PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14

vasudevan31355
31st October 2015, 09:45 PM
no ஸாரி. அதெல்லாம் சொல்லப்படாது. சரியா?

vasudevan31355
31st October 2015, 09:54 PM
'வேறென்ன நினைவு' அருமையான பாடல். ஆனால் படத்தில் பார்த்தால் ஆசையே போய் விடும். கவர்ச்சி வில்லன் கண்ணனுக்கு டி .எம்.எஸ் குரல் தந்திருப்பார்.:banghead: உடன் மேஜிக். இன்னொரு ஜோடி முத்து, புஷ்பலதா

ஆனால் பாடல்...அருமையோ அருமை!

RAGHAVENDRA
31st October 2015, 09:57 PM
ஒரு பக்கம் முகூர்த்த நாள், சுபதினம், நல்ல நாள், இப்படி சென்டிமென்டா டிஸ்கஷன், இன்னொரு பக்கம் 'காமிரா மேதை' கர்ணன் படம் டிஸ்கஷன்...

மதுர கானம் டிஜிட்டல் மயமாயிடுச்சோ... மல்டி டிராக்கிலேயில்லே ஓடிண்டிருக்கு...

RAGHAVENDRA
31st October 2015, 09:58 PM
'வேறென்ன நினைவு' அருமையான பாடல். ஆனால் படத்தில் பார்த்தால் ஆசையே போய் விடும். கவர்ச்சி வில்லன் கண்ணனுக்கு டி .எம்.எஸ் குரல் தந்திருப்பார்.:banghead: உடன் மேஜிக். இன்னொரு ஜோடி முத்து, புஷ்பலதா

ஆனால் பாடல்...அருமையோ அருமை!

சூப்பர் வாசு சார்..

RAGHAVENDRA
31st October 2015, 09:59 PM
நானும் சுபதினம் படத்தை தியேட்டர்லே ரிலீஸானப்போ பாத்ததோட சரி. டிவிடி வந்துடுச்சு ஆனால் இன்னும் போட்டுப் பாக்கலை..

vasudevan31355
31st October 2015, 10:03 PM
ராகவேந்திரன் சார், மதுண்ணா !

ரவி, ராஜஸ்ரீ, அழுவாச்சி நடித்த 'அமுதா' திரைப்படத்தில் நடிகர் ராம்குமாரும் (நடிகை இந்துவின் தந்தை) சுசீலா என்ற அறிமுக நடிகையும் (ரொம்ப அழகான நடிகை ஆனால் ஒரே படத்தோடு காலி என்று நினைக்கிறேன்) இணைந்து ஒரு பாடல் பாடுவார்கள். ராஜ் வீடியோ விஷன் தரவேற்றியுள்ள அமுதா படத்தில் இந்தப் பாடலின் வீடியோ காட்சி முழுதுமே ஆடியோ இல்லை. ஒருமுறை மதுண்ணா கூட குறிப்பிட்டிருந்தார். (இன்றைய ஸ்பெஷல் சம்பந்தமாய்) அது என்ன பாடல்?

கீழே வீடியோ உள்ளது. ஆடியோதான் காணோம். பாடல் 5.00க்குத் தொடங்கும்


https://youtu.be/1pNLJtpuxHA

vasudevan31355
31st October 2015, 10:05 PM
ஒரு பக்கம் முகூர்த்த நாள், சுபதினம், நல்ல நாள், இப்படி சென்டிமென்டா டிஸ்கஷன், இன்னொரு பக்கம் 'காமிரா மேதை' கர்ணன் படம் டிஸ்கஷன்...

மதுர கானம் டிஜிட்டல் மயமாயிடுச்சோ... மல்டி டிராக்கிலேயில்லே ஓடிண்டிருக்கு...

'கருடா சௌக்கியமா' தலைவர் தீனதயாளு போல நம்ம திரிக்கு இரண்டு பக்கங்கள் உண்டு ராகவேந்திரன் சார்.:)

chinnakkannan
31st October 2015, 10:05 PM
//சுபதினத்துக்கு இப்படி ட்ரெய்லரா விட்டுக்கிட்டிருந்தா எப்படி..என்னவாக்கும் கதை//

இன்னும் 'முகூர்த்த நாள்' கதையே முடியலையே சின்னா! அப்புறம்தான் சுபதினம். நீங்க நம்ப மாட்டீங்க. நான் இன்னும் பார்க்கல. ஆனா பாட்டுல்லாம் தண்ணி பட்ட பாடு.

ஓஹ்.. அதுசரி.. அதான் படம் வந்துடுச்சுங்கறாரே ராகவேந்தர்..ம்ம் கதையும் வரும் :)

ஆமாம் மல்ட்டி ட்ராக்ல போறதுங்கறது இப்ப அப்படி ஆகிடுச்சு..டேபிள்ள ஆறேழு புக்ஸ் பாதிப்பாதியா நிக்குது..திவ்யப்ப்ரபந்தம் பாடல் அர்த்தம்னு படிக்க ஆரம்பிச்சு இருநூத்தம்பது பாட்டோட நிக்குது..பார்க்காதபட டிவிடிக்கள் கண்சிமிட்டுது..(ஆஃபீஸ்லயும் இப்படித்தான் ஒரே சமயத்துல ஆறேழு வேலை அல்லது கொறஞ்சது மூணு ப்ராப்ளம்..சீரியஸா வேலை ஏதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டிருகக்றச்சே எப்படித்தான் தெரியுமோ லேண்ட்லைனும் செல்லும் சேர்ந்தே ஒலிக்கும்!) பட் பர்ஸனல் அண்ட் ஆஃபீஸ் ஒன்பை ஒன்னா க்ளியர் பண்ணிடுவேன்

chinnakkannan
31st October 2015, 10:14 PM
//கீழே வீடியோ உள்ளது. ஆடியோதான் காணோம். பாடல் 5.00க்குத் தொடங்கும் // பாட் எசகு பிசகா இருக்கும் போல இருக்கே.. போட மாட்டேனே :)

இந்தாங்க வாசு..ஏதோ என்னால் ஆனது.. வி.கு பாட்டு

https://youtu.be/5qNuQpcHhaE

vasudevan31355
31st October 2015, 10:25 PM
'காலம் என்னும் ஓர் ஆழக்கடலினில் காதல் படகு விளையாடுதம்மா'

டி .ஆர்.ராமலிங்கத்தின் குரலில் அதிகம் ஹிட்டடிக்காத அமுதவல்லி படப்பாடல். படகு சவாரி. உடன் எமன் ராஜம். இனி படகுப் பாடல்கள் வரிசை கட்டும் என்று நம்புகிறேன். சின்னா! உங்கள் பணியை நானே சிரமேற்கொண்டு விட்டேன். பொறுத்தருள்க.:)


https://youtu.be/mpccwKkhCpU

vasudevan31355
31st October 2015, 10:26 PM
.//ம்ம் கதையும் வரும்//

ஆரு சொல்லப் போராஹ?

vasudevan31355
31st October 2015, 10:28 PM
//இந்தாங்க வாசு..ஏதோ என்னால் ஆனது.. வி.கு பாட்டு//

இதையும் பல்லைக் கடிச்சி 'இன்றைய ஸ்பெஷல்' ல போட்டேன். ஆனா பாடலும், ரவியும் சூப்பர்.

chinnakkannan
31st October 2015, 10:47 PM
புத்தம்புது மேனி..ஆஹா பாலமுரளி கிருஷ்ணா ஆஹா என்னா பாட். நல்ல மெலடி..ஆமா இதுக்குக் கடற்கரைக்காட்சி வைக்க்ணும்னு யார் சொல்லியிருப்பாங்க..

எனிவே..ராகதேவன் ஓடி வரப் போறார் :)

https://youtu.be/fWelPVcwD9o

chinnakkannan
31st October 2015, 10:56 PM
// எமன் ராஜம்// எம்.என் ராஜம்..:) ஆனாக்க நீங்க சொன்னதும் ஓ.கே தான்.. பாவை விளக்குல ரொம்ப அழகா இருப்பாங்கன்னு எங்க தாத்தா சொல்வாங்க..ஆனால் இந்த மாதிரி நிறம் கூடிய நடிகைகள் எல்லாம் ப்ளாக் அண்ட் ஒய்ட்லயே இளமையில் நடித்தது சோகம் தான் இல்லியோ..டி.ஆர்.மகாலிங்கம் ஓய்.. (ஏனோ ராமலிங்கம் சுந்தரலிங்கம் பாட் நினைவுக்கு வருது)

படகு படகு ஆசைப்படகு (படகு வராத பாட்..வார்த்தையில் மட்டும் வரும் இல்லியோ)

நிலவும் மலரும் பாடுது

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம்போலே ( மோட்டார் படகு)

ஊரெங்கும் தேடினேன் ஒருவனைக் கண்டேன்

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே

ஓடம் அது உன்னோடும் என்னோடும் ஓடும்

இயற்கையெனும் இளைய கன்னி

முத் கேஆர்வி யோட கண்ணம்மா பாட்.

சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்

கடலோரம் கடலோரம் அலைகள் மோதி விளையாடும்

வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்

ஆசையே அலைபோலே..ஓடம்போலே ஆடிடுவோமே

மேகங்கருக்கையிலே அடி தேகம் குளிருதடி (ஓ பரிசலோ)


சரி சரி இப்போதைக்கு ஐலசா ஐலசா.. பாட் பார்க்கலாமா..

ஊதாப்பு கண் சிமிட்டுகிறது - புஷ்பா தங்கதுரையின் கதை..படித்ததில்லை..பாட்டு மட்டும் கேட்டிருக்கிறேன்.. நல்லா இருக்கும் என நினைத்து ஒரு நாள் பார்த்ததில்..என்னை அவ்வளவாகக் கவரவில்லை.. சரியாக எடுக்கவில்லை என்பது என் எண்ணம்..ச்சின்னப் பொண்ணாக சுஜாதா..சரிவரவில்லை எனத் தான் சொல்ல வேண்டும்..காதலுக்கும் அவ்வளவு ஆழமான காரணம் இருக்காது (டிஸ்க்ளெய்மரும் போட்டுடலாம்.. நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்)

ஆனால் பாட் இனிமை.. சூப்பர் டூப்பர் ஹிட்..

ஆண்டவனில்லா உலகமெது
ஆசைகளில்லா இதயமெது..

https://youtu.be/fm6E-iMNor4

chinnakkannan
31st October 2015, 10:58 PM
//இந்தாங்க வாசு..ஏதோ என்னால் ஆனது.. வி.கு பாட்டு//

இதையும் பல்லைக் கடிச்சி 'இன்றைய ஸ்பெஷல்' ல போட்டேன். ஆனா பாடலும், ரவியும் சூப்பர்.

இஸ்பெஷல் மறுபடி ஒரு தடவை படிச்சு நினைவு வச்சுக்கணும்.. நீர் போடாத பாட்டா போடணும்..ம்ம் என் ஆசை நிறைவேறுமா..

chinnakkannan
31st October 2015, 11:38 PM
முக நூலில் மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் எழுதியது..

*

ஒரு கிராமத்தில் ஒரு ஐதீகம்.கடவுள் சங்கை எடுத்து ஊதினால் தான் மழை வருமென. அவ்வண்ணமே வருடாவருட்ம் மழை பெய்யவே அனைவ்ரும் சந்தோஷமாக இருக்கவே பொறுக்குமா விதிக்கு...ஆக்ரோஷமாக உவமைக்கு வேறு வழியில்லாமல் அசோகனைப் போல கெக்கெக்கெக்கே எனச் சிரிக்க.....

அந்த வருடம் மக்கள் தன்னை மதிக்கவில்லை என ஏதோ காரணமாய் நினைத்து கடவுள் கோவில் பூசாரியின் கனவில், ‘ அன்பான மடையரே, இனி நான் சங்கு எடுத்து ஊதப் போவதில்லை..உங்கள் அனைவருக்கும் மழையே இல்லாமல் சென்னைத் தமிழில் அதுவே கிடைக்கும் ‘ எனச் சொல்லி விட்டார்..

பூசாரி நேரில் நமீதாவின் நடனத்தைப்பார்த்தாற்போல பயந்து கனவினில் இருந்து விழித்து அலறி அடித்துக்கொண்டு சென்று ஊர் நாட்டாமையிடம் போய்ச் சொல்ல...அவருடன் கூடியிருந்தவர்கள் மற்ற்வர்களிடம் அதைப்பற்றிச் சொல்லவிஷயம் எல்லாருக்கும் விளங்க...

ஏன் மாப்ள.. நம்ம கதி அம்புட்டு தானா.

ஆமாம்ல கடவுளே சொல்லிப்புட்டாராம்ல.

எனப் புலம்பி இருள் வர தூங்கி மறு நாள்காலை சூரியன் வந்த பின்பும் கூட யாரும் எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டே இருக்க...

(ஏங்க.. வயலுக்குப் போகத் தாவலை...

சும்மா கிட புள்ள.. சாமி சங்கு ஊதாதாம்..மழை தண்ணில்லாம் வரப்போறதில்ல..என்னத்த.உழுது என்னத்த் பயிரிட் முடியும்....முடிஞ்சா கொஞ்ச்ம் கேப்ப்ங்கூழ் கொடு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு..குடிச்சுட்டு உறங்கேன்..)...

ஒரே ஒரு ஆள் மட்டும் சீரியஸாக ஏர், மாடு எல்லாம் எடுத்துக்கொண்டு வ்யக்காட்டுப் பக்கம் செல்ல.. பார்த்த் கடவுளுக்கு கொஞ்சம் கன்ஃப்யூஷன்..

இன்னாடா இது என்கு வந்த சோதனை என யோசித்து அந்த ஆளிடம் போய்,” அஹோ வாரும் பிள்ளாய்....டு யூ நோ மி.. பீப்புள் யூஸ்டு கால் மி அஸ் கடவுள் நான் தான் ச்ங்கை முழங்க மாட்டேன் எனச் சொல்லிட்டேன்ல. வீட்ல் ஒக்காந்து சும்மா மானாட மயிலாட பாக்கலாமில்லை. இங்க என்ன பண்ற..”

அந்த ஆள் கொஞ்சம் மாற்றான் சூர்யாவைப் போல முறுவலித்து, “ அட ப் போங்க சாமி... நீரு சொல்லிட்டீக.. மழை வராதுன்னு...வாஸ்தவம் தான்.. யாரு இல்லைன்னா.இருந்தாலும் நமக்கெல்லாம் வேலை பாக்காம ஒரு நா இருந்தாலும் வேலை மறந்து போகும்லா.ஒமக்கே பாரும்..ஒரு மூச்சூடா ச்ங்கு முழங்காம இருந்தீருன்னா..அது மறந்து போகும் தெரியுமோ.”

அடப்பாவி...இவன் சொல்றதுல்ல அர்த்தம் இருக்கு போல இருக்கே.. நிறைய தமிழ் தன்னம்பிக்கைத் தொடர் படிப்பானோ. இருந்தாலும் நாமும் கொஞ்ச்ம் ச்ங்கை ஊதிப் பார்ப்போம் என கடவுள் சங்க நாதம் செய்ய வானில் வாகை சூடவா கதானாயகி நிறத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி இடித்து அந்தக்கால செளக்கார் ஜானகி மாதிரி குமுறிக் குமுறி மழை பொழிந்தது....

ம்ம்ம்..திடும்னு விட்ட ஆறு நாள் லீவுக்கப்புறம் ஆஃபீஸ் போனா..இப்படித் தான் எனக்கும் கொஞ்சம் வேலை மறந்த மாதிரி இருந்தது :) (கதை உபயம்..தென்கச்சி சுவாமினாதன்)

*

சங்குக்கு ஒரு பாட் போடலாம்..


https://youtu.be/HK11FvzcA9E

rajeshkrv
1st November 2015, 07:02 AM
ஏ.வி.எம்.ராஜன் - புஷ்பலதா .. மறக்க முடியுமா

இதோ இன்று எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்

http://igmedia.blob.core.windows.net/igmedia/tamil/gallery/events/sgmarriage020509/Recption020509_28.jpg

rajeshkrv
1st November 2015, 07:27 AM
இசையரசி ஜிக்கி

https://www.youtube.com/watch?v=7GLXAbqw4ts

vasudevan31355
1st November 2015, 07:35 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521642/378880bb-5dc9-4496-8bd3-c1f7b608eb7d

vasudevan31355
1st November 2015, 07:39 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521642/a6c21f9b-8d4b-463a-a169-d0f3eff38b58

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521642/33c72cc7-5712-4e3f-8bd9-9168a1a0e941

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521642/735eb80c-0fb6-45f2-99ad-35b58f41fa23

vasudevan31355
1st November 2015, 07:45 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/4a264f05-a2a1-49b5-a2cb-15cc40da5cd2

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/8cc2045f-0ec9-41b6-bf8a-828bfd5748c1

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/d491db75-4c43-48d3-af65-24e089aee506

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/99921521-b8af-42df-9b3a-27627f2cdcc6

vasudevan31355
1st November 2015, 07:48 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/ae686ea6-c85c-4dc2-8d76-22d9657648d2

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/5ce14db3-2c6f-4227-b366-62819b595ecc

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/db9bc077-26bc-41ac-91ca-9591fdf3e6f5

rajraj
1st November 2015, 08:07 AM
From Maheswari(1955)

aRam kaaththa deviye......

http://www.youtube.com/watch?v=xfZu3c8J_G4

A.M.Raja and Jikki. The lyricist is listed as Pattukkottai KalyaNasundaram (?)

rajeshkrv
1st November 2015, 08:21 AM
ஜி
வணக்கம்

அங்கிள் வணக்கம்

ஜி,

இதோ உமக்காக ஒரு போட்டோ

http://3.bp.blogspot.com/-iPUdXhqCEK8/VZZt-8tqteI/AAAAAAAABRI/cjCehGjLUQc/s1600/218451_4547324171863_957191491_o.jpg

vasudevan31355
1st November 2015, 08:31 AM
வணக்கம் வணக்கம் டபுள் வணக்கம்ஜி.

