View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17
Pages :
1
2
[
3]
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
Russelldvt
9th November 2015, 04:03 PM
http://i64.tinypic.com/11t7brn.jpg
Russelldvt
9th November 2015, 04:04 PM
http://i65.tinypic.com/25zs9cj.jpg
Russelldvt
9th November 2015, 04:05 PM
http://i65.tinypic.com/21ep7rb.jpg
Russelldvt
9th November 2015, 04:05 PM
http://i66.tinypic.com/14ik6lu.jpg
Russelldvt
9th November 2015, 04:06 PM
http://i64.tinypic.com/rlgjv7.jpg
Russelldvt
9th November 2015, 04:07 PM
http://i66.tinypic.com/5yg582.jpg
Russelldvt
9th November 2015, 04:07 PM
http://i65.tinypic.com/21dkb60.jpg
Russelldvt
9th November 2015, 04:08 PM
http://i68.tinypic.com/ftomeb.jpg
Russelldvt
9th November 2015, 04:09 PM
http://i65.tinypic.com/29uzwz.jpg
Russelldvt
9th November 2015, 04:10 PM
http://i67.tinypic.com/awmsw.jpg
Russelldvt
9th November 2015, 04:10 PM
http://i64.tinypic.com/2znvlz9.jpg
Russelldvt
9th November 2015, 04:11 PM
http://i65.tinypic.com/4scrc7.jpg
Russelldvt
9th November 2015, 04:12 PM
http://i68.tinypic.com/nqutxt.jpg
Russelldvt
9th November 2015, 04:12 PM
http://i67.tinypic.com/2rw96w7.jpg
Russelldvt
9th November 2015, 04:13 PM
http://i68.tinypic.com/2eeh1jr.jpg
Russelldvt
9th November 2015, 04:14 PM
http://i67.tinypic.com/ax0ehe.jpg
Russelldvt
9th November 2015, 04:15 PM
http://i68.tinypic.com/5cycdj.jpg
Russelldvt
9th November 2015, 04:15 PM
http://i68.tinypic.com/qpux.jpg
Russelldvt
9th November 2015, 04:16 PM
http://i67.tinypic.com/23gzip2.jpg
Subramaniam Ramajayam
9th November 2015, 07:47 PM
http://i68.tinypic.com/nqutxt.jpg
DIWALI
GREETINGS TO
ALLOURHUBBERS\ANDMT
FANS
Mypc
is
not
okaay
all
thevery
best
toallofyou
blssings
sss
9th November 2015, 08:05 PM
அட்டகாசமாக படங்களை தரவேற்றும் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கு மிக்க நன்றி..
எல்லா ரசிக பிள்ளைகளுக்கும் மனமார்ந்த தீப திருநாள் வாழ்த்துகள்...
பராசக்தி புதல்வனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ..
சுந்தரபாண்டியன்
Russellbpw
9th November 2015, 10:09 PM
WISHING ALL DEVOTEES OF NADIGAR THILAGAM A VERY HAPPY, DELIGHTFUL, COLORFUL, CHEERFUL DIWALI
https://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU
RKS
LAVA Iris X8
Russellsmd
10th November 2015, 12:45 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015110922152520 9_20151110003055950_20151110003935452_zpsei8a8cfu. jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015110922152520 9_20151110003055950_20151110003935452_zpsei8a8cfu. jpg.html)
sivaa
10th November 2015, 02:24 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQfCYas8GfsjY2094isMzSGZbhtqOaKx Xv1UjnwmU06hdqRXMUF4Q
(http://www.google.ca/imgres?imgurl=http://www.happydiwalisms.org/wp-content/uploads/2015/11/Diwali-Images-2015-25.jpg&imgrefurl=http://diwaligreetingsimages.com/happy-diwali-images/diwali-images-2015.html&h=768&w=1024&tbnid=3tvkOMlULTTfgM:&docid=UnW8wSoCveB4VM&ei=HQlEVoncC4e8eajvpMAF&tbm=isch&ved=0CC4QMygrMCs4ZGoVChMIyd7GoPqJyQIVB14eCh2oNwlY)
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
RAGHAVENDRA
10th November 2015, 04:36 AM
தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை [படம் வெளியான 9-வது நாள்] கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக எக்ஸ்ட்ரா காட்சி அதாவது 5 காட்சிகள் திரையிடப்பட்ட வரலாற்றை உருவாக்கியதும் நடிகர் திலகத்தின் என்னை போல் ஒருவன்தான்.
- முரளி சாரின் பதிவிலிருந்து...
http://www.nadigarthilagamsivaji.com/Photos/FilmAdvertisements/Others/034.jpg -
சகோதரி கிரிஜா அவர்களின் நடிகர் திலகம் சிவாஜி இணைய தளத்திலிருந்து..
RAGHAVENDRA
10th November 2015, 10:05 AM
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12191069_1003367003047305_5331201379047112309_n.jp g?oh=574c5ad0d8d1e42d18b8bdadb6382d53&oe=56FA05ED
RAGHAVENDRA
10th November 2015, 10:29 AM
தீபாவளி ...
சிவாஜி ரசிகனுக்கு சிறந்த நாள்...
மறக்க முடியுமா...
ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு திருநாளே... 1972ம் ஆண்டு தவிர... அந்த ஆண்டு மட்டும் தீபாவளி செப்டம்பர் 29ம் தேதியே வந்து விட்டது..
காலையில் எழுந்தோமானால் சிந்தனையே தியேட்டர் அளப்பரை எப்படி இருக்கும் என்னென்ன செய்யலாம்... இதில் தான் சுற்றி சுற்றி வரும்... தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னாடியே சார்ட் வரைந்து கொண்டு போய் வைத்து விடுவதில் அப்படி ஓர் அலாதி ஆர்வம்...
அந்த அட்டை முன் அமரும் போது தலைவரைப் பற்றிய ஏராளமான கற்பனைகளில் மனம் லயித்து விடும். அந்த தீபாவளிக்கு வரக்கூடிய படத்தின் ரிசர்வேஷன் விளம்பரம், அந்தப் படத்தைப் பற்றி முன்கூட்டியே பத்திரிகைகளில் வந்திருக்கக் கூடிய செய்திகள் மற்றும் நிழற்படங்கள், முந்தைய படத்தைப் பற்றிய பதிவுகள், மற்றும் பேப்பர் கட்டிங்குகள், வித விதமான போஸ்களில் தலைவர் இருக்கக் கூடிய கார்ட்போர்ட் அட்டைகளிலிருந்து தலைவர் படங்களை ஒவ்வொன்றாக அழகாக கத்தரித்து விதவிதமான வகையில் ஒட்டுவது. சார்ட்டில் ஒட்டுவதற்கென்றே பிரத்யேகமாக வாழ்த்து அட்டைகளை வாங்குவது...
குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும் இதையெல்லாம் செய்து முடிக்க.
முடித்த பின் அதை பத்திரமாக தியேட்டர் வரை கொண்டு செல்ல வேண்டுமே.. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே மழை ஆரம்பித்து விடும்..
கொண்டு போய் தியேட்டர் ஷோகேஸிலோ அல்லது வெளியில் அதற்கென தரப்படக்கூடிய இடத்திலோ வைத்து பரவசமடையும் போது இந்த உலகமே நமக்குப் பின்னால்...
தீபாவளிக்கு முன் நாள் படத்தின் போட்டோ கார்டு பார்க்க வரும் போது மக்கள் சார்ட்டையும் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விடுவர். அதைப் பற்றி வரக்கூடிய விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் கேட்பதிலும் மனம் புளகாங்கிதமடைந்து விடும்.
தீபாவளி விடியக் கூடாது. காலை 6 மணிக்கெல்லாம் குளித்து பட்டாசு வெடித்து விட்டு நண்பர்களை சந்திக்க கிளம்பி விடவேண்டியது தான். கிட்டத்தட்ட அனைவருமே தலைவரின் ரசிகர்களே.. ஒரு நண்பனின் உறவினருக்கு தியேட்டர்களில் நல்ல செல்வாக்கு இருக்கும், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் எப்படியாவது வாங்கி விடுவோம். மாலைக் காட்சிக்குத் தான் பெரும்பாலும்.
காலையில் ரசிகர் மன்றக் காட்சி... காது ஜவ்வு கிழியும் அளவிற்கு ஆர்ப்பரிப்பும் கரகோஷமும் உணர்ச்சி மிக்க குரல்களும் நம்மைப் பரவசமாக்கி விடும். மழையில் நனைந்து உடல் நலமின்றி ஜூரத்துடன் போனால் வரும் போது டாக்டர் செலவின்றி மருந்து மாத்திரையின்றி ஜூரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வகையில் உடல் சுறுசுறுப்படைந்திருக்கும். அது தான் தலைவரின் மகாத்மியம்..
எத்தனை தீபாவளிகள்... விவரம் தெரிந்து 1966ல் சித்ராவில் செல்வம், 1967ல் ஊட்டி வரை உறவு இருமலர்கள்... அதே சமயம் நான் ரிலீஸ் வேறு... மூன்றுமே சக்கைப்போடு போட்டன. குறிப்பாக தீபாவளி என்றால் சாந்தி தியேட்டர் தான் நமக்கு சொர்க்கம். ஊட்டி வரை உறவு கூட்டமென்றால் அப்படி ஓர் கூட்டம்... தியேட்டரில் நிற்கக் கூட முடியாது... வழக்கம் போல தியேட்டரில் நம்மை வரவேற்பது ஷியாம் பிரசாத் ஹோட்டல் பேனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஸ்டார்களின் அணிவகுப்பு.. தோரணம்... தோரணங்களில் பல வண்ணங்கள்.. நடுநடுவே காங்கிரஸ் கொடி... பிட் நோட்டீஸ்கள் ஏராளமாய்.. பல மன்றங்கள் போட்டி போட்டுக்கொண்டு நோட்டீஸ் அடித்திருப்பர். அப்போதெல்லாம் போஸ்டர்கள் அதிகமாக புழக்கமில்லை. அதே போல 1968 தீபாவளிக்கு சித்ராவில் எங்க ஊர் ராஜா.. தலைவர் மீசையுடன் காலை அகட்டி நிற்கும் பேனர் நம்மை வரவேற்கும்.. அங்கேயே நாம் ஃப்ளாட்...
1969லோ கேட்கவே வேண்டாம். தமிழகம் முழுவதுமே தீபாவளியை விட சிவந்த மண் ரிலீஸைத் தான் அதிகம் கொண்டாடியது. சிவந்த மண் படம் பேர் வைத்ததிலிருந்து அப்போது ஆரம்பித்த சைதை சிவந்த மண் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் குளோப் தியேட்டரில் முதல் மூன்று நாட்களுக்கு மூன்று காட்சிகளிலும் ரசிகர்களுக்கு சாக்கலேட், ஸ்வீட். பிட் நோட்டீஸ் கொடுத்தனர். குளோப் தியேட்டரில் இருக்கைகள் சற்றே அகலமாக இருக்கும். ஆனால் யார் உட்கார்ந்து படம் பார்த்தார்கள். படம் வரும் முன் ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டன. ஆனால் தியேட்டரில் அந்த செங்கல்பட்டு மலையடியில் ஹெலிகாப்டர் சீனுக்குத் தான் நொடிக்கு நொடி அளப்பரை. இத்தனைக்கும் எனக்கு இரண்டாம் நாள் தான் டிக்கெட் கிடைத்திருந்தது. இருந்தாலும் அனுபவமோ முதல் நாள் முதல் காட்சியைப் போலத் தான்...
1970 தீபாவளி வந்தது.. அன்று காலை...
... தொடரும்...
mr_karthik
10th November 2015, 10:48 AM
நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள், அன்பு நண்பர்கள் அனைவருக்கும் தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்பு ராகவேந்தர் சார் அவர்களின் தீபாவளி ரிலீஸ் நினைவுகள் என்னை அந்த நாட்களுக்கு கொண்டு செல்கின்றன. அதற்குக்காரணம் அன்றைய தீபாவளிகளில் அவர் சொல்லும் அத்தனை கொண்டாட்டங்களையும் அதே திரையரங்குகளில் அனுபவித்தவன் நானும். ஆனால் அவரைத்தெரிந்து அவரோடு நட்புறவு கொண்டது 'தியாகம்' படத்திலிருந்தே. அன்றிலிருந்து அவரது சார்ட்டுகளுக்கு முதல் ரசிகன் நான்தான். அந்தந்த திரையரங்குகளில் கொண்டுபோய் வைக்கும் முதலில் அவை வெளியிடப் படுவது சாந்தி வளாக நண்பர்கள் மத்தியில்தான்.
தொடர்ந்து அவரது அன்றைய நினைவுகளை அசைபோடக் காத்திருக்கிறேன்.
Russellsmd
10th November 2015, 10:48 AM
நினைப்போம்.மகிழ்வோம்-101
"சபாஷ் மீனா."
வெட்டியாய் சுற்றித் திரிந்து
வாழ்க்கை வீணாகி விடக் கூடாது என்கிற எண்ணத்தில்
தந்தை வெளியூருக்கு வேலைக்கு அனுப்ப..
அம்மா செல்லமான அவருக்கு
பலகாரம் தருகிறேன் என்று
தாயார், டிபன் பாக்ஸுக்குள் கத்தை, கத்தையாய் பணத்தை வைத்துத் தர...
எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய்
டிபன் பாக்ஸினுள் பணத்தைப்
பார்த்து, "..ஆ.." என்று கூவி
விட்டு, வேகமாய் மூடியைப்
போட்டு மூடுவது.
என்றும்
சிவாஜி புகழ் இருக்கும்.
எங்கும்
நமது கொடி பறக்கும்.
Russellsmd
10th November 2015, 11:00 AM
நினைப்போம்.மகிழ்வோம்-102
"உத்தமன்".
"நாளை நாளை" பாடல்.
பாடலின் துவக்கத்தில், அழகாய்
கழுத்து வளைத்துத் திரும்பி,
புறங்கைகள் கட்டிக் கொண்டு
புன்னகை பூத்து, ஒரு காலைத்
தூக்கி அதைப் பூமியில்
பதிக்காமல் அந்தரத்தில்
நிறுத்தும் அழகு.
Russellsmd
10th November 2015, 11:04 AM
நினைப்போம்.மகிழ்வோம்-103
"ராமன் எத்தனை ராமனடி."
விரும்பியவளைக் கல்யாணம்
செய்து கொள்வதற்காகப்
பெரும்பாடுபட்டு நடிகனாகி,
பணம் சேர்த்து வரும் போது,
அவள் வேறொருத்தியை
மணந்து கொண்டு போனது
தெரிய வர..
வேதனையில்,விரக்தியில்
கைக்குட்டையை கோபமாய்
உதறி..உதறி..
ஆத்திரமாய்த் தரையில்
காலுதைத்து நடக்கும் நடை.
Russelldvt
10th November 2015, 11:21 AM
http://i65.tinypic.com/30csy2p.jpg
Russelldvt
10th November 2015, 11:22 AM
http://i64.tinypic.com/2nopbl.jpg
Russelldvt
10th November 2015, 11:23 AM
http://i66.tinypic.com/zn7q0z.jpg
Russelldvt
10th November 2015, 11:23 AM
http://i66.tinypic.com/2yjpycx.jpg
Russelldvt
10th November 2015, 11:24 AM
http://i63.tinypic.com/2v0bd5s.jpg
Russelldvt
10th November 2015, 11:24 AM
http://i67.tinypic.com/2v9w5fn.jpg
Russelldvt
10th November 2015, 11:25 AM
http://i67.tinypic.com/1z15g.jpg
Russelldvt
10th November 2015, 11:25 AM
http://i68.tinypic.com/29qfn6s.jpg
Russelldvt
10th November 2015, 11:26 AM
http://i63.tinypic.com/2q8bpj6.jpg
Russelldvt
10th November 2015, 11:27 AM
http://i65.tinypic.com/1c4g0.jpg
Russelldvt
10th November 2015, 11:27 AM
http://i68.tinypic.com/34td1jn.jpg
Russelldvt
10th November 2015, 11:28 AM
http://i63.tinypic.com/25ro5r7.jpg
Russelldvt
10th November 2015, 11:29 AM
http://i65.tinypic.com/69jmhc.jpg
Russelldvt
10th November 2015, 11:29 AM
http://i64.tinypic.com/11r6tde.jpg
Russelldvt
10th November 2015, 11:30 AM
http://i65.tinypic.com/2wqde2u.jpg
Russelldvt
10th November 2015, 11:31 AM
http://i67.tinypic.com/mtxdet.jpg
Russelldvt
10th November 2015, 11:31 AM
http://i65.tinypic.com/28s8ti0.jpg
Russelldvt
10th November 2015, 11:32 AM
http://i66.tinypic.com/2118efc.jpg
Russelldvt
10th November 2015, 11:35 AM
http://i67.tinypic.com/11r9ovs.jpg
Russelldvt
10th November 2015, 11:35 AM
http://i64.tinypic.com/2mw79l0.jpg
Russelldvt
10th November 2015, 11:36 AM
http://i68.tinypic.com/1zqu0lc.jpg
Russelldvt
10th November 2015, 11:37 AM
http://i64.tinypic.com/2m64uon.jpg
Russelldvt
10th November 2015, 11:37 AM
http://i65.tinypic.com/fx8n12.jpg
Russelldvt
10th November 2015, 11:38 AM
http://i66.tinypic.com/2ic4go9.jpg
Murali Srinivas
10th November 2015, 02:35 PM
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்!
அன்புடன்
abkhlabhi
10th November 2015, 03:19 PM
இறையருளும், மகிழ்ச்சியும் நமக்கு என்றும் கிடைத்திட வேண்டும்.
அனைவருக்கும் தீவாவளி நல வாழ்த்துக்கள் .
அ. பாலகிருஷ்ணன்
siqutacelufuw
10th November 2015, 03:57 PM
http://i68.tinypic.com/282qfpu.jpg
நடிகர் திலகம் திரி அன்பர்கள் அனைவருக்கும், மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!
ifohadroziza
10th November 2015, 04:50 PM
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
adiram
10th November 2015, 05:23 PM
அனைவருக்கும், தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Russelldvt
10th November 2015, 05:36 PM
http://i63.tinypic.com/wa0ns7.jpg
Russelldvt
10th November 2015, 05:36 PM
http://i68.tinypic.com/34hh2rq.jpg
Russelldvt
10th November 2015, 05:37 PM
http://i63.tinypic.com/2bteue.jpg
Russelldvt
10th November 2015, 05:38 PM
http://i68.tinypic.com/2sbs7jo.jpg
Russelldvt
10th November 2015, 05:39 PM
http://i65.tinypic.com/23sf968.jpg
Russelldvt
10th November 2015, 05:39 PM
http://i63.tinypic.com/e8olky.jpg
Russelldvt
10th November 2015, 05:40 PM
http://i68.tinypic.com/23shq93.jpg
Russelldvt
10th November 2015, 05:40 PM
http://i66.tinypic.com/2jbtn4x.jpg
Russelldvt
10th November 2015, 05:41 PM
http://i68.tinypic.com/2chsz8h.jpg
Russelldvt
10th November 2015, 05:41 PM
http://i67.tinypic.com/2cft69.jpg
Russelldvt
10th November 2015, 05:42 PM
http://i67.tinypic.com/zlztir.jpg
Russelldvt
10th November 2015, 05:43 PM
http://i65.tinypic.com/2yvpcaw.jpg
Russelldvt
10th November 2015, 05:44 PM
http://i66.tinypic.com/fz0soj.jpg
http://i65.tinypic.com/91m88h.jpg
http://i65.tinypic.com/2mpmlb9.jpg
Russelldvt
10th November 2015, 05:45 PM
http://i66.tinypic.com/2mxfrdf.jpg
Russelldvt
10th November 2015, 05:46 PM
http://i66.tinypic.com/r8i3b5.jpg
Russelldvt
10th November 2015, 05:46 PM
http://i64.tinypic.com/jz8nkh.jpg
Russelldvt
10th November 2015, 05:47 PM
http://i63.tinypic.com/a101w5.jpg
Russellsmd
10th November 2015, 06:53 PM
http://i65.tinypic.com/2yvpcaw.jpg
ஹேப்பி...!
முத்தையன் அம்மு சார்..
உங்களால்
நாங்கள் மிக ஹேப்பி!
Subramaniam Ramajayam
10th November 2015, 06:58 PM
DEEPAVALI ENDRAL nadigarthilagam padangal than comes to memory first,
1962 pandhapsam broadway theatre followed by ANNAIILLAM AT maaraja in 1963navarathri at maharani IN 1964 1965 palani srikrishna 1966 selvam at chitra on a torrential rainy day 67 ootyvaraiuravu at pallavaram janatha morning show by 7am more than 200 persons were inques evening irumakargal at ram theatre fortunately tickets bppked in advance,
like that we have enjoyed first day allaparaigal aarpattangal which remains pasumaiyaga in mind always,
WITH DTWALI GREETINGS TO ALL OUR BROTHERS AND SISTERS
BLESSIGS
Subramaniam Ramajayam
10th November 2015, 08:01 PM
raghavendran kartk sir murali sir your diwali ninaivalaigal excellent and very descriptive
blessings
Harrietlgy
10th November 2015, 08:29 PM
அனைவருக்கும், தீபாவளி நல்வாழ்த்துக்கள்
RAGHAVENDRA
10th November 2015, 08:42 PM
What a pleasant surprise!
இன்ப அதிர்ச்சி என்னவென்று உணர்த்தி விட்டார் கார்த்திக்.
கார்த்திக் தங்களுடைய பதிவுகளில்லாமல் இத்திரியின் கடந்த சில பாகங்கள் முழுமை பெற முடியாமல் இருந்தன. தீபாவளி நினைவுகள் தங்களை இங்கு பதிவிடச் செய்து விட்டதில் எனக்கு பெருமை.
தொடர்ந்து தாங்கள் இங்கு பங்கு பெற வேண்டும். இதுவே என் வேண்டுகோள். என்னுடையது மட்டுமல்ல, இங்கிருக்கும் அனைவரது வேண்டுகோளும் அதுவாகத் தான் இருக்கும்.
தங்களுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் உளமார்ந்த தீபாவளிீ நல்வாழ்த்துக்கள்.
RAGHAVENDRA
10th November 2015, 08:42 PM
ராமஜெயம் சார்
தங்களுடைய பந்தபாசம், அன்னை இல்லம், நவராத்திரி, தீபாவளி நினைவுகள் சுவையாக உள்ளன. மேலும் தங்களுடைய நினைவுகளைத் தாங்களும் விரிவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஆவலுடன் கேட்டுக் கொள்கிறேன்.
RAGHAVENDRA
10th November 2015, 09:04 PM
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள்
தொடர்ச்சி..
1970ம் ஆண்டிற்குப் போவதற்கு முன்.
ஒவ்வொரு தீபாவளிக்கும் காலையில் எழுந்து குளித்து வெடி வெடித்து, புத்தாடை உடுத்தி காபி அருந்தி விட்டு கிளம்பி விடுவோம். நண்பர்கள் அனைவரும் ஒருவரையொருவர் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு இன்னொரு நண்பர் வீட்டில் கூடி விடுவோம். அவர் வீட்டில் சிற்றுண்டி அல்லது இனிப்பு இப்படி வயிற்றுக்கு அசை போட்டு விட்டு, தலைவரின் படங்களைப் பற்றிய பேச்சு துவங்கி விடும். கிட்டத்தட்ட 6.30 முதல் 8.30 மணி வரை தலைவரைப் பற்றி, படங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்புவோம். காலைக் காட்சி 1970க்குப் பிறகு தான் துவங்கியதாகையால். அதற்கு முந்தைய ஆண்டுகள் வரை முதல் நாள் முதல் காட்சி மேட்னியாகத் தான் இருக்கும். அதற்கு எப்படியாவது டிக்கெட் எடுத்து விடுவோம். ஒரு 12 மணி வாக்கில் கிளம்பினோமானால் மேட்னி ஆரம்பிக்கும் வரை தியேட்டர் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு மாலைக் காட்சிக்குக் காத்திருக்கும் ரசிகர்களிடம் உற்சாகமாகக் குரல் கொடுத்து விட்டு (அதற்கேற்ப படங்களும் அமைந்ததை சொல்லவும் வேண்டுமோ), இரவு 8 மணி சுமாருக்கு வீட்டுக்குப் போனால் பெற்றோர்க்குக் கோபம் வரும் .. பண்டிகை நாளும் அதுவுமா வீட்டில் இல்லாமல் எங்கோ போகறாய் என்று (நியாயமான கோபமாயிருந்தாலும் அது ஒரு ஃபார்மாலிட்டிக்குத் தான் இருக்கும். நம்மை மாற்ற முடியுமா என்ன).
கிட்டத்தட்ட ஒரு வாரமாக டென்ஷனாக இருந்த மனது தீபாவளியன்று தலைவரைத் திரையில் தரிசித்த பிறகு தான் நார்மல் லெவலுக்கு வரும். அதுவும் ரிலீஸுக்கு முதல் நாள் படத்தயாரிப்பாளர் கூட அவ்வளவு டென்ஷனாக மாட்டார். ரசிகர்கள் ஆகி விடுவார்கள். ரிஸல்ட் ஓஹோ என்றவுடன் மனம் துள்ளும் பாருங்கள்.. அதை வார்த்தையில் சொல்ல முடியாது.
தியேட்டர் அலங்காரம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி விடும். பெரும்பாலும் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை போன்ற சுற்று வட்டார ரசிகர்களின் கைங்கரியமே அதிகமிருக்கும். ஏனென்றால் சாந்தி தியேட்டரின் ரசிகர்கள் பல்ஸ் ரேடியஸ் அடையார் வரை கூட போகும். சில சமயம் அபூர்வமாக அடையார் ஈராஸில் புதுப்படம் வரும். ஆனால் அப்போது கூட நடிகர் திலகத்தின் படங்கள் மிக மிக அபூர்வம். எனவே அத்தனை மக்களும் சாந்திக்கே வருவார்கள். பிராட்வே, அல்லது, கிரௌன் அல்லது கிருஷ்ணா தியேட்டர் வடசென்னைப் பகுதியை கவர் செய்து விடும். புரசைவாக்கம் கீழ்ப்பாக்கம், சூளை, கெல்லீஸ், அமைந்தகரை போன்று இந்தப் பகுதிகளையெல்லாம் ராக்ஸி அல்லது மேகலா அல்லது புவனேஸ்வரி போன்ற தியேட்டர்கள் கவர் செய்து விடும். கிட்டத்தட்ட சென்னை நகரின் மொத்தப் பரப்பளவு ரசிகர்களுக்கும் இந்த மூன்று நான்கு தியேட்டர்கள் தான் புகலிடம் என்பதார் அனைத்துப் பகுதி ரசிகர்களுக்கும் தியேட்டரில் அலங்காரம் செய்வதற்கு இடம் பிடிப்பதில் போட்டி ஏற்படும்.
சாந்தி தியேட்டரைப் பொறுத்த வரையில் நான் முன்பே சொன்னது போல் ஷ்யாம்பிரசாத் ஹோட்டல் ரசிகர் மன்றம் பேனரை முதலில் வைத்து விடுவார்கள். அதைத் தொடர்ந்து மற்றவை.. பார்க்கும் பொழுதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இடமிருந்து வலமாக கிட்டத்தட்ட 20 அடி நீளத்திற்கு துணி பேனர்கள் வரிசையாக தொங்கும் காட்சி பார்க்கவே ரம்மியமாக இருக்கும். சாந்தி தியேட்டரின் வெளிப்புறச் சுவற்றிலிருந்து எதிரில் இருக்கக் கூடி பாங்கியின் சுவர் வரை கிட்டத்தட்ட 25 முதல் முப்பது அடி நீளத்திற்கு வரிசையாக கயிறு கட்டி அதில் பிளாஸ்டிக்கிலும் துணியிலும் தோரணமாக காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 30 வரிசையில் அவை கண்களைக் கொள்ளை கொள்ளும். நடுநடுவில் ஸ்டார்கள் மன்றத்தின் பெயரைத் தாங்கி, அதில் விதவிதமாக தலைவரின் போட்டோக்கள் ஒட்டப்பட்டு பார்ப்பவர்களை ஈர்க்கும். அதில் சிலர் பாட்டரி வைத்து விளக்கு வசதியும் செய்திருப்பார்கள். இரவு நேரங்களில் அந்த ஸ்டார்கள் ஜொலிப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/s720x720/12208826_1003609463023059_7968259289168294849_n.jp g?oh=1fc72cb380d48917022b9f63cfe1a260&oe=56B78802
அவற்றில் சில பாட்டரி வைத்து விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். அதன் நினைவூட்டலாக...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/12226921_1003612236356115_7344094631894450864_n.jp g?oh=6b2dec9abcce278861e2947561a8191b&oe=56FA32C0
மேலே தோரணங்களும் ஸ்டார்களும் கழுத்து சுளுக்கும் அளவிற்கு நம்மை அண்ணாந்து பார்க்க வைத்தன என்றால்...
நம்மைச் சுற்றிப் பார்த்தால் ...
..... தொடரும்...
RAGHAVENDRA
10th November 2015, 10:45 PM
1960களில் நடிகர் திலகம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்ட காங்கிரஸ் கொடிகள்... ஓர் நினைவூட்டலுக்காக..
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12241514_1003631859687486_7840463446348405673_n.jp g?oh=1b8650fad8dede6254c7b293bf82c318&oe=56F91FF3
HARISH2619
11th November 2015, 09:43 AM
நடிகர்திலகத்தின் அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
HARISH2619
11th November 2015, 09:54 AM
திரு ராகவேந்திரா சார்,
நடிகர்திலகத்தின் தீபாவளி பட வெளியீடு கொண்டாட்டங்களை காண கொடுத்துவைக்காத என்னைபோன்றவர்களின் குறையை தங்களின் நினைவலைகள் தீர்த்துவைக்கிறது,நன்றி.இங்கே பெங்களூரில் தீபாவளி நாளில் கூட்டம் அதிகம்,கலாட்டாக்கள் அதிகம் என்பதால் என் தந்தை எங்களை ஒரு வாரம் கழித்தே கூட்டிசெல்வார்.ஆனால் தீபாவளி நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட திருவிளையாடல்,வசந்தமாளிகை,தங்கபதக்கம் கட்டபொம்மன் போன்ற படங்களை 80களில் பார்த்தது மறக்கமுடியாத அனுபவம்
adiram
11th November 2015, 10:51 AM
ராகவேந்தர் சார் அவர்களின் தீபாவளி நினைவுகள்
முத்தையன் சார் அவர்களின் ஊட்டி வரை உறவு ஸ்டில்கள்
ஆதவன் ரவி அவர்களின் நினைப்போம் மகிழ்வோம் வரிசை
அனைத்தும் ஒன்றிணைந்து தீபாவளியை களைகட்ட செய்துவிட்டன.
ராகவேந்தர் அவர்களின் தீபாவளி படங்களின் வெளியீட்டு வைபவங்கள் அவர்மீது பொறாமைகொள்ள வைக்கின்றன. கொடுத்துவைத்த ரசிகர்கள்.
Murali Srinivas
11th November 2015, 01:35 PM
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
மதுரையில் பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் மற்றும் வசந்த மாளிகை ஆகிய படங்களின் வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .
(தொடரும்)
அன்புடன்
KCSHEKAR
11th November 2015, 06:09 PM
திரு.முரளி, திரு.ராகவேந்திரன் ஆகியோரது அனுபவப் பதிவுகள், திரி நண்பர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.
கார்த்திக் சார், தங்களது பதிவுகளும் இடம்பெற்றால் திரியின் சுவை மேலும் மெருகேரும்.
தொடர் பதிவுகளைத் தரும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
HARISH2619
11th November 2015, 06:20 PM
Dear murali sir,
we are waiting..................
Russellxor
11th November 2015, 06:23 PM
திரு.முரளி, திரு.ராகவேந்திரன் ஆகியோரது அனுபவப் பதிவுகள், திரி நண்பர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.
கார்த்திக் சார், தங்களது பதிவுகளும் இடம்பெற்றால் திரியின் சுவை மேலும் மெருகேரும்.
தொடர் பதிவுகளைத் தரும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
இதை இதைத்தானே எதிர்பார்க்கிறோம்.
Russellxor
11th November 2015, 06:48 PM
பட வரிசை தொடர்ச்சி
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1446284072540_zpsu29weiyq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1446284072540_zpsu29weiyq.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247724446_zpsnghlrhad.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247724446_zpsnghlrhad.jpg.html)
Russellxor
11th November 2015, 06:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247721217_zpsgsloinlv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247721217_zpsgsloinlv.jpg.html)
Russellxor
11th November 2015, 06:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247717612_zps5iill31d.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247717612_zps5iill31d.jpg.html)
Russellxor
11th November 2015, 06:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247711982_zps0rmueblw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247711982_zps0rmueblw.jpg.html)
Russellxor
11th November 2015, 06:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247708867_zpsprocm22o.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247708867_zpsprocm22o.jpg.html)
Russellxor
11th November 2015, 06:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247705685_zps5ceqz3gm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247705685_zps5ceqz3gm.jpg.html)
Russellxor
11th November 2015, 06:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247702015_zpsjofnbfzj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247702015_zpsjofnbfzj.jpg.html)
Russellxor
11th November 2015, 06:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247696825_zpsuzfqrbf8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247696825_zpsuzfqrbf8.jpg.html)
Russellxor
11th November 2015, 06:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247692728_zpsto1l6eov.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247692728_zpsto1l6eov.jpg.html)
Russellxor
11th November 2015, 06:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447247689702_zps11xhbbhq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447247689702_zps11xhbbhq.jpg.html)
Murali Srinivas
11th November 2015, 07:02 PM
வாசு,
மணமகன் தேவை பாடல் காட்சி பற்றிய உங்கள் பதிவை மீண்டுமொரு முறை படித்தேன். அந்த காட்சியமைப்பை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பாடலை ஒரு முறை ராகவேந்தர் சார்தான் அவர் வீட்டில் எனக்கு போட்டுக் காட்டினார் என்று நினைவு. அன்று பார்த்தபோது தோன்றிய உணர்வுகளை இப்போது உங்கள் எழுத்தில் பார்க்க முடிந்தது.
ராகவேந்தர் சார்,
Surprise தீபாவளி தொடருக்கு வாழ்த்துகள். பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒரே ஒரு request. 1970-லிருந்து தொடங்காமல் 1966 -லிருந்து ஆரம்பித்தால் இன்னும் பல சுவையான விஷயங்கள் பலருக்கும் தெரியாத விஷயங்களை உங்களால சொல்ல முடியும் என நினைக்கிறேன்.
அன்புடன்
RAGHAVENDRA
11th November 2015, 10:24 PM
வாசு சார்
முரளி சார் சொன்னது போல் மணமகன் தேவை படத்தைப் பற்றிய தங்களின் பதிவு, குறிப்பாக வெண்ணிலா ஜோதியை வீசுதே பாடலைப் பற்றி நாம் அடிக்கடி சிலாகிப்பது போல, தங்கள் எழுத்தில் அற்புதமாக கொண்டு வந்து விட்டீர்கள். உளமார்ந்த பாராட்டுக்கள்.
இதில் கே.ராணி பாடிய பாடல் ஒன்றில் தலைவர் கூலிங் கிளாஸுடன் அட்டகாசமான நடனமாடும் காட்சி மறக்க முடியாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தப் பாடலைப் பற்றியும் தாங்கள் எழுத வேண்டும் என விரும்புகிறேன்.
RAGHAVENDRA
11th November 2015, 10:25 PM
அடியேனுடைய தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் குறுந்தொடருக்கு விருப்பும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி.
RAGHAVENDRA
11th November 2015, 11:02 PM
தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - தொடர்ச்சி
முரளி சார்
1966ல் தான் நான் என் முதல் பதிவில் தொடங்கியுள்ளேன். என்றாலும் உங்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் சற்றே விரிவாக...
