PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

RAGHAVENDRA
10th November 2016, 07:10 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14962734_1253249438059059_164429049543519712_n.jpg ?oh=b7f14130bdcb5b6b3b8555becf84410c&oe=58C99DCA

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14991951_1253248891392447_5036061306531653633_n.jp g?oh=385779f41ad670195396444ed72720a2&oe=58C4E148

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14947441_1253248934725776_1345752831196454430_n.jp g?oh=c3be247c71530f72eb2378607adff2af&oe=58CA2CDF

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14956503_1253249024725767_4246372709282470304_n.jp g?oh=ba3e1f28edc2fd42dcaed8d24ccbc278&oe=58C16BED

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14993585_1253249048059098_4950052920673072824_n.jp g?oh=73a4c5cae72f6d6d431d4506718560db&oe=58CA1480

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15027727_1253249064725763_1346142763485488105_n.jp g?oh=ab9dd5a28057191e8b659d79939aabb7&oe=58C5D361

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15032085_1253249098059093_931432333897556683_n.jpg ?oh=cb88fb9cccfedc0e8b573dd52db97bb8&oe=58C65FC1

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14991940_1253249131392423_5449949489867434766_n.jp g?oh=29f616439df5c569b4906be81c6824b9&oe=589636A1

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14937334_1253249234725746_5316744948600542127_n.jp g?oh=264005efed0ba12becb0908462a6637a&oe=588BA8BC

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14956516_1253249301392406_5279804565523175172_n.jp g?oh=d78c53eb055ab33763d8f80222ac1ea8&oe=58927F5B

RAGHAVENDRA
10th November 2016, 07:11 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14993359_1253249458059057_7654568115035935846_n.jp g?oh=ea60bd5f434bdfec17d419f4fa15b88f&oe=58CC8B01

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15037289_1253249504725719_2130814870081782330_n.jp g?oh=1b10a5706a0ba6e93508023a56806577&oe=58955E84

Russellsmd
11th November 2016, 01:13 AM
சிவாஜி பாட்டையும், சுந்தர் எனும் என் நாயகனை நான் எழுதியதையும் பாராட்டிச் சிறப்பித்தமைக்கு..

ஞான ஒளியாரே.. ( நன்றி : ஆதிராம் சார் )
வணங்குதலுடன் நன்றி.

அன்பான வேண்டுகோள் ஒன்று..

கோபால் சாருக்கும், முரளி சாருக்கும், ராகவேந்திரா சாருக்கும் அன்பளித்தது போல்
எனக்கொன்று வேண்டும்...

கடைசித் தருவாயிலிருக்கும் பாதிரியாருக்காக
சிறப்பு அனுமதியின் பேரில் சிறையிலிருந்து வரும் ஆன்டனி, மெலிதான கேவலில் துவங்கி,
பாதிரியார் அருகழைக்க, மடிந்து விழுந்து வெடித்தழுவதை நீங்கள் எழுதிப் படிக்க வேண்டும்.
------------------

K.C.S சார்...

என் எழுத்துகளை வாழ்த்துவதில் எப்போதும்
ஆர்வம் காட்டும் தங்களை நன்றிகளோடு
நினைக்கிறேன். மகிழ்கிறேன்.
------------------

ராகவேந்திரா சார்..

சிவந்த மண் - சொர்க்கம் ஒப்பீட்டை முன்னமே
( மெல்லிசை மன்னர் அஞ்சலி நிகழ்ச்சி குறித்து
எழுதும் போது என்று நினைவு) நீங்கள் சுருக்கமாக எழுதியிருந்தீர்கள். அது ஆனந்தம்.

இது பேரானந்தம்.

Sent from my P01Y using Tapatalk

Gopal.s
11th November 2016, 07:02 AM
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )

ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)

ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)

Gopal.s
11th November 2016, 07:04 AM
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.

ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா

நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே

மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே

ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.

காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....

புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.

நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.

பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.

https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc

Gopal.s
11th November 2016, 07:31 AM
நண்பர்களே,

திரியின் வேகம் கபாலி போன்ற உதவாக்கரை படங்களினால் தடைபடுவது வருத்தத்திற்குரியது. நிறைய தேவையற்ற முடக்கங்கள்.
நண்பர்களே, குறைந்த அளவில் ஆனாலும் செம்மையான ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.என்னோடு பழகிய நண்பர்களுக்கு தெரியும், என்னுடைய தோன்றியதை அப்படியே சொல்லிவிடும் குணத்தால் ,எதிரிகளை விட,நண்பர்களை அதிகம் சோதித்தவன் சிவ பெருமானை போல.அனைத்தையும் பொறுத்து எழுத்தை தொடர்ந்தவர்களுக்கு நன்றி.

மகிழ்வான செய்தி. இதுவரை நம் நடிகர்திலத்தை பற்றி பல புத்தகங்கள் வெளி வந்தாலும் அவை ,உலக பெரு நடிகனை பற்றிய சராசரி தமிழக பார்வையில் வந்தவை. இந்த குறை போக்க எனது பொன்னெழுத்துக்கள் உலகத்தரத்தில் முதலில் ஆங்கிலம் கலந்த தமிழிலும்,பிறகு ஆங்கிலத்திலும், நாசர்,அஜித் ஹரி ,இயக்குனர் மகேந்திரன் முன்னுரையில் வெளியாகும்.இதை இலவசமாக கொடுக்கும் எண்ணமே எனக்கு உள்ளது. எனது வாழ்நாளை பொன்னாட்களாக மாற்றிய உலக கலைஞனுக்கு எனது சிறு காணிக்கை.

ராகவேந்தர்- தலைவா, நவம்பர் 9 முதல் சடேரென உறக்கம் விழித்து எனது ஆதர்ச திரியை உயிர்ப்பித்த உங்களுக்கு முதல் தலைவணக்கம் பிதாமகரே .

வாசு- என்னதான் நாங்கள் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் நீ வந்தால் களையே தனிதான். ஞான ஒளியுடன் வந்தால் கேட்கவா வேண்டும்?

முரளி- உன் தொலைபேசி வாழ்த்துக்கு நன்றி. பாலும் பழமும் விமரிசனத்தில் ராகவேந்தர் மிரட்டிய பிறகு வாழ்த்தெல்லாம் தொலைபேசியில் மட்டுமே.

சந்திரசேகர்- அவருக்கு வாரிசுகள் சொத்தையும் ,அவர் புகழையும் சொந்தம் கொண்டாடட்டும். நாமெல்லாம் பலன் கருதாமல் அவருக்காக உழைக்கும் உண்மை வாரிசுகள். நாம் செய்வது என்றென்றும் நிலைக்கும்.அவர் நமக்கு வாரித்தந்த கலை செல்வமே நமக்கு போதும்.

ஆதவன் ரவி- உனக்கு என்ன சொல்லி பாராட்ட? நேரம் கிடைக்கும் போது கவிதையிலேயே பாராட்டி விடுகிறேன். அதுதான் கவிதை ஞாயம்,உன் கவிதைக்கும் ஞாயம்.

செந்தில் வேல்- என்னுடன் சேர்ந்து 4000 கண்ட உனக்கு ,கண்ட படி பாராட்டை அள்ளி வழங்க கடமை பட்டுள்ளேன்.

சிவா- தங்களை பாராட்ட தகுதியற்றவன். தங்களின் ஈடுபாட்டோடு ஒப்பிடும் போது நானெல்லாம் தூசு . உங்களின் உண்மை ஈடுபாடு இணையற்றது.

முரளி- உன்னிடம் நிறைய எதிர்பார்த்து ஏமாந்தவன். உன்னை பாராட்டுவது வீண். சமீபமாக உன்னுடைய பங்களிப்பு ஒன்றுமேயில்லை.மன்னிக்கவும்.(வெட்டிவிடாதே)

Russellsmd
11th November 2016, 10:18 AM
நன்றி.. கோபால் சார்.

எனக்குப் பிரியமான தங்களின் கவிதையைத்தான் "ஒரு நாளிலே" வர்ணனையாகத் தந்து விட்டீர்களே !?

உலக மகா கலைஞனுக்குக் காணிக்கையாகும்
தங்களின் பொன்னெழுத்துகள் தாங்கி வரும்
நூலுக்கு நல்வாழ்த்துகள்.

Sent from my P01Y using Tapatalk

Gopal.s
11th November 2016, 10:22 AM
நவராத்திரி- 2

ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

இதில் ஒரு விஷயம்.

எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

இனி இந்த படத்தின் ,நடிப்பின் நுண்ணிய தருணங்களை மேலும் அலசுவோம்.

(தொடரும்)

Russellsmd
11th November 2016, 11:38 AM
நெஞ்சத் திரையில் நடிகர் திலகம் -11
-----------------------------------------------------------------

தினம் தினம் திருவிழாவைக் கொண்டு வருகிறார்
நடிகர் திலகம்.

"சிவந்த மண்" பார்த்து சிலிர்த்த விழிகளில் அடுத்த ஆனந்தம் விதைக்க நேற்று "அண்ணன் ஒரு கோயில்" ஆயிற்று.

இதோ.. இதனடியில் நான் இணைத்திருக்கிற
காட்சியைப் பார்த்து ரசிக்காதவர்களின் ஐநூறு,ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமலே போகக் கடவது.

இணைந்த இந்த காட்சித் துண்டில் நான் குறிப்பிடும் இடம் ஒரு அழைப்பு மணிச் சத்தத்தோடு துவங்குகிறது. நம்மைச் சிறந்ததோர்
ரசனை உலகத்திற்குள் அழைக்கும் அழைப்பு மணி
அது.

மாடிப்படியிலிருந்து வேகமாய் இறங்கி வரும்
ஜெய்கணேஷ் கதவு திறக்க, தலைவர் பரபரப்பாய்
உள்ளே நுழைவார்.

போலீசாரால் தீவிரமாக தேடப்படும் டாக்டர் ரமேஷ்,
அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஒரு
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியிருப்பார்.

ஜெய்கணேஷிடம் அந்தக் குழந்தையின் நலம் விசாரிக்கும் அக்கறையாகட்டும்..

"ஆபரேஷன் செஞ்சது நீங்க.. நல்ல பேரென்னவோ
எனக்கு" என்று ஜெய்கணேஷிடமிருந்து அடிக்கும்
பாராட்டுச் சாரலில் கொஞ்சமும் நனையாது,
கடமையாய் காகிதமெடுத்து மருந்து எழுதுவதாகட்டும்..

ஒரு கண்ணியமான மருத்துவர் கம்பீரமாகத் திரைக்கு வருவார்.

நண்பனான மருத்துவரிடம் கெஞ்சி அனுமதி பெற்று, பழசத்தனையும் மறந்து படுத்திருக்கும்
தங்கையைப் பார்க்கச் செல்லும் துடிப்பென்ன?

கவலை பூசிய கை விரல்கள் கொண்டு தங்கையின் தலைகோதும் மென்மையென்ன?

கண்விழித்துப் பார்க்கும் நா வறண்ட தங்கை தண்ணீர் கேட்க.. தங்கையின் இன்றைய நிலையை ஜீரணிக்கவியலாதவராய் எச்சில் கூட்டி
(ஒரு டாக்டர் விழுங்கும் கசப்பு மாத்திரை..?) விழுங்குவதென்ன?

உள்ளிருந்து பொங்கித் திரண்டு வரும் கண்ணீர்த் துளி தங்கை முகம் வீழ்ந்து தெறிக்க.. விழிக்கும்
தங்கை "நீங்க யாரு" என்று கேட்க.. உடைந்து நொறுங்கிய ஒரு குரலில் "டாக்டர்" என்று சொல்வதென்ன?

தன்னையே மறந்து விட்ட தங்கையை நினைந்தழும், நீரோடு பானை விழுந்துடையும்
சத்தத்தோடு வரும் அந்த அழுகையென்ன?

அழுகையோடு கலந்த தன்னிரக்கமென்ன?

இயலாமையைக் குறிப்பதென்ன? இடை விடாத
புலம்பலென்ன?

நினைத்து,நினைத்து அழும் போது நீல நிற கைக்குட்டையை மீண்டும் மீண்டும் பார்ப்பதென்ன?

ஆடிப் பாடி மகிழ்ந்திருந்தவள் அடங்கிப் படுத்திருக்கும் நிலையை சிரித்தும் அழுதும் செப்புவதென்ன?

ஒரு ஐந்து நிமிட நேரத்திற்குள் ஆயிரம் பாவங்கள்
காட்டி நம்மை நடிகர் திலகம் தன் உலகத்துள் இட்டுச் செல்வதென்ன?

"அண்ணன் ஒரு கோயில்" திரைக் காவியத்தை
அதன் தினமான நேற்று பார்க்கும் ஆர்வத்தைத்
தூண்டி விட்ட ராகவேந்திரா சாருக்கும், முரளி சாருக்குமான நன்றிகள் என் நெஞ்சோடு கனப்பதென்ன?


http://youtu.be/swq64io0IpA

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
11th November 2016, 12:01 PM
"நவராத்திரி"-

அசத்துகிறீர்கள்... கோபால் சார்.

முன்பொரு முறை ஒரு வாரப் பத்திரிகையில்
நாமே கேள்வி கேட்டு நாமே பதில் சொல்கிற மாதிரி ஒரு போட்டி வைத்தார்கள். நானும் எழுதினேன்..அனுப்பவில்லை.

என் கேள்வியும்..என் பதிலும்...

" ஒன்பதை விட பத்துதானே பெரிது?"


"ஒன்பதுக்குப் பிறகுதான் பத்து."

Sent from my P01Y using Tapatalk

Gopal.s
12th November 2016, 03:29 AM
Special Thanks to Barani too.

saradhaa_sn
12th November 2016, 11:49 AM
'சிவந்த மண்' நினைவுகள்.......

காவியப்படமான 'சிவந்த மண்' பற்றி நான் எற்கெனவே எழுதிய பதிவின் மீள்பதிவு இது. பலர் படித்திருக்கக்கூடும். சிலர் படிக்காதிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு செய்திருக்கிறேன். ஏற்கெனவே பதித்ததன் 'லிங்க்' பக்கம் தெரியாததால், முழுப்பதிவையும் (சிவந்த மண் வெளியீட்டு நாளை முன்னிட்டு) இங்கு தந்துள்ளேன்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.

ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் camera angles செட் செய்த இயக்குனர் sreedhar க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்

சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.

உதாரணத்துக்கு சில:

1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.

2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.

3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.

4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.

5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.

6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.

7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.

8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.

9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.

10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')

11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.

12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).

13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.

14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".

இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....

"....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.

"......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".

"பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).

"ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)

"இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)

இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.

இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.

15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).

16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.

17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).

'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.

('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)

இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).

எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் ஸ்ரீதருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.

1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.

சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.

அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.

குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.

அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.

saradhaa_sn
12th November 2016, 12:35 PM
அண்ணன் ஒரு கோயில்

தமிழ்த்திரைப்படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழக மக்களால், குறிப்பாக தாய்மார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போன்று நடிகர்திலகமும், நடிகையர்திலகமும் அண்ணன் தங்கையாக நடித்த... (ஸாரி) வாழ்ந்த 'பாசமலர்' திரைக்காவியம் இன்றளவும் தமிழ்ப்படங்களில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாசப்பிணைப்பைக் கிண்டல் செய்யும்போது கூட, 'அடேயப்பா என்னமோ பெரிய பாசமலர் அண்ணன் தங்கை மாதிரியல்லவா உருகுறீங்க?' என்ற சொற்றொடர் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று நடிகர்திலகமும், மற்றைய கதாநாயகர்களும் நடித்த, அண்ணன் தங்கை பாசத்தை அச்சாணியாகக்கொண்ட பல படங்களும் வெற்றிக்கனியை ஈட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் வந்து மாபெரும் வெற்றியடைந்த படம்தான், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான 'அண்ணன் ஒரு கோயில்' வண்ணத்திரை ஓவியம்.

இப்படத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. இப்படம் 1977-ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்தது. இதற்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1952 தீபாவளியன்று, தமிழ்த்திரையுலகின் புரட்சி கீதமாய், எழுச்சிப்பேரலையாய், சமுதாயக்கருத்துக்களை உள்ளடக்கிய காவியமாய் 'பராசக்தி' வெளிவந்து தமிழ்த்திரை வரலாற்றைத் திருப்பிப்போட்டதுடன், அதுவரை நாடக மேடைகளில் கலக்கி வந்த நடிப்புலகின் நாயகனை வெள்ளித்திரையில் காண வைத்தது. எனவே சரியாக 25 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெற்றிநடைபோட்ட நடிகர்திலகத்தின் வெள்ளிவிழா காணிக்கையாக வந்த படம்தான் 'அண்ணன் ஒரு கோயில்'.

படத்தின் துவக்கத்தில், பெரிய மனிதன் போலத்தோற்றம் தரும் ஒருவர், தலையில் தொப்பியும், கண்களில் கண்ணாடியும், முழங்காலுக்கும் கீழே நீண்ட முழுக்கோட்டும் அணிந்து, போலீஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். யார் அவர்? ஏன் ஓடுகிறார்?. அவர் ஒளிந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கட்டில்லா பயணியாக ஒரு பெண் ஸ்டேஷன் மாஸ்ட்டரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்திக்கு உடல்நலக்குறைவு என்று செய்தி வர, அந்தப்பெண்ணையும் அழைத்துப்போகும்போது, இவரும் கூடவே செல்ல, அந்தக்குழந்தைக்கு வைத்தியம் செய்யும்போது இவர் ஒரு டாக்டரென்று தெரிகிறது. அவருடைய கையெழுத்தைப்பார்த்ததும், அந்தப்பெண்ணுக்கு இவர் யாரென்பது பற்றி சந்தேகம் எழ, சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள அவரிடமே கேட்கும்போது அவர்தான் தன்னை மணக்கவிருந்த, சூரக்கோட்டை சின்னையா மன்றாயர் மகன் டாக்டர் ரமேஷ் என்பது தெளிவாக, தான்தான் அவரை மணக்கவிருக்கும் முரளிப்பாளையம் சேதுபதியின் மகள் ஜானகி என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.. (மணக்கவிருந்தவர் என்றால் எப்படி? பெற்றோர் நிச்சயித்த திருமணமா?. அப்படியானால் இருவரும் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டது எப்படி?. காதல் திருமணம் என்றால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதுமே தெரிந்துகொள்ளாமல் போனது எப்படி?. என்பதற்கான விவரம் இல்லை).

தான் ஏன் இப்படி போலீஸ்கண்ணில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் விளக்க, ப்ளாஷ்பேக் விரிகிறது....

பெற்றோரின் மறைவுக்குப்பின் தன் ஒரே தங்கை லட்சுமி (சுமித்ரா)வுக்கு தாயாக, தந்தையாக, ஏன் அவளுக்கு உலகமே தானாக வாழ்ந்துவந்தவர் டாக்டர் ரமேஷ் (நடிகர்திலகம்). அவருக்கு நல்ல நண்பனாக, மற்றும் உதவியாளராக டாக்டர் ஆனந்த் (ஜெய்கணேஷ்), மற்றும் பொல்லா நண்பனாக ரவி(மோகன்பாபு) மற்றும் அவனுக்கும் ஒரு நண்பன் (பிரேம் ஆனந்த்). அமைதியாக, அழகாக சென்று கொண்டிருந்த ரமேஷ், லட்சுமி வாழ்க்கையில் நாகம் புகுந்தது போல ரவியின் கழுகுப்பார்வை லட்சுமியின்மீது விழுகிறது.

தனது பிறந்தநாளன்று, டாக்டர் ஆனந்த் தபேலா வாசிக்க, சிதார் இசைத்தவாறு பாடும் லட்சுமியை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் ரவி, பாரவையாலேயே அவளை விழுங்குகிறான். பின்னொருமுறை ரவி, டாக்டர் ரமேஷைச்சந்தித்து, தான் லட்சுமியை விரும்புவதாகவும் அவளைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறும் கேட்க, அனைத்து தீய பழக்கங்களுக்கும் புகலிடமாக இருக்கும் அவனுக்கு தன் தங்கையை மணமுடிப்பதைவிட பாழுங்கிணற்றில் அவளைத்தள்ளுவது மேல் என்று நினைக்கும் ரமேஷ், திருமணத்துக்கு மறுக்க, வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்கை லட்சுமியைக்குறித்து கேவலமாக பேசும் ரவியை கன்னத்தில் அறைந்து விரட்டி விடுகிறார். அடிபட்ட பாம்பாக அலையும் ரவி, ஒரே கல்லில் இரண்டுமாங்காயாக, தான் விரும்பிய லட்சுமியை தகாத முறையில் அனுபவிக்கவும், தன்னை அவமானப்படுத்திய டாக்டர் ரமேஷைப் பழிதீர்க்கவும் சமயம் பார்த்திருக்கிறான். அந்தநாளும் வந்தது...

தன் தங்கையின் திருமணம் பற்றி, தனக்கு உறுதுணையாக இருந்து வரும் அப்பத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரிடமிருந்தோ ஒரு போன் வருகிறது, டாக்டர் ரமேஷின் தங்கை லட்சுமியை, ரவி தன்னுடைய கெஸ்ட் அவுஸுக்கு கடத்திச்சென்று, சீரழிக்க முயல்கிறான் என்று. (போன் செய்தவர் யாரென்பது கிளைமாக்ஸில் தெரியவருகிறது). காரில் பறந்துசெல்லும் ரமேஷ், காரோடு ரவியின் கெஸ்ட் அவுஸ் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அதற்குள் லட்சுமி சீரழிக்கப்பட்டுவிடுகிறாள். கோபாவேசமாக ரமேஷ் ரவியைத்தாக்க, சண்டையின் முடிவில் ரவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான்.

ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தினால் லட்சுமியின் புத்தி பேதலித்துப்போய், அண்ணன் ரமேஷையே யார் என்று கேட்க, ரமேஷின் மனம் நொறுங்கிப்போகிறது. நடந்த விஷயங்கள் வெளியே தெரிந்தால் தன் குடும்ப மானம், தங்கையின் எதிர்காலம் எல்லாம் பாழாகிவிடுமென்று எண்ணும் ரமேஷ், தனக்கு மிக மிக நம்பிக்கையான நண்பன் டாக்டர் ஆனந்தின் பொறுப்பில் தங்கையை ஒப்படைத்துவிட்டு போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிறார். அப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஓடும்போதுதான், தனக்கு மனைவியாக வரவிருந்த ஜானகியை (சுஜாதா) சந்திக்கிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது....

காட்டில் சுற்றியலையும்போது, ஒரு மரத்தடி சாமியின் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிற்றை எடுத்து ஜானகிக்கு ரமேஷ் தாலி கட்டிய மறுநிமிடம், போலீஸ் அவர்களை சுற்றி வளைக்கிறது. ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கணவனை எப்படியும் விடுதலை செய்வது என்ற வைராக்கியத்துடன் வக்கீல் மேஜரிடம் போக, அவரோ இந்த வழக்குக்கான காரண காரியங்களை கோர்ட்டில் சொல்லி, ரமேஷ் கொலை செய்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று நிரூபித்தால் மட்டுமே ரமேஷை விடுவிக்க முடியும் என்று கூற, சம்பவத்துக்கு ஒரே சாட்சியான லட்சுமியை கோர்ட்டில் பேச வைப்பது ஒன்றே ரமேஷைக்காப்பாற்றும் வழியென்ற எண்ணத்துடன் டாக்டர் ஆனந்தை சந்தித்து, தான் ரமேஷின் மனைவி ஜானகியென்று அறிமுகப்படுத்திக் கொள்ள, 'என்னது, ரமேஷுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று ஆனந்துக்கு அதிர்ச்சி.

ஆனால் தன் கழுத்தில் தாலியேறிய அடுத்த நிமிடமே, ரமேஷ் கையில் விலங்கேறிய சோகத்தை விவரித்த ஜானகி, தற்போது லட்சுமியைக் கொண்டு நடந்த அசம்பாவிதத்தைக் கோர்ட்டில் சொல்ல வைத்தால் மட்டுமே ரமேஷைக்காப்பாற்ற ஒரே வழியென்று சொல்ல, ஆனந்த் மறுத்துவிடுகிறார். காரணம், லட்சுமி தற்போது பழைய நினைவுகளை அறவே நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருப்பதும், தன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதென்று ரமேஷ் வாங்கிய சத்தியமும்தான். ஆனால் ஜானகியோ என்னவிலை கொடுத்தாகிலும் தன் கணவனை விடுத்லை செய்வேன் என்று ஆனந்திடம் சூளுரைத்துப்போகிறாள்.

ஜானகி போன சிறிது நேரத்தில், ‘rape’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலத் திரைப்பட விளம்பரம் ஆனந்தின் கண்ணில் பட, லட்சுமிக்கு பழைய நினைவு திரும்ப இப்படம் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் லட்சுமியை அழைத்துப்போகிறார். திரையில், தன் வாழ்க்கையில் நடந்து கொடுமையான சம்பவம் நடப்பதைப்பார்க்கும் லட்சுமியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருப்பு சம்பவம் நினைவுக்கு வர ஒரு கட்டத்தில் கத்திக்கதறி மூர்ச்சையாகிறாள்.

மயக்கம் தெளிந்து எழுந்ததும், தன் அருகே ஆனந்த் அமர்ந்திருப்பதையும், தன் கழுத்தில் தாலி இருப்பதையும் அறிந்து திடுக்கிடுகிறாள். ஆம், அவளுக்கு பழைய நினைவு திரும்பி விட்டது. ஆனந்த் மெல்ல மெல்ல அவளுக்கு நேர்ந்த கொடுமையையும், அதைத்தொடர்ந்து நடந்த ரவியின் கொலையின் காரணமாக அவளது அண்ணன் ரமேஷ் சிறையில் இருப்பதையும், விசாரணை நடந்து வருவதையும் எடுத்துச்சொல்ல, தனக்கு எல்லாமாக இருந்த தன் அண்ணனைக் காப்பாற்ற லட்சுமி, ஆனந்துடன் கோர்ட்டுக்குக் கிளம்புகிறாள்.

குற்றவாளிக்கூன்டில் நிற்கும் ரமேஷ், லட்சுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளை அழைத்து வந்ததற்காக ஆனந்தைக் கடிந்துகொள்ள, அவளோ தனக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆனந்தே பொருட்படுத்தாமல், தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது தனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை, அண்ணனை காப்பாற்றுவதே தன் ஒரே எண்ணம் என்று கூற, இதனிடையே ஜானகி தன் வக்கீலிடம், இதோ இந்தப்பெண்தான் ரமேஷின் தங்கை, அவரைக்காப்பாற்றக் கிடைத்த ஒரே சாட்சி என்று சொல்ல, வக்கீல் மேஜர், லட்சுமியை பிரதான சாட்சியாக கூண்டில் நிறுத்துகிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை கோர்ட்டில் சொல்லியழும் லட்சுமி, இந்தக்கொலை தன் அண்ணன் செய்யவில்லை என்றும் தானே செய்ததாகவும் கூறினாலும், அரசுத்தரப்பு வழக்கறிஞர், இது எதிர்த்தரப்பு வக்கீலால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மறுக்கிறார். அப்போது கோர்ட்டுக்குள் வரும் ரவியின் நண்பன் பிரேம் ஆனந்த் (கோர்ட் காட்சியின்போது நடிகர் பிரேம் ஆனந்துக்குப் போடப்பட்டிருக்கும் மேக்-அப் மிகவும் அற்புதம். தெய்வமகன் நடிகதிலகத்தின் மேக்-அப்பை நினைவுபடுத்தும்), லட்சுமி சொல்வது முழுக்க உண்மையென்றும், லட்சுமியை தானும் ரவியும்தான் கடத்திச்சென்றதாகவும், அவளை யார் முதலில் அடைவது என்ற சர்ச்சையில், ரவி தன் தலையில் பாட்டிலால் அடித்துக்கீழே தள்ளிவிட்டு லட்சுமியின் கற்பைச்சூறையாட முயலும்போது, தானே ரமேஷுக்கு போன் செய்ததாகவும், பின்னர் ரமேஷ் வந்து ரவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, புத்தி சுவாதீனமில்லாத நிலையில் லட்சுமியே ரவியைச்சுட்டதாகவும், தங்கையின் மானத்தைக்காப்பாற்ற ரமேஷ் கொலைப்பழியை தான் ஏற்றுக்கொண்டு நிற்பதாகவும் சாட்சி சொல்ல, ரமேஷ் விடுதலை செய்யப்படுகிறார்.

தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச்செல்லும் இப்படத்தின் துவக்கத்தில் வரும் ரயில்நிலையக்காட்சிகள் ரொம்பவே அருமையாக சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும். இரவுநேரத்தில், டாக்டர் ரமேஷ் ஒரு அறையில் ஒளிந்துகொண்டிருக்க, ரயில் வரும்நேரம் ஒரு பெண் (ஸ்வர்ணா) பாடிக்கொண்டே, ரயில் நிலையத்தில் இங்குமங்குமாக ஓடி யாரையோ தேடும் காட்சிகள் அருமையான துவக்கமாக இருக்கும். அந்தப்பெண்ணும் ரவியாக வரும் மோகன் பாபுவால் ஏமாற்றப்பட்ட பெண். அவள் ஏமாந்ததன் விளைவாக உருவானதுதான் ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்தி.

நடிகர்திலகத்தின் 'பெர்பார்மென்ஸ்'

** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...

** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...

** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....

** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...

** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடக்கிறவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....

** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....

** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....

இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.

கதையின் போக்கு ரொம்பவே சீரியஸாக அமைந்துவிட்டதால், 'காமெடி ட்ராக்' தனியாக சேர்க்கப்பட்டிருக்கும். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக (கௌரவத்தோற்றத்தில்) தேங்காய் சீனிவாசனும், கான்ஸ்டபிளாக ஏ.கருணாநிதியும், பாயிண்ட்மேனாக சுருளியும், கொள்ளைக்காரியாக மனோரமாவும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். டாக்டர் ரமேஷைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்ற காவல்துறை விளம்பரத்தை வைத்துக்கொண்டு சுருளி அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. அதுபோல, அப்பாவிப்பெண் போல வந்து போலியான கதைசொல்லி ஏமாற்றி கொள்ளையடித்துப்போகும் மனோரமாவும், அவளை மடக்கிப்பிடிக்கும் தேங்காயும் கூட நன்றாகவே சிரிக்கவைப்பார்கள்.

இதற்கு முன் நிறைகுடம், சிவந்தமண், எங்கமாமா, சுமதி என் சுந்தரி என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிகர்திலகத்தின் படங்களில் நடித்து வந்த தேங்காய் சீனிவாசன், சுமதி என் சுந்தரி (14.04.1971) க்குப்பிறகு, கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லை. இதுகுறித்து தேங்காய் கூட பல்வேறு பத்திரிகைப் பேட்டிகளில் குறைசொல்லி வந்தார். இவர் மாற்றுமுகாம் அபிமானி என்பதால் நடிக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் இவரைவிட மாற்றுமுகாம் அபிமானிகளான வில்லன் நடிகர் கே.கண்ணன், ராமதாஸ் போன்றவர்கள் நடிகர்திலகத்துடன் அதிகமான படங்களில் நடித்து வந்தனர்.

காரணம் என்னவாக இருந்தபோதிலும், மிக நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர்திலகத்தின் 'மறப்போம், மன்னிப்போம்' கொள்கையின் காரணமாக, நடிகர்திலகத்தின் சொந்தப்படமான இப்படத்தில் நடித்தாலும் நடித்தார், இதிலிருந்து தேங்காய் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு வரிசையாக அத்தனை படங்களிலும் இடம்பெறத் துவங்கினார். அதிலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சொந்தப்படங்களான திரிசூலத்துக்காக காஷ்மீருக்கும், ரத்தபாசத்துக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும் தேங்காய் அழைத்துச்செல்லப்பட்டார். அத்துடன் பைலட் பிரேம்நாத் படத்துக்காக இலங்கைக்கும், இமயம் படத்துக்காக நேபாளத்துக்கும் சென்று வந்தார். (இவர் நடித்த "மற்றவர்கள்" படங்களில் சென்னையில் வைத்தே இவர் ரோல்களை முடித்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்க, மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். முதல் பாடல், ரயில் நிலையத்தில், கைவிட்டுப்போன காதலனைத் தேடியலையும் ஸ்வர்ணாவுக்காக, வாணி ஜெயராம் பாடிய 'குங்குமக்கோலங்கள் கோயில் கொண்டாள கோதை நாயகன் வருவானடி' என்ற மனதை மயக்கும் பாடல். இரவுக்காட்சிக்கேற்ற திகிலூட்டும் இசையுடன் கலந்து தந்திருப்பார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்ட கதையாயிற்றே அதனால் பாசமலரில் இடம்பெற்ற 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்' பாடலைப்போல அமைந்த பாடல், 'மல்லிகை முல்லை பொன்மணி கிள்ளை, அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை' என்ற மிக அருமையான பாடல். தங்கையின் வருங்கால வாழ்க்கையைப்பற்றி அண்ணன் கனவுகாண, அவனது கனவில் அவள் மதுரை மீனாட்சியாக, கோதையாக, ஆண்டாளாக, சீதையாக வடிவெடுத்து வருகிறாள். பாடல், இசை மட்டுமல்ல, இவற்றைத்தூக்கி நிறுத்தும் ஒளிப்பதிவும் அற்புதம்.

தன்னுடைய பிறந்தநாளன்று, கையில் சிதார் மீட்டியவாறு சுமித்ரா பாடும், 'அண்ணன் ஒரு கோயிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ' இசைக்குயில் பி.சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. தங்கை அண்ணன் மீது கொண்ட பாசப்பிணைப்பை விவரிக்கும் ஒரு வரி.....
'கண்ணன் மொழி கீதையென்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ'

இதே பாடலை, சுயநினைவற்று இருக்கும் சுமித்ராவின் நினைவு திரும்புவதற்காக திரைக்குப்பின்னால் இருந்து ஜெய்கணேஷ் பாடுவார். அவருக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.

நடிகர்திலகமும் சுஜாதாவும் காட்டுக்குள் போலீஸுக்கு மறைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, போலீஸ் ஜீப் வந்துவிட, அவர்கள் கண்களில் படாமல் இருக்க மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட இடைவெளிக்குள் நுழைந்துகொள்ள, அங்கே இருவரும் காதல் வயப்படும்போது, பின்னணியில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் 'நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு... காதல், இன்பக்காதல்'. எஸ்.பி.பி.யும், வாணிஜெயராமும் பாடியிருந்தனர்.

நடிகர்திலகத்தின் வீடாகக் காண்பிக்கப்படும் இடம் ஊட்டியிலுள்ள அரண்மனையின் உட்புறம். இப்படத்துக்காக அக்கட்டிடத்தின் உட்பகுதி புதுப்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை பழம்பெரும் ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் செய்திருக்க, நடிகர்திலகத்தின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.விஜயன் இயக்கியிருந்தார்.

இப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் 'எங்க வீட்டு தங்க லட்சுமி'. படம் உருவாகிக்கொண்டிருந்தபோது, இப்படத்தின் பெயர் 50 களில் ஏ.நாகேஸ்வரராவ் நடித்து பெரும்வெற்றிபெற்ற 'எங்கவீட்டு மகாலட்சுமி' பெயர் போல இருக்கிறது என்றும், மிகவும் பழங்கால டைட்டில் போல இருக்கிறதென்றும் பலரும் அபிப்பிராயம் சொல்ல, படத்தின் பெயரை மாற்றுவதென்று முடிவு செய்து என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் அவரை பாசத்தோடு 'அண்ணன்' என்று அழைப்பதாலும், படத்தின் கதையும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக்கொண்டதாலும், 'அண்ணன் ஒரு கோயில்' என்று வைக்கலாம் என்று முடிவு செய்தபோது அனைவராலும் இந்த டைட்டில் வரவேற்கப்பட்டது.

1977-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த 'அண்ணன் ஒரு கோயில்', நடிகர்திலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டின் நிறைவுப்படமாகவும் அமைந்து மாபெரும் வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்தது. கீழ்க்கண்ட அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடைபோட்டது.

சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
மதுரை - நியூ சினிமா
கோவை - கீதாலயா
திருச்சி - பிரபாத்
சேலம் - சாந்தி
தஞ்சை -அருள்
குடந்தை - செல்வம் (நூர்மஹால்).

வெற்றிகரமாக 100 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்த ஆண்டின் வெள்ளிவிழாப்படமாக இப்படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கதாநாயகன் என்றால் வில்லன் வேண்டுமல்லவா?. எனவேதான் கதாநாயகனின் சொந்தப்படத்தை தடுக்க வில்லனின் சொந்தப்படம் வந்தது. ஆம், அண்ணன் ஒரு கோயில் வெற்றிகரமாக 114 நாட்களைக்கடந்தபோது, 115 வதுநாளன்று பாலாஜியின் 'தியாகம்' படம் இதே திரையரங்குகளில் ரிலீஸானது. 'அண்ணன் ஒரு கோயில்' 114-ம் நாள் விழாவோடு மாற்றப்பட்டு, 'தியாகம்' திரையிடப்பட்டது.

'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிய என் கருத்துக்களைப் படித்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

Gopal.s
12th November 2016, 06:00 PM
ஆதிராம்- தங்களின் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. தங்களோடு பேசியது என் சமீபத்திய சந்தோஷங்களில் ஒன்று.

சாரதா- இது எனக்கு பைபிள் மாதிரி நிறைய முறை படித்திருந்தாலும் ,இப்போது தங்கள் மீள்பதிவாய் பார்க்கும் போது ,புதிதான சந்தோசம் தருகிறது. சிவந்த மண்ணும்,அண்ணன் ஒரு கோயிலும் அடடா....

கார்த்திக்- நீங்கள் ரொம்ப நாள் வராதது ஒரு குறை.வாருங்கள்.

Harrietlgy
12th November 2016, 07:41 PM
Special Thanks to Barani too.

திரு. கோபால் சார் என்னையும் நினைவு வைத்து சொன்னதற்கு மிகவும் சந்தோசம் . நான் ஒன்றுமே செய்யாதவன், ரசிப்பதை தவிர. நீங்கள்,ராகவேந்தர், முரளி, ஆதவன் ரவி, சிவா, செந்தில்வேல் இவர்களுடன் ஒப்பிடும் போது.

saradhaa_sn
12th November 2016, 08:04 PM
சாரதா- இது எனக்கு பைபிள் மாதிரி நிறைய முறை படித்திருந்தாலும் ,இப்போது தங்கள் மீள்பதிவாய் பார்க்கும் போது ,புதிதான சந்தோசம் தருகிறது. சிவந்த மண்ணும்,அண்ணன் ஒரு கோயிலும் அடடா.

டியர் கோபால் சார்,

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. என் பதிவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் பாராட்ட மறப்பதில்லை. ஆனால் உங்கள் அற்புதமான பதிவுகளை நான் பாராட்டுவதில்லை என்ற குற்ற உணர்வு என்னை வருத்துகிறது.

தங்கள் பரந்த உள்ளத்துக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

Russellsmd
12th November 2016, 09:38 PM
நினைப்போம். மகிழ்வோம் -132


"ஆலயமணி"

"பொன்னை விரும்பும்" பாடல்.

"இந்த மனமும் ,இந்த உறவும் என்றும் வேண்டும்
என்னுயிரே!" - இந்த வரிகளைப் பாடுகையில்
அய்யனின் முகத்தைக் கவனியுங்கள்.

தன் மீதான கரிசனத்துடன் தன்னருகே நிற்கும்
பெண், தனக்கே தனக்கென்று எப்போதும் வேண்டும் என்று கெஞ்சுதலாய் ஒரு விண்ணப்பம் எழுதும் முகம்.


Sent from my P01Y using Tapatalk

Russellsmd
12th November 2016, 09:39 PM
நினைப்போம். மகிழ்வோம் -133


ரொம்ப காலமாக ஆசைப்பட்ட பொருள் திடீரென்று
ஒரு நாள் அளவுக்கதிகமாகவே கிடைத்து விட்டால்,
அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற
ஒரு வித குழப்பமும் மனிதனுக்கு அதிகமாகவே
வந்து விடும்.

"சொர்க்கம்"- "பொன்மகள் வந்தாள்" பாடலின்
நிறைவுப் பகுதியில் நடிகர் திலகம் இதை உணர்த்தியிருப்பார்.

ஆடலழகி உதிர்த்த பணப் பரவலிலிருந்து அள்ளி,
அள்ளி இறைப்பார்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
12th November 2016, 09:41 PM
நினைப்போம். மகிழ்வோம் -134


"கௌரவம்"

அழைப்பின் பேரில் மோகன்தாஸ் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தைப் பார்க்க வந்திருப்பான். கண்ணன், அழைத்துச் சென்று பெரியவர் முன்
நிறுத்துவான்.

கண்ணனை சைகையால் விலகி நிற்கச் சொல்லி
விட்டு, பெரியவர் பார்க்கும் அந்த கூர்மைப் பார்வை...

வக்கீல் பார்வை...

Sent from my P01Y using Tapatalk

RAGHAVENDRA
13th November 2016, 07:58 AM
வருக வருக சகோ. சாரதா அவர்களே. தங்களுடைய பதிவுகளை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை.. நடிகர் திலகத்தின் நடிப்பைப் போல...

தொடர்ந்து பங்களிப்பைத் தருக

vasudevan31355
13th November 2016, 08:46 AM
சாரதா மேடம் அவர்களே!

மகிழ்வுடன் அனைவருடனும் சேர்ந்து தங்களை வரவேற்கிறேன். வருக! வருக!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000650149.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_2VOB_000650149.jpg.html)

சிந்தையைக் கவர்ந்த தங்களின் 'சிவந்த மண்' பதிவை என்றுமே மீள்பதிவாக நான் நினைப்பதில்லை. அது எப்போதுமே தலைவர் போல பிரெஷ். அண்ணன் ஒரு கோவில் பதிவும் அது போலவே! புது பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். மீள்வருகைக்கு நன்றி!

(மேற்காணும் தலைவரின் அற்புத போஸை, நடிப்பை தாங்கள் வர்ணித்தவிதம்தான் உங்கள் 'சிவந்த மண்' கட்டுரைக்கு மணிமகுடம்)

vasudevan31355
13th November 2016, 08:54 AM
இதோ! 'அண்ணன் ஒரு கோவிலு'க்கு என் வழிபாட்டு ஸ்டில் பூக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004890785.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004890785.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_005507134.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_005507134.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_000214013.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_000214013.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_001860425.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_001860425.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_001927425.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_001927425.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002167198.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002167198.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002308005.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002308005.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002344275.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002344275.jpg.html)

vasudevan31355
13th November 2016, 08:58 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002344275.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002344275.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002432997.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002432997.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ANNANORUKOVILWWWTECHSATISHNETavi_001635967.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/ANNANORUKOVILWWWTECHSATISHNETavi_001635967.jpg.htm l)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002673270.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002673270.jpg.html)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003104301.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003104301.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003890386.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003890386.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003985681.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003985681.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004182644.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004182644.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004261256.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004261256.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_005187548.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_005187548.jpg.html)

vasudevan31355
13th November 2016, 08:59 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002255686.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002255686.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007220312.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007220312.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007823849.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007823849.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_006089983.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_006089983.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007898924.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007898924.jpg.html)

vasudevan31355
13th November 2016, 09:09 AM
'அன்பைத் தேடு'ம் ஞாபகங்கள்

(13.11.1974)

https://i.ytimg.com/vi/vtJY6a1PF50/hqdefault.jpghttp://ytimg.googleusercontent.com/vi/Nlej0LM24is/0.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000546795.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_02_1VOB_000546795.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_000353344.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_02_2VOB_000353344.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001566538.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_02_2VOB_001566538.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001711659.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_02_2VOB_001711659.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_002090588.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_02_2VOB_002090588.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_001912585.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_02_3VOB_001912585.jpg.html)

vasudevan31355
13th November 2016, 09:11 AM
https://i.ytimg.com/vi/DAf4xFxVSsU/maxresdefault.jpg

https://i.ytimg.com/vi/PuD5y0kY4RY/maxresdefault.jpg

https://i.ytimg.com/vi/hDsKMGTTPXQ/maxresdefault.jpg

https://i.ytimg.com/vi/CTsr7IoQE4s/maxresdefault.jpg

https://tunenow.info/photo/tWwJSp3m1S8:max/default.jpg

vasudevan31355
13th November 2016, 11:17 AM
'அன்பைத் தேடி' (நினைவலைகள்)

புதிய பதிவு

(குறு ஆய்வு)

http://s2.dmcdn.net/cRIl/526x297--ks.jpg

கனவுக் கதாநாயகன் கனவால் அல்லல்படும் வித்தியாசக் கதைக்களம்தான். எதிர்பார்த்த வெற்றி முடியாவிட்டாலும் இன்று பார்க்க நன்றாகவே உள்ளது. நடிகர் திலகம் கனவில் லயித்து நிஜத்தில் நிம்மதி இழப்பது ஜோர்தான். தன் அக்காளும், அத்தானும் ஈன்றெடுத்த 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' 'பேபி' இந்திரா தன்னால் தொலைந்து பின் இறந்துவிட்டதாக எண்ணி, தன்னுடைய காதல் மனைவி ஜெயா மூலம் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை பரிகாரமாக அக்காள் குடும்பத்திற்குத் தர முடிவு செய்து, அக்காளும், அத்தானும் அனுபவிக்கும் அதே வேதனையை தானும் அனுபவித்தே தீர வேண்டும் என்ற நாயகனின் 'தனக்குத்தானே தண்டனை' முடிவும் வித்தியாசமே. எல்லாமே இருந்தும் ஏதோ சில இல்லாதது போல முழு திருப்தி அடைய இயலாமல் போய் விட்டது. ஆனால் தலைவர் இருக்கையில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் வந்து விடுமா என்ன!

'6 விக்கெட் எடுத்தால் இந்தியா வின்' என்று ஜி.கே சொல்லிச் சென்றுவிட, தன்னை கிரிக்கெட் பௌலராக நினைத்து கனவு கண்டு, அத்தான் பேக்டரியின் பீங்கான் கப்களை பந்தாக சுவற்றில் வீசி தூளாக்கி தூள் கிளப்புவது தூள்.

பழக்காரி நாயகியுடன் அப்பாவியாய் வம்பில் மாட்டித் தவிக்கும் கட்டங்களும் பழங்கள் போலவே இனிமைதான்.

மறந்தும் மனசில் கள்ளமில்லாத மாமாவைப் பற்றி இந்திரா பாடும் 'மாமாவின் மனசு வெள்ளை மனசு' கலக்கல்.

தான் அப்பாவியாய் இருக்கையில் தன்னைக் கலாய்த்த சுபாவை தலையில் பெட்டி தூக்க வைத்து பழி வாங்கும் காட்சிகள் சுவையோ சுவை.

முக்தாவின் பிடித்த கவர்ச்சி வில்லனை, 'ராஜா' ஜம்புவை மற்றும் செந்தாமரையை புரட்டி எடுத்து நடிகர் திலகம் பழி தீர்க்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தோ விருந்து.

குழந்தையைத் தர முதலில் ஒப்புக்கொண்டு, பின் பாசத்தில் வாக்கு மாறும் நாயகியிடம் 'நான் அனுபவிக்கிற சுகத்திலயெல்லாம் உனக்குப் பங்குண்டு... ஆனா எனக்கு கிடைச்சிருக்கிற தண்டனையில உனக்கு பங்கில்லை?' என்று எக்குவது (ப்ளூ கலர் ஷர்ட்டும், டாலருமாக இன்னா அழகாக இருப்பார்!) அருமை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355106/VTS_02_3.VOB_002328768.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355106/VTS_02_3.VOB_002328768.jpg.html)

மனைவி கொடுத்த லாக்கெட்டை கையில் வைத்து தேய்த்தபடியே 'தாயா? குழந்தையா'? என்று 'சிசேரியன்' கண்டிஷனில் ஜெயாவை நினைத்து புலம்பும் கட்டமும் ஜோர். ('உலகத்துல எல்லாருக்கும் மனைவி இருக்காங்க...ஆனா எனக்கு கிடைச்ச மனைவி மாதிரி" என்று அழுகையில் பெருமைப்பட்டு, 'ஆஹா!' என்ற ஒற்றை வார்த்தை தந்து, அடக்கி வாசித்து ஆர்ப்பாட்டம் செய்வார். படத்துலே கொடி நாட்டும் காட்சி இதுதான்.)

கிளைமாக்ஸ் விறுவிறுவிற்காக குழந்தை கடத்தல், வில்லன்கள் மனோகர், ஸ்ரீகாந்த், பைட் என்று மசாலா கலவைகளும் சுவை குன்றாதவை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355106/VTS_02_2.VOB_001506003.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355106/VTS_02_2.VOB_001506003.jpg.html)

கனவுக் காட்சியான 'புத்தர் பெருமான்' 'சாவிலா வீட்டில் சாம்பல் வாங்கி வா' என்று ஜெயாவைப் பணிக்கும் அமைதிக் காட்சியும், திலகத்தின் தூய தமிழ் உச்சரிப்பும் ஓஹோ!. (வல்லவன் நீயே... வையகம் அறியும்" நடிகர் திலகத்திடம் ஜெயா சொல்லும் வசனம் இது)

'பேபி இந்திரா' பெயரை வைத்துக் கொண்டு 'சோ' பேசும் நையாண்டி வசனங்கள் வயிற்றைப் பதம் பார்க்கும். ('அம்மா இந்திரா! உன் உதவி இல்லைன்னா ராமு இந்த வீட்டிலேயே இருக்க முடியாதில்லே! (சிரிக்காம இருக்க முடியுமா?) பேஷ்! பாப்பா இந்திரா! அம்மா இந்தி..ரா! நீ மனசு வச்சா என்ன வேணும்னாலும் பண்ணலாம்)

'மெல்லிசை மன்னரி'ன் பாடல்கள் இன்னொரு பலம்.

'மிஸ் மெட்ராஸ்' கிராஸ் அணிந்து, சிகப்பு உடை கலக்கலோடு கோல்ட் கிரவுன் சூடி, பொம்மைக் கூந்தல் அலங்காரத்தில் ஜெயா மேடம் 'சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி' வைத்து செம அழகு. ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் படத்தில் அழகாகத் தெரிவார். உடன் 'வெண்ணுடை வேந்தர்' வெண் கோட் சூட்டில் ஜெயாவைவிட அழகாய் ஆண், பெண் அனைவரையும் பொறாமைப்பட வைப்பார். இதிலும் முதலிடமே! எதிலும்.

படுகேஷுவலாக லுங்கி, ஜிப்பா, பனியன் சகிதம் மைசூர் பிருந்தாவனத்தில் ஜெயாவுடன் 'அன்பர்' போடும் 'புத்தி கெட்ட பொண்ணு ஒன்னு சுத்துதடி என்னையே' பாடல் செம குத்தாட்டம். வெளிப்புறப் படப்பிடிப்பு கண்ணுக்கு ரம்மியம். புஷபலதா குரலில் 'அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்' டாப் ராகம்.

'சிப்பியிலே முத்து...அதில் சிப்பிக்கென்ன சொந்தம்?' என்று கதையோடு ஒட்டிய வாணி ஜெயராமின் பாடலும், அதற்கேற்ற மேடத்தின் நடிப்பும், திலகத்தின் சோக முத்திரைகளும, மெல்லிசை மன்னரின் மென்மையான, இதயத்தை சோகமாக்கும் இனிமையான டியூனும்....பாராட்ட வார்த்தைகள் இல்லை. (இப்பாடலின் இரண்டாவது சரணத்தின் இறுதியில் வரும், தலைவர் புகழ் பாடும் 'ஆணையிடும் தலைவனுக்கு ஈடு இணை இல்லை' என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை)

'மேஜர்' கன ஜோர். ஜாடிக்கேத்த மூடி விஜயகுமாரி. 'பேபி' இந்திரா என்றும் 'பளிச்'. ஆச்சி, ஸ்ரீகாந்த், மனோகர், செந்தாமரை இவர்கள் வழக்கமாய். 'ராக்கம்மா' சுபா ராங்கி நாகரீக உடையில் சற்றே வில்லித்தனம். சகுந்தலா இல்லாமலா?

கலைஞானம் கதை. தூயவன் வசனம். என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, முக்தாவின் இயக்கம் என்று அனைத்தும் தரம். (முக்தாவின் ஏகப்பட்ட வினோத வில்லங்க வியாதி கதாபாத்திரங்கள் இதிலும் தொடரும். இப்படி கேரக்டர்கள் உண்டு பண்ணுவது முக்தாவின் வியாதி)

பவுர்ணமி நிலவாக இல்லாவிட்டாலும் அமாவாசை அல்ல. முழு நிலவாக பிரகாசிக்கா விட்டாலும் முக்கால்வாசி நிலவாய் ஒளிர்ந்து இப்போது இன்னும் ரசிக்க வைக்கிறது.