அருமையோ அருமை. இசையரசியின் கண்களை மூடி தான் யாரென்று கண்டுபிடிக்கட்டும் என்று சஸ்பென்ஸ் வைக்கும் நடிப்பரசி. கள்ளமில்லாத குழந்தைகள் போல அந்தக்கால நினைவு நட்பு சிரிப்புகள். ஆனால் நான் என் கண்களை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

vasudevan31355
1st November 2015, 08:32 AM
ji!

enna thoongalaiyaa?

rajeshkrv
1st November 2015, 08:36 AM
thookama .. only 10:06 PM here :)

vasudevan31355
1st November 2015, 08:46 AM
தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே!

rajeshkrv
1st November 2015, 08:49 AM
ஜி
உமக்காக ஒரு கன்னட பாடல்
மிகவும் பிரபலமான பாடல்

ராஜ்குமார் லீலாவதி இணை மிகப்பிரபலமான இணை

https://www.youtube.com/watch?v=03TCetPBHBI

vasudevan31355
1st November 2015, 08:51 AM
ஜி

உங்களுக்காகவே ரிஷ்ய சிருங்கர் படத்திலிருந்து ஒரு அற்புதமான பாடல்.

'காதல் இன்பமே காணவே வாராய்'


https://youtu.be/2j3apggGqtQ

vasudevan31355
1st November 2015, 08:52 AM
ஆஹா! ரெண்டு பெரும் ஒரே நேரத்தில் பரிமாற்றம். இதுதான் ஆத்மார்த்தம் என்பது.:p

rajeshkrv
1st November 2015, 08:57 AM
ஆஹா! ரெண்டு பெரும் ஒரே நேரத்தில் பரிமாற்றம். இதுதான் ஆத்மார்த்தம் என்பது.:p

பின்ன இல்லையா ...

vasudevan31355
1st November 2015, 09:53 AM
'மங்கம்மா சபதம்'

https://upload.wikimedia.org/wikipedia/commons/3/31/Mangamma_sabatham_1943_film.jpg

https://i.ytimg.com/vi/smLTyd2cuLo/sddefault.jpg

வசுந்தராதேவியின் இந்தப் பாடலை என்னால் மறக்கவே இயலாது. அப்போதே அட்டகாசம். கிராமத்து மங்கம்மாவாக சபதம் இட்டு ரஞ்சனிடம் நாகரீக மங்கையாக ஆடிப் பாடும் இன்றைய ஆட்டங்களுக்கு சவால் விடக்கூடிய பாடல். ஆடலில் மேற்கத்திய இசையின் ஆதிக்கம் கொடி கட்டுகிறது. இன்றுவரை ஆச்சர்யப்பட வைக்கும் புதுமைதான்.

'லாலலாலலல்லா..தனன தானனன்னா தனனனானா' அம்மோவ்! எத்தனை 'தனனனானா' சுகமாக.

ஆரம்பமே அசத்திவிடும். வசுந்தராதேவியின் உடையலங்காரம் அப்போது மிகவும் புதுமையான ஒன்று.

'அய்யய்யய சொல்ல வெட்கமாகுதே
அய்யா மேலே ஆசையாகுதே'

என்று நின்றபடி இடையொடித்து அவர் ஆடும்போது எத்தனை சின்னாக்கள் சின்னாபின்னம் ஆனார்களோ தெரியவில்லை.:p

அதுவும் 'அய்யய்யா... ஹஹ்ஹஹஹா' என்று மாறி மாறி வயிற்றுப் பகுதியில் அவர் கை வைத்து ஆடுகையில் அற்புதம்.

தன் வாழ்வை சூறையாடிய ரஞ்சனை சவாலுடன் எதிர் கொள்வது, அவரை அடிமையாக்கியே தீருவது என்ற வெறி பாடலில் தொனிக்கும்.

'கைவளைக்குள் மெய் வளைத்து காட்டுவேன் (சின்னா பாணியில் சொன்னால் சர்க்கஸ்காரியோ)
கண்ணுக்குள்ளே உன்னைப் பூட்டுவேன்' ('பூட்டுவேன்' உச்சரிக்கப்படும்போது உறுதியும், தீர்க்கமும், நிச்சயமும் மனத்திடமும் புலப்படும்)

'பையப் பைய ஆடி உன்னை வாட்டுவேன்'

பழி உணர்ச்சி பக்காவாய் வெளிப்படும்.

ரஞ்சன் விவரம் புரியாமல் ஆனந்தமாய் சிரித்தபடி நடனத்தையும், பாடலையும் ரசித்து ஜொள் விடுவார்.

'என் நடையைப் பார்... நடை அழகைப் பார்
என் இடையைப் பார்... இடை அழகைப் பார்
என் விழியைப் பார்... விழி வெட்டுப் பார்
முகத்தை உற்றுப் பார்
ஆடுது பார்... தேடுது பார்... கூடுது பார்...
நாடுது பார்
அலுக்கு மினுக்கி குலுக்கி நலுக்கி'.....

என்று வசன நடையில் வதன அழகு பேசி, அப்படியே

'அய்யய்யய சொல்ல வெட்கமாகுதே'

அழகாக எடுத்து, அதே வரியை நாணம் கலந்த வெட்டுச் சிரிப்புடன் திரும்ப உதிர்க்கும்போது,

முனிவன் கூட முறிந்து போவான். இந்தக் காலத் தாத்தாக்களை அப்போது தவிக்க வைத்துவிட்ட தங்கப் பாடல்.:-P இந்தப் பாடலுக்காகவே படம் பிய்த்துக் கொண்டு ஓடியதாம்.

'Ranjan and Vasundhara became stars with this film and the heroine’s exotic dances are still recalled by old –timers' என்று சும்மாவா 'ஹிந்து'வில் எழுதினர் ராண்டார்கை.


https://youtu.be/guNcA4P_7zI

vasudevan31355
1st November 2015, 10:03 AM
https://i.ytimg.com/vi/Z9KWXkKPUgk/sddefault.jpg

rajeshkrv
1st November 2015, 10:07 AM
Iva thattina ava varuva .. famous dialouge by Ranjan in Mangamma sapatham

vasudevan31355
1st November 2015, 10:08 AM
1951ல் வெளிவந்த 'மல்லீஸ்வரி' தெலுங்குப் படத்தின் அபூர்வ நிழற்படங்கள்.

http://3.bp.blogspot.com/-bRVc4S6_vR4/TpOEAwTvuJI/AAAAAAAAHyA/vb8qvDZ5fxY/s1600/malliswari.jpg

http://2.bp.blogspot.com/_BbJAArGDIEA/R96Bp69iOrI/AAAAAAAADss/Xy3muZIGGB8/s1600/Malliswari.jpg

http://4.bp.blogspot.com/_BbJAArGDIEA/R96B2a9iOtI/AAAAAAAADs4/_c5aoXfFVr4/s1600/Malliswari1-copy.jpg

raagadevan
1st November 2015, 10:10 AM
திரைப்படம்: புல்லானாலும் பொஞ்சாதி (January 1993)
இடை: சந்திரபோஸ்
பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் & சுனந்தா

http://www.youtube.com/watch?v=BGZJrChFosU

தேவலோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப் போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும் தாகமோ

தேவலோக ராஜனோ
தேவி தேடும் தாசனோ
பாரிராஜன் தேரில் ஏறி
பார்க்க வந்த ஆசையோ
இதழ் ஓரம் இதம் தேட
இது தானே சுக நேரம்
உன் விரல்கள் நீந்தும் தேகமோ

தேவலோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ

கோவில் சிலையின் அழகோ
நீ கொஞ்சும் தஞ்சை கலையோ
ஓ மலையில் சிந்தும் மழையோ
என் வலையில் விழுந்த சிலையோ
மணமேடை மனம் போல
மடி மீது என் மஹராணி
உன்னை மார்கழி பனியாய்
தாகம் தீர்ப்பேன்

தேவலோக ராஜனோ
தேவி தேடும் தாசனோ
பாரிஜாத பூவைப்போல்
பாவை உந்தன் பார்வையோ

மதுவின் குடத்தை மடியில் நீ
மறைத்து வைத்த மலரோ
ஓ நிலவு கொடுத்த ஒளியில் எனை
களவு கொண்ட உறவோ
இந்த நேசன் உந்தன் தாசன்
கொஞ்சிப் பேசும் காளிதாசன்
உனை காற்றில் அணைத்து
கவிதைகள் வடிப்பேன்

தேவலோக ராஜனோ
தேவி தேடும் தாசனோ
பாரிராஜன் தேரில் ஏறி
பார்க்க வந்த ஆசையோ
இதழ் ஓரம் இதம் தேட
இது தானே சுக நேரம்
உன் விரல்கள் நீந்தும் தேகமோ

தேவலோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிராஜன் தேரில் ஏறி
பார்க்க வந்த ஆசையோ...

rajeshkrv
1st November 2015, 10:12 AM
RD

here is my recent article on Sunandha

https://www.facebook.com/photo.php?fbid=1154609527902158&set=a.195151357181318.53815.100000593659194&type=3&theater

raagadevan
1st November 2015, 10:17 AM
Thank you Rajesh: This is the message I got when I clicked on your link...

Sorry, this content isn't available right now...

I will try again (and again :))

rajeshkrv
1st November 2015, 10:46 AM
Thank you Rajesh: This is the message I got when I clicked on your link...

Sorry, this content isn't available right now...

I will try again (and again :))

ok here is the article

Soulful Sunandha
Chitralaya Sriram anna, not sure if this will be in your request or not but wanted to bring to light another koel from Raja sir’s nest.
She is more sweeter and more soft and more melodious than the previous 2 koels for sure . yes none other than Sunandha.
Sunandha was introduced by Raja sir in the Bharathiraja film “Puthumai pen” .Who can forget the duet with P.Jayachandran . “Kadhal Mayakkam azhagiya kangal thudikkum(lyrics:vairamuthu)” definitely both Jayachandran and Sunandha brought mayakkam to many music lovers with their voices .. Sunandha could not have asked for more.. A grand entry with a grand song .. quickly she was part of Raja’s gang.. yes “Poove sempoove un vasam varum”(lyrics:vaali) , many would have heard this song in Dasettan’s voice but the female version is equally good rendered by Sunandha. The Ever Famous “SEnbagame senbagame “ duet with mano and a short solo version even now makes us bright . Vella manam ulla machan velaiyadi onju vandhan from Chinna veedu with Malaysia vasudevan. She had a great number in Sirai paravai .. yes “aandham pongida pongida” both the duet and solo version (one of my fav). She sang along side SPB & Chitra in Enna samayalo(lent her voice for Aachi manorama ) yes “adiye mohana aduppadi enakkenna sondhama” yet another brilliant duet with Jayachandran in “en purushan thaan enakku mattumthan” – “poo mudithu pottu veitha vatta nila punnagayil paatezhuthum vannapura” .
She along with SP shailaja sang a song with Raja sir himself “siruvani thanni kudichu “. Then came the ever famous lullaby one of Sunandha’s best “Mannava mannava mannadhi mannal allava” Vaali ayya’s lyrics, Raja sir’s tune and Sunandha’s voice for Sukanya made this song a classic. She also sang poonkatre inge vandhu vaazhthu with mano & uma ramanan from the same film. In the same year the sad version of Solli solli vandhadhinge from Senthamizh paatu with SPB was another great number. She sang for veteran actress sujatha.
She sang another soulful pathos with Raja sir for Thaalatu – enakkena oruvarum illamal ponalum unakkena naan iruppen. Her singing continued in films like Dharma seelan, Sethupathi IPS.
Pon vilangu had 3 songs for her .. 2 duets with Jayachandran. Oru kola kili vandhathe inbama(happy version), oru kola kili sonnadhe poimaya (sad version), ooty mala rotinile . all hit numbers.
She also sang with SPB in the oru kola kili Jodi thanna theduthu theduthu mane (in the solo version
Where she just sings few words like marvelous, wonderful etc ) . yet another duet with Jayachandran in the movie sevvandhi “semmene semmene un kitta sonnene” beautiful song .
Nattukkota settiyaru with mano from Seeman
She sang Indhariyo sundhariyo in Kadhalan for Rahman. He called her to be part of edhukku pondatti in Kizhakku seemayile.
S.A.Rajkumar also has used Sunandha in his compositions.
Manasum manasum serndhachu poomala thaan from Perumpulli was regular feature in radios at that time.
She sang Nathcathira jannalil vanam etti paakkudhu with mano for Surya vamsam.
She also sang in 3 hindi films for NAdeem shravan.
Deva also gave her few chances(Sollava sollava oru kadhal kathai from mahaprabu)but after 1994-1995 she disappeared. According to an article in hindu she shifted from film music to Classical.. Anyone who knows her please request her to sing again.
Unbearable voices torturing the music industry these days
One of very few female singers who really impressed me and sunandha is one amongst them.
@Chitralaya sriram anna – another koel from raja’s nest though not your request but mine . (Rajesh Venkatasubramanian
https://scontent-atl3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12191038_1154609527902158_3528295465160328466_n.jp g?oh=a0823a67d19648913a4a50aeb4e881f5&oe=56BA22AD

raagadevan
1st November 2015, 10:53 AM
Thanks (again) Rajesh! Informative article about Sunanda; I am saving it in my collection! :)

Russellxor
1st November 2015, 08:02 PM
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்
அத்தனையும் தழைத்து வரும்
அவள் ஆடி வரப் பார்த்திருந்தேன்
ஆடி வந்து சேர்ந்தம்மா
ஐப்பசிக்கு காத்திருந்தேன்
எப்பசியும் தீரவில்லை

"மாசமும் ஐப்பசி
மழையும் பெய்யுது
அதற்கு தோதா ஒரு பாட்டு"

chinnakkannan
1st November 2015, 09:34 PM
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்// லைக் போட்டுட்டேனகண்டி என்ன பாட்னு நினைவுக்கு வர மறுக்குது..செந்தில்வேல்..

ஆவணி மலரே ஐப்பசி மழையே பாட் தான் நினைவுக்கு வருது

chinnakkannan
1st November 2015, 09:40 PM
சாமீஸ்..எனக்கொரு சந்தேகம்.. இந்த என் காதல் கண்மணி பாட் போட்டாச்சா. தெரிலை. முன்ன பார்த்தேனான்னும் நினைவில்லை..பட்

இப்பப் பாக்கறச்சே அவர் உற்சாகமா தாவி த் தாவி ப் பாட சோர்ந்து சோர்ந்து ஷீலா மயங்கி மயங்கி விழப்பார்க்க அதைத் தடுத்துரவி பாடிக்கிட்டே இருக்கறது இடிக்குதே.. மஞ்ச் குங்க்கும் பார்த்ததில்லியே..என்னவாக்கும் காரணம்..

chinnakkannan
1st November 2015, 09:48 PM
காலம் பாருங்க செந்தில்வேல் மழையை நினைவுபடுத்திட்டார்..மயில் இப்பத் தான் வ்ருது..

மயிலே மயிலே உன் தோகை எங்கே...சூப்பர் டூப்பர் ஹிட்டோன்னோ பாட்டு அந்தக்காலத்தில..படம் பார்த்ததில்லை

https://youtu.be/-kEVLQQNffE?list=RDyJwgsxMWn1Q

ஜென்சியோட கீச் குரல் நன்கு இந்தப் பாட்டில் தெரியும்..

rajraj
1st November 2015, 10:08 PM
From Malaiyitta Mangai

mazhai kooda oru naaLil then aagalaam
maNal kooda sila naaLil pon aagalaam........

http://www.youtube.com/watch?v=87pHmrrnrcs

M.S.Rajeswari is the singer !

vasudevan31355
1st November 2015, 10:16 PM
மீள் பதிவு


சாமீஸ்..எனக்கொரு சந்தேகம்.. இந்த என் காதல் கண்மணி பாட் போட்டாச்சா. தெரிலை. முன்ன பார்த்தேனான்னும் நினைவில்லை..பட்

இப்பப் பாக்கறச்சே அவர் உற்சாகமா தாவி த் தாவி ப் பாட சோர்ந்து சோர்ந்து ஷீலா மயங்கி மயங்கி விழப்பார்க்க அதைத் தடுத்துரவி பாடிக்கிட்டே இருக்கறது இடிக்குதே.. மஞ்ச் குங்க்கும் பார்த்ததில்லியே..என்னவாக்கும் காரணம்..