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Selvam1-1.jpg
அப்போது பள்ளிப் பருவமாகையால் அவ்வளவாக தனியாக வெளியே அனுப்ப மாட்டார்கள். அந்தக் காலத்துக் கெடுபிடிகள் எல்லோர் வீட்டிலும் அதிகம். நான் மட்டும் தப்ப முடியுமா என்ன. என்றாலும் நண்பர்களுடன் சென்றால் ஆட்சேபணை இல்லை. அந்த மாதிரி போன நாட்கள் சந்தித்த அனுபவங்கள் சற்றுக் குறைவு தான். இருந்தாலும் நினைவில் உள்ள வரை, சந்தித்த வரையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
செல்வம் படம் நன்றாக நினைவிருக்கிறது. காலையில் தீபாவளி அன்று தினத்தந்தி பேப்பர் வாங்கி விளம்பரத்தைக் கத்தரித்து வைத்துக் கொண்டது ஞாபகம் உள்ளது. முழுப்பக்க விளம்பரம். வி.கே.ஆர். பிக்சர்ஸ் அளிக்கும் என்ற தயாரிப்பாளர் நிறுவனம் பெயரும் மனதில் ஊறிவிடும். நண்பனிடம் நச்சரித்து மாலையில் சித்ரா தியேட்டருக்குச் சென்றோம். கெயிட்டி தியேட்டரில் இறங்கி நடப்போம். சித்ரா தியேட்டர் அருகிலேயே ஸ்டாப்பிங் உண்டு என்றாலும் கட்டணம் அடுத்த ஸ்டேஜுக்கு ஏற்ப வாங்கி விடுவார்கள். ஸ்டாப்பிங் இறங்கி பாலத்தில் நுழையும் போதே மக்கள் வெள்ளம் மொய்த்து விடும். அப்போது பாலம் சற்றே குறுகியிருக்கும். போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றாலும் தியேட்டர் கூட்டம் அதிகம் வரும் போது வண்டிகள் சாலையில் ஊர்ந்து தான் செல்லும். கூவம் கரையோரம் சாலையில் பிளாட்பாரத்தை யொட்டி நான்கு அல்லது ஐந்து அடி உயரத்தில் மதில் சுவர் இருக்கும். அதில் ரசிகர்கள் அமர்ந்திருப்பார்கள். என்னுடைய ஞாபகம் சரியாக இருக்குமானால் அந்த கூலிங் கிளாஸ் போஸ் தான் கட்அவுட்டாக வைத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் சித்ரா தியேட்டரில் 51 பைசா, 84 பைசா, ரூ 1.25 பைசா, ரூ 1.66 பைசா மற்றும் ரூ 2.50 பைசா. பெரும்பாலான தியேட்டர்களில் கட்டண விகிதம் 84 பைசா, 1.25 பைசா, 1.66 பைசா மற்றும் 2.50 பைசாவாகத் தான் இருக்கும். அதற்குக் கீழுள்ள வகுப்புக் கட்டணங்கள் மட்டும் சற்றே மாறு படும் ஒரு சில தியேட்டர்களில் 46 பைசா - உதாரணம் கெயிட்டி, பிளாசா, ஒரு சில தியேட்டர்களில் 51 பைசா, உதாரணம் சித்ரா, ஸ்டார், பாரகனில் 61 பைசா என வேறுபடும். குளோப், காசினோ, ஓடியன். ஆனந்த், மிட்லண்ட், வெலிங்டனில் குறைந்த பட்சம் 84 பைசா.என டிக்கெட் கட்டணமிருக்கும்.
அப்படி சித்ரா தியேட்டரைப் பொறுத்த மட்டில் 51 பைசா டிக்கெட்டுக்கான கவுண்டர் பின்புறம் இருக்கும் கேட் அருகில் இருக்கும். அதற்கான வாயிலும் பின்புறம் தான் இருக்கும். மற்ற டிக்கெட் கட்டணத்திற்கெல்லாம் தியேட்டர் பக்கத்தில் கார் பார்க் அருகில் இருக்கும்.
சித்ரா தியேட்டரில் மெயின் கேட்டும் தியேட்டரின் நுழைவாயிலும் அருகருகே இருக்குமாகையால் அங்கே நெரிசல் மிகவும் இருக்கும். மேனேஜர் அறையும் பரொஜக்டர் அறை அருகில் இருக்கும்.
2.50 டிக்கெட் மாடியில் பால்கனி வகுப்பாக இருக்கும். மாலைக் காட்சிகளில் நல்ல காற்றோட்டத்துடன் படம் பார்ப்பது சுகானுபவமாக இருக்கும்.
அப்படி ஒரு சூழலில் படம் பார்க்கும் ஆவலோடு தியேட்டருக்குச் சென்றோம். டிக்கெட் ஏதுமில்லை. கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற வகையில் தான் சென்றோம். பள்ளியில் காலை ஷிப்ட். மதியம் 12.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவோம். சாப்பிட்டு விட்டு ஹோம் ஒர்க் முடித்து விட்டு கடற்கரையில் விளையாடப் போய் விட்டு மாலை வீட்டுக்கு வரும் பழக்கமுண்டு. ஆனால் அன்றைக்கு தீபாவளி, படம் வேறு ரிலீஸ். அதனால் கடற்கரை பள்ளி சமாச்சாரங்கள் இல்லை. டிக்கெட் கிடைத்தால் போகிறோம் என வீட்டில் சொல்லித் தான் கிளம்பியிருந்தோம். அதனால் சற்று வீட்டைப் பற்றிய கவலையை விட்டு டிக்கெட் கவனத்தில் லயித்தோம்.
பாலத்தில் தியேட்டரை நோக்கிச் செல்லும் போதே ஒரு பெண்மணி மறித்தாள், செல்வம் டிக்கெட் 84 பைசா 5 ரூபாய் என எங்களிடம் டிக்கெட் வேண்டுமா என்று கேட்டார். ஆனால் எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாதே. 84 பைசா டிக்கெட்டை ஒரு ரூபாய் கொடுத்தே வாங்க முடியாத நிலையில் அல்லவா அப்போதெல்லாம் இருந்தோம்.
அப்போதே தீர்மானித்து விட்டோம், இன்றைக்கு நம்மால் படம் பார்க்க முடியாது என்று. அந்த பைசாவை செலவு செய்யாமல் ஓரிரு நாட்களுக்கு இன்னும் சேரும் பைசாவை வைத்து ரூ 2.50 ரிசர்வ் செய்து கொள்ளலாம் அல்லது 84 பைசா கிடைத்தால் பார்க்கலாம் என்று தீர்மானித்து விட்டோம்.
அதற்கேற்ப சில நாட்களுக்குப் பிறகு ரிசர்வ் செய்யப் போனோம். அப்போதெல்லாம் டிக்கெட் ரிசர்வ் செய்து பார்த்தால் பெரிய தோரணை வந்து விடும். காலரைத் தூக்கி விட்டு நாங்கள் ரிசர்வேஷன் டிக்கெட்டாக்கும் என்று சொல்வது ஒரு பெரிய கர்வமாக இருந்தது. எனவே மிதப்பு கனவுடன் கவுண்டருக்குப் போனால் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பகல் மற்றும் மாலைக் காட்சி நிறைந்து விட்டது. இரவுக் காட்சிக்கு மட்டும் ரிசர்வேஷன் இருந்தது. எங்களால் இரவுக்காட்சிக்கெல்லாம் போக முடியாது. யோசனை பண்ணும் போதே ரிசர்வேஷன் நேரம் முடிந்து விட்டது. 12 மணியாகி விட்டது. அப்போது ஒரு பெண்மணி சொன்னார். 84 பைசா கவுண்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் கியூவை அனுமதித்து விடுவார்கள். 84 முடிந்த பின் 51 பைசா கொடுப்பார்கள் எனவே இப்போதே 84 பைசாவுக்கு நின்று விடுங்கள் என்றார். அதைக் கேட்டு ஜம்பமாக கியூவில் போய் நின்றோம். 10வது அல்லது 15வது ஆளாக நின்றோம். நேரம் ஆக ஆக க்யூ நெருக்கமாகிக் கொண்டே இருந்தது. 10, 15 பேருக்குள் இருந்த நாங்கள் நெருக்கலில் சிக்கி 50 பேருக்குப் பின்னால் போய் விட்டோம். டிக்கெட்டும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் ஒரு வழியாக முட்டி மோதி நூறாவது ஆளாக இருக்கும் டிக்கெட் வாங்கி விட்டோம். கொஞ்ச பேருக்குப் பிறகு டிக்கெட் ஃபுல்.
ஆனால் உடம்போ நசுங்கி விட்டது. வேர்த்து விறுவிறுத்து தொப்பலாக நனைந்து உள்ளே போய் அமர்ந்து சட்டையைப் பார்த்தால் தண்ணீரில் முக்கி எடுத்தது போல் நனைந்து விட்டது. மற்றவர்களோ இன்னும் பாவம். பலர் சட்டை நனைந்தது மட்டுமின்றி சிராய்ப்பு காயங்களுடன் மல்லாடிக் கொண்டிருந்தனர்.
உள்ளே சீட் போட்டு விட்டு வெளியே வந்து பார்த்தால் ... ஆஹா... திருவிழா கூட்டம் போல் தியேட்டர் ஜேஜே என ரொம்பி வழிய மனசெல்லாம் குதூகலித்தது.
ஹவுஸ் புல் போர்டு மாட்டி விட்டார்கள்.
மெயின் கேட்டை மூடி விட்டார்கள்.
மணி அடித்து விட்டார்கள்.
உள்ளே சென்று அமர்ந்தோம்.. விளம்பரங்கள் ஓடி முடிந்தன. நியூஸ் ரீலும் ஓடி முடிந்தது. அதில் வரும் கிரிக்கெட் நியூஸில் மனம் லயித்து சிறிது நேரம் அந்த டெஸ்ட் மாட்சைப் பற்றி சுற்றி வந்தது.
எல்லாம் முடிந்து செல்வம் சென்ஸார் சர்டிபிகேட் வந்தது தான் தாமதம்..
காது ஜவ்வே கிழிந்து விடும் அளவிற்கு உள்ளே ஆரவாரம்.
சிறிது நேரத்தில் தலைவரின் தரிசனம்...
அங்கே தொடங்கிய அளப்பரை படம் முடியும் வரை ஓயவில்லை. இதுவும் ஞாபகம் இருக்கிறது. நான் சின்னப் பையனாக இருந்தாலும் மனதில் அன்றே பதிந்து விட்டது. ஒன்றா இரண்ட பாட்டில் கையைக் கடித்தவாறே ஒரு பார்வை பார்ப்பார், அப்போது, ஏர்போர்ட்டில் கூலிங் கிளாஸுடன் இறங்கி நடக்கும் போது, என பல காட்சிகளில்... அப்போது இடி விழுந்தது போல் ஆரவாரம்.. இத்தனைக்கு கைதட்டும் ஓசைதான். குரல் கூட தரமாட்டார்கள். விசில்.. ம்ஹூம்.. சுத்தம் யாரும் அடிக்க மாட்டார்கள். யாராவது விசில் தப்பித்தவறி அடித்தால் போதும் மற்ற ரசிகர்கள் அவரைக் கூப்பிட்டுத் திட்டி விடுவார்கள், சிவாஜி படத்திற்கு வந்து விசிலடிக்காதே... என்று.. அவர்கள் அந்த மாதிரி கண்டித்தது, எங்களைப் போன்ற அடுத்த தலைமுறையில் உருவான புதிய தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் எடுப்பது போல இருந்தது. அதற்கேற்ப உள்ள கைதட்டலே இடி இடிக்கும் ஓசையை மிஞ்சி விடும்.
சொர்க்கம் என்றால் அதுவல்லவோ சொர்க்கம்...
இப்படி அல்லவோ வாழ்க்கை அமைய வேண்டும்..
அந்த மதிமுகம் புன்னகை தவழ பவனி வரும் போது உலகில் நமக்கு வேறேது வேண்டும்..
படம் முடிந்து படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி அசை போட்ட படியே வந்தோம்..
சில நாட்கள் கழித்துப் பார்த்தால் படத்தின் ரிப்போர்ட் சரியில்லை .. சீக்கிரம் எடுத்து விடப் போகிறார்கள் என்று நண்பன் சொன்னான்..
எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நன்றாகத்தானே இருந்தது ... ஏன் மக்களிடம் வரவேற்பை பெற வேண்டிய அளவிற்குப் பெறவில்லை..
மண்டை குழம்பியது...
அன்று மட்டுமா..
இன்றும் தானே ..
... தொடரும்....
Russellsmd
11th November 2015, 11:45 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015111016252029 7_20151110162623441_zpsqgqywdcu.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015111016252029 7_20151110162623441_zpsqgqywdcu.jpg.html)
"இதுதான்..!
இதுவே தான்..!
என் மனம் விரும்புவது
இதுவேதான்..!"
-வெகுகாலமாக எதற்காகக்
காத்திருந்தோமோ.. அது
நமக்குக் கிடைத்து, அதை
அனுபவிக்கிற நிமிஷத்தில்,
மனம் இப்படித்தான் ஆனந்தக்
கூத்தாடும்.
அது, வெற்று ஆர்ப்பாட்டமில்லை.
வீண் கூச்சலில்லை.
அர்த்தமுள்ள சந்தோஷம்.
தேவையைத் தீர்த்துக் கொண்ட
இதயத்தின் இன்ப வெளிப்பாடு.
எழுத்துக்குள் அடங்காத அந்த
இன்பத்தை , எனக்கு நடிகர் திலகத்தின் படங்களே தந்திருக்கின்றன.
படம் முடிந்து, அவசர அவசரமாய் வீட்டுக்கு ஓடி வந்து, நுழைந்த மாத்திரத்திலேயே "அமிர்தாஞ்சன்" புட்டியைத்
தேட வைத்த படங்களுக்கு
மத்தியில், படம் பார்த்து விட்டு
வெளியே வருகிறவனின்
முகத்தில் ஒரு நிறைவையும்,
நடையில் ஒரு கம்பீரத்தையும்,
உள்ளத்தில் ஒரு மகிழ்வையும்
தந்த படங்கள் நடிகர் திலகத்தின் படங்களாகவே
இருந்தன. இருக்கின்றன.
இருக்கும்.
என் மட்டில், நடிகர் திலகத்தின்
படங்களை நான் காண நேர்ந்ததை நிகழ்வுகளாகக்
கருதவில்லை. காலமும்,
கடவுளும் எனக்குக் காட்டிய
கருணையென்றே கருதுகிறேன்.
அகன்ற வெண்திரையின்
முன்னால் அமர்ந்திருக்கும்
எனக்கு, நடிகர் திலகம் தருவது
வெறும் சினிமாக் காட்சியல்ல.
தன்னைக் கடவுளாக்கிக்
கொண்டவர், கவலை தீர்த்து
எனக்குத் தரும் "தரிசனம்."
-------------
நடிகர் திலகத்தின் படங்களில்
ஒவ்வொன்றாய் எடுத்துக்
கொண்டு, முழுப்படத்தையும்
அணு அணுவாய் ரசித்து
எழுத வேண்டும் என்கிற என்
ஆவலை அதிகப்படுத்திய
அன்பு நண்பர்
திரு. செந்தில்வேல் அவர்களுக்கும், திரியில்
இல்லாவிட்டாலும் தினமும்
திரியைப் பார்த்து விட்டு,
என் பதிவுகளை மெச்சி என்னை வாழ்த்தி மகிழும்
பெரியவர்.அய்யா. திரு.நடராஜன் அவர்களுக்கும்
அன்பின் திரு.பொன்.இரவிச்சந்திரன் அவர்களுக்கும்
எனது இதயப்பூர்வமான
நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
இதய தெய்வம் நடிகர் திலகம் "இரு மலர்கள்" கொண்டு
என் "தரிசனத்தை "துவக்கி
வைக்கிறார்.
இதயக் கோயிலில் வீற்றிருப்பவர்...
என்னையும், என் எழுத்துகளையும் ஆசீர்வதிக்கிறார்.
Russellsmd
11th November 2015, 11:49 PM
தரிசனம்-1
------------
'இரு மலர்கள்'
---------------
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/images-19_zpsjrv1ioaw.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/images-19_zpsjrv1ioaw.jpg.html)
"இரு மலர்கள்."
நாற்பத்தெட்டு வருடங்களுக்கு
முன்பு, நான் பிறப்பதற்கும்
ஐந்து மாதங்களுக்கு முன்பு,
இதே போல் ஒரு தீபாவளி
அன்றைக்குத்தான் வந்தது
என்றறிகிறேன்.
இன்னும் பல நூறு வருஷங்களுக்குப் பிறகு வரும்
ஒரு தீபாவளியன்றும் என்னைப் போல் யாரையேனும் "இரு மலர்கள்"
எழுத வைக்குமென்பது நிஜம்.
-------------
எண்பதுகளின் துவக்கத்தில்,
எங்கள் ஊரில் ஏதோ ஒரு
கோவில் திருவிழாவை
முன்னிட்டு, தெருவில் திரை
கட்டி இரண்டு படங்கள் காட்டினார்கள்.
ஒன்று-'இரு மலர்கள்.'
இன்னொன்று, 'தம்பதிகள்'
என்ற படம்.
சரளைக் கற்கள் உறுத்த, மண்
தரையில் உட்கார்ந்து பார்த்த
'இரு மலர்கள்' தந்த மயக்கம்
இன்னும் தீரவில்லை.
---------------
அழகும், அறிவும் நிறைந்த
இளைஞன் சுந்தர். கல்லூரி
மாணவன்.உடன் பயிலும் உமா என்கிற பெண்ணுக்கும், சுந்தருக்கும் காதல் உருவாகிறது. உருவானது, வளர்கிறது. வளர்ந்தது, செழிக்கிறது.
சுந்தரின் தந்தை பண்பாளர்
சிவக்கொழுந்து. அவரின்
சகோதரி மகள் சாந்தி. அன்பும்,
பண்பும் நிறைந்த குணவதியான
சாந்தியை, தன் மகன் சுந்தருக்கு மணமுடித்து வைக்க பெரிதும் விரும்புகிறார் ..சிவக்கொழுந்து.
தான் வேறொருத்தியை விரும்புவதாய் சுந்தர் சொல்லி
விட கலங்கிப் போகிறார்.
தனக்கு சகலமுமான, ராணுவத்தில் மேஜராகக் கடமையாற்றும் தன் அண்ணனிடம், தனக்கும் சுந்தருக்குமான காதலைத்
தெரிவித்து, அதைத் திருமணமாக ஆக்க அனுமதி
பெறும் பொருட்டு ஊருக்குப் புறப்பட்டுச் செல்கிறாள்,உமா.
அண்ணனிடம் சம்மதம் பெற்றவுடன் கடிதம் எழுதுவதாக தேதி குறிப்பிட்டு
உறுதி சொல்லிப் போகிறாள்.
போன இடத்தில் அன்பான அண்ணனும், அண்ணியும்
விபத்தில் இறந்து விட, உமா
அண்ணனின் மூன்று குழந்தைகளையும் கவனித்துப்
பராமரிக்கும் கடமையை
நினைத்து காதலைத் தியாகம்
செய்கிறாள். தனக்கு வேறொரு
வாலிபனுடன் திருமணம்
நடக்கவிருப்பதாகவும், தன்னை
மறந்து விடும்படியும் கடிதம்
எழுதுகிறாள்.
கடிதம் கண்டு அதிர்ந்து கலங்கிப் போகும் சுந்தர் உடல்
நலம் குன்றிப் போகிறான். உயிர் வாழவே விருப்பமின்றி
உயிர்ப் பிணமாகி விடும் சுந்தருக்கு சாந்தியின் தூய்மையான அன்பு புத்துயிர்
ஊட்டுகிறது.
தன் தந்தையின் எண்ணப்படி
சாந்தியையே மணந்து கொண்டு, உழைத்துப் பெரிய
மனிதனாகி, ஒரு அழகான
பெண் குழந்தைக்கும் தகப்பனாகி இன்ப வாழ்க்கை
வாழ்கிறான்.
விதி, மீண்டும் உமாவை சுந்தரின் வாழ்க்கையில்
செருகிச் சிரிக்கிறது. சுந்தரின்
மகள் பயிலும் பள்ளிக்கே
ஆசிரியையாக வருகிறாள்..
உமா.
உண்மையறியாத சுந்தரின்
மனதில் துன்பப் புயல் வீசி
நிம்மதியைக் காணாமலடிக்கிறது.
கணவனின் நிம்மதியின்மை
கண்டு துடித்துப் போகும் சாந்தி,
உமாவோடு வாழட்டும் என்று
சுந்தரைப் பிரிந்து தன் உயிரை
மாய்த்துக் கொள்ள விழைகிறாள்.
இன்பம் தவழும் சுந்தர்-சாந்தி
வாழ்வுக்குத் தான் இடையூறில்லை.. மூன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டியது தன்
பொறுப்பென்று உணர்த்தி விட்டு, சுந்தரையும், சாந்தியையும் மீண்டும்
இணைத்து விட்டு, தியாகத்தின்
பெண் உருவமாய் கையசைத்து
விடைபெறுகிறாள், உமா.
-இது, "இரு மலர்கள்" படத்தின்,
நம் இதயம் வாழும் கதை.
---------------
காதலுக்கும், கடமைக்கும்
ஊடே உணர்வுகளோடு
அல்லாடும் ஒரு இளம்பெண்.
மாமன் மகன்தான் உலகமென்றும், அவன் பருகத்
தருவது நஞ்செனினும் அதுவே
தனக்கு அமிழ்தென்றும் திரியும்
ஒரு பெண்.
படத்தின் தலைப்பு மட்டுமல்ல..
படத்தின் கதையும் கூட இந்த
இரண்டு பெண்களைத்தான்
பேசுகிறது.
இந்த 'இரு மலர்களையும்'
முந்திக் கொள்கிறது.. நம்
நடிகர் திலகமெனும் கலை
மலரின் வாசம்.
இந்த "சுந்தர் "கதாபாத்திரத்தில்
நடிகர் திலகம் தவிர வேறு
யார் நடித்திருந்தாலும், அது
ஒரு தவிர்க்க முடியாத பாத்திரமாக மட்டுமே இருந்திருக்கும்.
நடிகர் திலகம் "சுந்தர்" வேடம்
தாங்கினார். அது, மறக்க
முடியாத பாத்திரமாயிற்று.
--------------
காலம் கொண்டாடும் நம்
காவிய நாயகரை அகிலத்திற்கு
பெருமையோடு அறிமுகம்
செய்வித்தது போன்றதொரு நாடக மேடையோடுதான்
"இரு மலர்கள்" படமும்
ஆரம்பமாகிறது.
சென்னைக் கல்லூரியில் பயிலும் சுந்தரும்-உமாவும்,
கோவலனும்-மாதவியுமாக
நடிப்பார்கள் என்று அறிவிக்கப்
பட்டவுடன், தலையோடு,தலை
மோதிக் கொண்டு சண்டை
போடுவதாய் நடிகர் திலகமும்,
பத்மினியும் காட்டப்படுகிறார்கள்.
குறும்பு கொப்பளிக்கும் நடிகர்
திலகத்தின் அந்த முகம் தான்
போகப் போக ஆயிரம் உணர்வுகளைப் பூசிக் கொண்டு
நம்மை மயக்கப் போகிறது
என்பது அப்போது நமக்குத்
தெரியாது.
"மாறுபட்ட இரண்டு துருவங்கள் நாம். நாம் ஒன்று
சேர முடியாது."-என்று வாதிடும் பத்மினியிடம்,
"மாறுபட்ட இரண்டு விஷயங்கள்தான் ஒன்றை
ஒன்று ஆகர்ஷிக்கும். வசீகரம்
செய்யும். "-என எதிர்வாதம்
செய்கையில் நடிகர் திலகத்தின்
அந்த கிண்டலான தொனியில்
வரும் உச்சரிப்பு, சுவாரஸ்யமான வியப்பு.
இருவரும் மல்லுக்கட்டும்
போதே மணியடித்து நாடகம்
துவங்க, திரை விலக, மயிலென
நாட்டியப் பேரொளி ஆட,
படுக்கவும் இல்லாத,
உட்காரவும் இல்லாத ஒரு
ஒய்யார இருப்பில், ஒளியற்ற
இருட்டகற்றி ஒளி வந்து பாய,
அந்த ஒளியையும் மிஞ்சும் தன்
ஒளி முகத்தை நம்மை நோக்கித் திருப்பி, "மாதவிப்
பொன்மயிலாளை" வர்ணிக்கும்
கோவலனாக நடிக்க, நடிகர்
திலகத்தைத் தவிர வேறொருவரைச் சிந்திப்பவன்
கேவலன்.
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/images-10_zpsxfi0ac6s.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/images-10_zpsxfi0ac6s.jpg.html)
( தொடரும்...)
RAGHAVENDRA
12th November 2015, 02:03 AM
"மாதவிப்
பொன்மயிலாளை" வர்ணிக்கும்
கோவலனாக நடிக்க, நடிகர்
திலகத்தைத் தவிர வேறொருவரைச் சிந்திப்பவன்
கேவலன்.
"சூப்பர்...."
RAGHAVENDRA
12th November 2015, 02:11 AM
நிகழ்வுகளோடும் நினைவுகளோடும் காலமெனும் நதியில் நீந்தியோடும் கற்பனை ஓடம், மெல்ல மெல்லத் தன் பயணிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகிறது... வாசு, முரளி, ஆதவன் ரவி என பயணிகள் ஒவ்வொருவரும் ஓடத்தை சீராக அலையோட்டத்தோடு கொண்டு செல்கிறார்கள். பயணிகளாக மட்டுமின்றி துடுப்புக்காரனாகவும் அவர்கள் செயல்படுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். பயணிகள் எண்ணிக்கை கூட வேண்டும் எனவும் விரும்புகிறது மனம்.
இந்த நினைவுகளில் மூழ்கி விட்ட என் மனது, மற்றொரு முக்கியமான பயணியை மறந்து விட்டது. சக பயணிகளின் மனம் சோர்வடையாமல் ஊக்குவித்து, அவர்கள் ஒவ்வொருவரின் சிறப்பையும் மற்றவரிடத்து எடுத்துரைத்து, தன் சிறப்பையும் மற்றவர்கள் அறியும் வண்ணம் எடுத்துரைத்து பயணத்தை சிறப்பாக்கும் அந்த பயணி, கடந்த 7ம் தேதி தன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது.
ஏனோ மனம் மறந்து விட்டது.. என்றாலும் அதில் தவறுமில்லை. காரணம் அந்த பிறந்த நாளில் அந்தப் பயணியோடு இன்னோர் கலைஞனும் தன் பிறந்த நாளைக் கொண்டாடினான்றோ.. இவருவரும் ஒன்றெனத்தானே மனம் நினைக்கிறது.. ஒருவரை வாழ்த்தினால் அது இன்னொருவரை சேரும் அளவிற்கு ஆத்மார்த்தமான பிணைப்பன்றோ..
இருந்தாலும் தாமதமாக வாழ்த்துவதில் குறை ஒன்றுமில்லையே..
கோபால்,
தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். எங்களைப் பொறுத்த மட்டில் எல்லா நாளும் நவம்பர் 7 அன்றோ..
கலை"வாணி" யின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்ற தாங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
RAGHAVENDRA
12th November 2015, 02:15 AM
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழாவில் என்ன நடந்தது...
முரளி சார் ... காத்திருக்கிறோம்...
Gopal.s
12th November 2015, 08:07 AM
ராகவேந்தர் ,
நான் ஒரு ஜெட் பைலட் .சிவாஜியை உலகத்தர பார்வையில் நவீன நடிப்பு கோட்பாடுகளில் அளந்தவன்.இன்னும் ஓடத்தில் போய் கொண்டிருக்கும் உங்களுடன் ஒப்பிட்டு என்னை அவமதிக்க வேண்டாம். நான் உங்களில் சக பயணியல்ல.அந்த நினைப்பே உங்களுக்கு வேண்டாம். ஓடக்கார மாரிமுத்துவாக நீங்களும் ,முரளியுமே இருந்து கொள்ளுங்கள்.
துரோக கும்பலை மட்டுமே வளர்த்து விட்ட சிவாஜி அண்ணே கோஷ்டிக்கு ,மாற்றாருக்கு புத்தகம் போட்டு அலையும் ஆட்களை மட்டுமே ஞாபகம் வைத்திருக்க முடியும். உண்மை விசுவாசிகள் தங்கள் வழி கண்டு கொள்ள வேண்டியதுதான். ஏன் அரசியலில் ஒரு புண்ணாக்கும் எடு படவில்லை என்று இப்போதாவது புரிகிறதா? நல்ல வேளை ,தப்பி தவறி ஆட்சி அதிகாரம் கிடைத்திருந்தால் ,நகைசுவையின் உச்சத்தையல்லவா தொட்டிருக்கும்?
belated என்பது ஓரிரு நாள் தவறலாம். ஒரு வாரம் கழித்து வாழ்த்துவது அருவருப்பான அநாகரிகத்தின் உச்சம். நான் கொண்டாட வேண்டிய முறையில் கொண்டாடி ஆயிற்று. உங்கள் வாழ்த்துக்களை திருப்பி அளிக்கிறேன்.
இன்று தற்செயலாக வந்ததால் இந்த கன்றாவி கூத்தை பார்க்க நேர்ந்தது. நான் 6 ஆம் தேதி வியட்நாமில் 20 பெண்களுடன் (எனது பணியாளர்கள்),7 ஆம் தேதி சிங்கப்பூர் எனது சகோதர சகோதரிகளுடன் ,8 ஆம் தேதி இந்தோனேசியாவில் எனது 10 பணியாள நண்பிகளுடன் , சிறப்பாகவே கொண்டாடி விட்டேன்.
தயவு செய்து தொடர்ந்து யாரும் இந்த கூத்துக்களை அரங்கேற்ற தேவையில்லை.
Murali Srinivas
12th November 2015, 09:40 AM
Gopal,
I thought you were beyond all those expectations of wanting birthday wishes. Last year every soul in this hub universe wished you but this time may be due to oversight people might have forgotten. To err is human. Why should you resort to harsh lamguage? I am not writing this just because you ahve mentioned my name also. But as a genuine well wisher who doesn't want his friend to be misunderstood all the times for all the wrong reasons. Hope you understand!
Regards
adiram
12th November 2015, 12:17 PM
டியர் ராகவேந்தர் சார்,
1966 தீபாவளி வெளியீடான 'செல்வம்' நினைவலைகள் மிகவும் விவரமாக இருந்தது. படத்தைப்பற்றி மட்டுமல்லாது சித்ரா தியேட்டரைப் பற்றிய விவரங்களும் சிறப்பாக இருந்தன. அப்போதெல்லாம் கூவம் ஆறு(?) 'கொஞ்சம்' தெளிவாக இருந்ததால் இரவு நேரங்களில் சித்ராவின் விளக்கு அலங்காரங்கள் அதில் பிரதிபலித்து அழகை கூட்டும் என்பதாக மூத்த ரசிகர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை கெயிட்டி கரையிலிருந்து பார்த்து மகிழ்வார்களாம்.
உங்கள் பதிவின் கடைசி வரிகள்தான் சற்று புரியவில்லை. 'செல்வம்' ரிப்போர்ட் ஏன் ரிசல்ட் சரியில்லைஎன்று சொல்லப்பட்டது?. அந்த தீபாவளிக்கு வந்த படங்களிலேயே செல்வம்தானே நன்றாக ஓடியது. ஏற்கெனவே சரஸ்வதி சபதம் ஓடிக்கொண்டிருந்தபோதிலும் எல்லா ஊர்களிலும் செல்வம் நல்ல வசூல் ஆனது.
1966 தீபாவளிக்கு செல்வம், பறக்கும்பாவை, கௌரிகல்யாணம், வல்லவன் ஒருவன், தேன்மழை, மேஜர் சந்திரகாந்த் ஆகிய படங்கள் வெளியாகி திரையை கலக்கின.
JamesFague
12th November 2015, 01:55 PM
Mr Raghavendra Sir,
Excellent recollection of Diwali Releases of NT's Movies. We are waiting for the next one.
Mr Athavan Sir,
Your Dharisanam of Thalaivar is super.
RAGHAVENDRA
12th November 2015, 02:10 PM
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - 3
சில நாட்கள் கழித்துப் பார்த்தால் படத்தின் ரிப்போர்ட் சரியில்லை .. சீக்கிரம் எடுத்து விடப் போகிறார்கள் என்று நண்பன் சொன்னான்..
எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நன்றாகத்தானே இருந்தது ... ஏன் மக்களிடம் வரவேற்பை பெற வேண்டிய அளவிற்குப் பெறவில்லை..
மண்டை குழம்பியது...
அன்று மட்டுமா..
இன்றும் தானே ..
... தொடர்ச்சி...
அந்தக் குழப்பம் இன்றும் இருக்கிறது.. நண்பன் ஏன் சொன்னான்.. அப்படி சொல்வதற்குக் காரணம் என்ன... இவையெல்லாம் விளங்குவதற்கு சில காலம் ஆனது... அந்த ஒரு பிராயத்தில் அவ்வளவாக தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால் யாராவது வாய் மொழியாக ஏதாவது சொன்னால் மனம் நம்பி விடும். வதந்தியாகப் பரவி விடும் அந்தத் தகவல்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.. சாந்தியில் சரஸ்வதி சபதம் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருந்ததால் அடுத்த படம் தோல்வி என பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில் இப்படி ஒரு செய்தி பரப்பப் பட்டது என மூத்த ரசிகர்கள் கூறினர். தேர்தலுக்கான முஸ்தீபுகள் தொடங்கிய நேரம். எனவே நடிகர் திலகத்தின் படம் தோல்வி என்று பரப்பி விட்டால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்று கணக்குப் போட்டார்களோ என்னவோ இப்படி ஒரு பேச்சு நிலவியது. எங்கள் கண்ணெதிரிலேயே ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எப்படி சரியாகப் போகாமலிருக்கும் என்ற கேள்வி மனதில் ஓடியது. அதற்குப் பிறகு மாலையில் சாந்தியில் சில நண்பர்களிடம் பேச்சுக் கொடுத்த போது சில மூத்த ரசிகர்கள் எங்களிடம் விளக்கினார்கள். இது எப்போதும் நடப்பது தான். சிவாஜி படம் எவ்வளவு தான் நன்றாக ஓடினாலும் அது ஃப்ளாப், தோல்வி, நஷ்டம் என்றெல்லாம் சொல்வார்கள், அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள், படம் சூப்பராக ஓடுகிறது, என்று அவர்கள் விளக்கி, எங்களை சமாதானப் படுத்திய பிறகு தான் மனம் சமாதானம் அடைந்தது. ஆனால் அவ்வாறு செய்தி பரப்பப்பட்டது ஏன் என்ற குழப்பம் பல நாட்கள் நீடித்து பின் ஒரு கால கட்டத்தில் புரிய ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் வெவ்வேறு முனைகளில் நடிகர் திலகத்திற்கு எதிர்ப்பு இருந்தது. அரசியல் ரீிதியாகவும், தொழில் ரீதியாகவும் என அவர் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை. செல்வம் படம் ஓடும் போது கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நேரம். அதன் காரணமாக எதிர்ப்பையும் தாக்குதல்களையும் பிரச்சாரங்களில் தனிப்பட்ட முறையிலும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
படம் தோல்வி என்ற பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும், உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என விரும்பிய மூத்த ரசிகர்களோடு நாங்களும் ஒரு சில வாரங்களுக்குத் தொடர்ந்து அவ்வப்போது சித்ராவில் முகாமிடுவோம். நான் அதிகம் போனதில்லை. ஒன்றிரண்டு முறையே. ஆனாலும் அத்தனை ரசிகர்களும் ஏகோபித்த முறையில் கூறியது.. படம் நிஜமாகவே சூப்பர் ஹிட். இந்த பிரச்சாரத்தை மீறி சிவாஜி படம் ஜெயித்துக் காட்டும் என்று தீவிரமாக நம்பினார்கள் அது உண்மையானது.
படம் மட்டுமல்ல, தேர்தலிலும் அவர் தன் பலத்தை நிரூபித்துக் காட்டினார். அத்தனை பெரிய திராவிட சுனாமியை எதிர்கொண்டு தன்னந்தனியாளாக காங்கிரஸைத் தோளில் சுமந்து அந்த அலையை எதிர்கொண்டார்.
முதன் முறையாக திராவிட ஆட்சியில் தீபாவளியில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வெளியான 1967ம் ஆண்டு...
அடுத்து...
Russellxor
12th November 2015, 03:23 PM
ராகவேந்திரா சார்
வார இதழ்களில் வரும் தொடர்கதை போல் விறுவிறுப்பாக செல்கிறது.
தொடருங்கள்.
நன்றி
Russellxor
12th November 2015, 03:28 PM
பிரமாதம்.அடுத்தபதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
[QUOTE=Aathavan Ravi;1267732]தரிசனம்-1
------------
'இரு மலர்கள்'
---------------
"மாதவிப்
பொன்மயிலாளை" வர்ணிக்கும்
கோவலனாக நடிக்க, நடிகர்
திலகத்தைத் தவிர வேறொருவரைச் சிந்திப்பவன்
கேவலன்.
