam namakkuL indha MSV TMS, MGR, JJ MGR, JJ
1957 pudhumai pithan thEn madhuvai vandinam thEdi G. Ramanathan
1968 pudhiya bhoomi vizhiye vizhiye Unakkenna velai MSV TMS
1968 pudhiya bhoomi nethiyile pottu vechen MSV
1968 pudhiya bhoomi nAn thAndi kAthi naLLa muthu pEthi MSV LRE
1968 pudhiya bhoomi chinnavaLai mugam sivandhavaLai MSV TMS
1966 petrAldhAn piLLaiyA sakkarakkatti rAjAththi MSV TMS
1966 petrAldhAn piLLaiyA nalla nalla pillaigalai nambi MSV
1963 parisu kAlamenum nadhiyinilE KVM
1963 parisu eNNa eNNa inikkudhu, EdhEdhO KVM TMS
1964 Padagoti ennai eduthu thannai koduthu MSV-TKR
1964 Padagoti azhagu oru rAgam MSV-TKR Jayanthi
1971 oru thAi makkaL kaNNan endhan kAdhalan MSV TMS
1971 oru thAi makkaL ayiram kannukku virunthagum MSV
1976 Oorukku Uzhaippavan azhagenum Oviyam inge MSV KJY
1968 Oli vilakku nAnga pudhusA kattikkitta MSV MGR, JJ
1968 Oli vilakku iraiva un mAligayil MSV Sowcar Janaki
1975 Ninaithadhai mudippavan oruvar mEdhu oruvar sainthu MSV TMS MGR, Manjula
1975 Ninaithadhai mudippavan nE Thottu pesinAl nAn MSV
1975 Ninaithadhai mudippavan kollayittavan nE than MSV VJ
1974 Netru Intru nAlai nerungi Nerungi pazhagum podhu MSV TMS MGR, Manjula
1974 nEtru indru nALai nE ennenna sonnAlum kavidhai MSV TMS MGR, Manjula
1974 nEtru indru nALai innoru vAnam, innoru nilavu MSV TMS MGR, Latha
1971 nErum neruppum irandu kangal pesum mozhiyil MSV SPB
1971 nErum neruppum kanni oruthi madiyil, kAlai oruvan MSV TMS
1963 nEdhikkup pin pAsam vAnga vAnga gopalayya KVM
1964 Padagoti pAtukku pAteduthu MSV-TKR TMS Saroja Devi
1964 Padagoti thottal Poo malarum MSV-TKR MGR, Saroja Devi
1963 parisu alaipArthu KVM TMS
1966 paRakkum pAvai yAraithAn nambuvathO MSV
1966 paRakkum pAvai unnaithane Yei unnaithane MSV TMS MGR, Saroja Devi
1966 paRakkum pAvai nilavennum Adai koNdALO MSV TMS MGR, Saroja Devi
1966 paRakkum pAvai kalyANa nAL pArkka chollalAmA MSV TMS MGR, Saroja Devi
1963 panathottam pesuvathu kiliya, illai pennarasi MSV-TKR TMS
1963 panathottam oru nAl iravil kann urakkam MSV-TKR
1963 panathottam javvathu medayittu sarkarayil MSV-TKR TMS
1965 paNam padaiththavan thannuyir pirivadhai pArthavar illai MSV-TKR TMS
1965 paNam padaiththavan mAnikka thottil angirukka MSV-TKR TMS
1965 panakkara kudumbam vAdiyamma vAdi vandattam MSV-TKR LRE
1965 panakkara kudumbam unnai nambinor keduvathillai MSV-TKR
1965 panakkara kudumbam parakkum panthu parakkum MSV-TKR TMS
1965 panakkara kudumbam ithuvari nEngal pArtha pArvai MSV-TKR TMS
1965 panakkara kudumbam athai magal rathinathai MSV-TKR
1975 pallAndu vAzhga enna sugham enna sugham KVM KJY MGR, Latha
1963 nEdhikkup pin pAsam siriththAlum pOdhumE KVM TMS
1967 vivasayi ippadithan irukka vendum pombale KVM
1964 thozhilALi varuga varuga thirumagalin KVM TMS
1964 thozhilALi valarvadhu kannukku theriyalE KVM TMS
1964 thozhilALi kalai vantha vidham kElu kannE KVM
1964 thozhilALi enna koduppAi enna koduppAi KVM TMS
1964 thozhilALi azham theriyAma kAlvittu KVM TMS
1964 thozhilALi azhagan azhagan perazhagan KVM SJ
1961 thirudAthE mAmA mAmA makku mAmA SMS ALR, Rajeshwari
1961 thirudAthE ennaruge nE irunthAl SMS PBS
1968 thErth thiruvizhA thanjAvur seemayilE KVM TMS
1968 thErth thiruvizhA siththAdai kattiyirukkum chittu KVM TMS
1968 thErth thiruvizhA mazhai muththu muththu pandhalittu KVM TMS
1968 thErth thiruvizhA adikkattumA murasu adikkattumA KVM TMS
1970 thEdi vandha mAppiLLai nAlu pakkam suvaru (idamO sugamAnadhu ) MSV TMS MGR, JJ
1970 thEdi vandha mAppiLLai mANikka thEril maragadha kalasam MSV TMS MGR, JJ
1970 thEdi vandha mAppiLLai ada ARumugam, idhu yAru mugam MSV TMS MGR, JJ
1965 thAzham poo vatta vatta pAthi katti KVM
1973 ulagam sutrum vAliban lilly malarukku koNdAttam MSV TMS MGR, Manjula
1973 ulagam sutrum vAliban ninaikum podhu ha thanakkul MSV
1967 vivasayi evaridathum thavaru illai,enakkuthan KVM TMS
1967 vivasayi ennamma singara kannamma KVM TMS
1962 vikramathithan vannam pAduthey S. Rajeshwara rao TMS
1962 vikramathithan venmughilE konja neram nillu S. Rajeshwara rao
1964 vEttaikkAran oru kadhAnAyagan kadhai sonnAn KVM TMS
1964 vEttaikkAran medhuvA medhuvA thodalAmA KVM TMS
1964 vEttaikkAran manjaL ugamE varuga KVM TMS
1964 vEttaikkAran kadhAnAyagan kadhai sonnAn KVM
1964 vEttaikkAran en kannanukkethani kOyilO KVM
1976 Uzhaikkum karangal nAnmAda kOdalilE MSV
1976 Uzhaikkum karangal adiya pAdhangal ambalathil MSV
1974 urimaik kural vizhiye kadhai ezhthu MSV KJY MGR, Latha
1974 urimaik kural kalyANa vaLaiyOsai koNdu MSV TMS MGR, Latha
1973 ulagam sutrum vAliban thangathoniyile thavazhum MSV TMS MGR,
1973 ulagam sutrum vAliban pachchaikkiLi muththuch charam MSV TMS MGR, Metha
1973 ulagam sutrum vAliban o My Darling MSV TMS
1965 thAzham poo thoovAnam idhu thoovAnam KVM TMS
1965 thAzham poo thAzhampoovin narumanathil KVM TMS
1966 thanip piRavi aLaip pArppadhAl azhagenna KVM TMS
1966 thAli bhAgyam ullam oru koyil KVM TMS
1966 thAli bhAgyam kaN pattadhu konjam KVM TMS
1966 thAli bhAgyam ippadiyE irundhuvittAl eppadi irukkum KVM TMS
1966 thAli bhAgyam annai illamam piranthavar yAr KVM
1970 thalaivan pAi virikkum paruvam SMS TMS
1970 thalaivan nErazhi mandapathil thendral SMS SPB
1967 thAikku thalaimagan vAzhavendum sugham valara vendum KVM TMS
1967 thAikku thalaimagan pArthu kondathu nenju KVM TMS
1967 thAikku thalaimagan annayentru Agum munne ArArO KVM TMS
1971 sangE muzhangu thamizhil adhu oru iniya kalai MSV TMS
1971 sangE muzhangu irandu kaigal pEsum mozhiyil MSV SPB MGR, Lakshmi
1967 vivasayi kadhal enthan mEthil entral KVM TMS
1971 rikshAkkAran ponnazhagu penmai sindhum MSV LRE Manjula
1971 rikshAkkAran kollimalai kAttukkuLLE MSV TMS MGR, Jothi Lakshmi
1971 rikshAkkAran azhagiya thamizh magaL ivaL MSV TMS MGR, Manjula
1966 thanip piRavi edhir pAramal nadanthadi KVM
1966 thanip piRavi kannathil ennadi kAyam KVM TMS
1965 thAzham poo panguni mAsathil Or iravu KVM TMS
1965 thAzham poo erikkarai OraththilE ettu vEli KVM TMS
1964 thAyin madiyil rajathi kAthiruntha roja pol SMS TMS
1964 thAyin madiyil penne ontru sollava, kanne ontru SMS
1964 thAyin madiyil pArvayile panthal katti paruva SMS
1964 thAyin madiyil kallirukkum roja malar thulluvathai SMS TMS
1964 thAyin madiyil ennai pArthu ethai pArthal SMS TMS
1962 thAyaik kAththa thanayan pErai sollalAma kanavan pErai KVM TMS
1962 thAyaik kAththa thanayan moodith thiRandha imai iraNdum KVM TMS
1962 thAyaik kAththa thanayan kAvErik karaiyirukku KVM TMS
1962 thAyaik kAththa thanayan katturAni kOttayilE KVM
1962 thAyaik kAththa thanayan chandi kudhirai nondikudhirai KVM
1966 thanip piRavi sirippenna sirippenna KVM
1966 thanip piRavi pEsip pEsiyE pozhudhum KVM TMS
1966 thanip piRavi orE muRaidhAn unnOdu pEsip KVM TMS
1966 thanip piRavi nEram nalla nEram KVM TMS
1962 Rani samyuktha pAvai uankku sethi theriyuma KVM AP. Komala
1965 kanniththAi endrum padhinARu, vayadhu KVM TMS
1977 indru pOl endrum vAzhga welcome hero happy marriage MSV TMS, Sasirekha
1977 indru pOl endrum vAzhga idhayaththilirundhu idhazhgaL varai MSV TMS MGR, Latha
1975 Idhayakani inbame , unthan perr penmayo MSV TMS MGR, Radha Saluja
1975 Idhayakani azhagai valarpom nilavil mayangi MSV V.A. Nirmala
1972 Idhaya Veenai ponnandhi mAli pozhuthu SG TMS MGR, Manjula
1972 Idhaya Veenai neeradum azhagellam nee SG Lakshmi
1970 Engal Thangam nAn Alavodu rasippavan MSV TMS MGR, JJ
1965 Enga vEtu pillai penn ponal intha penn ponal MSV-TKR TMS MGR, Saroja Devi
1965 Enga vEtu pillai malarukku thendral paghayAnAl MSV-TKR LRE Saroja Devi
1965 Enga vEtu pillai kumari pennin ullathile MSV-TKR TMS MGR, Saroja Devi
1964 En Kadamai yArathu YArathu thangama MSV-TKR TMS Saroja Devi
1964 En Kadamai thEnodum thannErin mEdhu MSV-TKR Saroja Devi
1964 En Kadamai mEnE mEnE mEnamma MSV-TKR Saroja Devi
1968 kAdhal vAhanam inge vA inge vA oru rahasyam KVM PBS
1968 kAdhal vAhanam vA ponnukku pottu vaikka KVM TMS
1968 kAdhal vAhanam vanakkan en vanakkam KVM
1965 kanniththAi ammAdi thookkamA KVM TMS
1968 kannan en kAdhalan kangalirandum oli vilakkaga MSV TMS MGR, JJ
1968 kannan en kAdhalan chirithal thanga padumai adada MSV TMS MGR, JJ
1968 kannan en kAdhalan geTTiKKaariyin Poyyum Purattum MSV TMS MGR, JJ
1963 KAnchi Thalaivan vAnathil varuvathu oru nilavi KVM TMS
1963 KAnchi Thalaivan oru Kodiyil iru malargal KVM TMS MGR, Vijaya Kumari
1968 kanavan neenga nenacha nadakkatha MSV
1968 kanavan mayangum vayadhu madimEl MSV TMS MGR, JJ
1963 kalayarasi nE iruppathu ingE un ninaivuruupadhu SG
1965 kalankarai vilakkam sange muzhangu MSV SG
1965 kalankarai vilakkam ponnezhil poothathu MSV TMS
1970 Engal Thangam thangap Pathakkathin mele MSV TMS MGR, JJ
1965 kalankarai vilakkam ennai maranthathen thendrale MSV
1964 En Kadamai iravinile enna nenappu MSV-TKR Saroja Devi
1970 en aNNan nenjam undu nErmai undu KVM TMS
1970 en aNNan koNdai oru pakkam sariya sariya KVM TMS
1965 Ayirathil oruvan adamal Adugiren MSV-TKR Jayalalitha
1965 Asai mugam yArukku yAr entru theriyAtha SMS TMS
1965 Asai mugam neeya illai nAna en nenja SMS TMS
1965 Asai mugam ennai kAdhaliththAl mattum SMS TMS jayalalitha
1972 annamitta kai padhinaru vayathinile KVM JJ
1972 annamitta kai onnonna onnonna sollu sollu KVM TMS
1972 annamitta kai mayangi vitten unnao kandu KVM TMS
1966 anbE vA nAn pArththadhilE avaL oruthiyai MSV TMS MGR, Saroja Devi
1966 Anbe vA vetkam illai nAnam illai MSV TMS, LRE, ALR Saroja Devi
1966 Anbe vA rajavin pAravi MSV TMS MGR, Saroja Devi
1966 Anbe vA porattam,ye nadodi nadodi MSV TMS, LRE, ALR MGR, Saroja Devi
1966 Anbe vA love birds Love Birds MSV Saroja Devi
1969 Adimai penn kAlathai ventravan nE KVM SJ JJ, Jothi Lakshmi
1965 Ayirathil oruvan nAnamo Innum NAnamo MSV-TKR TMS MGR, JJ
1965 Ayirathil oruvan paruvam enadhu pAdal MSV-TKR JJ
1965 Ayirathil oruvan unnai nAn santhithen MSV-TKR JJ
1970 en aNNan ayiram eNNam koNda mAnida KVM TMS
1963 Dharmam Thalai kAkum thottu vida Thottu vida KVM TMS
1963 Dharmam Thalai kAkum paravaigale paravaigale KVM
1963 Dharmam Thalai kAkum moodupani kulireduthu mullai malar KVM TMS
1963 Dharmam Thalai kAkum hello Hello sughama KVM TMS
1963 Dharmam Thalai kAkum azhagana vAzhai mara thOtam KVM
1964 Deiva Thai vannkili sonna mozhi enna MSV-TKR TMS Saroja Devi
1964 Deiva Thai paruvam pona padhayile MSV-TKR Saroja Devi
1964 Deiva Thai kAdhalikkathe kavalaipadathe MSV-TKR Saroja Devi
1964 Deiva Thai intha punnagai Enna vilai MSV-TKR TMS Saroja Devi
1966 chandhrOdhayam ketti mElam kottura kalyAnam MSV JJ
1966 chandhrOdhayam engirundhO AsaigaL MSV TMS MGR, JJ
1966 chandhrOdhayam chandhrOdhayam oru peNNAnadhO MSV TMS MGR, JJ
1969 Adimai penn ayiram nilave vA KVM SPB MGR, JJ
1965 kanniththAi mAnA poRandhA kAttukku rANi KVM TMS
1963 nEdhikkup pin pAsam mAnallavO kaNgaL thandhadhu KVM TMS
1975 nAlai Namadhe kadhal Enbadhu kAviyam Anal MSV KJY MGR, Latha
1975 nAlai Namadhe ennai Vittal yArum illai MSV KJY MGR, Latha
1966 nAdOdi kangalinaal kaanbadelaam manadinLey MSV
1966 nAdOdi ulagam engum orE mozhi MSV TMS
1966 nAdOdi thirumbi vA Uyire MSV TMS
1966 nAdOdi rasikkathane intha azhagu MSV
1977 navarathinam puriyathathai puriya vaikkum kunnakudi MGR
1966 nAdOdi nAdu Athai NAdu MSV TMS
1966 nAdOdi antoru nAl idhe nilavil MSV LRE
1966 nAdOdi antoru nAl idhe nilavil MSV TMS
1968 mugarAsi thannerenum kannadi thazhuvuvathu KVM
1968 mugarAsi mugaththaik kAtti kAtti KVM TMS
1962 Rani samyuktha nenjirukkum varai ninaivirukkum KVM TMS
1968 mugarAsi ennenna ennenna eNNangaL KVM TMS
1968 mugarAsi enakkum unakkumdhAn poruththam KVM TMS
1975 nAlai Namadhe nAlai Namadhe MSV Soman, ..
1975 nAlai Namadhe neela Nayanagalil oru neenda MSV KJY MGR, Latha
1972 nalla neram tak,tak,tak ithu manuthukka KVM TMS
1963 nEdhikkup pin pAsam kAdu kodutha kaniyirukku KVM
1963 nEdhikkup pin pAsam idi idichchu mazhai pozhinju KVM TMS
1963 nEdhikkup pin pAsam akkam pakkam pAkkAdhE KVM TMS MGR, Saroja Devi
1976 nEdhikku thalai vanangu pArkka PArkka sirippu varuthu MSV TMS MGR, Latha
1976 nEdhikku thalai vanangu kanavugale Ayiram Kanavugale MSV TMS MGR, Latha
1972 nAn en piranthen raadhai enthan kaathali SG TMS
1972 nAn en piranthen ennamma chinna ponnu SG TMS MGR, Kanchana
1972 nAn en piranthen enathu vizhiyil unathu pArvai SG TMS
1966 nAn ANaiyittAl pAttu varum, pAttu varum MSV TMS
1966 nAn ANaiyittAl odi vanthu mEtpatharku MSV SG
1966 nAn ANaiyittAl Kodukka kodukka inbam MSV MSV
1966 nAn ANaiyittAl karumbinil thEn vaitha MSV SG
1969 nam nAdu vAngayya, vAthiyArayya MSV TMS MGR, JJ
1969 nam nAdu adai muzhuthum nanaya MSV JJ
1972 nalla neram thottal engum ponnAgume KVM TMS
1969 mAttukkAra vElan poo vaiththa poovaikku KVM TMS, LRE
1969 mAttukkara velan thottu kollava nenjil KVM TMS
1966 nAdOdi nayaganin kOyilile(pAdum kural) MSV
1968 Kudiyiruntha koil neeye than enakku manavAti MSV TMS MGR, JJ
1968 Kudiyiruntha koil adaludan pAdali kettu MSV TMS MGR, L.Vijaya Lakshmi
1968 Kudiyiruntha koil kunguma pottin mangalam MSV TMS MGR, JJ
1974 siriththu vaazha vENdum ulagamenum naadaga mEdaiyil naanoru nadigan MSV TMS MGR, Latha
1962 kudumba thalaivan mazhai pozhinthu konde irukkum KVM
1962 kudumba thalaivan kuruvi kootam pole nikkira povamma KVM
1962 kudumba thalaivan kattAna kattazhagu kanna KVM TMS
1962 kudumba thalaivan antoru nAl avanudaya perai ketten KVM
1962 kudumba thalaivan etho etho etho oru mayakkam KVM TMS
1963 koduthu vaithaval neeyum nAnum ontru KVM
1963 koduthu vaithaval minnal varum sethiyile KVM
1965 kanniththAi vAyAra mutham thandhu KVM
1957 mahAdEvi kaN moodum vElayilu kalai MSV-TKR AMR MGR, Savithri
1977 madhurayai mEta sundarapandian vEramagan pOrAda vetrimagal MSV TMS MGR, Latha
1963 koduththu vaithavaL ennammA sowkkiyamA eppadi irukkudhu manasu KVM TMS
1967 kAvalkAran kattazhagu thanga magal thirunAlo MSV Alangudi somu MGR, JJ
1958 nAdOdi Mannan dravidamam Amma petra SMS Bhaskaran P.Nair
1963 Anadha jyothi kAlamagal kaNthirappAL chinnayya MSV-TKR kannadasan Devika
1963 Anadha jyothi poyyile piranthu poyyile MSV-TKR kannadasan TMS Devika
1963 Anadha jyothi pani illatha mArgazhiya MSV-TKR kannadasan TMS Devika
1960 mannadhi mannan neeyo nAno yAr nilave MSV-TKR Kannadasan PBS, JR MGR, Padmini
1963 Anadha jyothi ninaikka therintha maname MSV-TKR kannadasan devika
1960 mannadhi mannan kangal irandum entru unnai kandu MSV-TKR Kannadasan MGR, Padmini
1961 thAi sollai thattathe pAtu ore pAtu, pAtu ore oru pAtu KVM Kannadasan TMS MGR, Saroja Devi
1960 mannadhi mannan kaniya kaniya mazhalai pesum MSV-TKR Kannadasan TMS MGR, Padmini
1961 thAi sollai thattathe poo uranguthu, pozhthum uranguthu KVM Kannadasan MGR, Saroja Devi
1961 thAi sollai thattathe pattu selai kAthada paruva meni KVM Kannadasan TMS MGR, Saroja Devi
1961 thAi sollai thattathe oruthi maganai poranthavanam KVM Kannadasan MGR, Saroja Devi
1961 thAi sollai thattathe kattukkulle thiruvizha KVM Kannadasan MGR, Saroja Devi
1961 thAi sollai thattathe sirithu sirithu ennai sirayillittai KVM Kannadasan TMS MGR, Saroja Devi
1958 arasiLankumari thillalangadi G. Ramanathan Kannadasan
1962 mAdapurA kannai parikkudha karuthai KVM Maruthakasi Saroja Devi
1962 mAdapurA manadhil konda Asaigalai KVM Maruthakasi Soola mangalam Saroja Devi
1962 mAdapurA vanakkam vanakkam ayya KVM Maruthakasi Saroja Devi
1962 mAdapurA Varuvar oru nAl iruppar inge KVM Maruthakasi Saroja Devi
1961 Sabash mApille mApillai mApillai KVM Maruthakasi SG MGR, Malini
1960 Bhagdad thirudan poothu kulunkuthE, pudhu Unarvu Govinda Rajulu Maruthakasi V.Mala
1960 Bhagdad thirudan sokkuthE manam suththuthE Govinda Rajulu Maruthakasi V.Mala
1961 Sabash mApille mandhil irukkuthu oNNu KVM Maruthakasi SG MGR, Malini
1961 Sabash mApille yArukku yAr sontham enbathu(sad) KVM Maruthakasi SG MGR, Malini
1960 Bhagdad thirudan unmai anbin uruvai en munn Govinda Rajulu Maruthakasi TMS V.Mala
1960 Bhagdad thirudan vetri kollum vAlenthi vEram Govinda Rajulu Maruthakasi V.Mala
1960 Bhagdad thirudan kannErin vellam inge Oduthayya Govinda Rajulu Maruthakasi V.Mala
1961 Sabash mApille yArukku yAr sontham enbathu KVM Maruthakasi SG MGR, Malini
1960 Bhagdad thirudan adimai nAn ezhtha munainthen Govinda Rajulu Maruthakasi V.Mala
1967 Arasa kattalai ethanai kAlam kanavukal kanden KVM Muthuk koothan MGR, JJ
1960 rAjA desinku kadhalin bimbham endan G. Ramanathan Thanjai ramaiah das MGR, Padmini
1967 kAvalkAran mellap pO mellap pO MSV Vaali TMS MGR, JJ
1967 kAvalkAran ninaiththEn vandhAi nooRu vayadhu MSV Vaali TMS MGR, JJ
1967 Arasa kattalai ennai pAda vaithavan KVM Vaali MGR, JJ
1967 Arasa kattalai mughathai pArthathillai KVM Vaali TMS MGR, JJ
1967 Arasa kattalai panpAdum paravaye KVM Vaali MGR, JJ
1967 Arasa kattalai vettayadu vilayadu viruppampole KVM Vaali TMS MGR, JJ
1967 Arasa kattalai putham puyhiya puthagame KVM Vaali TMS MGR, JJ