இன்றைய ஸ்பெஷல் (63)

'இன்றைய ஸ்பெஷலி' ல்

http://i.ytimg.com/vi/iGDLklzLT_Y/hqdefault.jpg

அன்று திரும்பிய இடங்களிலெல்லாம் எதிரொலித்த சூப்பர் ஹிட் பாடல். அனைத்து வானொலிகளிலும் தினம் தினம் ஒலித்த உற்சாகப் பாடல். பாகுபாடின்றி அனைவரும் ரசித்த ஒரு பாடல். பாலாவின் மணிமகுடத்தில் வைரமாய் பதிந்த பாடல். நம் நெஞ்சங்களில் நிறைந்த பாடல்.)

படம்: மஞ்சள் குங்குமம் (1973)
பாடல்: 'வாலிப கவிஞர்' வாலி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர் : பாலா )

கொள்ளை அழகு கொஞ்சும் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ரொம்ப ரொம்ப சுந்தரனாகத் தெரிவார். உடம்பும் படு ஸ்லிம். சொந்த மனைவி ஷீலாவுடனான பாடல். ரவியைப் பொருத்தவரையில் இது டூயட். ஷீலாவைப் பொருத்தவரை இது சோகம்.

நர்ஸ் ஷீலாவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரவி. பிடி கொடுக்காத ஷீலா. ஆனால் தனக்கு ஏற்பட்ட நோயினால் மரண வாசலை எதிர் நோக்கும் ஷீலா. ஆனால் ரவியிடம் காதலை சூழ்நிலை காரணமாக சொல்லிவிட, ரவி மகிழ்ச்சித் தாண்டவம் ஆடி 'இதுவரை உன் காதலை என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாயே' என்ற அர்த்தத்தில் பாட, ஆனால் அது ஷீலாவைத் தாக்கியுள்ள நோயை அவர் ரவியிடம் சொல்லாமல் மறைக்கும் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும் அருமையான வரிகள். ' என்னடா இது இப்படியா கதை'?! என்று படம் பார்த்தவர்கள் என்னை ஒரு பிடிபிடித்துவிடப் போகிறீர்கள்?

நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்தப் பாடலுக்கான காட்சியையும், பாடல் வரிகளையும் வைத்து என் மனதில் இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தது. அது ஓரளவிற்கு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். (கார்த்திக் சார் இருக்கும் போது எனக்கென்ன பயம்?))

நோயின் கொடுமை தாளாமல் தள்ளாடித் தள்ளாடி மயங்கி விழப் பார்க்கும் ஷீலா. ரவி தன்னிடம் நெருங்கி வரும்போது அதை மறைக்குமிடம் பரிதாபம். அது தெரியாமல் காதல் வெற்றி பெற்றதே என்று ரவியின் அளவு கடந்த உற்சாக வெள்ளம். 'பிளாக் அண்ட் பிளாக்' பேண்ட் ஷர்ட்டில் ரவி கண் கவருவார். அந்த நடையும், ஓட்டமும், துள்ளலும், சுறுசுறுப்பும் நம்மை 'ரவி ரவிதான்' என்று சந்தோஷக் கூப்பாடு போட வைக்கின்றன. முகம் வசீகரம். (ஷீலா ஏன் மயங்க மாட்டார்?)

https://i.ytimg.com/vi/0D2MkQnXEZw/mqdefault.jpg

நடிகர் திலகத்தை பாலோ பண்ணி அதே போல் விக், உடை வகையறாக்கள் என்றாலும் அது இவர் ஒருவருக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்த வில்லையே! அழகான நடிகர் திலக ஜெராக்ஸ். (திருப்பதி லட்டு கிடைக்காத பட்சத்தில் தி.நகர் லட்டு கிடைத்ததைப் போல)

பூங்காக்களிலும், மெரினாவிலும் படமாக்கப்பட்ட பாடல். உச்சி வெயிலில் படமாக்கியிருப்பார்கள். ரவி நிழலுருவம் மிகச் சிறியதாக விழும்.

http://s1.dmcdn.net/CjdYw.jpg

பொலிவிழந்த ஷீலா பாடலுக்கு ஒரு மைனஸ் பாயிண்ட். கதை அப்படி இருக்கையில் ஒன்றும் செய்வதற்கில்லை.

வாலி கதை புரிந்து அதற்கேற்றவாறு பிளந்துகட்டியிருப்பார்.)

சங்கர் கணேஷின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் இப்பாடலும் இடம் பெறலாம். அற்புதமான இசைக்கருவிகளை ஆர்ப்பாட்டமாக உபயோகித்து காலத்தால் அழியாத காவியப் பாடலாக இரட்டையர்கள் இதைத் தந்து விட்டார்கள். இசைக்கருவிகளின் உன்னத ஆர்ப்பாட்டம். முக்கியமாக பாடலினூடே நிறைந்து வரும் அந்த புல்லாங்குழல் ஓசை. பாடல் முடிவடைந்தவுடன் நிறைவு தரும் அந்த இனிய ஓசை.

(எப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் தந்த திறமைசாலிகள்! கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பெருமை தேவருக்கே உண்டு. சும்மா ஆட்டுக்கும், மாட்டுக்கும் 'டொன் டொன் டொய்ங்' பின்னணி போட வைத்து உருப்பட விடாமல் செய்த புண்ணியம். அப்புறம் இளையராஜாவின் போட்டியை சமாளிக்க 'கன்னிப் பருவத்திலே' கொடுத்து அது ஹிட்டாகித் தொலைக்க, டிராக் மாறியதால் நமக்குத்தான் நஷ்டம் நிறைய.)

சரி! எல்லோரையும் சொல்லியாயிற்று. இப்பாடலின் ஹீரோ யார்? ரவியா? ரவி இரண்டாவதுதான்.)

'பாடும் நிலா' பாலுதான் இப்பாடலின் ஹீரோ. மனிதர் மனதை அப்படியே கொள்ளை கொண்டு விட்டார். வேகம், தெளிவு, வைப்ரேஷன்ஸ், கம்பீரம், உற்சாகம், சந்தோஷம், ஹைபிட்ச், குழைவு, நெளிவு, சுளிவு என்று அமர்க்களமோ அமர்க்களம். அதுவும் 'ராதா' என்று முடிக்கும் போது தரும் அதிர்வுகள் அருமை. 'சொல்ல நா... ணம் வந்ததோ' அந்த 'நா' வுக்குப் பிறகு சின்ன இடைவெளிவிட்டு 'ணம்' தொடருவது பிரமாதம். இது ரவியின் சொந்தப்படம் என்று சொல்வார்கள்.)

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

(இடையிசை அமர்க்களம்)

என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
வாடாத மலரே தேயாத நிலவே
நாள்தோறும் என்னோடு உறவாட வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

(ஷீலாவுக்கு வரப் போகும் ஆபத்தை முன்னமேயே அருமையாக உணர்த்தும் இசை)

கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
காலத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
மாறாத நிலை கொண்ட மனம் உண்டு வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

உன் நெஞ்சம் பொன் நெஞ்சம் அறியாததோ
உனதெல்லாம் எனதென்று தெரியாததோ
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
வருங்காலம் நமதென்ற முடிவோடு வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா


https://youtu.be/iGDLklzLT_Y

chinnakkannan
1st November 2015, 10:33 PM
என் நட்பான கண்மணீஈஈ..வாஸ்ஸு.. தாங்க்ஸ்..எஸ்.. நீங்கள் போட்டிருந்தது நினைவு வந்துவிட்டது..பட் என ஆரம்பித்து வாக்கியம் தொடங்கு முன்..எஸ்வி.சேகரின் வண்ணக்கோலங்களில் ஒரு காட்சி..

எஸ்வி.சேகர்.: எங்க மேனேஜர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்..எங்க ஆஃபீஸ் அக்கெளண்டண்ட்டுக்கு ஏற்பட்ட நிலைமையை க் கேட்டீன்னா உனக்குத் தெரியும்

ஃப்ளாஷ் பேக்..

என்ன ராமசாமி இப்படி ஆகிட்டீங்க.இப்படி கசங்கி இருக்கீங்களே

என்ன செய்றதுவாசு ( எதேச்சையாக சீரியலில் சேகர் பெயரும் வாசு தான்!) நான் இந்த நிலைமைக்கு வரக்காரணம் நம்ம மானே..ஜர் தான்...ர்ர்ர்

சரி சரி என்ன ஆச்சு

ரெண்டு நாள் குளிக்காம வந்தேன்னு என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாம்ப்பா அந்த மேனேஜர்..