JamesFague
12th November 2015, 06:13 PM
நான் தீபாவளி அன்று பார்த்த நடிகர் திலகத்தின் படம் கீழ்வானம் சிவக்கும். இந்த படத்தை ராக்ஸ் யில் பார்த்தேன். மிக அற்புதமான தருணம்.
ifohadroziza
12th November 2015, 07:06 PM
என்னை பொறுத்தவரையில் தீபாவளியும் நடிகர் திலகம் படம் வரும் நாளும் ஒன்று தான்.
திரு ராகவேந்திரா சார் தங்களது தீபாவளி வெளியீடுகள்,அலப்பரைகள்,தோரணங்கள் எல்லாம் அருமை.
தீபவளி அன்று காலை 5 மணிக்கு விழித்து தலைகுளித்து உணவு அருந்தி நடிகர்திலகம் படம் பார்க்கபோவது போல் தான் ஒவ்வொரு படம் வெளியீட்டின் போதும் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து விட்டு ஆயா கடையில் பணியாரமும் ஆப்பமும் வங்கி சாப்பிட்டுவிட்டு 5 மணிக்கு தியட்டர்
வாசலுக்கு சென்று வரிசையில் காத்து நின்று டிக்கெட் கிடைத்தவுடன் உள்ளே ஓடுவோமே .என்ன சுகம்.மீண்டும் வராது அந்த இனிமையான நாட்கள்.
ifohadroziza
12th November 2015, 07:27 PM
திரு ஆதவன் சார்
தங்களது தரிசனம் மற்றும் இருமலர்கள் பதிவுகள் மிக அருமை.
நான் தற்பொழுது தான் மாதவி பொன் மயிலாள் பற்றி எனது சக சிறு வயது ஊழியரிடம் பேசிவிட்டு வந்தால் உங்க பதிவு அப்படியே இருக்கிறது.
அந்த சக ஊழியர் subordinate debt என்றால் என்ன வென்று கேட்டார் .நான் அதற்க்கு தான் நடிகர் திலகம் படம் பார்க்க வேண்டும் .பார்த்திருந்தால் ஈசி யாக புரிந்திருக்கும் என்று இருமலர்கள் படத்தை உதரணமாக கூறினேன்.
கூறிவிட்டு மாதவி பொன்மயிலால் பாடலில் பத்மினி அவர்கள் பாடல் தொடங்கும் போது ஆடலில் தூள் கிளப்பி கொண்டிருக்கும் போது எங்களது தலைவர் சீன வரும் பொது முகத்தை திருப்பி தோளில் கிடக்கும் சால்வையை சரி செய்து பாடிகிட்டே ஒரு நடை நடப்பாரே முடிந்தது எல்லாமே என்றேன்.
subordinate debt is an additional debt to the main debt.
Russellsmd
12th November 2015, 10:49 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
...தொடர்கிறது...
----------------
பத்து நிமிஷ நேரத்தில் முடிந்து
போகிற ஒரு சினிமாப் பாட்டு
அரை நூற்றாண்டு காலமாக
அத்தனை மனங்களிலும்
வாழ்கின்றதென்றால்...
"மாதவிப் பொன் மயிலாளில்"
என்ன வசிய மருந்து பூசினார்கள்..?
மிகச் சிறந்த இசையமைப்பையும்,
திறமை மிகுந்த ஒரு பாடலாசிரியரின் தேர்ந்த
எழுத்தையும்,நம் உயிரோடு நிறைந்து விட்ட ஒரு உன்னதக் குரலையும் மீறி இந்தப்
பாடலின் சூழலை அற்புதமாய்
உள்வாங்கிக் கொண்டு, நடிகர் திலகமும்,நாட்டியப் பேரொளியும் திறம்பட வெளிப்படுத்தும் பாவனைகள்...
மாதவிப் பொன் மயிலாளை
மகத்தான வெற்றியடையச்
செய்தன.
ஓயாமல் சண்டையிட்டுக்
கொள்ளும் ஒரு ஆணும்,பெண்ணும் மேடையில்
ஒன்றாக நடிக்க வேண்டிய
சந்தர்ப்பம் வரும் போது,
அவர்களுக்குள் நிலவும்
மென்மையான பூசலையும்
காட்ட வேண்டும். அதே சமயம்,
பார்த்துக் கொண்டிருக்கும்
நூற்றுக்கணக்கானோரை
பரவசப்படுத்தும் வகையில்
கோவலன்- மாதவியாக
நடிக்கவும் வேண்டும்.
பின்னியிருக்கிறார்கள்...
நம்மவரும்,நாட்டியப் பேரொளியும்.
அதுவும், கோவலனாய்,மாதவியின் கையைப் பற்றி
இழுத்துச் சுழற்றி விட, கட்டிலில் விழுந்த மாதவி
நொடியில் உமாவாய் மாறி
கோபம் காட்ட, சிரிப்பு மாறாத
கோவலன் ஓரிரு விநாடிகள்
சுந்தராய் மாற..
வாழ்ந்திருக்கிறார்கள்.
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/madhavi-ponmaiyilaal_zpsyqbuh5ny.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/madhavi-ponmaiyilaal_zpsyqbuh5ny.jpg.html)
அனுதினமும் சந்திக்கிற வாய்ப்பிருக்கிறது. அழகு மொத்தமும் உமாவிடம் இருக்கிறது. அவளைச் சீண்டும்
போதெல்லாம் சுந்தரின் காதல்
புரிகிறது.
அவர்களுக்குள் ஏன் காதல்
இல்லாமல்..மோதல்?
நமக்கு மனசு கிடந்து அடித்துக்
கொள்கிறது.
இருவரும், நாடகம் துவங்கும்
முன் சண்டை போட்ட போது
குறுக்கிட்டுத் தடுக்கும் பேராசிரியர் சுந்தரவதனமாக
வரும் நாகேஷ், "உங்க மிச்ச
சொச்ச சண்டையெல்லாம்
நாடகம் முடிஞ்ச பிறகு
கொடைக்கானல் போறோமே..
அங்கே வச்சுக்கங்களேன்"
என்றாரே?
அவர்களைப் பற்றி நமக்கு
கொடைக்கானலில்தான்
விபரமாகத் தெரிய வருமோ?
------------
கொடைக்கானல்.
"என்னைப் பார்க்காமல் போய்
விடுவாயா?"- என்று கர்வமாய்ச் சிரிக்கிறது.. அழகான இளம்பெண் போல.
துடிப்பு மிக்க மாணவர் குழாம்
அங்கே சந்தோஷமாய்ச் சுற்றி
வருகிறது.
தொப்பி தூக்கும் பாறை, தாங்கள் வீசிய தொப்பிகளை
திருப்பித் தரும் வேகம் பார்த்து
குதூகலிக்கிறது.
இயற்கையை ரசித்துக் கொண்டே சுற்றித் திரும்பும்
உமா மோதுவது, அவளையே
ரசித்துக் கொண்டு நிற்கும்
சுந்தரின் மீது.
நடிகர் திலகத்தின் அந்தப்
பார்வையில்தான் ( புன்னகை-
இலவச இணைப்பு.) எத்தனை
காதல்? எவ்வளவு எதிர்பார்ப்புகள்? எத்தனையெத்தனை கோரிக்கைகள்?
பட்டென்று நொடியில் கடந்து
போய் விடும் ஒரு சின்னஞ்சிறு
காட்சிக்குத் தன்னையும், தன்
அபாரத் திறமையையும் முழுமையாய் ஒப்படைத்து
விட்டு நிற்கும் அந்த ஒப்பற்ற
கலைஞனின் கலையொழுக்கம்
அங்குள்ள மலைகளைக்
காட்டிலும் உயரமானது.
மிக உயர்ந்த மலையின்
உச்சியிலுள்ள பாறை வரை
சென்று வரலாம் என்கிறாள்..
உமா.
சுந்தர் நடுங்குகிறான்.
( இந்தக் காட்சியில், பத்மினி
அந்தப் பாறையை சுட்டிக் காட்டி பேசப் பேசவே, நடிகர்
திலகத்தின் முகம், சாதாரண
நிலையிலிருந்து பயந்த நிலைக்கு மாறுவதை நாம்
தெளிவாகப் பார்க்கலாம்.)
நடுங்கி விலகிப் போகும் சுந்தரைப் பற்றி "பய நழுவுறான். விடாதே." என்று
உமாவை இன்னொரு மாணவன் உசுப்பி விட, உமா
ஒரு அறிவிப்பு செய்கிறாள்.
"உங்களுக்கெல்லாம் ஒரு
போட்டி வைக்கப் போறேன்.
பரிசு சின்னதுதான். ஆனா
அதை என் இதயத்தோடு
தர்றேன்." -என்றபடியே தன்
கூந்தலிலிருந்து ஒரு மலரை
எடுத்துக் கையில் வைத்துக்
கொண்டு.."யாருக்கு வேணும்
இந்த மலர்?" என்று கேட்கிறாள்.
ஏற்கெனவே, பயத்தில் அந்த
இடத்தை விட்டு நழுவி நடந்து
கொண்டிருக்கும் சுந்தர் தன்
நடை நிறுத்தித் திரும்பி ஆவலாய்க் கூவுகிறான்.
"எனக்கு... எனக்கு."
ஆர்வக் கூவலோடு திரும்பி
நிற்கும் அந்த உருவத்தில்,
நடிப்பன்றி வேறொன்றுமறியாத ஒரு
குழந்தையைப் பார்க்கிறோம்.
( ...தொடரும்...)
RAGHAVENDRA
12th November 2015, 10:56 PM
பட்டென்று நொடியில் கடந்து
போய் விடும் ஒரு சின்னஞ்சிறு
காட்சிக்குத் தன்னையும், தன்
அபாரத் திறமையையும் முழுமையாய் ஒப்படைத்து
விட்டு நிற்கும் அந்த ஒப்பற்ற
கலைஞனின் கலையொழுக்கம்
அங்குள்ள மலைகளைக்
காட்டிலும் உயரமானது.
சரியான Punch.. சூப்பர் ரவி...
ifohadroziza
12th November 2015, 11:06 PM
super aathavan sir
Russellxor
12th November 2015, 11:24 PM
சவாலே சமாளி கடைசிப்பதிவு
மாணிக்கம் சகுந்தலாவின்
திருமணம் முடிந்த அன்றைய நாள் இரவு.
மாணிக்கம் பேசுவது:
முன்பின் தெரியாம நாம ஒருத்தரையொருத்தர் சந்திச்சப்போ,அந்த ஒரு நிமிஷத்திலேயேஎன் மனச உங்கிட்ட பறி கொடுத்திட்டேன்.ஆனா அடுத்த நிமிஷமே உன் பணத்திமிராலே என்னை அவமானப்படுத்திட்டே.உன் திமிரை அடக்கனும்கறதுக்காக ஏழைக்கே உரிய ஆத்திரத்தில்,நானும் சரிக்கு சமமா பதிலுக்கு அவமானப்படுத்திட்டேன்.நாம ரெண்டு பேரும் புருஷன் மனைவி ஆவோமான்னு நினைச்சு பார்த்திருப்போமா?உன் மனசுக்கு புடிச்ச வாழ்க்கை உனக்கு கிடைக்காம இருக்கலாம்.ஆனா கிடைச்ச வாழ்க்கைக்கு தகுந்தாப்போலே உன் மனச மாத்திக்கிறதுதான் உனக்கு நல்லது.இந்தப்புது இடம்,புது உறவு, புது வாழ்க்கை உனக்கு புடிக்காம இருக்கலாம். ஏன் அறுவெறுப்பாக்கூட இருக்கலாம்.என்ன உனக்கு புடிக்கல்லனாக் கூட உன்ன எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.குறிப்பா உன் பிடிவாதகுணம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு.ஏன் தெரியுமா?
(அவ கிட்ட எனக்கு புடிச்சதே அந்த அகம்பாவம்தான்—
"இது வசந்தமாளிகை"
இதுக்கு விழாத கைதட்டா,விசிலா)
நானும் ஒரு பிடிவாதக்காரன்தான்.நம்ம கல்யாணம் இருக்கே அதுதான்
"டிபிகல் சோசியலிசம்".நம்ம ரெண்டு பேரும் ரெண்டு வர்க்கம்.இந்த ரெண்டு வர்க்கமும் பக்குவப்பட்டு ஒண்ணா சேர்ந்தா அதுதான் உண்மையான சோசியலிசம்.அதுக்குத்தான் தலைவர்கள் எல்லாம் பாடுபடறாங்க.நான் உன்ன வெறுக்கல.உன் ஆணவம்,பகட்டு,பணக்காரதிமிறு இதத்தான் வெறுக்கிறேன்.என்கிட்ட ஏழ்மை,வறுமைசூழ்நிலை இதெல்லாம் இருக்கலாம்.அது நாயம்.ஆனா அதுக்காக என்னை ஏன் வெறுக்கற.?புரியல இல்ல. உனக்கு, என்ன , உங்க வர்க்கத்துக்கே புரியாது. ஏன் எங்கள வெறுக்கறோம்கறதே தெரியாம பாரம்பர்யமா அது உங்க ரத்தத்துலயேவிஷமா ஊறிப்போச்சு.
நான் ஒரு முட்டாள் உன்னை நிக்க வச்சே பேசிட்டு இருக்கறம்பாரு.
நீயும் பேசுவ .ஆனா பேசக்கூடாதுன்னு இருக்கற.இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பெண்கள் ரொம்ப வெட்கப்படுவாங்கன்னு சொல்வாங்க.நீயும் வெட்கப்படுறே. எப்படின்னா,அய்யோ எனக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டுப்போச்சேன்னு.
பரவாயில்ல.நீ படிச்ச பொண்ணு. நானும் உன் அளவுக்கு படிச்சவன்தான். எப்படின்னு கேட்கறியா?"ஆயிரம் புஸ்தகத்தை படிச்சவன விடஆயிரம் வயலை உழுதவன் அறிவாளி" ன்னு பெரியவங்க சொல்வாங்க.
(அடடா.என்ன ஒரு வார்த்தை மழை. அவர் பேசறத கேட்க கேட்கத்தான் எத்தனை ஆனந்தம்.)
பேசிக்கொண்டே போய் மனைவி என்ற உரிமையில் சகுந்தலாவை தொடப்போக,
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/lightning-vector-5472_zpsqucpsswl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/lightning-vector-5472_zpsqucpsswl.jpg.html)
"தொடாதீங்ங்ஙக"
சகுந்தலாவின் ஆவேசக் கத்தத்தலில் மாணிக்கம் அதிர்ச்சியில் நிற்க,
"நீங்க ரோசமுள்ள ஆம்பளயாயிருந்தா என் உரிமையில்லாம என்னைத் தொடக்கூடாது "-
இது சகுந்தலா.
"நான் உன்ன தொட்டு தாலிகட்டின புருஷன்.உன்ன இப்ப நான் என்ன வேணாலும்செய்யலாம்.அதுக்கு எனக்கு உரிமையிருக்கு.என்னைக்கு நீ உண்மையா என்னை கணவனா ஏத்துக்கிறியோ அன்னைக்குத்தான் உன்னை நான் தொடுவேன்.இது என் அம்மா மேல ஆணை"-
இது மாணிக்கம்.
நாகரீகம் மனிதனை உயர வைத்தது.அதே நாகரிகம் மனிதர்களை தாழ்த்தவும் வைக்கிறது.நடந்து போனது சாஸ்திர சடங்கல்ல.அது நிர்ப்பந்தத்தால் நடந்த சம்பிரதாயம்.
...ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.
பசி பொறுக்க மாட்டாமல் இரவில் யாருக்கும் தெரியாமல்பழைய சாதம் உண்ணும்படியான நிலைமை,அதை மாணிக்கம் பார்த்து கிண்டல் செய்வது,துணிகளை துவைத்து போடுமாறு மாணிக்கம் சொல்வது.,இது போன்ற நடத்தல்கள் சகுந்தலாவை அவள் வீட்டிற்கு ஓட வைக்கிறது. அவளின் அம்மா சொல்லும் சொற்கள் சகுந்தலாவை மாணிக்கத்திடமே திருப்பி அனுப்புகிறது.
இஷ்டப்படாத திருமணம் ஒரு பக்கம் நடந்திருந்தாலும்,மாணிக்கம் தன் குடும்பத்திற்கேற்றவாறு சகுந்தலாவை மாற்ற செயல்படுத்தும் சில கட்டுப்பாடுகள் சகுந்தலாவை நோக வைக்கின்றன.அது அவளை வேதனைப்படுத்தி ,இறந்துவிடலாம் என்று கிணற்றில் குதிக்க முயற்சிக்கும் போது,மாணிக்கம் வந்து தடுத்து விடுகிறார்.
என்னை ஏன் சித்ரவதை செய்கிறீர்கள் நான் இறந்து விடுகிறேன் என்று சகுந்தலா கூற,நீ இறந்து விட்டால் பழி என் மீதல்லவா வரும் எனவே கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு நீ நிம்மதியாக இரு என்று கிணற்றின் மேல் நின்று கொள்கிறார்.
பின்பக்கம் இருந்து தள்ள கைகளை கொண்டு வரும் சகுந்தலா தள்ளிவிட எத்தனிக்கையில்,
மனமா?
அது
மாறுமா?
யோசிக்கிறது மனம்.
சிந்தை தடுமாற பின் வாங்குகிறது கரங்கள்.
சகுந்தலாவின் மனம் தோற்றது.
தமிழ்ப்பண்பாடு வென்றது.
இந்த இடத்தில் மாணிக்கம் கூறும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும்.சகுந்தலா என்ன இருந்தாலும் பெண்தானே.சற்றே கரைவது போல் தெரிகிறது.
மாணிக்கத்தின் சொற்கள் சகுந்தலாவிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது அவள் விழிகள் காட்டுகின்றன.
இவ்விடத்தில் சகுந்தலாவை தேடி வரும் காவேரியை ராஜவேலு மானபங்கப்படுத்தி விடுகிறான்.ஆவேசமடைந்த காவேரி
ராஜவேலுவின் வயலுக்கு "தீ"வைத்து விடுகிறாள்.அதை மாணிக்கம் பார்த்துவிடுகிறார்.காவேரியிடம் காரணம் கேட்க நடந்ததை கூறுகிறாள்.தீ பரவுவதை பார்த்து ஊர் மக்களுடன் அய்யாக்கண்ணுவும் சேர்ந்து வருவதைப்பார்த்ததும் மாணிக்கம் காவேரியின் கைகளில் இருந்து தீப்பந்தத்தை வாங்கி காவேரியை தப்பிக்க வைக்கிறார். தீப்பந்தத்துடன் மாணிக்கம் வருவதைப் பார்த்து ஊர்மக்கள் மாணிக்கம்தான் தீ வைத்தது என்று முடிவு செய்து பண்ணையாரின் வீட்டிற்கு பிடித்துச் செல்கின்றனர்.
அங்கே விசாரணை ஆரம்பிக்கிறது.
(சவாலே சமாளி முதல்பதிவு)ஆரம்பத்தில் குறிப்பிட்ட காட்சி இங்கேதான் அரங்கேற்றமாகிறது.
சாட்டையடியால் ரணமாகி,வலிகளுடன் கட்டிலில் படுத்திருக்கும் மாணிக்கத்தை பார்த்து கண்ணீர் விடுவதோடு,அவருடைய காலிலும் விழுந்து அழுகிறாள்.மாணிக்கத்தை தொட்டு தாய் மேல் இட்ட ஆணையை வாபஸ் வாங்க சொல்லுகிறாள்.
அப்புறம்,"
கேட்டுக்கோடி உறுமிமேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்.
வ ண க் க ம்.
நடிகர்திலகத்தின் நடிப்பை விவரிக்க வேண்டுமென்றால் பிரேம் பை பிரேம் எழுத வேண்டி வரும்.அதற்கு பொருத்தமான வார்த்தைகள் தேடினால் பொழுதும் போதாது.
ஆரம்பகாட்சியில் பணிவுக்கு பணிவு,பதிலுக்கு பதில் அளிக்கும் அந்தபாந்தமான நடிப்பைச் சொல்வதா?
விஜயகுமாரியை கண்டிக்கும் போது கூட, காட்டும் கண்ணியத்தை சொல்வதா?
மரம் வெட்டும் போது ராகவனிடத்தில்
மறைத்து வைத்த பாசத்தை இயல்பாக வெளிப்படுத்துவதைச் சொல்வதா?
நாகேஷ் ஆடும் சகுனியாட்டத்தில்
பகவதியிடம் சவால் போடும் வித்தையைச் சொல்வதா?
அம்மாவாக வரும் காந்திமதியிடம் அவர் காட்டும் அந்நியோன்யமான அன்பைச் சொல்வதா?
தேர்தல்களத்தில் மஞ்சள் தாலியை கையில் வைத்து மதர்ப்பானநடை காட்டும் அந்த நடிப்பைச் சொல்வதா?
நம்பியாரை பொளந்து கட்டும் சண்டையில் அந்த ஆவேச நடிப்பைச் சொல்வதா?
தொடாதீர்கள் என்று சொல்லும் ஜெயாவிடம் காட்டும் அந்த ஆண்மையின் கம்பீரத்தைச் சொல்வதா?
தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவிடம் பேசும் அந்த சொற்பொழிவைச் சொல்வதா?
...அதனால்தான் கண்ணதாசன் சொன்னார்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/_IMG_000000_000000_zpslqvwvavt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/_IMG_000000_000000_zpslqvwvavt.jpg.html)
$$$$$$$$$$$$ E N D $$$$$$$$$$$$$$$$$$
Murali Srinivas
12th November 2015, 11:34 PM
விரைவில் சென்னையில் நல்ல திரையரங்கில்!
நமது உள்ளம் கொள்ளை கொண்ட இரு மலர்கள்!
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/12196167_1641167692825616_3799762500431214189_n.jp g?oh=7440b238ad3a15238f8872c1de93e363&oe=56EC4B5F
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12227601_1641167849492267_3017952985935214297_n.jp g?oh=610fe3cbb8153acea91b97fa38b72371&oe=56ADF73B
வாசு ரெடியா?
அன்புடன்
JamesFague
13th November 2015, 09:19 AM
நேற்று குருதட்சிணை பாடல் ஒன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடல் ஒன்றாம் கிரகம் அடி அதில் நான்காம் கிரகமடி என்ற வரியில் ஒரு நடை நடப்பாரே நடையா அது. அழகு நடை .
JamesFague
13th November 2015, 10:12 AM
From Dinamani
மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபா அடுத்து வெளியானது. சேலத்தில் அதன் படப்பிடிப்பில் பானுமதிக்கு கிடைத்த இன்னொரு அற்புத இணை நடிகர் திலகம்!
முதன் முதலாக சிவாஜியைச் சந்தித்தது பற்றி பானுமதி விவரமாக கூறியுள்ளார்.
‘நெப்டியூன் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் ராணி படத்தில் நடித்த சமயம். ஒருநாள் அவர்களது ‘மனோகரா’ படக் காட்சிகளைப் பார்த்து விட்டு செட்டுக்குத் திரும்பினேன்.
அவரது நடிப்பு என்னைக் கவர்ந்து விட்டிருந்தது. அன்றைய தினம் அரங்கில் என்னுடன் நடித்தவர்களிடமெல்லாம், கணேசனின் திறமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
சிவாஜிகணேசன் நடித்து நான் பார்த்த முதல் படம் இதுவே. பின்னர் நான் பார்த்த சினிமாக்களில் அவரது ஆற்றல் மேலும் மேலும் பெருகியது.
தவிர, ஒரு சிறந்த நடிகர் என்கிற முறையில் அவர் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் என்னிடம் வளர்ந்தன. மனோகரா பார்த்துச் சில மாதங்கள் சென்றிருக்கும்.
சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்.
சிறிது நேரம் காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணேசன் கிளம்பிச் சென்றார்.
அந்த சில நிமிஷங்களில்
என்ன அருமையாக நடிக்கிறார் இவர்! இவருடன் எப்படியாவது நான் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். என்ற தன் விருப்பத்தை சுப்பாராவிடம் சொன்னாராம்.
சிவாஜி போன பிறகு, அதை என்னிடம் கூறிய சுப்பாராவ், ‘என்னம்மா உங்களுடன் நடிக்கணும்னு இவர் இப்படித் துடிக்கிறாரே!’ என்றார்.
சென்னைக்குத் திரும்பி வந்த சில நாள்களிலேயே அதற்குப் புதிய சந்தர்ப்பம் கிடைத்தது.
கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதையைப் படமாக்க என்னைத் தேடி வந்தார் ரேவதி ஸ்டுடியோ அதிபர், டைரக்டர் வி.எஸ். ராகவன்.
‘இந்தப் படத்தில் கதாநாயகி கல்யாணியாக நீங்கள் நடிக்க வேண்டும். முத்தையனாக சிவாஜி நடிக்கப் போகிறார்... உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.
‘நான் என்ன சொல்வது...? கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே...! என உடனடியாக ஒத்துக் கொண்டேன்.- பானுமதி.
‘கள்வனின் காதலி’ 1955 தீபாவளி வெளியீடு. சென்னையில் கெயிட்டி, மகாலட்சுமி, சயானி, ராஜகுமாரி, பிரபாத் என ஐந்து தியேட்டர்களில் ரிலிசானது. அந்நாளில் அது ஓர் அபூர்வ நிகழ்வு. பிரம்மாண்டமான ஜெமினி சித்திரங்கள் கூட மூன்று அரங்குகளில் மட்டுமே நடைபெறும்.
அதே நாளில் சிவாஜியின் இன்னொரு படமான கோட்டீஸ்வரனும் வெளியானது. அதில் அவரது ராசியான பத்மினி ஜோடி. கோட்டீஸ்வரன் முழு நீள நகைச்சுவைச் சித்திரம். வீணை எஸ். பாலச்சந்தர் கூட சிரிப்பு காட்டினார்.
திரையிட்ட ஐந்திலும் கள்வனின் காதலி 80 நாள்களைக் கடந்து ஓடி நன்கு வசூலித்தது.
மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் பட இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணியின், சொந்தத் தயாரிப்பு இயக்கத்தில் கோட்டீஸ்வரன் உருவானது. இருந்தும் கள்வனின் காதலி பிரமாதமாக ஓடியது. காரணம் சிவாஜி- பானுமதி இருவருமே விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தார்கள்.
நூறாவது நாள் விழா எடுத்தால் ஐந்து தியேட்டர் ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த வசூலோடு ரேவதி ஸ்டுடியோ திருப்தி அடைந்தது. கள்வனின் காதலியில் பானுமதி பாடியதில் ‘வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ சூப்பர் ஹிட்.
1955 தீபாவளி தொடங்கி தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நடிப்புப் போட்டி முதன் முதலாக உருவானது.
‘கள்வனின் காதலியில்’ நடித்தது பற்றி நடிகர் திலகம்:
‘கள்வனின் காதலி’யில் பானுமதி ஹீரோயின் என்று டைரக்டர் ராகவன் சொன்னதும் எனக்குப் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்காகச் சென்றேன்.
ராகவன் என்னை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பெரிய நடிகை, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே, நடித்துப் பிரபலமாக விளங்கி வரும் சிறந்த நடிகை என்ற உணர்வோடு வணக்கம் என்றேன்.
அன்றைய தினம் நான் பெண் மாதிரியும், அவர் ஆண் பிள்ளை போலவும் பேசி கிண்டல் செய்யும் தமாஷான காட்சி ஒன்றை எடுத்ததாக நினைவு.
முந்நூறு படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுடன் நடித்தவர் சிவாஜிகணேசன். 1970ல் ராமன் எத்தனை ராமனடியோடு விரைந்து 140 படங்களை முடித்தத் திருப்தி !
சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.
கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.
கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம்(1955 -1970) கடந்திருந்தும், அதே பழைய பணிவை, வி.சி. கணேசன் போன்ற யுகக் கலைஞரிடம் பெற பானுமதியால் மட்டுமே முடிந்தது!
‘மலைக்கள்ளன், - கள்வனின் காதலி’ எம்.ஜி.ஆர்.-சிவாஜியோடு முதன் முதலாக பானுமதி சேர்ந்து நடித்த இவ்விரு படங்களும் தமிழின் புகழ் பெற்றப் புதினங்கள்.
இரு கதைகளிலும் கதாநாயகன் திருடன். ஆனால் மிகவும் நல்லவன். இரண்டிலும் ஒரே நாயகி பானுமதி. பூங்கோதைக்கும், கல்யாணிக்கும் நடிப்பில் எத்தனை எத்தனை வித்தியாசம் காட்டி இருக்கிறார் பானுமதி!
RAGHAVENDRA
13th November 2015, 02:07 PM
ஆதவன் ரவி
தங்களுடைய நினைப்போம் மகிழ்வோம் தொடரில் நம் அனைவருக்குமே பங்கு கொள்ள விருப்பமாக உள்ளது.
இத்தொடரில் துணைப் பதிவுகளாக அடியேனும் சிலவற்றை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
இமயம் .. க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் எல்லோரும் தலைவரை ஏளனமாய்ப் பேசி விட்டுப் போவார்கள். கடைசியாக அவருடைய மனைவியும் குழந்தையும் போவார்கள். அப்போது மனைவியை எதிர்பார்த்து ஒரு விஷமப் புன்னகை புரிந்தவாறே அவள் வயிற்றில் அலட்சியமாகத் தட்டி விட்டு போ என கையால் சைகை காட்டுவாரே...
ஆஹா... என்ன ஒரு அட்டகாசமான உடல் மொழி..
https://www.youtube.com/watch?v=u3q80QDiwUQ
16.18 நிமிடங்களில் பார்க்கவும்.
KCSHEKAR
13th November 2015, 02:16 PM
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர்திலகத்தின் 88-வது பிறந்தநாள் விழாவின் பத்திரிக்கை செய்திகள்....
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/88thBirth%20Day%20-2015/Dinamalar_zpssun9v7ik.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/88thBirth%20Day%20-2015/Dinamalar_zpssun9v7ik.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/88thBirth%20Day%20-2015/DeccanChronicle_zpsxs03vkyv.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/88thBirth%20Day%20-2015/DeccanChronicle_zpsxs03vkyv.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/88thBirth%20Day%20-2015/Dinathanthi_zps3z3zpk5n.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/88thBirth%20Day%20-2015/Dinathanthi_zps3z3zpk5n.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/88thBirth%20Day%20-2015/Dinamani_zpsacmwriu6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/88thBirth%20Day%20-2015/Dinamani_zpsacmwriu6.jpg.html)
Russellxor
13th November 2015, 08:07 PM
Film list contd... http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425294697_zpsfycnt0i7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425294697_zpsfycnt0i7.jpg.html)
Russellxor
13th November 2015, 08:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425291443_zpsjerhvrwh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425291443_zpsjerhvrwh.jpg.html)
Russellxor
13th November 2015, 08:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425288044_zpsdbbijbs7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425288044_zpsdbbijbs7.jpg.html)
Russellxor
13th November 2015, 08:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425284004_zpshfhtgfu7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425284004_zpshfhtgfu7.jpg.html)
Russellxor
13th November 2015, 08:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425280058_zpscy04rvmg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425280058_zpscy04rvmg.jpg.html)
Russellxor
13th November 2015, 08:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425276733_zps0rqiudbq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425276733_zps0rqiudbq.jpg.html)
Russellxor
13th November 2015, 08:11 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425273325_zps7nmhguvm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425273325_zps7nmhguvm.jpg.html)
Russellxor
13th November 2015, 08:11 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425269414_zpsn2altdbl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425269414_zpsn2altdbl.jpg.html)
Russellxor
13th November 2015, 08:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425266531_zps1oxmujcu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425266531_zps1oxmujcu.jpg.html)
Russellxor
13th November 2015, 08:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447425262915_zpswzfnhtug.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447425262915_zpswzfnhtug.jpg.html)
RAGHAVENDRA
13th November 2015, 08:34 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12208338_1004897502894255_1268890855288455905_n.jp g?oh=5b24750090faf56a2e5eb4d0d5cc4b91&oe=56B5559D
என் தமிழ் என் மக்கள்
RAGHAVENDRA
13th November 2015, 08:35 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/12241764_1004897576227581_7269582963908724882_n.jp g?oh=4c79baaeb2cd4a4e4e0125fe6534d743&oe=56FA5622&__gda__=1454565282_f935d88b0c0553a2d546800be6a42bb 3
என் தமிழ் என் மக்கள்
RAGHAVENDRA
13th November 2015, 08:36 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12219359_1004897666227572_9188003064007482780_n.jp g?oh=040cbf67c2af9d1534ecab7ad953cd6a&oe=56EBCF33
இமயம்
Russellsmd
14th November 2015, 12:45 AM
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது.
-------------
"உன் மலர், உன் இதயம் எல்லாமே எனக்குத்தான்.
இதயத்தை நான் எடுத்துக்கிட்டு
மலரை உன்கிட்டயே
குடுத்துடறேன்."
-காதலில் ஆழ்ந்து லயித்து
விட்ட மனம், பண்டமாற்று
முறை பேசுகிறது.
அன்புக்குரியவள் தரும்
பரிசுக்காகத், தன்னை மிகவும்
பயப்படுத்தும் உயரம் நோக்கிச்
செல்லும் தைரியம் சுந்தருக்கு
எப்படி வந்தது?
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது,
எங்கள் தமிழாசிரியர் ஒரு
போட்டி வைத்தார். காலாண்டுத்
தேர்வு கூட முடிந்திராத காலமது. எங்கள் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த,
பாடப் பகுதிகள் தவிர்த்த
செய்யுள் பகுதி முழுவதையும், (ஆண்டின் இறுதித் தேர்வு வரை உள்ள பகுதிகள் அனைத்தையும்)
மனப்பாடம் செய்து தங்கு
தடையின்றி ஒப்பிக்க வேண்டும். நல்ல முறையில்
ஒப்பிப்போருக்கு பரிசாக ஒரு
ஸ்கேல், ஒரு பென்சில், ஒரு
ரப்பர் மூன்றும் தரப்படும்
என்ற அறிவிப்பே அது.
ஏழெட்டுப் பேர் போட்டியில்
கலந்து கொண்டதில், மூன்று
பேருக்குப் பரிசு கிடைத்து,
அந்த மூவரில் நானும் ஒருவனாகி, பரிசு வென்ற
மகிழ்வில் அவ்வப்போது
ஸ்கேல் வைத்து பென்சிலால்
நிறையக் கோடுகள் போட்டு,
அதை ரப்பரால் அழித்துக்
கொண்டு.. அது ஒரு காலம்.
சொல்ல வரும் விஷயம்-
விருப்பத்துக்குரியது பரிசாகக்
கிடைத்தால், அந்தப் பரிசுக்காக
எதை வேண்டுமானாலும்
செய்யும் துணிச்சல் வந்து
விடுகிறது.
அப்படி ஒரு துணிச்சல்தான்
சுந்தருக்கும் வந்து விட்டது.
"அவசியம் போய்த்தான்
ஆகணுமா" என ஆரம்பத்தில்
தயங்கினாலும், அவள் தரப்
போகிற பரிசின் மீதான ஆர்வம்,
சுந்தரை ஆபத்தான பாறையை
நோக்கிச் செலுத்துகிறது.
நடை வேகம் பிடித்து, வேகம்
சூடு பிடிக்கும் வழக்கமான
நடையல்ல அது. காதலியின்
பரிசைப் பெற வேண்டும்
என்கிற அவசரமும், தனக்கு
ஒவ்வாத உயரம் நோக்கிச்
செல்கிற நடுக்கம் தரும்
தள்ளாட்டமும் கலந்த நடை.
தொலைவில் நின்றாலும் உமா,
சுந்தர் தள்ளாடி நடப்பதைக்
கண்டுபிடித்து விடுகிறாள்.
"அய்யோ.. அவர் தள்ளாடுறாரே!?" என்று அவள்
பதற, "அவன் தைரியமானவன்தான். ஆனா,
உயரம்னா ரொம்பப் பயப்படுவான். ஒரு ஏணியில
கூட ஏற மாட்டான். வேர்த்துக்கொட்டும்." என்று
தாமதமாக விவரிக்கும் சக
மாணவனைக் கடிந்து கொள்ளும் உமா, தூரத்தே
தடுமாறிச் செல்லும் சுந்தரை
நோக்கி பதற்றத்தோடு கூவுகிறாள்..
"வேண்டாம்..போகாதீங்க!
இதோ இந்த மலரைக் கூட
தர்றேன். போகாதீங்க..!"