என்றும் உங்கள் அன்பைத் தேடும்
வாசுதேவன்

RAGHAVENDRA
13th November 2016, 03:12 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/vasu9000grtgs_zps8qeyp8aj.jpg

saradhaa_sn
13th November 2016, 03:30 PM
ஒப்பில்லாத ஒன்பதாயிரம் பதிவுகளோடு திரியின் பெரும் பணக்காரராக திகழும் (அத்தனையும் வெள்ளை, கருப்புக்கே இடமில்லை) அன்பினிற்கினிய சகோதரர் நெய்வேலியார், ஸாரி ஞானஒளியார் (நன்றி ஆதிராம் சார்) வாசுதேவன் அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தங்களின் தொய்வில்லா தொண்டுக்கு நன்றிகள்.

Russellsmd
13th November 2016, 05:04 PM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்...

வணங்குகிறேன்.. தங்கள் எழுத்துகளையும்,
தங்களின் வருகையையும்.

என் போன்ற இளையவர்கள் மிகப் பிரயத்தனப்பட்டு, எழுத்துக் கூட்டி இன்று எழுதுவதை தாங்கள் அன்றே அநாயசமாக
எழுதியவர் என்பதை தங்களின் "சிவந்த மண்"
மீள் பதிவு கர்வமாக அறிவிக்கிறது.

தங்களின் உன்னத எழுத்துகள் தொடர்ந்து வந்து
எங்கள் காலத்தையும் பெருமை செய்யும் என்று
நம்புகிறேன்.

Sent from my P01Y using Tapatalk

Richardsof
13th November 2016, 06:01 PM
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
http://i68.tinypic.com/29ekuau.jpg
9000 பதிவுகள் திரியில் வழங்கி சாதனைகள் படைத்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் .

Richardsof
13th November 2016, 06:06 PM
சாரதா மேடம் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகம் திரியில் பதிவுகள் வழங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி .ஏற்கனவே அவர் பதிவிட்ட எல்லா தரப்பு பதிவுகளும் மிகவும் அருமை . குறிப்பாக மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விமர்சனம் மறக்க முடியாது . இனி தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .

Russellsmd
13th November 2016, 06:24 PM
காலம் கொண்டாடும்
காவிய நாயகனுக்காய்
நாளும் பிறக்கும்
நல்ல எழுத்துகளை...

அவற்றில்
நாங்கள் உணர்ந்த
உண்மையின் ஆழத்தை...

உளப்பூர்வமான
அர்ப்பணிப்பை...

ஞான ஒளி்யாரின்
ஒப்புயர்வற்ற
ஒன்பதாயிரத்தை...

வணங்குகிறேன்.

Sent from my P01Y using Tapatalk

Harrietlgy
13th November 2016, 07:33 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 151 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/88941999714787730521195052881Thanga_Patthakam.jpg

சிவாஜி கணேசனைப் பொறுத்த வரையில் அவருக்கு அவர் நடிக்கும் வேடம்தான் முக்கியம். அந்த கதாபாத்திரம் வில்லனா, கதாநாயகனா என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. தனக்கு நடிக்க அந்த கதாபாத்திரத்தில் வாய்ப்பு இருக்கிறதா என்பதைத்தான் பார்ப்பார்.இதை சிவாஜியே கதை – வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் சொல்லியிருக்கிறார்.
`ஒரு படத்தில் கதாநாயகன் வேடம்தான் அணிய வேண்டும் என்பது முக்கியமல்ல. வில்லன் வேடமாக இருந்தாலும் சரி அல்லது வேறு குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி. அது ரசிகர்களால் பேசப்படும்படியாக நடித்துக் காட்டவேண்டும். அதுதான் நடிப்பு. கதாநாயகியுடன் `டூயட்’ பாடிவிட்டால் மட்டும் அது நடிப்பாகிவிடாது’ என்றார்.
இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு படம் உண்டு. நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம். இவர் `மஜ்பூர்’ என்ற இந்திப் படத்தின் உரிமையைப் பெற்று, தமிழில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா ஜோடியாக நடிக்க, ஆரூர்தாஸ் வசனமெழுதி எடுத்த படம்தான் ` நான் வாழ வைப்பேன்.’
அந்தப் படத்தின் கடைசி இரண்டு ரீல்களில், இந்திப் படத்தில் நடிகர் பிரான் நடித்த கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.
படம் முடிந்து, முதல் பிரதியை சிவாஜிக்கு போட்டுக் காட்டினார்கள்.
`மைக்கேல் – டி. சவுஸா’ என்கிற பெயரில் ஒரு வழிப்பறி திருடனாக ரஜினி நடித்த அந்த பாத்திரத்துக்குப் படத்தின் உச்சக்கட்ட காட்சியில் அமைந்திருந்த முக்கியத்துவத்தைப் பார்த்த சிவாஜி, `இந்த ரஜினியோட `கேரக்டர்’ல நான் நடிச்சிருக்கணும். ஏன்னா, கிளைமாக்ஸ் ரஜினி மேலே போயிடுச்சு. இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்னு யாரும் எனக்கு சொல்லலையே?’ என்றார்.
அதற்கு பதிலளித்த ஆரூர்தாஸ், `ரஜினி நடித்தது கெஸ்ட் ரோல். ஹீரோவான உங்க பேரைச் சொல்லித்தான் படத்தை விற்க முடியும். இந்திப் படத்தை அமிதாப் பச்சனை வைத்துத்தான் வியாபாரம் செய்தார்கள். ரஜினி நடித்த பாத்திரத்தில் நடித்த பிரானை வைத்து அவர்கள் வியாபாரம் செய்யவில்லை’ என்றார்.
அதற்கு சிவாஜி, ` ஹீரோ என்ன ஹீரோ?` ஆக்டிங் ஸ்கோப்’ இல்லாம சும்மா ஹீரோயின் பின்னால போய் மரத்தை சுத்தி ஆடிக்கிட்டு. எனக்கு முன்னாலேயே சொல்லியிருந்தா அந்த ஹீரோ ரோலை ரஜினிக்கு கொடுத்துட்டு அவர் செய்த ரோலை நான் செய்திருப்பேன். இப்ப `கிளைமாக்ஸ்’ ரஜினி மேலே நின்னுடுச்சு. நான் மக்கள் மனதில் இருக்கமாட்டேன்’ என்றார்.
அதுதான் சிவாஜி.
படத்தில் தான் எத்தனை காட்சிகளில் வருகிறோம் என்பது அவருக்கு முக்கியமில்லை. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மக்கள் மனதில் நிற்க வேண்டுமென்றுதான் அவர் நினைப்பார். சிவாஜி ‘நான் வாழ வைப்பேன்’ படத்தைப் பற்றி சொன்னது உண்மைதான். ஆனால் ரஜினிக்கு அப்போது அவ்வளவாக மார்க்கெட் மதிப்பு கிடையாது. அதனால் அவரை ஹீரோவாக போட்டு படத்தை எடுத்திருக்க முடியாது.
`புதிய பறவை’ படத்தில் சிவாஜியின் கதாபாத்திரம் என்பது நெகட்டிவ் கேரக்டர்தான்.
அந்தப் படத்தில் சவுகார் ஜானகியும் `நெகட்டிவ் கேரக்டர்’ என்பதால் நடிப்பால் தனது `நெகட்டிவ் கேரக்டரை’ சிவாஜி உயர்த்திக் காட்டிவிட்டார்.
`சிவாஜி கணேசன் ஒரு பிறவி நடிகர்’ என்பதால் அவரது முகத்துக்கு எடுப்பாக செதுக்கியது போன்று இயற்கையாக அந்த நீண்ட மூக்கும், பெரிய விழிகளும், வாய்த்தாடையும் வேறு யாருக்கும் அப்படி அமையவில்லை. அவருடைய முகத்தை நேரடியாகப் பார்த்தாலும், பக்கவாட்டில் பார்த்தாலும் எடுப்பாகவே இருக்கும். அந்த அமைப்பு இருந்ததால்தான் `சிவாஜி’ வேடம் அவருக்கு அத்தனை பொருத்தமாக அமைந்தது. பெரும்பாலும் மராட்டிய வீரர் சிவாஜியின் புகைப்படத்தை புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் பக்கவாட்டில்தான் போடுவார்கள். சிவாஜியின் உடல்வாகு எந்த உடை அணிந்தாலும், அழகாகவும் பொருத்தமாகவும்தான் அவர் இருப்பார். இதை அவர் நடித்த பல படங்களிலும் பார்க்கலாம். கடவுளர் வேஷமாகட்டும், ராஜா வேஷமாகட்டும் மற்ற சமூக படங்களில், கதாநாயகர் வேஷமாகட்டும், அந்தந்த பாத்திரங்களுக்கான வெவ்வேறு உடைகள் அவருடைய உடலுக்கு அப்படி பொருந்திவிடும்.
ஒழுக்கம், உணவு விஷயங்களிலும் சிவாஜி கட்டுப்பாட்டோடு இருந்தார்.
அதே போல் ஒரு நாடகத்திலோ, அல்லது வேற்றுமொழி படங்களிலோ நல்ல கதாபாத்திரம் இருந்தால் அந்த பாத்திரத்தில் தான் நடிக்க வேண்டுமென்று சிவாஜி ஆசைப்படுவார். இதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். முதலில், நாடகம். சிவாஜி நடித்த ‘தங்கப் பதக்க’த்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.
இந்த படத்திற்கு கதை – வசனம் எழுதிய இயக்குநர் மகேந்திரன் என்னிடம் சொன்ன விஷயம் இது. அப்போது மகேந்திரன் துக்ளக் பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் அங்கே உதவி ஆசிரியர்.
காரசாரமான சினிமா விமர்சனங்களை `போஸ்ட்மார்ட்டம்’ என்ற தலைப்பில் `டாக்டர்’ என்ற பெயரில் எழுதி வந்தார். ஒரு நாள் துக்ளக் ஆசிரியர் சோவைப் பார்க்க சிவாஜியின் பால்ய நண்பரும், நடிகருமான எஸ்.ஏ. கண்ணனும், நடிகர் செந்தாமரையும் வந்திருந்தார்கள். சோ அப்போது அலுவலகத்தில் இல்லை. வெளியே போயிருந்தார். அவருக்காக காத்திருந்த கண்ணனும், செந்தாமரையும், மகேந்திரனிடம் `சோவிடம் நாடகத்திற்கு கதை கேட்க வந்தோம். உங்களிடம் நல்ல கதை இருந்தால் கூட சொல்லுங்களேன். நாடகமாக்குவோம்’ என்றார்கள்.
உடனே மகேந்திரன் பக்கத்தில் இருந்த ஒரு மேல்நாட்டு பத்திரிகை பக்கம் பார்த்தார். அதில் `ஹடாரி’ படத்தில் நடித்த ஜான் படம் இருந்தார். அது ஓர் ஆங்கிலப்பட விளம்பரம். அதில் ஒற்றைக்கண்ணை துணியால் மூடியபடி ஜான் வெய்ன் படம் இருந்தது. அந்த படத்தின் தலைப்பு `தி ஷெரிப்.’
ஷெரிப் என்றால் மேலைநாடுகளில் போலீஸ் என்று பொருள். அதைப் பார்த்த மாத்திரத்தில் மகேந்திரன் மனதில் ஒன்று தோன்றியது. உடனே வந்திருந்த இருவரிடமும், `அப்பா போலீஸ். பிள்ளை திருடன்’ இதுதான் கதை’ என்றார்.
இருவருக்கும் இந்த ஒற்றைவரி ஐடியா பிடித்துப் போனது.
`இதையே நாடகமாக எழுதிக் கொடுங்களேன்’ என்றார்கள். நாடகம் உருவாயிற்று. நாடகத்தின் தலைப்பு `இரண்டில் ஒன்று.’ அதை செந்தாமரையின் நாடகக்குழு மேடையேற்றியது. நாடகம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
நாடகத்தின் கதைக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. சுமார் 30 நாடகங்கள் நடந்திருக்கும். ஒரு நாள் சிவாஜி செந்தாமரையை அழைத்தார்.
`என்ன? உன் நாடகத்தைப் பத்தி எல்லோரும் ‘ஓஹோ’ன்னு பேசிக்கிறாங்க. நான் எப்ப பாக்கறது?’ என்று கேட்டார்.
சிவாஜி நாடகத்தைப் பார்த்தார்.
அடுத்து....
(தொடரும்)

Gopal.s
14th November 2016, 04:56 AM
வாசு,

9000 விட 10000 என்பது சிறப்பானது.சீக்கிரம் அங்கு வா.

நண்பர்களுடன் தொடர்பே இல்லாமல் என்றேனும் ஓர் நாள் அன்பை தேடி லோ லோ என்று அலைவாய் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அன்பை தேடி ,முக்தாவின் முதல் வண்ண படம். புதிய கரு.புதிய களம் .கலைஞானம்-தூயவன் இணைவு ,சோ நகைசுவை எல்லாமே அமைந்தும், எம்.எஸ்.வீ ஓரளவு திருப்தியான பாடல்களை கொடுத்தும், பாலசந்தர் போட்ட கருப்பு-வெள்ளை அணுகுண்டு அவள் ஒரு தொடர்கதை, எல்லாவற்றையும் பூண்டோடு அழித்தது 1974
தீபாவளியில்.

KCSHEKAR
14th November 2016, 10:52 AM

சிவந்த மண், அண்ணன் ஒரு கோவில்

சாரதா மேடம்,

சிவந்த மண், அண்ணன் ஒரு கோவில் விமர்சனத்துடன் திரியில் மீண்டும் தங்களின் பதிவினைக் காண்பதில் மகிழ்ச்சி. தொடருங்கள், நன்றி.

KCSHEKAR
14th November 2016, 10:53 AM
வாசுதேவன் சார்,

தங்களின் 9000 முத்திரைப் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி. தங்களின் பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

Russellxor
14th November 2016, 01:30 PM
வாசு சார்

9000பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
உங்களுக்காக இதோ...
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20161114132506_zpsi1zdkptv.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20161114132506_zpsi1zdkptv.gif.html)

Russellsmd
14th November 2016, 01:38 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161114133006474_zpssbya0iwx.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161114133006474_zpssbya0iwx.jpg.html)

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
14th November 2016, 11:32 PM
நெஞ்சத் திரையில் நடிகர் திலகம் -12
-----------------------------------------------------------------

"அன்பைத் தேடி"-

நேற்று 42 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது.. நம் இதயத்தின் தேவைகளை
நடிகர் திலகம் பூர்த்தி செய்வதைப் போல.

"ஏனோ வெற்றியடையவில்லை" என்று வாசு சார் வருத்தப்படுகிறார். ஏன் எடுபடவில்லை
என்று ராகவேந்திரா சார் விளக்குகிறார்.

படம் வெளியான நாளிலிருந்து வெகுகாலம்
தள்ளி,நிறைந்த அரங்கத்தில், நிறைவோடு
"அன்பைத் தேடி" பார்த்த என் போன்றோருக்கு அந்தக் கவலையில்லை என்று ஒரு பக்கம் மனம் சந்தோஷித்தாலும், "அன்பைத் தேடி" யின் காலத்தில் அது குறித்த வெற்றிக் கனவுகளோடும், அது குறித்த நினைவுகளோடுமே பயணித்துக்
கொண்டிருந்த மூத்த ரசிகர்களின் மெலிதான ஏமாற்றங்கள் அவர்களின் வார்த்தைகளில்
ஒட்டியிருப்பதைப் பார்க்க வருத்தமாகத்தான்
இருக்கிறது.

நல்லதைக் கொண்டாடத் தெரியாத சண்டாளத்
தமிழர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து
தொலைக்கிறார்கள்.
---------------------

இத்துடன் ஒரு பத்து நிமிடக் காணொளி
இணைத்துள்ளேன். அதில் கடைசி நான்கு
நிமிடத்தைப் பாருங்கள்.

இதில் அய்யா ஏற்றிருக்கிற அந்த "ராமு" கதாபாத்திரம் திடீரென்று ஒரு நிமிஷத்தில் மாற்றம் பெற்று, அனைவரின் கவனத்தையும்
தன் வசம் ஈர்க்கக் கூடிய கதாபாத்திரம். சிறப்பு மிக்க அந்த "திடீர் நிமிஷத்தை" இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்டோரைத் தாண்டி நடிகர் திலகமே தீர்மானித்திருக்கிறார் என்பது இந்தக்
காட்சியில் விளங்கும்.

சதா கனவுகளோடு வாழும் நாயகன், தன் கனவுப்
பழக்கத்தால் தனது பிரியமான அக்காள் மகள்
குழந்தை இந்திராவைத் தொலைத்து அவளது
சாவுக்கும் காரணமாகிறான். "எங்களைப் போலவே பெற்றுப் பறி கொடுப்பாய்" என்று
அத்தான் கொடுத்த சாபத்தை, தலை வணங்கி
ஏற்றுக் கொள்கிறான்.

புராண, சரித்திர பாத்திரங்களில்.. படித்தறிந்ததை,
கேள்வி ஞானத்தை வைத்து நடித்து ஜெயித்து விடலாம்.

நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கவே
வாய்ப்பில்லாத, நாசமாய்ப் போன இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் நல்லவனான "ராமு"
என்கிறவனை தன் கலையறிவால் கற்பனை செய்து, நடித்து ஜெயிப்பது எளிதான காரியமல்ல.

அத்தான் கொடுத்த சாபத்தை ஏற்றுக் கொண்டு,
மணந்து,பெற்று, தானம் தந்து விடத் தயாராகும்
ராமு, தனக்கு இதில் உதவுமாறு கேட்டுக் கொள்ள
தன் காதலியை வரச் சொல்லியிருக்கிறான்.

காதலி, ராமுவின் மாளிகைக்கு வருகிறாள்.

பளீரென்று வெள்ளை உடை தரித்து மாடி விட்டு
ராமுவாக இறங்கி வருவார்.. நடிகர் திலகம்.

காதலியிடம், தன்னை மணந்து கொள்ளச் சம்மதமா என்று ஒரு ஒழுக்கமான ஆடவன்
பொட்டிலடித்தாற்போல் கேட்டு விட மாட்டான்.

கேட்க வேண்டிய கட்டாயத்திற்கும், அதிரடியாகக்
கேட்கவியலாத சூழலுக்கும் ஊடே "நீ என்னைக்
கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று தயங்கிக்
கேட்பதற்கு நடிகர் திலகம் எடுத்துக் கொள்கிற
கால அவகாசம் அற்புதமானது.

ஒரு தேர்ந்த இசையமைப்பாளர்,ஒரு நல்ல பாடலுக்கான தாளத்திற்கு சரியான இடைவெளிகள் விட்டுத் தரும் கால
அவகாசத்தையொத்தது அது.

காதலி கல்யாணத்திற்கு சம்மதித்த பின் அடுத்த
இறைஞ்சுதல்.

"நமக்குப் பிறக்கும் குழந்தையை நம்ம குழந்தை
இல்லேன்னு நினைச்சு வேற ஒருத்தருக்குத்
தானம் குடுக்க நீ சம்மதிப்பியா?"

சில த்வனிகள் நம்பிக்கையைத் தன்னுள் நிறைத்தபடி வெளிப்படும். நடிகர் திலகம் இதைக்
கேட்கும் த்வனி, 'காதலி இதற்கு(ம்) சம்மதிப்பாள்'
என்கிற நம்பிக்கையுடையதாகவே இருக்கும்.

அதிர்ந்து போகும் காதலி, "யாராவது அப்படி தானம் குடுப்பாங்களாய்யா? என்று கேட்க...

"யாரும் குடுக்குறாங்களோ.. இல்லையோ? நான்
குடுக்கணும்" எனும் நடிகர் திலகத்தின் உறுதிக்
குரல் அவரது லட்சியத்தில் அவர் பிடிவாதமாய்
இருப்பதைக் குறிக்கிறது.

உறுதிக் குரல் அடுத்த விநாடியே மென்மையாகி,
தனது லட்சியத்திற்குப் பின்னால் இருக்கும் சோகக் கதையை காதலியின் முன் விரிக்கிறது.

கதை கேட்டு, நல்லவனான தன் நாயகனை வியந்த காதலி அவனது லட்சியத்திற்கு தான்
உறுதுணையாக இருப்பதாக உறுதி சொல்லும்
போது, ஒரு நெகிழ்வான அழுகையைக் கரைத்துக்
கொண்டு உருகுகிறது. உருக்குகிறது.

ஒரே ஒரு நாயகரின் உலகறிந்த சிம்மக்குரல்..
அந்த மகாகலைஞரோடு சேர்ந்து கொண்டு
விதவிதமாய் நடிக்கிறது.

ஆண்டாண்டு காலங்களுக்கு முன் அய்யன் செய்த
அற்புதம் இந்தத் தலைமுறைக்கும் பிடிக்கிறது.

எனக்கு ஆறு வயதாயிருக்கையில் உலகம் பார்த்த
ஒரு உற்சாகத் தீபாவளியை "அன்பைத் தேடி"
பார்த்து ஆனந்தமாய்க் கொண்டாடிய பொறாமைக்குரிய மூத்த ரசிகர்களுக்கு என் வந்தனங்கள்.

http://youtu.be/48ZuRRHdOqs

Sent from my P01Y using Tapatalk

vasudevan31355
15th November 2016, 08:23 AM
ஆதவன் ரவி!

'அன்பைத் தேடி' காட்சி விளக்கம் அருமை. தங்கள் ரசனை மெச்சத் தகுந்தது.

தங்கள் விருப்பம் போல மரணப்பிடியில் இருக்கும் பாதிரியாரிடம் மடிந்து, ஒடிந்து விழும் ஆண்டனியின் உடல் மொழியையும், உள்வேதனைகளையும் இன்னும் வெளிக்கொணர முயல்கிறேன். அதைவிடவும் இன்னொரு சிறப்பான காட்சி. அவ்வளவு இலகுவாக வார்த்தைகளில் வடித்துவிட இயலாது. அதை நம் ராகவேந்திரன் சாருக்காக எழுதுவதாக கூறியிருந்தேன். இப்போது அது உங்களுக்குமாக சேர்த்து விரைவில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ssss.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/ssss.png.html)

'கடவுள் தந்த இருமலர்கள்' பாடலில் 'சுந்தர' சுந்தர் உண்மை நிலையை உணருமுன் மாடியில் கருவண்ண உடையில் நின்றபடி தன்னை கருவருத்தவளை அழுத்தமான இறுக்கத்துடன், ஆழ்மனதில் புதைந்து போன ஆழமான மாறாத வடுக்களுடன், நெஞ்சமெல்லாம் வஞ்சமாக 'பாடுடி...பாடு. உன் நடிப்புக்கெல்லாம் மயங்கிய ஏமாளி சுந்தர் என்று இப்போதும் என்னை நினைக்கிறாயா? என்னிடமே நடிக்கிறாயா?... இனி உன் ஆட்டம் செல்லாது' என்று பழைய காதலி உமாவை மெளனமாக, அதே சமயம் தீர்க்கமாக, மூர்க்கமாக முறைத்தபடி (மனைவிக்கும் தெரிந்துவிடாதபடி) நிற்கும் அந்த ஒரு வினாடிக் காட்சியை தங்கள் கவிதை நடையில் ஆழமாகத் தருக.

(முரளி சாரும், ராகவேந்திரன் சாரும், நானும் இமை கொட்டாமல் பார்த்து பார்த்து, ரசித்து ரசித்து, வியந்து வியந்து இப்போதும் வியக்கும் காவியக் காட்சி. எப்போதும் வியக்கப் போகும் விலையில்லா உயரிய உயிர்க் காட்சி)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sss1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sss1.jpg.html)

Russellsmd
15th November 2016, 06:11 PM
நன்றி வாசு சார்...

பாராட்டுகளுக்கு,

தாங்கள் விரைவில் எனக்குத்
தரவிருக்கிற ஞான ஒளிப் பரிசுக்கு,

இவனெழுதுவான் என்ற நம்பிக்கையோடு எனக்கு "இரு மலர்கள்" பரீட்சை வைத்த அன்புக்கு,

இன்னும் அத்தனைக்கும்.

இதோ.. எனக்குத் தெரிந்த வரை தேர்வு எழுதியிருக்கிறேன்.

திருத்துங்கள்.. ( சரியான வார்த்தை!)

http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/tapatalk_1479184740697_zpshl0gvgtc.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/tapatalk_1479184740697_zpshl0gvgtc.jpg.html)

* அந்த அழகு விழி இரண்டும்
அன்றிருந்தது
காதலிக்கான வரவேற்பறையாக.

இன்று ஆனது..
அவளைக் கொல்ல
ஆயுதங்கள் தயாராகும்
பட்டறையாக.


நல்லவர்களின் கோபம் சக்தி வாய்ந்தது என்பதற்கு சுந்தரின் கோபம் விளக்கம். கனல்
கக்கும் அவன் கண்களிரண்டும் காதலி மீதான
ஈவு, இரக்கத்தை எல்லாம் விலக்கும்.


* அந்த காந்த விழி இரண்டும்
அன்றிருந்தது
காதலெனும் கோயிலிலே
தீபமாக.

இன்று ஆனது
காதலியின் துரோகத்தைக்
கொளுத்த வந்த
தீப்பந்தமாக.


சுந்தரின் கோபம் சாதாரணமானதல்ல. 'சாம்பார்
சரியில்லை' என்று மனைவியோடு மதியம் துவங்கி, சாயங்காலம் சமாதானமாகி விடுகிற
சராசரிகளின் கோபமில்லை. தாமத வருகைக்காக
மேலதிகாரி கடிந்து கொள்ளும் போது கனிந்து
சிவந்து, மறுநாள் அவரே மன்னிப்புக் கேட்டதும் மடிந்து விடுகிற கோபமில்லை. அது, ஒரு ஆண்மகனின் கோபம் மட்டுமல்ல. ஆண்மையின் கோபம்.

கண் மண் தெரியாத கோபமல்ல. கண்ணுக்குள் உறுத்தலாய் இருப்பவளின் மீதான கோபம்.

வலிக்க,வலிக்கத் தாக்கும் கோபமல்ல. வலி தாங்கிய உள்ளத்தின் கோபம்.

இழப்பை உண்டாக்க முனையும் கோபமல்ல.
இழப்பின் கோபம்.

தன்னை விலக்கிச் சென்றவளின் வாழ்வழியச்
சாபமிடும் வக்கிரக் கோபமல்ல. தன் பக்கம்
இருக்கும் நியாயத்தையும்,உண்மையையும்
உணர்த்தும் உக்கிரக் கோபம்.


* அந்த எழில் விழி இரண்டும்
அன்றிருந்தது
காதலுக்கும்,காதலிக்குமான
வழிபாட்டுத் தலமாக.

இன்று ஆனது
காதலிக்கான
தண்டனைக் களமாக.


சுந்தரின் கோபத்தில் நியாயமிருக்கிறது. அவனது
கோபம் "பதிலுக்குப் பதில்" என்கிற வன்மமில்லை.
"உமா ஏன் தன் வாழ்வினின்றும் நீங்கினாள்.. ஏன்
தனக்கு அவள் துரோகம் செய்தாள்" என்றெல்லாம்
அவனைத் துளைத்தெடுக்கும் அவனது மனசாட்சியின் கேள்விகளுக்கு அவனால் சொல்ல முடிந்த ஒரே பதில் அந்தக் கோபம்.


* அந்தக் காந்த விழி இரண்டும்
அன்றிருந்தது
காதல் கவிதைகளின்
அடிகளாக.

இன்று ஆனது
காதலியைத் தகர்க்க வந்த
வெடிகளாக.


'காதலி துரோகம் செய்யவில்லை..தியாகம்
செய்திருக்கிறாள்' என்பது கதையின் நாயகன்
சுந்தருக்குத்தான் தெரியாது. நம் காவிய நாயகனுக்கு நன்றாகவே தெரியும். ஒன்றும்
தெரியாதது போல், நிஜ சுந்தராகவே ஆகி,நடிகர் திலகம் பார்க்கும் அந்த அக்கினிப்பார்வை..
காலகாலத்துக்கும் வியப்பல்லவோ?


* அந்த வெளிச்ச விழி இரண்டும்
அன்றிருந்தது
அன்பு மொழிப் பேச்சாக.

இன்று ஆனது
புயலொன்றின் வீச்சாக.


காதலையும், காதலனையும் தியாகம் செய்த
ஒருத்தி வேதனை மிகுதியில் பாடுகிறாள்.. அவள்
பாடுவதை இன்றைக்கு மற்றொரு குணவதியின்
கணவனாக,ஒரு அழகுப் பெண் குழந்தையின்
தகப்பனாக இருக்கிற அவளது முன்னாள் காதலன் ஒரு வெறுப்பான, அலட்சியம் மிகுந்த கோபமான பார்வை கொண்டு பார்க்கிறான்.
இது காட்சி.

ஒரு தியாகவதி பாடுவதாய் வரும் இப்பாடல்
தாய்க்குலத்தைத் தன் வசம் ஈர்க்கிற பாடல்.
நியாயமாக இந்தப் பாடல், நாட்டியப் பேரொளியை
கவனிக்க வைக்கிற பாடல். அதில் ஒரு நெருப்புப்
பார்வை பார்க்கும் ஒரு விநாடியை எடுத்துக்
கொண்டு, எலலோரின் கவனத்தையும் தன் வசம்
ஈர்க்கிறார்..நடிகர் திலகம்.

உப்பரிகையில் கையூன்றி அய்யன் பார்க்கும்
அந்தக் கூர்மைப் பார்வை என்னவோ நொடிப் பொழுதுதான்.

ஆனால் அந்த அற்புதப் பார்வை நம் நெஞ்சங்களில் நிலைப்பதென்னவோ..யுகக்
கணக்கிலன்றோ..?

http://youtu.be/AW8Y-IsPWBs

Sent from my P01Y using Tapatalk

saradhaa_sn
15th November 2016, 07:29 PM
டியர் ஆதவன் ரவி,

'அன்பைத்தேடி' படத்தில் சில நிமிடங்கள் வந்து போகும் காடசியிலும், இருமலர்கள் படத்தின் நான்கு நிமிடப்படலில் சில வினாடிகளே வந்து போகும் காடசி பற்றியும் உங்கள் ஆழ்ந்த விவரிப்பு கண்டு அசந்தேன். என்னவொரு தீர்க்கமான ஆய்வு மற்றும் விவரிப்பு. அந்த அற்புத கண்களின் அன்றைய நிலையையும், இன்றைய சூழலையும் புலப்படுத்துவதில் தான் என்னவொரு கவிதை நயம்.

முன்பு முரளியண்ணா இந்தக் காடசியை விவரித்த பாங்கு மீண்டும் மனதில் அலைகளாக மோதுகிறது. மரப்பிடியில் கையூன்றியபடி கண்களில் கோபம் கொப்பளிக்க, ஸாரி கோபமென்று சொல்ல முடியாது ஒருவித கடுப்புடன் நின்று பார்ப்பதும், பக்கத்தில் நின்ற மனைவி பாடத் தொடங்கியதும், அதை எதிர்பாராதவர் போல திடுக்கிட்டு திரும்புவதும் எத்தனை தத்ரூபம் இவர் நடிப்பில்.

இவர்களின் முன்கதை தெரியாத அப்பாவி மனைவி, ஆசிரியையின் சோகத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பாடலில் பங்குபெறுவது எத்தனை இயல்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

இப்படங்களின் இருவேறு காடசிகளை உங்களுக்கே உரிய தனி நடையில் விவரித்து அழகு சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

வாசுவின் நடையில் முரட்டுப்பயல் ஆண்டனியின் அட்டகாசங்களுக்கு காத்திருக்கிறோம்.

Russellxor
15th November 2016, 08:00 PM
[QUOTE=Aathavan Ravi;1311164]நன்றி வாசு சார்...


***உப்பரிகையில் கையூன்றி அய்யன் பார்க்கும்
அந்தக் கூர்மைப் பார்வை என்னவோ நொடிப் பொழுதுதான்.

ஆனால் அந்த அற்புதப் பார்வை நம் நெஞ்சங்களில் நிலைப்பதென்னவோ..யுகக்
கணக்கிலன்றோ..? ****

அருமை.அருமை.ஆதவன் அவர்களே.பாராட்டுக்கள்.

adiram
15th November 2016, 08:04 PM
1974 தீபாவளி வெளியீடாக 'அன்பைத்தேடி' குமபகோணம் நூர்மஹால் தியேட்டரில் திரையிடப் பட்டு மூன்று முறை பார்த்தாகி விட்டது. படம் நன்றாகவே இருந்தது. என்ன காரணமோ கூட்டமில்லை. அன்றைக்கு கும்பகோணத்தில் சிறந்த தியேட்டர் அதுதான். சவாலே சமாளி அங்குதான் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பிற்காலத்தில் செல்வம் என்று பெயர் மாற்றப் பட்டபின் அண்ணன் ஒரு கோயில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

குறைந்த நாட்களே ஓடிய அன்பைத்தேடி அன்றைக்கு எடுக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டு இறுதிநாள் மாலைக்காட்சி போனோம். மறுநாள் திரையிடப் போகும் புதிய படத்துக்கு ஸ்லைடு காண்பித்தனர். இருபத்து மூன்று நாட்களிலேயே அன்பைத்தேடிபடம் எடுப்பதை அறிந்து மனது வலித்தது. இரவு ஒன்பதரை மணிக்கு படம் முடிந்து வெளியே வந்தோம். அன்பிற்கினிய எம்.ஜி.ஆர். ரசிக நண்பர்கள் அன்பைத்தேடிக்காக கட்டப்பட்டிருந்த, மெருகு கலையாமல் இருந்த நமது கொடிகள், பேனர்கள், ஸ்டார்கள் ஆகியவற்றை கொஞ்சம்கூட சேதப்படாமல் அவிழ்த்து ஒருபக்கம் பத்திரமாக வைத்துவிட்டு, மறுநாள் அங்கு திரையிடப்பட விருக்கும் "சிரித்து வாழ வேண்டும்" படத்துக்காக அவர்களுடைய பேனர்கள், ஸ்டார்கள், தோரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஸ்டார் மற்றும் பேனர்களை நமது மன்றத்தினர் சைக்கிள்களிலும் தட்டு வண்டிகளிலும் திருப்பி எடுத்து சென்றனர். நாங்கள் இதய கனத்துடன் வீடு திருப்பினோம்.

vasudevan31355
16th November 2016, 07:12 AM
ஆதிராம் சார், சாரதா மேடம் வருகையால் திரி மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.

ஆதிராம் சார்,

'ஞான ஒளி' பதிவை படித்துப் பாராட்டியதற்கு நன்றி. தங்களின் 'அன்பைத் தேடி' கும்பகோண நினைவலைகள் என் நினைவலைகளை தட்டி எழுப்பி விட்டன. கடலூர் நியூசினிமாவிலும் நீங்கள் குறிப்பிட்ட அதே நிலைமைதான். ஆனால் ஓடினால் ஓடியது இல்லையென்றால் இல்லை என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்ளும் ஒரே ரசிகர்கள் தலைவரின் ரசிகர்களாகிய நாம் மட்டுமே. இதற்காக நாம் தனியாகவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். தங்களின் 'ஒளியார்' பட்டமெல்லாம் 'அவர்' ஒருவருக்கே. தாங்கள் என் மீது கொண்ட பற்றுதலுக்கு என் மனமார்ந்த நன்றி.

vasudevan31355
16th November 2016, 08:19 AM
ஆதவன் ரவி!

அபாரம். சுந்தர் பார்வை பற்றிய பரிமாற்றக் கவிதை நடை வெகு அழகு. ரசித்து சுவைத்து மகிழ்ந்தேன்.

//'காதலி துரோகம் செய்யவில்லை..தியாகம்
செய்திருக்கிறாள்' என்பது கதையின் நாயகன்
சுந்தருக்குத்தான் தெரியாது. நம் காவிய நாயகனுக்கு நன்றாகவே தெரியும். ஒன்றும்
தெரியாதது போல், நிஜ சுந்தராகவே ஆகி,நடிகர் திலகம் பார்க்கும் அந்த அக்கினிப்பார்வை..
காலகாலத்துக்கும் வியப்பல்லவோ?//

அதுதான் நடிகர் திலகம்.

பரிக்ஷை வைத்தவரையே படபடப்புடன் ஒரே மூச்சில் ரசித்துப் படிக்க வைத்த ஆதவக் கவியே! உன்னை மனமுவந்து பாராட்டுகிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/iru%20malargal.mpg_007438769.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/iru%20malargal.mpg_007438769.jpg.html)

சுந்தருடைய கோபமெல்லாம் உமாவிடம் வெடிக்கும் அந்த அற்புதக் காட்சியில் அப்பட்டமாகத் தெரியும். உமாவின் பக்கம் நியாயம் இருப்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் நடிகர் திலகம் குத்தீட்டிகளாய் உமாவை கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும் போது உமாவின் பக்கம் நமக்கு பரிதாபம் ஏற்படுவதை மறக்கடித்து விடும் நம்மவரின் அந்த விஸ்வரூபக் காட்சி நடிப்பு. 'நல்லா அப்படிக் கேள் தலைவா' என்று நியாயம் உணர்ந்த நாமே அரங்கில் எழுந்து நின்று கத்தத் தோன்றும். அது மட்டுமா? உமா மீது கோபம் மட்டுமே கொண்டிருந்தவர், ஆத்திரம் மட்டுமே கொண்டிருந்தவர், அவளால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டுமே மனதில் நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தவர், பொங்கிக் கொண்டிருந்தவர், ஏன் நாம் 'ரிஜெக்ட்' செய்யப்பட்டோம் என்ற ஓயாத கேள்விகளுடன் உள்மனதில் போராடிக் கொண்டிருந்தவர்.... அவளை பேசவிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுது துளைத்து, அக்கினிப் பிராவகமாய்ப் பொங்கி, இறுதியில் இந்த மனிதர் உமாவின் மேல் கொண்ட கோபம் கோபமே அல்ல...அது அவள் மீது கொண்ட பாசம்...அவள் மீது கொண்ட நேசம்...அவள் மீது கொண்ட தீராக் காதல்...அவள் மீது கொண்ட அக்கறை என்பதை பட்டவர்த்தனமாக நம்மை ஒரு நொடிப் பொழுதில் உணரச் செய்து, உமாவையும் உணரச் செய்து 'ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கிறே?' என்று விம்மி வெடித்து நெஞ்சு வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு ஒரு பொங்கு பொங்கி, தன்னையும் மீறி அழுது அலம்பல் பண்ணுவாரே! அதுவரை அவள் மேல் இருந்த கோபமெல்லாம் தற்காலிகமே என்பது போலல்லவா அந்த அழுகையும் அக்கறையும் இருக்கும்! 'நீ எக்கேடு கெட்டாவது போ...எனக்கென்ன? என்னை ஏமாற்றியவள் அல்லவா!' என்ற சராசரி துன்பக் காதலனைப் போலவா நம் சுந்தர்? மனம் முழுதும் மண்டிக் கிடைக்கும் ஏமாற்றப்பட்ட அல்லது வஞ்சிக்கப்பட்ட சோகத்தைவிட 'எப்படி இருந்த நம் காதலி நம் கண்முன்னமேயே இப்படி உருக்குலைந்து நிற்கிறாளே' என்ற இரக்கமும், அக்கறையும் அவள் மீது இருந்த கோபத்தையும் தாண்டி அந்த அழுகையில் வெளிப்படுவது அல்லது வெளிப்பட்டுவிடுவது ஏமாற்றப்பட்ட காதல(ன்)ர்களுக்கு புது இலக்கணம் அல்லவோ! அதை உலகிற்கு உணர்த்திக் காட்டுவது சுந்தரா அல்லது நடிகர் திலகமா என்கின்ற கேள்விக்குத்தான் எனக்கு இன்றுவரை விடை தெரியவில்லை.

(என்ன மனிதரய்யா இந்த மகான்! அந்த வாயும், அந்த அழகு அழுகையும், அடடா! என்ன பிறவி அது!)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/iru%20malargal.mpg_007440949.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/iru%20malargal.mpg_007440949.jpg.html)

நன்றி ஆதவன். சுந்தர் பார்வை பற்றிய தங்கள் கவிதைப் பார்வை களிப்பூட்டி அதே சமயம் கவலையிலும் ஆழ்த்திவிட்டது. சுகக் கவலையில்.

Russellsmd
16th November 2016, 02:28 PM
தேர்வு வைத்த பேராசிரியரிடமிருந்து மதிப்பெண் எதிர்பார்த்து பதைப்புடன் காத்திருந்த போது,
மற்றொரு மதிப்புமிகு பேராசிரியையிடமிருந்து
இனிப்பே வந்து விட்டது.

நன்றி.. சாரதா மேடம்.. மிக்க நன்றி.

நெகிழ்த்திய தங்களின் வாழ்த்து, இந்த மாணவனுக்கு மிகவும் பெருமை.

---------------
என்றும் அன்பு மாறாத தங்களின் பாராட்டுகளுக்கு
நன்றி.. செந்தில்வேல் சார்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
16th November 2016, 02:30 PM
நன்றியோ நன்றி.. வாசு சார்.

தேர்வில் தேறி விட்டேன் என்று சந்தோஷக் குதியல் போடும் நேரம்.. அய்யன் நடிகர் திலகம்
எனும் ஆசான், கை நிறைய எண்ணற்ற புதுப்
பாடங்களோடு சிரிக்கிறார்.

Sent from my P01Y using Tapatalk

RAGHAVENDRA
16th November 2016, 09:59 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14054069_1259260067457996_102586754395510451_n.jpg ?oh=e1b24594123de072a041cdd8fee69b64&oe=588E7148

Murali Srinivas
16th November 2016, 10:36 PM
வாசு, சாரதா, ஆதவன் ரவி, கோபால் போன்ற திரியின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பங்களிப்பு செய்யும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. ஆயிரம் facebook, whatsapp வந்தாலும் நமது மய்யம் நடிகர் திலகம் திரி போல் வரவே முடியாது என்ற என் எண்ணம் மேலும் வலுப்படுகிறது.

சாரதா, உங்கள் சிவந்த மண் பதிவு என்னால் மறக்கவே முடியாது. முதன் முறை நீங்கள் அதை பதிந்த போது அதன் பின்னூட்டமாக அந்த காட்சியின் சில சிறப்புகளை பற்றி நான் பதிந்திருந்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. ("உணர்ச்சிகள் வார்த்தையில் அல்ல செயல்களில் வேண்டும்" என்று ரங்காராவிடம் ஒரு காலை உயர்த்தி வசனம் பேசும் முறை, "இந்த நாட்டின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று பதிலளிப்பது பற்றியெல்லாம்). அந்த சுகமான நினைவுகளை மீண்டும் நினைவு கூற வைத்ததற்கு நன்றி. அது போல் வாசு குறிப்பிட்ட கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சியை பற்றி நான் முன்பு எழுதியிருந்ததை நினைவு வைத்து எழுதியது உங்களுக்கே உரித்தான பண்பு.

வாசு,

நான் என்ன சொல்வது? நம் உள்ளில் கலந்து விட்ட ஒரு காவியத்தை அதன் ஒரு உயிர்ப்பான காட்சியைப் பற்றி நீங்கள் எழுதுவதுடன் கூடவே கவிதை சித்தர் ஆதவன் ரவியையும் எழுத வைத்து "நற்கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனிதிச்சுவை கலந்து" என்று புலவர் பாடியது போல் ஒரு விருந்தே பரிமாறி விட்டீர்கள். அதுவும் நீங்கள் போட்டிருக்கும் அந்தக் காட்சி ஆஹா! (என்ன ஆனான் உன் பணக்கார மாப்பிளை?)

ரவி,

அருமை என்பது சம்பிரதாய வார்த்தை. தொடருங்கள்!

அன்புடன்

Russellxor
17th November 2016, 01:41 PM
நினைவுகள்

பொள்ளாச்சி நகரில் எந்த வருடத்தில் இருந்து திரையரங்குகள்
ஆரம்பிக்கப்பட்டன என்ற வரலாறு சரியாக அறிய முடியவில்லை.ஆனால் 100 நாட்கள் ஓடிய முதல் படத்தின் வரலாற்றை மட்டும் நன்கு அறிவேன்.எனக்கு வயது அப்போது ஒன்பது.100 நாட்கள் அல்ல.,அதையும் தாண்டி 128 நாட்கள் ஓடிய முதல் படம் திரிசூலம்.

எனக்கு நன்றாகநினைவிருக்கிறது.ஒரு டெம்போவில் இரு புறமும் பட
பேனர் வைத்து ஒலி பெருக்கியுடன் அறிவிப்பு செய்து கொண்டு,பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டும்,நோட்டீஸ்களை கற்றை கற்றையாக வீசிக்கொண்டும் தெருக்களில் பவனி வரும்.பேனர்கள் வரையப்பட்டவை.
அப்பொழுதெல்லாம் கை தூரிகைகளால் வரையபட்ட பேனர்கள் தானே.அந்த கால கட்டங்களில் திரையரங்குகளில் வைக்கப்பட்ட பேனர்களை ரசிப்பதே பெரும் ஆனந்தம். அன்று ரசித்ததில் கால்வாசி கூட இன்று வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்களை ரசிக்க முடிவதில்லையே.வரையப்பட்ட பேனர்களின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
குறிப்பாக சினி ஆர்ட்ஸ் வரையும் விளம்பரங்கள் தத்ரூபமாக இருக்கும்.

50நாள்.,75 நாள்,100வது நாள்,என படம் நாட்களை தாண்டும்போது அந்தடெம்போ விளம்பர வாகனம் வந்ததுண்டு. திரிசூலம் படத்திற்கு தான் அந்த டெம்போ விளம்பரம் நான் பார்த்திருக்கிறேன்.அதற்கு முன் மாட்டுவண்டியில் கூம்பு போல் தட்டிகளில் போஸ்டர்கள் ஒட்டி வலம் வந்ததுண்டு.திரிசூலம் தமிழ்நாட்டின் மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் படம் இல்லையா.அதனால் தான் என்னவோ அந்த டெம்போ விளம்பரம்.

டெம்போ விளம்பரம்இது போல் தான் இருக்கும்:
http://uploads.tapatalk-cdn.com/20161117/7312b07fbc5b4a98b7845970ba7bae4a.jpg

http://uploads.tapatalk-cdn.com/20161117/fdd66fc3952430ca90abf51b39da4d97.jpg

டெம்போ வந்து நின்றதும் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்படும்.அந்த நோட்டீஸ்களை வாங்க கூட்டமே சேரும்.அந்த நோட்டீஸ்களைமுண்டியடித்து வாங்குவதில் பெரும் களேபரமே நடக்கும். முதலில் வாங்கியவன் போட்டியில் ஜெயித்தது போல் நடப்பான்.அந்த நோட்டீஸ்களை எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு தடவை முயற்சிகள் நடக்கும்.
திரிசூலம் 125 நாட்களைத் தாண்டியும் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்தது.பொள்ளாச்சி ஒரு சிறு நகரம்.அந்த நகரத்தில் 100 நாட்கள் என்பதே மலைக்க வைத்த சாதனை.வரும் படங்களுக்கு வழிவிட்டு கௌரவமாக எடுக்கப்பட்டு விட்டது.

காலம் நோட்டீஸை எப்படியோ தொலைக்க வைத்து விட்டது.ஆனால் நினைவுகளை?

Murali Srinivas
17th November 2016, 11:04 PM
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நவம்பர் மாத கோட்டவாக (quota) நான்மாடக் கூடல் வாழ் மக்களுக்கு விருந்தளிக்க வீராவேச கர்ஜனை புரிய வருகிறார் காலத்தை வென்ற காவிய நாயகன் கட்டபொம்மன். இம்முறை டிஜிட்டலில் அல்லாமல் முன் போலவே 35 mm திரையில் காட்சியளிக்கிறார் நடிகர் திலகம். நவம்பர் 25 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் தினசரி 4 காட்சிகளாக. காணத் தயாராவோம்! கொண்டாட தயாராவோம்!

அன்புடன்

vasudevan31355
18th November 2016, 08:49 AM
நன்றி முரளி சார்.

'இருமலர்க'ளின் காட்சிகளுக்கு நம் ரசிகர்களின் ரசனை மெய்சிலிர்க்க வைக்கிறது. நம் ரசிகர்கள் ஒருவர் கூட ரசனையில் சோடை போனவர்களல்ல என்று மீண்டும் நிரூபணம்.

கட்டபொம்மன் கர்ஜனை மீண்டும் நான்மாடக் கூடல் எங்கும் எதிரொலிக்கட்டும். வாழ்த்துக்கள்.

vasudevan31355
18th November 2016, 08:50 AM
9000 பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கு அனைத்து நண்பர்களுக்கும் என் உளம்கனிந்த நன்றி.

HARISH2619
18th November 2016, 05:07 PM
9000 முத்தான பதிவுகளை கடந்த என் அண்ணன் வாசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

adiram
18th November 2016, 07:05 PM
This is Murali Srinivas Sir's writing about "IRU MALARGAL"

Now Over to Murali Sir........

ஐந்து ஆறு நாட்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் இந்த வார நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியலை பதிவிட்டிருந்தார் ராகவேந்தர் சார். அதில் சன் லைஃப் டிவியில் இரு மலர்கள் என்று பார்த்தவுடன் பயங்கர சந்தோசம். 26-ந் தேதி சனியன்று இரு மலர்கள் என்று இருந்தது. இதற்கு முன்பு Z தமிழ் டிவியிடம் இந்த ஒளிப்பரப்பு உரிமை இருந்தது. அவர்கள் காலை 10 மணி அல்லது பகல் 2 மணிக்கு ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே பார்க்கவே முடியவில்லை. இப்போது சன் லைஃப் தொலைகாட்சியில் வருகிறது என்றவுடன் அதுவும் மாலை 7 மணிக்கு எனும்போது பார்க்கலாமே என்ற ஆசை.வீட்டில் டிவிடி இருக்கிறது. இருந்தாலும் ஆசை.

25-ந் தேதி வெள்ளி மாலை சுமார் 7.10 மணிக்கு முரசு தொலைக்காட்சியை வைத்தபோது வெள்ளி மணி ஓசையிலே பாடல் காட்சி. ரசித்துப் பார்த்த்து விட்டு அடுத்த பாட்டு என்னவென்று பார்த்தால் மகராஜா ஒரு மகராணி பாடல். உடனே புரிந்து விட்டது ஒரு படப் பாடல்கள் வரிசையில் இரு மலர்கள் பாடல்களை போடுகிறார்கள் என்று. வெளியே போகும் வேலையை தள்ளி வைத்து விட்டு பாடல்களை பார்க்க தொடங்கினேன். சன் லைஃபில் மறு நாள் இந்தப் படம் என்பதால் போட்டிக்கு போடுகிறார்கள் என யூகித்துக் கொண்டேன். அன்னமிட்ட கைகளுக்கு, கடவுள் தந்த இரு மலர்கள் மற்றும் மன்னிக்க வேண்டுகிறேன் சோக வடிவம் ஆகியவையும் பார்த்து விட்டு தெய்வ செயல் திரைப்படம் ஆரம்பித்தவுடன் வெளியே கிளம்பி சென்றேன். மாதவி பொன் மயிலாளும் மன்னிக்க வேண்டுகிறேனும் நான் பார்க்க ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து விட்டிருந்தன.

மீண்டும் வீட்டிற்கு வரும்போது 9 மணி. அப்போது சன் லைஃப் தொலைக்காட்சியை போட்டவுடன் ஷாக். காரணம் இரு மலர்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ராகவேந்தர் சார் போட்ட பட்டியலில் தேதி மாறிவிட்டது என்பது தெரிந்தது. ஏன் முரசு தொலைக்காட்சி ஒரு படப் பாடல்களாக இந்தப் படத்தை ஒளிப்பரப்பியது என்பதும் புரிந்தது.

அப்போது முதல் அதாவது மகராஜா ஒரு மகராணி பாடல் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு மணி நேரமும் படம் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.

இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.

பத்மினியை பொறுத்தவரை அவரது பாத்திரம் மற்ற இருவரையும் விட சற்றே சிக்கலானது. தவறு எதுவும் செய்யாமலேயே குற்றம் சாட்டபப்டும் ஒரு விசித்திர சூழல். முன்னாள் காதலனுக்கு தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம். அவன் பெண் குழந்தைக்கோ சரியான விவரம் புரியாத போதினும் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் வருகிறாள் என்ற கோபம், வேலை செய்யும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருக்கோ அவள் தன்னை விரும்பவில்லை என்ற கோபம். இதற்கு நடுவில் தன்னை நம்பினாலும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பள்ளி முதல்வர் [அவளின் முன்னாள் ஆசிரியரும் கூட] இதற்கு மேலும் ஒரு தர்மசங்கடமாக தன்னை மூத்த சகோதரியாக எண்ணி அந்தரங்க விஷயங்களையெல்லாம் கூட சொல்லும் முன்னாள் காதலனின் இந்நாள் மனைவி. இப்படிபட்ட சூழலில் வாழும் உமா என்ற அந்த பெண்ணை சரியாக சித்தரிப்பதில் நாட்டிய பேரொளி வெற்றியே பெற்றிருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிடலாம். தன் கணவன் தன்னிடம் எத்துனை பிரியம் வைத்திருக்கிறான் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வான் என்பதை காதலனின் மனைவி சொல்லும்போது தான் அடைய வேண்டியதை அனுபவித்திருக்க வேண்டியவற்றை எல்லாம் இழந்து விட்டோமே அவற்றையெல்லாம் இந்த பெண் வாயிலாக கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அந்த வேதனையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். மற்றொரு காட்சி என்னதான் மனம் கட்டுப்பாடாக இருந்தாலும் பழைய காதலனை மீண்டும் சந்தித்தவுடன் மனதில் ஏற்படும் சலனத்தை காட்டும் காட்சி. தெருவில் நடந்து செல்லும்போது பின்னாலிருந்து கார் வந்து நிற்க [அதற்கு முன்பும் இரண்டு முறை காதலனை காரில் வைத்தே சந்தித்திருப்பார்] கண்கள் ஆவலோடு காரினுள்ளில் பார்க்க காதலனின் மனைவியை பார்த்ததும் சட்டென்று ஏற்படும் ஏமாற்றம்! அதை அவர் கேட்கும் கேள்வியிலேயே வெளிப்படுத்துவார் [ஓ, நீங்களா?].

நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இரு மலர்கள் விமர்சனத்தை இதே திரியில் முன்பே நான் எழுதியபோதும் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. கணவனே உலகம் என்று வாழும் அந்த சாந்தி என்ற மனைவியை கச்சிதமாக் கண் முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார். கணவனாகவே இருந்தாலும் ஒரு சில நெருக்கமான தருணங்களில் ஏற்படும் அந்த வெட்கம் அதிலும் அது போன்ற ஒரு சூழல் குழந்தை தங்களுக்கு முன்னால் நிற்கும் நிலையில் ஏற்படும்போது தோன்றும் ஒரு தர்மசங்கடம் கலந்த நாணம் இவற்றையெல்லாம் மகராஜா ஒரு மகராணி பாடலில் நன்றாகவே வெளிப்படுத்தியிருப்பார்.

தன கணவனின் முன்னாள் காதலிதான் தன் குழந்தையின் டீச்சர் என்ற உண்மை தெரியாமலே அவரிடம் நெருங்கி பழகுவதும் தனக்கும் தன கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதுமான அந்த innocent மனோநிலையை அழகாய் செய்திருப்பார்.கல்யாணம் ஆன புதுசிலேதான் ஆண்கள் கணவன் மாதிரி நடந்துப்பாங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலியே அவங்களும் நமக்கு ஒரு குழந்தை மாதிரி ஆயிடுவாங்க என்று தங்கள் அன்னியோனியத்தை சொல்லும் போதும் சரி, எங்க கல்யாண போட்டோவை பாருங்க நாந்தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன், ஆனா அவர் முகத்திலே அந்தளவிற்கு சந்தோசம் இருக்காது என வெகுளியாக உண்மையை போட்டு உடைக்கும் போதும் நன்றாகவே impress செய்வார்.

இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? மகராஜா பாடலில் அவர் இளமை துள்ளலுடன் அசத்தியிருப்பார். பல்லவி முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து ட்விஸ்ட் ஆடும் அழகு, வேடிக்கை பார்க்கும் மனைவியை ஆட அழைக்கும் குறும்பு, முதல் சரணத்தில் மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்தம்மா என்ற வரிகளின் போது ஒரு பக்கம் தோளை சற்றே பின்னால் சாய்த்து ஒரு கையை மட்டும் வயிற்றிலிருந்து முகம் வரை படிப்படியாக உயர்த்தி மாளிகை அமைத்தம்மா என்று காட்டும் ஸ்டைல் போஸ், மனைவியை அணைத்துக் கொண்டு ஆடும் ஸ்டெப்ஸ், ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று மகள் பாடியவுடன் உடனே மனைவியை பார்க்கும் அந்த romantic look, பொண்ணு என்ன சொல்றா பாரு அதை செயல்படுத்திடலாமா என்ற வார்த்தைகளை முகத்திலேயே காட்டும் அந்த பாவம், பெண் கேட்டதற்கு "ராஜாவிற்கும் இது போல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா" என்று பதில் சொல்லும் குறும்பு, பின்னியிருப்பார். அதே போல் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனைவியை இழுத்துக் கொள்ளும் அந்த இளமை துள்ளல். பாத்திரத்தின் பெயரான சுந்தர் என்பதற்கேற்ப ஆளும் "சுந்தர்" ஆகவே இருப்பார்.ஆனால் இந்த துள்ளல எல்லாம் பத்மினியை பார்க்கும் வரைதான்.

முதலில் காரில் இருந்தவாறே rear view mirror-ல் பத்மினியை பார்த்தவுடன் ஏற்படும் அந்த சந்தோசம், உடனே அதுவே கோபமாக மாறுவதை சில வினாடிகளுக்குள் காட்டுவதற்கு நடிகர் திலகத்தை விட்டால் யார் இருக்கிறார்கள்! வீட்டில் வந்து மகளுக்கு tuition எடுக்கும் முன்னாள் காதலி, தன வாழ்க்கை போன திசையைப் பற்றி பாட அதற்கு ஆதரவாக தன் மனைவியும் பாட ஒன்றுமே சொல்லாமல் மனைவி சொல்லுவதையெல்லாம் ஊம் மட்டும் போட்டு கேட்பது, பிறகு கூண்டுக்குள்ளே இருக்கிற புலி பார்க்க அழகாத்தான் இருக்கும், பக்கத்திலே போய் பார்த்தால்தான் உண்மை குணம் தெரியும் என்று crude ஆக கமன்ட் அடிப்பதில் ஆரம்பிக்கும்

அடுத்த காட்சிதான் highlight-களில் ஒன்றான காட்சி. மகளையும் கூட்டிக் கொண்டு அவளது டீச்சரும் தன் முன்னாள் காதலியுமான உமாவை சந்திக்க போகும் காட்சி. தன்னை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் காதலியை வார்த்தைகளிலே குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வெறியோடு ஆத்திரத்தின் உச்சியில் நிற்கும் மனதோடு செல்லும் அவர் முதலில் ஆரம்பிக்கும் போது சாதாரணமாக ஆரம்பிப்பார். வீட்டிற்கு வந்தவங்களை வரவேற்கனும் என்கிற மரியாதை கூட உங்க டீச்சருக்கு தெரியலை என்பார்.பின்பு பத்மினியின் பக்கத்தில் போய் நேத்து என் பொண்ணுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தீங்களே அது ரொம்ப பிரமாதம் என்ற குத்தல். இந்த பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவன் பணக்காரனாக இருக்கணும், கார் பங்களா அந்தஸ்து இதெல்லாம் இருக்கணும் அதோடு கொஞ்சம் இளிச்சவாயனாவும் இருக்கணும் இல்லே என்ற sarcasm, தொடர்ந்து "பாவம் அந்த பொண்ணுக்கு தான் காதலிச்ச ஏழை வாலிபன் பிற்காலத்திலே பெரிய பணக்காரனாக போறான்கிறது தெரியாது. என்ன செய்யறது நாம நினைக்கிறதெல்லாம்தான் நடக்கிறதில்லையே" என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தி பிறகு குரலை உயர்த்தி " ஆமா உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்த அந்த பணக்கார வாலிபன் என்ன ஆனான். உன்னை மாதிரியே வேற பணக்கார பொண்ணை தேடி போயிட்டானா ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கறே" என்று சிரிக்க ஆரம்பித்து அது முடியாமல் உடைந்து அழுவாரே அந்த 5 நிமிடத்தில் ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.முத்தாய்ப்பாக தன் பெண், தான் பேசியதையெல்லாம் கேட்டு விட்டாள் என்று தெரிந்தவுடன் ஒன்றுமே பேசாமல் மெளனமாக படியேறி கிழே கிடக்கும் சிகரெட் லைட்டரை எடுத்துக் கொண்டு பெண்ணை கையை பிடித்துக் கூட்டிக் கொண்டும் போகும்போது காட்டும் அந்த உடல் மொழி. நடிகர் திலகத்தின் உணர்சிகரமான படங்களை பார்க்கும்போதெல்லாம் இது போன்ற காட்சிகள் வராதா என்று என்னை ஏங்க வைத்ததில் இந்தக் காட்சிக்கு பெரிதும் பங்குண்டு.

அன்றிரவு வீட்டில் சரியாக சாப்பிடமால் அடம் பிடிக்கும் பெண்ணிடம் அப்பாக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்று மனைவி சொல்ல தயங்கி நிற்கும் மகளைப் பார்த்து "போ" என்று ஒற்றை சொல்லை சொல்லும் விதம், மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் நடுவில் மனசு கிடந்து அல்லாடும் அந்த தவிப்பை காட்சிக்கு காட்சி பார்க்க முடியும். முன்னாட்களில் இருவரும் சந்தித்த மலை உச்சியில் மீண்டும் பழைய காதலியை சந்தித்து தன் மனதவிப்பை கொட்டும் அந்த காட்சி. அப்போதும் கூட ஆத்திரம் அடங்காமல் "உன்னை பிரிஞ்சப்பறம் உயிரோடு இருந்ததுக்கு காரணமே என்னிக்காவது உன்னை சந்திசேன்னா என் கையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு இருந்தேன்" என்று பொங்குவது, திடீரென்று அங்கே வரும் அசோகன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேறுவிதமாக சித்தரிக்க மனதில் இருக்கும் கோபத்தையெல்லாம் அசோகனின் முகத்தில் அறையும் அந்த அறையில் காண்பிப்பது என நவரசம் காட்டுவார்.

மனம் நிலைக் கொள்ளாமல் அலை பாய வீட்டுக்குள் வரும் அவர் மனைவியையே உற்று பார்க்க என்ன அத்தான் புதுசா பாக்கிற மாதிரி பாக்கறீங்க என்று கேட்க ஏன் நான் உன்னை நான் பார்க்க கூடாதா என்று கேட்பவரிடம் இன்னிக்கு என்ன நாள் தெரியுமா என்று மனைவி கேட்க சற்று யோசித்து இன்னிக்கு நமக்கு கல்யாணமாகி 7 வருஷம் ஆகுதில்லே என்று சொல்லும்போதே முக்கியமான நாளை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவார். இங்கே வா என்று மனைவியை அழைத்து வந்து உட்கார் உட்கார் என்று படுக்கையை தட்டிக் காட்டும் அந்த சைகை, நீ என் மேலே அன்பு வைச்சிருக்கிற அளவுக்கு நான் உன் மேலே அன்பு வைக்கலே என்னை மன்னிச்சிடு என்று மனைவியின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு உன்கிட்டே நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா" என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே "என்னால சொல்ல முடியல" என்று மனைவியின் தோளில் முகம் புதைத்து விம்மும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்லுவது?

இறுதியாக படுக்கையறையில் மனைவிதான் நிற்கிறாள் என்று நினைத்து உண்மைகளையெல்லாம் கொட்டிவிட்டு தற்செயலாக கண்ணாடியில் தெரியும் காதலியின் முகம் பார்த்தவுடன் திகைத்து ஏதோ பேச தொடங்கி காதலியால் தடுக்கப்பட்டு அவள் அந்த அறையை விட்டு வேகமாக விலகி சென்றதும் மேஜையில் இருக்கும் காப்பி டம்பளரையும் தன் பழைய காதலி 7 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதையே உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் மெதுவாக அந்த சூழலின் உண்மை அவரில் இறங்கும் அந்த நொடியை அவர் முகம் காட்டும் விதம் டாப் கிளாஸ்.

ACT இயக்கத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இரு மலர்களுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம். வெகு இயல்பான திரைக்கதை செயற்கைத்தனம் கலக்காத வசனங்கள் [ஆரூர்தாஸ்]. மனைவி மற்றும் காதலி இவர்களின் point of view-வில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள். எனக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்த பொண்ணு திரும்ப வந்தா அவகிட்ட என் கணவரை திருப்பி ஒப்படைசுடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் என்று விஜயா சொல்ல இடைமறிக்கும் பத்மினி ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு இப்போ தோணுதிலே என்று மடக்கும் இடம் வசனத்தின் இயல்புக்கு ஒரு சின்ன உதாரணம்.

இயக்கத்திலும் ACT நன்றாகவே செய்திருப்பார். தாத்தாவுக்கு குட் நைட் சொல்லிட்டு போய் படு என்று சொல்லப்பட, குழந்தை ரோஜாரமணி நாகையாவின் மாலை போடப்பட்ட புகைப்படத்திற்கு குட் நைட் சொல்லுவதை வைத்தே நாகையா பாத்திரம் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரக்கூடிய lead காட்சியில் படுக்கையறைக்கு அழைத்து வரும் விஜயாவிடம் வேண்டாமே ஹாலிலேயே இருக்கலாமே என்று மறுக்கும் பத்மினி. இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் [படுக்கையறை என்பதனால்தான் நாயகன் தன் மனைவி என்று நினைத்து பேசுவான்], காட்சியின் முடிவில் காபி டம்பளரும் கடிதமும் மேஜையில் இருப்பதை காட்டுவதன் மூலம் மனைவி அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு விட்டாள் என்பதை நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்த்துவது என்று ACT யின் சிறப்பான இயக்கத்திற்கு நிறைய காட்சிகள்.

அன்று பார்த்த நான்கு பாடல் காட்சிகளை பற்றியும் சொல்ல வேண்டும். வெள்ளி மணி ஓசையிலே [இது முரசில் வந்தது]. படம் முழுக்க மெல்லிசை மன்னர், வாலி மற்றும் இசையரசி ஆகியோர் கிளப்பியிருப்பார்கள். இந்தப் பாடலில் முதல் சரணத்தில் வரும வரிகள்

பிறந்து வந்தேன் நூறு முறை

மன்னவன் கை சேரும்வரை

தவம் இருந்தேன் கோடி முறை

தேவன் முகம் காணும் வரை

அதிலும் அந்த மூன்றாவது வரியான தவம் இருந்தேன் கோடி முறை என்பதை இசையரசி பாடும்போது ஆஹா!

மகராஜா பற்றி சொல்லி விட்டேன்.

அடுத்து கடவுள் தந்த இரு மலர்கள் பாடல். இதில் வாலி, எம்எஸ்வி, சுசீலாம்மா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூட்டணி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.முதல் சரணத்தில்

ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா

அலைகள் கொண்டு போனதம்மா

என்ற வரிகளில் இசையரசி கொடி நாட்டுவர் என்றால் அடுத்த சரணத்தில்

தலையில் இறைவன் சூடிக் கொண்டான்

தானே அதனை சேர்த்துக் கொண்டான்

குழலில் சூடிய ஒரு மலரும்

கோவில் சேர்ந்த ஒரு மலரும்

என்ற வரிகளைப் பாடி ஈஸ்வரி கோல் அடிப்பார்.

இறுதியாக அன்னமிட்ட கைகளுக்கு. இந்த பாடலைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பு சாரதா அற்புதமாக எழுதியிருந்தார். அது இப்போது வாசிக்க கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

இதிலும் இசையரசியின் சாம்ராஜ்ஜியம்தான். உணர்சிகரமான பாடல். கண்ணீரும் விம்மலும் நிறைந்த பாடல். அனாயசமாக பாடியிருப்பார் சுசீலாம்மா.

கைவிளக்கை ஏற்றி வைத்தேன் கோவிலுக்காக

என் தெய்வத்தின் மேல் எனக்கு இருக்கும் காதலுக்காக

என்று கணவனின் மேல் இருக்கும் காதலை சொல்லுபவர் தான் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் வேறொரு பெண் வரப் போகிறாள் என்ற நிலையை குரல் விம்ம

ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக என்று சரணத்தை நிறைவு செய்யும்போது மனதை என்னவோ செய்யும்.

அதே போன்று இரண்டாவது சரணத்தில் .

தாய்க் குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்

என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்

என்று மகளுக்காக பாடும் ஒரு தாயின் குரலைத்தான் இசையரசியின் குரலில் கேட்க முடியும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தின் முதல் பகுதியை அன்று பார்த்திருந்தால் இன்னும் இரண்டு பார்ட் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். பலருக்கும் அதே போன்றே உணர்வை கொடுததனால்தான் அந்த தீபாவளிக்கு வந்த அனைத்து mass மசாலா entertainers போட்டியையும் சமாளித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

ஆயிற்று, இன்னும் நான்கு நாட்கள் போனால் நவம்பர் 1 வந்து விடும், நாற்பது ஆறு ஆண்டுகள் கடந்து விடும். இருப்பினும் இப்போதும் இந்தப் படம் இவ்வளவு உயிர்துடிப்பாக இருக்கிறது என்றால் அதுதான் அந்த படத்தின் சிறப்பு.

ACT அவர்களிடம் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். சார் ஒரு மூன்று படங்கள் மிகுந்த போட்டிக்கிடையே அதாவது மற்றொரு நடிகர் திலகத்தின் படத்தோடயே போட்டி போட்டு ரிலீஸ் செய்தீர்கள்.இதற்கும் போட்டி போட்ட படங்கள் உங்கள் படங்களை விட அதிக எதிர்பார்ப்பையும் வெற்றி பெறுவதற்கான மூலக்கூறுகளை அதிகமாக கொண்ட படங்கள்.அப்படியிருந்தும் எப்படி சார் தைரியமாக ரிலீஸ் செய்தீர்கள் என்று கேட்டபோது ACT சிரித்துக் கொண்டே " என் சரக்கு முறுக்கு" என்றார்.

அன்புடன்

PS 1 : நடிகர் திலகத்தின் மற்றொரு படத்துடன் போட்டி போட்ட ACT யின் படங்கள்

இரு மலர்கள் - போட்டி படம் ஊட்டி வரை உறவு - Nov 1,1967

எங்கிருந்தோ வந்தாள் - சொர்க்கம் - Oct 29,1970.

பாரத விலாஸ் -24.03.1973, ராஜ ராஜ சோழன் - 31.03.1973.

adiram
18th November 2016, 07:11 PM
Kertthik Sir's reaction for Murali Sir's writing about "IRUMALARGAL"

Over to Karthik sir......

அன்புள்ள முரளி சார்,

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கருப்புவெள்ளை காவியங்களில் சிறந்த பத்துக்குள் இடம்பெறும் "இருமலர்கள்" பற்றிய கருத்தாய்வு மிக மிக அருமை. முரளி அவர்களின் ஆய்வு விமர்சனம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது என்பது எஸ்.பி.பி.யின் குரல் இனிமையாக இருக்கிறது என்று சொலவ்துபோல universal tuth என்றாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். பாதிப்படம் படம் பார்த்ததற்கே இவ்வளவு அருமையான ஆய்வு என்னும்போது, முழுப்படமும் பார்த்து எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணினேன். இறைவன் செய்வது அனைத்தும் நன்மைக்கே.

ஏனென்றால் படத்தில் முதல் பாதி பத்மினி எபிஸோட். இப்படத்தில் எனக்கு பத்மினியின் நடிப்பு அவ்வளவாகப் பிடிக்காது. எனக்கு எப்போதுமே அவ்வளவாகப் பிடிக்காத கே.ஆர்.விஜயாவின் நடிப்பும் ரோலும் இப்படத்தில் பிடித்ததற்கு காரணமே பத்மினிதான். படத்தின் பின்பாதியில் மிக அட்டகாசமாக ஸ்கோர் செய்துகொண்டு போய்விடுவார் புன்னகை அரசி. ரொம்ப பாந்தமான, அமைதியான, கொஞ்சம் அப்பாவித்தனமான குடும்பத்தலைவி. கணவனும் மக்களுமே உலகம் என்று வாழும் பேதைப்பெண். (அது சரி, அந்த தீபாவளி என்ன 'விஜயா தீபாவளியா?' நம்முடைய இருபடங்களிலும் விஜயா, இதற்கு போட்டியாக வந்த 'விவசாயி'யிலும் விஜயா).

ஒவ்வொரு காட்சியையும் மிக மிக தத்ரூபமாக விவரித்திருக்கிறீர்கள். இம்மாதிரி ப்ரொபசர்கள் எங்கள் கல்லூரி நாட்களில் கிடைத்திருந்தால் டிஸ்டிங்க்ஷனில் பாசாகி இருப்போம்.

திருலோகசந்தர் உட்பட எல்லா இயக்குனர்களும் தங்கள் படங்களுக்கு ஒரு திருஷ்டிப்போட்டு வைப்பது வழக்கம். இருமலர்களில் அப்படி அமைந்தது நாகேஷ் - மனோரமா காமெடி. சீராக சென்றுகொண்டிருக்கும் படத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அறுவை எபிஸோட். (ஏ.சி.டி. இப்படி சறுக்குவதுண்டு, இன்னொரு உதாரணம் அதே கண்களில் நாகேஷின் ஆங்கிலோ இண்டியன் பெண் வேடம்).

எப்போதாவது வந்து இப்படி எங்களை பைத்தியமாக்கி விட்டு (பொது நலம் கருதி) ஒளிந்து கொள்கிறீர்கள். பொது நலம்..???. யெஸ்... உங்கள் பதிவு வந்தால் வானத்தில் பௌர்ணமி அன்று நிலவு வந்தது போல. அந்த சமயம் வானத்திலிருக்கும் ஒரு நட்சத்திரமும் கண்களில் படாது. அதனால் மற்ற நட்சத்திரங்களும் ஒளிரட்டும் என்று நீங்கள் ஒளிந்துகொள்கிறீர்கள். ஆனால் திரி எந்நாளும் பௌர்ணமியாக இருக்க வேண்டுமென்பதே எங்களுடைய/என்னுடைய ஆசை. மெயின் பேச்சாளர் வரும்வரை கத்துக்குட்டி பேச்சாளர்களை வைத்து சமாளிப்பதுபோலத்தான் என்னுடைய பங்களிப்புகள் அமைந்துள்ளன.

தங்களை இங்கு வரவைப்பதற்காகவே தங்கள் இதயத்துக்கு நெருக்கமான படங்கள் தொலைக்காட்சிகளில் வரட்டும் என்பதே எங்கள் வேண்டல்.

adiram
18th November 2016, 07:16 PM
Gnana Oli Vasu Sir's reaction for Murali Sir's writing about "IRUMALARGAL"

Over to Gnana Oliyaar Vasu sir......

டியர் முரளி சார்,

இரு மலர்களின் இடைவேளைக்குப் பிறகு வரும் பாதிப்படத்தை இரு பாகங்களாகப் பிரித்து இனிமையாக அலசியுள்ளீர்கள். என்ன ஒரு அற்புதமான படம்! சிறிது இடைவெளிக்குப் பின் தாங்கள் தந்துள்ள இரு மலர்களின் மீள் பார்வை தென்றலாய் வருடுகிறது. பிரேம் பை பிரேம் என்னைக் கவர்ந்த படம். கேரக்டர்களின் தன்மை அவ்வளவு பிரமாதமாக இருக்கும். உள்மனதில் ரகசியங்களை பூட்டி வைத்து புழுங்கும் வேடங்களில் நடிகர் திலகத்தின் பங்களிப்பை அவ்வளவு எளிதாக நம்மால் வெளிப்படுத்தி விட முடியாது. அதை நீங்கள் செவ்வனே செய்துள்ளீர்கள். அதுவும் சொந்த ஹேர் ஸ்டைலில், படு ஸ்லிம்மான உடல்வாகில் உலகத்திலே ஒருவனென அழகில் உயர்ந்து நிற்கும் சுந்தர் திலகமாக நம் அன்பு நாயகர் இப்படத்தை ஆளுமை செய்வது அபாரம்.

அதே போல மகராஜா என்னுடைய மனங்கவர்ந்த ஒரு பாடல். அப்பாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல தன் ஆசையை குறிப்பால், ஜாடையால் மகளுக்குத் தெரியாமல் மனைவிக்குப் புரிய வைக்கும் அழகே தனி.

காரியம் கெட்டது. இன்று இருமலர்கள்தான்.

முரளி சார்

இன்னொன்று. நம் இருவருக்கும் தலைவருடைய சில போஸ் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணும். உண்மைதானே! உதாரணம் (குலமகள் ராதை சரோஜா தேவியுடன் சடையைப் பிடித்தபடி கண்ணாடியில் தெரியும் பிம்ப போஸ்.... நெஞ்சிருக்கும் வரையில் முத்துராமனை மிரட்டி விட்டு சட்டென்று திரும்பும் உயிரை எடுக்கும் போஸ்) அதே போல இந்தப்படத்தில் தலைவர் அதம் பண்ணும் ஒரு போஸைப் பதிவிடுகிறேன். நிச்சயம் இந்த போஸும் தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்க வேண்டும். அந்த போஸ் சொல்லும் அர்த்தங்கள் தான் எத்தனை?

'கடவுள் தந்த இருமலர்கள்' பாடலின் போது நெஞ்சில் புதைந்து கிடக்கும் சுமைகளோடும், மன உறுத்தல்களோடும், வேதனைகளோடும் ஆனால் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், பழைய காதலியின் நிலைமை புரியாமல் அவள் வேதனையுடன் பாடும் போது 'பாடு பாடு... உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? நடிக்கிறியா? வஞ்சகி' என்ற கடுப்பை முகத்தில் தேக்கி மாடியில் நின்றபடியே கைப்பிடியைப் பிடித்தவாறு பத்மினியை சற்றே வெறுப்புடன் நோக்கும் அந்த போஸ்.

இந்த போஸை என் நண்பர்கள் சிலருக்குக் காட்டி காட்டி நான் மகிழ்வதுண்டு. அவர்கள் அப்படி என்னதாண்டா இருக்கு அந்த போஸ்ல? என்பார்கள் என்னிடம். நான் அதைப் பற்றி விளக்கிச் சொன்னவுடன் அவர்களும் ரசித்து விட்டு "இவன் நம்மளைப் பைத்தியமாக்கி விடுவான். கிளம்பு" என்று ஓடத் தயாராவார்கள்.

மறுபடியும் சொல்கிறேன். இந்தப் போஸ் சொல்லும் கதைகள் எனக்கு மாத்திரமே தெரியும். அது உங்களுக்கும் தெரியும்.

adiram
18th November 2016, 07:19 PM
S.Gopal Sir's reaction about Murali Sir's writing about "IRU MALARGAL"

Now over to Gopal sir.....

முரளி ,

தோய்ந்து எழுதுவது என்பார்களே, அது இதுதான்.

இரு மலர்கள் படத்தை பொறுத்த வரை இன்னொரு நெஞ்சில் ஓர் ஆலயம்.

அவரவர்களின் கோணத்தில் உணர்ச்சி தெறிப்பு , வெடிப்பு இவை அற்புதமாக பதிவான படம். என்னதான் பத்மினி,கே.ஆர்.விஜயா மாஞ்சு மாஞ்சு நேர் நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்ய பார்த்தாலும்,நடிகர்திலகத்தின் உளவியல் பார்வை கொண்ட situation சார்ந்த உணர்ச்சி cocktail மற்றவற்றை அலை மாதிரி அடித்து சென்று விடும்.

கண்ணதாசன்-எம்.எஸ்.வீ stale ஆக போன நேரத்தில் வாலி-எம்.எஸ்.வீ இணைவு புத்துணர்வு தந்தது.(நன்றி ஏ.சி.டி)
எனக்கு பிடித்தவை மன்னிக்க, அன்னமிட்ட.

முன்னரைத்த காதலை முடிவுரையாய் தர சொல்லும் பாடலில் செல்லமாய் நடிகர்திலகம் உந்தன் ஆசையை தூண்டுகிறேன் என்று மார்பில் விரல் வைக்க ,நாணும் நாட்டிய பேரொளியின் response ???அடடா????

சுசிலாவின் குரலில் சொன்னது நீதானா, அன்னமிட்ட கைகளுக்கு, ஒரு நாளிரவு பகல் போல் நிலவு பாடல்கள் என் மனதை கீறி கண்ணீர் துளிக்க வைத்து விடும். இந்த முறை எம்.எஸ்.வீ சார் வீட்டு பேரன் வரவேற்பில், சுசீலாவிடம் ஆசி பெற்றது எனக்கு கிடைத்த மோட்ஷம்.

vasudevan31355
18th November 2016, 07:27 PM
ஆஹா! என்ன அருமையான கட்டுரை! முரளி சாரின் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. அதை சரியான நேரத்தில் மீள்பதிவு செய்த ஆதிராம் சாருக்கு மிக்க நன்றி. கார்த்திக் சாரின் பதில் பின்னூட்டப் பதிவைப் பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும். மனிதர் வருவேனா என்கிறார். வாருங்கள் கார்த்திக் சார்.

adiram
18th November 2016, 07:29 PM
Viduvadhaaga illai.

Meendum Murali Sir's post about "IRU MALARGAL" particularly about that song and pose..

Over to Murali sir......

இரு மலர்கள். இந்த படத்தின் பாடல் காட்சிகளிலெல்லாம் பல nuances நடிகர் திலகம் செய்திருப்பார். மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் வரும் வாயசைப்பு பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். அது போல் கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சி. இந்த பாடல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இனம் புரியாத சோகத்தை மனதில் விதைக்கும் மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, வாலியின் முத்தாய்ப்பான வரிகள், இனிமையே உருவான சுசீலா, ஈடு கொடுக்கும் ஈஸ்வரி, திரையில் நாட்டியப் பேரொளியும் புன்னகை அரசியும் அவரவர் பாணியில் அழகுற செய்திருப்பார்கள்.

ஆனால் நான் சொல்ல வந்தது நமது நடிகர் திலகம் பற்றி. இந்தப் பாடலை எப்போது பார்த்தாலும் இரண்டு விஷயங்கள் பளிச்சென்று தெரியும், ஒன்று நடிகர் திலகத்தின் புற தோற்றம் மற்றொன்று அவரின் உடல் மொழி எனப்படும் body language. புற தோற்றத்தைப் பொறுத்த வரை ஆள் அவ்வளவு அழகாக இருப்பார். விகடனில் எழுதியது போல படு இளமையாக ஸ்லிமாக இருப்பார். அந்த பால்கனியின் கைப்பிடி ரைல்ஸ்-ஐ பிடித்தபடி நிற்கும் அந்த போஸ் ஒன்றே போதும்.

Body language - அந்த பாத்திரம் [சுந்தர்] தன் காதலி மேல் தீராக் கோபம் கொண்டிருக்கின்றான். தன்னிடம் அவ்வளவு வாக்குறுதி கொடுத்தவள் வார்த்தை தவறி விட்டாளே என்ற ஆத்திரம், அவளை வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது அந்த கோவம் ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்த பிறகும் அடங்காமல் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அது முகத்தில் பிரதிபலிக்கிறது. அவளாலும் நடந்த உண்மையை சொல்ல முடியவில்லை. தன் நிலையை பாடலாய் வடிக்கிறாள் அதை கேட்கும் போதும் நாயகனுக்கு கோபம் தணியவில்லை என்பது அந்த முகத்தில் தெரிகிறது.

அந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதையோ முன்பு நடந்தது என்னவென்றோ தெரியாத நாயகனின் மனைவி அவளுக்கு ஆறுதல் சொல்லி பாடுகிறாள்.

இந்த காட்சியை சற்று கூர்ந்து நோக்கினால் நான் முதலில் சொன்ன nuance தெரியும். கதைப்படி நாயகனுக்கு தன் மனைவி பாடப் போகிறாள் என்று தெரியாது. ஆனால் காட்சிப்படி சிவாஜி என்ற நடிகருக்கு விஜயா என்ற நடிகை வாயசைக்க போகிறார் என்று தெரியும். தெரிந்த ஒன்றை தெரியாதது போல் செய்ய வேண்டும், பார்வையாளனும் அதை உணர வேண்டும். இப்போது கவனியுங்கள். இரண்டாவது சரணம் தொடங்குகிறது

அலையில் மிதந்த மலர் கண்டு

அதன் மேல் கருணை மனம் கொண்டு

குரல் ஒலித்தவுடன் கிழே டீச்சரை பார்க்கும் நடிகர் திலகம், டீச்சர் பாடவில்லை குரல் தன் பக்கத்திலிருந்து வருகிறது என்று புரிந்து தன் மனைவியை பார்க்கும் நடிகர் திலகம், அந்த ஒரு வினாடிக்குள் அவர் முகத்தில் வந்து போகும் அந்த திகைப்பு +ஆச்சரியம், எப்படி இவரால் மட்டும் முடிகிறது? என்று பல முறை நான் வியந்து போவேன்.

பொதுவாகவே சினிமாவில் நடிகனுக்கு தெரியும், கதாபாத்திரத்திற்கு தெரியாது என்பதுதான் அடிப்படை என்றாலும் அதை இவர் அளவிற்கு convincing-ஆக செய்தவர்கள் எத்தனை பேர்?

பல முறை மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை எழுத்தில் வடிக்க வேண்டும் என்பது இன்று காலை இந்த பாடலை டி.வியில் பார்க்க நேர்ந்த போது தோன்றியது.

அன்புடன்

vasudevan31355
18th November 2016, 07:31 PM
கடந்த 2011-ல் 'யூ டியூபி'ல் நான் அப்லோட் செய்த நடிகர் திலகத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் கரகாட்டப் பாடலான 'என் ஆசை ராசா' படப் பாடலுக்கு (கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்னு) இவ்வளவு ரசிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. மெயிலைத் திறந்தால் தினம் இப்பாடலைப் பற்றிய கமெண்ட்களும், பாராட்டுகளும் வராமல் இருந்ததில்லை. இளைஞர்கள், முதியவர்கள், நடுத்தர வயதினர் என்று இப்பாடலின் வீச்சு அனைவரிடமும் ஆழமாக உள் இறங்கியிருக்கிறது. வயதானாலும் சிம்மம் சிம்மம்தான் என்று இதன் மூலம் தெரிகிறது. பல பேர் நெகிழ்வுடன் இப்பாடலைப் பற்றி குறிப்பிடுகின்றனர். இதுவரை 384,363 பார்வையாளர்களோடு டியூபில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது இப்பாடல். இந்த கமெண்ட்களையெல்லாம் பார்த்து விட்டு நான் இந்தப் பாடலை மறுபடி பார்த்த போது ஆடிப் போய் விட்டேன் என்றுதான் கூற வேண்டும். அந்த வயதிலும், குறிப்பாக உடல் பாடுபடுத்திய சங்கடங்களையும் தாண்டி நம் யுகக் கலைஞர் இப்பாடலுக்கு கரகம் எடுத்து ஆடி அனைவரையும் வாய் பிளக்கச் செய்திருப்பது நிஜமாகவே மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்பாடல் அந்த மகானின் உண்மையான ரசிகர்களுக்கு கண்களில் நீரை ஆறாகப் பெருக வைக்கிறது. எத்தனை காலமானாலும் இந்த உன்னத நடிப்பு சிங்கத்துக்கு உலகம் உள்ளமட்டும் ரசிகர் பட்டாளம் திரண்டபடியேதான் இருக்கும் என்பது திண்ணம்.

வெங்கடேஷ் காவை என்ற இளைஞன்

'நான் பார்த்து ரசித்து அழுதது எனது தந்தையாருக்காக'

என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டிருப்பது இப்பாடலின் வெற்றிக்கு ஒரு சான்று.

Harrietlgy
19th November 2016, 11:45 AM
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு!

http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/18/original/sivaji.jpg

வாழ்க்கையில் நான் சந்தித்து பேசிப் பழகிய போது என்னைக் கவர்ந்த பலரது இன்ஸ்பிரேஷன் என் கதாபாத்திரங்களை முழுமை ஆக்கிக்கொள்ள பெருமளவில் உதவியது.

"திருவருட்ச் செல்வர்" படத்தில் எனது நடிப்பு காஞ்சிப்பெரியவர் அவர்களிடம் இருந்து பெற்ற இன்ஸ்பிரேஷன் என்று என்னிடம் சிலர் சொனனார்கள். அந்த சமயத்தில்ப பெரியவரை நேரில் நெருங்கி நான் சந்தித்ததில்லை என்றாலும், அவருடன் இருந்த பலர் அவரைப்பற்றி என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். பெரியவர்களைப் பற்றி நூல்களில் படித்திருந்தேன். இவற்றை எல்லாம் மனதில் கொண்டிருந்ததால், அவற்றின் மூலம் கிடைத்த இன்ஸ்பிரேஷன் "திருவருட்ச் செல்வர்" படத்தில் உதவியிருக்கின்றன என்று நினைக்கிறேன். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு பெரியவர்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது, நண்பர்கள் சொன்னது மெத்தப் பொருத்தமானது என்பதை உணர்ந்தேன்.

"சம்பூர்ண ராமாயணம்" படத்தில் பாரதனாகத் தோன்றியுள்ளேன். ராமாயணத்தை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறுவனாக இருந்த பொழுதே அதில் என்னைக் கவர்ந்த பாத்திரம் பரதன். அப்போதே பரதன் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டான். "சம்பூர்ண ராமாயணம்" படப்பிபிடிப்பு முடிந்ததும் அதைப் பார்த்து விட்டு, என்னை வாழ்த்தி மூதறிஞர் ராஜாஜி அவர்கள், 'பரதன் வாழ்க, பரதன் வாழ்க' என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட நிகழ்ச்சி இன்னமும் என் கண்ணில் காட்சியாகவே தெரிகிறது.

வாழ்க்கையில் எனக்கு நல்ல அபூர்வமான சில நண்பர்கள் கிடைத்தார்கள்.சிலருடன் பேசும் பொழுது,பழகும் போது , அவர்களது பேச்சு, அசைவு, நடை, உடை, பாவனை, போன்றவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

'வியட்நாம் வீடு' படத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் திரு.நாராயணசாமி, 'கவுரவம்' படத்தில் டி .வி.எஸ்.கிருஷ்ணா (கிச்சு) ..இப்படி சொல்லலாம். 'ரங்கூன் ராதா' படத்தில் சார்லஸ் போயரின் இன்ஸ்பிரேஷன்.

இதைப்போல நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாறு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.11.82 இதழ்)

Harrietlgy
20th November 2016, 05:26 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 152 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/142337481514794675451862746622thanga-pathakkam-full-movie-.jpg


சிவாஜி கணேசன் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகத்தை சிவாஜியின் நண்பர் எஸ்.ஏ. கண்ணன் இயக்கியிருந்தார். எஸ்.பி. சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்திருந்தார். அது 42வது முறையாக அன்று அரங்கேறியிருந்தது. நாடகத்தை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி ரசிகர்களின் கைத்தட்டலையும், ஆரவாரத்தையும் கூட கவனித்தார். நாடகம் முடிந்ததும் மேடைக்கு போனார் சிவாஜி. எஸ்.ஏ. கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்தார்.
`நாளைக்கு எங்கே நாடகம்?’ என்று கேட்டார். சொன்னார்கள். `நாளையோட நாடகத்தை நிறுத்திக்குங்க. அப்புறம் இந்த நாடகத்தை நம்ப சிவாஜி நாடக மன்றம் நடத்தும். எஸ்.பி. சவுத்ரி நான்தான்’. அவர் அப்படிச் சொல்ல சொல்ல அவர்கள் இருவரும் திகைத்தனர். அடுத்ததாக ` சரி! நாடக ஆசிரியர் எங்கே?’ என்றார்.
மகேந்திரனை கொண்டு போய் அவர் எதிரே நிறுத்தினார்கள். `உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே?’ என்றார் நடிகர் திலகம். `நான் எழுதிய ‘நிறைகுடம்’ பட பூஜையில்.. உங்களிடம் என்னை இயக்குநர் முக்தா சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்’ என்றார் மகேந்திரன்.
`சரி! ஆசிரியரே… நாளைக்கு நாடகம் நடக்கும்போது நான் மேடையில் ‘சைடு ஸ்டே’ஜில் இருப்பேன். நீங்களும் எனக்கு பக்கத்தில் இருக்கவேண்டும். எனக்குத் தோன்றுகிற சில ஐடியாக்களைச் சொல்கிறேன்’ என்றார்.
அதன்படியே மறுநாள் நடந்தது. அவருக்கு அருகில் மகேந்திரன் அமர்ந்திருந்தார். நாடகம் முடியும் வரை மகேந்திரனிடம் சிவாஜி எதுவும் பேசவில்லை. கடைசியில் `அந்த படவா ராஸ்கலை நான் (சவுத்ரி) சுட்டுக்கொல்ல வேண்டும்! என்ன சொல்றீங்க?’ என்றார். மகேந்திரனும் `சரி’ என்றார். ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தின் இறுதியில் கவர்னரிடம் தங்கப்பதக்கம் வாங்கும் ஒரு நாளில் எஸ்.பி. சவுத்ரி தற்கொலை செய்து கொள்வார்.அதாவது தன்னை பழிவாங்க நினைக்கும் முயற்சியில், மகன் தனது வாழ்க்கையை அழித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக! இதைத்தான் நடிகர் திலகம் மாற்ற வேண்டுமென்றார். இப்படித்தான் ‘இரண்டில் ஒன்று’ நாடகம் ‘தங்கப் பதக்கம்’ ஆனது. மூன்றே நாட்கள்தான். நாடகப் பிரதியைப் படிக்கச் சொல்லி, கொண்டே கண்மூடிக் கேட்பார். அவ்வளவுதான், நான்காம் நாள்,
` கிராண்ட் ரிகர்சல் ( இறுதி ஒத்திகை). மறுநாள், மியூசிக் அகாடமியில் ‘தங்கப் பதக்கம்’ நாடகம் அரங்கேற்றம். சென்னை நகரம் முழுவதும் திரைப்பட போஸ்டர் மாதிரி ‘தங்கப் பதக்கம்’ நாடக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, ரசிகர்களது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. பெருந்தலைவர் காமராஜர் நாடகம் பார்க்க வந்திருந்தார். மகேந்திரன் `கிரீன்’ ரூமுக்கு போய் சிவாஜியை எட்ட நின்று பார்த்தார். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடம்பு எகு போல நிமிர்கிறது.
`மூன்று நாட்கள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் இவர் எப்படி வசனம் பேச போகிறார் என்பது மாதிரியான சந்தேகக் கேள்விகளை மகேந்திரனுக்குள் எழுந்தது. அரங்கில் மணியடித்தது. நாடகம் தொடங்கியது. மகேந்திரன் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை.
மகேந்திரனின் வசனத்திற்கு தனது நடிப்பு ஆற்றலால், குரல் வளத்தால், அதை உன்னதமாக பயன்படுத்த தெரிந்த மேடை அனுபவத்தால், புதியதோர் அழகையும், உயிரோட்டத்தையும் கம்பீரத்தையும் சிவாஜி படைத்துக் காட்டியபோது மகேந்திரன் வியந்தே போனார்.
மகேந்திரனுக்குள் அப்படியொரு பிரமிப்பு! நாடகம் முடியும் வரை அமோகமான கைத்தட்டல்கள் ஓயவில்லை. நாடகம் முடிந்ததும், மகேந்திரன் `கிரீன்’ ரூமுக்குப் போனார். ஒப்பனை கலைக்கப்பட்டு களைப்புடன் அமர்ந்திருந்தார் நடிகர் திலகம்.
நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்துக்கும் ஒப்பற்ற நடிப்புக்கும் அவர் தனது உடலின் சக்தி மொத்தத்தையும் செலவழித்திருந்தார். ஒப்பனை கலைவது வரை சவுத்ரியாக வாழ்ந்தவர், இப்போது தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகிவிட்டார்.
மகேந்திரனைப் பார்த்ததும், `என்னப்பா உன் டயலாக்கையெல்லாம் நான் ஒழுங்காக பேசினேனா?’ என்று ஒரு மாணவனைப் போலக் கேட்டார்.
மாபெரும் நடிகர்! மகேந்திரனின் கண்கள் கலங்கின. மனம் சிலிர்த்தது.
‘தங்கப் பதக்கம்’ நாடகம் இந்தியா முழுக்க நடைபெற்று இணையற்ற வெற்றியை ஈட்டியது. அதன் பிறகு மும்பையில் நடந்த நாடகத்திற்கு மட்டும்தான் மகேந்திரனால் போக முடிந்தது. நடிகர் ராஜ்கபூர் உட்பட மற்ற பிரபல நடிகர்களில் பெரும்பாலானோர் சிவாஜியின் காலை தொட்டு வணங்கி, அவரது நடிப்பின் மேன்மையை ஆராதித்த காட்சியை மகேந்திரனால் இன்றும் மறக்க முடியவில்லை. அது சிவாஜி என்ற மகா கலைஞனது மொழி தாண்டிய அற்புத நடிப்பாற்றலின் வல்லமையை மட்டுமல்ல, நாடகக்கலையின் சிறப்பையும் உன்னதத்தையும் மகேந்திரனுக்கு ஆழமாக உணர்த்தியது. ‘தங்கப் பதக்கம்’ 100 வது நாள் நாடகத்தின்போது மேடையில் மகேந்திரனுக்கு மோதிரம் அணிவித்து மரியாதை செய்து மகிழ்ந்தார் நடிகர் திலகம். ஒரு நாள் மாலை நேரத்தில் துக்ளக் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார் மகேந்திரன். அன்றைய மாலைப் பத்திரிகைகளில் ஒரு முழுப் பக்க விளம்பரம் வந்திருந்தது. ‘தங்கப் பதக்கம்’ திரைப்படம் ஆகப்போகிற விளம்பரம் அது! மகேந்திரனுக்குள் ஓர் அதிர்வு. இதனால் தான் மிகவும் நேசிக்கும் துக்ளக் பணி பாதிக்கப்படுமோ என்று பயந்தார். அவர் நினைத்தபடியேதான் நடந்தது.
சிவாஜி பிலிம்ஸிலிருந்து மகேந்திரனுக்கு அழைப்பு வந்தது. நடிகர் திலகத்தின் தம்பி சண்முகம்தான் பேசினார். `படம் முடியும் வரை ஷூட்டிங் நாட்களில் நீங்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருக்க வேண்டும்!’ என்று அன்பான வேண்டுகோள் விடுத்தார்.
படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கி விட்டன. செட்டுக்கு போக வேண்டுமென்றால், துக்ளக்கிலிருந்து மகேந்திரன் விலக வேண்டும். மகேந்திரனால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் சோ பெருந்தன்மையோடு, `இது சிவாஜி படம். நீங்கள் கூட இருந்தால்தான் சரியாக இருக்கும்’ என்று பெருந்தன்மையோடு மகேந்திரனை அனுப்பி வைத்தார்.
‘தங்கப் பதக்கம்’ தயாராகி சென்னை சாந்தி தியேட்டரில் ரிலீஸானது. ஆரம்ப காட்சியில் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டராக, அந்த காலத்து இன்ஸ்பெக்டர் மாதிரி சிவாஜி அரை டிராயரோடு ஜீப்பில் இருந்து ரவுடி மேஜர் சுந்தரராஜனை மடக்க வருவார். அவர் ஜீப்பிலிருந்து அவரது பிரவுன் கலர் ஷூ தெரிந்தவுடனேயே தியேட்டரில் விசில் பறக்கும். பாடல்களும் ‘தங்கப் பதக்கம்’ படத்திற்கு மெருகு சேர்த்தன. நாடகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அதாவது சோவுக்கு இரட்டை வேடம் ஒன்றை திரைக்காக உருவாக்கினார்கள். அதில் சோவின் ஒரு கதாபாத்திரம் அரசியல்வாதி. பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.
(தொடரும்)

Russellxor
21st November 2016, 12:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/c59b1dca3ccbc5d1ca85df92769bc22a.jpg

Russellxor
21st November 2016, 12:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/490d7dc528f4eafef1af22e4c1f2f5b4.jpg

Russellxor
21st November 2016, 12:46 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/405254a6ed617727ec0fb044a70bd32f.jpg

Russellxor
21st November 2016, 12:46 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/a88b9e1d4f9cb9336146c38400f331b6.jpg

Russellxor
21st November 2016, 12:52 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/c8cc203f35fa4b5d96735d5d62eef634.jpg

Russellxor
21st November 2016, 12:52 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/8a56da5cbe413e7f664cbb8e3f93c6ff.jpg

Russellxor
21st November 2016, 12:58 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/78c54c1680e765b5ec9c781b07ad4237.jpg

Russellxor
21st November 2016, 01:02 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/c17939cebd50000ae88067f37dc899fb.jpg

Russellxor
21st November 2016, 01:03 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/7608ac3805bf48991d594e70678ac7d1.jpg

Russellxor
21st November 2016, 01:09 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/4f3dbf3968f3e873ac85c2a330a22c3f.jpg

Russellxor
21st November 2016, 01:13 PM
http://uploads.tapatalk-cdn.com/20161121/12a44ba931c169c2f7c47539ebebd281.jpg

sivaa
21st November 2016, 07:34 PM
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
3 மாத காலத்துக்குள்
எனது குடும்ப உறவுகளில்
இருவரது (மைத்துனர்,மாமனார்)இழப்பு
காரணமாக திரியில் அதிகமாக பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

sivaa
21st November 2016, 07:34 PM
சகோதரி சாரதா அவர்களின் மீள் வரவு
மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
அவரை வருக வருக என அன்புடன் வரவேற்கின்றேன்

sivaa
21st November 2016, 07:36 PM
http://oi64.tinypic.com/f04w3r.jpg

sivaa
21st November 2016, 07:37 PM
http://oi63.tinypic.com/29yfg9i.jpghttp://oi64.tinypic.com/rlj23b.jpg

sivaa
21st November 2016, 10:52 PM
9000 பதிவுகளை கடந்த வாசு சார்
வாழ்த்துக்கள்.

தங்களின் தொடர் பதிவுகளை
இத்திரியில் எதிர்பார்க்கின்றேன்.

sivaa
21st November 2016, 10:55 PM
4000 பதிவுகளை கடந்த
கோபால் , செந்தில்வேல்
இருவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Gopal.s
22nd November 2016, 11:51 AM
நவராத்திரி-3.

இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.பர பரப்புடன் ஆண்டனி இங்க நின்னுட்டிருந்த பொண்ணு என்று காட்டும் பாத்திரத்துடன் ஒட்டிய ஸ்டைல்.

4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தொனி ,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தொனி (சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையான மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை காய் குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அதகலத்துக்கு, நளினாவை ஆண் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனதனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது.

Gopal.s
22nd November 2016, 11:54 AM
நவராத்திரி- 03/11/1964.(எனது பெருமைக்குரிய 4000)

அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

இதில் ஒரு விஷயம்.

எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

இனி இந்த படத்தின் ,நடிப்பின் நுண்ணிய தருணங்களை மேலும் அலசுவோம்.

இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.பர பரப்புடன் ஆண்டனி இங்க நின்னுட்டிருந்த பொண்ணு என்று காட்டும் பாத்திரத்துடன் ஒட்டிய ஸ்டைல்.

4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தொனி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தொனி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையான மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை காய் குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அதகலத்துக்கு, நளினாவை ஆண் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனதனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது.

Russellxor
22nd November 2016, 01:00 PM
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
3 மாத காலத்துக்குள்
எனது குடும்ப உறவுகளில்
இருவரது (மைத்துனர்,மாமனார்)இழப்பு
காரணமாக திரியில் அதிகமாக பங்கேற்க முடியாமல் போய்விட்டது.
சிவா சார்
இழப்புகள் ஈடு செய்ய முயலாதவை.அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

Gopal.s
22nd November 2016, 02:00 PM
Dear Siva,

My hearty Condolences to your inconsolable losses of you Father in law and Brother in law.

adiram
22nd November 2016, 04:12 PM
அன்புள்ள சிவா சார்,

உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். உறவுகளை இழந்து வாடும் உங்கள் மனதுக்கு, திரியில் பங்கேற்பதன் மூலம் ஆறுதலும் அமைதியும் கிடைக்க வேண்டுகிறோம்.

adiram
22nd November 2016, 04:25 PM
அன்புள்ள கோபால் சார்,

நவராத்திரியின் ஒன்பது கதாபாத்திரங்களையும் நீங்கள் அலசியிருக்கும் விதம் அருமை ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கு உள்ளேயும் பல்வேறு குணாதிசயங்களும் இடம் பெற்றிருப்பதை நீங்கள் ஆய்ந்திருக்கும் விதமே தனி. ஏற்கெனவே பலர் சொன்னது போல நாடக நடிகன் சிங்காரம் ஒரு கதா பாத்திரமென்றால், அவர் மேடையில் கொண்டுவந்த சத்தியவான் பத்தாவது பாத்திரம். எனவே அப்போதே நம்மவர் தசாவதாரம் செய்துவிட்டார்.

இதில் வரும் சத்தியவான் சாவித்திரி யும், பாபுவில் வரும் கீசக வதமும் ஒரிஜினல் தெருக்கூத்தின் வடிவங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அருமையான ஆய்வுக்கு பாராட்டுக்கள்.

vasudevan31355
23rd November 2016, 07:26 AM
சிவா சார்,

துயரமான செய்தி. மிகவும் வருத்தமாக உள்ளது. குடும்ப உறவுகளை இழந்து வாடும் தங்களுக்கு மன ஆறுதல் கிடைத்திட இறைவனை வேண்டி என்னுடைய ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

vasudevan31355
23rd November 2016, 11:35 AM
கோ,

https://herotalkies-a.akamaihd.net/Images/Movies/Navarathiri/Video_Songs/overlay-kathai_sollaba.jpg

நவராத்திரிக்கு மெனக்கெட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. அற்புதம் என்றால் அது சும்மா.

ராதா முழுநேரக் குத்தகை எடுத்துக் கொண்டாலும் (அதுவும் பலமுறை நாடக அரங்கேற்றங்கள்) தலைவர் ஒரே படத்தில் அதுவும் குறிப்பிட்ட நிமிட நேரங்களில் ரோகியாய் தன்னை மாற்றிக் கொண்டது அவர் ஒருவருக்கே உரித்தானது.