சேகர் மூக்கைப் பொத்தியவாறே... அதற்கப்புறமாவது குளிச்சுருக்கலாம்ல..

*

எனில் மீள் பதிவுல்லாம் சரி.. ம. கு பார்த்தீர்களா என்ன அதன் பிறகு..?

Russellxor
1st November 2015, 10:37 PM
சின்னக்கண்ணன் சார்

ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்// லைக் போட்டுட்டேனகண்டி என்ன பாட்னு நினைவுக்கு வர மறுக்குது..செந்தில்வேல்..

ஆவணி மலரே ஐப்பசி மழையே பாட் தான் நினைவுக்கு வருது
Uthaman│Kanavukaley Kanavukaley│Sivaji Ganesan, P…: http://youtu.be/bEJv4FP3m7U

chinnakkannan
1st November 2015, 10:46 PM
நம்ம நட்பு என்னா நட்பு வாசு..வர்ணிக்க வார்த்தையே இல்லை..:) நான் கேட்டா தேடி எடுத்துச் சமர்த்தாக் கொடுத்துட்டீஙக்..

உமக்காக இரு தோழிகள் பாடும் பாடல் (ஆம்பள பாடற பாட் கிடைக்கலையான்னு கேக்கப் படாத் :) )

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ(ர்)

காற்றில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி..

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்..

தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா

https://youtu.be/YlnBv7EDaXw?list=PL57mILzTJQIdsaVx-mURQ2VG3fmJyT5uZ


வட்டத்துக்குள் சதுரம் மகரிஷி நாவலாய் மாலைமதியில் வந்த நினைவு..கதை இரு தோழிகள் கதை என்பது மட்டும் நினைவில் கொஞ்சூண்டு மிகத் தெளிவின்றீருக்கிறது..

லத்து சுமி..ம்ம் பார்க்கணும் படம்..

chinnakkannan
1st November 2015, 10:47 PM
ஊப்ஸ்... ஓஹ்..கனவுகளே கனவுகளே யா. தாங்க்ஸ் செந்தில்வேல்..இருந்தாலும் தேவன் வந்தாண்டி எனக்குப் பிடிக்கும்..

madhu
2nd November 2015, 04:19 AM
அட அட அட...

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்குறப்பவே இத்தனை தித்திக்கும் பாடல்களா ?

( வாசுஜி... சின்னாவை சின்னாபின்னமாக்கும் வசு(ந்தரா) இருக்க வாசுவுக்கு என்ன கவலை ? இன்னும் இது மாதிரி ரெண்டு பாட் போட்டா சிக்கா.. சிக்க்க்க்கிடுவார்.. என் பங்குக்கு இரும்புத்திரை பாட்டைப் போட்டு எழுப்பி விடலாம்னு நினைச்சேன்..அப்புறம் விட்டுட்டேன் )

மஞ்சள் குங்குமம் அப்போ பிரபலமாக இருந்த லவ் ஸ்டோரி ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவியதுதான். ஏழைப் பெண்ணை காதலிக்கும் பணக்கார வாலிபன். பெற்றோர் எதிர்ப்பு. வீட்டை விட்டு வெளியேறி திருமணம். தீராத வியாதியை மறைத்து செங்கல் சுமந்து அவனைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியதும் பொட்டென்று போய்விடும் கதா நாயகி... ( படம் கொஞ்சம் அழுவாச்சிதான் ) ... நீங்கள் சொல்வது போல காட்சியைப் பார்க்கும்போது கதை புரியலாம். ஆனால் பார்க்காமல் கேட்ட காலத்தில் துள்ளிக் குதிக்க வைத்தது ...

இதே படத்தில் தேங்காய், மனோரமாவுக்காக எஸ்.பி.பி, மனோரமா பாடும் ரா ரா நா பாவா என்ற சிக்காவுக்கு பிரியமான பாட்டு ஒண்ணும் இருக்கே !!

vasudevan31355
2nd November 2015, 05:08 AM
//இதே படத்தில் தேங்காய், மனோரமாவுக்காக எஸ்.பி.பி, மனோரமா பாடும் ரா ரா நா பாவா என்ற சிக்காவுக்கு பிரியமான பாட்டு ஒண்ணும் இருக்கே !! //

ரொம்ப ராங்கான பாதையிலே போஸ்தாவா

அட மூஸ்க்கோய்யா
நோர் மூஸ்க்கோய்யா

ஆச்சி சூப்பர். கூலிங் க்ளாஸ் ஆச்சி. புடவை கட்டிய தேங்காய்.


http://www.dailymotion.com/video/x15k1vk_ra-ra-na-pa-va-manjal-kungumam-1973_shortfilms

vasudevan31355
2nd November 2015, 05:13 AM
//அவனைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியதும் பொட்டென்று போய்விடும் கதா நாயகி//

இதைப் பார்த்தா படம் பார்த்த மாதிரி:)


http://www.dailymotion.com/video/x15k1yx_kannukul-manjal-kungumam-1973_shortfilms

vasudevan31355
2nd November 2015, 05:17 AM
//என் பங்குக்கு இரும்புத்திரை பாட்டைப் போட்டு எழுப்பி விடலாம்னு நினைச்சேன்..அப்புறம் விட்டுட்டேன் )//

பழைய பக்கெட் போட்டுட்டீங்கன்னு சின்னா வருத்தப்படுவார்.:) ஏன்னா வசுந்துரா அதுல தன் மகளுக்கு அம்மாவா வயசானவங்களா நடிச்சிருப்பாங்க இல்லியா?

vasudevan31355
2nd November 2015, 05:18 AM
மதுண்ணா!

மார்னிங் ஷிப்ட் கிளம்பறேன். ஈவ்னிங் சந்திப்போம்.

rajeshkrv
2nd November 2015, 07:44 AM
இசையரசியின் இனிய கீதங்கள்

கொலுசு என்ற திரைப்படம். மலேசியா வாசுதேவன் அவர்களின் இசை
ராஜேஷ் மற்றும் சரிதா நடித்த படம்

கோபம் என்ன ராசாவுக்கு

https://www.youtube.com/watch?v=HVzOiLPnH4s

JamesFague
2nd November 2015, 01:10 PM
Courtesy: Tamil Hindu

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்?




தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவத ரின் நினைவுநாளில், அவருக்கு அஞ்சலி செலுத்த நாடக நடிகர் கள், திரையுலகினர் ஆர்வம் காட்ட வில்லை என்று அவரது உறவினர் கள் வேதனை தெரிவித்தனர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை தக்க வைத்திருப்பது “ஹரிதாஸ்”. 1944-ல் வெளியான இப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தியாகராஜ பாகவதர்.

1910 மார்ச் 1-ம் தேதி மயிலாடு துறையில் கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்த இவர், சிறுவயதி லேயே குடும்பத்துடன் திருச்சி சங்கிலியாண்டபுரம் கல்லுக்காரத் தெருவில் குடிபெயர்ந்தார். 1926-ல் பொன்மலையில் நடைபெற்ற ‘பவளக்கொடி’ நாடகத்தில் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

பொன்னிற மேனி, கந்தர்வக் குரலால் நாடக மேடைகளை வசப்படுத்திய அவருக்கு திரை வாய்ப்பு தேடிவந்தது. 1934-ல் பவளக்கொடி நாடகத்தை திரைப் படமாக தயாரித்தபோது, அதில் இவர் கதாநாயகனாக நடித்தார். தமிழகத்தின் இசை மாமேதையாக கருதப்படும் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை இவருக்கு பாகவதர் என்னும் பட்டத்தை வழங்கினார்.

தொடர்ந்து 1936 முதல் 1943 வரை இவர் நடித்த நவீன சாரங்க தாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி உள்ளிட்ட படங்கள் வசூலை அள்ளிக் குவித்தன. தமிழ்த் திரையுல கின் முதல் சூப்பர் ஸ்டாரான இவருக்கு, 1944-ல் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பெரும் பின்ன டவை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 30 மாதங்கள் சிறையிலிருந்த தியாக ராஜ பாகவதர், பின்னர் விடுதலை யானார். அதற்குப் பின் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற வில்லை.

