View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
Pages :
1
2
3
4
5
6
[
7]
8
9
10
11
12
13
14
rajraj
13th November 2015, 07:43 AM
ம்ம் புலவர் ல நிறைய பாட் இல்லை போல..
Here is one from Paithiyakkaaran(1947)
Paattukkoru pulavan Bharathiyadaa......
No video clip from the movie is available. Listen to M.M.DandapaNi Desikar's rendition:
http://www.youtube.com/watch?v=70_DxxsWL6A
JamesFague
13th November 2015, 09:38 AM
Courtesy: Dinamani
பானுமதி: 4. பூங்கோதையும்... கல்யாணியும்...
தெலுங்கிலும் தமிழிலும் பானுமதிக்கு வரவேற்பு தொடர்ந்தது. 1939---ல் அறிமுகமான பானுமதிக்குப் பத்து ஆண்டுகள் கடந்தும், நீடித்தப் புகழோடு பரபரப்பானப் பொற்காலமும் சேர்ந்து கொண்டது.
ஆந்திராவை ஒரு கலக்கு கலக்கிய பானுமதியின் ‘லைலா மஜ்னு’ வை அன்றைய பிரபல சினிமா நிறுவனமான ஜூபிடர் 1949 நவம்பர் 5-ல் தமிழில் வெளியிட்டது. இங்கும் அமோக வசூல் கிடைத்தது.
இளையராஜாவையே கட்டிப் போட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் அதில் ஒலித்தன.
சி.ஆர். சுப்பராமனின் இசையில் 1. ‘எனது உயிர் உருகும் நிலை - சொல்லுவாய் வான்மதி’, 2. பறந்து பறந்து செல்லும் பைங்கிளியே மறதியாகுமா?- இது நியாயமா? 3. பிரேமைதான் பொல்லாததா’ போன்ற பாடல்கள் நெஞ்சில் நிலைத்தவை.
ஹாலிவுட் கீதங்களை நம் பண்பாட்டுக்கு ஏற்ப சுவீகரிக்க கொஞ்சமும் தயங்காதவர் பானுமதி.
ஸ்வர்க்க ஸீமாவில் ரீடா ஹேவர்த் பாடலைப் பின்பற்றி பாவுறமா பறக்க விட்டதை, லைலா மஜ்னுவிலும் பின்பற்றினார்.
இம்முறை லாரென்ஸ் ஆலிவரின் ‘ஹாம்லெட்’ படத்தில் இருந்து கிடைத்த மெட்டை, ‘பிரேமை தான் பொல்லாதது’ என்கிற டூயட்டாக உயிர்ப்பித்தார்.
மஜ்னுவாக ஏ. நாகேஸ்வரராவும், லைலாவாக பானுமதியும் வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.
திரையில் லைலாவாக மறு பிறவி எடுத்த பானுமதியின் கமென்ட் இது.
‘என் கணவர் ஒரு டைரக்டர். என்னைப் போன்ற பிரபல நட்சத்திரத்தோட கணவராக இருந்துக்கிட்டு, அடுத்தவங்க கிட்ட வேலை செய்ய விரும்பல. அதுக்காகத் தானே, புதுசா ஒரு சினிமா கம்பெனி ஆரம்பிச்சார். அவர் இயக்கத்துல என் கேரக்டர்கு ஒத்து வராத படம் லைலா மஜ்னு. அழுது அழுது கண்ணு புண்ணாப் போச்சு. - பானுமதி (1993 பிப்ரவரி பொம்மையில்)
அதே நேரத்தில் பானுமதி குறித்த கண்டனங்களும் பரவலாக எழுந்தன.
நவம்பர் 1949 குண்டூசி இதழில் ‘மலாயா செண்டூல்- எம்.எஸ். ராதா’ என்கிற வாசகர் ஒரு கேள்வி எழுப்பினார்.
‘ஆந்திர நடிகையான பானுமதி இப்படியேன், மார்பகத்தில் துணியே இல்லாமல் ஆபாசமாய் நடிக்கிறார்? இதை அவரது கணவர் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறார்...?’
‘நிஷானின்’ வரலாறு காணாத ஓட்டத்தைத் தொடர்ந்து, ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’ பானுமதி- ரஞ்சன் மீண்டும் இணைந்து நடிக்க இந்தியில் ‘மங்களா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.
பாரதம் உலகின் மிகப் பெரிய குடியரசு நாடாக, ஜெய பேரிகை கொட்டிய ஜனவரி 26, 1950. ஒட்டு மொத்த இந்தியாவெங்கும், பானுமதியின் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.
1949 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகையாக பானுமதியைத் தேர்வு செய்து கவுரவித்தது சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்.
1951ல் பி.என். ரெட்டியின் வாகினி பிக்சர்ஸில் பானுமதி நடித்தது ‘மல்லீஸ்வரி’ தெலுங்கு வெற்றிச் சித்திரம். என்.டி. ராமாராவ் ஹீரோ. பானுமதியின் இனிய பாடல்களும், அத்தனை இலேசில் மறக்க முடியாத நடிப்பும் மல்லீஸ்வரியை ஓஹோவென்று ஓட வைத்தன.
லைலா மஜ்னுவில் லாபம் குவித்த ஜூபிடர், பானுமதி நாயகியாக நடிக்க நேரடியாகத் தயாரித்த படம் ராணி. 1952 கோடையில் வெளியானது. ராஜா ராணி கதை. ஓடாமல் போனது.
லைலா மஜ்னு வெற்றிக்குப் பின்னர் பரணி பிக்சர்ஸின் அடுத்த படைப்பு ‘காதல்’. அதே பானுமதி- ஏ. நாகேஸ்வர ராவ் ஜோடி. பானுமதியின் ஆஸ்தான இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனின்
‘இன்பக் காவியம் ஆகும் வாழ்வே காதலினாலே’ போன்ற இனிய பாடல் இடம் பிடித்தும் ‘காதல்’ தோல்வியில் முடிந்தது.
பானுமதி ராசியான தனது மகன் பெயரிலேயே பரணி ஸ்டுடியோவை சாலிகிராமத்தில் உருவாக்கினார். அங்கு உருவான சண்டிராணி, இந்திய சினிமா சரித்திரத்தில் இடம் பெற்ற பானுமதியின் சாதனைச் சித்திரம்!
பானுமதியின் சண்டிராணி சாகஸங்கள்:
‘ஒரு தடவை என்னைக் காப்பாத்தறதுக்காக எம்.ஜி.ஆர்., நம்பியாரோட கத்திச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். நான் இந்த சண்டைக்கு நடுவே தவித்துக் கொண்டிருப்பதாக காட்சி. எனக்குத்தான் இந்த மாதிரி கட்டங்கள் தாங்காதே...
அந்தக் காட்சி படமானதும் நான் ‘எம்.ஜி.ஆரிடம், ‘உங்க வாளை என் கிட்ட கொடுத்தா, என்னை நான் காப்பாத்திக்க மாட்டேனா...?’ என்றேன்.
எம்.ஜி.ஆர். அதை ரொம்பவே ரசித்துச் சிரித்தார்.
உண்மையில் நான் சண்டிராணி படத்தில் நடிக்கும் போது வாள் சண்டையில் பயிற்சி எடுத்திருந்தேன். அதோடு அந்தப் படத்துக்குத் தேவையான குதிரை ஏற்றமும் கற்றேன்.
நான் கத்தி வீச எங்கே, எப்படிப் பயின்றேன் என்பதே கூட ஆச்சர்யமானதாக இருக்கும். பஞ்ச பாண்டவர்களின் வம்சத்தினர் கல்கத்தாவில் வாழ்வதாகக் கூறுகிறார்கள்.
அங்கு பாண்டவர் பரம்பரையில் பிறந்த ஒரு பெரியவர், எனக்கும் ரொம்ப நல்லாவே கற்றுக் கொடுத்தார். அதில் அடைந்த தேர்ச்சியால் சண்டி ராணியில் வேக வேகமாக, நான் வாளைச் சுழற்றி ரசிகர்களை பிரமிக்க வைக்க முடிந்தது.
அதனால்தானோ என்னவோ சினிமாவில் கூட என்னை நானே காப்பாற்றிக் கொள்ள விரும்பினேன்.
1953லேயே சண்டி ராணில சண்டி, சம்பான்னு இரட்டை வேஷங்கள்ள நடிச்சேன். ஒருத்தி காட்டுல இருப்பா. இன்னொருத்தி அரண்மனையில இளவரசியா வாழ்வா. என். டி. ராமாராவ் ‘கிஷோர்’ன்ற பேர்ல மந்திரி மகனா வருவாரு.
வில்லனைப் பழிக்குப் பழி வாங்கி அவன் கிட்டயிருந்து பெத்தவங்கள காப்பாத்தற, ஒரு ஆக்ஷன் ஹீரோ செய்ய வேண்டிய ரிவென்ஜ் சப்ஜெக்ட் அது. நான் தைரியாமா நடிச்சேன்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாள்ள தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகள்ள 1953 ஆகஸ்டு 28ல் வெளியிட்டேன். எனக்கு அப்ப முழுசா இருபத்தேழு வயசு.
‘ஒரு பொம்பள தனியா நின்னு ஜெயிச்சிட்டா பாரு!’ன்னு, ஏவிஎம். செட்டியார் எல்லார் கிட்டயும் என்னைப் பாராட்டிப் பெருமையா பேசுவாராம். -பானுமதி.
அபூர்வ சகோதரர்களை உல்டா செய்து பானுமதி சண்டிராணி எடுத்திருந்தும், அதுவும் நன்றாகவே ஓடியது.
சண்டி ராணி இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் அகால மரணம் எய்த, மிச்சத்தைப் பூர்த்தி செய்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். அதன் மூலம் எம்.எஸ்.விக்கு மிகப் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியவர் பானுமதி.
அவர் சொந்தக்குரலில் பாடி அதில் இடம் பெற்ற மகா அற்புதமானப் பாடல்
‘வான் மீதிலே... இன்பத் தேன் மாரி பெய்யுதே...!’ இளையராஜாவை வெகுவாகக் கவர்ந்தது.
சண்டிராணியில் இடம் பெற்ற அதே பாடல் மீண்டும் ஏவி.எம்மின் மெல்லத் திறந்தது கதவு படத்தில் (வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே...) புதுமையாக ஒலித்தது.
தன்னை அசத்திய எம்.எஸ்.வி.யின் மெட்டை, மெல்லிசை மன்னருடன் சேர்ந்து பணியாற்றிய வேளையில் அவர் முன்னிலையிலேயே மீண்டும் பயன்படுத்திக் கொண்டார் இசைஞானி.
எடுத்த எடுப்பில் மூன்று மொழிகளிலும் சொந்தமாகப் படத்தைத் தயாரித்து, இயக்கி அதில் வெற்றியும் அடைந்த முதல் பெண் டைரக்டர் பானுமதி! என வரலாறு பதிவு செய்து கொண்டது. இன்று வரையில் மிக அபூர்வமான சாதனை!
சண்டி ராணிக்குப் பிறகு பானுமதிக்குப் பெரும் புகழைத் தேடித் தந்த படம் மலைக்கள்ளன். பானுமதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த முதல் படமே வெற்றிச் சித்திரமாகவும், தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படமாகவும் விளங்கியது தனிச் சிறப்பு.
மலைக்கள்ளன் நாயகி பானுமதி பற்றிய ‘குமுதம்’ விமர்சனம்:
‘பானுமதிக்குப் ‘பூங்கோதை’ பாகம் வெகு பொருத்தம். ஏய் யார் நீ... ? என்று அவர் போடும் அதட்டலைக் கேட்டு அஞ்சாதவர்கள் இரும்பு மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்.
கதாநாயகியை ஒரு முறை கூடக் கண்ணீர் விடச் செய்யாமல் எடுக்கப்பட்ட, முதல் தமிழ்ப் படம் மலைக்கள்ளன்’ என்று எண்ணுகிறோம். பானுமதியின் நாட்டியம் சுகமில்லை. பாட்டுக்கள் மதுரமாக இல்லை.’
சரோஜாதேவி அறிமுகமாவதற்கு முன்பு தொடர்ந்து வெற்றி வலம் வந்தது எம்.ஜி.ஆர் - பானுமதி ஜோடி. மலைக்கள்ளனின் அமர்க்களமான வசூல் ஓட்டத்துக்குப் பின்னர், அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க கிராக்கி கூடியது.
மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபா அடுத்து வெளியானது. சேலத்தில் அதன் படப்பிடிப்பில் பானுமதிக்கு கிடைத்த இன்னொரு அற்புத இணை நடிகர் திலகம்!
முதன் முதலாக சிவாஜியைச் சந்தித்தது பற்றி பானுமதி விவரமாக கூறியுள்ளார்.
‘நெப்டியூன் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் ராணி படத்தில் நடித்த சமயம். ஒருநாள் அவர்களது ‘மனோகரா’ படக் காட்சிகளைப் பார்த்து விட்டு செட்டுக்குத் திரும்பினேன்.
அவரது நடிப்பு என்னைக் கவர்ந்து விட்டிருந்தது. அன்றைய தினம் அரங்கில் என்னுடன் நடித்தவர்களிடமெல்லாம், கணேசனின் திறமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
சிவாஜிகணேசன் நடித்து நான் பார்த்த முதல் படம் இதுவே. பின்னர் நான் பார்த்த சினிமாக்களில் அவரது ஆற்றல் மேலும் மேலும் பெருகியது.
தவிர, ஒரு சிறந்த நடிகர் என்கிற முறையில் அவர் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் என்னிடம் வளர்ந்தன. மனோகரா பார்த்துச் சில மாதங்கள் சென்றிருக்கும்.
சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்.
சிறிது நேரம் காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணேசன் கிளம்பிச் சென்றார்.
அந்த சில நிமிஷங்களில்
என்ன அருமையாக நடிக்கிறார் இவர்! இவருடன் எப்படியாவது நான் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். என்ற தன் விருப்பத்தை சுப்பாராவிடம் சொன்னாராம்.
சிவாஜி போன பிறகு, அதை என்னிடம் கூறிய சுப்பாராவ், ‘என்னம்மா உங்களுடன் நடிக்கணும்னு இவர் இப்படித் துடிக்கிறாரே!’ என்றார்.
சென்னைக்குத் திரும்பி வந்த சில நாள்களிலேயே அதற்குப் புதிய சந்தர்ப்பம் கிடைத்தது.
கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதையைப் படமாக்க என்னைத் தேடி வந்தார் ரேவதி ஸ்டுடியோ அதிபர், டைரக்டர் வி.எஸ். ராகவன்.
‘இந்தப் படத்தில் கதாநாயகி கல்யாணியாக நீங்கள் நடிக்க வேண்டும். முத்தையனாக சிவாஜி நடிக்கப் போகிறார்... உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.
‘நான் என்ன சொல்வது...? கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே...! என உடனடியாக ஒத்துக் கொண்டேன்.- பானுமதி.
‘கள்வனின் காதலி’ 1955 தீபாவளி வெளியீடு. சென்னையில் கெயிட்டி, மகாலட்சுமி, சயானி, ராஜகுமாரி, பிரபாத் என ஐந்து தியேட்டர்களில் ரிலிசானது. அந்நாளில் அது ஓர் அபூர்வ நிகழ்வு. பிரம்மாண்டமான ஜெமினி சித்திரங்கள் கூட மூன்று அரங்குகளில் மட்டுமே நடைபெறும்.
அதே நாளில் சிவாஜியின் இன்னொரு படமான கோட்டீஸ்வரனும் வெளியானது. அதில் அவரது ராசியான பத்மினி ஜோடி. கோட்டீஸ்வரன் முழு நீள நகைச்சுவைச் சித்திரம். வீணை எஸ். பாலச்சந்தர் கூட சிரிப்பு காட்டினார்.
திரையிட்ட ஐந்திலும் கள்வனின் காதலி 80 நாள்களைக் கடந்து ஓடி நன்கு வசூலித்தது.
மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் பட இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணியின், சொந்தத் தயாரிப்பு இயக்கத்தில் கோட்டீஸ்வரன் உருவானது. இருந்தும் கள்வனின் காதலி பிரமாதமாக ஓடியது. காரணம் சிவாஜி- பானுமதி இருவருமே விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தார்கள்.
நூறாவது நாள் விழா எடுத்தால் ஐந்து தியேட்டர் ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த வசூலோடு ரேவதி ஸ்டுடியோ திருப்தி அடைந்தது. கள்வனின் காதலியில் பானுமதி பாடியதில் ‘வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ சூப்பர் ஹிட்.
1955 தீபாவளி தொடங்கி தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நடிப்புப் போட்டி முதன் முதலாக உருவானது.
‘கள்வனின் காதலியில்’ நடித்தது பற்றி நடிகர் திலகம்:
‘கள்வனின் காதலி’யில் பானுமதி ஹீரோயின் என்று டைரக்டர் ராகவன் சொன்னதும் எனக்குப் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்காகச் சென்றேன்.
ராகவன் என்னை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பெரிய நடிகை, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே, நடித்துப் பிரபலமாக விளங்கி வரும் சிறந்த நடிகை என்ற உணர்வோடு வணக்கம் என்றேன்.
அன்றைய தினம் நான் பெண் மாதிரியும், அவர் ஆண் பிள்ளை போலவும் பேசி கிண்டல் செய்யும் தமாஷான காட்சி ஒன்றை எடுத்ததாக நினைவு.
முந்நூறு படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுடன் நடித்தவர் சிவாஜிகணேசன். 1970ல் ராமன் எத்தனை ராமனடியோடு விரைந்து 140 படங்களை முடித்தத் திருப்தி !
சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.
கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.
கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம்(1955 -1970) கடந்திருந்தும், அதே பழைய பணிவை, வி.சி. கணேசன் போன்ற யுகக் கலைஞரிடம் பெற பானுமதியால் மட்டுமே முடிந்தது!
‘மலைக்கள்ளன், - கள்வனின் காதலி’ எம்.ஜி.ஆர்.-சிவாஜியோடு முதன் முதலாக பானுமதி சேர்ந்து நடித்த இவ்விரு படங்களும் தமிழின் புகழ் பெற்றப் புதினங்கள்.
இரு கதைகளிலும் கதாநாயகன் திருடன். ஆனால் மிகவும் நல்லவன். இரண்டிலும் ஒரே நாயகி பானுமதி. பூங்கோதைக்கும், கல்யாணிக்கும் நடிப்பில் எத்தனை எத்தனை வித்தியாசம் காட்டி இருக்கிறார் பானுமதி!
JamesFague
13th November 2015, 12:09 PM
13/11/2015
From Facebook
இசையரசிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் !!
அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்!!
இன்று திரையிசைக்குயில், இசையரசி
பி.சுசீலா அவர்களின் பிறந்த தினமாகும். அவர் நோய், நொடியின்றி நீடூழி வாழ இறைவனை பிரார்த்திப்போம்.
கான சரஸ்வதி,தெய்வப் பாடகி,திரையுலக பொக்கிஷம்,கலைவாணி சுசீலாம்மா
அவர்களின் 82-வது பிறந்த நாளான இன்று அவரை வணங்கி புகழ் பாடுவோம்.காலம் காலமாக தான் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களால் நம்மையெல்லாம் மகிழ்வித்திருக்கிறார் இசையரசி
பி.சுசீலா அவர்கள்.
நாட்டில் சிலரைப் பார்க்கையில் இவர் ஏன் பிறந்தார் என்று கேள்வி தோன்றும். இசையரசியின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும் பொழுதுதான் இவர் நமக்காகப் பிறந்தார் என்று தோன்றும்.
எத்தனை பாடல்கள்! தாலாட்டும் தாயாக, ஆதரவூட்டும் மனைவியாக, நல்லதொரு தோழியாக, குறும்பு மிக்க சுட்டிப் பெண்ணாக, எழுச்சியூட்டும் புரட்சிப் பெண்ணாக, நம்முடைய நெஞ்சில் இருக்கும் சோகத்தையெல்லாம் நெருப்பிட்டு உருக்கி கண்ணீராய் வழிந்து ஓடச் செய்து மனதை இலேசாக்கும் ஆதரவாக, இறைவன் புகழைப் பாடி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும்
வழிகாட்டியாக என்று பலப்பல உணர்ச்சிகளில் தனது இனிய குரலால் பாடியிருக்கிறார்.
வாழ்க அவரது புகழ்..!!
வளர்க அவரது திரைப் பணி...!!
JamesFague
13th November 2015, 12:59 PM
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 30 - அன்பைத் தேடும் மனதின் பாடல்
மனம் ஒரு விசித்திர உலகம். ஒருவர் தன் வாழ்வில் கடந்துவந்த மனிதர்களை நிரந்தரமாகக் குடியமர்த்தியிருக்கும் பிரதேசம். அனுபவங்களின் நிழல்கள் நிரந்தரமாகப் படிந்திருக்கும் அந்த இருள் குகைக்குள், இளம் வயதில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் கோர உருவங்களாகத் தங்கிவிடும்.
எல்லைகளற்று விரியும் மனதை நிர்வகிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் அதன் எதிர்மறையான எண்ணங்களுக்குப் பலியாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு மனிதனைப் பற்றிய கதைதான் பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’(1980). ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் இப்படத்தை எடுத்ததாகப் பின்னாட்களில் குறிப்பிட்டார் பாலுமகேந்திரா.
பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இப்படத்தில் கல்கத்தா விஸ்வநாத், பானுச்சந்தர், மோகன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இளையராஜாவின் 100-வது படம். தன் முதல் படத்திலேயே இளையராஜாவுடன் பணியாற்ற விரும்பினாலும், அது சாத்தியமானது தனது மூன்றாவது படமான மூடுபனியில்தான் என்று பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.
கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் இசையும், அர்த்தமுள்ள மவுனங்களும் நிறைந்தவை பாலுமகேந்திராவின் படங்கள். அவரது பயணம் முழுவதும் அவருக்குத் துணை நின்றவர் இளையராஜா.
‘பருவ காலங்களின் கனவு’ எனும் பாடலுடன் படம் தொடங்கும். எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடல் இனிமை பொங்கும் உற்சாகத்தின் இசை வடிவம். மோட்டார் சைக்கிள் பில்லியனில் அமர்ந்து காதலனை அணைத்தபடி செல்லும் பெண்ணின் குதூகலத்தைப் பிரதியெடுக்கும் பாடல் இது. கங்கை அமரன் எழுதியது. காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும் வாகனத்தின் வேகமும், கட்டற்ற சுதந்திரத்துடன் துடிக்கும் மனதின் பாய்ச்சலும் இப்பாடல் முழுவதும் நிரம்பித் ததும்பும்.
‘தகுதகுததாங்குதா தகுதகு’ என்று களிப்புடன் கூடிய குரலில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங் இப்பாடல், சென்றடையும் தூரத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். பாடல் முழுவதும் அதிர்ந்துகொண்டே இருக்கும் டிரம்ஸ், அதீத மகிழ்ச்சியில் வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத் துடிப்பை நினைவுபடுத்தும். ஒரே ஒரு சரணத்தைக் கொண்ட இப்பாடலின் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், மாலை நேரச் சூரியக் கதிர்களினூடே வாகனங்கள் மீது மிதந்துசெல்லும் அனுபவத்தைத் தரும் எலெக்ட்ரிக் கிட்டார் என்று ஒரு இன்பச் சுற்றுலாவை இசைத்திருப்பார் இளையராஜா.
உல்லாசம் ததும்பும் மலேசியா வாசுதேவனின் குரல் பாடலின் மிகப் பெரிய பலம். மெல்லிய உணர்வுகள் கொண்ட இளம் காதலியை அரவணைக்கும் குரலில், ‘தழுவத்தானே தவித்த மானே…’ என்று பாந்தமாகப் பாடியிருப்பார்
‘ஸ்விங்… ஸ்விங்’ எனும் ஆங்கிலப் பாடலை டாக்டர் கல்யாண் பாடியிருப்பார். விஜி மேனுவல் எழுதிய இந்தப் பாடல், கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் உத்வேகத்தைத் தரும் வகையில் இசைக்கப்பட்டது. எலெக்ட்ரிக் கிட்டார் இசையில் தெறிக்கும் உத்வேகம் பிரதாப் போத்தனுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தைத் தட்டியெழுப்பும். சித்தியின் கொடுமையால் அத்தனை பெண்களையும் வெறுக்கும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை, படத்தின் போக்கில் பின்னணியில் ஒலிக்கும் இந்தப் பாடல் உணர்த்திவிடும்.
அதேசமயம், மறைந்துபோன தனது தாயின் மென் சுபாவத்தைக் கொண்ட பெண்ணின் (ஷோபா) பின்னால் பித்தேறிச் சுற்றுவான் நாயகன். அவனது மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் தாலாட்டுப் பாடல் ‘அம்மா பொன்னே ஆராரோ’. உமா ரமணன் பாடியிருக்கும் இந்தக் குறும்பாடல், நாயகனின் ஆழ்மனதின் வேதனைகளுக்கு மருந்திடும் மந்திரம்.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘என் இனிய பொன் நிலாவே’. கங்கை அமரன் எழுதிய இப்பாடல், உலக அளவில் கிட்டார் இசையின் நுட்பங்களையும், அழகியல் கூறுகளையும் கொண்ட மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு ஷோபாவைக் கடத்திவந்திருக்கும் பிரதாப், தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சுவார். உயிர் பயத்துடன் அங்கு தங்கியிருக்கும் ஷோபா, ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, கிட்டாரும் கையுமாக இருக்கும் பிரதாப்புக்குப் பாடத் தெரியுமா என்று கேட்பார். தன் மனதின் குரலை வெளிப்படுத்தும் விதமாக, சற்றே கூச்சத்துடன் பாடத் தொடங்குவார் பிரதாப்.
மெல்லிய கிட்டார் ஒலியுடன் தொடங்கும் இப்பாடலின் வழியே, சுய இரக்கமும் மர்மமும் நிறைந்த அம்மனிதனின் ஆழ்மனதில் கிடக்கும் அன்பு மேலேறி வரும். நிகழ்விடத்திலிருந்து கனவுலகுக்குச் செல்லும் அவன், அந்த உலகில் தன் காதலியின் அருகாமையை, அன்பை உணர்வான்.
முதல் நிரவல் இசையில் தேவதைகளின் வாழ்த்தொலியாக ஒலிக்கும் பெண் குரல்களின் கோரஸைத் தொடர்ந்து அடிவானத்தில் மிதக்கும் மாலை நேரத்து சொர்க்கம் நம் மனதில் உருப்பெறும். இரண்டாவது நிரவல் இசையில், கற்பனை உலகின் சவுந்தர்யங்களை உணர்த்தும் வயலின் இசைக்கோவையும், பெருகிக்கொண்டே செல்லும் காதலின் வலியை உணர்த்தும் எலெக்ட்ரிக் கிட்டார் இசையும் ஒலிக்கதிர்களாக நம்முள் ஊடுருவதை உணர முடியும்.
காதலுக்காக இறைஞ்சும் மனமும், இருட்டு உலகிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமாகும் நம்பிக்கையும் கலந்த குரலில் பிரவாகமாகப் பாடியிருப்பார் ஜேசுதாஸ். ‘தொடருதே தினம் தினம்’ எனும் வரியைப் பாடும்போது அவர் குரலில் சந்தோஷக் குளிர் தரும் சிலிர்ப்பு தொனிக்கும். அன்பைத் தேடி அலையும் மனதின் தற்காலிக ஏகாந்தம் அது!
JamesFague
13th November 2015, 01:04 PM
Courtesy: Tamil Hindu
நினைவுகளின் சிறகுகள்: கே.ஏ. தங்கவேலு - அண்ணே என்னைச் சுடப்போறாங்க!
‘புது வாழ்வு’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, டி.ஏ. மதுரம் | படங்கள் உதவி: ஞானம்
‘புது வாழ்வு’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, டி.ஏ. மதுரம் | படங்கள் உதவி: ஞானம்
சந்திரபாபுவைப் போலவே 1950-களில் நல்ல மார்க்கெட்டில் இருந்த காலம் தொடங்கி, பின்னால் நாகேஷ் காலம், சோ, தேங்காய் சீனிவாசன்,சுருளி ராஜன் காலங்களையும் தாண்டிக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு இவருடையது.
‘கல்யாண பரிசு’ பைரவன் மட்டுமல்ல. ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவியில் “அடியே, நீ என்ன சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்டே”, “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக் கேட்டியா” போன்ற பல வசனங்கள் பிரபலம். வீரக்கனல்’ படத்தில் “தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுருச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று தங்கவேலு பேசும் வசனம்!
“தங்கவேலு சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்ததும் நாங்களே!” என ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் பேசுவதும் மறக்க முடியாதது. ‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு கற்றுக்கொள்ளும் தங்கவேலு. அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டுத் தவிக்கிற காட்சி!
‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’
‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுலதான் செத்தான்!’’ என்ற வசனம். இவையெல்லாம் அந்தக் கால திரைப்பட நகைச்சுவையில் முத்திரை வசனங்கள்! வடிவேலுவின் வசனங்களையும் கவுண்டமணியின் கவுன்டர்களையும் வைத்து இன்று இணைய உலகின் ‘நையாண்டி’ பதிவுகளும் பின்னூட்டங்களும் பிழைப்பு நடத்துவதுபோல் அன்றைய திண்ணைப் பேச்சுப் பெரிசுகளுக்குத் தங்கவேலுவின் வசனங்கள்தான் வாய்ச்சரக்கு.
சந்தானம் தனக்குப் பிடித்த காமெடியன்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். சந்தானத்தின் நடிப்பில் கவுண்டமணி தெரியும் அளவுக்கு தங்கவேலு தெரிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் தங்கவேலுவின் நாசூக்கான நடிப்புதான். தங்கவேலு எந்தப் படத்திலும் கல்யாணப் பெண்- மாப்பிள்ளையைப் பார்த்து “இவ என்ன யாரோடயாவது ஓடிப் போயிட்டாளா? இல்ல இவன்தான் செத்துப் போயிட்டானா?” என்று கேட்கவே மாட்டார். தொந்தரவான வில்லனைக் கூட “அட நீ நல்லாருக்க” என்பார்.
‘பணம்’(1952) படத்தில் வயதானவராக நடித்த பின்தான் தங்கவேலு பிசியான நடிகரானார். ‘பணம்’ படத்தில் நடித்ததற்காகப் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தக் காலத்தில் தங்கவேலுவுக்கு 5,000 ரூபாய் கொடுத்தாராம். இவரும் அந்தப் பணத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் காட்ட, இவருடைய பெரியப்பா “அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல கன்னமிடலாமாடா? கலைவாணர்கிட்ட திருடுனா நீ விளங்கவே மாட்ட”ன்னு திட்டி அடித்து இழுத்துக்கொண்டு என்.எஸ்.கேயிடம் அழைத்துக்கொண்டு போனார். என்.எஸ்.கே “அந்த பணம் தங்கவேலுவுக்கு நான் கொடுத்த சம்பளம்” என்று சொன்னபோதுதான் சமாதானம் ஆனாராம்.
எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதி லீலாவதி’ (1936) திரைப்படத்தில் தங்கவேலுவுக்கு ஒரு சின்ன பாத்திரம். அதே படத்தில் என்.எஸ்.கே, டி.எஸ் பாலையா போன்றோரும் நடித்தார்கள். “இன்னைக்கு உன்னை ஷூட் பண்ணப் போறோம்”னு இயக்குநர் தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கே-விடம் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! ஒன்னைப் படம் பிடிக்கப் போறாங்கடா!” என்று என்.எஸ்.கே விளக்கம் சொன்னாராம்.
தங்கவேலுவுக்கு பின்னணிப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன்.
‘கண்ணே நல்வாக்கு நீ கூறடி, நான் நாலு நாளில் திரும்பிடுவேன். என் செல்வக் களஞ்சியமே! என் சின்னக்கண்ணு மோகனமே!’
சீர்காழி சில பாடல்கள் பாடினார். பிரபலமான ‘ரம்பையின் காதல்’(1956) படப் பாடல். ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’சுடுகாட்டில் தங்கவேலு பாடுவதாகக் காட்சி.
பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடியிருக்கிறார். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ ரொம்பப் பிரபலம். கண்களை நன்கு உருட்டி நடிக்கத் தெரிந்த நடிகர்களில் தங்கவேலு டாப்கிளாஸ் நடிகர்.
தங்கவேலு 10/10
1.புதுச்சேரி மாநிலம் காரைக்கால்தான் தங்க வேலுவின் சொந்த ஊர்.
2.பத்து வயதுமுதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய தங்கவேலு 20 வயதில் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். அப்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவுக்குத் தன் நண்பரான தங்கவேலுவை இழுத்துக்கொண்டார்.
3. என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம்தான் பின்னாளில் ‘சதி லீலாவதி(1936)’ என்ற படமாகத் தயாரிக்கப்பட்டது. அதில்தான் அறிமுகமானார் தங்கவேலு.
4. சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி, பல நாடகங்களை நடத்திய தங்கவேலு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் 1994-வரை தொடர்ந்து நாடகங்களில் நடித்திருக்கிறார்.
5. தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார்.
6. ‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயர் முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது.
7. கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் வரை சுமார் 1,000 படங்களில் நடித்திருக்கிறார்.
8. நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
9. கடந்த 1994-ம் ஆண்டு தமது 77-வது வயதில் மறைந்த தங்கவேலு தி.மு.கவின் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் மறைந்தபோது தி.மு.கவின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
10. தங்கவேலுவின் முதல் மனைவி ராஜாமணி அம்மாள். அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மனைவி நடிகை எம்.சரோஜாவுக்கு ஒரே மகள்.
JamesFague
13th November 2015, 02:06 PM
Courtesy: Facebook
சுசீலாம்மா..
சில ரசனைகள் .. என் பார்வையில்.
பாடலாசிரியர் அறியேன்.. இசையைத்தவர் அறியேன்.. தெரிந்ததெல்லாம். பாடும் குரலும் பாடல்வரிகளுமே. இவற்றில் திளைத்து ஊறிய பிறகே மற்ற சங்கதிகளுக்குள் மனம் நுழையும்.
கிராமத்துப் பண்ணிசையில் தான் இவர் முதல் ரசனையுணர்வாக என்னுள் நின்றார்.
தாலாட்டு... 'நிலவும் தாரகையும் நீயம்மா.. உலகம் ஒருநாள் உனதம்மா...'
தொடங்கி, ...' திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரனுமா.." கேட்டு , ...' மாவடு கண்ணல்லவோ ! மைனாவின் மொழியல்லவோ ! பூவின் முகமல்லவோ! பொன் போன்ற நிறமல்லவோ... !" எனவெல்லாம் சீராட்டி..
'.... காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே! '... என வாழ்வில் பெண்மையின் யதார்த்த இயல்புகளை தனது குரல் பாவத்தில் எதிரொலித்தவர் தான்.
பிறகு சற்று வளர்ந்து விட்ட நிலையில்..
' காட்டு ராணி கோட்டையிலே கதவுகளில்லை .. இங்கு காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை..'...என்று எங்களைக் கவர்ந்திழுத்தவர். .. அடுத்தடுத்து அந்த ரசனையிலேயே எங்களை .. ஏன் இன்னமும் நிறுத்தியுள்ளார் என்றால் அது மிகையில்லை. ' காட்டுக்குள்ளே திருவிழா .. கன்னிப் பொன்னு மணவிழா!..' என்று ஒரு வைபவத்து பரவசங்களையே தனது குரல் பாவத்தில் வைத்தவர்.
' காடு கொடுத்த கனியிருக்கு ..கழனி விளைஞ்ச நெல்லிருக்கு.." என எகிறி விழும் சொற்களில் மீதேறி வரும் தன் குரல் பாவத்தில் அழுத்தமான முத்திரை பதித்தவராயிற்றே.
' பூ முடிப்பதும் பொட்டு வைப்பதும் யாருக்காக .. என்று பாடியவர், ' குருவிக் கூட்டம் போல நிற்கிற பூவம்மா! உன்னைக் கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா ? ..என இயற்கையான யதார்தங்களைப் பாடியவர் ..பின்னாளில் ..' ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை ..சேர்ந்துச்சோ சேரலியோ ..செவத்த மச்சான் நெற்றியிலே..!'...என்று மயங்க வைத்தவராயிற்றே.
துணை குரலோடு ..ஒத்தையடிப் பாதையிலே அத்தை மகன் போகையிலே.. ' பாடலும், ' வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே..?,,,, வந்திருக்கும் வேலனைப் பார்க்கப் போறேன்...' பாடல்கள் இன்றும் கேட்க சுகமே!
RAGHAVENDRA
13th November 2015, 11:15 PM
https://upload.wikimedia.org/wikipedia/kn/a/a9/P.susheela.jpg
நவம்பர் 13 அன்று பிறந்த நாள் கொண்டாடும் இசையரசிக்கு வாழ்வில் எல்லா வளமும் நலனும் தந்து இறைவன் ஆசீர்வதிப்பானாக.
https://www.youtube.com/watch?v=EebeAk08FnE
இசையரசி பாடிய முதல் தமிழ்த்திரைப்படப் பாடல்
rajeshkrv
14th November 2015, 07:52 AM
இசையரசியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம்
https://scontent-mia1-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12239548_979448812094048_5757456671763172391_n.jpg ?oh=5e75d92f5c293c1c730bb9a40a99faed&oe=56F468BB
vasudevan31355
14th November 2015, 08:45 AM
'பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/ANR_wih_Sivaji_in__1654970g_zps36911d5b.jpg
'பரதேசி' (தெலுங்கு)
வெளி வந்த நாள்: 14.01.1953
'பூங்கோதை'(தமிழ்)
http://www.iqlikmovies.com/modules/articles/dataimages/ANR_Sivaji_Ganesan_2013_10_07_07_35_49.jpg
வெளி வந்த நாள்: 31.01.1953
உரையாடல் - சக்தி கிருஷ்ணசாமி
இசை: ஆதிநாராயண ராவ்
ஒளிப்பதிவு: கமால் கோஷ்
தயாரிப்பு: அஞ்சலி பிக்சர்ஸ் கம்பைன்ஸ் (நடிகை அஞ்சலி தேவி மாறும் அவர் கணவர் ஆதிநாராயண ராவ்)
இயக்கம்: எல்.வி. பிரசாத்
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், 'அக்கினேனி' நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி, எஸ்.வி.ரங்காராவ், பண்டரி பாய், வசந்தா, ரேலங்கி...
கதை:
http://www.thehindu.com/multimedia/dynamic/01654/ANR_and_Anjali_Dev_1654969g.jpg
சந்த்ரம் (நாகேஸ்வரராவ்) ஓர் இளைஞன். ஏழையும் கூட. தன் தந்தையை விபத்தில் பறி கொடுக்கிறான். வறுமையில் வாடுகிறான். அவனுடைய நண்பன் ரகு (ஜனார்த்தன்) திடீரென மாரடைப்பால் மரணம் எய்துகிறான். இறந்த ரகுவிற்கு சுசீலா (பண்டரிபாய்) என்ற மனைவியும் மோகன் என்ற சிறு வயது மகனும் உண்டு. நண்பன் ரகு இறந்ததால் அவன் மனைவி, மகன் இருவரையும் தன் பொறுப்பில் வைத்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் சந்தத்ம். அதனால் கடுமையாக பணிபுரிந்து அதிக மணி நேரங்கள் உழைத்து நண்பனின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். இதனால் அவன் உடல் நிலை சீர்கெடுகிறது. அவன் உடல்நிலையைப் பரிசோதிக்கும் மருத்துவர் சந்தரமை ஒரு நல்ல மலைப் பிரதேசத்திற்கு சென்று சில காலம் அவனை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்துகிறார்.
சந்திரமும் மருத்துவர் அறிவுரையின்படி சீதகிரி என்னும் அழகிய மலைப் பிரதேசத்திற்கு ஓய்வெடுக்க செல்கிறான். அங்கு பூக்கள் விற்கும் லக்ஷ்மி (அஞ்சலிதேவி) என்ற பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அங்கிருக்கும் ஒரு கோவிலில் வைத்து அவளை திருமணமும் செய்து கொள்கிறான். சந்தரமுக்கு சொந்த ஊரிலிருந்து வேலை நிமித்தம் ஒரு அவசர அழைப்பு வருவதால் அவன் லஷ்மியிடம் சொல்லாமல் ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சந்த்ரம் தங்கியிருந்த ஓட்டலில் லஷ்மி வந்து அவனைப் பற்றி விசாரிக்கையில் சந்த்ரம் அங்கில்லை என்பது தெரிகிறது. லஷ்மி இதனால் அதிர்ச்சியடைகிறாள். சந்த்ரம் தன்னை ஏமாற்றி விட்டானோ என்று பரிதவிக்கிறாள்.
லஷ்மி இதனிடையே கர்ப்பமாகிறாள். இனியும் விஷயத்தை மறைக்க முடியாது என்று லஷ்மி தன் தந்தை ரங்கடுவிடம் தான் சந்த்ரமை திருமணம் செய்த விஷயத்தையும், அதனால் தான் கர்ப்பமுற்றிருக்கும் நிலைமையையும் சொல்லி சந்திரனை தேடிக் கண்டு பிடித்து வரும்படி மன்றாடுகிறாள். சந்த்ரமைத் தேடி அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் மலைக் கிராமத்திற்கு திரும்பும் ரங்கடு தன மகள் லஷ்மியின் நிலைமையால் ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகி அவமானம் தாங்காமல் தற்கொலை புரிந்து கொள்கிறான்.
இதற்கிடையில் லஷ்மியை தன்னுடன் அழைத்து செல்ல மறுபடி சீதகிரிக்கு வரும் சந்த்ரம் லஷ்மியின் வீடு தீப்பற்றி எரிந்து போய் விட்டதாகவும், அதில் சிக்கி லஷ்மி உயிரை விட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டுத் துடித்துப் போகிறான், சோகத்துடன் மறுபடி சொந்த ஊருக்கே திரும்புகிறான்.
ஆனால் தந்தையை இழந்த லஷ்மி தீ விபத்திலிருந்து தப்பி சந்த்ரம் மூலம் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு தாரா( வசந்தா) எனப் பெயரிட்டு அவளை மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்க்கிறாள்.
வருடங்கள் உருண்டோட சந்த்ரம் வளர்க்கும் நண்பனின் மகன் ஆனந்த் (சிவாஜி கணேசன்) இளைஞனாகிறான். ஒரு வேலையாக சீதகிரிக்கு வரும் சந்தரன் அங்கு லஷ்மியின் மகள் தாராவைப் பார்த்து காதல் கொள்கிறான். தன் வாழ்க்கை சந்த்ரமால் வீணாகப் போனதாக நினைத்து வருந்தும் லஷ்மி தன் மகள் வாழ்க்கையும் தன்னைப் போல ஆகிவிடக் கூடாதே என்று கவலை கொள்கிறாள். தாரா ஆனந்ததைக் காதலிப்பதைத் தடுத்து எதிர்க்கிறாள். அவனிடமிருந்தும் தாராவைப் பிரிக்க நினைக்கிறாள். இதற்கிடையில் சந்த்ரமும் சீதகிரிக்கு திரும்ப வருகிறான்.
சந்த்ரம் தன் மனைவி லஷ்மியை சந்தித்தானா?
ஆனந்த், தாராவின் காதல் வெற்றி பெற்றதா?
சந்தர்மும் லஷ்மியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?
போன்ற கேள்விகளுக்கு சில திருப்பங்களுடன் கூடிய கிளைமாஸ் பதில் சொல்லுகிறது.
'பரதேசி' மற்றும் 'பூங்கோதை' படங்கள் பற்றிய சில சுவையான விசேஷ தகவல்கள்
1. நடிகர் திலகத்தின் முதல் நேரடித் தெலுங்குப் படம் இது.
2. தெலுங்குப் படவுலகின் முடிசூடா நாயகர் 'அக்கினேனி' நாகேஸ்வரராவ் (ANR )அவர்களுடன் நடிகர் திலகம் இணைந்த முதல் படம் இது.
3. பிரபல இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் அவர்கள், அஞ்சலி தேவி இவர்களுடன் சிவாஜி இணைந்த முதல் படம்.
4.' பராசக்தி' படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் புதுமையான நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து புளோரிலிருந்த நடிகை அஞ்சலி தேவி தான் நடிப்பதை நிறுத்திவிட்டு சிவாஜி நடிப்பதைப் பார்க்க 'பராசக்தி' ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறார்.
5. அப்போதே தெலுங்கு, மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் மிகப் பிரபலமாகி விட்ட நடிகை அஞ்சலிதேவி. (சிவாஜிக்கு மிக சீனியர்) பிரபல மியூசிக் டைரக்டர் ஆதிநாராயண ராவ் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு 'அஞ்சலி பிக்சர்ஸ்' என்ற சொந்த சினிமாத் தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து 'பரதேசி' படத்தை தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்க முடிவு செய்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் என்று முடிவாயிற்று. 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு தமிழில் 'பூங்கோதை' என்று பெயர் வைக்கப்பட்டது. நாகேஸ்வரராவ் வளர்ப்பு மகனாக வரும் ஆனந்த் கதாபாத்திரத்திற்கு சிவாஜி என்ற அந்த புதுப் பையன் நன்கு பொருந்துவார் என்று அஞ்சலிதேவி சிவாஜியின் 'பராசக்தி' படத்தின் நடிப்பைப் பார்த்து முடிவெடுத்தார். சிவாஜியை தனியே அழைத்து 'பூங்கோதை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். முதல் தொகையாக ஒரு நல்ல தொகையைக் கொடுத்து சிவாஜியை மகிழ்வித்தார் அஞ்சலி தேவி.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/PoongothaiMovieAd_zpsaa331c5f.jpg
(நடிகர் திலகம்.காம், மற்றும் திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)
6. சிவாஜியும் அற்புதமாக 'பூங்கோதை' படத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்கிடையில் 'பரதேசி' தெலுங்குப் படத்திற்காக அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு தெலுங்கு நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரின் நடிப்பு எல்.வி.பிரசாத்திற்கும், அஞ்சலி தேவிக்கும் பிடிக்காமல் போனதால் தெலுங்கிலும் சிவாஜியே செய்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலி தேவி சிவாஜியைக் கேட்க சிவாஜி சற்று தயங்கினார். "நான் நடிக்கப் போகும் பாத்திரத்திற்கு நீங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கும் அந்த தெலுங்கு நடிகரை எனக்காக நீக்கினால் அவர் வருத்தப் படுவாரே" என்று சிவாஜி அஞ்சலி தேவியிடம் சொல்ல, சிவாஜியின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்ட அஞ்சலிதேவி அந்த தெலுங்கு நடிகரின் மனம் புண்படாத வகையில் அவரிடம் பேசி, அவரை சமாதானப் படுத்தி, அவருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து, அவரை நீக்கி, பின் சிவாஜியை 'பரதேசி'யில் 'புக்' செய்தார்.
7. அதனால்' பரதேசி' தெலுங்கு, அதன் தமிழாக்கம் 'பூங்கோதை' இரண்டு மொழிப் படங்களிலும் சிவாஜியே திறம்பட நடித்தார். சிவாஜி தெலுங்கில் வசனங்களை அருமையாக மனனம் செய்து பிரமாதமாக தெலுங்கை உச்சரித்து 'ஆனந்த்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
8. பின்னாட்களில் சிவாஜி அவர்கள் தமிழ்த் திரையலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் (அதாவது தமிழ்த் திரைப்படத் தொழிலின் மொத்த வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரம் இந்தக் காலக் கட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜியை வைத்தே நடந்தது) அஞ்சலி தேவிக்கு வயதாகி விட்டது. 1973 ஆம் ஆண்டு அஞ்சலி தேவி நாகேஸ்வரராவ் அவர்களை வைத்து' பக்த துக்காராம்' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதில் மிக முக்கியமாக மகாரஷ்டிர 'வீர சத்ரபதி சிவாஜி' வேடம் ஒன்று முக்கியமான பாத்திரமாக, படத்தை முடித்து வைக்கும் பாத்திரமாக வரும். அந்த 'வீர சத்ரபதி சிவாஜி' பாத்திரத்திற்கு நம் சிவாஜிதான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்த அஞ்சலிதேவி அந்தப் பாத்திரத்தில் நடிக்க சிவாஜியை அணுகினார். சிவாஜி அவர்களும் தனக்கு ஆரம்ப காலங்களில் அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை படங்களில் சான்ஸ் கொடுத்து உதவி செய்ததை மறக்காமல் மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் 'சத்ரபதி சிவாஜி' வேடத்தில் நடித்துத் தர மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். 'பக்த துக்காராம்' படத்தில் ஒரு கால் மணி நேரமே வரும் அந்த வீர சிவாஜி பாத்திரத்தில் 'சத்ரபதி சிவாஜி'யாகவே நடிகர் திலகம் வாழ்ந்து காட்டி இன்றளவும் அந்த பாத்திரத்தைப் பற்றிப் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிவாஜி அவர்கள் அஞ்சலிதேவியிடம் நன்றி உணர்ச்சியின் காரணமாக ஒரு பைசா கூட வாங்க வில்லை என்பது இன்னோர் செய்தி. 'பக்த துக்காராம்' ஆந்திராவில் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது.
நடிகர் திலகம் அதன் பிறகு முதல் டெலிவிஷன் தொடராக பம்பாய் தூர்தர்ஷனுக்கு 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகத்தை நடித்துக் கொடுத்தார். அப்போது அஞ்சலிதேவி தான் தயாரித்த' பக்த துக்காராம்' படத்தில் வீர சிவாஜியாக நடிகர் திலகம் அணிந்த உடைகளே டெலிவிஷன் நாடகத்திற்கும் பயன்படுத்தப்பட்டன. அஞ்சலிதேவி சிவாஜி அவர்கள் மேல் கொண்ட பேரன்பினால் வீர சிவாஜி உடைகளை டெலிவிஷன் நாடகத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிக்கு தந்து உதவினார்.
8.1951 -இல் இந்தியில் வெளி வந்த 'ராஜா ராணி' படத்தின் உரிமையை வாங்கி அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை திரைப்படங்களைத் தயாரித்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் இந்திப் படத்தின் முழுக் கதையையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி சினிமாக்களுக்குத் தக்கபடி கதையை மாற்றி பின் இயக்கம் செய்தார்.
9. நடிகர் திலகத்திற்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் அப்போது ஓரளவிற்கு பிரபலமாய் இருந்த நடிகை வசந்தா 'தாரா' பாத்திரத்தில் நடித்தார்.
10. நடிகர் திலகம் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கத்தில் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அந்தமான் காதலி' திரைப்படம் பரதேசி மற்றும் பூங்கோதை திரைப் படங்களைத் தழுவி எடுக்கப் பட்டதாகும். தெலுங்கில் நாகேஸ்வரராவ் ஏற்ற பாத்திரத்தை அந்தமான் காதலியில் நடிகர் திலகமும், அஞ்சலிதேவி பாத்திரத்தை நடிகை சுஜாதாவும், நடிகர் திலகத்தின் ஆனந்த் பாத்திரத்தை தெலுங்கு குணச்சித்திர நடிகர் சந்திரமோகனும், தாரா பாத்திரத்தை நடிகை கவிதாவும், ரங்குடு பாத்திரத்தை நடிகர் செந்தாமரையும் சிறு சிறு பாத்திர மாறுதல்களுடன் ஏற்று நடித்திருந்தனர்.
11. பரதேசி, பூங்கோதை இரு படங்களும் சிவாஜி அவர்களின் படங்களில் மிக மிக அபூர்வமான படங்கள். இப்படங்களை பெரும்பாலோனோர் பார்த்திருப்பதே அரிது. இப்படங்களின் வீடியோ சிடிக்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன். நானும் இப்படத்தைப் பார்த்ததில்லை. பல்வேறு பத்திரிக்கை செய்திகள், ஊடகங்கள், வீடியோ பேட்டிகள் உதவியில்தான் இக்கட்டுரையை வடித்துள்ளேன். அதனால்தான் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அப்படி இந்தப் படம் பார்க்கும் அதிர்ஷ்டம் நேர்ந்தால் (நிச்சயம் நிகழும்) இப்படத்தில் நடிகர் திலகம் அவர்களின் பங்களிப்பைப் பற்றி அவசியம் எழுதுகிறேன்.
12. தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக ஸ்லோ மோஷன் காட்சி அறிமுகமானது இந்தப் படத்தில்தான். சாகுந்தலை நாட்டிய நாடகக் காட்சியில் ஸ்லோ மோஷன் காட்சி காண்பிக்கப் பட்டதாம். பிரபல இயக்குனர் சாந்தாராம், அவருடைய ராஜ்கமல் கலாமந்திர் சார்பாக ஸ்லோ மோஷன் காட்சிகளுக்காகவே வெளிநாட்டிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்ட சிறப்புக் காமிரா தான் இந்த இரு படங்களுக்காக வாடகைக்கு வாங்கப்பட்டு உபயோகிக்கப் படுத்தப்பட்டதாம். (நன்றி: தி இந்து)
13. இயற்கை சூழல்கள் அதிகம் தேவைப்பட்ட இந்த படங்களுக்கு மொத்தம் நான்கு ஆர்ட் டைரக்டர்கள் பணி புரிந்தனராம். (T.V.S.ஷர்மா, வாலி, தோட்டா வெங்கடேஸ்வரா, ஏ.கே சேகர் என்ற 4 ஆர்ட் டைரக்டர்கள்). இயற்கை எழில் சார்ந்த மலைப் பிரதேசங்களிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
13. பிரபல ஒளிப்பதிவாளர் கமால் கோஷ் அவர்களின் உதவியாளராக இருந்தவர்தான் பிரபல ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் அவர்கள். இவரிடம் தான் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள் நடிகர் திலகத்தின் கண்களைப் பார்த்து இவர் மிகச் சிறந்த நடிகராக வருவார் என தீர்க்கதரிசனமாக கணித்தாராம்
14. தன்னை முதன் முதல் ஆதரித்து வாய்ப்பு கொடுத்ததால் அஞ்சலி தேவி அவர்களை சிவாஜி அவர்கள் 'பாஸ்... பாஸ்' என்று தான் அழைப்பார். அவ்வளவு நன்றிப் பற்று நடிகர் திலகத்திடம் இருந்தது.