இந்தக் காட்சியில் உமாவாக
பத்மினி கூவ, தள்ளாடிச்
சென்றாலும் நடை நிறுத்தாமல்,
முற்றிலும் முகம் திருப்பாது
மிக இலேசாய் உமாவின்
பக்கம் முகம் திருப்பி, "இரு..
கவலைப்படாதே. நான் போய்த்
திரும்புவேன்" என்பதாய்ச்
சைகை காட்டி சுந்தராகத்
தொடர்ந்து நடக்கும் நம்
நடிகர் திலகத்தைப் பார்த்து
மனம் சொல்கிறது...
அய்யா..! உங்கள் பொது
வாழ்க்கைப் பாதையும் கூட ஆபத்தை நோக்கி நீங்கள்
போகும் இந்த மலைப்பாதை
போலத்தானே? உமாவின்
கூவலைக் கேட்டு பாதிப்
பயணத்தோடு திரும்பி வந்து பரிசை வாங்கிக் கொள்ளாமல்
தொடர்ந்து தன் வழியில்
முயற்சித்து நடக்கும் சுந்தர்
போல, எந்த சலுகை மொழிக்கும் மயங்காது நீங்கள்
தன்மானப் பயணம் தொடர்ந்ததால்தானே சுந்தர்
போல் நீங்களும் மறக்க முடியாதவரானீர்கள்..?
--------------
மேலும், மேலும் தடுமாற்றம்
அதிகரித்து, தலை கிறுகிறுத்து,
ஆபத்தான பாறையின் விளிம்பில் தத்தளிக்கும்
சுந்தரைக் காணப் பொறுக்காத
உமா விரைந்து ஓடுகிறாள்.
உலகமே தலை கீழாய்ச் சுழல,
மிகப் பெரிய பள்ளத்தில் தவறி விழவிருந்தவனை உமா
தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுகிறாள்.
காப்பாற்றுவதற்காக ஒடி வந்த
பதற்றத்தை விட, தன்னால்
ஒரு நல்ல உயிர் போகவிருந்ததே எனும் குற்ற
உணர்வு அவளுக்கு.
உமா,வருந்தி அவனிடம்
மன்னிப்புக் கோருகிறாள்.
சுந்தர் மனம் திறக்கிறான்.
உயரமென்றால் பயப்படுவது
ஏனென்று விளக்குகிறான்.
நிறைமாத கர்ப்பிணியாக
இருந்த தன் அன்னையிடம்,
பரண் மேலிருந்த லட்டு வேண்டுமென்று அடம் பிடிக்க,
மகனுக்காக, சிரமம் பாராத
அன்னை ஏணியில் ஏறி பரண்
மேலிருக்கும் இனிப்பை எடுக்க
முனைய, ஏணி வழுக்கி விட்டு
"சுந்தர்" எனும் அலறலோடு
அவள் கீழே விழுந்து உயிர்
விட்ட கண்ணீர்ச் சரித்திரத்தை
சுருக்கமாகப் பேசுகிறான்.
இந்தக் காட்சி, எனக்கு மிகப்
பெரும் வியப்பு.
நடிகர் திலகம்,பத்மினியிடம்
சொல்வது மட்டுமே. அந்த
சுந்தருக்கு ஒரு அம்மா இருந்தது, அதற்கு முன்
காட்டப்படவில்லை.
"நான் சின்னப் புள்ளையா
இருந்தப்ப..." என்று நடிகர்
திலகம் துவங்கியவுடன்..
தடிமனான வெள்ளை நிற
வட்டங்களாய் திரை முழுக்க
வியாபித்து "ஃப்ளாஷ் பேக்"
எதுவும் காட்டப்படவில்லை.
அவர் உணர்வுப் பொங்கப்
பேசும் பாங்கிலேயே, ஒரு
நிறைமாத கர்ப்பிணி ஏணியில்
இருந்து தவறி விழுந்து இறந்து
விடுவது காட்சிப்படுத்தப்படுகிறது.
அதிலும், அவர் "அப்ப அவங்க
நிறைமாத கர்ப்பிணி" என்று
சொல்லும் போது அவர் குரலில்
கொண்டு வரும் உருக்கம்...
"ஏணி வழுக்கி விட்டுடுச்சு"
எனும் போது குரலில் காட்டும்
அழுகை கலந்த தழுதழுப்பு...
"சுந்தர்ங்கிற சத்தத்தோட கீழே
விழுந்தாங்க" எனும் போது
தன் நினைவுகளில் ஆழப்
பதிந்து விட்ட அந்த அலறல்
சத்தத்தை இன்னும் மறக்கவில்லை என்பதான
அறிவிப்பு...
-"இருமல் தாத்தா" என்று
எழுதப்பட்ட சார்த்திய அறைக்
கதவுகளைக் காட்டி, பலத்த
இருமல் சத்தத்தை ஒலிக்கச்
செய்ததன் மூலமாக, ஒரு
முடியாத கிழவர் அந்த அறைக்குள் இருப்பதாய்
இயக்குநர் சிகரம் 'எதிர் நீச்சலில்' நம்ப வைத்ததை
வியந்து, வியந்து பேசினோமே?
காட்டப்படாத ஒரு அம்மாவை
நாலே வார்த்தைகள் பேசி
நமக்குக் காட்சிப்படுத்திய
நடிகர் திலகத்தை எப்படி
வியக்கப் போகிறோம்?
எப்படி கொண்டாடப் போகிறோம்?
(...தொடரும்...)
vasudevan31355
14th November 2015, 07:27 AM
'பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/ANR_wih_Sivaji_in__1654970g_zps36911d5b.jpg
'பரதேசி' (தெலுங்கு)
வெளி வந்த நாள்: 14.01.1953
'பூங்கோதை'(தமிழ்)
http://www.iqlikmovies.com/modules/articles/dataimages/ANR_Sivaji_Ganesan_2013_10_07_07_35_49.jpg
வெளி வந்த நாள்: 31.01.1953
உரையாடல் - சக்தி கிருஷ்ணசாமி
இசை: ஆதிநாராயண ராவ்
ஒளிப்பதிவு: கமால் கோஷ்
தயாரிப்பு: அஞ்சலி பிக்சர்ஸ் கம்பைன்ஸ் (நடிகை அஞ்சலி தேவி மாறும் அவர் கணவர் ஆதிநாராயண ராவ்)
இயக்கம்: எல்.வி. பிரசாத்
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், 'அக்கினேனி' நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி, எஸ்.வி.ரங்காராவ், பண்டரி பாய், வசந்தா, ரேலங்கி...
கதை:
http://www.thehindu.com/multimedia/dynamic/01654/ANR_and_Anjali_Dev_1654969g.jpg
சந்த்ரம் (நாகேஸ்வரராவ்) ஓர் இளைஞன். ஏழையும் கூட. தன் தந்தையை விபத்தில் பறி கொடுக்கிறான். வறுமையில் வாடுகிறான். அவனுடைய நண்பன் ரகு (ஜனார்த்தன்) திடீரென மாரடைப்பால் மரணம் எய்துகிறான். இறந்த ரகுவிற்கு சுசீலா (பண்டரிபாய்) என்ற மனைவியும் மோகன் என்ற சிறு வயது மகனும் உண்டு. நண்பன் ரகு இறந்ததால் அவன் மனைவி, மகன் இருவரையும் தன் பொறுப்பில் வைத்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் சந்தத்ம். அதனால் கடுமையாக பணிபுரிந்து அதிக மணி நேரங்கள் உழைத்து நண்பனின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். இதனால் அவன் உடல் நிலை சீர்கெடுகிறது. அவன் உடல்நிலையைப் பரிசோதிக்கும் மருத்துவர் சந்தரமை ஒரு நல்ல மலைப் பிரதேசத்திற்கு சென்று சில காலம் அவனை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்துகிறார்.
சந்திரமும் மருத்துவர் அறிவுரையின்படி சீதகிரி என்னும் அழகிய மலைப் பிரதேசத்திற்கு ஓய்வெடுக்க செல்கிறான். அங்கு பூக்கள் விற்கும் லக்ஷ்மி (அஞ்சலிதேவி) என்ற பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அங்கிருக்கும் ஒரு கோவிலில் வைத்து அவளை திருமணமும் செய்து கொள்கிறான். சந்தரமுக்கு சொந்த ஊரிலிருந்து வேலை நிமித்தம் ஒரு அவசர அழைப்பு வருவதால் அவன் லஷ்மியிடம் சொல்லாமல் ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சந்த்ரம் தங்கியிருந்த ஓட்டலில் லஷ்மி வந்து அவனைப் பற்றி விசாரிக்கையில் சந்த்ரம் அங்கில்லை என்பது தெரிகிறது. லஷ்மி இதனால் அதிர்ச்சியடைகிறாள். சந்த்ரம் தன்னை ஏமாற்றி விட்டானோ என்று பரிதவிக்கிறாள்.
லஷ்மி இதனிடையே கர்ப்பமாகிறாள். இனியும் விஷயத்தை மறைக்க முடியாது என்று லஷ்மி தன் தந்தை ரங்கடுவிடம் தான் சந்த்ரமை திருமணம் செய்த விஷயத்தையும், அதனால் தான் கர்ப்பமுற்றிருக்கும் நிலைமையையும் சொல்லி சந்திரனை தேடிக் கண்டு பிடித்து வரும்படி மன்றாடுகிறாள். சந்த்ரமைத் தேடி அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் மலைக் கிராமத்திற்கு திரும்பும் ரங்கடு தன மகள் லஷ்மியின் நிலைமையால் ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகி அவமானம் தாங்காமல் தற்கொலை புரிந்து கொள்கிறான்.
இதற்கிடையில் லஷ்மியை தன்னுடன் அழைத்து செல்ல மறுபடி சீதகிரிக்கு வரும் சந்த்ரம் லஷ்மியின் வீடு தீப்பற்றி எரிந்து போய் விட்டதாகவும், அதில் சிக்கி லஷ்மி உயிரை விட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டுத் துடித்துப் போகிறான், சோகத்துடன் மறுபடி சொந்த ஊருக்கே திரும்புகிறான்.
ஆனால் தந்தையை இழந்த லஷ்மி தீ விபத்திலிருந்து தப்பி சந்த்ரம் மூலம் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு தாரா( வசந்தா) எனப் பெயரிட்டு அவளை மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்க்கிறாள்.
வருடங்கள் உருண்டோட சந்த்ரம் வளர்க்கும் நண்பனின் மகன் ஆனந்த் (சிவாஜி கணேசன்) இளைஞனாகிறான். ஒரு வேலையாக சீதகிரிக்கு வரும் சந்தரன் அங்கு லஷ்மியின் மகள் தாராவைப் பார்த்து காதல் கொள்கிறான். தன் வாழ்க்கை சந்த்ரமால் வீணாகப் போனதாக நினைத்து வருந்தும் லஷ்மி தன் மகள் வாழ்க்கையும் தன்னைப் போல ஆகிவிடக் கூடாதே என்று கவலை கொள்கிறாள். தாரா ஆனந்ததைக் காதலிப்பதைத் தடுத்து எதிர்க்கிறாள். அவனிடமிருந்தும் தாராவைப் பிரிக்க நினைக்கிறாள். இதற்கிடையில் சந்த்ரமும் சீதகிரிக்கு திரும்ப வருகிறான்.
சந்த்ரம் தன் மனைவி லஷ்மியை சந்தித்தானா?
ஆனந்த், தாராவின் காதல் வெற்றி பெற்றதா?
சந்தர்மும் லஷ்மியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?
போன்ற கேள்விகளுக்கு சில திருப்பங்களுடன் கூடிய கிளைமாஸ் பதில் சொல்லுகிறது.
'பரதேசி' மற்றும் 'பூங்கோதை' படங்கள் பற்றிய சில சுவையான விசேஷ தகவல்கள்
1. நடிகர் திலகத்தின் முதல் நேரடித் தெலுங்குப் படம் இது.
2. தெலுங்குப் படவுலகின் முடிசூடா நாயகர் 'அக்கினேனி' நாகேஸ்வரராவ் (ANR )அவர்களுடன் நடிகர் திலகம் இணைந்த முதல் படம் இது.
3. பிரபல இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் அவர்கள், அஞ்சலி தேவி இவர்களுடன் சிவாஜி இணைந்த முதல் படம்.
4.' பராசக்தி' படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் புதுமையான நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து புளோரிலிருந்த நடிகை அஞ்சலி தேவி தான் நடிப்பதை நிறுத்திவிட்டு சிவாஜி நடிப்பதைப் பார்க்க 'பராசக்தி' ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறார்.
5. அப்போதே தெலுங்கு, மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் மிகப் பிரபலமாகி விட்ட நடிகை அஞ்சலிதேவி. (சிவாஜிக்கு மிக சீனியர்) பிரபல மியூசிக் டைரக்டர் ஆதிநாராயண ராவ் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு 'அஞ்சலி பிக்சர்ஸ்' என்ற சொந்த சினிமாத் தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து 'பரதேசி' படத்தை தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்க முடிவு செய்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் என்று முடிவாயிற்று. 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு தமிழில் 'பூங்கோதை' என்று பெயர் வைக்கப்பட்டது. நாகேஸ்வரராவ் வளர்ப்பு மகனாக வரும் ஆனந்த் கதாபாத்திரத்திற்கு சிவாஜி என்ற அந்த புதுப் பையன் நன்கு பொருந்துவார் என்று அஞ்சலிதேவி சிவாஜியின் 'பராசக்தி' படத்தின் நடிப்பைப் பார்த்து முடிவெடுத்தார். சிவாஜியை தனியே அழைத்து 'பூங்கோதை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். முதல் தொகையாக ஒரு நல்ல தொகையைக் கொடுத்து சிவாஜியை மகிழ்வித்தார் அஞ்சலி தேவி.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/PoongothaiMovieAd_zpsaa331c5f.jpg
(நடிகர் திலகம்.காம், மற்றும் திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)
6. சிவாஜியும் அற்புதமாக 'பூங்கோதை' படத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்கிடையில் 'பரதேசி' தெலுங்குப் படத்திற்காக அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு தெலுங்கு நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரின் நடிப்பு எல்.வி.பிரசாத்திற்கும், அஞ்சலி தேவிக்கும் பிடிக்காமல் போனதால் தெலுங்கிலும் சிவாஜியே செய்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலி தேவி சிவாஜியைக் கேட்க சிவாஜி சற்று தயங்கினார். "நான் நடிக்கப் போகும் பாத்திரத்திற்கு நீங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கும் அந்த தெலுங்கு நடிகரை எனக்காக நீக்கினால் அவர் வருத்தப் படுவாரே" என்று சிவாஜி அஞ்சலி தேவியிடம் சொல்ல, சிவாஜியின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்ட அஞ்சலிதேவி அந்த தெலுங்கு நடிகரின் மனம் புண்படாத வகையில் அவரிடம் பேசி, அவரை சமாதானப் படுத்தி, அவருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து, அவரை நீக்கி, பின் சிவாஜியை 'பரதேசி'யில் 'புக்' செய்தார்.
7. அதனால்' பரதேசி' தெலுங்கு, அதன் தமிழாக்கம் 'பூங்கோதை' இரண்டு மொழிப் படங்களிலும் சிவாஜியே திறம்பட நடித்தார். சிவாஜி தெலுங்கில் வசனங்களை அருமையாக மனனம் செய்து பிரமாதமாக தெலுங்கை உச்சரித்து 'ஆனந்த்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
8. பின்னாட்களில் சிவாஜி அவர்கள் தமிழ்த் திரையலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் (அதாவது தமிழ்த் திரைப்படத் தொழிலின் மொத்த வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரம் இந்தக் காலக் கட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜியை வைத்தே நடந்தது) அஞ்சலி தேவிக்கு வயதாகி விட்டது. 1973 ஆம் ஆண்டு அஞ்சலி தேவி நாகேஸ்வரராவ் அவர்களை வைத்து' பக்த துக்காராம்' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதில் மிக முக்கியமாக மகாரஷ்டிர 'வீர சத்ரபதி சிவாஜி' வேடம் ஒன்று முக்கியமான பாத்திரமாக, படத்தை முடித்து வைக்கும் பாத்திரமாக வரும். அந்த 'வீர சத்ரபதி சிவாஜி' பாத்திரத்திற்கு நம் சிவாஜிதான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்த அஞ்சலிதேவி அந்தப் பாத்திரத்தில் நடிக்க சிவாஜியை அணுகினார். சிவாஜி அவர்களும் தனக்கு ஆரம்ப காலங்களில் அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை படங்களில் சான்ஸ் கொடுத்து உதவி செய்ததை மறக்காமல் மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் 'சத்ரபதி சிவாஜி' வேடத்தில் நடித்துத் தர மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். 'பக்த துக்காராம்' படத்தில் ஒரு கால் மணி நேரமே வரும் அந்த வீர சிவாஜி பாத்திரத்தில் 'சத்ரபதி சிவாஜி'யாகவே நடிகர் திலகம் வாழ்ந்து காட்டி இன்றளவும் அந்த பாத்திரத்தைப் பற்றிப் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிவாஜி அவர்கள் அஞ்சலிதேவியிடம் நன்றி உணர்ச்சியின் காரணமாக ஒரு பைசா கூட வாங்க வில்லை என்பது இன்னோர் செய்தி. 'பக்த துக்காராம்' ஆந்திராவில் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது.
நடிகர் திலகம் அதன் பிறகு முதல் டெலிவிஷன் தொடராக பம்பாய் தூர்தர்ஷனுக்கு 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகத்தை நடித்துக் கொடுத்தார். அப்போது அஞ்சலிதேவி தான் தயாரித்த' பக்த துக்காராம்' படத்தில் வீர சிவாஜியாக நடிகர் திலகம் அணிந்த உடைகளே டெலிவிஷன் நாடகத்திற்கும் பயன்படுத்தப்பட்டன. அஞ்சலிதேவி சிவாஜி அவர்கள் மேல் கொண்ட பேரன்பினால் வீர சிவாஜி உடைகளை டெலிவிஷன் நாடகத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிக்கு தந்து உதவினார்.
8.1951 -இல் இந்தியில் வெளி வந்த 'ராஜா ராணி' படத்தின் உரிமையை வாங்கி அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை திரைப்படங்களைத் தயாரித்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் இந்திப் படத்தின் முழுக் கதையையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி சினிமாக்களுக்குத் தக்கபடி கதையை மாற்றி பின் இயக்கம் செய்தார்.
9. நடிகர் திலகத்திற்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் அப்போது ஓரளவிற்கு பிரபலமாய் இருந்த நடிகை வசந்தா 'தாரா' பாத்திரத்தில் நடித்தார்.
10. நடிகர் திலகம் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கத்தில் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அந்தமான் காதலி' திரைப்படம் பரதேசி மற்றும் பூங்கோதை திரைப் படங்களைத் தழுவி எடுக்கப் பட்டதாகும். தெலுங்கில் நாகேஸ்வரராவ் ஏற்ற பாத்திரத்தை அந்தமான் காதலியில் நடிகர் திலகமும், அஞ்சலிதேவி பாத்திரத்தை நடிகை சுஜாதாவும், நடிகர் திலகத்தின் ஆனந்த் பாத்திரத்தை தெலுங்கு குணச்சித்திர நடிகர் சந்திரமோகனும், தாரா பாத்திரத்தை நடிகை கவிதாவும், ரங்குடு பாத்திரத்தை நடிகர் செந்தாமரையும் சிறு சிறு பாத்திர மாறுதல்களுடன் ஏற்று நடித்திருந்தனர்.
11. பரதேசி, பூங்கோதை இரு படங்களும் சிவாஜி அவர்களின் படங்களில் மிக மிக அபூர்வமான படங்கள். இப்படங்களை பெரும்பாலோனோர் பார்த்திருப்பதே அரிது. இப்படங்களின் வீடியோ சிடிக்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன். நானும் இப்படத்தைப் பார்த்ததில்லை. பல்வேறு பத்திரிக்கை செய்திகள், ஊடகங்கள், வீடியோ பேட்டிகள் உதவியில்தான் இக்கட்டுரையை வடித்துள்ளேன். அதனால்தான் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அப்படி இந்தப் படம் பார்க்கும் அதிர்ஷ்டம் நேர்ந்தால் (நிச்சயம் நிகழும்) இப்படத்தில் நடிகர் திலகம் அவர்களின் பங்களிப்பைப் பற்றி அவசியம் எழுதுகிறேன்.
12. தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக ஸ்லோ மோஷன் காட்சி அறிமுகமானது இந்தப் படத்தில்தான். சாகுந்தலை நாட்டிய நாடகக் காட்சியில் ஸ்லோ மோஷன் காட்சி காண்பிக்கப் பட்டதாம். பிரபல இயக்குனர் சாந்தாராம், அவருடைய ராஜ்கமல் கலாமந்திர் சார்பாக ஸ்லோ மோஷன் காட்சிகளுக்காகவே வெளிநாட்டிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்ட சிறப்புக் காமிரா தான் இந்த இரு படங்களுக்காக வாடகைக்கு வாங்கப்பட்டு உபயோகிக்கப் படுத்தப்பட்டதாம். (நன்றி: தி இந்து)
13. இயற்கை சூழல்கள் அதிகம் தேவைப்பட்ட இந்த படங்களுக்கு மொத்தம் நான்கு ஆர்ட் டைரக்டர்கள் பணி புரிந்தனராம். (T.V.S.ஷர்மா, வாலி, தோட்டா வெங்கடேஸ்வரா, ஏ.கே சேகர் என்ற 4 ஆர்ட் டைரக்டர்கள்). இயற்கை எழில் சார்ந்த மலைப் பிரதேசங்களிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
13. பிரபல ஒளிப்பதிவாளர் கமால் கோஷ் அவர்களின் உதவியாளராக இருந்தவர்தான் பிரபல ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் அவர்கள். இவரிடம் தான் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள் நடிகர் திலகத்தின் கண்களைப் பார்த்து இவர் மிகச் சிறந்த நடிகராக வருவார் என தீர்க்கதரிசனமாக கணித்தாராம்
14. தன்னை முதன் முதல் ஆதரித்து வாய்ப்பு கொடுத்ததால் அஞ்சலி தேவி அவர்களை சிவாஜி அவர்கள் 'பாஸ்... பாஸ்' என்று தான் அழைப்பார். அவ்வளவு நன்றிப் பற்று நடிகர் திலகத்திடம் இருந்தது.
15. இந்தப் படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதுதான் சிவாஜி அவர்களின் திருமணமும் நடந்தது. ஒரு ஆறு மாத காலம் படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டு அஞ்சலிதேவி சிவாஜி அவர்களை திருமணத்திற்கு அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து வரும் போது சிவாஜி நன்றாக சதை போட்டிருந்தார். அதற்கு நாகேஸ்வரராவ் "என்ன சிவாஜி! மாமனார் வீட்டு சாப்பாடு பலமா! நல்லா சதை போட்டுட்டு வந்துட்டியே" என்று ஜோக் அடித்து சிரித்தாராம். அது முதற்கொண்டு சிவாஜி அவர்களின் குடும்பத்தாரோடு நெருக்கமாக இருந்து இருந்திருக்கிறார் அஞ்சலிதேவி.
16. நாகேஸ்வரராவ் இடைவேளை வரை இளவயது சந்த்ரமாகவும், இடைவேளைக்குப் பிறகு நடிகர் திலகத்துத் தந்தையாக வயதான தோற்றத்திலும் முதன் முதலாக நடித்தார். அப்போது அவரும் இளைஞர்தான். நாகேஸ்வரராவ் தந்தையாகவும், நடிகர் திலகம் மகனாகவும் நடிக்க நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா! இன்னொரு கொசுறு செய்தி என்னவென்றால் இதே நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனனுடன் நடிகர் திலகம் 'அக்னி புத்ருடு' என்ற தெலுங்குப் படத்தில் கை கோர்த்தார். அதனால் அப்பா, பிள்ளை இருவருடனும் நடித்த பெருமைக்குரியவராகிறார் நடிகர் திலகம்.
17. வயதான கெட்-அப்பில் நாகேஸ்வரராவ் அவர்களை போட்டோ செக்ஷனுக்காக புகைப்படம் எடுக்கும் போது குளோஸ்-அப் ஷாட்ஸ் சரிவரவில்லை. இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. மிகவும் இரக்கப்பட்டு பார்க்க வேண்டிய வயதான வேடம் ஆகையால் பல தடவை நாகேஸ்வரராவை மேக்-அப் மாற்றி மாற்றி திருப்தி வரும் வரை புகைப்படம் எடுத்தார் இயக்குனர் எல்வி.பிரசாத். நாகேஸ்வரராவும் மிக்க பொறுமையுடன் ஒத்துழைத்தார்.
http://www.iqlikmovies.com/modules/artist/dataimages/L.V%20Prasad_0476A8-09DF90.jpg
18. 'நடிகர் திலகம்' அவர்கள் நாடகங்களில் நடித்து விட்டு பின் திரைப்படங்களுக்கு வந்தவர் ஆதலால் வந்த புதிதில் நாடகங்களில் உரக்க பேசுவது, எமோஷன் காட்சிகளில் நடிப்பது போன்றே இப்படங்களில் அவர் நடிக்க, இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்கள் "தம்பி...நாடகங்களில் காட்ட வேண்டிய அதிகப்படியான முக பாவங்கள், சத்தமான உச்சரிப்புக்கள் சினிமாவுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. நீ சினிமாவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்தால் போதும்" என்று நாடகங்களுக்கும், சினிமாவுக்கும் நடிப்பில் உள்ள வித்தியாசங்களை புரியவைத்து, ஒரு குரு போல நடிகர் திலகத்திற்கு சினிமா பற்றிய நடிப்பிலக்கணங்களை பற்றி சொல்லிக் கொடுத்தாராம். நடிகர் திலகமும் கற்பூரம் போல 'டக்'கென அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு, சினிமாவுக்கேற்றமாதிரி பிரமாதமாக நடித்து இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்களிடமே அதிகப் பட்சமான பாராட்டுக்களைப் பெற்றாராம். தொழிலை சரியாகக் கற்றுக் கொடுத்ததனால் 'நடிகர் திலகம்' திரு. எல்.வி.பிரசாத் அவர்களை கடைசி வரை மறக்காமல் "சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்து என்னை சினிமா நடிகனாக்கிய செதுக்கிய குரு" என்று குருபக்தியோடு குறிப்பிடுவதுண்டு.
இந்த இரு படங்களைப் பற்றி என்னால் இயன்றவரை திரட்டிய தகவல்களை அளித்துள்ளேன். இப்படங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
'பூங்கோதை' திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் டி.பி.ராமச்சந்தின் பாடிய அற்புதமான பாடல் ஒன்று மிகவும் புகழ் பெற்றதாகும்.
'நான் ஏன் வரவேண்டும் ஏதுக்காகவோ
யாரைக் காண்பதற்கோ
வான் நட்சத்திரம் முன் குயிலழைத்தாலும்
வையகம் தனிலே வருமோ
வலை கண்டும் மான் வீழ்ந்திடுமோ'
https://youtu.be/5dMdoM1PhRs
RAGHAVENDRA
14th November 2015, 08:18 AM
வாசு சார்
தங்கள் நெய்வேலியில் நிலைமை சகஜமாகி வருகிறதா.. மின்சாரம் நிலைமை சீராகி விட்டதா.
தங்கள் பகுதி மக்கள் அனைவரும் மழையின் பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
பரதேசி மற்றும் பூங்கோதை படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் என்பதே பலருக்கு தெரியாத விஷயம். அப்படி இருக்கும் போது இந்தப் படங்களைப் பற்றி இவ்வளவு விவரமாக தாங்கள் தந்துள்ளதை விட மேலும் யாராலும் தந்து விட முடியாது என்பதே என் கருத்து. இதற்கு மேல் என்ன விவரம் அளித்தாலும் அது "அதிக"மாகத்தான் இருக்கும்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
vasudevan31355
14th November 2015, 09:08 AM
நன்றி ராகவேந்திரன் சார்.
மழை, புயலில் அதிகம் பாதிக்கப்பட்டு நெய்வேலியில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. 5 நாட்களாக மின்சாரம், இணைய இணைப்பு, கேபிள் எதுவும் இல்லை. நேற்று ஓரளவு நிலைமை சீராகி இன்று மறுபடியும் மழை பிய்த்து உதற ஆரம்பித்து விட்டது. இணைய இணைப்பு கிடைத்த நேரத்தில் 'பூங்கோதை' பதிவை இட்டுவிட்டேன். இணைய இணைப்பு விட்டு விட்டு வருவதால் பதிவுகளை சரிவர இட முடியவில்லை.
நடிகர் திலகம் திரியில் அனைத்து நண்பர்களும் பங்களித்து சிறப்பித்து வருவதைப் பார்த்தால் துயரங்கள் மறைந்து விடுகின்றன. இணைப்பு சரியில்லாததால் அற்புதமான பதிவுகளுக்காக அனைவருக்கும் சேர்த்து என்னுடைய பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
RAGHAVENDRA
14th November 2015, 09:41 AM
வாசு சார்
இயற்கை இடர்ப்பாடுகள் குறைந்து, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
தங்களுடைய பூங்கோதை படத்தைப் பற்றிய பதிவினைப் படித்து விட்டு அருமை நண்பர் பெரியவர் தூத்துக்குடி நடராஜன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை மிகவும் பாராட்டியுள்ளார். பூங்கோதை படத்தை அவர் பார்த்திருக்கிறாராம். அஞ்சலி தேவியின் தந்தையாக முக்கமாலா நடித்திருப்பார். தந்தை மரணமடையும் காட்சியில் அஞ்சலி தேவியின் மிகச் சிறந்த நடிப்பு, இன்று வரை வேறு எந்த நடிகையாலும் செய்ய முடியாத அளவிற்கு உள்ளது எனக் கூறினார். அந்தக் காட்சியில் கீழே விழுந்து அப்படியே அமர்ந்தவாறே பின்னால் சென்றவாறு தந்தை இறந்த துக்கத்தில் கதறி யழும் காட்சியில் ஈடிணையற்ற நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார் எனக் கூறினார். தலைவரைப் பொறுத்த மட்டில் மிகவும் இளமையாக வசீகரமான தோற்றத்தில் நடித்திருப்பார் எனக் கூறினார்.
தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு உளமார்ந்த நன்றி.
vasudevan31355
14th November 2015, 10:19 AM
இன்று 'குழந்தைகள் தினம்' முன்னிட்டு நான் முன்னம் அளித்திருந்த, தலைவர் விஞ்ஞானி வேடத்தில் அசத்தியிருந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' பட ஆய்வின் மீள்பதிவு.
http://www.koodal.com/contents_koodal/women/images/2012/Republic%20Day-jpg-1193.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி
நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.
கதை: தாதாமிராசி
வசனம்: விந்தன்
பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்
இசை: டி .ஜி.லிங்கப்பா.
ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.
ஒளிப்பதிவு: M .கர்ணன்.
ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zps7e39311e.jpg
இந்த 'குழந்தைகள் தின'த்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.
B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், ('குழந்தைகள் கண்ட குடியரசு') கன்னடம், ('மக்கள ராஜ்யா' 1960) தெலுங்கு, ('பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்' 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.
மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும், தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபகசக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.
சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் 'நடிகர் திலகம்' சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg
தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடுவகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-5_zps652fe1e0.jpg
வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).
இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல... நம்மையும் மிரள வைக்கிறதே... எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg
"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.
வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் 'நடிகர் திலகம்' என்கிறீர்களா!)
மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.
அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்
"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zps38ae55d5.jpg
பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.
கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.
என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.
இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)
அன்புடன்,
வாசுதேவன்.
JamesFague
14th November 2015, 10:56 AM
Mr Neyveliar
Meel pathivu endralum marakka mudiyatha pathivu. Even there are lot of thalaivar movies which deserves
suitable attention like Oorum Uravum,Raja Mariyadhai where the performance of NT's simply outstanding.
Do write the above movies in your unique style for the benefit of millions of NT's fans.
KCSHEKAR
14th November 2015, 11:23 AM
வாசு சார்,
தங்களது "பரதேசி-பூங்கோதை" திரைப்படப் பதிவு அருமை. தெரியாத பல தகவல்கள். நன்றி.
Russellxor
14th November 2015, 12:54 PM
வாசு சார்
பரதேசி-பூங்கோதை அபூர்வ தகவல்கள்
நடிகர்திலகத்திற்கு தந்தை நாகேஸ்வரராவ் என்பதும்,முதல்ஸ்லோமோஷன் படப்பிடிப்பு போன்ற தகவல்களும்
(பல பத்திரிக்கைககள் ,ரசிகர்கள் உட்பட வசந்தமாளிகை தான் முதல் ஸ்லோமோஷன் படப்பிடிப்பு என்று கூற அறிந்திருக்கிறேன்) அருமையானவை.
இது வியக்கத்தகக்க தகவல்தான்.
குழந்தைகள் கண்ட குடியரசு மீள்பதிவு பிரமாதம்.படத்தின் திரைக்கதையில் கூட இவ்வளவு விவரங்கள் எழுதப்பட்டிருக்காது.
உங்கள் பாஷையிலேயே சொல்வதென்றால் "செம தூள்".
anasiuvawoeh
14th November 2015, 02:13 PM
Dear Aathavan Ravi excellent writing.Carry on
Russellsmd
14th November 2015, 03:13 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
--------------------------
தொடர்கிறது.
-------------
சில விஷயங்களை முதன்முறையாகப் பார்க்கிற
போது ஆச்சரியமாக இருக்கும்.
சுந்தரின் உயரப் பயத்திற்கான
சோகமான காரணத்தைத்
தெரிந்து கொள்ளும் போது
உமாவின் குறும்பு ததும்பும்
கண்களில் நிரம்பும் கண்ணீர்
அம்மாதிரி ஆச்சரியத்துக்கு
ஒரு எடுத்துக்காட்டு.
கோபதாபங்கள், குறும்பு மிகுந்த
விளையாட்டுகள் இவற்றை
எல்லாம் போட்டு மூடி, சுந்தரும்,உமாவும் போர்த்தி வைத்திருந்த காதலை, அந்த
மலையுச்சியில் வீசிய சம்பவக்
காற்று போர்வையைக் கலைத்து அம்பலப்படுத்துகிறது.
மரணப் பாறையில் அழகாய்
ஒரு காதல் பிறக்கிறது.
தன்னுயிரைக் காப்பாற்றிய
உமாவிற்கு நன்றி சொல்லும்
சுந்தர், காதல் பரிசை இழந்து
விட விரும்பாத தன் மன நிலையை வெளிப்படுத்தி
"இப்பவாவது இந்த மலரை
எனக்குக் குடுப்பியா?" என்று
கெஞ்சலாய்க் கேட்கவும்
தவறவில்லை.
"மலருக்குப் பதிலா என்னையே உங்களுக்குத் தர்றேன்"-எனும் உமாவின் பதில்.. மானசீகமாய் சுந்தர்
பருகும் அமிர்தத்தின் முதல்
துளி.
--------------
பருகிச் சுவை கண்ட சுந்தருக்கு
அடுத்த துளி அமுதம் வழங்க
கொடைக்கானலில் மற்றுமொரு இரவு மலர்கிறது.
நடுக்கும் குளிரில் நனைந்தபடி
உலாத்தும் சுந்தரை, தூக்கம்
பிடிக்காமல் இரவுடையில்
நடந்து வரும் உமா பார்க்கிறாள்.
குளிரின் உடல் நடுக்கம்.காதல் தந்த மன நடுக்கம். சுந்தர் கை
பிசைந்து தவிக்கிறான். தயங்கி
ஓரக் கண்ணால் உமாவைப்
பார்க்கிறான். தயக்கம் உடைத்து மெல்ல சுந்தரின்
அருகில் வந்து நிற்கிறாள்
உமா.
அங்கே நிலவும் அசாதாரண
மௌனத்தை சுந்தரே கலைக்கிறான்..
"குளிருதுல்ல..?"
"ஆமா."
"நீ தூங்கல?"
"இல்ல."
"ஏன்?"
"தெரியல."
-தூங்காததற்கான காரணம்
தெரியவில்லை எனச் சொல்லும் உமா, அதே கேள்வியை சுந்தரை நோக்கித்
திருப்புகிறாள்.
"நீங்க தூங்கல?"
"இல்ல."
"ஏன்?"
"தெரியலேன்னு நீ சொன்னே.