இதையடுத்து திருச்சி திரும்பிய அவர் வறுமையில் வாடினார். 1959 நவம்பர் 1-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை பொது மருத்துவமனையில் தியாகராஜ பாகவதர் உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அங்கு அவரது 56-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. திரைப்பட, நாடக நடிகர்கள் சார்பில் நேற்று மதியம் வரை ஒருவர்கூட அஞ்சலி செலுத்த வரவில்லை. உறவினர்கள் சிலரும், அவர் சார்ந்த சமூகத்தினர் சிலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் இசைத் துறை தலைவர் எஸ்.டி.மூர்த்தி கூறும்போது, “திருச்சிக்கு பெருமை சேர்த்த தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் அமைத்து, இசை, நாடக விழாக்கள் நடத்த வேண்டும்” என்றார்.

விஸ்வகர்மா மகாஜன சபை துணைத் தலைவர் சுப்பண்ணா கூறும்போது, “பணமிருந்தபோது அள்ளிக் கொடுத்த தியாகராஜ பாகவதர், கடைசிக் காலத்தில் வறுமையில் சிக்கி, நோயால் இறந்தார். எம்.ஆர்.ராதா முயற்சி யால்தான் அவரது உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்த இடத்தை நாங்கள் பராமரித்து வருகிறோம். நடிகர்கள் சார்பில் சென்னையிலாவது அஞ்சலி செலுத்தியிருக்கலாம். தமிழகமே போற்றிப் புகழ்ந்த கலைஞனுக்கு உரிய மரியாதையை அரசும், கலை உலகத்தினரும் அளிக்க வேண்டும்” என்றார்.

கருணாஸ் அஞ்சலி

தேர்தலில் வாக்களித்த நாடக நடிகர்களுக்கு நன்றி தெரி விப்பதற்காக நடிகர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் மணப் பாறைக்கு நேற்று வந்திருந்தனர். அவர்களிடம், தியாகராஜ பாகதவர் நினைவு நாள் குறித்து திருச்சி நடிகர் ஜெரால்டு மில்டன் நினைவுபடுத்தியுள்ளார். இதை யடுத்து இருவரும் மாலையில் சங்கிலியாண்டபுரம் வந்து, அஞ்சலி செலுத்தினர்.

vasudevan31355
2nd November 2015, 03:20 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

48

'உத்தரவின்றி உள்ளே வா'

http://padamhosting.me/out.php/i84193_uiuv1.png

http://shakthi.fm/album-covers/ta/80e00366/cover_m.jpg

'உத்தரவின்றி உள்ளே வா'

பாடல்களுக்கென்றே நம்மை சில படங்கள் வசியப்படுத்துவதுண்டு. பாலா தொடரில் வரும் சூப்பர் பாடல்கள் இடம் பெற்ற இந்தப் படமும் கூட சேர்ந்து நம்மை கலகலப்பில் கலக்க வைக்கும். 1971 ல் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி வாகை சூடிய படம்.

அப்படிப்பட்ட தேன் சுவை நிறைந்த பாடல்களோடு நம் விலா நோக சிரிக்க வைத்து இன்றும் நம்மை ரசிக்க வைக்கும் படம்தான் 'உத்தரவின்றி உள்ளே வா'.

'சித்ராலயா' தயாரிப்பு. வண்ணத்தில் நம் எண்ணம் போல. என்.சி.சக்கரவர்த்தி என்ற ஸ்ரீதரின் உதவி இயக்குனர்தான். இசைச் சஞ்சீவி 'மெல்லிசை மன்னர்'தான் படத்தின் பிரதான தூண். அடுத்த தூண்களாக பாலாவும், சுசீலா அம்மாவும். மற்றதெல்லாம் பிறகுதான்.

ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், தேங்காய், மாலி, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, ரமாபிரபா, சச்சு என்று ஏகத்துக்கும் நகைச்சுவை. ரவி, காஞ்சனாவின் இளமை துள்ளும் காதல் பாடல்கள், 'நகைச்சுவையின் நாயகன்' நாகேஷின் அமர்க்களம், தேங்காயின் டாக்டர் ரோல், யார் பெற்ற குழந்தையோ தன்னை 'அப்பா' என்று அழைக்க அதனுடன் அவஸ்தைப் படும் மாலி, (இறுதியில் குழந்தையை உரியவர்களிடம் சேர்த்துவிட்டு அதைப் பிரிய மனமில்லாமல் மாலி திரும்பிப் பார்த்தபடியே வருவது நெகிழ்ச்சி) பூர்வஜென்ம 'நாதா' நாகேஷ் பைத்தியம் ரமாபிரபா, கலக்கலான 'வெண்ணிற ஆடை' மூர்த்தி என்று படம் பக்கா.

இப்படத்தின் கதையெல்லாம் தேவையே இல்லை. எல்லோரும் அறிந்த இரு வரிக் கதைதான். நான்கு பிரம்மச்சாரி இளைஞர்கள். அவர்களில் நாயகன் ரவி பணக்காரர். இவர்கள் வாழ்வில் குறுக்கிடும் அழகான இளம் பெண். அவளைக் காதலிக்கும் நால்வரில் நாயகனுக்கே நாயகி. இறுதியின் நாயகி மேல் களங்கப் பழி, துடைத்தெறிய ஹீரோ, வில்லன், அப்புறம் சின்ன பைட். முடிவு எல்லோருக்கும் சுபம் என்று முழுக்க ஜாலிதான்.

என்.சி.சக்கரவர்த்தி இயக்கமே தவிர அப்படியே ஸ்ரீதர் படமேதான். இன்னொரு 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டிவரை உறவு' போல.

பாடல்கள் ஒவ்வொன்றும் அனைவர் மனதிலும் பசுமரத்தாணி போல் பதிந்தவை. ஒன்றுக்கொன்று சளைக்காமல் பெரிய ஹிட் அடித்தவை. இப்படத்தின் பாடல்களில் மயங்காத மனமே இல்லை என்று சொல்லலாம் நிச்சயமாக.

காஞ்சனா இளைஞர்கள் கனவில் வந்து இன்பத் துன்புறுத்த, அதில் மூர்த்தி, நாகேஷ், ரவி மூவரும் தனித்தனியே காஞ்சனாவுடன் காதல் டூயட் பாடி சல்லாப சொப்பனம் காணுகின்றனர். இதில் மாலியை டூயட் பாட வைக்காமல் மாபெரும் ஏமாற்றத்தை அவருக்குத் தந்து நம்மைக் காப்பாற்றி விட்டனர். அப்படியே இருந்தாலும் 'கவர்ச்சி' வில்லன் கண்ணன் 'சுபதின' டூயட்டை விட ஓரளவிற்கு நன்றாகவே இருந்திருக்கும்.

இந்தத் தொடரில் மேலே சொன்ன பாடலை இப்போது தொடரின் பாடலாகப் பார்க்கலாம். தொடர்ந்து தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் பாலா சம்பந்தப்பட்ட பாடல்களை தொடர்ச்சியாகப் பார்க்கலாம். என்ன? சரிதானே!

அதற்கு முன் பாலா சம்பந்தப்படாத இப்படத்தின் பாடல்களை கொஞ்சம் ஊறுகாயாகத் தொட்டு ரு(ர)சிக்கலாம்.

http://padamhosting.me/out.php/i70626_vlcsnap2011040612h22m26s63.png

'பூர்வ ஜென்மப் பைத்தியம்' பிடித்து நாதா நாதா என்று நாகேஷ் பின்னால் அலைந்து அவரைப் படாத இம்சைப்படுத்தும் ரமாபிரபாவை குணப்படுத்த டாக்டராக 'தேங்காய்' வயது முதிர்ந்த நரை டாக்டராக வர அப்போது நடக்கும் ஒரு சின்ன சீனை சொல்லியே ஆகவேண்டும்.

https://i.ytimg.com/vi/FKQY2eZQsGs/hqdefault.jpg

தேங்காய் நர்ஸ் சச்சுவுடன் உள்ளே நுழையும் போது ரமாபிரபா சோபாவில் அமர்ந்து பொம்மைக்குக் கீ கொடுப்பார். பக்கத்தில் அவர் தாயார் சுந்தரிபாய் 7 கல் பொறுக்கி விளையாடிக் கொண்டிருப்பார். கீழே மாலி, நாகேஷ், மூர்த்தி மூவரும் குழந்தை பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் விளையாட வேண்டிய மாலியின் குழந்தையோ (ஆக்சுவலாக அது ஒரு அனாதைகுழந்தை... மாலிக்கு தகப்பன் ஸ்தானம் கட்டி விடுவார்கள்) அங்கிருந்து தள்ளி போய் எதையும் கண்டு கொள்ளாமல் புத்திசாலித்தனமாக புத்தகம் புரட்டிக் கொண்டு இருக்கும். எவ்வளவு சமயோசிதமான சீன்!