15. இந்தப் படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதுதான் சிவாஜி அவர்களின் திருமணமும் நடந்தது. ஒரு ஆறு மாத காலம் படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டு அஞ்சலிதேவி சிவாஜி அவர்களை திருமணத்திற்கு அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து வரும் போது சிவாஜி நன்றாக சதை போட்டிருந்தார். அதற்கு நாகேஸ்வரராவ் "என்ன சிவாஜி! மாமனார் வீட்டு சாப்பாடு பலமா! நல்லா சதை போட்டுட்டு வந்துட்டியே" என்று ஜோக் அடித்து சிரித்தாராம். அது முதற்கொண்டு சிவாஜி அவர்களின் குடும்பத்தாரோடு நெருக்கமாக இருந்து இருந்திருக்கிறார் அஞ்சலிதேவி.
16. நாகேஸ்வரராவ் இடைவேளை வரை இளவயது சந்த்ரமாகவும், இடைவேளைக்குப் பிறகு நடிகர் திலகத்துத் தந்தையாக வயதான தோற்றத்திலும் முதன் முதலாக நடித்தார். அப்போது அவரும் இளைஞர்தான். நாகேஸ்வரராவ் தந்தையாகவும், நடிகர் திலகம் மகனாகவும் நடிக்க நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா! இன்னொரு கொசுறு செய்தி என்னவென்றால் இதே நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனனுடன் நடிகர் திலகம் 'அக்னி புத்ருடு' என்ற தெலுங்குப் படத்தில் கை கோர்த்தார். அதனால் அப்பா, பிள்ளை இருவருடனும் நடித்த பெருமைக்குரியவராகிறார் நடிகர் திலகம்.
17. வயதான கெட்-அப்பில் நாகேஸ்வரராவ் அவர்களை போட்டோ செக்ஷனுக்காக புகைப்படம் எடுக்கும் போது குளோஸ்-அப் ஷாட்ஸ் சரிவரவில்லை. இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. மிகவும் இரக்கப்பட்டு பார்க்க வேண்டிய வயதான வேடம் ஆகையால் பல தடவை நாகேஸ்வரராவை மேக்-அப் மாற்றி மாற்றி திருப்தி வரும் வரை புகைப்படம் எடுத்தார் இயக்குனர் எல்வி.பிரசாத். நாகேஸ்வரராவும் மிக்க பொறுமையுடன் ஒத்துழைத்தார்.
http://www.iqlikmovies.com/modules/artist/dataimages/L.V%20Prasad_0476A8-09DF90.jpg
18. 'நடிகர் திலகம்' அவர்கள் நாடகங்களில் நடித்து விட்டு பின் திரைப்படங்களுக்கு வந்தவர் ஆதலால் வந்த புதிதில் நாடகங்களில் உரக்க பேசுவது, எமோஷன் காட்சிகளில் நடிப்பது போன்றே இப்படங்களில் அவர் நடிக்க, இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்கள் "தம்பி...நாடகங்களில் காட்ட வேண்டிய அதிகப்படியான முக பாவங்கள், சத்தமான உச்சரிப்புக்கள் சினிமாவுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. நீ சினிமாவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்தால் போதும்" என்று நாடகங்களுக்கும், சினிமாவுக்கும் நடிப்பில் உள்ள வித்தியாசங்களை புரியவைத்து, ஒரு குரு போல நடிகர் திலகத்திற்கு சினிமா பற்றிய நடிப்பிலக்கணங்களை பற்றி சொல்லிக் கொடுத்தாராம். நடிகர் திலகமும் கற்பூரம் போல 'டக்'கென அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு, சினிமாவுக்கேற்றமாதிரி பிரமாதமாக நடித்து இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்களிடமே அதிகப் பட்சமான பாராட்டுக்களைப் பெற்றாராம். தொழிலை சரியாகக் கற்றுக் கொடுத்ததனால் 'நடிகர் திலகம்' திரு. எல்.வி.பிரசாத் அவர்களை கடைசி வரை மறக்காமல் "சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்து என்னை சினிமா நடிகனாக்கிய செதுக்கிய குரு" என்று குருபக்தியோடு குறிப்பிடுவதுண்டு.
இந்த இரு படங்களைப் பற்றி என்னால் இயன்றவரை திரட்டிய தகவல்களை அளித்துள்ளேன். இப்படங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
'பூங்கோதை' திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் டி.பி.ராமச்சந்தின் பாடிய அற்புதமான பாடல் ஒன்று மிகவும் புகழ் பெற்றதாகும்.
'நான் ஏன் வரவேண்டும் ஏதுக்காகவோ
யாரைக் காண்பதற்கோ
வான் நட்சத்திரம் முன் குயிலழைத்தாலும்
வையகம் தனிலே வருமோ
வலை கண்டும் மான் வீழ்ந்திடுமோ'
https://youtu.be/5dMdoM1PhRs
இந்தப் பாடல் 1951ல் வெளிவந்த 'Jadoo' இந்திப் படத்தில் ஒலித்த 'Lo Pyar Ki Ho Gai' பாடலின் தழுவலாகும். இந்தியில் இசை நவ்ஷாத்.
https://youtu.be/vRTYEcnEY0w
vasudevan31355
14th November 2015, 09:29 AM
மழை, புயலில் அதிகம் பாதிக்கப்பட்டு நெய்வேலியில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. 5 நாட்களாக மின்சாரம், இணைய இணைப்பு, கேபிள் எதுவும் இல்லை. நேற்று ஓரளவு நிலைமை சீராகி இன்று மறுபடியும் மழை பிய்த்து உதற ஆரம்பித்து விட்டது. இணைய இணைப்பு கிடைத்த நேரத்தில் 'பூங்கோதை' பதிவை இட்டுவிட்டேன்.
மதுண்ணா, ஜி, சின்னா, வாசு சார், ராஜ்ராஜ் சார், வினோத் சார், ராகவேந்திரன் சார், ரவி சார், ராகதேவன் சார், கோபு சார், பாலா சார், கிருஷ்ணா சார் மற்றும் அனைத்து நண்பர்களும் நலம்தானே!
சின்னா!
எங்கே காணோம்? மதுர கானங்கள் மயங்கி நின்று விட்டதே!
ஜி!
தங்கள் பி.எம் இன்றுதான் பார்க்க முடிந்தது. ரொம்பவும் மிஸ் பண்ணி விட்டேன். இசைத் தாய்க்கு என் மகிழ்வான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
மதுண்ணா!
எப்படி இருக்கிறீர்கள்? உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்.
vasudevan31355
14th November 2015, 10:54 AM
இன்று 'குழந்தைகள் தினம்' முன்னிட்டு நான் முன்னம் அளித்திருந்த, தலைவர் விஞ்ஞானி வேடத்தில் அசத்தியிருந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' பட ஆய்வின் மீள்பதிவு.
http://www.koodal.com/contents_koodal/women/images/2012/Republic%20Day-jpg-1193.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி
நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.
கதை: தாதாமிராசி
வசனம்: விந்தன்
பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்
இசை: டி .ஜி.லிங்கப்பா.
ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.
ஒளிப்பதிவு: M .கர்ணன்.
ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zps7e39311e.jpg
இந்த 'குழந்தைகள் தின'த்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.
B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், ('குழந்தைகள் கண்ட குடியரசு') கன்னடம், ('மக்கள ராஜ்யா' 1960) தெலுங்கு, ('பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்' 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.
மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும், தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபகசக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.
சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் 'நடிகர் திலகம்' சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg
தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடுவகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-5_zps652fe1e0.jpg
வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).
இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல... நம்மையும் மிரள வைக்கிறதே... எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg
"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.
வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் 'நடிகர் திலகம்' என்கிறீர்களா!)
மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.
அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்
"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zps38ae55d5.jpg
பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.
கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.
என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.
இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)
அன்புடன்,
வாசுதேவன்.
Russellxor
14th November 2015, 12:53 PM
வாசு சார்
பரதேசி-பூங்கோதை அபூர்வ தகவல்கள்
நடிகர்திலகத்திற்கு தந்தை நாகேஸ்வரராவ் என்பதும்,முதல்ஸ்லோமோஷன் படப்பிடிப்பு போன்ற தகவல்களும்
(பல பத்திரிக்கைககள் ,ரசிகர்கள் உட்பட வசந்தமாளிகை தான் முதல் ஸ்லோமோஷன் படப்பிடிப்பு என்று கூற அறிந்திருக்கிறேன்) அருமையானவை.
இது வியக்கத்தகக்க தகவல்தான்.
குழந்தைகள் கண்ட குடியரசு மீள்பதிவு பிரமாதம்.படத்தின் திரைக்கதையில் கூட இவ்வளவு விவரங்கள் எழுதப்பட்டிருக்காது.
உங்கள் பாஷையிலேயே சொல்வதென்றால் "செம தூள்".
madhu
14th November 2015, 02:35 PM
வாசுஜி..
குழந்தைகள் கண்ட குடியரசு பற்றி கேள்விப்பட்டதுடன் சரி.. சில காலத்துக்கு முன்புதான் சில பாடல் காட்சிகளை யூடியூபில் பார்த்தேன். மற்றபடி ந.தி. கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது மட்டுமே அறிந்த விஷயம். இப்போது 70mm ஸ்கிரீனில் மொத்தப் படத்தையும் பார்த்து முடித்த உணர்வு. அதிலும் ந.தி காட்சிகளை ஸ்லோ மோஷனில் நிதானமாக ரசித்த ஃபீலிங்.... என்ன சொல்வேன்.. ?
அதிரடி... சரவெடி... என்றெல்லாம் சொல்வது இந்தப் பதிவைக் குறித்துதான்..
chinnakkannan
14th November 2015, 08:19 PM
வாசுஜி.. மழை எல்லாம் நின்று விட்டதா..இன்னும் இரு தினங்கள் இருக்குமாமே..குழந்தைகள் கண்ட குடியரசு வெகு ஜோரான பதிவு.. நான் கேள்விப் பட்டதில்லை. ந.தியின் ரோலின் விளக்கம் காட்சியின் வர்ணனை ஓஹோ. வெரி நைஸ் வாஸ்ஸூ.. தாங்க்ஸ்..
chinnakkannan
14th November 2015, 08:37 PM
மழை யெல்லாம் நின்னு கரெண்ட் வரவழைக்க என்ன பண்ணலாம்..\
விஜயகுமாரி பாட் போட்டுடலாம்..கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்..இந்த ஆனந்தி படத்துலயே இன்னொரு பாட் குளிரெடுக்குது குளிரெடுக்குது கூட வரட்டுமா..டிஎம்மெஸ் எல் ஆர் ஈன்னு நினைக்கறேன்..பட் அது நிறைய பாடல்களோட இருக்கு..
https://youtu.be/wAqfNj0aBmM
chinnakkannan
14th November 2015, 08:47 PM
சேற்றில் ஒரு செங்கழுநீர் திங்கள் நூறு பூ மலரும்... சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்கும் பாடல்..இன்று தான் பார்க்கிறேன்...ம்ஹூஹூம். ஹீரோயின் புதுவெள்ளம் மஞ்சுளா இல்லை..ஒரு வேளை சுபாவின் தங்கையோ..ம்ம் யாருக்குத் தெரியும்..பாட்கேக்கலாம்..
https://youtu.be/9wt7jpwinEw
chinnakkannan
14th November 2015, 09:39 PM
செந்தில் நடிச்ச முதல் படம் ஒரு கோவில் இரு தீபங்கள். ம்ம் ஆனா இந்தப் படத்தைப் பத்தி வேற தகவல்லாம் இல்லை ஒரே ஒரு பாட்..முத்துமுத்துப் புன்னகையோ முக்கனித்தோட்டம் உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்னு ஒரு பாட்..பரவாயில்லாத பாடல்.. பட் ஹீரோயின் யாருன்னு தெரியலையே..
https://youtu.be/2Jy8bmAO6YI?list=PL4SxysG_X0Wm-AlpRZL5QsJ3M37XN7STO
rajraj
15th November 2015, 07:29 AM
From IndraNi(1994)
thoda thoda malarndhadhenna........
http://www.youtube.com/watch?v=CgkSNkZhxCQ
From the Hindi dubbed version Priyanka(1994)
ThOdaa thOdaa pyaar ho gaya.......
http://www.youtube.com/watch?v=wzLPNXPP5wk
In a recent Super Singer show SPB had this to say: "I pleaded with Hariharan to let me sing this song in the Hindi version." Hariharan was supposed to sing this song. But yielded to SPB.
Here is the Hariharan version:
http://www.youtube.com/watch?v=RvB3R_e3BYI
RAGHAVENDRA
15th November 2015, 08:39 AM
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/da/Mr._KS._Gopala_Krishnan.JPG/800px-Mr._KS._Gopala_Krishnan.JPG
இயக்குநர் திலகம் என்று மக்களால் போற்றப்பட்ட திரு கே.எஸ்.ஜி. அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். வசனங்களால் புகழ் பெற்றவர் திரு கே.எஸ்.ஜி. சினிமா என்பது விஷுவல் மீடியாவாக 70களின் பிற்பகுதியில் புதிய பரிமாணம் பெறும் வரை வசனத்தின் முக்கியத்துவம் மற்றவற்றை விட சற்று அதிகமாகவே இருந்த காலத்தில், அவருடைய பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது. பக்கம் பக்கமாக வசனம் எழுதினாலும் அதிலும் பல்வேறு கருத்துக்களை புகுத்தியிருப்பார் கே.எஸ்.ஜி.
அவருடைய படங்களில் பெரும்பாலும் சம்பத் அவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பார். ஆனால் இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் தனக்கேற்ப, தன் மனதிற்குத் திருப்தியளிக்கும் வரையில் விடாத அளவிற்கு இசை ஞானம் கொண்டவராயிருந்ததால் அவர் படங்களில் பாடல்கள் ஹிட்டானது மட்டுமின்றி இன்றும் கேட்கும் வகையில் மன நிறைவைத் தருகின்றன.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய படப்பாடல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே.
மெல்லிசை மன்னரின் இசையில் கே.எஸ்.ஜி.யின் உயிரா மானமா படத்திலிருந்து அருமையான பாடல்.
https://www.youtube.com/watch?v=sltxkZQvcfU
vasudevan31355
15th November 2015, 08:43 AM
இயக்குனர் கே.எஸ்.ஜி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
http://2.bp.blogspot.com/-fgbq1K_lx4s/ThL-LjqOn6I/AAAAAAAAAAU/kqPQgwGtqJo/s1600/Image0018.JPG
http://3.bp.blogspot.com/-M9KklSCzuvo/ThL-Z_buc7I/AAAAAAAAAAc/K0QKhDc3dbY/s1600/maxi...10++.....JPG
vasudevan31355
15th November 2015, 08:47 AM
நன்றி: அன்று கண்ட முகம் வோர்ட் பிரஸ்.காம்.
https://antrukandamugam.files.wordpress.com/2015/01/ks-gopalakrishnan-chithi-1966.jpg?w=496&h=354
” இயக்குநர் திலகம் ” கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
நாடகத் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின்னர் கதை-வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும், ஸ்டூடியோ அதிபராகவும் உயர்ந்தார். இவரது திரையுலகப் பிரவேசத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர்.
” இயக்குநர் திலகம் ” என்ற பட்டம் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டை ஆகும். தந்தை சீனுவாச நாயுடு. தாயார் விஜயத்தம்மாள். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார்.
அதனால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது 10-ஆவது வயதிலேயே நவாப் ராஜமாணிக்கத்தின் ‘மதுரை தேவி பால வினோத சங்கீத சபா’ நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு நடிப்பு, இசை, நடனம், தமிழ், இந்தி மொழிகள் கற்றுத்தேர்ந்தார்.
பின்னர் அந்த நாடகக்குழுவிலிருந்து வெளியேறி தேவி நாடக சபையில் சேர்ந்தார். அங்கு கதை, கவிதை எழுத ஆரம்பித்ததுடன் ‘எழுத்தாளர்’, ‘தம்பி’, ‘தபால்காரன்’ ஆகிய நாடகங்களை எழுதினார். அவை சக்தி நாடக சபா, தேவி நாடக சபாக்களில் அரங்கேறின.
1954-இல் ஸ்ரீதரின் உதவியாளராக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சேர்ந்தார். மாதர்குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி போன்ற படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரான போது தமிழ்ப் படத்திற்கு வசனங்களைச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
இவரைக் கைதூக்கி விட்டவர்களில் முதல் நபர் இயக்குநர் ஸ்ரீதர்.
தொடர்ந்து கவிதையில் நாட்டம் கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘லட்சாதிபதி’, ‘அமரதீபம்’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களுக்கு சில பாடல்களை எழுதினார்.
இந்த நிலையில் நாடக நடிகர் [பின்னர் திரைப்படங்களில் நடித்தவர்] நம்பிராஜன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை சந்தித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி வைத்திருந்த “தெய்வப்பிறவி” கதையைப் படமாக்க திட்டம் உருவாகியிருப்பதாகவும் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
கமால் பிரதர்ஸாரும் ஏவி.எம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டனர். இப்படத்திற்கான வசனத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதினார். 1960-ஆம் ஆண்டு வெளியான “தெய்வப்பிறவி” வெற்றிப்படமாகியது. இப்படத்திற்கு அகில இந்திய அளவில் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். அவற்றில் மிகப்பெரிய வெற்றிப்படம் “படிக்காத மேதை”. 1960-இல் வெளிவந்தது இப்படம். படத்தின் வெற்றிக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, வசனம் பெரிதும் உதவியாக இருந்தது. தொடர்ந்து ‘கைராசி’, ‘எல்லாம் உனக்காக’, ‘அன்னை’, ‘குமுதம்’, என்று பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி முத்திரை பதித்தார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘சாரதா’ கதை புரட்சிகரமான கதை. அதை நீங்களே இயக்கினால்தான் பிரமாதமான படமாக அமையும் என்று சொன்னார் படத்தயாரிப்பாளர் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். ‘சாரதா’ கதை முற்றிலும் மாறுபட்டது. அதற்குமுன் எந்தப் படத்திலும் இடம்பெறாத புரட்சிகரமான கருத்தினைக் கொண்டது. எந்த இயக்குநருக்கும் சவாலாக அமைந்த கதையிது. கதை-வசனத்தை மிகத் திறமையாக அமைத்து, கவனமாக இயக்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கத்தி மீது நடப்பது போன்ற முயற்சியில் வெற்றியும் பெற்றார். கதாநாயகனாக சேடப்பட்டி, சூரியநாராயணத்தேவர் ராஜேந்திரனும், அவர் மனைவி சாரதாவாக ஆர்.விஜயகுமாரியும் அருமையாக நடித்திருந்தனர். 1962-ஆம் ஆண்டு வெளியான ‘சாரதா’ வெற்றிப்படமானது. இப்படத்திற்குத் தேசிய விருதுக்கான சான்றிதழும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து “சித்ரா புரொடக்சன்ஸ்” என்ற பெயரில் சொந்தத்தில் பட நிறுவனத்தைத் தொடங்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இதன் சார்பாக ‘தெய்வத்தின் தெய்வம்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். இப்படம் சுமாராகத்தான் ஓடியது. அதன்பின் ”கற்பகம்” படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார். இப்படம் மகத்தான வெற்றிப்படமானது. நாடக நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்த ‘தெய்வநாயகி’ என்ற கே.ஆர்.விஜயா ஒரே படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார்.
இந்தப் படத்தின் லாபத்தைக் கொண்டு “ கற்பகம் ஸ்டூடியோ “ வை உருவாக்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இப்படத்தைத் தொடர்ந்து கதை, வசன கர்த்தாகவும் இயக்குநராகவும் கொடிகட்டிப் பறந்தார். பல வெற்றிப்படங்களைத் தயாரித்து இயக்கினார்.
1964-இல் ‘கை கொடுத்த தெய்வம்’ ஒரு மகத்தான படமாகும். இப்படத்திற்கு நடுவண் அரசின் பிராந்திய சிறந்த படத்திற்கான வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
வித்தியாசமான படங்களை இயக்கிவந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஜனரஞ்சகமாக ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டார். அதுதான் “சித்தி”. இப்படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடித்தார். சித்தி கதாபாத்திரத்தில் பத்மினி நடித்தார். எம்.ஆர்.ராதாவின் மூத்த மகனாக நாகேஷும், மகளாக விஜயநிர்மலாவும் தாயாக எம்.எஸ்.சுந்தரிபாயும் கடைக்குட்டி மகளாக பேபி ராணியும், ஜெமினிகணேசன், குலதெய்வம் ராஜகோபால், ரி.எம்.சாமிக்கண்ணு, முத்துராமனும் மிகப் பிரமாதமாக நடித்திருந்தனர். இப்படம் 1966-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.
1967-ஆம் ஆண்டு “கண் கண்ட தெய்வம்” என்ற படத்தை எடுத்தார். எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, பத்மினி, சிவகுமார், நம்பியார், நாகேஷ் போன்ற பலர் நடித்தனர். கே.வி.மகாதேவனின் இனிய இசையில் ரி.எம்.எஸ் பாடிய தென்ன மரத்துல குடியிருப்பது சின்ன பாப்பா, சுசீலாவுடன் இணைந்து பாடிய கண்ணுகுட்டி கண்ணுக்குட்டி காளை கண்ணுக்குட்டி போன்ற பாடல்கள் தேனினும் இனியவை. இப்படமும் வெற்றிப்படமானது. இப்படத்தினை ’பாண்டவலு’ என்ற பெயரில் தெலுங்கில் எஸ்.வி.ரங்காராவ் அவரே தயாரித்து இயக்கியிருந்தார். ஆனால் தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய அளவுக்கு ஜனரஞ்சகமாக இயக்க எஸ்.வி.ரங்காராவால் முடியவில்லை என்பதும் உண்மை. எஸ்.பி.கோதண்டபாணியின் இசையில் ( கே.வி.மகாதேவனின் இசையில் உருவான பாடல்களைப் போல் அல்லாமல் ) பாடல்களும் சோபிக்கவில்லை.
1965-ஆம் ஆண்டு வி.கே.ராமசாமியின் வி.கே.ஆர். பிக்சர்ஸுக்காக ‘செல்வம்’ என்ற படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், லட்சுமி பிரபா நடித்திருந்தனர். இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
1968-ஆம் ஆண்டு “ பணமா பாசமா “ என்ற படத்தைச் சொந்தமாக தயாரித்தார். இதன் கதை-வசனம் இயக்கம் பொறுப்புக்களை அவரே ஏற்றார். இப்படத்தில் ஜெமினிகணேசன், சரோஜாதேவி, எஸ்.வரலக்ஷ்மி, நாகேஷ், விஜயநிர்மலா, ரி.கே.பகவதி, கே.சாரங்கபாணி, கே.கண்ணன் போன்ற பலர் நடித்திருந்தனர். மருமகனை அடக்கி ஆள நினைக்கும் மாமியார் (எஸ்.வரலக்ஷ்மி) கடைசியில் எலந்த பழம் விற்கும் ஒரு பெண்ணை (விஜயநிர்மலா) பெரிய பணக்காரர் என நினைத்து மருமகளாக்கி மூக்கு உடைபடுவதுதான் கதையின் மையம்.
நடுத்தர குடும்பங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சுவைபட சேர்த்து அருமையாக வசனம் எழுதியிருந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். எஸ்.வரலக்ஷ்மியின் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
கே.வி.மஹாதேவனின் இசையமைப்பில் ’எலந்த பயம், எலந்த பயம்’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலும், ‘வாழைத்தண்டு போல உடம்பு அலேக்’ என்ற ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் என்பவை ஜனரஞ்சகமாக அமைந்து மூலை முடுக்கெல்லாம் ஒலித்தன. இப்படம் ரஷியாவிலும் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமூகப் படங்களையே இயக்கிவந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முதலாக 1971-இல் ‘ஆதிபராசக்தி’ என்ற காலத்தால் அழியாத பக்திப் படத்தை இயக்கினார். இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. அதே போல் 1976-ஆம் ஆண்டு ‘தசாவதாரம்’ என்ற மிகப் பிரமாண்டமான படத்தை இயக்கினார்.
இவரது இயக்கத்தில் உயிரா மானமா, பாலாபிஷேகம், குலவிளக்கு, குலமா குணமா, குறத்தி மகன், வந்தாளே மகராசி, ஸ்ரீ காஞ்சி காமாட்சி, அடுக்குமல்லி, நன்றிக்கரங்கள், தேவியின் திருவிளையாடல், நாயக்கரின் மகள், போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.
எதிர்பார்த்து இயக்கிய மாலதி, சுவாதி நட்சத்திரம், பேர் சொல்லும் பிள்ளை, மகரந்தம், தனது மகன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷை கதாநாயகனாக்கி எடுத்த ‘அத்தைமடி மெத்தையடி’ போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. 1992-க்குப் பின்னர் படங்களை இயக்கவில்லை. சில படங்களின் தொடர் தோல்வியினால் நொடிந்து போன கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆன்மீகத்தில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின் மீண்டும் புது வேகம் பெற்று நட்டங்களிலிருந்து மீண்டு எழும்பினார். காலத்தின் சுழற்சியால் இம்மாபெரும் இயக்குநரின் மவுசு குறைந்தது. அதன்பின் ஸ்டூடியோவையும் இதர நிறுவனங்களையும் கவனிக்கத் தொடங்கினார்,
ஏனைய இயக்குநர்களிலிருந்து இவர் மாறுபட்டவர். எப்போதும் எளிமையையே விரும்புபவர் இவர். படப்பிடிப்புத் தளங்களில் கதர் வேட்டி, முண்டா பனியனுடனேயே காணப்படுவார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மொத்தம் 45 படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் 33 படங்கள் இவர் தயாரித்தவை. 8 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
1975-ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும், 1980-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா விருதையும் தமிழக அரசு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கி கௌரவித்தது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு சுலோசனா என்ற மனைவியும் அசோக், ரவி, ராஜ்குமார், சின்னத்துரை ஆகிய நான்குப் புதல்வர்களும் உள்ளனர்.
தினத்தந்தி நாளிதழ்கள் 29.12.2005-30.12.2005 மற்றும் 2.1.2006-லிருந்து எடுக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களின் பட்டியல்:-
சாரதா 1962
தெய்வத்தின் தெய்வம் 1962
கற்பகம் 1963
ஆயிரம் ரூபாய் 1964
கை கொடுத்த தெய்வம் 1964
என்னதான் முடிவு 1965
பேசும் தெய்வம் 1967
கண்கண்ட தெய்வம் 1967
குலமா குணமா 1971
சித்தி 1966
செல்வம் 1966
சின்னஞ்சிறு உலகம் 1966
பணமா பாசமா 1968
உயிரா மானமா 1968
குலவிளக்கு 1969
தபால்காரன் தங்கை 1970
மாலதி 1970
ஆதிபராசக்தி 1971
குறத்தி மகன் 1972
வாழையடி வாழை 1972
நத்தையில் முத்து 1973
வந்தாளே மகராசி 1973
சுவாதி நட்சத்திரம் 1974
உறவுக்குக் கை கொடுப்போம் 1975
வாயில்லா பூச்சி 1976
தசாவதாரம் 1976
பாலாபிஷேகம் 1977
புண்ணியம் செய்தவள் 1977
ரௌடி ராக்கம்மா 1977
உள்ளத்தில் குழந்தையடி 1978
ஸ்ரீ காஞ்சி காமாட்சி 1978
அடுக்குமல்லி 1979
நீர் நிலம் நெருப்பு 1980
நன்றிக்கரங்கள் 1980
மகரந்தம் 1981
நாயக்கரின் மகள் 1982
தேவியின் திருவிளையாடல் 1982
யுகதர்மம் 1983
படிக்காத பண்ணையார் 1985
எரிமலை 1985
மகாசக்தி மாரியம்மன் 1986
பார்த்தால் பசு 1988
அத்தைமடி மெத்தையடி 1989
எனக்கு ஒரு நீதி 1990
காவியத்தலைவன் 1992
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது 86-ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு 14.11.2015 அன்று மாலை 6.30 மணியளவில் காலமானார்.
rajeshkrv
15th November 2015, 10:04 AM
ஜி
வணக்கம், பரவாயில்லை மழையின் காரணமாக எளிமையான கொண்டாட்டம் தான்
சென்னையில் புயல் ஓய மாட்டேங்குது
chinnakkannan
15th November 2015, 10:08 AM
இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
நாயக்கரின் மகள்- திடுதெப்பென்று வந்த நல்ல படம்..பாடல்கள் நல்ல பாட் இருப்பதாக நினைவில்லை..ஆனால் அந்த கால கட்டத்தில் மதுரை சக்தியில் ரிலீஸ் என நினைவு.. நீள நீள வசனங்கள் இருப்பினும் கொஞ்சம் சுவையாகவே இருந்தது..ஜெ.சித் திற்கு ரொம்ப உணர்ச்சிவசப் படக் கூடிய ரோல் ..சமாளித்திருப்பார்..விஜயகுமார் அழகானவாலிபர்.. மே.சு. மன்னர் என..
ஆதிப்ராசக்தி கே.எஸ்.ஜியா..தசாவதாரமுமா..பாலாபிசேகம் சினிப்ரியாவில் சக்கை போடு போட்டு பார்க்க இயலாமல் சாந்தியில் வந்தபிறகு பார்த்த நினைவு..பாட்டு சுருளி காமெடி ஹிட்..
கை கொடுத்த தெய்வம் பேசும் தெய்வம் குலமா குணமா மறக்க முடியாது.. தபால் காரன் தங்கை, குலவிளக்கு பார்த்ததில்லை.. நத்தையில் முத்து ஸ்ரீதேவியில் ரிலீஸ் என நினைக்கிறேன்..
கற்பகம் ரீ ரன்னில் ஸ்ரீதேவியில் பார்த்த நினைவு..ம்ம் அப்புறம் வருகிறேன்..
vasudevan31355
15th November 2015, 10:58 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
49
'உத்தரவின்றி உள்ளே வா'
'மாதமோ ஆவணி'
https://i.ytimg.com/vi/qWj1JSmI2gw/hqdefault.jpg
http://padamhosting.me/out.php/i70626_vlcsnap2011040612h22m26s63.pnghttp://padamhosting.me/out.php/i70622_vlcsnap2011040612h23m07s219.png
'உத்தரவின்றி உள்ளே வா' ஒரு எனர்ஜி டானிக். பார்க்க ஆரம்பித்தவுடன் உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விடும். ரொம்ப விழுந்து விழுந்து சிரிக்க வைக்காவிட்டாலும் கிச்சு கிச்சுகளுக்கு குறைவில்லை. பாடல் ஆய்விற்கு முன் உங்கள் உத்தரவில்லாமல் அதிலிருந்து சில 'ஜோக்ஸ்'களை கொடுக்கறேன். சிரிப்பதும், சிரிக்காமலிருப்பதும் உங்கள் பாடு.
தன்னை குண்டு என்று கிண்டல் செய்யும் நாகேஷிடம் மாலி கடுப்புடன் சொல்வது.
"பெரிய மன்மதக் குஞ்சு...எடை போட்டா ஒன்னரை கிலோ இருக்க மாட்டான்... இவன் பேசறான்"
ரூப் கார்டென் போய் சாப்பிட ப்ளான் போடும் நண்பர்களிடம் 'உடம்பு சரியில்ல...முதுகுவலி அதனால் வரும்போது 12 இட்லி, 7 தோசை பார்சல் புடிச்சிட்டு வந்திடுங்க' என்று மாலி நழுவ, 'ஏண்டா உடம்பு சரியில்லாத போதே ஒரு டஜன் இட்லியா? என்று மூர்த்தி காய, அதற்கு நாகேஷ் மூர்த்தியிடம் 'அறிவு கெட்டவனே! முதுகுதானே வலிக்குதுன்னான்..வயித்துலையா வலி? புடிச்சுட்டு வரணும்...அது என்ன அல்சேஷனா?
வீரராகவன்: என்னைச் சுத்தி சின்ன வயசுல 7,8 பேர் இருந்துகிட்டே இருப்பாங்க.
நாகேஷ்: அப்பிடி இருந்தும் சொத்து இருக்கு உங்களுக்கு.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/t.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/t.jpg.html)
'மாந்தோப்பில் நான் இவரை சந்திப்பேன்... மஞ்சள் வெயில் மாலையிலே என் மன்னன் வருவான்' என பூர்வ ஜென்மக் கதையை ரமா நாகேஷை வைத்துக் கொண்டு சொல்ல, எல்லாவற்றையும் குறிப்பெடுக்கும் சச்சுவிடம் 'டாக்டர்' தேங்காய் சொல்வது. 'அப்போ அந்தக் காலத்துல வெயில் மஞ்சளா அடிச்சுது...அத நீ நோட் பண்ணிக்கோ'.
ரமாபிரபா நாகேஷை ஆரம்பத்தில் சந்தித்து வீட்டில்,
'நீங்கள் என் நாதன்
நான் உங்கள் நாதி'
ரமா: உங்களுக்கு எப்போதும் தனிமைதானே பிடிக்கும்?
நாகேஷ்: இப்போ பைத்தியமே புடிக்கும் போல இருக்கு
ரமா: சீதைக்கு ராமன் இருக்கும் இடம்தானே அயோத்தி?
நாகேஷ்: அது சீதைக்கு...ஆண்டாளுக்கு ஏன் அயோத்தி? ஸ்ரீவில்லிபுத்தூர் போறது.
ரமா: நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை சந்தித்த காரணத்தால்.....
நாகேஷ்: வயசாயிடுச்சுங்கிறியா?
மாலி: நேத்து ராத்திரி ரவியும், ஜானகியும் இந்துஸ்தானி ராகத்தில ஒரு பர்ஸ்ட் கிளாஸ் பாட்டு பாடிகிட்டு இருந்தாங்களே! நான் பார்த்தேன்.
மூர்த்தி: உன் காலம் வேடிக்கை பார்த்தே முடியப் போகுது.
http://padamhosting.me/out.php/i84187_uiuv7.pnghttp://padamhosting.me/out.php/i84192_uiuv2.png
ஐஸ் புரூட் விற்பவனிடம் சென்று, அங்கு ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து அவர் கையில் வைத்து சாப்பிடும் ஐஸ் போலவே தனக்கும் வேண்டும் என்ற அர்த்தத்தில் கைநீட்டி 'அது வேண்டும்' என்று ரமாபிரபா நாகேஷிடம் கேட்க, நாகேஷ் சொல்வது.
'அது வேண்டாம்...எச்சி(ல்)'
'உட்லண்ட்ஸ் டிரைவ் இன்'-ல் சர்வர் 'என்ன வேணும்?' எனக் கேட்க,
ரமா,
'ஒரு தட்டில் நான்கு அதிரசங்கள்...இன்னொரு தட்டில் தேனும் தினை மாவும் கொணர்க'
நாகேஷ் சர்வரிடம் சமாளிப்பு.
'ஒண்ணுமில்ல. அவ வித்வான் கோர்ஸ் படிக்கிறா'.
சச்சு: எங்க டாக்டருக்கு தன் திறமையைவிட ஆண்டவன் மேலதான் நம்பிக்கை ஜாஸ்தி.
தேங்காய்: (சுந்தரிபாயிடம்) இது ரொம்ப பேருக்கு புரிய மாட்டேன்னுதுங்க.:)
தேங்காய்: மேதையெல்லாம் எப்பவும் கிறுக்கனாத்தான்யா இருப்பாங்க.
நாகேஷ்: அப்ப நான் மேதையா?
தேங்காய்: அவன் பேர் ஹொலண்ட் விஸ்கி. 60 வயசு கெழவன்.
நாகேஷ்: 60 வயசுலதான் கெழவன். இருபது வயசுல வாலிபன்.
தேங்காய் மேலை நாட்டு பூர்வ ஜென்மக் கதை சொல்லும்போது,
'துரத்தி துரத்தி துரத்தி 'அனாஸின்' ஹைரோட்ல அவளைப் புடிச்சான்...
'ஸாரிடான்' காட்டுல இருக்குற பழைய பங்களாவுக்கு கூட்டிட்டு போயி.....
http://i63.tinypic.com/r91kxt.jpg
சரி! பாடலுக்கு வந்து விடுவோம். இந்தப் பாடலின் புகழைப் பற்றி பெருமையைப் பற்றி என்ன எழுத!
தமிழ்ப் பாடல்களின் சிறந்த டூயட்களை எடுத்துக் கொண்டால் அதில் முதல் பத்தில் நிச்சயம் இடம் பெறக் கூடிய தகுதியைக் கொண்டது இந்தப் பாடல். சுவையான சுகமான வரிகள் மிக எளிமையுடன். சாதாரண வார்த்தைகளிலேயே காவிய ரசனையை காதல் பாடலில் வடித்துத் தந்திருப்பார் கவிஞர். இது சாதாரண விஷயமல்ல.
தன்னிடம் ஆதரவு கேட்டு வந்த நங்கையிடம் காதல் கொண்டு நால்வர் போட்டியில் வெற்றி வாகை சூடும் நாயகன் அவன் 'என்றோ ஒருநாள் எண்ணிய எண்ணம்' இலை விட்டு, கனி விட்டு, இப்போது பிடிபட்டுவிட்டதை சில வேறு அர்த்தங்களில் இருவரின் எண்ணங்களாக கவிஞர் பாங்குடன் பண்பு கெடாமல் வர்ணிக்கும் அழகுதான் என்ன!
ஏக்கத்திலேயே நிறைந்திருந்தவனுக்கு இந்த ஆவணி மாதத்தில் மாங்கனி மங்கையாய் அவன் அருகில் மயக்க, அவனை தன் இடையும், இதழும் தொட வைத்து அவனுடைய ஏக்கத்தைப் போக்கிய காதலியின் கரிசனம்தான் என்ன!
அவளுக்கு வாழ்வுக் கொடை தந்த வள்ளல் சும்மா ஒன்றும் தரவில்லையே! அவளை மெல்லக் குறிவைத்து, அவள் கூடவே வந்து, அவளையே கொடையாக திரும்பப் பெற்றுக் கொண்ட காதலனின் கொடைப் பரிமாற்றம்தான் என்ன!
மஞ்சள் நிறத்திலான மங்கையின் கன்னம் நாணத்தால் வண்ணம் மாறி சிவந்து போனது சிந்திக்க வைக்கிறது.
என்ன அழகான எண்ணங்கள்! எதிர்பார்ப்புகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்ற தர்க்கங்கள் இல்லாத தருணங்கள்.
பாடலை பக்குவமாய் கவிஞர் உருவாக்கித் தந்து விட்டாலும் அதைப் படமாக்கும் முறைதான் கடினமானது. அதை கொஞ்சமும் கெடாமல் நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாக இந்தப் பாடல் மடமாக்கப்பட்டது சிறப்பு. அதற்கேற்ற மாதிரி ரவி, காஞ்சனா ஜோடி அமைந்தது இன்னும் சிறப்பு. பாடலை பால்கோவாவாய் இனிக்கச் செய்த 'மெல்லிசை மன்னரி'ன் இசை அதைவிடச் சிறப்பு. இவர்களுக்கு மிக மிக பொருத்தமாக பாலாவும், சுசீலா அம்மாவும் குரல் தந்து எல்லாவற்றையும் விட சிறப்பு.
காதல் பாடல் என்பதால் பகட்டான உடைகள், நகைகள், அளவுக்கதிகமான மேக்-அப் என்பதெல்லாம் இல்லாமல், (இத்தனைக்கும் வண்ணப் படமாக ஜொலித்தும் கூட) ஆடம்பர அமர்க்களங்கள் இல்லாமல் அளவோடு அருமையாக எடுக்கப்பட்டிருக்கும்.
கழுத்து வரை பட்டன் அணிந்த சிகப்பு செக்டு ஷர்ட் பணக்கார ரவியின் தோரணை, அடைக்கலம் நாடி வந்த காஞ்சனாவின் வெகு சிம்பிளான வெளிர் நீல சேலையுடை, (கழுத்தில் கூட ஏழை அபலை என்பதால் சாதாரண இரண்டு ரூபாய் மணி போட்டிருப்பார். அதே போல சிம்பிளாக மல்லிகைப் பூ)
இரவு நேரம். அவுட்டோர் என்றெல்லாம் வருத்திக் கொள்ளாமல் வீட்டு செட்டின் தோட்டப் பின்னணி என்று எல்லாமே எளிமைதான்.
ஒளிந்திருந்து இவர்களின் காதலைப் பொறாமையுடன் பார்க்கும் மற்ற மூன்று நண்பர்களும் சிரிக்க வைப்பார்கள். ('அடேய்! இந்தக் கண்றாவியெல்லாம் நாம பாக்கணுமா?')
பாலா இந்தப் படத்தின் பாடல்கள் மூலம் இன்னும் எட்ட முடியாத உயரத்திற்குப் போய்விட்டார். இளவட்டங்களுக்கு இனி இவர் குரல்தான் என்றானது. சுசீலாவின் இணை வெகு பொருத்தமாய் பாலாவுக்கு அமைந்து அவரது புகழுக்கும் வெற்றிக்கும் மென்மேலும் வழி வகுத்தது. .
'நாளிலே நல்ல நாள்' என்று இழுத்துப் பாடியபடி பாடும் 'நாயகன் பாலா' வென்ற படம். சுசீலா, பாலா முதல் சரணம் முன் கலக்கி எடுக்கும் அந்த,
'டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டர டண்ட டாண்டர டண்டடா'....
'டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டட டண்ட டாண்டட டட்டடா'
ஹம்மிங் சுவையின் உச்சம். பெரும்பாலும் வானொலிகளில் ஒலிப்பதில்லை.
அது போலவே பாலா, சுசீலா தனித்தனியே உச்சரிக்கும்,
'தன்னன தன்னன தன்னன தன்னனனா'
கொள்ளையோ கொள்ளை கொள்ளும் நம் மனதை. பாடிப் பார்ப்பதும் சுலபமே. நாயகன் பாலா 'பொன்மணி'. நாயகி சுசீலா 'பைங்கிளி'. என்ன ஒரு பொருத்தம்!
'மெல்லிசை மன்னர்' உச்சி முதல் பாதம் வரை உணர்வுகளை பெருக்கெடுத்து ஓட வைக்கும் இன்ப சங்கதிகளை அள்ளி அள்ளி வழங்கியிருப்பார். 'அருமையாய் இருக்கிறது' என்று ஒரு வார்த்தையில் பொத்தம் பொதுவாக சொல்லிவிட இயலாது. அனுபவித்து ஆழ்ந்து ரசித்தால் சங்கீத சங்கதிகள் சப்த நாடிகளிலும் ஊடுருவி மெய் சிலிர்க்க வைக்கும். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று. பாடலின் துவக்க இசை. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத இசைப் பிராவகம் அது.
'மாதமோ' என்று முடித்தவுடன் பின்னணியில் ஒலிக்கும் 'டொக் டொக் டொக்' என்று ஒலிக்கும் மிக மிக எளிமையான தாள ஓசை இந்தப் பாடலை எங்கேயோ கொண்டு போய் விடும். (ரவிச்சந்திரன் கையில் பிடித்து படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை அலட்சியமாக பின்புறம் தூக்கிப் போட்டுவிட்டு ரொம்ப அழகாக காஞ்சனா அருகில் நடந்து வருவார்)
பல்லவி முடிந்து முதல் சரணம் தொடங்குமுன் ஆரம்பிக்கும் இசைக்கு மிக அழகாக ரவியும், காஞ்சனாவும் கால்களால் ஸ்டெப்ஸ் வைத்து எதிர்த் திசையில் அருகருகே அழகாக ஒருவருக்கொருவர் சுழன்று திரும்புவார்கள். ரொம்ப அருமையாக இருக்கும். காஞ்சனாவின் பெண்மைக்கே உரித்தான நாணமும், நடையும், வளைந்து மடியும் இடை வளைவுகளும், ஓடல்களும், ஊடல்களும், கூடல்களும், தேடல்களும், அவர் சினிமா கதாநாயகி என்பதையே மறக்க வைத்து அவர் நம் தெருவில் உலவும் சாதாரணப் பெண்தான் என்ற எண்ணத்தை நமக்கு உருவாக்கி விடுகின்றன. அனைவருக்கும் பிடித்த நளின நாயகியல்லவோ இந்த கடைந்தெடுத்த பொற்சிலை!
எத்தனை காலங்கள் ஆனாலும் அத்தனையையும் வென்று தனித்து நின்று ராஜாங்கம் நடத்தும் ரசனைக்குரிய பாடல்.
http://padamhosting.me/out.php/i84188_uiuv6.pnghttp://padamhosting.me/out.php/i84189_uiuv5.png
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
நாளிலே ஒன்றுதான்
நாணமும் இன்று தான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி
டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டர டண்ட டாண்டர டண்டடா
டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டட டண்ட டாண்டட டட்டடா
என்றோ ஒருநாள் எண்ணிய எண்ணம்
இலைவிட்டதென்ன
கனிவிட்டதென்ன
பிடிபட்டதென்ன
தன்னன தன்னன தன்னன தன்னனனா
இதழ் தொட்ட போதும்
இடை தொட்ட போதும்
இதழ் தொட்ட போதும்
இடை தொட்ட போதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன
ஏக்கம் தீர்ந்ததென்ன
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம்
சிவந்தது என்ன
பிறந்தது என்ன
நடந்தது என்ன
தன்னன தன்னன தன்னன தன்னனனா
கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன கூட வந்ததென்ன
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
நாளிலே ஒன்றுதான்
நாணமும் இன்று தான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி
லால்லலா லால்லலா
லால்லலா லால்லலா
https://youtu.be/OvDlKI1HB9w
பாலாவும், சுசீலாவும் நேரிடையாக களத்தில் இறங்கி இதே பாடலைப் பாடி அசத்துவதையும் பர்ர்த்து மகிழுங்கள். ஆனால் ஒரிஜினல் போல் இராது.
https://youtu.be/sBnG0I_KGiQ
chinnakkannan
15th November 2015, 11:55 AM
என்னவென்று சொல்வது வாஸ்ஸு.. வழக்கம் போல சூப்பர்.. உ.இ உ வா மறுபடி பார்க்க ஆவல் கொள்ள வைத்துவிட்டீர்கள்.. மாதமோ ஆவணி என்னாளும் பிடிக்கும் ஒரு பாடல் ..(மோ.மு படிச்சீரா ஓய்)
அதோட நகைச்சுவையும்.. வெகு ஜோர்..தாங்க்ஸ்..
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோவும்.. காதில் ஒலிக்கிறது.. பின்ன் வாரேன்..
vasudevan31355
15th November 2015, 11:59 AM
நன்றி சின்னா!
இனிமேல்தான் படிக்கணும். படிச்சுட்டு கண்டிப்பாக சொல்றேன். வெய்ட். என்னுடைய கருத்து ஒன்னு இருக்கு. படத்தப் பத்தி.:)
eehaiupehazij
15th November 2015, 02:48 PM
மழை ஜா(ஜ)லமும் மழலைக் காலமும் ஒரு மீள்பார்வை !
இயற்கையின் அருட்கொடையான மழை வானத்தைப் பிய்த்துக் கொண்டு கொட்டித்தீர்க்கும் இப்பருவ காலம் சிலபல இடர் பாடுகளையும் அள்ளித் தெறித்தாலும் மழை ஜலத்தில் நனைவது மழலையர்க்கு கொண்டாட்டமே !! காதலர்க்கும் கன்னியர்க்கும்தான்.....
https://www.youtube.com/watch?v=0JtRRub86wU
https://www.youtube.com/watch?v=euICZmupFJ0
https://www.youtube.com/watch?v=ofVnjzqy6cE
chinnakkannan
15th November 2015, 02:54 PM
எனக்கு முதலாய்த்தோன்றியதிது..
மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில்வா...
https://youtu.be/nYWcpYtCJlQ
madhu
15th November 2015, 04:09 PM
நாயக்கரின் மகள்- திடுதெப்பென்று வந்த நல்ல படம்..பாடல்கள் நல்ல பாட் இருப்பதாக நினைவில்லை.
வாணி ஜெயராமின் "கலையாத கனவொன்று கண்டேன்" பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. நல்ல பாட் அல்லது மோசமான பாட் என்பது தெரியாது!! :)
madhu
15th November 2015, 04:57 PM
வாசு ஜி..
ஒன்ஸ் அகெய்ன்... ஐப்பசி மாதத்தில் ஆவணியை அழைத்து வந்து விட்டீர்கள்... அதில் கோடையில் கிடைக்கும் மாங்கனியை வேறு கொண்டு வந்து மழையை மறக்கடித்து விட்டீர்கள்.. உங்கள் எழுத்தைப் படித்த பின் பாட்டைக் கேட்டால் மிமீ மிமீயாக ரசிக்க முடிகிறது. ( பார்த்தாலும்தான் )
vasudevan31355
15th November 2015, 07:01 PM
சின்னா!
உங்களது 'மோகமுள்':) இப்போதுதான் படித்து முடித்தேன். கதைச் சுருக்கமும், விளக்கங்களும், வசனங்களும் உங்களுக்கே உரித்தான பாணியில் ஜோர். உங்களுக்கு நாவல் பித்து அதிகம் என்று எனக்குத் தெரியும். அதன் விளைவாக 'மோகமுள்' தங்களுக்கு மோகத்தை ஏற்றி கலர் பதிவை இடும் அளவிற்கு கொண்டு வந்தும் விட்டது.
நானும் ஒருதடவை மோகமுள் பார்த்தேன். நாவலும் வாசித்திருக்கிறேன். எனக்கு கதையை சிதைத்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அர்ச்சனா அன்னியோன்யமாகப் படாமல் அன்னியமாகப் பட்டார். நம் தமிழில் இல்லாத திறமைசாலிகளா? அதே போல அபிஷேக் அன்றுமுதல் இன்றுவரை தொலைகாட்சி நடிகராகவே தெரிகிறார். அவர் எப்போதும் டிஸ்டர்ப் ஆகவே நடிப்பார். அது போல நெடுமுடிவேணு மலையாளியாகவே தெரிவார்.
அதே போலத்தான் பாரதியாரும் வேற்று மாநில நடிகராக (ஷாயாஜி ஷிண்டே) வந்து நன்கு செய்திருந்தும் மனதில் ஓட்டாமல் போனார். கமல் இல்லாமல் நாசருக்குக் கொடுத்திருந்தால் கூட ஜோராக இருந்திருக்கும். இது என் சொந்தக் கருத்து என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.:)
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாலா பாடல் ஒன்றையும் துணிவாக போட்டுவிட்ட உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள். முத்து முத்துப் புன்னகை புரியும் நாயகி சரோஜா. 'வடைமாலை' புகழ் நடிகை.
'சேற்றில் ஒரு செங்கழனி' அருமையான பாடல். எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த நடிகை வான் நிலா நிலா அல்ல புகழ் சொர்ணா. அண்ணன் ஒரு கோவில் படத்தில் குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட என்ற வாணியின் பாடலுக்கு நடித்து பேய் போல பயமுறுத்துபவர். நல்ல பாடலுக்கு நன்றி. ஆனால் நன்றியை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் விஜயகுமாரின் பாடலைப் போட்டதற்கு.
அடித்த மழை, புயல், வெள்ளத்தில் பக்கெட் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதனால் தற்போது இமேஜஸ் நோ. இப்போதுதான் படித்து முடித்தேன். கதைச் சுருக்கமும், விளக்கங்களும், வசனங்களும் உங்களுக்கே உரித்தான பாணியில் ஜோர். உங்களுக்கு நாவல் பித்து அதிகம் என்று எனக்குத் தெரியும். அதன் விளைவாக மோகமுள் தங்களுக்கு மோகத்தை ஏற்றி கலர் பதிவை இடும் அளவிற்கு கொண்டு வந்தும் விட்டது.
நானும் ஒருதடவை மோகமுள் பார்த்தேன். நாவலும் வாசித்திருக்கிறேன். எனக்கு கதையை சிதைத்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அர்ச்சனா அன்னியோன்யமாகப் படாமல் அன்னியமாகப் பட்டார். நம் தமிழில் இல்லாத திறமைசாலிகளா? அதே போல அபிஷேக் அன்றுமுதல் இன்றுவரை தொலைகாட்சி நடிகராகவே தெரிகிறார். அவர் எப்போதும் டிஸ்டர்ப் ஆகவே நடிப்பார். அது போல நெடுமுடிவேணு மலையாளியாகவே தெரிவார்.
அதே போலத்தான் பாரதியாரும் வேற்று மாநில நடிகராக (ஷாயாஜி ஷிண்டே) வந்து நன்கு செய்திருந்தும் மனதில் ஓட்டாமல் போனார். கமல் இல்லாமல் நாசருக்குக் கொடுத்திருந்தால் கூட ஜோராக இருந்திருக்கும். இது என் சொந்தக் கருத்து என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.:)
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாலா பாடல் ஒன்றையும் துணிவாக போட்டுவிட்ட உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள். 'முத்து முத்துப் புன்னகை' புரியும் நாயகி சரோஜா. 'வடைமாலை' புகழ் நடிகை.
'சேற்றில் ஒரு செங்கழனி' அருமையான பாடல். எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த நடிகை 'வான் நிலா நிலா அல்ல' புகழ் சொர்ணா. 'அண்ணன் ஒரு கோவில்' படத்தில் 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட' என்ற வாணியின் பாடலுக்கு நடித்து பேய் போல பயமுறுத்துபவர். நல்ல பாடலுக்கு நன்றி. ஆனால் நன்றியை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் விஜயகுமாரின் பாடலைப் போட்டதற்கு.:)
அடித்த மழை, புயல், வெள்ளத்தில் பக்கெட் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதனால் தற்போது இமேஜஸ் நோ.:)
vasudevan31355
15th November 2015, 07:44 PM
வாசு சார்,
https://i.ytimg.com/vi/S4j8scoG4KQ/hqdefault.jpg
பானுமதி பற்றிய தினமணி தகவல்கள் மிகவும் சுவையானவை. இதுவரை நான்கு முறை படித்து ரசித்து விட்டேன். அருமையான தகவல்கள்.