என்னுடைய பெஸ்ட் வீரப்பன்தான். அடுத்து கொலைகாரன்.

https://i.ytimg.com/vi/098CzvBaaLs/hqdefault.jpg

குடிகேடியின் குணாதிசயங்கள் விசித்திரம். காமமும், அச்சமும் கோர்த்த மணியான கேரக்டர். டயலாக் டெலிவிரி அதிசயங்கள் காலாகாலத்துக்கும் வியக்க வைப்பவை.

http://v024o.popscreen.com/Q1FZNHFmYjFKOEUx_o_sivaji-ganesan-savitri-brothel-scene---navarathri-tamil-.jpg

ஒரு தூண்...அதை மட்டுமே வளைத்துப் பிடித்து இந்த நடிப்புத்தூண் நடிப்பின் அஸ்திவாரமாய் இக்காட்சியை அல்லோலகல்லோலப்படுத்தும் அதிசய ஆச்சர்யங்கள். மாஸ்க் கிடையாது..தோலுரித்தல்கள் இல்லை..கெமிக்கல் கலவைகள் கிடையாது. மெழுகுப பூச்சுக்கள் கிடையாது. நவீன தகிடுதத்த தொழில் நுட்ப ஏமாற்று சித்து வேலைகள் கிடையாது.

ஒரு சிறு குச்சி கையில் கிடைத்தாலும் அதையும் நடிக்க வைத்து விடுவார்.

அது மட்டுமா?

'ஏண்டி...என்னை உனக்குப் பிடிக்கலையா?' என்று தன் மனைவியுடனான நினைவுகளை அருகில் தட்டிலிருக்கும் ஒரு கொய்யாப் பழத்தை எடுத்து கடித்தபடி, அதை சுவைத்தபடி பகர்வார். பின்னால் இசையற்ற நிசப்தம். குரல் மட்டுமே வினாடிக்கு வினாடி வித்தியாச மாடுலேஷன்களில் மகிமை புரியும். எவெரெஸ்ட்டுக்கு ஏறும்...பரங்கிமலைக்குத் தாழும். இடையில் எங்கெல்லாமோ போயிட்டு வரும்.

பழச்சுவையை சுவைத்து அந்த வாய் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது.

'நீ வேற யாரையாவது காதலிச்சு உன் இஷ்டத்துக்கு விரோதமா எனக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்களா?

இது அவர் மனைவிடம் கேட்டதாக சாவித்திரியிடம் சொல்வது.

இப்போது மனைவியின் பதிலாக அவர் சொல்வது எத்தகைய ஆச்சர்யம்! அப்படியே மனைவியின் மனதிலிருந்து ஒலித்த வார்த்தைகளை பாவம் மாறாமல் நமக்குச் சொல்லுவார்.

'அய்யய்யோ...அய்யய்யோ..அப்படியெல்லாம் சொல்லாதீங்க...என்று தொடர்வார். 'அய்யய்யோ...அய்யய்யோ' என்று இரண்டு முறை மனைவியின் அதிர்ச்சி வசனமாக அவர் உச்சரிக்கும் தொனியை எந்த நடிகனும் செய்ததில்லை. வசனங்கள் முடிந்து சிறிது கேப் விட்டு மறுபடி பேசுவார். தொண்டையில் அடைக்கும் கொய்யாப்பழத்தை விழுங்கி, ரசிக்காமல் ருசித்து, கடமைக்கு கடித்து, தன்னையறியாமல் உதட்டில் ஒட்டியிருக்கும் பீஸை நாக்கால் தடவி வாய் உள்ளே செலுத்தி ,கண்களை மேல்நோக்கிய நிலையில் நிறுத்தி, இருத்தி பிளாஷ்பேக் கதையை கன கச்சிதகிமாக சொல்வார்.

'எங்க அம்மா அப்பா பணத்தைக் கொடுத்து உங்களை ஏமாத்திட்டாங்க' என்று மனைவி சொன்னதாக சொல்லி இப்போது தான் கேட்ட கேள்வியை இங்கே சொல்வார். அதுதான் டாப்போ டாப்.

'என்னா ஏமாத்திட்டாங்க?'

இந்த ஒற்றைவரிதான். இந்த வரிக்கு அவர் தரும் அந்த அர்த்தபுஷ்டியான குரல்...அதன் வளம்....ஒரு அப்பாவி அல்லது குழந்தைத்தனத்தின் பிரதிபலிப்பு அந்தக் குரலில் தெரியும். உதடுகளை ஒன்று சேர்த்து பிதுக்கி கொய்யா சதையை மென்று விழுங்கும் நேரமும் இதில் அடங்கும்.

'காசநோய்'எனும்போது குரல் தழுதழுத்து நடுங்கும்.. தூணின் இந்தக் பக்க கட்டிப்பிடித்தலுக்கு பிறகு அந்தப் பக்கம் மாறுவார்.

மனைவியோ, நடந்த சம்பவங்களோ காட்சிகளாகக் காட்டப்படாமல் வெறும் சொல்லாலேயே, வசனங்களாலேயே, உச்சரிக்கும் பாணியாலேயே அதை அப்படியே நடந்த சம்பவம் போல பிளாஷ்பேக்காக நம் மனதில் காட்சிகளாக விரியவைக்க இவரன்றி வேறு ஒருவரை காட்டிவிட முடியுமா?

என்னய்யா நடிப்பு! உடம்பு அலட்டல் இல்லை...கைகால் அலட்டல்கள் இல்லை. வெறும் முகம். ஒரே ஒரு கொய்யாக் கனி. வீட்டின் தூண் மட்டுமே. வசனங்கள் மட்டுமே. நடிப்பின் மொத்த பாடமும் அந்த இரண்டு நிமிடங்களில் அத்தனை பேருக்கும் எளிதாக விளக்கப்பட்டுவிடும். அதுதான் எங்கள் ஒரே ஒரு அய்யா.

'நானென்ன கெழவனா? என்ற வாலிபக் கேள்வி. 'அங்'.... என்ற இழுவைக் கேள்வி தொடர்ச்சியில் மிளிர்வார்.

எப்படி இவரைத்தவிர மற்ற எவரையும் நடிகராக மனது ஏற்கும்?

எங்களை வாழ்நாள் முழுக்க தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் மானத் தமிழனல்லவோ என் நடிப்புக் கடவுள்!

'நவராத்திரி'யின் நவ நாயகர்களின் நவரசங்களை ரத்தினச் சுருக்கமாக அதே சமயம் ஆணித்தரமாக வெளிக்கொண்டு வந்ததற்கு தங்களுக்கு ஒரு 'சபாஷ்'

Russellsmd
23rd November 2016, 11:44 AM
சிவா சார்...

மரணம் என்கிற மகா கொடுமை மனசுக்குத் தருகிற வேதனை சொல்லித் தீராதது.

ஆறுதல் சம்பிரதாயங்களுக்கு அடங்காதது.

நேசமிகு உறவுகளில் ஒன்றல்ல.. இரண்டைப்
பறிகொடுத்து விட்டு சோகித்திருக்கும் தங்களைக்
காலம் விரைவில் கண்டிப்பாகத் தேற்றும் என்பது எமது நம்பிக்கை.

Sent from my P01Y using Tapatalk

Gopal.s
23rd November 2016, 03:08 PM
வாசு,

கிழித்து நாட்டி விட்டாய். குடிகாரன் தன்னுடைய கதை சொல்லும் முறைமையில் நடிப்பின் உன்னதம் வெளிப்படும். நடிகர்திலகம் தான் ஒரு விவரிப்பு செய்யும் போது பங்கு கொண்ட மற்றோர் மனநிலையில் அவர்களின் மொழியில் பேசியே தன்னுடைய மனத்தின் மொழியை பதிவு செய்வார். நீ விரித்து எழுதிய விவரணை ,காட்சியை பார்ப்பதை விட மனத்திரையில் பார்ப்பதை பரவசமாக்கும்.

என்னவோ போடா ,மாதவா, படுத்தி எடுக்கிறாய்.

adiram
23rd November 2016, 05:44 PM
அன்பு வாசு சார்,

உங்கள் பங்குக்கு நீங்களும் பிய்த்து உதறி விட்டீர்கள். எத்தனை பேர் எத்தனை முறை ஆராய்ந்தாலும் புதையல் கிடைத்துக் கொண்டேயிருக்கும் அதிசய சுரங்கம் நம் தலைவர்.

நாடகநடிகன் சிங்காரம்...

தன்னுடைய அறிமுகப்பாடல் முடிந்ததும், சட்டென்று அசிஸ்டன்ட் உடைத்து தரும் சோடாவை ஒரு வாய் குடித்து, சற்று தாழ்ந்த குரலில் "வரச்சொல் வரச்சொல்" என்று உஷார் படுத்தும் அழகு. வழக்கமான நடிகையென்றால் இது தேவையிருக்காது. இவளோ ஒருநாளைக்கு மட்டும் இக்கட்டில் உதவி செய்ய வந்த பெண் என்பதை மறவாமல் சொல்லும் காட்சி இது.

எஸ்டேட் தொழிலாளி....

தன தம்பியின் கதையை சாவித்திரியிடம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என்ன ஒரு உயிர்த்துடிப்பு. "சுட்டேன் சும்மா சுட்டேன்" எனும்போது குரலிலும் முகத்திலும் தோன்றும் வெறி. பேசிக்கொண்டே எதிரிகள் வருகிறார்களா என்று பார்த்துக்கொள்ளும் கவனம். இறுதியில் முதுகில் குத்தப்பட்ட நிலையிலும், சாவித்திரியை பார்த்து "ஒருத்தன் விடாமல் எல்லாரையும் முடிச்சுட்டேன். நீ இங்கிருந்து ஓடிபோயிடு" என்று சைகையாலேயே கட்டிவிட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து துடித்த படியே உயிரை விடுவது....

அட போங்க சார், இவர் நடிப்பையெல்லாம் பார்த்துட்டு..... மற்றவர்களை பார்க்கும்போது.

adiram
23rd November 2016, 05:56 PM
ஞாயிறன்று புதிய தலைமுறை சேனலின் 'என்றும் புதிது' நிகழ்சியில் தலைவரின் 'உத்தம புத்திரன்' படத்தை ஆய்வு செய்தனர்.

அதில் குணசித்திர நடிகர் நந்தகுமார் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் சிலிர்க்க வைத்தது. மிகுந்த ரசனையோடு பேசினார். இறுதியில் "நடிகர்திலகம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனக்கு பெருமை" என்று சொன்னபோது நெகிழ வைத்தார்.

RAGHAVENDRA
23rd November 2016, 11:03 PM
சிவா அவர்களே
தங்கள் நெருங்கிய உறவினர்களை இழந்து வாடும் துயரத்தை ஆறுதல் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் போக்கி விடாது என்றாலும் சிறிது மறக்கவாவது உதவும். தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுடைய ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

இத்திரியில் பங்கு பெற்று நம்முடைய மக்கள் தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் தங்களுக்கு நிச்சயம் ஆறுதல் கிட்டும். தங்கள் துயரிலிருந்தும் கவலைகளிலிருந்தும் தங்கள் நேரங்களை நடிகர் திலகத்தின் பக்கம் திருப்பி ஆறுதல் கொள்ளுங்கள்.

sivaa
24th November 2016, 12:07 AM
எனது உறவுகளின் பிரிவிற்கு ஆறுதல் கூறிய
நண்பர் செந்தில்வேல்,திரு கோபால் , திருஆதிராம்
திரு வாசு, திரு ஆதவன்ரவி,மற்றும்
திரு ராகவேந்திரா சார் அனைவருக்கும் நன்றி.

திருஆதிராம் திரு ராகவேந்திரா சார் ஆகியோர்
கூறியதுபோல்
நமது தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும்
எனது நேரங்களை
நடிகர் திலகத்தின் பக்கம் திருப்பிக்கொள்வதிலும்
ஆறுதல் கிடைக்கிறது.

நன்றி நன்றி நன்றி.

Gopal.s
24th November 2016, 01:59 PM
வாசு,

சிவாவின் துயர செய்தியால் ,உனக்கு வாழ்த்து செய்தியை தள்ளி போட்டேன் தவிர மறக்கவில்லை. இப்போது உன் பிறந்த தினத்திற்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
24th November 2016, 05:05 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VASUBDGRTGW2015_zpsueqx9wk9.jpg

வாசு சார்
கடந்த சில நாட்களாக ஊரில் இல்லாததால் கணினியை இயக்கவில்லை. தற்பொழுது தான் ஓரிரு நாட்களாக வழக்கம் போல் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறேன். இந்த காரணத்தால் கடந்த 21ம் தேதி தங்களுடைய பிறந்த நாளன்று வாழ்த்துத் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தும் வேறு கவன திசை திருப்புதல்களில் கடந்து விட்டது. தாமதமானாலும் தங்களுக்கு உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்., மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் ஆசியுடன் தாங்கள் நீடூழி வாழ்ந்து வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

நினைவூட்டிய கோபால் சாருக்கு உளமார்ந்த நன்றி.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VASUBDGRTGW2015_zpsueqx9wk9.jpg

Russellxor
24th November 2016, 05:24 PM
வாசு சார்
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

Russellsmd
24th November 2016, 05:48 PM
தனது திறமைப் பேரொளியிலிருந்து இந்த ஆதவனுக்கு நிறைய இரவல் தரும் ஞான ஒளியாருக்கு வணங்குதலுடன் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.





Sent from my P01Y using Tapatalk

adiram
24th November 2016, 07:30 PM
நடிகர்திலகம் திரிகளின் "பதிவு திலகம்" "ஞான ஒளியார்" வாசுதேவன் அவர்களுக்கு இதயம் நிறைந்த (தாமதித்த) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த இனிய பிறந்த நாளை முன்னிட்டு 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் தாராளமாக கிடைக்கப்பெற்று வளமாக வாழ வாழ்த்துகிறேன்

நினைவூட்டிய கோபால் சாருக்கு நன்றிகள்.

Russellxor
24th November 2016, 07:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20161124/40858fd223813e231c9ee67508a156ac.jpg

adiram
24th November 2016, 08:13 PM
கடந்த ஞாயிறன்று ntfans சார்பில் நடைபெற்ற ""செல்வம் "" திரை காவியத்தின் சீரிய விழா குறித்து நமது முரளி சார் அவர்களின் நேர்த்தியான நேர்முக வர்ணணைக்காக எதிர்நோக்கியிருக்கிறோம்.

Russellsmd
24th November 2016, 10:21 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161124214424035_zpsh6rwkmlk.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161124214424035_zpsh6rwkmlk.jpg.html)

Sent from my P01Y using Tapatalk

Gopal.s
25th November 2016, 07:32 AM
நடிகர்திலகத்தின் மிக மிக சிறப்பான காதல்காட்சிகளாக நான் கருத்துபவை,

1)வசந்த மாளிகை ஆதிவாசி குடில் காட்சி.

2)சிவகாமியின் செல்வனின் எத்தனை அழகு.

3)சுமதி என் சுந்தரியில் பலூன் காட்சி.

4)இரும்புத்திரையில் நதியோர உரையாடல்.

5)அன்னை இல்லத்தின் மடிமீது தலை வைத்து.

6)சிவந்த மண்ணின் ஒருநாளில் உருவானதே

7)நவராத்திரி ஆனந்தன் -நளினா .

8)அண்ணன் ஒரு கோவில் நாலு பக்கம் வேடருண்டு

9)புதையல் துரை -பரிமளா காட்சிகள்.

10)ராஜா-ராணி காட்சிகள்.

இதில் கடைசி ஐந்தை நான் வேண்டிய மட்டும் அலசி துவைத்து பிழிந்து விட்டதால் முதல் ஐந்தை பார்ப்போம். (வாசு நீ முணுமுணுப்பது கேட்கிறது, எத்தனை அழகில் நடிகர்திலகத்தை விட அதிகம் பிழிந்து விடவில்லையா என்று.எத்தனை பிழிந்தாலும் காமசாறு வழிந்தோடும் அதனை மீண்டும் எடுக்கத்தான் எடுப்பேன்.)

RAGHAVENDRA
25th November 2016, 09:19 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15095515_1267447333305936_7511616228417448648_n.jp g?oh=e952dc00317c0672816723d1ad2ec9de&oe=58B09866

RAGHAVENDRA
25th November 2016, 09:28 AM
இந்தக் காட்சிக்கு உயிரோட்டமான, உணர்வு பூர்வமான பின்னணி இசையமைத்த திரை இசைத் திலகத்தைப் பற்றிச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே,

Gopal.s
25th November 2016, 10:36 AM
இந்தக் காட்சிக்கு உயிரோட்டமான, உணர்வு பூர்வமான பின்னணி இசையமைத்த திரை இசைத் திலகத்தைப் பற்றிச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே,

Edited and done big boss.

KCSHEKAR
25th November 2016, 11:37 AM
திரு. சிவா சார்,
தங்களின் இல்லத்தில் நடைபெற்ற துயரங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....

Gopal.s
25th November 2016, 11:39 AM
அவனோ செல்வம் தந்த சுகத்தில் திளைத்து கரைகண்டவன். இழந்த பாசத்தை மீட்டு இதமாக வாழ துடிப்பவன். ஏழையான ,சுயநல உறவுகளில் களைத்த அவளோ ,காட்டிய அக்கறையால் அக்கரை கண்ட மன்மதனின் மேல் உரிமையான நேசம் உயிர்ப்பதை உணர்ந்தவள். அந்நியத்தன்மை துறந்தவள் . இதன் பின்னணியில் காட்சியில் நுழைவோம்.

அவனுடைய மேலங்கியை அங்கீகரித்தவள் ,தன் மேலாடை துறந்து ஈரம் பிழிவதை ,அந்நியனாக அவன் இருப்பை உணராமல் இயல்பாக செய்வாள் ,அவன் மேல் நம்பிக்கை,

அவனோ காமம் காட்டிய வழியெல்லாம் சென்று கடனுக்காக காமம் பெற்றவன்.காதலுக்காக காமம் யாசிப்பதை தவறாக யோசியாதவன். அலையும் கதவுக்கு தாழ்ப்பாளிடுபவன்,அலையும் மனதை சிறிதே கட்டுக்குள் வைப்பான். காதலின் காமம் கவர்ந்து பெறுவதில்லை.கனிந்து பெறுவதாயிற்றே.அவனோ அவசர காமுகன்.ஆனாலும் காதலுற்ற காமுகன்.

அந்த பார்வையில் தான் கண்ட உன்னத கனியை சுவைக்கும் ,தனிமையும்,ஈரமும்,வாடையும்,உரிமையும் தந்த உயிர்ப்பால் பார்வை திரிந்தாலும் ,பதிந்தாலும், சுவைத்து கடிப்பதென்னவோ வயிற்று பசி தீர்க்கும் கனியை. நமக்கு கொடுப்பதென்னவோ அவன் சுவைக்க விரும்பிய கன்னியின் கனியின் சுவையை.கண்டதை சுவைத்து களித்தவனுக்கு, தான் சற்று முன் கண்டதை உரிமையுடன் கடித்து சுவைக்கும் உன்மத்த நினைவு.

இதன் பின்னணி இசையை கவனியுங்கள். வயலின், வீணை, மோர்சிங் என்ற மூன்றே மூன்று. இதமாக மெல்லிய காமம் படரும் உணர்வு. முதலில் மழையை போன்று இதம் தந்து மனதில் காதல் தீயை மூட்டி, மெல்லிய காமத்துடன் பயணம் செய்யும். காதுகளை பதம் பார்க்காமல் திரை இசை திலகம் தந்த இசை, காட்சியுடன் இசைந்து,மனத்தை பிசைந்து மெல்லியதாக்கும்.

மனதின் நெருப்பை புகை போட்டு இதமாக்க அவன் நாடுவது தீக்குச்சியை அல்ல (அதைத்தான் உறியவள் சிற்றுந்தியிலேயே காற்றையும் மீறி அளித்து விட்டாளே )எரியும் கொள்ளியை , அதில் புகை பற்றுவது ,மனத்தை சொல்லி விடாதா ,அது லேசான தீயா?

உரியவளோ நாணத்தால் விலகி நிற்க, மனத்தின் திண்மையை,தன்மையை,தண்மையை ,ஆண்மையை அண்மையாய் அளிக்கும் நோக்கில் ,சீட்டியொலி போல உஸ் என்று ,வாயேன் இங்கே , என்று கண் சாடை காட்டி , பசிக்குதா ,குளிருதா ,வேறே எப்படி என்று பெண்மையின் ஆழம் காண முயலும் அற்புத காட்சி.

பெண்மையின் உரிமை கலந்த நாணம், அழைப்புக்கு உளம் கனிந்தாலும் ,உடலால் சற்றே கூசி விலகும் பெண்மை,அழைப்பை ஏற்று அப்பாவியாய் நடிக்கும் பாவம் , ஏற்று கொண்டதை சொல்லும் மௌனம் என அப்பெண்ணின் உணர்வுகள் ,ஆணுக்கு ஈடாய் புரியும் ரசாயன விந்தை.


கண்டு மகிழுங்கள்.தமிழின் மிக சிறந்த காமம் தோய்த்த கவிதை.

https://www.bing.com/videos/search?q=vasantha+maligai+hot+scene+sivaji-vanisri&view=detail&mid=6216CF44B73E99C4C2986216CF44B73

https://www.youtube.com/watch?v=bkzZShTu-oQ

KCSHEKAR
25th November 2016, 11:41 AM
வாசுதேவன் சார்,

தங்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் (தாமதமாக இருந்தாலும் - ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு).

நவராத்திரி அலசல் - சூப்பர்......

KCSHEKAR
25th November 2016, 11:45 AM
அவனோ செல்வம் தந்த சுகத்தில் திளைத்து கரைகண்டவன்.
கோபால் சார்,
தங்களின் வர்ணனைகள் (குறிப்பாக காமத்துப்பால்) அருமை. அனுபவம் இழயோடுகிறது.......

HARISH2619
25th November 2016, 04:24 PM
Belated birthday wishes to my dear brother vasudevan

RAGHAVENDRA
26th November 2016, 07:41 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15241885_1268360836547919_4661949607705208666_n.jp g?oh=c63309971d57a3a63096164a003debb3&oe=58C6BAB0

Harrietlgy
26th November 2016, 09:19 PM
Belated birthday wishes to Mr. Vasudevan sir.

sivaa
27th November 2016, 03:45 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம் அருமை நண்பர் கோபால் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

7.11.2016ல் பிறந்த நாள்கண்ட
கோபால் அவர்களுக்கு
(தாமதமான) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

sivaa
27th November 2016, 03:48 AM
21.11 2016ல் பிறந்த நாள் கண்ட
வாசு சார்
(தாமதமான) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

sivaa
27th November 2016, 03:49 AM
திரு. சிவா சார்,
தங்களின் இல்லத்தில் நடைபெற்ற துயரங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....

நன்றி

sivaa
27th November 2016, 03:51 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15095515_1267447333305936_7511616228417448648_n.jp g?oh=e952dc00317c0672816723d1ad2ec9de&oe=58B09866
ஸ்ரைல் மன்னன்

sivaa
27th November 2016, 03:56 AM
http://oi68.tinypic.com/wsa1z9.jpg

sivaa
27th November 2016, 03:57 AM
http://oi67.tinypic.com/2dmh8vd.jpg

Gopal.s
27th November 2016, 06:21 AM
அந்த இளம் ஜோடி எதிர்பாராத விதமாக மாலை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட கணவன்-மனைவியாகி விட்ட நிலையில் ,தனியறையில்.
பக்கத்து இலையில் பாயசம் ஏராளம் என்பது போல மற்றுமோர் இளம்ஜோடியின் கொஞ்சல் மறு அறையில்.

அந்த இளம் விமானி இவற்றில் தூண்ட பட்டு தன் காதலியை புதிதாக பார்க்கிறான்.அந்த பார்வை என்ன சொல்கிறது? அவள் அழகை ரசிக்கிறதா? தனக்கு கிடைத்த புதிய உரிமையில் அழகை விழுங்கி களிக்கிறதா? மெல்லிய அழைப்பு விடுகிறதா? தன் புணர்ச்சி வேட்கையை பறை சாற்றுகிறதா?அந்த காதலியோ ,இணங்கும் ஆசையிலா, புதிய உணர்வின் ,சூழ்நிலையின் பயம் கலந்த நாணமா,விழைவுக்கு பதில் விழைவா,அழைப்பிற்கு தூது விடும் கண்களா?

எழும் நாயகன் தன்னுடைய ஆண்மையின் எழுச்சியையும் குறிப்பால் உணர்த்தி கைகளில் முத்தமிட ,ஏற்றாலும் சிறிதே விலகும் பயம் கலந்த நாணம்.எத்தனை அழகு கொட்டி கிடக்குது,எப்படி மனதை தட்டி பறிக்குது ,அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது ஆனாலும் அச்சம்தான் தடுக்குது என்ற வரிகள் மௌனமான காதலர்களின் உடன் மொழியில் பாவத்தில் ,கண்களின் காவிய மொழியில் ,அனுசரணையான இணைவு நடிப்பில் அப்படியே நமக்கு இந்த காட்சியின் மிச்சத்தை கோடிகாட்டும்.

முதல் அனுபவம் பெற்றவர்களுக்கு புரியும். காதலர்கள் முதலில்
தொடு உணர்வு,தடவல், சிறிதே முன்னேறி முத்த பரிமாற்றம், இவற்றில் தயக்கம்,தடுமாற்றம்,சிறிதே awkwardness கலந்த அவசரம் பிறகு இணையை தூண்டும் காம இச்சை வெளியிடும் அழுத்தமான பிடிப்புகள்,ஆவேசம், பின் காம கட்டிப்பிடித்தல் ,பின்புறமாக கட்டி முத்தமிடும் முயல்வு ,காதலி காதலன் கையை விரும்பும் இடத்திற்கு நகர்த்தல்,கடைசியில் உணர்ச்சி வயப்பட்டு புணர்ச்சிக்கு இயைதல் என்றுதான் போகும். அதை அப்படியே இந்த காதலர்கள் ,பல காதல்களுக்கு முன்னோடியான பாலபாடமாக்குவார்கள்.

அவனோ ,அவளை கால் முதல் தலைவரை தொட்டு தடவி, அவளின் நாணி விலகும் முயற்சியால் சிறிதே குறி தவறுவான்.தினம் வந்து கொஞ்சும் மலர்கொண்ட மஞ்சம் இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும் ,என்ற மஞ்சத்தில் பின்புற அணைப்பில் இதழை கேட்பான். இருவருக்குமே தயக்கம். கைகளை பிணைக்கும் போதும் இசைவின்மை தெரியும் சிறிதே முறுக்குவது போல.

பிறகு முகத்தை கைகளில் ஏந்தி முத்த பரிமாறல் .coat stand அருகில் எதிர்பார்ப்போடு நிற்கும் காதலியை பதமாக முத்தமிடும் முயல்வு. சிறிதே துணிவுடன் அவள் இடையின் முற்புறத்தில் விழைவின் இறுக்கத்தை விரலில் தேங்கிய தேய்த்தணைப்பு,திரைக்கு ஓடும் காதலியை ,தன்னுடைய வல்லணைப்பால் இடையின் பின்புறத்தின் கீழே இறுக்கி தன்னுடன் பிணக்கும் இறுக்கம்.தயங்கி விலகும் காதலியின் மார்பை தூண்டும் முயல்வு. பிறகு இறுக்கி அணைத்து ஆவேச முத்தம்.உதட்டு கனிக்குள் இருக்கும் சிவப்பு ,விழிக்குள் நடக்கும் விருந்தை படைக்கும். செந்தாழம்பூ மலரவும் ,சிந்தாமல் தேன் பருகவும் ஒரே சுகம் தினம் தினம்.

மஞ்சத்தில் சரியும் அவளோ ,இனி என்னால் விலக முடியாது என்று சரணாகதி பார்வை பார்க்க ,அவனோ படுக்கையில் சரியும் அவளை ஆவேச பின்புற அணைப்பில் இளக்குவான்.தலையணையை மார்புக்கு காவலாகவோ ,அல்லது இதமாகவோ அணைக்கும் அவளை, நானிருக்க இது ஏன் என்று தலையணை பிரித்து, நாயகியே அவன் கைகளை மார்புக்கு அணையாக கொண்டு செல்லும் நிலைக்கு சென்று ,இறுதி உணர்ச்சி வச பட்ட ஆவேச அணைப்பில் நெருப்பு பற்றி கொழுந்து விட்டு எரிந்து ,காதலர்களின் புணர்ச்சி என்ற காம காவியம் இறுதி காணும்.அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும் ......


ஆனந்தோ காமம் கரை கண்டவன். அவன் நினைத்தால் நொடியில் அரங்கேற்றி விடுவான் ஆசையை,ஆனாலும் அதற்கு அணை போட்டு விழைவை சொல்வான். இந்த அசோக் அனுபவமற்றவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலியுடன் உணர்ச்சி வச பட்டு காம சோதனையின் துடிப்பான பயத்துடன் அணையை உடைத்து காமம் வெல்வான்.

இது இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சிவாஜியும் ,வாணிஸ்ரீயும் நடித்து காட்டும் விந்தையை ரசியுங்கள். மெல்லிசை மன்னர் காட்சிக்குரிய தயக்கம், தூண்டல் ,அவசரம், ஆவேசம் இவற்றை தனது பாடல் மற்றும் பின்னணியில் தரும் அதிசயம், எஸ்.பீ.பீயின் இச்சை நிறைந்த இளம் குரல் என்று என் மதிப்பில் ரூப்பு தெரா வை விட இந்த சூழ்நிலைக்கு மேலான பாடல் எத்தனை அழகே.

https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA

RAGHAVENDRA
27th November 2016, 07:51 AM
அந்த இளம் ஜோடி எதிர்பாராத விதமாக மாலை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட கணவன்-மனைவியாகி விட்ட நிலையில் ,தனியறையில்.
பக்கத்து இலையில் பாயசம் ஏராளம் என்பது போல மற்றுமோர் இளம்ஜோடியின் கொஞ்சல் மறு அறையில்.

அந்த அடுத்த அறை ஜோடியின் சம்பாஷணையில் ஒலிக்கும் ஆண் குரலும் எஸ்.பி.பாலாவினுடையதைப் போல் தான் தோன்றுகிறது.

RAGHAVENDRA
27th November 2016, 08:18 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15220233_1269426869774649_5138410978950518274_n.jp g?oh=5270e41a7585f70f7edfb3fdaed54c7d&oe=58C26DF6

Gopal.s
27th November 2016, 08:33 AM
ஒரு ஒன்றரை நிமிட காட்சி மாணவர்களின்,இளைஞர்களின் காதல் வேத வழிகாட்டியாகுமா? காட்சியமைப்பு,இசை, காமெரா,இயக்கம் ,உடைகளின் தேர்வு,,நடிப்பு,காட்சிகளின் நடிகர்களின் அழகு,இளமை வெவ்வேறாக தெரியாமல் ஒன்றிணைந்து ஒரு படத்துக்கே இளமை முகவரி தரமுடியுமா?1971 தமிழ் புத்தாண்டில் இந்த அதிசயம் நிகழ்ந்தது.

அருமையான காட்சி.சிவாஜி,ஜெயலலிதா, சி.வீ.ராஜேந்திரன்,தம்பு,எம்.எஸ்.விஸ்வநாதன்,பீ.ராமக ிருஷ்ணன் இவர்களுக்கு தலைவணக்கம்.

அவனோ எஸ்டேட் உள்ளே முடங்கி கிடக்கும் கிணற்று தவளையாக அழகான இளைஞன். சினிமா சுவொரொட்டி கூட கண்டறியாதவன். பெயரிலே மட்டுமே மது. அவள் விரக்தியுற்ற சினிமா நடிகை. சந்தர்ப்பவசத்தால் உண்மை வெளியிட முடியாமல் மதுவின் வாழ்க்கையுடன் பிணைக்க படுகிறான். உண்மை,மது காதலில் வீழ்கிறான் சுந்தயுடன்(சுமதி என்ற).

ஒரு விழா . திடீரென்று ஆட வைக்க படும் மதுவும் சுமதியும் இரவில் தனியாக வீடு திரும்புகிறார்கள் எஸ்டேட் காடுகளினோடே.மது கிட்ட தட்ட வயலட் மற்றும் இலை நீல பூப்போட்ட பட்டிக் short kurthi யம் ,இளநீல முழு கால்சட்டையும்.பொருத்தமான scarf .சுமதியோ ,மதுவுக்கு இசைந்த வண்ணத்தில் பிங்க் வர்ண புடவை மட்டும் ஜாக்கெட் பெண்மை வர்ணம். மது கையில் இருளை விரட்ட டார்ச். சுமதியின் கையிலோ விழாவின் மிச்சமாக நீல,மஞ்சள் ,இளம் சிவப்பு
பலூன்கள்.இரவில் நடக்கும் போது நள்ளிரவின் காட்டின் மித ஓசை இசையில் மிதக்கும்.

மது , தன்னை கூட்டத்தில் திடீரென தள்ளி ஆட சொல்லி தனக்கு வ்ராததையும்(ஆட்ட காட்சியில் இதை நடிப்பிலும் உணர்த்துவார் மேதை),சுமதி சமாளித்ததையும் சொல்லி, தன்னை விருந்தினர் போட்டோ எடுக்கும் போது கூசியதை ,இயல்பாக சொல்லி வரும் போது ,இறுக்கமாக பதட்டத்தில் இருக்கும் சுமதி (விருந்தாளி தான் பட இயக்குனர். குட்டு வெளியாகலாம்)மௌனம் காக்க, அறியாத மதுவோ ஏன் பேசாமயே வர என, சுமதி மரத்தின் அருகில் சென்று பலூனால் முகம் மறைக்க, மது விளையாட்டாக ஒரு ஊசி எடுத்து மஞ்சள் பலூனை குத்தி உடைக்க பதறும் சுமதி காதலனிடம் அணைப்பில் இணைய,இடையை புண்ணாக்கும் மதுவின் கையை மரத்தில் தள்ளி அந்த கையை பதமாக சுமதி வருட, அந்த கையோ மரத்தை வருடும் காதல் ஆவேசம் அந்த இடையில் நிகழ்ந்திருந்தால் என்ற கற்பனையை நமக்களிக்க,பறக்கும் பலூன், signature இசையில் லலல்லாவில் ஆரம்பித்து ஹும் என்று முடியும் எம்.எஸ்.வீயின் குதூகல ரொமான்டிக் பின்னணி இசை என்று இந்த காட்சி எங்கள் தினசரி வீட்டு பாடமானதில் என்ன அதிசயம்?

வன்மையும்,காமமும் அற்றே,மனதில் இனிய காதல் போதையேற்றும் அந்த அற்புத காட்சி.1.35.20 மணித்துளியில் துவங்கி 1.36.40 மணித்துளிவரை சுவையுங்கள்.

https://www.youtube.com/watch?v=OJiFEWQ4fBo

sivaa
27th November 2016, 09:58 AM
http://oi64.tinypic.com/4lk9bp.jpg

sivaa
27th November 2016, 09:59 AM
http://oi65.tinypic.com/2mex2qg.jpg

sivaa
27th November 2016, 09:59 AM
http://oi64.tinypic.com/nyh5yg.jpg

sivaa
27th November 2016, 10:00 AM
http://oi68.tinypic.com/2uhvgv9.jpg

Russellsmd
27th November 2016, 01:28 PM
சிவாஜி பாட்டு -34
----------------------------------

"வெள்ளிக் கிண்ணந்தான்" -

இவர்கள், பாடிக் காதலிக்கிறார்கள்.

நாம், பாடுபவர்களைக் காதலிக்கிறோம்.

பாடலைக் காதலிக்கிறோம்.
*****

நாயகரின் கம்பீர வீற்றிருப்பை ஒரு நாற்காலி
ஏந்தியிருக்கிறது.

கால் மேல் கால் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் கலை நாயகர், காதல் நாயகியின்
வரவு கண்டு மலர்ந்து, மெல்லக் கால்கள் பிரித்து,
லாவகமாய் நாற்காலியின் கைப்பிடியில் கையூன்றி எழுவதாய் பாடலின் துவக்கத்திலே
ஒரு பாவனை.

அதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது..
அய்யன் தன்னை விலகி எழுந்து போனதும் அந்த
நாற்காலி இவ்வாறு புலம்பியிருக்குமோ?

"தெரியாத்தனமாக நான் சிக்கி விட்டால், ஆண்டாண்டு காலங்களாய் என் மீது ஏறிக் கொண்டு, நான் அழுக்காகி, தேய்ந்து, உடைந்து போகிற வரைக்கும் என்னை விடாதவர்கள் எண்ணற்றோர். அவர்களுக்கெல்லாம் என் மீது
இருந்த பற்று, அவர்கள் மீது எனக்குக் கொஞ்சமும் கிடையாது. நான் விரும்பும் தலைவா..
எனக்குப் பெருமையான உன் சில நிமிட அமர்வு
காலகாலத்திற்கும் எனக்குக் கிடைத்து விடலாகாதா?"
*****

நல்லவர்களிடம் ஆசை இருக்கும். பேராசை இருக்காது. "எனக்கு.. எனக்கு" என்கிற அலையல்
இருக்காது.

தனக்குத் தேவையானது தவிர்த்து வேறெதையும்
விரும்பாத நல்ல காதலனாய் இதில் வரும் நடிகர்
திலகத்திடம் இவற்றை உணரலாம்.

வெள்ளிக் கிண்ணங்களில் பால் நிரப்பிக் கொண்டு காதல் மனைவி சிரித்து வருகிறாள்..
முதலிரவு அறைக்குள். அவன் முன் அவள் நீட்டிய
வெள்ளித் தம்ளர் பாலை அவன் ஏறெடுத்தும்
பார்க்கவில்லை. தனக்கு எதையோ தந்தாளே..
அதை வாங்கி ஓரமாய் வைத்தோமே.. அது என்ன?
..ம்ஹூம்.. அந்த மாதிரிக் கேள்விகளை அவன்
சிந்தனையில் சேர்க்கவில்லை.

அவனுக்குத் தேவையில்லை பால் என்கிற திரவம்.
அவன் விரும்புவது திரவம் சுமந்து வரும் அழகான
உருவம்.
*****

முகத்தில் செயற்கையாக ஒப்பனை போலில்லாமல், கண், மூக்கு, உதடு போன்று
ஒரு அவயமாகவே புன்னகையைப் பொருத்துவது
நடிகர் திலகத்தாலேயே ஆகும். இந்தப் பாடலிலும்
ஆக்கியிருக்கிறார்.
*****

கட்டில் உண்டு். கட்டிப் பிடித்தல் உண்டு. கன்ன
முத்தம் உண்டு். மறந்தும் காமமாகி விடாத மகத்தான வியப்பு மட்டுமே அத்தனையிலும் உண்டு.
*****

நீர் நிலைக்கு மேலே ஒரு பாலம். பாலத்தின் மீது
காதலர் இருவர். அவர்களும் உருவாக்குகிறார்கள்
ஒரு நேசப் பாலம். அதில் காதல் நடக்கிறது.
*****

அவசியத்திற்கென்று வந்ததும் அழகாகிறது அய்யனிடம். குளிருக்கென்று அணியும் ஸ்வெட்டர்
நம் கண்களுக்குக் கொண்டு வருகிறது குளிர்ச்சி.
*****

கைகளைக் கத்தி போல் நீட்டிக் கொண்டு ஒரு
ஒயிலான முன் பின் நகர்தலோடும், மெலிதாய்ச் சுழன்று தோள் குலுக்கலோடும் ஆடும் பாடலின் இடையிசைக்கான நடனம், காதல் பாடல்களுக்கு
இப்படித்தான், இவ்வளவுதான் ஆட வேண்டும்
என்பதான அறிவுறுத்தல்.
*****

பாத்திரம் நிறைய பாயசம் இருந்தால்தான் தம்ளர்களில் நிரப்பி அடுத்தவர்களுக்குத் தர முடியும். ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவனாலேயே
பணம் கேட்டவனுக்கு ஐநூறாவது தர முடியும்.
சொல்வதற்கு இன்பமான விஷயங்கள் ஏராளமாக
வைத்திருப்பவனாலேயே "இன்னும் சொல்லவோ"
என்று ஆனந்திக்க முடியும். "இன்னும் சொல்லவோ" என்று அய்யா பாடும் போது முக
நிறைவைக் கவனியுங்கள்.. புரியும்.. நிறைய வைத்திருப்பவனின் நிறைவு.
*****

"காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன?"
ஒரே வரி.

தன்னுடையவள் காலத்தை நிறுத்திப் பார்க்கிற மாயக்காரி என்பதைச் சொல்ல வருகிற ஒரு பெருமித பாவனை.

காலத்தையே நில்லென்று சொல்லி விட்டவள்
தன்னுடையவள் என்று கண்களால் காட்டுகிற
கர்வ பாவனை.

ஒரே வரி். இரண்டு பாவனை.

உயரக் கை தூக்கிக் குவித்து வணங்குகிறேன்..
என் உள்ளக் கோயில் வாழ்கின்ற தேவனை.


http://youtu.be/4J52KO9Is7o

Sent from my P01Y using Tapatalk

vasudevan31355
27th November 2016, 02:30 PM
கோ,

எத்தனை அர்த்தம் கொட்டிக் கிடக்குது! ம்...நடத்துங்கள். இந்தோனேஷியாவில் என்ன இப்போது குளிர்காலமா?

vasudevan31355
27th November 2016, 02:31 PM
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

vasudevan31355
27th November 2016, 02:32 PM
ராகவேந்திரன் சாரின் நடிகர் திலக புகைப்படங்கள் புல்லரிக்க வைக்கின்றன. ஆயிரம் நன்றிகள் ராகவேந்திரன் சார்.

vasudevan31355
27th November 2016, 02:37 PM
நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சி தொடர்-15

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_000020089.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_000020089.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_000103987.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_000103987.jpg.html)

நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சி தொடரை சற்று நீண்ட இடைவெளிக்குப் பின் தொடருகிறேன். இடையில் வேலைப்பளுவினால் தொடர் தாமதமானதற்கு வருந்துகிறேன்.

இந்தத் தொடரில் இப்போது மிக மிக வித்தியாசமான நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சியை கண்டு ரசிக்கலாம். நிஜமாகவே நிரம்ப வித்தியாசம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_002988502.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_002988502.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_002956141.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_002956141.jpg.html)

பொதுவாக கண்பார்வையுள்ள நாயகனும், வில்லனும் மோதி பல படங்கள் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கண்பார்வையற்ற நாயகனும், கண் பார்வையுள்ள வில்லனும் மோதினால் எப்படி இருக்கும்? இது வித்தியாசம்தானே! அதுவும் கண்பார்வையற்ற மாலைக்கண் நோயால் அவதியுறும் பாடகர் நாயகன் நிர்மல் என்ற நம் 'தவப்புதலவர்' இந்த ஸ்டன்ட் சீனில் எனும்போது ஆச்சர்யங்களுக்குப் பஞ்சமென்ன? வழக்கத்தைவிடவும் அதிகமாக வாய் பிளக்க வைக்கிறார் இந்த சண்டைக்காட்சியில் நம் அருமை நடிகர் திலகம்.

பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம், மோதல், அடிதடி, கும்மாங்குத்துக்களுக்கு பஞ்சமிருக்காது. சண்டைக்காட்சிகளில் அடி வாங்குவது, ஆக்ரோஷப்படுவது, திருப்பி அடிப்பது போன்ற சம்பவங்களே ஜாஸ்தி. ஆனால் நம் தவப்புதல்வனின் இந்த சண்டைக் காட்சியில் அவருக்கே உரித்தான நடிப்பும் சண்டையோடு சேர்த்து வெளிப்படும் தத்ரூபமாக. இது மிகவும் வியக்கத்தக்க ஒன்று. அது மட்டுமல்ல....இந்தக் காட்சியில் அருமையான நடிப்பு, சண்டையோடு புத்திசாலித்தனமும் இணைந்து ஜொலிப்பதைக் காணலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_002891406.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_002891406.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_003106772.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_003106772.jpg.html)

பாடகர் நிர்மலான நம் நடிகர் திலகத்திற்கு மாலைக்கண் வியாதி. இரவானால் கண் பார்வை போய்விடும். பகலில் பிரச்னை இல்லை. ஹோட்டலில் பாடி சம்பாதித்த பணத்தை ஹோட்டல் ரூமில் நடிகர் திலகம் பர்ஸில் வைத்து தலையணையின் அடியில் வைக்க, அதை வில்லன் எம்.ஆர்.ஆர்.வாசு வெளியே இருந்து கவனித்து விடுவார். 'சரி! இரவு வேளையில் அந்தப் பணத்தை அபேஸ் பண்ணிவிடலாம்' என்று முடிவு செய்து இரவு நடிகர் திலகத்தின் ரூமை கம்பி போட்டு திறந்து உள்ளே நுழைவார். ஆனால் வாசுவிற்கு நடிகர் திலகத்திற்கு மாலைக்கண் நோய் இருப்பது தெரியாது. உள்ளே நடிகர் திலகம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருப்பார். ரூமின் உள்ளே ஷூ கால்களுடன் 'சரக் சரக்' என மெதுவாக வரும் வாசு தலையணையின் அடியில் உள்ள நடிகர் திலகத்தின் பர்ஸை நைசாக எடுக்க முற்படும்போது கட்டிலின் அருகே உள்ள மேஜை டிராயர் மீது இருக்கும் தண்ணீர் டம்ளரை தெரியாமல் தட்டிவிட்டுவிட, அந்த சப்தத்தில் 'திடு'மென எழுந்திருக்கும் நடிகர் திலகம் 'யாரது?' என்று குரல் கொடுத்து அதே டேபிளின் மீது இருக்கும் பெட் ஸ்விட்ச்சைப் போட, அறையில் பாதியில் லைட் வெளிச்சம் பரவ, வாசு அறையை ஒட்டிய சுவற்றில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு மறைந்து நிற்க, நடிகர் திலகம் கைநீட்டி தடவியபடி, கண் தெரியாமல் வந்த நபரைத் தேட முயற்சித்து வாசு அருகே வர, நடிகர் திலகத்திற்கு தான் தெரிவதாக நினைத்துக் கொண்டிருக்கும் வாசு 'மாட்டினோம்' என்று முடிவெடுத்து அப்படியே பயந்து கீழே அமர்ந்து கொள்ள, இந்த சண்டைக்காட்சிக்கான ஆரம்பக் காட்சி படுபயங்கரமாக சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். அனைவரையும் நிமிர்ந்து உட்காரவும் செய்துவிடும்.

சுவற்றைத் தடவியபடியே வாசல் கதவின் பக்கம் வரும் நடிகர் திலகம் கதவு சாத்தியிருப்பதை உணர்வால் கண்டுபிடித்து சிறு திருப்தியை முகத்தில் காட்டுவார். அச்சு அசலாக கண் தெரியாதவர்கள் போலவே அவரது ஒவ்வொரு செய்கையும், பார்வையும், முகபாவங்களும் முத்திரைகள் படைத்தபடி இருக்கும்.

கீழே உட்கார்ந்து 'ஏன் லைட் போட்டும் இவன் நம்மை பிடிக்கவில்லை? என்று ஆழ்ந்து யோசிக்கும் வாசு திரும்ப கட்டிலுக்குச் சென்று படுக்கும் நடிகர் திலகத்தை வாட்ச் செய்வார். நடிகர் திலகமோ மிகவும் உஷார் நிலையில் கண்களை தீர்க்கமாக விழித்தபடி படுத்திருப்பார். (படுக்கும்போது கூட கட்டிலில் எவ்வளவு அழகாகப் படுப்பார் தெரியுமா? கட்டிலில் அமர்ந்து தலையணையை செக் செய்து பார்த்துவிட்டு, முதலில் வலது காலை மெத்தையின் மேல் வைத்து நீட்டி, பின் மிக அழகாக இடது காலையும் சேர்த்து வைத்து, அப்படியே வலது பக்கமாக ஒருக்களித்து வலது கையை தலையில் தாங்கியபடி படுப்பார். அவ்வளவு அழகாக இருக்கும். இந்த மனுஷர் எது செஞ்சாலும் அது ஒரு தனி அழகுதான்)

இப்போது வெறும் நிசப்தம். மியூஸிக் இருக்காது. வாசு நடிகர் திலகம் அருகே நடந்து வந்து தலைமாட்டின் அருகே நிற்பார். 'ஷூ' வின் சப்தம் மட்டுமே கேட்கும். நடிகர் திலகம் விழித்தபடி அந்த சப்தத்தை உன்னிப்பாக கவனிப்பார். வாசு விழித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் முகத்தருகே தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள தனது கையை அப்படி இப்படி ஆட்டுவார். ஆனால் நடிகர் திலகத்திடம் எந்த எக்ஸ்பிரஷனும் இருக்காது. (ஆனால் எக்ஸ்பிரஷன் இல்லாத கண் தெரியாத எக்ஸ்பிரஷன் சும்மா அமர்க்களப்படுத்தும்). வாசு அதை வைத்து நடிகர் திலகத்திற்கு கண் தெரியாததை முழுமையாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்வார். எனவே பயம் போய் தைரியமாக நடிகர் திலகத்தின் தலையணையின் அடியில் கைவைத்து வாசு பர்ஸை எடுக்க முயற்சிக்க, உணர்வில் அதை அதை புரிந்து கொள்ளும் நடிகர் திலகம் 'சட்'டென வாசுவின் இரு கைகளையும் பிடித்துவிடுவார். படுத்தபடியே பிடியை விடாமல் நடிகர் திலகம் வாசுவுடன் போராடுவார். வாசு தன் கழுத்தை நெறிக்க முயற்சிக்கையில் தடுமாறும் நடிகர் திலகம் திடுமென்று தனது கால்களை மடக்கி வாசுவின் கழுத்தில் கால்களால் பிடி போட்டு விடுவார். பிடித்தபடியே அப்படியே வாசுவைப் புரட்டி தன் முன்னுக்கு கொண்டு வந்து விடுவார். இப்போது நடிகர் திலகம் வாசுவுக்கு முன்னால் அமர்ந்த நிலையில். உட்கார்ந்தபடியே நடிகர் திலகம் வாசுவை கால்களால் கிடுக்கிப்பிடி போட்டு மடியில் வைத்து வாசுவின் நெஞ்சை கைகளால் (கண் தெரியாத ஒருவன் தன்னிடம் மாட்டிய ஒருவனை தோராயமாக சரியாகத் தெரியாத நிலையில் எப்படி ஒரு குத்துமதிப்பாகக் குத்துவானோ அப்படியே நடிகர் திலகம் வாசுவைக் கைகளால் குத்துவார். பார்வையையும் எங்கேயோ மேல்நோக்கிய நிலையில் வைத்தது குத்துவார்...வாவ்!) நெஞ்சுக் குத்தில் நிலைதடுமாறும் வாசு நடிகர் திலகத்தின் கால்களை கஷ்டப்பட்டு விலக்கி நடிகர் திலகத்தை கட்டிலிலிருந்து உருட்டிவிட்டு விடுவார்.

நடிகர் திலகம் வாசுவின் கைகளை பிடித்தவுடன் 'மெல்லிசை மன்ன'ரின் அற்புதமான பின்னணி இசை பிரித்து மேய ஆரம்பிக்கும். இதை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். சும்மா அந்த திகில் பின்னணி சண்டைக் காட்சிக்கேற்ப 'பரபர'வென 'மெல்லிசை மன்னர்' பிரமாத ரீரிக்கார்டிங் தர, (பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல் அபாரம்) இக்காட்சியைப் பார்ப்பவர் அனைவரையும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

கீழே உருண்டு விழும் நடிகர் திலகம் அருகிலிருக்கும் ஈஸிசேர் போனற சோபாவை பிடித்து எழுந்து, 'பரபர'வென பதறியபடி சுவற்றைக் கண்டுபிடித்து, அப்படியே கதவின் பக்கம் வந்து ரூம் வாசலை மறைத்தபடி நின்றுவிடுவார்.

'என்கிட்டே இருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காதே.. யார் நீ?'

இப்போதுதான் வசனம் (தூயவன்) கேட்கும். அதுவரை திகில் நிசப்தமும், மிரட்டும் மியூஸிக்கும் மாறி மாறி இக்காட்சிக்கு வலு சேர்க்கும்.

இடமிருந்து வலமாக சடுதியில் இடுப்பை மாற்றிப் போடும் அற்புத காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_003033028.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_003033028.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_003029544.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_003029544.jpg.html)

வாசு வியப்புடன் நடிகர் திலகத்தை பார்ப்பார். கீழே கிடைக்கும் பர்ஸை, சிதறிக் கிடைக்கும் பணத்தை எடுப்பதுடன் வாசு அங்கே கிடைக்கும் சில்லறை நாணயத்தைக் கூடவா மனிதர் எடுத்து வைப்பார்! வாசுவும் சூப்பராக பண்ணியிருப்பார். இப்போது இசையே இல்லாமல் மீண்டும் மயான அமைதி. ஷூ சப்தத்துடன் வாசு நடந்து வந்து அங்கே இருக்கும் டீப்பாயின் மீது தெரியாமல் மோதிவிட, மிக கவனமாக அதை நடிகர் திலகம் தனது அறிவால் உள்வாங்கி 'சட்'டென்று அந்த ஈஸிசேரை பிடித்து வாசுவின் மேல் தூக்கி அடிக்க, வாசு நிலைதடுமாறிக் கீழே விழ, நடிகர் திலகமும் அந்த ஈஸிசேரிலேயே உருண்டு எதிர்த்திசையில் கீழே விழுவார். அற்புதமான காட்சி இது. கைகளைத் தரையில் ஊன்றியபடி கீழே விழும் நடிகர் திலகம் அப்படியே இடுப்பை ஒரு செகண்டில் இடமிருந்து வலமாக மாற்றி பிரட்டிப் போடுவார் பாருங்கள். அடடா! ஒரு வினாடிக் காட்சிதான் அய்யா அது! சும்மா பிச்சி உதறி விடும் இல்லையோ! (மேலே உள்ள இரண்டு படங்களையும் பாருங்கள்) அதியற்புதமான இருக்கும்.