Richardsof
13th November 2016, 06:40 PM
தமிழர்கள், அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அனைவருக்கும் நம்முடைய அன்புத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பது எண்ணற்ற சிந்தனைகளையும், பல உணர்ச்சிப் பூர்வமான அனுபவங்களையும் நெஞ்சில் மலரச் செய்யும் நாள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்." என்று தான் பதில் வரும்.

எம்.ஜி.ஆரின் தனித் தன்மையைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நேசிக்கின்ற பேருள்ளம் அவருக்கு இருந்தது.

கலைத் துறையில் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர். திரைப்படத் துறையில் அவருக்குத் தெரியாத தொழில்நுட்பமே கிடையாது. மிகச் சிறந்த இசை உணர்வு கொண்டவர். மிகச் சிறந்த நடன திறமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு நடிப்பதென்றால் அதிலும் அவருக்கு நிகர் கிடையாது. எனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். தன்னிகரற்ற மனிதராக, பல்துறை வல்லுநராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றி வாகை சூடும் சாதனையாளராக, இவரைப்போல இன்னொருவர் பிறக்க முடியாது என்று எதிரிகளும் சொல்லும் சரித்திர நாயகராக வாழ்வாங்கு வாழ்ந்தவர் அவர். வரலாற்றை கி.மு., கி.பி. என்று பிரிப்பதைப் போல, சுதந்திர இந்தியாவின் அரசியலையும், ஆட்சி முறையையும் எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப் பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம். எப்படி என்கிறீர்களா?. எம்.ஜி.ஆருடைய ஆட்சிக்குப் பின்னர் தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன் வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன. அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளை பூர்த்தி செய்வது தான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும் அமைந்தன. இன்றைக்கும் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் ஒரு சாதாரண மனிதனை மையமாகக் கொண்ட திட்டங்கள். இனி, எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத் தான் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்;
tamil nadu chief minister j. Jayalaithaa.

fidowag
13th November 2016, 11:20 PM
இணைந்த 50 வது நாளை நோக்கி தொடர்கிறது

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " வெற்றிகரமான
இணைந்த 7 வது வாரம் .

11/11/2016 வெள்ளி முதல் திருவொற்றியூர் எம்.எஸ். எம் .திரையரங்கில்
தினசரி 2 காட்சிகள் (மாலை மற்றும் இரவு )
http://i64.tinypic.com/95rk0y.jpg

தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர் - மணலி திரு. சங்கரன் .

fidowag
13th November 2016, 11:28 PM
வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்
நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள்
இடம் பெறும் . அதன் விளம்பர பேனரை காண்க .
http://i63.tinypic.com/ok4pwy.jpg

okiiiqugiqkov
14th November 2016, 12:57 AM
மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்: ஜெ. அறிக்கை

Read more at: http://tamil.oneindia.com/news/india/statement-from-jayalalithaa-request-people-vote-admk-267119.html

http://i67.tinypic.com/1sjldt.jpg

ifucaurun
14th November 2016, 01:08 AM
தகவலுக்கு நன்றி சுந்தர பாண்டியன் சார்.

http://i67.tinypic.com/2q9j95w.jpg

Richardsof
15th November 2016, 07:41 PM
மக்கள் திலகத்தின் ''பரிசு '' திரைப்படம் இன்று வெளிவந்த நாள் .
15.11.1963.
54வது ஆண்டு துவக்கம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் , இனிய பாடல்கள் மற்றும் சிறந்த பொழுது போக்கு சித்திரமாக ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .

தன்னுடைய ரசிகர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் தந்த ''பரிசு ''- திரைப்படம் .
ரசிகர்கள் எம்ஜிஆருக்கு தந்த'' பரிசு'' - எங்க வீட்டு பிள்ளை '' எம்ஜிஆர்..
மக்கள் தந்த ''பரிசு'' - தமிழக கோட்டை .
திரை உலகம் தந்த '' பரிசு''' - திரை உலக முடிசூடா மன்னன் எம்ஜிஆர் .
மத்திய அரசு தந்த ''பரிசு'' - பாரத் மற்றும் பாரத ரத்னா
இனைய தளம் தந்த '' பரிசு'' - மையத்தின் ''மக்கள் திலகம் எம்ஜிஆர் -எம்ஜிஆர் படங்கள் ''
எம்ஜிஆர் திரிக்கு கிடைத்த'' பரிசு'' - எம்ஜிஆர் நட்பு வட்டம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு நமக்கு கிடைக்க உள்ள ''பரிசு '' ஏராளம் .
காத்திருப்போம் .....வரவேற்போம்.

Richardsof
15th November 2016, 07:46 PM
ராஜ் டிவியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - மூன்றெழுத்து - புதிய தொடர் விரைவில் ஆரம்பம் என்று விளம்பரம் வந்துள்ளது .

Richardsof
15th November 2016, 08:06 PM
தமிழகம் எம்.ஜி.ஆர் பக்கம்,


தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகள் என்று புரட்டிப் பார்த்தால் வேலூர் சிப்பாய் போராட்டம், 1950–ல் சென்னை மாகாணம் அமைப்பு, 1968 தமிழகம் என்ற மாநில அந்தஸ்து, 1960களில் இந்தி எதிர்ப்பு, தேதிய அளவில் தமிழகத்தை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது.
பிறகு 1972–ல் எம்.ஜி.ஆர். தி.மு.கவில் இருந்து நீக்கப்படுகிறார். அதற்கு முன்பு கட்சியை விட்டு இந்திரா காந்தியை வெளியேற்றியவுடன் நாடு முழுவதும் மிகப்பரபரப்பாக பேசப்பட்டது போல் எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது. தேசம் முழுவதும் எதிரொலித்தது.
அதுவரை அரசியலில் ஒரு கட்சியை துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்று எண்ணியிராத எம்.ஜி.ஆர் நாடு தன் மீது வைத்து இருந்த நம்பிக்கை, அன்பு, பாசத்தை புரிந்து கொண்டு ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு மகத்தான இயகத்தை துவக்க முன்வந்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். மீது பாசம்
அன்று எம்.ஜி.ஆர் மீது வைத்திருந்த அன்பும் பாசமும் அவரது தலைமைக்கு பாராட்டாக, அவரது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கோட்பாடுகளுக்கு கிடைத்த வரவேற்பு அபரீதமானது.
அறிஞர் அண்ணாவின் ‘இதயக் கனி’ என்றும் பாராட்டப்பட்டார்.
மக்களுக்காக களம் இறங்கி ஓர் உன்னதமான மக்கள் ஆட்சி நடத்தினார். அதன் பலனாக தமிழகத்தில் ஏழை எளியோருக்கு புது வாழ்வு தரும் மகத்தான ஆட்சியை கண்டோம்.
1972–ல் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகம், 1987–ல் எம்.ஜி.ஆரின் மறைவு வரை 15 ஆண்டுகளுக்கு அவரது தலைமையில் இயங்கியது.
1977–ல் 155 இடங்களில் தமிழகத்தில் போட்டியிட்டு 132 இடங்களில் வென்று அண்ணா தி.மு.க தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் பதவியில் அமர்ந்தார். பிறகு மீண்டும் இரண்டே ஆண்டுகளில் 1980–ல் 177 இடங்களில் நின்று 129 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.
எதிர்கட்சியாக இருந்த தி.மு.கவை தன் வசமாக்கி கொண்ட கருணாநிதி கும்பலை மீண்டும் தலைநிமிர முடியாமல் வீழ்த்தியவர் எம்.ஜி.ஆர் ஆவார். பிறகு 1984–ல் மீண்டும் தமிழகத்தில் 134 இடங்களை பிடித்து மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து ஆட்சி செய்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தை எம்.ஜி.ஆரின் வழியில் நடத்திச் செல்ல முன் வந்த திறமைசாலி ஜெயலலிதா என்பதை தமிழகம் அடையாளம் கண்டு கொண்ட பிறகு அண்ணா தி.மு.கவை முழுமையாக அவர் வசம் ஒப்படைத்ததுடன் தமிழகத்தில் நல்லாட்சியை தந்தது.
தேசிய அரசியலில் தமிழகம்
தமிழகம் தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற ஆவலுடன் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அண்ணா தி.மு.க கட்சிக்கு ‘அனைத்து இந்திய’ என்ற அடை மொழியையும் சேர்த்துக்கொண்டு அண்ணா தி.மு.க என்று உருவாக்கினார்.
இப்படி தமிழகத்தில் மக்கள் வளர்ச்சிக்காக பாடுபட்ட எம்.ஜி.ஆரை அன்று தமிழகம் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் அமர்த்தி 11 ஆண்டுகளுக்கு கருணாநிதி மீண்டும் எழ முடியாத நிலையை உருவாக்கி தந்தது தமிழகம்.
1979–ல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் இருந்து இரு எம்.பிகள் மத்திய அமைச்சர்களாக பணியாற்றும் வாய்ப்பையும் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தினார். அதுவே காங்கிரஸ் அல்லாத திராவிட இயக்கத்தினர் மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக இடம் பிடித்த நிகழ்வாகும்.

fidowag
15th November 2016, 10:49 PM
தற்போது திருச்சி பேலஸில் ,நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை "
வெற்றி நடை போடுகிறது .
http://i65.tinypic.com/30t5k09.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
15th November 2016, 10:53 PM
இன்று பிற்பகல் 3 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " மந்திரி குமாரி "
பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/azb6op.jpg

fidowag
15th November 2016, 10:58 PM
நாளை (16/11/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். " எங்கள் தங்கம் " ஒளிபரப்பாகிறது .

http://i64.tinypic.com/nmz13n.jpg

fidowag
15th November 2016, 10:59 PM
நாளை இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"காவல்காரன் " ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/9rkn52.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
16th November 2016, 10:55 PM
http://i68.tinypic.com/2wmnvuq.jpg
http://i64.tinypic.com/302or2h.jpg
http://i63.tinypic.com/jsc6r5.jpg

fidowag
16th November 2016, 10:57 PM
http://i66.tinypic.com/2n0rckp.jpg
http://i65.tinypic.com/2vjolte.jpg
http://i68.tinypic.com/2u8bcs3.jpg
http://i67.tinypic.com/20t10ye.jpg

fidowag
16th November 2016, 11:03 PM
இன்று (16/11/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நல்ல நேரம் " ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/2igncic.jpg

fidowag
16th November 2016, 11:13 PM
குமுதம் சன்லைப் இதழ்

http://i64.tinypic.com/zu1jly.jpg

http://i65.tinypic.com/2vvl0jm.jpg
http://i68.tinypic.com/rivj8m.jpg

fidowag
17th November 2016, 10:03 PM
நாளை (18/11/2016) முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் )
இதயக்கனி - அகஸ்தியாவில் தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது .

மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரத்தின் சாதனை தொடர்கிறது . சமீபத்தில் எந்த நடிகரின் பழைய படமும் செய்யாத அரிய சாதனை .

படு மோசமான பிரிண்ட் - மிக குறுகிய காலத்தில் மக்களின் பேராதரவோடு சென்னையில், மகாலட்சுமி ,கிருஷ்ணவேணி, சரவணா அரங்குகளை தொடர்ந்து ,இணைந்த 4 வது வாரமாக வட சென்னை -அகஸ்தியாவில் வெள்ளித்திரைக்கு வருகிறது .
http://i65.tinypic.com/2d9eg3q.jpg

தகவல் உதவி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர் மற்றும் பதிவாளர்
திரு.யுகேஷ் பாபு .

fidowag
17th November 2016, 10:05 PM
நாளை (18/11/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2yy7ckl.jpg

தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர் திரு. பி.ஜி.சேகர் .

oygateedat
18th November 2016, 08:49 PM
இன்று முதல் கோவை ராயல் திரையரங்கில் மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை.

fidowag
18th November 2016, 10:38 PM
சென்னை மாநகரில் ஒரே சமயத்தில் 1974/1975/1976 ஆண்டுகளில் வெளியாகி
சரித்திர சாதனைகள் புரிந்த வெற்றி சித்திரங்கள் வெள்ளித்திரைக்கு வந்தன.

http://i65.tinypic.com/35laij5.jpg
இன்று (18/11/2016) முதல் வட சென்னை அகஸ்தியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " தினசரி 2 காட்சிகள் (மேட்னி/மாலை )வெற்றிநடை போடுகிறது

fidowag
18th November 2016, 10:41 PM
http://i63.tinypic.com/9prvw7.jpg

fidowag
18th November 2016, 10:42 PM
இன்று (18/11/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/2qkihj7.jpg

fidowag
18th November 2016, 10:44 PM
http://i67.tinypic.com/2ihbdbn.jpg

fidowag
18th November 2016, 10:45 PM
இன்று (18/11/2016) முதல் தென்சென்னை (மேற்கு மாம்பலம் ) ஸ்ரீனிவாஸாவில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i66.tinypic.com/4sgps1.jpg
தகவல் உதவி : சைதை திரு.பாண்டியராஜ் .

fidowag
18th November 2016, 10:47 PM
ஜூனியர் விகடன் வார இதழ்
http://i67.tinypic.com/r0tq2t.jpg

fidowag
18th November 2016, 10:59 PM
குங்குமம் வார இதழ்

http://i66.tinypic.com/r2l3c0.jpg

சினிமா நட்சத்திரங்களின் பல் டாக்டர் திரு. ஜானகிராமன் , சென்னை தி.நகரில் பல் மருத்துவ மையம் நடத்தி வந்த காலத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்கள் , "உலகம் சுற்றும் வாலிபன் " படத்திற்காக , வில்லன் நடிகர் நம்பியாருக்கு கோரமான வடிவில் பல் செட் அமைத்து தரும்படி கேட்டிருந்தார் . அந்த பல் செட் கன கச்சிதமாக வில்லன் நடிகர் நம்பியாருக்கு பொருந்தி இருந்தது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு , பல் மருத்துவர் திரு.ஜானகிராமன் அவர்களை எதேச்சையாக சந்தித்த , நமது எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.சி.எஸ். குமார் மற்றும் வி.சுந்தர் அவர்களிடம் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நம்பியாருக்கு பல் செட் அமைந்ததற்கு , அந்த காலத்திலேயே, ரூ.20,000/-
அளித்ததாக , உரையாடலில் பல் மருத்துவர் தெரிவித்ததாக திரு. சுந்தர்
நினைவூட்டினார் என்பது கூடுதல் செய்தி.

fidowag
18th November 2016, 11:13 PM
வண்ணத்திரை வார இதழ் -25/11/2016
http://i67.tinypic.com/13zrf35.jpg

http://i67.tinypic.com/2ep7ewi.jpg
http://i68.tinypic.com/ifahvt.jpg

http://i67.tinypic.com/29xxjb4.jpg

fidowag
18th November 2016, 11:22 PM
புதிய தலைமுறை வார இதழ் -24/11/2016
http://i63.tinypic.com/2ewh7ki.jpg
http://i65.tinypic.com/28qsu4p.jpg
http://i67.tinypic.com/2hfnk1f.jpg
http://i67.tinypic.com/2s93rm8.jpg

fidowag
18th November 2016, 11:45 PM
http://i66.tinypic.com/bij75x.jpg
மதுரை மாநகரில் இருந்து , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் ,மற்றும்
செய்திகள் / புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளும் இனிய நண்பர் திரு. குமார்
அவர்கள் 19/11/2016 அன்று பிறந்த நாள் காணும் வேளையில் , இறைவன் எம்.ஜி.ஆர். அவர்கள் அருளாசியுடன் , எல்லா நலமும் , வளமும் பெற்று ,
இன்று போல் என்றும் , பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

ஆர். லோகநாதன் ,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

okiiiqugiqkov
19th November 2016, 02:45 AM
http://i66.tinypic.com/bij75x.jpg
மதுரை மாநகரில் இருந்து , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் ,மற்றும்
செய்திகள் / புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளும் இனிய நண்பர் திரு. குமார்
அவர்கள் 19/11/2016 அன்று பிறந்த நாள் காணும் வேளையில் , இறைவன் எம்.ஜி.ஆர். அவர்கள் அருளாசியுடன் , எல்லா நலமும் , வளமும் பெற்று ,
இன்று போல் என்றும் , பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

ஆர். லோகநாதன் ,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் புரட்சித் தலைவர் படங்கள் திரையிட்டால் படத்துக்கு விளம்பரம் தியேட்டரில் அலங்காரங்கள் செய்வதோடு, உண்மையான வசூல் விபரங்கள் விசாரித்து புரட்சித் தலைவர் பெருமையை உலகறியச் செய்து ஏழைகளுக்கும் உதவிகள் செய்து வரும் அண்ணன் எஸ்.குமார் அவர்களுக்கு

http://i66.tinypic.com/w02whs.jpg

fidowag
19th November 2016, 07:22 AM
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

விரைவாக 200 பதிவுகள் முடித்ததற்கும், மதுரை மாநகர் எம்.ஜி.ஆர். பக்தர் திரு.எஸ். குமார் அவர்களின் பிறந்த நாளுக்கு , மிக சிறப்பாக வாழ்த்துக்கள்
பதிவு செய்து தெரிவித்தமைக்கும் மனமார்ந்த நன்றி.


ஏனைய பதிவாளர்களும் , மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும்படி அன்பான வேண்டுகோள்.

ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

Richardsof
19th November 2016, 07:53 AM
என்றென்றும் நமது மக்கள் திலகத்தின் மதுரை கோட்டை நகர் இனிய நண்பர் திரு குமார் அவர்கள் பிறந்த நாளுக்கு இனிய அன்பு வாழ்த்துக்கள்

Richardsof
19th November 2016, 07:58 AM
1984ல் மக்கள் திலகத்தின் உடல் நலன் முன்னிட்டு அவரை அமெரிக்காவிற்கு மேல் சிகிச்சைக் காக .அன்றைய பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் செய்த உதவிகள் மறக்க முடியது . இன்று அவருடைய பிறந்த நாள் .இந்த இனிய நன்னாளில் அவரின் சிறப்புகளை நினைவு கூர்வோம் .

ifucaurun
19th November 2016, 11:21 AM
http://i66.tinypic.com/bij75x.jpg
மதுரை மாநகரில் இருந்து , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் ,மற்றும்
செய்திகள் / புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளும் இனிய நண்பர் திரு. குமார்
அவர்கள் 19/11/2016 அன்று பிறந்த நாள் காணும் வேளையில் , இறைவன் எம்.ஜி.ஆர். அவர்கள் அருளாசியுடன் , எல்லா நலமும் , வளமும் பெற்று ,
இன்று போல் என்றும் , பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

ஆர். லோகநாதன் ,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

என் உள்ளப்பூர்வமான வாழ்த்துகள். நீண்ட ஆயுசும் ஆரோக்கியமும் பெற்று உங்கள் பணி என்றும் தொடர வேண்டும்.

okiiiqugiqkov
19th November 2016, 11:52 AM
இன்று வில்லத் திலகம் நம்பியார் அவர்கள் நினைவுநாள் (19-11-2016)


http://i66.tinypic.com/s1q4ba.jpg


எம்ஜிஆர் 100 | 17 - நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்

M.G.R. பற்றி பேசினால் நம்பியார் பற்றி பேசாமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். படங்களில் வில்லனாக நம்பியார் வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பு கூடும். படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு அவர் வில்லனே தவிர, உண்மையில் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்ற ஒரு சிலரில் நம்பியாரும் ஒருவர். ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட. அவரது நகைச்சுவையை எம்.ஜி.ஆரும் விரும்பி ரசிப்பார். இருவரும் நிழலில் எதிரிகள். நிஜத்தில் நண்பர்கள்.

எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.
அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பி யாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.

படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து, ‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’ என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.

எம்.ஜி.ஆர். உடனே, ‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.

பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.

தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு, ‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.

‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’ என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு நம்பியார் சென்றுள்ளார். அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி-க்கள் எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருந்தனர். நம்பியார் வந்துள்ள விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே தனது அறையின் கதவைத் திறந்து நம்பியாரைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.

தங்களைத்தான் எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆர். அறைக்குச் சென்றனர். நம்பியார் வராததைப் பார்த்த எம்.ஜி.ஆர். மீண்டும் தனது அறையின் கதவைத் திறந்து, நம்பியாரைப் பார்த்து ‘‘உன்னைத்தான். உள்ளே வாய்யா’’ என்றார். நம்பியார் உள்ளே வந்த பின் உதவியாளரிடம் எல்லோருக்கும் காபி கொண்டு வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார். அந்த உதவியாளரை நம்பியார் தடுத்து, ‘‘எனக்கு மட்டும் ஒரு காபி கொண்டு வாருங்கள்’’ என்றார்.

அங்கிருந்த அமைச்சர் ஒருவர் நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன், நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ என்று நம்பியாரிடம் கேட்டார். அதற்கு, ‘‘இங்கே நான் மட்டும்தான் விஐபி’’ என்ற நம்பியாரின் பதிலால் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி கேள்வி கேட்ட அமைச்சர் உட்பட எல்லோரும் சிரித்தனர்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் நல்ல நகைச்சுவையை ரசிக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நகைச்சுவை உணர்வு அபாரம்.

பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெளி நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்து வெளியிட்டு மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் நடிகை லதா அறிமுகம். முதல் படத்திலேயே கதாநாயகி. அதிலும் உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆருக்கு ஜோடி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை முன் நடிப்பதில் லதாவுக்கு உள்ளூர நடுக்கம். படத்தின் இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான். லதா நடித்த காட்சிகளில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. காரணம் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘சார், உங்கள் முன் நடிக்க எனக்கு தயக்க மாக இருக்கிறது’’ என்றார் லதா. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகு, நடிக்கத் தயக்கம் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனாலும், லதாவின் நிலையை எம்.ஜி.ஆர். புரிந்துகொண்டார்.
அவருக்கு தைரியம் ஏற்படுத்த எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த லதா, இயல்பான நிலைக்கு வந்து நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். லதாவின் தயக் கத்தை போக்குவதற்காக எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி...

‘‘பேசாமல் படத்தின் கதாநாயகனை மாத்திடலாமா?’’

நன்றி - தி இந்து நாளிதழ்


‘தி இந்து’ நாளிதழ் கட்டுரையில் கூறியுள்ளபடி அரசிளங்குமரி படத்தில் நம்பியாரின் கத்தி பட்டதில் புரட்சித் தலைவரின் இடது புருவத்தில் தழும்பு இருப்பதை இந்தப் படத்தில் காணலாம். கத்தி கொஞ்சம் கீழே பட்டு பார்வை போயிருந்தால் என்னாவது. எப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து படங்களில் புரட்சித் தலைவர் நடித்துள்ளார் என்பதை நினைத்தால் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

http://i63.tinypic.com/33o7aci.jpg

okiiiqugiqkov
19th November 2016, 12:10 PM
வில்லத் திலகம் நம்பியார் அவர்கள் நினைவுநாளை முன்னிட்டு சிறப்பு மீள் பதிவு
நன்றி - கலைவேந்தன் சார்


http://i65.tinypic.com/2n7guie.jpg



'வாலிபன் என்றென்றும் வாலிபன்'


உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் டிஜிட்டலில் வருகிறார் என்ற இனிக்கும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் . பொதுவாகவே, நான் லிப்ட் பயன்படுத்துவதில்லை. எவ்வளவு மாடியாக இருந்தாலும் படிக்கட்டில் ஏறியே செல்வேன். என்றாலும் ஒவ்வொரு படியாக நிதானமாக ஏறிச் செல்லும் வழக்கமுடைய நான், இன்று ஒருபடி விட்டு ஒரு படி தாவிக்குதித்து ஏறிச் சென்றேன். வாலிபன் தந்த மகிழ்ச்சிதான் காரணம்.

படம் விரைவில் வெளியாக உள்ள செய்தியறிந்ததும் படத்தைப்பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடின . கழகக் கொடி ஏந்தி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் இலச்சினை திரும்புவதில் இருந்து, 'எமது அடுத்த தயாரிப்பு கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ' என்ற கார்டு காட்டப்படும் வரை படத்தை அணு அணுவாய் அலசியெடுக்க ஆசை ஆனால் நேரமின்மை தடுக்கிறது .

படம் வெளியான போது போஸ்டர்கள் ஒட்டக் கூட கெடுபிடி இருந்த நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் வீட்டுக்கு அருகே தெரு முனையில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டேன் . அந்த மாரியம்மன் உண்மையிலேயே நல்ல சக்தி உள்ள மாரியம்மன். அப்படித்தான் ஒரு முறை மழையே இல்லாதபோது எங்கள் பகுதி மக்கள் ..... என்னது இது? வண்டி டிராக் மாறி பக்தி ரூட்டில் போகிறதே? ஹை ... ஹை .. க்..க்..ஓவ் ... ஓவ் ... டுர் (பயப்படாதீர்கள். வண்டியை நம்ம ரூட்டுக்கு திருப்பினேன். அதான்)

அதனால் படத்தின் ஹைலைட்டான நம் எல்லோருக்கும் பிடித்த புத்த பிட்சு வீட்டில் நம்பியாருடன் தலைவர் போடும் சண்டைக் காட்சியை மட்டும் அசைபோடுவோம் . மேலும், திரு.யுகேஷ்பாபு அவர்கள் நேற்று கூறியிருந்தபடி சமீபத்தில்தான் 'ஆடாத மனமும் உண்டோ?' பாடலை அலசியிருந்தேன். கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்த அந்த பாடல் ஒரு தனிச்சுவை என்றாலும் தயிர்சாதமும் வடுமாங்காயும் சாப்பிட்டது போன்ற உணர்வு . அசைவ சாப்பாடு என்றால் நாவை சப்புக் கொட்டி ஒரு கட்டு கட்டாமல் இருப்போமா ? அந்தக் கட்டலே இந்த சண்டைக்காட்சி அலசல்.

முதலில் அட்டகாசமான அந்த புத்தர் கோயிலைப் போன்ற செட்டுக்காகவே ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து அவர்களுக்கு ஒரு சபாஷ் . கழகக் கொடியை வடிவமைத்த பெருமைக்குரியவர் இவரே. புத்தரின் சின்ன சின்ன மோல்டிங்குகளை நிர்மாணித்து அழகாக அரங்கம் அமைத்த அங்கமுத்துவை ஆட்சிக்கு வந்ததும் குடிசை மாற்று வாரியத் தலைவராக்கி அழகு பார்த்தார் புரட்சித் தலைவர் .

தற்காப்புக்கலை பயிற்சி பள்ளியில் மாணவர்களின் பயிற்சியை முதுகை காட்டியடி நின்று கொண்டு மேற்பார்வையிடுபவரின் தோளை அசோகன் தொட , அவர் 'யா' என்று கத்தியபடி திரும்பினால் அட! நம்பியார். துருத்திக் கொண்டிருக்கும் நீண்ட கோரைப் பற்களுடன் இருக்கும் நம்பியாருக்கு மேக்கப் கனகச்சிதம் . தோளை அசோகன் தொட்டதும் கத்தியபடியே நம்பியார் திரும்புவது அவரது அலர்ட்னெசையும் கோபத்தையும் உணர்த்துவதில் இருந்தே தலைவருடன் அவரது சண்டை ஆக்ரோஷமானதாக இருக்கும் என்பதை நமக்கு உணர்த்திவிடும் .

புத்த பிட்சுவின் வீட்டுக்கு நம்பியார் வரும்போது கோயிலின் அமைதியை உணரவைக்கும் கோரசுடன் சேர்ந்த பின்னணி இசை . புத்தபிட்சுவாக வரும் நபரின் முகத்தில் பெளத்த துறவிகளுக்கே உரித்தான புன்முறுவலுடன் கூடிய சாந்தம் . நல்ல தேர்வு.

புத்த பிட்சு வீட்டுக்கு தலைவர் என்ட்ரீ ஆகும்போதே சண்டைக்காட்சி விருந்துக்கு தயாராக நாம் சீட் நுனிக்கு வந்து விடுவோம் . தலைவர் வரும்போது அவர் அணிந்துள்ள சிவப்பு கலர் முழு சட்டை, அதே வண்ணத்தில் பந்த், ஷூ அணிந்து வருவார். அங்குதான் அவரது உயரிய பண்பாட்டை விளக்கும் வகையிலான காட்சியாக கோயில் போன்ற அந்த வீட்டுக்குள் நுழையும்போது ஷூ வை கழற்றி விட்டு செல்வார். ஷூ வை கழற்றினால் socks- ம் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சிவப்பு கலரில் முழு உடை அணிவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். தலைவரைத் தவிர வேறு யாருக்கும் இதுபோன்ற கலர் உடைகள் பொருந்தாது. எந்த கலரில் உடை அணிந்தாலும் அவர் ஒருவருக்குதான் பொருத்தமாக இருக்கும்.

அந்த சந்தனக் கலருக்கும் தேக்குமரத் தேகத்துக்கும் (இந்த வார்த்தைகளை பயன்படுத்தி சமீபத்தில் மக்கள் திலகத்தைப் புகழ்ந்த திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி ) சிவப்பு நிறம் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

வீட்டுக்குள் தலைவர் நுழைந்ததும், புத்த பிட்சுவை கட்டிப்போட்டு விட்டு அங்கே கருப்பு அங்கியை போர்த்தியபடி அமர்ந்திருக்கும் நம்பியாரை புத்தபிட்சு என்று தவறாக நினைப்பார் . அவர் போர்த்தியபடி அமர்ந்திருப்பதை பார்த்து '' அய்யாவுக்கு உடம்புக்கு என்ன? ' என்று கேட்பார். எப்போது நம்பியார் தாக்குவாரோ என்ற திகில் ஒருபக்கம் இருந்தாலும் '' கொஞ்சம் குளிர் ஜூரம் '' என்று அவர் அளிக்கும் பதிலால் தியேட்டர் சிரிப்பால் அதிர்வது உண்மை.

இந்தக் காட்சியில் நம்பியாரின் கண்கள் மேல்நோக்கி நிலைகுத்தியதுபோல இருக்கும். அதாவது அவர் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார். தலைவர் பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறார். நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சியை தலைவர் எதிரே நிற்காத போது தனியாகக் கூட எடுத்திருக்கக் கூடும் . ஆனால், உட்கார்ந்திருப்பவர் பத்தடி தூரத்தில் நிற்பவரைப் பார்க்கும்போது பார்வை சற்று மேல்நோக்கியபடிதான் இருக்கும் . இதை நம்பியார் நுணுக்கமாக செய்திருப்பார்.

பின்னர், ரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்பையும் ஜப்பானிய வார்த்தைகளான, தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்பதை நம்பியாரே குறிப்பிடுவார். அதை இவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாதபோது ஏன் குறிப்பிடுகிறார்? என்ற சந்தேகத்தை விழிகளில் தேக்கியபடி லேசாக புருவம் நெரிய, '' தெரியுமே '' என்று தலைவர் கூறுவது படு இயல்பாக இருக்கும். இங்கு இன்னொரு விஷயம். ஜப்பானிய வார்த்தைகளை சங்கேதக் குறிப்புகளாக படத்துக்காக பயன்படுத்தினாலும் 'கிமோனா' என்பது ஜப்பானியர்களின் தேசிய உடை.
சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் தெரியுமா? என்று நம்பியார் தொடர்ந்து கேட்க தலைவர் அதன் அர்த்தத்தை (தொஷிகா - பெரிய புத்தருக்கு இடது பக்கம், கிமாகோ - மேற்கிலிருந்து 5 வது கல், மிகாயோ - வலதுபக்கமிருந்து 4 வது கல் கிமோனா -. அந்தகல்லுக்கு அடியில்தான் ரகசியம் இருக்கிறது) சொல்லியதும் முகம் பிராகசிக்க '' நீயே எடுத்துக் கொள் '' என்று நம்பியார் கூறுவது தனது வேலையை சுலபமாக்கத்தான் . தலைவர் கல்லைத் தோண்டுவதை பார்க்கும் நம்பியார் கொஞ்சம் கொஞ்சமாக தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு எழுந்து விளக்குகள் ஏற்றப்படும் பித்தளை நிற்க க்கு பின் ஒளிந்து கொண்டு பார்ப்பது, அவரது ரகசியத்தை களவாட வந்திருக்கும் போக்கை உணர்த்தும். சூட்கேஸ் கண்ணில் தட்டுப்பட்டதும் ரகசியத்தை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் தலைவரின் பெருமூச்சுடன் நிம்மதி கலந்த சிரிப்பும் , நம்பியாரின் பேராசை சிரிப்பையும் ஒரே பிரேமுக்குள் காட்டப்படும் காட்சியில் மனிதர்களின் மனோபாவத்திலும் அதை வெளிப்படுத்தும் முக பாவத்திலும்தான் எத்தனை வேறுபாடுகள் . அவரவர் மனோ நிலையை உணர்த்தும் இந்தக் காட்சி அற்புதம்.
பெட்டியை தலைவர் கையில் எடுத்ததும் நம்பியார் ஓடி வந்து உதைப்பார். அதிர்ச்சியுடன் நிற்கும் தலைவரைப் பார்த்து 'மரியாதையா அந்தப் பெட்டியை கொடு' என்று கர்ஜிப்பார். அதிர்ச்சி விலகாத தலைவர் இரண்டு அடிகள் முன்னாள் வந்து சூட்கேசை நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி , '' புனிதமான தவக்கோலத்தில் இருக்கும் நீங்களா இப்படி பேசறீங்க? ' என்று கேட்க, '' இந்த ரகசியத்தை பைரவனிடம் (அசோகன்) கொடுத்தால் எனக்கு ஒரு கோடி டாலர் கிடைக்கும் '' என்று நம்பியார் பதிலளிக்க '' முற்றும் துறந்த தாங்களா இந்த அற்ப ஆசைக்கு அடிமை ஆயிட்டீங்க? '' என்று தலைவர் கேட்டதும் '' நான் புத்தபிட்சு அல்ல. இதெல்லாம் வேஷம் '' என்று கூறியபடி கருப்பு அங்கியை வீசி எறிந்து மஞ்சள் நிற கச்சையுடன் நிற்கும் நம்பியாரைப் பார்த்தால் ....

சும்மா சொல்லக் கூடாது. ஆரம்ப காட்சியில் ரகசியத்தை கொண்டு வரமுடியுமா? என்று சந்தேகமாக கேட்கும் அசோகனிடம் '' இந்த மதயானையைப் பார்த்தா அப்படி கேட்கறீங்க? '' என்று நம்பியார் கேட்பார். அதற்கேற்ப மத யானை போலவே நம்பியார் காட்சி தருவார்.

அப்போது, புரட்சித் தலைவர் இரண்டடி பின்வாங்கி நெஞ்சுக்கு நேரே பிடித்திருந்த சூட்கேசை பின்னால் மறைத்துக் கொள்வார் . கதைப்படி தலைவர்தான் வெற்றி பெறுவார் அந்த சூட்கேஸ் நம்பியாருக்கு கிடைக்காது என்று நமக்குத் தெரியும் . நமக்கே தெரியும்போது தலைவருக்கு தெரியாதா? இருந்தாலும், உலகத்தையே அழிக்கக் கூடிய அந்த ரகசியத்தை காக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சூட்கேசை பின்னே மறைத்துக் கொள்ளும் நுணக்கமான நடிப்பை தலைவர் வெளிப்படுத்தியிருப்பார் . வெகு ஜனங்களுக்கு இந்த நுணுக்கங்கள், நகாசு வேலைகள் புரியாவிட்டாலும் தன்னை மறந்து படத்தோடும் காட்சிகளோடும் அவர்களை ஒன்றுபடுத்துவது இதுபோன்ற காட்சிகள்தான் .

இரண்டு, மூன்று அடிகள் வாங்கிய பிறகு கோயிலை விட்டு வெளியே வந்ததும், மாடியில் இருந்து குதித்து சுதாரித்துக் கொள்வார் தலைவர். படி வழியே இறங்கி வந்து தொடைகளை தட்டியபடி நிற்கும் நம்பியாரை அளவெடுப்பதுபோல் , தலைவரின் தீட்சண்யமான பார்வையை காட்டும் ஷாட்டில் தலைவர் சண்டைக்கு தயாராகி விட்டதை அறிந்து விசில் பறக்கும் .

'' என் பலத்தை பார்த்திருப்பே. மரியாதையா அந்த பெட்டியை கொடு '' என்று கேட்கும் நம்பியாரிடம் '' உன் பலத்தை நான் பார்த்துட்டேன் '' எனக் கூறி தாடையை கையால் அசைத்து (அடி வாங்கியதால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பால் உணர்த்துகிறார்) '' என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரே ஒரு சான்ஸ் குடேன் '' என்று கூறும்போது சற்று பழைய தியேட்டராக இருந்தால் கைதட்டலில் கூரை இடிந்துதான் விழும் .

பின்னர், நடக்கும் ஆக்ரோஷமான சண்டை. அதிலும் சூட்கேசை தூரப் போட்டு அதை எடுக்க முயற்சிக்கும் நம்பியாரை கீழே தள்ளி அவரது வலதுகால் முட்டிக்குப் பின்னே தனது ஒருகாலால் அழுத்தி மற்றொரு காலால் நம்பியாரின் காலை மடக்கிப் போடும் தலைவரின் அந்தப் பிடி . இருவருமே தனது முழு பலத்தை பிரயோகித்து கைகளை கோர்த்து ஒருவரை ஒருவர் தள்ளும் காட்சி . இத்தனைக்கும் 'நமது வாலிபனுக்கு' அப்போது வயது 56 என்று நினைக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

ஓடிவந்து உதைத்து நம்பியாரை சாய்த்து அவர் மீண்டும் எழும்போது தாக்கி வீழ்த்தும் காட்சியில்தான் தலைவரின் தொழில்நுட்பம் புலப்படும் . நம்பியாரை குத்தியதும் அவர் வட்டமான மேஜையில் கையை ஊன்றியபடியே கீழே விழுவார் . உண்மையில் அது நம்பியார் அல்ல. அவரது டூப். ஆனால், கீழே விழுந்ததும் தலைவர் இடது பக்கமாக நகர்ந்து வருவார். சரியாக 3 வது விநாடியில் தலைவருக்கு கீழே படுத்திருக்கும் நம்பியாரை கேமரா காட்டும்.