'எனது உயிர் உருகும் நிலை - சொல்லுவாய் வான்மதி' பாடலையெல்லாம் நான் எத்தனை முறை கேட்டு ரசித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாது.
நாகேஸ்வரராவ், பானுமதி 'லைலா மஜ்னுவு' க்குப் போட்டியாக டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடித்த இன்னொரு 'லைலா மஜ்னு' படம் வந்து மண்ணைக் கவ்வியது.
https://upload.wikimedia.org/wikipedia/en/5/5d/Laila_Majnu_1949.jpghttp://www.thehindu.com/multimedia/dynamic/00928/19cp_laila_-_majunu_928100e.jpg
அதே போல பானுமதி குறிப்பிட்டிருக்கும் ராணி திரைப்படம் 1952-ல் வெளிவந்தது. இப்படத்திலிருந்து ஒரு காட்சி. இதில் இளமையான அழகு பானுமதியுடன் இருக்கும் நடிகர் 'குறவஞ்சி' படத்தின் வில்லனான வஹாப் காஷ்மீரி என்ற நடிகர்.
http://www.thehindu.com/multimedia/dynamic/00117/21cp_rani_jpg_117512f.jpg
'சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்'.
என்று பானுமதி பேட்டியில் கூறி இருக்கிறார். அது அனேகமாக 'திரும்பிப் பார்' பட ஷூட்டிங்காக இருந்திருக்க வேண்டும் அல்லது 'இல்லற ஜோதி'யாகவும் இருந்திருக்கலாம்.
vasudevan31355
15th November 2015, 07:51 PM
//இம்முறை லாரென்ஸ் ஆலிவரின் ‘ஹாம்லெட்’ படத்தில் இருந்து கிடைத்த மெட்டை, ‘பிரேமை தான் பொல்லாதது’ என்கிற டூயட்டாக உயிர்ப்பித்தார்.//
https://youtu.be/LJ9sLO_FSVk
vasudevan31355
15th November 2015, 07:54 PM
//‘எனது உயிர் உருகும் நிலை - சொல்லுவாய் வான்மதி’,//
அடடா! என்ன மாதிரிப் பாடல்! பானுமதியின் வாய்ஸ் அப்படியே இதயத்தை உருக்கிப் பிசைகிறதே!
https://youtu.be/EzMaRAzEbzg
vasudevan31355
15th November 2015, 08:01 PM
மதுண்ணா!
'எனது உயிர் உருகும் நிலை' பாடலை பாடிக் கொண்டே வந்தால் தேவதாஸின் 'உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமே இல்லை' பாடலைப் பிடித்து விடலாம்.:) ம்ஹூஹூஹூம்.:)
vasudevan31355
15th November 2015, 08:04 PM
//ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’ பானுமதி- ரஞ்சன் மீண்டும் இணைந்து நடிக்க இந்தியில் ‘மங்களா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.//
https://i.ytimg.com/vi/8Upj39svZHY/hqdefault.jpg
vasudevan31355
15th November 2015, 08:11 PM
'மங்களா' இந்திப் படத்தில் ரஞ்சன் மிருதங்கம் வாசிக்க அதற்கு பானுமதி ஆடும் அற்புதமான இசையோடு கூடிய நடனம்.
https://youtu.be/XXDU3vrf25Q
தமிழில் வசுந்தராதேவி 'மங்கம்மா சபத'த்தில் ஆடியதை சமீபமாக பார்த்தோம். இங்கே அதே டியூனில் பானுமதி 'அய்யய்யா' பாடுவதைக் காணலாம். இதுதான் 'அலிபாபாவும் 40 திருடர்களு'க்கும் முன்னோடி.
https://youtu.be/D5Jc0gaoZCY
chinnakkannan
15th November 2015, 08:44 PM
//நானும் ஒருதடவை மோகமுள் பார்த்தேன். நாவலும் வாசித்திருக்கிறேன். எனக்கு கதையை சிதைத்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அர்ச்சனா அன்னியோன்யமாகப் படாமல் அன்னியமாகப் பட்டார். நம் தமிழில் இல்லாத திறமைசாலிகளா? அதே போல அபிஷேக் அன்றுமுதல் இன்றுவரை தொலைகாட்சி நடிகராகவே தெரிகிறார். அவர் எப்போதும் டிஸ்டர்ப் ஆகவே நடிப்பார். அது போல நெடுமுடிவேணு மலையாளியாகவே தெரிவார். //
வாஸ்ஸூ.. ஒம்ம யாரு அர்ச்சனாவைப் பார்க்கச் சொன்னா..:) பட் யமுனா காரெக்டர் என்றால் வயதேறும் போது முதிர்கன்னியாகவும் காட்ட வேண்டும்..கொஞ்சம் இள மையாகவும் இருக்க வேண்டும் என நினைத்திருப்பார்களோ என்னவோ.. அபிஷேக் அப்போதெல்லாம் தொ.கா வில் நடிக்கவில்லை என நினைக்கிறேன்.. நெமுவே நீர் சொன்னது சரியே..பட் ஏழை வித்வானுக்கு கஷ்க்முஷ்க் சோமயாஜுலு பொருந்தியிருக்க மாட்டார்..அப்புறம் வேறு யாரைத்தேடுவது எனத் திணறியிருப்பார்கள் என நினைக்கிறேன்..
ம பா கேட் ரசித் தாங்க்ஸ்..வி கு பாட்கு சாரி..
மதுண்ணா தேடிப்பார்த்தேன் ஜெ.சித் நா மகளின் வா ஜெ பாட்..கிடைக்கலை..
வாஸ்ஸூ அதே தினமணியில் சாவித்திரி, பத்மினி பற்றி தீன தயாளன் எழுதியிருக்கிறார். படித்துப்பாருங்கள்..
RAGHAVENDRA
15th November 2015, 10:25 PM
வாசு சார்
மாதமோ ஆவணி பாடலைப் பற்றி இதற்கு மேல் யாரும் சிறப்பாக எழுதி விட முடியாது.
'நாளிலே நல்ல நாள்' என்று இழுத்துப் பாடியபடி பாடும் 'நாயகன் பாலா' வென்ற படம். சுசீலா, பாலா முதல் சரணம் முன் கலக்கி எடுக்கும் அந்த,
'டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டர டண்ட டாண்டர டண்டடா'....
'டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டட டண்ட டாண்டட டட்டடா'
இந்தப் பகுதி இசைத்தட்டில் கிடையாது. அதனால் முதன் முதலில் படத்தில் பார்த்த பொழுது பரவசம் அதிகமானது.
எத்தனை காலங்கள் ஆனாலும் அத்தனையையும் வென்று தனித்து நின்று ராஜாங்கம் நடத்தும் ரசனைக்குரிய பாடல்.
சத்தியமான உண்மை.
உளமார்ந்த பாராட்டுக்கள் வாசு சார்.
RAGHAVENDRA
16th November 2015, 12:19 AM
நினைத்துப் பார்க்கிறேன்
தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பாடல்கள்... நம் நெஞ்சில் அன்றாடம் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் சிலவோ காலம் காலமாய் மனதில் ஆழமாய்ப் பதிந்து நமக்குள் பலவிதமான எண்ணங்களையும் கற்பனைகளையும் உருவாக்கும்.
ஒரு சிவாஜி ரசிகனாய், ஏராளமான மற்ற திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இதில் நடிகர் திலகம் நடித்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் ஏற்படும். சில பாடல்களில் சில இயக்குநர்கள் காட்சியமைப்பையே நடிகர் திலகத்தை மனதில் வைத்து எடுத்திருப்பார்களோ என்று தோன்றும் வண்ணம் படமாக்கியிருப்பார்கள்.
அப்படி என்னுடைய கனவுப் பாடல்களாய், அதில் நான் நடிகர் திலகத்தை உருவகப்படுத்தி நினைத்துப் பார்த்து மகிழ்ந்த பாடல்களாய், இந்தத் தொடரில் என் எண்ணங்களில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதே எண்ண ஓட்டத்தில் நம்முடைய மற்ற நணபர்களும் இருந்திருக்கலாம். அவ்வாறு எண்ண ஓட்டத்தை இங்கே பகிர்ந்து கொண்டால் நம் மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்த திருப்தி கிட்டும் என்பது திண்ணம்.
தொடக்கமாக எனக்கு மிக மிக பிடித்த பாடல், சிறு வயதில் முதன் முதலில் படம் வந்த புதிதில் கேட்ட போதே ஈர்த்து விட்ட பாடல், பரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற பட்டு வண்ண சிட்டு பாடலாகும்.
http://www.moremp3.in/wp-content/uploads/2015/07/K-V-Mahadevan1.jpg
மாமா என அன்போடு அழைக்கப்படும் திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களின் சிறப்பு அவருடைய படைப்புகளில் இருக்கக் கூடிய இழையோடக் கூடிய மெலடி, அதில் உள்ளே புதைந்திருக்கும் ஜீவன். இந்தப் பாட்டைக் கேட்கும் போது யாராக இருந்தாலும் தங்களை மெய் மறந்து விடுவார்கள். அதுவும் கே.வி.எம். மின் இன்னொரு சிறப்பு, பல்லவியை மிஞ்சும் வண்ணம் சரணத்தில் அவர் புகுத்தியிருக்கக் கூடிய உட்கரு, பாடலின் பொருளை முழுதும் கொண்டு வந்து விடும்.
இந்தப் பாட்டில் மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம், படமாக்கல். அந்தப் பாட்டின் ஜீவனை, அந்தப் பாட்டின் மென்மையை, அந்தப் பாட்டின் நளினத்தை, ஒரு சதவீதம் கூட கெடுக்காமல் மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கக் கூடிய விதமே.
இரண்டு இடங்களில் எம்.ஜி.ஆரின் நடன அசைவுகள் அவ்வளவு நளினமாக கொண்டு வந்திருப்பார். இயக்குநர் யோகானந்த் நல்ல ரசனைக்கார். இந்தப் பாட்டில் வழக்கமான எம்.ஜி.ஆரைப் பார்க்க நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.
சாவித்திரி அன்ன நடை போடும் போது இவரும் அதே போல அன்ன நடை போட்டு கையையும் காலையும் நளினமாக வைத்து நடக்கும் போதெல்லாம் மனம் துடிக்கும், நம்முடைய தலைவருக்கு இந்தப் பாட்டு கிடைத்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கும்.
பொண்ணாப் பொறந்தா ஒரு புருஷனுக்கு நேரே வரிகளின் போதும் எம்.ஜி.ஆரின் நளினமான அசைவுகள் சிறப்பாக இருக்கும்.
காலைப் பார்த்து நடந்த பொண்ணு காட்டுதம்மா பாவம் வரியின் போது கால்களை முயல் போல் தத்தி தத்தி வைத்து நடப்பது இயக்குநரின் சமயோசித புத்திக்கு சான்று. எம்.ஜி.ஆர். இந்த இடத்தில் தியேட்டராக இருந்தால் கரகோஷங்களை அள்ளிக்கொண்டு போய் விடுவார்.
பார்ப்பதும் யாரையடி அன்ன நடை போட்டு வரியின் போது இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு கால்களை மெதுவாக வைத்து அன்ன நடை போடுவது அட்டகாசமாக இருக்கும்.
பரிசு படத்தில் சாவித்திரிக்கு பல புதிய ரசிகர்கள் உருவானார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் இந்தப் பாடல் காட்சியுமாகும்.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை மனதில் உருவகப் படுத்த வைக்கும் இனிமையான பாடல்.
பாடகர் திலகத்தின் குரல் ஏன் இன்றும் மக்களிடம் இந்த அளவிற்கு வரவேற்பு பெறுகிறது என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.
கவியரசரின் பாடல் வரிகள் இலக்கியம் வாய்ந்தவையாக இப்பாடலில் பரிமளிக்கும்.
https://www.youtube.com/watch?v=ciLV4Ap2kPM
vasudevan31355
16th November 2015, 08:21 AM
ராகவேந்திரன் சார்,
நன்றி!
'பட்டு வண்ணச் சிட்டு' பாடலுக்கான தங்கள் ஏக்கமும், அந்தப் பாடலை அலசிய விதமும் அருமை. (எஸ்.வி சார் மனம் குளிர்ந்திருப்பார். உங்களுக்கு ட்ரீட் நிச்சயம் உண்டு):) பெண் நளின நடை அசைவுகள் தலைவருக்கு கை வந்த கலை. தாங்கள் சொல்லியிருந்தபடி எம்.ஜி.ஆர் அவர்களும் இந்தப் பாடல் காட்சியில் நன்றாகவே செய்திருப்பார். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அறிஞரின் பொன் வாக்கியத்தை அப்படியே நீங்கள் பிரதிபலித்திருப்பது பாராட்டுக்குரியது. தங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் யோகானந்த் தலைவரின் பல படங்களை இயக்கியவர் என்பதால் இந்தப் பாடல் காட்சியில் தலைவர் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை தங்களுக்கு எழுந்தது நியாயமே.
எனக்குக் கூட 'சுடரும் சூறாவளியும்' படத்தில் 'அனுபவம் தானே வரவேண்டும்' என்ற பாடல் தலைவருக்குக் கிடைக்காமல் போய் விட்டதே என்று மிகவும் மனம் வருந்தும். 'பாடகர் திலகம்' முத்துராமனுக்குப் பாடுவதை கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் அப்படியே நடிகர் திலகத்திற்கு பாடியது போலவே இருக்கும். கூட ராட்சஸி வேற. நிர்மலாவிற்கு குரல் தந்திருப்பார். ரொம்ப அருமையான தலைவருக்கு ஏற்ற பாடல். நான் அப்போதெல்லாம் சிலோன் வானொலியில் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இது தலைவர் படத்தின் வெளிவராத 'ஞாயிறும் திங்களும்' படப் பாடல் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். நிஜமாகவே இணைய உறவு:) வந்த பின்தான் இந்தப் படம் 'சுடரும் சூறாவளியும்' என்றே தெரியும்.
https://youtu.be/euuJPl73gNk
பாடலின் ஆரம்ப இசையே ஆனந்தம் கூட்டி விடும்.
'நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்' என்று ஈஸ்வரி பாடும் போது தலைவராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? 'ஓகே' என்பது போல எவ்வளவு அழகாக தலையசைவில் 'சொல்லித்தர சம்மதம்' என்பது போல காட்டியிருப்பார். முத்து இதுக்கெல்லாம் ரொம்ப தூரம். அவர் இதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்.:)
'ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்' என்ற ஆண் குரலுக்கு அவர் வெகு இலகுவாக கைவிரல்களை காதலி மீது பிரயோகிக்கும் காட்சி கண் கொள்ளாத அளவு நிறைந்திருக்குமே.
முதல் சரணம் தொடங்குமுன் ஒலிக்கும் இடையிசைக்கு முத்துராமன் ஓட்டமும் நடையுமாக நிர்மலாவை நோக்கி வருவார். இதே தலைவரின் ஓட்டமும், நடையும் அந்த இடத்தில் இருந்திருந்தால் கொட்டகை கைத்தட்டல் ஓசையில் இடிந்து விழாதோ! ஒலிக்கும் ஷெனாய் இசைக்கு நிர்மாலாவின் இடுப்பை பின்னாலிருந்து அணைத்தபடி அவர் கழுத்தில் முகம் புதைத்து கண்களை மேலிருத்தி தூள் கிளப்பியிருக்க மாட்டாரா?
'தலை சாயும் பெண்ணுக்கு சந்தோஷம் என்ன?'
என்று நிர்மலாவின் முகத்தை ஆட்காட்டி விரலால் தூக்கி நிறுத்தி, ஒரு கண்ணை ஸ்டைலாக அடித்து நம்மை சந்தோஷப்பட வைத்து இருப்பாரே! முத்துவோ நிர்மலாவின் கன்னத்தில் விரலால் பொட்டு வைத்துக் கொண்டிருப்பார்.:)
'இது கன்னந் தொட்டு, கையைத் தொட்டு எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்'
என்ற வேகமான வரிகளுக்கு நிர்மலா இடையசைத்து முன்னால் நடந்து வர, 'நடிகர் திலகம்' அதைப் பாடியபடியே அப்படியே சைட் வாக்கில் ஒரு வேகமான வாக் நடந்து வந்து அள்ளியிருப்பாரே!
'ரிரகமததமாரி'
என்று அவர் வாயசைப்பில் பின்னி, நிர்மலாவின் மேல் கைகளால் தாளம் போட்டபடி அசத்தியிருப்பாரே! முத்து அங்கிருக்கும் பூச்செடி ஒன்றில் இருக்கும் பூவை பிடித்து ஆட்டியபடி தனியே இதைப் பாடுவார்.:)
'சசரிகமபபசச'
என்ற ஈஸ்வரியின் அமர்க்களத்திற்கு நிர்மலா 'சொர்க்கம் பக்கத்தில்' 'எங்க மாமா' பாடலில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து ஆடுவது போலவே ஆடிக் காட்டுவது வேறு நமக்கு 'இந்த இடத்தில் நடிகர் திலகம் இல்லையே' என்று இன்னும் வெறியைக் கூட்டும்.
இப்படி பாடல் முழுதும் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு 'காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்', 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' போல அற்புதமான நடிகர் திலகத்தை நாம் இப்பாடலில் கண்டு ரசித்திருக்கலாம். ம்...நாகையா பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்.:)
நிர்மலாவுடன் நடிகர் திலகத்திற்கு அதிகமான பாடல்கள் இல்லை. ஆனால் பல பாடல் காட்சிகளில் தலைவருடன் தோன்றியிருப்பார். தங்கச் சுரங்கம், லஷ்மி கல்யாணம் இப்படி.
ஜோடியாக நடித்த 'தங்கைக்காக' படத்தில் ஒரு அருமையான டூயட் பாடல், அப்புறம் நம் எல்லோருக்கும் பிடித்தமான 'சொர்க்கம் பக்கத்தில்' பாடல். 'லஷ்மி கல்யாணம்' படத்தில் 'போட்டாளே... போட்டாளே... உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே' பாடலில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து கும்பலோடு நிர்மலாவும் ஆடுவார். இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் பாவனைகளும், கேலிகளும், கிண்டல்களும், நக்கல்களும், குத்துக்களும், நையாண்டி சிரிப்புகளும், கொள்ளை அழகும், எளிமையான உடையும் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வளவு அற்புதமாக ஆடியிருப்பார். முழுப் பாடலையும் ஆய்வு செய்து எழுத மனம் துடிக்கிறது.
நம் கற்பனைக்கு வடிகாலாக இந்தப் பாடலைப் பார்த்து நம் தாகத்தை தணித்துக் கொள்ளுவோம். இந்தப் பாடல் உங்களின் உயிர்ப்பாடல் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் அனுபவித்து என்னிடம் பலமுறை போனில் உரையாடி இருக்கிறீர்கள். தலைவர் ஒவ்வொரு பிரேமிலும் நிர்மலாவுடன் கலக்குவார். அதுவும்
'எனைத் தேடி வரும் எதிர்காலம்' என்று அவர் பாடலை ஆரம்பிக்கும்போது கைவிரல்களை நீட்டி சொடுக்குப் போட்டவாறே கைகளை கொஞ்சம் கொஞ்சமாக மடக்குவாரே! (மதுண்ணா! கவனிக்க):)
'அதைத் தெரிவிப்பதே இந்த நேரம்'
வலதுகை ஆட்காட்டி விரலை தோள்பட்டைக்குப் பின் வட்டமடிக்க வைத்து நிர்மலாவிடம் படுஸ்டைலாக சின்னப் பையன் போல ஒரு நடை நடந்து வருவாரே!
போங்க ராகவேந்திரன் சார்! இனிமே தாங்காது.
https://youtu.be/kq-_sugzwGE
Richardsof
16th November 2015, 08:42 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
பரிசு படத்தில் இடம் பெற்ற பட்டு வண்ண சிட்டு பாடலை பற்றியும் மக்கள் திலகத்தை பற்றியும் தாங்கள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி .இனிய நண்பர் திரு வாசு சார் கூறியது போல் மனம் குளிரிந்து விட்டது .இன்று காலை வரை 5 முறை தொடர்ந்து பட்டு வண்ண சிட்டு பாடலை வீடியோவில் பார்த்து மகிழ்ந்தேன் .நன்றி .
நடிகர் திலகத்துடன் தாங்கள் இருக்கும் நிழற் படம் அருமை ராகவேந்திரன் சார் .
vasudevan31355
16th November 2015, 09:08 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
நடிகர் திலகத்துடன் தாங்கள் இருக்கும் நிழற் படம் அருமை ராகவேந்திரன் சார் .
ஆமாம் ராகவேந்திரன் சார். நேற்றே கவனித்தேன். தங்கள் நியூ அவதார் அமர்க்களமோ அமர்க்களம்.:thumbsup: தெய்வத்துடன் ஈடு இணையில்லா பக்தர். அருமை.
RAGHAVENDRA
16th November 2015, 09:51 AM
வாசு சார்
என்ன ஒரு டெலிபதி சார். தாங்கள் குறிப்பிட்ட அதே சுடரும் சூறாவளி பாடலை நானும் நினைத்திருந்தேன். இந்தத் தொடரில் கொண்டு வரவும் இருந்தேன். என் மனதில் உள்ளதை அப்படியே தங்கள் எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்.
சொல்லப் போனால் தாங்கள் நடிகர் திலகத்தை அந்தப் பாடல் காட்சியில் உருவகப் படுத்திய விதம்... ஆஹா... அப்படியே கண் முன்னால் தலைவர் அந்த ஸ்டைலையெல்லாம் செய்கின்றார்... மனக்கண்முன் அந்தக் காட்சி அப்படியே விரிகிறது. பிரமாதம்.
இந்தத் தொடரின் முழுப் பரிமாணத்தையும் நோக்கத்தையும் என்னை விட தாங்களே மிகச் சரியாக கொண்டு வந்து விட்டீர்கள். இதற்காகத் தங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
வெண்ணிற ஆடை நிர்மலா ஒத்துழைப்புத் தந்திருந்து, சிவகாமியின் செல்வன் படத்தில் நடித்து முடித்திருந்தால், அந்த ஆடிக்குப் பின்னே பாடலின் பரிமாணமே இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும். லதாவும் நன்றாகவே செய்திருந்தார். என்றாலும் நிர்மலா அந்தப் படத்திற்கு கூடுதல் போனஸாக அமைந்திருப்பார்.
அதுவும் ஈஸ்வரியின் குரல் நிர்மலாவிற்கு மிக அழகாகப் பொருந்தும். இதற்கு இன்னொரு உதாரணம், அன்னையும் பிதாவும் படத்தில் இடம் பெற்ற பொன்னாலே வாழும் புதிய உலகமிது.
தங்கைக்காக படத்தையும் நினைவு கூர்ந்து நமக்குள்ளே மீண்டும் தலைவரின் மேல் உள்ள பக்தியை அதிகமாக்கி விட்டீர்கள். இந்தப் பாடல் காட்சியை மீணடும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதுவும் அந்தக் கையை சொடுக்குப் போடும் ஸ்டைல்... ஆஹா...
யோகானந்த் பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் வித்தியாசமாக செய்வார். கண்ணியமாக இருக்கும். ஆர்ப்பாட்டங்கள் அதிகம் இருக்காது. அதுவும் நடிகர் ,திலகம் நடிக்கிறார் என்றால் நுணுக்கங்கள் கண்டிப்பாக இடம் பெற்று விடும். இதற்காகவே அவர் என்னுடைய ஃபேவரிட் இயக்குநராகிறார். குறிப்பாக அவர் படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு மிகவும் subtle ஆக இருக்கும்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
JamesFague
16th November 2015, 11:55 AM
Courtesy: Tamil Hindu
சுசீலா 80
தென்னகத் திரையுலகின் மறக்க இயலாத பாடகிகளில் ஒருவரான சுசீலாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 80 வயது. ஞானகோகிலம் என்று பெருமையுடன் அழைக்கப்படும் பி.சுசீலா தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தலைமுறைகளைக் கடந்தும் நினைவில் நிற்கும் பாடல்களைப் பாடியவர். ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனத்தால் மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட அரிதான பாடகி அவர். பாடல் வரிகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் பாடலின் முழு உணர்வையும் பாவத்தையும் கொண்டுவரும் மேதை என்று புகழப்பெற்றவர்.
கேரளத்தில் இன்றும் தாலாட்டுப் பாடலாகத் தாய்மார்களால் பாடப்படும் ‘பாட்டுப்பாடியுறக்கம் ஞான்’ பாடல்தான் இவரது முதல் மலையாளப் பாடல். இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி. தென்னிந்தியாவில் அதிகபட்ச ரசிகர்களைக் கொண்ட ஒரே பாடகி இவர்தான் என்கிறார் பாடகர் ஜெயச்சந்திரன். ‘சொன்னது நீ தானா’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘நலந்தானா’ முதலிய அமரத்துவம் வாய்ந்த பாடல்களைப் பாடிய சுசீலாவை வாழ்த்துவோம்.
raagadevan
16th November 2015, 12:15 PM
Ode to a Southern nightingale
http://www.thehindu.com/news/nationa...ece?ref=tpnews
No singer could match her
http://www.thehindu.com/news/nationa...ece?ref=tpnews
Her voice was perfect for me
http://www.thehindu.com/news/nationa...ece?ref=tpnews
RAGHAVENDRA
16th November 2015, 07:12 PM
http://i.ytimg.com/vi/AoDywRyfZ0s/0.jpg
ஹேமமாலினியின் உருவ ஒற்றுமையோடு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கப் பெற்ற பத்மப்ரியாவின் நினைவு நாள் இன்று.
ஹீரோ 72 படத்தில் நடிக்க ஸ்ரீதர் முதலில் அணுகியது ஹேமமாலினி அவர்களை. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர்களால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட பத்மப்ரியா ஸ்ரீதரின் கண்ணில் பட்டு விட தமிழ் சினிமாவில் கிடைத்த புதிய கதாநாயகியாக, மோதிரக்கையால் குட்டுப்படும் வாய்ப்பினையும் பெற்றார். முதல் படத்திலேயே நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்தவர்.
இதைத் தொடர்ந்து அவருக்கு நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த படங்களில் மன்னவன் வந்தானடி, அவன் ஒரு சரித்திரம், டாக்டர் சிவா, எங்கள் தங்க ராஜா, அவன் தான் மனிதன் உள்ளிட்ட பல படங்கள். ஆனால் ஸ்ரீதரின் ஒப்பந்தம் காரணமாக வெளிப்படங்களில் நடிக்க முடியவில்லை என ஒரு சமயம் அவர் வருத்தப்பட்டு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்தப் படங்களெல்லாமே மஞ்சுளா அவர்களுக்குப் போயின. அதற்குப் பிறகு சில மற்ற படங்களில் நடித்தார். அவருடைய பெயர் சொல்ல ஒரு படமாக உறவு சொல்ல ஒருவன் படம் அமைந்தது. மற்றும் வாழ்ந்து காட்டுகிறேன் படமும் நல்ல பெயரைத் தந்தது.
நேற்று நம்முடைய நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பாக வைர நெஞ்சம் திரையிட இருந்தது. மழை காரணமாக நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. அவ்வாறு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் இவருடைய நினைவு நாளைப் பற்றிக்குறிப்பிட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.
பத்மப்ரியா நினைவாக இரு பாடல்கள்..
காவிரி நகரினில் - வாழ்ந்து காட்டுகிறேன்
https://www.youtube.com/watch?v=JtQ_xjK2Bb0
பனிமலர் நீரில் ஆடும் அழகு - உறவு சொல்ல ஒருவன்
https://www.youtube.com/watch?v=3FMxPvEBW6o
eehaiupehazij
16th November 2015, 08:28 PM
நவம்பர் 17 தமிழ்த்திரையுலகின் காதலின் முடிசூடா நிரந்தர சக்கரவர்த்தி ஜெமினி கணேசனின் 95வது பிறந்த நாள்!!
Heroes on heels! Vs Heroes on Wheels!
Part 1 : The King of Romance Gemini Ganesan's Birthday remembrance!!
காதலில் ஓடுவதும் ஓட்டுவதும் !
ரொமாண்டிக் ஹீரோ காதல்மன்னரின் ஆற்றல் !
காதல் காட்சிகளில் பூங்காக்களில் மரங்களை சுற்றி ஹீரோ ஓடி ஆடி கதாநாயகியை சுற்றுவதும் வாகனங்களில் அமர்த்தி ஓட்டுவதும் சாதாரணமப்பா!!
GG on heels !!
https://www.youtube.com/watch?v=XUFiNhC8CcA
https://www.youtube.com/watch?v=ta8CLL8TtPA
GG on Wheels !!!
https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA
vasudevan31355
16th November 2015, 08:53 PM
ராகவேந்திரன் சார்,
https://i.ytimg.com/vi/rHX5_GGUIro/hqdefault.jpg
அழகுப் பதுமையாம் பத்மபிரியாவின் நினைவு நாளை நினைவூட்டி அவருக்கு சிறந்த நினைவாஞ்சலி செய்து விட்டீர்கள். நடித்தது கொஞ்சமே ஆயினும் அனைவர் மனதிலும் தன் இளமையாலும், அழகாலும் மிக எளிதாக இடம் பிடித்த கலப்படமற்ற கலர்ப்பட கதாநாயகி. அவருடன் 'வைரநெஞ்சம்' படப்பிடிப்பில் பேசி மகிழ்ந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. நடிகர் திலகம் முதற்கொண்டு அத்தனை பெரிய நடிகர்களுடனும் நடித்தவர். கன்னடம், தெலுங்கு என்று அந்த மொழித் திரைப்படங்களிலும் புகழ் பெற்றவர்.
அவரது நினைவாக நான் 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் எழுதிய, தற்போது நீங்கள் பதிந்துள்ள 'பனி மலர் நீரில் ஆடும்' பாடலின் ஆய்வை இங்கே மறுபதிவாக இடுகிறேன். அவர் பாடல்களிலேயே எனக்குப் பிடித்த முதன்மையான பாடல் இது.
http://i1.ytimg.com/vi/3FMxPvEBW6o/hqdefault.jpg
1975-இல் வெளிவந்த 'உறவு சொல்ல ஒருவன்' கருப்பு வெள்ளைத் திரைப்படம். விஜயபாஸ்கரின் அற்புத இசையமைப்பில் நமதருமை சுசீலா அவர்களின் கோடிகோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத முழுமையான இனிமையான குரலில் நம்மை அணுஅணுவாக இன்ப சாகரத்தில் மூழ்க வைக்கும் ஒரு பாடல்.
இப்படி ஒரு குரலின் மூலம், இப்படி ஒரு டியூன் மூலம் நம்மை அப்படியே கட்டிபோட்டு விட முடியுமா?
'முடியும்' என்கிறார்கள் இப்பாடலைப் பாடிய பாடகியர் திலகமும், இசையமைத்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கரும்.
அப்படி நம் ரத்த நாளங்களில் புகுந்து இன்ப அதிர்வுகளை நமக்குள்ளே அதிரச் செய்யும் பாடல்.
முத்துராமன், பத்மபிரியா முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
தனக்கு வரப்போகும் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டும்...தனக்கு வாய்க்கும் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்... என்று கற்பனை செய்து செய்து வைத்திருக்கிறாள் இந்த இளம் நங்கை.
அவள் நினைத்தது போலவே எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. வசதியான வாழ்வு அவளுக்குக் கிட்டவிருக்கிறது.
மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, தன் தோழியர் கூட்டத்திடம் தான் நினைத்திருந்த வாழ்வு கிட்டப் போவதை எண்ணி அவள் ஆனந்தமாய்ப் பாடுவதைக் கவனியுங்கள்.
அந்தக் குரலில் என்ன ஒரு மகிழ்ச்சி கலந்த ஆணவம்!
'என்னை மாதிரி இந்த உலகிலே யார் அதிர்ஷ்டசாலி இருக்க முடியும்?' என்ற களிப்பான கர்வம்.
'மகராணி போல மகராசியாய் வாழப் போகிறேன்' என்று கொக்கரிக்கிறாள்.
அளவு கடந்த ஆனந்தத்தால் அவள் எதைக் கண்டாலும் அது அவளுக்கு சுகமாகவே தெரிகிறது.
'எல்லோருக்கும் நினைத்த வாழ்வு எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை அவர்கள் ரசித்து அனுபவிப்பதில்லை. அப்படியே ரசித்தாலும் அந்த வாழ்வு அவர்களுக்கு நிலைப்பதில்லை.
ஆனால் என்னைப் பாருங்கள்.
நிலையான, என்றென்றும் நான் ரசித்து மகிழும் வாழ்வு எனக்குக் கிடைத்து விட்டது. நான் மகராணியல்லாமல் வேறு என்ன?'
அந்த சந்தோஷத் தாரகை அழகுப் பதுமை பத்மப்ரியாதான். கொலு பொம்மை போல் நம் எல்லோரையும் தன் அளவான உடலமைப்பால் கவர்ந்தவர். கலர்ப்பட கதாநாயகி. அழகுமுகம். எடுத்த எடுப்பிலேயே நடிக இமயத்தின் ஜோடியாகி நம் 'வைர நெஞ்சங்'களில் ஊடுருவியவர்.
அவர் தோழிகளுடன் ஆடிப்பாடும் இந்த உற்சாகப் பாடலைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் பத்மப்ரியா இன்னும் நன்றகப் பண்ணியிருக்கலாம். ஆனால் அவர் அழகுத் தோற்றமும், ஸ்லிம்மான உடலும் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகின்றது.
முழுக்க முழுக்க சுசீலாம்மா ஆக்கிரமிப்பு செய்த என் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்ட ஒரு பாடல்.
தெள்ளத் தெளிவான ஆணித்தரமான தமிழ் உச்சரிப்பு, குரலில் தெரியும் கர்வம், குரல் பாவம், 'நச்'நச்'சென்று வாயிலிருந்து விழும் வார்த்தைகள்
இந்த 'தென்னகத்துக் குயில்' இப்பாடலில் செய்துகாட்டும் மாயாஜாலங்கள் தான் என்ன! உலகத்தில் வேறெந்தப் பாடகிக்காவது இவ்வளவு இனிமையான, முழுமையடைந்த குரல் இருக்கிறதா என்ன!
(இந்த மாதிரி தற்பெருமை பொங்கும் இன்னொரு பாடலை 'புது வெள்ளம்' படத்தில் சுசீலா 'நான் ராஜாவீட்டுக் கன்னுக்குட்டி...கன்னுக்குட்டி' என்று பாடி அசத்தியிருப்பார். கன்னட மஞ்சுளா படுதிமிர் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பெண்ணாக அருமையாக நடித்திருப்பார்)
பஞ்சு அருணாச்சலம் இயற்றிய இப்பாடல் படத்தின் கதாநாயகியின் பாத்திரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. இயக்கம் தேவராஜ் மோகன்.
இனி பாடலின் வரிகளைப் பார்க்கலாம். பின் பாடலைப் பார்க்கலாம்.
பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
நினைவுகள் கோலம் போடும்
இளமை குலுங்கும் தங்க ரதமே
பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
(முத்துராமன் பத்மப்ரியா கேட்ட நகை, புடவையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறாரே! பின் ஏன் பத்மாவுக்கு சந்தோஷம் பொங்காது?)
எண்ணங்கள் இனிக்கட்டுமே
வண்ணங்கள் மலரட்டுமே
வாலிபம் சிரிக்கட்டுமே
வாழ்க்கையில் தொடரட்டுமே
மகராணி நான் மகராசி நான்
மகராணி நான் மகராசி நான்
மனது போலவே வாழ்வு கிடைத்தது
பார்க்கும் யாவையும் சுகம் சுகமே
பனிமலர் நீரில் ஆடும்
அழகை ரசிக்க மனதில் சுகமே
கண்ணான கண்ணன் வந்தான்
கண்ணோடு கண்ணை வைத்தான்
பொன்னான புன்னகையில்
பெண் என்னைத் தழுவிக் கொண்டான்
மகராணி நான் மகராசி நான்
மகராணி நான் மகராசி நான்
இரவு போனது பொழுது விடிந்தது
எனது நெஞ்சிலே சுகம் சுகமே
பனிமலர் நீரில் ஆடும்
அழகை ரசிக்க மனதில் சுகமே
எல்லோரும் நினைப்பதில்லை
நினைத்தாலும் கிடைப்பதில்லை
கிடைத்தாலும் ரசிப்பதில்லை
ரசித்தாலும் நிலைப்பதில்லை
மகராணி நான் மகராசி நான்
மகராணி நான் மகராசி நான்
நினைத்த யாவையும் உண்மையானது
இறைவன் கருணையால் சுகம் சுகமே
பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
chinnakkannan
16th November 2015, 09:00 PM
பத்மப் ப்ரியா கொஞ்சம் அழகு தான் எனச் சொல்லவேண்டும்..அழகிலும் நடிப்பிலும் லதாவுடன் கடும் போட்டி இவருக்கு.. இருவருமே அழகு இருவருக்குமே நடிக்க வராது! இருவருமே இருக்கும் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்..
அமுதோர் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ.. புலமைப் பித்தன் பாடல் என நினைக்கிறேன்.. சோழ ராஜ குமாரியாக நடித்திருப்பார் என நினைவு.. ஆடியோ தான் கிடைத்தது.. நல்ல பாடல்..
https://youtu.be/syosMMrWl7M
இன்னொரு ஜெய் பத்மப்ரியா என நினைவு நல்ல பாட் ஆனால் மனதில் நினைவுக்கு வரவில்லை எதையோ தே டி அன்று சிந்திய ரத்தம் கிடைத்தது..அதுவும் 6.10க்கு ஆரம்பிக்கும் பாட்டு..பத்மப் ப்ரியா அண்ட் ஜெய் அண்ட்.. பில் இன் த ப்ளாங்க்..:)
https://youtu.be/ZGLTQB7eXZs
மோகனப் புன்னகையில் ந.தியின் முறைப்பொண்ணாக வந்து சிலோன் நடிகையைச் சுட்டுவிட்டு தானும் விஷமருந்தி இறப்பார் என நினைவு..
அவரே பலவருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதாக - ட்யூ டூ ஜாண்டிஸ் ஆர் வேறு வியாதியாலோ - படித்த நினைவு..இப்போது தேடினால் ஃபேஸ்புக்கில் அக்கெளண்ட் இருக்கிறது..டம்மி என நினைக்கிறேன்..
இன்னொரு ஜெய் ப பி பாட் உண்டு.. வாஸ்ஸு நினைவுக்கு வர மாட்டேங்குதே..
ஆமாம்.. மோ.சு.பி யில் காத்திருந்த கண்களே - மணிமாலாவிற்கும் ந.திக்கும் கொடுத்திருக்கலாம் ஃப்ளாஷ் பேக்கில்..
rajeshkrv
16th November 2015, 09:13 PM
vanakkam ji
vasudevan31355
16th November 2015, 09:20 PM
//இன்னொரு ஜெய் ப பி பாட் உண்டு.. வாஸ்ஸு நினைவுக்கு வர மாட்டேங்குதே..//
தொடரில் வரும். வெயிட் செய்க.:)
vasudevan31355
16th November 2015, 09:20 PM
வணக்கம் ஜி! அப்பா! எத்தனை நாட்களாகி விட்டது?
vasudevan31355
16th November 2015, 09:23 PM
//ஆமாம்.. மோ.சு.பி யில் காத்திருந்த கண்களே - மணிமாலாவிற்கும் ந.திக்கும் கொடுத்திருக்கலாம் ஃப்ளாஷ் பேக்கில்..//
'டமால்' என்று மோ.பு யில் இருந்து மோ.சு.பி க்கு தாவுகிறீரே!:)
vasudevan31355
16th November 2015, 09:27 PM
//சிலோன் நடிகையைச் சுட்டுவிட்டு//
http://thumbs.dreamstime.com/z/question-mark-face-26248158.jpg
chinnakkannan
16th November 2015, 09:37 PM
எதுக்கு இத்தினி பெரிய்ய கேள்விக்குறிங்கறேன்
டைட்டில்ல அனுராதா பத்மப்ரியா ஜெயபாரதி ஆனந்தின்னு போட்டுருக்குங்கறேன்..கூடவே கீதான்னும்.
அந்த சிலோன்ல வர்ற் பொண்ணா வர்றது ஆனந்தியா கீதாவாங்கறேன்.
இந்தாரும் தென்னிலங்கை மங்கையைப் பார்த்துச் சொல்லுங்கங்கறேன்..
(வர வர ப்ரொபஸர்ஸ்லாம் எல் கே ஜி ஸ்டூடண்டப் படுத்த ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. :) ).
https://youtu.be/f6efkuqrka4
vasudevan31355
16th November 2015, 09:40 PM
muthuraman manjula illayo doctoramma?
இல்லைஜி! ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா, தேங்காய், அசோகன் பிரதான பாத்திரங்கள்.
ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளாவிற்கு 'கண்கள் மலரட்டுமே' என்ற பாடலும் உண்டு. பாலா, சுசீலாம்மா பாடி இருப்பார்கள். 'செல்வங்கள் ஓடி வந்தது' என்று இசையரசி பாடுவாரே. அதுவும் ராஜனிடம் குடித்துவிட்டு நடிப்பது போல மஞ்சுளா பாடுவது.
உங்கள் சந்தேகத்திற்காக இதோ என் டி.வி.டியிலிருந்து இமேஜ்.
http://i67.tinypic.com/nqzpyb.jpg
chinnakkannan
16th November 2015, 09:45 PM
ஹைய்யா இது வாஸ்ஸூ போட்ட பாட்டு கிடையாதே.. :)
செவ்வானமே பொன்மேகமே.. யாராக்கும் பாடுவாங்க..மறந்து போச்.
https://youtu.be/c6nRGEYQV3E
chinnakkannan
16th November 2015, 09:46 PM
ஆமா அனியாயத்துக்கு டாக்டரம்மா மஞ்சுளா செத் போவாங்க் இல்லியோ..
vasudevan31355
16th November 2015, 09:46 PM
ஓய்!
முடிஞ்சா சிலோன் தயாரிப்பு 'ரத்தத்தின் ரத்தமே' கண்டு புடிச்சி பாரும்கிறேன். அப்போ புரியும்கிறேன். ஆனா 'என் ரத்தத்தின் ரத்தமே'ன்னு தேடதேயும்கிறேன். புரியுதாங்கிறேன். அதுல யாரு ஹீரோன்னு கேட்காதேயும்கிறேன். எத்தனை நாளைக்கு எல்.கே.ஜி ஸ்டூ டண்ட் ஆகவே இருப்பீர்ங்கிறேன். அப்புறம் ஆதிகிட்டே சொல்லிடுவேங்கிறேன்.:)
vasudevan31355
16th November 2015, 09:48 PM
கீதா குளிக்கிறதை ரெண்டு தரம் பாக்கணுமா சின்னா!:)
RAGHAVENDRA
16th November 2015, 09:49 PM
அநியாயம்.. அக்கிரமம்....
காமிரா மேதை கர்ணன் என்றால் எல்லோருக்கும் அவ்வளவு இளக்காரமா.. அப்போது மட்டும் கத்திரி கூர்மையாக இருக்கிறதே..
இப்போது சி.க. சார் கத்திரிக்கோலை வேண்டுமென்றே ஒளித்து வைத்து விட்டாரோ...
vasudevan31355
16th November 2015, 09:49 PM
சரி செவ்வானத்தை நானே காட்றேன்.
https://youtu.be/x4BRKvHZNOg
chinnakkannan
16th November 2015, 09:49 PM
ஹத்த்தான்.. இந்த ஏந்திழையைப்படுத்துவது நியாயமா- ந்னு அ கால ராஜகுமாரி ஸ்டைல்ல பேச ஆரம்பிச்சுடுவேன்.. ரத்தத்தின் ரத்தமேயா.. ம்ம்
இந்த நானோ உன் அடிமைபாட் போடலேன்னா ப.பியோட ஆவி என்னை மன்னிக்காது இல்லியோ..
https://youtu.be/X9Uy1vRL2MU?list=PL4SxysG_X0Wm-AlpRZL5QsJ3M37XN7STO
RAGHAVENDRA
16th November 2015, 09:50 PM
கீதா குளிக்கிறதை ரெண்டு தரம் பாக்கணுமா சின்னா!:)
அதுமட்டுமல்ல... ரேப்பிங்கும் உண்டாக்கும்...
இதுக்கு மேல் அதைப் பற்றி .... ஹ்ம்ம்... நோ...
vasudevan31355
16th November 2015, 09:51 PM
அந்தக் காலத்திலிருந்தே சென்ஸார் போர்ட் நியாயமா செயல்பட்டதில்லையே ராகவேந்திரன் சார்! சின்னா மட்டும் விதி விலக்கா என்ன?:)
chinnakkannan
16th November 2015, 09:55 PM
சரி செவ்வானத்தை நானே காட்றேன்// தாங்க்ஸ்ங்க.. குட்டிபத்மினி உன்னி மேரி ம்ம் நினைவுக்கே வரலை..
கத்திரி என்னங்க நான் பாட் போட்டதோட சரி தெ இ மங்கையை..ம்ம் மறுபடி பார்க்கணுமோ.. ராகவேந்தர் சார்..
எதுக்காக ரெண்டாவது முறையா பார்க்கணும் தலைவி பாட்டுல ல மறுபடி குளிக்கறாங்களா என்ன..
chinnakkannan
16th November 2015, 09:57 PM
இப்படி டிபார்ட்மெண்ட் ஹெட், ப்ரொபஸர்லாம் அனியாயத்துக்கு சி.க வை ராகிங் பண்றாங்கப்பா..:) ப்ளட் டின் ப்ளட் தேடிப் பார்க்கணும்
vasudevan31355
16th November 2015, 09:57 PM
'தென் இலங்கை மங்கை' பாட்டை ரெண்டு தரம் வீடியோ காண்பிச்சிருக்கீக சின்னா. பாக்கலையோ? என்ன குழப்பம்?
chinnakkannan
16th November 2015, 10:00 PM
ஹச்சோ..தெரியாத்தனமா போட்டுட்டேன்.. இப்போ மாத்திட்டேன்..ஸாரி.. :)
vasudevan31355
16th November 2015, 10:03 PM
இப்போ புரியுதா ரெண்டு தடவைக்கு அர்த்தம்?:)
chinnakkannan
16th November 2015, 10:05 PM
புரிகிறது ஸ்வாமி.. எளியேனை ரத்தத்தின் ரத்த்மே பற்றி விளக்கம் கூறி க்காப்பாற்றுங்கள்..கூகுள் கை விட்டு விட்டது.. :)
இப்போ புரியுதா ரெண்டு தடவைக்கு அர்த்தம்?:)
vasudevan31355
16th November 2015, 10:09 PM
எளியேன்
எல்.கே.ஜி ஸ்டுடென்ட்
ராஜகுமாரி
சென்சார் அதிகாரி
இன்னும் எத்தனை மாய வேஷங்களோ எங்கள் சின்னக் கண்ணனுக்கு.:)
RAGHAVENDRA
16th November 2015, 10:11 PM
எளியேனை ரத்தத்தின் ரத்த்மே பற்றி விளக்கம் கூறி க்காப்பாற்றுங்கள்..கூகுள் கை விட்டு விட்டது..
எம்.ஜி.ஆர். தன் அ.தி.மு.க. தொண்டர்களை அன்போடு அழைக்கும் சொற்றொடர் ரத்தத்தின் ரத்தமே..
ரத்தத்தின் ரத்தமே என்ற பெயரில் ஜெய் நடித்து ஒரு படமும், என் ரத்தத்தின் ரத்தமே என்ற பெயரில் பாக்யராஜ் நடித்து ஒரு படமும் உண்டு.
ஜெய் நடித்த ரத்தத்தின் ரத்தமே படத்தின் கதாநாயகி சிலோன் கீதா.
இதுக்கு மேலே கேட்காதீர்கள்... தெரியாது ........
அவ்வளவு தான்.. எஸ்கேப்...
chinnakkannan
16th November 2015, 10:16 PM
ராகவேந்தர் சார் உங்க சின்னவயசு போட்டோலயும் நீங்க ஹாண்ட்ஸம்மா இருக்கீங்களாக்கும் :) எதைப் பற்றியுமே தெரியாத, எல்லாவற்றையும் அறியத்துடிக்கும் ஆவலுள்ள இந்த பச்சிளம் பாலகன் மீது கருணை காட்டக் கூடாதோ..
வாஸ்ஸூ கைண்ட்லி ஆட் ப பா ஆல்ஸோ :)
vasudevan31355
16th November 2015, 10:17 PM
//இதுக்கு மேலே கேட்காதீர்கள்... தெரியாது ........//
சின்னா! இதுக்கு மேலதான் விஷயமே இருக்கு.:) சாமர்த்தியம் இருந்தா பொழச்சுக்கோங்க.:)
rajeshkrv
16th November 2015, 10:33 PM
வணக்கம் ஜி! அப்பா! எத்தனை நாட்களாகி விட்டது?
aam ..neer eppadi irukkeer??
chinnakkannan
16th November 2015, 10:50 PM
நான் மெதுவாகத்தொடர்கின்ற போது கண்மயங்காமல் இருப்பாளோ மாது
சுகமான சிந்தனையில் இதமான உணர்வோடு சொர்க்கங்கள் வருகின்றன
இது ராஜ கோபுர தீபம் அகல் விளக்கல்ல
சாந்தீஈ மை ஹோலி ஏஞ்சல்
இதெல்லாம் சிலோன் ரேடியோவில் கேட்ட பாட்ஸ் எஸ்பிபி தானே எப்போ வ்ரும்..
vasudevan31355
16th November 2015, 11:15 PM
//நான் மெதுவாகத்தொடர்கின்ற போது கண்மயங்காமல் இருப்பாளோ மாது//
http://www.jayachandransite.com/images/differ_p3.jpg
vasudevan31355
16th November 2015, 11:17 PM
aam ..neer eppadi irukkeer??
நீர் சூழ இருக்கேன். ஐ மீன் மழை நீர். :)
vasudevan31355
16th November 2015, 11:18 PM
//இதெல்லாம் சிலோன் ரேடியோவில் கேட்ட பாட்ஸ் எஸ்பிபி தானே எப்போ வ்ரும்..//
இப்போ வராது. ஆனா கண்டிப்பா வரும்.
rajeshkrv
16th November 2015, 11:43 PM
நீர் சூழ இருக்கேன். ஐ மீன் மழை நீர். :)
aaha enne thazmih pulamai
madhu
17th November 2015, 09:02 AM
நாலு நாள் மழையில் சிக்கிய மல்லிகைக் கொடியாக நனைந்து பாலுமகேந்திராவின் ஊட்டியாக ஈரமாக இருக்கிறேன். அதுக்குள்ள இங்கே ஏழெட்டு பக்கம் நகர்ந்து போச்சா ?
சிக்கா... கீதாவின் இரட்டைக் குளியல் என்று படிக்கிறப்பவே எனக்கு நீங்க ரெண்டு வாட்டி வீடியோ போஸ்ட் செஞ்சிருப்பீங்கன்னு தோணிச்சு.. ( நீங்க டெலீட் செஞ்சுட்டாலும் கூட )..
நா.ம வின் க .க. க. பாட்டு உமாவுக்கு.. ஜெ.சிக்கு அல்ல...
பவர் பிரச்சினையால் பதிய முடியவில்லை. அப்புறமா வரேன்
RAGHAVENDRA
17th November 2015, 09:15 AM
பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்
சென்னை : பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் காலமானார். இவர், கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். பக்திப்பாடகரான இவர் தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தினமலர் இணையப்பக்கத்திலிருந்து- http://www.dinamalar.com/news_detail.asp?id=1388839&
திரு பித்துக்குளி முருகதாஸ் மறைவு பக்கி சங்கீதத்திற்கு பேரிழப்பு. பஜனை சம்பிரதாயத்தில் பொது மக்களை மிக அதிக அளவில் பங்கு கொள்ள வைத்த பெருமை இவருக்கும், கே.பி.சுந்தராம்பாள், பெங்களூரு ரமணி அம்மாள் ஆகியோருக்கு உண்டு. அவர்களுடைய தலைமுறையைச் சார்ந்த பித்துக்குளி முருகதாஸ் அந்தக்கால பஜனை சம்பிரதாயத்தின் பிரதிபலிப்பாக நம்மிடையே வாழ்ந்து வந்தார். அவருடைய மறைவுக்கு நமது அஞ்சலியை செலுத்திக் கொள்வோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
அவர் நினைவாக அவர் புகழை என்னாளும் கூறும் தெய்வம் படத்தில் இடம் பெற்ற அவருடைய பாடல்..
https://www.youtube.com/watch?v=Uh7rxS-eJhQ
vasudevan31355
17th November 2015, 11:15 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
50-ஆவது சிறப்புப் பதிவு
http://kevinblakeman.files.wordpress.com/2011/08/number-50.jpg
50
'உத்தரவின்றி உள்ளே வா'
http://padamhosting.me/out.php/i73341_vlcsnap-2011-04-20-08h48m29s0.pnghttp://padamhosting.me/out.php/i84186_uiuv8.png
'உன்னைத் தொடுவது இனியது'
பாலாவின் இன்னொரு அலாதியான உற்சாகப் பாடல் அதே 'உத்தரவின்றி உள்ளே வா' படத்திலிருந்து. பாடல்களுக்கு ஒரு படமல்லவா அது!
இந்தப் படத்தின் பாடல்கள் பல பேரைக் குழப்பும் திறன் வாய்ந்தவை. ஏனென்றால் ஒன்றையொன்று மிஞ்சும் ரகம். 'உத்தரவின்றி உள்ளே வா' பாடல் அருமை என்றால் 'காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ' தான் டாப் என்பவர்கள் பலர். 'நோ.. நோ... மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி'தான் அனைத்தையயும்விட டாப்' என்று ஒரு வர்க்கம் வரிந்து கட்டிக் கொண்டு வரும். 'அதெல்லாம் கிடையாது...'உன்னைத் தொடுவது இனியது' தான் செம ஜாலி' என்று கூக்க்குரலிடும் ஒரு கும்பல். 'நிறுத்துங்கப்பா! தேன் மாதிரி ஈஸ்வரி பாட்டை மறந்துட்டு ஏதேதோ பேசறீங்களே...'தேனாற்றங்கரையினிலே' மாதிரி பாடல் வருமா?' என்போர் ஒரு குரூப். இப்படி ஆளாளுக்கு தங்களுக்குப் பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தினாலும் அத்தனைப் பாடல்களும் அத்தனைப் பேருக்கும் அவ்வளவு பிடிக்குமே! இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இப்படி சில படங்கள்தான் பாடல்களுக்கென்றே அமையும். (எனக்கு இதில் 'வெண்ணிற ஆடை' முதல் இடத்தைப் பிடிக்கும். அப்புறம் 'காவியத் தலைவி'. நடிகர் திலகம் படப் பாடல்கள் கதை வேறே. அதை இதில் கலக்க மாட்டேன்:))
இதில் நான் 'உன்னைத் தொடுவது இனியது' ஆதரவாளர்கள் கட்சியைச் சேர்ந்தவன். முதலிடம் அதற்குத்தான். அவ்வளவு பிடிக்கும்.