ஷூ ஓசை கேட்டு கைகால்கள் பதறும். அப்படியே பாய்ந்து வாசுவின் கால்களை ஷூவுடன் இறுக்கமாக பிடித்துவிடுவார். இருவரும் படுத்து புரண்டபடி போராட, வாசு நடிகர் திலகத்திடம் இருந்து நழுவி கதவைத் திறந்து வெளியே செல்ல எத்தனிக்க, நடிகர் திலகம் வாசுவை போக விடாமல் கட்டிப் பிடித்தபடி கழுத்தை இறுக்கி ஜன்னலருகே கொண்டு செல்ல, ஜன்னலில் தொங்கும் திரைச்சீலை நழுவி வாசுவின் தலையில் விழுந்து வாசுவின் பார்வையை மறைக்க, இப்போது இருவருக்குமே கண்தெரியாத சூழலில் அற்புதமான சண்டைக் காட்சி அமைப்பு.

போராட்டம்... போராட்டம். இருவருக்கும் அப்படி ஒரு போராட்டம். இருவரும் இடைவிடாமல் போராட, முகத்தில் துணியுடன் தத்தளிக்கும் வாசு நடிகர் திலகத்தை மூர்க்கத்தனமாகப் பிடித்து தள்ளிவிட, நடிகர் திலகம் 'விறுவிறு'வென தவழ்ந்து, ஈஸிசேரை கண்டு பிடித்து, அதைத் தடவி எழுந்து, அதன் மூலம் கதவிருக்கும் இடத்தை மனத்தால் உணர்ந்து, 'டக்'கென்று வாசலை அடைத்தவாறு நின்றுவிடுவார். கதவு திறந்த நிலையில் இருக்கும். வாசு நடந்து வாசல் பக்கம் வர, ஷூ சப்தத்தை நடிகர் திலகம் உன்னிப்பாகக் கேட்பதை வாசு பார்த்து உஷாராகி விடுவார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_003135989.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_003135989.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1.VOB_003143906.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1.VOB_003143906.jpg.html)

இப்போது செம காமெடி ஷூவை வைத்துதானே இவன் கண்டு பிடிக்கிறான் என்று வாசு ஷூக்களைக் கழற்றி லேஸால் இணைத்து முடி போட்டு, அப்படியே கழுத்தில் தொங்கவிட்டு, குழந்தை போல முட்டி போட்டு மெதுவாக தவழ்ந்து நடிகர் திலகத்தை நோக்கி நகர ஆரம்பிப்பார். (நிஜமாகவே வாசு இந்தக் காட்சியில் அனைவரையும் அவ்வளவு சீரியஸ் காட்சியிலும் சிரிக்க வைத்து விடுவார்) கால்களை அகலவைத்து வாசலில் நிலைக்கால்களை மேல்நோக்கிப் பிடித்தபடி வழி மறித்து நிற்கும் நடிகர் திலகம் வந்த திருடன் தப்பி விடக்கூடாது என்பதற்காக வலதுகையை அப்படியும் இப்படியுமாக அசைத்து அவனைத் தப்பவிடாதவாறு தேடியபடி இருப்பார். கழுத்தில் ஷூவுடன் நடிகர் திலகத்தின் கால்களின் இடைவெளியில் தவழ்ந்து புகுந்து தப்பிக்க வாசு முயல, அதில் பாதிக் கிணறும் தாண்டிவிட, பின் உடல் நுழையும்போது நடிகர் திலகத்தின் கால்களில் வசமாகப்பட்டுவிட, நடிகர் திலகம் வாட்டமாக வாசுவைப் பிடித்து வாசுவின் பின்புறங்களில் பதம் பார்க்க, எப்படியோ நடிகர் திலகத்தைத் தள்ளிவிட்டு வாசு தப்பித்தோம்...பிழைத்தோம் என்று ஓடிவிட....

ஒரு அற்புதமான, அறிவார்த்தமான, நடிப்போடு கூடிய, நகைச்சுவையும் கலந்த, நம்பத்தகுந்த தூள் சண்டைக் காட்சி. முக்தாவின் படங்களில் பொதுவாக வியாபார ரீதிக்காக சண்டைக்காட்சிகள் ஒன்றிரெண்டு இடம் பெறும். ஆனால் 'தவப்புதல்வனி'ன் இந்த சண்டைக்காட்சி அமர்க்களம். உலகப்பெரு நடிகரும், உன்னத இசையமைப்பாளரும், சண்டைப் பயிற்சியாளர் மாதவனும் (மாதவனின் விறுவிறுப்பான சண்டைப் பயிற்சிக்கும், முக்தாவின் கற்பனைக்கும் ஒரு சலாம்) இந்த சண்டைக் காட்சியில் ஜொலிக்கிறார்கள். வில்லனும் சூப்பர். சண்டைக் காட்சியிலேயே தன்னுடைய கண் தெரியாத, உன்னத நடிப்பை சண்டை போட்டு சமாளித்தபடி வாரி வழங்கும் உத்தமரின் திறமையை எப்படிப் பாராட்ட!

சிறுவயதிலேயே என் ஆழ் மனதில் மனதில் பதிந்து புதைந்துவிட்ட அற்புதமான இந்த சண்டைக்காட்சியை நீங்கள் மட்டுமென்ன ரசிக்காமலா இருந்திருப்பீர்கள்? இப்போது மீண்டும் பார்த்து அனுபவியுங்கள்.

(http://anonymouse.org/ வழியே பதிவுகள் இடுவதால் youtube விடியோக்கள் இட முடியவில்லை. எனவே இன்று நான் அப்-லோட் செய்த 'தவப்புதல்வன்' பட சண்டைக்காட்சியின் வீடியோ லிங்க் கீழே)

https://youtu.be/GVSdB6D9t9o

Harrietlgy
27th November 2016, 05:29 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 153 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/50642426214799802671807883107navarathri%20sivaji.j pg

‘தங்கப்பதக்கம்’ படம் வெளியாகி மகத்தான வெற்றியைக் கண்டது. தெலுங்கில் என்.டி.ராமராவ் ‘தங்கப்பதக்க’த்தை எடுத்து அவரே எஸ்.பி. சவுத்ரி வேடத்தில் நடித்தார். அதுவும் மிகப்பெரிய ஹிட். கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார் ‘தங்கப்பதக்கம்’ எடுத்தார். அதுவும் மிகப்பெரிய வெற்றி. கன்னடம், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ‘தங்கப்பதக்கம்’ இந்தியில் ‘ஷக்தி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது.
எஸ்.பி. சவுத்ரி கேரக்டரில் திலீப்குமாரும், மகன் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடித்தார்கள். இந்தியிலும் படம் பெரும் வெற்றியை அடைந்தது. இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதிய மகேந்திரன்தான் பின்னர் பிரபல இயக்குநர் ஆனார். மகேந்திரன் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவர். பிறகுதான் சிவாஜி படங்களுக்குள் வந்தார். இவர்தான் சிவாஜி நடித்து முக்தா பிலிம்ஸ் தயாரித்த ‘நிறைகுடம்’ படத்திற்கும் கதை எழுதினார்.
படத்திற்கு திரைக்கதை, வசனத்தை சோ எழுதினார். மகேந்திரனுக்கு சிவாஜி மீது அளவு கடந்த ரசிப்பு உண்டு. அவர் தன்னுடைய புத்தகத்தில் `இயற்கை அதிசயங்களில் சிவாஜியும் ஒருவர்!’ என குறிப்பிட்டிருக்கிறார். நம்மை நினைத்து தூண்டுபவர் சிவாஜி. தமிழ் சினிமாவின் நிரந்தரப் பெருமை அந்த மகா கலைஞன்! உலக சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பலர் மூன்று, நான்கு வேறுபட்ட கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று மிகச் சிறப்பாக நடிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
நடிகர் திலகத்தை பொறுத்தவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என்பதே வியப்பானது. கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டும் பெரிய காரியமல்ல.. அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் அமானுஷ்ய திறமை படைத்தவர் அந்த மேதை. சமூகப் படங்களா.. சரித்திர படங்களா.. புராண இதிகாச படங்களா...... அவர் எதைத்தான் விட்டு வைத்தார்? சத்ரபதி சிவாஜியை மாணவர்கள் கண்முன்னே கொண்டு வந்தவர். ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னை நமக்கு அறிமுகப்படுத்தியவர். சிவபெருமான் இப்படித்தான் பேசியிருப்பார், நடந்திருப்பார், சிரித்திருப்பார் என்று நமக்குக் காட்டியவர். ‘தில்லானா மோகனாம்பா’ளில் நாதஸ்வர கலைஞனாக.. ‘மிருதங்க சக்ரவர்த்தி’யில் மிருதங்க வித்வானாக.. ‘கப்பலோட்டிய தமிழ’னில் வ.உ. சிதம்பரம் பிள்ளையாக.. ‘கைகொடுத்த தெய்வம்’ படத்தில் பாரதியாராக.. கர்ணனாக.. ‘திருவருட் செல்வ’ரில் அப்பராக.. புகழ்பெற்ற பிராமண வழக்கறிஞராக.. திருடனாக… வயதான தாத்தாவாக… கம்பீரமான போலீஸ் அதிகாரியாக.. உடல் ஊனமுற்றவராக… அப்பாவியாக…. மாமேதையாக அவரைப் போல நடிக்க வேறு எவராலும் முடியுமா? முடியாது, முடியாது, முடியவே முடியாது. ‘நவராத்திரி’யில் அவர் ஏற்று நடித்த ஒன்பது வேடங்களைப் போலவோ.. ‘தெய்வ மகனி’ல் அவர் நடித்த அப்பா, மகன்கள் கதாபாத்திரம் போலவோ.. ‘சபாஷ் மீனா’விலும், ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’யிலும் அவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் போலவோ.. ‘திரும்பிப் பார்’, ‘அந்த நாள்’, ‘ரங்கூன் ராதா’, போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த வில்லத்தனம் கொண்ட அற்புத கதாபாத்திரங்களைப் போலவோ நடிப்பதற்கு வேறு எவரால் முடியும்?
‘நவராத்திரி’ படத்தின் இறுதிக் காட்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் காதலியிடம் பேசாமலேயே அவர் நடித்துக் காட்டிய அற்புதத்தை எளிதில் மறக்க முடியுமா?
`அவர் சிவபெருமானாக நடித்ததைப் பார்த்த பிறகே எனக்கு கடவுள் நம்பிக்கை வந்தது’ என்று என்னிடம் சொன்னவர்கள் உண்டு. தமிழ் சினிமா, உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றைக்கும் பெருமைப்பட வேண்டும்.
நமது அதிர்ஷ்டம்… அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்பது! அவருடன் நடித்தவர்களும், அவருடன் பேசிப் பழகிய அத்தனை பேருமே ‘நான் வள்ளுவன் காலத்தில் வாழ்ந்தவன்!’ என்று சொல்லும் அளவுக்கு பேறு பெற்றவர்கள். என் போன்றவனுக்குத்தான் எத்தனை பாக்கியம்!
அந்த நடிப்புலக மாமேதை நான் எழுதிய வசனத்தைப் பேசினார் என்று அப்பாவை யானையாக நினைத்து சவாரி செய்து குதூகலிக்கும் குழந்தையைப் போல, சந்தோஷமாக ஆர்ப்பரிக்கிறேன்.
நான் உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு அவர் உயிரும் உருவமும் கொடுத்து வாழ்ந்து காட்டியதை, என் சந்ததியினால் மறக்க முடியாது. அப்பேர்ப்பட்ட நடிப்புலக சக்ரவர்த்தியுடன்தான் எனக்கு எத்தனை விதமான அற்புதத் தருணங்கள்! நினைக்க நினைக்க பரவசமாக இருக்கிறது!
அவர் ‘பராசக்தி’ படத்தில் பேசிய அழகைப் பார்த்துவிட்டு பள்ளி நாட்களில் அவருக்காகவே அந்த வசன புத்தகத்தை வாங்கி உருப்போட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன். அப்பேர்ப்பட்ட பிறவிக் கலைஞன், எப்பேர்ப்பட்ட தொழில் பக்தி கொண்டவர் தெரியுமா? காலையில் ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால், 6.40க்கே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். மதிய சாப்பாடு இடைவேளை வரை செட்டை விட்டு வெளியே வரமாட்டார். மாலையில் நாடகம் என்றால், மதியம் ஒரு மணிக்கே நாடகமேடைக்கு வந்து தங்கிவிடுவார். காரணம்? நடிக்கப்போகும் நாடகத்துக்கு போடப்பட்டிருக்கும் அவருடைய வீடு அல்லது அரண்மனையே தான் வாழும் இடம் என்ற உணர்வை தனக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளத்தான்.
நாடகம் தொடங்கி முடியும் வரை தன் பெயர் சிவாஜி கணேசன் என்பதையே மறந்து நாடகத்தின் ‘கட்டபொம்ம’னாகவோ, எஸ்.பி. சவுத்ரியாகவோ கூடுவிட்டு கூடு பாய்ந்துவிடுவார்.
`அவருக்கு சராசரி உயரம்தான். ஆனால், மேடையிலும், சினிமாவிலும் அவரைப் பார்க்கும்போது உயரம் அதிகமாகத் தெரிவார். அது எப்படி?’ என்று சிவாஜி நாடக மன்ற இயக்குநர் எஸ்.ஏ. கண்ணனிடம் ஒரு நாள் கேட்டேன்.
அதற்கு அவர், “சின்ன வயதிலிருந்து நானும் அவருடன் நாடகங்களில் நடிக்கிறேன். ஆனால் இவர் எப்படி இவ்வளவு உயரமாகத் தெரிகிறார் என்பது எனக்கே புரியாத புதிர்தான்” என்றார்.
ஒரு சமயம் நான் திரைக்கதை எழுதிய படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில், அவரிடமே இந்த சந்தேகத்தைக் கேட்டேன்.
அந்த மாபெரும் கலைஞன் சொன்னார், `இங்கே பாரு… நான் கால்களில் உயரமான ஹீல்ஸ் போடுவது கிடையாது. அதே போல, காலின் முன்பாதத்தை அழுத்திக் குதிகால் உயர்த்துவதும் கிடையாது. எனக்குத் தரப்படும் கதாபாத்திரத்தின் கவுரவத்தை, பெருமையை, மேன்மையை என் மனம் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். அதே நினைப்புடன் நடிக்கும்போது, என் பேச்சு, பார்வை, கையசைவு, நடை, இந்த உடல்மொழி எல்லாமே அந்த கதாபாத்திரத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு `எவ்வளவு உயர்ந்த மனிதன்’ என்ற கண்ணோட்டத்தில் என்னைப் பார்க்கிறார்கள். மேலும் தொடர்ந்து….
(தொடரும்)

adiram
27th November 2016, 05:30 PM
அன்பு கோபால் சார்,

அருமையாக தொகுத்து தந்த மூன்று முத்தான காதல் காட்சிகள். மூன்றிலுமே நாயகன் நாயகிக்கு பாடல் கிடையாது (ஒன்றில் மட்டும் பின்னணியில் ஒலிக்கும்) ஓடிபிடித்தல் கிடையாது. ஆனாலும் நம்மை காட்சியுடன் ஒன்ற வைத்து விடக்கூடிய அந்த அதியற்புத காதலை உங்கள் வர்ணனையில் படிக்கும் சுகமே தனி. படித்தவுடன் அவற்றை காட்சியாக காணும் பரவசமே தனி.

அருமையான விவரணை, பாராட்டுக்கள்

adiram
27th November 2016, 05:52 PM
அன்பு ஆதவன் ரவி சார்,

'வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில்' பாடலை ரசித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள். படிக்க படிக்க இன்பமாக இருக்கிறது. எத்தகைய ரசிப்பு தன்மை தங்களுள் புதைந்து கிடக்கிறது என்பதற்கு உங்கள் எழுத்துக்களே சாட்சி.

நாற்காலியின் ஆதங்கம் பற்றிய உங்கள் கற்பனை பலே...

டெல்லி மாநிலங்களவை நாற்காலி குதூகலித்தது "அந்த கலை மேதையை சுமக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது"

தமிழக சட்டமன்ற நாற்காலி சாபமிட்டது "அந்த பாக்கியம் எனக்கு கிடைக்காமல் செய்த திருவையாறு வாக்காளர்கள் ஒழிக".

adiram
27th November 2016, 06:26 PM
அன்பு வாசுதேவன் சார்,

ஸ்டெப் - பை - ஸ்டெப் ஆக சண்டை போடுபவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அதை ஸ்டெப் - பை - ஸ்டெப் ஆக எழுத்துக்களில் கொண்டு வர உங்களை விட்டால் வேறு யார்?.

எல்லா சண்டைக் காட்சிகளையும் ஒரே மாதிரி செய்துவிட்டு போகிறவர்கள் மத்தியில், கொஞ்சம் பிசகினாலும் கேலியாகி விடக்கூடிய கடினமான சண்டையை, ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு கொஞ்சமும் ஊறு வந்து விடாமல் மிக கவனமாக செய்ய நம்மவரை விட்டால் வேறு யார்?.

நாயகன் நம்மவர் என்பதால் அவரை மட்டுமே பாராட்டாமல் உடன் சண்டையிடும் வில்லனையும், சண்டை பயிற்சியாளரையும், பின்னணி இசை தந்தவரையும் இயக்குனரையும் சேர்த்து பாராட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்களை விட்டால் வேறு யார்?.

Gopal.s
28th November 2016, 07:50 AM
ஆதவன் ரவி,

உங்களுடையது வெள்ளி கிண்ணமல்ல." தங்க "கிண்ணம். மனதில் தங்க.

அருமையான பாடலுக்கு ,அருமையான ஜோடிக்கு, அருமையான பதிவு.

வாசு,

தவப்புதல்வன் படம் முக்தா படங்களிலேயே சுவாரஸ்யமானது. (கே.ஆர்.விஜயா தவிர)அதுவும் இந்த காட்சியும் ,இதன் பின்னணி போராட்டமும். துவந்த யுத்தமல்ல இதுவென்ற போதிலும் ,அதை விட சுவாரஸ்யமானது.உனது உழைப்பை விட ,அதிக நேரம் பதிவை பார்த்து, காட்சி பார்த்து நேரம் செலவழித்தேன்.

RAGHAVENDRA
28th November 2016, 07:55 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15232214_1270278459689490_4293722679642356008_n.jp g?oh=a6d924efd39cd772450332be266a9d9f&oe=58BC391F

Gopal.s
28th November 2016, 09:45 AM
அக நானூறு என்பது தமிழில் அக நாநூற்றொன்று என்று மாறிய அதிசயம் இதே மாதம் 15 ,53 வருடங்கள் முன் (15.11.1963)நிகழ்ந்தேறியது.மகளிருக்கு காமத்தை வெளியிடும் சுதந்திரம்,உடன் போக்கு என்று இன்று பேசும் பெண் உரிமைகளை சங்க காலத்திலேயே வழங்கிய தமிழ் சமூகமாயிற்றே?

ஒரு பெண்ணே தன்னுடைய விழைவை நாணம் துறந்து வெளியிட்டு ,நாணத்தை அழைப்பின் தூண்டிலாய் மாற்றிய அதிசயம் கண்டோம்.
61 முதல் 65 வரை காதல் ரசாயனத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த ஜோடியின் புணர்ச்சி விழைவு உணர்ச்சி பண் என்றால் நாங்கள் மெய் மட்டுமா மறப்போம்?அப்போது தமிழின் செயற்கை பெருந்திணை காதல் பொய்களையும் சேர்த்தே மறந்து துறந்தோம்.

மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்க (???)விரும்பும் ஏந்திழையாளின் அழைக்கும் விழிகள் தூக்கத்தின் உண்மை அர்த்தத்தை கூறி விடாதா? மறுநாள் எழும் விருப்பம் காலையல்ல?சேவல் குரலுக்கு தடை பின் மறுநாளும் ,மருகி நாட்களாகி விடுமே?இன்பத்தின் கதையை முடிக்காமல்,சேர்ந்தவர் உயிரும் பிரியாமல் இருக்க நாயகி முதல் மாதிரியாக தருவது தன்னுடைய விரல்களை அவன் இதழுக்கு காணிக்கையாக.அவன் அதை மென்மையான முத்தத்தால் அங்கீகரித்தாலும் ,அவனுக்கு புரியாதா அசல்கள் ,முன் இந்த மாதிரி எம்மாத்திரம் என்று?

விழிகள் கலக்கும் போது ,காதலன் கண்கள் காதலை வெளியிட,காதலியோ பொய் நாணத்தால் அதை மேலே இழுக்கும் முயல்வை காட்டுவார்.சிறிதே விலகி ஓடும் காதலி ,அவனால் இழுபட்டு இணைவின் சுகத்தின் எதிர்பார்ப்பை காட்டும் அதிசயம் நாயகியின் பாவத்தால்,கண்களால்,உடல்மொழியால் நமக்கே விளக்கி விடுமே? இரண்டற ஓருயிராக கலக்க விரும்பும் நாயகனுக்கா விளங்காது? இந்த ஓட்டம் இன்ப ஓட்டம் ஆயிற்றே?காமம் என்ற புத்தகத்தின் பக்கங்களை விட முன்னுரை பக்கங்கள் அதிகம் வேண்டும் என காம சாத்திரங்கள் உரைக்கிறதே?
முன்னுரைத்து காதலால் காமம் தூண்டி உயிரை இணைத்து காண வேண்டிய உன்னத விளையாட்டாயிற்றே?

இரவே இரவே விடியாதே ,இன்பத்தின் கதையை முடிக்காதே,சேவல் குரலே கூவாதே ,சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே என்று நாயகி அபிநயத்தால் ஆணையிடும் அழகில் இரவும்,சேவலும் கேட்டு விட்டால் நம் கதி?ஆனால் அந்த அழகுக்கு இரண்டும் இசையும் வாய்ப்பு அதிகமே.

இரண்டு உள்ளங்களும் வதை படும் உருண்டு விளையாடும்,நாயகரும் ஓடியே தொடர்வார்?பின் பேரின்பம் என்பது சும்மாவா கிடைக்கும்? உன்மத்தமான துரத்தல் விளையாடல். (இன்பத்தை துறக்காமல் துய்த்து கொண்டேயிருக்க)

வாயின் சிவப்பு விழியிலே,மலர்கண் வெளுப்பு இதழிலே என்பதற்கு இந்த நாயகி வண்ணங்களின் துணையின்றியே விளக்கமளித்து ,உள்ளத்தில் வண்ணம் கூட்டும் அதிசயத்தை காட்சியாக பாருங்கள்.

கடைசி இதமான அணைப்பில் காதலும் காமமும் இணையும் பாலத்தை கடந்து செல்லும் அழகு.(erotic )

காலடி தடங்கள் மட்டுமா அடையாளம் அழிந்து கலக்கின்றன ?செம்புல பெயனீர் போல அன்புடை உடல்களும் தான் கடந்தனவே? கலந்தனவே???நினைப்பின் தடத்தை விட்டு செல்லும் நம் மனதில் , அகழியில் வீசிய கல் அலைவுகளை விட்டு செல்வது போல.இவ்வளவும் நடப்பது அன்னை இல்லத்திலேயே.

சில பாடல்கள் மட்டுமே காட்சியுடன் ஒன்றி ,திரை காதலர்கள் உண்மையில் வாழ்வில் இணைகிறார்கள் என்ற பிரமையை ஏற்படுத்தும். அந்த மாதிரி கே.வீ..எம்மின் இரவின் இன்பத்தை கூட்டும் இசையில், கண்ணதாசனின் காம மையில் தோய்த்த எழுத்தில்,சிவாஜியும்-தேவிகாவும் அரங்கேற்றும் கூடல் நாடகம், காட்சி வடிவில்.

https://www.youtube.com/watch?v=w_R5KhMJlzs

Gopal.s
28th November 2016, 11:15 AM
அந்த அடுத்த அறை ஜோடியின் சம்பாஷணையில் ஒலிக்கும் ஆண் குரலும் எஸ்.பி.பாலாவினுடையதைப் போல் தான் தோன்றுகிறது.

இரு அறையிலும் ஒரே நிகழ்வு என்பதால் ஒருவரே பின்னணி கொடுத்து விட்டார் போலும்? :)

RAGHAVENDRA
28th November 2016, 10:07 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15135881_1270937016290301_369843533457751307_n.jpg ?oh=114fe5153f089d104032ed3df327f898&oe=58BB531C

Russellxor
28th November 2016, 10:32 PM
Image courtesy :what's up
http://uploads.tapatalk-cdn.com/20161128/0f676164de856f6758b4274f58549032.jpg

Russellxor
28th November 2016, 10:33 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/66195937338b89bbec48be0a95c1182d.jpg

Russellxor
28th November 2016, 10:34 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/5218e425f9a0a154ca9995d7cf064a3f.jpg

Russellxor
28th November 2016, 10:34 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/ef295c449332204c79c3cb5e9380a764.jpg

Russellxor
28th November 2016, 10:35 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/93bcc885ae54eb4974ed846525fa80b3.jpg

Russellxor
28th November 2016, 10:35 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/457b0f2d48b6faab3ccdf87cc615ffa0.jpg

Russellxor
28th November 2016, 10:36 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/20fced3b11ee6c006cbc0fd80b824e29.jpg

Russellxor
28th November 2016, 10:37 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/1bd4aceb01207977229e185ad26b76e9.jpg.y

Russellxor
28th November 2016, 10:38 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/bc27e3215a7db43c500d32284ced3b6f.jpg

Russellxor
28th November 2016, 10:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20161128/ba37061cf4acba2675683252fdaa016c.jpg

Thanks to Mr.Ramesh

RAGHAVENDRA
29th November 2016, 06:49 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15203109_1271460152904654_2776316066803114644_n.jp g?oh=db18de440ff68d682c53f14bd57db5dd&oe=58CFB3BF

RAGHAVENDRA
29th November 2016, 06:50 AM
செந்தில்வேல்,
அபூர்வமான விளம்பர நிழற்படங்கள், குறிப்பாக தெலுங்கு விளம்பரங்கள், மிகவும் அரியவை. பகிர்ந்து கொண்டதற்கு உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
29th November 2016, 06:50 AM
பரணி,
தங்களின் பங்களிப்பின் மூலமாக செல்லுலாய்டு சோழன் தொடரைப் படித்து வருகிறோம். தங்களுக்கு உளமார்ந்த நன்றி.

Gopal.s
29th November 2016, 11:37 AM
ராகவேந்தர்,

தாங்கள் பொன்னூஞ்சல் கூத்து காட்சியில் சோவின் அலப்பறைகளை ரசித்து சொன்ன ஞாபகம்.

Gopal.s
29th November 2016, 08:19 PM
எனக்கு எப்போதுமே குறை உண்டு. இந்தியாவிலேயே சிறந்த அழகியான வைஜயந்தி மாலாவும், இந்தியாவிலேயே ஆண்மையான முக வசீகரம் ,நடை,,உடை பாவனை மற்றும் குரல் கொண்ட நடிகர்திலகமும் இன்னமும் கூடுதல் படங்களில் நடித்திருக்கலாம் என்ற பேராசை உண்டு.வைஜயந்தி ஓரளவு நடிப்பு திறனும் கொண்டவர். நடிகர்திலகத்திற்கு சில படங்களில் அனுசரணையாக ஈடு கொடுத்திருப்பார். உதாரணம்- அம்பிகாபதி ,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள் ,சிவந்தமண் ,தர்மம் எங்கே போன்ற படங்கள்.

அவர்கள் சேர்ந்து நடித்த மூன்றில் (இரும்பு திரை,ராஜபக்தி,சித்தூர் ராணி பத்மினி ) கடைசி இரண்டு சொதப்பல். ஆனால் இரும்பு திரை அனைத்தையும் ஈடு கட்டி விடும்.

மாணிக்கமும் ,ஜெயந்தியும் அறிமுகம் ஆவது ஒரு அவசர சந்தர்ப்பத்திலேயே. அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று ரிக்ஷா தேடும் போது மாணிக்கம் உதவ,,கடைசியில் டாக்டர் பணத்தையும் மாணிக்கமே கொடுக்க நேர, அவனை பற்றி ஒரு தொழில் கல்வி பகுதி நேரத்தில் படிக்கும் மாணவன் என்றறிந்து ஆச்சரியமுறுவாள்.பிறகு அண்ணன் வேலை பார்க்கும் இடத்திற்கு போகும் மாணிக்கம் ஒரு பெரிய இயந்திர கோளாறை தன் திறமையால் சவால் விட்டு சரி பண்ணும் இடத்தில் ,ஜெயந்தி தோழி தயவால் வேலைக்கு சேர்ந்திருப்பாள் .

அவன் ஒரு குட்டையில் கல் வீசி பொழுது போக்கும் மாலையில் ,ஜெயந்தி பணம் கொடுக்கும் சாக்கில் வர,அவளும் எதிரமர, இருவரும் கண்ணினை கண்ணோக்கி, நோக்காக்கால் எதிர்நோக்கி , வண்டுகள்,பட்சிகளின் சப்தத்தில் கூப்பிட்டீங்களா என்று வினவ,அவள் நாணத்துடன் இல்லையே என்று ,சிறிதே தயக்கம் களைந்து ,அவன் பல்முனை திறமையை வியக்க, அப்போ பகல் வேஷக்காரன்கிறீங்க என்று கலாய்க்க, அங்கு குழலூதி வரும் இடையனிடம் ,குழலை வாங்கி ஊத முயல்வது போல பாவிக்க, அவள் அது கண்டு அவன் தெரியாததை முயல்கிறான் என நகைக்க, இதற்காகவே காத்திருந்த நாயகன் தன்னுடைய அண்ணன் ,மதுர கானத்தால் அவளை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்வான். முடிந்ததும் பண்புடன் இடையனிடம் குழலை கொடுக்கும் போது ,சிறிது பணத்தையும் அளிக்கும் கண்ணியம். ஜெயந்தி வலையில்லாமலே வீழ்ந்ததில் என்ன அதிசயம்?

அடுத்ததடுத்த சந்திப்புகளில் ,ஒரு சந்திப்பில் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என்று கேட்டு விட ,மாணிக்கத்தின் விரிப்பில், ஜெயந்தியின் ஆரம்ப ஆர்வம்,சிறிதே சுருதி பேதம் கண்டு, பொறாமையாய் விரிவதை வைஜயந்தியும்,அது புரிந்து விவரமாக கலாய்த்து ,இறுதியில் குழந்தை நாட்களின் விளையாட்டு என்று முடிக்கும் போது வைஜயந்தியின் ஆசுவாசம்.

ஒரு கட்டத்தில் முதலாளி மகளும் மாணிக்கம் மேல் விருப்பம் கொண்டு ,வேலை பார்க்கும் இடத்தில் தொணதொணக்க, அங்கு ஆழம் பார்க்க வரும் ஜெயந்தியிடம் மாணிக்கம் எரிந்து விழுந்து பின் சமாதானம் செய்து அழுத பிள்ளையை சிரிக்க வைக்கும் அழகு.

இரும்பு திரையின் கண்ணியமான ,மத்திய தர , ரசனையான காதல் இன்றளவும் பேச பட்டு சிலாகிக்க படுவது ஒன்று போதாதா கொத்தமங்கலம் சுப்பு-வாசன்-சிவாஜி-வைஜயந்தி கூட்டணியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைக்குமே ??

https://www.youtube.com/watch?v=5_lghtjmgzU

Russellxor
29th November 2016, 08:32 PM
http://uploads.tapatalk-cdn.com/20161129/1e003e9eb798d174e8595a7af3d2cae3.jpg

Russellxor
29th November 2016, 08:33 PM
http://uploads.tapatalk-cdn.com/20161129/2f2425f1a20de79b3faf2338e65fa94e.jpg

Russellxor
29th November 2016, 08:36 PM
http://uploads.tapatalk-cdn.com/20161129/43d918478db9740a291b106a243c708c.jpg

Russellxor
29th November 2016, 08:36 PM
http://uploads.tapatalk-cdn.com/20161129/4646b264f4a5d08ba87f029b52bbb38c.jpg

Russellxor
29th November 2016, 08:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20161129/7bd01e5479e34ae6ec27eb8afe777a08.jpg
Thanks to mr.Ramesh

RAGHAVENDRA
29th November 2016, 10:11 PM
எனக்கு எப்போதுமே குறை உண்டு. இந்தியாவிலேயே சிறந்த அழகியான வைஜயந்தி மாலாவும், இந்தியாவிலேயே ஆண்மையான முக வசீகரம் ,நடை,,உடை பாவனை மற்றும் குரல் கொண்ட நடிகர்திலகமும் இன்னமும் கூடுதல் படங்களில் நடித்திருக்கலாம் என்ற பேராசை உண்டு.வைஜயந்தி ஓரளவு நடிப்பு திறனும் கொண்டவர். நடிகர்திலகத்திற்கு சில படங்களில் அனுசரணையாக ஈடு கொடுத்திருப்பார். உதாரணம்- அம்பிகாபதி ,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள் ,சிவந்தமண் ,தர்மம் எங்கே போன்ற படங்கள்.

கோபால்,
மேலே உள்ள லிஸ்ட்டில்... அம்பிகாபதி, தில்லானா நிச்சயம் ஓ.கே. தான். ஆனால் சிவந்த மண், தர்மம் எங்கே படமெல்லாம் வைஜயந்திக்கு சற்றும் பொருந்தாதவை. சிவந்த மண்ணைப் பொறுத்த மட்டில் சில காட்சிகளுக்கு சரிப்பட்டு வருவார். குறிப்பாக ஒரு நாளிலே உறவாடவே பாடல் காட்சியில் வைஜயந்தி மிக பாந்தமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் படம் அவருக்கு ஏற்றதில்லை. புதிய பறவையிலும் அதே போலத் தான் அந்த ஊட்டியில் சிட்டுக்குருவி பாடலுக்கு முந்தைய காட்சி, மற்றும் கோபால் மனம் ஒடிந்து விரக்தியின் உச்சியில் இருக்கும் போது ஆறுதல் சொல்லும் காட்சி, இவற்றில் வைஜயந்தி மின்னலாம். தர்மம் எங்கே படத்தைப் பொறுத்த மட்டில் அந்த உடையில் வைஜயந்தி மிக அழகாக ஜொலிப்பார். ஆனால் அந்தப்பாத்திரமும் அவருக்கேற்றதல்ல. சித்தூர் ராணி பத்மினி, ராஜ பக்தி இரண்டிலுமே படம் சொதப்பலேயன்றி ந.தி. வைஜயந்தி இருவரின் காதல் காட்சிகள் உயிரோட்டமாகத் தான் இருக்கும்.

RAGHAVENDRA
29th November 2016, 10:32 PM
வைஜயந்தி எந்தெந்த படத்தில் நடித்திருக்கலாம் என்று நான் விரும்பிய படங்கள்....

1. அம்பிகாபதி
2. தில்லானா மோகனாம்பாள்
3. பாட்டும் பரதமும்
4. குலமகள் ராதை (சரோஜா தேவி )
5. மகாகவி காளிதாஸ் சௌகார்
6. ஹரிச்சந்திரா - ஜி.வரலக்ஷ்மி
7. சாரங்கதரா - ராஜ சுலோச்சனா

Gopal.s
30th November 2016, 04:25 AM
உலகம் அழிய போவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி விட்டன .

அன்னை இல்லத்துக்கு கார்த்திக் வரவு இல்லாதது,சுமதியையும்-சுந்தரியையும் ராகவேந்தர் கொஞ்சாமல் விட்டது.

அம்மா கண்ணுவை ஆராய்ந்து இன்னொருத்தரை குஷி படுத்த போகிறேன்.

vasudevan31355
30th November 2016, 05:52 AM
கோ,

அடடா!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1.VOB_003339197.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_1.VOB_003339197.jpg.html)

'இரும்புத்திரை' இரண்டாம் கட்ட காவியக் காதல் காட்சியை எதிர்பாராமல் எழுதி ஏடாகூடம் பண்ணி விட்டீர்களே! என் மனத்தில் இந்தக் காட்சி பற்றி எப்போதும் ஓடும் எண்ணங்களோடு ஒத்துப் போகின்றன உங்கள் பொன்னான இந்தப் பதிவின் எழுத்துக்கள். அதற்கு முதலில் உங்கள் சக ரசனையாளனின் நன்றி!

இந்த மாதிரிக் காட்சிகளையெல்லாம் நாம் பொதுவாக கவனிப்பதே இல்லை என்பது ஒரு குறைதான். சும்மா தேவர் மகனும், தில்லானாவுமே பேசப்பட்டுவிட்டன. இந்தக் காட்சி அற்புதத்திலும் அற்புதம்.

முதல் காதல் காட்சி படுகிளாஸிக். இந்தியத் திரைவானில் இதுவரை அப்படி ஒரு காதல் காட்சி வந்ததில்லை. இதில் என்ன வியப்பு தெரியுமா? இரண்டாவதாக காதலர்கள் சந்திக்கும் அந்தக் காட்சியும் முதல் காட்சிக்கு கொஞ்சமும் இளைத்ததோ சளைத்ததோ இல்லை.

ஆக இரண்டுமே உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடப்படவேண்டியவை.

முதல் சந்திப்பின் போது மெலிதான அச்சம், கூச்சம், யார் பேசுவது முதலில் என்ற தயக்கம், இடையில் சிக்கிய இடையனை வைத்து காதல் கலாய்ப்பு, புல்லாங்குழல் இசை அரங்கம் என்று காதல் பாடங்களுக்கெல்லாம் குருக்களாக விளங்கும் இந்த இரண்டு அழகு ப்ளஸ் அன்பு உள்ளங்களும்.

இரண்டாவது தனிமை சந்திப்பில் முதல் சந்திப்பின் போது இருந்த பயம், தயக்கம், கூச்சம் எல்லாம் கொஞ்சம் விடுபட்டு ஒரு அந்நியோன்ய நெருக்கம் ஆரம்பித்திருப்பது புலப்படும். உரிமையும் சற்று அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும். முன்னேற்றம் அதில் புலப்படும். மெலிதான உண்மை கலந்த பொய்க்கோபங்கள், தாபங்கள், சந்தேகங்கள், சீண்டல்கள் என்று இந்த சீன் காதலின் அடுத்த கட்ட அஸ்திவாரத்தை மிக பலமாக கட்ட ஆரம்பிக்கும். அப்படியே நம் மனதிலும் கூட.

'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா?' என்ற கேள்வி கேட்ட காதலியுடன் அந்த நிலா வேளையில், யாருமற்ற நிம்மதி சூழலில், இன்னும் தயக்கம் கலையாத நிலையில் இருவரும் சற்றே விலகி அமர்ந்து (காதலன் சாய்ந்து) இருக்க, அந்த அழகுப் பொன் மயில் கையில் கிடைத்த இலைக்குச்சியை வைத்து மணலில் கோலக்கோடுகள் போட, (என்ன செய்வதென்று அறியாமல்) நாயகனோ அதே போன்ற குச்சியின் இலைகளால் அந்தக் கோலமயிலின் மேலேயே கோலம் போட்டு ஸ்பரிசம் படாமல் மென்மையாக வருட, காதலர்களின் ஆரம்ப அமெச்சூர் உண்மை மனநிலை அந்த சூழலில் வெகு இயல்பாக உணர்த்தப்படும்.

இளமைச் சிங்கம் சிரித்துக் கொண்டே இருக்க, பதிலுக்கு இளமானும் நகைக்க, காரணம் அவர்களுக்குப் புரியாது. கள்ளம்கபடமற்ற சந்தோஷ உணர்வுகளின் சங்கமிப்பு சிரிப்பல்லவோ அது!

'இப்படியே சிரித்துக் கொண்டிருந்தால்... யாரவது பார்த்தால் நம்மை பைத்தியம் என்று நினைக்க மாட்டாங்க?'

என்று இளம் ஏந்திழை வினா எழுப்ப,

பதிலுக்கு,

'நினைச்சா நினைச்சுட்டு போறாங்க பைத்தியக்கார(வு)ங்க'

என்று பார்க்க முற்படுபவர்களையே பைத்தியங்களாகப் பார்க்கும் பக்குவ புத்திசாலி நாயகன். சமூகத்தின் சகலங்களையும் சல்லடையாய் அலசி ஆராய்ந்து உணர்ந்த அறிவார்ந்த ஆணழகன்.

காதலின் ஆரம்பக் காதலிக்கு எல்லாக் காதலிக்கும் வரும் சந்தேகம்தான். கேட்டு விட்டால் என்ன என்று அவள் கேட்டே விட்டாள்.

'இந்த மாதிரி எப்பவாவது இன்னொரு பெண்ணோடு பழகியிருக்கீங்களா?'

நான்தான் முன்னமேயே சொன்னேனே அவன் மகா புத்திசாலியென்று. கொஞ்சமும் தாமதியாமல் முடிவெடுத்துவிட்டான் 'மதுமதி'யாளை சீண்டி முனக வைப்பது என்று.

ரிக்ஷா ஓட்டும் தொழிலும் புரிவதால் 'என் ரிக்ஷாவில் ஏறாத பெண்களே கிடையாது' என்று அவளிடம் குறும்பு பண்ண ஆரம்பிப்பான். காதலி தப்பித்தாள் அந்த முதல் பதிலைக் கேட்டு.

'அப்படி இல்லை... இப்படி'

என்று தனக்கும், அவனுக்கும் உள்ள இடைவெளி நெருக்கத்தை கைஜாடையால் காட்டி ('இந்த அளவிற்கு பழகியிருக்கிறாயா!?' என்று கேட்க, அதை உணர்ந்து கொண்டது போல அவன்,

'சே! சே! அப்படியெல்லாம் இல்லை' என்று நாணம் கலந்த ஆதர்ஷ சிரிப்புடன் அதை மறுப்பது போல் மறுத்து, அவள் வயிற்றில் ஒரு வினாடி பாலை வார்ப்பது போல வார்த்து, அதைக் கேட்டு சந்தோஷப்படுமுன் அவள் வயிற்றில் உடன் புளி கரைப்பான்.

'ஒரே ஒரு தடவை' என்று அவளை வெறுப்பேற்ற ஜம்பமாய் வேறு சம்மனமிட்டு அமர்ந்து விஷ(ம) ரீல் சுத்த ஆரம்பிப்பான். மலர்ந்திருந்த அவளின் மதிவதன முகம் மந்தகாசப் புன்னகை இழந்து அதில் கலவரக் கோடுகள் கலக்க ஆரம்பிக்கும். உள்ளுக்குள் உதைப்பு. 'என்ன சொல்லப் போறானோ' பதைபதைப்பு.

யாருமில்லாத களத்து மேட்டு அரச மரத்தில் தான் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும் போது அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த பெண் ஒருத்தி பற்றி சொல்லி அவன் ஜோராய் சீண்டல் தீ பற்ற வைக்கும் போது அவளுக்குத்தான் எத்துணை அவசரம் கலந்த ஆர்வம் அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ள. 'யார்...எந்தப் பெண்?' என்ற பொறாமைக் கேள்வியில் அவள் முகம் அமைதியற்றதாய் அல்லலுறுகிறதே! அதை அவளால் மறைக்க இயலாதோ?

'அவ.....அவ பேரு கூட மறந்து போச்சே' என்று யோசிக்கும் பொய்த்தலைச் சொரியல் செய்கையை இந்த மகா (காதல்) நடிகன் செய்ய, அவளுக்கு இருப்புக் கொள்ளாத அவசரம். இப்போது அதுவா முக்கியம்?...மேலே..மேலே...

அவன் தொடர்கிறான் கலாய்ப்புக் கற்பனைக் கதையை வெகு இலகுவாக.

காற்று வேகமாய் அடித்ததாகவும், புத்தகத்தில் ஒரு பக்கம் கிழிந்து, பறந்து போய் கிணற்றுக்குள்ளே விழுந்ததாகவும் அவன் கூற, அந்த அவசர மடந்தை 'கிணற்றுக்குள்ளே விழுந்ததா? என்று கேட்க, அவன் அதை அப்படியே மாற்றி 'இல்லே! அந்தப் பெண்ணோட தண்ணீர் பக்கெட்ல போய் விழுந்துடுச்சி' என்று பொய்யுரைக்க, அவள் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் நெருக்குலைந்து ஒரு 'ஓ' வை வெறுமனே 'தேமே' என்று போட்டு வைக்க,

அவன்,

'அந்த பேப்பேரை எடுத்து முந்தானையால் துடைத்து (காதலன் ரொம்ப குசும்பு பிடித்தவன். அது 'முந்தானை' என்பது கூடத் தெரியாதவாறு நடித்து, காதலியின் முந்தானையைத் தொட்டு 'இது என்ன?' என்று அவளிடமே கேட்பது போல் கேட்டுத் தெரிந்து கொண்டு, அந்த வார்த்தையாலேயே அவளை அழகாக அச்சுறுத்துவான்) அதை எடுத்துக்கிட்டு என் பக்கத்துல வந்து நின்னு என்கிட்டே கொடுத்தா'

இப்போது காதலியின் நிலைமை இன்னும் கவலைக்கிடம். பொறாமை பிடுங்கித் தின்ன அவனிடம்,

'உங்க பக்கத்திலேயா?'

அவள் நெஞ்சடைப்பது காதலன் உணராததா? அதுதான் வார்த்தைகளின் அடைப்பிலேயே தெரிகிறதே! இருந்தாலும் இனியவளை இன்னும் சீண்ட வேண்டுமே! பொறாமையால் பொச்சரித்துப் போகும் அவள் முகத்தின் விதவிதமான அழகுக் கோணங்களை அள்ளி ரசிக்க வேண்டுமே!

விடுவானோ! தீண்டும் இன்பத்தைவிட சீண்டும் இன்பமும் ஒரு தனி சுகம்தான்! எதுவுமே நடக்காதது போல எந்தப் பாதிப்பும் அவளுக்கு இந்தக் கதையால் இல்லை என்பது போல சுவாரஸ்யமாக சுவை கூட்டி தன் சுகக்கதை தொடர்வான்.

கிணற்றுப் பெண் இவனிடம் என்னன்னவோ பேசியதாக இன்னும் இவன் எடுத்துவிட, மருண்ட மான் போல அதன் விழியாள் விழி பிதுங்க, அவன் ராஜ்ஜியம் தொடரும்.

'இந்தா புள்ள! என் முன்னால நிக்காதே! இந்த இடத்தை விட்டுப் போயிடு' என்று அந்த கற்பனை பெண்ணிடம் இவன் கறாராகச் சொன்னதாகக் கதைவிட, கலவரக் காதலி முகத்தில் கொஞ்சம் சந்தோஷ மறுமலர்ச்சி.

'அப்படின்னு சொன்னீங்களா?' என்று அவன் சொல்லுமுன் இவளே ஆர்வத்தில் அவசரமாய் தலை நீட்ட, அவன் அதை வேகமாக மறுத்து,

'சொல்ல நினச்சேன்...அவசரத்துல வாய் குழறி பக்கத்துல உட்காருன்னு சொல்லிட்டேன்' என்று தீர்க்கமான குறும்பு கொப்பளிக்கும் பார்வையுடன் தன்னுடையவளை ஆழம் பார்க்க, அவன் எதிர்பார்த்தது நடக்கிறது.

பரிதாபத் காதலி,

'போன்னு சொல்ல நெனச்சீங்க...ஆனா பக்கத்துல உட்காருன்னு சொல்லிட்டீங்க... அவளும் உட்கார்ந்துட்டாளா?' என்று மனம் புழுங்கி பொறாமை வினா எழுப்ப,

வில்ல, வில்லங்க, நாயகக் காதலனோ ஒன்றும் அறியாதவன் போல் (தர்ம)சங்கட நடிப்புடன் 'ஆங்' என்று அவள் அதிர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த,

அதைத் தாங்கமாட்டாமல் தாங்கிய பேதை இன்னும் தாங்கமாட்டாமல்,

'கிட்ட?' என்ற கிலியான கேள்வியை வேறு கேட்டாள்.

அதற்கும் காதலன் 'ஆங்' தான்.

'எவ்வளவு கிட்டே?'

அந்தப் பெண்ணுடனான இவனின் அமரும் நெருக்கத்தை அது துன்பமாயினும் கூட அறிந்து கொள்ள இவள் துடிக்கும் துடிப்பென்ன? அது வேதனையான பதிலையே தரும் என்ற நம்பிக்கை தளர்ந்த நிலையிலும் இந்தக் கேள்வி ஏன்?

'இப்படி' என்று காதலன் அவர்களுக்குண்டான நெருக்கத்தை பயந்தவன் போல் பேசாமல் சைகையால் காட்டிட,

அவள்,

'மேலே என்ன நடந்தது?' என மேலும் கேட்க, அவனோ அந்தப் பெண்ணின் அருகாமையால் தன் உடல் வியர்த்து விறுவிறுத்ததையும், ஐஸ் போல சில்லிட்டுப் போனதையும் கற்பனையாகக் கூற,

இவளோ இன்னும் ஆர்வமாய்...

'அவள் பேர் என்ன?..அவள் ரொம்ப அழகா இருந்தாளா?'

என்று பொஸசிவ் கேள்விகளை அடுக்க,

அவன் சளையாமல்,

'அப்படி ஒன்னும் அழகில்லை' என்று அவளை அமைதிப்படுத்துவது போல் காட்டி, பின் பார்த்தவளின் மூக்கு, கண், முடி பற்றி முடிவில்லாமல் வர்ணிக்க,

இப்போது முழுமதியாள் முற்றிலும் தாங்க மாட்டாதவளாய்,

'ஆமாம்! கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் ஞாபகம் இருக்கு' என்று 'வெடுக்'க ,

இவன் பரிதாபப் பருந்தாய்,

'பார்த்தது எப்படி மனசை விட்டு மறந்து போகும்? என்று பயந்த சுபாவம் காட்ட,

இவள்,

'ஓ' என ஓல ஓங்காரமிட்டு,

'மறக்கவே முடியல.... இல்ல?' என்று உள்ளேயும்,வெளியேயும் எரிய,

அவன் அவள் உச்ச நிலைக்கு போய் விட்டாள் (இந்த உச்ச நிலை வேறு கோபால்) என்று தெரிந்து சமாதானப்படுத்த, அதுவரை கட்டுப்பாடு கொண்டிருந்தவள் அதை உடைத்து உடைந்து விட,

'நல்லா புரிஞ்சி போச்சு...வந்தாளாம்...உக்காந்தாளாம்...பேசினாளா ம்' என்று வெளிப்படையாய், வெகுளியாய் தாளிப்பு வார்த்தைகள் கொண்டு வெகுண்டு எழ, முத்தாய்ப்பாக முடிவில் அவன் தன் வேடிக்கை முடித்து காதலியின் கவலைக்கும் முடிவு கட்டுவான்.

'அப்போ எனக்கு வயசு 10
அந்தப் பொண்ணுக்கு எட்டு'.

என்று.

'ஏன் இந்த நாடகத்தை நிறுத்தினான்? என்று நமக்கு கவலையைத் தரத் தொடங்குவான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1.VOB_003402306.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_1.VOB_003402306.jpg.html)

இயல்பு...இயல்பு...இயல்பு....உண்மைக் காதலின் மகத்துவம்... நடிப்பே அல்ல. நிஜம்...காதலர்கள் ஒருத்தரை ஒருத்தர் பேச விடாமல் இறுதியில் இனிமையாய் எதிர்வாதங்கள் புரிவது... அந்த வாதங்கள் நமக்கு ஒன்று விடாமல் தெளிவாகக் கேட்பது....உண்மைக் காதலை நடித்துக் காட்ட பலர் இருக்கிறார்கள். ஆனால் நடிப்பையே உண்மைக்காதல் என்று உணரவைக்க இந்தக் காதலர்கள் மட்டுமே இருப்பார்கள். அப்படியே இது நடிப்பு என்று வைத்துக்கொண்டாலும் அதிலும் இருவருக்கும் பலமான போட்டியே. அவனும் அவளும் அதில் மாறி மாறி வென்று கொண்டே இருப்பார்கள். இந்தக் காதல் நடிகனுக்கு கிடைத்த உன்னதமான இணை அழகி அப்போது
இவள் மட்டுமே. இவளுக்கென்று 'இருவர்' சாம்ராஜ்யத்தில் என்றும் தனி இடம் உண்டு. 'வேந்த'ரும் சேர்ந்தால் மூவர்

ஊடல் என்ற வார்த்தைக்கு உண்மையான விளக்கம்....அது கூடலில் முடியும் குதூகலம். தத்ரூபக் காதலர்களே கற்றுக் கொள்ள வேண்டிய குருகுலப் பாடம்.