நான் அப்படி சொல்லப் போறதில்ல. கண்ணைத்
திறந்தாலும், மூடினாலும்
நீதான் வந்து நிக்கிறே. உன்
நினைப்பு என்னை வாட்டுது.
இதயத்துக்குள்ள ஏற்பட்டிருக்கிற ரணத்தை
மயிலிறகாலே தடவிக் குடுக்கிற மாதிரி... ஒரு இன்பமான வேதனை..!"
என்னய்யா இது?
குரலுமா நடிக்கும்..?
இரவின் மௌனத்தோடு
ஈஷிக் கொள்கிறதாய்..
"சத்தியமாச் சொல்றேன்,
துணிஞ்சு சொல்றேன்" போன்ற
மனிதனின் மன உறுதியை
ஆணித்தரமாய் வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கூட...
சாந்தமாய்..
இரைச்சலின்றி..
அதிர்வின்றி..
அட.. குரலுமா நடிக்கும்?
------------
எல்லோரும் உறங்கிப் போன
அந்த இரவில்தான் அவர்களது
அன்பின் நெருக்கம் விழித்துக்
கொண்டது.
அந்த இரவுதான், உமாவின்
வாயாடி, கோபக்காரி உள்ளிட்ட
வேறு வேறு பொய்த் தோற்றங்கள் எல்லாம் பொய்.
அன்பே அறியாத அப்பாவியாய்
தான் வளர்ந்து விட்டதை இந்த
உலகத்திற்கு மறைப்பதற்காக
அவளே போட்டுக் கொண்ட
வேஷங்கள் அவை என்பதையும் உமா மூலமாகவே சுந்தருக்குப்
புரிய வைக்கிறது.
மெல்ல விலகி நடந்து கையசைத்து தன் அறைக்குச்
செல்லும் உமாவிற்கு கண்கள்
சிரிக்க விடை தரும் சுந்தரின்
உள்ளம் வெற்றிக் கூச்சல்
போடுகிறது...
"வெற்றி..! வெற்றி!
காதலே நீ வாழ்க.
நீடுழி வாழ்க."
-------------
பொருத்தமான நேரத்தில்
இடம் பெறும் ஒரு திரைப்படப்
பாடல் நமக்குத் தரும் மகிழ்வு
சொல்லிலடங்காதது.
"மன்னிக்க வேண்டுகிறேன்"
பொருத்தமான நேரத்தில்
மகிழ வைத்த பாட்டு. இன்னும்
மகிழ வைக்கிற பாட்டு. என்றும்
மகிழ வைக்கும் பாட்டு.
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/FB_IMG_1437843462558_zps0zvdsefv.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/FB_IMG_1437843462558_zps0zvdsefv.jpg.html)
அகன்று விரிந்த "அம்மாம் பெரிய" வானமும் தமக்குத்தான் என்பது போல்
சிறகடித்துப் பறக்கும் இரு
சந்தோஷப் பறவைகளாய்
நடிகர் திலகமும், நாட்டியப்
பேரொளியும் நம் ரசிப்பு
வானத்தையும் பெருமை
செய்கிறார்கள்.
" இந்த இருவரைப் போல இணைந்தால்தானா? ஏன்
நாங்கள் இணைந்தால் சந்தோஷம் இல்லையா உங்களுக்கு? " என்று சண்டைக்கு வருகிறார்கள்..
இதயம் வாழும் இன்னும்
இரண்டு பேர்கள்.
நம்மிடம் சண்டை போட
அவர்கள் உபயோகிக்கும்
ஆயுதங்கள்..?
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான காதலை
அழகாய் எடுத்துச் சொல்லும்
அருமையான பாட்டுக்குத்
தாளமமைத்த வாத்தியக் குச்சி
ஒருத்தரிடம்.
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Vam9o6S_zpsvjyiosmb.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Vam9o6S_zpsvjyiosmb.jpg.html)
"மலர்கள் ஒன்று சேரும்.
மாலையாக மாறும்.
நெஞ்சினிக்க.. நினைவினிக்க
கண்கள் நூறு கதை கூறும்."
-மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும் புரிகிறாற்போல் காதல் பாட்டு
எழுதிய இன்னொருத்தர் கையில்...
மூடி திறந்த பேனா.
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/VaaliTH0713_zps6qltdt72.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/VaaliTH0713_zps6qltdt72.jpg.html)
(...தொடரும்...)
ifohadroziza
14th November 2015, 03:45 PM
வாசு சார் பூங்கோதை பதிவு அருமை.படம் பார்த்த உணாவு இருந்தது
Russellxor
14th November 2015, 04:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499858502_zpsntnqwwbn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499858502_zpsntnqwwbn.jpg.html)
Russellxor
14th November 2015, 05:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499855401_zpshb2mlzgi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499855401_zpshb2mlzgi.jpg.html)
Russellxor
14th November 2015, 05:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499852268_zpsterwgmqi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499852268_zpsterwgmqi.jpg.html)
Russellxor
14th November 2015, 05:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499849068_zpsjeqohfx1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499849068_zpsjeqohfx1.jpg.html)
Russellxor
14th November 2015, 06:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499845521_zpsq1s9vwtq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499845521_zpsq1s9vwtq.jpg.html)
Russellxor
14th November 2015, 06:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499842432_zpsqv7suafe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499842432_zpsqv7suafe.jpg.html)
Russellxor
14th November 2015, 06:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499839277_zpsef2qxuwh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499839277_zpsef2qxuwh.jpg.html)
Russellxor
14th November 2015, 06:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499836294_zpsqn3jbuxq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499836294_zpsqn3jbuxq.jpg.html)
Russellxor
14th November 2015, 06:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499833234_zps8y1hesrp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499833234_zps8y1hesrp.jpg.html)
Russellxor
14th November 2015, 06:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1447499829909_zpsusoeuxuq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1447499829909_zpsusoeuxuq.jpg.html)
RAGHAVENDRA
14th November 2015, 06:26 PM
http://www.mediafire.com/listen/3c0rxb1s88oqc47/RANGONRADHANTPRAYER.MP3
ரங்கோன் ராதா திரைப்படத்தில் தலைவர் மந்திரம் உச்சரித்து பூஜை செய்யும் காட்சி ... ஆடியோவாக
RAGHAVENDRA
14th November 2015, 07:13 PM
http://g.ahan.in/tamil/Vasantha%20Maligai/Vasantha%20Maligai%20(15).jpg
இது இறந்து போன ராணிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடு இருக்கும் என் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதியல்ல சன்னிதி.
இந்த வரிகள் காதல் வேதமாய் அந்த காலத்தில் ஒவ்வொரு இளைஞன் மனதிலும் ஒலித்தது இன்றும் பசுமையாய் நினைவில் உள்ளது. வானொலியில் இந்த வரிகள் விவித்பாரதியில் இரவு 8.30 மணிக்கு தினமும் ஒலிக்கும் போது இதற்காகவே மற்ற வேலைகளை விட்டு விட்டு ரேடியோ அருகில் காத்திருந்ததெல்லாம் நினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகள்.
எண்ணற்ற இளைஞர்கள் மனதில் இன்றும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய காதல் வசனம் வசந்த மாளிகை படத்தில் இந்தக் காட்சியில் இடம் பெற்ற வசனமாகும். என்றும் சிரஞ்சீவியாக காதலர்கள் மனதில் நிலைத்திருக்கும் இந்த வசனம், அவர்களைத் தாண்டி அனைத்து மக்களிடமும் நெஞ்சில் நிலைத்து விட்டதே இதனுடைய பெருமைக்கு சான்று.
பாலமுருகனின் பேனாவில் காதல் மையை நிரப்பி எழுதினாரோ என ஒரு பத்திரிகை அந்தக் காலத்தில் எழுதியது. அது உண்மைதானோ என இன்றும் தோன்றுகிறது.
இதோ நாம் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ ..
ஒலி வடிவில்...
http://www.mediafire.com/download/t3wmnl6n34oc82q/VASANTHAMALIGAISIVAJIDIALOGUE.MP3
Russellsmd
14th November 2015, 09:01 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
----------------
காதல் பாடி ஓய்ந்த அமைதியில், அகன்ற மலைப்
பிரதேச வெளியில், பொட்டிட்டு,
மலர் சார்த்தி கடவுளாக
வணங்கப்படும் ஒரு கல்லின்
முன் கண்மூடி, மனமுருகி
ஏதோ வேண்டி நிற்கிறாள்...
உமா.
அவள் பின்னாலேயே ஒடி வந்த
சுந்தர், அவள் நிற்கும் நிலை
கண்டு வியக்கிறான். கண்மூடி
நிற்கும் அவளின் காதின் அருகில் விரல்களால் சொடுக்கிட்டுச் சத்தமெழுப்பி
அவளது வேண்டுதல் கலைத்துக் கேட்கிறான்..
"கல்லுக்கு முன்னாடி நின்னு
என்ன பண்ணிக்கிட்டிருக்கே?"
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. கண்ணைத் திறந்து பாத்து இதைக் கல்லுன்னு சொன்னா கல்லுதான். கண்ணை மூடிக்கிட்டு இதைக் கடவுள்னு
நினைச்சா கடவுள்தான்."
-என்கிறாள் உமா.
அவள் பேசுவதை வியக்கும்
சுந்தர் "பெரிய பக்தை ஆயிட்டே
போலிருக்கே?" என்று கேலி
செய்கிறான்.
"வெட்டவெளியாயிருந்த உள்ளத்தை நீங்கதான் கோவிலாக்கினீங்க. அந்தக்
கோவில்ல உங்களை கடவுளா நினைச்சு எப்ப பூஜை செய்ய ஆரம்பிச்சேனோ..
அன்னிக்கே நான் உங்க பக்தையாயிட்டேன்."
-என்று உமா சொல்கிறாள்.
தொடர்ந்து வரும் வசனங்களும், காட்சிமைப்பும்,
இயக்கமும், இசையமைப்பும்,
நாட்டியப் பேரொளி துவக்கி
வைக்க நடிகர் திலகம் முடித்து
வைக்கும் அந்தக் காட்சிக்கான
நடிப்பின் பூரணத்துவமும்
நம் நெஞ்சோடு வாழ்பவை.
இன்னொன்று...
காதல் தரும் பேரின்பத்தைக்
கூட தாங்கிக் கொள்ள முடியாமல் பரிதவிக்கிற
ஒரு பெண்ணின் மனோநிலை
"இரு மலர்கள்" படத்திற்குப்
பிறகு வேறெந்தப் படத்திலும்
சொல்லப்படவில்லை என்றே
நினைக்கிறேன்.
"வேறெந்த நினைப்புமில்லாம
உங்க மனசில நான் மட்டுமே நிறைஞ்சிருக்கிற இந்த ஒரு
கணம் போதும்." -என்று அன்பு
தாங்காமல் கதறித் துடிக்கிற
உமாவிற்கு, உமாவாகவே
மாறி வசனம் எழுதியுள்ள
அய்யா திரு.ஆரூர்தாஸ்
போற்றுதலுக்குரியவர்.
"தில்லானா"வில் "மறைந்திருந்து" பாடலினூடே
தனித்தனியே புருவங்களை
ஏற்றி, இறக்கி, வளைத்து
வித்தை காட்டிய போது,
பப்பியம்மாவுக்காக ஆனந்தமாய்த் தட்டி ஒலி
எழுப்பிய கரங்கள்..
"இதோ.. இன்பத்தாலே துடிக்குதே..இந்த நரம்பெல்லாம்
அப்படியே அறுந்துடக் கூடாதா?"-என்று பரந்த
வெளியெங்கும் ஒடி,ஒடி
நடிக்கும் போது கும்பிடவே
செய்கின்றன.
காட்சியமைப்பின்படி, இதில்
பத்மினியம்மா ஏற்ற உமா
பாத்திரம்தான் மக்கள் மனதில்
பதியும் வாய்ப்பு அதிகம்.
அதிலும், தனக்கொரு பெரும்
பங்கை தட்டிச் செல்லும்
நம் நடிகர் திலகத்தின்
சாமர்த்தியம் வேறு எவருக்கும்
வராது.
பத்மினியம்மாவை கிண்டல்
செய்வதில் துவங்கும் அவரது
திறமை சாம்ராஜ்யம், பத்மினியம்மா உணர்ச்சிவசப்
பட்டு பேசப் பேச மாறும்
முகபாவங்களில் விரிந்து,
எதைக் கல்லென்றாரோ..
அதைக் கடவுளென்றுணர்ந்து,
அதன் மீதிருந்த குங்குமம்
எடுத்து பத்மினியம்மாவுக்கு
இட்டு, நம்மை யாரும்
பிரிப்பதற்கில்லை என்று
நெஞ்சு நிமிர்த்தும் போது
மேலும் பரவி நிலைக்கிறது.
--------------
சுந்தர் உறங்குகிறான்.
(அதாவது-
நடிகர் திலகம், சுந்தராக
உறங்குவது போல் நடிக்கிறார்.
அல்லது-
நடிப்பு அங்கே உறங்குகிறது.)
மெல்ல எழுந்து, உள்ளங்கை
இரண்டும் விரித்து முகத்துக்கு
நேரே வைத்துக் கொண்டு
"உமா" என்று செல்லமாய்
அழைக்கிறான்..சுந்தர்.
கற்பனையென்றாலும், அழைத்தது அன்பான காதலன்
என்பதால் அவன் உள்ளங்கையில் உடனே
தோன்றுகிறாள்..உமா.
அவளும்,அவனுமாய்க் கைகோர்த்து உல்லாசமாக
நடந்ததாக அவன் கண்ட
கனவை அவனது உள்ளங்கை
உமாவிடம் சொல்லிக்
கொண்டிருக்கையில்..
வீறிட்டு அலறுகிறது.. அலாரம்
வைத்த கடிகாரம். அலறும்
கடிகாரம் காலை ஏழு மணி
என அறிவிக்கிறது.
தொடர்ந்து வீறிடும் கடிகாரத்தை கட்டிலில் இருந்தபடியே சுந்தர் எட்டி
எடுக்க முனையும் போது, அது
தவறி கீழே விழ..
"சாந்தி" என்று கூவுகிறான்.
இரண்டாம் முறையாக "சாந்தி"
என்று கத்தும் போது, சார்த்தப்
பட்ட அறைக்கதவு திறந்து
உள்ளே நுழையும் பெண்
உருவத்தின் பெயர், புன்னகை
அரசி கே.ஆர்.விஜயா.
அந்த "சாந்தி" கதாபாத்திரத்தில்
புன்னகை அரசியைப் பார்க்கிற
போது, ஏதோ காபித்தூள்
இரவல் வாங்க கூச்சத்தோடு
நம் வீட்டுக்கு வரும் பக்கத்து
வீட்டுப் பெண் போல அத்தனை
யதார்த்தம்.
அத்தனை சீக்கிரம் தன்னை
எழுப்பக் காரணம் என்னவென்று விசாரிக்க,
அன்று சுந்தரின் அன்னையின்
தவசமென்று சொல்லப்படுகிறது.
வேகமாய் எழுந்து, குளிப்பதற்காக துண்டு, சோப்பு
இவற்றை எடுக்கப் போக..
ஏற்கனவே குளியலறையில்
அவையனைத்தையும் எடுத்து
வைத்திருப்பதாய் சொல்லும்
கே.ஆர்.விஜயாவை திரும்பிப்
பார்க்கும் நம் நடிகர் திலகத்தின்
ஒரே ஒரு பார்வை போதும்..
பல நூறு வார்த்தைகள் கொண்டு எழுதப்பட வேண்டிய
வசனத்தை ஓசையின்றிப்
பேசி விட.
(...தொடரும்...)
Russellxor
14th November 2015, 09:30 PM
1
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1447516174149_zpssrfugoyo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1447516174149_zpssrfugoyo.jpg.html)
Russellxor
14th November 2015, 09:31 PM
2
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1447516171121_zps9zyqh6jn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1447516171121_zps9zyqh6jn.jpg.html)
Russellxor
14th November 2015, 09:31 PM
3http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1447516168227_zpsccyyrug8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1447516168227_zpsccyyrug8.jpg.html)
Russellxor
14th November 2015, 09:32 PM
4http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1447516165226_zpsvsoreoyq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1447516165226_zpsvsoreoyq.jpg.html)
Russellxor
14th November 2015, 09:33 PM
Last
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1447516162074_zpsgl6yqt1h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1447516162074_zpsgl6yqt1h.jpg.html)
Russellxor
14th November 2015, 10:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-11-14-21-59-24_zps3sxvay6k.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-11-14-21-59-24_zps3sxvay6k.png.html)
RAGHAVENDRA
14th November 2015, 11:25 PM
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/da/Mr._KS._Gopala_Krishnan.JPG/800px-Mr._KS._Gopala_Krishnan.JPG
இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி. மறைவு.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட திரு கே.எஸ்.ஜி. எ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று இரவு 7.30 மணிக்கு இயற்கை எய்தி விட்டார்.
தினமலர் நாளிதழின் இணையப்பக்கத்திலிருந்து..http://cinema.dinamalar.com/tamil-news/39822/cinema/Kollywood/Director-k.s.-gopalakrishnan-passes-away.htm
சம்பிரதாயத்திற்காக அல்லாமல், உண்மையிலேயே தமிழ்த்திரையுலகிற்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என பல்துறை வித்தகராயிருந்து கே.எஸ்.ஜி. அவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் இடையே இருந்த புரிந்துணர்வு, பீீம்சிங்-நடிகர் திலகம் நட்பிற்கும் புரிந்துணர்விற்கும் சற்றும் குறையாயததல்ல.
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்கள் பலவற்றைத் தந்துள்ளார் கே.எஸ்.ஜி.
அவரது மறைவிற்கு நமது உளமார்ந்த அஞ்சலியை செலுத்திக்கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது மறைவினால் ஏற்பட்டதுயரத்தைத் தாங்கும் வலிவை அவரது குடும்பத்தாருக்கு அளிக்க வேண்டியும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.
RAGHAVENDRA
15th November 2015, 08:42 AM
திரு கே.எஸ்.ஜி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய இயக்கத்தில் / எழுத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து சில பாடல்கள்.
உத்தம புத்திரன் படத்தில் கே.எஸ்.ஜி. எழுதிய உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே பாடல்..
https://www.youtube.com/watch?v=-luAPt44VL0
RAGHAVENDRA
15th November 2015, 08:53 AM
கே.எஸ்.ஜி.யின் பேனாவுக்கு உயிர் கொடுத்தவை நடிகர் திலகத்தின் நடிப்பில் வந்த படங்கள். அதிலும் குறிப்பாக படிக்காத மேதை தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தைப்பிடித்ததற்கு நடிகர் திலகத்தின், அந்த வசன உச்சரிப்பு. வெறும் அடுக்கு மொழி வசனங்களே டாமினேட் செய்த காலத்தில் தன் இயல்பான பிரயோகத்தினால் பேச்சு வழக்கு வசனங்களிலும் தன் நடிப்பின் மூலம் ஜீவன் அளித்தவர் நடிகர் திலகம். அந்த வகையில் முடியாது என்ற ஒரு வார்த்தைக்கு எத்தனை விதமான பரிமாணங்களைத் தர முடியும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் காட்டி இப்படத்திற்கு இமாலய அந்தஸ்தைத் தேடித் தந்தவர் நடிகர் திலகம். கே.எஸ்.ஜி. அவர்களும் நடிகர் திலகமும் இணைந்த படங்கள் ரசிகர்களுக்கு தெவிட்டாத விருந்தாய் அமைந்தன.
படிக்காத மேதை படத்தில் ரங்கனை வீட்டை விட்டுப்போ என முதலாளி அனுப்பும் அந்த புகழ் பெற்ற காட்சி இதோ நம் பார்வைக்கு.
https://www.youtube.com/watch?v=gC-Tm6xu0nI
Russellsmd
15th November 2015, 10:54 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/12115466_1233260856700313_6903214465853980213_n_zp srgz1gudl.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/12115466_1233260856700313_6903214465853980213_n_zp srgz1gudl.jpg.html)
எழுதினாலும், இயக்கினாலும்..
எளிமை என்கிற எல்லோருக்கும் பிரியமான
விஷயத்தை எப்போதும்
தன்னுடனே வைத்திருந்தவர்
அமரர் அய்யா கே.எஸ்.ஜி
அவர்கள்.
"கை கொடுத்த தெய்வத்தை"யும், "பேசும்
தெய்வத்தையும்" தேடித் தேடித்
தரிசித்துக் கொண்டிருந்த
எங்கள் தலைமுறையினருக்கு
"படிக்காத பண்ணையாரைப்"
பரிசளித்த பெருமகனார்.
ராகவேந்திரா சார் குறிப்பிட்டதைப் போல
நம் நடிகர் திலகத்திற்கும்,
அய்யா கே.எஸ்.ஜி அவர்களுக்குமான கனிந்த
நட்பை, அவர்களிருவரும் இணைந்த படங்கள் நமக்குத்
தந்த பரவசங்களே சொல்லும்.
அய்யா கே.எஸ்.ஜி அவர்களை
இழந்து துன்புறும் அத்தனை
உள்ளங்களிலும் இந்த துன்பம்
தாங்குகிற சக்தி படரட்டும்.
தூயவர்களாம் நம் நடிகர் திலகம்- அய்யா கே.எஸ்.ஜி
நட்பு, சொர்க்கத்திலும் தொடரட்டும்.
Russellxor
15th November 2015, 03:56 PM
சவாலே சமாளி முழுப்பதிவு
சவாலே சமாளி முழுப்பதிவு:
ராஜவேலு:
எங்க தலை குனிய வச்சுட்டு நீ எப்பவும் நெஞ்சை நிமித்திட்டு நடப்பியே இப்ப ஏன் குனிஞ்ச தலை நிமிரவே இல்லையே ஏன்?
மாணிக்கம்:
உம் முகத்தை பாக்கவே கண் கூசுது.
ராஜவேலு:கூசத்தாண்டா செய்யும்?எம் முகத்தை மட்டுமல்லஇந்த ஊர் முகத்த பார்க்கவே உனக்கு கண் கூசத்தான் செய்யும். நல்லவனா இருந்தா இந்நேரம் அவமானம் தாங்காம நாக்க புடிங்கிக்கிட்டு செத்துருக்கனும்..
மாணிக்கம்:இதுல என்னடா அவமானம்?இதோ இடுப்புல இருக்கிற கதிர் அரிவாளைஎடுக்கக் கூட சக்தி இல்லாம ஒரு கையாலவயித்தைப் புடிச்சுக்கிட்டு இன்னொரு கையால மானத்தையும் மறைச்சுகிட்டு நின்னுகிட்டுஇருக்கே உன் முன்னாலே பட்டினிக்கூட்டம்,அவங்க வயித்துக்கு சேர வேண்டிய கஞ்சியை உன் சட்டையில் போட்டுகிட்டு விரைச்சுகிட்டு நிக்கிறியே இதுக்கு*
நீ தாண்டா அவமானப்படனும்.உன்னை எல்லாம் இன்னும் விட்டு வச்சுருக்கம்பாரு அதுக்கு நான் மட்டும் இந்த நாடே வெட்கப்படணும்.
ராஜவேலு:இதுக்கு அப்புறமும் உன் திமிறு அடங்கலே பாரு
மாணிக்கம்:இது அடங்கற திமிரு இல்லே அடக்கற திமிறு.
அய்யாக்கண்ணு:ஏண்டா செஞ்சே? எதுக்கு செஞ்சே?
மாணிக்கம்:நான் ஏன் செஞ்சேன்? எதுக்கு செஞ்சேன்னு அவங்கவங்க
மனசுக்குத் தெரியும்.
ராஜவேலு:எங்க மனசுக்கு தெரிஞ்சா பத்தாதுடா?இங்க கூடி இருக்கிற கூட்டத்துக்குநல்லா கேட்கிற மாதிரி சத்தம் போட்டு சொல்லு.
மாணிக்கம்:சொல்றண்டா. சொல்றேன்.
வயலை எரிச்ச பந்தத்தை அணைச்சு வச்சுறுக்கேன்.அத மறுபடியும் கொளுத்தி எடுத்துட்டு வந்துஎன்னை உயிரோடு கொளுத்திடுவேன்னு சொன்ன அத்தனை பயலுகளையும் எரிச்சு சாம்பலாக்கிட்டு அந்த சாம்பல் மேட்டுல நின்னுகிட்டு சத்தம் போட்டு சொல்றண்டா. சத்தம் போட்டு சொல்றேன்.
மாணிக்கம்:சின்ன வயசுல இருந்து என் பையனை நான் தொட்டதே இல்லேன்னுபெருமையா பேசிக்குவீங்களே!உங்க ஆத்திரம் தீரும் வரை அடிங்க. அடிங்க.ஏன்னா என்னை பழி வாங்கணும்ங்கிற வெறி அவங்கள விட உங்களுக்குத்தானே அதிகம்.வாங்க உங்க எஐமான விசுவாசத்த காட்ட நல்ல. சந்தர்ப்பம்.அடிங்க. நல்லா அடிங்க
மாணிக்கத்தின் வார்த்தைகளால் தாக்கப்பட்டு அய்யாக்கண்ணு தடுமாற ,
அதற்குப்பினநடக்கும் சில நிகழ்வுகள் உண்மையைச்சொல்லி சுபமாக்குகிறது.

மேலே சொன்ன காட்சிதான் க்ளைமாக்ஸ் என்றிருந்தாலும்
படத்திலே வரும் பல காட்சிகள் அதைவிட பிரமாதமாக அமைந்திருக்கும்.
நடிகர்திலகம் வரும் முதல்காட்சி வசனங்களேஏகஅமர்க்கள
மாயிருக்கும்.வேட்டி*
சட்டை யில்ரெண்டு மாட்டையும் பிடித்துக்கொண்டு அவர் அறிமுகமாகும் காட்சி அருமையிலும் அருமை.இந்த ஒரு போட்டோ சொல்லுமே அதன் அழகை.

அடக்கமா கேட்டா மரியாதையா பதில் வரும்.இகழ்ச்சியா கேட்டா
அதுக்கேத்தமாதிரி பதில். மேல கைய வைச்சா பதிலுக்கு பதில்.எல்லாருக்கும் வேலைக்கேத்த கூலி கிடைக்கணும்.ஏழையோ,
பணக்காரனோ மனுஷனுக்குண்டான மதிப்பு குடுக்கணும். இதுதான் மாணிக்கம் கேரக்டர்.
அதிரடி அறிமுகம்:
வயலில் வேற்று ஆட்களை வைத்து*
வேலை வாங்க நம்பியார் முன்னே வர
"வயலில் காலை வைத்தால் காலை ஒடைச்சுருவேன்"னு சத்தம் மட்டும் வரும்.யார்ராராதுன்னு எல்லோரும் பார்க்க, நெற்கதிர்களின் பின்னே இருந்து வந்து நடிகர்திலகம் காட்சி தரும் காட்சி கண் கொள்ளா காட்சி.
முதலில் தொழிலாளர்களுக்கு பரிஞ்சு*
பணிவாய் விவாதம் செய்ய அதற்கு நம்பியார் "உங்கப்பன் கொடுப்பான்"
மரியாதை குறைவாய் பேச ஆரம்பிக்க,சட்டென்று பணிவு மறைந்து பதில் மரியாதைக்கு தாவி,
பதிலுக்கு பதில் வசனங்களலால்*
அந்த அறிமுக காட்சி முழுவதும் கலகலப்பாக செல்லும்.கதிர் அறுப்பது.,கதிர் அடிப்பது என்று அவர் டக் டக்குன்னு இயல்பாக வயலில் இறங்கி வேலை செய்யும் நடிப்பு அசல் கிராமத்து விவசாயியை விட அழகு+எதார்த்தம்.
நடிகர்திலகம் வரும் அடுத்த காட்சி:
காந்திமதி, நடிகர்திலகம் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி.எவ்வளவு இயல்பாக இருக்கும்.
விஜயகுமாரி எங்கே என்று விசாரிக்க ,
முத்துராமனை பார்க்க சென்றிருப்பதாக காந்திமதி சொல்ல நொடியில் சடாரென்று கோபப்படுவதும்,விஜயகுமாரி வந்தபின்பு விசாரிக்கையில் ஆத்திரப் படுவதும் பின்*
ஆதங்கப்படுவதுமாய் மாறி மாறி உணர்ச்சி வசப்படுவதுமாயும்,தடங்கலின்றி பெய்யும் மழையாய் வசனங்கள்
பொழிந்து மழை நின்றது போல் சற்று ஆசுவாசப்பட மீண்டும் வி எஸ் ராகவன் வர அதே மழை தொடர, என்று காட்சிகள் ஜிவ்வென்று சுறுசுறுப்பாய் செல்லும்.பெரிய ஆக்ஷன் படங்களில் கூட சில சமயங்களில் நடிகர்திலகத்தின் குடும்பபடங்களில் வரும் இது போன்ற விறுவிறுப்பு சுவாராஸ்யங்களை
காண முடியாது.
தந்தைக்கும் மகனுக்கும்*
அபிப்பிராய பேதம் ஏற்பட்டு இருவரும் நான் சாப்பிடமாட்டேன் என்று வீட்டின் வெளி யில் திண்ணையில் வந்து எதிரும் புதிருமாக அமர்ந்து கொள்கின்றனர்.காந்திமதியும் ,விஜயகுமாரியும் சமாதானப்படுத்த அவர்களுக்காக இருவரும்*
"சரி வந்து தொலைக்கிறேன் "
என்று இருவரும் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
இந்தக்காட்சியை பார்த்தோமானால்*
நடிகர்திலகத்திடம் இருந்து எந்தவித கதாநாயகத்தன்மை(ஹீரோயிசம்)
வெளிப்படாமல் ஒரு கிராமத்து இளைஞனின் தன்மானத்தையும்
குடும்பபாசமும் ,தந்தையின் அறியாமையை எதிர்த்தாலும் அதே சமயம் அவருடைய ஸ்தானத்திற்கு மதிப்பு அளிக்கும் கண்ணியம் கொண்டவராகவும்சின்ன சின்ன ஊசிமுனை உணர்ச்சிகளைக்கூட படு இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
சரி வந்து தொலைக்கிறேன் என்று இருவரும் வீராப்பாக குடிசைக்குள் நுழையும் சமயம்*
வேகமாக வேட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லப்போகும்*
நடிகர்திலகம் ராகவனும் அதே போல் வர,அவர் முன்னே செல்லட்டும் என்பதற்காக தந்தைக்கு தரும் மரியாதையாக சற்று பின்வாங்கி உடலை சாய்த்து ஒரு வித உடல் பம்மலில் தன் நடிப்பை இயல்பாக எப்படி அழகாக வெளிப்படுத்துகிறார்.
(ராகவன்:துரை கொஞ்சம் எந்திரிங்க
நடிகர்திலகம்:ஏண்டா எந்த அளவுக்கு குடிச்சிருக்கேன்னு பார்க்கிறதுக்கா?
(ராகவன் மாலையை எடுத்து சிவாஜியின் கழுத்தில் போட்டுவிட்டு)
ராகவன்:இன்னைக்கு உங்களுக்கு பொறந்தநாள்.
நடிகர்திலகம்:ராமையா நான் பொறந்திருக்கிறது ஏன்னு யாருக்கும் தெரியாது?.ஏன் எனக்கே தெரியாது?ஆனா நீ பொறந்திருக்கிறது மட்டும் எனக்காகத்தான்.
சவாலே சமாளியைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் மனத்திரையில் இந்தக்காட்சி வந்து இடிக்கிறது.என்ன செய்ய?*
பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும் என்பது போல் திறமைமிக்க கலைஞர்களாக இருந்தாலும் சிறந்த கலைஞனோடு
சேரும்போதுதானே அவர்களின்
பங்களிப்பு பளீரிடுகிறது.இங்கேதான் நிற்கிறார் வி.எஸ். ராகவன்.பூவோடு சேர்ந்த நார்.
இரண்டு படத்திலுமே அதே வேலைக்கார வேடம்.காஸ்டியூம்ஸ் கூட
அதே போலத்தான்.ஆனால் இரண்டிலும் என்ன ஒரு மாறுபாடான நடிப்பு.ஒன்றில் நடிகர்திலகம் எது செய்தாலும் விட்டுக்கொடுக்கும் கேரக்டர்.ஒன்றில் எது சொன்னாலும் எதிர்ப்பை காட்டும் கேரக்டர்.
உணர்ச்சி மிக்க காட்சிகள்.
ரசனையை உயர்த்தும் நடிப்புகள்.
எல்லாம் நடிகர்திலகத்தால் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த நற்பலன்கள்.புகழ்.சிறப்பு.
இந்த வரிகள் ராகவனை மட்டும் வைத்தல்ல., பெரும்பான்மையான கலைஞர்களின் அனுபவங்களையும் வைத்துதான்.)
ஒன்று
தங்களுடைய பெரிய வீட்டின் அருகிலேயே இருக்கும் மாணிக்கத்தின் குடிசை தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதுவது.
இரண்டு
மாணிக்கத்தின் பேச்சு செயல்
இரண்டும் தங்களை அவமதிப்பதாக கருதுவது.
இந்த இரண்டுக்கும் தீர்வு காண சின்னப்பண்ணை சிங்காரத்திடம் யோசனை கேட்க,அய்யாக்கண்ணு பட்ட கடனுக்காக மாணிக்கத்தை பண்ணையில் வேலை செய்ய வைத்து*
முரட்டுக்காளைக்கு மூக்கணாங்கயிறு*
கட்டலாம் என்று சின்னப்பண்ணை யோசனை கூற அதன்படியே அய்யாக்கண்ணுவை வலியுறுத்த.,அய்யாக்கண்ணுவும் வேறு வழி தெரியாமல் மாணிக்கத்தை பண்ணைவேலைக்கு வருமாறு கூறுகிறார்.
வேலைக்கு செல்லும் காட்சி:
முதலாளி என்ற திமிரில் நம்பியார்
'என்னடா மாணிக்கம்'
என்று ஒருமையில் கேட்பார்.பதிலுக்கு நடிகர்திலகம் 'என்னடா ராஜவேலு' என கேட்க,
பதிலடியால் திகைக்கும் நம்பியார்
கிண்டலும் மரியாதையும் கலந்து
"மகாராஜ ராஜ ராஜ ஸ்ரீமாணிக்காம் அவர்கள் தங்களுடைய வேலையை கவனிக்க செல்லுங்கள்"
என்று கூற
"ஆகட்டுங்க"
என்று உடனே அதே சுதியில் பதில்சொல்வது செம ரகளை.
பண்ணையில் மரத்தை வெட்டி சாய்ப்பார் .நம்பியார் வந்து 'ஒரு மரம் வெட்ட இவ்வளவு நேரமா?'என்று கேட்க அதற்கு நடிகர்திலகம் கொடுக்கும் ரீயாக்ஷன் அபாரம்.ஒன்றும் பேச மாட்டார்.அப்படியே நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்து பார்வையால் ஒரு வீசு வீசுவார்.என்ன ஒரு ஸ்டைலப்பா !*
மரம் வெட்டும்போது
நடிகர்திலகமும் ராகவனும் தேக்கி வைத்த அன்பை மாறி மாறி பாசமழையாய் பொழிவது நல்ல நெகிழ்ச்சியான காட்சி.
சீன் பை சீன் உயிரோட்டமாய் செல்லும்.
ஊரிலிருந்து வரும் ஜெயலலிதாவை வண்டியில் கூட்டி வரும் காட்சி.
ஜெயலலிதா வண்டியில் முன்பக்கம் தள்ளி உட்காரச்சொல்லிவிட்டு
வண்டி முன்பாரம் ஜாஸ்தி என்றும்
பின்பக்கம் தள்ளி உட்காரச் சொல்லிவிட்டு பின்பாரம் ஜாஸ்தி என கூறுவதும் வேடிக்கையான சீன்.
பெட்டி சேற்றில் விழ அதற்காக நடிகர்திலகத்தை கேவலப்படுத்தும் சொற்களலால் வசைபாட பெண்னென்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் கோபம் தலைதூக்க கோபத்தை அந்த சாட்டைவாரை ஒடித்து வீசுவதிலே காட்டுவார்.தன்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த நடிப்பு.
அடுத்த காட்சியில்...
தந்தை ராகவனுடன் கிணற்றருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் தன்னுடைய துணிகளை துவைத்து போடுமாறு ஜெயா துணிகளை நடிகர்திலத்தின் முகத்தில் விட்டெறிய...
சில நிமிடங்களுக்கு முன்புதான்
' நீ நல்லவங்ககிட்டத்தான் நேருக்கு மாறா நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட கூட மரியாதையா நடக்கத்தெரியாதா ' ராகவன் நடிகர்திலகத்தை பார்த்து கேட்பார்.