வீட்டிலேயே அடைந்து சதா வேலை செய்து கொண்டிருக்கும் காதலி காஞ்சனாவை வற்புறுத்தி வெளியே பார்க்குக்கு காரில் அழைத்துச் செல்வார் ரவி. அங்கு சென்று பார்த்தால் அவருக்குத் தெரியாமல் நாகேஷ் 'நாதா' பைத்தியத்துக்குப் பயந்து காரில் ஒளிந்து கொண்டு உறங்கி விட்டிருப்பார். நாகேஷுக்குத் தெரியாமல் 'நாதா' ரமாபிரபா காரின் டிக்கியில் ஒளிந்து கொண்டிருப்பார். டிபன் கேரியர் எடுக்க ரவி டிக்கியைத் திறக்கும் போது ரமா அங்கு ஒளிந்திருப்பது தெரிய வரும். ரவி காஞ்சனாவுடன் டூயட் பாட ஒரு பக்கம் செல்ல, நாகேஷை விடாமல் இன்னொரு பக்கம் துரத்தி ரமா செல்வார். இப்போது இரு ஜோடிகளுக்கும் அதியற்புதமான பாடல்.
அது உங்களையும் என்னை மட்டும் தொட்ட இனிய பாடல் அல்ல..தமிழ்நாட்டையே கலக்கிய தங்கப் பாடல்.
எப்போது கேட்டாலும் புதிதாகத் தெரியும் பாடல். மின்னல் போல உடலில் துடிப்பை ஏற்படுத்தும் பாடல்.
முன்பின் இல்லாத அளவிற்கு நம் நினைப்பிலேயே நின்றுவிட்ட பாடல்.
'உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது'
'ஆஹா' என்பதா? 'ஓஹோ' என்பதா? 'பேஷ் பேஷ்' என்பதா? எதைச் சொல்லி இந்தப் பாடலைப் பாராட்டுவது?
https://i.ytimg.com/vi/pZQwOBTGJWs/hqdefault.jpg
உற்சாகம் என்றால் கரை புரண்டு ஓடும் உற்சாகம். நாயகன் நாயகி இருவரும் இளமை பொங்க 'துறுதுறு'ப்பாயும், 'சுறுசுறு'ப்பாயும் பார்க்கைச் சுற்றி சுற்றி வந்து ஆடிப்ப் பாட, அங்கே நாகேஷ் தன் தலைவிதியை நொந்து தன்னையே சுற்றும் பூர்வஜென்மப் பைத்திய ராமாவின் கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக பதில் சொல்லிக் கொண்டிருக்க நகைச்சுவையும், நயமும் கொப்புளிக்கும் ஜோரான பாடல்.
ரவியின் டிரெஸ் நிரம்ப அழகு. ப்ளைன் ஸான்டல் கலரில் முழுக்கை சட்டை ரவிக்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கும். நீள் கோடிட்ட டிசைன் பிரவுன் பேன்ட் அந்த ஷர்ட்டின் கலருக்கு அவ்வளவு மேட்ச் ஆகும். காஞ்சனா வீட்டிலிருந்து அவசரமாக வெளியில் புறப்பட்டு வருவதால் வீட்டில் உள்ள சாதாரண புடவையையே அணிந்திருப்பார். இந்தப் பாடலிலும் அவருக்கு மிக எளிமையான உடையே. ஆனால் அதுதான் அழகே!
ரவிக்கு ரசனை மிகுந்த பாலா குரல். காஞ்சனாவிற்கு 'கானக் குயிலி'ன் குரல். இவர்கள் ஒரு பக்கம் தூள் பண்ணிக் கொண்டிருக்க,
அங்கே நாகேக்ஷுக்கு எனக்கு மிக மிகப் பிடித்த, அவருக்கு பொருத்தமான சாய்பாபாவின் குரல். ரமாபிரபாவிற்கு எனதருமை ராட்சஸி குரல். நால்வர் கூட்டணி. இப்போது புரிகிறதா எனக்கு ஏன் இந்தப் பாடல் முதலிடம் என்று?
மெலிதாயும் இல்லாமல், வலிதாயும் இல்லாமல், இடைப்பட்ட சுகமான கிடார் ஒலியில் ஆரம்பித்து வயலின்களின் இசை பின்னல் சேர, ஆர்கன்களின் ஓசை பின்னி எடுக்க, செம ஜாலியாக பாலா,
'லா...லலல்லா
லா... லலலலலா'
எடுக்க உங்கள் அங்கமெல்லாம் தேன் மாரி பொழிய ஆரம்பித்துவிடும். அதே ஓசை டிரம்பெட் ஒலியில் கம்பீரமாகத் தொடரும். இத்தனை உபகரணங்களும் இசை மழை பொழிந்த பின்பு பாலா என்ற காமதேனு தன் வழுக்குக் குரலால் மேலும் இனிமையைப் பொழிய ஆரம்பிக்கும்.
'உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது'
என்று குழைவாக அதே சமயம் கம்பீரம் கெடாமல் முழங்க, அதைத் தொடர்ந்து குயில் குரல் தரும்.
'இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு'
இந்த நான்கு வரிகள் நானூறு வருஷத்துக்குப் போதுமைய்யா! பாடல் முழுவதையும் அப்புறம் கேட்டுக் கொள்ளலாம்.
சரணத்தில் பாலா பேஸ் வாய்ஸில், கட்டைக் குரலில்,
'பாவை முன்பு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னாலென்ன?'
என்று பாடும்போது அப்படியே நம் நெஞ்சம் 'சர்'ரென்று 'பி.எஸ்.எல்.வி' வேகத்தில் பறக்கும். ரத்த நாளங்கள் சுறுசுறுப்பாகும். அதுவும் 'பள்ளிப் பாடம்' சொல்லி முடித்து 'சொன்னாலென்ன?' என்று சற்று வேகமாக ஒரு தூக்குத் தூக்குவாரே பார்க்கலாம். அய்யோ!
சுசீலா அடுத்த வரிகளை முடித்தவுடன் பாலா,
'லலலலலலலலலால்லா
ல லலலலலலலலலால்லா'
என்று குதூகல ஹம்மிங் போடுவது குஷியோ குஷி! எதிர்ப்புறமும் அப்படியே.
அப்படியே அவர்களை மறந்து இங்கே வாருங்கள்.
பூங்காவில் மலை போல நிற்கும் யானை சிலையின் கால்களுக்கிடையில் ரமா புகுந்து வர,
'ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்'
என்று திடீரென ஒரு அரக்கியின் அடாவடிக் குரல் கேட்கும். விசாரித்தால் 'ஈடு இணையில்லா ஈஸ்வரி' என்று சொல்வார்கள். நாகேஷின் ஒயிட் ஜிப்பா அவரைப் போலவே காமெடியில் கலக்கும்.
'சேரன் சோழன் திரும்பவும் வருவான்
காதல் வீடு கல்யாணமெல்லாம்
அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
அம்மா தாயே! நான் யார்? நீ யார்?
நானோ எலும்பு.. நீயோ இரும்பு
கண்ணே பூர்வ ஜென்மம்'
என்று நாகேஷ் சாய்பாபாவின் சாய வைக்கும் குரலில் ரமாவுக்கு வேண்டுகோள் விடுப்பது வேடிக்கை கலந்த அபாரம். அதுவும் நாகேக்ஷின் உடலை அவரே நையாண்டி செய்து ('நானோ எலும்பு') துரத்தும் ராமாவை 'அயர்னு'க்கு ஒப்பிட்டு ('நீயோ இரும்பு') பூர்வ ஜெமத்தையும் 'கண்ணே!' என்று கனிவோடு அழைத்துச் சுட்டிக் காட்டும் போது எவர் சிரிக்காமல் இருக்க முடியும்? பாபா குரல் பிளஸுக்கும் பிளஸ் பாய்ன்ட். குரலில் குல்கந்து கலந்திருப்பாரோ!
'அங்கே பேசு என்னிடம் வேண்டாம்' என்று நாகேஷ் இசைக்கும்போது ரமாபிரபா பின்பக்கமாக படிக்கட்டுகளில் இறங்கியபடியே கைகளை பறவை இறகுகள் போல் வைத்து வெகு ஜோராக இடுப்பை அசைத்து வருவது அமர்க்களம். (மறவாமல் pause பண்ணி பார்க்க):)
'நானோ எலும்பு' என்று சொல்லுபோது படிக்கட்டில் ராமாவுக்காக பயந்து சாயும் நாகேஷின் முக அஷ்ட கோணலை பார்க்க மறக்காதீர்கள்.
இப்போது ரவி, காஞ்சனா டர்ன்.
சரண இடையிசைக்கு புடவையுடன் காஞ்சனா ட்விஸ்ட் ஆடும் போது நம் எல்லோர் மனமும் ஆட்டம் காணும். உடன் ரவி ஒரு காலை மட்டும் தூக்கி தூக்கி ஆடியபடி மிக அழகாக ஜாயின் செய்வார். பிறகு ரவி அப்படியே காஞ்சனாக் கொடியை 'அலேக்' காகத் தூக்க 'மெல்லிசை மன்னர்' இப்போது புகுந்து புறப்படுவார் பாருங்கள்! பாடலின் பல்லவி வரிகளை அப்படியே இசைக்கருவிகளின் மூலம் இந்த இடத்தில் டைமிங்கில் அற்புதமாக ஒலிக்க வைத்து அம்சமாக பெயரைத் தட்டிக் கொண்டு போய் விடுவார் எம்.எஸ்.வி.எமகாதகன்.
http://i67.tinypic.com/xpsetf.jpghttp://i64.tinypic.com/24oowt3.jpg
அதே இசைக்கு (பின் இரண்டு லைன்கள்) இங்கே நடந்ததற்கு தலைகீழாக அங்கே ரமாபிரபா சர்வ அலட்சியமாக நாகேஷை 'அலேக்'காகத் தூக்கி மூன்று முறை சுற்றிக் கிடாசுவார். (ரவி கூட காஞ்சனாவை தூக்கி ஒருமுறைதான் சுற்றுவார்) அப்பப்பா! வயிறு சிரித்து சிரித்து வெடித்தே விடும். என்ன நளினமான அழகான கற்பனை! ஹீரோ ஹீரோயினைத் தூக்குவது வாடிக்கை. காமெடியினி காமெடியனை தூக்கி சுடுவது நிஜமான காமெடி. தியேட்டர் குலுங்கும்.
அடுத்த சரணத்தில்
'தேகமெங்கும் மோக வண்ணம்
சிந்து பாடும் பெண்ணல்லவோ'
என்று இரண்டாம் தரம் பாடும் போது பாலா 'பெண்ண..ல்லவோ' என்று கொஞ்சிக் குழைந்து 'இன்னும் ஒரு முறை பாலா... ப்ளீஸ்!' என்று நம்மைக் கெஞ்சிக் கூத்தாட வைப்பார். அடடா! இந்த இடத்தில் பாலா குரலால் வாழ்ந்து காட்டுவார்.
இதே சரணத்தில் காஞ்சனா பாடுவதாக வரும்,
'மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் சொந்தம் நீயல்லவோ'
வரிகளை மறக்கவே முடியாது. என்னா கவிஞன்யா அவன்! இந்த வரிகளுக்கு அர்த்தம் சொன்னால் என்னை விட மாங்காய் இருக்க முடியாது. காஞ்சனா வேறு அவர் பங்குக்கு இந்த இடத்தில் நமம்க் கொல்வார். எத்தனை இன்ப இம்சைகள்!
காஞ்சனா, ரவி ஆடுவது நடன மாஸ்டர் சொல்லித் தந்தது போலவே இராது. ரொம்ப இயல்பாக அவர்கள் இஷ்டத்திற்கு ஆடுவது போலவே அவ்வளவு இயற்கையாக இருக்கும்.
இவர்கள் போர்ஷன் முடிந்தவுடன் திரும்ப நாகேஷ், ரமா. ஆற்றின் குறுக்கே நிற்கும் பாலத்தில்.
'நீ பாண்டியனின் பிள்ளையோ?' என்று ஈஸ்வரி கொக்கரிப்பார். அந்த 'யோ' அழுத்தம் அய்'யோ'!
'நான் மாமதுரைக் காதலி
என் மன்னவனின் நாயகி'
என்று ராட்சஸி பாடுவதை இரண்டு முறைக்குக் மேல் நிறுத்திக் கேட்காமல் மேலே போக முடியாது.
நாகேஷ் சொல்லும் பதிலில் நகைச்சுவை மண்டிக் கிடக்கும்.
'நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
ராஜா ராணி நம்மைப் போல் இல்லை'
பாருங்கள். 'கொஞ்சம் சரித்திரம்' படித்தாராம். நாகேஷின் படிப்பு மக்குத்தனத்தை, அதே சமயம் புத்திசாலித்தனத்தை ஒருங்கே வெளிப்படுத்தும் வரிகள்.
'காதல் உலகை வாழ விடம்மா'
என்று ராமாவிடம் கெஞ்சல் வேறே.:)
'சேரன் சோழன் திரும்பவும் வருவான்
காதல் வீடு கல்யாணமெல்லாம்'
'நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
ராஜா ராணி நம்மைப் போல் இல்லை'
என்ற சாய்பாபாவின் வரிகள் இரண்டு சரணங்களிலும் முடிந்தவுடன் விட்டு விட்டு ஒலிக்கும் 4 முறை வரும் அந்த ம்யூசிக். (டைன்... டைன்... டைன்... டைன்) சான்ஸே இல்லை.
பாடல் முழுதும் எதை ரசிப்பது என்ற குழப்பம் நமக்கு. பாடகர்களின் குரலையா, நடிகர்களின் நடிப்பையா, நாகேஷ் ராமாவின் காமெடியையா, வெளுத்து வாங்கும் 'மெல்லிசை மன்ன'ரின் மகோன்னத இசையையா, வெளிப்புற கலர்புல் படப்பிடிப்பையா, அட்டகாசமான பாடல் வரிகளையா என்று எதை எடுப்பது எதை உடுப்பது போன்ற இன்பக் குழப்பம் ஏற்படுத்தும் இனிமைப்பாடல். இளமைப் பாடல். துள்ளல் பாடல்.
இனி பாடல் வரிகள்
http://i64.tinypic.com/25jy4w6.png
லா... லலல்லா
லா... லலலலலா
லா லலலலலலா
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
பாவை முன்பு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னாலென்ன
தேவையென்றால் கோடி உண்டு
தேடித் தேடித் தந்தாலென்ன
பாவை முன்பு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னாலென்ன
தேவையென்றால் கோடி உண்டு
தேடித் தேடித் தந்தால் என்ன
லலலலலலலலலால்லா
லல்லல்லலல்லலல்லலல்லலால்லா
லலலலலலலலலால்லா
லலலலலலலலலலால்லா
ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்
ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்
அதே முகம் என்றாள்
இதோ என்னைத் தந்தேன்
சேரன் சோழன் திரும்பவும் வருவான்
காதல் வீடு கல்யாணமெல்லாம்
அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
அம்மா தாயே! நான் யார் நீ யார்
நானோ எலும்பு நீயோ இரும்பு
கண்ணே பூர்வ ஜென்மம்
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
தேகமெங்கும் மோக வண்ணம்
சிந்து பாடும் பெண்ணல்லவோ
மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் சொந்தம் நீயல்லவோ
தேகமெங்கும் மோக வண்ணம்
சிந்து பாடும் பெண்ணல்லவோ
மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் சொந்தம் நீயல்லவோ
லலலலலலலலலால்லா
ல லலலலலலலலலால்லா
லலலலலலலலலால்லா
ல லலலலலலலலலால்லா
நீ பாண்டியனின் பிள்ளையோ
உன் பால் மனது வெள்ளையோ
நீ பாண்டியனின் பிள்ளையோ
உன் பால் மனது வெள்ளையோ
நான் மாமதுரைக் காதலி
என் மன்னவனின் நாயகி
நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
ராஜா ராணி நம்மைப் போல் இல்லை
தானே பார்த்து தானே சிரித்து
தானே அணைத்தால் தாங்காது தாயே
காதல் உலகை வாழ விடம்மா
கண்ணே பூர்வ ஜென்மம்
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
chinnakkannan
17th November 2015, 11:34 AM
//தானே பார்த்து தானே சிரித்து
தானே அணைத்தால் தாங்காது தாயே
காதல் உலகை வாழ விடம்மா
கண்ணே பூர்வ ஜென்மம் //சேரன் சோழன் திரும்பவும் வருவான்
காதல் வீடு கல்யாணமெல்லாம்
அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
அம்மா தாயே! நான் யார் நீ யார்
நானோ எலும்பு நீயோ இரும்பு
கண்ணே பூர்வ ஜென்மம் // ககக்னு சிரிக்காம யார் தான் இருப்பாங்க.. வாஸ்ஸூ..வழக்கம் போல கலக்கல்ஸ்.. எனக்கு நாகேஷ் ரமாப்ரபா போர்ஷன்ரொம்ப ப் பிடிக்கும்.. நன்னி, தாங்க்ஸ், வளர நன்னியானு, நன்னிலு, ஷூக்ரான் ஹபிபி.. வேற மொழில்ல ராஜ்ராஜும் ராகதேவனும் சொல்வாக..
RAGHAVENDRA
17th November 2015, 12:06 PM
http://www.dailymotion.com/video/xiple0_unnai-thoduvathu-iniyathu_school
வாசு சார்
சூப்பரோ சூப்பர்... இதை விட இந்தப் பாடலைப் பற்றி வேறு யாரும் எழுத முடியாது. அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து உதறி விட்டீர்கள்.
உத்தரவின்றி உள்ளே வா ... சந்தேகமே யில்லாமல் இசைக்கென்ரு ஓர் படம்...
தங்கள் எழுத்தில் படிக்கப் படிக்க மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆர்வமே எவருக்கும் மேலிடும்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
17th November 2015, 12:23 PM
இசைக்கென்றே ஒரு படமான உத்தரவின்றி உள்ளே வா படத்தின் டைட்டில் இசையும் நாம் கேட்டால் முழுமை அடைந்து விடுமே..
இதோ உங்களுக்காக உத்தரவின்றி உள்ளே வா திரைப்படத்தின் முகப்பிசை. தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.
https://www.mediafire.com/?ol08dj4cc7vo3uy
chinnakkannan
17th November 2015, 12:37 PM
நேத்திக்கு ஒரு பாட் கேட்டேன்..கேட்டேனா..
ஹிப்பி ஸ்டைல்ல முத்துராமன்.. அப்புறம் யாராக்கும் இது தேர்ந்த சிற்பியால செதுக்கப் பட்ட கருங்கற்சிற்பம் சுடிதார் டைப் ட்ரஸ்ல ஆடுதோ ந்னு வியக்கவைக்கற மாதிரி அழகோட ஃபடாபட்.. படம் உறவுகள் என்றும் வாழ்கன்னு நினைக்கிறேன்
பாட் சொல்லலாம்போட முடியாத்..வாசு திட்டும்..
நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே.. நல்ல இசை..
ஆமா என்னவாக்கும் கதை? :)
madhu
17th November 2015, 06:37 PM
வாசு ஜி..
உன்னைத் தொடுவது பாடல் எனக்கும் ரொம்பப் பிடித்தது. ( நாலு குரல்களில் ஒரு பஃபே பார்ட்டியே கிடைத்தால் யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா ? ) முதல் காரணம் அந்தப் பாட்டின் வேகமான மெட்டு. பாலு,சுசீலா,ஈஸ்வரி பற்றி சொல்லவே வேண்டாம். நாகேஷ் என்றால் ஏ.எல்.ராகவன் குரல்தான் சரி என்று நினைத்திருப்போருக்கு "ம்ம்ம்மாட்டிகிட்டான்" படத்தின் ரோமியோவும்... இந்தப் பாட்டும் ஷிர்டியும் புட்டபர்த்தியும் போல.....( சிக்காவுக்கு புரிஞ்சா போதும்.. )
அ
RAGHAVENDRA
17th November 2015, 11:58 PM
நினைத்துப் பார்க்கிறேன்
https://i.ytimg.com/vi/Aa08VgC1YkE/maxresdefault.jpg
இந்தப் பதிவைத் தொடங்குதற்கு முன் முதலில் மேலே காணும் இரு இசைத் தெய்வங்களுக்கும் உளமார்ந்த அஞ்சலி.
இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பாக தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில், டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ... இவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய மகுடம் சூட்டிய பாடல்...
ஒரு மனிதன் மரணத்தை நோக்கிப் பயணிக்கும் போது அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும்.. அவன் என்னவெல்லாம் நினைப்பான்... இதை நாம் யாராவது சிந்தித்திருக்கிறோமா.. அதுவும் அவன் தான் இறக்கப் போகிறோம் என்பதைத் தானே உணர்கிறான்.. அதற்குக் காரணம் அவன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான்.. அப்போது அவன் மன ஓட்டம் எப்படி இருக்கும்...
இப்படி ஓர் சூழ்நிலை ஒரு படத்தில் உருவாகியுள்ளது. இதற்குப் பாடல் எழுத வேண்டும், இசையமைக்க வேண்டும், பாட வேண்டும்...
முதல் சவால், பாடலில் எந்த விதமான விஷயங்கள் இடம் பெற வேண்டும், அவை என்ன சொல்ல வேண்டும், என்னென்ன கால கட்டங்கள் இடம் பெற வேண்டும், அதைப் பற்றி அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும்.. இப்படிப் பல விஷயங்களைப் பாடலில் கொண்டு வருவதற்கான முதல் படி.
இரண்டாவது ... இசை ...இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன மாதிரியான இசையமைக்க வேண்டும்,, என்னென்ன கருவிகளைக் கையாள வேண்டும், பாடலில் என்னென்ன உணர்வுகளைக் கொண்டு வர வேண்டும்...
மூன்றாவது ... பாடகர்கள்... இத்தனை விஷயங்களையும் தீர்மானித்தபின் இதை மக்களிடம் கொண்டு செல்பவர்கள் பாடகர்கள் தானே.. அவர்களிடம் இருந்து என்ன கொண்டு வர வேண்டும்...
இப்படி வெவ்வேறு சவால்களை எதிர்நோக்கும் இசையமைப்பாளனுக்கு நிச்சயம் இது மிகப் பெரிய பரீட்சையே...
ஆனால் இந்த சவாலை சந்தித்தவர்கள் யார்... மெல்லிசை மன்னர்களாயிற்றே.... விட்டு விடுவார்களா என்ன... கூட இருப்பது என்ன சாமான்யரா... கவிச்சக்கரவர்த்தியாயிற்றே...
ஒரு மனிதன் கடைசி காலத்தில் தான் வாழ்க்கை என்றால் என்ன வென்று புரிந்து கொள்கிறான். அதற்குள் எல்லாமே கடந்து போய் விடுகின்றன.. வாழ்க்கையில் இளமையின் அனுபவங்கள், முதுமையின் துவக்கத்தில் படிப்பினைகள், கடைசி காலத்தில் முக்தியை வேண்டுதல் என மனித வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களையும் மன ஓட்டங்களையும் அவன் நினைத்துப் பார்க்கிறான். காலங்கடந்த ஞானோதயம் .. சராசரி மனித மனம் அப்படிப்பட்ட நேரங்களில் என்ன செய்யும்.. இறைவனிடம் புலம்பும்..
இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.
ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தையென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடு விட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன...
இந்தத் தொகையறாவிலேயே பாடலின் சூழலைக் கொண்டு வந்து விடுகிறார்கள்..
இங்கேயே ஆரம்பித்து விடுகிறது பாடகர் திலகத்தின் குரல் சாம்ராஜ்ஜியம்...
http://www.siruppiddy.net/wp-content/uploads/2013/05/tms.jpg
வீடு வரை உறவு,
வீதி வரை உறவு,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ
... இந்தப் பல்லவியை முதன் முதலில் கேட்டவுடன் நினைவுக்கு வந்து விடக்கூடிய முகம்...
முதன் முதலாக இந்தப் பாடலைக் கேட்பவர்களுக்கு உடனே நினைவுக்கு வந்து விடக்கூடிய முகம்...
http://tamiledhal.com/wp-content/uploads/2014/07/sivaji.jpg
இப்படி உடனேயே நடிகர் திலகத்தின் முகத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்ட இந்தப் பாடல் பாத காணிக்கை படம் என்ற வுடன் இயல்பாகவே மக்கள் மனதில் இது சிவாஜி படம் போல இருக்கிறது, என அவரை நினைத்து தியேட்டருக்கு வரவழைக்கும் அளவிற்கு இந்தப் பாடல் அமைந்து விட்டது. படத்தின் இயக்குநர் பீம்சிங் எனவும் மக்கள் கணிக்கும் அளவிற்கு முதல் எழுத்து பானாவும் சேர்ந்து கொண்டது.
போகப் போக பாடலில் சூழ்நிலைகள் வெவ்வேறு வகையாக மாறவும் மக்கள் தீர்மானமே செய்து விட்டனர் இது சிவாஜி படமென்று.
எல்லாமே படத்தின் இசைத்த்ட்டு பரபரப்பாக விற்பனையாகி சக்கை போடு போட ஆரம்பித்த பிறகு, படத்தில் சிவாஜி இல்லை எனத் தெரியும் வரைதான்.
இப்படிப்பலவாறாக எதிர்பார்ப்பை உண்டாக்கி, பின்னாளில், இப்படத்தில் நடிகர் திலகம் நடித்திருக்கக் கூடாதா என்று நிரந்தரமாகவே என்னை ஏங்க வைத்த பாடல் - என்னை மட்டுமல்ல உங்களையும் நிச்சயம் ஏங்க வைத்திருக்கும் தானே...
அசோகன் மிகத் திறமையான நடிகர். இருந்தாலும் இந்தப் பாடலில் மட்டும் நடிகர் திலகம் நடித்திருந்தால் இதனுடைய ரேஞ்ச் எங்கோ போயிருக்கும்... 1962ல் நடிகர் திலகத்திற்கு மற்றுமோர் வெள்ளி விழாப்படமாக அமைந்திருக்கும்.
மெல்லிசை மன்னர் இப்பாடலை எப்படிப் போட்டிருந்தார்கள்... இதைச் சொன்னாலே நாம் இப்பாடலில் நடிகர் திலகம் இல்லை என ஏன் ஏங்குகிறோம், என்பது புலனாகும்.
தொகையறா முடிந்து வீடு வரை உறவு பல்லவி முடிந்தவுடனேயே அதே தாளக்கட்டில், இளமையில் ஆட்டம் போடுவதைக் குறிக்கும் வண்ணம் டிரம்பெட்டில் ஒரு மேற்கத்திய இசைக்கோர்வை, இந்த இடத்தில் இயக்குநர் சமயோசிதமாக சில்ஹௌட்டில் நடனத்தை ஒளிப்பதிவு செய்ய வைத்திருப்பார், அப்படியே காமிரா கீழிறங்கி அசோகனிடம் செல்லும்...ஆடும் வரை ஆட்டம் சரணம் தொடங்கும்... அதற்கு அடுத்த சரணம், இளமையின் விளைவுகளைப் பற்றியும் சிற்றின்பம் வாழ்க்கையில் அதன் தாக்கம்,
அதைச் சொல்லும் விதமாக தன் அன்னையை நினைக்கிறான்.. அப்போது தாயின் தாலாட்டு.. ஹம்மிங்கில் ஒலிக்கிறது...
இந்த இடத்தில் மெல்லிசை மன்னரின் இசை ஞானம் நம்மை பிரமிக்க வைக்கிறது.. தாய்க்கு தாலாட்டு பாடும் சூழ்நிலையில், அவருக்கு வார்த்தைகள் இல்லாமல் ஆரிரோ மட்டுமே பாட வைத்திருப்பார். சொல்ல வந்த விஷயத்தை வார்த்தைகளை விட ஹம்மிங்கிலேயே சொல்லி விடத் தீர்மானித்து, அதற்கு மிகச் சரியாக அவர் பயன்படுத்திய பாடகி..
http://www.indya101.com/gallery/Singers/L_R_Eswari/2012/10/12/L_R_Eswari_zplwy_Indya101(dot)com.jpg
ஹம்மிங் பேர்ட் என நாம் அன்போடு நினைவு கூறும் பி.வசந்தாவுக்கு முன்னோடி ஈஸ்வரி அவர்களே.. இவருடைய ஹம்மிங்கிலேயே பலவிதமான உணர்வுகளைப் பல பாடல்களில் கொண்டு வந்திருப்பார். ஏட்டில் எழுதி வைத்தேன் பாடலில் காதலன் காதலியை நினைவு கூற வைக்கும் குரல், எண்ணிரண்டு பதினாறு வயது பாடலில் காதலனின் காதலை ஏற்று ஆமோதிக்கும் குரல், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலில் காதலனின் கலைநயத்தை ரசிக்கும் குரல்.. இப்படி தன் ஹம்மிங்கிலேயே பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திய ஈஸ்வரியை, இப்பாடலில் தாய்மைக்கும் தாலாட்டிற்கும் ஒரே சேர பயன்படுத்தி யிருக்கும் உத்தி மெல்லிசை மன்னருக்கே உரித்தான சிறப்பாகும்.
இந்த ஹம்மிங் முடிந்தவுடனே வரும் சரணத்தில் நாயகனின் உணர்வுகளை விளக்கும் சரணம்...
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்கு கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்டபின்பு ஞானி
இந்த வரிகளின் மூலம் வாழ்க்கையில் சலிப்பும் விரக்தியும் ஏற்படுவதைச் சொல்லி விடுகிறார் கவிஞர்.
இந்த நேரத்தில் அண்ணன் வீட்டை விட்டு வெளியேறி விபரீதமான எண்ணத்தில் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து பதைபதைப்புடன் தம்பி அவனைத் தேடி வருகிறான். இதையும் பாட்டில் கொண்டு வரவேண்டும். மெல்லிசை மன்னராயிற்றே சும்மாவா.. இதையும் மிகவும் தத்ரூபமாக டி.கே.ஆரின் வயலினில் அந்த டென்ஷனைக் கொண்டு வந்து விடுகிறார். கேட்கும் போதே நாமும் பதறி விடும் அளவிற்கு உணர்வு பாட்டிலேயே எதிரொலிக்கும்.
இப்போது பாடலின் நாயகன் செல்லும் வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அந்தக் கல்லறைகள் அவன் மனதில் ஒரு தாக்கத்தையும் தத்துவத்தையும் போதிக்கிறது. இதற்கு கவிஞரின் வரிகள் எப்படி அமைகின்றன.
சென்றவனைக் கேட்டால்
வந்து விடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்
சென்று விடு என்பான்...
இரண்டே வரிகளில் வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் அவற்றால் மனிதன் மனதில் ஏற்படும் விரக்தியையும் வெறுப்புணர்வையும் சொல்லி விடுகிறார் கவிஞர். சென்றவனைக் கேட்டால் வந்து விடு என்பான் .. என்ற வரிகளில், ஒரு மனிதன் , மரணமடைந்த ஒருவனிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் மரணமடைந்தவன் அவனையும் தான் இருக்கும் இடத்துக்கே வந்து விடு என்று கூறுவதாக கவிஞர் உருவகப் படுத்திக்கொள்கிறார். அந்த அளவிற்கு மனித வாழ்க்கை மோசமாக இருக்கமாம். அதற்கு அடுத்த வரி இன்னும் ஆழமானது. வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்... இந்த வரி எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியது. ஒரு மனிதனின் இழப்பில் தான் இன்னொருவனின் பிழைப்பே இருக்கிறது என்பதாக உருவகம் செய்கிறார். அதற்காக நீ இன்னும் இருந்து என்ன சாதிக்கப் போகிறாய், நீ செத்தால் இன்னொருவன் பிழைப்பானல்லவா என இருப்பவனையும் மேல் லோகத்துக்கு அனுப்பத் துடிக்கும் மனித மனத்தையல்லவா இந்த வரிகள் கூறுகின்றன.
இந்தக் கல்லறை அவன் மனதில் ஏற்கெனவே துளிர் விட்டிருந்த தற்கொலை எண்ணத்தை மேலும் அதிகமாகத் தூண்டி விட தான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிழைத்து விழக்கூடாது எனத் தீர்மானித்து உயரமான மலையிலிருந்து குதி்ப்பதுவே மரணத்திற்கு உத்தரவாதமளிக்கும் என்ற எண்ணத்தோடு மலை உச்சிக்குப் போகிறான்.
இதை உணர்த்துவதற்காக மெல்லிசை மன்னர் இசைக்கருவிகளின் - குறிப்பாக வயலின் இசையில் உச்சஸ்தாயியில் கொண்டு செல்கிறார். அப்படியே மேலே போகப் போக, கேட்பவர்களுக்கு ஒரு பரபரப்பை உண்டு பண்ணி விடுகிறது.
அவ்வளவுதான்..
க்ளைமாக்ஸ்.. காட்சியில் மட்டுமல்ல...
பாடலின் வரிகளில்.. பாடலின் இசையில்...பாடும் குரலில்...
விட்டு விடும் ஆவி
பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு...
அந்த சூனியத்தில் நிலைப்புடன் அவன் நிறுத்திக் கொள்கிறான்.
ஆனால் அந்த பரபரப்போ நிற்கவில்லை..
காரணம்.. அவன் தேடப்படுகிறான். உறவால் தேடப்படுகிறான்.. அவன் தம்பி தேடுகிறான்.. அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமே.. பாடல் முடிந்த பின் தான் அதற்கு விடை கிடைக்கும்.. எனவே இசை அப்படியே மேல் ஸ்தாயியிலேயே சஞ்சரித்து ஒரு ஸ்டேஜில் போய் நிற்கிறது. காட்சியின் தொடர்ச்சிக்காக..
....
இப்படி பல்வேறு வகையில் மகத்துவம் வாய்ந்த பாடலில் பக்கம் பக்கமாக எழுதினாலும் தீராத விஷயமுள்ள காலத்தால் அழியாத காவியப் பாடலில் நம் மனதை மிகவும் பாதித்த ஒரு விஷயம்..
இப்பாடல் காட்சியில் நம் நடிகர் திலகம் நடிக்கவில்லையே என்கிற மிகப் பெரிய குறையே.
https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw
madhu
18th November 2015, 05:09 AM
ராகவ் ஜி...
இன்றைக்கும் "வீடு வரை உறவு" பாட்டுக்கு என் மனதுக்குள் ஓடும் வீடியோ "சட்டி சுட்டதடா"தான் என்றால் நம்புவீர்களா ? ( இது போல இன்னும் பல பாடல்களை ந.தி. நடிப்பில் மனதுக்குள் ஓட விட்டதுண்டு.. (உ-ம்) மெல்ல மெல்ல அருகில் வந்து )..
பாட்டை சக்கையாக திறனாய்வு செய்து கசக்கிப் பிழிந்து உலர்த்தி விட்டீர்கள் ... ஆனால் பாட்டின் ரசம் மட்டும் மெல்ல மெல்ல மனதுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கிறது..
rajraj
18th November 2015, 06:11 AM
May his soul rest in peace.
An article in the Hindu mentions two of his song - alai payudhe kaNNa and aadaadhu asangaadhu- both by oothukkadu Venkatasubbaiyar.
Here is alai payudhe kaNNa.......
http://www.youtube.com/watch?v=TPnbrBoDvDc
Pithukuli Murugadas was a welcome change in the days when carnatic vocalists relegated Tamil compositiions to thukkada section towards the end of the concert. That has changed now. I heard one vocalist sing RTP with a Tamil compositon.
Another one opened the concert with a Tamil composition instead of 'vathapi ganapathim...'. Another had a concert with mostly Tamil compositions. Finally, they are listening to what Bharathiyar said long time back- sing in a language people can understand ! :))
chinnakkannan
18th November 2015, 10:08 AM
குட்மார்னிங்க் ஆல்
ராகவ் ஜி.. காலங்கார்த்தால என்ன சோகம்..
ஆனாக்க
ட்ரூ.. இந்த வீடு வரை உறவு ந.திக்குக் கிடைத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்..ஆனால் எப்போது கேட்டாலும் படித்தாலும் ஒரு விதமான சோகம்மனதைக் கவ்வுவது இந்தப் பாடலினால் தான்..
இன்னும் சில பாடல்கள் உண்டு
சமரசம் உலாவும் இடமே
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
தத்துவப் பாடல்களில் சிவாஜிக்கு இது அமைந்தால் நன்றாக இருக்குமென நினைத்துப் பார்க்கும் பாடல - ம்ம் சி.செயை வம்புக்கு இழுக்கலாம் :) மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போதுவள்ளலாக்லாம்.. ஆனால் இதை டி.எம்.எஸ் குரலில் ஏனோ பொருத்திப் பார்க்க முடியவில்லை..
rajeshkrv
18th November 2015, 10:20 AM
Vanakkam
adiram
18th November 2015, 12:24 PM
டியர் ராகவேந்தர் சார்,
உங்கள் 'வீடுவரை உறவு' பாடல் ஆய்வு படித்து ஒருகணம் ஆடிப்போய்விட்டேன். என்ன அருமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். அற்புதம். உண்மையில் நடிகர்திலகத்துக்கு கிடைத்திருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது சரியான கணிப்புதான். ஆனால் அசோகனும் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது அவரது மேக்கப் மற்றும் உடைகள்.
குறிப்பாக பாடலின் துவக்கத்தில், காலூன்றும் கட்டைகளால் தலையில் அடித்துக்கொள்ளும்போது பதற வைப்பார். இசைத்தட்டில் இடம் பெறாமல் படத்தில் மட்டும் இடம் பெற்றிருக்கும் (ஜெமினியின்) 'அண்ணா', 'அண்ணா' என்ற அலறல் சற்று டிஸ்டர்ப்ட் ஆகவே இருக்கும்.
அசோகன் எத்தனை பாடல்களில் நடித்து இருந்தாலும், இந்த 'வீடுவரை உறவு' பாடலும், இரவும் பகலும் படத்தில் அவரே சொந்தக்குரலில் பாடிய 'இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்' பாடலும் அவருக்கு பெரிய பெயரையும் புகழையும் தந்தன என்றால் மிகையில்லை.
பாடலின் ஒவ்வொரு வரிக்கும் உங்கள் சிறப்பான ஆய்வுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
18th November 2015, 12:33 PM
மதுஜி
வீடு வரை உறவு பார்த்த உடனே தங்கள் மனதில் மட்டுமல்ல, பலருக்கும் ஆலயமணி பாடல் தான் நினைவுக்கு வரும். பாத காணிக்கை படத்தில் நடிகர் திலகம் நடிக்கவில்லையே என்ற குறை நம்மைப் போலவே இயக்குநர் சங்கருக்கும் இருந்திருக்கும். காரணம் முதலில் சரவணா ஃபிலிம்ஸ் அணுகியது நடிகர் திலகத்தைத் தான். இந்தப் பாத்திரத்தை அவர்கள் உருவாக்கியதே நடிகர் திலகத்தை மனதில் வைத்துத் தான். என்றாலும் தொடர்ச்சியான கால்ஷீட், அமெரிக்கப் பயணம் போன்ற காரணங்களால் நடிகர் திலகத்தால் அதை ஒப்புக்கொள்ள முடியாமல் போய்விட்டது. என்றாலும் சங்கர் விடவில்லை. அதே போன்ற ஒரு பாடல் காட்சியை உருவகப்படுத்தி ஆலயமணி படத்தில் கொண்டு வந்து கிட்டத்தட்ட அதே போன்ற முடவன் வேடத்தில் நடிகர் திலகத்தை நடிக்க வைத்து - மன்னிக்கவும் - நடக்க வைத்து, தன்னுடையை ஆவலைத் தீர்த்துக்கொண்டார். அது நமக்கும் மிகப் பெரிய போனஸாக அல்லவா அமைந்து விட்டது.
படப்பிடிப்பு நடந்த இடமும் அதுவாகக் கூட இருக்கலாம்.
தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி.
RAGHAVENDRA
18th November 2015, 12:34 PM
சி.க. சார்
அன்னக்கிளி படத்தில் சுஜாதா சொல்வது போல, சோகத்திலும் ஒரு சுகம் இருக்கிறதன்றோ..
மனிதன் என்பவன் பாடல்...
டி.எம்.எஸ். பாடினாலும் நன்றாக இருந்திருக்கும்.. ஆனால் படமாக்கியிருக்கக் கூடிய முறை வேறாக இருந்திருக்கும்.
RAGHAVENDRA
18th November 2015, 12:36 PM
ஆதிராம்
அசோகன் ... நம்மைப் போன்ற சிவாஜி ரசிகர்களைப் பொறாமைப் படவைக்கக் கூடிய அதிர்ஷ்டசாலி...
இது மட்டுமல்ல இன்னும் பல பாடல்கள்,, நடிகர் திலகத்திற்குக் கிடைத்திருக்க வேண்டிய பாடல்கள் அவருக்கு வாய்த்து விட்டன.
அவற்றில் ஒரு சில இத்தொடரில் இடம் பெறவும் உள்ளன.
பாதகாணிக்கை அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு - நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
chinnakkannan
18th November 2015, 05:31 PM
இன்னிக்கு நயன் தாரா பர்த்டேயாமே.. சொல்லவே இல்லை..(கல் நாயக்கா இருந்தா மொதல்ல சொல்லியிருப்பார்.. ராஜேஷ்.. ம்ம் இன்னும் சர்ரூவ விட்டே வரமாட்டேங்கறார்..)
நல்ல நடிப்பென்றால் நானுண்டு என்றுவந்து
அல்லதை விட்டே அழகாக - சொல்ல
வியக்கும் எழிலுடனே வித்தைகள் செய்பவர்
நயன் தாரா என்றே நவில்
https://youtu.be/WD6MWLyGG3k
JamesFague
18th November 2015, 05:51 PM
Courtesy: Tamil Hindu
Mr C K for you
நயன்தாரா: வசீகர நடிகருக்குப் பின்னால் 10 ருசிகரங்கள்!
தமிழ்த் திரையுலகில் ஒரு நாயகி தனது எந்தப் படத்தையும் விளம்பரப்படுத்த மாட்டார்... ஆனா, அந்தப் படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பது உறுதி. 2015-ல் 'மாயா', 'தனி ஒருவன்', 'நானும் ரவுடிதான்' என வரிசையாக மூன்று ஹிட்களில் வலம் வந்த நயன்தாராதான் அந்த நாயகி.
நம்மில் பலருக்கும் வெள்ளித்திரையில் நடிக்கும் நயன்தாராவைத் தெரியும். ஆனால், திரைக்கு பின்னால் நயன்தாராவிடம் இருக்கும் பல குணங்கள், அவரது துறையிலேயே பெரும்பாலானோரிடம் இல்லை என்பதால், தனித்துவமானது என்றே சொல்லலாம்.
* 'வில்லு' படத்தின் படப்பிடிப்பு நடந்த்போது, அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் வெங்கட் மாணிக்கம். மூளையில் கட்டி வந்ததால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நயன்தாரா ஒரு பெரிய தொகையை அளித்தார். அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து, நயன்தாராவுக்கு நன்றி சொல்ல பூங்கொத்தோடு சென்றார் வெங்கட்மாணிக்கம்.
"ஏன் பூங்கொத்து. இதெல்லாம் வேண்டாம். எனக்கு தோணுச்சி பண்ணினேன். அவ்வளவு தான்." - இதுதான் நயன்தாராவின் பதில்.
* விரைவில் வெளிவர இருக்கும் 'திருநாள்' படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அப்போது, அந்த ஊரில் உள்ள ஒரு பையனை நயன்தாராவுக்கு உதவியாளராக நியமித்தார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பையன் படப்பிடிப்புக்கு வரவில்லை. படக்குழுவினர் விட்டுவிட்டார்கள். 'ஏன் வரவில்லை' என்று விசாரித்தபோது, அந்தப் பையனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என தெரிந்திருக்கிறது. உடனே நயன்தாரா அளித்த தொகை சுமார் 2 லட்சம். இத்தனைக்கு அந்தப் பையன் நயன்தாராவுக்கு தெரிந்த நாட்கள் வெறும் 5 மட்டுமே!
* நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவரைப் போல படப்பிடிப்பு தளத்துக்கு மிகச் சரியான நேரத்துக்கு வர முடியாது. 8 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 7:55 மணிக்கு மேக்கப் எல்லாம் முடித்து படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். கேராவேனில் இருந்து மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார் என்றால் மதியம் மற்றும் மாலை வேலைகளில் ப்ரேக் விடுவார்கள். அப்போது தான் கேராவேனுக்கு செல்வார். காட்சிகள் இல்லாவிட்டாலும், படப்பிடிப்பு தளத்திலேயே உட்கார்ந்திருப்பார். ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று ஒரு இயக்குநர் கேட்டதற்கு, "சார்.. திடீரென்று நாயகன் அல்லது வில்லன் உள்ளிட்ட படக்குழுவினர் வர தாமதமாகலாம். அந்த சமயத்தில் நாயகியை வைத்து ஒரு க்ளோஸ்-அப் காட்சி எடுக்கலாமே என உங்களுக்குத் தோன்றும். அப்படி தோன்றும் போது நான் இங்கு இல்லையென்றால்.." என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
தெலுங்கில் 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற படத்தில் சீதையாக நடித்தபோது, ஒருநாள் கூட அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்துக் கொடுத்தார். அந்தளவுக்கு தொழில் மீது பக்தி.
* உதவியாளர்கள் மீது அக்கறை தன்னிடம் இருக்கும் உதவியாளர்கள் அனைவரிடமும் மிகுந்த அக்கறைக் கொண்டவர் நயன்தாரா. அது போலவே, அவர்களுக்கு மட்டும்தான் நயன்தாராவின் கோபமும் தெரியும். அவருடன் நீண்ட நாட்களாக பணியாற்றும் ராஜீவுக்கு வீடு, மறைந்த தன்னுடைய மேலாளர் அஜித்துக்கு கார் என தன்னிடம் பணிபுரிபவர்கள் யாருமே கஷ்டத்துடன் இருக்க கூடாது என்று நினைப்பார். தன்னிடம் பணிபுரிந்த ஒருவரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். அப்போது சென்னையில் வெள்ளம் வந்திருக்கிறது. நயன்தாராவோ வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். உடனடியாக தன்னிடம் இருந்தவருக்கு போன் செய்து "அவருடைய மனைவி எப்படி இருக்கிறார், அவருடைய வீடு வெள்ளம் பாதித்த பகுதியில் இருக்கிறது. உடனே போய் ஒரு லட்ச ரூபாய் கொடுங்கள். நான் இந்தியா வந்தவுடன் தருகிறேன்" என்று தெரிவித்தார் நயன்தாரா. அவர்கள் கொண்டு போய் பணம் கொடுக்கும் வரை, அடிக்கடி போன் செய்து என்னாச்சு என்று விசாரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
* மற்ற நாயகிகள் போல நயன்தாரா கிடையவே கிடையாது. எப்போது தன்னிடம் நடிப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து சாக்லெட், பரிசுப் பொருட்கள் என ஏதாவது வந்து கொண்டே இருக்கும். தன்னுடம் இருப்பவர்கள் எப்போதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் அவருடைய எண்ணம். 'நண்பேன்டா' படப்பிடிப்பு தளத்தில் ஒரு லைட்மேனுக்கு குறைந்த அழுத்தம் வந்து மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். முதல் ஆளாக ஒடிச் சென்று, அவருடைய காலை எடுத்து தன் மீது வைத்து நன்றாக தேய்த்து முதலுதவி எல்லாம் செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் நயன்தாரா.
* நயன்தாராவுடன் ஒருநாள் பழகிவிட்டால் போதும், பிறகு எப்போது எங்கு பார்த்தாலும் அவரே நேரடியாக போய் பேசுவார். அவர்கள் வந்து தம்மிடம் பேசட்டுமே என்று எந்த ஒரு இடத்திலும் நினைக்கவே மாட்டார்.
* ஒருநாள் 'நண்பேன்டா' படத்தின் படப்பிடிப்பில் நயன்தாராவைக் காண ரசிகர்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. திடீரென்று இயக்குநரிடம் மைக்கை வாங்கிய நயன் "ஹாய் எவ்ரிபடி... இங்கு பல லட்சம் செலவு செய்து படப்பிடிப்பு நடத்துக்கிறோம். நீங்கள் படப்பிடிப்பைக் காணலாம், ஆனால் எதுவும் இடைஞ்சல்கள் வராமல் பாருங்கள்" என ஒரு பெரிய உரையே நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய உரைக்குப் பிறகு ஒரு சத்தம் இல்லாமல் படப்பிடிப்பு இனிதே நடந்திருக்கிறது.
* சமீபத்தில் ஒரு நகைக் கடை திறப்பு விழாவுக்கு சென்றார் நயன்தாரா. அங்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து "எனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா, என்னால் நம்பவே முடியவில்லை" என்று தனது உதவியாளரிடம் மிகவும் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார்.
* சில பல பர்சனல் பின்னடைவுகளைக் கடந்து, இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு, நடிப்புத் திறமையைத் தாண்டி, அவரிடம் நிறைந்துள்ள நல்ல பண்புகளும் முக்கியக் காரணம் என்பார்கள் நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள்.
* நயன்தாராவின் நலம் விரும்பிகள் சிலரிடம் பேசியபோது, அவர்கள் அனைவரும் தவறாமல் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள். உலகின் பிரபல நடிகைகள் சிலரிடம் காணப்பட்ட விஷயம்தான். அது... "நயன்தாரா ரொம்ப வெகுளி சார். அவருடன் பழகிவிட்டால் கண்மூடித்தனமாக நம்பிவிடுவது பலம் என்றாலும், பல நேரங்களில் பலவீனமாகவும் மாறிவிடுகிறது."
இன்று - நவம்பர் 18 - நடிகர் நயன்தாரா பிறந்தநாள்
chinnakkannan
18th November 2015, 06:00 PM
நடிகையோ நடிகரோ பர்ஸனல் லைஃப்லாம் எப்படின்னு எந்த்க் காலத்திலும் நான் நினைத்ததுகிடையாது.. நயன் தாரா வைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே ஆத்மார்த்தமான உழைப்பு தான்..எந்தக் கஷ்டகாலத்திலும் சரி மனதைர்யம் இழக்காமல் மறுபடியும் முன் வந்தது அசுரத்தனமான உழைப்பினால் தான்.. நல்லமனம் அவருடைய கூடுதல் ப்ளஸ்..
தாங்க்ஸ் எஸ்.வாசு சார்..
Russellxor
18th November 2015, 06:07 PM
சரித்திரத்தை மாற்றிய பாடல்
தமிழ் சினிமா சரித்திரத்தை,அது சென்று கொண்டிருந்த பாதையை,
அது தமிழ் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்த பங்களிப்பை அதனினும் உயர்ந்த,ஏன் உலகமே திரும்பிப்பார்த்து வியக்க வைத்த பெருமை இந்தப் பாடலில் நடித்த இளைஞரையே சாரும்.தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களிலும் எதிரொலித்த பெருமை இந்தப் பாடலுக்குண்டு.அந்த இளைஞரின் கண் அசைவும் காலசைவும் கூட கூர்ந்து கவனிக்கப்பட்டன.பெரும் பேரிகைகள் கூட ஏற்படுத்த முடியாத கிளர்ச்சியை அந்த இளைஞரின் ஒரு விரலசைவு ஏற்படுத்தியது.அவருடைய கண்களின் தீட்சண்யத்தை தாங்கும் சக்திகள் கூட அவர் எதிரில் நின்றுபேச தயக்கம் காட்டியது .ஒரு மனிதனின் மூலம் இத்தனை கலை நுட்பங்களை சகல அவயங்களிலும் வெளிப்படுத்தமுடியுமா?என்று வியப்புண்டாயிற்று.அந்த வியப்பு பிரமையாய் மாறி அந்த பிரமையிலிருந்து மக்கள் விடுபடும் முன்னரே அந்த இளைஞனின் அடுத்தடுத்த நடிப்புக்கணைகளால்
தாக்குண்டு அந்த பிரமையிலிருந்து விடுபட இயலாத நிலைமை இன்று வரை தொடர்கிறது.
அது எந்த திரைப்படம் என்பதையும் அந்த நடிகர் யார் என்பதையும் தமிழ்நாட்டில் கேட்டால்அதற்கான பதிலை கோடி உதடுகள் உரக்கச்சொல்லும்.
அந்த இளைஞரை தான் நடிப்புலக மகானாக பின்னாட்களில் தமிழ்மக்கள் தம்நெஞ்சங்களில்
ஏற்றிக்கொண்டனர்.
அவரின்சிறுசிறு அசைவுகள் கூட ஒரு பிரளயத்தையே திரையரங்குகளில் ஏற்படுத்தியது.
குணசேகரனாக அவதாரம் எடுத்த
அந்தக் காவியத்தில் ,தீப்பிளம்பு போல் வந்து
நின்று தாண்டவமாடிய அந்தப் பாடலை பார்த்தோமானால் நம்மை
மீறிய ஒரு உணர்ச்சி உடலிலே பரவுவதை உணரலாம்.
சின்ன அசைவுகள்தான்.