காலம் உள்ளவரை காதல் அழியாது....அது அழிந்தாலும் இந்தக் காதல் ரசம் கொட்டும் காட்சி அழியவே அழியாது. அதுவே அழிந்தாலும் நாயகனும், நாயகியும் கோபால் சொன்னது போல அழிவில்லாமல் 'இரும்புத்திரை' போட்டு நம் இதயத் திரைக்குள் இல்லறம் நடத்துவார்கள்.

கோ,

உங்களுக்காகவும், நம் நண்பர்களுக்காகவும் இன்று தரவேற்றிய 'இரும்புத் திரையின்' இனிமையான காதல் காட்சி.

https://youtu.be/PknwkgvmOg0


https://youtu.be/PknwkgvmOg0

Gopal.s
30th November 2016, 07:57 AM
வாசு,

நான் கோடு போட்டால் நீ ரோடு போட்டு (தங்க நாற்கரம்) அலம்பல் பண்ணி விட்டாய். என் வேண்டுகோளை ஏற்று என்னுடைய இதயத்துடன் ஈஷியிருக்கும் காட்சியை தரவேற்றியதற்கு நன்றி.
நீ விவரித்து எனக்கு மேலும் வேலையில்லாமல் பண்ணி விட்டாய். எழுத்தில் மனோதத்தவம் பேசும் புது மெருகு.

எனக்கு வேற யாரு இருக்கா உங்களைத்தானே நம்பணும் என்ற தேவர் புலம்பலை போல கார்த்திக் கைவிட்டுவிட,சாரதா கௌரவ நடிகையாகி விட, முரளி பழைய பெருங்காய டபபா ஆகிவிட,ராகவேந்தர் அப்போப்போ தலை காட்ட,புதிய பதிவர்களோ ,நாங்கள் பாட்டுக்கு எங்கள் பதிவை போடுவோம் பதில் வினை-எதிர்வினையா மன்னிக்க என்று செல்ல ,என்னத்தை சொல்ல?எவ்வளவு நாள் உதாசீனத்துடன் போராடி தங்கத்தை இலவசமாகவே ,நன்றி என்ற வார்த்தை கூட இன்றி வழங்கி கொண்டிருக்க போகிறோமோ?

RAGHAVENDRA
30th November 2016, 08:21 AM
சுமதியையும்-சுந்தரியையும் ராகவேந்தர் கொஞ்சாமல் விட்டது.

அவசரம் என்றால் அப்படி ஒரு அவசரம்...உங்க ஸ்பீடுக்கு நானில்லை ...நான் மெதுவாத் தான் வருவேன். அதுக்காக எம்புட்டு மெதுவான்னு கேக்கக் கூடாது.

அது சரி சுமதியும் சுந்தரியும் நான் எப்படி கொஞ்ச முடியும்..சுமதியை கொஞ்சினா சுந்தரிக்கு கோபம் வரும்... சுந்தரியைக் கொஞ்சினா சுமதிக்கு கோபம் வரும்.. ம்ஹூம்.. நமக்கு இந்த வெளையாட்டெல்லாம் வேணாம்...

மெதுவாக தலைவர் வழியிலேயே போயிடறேன். அது தான் என்றைக்கும் சேஃப்டி...

RAGHAVENDRA
30th November 2016, 08:28 AM
Sivaji Ganesan - Definition of Style 10

நடிகர் திலகம் என்னும் அட்சய பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் மட்டுமல்ல அந்த உணவு நம் விருப்பத்தையும் நிறைவேற்ற வல்லதாகத் தருவதும் கூட என்ற உண்மையை யார் உணர்ந்திருந்தார்களோ இல்லையோ, அமரர் எஸ்.எஸ்.வாசன் மிக நன்றாக உணர்ந்திருந்தார். பரஸ்பரம் இணக்கமான சூழல் அல்லாதிருந்தாலும் நடிகர் திலகம் அதனைத் தொழிலில் புகுத்தாமல் வேறு படுத்தும் பண்பைக் கொண்டிருந்ததால் மேலும் மேலும் உயரப் பறந்து கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் உருவானதே இரும்புத் திரை, திரைக்காவியம்.

ஒவ்வொரு காட்சியிலும் அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார் நடிகர் திலகம். ஒரு படித்த தொழிலாளிக்கும் படிக்காத தொழிலாளிக்கும் வேறுபாட்டைக் காட்ட அவரால் முடிந்தது. இந்த முதலாம் வகைத் தொழிலாளியை இரும்புத் திரை திரைப்படத்தில் மிகச் சிறப்பாக வடித்திருப்பார்.

காதல் காட்சிகளைக் காமமாக சித்தரிக்கும் படங்களிலிருந்து மாறுபட்டு மிக இயல்பான ஒரு காதல் காட்சியை இரும்புத் திரை திரைப்படத்தில் வடித்திருப்பார்கள் நடிகர் திலகம்-வாசன்-வைஜெயந்திமாலா கூட்டணி.

இந்தக் கூட்டணியின் இந்தக் காட்சி இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாய் நிழலாடுகிறது என்றால் அதற்கு பெரும் பங்கு நடிகர் திலகத்திற்கும், உடன் நடித்த வைஜெந்திமாலா அவர்களுக்கும், மிகச் சிறப்பான பின்னணி இசையை வழங்கிய எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் ஒளிப்பதிவாளருக்கும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு காவியமாய் நிறைவடையச் செய்த வாசன் அவர்களுக்கும் சாரும்.

இனி காட்சிக்கு வருவோம்.

துவக்கத்தில் வரும் பின்னணி இசையே பாடலின் Moodஐ அருமையாய்க் கொண்டு வரும். ஒரு சிறிய கல் மேல் அமர்ந்தவாறு ஒவ்வொரு கல்லாய் தண்ணீரில் வீசும் போதே, தான் வெகு நேரமாய் காத்திருக்கிறோம் என்பதை விளக்கி விடுகிறார் நடிகர் திலகம். மேற்சட்டையின் கைகளில் பாதிக்கு மடித்து வைத்திருக்கும் போதே அவர் ஒரு தொழிலாளி என்பதை உணர்த்தி விடுகிறார். வைஜெயந்தி வந்தவுடன் பதில் வணக்கம் தரும் போது கைகளைக் கூப்பிச் செலுத்தும் நேர்த்தி கண்களைக் கவர்கிறது, பெண்மைக்குத் தரும் மரியாதையை நிலைநிறுத்துகிறது.

அமர்ந்தவுடன் ஒரு சில விநாடிகள் மௌனம். கதைகளில் கதாசிரியர் மௌனம் என்று சுலபமாக எழுதி விடுவார். அதைத் திரையில் வடிக்கும் போது அதற்கு ஒரு நடிகன் எப்படி உயிர் தரவேண்டும்.

இங்கே மௌனமே மொழி பேசுகிறது..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல சிரிப்பது...

பின்னணியில் புல்லாங்குழலை வாசித்தபடி ஒரு மேய்ப்பன் வருகிறான்.

நாயகன் அந்தப் புல்லாங்குழல் வரும் திசையைப் பார்க்க, நாயகியோ அவனைப் பார்க்கிறாள்.

அவன் அந்தப் புல்லாங்குழல் ஓசையை ரசித்துக் கொண்டிருக்க, இவளோ அவனை ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

அவன் அந்தப் புல்லாங்குழல் ஓசையை சிலாகிக்க, இவளோ எது என வினவுகிறாள் ஒன்றுமே தெரியாதவளைப் போன்ற குறும்புமிக்க புன்னகையுடன்..

அவன் சங்கீதத்தைப் பற்றி அவள் கூற அவனோ ஒன்றுமே தெரியாததைப் போல கூற, ஒரு குறும்பு செய்யவேண்டி அந்தப் புல்லாங்குழலை மேய்ப்பனிடமிருந்து வாங்கி முதலில் வாசிக்கிறான். ஒலி எதுவும் வரவில்லை. காற்று மட்டுமே ...

ஒரு சிறிய குறும்பிற்குப் பின்னர் இனிமையான இசை இவன் வாசிப்பில் அப்புல்லாங்குழலிலிருந்து வெளிப்படுகிறது.

இந்த இடத்தில் "ம்ம்.. ஏதாவது ராகம் " என அவள் சொன்னதை வேண்டுமென்றே குறும்பாக கிண்டல் செய்து இரண்டு முறை சொல்வது ஒரு உரிமை அவர்களுக்குள் இருப்பதை நிலைநாட்டுகிறது.

அந்த ஏதாவது என்ற வார்த்தைக்குள்ளும் இசையைக் கொண்டு வரும் நேர்த்தி..

இந்த இசை முடிந்தவுடனும் அதிலிருந்து அவளால் மீளமுடியவில்லை..

அவளால் மட்டுமா..

நம்மாலும் தான்.

இந்தக் காட்சியில் வெளிப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு..

வேறு யாராலும் பின்பற்ற முடியாத கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புத ஸ்டைல்...

இது இவரால் மட்டுமே முடிந்த ஒன்றாகும்..

....

இந்தக் காட்சியில் காதல் வசனங்கள் ஏதுமில்லை... ஆனால் அதற்கான Buildup இருக்கிறது. இதுவே இப்படத்திற்கு உயிர்நாடியான காட்சி.

இக்காட்சியைத் தரவேற்றிய நம் அன்புமிக்க வாசு சாருக்கும் யூட்யூப் இணையதளத்திற்கும் உளமார்ந்த நன்றி

ஒரு காதல் பாடல் எப்படிப் படமாக்கப் படவேண்டும், அதில் நாயக நாயகியின் நடிப்பு எப்படி இருக்க வேண்டும்.. இதோ ஓர் இலக்கண நூல்..

ஆஹா.. அந்த மந்தகாசப்புன்னகை வீசும் அந்த திராவிட மன்மதனின் முகம்... பெண்மையின் இலக்கணமாய் ஒளிவீசும் கண்களுடன் வைஜெயந்தி... நாடி நரம்புகளையெல்லாம் மீட்டும் மென்மையான இசை, காதல் உணர்வை அற்புதமாய் சித்தரிக்கும் பாடகர் திலகம் மற்றும் பி.லீலாவின் குரல்கள்...

...

அமரராகி தந்தையுடன் சேர்ந்து விட்ட பாலு சாருக்கு இப்பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன்.


Posted on : 20.12.2014 as a tribute to Sri S. Balasubramanian
Post No.3379
Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.mayyam.com/talk/showthread.php?11021-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-14&p=1193141&viewfull=1&PHPSESSID=b0ae58b47c206eb9f4773a4decf92d9a#post119 3141


மீள்பதிவு

RAGHAVENDRA
30th November 2016, 08:31 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15253494_1272866789430657_5917015741096753107_n.jp g?oh=e93d003c169fca6b061102e9b3a7fcd4&oe=58FA9DE2

RAGHAVENDRA
30th November 2016, 09:12 AM
Vasu Sir

http://images.all-free-download.com/images/graphiclarge/praying_hands_206293.jpg

KCSHEKAR
30th November 2016, 10:48 AM
'இரும்புத்திரை'
வாசு சார்,
"இரும்புத்திரை". - பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உங்கள் பதிவிற்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தைப் பார்த்தால்தான் சுவாரசியாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அருமையான பதிவு. நன்றி.

Gopal.s
30th November 2016, 07:41 PM
கிடைத்தற்கரிய "செல்வம்" கிடைத்தும்,அதை பகிர மனமில்லா கஞ்சனாய் உங்களிடமே வைத்திருக்கிறீர்களே முரளி? இது ஞாயமா ?

adiram
30th November 2016, 07:41 PM
வாசு,

எனக்கு வேற யாரு இருக்கா உங்களைத்தானே நம்பணும் என்ற தேவர் புலம்பலை போல கார்த்திக் கைவிட்டுவிட,சாரதா கௌரவ நடிகையாகி விட, முரளி பழைய பெருங்காய டபபா ஆகிவிட,ராகவேந்தர் அப்போப்போ தலை காட்ட,புதிய பதிவர்களோ ,நாங்கள் பாட்டுக்கு எங்கள் பதிவை போடுவோம் பதில் வினை-எதிர்வினையா மன்னிக்க என்று செல்ல ,என்னத்தை சொல்ல?எவ்வளவு நாள் உதாசீனத்துடன் போராடி தங்கத்தை இலவசமாகவே ,நன்றி என்ற வார்த்தை கூட இன்றி வழங்கி கொண்டிருக்க போகிறோமோ?

பெரிய பெரிய பதிவுகள் எல்லாம் போட்டு அசத்தும் வல்லமை இல்லாவிட்டாலும், ஜாம்பவான்கள் பக்கத்தில் நெருங்க முடியாவிட்டாலும், அவர்கள் போடும் அற்புத பதிவுகளுக்கு வெறும் 'லைக்' மட்டும் போட்டு அகல்வது தர்மமில்லையென்று எதையாவது தனக்கு தெரிந்த வரையில் எழுதி பாராட்டுவதற்காக இங்கே 'ஆதி' என்றொரு கிறுக்கன் அலைந்து கொண்டிருந்தானே / கொண்டிருக்கிறானே.

Gopal.s
30th November 2016, 07:52 PM
பெரிய பெரிய பதிவுகள் எல்லாம் போட்டு அசத்தும் வல்லமை இல்லாவிட்டாலும், ஜாம்பவான்கள் பக்கத்தில் நெருங்க முடியாவிட்டாலும், அவர்கள் போடும் அற்புத பதிவுகளுக்கு வெறும் 'லைக்' மட்டும் போட்டு அகல்வது தர்மமில்லையென்று எதையாவது தனக்கு தெரிந்த வரையில் எழுதி பாராட்டுவதற்காக இங்கே 'ஆதி' என்றொரு கிறுக்கன் அலைந்து கொண்டிருந்தானே / கொண்டிருக்கிறானே.

ஆதி ,


உங்களை மறப்போமா? 1000 கடைசி,2000 கடைசி,3000 கடைசி,4000 போதும் என்று சொல்லி சொல்லி செயல் படுத்தும் மனமின்றி இன்னும் மாஞ்சு மாஞ்சு உழைப்பது நடிகர்திலகம் என்ற தெய்வத்திற்கும்,உங்களை போன்ற உயர்ந்த நட்புகளுக்காகவுமே.

adiram
30th November 2016, 07:52 PM
கிடைத்தற்கரிய "செல்வம்" கிடைத்தும்,அதை பகிர மனமில்லா கஞ்சனாய் உங்களிடமே வைத்திருக்கிறீர்களே முரளி? இது ஞாயமா ?

நானும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். 'செல்வம்' விழாவில் ராகவ்ஜி பங்கேற்க முடியவில்லை என்று கேள்விப்பட்டேன். கே.ஆர்.விஜயாம்மா வந்திருந்தார்களாம்.

முரளி சார் சீக்கிரம் வாங்க உங்க பொக்கிஷ பதிவோடு.

sivaa
30th November 2016, 11:48 PM
http://oi67.tinypic.com/rasvis.jpg


சிவாஜி கணேசன்நடித்து திரைக்கு வராத படம் ஒன்றும் உள்ளது. ‘பெண் பாவம் பொல்லாது’ என்பதே அந்தப் படம். கோபி –
சிவசுந்தரம் சகோதரர்கள் கதை வசனத்தில், எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், காயத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரேவதி ஸ்டுடியோவில் உருவான இப்படம், திரைக்கு வரவேயில்லை

Murali Srinivas
1st December 2016, 12:04 AM
கோபால்,

மிகுந்த சந்தோஷமான விஷயம் என்ன தெரியுமா? நீங்கள் மீண்டும் புதிதாய் எழுதுவது. அன்னை இல்லம் பற்றி, இரும்பு திரை பற்றி, மாளிகை பற்றியெல்லாம் நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும்போது பல்வேறு உணர்வுகள். முன்பு மடி மீது தலை வைத்து பற்றி எழுதியிருக்கிறேன். இரும்புத்திரை பற்றி சிலாகித்திருக்கிறேன். சென்னை அபிராமியில் மாளிகை பார்த்ததைப் பற்றி எழுதும்போது நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சியைப் பற்றி சொல்லி (குளிருதா? பசிக்குதா?) இதைப் பற்றி இன்னும் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு பார்வையாளனுக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்களை விதைப்பதுதானே நடிகர் திலகத்தின் படங்களின் சிறப்பே! எழுத வேண்டும்! எழுதுகிறேன்.

ஆதிராம் சார்,

வேலைப் பளு, நேரமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் செல்வம் பொன் விழா நிகழ்ச்சி பற்றி எழுத முடியவில்லை. விரைவில் எழுத முயற்சிக்கிறேன். கோபால், உங்களுக்கும் சேர்த்துதான்.

இரு மலர்கள் பற்றிய பதிவை மீள் பதிவு செய்ததற்கு நன்றி ஆதிராம் சார்.

வாசு,

ஆயிரம் கோடி நன்றிகள். முதலாவதாக நிர்மல் பற்றி எழுதியதற்கு. காரணம் மாணிக்கம் பற்றி கூட நிறைய பேர் எழுத முன்வருவார்கள். ஆனால் நிர்மல் பற்றி சொல்ல விழைபவர்கள் குறைவு. அந்த சண்டைக் காட்சியை கண் முன்னே நிறுத்தியதற்கு மீண்டும் நன்றி.

ஜெமினி நிறுவனம் நடிகர் திலகத்தை வைத்து எடுத்த மூன்று படங்களில் இரும்பு திரையும் சரி, MSP யும் சரி விமர்சகர்களின் பாராட்டை வெகுவாக பெற்ற படம். கிட்டத்தட்ட 57 வருடங்களை தொடும் நிலையிலும் இரும்புத்திரை திரைப்படமும் நடிகர் திலகத்தின் நடிப்பும் இன்றும் relevant ஆக இருக்கிறது. எப்போதும் இயல்பான காதல் காட்சி என்பது மனதுக்குள் சந்தோஷ பூக்களை தூவுவது. அதிலும் இந்த படத்தின் காட்சி காவியம். சில மாதங்களுக்கு முன்னால் சில இளைஞர் இளம் பெண்கள் குழு ஒன்றிற்கு இந்த காட்சி திரையிடப்பட்டது. அதில் தமிழ் தாய் மொழியாக அல்லாதோர் அதிகம். கலை ஒன்றை பயில்வதற்காக வந்தவர்கள். தொடாமலேயே காதல் உணர்வை எப்படி சொல்ல முடியும், அந்த உணர்வை எப்படி பார்வையாளனுக்கு கடத்த முடியும் என்பதை விளக்கவே இந்த காட்சி தேர்வு செய்யப்பட்டது. திரையிட்டவர் ஒரு சினிமா பிரபலம். காட்சி முடிந்தவுடன் ஆங்கிலத்தில் விளக்குவதாக திட்டம். ஆனால் அந்த அவசியமே எழாமல் அந்த குழுவினர் காட்சியை புரிந்துக் கொண்டதுடன் கைதட்டி ரசித்தார்கள் என்று அந்த பிரபலம் சொன்னபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதே மகிழ்ச்சி இப்போது உங்கள் பதிவை படிக்கும்போதும்!

அன்புடன்

Murali Srinivas
1st December 2016, 12:08 AM
வாசு,

இந்த பதிவும் உங்களுக்குத்தான்.

ஒரு 20 நாட்களுக்கு முன்பு ஒருவரின் அலுவலகத்திற்கு நானும் ராகவேந்தர் சாரும் சென்றிருந்தோம். அங்கே எதிர்பாராவிதமாய் மற்றொருவர் வந்தார். நாங்கள் காண சென்றது திரை பிரபலம். வந்தவரோ சின்னத் திரை பிரபலம். Topic நடிகர் திலகம்தான். சிறிது நேரத்திற்கு பிறகு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட சில காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு காட்சி வந்தது. உடனே அதை freeze செய்துவிட்டு இந்தக் காட்சியில் என்ன விஷேஷம் தெரியுமா என்று திரை பிரபலம் கேட்க சின்னத்திரை நபர் கவனிக்கவில்லையே, மீண்டும் போடுங்கள் என்று சொல்ல மீண்டும் அந்தக் காட்சி. சின்னத்திரை நடிகர் சற்று யோசிக்கிறார்.

காட்சி இதுதான். வயதான பாதிரியார் ஈஸி சேரில் சாய்ந்திருக்க "முரட்டு பயலே இது யாருனு தெரியுதா" என்று அவரின் கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்லாமல் வலது கண்ணை கருப்பு திரை மறைத்திருக்க வந்திருப்பவர் யார் என ஆண்டனி பார்க்கிறான். சட்டென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் தலையை சற்றே இடது புறம் சாய்த்து மீண்டும் பார்க்கிறான். இதுதான் காட்சி. இதில் என்ன ஸ்பெஷல் என்பதுதான் கேள்வி. பதிலையும் சினிமா பிரபலமே சொன்னார்.

நம்மைப் போன்றவர்கள் அதாவது இரன்டு கண்களாலும் பார்க்க முடிபவர்களுக்கு பார்க்கும் மனிதனையோ அல்லது பொருளையோ நேராக பார்ப்போம். அதாவது இரண்டு கண்களும் ஒரு மையப் புள்ளியில் நிலை கொண்டு பிம்பத்தை நமது மூளைக்கு உணர்த்தும். அதே நேரத்தில் கண் பார்வை குறையுடையவர்களும் ஒரு கண் பார்வை இழந்தவர்களும் நம்மைப் போன்று பார்க்க இயலாது. எதிரே நிற்கும் பிம்பம் போன்ற எதையுமே அவர்கள் ஒரு கண்ணால் focus செய்வார்கள். அதில் சற்றே சிரமப்படும்போது பிம்பத்தை சரியாக உள்வாங்க அந்த focus சரியாக கிடைக்க எந்த கண் தெரிகிறதோ அந்தப் பக்கம் சற்றே தலையை சாய்த்து அதை சரி செய்வார்கள். வந்திருக்கும் பால்ய நண்பனை சரியாக அடையாளம் கண்டுகொள்ள ஆண்டனி அதைத்தான் செய்கிறான் என்று அவர் விளக்கியபோது மெய் சிலிர்த்து விட்டது.

வெறும் முப்பது வினாடிகளுக்கும் குறைவாக வந்து போகும் அந்த ஒரு ஷாட்டிற்காக நடிகர் திலகம் வெளிப்படுத்திய அந்த நுணுக்கம், எந்தளவிற்கு தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு நீதி புலர்த்தினான் அந்த மகாகலைஞன் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஆண்டனி பற்றியோ அல்லது அருண் பற்றியோ விஷயம் பேசப்படும்போது அதை உங்களை தவிர வேறு யாருக்கு dedicate செய்ய முடியும்!

அன்புடன்

RAGHAVENDRA
1st December 2016, 01:37 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15284801_1273687522681917_1639328734363526706_n.jp g?oh=65705d7601eff7351a55ecc630a65bc2&oe=58F762BE

Gopal.s
1st December 2016, 02:21 AM
முரளி,

ஞான ஒளி காட்சியை நன்றாக ஆராய்ந்து இருக்கிறீர்கள்.அடிக்கடி இந்த மாதிரி ஏதாவது surprise தரவும்.செல்வன் எப்படி கண்ணில் படாமல் போயிற்று?

சிவா.

நிஜமாகவே எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் நடிகர்திலகம் ஸ்டில் நான் பார்த்தும் கேட்டும் அறியாதது. மிக்க நன்றி. இதமான நண்பரான எஸ்.பாலசந்தர் சென்சாரில் திரிசூலத்திற்கு சுட் கொடுத்து இடைஞ்சல் தந்து நன்றி மறந்தார்.

Gopal.s
1st December 2016, 02:31 AM
தவப்புதல்வன்- 1972

முக்தா ஸ்ரீனிவாசன் ,சிவாஜியுடன் "அந்த நாள்" முதல் பணி புரிபவர். சில சிறு வெற்றி படங்கள் எடுத்த பிறகு நடிகர்திலகத்துடன் இணைந்து நிறைகுடம்,அருணோதயம் முதலிய வெற்றிகள் கண்டு தவப்புதல்வனை மூன்றாவது தொடர் வெற்றி படமாக வெளியிட்டார்.அவர் எல்லா படங்களுக்கும் அவர் இயக்குனர். அவர் அண்ணன் ராமசாமி பெயரில் தயாரிக்க படும்.

முதலில் சில வருடங்கள் உதவி இயக்குனாராக பணி புரிந்து ,முழு இயக்குனராக முதலாளி என்ற சூப்பர் ஹிட் படத்துடன் 57 இல் படத்துறையில் நுழைந்தவர்.ஆரம்பத்தில் எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஜெமினி உடன் பணிபுரிந்தாலும் பின்னாட்களில் இவர்களை உபயோகித்ததில்லை. 69 முதல் சிவாஜியுடன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இணைந்தார்.

அவர் படங்களுக்கென்று தனி சூத்திரம் உண்டு.

1) கதாநாயகன் அல்லது நாயகி ஏதாவது உடற்குறை அல்லது மன பிறழ்வு கொண்டிருப்பார்கள்.
2)இவர்கள் குறைகளால் ஏதாவது மோசமான விளைவு நேரும்.
3)அந்த விளைவுக்கோ செயலுக்கோ அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
4)பழிதுடைத்து, அல்லது குறை தீரும் வரை அவர்களை வில்லனோ வில்லியோ ஆட்டி படைப்பார்கள்.
5)கதாநாயகன் அதை மற்றவரிடமிருந்து மறைத்து உண்மை வெளிக்கொண்டு வர முயல்வார்.
6)நகைச்சுவை நடிகர்களுக்கென தனி track ஓடும்.
7)ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் ,கதாநாயகனின் பிரச்சினையில் இணைந்து தீர்க்க பார்க்கும் போது, பிரச்சினையில் வேடிக்கையான திருப்பங்கள் சேர்ந்து படத்தை நகர்த்தும்.
8)பெரும்பாலும் முடிவு சுபமாகவே இருக்கும்.
9)நகைச்சுவை முக்கியத்துவம் பெற்றாலும் ,மனதை வருடும் காட்சிகளும் இருக்கும்.
10)நாகேஷ்,சோ,மனோரமா தவறாமல்.

---இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,டி.கே.ராமமூர்த்தி,குமார் ,கே.வீ.மகாதேவன் என்று மாறி மாறி விஸ்வநாதனிடம் நிலை கொண்டது.

---வித்யா movies என்ற போர்வையில் ரவி,ஜெய்,முத்துராமன் என்றும் தொடர்ந்து படங்கள் எடுத்தார்.

---நடிகர்திலகத்தை வைத்து 9 படங்கள் இயக்கி தயாரித்தார்.

---பலவேறு பட்ட கதாசிரியர்களுடன் பணி புரிந்துள்ளார். குறிப்பிட தக்கவர்கள்-கே.பாலசந்தர்,மதுரை திருமாறன்,மகேந்திரன்,சோ,தூயவன், கலைஞானம்,ஏ.எஸ்.பிரகாசம்,விசு ஆகியோர்.

---மிக குறைந்த செலவில் படமெடுத்து பெரும் லாபம் கண்டவர்.

---பாலாஜி,திருலோகச்சந்தர்,மாதவன் வரிசையில்,நடிகர்திலகத்தின் loyalist ஆக இருந்து மிக பெரும் பலன் கண்டு ,லாபத்துடன் மன அமைதி கொண்டு மதிப்புடன் வாழ்ந்தவர்.

---மெகா ஹிட் படங்கள் தவப்புதல்வன்,அந்தமான் காதலி,கீழ் வானம் சிவக்கும். ஹிட் படங்கள் நிறைகுடம்,அருணோதயம்,இமயம்,பரீட்சைக்கு நேரமாச்சு. சுமார் வரிசையில் அன்பை தேடி,இரு மேதைகள்.

---பழுத்த காங்கிரஸ் தேசியவாதி.

ஒரு மத்யதர குடும்பத்து கல்யாண விருந்துக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும் traditional மெனு .breakfast ,டின்னெர் எல்லாமே நீங்கள் எதிர்பார்த்த படியே. ஆனால் உப்பு,உறைப்பு,இனிப்பு எல்லாமே சரியான விகிதத்தில் கலந்து சுவை கூடுதலாய், பரிமாறும் விதமும் பாந்தமாய் இருந்தால் மனதுக்கு ஒரு இதம் ஏற்படுமல்லவா?அதைத்தான் தவப்புதல்வனில் ரசிகர்கள் உணர்ந்தனர்.தூயவன் திரைக்கதை படு கச்சிதம்.

நிர்மல் இசையறிவு மிகுந்த ,இசைக்கருவிகள் பலவற்றில் இயல்பான வாசிப்பு திறமை கொண்ட ,அன்னையுடன் தனித்து வாழும் ஒரு பணக்கார இளைஞன்.டாக்டர் வசந்தி அவனை மணக்க இருக்கும் மாமன் மகள்.இருவருமே ஒருவரின் திறமை மீது மற்றவர் மரியாதை வைத்து,ஒருவரின் முன்னேற்றத்தில் மற்றவர் உண்மை அக்கறை செலுத்தும் தூய அன்பு கொண்டவர்கள்.

நிர்மல் தன் நண்பன் james வேண்டுகோளை தட்ட முடியாமல் ,அவன் ஹோட்டல் இல் trumpet வாசிக்க ஒப்பு கொள்ள,அதன் மூலம் நடன காரி விமலா அவள் குடிகார புல்லுருவி அண்ணன் ஜம்பு இவர்களுடன் அறிமுகமாகி ,அவர்களுடன் உரிய எச்சரிக்கையுடன் நடக்கிறான். இடையில், நிர்மலுக்கு அவன் பரம்பரை நோயான மாலைக்கண் தாக்க,தன் தந்தையை தாக்கி விபத்திலும் கொன்ற அந்த நோய் தாயை சித்த சுவாதீனம் இழக்க வைத்ததையும், தாய் இந்த உண்மையை தாங்க மாட்டாள் என்பதையும் ,வசந்தியிடம் ரகசியம் தங்காது என்பதால் இரவுகளில் தான் வாசிக்கும் ஹோட்டல் அறையில் தங்கி ரகசியம் காக்கிறான்.தற்செயலாய் திருட வரும் ஜம்புவிற்கு இந்த உண்மை தெரிய விமலா இதை வைத்து ,வசந்தியை அறைக்கு வரவழைத்து நிர்மல் தன்னுடன் அந்தரங்கமாய் இருப்பது போல தோற்றம் கொடுத்து அவர்கள் கல்யாணத்தை நிறுத்துகிறாள்.

நிர்மல் தாய் விரும்பும் பெண்ணிற்கே கல்யாணம் செய்து சொத்தும் சேரும் என்பதால் ,வசந்தியின் கார் முன் தற்கொலை செய்ய வருவது போல் நடித்து தனக்கும் நிர்மலுக்கும் தொடர்புண்டு என்று நிருபித்து, நிர்மலை மிரட்டி வீட்டிற்கே வருகிறாள்.james ,விமலாவை அங்கிருந்து விரட்ட அவள் அண்ணன் போல் விமலாவுடன் வருகிறான். விமலாவை விரட்ட சதி செய்யும் ஒவ்வொரு முறையும் சந்தர்ப்பம் விமலாவிற்கே சாதகமாகி ,கல்யாணம் வரை போக, தற்செயலாய் உண்மை வசந்திக்கு தெரிய, ஒரு வெளிநாட்டு டாக்டர் சிகிச்சையால் நிர்மல் குணமாகி ,விமலாவின் குட்டு வெளியாகி வசந்தியும் நிர்மலும் சேர james அரசியல் பஞ்ச் காமெடியுடன் சுபம்.

எனக்கு நினைவு தெரிந்த வரை ஒவ்வொரு அசைவுக்கும் லாஜிக் பார்த்து,மிக சுவையான திருப்பங்கள்,மனதை தொடும் பன்முகம் கொண்ட காட்சியமைப்புகள் என்று ஒரு சில மசாலா குடும்ப படங்களே ,ஒரு action பட விறுவிறுப்புடன் அமைந்தன. அவற்றில் ஒன்று தவப்புதல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாத திரைக்கதை,அளவான வசனங்கள்.உறுத்தாத executive வகை இயக்கம்.

சுவையான காட்சிகளுக்கு பஞ்சமே வைக்காத படம்.love is fine நடனம், வசந்தியுடன் ஹோட்டல் trumpet வாசிப்பதை வீட்டில் சொல்லாமல் மாட்டும் இடம், வாசு திருட வரும் இடத்தில் கண்தெரியாமல் சிவாஜி அவருடன் மோதும் இடம்,
அம்மாவுக்கு தவறுதலாய் விஷ மருந்து கொடுக்க முயலும் காட்சி ,தான்சேன் காட்சி,விமலா திட்டமிடும் காட்சிகள்,james (சோ),மனோரமா வசந்தியை மாட்ட வைக்க பார்த்து backfire ஆகும் சுவாரஸ்யம் (முக்தா பஞ்ச் ),சிவாஜியை சகுந்தலா ( பிரசித்தி பெற்று தொடர்ந்த ஜோடியின் முதல் படம்) tease பண்ணும் காட்சிகள்,தான் கொடுத்த கம்பு தனக்கே உதவும் காட்சி,சிவாஜி வாத்தியத்தை உடைத்து விரக்தியை வெளிப்படுத்த கே.ஆர்.விஜயா அதே பாணியில் தன் மருத்துவ கருவிகளை உடைக்கும் காட்சி,கிண்கிணி கிண்கிணி கிறிஸ்மஸ் தாத்தா காட்சி, போட்டி பாடல் காட்சி ,இரு பகுதி கொண்ட விறு விறு இறுதி காட்சி , வசந்தியின் நல்ல நோக்கம் கேள்விக்குள்ளாவது என்று பல நல்ல காட்சிகள் சிறந்த முறையில் திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கும். மற்ற முக்தா படங்களை விட கூடுதல் professionalism தெரியும்.


சிவாஜியின் சிகை அலங்காரம்(முக்தா சிவாஜிக்கு நிறைகுடத்தில் ஆரம்பித்த பிரத்யேக ஸ்டைல் அக்கால கிருதாவுடன்),
வித விதமான டிசைன் குர்தா டைப் மேலுடை,இளமை தெறிக்கும் அழகு,அமெரிக்கையான நடிப்பு,படம் முழுதும் பிரமாதம். மாலைக்கண் நோய்க்கு முழு விளக்கம், கூடுதல் பிரச்சினை என்று மெடிக்கல் ஆகவும் நன்கு டீல் பண்ண பட்ட படத்தில் (Nyctalopia ,xerosis ,edema ) சிவாஜி dry eyes பிரச்சினையில் கண்ணை கொட்டுவதும், கண் தெரியாத போது காதை சிறிதே திசை நோக்கி சப்தம் உணர்வது என்று கலக்குவார். துள்ளல் ஸ்டைல் நானொரு காதல் சந்நியாசி,தான்சேன் இசை கேட்டால், உருக்க கிண்கிணி,முத்திரையுடன் போட்டி பாடல் காட்சி என ரசிகர்களுக்கு full மீல்ஸ் . வாத்தியங்களை உடைத்து முடித்து கடைசியாக கிடாரை எடுத்து வசந்தி போய் விட்டதை உணர்ந்து கடைசி நிமிடத்தில் உடைக்காமல் அணைத்து கொள்ளும் பரவச உருக்க ஈடுபாடு,கடைசியில் தன்னை படுத்தி எடுத்தாளே என்று விமலா கண்ணை கட்டி பரபரப்பாய் பழி வாங்கும் டீசிங் என்று இந்த படத்திலும் அவர் கொடி நாட்டி விடுவார்.

மெல்லிசை மாமன்னர் இந்த இசையுடன் சம்பந்தமுள்ள படத்திற்கு நன்றாக பங்களித்துள்ளார்.(திருப்தியா கார்த்திக் சார்?)
சோ,மனோரமா,வாசு ,பண்டரிபாய்,செந்தாமரை அவரவர் பங்கை உரிய முறையில் தர, விஜயா,சகுந்தலா செமையாய் ஸ்கோர் செய்வார்கள்.இந்த படத்திற்கு விஜயா ஓகே.(டூயட் கிடையாது)

வழக்கமாய் வெற்றி பெரும் முக்தா formula ,இந்த படத்தை சரியான விகித உணர்ச்சி,entertainment ,விறுவிறுப்பு, பாத்திர படைப்பில் முழுமை ,படம் முழுதும் தெரியும் sincerity &seriousness தன்மை இவற்றுடன் ரசிகர்கள்,பொதுமக்கள் (அனைத்து வயதினர்) திருப்தி தந்ததால் பெரிய ஹிட் என்ற status எட்டியது.

RAGHAVENDRA
1st December 2016, 07:20 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15267572_1273883952662274_117683347696251659_n.jpg ?oh=01901fdd102807582ac4b8723c1b5639&oe=58C74C24

நின்னுட்டு போஸ் காட்டினா மட்டும் ஸ்டைல் என்பதல்ல. படுத்துக்கொண்டும் ஸ்டைல் காட்டுவதிலும் தலைவர் மட்டுமே என்றும் சக்கரவர்த்தி

vasudevan31355
1st December 2016, 08:16 AM
மிக்க நன்றி முரளி சார். பின்னூட்டப் பதிவுகள் உங்களுக்கே உரித்தான நடையில். ரசிக்க ருசிக்க வைக்கிறது. ஆண்டனியின் தலை சாய்த்து நோக்கும் அந்தக் காட்சியை நானும் உன்னிப்பாகக் கண்டு ரசித்து வியந்து கொண்டிருப்பது உண்டு. இதோ உங்களுக்காக அந்த முரட்டுப் புயலின் முகம் சாய்த்த போஸ். இது போல ஆராயக்கூடிய போஸ்கள் என் ஆண்டவனாம் ஆண்டனியிடம் ஆயிரக்கணக்கில் உண்டே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Gnana%20Oli%20-%20Uyirvani.com.avi_001775103.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/Gnana%20Oli%20-%20Uyirvani.com.avi_001775103.jpg.html)

vasudevan31355
1st December 2016, 09:53 AM
கோ,

'தவப்புதல்வன்' அட்டகாசம். படத்தின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் ஒரே கட்டுரையில் அளித்து விட்டீர்கள். நடிகர் திலகத்தை வைத்து நிறைய பணம் சம்பாதித்ததையும் வெளிக்காட்டாமல் நடிக்கத் தெரிந்தவர் வரிசையில் முக்தா முதலிடம் பெறுவார்.

adiram
1st December 2016, 01:59 PM
முரளி சார்,

மிக்க நன்றி. உங்கள் வேலைப்பளு நான் அறிந்ததே. சமயம் கிடைக்கும்போது 'செல்வத்தை' அள்ளித்தாருங்கள்.

ஆண்டனியின் தலை சாய்த்த பார்வையில் இருக்கும் நுணுக்கம் பற்றி திரை பிரபலம் விளக்கிய பங்கு மிக அருமை. சின்னத்திரைகாரர் போல பலர் உணரும் வண்ணம் அமைந்த நல்ல பதிவு. ஞான ஒளியார் குத்தகை எடுத்த சுரங்கத்தில் நீங்களும் அவ்வப்போது அகழ்வாராய்ச்சி நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

adiram
1st December 2016, 02:53 PM
கோபால் சார்,

தவப்புதல்வன் நிர்மல் பற்றிய பதிவு அருமை. படத்தைப்பற்றி சுருக்கமாகவும் தயாரிப்பாளர் பற்றி அதிகமாகவும் எழுதியிருக்கிறீர்கள். வேலி தாண்டாத வெள்ளாடு என்ற வகையில் இவர் மீது மதிப்பு உண்டு.

60 களில் மற்றவர்களை வைத்து பனித்திரை, இதயத்தில் நீ, நினைவில் நின்றவள், தேன்மழை ஆயிரம் பொய், பொம்மலாட்டம் என்று சகட்டு மேனிக்கு பொழுதுபோக்கு படங்களை அள்ளி தெளித்தவர். ஆனால் நன்றாக இருக்கும்.

மூக்கையா சேர்வைக்கும், ஜமீன்தார் அனைத்துக்கும் இடையே மாட்டினாலும் அற்புதமாக கரை சேர்ந்த நிர்மல் பற்றி அடிக்கடி அலசுவது மனதுக்கு இதம்.

பதிவுக்கு நன்றி

RAGHAVENDRA
1st December 2016, 04:45 PM
http://www.behindwoods.com/new-images/photo-galleries-q1-09/tamil-photo-gallery/vasantha-maligai/wmarks/vasantha-maligai31.jpg

அழகாபுரி ஜமீன்தார் அகஸ்தியா விஜயம்

நாளை 02.12.2016 முதல் தினசரி பகல் மற்றும் மாலைக் காட்சியில் சென்னை அகஸ்தியா திரையரங்கில்

காலத்தால் அழியாத காதல் காவியம்

நடிகர் திலகத்தின்

http://royalisai.com/download/albums/Vasantha%20Maligai.jpg

Murali Srinivas
1st December 2016, 09:52 PM
நன்றி வாசு. மகிழ்ச்சியாக எழுதும் ஆர்வக் கோளாறில் இடது கண்ணிற்கு பதிலாக வலது கண்ணை மறைத்திருக்கும் கருப்பு திரை என்று எழுதி விட்டேன். மன்னிக்கவும்.

கோபால், மீள் பதிவு என்றாலும் நச் பதிவு. ரசித்துப் படித்தேன் மீண்டும்.

ஆதிராம் சார், அழகாபுரி சின்ன ஜமீன் பற்றி நீங்கள் குறிப்பிட்டவுடன் அவரின் அகஸ்தியா விஜயம் ஆரம்பமாகி விட்டது பார்த்தீர்களா?

அன்புடன்

rajeshkrv
1st December 2016, 10:17 PM
மிக்க நன்றி முரளி சார். பின்னூட்டப் பதிவுகள் உங்களுக்கே உரித்தான நடையில். ரசிக்க ருசிக்க வைக்கிறது. ஆண்டனியின் தலை சாய்த்து நோக்கும் அந்தக் காட்சியை நானும் உன்னிப்பாகக் கண்டு ரசித்து வியந்து கொண்டிருப்பது உண்டு. இதோ உங்களுக்காக அந்த முரட்டுப் புயலின் முகம் சாய்த்த போஸ். இது போல ஆராயக்கூடிய போஸ்கள் என் ஆண்டவனாம் ஆண்டனியிடம் ஆயிரக்கணக்கில் உண்டே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Gnana%20Oli%20-%20Uyirvani.com.avi_001775103.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/Gnana%20Oli%20-%20Uyirvani.com.avi_001775103.jpg.html)

Vasu ji. ungalai meendum inge paarthathil sandhosham

Gopal.s
2nd December 2016, 04:46 AM
வாசு,

நீ தரவேற்றிய இரும்பு திரை காட்சியை இரண்டு மணிநேரமாக திருப்பி திருப்பி ரசித்து மகிழ்ந்து கொண்டே இருக்கிறேன்.1960 பொற்காலம்.இரும்புத்திரை சிவாஜி-வைஜயந்தி, தெய்வப்பிறவி சிவாஜி-பத்மினி,பாவைவிளக்கு சிவாஜி-கமலா என்று ஏராளமான லயிப்புக்குரிய
படு இயல்பான காதல் காட்சிகள். அது என்னவோ சிவாஜியுடன் இணைந்தாலே எந்த நாயகிக்கும் அவருடன் காதல் ரசாயனம் அமைந்து விடுகிறது.

RAGHAVENDRA
2nd December 2016, 07:22 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15338869_1275303935853609_3755341160436359657_n.jp g?oh=0cee9b54ccb40319f30771aed716ddd8&oe=58CBAB65

KCSHEKAR
2nd December 2016, 12:14 PM
தவப்புதல்வன்- 1972 .
கோபால் சார்,
தவப்புதல்வன் பற்றிய அலசலில், காட்சிகளை சிறப்பாக தங்கள் பாணியில் வர்ணித்திருப்பதோடு, நடிகர்திலகத்தோடு முக்தாவின் வரலாற்றையும் கலந்து அளித்துவிட்டீர்கள். நன்றி.

KCSHEKAR
2nd December 2016, 12:22 PM
வரும் 11 -12 -2016 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியின் அழைப்பிதழ்

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Pudukottai/PdkInvitationPg1_zpsjshf4boo.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Pudukottai/PdkInvitationPg1_zpsjshf4boo.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Pudukottai/PdkInvitationPg2_zpstcqws4t7.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Pudukottai/PdkInvitationPg2_zpstcqws4t7.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Pudukottai/PdkInvitationPg3_zpspskpcelw.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Pudukottai/PdkInvitationPg3_zpspskpcelw.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Pudukottai/InvitationPg4_zpspg5gte3e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Pudukottai/InvitationPg4_zpspg5gte3e.jpg.html)

RAGHAVENDRA
2nd December 2016, 02:49 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15241146_214480402327919_6570104310329959404_n.jpg ?oh=89f235f5ba2389e16d365ecdd524b6ff&oe=58B9E4F5

Dear Sivaji Fans... Our All India Thalaivan Sivaji Makkal Iyakkam- Trichy Dt. regular monthly meeting to be held at SRUTHI thirumana mandapam evening 5.00 O'"clock on 4.12.2016 (SUN DAY) after the meeting we will show our Great Sivaji's RAJA silver jubilee picture on screen don't miss it...all are come and enjoy...

by
Trichy M.Srinivasan.
President : All India Thalaivan Sivaji Makkal Iyakkam.

Thank you.


Reproduced from the FB page of Trichy M. Srinivasan

Link: https://www.facebook.com/photo.php?fbid=214480402327919&set=a.107545709688056.1073741828.100012978815926&type=3

Russellxor
2nd December 2016, 05:17 PM
விகடனிலிருந்து...

பாசமலர் :

இந்தப் படத்திற்கு அறிமுகமே தேவையில்லை. 1961-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிங்களம் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் மட்டும் இரண்டு முறை ரீமேக் ஆகியுள்ளது. எல்லாப் பயலுகளுக்கும் இளகிய மனசுதான் போல...

Murali Srinivas
2nd December 2016, 11:24 PM
சூரியன் இன்று காலை கிழக்கே உதித்தது என்று சொல்லுவது எப்படி இயல்போ அது போன்றே அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது என சொல்லுவதும். தமிழ் சினிமா சரித்திரத்திலேயே மறு வெளியீடுகளில் வசந்த மாளிகை அளவிற்கு திரையிடப்பட்ட படங்கள் உண்டா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் எத்தனை முறை வந்தாலும் அத்தனை முறையும் வெளியீட்டாளருக்கு வாரி வழங்கும் வள்ளல் அழகாபுரி சின்ன ஜமீன் அவர்கள்.

இன்று முதல் சென்னை அகஸ்தியா திரையரங்கில் மதியக் காட்சியும் மாலைக் காட்சியுமாக தினசரி 2 காட்சிகளாக திரையிடப்பட்ட வசந்த மாளிகை படத்தின் இன்றைய மதியக் காட்சிக்கு சற்றேறக்குறைய 500 நபர்கள் படம் பார்க்க வந்திருந்தனர் என்பதுதான் செய்தி. அதிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது சிறப்பு செய்தி. மதியக் காட்சிக்கு சென்றிருந்த நண்பர் அண்மைக் காலத்தில் மறு வெளியீட்டு படங்களுக்கு இந்த அளவிற்கு பெண்கள் கூட்டம் வந்ததை பார்க்கவில்லை என்றார். மாலைக் காட்சிக்கும் அதேயளவிற்கு மக்கள் வந்திருந்தனர் என்பதையும் மற்றொரு நண்பர் மூலமாக அறிய முடிந்தது.

புயலும் மழையும் மிரட்டிக் கொண்டிருந்த நாளிலும் சில சமயங்களில் பலத்த மழை பெய்தபோதும் பண புழக்கம் பாதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலும் இப்படிப்பட்ட சாதனைகள் புரிவது என்பதுதானே நடிகர் திலகத்தின் வரலாறு.

அன்புடன்

Murali Srinivas
2nd December 2016, 11:26 PM
சென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்த சென்ட்ரல் சினிமாவிற்கு ஞாயிறு மாலை சென்ற போது ரசிகர்கள் வழக்கம் போல் ஆர்பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் வெளிநாட்டை சேர்ந்த இருவர் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தனர். திரையரங்கின் வாசலில் நடக்கும் இந்த கோலாகலங்களை பார்த்துவிட்டு அங்கேயே நின்ற அவர்கள் அதைப் பற்றி விசாரித்தனர். படத்தைப் பற்றியும் நடிகர் திலகம் பற்றியும் அவர்களிடம் விவரிக்கப்பட்டது. அவர்களை பற்றிய விவரம் கேட்க அவர்கள் இருவரும் ஸ்விசர்லாண்ட் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பெயர் முறையே ஸ்டார்க் மற்றும் ம்யுனிக் என்பதும் அவர்கள் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் எனபதும் தெரியவந்தது.

வாசலில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை கேட்டவுடன் படம் பார்க்க ஆவல் மிகுந்த அவர்கள் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றனர். படம் பார்க்க பார்க்க அப்படியே பிரமித்து போய் அமர்ந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்காக ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தின் சிறந்த நடிகர் பரிசு நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அவர்களுக்கு சொல்லப்பட அதுவும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷம் போட்டுக் கொண்டே வருகின்றனர். வெளிநாட்டினர் இருவரும் ரசிகர் எழுப்பும் வாழ்க என்ற கோஷத்தின் அர்த்தம் என கேட்டிருக்கிறார்கள்.அர்த்தம் அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது. நடிகர் திலகம் தற்போது எங்கே இருக்கின்றார் என்ற வினாவை அவர்கள் எழுப்ப 15 வருடங்களுக்கு முன்பே நடிகர் திலகம் நம்மை விட்டுப் பிரிந்து விட்ட தகவல் அவர்களுக்கு சொல்லப்பட ஒன்றும் பேச முடியாமல் நின்று விட்டனராம். அப்போது ரசிகர்கள் மீண்டும் வாழ்க என்று கோஷம் எழுப்ப அவ்விருவரும் அதே உணர்ச்சியோடு ரசிகர்களுடன் சேர்ந்து வாழ்க என்று சொல்ல அந்த நேரத்தில் அங்கே இருந்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். மேலும் சில நிமிடங்கள் அவர்கள் செலவிட்டபின் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியிருக்கின்றனர்.

இப்படி மொழி தெரியாத, நம்முடைய வரலாற்றை முழுவதுமாக அறியாத வெளிநாட்டினரைக் கூட தன் ஒப்புயர்வற்ற நடிப்பினால் கட்டிப் போட நமது நடிகர் திலகம் இருந்ததால்தான் நம்மால் இன்றும் மார் தட்டிப் பேச முடிகிறது.

அன்புடன்

RAGHAVENDRA
3rd December 2016, 07:07 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15232330_1276433612407308_4471523611399960541_n.jp g?oh=1cb6d34eb949b1b4be5b85480b69005d&oe=58BDAFBC

RAGHAVENDRA
3rd December 2016, 07:08 AM
Murali Sir
Super

RAGHAVENDRA
3rd December 2016, 07:20 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15241929_1276444525739550_3646124063157080618_n.jp g?oh=6a3b27aa57b09fa01b80783ca712e51f&oe=58BA8781

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15349572_1276444592406210_2657081491663236256_n.jp g?oh=00414900061f991c2790ed5607a4ab63&oe=58B018F9

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15284012_1276444569072879_974690343304303425_n.jpg ?oh=1a2063d3c25599e1379d2acb861a0f48&oe=58BC5F34

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15193651_1276444672406202_818452980656078666_n.jpg ?oh=f624ff8d3a24f7df9828834f21170d48&oe=58FCDE03

Murali Srinivas
3rd December 2016, 09:09 AM
ராகவேந்தர் சார்,

நான் அனுப்பிய புகைப்படங்களை மிக அழகாக தரவேற்றிய தங்களுக்கு கோடானு கோடி நன்றி. அன்று இரவே ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழல் ஆதலால் என்னால் முழுமையாக இருக்க முடியவில்லை. இறுதி வரை இருந்து புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ஜெய்குமாருக்கு நன்றி,

அன்புடன்

KCSHEKAR
3rd December 2016, 11:00 AM
சென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்த சென்ட்ரல் சினிமாவிற்கு ஞாயிறு மாலை சென்ற போது ரசிகர்கள் வழக்கம் போல் ஆர்பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். .
இப்படி மொழி தெரியாத, நம்முடைய வரலாற்றை முழுவதுமாக அறியாத வெளிநாட்டினரைக் கூட தன் ஒப்புயர்வற்ற நடிப்பினால் கட்டிப் போட நமது நடிகர் திலகம் இருந்ததால்தான் நம்மால் இன்றும் மார் தட்டிப் பேச முடிகிறது.