அதற்கு நடிகர்திலகம் 'மரியாதை ரெண்டு பக்கமும் இருக்க வேண்டாமா'
என்று முடிப்பதற்குள்ளாகவே ஜெயா வந்து மூஞ்சியில் துணிகளை வீசுவார்.
நடிகர்திலகம் அமைதியா திரும்பி ராகவனைப் பார்க்க ,
என்னடா இது நம்ம பையன தப்புன்னு கண்டிக்கப்போனா இது அதுக்கு மேல*
தப்பா இருக்கேங்கிற மனநிலையில் முகத்தை திருப்பிக்குவார் ராகவன்.
ஒரு பொம்பள இப்படி சொல்லிட்டாளேங்கற ஆத்திரம் ஒரு பக்கம்.,பணக்கார திமிரை ஏத்துக்காத தன்மான குணமும் உசுப்பஅப்பா இருக்கிறத ஒரு நிமிஷம் யோசிக்கிற மனசு பின் அடக்கமாட்டாம கேப்பாரைய்யா ஒரு கேள்வி.
' நீ என் பொண்டாட்டியாஉன் சேலை துவைச்சு போட'ன்னு சொல்வது
சரியான ஆத்திர வெடி.அதைக் கேட்டு ஜெயா அவமானத்தில் ஓவென்று கதறி சிணுங்கஅதையே பாவனையில் ஜெயா போல் நடிகர்திலகமும் செய்து காட்டுவது வேடிக்கை.
உழவர் கூட்டம் அனுபவிப்பதில்லை அறுவடையின் பலனை.ஆனாலும் விவசாய பூமி அவர்களுக்கு தெய்வம் போலே.அதனால்தான் செருப்பணிந்து நடப்பதில்லை வயலில்.பலனை அனுபவிக்கும் பணக்கார வர்க்கமோ அந்த பழக்கத்திற்கு நேர்எதிர். ஏற்கெனவே படித்த திமிறும் பணக்கார திமிறும் சகுந்தலாவுக்கும் அதிகம்.
மாணிக்கமும் நடவுப் பெண்களும் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வரப்பில்செருப்பணிந்து நடந்து வரும் சகுந்தலா மாணிக்கத்திடம் ஒதுங்கி நிற்குமாறு கூற மாணிக்கம் மறுக்க வீம்பு கொண்ட சகுந்தலா வயல் சேற்றில் நடந்து காலெல்லாம் சேறாக சென்று சேர்வதோ மாணிக்கத்தின் வீட்டிற்கு.
சகுந்தலாவைப் பார்த்த மாணிக்கத்தின் தங்கையும் அம்மாவும்
குடிக்க மோர் தர, அருவெறுப்புடன் குடிகேகத் தயங்கி அவர்கள் பாரா வண்ணம் மோரை வீட்டிற்கு வெளியில் வீசி விடுகிறாள்.அப்போது அது யாருக்கும் தெரியாது.
மாணிக்கத்தைத் தவிர.மாணிக்கத்திற்கு மட்டும் எப்படி தெரியும்?வீசி எறியப்பட்ட மோர் வந்தடைந்த இடம்
"மாணிக்கத்தின் முகம்".
வெளியில் வரும் சகுந்தலாவிற்கு சிறிது அதிர்ச்சி.இவங்களுக்கெல்லாம் தண்ணீரே தரக்கூடாது என்று கதையின் நாயகனாகிய மாணிக்கம் சொல்ல அதற்கு மாணிக்கத்தின் தாய் 'அப்படியெல்லாம் சொல்லாதப்பா
நான் கொடுத்த மோரை முகம் சுளிக்காம குடிச்சதப்பா'
என்று சொல்ல,
திரும்பி நிற்கும் மாணிக்கமாக நடித்த நடிகர்திலகம் திரும்பி நிற்க ஆச்சர்யத்துடன' என்னடா இது' அம்மாவாக நடித்த காந்திமதி கேட்க "பால் வடியற முகம்,பால் வடியற முகம்னு சொல்லுவியேஇது மோர் வடியற முகம் "ன்னு நடிகர்திலகம் சொல்வது பொருத்தமான டைமிங் காமெடி .
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
முத்தாய்ப்பாக காமெடிசென்ஸ்,சென்டிமென்ட்,
பலமான வசனங்கள் என ஏதாவது ஒன்றைக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருப்பதுஇந்தப்படத்தின் சிறப்பு. இந்த மாதிரி திரைக்கதைஅமைந்திருப்பதால் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் மேலும் ரசிக்க வைக்கும். காலம் தாண்டியும் நிற்கும்
இங்கே ஒரு பாடல்:
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
சேனை பரிவாரத்துடன் சீமான் போல்
வாழ்ந்தவனும் எவனுமில்லை
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
(கோட் சூட் அணிந்து இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்ப சக்கரம் சுற்றுதடா*
அதில் நான் சக்கரவர்த்தியடா
என்று பாடி போஸ் தந்தாலும்,
வேட்டி, சாதாரண சட்டை அணிந்து,
சேனை பரிவாரங்களுடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனுமில்லே
என்று பாடி போஸ் தந்தாலும்.
அந்தப் போஸ்கள்தான் காலா காலத்துக்கும்.)
தெரிஞ்சுக்கோ (ஆனை)
பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆணையிட்டுச் சொல்லுறேன் நான் அதுலே
உங்க பணத் திமிரை அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும் வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய கூசுகின்ற
கோழைங்கதான் குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து
இந்த வரிகளின் போது தான் கீழ்க்கண்ட படங்கள்
எடுத்திருக்க வேண்டும்

Shooting spot still
ஒசந்திடும் கோபுரமா கோபுரமா கோபுரமா அந்த
கோபுரத்து சாமியெல்லாம் குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
மாணிக்கமும் அவருடைய கூட்டமும் சேர்ந்து பாடும் பாடலால் சகுந்தலா*
கோபமடைந்து செல்கிறாள்.பின்னே நாயை பிடித்துக்கொண்டு வரும் மாணிக்கம் நாயை அழைப்பது போல் சகுந்தலாவை கேலி செய்கிறான்.இது தவறென்றாலும் அது ஒரு சிறிய பழி தீர்த்தல் கணக்கு. முன்பொருமுறை அதே செயல் சகுந்தலாவால் நடத்தப்பட்டு மாணிக்கம் இழிவு படுத்தப்பட்டிருப்பார்.எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் ஆத்திரம் தான் அது.திமிர் பிடித்த அதுவும் ஒரு பெண் எனும் போது அந்தக் கோபம் சந்தர்ப்பம் தேடி அலையும்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமைந்த நிகழ்ச்சிதான் இப்போது நடைபெறுவது.தன்னை நாய் என்னும் அர்த்தத்தில் கிண்டல் செய்தது அவளுக்கு கோபத்தை உண்டாக்கி*
விடுகிறது.அதனால் மாணிக்கத்தை கேவலமாக திட்ட ,அதற்கு மாணிக்கமும் பதிலடி கொடுக்கும்படி ஆகிறது.சகுந்தலாவின் அண்ணன் ராஜவேலுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.பண்ணையாரின்
வீட்டுக்கு செல்லும்மாணிக்கம் ராஜவேலுவால் தாக்கப்படுகிறார்.ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கும் கோபம் எரிமலையாய் வெடிக்க ராஜவேலுவை பொளந்து கட்டுகிறார் மாணிக்கம்.பண்ணையாரும்,
அய்யாக்கண்ணுவும் வந்து சண்டையை விலக்கி விடுகின்றனர்.சண்டையில் மாணிக்கம் வெறித்தாண்டவம் ஆடி விடுகிறார்.
மாணிக்கத்தின் வீடு:
மாணிக்கத்தின் தாய் அந்த சண்டையை நினைத்து வருத்தப்பட சகோதரி காவேரி அண்ணனுக்கு ஆதரவாய் பேசுகிறாள்.
(பாசமலர் படத்தில் ஜெமினிகணேசன் வந்து வேலையை விட்டு நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடிகர்திலகத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,ஜெமினிசொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு துளி கோபமாய் நடிகர்திலகத்தின்*
மனதுக்குள் சென்று அந்தக் கோபம்
கையில் கத்தி வைத்து பென்சிலை சீவி சீவி அந்தக் கோபத்தை ஒவ்வொரு சீவலிலும் வெளிப்படுத்திநடிப்பின் ராஜ முத்திரையை காட்டியது நடிகர்திலகம் உலகறிந்தது.அதே போல் இங்கு
அந்த வாழைத்தார் தண்டைசீவிக்கொண்டே வந்து கடைசியில் வெட்டி போட்டு தன் ஆத்திரத்தைக் காண்பிப்பார் நடிகர்திலகம்.)
ராஜவேலுவும் சகுந்தலாவும் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.
சின்னப்பண்ணைசிங்காரம் நிர்ப்பந்தத்தின் காரணமாக பெரிய பண்ணையார் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரு மனதாக சம்மதிக்கிறார். அவருக்கு போட்டியிட முழு விருப்பம் இல்லை.காரணம் தான் ஜெயிக்கமாட்டோம் என்ற எண்ணமும், ஊர் மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம்.சின்னப்பண்ணை ஊர் மக்களைக் கூட்டி ஆதரவு தருமாறு கேட்கிறார்.பெரும்பான்மையாக ஊர் மக்களும் ஆதரவு தருவதாக இசைகின்றனர்.அதே சமயம் ஊர் மக்கள் எவரும் தனக்கெதிராக எதிர்த்து நிற்கக்கூடாது எனக் கூற மாணிக்கம் தான் எதிர்த்து நிற்பேன் என்க,பெரிய பண்ணை சஞ்சலமடைய சின்னப்பண்ணை மறுபடியும் ஊர்மக்களின் ஆதரவைக்காட்டி பண்ணையாரை போட்டியிட சம்மதிக்கவைக்கிறார்.அப்போது பெரியபண்ணையார் தான்ஜெயித்தால் இந்த ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று மாணிக்கத்திற்கு சவால் விடுகிறார்.மாணிக்கமும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இப்பொழுது ஒரு கேள்வி? மாணிக்கம் ஜெயிச்சா?*
அதை மாணிக்கமே கேட்டு விடுகிறார்.நான் ஜெயிச்சா பதிலுக்கு பண்ணையார் என்ன செய்வார்?பணம் கொடுப்பதாகச் சொல்லப்பட,இது சரியான சவால் போல் இல்லையே என்று மாணிக்கம் சொல்ல,அதற்கு சின்னப்பண்ணை வேறு ஏதோ ஏதோ சொல்லி கடைசியில்'அவர் மகளையா கட்டி வைக்க முடியும்?"என்று குத்தலாக கேட்க,அதையே மாணிக்கமும் சரியான பிடிப்பாக எடுத்துக் கொண்டு.,"இதுதான்யா
சரியான சவாலு"எனச் சொல்ல,
இந்த சவாலை பெரியபண்ணையார் ஏற்க மறுக்க.,சின்னப்பண்ணை ஒரு வழியாய் பெரிய பண்ணையாரை சம்மதிக்க வைத்து விடுகிறார்.இருவருக்குமான சவால் ஒப்பந்தமாக எழுதப்படுகிறது.
மாணிக்கத்தின் முன் நிற்கும் பெரிய சவால் இது.மாணிக்கம் என்ன செய்யப்போகிறார்?
எத்தனையோ தேர்தல் காட்சிகள் தமிழ் சினிமாவில்காட்டப்பட்டிருக்கின்றன.ஆனால் இப்படத்தில் வருவது போல்,தேர்தலுக்கு முன்னும், ,தேர்தலுக்கு பின்னும் வரும் காட்சிகள் போன்று விறுவிறுப்பைத்தரும் காட்சிகள் வேறு எதிலும் இல்லை.கையில் தாலியுடன் ,அதை சுழற்றிக்கொண்டே*
வாக்கு சாவடியை சுற்றி சுற்றிநடிகர்திலகம் அங்குமிங்கும் நடை போடுவது ரகளையான சீன்.
மாணிக்கம் வெற்றி பெற்றதாக வேலையாள் ஓடிவந்து சின்னப்பண்ணையிடம் கூற,அது அவருக்கு அதிர்ச்சியடையாமல் ஆனந்தக்கூத்தாடுகிறார்.மாணிக்கம் ஜெயிக்க வைத்ததே நான்தான் என்று பேச திரைக்குப்பின்னால் சகுனி ஆட்டம் அவர் ஆடியிருப்பது புலனாகிறது.
(சின்னப்பண்ணை சிங்காரமாக நாகேஷ்:
தருமி,வைத்தி,வரிசையில் சின்னப்பண்ணையையும் சேர்க்கலாம்.
டயலாக் டெலிவரியை டைமிங்காக வெளிப்படுத்துவதில் நாகேஷ் கில்லாடி.அது எந்த சீனாக இருந்தாலும்.நாகேஷின் சிறந்த படங்களில் நடிகர்திலகத்துடன் இணைந்த படங்களே அதிகமிருக்கும்.
பத்திரத்தை வைத்து நான்என்ன செய்யப்போகிறேன் என்று டி.கே.பகவதி கேட்க,நாகேஷ் கையை ஓங்கியவாறு"பெரிய பண்ணையாச்சேன்னு பார்க்கிறேன்,இல்லேன்னா பொளேர்னு அறைஞ்சிடுவேன்"ன்னு சொல்லும் சீனிலும்சரி, பகவதியை தேர்தலில் நிற்க வைக்க அவர் முயற்சி செய்யும் காட்சியிலும் சரி நாகேஷின்*
பங்கு பாராட்டுதலுக்குரியது.)
அந்த தேர்தல் வெற்றி ஊர்வலகாட்சி அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும்.
நடிகர்திலகத்தை தோளில் உட்கார வைத்து தூக்கிக்கொண்டு வரும் வரவேற்புக்காட்சி ஏக அமர்க்களம்.,
ஆட்டம் பாட்டம்,தாரை தப்பட்டை,கரகாட்டம்,புலிவேஷம்
என்று கிராமியகலைகள் எல்லாம் சேர்ந்து கூத்து கட்டும்.பகவதியை கொம்பைக்காட்டி மிரட்டும் ஷாட் பிரமாதம்.
படையப்பா படத்தில் கடைசி காட்சியில் வரிசையாக நிற்கும் மக்கள் கூட்டத்தை காட்டுவார்கள். காமிரா
வளைந்துநெளிந்து சுற்றிக்காட்டும் ஷாட்டாக இடம் பெற்றிருக்கும்.இந்த மாதிரியான காட்சி சவாலே சமாளிபடத்தில் இந்த இடத்தில் இடம்பெற்றிருக்கும். அது போன்ற ஷாட்தான் பில்டப்புடன் படையப்பாவில் காட்டப்படுகிறது..சவாலே சமாளியில் உண்மையாக இருப்பது போல் இருக்கும் .நடிகர்திலகம் மட்டுமல்ல அவரின் திரைப்பட காட்சிகளும் கூட*
மற்ற திரைப்படங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது என்பதையல்லவா இது காட்டுகிறது.


காரில் சகுந்தலாவை வெளியூருக்கே திருப்பி அனுப்பபெரிய பண்ணை முயற்சிக்கிறார்.வெற்றி பவனி வந்து கொண்டிருக்கும் மாணக்கத்தின் தோழர்கள் அதைப் பார்த்துகாரை தடுத்து நிறுத்தி பெரியபண்ணையின்
வீட்டுக்கேதள்ளிக்கொண்டு வந்து விடுகின்றனர்.
அங்கேயே பஞ்சாயத்து நடக்கிறது.
எல்லா பணக்காரக்குடும்பங்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நியாயம்தான் பண்ணையாரின் வீட்டிலும் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஊர் விடுமா?
ராஜவேலுவும் வந்து பண்ணையாரை விமர்சிக்க, துக்கம் தாளாமல்பண்ணைக்கு நெஞ்சை அடைக்கபதறும் மனைவி தாலியைக்காட்டி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
"
(இந்தக் காட்சியில்ஊரார் முன்னிலையில் நம்பியார் நடிகர்திலகத்தைஅடிக்க கை ஓங்க,
"உனக்கு ரெண்டு கைதான். எனக்கு பின்னால் பார் எத்தனை கையென்று"
என்று சொல்லும் வசனம் கூட படையப்பாவில் 'இந்த தனி மனுஷனுக்கு பின்னால் பாருங்க.எத்தனை பேர்னு தெரியும் என்று வரும்)
மாணிக்கம் சகுந்தலா திருமணம் கிராம மக்களலால் எளிமையாக நடத்தி வைக்கப்பட்டது.
படிப்பும் பணக்காரத்திமிறும் கொண்ட சகுந்தலா,ஏழ்மை வர்க்கத்தைச் சேர்ந்த மாணிக்கத்தை ஏற்றுக்கொள்வாளா?
மாணிக்கம் சகுந்தலாவின்
திருமணம் முடிந்த அன்றைய நாள் இரவு.
மாணிக்கம் பேசுவது:
முன்பின் தெரியாம நாம ஒருத்தரையொருத்தர் சந்திச்சப்போ,அந்த ஒரு நிமிஷத்திலேயேஎன் மனச உங்கிட்ட பறி கொடுத்திட்டேன்.ஆனா அடுத்த நிமிஷமே உன் பணத்திமிராலே என்னை அவமானப்படுத்திட்டே.உன் திமிரை அடக்கனும்கறதுக்காக ஏழைக்கே உரிய ஆத்திரத்தில்,நானும் சரிக்கு சமமா பதிலுக்கு அவமானப்படுத்திட்டேன்.நாம ரெண்டு பேரும் புருஷன் மனைவி ஆவோமான்னு நினைச்சு பார்த்திருப்போமா?உன் மனசுக்கு புடிச்ச வாழ்க்கை உனக்கு கிடைக்காம இருக்கலாம்.ஆனா கிடைச்ச வாழ்க்கைக்கு தகுந்தாப்போலே உன் மனச மாத்திக்கிறதுதான் உனக்கு நல்லது.இந்தப்புது இடம்,புது உறவு, புது வாழ்க்கை உனக்கு புடிக்காம இருக்கலாம். ஏன் அறுவெறுப்பாக்கூட இருக்கலாம்.என்ன உனக்கு புடிக்கல்லனாக் கூட உன்ன எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.குறிப்பா உன் பிடிவாதகுணம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு.ஏன் தெரியுமா?
(அவ கிட்ட எனக்கு புடிச்சதே அந்த அகம்பாவம்தான்—
"இது வசந்தமாளிகை"
இதுக்கு விழாத கைதட்டா,விசிலா)
நானும் ஒரு பிடிவாதக்காரன்தான்.நம்ம கல்யாணம் இருக்கே அதுதான்
"டிபிகல் சோசியலிசம்".நம்ம ரெண்டு பேரும் ரெண்டு வர்க்கம்.இந்த ரெண்டு வர்க்கமும் பக்குவப்பட்டு ஒண்ணா சேர்ந்தா அதுதான் உண்மையான சோசியலிசம்.அதுக்குத்தான் தலைவர்கள் எல்லாம் பாடுபடறாங்க.நான் உன்ன வெறுக்கல.உன் ஆணவம்,பகட்டு,பணக்காரதிமிறு இதத்தான் வெறுக்கிறேன்.என்கிட்ட ஏழ்மை,வறுமைசூழ்நிலை இதெல்லாம் இருக்கலாம்.அது நாயம்.ஆனா அதுக்காக என்னை ஏன் வெறுக்கற.?புரியல இல்ல. உனக்கு, என்ன , உங்க வர்க்கத்துக்கே புரியாது. ஏன் எங்கள வெறுக்கறோம்கறதே தெரியாம பாரம்பர்யமா அது உங்க ரத்தத்துலயேவிஷமா ஊறிப்போச்சு.
நான் ஒரு முட்டாள் உன்னை நிக்க வச்சே பேசிட்டு இருக்கறம்பாரு.
நீயும் பேசுவ .ஆனா பேசக்கூடாதுன்னு இருக்கற.இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பெண்கள் ரொம்ப வெட்கப்படுவாங்கன்னு சொல்வாங்க.நீயும் வெட்கப்படுறே. எப்படின்னா,அய்யோ எனக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டுப்போச்சேன்னு.
பரவாயில்ல.நீ படிச்ச பொண்ணு. நானும் உன் அளவுக்கு படிச்சவன்தான். எப்படின்னு கேட்கறியா?"ஆயிரம் புஸ்தகத்தை படிச்சவன விடஆயிரம் வயலை உழுதவன் அறிவாளி" ன்னு பெரியவங்க சொல்வாங்க.
(அடடா.என்ன ஒரு வார்த்தை மழை. அவர் பேசறத கேட்க கேட்கத்தான் எத்தனை ஆனந்தம்.)
பேசிக்கொண்டே போய் மனைவி என்ற உரிமையில் சகுந்தலாவை தொடப்போக,

"தொடாதீங்ங்ஙக"
சகுந்தலாவின் ஆவேசக் கத்தத்தலில் மாணிக்கம் அதிர்ச்சியில் நிற்க,
"நீங்க ரோசமுள்ள ஆம்பளயாயிருந்தா என் உரிமையில்லாம என்னைத் தொடக்கூடாது "-
இது சகுந்தலா.
"நான் உன்ன தொட்டு தாலிகட்டின புருஷன்.உன்ன இப்ப நான் என்ன வேணாலும்செய்யலாம்.அதுக்கு எனக்கு உரிமையிருக்கு.என்னைக்கு நீ உண்மையா என்னை கணவனா ஏத்துக்கிறியோ அன்னைக்குத்தான் உன்னை நான் தொடுவேன்.இது என் அம்மா மேல ஆணை"-
இது மாணிக்கம்.
நாகரீகம் மனிதனை உயர வைத்தது.அதே நாகரிகம் மனிதர்களை தாழ்த்தவும் வைக்கிறது.நடந்து போனது சாஸ்திர சடங்கல்ல.அது நிர்ப்பந்தத்தால் நடந்த சம்பிரதாயம்.
...ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.
பசி பொறுக்க மாட்டாமல் இரவில் யாருக்கும் தெரியாமல்பழைய சாதம் உண்ணும்படியான நிலைமை,அதை மாணிக்கம் பார்த்து கிண்டல் செய்வது,துணிகளை துவைத்து போடுமாறு மாணிக்கம் சொல்வது.,இது போன்ற நடத்தல்கள் சகுந்தலாவை அவள் வீட்டிற்கு ஓட வைக்கிறது. அவளின் அம்மா சொல்லும் சொற்கள் சகுந்தலாவை மாணிக்கத்திடமே திருப்பி அனுப்புகிறது.
இஷ்டப்படாத திருமணம் ஒரு பக்கம் நடந்திருந்தாலும்,மாணிக்கம் தன் குடும்பத்திற்கேற்றவாறு சகுந்தலாவை மாற்ற செயல்படுத்தும் சில கட்டுப்பாடுகள் சகுந்தலாவை நோக வைக்கின்றன.அது அவளை வேதனைப்படுத்தி ,இறந்துவிடலாம் என்று கிணற்றில் குதிக்க முயற்சிக்கும் போது,மாணிக்கம் வந்து தடுத்து விடுகிறார்.
என்னை ஏன் சித்ரவதை செய்கிறீர்கள் நான் இறந்து விடுகிறேன் என்று சகுந்தலா கூற,நீ இறந்து விட்டால் பழி என் மீதல்லவா வரும் எனவே கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு நீ நிம்மதியாக இரு என்று கிணற்றின் மேல் நின்று கொள்கிறார்.
பின்பக்கம் இருந்து தள்ள கைகளை கொண்டு வரும் சகுந்தலா தள்ளிவிட எத்தனிக்கையில்,
மனமா?
அது*
மாறுமா?
யோசிக்கிறது மனம்.
சிந்தை தடுமாற பின் வாங்குகிறது கரங்கள்.
சகுந்தலாவின் மனம் தோற்றது.
தமிழ்ப்பண்பாடு வென்றது.
இந்த இடத்தில் மாணிக்கம் கூறும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும்.சகுந்தலா என்ன இருந்தாலும் பெண்தானே.சற்றே கரைவது போல் தெரிகிறது.
மாணிக்கத்தின் சொற்கள் சகுந்தலாவிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது அவள் விழிகள் காட்டுகின்றன.
இவ்விடத்தில் சகுந்தலாவை தேடி வரும் காவேரியை ராஜவேலு மானபங்கப்படுத்தி விடுகிறான்.ஆவேசமடைந்த காவேரி*
ராஜவேலுவின் வயலுக்கு "தீ"வைத்து விடுகிறாள்.அதை மாணிக்கம் பார்த்துவிடுகிறார்.காவேரியிடம் காரணம் கேட்க நடந்ததை கூறுகிறாள்.தீ பரவுவதை பார்த்து ஊர் மக்களுடன் அய்யாக்கண்ணுவும் சேர்ந்து வருவதைப்பார்த்ததும் மாணிக்கம் காவேரியின் கைகளில் இருந்து தீப்பந்தத்தை வாங்கி காவேரியை தப்பிக்க வைக்கிறார். தீப்பந்தத்துடன் மாணிக்கம் வருவதைப் பார்த்து ஊர்மக்கள் மாணிக்கம்தான் தீ வைத்தது என்று முடிவு செய்து பண்ணையாரின் வீட்டிற்கு பிடித்துச் செல்கின்றனர்.
அங்கே விசாரணை ஆரம்பிக்கிறது.
(சவாலே சமாளி முதல்பதிவு)ஆரம்பத்தில் குறிப்பிட்ட காட்சி இங்கேதான் அரங்கேற்றமாகிறது.
சாட்டையடியால் ரணமாகி,வலிகளுடன் கட்டிலில் படுத்திருக்கும் மாணிக்கத்தை பார்த்து கண்ணீர் விடுவதோடு,அவருடைய காலிலும் விழுந்து அழுகிறாள்.மாணிக்கத்தை தொட்டு தாய் மேல் இட்ட ஆணையை வாபஸ் வாங்க சொல்லுகிறாள்.
அப்புறம்,"
கேட்டுக்கோடி உறுமிமேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்.
வ ண க் க ம்.
நடிகர்திலகத்தின் நடிப்பை விவரிக்க வேண்டுமென்றால் பிரேம் பை பிரேம் எழுத வேண்டி வரும்.அதற்கு பொருத்தமான வார்த்தைகள் தேடினால் பொழுதும் போதாது.
ஆரம்பகாட்சியில் பணிவுக்கு பணிவு,பதிலுக்கு பதில் அளிக்கும் அந்தபாந்தமான நடிப்பைச் சொல்வதா?
விஜயகுமாரியை கண்டிக்கும் போது கூட, காட்டும் கண்ணியத்தை சொல்வதா?
மரம் வெட்டும் போது ராகவனிடத்தில்*
மறைத்து வைத்த பாசத்தை இயல்பாக வெளிப்படுத்துவதைச் சொல்வதா?
நாகேஷ் ஆடும் சகுனியாட்டத்தில்
பகவதியிடம் சவால் போடும் வித்தையைச் சொல்வதா?
அம்மாவாக வரும் காந்திமதியிடம் அவர் காட்டும் அந்நியோன்யமான அன்பைச் சொல்வதா?
தேர்தல்களத்தில் மஞ்சள் தாலியை கையில் வைத்து மதர்ப்பானநடை காட்டும் அந்த நடிப்பைச் சொல்வதா?
நம்பியாரை பொளந்து கட்டும் சண்டையில் அந்த ஆவேச நடிப்பைச் சொல்வதா?
தொடாதீர்கள் என்று சொல்லும் ஜெயாவிடம் காட்டும் அந்த ஆண்மையின் கம்பீரத்தைச் சொல்வதா?
தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவிடம் பேசும் அந்த சொற்பொழிவைச் சொல்வதா?
எதைச் சொல்வது?
எதை விடுவது?
Russellxor
15th November 2015, 05:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG-20151115-WA0007_zpswkzqoqbo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG-20151115-WA0007_zpswkzqoqbo.jpg.html)
RAGHAVENDRA
15th November 2015, 06:53 PM
செந்தில்வேல்
தலைமுறைகளைக் கடந்து நிற்கும் அவதார புருஷனின் உன்னதங்களை உங்களுக்கே உரிய சிறப்பான வடிவில் இங்கு பகிர்ந்து வருவது உள்ளபடியே மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் உள்ளது. அடுத்த தலைமுறை மட்டுமல்ல, அதற்கு அடுத்த பல தலைமுறைகள் சிலாகித்து மகிழ ஏராளமான விஷயங்களை நடிகர் திலகம் அளித்துள்ளதும், அதற்கு இன்னும் பல தலைமுறைகளில் அதைப் பற்றிப் பலர் எழுதுவர் என்பதை உணர்த்தும் விதமாக உங்கள் பதிவுகள் விளங்குவதும் நெஞ்சுக்கு நிம்மதி அளிக்கும் நிறைவான விஷயங்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
Russellxor
15th November 2015, 07:29 PM
ராகவேந்திரா சார்
மிக்க நன்றி
தங்களின் பாராட்டுகளுக்கு.
பேஸ்புக்கில் தலைவருடன் நீங்கள் இருக்கும் புகைப்படம் பார்த்தேன்.
அரிய படம்.அருமை.
Russellxor
15th November 2015, 07:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1447594757665_zps6eibx2jz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1447594757665_zps6eibx2jz.jpg.html)
Russellxor
15th November 2015, 07:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1447594751515_zpsmrnx0eo1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1447594751515_zpsmrnx0eo1.jpg.html)
Russellxor
15th November 2015, 07:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1447594754561_zpsv7zr7zjc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1447594754561_zpsv7zr7zjc.jpg.html)
Gopal.s
15th November 2015, 07:46 PM
நான் என்றுமே பீடத்தில் வைத்து வணங்கும் திரைக் கதை,வசனகர்த்தா ,இயக்குனர் கே.எஸ்.ஜியின் மறைவு என்னை மிக துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரை போல ஒருவர் தமிழ் திரையுலகுக்கு கிடைக்க மாட்டார்.ஆயிரம் ஸ்ரீதர்கள் ,பாலசந்தர்கள் வரலாம். ஆனால் ஒரு கே.எஸ்.ஜி இனி தோன்ற வாய்ப்பே இல்லை.
நடிகர்திலகத்தின் மீது அபார பக்தி கொண்டவர்.நடிகர்திலகம் மட்டுமே நடிகர் என்ற சொல்லுக்கே தகுதியுள்ளவர் என்று நேரடி சந்திப்புகளிலும்,பேட்டிகளிலும்,கூறி வந்தவர். இறுதியாக மறதி நோய் ஆட்கொண்ட நாட்களிலும் ,நடிகர்திலகம் மேக் அப்புடன் காத்திருப்பார் ,நான் போக வேண்டும் என்று கூறி வந்ததாக முரளி சொன்ன ஞாபகம்.
நடிகர்திலகத்துடன் ,அவர் சம்பந்த பட்ட படங்கள்.
வசனகர்த்தா.
1)தெய்வ பிறவி,
2)படிக்காத மேதை.
3)எல்லாம் உனக்காக .
வசனம்,இயக்கம்.
1)கை கொடுத்த தெய்வம்.
2)செல்வம்.
3)பேசும் தெய்வம்.
4)குலமா குணமா
5)படிக்காத பண்ணையார்.
பாடல்கள் மட்டும்.
1)எதிர்பாராதது.
2)அமர தீபம்.
3)உத்தமபுத்திரன்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய உண்மை ரசிகனாக பிரார்த்திக்கிறேன். இயக்குனர் மகேந்திரன் கூட இவரின் தீவிர ரசிகர்.
Russellxor
15th November 2015, 08:03 PM
நன்றி
திரு .ராகவேந்திரா அவர்களுக்கு,
(திரி14ல் ராகவேந்திரா சார் எழுதியது)
சாதனைக்கென்றே பிறந்த மாமன்னன்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மய்யத்தை மட்டும் விட்டு வைப்பாரா என்ன..
36 தலைப்புகள்...*
24.01.2005 தொடங்கி இன்று வரை பத்து ஆண்டுகளில் இந்தப் பயணம் படைத்துள்ள வரலாறு.. மலைக்க வைக்கும் வரலாறு..
தொடர்ந்து பத்து ஆண்டுகள் இடைவெளியின்றி இயங்கி சாதனை படைத்துள்ளது, நடிகர் திலகத்தின் ரசிகர்களின் மிகப் பெரிய வெற்றியாகும்.
சமீப காலத்தில் திரியில் ஏற்படுத்தப்பட்ட வடிவமைப்பு மாற்றத்தினால் ஒவ்வொரு பாகமும் 400 பக்கங்கள் என்னும் போது இதனுடைய தாக்கம் இன்னும் அதிகமாகும்.
முப்பதிற்கும் மேற்பட்ட தலைப்புகளில் மக்கள் தலைவரின் மகத்தான வரலாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
இன்று வரை அநைத்து பாகங்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 58 லட்சம் (11.02.2015 வரை)பார்வையாளர்களை நடிகர் திலகம் திரியின் பல்வேறு பாகங்கள் கவர்ந்துள்ளன என்பதிலேயே அவருடைய ஆளுமை உள்ளங்கை நெல்லிக்கனி போல் புலப்படும்.
பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள், பல்வேறு கோணங்களில் அவருடைய நடிப்பைப்பற்றிய திறனாய்வுகள், அவருடைய சமுதாய பங்களிப்பு, நேர்மையான அவருடைய அரசியல் வாழ்க்கை.. கர்ணனைப் போல் வலது கை தருவதை இடது கை அறியாத கொடையுள்ளம், தேசியவாதியாக, தன்னலமற்ற தொண்டனாக என அவரின் வாழ்க்கையின் திறந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் புரட்டிப் பார்த்து அலசிய ஒவ்வொரு ரசிகரின் எழுத்து வன்மை..
இவ்வாறு பல்வேறு வகையில் வரலாறு படைத்திட்ட நடிகர் திலகம் திரி, இம்மய்யம் திரியின் திலகமாகவும் விளங்குவதில் வியப்பேது...
குறிப்பாக நடிகர் திலகம் திரியின் உச்சகட்ட சாதனை, பம்மலார், வாசு உள்ளிட்ட அனைத்து நண்பர்கள் ஒருங்கிணைந்து படைத்த நடிகர் திலகம் திரி பாகம் 9... கிட்டத்தட்ட பத்து லட்சம் பார்வையாளர்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. முடிந்து இரண்டரை ஆண்டுகளான பின்னும், இன்று வரை இத்திரி தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது என்றால்..
அதில் பம்மலார் மற்றும் வாசு இருவரின் பங்கு மகத்தானது என்பதில் சிறிதும் ஐயமில்லை.*
வரும் நாட்களில் வரும் பாகங்களில் இவர்கள் இருவரும் மீண்டும் தொடர்ந்து பங்காற்றி இந்த ஐம்பத்தெட்டு லட்சம் பார்வையாளர்கள் என்பதை ஒரு கோடி என்கிற இலக்கை தாண்ட வைக்க தோள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் வேண்டுகோளுடனும்
பாகம் 18ஐ ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
திரி 9ல் பங்கெடுத்தவர்கள்விவரம்.
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-11-15-19-36-28_zpspvcchi9a.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-11-15-19-36-28_zpspvcchi9a.png.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-11-15-19-36-39_zpsrkdtycs5.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-11-15-19-36-39_zpsrkdtycs5.png.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151115_194743_zps1simajsi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151115_194743_zps1simajsi.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20151115_195128_zpsidpyxzdf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20151115_195128_zpsidpyxzdf.jpg.html)
Russellsmd
15th November 2015, 09:54 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
-----------------
சுந்தரின் வீட்டிற்கு, சாந்தி மிகப்
பெரிய பலம்.
வறட்சியும், வெப்பமும் வாட்டும் இடத்தின் கொடுஞ்
சூழலை, ஒரு மழை மாற்றி
விடுவதைப் போல...
துன்பங்களை தொடர்ந்து
தாங்கிய நெஞ்சத்தின் தளர்வை,
ஒரு நம்பிக்கை தகர்த்து விடுவதைப் போல...
சுந்தரின் தந்தை, சுந்தர் குறித்தும், அவனது எதிர்காலம்
குறித்தும் கொண்டிருக்கும்
கவலைகளை மாற்றுபவளாகத்
திகழ்கிறாள்...சாந்தி.
அவரது மன வறட்சியைப்
போக்கும் மாமழை சாந்தி.