இசைக்குத் தகுந்தபடி தலையாட்டலிலும் உடலசைவிலும்காட்டப்படும் அந்த புது விதமான நடிப்பு , இப்பொழுது கூட சிந்தையிலபெரும் வியப்பை விதைக்கின்றது என்றால் அன்று வந்த காலகட்டத்தில் அது எத்தனை பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
முழங்கால் அளவுக்கு சுருட்டிய பேன்ட்,இன் செய்யப்பட்டும்,முன் நெற்றிக்கு சற்று மேலே அணிந்த தொப்பியும்,முழங்கை அளவுக்கு மடித்த சர்ட்டும் அணிந்த அந்த உருவம்தானே உலகத்தரம் வாய்ந்த முத்திரையாக மாறிய கதையை அப்பொழுதல்லவா அரங்கேற்றியது.
உடம்பை திருப்பி கால்களை விந்திவிந்தி நடந்து ஆடியபடி ஆரம்பிக்கும் அந்த வித்தியாசமான நடையுடன் ஆடும் ஆட்டத்தை திரையுலகம் இன்றுவரை வியப்புடன்தானே பார்த்துக்கொண்டிருக்கிறது.
அப்படியே சென்று தண்ணீர் பைப் திட்டை பச்சைக்குதிரை தாண்டி அதே குதூகலத்துடன்
திட்டின் மேல்நின்று,
"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி."
பொதுஜனப் பார்வையாளர்கள் அதிகம பேர் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக மாறியது இந்தப்பாடலுக்காகத்தான் தான் இருக்கும்.
காசு எனும் போது சுண்டிக்காட்டுவது,
தொப்பியை சரி செய்வது
இது போன்ற மின்னலாய் வந்து போகும் அந்த சின்னஞ்சிறு ஷாட்களில கூட நடிப்பின் வீச்சு கூர்மையாக இருக்கும்.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.
சாட்சியான பணம் கைவிட்டுப்
(இமைக்காமல் உற்று கவனித்தால் மட்டுமே இந்த இடத்தில் அவர் போடும் அசத்தலான ஸ்டெப்பை பார்க்கமுடியும்.)
அது போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
நாடக சபாக்களில் இருந்தபோது எல்லோருக்கும் கிடைத்த அனுபவமும் பயிற்சியும்தானே இவருக்கும் கிடைத்திருக்கும்? ஆனால் அதையெல்லாம்
மீறிய அதிசய நடிப்பை முதல் படத்திலேயே எப்படி வெளிப்படுத்தினார்? என்பதுதான் அப்போதைய கலைஞர்களின் கேள்வியாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.
பெருமாள் முதலியாரின் இலட்சியம் எவரெஸ்ட் தொட்டதும்,
கணேசனை தவறாக எடை போட்டவர்களின் கணிப்பு தரைமட்டமும் ஆகியிருக்கும் இப்பொழுது.
கைகளை பக்கவாட்டில் மேலே தூக்கி,விரல்களை விரித்தும், சுழற்றிக்கொண்டும் சுற்றி சுற்றி ஆடும் அந்த ஆட்டத்தை,கடும் நடன பயிற்சி பெற்றவர்கள் கூட அவ்வளவு அழகாக வெளிப்படுத்தமுடியுமா?
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_1148_zpsd2w8jh9b.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_1148_zpsd2w8jh9b.jpg.html)
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.
கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே
பாடிக்கொண்டே சூதாடிகளிடமிருந்து பணத்தை தூக்கிக்கொண்டு
சடாரென்று திரும்பி கைககளை ஆட்டிக்கொண்டே கால்களை மாற்றி மாற்றி குத்தாட்டத்தில் கலக்கியெடுப்பார்.
ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டம் தான்.ஆனாலும் அது விளைவித்த பாதிப்பு? அதை நாடே அறியும்.
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
தெருக்கூத்தாட்டத்தை ஏளனமாக பார்க்கும் எண்ணத்தை கொண்டவர்கள் யாராவது இந்த ஆட்டத்தை பார்த்தால் அவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.அந்த தெருக்கூத்தைஅவர் பார்த்ததால்தானே நமக்கு இந்த சிவாஜிகணேசன் கிடைத்தார்.அதற்கு பிரதியுபகாரமாக இந்த காட்சியின் மூலம்அதற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்து விட்டாரல்லவா!
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே -
தாண்டவக்கோனேவை இழுக்கும்போது பெரியவரின் மேல் சாய்ந்திருப்பார்.அப்போது பின் முதுகு குலுக்கலில் எதிரொலிப்பார் தாண்டவக்கோனே என்பதில் 'னேனேனேனேனே 'என்பதை. உடல்மொழி நடிப்பை உலகிற்கு காட்டிய அவதார புருஷனல்லவோ அவர்.
மூக்கைச்சிந்தி பெரியவரின் மேல் துடைத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.யப்பா.என்ன பார்வை அது?என்ன ஒரு தீட்சண்யமான பார்வை.மின்னல் மின்னி விட்டுப் போவது போலே.
பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே
பாடலின் முடிவில் நடக்கும் நடை,தொப்பி வீசும் ஸ்டைல்,அந்த கையசைப்பு,நடந்து செல்லும் கம்பீரம்
எல்லாம்,
மற்ற இந்திய சினிமாக்களையெல்லாம் புறந்தள்ளி வரலாறானது தனிக்கதை.
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_9943_zpssdglr2hc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Parasakthi%20Desam%20Gnanam%20Song%20-%20480P_9943_zpssdglr2hc.jpg.html)
vasudevan31355
18th November 2015, 06:21 PM
ராகவேந்திரன் சார்,
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்களின் 'நினைத்துப் பார்க்கிறேன்' பதிவு அற்புதம். அத்தனை பேர் மனதில் இருப்பதையும் ஒட்டுமொத்தமாக ஒரே பதிவில் கொண்டு வந்து விட்டீர்கள். இறக்கப் போகும் மனிதனின் மனநிலையை அழகாய் விளக்கியமைக்கு நன்றி!
இந்தப் பாடலுடன் 'ஆலயமணி' பாடல் காட்சியைத் தொடர்புபடுத்தி நினைவூட்ட தங்களால் மட்டுமே முடியும். அருமையான பாடல் ஆய்வு. கடைசி வரை மறக்க முடியாதது.
இணையத்திலும் சரி! வெளியிடங்களிலும் சரி! பாதகாணிக்கை இன்னமும் நடிகர் திலகத்தின் பட வரிசையில்தான் இருக்கிறது. 'பாத காணிக்கை' படத்தில் நடிகர் திலகம் நடித்திருப்பதாகத்தான் பல இணையத் தகவல்கள் இன்றும் கூறுகின்றன.
ராட்சஸியின் அமர்க்களமான வண்ணப் புகைப்படத்திற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.:)
rajeshkrv
18th November 2015, 09:19 PM
vanakkam ji nalama
JamesFague
19th November 2015, 10:37 AM
Courtesy: Dinamani
பானுமதி: 5. அண்ணா எனக்கு அளித்த தனி கவுரவம்!
1953-ல் சண்டிராணி, 1954-ல் மலைக்கள்ளன், 1955-ல் கள்வனின் காதலி என ஹாட்ரிக் அடித்த பானுமதியின் ஆண்டாக 1956 ஆகிப்போனது. காரணம், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், ரங்கோன் ராதா என்று ஒரே வருஷத்தில் அவர் அடுத்தடுத்து விளாசித் தள்ளிய மகத்தான நாலு சிக்ஸர்கள்!
முதலில் தைத்திருநாளுக்கு அலிபாபா வெளியானது. எம்.ஜி.ஆர்., டைட்டில் ஹீரோ அவ்வளவே. அவரை ஆட்டுவிக்கும் பம்பரமாக அதிபுத்திசாலி ‘மார்ஜியானா’ மீதே முழுக் கதையும் பயணிக்கும்.
‘எனக்கு டான்ஸ் பிடிக்கவே பிடிக்காது. சுட்டுப்போட்டாலும் வராது’ என்று தனது ஒவ்வொரு நேர்காணலிலும் ரிபீட் செய்வார் பானுமதி. அலிபாபாவில், மார்ஜியானாவாக ஆடிய அவரது நடனங்கள் பேசப்பட்டன.
‘உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே’, ‘அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்’ போன்ற நாட்டியங்களிலும் சரி, ‘மாசிலா உண்மைக் காதலி’ டூயட்டிலும் சரி, மெல்லிய அசைவுகளும், தமிழ் சினிமாவின் முதல் வண்ண ஓவியத்தை ஓஹோவென்று ஆக்கின.
அலிபாபா விளம்பரங்களில், ஆரம்பத்தில் பானுமதிக்கே பிரதான இடம் கிடைத்தது. காலப்போக்கில், எம்.ஜி.ஆர். வசூல் ராஜா ஆன பின்பு அது மாறியது.
எம்.ஜி.ஆர். நடித்த ஹிந்தி ரீமேக்குகள் எதுவும், அலிபாபாவின் புகழைக் கடைசி வரையில் பெறவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம், பானுமதியின் ஒப்பற்ற நவரச நடிப்பு!
பானுமதி நடித்து தமிழ், தெலுங்கு இருமொழிப் படமாக விக்ரம் ஸ்டுடியோஸின் ‘தெனாலிராமன்’, பிப்ரவரியில் வெளியானது. அதில் கிருஷ்ணதேவராயராக வரும் என்.டி.ராமாராவை ஆடிப்பாடி மயக்கும், டெல்லி பாதுஷாவின் பெண் ஒற்றன் வேடம் பானுமதிக்கு.
தெலுங்கு பேசிய தெனாலிராமன், ஏ. நாகேஸ்வர ராவ் என நினைக்கிறேன். பின்னாளில், ‘சித்தூர் வி. நாகையா, சிவாஜி, பானுமதி, என்.டி.ஆர். என்று நான்கு பத்மஸ்ரீ பட்டம் பெற்றக் கலைஞர்கள் பங்கேற்ற ஒரே தமிழ்ப் படம்!’ என்கிற பெருமை, தெனாலிராமனுக்குக் கிடைத்தது.
அதில் ஜோடியாக நடித்த சிவாஜி – ஜமுனா இருவரும் எம்.பி.யாகவும் பதவி வகித்தனர். தி.மு.க.விலிருந்து சிவாஜி வெளியேறிய தருணம். அதனால், தமிழில் தெனாலிராமன் தோல்வி அடைந்தது என்று கண்ணதாசன் போன்றவர்கள் குறிப்பிட்டனர்.
முதலும் கடைசியுமாக, பானுமதியின் 7 தமிழ்ப்படங்கள் 1956-ல் வெளியாகின. மற்றதில் - சதாரம், ஜெமினி கணேசன் ஜோடியாக பானுமதி நடித்த முதல் படம்.
‘பானுமதியோடு நடிக்கத் தவம் கிடந்தார் காதல் மன்னன்!’ என்று எழுதினால், அமரர் ஜெமினி கணேசன் நிஜமாகவே பூரித்துப்போவார். அந்த அளவுக்கு அவருக்கு பானுமதியைப் பிடிக்கும்!
‘ஸ்வர்க்கஸீமா பார்த்ததிலிருந்து உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனானேன்’ என, வருஷக்கணக்கில் பானுமதியிடம் நேரிடையாகச் சொல்லத் துடித்தவர், சதாரம் பட செட்டில் அதைக் கூறி சந்தோஷமாக நடித்தார்.
சதாரம் என்பது கதையில் பானுமதியின் பெயர். ஜெமினிக்காக டி.எம். சவுந்தரராஜன் குரலில் ஒலித்த ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...’ என்கிற கா.மூ. ஷெரீஃபின் உள்ளத்தை உருக்கும் வரிகள் மட்டுமே சதாரத்துக்கு இன்றும் முகவரி.
சதாரம் தோல்வி அடைந்த அதே தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழாப் படமான மதுரை வீரனும் ரிலீஸானது. அது, படத்தில் பொம்மியாக வாழ்ந்த பானுமதிக்குப் புது மகுடம் சூட்டியது.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து செய்த கலவை பானுமதி. நடிப்பில் அவர் கணேசனுக்கும் மேலே. மற்ற தொழில்நுட்பத் தலையீடுகளில், பானுமதி வாத்யாருக்கும் வாத்யார்.
முதல் படமான ‘வர விக்ரயம்’ தெலுங்கு சித்திரத்தின் டைரக்டர் சி.புல்லையாவை, பானுமதியின் அப்பா பிடுங்கி எடுத்தார். தந்தை சொல் தட்டாமல், அதைத் தன் நடிப்புத் தொழிலில் ஓர் அங்கமாகவே ஆக்கிக்கொண்டவர் பானுமதி. பானுமதிக்குத் தெரியாமல் அவர் நடிக்கும் படங்களில் காற்றுகூட நுழைய முடியாது.
தமிழ் சினிமாவுக்கு கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் வழங்கிய வெற்றிகள் நிறைய. மதுரை வீரன் அவர்களது மகத்தான தயாரிப்பு. அதன் இயக்குநர் டி. யோகானந்த், மதுரை வீரனுக்கு முன்பாக அதே நிறுவனத்துக்கு, என்.டி. ராமாராவ் - பத்மினி நடிக்க, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ‘மருமகள்’ படத்தை டைரக்ட் செய்தவர். மருமகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
மதுரை வீரனில் பானுமதி நடிக்க வந்தது பற்றி யோகானந்த் கூறியது -
‘பானுமதியை, ரத்னகுமார் ஷூட்டிங்கில் நான் உதவி கேமராமேனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். நேரிடையான அறிமுகம் கிடையாது. லேனா செட்டியார், பானுமதியை மதுரை வீரன் படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டு, அவரிடம் ‘இதை யோகானந்த் டைரக்ட் செய்யப்போகிறார்...’ என்று சொல்லி இருக்கிறார்.
‘டைரக்டர் பெயர் புதுசா இருக்கே. ஏற்கெனவே இவர் பணியாற்றிய படத்தை நான் பாத்தால் தேவலை!’ என்றிருக்கிறார் பானுமதி.
லேனா செட்டியார், நான் இயக்கிய ‘அம்மலக்கலு’ படத்தை அனுப்பிவைத்தார். பானுமதி தன்னுடைய தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது, தற்செயலாக நானும் லேனா செட்டியாரும், வேறொரு வேலையாக பரணி ஸ்டுடியோவுக்கு சென்றிருந்தோம்.
பானுமதியிடம் உடனே என்னை அறிமுகப்படுத்தினார் லேனா.
‘என்ன செட்டியாரே... யோகானந்த் என்றால் பெரிய ஆளா, மீசை முறுக்கோடு இருப்பார் என்று பார்த்தால், இவர் ரொம்பச் சின்னவராக இருக்கிறாரே...!’ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார் பானுமதி.
என்னிடம், ‘அந்தப் பெரிய மருமகள் வேஷத்தை (படத்தில் லலிதா நடித்தது), எனக்குக் கொடுத்திருந்தால் பிய்த்து உதறியிருப்பேன்’ என்றார்.
உடனே லேனா, ‘லலிதாவுக்குத் தெலுங்கே தெரியாது. அவரையே இவ்வளவு நல்லா நடிக்க வெச்சிருக்கார். படமும் நன்றாக ஓடியது’ என்றார்.
‘சரி. உங்க படத்துல, டைரக்டர் சொல்றபடி நான் நடிக்கிறேன். இன்னொன்றையும் ஆருடமாகச் சொல்கிறேன் - உங்க படம் சக்ஸஸ்’ என்றார் மகிழ்ச்சியோடு.
அனுபவ நடிகையாக இருப்பினும், புதியவனான நான் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்டு, எதிர்த்து எதுவும் சொல்லாமல், ஒரு குழந்தையைப்போல மிகவும் இயல்பாகப் பழகி நடித்தார்.
காமெடி, சோகம், உணர்ச்சிகரமான காட்சிகளில் பொம்மி வேடத்துக்கு உயிர் ஊட்டினார். அவர் ஆரூடம் சொன்னபடி, படமும் வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடியது.
எங்கள் இருவருக்கும் இப்படத்தின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
*
சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை வைத்துப் படம் தயாரிக்க விரும்பி, முதலில் அவர் தேடிச் சென்ற கதாநாயகி பத்மினி. அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.
தேவர், நாயகி கிடைக்காத அவஸ்தையை எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.
‘அண்ணே ஹீரோயின் விஷயமெல்லாம் பெரிய பிரச்னையா. பத்மினி கிடைக்கலேன்னா பானுமதியை நடிக்கவெப்போம்’ என்றார் எம்.ஜி.ஆர்., அலட்சியமாக.
‘பானுமதியா...!’ தேவர் வாயைப் பிளந்தார். பானுமதி அப்போது நடித்து வந்தது, மிகப்பெரிய ஸ்டூடியோ அதிபர்களின் படங்களில். சினிமாவில், அடியாள்களில் ஒருவராக ஆஜராகி, ஓரளவு தெரிந்த முகமாக வளர்ந்துகொண்டிருந்தார் தேவர்.
எம்.ஜி.ஆரை நம்பி, சொந்தத் தயாரிப்பிலும் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.
‘அந்த அம்மா ஒத்துக்குவாங்களா...? நானும் புதுசு. டைரக்ட் பண்ணப்போற என் தம்பிக்கும் முதல் படம்’ - தேவரின் குரல், அவரையும் அறியாமல் நடுங்கியது.
‘நான் இருக்கேன் இல்ல. நானே அவங்ககிட்ட பேசி கால்ஷீட் வாங்கித் தரேன். போதுமா...!’ சொன்னதோடு இல்லாமல், தேவரை அழைத்துச் சென்று பானுமதியிடமும் அறிமுகம் செய்தார்.
‘இவர் என்னோட உயிர் நண்பர். என்னை ஹீரோவா போட்டு புதுப்படம் எடுக்கப்போறாரு. நீங்க ஜோடியா நடிக்கணும்னு கேட்க வந்திருக்காரு’.
‘அதுக்கென்ன ஆக்ட் பண்ணாப் போச்சு. சந்தோஷமா போங்க. மலைக்கள்ளன் மாதிரி உங்க படமும் சக்சஸ் ஆகும்’.
பானுமதியின் நாக்கு பலித்தது. தேவருக்கும் நல்ல நேரம் வாய்த்தது!
1955 ஜூலை 7-ல், தேவர் பிலிம்ஸின் முதல் கதாநாயகியாக பானுமதி நடிக்க, ‘தாய்க்குப் பின் தாரம்’, வாஹினியில் தொடங்கியது. 1956 செப்டம்பர் 21-ல் வெளியானது.
‘ஆஹா நம் ஆசை நிறைவேறுமா...’ டி.எம்.சவுந்தரராஜன் - பானுமதி குரல்களிலும், ‘அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’, ‘என் காதல் இன்பம் இதுதானா...?’ பானுமதி தனித்துப் பாடியும் சூப்பர் ஹிட் ஆயின. இன்றுவரையில், அனைத்து வானொலிகளிலும் ஒலிக்கிறது.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளில் அது மிக அதிக லாபத்தை ஈட்டியது. முதல் முயற்சியிலேயே சுளையாக முப்பதாயிரம் லாபம் வந்ததாக தேவரே பெரும் பூரிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
தாய்க்குப் பின் தாரம் வெளியான அடுத்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது, ரம்பையின் காதல்.
தென்னாட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தவர், இமேஜ் பார்க்காமல் ‘டணால்’ தங்கவேலுவுடனும் நடித்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைப்போல ‘ரம்பையின் காதல்’ பல மறுவெளியீடுகளை வெற்றிகரமாகச் சந்தித்தது. அதைத்தவிர, ‘சமரசம் உலாவும் இடம்’ என கம்பீரமாக சீர்காழியின் பாடல், வான் அலைகளில் இன்றும் மிதக்கிறது.
மெகா கூட்டணி என்பார்கள். தமிழ் சினிமாவில், நிஜமாகவே அண்ணாதுரை, என்.எஸ். கிருஷ்ணன், மு.கருணாநிதி, வி.சி. கணேசன், பானுமதி என்று ஜாம்பவான்கள் ஐவர் இடம் பெற்ற ஒரே படம், ரங்கோன் ராதா.
‘தி.மு.க.விலிருந்து நம்மை பிரிந்த கணேசன்தான், எனது இந்தக் கதையில் நடிக்க வேண்டும்’ என்று அண்ணா வலியுறுத்திக் கூறினார்.
மேகலா பிக்சர்ஸ் சார்பில், கலைஞர் திரைக்கதை வசனம் எழுதித் தயாரித்த படம்.
திருப்புமுனையை ஏற்படுத்தும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் முதலும் கடைசியுமாக கலைவாணர். அன்றைய இளம் ஹீரோ எஸ்.எஸ். ராஜேந்திரனின் அம்மாவாக பானுமதி நடித்தார்.
1956 நவம்பர் முதல் தேதி, தீபாவளியன்று ரங்கோன் ராதா வெளியானது.
மைத்துனி தங்கம் (எம்.என். ராஜம்) மேல் காதல் வயப்பட்டு, அவளையும் சொத்துக்காக மணந்துகொள்ளும், சீமான் ‘கோட்டையூர் தர்மலிங்க முதலியாராக’ சிவாஜி கணேசன்!
மிக மாறுபட்ட உடல்மொழி, கூரிய பார்வை, கத்தி போன்ற கருணாநிதியின் உரையாடல்களை நடிகர் திலகத்தின் உதடுகள் உச்சரித்த பாங்கு, ஓங்கிய குரலில் சத்தம் போடாமல், மெல்லப் பேசியே சதி வலை விரிக்கும் கள்ளத்தனம்... அவை எதுவுமே, அதற்கு முன்போ பின்போ சிவாஜி படைத்தது கிடையாது. அப்படியோர் அமுத மழையான நடிப்பை அவரது வேறு எந்த சினிமாவிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.
நெருப்பைக் கக்கும் கணவரின் சுடு சொற்களைப் பொறுத்துக்கொண்டு வாழும் மகா பத்தினியாக, புருஷனால் பைத்தியம், பேய் பிடித்தவள் என ஊராரிடம் அடையாளம் காட்டப்படும் பரிதாபத்துக்குரிய ரங்கம்மாளாக பானுமதியின் அழுகையும் ஆர்ப்பாட்டமும், ஹிட்லரையும் கண்ணீர் விடச் செய்யும்!
‘ரங்கோன் ராதாவில் நான்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும். பானுமதியால் மட்டுமே ரங்கம்மாளாகச் சிறப்பாக நடிக்க முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்லி என்னையே நடிக்கவைத்தார் அண்ணா. என் நடிப்பில் அந்த அளவுக்கு அண்ணாவுக்கு நம்பிக்கையும் பிடிப்பும் உண்டு. நான் நடித்த பல படங்களைப் பார்த்துப் பாராட்டி இருக்கிறார். ரங்கோன் ராதா படப்பிடிப்பு நடந்த சமயம். நான் நடிக்கும் நேரத்தில், தினந்தோறும் அண்ணா செட்டுக்கு வருவார். அண்ணா எனக்கு அளித்த தனி கவுரவம் அது!’ - பானுமதி.
அரசியல் காரணமாக, ரங்கோன் ராதாவை வி.சி.கணேசன் தவிர்த்திருந்தால், தமிழ் சினிமாவின் நடிப்புக் களஞ்சியத்தில் சில வைரக்கற்கள் காணாமல் போயிருக்கும்.
‘பானுமதியா... சிவாஜியா... நடிப்புப் போட்டியில் யார் ஜெயிப்பார்கள்...?’ என அனைத்து ரசிகர்களையும் வாய் பிளக்கவைத்தது ரங்கோன் ராதா. இறுதியில், இருவருமே வென்றார்கள்.
சிவாஜியும் பானுமதியும், 1956-ம் ஆண்டின் மிகச் சிறந்த கலைஞர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை சினிமா ரசிகர் சங்கம் அதற்காக நடத்திய விழா மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. பானுமதியால், வேலைப் பளு காரணமாக நேரில் வந்து விருது பெற முடியவில்லை.
நடிகர் திலகமே பானுமதிக்கான பரிசையும் மாலையையும் பெற்றுக்கொண்டு, நேரே வாஹினி ஸ்டுடியோவுக்கு பறந்தார். அங்கு நடித்துக்கொண்டிருந்த பானுமதியிடம் அவற்றைக் கொடுத்து மனமாரப் பாராட்டினார். வேறு யாருக்கு அந்தப் பாக்கியம் கிடைத்திருக்கும் பானுமதியைத் தவிர!
பானுமதியை நடிப்பின் இமயமாக, இதயத்தில் வி.சி. கணேசன் பதியம் போட்டு வைத்ததன் பலன், நமக்கு ரங்கோன் ராதா கிடைத்தது.
ரங்கோன் ராதாவில் பானுமதியோடு நடித்ததை கணேசன் தன் சுயசரிதையில் நினைவுகூர்ந்துள்ளார்.
‘கேஸ் லைட்’ என்கிற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் ரங்கோன் ராதா. அதில் நல்லவன்போல் நடிக்கும் ஒரு தீயவன் பாத்திரம். வில்லனாகவும் நடிக்க வேண்டும்; மக்களிடம் இருக்கும் நல்ல பேர் போகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, மிகவும் கவனமாக நடிக்க வேண்டிய வேடம்.
கள்வனின் காதலி, ரங்கோன் ராதா இந்த இரண்டு படங்களிலும் விசேஷம் என்னவென்றால், நான் ஒரு பெரிய நடிகையுடன் நடித்தேன் என்பதுதான். பானுமதி போன்ற பெரிய நடிகையின் நடிப்புக்கு ஈடு கொடுக்க வேண்டும். நமது நடிப்புத் திறமையால்தான் அதைக் காட்ட வேண்டும். பானுமதி அம்மா மிகத் திறமைவாய்ந்த நடிகை. அவர்களுக்கு இணையே கிடையாது எனலாம்.
அறிஞர் அண்ணாவே நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அவர்களைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர்களுடன் நடிக்கும்போது, எனக்கு ஒரு புது அனுபவம் ஏற்பட்டது. அப்பொழுது நான் மிகச் சின்னப் பையன். பானுமதி அவர்களுடன் நடித்தேன் என்பதில் எனக்குப் பெருமை!’
JamesFague
19th November 2015, 10:49 AM
Courtesy: Tamil HIndu
சினிமா எடுத்துப் பார் 34: காதல் பூக்கும் தருணம்!
எஸ்பி.முத்துராமன்
‘பெத்த மனம் பித்து’ படம் வெற் றிக்குப் பிறகு எங்கள் குழுவின் மேல் நம்பிக்கை வைத்து, அடுத்தடுத்து படம் எடுக்க அட்வான்ஸ் கொடுக்க பலர் முன் வந்தார்கள். நல்ல கதை, நல்ல கம்பெனி என்று பார்த்து இறங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். இந்நிலையில் ‘விக்டரி மூவிஸ்’ பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த விஜய பாஸ்கர் படம் எடுக்க ஆசையோடு எங்களை அணுகி ‘‘என் கையில் 25 ஆயிரம் ரூபாய் உள்ளது. தொழிலும் தெரியும், எல்லா விநியோகஸ்தர்களும் நல்ல பழக்கம், படம் தொடங்குவோம்’’ என்று சொல்லி அவர் பெயரிலேயே ‘விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ என்ற கம்பெனியை ஆரம்பித்தார்.
அப்போது பஞ்சு அருணாசலம் நகைச் சுவை கதைகளை எழுதி நல்ல பெயர் பெற்று வந்தார். கவியரசு கண்ணதாச னின் அண்ணன் கண்ணப்பனின் மக னான பஞ்சு அருணாசலம், கண்ணதாச னிடம் உதவியாளராக இருந்துவந்தார். பின்னர் ஒருகட்டத்தில் படங்களுக்கு வசனம் எழுதச் சென்றார். அவர் எழுதிய முதல் மூன்று படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. அதனால் ‘பாதி படம் பஞ்சு அருணாச்சலம்’ என்றே அவருக்கு பெயர். அதன் பிறகு நகைச்சுவை கதை களுக்குத் திரைக்கதை எழுதி வெற்றி பெற்றார். சினிமா உலகில் தோல்வி களைக் கண்டு அஞ்சாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெற்றவர் பஞ்சு அருணாசலம்.
அவர் எங்களுக்கு முதன்முதலில் எழுதி கொடுத்த படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘எங்கம்மா சபதம்’. இதில் முத்து ராமன், சிவகுமார், ஜெயசித்ரா, விதுபாலா, மனோரமா, அசோகன் நடித் தார்கள். இசை விஜய பாஸ்கர். கன்னடத் திரை இசையுலகில் புகழ் பெற்றிருந்த அவரை ‘கன்னடத்து எம்.எஸ்.வி’ என்றே அழைப்பார்கள். அவருடைய இசையில் ‘அன்பு மேகமே இங்கு ஓடி வா’என்ற அருமையான பாடலுக்கு, சென்னை கடற்கரையில் இரவு 9 மணி முதல் 2 மணி வரையில் சிவகுமார், ஜெயசித்ரா இருவரையும் நடிக்க வைத்து படமாக் கினோம். சிவகுமாருக்கு அப்போதுதான் திருமணம் முடிந்திருந்தது. அவர் என் அருகில் வந்து ‘‘சார் இந்த ராத்திரி நேரத் துல படப்பிடிப்பு வைக்கிறீங்களே’’ என்றார். ‘‘மனைவியைக் காக்க வைப்பதிலும் ஓர் இன்பம் இருக்கு’ என்று சொல்லி நாங்கள் அவரை கிண்டலடித்தோம்.
‘எங்கம்மா சபதம்’ நகைச்சுவை பட மாக உருவாகி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே கதை மீண்டும் ‘வனஜா கிரிஜா’ என்ற பெயரில் எடுக்கப் பட்டதில் இருந்து பஞ்சு அருணாசலத் தின் கதை ஆற்றலைப் புரிந்து கொள்ளலாம்.
‘எதையும் பெரிதாக பொருட்படுத் தாத இளம் வயதில் காதலில் இறங்கும் போது, அது ஆத்மார்த்தமான காதலாக மலராமல், டைம் பாஸ் காதலாக முளைத் தால் அதன் விளைவு என்னவாகும்?’ என்பதைப் பின்னணியைக் கொண்ட கதைதான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’. எங்களை ‘கமர்ஷியல் இயக்குநர்’ என்று சிலர் சொல்கிறார்கள். கருத்துள்ள, கதை அம்சம் கொண்ட படங்களை நாங்களும் எடுத்துள்ளோம் என்பதற்கு 1975-ல் எடுக்கப்பட்ட ‘மயங்குகிறாள் ஒரு மாது’ ஒரு சாட்சி!
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ‘‘சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவை முழு படத்துக்கும், குறிப்பிட்ட தொகைக்கு வாடகைக்குத் தரத் தயாராக இருக் கிறார்கள். அங்கு படமெடுக்க முன்வந் தால் ராமப்பாவிடம் சொல்லி, முழு உதவியும் வாங்கித் தருகிறேன்’’ என்றார். தயாரிப்பாளர் விஜய பாஸ்கருக்கு ஒரே கொண்டாட்டம். அங்கு போய் ‘மயங்கு கிறாள் ஒரு மாது’ படப்பிடிப்பைத் தொடங்கினோம். படப்பிடிப்புக்கான அத்தனை வசதிகளையும் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் செய்து வைத்திருந்தார். அப்போது சென்னை யில் மின் தடை (கரண்ட் கட்) இருந் தது. ஆனால், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மின் தடையே இல்லை. காரணம், ஸ்டுடியோ முழுவதும் ஜெனரேட்டர் வசதி செய்திருந்தார் சுந்தரம். அவரெல்லாம் சினிமாவின் தீர்க்கதரிசி!
‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் முத்துராமன், விஜயகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெய லட்சுமி ஆகியோர் நடித்தனர். சுஜாதா ஒரு கல்லூரி மாணவி. அவர் அணிய வேண்டிய உடைகளை மேக்கப் அறை யில் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்து விட்டார். ‘‘மாடர்ன் டிரெஸ் எனக்கு வேண் டாம். சேலை கட்டிக் கொள்கிறேனே’’ என்றார். ‘‘அது கவர்ச்சி உடை இல்லை. கல்லூரிக்கு அணிந்து செல்கிற சுடிதார் போன்ற உடைதான்’’ என்று எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் பிடிவாதமாக மறுத்தார். சுஜாதாவின் அறைக்கு அருகில் இருந்த குணச்சித்திர நடிகை காந்திமதியிடம் ‘‘என்ன செய் வீர்களோ தெரியாது. சுஜாதாவிடம் கதாபாத்திரத்தை எடுத்துக் கூறி, அந்த உடையை அணிவித்து அழைத்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்றேன். அடுத்த சில மணித் துளிகளில் சுடிதார் உடையில் வந்து நின்றார் சுஜாதா. சாமர்த்தியமான பேச்சிலும் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்தார் காந்திமதி.
படத்தில் விஜயகுமாருக்கும் சுஜாதா வுக்கும் காதல் பூக்கும். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தன் வீட்டுக்கு சுஜாதாவை அழைத்து வருவார். இனிமையான தனிமை காதலர்களை எல்லை மீற வைத்துவிடும். அதன் விளைவு, கரு கலைப்பு வரைக்கும் சென்றுவிடும். அப்போது சுஜாதாவுக்கு சிகிச்சை செய்த டாக்டர் எம்.என்.ராஜம், ‘‘நடந்ததை மறந்து விடு. இந்த விஷயம் நம்மைத் தவிர யாருக்கும் தெரியாது. இனி, அடுத்து உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்’’ என்பார் சுஜாதாவிடம்.
கதாநாயகன் முத்துராமன் வீட்டில் இருந்து சுஜாதாவைப் பெண் பார்க்க வருவார்கள். சுஜாதாவுக்கு பேரதிர்ச்சி. டாக்டர் எம்.என்.ராஜத்தின் தம்பிதான் மாப்பிள்ளை முத்துராமன். எம்.என்.ராஜம் சுஜாதாவை வீட்டுக்குள்ளே தனியாக அழைத்துச் சென்று, ‘‘அன்று சொன்னதைத்தான் இப்போதும் சொல் கிறேன். என் தம்பியைத் திருமணம் செய்துகொண்டு, நல்லபடியாக வாழ்க் கையைத் தொடங்கு’’ என்று கூறி திருமணம் செய்து வைப்பார்.
தேங்காய் சீனிவாசன் எதிர்பாராத விதமாக தான் எடுத்த விஜயகுமார், சுஜாதா இணைந்திருந்த புகைப்படங் களை வைத்துக்கொண்டு, சுஜாதாவை பிளாக்மெயில் செய்வார். சுஜாதா மனதள வில் உடைந்து, உடல்நிலை பாதிக்கப் பட்டு இறந்துவிடும் நிலை யில் தன் கணவ னிடம், தன் தவறை சொல்லி மன்னிப்பு கேட்பார். அதற்கு முத்துராமன், ‘‘உன்னை பெண் பார்க்க வரும்போதே எனக்கு அந்த உண்மை தெரியும். நீயும், என் அக்காவும் பேசியதை நான் அன்றைக்கு கேட்டேன். தெரியாமல் செய்த தவறை மன்னிப்பதுதான் மனித குணம்’’ என்று அவரை ஏற்றுக்கொள்வார். சுஜாதா இறுக்கம் குறைந்து உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ்வார். இதோடு படம் முடியும். இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் ‘‘தவறு செய்த கதாநாயகி சாக வேண்டும். அப்படி கதையை முடித்தால் படத்தை வாங்கிக்கொள்கிறோம்’’ என்றார்கள்.
எங்களுக்கு மிகுந்த பண நெருக்கடி. நாங்கள் என்ன செய்தோம்?
sss
19th November 2015, 04:17 PM
நடிகர் திலகம் காலமான போது "இருந்த ஒரு நடிகனையும் கொன்னுடீங்களேடா" என்று ஒரு ரசிக வெறியன் சொன்னதை வடிவேலு அவர் பாணி சொல்லும் யூ டீயூப்...
https://www.youtube.com/watch?v=TZJqgM86fyY
vasudevan31355
19th November 2015, 06:30 PM
தேங்காய் சீனிவாசன் எதிர்பாராத விதமாக தான் எடுத்த விஜயகுமார், சுஜாதா இணைந்திருந்த புகைப்படங் களை வைத்துக்கொண்டு, சுஜாதாவை பிளாக்மெயில் செய்வார். சுஜாதா மனதள வில் உடைந்து, உடல்நிலை பாதிக்கப் பட்டு இறந்துவிடும் நிலை யில் தன் கணவ னிடம், தன் தவறை சொல்லி மன்னிப்பு கேட்பார். அதற்கு முத்துராமன், ‘‘உன்னை பெண் பார்க்க வரும்போதே எனக்கு அந்த உண்மை தெரியும். நீயும், என் அக்காவும் பேசியதை நான் அன்றைக்கு கேட்டேன். தெரியாமல் செய்த தவறை மன்னிப்பதுதான் மனித குணம்’’ என்று அவரை ஏற்றுக்கொள்வார். சுஜாதா இறுக்கம் குறைந்து உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ்வார். இதோடு படம் முடியும். இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் ‘‘தவறு செய்த கதாநாயகி சாக வேண்டும். அப்படி கதையை முடித்தால் படத்தை வாங்கிக்கொள்கிறோம்’’ என்றார்கள்.
எங்களுக்கு மிகுந்த பண நெருக்கடி. நாங்கள் என்ன செய்தோம்?
வாசு சார் பதித்திருந்த பதிவைப் படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. அப்போது ஒரு பத்திரிகை அதாவது குமுதமா அல்லது விகடனா என்று சரியாகத் தெரியவில்லை. 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தது. அதில் மேற்குறிப்பிட்டுள்ள படத்தின் சம்பவத்தை எழுதி,
"படத்தின் முடிவில் சொல்ல வேண்டியதை எல்லாம் தெரிந்த முத்துராமன் ஆரம்பத்திலேயே சுஜாதாவிடம் சொல்லியிருந்தால் கால் மணி நேரத்தோடு நிம்மதியாக நாம் தியேட்டரிலிருந்து கிளம்பி வந்திருக்கலாம். சுஜாதாவுக்கும் நிம்மதி...நமக்கும் விடுதலை"
என்று பண்ணியிருந்தார்களே ஒரு அமர்க்களம்.:) அன்றிலிருந்து இன்றுவரை எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு பொத்திக் கொண்டு வரும்.
படம் அவ்வளவு அறுவை என்பதை எவ்வளவு எள்ளலாக தெரிவித்திருந்தார்கள்!
chinnakkannan
19th November 2015, 07:31 PM
எவ்ளோ தடவை கேட்ட பாட் தான் நன்னாவும் இருக்கும் கேக்கறதுக்கு..பட் இப்பத் தான் ஐ ஸா.. சாமி சத்தியமா இப்படி இருக்கும்னு தெரியாது..ம்ம்
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே( ராமா ராமா :) )
https://youtu.be/acdw6B5Cq68
chinnakkannan
19th November 2015, 07:45 PM
முகத்தில் கால் பாகம் முழி. கொஞ்சம் மஸ்கட் பேக்கரி பன்னாட்டம் மெல்லிய கன்னம்! மற்றபடி திருத்தமான முகத்தை உற்றுப் பார்த்தால் பூர்ணிமா ஜெயராமின் சாயல் வரும். அவர் அளவுக்கு நடிப்பு வராவிடினும் நோ ப்ராப்ளம்..நடிப்பில் குற்றம் சொல்ல ஏலாது! ஆனால் கொஞ்சம் மார்க்கெட் போனவுடன் சமர்த்தாய் தெலுங்குப் பக்கம் சென்று ரியல் லைஃப் டாக்டரை ரீல் லைஃப் நடிகரை மனம் போல் மணம் புரிந்து செட்டில்ட் இன் லைஃப்.. யாராக்கும்..ஜீவிதை தான்..
இளையராஜாவும் தான் எந்தப் பாட்டுக்கு த் தான்பாடலாம் என்று தேர்ந்தெடுக்கிறார் என்பது கொஞ்சம் புதிர் தான்..இந்தப் பாடல் அருமையாய்ப் பொருந்தியும் இருக்கிறது கார்த்திக்கிற்கு.. இதுவும் மெனி டைம்ஸ் கேட்டாலும் இந்த தபா தான் பார்க்கிறேன்.. நைஸ் ஸாங்க் யு நோ..
நான் தேடும் செவ்வந்திப் பூவிது..தர்ம பத்னி
https://youtu.be/WtoCbEvGIME
vasudevan31355
19th November 2015, 07:53 PM
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.
குறுந்தொடர் 4
'கடவுளின் படைப்பே காதலும் பசியும்
அனுபவித்தால் என்ன போச்சு
அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு'
http://tamilkeymovie.com/wp-content/uploads/2013/10/Jakkamma-1972-Tamil-Movie-Watch-Online.jpg
'ஜக்கம்மா' என்ற 'காமெரா மேதை' கர்ணனின் படைப்பில் ராட்சஸி பாடல். ஹலம் டான்ஸ். வெட்ட வெளிப் பொட்டலில், கொளுத்தும் வெயிலில், நான்கைந்து துணிக் கூடாரங்களை அமைத்து, அங்கங்கு குதிரைகளை நிற்க வைத்து, கூடவே ஸ்டன்ட் நடிகர்களையும் நிற்க வைத்து, ஹலத்திற்கு பஞ்சு உடையை பிய்த்து அணிய, வைத்து 'கர்ணனி'ன் ஆஸ்தான 'நண்பன்' அசோகன் ஆட்டத்தை ரசிக்க, வில்லனை ஒழிக்க பெரிய பெரிய முகம் மறைக்கும் தொப்பிகளை அணிந்து ஹீரோ ஜெய், மற்றும் தேங்காய் அங்கு நுழைய, லாங் ஷாட்டும், குளோஸ்-அப் ஷாட்டுமாய் மாறி மாறி கர்ணன் காமெராவைத் தூக்கிக் கொண்டு அலைய, பாடல் வரிகள் பயங்கரம்.
'மனதுக்கு வெறுத்தால் மதுவிலக்கு
இதில் மாதத்தில் சிலநாள் விதிவிலக்கு
எரியட்டும் அறையில் சிறுவிளக்கு
அங்கு உனக்கும் எனக்கும் ஒரு வழக்கு'
முகத்தில் சலனமே காட்டாத 'கங்கா' ராமகிருஷ்ணன் மறக்காமல் உண்டு. எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் விதவிதமான வாத்தியக் கருவிகளின் ஓசைகள். 'கவர்ச்சி வில்லன்'கண்ணன் வேறு விடாமல் 'ஐ.சி.ஹெச்' காபி பீங்கான் கப்பில் விடாமல் ஏதோ குடித்துக் கொண்டே இருக்கிறார்.:) சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒருவர் மாற்றி ஒருவராக முகங்களை காமெரா காட்டும். கர்ணன் படங்களில் எல்லாம் ஜெய் ஒரே மாதிரி பாவனை காட்டிக் கொண்டிருப்பார். கீழுதட்டை கொஞ்சம் அதிகமாக கடிப்பார். நடுவில் 'யாதோன்-கி.பாராத்' பட மியூசிக்கெல்லாம் கலந்து கட்டிக் கேட்கும்.
வில்லனைப் பழி வாங்கி கூந்தலை அள்ளி முடியும் 'ஜக்கம்மா' சாவித்திரியாம். நமக்கு அப்போது 'சுழி' சரியில்லை. ஆனால் கர்ணன் படத்தின் வழக்கமான கவர்ச்சி சற்றுக் குறைவே.
https://i.ytimg.com/vi/JeQXu7tIw88/hqdefault.jpg
கீழே உள்ள வீடியோவில் juke box-ல் 'ஜக்கம்மா' படத்தின் மூன்று பாடல்கள் உள்ளன, ஈஸ்வரி பாடல் நடு பாடல். இறுதியில் வரும் சாவித்திரி சிறுவர்களிடம் பாடும் ஒப்பாரிப் பாடலை பாடும் பின்னணிப் பாடகி யார் என்று ஜாம்பவான்கள் மூவரைத் தவிர மற்ற நண்பர்கள் சொல்லலாம்.:)
https://youtu.be/rqWubqNmOzs
RAGHAVENDRA
19th November 2015, 08:01 PM
வாசு சார்
ஜக்கம்மா என்றாலே நமக்கு உடனே தலைவரின் பாட்டுத் தான் எப்போதும் நினைவுக்கு வருகிறது.. என்ன செய்வது, நமக்கு எங்கும் தலைவர்... எதிலும் தலைவர்...
இந்தப் படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு என நினைக்கிறேன். அது மடடுமில்லாமல் ஒரு புதிய பாடகியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன் அவர் மலையாளம் கன்னடம் மொழிகளில் நிறைய பாடல்கள் பாடியிருந்தார்கள். பேர் மட்டும் தான் ஞாபகம் வரவில்லை. ஆனால் அவர் பாடிய பாட்டுத்தான் சாவித்திரி பாடுவதாக வரும் மூன்றாவது பாட்டு.
chinnakkannan
19th November 2015, 08:11 PM
ராகவேந்தருக்கே நினைவு வரவில்லை என்றால் நானெல்லாம் சின்னஞ்சிறு கண்ணன்..சிங்கார வண்ணன் :) மேரிகோ கைஸா மாலும்..இருந்தாலும் ரொம்ப ஃபெமிலியரா இருக்குதுங்க்ணா வாய்ஸ்..கொஞ்சம் சூலமங்கலம் ராஜலஷ்மி சாயல்..
vasudevan31355
19th November 2015, 08:13 PM
வாசு சார்
ஜக்கம்மா என்றாலே நமக்கு உடனே தலைவரின் பாட்டுத் தான் எப்போதும் நினைவுக்கு வருகிறது.. என்ன செய்வது, நமக்கு எங்கும் தலைவர்... எதிலும் தலைவர்...
இந்தப் படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு என நினைக்கிறேன். அது மடடுமில்லாமல் ஒரு புதிய பாடகியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன் அவர் மலையாளம் கன்னடம் மொழிகளில் நிறைய பாடல்கள் பாடியிருந்தார்கள். பேர் மட்டும் தான் ஞாபகம் வரவில்லை. ஆனால் அவர் பாடிய பாட்டுத்தான் சாவித்திரி பாடுவதாக வரும் மூன்றாவது பாட்டு.
ஆமாம் ராகவேந்திரன் சார். ஜக்கம்மவிற்கு எஸ்.எம்.எஸ் தான் இசை. பாடகி யார் என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.
http://i65.tinypic.com/qpifq1.jpg
chinnakkannan
19th November 2015, 08:26 PM
என்ன தாங்க நடக்குது ஸாரி நடந்தது.. திடீர்னு தேடிக்கிட்டிருக்கறச்சே ஒரு பாட்.. ஸ்ரீகாந்த் மணிமாலா சோடியாம்ல.. கற்பூரம் படமாம்ல..\(மணிமாலா ஸ்ரீ யை விட வயசுல பெரியவரோன்னோ)
நில வே உனக்கு க் குறையே து நீ நினைத்ததும் கதிரவன் வரும் போது (ஆண் வாய்ஸ் யாரு பிபிஎஸ் மாதிரி இருக்கு ஆனா இல்லை இல்லியோ)
https://youtu.be/iWV_hi_CjxE?list=PL4SxysG_X0Wm-AlpRZL5QsJ3M37XN7STO
chinnakkannan
19th November 2015, 08:27 PM
எம் எஸ் ஷீலான்னு ஒரு பாடகியை இப்பத் தான் கேள்வியே படறேன் ம்ம்
vasudevan31355
19th November 2015, 08:37 PM
சின்னா!
அது கொஞ்சம் மாதுரி குரல் போலவும் தெரியுமே!
vasudevan31355
19th November 2015, 08:38 PM
ராகவேந்திரன் சார்!
உண்மை! ஜக்கம்மா.... தலைவரைத் தவிர வேறு எதுவும் இல்லை திக்கம்மா.
vasudevan31355
19th November 2015, 08:39 PM
//(மணிமாலா ஸ்ரீ யை விட வயசுல பெரியவரோன்னோ)//
'Moga mull':)
vasudevan31355
19th November 2015, 08:43 PM
'நிலவே உனக்குக் குறை ஏது' அருமையான பாட்டு சின்னா! 'அழகு ரதம் பொறக்கும்'பாட்டும் கற்பூரம்தான். தாராபுரத்தார் தரணி புகழ் அடைய வைத்த பாட்டு. ஆமா! மதுண்ணா சொன்ன "ம்ம்ம்மாட்டிகிட்டான்" ஷிர்டியும் புதிர் கண்டுபிடிச்சீங்களா?
chinnakkannan
19th November 2015, 09:51 PM
ம்மாட்டிக்கிட்டான்... சோவா நாகேஷா..உள்ள இருக்கு வெளீல வர மாட்டேங்குது..:)
'நிலவே உனக்குக் குறை ஏது' அருமையான பாட்டு சின்னா! 'அழகு ரதம் பொறக்கும்'பாட்டும் கற்பூரம்தான். தாராபுரத்தார் தரணி புகழ் அடைய வைத்த பாட்டு. ஆமா! மதுண்ணா சொன்ன "ம்ம்ம்மாட்டிகிட்டான்" ஷிர்டியும் புதிர் கண்டுபிடிச்சீங்களா?
rajeshkrv
19th November 2015, 10:02 PM
எம் எஸ் ஷீலான்னு ஒரு பாடகியை இப்பத் தான் கேள்வியே படறேன் ம்ம்
bangalore pugazh sheela.
rajeshkrv
19th November 2015, 10:02 PM
'நிலவே உனக்குக் குறை ஏது' அருமையான பாட்டு சின்னா! 'அழகு ரதம் பொறக்கும்'பாட்டும் கற்பூரம்தான். தாராபுரத்தார் தரணி புகழ் அடைய வைத்த பாட்டு. ஆமா! மதுண்ணா சொன்ன "ம்ம்ம்மாட்டிகிட்டான்" ஷிர்டியும் புதிர் கண்டுபிடிச்சீங்களா?
paavam Saibabannu singer per varavazhaikka ivlo clue koduthum kandu pudikka mudiyadha kuzhandhaiyaave irukkare CIKA
rajeshkrv
20th November 2015, 09:38 AM
கே.எஸ்.ஜி என்று சினிமா வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படும் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள்..
சென்னையில் அடித்த புயலால் இவர் இறந்த செய்தி கூட பெரிதாக யாரும் கண்டுகொள்ளாத விதமாக அமைந்துவிட்டது.. பாவம் எப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர் , படைப்பாளி. இன்று கதையே இல்லாமல் படங்கள் வரும் நிலையில் நல்ல கதைக்கரு மற்றும் அழுத்தமான ஆழமான வசனங்களுடன் இவர் இயக்கிய
படங்கள் ஒன்றா இரண்டா …
ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்து, பல பாடல்களும் எழுதி (ஆம் உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே இவரது வரிகள் தான்) , இவரது கதை, வசனம் எழுதும் திறனால் கவியரசரின் அண்ணனால்(திரு ஏ.எல்.ஸ்ரீனிவாசன்) இயக்குனராக உருவெடுத்தார்.
இயக்கிய முதல் படம் சாரதா.. முதல் படமே வித்தியாசமான கதை.. ஆசிரியர் மாணவி காதல், பின் கணவனுக்கு அடிபட்டு ஆண்மை இழத்தல் என மிகவும் கனமான கதைக்கரு .. என்னமாய் இயக்கியிருப்பார் கே.எஸ்.ஜி.
ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகவு, பெண்மையை மையமாக கொண்டும், சமுதாய பிரச்சனைகளை சொல்வதிலும் இவர் கெட்டிக்காரர்
பணமா பாசமா என்று பட்டிமன்ற தலைப்பு போல் படங்கள் எடுத்து வெற்றி பெற்றவர் .
ஒரு பக்கம் பணமா பாசமா , குலமா குணமா போன்ற படங்கள்
இன்னொரு பக்கம் சித்தி, குறத்தி மகன், கை கொடுத்த தெய்வம் என அழுத்தமான படங்கள்
சித்தி என்ற சொன்னாலே கொடுமை என்று நினைத்துக்கொண்டிருக்க , சித்தி என்று ஒரு படமெடுத்து
பெரிய குடும்பத்தில் படிப்படியாக எல்லோர் அன்பையும் பெறும் அந்த சித்தி பாத்திரம் மக்களை திரும்பி பார்க்க செய்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.சித்தியாக பத்மினி வாழ்ந்திருப்பார்
தெய்வத்தின் தெய்வம்.. இளம் விதவை கதை .. கையாண்ட விதம் அருமை.
கை கொடுத்த தெய்வம்.. அப்பாவித்தனமான ஒரு பெண் .. அவள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், எப்படி சொந்த அண்ணனே அவள் மீது அவதூறு சொல்ல நண்பன் அவளுக்கு உதவ இப்படி போகிறது கதை..
குறத்தி மகன்.. ஒரு குற்வன் குறத்தி சமூக நிகழ்வுகள் அவர்களுக்கு உள்ள ஆசைகள் என அதை படம்பிடித்து
காட்டியது .. குறவன் குறத்தியாக ஜெமினியும் புன்னகை அரசியும் கலக்கியிருப்பார்கள்
கே.ஆர்.வியை பிரபலப்படுத்திய கற்பகம் இவரது இயக்கம்.. அதே கே.ஆர்.விஜயாவின் 100’வது படமான
நத்தையில் முத்து படமும் இவரது இயக்கம் . ஜாதிகள் இல்லையடி பாப்பா தான் கரு. அருமையான படம்
வசனங்கள் பளிச் பளிச்
வாழையடி வாழை, குலவிளக்கு, அடுக்கு மல்லி, பாலாபிஷேகம் என பல வித்தியாசமான படங்களை கொடுத்தவர்.
கதை, வசனம் இயக்கம் எல்லாவற்றிலும் மிக நேர்த்தி அதானால் தானே இவர் இயக்குனர் திலகம்…
பலரும் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய. இந்த கால இயக்குனர்கள் இவரிடம் ஒரு 10 நாள் பயிற்சி எடுத்திருந்தால் கூட நல்ல இயக்குனர்களாகியிருப்பர்.
இவரது மறைவு தமிழ் சினிமா ஒரு மிகச்சிறந்த படைப்பாளியை இழந்துவிட்டது.
இவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், எல்லாம் வல்ல இறைவன் இவரது ஆன்மா சாந்தியடைய
பிரார்திப்போம்
ராஜேஷ்(Rajesh Venkatasubramanian)
https://scontent-atl3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12249986_722083717921849_1787515990851311879_n.jpg ?oh=a643c7829baa4888341d83039f789bab&oe=56E3AB39
chinnakkannan
20th November 2015, 10:08 AM
அன்பின் வாசு…
ஹாப்பி பர்த் டே டு யூ
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உங்கள் இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளூமே இனியதாக வாழ்த்துக்கள்..
பூசுமஞ்சள் மின்னுதற்போல் போடும் பதிவுகள்
வாசுதான் பெற்ற வரம்
http://api.ning.com/files/hSOUK3FODouSSwfJdD1pR28c5FiiOkj*DK6MpxTC-lyTyxyMMWMc7asLaiZihR5Q4oewK2CmLvJIyulE7O3otLcwtaR eEjA5/sivajiganesan.jpg
அகெய்ன் விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே..
உம்மை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :)
[https://youtu.be/i-jlk4dEFLY
chinnakkannan
20th November 2015, 12:13 PM
வாஸ்ஸூ நாளைக்குத்தான் ப்ர்த்டேயா..அதனால் என்ன அட்வான்ஸ் விஷஷா வெச்சுக்கலாம்.. :) ஜோரா பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பிச்சுடலாம்..
வாசு பிறந்த நாள் கொண்டாட்டம் - 1
காட்டினிலே கானக்குயில்
நெய்வேலியில் நம்ம வாசு பாட்டுப்பாடினார்
மதுர கீதம் பாடினார்..
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனகசபை
நடனமாடினார் ஒருவர் உருவம் மாறினார்...சுசீலாம்மாவின் குரல் இழையல் வெரி நைஸ்..
https://youtu.be/awl6lfD9Q40
rajraj
20th November 2015, 12:30 PM
vaNakkam from Hawaii! :) I probably wont boher you with any posts for a week. Have fun ! :)
Happy Birthday vasu ! :)
chinnakkannan
20th November 2015, 12:45 PM
வாவ் ராஜ் ராஜ் சார் என் ஜாய்... ஹேவ் எ ஒண்டர்ஃபுல் ஹாலிடே
Richardsof
20th November 2015, 04:02 PM
இனிய நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
madhu
20th November 2015, 05:48 PM
எல்லோரும் சொல்றீங்க... அதனால் நாளையை இன்னைக்கே கொண்டு வந்துட வேண்டியதுதானா ?
வாசு ஜி..... மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் இன்றைய தினத்தை விட இனி வரும் தினங்கள் எல்லா வளங்களும் பெருகி இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
( நாளைக்கு கூப்பிட்டு பேசிக்கிறேன் )
RAGHAVENDRA
21st November 2015, 09:04 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VASUBDGRTGW2015b_zps0fm3zxtb.jpg
JamesFague
21st November 2015, 09:41 AM
Courtesy:Tamil Hindu
காற்றில் கலந்த இசை 31: நினைவெல்லாம் நல்லிசை!
தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான தர் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைத் தொடர்ந்து இளையராஜாவுடன் இணைந்து அற்புதமான இசைக் காவியங்களைத் தந்தார். இவர்கள் கூட்டணியில், 1982-ல் வெளியான திரைப்படம் ‘நினைவெல்லாம் நித்யா’. கார்த்திக், ஜீஜீ., பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் தொழிலதிபரின் மகனான சந்துரு (கார்த்திக்), பழங்குடியினப் பெண்ணான நித்யா(ஜீஜீ.)வைக் காதலிப்பான். ஏற்றத்தாழ்வின் கொடூரப் பார்வைக்கு இருவரும் பலியாகிவிடுவார்கள்.
ஆத்மார்த்தமான காதல் கதைக்கு உயிரோட்டமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா. பாடல்களில் மட்டுமல்ல, படத்தின் பின்னணி இசையிலும் காதல் மனதின் துடிப்பை இசையாக்கியிருந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவின் கவித்துவமான வரிகள் பாடல்களுக்குச் செறிவைச் சேர்த்தன. எஸ்.பி.பி.யின் பொற்காலத்தில் வெளியான ஆல்பம் இது.
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, தந்தை நிர்வகித்து வந்த நிறுவனங்களின் பொறுப்பில் அமரவைக்கப்படும் சந்துரு, பொறுப்புகளிலிருந்து தப்பித்து நண்பர்களுடன் சுதந்திரமாக ஆடிப்பாடுவான். ஆப்பிரிக்க பாணி தாளக்கட்டுடன் உருவாக்கப்பட்ட ‘தோளின் மேலே பாரமில்லே’ எனும் இப்பாடலை தெறிக்கும் இளமையின் உற்சாகத்துடன் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பாடலின் முகப்பு இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல் துணுக்கு, மாலை நேர ஒளியின் பின்னணியில் கூடாரங்களில் வசிக்கும் செவ்விந்தியர்களின் குடியிருப்பை நினைவுபடுத்தும்.
இரண்டாவது நிரவல் இசையிலும் இந்தப் புல்லாங்குழல் இசையின் தொடர்ச்சி வரும். அதைத் தொடர்ந்து ‘தரரத் தரரத் தா’ என்று ஆர்ப்பரிக்கும் குதூகலத்துடன் சரணத்தைத் தொடங்குவார் எஸ்.பி.பி. 80-களில் வானொலி நிகழ்ச்சிகளின் முகப்பு இசையாக இப்பாடலின் இசை பயன்படுத்தப்பட்டது. பழங்குடியினத் திருமண நிகழ்ச்சியொன்றில் பாடப்படும் ‘கன்னிப் பொண்ணு கைமேலே’ பாடலை மலேசியா வாசுதேவனும், பி.சுசீலாவும் பாடியிருப்பார்கள்.
முற்றிலும் வேறுவிதமான தாளக்கட்டுடன் தொடங்கி, வேறு திசையில் பயணிக்கும் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடல் இளையராஜாவின் ராஜ முத்திரைகளில் ஒன்று. கரும்பச்சைப் பாறைகளில் தெறித்து ஓடி, கூழாங்கற்களின் மீது படரும் ஓடையைப் போல் தபேலா, டிரம்ஸின் கூட்டுக் கலவையின் தொடர்ச்சியாக ஜலதரங்கம். ஓடை நீரில் கால் நனைக்கும் சுகத்துடன் ஜானகியின் ஆலாபனை என்று வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்ட சுகந்தத்தைத் தரும் முகப்பு இசை அது.
நிரவல் இசையில் ஜலதரங்கம், பேஸ் கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு காவியத்தையே படைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், விட்டு விட்டு ஒலிக்கும் பறவையின் குரலை ஓடைக் கரையில் அமர்ந்து கேட்கும் சுகத்தை இசையாக வார்த்திருப்பார். நந்தவனம், பூஞ்சோலை போன்ற வார்த்தைகளுக்கு இசையால் வடிவம் கொடுத்த பாடல் இது.
எஸ்.பி.பி. பாடிய ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ பாடல் இப்படத்தின் மொத்தச் சூழலையும் சொல்லிவிடும். குடும்பத்தினரின் ஆதரவில்லாமல், கையில் பணமுமில்லாமல் தவிக்கும் கார்த்திக், அன்பைத் தவிர வேறு எந்த ஆபரணமும் இல்லாத தனது காதலியை ராஜகுமாரியாக வர்ணித்துப் பாடும் பாடல் இது. பல்லவியை எஸ்.பி.பி. தொடங்கியதும் வசந்தத்தின் வருகையை உணர்த்தும் புல்லாங்குழல் ஒலிக்கும்.
முதல் நிரவல் இசையில் வசந்தத்தின் இனிமையை உணர்த்தும் வயலின் இசைக்கோவை, கிட்டார் இசையைத் தொடர்ந்து களிப்பூட்டும் ஒற்றை வயலினை ஒலிக்கவிடுவார் இளையராஜா. கூடவே துள்ளலான டிரம்ஸ் தாளம். இளம் காதலர்களை வாழ்த்தும் இயற்கையின் பிரத்யேக மொழிபோல் அது ஒலிக்கும். பாடல் முழுவதுமே இயற்கையின் பேரழகைப் பிரதிபலிக்கும் இசைக்கோவைகளைத் தந்திருப்பார்.
இளையராஜாவின் பெரும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று எஸ்.பி.பி. பாடிய ‘பனிவிழும் மலர்வனம்’. பாடலின் தொடக்க வரியே பனிக்காலப் பூந்தோட்டத்தின் காட்சியை உணர்த்திவிடும். காதலில் உறைந்திருக்கும் மனம் மெல்ல மவுனத்தைக் கலைப்பதுபோல், கிட்டார் இசை மெலிதாக ஒலிக்கத் தொடங்கும். ‘…உன் பார்வை ஒரு வரம்’ எனும் வரிகளை ஆமோதித்து ஆசி வழங்குவதுபோல், இயற்கை வயலின் இசைக்கோவையை வழங்கியிருப்பார் இளையராஜா.
வாவா பெடல் (wah wah pedal) எனப்படும் கருவியுடன் சேர்ந்து ஒலிக்கும் கிட்டார் இளமைத் துள்ளலை இரட்டிப்பாக்கியிருக்கும். முதல் நிரவல் இசையில் புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையிலான உரையாடல்; அதைத் தொடர்ந்து, மெல்லிய வெயிலுக்கு நடுவே வீசும் தென்றலைப் போன்ற வயலின் இசைக் கீற்று; அதனுடன் கலக்கும் நறுமணத்தைப் போல் ஒரு வயலின் கோவை; எதிர்பாராத இடத்தில் ஒரு தபேலா தாளம் என்று திரையிசைப் பாடல் ஒன்றைச் சமகாலத்திலேயே காவியமாக்கும் அளவுக்கு அற்புதமான இசையமைப்பை இப்பாடலுக்கு வழங்கியிருந்தார் இளையராஜா. ’தழுவிடும்பொழுதிலே இடம் மாறும் இதயமே’ எனும் வரி வைரமுத்துவின் அசாத்திய கற்பனை.
காதலியின் பிரிவை நினைத்து வாடும் காதலன் பாடும் ‘நினைவெல்லாம் நித்யா நித்யா’ எனும் குறும்பாடலும் இப்படத்தில் உண்டு.
eehaiupehazij
21st November 2015, 08:27 PM
On behalf of NT/GG threads...
ஏதோ மனிதர் பிறந்துவிட்டார் என்றில்லாமல் இதோ ஒரு மனிதர் தனது பிறவிப் பயனை வெல்லமுடியாத வெல்லமான வெள்ளமான எழுத்தாற்றலால் மெழுகுவர்த்தியாக கரைந்து ஒளிர்ந்து ஏனைய மனித மனங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு நிகழ்கால சாட்சியாக அசத்தியடிக்கும் விற்பன்னர் வாசு சாருக்கு நடிகர்திலகம் / காதல் மன்னர் திரிசார்ந்த மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy Birthday Vasu Sir
senthil
https://www.youtube.com/watch?v=R8S8OdW7Y4Q
https://www.youtube.com/watch?v=4xeW8ITF2y8
rajeshkrv
22nd November 2015, 07:34 AM
https://www.youtube.com/watch?v=fnV5jeJNFFg
eehaiupehazij
22nd November 2015, 07:43 AM
Heroines Swap Songs! / Paradox Error!
கதாநாயகர் வில்லன் கண்களில் கதாநாயகியர் இடமாறு தோற்றப்பிழை!!
ஒருதலைக் காதலில் நாயகியர் வீழும்போது நாயக வில்லன்களில் கண்களில் இடமாறு தோற்றப்பிழை காரணமாக சரோஜாதேவி மட்டுமே தெரிவாராம் !!
https://www.youtube.com/watch?v=J-N6xTuQb88
https://www.youtube.com/watch?v=maSfRASRcVw
vasudevan31355
22nd November 2015, 10:11 AM
அன்போடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அருமை சகோதரர்கள்
எங்கள் செல்லக்குட்டி சின்னா
எஸ்.வாசுதேவன் சார்
செந்தில்வேல் சார்,
ராகவேந்திரன் சார் (தொலைபேசியிலும்)
வினோத் சார் (தொலைபேசியிலும்)
சிவாஜி செந்தில் சார் (தொலைபேசியிலும்)
மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்த முரளி சார், பம்மலார் சார், கோபால் சார், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்களாக எஸ்.எம்.எஸ்.களாக அனுப்பி என்னைத் திக்குமுக்காடச் செய்த எனதருமை ராஜேஷ்ஜி, பம்மலார் சார், ரவி சார் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
chinnakkannan
22nd November 2015, 10:16 AM
குட்மார்னிங் ஆல்..
வாசு..பிறந்த நாள் எப்படிப் போயிற்று (பதினெட்டு தானே..:) உம்ம பையன் வயசைச்சொன்னேன் ஸ்வாமி..) நேற்றும் முன் தினமும் லொக் லொக் அண்ட் ஃபீவர்...கொஞ்ச்ம அழைத்த போது எங்கேஜ்டாகவே வந்தது.. இன்று முயல்கிறேன்..
vasudevan31355
22nd November 2015, 10:16 AM
உடல்நிலை முடியாதபோதும் அதையும் பொருட்படுத்தாது அன்புடன் கைபேசியில் அழைத்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அன்பு மது அண்ணாவிற்கு என்னுடைய ஸ்பெஷலான நன்றிகள்.
vasudevan31355
22nd November 2015, 10:23 AM
குட்மார்னிங் ஆல்..
வாசு..பிறந்த நாள் எப்படிப் போயிற்று (பதினெட்டு தானே..:) உம்ம பையன் வயசைச்சொன்னேன் ஸ்வாமி..) நேற்றும் முன் தினமும் லொக் லொக் அண்ட் ஃபீவர்...கொஞ்ச்ம அழைத்த போது எங்கேஜ்டாகவே வந்தது.. இன்று முயல்கிறேன்..
ஹாய் சின்னா!
எப்படியிருக்கீங்க? நம் மய்ய நண்பர்களால் பிறந்த நாள் அமர்க்களமாகப் போயிற்று. மது அண்ணா போன் பண்ணி வாழ்த்தியது பாக்கியம். ஜி எஸ்.எம்.எஸ் அனுப்பித் தள்ளிவிட்டார். முரளி சார் வாழ்த்துக்கள் அளித்தார். தொடர்ந்து நமது ரசிக வேந்தர் ஆசிகள் தந்தார். காலையில் நமது சிவாஜி செந்தில் சார் போனில் வாழ்த்தினார். நேற்று முழுதும் கைபேசியிலேயே நேரம் கழிந்தது.
எப்படியிருக்கீங்க சின்னா! ஆஹா! உங்க காலை மிஸ் பண்ணிட்டேனே! போன் காலைச் சொன்னேன் சாமி!:) (நாங்களும் வாருவோமில்லே.... காலை):) லொக் லொக் தேவலையா? ஃபீவர் குறைஞ்சுதா? டாகடரிடம் போகலையா? 'எதிர்நீச்சல்' இருமல் தாத்தா ஞாபகம் வருது. உடம்பைப் பார்த்துக்கோங்க.
ஏன் மதுர கானங்கள் கொஞ்சம் மௌனமாயிடுத்து?
rajeshkrv
22nd November 2015, 10:47 AM
vaanga ji
rajeshkrv
22nd November 2015, 10:48 AM
பிறந்த நாள் எப்படி போச்சு
vasudevan31355
22nd November 2015, 10:50 AM
பிறந்த நாள் எப்படி போச்சு
வணக்கம்ஜி! நலம்தானே!
அருமையாப் போச்சுஜி! எதுக்கு இத்தனை எஸ்.எம்.எஸ்.?:)
rajeshkrv
22nd November 2015, 11:09 AM
வணக்கம்ஜி! நலம்தானே!
அருமையாப் போச்சுஜி! எதுக்கு இத்தனை எஸ்.எம்.எஸ்.?:)
உங்களுக்கு சொல்லாம யாருக்கு சொல்றது
rajeshkrv
22nd November 2015, 11:14 AM
https://www.youtube.com/watch?v=FvMk1bRymIk
rajeshkrv
22nd November 2015, 11:18 AM
https://www.youtube.com/watch?v=OGob6T7k_PI
madhu
22nd November 2015, 02:19 PM
ராஜேஷ்....
பாடு பாடு பாடு... மறக்கவே முடியாத பாடல்... அனேகமாக தினமும் சமையல் முடித்து சுற்றுக் காரியங்கள் செய்யும் நேரத்தில் என் அம்மா இந்தப் பாடலை பாடியபடி வேலை செய்வாங்க... அப்பா கூட தன் பெயரை ஸ்ரீராம் என்று மாற்றிக் கொண்டதாக கிண்டல் செய்வார். மீண்டும் அந்த சந்தோஷத்தை மனதுக்குள் கொண்டு வந்ததற்கு நன்றி
https://www.youtube.com/watch?v=FOWQfiTuadw
madhu
22nd November 2015, 02:21 PM
வாசு ஜி...
மௌனமாகப் போகும் மதுர கானத் திரியில் ராஜேஷ் கார்த்திகை விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார். நீங்க ஒரு சரவெடி வையுங்க பார்ப்போம் ( சிக்கா பயப்படாம காதைப் பொத்திக்குங்க )
madhu
22nd November 2015, 02:37 PM
வாசு ஜி..
நம் போனாடலில் சிக்கிய பாடல்களில் ஒன்று என்னிடம் சிக்கி விட்டது. உங்க ராட்சசியின் இனிய குரலில் கற்பூரம் படத்தில் அம்மா வேணுமா... கண்ணா அக்கா வேணுமா ?
https://www.youtube.com/watch?v=vikdw2L24wY
vasudevan31355
22nd November 2015, 03:17 PM
ராட்சஸி பாடல்.
மதுண்ணாவின் விருப்பம்.
கேபரே பாடல் கிடையாது. குழந்தையை கொஞ்சி மகிழும் பாடல்.
பாவாடை தாவணி கட்டிய பருவச்சிட்டாக அன்றைய வாலிப மனங்களை நாளுக்கு நாளாய் வாடைக்காற்றாய் வாட்டி எடுத்த புஷ்பலதா. கற்பூரமாய் இப்போது பிடித்துக் கொள்வீர்கள்தானே! இரட்டைஜடை பின்னலில் ஒற்றை ரோஜா வைத்து அம்மா என்று தேடி அழுது தவழும் குழந்தையைத் தூக்கி
அம்மா வேணுமா! கண்ணா!
அக்கா வேணுமா
அம்மா என்றால் பால்தருவாள்
அக்கா என்றால் பழம் தருவாள்
பால் வேணுமா இல்லே பழம் வேணுமா
இளம் தண்டான ஈஸ்வரி குரலில் புஷ்பலதா பாடும் பாடல்.
'கட்டில் இங்கே போடவில்லை
தொட்டில் போடணும்'
பாடி முடித்து ராட்சஸி 'லுலுலுலுலுலுலுலு..................லாயி' போடுவது டாப். எவ்வளவு பெரிய 'லுலுலுலுலாயி'!
பாடலின் டியூன் அங்கிட்டு இங்கிட்டு இருந்தாலும் ஈஸ்வரியின் குரல்வளத்தால் அத்தனையும் மறந்து போய்விடும்.
பதிவை முடித்து போடப் பார்த்தால் மதுண்ணா முந்திக் கொண்டாரே! அதனால் வீடியோவைக் கட் பண்ணிடறேன்.:)
RAGHAVENDRA
22nd November 2015, 03:47 PM
மதுஜி
கற்பூரம் படத்தில் ஈஸ்வரியின் இந்தப் பாடலை வைத்து, டிக்கெட் வேணுமா, காசு வேணுமா என பள்ளியில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்ததுண்டு. பாடல் ஹிட்டாகவில்லை. ரேடியோவில் எப்போதாவது ஒலிபரப்புவார்கள். எதேச்சையாக நண்பர்கள் சிலர் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு மறுநாள் பள்ளியில் இந்தப்பாட்டைப் பாடி கிண்டல் செய்வார்கள்.
கற்பூரம் படம் வெளிவந்த புதிதில் அழகு ரதம் பொறக்கும் பாடல் தான் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். அம்மா வேணுமா பாடல் கூட சிலோன் ரேடியோவில் தான் அதிகம் இடம் பெற்றது.
அபூர்வமான பாடலை நினைவூட்டியமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
RAGHAVENDRA
22nd November 2015, 03:50 PM
குணசுந்தரி படம் டிவிடியில் வந்த போது ஆர்வத்துடன் வாங்கி ஏமாந்ததுண்டு. கலையே உன் விழி கூட கவி பாடுதே பாடல் இல்லை.
பின் நீண்ட நாட்களுக்குப் பின் யூட்யூபில் இப்பாடலின் காணொளி தரவேற்றப்பட்டுள்ளது. வேம்பார் மணிவண்ணன் அவர்கள் தரவேற்றியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=xj886t5Hw64
இந்தப பாடலின் ஒரிஜினல் வீடியோ தானா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை. என்றாலும் பாடலைப் பார்க்கும் வாய்ப்பிற்கு நமது உளமார்ந்த் நன்றி.
chinnakkannan
22nd November 2015, 03:51 PM
பாவாடை தாவணி கட்டிய பருவச்சிட்டாக அன்றைய வாலிப மனங்களை நாளுக்கு நாளாய் வாடைக்காற்றாய் வாட்டி எடுத்த புஷ்பலதா. கற்பூரமாய் இப்போது பிடித்துக் கொள்வீர்கள்தானே! இரட்டைஜடை பின்னலில் ஒற்றை ரோஜா வைத்து அம்மா என்று தேடி அழுது தவழும் குழந்தையைத் தூக்கி // அந்தக்குழந்தையே இப்போ பாட்டி ஆகியிருக்குமோன்னோ..:) அம்மா வேணுமா அக்கா வேணுமா பாட் முத தபா கேக்கறேன் பாக்கறேன். ட்டாங்க்ஸூ மதுண்ணா அண்ட் வாசுவிற்கு..
ராம பக்த ஹனுமான் பாடலுக்கும் ரா அண்ட் ம விற்கு தாங்க்ஸ்..
சரவெடியா.. ஏற்கெனவே இருமல் லொக்லொக் மீட்டிங் கில் பேச்சு பாதி லொக்கில் போய் காற்று வந்து வர்றேங்க்ணா எனச் சொல்லி வீட் வந்தாயிற்று..சரி என்பங்கிற்கு - இப்போது என்னால் முடியா விட்டாலும் - நா ஆஆன் சத்தம் போட்டு தான் பாடுவேன்..:).
https://youtu.be/0mnfdli34Gw
vasudevan31355
22nd November 2015, 04:01 PM
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.
குறுந்தொடர் 5
மதுண்ணா!
சரவெடியா இல்லையா தெரியாது. ஆனால் புதுவெடி. 'கர்ணன்' படங்களின் வரிசையில்.
எதற்கும் துணிந்த கர்ணனைப் பற்றி நமக்குத் தெரியும். அதையும் மீறி சிவக்குமார் கர்ணனின் படத்தில் 'கௌபாய்' பாணியில் நடித்தது உண்மையாகவே மகா துணிச்சல்தான். அதனால்தான் சிவக்குமார் 'எதற்கும் துணிந்தவ'(ரோ)னோ.
பாரதிராஜா பாடல்களின் வெள்ளை உடை தேவதைகளை அப்போதே கர்ணன் ஜெயலட்சுமி ரூபத்தில், அதுவும் ஸ்லோமோஷனில் காட்டியிருப்பது வியப்புதான். அசாத்திய திறமை. அதை விழலுக்கிறைத்த நீராய் வீணாக்கிக் கொண்டவர் கர்ணன். இந்த உழைப்பையெல்லாம் வேறு இயக்குனர்களிடம் சிந்தியிருந்தால் பின்னாளில் நல்ல பெயர் பெற்று இருக்கலாம்.
சிவக்குமாரும் வெள்ளை உடையில் ஸ்லோமோஷனில் எகிறி எகிறிக் குதித்து ஓடி வருகிறார்.
அப்புறம் வழக்கம் போல குதிரை சப்ளையர் :)கொடுத்த குதிரைகள் மேல் நாயகன், நாயகி உல்லாசம்.
பாடலின் பின்னணியில் தவறாது மணியோசை ஒலிக்கும்.
இப்போது பெய்து வரும் மழை வெள்ளம் போல கழுத்து வரை வெள்ளத்தில் நடந்து வரும் குதிரைகள். ஹீரோயின் துணிச்சல் மிக்கவர்தான். பயமில்லாமல் குதிரையை ஆற்றில் ஓட்டி வருகிறார். இல்லையென்றால் கர்ணன் தோலை உரித்துவிடுவார். குதிரையின் தோலை.:) அப்புறம் நடிகையின் தோலையும். இரு குதிரைகளுக்கிடையில் பால இணைப்பும் உண்டு. 'குளோஸ்-அப்' குதிரைகளின் கால்களுக்கு மத்தியில் தூரத்தில் ஓடி வரும் ஹீரோ..ஹீரோயின். மணியோடு ஒலிக்கும் ஏதோ புரியாத மொழி கோரஸ். சங்கர்-கணேஷ் இசை.
ஆனால் பாடலில் ஏதோ ஒரு இனம் புரியா இனிமை இருக்கிறது என்பதுதான் உண்மை. இரண்டாவது கர்ணன் முத்திரைகளான முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் கூத்துக்கள் அவ்வளவாக இப்பாடலில் இருக்காது. அதுவே பெரிய விஷயம்.:)
ஆனால் லொகேஷன்கள், குதிரைகள், பெரிய பெரிய ஆறுகள், வெட்டவெளிப் பொட்டல்கள் என்று கர்ணன் இதிலெல்லாம் காம்ப்ரமைஸ் ஆகவே மாட்டார்.
டி.எம்.எஸ், ராட்சஸி இணைந்த இந்தப் பாடல் பல பேருக்கு இப்போதுதான் அறிமுகமாகும். ஆனாலும் இரண்டு மூன்று முறை திரும்ப திரும்பக் கேட்க ஆரம்பித்தால் சுவையான பாடல்தான். கொஞ்சம் வித்தியாசமும் கூட.
'சுகம் பெற ஒரே வழி துணையென இணைவதுதான்'
என்று பல்லவி வரி கட் அண்ட் ரைட்டாக ஆரம்பிக்கும்.:)
'ஓர் உலகம்.... ஓர் இதயம்' என்று பாடகர் திலகம் இழுத்து லயித்துதான் பாடியிருக்கிறார்.
ஈஸ்வரி கொஞ்சம் குரலைக் கொஞ்சம் கட்டையாக்கி,
'தினம் மேகத்தில் ஊறிய துளிகள்' என்று பாட அது வேறு ஏதோ ஒரு பாடலை நினைவுபடுத்தி படுத்தி எடுக்கிறது.
'தேன்... நிலவு ஹோய்' என்பது அசல் அரக்கி முத்திரை.
https://youtu.be/IZRAHMYs-p8
RAGHAVENDRA
22nd November 2015, 04:14 PM
வாசு சார்
எதற்கும் துணிந்தவன் பாடல் அபூர்வமான ஆனால் அட்டகாசமான பாடலைப் பகிர்ந்துள்ளீர்கள். ஏற்கெனவே ஃபடாபட் ஜெயலக்ஷ்மி இருந்ததால், இவருக்கு கர்ணன் ஜெயலக்ஷ்மி, என்றும் ஒரு பெயர் அந்தக்காலத்தில் இருந்ததுண்டு. பாடல் சூப்பர். விவித்பாரதியில் அடிக்கடி இடம் பெறும். சிலோன் ரேடியோவில் சொல்லவே வேண்டாம். இந்தப் பாடலை இசைத்தட்டில் தான் கேட்கவேண்டும். வீடியோவில் ஒலியமைப்பு சரியில்லை.
இசைத்தட்டின் துல்லியமான ஒலியில் பாடலைக் கேட்டால் அதன் சிறப்பே தனி.
vasudevan31355
22nd November 2015, 04:15 PM
ராகவேந்திரன் சார்!
'கலையே உன் விழி கூட கவி பாடுதே' பாடல் ஒரிஜினல் பாடல்தான் என்று நினைக்கிறேன். வாயசைப்பு எல்லாம் மிகச் சரியாகவே உள்ளது. அதனால் ஒரிஜினலாகவே இருக்கலாம். நல்ல பாடலுக்கு நன்றி.
chinnakkannan
22nd November 2015, 04:15 PM
ஏதோ கொயந்த பாட் பக்திப் பாட்லாம் போடறாகளே நாமளும் நம்ம பங்குக்கு கொயந்தபாட் போடலாம்னு வந்தா கர்ணன் பாட் வந்துடுச்சு :)
ஆளுக்கொரு முத்தம் உங்க அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உஙக் அம்மா நெஞ்சத்திலே
https://youtu.be/y5jm9sxJ-EU
vasudevan31355
22nd November 2015, 04:20 PM
ராகவேந்திரன் சார்,
என்னைப் போலவே 'சுகம் பெற ஒரே வழி' பாடலும் தங்களுக்குப் பிடித்தம் என்பதில் ஆச்சர்யம் இல்லாத சந்தோஷம். இந்த ஜெயலட்சுமியின் தங்கையோ, அல்லது மகளோதானே டிவி மற்றும் சினிமா நடிகை மோகனபிரியா?
vasudevan31355
22nd November 2015, 04:21 PM
'ஆளுக்கொரு முத்தம்' தராமல் மறுபடியும் 'சத்தம் போட்டு' பாடுகிறீர்களே சின்னா! என்ன ஆச்சு?
chinnakkannan
22nd November 2015, 04:23 PM
//குதிரையை ஆற்றில் ஓட்டி வருகிறார். இல்லையென்றால் கர்ணன் தோலை உரித்துவிடுவார். குதிரையின் தோலை. அப்புறம் நடிகையின் தோலையும்// :) பட்குதிரைக்கால்களுக்கு ப் பின்னால் காமரா வைத்திருப்பது ரிஸ்க் இல்லியோ..பாடல் என்னமோ மனதில் ஒட்டவில்லை.
முத்ல் பாட்டும் பாரதி பாட் என்பதால் இதுவும் அஃதே என்பதை..
நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா...
https://youtu.be/0i9yXzmqqOc
vasudevan31355
22nd November 2015, 04:24 PM
'ஹச்சோ! ஸாரி! மறந்து போட்டுட்டேன் போல இருக்கு... இப்போ மாத்திடறேன்' ன்னு சொல்லுவீங்க.:) உங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னுதான் நானே .....ஹி...ஹி:)
சின்னா! 'you tube' ல் பாடலுக்கான url காப்பி பண்ணும்போது இரண்டு மூன்று தடவைக்கு மேல் மறுபடி மறுபடி காப்பி பண்ணி பின் நமது திரியில் பேஸ்ட் செய்யுங்கள். அபோது இது போன்ற பிரச்னை வராது.
vasudevan31355
22nd November 2015, 04:27 PM
//பாடல் என்னமோ மனதில் ஒட்டவில்லை.//
முதல்ல அப்படிதான் தெரியும் சின்னா! ரெண்டு மூணு தரம் 3 குதிரைகளையும்:) பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். தானாகப் பிடித்துப் போகும். ரொம்ப முக்கியம் குதிரைகளைப் பார்க்கக் கூடாது.:)
vasudevan31355
22nd November 2015, 04:29 PM
பதை பதைக்க மாத்தியாச்சா.:)
chinnakkannan
22nd November 2015, 04:30 PM
Sorry maathiyaach..\\
தங்க நிறம் இதழ் செம்பவளம்
காணாத போது நெஞ்சம்கனாக்கண்டு வாடும்
கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும்
கண்மணீயே என் விண்ணமுதே இது பெண்மையின் தன்மையன்றோ..
https://youtu.be/ipWbd64Q2H8
போடாத பாட் தானே.. அருமை மகள் அபிராமி பிபிஎஸ் பிஎஸ்..
chinnakkannan
22nd November 2015, 04:37 PM
முதல்ல அப்படிதான் தெரியும் சின்னா! ரெண்டு மூணு தரம் 3 குதிரைகளையும் பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். தானாகப் பிடித்துப் போகும். ரொம்ப முக்கியம் குதிரைகளைப் பார்க்கக் கூடாது.// குதிரை தானேங்க நல்லா இருக்கு.. :) சொன்னாப்பல ஹச்சோ பாக்கலை தான் :)
chinnakkannan
22nd November 2015, 04:44 PM
'ஹச்சோ! ஸாரி! மறந்து போட்டுட்டேன் போல இருக்கு... இப்போ மாத்திடறேன்' ன்னு சொல்லுவீங்க.:) உங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னுதான் நானே .....ஹி...ஹி:)
சின்னா! 'you tube' ல் பாடலுக்கான url காப்பி பண்ணும்போது இரண்டு மூன்று தடவைக்கு மேல் மறுபடி மறுபடி காப்பி பண்ணி பின் நமது திரியில் பேஸ்ட் செய்யுங்கள். அபோது இது போன்ற பிரச்னை வராது. ஷ்யூர் வாசு வில் டூ தட்.
அடுத்து என்ன பாலாபாட்.. நானூறு பூக்கள்லா.. கர்ணன் ஜெயல்டசுமி பாட் போட்டீர்.. ஃபடாபட் பாட் போடுமேன்..
RAGHAVENDRA
22nd November 2015, 04:47 PM
http://www.indya101.com/gallery/Singers/L_R_Eswari/2012/10/12/L_R_Eswari_6_xklan_Indya101(dot)com.jpg
குழந்தைக்குப் பாலூட்டுவார்கள், சோறூட்டுவார்கள்.. பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். நுங்கு உண்ண ஒரு குழந்தையைக் கெஞ்சும் பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா.. அதற்கு ஒரு பாட்டு.. அதிலும் பாடுபவர் ... நமது ராட்சசி ஈஸ்வரி ...
என்ன ஒரு இனிமையான பாடல்.. மிகச் சிலரே அறிந்திருக்கக் கூடிய அபூர்வமான பாடல்..
கார்த்திகை தீபம்.. எல்.ஆர். ஈஸ்வரியின் புகழ்க் கிரீடத்தில் மகுடம்.. பார்க்காத உலகம் பழகாத இதயம் என அருமையான டூயட்டும் இப்படத்தின் சிறப்பிற்கு சான்று. அது மட்டுமின்றி பாடகர் திலகம் மட்டும் இசையரசி இருவருமே தனித்தனியாக பாடிய எண்ணப்பறவை சிறகடிக்கும் பாடல் இடம் பெற்ற படம்...
படம் வெண்ணிற ஆடையோடு வெளிவந்தது.. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்கிற அனுமதியோடு...
https://www.youtube.com/watch?v=trsT5NKuVbw
vasudevan31355
22nd November 2015, 08:07 PM
சின்னா!
பாரதியின் குரலில் அமெச்சூர்த்தனம் தெரிந்தாலும் இன்றுவரை நம்மை அப்படியே வசியம் செய்த பாடல். ஒரு மாதிரியான, மாதுரி, வசந்தா, கௌசல்யா இவர்கள் குரல்களையெல்லாம் கலந்து கட்டியமாதிரி ஒரு குரல்.
'மூடிவைத்த மனதினுள்ளே
மோதும் இன்ப நினைவிலே'
என்று இரண்டாவது சரணத்தில் அவர் பாடும்போது கிறங்காத மனமும் உண்டா?
'வேண்டுமென்ற அர்த்தமின்றி
வேறு காண முடியுமா'
என்று அடுத்த அடிகளை அவர் பாடுவதும், அதற்கான அழகான அர்த்தமும் அமர்க்களம்தானே?
இன்னொன்று
'முடியுமா' என்று முடிக்கும் போது பாரதி டோட்டலாக நம்மை 'ஸ்வாஹா' செய்து விடுவார். கொஞ்சலும், கெஞ்சலும், நிதர்சனமான உண்மையுமாக அந்த வரி எப்போதுமே காதில் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுவும் முடிவெழுத்து 'மா' உச்சரிப்பு மறக்கவே இயலாது.:clap:
பாடகர் திலகத்தைப் பற்றி இந்தப் பாட்டில் கூற வேண்டுமானால் விவேக் சொல்வது போல 'அது வேற டிபார்ட்மெண்ட்'. கை ஊறுது. வேண்டாம். பதிவு நீண்டிடும். இத்தோட முடிச்சுக்கிறேன் சிநேகிதரே.
ஆனா ஒன்னு. இன்னா மாதிரி பாட்டைப் போட்டுட்டு ஒத்த வரியில முடிச்சுட்டீரே! இதெல்லாம் நியாயமா ராசா? உமக்கு எதாச்சும் பனிஷ்மெண்ட் கொடுத்தே தீரணும்.
vasudevan31355
22nd November 2015, 08:44 PM
மதுண்ணா!
பி.எம்.பார்க்கவும்.
vasudevan31355
22nd November 2015, 09:01 PM
சின்னா!
ஜெய், பாரதி ஜோடியாய் நடித்த கீதா சித்ராவின் 'உனக்கும், எனக்கும்' படத்தில்
'சுகம்
என்ன சுகம்
என்ன சுகம்
தாகம்... அது பருவத்தின் ஒருவகை ராகம்
மோகம்... அது பிரிந்தது ஒருவித வேகம்'
என்ற அதியற்புதமான பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.
ஆஹா! செமையான மைண்ட் வாய்ஸ் பாட்டு. பாரதி வாயசக்காவிட்டாலும் அப்படியே பாரதிக்கு தோதாக அவருடைய குரல் போலவே ஒலிக்கும்.
'மெய்யும் மெய்யும் கலந்தது
மையும் சாந்தும் கரைந்தது
என்ன சுகம்'
பாடல் சுகம்....பாடகி குரல் சுகமோ சுகம்...'மெல்லிசை மாமணி' வி.குமாரின் அழகான மெல்லிசை சுகமோ சுகமோ சுகம். பாரதி அப்ஸரசாய் சுகம். ஆலங்குடி சோமுவின் பாடல் வரிகள் தனி சுகம்.
உங்களுக்கும், எனக்கும் மட்டும் அல்ல ஊரிலுள்ள எல்லோருக்கும் சுகம் தரும் ஆனந்தப் பாடல். 1972லேயே இப்படி ஒரு அசத்தலான பாடலை கொடுத்த குமாரின் திறமை அசாத்தியமானது. பாலாவின் தொடர் முடிந்ததும் குமார் இசையைத்தான் எடுக்கப் போகிறேன்.
சொர்ணா என்ற சொர்ணக் கருவூலமாய் என் எண்ணங்களில் என்றும் வலம் வரும் வளமையான பாடகியின் கல்கண்டு குரலுக்காகவே லட்சம் முறை இந்தப் பாடலை சுகமாய்க் கேட்டு மகிழலாம்.
https://youtu.be/dPVatHkTsYI
chinnakkannan
22nd November 2015, 09:30 PM
//ஆனா ஒன்னு. இன்னா மாதிரி பாட்டைப் போட்டுட்டு ஒத்த வரியில முடிச்சுட்டீரே! இதெல்லாம் நியாயமா ராசா? உமக்கு எதாச்சும் பனிஷ்மெண்ட் கொடுத்தே தீரணும்.// வாஸ்ஸூ தப்பு தான் ஒத்துக்கறேன்.. ஆனா ஏதாவ்து பாட் போட்டுட்டு எழுதலாம்னு பார்த்தா நீர் எழுதியிருப்பீரோன்னு நினைக்கற்ச்சயே மனசுக்குள் ஒதறலா இருக்கு.. அதான்.. அப்படியே விட்டுட்டேன்..அதான் நீர் இப்போ அலசிட்ட்டீரே
ஆனா எப்படி ஓய் உனக்கும் எனக்கும் நினைத்தீர்.. நானும் அந்தப் பாட் - நீர் போட்ட தாகம் இல்லை - பாரதி ஜெய்யைக் கேலி செய்து பாடும் பாடல் கேட்டு சரி சுமார் ரகம் தான் என விட்டு விட்டு அப்புறம் கிக்கு கொடுக்குது ரம் பாட்டையும் கேட்டுபுட்டு சே டூயட்டே இல்லையே என நொந்து ( ஒரே வீடியோல்ல நாலு பாட் டிஎம் எஸ் புகழ் வாழ்க உனக்கும் எனக்கும்னு கொடுத்திருந்தாக) பின் தான் தங்க நிலவே பாட் கிடைச்சு அதைப் போட்டேனாக்கும்..
இங்கிட்டுவந்தா தாகம் பாட்.. சூப்பர் வெரி நைஸ் தாங்க்ஸ்லு..
chinnakkannan
22nd November 2015, 10:02 PM
ஒத்தையடிப் பாதையிலே அத்தை மகன் போகையிலே
மாமன் வந்தான் பின்னாடி அம்மாடி அவன்மனசு வந்தது முன்னாடி
எப்போதும் சிலோனில் கேட்ட பாடல்தான்..ஒரு தடவை வாஸ்ஸூ போட்டதாக நினைவு..ஆனால் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..
இப்ப பார்த்தா நம்ம டாபிகல் பாரதி..
இப்படி ட்ரஸ் போட்டுக்கினு ஸ்ப்ரிங்காட்டம் குதிக்கணும்னு யார் சொல்லியிருப்பாங்க
எனி டைம் கேட்கபிள் பாட்..
https://youtu.be/qzNioUyHYxc
chinnakkannan
22nd November 2015, 10:27 PM
மேலும் மேலும் இது வளரட்டும் வளர்ந்தா தெய்வச் செயல் தானே..
படத்துல யானை புலி சிங்கம்லாம் இருக்கு படம் எப்படி இருக்கும்..இங்க மாடாட்டம் பாரதி முத்தை முத்தறார் டைப்போ முட்டறார்..
மடியிலே வந்தகொடியிலே இன்ப மலர்கள் நூறு வரவேண்டும்..ம்ம்
விழியிலே மணி விழியிலே எந்தன் முகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் (வீட்ல கண்ணாடி வாங்க மாட்டாங்க போலிருக்கு)
பாரதிக்குப்புடவை பாந்தமா இருக்கு சர்ருவ விட ( நாராயண நாராயண )
https://youtu.be/44Z2W8OpTa4
chinnakkannan
22nd November 2015, 10:35 PM
எங்கு பார்த்தாலும் புதுமை புதுமை
என்ன தான் இந்த இளமை இளமை..
பாரதியோட காதில இருக்கற மாட்டல் தோடு இருக்கே அது இப்பவும் ஃபேஷன் தானாக்கும்..
https://youtu.be/ghdV3ZlR5EU
கொஞ்சம் ப்ரோஸ் ஆட்டம் பாடினாலும் பாடல் நன்னாத் தான் இருக்கு..
vasudevan31355
23rd November 2015, 09:59 AM
சின்னா!
பாரதி பாடல்களா போட்டு கலக்குறீர். சபாஷ்! நீடூழி வாழ்க!:)
பாரதியைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இதற்கே நடிப்பில் அவ்வளவு எல்லாம் கெட்டி அல்ல. அப்போது அழகான முகத்தோற்றமும், அளவான உடல் தோற்றமும் கொண்ட மிக சொற்பமான நடிகைகளில் பாரதிதான் முதன்மையானவர்.
சரி! பாரதி புகழ் பாடுவதை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு 'தெய்வச் செயல்' படத்தின் இன்னொரு பாடலைப் பார்க்கலாம். அப்புறம் பாரதியை கண்டிப்பாகத் தொடரலாம்.
'தெய்வச் செயல்' படத்தில் பாடல்கள் எல்லாமே நன்றாகவே இருக்கும். முத்துவும் நன்றாக 'ரிச்'சாக இருப்பார். இந்தப் படத்திலிருந்தே தேவர் பலகாட்சிகளை எடுத்து 'நல்ல நேரம்' படத்தில் உபயோகப்படுத்தி இருப்பார்.
ஒரிஜினல் விலங்குகளை நடிக்க வைத்திருப்பார் தேவர். இதில் இன்னும் வியப்பான விஷயம் காண்டாமிருகத்தைக் கூட சில காட்சிகளில் வெறுமனே காட்டாமல் அதற்கு முக்கியத்துவம் தந்திருப்பார்.
இந்த விலங்குகள் எல்லாம் அப்போது பிரபலமாய் இருந்த 'ஜெமினி சர்க்கஸ்' என்ற சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்த விலங்குகள்.
'மேஜர்'தான் படத்தில் விலங்குகளின் காவலர். அவருக்கு விலங்குகள் மத்தியில் ஒரு மைண்ட் வாய்ஸ் சோகப் பாடல் உண்டு. 'பாடகர் திலகம்' பாடுவார். யானைகள், சிங்கம், காண்டா மிருகம், புலி எல்லாம் கண்ணீர் வடிக்கும். ஆனால் மேஜர் பின்னணி தனிப்பாடலுக்கு நடிக்க கொஞ்சம் திணறுவார்.
'பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே'
இதைக் கூட 'யூ டியூபி'ல்
'பழகும் வகையில்' என்பதற்கு பதிலாக 'அழகு மடியில்' என்று தவறாக கொடுத்திருப்பார்கள். (அந்த லட்சணத்தில் பாடலைக் காதில் வாங்குகிறார்கள்):banghead:
https://youtu.be/kkVB7y98UsE
அதே போல் மேஜருக்கு நேரிடையாக இன்னொரு பாடல் உண்டு. அனைத்து விலங்குகளையும் தடவித் தடவிக் கொடுத்து உருகி உருகி பாடுவார். ஆரம்பத்தில் விலங்குகளுடன் நெருங்கி நடிக்க மேஜர் ரொம்பவும் பயந்தாராம்.
'என் உயிருக்கு யாரும் காவல் இல்லை என்றே உறவு கொண்டீரோ
என் மேலே உயிரை வைத்தீரோ'
இந்தப் படத்திற்கு இசை பி.எஸ்.திவாகர் என்று நினைவு. காட்டுப் பின்னணி இசை அமைப்பதில் கில்லாடி இவர். கன்னடப் படங்கள் பலவற்றிக்கு இசை அமைத்திருக்கிறார். ராகவேந்திரன் சார் உதவ வேண்டும். இவர் தான் சில தேவர் படங்களுக்கு அப்போதெல்லாம் இசை அமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். டைட்டில் இசை பிரமாதமாக இருக்கும். பாலு என்பவர் இப்படத்தின் இயக்குனர்.
https://youtu.be/4nE7d8AtkpM
தேவர் தயாரித்த 'காட்டு ராணி' படத்திற்கும் திவாகர்தான் மியூசிக்.
திவாகர் இசையமைத்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது 'காட்டு ராணி' படத்தில் வரும்
காட்டோசையை அப்படியே பிரதிபலிக்கும்
'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே' பாடல்தான்.
https://youtu.be/MOJu2BJxrV8
madhu
23rd November 2015, 10:09 AM
வாசு ஜி... பதில் போட்டாச்.. சுவர்ணா குமாரின் பாடல்களில் பல உள்ளத்தை அள்ளிச்செல்லுமே... பாலாற்றங்கரை அருகே ஒரு சொர்ண ஓடையும் ஓடட்டும்..
சிக்கா.. தெய்வச்செயல் பார்த்ததில்லையா ? இது இங்கே நல்ல நேரமாகி வடக்கே ஹாத்தி மேரா சாத்தியாகி மீண்டும் இங்கே அன்னை ஓர் ஆலயமாகி அங்கே "மா"வாகி. அரைச்சு அரைச்சு அரைச்சு.... யானை தேய்ஞ்சே போச்சாம்..
தெய்வச்செயலில் இன்னும் டி.எம்.எஸ்ஸின் இரு பாடல்கள் உண்டு. "பழகும் வகையில் பழகிப் பார்த்தால்" மற்றும் "என் உயிருக்கு யாரும் காவல் இல்லையென்றே".... கேட்க சுகமாகவே இருக்கும்.
madhu
23rd November 2015, 10:10 AM
ஆஹா... வாசு ஜி... இது திருப்பதியேதா.... சாரி.. டெலிபதியேதான்.
chinnakkannan
23rd November 2015, 10:21 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
வாஸ்ஸூ மதுண்ணா மத்த ரெண்டு பாட்டும் பார்த்தேன் கேட்டேன்..பட் அதை உங்களுக்காக விட்டு விட்டேன்.. கொஞ்சம் அப்புறமா வர்றேன்.. நடிகை பாரதி பற்றி இன்னும் பேச வேண்டியிருக்கு
madhu
23rd November 2015, 10:33 AM
சிக்கா....
உங்களைப் பொறுத்தவரை பாரதி என்றால் பார்.. ரதி என்பீர்கள்... வெயிட்டிங்... வந்து பேசுங்க..
மலையாள மழைத்துளிகிலுக்கத்தில் திலீப், நவ்யாவுடன்.....சாரதாவும் பாரதியும்
https://www.youtube.com/watch?v=ZBfZD7Ih5qw
RAGHAVENDRA
23rd November 2015, 10:45 AM
வாசு சார்
தெய்வச்செயல் படத்துக்கு இசை திவாகரே தான். திவாகருக்கு மிகவும் புகழ் தேடித்தந்த படம் நேர்வழி. வாய்மையே வெல்லுமடா பாடல் தான் தமிழ் சினிமாவில் திவாகருக்கு அடையாளம் தந்தது. அதற்குப் பிறகு அவருடைய இசையில் மற்ற பாடல்களும் பிரபலமாகின.
குறிப்பாக நேர்வழியில் இந்த டூயட் சூப்பர்..
https://www.youtube.com/watch?v=QvqhoG78Xoc
RAGHAVENDRA
23rd November 2015, 10:46 AM
நேர்வழியில் இந்தப் பாட்டு அதை விட சூப்பர்...
https://www.youtube.com/watch?v=ZYhireTPVBI
என்ன செய்வது.. இந்தப் பாட்டைப் பார்த்தால் ஒருத்தருக்கு தாங்காது...
RAGHAVENDRA
23rd November 2015, 11:06 AM
பி.எஸ். திவாகர் தென்னிந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் இசையமைத்து கடைசியாக நான் கேள்விப்பட்ட தமிழ்ப்படம் புலி பெற்ற பிள்ளை. இதில் சில்க் ஸ்மிதாவுக்கு முக்கிய வேடம் என நினைக்கிறேன்.
இதில் டி.எம்.எஸ். பி.சுசீலா, ஈஸ்வரி, எஸ்.பி.பி. வாணி ஜெயராம் என அனைவருமே பாடியுள்ளனர். ஐந்து பாடல்கள் சரிகம இணைய தளத்தில் தலா 90 விநாடிகளுக்கு கேட்கலாம். முழுப்பாடல்கள் வேறெந்த இணையதளத்திலுள்ளன எனத் தெரியவில்லை.
சரிகம இணையதளத்தில் புலி பெற்ற பிள்ளை படத்திற்கான இணைப்பு
http://www.saregama.com/album/puli-petra-pillai_13232
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் பிரபல கர்நாடக இசை வயலின் வித்வான் எம்பார் கண்ணன் அவர்கள் திவாகரின் இசையமைப்பில் இப்படத்தில் வயலின் வாசித்திருக்கிறார்.
rajeshkrv
23rd November 2015, 11:23 AM
பாலச்சந்தர் படங்களில் அருமையான கதாப்பாத்திரங்கள் செய்த ஜெயலெக்*ஷ்மி
இப்பொழுது தொலைக்காட்சி வில்லி
முன்னாளில் கதாநாயகி பின்னர் கிளாமராக சில வேடங்கள்
ஜி, உங்க கர்ணன் தான் அறிமுகம் செய்தார்
https://www.youtube.com/watch?v=PybQjwXoUJ4
RAGHAVENDRA
23rd November 2015, 11:44 AM
Heartrendering speech by SPB as a mark of Tribute to Mellisai Mannar MSV .
Function hosted by Madras Management Association, Multimedia Presentation under the topic Leadership in Creative Business, Case Study M.S. Viswanathan.
Video given in Two Parts in the website.
http://www.liveibc.com/mma/
rajeshkrv
23rd November 2015, 11:46 AM
Heartrendering speech by SPB as a mark of Tribute to Mellisai Mannar MSV .
Function hosted by Madras Management Association, Multimedia Presentation under the topic Leadership in Creative Business, Case Study M.S. Viswanathan.
Video given in Two Parts in the website.
http://www.liveibc.com/mma/
he will speak more about Illayaraja if any illayaraja function is conducted
vasudevan31355
23rd November 2015, 12:11 PM
வாசு ஜி... பதில் போட்டாச்..
பார்த்துட்டேன் மதுண்ணா! தேங்க்ஸ்.
vasudevan31355
23rd November 2015, 12:15 PM
//ஜி, உங்க கர்ணன் தான் அறிமுகம் செய்தார்//
ஆமாம்ஜி! அது தெரிந்ததே! ஆனால் மோகனப்பிரியா யார்?
ஆமாம்! அது என்ன உங்க கர்ணன்?:) சின்னா சண்டை பிடிப்பார். 100 வருட உரிமை அவருக்கே.:) எங்க கர்ணன் எப்பவுமே எங்க கர்ண மகராஜா நடிகர் திலகமே.:2thumbsup:
sss
23rd November 2015, 03:27 PM
பி.எஸ். திவாகர் தென்னிந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் இசையமைத்து கடைசியாக நான் கேள்விப்பட்ட தமிழ்ப்படம் புலி பெற்ற பிள்ளை . முழுப்பாடல்கள் வேறெந்த இணையதளத்திலுள்ளன எனத் தெரியவில்லை.
அன்புள்ள திரு வீயார் அவர்களே
புலி பெற்ற பிள்ளை பாடல்கள் இதோ :
https://www.mediafire.com/folder/dukx5181723qy/PULI_PETRA_PILLAI
சுந்தரபாண்டியன்
vasudevan31355
23rd November 2015, 09:00 PM
ராகவேந்திரன் சார்,
மிக மிக அபூர்வப் படமான 'புலி பெற்ற பிள்ளை' படம் பற்றி தகவல் தர என்னுடைய பழைய ஆவணங்களில் தேடினேன். அதில் நான் வைத்திருந்த அக்டோபர் 1984 'பொம்மை' சினிமா மாத இதழில் இப்படம் பற்றிய தகவல்கள் கிடைத்தது. இதை இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படத்தின் பாடல்களை இங்கு அளித்த நம் சுந்தர பாண்டியன் சாருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355070/IMG_0002.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355070/IMG_0002.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355070/IMG.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355070/IMG.jpg.html)
RAGHAVENDRA
23rd November 2015, 09:10 PM
புலி பெற்ற பிள்ளை பாடல்களுக்கு உளமார்ந்த நன்றி சுந்தரபாண்டியன் சார்.