நன்றி முரளி சார்.
நடிகர்திலகம் காலம் கடந்த கலைஞர் என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

KCSHEKAR
3rd December 2016, 11:14 AM
நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களாக, முகநூல் மற்றும் WhatsApp இல் தொடர்பவர்கள் ஒன்றிணைந்து, நடிகர்திலகம் சிவாஜி - நண்பர்கள் குழு என்ற பெயரில் அமைப்பாக உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை பல்லாவரத்திலுள்ள ஓட்டல் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 100 நண்பர்கள் கலந்துகொண்ட இந்த சந்திப்பு நிகழ்வின் சில புகைப்படங்கள்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WAMeetingMathySpeech_zpsdmz4rqab.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WAMeetingMathySpeech_zpsdmz4rqab.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WAMeeting4_zpsbn4g8hb8.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WAMeeting4_zpsbn4g8hb8.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WAMeeting3_zpswu0m0liy.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WAMeeting3_zpswu0m0liy.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsAppFriendsMeeting2Oct2016_zpsj3gnzkfc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsAppFriendsMeeting2Oct2016_zpsj3gnzkfc.jpg.htm l)

Russellsmd
3rd December 2016, 11:58 PM
சிவாஜி பாட்டு - 35
---------------------------------

வீணை இசை என்ன இத்தனை இனிக்கிறது
என்று விசாரித்தால், வீணை பலா மரத்தில்தான்
செய்யப்படுகிறதாமே?

அதுவும் "வாணி"யே மீட்டினால்.. இனிமைக்கா
பஞ்சம்?
*****

மிதமிஞ்சிய ஒப்பனை அழகு. கற்பழிக்க விரட்டும்
தடியர்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகனின் மீது காதல். நாலு ஜோடிப் பாட்டு. நடிப்பதற்கே
வாய்ப்பில்லாத காட்சிகள்... இப்படியான கதாநாயகி நடிகர் திலகத்தின் படங்களில் காணக்
கிடைக்க மாட்டாள்.

நவராத்திரியில், பாசமலரில் - நடிகையர் திலகம்,

நெஞ்சிருக்கும் வரை, இரு மலர்களில் - புன்னகை
அரசி,

பாலும் பழமும், ஆலயமணியில் - அபிநய சரஸ்வதி,

அவன்தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாளில் -
கலைச் செல்வி,

வசந்த மாளிகையில், சிவகாமியின் செல்வனில் -
வாணிஸ்ரீ...

சராசரி நாயகிகளில்லை.. சாதித்த நாயகிகள்.

நடிப்பென்பதின் மனித உருவமாய்த் திகழ்ந்த
எங்கள் நடிகர் திலகத்தின் நேர் நின்று, பேர் வென்று சாதித்த நாயகிகள்.
*****

" ல(த்)தா"-

மறக்க முடியாத பெயர்.

கதவிடுக்கில் சிக்கிய பல்லியாய் அன்றாடங்களின் பிடியில் சிக்கி அல்லலுறும்
மனிதர்களுக்கு சினிமாக் கொட்டகைகள் ஆறுதல் தளமாகின்றன.

எல்லோருக்குமே சினிமா என்பது பொழுதுபோக்கில்லை. தன்னை, தன் கஷ்ட நஷ்டங்களை திரையும் உலவும் பிம்பத்தோடு
பொருத்திப் பார்த்துக் கொண்டு, ஒப்பிட்டுக் கொண்டு சந்தோஷிக்கவோ, வருந்தவோ செய்யும்
சாதாரணர்களுக்கு சினிமா ஒரு திருத்தலம்.

வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி் போல்
அலங்காரப் பதுமையாக மட்டும் வளைய வராமல், நடுத்தரக் குடும்பங்களில் திடீர் திடீரெனச் சூழும் இருளை விரட்டும் சுள்ளென்ற சூரியப் பெண் ல(த்)தாவை தமிழ் மக்கள் வசந்த மாளிகையில் கதாநாயகியாகப் பார்த்தார்கள்.

ஒரு அடிமைத் தனம் கிடையாது. பிறையில் ஏற்றி
வைத்த தீபமாட்டம் அழகில் அலப்பல் கிடையாது.
காசென்றால் வாய் பிளக்கும் கேவலம் கிடையாது.
எந்தவொரு சூழலிலும் தன் கம்பீத்தை சிறிதும் இழக்காத கதாநாயகி, தமிழ்த் திரைகள் பழகாத புதுசு.

அன்புக்கு சந்தனமாய் குழைவதும், அதிகாரத்தை
திராவகமாய் பொசுக்குவதுமாய் ஒரு குணம்.

தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கிறவன் காதலனே ஆனாலும், அவனே தனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியாய் இருந்தாலும், துணிந்து நெற்றிக் கண் திறக்கிற ல(த்)தா என்கிற கதாநாயகியை, நான் வசந்த மாளிகையை முதன் முதலாகப்
பார்த்த அந்தச் சின்ன வயசிலேயே பிடித்துப் போனது.

"ல(த்)தா"-

மறக்க முடியாத பெயர்.

( தலைவர், "லத்தா" என்று அழைத்து அழகாக்கிய
பிறகு "லதா" வாவது..? "லத்தா" தான்! )
*****

அந்தக் கால இரவுகளில் என்னோடு அதிக நேரம் வசித்த வானொலிப் பெட்டியிலிருந்து "அடுத்ததாக வசந்த மாளிகை படத்திலிருந்து ஒரு பாடல்" என்று குரல் வந்தால், எம். ஆர். ஆர். வாசு அறைக்குள் நுழைந்து உருட்டிய சத்தம் கேட்டு, கண் தெரியாத தவப்புதல்வன் நிர்மல் காதோடு
கை குவித்து கவனமாதல் போல நானும் ஆவலோடு காது தீட்டிக் காத்திருப்பது... இந்தப்
பாடலுக்காகத்தான்.

நன்றிகளுக்குரிய கவியரசர் நடிகர் திலகத்தை
வீணையாக உருவகப்படுத்திய போதே பாடல்
ஜெயித்து விட்டது.

"கலைமகள் கைப்பொருள்" கலைமகளின் மடிமீது
கிடக்கிறது.. குழந்தை போல. மடி கிடத்திப் பார்த்த
கலையன்னைக்குத் தன் திறமை நாதத்தால் பெருமை சேர்த்த குழந்தைதானே நம் நடிகர் திலகம்?

"கவனிக்க ஆளில்லையோ"...

கவனிப்பு - அன்பு மிகுந்த அக்கறை.

சரியான விரல்களால் மீட்டப்படாத அற்புதமாய்
நாயகன். நாதம் நிரம்பிய வாத்தியம் நல்லிசை
தாராமல் வீணாகிறதே என்கிற நாயகியின் கவலை, பாடலாகியிருக்கிறது.

கவலை எவ்வளவு இனிமை கேளுங்கள் என்கிறார்
திரை இசைத் திலகம்.

நாயகன் குறித்த நாயகியின் கவலையை மூன்று
பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் .. கவியரசரும், திரை இசைத் திலகமும்.

"உன்னிடம் ஆயிரம் ராகங்களே - என்றும்
உனக்குள் ஆயிரம் கீதங்களே..
இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் - இல்லை
எனக்கேனும் வழிகாட்டுங்களேன்!?"

- அக்கறை. காதல் மிகுதியில் கசியும் கரிசனம்.
கெட்டழியும் காதலனை நல்வழிப்படுத்த வேண்டும்
என்கிற துடிப்பு. தானே அந்த நல்ல காரியத்தைச்
செய்ய வேண்டுமென்பதுதான் நினைப்பு. இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் என்பதெல்லாம் சும்மா நடிப்பு.

"நான் யார் உன்னை மீட்ட?
வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட?
ஏனோ துடிக்கின்றேன்..
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்..!"

- சுய பரிசீலனை. காதலனை நல்வழிப்படுத்தும்
யோக்கியதை தனக்கிருக்கிறதா என்று தனக்குத்
தானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. தனது தவிப்பையே தன் கேள்விக்குப் பதிலாகத் தரும்
பரிதாபம்.

"சொர்க்கமும், நரகமும் நம் வசமே.
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே.
சத்தியம், தர்மங்கள் நிலைக்கட்டுமே.
இது, தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே."

- ஏக்கத்தையும், கவலையையும் அறிவுரையாக மாறும் உரிமை. தன் நேசத்திற்குரியவன் மேல்
தான் கொண்ட அன்பெல்லாம் திரட்டி தாயாகி
நிற்கிற பெருமை.
*****

சுசீலாம்மா ஆயிரம், ஆயிரம் என்று பாடும் போது
அந்த "ரம்", உள்ளே சிவப்பு பரவிய அறையில்
தலைவர் ஊற்றி, ஊற்றிக் குடிக்கும் மதுவை விட
போதை.
*****

சிவப்பு வெல்வெட் விரித்த மாடிப் படிகளில் ஊன்றி, ஊன்றி நடந்து வரும் அழகை வி்டுங்கள்..

வெளிர் நீல உடையணிந்த மெழுகுச் சிலை போல
நிற்கும் அழகை விடுங்கள்..

"இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே" என்று
வாணிஸ்ரீ பாட, உதடு சுழித்துச் சிரிக்கிற அழகை
விடுங்கள்..

"ஏனோ.. துடிக்கின்றேன்" என்று அழுது பாடும்
பெண் குரல் கேட்டதும், நின்று நிமிர்ந்து திரும்பிப்
பார்க்கும் ஒரு பார்வை போதாதா.. எங்கள் தலைவனை நினைத்து, நினைத்து நாங்கள்
கொண்டாட..!?

http://youtu.be/hx8VqmStqaE

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
4th December 2016, 07:57 AM
நன்றி.. ஆதிராம் சார்.. "வெள்ளிக் கிண்ணம்"
பதிவுக்கான பாராட்டுக்காக.

அந்த எனது நாற்காலிக் கற்பனையைத் தாங்கள்
பாராட்டியது பார்த்து மனம் மகிழ்ந்து குதித்தாலும்,
தங்களின் பாராட்டுப் பதிவின் கடைசி இரண்டு
அடிகளில் அந்த நாற்காலி குறித்து நீங்கள் எழுதியிருந்தீர்களே.. அந்த மாதிரியான துணிச்சலான எழுத்துகள் எனக்கு எப்போ கை வருமோ என்று ஒரு ஓரத்தில் கவலைப்படவும் செய்கிறது.
*****

கோபால் சார்...

நீங்கள் எழுதினால் "எத்தனை அழகு", இன்னும்
எத்தனை அழகு? ரசித்தேன்.

"மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்" என்று எழுதி விட்டு தூங்குவோம் பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் கேள்விக் குறிகள் அடைத்த உங்களின் குறும்பு... ரசித்தேன்.

அசங்கல், கசங்கலில்லாத புத்தம் புது பிரிண்டில் மீண்டும் படம் பார்த்தது போல அந்த "தவப்
புதல்வன்" பதிவு.. மிக ரசித்தேன்.

எத்தனை அருந்தினாலும் திகட்டுவதேயில்லை
உங்களின் எழுத்துத் தேன்.

தங்களைப் போன்ற திரியின் முன்னோடிகளின் சிறந்த எழுத்துகள் உதாசீனப்படுத்தப்
படுவதாய் தாங்கள் வருந்தும் பதிவுகளை இடையிடையே பார்க்க முடிகிறது.

நல்ல எழுத்துகளை வாசித்து, உடனுக்குடன் விமர்சிப்பது, ஆலயம் சென்று இறை வணங்குதல்
போல. சொல்ல வார்த்தையின்றி மௌனித்திருப்பது, கோபுரம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வது போல.

வணங்கும் முறைகள்தான் வேறுபடுகின்றன.
நல்ல எழுத்துகள் வணங்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

வெள்ளிக் கிண்ணத்தைத் தங்கக் கிண்ணமாக
மாற்றித் தந்த தங்கள் தமிழ்க் கரங்களுக்கு என்
நன்றி முத்தங்கள்.
******

வாசு சார்...

கடந்த பிப்ரவரியில் சென்னையில் நிகழ்ந்த வாட்ஸ் ஆப் குழும நண்பர்கள் சந்திப்பின் போது,
(கோபால் சார் கோடு போட, நீங்கள் தங்க நாற்கரசாலை போட்ட) இரும்புத் திரை காதல் காட்சியை ராகவேந்திரா சார் புண்ணியத்தில் பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் எழுத்து வழி ஓட்டிக்
காட்ட, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும்
பார்த்து மகிழ்ந்தேன்.

அப்புறம்.. தவப்புதல்வன் சண்டைக் காட்சி வர்ணனையை வியந்தேன். விரித்து வைத்த
நடிகர் திலகத்தின் கால்களுக்கூடே தங்களின் பெயர் கொண்டவர் படும் அவஸ்தைகளுக்கு
நீண்ட காலம் சிரிக்கலாம்.

அறுபதுகளில் நம்மவரோடு தந்தை நடிகவேள் நடித்துத் தந்த நிறைவுக்குக் கொஞ்சமும் குறைவின்றி எழுபதுகளில் வாசுவும் தந்திருக்கிறார். உதாரணம் - பாரத விலாஸ், தவப்புதல்வன்.
*****

முரளி சார்..

"செல்வம்" வரக் காத்திருக்கும் ஏழையாக நானும்.
******

ராகவேந்திரா சார்..

அய்யனின் அழகுத் திருவுருவங்களுடன் தாங்கள்
சொல்லும் "குட்மார்னிங்" களுக்காகவே எனது
காலைகள் விடிகின்றன.

Sent from my P01Y using Tapatalk

RAGHAVENDRA
4th December 2016, 08:14 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15337618_1277874645596538_7255858382237996140_n.jp g?oh=cd7e15ceffda68524b293c993e422711&oe=58C611ED

sivaa
4th December 2016, 11:35 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15337618_1277874645596538_7255858382237996140_n.jp g?oh=cd7e15ceffda68524b293c993e422711&oe=58C611ED

good morning

sivaa
4th December 2016, 11:36 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/10420405_646162108821145_7406483021127632999_n.jpg ?oh=fc2d97c2f2f907c17e30fbece71375fe&oe=58B9B8D9

எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது ...நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.
நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
PHOTO-(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)

(முகநூலில் இருந்து)

Harrietlgy
4th December 2016, 05:54 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 154 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/101877929714806852911569782234thanga%20pathakkam%2 03%20stars.jpg


சிவாஜி தொடர்ந்தார், `அதனால் நான் அவர்களின் மனதுக்கு உயரமாகத் தெரிகிறேன். அதனால் அவர்களின் கண்களும் என்னை உயரமாக பார்ப்பது போல் உணர்கின்றன. அவ்வளவுதான்! எப்பேர்ப்பட்ட உண்மை இது! இந்த உண்மை அவர் ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதை அவருக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. இப்படி எவரும் எதையும் கற்றுக்கொடுக்க முடியாத வியப்புக்குரிய நடிப்பின் எண்ணற்ற பரிமாணங்கள் இந்திய சினிமாவில் அவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு. நடிப்பில் அவர் தொடாத எல்லையே இல்லை எனலாம். நடிகர் திலகத்திடம் இயக்குநர் மகேந்திரன் இன்னொரு கேள்வியைக் கேட்டார். `சில படங்களில் உங்களின் நடிப்பு சற்று மிகையாக இருப்பதாக சிலர் குற்றம் சுமத்துகிறார்களே! இதற்கு உங்கள் விளக்கம் என்ன?’
`வாஸ்தவம்தான். நான் மறுக்கவில்லை. எல்லாம் தெரியாமலா செய்வேன்? மைக் இல்லாத காலத்தில் நாம் சத்தம் போட்டு பேசியிருக்கிறோம்.
அது போல ‘கட்டபொம்மன்’ காலகட்டத்தில், அப்படி நான் வசனம் பேசி, மிகையாக நடிக்காவிட்டால், அந்த ‘கட்டபொம்மன்’ மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டான்.
இன்று வரை அந்த ‘கட்டபொம்மன்’, வசனத்தை நினைவு வைத்து பேசவும் மாட்டான். சரி, அதே வசனத்தைக் குரல் தாழ்த்தி நான் யதார்த்தமாக இப்போது பேசிக்காட்டுகிறேன் கேள்!’ என்றவர், வெள்ளைத்துரையிடம் பேசும் அந்த வசனக் காட்சியை தணிந்த குரலில் மிக மிக யதார்த்தமாக பேசிக் காட்டினார்.
மகேந்திரனுக்கு பிரமிப்பாக இருந்தது… `இப்படி நான் பேசியிருந்தால், அன்றைக்கு படம் பார்த்த மக்கள் ரசித்திருக்க முடியுமா? இன்று வரை அவர்கள் அதை நினைவில் வைத்திருக்க முடியுமா?’ என்று என்னிடம் கேட்டார்.
பிறகு அவரே தொடர்ந்தார், `என்ன மாதிரி கேரக்டரை எனக்குக் கொடுக்கிறார்களோ…. அதற்குத் தக்கபடி நான் நடிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு பென்சிலை என்னிடம் தந்து கையெழுத்துப் போடச் சொன்னால், அதைக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கையெழுத்துப் போட்டுக் காட்டுவேன். பேனாவைக் கொடுத்தால், அதற்கேற்ற மாதிரி… ஸ்கெட்ச் பேனாவை தந்தால், அதற்கேற்ற மாதிரி… பெயிண்ட் அடிக்கும் பிரஷ்ஷைக் கொடுத்தால் அதற்கேற்ற மாதிரியும் எழுதுவேன். இப்படித்தான் எனக்கு தரப்படும் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, இயக்குநரது சொல்படி எனது நடிப்பும் வேறுபடுகிறது.’’
அவரது அற்புதமான இந்த சுயவிளக்கம் மகேந்திரனுக்கு திருப்தி அளித்தது. ஆனால், அவரது வாழ்வின் இறுதிப் பகுதியில் அவரை வைத்து படமெடுத்தவர்கள், இயக்கியவர்கள் அவரிடம் பெயிண்ட் அடிக்கும் பிரஷ்ஷைக் கொடுத்து விட்டார்கள். அத்தகைய படங்களின் வரிசையில் பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ மட்டுமே வித்தியாசப்பட்டு ஆறுதல் அளித்தது’ என்கிறார் இயக்குநர் மகேந்திரன்.
`நடிகர் திலகம் ஏன் இந்த மாதிரியான தனக்குப் பொருத்தமற்ற, சராசரித்தனமான படங்களில் நடித்து, தன்னை வருத்திக் கொள்கிறார்?’ என்ற கேள்வியும் மகேந்திரனுக்குள் எழுந்தது. அவருக்கு விளங்கிய உண்மை இதுதான்! ‘நடிப்பு ஆற்றலில் அவருக்கிருந்த வல்லமையின் உயரத்துக்கு ஏற்ற கதைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்ட கதாசிரியர்களோ,இயக்குநர்களோ நம்மிடம் கிடையாது. அவரை உலகமயமாக்கும் முனைப்புக் கொண்ட படத்தயாரிப்பாளர்களும் நம்மிடையே இல்லை. சராசரிக்கும் தகுதியற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், உப்புசப்பற்றதாக அமையும்போது, அதை ஈடுகட்ட அப்படிப்பட்ட காட்சிகளைக் கரையேற்றும் முனைப்பில் அவராகவே மிகையாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்.’ இப்படித்தான் மகேந்திரனால் நினைக்க முடிந்தது.
‘தங்கப்பதக்கம்’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி. மனைவி லட்சுமி இறந்து போய் மனைவியை எஸ்.பி சவுத்ரி வந்து பார்க்கும் காட்சி மறுநாள் படமாக்கப்படவிருந்தது.
முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து புறப்படும்போது ``மகேன், இங்கே வாப்பா…நாளைக்கு எடுக்கப்போற சீன் எவ்வளவு எமோஷனலான சீன் என்று உனக்குத் தெரியும். அந்தக் காட்சியில் எனக்கு வசனம் எப்படி அமையவேண்டும் என்று நினைத்துப் பார். அதற்கேற்ற வசனத்தை எழுதிக் கொண்டு வா!!’ என்றார் நடிகர் திலகம்.
மகேந்திரனும் அன்று நள்ளிரவு வரை யோசித்தார். நடிகர் திலகம் கேட்ட மாதிரி வசனம் எழுதினால், ஒரு சில படங்களில் அவர் ஏற்கனவே பேசி நடித்த காட்சி போல அது அமையுமே என்று நினைத்தவராக… ஒரு தீர்மானத்துக்கு வந்தார் மகேந்திரன். ஒரு பேப்பரில் கால் பக்கத்தில் சில வரிகளை மட்டுமே எழுதிக் கொண்டு மறுநாள் ஸ்டூடியோவுக்குப் போனார். ஒப்பனை அறையில் சிவாஜி இருந்தார். அதனால் செட்டில் இருந்த இயக்குநர் பி. மாதவனிடம் அந்த சில வசன வரிகளைக் காட்டினார். அவர் பதைபதைத்துவிட்டார்.``நேத்து அவர் அவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் இவ்வளவு கொஞ்சமா எழுதிட்டு வந்திருக்கீங்களே.. சீக்கிரம் போய் வேற டயலாக் எழுதுங்க ..’’
உதவி இயக்குநர் தேவராஜ் மகேந்திரன் எழுதிக் கொண்டு வந்ததைப்படித்து பார்த்துவிட்டு, `இதுதான் நல்லாருக்கு..மாத்தாதீங்க சிவாஜி சார்கிட்ட போய் விளக்கமாக சொல்லுங்கள்’ என்றார்.
மகேந்திரன் மேக்கப் ரூமுக்குப் போனார். தயங்கி தயங்கி தான் நினைத்தபடி எழுதிய அந்தக் காட்சியையும் சம்பந்தப்பட்ட வசனத்தையும் அவரிடம் விவரித்தார் மகேந்திரன்.
``நீங்கள் கமிஷனர் ஆபீஸிலிருந்து மனைவி இறந்த செய்தி கேட்டு வருகிறீர்கள். வீட்டுக்குள் நுழைந்ததும், ஆர்டர்லி உங்களுக்கு பின்பக்கமாக வந்து உங்கள் யூனிபார்மை கழற்றுகிறார். மனதுக்குள்ளேயே சுமையைத் தாங்கியபடி, நீங்கள் மவுனமாக படியேறிச் செல்கிறீர்கள்.மாடியில் மனைவியின் பிணத்தருகே நண்பர், மருமகள் எல்லோரும் உங்களது வரவை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
மனைவியின் உயிரற்ற உடலைப் பார்த்ததும், நீங்கள் உடனே கதறவில்லை. தினமும் வீட்டில் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நடக்கிற நிகழ்வை மனதில் கொண்டு, இரண்டு வாக்கியங்கள் மட்டுமே பேசுகிறீர்கள். கடைசியில்தான், `லட்சுமி’ என்று பொறுக்க முடியாமல் வெடித்துக் குமுறி,மனைவி மீது விழுந்து அழுகிறீர்கள்’ என்றார் மகேந்திரன்.
அமைதியாகக் கேட்டவர், மகேந்திரனை அழைத்துக் கொண்டு செட்டிற்குப் போனார். இயக்குநரிடம், `மகேந்திரன் சொன்ன மாதிரியே காட்சியை எடுங்க. அதுக்கேத்த மாதிரி லைட் பண்ணிக்குங்க’’ என்றதோடு மகேந்திரன் விவரித்த காட்சியையும் அவருக்கு விளக்கினார்.
`என் மனைவி தினமும் நான் யூனிபார்மிலேயே வர்றப்ப, மொதல்ல யூனிபார்மை கழட்டுங்க ‘’ என்று சொல்லி விட்டு தனது கோபத்தைக் காட்டுவாள். நான் வீட்டுக்கு வரும் வரை அவள் தூங்கமாட்டாள். இப்படி இதற்கு முன்னால் கணவன்– மனைவிக்குள் நடந்தவற்றை காட்சிகளாக படமாக்கி இருக்கிறோம்..
அதனால்–
(தொடரும்)

sivaa
4th December 2016, 10:12 PM
அரங்கு நிறைந்த காட்சிகளாக " வசந்த மாளிகை "
சென்னை அகஸ்தியாவில் இன்று மாலைக் காட்சி அதே உற்சாகம் நடிகர்திலகத்தின் நடிப்பினில் லயித்துப் போன எங்களுக்கு மீண்டும் அழகாபுரி இளவரசராக தரிசனம்,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15349803_1164470203669868_3446063439763786649_n.jp g?oh=492f56a70f99b90d88fd4ab79ea08047&oe=58B9231D

sivaa
4th December 2016, 10:12 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15327287_1164470210336534_6811201050007172123_n.jp g?oh=0df4dbcc024e41a70dfb9de3486abd68&oe=58BE7171

sivaa
4th December 2016, 10:13 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/l/t1.0-9/15317864_1164470100336545_725164967379781507_n.jpg ?oh=543897ee834c0ef6a86142cf7f3cf2bb&oe=58C053C5

sivaa
4th December 2016, 10:13 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15338740_1164470230336532_4878238978218877245_n.jp g?oh=98b20a276d6154fa0eb674664c76e394&oe=58BDFFD8

sivaa
4th December 2016, 10:15 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/t31.0-8/15259220_1164470293669859_8847803373709649291_o.jp g

(வசந்தமாளிகை பதிவுகள் அனைத்தும் முகநூலில் இருந்து)

sivaa
4th December 2016, 10:16 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/t31.0-8/15304629_1164470333669855_2062285888959954797_o.jp g

sivaa
4th December 2016, 10:16 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15241317_1164470460336509_1063205814989553443_n.jp g?oh=2f159008df9e7f684495445a84e08007&oe=58BA08AA

sivaa
4th December 2016, 10:17 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15241756_1164470510336504_1728914449588780799_n.jp g?oh=17b2559874dafb6f1946389d405aa2bc&oe=58F753A2

sivaa
5th December 2016, 05:05 AM
வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியான சிவந்த மண்.
வெளிநாட்டின் இயற்கை அழகுடன், ஆருயிர் அண்ணன் நடிகர்திலகம் மேக்கப் இல...்லாமல் நடித்த ( பட்டத்து ராணி பாடல் காட்சி தவிர படம் முழுவதும் மேக்கப் இல்லை) கலைகுரிசில் சிவாஜி இயற்கை அழகுடன் கூடிய சிவந்தமண் மக்களிடயே பெரும் வரவேற்புடன் மாபெரும் வெற்றி பெற்றது,
நடிகர் திலகம் மேக்கப் இல்லாமல் நடித்த பல படங்கள், அனைத்தும் இமாலய வெற்றி பெற்றன,உதாரணத்துக்கு சில படங்களை குறிப்பிடுகிறேன்,
நெஞ்சிருக்கும் வரை, மூன்று தெய்வங்கள் (வசந்தத்தில் ஓர் நாள் பாடல் காட்சி மட்டும் மேக்கப்), சிவந்தமண், பராசக்தி யில் பெரும் பகுதி மேக்கப் இல்லை,
இன்னும் பல படங்கள்

(முகநூலில் இருந்து)

sivaa
5th December 2016, 07:19 AM
நடிகர் திலகமும் விருதுகளும் .

நிறைய பேர் விருதுகளை பற்றிய அடிப்படை உண்மை கூட தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்கள். செய்து இந்த உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.

இந்திய அரசின் விருது.(சிறந்த நடிகர்)

இந்த விருது ஏற்படுத்த பட்டதே 1967 ஆம் ஆண்டில்தான். நடிகர்திலகம் நடிக்க வந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முடிவுற்ற நிலை. இந்த விருது 1952 முதலே இருந்திருக்குமானால் , அவருக்கு பராசக்தி,அந்த நாள்,உத்தமபுத்திரன்,வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை,படிக்காத மேதை,கப்பலோட்டிய தமிழன்,கர்ணன்,நவராத்திரி, என்ற 1967 க்கு முற்பட்ட படங்களிலும் ,தில்லானா மோகனாம்பாள்,தெய்வ மகன்,வியட்னாம் வீடு,ஞான ஒளி ,கெளரவம்,தங்க பதக்கம், முதல் மரியாதை போன்ற 1967 க்கு பிற்பட்ட படங்களுக்கும் சாத்தியம்.

மொழி மாற்ற படங்கள் இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,பாபு போன்ற படங்களுக்கு சாத்தியம் இல்லை.இது தேர்வு குழு தகுதி அடிப்படை. மொழி மாற்ற படங்கள்,இரவல் குரல் இவை தேர்வுக்கு பங்கு பெற முடியாது. 1971 இல் சவுந்தரா கைலாசம் சிவாஜிக்குத்தான் என்று சொல்லி, அங்கு சென்று வேறோர் பெயரை .சொல்லி ,தேர்வு பிரச்சினைக்கு உள்ளானதுடன் ,அகில இந்தியாவும் கை கொட்டி நகைத்தது. 1972 சட்ட சபையில் நெடுஞ்செழியன் உண்மையை போட்டு உடைக்க, சம்பந்த பட்ட நபர் நாணி ,அதனை திருப்பி விட்டார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனை பற்றி முழு விவரம் வேண்டுவோர் 1972 துக்ளக் இதழ்களை துழாவி
னால் உண்மைகள் வெளிச்சமாகும்.

1985 இல் முதல் மரியாதைக்குத்தான் என்று முடிவான நிலையில் ,ஜெயா (இத்தனைக்கும் இவர் சிவாஜி ரசிகர்) எம் .பீ பிரச்சினையை மனதில் வைத்து கடைசி நிமிடத்தில் கழுத்தறுத்ததை ,சக தேர்வு குழு உறுப்பினர் கோமல் ,சுபமங்களா இதழில் விரிவாக எழுதியுள்ளார்.

அதனால் இந்த விருது ,நடிகர்திலகத்தின் உன்னத நடிப்பு பொற்காலத்தில் (1952 to 1966) ஆரம்பிக்க படவே இல்லை.பிறகு தி.மு.க ,அமிதாப் போன்ற காரணிகள் குறுக்கே வந்தன.
Film fare விருது (தமிழ் மொழி சிறந்த நடிகர்)

இந்த விருது தமிழுக்கு ஏற்படுத்த பட்டதே 1972 ல்தான் . இதுவும் பிராந்திய அளவு தேர்ந்தெடுப்பதே. ஆனாலும் ஓரளவு புகழ்பெற்ற விருது.கமல் கூட குழந்தை தனமாக உண்மை தெரியாமல் (அல்லது சாமர்த்தியமாக மறைத்து) இதை பற்றி அரைகுறையாய் கூறியுள்ளார். இது ஏற்படுத்த பட்ட முதலிரண்டு வருடங்கள் சிவாஜிக்கே சென்றது. (ஞான ஒளி ,கெளரவம்).1974 இல் நான் அவனில்லை,தங்க பதக்கம் போட்டியில் நான் அவனில்லை ஜெமினிக்கு சென்றது. (நிஜமாகவே நல்ல தேர்வு).பிறகு சிவாஜி ஸ்டார் மட்டுமே ஆகிவிட்ட 1975 முதல் 1984 வரை குறிப்பிடத்தக்க படங்களே இல்லை. 1985 இல் முதல் மரியாதைக்கு மரியாதை வழங்க பட்டது.

அவர் உன்னதம் தொட்ட காலங்களில் Film Fare விருதே கிடையாது.(தமிழுக்கு)

தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது.

இந்த விருது ஆரம்பிக்க பட்டதே 1967 இல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு. இதன் லட்சணம் உங்களுக்கே தெரியும். அதிலும் ஏதோ காரணங்களுக்கு 1971 முதல் 1976 வரையும், 1983 முதல் 1987 வரை இந்த விருது வழங்க படாமல் நிறுத்து வைக்க பட்டுள்ளது. அதையும் மீறி தமிழக அரசு மனமேயில்லாமல் தெய்வ மகனுக்கு வழங்கியாக வேண்டிய கட்டாயம்.

இப்போது புரிந்திருக்குமே ,இந்த விருதுகள் அவர் உன்னதம் தொட்ட முதல் 15 வருடங்கள் ஏற்படுத்த படவே இல்லை.பிறகு மிக மோசமான அரசியல் மூன்று முறை விளையாடி உள்ளது.

இனியாவது நம் ரசிகர்கள் உண்மை புரிந்து புலம்புவதை நிறுத்தி கொள்ளவும். இந்த உண்மைகள் நிறைய திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கே தெரியாது.

அது சரி, அவர் கலைமாமணி பெற்றது 1962 இல். இது கூட விக்கி யில் தவறாக குறிக்க பட்டுள்ளது. ஆதாரத்துடன் திருத்தவும்.


தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.

‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல் செய்ததே, நம்மை ஆண்டவர்கள் காட்டிய நன்றிக்கடன்!’

தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர் பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!

நடந்தது என்ன?

தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.

பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.

சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.



ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.

‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.

என்னைப் பொறுத்த வரையில் எத்தனை முறை நான் தேர்வு கமிட்டியில் இருந்தாலும், அங்கே சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் தேர்வுக்கு வந்தால், நடிகர் திலகத்தைத் தான் சிறந்த கலைஞராகத் தேர்வு செய்வேன். ஏனெனில் நடிப்புக் கலையில் அவரே சிறந்தவர்!’

தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.

‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல் செய்ததே, நம்மை ஆண்டவர்கள் காட்டிய நன்றிக்கடன்!’

தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர் பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!

நடந்தது என்ன?

தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.

பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.

சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.



ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.

‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.

என்னைப் பொறுத்த வரையில் எத்தனை முறை நான் தேர்வு கமிட்டியில் இருந்தாலும், அங்கே சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் தேர்வுக்கு வந்தால், நடிகர் திலகத்தைத் தான் சிறந்த கலைஞராகத் தேர்வு செய்வேன். ஏனெனில் நடிப்புக் கலையில் அவரே சிறந்தவர்!’
(தினமணி பத்திரிகையில் வெளிவந்த கனவுக்கன்னிகள் பகுதியில் இருந்து)



நிறைய பேர் விருதுகளை பற்றிய அடிப்படை உண்மை கூட தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்கள். செய்து இந்த உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.

இந்திய அரசின் விருது.(சிறந்த நடிகர்)

இந்த விருது ஏற்படுத்த பட்டதே 1967 ஆம் ஆண்டில்தான். நடிகர்திலகம் நடிக்க வந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முடிவுற்ற நிலை. இந்த விருது 1952 முதலே இருந்திருக்குமானால் , அவருக்கு பராசக்தி,அந்த நாள்,உத்தமபுத்திரன்,வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை,படிக்காத மேதை,கப்பலோட்டிய தமிழன்,கர்ணன்,நவராத்திரி, என்ற 1967 க்கு முற்பட்ட படங்களிலும் ,தில்லானா மோகனாம்பாள்,தெய்வ மகன்,வியட்னாம் வீடு,ஞான ஒளி ,கெளரவம்,தங்க பதக்கம், முதல் மரியாதை போன்ற 1967 க்கு பிற்பட்ட படங்களுக்கும் சாத்தியம்.

மொழி மாற்ற படங்கள் இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,பாபு போன்ற படங்களுக்கு சாத்தியம் இல்லை.இது தேர்வு குழு தகுதி அடிப்படை. மொழி மாற்ற படங்கள்,இரவல் குரல் இவை தேர்வுக்கு பங்கு பெற முடியாது. 1971 இல் சவுந்தரா கைலாசம் சிவாஜிக்குத்தான் என்று சொல்லி, அங்கு சென்று வேறோர் பெயரை .சொல்லி ,தேர்வு பிரச்சினைக்கு உள்ளானதுடன் ,அகில இந்தியாவும் கை கொட்டி நகைத்தது. 1972 சட்ட சபையில் நெடுஞ்செழியன் உண்மையை போட்டு உடைக்க, சம்பந்த பட்ட நபர் நாணி ,அதனை திருப்பி விட்டார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனை பற்றி முழு விவரம் வேண்டுவோர் 1972 துக்ளக் இதழ்களை துழாவி
னால் உண்மைகள் வெளிச்சமாகும்.

1985 இல் முதல் மரியாதைக்குத்தான் என்று முடிவான நிலையில் ,ஜெயா (இத்தனைக்கும் இவர் சிவாஜி ரசிகர்) எம் .பீ பிரச்சினையை மனதில் வைத்து கடைசி நிமிடத்தில் கழுத்தறுத்ததை ,சக தேர்வு குழு உறுப்பினர் கோமல் ,சுபமங்களா இதழில் விரிவாக எழுதியுள்ளார்.

அதனால் இந்த விருது ,நடிகர்திலகத்தின் உன்னத நடிப்பு பொற்காலத்தில் (1952 to 1966) ஆரம்பிக்க படவே இல்லை.பிறகு தி.மு.க ,அமிதாப் போன்ற காரணிகள் குறுக்கே வந்தன.

துக்ளக்கில் வநதது அலைஓசையில் மறுபதிப்பு செய்திருந்தார்கள் அதனை மதிஒளி
மறுபதிவு செய்திருந்தது அது என் கைவசம் இருக்கிறது.

RAGHAVENDRA
5th December 2016, 07:42 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15317816_1279274018789934_7707160489588754877_n.jp g?oh=798c4162412fb7492ba582f16b7dc6fd&oe=58F90EBD

Harrietlgy
5th December 2016, 08:49 PM
தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.

‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல் செய்ததே, நம்மை ஆண்டவர்கள் காட்டிய நன்றிக்கடன்!’

தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர் பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!

நடந்தது என்ன?

தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.

பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.

சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.



ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.

‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.

என்னைப் பொறுத்த வரையில் எத்தனை முறை நான் தேர்வு கமிட்டியில் இருந்தாலும், அங்கே சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் தேர்வுக்கு வந்தால், நடிகர் திலகத்தைத் தான் சிறந்த கலைஞராகத் தேர்வு செய்வேன். ஏனெனில் நடிப்புக் கலையில் அவரே சிறந்தவர்!’

தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.

‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல் செய்ததே, நம்மை ஆண்டவர்கள் காட்டிய நன்றிக்கடன்!’

தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர் பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!

நடந்தது என்ன?

தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.

பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.

சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.



ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.

‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.

என்னைப் பொறுத்த வரையில் எத்தனை முறை நான் தேர்வு கமிட்டியில் இருந்தாலும், அங்கே சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் தேர்வுக்கு வந்தால், நடிகர் திலகத்தைத் தான் சிறந்த கலைஞராகத் தேர்வு செய்வேன். ஏனெனில் நடிப்புக் கலையில் அவரே சிறந்தவர்!’
(தினமணி பத்திரிகையில் வெளிவந்த கனவுக்கன்னிகள் பகுதியில் இருந்து)




துக்ளக்கில் வநதது அலைஓசையில் மறுபதிப்பு செய்திருந்தார்கள் அதனை மதிஒளி
மறுபதிவு செய்திருந்தது அது என் கைவசம் இருக்கிறது.

SIvaa sir, please post I am early wait for that. I never read that article. I would like to know the details.

RAGHAVENDRA
6th December 2016, 03:25 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15284172_1280513931999276_3256018560467299465_n.jp g?oh=ae4e5c91fb516370093e96b775141097&oe=58F42EED

மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் 1966ல் மோட்டார் சுந்தரம் பிள்ளை தொடங்கி 1976ல் வெளியான சித்ரா பௌர்ணமி முடிய 20 படங்களில் நடித்துள்ள அன்புச் சகோதரி கலைச்செல்வி ஜெயலலிதா, நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த பாசமும் பக்தியும் உடையவர். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த படங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிகளைப் பெற்றுள்ளன. அதில் குரிப்பிடத்தக்கது 1972ம் வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா படமாகும். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக கருப்பு வெள்ளை வரலாற்றில் மிகப் பெரிய வசூல் பெற்ற படம் பட்டிக்காடா பட்டணமா. அதே போல் நடிகர் திலகத்தின் 150வது படத்தில் நடித்த பெருமையும் பெற்றவர். அவருடைய மறைவு சினிமா உலகம், அரசியல் உலகம் இவ்விரு உலகத்திலுமே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கு நமது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய நமது உளமார்ந்த பிரார்த்தனைகள்.

Russellsmd
6th December 2016, 11:55 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161206090845976_20161206111719443_zps8aua jeqo.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161206090845976_20161206111719443_zps8aua jeqo.jpg.html)

Sent from my P01Y using Tapatalk

vasudevan31355
6th December 2016, 02:57 PM
சகலகலாவல்லியை சாவு தழுவியது.

கல்வி, கலை, அரசியல் என்று பல்துறையிலும் முத்திரை பதித்திட்ட எங்கள் மன்னவரின் 'சுந்தரி'யே!

அனைத்து நெஞ்சங்களும் பதைபதைக்க, துடிதுடிக்க, தாங்கவொண்ணாதபடி துவள வைத்துச் சென்றது ஏன்?

https://i.ytimg.com/vi/TDgB5nydLc8/maxresdefault.jpg


பிடிக்காதவர்களைக் கூட இன்று உன் மேல் பித்து பிடிக்க வைத்த விந்தைதான் என்ன?

தமிழக அரசியல் இன்றுமுதல் 'வெண்ணிற ஆடை' அணிகிறது.

உலக சினிமா வரலாற்றில் தலைவரை மிஞ்ச ஆள் கிடையாது

தமிழக அரசியலில் 'காவிரி தந்த கலைச்செல்வி'யை மிஞ்ச ஆள் கிடையாது.

இழந்து தவிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் என் கதறும் கண்ணீருடன் கூடிய ஆழ்ந்த அஞ்சலிகள்.

sivaa
6th December 2016, 03:45 PM
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

Murali Srinivas
6th December 2016, 08:28 PM
கலையுலகிலும் அரசியல் உலகிலும் தனித்துவமான முத்திரை பதித்து ஒரு மாபெரும் ஆளுமையாக வலம் வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

Russellsmd
6th December 2016, 10:03 PM
விவரந் தெரிந்த நாள் முதலாய் இந்தக் குரலைக்
கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

திகட்டலோ, சலிப்போ சிறிதுமில்லை.

ஒவ்வொரு முறை செவியுறும் போதும் ஒரு இனம்
புரியாப் பரவசத்தையே தருகின்ற அந்தக் குரல்,
இன்றென்னவோ பரவசத்தைப் பிடுங்கிக்
கொண்டு கண்ணீரைத் தந்தது.
*****

உண்மை அழுகிய நாற்றம், கண்ணிய மீன்கள் சாகடிக்கப்பட்டுக் காய்ந்து கருவாடாகி நாறும்
நாற்றம்.. எல்லாம் கலந்து கட்டி குமட்ட வைக்கிற
அரசியல் சந்தைக்குள் எழுந்த இங்கிதமற்ற
பேரிரைச்சலுக்குள் அந்தக் குரலினிமையை நான்
தொலைத்திருந்தேன்.

"ஆஹா.. ஓஹோ.. உன்னைப் போலுண்டா" முகஸ்துதிச் சத்தத்திற்குள் அமிழ்ந்து போன
அந்தக் குரலைத் தேடிக் கொண்டிருந்தேன்.

தனக்கும், எனக்கும் ஊடே இடையூறாய் ஒரு ஒலிபெருக்கியை நிறுத்திக் கொண்ட போலியான
அந்தக் குரலில் நான் தேடிய உண்மையின் ஒலியில்லாமல் தவித்திருந்தேன்.
*****

அந்தக் குரலுக்கென்று ஒரு உலகமுண்டு. அழகான உலகம். உண்மைக்கு மிக சமீபமாய்
எப்போதுமிருக்கிற உலகம்.

இந்த உலகத்திலும் நன்றி உண்டு. பெற்றுக் கொண்ட இன்பங்களுக்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆத்மார்த்தமாக வழங்குகிற நன்றி. பொய்யானதாயிருக்காது.

இந்த உலகத்திலும் கண்ணீர் உண்டு. உருகித் திரண்டு உண்மையாகவும், நெகிழ்வால் உந்தப்பட்டு ஆனந்தமாகவும். போலியானதாயிருக்காது.
*****

அந்தக் குரல் அழகானது. கம்பீரமானது. காலம் எழுப்புகிற ஓலத்தில் தன்னைத் தொலைக்காத
குரல். தனக்கான உலகத்தை விட்டு விலகி வேறொரு பொய்யான உலகத்துள் தன்னை ஒளித்துக் கொண்டதன்றி வேறொரு பாவமுமறியாத உன்னதக் குரல். அத்தனை குரல்களின் வாழ்த்தையும் தனதாக்கிக் கொண்ட
சிம்மக்குரலோடு சேர்ந்து சாதித்த குரல். வெற்றிக் குரல்.

நான் குரலென்று குறிப்பது வெறும் சப்தக் குரலையல்ல. கலை எனும் குரல். திறமை எனும்
குரல்.

இதோ.. எனக்கு மிகப் பிரியமான குரல் எனக்களித்த கண்ணீரில்.. நன்றிச் சொட்டுகள்!

http://youtu.be/qWVHRqrxz1Y

Sent from my P01Y using Tapatalk

RAGHAVENDRA
7th December 2016, 06:29 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15349751_1281984821852187_3392984207624922145_n.jp g?oh=2ec5fd01d7f9e7746f109aedd6cb39cd&oe=58B07831

RAGHAVENDRA
7th December 2016, 06:42 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15400999_1281990385184964_2857989535028950606_n.jp g?oh=59e1a46811b99a0fa9faa2a583881145&oe=58FB07D8

RAGHAVENDRA
7th December 2016, 07:32 AM
சோ - இந்த ஓரெழுத்து தமிழக ஊடகத்துறையிலும் அரசியல் துறையிலும் பலரது தூக்கத்தைக் கெடுத்த எழுத்து.
திரையுலகில் நடிகர் திலகம் என்னும் மோதிரக்கையால் குட்டுப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர் திரு சோ ராமசாமி.
உண்மையைத் தவிர வேறேதும் எழுதாத பத்திரிகையாக துக்ளக் விளங்க வேண்டும் என்பதில் சோவின் உறுதி பிரமிக்கத் தக்கது.
ஒரு சில விஷயங்களில் எனக்கு அவருடன் அபிப்ராய பேதம் உண்டு.
அரசியலைப் பொறுத்த மட்டில் நல்லவர்கள் வரவேண்டும் என விருப்பப்பட்டவர், நடிகர் திலகத்தை மட்டும் அரசியல் ரீதியாக ஆதரிக்கவில்லை.
குறிப்பாக நடிகர் திலகம் மறைந்த பொழுது உள்ளே அரைப்பக்கத்திற்கு கருப்பு வெள்ளையில் அவருடைய படத்துடன் அஞ்சலி செலுத்தியவர் மூப்பனார் மறைந்த பொழுது அட்டையில் முழுப்பக்கத்திற்கு வண்ணப்படத்தை இடம் பெறச் செய்தார். மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது இதெல்லாம் ஒரு விஷயமா எனத் தோன்றலாம்.
ஆனால் என்னைப் போன்ற ஏராளமான சிவாஜி ரசிகர்களுக்கு அது ஒரு மன வருத்தமே.
இருந்தாலும் அவர் பத்திரிகையாற்றிய அளப்பரிய சேவையினால் தான் இன்றும் பத்திரிகை தர்மம் என்பது தழைத்து வருகிறது.
நேர்மையைத் தவிர வேறொன்றறியாத மனிதராய் இறுதி வரை வாழ்ந்த திரு சோவின் மறைவு தமிழக ஊடகத்துறை, திரைத்துறை, நாடகத்துறை உள்ளிட்ட அவர் பங்களிப்பினைப் பெற்ற அத்துணைத் துறைகளுக்கும் பேரிழப்பே.
எல்லாவற்றிற்கும் மேலாக எந்த ஒரு விஷயத்தையும் லாஜிகலாக அதாவது தர்க்கரீதியாக அணுக வேண்டிய முறையை அவர் எழுத்துக்கள் தான் எனக்கு போதித்தது. தொடர்ந்து துக்ளக் இதழை படித்து வருபவர்கள் தானாகவே எந்த வித சட்ட ரீதியான விஷயத்தையும் விவாதிக்கும் வல்லமையைப் பெறுவார்கள் என்பது திண்ணம்.
திரு சோ அவர்களுக்கு உளமார்ந்த அஞ்சலி. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வோம்.

adiram
7th December 2016, 12:35 PM
"அதிர்சசியுற்றேன்"
=================

'ஜெயலலிதா'....... தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, தமிழக அரசியல் உலகில் மட்டுமல்ல, தமிழர் வாழ்விலிருந்து அகற்ற முடியாத பெயர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த ஒரு ஆளுமை நிறைந்த சக்தி.

இம்முறை பதவியேற்றத்தில் இருந்தே அவர் முகத்தில் பழைய பொலிவில்லை. மிகவும் சோர்ந்து காணப்பட்டார். கடசியிலிருந்தோ, மக்களிடமிருந்தோ, எதிர்க்கட்ச்சிகளிடமிருந்தோ எந்த நெருக்கடியும் நிச்சயமாக இல்லை. அவரது கோட்டைக்குள் கூடவே இருந்தவர்களால் ஏதோ வெளியில் சொல்ல முடியாத நெருக்கடிகளால் தவித்திருக்கிறார், பாவம்.

அப்பல்லோவில் அட்மிட் ஆனார் என்றபோதே மனது துணுக்குற்றது. தொடர்ந்து வந்த செய்திகளில் இருந்த முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் கவலை படர்ந்தது. இருந்தபோதும் 'அம்மா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்' என்ற செய்திகள் மனதுக்கு அமைதியை தந்தது.

ஆனால் நான்காம் தேதி மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தியும், தொடந்து நிலைமை கவலைக்கிடம் என்ற தகவல்களும் நம் நம்பிக்கையை தகர்த்தது. இறைவா இந்த செய்திகள் பொய்யாக இருக்க வேண்டுமே என்று மனம் துடித்தது. ஆனால் இயற்கையின் தீர்ப்புக்கு முன் எல்லாம் தோற்றது. எது நடக்க கூடாது என்று துடித்தோமோ அது நடந்து விட்டது.

ஆம், தமிழக அரசியலில் முப்பது வருடங்களாக ஆர்ப்பரித்த பெண் சிங்கத்தை இழந்து விட்டோம். சூறாவளியாக சுழன்றடித்த அந்த ஆளுமை, அந்த கம்பீரம் நேற்று முழுவதும் ராஜாஜி மண்டப வாயிலில் மீளா துயிலில் கிடந்த போது, கண்ணீர் விடாதோர், கதறாதோர் உண்டோ.

எழுபத்தைந்து நாட்கள் நீ என்ன நினைத்தாய், என்ன சொல்ல துடித்தாய் என்பது யாருக்கும் தெரியாது போனதே தாயே. உன் இறுதி நாட்களில் குள்ளநரி கூட்டத்தின் கைகளில் விளையாட்டு பொருளாகி போனாயே. மூன்று தொகுதிகளின் வெற்றிசெய்தி உனக்கு உத்வேகம் தந்து உன்னை எழுந்து உட்கார வைத்து விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் வெற்றியை தந்தனரே. ஆனால் தேர்தல் நடந்ததே உனக்கு தெரியுமா என்ற ஐயப்பாடு இப்போது எங்களுக்குள் எழுகிறதே.

ஆள், அம்பு, சேனை பரிவாரம் எல்லாமிருந்தும் ஏதுமற்றவராய், அந்த கடைசி நேர மூச்சுகாற்றுக்காக எவ்வளவு துடித்திருப்பாய் என்று எண்ணும்போதே இதயம் கனத்து, கண்களில் நீர் பெருக்கெடுக்கிறதே தாயே.

உன் தலைவரையும், எங்கள் அண்ணனையும் காணச்சென்று விட்ட தாயே, நாங்களும் வரிசையில் நிற்கிறோம், வந்து விடுவோம்.

ஆனால் அங்கேயும் நான் உனக்கு எதிர்க்கட்ச்சிதான். உன்னை உரிமையோடு எதிர்ப்பதில் உள்ள சுகமே தனி.

சென்று வா... தாயே

கண்ணீருடன்
ஆதி.

Murali Srinivas
7th December 2016, 11:01 PM
சோ - சிறந்த வழக்கறிஞர். TTK போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லீகல் அட்வைஸர். UAA குழுவில் இணைந்து அமெச்சூர் நாடகங்களில் நடிக்க தொடங்கி பின் சொந்தமாக விவேகா பைன் ஆர்ட்ஸ் என்ற குழுவை தொடங்கி அதுவரை தமிழ் நாடகத்துறை காணாத அங்கத நகைசுவை நாடங்களை அரங்கேற்றி வெற்றிகரமாக இயக்கி நடித்தவர், திரைப்பட நடிகராக, திரைப்பட கதை வசனகர்த்தாவாக, திரைப்பட இயக்குனராக பரிமளித்தவர். சொந்தமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை நடத்தியவர், அனைத்திற்கும் மேலாக ஒரு அரசியல் பத்திரிக்கை எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற இலக்கணத்தை தமிழகத்திற்கு வகுத்துக் காட்டியவர். இத்துணை பன்முகத்தன்மை கொண்ட ஒரு மனிதனாக வலம் வந்த திரு சோ அவர்களின் மறைவு உண்மையிலே ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஒரு அரசியல் விமர்சகராக அவர் தொட்ட உயரங்கள் பிரமிக்கத்தக்கவை. கிட்டத்தட்ட கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் தமிழகம் மட்டுமின்றி அகில இந்தியாவெங்கும் அவர் பழகாத அவருக்கு தெரியாத அரசியல் தலைவர்கள் யாருமே இருக்க முடியாது என்பது இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் அறியாத செய்தி.