அவரது நெஞ்சம் தளராமல்
பார்த்துக் கொள்ளும் நம்பிக்கை
சாந்தி.
ஒரு இரவு.
சுந்தரின் தந்தை சிவக்கொழுந்து
தன் வீட்டு ஊஞ்சலில் அமர்ந்து
கொண்டு, தனது நண்பரிடம்
பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த நண்பரும் கூட
சிவக்கொழுந்துவின் தங்கை
மகள் சாந்தியை, சுந்தருக்கு
மணமுடித்து வைக்கும்படி
யோசனை தெரிவித்துப்
போகிறார்.
சிவக்கொழுந்து, சாந்தியிடம்
"சாப்பிட்டியா" என்று கேட்க,
"இல்ல மாமா.. நான் அத்தான்
வந்தவுடனே சாப்பிடறேன்"
என்கிறாள் சாந்தி.
அந்நேரம் பார்த்து சுந்தர் உள்ளே
வர, சாந்தி மலர்கிறாள்.
உற்சாகமாய் விசிலடித்துக்
கொண்டு, எதையோ வென்ற
சந்தோஷ முகமாய் ராஜநடை
போட்டு வரும் அந்தத்
திருவுருவத்தின் வருகை,
சாந்திக்கு மட்டுமா மகிழ்வு?
இதே போல் வெற்றி நடை
போட்டு அய்யன் திரையுலகில்
நுழைந்த 1952-ல் அகிலத்துக்கே தானே மகிழ்வு?
------------------
புன்னகை அரசி, நடிகர் திலகத்திற்கு உணவெடுத்துப்
போகும் அந்தக் காட்சி, அந்த
"சாந்தி" கதாபாத்திரத்தின் ஒட்டு மொத்த குணாதிசயங்களை ஒரே நேரத்தில் விளக்குவதாய்
அமைகிறது.
தனக்காக வெகுநேரம் இரவுணவு உண்ணாமல் காத்திருக்கும் அத்தை பெண்ணைக் கண்டிக்கிறதாய் இந்தக் காட்சியில் வேறொரு அவதாரம் எடுத்திருக்கிறார்..
நடிகர் திலகம்.
சத்தமிட்டுச் சிரித்தாலும், விழி
அகட்டிப் பார்த்தாலும், ஏற்ற
பாத்திரத்திற்கு உயிரூட்ட
தனது கற்பனைப்படி அந்தக்
கலையரசர் எது செய்தாலும்,
மிகை நடிப்பென்று எக்காளம்
செய்து, அலட்சியப்படுத்திய
அதிமேதாவிகளையெல்லாம்
உட்கார்த்தி வைத்து இந்தக்
காட்சியைப் போட்டுக் காட்ட
வேண்டும்.
"வாங்...க" என்று கே.ஆர்.விஜயாவைக் கிண்டலாய்
அழைக்கும் அழகை...
ஒரு பொய்க் கோபத்துடன்
தன் பின்னே வருமாறு நடந்து
கொண்டே
கே.ஆர். விஜயாவிற்கு சைகை
காட்டும் அழகை...
பளீரென்று திரும்புகையில்
முதுகில் கே.ஆர்.விஜயா
கொண்டு வரும் சாப்பாட்டுத்
தட்டு இடிக்க, செல்லக்
கோபத்துடன் முறைக்கும்
அழகை...
நாற்காலியில் அமர்ந்து கொண்டு கே.ஆர்.விஜயாவிடம்
தன் ஒரு உள்ளங்கை விரித்து,
மற்றொரு கையை மூடிக்
கொண்டு குத்திக் குத்தி, "நான்
யாரு" என்று கேட்கும் அழகை..
தன்னைக் கண்டு பயப்படுவது
ஏனென்று கேட்டதற்கு, சின்ன
வயசில் தான் குறும்பு செய்தால்
அவர் தலையில் குட்டியதால்
ஏற்பட்ட பயம் இன்னும்
நீடிப்பதாக கே.ஆர்.விஜயா
கூறும் சிறுபிள்ளைத்தனமான
காரணத்தைக் கேட்டு "கடகட"வென சிரிக்கும்
அழகை...
"நீ சாப்பிட்டியா" என்று கேட்க,
முதலில் "சாப்பிட்டு விட்டேன்"
என்று சொல்லி விட்டு, பின்
"இதோ..சாப்பிடறேன்" என்று கே.ஆர்.விஜயா பயந்தோடிய
பின், சிரித்துக் கொண்டே
"அபிஷ்டு" சொல்கிற அழகை..
அந்த அதிமேதாவிகள் பார்க்கப்,
பார்க்க அவர்களது மூஞ்சிகள்
போகிற போக்கைப் பார்க்க
வேண்டும்.
-------------
வாழ்க்கையில் தனக்குக்
கிடைத்த அத்தனையையும்
விட உயர்வாக,தன் அத்தான்
தனக்குக் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறது
சாந்தியின் மனம்.
அவனுக்காகவே தான் பிறந்து
வந்தேன் என்று அந்த உயிர்
ஆனந்தத்தில் மிதக்கிறது.
ஆடிப் பாடி களிக்கிறது.
வெள்ளைச் சிரிப்பொலி, வெள்ளி மணி ஒலியை மிஞ்ச
சந்தோஷக் கூத்தாடுகிறது.
" பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை"
-கனவிலும், நினைவிலும்
மாமன் மகனுடனே வாழும்
ஒரு பெண்ணின் சிந்தனையாய்
எத்தனை அழகான வரிகள்?
காவியக் கவிஞரை இன்னுமொருதரம் நன்றியோடு
நினைத்துக் கொள்கிறோம்.
நெஞ்சினிக்க மாமனைப் பாடிய
பின், நம் செவியினிக்க வீணை
மீட்டுகிறாள்.
கதவு திறந்து வரும் மாமனுக்கு
மருமகள் கலைமகளாகத்
தெரிகிறாள். நெஞ்சு நிறைந்த
சந்தோஷத்தில் அவளிடம்
பேசுகிறார். தன் மகனை
அவள்தான் மணந்து கொண்டு
நல்வழிப்படுத்த வேண்டும்
என்று வேண்டுகிறார். அன்பில்
நெகிழ்ந்த அவளும் ஆனந்தக்கண்ணீர் சொரிகிறாள்.
மாமன் பாதம் பணிகிறாள்.
-----------------
அவளது ஆனந்தம் கலந்த
கண்ணீர், அழுகைக் கண்ணீராக
வெகு சீக்கிரமே மாறப் போவதை அங்கே தூரத்தில்
கடற்கரையில் அரங்கேறும்
காதற் காட்சியொன்று அறிவிக்கிறது.
அங்கே, கடலில் ஆட்டம் போட்டு விட்டு வந்த சுந்தரை
"கிடைத்த கொஞ்ச நேரத்திலும்
என்னைப் பிரிந்து போவதா?"
என்று கண்டித்தபடியே ஒரு
அன்னை போலே அவனுக்குத்
தலை துவட்டுகிறாள்..உமா.
அம்மா தலை துவட்டுகையில்
குறும்பு செய்யும் குழந்தை
போலே ..நாக்கைத் துருத்திக்
கொண்டு அவளிடம் வேடிக்கை
செய்கிறான்..சுந்தர்.
காதலியைப் பிரிந்து நொடிப்
பொழுதும் தன்னால் இருக்க
முடியவில்லை என்பதை
அவளிடம் வெளிப்படுத்தும்
அந்தக் காட்சியில் மீண்டும் நடிகர் திலகம் நம் இதய
தேசத்தை வென்று அரியணை
ஏறுகிறார்.
"என்னால பேச முடியல..
அழணும் போல இருக்கு.."
என்று விசும்பி அழும் போது
விசிலடிக்கத் தெரியாத ரசிகன்
மிகவும் வேதனைப்படுவான்.
குழந்தைகளின் அழுகை விநோதமானது. அழுவதற்கான
நிஜமான காரணம் ஒருபுறமிருக்க, சமாதானப்படுத்துகையில்
அழுகை இன்னும் பெரிதாகும்.
குழந்தையாய்ப் பாவித்து, "என்
கண்ணுல்ல.. என் செல்லம்ல.."
என பத்மினியம்மா சமாதானப்
படுத்துகையில், இன்னும்
பெரிதாகும் அழுகையுடன்,
பத்மினியின் கழுத்தில் புதைந்து
விசும்பும் நடிகர் திலகத்திடம்
மீண்டும் ஒரு குழந்தையைப்
பார்க்கிறோம்.
நடிப்பதன்றி வேறொன்றறியாக்
குழந்தை.
திரைக்குப் பின்னே நடிக்கத்
தெரியாத குழந்தை.
(...தொடரும்...)
Russellxor
15th November 2015, 10:12 PM
ஆதவன் ரவி
இருமலர்கள் பதிவு
ஒரு புத்தகமே போடலாம் எனும் அளவுக்கு பதிவுகள் அமையும்
என்று நினைக்கிறேன்.(அந்தக் காலங்களில் வந்த திரைப்பட கதை வசனம் புத்தகங்கள் போல்.)
பாராட்டுக்கள்.
Russellsmd
15th November 2015, 10:29 PM
நன்றி... செந்தில்வேல் சார்.
நீங்கள் சொன்னதைப் போல
ஒரு புத்தகம் போல இத்தனை
நீளமாய் நான் எழுதுவதற்கு, இம்மாதிரி எழுத வேண்டும்
என்கிற என் ஆவல் தவிர்த்து
இன்னொரு காரணமும் உண்டு.
மதிப்பிற்குரிய வாசு சார், முரளி
சார், அப்புறம் தாங்கள்..
எல்லோரும் பத்து வரி எழுதினால், பத்தையும் கண்களில் ஒற்றிக் கொள்கிற
மாதிரி எழுதி விடுகிறீர்கள்.
நூறு வரி எழுதுவோமே..
பத்தாவது தேறாதா என்கிற
நப்பாசை எனக்கு.
RAGHAVENDRA
15th November 2015, 10:30 PM
ரவி
நினைத்தோம் மகிழ்கிறோம்.. இரு மலர்கள் படத்திற்கு மட்டுமே தனியாக ஆயிரம் பதிவுகள் தேவைப்படும் போல.. தங்களின் உன்னதமான எழுத்தில் இரு மலர்கள் நமது இதய தெய்வத்தின் அர்ச்சனைப் பூக்களாக வடிவெடுத்து அன்றாடம் அர்ச்சிக்கப் படுகின்றன.
அந்த வித்யாபதி பூந்தோட்டத்து மலர்களைத் தொடுத்தார்.
இந்த ரவியோ கற்பனைத் தோட்டத்து மலர்களைத் தொடுத்தார்.
அந்த வித்யாபதி அகர முதல எழுத்தெல்லாம் பாடினார்.
இந்த ரவி அகில முழுதும் தலைவர் புகழ் பாடுகிறார்.
பாராட்டுக்கள்.
vasudevan31355
16th November 2015, 09:01 AM
நடிப்பு தெய்வத்தின் 'காவல் தெய்வம்' மீள்பதிவு (புதிய அங்கத்தினர்களுக்காக)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-93.jpg
திரையுலகைக் காத்த 'காவல் தெய்வம்' ஒரு ஆய்வு. (நடிகர் திலகத்தின் பகுதி மட்டும்)
அதுவரை வெளிவந்த நடிகர் திலகத்தின் காவியங்களில் நடிப்பில் பிரளயம் செய்த சரித்திர பெருமை பெற்ற படம்.
"கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த சாமுண்டி என்னை அதிகமாகத்தான் ஆட்டிப் படைத்து விட்டான்"
என்று அந்த சாமுண்டி பாத்திரத்தைப் பற்றி நடிகர் திலகமே பெருமிதம் கொண்ட கர்ஜனைக் காவியம். இனி சாமுண்டியைப் பற்றி...
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/maramyeri.jpg
சாமுண்டி கிராமணி ஒரு மரம் ஏறி. பனை மரம் ஏறி 'பதநீர்' இறக்கும் தொழில் அவனுடையது. குணம் புடம் போட்ட தங்கம். யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு, தன் தொழில் உண்டு, தன் அன்பு மகள் உண்டு என்று வாழ்பவன். சாணரன் ஆனாலும் தன்மானமிக்கவன். தன்னுடன் மரம் ஏறும் சக தொழிலாளியிடம் கூட அவன் ஏறும் மரத்தில் இருக்கும் குருவிக்கூட்டைக் கலைத்து விடாதே என்று சொல்லும் இளகிய மனம் கொண்டவன். மனைவியை இழந்தவன். மகளுக்காக உயிரை சுமப்பவன்.
ஊர்ப் பெரிய மனிதர் இருவரின் கழுகுப் பார்வையில் பட்டு விடுகிறாள் சாமுண்டியின் மகள். சாமுண்டி தொழிலுக்குப் போய் இருக்கும் நேரத்தில் மகளின் கற்பு சூறையாடப்படுகிறது. காமப் பிசாசுகளின் காம வெறியாட்டத்தால் கற்பிழந்து காலனுக்குப் பலியாகிறாள் காவிய மகள்.
வீடு திரும்பும் சாமுண்டி கயவர்களைக் கண்டு விடுகிறான். என்ன நடந்தது என்று தெரியாமல் ஆனால் என்னவோ நடந்து விட்டது என்பதை மட்டும் புரிந்துகொண்ட சாமுண்டி வீடு நுழையும் முன் ஒருவனைப் பிடித்து விடுகிறான். இன்னொருவனோ தப்பித்து விடுகிறான். பிடித்தவனைப் பிடித்தபடியே வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால்...
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/athirchi.jpg
மகள் மானத்தை பலி கொடுத்து, அலங்கோலமாக சின்னாபின்னாபடுத்தப்பட்டு மரணத்தை தழுவியிருக்கிறாள். சடுதியில் புரிந்து கொண்டு உறைந்து போய் விடுகிறான் சாமுண்டி. அவன் வாழ்வே அவன் கண்ணெதிரில் நாசமாகக் கிடக்கிறது. கோபத்திலும், வெறியிலும், கட்டுக்கடங்கா உணர்ச்சியிலும் பிடித்தவனை கண்டந்துண்டமாக வெட்டி மகளுக்கு பலி கொடுக்கிறான். கதறுகிறான்... துடிக்கிறான்... துவள்கிறான்.
காவல் துறை கைது செய்து கூண்டில் ஏற்றுகிறது. கோர்ட் ஆயுள் தண்டனை விதிக்கிறது. விதியின் தீர்ப்பு. சாய்ந்த பனைமரமாய் சருகாய் கருகிப் போனது அவன் வாழ்க்கை.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kolaiveri.jpg
ஒருநாள்... எதிர்பாராத திருப்பம். தன் மகளை நாசப்படுத்திய இன்னொருவன் தான் இருக்கும் ஜெயிலுக்கே தண்டனை அனுபவிக்க வருவதைப் பார்த்து விடுகிறான் சாமுண்டி. கூண்டில் அடைக்கப் பட்ட சிம்மமாய் கர்ஜிக்கிறான். அங்கும் இங்கும் கூண்டில் அலை பாய்கிறான். கொலை வெறியோடு எரிமலை ஆகிறான்.
ஜெயிலில் உள்ள சக கைதி கேசவன் தச்சுப் பட்டறையில் வேலை செய்யும்போது கம்பி அறுக்கும் ரம்பத்தை கொண்டு வந்து சாமுண்டியிடம் கொடுத்து தப்பித்துப் போக சொல்கிறான்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thappiththal.jpg
தப்பித்துப் போகவா விருப்பப்பட்டான் சாமுண்டி? அவன் மனம் முழுதும் ஒரே எண்ணம்... ஒரே சிந்தனை... பழி..பழி..பழி.. பழி தீர்... மகளைக் கெடுத்தவனை பழி தீர்...
ஒரு இரவு வேளையின் நடுநிசியில் ஜெயில் கம்பியை அறுத்து தப்பிக்கிறான் சாமுண்டி. கால்களில் பூட்டப்பட்டுள்ள விலங்கு சத்தம் காவலர்களுக்கு தெரியாமல் பூனை போல மெதுவாக அடியெடுத்து வைக்கிறான். ஜெயிலுக்குப் பக்கத்தில் தெருக்கூத்து நடக்கிறது. என்ன நாடகம் தெரியுமா?.. இரண்ய விலாசம்... பிரகலாதா நாடகம்.
என்ன ஒரு பொருத்தம்! அங்கே நாராயணன் தூணிலிருந்து நரசிம்மமாய் வெடித்துக் கிளம்ப, இங்கே நமது சிம்மம் ஜெயிலில் இருந்து துடித்துக் கிளம்ப, அங்கே இரணியனை நரசிம்மன் குடலைக் கிழித்து துவம்சம் செய்ய, இங்கே சாமுண்டி கயவன் உறங்கும் சிறைக் கம்பியை அறுத்து அவனது குடலை உருவி நாசம் செய்ய...
எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் யாரும் நெருங்க முடியவில்லை.. சிங்கத்தின் உறுமல் நிற்கவில்லை...கோபம் தணிய வில்லை. அன்பே வடிவான ஜெயிலரின் சாந்தமான கண்களின் தீர்க்கமான கருணைப் பார்வையினால் சாந்தமடைகிறான் சாமுண்டி. பழி தீர்ந்தது...வெறி தணிந்தது... இனி நிம்மதி... மனதில் எந்த பாரமும் இல்லை...லேசானது...கொலைக்குற்றத்துக்கு தூக்கு தண்டனை... சந்தோஷமாக எதிர்கொள்கிறான். விரைவில் தன் மனைவி கமலத்திடமும் மகள் சிவகாமியிடமும் ஐக்கியமாகி விடுவான் நம் சாமுண்டி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/pazhi.jpg
சாமுண்டியாக சரித்திர நாயகர். கேக்கணுமா...சும்மா அதம் பறக்காதா!...
தலையில் பின்னால் அள்ளி முடியப்பட்ட பெரிய கொண்டை... முகத்தின் இருபக்கமும் மேல்நோக்கி முறுக்கிவிடப்பட்ட முரட்டு மீசை... இடுப்பில் சாணரர்கள் அணியும் கச்சை... கச்சையில் கட்டப்பட்ட அருவாப் பொட்டி... அதில் செருகியிருக்கும் அருவாகத்தி... அருவாவை சுற்றியிருக்கும் கிட்டிக் கயிறு... மரம் ஏற தளவாடிக்கயிறு சகிதம் சாமுண்டி கிராமணியாக நம் சிங்கத்தமிழன். மரம் ஏறும் சாணரக் குலத்தோர் கெட்டார் போங்கள்.
சாணரர்களுக்கே உரித்தான அந்த கம்பீர நடை... அந்தப் பணிவு... அடக்கம்... அதே சமயம் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத கவரிமானின் குணம்... கள் இறக்கச் சொல்லி தூண்டிவிடும் களவானிகளின் மேல் எரிச்சல், கோபம்... மகளின் மேல் மட்டற்ற பாசம்... மகள் கெடுக்கப்பட்ட நிலையில் பொங்கி எழும் பிரளய நிலை... அதிர்ச்சியில் உறைந்து நிலைதடுமாறி மகளின் பிணத்தின் மேல் விழுந்து மகளை வாரியணைத்து கதறி அழும் சோகம், வெறி கொண்ட வேங்கையாகி மகளைக் கெடுத்த ஒருவனை வெட்டிச் சாய்க்கும் வேகம்... சிறையில் தன்னுடன் சக கைதியாய் இருக்கும் சிவக்குமார் தன் கதையைக் கேட்கச் சொல்லி கேட்கும் போது "கத கேக்குறியா...என் கதையைக் கேக்குறியா" என்று குமுறி மகளின் மேல் உள்ள வாஞ்சையை வர்ணிக்கும் விதம்... தான் பழிவாங்கத் துடிக்கும் கயவன் தன் எதிரிலேயே தான் இருக்கும் சிறையில் அடைக்கப்பட கொண்டு போவதை எதிர்பாராமல் பார்த்து அதிர்ச்சியுற்று, அவன்தானா என்று நன்கு உற்று நோக்கி, பார்வையாலேயே நன்கு ஊர்ஜிதம் செய்த பின்னர் செய்வதறியாது சிறையிலேயே சிங்கம் போல சிலிர்த்து, ஜெயில் கம்பிகளைப் பிடித்தபடியே அவனை கிரகிக்கும் விதம்... அங்கும் இங்குமாக அலைபாய்ந்து நடக்கும் பட்டவர்த்தனமான பழி உணர்ச்சி... நாகேஷ் ரம்பத்தை கொடுத்தவுடன் ஏதோ பம்மலாரின் பொக்கிஷம் கிடைத்தது போன்ற சந்தோஷ வெறி... இரணியன் கூத்து நடக்கும் போது கம்பியை நைசாக அறுத்து தப்பிக்கும் விதம்... (ஆஹா... கம்பியை அறுத்து முடித்தவுடன் ஏற்படும் கைவலியைக் கூட கைகளை உதறிவிட்டவாறே காட்ட தெய்வமே! உன்னால் மட்டுமே முடியும்) கால்களில் பூட்டப்பட்ட விலங்குகளினூடே சத்தமில்லாமல், சந்தடியில்லாமல் அடிமேல் அடியெடுத்து வைக்கும் விவேகம்... O.A.K.தேவர் உறங்கும் சிறை அறையின் கம்பிகளை அறுத்து உள்ளே நுழையும் லாவகம்... உள்ளே நுழைந்தவுடன் நம்முடைய இலக்கை அடைந்து விட்டோம் என்ற பரிபூரண திருப்தியை முகத்தில் வெளிப்படுத்துதல்... கண்களில் கனல் கக்கும் வெறி... உச்சந்தலை வரை ஏறியிருக்கும் கோபம்... நாலு கால் பாய்ச்சலில் தாவி நரியைப் பிடிக்கும் சிங்கத்தின் வெறி... வில்லனை நார் நாராய் கிழித்து வெறி அடங்காமல் தொடர் உறுமல்... ஜெயிலர் எஸ்.வி. சுப்பையாவின் கருணைப் பார்வையில் படிப்படியாக கோபம் குறைத்து சாந்தம்... நோக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி விட்ட திருப்தியை அழகாக நடையிலேயே வெளிப்படுத்தும் பாங்கு... தூக்குதண்டனையின் முதல்நாள் இரவு அநியாயமாக உயிரைவிடப் போகிறோமே என்ற சாதாரண மனிதனின் ஆதங்க வெளிப்பாடு ... தனிமை வாட்டும் சோகம்... அதை மறக்க சக கைதிகளை பாட்டு பாடச் சொல்லி கேட்கும் பரிதாபம்... பாட்டுபாட சக கைதிகள் மதங்களின் பெயரை சொல்லி மறுக்கும் போது,"அட ஏண்டா பாவிகளா இங்க வந்து கூட சாதி மதம்ணு பேசிகிட்டு" என்று சலிப்புக் குரல் கொடுத்து... பின் தானே "பொறப்பதும் போறதும் இயற்கை...சிலர் புகழ்வதும், இகழ்வதும் செயற்கை" என்று வருத்தம் மேலிடப் பாடி முடிக்கும் சோகம்... தூக்கு மேடைக்கு போகும் போது மிக அமைதியாக கைதிகளிடம் விடை பெற்று "நான் என் சிவகாமிகிட்டே போறேன்" என்று தன்னைத்தானே தேற்றிகொள்ளும் பக்குவம்... ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக இறுதி மூச்சை விடப்போகும் போது "ஐயா"...என்று குரல் எதிரொலிக்க கூக்குரலிடும் பரிதாபம்...
நடிப்புக் கயிற்றால் உலகத்தைக் கட்டிப் போட்ட கண் கண்ட கடவுளே! உன் பக்தனாக நாங்கள் என்ன தவங்கள் செய்திருந்தோமோ தெரியவில்லை.
அன்புடன்,
வாசுதேவன்.
Russellsmd
16th November 2015, 09:31 AM
நினைப்போம்.மகிழ்வோம்-104.
"வியட்நாம் வீடு."
துவக்கக் காட்சி.
விசேஷ காலங்களில் மனிதனுக்கு இனம் புரியாத
கூடுதல் சந்தோஷம் கிட்டும்.
இதை மெய்ப்பிக்கிற விதமாய்
தன் வீட்டுக் கிரகப் பிரவேச
நிகழ்வுக்கு வருபவர்களைத்
தன் சம்மந்தி வி.எஸ்.ராகவன்
வரவேற்பதைக் கிண்டலடித்து,
உரிமையுடன் அவர் இடுப்பில்
கிச்சுகிச்சு மூட்டி விளையாடுவது.
Russellsmd
16th November 2015, 09:34 AM
நினைப்போம்.மகிழ்வோம்-105.
"முரடன் முத்து".
"தாமரைப் பூக்குளத்திலே"
பாடல்.
பாடல் முடியும் தருவாயில்
மற்ற எல்லாம் மறந்த காதல்
மகிழ்வில், தேவிகா எதிரில்
ஆட, ஒரு சின்னப் பாறை மீது
நின்று கொண்டு ஆடும்
ஆட்டமும்,
பலத்த காற்றுக்கு வேட்டி
விலகி விடாதபடிக்கு,ஆட்டத்தோடு ஆட்டமாய்
அதையும் சரி செய்து கொள்வதும்.
Russellsmd
16th November 2015, 09:37 AM
நினைப்போம்.மகிழ்வோம்-106.
"பாட்டும் பரதமும்".
நடன நிகழ்ச்சிக்கு தலைமை
ஏற்க அழைக்க வந்த பள்ளித்
தலைமையாசிரியரான காது
கேளாத சாமிக்கண்ணு "ஒங்க
அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்
கூடம்." என்று சொன்னதையே
சொல்ல...
தொழில் சம்மந்தமான வேறொரு தொலைபேசிப் பேச்சையும்,சாமிக்கண்ணுவின் " ஒங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச
பள்ளிக்கூடம்" ஒப்பித்தலையும்
ஒரே நேரத்தில் சமாளிக்கும்
சாமர்த்திய வேகம்.
RAGHAVENDRA
16th November 2015, 09:45 AM
வாசு சார்
எத்தனை முறை மீள்பதிவு செய்தாலும் ஒவ்வொரு முறையும் சுவையாகவும் புதிதாகவும் இருக்கும் சிறப்பு வாய்ந்த எழுத்துக்கள் தங்களுடையது. காவல் தெய்வம் விதிவிலக்காகி விடுமா என்ன.
படிக்கப் படிக்க தலைவரின் மேன்மை மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
RAGHAVENDRA
16th November 2015, 10:09 AM
மிக மிக மிக மிக மிக...... அரிய பொக்கிஷம்......
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு ரசிகருக்கும் அரிய பொக்கிஷம்...
சேமித்து வைத்துப் பார்த்துப் பார்த்து நெஞ்சில் மகிழ வேண்டிய பொக்கிஷம்...
காத்திருங்கள்...
RAGHAVENDRA
16th November 2015, 10:33 AM
காலத்தால் அழியாத கலை தெய்வத்தின் சாதனை மகுடம். பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் அபூர்வ நிழற்படம். தமிழ் சினிமாவின் பெருமையை உலகெங்கும் 1959லேயே பறைசாற்றிய உலக மகா நாயகனின் உன்னத நிகழ்வு.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் நடிகர் திலகம் பெற்ற பெருமை மிகு நிகழ்வைப் பறைசாற்றும் நிழற்படம்.
ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பெற்ற சிறந்த நடிகருக்கான விருதுடன் நடிகர் திலகம் காட்சியளிக்கும் அபூர்வ நிழற்படம்.
ஒவ்வொரு ரசிகருக்கும் இது பொக்கிஷமன்றோ.
அனைவருக்கும் பொதுவான வேண்டுகோள். இந்நிழற்படத்தில் எந்த விதமான எழுத்துக்களையும் வாட்டர்மார்க்காகவோ அல்லது வேறு குறிப்புகளுக்காகவோ பதிக்க வேண்டாம்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/ntwithcairoawardFW_zpsrv4bpyrq.jpg
Russellxor
16th November 2015, 11:05 AM
[QUOTE=vasudevan31355;1268647]நடிப்பு தெய்வத்தின் 'காவல் தெய்வம்' மீள்பதிவு (புதிய அங்கத்தினர்களுக்காக)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/maramyeri.jpg
(. மரம் ஏறும் சாணரக் குலத்தோர் கெட்டார் போங்கள்)
—------------------------------------------------------------
இந்த ஸ்டில்லைப் பார்த்தால் யார் தான் அதை மறுப்பார்கள்.நீங்கள் பதிவிட்ட போட்டோக்கள் அத்தனையும் அட்டகாசம்.
மீள்பதிவாக இருந்தாலும் அதிலிருந்து யாரும் மீள முடியாத பதிவு.
்படம் பார்த்த திருப்தி.
Russellxor
16th November 2015, 11:19 AM
பொக்கஷப்போட்டோக்களை தேடிப்பிடித்து பதிவிடும் ராகவேந்திரா அவர்களுக்கு நன்றி
JamesFague
16th November 2015, 12:12 PM
from Facebook
இன்று(16/11/15) காலை sun TV யின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உயர்திரு டாக்டர் சீதாராமன் CEO Deha bank USA அவர்கள் கலந்து கொண்டு மீண்டும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்,
நடிகர்த்திலகத்தின் திரைப்படங்கள் பார்த்ததால் தான் எண்ணால் இந்த நிலையை அடைய முடிந்தது, என்றும்,அவர்தான் என்க்கு உந்துசக்தி என்று அவர் கூறியதும் நடிகர்திலகதின் திருவிளையாடலில் இருந்து வசனங்களையும் ராஜ ராஜ சோழன் பட " தென்றலோடு உடன் பிறந்தாள்' பாடலை நடிகர்திலகத்தின் தமிழ் மொழி உச்சரிப்பு என்று பாடியதும்
இறுதியாக நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட நீங்கள் அடைந்த உயரிய பெருமையாக எதை சொல்வீர்கள் என்ற வினாவிற்கு " நடிகர்திலக்தின் பிறந்த நாள் விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தது " அதுவே என அவர் பதில் அளித்தபோது. என்னை அறியாமல் ஒரு கர்வம் கூடுகிறது
vasudevan31355
16th November 2015, 01:44 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/ntwithcairoawardFW_zpsrv4bpyrq.jpg
அத்தனை விருதுகளும் சின்னதாய் நிற்க
ஒரே ஒரு விருது மட்டும் விண்ணைத் தொட்டு நிற்கிறதே.
ஓ! அதுதான் வி.சி.கணேசன் என்ற விலைமதிப்பில்லா விருதோ!
கோடி நன்றிகள் ராகவேந்திரன் சார் தலைவரின் இந்த அபூர்வ நிழற்படத்திற்கு இல்லை இல்லை நிஜப்படத்திற்கு.
anasiuvawoeh
16th November 2015, 01:53 PM
Dear all,happy to join all of you after a long gap.Though I have been following the thread i haven't posted.Now I will be posting replies to the writings of all stalwarts and specially i thank Senthilvel sir,Aathavan ravi and Raghavendra sir whose support made me to come to this thread.I feel each one of you belong to my caste and I will be happy to be in the last row with clapping hands for anyone who praises Nadigar Thilagam and wont mind in waiting for my opportunity.Dont get shocked for mentioning caste,I mean we all belong to Nadigar Thilagam fans caste.I am not generous and become a short minded man when somebody talks ill of Nadigar Thilagam and I dont hesitate in removing their name from my friends list.
Sunday evening was very pleasant as I saw Vellai Roja full movie in SUNLIFE (courtesy,my children ,who allowed me after many requests and they also enjoyed the same.it was very difficult to accept the movie is around 30years old)
anasiuvawoeh
16th November 2015, 01:55 PM
Raghavendra Sir,precious photo sir.Thanks
anasiuvawoeh
16th November 2015, 02:02 PM
Dear Vasudevan Sir,excellent SAAMUNDI.Many movies are there which I have missed or not seen after becoming an adult.Kaaval Deivam is one such but your review had kindled my eager to watch the movie.Thank you sir.
RAGHAVENDRA
16th November 2015, 02:06 PM
ரவிச்சந்திரன்
தாங்கள் கூறியது மிகச் சரி, நாம் அனைவரும் ஓரினம். பொதுவாக அனைவரும் ஒரே Blood Group என்பேன். எல்லோரும் B POSITIVE, B NEGATIVE, O POSITIVE, O NEGATIVE, A POSITIVE, A NEGATIVE எனப் பல்வேறு ரத்த வகையைச் சார்ந்தவர்களாயிருப்பார்கள். ஆனால் நாம்சிவாஜி என்னும் Blood Group சார்ந்தவர்கள். அவர் தான் நம் ரத்தத்திலேயே கலந்து விட்டவராயிற்றே.
anasiuvawoeh
16th November 2015, 02:06 PM
Dear Gopal sir,your words about KSG is very true.Recently few months back ,I heard the olichitram of Padikkaadha Medhai,in Suryan FM.Even just by hearing the dialogues ,i was in tears.That was the power of KSG(Nadigar thilagam "s voice need no mention)
RAGHAVENDRA
16th November 2015, 02:07 PM
வாசு சார்
தங்கள் பாராட்டிற்கு நன்றி.
அந்த படத்தை உற்றுப் பார்த்தீர்களானால் இன்னொன்று புலப்படும்.
அத்தனை விருதுகளும் கை உயர்த்தி அவரை வணங்குவதைப் போல் தோற்றமளிக்கிறதன்றோ..
விருதுகள் வணங்கும் வித்தகனாயிற்றே நம் மக்கள் தலைவர்..
anasiuvawoeh
16th November 2015, 02:12 PM
Dear Raghavendra Sir,absolutely. Sagodharan word formed from SAGA+UDHARAN(udharam endraal vayiru).Though we are sons of different mothers,we are
Sagaudhirargal SAGA+UDHIRAM(raththam)
Thank you
JamesFague
16th November 2015, 02:15 PM
The Supreme Court granted time till October 2016 to TN Govt for the shifting of NT Statue.
Russellxor
16th November 2015, 04:24 PM
திரு பொன் ரவிச்சந்திரன் அவர்களே
நடிகர்திலகத்தின் படங்களை பற்றிய ஆய்வு உங்கள் பார்வையில் விரைவில் வரும் என்று
எதிர்பார்க்கிறேன்+ஆசைப்படுகிறேன்.
RAGHAVENDRA
16th November 2015, 08:01 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/OVU1-1.jpg
தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரே நாளில் இரு படங்களை பல முறை வெளியிட்டு அதில் இரு முறை தலா இரு படங்கள் வீதம் நான்கு படங்கள் நூறு நாள் கொண்டாடிய சாதனை புரிந்த ஒரே கதாநாயகனின் வெற்றிப் புன்னகை
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - 4
தொடர்ச்சி...
திராவிட அரசியல் சுனாமியை எதிர்கொண்டு தாங்கியது மட்டுமல்லாமல் அதே திராவிட ஆட்சியில் சினிமா சுனாமியாய்ப் பொங்கி எழுந்து ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு இரண்டுமே மகத்தான வெற்றி பெற்ற அந்த தீபாவளி .. 01.11.1967.... தமிழ் சினிமா வரலாற்றிலும் சிவாஜி ரசிகர்கள் நெஞ்சினிலும் ஆழப் பதிந்து விட்டது.
அன்று 01.11.1967 அன்று எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது ஊட்டி வரை உறவு படத்திற்கே..பல மூத்த ரசிகர்கள் மணிஜே சினி புரொடக்ஷன்ஸ் மேல் மிகவும் கோபமாக இருந்தனர். அதற்கு முன்னரும் ஒரே நாளில் இரு படங்கள் வந்துள்ளன. என்றாலும் நடிகர் திலகம் உச்சகட்ட புகழுடன் திகழ்ந்த இந்த கால கட்டத்தில் இரு படங்கள் ஒரே நாளில் வெளி வருவது முதன் முறையாக ரசிகர்கள் நெஞ்சில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. அது அன்றைய சூழ்நிலையில் நியாயமான கலக்கமாகவும் பட்டது.
சாந்தியில் எள் போட்டால் எண்ணெயாய் விழும் எனச் சொல்வார்களே அது போல கூட்டமென்றால் அவ்வளவு கூட்டம். பட்டாசு, வாண வேடிக்கை, ரசிகர் மன்ற அளப்பரை எல்லாம் திருவிழா போல ஜொலித்தன. என்றாலும் ரசிகர்கள் பக்கத்திலேயே வெலிங்டனிலும் சென்று குவிந்து விட்டனர். மேட்னி ஷோ முடிந்து மாலையில் வரும் ரசிகர்கள் முகத்தையே பார்த்த வண்ணம் ஆவலோடு காத்திருந்தோம்.. எனக்கு ஊட்டி வரை உறவு படத்திற்கு மட்டும் முதல் நாள் மாலைக்காட்சிக்கான டிக்கெட்டு கிடைத்தது.