RAGHAVENDRA
23rd November 2015, 09:17 PM
வாசு சார்
தெய்வச் செயல், காட்டு ராணி என மதுர கானத்தின் பயணம் திவாகர் என்ற இசையமைப்பாளர் முகாமில் தற்போது நிலை கொண்டுள்ளது. ... மன்னிக்கவும்.. வானிலை அறிக்கை கேட்டுக் கேட்டு எழுத்தும் அது மாதிரி ஆகிவிட்டது..
நேர்வழி படத்தின் மஞ்சள் குங்குமம் பாட்டு அந்தக் காலத்தில் மிகவும் விரும்பிக் கேட்ட பாட்டாகும். ஜெய்யின் டாப் டென் அல்லது ட்வென்டி லிஸ்டில் இடம் பெறக் கூடிய பாட்டு.
அந்த திவாகர் அவர்கள் இசையமைத்து புலிக்குட்டி கோவிந்தராஜ் அவர்கள் தயாரித்த படம் புலி பெற்ற பிள்ளை. 60களின் கடைசியிலேயே இந்தப் படம் எடுப்பதற்கான அறிவிப்புகள் வந்து விட்டன. யார் யாரையோ போட்டு எடுக்க பலமுறை முயற்சித்தார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடைசியில் 80களின் துவக்கத்தில் தான் இந்தப் படம் ஒரு வடிவம் பெற்றது. ஒரு சில பாடல்கள் முதலிலேயே பதிவு செய்யப்பட்டு விட்டன எனவும் மீதிப் பாடல்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டன எனவும் கூட சொல்வார்கள்.
அப்படிப்பட்ட அபூர்வமான படத்தைப் பற்றிய செய்தியினை பொம்மையில் எப்போதோ படித்ததை அப்படியே நினைவில் வைத்திருந்து இப்போது எடுத்து பகிர்ந்து கொண்டிருக்கும் தங்களுடைய அபாரமான நினைவாற்றல் மலைக்க வைக்கிறது.
தங்களுக்கும், இந்தப்படத்தின் பாடல்களைத் தந்துதவிய சுந்தரபாண்டியன் சாருக்கும் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
chinnakkannan
23rd November 2015, 11:33 PM
//என்ன செய்வது.. இந்தப் பாட்டைப் பார்த்தால் ஒருத்தருக்கு தாங்காது...// யாருக்கு யாருக்கோ :) தாங்க்ஸ் ராகவேந்தர் சார்..
கொடுக்கலுண்டு பெறுவதுண்டு கணக்கு மட்டும் பார்ப்பதில்லை ( நான் எங்களைச் சொன்னேன் ஸ்வாமி :) )
படித்தலுண்டு முடித்தலுண்டு பாடம் என்றும் முடிவதில்லை.. ரொம்ப புவர் ஸ்டூடண்ட் போல :)
chinnakkannan
23rd November 2015, 11:59 PM
இந்தக் கேள்விக்கு அடி வாங்கினாலும் வாங்குவேன்.. இந்தப் பாட் நிச்சய தாம்பூலமா? படம் பார்த்து நாளாகிவிட்டது..
இதுவேறுலகம் தனி உலகம்.. எல்.ஆர்.இ.. ந.தி நம்பியார்..
https://youtu.be/YgIObEhgFXA?list=PLbwjytqZWqzT5yhydnw60IEJoJTa5mD8 V
chinnakkannan
24th November 2015, 12:07 AM
பாரதி பாதியில் விட முடியாதே.. அ.எ.ஓ.மனம் சினேகிதிக்காக தன்னையே கொடுப்பது எல்லாம் கொஞ்சம் நெருடல் தான்.. படமும் விட்டு விட்டுத் தான் பார்த்தேன்.. மலர் எதுவில் நீச்ச்லாக வந்ததற்கு ப் பரிகாரமாகவோ என்னவோ..முழுக்கை உடை தான்புட்வையிலும் சரி சுரிதாரிலும் சரி.. மிகப் பிரமாதமாக நடிக்க வேண்டிய இடங்களில் வெகு சுமாராக நடித்திருப்பார்..
ஈ பாட் மியூசிக்கிற்காக எனக்குப் பிடிக்க்கும்..
https://youtu.be/7Srv1I9aOF4?list=PLbwjytqZWqzT5yhydnw60IEJoJTa5mD8 V
vasudevan31355
24th November 2015, 07:45 AM
http://i.ytimg.com/vi/KLTASWvQ2S0/0.jpg
நன்றி ராகவேந்திரன் சார்.
திவாகர் பற்றிய தகவல்களுக்கு நன்றி! தேவர்தான் விடாமல் திவாகரை இசையமைப்பாளராக போட்டுக் கொண்டிருந்தார். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லாத பிற படங்களுக்கு. இந்தப் படங்களில் எல்லாம் அசோகன் போன்ற துண்டு துக்கடா ஹீரோக்களே. தேவர் அவர் இஷ்டத்திற்கு ஏதாவது எடுத்துக் கொண்டே இருப்பார். தாங்க முடியாது. அப்படி எடுக்கப்பட்ட ஒரு படம்தான் 'தெய்வத் திருமகள்'. இந்தப் படத்திற்கும் திவாகர்தான் மியூசிக்.
தேவர் படம் என்பதால் முருகன் பாட்டு இல்லாமலா? அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்று ஒரு பாடலும் உண்டு.
இதில் முத்துராமன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு ஒரு பாடல் பாடி வருவார். நன்றாகவே இருக்கும்.
மாடுகள் சேர்ந்தா மந்தையடா
வெறும் மனிதர்கள் சேர்ந்தா சண்டையடா
மணிகளைச் சேர்த்தால் தண்டையடா
இளம் மங்கையர் சேர்ந்தால் சண்டையடா
பாடல் வரிகளும் நன்றாக இருக்கும். சௌந்தரராஜன் பாடுவார்.
https://youtu.be/KLTASWvQ2S0
vasudevan31355
24th November 2015, 08:05 AM
ராகவேந்திரன் சார்,
'நேர்வழி' டிவிடி கவரில் அப்படத்திற்கு இசை சங்கர் கணேஷ் என்று தவறாகப் போட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிவிடியில் டைட்டில் இல்லை. இப்படத்திற்கு இயக்கம் எம்.ஏ.திருமுகமா? இல்லை 'தெய்வச் செயல்' படத்தை இயக்கிய எம்.ஜி.பாலுவா? எம்.ஏ. திருமுகம்தான் என்று எனக்கு நினைவு. 'காட்டுராணி' இயக்கம் எம்.ஏ.திருமுகம் என்பது தெரியும். தெய்வத் திருமகளை தேவரே இயக்கியிருந்தார் அல்லவா? எம்.ஜி பாலு வேறு என்னென்ன படங்கள் டைரெக்ஷன் செய்திருக்கிறார்?
vasudevan31355
24th November 2015, 08:15 AM
ராகவேந்திரன் சார்,
இதோ 'புலி பெற்ற பிள்ளை' படத்தின் இன்னொரு விளம்பரம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355071/IMG.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355071/IMG.jpg.html)
RAGHAVENDRA
24th November 2015, 08:22 AM
வாசு சார்
அதகளம் பண்ணிட்டீங்க..
மதுரகானம் திரி பழைய படங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமாக மாறி வருகிறது உங்கள் புண்ணியத்தில்.
புலி பெற்ற பிள்ளை என்று ஒரு படம் வந்ததே பலருக்குத் தெரியாத விஷயம். அப்படி இருக்கும் போது அதை அக்கு வேறு ஆணி வேறாக விஷயங்களைத் தந்து அசத்தி விட்டீர்கள்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
திவாகரைப் பொறுத்த மட்டில் அதிகம் அறியப்படாத இசையமைப்பாளர். பெரும்பாலும் தேவரின் படங்களுக்கே பணிபுரிந்திருந்தார். இதர ஒரு சில படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். விவரம் ஏதாவது தட்டுப்படுமா எனப் பார்க்கலாம். இணைய தளங்களில் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை.
எம்.ஜி.பாலு, அவர்கள் அந்தக்காலத்திய பிரபல படத்தொகுப்பாளர். பல தேவர் படங்களில் பணி புரிந்தவர். அவரே படங்களைத் தயாரித்துமிருக்கிறார். நேர்வழி படத்தை இயக்கியவரும் எம்.ஜி.பாலு தான். வசனம் வழக்கம் போல அய்யாப்பிள்ளையும் திருமாறனும். நேர்வழி திரைப்படம் 22.06.1968 தணிக்கையாகி 28.06.1968 அன்று வெளியானது. இந்த விவரங்கள் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் புத்தகங்களிலுள்ளது.
இந்தப்படம் சென்னையில் எங்கள் ஏரியாவைப் பொறுத்தமட்டில் மயிலாப்பூர் காமதேனு தியேட்டரில் வெளியானது. படம் ஓடிக்கொண்டிருந்த புதிதில் ரேடியோவில் அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே, வாய்மையே வெல்லுமடா, என்னைத் தெரியுமா போன்ற பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகும். அது நன்கு நினைவிருக்கிறது.
madhu
24th November 2015, 08:57 AM
வாசு ஜி, ராகவ் ஜி..
மொத்தத்தில் வரி வரியாக வரைந்து புலி பெற்ற பிள்ளைக்கு ஒரு முழு உருவம் கொடுத்து விட்டீங்க ? ரதிதேவி யாரு ? "பாப்பாத்தி"யா ? ஹீரோ விமல்ராஜ் யாரு ? முதல் பாவத்தில் ஆதாமாக வந்த பெரம்பூர் ரயில்வே எம்ப்ளாயியா ? ( முகத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கு. ஆனால் அவர்கள் நடித்த படங்களில் முகம் அவ்வளவாகத் தெர்லியே ( சிக்கா.. எங்கே போயிட்டே பா ? ) ? )
பிடில் எம்பார் கண்ணன் இந்தப் படத்தில் வாசித்திருக்கிறாராம். ஹிந்துவில் போட்டிருக்காங்க " As a school boy Kannan played the violin for the Tamil film Puli Petra Pillai and a few Kannada movies."
வாய்மையே வெல்லிமடா பாடல் எப்போது கேட்டாலும் மனதில் ஒரு சம்பந்தமில்லாத கௌபாய் தைரியத்தை உருவாக்கும். ( Fantasy... fantasy..)
RAGHAVENDRA
24th November 2015, 09:05 AM
ரதிதேவி யாரு ? "பாப்பாத்தி"யா ?
ஹீரோ விமல்ராஜ் யாரு ? முதல் பாவத்தில் ஆதாமாக வந்த பெரம்பூர் ரயில்வே எம்ப்ளாயியா ?
அதே அதே...
rajraj
24th November 2015, 09:48 AM
..............எப்போது கேட்டாலும் மனதில் ஒரு சம்பந்தமில்லாத கௌபாய் தைரியத்தை உருவாக்கும். ( Fantasy... fantasy..)
Must be watching John Wayne movies? Or Clint Eastwood movies?
Next time I will bring a cowboy hat for you,if it fits in my suitcase! :lol:
chinnakkannan
24th November 2015, 10:03 AM
hi good morning all
புலி பெற்ற பிள்ளை தகவல்களுக்கு ந்னறி பாட் தான் கேக் முடியவில்லை..ஏன் எனத் தெரியவில்லை..
முதல் பாவமா அப்படின்னா..? ரதிதேவி மெல்லிய பனியாக நினைவில் இருக்கிறது..
JamesFague
24th November 2015, 10:29 AM
பாரதி போய் இப்போது ரதி வந்து விட்டது. சின்னகண்ணன் அவர்கள் ஆசையை நெய்வேலியார் தீர்க்க வேண்டும்.
RAGHAVENDRA
24th November 2015, 10:42 AM
பாரதி போய் இப்போது ரதி வந்து விட்டது.
பாரதி போய் விடவில்லையே.. பாரதிக்குள்ளேயே ரதியும் இருக்கிறாரே...
abkhlabhi
24th November 2015, 10:49 AM
Dear Vasu Sir,
NO EXCUSE IS GOOD ENOUGH FOR MISSING YOUR BIRTHDAY. A VERY HAPPY BELATED BIRTHDAY WISHES TO YOU.
a.balakrishnan
abkhlabhi
24th November 2015, 10:59 AM
Karnan - Iravum Neelavum in telugu - Padutha theeyaga Yesterday Show (23rd Nov)
http://manaserials.com/?url=4334071&source=playwire
Watch and you all love it.
vasudevan31355
24th November 2015, 11:29 AM
//ஆனால் அவர்கள் நடித்த படங்களில் முகம் அவ்வளவாகத் தெர்லியே//
மதுண்ணா!
எத்தனை பேருக்குத் தெர்யும்னு தெரியலையே.:) செம தமாஷ் உணர்ச்சி உங்களுக்கு. 'மஞ்சள் முகமே வருக'! ஸாரி மதுமுகமே வருக.:)
vasudevan31355
24th November 2015, 11:32 AM
//முதல் பாவமா அப்படின்னா//
அடப்பாவமே! இது தெரியாதா? வேஸ்ட். அட்டர் வேஸ்ட்.:)
vasudevan31355
24th November 2015, 11:36 AM
வாசு சார்
அதகளம் பண்ணிட்டீங்க..
மதுரகானம் திரி பழைய படங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமாக மாறி வருகிறது உங்கள் புண்ணியத்தில்.
தங்களின் பேராதரவு தலைமையில் எனபதுதான் மிகச் சரியானதாக இருக்கும். அதுதான் நிஜம். நன்றி ராகவேந்திரன் சார்.
vasudevan31355
24th November 2015, 11:39 AM
வாசு ஜி, ராகவ் ஜி..
வாய்மையே வெல்லிமடா பாடல் எப்போது கேட்டாலும் மனதில் ஒரு சம்பந்தமில்லாத கௌபாய் தைரியத்தை உருவாக்கும். ( Fantasy... fantasy..)
உண்மை! அது போல 'சபாஷ் தம்பி! உன் செய்கையைப் போற்றுகிறேன்... நீ ஒருவன் மட்டும் துணையாய் இருந்தால் உலகை மாற்றுகிறேன்' பாட்டும் நிரம்ப துணிச்சலைக் கொடுக்கும்.
chinnakkannan
24th November 2015, 11:41 AM
பாரதி போய் இப்போது ரதி வந்து விட்டது. சின்னகண்ணன் அவர்கள் ஆசையை நெய்வேலியார் தீர்க்க வேண்டும்.
சரி சரி உங்கள் ஆதங்கம் புரிகிறது..வி.சா பற்றி விரைவில் கேட்கிறேன் :)
chinnakkannan
24th November 2015, 11:43 AM
பாரதி போய் விடவில்லையே.. பாரதிக்குள்ளேயே ரதியும் இருக்கிறாரே...
யெஸ்..அதற்குள் நடிகை பாரதியை விட்டுவிட முடியுமா என்ன.இன்னும் நிறைய பாட் இருக்கே :)
vasudevan31355
24th November 2015, 01:30 PM
Thanks bala sir.
vasudevan31355
24th November 2015, 01:47 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
51
'அம்மன் அருள்'
https://i.ytimg.com/vi/qFkEl0RPpEk/hqdefault.jpg
'ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்'
பாலாவின் தொடரில் அடுத்து நாம் ஆராயப் போவது அம்பிகா மூவிஸ் 'அம்மன் அருள்' படப்பாடல்.
1972-ல் வெளிவந்த இந்த கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் ஜெய்சங்கர், மஞ்சுளா, ஏ.வி.எம்.ராஜன், தேங்காய், ஸ்ரீகாந்த், அசோகன், தங்கவேலு நடித்திருந்தனர்.
பாடல்கள் வாலி. இசை சங்கர் கணேஷ். இயக்கம் பட்டு.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/22.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/22.png.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/24.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/24.png.html)
ஒரு கிராமம். ஊரை அடித்து உலையில் போடும் பண்ணையார் அசோகன். அவரின் ஒரே மகன் ஜெய். மேலை நாட்டில் படித்துவிட்டு கிராமம் திரும்பும் டாக்டர். கிராமக் கோவில் ஏழை பூசாரி... சதா சர்வ காலமும் மகமாயி பெயரை உச்ச்சரித்து ஜெபம் செய்யும் ஏ .வி.எம்.ராஜன். அவரது மகள் மஞ்சுளா. தாயில்லாத பெண். ஜெய்க்கு மஞ்சுளா மீது காதல்.
ராஜன் 'பிறகு பெற்றுக் கொள்கிறேன்'என்று சண்முகசுந்தரி தன்னிடம் நம்பிக் கொடுத்திருக்கும் தங்கச் சங்கிலியை மகள் மஞ்சுளாவின் பிறந்தநாளுக்கு ஆசைப்பட்டாள் என்று பரிசாகக் கொடுத்துவிட, அதை மஞ்சுளா தொலைத்துவிட்டு வந்து நிற்கிறார். செய்வதறியாது திகைக்கும் ராஜனுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கிறது. கிராமத்தில் இருக்கும் ராஜவேலு பூசாரி ராஜனிடம் 1000 ரூபாயைக் கொடுத்து மகள் திருமணத்தின் போது வாங்கிக் கொள்வதாகச் சொல்லித் தர, ராஜன் அந்த 1000 ரூபாயை வைத்து சண்முகசுந்தரியின் சங்கிலியை திருப்பிக் கொடுத்துவிட்டு அப்போதைக்கு நிலைமையை சமாளித்து விடுகிறார். அப்புறம் 1000 ரூபாய் கொடுத்தவருக்கு அதைத் திருப்பித் தர வேண்டுமே!
கிராமத்தில் சினிமா ஷூட்டிங் எடுக்க வரும் ஐசரிவேலனின் பணம் 1000 ரூபாய் கோவிலில் சாமி கும்பிட வருகையில் தொலைந்து போக. ராஜன் கையில் அது கிடைக்க, ராஜன் அந்தப் பணத்தை எடுத்து மறைத்து தன்னிடம் கொடுத்திருந்தவருக்கு திருப்பிக் கொடுத்து விடுகிறார். இப்படி வேறு வழியே இல்லாமல் அம்மன் முன்னிலையிலேயே தவறு மேல் தவறு செய்கிறார் ராஜன். அந்தத் தவறுக்கு அம்மனிடம் பேசி நியாயமும் கற்பித்துக் கொள்கிறார் தனக்குத்தானே.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/28.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/28.png.html)
ஜெய் ஹாஸ்பிடல் கட்டி இலவச மருத்துவ சேவை செய்ய ஆசைப்பட, தந்தை அசோகன் மறுக்கிறார். அதையும் மீறி ஜெய் மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கிறார். மஞ்சுளா, ஜெய் காதலுக்கு அசோகன் கடுமையான எதிர்ப்பு. தன் தங்கை மகள் சகுந்தாலவைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அசோகன் மகன் ஜெய்யிடம் வற்புறுத்த, ஜெய் 'சகுந்தலா தனக்குத் தங்கை மாதிரி' என்று கூறி மறுத்து விடுகிறார். சகுந்தலாவும் 'ஜெய் தனக்கு அண்ணன் போலத்தான்' என்று கூறி மேலும் அசோகனுக்கு அதிர்ச்சி உண்டாக்குகிறார்.
ஜெய் 'மஞ்சுளாவைத்தான் கட்டிக் கொள்வேன்' என்று ஒற்றைக் காலில் நிற்க, வேறு வழியில்லாமல் கோவிலில் அம்மனிடம் உத்தரவு கேட்டுப் பெறுவது என்று முடிவு செய்து ராஜனிடம் விபூதிப் பொட்டலம் ஒன்று...குங்குமப் பொட்டலம் ஒன்று தனித்தனியே கட்டி அம்மன் முன்னிலையில் அவரையே எடுக்கச் சொல்கிறார் அசோகன். 'குங்குமப் பொட்டலம் வந்தால் அம்மன் சம்மதம் கிடைச்சுடுத்து என்று அர்த்தம்' என்று சொல்கிறார்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/30.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/30.png.html)
ஆனால் ராஜன் அசோகன் தன் தங்கை மகளுக்குத்தான் ஜெய்யை திருமணம் செய்ய அசோகன் உத்தரவு கேட்கிறார் என்று தவறாக நினைத்து அது 'தன் மகளுக்கான உத்தரவு' என்று தெரியாமல் மகளின் வாழ்வு வீணாகக் கூடாதே என்று இரண்டு பொட்டலங்களையும் விபூதியாக மடித்து வைத்து அசோகனை ஏமாற்றி விடுகிறார். அசோகன் உத்தரவு கேட்டது 'மஞ்சுளாவை ஜெய்க்கு மணமுடித்து வைக்கலாமா இல்லையா' என்பது. இது ராஜனுக்குத் தெரியாது. ராஜன் நினைத்துக் கொண்டது 'அது சகுந்தலா ஜெய் திருமணம் கேட்டு உத்தரவு' என்று. அதனால் இரண்டு பொட்டலங்களிலும் விபூதியையே மடித்து வைத்து ஜெய், சகுந்தலா கல்யாணத்திற்கு உத்தரவு இல்லை என்று அம்மன் சொல்வதாக ராஜன் அசோகனை நம்ப வைத்து விடுவார். அசோகனோ 'ஜெய், மஞ்சுளா திருமணத்திற்கு அம்மன் சம்மதம் கிடைக்கவில்லை' என்று சந்தோஷமாக ராஜனிடம் சொல்லிவிட்டுப் போய்விட, ராஜன் இப்போது உண்மை புரிந்து நிலைகுலைந்து போகிறார். விவரம் புரியாமல் மகள் மஞ்சுளாவின் வாழ்வை தந்தை ராஜனே சீரழித்து விட்டார். இதை இப்போது அவர் வெளியில் சொல்லவும் முடியாது.
மஞ்சுளாவும் அம்மன் அருள் வாக்கு கிடைக்காததால் ஜெய்யை மறக்கத் துணிகிறார். ஜெய்க்குத் தன் மேல் உள்ள காதல் மறைய அவரை வெறுப்பது போலவும் நடிக்கிறார். மஞ்சுளா வெறுத்ததனால் மனம் உடைந்த ஜெய் திரும்ப வெளிநாடு செல்ல முடிவு செய்கிறார். கிளினிக்கையும் மூடி விடுகிறார். தன் ஒரே மகன் பரிதாப நிலைமை எண்ணி அசோகன் பாசத்தில் வெறி பிடித்தவர் போல ஆகிறார். எல்லாவற்றுக்கும் அம்மன்தான் காரணம் என்று முடிவெடுத்து அம்மன் மேல் கோபம் கொண்டு கோவிலை இடிக்க முற்படுகிறார்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/27.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/27.png.html)
'அம்மன் மேல் கையை வைக்க வேண்டாம்' என்று பூசாரி ராஜன் தடுத்து கெஞ்சுகிறார். அப்போது எல்லோரும் அங்கு வருகிறார்கள். அனைவரும் 'அம்மன் ஒரு கல்' என்று குறை கூறுகின்றனர். மஞ்சுளா முதற்கொண்டு அம்மன் சக்தியில்லாதவள்...அருள் இல்லாதவள்' என்று கூற, துடிதுடிக்கும் ராஜன் 'அம்மன் அருள் உள்ளவள்....எல்லா தவறுக்கும் தான் தான் காரணம்... அதனால் தான் இப்படி என் மகளின் வாழ்வை என் மூலமே பாழாக்கி என் தவறுதல்களுக்கு தண்டனை கொடுத்து விட்டாள்...அதனால் அம்மன் பேசும் தெய்வமே' என்று கூறி தன் தவறுகளை ஒத்துக் கொள்கிறார். 'சாமி இல்லை' என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெய்யையும் அம்மனின் அருள் பற்றி சொல்லி நம்பவைத்து அவர் நெற்றியில் விபூதி வைத்து விடுகிறார். ஜெய், மஞ்சுளா ஒன்று சேருகின்றனர் அம்மன், அசோகன், பூசாரி ராஜன் சம்மதத்தோடு. எல்லோருக்கும் அம்மன் அருள் கிடைத்து விட்டது நம்மைத் தவிர.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/29.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/29.png.html)
ஹாவ்....கொட்டாவி வருகிறது. தூக்கம் தூக்கமாய் வருகிறது. என்ன படமோ! என்னவோ! ராஜன் படம் முழுக்க குமுறிக் குமுறி நம்மக் குமுற வைத்து படுத்தி விடுவார். ஸ்ரீகாந்த் நல்ல லூசாக வந்து பின் தெளிந்து மஞ்சுளா, ஜெய் வாழ்க்கைக்காக உருகுகிறார். சினிமா ஆபாச போஸ்டர் பைத்தியம் பிடித்து தேங்காய் அலைகிறார். புளித்துப் போன கணக்கப்பிள்ளை ரோலை தங்கவேலு நூறாவது தடவையாகவாவது பண்ணியிருப்பார்.
படத்தின் ஒரே பலமான முடிச்சு விபூதிப் பொட்டலம் போட்டு அம்மன் வாக்கு கேட்கும் காட்சி மட்டுமே. படத்தின் திருப்புமுனையும் கூட.
மொத்தம் நான்கு பாடல்கள்.
ஆனால் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும். இரண்டு பாடல்கள் சுமார் ரகம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/23.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/23.png.html)
படத்தின் ஆரம்பத்தில் 'குமாரி' பத்மினி கோவிலில் பரதம் ஆடி ஒரு பாடல். ராதா ஜெயலஷ்மியின் குரலில் அற்புதமாக ஒலிக்கும் இந்தப் பாடல் நிஜமாகவே பக்திப் பரவசமே.
'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்
அது அடியவர் துயர் தீர்க்கும்... ஆயிரம் நலம் சேர்க்கும்
அற்புத விருந்தாகுமே'
சில பேர் இந்தப் பாடலைக் கேட்டு டி.கே.கலா என்று சொல்லிவிடுவார்கள். குரல் ஒற்றுமை அப்படி.
அப்புறம் படு லோ-கிளாஸாக ஒரு பாடல். தேங்காய் சாராயம் அடித்துக் கொண்டே கணேஷ் குரலில் பாடித் தள்ளாட, உடன் ஜெயகுமாரி குப்பத்துக்காரியாக ஈஸ்வரியின் குரலில் அடிமட்டமாக ஆடிப்பாடும்
'மில்லியடிச்சேன்
100 மில்லியடிச்சேன்
பெரும் குடிமகன் நான்தான்னு சொல்லியடிச்சேன்
குடிமகனே நல்லா குடிமகனே!'
பாடல். ராட்சஸி எல்லைகளையெல்லாம் மீறி குரலால் நம்மை அ(கு)டிப்பார். பதற வைப்பார். ஜெய் குமாரியும்தான்.
'குடி' வார்த்தையை வைத்தே ஊர்ப் பெயர்களை வாலி எழுதி ஈஸ்வரி பாடும் போது நமக்கு 'பகீர்' என்கிறது
'என் தாத்தா பொறந்தது தூத்துக்'குடி'
என் மாமன் பொறந்தது மன்னார்'குடி'
என் புருஷன் பொறந்தது பரமக்'குடி'
நான் பொண்ணா பொறந்தது காரைக்'குடி'
எப்படி?
செம கிக்'குடி' இந்தப் பாடல்.
அப்புறம் ஜெய், மஞ்சுளா காதல் முறிவுக்காக சோகப் பாடல் ஒன்று.
'சாட்சி சொல்ல அன்று
தெய்வம் சபையில் வந்ததுண்டு'
சுசீலா, டி.எம்.எஸ். குரல்களில். சுமார் ரகம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/25.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/25.png.html)
இப்போது தொடரின் பாடல்.
பாலா,
'ம்ஹூம் ம்ஹூஹூம் ஹூம்'
என்று ஹம்மிங் எடுத்துத் தொடங்க,
'ஆஹா ஆஅஅஹா'
என்று தொடர சங்கர்- கணேஷின் அற்புதமான இசைக்கருவிகள் இயங்கத் தொடங்கும்.
சுசீலா, பாலா இணைவு என்றால் சங்கர்-கணேஷ் இருவரின் சாம்ராஜ்யம் சமுத்திரமாய் பெருகும். ஒன்று கூட சோடை போகாது. அந்த வரிசையில் இந்தப் பாடலும் ஒன்று.
வாலியின் வாளிப்பான இளமை ததும்பும் தூய தமிழ் வரிகள். மிக இனிமையான டியூன். அழகான வெளிப்புறப் படப்பிடிப்பு. கட்டம் போட்ட பட்டுப்பாவாடை, தாவணி கட்டிய கட்டுக்குயிலாய் அழகு மயில் மல்லிகைப்பூ சூடிய மஞ்சுளா. கழுத்தில் மெல்லிய கருகுமணியுடன் அப்படியே கிராமத்துச் சிட்டு போலவே கிறங்க வைப்பார். மலையாளிகள் அணியும் முண்டு போல வெள்ளைக் கலரில் கருப்பு ஜரிகை பார்டர் போட்ட தாவணி அணிந்திருப்பார்.
ஹீரோயிஸம் தூக்காத சிம்பிளான உடையில் ஜெய். ஜெய், மஞ்சுளா ஜோடி சேர்ந்த முதல் படம். ஜெய் காஷுவலாக பண்ணியிருப்பார்.
கிராம வெட்டவெளிப் பின்னணி. தூரத்தில் பனைமரங்கள் கருங்குச்சிகளை வரிசையாக நட்டது போலக் காட்சியளிக்க, இங்கே அருகே ஒரு சிறிய குளம். அதன் பின்னால் கிளைகள் விட்டு காட்சியளிக்கும் மிகப் பெரிய மரம். அழகான வளைந்தோடும் ஓடை, வளர்ந்தும் வளராமல் சாய்ந்து சாய்ந்து ஆடும் சவுக்கு மரங்கள். மஞ்சுளா சாய வசதியாக பெரிய வைக்கோற்போர்கள் என்று ஸ்டூடியோ வாசனையே எட்டிப்பார்க்காத இயல்பான கிராமம் அப்படியே படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
பாடலின் துவக்க இசை உற்சாகம் கொள்ள வைப்பது. குயில் கூவுவது போல. (கியூங்... கியூங்...கியூங்கியூங்) அப்படியே மெலிதான கிடாரின் பின்னணி தபேலாவுடன் சேர்ந்து. மிகச் சிறிய பிட். ஆனால் இரட்டையர்கள் இன்பத்தை வாரி வழங்குவார்கள்.
சுசீலா பாலா ஹம்மிங் முடித்தவுடன் 'டிடிடிடிங்டிடிங்... டிடிடிடிங்டிடிங்... டிடிடிடிங்டிடிங்... டிடிடிடிங்டிடிங்' என்று நான்கு முறை மனதை மயக்கும் பியானோவின் ஒலி இன்னும் நம்மை அசர வைக்கும்.
'ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே' எனும்போது பாலா கொஞ்சம் அவசரமாக 'நான் தருவேனே' என்று பாடுவது கொள்ளை இன்பம். திரும்பவும் அருமையான இசைச் சங்கதிகள் முன்னைப் போலவே.
ஜெய்க்கு பாலாவின் குரல் இந்தப் பாட்டில் வழக்கத்தை விட மிக அழகாக இருக்கும். பல்லவி முடிந்து இடையிசையில் பியானோ மறுபடி தூள் கிளப்பும். அது முடிந்தவுடன் கிராம இசை என்பதை புல்லாங்குழல் ஓசை நமக்கு உணர்த்தும்
'பட்டுத்தளிர்க் கொடியில்
பச்சைப் பசும் கிளிகள்
தொட்டுக் கொண்டு பேசும் இன்று'
இதில் இரண்டாம் முறை 'இன்று' என்று வரும்போது பாலா சற்றே இந்த வார்த்தையை நீட்டி முழக்குவார். ஜோர்.
'ஓடை நீரில்' என்று பாலா பாடியதும் அது முடிந்த உடன் பின்னால் மெலிதாக இழைந்து கொண்டிருக்கும் ஷெனாய் ஒலி பட்டும் பாமலும் தொட்டும் தொடாமலும் நம் காதுகளில் ஒலிக்கும்போது அப்படியே நம்மை அள்ளிக்கொண்டு போகும். அதே போல சுசீலா பாடிக் கொண்டிருக்கும் போதும் இனிமையாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் இடையிசையாக ஆரம்பிக்கும் அந்த சாக்ஸ் இசை கிரேட். பின்னால் பாங்கோஸ் உருட்டல்கள் உண்டு. அது முடிந்து வழக்கமான பியானோ ஓசை வந்து ஒட்டிக் கொள்ளும்.
'உன்னைக் கண்டு எனக்கு
என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா'
பாலா 'இன்று' என்று முதல் சரணத்தில் இழுத்துப் பாடுவது போலவே மேற் சொன்ன சரண வரிகளில் சுசீலா தன பங்கிற்கு கொஞ்சமும் குறையாமல் 'கண்ணா.....ஆ' என்று பாலாவையே முந்துவார். அவ்வளவு கொஞ்சல் அது.
பாடல் முடியும்போதும் அதே கிடார் இசையுடன் அம்சமாக மிக இனிமையாக பாடலை முடிப்பார்கள் சங்கர்- கணேஷ் என்ற சர்க்கரை இரட்டையர்கள்.
பாடலோடு இசை இழையும் பாடல்களில் இதுவும் ஒன்று. அலட்டாத பாலா, சுசீலாவின் குரல்கள் ரொம்பவும் இனிமை சேர்க்கிறது இப்பாடலுக்கு. அது மட்டுமல்ல... இப்படத்திற்கே இந்தப் பாடல்தான் பலம்...முத்தாய்ப்பு.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355077/26.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355077/26.png.html)
ம்ஹூம் ம்ஹூஹூம் ஹூம்
ஆஹா... ஆஅஅஹா
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான்தானே
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
பட்டுத்தளிர்க் கொடியில்
பச்சைப் பசும் கிளிகள்
தொட்டுக் கொண்டு பேசும் சிந்து
புன்னைமர நிழலில்
சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
பட்டுத்தளிர்க் கொடியில்
பச்சைப் பசும் கிளிகள்
தொட்டுக் கொண்டு பேசும் சிந்து
புன்னைமர நிழலில்
சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாடை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
ஓடும் தென்றல் பூவையைப் பார்த்து
கூறும் கதைகள் என் னென் ன
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
உன்னைக் கண்டு எனக்கு
என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம்
நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
உன்னைக் கண்டு எனக்கு
என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம்
நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
நான்கில் ஒன்று நாணம் என்று
பென்ன்மனம் கொஞ்சம் அஞ்சுவதென்னென்ன
அச்சம் என்ன ஆசை கொண்டு
துள்ளிடும் உள்ளம் பூப்பந்து
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஹே ஹே ஹே ஹேஹேஹே
ஆ ஹா ஆ ஹஹஹா
ஹே ஹே ஹே ஹேஹேஹே
லா லா லா லலலா
https://youtu.be/7_RkpXvdLhM
chinnakkannan
24th November 2015, 06:25 PM
//அம்மன், அசோகன், பூசாரி ராஜன் சம்மதத்தோடு. எல்லோருக்கும் அம்மன் அருள் கிடைத்து விட்டது நம்மைத் தவிர. // :)
//ஹாவ்....கொட்டாவி வருகிறது. தூக்கம் தூக்கமாய் வருகிறது. என்ன படமோ! என்னவோ! ராஜன் படம் முழுக்க குமுறிக் குமுறி நம்மக் குமுற வைத்து படுத்தி விடுவார். ஸ்ரீகாந்த் நல்ல லூசாக வந்து // அது என்ன நல்ல லூசு :)
அம்மன் அருள் ட்ராயர் வயதில் மதுரை ஸ்ரீதேவி என்று சொல்லவும் வேண்டுமோ.. இந்த ஆனால்...ஆனால்..அவ இருக்காளே அம்மன் எல்லாத்தையும் பாத்துக்குவா என்று அடிவயிற்றிலிருந்து அடிக்கடிக் கத்திச் சொல்வது இன்னும் காதுகளில் ஒலிக்க்க்கிறது..
இந்த ஒன்றே ஒன்று சமீபத்தில்தான் யூட்யூபில் பார்த்தேன். .சி.வயதில் பார்த்தது நினைவிலில்லை..
//வாலியின் வாளிப்பான இளமை// :) //தாவணி கட்டிய கட்டுக்குயிலாய்// பாவம் மஞ்சுளாவோட கால் விட்டுட்டீங்களே! :) ஒருவேளை கட்டுப்பாடான கட்டுக்கோப்பான கட்டழகான .. குயிலோ.. :)
ம்ம் நல்ல பாட் கொடுத்ததுக்கு தாங்க்ஸ். .கதைச்சுருக்கம் சொல்றதுக்காக ப் படம் பார்த்த உங்களுக்கு ஸாரிடான். சொன்னதுக்காக ஒரு செல்ல அடி..( நற நற) மொத்தத்தில் தாங்க்ஸ்.. வாஸ்ஸு..:)
madhu
24th November 2015, 07:26 PM
வாசுஜி
பாலுவி பாடல் ஒன்றே ஒன்று நீ தரவேண்டும் என்று கேட்டால் இந்தப் பாட்டை கொடுத்துடுவீங்க போலிருக்கே ! :)
கதையின் கடைசியில் விமானம் ஏறப்போன ஜெய் திரும்பி வந்தபின் அவர் போவதாக இருந்த விமானம் வெடித்து சிதறிய செய்தி ஒண்ணு வரும்.. இப்படி இவர் ஒருவருக்காக ஒரு விமானம் மொத்தமும் சிதறிப் போவதுதான் அம்மன் அருளா என்று குமுதம் விமரிசனத்தில் கேட்டிருந்தார்கள்...
நான் எனக்குள்ளேயே பாடிக்கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனால் "தொட்டுக் கொண்டு பேசும் சிந்து" என்று பாடுவேன்.. அப்போதானே "கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து" என்று பாடும்போது ஒத்துப் போகும்... இன்னைக்குதான் அது "இன்று" என்பதையே கவனித்தேன் !! ஹி ஹி..
அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் பாட்டு யூடியூபில் காணலியே என்று மூணு மாசத்துக்கு முன்னால்தான் அப்லோடு செஞ்சிருந்தேன்...
https://www.youtube.com/watch?v=cWpSkcxu6cY
vasudevan31355
24th November 2015, 10:48 PM
மதுண்ணா!
மதுண்ணாவா கொக்கா?... அது 'இன்று' அல்ல 'சிந்து'தான்.:clap: நீங்கள் உள்ளுக்குள் பாடிக்கொண்டிருப்பது சரியான சிந்து. அதை அங்கே மாற்றி சரியாக 'சிந்தி' விட்டேன். இன்றே அதை திருத்தித் தந்தது நன்று. அதற்கு என்னுடைய பெரிய நன்றி ஒன்று. தப்ப முடியாது என்று(ம்).:) நான்தான் ஹி ..ஹி வழிய வேண்டும்.! நீங்கள் கூடாது. சமாளிச்சுட்டேனே! இருந்தாலும் நல்ல காது டாக்டர் இக்கட லேது.:)
அப்புறம் 'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்' குறிப்பிட்டுள்ளேன். நீங்கள்தான் அந்த வீடியோ புண்ணியம் பண்ணியதா? எங்களுக்கும் சேர்த்து. அம்மன் அருள் நிச்சயம் உண்டு கொடுத்தவருக்கும், பார்ப்பவர்களுக்கும்.:)
குமுதம் விமர்சனம் 'கிளுக்'. சிரித்து சிந்திக்க வைக்கும் நியாயமான கேள்வி.
vasudevan31355
24th November 2015, 10:59 PM
மதுண்ணா!
அரவிந்த் கார்த்திக்?!:cheer:
chinnakkannan
24th November 2015, 11:12 PM
புரியலை
மதுண்ணா!
அரவிந்த் கார்த்திக்?!:cheer:
rajeshkrv
25th November 2015, 02:42 AM
https://www.youtube.com/watch?v=rA8qDcGNlOs
RAGHAVENDRA
25th November 2015, 06:21 AM
புரியலை
"அந்த மேவும் அரவிந்த மாமலையில் வந்த வேதவல்லியாம்" - இது தான் ஞாபகத்திற்கு வருகிறது....
RAGHAVENDRA
25th November 2015, 06:25 AM
வாசு சார்
அம்மன் அருள் படத்தை முழுதும் பார்த்த பொறுமைசாலிகளில் அடியேனும் ஒருவன். அந்தப் படத்தைப் பார்க்க வைத்த அந்த "ஒன்றே ஒன்று" - அதைப் பற்றித் தாங்கள் அவ்வளவு சிறப்பாக எழுதி விட்டீர்கள். அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ... அதுவும் கொஞ்சம் தன் பங்கிற்கு படத்திற்கு சிறப்பு செய்தது.
மற்றபடி ஏதோ ஓவர் ஆக்டிங்... என்கிறார்களே... அதற்கு முழுத் தகுதியும் படைத்த ஏவிஎம் ராஜனின் நடிப்பைப் பற்றிப் பாராட்டி எழுதாத தங்களுக்கு ஈரேழு உலக ஏவிஎம்ராஜன் ரசிகர் மன்றங்களில் தலைமை ஒருங்கிணைப்பு ஒன்றிய அமைப்பு சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்குத் தண்டனையாக திருவருள் படத்தை நூறு முறை தாங்கள் பார்க்கக் கடவது...!
rajeshkrv
25th November 2015, 06:46 AM
வாசு சார்
அம்மன் அருள் படத்தை முழுதும் பார்த்த பொறுமைசாலிகளில் அடியேனும் ஒருவன். அந்தப் படத்தைப் பார்க்க வைத்த அந்த "ஒன்றே ஒன்று" - அதைப் பற்றித் தாங்கள் அவ்வளவு சிறப்பாக எழுதி விட்டீர்கள். அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ... அதுவும் கொஞ்சம் தன் பங்கிற்கு படத்திற்கு சிறப்பு செய்தது.
மற்றபடி ஏதோ ஓவர் ஆக்டிங்... என்கிறார்களே... அதற்கு முழுத் தகுதியும் படைத்த ஏவிஎம் ராஜனின் நடிப்பைப் பற்றிப் பாராட்டி எழுதாத தங்களுக்கு ஈரேழு உலக ஏவிஎம்ராஜன் ரசிகர் மன்றங்களில் தலைமை ஒருங்கிணைப்பு ஒன்றிய அமைப்பு சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்குத் தண்டனையாக திருவருள் படத்தை நூறு முறை தாங்கள் பார்க்கக் கடவது...!
Raghav ji, edhu eppadiyo AVMrajanukku credit kodukkanum. he did accept to play Manjula's Dad ... yedho konjam nandraga seithiruppar
vasudevan31355
25th November 2015, 08:26 AM
Raghav ji, edhu eppadiyo AVMrajanukku credit kodukkanum. he did accept to play Manjula's Dad ... yedho konjam nandraga seithiruppar
ஜி
ஒங்க நல்ல மனசுக்கொரு கொறையுமில்லே தானேதந்தனானா:)
vasudevan31355
25th November 2015, 08:28 AM
வாசு சார்
இதற்குத் தண்டனையாக திருவருள் படத்தை நூறு முறை தாங்கள் பார்க்கக் கடவது...!
அய்யயோ! தப்பு பண்ணிட்டேன் ராகவேந்திரன் சார் தப்பு பண்ணீட்டேன்.:) மன்னிச்சிடுங்கோ! மன்னிச்சிடுங்கோ! இவ்ளோவ் பெரிய தண்டனையை ஓடமும், மனசும் தாங்காது. ம க மா யி..............:)
RAGHAVENDRA
25th November 2015, 08:44 AM
வாசு சார்
பி.எஸ்.திவாகர் இசையமைத்த படங்களைப் பட்டியலிடலாமே என்ற எண்ணத்தில் 1951 முதல் 1980 வரையில் வெளிவந்த தமிழ்ப்படங்களில், திவாகர் இசையமைத்த படங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஆதாரம்... பிலிம் நியூஸ் அனந்தன் வெளியிட்ட திரைப்படப்பட்டியல் புத்தகம்.
1952 - பசியின் கொடுமை
1952 - புயல் - எஸ்.ஜி.கே. பிள்ளை என்பவருடன் இணைந்து
1953 - தந்தை
1964 - தெய்வத்திருமகள்
1965 - காட்டு ராணி
1965 - தாயும் மகளும்
1967 - தெய்வச் செயல்
1968 - நேர்வழி
1980க்குப் பிறகு இன்னும் பட்டியலெடுக்கவில்லை.
rajeshkrv
25th November 2015, 09:05 AM
Vanakkam ji
rajeshkrv
25th November 2015, 09:18 AM
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் “இறைவன் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்” பாடலை மிகவும் விரும்புவார் போல
தான் இயக்கிய காவியத்தலைவனில் (விஜயகாந்த் பானுப்பிரியா நடித்தது)
தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்து வந்த அர்விந்த் சித்தார்த்தா (ஆபாவாணனின் துணையுடன்) இசையமைத்தார்
இறைவன் ஒரு நாள் போலவே ஒரு பாடல்
யேசுதாஸுடன் ஸ்வர்ணலதா
சந்தன மலர்களை பார்த்து வந்தது தென்றல் காற்று
https://www.youtube.com/watch?v=9pqsRyFRqWU
vasudevan31355
25th November 2015, 10:05 AM
'உத்தரவின்றி உள்ளே வா' போனஸ் சிறப்புப் பதிவு.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355078/utharavindri%20ulle%20vaa%20climax%20song.MPG_0000 51912.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355078/utharavindri%20ulle%20vaa%20climax%20song.MPG_0000 51912.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355078/utharavindri%20ulle%20vaa%20climax%20song.MPG_0000 44416.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355078/utharavindri%20ulle%20vaa%20climax%20song.MPG_0000 44416.jpg.html)
மதுண்ணா!
'உத்தரவின்றி உள்ளே வா' படத்தின் கிளைமாக்ஸ் பாடல் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இன்றுதான் அப்லோட் செய்ய அதற்கு நேரம் கிடைத்தது. இறுதியில் ரவி, காஞ்சனா அலங்கரிக்கப்பட்ட பொண்ணு மாப்பிள்ளை காரிலும், அவர்களுக்கு முன்னால் ஆளுக்கொரு பக்கமாக மூர்த்தி, சச்சு ஜோடி ஸ்கூட்டரிலும், நாகேஷ், ரமாபிரபா ஜோடி இன்னொரு ஸ்கூட்டரிலும் சென்னை சாலைகளில் அம்சமாக நிஜமாகவே வர, ரோட்டின் இருமருங்கிலும் ஷூட்டிங் பார்க்க ஜனங்கள் திரண்டிருப்பதும், காரின் பின்னாலேயே சிலர் ஆர்வத்துடன் ஓடிவருவதும் ரசிக்க வைக்கிறது. நாகேஷ் சீரியஸாக ஸ்கூட்டர் ஓடி வருவார். அப்புறம் வலுக்கட்டாயமாக சிரிப்பார். முகம் காட்டிக் கொடுக்கும். மூர்த்தி சமாளித்து விடுவார். ரவி, காஞ்சனா காரின் பின்னால் அவர்களின் பாதுகாப்பிற்காக ஐந்தாறு கார்கள் தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம். மாலிக்கு ஜோடி இல்லாததால் பூ தூவும் வேலை. இப்போதும் பாவ'மாலி':)
வழக்கமான 'கள்ளம் இல்லாத' வரிகள் ரவிக்கு பாலா குரலில்.
'மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ'
என்று ரமாபிரபாவுக்கும்,
'வண்ணம் மலர்ந்து எண்ணம் கலந்து மின்னல் மயக்கம் கொள்ளாதோ'
என்று சச்சுவுக்கும் புதிதாக ஆளுக்கொரு வரி பாட இப்பாடலில் அடித்தது சான்ஸ்.
பாடலின் இடையிசையில் ஒரிஜினல் பாடலுடன் வேறுபடுத்திக் காட்ட இப்பாடலில் மாற்றம் தந்திருப்பார் எம்.எஸ்.வி. இடையிசை கேட்டீர்களானால் ஒரு இடத்தில் அதாவது மாலி பூ தூவும் போது 'வரவு எட்டணா....செலவு பத்தணா' 'பாமா விஜயம்' படப் பாடலின் இடையிசையை அப்படியே ஞாபகப்படுத்தும்.:) ('அடங்கா மனைவி அடிமைப் புருஷன் குடும்பத்துக்ககாது' என்று டி.எம்.எஸ் பாடும் முன்பு வரும் இடையிசை யில் நான் சொன்ன மியூசிக் பிட் 4 தரம் ஒலிக்கும். அதே போல இப்பாடலிலும் கொஞ்சம் வலுவாக அதே 4 தரம் ஒலிக்கும். டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்):)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355078/utharavindri%20ulle%20vaa%20climax%20song.MPG_0000 35889.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355078/utharavindri%20ulle%20vaa%20climax%20song.MPG_0000 35889.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355078/utharavindri%20ulle%20vaa%20climax%20song.MPG_0000 64857.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355078/utharavindri%20ulle%20vaa%20climax%20song.MPG_0000 64857.jpg.html)
பாடல் முடியும்போது இருவர் காரின் முன்னே ஓடி வந்து காஞ்சனா, ரவியை கழுத்தில் மாட்டியிருக்கும் கேமெரா மூலம் ஸ்டில் எடுப்பார்கள். அதில் பேன்ட் போட்டு படம் பிடிப்பவர் 'ஸ்டில்' சாரதி போலத் தெரிகிறது. ராகவேந்திரன் சாரும் இதை உறுதி செய்தார். (சாரதிதான் இந்தப் படத்திற்கு ஸ்டில் உதவி. லாங் ஷாட்டில் பார்த்தால் ஸ்ரீதர் போலவும் தெரியும்).
'உத்தரவின்றி உள்ளே.... வா' என்ற அனைவரின் உற்சாகக் கூக்குரல்களுடன் பாடல் முடியும்.
பட யூனிட்டே காமெடி படம் என்பதற்காக ஜாலியாக இப்பாடலை பொதுமக்கள் முன்னிலையில் ஜோவியலாக படமாக்கிருப்பார்கள். அதனால் இந்தப் பாடல் காட்சியும் ஒரு நிமிடங்கள் சில வினாடிகளே ஆனாலும் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டது. சரியான எண்ட்.
இன்னொன்று. இந்தக் காட்சியில் பாடல் ஆரம்பிக்கும்போது இரு பெண்குரல்கள் 'உத்தரவின்றி உள்ளே.... வா' என்று சேர்ந்து ஒலிக்கும். ஏற்கனவே இந்தப் பாடலை ஈஸ்வரி பாடியிருப்பதால் ஒரு குரல் அவருடையது. இன்னொரு பெண் குரல் சுசீலா அம்மாவா அல்லது டிராக் பாடும் வேறு பாடகியா என்பது தெரியவில்லை. சச்சுவும், ரமாபிரபாவும் பாடும்போது ஈஸ்வரியின் குரலிலேயே பாடுவார்கள். இரு பெண்குரல்கள் சேர்ந்து ஆரம்பத்தில் ஒலிக்கும்போதுதான் இன்னொருவர் யார் என்பதில் குழப்பம்.
இந்தப் பாடலை பாலா தொடரில் நான் சேர்க்கவில்லை. அதனால் இது நம் நண்பர்களுக்கு ஸ்பெஷல் போனஸ். குறிப்பாக மதுண்ணாவிற்கு. ஓ.கே.வா?
https://youtu.be/rePTD5ZeAZ8
chinnakkannan
25th November 2015, 11:27 AM
அய்யயோ! தப்பு பண்ணிட்டேன் ராகவேந்திரன் சார் தப்பு பண்ணீட்டேன்.:) மன்னிச்சிடுங்கோ! மன்னிச்சிடுங்கோ! இவ்ளோவ் பெரிய தண்டனையை ஓடமும், மனசும் தாங்காது. ம க மா யி..............:)
அவர் ஒண்ணும் பெரிய தண்டனை தரலையே.. துணைவனைப் பார்க்கச் சொல்லியிருந்தா நீங்க சொல்றது கரீட்டு :)
*
இந்த கண்ணிரண்டும் மின்னமின்ன காலிரண்டும் பின்னப் பின்ன - இந்தப் பாட்டை ந.திக்குக் கொடுத்திருக்கலாமோ..ஜஸ்ட் இமாஜின்..ந.தி அண்ட் தேவிகா இன் திஸ் ஸாங்க்..
JamesFague
25th November 2015, 04:33 PM
Courtesy: Tamil HIndu
சினிமா எடுத்துப் பார் 35: ‘மயங்குகிறாள் ஒரு மாது’
ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான விநியோகஸ்தர்கள் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தை வாங்கத் தயங்கினார்கள். திருச்சியைச் சேர்ந்த விநியோ கஸ்தர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு களை அடுக்கி வைத்துக்கொண்டு ‘கிளை மாக்ஸில் கதாநாயகி இறப்பது போல மாற்றிக் கொடுங்கள். உடனே படத்தை வாங்கிக்கொள்கிறேன்’ என்றார். நானும், பஞ்சு அருணாசலமும் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகியைக் கொன்றுவிடக் கூடாது. தவறை மன்னித்து வாழ வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந் தோம். தயாரிப்பாளர் விஜயபாஸ்கரிடம் படம் தொடங்குவதற்கு முன்பே, இதை சொல்லியிருந்ததால் அவரும் அந்த முடிவில் இருந்து மாறவில்லை.
பல வகையில் பணத்தை புரட்டி னோம். படப்பிடிப்பு முடிந்தது படத்தை சென்சாருக்கு அனுப்பினோம். படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரி எங்களை அழைத்து பாராட்டி, ‘யூ’ சான்றிதழ் கொடுப்பதாகக் கூறினார்.