விஷயம் இதுதான். கீழே விழுந்திருக்கும் டூப்பை காட்ட முடியாது என்பதால் அத்துடன் காட்சியை கட் செய்ய வேண்டியிருக்கும் . நேரமும் பிலிமும் வேஸ்ட் ஆவதை தடுக்க, தலைவர் இடது பக்கம் நகர்ந்து (கேமராவும் அவருடனே நகரும்) ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு நேரே வந்து நிற்பார் . ஏனென்றால், டூப் விழுந்த இடத்தில் இருந்து நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு கேமரா ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் , 3 விநாடிகளில் கேமராவில் படாமல் உருண்டபடியே வர முடியாது. அந்தக் காட்சியை நண்பர்கள் பதிவிட்டால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

அடிதாங்காமல் மூர்ச்சையாகி கிடக்கும் நம்பியாரை மீண்டும் வீட்டுக்குள் தலைவர் அநாயசமாக தோளில் போட்டு தூக்கி சென்று கிடத்தி , புத்த பிட்சு நம்பியாருக்கு தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிந்ததும் அந்த பிட்சு , புத்தர் சிலையைப் பார்த்து தனக்கே உரிய கருணையை காட்டும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் '' அப்பா '' என்பாரே! அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்திருக்கிறார் தலைவர்.

மூர்ச்சை தெளிந்து எழுந்து செல்லும் நம்பியார், பாதி தூரம் சென்று உடம்பை அரை வட்டமாக திருப்பி தலைவரையும் புத்த பிட்சுவையும் பார்க்கும் அந்த பார்வையில்தான் எத்தனை இயலாமை .... வெறுப்பு .... பணியை முடிக்காததால் இனி பணம் கிடைக்காதே என்ற ஏமாற்றம் ..... ஒரு எம்.ஜி.ஆர்.தான் ., ஒரு நம்பியார்தான்.

தலைவரும் இப்படி தாக்கவேண்டி ஆகிவிட்டதே என்று வருந்தும் வகையில் கவலை தோய்ந்த முகத்துடன் புத்தர் சிலைக்கு அருகே சென்று கீழே நின்று குனித்து வணங்குவார் . ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து விறுவிறுப்பான அதே நேரம் வன்முறையில்லாத, என்ன ஒரு அருமையான சண்டைக் காட்சி.

இதேபோன்று ஒவ்வொரு காட்சியையும் அலசி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் பணிச்சுமை தடுக்கிறது . அதனால்தான் வழக்கமான ஆக திரியில் பங்கேற்க முடிவதில்லை. நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.


'ஷூக்ரியா!'

.......... பார்த்தீர்களா? ஜப்பான் மொழியை பற்றி மேலே சில வார்த்தைகளை குறிப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என்னவோ ? நன்றி என்பதற்கு பதிலாக அதே பொருளைக் கொடுக்கும் 'ஷூக்ரியா' என்ற இந்தி வார்த்தையை கூறி விட்டேன். நான் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட இந்தி வார்த்தை. அதற்காக இந்தியில் நான் ரொம்ப பலவீனமான என்று நினைக்காதீர்கள். எனக்கு மேலும் சில வார்த்தைகள் தெரியும் .... அவை '' ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா '' ....... முடிஞ்சா நாளைக்கு வரேன் .............. டாட்டா!

fidowag
19th November 2016, 10:21 PM
தினத்தந்தி =19/11/2016
http://i66.tinypic.com/70gtad.jpg

fidowag
19th November 2016, 10:26 PM
தற்போது ஜெயா மூவிஸில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி "
இரவு 10 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .

http://i66.tinypic.com/50liqt.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
19th November 2016, 10:36 PM
இன்று ( 19/11/2016) மாலை முதல் , சன் லைப் தொலைக்காட்சியில் , நாளை (20/11/2016) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்பட முன்னோட்டத்தில்
உரிமைக்குரல், மற்றும் இதயக்கனி படங்களின் காட்சிகள்/ பாடல்களை அவ்வப்போது காண்பித்து வருகின்றனர் .

தற்போது , சென்னை ஸ்ரீனிவாஸாவில் உரிமைக்குரல் திரைப்படமும் (தினசரி 3 காட்சிகள் ) அகஸ்தியாவில் இதயக்கனி திரைப்படமும் ( தினசரி 2 காட்சிகள் )
வெற்றி நடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .


இந்த சமயத்தில் இந்த இரு படங்களின் ஒளிபரப்பையும் அமுல்படுத்த வேண்டிய அவசியம் என்ன ?
சன் லைப் தொலைகாட்சி நிறுவனம் ஏன் மக்களை /ரசிகர்களை குழப்பத்தில்
ஆழ்த்துகிறது என்பது புரியவில்லை .திரைமறைவு ரகசியம் ஏதாவது உண்டா
என்பதும் தெரியவில்லை .
http://i68.tinypic.com/5beoaa.jpg
http://i65.tinypic.com/bewxj.jpg

fidowag
20th November 2016, 09:01 AM
18/11/2016 முதல் அனகாபுத்தூர் அருண்மதியில் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆரின்
டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " வெற்றிநடை போடுகிறது .

இணைந்த 8 வது வாரம் -வெற்றிகரமான 50 வது நாள்.தினசரி 4 காட்சிகள்.

http://i67.tinypic.com/2w7o4et.jpg

oygateedat
20th November 2016, 11:21 AM
[url=https://postimg.org/image/5u7wq6ce9/]https://s16.postimg.org/f2056vjgl/IMG_1546.jpg

oygateedat
20th November 2016, 11:23 AM
https://s16.postimg.org/f2056vjgl/IMG_1546.jpg
Courtesy - mr.kumar, madurai

oygateedat
20th November 2016, 11:34 AM
https://s22.postimg.org/vh5ypi5up/IMG_1549.jpg (https://postimg.org/image/qv9uh5kbh/)

fidowag
20th November 2016, 11:11 PM
இன்று காலை 11 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) இதயக்கனி , திரைப்படம் , சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/23utzbm.jpg

தற்போது வட சென்னை அகஸ்தியாவில் தினசரி 2 காட்சிகளில் , இதயக்கனி
வெற்றிநடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .இந்த நேரத்தில் , தனியார் டிவி யில் ஒளிபரப்பு என்பது நமது தலைவர் படத்திற்கு மட்டுமே சாத்தியம் என்பது
நிரூபணம் .

fidowag
20th November 2016, 11:13 PM
இன்று இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " ஒளிபரப்பாகியது .

http://i66.tinypic.com/2yxj0au.jpg

தற்போது தென் சென்னை ஸ்ரீநிவாஸாவில் ,உரிமைக்குரல் தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் , தனியார் டிவியில் ஒளிபரப்பு என்பது நமது தலைவர் படத்திற்கு மட்டுமே சாத்தியம் என்பது
மீண்டும் நிரூபணம் .

fidowag
20th November 2016, 11:17 PM
தினமலர் - வாரமலர் -20/11/2016
http://i68.tinypic.com/4jro80.jpg

fidowag
20th November 2016, 11:26 PM
தற்போது சென்னை ஸ்ரீனிவாஸாவில் வெற்றிநடை போடுகிறது .
http://i68.tinypic.com/mb77zt.jpg

fidowag
20th November 2016, 11:27 PM
http://i67.tinypic.com/2my5021.jpg

fidowag
20th November 2016, 11:28 PM
http://i64.tinypic.com/zikoqw.jpg

orodizli
21st November 2016, 10:22 PM
Makkalthilagam kaaviyams screening @ theatres regularly nowadays ...It's a unparallel greatest achievements in the World Cinemas...

fidowag
21st November 2016, 11:08 PM
சென்னை ஸ்ரீநிவாஸாவில் நேற்று (20/11/2016) மாலை காட்சியில், மக்கள் திலகம்
எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " திரைப்பட கொண்டாட்டம் பற்றிய புகைப்படங்கள்
http://i66.tinypic.com/5dmgxv.jpg

fidowag
21st November 2016, 11:09 PM
http://i65.tinypic.com/5nkksi.jpg

fidowag
21st November 2016, 11:10 PM
http://i63.tinypic.com/214nhqr.jpg

fidowag
21st November 2016, 11:12 PM
http://i65.tinypic.com/bg9s0l.jpg

fidowag
21st November 2016, 11:13 PM
http://i68.tinypic.com/2u9hf2f.jpg

fidowag
21st November 2016, 11:14 PM
http://i67.tinypic.com/1z56kvt.jpg

fidowag
21st November 2016, 11:15 PM
http://i65.tinypic.com/24d1sau.jpg

fidowag
21st November 2016, 11:16 PM
http://i66.tinypic.com/21l945x.jpg

fidowag
21st November 2016, 11:17 PM
http://i68.tinypic.com/mruu6t.jpg

fidowag
21st November 2016, 11:18 PM
http://i68.tinypic.com/15n1zdt.jpg

fidowag
21st November 2016, 11:19 PM
http://i63.tinypic.com/1zv8ri0.jpg

fidowag
21st November 2016, 11:19 PM
http://i66.tinypic.com/33e0uvm.jpg

fidowag
21st November 2016, 11:20 PM
http://i63.tinypic.com/2metq8w.jpg

fidowag
21st November 2016, 11:21 PM
http://i65.tinypic.com/16c6o2e.jpg

fidowag
21st November 2016, 11:23 PM
http://i65.tinypic.com/2hi31jl.jpg

fidowag
21st November 2016, 11:24 PM
http://i64.tinypic.com/kaqq1c.jpg

fidowag
21st November 2016, 11:25 PM
http://i67.tinypic.com/34ydzwl.jpg

fidowag
21st November 2016, 11:25 PM
http://i63.tinypic.com/rrrr5g.jpg

fidowag
21st November 2016, 11:26 PM
http://i67.tinypic.com/11lkc9z.jpg

fidowag
21st November 2016, 11:28 PM
http://i66.tinypic.com/furndi.jpg

fidowag
21st November 2016, 11:29 PM
http://i63.tinypic.com/35jm0d1.jpg

fidowag
21st November 2016, 11:30 PM
அரங்க வளாகத்தில் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள் விற்பனை
http://i66.tinypic.com/25iupzq.jpg

fidowag
21st November 2016, 11:32 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு ஆரத்தி . அருகில் திரு. பாண்டியராஜ் ,திரு. கோபால் .
http://i63.tinypic.com/23k5n4.jpg

fidowag
21st November 2016, 11:34 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு , ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. பாண்டியராஜ் ஆரத்தி.
http://i63.tinypic.com/jggkd1.jpg

fidowag
21st November 2016, 11:36 PM
http://i67.tinypic.com/2h6zlf5.jpg
பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்ட காட்சிகள் .

fidowag
21st November 2016, 11:38 PM
வருகை தந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்படும் காட்சி.
http://i67.tinypic.com/2rc5pie.jpg

fidowag
21st November 2016, 11:40 PM
மக்கள் தலைவரின் பேனருக்கு கற்பூர ஆரத்தி .
http://i63.tinypic.com/19p2xl.jpg

fidowag
21st November 2016, 11:42 PM
மக்கள் தலைவரின் பேனருக்கு மலர் பூஜை
http://i65.tinypic.com/33jik49.jpg

fidowag
21st November 2016, 11:44 PM
http://i68.tinypic.com/2cpdieu.jpg

fidowag
21st November 2016, 11:46 PM
அரங்க வளாகத்தில் பட்டாசு வெடிக்கும்போது
http://i68.tinypic.com/2dgngr6.jpg

fidowag
21st November 2016, 11:49 PM
அரங்கத்திற்கு வருகை தந்த பக்தர்களின் அணிவகுப்பு .
http://i64.tinypic.com/2ykez2f.jpg

fidowag
21st November 2016, 11:50 PM
http://i65.tinypic.com/2z8rmtf.jpg

fidowag
21st November 2016, 11:51 PM
http://i63.tinypic.com/3469tgk.jpg

fidowag
21st November 2016, 11:52 PM
http://i64.tinypic.com/2mzz638.jpg

நுழைவு சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்ற பக்தர்கள் .

fidowag
21st November 2016, 11:54 PM
http://i64.tinypic.com/25spuhi.jpg

fidowag
21st November 2016, 11:56 PM
http://i64.tinypic.com/wco2rn.jpg

fidowag
21st November 2016, 11:57 PM
http://i67.tinypic.com/120rqyw.jpg

fidowag
21st November 2016, 11:58 PM
திரைப்பட விநியோகஸ்தர்களுடன் , திரு. பி.எஸ். ராஜு, திரு.பாண்டியராஜ்
http://i64.tinypic.com/iqygb6.jpg

fidowag
22nd November 2016, 12:00 AM
http://i66.tinypic.com/2v2yv42.jpg

fidowag
22nd November 2016, 12:02 AM
அரங்கத்திற்கு வந்திருந்த வாகனங்களின் அணிவகுப்பு .
http://i63.tinypic.com/2zzqgqu.jpg

fidowag
22nd November 2016, 12:04 AM
http://i66.tinypic.com/vdhds7.jpg

fidowag
22nd November 2016, 12:05 AM
சென்னை சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்.
http://i68.tinypic.com/2qn0dpe.jpg

okiiiqugiqkov
22nd November 2016, 11:14 AM
http://i67.tinypic.com/1zl7rq8.jpg

வெற்றி! வெற்றி! வெற்றி!

புரட்சித் தலைவருக்கு வெற்றி!

புரட்சித் தலைவிக்கு வெற்றி!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு 19-ம் தேதி நடந்த தேர்தலில் இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. இப்போதைய நிலவரப்படி 3 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இன்னும் 3 மணி நேரத்துக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

அதிமுக 3 தொகுதிகளிலும் அமோக வெற்றி! உறுதி!

43 வருசத்துக்கு முன் ஒரு தனி மனிதர் தனது சொந்த செல்வாக்கையும் மக்களையும் மட்டுமே நம்பி ஆரம்பித்த கட்சி இன்றும், அந்த மனிதர் உடல் அளவில் மறைந்து 29 ஆண்டுகள் ஆகியும் அவரது கட்சி வெற்றிகளை குவித்து வருகிறது. அப்படி என்றால் மக்கள் தலைவர், மனிதர் குல மாணிக்கம் புரட்சித் தலைவரின் செல்வாக்கு எந்த அளவுக்கு மக்களிடம் நிலைத்து நிற்கிறது என்பதை மன மாச்சரியங்களை, வெறுப்பை, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு இதைப் படிக்கும் எல்லாரும் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் பிரமிப்பை ஏற்படுத்தும்.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையின் திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மதுரை என்றும் புரட்சித் தலைவரின் கோட்டை என்பதற்கு மறுபடியும் ஒரு உதாரணம்.

1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு படுத்தபடியே இங்கு வெற்றி பெற்றார். கட்சியும் வெற்றி பெற்றது. அவர் வழியில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சி்கிச்சை பெற்று வரும் புரட்சித் தலைவி அம்மாவும் பிரசாரத்துக்கு போகாமல் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே புரட்சித் தலைவர் ஆசியோடு 3 தொகுதியிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்துள்ளார்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கூடிய சீக்கிரம் அம்மா அவர்கள் பூரண குணம்பெற்று திரும்பிவந்து பணியாற்ற வேண்டும். புரட்சித் தலைவர் அருள் புரிய வேண்டும்.

மனிதப் புனிதர் மங்காப்புகழ் மன்னவர் மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் அவர்கள் வாழ்க!

தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீராங்கனை கட்சியின் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நீடுழி வாழ்க!

http://i65.tinypic.com/2vmzh91.jpg

Richardsof
22nd November 2016, 01:26 PM
http://i67.tinypic.com/1zl7rq8.jpg

வெற்றி! வெற்றி! வெற்றி!

புரட்சித் தலைவருக்கு வெற்றி!

புரட்சித் தலைவிக்கு வெற்றி!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு 19-ம் தேதி நடந்த தேர்தலில் இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. இப்போதைய நிலவரப்படி 3 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இன்னும் 3 மணி நேரத்துக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

அதிமுக 3 தொகுதிகளிலும் அமோக வெற்றி! உறுதி!

43 வருசத்துக்கு முன் ஒரு தனி மனிதர் தனது சொந்த செல்வாக்கையும் மக்களையும் மட்டுமே நம்பி ஆரம்பித்த கட்சி இன்றும், அந்த மனிதர் உடல் அளவில் மறைந்து 29 ஆண்டுகள் ஆகியும் அவரது கட்சி வெற்றிகளை குவித்து வருகிறது. அப்படி என்றால் மக்கள் தலைவர், மனிதர் குல மாணிக்கம் புரட்சித் தலைவரின் செல்வாக்கு எந்த அளவுக்கு மக்களிடம் நிலைத்து நிற்கிறது என்பதை மன மாச்சரியங்களை, வெறுப்பை, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு இதைப் படிக்கும் எல்லாரும் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் பிரமிப்பை ஏற்படுத்தும்.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையின் திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மதுரை என்றும் புரட்சித் தலைவரின் கோட்டை என்பதற்கு மறுபடியும் ஒரு உதாரணம்.

1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு படுத்தபடியே இங்கு வெற்றி பெற்றார். கட்சியும் வெற்றி பெற்றது. அவர் வழியில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சி்கிச்சை பெற்று வரும் புரட்சித் தலைவி அம்மாவும் பிரசாரத்துக்கு போகாமல் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே புரட்சித் தலைவர் ஆசியோடு 3 தொகுதியிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்துள்ளார்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கூடிய சீக்கிரம் அம்மா அவர்கள் பூரண குணம்பெற்று திரும்பிவந்து பணியாற்ற வேண்டும். புரட்சித் தலைவர் அருள் புரிய வேண்டும்.

மனிதப் புனிதர் மங்காப்புகழ் மன்னவர் மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் அவர்கள் வாழ்க!

தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீராங்கனை கட்சியின் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நீடுழி வாழ்க!

http://i65.tinypic.com/2vmzh91.jpg
excellent article about our puratchi thalaivar m.g.r and his popularity. Thanks sir.

oygateedat
22nd November 2016, 08:40 PM
http://i67.tinypic.com/1zl7rq8.jpg

வெற்றி! வெற்றி! வெற்றி!

புரட்சித் தலைவருக்கு வெற்றி!

புரட்சித் தலைவிக்கு வெற்றி!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு 19-ம் தேதி நடந்த தேர்தலில் இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. இப்போதைய நிலவரப்படி 3 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இன்னும் 3 மணி நேரத்துக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

அதிமுக 3 தொகுதிகளிலும் அமோக வெற்றி! உறுதி!

43 வருசத்துக்கு முன் ஒரு தனி மனிதர் தனது சொந்த செல்வாக்கையும் மக்களையும் மட்டுமே நம்பி ஆரம்பித்த கட்சி இன்றும், அந்த மனிதர் உடல் அளவில் மறைந்து 29 ஆண்டுகள் ஆகியும் அவரது கட்சி வெற்றிகளை குவித்து வருகிறது. அப்படி என்றால் மக்கள் தலைவர், மனிதர் குல மாணிக்கம் புரட்சித் தலைவரின் செல்வாக்கு எந்த அளவுக்கு மக்களிடம் நிலைத்து நிற்கிறது என்பதை மன மாச்சரியங்களை, வெறுப்பை, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு இதைப் படிக்கும் எல்லாரும் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் பிரமிப்பை ஏற்படுத்தும்.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையின் திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மதுரை என்றும் புரட்சித் தலைவரின் கோட்டை என்பதற்கு மறுபடியும் ஒரு உதாரணம்.

1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு படுத்தபடியே இங்கு வெற்றி பெற்றார். கட்சியும் வெற்றி பெற்றது. அவர் வழியில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சி்கிச்சை பெற்று வரும் புரட்சித் தலைவி அம்மாவும் பிரசாரத்துக்கு போகாமல் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே புரட்சித் தலைவர் ஆசியோடு 3 தொகுதியிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்துள்ளார்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கூடிய சீக்கிரம் அம்மா அவர்கள் பூரண குணம்பெற்று திரும்பிவந்து பணியாற்ற வேண்டும். புரட்சித் தலைவர் அருள் புரிய வேண்டும்.