எனவே முதல் நாள் பகல் முழுதும் சாந்தி வெலிங்டன் என தியேட்டர் கொண்டாட்டத்தில் மூழ்கி விட்டோம்.
வெலிங்டனில் அலங்காரம் செய்ய வாய்ப்புக் கம்மி. பேனர் மற்றும் கட்அவுட் தியேட்டர் முகப்பின் மேல் பக்கத்திலேயே வைக்கப்படும். உள்ளே டிக்கெட் கவுண்டர் இருக்குமிடம் அருகே சற்று இடம் உண்டு அங்கு மட்டும் நாம் டெகரேஷன் செய்து கொள்ளலாம். எனவே வெலிங்டன் தியேட்டர் எதிரே சாலையில் நீளமான கொம்புகளை நட்டு வைத்து அங்கிருந்து முகப்பின் உச்சியில் கொடிகளையும் தோரணங்களையும் கட்டி விடுவார்கள்.
சாந்தியில் கொண்டாட்டங்களைப் பார்த்து விட்டு சுமார் 5 மணி வாக்கில் வெலிங்டனுக்கு வந்தோம். சற்று நேரத்தில் வெலிங்டனில் மணி அடித்தது. படம் முடியப் போகிறது என்பதற்கான அறிகுறி.. பரபரப்பு, டென்ஷன், கூடிக்கொண்டே போகிறது.. கதவு திறக்கிறது. மக்கள் வெளியே வருகிறார்கள்..
ஆஹா.. ஒரே வினாடி தான்.. படம் பார்த்து விட்டு வந்தவர்கள் மட்டுமின்றி எங்கள் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒளிர்வது போல பிரகாசம்.. ரசிகர்கள் ஓ... எனக் கூச்சலிட்டுக்கொண்டே வந்தனர். படம் சூப்பர். நூறு நாள் நிச்சயம். தலைவரின் ஸ்டைல் க்ளாஸ்... நாளைக்கே இன்னொரு தரம் பார்க்கப் போகிறேன் என்றபடியெல்லாம் ரசிகர்கள் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டே வந்தனர். அதுவும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்று மாதவிப் பொன்மயிலாள் பாடலை சிலாகித்துக் கொண்டே வந்தனர். சற்றுப் பொறுத்து விட்டு சில வயதான தம்பதிகள், மூத்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.. எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னது ... படம் சூப்பர்.. சிவாஜி சிவாஜி தான்.. அவரை எவனாலும் பீட் பண்ண முடியாது..
எங்கள் உற்சாகத்திற்கு கரையேது.. அவ்வளவு தான் வெலிங்டன் தியேட்டர் வாசலே இரண்டாகி விட்டது. ரோடிலேயே பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் கொண்டாடினோம்.
இப்போது வேறு டென்ஷன்... சாந்தி ரிஸல்ட் எப்படி...உடனே ஓடினோம்.. அதற்குள் சாந்தியிலும் படம் முடிந்து விட்டிருந்தது. வாசலில் உள்ள பஸ் ஸ்டாப் ஜேஜே என இருந்த்து. உள்ளே கால் வைக்கக் கூட முடியவில்லை. சீக்கிரம் இருண்டு விட்ட படியால் விளக்கையெல்லாம் ஏற்றி விட்டிருந்தார்கள். ஹவுஸ்ஃபுல் போர்டு எங்களை உற்சாகமாய் வரவேற்றது. ஏழு மணி வரை ரிசர்வேஷன் என்பதால் படம் விட்டு வந்தவர்களில் பலர் மீண்டும் பார்ப்பதற்காக ரிசர்வேஷன் க்யூவில் நின்று கொண்டார்கள். அப்போதே தெரிந்து விட்டது. இதுவும் சூப்பர் ஹிட் என்று. இருந்தாலும் அங்கே இருந்த பல ரசிகர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். பலரும் படத்தைப் பார்த்து விட்டனர் என்றாலும் அதிலும் மெஜாரிட்டி வெலிங்கனுக்கு சென்று விட்டனர். மீதம் இருந்த நண்பர்களிடம் கேட்ட போது எல்லோருமே சந்தோஷமாக இருந்தனர். படம் சூப்பர். கொஞ்சம் கூட போரில்லை. நல்ல காமெடி. அங்கு ரிஸல்ட் எப்படி எனக் கேட்டனர். நாங்கள் இருமலர்கள் ரிஸல்ட் பற்றி சொன்னோம்..
அவ்வளவு தான் இரு படங்களும் நூறு நாள் என்பது முதல் நாளிலேயே தெரிந்து விட்டது.
உற்சாகம் கரைபுரண்டோட ஷோவுக்கு நேரமான படியால் உள்ளே ஓடினோம். நல்ல வேளை நியூஸ் ரீல் தான். நாங்கள் உள்ளே போய் அமர்ந்து கொஞ்ச நேரத்திலேயே படம் ஆரம்பித்து விட்டது.
அவ்வளவு தான்.. அதற்கப்புறம் இந்த உலகையே மறந்து விட்டோம். கூடவே இருமலர்கள் ஹிட்டான சந்தோஷமும் சேர்ந்து கொள்ள தலைவரின் சூப்பர் டூப்பர் ஸ்டைலில் ஊட்டி வரை உறவு மக்களைப் பரவசப்படுத்த ஒரே அதகளம் தான். குறிப்பாக புது நாடகத்தில் பாட்டில் குனிந்து நடக்கும் ஸ்டைல், ஹேப்பி பாட்டில் கை தட்டும் ஸ்டைல், அங்கே மாலை மயக்கம் பாட்டில் வெள்ளை உடையில் கம்பீரமாக நிற்கும் போஸ் என காது ஜவ்வு கிழியும் வண்ணம் ரசிகர்களின் உற்சாகக் குரல் தான். தேடினேன் வந்த்து பாட்டில் சிகரெட் ஸ்டைலுக்கு ஆரம்பித்த கைதட்டல் படம் முழுதும் ஓயவேயில்லை.
பலருடைய கணிப்பும் தவறவில்லை. தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா சாதனைக்கு 01.11.1967 அன்றே நடிகர் திலகம் வித்திட்டு விட்டார்.
தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் என்பதற்கு அன்றைய தினம் ஒரு அத்தாட்சியாக அமைந்து விட்டது.
.... தொடரும்....
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4926-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4925-1-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4927-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4924-1.jpg
Russellsmd
16th November 2015, 08:38 PM
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
---------------
அழும் குழந்தையை தேற்றும்
வேலையைச் செய்யும் போதே
அன்னை அதனைப் பிரிந்து
செல்ல வேண்டியிருப்பதை
நாசூக்காகச் சொல்வதைப்
போல..உமா, தனக்கும் சுந்தருக்குமான காதலைத்
திருமணமாக்க தன் அண்ணனின் அனுமதி கோரும்
பொருட்டு தான் ஊருக்குச்
செல்லவிருப்பதாகவும்,
அண்ணனின் அனுமதி கிடைத்து விட்ட நல்ல செய்தி
தாங்கிய தனது கடிதம், அக்டோபர் 10 ந் தேதி சுந்தரை
வந்தடையும் என்று உறுதி
சொல்லி அழுத பிள்ளையைச்
சிரிக்க வைக்கிறாள்.
----------------
இங்கே அழுத உயிர் சிரிக்க..
அங்கே சுந்தரின் வீட்டில்
சிரித்த உயிர் அழுகிறது.
வெகு தற்செயலாக சுந்தரின்
நாட்குறிப்பைப் படிக்க நேர்ந்த
சாந்தி, தன் அத்தான் சுந்தருக்கும், உமாவுக்குமான
ஆழமான காதலைத் தெரிந்து
கொள்கிறாள்.
அழுகிறாள்.
அத்தானுடன் அவளிருப்பதாய்
அவள் இதயத்துள் தீட்டிக்
கொண்ட ஆசை ஓவியங்களை
அவளது கண்ணீரே கரைத்து
அழிக்கிறது.
---------------
அலுத்துக் களைத்து இரவில்
வீடு திரும்பும் மாமாவை,
தினமும் இரவில் களைத்து
வருவது குறித்து கனிவுடன்
விசாரிக்கிறாள்.
அவளுக்கும், சுந்தருக்கும்
மணமுடிக்கும் பொருட்டு
தான் வேலை செய்து சம்பாதிக்கச் செல்வதாக மாமன் சொல்ல..
அவரது எண்ணம் பொய்க்கப்
போகிற யதார்த்தம் தெரிந்து
அவரைப் பரிதாபமாய்ப்
பார்க்கிறாள்.. சாந்தி.
சாந்தியை மணந்து கொள்ளும்
விஷயத்தில் சுந்தரின் முடிவைத் தெரிந்து கொள்ள
சிவக்கொழுந்து உறுதி காட்ட..
சாந்தி தவிக்கிறாள்.
இன்று என்னவானாலும் சரி..
சுந்தர் வீடு திரும்பியவுடன்
அவனது முடிவைத் தெரிந்து
கொள்வதென சிவக்கொழுந்து
திடமாயிருக்கும் போதா
சுந்தர் வீடு திரும்ப வேண்டும்?
மெல்ல மெல்ல..சாந்தியை,
சுந்தர் மணக்க வேண்டும்
எனும் தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் தந்தையிடம்
தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும்
நடிகர் திலகத்தின் நடிப்பில்
வெட்கி, அவருக்குக் கிட்டாத
உயரிய விருதுகள் தலைகவிழ்கின்றன.
மகன் சொல்லும் மழுப்பலான
பதில்களால் சந்தேகமுற்ற
தந்தை விடாமல் கேள்விகளால்
துளைக்க, தான் வேறொரு
பெண்ணை விரும்புவதாய்
ஒரு வழியாய்ச் சொல்லி விட,
உள்ளத்தின் ஆத்திரத்தையெல்லாம் கைக்கு
கொண்டு வந்து மகனை
அறைந்த பின்னும் மனசாறாத
தந்தை, மகனின் காதலியால்
மகனே அழியப் போவதாய்
கடுஞ்சொல் பேச..
கண்களில் மளமளவென்று நீர்
திரள, வேதனையுடன் தன்
தந்தையை நோக்கி "யாருன்னே
தெரியாத பொண்ணைப் பத்தி
ஏன் கேவலமாப் பேசுறீங்க?"
என்று குரல் கம்ம கேட்கும்
சுந்தர் கதாபாத்திரத்திற்கு
யார் இப்படிப்
பொருந்துவார்கள்..
நடிகர் திலகம் போல.
--------------
உமா கிளம்பி விட்டாள்.
சுந்தர், பரிசுப் பொருளோடு
வழியனுப்ப வந்து விட்டான்.
இனிமேல் நிரந்தமாகப் போகிற
தங்கள் பிரிவை, தற்காலிகமானதென்று எண்ணிக் கொண்ட இரண்டு
அப்பாவி உயிர்களின் கண்ணீரும், நம்பிக்கையும்,
ஏக்கங்களும் அந்த ரயிலடி
இரைச்சலை மீறி சத்தப்படுகின்றன.
இதயத்தின் வடிவங் கொண்டதாய், மூடி திறந்தால்
உருவங் காட்டும் கண்ணாடியைப் பரிசளிக்கிறான்..சுந்தர்.
சொல்லும் போது சுருக்கமாகத்
தெரியும் பிரிவு, அனுபவிக்கக்
கொடியது.
இதனை உணர்ந்து கொண்ட
சுந்தர், உமாவிடம் வேகமாகக்
கேட்கிறான்.
"நானும் இப்படியே உன் கூட
ரயிலேறி வந்துடவா?"
உமாவின் பிரிவு தாங்கா மனம்
பதிலுக்குப் பதிலாக வேறொரு கேள்வியை வீசுகிறது.
"அதுக்குப் பதிலா..இப்படியே
என்னை ஒங்க வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போயிடுங்களேன்."
கூட்டிப் போய் விடலாம் என நினைத்து வரும் சந்தோஷம்,
அப்படியெல்லாம் கூட்டிப்
போய் விட முடியாது என்கிற
யதார்த்தத்தில் துளிர்க்கிற
கண்ணீர்..
கண்ணிமைக்கும் நேரத்துக்கும்
குறைவான கால வித்தியாசத்தில்,இரண்டையும் ஒரே முகத்தில் கொண்டு வர வேண்டும்.
அப்படியெல்லாம் நடிப்பதற்கு
உகந்த அந்த ஒரே
கலைஞனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
அதற்கு, அந்த நடிகர் திலகம்
வாழும் அந்த சொர்க்கம்
நோக்கி கைகூப்ப வேண்டும்.
(...தொடரும்...)
Russelldwp
16th November 2015, 08:56 PM
]http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ovu1-1.jpg
தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரே நாளில் இரு படங்களை பல முறை வெளியிட்டு அதில் இரு முறை தலா இரு படங்கள் வீதம் நான்கு படங்கள் நூறு நாள் கொண்டாடிய சாதனை புரிந்த ஒரே கதாநாயகனின் வெற்றிப் புன்னகை
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - 4
எத்தகைய திறமைமிக்க நடிகரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனை -
தன்னுடைய திறமையின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தால் இத்தகைய சாதனையை நிகழ்த்தி இருப்பார் நடிகர்திலகம் -
ஒரே நாளில் தன்னுடைய இரண்டு படங்களை துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் 100 நாள் ஓடியது (அதுவும் இரண்டு முறை) - இது அசுரத்தனமான சாதனை என்பதோடு மட்டுமல்லாமல் மனிதனால் நிகழ்த்த முடியாத சாதனை - தெய்வப்பிறவியால் மட்டுமே முடிந்தது
vasudevan31355
16th November 2015, 09:03 PM
ராகவேந்திரன் சார்,
ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா நடித்த 'டாக்டரம்மா' திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன், மஞ்சுளா இடம் பெற்ற ஒரு காட்சியில் நமது தலைவரின் 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியத்தின் போஸ்டர் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
http://i66.tinypic.com/2vcj8fs.jpg
rajeshkrv
16th November 2015, 09:19 PM
ராகவேந்திரன் சார்,
ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா நடித்த 'டாக்டரம்மா' திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன், மஞ்சுளா இடம் பெற்ற ஒரு காட்சியில் நமது தலைவரின் 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியத்தின் போஸ்டர் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
http://i66.tinypic.com/2vcj8fs.jpg
muthuraman manjula illayo doctoramma?
Russellsmd
16th November 2015, 09:31 PM
நினைப்போம்.மகிழ்வோம்-107.
"நவராத்திரி".
தொழுநோயாளியாய் வருபவரிடம் அவரது உதவி
பெற்று வளர்ந்த மருத்துவர்
நன்றி பாராட்டும் காட்சி.
அவரது நினைவாக வைத்துள்ள
அவரது புகைப்படத்தையே
காட்டி, " அய்யா ..இந்த
போட்டோல இருக்கிறது யாருன்னு பாருங்க" என்பார்..
மருத்துவர்.
"கண் பார்வை தெரியவில்லை"
என்று சொல்லி, மருத்துவர்
போன பிறகு, கண் குழித்து,
கண்களுக்குக் குடை போல
கைகள் வைத்து, மிக முயன்று
அந்தப் புகைப்படத்தைப்
பார்ப்பது.
Russellsmd
16th November 2015, 09:33 PM
நினைப்போம்.மகிழ்வோம்-108.
"பாபு."
"வரதப்பா" பாடல்.
மேரியம்மா கேரியரின் எறா
பத்மநாபன் வீட்டுக் குழம்பில்
கிடப்பதைப் பாடுகையில்
சிரிக்கும் கள்ளமிலாச் சிரிப்பு.
Russellsmd
16th November 2015, 09:36 PM
நினைப்போம்.மகிழ்வோம்-109.
"ஊட்டி வரை உறவு."
"ஹேப்பி" பாடல்.
புன்னகை அரசி பாடியபடியே
அழகாய்த் தன் தோள்கள்
ஒடித்து ஆட..
அதை அப்படியே உள்வாங்கி
இன்னும் அழகாய் தோள்கள்
ஒடித்து ஆடும் அழகு.
vasudevan31355
16th November 2015, 09:38 PM
muthuraman manjula illayo doctoramma?
இல்லைஜி! ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா, தேங்காய், அசோகன் பிரதான பாத்திரங்கள்.
ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளாவிற்கு 'கண்கள் மலரட்டுமே' என்ற பாடலும் உண்டு. பாலா, சுசீலாம்மா பாடி இருப்பார்கள். 'செல்வங்கள் ஓடி வந்தது' என்று இசையரசி பாடுவாரே. அதுவும் ராஜனிடம் குடித்துவிட்டு நடிப்பது போல மஞ்சுளா பாடுவது.
உங்கள் சந்தேகத்திற்காக இதோ என் டி.வி.டியிலிருந்து இமேஜ்.
http://i67.tinypic.com/nqzpyb.jpg
vasudevan31355
16th November 2015, 10:07 PM
செந்திவேல்,
நன்றி!
'சவாலே சமாளி' முழுப் பதிவையும் ஒரு தடவை முழு மூச்சுடன் ரசித்துப் படித்து விட்டேன். அருமை! அருமை! உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்படியே ஆதவன் சாருக்கும்.
rajeshkrv
16th November 2015, 10:33 PM
இல்லைஜி! ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா, தேங்காய், அசோகன் பிரதான பாத்திரங்கள்.
ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளாவிற்கு 'கண்கள் மலரட்டுமே' என்ற பாடலும் உண்டு. பாலா, சுசீலாம்மா பாடி இருப்பார்கள். 'செல்வங்கள் ஓடி வந்தது' என்று இசையரசி பாடுவாரே. அதுவும் ராஜனிடம் குடித்துவிட்டு நடிப்பது போல மஞ்சுளா பாடுவது.
உங்கள் சந்தேகத்திற்காக இதோ என் டி.வி.டியிலிருந்து இமேஜ்.
http://i67.tinypic.com/nqzpyb.jpg
oh ok ok. manjula muthuraman gnayabakam enakku. sorry sorry
Russellxor
16th November 2015, 11:00 PM
Rare picture http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG-20151116-WA0008_zpsbkbj0tle.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG-20151116-WA0008_zpsbkbj0tle.jpg.html)
RAGHAVENDRA
17th November 2015, 07:26 AM
https://external.fmaa1-2.fna.fbcdn.net/safe_image.php?d=AQBwegZ86CM_xZyj&w=487&h=433&url=http%3A%2F%2Fwww.thehindu.com%2Fmultimedia%2Fd ynamic%2F02623%2F16NOVUDH01_Nass_17_2623277f.jpg
"Chief Minister Jayalalithaa on Monday met the newly-elected office bearers of Nadigar Sangam – actors Nasser, Vishal, Karthi, Ponvannan and Karunas.
“The meeting lasted for around 10 minutes. She wished us well and said that she had confidence that the Nadigar Sangam will once again function like how it used to be when Sivaji Ganesan was at the helm of affairs. It was a great day for us,” said Nasser, actor and president of the Nadigar Sangam.
He said that Ms. Jayalalithaa told them not to hesitate to ask for any help, if needed. “We just wanted to take her wishes and decided not to request for any help. But we were pleasantly surprised when she told us this,” he said.
When actor Vishal requested her to lay the foundation stone for the new building that is being planned in the 19-ground Nadigar Sangam property, the Chief Minister had reportedly told them to keep her informed in advance.
Actor Nasser said that the Nadigar Sangam was now working on a project to update and digitise the database."
courtesy: The Hindu at : http://www.thehindu.com/news/cities/chennai/cm-has-promised-all-help-to-nadigar-sangam-says-nasser/article7885663.ece
THANK YOU SO MUCH MADAM for not forgetting the yeoman service rendered by Nadigar Thilagam and his team to the South Indian Cine Artists Association and mentioning it at the appropriate time.
RAGHAVENDRA
17th November 2015, 08:06 AM
http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16911363&code=6140
RAGHAVENDRA
17th November 2015, 08:12 AM
தினமலர், தினத்தந்தி ஆன்லைன் பதிப்புகளில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் அவர்கள் நடிகர் திலகத்தின் பொற்கால நிர்வாகத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று சொன்னதை இருட்டடிப்பு செய்துள்ளன. தினத்தந்தி அச்சுப் பதிப்பிலும் ஹிந்து நாளிதழின் பதிப்புகளிலும் நடிகர் திலகத்தைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
எந்த அளவிற்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் தங்கள் நிலைப்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.
RAGHAVENDRA
17th November 2015, 08:19 AM
வாசு சார்
டாக்டரம்மா நிழற்படத்தில் கட்டபொம்மன் போஸ்டரைக் கண்டு பிடித்து அதை இங்கே பதிவு செய்ததன் மூலம் நடிகர் திலகத்தைப் பற்றி எந்த விஷயமானாலும் தங்களிடமிருந்து தப்பாது என நிரூபித்து விட்டீர்கள்.
அதில் உள்ள வாசகங்கள் கூட ஏதோ குறிப்பிடுவது போல உள்ளது. முடிந்தால் அதைப் படிக்க முடியுமா பாருங்கள்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
sivaa
17th November 2015, 09:07 AM
தினமலர், தினத்தந்தி ஆன்லைன் பதிப்புகளில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் அவர்கள் நடிகர் திலகத்தின் பொற்கால நிர்வாகத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று சொன்னதை இருட்டடிப்பு செய்துள்ளன. தினத்தந்தி அச்சுப் பதிப்பிலும் ஹிந்து நாளிதழின் பதிப்புகளிலும் நடிகர் திலகத்தைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
எந்த அளவிற்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் தங்கள் நிலைப்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.
சிவாஜி ரசிகர்கள் எல்லோரும் விடயத்தை வாசித்துவிட்டு அடுத்தவேலையை கவனிக்க போய்விடுகின்றோம்.
அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயத்தை கேட்பதில்லை.
எனவே தொடர்ந்து அவர்கள் அதனையே செய்கின்றார்கள்.
RAGHAVENDRA
17th November 2015, 09:21 AM
சிவாஜி ரசிகர்கள் எல்லோரும் விடயத்தை வாசித்துவிட்டு அடுத்தவேலையை கவனிக்க போய்விடுகின்றோம்.
அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயத்தை கேட்பதில்லை.
எனவே தொடர்ந்து அவர்கள் அதனையே செய்கின்றார்கள்.
சிவா.
தங்கள் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் நடைமுறை என்பது வேறு. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். Predetermined notion என்பது போல, முன்கூட்டியே அவர்கள் நடிகர் திலகம் பற்றிய செய்தி என்றால் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற நிலைப்பாடு கொண்டிருந்தால், அந்த அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவது என தீர்மானம் செய்து வைத்திருந்தால், அதை மாற்றுவது கடினம்.
sivaa
17th November 2015, 09:43 AM
சிவா.
தங்கள் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் நடைமுறை என்பது வேறு. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். Predetermined notion என்பது போல, முன்கூட்டியே அவர்கள் நடிகர் திலகம் பற்றிய செய்தி என்றால் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற நிலைப்பாடு கொண்டிருந்தால், அந்த அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவது என தீர்மானம் செய்து வைத்திருந்தால், அதை மாற்றுவது கடினம்.
நாம் விடும் பெரிய தவறு இதுதான் சார்.
தொடர்ந்து அவர்கள் விடும் தவறை சுட்டிக்காட்டி வந்தால்
நிச்சயமாக அவர்களது தீர்மானத்தில் சிறு மாற்றத்தை கொண்டுவரலாம்.
RAGHAVENDRA
17th November 2015, 09:47 AM
சிவா
என்னைப் பொறுத்த மட்டில் என் மனதில் பட்டதை நான் சொல்லி விட்டேன். அவ்வளவு தான்.
இதற்கு மேல் இதை வளர்க்க நான் விரும்பவில்லை.
Russellxor
17th November 2015, 10:42 AM
கோவை மாநகரில் சிவாஜியின் சாதனைகள்.
1. நூறு நாட்களுக்கு மேல் ஒடிய படங்கள் 33க்கும் மேல்.
கோவையில் அதிக நூறுநாள் படங்கள் கொடுத்த ஒரே நடிகர் நடிகர்திலகம் மட்டுமே.
..வேறு எவரும் செய்திராத சாதனை இது.
..தேவர்மகன் படையப்பா
படிக்காதவன் படங்கள் சேர்க்கப்படவில்லை .
..ஒரே காலண்டர் வருடத்தில் மூன்று
நூறு நாட்கள.
.அதுவும் இரண்டு முறை.
.அதுவும் தொடர்ந்த வருடங்களில்.
வருடங்கள் 1960-1961
1960
1. இரும்புத்திரை
2.தெய்வப்பிறவி
3.படிக்காதமேதை
மேற்கண்ட மூன்று படங்களும்14.01.1960லிருந்து
25.06.1960 க்குள் ரீலீசான படங்கள்.ஆறு மாதங்கள் கூட பூர்த்தியாகாத காலகட்டங்களில் வெளியான படங்கள்.
1961
1.பாவமன்னிப்பு
2.பாசமலர்.
3.பாலும்பழமும்.
இந்த சாதனைகளும் எவராலும் நிகழ்த்தப்படவில்லை
ஒரே காலண்டர் வருடத்தில் ஒரு மாத இடைவெளியில் வெளியான இரு படங்களும் நூறு நாட்கள் ஓடிய படங்கள்.இந்தச் சாதனை 1958 ஆம் வருடமே நிகழ்த்தப்பட்டுவிட்டது.
படங்கள்:
1.பதிபக்தி(14.0358)
2.சம்பூர்ண ராமாயணம்.(14.04.58)
83ஆம் வருடம் இரண்டு நூறுநாள் படங்களைஅளித்துள்ளார்.அப்போது நடிகர்திலகத்தின் வயது 55.இரண்டிலும் அவர் இளவயது கதாபாத்திரமாக நடிக்கவில்லை.
படங்கள்:
1.நீதிபதி
2.வெள்ளைரோஜா.
வெள்ளை ரோஜாவில் அவருக்கு ஜோடி கிடையாது.
வயதான காலத்தில் வயதான வேடங்களில் நடித்து வெற்றியடையச்செய்த படங்கள்.
2. 150 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்ஏழு.(7)
அவை:
1.வீரபாண்டிய கட்டபொம்மன்(151)
2.இரும்புத்திர(161)
3.பாசமலர்(151)
4.வசந்தமாளிகை(161)
5.தங்கப்பதக்கம்(158)
6.திரிசூலம்(176)
7.முதல் மரியாதை(175)
தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் ஏழு படங்கள் 150 நாட்கள் இவரைத்தவிர வேறு யாரும் கொடுத்ததாக தெரியவில்லை
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1447736774469_zpsimcyj8rj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1447736774469_zpsimcyj8rj.jpg.html)
3.விமானத்தில் வந்து விளம்பர நோட்டீஸ்களும் பூக்களும் வீசப்பட்ட ஒரே படம் "ரோஜாவின் ராஜா".
நகரெங்கும் விமானம் பறந்து நோட்டீஸ்கள் வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இது ஒரு சரித்திர சாதனை.
4.கோவையைப் பொறுத்தவரை மிக உயரமான கட்அவுட் '60'அடிக்குமேல் வைக்கப்பட்டபடம்
ஜெனரல் சக்கரவர்த்தி.இந்த அளவு உயர கட்அவுட் அந்த படத்திற்குப் பின் வேறு எந்தப்படத்திற்கும் அதற்குப்பின் வைக்கப்படவில்லை.
...
KCSHEKAR
17th November 2015, 11:47 AM
சிவாஜி ரசிகர்கள் எல்லோரும் விடயத்தை வாசித்துவிட்டு அடுத்தவேலையை கவனிக்க போய்விடுகின்றோம். அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயத்தை கேட்பதில்லை.
எனவே தொடர்ந்து அவர்கள் அதனையே செய்கின்றார்கள்.
திரு.சிவா,
தாங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான். எந்த செய்தியாக இருந்தாலும், ஒரு ரசிகனாக மறுப்பு மற்றும் கண்டனக் கடிதம் அல்லது இப்போது இருக்கும் வசதி வாய்ப்புகளில் e -mail மூலமாக தெரிவிக்கவேண்டும். நம்மில் பலரும் திரியில் கண்டனம் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்துவது அவர்களிடத்தில் (ஊடகம் அல்லது செய்தித்தாள்) எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
என்னைப் பொறுத்தவரையில், என் கவனத்திற்கு வரும், இந்த மாதிரி தகவல்களுக்கு, சிவாஜி பேரவை ஆரம்பிப்பதற்கு முன்பு தனிப்பட்ட முறையிலும், பிறகு, சிவாஜி சமூகநலப்பேரவை அமைப்பின் சார்பிலும் கடிதங்கள் எழுதுவது, தொலைபேசியில் தெரிவிப்பது சிலமுறை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவற்றில் சில், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிலநேரம் மறுப்பாக வெளியிடப்பட்டும் இருக்கிறது.
KCSHEKAR
17th November 2015, 12:17 PM
நடிகர்திலகம் சிலையை அகற்ற ஓராண்டு கால அவகாசம் கேட்ட தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் மூலம், இப்போதைக்கு நமது ரசிகர்களுக்கு ஒரு இடைக்கால நிம்மதி கிடைத்திருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துவிடும். அதன்பிறகான சூழ்நிலையின் அடிப்படையிலேயே சிலை பிரச்சினையில் மேல் நடவடிக்கை அமையும். நடிகர்திலகத்தின் சிலைக்கு எந்த இடையூறும் நேராமல், சிலை அமைக்கப்பட்ட இடத்திலேயே தொடரும் என்றே நாம் நம்புகிறோம்.
என்றாலும் இப்போதுள்ள சூழ்நிலையில், சில கருத்துக்கள்: நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம் அமைவதை வரவேற்கும் அதே நேரத்தில் அதற்காக சிலை அகற்றப்படுவதை நாம் கண்டிப்பாக ஏற்கமுடியாது. காமராஜர், அண்ணா, அம்பேத்கார், எம்.ஜி.ஆர் உட்பட பல தலைவர்களுக்கும் சென்னையில் நினைவிடம் அல்லது மணிமண்டபம் தனியாகவும், வேறு பல இடங்களில் சிலைகள் தனியாகவும் இருக்கும்போது, சென்னையில் ஒரே இடத்தில் மட்டும் இருக்கும் நடிகர்திலகம் சிலை மட்டும் மணிமண்டபத்தில் மாற்றப்படும் எனும் முடிவு சரியானதல்ல. மணிமண்டப முகப்பில் வேறொரு சிலை அமைப்பதே சரியானதாகும்.
ஏற்கனவே தமிழக அரசு, சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு என்று மனு தாக்கல் செய்துள்ளதையே உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் தங்கள் கருத்தில் கொண்டு சிலையை அகற்றவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன என்றே வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து அகற்றியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வந்தால், சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவே மற்றி அமைத்துவிட்டு, மணிமண்டபம் அமைக்கப்படும்போது அங்கு வேறு சிலை அமைக்கப்படவேண்டும் என்பதே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் வேண்டுகோள். இதனை தமிழக அரசிடமும் வலியுறுத்தியுள்ளோம்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/StatueSupremeCourt17Nov2015_zpsjxpocrbp.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/StatueSupremeCourt17Nov2015_zpsjxpocrbp.jpg.html)
anasiuvawoeh
17th November 2015, 01:23 PM
Dear senthilvel sir,happy to see your wish.I am just a LKG boy infront of the stalwarts already in the thread.But I will write something true from my heart regularly which i am sure all will encourage me.Thanks/regards
anasiuvawoeh
17th November 2015, 01:30 PM
Ravi.naan migavum rasiththa kaatchi.Thangal ezhuththil meendum rasikkiraen.
RAGHAVENDRA
17th November 2015, 01:42 PM
ஒரு செய்தியை ஒரு ஊடகம் வெளியிடும் போது அதைத் தொகுத்து தேவையானவை அல்லது தேவையற்றவை என அவ்வூடகம் கருதும் விஷயத்தை எடிட் செய்து வெளியிடுவது அதற்குரிய உரிமை. அதில் அவர்களுடைய நிலைப்பாடு நிலைநிறுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் பாதிப்பு என்பதற்கு வழியில்லை. ஏன் இந்த விஷயத்தை சேர்க்கவில்லை என்று நாம் கேட்க முடியாது. ஓரு விஷயத்தை சில ஊடகங்கள் அப்படியே வெளியிடும். சில தமக்குத் தேவையானவற்றை அல்லது தாங்கள் வெளியிட வேண்டியது இந்தப் பகுதி தான் என்று தீர்மானிப்பவற்றை மட்டுமே வெளியிடும்.
அவ்வாறு வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு மாறாக இருந்தாலோ அல்லது திரிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே நாம் அவற்றை அணுக முடியும். இந்த விஷயத்தை நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம் என்பவர்களிடம் போய் நாம் என்ன முறையிட முடியும். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பாதிக்கப்பட்டாலோ அல்லது நம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெளியிடப்பட்டு அவற்றால் நம் மனம் புண்பட்டாலோ நாம் கேட்கலாம்.
ஊடகங்களில் நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட செய்திகளை தவிர்க்காமல் சேர்த்து வெளியிடுவது அந்த ஊடகங்கள் மனதார செய்ய வேண்டியதாகும். உணர்வோடு செய்ய வேண்டியதாகும். இதைக் கேட்டுப் பெறுவதென்பது செயற்கையாகத் தான் இருக்கும்.
anasiuvawoeh
17th November 2015, 01:53 PM
Dear all,generally we human-beings are either theist or atheist.When I was going through dictionary I could see words AGNOSTIC and MYSTIC.The word agnostic means a person who believes, it is difficult to find whether GOD exists or not.The word mystic means ,a person who is spiritual and believes that by constant prayers he can reach GOD. Except few, many of us would have been in all the four ,in some stage of our life.So I became mystic at one point.
I would like to write my experiences under the title THE UNCOMMON GOD & a common man
THE UNCOMMON GOD - NADIGAR THILAGAM
a common man - Pon.Ravichandran
(to be continued)
Gopal.s
17th November 2015, 02:32 PM
சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா மனதார வாழ்த்தியதாக நடிகர் நாசர் தெரிவித்தார்.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும், 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும், நடிகர் சங்க தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற உதவிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும் அனுமதி கேட்டிருந்தார்கள். அவர்களை சந்தித்துப்பேச முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கினார்.அதன்படி, நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் நேற்று காலை 11 மணிக்கு முதல்வரை நடிகர் சங்கத்தினர் சந்தித்தனர். அவருக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்கள்.இதுகுறித்து நாசர் கூறுகையில், "முதல்வர் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். எங்களுக்கு மனதார வாழ்த்து சொன்னார். 'தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ‘நடிகர் திலகம்' சிவாஜிகணேசன், மேஜர் சுந்தரராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்த புதிய நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும். அதை இந்த புதிய நிர்வாகம் செய்யும் என்று நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக எந்த உதவியை கேட்டாலும் அரசு செய்யும்,' என்றார்.அப்போது, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் அம்மா கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை முதல்வர் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு, நிச்சயம் வருவதாகக் கூறினார்," என்றார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cm-jayalalithaa-wished-us-whole-heartely-says-nasser-240010.html
Russelldvt
17th November 2015, 06:22 PM
http://i66.tinypic.com/nv37lh.jpg
Russelldvt
17th November 2015, 06:24 PM
http://i65.tinypic.com/bet55e.jpg
Russelldvt
17th November 2015, 06:25 PM
http://i67.tinypic.com/2d9qnnp.jpg
Russelldvt
17th November 2015, 06:27 PM
http://i66.tinypic.com/azhyjs.jpg
Russelldvt
17th November 2015, 06:27 PM
http://i67.tinypic.com/2ez3hv8.jpg
Russelldvt
17th November 2015, 06:28 PM
http://i65.tinypic.com/o9ka6q.jpg
Russelldvt
17th November 2015, 06:29 PM
http://i65.tinypic.com/xbz9dz.jpg
Russelldvt
17th November 2015, 06:30 PM
http://i67.tinypic.com/155qkux.jpg
Russelldvt
17th November 2015, 06:31 PM
http://i64.tinypic.com/10e3jab.jpg
Russelldvt
17th November 2015, 06:31 PM
http://i65.tinypic.com/1zmdq80.jpg
Russelldvt
17th November 2015, 06:32 PM
http://i67.tinypic.com/do106t.jpg
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.