பஞ்சு அவர்கள் என்னை அழைத்து, ‘‘ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதிகாரியிடம் அந்த பருவக் கோளாறு காட்சிகளைப் பற்றி கேட்டுவிடுங்கள்’’ என்றார். நான் சென்சார் அதிகாரியிடம் சென்று ‘‘படத் துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து காதலர் கள் தனிமையில் இருக்கும் காட்சிகளைக் குறைப்பீர்கள் என்று நினைத்தோம்!’’ என்றேன். அதற்கு சென்சார் அதிகாரி, ‘‘படத்தில் திருப்புமுனையே அந்தக் காட்சிதான். இளம் வயதில் தவறு செய் தால் அதன் பின்விளைவு என்ன என் பதை உணர்த்துகிறது. அதனால்தான் அக் காட்சியை வெட்டவில்லை. எல்லோரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என் பதற்காக ‘யூ’ சான்று கொடுத்தோம்’’ என் றார். கதைக்கு சம்பந்தமில்லாமல் கவர்ச் சியாக, அசிங்கமாக வைத்தால்தான் சென்சாரில் கட் செய்வார்கள் என்பதை அன்று புரிந்துகொண்டோம்.
‘சினிமா எடுத்துப் பார்’ என்ற சவாலை ஏற்று பல சங்கடங்களுக்கு மத்தியில் படத்தை வெளியிட்டோம். தவறு செய்த பெண்ணை மன்னித்து வாழ வைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். கிளை மாக்ஸை மாற்ற சொன்ன திருச்சி விநி யோகஸ்தரும் படத்தை பார்த்துவிட்டு ‘‘நீங்க ஜெயிச்சீட்டீங்க முத்துராமன் சார். உங்க கிளைமாக்ஸை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்’’ என்றார்.
படத்தில் ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற பாடலை எழுதியிருந்த கண்ண தாசன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, படம் எனக்குப் பெரிய தாக்கத்தை கொடுக் கிறது. சுஜாதா கதாபாத்திரம் கண் முன் னேயே சுற்றி சுற்றி வருகிறது. வித்தி யாசமான படமாக எடுத்துவிட்டீர்கள்’’ என்று என்னையும் பஞ்சுவையும் பாராட்டி னார். தம்பிகளுக்கு அண்ணன் கொடுத்த ஆஸ்கர் விருதாக அதை எடுத்துக்கொண் டோம். பட்ட கஷ்டமெல்லாம் படத்தின் வெற்றியில் கரைந்து போனது. இளங்கோ கலை மன்றம் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தின் வெற்றிக்கு விழா எடுத்தது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் விருது கொடுத்தார். புதியவர்களை ஊக்குவித்த இளங்கோ கலை மன்றத் துக்கும், இளங்கோ வீரப்பனுக்கும் எங்கள் நன்றி என்றும் உரியது.
காவிய கவிஞர் வாலி என் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக் கிறார். இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். அதில் ஒரு படம் ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’ மணியனின் கதை. திரைக்கதை, வசனம், பாடல்கலை வாலி எழுதியிருந்தார்.
கணவன், மனைவியை கவனிக் காமல் இருந்தால் மனைவி தவறான வழிகளில் போக வாய்ப்பு இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்ன படம். கதாபாத்திரத்தின் விரகதாபத்தை அள வுக்கு அதிகமாக சொன்னதால் படத்தை பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங் களுக்கு வருத்தம். அதைவிட வருத்தம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என் எல்லா படங்களுக்கும் எடிட்டரான ஆர்.விட்டல்.
எழுத்தாளர் பிலகிரி படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, குடும்பப் பின்னணி கதையுடன் வந்து என்னைச் சந்தித்தார். அந்தக் கதைதான் ‘ஒரு கொடி யில் இரு மலர்கள்’. அந்தப் படத்துக்கு வசனம் வாலி சார்தான். அந்தப் படத்தின் வசனம் கவிதையாகவே இருந்ததைப் பலரும் பாராட்டினார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயத் தையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’ படத்தின் வேலைகள் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தன. அதற்கு வசனம் எழுதுவதற்காக வாலி சார் சேலத்துக்கு வந்திருந்தார். என் குழுவினர் என்னிடம் வந்து ‘வாலி சார் இரவு நேரத்தில் அள வுக்கு அதிகமாக மது அருந்துகிறார்’’ என்றார்கள்.
அடுத்த நாள் அவரை சந்தித்து, அதைப் பற்றி கேட்டேன். ‘‘யார் சொன்னது, யார் சொன்னது?’’ என்று வியப்பாக கேட்டார். ‘‘நாம் இருப் பது சினிமா துறை. இங்கே ரகசியம் எல்லாம் எட்டுத் திக்குக்கும் தெரிந்து விடும்’’ என்று கூறினேன். நான் ‘கனிமுத்து பாப்பா’ படத்தை இயக்கும் நேரத்தில் வி.சி.குகநாதனின் அலுவலகத்துக்கு எதிர்வீடுதான் வாலி வீடு. மாலை நேரத்தில் வாலி சாரோடு பேசிவிட்டு, அவர் மனைவி ரமண திலகம் கொடுக் கும் காபியை குடித்துவிட்டு, அவர் மகன் பாலாஜியோடு விளையாடுவேன். இதனால் நான் வாலி சார் குடும்பத்தில் ஒருவனாகியிருந்தேன். அந்த உரிமை யோடு அவரிடம் பேசினேன்.
‘‘உங்கள் குடும்பத்தில் ஒருவ னாக சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந் தீர்கள். உங்கள் கவிதைகளையும், பாடல் களையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். மக்கள் விழிப்புணர்வு அடையும் அள வுக்கு உங்கள் எழுத்துக்கள் இருக்கின் றன. நீங்கள் குடிக்கு அடிமையாக லாமா? உங்கள் மனைவி ரமண தில கத்தையும், மகன் பாலாஜியையும் நினைத்துப் பாருங்கள்’’ என்று மன அழுத்ததுடன் எடுத்துச் சொன்னேன்.
சில விநாடிகள் யோசித்தவர், ‘‘இனிமேல் எந்தச் சூழலிலும் குடிக்க மாட்டேன்’’ என்று என் கையில் அடித்து சத்தியம் செய்தார். அன்று முதல் வாலி குடிப்பதை விட்டுவிட்டார். இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. வாலியின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருமுறை வாலியைப் பார்த்தபோது, ‘‘என்னய்யா, நாங்க எவ்வளவோ சொல்லியும் குடிப்பதை நிறுத்தாத நீ, இப்போ எப்படி நிறுத்தினே?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நடந்ததை எடுத்து கூறி யிருக்கிறார். வாலி சார் கைகளில் இரண்டு சாக்லேட்டை கொடுத்த எம்.ஜி.ஆர் ‘ஒன்று உனக்கு. இன்னொன்று முத்துராமனுக்கு!’’ என் றாராம். இந்த சம்பவத்தை துக்ளக் பத்திரிகையில் வாலியே எழுதியிருந்தார்.
இன்றைக்கு உங்களோடு இதைப் பகிர்ந்துகொள்ள காரணம், தற்போது குடிப் பழக்கம் குடும்பத் தலைவர்களை, தொழிலாளர்களை, மாணவர்களை சீரழித்து வருகிறது. அதனால் தமிழ்க் குடும்பங்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. அடுத்த தலைமுறை முழுவதும் குடிக்கு அடிமையான தலைமுறையாக ஆகிவிடுமோ என்கிற பயம் வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு வருத்தமான மனநிலையில் என் கண்களில் கண்ணீர் வந்து, அந்த துக்கம் எழுதவிடாமல் தடுக்கிறது. அதனால் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் சந்திப்போம்.
- இன்னும் படம் பார்ப்போம்…
JamesFague
25th November 2015, 04:39 PM
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?
ஐம்பெரும் இயற்கை சக்திகளாக நாம் போற்றுவது நிலம், நீர், காற்று, தீ மற்றும் ஆகாயம். இவற்றின் பௌதிக இயல்புகளையும் தாண்டி நமது செயல்கள் மற்றும் உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பாடப்படுவது கவி மரபு. இந்த மரபை அடியொற்றி இரண்டு மழைப் பாடல்களைப் பார்ப்போம்.
இந்திப் பாட்டு.
படம்: ஷோர் (சத்தம்/ இரைச்சல்),
பாடலாசிரியர்: இந்திரஜித் சிங் துளசி,
பாடியவர்: முகேஷ், இசை: லட்சுமிகாந்த் பியாரிலால்:
பாடல்:
பானிரே பானி தேரா ரங்க் கைஸா,
ஜிஸ்மே மிலா தோ லகே உஸ் ஜைஸ்ஸா
பானிரே பானிரே ஓ பானிரே பானிரே பானிரே
பொருள்:
தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி
எதில் கலந்தாயோ அதுவாக நீ மாறுவாய் அப்படி
தண்ணீரே ஓ தண்ணீரே
இப்படியும் உள்ளது இவ்வுலகின் சிலரது வாழ்க்கை
உலர்ந்ததை உண்டு குளிர்ந்ததைக் குடிக்கும் செய்கை
நிறையும் உன் ஒரு சொட்டு நீரில் இந்நில மக்களின்
குறைகள் பலவும் அவர் கொள்வர் அமைதி - ஓ மழையே
(தண்ணீரே ஓ தண்ணீரே)
பசித்த மானிடனின் பசியும் அவன் தாகமும் போல
கங்கையில் விழும்போது நீ புனித கங்கை நீராகிறாய்
தங்கும் மேகத்துடன் கலந்து பொங்கு மழையாகிறாய்
(ஒருபுறம் மழையை ரசிக்கும்)
தீயில் விரிந்து தீயை அணிந்து தடுமாறும் இளமை
(மறுபுறம் அதே மழையினால்)
சாயும் மதில்கள் சரியும் சுவர்கள் ஓ மழையே
நீ வாழ்வை மாற்றுவாய் வீழும் சுமையாய் அங்கே
தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி தாம்
எண்ணியபடி இவ்வுலகைப் படைத்த இறைவன் அப்படி
ஒவ்வொரு காட்சியும் ஒளிபெறும் வண்ணம்
உள்ளது மழையே உன் கைவண்ணம்
(நீ நீராய்) கொட்டும்போது கிட்டாத இவ்வெழில் வண்ணம்
மொட்டுகள் மலர்ந்து வனங்கள் முகிழ்கும் செய்தி
மெட்டுகள் வந்து நமக்கு மெலிதாய் உணர்த்தும்
தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி - இந்த
மண்ணில் வாழ்வோம் ஆண்டுகள் நூறு என நம்பும்படி
மழையை இரு விதமான கோணங்களில் மனோஜ்குமார் காண்பதாக அமைந்த இப்பாடல் இன்றும் மழைக்காலங்களில் மும்பையில் ஒலிக்கப்படுகிறது. மிக அழுத்தமான கதையம்சம், முகேஷின் உருக்கமான குரல், தத்துவார்த்தமான வரிகள் ஆகியவற்றுடன் கூடிய பல பாடல்கள் நிறைந்த ஷோர் என்ற இந்தத் திரைப்படம் மனோஜ் குமாரை ஒரு லட்சிய நடிகராக ஆக்கியதில் பெரும் பங்கு வகித்தது.
சமூகத்தின் அவலங்களை எளிய வார்த்தைகள் மூலம் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல் எழுதியவர் மருதகாசி. மழையைப் பற்றி அவரின் அழகான உவமேயங்கள் கொண்ட இந்த மழைப் பாடலைப் பாடி நடித்த வசீகரமான குரல் வளம் கொண்டவர் டி.ஆர். மகாலிங்கம்.
படம்: ஆடவந்த தெய்வம், பாடலாசிரியர்: ஏ. மருதகாசி,
பாடியவர்கள்: டி.ஆர். மகாலிங்கம், பி.சுசீலா, இசை: கே.வி. மகாதேவன்
பாடல்:
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே- மழை
கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே-அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர் துளி போலே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
முட்டா பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளி கொட்டுற வார்த்தை போலே
கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே
முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு
உன் முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோணல் புத்தியை காட்டுறே
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பு போலவே
முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாய் ஓடி வா
செவந்து போன முகத்தில் சிரிப்பை நீயும் காணலாம்
JamesFague
26th November 2015, 09:29 AM
Mr CK you can enjoy and get more details about Soundarya from Neyveliar
https://youtu.be/RTPaiGmQ8k8
JamesFague
26th November 2015, 10:04 AM
One more melody from Karna.
https://youtu.be/HuPIrY3fyso
chinnakkannan
26th November 2015, 10:32 AM
நேற்று பெளர்ணமி. முழு நிலவு. பால் வெள்ளை? ம்ஹூம்.. கொஞ்சம் சிறிதாக ஒருலிட்டர் பாலில் ஒரு இத்தினியூண்டு மஞ்சள் பொடி போடடுக் கலக்கினால் என்ன நிறமோ அது போன்ற வெளிர் மஞ்சள் நிறம்..ஆனால் ரின்போட்டு வெளுத்தாற்போல் பளீர் எனச் சிரிப்பு..
அதனுடைய வடிவம் எப்படி..
வட்டம்..என சுலபமாய்ச் சிறு குழந்தை சொல்லும்.. சரி..அந்த வட்ட முகம் எத்தனை பேருக்கு உண்டு..
எஸ் செளந்தர்யா தான்..
மெளன விழிகளால் மென்மைக் கவிசொல்லும்
செளந்தர்யம் கொண்டவர் தான்
பொன்னுமணியில் அறிமுகமாகி தமிழில் சோபிக்காமல் தெலுங்கு சென்று கிளாமரித்துப் பின் தமிழ் மறுபடி தெலுகு பின் அரசியல் எனப் போய்க் கொண்டிருந்தவர். வாழ்க்கையில் எதிர்பாரத திருப்பமாக விபத்தில் மரித்தும் விட்டார்.. வெகு சின்ன வயது..ம்ம்
போதுமா Mr. s.v.d sir :) நெய்வேலியார் வந்து அவர் பங்குக்குச் சுத்திச் சுத்தி வந்தாரு என அவர் பற்றிச் சொல்லட்டும்.. :)
eehaiupehazij
26th November 2015, 06:33 PM
'மரியாதை' குறைந்தாலும் மனதில் நிறைந்த மதுர கானங்கள் !
வாடா வாடி போடா போடி வாங்க போங்க வாங்கடா போங்கடா ....டா....டி.... பாடல்கள்!!
மரியாதை என்பது மனதில் தோன்றுவது நம்மை விட வயதானவர்களைக் காணும் போதும் படிப்பிலும் பண்பிலும் பதவியிலும் உயர்ந்தவர்களுடன் உரையாட நேரும் போதும் ...இயல்பானதே!!
இந்த தகுதிகள் எல்லாமே இருந்தாலும் மரியாதைக்குரிய மனிதரும் மயங்குவது தன்னை காதலி (மனைவி அல்ல மக்களே!) மரியாதைக் குறைவாக வாடா போடா என்றழைக்கும் போதும் மழலைகள் வாப்பா போப்பா வா தாத்தா போ பாட்டி என்றெல்லாம் மரியாதையின்றி விளிக்கும்போதுமே !!
நண்பர்களுக்குள் எத்தனை வயதானாலும் வாடா போடா வாடி போடி இயல்பே !!
நாட்டிய பேரொளியின் மழலை செல்ல தாங்கல் !!
https://www.youtube.com/watch?v=uPdzO1jxXkM
நளின நடன நிலவு ரவிச்சந்திரனின் சூப்பர் டான்சேதான் ....... நெளிவுசுளிவு நடன நட்சத்திரம் நாகேஷுடன்!
https://www.youtube.com/watch?v=dnG9krdsYxM
நடிகர்திலகத்தின் தன்னம்பிக்கை .....
https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU
chinnakkannan
26th November 2015, 08:50 PM
மரியாதை பற்றி முன்பு திருப்பாவை - பூமாலை தொடுத்த பாமாலை - விளக்கவுரை எழுத முயற்சித்தபோது - எழுதியது நினைவுக்கு வருகிறது சி.செ.
//
மரியாதை என்பது என்ன?
ஒருவன் தான் செய்த செயல்கள் மூலம் நான்கு பேருக்கு நல்லது செய்தானென்றால் அவனுக்கு அனைவரும் மரியாதை காட்டுவார்கள் – அது அவனது குணத்திற்கு. மேற்பதவியில் இருப்பவர்க்கு கீழே உள்ளவர்கள் மரியாதை காட்டுவார்கள் – அது அவர்களின் பதவிக்கு.
சரி மரியாதையை எப்படிக் காட்ட வேண்டும்?
குழந்தை தந்தையிடம், ‘அப்பா ,நீ எங்க போயிட்டு வந்தே?” என ஒருமையில் கேட்கிறது. குழந்தைக்கு மரியாதை தெரியவில்லை என அர்த்தமில்லை. அன்பின் மிகுதியால் ஒருமையில் அழைக்கிறது. வளர்ந்தவுடன் அதே குழந்தை மரியாதையாகத் தந்தையிடம், ‘ அப்பா, நீங்கள் எனக்காக என்ன செய்து கிழித்தீர்கள்?” என்று கேட்கும்!
எனது சகோதரி நாய் ஒன்று வளர்த்தார்கள். அது அழகாய் வேளாவேளைக்கு தயிர்சாதம், தொட்டுக் கொள்ள எலுமிச்சங்காய் ஊறுகாய், இட்லி, தோசை எல்லாம் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடும். சகோதரி உணவருந்தும் போது வாயில் உமிழ் நீர் பெருக, அவர் சாப்பிடும் சாம்பார் சாதத்தையே பார்க்கும். சகோதரிக்குக் கோபம் வரும்., “ச்சீ, அந்தப் பக்கம் போ எருமை மாடே!” என்பார்கள். அது பரிதாபமாய் வைப்புத் தொகை இழந்த வேட்பாளர் போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒதுங்கிவிடும். அவர் உண்டு முடித்ததும் எதிரே பாவமாய்ப்போய் நிற்கும். சகோதரிக்குச் சிரிப்பு வரும், “என் கன்னுக்குட்டியைத் திட்டிட்டேனாடா?” என்று அதைக் கொஞ்சுவார். நாய் எருமை மாடானதும் கன்றுக்குட்டியானதும் அன்பின் மிகுதியால் தான்!
*இருபது வருடங்களுக்கு முன்னால் பெயர் பெற்ற அம்மையார் ஒருவர் தலை நகரிலிருந்து மதுரை வந்திருந்தார்கள். சாலையில் இருபக்கமும் ஒரே கூட்டம். ஒருவரிடம் விசாரித்தேன், “யாருங்க வராங்க?” அவர், “உஷ், அந்த அம்மா வருது!” என்றார். இங்கு மரியாதை காரணமாக உயர் திணை அஃறிணையாகி விட்டது!
இன்றையபாடலில் கோபியர்கள் கண்ணனை, தவறிப் போய் உன்னை ஏக வசனத்தில் அழைத்திருந்தாலும் கோபங்கொள்ளாதே – எனச் சொல்கிறார்கள்.// :)
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
வாடா வாடா பையா என் வாசம் தூண்டிப் போயா ?
ராஜா வாடா சிங்கக் குட்டி
வாடி ராசாத்தி..
கிட்ட வாடி ஆசை புள்ள
எனில் இங்கு போடப் போவது
https://youtu.be/45sjbjyko5I
ஹச்சோ இது வேற வாடா வோ :)
chinnakkannan
26th November 2015, 08:59 PM
சரி.. ரியல் வாடியம்மா சின்னப் பொண்ணு கேட்கலாம் என்றால் முதல் பாட்டு கேட்டு இரண்டாவது பாட் கேட்கவேண்டும்..ஜெய்ஷங்கர் எல்.விஜயலஷ்மி..
https://youtu.be/O9Er6cW6vBo
rajraj
27th November 2015, 04:18 AM
vaNakkam from Los Angeles,CA. Will post beginning Sunday! :lol:
vasudevan31355
27th November 2015, 12:41 PM
வெரி குட் சின்னா! இதுவரை போடவில்லை என்று நினைக்கிறேன். 'உயிர் மேல் ஆசை' நிறைய இருக்கிறது. நன்றி சிஷ்யரே!
அடா அடி போடா போடி பாடல் போடுமய்யா என்றால் வாடா மலரே பாட்டை அந்த லிஸ்ட்டில் சேர்த்து அடாவடி பண்ணி விட்டீரே!:) நல்ல வேளை. கடா பாட்டு போடாமல் தப்பிக வைத்தீரே! அதுமட்டும் சந்தோசம்.:)
vasudevan31355
27th November 2015, 12:45 PM
vaNakkam from Los Angeles,CA. Will post beginning Sunday! :lol:
ராஜ்ராஜ் சார்!
லாஸ் ஏஞ்சல்ஸ், ஹவாய் என்று கலக்குகிறீர்கள். இங்கே வெறும் கரி (நாட் கறி) அப்புறம் வெள்ளமாய் எங்க பார்த்தாலும் பானி பானி பானி. உங்கள் ஹேப்பி எங்கள் ஹேப்பி. என்ஜாய்.:)
RAGHAVENDRA
27th November 2015, 01:53 PM
Dear RajRaj Sir
Our fellow hubber SUBRAMANIAM RAMAJAYAM is now at Los Angeles only. If chance occurs, you can meet him there. I don't have his US mobile no. However u can contact him through pm and notify the pm here so he will come to know.
rajraj
27th November 2015, 10:16 PM
Dear RajRaj Sir
Our fellow hubber SUBRAMANIAM RAMAJAYAM is now at Los Angeles only. If chance occurs, you can meet him there. I don't have his US mobile no. However u can contact him through pm and notify the pm here so he will come to know.
We were waiting in the airport for the connecting flight. I thought I should let all of you know that I would be back soon! :)
Thanks for the information. We have visited all tourist attractions in LA area. We might visit again when our grand children grow up. :)
Vasu: It was a family get together in Hawaii. My eldest son likes the place where we stayed( a rented house). He wanted the entire family to be there! :) A bit expensive. We went along for the sake of our sons,daughter in law and grand children! It was fun. :) Hope the rain stops and the floods recede soon.
rajeshkrv
27th November 2015, 11:05 PM
vanakkam
RAGHAVENDRA
28th November 2015, 12:01 AM
நினைத்துப் பார்க்கிறேன்
http://www.moremp3.in/wp-content/uploads/2015/07/K-V-Mahadevan1.jpg
1960களில் ஒரு பக்கம் மெல்லிசை மன்னர்கள் அதகளம் பண்ணிக் கொண்டிருக்க, தன்னிகரில்லா இசைச் சக்கரவர்த்தியாக விளங்கிய திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், இன்னொரு பக்கம் தன் ராஜ்ஜியத்தை நிலைநிறுத்திக்கொண்டேயிருந்தார். பல படங்களின் பெயர்கள் இன்றும் மக்கள் மத்தியில் நிலைகொண்டிருப்பதற்குக் காரணமே, கே.வி.எம். அவர்களின் பாடல்களால் தான். அப்படி ஒரு படம் தான் 1965ல் வெளிவந்த காக்கும் கரங்கள். சிவகுமார் அறிமுகமான படம் என்பதை ஓர் அடையாளமாக்க் கொண்டாலும், பாடல்களே இப்படத்தை இன்று வரை மக்களிடம் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. இசையரசியின் குரலில் இப்படத்தில் ஒலித்த பாடல்களனைத்துமே நெஞ்சை விட்டு அகலாதவை. அதே போல பாடகர் திலகம் இசையரசி பாடிய அல்லித்தண்டு காலெடுத்து மற்றும் ஞாயிறு என்பது கண்ணாக - இந்த இரு டூயட் பாடல்கள் இப்படத் மிகப் பெரும் அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தன, சேர்க்கின்றன, சேர்க்கும்.
முதன்முறை கேட்டதிலிருந்து பல நாட்களுக்கு ஞாயிறு என்பது கண்ணாக பாடல் நடிகர் திலகம் நடித்தது என்றே எனக்குள் ஓர் எண்ணம் இருந்தது. பொதுவாக பொதுக்கூட்டம், கல்யாணங்கள் இந்த மாதிரி நிகழ்வுகளில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் மைக் செட்காரரிடம் நட்பாகப் பழகி அந்த இசைத்தட்டை வாங்கிப் பார்ப்பதில் தனி பரவசம் ஏற்படும், அந்தப் பழக்கத்தில் தான் இந்தப்பாட்டின் இசைத்தட்டை ஒரு நிகழ்ச்சியில் வாங்கிப் பார்த்தபோது அது எஸ்.எஸ்.ஆர். என அந்த மைக் செட் காரர் சொன்னார். அவ்வளவு தான் புஸ்ஸென்று ஆகி விட்டது.
50 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த ஏக்கம் தீரவில்லை. மீண்டும் நடிகர் திலகம் பிறந்து வந்தால் நிச்சயமாக இந்தப் பாடலுக்கு நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுப்பேன்.
https://www.youtube.com/watch?v=yGppVFnr-Vc
பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்கிற்கு...
நம் மனதில் தோன்றும் கதாநாயகி ...
வேறு யார்.. நம்ம...
https://i.ytimg.com/vi/zjAOJ9xOP-w/hqdefault.jpg
அண்ணி தேவிகா தான்.
அதே கண்ணாடி அதே உடையுடன் நடிகர் திலகம்... விஜயகுமாரியின் காஸ்ட்யூமில் தேவிகா..
ஆனால்...
தலைவர் எப்படி செய்திருப்பார்...
தேவிகா அந்தப் பாறை மேல் அமர்ந்திருப்பார்.. தலைவர் மெல்ல அருகில் வருவார். அப்படியே அமர்ந்திருக்கும் தேவிகாவை முதுகு வழியாக வளைத்து மெல்ல எழுப்புவார்.
மெல்ல முகவாய்க்கட்டையில் கைவைத்து முகத்தை சற்றே மேலே தூக்கியவாறு கண்களைப் பார்ப்பார். இப்போது காமிரா ஒரு விநாடி க்ளோஸப்பில் வரும்.
பல்லவி துவங்கும் போது இரு கைகளையும் தேவிகாவின் இரு தோள்களில் போட்டு பாடத்துவங்குவார். நீரோடும் வைகையிலே சௌகார் ஜானகியை நினைவுறுத்திக் கொள்ளுங்கள்..
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக எனப் பாடும் போது தேவிகா முகத்தில் நாணம் தோன்ற மெல்ல நழுவி நடக்கத் தொடங்குவார். இந்த இடத்தைப் பொறுத்த வரையில் விஜயகுமாரியின் உடல் மொழி சிறப்பு. தலைவர் கூடவே மெல்ல இரு ஸ்டெப் வைத்து, சேர்ந்தே நடந்த்து அழகாக என பல்லவியை முடிப்பார்...
இதன் பிறகு அனுபல்லவி முடிய எஸ்.எஸ்.ஆருக்கு பதில் நடிகர் திலகத்தை நினைவுறுத்திக் கொள்ளலாம்.
நேற்றைய பொழுது கண்ணோடு எனச் சொல்லும் போது, தலைவரின் கண்கள் சற்றே மேல் நோக்கிப் பார்த்து கீழிறங்கும்.. ஆஹா.. இது இந்தப் பாட்டில் மிஸ்ஸாகிறதே...
நிழலாய் நடப்பேன் பின்னோடு வரியின் போது தலைவர் கூடவே நடத்தி வருவார். ஒரு ஸ்டெப் மற்றுமே முன்னால் செல்வார். தேவிகாவோ அவரை ஒட்டினாற்போல் பின் தொடர்வார்.
இதன் பின் வரும் பிஜிஎம் மில் தலைவரின் தனி நடை வரும். ஆனால் அது வேகமாக இருக்காது. மெஜஸ்டிக்காக மெதுவாக நடப்பார். தொடர்ந்து சரணம், ஊருக்குத் துணையாய் நானிருக்க.. வரியின் போது தான் மருத்துவர் என்பதை சித்தரிக்கும் விதமாக உடல் மொழி தருவார். எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் என்ற வரியின் போது ஒரு புன்னகை புரிவார்.. இதழ்கள் முறுவலிக்க, சுட்டுவிரல் தேவிகாவின் இதயத்தை தொட்டுக் காட்டும். உள்ளத்தின் கைகளில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்... இந்த வரிக்கு தேவிகாவும் தலவரும் டைட் க்ளோஸப்பில் ஒருவரை யொருவர் பார்த்தபடி ஃப்ரேம் கம்போஸிங் இருக்கும். திரை முழுதும் இந்தக் காட்சி பார்க்க ரம்மியமாக இருக்கும்..
இப்போது எஸ்.எஸ்.ஆர். இரு கைகளையும் நீட்டும் அதே உடல் மொழியைத் தலைவரும் உபயோகிக்கலாம். முகத்தை ஒரு பக்கம் சாய்த்தவாறு தேவிகவைப் பார்த்து சிரித்தவாறே தன் இரு கரங்களாலும் அவளை வளைத்து மார்போடு அணைத்துக் கொண்டு பாடுவார்.
இப்போது தலைவராயிருந்தால் பிஜிஎம்மில் இருவரும் சற்று தூரம் நடந்து வருவார்கள். முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் என்ற வரிக்கு கையை நன்கு மேலே உயர்த்தி அப்படியே அந்தக் கையை தேவிகாவின் மேல் கொண்டு வந்து வைத்து உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன் எனப் பாடுவார். ஆனால் சிரிக்க மாட்டார். கண்களில் ஒரு விதமான ஏக்கம் வரும். பெண்ணொரு பிறவி எடுக்க வந்தேன், பேசியபடியே கொடுக்க வந்தேன் என்ற அடுத்த வரியை தேவிகா பாடுவதாக இருந்தால், சற்றே நெருக்கமாக மீண்டும் காமிரா ஜூம் செய்து கொண்டே போய் பேசிய படியே கொடுக்க வந்தேன் என்ற வரியில் கொடுக்க வந்தேன் என்ற வரியின் போது முகம் நாணி கைகள் மூடிக்கொண்டு விடும்.
இப்போது பல்லவி தொடரும் போது தலைவராக இருந்தால் முகத்தில் ஓர் இனம் புரியாத உணர்வைக் கொண்டு வந்து தேவிகாவைப் பார்க்க, அவரும் தலைவரை அதே போன்ற உணர்வுடன் பார்க்க, காதல் உணர்வு அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கும் அப்படியே தொற்றிக்கொண்டு மூழ்கி விடுவார்கள்.
அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தவாறே மெய்மறந்து கண்களை மூடி சாய்ந்து அமர, காமிரா ஜூம் அவுட் ஆகி அப்படியே டிசால்வ் ஆகி விடும்.
.....
ஹ்ம்.. இவ்வளவு அருமையான பாடல் தலைவருக்கு வாய்த்திருந்தால் நான் இப்படித்தான் எடுத்திருப்பேன்..
இந்தப் பாடலில் தலைவர் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என அடிக்கடி
நினைத்துப் பார்க்கிறேன்
என்றாலும் ஒரு ஆறுதலுக்காக இதோ தலைவர் தேவிகா சூப்பர் ஸ்டில்...
https://i.ytimg.com/vi/xDev1jcbRN8/maxresdefault.jpg
JamesFague
28th November 2015, 09:22 AM
Think NT in this song. What a composition. a fantastic melody from Poovum Pottum.
https://youtu.be/AH9Ga0rZpio
JamesFague
28th November 2015, 09:34 AM
Courtesy:Tamil Hindu
காற்றில் கலந்த இசை 32 - சுகானுபவத்தின் ஒரு துளி!
ஹிட் ஆன படங்களின் பாடல்களைத் தவிர, பாடல்களுக்காகவென்றே நினைவுகூரப்படும் எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. 1983-ல் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் பிரபு, அம்பிகா நடித்த ‘ராகங்கள் மாறுவதில்லை’ படமும் அதில் ஒன்று.
சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. முன்னிலையில் ஸ்பூர்த்தி எனும் சிறுமி பாடிய ‘விழிகள் மீனோ’ பாடலைக் கேட்ட 80-களின் ரசிகர்கள் பூரித்து நின்றார்கள். இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்காமலேயே வளர்கிறோமே என்று இளைய தலைமுறையினர் வருத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. கல்யாணி ராகத்தின் சாயலில் அமைந்த அந்தப் பாடல், காதலியை வர்ணித்துக் காதலன் பாடும் சாதாரண ‘சிச்சுவேஷ’னுக்காக இசைக்கப்பட்டதுதான். எனினும், அப்பாடல் தரும் இசைச் சுவை, சுகானுபவம், சஞ்சரிக்க வைக்கும் கற்பனை உலகம் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை.
அழகை ரசிக்கும் மனதின் ஆலாபனையாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங்குடன் தொடங்கும் இப்பாடல் இசையமைப்பாளருக்கும் பாடகருக்கும் இடையிலான பரஸ்பரப் புரிதலுக்கு மிகச் சிறந்த உதாரணம். தபேலா, மிருதங்கம் தாள வாத்தியங்கள் அமைத்துத் தரும் நடைமேடையில் புல்லாங்குழல் நடைபயில, பாடல் தொடங்கும். முதல் நிரவல் இசையில் வீணையின் நடைபாதையில் குறுக்கிடும் இரண்டு வயலின்கள் நெகிழ்ந்துருகியபடி உரையாடிச் செல்ல, துள்ளும் மானின் குதூகலத்துடன் புல்லாங்குழலும், அதை வியக்கும் வீணையின் சிலிர்ப்பும் அவற்றைத் தொடர்ந்து ஒலிக்கும்.
இசைஞானமும் கற்பனையின் வீச்சும் எல்லையற்று விரிந்து கிடக்கும் இளையராஜாவின் படைப்பாற்றலின் சிறு துளி அது. இரண்டாவது நிரவல் இசையில் எஸ்.பி.பி.யின் ஜதிக்கும், மிருதங்கத்தின் தாளத்துக்கும் இடையில் சின்ன உரையாடல். உரையாடலுக்கு நடுவே மிருதங்கத்துடன் சேர்ந்து ஒலிக்கும் பேஸ் கிட்டார் தரும் பியூஷன் என்று அற்புதமான இசைத் தருணங்கள் நிறைந்த பாடல் இது.
எஸ்பிபி பாடிய ‘தென்றலோ தீயோ’ எனும் தனித்தன்மை மிக்க பாடலும் இப்படத்தில் உண்டு. இரவின் மவுனத்தைக் கலைத்தபடி மெலிதாக ஒலிக்கும் கிட்டாருடன் பாடல் தொடங்கும். நினைவுகள் தரும் வலியைத் தாளாமல் புலம்பும் மனதின் மெல்லிய விசும்பலாக ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் எஸ்.பி.பி. மென்மையான தபேலா தாளக்கட்டில் நகரும் பாடல் இது.
‘தீண்டியது நானோ’ எனும் வரியில் குற்றவுணர்வில் பரிதவிக்கும் மனதின் ஊடாட்டத்தைப் பிரதிபலித்திருப்பார் எஸ்.பி.பி. நிரவல் இசையில் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று டூயட் பாடல்களுப் பயன்படுத்தும் இசைக் கருவிகளை வைத்து மென்சோகத்தை இசைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது சரணத்தில் ‘இளமைக் காலம்… உறவுக் கோலம்’ எனும் வரியில், அலைக்கழிக்கப்படும் மனதின் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.
இப்படத்தின் மற்றொரு பாடலான ‘என் காதல் தேவி நீ என்னில் பாதி’ எனும் பாடலை உற்சாகத்தின் உச்சத்தில் நின்று எஸ்பிபி பாடியிருக்க வேண்டும். அத்தனை குதூகலமான பாடல் இது. உண்மையில் 80-களின் ‘ஈவ்டீஸிங் சிச்சுவேஷன்’ பாடல்களில் ஒன்றுதான் இது. எனினும், நிரவல் இசையின் இனிமை அந்த வகைப்பாட்டைத் தாண்டிப் பாடலைத் தூக்கி நிறுத்தும். எஸ்.பி.பி., ஷைலஜா பாடிய ‘நாளெல்லாம் நல்ல நாளே’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல் எஸ். ஜானகி பாடிய ‘வான் மீதிலே அதிகாலை ’. பல ஆண்டுகளுக்கு முன்னர், அதிகாலை நேரத்தில் வானொலியில் கேட்ட பாடல் இது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலான மங்கலான உலகில் ஒலித்த அந்தப் பாடல் நினைவடுக்கின் ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடந்தது. 2000-களில் இணையத்தின் வழியாக இந்தப் பாடல் மீண்டும் கேட்கக் கிடைத்தது. இளையராஜாவின் இசையில் தனக்குப் பிடித்த பாடல்களாக, கிட்டார் இசைக் கலைஞர் பிரசன்னா எழுதியிருந்த பட்டியலில் இப்பாடலைக் கண்டதும் மனம் அடைந்த ஒளி வெள்ளத்தை இன்றும் உணர முடிகிறது.
பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங், விடிகாலை வேளையில் நாணல்கள் அடர்ந்த ஓடைக் கரையில் பாடியபடி செல்லும் பெண்ணை மனதுக்குள் உருவகப்படுத்தும். பெண் குரல்களின் கோரஸுடன் சேர்ந்து ஒலிக்கும் ஜானகியின் ‘பப்பப்பா…’ எனும் ஹம்மிங் தரும் உணர்வு மிக நுட்பமானது. சோகத்தை மறைத்துக்கொண்டு பிறருக்காகப் பாடும்போதும், தன்னையும் மீறி வெளிப்படும் துயரத்தை அதில் அத்தனை அழகாகப் பிரதிபலித்திருப்பார் ஜானகி.
பாடலின் தாளம் மிக வித்தியாசமானது. அடித்துக்கொள்ளும் மனதின் பிரதிபலிப்பாகப் பாடலின் டிரம்ஸ் தாளத்தை வடிவமைத்திருப்பார் இளையராஜா. முகப்பு இசையிலோ நிரவல் இசையிலோ இந்தத் தாளம் ஒலிக்காது. ஜானகி பாடும்போது மட்டும் இந்தச் சிறப்புத் தாளத்தை ஒலிக்க விட்டிருப்பார். வாழ்வில் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், ஏமாற்றங்கள் என்று பல்வேறு தருணங்களின் தொகுப்பாக இப்பாடலின் நிரவல் இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.
குறிப்பாக, இரண்டாவது நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸுடன் இணைந்து ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார் மூலம், பூடகமான எத்தனையோ விஷயங்களைச் சிதறவிட்டிருப்பார். பல்லவியில் ‘பாவை எந்தன் நெஞ்சம்தான் பாடும்’ எனும் வரியை ஜானகி சரியாக உச்சரிக்காததுபோல தோன்றும். ஆனால், புலம்பிக்கொண்டிருக்கும் மனதின் மொழி வார்த்தைகளுக்குள் அடங்கக்கூடியதா என்ன?
JamesFague
28th November 2015, 09:36 AM
Courtesy: Tamil HIndu
சினிமா ரசனை 26: தமிழில் ஒரு படம்கூட இல்லை!
தமிழ் சினிமாவின் முதல் படத்தில் இருந்து இன்றுவரை கவனித்தால், ஒரு விஷயம் பளிச்சென்று தெரிகிறது. அது பொழுதுபோக்கு. அன்றைய கீசக வதமாக இருந்தாலும் சரி, இப்போதைய வேதாளமாக இருந்தாலும் சரி, வணிகப் படங்களே பெரும்பாலும் வசூலில் வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றில் பாடல்கள், நகைச்சுவை, செண்டிமெண்ட், சண்டைக்காட்சிகள் முதலியவற்றோடு, கதாநாயகனைக் கடவுள் போல சித்தரிக்கும் காட்சிகளும் உண்டு. அண்டை மாநிலங்களில் தரமான திரைப்படங்கள் வரும் அளவுகூடத் தமிழில் படங்கள் இல்லை என்பதையும் சென்ற சில வாரங்களில் மேலோட்டமாகப் பார்த்தோம். அப்படியென்றால், ஒரு கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட முற்றிலும் ‘கமர்ஷியல்’ அம்சங்கள் கொண்ட படங்கள் வரவே கூடாதா? வந்தால் என்ன தவறு?
கமர்ஷியல் படங்களின் முகம்
கமர்ஷியல் படங்கள் அவசியம் வர வேண்டும் என்பதே என் கருத்தும். ஆனால், நடிகர்களைக் கடவுள் போல சித்தரித்து, அவர்களுக்காகவே காட்சிகள் எழுதி, ஒவ்வொரு காட்சியிலும் பஞ்ச் வசனங்கள், ரசிகர்களை நோக்கிய நாயகனின் வசனங்கள் முதலியவைகளை விட்டுவிட்டு, தரமான, சுவாரஸ்யமான திரைக்கதைகளை மனதில் வைத்துக்கொண்டு எடுக்கப்படும் ‘கமர்ஷியல்’ படங்களே என் விருப்பம். அப்படிப்பட்ட படங்கள்தான் திரைப்படம் பார்க்க வரும் ஆடியன்ஸை முழுமையாகத் திருப்திப்படுத்தும்.
மாறாக அந்த நட்சத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து, அவருக்கென்றே காட்சிகள் எழுதி ஒரு படம் எடுத்தால், முதலில் சில நாட்கள் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கங்கள் அதிர்ந்தாலும், சரக்கு இல்லாததால் படம் எளிதில் மறக்கப்பட்டுவிடும். யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட படங்கள் ஆண்டுதோறும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் எத்தனை படங்கள் நம் நினைவில் இருக்கின்றன?
இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படுவதற்கான மையநோக்கமாக, ‘ரசிகர்களின் விருப்பம்’ என்ற விஷயம் இயக்குநர்களாலும் தயாரிப்பாளர்களாலும் முன்நிறுத்தப்படுகிறது. அது போலவே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமும், ‘திரைப்படம் பார்த்தால் பொழுது போக வேண்டும்’ என்பதாகவே இருப்பதும் தெரிகிறது. அதில் தவறும் இல்லைதான். என்றாலும், இந்தியாவிலேயே நாம் ஏற்கெனவே முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கும் சில மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து தரமான படங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அங்கே மட்டும் ரசிகர்கள் பொழுதுபோக்குக்காகத் திரையரங்கு வருவதில்லையா?
எப்படிச் சாத்தியமானது?
யோசித்துப் பார்த்தால், மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம் முதலிய மாநிலங்களில் ஆரம்ப காலம் தொட்டே மக்களின் மத்தியில் நல்ல ரசனை இருந்துவருகிறது என்பது புரிகிறது. இது எப்படிச் சாத்தியமென்றால், வணிகம் மற்றும் கலைக்கான வேறுபாட்டை நன்றாக அறிந்துகொண்டதன் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. அரசியல்வாதிகளும் நடிகர்களும் கடவுளர்க்கு நிகராகக் கருதப்படும் இடமாகத் தமிழகம் தொடர்கிறது. கேரளத்திலோ மேற்கு வங்கத்திலோ அரசியல்வாதிகள் இப்படிக் கருதப்படுவதில்லை.
நடிகர்களுக்கும் கடவுளுக்கு இருப்பதுபோன்ற ரசிகர் பட்டாளம் இல்லை. அங்கே மக்களுக்குத் தெளிவான புரிதல் உண்டு. இந்தப் புரிதல் அவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது என்பதை யோசித்தால், அந்த மாநிலங்களில் தரமான ரசனை சிறுவயதிலிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டுவருகிறது என்பது புரியும். இலக்கியத்துக்கே அங்கே முதலிடம். இதனாலேயே நல்ல திரைப்படங்கள் அங்கே இயல்பாகவே வரவேற்கப்பட்டுவருகின்றன. இதனால்தான் மேற்கு வங்கம் இன்று தரமான திரைப்படங்களுக்காக இந்தியாவில் முதலிடம் பெறுகிறது.
அப்படியே தமிழகத்தைக் கவனித்தால், இங்கே இலக்கியத்துக்கு என்ன இடம்? இலக்கியப் புத்தகங்கள் சில நூறு பிரதிகள் விற்றாலே அதிகம். ஜனரஞ்சகப் புத்தகங்களே இங்கே அதிகம் விற்கின்றன. சிறுவயது முதலே இங்கே ஜனரஞ்சகத்துக்கே முதலிடம். இதனால்தான் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் இங்கே கடவுளைக் கண்டதுபோலக் காண வருகின்றனர்.
பொழுதுபோக்கு மட்டுமே அல்ல
திரைப்படங்கள் மூலம் நிகழ்த்தக்கூடிய சமூக மாற்றங்களைப் பற்றி இங்கே மிகச் சிலருக்கே தெரிகிறது. திரைப்படங்களைக் காணும் பலரும் இன்னும் அவை பொழுதுபோக்குக்காகவே எடுக்கப்படுகின்றன என்றே கருதி வளர்கிறோம்.
இந்த மனநிலை சமுதாயத்தில் அடித்தட்டு முதல் மேல்தட்டு வரை அனைவருக்குமே இருக்கிறது என்பதும் தெரிகிறது. மிகச் சமீபத்தில்தான் உலகப்படங்களைப் பற்றிய ஆர்வம் நமக்கு வந்துள்ளது. இதற்கு இணையம் ஒரு காரணம்.
கர்நாடகத்தைப் பற்றி மேலே பார்த்தோம். இங்கு இலக்கியத்துக்கான வரவேற்பு கண்கூடாகத் தெரிந்த விஷயம். நான் பல வருடங்களாக இங்கே இருப்பதால் இது நன்றாகவே புரிகிறது. இங்கும் ஜனரஞ்சகக் கமர்ஷியல் படங்களூக்கான வரவேற்பு அதிகம் என்றாலும், அதே சமயம் நல்ல படங்களும் அவசியம் ஓடவே செய்கின்றன. இலக்கியப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்கின்றன. மக்களுக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. இது என் அனுபவம்.
தமிழ் மக்களாகிய நாம், தமிழில் இதுவரை வந்திருக்கும் தரமான இலக்கியங்கள் எவை என்று தேடித்தேடிப் படிக்க வேண்டும். இலக்கியம் ஒருபுறம், ஜனரஞ்சக எழுத்து மறுபுறம் என்று இரண்டுக்குமே சம அளவு இங்கே வரவேற்பு வேண்டும். வாழ்ந்து மறைந்த எத்தனையோ இலக்கியவாதிகள் இங்கே அங்கீகாரமே இதுவரை இன்றியே இருந்திருக்கின்றனர்; இன்னும் இருந்துகொண்டிருக்கின்றனர். இவர்களது புத்தகங்களை நாம் அனைவரும் தேடிச்சென்று படிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஏனெனில், தரமான எழுத்துகள் நமது வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவை. இலக்கியத்தை உள்ளபடி புரிந்துகொண்டால் வாழ்க்கையில் பக்குவம் கூடும். அந்தப் பக்குவத்தால் எளிதில் நம்முன் இருக்கும் விஷயங்களைத் தரம் பிரித்து அறிந்துகொள்ள முடியும். அப்படி அறிந்துகொண்டால், எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று புரிந்துகொள்வோம். யார் பின்னாலும் ஓட மாட்டோம். நல்லவற்றை வரவேற்போம்.
இலக்கியம் எழ வேண்டும்
இப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது இலக்கியம். இது மட்டும் நடந்துவிட்டால், பின்னர் தாமாகவே உலக அளவில் பேசப்படும் பல படங்கள் இங்கும் அவசியம் எடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலில் நமது தாய்மொழியில் இருந்து மறைந்த/எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகள் யார் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர்களின் எழுத்துகளை நாம் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இதுதான் சிறந்த காலகட்டம். இப்போது இலவசமாகவே பல இலக்கியக் கூட்டங்களும் உலக சினிமாத் திரையிடல்களும் பரவலாகத் தமிழகமெங்கும் நடைபெற ஆரம்பித்துள்ளன. இதனை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் நமது ரசனை மாறும். ரசனை மாறினால் வாழ்க்கை மாறும். வாழ்க்கை மாறினால், தமிழகத்திலிருந்து அவசியம் பிரமாதமான உலகப்படங்கள் வெளியாகி, தமிழுக்கு நீங்காத பெருமையை அளிக்கும்.
நன்றாக யோசித்துப் பார்த்தால், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பதினாறு வயதினிலே, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஏழாவது மனிதன், அக்ரஹாரத்தில் கழுதை, வீடு, சந்தியா ராகம், காக்கா முட்டை, குற்றம் கடிதல், விசாரணை போன்ற பல படங்கள் இங்கே நம்மால் கொண்டாடப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லைதான். ஆனால், இவற்றைத் தமிழே தெரியாத ஒரு உலகப்பட ரசிகர் வேறொரு நாட்டில் இருந்துகொண்டு பார்க்கிறார் என்றால், ஒரு ‘பதேர் பாஞ்சாலி’யை அவர் ரசிப்பது போலவோ, ஒரு ‘மேகே தக்க தாரா’வை அவர் உணர்ந்து புரிந்துகொள்ளுவதைப் போலவோ இவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கவனித்தால், அது கொஞ்சம் கடினமே என்று புரியும்.
இப்படங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் விருதுகள் வாங்கியிருப்பது போதாது. மாறாக, ஒரு சத்யஜித் ராய் படம் போல உலகெங்கும் பாராட்டுகளைக் குவிக்க வேண்டும். காக்காமுட்டை, குற்றம் கடிதல், விசாரணை ஆகியவை உலகில் சில திரைவிழாக்களில் வலம்வருகின்றன. அது அவசியம் பாராட்டத் தக்கதே. ஆனால், அதுவும் போதாது. வெனிஸ் பட விழாவிலோ, கான் பட விழாவிலோ அல்லது இவற்றைப் போன்ற மதிப்புக்குரிய உலகப் படவிழாக்களிலோ ஒரு தமிழ்ப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டு தங்கச்சிங்கம் போன்றதொரு விருதை வாங்கினால் நமக்கு எவ்வளவு பெருமை? இன்றுவரை தமிழில் உலகத் திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு படம்கூட இல்லை என்பது வருத்தம்தானே?
JamesFague
28th November 2015, 10:49 AM
Mr CK Karna song for you. Arjun with your favourite actress Ranjitha. Any update pls share.
https://youtu.be/o32O5g_Kack
chinnakkannan
28th November 2015, 11:54 AM
பஞ்சினும் மெல்லிய பாவையின் கண்களில்
ரஞ்சிதம் பூத்திடும் ரம்யமாய் - நெஞ்சினில்
நேரிழை நல்லெழில் நேர்பட நின்றுதான்
தூறிடும் சாரலாய்த் தான்..
கொஞ்சுமெழில் விஞ்சிவரக் கோலமெழில் கொண்டவளாய்
…கோதையிவள் வந்ததுவோர் வரலாற்றுப் படமென்றால்
விஞ்சுகிற நடிப்பில்லை விந்தையெனக் கொள்ளைகொளும்
..வித்தையிலை இருந்தாலும் பலவிதமாய்ப் பாத்திரங்கள்
கெஞ்சினரா கேட்டுத்தான் பெற்றனரா யாரறிவர்
….கேள்விகளும் எழும்புகின்ற நேரத்திலே எழிலான
வஞ்சியிவர் மணம்புரிந்தார் சிலகாலம் சென்றபின்னர்
..வாகாக முனிவரையே பணீந்தகதை ஊரறியும்..!
எஸ்.வாசுதேவன் சார்.. இது ரொம்ப அநியாயம்.. ராகவேந்தர் அழகாக தேவிகையை ந.தியைப் பற்றி ஞாயிறு பாட்டுடன் எழுத நீரென்றால் ரஞ்சிதத்தைப் பற்றிக் கேட்டுவெனைத் தூண்டுகிறீர்..
நாடோடித் தென்றலில் கொஞ்சம் நிறம்மட்டாய் வாத்துக்கூட்டத்துடன் கருப்பு மயிலாய் கொய்ங்க் கொய்ங்க் கென்று வந்து கார்த்திக்குடன் கொஞ்சிப் பாடியவர் அன்றோ இந்த ரஞ்சிதை..
அதன் பின்னர் நடித்த படங்கள் கணக்கில..ஊர்,உலகம், தமிழ் சினிமாவுலகம் மறந்திருந்த போழ்தில் – பாவம் பொண்ணு கல்யாணமாயிப் போய்டுச்சு – என இருந்த போதில்- ரீ எண்ட்ரியாக நித்தி ஸ்வாமிகளின் செய்திகளில் தலைப்புச் செய்தியானார்.. இப்போது என்ன செய்கிறார் எனத் தெரியவில்லை..இல்லியோ..?
அர்ஜூன் படங்களில் நிறைய நடித்திருப்பார் என நினைவு.. ஜெய்ஹிந்த் திடீரென வந்த விறுவிறுப்பான படம்.. அது ரிலீஸான போது துபாயில் இருந்த நினைவு. ஆனால் பாடல் எனது உறவுகாரப் பையனின் காரில் தான் முதன்முதல் கேட்டேன். என்னமோ வித்தியாசமாக கொஞ்சம் குறும்பு கலந்து கொஞ்சம் வல்கராகவும் இருந்த பாடல்..முத்தமிட ஏற்ற இடம்.. அவன் இது தமிழ் பாப் ஸாங்க் அங்கிள் என்றதையும் நம்பினேன்..படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது அது திரைப்பாடல் என. அதே படத்தில் கட்டெறும்பு கடிக்க விடும் பாடலும் உண்டு!
இந்தப் பதிவுக்காக நான் முழுக்கக் கேட்காத நீதானா நாள் தோறும் நான் பாடக் காரணம்..பாட்டுவாத்தியார் ரமேஷ் அர்விந்த் ரன்ச்சு..!
https://youtu.be/6YfNXGqwvuY
நெய்வேலியார் ஏற்கெனவே நாடோடித்தென்றல் பாட் போட்டுவிட்டா.ர்…
*
வாஸ்ஸூ.. உயிர்மேல் ஆசை பாடல்கள் போடவில்லை எனச் சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி..வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.. நீங்கள் போடாத பாடல்கள் ஏதாவது உண்டு என்று பார்த்தால் – நானே ஏதாவது புதிய “பழைய படம்” எடுத்தால் தான் உண்டு என நினைத்திருந்தேன்! ஆக்சுவலா பாத்தீங்கன்னா நான் தேடியது பழைய ‘உயிர்’ படப் பாடல்களை..ம்ம் இதுவரை சிக்கவில்லை..இப்போது சிக்கிவிடும்!
ராகவேந்தர் சார்.. வழக்கம் போல நி.பா அருமை.. நன்றி..
**
எஸ்.வாசுதேவன் சார்.. ரஞ்சிதை என்னோட ஃபேவரிட் ஆக்ட்ரஸா.. யார் சொன்னா ஒரு சின்ன ரப்பர் எடுத்து அழிக்கவும் :)
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.