மனிதப் புனிதர் மங்காப்புகழ் மன்னவர் மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் அவர்கள் வாழ்க!

தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீராங்கனை கட்சியின் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நீடுழி வாழ்க!

http://i65.tinypic.com/2vmzh91.jpg

அருமை.

திரு சுந்தரபாண்டியன் அவர்களுக்கு

பாராட்டுக்கள்...

oygateedat
22nd November 2016, 08:44 PM
இன்று இசை மேதை மதிப்பிற்குரிய பாலமுரளி கிருஷ்ணா காலமானார்.

மக்கள் திலகம் நடித்த நவரத்தினம் என்ற படத்தில் குருவிக்கார மச்சானே என்ற ஒரு பாடல் மட்டுமே மக்கள் திலகத்திற்காக அவர் பாடியுள்ளார்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன்.

fidowag
22nd November 2016, 10:25 PM
அருமை நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே, தஞ்சை, அரவக்குறிச்சி ,
திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க அமோக . வெற்றி பற்றிய தங்களின்
கருத்துக்கள் /விமர்சனங்கள் மேலானவை.பாராட்டுக்கள்.

இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு,

மறைந்த இசை மேதை திரு. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. திரு. பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் , :நவரத்தினம் திரைப்படத்தில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக , குருவிக்கார மச்சானே பாடலுடன்
பன்மொழி பாடலையும் பாடியுள்ளார்(நடிகை ஒய். விஜயாவுடன் )என்பது கூடுதல் தகவல்.


ஆர். லோகநாதன்.

fidowag
22nd November 2016, 11:23 PM
http://i67.tinypic.com/2yy7ckl.jpg
நாளை (23/11/2016) இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

தற்போது சென்னை பாட்சா (மினர்வா ) அரங்கில் தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் படங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில் , சமீப காலமாக , சன் டி.வி. நிறுவனம் , தற்போது அரங்குகளில்
ஓடி கொண்டிருக்கும் படங்களை மட்டும் தேடி பிடித்து ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்னவோ ?

உதாரணத்திற்கு கடந்த ஞாயிறு அன்று இதயக்கனி காலை 11 மணிக்கும் (அகஸ்தியாவில் திரையிடப்பட்டள்ள படம் ), உரிமைக்குரல் இரவு 7 மணிக்கும்
(ஸ்ரீநிவாஸாவில் திரையிடப்பட்டுள்ள படம் ) சன் டி.வி. ஒளிப்பரப்பியது .

okiiiqugiqkov
23rd November 2016, 01:02 AM
நன்றி - தினமணி

http://i66.tinypic.com/20kq9tl.jpg

http://www.dinamani.com/latest-news/2016/nov/22/3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%A E%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81% E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%A E%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%A E%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%A E%95-2603131.html

3 தொகுதிகளிலும் முத்தான வெற்றியைப் பெற்றது அதிமுக!

நன்றி - தினமணி

----------------------------------------------------------------------------------------------------------------

மற்ற இரண்டு தொகுதிகளை விட எங்கள் மதுரையம்பதியின் திருப்பரங்குன்றத்தில் வாக்கு வித்தியாசம் எங்கோ இருக்கிறது. அதிமுக வேட்பாளர் அண்ணன் ஏ.கே.போஸ் பெற்ற மொத்த வாக்குகள் 1,13,032. வாக்கு வித்தியாசம் 42,000-க்கும் மேல்.

எல்லாருக்குமே ஊர்ப் பாசம் இருக்கும். மதுரைக்காரர்களுக்கு கொஞ்சம் கூடவே உண்டு. எங்கள் ஊரில் உள்ள தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு நன்றி தெரிவிக்கிறோம்.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டை மண் மணக்கும் எங்கள் மாமதுரை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

http://i65.tinypic.com/1zn97ut.jpg

okiiiqugiqkov
23rd November 2016, 01:12 AM
3தொகுதி தேர்தல் பற்றிய எனது கருத்துகளுக்கு பாராட்டு தெரிவித்த திரு. எஸ்.வி.அய்யா அவர்கள், நண்பர்கள் திரு. லோகநாதன் அவர்கள், திரு.ரவிச்சந்திரன் அவர்கள் ஆகியோருக்கு நன்றி. புரட்சித் தலைவரின் பெருமையை சொல்லுவதால் என் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. என் பெருமை ஒன்றும் இல்லை.

எல்லாப் புகழும் பெருமையும் வெற்றித் தெய்வம் புரட்சித் தலைவருக்கே!

http://i66.tinypic.com/14jn69k.png

okiiiqugiqkov
23rd November 2016, 01:35 AM
நாளை (23/11/2016) இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

தற்போது சென்னை பாட்சா (மினர்வா ) அரங்கில் தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் படங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில் , சமீப காலமாக , சன் டி.வி. நிறுவனம் , தற்போது அரங்குகளில்
ஓடி கொண்டிருக்கும் படங்களை மட்டும் தேடி பிடித்து ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்னவோ ?

உதாரணத்திற்கு கடந்த ஞாயிறு அன்று இதயக்கனி காலை 11 மணிக்கும் (அகஸ்தியாவில் திரையிடப்பட்டள்ள படம் ), உரிமைக்குரல் இரவு 7 மணிக்கும்
(ஸ்ரீநிவாஸாவில் திரையிடப்பட்டுள்ள படம் ) சன் டி.வி. ஒளிப்பரப்பியது .

நண்பர் லோகநாதன் சார் ,

ரிக்க்ஷக்காரன் படம் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் நடந்த அதே நேரத்தில் ரிக்க்ஷாக்காரன் படத்தை சன் லைப் தொலைக்காட்சியில் திரையிட்டார்கள். படம் வருவதற்குள் மறுபடியும் இரண்டு முறை ஒளிபரப்பினார்கள்.

இது வேண்டுமென்றே நடக்கிறதா? யதேச்சையாக நடக்கிறதா? என்று தெரியவில்லை.

எதற்கும் நல்லதையே நினைப்போம். பார்ப்போம். தொடர்ந்தால் யோசிப்போம்.

உரிமைக்குரல் படத்தின் சென்னை சீனிவாசா தியேட்டர் கொண்டாட்ட படங்கள் அருமை. உங்களின் தொடர்ந்த அயராத பணிக்கு நன்றி.

Richardsof
23rd November 2016, 05:27 AM
மக்கள் திலகமும் மதுரை நகரமும்
************************************************** **********
http://i67.tinypic.com/1zxo9jn.png
மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள்

1956ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''மதுரை வீரன் '' திரைப்படம் மதுரை மாநகரில் வெள்ளி விழா ஓடி மாபெரும் சரித்திர சாதனை புரிந்தது .

1958ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நாடோடி மன்னன் '' வெற்றி விழா கண்டு மாபெரும் ஊர்வலத்துடன் பிரமாண்ட காட்சிகளை மதுரை மாநகர் கண்டது .

மதுரை மாநகரில் ......................http://i63.tinypic.com/2myt4z7.jpg
http://i63.tinypic.com/2rmoxhe.jpg
1965ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''எங்க வீட்டு பிள்ளை '' - வெள்ளிவிழா

1969ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''அடிமைப்பெண் '' வெள்ளிவிழா

1970ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''' மாட்டுக்கார வேலன் '' வெள்ளிவிழா

1973ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''உலகம் சுற்றும் வாலிபன் '' 200 நாட்கள்

1974ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''உரிமைக்குரல் '' 200 நாட்கள்

1978ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கடைசி திரைப்படம் ''மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ''.
மக்கள் திலகத்தின் அரசியல் -மதுரை
*******************************************

1957
1962
1967
1971
1977
1980
1984

தமிழகத்தில் நடைபெற்ற 7 பொது தேர்தல்களில் [ பாராளுமன்றம் மற்றும் சட்ட சபை ] மக்கள் திலகம் அவர்கள் தான் சேர்ந்திருந்த திமுகவிற்கும் 1957-1971 ] பிறகு [1973- 1984] கால கட்டங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் அவருடைய பெயரும் , கட்சியின் சின்னமும் , திரைப்படங்களும் , பாடல்களும் இடம் பெற்று வரலாற்று வெற்றிகள் குவித்தது ஏராளம் .

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 1962ல் தேனி சட்ட சபைக்கு நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களை ஆதரித்து வெற்றி பெற செய்தார் .1967ல் மதுரை மாவட்டத்தில் திமுக பல தொகுதிகளை கைப்பற்றியது .1971ல் பெரும்பாலான தொகுதிகளை மதுரை மாவட்டம் கைப்பற்றியது .
http://i68.tinypic.com/1178r2u.png
1973ல் மதுரை மாவட்டம் -திண்டுக்கல் -நாடாளுமன்ற இடை தேர்தலில் புதியதாக உதயமான புரட்சித்தலைவரின் அதிமுக முதல் வெற்றி .வரலாற்று வெற்றி .
1977-1980-1984 மதுரை எம்ஜிஆர் கோட்டையானது என்பது சரித்திர வரலாறு .

1989 மதுரை -கிழக்கு சட்ட சபை தொகுதி ஒன்று பட்ட அதிமுகவிற்கு கிடைத்த முதல் வெற்றி .

1991-2001-2006-2011-2016 சட்ட சபை தேர்தல்களில் மதுரை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆர் கோட்டை என்பதை உறுதி செய்தது .

மக்கள் திலகத்தின் பழைய திரைப்படங்கள் சுமார் 80 படங்களுக்கு மேல் மதுரை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற மதுரை மாவட்டத்தில் கடந்த 1977 முதல் 2016 இன்று வரை ஓய்வில்லாமல் படங்கள் வெற்றி பவனி வருவதும் திரை உலக சாதனை .

22.11.2016
http://i63.tinypic.com/s1kz9t.jpg
இன்று ஒட்டு எண்ணப்பட்ட மதுரை - திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தொகுதியை தக்க வைத்து கொண்டுள்ளது .42,670 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி
இரட்டை இலை சின்னம் புரட்சித்தலைவரின் திருமுகம் மீண்டும் வெற்றி கனியை பறித்துள்ளது .

மக்கள் திலகத்தின் பெயரும் , அவருடைய புகழும் , மாநிலம் முழுவதும் 60 ஆண்டுகளாக வலம் வருவது உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை .
மேலும் மதுரை கோட்டை - இன்றைய அரசியல் வெற்றி எம்ஜிஆர் புகழிற்கு கிடைத்த வைர கிரீடம் .

okiiiqugiqkov
23rd November 2016, 02:02 PM
மக்கள் திலகமும் மதுரை நகரமும்
************************************************** **********
http://i67.tinypic.com/1zxo9jn.png

http://i63.tinypic.com/2myt4z7.jpg


மக்கள் திலகத்தின் பெயரும் , அவருடைய புகழும் , மாநிலம் முழுவதும் 60 ஆண்டுகளாக வலம் வருவது உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை .
மேலும் மதுரை கோட்டை - இன்றைய அரசியல் வெற்றி எம்ஜிஆர் புகழிற்கு கிடைத்த வைர கிரீடம் .

எஸ்வி அய்யா அவர்களுக்கு,

எங்கள் மண் மணக்கும் மதுரையில் புரட்சித் தலைவரின் வெற்றிகளை சாதனைகளை புள்ளி விவரத்தோடு துல்லியமாக பட்டியல் போட்ட உங்களுக்கு நன்றி. இவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. எங்கள் ஊரின் பெருமையை உலகுக்கு அறிவித்த உங்களுக்கு மிகவும் நன்றி.

அடுத்த பதிவில் மதுரையில் புரட்சித் தலைவர் அண்ணா சிலைக்கு துணிச்சலாக மாலை போட்ட சம்பவத்தையும் மதுரைக்கும் புரட்சித் தலைவருக்கும் உள்ள தொடர்புகள் நெருக்கம் வெற்றிகள் பற்றியும் தி இந்து பத்திரிகையில் வந்த கட்டுரையை பதிவிடுகிறேன். நன்றி.

okiiiqugiqkov
23rd November 2016, 02:07 PM
http://i67.tinypic.com/2q88ze8.jpg


எம்ஜிஆர் 100 | 39 -படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!

M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.

1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.

இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர்.

தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.

அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது.

மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கியது.

சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.

1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.

அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது.

அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு.

மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார்.

1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது.

1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம்
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!

ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.

நிதானத்துக்கு வந்த ஜப்பானியர், தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் இரு கைகளையும் கோர்த்து இடுப்பு வரை முன்னோக்கி வளைந்து ‘‘மன்னியுங்கள்’’ என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு பின்னோக்கி நகர்ந்து போய்விட்டார்.

படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’ எம்.ஜி.ஆர்.!

நன்றி - தி இந்து

okiiiqugiqkov
23rd November 2016, 02:17 PM
என் நினைவு தவறில்லை எனில்... மிகக் சரியாக 3 வருடங்கள் இருக்கும்... எந்த வித சிறப்பு நாளும் இல்லாத ஒரு மிக சாதாரண நாளில்...
மனநிலையில் சற்று குழப்பத்துடன் அமைதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போய் அமர்ந்து இருக்க...

வயதானவர்கள்... நடக்க இயலாதவர்கள்... கர்ப்பிணி பெண்கள்... இவர்களுக்காக கோவிலுக்குள் இயக்கப்படும் பேட்டரி கார் சப்தம் கேட்டு என் அமைதி குழைந்து திரும்பி பார்த்தால்...

அய்யா. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்...

தடாலடியாக எழுந்து கை கூப்பி வணக்கம் சொல்ல... காரை நிறுத்த சொல்லி என்னை அருகில் அழைத்து தன் இரு கைகளையும் என் தலைக்கு மேல் வைத்து "நல்லா இரு கண்ணா..." என்றார்...

"அய்யா... நான் பத்திரிக்கைகாரன்... நீங்க சரினு சொன்னா... நான் உங்க ரூமுக்கு..."

இல்ல... எனக்கு 8 .30க்கு ட்ரைன்... இன்னொரு தரம் பார்ப்போம்...

"இன்னொரு வாய்ப்பு...?" என நான் வாய் விட்டே தயங்கவும்...

"சன்னதி வரை நடந்து போவோம்ல... அதுவரை பேசலாமா...?"

என ஜாக்பாட் வாய்ப்பளித்தார்...

பேட்டரி காருக்கு முன்... நான் சன்னதி வாசலில்...

காரில் இருந்து அய்யா இறங்க நான் என் கை கொடுத்து உதவ... கீழே இறங்கியவுடன்... அவர் என்னை பார்த்ததும் ...
"ஓஓ... நீதானா... அதுக்குள்ளே வந்துட்டியா...?" என சொல்லி விட்டு இடுப்பில் கட்டி இருந்த அங்கவஸ்த்திரத்தை இறுக்கி கொண்டு...

" போகலாமா...? " என்பதாய் தலையாட்டி...கை அசைத்தார்... மௌனமாய்...

ஓடி வந்த அந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இசை சமுத்திரத்தை கேள்வி கேட்க நான் எப்படி தயாரானேன்...?!

"அய்யா... ஆலாபனை - சாஷ்திரிய சங்கீதம் என இருந்த உங்களை ஜனரஞ்சக பாடல் பாட வைத்தாரே... எம்.ஜி.ஆர். அய்யா... அவர் ஒரு பெரும் ஆளுமை என்பதால் ஒத்துக்கொண்ட பாடலா அது...? "
- என நொடிப்பொழுதில் நான் கேட்க...? சந்நிதானத்தின் உள்ளே நுழைய படிக்கட்டுகள் ஏற இருந்த சூழலில்...
என் கை பிடித்து... படியேற...

" தம்பி... எடுத்த எடுப்பிலேயே அழகான தொடுப்பு... ஈஸ்வரா... ! " என்றவாறு...

" அது என்ன படம்னு இப்போ சரியா ஞாபகத்துக்கு வரல... ஆனா அந்த படத்துக்கு நம்ம வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் தான் மியூசிக்... அவர் ரொம்பவே கேட்டுக்கிட்டதால தான் நான் ஓகே சொன்னேன்... பட் ரெகார்டிங் போனப்பறம் தான் தெரியும் அது எம்.ஜி.ஆர் சார் படம்னு... கொஞ்சம் தயக்கம் இருந்தது என்னவோ உண்மைதான்... தமிழ் சினிமாவின் ரொம்ப பெரிய ஜாம்பவான் பட் அவரோட ஜானர் வேற ... நம்மள வச்சு என நானும் யோஜனையோட தான் போய் உக்காந்தேன்... எம்.ஜி.ஆர் சார் ஒரு 15 நிமிஷம் லேட்டா தான் வந்தாரு... அவர் வரவும் நான் எழுந்து வணக்கம் சொல்ல... அவர் வந்து என் கைய புடிச்சு உக்கார வச்சு... சூடா பால் கொண்டுவர சொன்னார்... குடிச்சேன்...

போகலாமா...? - னார் கொஞ்சம் யோஜனையோட போனேன்... ரெகார்டிங்க்ல அவரும் வந்தார் நான் பாடுவேன்... ஊடால ஊடால அவர் பேசுவதாக போனது அந்த ரெகார்டிங்... எல்லாம் முடிவானது...எனக்கும் ரொம்பவே சந்தோசம்... நல்ல ஒரு மியூசிக் பத்தின பாட்டு... தமிழ்ல இந்த மாதிரி பாட்டு தமிழ் மியூசிக் பத்தி விளக்கமா சொல்ற பாட்டு அன்னைய தேதில இல்லாததால நான் ரொம்பவே சந்தோசமா சொல்லீட்டு கிளம்ப போக...

எம்.ஜி.ஆர் சார் என் கைய புடிச்சு... " ஒரு வேண்டுகோள்... இந்த படத்தோட நாயகன் பலதரப்பட்ட ஆட்களை சந்திப்பதாக போறது கதை... அதுல ஒரு பொண்ணு நாடோடி பொண்ணு ... அவளுக்கும் எனக்கும் ஒரு டூயட் அது கொஞ்சம் லோக்கலா இருக்கும்... வைத்தி உங்க வாய்ஸ் நல்லா இருக்கும்னு சொல்லுறாரு ஆனா உங்ககிட்டே கேக்க கொஞ்சம் கூசுறாரு... அதான் நானே..." - என இழுத்தார்...

அவர் நினச்சு இருந்தா எல்லாத்தையும் மியூசிக் டைரக்டர் மேல பாரத்த போட்டுட்டு ஷிவ ஷிவ னு உக்காந்துஇருக்கலாம் ஆனா அவர் அப்படி செய்யல... அவருக்காக இவர் தூது வரணும்னு அவசியமும் இல்ல...
அவர் அப்ரோச் பண்ணுனது எனக்கு புடிச்சுடுச்சு நான் ஓகே சொல்லீட்டு ஒரு 10 நாள் கழிச்சு பாடுனதுதான் அந்த குருவிகார பாட்டு..." என அதிரடி மழையாய் பொழிந்தார்...

http://i67.tinypic.com/2keic4.jpg


‘‘இன்னொரு விஷயமும் இதுல இருக்கு சாமி தரிசனம் பண்ணீட்டு பேசலாமா ? - னார்... அய்யா. டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்...

நான் சாமி தரிசனம் கூட சரியாக செய்யாமல்...

"என்னவாக இருக்கும்...?" என காத்திருந்தது போல... நீங்களும்...கொஞ்சம்...


--------மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல் பக்கம்

fidowag
23rd November 2016, 10:03 PM
நண்பர் திரு. வினோத் அவர்கள் பதிவிட்ட , மதுரை மாநகரில், மக்கள் திலகத்தின்
சினிமா மற்றும் சாதனை செய்திகள் அபாரம் .

நண்பர் திரு. சுந்தரபாண்டியன் பதிவு செய்த , மதுரை மண்ணுக்கும் , மக்கள் திலகம் மற்றும் மக்கள் தலைவருக்கும் உள்ள இணைப்பு, பிணைப்பு ஆகியன குறித்த
விளக்க செய்திகள் அசத்தல் .