இத்துணை சிறப்பு வாய்ந்த ஒருவரை நமது நடிகர் திலகம்தான் திரையுலகில் அறிமுகப்படுத்தினார் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். அதுவும் தவிர 1970 முதல் 1975 வரை பெருந்தலைவரின் தலைமையை ஆதரித்தும், ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம் மற்றும் நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் ஒரு moral support ஆக செயல்பட்ட பத்திரிக்கைகளில் துக்ளக்கின் பங்கு முக்கியமானது வலிமையானது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். திரு சோ அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

RAGHAVENDRA
8th December 2016, 08:40 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x395/15355554_1283319281718741_8636773700846093781_n.jp g?oh=348405516c19d6843bd1725b9ff0ec6b&oe=58B11B3E

RAGHAVENDRA
8th December 2016, 09:00 AM
http://i.ndtvimg.com/i/2016-12/jaya-sivaji-ganesan-650_650x400_71481097375.jpg

.....

Jayalalithaa was a skilled Bharat Natyam dancer. She had her arangetram (on-stage debut) in May 1960 when she was 12. Personalities from the film industry came for the performance. Shivaji Ganesan, mega-star, was the guest of honour.

Jayalalithaa recalled, "When Shivaji gave the speech, he said 'this girl is really beautiful like a golden idol, and one day in the future she will come into the film industry and will get a great welcome. I wish that for her.'"

"I'm certain he wouldn't have even dreamt that in some years, I would work alongside him as a heroine," she wrote.


From NDTV website at: http://www.ndtv.com/tamil-nadu-news/jayalalithaa-wrote-of-pining-for-mother-blowing-away-sivaji-ganesan-1634946

RAGHAVENDRA
8th December 2016, 09:02 AM
தங்கச்சிலை எனத் தலைவரால் போற்றப்பட்ட கலைச்செல்வி ஜெயலலிதாவின் எதிர்காலத்தை 1960லேயே தலைவர் தீர்க்கதரிசியாய்க் கூறியதை வரலாறு இன்று நிரூபித்துள்ளது.

KCSHEKAR
8th December 2016, 10:14 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NTaboutJaya_zpsfurhjy1e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NTaboutJaya_zpsfurhjy1e.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/JayaAboutNTPg1_zps4mjyb4mw.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/JayaAboutNTPg1_zps4mjyb4mw.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/JayaAboutNTPg2_zpsvdaxzx7x.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/JayaAboutNTPg2_zpsvdaxzx7x.jpg.html)

KCSHEKAR
8th December 2016, 10:16 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Page1_zpsc2ignlk4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Page1_zpsc2ignlk4.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Page2_zpsaenihyti.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Page2_zpsaenihyti.jpg.html)

vasudevan31355
8th December 2016, 11:09 AM
http://quintype-01.imgix.net/swarajya/2016-12/8fe26407-7d63-4324-ab79-729eb578c90f/Cho_JJ_Posters.jpg?w=661&q=60&fmt=pjpeg&auto=format

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. மேடம் மறைந்த மணித்துளிகளில் நடிகர் திலக ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்புக்குப் பாத்திரமான நமது பிரியத்துக்குரிய 'சோ' அவர்கள் இறந்து விட்டதாக தகவல் வந்ததும் தாங்கவே முடியவில்லை. எப்பேர்பட்டவர்கள் எல்லாம் நம்மை விட்டு மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு நன்றக நினைவில் இருக்கிறது. 1970-ல் சோ கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் நடைபெற்ற பொருட்காட்சியில் தன்னுடைய புகழ் பெற்ற 'முகமது பின் துக்ளக்' நாடகத்தை ஒருநாள் இரவு 7.00 மணிக்கு நடத்திக் கொண்டிருந்தார். (அந்த நாடகத்தை நடத்தவிடாமல் அவருக்கு அப்போது தமிழகத்தில் அரசியல் தொடர்பான பல தொல்லைகள். அதையெல்லாம் மீறி தன் மனதைரியத்தால் ஜனங்களின் பேராதரவோடு அந்த நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார் அவர்)

கடலூரிலும் அவருக்கு நாடகம் நடத்த விடாமல் பிரச்னைகள் தந்தனர் அவருடைய விமர்சனங்களை தாங்க மாட்டாதோர். நாடகம் நடக்கும் போது கற்களை மேடை மீது வீசி கலாட்டா செய்தார்கள் அன்றைய அரசியல் ரவுடிகள். இதற்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் தொடர்ந்து அவர் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். கூட்டம் அதிகம் வேறு. கலவரம் அதிகமாவதை பார்த்து அம்மா என்னை நாடகம் முடிவதற்கு முன் கடலூர் துறைமுகத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். பின் சாப்பிட்டுவிட்டு கடலூர் துறைமுகம் கமர் தியேட்டரில் அப்போது ஓடிக்கொண்டிருந்த கே.எஸ்.ஜியின் 'தபால்காரன் தங்கை' படத்துக்கு அனைவரும் சென்று பார்த்துவிட்டு நொந்து வந்தோம்.

http://quintype-01.imgix.net/swarajya/2016-12/71621968-ca21-4f87-844a-f5eb6b975935/q..jpg?w=661&q=60&fmt=pjpeg&auto=formatt

துணிச்சல், எதற்கும் கலங்காமல் தன் கருத்துக்களை முன் வைக்கும் தைரியம், தன்னைத்தானே கலாய்த்துக் கொள்ளும் பக்குவம், கேலி, கேள்வி என்று அம்சமான 'துக்ளக்' பத்திரிகை, டியர் மிஸ்டர் துக்ளக், டாக்டர் என்று ரகளையான பக்கங்கள், சினிமா விமர்சனம், அதற்கு டைரக்டரின் பதில் கடிதம், வாசகர்களின் சிறந்த கேள்விக்கு துக்ளக் ஆண்டுவிழாவில் மூன்று பைசா பரிசு என்று தமிழகத்தை களை கட்ட வைத்தார் சோ. துக்ளக்கின் தீவிரமான வாசகர்களை நானறிவேன். அதை இன்று பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்து வருவோரும் உண்டு.

சினிமாவில் நகைச்சுவை சாதனை. நினைவில் நின்றவள், தேன்மழை, பொம்மலாட்டம் என்ற முக்தாவின் படங்களில் 'சோ' வா நாகேஷா? என்று போட்டி வைத்தால் யார் டாப் என்று சொல்வது சிரமம். 'தங்கப்பதக்கம்'கேட்கவே வேண்டாம். 'யிஸம்' களை அவர் படுத்தியபாடு.... 'விளையாட்டுப்பிள்ளை'யில் வில்லனாகக் கூட நடித்தது விட்டார்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/niraikudamrunning_zpstgmxbghu.jpg[/URL]

http://www.chennaicitynews.net/wp-content/uploads/2015/10/MANORAMA5_cho.jpg

அரசியல் வித்தகர், அறிவாளி, ராஜதந்திரி, சூத்திரதாரி, பத்திரிக்கையாளர், ஆலோசகர் என்று அவர் அரசியலில் செய்யாததே இல்லை. அதையெல்லாம் மீறி அந்த முட்டை கண்களை மலங்க மலங்க விழித்து அம்மாஞ்சியாய் அமர்க்களம் பண்ணின அந்தக்கால பிளாக் அண்ட் ஒயிட் 'சோ'வை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
9th December 2016, 07:52 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15284969_1284605558256780_2001814495638997123_n.jp g?oh=b17ee2fdacba88f88c25beedb03a5614&oe=58FC7D4D

RAGHAVENDRA
9th December 2016, 07:53 AM
வாசு சார்
கலைச்செல்வி ஜெயலலிதா மற்றும் திரு சோ இருவருக்கும் தாங்கள் செலுத்திய அஞ்சலி நெஞ்சைத் தொடும் வகையில் உணர்வு பூர்வமாக உள்ளது.

Russellxor
9th December 2016, 05:54 PM
பெண்ணின் பெருமை.

எந்தவொரு கதாநாயகரும் ஆரம்பத்திலேயே கதாநாயக பாத்திரம் செய்து நல்ல பெயரெடுத்த பின் இப்படியொரு கதாபாத்திரத்தை தவிர்க்கவே விரும்புவார்கள்.அப்படி யாரும் செய்ததாக வரலாற்றிலும் இல்லை.தங்கள் இமேஜ் கெட்டுவிடும் என்ற மாயை வளர்த்துக் கொள்பவர்கள்தான் இது போன்ற பாத்திரங்களை தவிர்த்து விடுகின்றனர்.ஆனால் உண்மை என்ன?இது போன்ற வேடங்களை செய்து விட்டால் கூட அந்த வேடங்களுக்கு கௌரவம் செய்து விடுவார்களா என்ன?
யாரால் முடியும்? என்று கௌரவம் படத்தில் கண்ணன் கேட்பார்.என்னால முடியும் என்றுபாரிஸ்டமிருந்து பதில் வரும். அது தான் நினைவுக்கு வருகிறது.
அவர் செய்த அந்த இமேஜை காலத்தால கரைக்க முடிந்ததா?செய்யற வேஷத்துல என்ன இமேஜ்?அதை எப்படி செய்யணும்னு காட்டறதுலதாண்டாஅடங்கி இருக்கு உன் இமேஜ்னு செய்து காட்டிய ஒரே நடிகன்.


நடிகர்திலகம் ஆஜராகும் காட்சிகள் மட்டும்:
அவர் தோன்றும் அந்த முதல் காட்சியில் பைத்திய ஜெமினியை சவுக்கால் விளாசும் காட்சி.நடிக்கிறாரா இல்லை உண்மையிலேயே அடிக்கிறாரா?
நாகையா வர அடிப்பதை நிறுத்தி விட்டு சோபாவில் ஓரத்தில் உட்கார்வார்.நடிகன் ஒருவன் ஒரு காட்சியில் வெறுமனே வந்து நின்றாலும் தன் இருப்பை மக்களிடம் ஈர்க்க வைக்க வேண்டும்.சில வருடங்களுக்கு முன் ஒரு பிரபல இயக்குனர்,
"என் படத்தில் சும்மா நின்று கொண்டே இருக்கும் காட்சி என்றாலும் எனக்கு திருப்தியாகும் வரை அவர்களை அந்த இடத்திலிருந்து நகர விட மாட்டேன்,வசன உச்சரிப்புகளை மட்டுமல்ல அங்க அசைவுகளையும்,பாவங்களையும் சரியாக வெளிப்படுத்தினால் தான் நான் விடுவேன்.சண்டை காட்சி என்றால் ஒரு அடி அடித்தாலும் அந்த அடி, அடிமாதிரி இருக்க வேண்டும் அப்போது தான் விடுவேன்"என்று கூறியது நினைவுக்கு வருகிறது.அந்த இயக்குனரும் நடிகர்திலகத்தின் ரசிகரே.
சரி காட்சிக்கு வருவோம்.அவர் உட்கார்ந்திருக்கும் போஸை பார்க்க வேண்டுமே.நாகையா திட்டிக் கொண்டே இருக்க ஜெமினி அழுது கொண்டே இருக்க மற்றவர்கள் பிரமை பிடித்தது போல் நிற்க.,இவரோ எதையும் சட்டை செய்யாதவர் போல் கோபத்தை உள்ளடக்கி உட்கார்ந்திருப்பார். ரொம்ப ஸ்டைலா இருக்கும்.அனுதாபம் கொண்டு ஜெமினியை பார்க்க வேண்டிய அந்த காட்சியையே தன் பக்கம் திருப்பியிருப்பார்.
*****
தொடரும்

RAGHAVENDRA
10th December 2016, 08:15 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15349833_1285905201460149_6934365716055041342_n.jp g?oh=8973968b983c5cbbf2b0a534c33d42d3&oe=58B2B863

vasudevan31355
10th December 2016, 11:12 AM
நடிகர் திலகத்தின் உயிரான இதயங்களே!

http://www.thehindu.com/multimedia/dynamic/02378/19cp_Anbu_jpg_2378404e.jpg

நடிகர் திலகத்தின் ஆறாவது படமான 'அன்பு' படத்தைப் பற்றி முழு விவரங்களும் எழுதி நமது திரியில் முன்பு பதித்திருந்தேன். மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் திரு.கந்தசாமி பிள்ளை ('சுக்ரவதனீ' புகழ்) 1953ஆம் ஆண்டின் 'பேசும்படம்' இதழ் ஒன்றை அரிதாகக் கிடைக்கப் பெற்று அதை pdf பைலாக 'சுக்ரா' வில் தரவேற்றம் செய்திருந்தார். அதில் 'அன்பு' படத்தின் முழு வசனங்களும் அடங்கியிருந்தன. அந்த பைலை நான் டவுன்லோடு செய்து இப்போது இங்கே பதிவு செய்கிறேன்.

நான் முன்னம் எழுதியிருந்த 'அன்பு' பதிவுடன் இப்போது புதிதாக ஸ்கேன் செய்த 'பேசும் படம்' பதிவையும் இணைக்கிறேன். இதிலிருந்து 'அன்பு' படத்தைப் பற்றிய முழு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மிகுந்த சிரமங்களுக்கிடையில் யாருக்கும் கிடைக்கப் பெறாத இந்த அரிய பேசும்பட இதழை pdf பைலாக தரவேற்றிய பேராசிரியருக்கு என் வாழ்நாள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவு ஒரு அரிய பொக்கிஷமாக இங்கே பதிவாவதில் மிகுந்த சந்தோஷம் அடைகிறேன். நன்றி

இனி பதிவு.

வெளிவந்த ஆண்டு- (24.07.1953)

கதை - எம். நடேசன்

வசனம் - விந்தன்

சங்கீதம் - டி.ஆர். பாப்பா

படப்பிடிப்பு - ஜி.விட்டல்ராவ்

நடனம் - தண்டாயுதபாணி பிள்ளை, ஹீராலால், கோபால கிருஷ்ணன்

ஸ்டூடியோ - நியூடோன், சிட்டாடல்

தயாரிப்பாளர் இயக்குநர் - எம்.நடேசன்

தயாரிப்பு - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4112aa.jpg

கதை:

ராஜமாணிக்கம் (கே. துரைசாமி) ஒரு முதியவர். அவர் ஒரு ஆபிசில் பணிபுரிகிறார். அவரின் முதல் தாரத்து பிள்ளைகள் செல்வமும், (நடிகர் திலகம்) லஷ்மியும்.(எஸ். பத்மா) மனைவியை இழந்த ராஜமாணிக்கம் இரண்டாம் தாரமாக தங்கம் (டி.ஆர். ராஜகுமாரி) என்ற இளம் குணவதியை மணந்து கொள்கிறார். தங்கம் குணத்திலும் தங்கம். மற்ற சித்திகள் போலல்லாது செல்வத்தையும், அவன் அக்கா லஷ்மியையும் அன்புடன் வளர்க்கிறாள். மாற்றாந்தாய் என்ற மனப்பான்மை சிறிதும் இன்றி செல்வத்தையும், லஷ்மியையும் பராமரிக்கிறாள் அவள். செல்வமும் தன் சொந்த தாயாகவே அவளை எண்ணி அவளிடம் அன்பு செலுத்துகிறான். ஆனால் லஷ்மியோ தன்னைச் சேர்ந்தவர்கள் போடும் தூபத்தின் காரணமாக லஷ்மியை வெறுக்கிறாள். ஆனாலும் தங்கம் லஷ்மி மேல் உயிரையே வைத்திருக்கிறாள். செல்வம் கல்லூரியில் படிக்கிறான்.

அதே ஊரில் விஜயா (எம்.ருஷ்யேந்திர மணி) என்ற பணக்கார பெண்மணி வசித்து வருகிறாள். அவளுடைய பெண் மாலதி. (பத்மினி) நல்லவள். அவளும் செல்வம் பயிலும் கல்லூரியிலேயே பயிலுகிறாள். செல்வமும், மாலதியும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகின்றனர்.

மாலதியின் அம்மா விஜயா கணவனை இழந்தவள். விதவை. ஆனால் வயதானாலும் நாகரீக மோகம் சற்று கொண்டவள். தங்கத்துக்கு நடன ஆசிரியையாக இருக்கும் கலா 'மிஸ்டர்' லை (டி.எஸ்.பாலையா) என்ற மோசக்காரனை விஜயாவிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறாள். திருமலை என்னும் அந்த லை தன்னை ஒரு மிருகங்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவர் என்று விஜயாவிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். விஜயா தன் அண்ணன் பர்மாவில் தன் மனைவியுடன் குடியிருந்த போது போரின் காரணமாக ஜப்பான் காரர்களின் குண்டு வீச்சினால் தன் அண்ணனும், அண்ணியும் இறக்க நேரிட்டதாக திருமலையிடம் கூறிக் கண்ணீர் வடிக்கிறாள். அவர்களுக்கு ஒரு மகன் இருந்ததாகவும் அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை என்றும் கூறுகிறாள். இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இறந்து போன விஜயாவின் அண்ணன் மகன் தான்தான் என்று விஜயாவை நம்ப வைத்து ஏமாற்றி விடுகிறான் திருமலை. ஏமாளி விஜயாவும் தன் அண்ணன் மகன்தான் திருமலை என்று நம்பி விடுகிறாள். திருமலை கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டின் நிர்வாகத்தில் தலையிட ஆரம்பிக்கிறான். தன்னை நேசித்த கலாவிற்கும் (குமாரி ராஜம்) கடுக்காய் கொடுத்து விடுகிறான். அது மட்டுமல்ல. அத்தை பையன் என்ற போர்வையில் மாலதியை திருமணம் செய்து கொள்ளவும் திட்டம் தீட்டுகிறான். விஜயாவும் அவன் பேச்சுப்படியே நடக்கிறாள்.

ராஜமாணிக்கமும், தங்கமும் லஷ்மிக்கு நல்ல செலவு செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். லஷ்மியின் மாமியார் ஒரு பேராசை பிடித்தவள். தன்னிடமிருந்த நகைகளைக் கூட கழற்றி லஷ்மியின் வரதட்சணைக்காக கொடுத்து விடுகிறாள் சித்தி தங்கம். அப்போது கூட தன் சித்தி மேல் லஷ்மிக்கு பாசம் அரும்பவில்லை. குடும்பம் ஏழ்மை நிலையை அடைந்து விடுகிறது. திடீரென்று ராஜமாணிக்கம் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கை ஆகி விடுகிறார். தங்கமும், லஷ்மியும் அவரை உடன் இருந்து கவனிக்கின்றனர். ஆனாலும் லஷ்மி இன்னும் தங்கத்துடன் ஒட்டாமலே இருக்கிறாள். அதில்லாமல் இன்னொரு எதிர்பாராத சம்பவம் வேறு நடக்கிறது. இந்த சமயத்தில் தங்கம் கர்ப்பவதியாக வேறு ஆகி விடுகிறாள்.

படுத்த படுக்கையில் இருக்கும் ராஜ மாணிக்கம் தங்கத்தின் மாறா தூய்மையான அன்பைக் கண்டு நெகிழ்ந்து "உன்னால் மட்டு எப்படி எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிகிறது?" என்று கேட்கிறார். அதற்கு தங்கம் சிறுவயதில் தான் தாயை இழந்து விட்டதால் தன்னுடைய அப்பா வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்ள அந்த மாற்றாந்தாய் சித்தி தன்னை அளவுக்கதிமாகக் கொடுமைப் படுத்தியதாக கணவனிடம் கூறுகிறாள். (சித்தி சிறு வயதில் அவள் சித்தியால் கொடுமைப்படுத்தப் படுவது பிளாஷ் பேக் காட்சிகளாகக் காட்டப்படும்) மேலும் தங்கம் அதற்கு அந்த சித்தி மேல் தவறில்லை என்றும் முதுமை கொண்ட ஆண்கள் இளம் மங்கையரை இரண்டாம் தாரமாக ஆக்கி அவர்களுடைய இளமையையும், வாழ்வையும் நாசம் செய்து விடுகிறார்கள் என்றும் அதனால் அந்தப் பெண்கள் யாரிடமும் அன்பு செலுத்த முடியாமல் கொடுமைக்காரிகளாகி விடுகிறார்கள் என்றும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறி விடுகிறாள். இது ராஜமாணிக்கத்திற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. 'தானும் முதியவந்தானே....தாரத்தை இழந்தவுடன் இளம் மங்கையான தங்கத்தை மணந்து அவள் இளமை வாழ்வைக் கெடுத்து விட்டேனே... அதைத்தான் தங்கம் இவ்வளவுநாள் மனதில் பூட்டி வைத்திருந்து இன்று கொட்டிவிட்டாளோ' ...என்ற குற்ற உணர்ச்சி மிகுதியாகி உடல்நிலை மிக்க மோசமடைந்து உயிரை விடுகிறார் அவள் தன்னால் கர்ப்பவதி ஆகியிருக்கிறாள் என்பது கூடத் தெரியாமல். தான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சொன்னதை தன் கணவர் தன்னைக் கற்பனை செய்து பார்த்து இப்படி திடுமென உயிரை விட்டு விடுவார் என்பது அவள் எதிர்பார்க்காத ஒன்று. கணவனை இழந்து தங்கமும், தந்தையை இழந்து செல்வமும் பரிதவிக்கின்றனர்.

ஏழ்மை நிலைமையிலும், தன் சித்தி நிலைமையையும் எண்ணிப் பார்க்கும் செல்வம் தன் காதலைத் துறக்க முடிவு செய்கிறான். மாலதியை சந்திப்பதைத் தவிர்க்கிறான். மாலதி அவன் ஏன் தன்னை நிராகரிக்கிறான் என்று குழம்புகிறாள்.

சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்கு வந்து விட்ட செல்வம் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு வேலை தேடி அலைகிறான். அவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. அப்படியே ஒரு இடத்தில் வேலை கிடைத்தும் அவனுக்கும் அவன் சித்திக்கும் தொடர்பு இருப்பதாக கருதி அந்த வேலையும் அவனுக்குக் கிடைக்காமல் போகிறது.

இதற்கிடையில் சித்தி தங்கம் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். தனக்குத் தங்கை பிறந்ததை எண்ணி பெருமகிழ்வு கொள்கிறான் செல்வம். ஆனால் ஊரார்?! தங்கத்தையும், செல்வத்தையும் இணைத்து தாறுமாறாகப் பேசுகின்றனர். இளம் வயது செல்வத்தை சித்தி தங்கம் வைத்திருக்கிறாள் என்று வாய் கூசாமல் பேசுகின்றனர். கணவன் இறந்த பிறகு குழந்தை பெற்றெடுத்த தங்கத்தின் குழந்தைக்கு தகப்பன் செல்வம் என்று நாக்கில் நரம்பில்லாமல் குற்றம் சுமத்துகின்றனர். குடும்பம் மிக வறுமையில் வாடுகிறது.

செல்வத்தின் நிலைமை புரியாமல் அவனையே எண்ணிக் கொண்டிருக்கும் மாலதியின் மனதில் விஷத்தை விதைக்கிறான் அயோக்கியன் திருமலை. செல்வம் மாலதியை மறந்து அவன் சித்தி தங்கத்துடன் குடித்தனம் நடத்துவதாகவும், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை கூட பிறந்திருப்பதாகவும், ஊரார் அதைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதாகவும் திருமலையும், விஜயாவும் மாலதியிடம் கூறுகின்றனர். நம்ப மறுக்கும் மாலதி தானே நேரில் சென்று உண்மையை தெரிந்து வருவதாக செல்வத்தின் வீட்டிற்கு செல்கிறாள். விதி அங்குதான் விளையாடுகிறது. மாலதி செல்வத்தின் வீட்டினுள் நுழைய அப்போது செல்வம் கண்களில் விழுத்த தூசியை தங்கம் வாயால் ஊத, அதைக் கண்ட மாலதி செல்வமும், தங்கமும் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தவறாக முடிவு செய்து விடுகிறாள். ஊராரும், தன் தாயும், திருமலையும் சொன்னது சரிதான் என்று நம்பியும் விடுகிறாள். செல்வத்தையும், தங்கத்தையும் தாறுமாறாகத் திட்டி விடுகிறாள். தன் சித்தியை தங்கம் திட்டுவதைப் பொறுக்க முடியாத செல்வம் மாலதியை அடித்து விடுகிறான். மாலதி அழுதபடியே சென்று விடுகிறாள். சித்தி தங்கமோ செல்வத்திடம் "மாலதி உன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அந்த அன்பினால்தான் அப்படிப் பேசி விட்டாள். நீ மாலதியிடம் சென்று மன்னிப்பு கேட்டு உண்மை நிலையை அவளுக்கு உணர்த்து. நாம் குற்றமற்றவர்கள் என்று அவளிடம் விவரமாக எடுத்துச் சொல். அவள் உணர்ந்தால் சரி. இல்லையென்றால் நீ, நான், என் குழந்தை மூவரும் இந்த உலகத்தை விட்டே சென்று விடலாம்" என்று உறுதியாகக் கூறி விடுகிறாள்.

தங்கம் குழப்பமாய் இருக்கும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தங்கத்தைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படி விஜயாவிடம் கேட்கிறான் திருமலை. தன் அண்ணன் பையன்தான் திருமலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் விஜயா முறைப் பையனான அவனுக்கே மாலதியை மணமுடித்து வைக்க சம்மதம் அளித்து திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறாள். மாலதியிடமும் இது பற்றிக் கூறுகிறாள். மாலதி செய்வதறியாது ஊமையாய் நிற்கிறாள்.

திருமண பொருட்கள் வாங்க திருமலையும், விஜயாவும் வெளியே சென்றிருக்கும் நேரம் செல்வம் மாலதியை அவள் வீட்டில் சந்தித்து அவளிடம் உண்மை நிலைகளை தெரியப்படுத்துகிறான். 'தன் சித்தி அன்பே உருவான தெய்வம்... அவளும், தானும் களங்கமற்றவர்கள்... சித்திக்கு தன் வயதான தகப்பனால்தான் குழந்தை பிறந்தது... ஊர் அதை மாற்றி பேசியது'... என்று கண்ணீருடன் கூறுகிறான். தான் மாலதி மேல் கொண்ட காதலை மறக்கவில்லையென்றும், ஏழ்மை நிலைமையின் காரணமாக தான் காதலை புறக்கணித்ததையும் கூறுகிறான். மாலதி உண்மையை உணர்ந்து கொள்கிறாள். சித்தியின் அன்பையும் புரிந்து கொள்கிறாள்.

மாலதிக்கும், திருமலைக்கும் திருமணம் நடக்க இருக்கும் நேரம் மாலதி அதுவரை பொறுமையாய் இருந்து விட்டு தன் தோழிகள் உதவியுடன் தாலி கட்டும் சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறி செல்வத்தை சந்தித்து சித்தி முன்னிலையில் கோவிலில் செல்வத்தை திருமணமும் செய்து கொள்கிறாள். அங்கே கல்யாணத்தில் மணப்பெண் மாலதி ஓடிவிட்டதாக செய்தி பரவ, அதிர்ந்து நிற்கும் விஜயா தன் மகள் மாலதியைத் தேடி கோவிலுக்கு ஓடி வருகிறாள். அங்கே செல்வத்தின் மனைவியாக மாலதியைப் பார்த்து அதிர்கிறாள், இனி மாலதி தனக்கு மகள் இல்லை என்று கூறி தன் சொத்தில் ஒரு சிறு பங்கு கூட இனி அவளுக்கில்லை என்று கோபமாகக் கத்தி, அவளை அறைந்துவிட்டு வெளியேறி, மீண்டும் திருமண மண்டபத்திற்கு சென்று தன் குடும்ப நண்பர் ஒருவரின் பெண்ணான ரீட்டாவை அதே முகூர்த்தத்தில் திருமலைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ரீட்டாவின் சம்மதத்தைக் கேட்கிறாள். ரீட்டாவும் தன் சுதந்திரத்திற்கு யாரும் தடை செய்யாத பட்சத்தில் அந்த திருமணத்திற்கு தயார் என்று சம்மதம் தெரிவிக்கிறாள். ரீட்டாவை தன் மகளாக தத்து எடுத்துக் கொள்வதாகவும், இனி சொத்துக்கள் எல்லாம் ரீட்டாவுக்கே சேரும் என்றும், மாலதி இனி தனக்கு மகளே அல்ல... ரீட்டாதான் இனி தன் மகள் என்றும் வாக்களித்து அவசரப்பட்டு அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கிறாள் விஜயா. கல்யாணம் நின்று போய் தன் மானம் காற்றில் பறந்து விடக்க கூடாது என்று விஜயா கோபத்தில் அந்த முடிவெடுக்கிறாள்.

மாலதி, செல்வம் திருமணம் முடிந்து சித்தி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாகவே வாழ்கின்றனர். வேலை கிடைக்காததால் செல்வம் 'நோ வேகன்ஸி' போர்டு எழுதி அதை விற்று காசு சம்பாதிக்கிறான். மாலதி அவனுக்குத் தெரியாமல் போஸ்ட் ஆபிஸ் சென்று அங்கு வரும் படிக்கத் தெரியாத மக்களுக்கு கடிதம் எழுதித் தந்து, மணிஆர்டர் பாரம் நிரப்பித் தந்து அவளும் காசு சம்பாதிக்கிறாள். இதன் இடையில் விஜயாவின் முன்னாள் கணக்கப்பிள்ளை மூலமாக செல்வத்திற்கு ஒரு ஆபிசில் நல்ல வேலை ஒன்று கிடைக்கிறது. ஆபிசில் பொறுப்பாகப் பணியாற்றும் செல்வம் நல்ல நிலையை அடைகிறான். குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழ்கிறது. ஏழ்மை மறைகிறது. சித்தியும், மாலதியும் ரொம்ப அன்னியோன்யமாக இருக்கின்றனர். செல்வத்திற்கு ஆண் குழந்தையும் பிறக்கிறது.

ரீட்டாவைத் தத்தெடுத்த விஜயா மிகுந்த கஷ்டங்களுக்கு உள்ளாகிறாள். ரீட்டாவும், திருமலையும் நிறைய கடன் வாங்கி மனம் போன போக்கில் செலவு செய்து கூத்தடிக்கின்றனர். திருமலை ரீட்டாவின் தலையாட்டி பொம்மை ஆகிறான். விஜயாவின் சொத்து முழுதும் காலியாகிறது. வீடு கூட ஏலத்திற்கு வந்து விடுகிறது.
விஜயாவை மிகுந்த கொடுமைப் படுத்துகிறாள் ரீட்டா. மிகுந்த மனக் கவலையினால் விஜயா படுத்த படுக்கை ஆகிறாள். ரீட்டாவை ஏன் மகளாகத் தத்தேடுத்தோம் என்று தன்னே நொந்து கொள்கிறாள். அவளுக்குத் தண்ணீர் தரக் கூட யாரும் கிடையாது. விஜயா இப்போது தன் மகள் மாலதியை எண்ணி அழுகிறாள்.

விஜயாவின் இறந்து போன கணவர் அதாவது மாலதியின் அப்பா விஜயாவிற்குத் தெரியாமலேயே மாலதி பெயரில் அந்த வீட்டை உயில் எழுதி வைத்து விட்டு இறந்திருப்பார். அந்த உயில் கணக்கப் பிள்ளை மூலமாக செல்வத்திற்கும், மாலதிக்கும் வந்து சேர்கிறது. அந்த உயிலில் உள்ளபடி வீடு மாலதியின் பேரில் இருப்பதால் வீடு ஏலத்தில் போகாமல் இருக்க கோர்ட்டுக்கு போக முடிவு செய்கின்றான் செல்வம். தன் தாய் படுத்த படுக்கையாய் கிடப்பதை, திருமலையும், ரீட்டாவும் அவளைக் கொடுமைப் படுத்துவதைக் கேள்விப்பட்ட மாலதி மிகுந்த துயருறுகிறாள். தாயைப் பார்க்கத் துடிக்கிறாள்.

மாமனார் வீட்டில் சொத்து கரைந்து விட்டதாக் கூறி லஷ்மியும் தன் கணவனுடன் செல்வத்தின் வீட்டிற்கே வந்து சேர்கிறாள். அவளுக்கும் அந்த உயில் விஷயம் தெரிந்து விடுகிறது. தன் குணத்தில் கொஞ்சமும் மாறாத லஷ்மி அந்த உயில் இருந்தால் மாலதி தன்னை மதிக்க மாட்டாள் என்று கேட்பாரின் பேச்சைக் கேட்டு அந்த உயிலைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் முயற்சிக்குத் தயாராகிறாள்.

இதற்கிடையில் அந்த உயிலை பற்றிக் கேள்விப்பட்ட திருமலையும், ரீட்டாவும் மிகுந்த கோபமடைகின்றனர். வீட்டின் ஏலத்தின் மூலம் ஏலம் விட்டது போக மீதமுள்ள பணம் தங்களுக்கு பணம் கிடைக்கும் என்று நம்பியிருந்த அவர்களின் கனவு வீடு மாலதி பெயரில் உயில் எழுதப் பட்டிருப்பதால் தகர்கிறது. இதனால் பழி வாங்க அந்த உயிலை செல்வம் வீட்டில் இருந்து கடத்தி விட வேண்டும் என்று திருமலையும், ரீட்டாவும் திட்டம் போடுகின்றனர். டூப்ளிகேட் நகலை ரிஜிஸ்தர் ஆபீஸிலிருந்து தான் கடத்தி வருவதாயும், திருமலை நிஜ உயிலை செல்வம் வீட்டிலிருந்து கடத்தி வர வேண்டுமென்றும் முடிவாகிறது. உயிலைத் திருட திருமலை செல்வம் வீட்டிற்கு செல்ல, அங்கே பீரோவில் இருக்கும் உயிலை யாருக்கும் தெரியாமல் லஷ்மி எடுக்க, அதைப் பார்த்த திருமலை லஷ்மியிடமிருந்து அந்த உயிலைப் பறித்து ஓடுகிறான். லஷ்மி பயந்து சப்தம் போட, அங்கு ஓடி வரும் செல்வம் திருமலையுடன் உயிலைக் கைப்பற்ற சண்டையிடுகிறான். சண்டையில் அடிபட்டு கீழே விழும் திருமலை தன் கைத்துப்பாகியை எடுத்து செல்வத்தை சுட, துப்பாகிக் குண்டைத் தன் மேல் வாங்கிக் கொண்டு செல்வத்தைக் காக்கிறாள் சித்தி என்ற அந்த அன்புத்தங்கம்.

சுட்ட குற்றத்திற்காக கைதாகிறான் திருமலை. ஆபிசில் டூப்ளிகேட் நகலை திருடப் போன ரீட்டாவும் போலீசிடம் மாட்டிக் கொள்கிறாள். இருவரும் கம்பி எண்ணுகின்றனர். குண்டடிபட்டு படுக்கையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் தங்கம். தன் மகளைக் காண அங்கு வரும் விஜயா தன் தவறுகளை உணர்ந்து சித்தி தங்கத்திடமும், தன் மகள் விஜயாவிடமும் மன்னிப்பு கோருகிறாள். தான் யாரையுமே குற்றவாளியாக நினைக்கவில்லை என்று கூறி தன் உயிரை விடுகிறாள் சித்தி தங்கம். எல்லோரும் அவளை இழந்து கதறுகின்றனர். குறிப்பாக செல்வம். தன் அன்பால் அனைவர் மனதிலும் குடிகொண்ட அந்த நன்மங்கை அனைவர் உள்ளங்களிலும் தெய்வமாக இன்னும் குடி கொண்டு வாழ்கிறாள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

இனி செல்வமாக நடிகர் திலகம் .

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/15-4.jpg

நடிகர் திலகத்தின் ஆறாவது படம். அருமையான பாத்திரம். தன் சித்தியின் அன்பில் கட்டுண்டு, அவள் மேல் தன் உயிரை வைத்திருக்கும் அற்புத பாத்திரம். பத்மினியைக் காதலிக்கவும் நல்ல வாய்ப்பு. சும்மா நடிகர் திலகத்திடம் இளமை கொப்பளிக்கிறது. முதல் படமான 'பராசக்தி' யில் சற்றே ஒல்லியாகத் தெரிந்தவர் இந்த 'அன்பு' திரைப்படத்தில் நல்ல வாளிப்பாக, மிக்க அழகாக, கல்லூரி மாணவன் போல தோற்றமளிக்கிறார். நெற்றியில் புரண்டு விழும் அழகான முடிக் கற்றைகள் அவரை இன்னும் அழகாகக் காட்டுகின்றன. சித்தி மேல் வைத்துள்ள பாசம், அப்பாவின் மேல் கொண்ட அன்பு, அக்கா லஷ்மி மேல் வேண்டா வெறுப்பாக பாசம் என்று பிய்த்து உதறுகிறார்.

காலேஜுக்கு சைக்கிளில் சுறுசுறுப்பாக செல்லும் வேகம், பத்மினியுடன் செல்லமாக மோதல்கள், கல்லூரி பிக்னிக்கில் நண்பர் குழாமுடன் படகில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு (அப்பா! என்ன ஒரு அழகு நடிகர் திலகம்!) பத்மினி பட்டாளத்திடம் ஆடவர் பெருமையை பாடலில் உரைத்திடும் அழகு (ஆடவரே நாட்டினிலே - சுரதா), பத்மினி படகில் இருந்து ஆற்றில் விழுந்தவுடன் உடனே குதித்து காப்பாற்றும் அழகு, பத்மினியுடன் மென்மையாக ஆரம்பிக்கும் காதல் படலம், பத்மினி வீட்டில் பின்னிருந்து பியானோ இசைத்தபடி "என்ன என்ன இன்பமே... வாழ்விலே எந்நாளும்'...பாடும் அற்புத ஸ்டைல், கல்லூரி 'ஒதெல்லோ' டிராமாவில் ஒதெல்லோவாக கர்ஜிக்கும் சிங்கமாக பட்டை கிளப்பும் பாங்கு, (மனிதர் ஆறாவது படத்திலேயே என்ன ஒரு கம்பீரம் காட்டுகிறார்! ஒதேல்லோவுக்கு தன் மனைவி டெஸ்டிமோனா மீது எழும் சந்தேகங்களை முகத்தில் அப்படியே பிரதிபலிக்கும் அற்புதம், அவளைக் கொல்வதா வேண்டாமா என்ற குழப்ப சிந்தனை, அவளை முத்தமிட எத்தனிக்கும் அழகு, இறுதியில் அவளை சந்தேகப் பேய் என்னும் நோயால் கைகளால் கழுத்தை நெரித்து கொலை செய்யும் கொடுரம் என்று அசல் ஒத்தேல்லோவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்)

தந்தை இறந்தவுடன் கதறல், ஏழ்மை நிலையில் வேலை தேடி அலையும் பரிதாபம், வேலை கிடைக்காமல் 'நோ வேகன்ஸி' போர்ட் எழுதி பாடி ஆடியபடியே விற்றுத் தீர்க்கும் சாமர்த்தியம், பத்மினியை விட்டு ஒதுங்கும் போதெல்லாம் காதலை நினைத்து சோகமுற்று அதை மறைத்து வைக்கும் நயம், சித்தி குழந்தை மேல் அண்ணன் என்ற பாசம் காட்டும் உணர்வு, பத்மினி தன்னை சித்தியுடன் தொடர்பு படுத்தி பேசியவுடன் காட்டும் ஆங்கார ஆத்திர உணர்ச்சிகள், பின் சித்தியின் சொல்லுக்கு அடங்கி மீண்டும் பத்மினி வீடு சென்று தன் நிலையை அழுதபடி விளக்கும் அற்புதம், (இந்த இடத்தில் நடிப்பில் கொடி கட்டி விசேஷமாகப் பறப்பார்) பத்மினியை மணந்து அன்னியோன்யமாக குடும்பம் நடத்தும் அழகு, ஆபிசில் வேலை கிடைத்தவுடன் மறுபடி உடையிலும், நடையிலும் காட்டும் பணக்காரக் களை, தனக்கு மகன் பிறந்தான் என்று கேட்டவுடன் பூரிக்கும் குதூகலம், தங்கை தன் வீட்டிற்கே கணவனுடன் வந்து 'டேரா' போடப் போகிறாள் என்று தெரிந்து செய்யும் இயல்பான நையாண்டி நக்கல், உயிலைக் காப்பற்ற பாலையாவுடன் போடும் உணர்வுபூர்வமான சண்டை, சித்தி இறந்தவுடன் காட்டும் சோகம் என்று படம் முழுக்க தன் தனி முத்திரையை ஆழமாகப் பதித்து விடுகிறார் நடிகர் திலகம். அன்பால் சித்தி இப்படத்தில் எல்லோரையும் கட்டிப் போடுகிறார் என்றால் நடிகர் திலகம் தன் இளமை துள்ளும் நடிப்பால் நம் அனைவரையும் கட்டிப் போடுகிறார்.

மற்ற கலைஞர்கள் .

விஜயாவாக எம்.ருஷ்யேந்திர மணி அருமையாக நடித்துள்ளார். பணக்கார கர்வம், அகந்தை, மகள் மீது பாசம், மகள் தன்னை மீறி வேறு திருமணம் செய்து கொண்டதற்கு கோபம், ரீட்டாவை தத்தெடுத்து அவள் கொடுமைகளைத் தாங்க மாட்டாமல் அவளிடம் கொண்ட ஆவேசம் என்று அமர்க்களமாகச் செய்திருக்கிறார்.

மாலதியாக நாட்டியப் பேரொளி பத்மினி. நடிகர் திலகத்திற்கு ஜோடி. அழகான ஜோடிப் பொருத்தம். காதலனை சித்தியுடன் கண்டு கொதிப்படையும் போது ஆவேசமான நடிப்பு. காதலன் தன் நிலையை எடுத்துச் சொன்னவுடன் அவன் மேல் கனிவு, இரக்கம் என்று தன் பங்கிற்கு குறைவில்லாமல் செய்திருக்கிறார். பாலையாவை அலட்சியப் படுத்தும் போதும் அமர்களப் படுத்துகிறார்.

வில்லனாக பாலையா. ஆர்ப்பாட்டம் பண்ணாமல் ஆ...ஊ.. . என்று கத்தாமல் அமைதியான நரி போன்ற தந்திர வில்லத்தனத்தில் கலக்க இவருக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன? அருமை.

வில்லியாக பத்மினியின் சொந்த அக்காள் லலிதா (திருவாங்கூர் கேரளா சகோதரி) ஜொலிக்கிறார்.

மற்ற பங்களிப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாத்திரத்தை அறிந்து நன்றாகச் செய்திருக்கிறார்கள். 'டணால்' தங்கவேலுவும், 'பிரண்ட்' ராமசாமியும் சில காட்சிகளில் தலை நீட்டி விட்டு பின் காணாமல் போய் விடுகிறார்கள்.

நமக்குப் பரிச்சயமான நகைச்சுவை நடிகர் மாலியும் இந்தப் படத்தில் லஷ்மியின் கணவராக வருகிறார். அதே குண்டு. அதே திருட்டு முழி. ஆனால் இளமையாக இருக்கிறார். அடையாளமே தெரியவில்லை.

இசை டி.ஆர். பாப்பா. அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள். நடிகர் திலகம் வேலை கிடைக்காமல் பாடும் 'ஒண்ணும் புரியவில்லை தம்பி' மற்றும் 'நோ வேகன்ஸி' போர்டு விற்றபடியே பாடும் 'ஐயா முதலாளி வாங்க' (பாடல்: கா.மு.ஷெரீப்) பாடல்கள் மிகப் பிரபலமானவை.

விந்தனின் வசனங்கள் அருமை. இயக்கமும் அற்புதம்.

இனி 'அன்பு' படத்தின் சில விசேஷ செய்திகள்.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4115a.jpg

1. 'நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்' நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த முதல் படம். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எம்.நடேசன் அவர்கள்.

2. முதன் முதலில் தமிழ்த் திரைப்படத்தில் தனியாக 'ஒதெல்லோ' என்ற ஓரங்க நாடகக் காட்சி இடம் பெற்ற திரைப்படம். ஒதெல்லோவாக நடிகர் திலகமும், டெஸ்டிமோனாவாக பத்மினியும் நடித்திருந்தனர். (பின் வெளிவந்த 'ரத்தத் திலகம்' திரைப்படத்தில் மீண்டும் ஒரு 'ஒதெல்லோ' ஓரங்க நாடகக் காட்சி இடம் பெற்றது ஆனால் ஒரு வித்தியாசம் இக்காட்சி ஆங்கிலத்தில் இடம் பெற்றது. இதில் டெஸ்டிமோனாவாக நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். ஒதெல்லோ?! அதே நடிகர் திலகம்தான். ஆனால் ஆங்கிலத்தில் இருவருக்கும் டப்பிங் குரல் கொடுக்கப்பட்டது)

3. நடிகர் திலகத்துடன் பத்மினி இணைந்த இரண்டாவது படம்.

4. அன்றைய ரசிகர்களின் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி, டி.எஸ்.பாலையா ஆகியோர் முதன் முதலாக நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய படம் இது.

5. பின்னாட்களில் எவ்வளவோ இசைக்கருவிகளை கையாண்டு நடித்த நடிகர் திலகம் முதன் முதலாக இசைக் கருவி (பியானோ) வாசித்து நடிப்பது போன்ற காட்சி அமைந்த முதல் படம்.

6. நடிகர் திலகத்தின் இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர்.பாப்பா அவர்கள்.

7. எம்.ருஷ்யேந்திர மணி என்ற அந்தக் கால நடிகையின் அற்புத நடிப்பைக் கொண்ட படம் இது. ('விஜயா' பாத்திரத்தில் வயதான வேடத்தில் நடிப்பவர்). இவர் கிட்டத் தட்ட கண்ணாம்பா போலக் காட்சியளிப்பார்.

8. அன்றைய ரசிகர்களின் கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரி ('சந்திரலேகா' புகழ் ) இந்தப் படத்தில் சித்தியாக வேடமிட்டது குறிப்பிடத் தக்கது. ராஜகுமாரிக்கு அன்றைக்கிருந்த செல்வாக்கிற்கும், அழகிற்கும் அவர் இப்படம் வந்த தருணத்தில் கதாநாயகியாகக் கூட நடித்திருக்க முடியும். ஆனால் பாத்திரம் மிகப் பொருத்தமாக இருந்ததால் இயக்குனர் இவர் நடித்தால்தான் சரிப்படும் என்று சொல்லி விட்டாராம். ஒரு கதாநாயகிக்கு தரக் கூடிய தொகையை விட கூடுதல் தொகை கொடுத்து ராஜகுமாரியை சித்தி கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தார்களாம்.

இந்த டி.ஆர். ராஜகுமாரி பிரபல தமிழ்ப்பட இயக்குனர் டி.ஆர். ராமண்ணாவின் சகோதரி.

9. வேலையில்லாத் திண்டாட்டம் அந்தக் காலத்திலேயே இருந்தது என்பதை இந்தப் படம் ஆணித்தரமாகப் பறைசாற்றுகிறது. அதுவும் 'நோ வேகன்ஸி' போர்ட் விற்றே வேலயில்லாத் திண்டாட்டத்தைக் காண்பித்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

10. நடிகர் திலகமும், பத்மினியும் பாடுவதாக வரும் 'என்ன என்ன இன்பமே' எவராலும் மறக்க முடியாத இனிய பாடல். இலங்கை வானொலியில் சாதனை படைத்த பாடல்.

11.1953 ஜுலை 24 வெள்ளியன்று சென்னை தவிர தென்னகமெங்கும் வெளியான இக்காவியம் சென்னையில் மட்டும் ஆகஸ்ட் 7 வெள்ளியன்று வெளியானது] (நன்றி பம்மல் சுவாமிநாதன் அவர்களே!)

12. அன்பு ஒன்றே பிரதானமானது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் அற்புதமான கதைப் போக்கு, அதற்கேற்ற வசனங்கள், நடிக நடிகையரின் நடிப்பு.

மொத்தத்தில் அன்பு மனம் கொண்டவர்கள் அதிகம் விரும்பக் கூடிய வகையில் ரசிக்கத் தக்க ஒரு நல்ல படம்.

இக்கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே .

அன்புடன்

வாசுதேவன்

vasudevan31355
10th December 2016, 11:18 AM
இனி 'பேசும்பட' 'அன்பு' பதிவு. மொத்தம் 22 பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்தையும் அப்படியே தரம் குறைக்காமல் அதே தரத்தோடு 'photo bucket' ல் தரவேற்றி இங்கே பதிவு செய்துள்ளேன். பொறுமையாக படித்து விட்டு படத்தைப் பார்த்தால் மிகவும் அருமையாக இருக்கிறது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5_2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/23_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/10_1.jpg

vasudevan31355
10th December 2016, 11:21 AM
'பேசும்பட' 'அன்பு' வசன பதிவு தொடர்கிறது...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/11_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/12_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/13_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/14.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/15_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/16_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/17_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/18_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/19_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/20_1.jpg

vasudevan31355
10th December 2016, 11:22 AM
'பேசும்பட' 'அன்பு' வசன பதிவு தொடர்கிறது...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/21_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/22_1.jpg

HARISH2619
10th December 2016, 01:56 PM
ஜெயலலிதா அவர்கள் சிவாஜியுடன் 20 படங்கள், எம்.ஜி.ஆருடன் 28 படங்கள். ஜெ . எம்.ஜி.ஆருடன் நடித்தது 28 படங்களாக இருந்தாலும் அதில் வெற்றிக் கண்டவை கீழ் வருமாறு :

1.நம்நாடு
2.அடிமைப்பெண்
3. ஆயிரத்தில் ஒருவன்
4. குடியிருந்த கோயில்
5. ஒளிவிளக்கு
6.எங்கள் தங்கம்
7. மாட்டுக்கார வேலன்
சிவாஜியுடன் வெற்றிப் படங்கள் கீழே வருமாறு :

1. கலாட்டா கல்யாணம்
2. பட்டிக்காடா பட்டனமா
3. எங்கிருந்தோ வந்தாள்
4. ராஜா
5. சுமதி என் சுந்தரி
6. எங்க ஊர் ராஜா
7. நீதி
8.பாட்டும் பரதமும்
9. அவன் தான் மனிதன்
10. சவாலே சமாளி
11. எங்க மாமா
12. தெய்வ மகன்
13. கந்தன் கருணை
14. மோட்டார் சுந்தரம் பிள்ளை

ஆக மொத்தம் 14 படங்கள் வெற்றிப்படங்கள், இவற்றில் கலாட்டா கல்யாணம், பட்டிக்காடா பட்டனமா, எங்கிருந்தோ வந்தாள், ராஜா , அவன்தான் மனிதன், சவாலே சமாளி, தெய்வ மகன் போன்றவை வெள்ளி விழாப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே சிவாஜியுடன் 20 படங்கள் என்னென்ன என்பதை தருகிறேன் :

1. மோட்டார் சுந்தரம் பிள்ளை
2. பட்டிக்காடா பட்டனமா
3. சுமதி என் சுந்தரி
4. ராஜா
5. எங்க ஊர் ராஜா
6. நீதி
7. அன்பைத்தேடி
8. குருதட்சணை
9. பாட்டும் பரதமும்
10; அவன் தான் மனிதன்
11. சவாலே சமாளி
12. தாய்
13. கலாட்டா கல்யாணம்
14. எங்க மாமா
15. தெய்வமகன்
16. பாதுகாப்பு
17. எங்கிருந்தோ வந்தாள்
18. தர்மம் எங்கே
19. கந்தன் கருணை
20. சித்ரா பௌர்ணமி

ஆக மொத்தம் 20 படங்கள்.

எம்.ஜி.ஆருடன் 28 படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம் :

1. நம்நாடு
2. ராமன் தேடிய சீதை
3. அடிமைப் பெண்
4. முகராசி
5. கண்ணன் என் காதலன்
6. தேர்திருவிழா
7. குமரிக்கோட்டம்
8. ரகசியபோலிஸ் 115
9. பட்டிக்காட்டு பொண்ணையா
10. காவல்காரன்
11. குடியிருந்த கோயில்
12. ஒளி விளக்கு
13. ஆயிரத்தில் ஒருவன்
14. ஒரு தாய் மக்கள்
15. எங்கள் தங்கம்
16. தனிபிறவி
17. தாய்க்கு தலைமகன்
18. அரசகட்டளை
19. என் அண்ணன்
20. நீரும் நெருப்பும்
21. கன்னித்தாய்
22. தேடிவந்த மாப்பிள்ளை
23. காதல் வாகனம்
24. மாட்டுக்கார வேலன்
25. சந்திரோதயம்
26. அன்னமிட்டகை
27. புதிய பூமி
28. கணவன்

ஆக மொத்தம் 28 படங்கள்.

ஆக இறுதியில் திரைப்படத் துறையை பொருத்தவரை ஜெயலலிதாவிற்கு புகழைத் தேடித் தந்தவர் உலக மகா நாயகன் நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே என்பது தெளிவாகிறதா ?

From the facebook page of mr trichy srinivasan
our murali sir has to give the authenticity of this news

adiram
10th December 2016, 04:11 PM
அன்பு வாசு சார்,

"அன்பு" திரைப்படம் பற்றிய முழுமையான ஆய்வு மிகவும் நன்றாக அமைந்துள்ளது. கதை விவரிப்பு, நடித்தவர்கள் பங்களிப்பு. நடிகர்திலகத்தின் அசாத்திய பெர்பார்மென்ஸ், இணைப்பாக அப்படத்தின் அந்நாளைய விளம்பரங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பேசும்படம் இதழில் வந்த முழு வசனம் என முழுமை பெற்ற ஆய்வாக அமைந்துள்ளது.

நான் இந்தப்படம் பார்த்ததில்லை. ஆனால் உங்கள் திறனாய்வு உடனே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.