ஆர்.லோகநாதன்.

fidowag
23rd November 2016, 10:14 PM
http://i63.tinypic.com/29oikpd.jpg
http://i64.tinypic.com/8yxqmp.jpg
http://i65.tinypic.com/11jun80.jpg

fidowag
23rd November 2016, 10:16 PM
http://i67.tinypic.com/4vicya.jpg
http://i64.tinypic.com/f5d9wk.jpg
http://i66.tinypic.com/1zl9p1f.jpg

fidowag
23rd November 2016, 10:27 PM
குமுதம் லைப் வார இதழ் -30/11/2016
http://i64.tinypic.com/n2y44o.jpg
http://i63.tinypic.com/726is7.jpg
http://i65.tinypic.com/2yuyotc.jpg

orodizli
25th November 2016, 09:14 AM
Makkalthilagam, Evergreen Collection Emperor's "Adimaipenn" Digitally Remastered Format ready to Rerelese soon... Informations received...

oygateedat
25th November 2016, 02:18 PM
இன்று முதல்

கோவை

டிலைட் திரையரங்கில்

பறக்கும் பாவை

Richardsof
25th November 2016, 06:46 PM
மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை '' பொன்விழா ஆண்டு நிறைவுபெற்ற இந்த மாதத்தில் கோவை நகரில் திரைக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி .தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .

Richardsof
25th November 2016, 06:50 PM
மகாதேவி பரிசு வேட்டைக்காரன் ஆகிய மூன்று படங்களில் தலைவரோடு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி!
முதல் இர்ண்டு படங்களில் காதல் காட்சிகளில் சற்று இடைவெளி விட்டு அதாவது பட்டும்படாமலும் நடித்த தலைவர் வேட்டைக்காரனில் வழக்கம்போல் சற்று நெருக்கமாக நடித்தாராம்?
அவரது நண்பர் அவரிடம் இந்த வித்தியாசம் குறித்து வினவியபோது தலைவர் அளித்த விளக்கம்?
முதல் இரண்டு படங்களில் நடிக்கும்போது அந்தம்மா ஜெமினி கணேசனைக் காதலித்து திருமணம் செய்யுக்கூடிய நிலையில் இருந்தார்கள், அந்த சமயத்தில் நான் நெருக்கமாக நடித்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்பும் திருமணம் தள்ளிப்போகும் நிலையும் வந்திருக்கும், ஆனால் வேட்டைக்காரன் படத்தின்போது அதற்கு திருமணம் ஆகி தன் கணவரின் அனுமதியோடு நடிக்க வந்திருக்கு
இப்போது தொழில் ரீதியில் இப்படி நடித்தால் அந்தப் பெண்ணுக்கு யாதொரு பாதிப்பும் இல்லையே?
தலைவரின் இந்த கண்ணியம் கலந்த விளக்கம் கேட்டு அனைவரும் அயர்ந்து போனார்களாம்!
ஏன் நாமும்தானே??
courtesy - fb

Richardsof
25th November 2016, 06:53 PM
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.




‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...

-கோவி.லெனின்.

Richardsof
25th November 2016, 07:00 PM
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே......
எம்ஜிஆர் மீது மயக்கம் கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் போடும் டைட்டான சட்டையை இன்றும் விரும்பி அணிகிறேன். நேர்மை, நியாயத்திற்காக வாதாடும் குணம், ஏழைகள் மீது கருணை, முதியோர் மற்றும் உழைப்பாளிகளுடன் தோழமை, குழந்தைகள் மீதான பிரியம், அழகான பெண்களுடன் காதல் லீலைகள், தத்துவம், போன்ற எம்ஜிஆரின் முத்திரைகள் தெரிந்தோ தெரியாமலோ என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆண்களின் அடையாளமாகி விட்டுள்ளது.

இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்
என்ற வரிகள் யாவும் எனக்காக எழுதப்பட்டது போல் தோன்றுகின்றன. இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.

கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலித்தது.


எம்ஜிஆரை நான் ஒருமுறைதான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு பதின்பருவம். மக்கள் குரல் மாலை நாளிதழில் டி.ஆர்.ஆர். கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். எனது அரசியல் அரிச்சுவடி அதுதான்.
அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு எம்ஜிஆர் மலர் வளையம் வைக்க வருகிறார் என அறிந்து காலை 6 மணிக்கே கடற்கரைக்கு போய்விட்டேன். கையில் மாலை வாங்கிய மக்கள் குரல் இருந்தது.

8 மணிக்கு செக்க செவேல் என சூரியனை விட பிரகாசமாக ஜொலித்தபடி வந்தார் எம்ஜிஆர். ஒளியே ரூபமெடுத்து நடந்துவருவது போல் இருந்த்து. வெள்ளை கரை வேட்டி சட்டையுடன் வழக்கமான தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்த எம்ஜிஆர் தொண்டர்களிடம் வணக்கம் கூறியபடியும் கைகளை உயர்த்தி ஆட்டியபடியும் சென்றுக்கொண்டிருந்தார். ஆரவாரமும் கரவொலிகளும் அடங்கவே இல்லை.இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் என்கையில் இருந்த மக்கள் குரலை பார்த்துவிட்டார் எம்ஜிஆர். நான் அதனை கையில் பிடித்து அவரை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்த அவர் என் கன்னத்தைத் தொட்டு தடவி சிரித்தபடி சென்றுவிட்டார். எனக்கு சொர்க்கத்தில் மிதக்கிற நினைப்பு


எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றுதான். எம்ஜிஆரின் சுறுசுறுப்பும் நடன அசைவுகளும் டிஎம்எஸ் சின் கம்பீரமான குரலும் வாலியின் வைர வரிகளும் கொண்ட பாடல் அது. இந்தப் பாட்டு எனக்கு மட்டுமின்றி என்னை விட 40 வயது குறைந்த விக்கிக்கும் பிடித்த பாட்டாக இருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.

எம்ஜிஆரின் புகழ் தலைமுறைகளைக் கடந்து தொடர்வதற்கான சாட்சி எனக்கு என் வீட்டிலேயே இருக்கிறது.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி.தானுங்க.....

தமிழ்த்திரையுலகம் கண்ட ஜோடிப் பொருத்தங்களில் முதன்மையானது எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடிதான். எம்.ஜிஆரும் ஜெயல லிதாவும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் நீளமானது. இதில் முக்கியமாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில், ராமன் தேடிய சீதை, அன்னமிட்டகை, ஒருதாய் மக்கள், , ரகசிய போலீஸ்115, காவல்காரன், மாட்டுக்கார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை, முகராசி, புதிய பூமி. ஆகிய படங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

குமரிக்கோட்டம் படத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் ஆணவக்காரியாக சித்தரித்து பாடுவார் என்பதால் அப்படமும் பாடலும் கலைஞர் டிவியில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.

அரசியலை விட சினிமாவில்தான் ஜெயலலிதா மனம் கவர்கிறார். அதுவும் எம்ஜிஆர் படங்களில் அவரது திறமை மிக அற்புதமாக வெளிப்படுகிறது.

ரகசிய போலீஸ் 115ல் கணவன்-மனைவியாக எம்ஜிஆர்-ஜெயல லிதா சண்டை போடும் காட்சியும் குடியிருந்த கோவிலில் நீயேதான் என் மணவாட்டி என ஊஞ்சலில் ஆடிப்பாடுவதும் எனக்கு மிகவும் பிடித்த திரைக்காட்சிகள்.

அதெல்லாம் விடுங்கள் .ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை என்று ராமன் தேடிய சீதையில் எம்ஜிஆரும் எனது மடியில் வா ராமா என எம்ஜி ராமச்சந்திரனை ஜெயலலிதா அழைப்பதும் பரவசமான காதல் காட்சிகளில் ஒன்று
திரைவாழ்வைப் போல எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிஜவாழ்விலும் ஜோடி சேர வேண்டும் என விரும்பிய ரசிகர்களில் நானும் ஒருவன்தான்.

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று ஒளிவிளக்கில் அவர்கள் ஆடிப்பாடினார்கள். ராமன் தேடிய சீதையில்தான் எம்ஜிஆரும் ஜெயல லிதாவும் மணக்கோலத்தில் வரும் காட்சி வரும். அது வரலாற்றால் பதிவு செய்யப்பட்ட அற்புதக் காட்சியாகும்.
----------------------------------------------------------------------------------------------------
 courtesy - net

Richardsof
25th November 2016, 07:06 PM
எம்.ஜி.ஆர். அவர்களின் சினிமா மார்க்கெட்டை உயர்த்திய மர்மயோகி

– பெரு துளசி பழனிவேல்

Vetrithirumagan MGR
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் மர்மயோகி(1951). நூறு நாட்களை கடந்து ஓடி வசூலையும் அள்ளித்தந்து அவருக்கு நல்ல பேரையும், புகழையும் பெற்றுத்தந்த படமான மர்மயோகியில் எம்.ஜி.ஆர். கரிகாலன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தார். மக்கள் தலைவன் மக்களுக்காக போராடுகிறவன். நீதி நியாயத்தை நிலைநாட்ட விரும்புகிறவன். இந்த கதாபாத்திரம் பிடித்திருந்ததால் எம்.ஜி.ஆர். படு உற்சாகத்தோடு அக்கறையோடும் நடித்தார்.

வில்லி இளையராணி (அஞ்சலிதேவி)யின் முன்னிலையில் நடக்கும் வீர தீர சாகசப்போட்டிகள் நடைபெறும் காட்சியில் குதிரை மீதேறி ஓடுவது ஈட்டி, வாளுடன் பாய்வது, நாட்டின் தளபதியாக இருக்கும் அரச குமாரனை (எஸ்.வி.சகஸ்ரநாமம்) எதிர்த்து போராடுவது போன்ற காட்சி முழுவதும் கவசமும், முகமூடியும் அணிந்திருந்தாலும் டூப் போட வேண்டாம் என எம்.ஜி.ஆரே பயிற்சி எடுத்துக் கொண்டு ஈடுபாட்டோடு மூன்று நான்கு நாட்கள் அந்தச் சண்டைக்காட்சியில் நடித்தார்.

இந்தச் சண்டைக்காட்சியை வெளிப்புறக் காட்சியாக அற்புதமாக படமாக்கினார்கள். படத்தில் எம்.ஜி.ஆரின் தோற்றம் மிக அழகாக இருந்ததால் அவர் ஏற்றுக் கொண்ட வீரம், தீரம் நிறைந்த கரிகாலன் கதாபாத்திரம் மக்களை மிகவும் கவர்ந்தது.

mgr-in-marma-yogi-the-mysterious-mystic-1951-movie

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் நடை, உடை, பாவனை, வசனம் பேசும் அழகு, இரண்டு கைகளிலும் வாள் கொண்டு சுழற்றும் முறை எல்லாமே படம் பார்த்தவர்களை கவர்ந்து விட்டதால் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால் இந்தப் படத்தை இந்தியிலும் ‘ஏக்தராஜா’ என்ற பெயரில் வெளியிட்டார்கள்.

இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். பேசிய வசனங்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டன. ‘கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான். தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்’. மற்றொரு காட்சியில் நாற்காலியை, காலால் எட்டி உதைத்து மறுபடியும் அதை தன்னிடமே வரும்படி செய்து அதில் அமர்ந்து இளையராணியை பார்த்து அழகாக வசனம் பேசும் காட்சியை பார்த்து ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

குதிரை மீதேறி ஈட்டி, வாளை ஏந்திக்கொண்டு போரிடும் காட்சியில் படம் பார்த்த அனைவரையும் வியக்க வைத்தார். மொத்தத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு சினிமா மார்க்கெட்டை உயர்த்தி விட்ட படம் ‘மர்மயோகி’.

அரசர் வயதானவர் (செருகளத்தூர்சாமா) என்பதால் அவரை மயக்கி அரசைக் கைப்பற்ற முயற்சிக்கிறார் சூழ்ச்சிக்காரி இளையராணி (அஞ்சலிதேவி). இதை தடுக்க வாரீசான அரசகுமாரன் ஒருவன் முயற்சிக்கிறான் (எஸ்.வி.சகஸ்ரநாமம்). மற்றொரு அரசகுமாரன் (எம்.ஜி.ஆர்.) அவருக்கு ஒரு பெண்ணோடு (மாதுரிதேவி) காதல் ஏற்படுகிறது. அது தொடர்ந்து கொண்டருக்கிறது. மக்களோடு மக்களாக இருந்து அவர்களை ஒன்று திரட்டி நாட்டின் இளையராணியை எதிர்த்துப் போராடி அரசரையும், அரசையும் மீட்டெடுக்க முயற்சி செய்கிறான். அரசர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அரசர் இறந்து விட்டார் என்று இளையராணி கருதினாள்.

அவரோ அரூபமான உருவில் வந்து தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவர்களை மிரட்டுகிறார் பயமுறுத்துகிறார். மற்றொரு அரசகுமாரனும் மக்கள் தலைவனுமாகிய கரிகாலன் இளையராணியை அவளது அரச சபையிலேயே நேருக்கு நேராக சந்தித்து மோதுகிறான். மக்களை ஒன்று திரட்டி புரட்சியும் செய்கிறான். இறுதியில் அரசர் இறக்கவில்லை மர்மயோகி என்ற பெயரில் அரூபமான தோற்றத்தில் வந்து தன்னை மிரட்டிக் கொண்டிருப்பவர்தான் என்பதை அறிகிறாள். மக்களும் கொந்தளிக்கிறார்கள். அவளும் அதிர்ச்சியில் இறந்து போய்விடுகிறாள். மறுபடியும் அரசர் கையில் ஆட்சி வருகிறது. அரச குமாரர்களின் உதவியுடன் நல்லாட்சி நடைபெறுகிறது.

இதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கரிகாலன் வேடத்தில் நடித்தார். வில்லி இளையராணியாக அஞ்சலிதேவி நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார். மர்மயோகியாக செருகளத்தூர்சாமா நடித்தார். மற்றும் எம்என் நம்பியார், எஸ்.ஏ.நடராஜன், ‘ஜாவர்’ சீதாராமன், எம்.ஜி.ஆரின் சகோதரனாக எஸ்.வி.சகஸ்ரநாமம் நடித்தார். பாடல்கள் உடுமலை நாராயண கவி, கே.டி.சந்தானம். திரைக்கதை, வசனம், ஏ.எஸ்.ஏ.சாமி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ் எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொய்தீன். டைரக்*ஷன் கே.ராம்நாத்.

Richardsof
25th November 2016, 07:07 PM
மக்கள் விரும்பிய மந்திரி குமாரி

– பெரு துளசி பழனிவேல்



manthirikumari Vetrithirumagan mgr

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய முதல் படம் ‘சதிலீலாவதி’ (1936). தொடர்ந்து இரு சகோதரர்கள் (1936), தட்சயக்ஞம் (1938), வீரஜெகதீஷ் (1938), மாயமச்சீந்திரா (1938), பிரகலாதா (1939), சீதா ஜனனம் (1941), அசோக்குமார் (1941), தமிழ் அறியும் பெருமாள் (1942) தாசிப்பெண் (1943), ஹரிச்சந்திரா (1944), சாலிவாஹனன் (1945), மீரா (1945), ஸ்ரீமுருகன் (1946), சுலேக்சனா (1946), பைத்தியக்காரன் (1947), அபிமன்யூ (1948), ராஜமுக்தி (1948), ரத்னகுமார் (1949), போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் எம்.ஜி.ஆர்.

அதன்பிறகு ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த ராஜகுமாரி (1947) படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து மோகினி (1948), மருதநாட்டு இளவரசி (1950), போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தி.மு.க தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதியை அழைத்து, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலக்கேசியில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மந்திரிகுமாரி என்ற நாடகத்தை எழுதி வைத்திருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றிப்பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க டி.ஆர்.சுந்தரம் தீர்மானித்தார். திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதி தரும்படி மு.கருணாநிதியிடம் டி.ஆர்.சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று வசனத்தை எழுதினார் மு.கருணாநிதி.

manthirikumari

மந்திரிகுமாரி படத்தின் கதாநாயகனாக யாரைப்போடுவது என்று டி.ஆர்.சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்த போது, தான் வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற படங்களில் ஏற்கனவே கதாநாயகனாக நடித்திருந்த எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க சிபாரிசு செய்தார் மு.கருணாநிதி. நன்றாக நடிப்பார். ஒர்ஜினலாக முறையாக கத்தி சண்டை போடக்கூடியவர் எம்.ஜி.ஆர். என்று எடுத்துச் சொன்னார். மந்திரி குமாரி படத்தின் கதாநாயகனாக எம்.ஜி.ஆரை நடிக்க வைத்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்.

மந்திரி குமாரி படத்தில் அனைவரும் பாராட்டக்கூடிய ஒரு வில்லன் வேடம் இருந்தது. அந்த வேடத்திற்கு நாடக நடிகர், எஸ்.ஏ.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்திற்கு ஜி.சகுந்தலா, மந்திரி குமாரி வேடத்திற்கு மாதுரி தேவி. ராஜகுரு வேடத்திற்கு எம்.என்.நம்பியார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நடித்தார்கள்.

1950 ஆம் ஆண்டு வெளிவந்து 151 நாட்கள் ஓடி வசூலை அள்ளிக்கொடுத்த மந்திரி குமாரி படத்தில் எம்.ஜி.ஆர். வீர மோகன் என்ற தளபதி வேடத்தில் நடித்தார். ராஜகுருவாக நடித்திருக்கும் எம்.என்.நம்பியாரிடமும், வில்லன் நடித்திருக்கும் எஸ்.ஏ.நடராஜனிடமும் மோதும் காட்சிகள் தியேட்டரில் கைத்தட்டல்களை எம்.ஜி.ஆருக்கு பெற்றுத்தந்தது.

manthirikumari

இந்தப் படத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. படத்தின் இறுதிக் காட்சியில் எம்.ஜி.ஆர். வில்லன் அடியாட்களுடன் மோதும் காட்சி ரசிகர்களால் மட்டுமல்லாமல் திரைப்பட துறையினராலேயே அன்று பெரிதும் பாராட்டி பேசப்பட்டது. கத்திச்சண்டையில் இவருக்கு நிகராக ஸ்டைலாக சண்டையிடும் நடிகர் இன்று வரையிலும் இல்லை என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தோளில் மயங்கிக் கிடக்கும். ஜி. சகுந்தலாவை சுமந்துக் கொண்டே வில்லன் அடியாட்களுடன் எம்.ஜி.ஆர். கத்திச் சண்டையிடும் காட்சியை அற்புதமாக படமாக்கியிருந்தார்கள். இந்தச் சண்டைக்காட்சியை நிஜ சண்டைக் காட்சியைப் போலவே டைரக்டர் கட் சொல்லாமல் படமாக்கியிருந்தார். அதனால்தான் இன்று வரையிலும் அந்தச் சண்டைக்காட்சிக்காக எம்.ஜி.ஆர். அனைவராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த நான்காவது படமான மந்திரிகுமாரி அவரது கலையுலக வாழ்க்கையில் எதிர்கால உயர்வையும், ரசிகர் கூட்டத்தையும் பெற்றுத் தந்தது.

இதில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எம்.என்.நம்பியா, மாதுரி தேவி, எஸ்.ஏ.நடராஜன், ஜி.சகுந்தலா, ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கதை, வசனம் மு.கருணாநிதி, பாடல்கள் மருதகாசி, கவிகாமு ஷெரீப், இசை ஜி.ராமநாதன், டைரக்*ஷன் டி.ஆர்.சுந்தரம் எல்லீஸ் ஆர்.டங்கன்.

manthirikumari

முல்லை நாட்டில் கொலை, கொள்ளை செய்து, நாட்டு மக்களை அச்சுறுத்தி சீரழித்துக் கொண்டிருக்கிறான் ஒரு கொடியவன் (எஸ்.ஏ.நடராஜன்). அவனுக்கு அந்த நாட்டின் ராஜகுரு (எம்.என்.நம்பியார்). கொடியவனின் தந்தையாக இருப்பதால் அவனுடைய பாவ செயல்களுக்கெல்லாம் துணையாக நிற்கிறான். அதனால், அவர்களை எதிர்த்து போரிடவோ, தடுத்து நிறுத்தவோ யாருக்கும் துணிச்சல் இல்லை. அதனால், அனைவரும் அந்த நாட்டு அரசரிடம் முறையிடுகிறார்கள். அரசரும் அதிர்ச்சி அடைகிறார். உடனடியாக தனது தளபதி வீரமோகனை (எம்.ஜி.ஆர்) வரவழைத்து, தமது நாட்டு மக்களை ஏழை எளியவர்களை அந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அதன் மூலம் எனது அரசையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார். வீர மோகனும் மக்களிடம் இருந்து கொள்ளை அடிப்பது கொலை செய்வது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் பிடிபடுகிறார்கள். பிடிபட்டவர்கள் ராஜகுருவும், அவரது மகன் கொடியவன் பார்த்திபனும்தான். இவர்களை அரசபையின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான் வீரமோகன்.

ராஜகுருவின் சூழ்ச்சியால் பார்த்திபன் தவறாக பிடிக்கப்பட்டுவிட்டான் என்று தீர்ப்பு வழங்கிய அரசர், வீரமோகனை நாடு கடத்துகிறார்.

இதற்கிடையில் ஏற்கனவே ராஜகுமாரி (ஜி.சகுந்தலா) தளபதி வீரமோகனும் (எம்.ஜி.ஆர்) காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். மந்திரியின் மகள் அமுதவள்ளி (மாதுரி தேவி) கொடியவன் பார்த்திபனை நல்லவன் என்று நம்பி காதலித்து ஏமாறுகிறார். ராஜகுரு அரசனை கொன்று தான் அரசனாக முயற்சிக்கிறான். அதற்கு கொடியவன் பார்த்திபன் உதவுகிறான். பார்த்திபன்தான் கொலை கொள்ளைக்கு காரணமானவன் என்பதை அறிந்துக் கொண்ட மந்திரி குமாரி அமுதவள்ளி அவனை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளி சாகடிக்கிறாள். நாடு கடத்தப்பட்ட வீரமோகன் தவற்றவன் என்பதை அறிந்து அரசர் தண்டனையை நீக்கி நாட்டுக்குள் வரவழைக்கிறார். வீரமோகனும், ராஜகுமாரியும் கணவன் மனைவியாக ஒன்று சேருகிறார்கள்.

Richardsof
25th November 2016, 07:09 PM
மாபெரும் வெற்றிப் படம் குலேபகாவலி

– பெருதுளசி பழனிவேல்

mgr-special

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து ‘குலேபகாவலி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தை ஆர்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர்.ராமண்ணாவே தயாரித்தார்.

இந்திய நாடோடி, கர்ணபரம்பரைக் கதைகள் போல இஸ்லாமியப் பின்புலத்தில் அமைக்கப்பட்ட புகழ் பெற்ற கதை. இது தெருக்கூத்து, நாடக மேடைகளிலே பிரபலமான கதை. இந்தக்கதை ஏற்கனவே ஒருமுறை வி.ஏ.செல்லப்பா, டி.பி.ராஜலட்சுமி போன்ற பழம் பெரும் கலைஞர்கள் நடித்து தயாரிக்கப்பட்டது. இப்பொழுது சில மாற்றங்களுடன் மீண்டும் ‘குலேபகாவலி’ என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டது.

இதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆடல் பாடல், வாள் சண்டை, புலியுடன் கட்டிப்பிரண்டு சண்டை, வசீகர காதல் காட்சி என்று அனைத்திலும் புகுந்து விளையாடினார். வீரம் நிறைந்த புத்திசாலித்தனமான கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்து கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜி.வரலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, ராஜசுலோச்சனா, ஈ.வி.ஆர்.சரோஜா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

ஒரு கதாநாயகனுக்கு நான்கு கதாநாயகிகள் ஜோடியாக நடித்தது இந்தப்படத்தின் சிறப்பம்சமாகும். இவர்களுடன் தங்கவேலு, சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படத்தின் வெற்றிக்கு உதவுகின்ற வகையில் எம்.ஜி.ஆர். போடும் வாள் சண்டைக் காட்சி, கதாநாயகிகளுடன் ஆடிப்பாடிய காதல், பாடல் காட்சி, பந்தய மைதானத்தில் எம்.ஜி.ஆர். டூப் இல்லாமல் புலியுடன் கட்டிப்பிடித்து போட்ட மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சியும், பிரம்மாண்டமான அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

MGR
இந்தப்படத்தில் இடம் பெற்ற அத்தனை சூப்பர் ஹிட் பாடல்களான ‘பாராண்ட மன்னரெல்லாம்’, ‘பளப்பள பட்டுகளா’, ‘வில்லேந்தும் வீரரெல்லாம்’ (இந்தப் பாடலில் பல மொழிகள் கையாளப்பட்டன) ‘கையைத் தொட்டதும்’, ‘சொக்கா போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு’, ‘அநியாயம் இந்த ஆட்சியிலே – அநியாயம்’, ‘கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே’, ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ போன்ற பாடல்களை தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார். படம் பார்த்த அனைவரையும் கவருகின்ற வகையில் வசனங்களையும் எளிமையாக எழுதியிருந்தார் தஞ்சை ராமையாதாஸ்.

பாதுஷா தனது மகனை நேரில் பார்த்தால் தன் கண் பார்வையே இழந்துவிடுவார் என்று ஜோதிடர் ஒருவர் கூறுகிறார். இதனால் பாதுஷாவின் முதல் மனைவியையும், அவள் குழந்தையையும் நாட்டுக்கு அப்பாற்பட்டு அழைத்துச் சென்று மறைந்து வாழ சொல்கின்றனர். அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிறான். இளைய மனைவியின் மகன்களுடன் வேட்டையாடச் சென்ற பாதுஷா, தெரியாமல் மூத்த மனைவியின் மகனை நேரில் பார்த்து விடுகிறார். அதனால் அவரது கண் பார்வை பறி போகிறது. குலேபகாவலி நாட்டிற்கு சென்று பகாவலி என்னும் மலரைக் கொண்டு வந்தால்தான் இழந்த பார்வை பெற முடியும் என்னும் நிலை ஏற்படுகிறது. பாதுஷாவின் நான்கு மகன்களும் மலரைக் கொண்டு வரச் செல்கிறார்கள். மூத்த மகன் தாசனும் (எம்.ஜி.ஆர்) இதையறிந்து புறப்படுகிறான்.

மலர் வெகு தூரத்தில் உள்ளது. அதை எடுத்து வரப் பல தடைகளைக் கடக்க வேண்டும். ஒரு மயக்குக்காரியைச் சூதாட்டத்தில் வெல்ல வேண்டும். ஒரு சூழ்ச்சிக் காரியை மணக்க வேண்டும். பிறகு ஆண்களை அடிமையாக ஆட்டிப்படைக்கும் ஆணவக்காரி ஒருத்தியை சந்தித்து போட்டிகளில் வென்று மலரை அடையவேண்டும்.

சூதாட்டத்தில் அடிமையாக்கப்பட்ட சகோதரர்களை விடுவித்து முன் கூறிய சோதனைகளைக் கடந்து, மலரைப் பெறுகிறான் தாசன். அவனை மோசம் செய்கின்றனர் சகோதரர்கள். பிறகு தந்தைக்கு உண்மைத் தெரிய வருகிறது.

இந்தப்படம் 1955ஆம் ஆண்டு வெளிவந்தது. 166 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் உயர்ந்தது. சினிமா மார்க்கெட்டை மேலும் உயர்த்து வதற்கும், அதிகமாக சம்பளம் பெறுவதற்கும் ‘குலேபகாவலி’ படம் பெரிதும் உதவியது.

எம்.ஜி.ஆர். நடிக்கின்ற படங்களின் கதை, காட்சியமைப்பு, சண்டைக்காட்சி, காதல் காட்சி, உடையலங்காரம் அனைத்துமே எம்.ஜி.ஆர். என்ற இமேஜ் நடிகருக்கு உட்பட்டு அது படத்தின் கதாநாயகனாக வெளிப்படும். அதனால்தான் அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அது எம்.ஜி.ஆர் படமாகவே அனைவராலும் போற்றப்பட்டது. அப்படித்தான் ‘குலேபகாவலி’ படத்தின் வெற்றியும் அமைந்தது.

Richardsof
25th November 2016, 07:10 PM
மாபெரும் வெற்றிப்படம் – மதுரைவீரன்

– பெருதுளசி பழனிவேல்

Vetrithirumagan MGR

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தப்படங்களில் அவருக்கு வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்தப்படம் மதுரைவீரன். 13.4.1956 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டன்று வெளிவந்து 180 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தப்படம்

மதுரைவீரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்களை உருவாக்கித் தந்த படம்.

எம்.ஜி.ஆரை வைத்துப் படங்களை உருவாக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு படையெடுப்பதற்கு காரணமாக இருந்த படம் மதுரைவீரன். தாழ்த்தப்பட்டவர்கள் காலம் காலமாக மதுரை வீரனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அத்தெய்வத்தின் வேடத்தையே எம்.ஜி.ஆர் ஏற்று நடித்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுவரை எம்.ஜி.ஆரை தெய்வமாகத்தான் பூஜித்துவருகிறார்கள்.

கிருஷ்ணாபிக்சர்ஸ் லேனா செட்டியார் மதுரைவீரன் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார். அதற்கான லாபத்தை அதிகமாக பெற்றார்.

இதில் எம்.ஜி.ஆர் மதுரைவீரனாக நடித்தார். பி.பானுமதி பொம்மியாகவும், பத்மினி வெள்ளையம்மாளாகவும், டி.எஸ். பாலையா, ஒ.ஏ.கே.தேவர், கலைவாணர் – என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், ஈ.வி.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், சந்தானலட்சுமி, டி.கே.ராமசந்திரன், ”மாடி”லட்சுமி, மற்றும் பலர் நடித்திருந்தனர்.



கர்ண பரம்பரைக் கதையான மதுரைவீரனுக்கு திரைக்கதை, வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இசையை ஜி.ராமனாதன் அமைத்தார். பாடல்களை, உடுமலைநாராயண கவி, தஞ்சைராமையதாஸ், மற்றும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தனர். டைரக்*ஷன் – யோகானந்த்.

அரசருக்கு பிறந்த குழந்தை கழுத்தில் மாலையுடன் பிறந்துவிட்டதால் அது நாட்டுக்கு ஆகாது என்கிறார் ஜோசியர். அதைக்கேட்டதும் அரசர் அதிர்ந்து போய் குழந்தையை உடனடியாக காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் சொல்கிறார். காட்டில் விடப்பட்ட குழந்தையை செருப்புத்தைக்கும் தொழிலாளியும் (என்.எஸ்.கிருஷ்ணன்) அவரது மனைவியும் (டி.ஏ.மதுரம்) பார்த்து விடுகிறார்கள். அந்தக் குழந்தை அழகும், அறிவும், வீரமும் நிறைந்த இளைஞனாக (எம்.ஜி.ஆர்) வளர்கிறார். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பி.பானுமதி) எதிரிகளிடமிருந்து வீரன் காப்பாற்றுகிறான். அதனால் வீரனின் திறமையிலும், அழகிலும் மயங்கி அரசகுமாரி பொம்மி காதலிக்கத் தொடங்குகிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன் பொம்மியை காவலில் கட்டிவைத்து கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் வீரன் தக்க தருணத்தில் பாய்ந்து வந்து பொம்மியை காப்பாற்றி சிறையெடுத்துச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்கசொக்கன் பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். அதனால் வீரன் பொம்மியை மணந்துக் கொள்கிறான்.



திருமலைநாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி வெள்ளையம்மாள் (பத்மினி) வீரனை காதலிக்கிறாள். இதையரிந்த பொம்மி தன் கணவனை மறந்துவிடுமாறு அவளிடம் கெஞ்சி கேட்கிறாள். வெள்ளையம்மாளும் பொம்மியின் வேண்டுகோளை ஏற்கிறாள். பக்கத்து ஊர் கள்ளர்களை பிடித்து வர தமது தளபதி வீரனுக்கு ஆணையிடுகிறார். திரிமலைமன்னன் வீரன் உற்சாகத்துடன் இறங்கி கள்ளர்களை பிடித்து வந்து அரசபைமுன் நிறுத்துகிறான். இதனால் தளபதி வீரனுக்கு நாட்டில் நல்ல பெயர் உண்டாகிறது. அவனது வீரம் நாட்டு மக்களால் போற்றப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நரசப்பனும், குடிலனும் திருமலைமன்னரிடம் தவறான செய்திகளை கூறுகிறனர். வீரன் மீது பல பழிகளைப் போட்டு மன்னனிடம் தெரிவித்தார்கள், இதை உண்மையென்று நம்பிய மன்னன் வீரனின் மாறுகால், மாறுகை வாங்க அரசானைபிறப்பிக்கிறான். கொலைக்களத்துக்கு வீரன் இழுத்துச்செல்லப் படுகிறான். இந்த செய்தியைக் அறிந்த பொம்மியும், வெள்ளையம்மாளும் கொலைக்களத்திற்க்கு வேதனையோடு ஓடி வருகிறார்கள். மக்கள் கூட்டமும் நிரம்பி வழிகிறது. தண்டனை நிறைவேற்றப்படுகிறது. வீரனின் மாறுகால், மாறுகை வாங்கப்படுகிறது. கதறுகிறார்கள் பொம்மியும், வெள்ளையம்மாளும், மக்களும் இறந்து போன வீரனுக்காக மார்தட்டி அழுகிறார்கள். வானத்திலிருந்து மலர்மழை வீரனின் உடம்பிலும், பொம்மி, வெள்ளையம்மாள் உடம்பிலும் விழுகிறது. இப்பொழுது வீரன் மதுரைவீரன் தெய்வமாகவும், பொம்மி, வெள்ளையம்மாள் மற்றொரு பெண்தெய்வங்களாகவும் வானுலகம் சொல்கிறார்கள். மக்களால் இன்றுவரை அவர்கள் தெய்வங்களாக வணங்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

Richardsof
25th November 2016, 07:14 PM
ட்சிராஜா ஸ்டூடியோ அதிகப்படங்களை தயாரிப்பதில்லை ஆனால் அவர்கள் எடுத்தப்படங்கள்அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இதன் அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய ‘மலைக்கள்ளன்’ நாவலைப் படித்தார்.அந்தநாவலைபடமாக்க விரும்பினார்.இக்கதையைபடமாக்குவதாக இருந்தால் அன்று ‘பராசக்தி’ படம் மூலம் பிரபலமாக இருந்த மு.கருணாநிதியை படத்திற்கு வசனமெழுத வைக்க வேண்டும் என்றுதீர்மானித்தார்.

இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர்.ஸ்ரீராமுலு நாயுடுவை வந்து சந்திக்க ‘நீங்கள் தான் இந்தப்படத்திற்கு ஹீரோ, ஆனால் மு.கருணாநிதியை வசனமெழுத வைக்க வேண்டும்’ என்றார். எம்.ஜி.ஆரும் மு.கருணாநிதியை சந்தித்து வேண்டுகோள்வைத்தார்.அவரும் ஏற்றுக்கொண்டார்.எம்.ஜி.ஆர் கதாநாயகனாகநடிக்க, மு.கருணாநிதி வசனமெழுதபட்சிராஜா ஸ்டூடியோ ஸ்ரீராமுலு நாயுடு ‘மலைக்கள்ளன்’ படத்தை இயக்கித் தயாரித்தார்.1954ஆம் ஆண்டு வெளிவந்த ‘மலைக்கள்ளன்’ பெரும்வெற்றிப் பெற்று எம்.ஜி.ஆருக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத்தந்தது.

படத்தைதயாரித்தவர்களுக்கு சிறந்தமாநிலப்படமாக தேசிய விருதைப்பெற்றுத் தந்தது. தேசிய விருதுப் பெற்ற முதல் தமிழ் படம் ‘மலைக்கள்ளன்’ தான். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகபி.பானுமதி நடித்தார்.எம்.ஜி.ஆர் பலமாறுபட்ட வேடங்களில் வந்து அனைவரையும் கவர்ந்தார்.இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் முழுத்திறமையும் வெளிப்பட்டது.

எம்.ஜி.ஆரின் படங்களில் நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் பாடல்கள்எப்போதும் இடம் பெற்றிருக்கும்.அதைத் துவக்கி வைத்தப்படம் ‘மலைக்கள்ளன்’ தான்.எம்.ஜி.ஆர் பானுமதியை குதிரையில் அமரவைத்து அழைத்துச் செல்லும் காட்சியில் ‘எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே’ என்று பாடிக் கொண்டே செல்லுவார்.இந்தப்பாடலைகணீர் குரலில் டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருந்தார்.எம்.ஜி.ஆருக்காக டி.எம். சௌந்தரராஜன் பின்னணி பாடிய முதல் படம் ‘மலைக்கள்ளன்’ தான்.

இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய 6 மொழிகளிலும் தயாரித்து வெளியிடப்பட்டது.

இந்தியில் எம்.ஜி.ஆர்.நடித்த வேடத்தில் திலீப்குமார் நடித்தார். எல்லாமொழிகதாநாயகர்களும் எம்.ஜி.ஆரைபின்பற்றியே நடித்தனர். ‘மலைக்கள்ளன்’ 6 மொழிகளிலும் பெரும் வெற்றிப் பெற்றது.

இருப்பவர்களிடமிருந்துது கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு தருகின்ற ராபின்ஹூட் கேரக்டர் அமைந்தபடங்களுக்கு முன்னோடி மலைக்கள்ளன்’ தான்.ஏழைஎளியவர்களுக்கு உதவுகின்ற கதாபாத்திரத்தை ஏற்றுதான் எம்.ஜி.ஆர்.எல்லா படங்களிலும் நடித்திருப்பார். இல்லாதவர்களின் துயரங்களை பிரச்சனைகளை போக்குபவராகஎம்.ஜி.ஆர்.என்றென்றும் இருப்பார் என்ற நம்பிக்கையைமக்கள்மனதில் முதன்முதலில் விதைத்தப்படம் ‘மலைக்கள்ளன்’ தான்.

இந்தப்படத்திலிருந்து தான் எம்.ஜி.ஆர்.ஏழைப்பங்களனாக, தொழிலாளிகளின் தோழனாக, அநீதியைஎதிர்ப்பவராக, தர்மத்தை காப்பவராக, பின்னாளில் பலபடங்களில் இப்படிப்பட்டகதாபாத்திரங்களை ஏற்று நடித்து பேரும்புகழையும் பெறுவதற்கு காரணமாகஅமைந்தபடம் ‘மலைக்கள்ளன்’ தான்.

இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர், பி.பானுமதி எம்.ஜி.சக்கரபாணி (எம்.ஜி.ஆரின் தமையனார்), டி.எஸ்.துரைராஜ், சந்தியா (ஜெயலலிதாவின் தாயார்), பி.எஸ்.ஞானம், டி.பாலசுப்ரமணியம், ஈ.ஆர்.சகாதேவன், சாந்தா, பாலசரஸ்வதிமற்றும் பலர் நடித்திருந்தனர்.கதை&நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை, வசனம் & மு.கருணாநிதி, இசை& எஸ்.எம்.சுப்பையா நாயுடு, பாடல்கள்&நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, டி.பாலசுப்ரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன், தயாரிப்பு & டைரக்ஷன் & எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

விஜயபுரி மிராசுதார் சொக்கேசமுதலியார் (டி.பாலசுப்ரமணியன்) இவரது ஒரேமகள்பூங்கோதை (பானுமதி) இவளுக்கு முறைமாமன் வீரராஜன் ஒரு வில்லன் மனப்பபோக்கு கொண்டவன்.இவனுக்கு துணையாக இருப்பவன் கொள்ளை காத்தவராயன் (ஈ.ஆர்.சகாதேவன்) அடியாட்களை வைத்து ஆட்டிபடைக்கிறவன் குட்டிபுட்டி ஜமீந்தார். பெயருருக்கேற்றாற்போல் குட்டிபுட்டிகளுடன் தான் இருப்பான்.

பூங்கோதையைஇக்கூட்டம் கடத்திவிடுகிறது. ‘மலைக்கள்ளன்’ காப்பாற்றிமரியாதையுடன் திருப்பி அனுப்புகிறான்.முயற்சி தோல்வியடைந்ததால் சொக்கேசரைகடத்தி, பூங்கோதையைமடக்கிதன் வீட்டில் வைத்து அவர்களை சித்திரவதைகளை செய்கிறான் வில்லன்.

அந்தவில்லன் கும்பலிடமிருந்து அவர்களை காப்பாற்றுகிறான் ‘மலைக்கள்ளன்’ மலையிலே வாழ்ந்து வந்தான் மக்களுக்கு பொது நலத்தொண்டு புரிந்தான்.இதனால் அவன் குடும்பம் பாதிக்கப்படுகிறது.பச்சோந்திகளுக்கு பாடம் புகட்டினான். வஞ்சகத்தை வீழ்த்தினான். வெற்றிக்கண்டான் தனது கொள்கையிலே மட்டுமல்லாமல் காதலிலும் வெற்றிக் கண்டான்.ஏழைகளின் தோழனானான்.ஏய்ப்பவர்களுக்கு கள்ளனானான்.காதலிக்கு கணவனாகஆனான்.

Richardsof
25th November 2016, 07:18 PM
எம்.ஜி.ஆர்

இந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்து வாழ்க்கையில் உயர்ந்தவர்களை பட்டியலிட்டால் எண்ணிக்கையிலடங்காமல் நீண்டுக் கொண்டே போகும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் இதயங்களிலும் அன்பென்ற ஆணிகள் அடிக்கப்பட்டு அழகாக மாட்டப்பட்டிருக்கும் உயிரோவியம் எம்.ஜி.ஆர்.

ஒரு நடிகரால் மக்களை கவரவும் முடியும், நாடாளவும் முடியும் என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபித்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சினிமாவில் நடிக்க வந்த நடிகர்களில் சினிமாவை சரியாக பயன்படுத்தி தன்னை உலகளவில் உயர்த்தி கொண்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மட்டும்தான்.



தனக்கு கிடைத்த படவாய்ப்புகளில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தினார். ஏழை எளியோரின் தோழனாக மாற்றிக் கொண்டார். அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவராக உருவாக்கிக் கொண்டார். பெண் குலத்தை பாதுகாப்பவராக அடையாளம் காட்டிக் கொண்டார். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற உணர்வை அனைவருக்குள்ளும் வரவழைப்பதற்காக மனித நேயமிக்க கதாபாத்திரங்களில் நடித்தார். வறுமையை ஒழிப்பவராக, குழந்தைகளை நேசிப்பவராக, மாமனிதராக ஒவ்வொரு படங்களிலும் தன்னை உயர்த்திக் கொண்டார்.

26

தான் நடிக்கும் படங்களில் இடம் பெறும் வசனம், பாடல்களை கூட படம் பார்ப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தான் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த எம்.ஜி.ஆரின் மீது படம் பார்த்துவிட்டு வந்தமக்கள் முழுவதுமாக நம்பிக்கையை வைத்தார்கள்.தனது துன்பங்களை தீர்க்கவந்த தேவது£தனாக பார்த்தார்கள். தொடரும் தங்களது பிரச்சனைகளை தீர்க்க வந்த தீர்க்கதரிசியாக பார்த்தார்கள். ஏன் தங்களது கவலைகளை, தலை எழுத்தை மாற்றவந்த கடவுளாகவும் எம்.ஜி.ஆரை நினைத்தார்கள். அதனால்தான் சினிமாவில் நடிக்க வந்தவரை தமிழகத்தின் முதல்வராகவும் உயர்த்தி வைத்து மக்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.

10

எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் மரணம் வரும் என்பதை தமிழகத்திலிருக்கும் பல குக்கிராமங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அதனால்தான் எம்.ஜி.ஆர். இறந்து விட்டார் என்று ஊருக்குள் போய் சொன்னர்வர்களை கூட அடித்து வெளியே துரத்தியிருக்கிறார்கள். இப்படி கற்பனைக்கு அப்பாற்பட்ட சர்வ சக்தி படைத்த மனிதராக எம்.ஜி.ஆரை உயர்த்தி வைத்து மக்கள் கொண்டாடிக் கொணடிருக்கிறார்கள்.

11

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த இமாலய வெற்றியை, இறவாப்புகழை இவருக்கு வழங்கியது.

fidowag
25th November 2016, 10:16 PM
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், நாளை (26/11/2016) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்கள் மட்டும் இடம் பெறும் . அதன் விளம்பர பேனர்/சுவரொட்டிகளை காண்க .
http://i65.tinypic.com/33wmerd.jpg

fidowag
25th November 2016, 10:17 PM
http://i66.tinypic.com/s3d75d.jpg

fidowag
25th November 2016, 10:19 PM
http://i68.tinypic.com/2vkagky.jpg

fidowag
25th November 2016, 10:20 PM
http://i63.tinypic.com/ern3ft.jpg

fidowag
25th November 2016, 10:25 PM
http://i63.tinypic.com/wlvp1d.jpg
வண்ணத்திரை வார இதழ்


நடிகர் சிவகுமார் பேட்டி .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ,காவல்காரன், இதய வீணை ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.

ஏழு லட்சம் வாங்கும் மக்கள் திலகம் , ஏழாயிரம் வாங்கும் என்னை , அன்புடன்
வரவேற்று, உபசரித்து ,அருகில் அமர்ந்து அரவணைப்போடு பேசிய நாட்கள்
மறக்க முடியாதவை .

fidowag
25th November 2016, 10:34 PM
சினி சாரல் மாத இதழ் -நவம்பர் 2016
http://i67.tinypic.com/2zohtm0.jpg
http://i68.tinypic.com/20hvcyh.jpg

fidowag
25th November 2016, 11:03 PM
http://i63.tinypic.com/1xxwqt.jpg
http://i67.tinypic.com/2h73xw6.jpg
http://i63.tinypic.com/358qtjm.jpg
http://i64.tinypic.com/2vvvo09.jpg

fidowag
25th November 2016, 11:06 PM
http://i65.tinypic.com/2emn6ur.jpg
http://i63.tinypic.com/23rlumc.jpg
http://i63.tinypic.com/1id1qc.jpg
http://i64.tinypic.com/jz7dw8.jpg

fidowag
25th November 2016, 11:07 PM
சினி சாரல் மாத இதழ் -நவம்பர் 2016


இயக்குனர் ப.நீலகண்டன் இயக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.படங்கள் பட்டியல்

1.சக்கரவர்த்தி திருமகள் -1957- இசை -ஜி.ராமநாதன்
2.திருடாதே -1961-இசை -எஸ்.எம்.சுப்பையா நாயுடு
3.நல்லவன் வாழ்வான் -1961- தயாரிப்பு / இயக்கம்.-இசை.டி.ஆர். பாப்பா
4.கொடுத்து வைத்தவள் - வசனம் /இயக்கம் -இசை.கே.வி.மகாதேவன்
5.காவல்காரன் -1967-இசை எம்.எஸ்.வி.
6.கணவன் -1968-இசை எம்.எஸ்.வி.
7.கண்ணன் என் காதலன் 1968-இசை எம்.எஸ்.வி.
8.என் அண்ணன் -1970-இசை கே.வி.மகாதேவன்
9.மாட்டுக்கார வேளாண் -1970-இசை கே.வி.மகாதேவன்
10.குமரிக்கோட்டம் -1971-இசை எம்.எஸ்.வி.
11.ஒரு தாய் மக்கள் -1971-இசை எம்.எஸ்.வி.
12.நீரும் நெருப்பும்-1971-இசை எம்.எஸ்.வி.
13.சங்கே முழங்கு -1972-இசை எம்.எஸ்.வி.
14.ராமன் தேடிய சீதை -1972-இசை எம்.எஸ்.வி.
15.நேற்று இன்று நாளை -1974-இசை எம்.எஸ்.வி.
16.நினைத்ததை முடிப்பவன் -1975-இசை எம்.எஸ்.வி.
17.நீதிக்கு தலை வணங்கு -1976-இசை எம்.எஸ்.வி.

okiiiqugiqkov
26th November 2016, 08:21 PM
http://i64.tinypic.com/f5d9wk.jpg
http://i66.tinypic.com/1zl9p1f.jpg

சாதாரண நடிகையான சச்சு எங்கே? மக்கள் தலைவர் எங்கே?

சச்சுவின் பாட்டி, சச்சுவுக்கு புரட்சித் தலைவரிடம் ஹீரோயின் சான்ஸ் கேட்டதற்கு, ‘ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு கொஞ்சம் போகட்டும்’ என்று மக்கள் திலகம் சொன்னதற்காக சச்சு கோபித்துக் கொண்டு போயிருக்கிறார். சச்சுவை சமாதானப்படுத்தும் வகையில் பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்திருந்து ‘‘நான் அன்னிக்கு அப்படி சொன்னேன்னு கோபமா? கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம்ல’’ என்று புரட்சித் தலைவர் கேட்கிறார்.

சச்சுவை சமாதானப்படுத்த வேண்டும் என்று அவருக்கு அவசியமே இல்லை. யாரையும் காயப்படுத்தாத பொன்மனச் செம்மல் மக்கள் திலகம். சச்சு கொஞ்ச காலம் காத்திருந்தால் நிச்சயம் அவருக்கு தனது படத்திலேயே ஹீரோயின் வேடத்தை தலைவர் கொடுத்திருப்பார். காமெடி நடிகையான பிறகு எப்படி அவரை தலைவர் தனது படத்தில் ஹீரோயினாகப் போட முடியும்? மனோரமா மக்கள் திலகத்துக்கு ஜோடியாக நடித்தால் எப்படி இருக்கும்? நாம் ரசிப்போமா?

சச்சுவை சொல்லியும் தவறில்லை. காத்திருக்கும் நிலையில் அவரது குடும்ப சூழல் இல்லை என்று அவரது பேட்டியில் இருந்து தெரிகிறது. அப்படியும், அவரை மட்டம் தட்டாமல் ‘காமெடி உனக்கு நன்றாக வருகிறது, அதுல பெரிய அளவுல வருவ’ என்று சொல்லி அப்போதும் அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார் நம் மனிதநேய மாமனிதர்!

சச்சுவின் அக்கா மாடி லட்சுமியி்ன் வாழ்வும் அஸ்தமித்துப் போகாமல் வாழ்வு கொடுத்திருக்கிறார் மக்கள் தலைவர். பின்னாளில் அதே மாடி லட்சுமி தலைவரை கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார். அதைப் பற்றி எல்லாம் தலைவர் கவலைப்பட்டதே இல்லை. அவரால் உயர்ந்த பலர் பின்னர் அவரையே தாக்கியிருக்கிறார்கள்.

‘‘என்னால்தான் உனக்கு இந்த வாழ்வு வந்தது, நான் உனக்கு ஒரு காலத்தில் எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறேன். நன்றி மறந்துவிட்டாயே’’ என்று யாரையும் புரட்சித் தலைவர் சொல்லிக் காட்டியதே இல்லை.

அரசியல், சினிமா என்று புரட்சித் தலைவர் கால்வைத்த துறை எல்லாம் வெற்றி. ஆனாலும் அவர் ஆணவம் கொண்டது இல்லை. தூற்றியவர்களுக்கும் உதவி செய்யத் தவறியது இல்லை. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று எதிர்கால உலகம் ஆச்சரியப்படும். அப்படிப்பட்ட மனிதர் குல மாணிக்கத்தின் ரசிகர்கள், தொண்டர்கள் என்பதில் நாம் கர்வம் கொள்ளலாம்.

புரட்சித் தலைவர் பற்றிய பத்திரிகை செய்திகளை தவறாமல் பதிவிடும் நண்பர் லோகநாதன் சார் அவர்களுக்கு நன்றி.

okiiiqugiqkov
26th November 2016, 08:30 PM
http://i65.tinypic.com/2zfu6b7.jpg

மக்கள் திலகம் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல. சினிமாத்துறையில் அவருக்கு தெரியாதது எதுவும் கிடையாது. படத் தயாரிப்பு, இயக்கம், எடிட்டிங், கேமரா கோணங்கள், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, இசை ஞானம், வசனங்களின் முக்கியத்துவம், எந்த வசனங்களை, பாடல்களை எந்தக் காட்சியில் பயன்படுத்துவது என்ற நுண்ணறிவு, நடனத் திறமை, குதிரையேற்றம், சண்டைக் கலைகள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு காட்சி சிறப்பாக அமைய கேமரா கோணங்கள் மிகவும் முக்கியம். அதைவிடவும் முக்கியமானது, அந்த கேமரா கோணத்துக்கு ஏற்றபடி அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகர் குறிப்பிட்ட இடத்தில் நிற்பது. அவ்வாறு குறிப்பிட்ட இடத்தில் நின்றால்தான் காட்சிக்கு மேலும் அழகு கூடும். கேமரா கோணத்துக்கு ஏற்றபடி மிகச் சரியான இடத்தில் நின்று போஸ் கொடுப்பதில் மக்கள் திலகத்துக்கு இணை யாருமில்லை.

நான் ஆணையிட்டால் படத்தில் இடம்பெற்ற, பிறந்த இடம் தேடி … பாடலில் வரும் ஒரு காட்சியின் ஸ்டில்லை இத்துடன் இணைத்துள்ளேன். மக்கள் திலகத்தை வரவேற்க அமைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்கு தனது தலைக்குப் பின்னணியில் வட்டமாக அழகாக தோன்றுமளவுக்கு மிகச்சரியான இடத்தில் நின்று மக்கள் திலகம் போஸ் கொடுக்கும் அழகைப் பாருங்கள். அவரது களங்கமில்லா எழில் முகம் மேலும் அழகு.

தலையைச் சுற்றி ஒளிவட்டம் ஆண்டவனுக்குத்தான் இருக்கும் என்பார்கள். கடவுள் படங்களின் ஓவியங்களில் இதைக் காணலாம். மக்கள் திலகமும் ஆண்டவர்தான், புகழ்ச்சிக்காக சொல்லவில்லை சத்தியத்தைக் கூறுகிறேன். ஒருமுறை அல்ல, எந்த தலைவரும் இதுவரை செய்யாத சாதனையாக தமிழ்நாட்டை புரட்சித் தலைவர் தொடர்ச்சியாக மூன்று முறை ஆண்டவர்தான்!

இப்போது சொல்லுங்கள் நம் தலைவர் ஆண்டவர்தானே!

okiiiqugiqkov
26th November 2016, 08:31 PM
http://i65.tinypic.com/2qm2oi0.jpg

கட்டான கட்டழகு கண்ணா...
உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா...

என்ன ஒரு ஆனந்தமான குளியல்.
பாத்ரூமில் அந்தப் பக்கம் குளிக்கும் சரோஜா தேவியை இந்தப் பக்கத்தில் இருந்து தண்ணீரால் தலைவர் அடிக்கும் இளமைக் குறும்பே தனி.

okiiiqugiqkov
26th November 2016, 08:34 PM
http://i68.tinypic.com/280zet.jpg

ஸ்டைலுக்கே ஸ்டைல் கற்றுத் தந்தவர்.

okiiiqugiqkov
26th November 2016, 08:38 PM
http://i64.tinypic.com/xf42me.jpg

இன்று பிரதோசம். எல்லாரும் சிவபெருமானை தரிசனம் பண்ணிக்கோங்கோ.

நன்னா போட்டு வாங்கிக் குத்துங்கோ..

சம்போ மகாதேவா... ஹரஹர மகாதேவா...

fidowag
27th November 2016, 10:34 AM
நேற்று (26/11/2016) காலை 11 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/f39hzr.jpg

fidowag
27th November 2016, 10:36 AM
இன்று (27/11/2016) காலை 11 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "அன்னமிட்டகை " ஒளிபரப்பாகிறது

http://i64.tinypic.com/znr8nq.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்

Gambler_whify
27th November 2016, 12:22 PM
http://i68.tinypic.com/34y60br.jpg

ஒரு அரைவேக்காடு, ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பவர், ரசிகர் மன்றத்திலேயே பொறுப்பில் இருப்பவர் தப்பும் தவறுமாக தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் உளறிக் கொட்டி வருகிறார். ‘‘பிராப்தம் என்ற சாவித்திரி தயாரித்த படத்தால் சாவித்திரி நஷ்டமடையவில்லை. நல்ல லாபம் வந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு கணக்கு காட்டியவர்கள் சாவித்திரியை சுற்றி இருந்தவர்கள் லாபத்தை தாங்கள் சுருட்டிக் கொண்டு சாவித்திரியை ஏமாற்றி விட்டார்கள்’’ என்று நிறுவுவதுதான் அவரது நோக்கம். அதுபற்றி நமக்கு அக்கறை இல்லை.

சாவித்திரி நொடித்துப் போனார் என்பதைப் பற்றி நாம் பரிதாபம் படலாமே தவிர, ஆராய வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை.

ஆனால், ‘‘பிராப்தம் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பம் கொண்டு சாவித்திரியின் வீட்டுக்குச் சென்று விருப்பம் தெரிவித்தார். சாவித்திரி அவர் விருப்பத்தை ஏற்கவில்லை’’ என்று தமிழக அரசியல் பத்திரிகையில் அந்த பொய்யர் உளறிக் கொட்டி இருக்கிறார். சாவித்திரியின் வீடு தேடிப் போய் படத்தில் நடிக்க மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டாராம். அதுவும் பிராப்தம் படத்தில் நடிப்பதற்காகவாம். கொடுமை. பொய்க்கு ஒரு அளவு வேண்டாமா?

ஏற்கனவே அந்தத் தொடரில் மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது என்று எழுதியதற்காக நாஞ்சில் இன்பா என்ற அந்த நபரை எம்.ஜி.ஆர். மன்றத்தினர் பலரும் மதுரை தமிழ்நேசன், திண்டுக்கல் மலரவன் உட்பட பலரும் செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தோம். சரியாக பதில் அளிக்காமல் போனை கட் செய்தார். இப்போது பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்திரி வீட்டுக்குச் சென்று மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டார் என்று கூச்சமே இல்லாமல் பொய் எழுதி இருக்கிறார்.

ஏற்கனவே இதே தொடரில் அவருக்குப் பிடித்த நடிகரின் மகள் சாந்தியின் திருமணத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த அன்பில் பொய்யாமொழி கலந்துகொண்டார் என்று எழுதி தனது ஞான சூனியத்தை அவர் காட்டிக் கொண்டார். உண்மையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டது அன்பில் தர்மலிங்கம்.

இன்னும் என்னவெல்லாம் பொய்களை அவிழ்த்துவிடப் போகிறாரோ தெரியவில்லை.

okiiiqugiqkov
27th November 2016, 12:49 PM
http://i68.tinypic.com/34y60br.jpg

ஒரு அரைவேக்காடு, ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பவர், ரசிகர் மன்றத்திலேயே பொறுப்பில் இருப்பவர் தப்பும் தவறுமாக தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் உளறிக் கொட்டி வருகிறார். ‘‘பிராப்தம் என்ற சாவித்திரி தயாரித்த படத்தால் சாவித்திரி நஷ்டமடையவில்லை. நல்ல லாபம் வந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு கணக்கு காட்டியவர்கள் சாவித்திரியை சுற்றி இருந்தவர்கள் லாபத்தை தாங்கள் சுருட்டிக் கொண்டு சாவித்திரியை ஏமாற்றி விட்டார்கள்’’ என்று நிறுவுவதுதான் அவரது நோக்கம். அதுபற்றி நமக்கு அக்கறை இல்லை.

சாவித்திரி நொடித்துப் போனார் என்பதைப் பற்றி நாம் பரிதாபம் படலாமே தவிர, ஆராய வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை.

ஆனால், ‘‘பிராப்தம் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பம் கொண்டு சாவித்திரியின் வீட்டுக்குச் சென்று விருப்பம் தெரிவித்தார். சாவித்திரி அவர் விருப்பத்தை ஏற்கவில்லை’’ என்று தமிழக அரசியல் பத்திரிகையில் அந்த பொய்யர் உளறிக் கொட்டி இருக்கிறார். சாவித்திரியின் வீடு தேடிப் போய் படத்தில் நடிக்க மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டாராம். அதுவும் பிராப்தம் படத்தில் நடிப்பதற்காகவாம். கொடுமை. பொய்க்கு ஒரு அளவு வேண்டாமா?

ஏற்கனவே அந்தத் தொடரில் மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது என்று எழுதியதற்காக நாஞ்சில் இன்பா என்ற அந்த நபரை எம்.ஜி.ஆர். மன்றத்தினர் பலரும் மதுரை தமிழ்நேசன், திண்டுக்கல் மலரவன் உட்பட பலரும் செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தோம். சரியாக பதில் அளிக்காமல் போனை கட் செய்தார். இப்போது பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்திரி வீட்டுக்குச் சென்று மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டார் என்று கூச்சமே இல்லாமல் பொய் எழுதி இருக்கிறார்.

ஏற்கனவே இதே தொடரில் அவருக்குப் பிடித்த நடிகரின் மகள் சாந்தியின் திருமணத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த அன்பில் பொய்யாமொழி கலந்துகொண்டார் என்று எழுதி தனது ஞான சூனியத்தை அவர் காட்டிக் கொண்டார். உண்மையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டது அன்பில் தர்மலிங்கம்.

இன்னும் என்னவெல்லாம் பொய்களை அவிழ்த்துவிடப் போகிறாரோ தெரியவில்லை.

http://i67.tinypic.com/34g3ors.jpg

fidowag
27th November 2016, 06:14 PM
தின இதழ் -25/11/2016
http://i67.tinypic.com/2sajnua.jpg
http://i64.tinypic.com/v6ptfp.jpg
http://i66.tinypic.com/2jlsi.jpg
http://i67.tinypic.com/qq94pc.jpg

fidowag
27th November 2016, 06:29 PM
குங்குமம் வார இதழ் -02/12/2016
http://i68.tinypic.com/28bz2ag.jpg
http://i64.tinypic.com/213pw5h.jpg
http://i67.tinypic.com/kb58gw.jpg
http://i64.tinypic.com/2hfkpiv.jpg