உள்ளே நுழையும் தேங்காய் 'அத்தனையும் லூஸுங்களாய் இருக்கே... இதில் எதுக்கு வைத்தியம் பார்க்கிறது?' என்று குழம்புவார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போய் விடும். இது போல ஏகப்பட்ட காட்சிகள். இன்னொன்று காஞ்சனாவின் ரவிக்கை உடை சோபாவில் இருக்க, ரவியின் அப்பா வீரராகவன் அங்கு வந்து அதன் மீது தெரியாமல் சாய்ந்து உட்கார்ந்து விட, அவருக்குத் தெரியாமல் அதை எடுக்க, இழுக்க நாகேஷ் செய்யும் கூத்து இருக்கிறதே... அடடா!

நட்டநடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு தேங்காய் மற்றவர்களுக்கு பேய் கதை சொல்ல, டைமிங்காக ரமாபிரபா பூர்வ ஜென்ம நினைவில் கரெக்ட்டாக 'தேனாற்றங்கரையினிலே... தேய்பிறையின் இரவினிலே' பாடலை மோகினி போல் பாட, அத்தனை பேரும் குறிப்பாக தேங்காய் தொடை நடுங்குவது நமது உடல் நடுங்க சிரிக்க வைக்கும். (இந்த மாதிரி காட்சிகளில் தேங்காயை அடித்துக் கொள்ள வேறு யார்?)

ராட்சஸியின் பேய்ப் பாடல்களில் முதன்மையானது. பின்னணி இசை பலவிதங்களில் பயமுறுத்தி படத்தின் பாத்திரங்களைக் குலை நடுங்க வைக்கும். நம்மைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும்.

'கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்டாயே' என்று ஈஸ்வரி பாடியவுடன் போரின் வெற்றி ஒலியை மெல்லிசை மன்னர் பீறிட்டுத் தரும் அழகே அழகு.

சரி! சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது பாடலுக்கு வந்து விடுவோம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355060/VTS_16_1.VOB_000069651.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355060/VTS_16_1.VOB_000069651.jpg.html)

முதலில் மூர்த்தி 'ஃபெமினா' புக் கையில் வைத்துக் கொண்டு கனவு காணுவார்.:)

மஞ்சள் மேலாடை ஜிப்பாவும், கீழே பூப்போட்ட சிகப்பு கலர் கைலியுமாக ஜப்பான் பொம்மை போல கிராப் அலங்காரத்துடன் கலியுக கட்டழகி காஞ்சனா அட்டகாசமான பார்க்கில் மூர்த்தியை,

'உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா'

என்று காதலாகி அழைக்க, 'ஜேம்ஸ்பாண்ட்' சான் கானரி போல முழுக்கை பனியன் அணிந்து, தத்தி தத்தி காஞ்சனாவின் கைபிடித்து நடந்து 'வெண்ணிற ஆடை' மூர்த்தி கலக்கி விடுவார். காஞ்சனா வேறு கனவு ஜோடி. முகத்தில் சந்தோஷப் பூரிப்புதான் மணிமாலா கணவருக்கு. பெல்ட்டிலோ வட்ட வட்டங்களாக மெல்லிய மெட்டலில் டிசைன்கள்.

சும்மா நடனத்தில் பிய்த்து உதறுவார் மூர்த்தி. பல்லவி முடிந்து முதல் சரணத்திற்கு முன் வரும் டிரம்பெட் ஒலிக்கு அவர் கைகொட்டியபடி இடையை படா ஷேக் செய்து ஆடுவது பலே காமெடி ஜோர்.

'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி'

என்று ஈஸ்வரி நீட்டி முழக்கி அனுமதி வழங்க, உடன் வரும் டிரம்பெட்டின் அதே 'காதலி' இசை ஒலிக்கு ஏற்ப உடலை பின்னுக்கு இழுத்து மூர்த்தி கைவிரல்களால் டிரம்பெட் வாசிப்பது போல பாவனை செய்து காட்டுவது எப்படிப்பட்ட உம்மணாம் மூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும்.

'அந்தப்புரத்தில் நண்பன் இருக்க
இந்தப் புறத்தில் வா... வா வா... நீ வா'

என்றபடி காஞ்சனா மூர்த்தியை இறுக்க அணைத்து (இந்த இடத்தில் பொறமை மூச்சை விடாமல் நம்மால் அடக்க முடியவில்லை...ம்..நல்லா இருங்க மூர்த்தி...புர்ர்....) அங்கிருக்கும் பூச்செடியின் பின்னால் இழுத்து மறைத்து வைத்து என்னவோ செய்ய, அந்த செடி ஆடும் ஆட்டம்....இந்த இடத்தில் 'மெல்லிசை மன்னர்' குழுசின் கிடார் வாசிப்பு 'டங் டங் டங் டங் டங் டங் டங் டங்'அவ்வளவு பொருத்தமாக அந்த இடத்தில் இனிமையாக மேட்ச் ஆகும். அந்தி மாலை நேரத்தில் இந்தப் பாடலை எடுத்திருப்பார்களோ! செடி, கொடி , மரங்களின் நிழல்களும் அழகாய்த் தெரிகின்றன.

முதல் சரணம் மூர்த்திக்கு முடிந்தது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355060/VTS_16_1.VOB_000136096.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355060/VTS_16_1.VOB_000136096.jpg.html)

அடுத்து நாகேஷ் டர்ன். அந்த மீசையில்லாத, அம்மை வடுக்கள் நிறைந்த, கண்கள் இமைக்காத, கனவு காணும் முகம் பார்க்கும் போதே 'முணுக்' கென்று சிரிப்பு வந்து விடும்.

கனவிலோ பாகவதர். கழுத்தில் நீள வெண் பட்டு அங்கவஸ்த்திரத்துடன் பாகவதர் கிராப் வைத்து கந்தர்வக் காரிகையுடன்

'பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண'

என்று 'பாடகர் திலக'த்தின் 'கணீர்'க் குரலில் ஆலாபனை டூயட். காஞ்சனா தேவலோக ரம்பை போல சந்தனக் கலர் சேலையணிந்து 'சுபாஷணி... மதாங்கினி' களுக்கு அற்புத அபிநயங்கள் பிடிப்பார்.

நாகேஷ் இரண்டாவது முறை 'சுபாஷினி... மதாங்கினி' பாடும்போது கம்பீரமாக பார்க்கில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கவஸ்திரத்தின் ஒரு பகுதியின் நுனியை பிடித்து இடது கை அக்குளில் தள்ளி செருகி, 'டபக்'கென்று காஞ்சனாவிடம் கால் மடக்கி குனிந்து காமம் கண்ணை மறைக்க ஒரே ஒரு செகண்டில் போடுவாரே ஒரு அவசரக் கும்பிடு! அப்பாடி! சிரிப்பில் கண்களில் தண்ணீரே வந்துவிடும். மோகத்தின் வேகத்தில் காஞ்சனாவின் கால்களில் கூட விழுவது... அது கூட யாருக்கும் தெரியாமல் கௌரவமாக விழுவது செம காமெடி. அதே போல சரணம் முடிந்து,

'உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா'

என்று கைகளில் தாளம் போட்டு (அதுவும் திமிராக, தெனாவட்டாக ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு இன்னொரு கையை உயர்த்தி விரல்களால் தாளம் போட்டபடி நடந்து செல்வார்.) நல்ல மதிய வெயிலிலும், பிறகு மாலையிலும் இந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

மூன்றாவது சரணம் முத்தான ரவிக்கு.

சிம்பிள் சுடிதாரில் காஞ்சனா ரொம்ப ஜோராக இருப்பார். கடைந்தெடுத்தது போல உடலின் அங்க அமைப்புகள். அதில் நச்சென்று பொருந்தும் சுடி. வெளிர் நீல பேன்ட், ஷர்ட்டில் ரவி. (என்ன... சிகையலங்காரம்தான் கொஞ்சம் சிரமம் செய்யும். வேறு மாதிரி 'விக்' வைத்திருக்கலாம். (மேலே தூக்கி வைத்து படிய வாரி விட்ட கிராப்... ஆதலால் இளமை கொஞ்சம் மிஸ் ஆவது போல தெரியும்) மன்மதன் ரதிதேவி இணைந்து நிற்கும் சிலை பின்னால் இருக்க அதன் முன்னால் ரவி, காஞ்சனா ஆடுவார்கள்.

ரவிக்கு நம் 'தொடரின் நாயகர்' குரல். மூன்றாவது சரணத்தில் இரண்டு வரிகளுக்கு மட்டுமே வாய்ப்பு.

'கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ'

இருந்தால் என்ன! அந்த இரண்டு வரிகளும், பின்னால் வரும் பல்லவியின் நான்கு வரிகளும் பாலாவின் குரலில் பகட்டாய் மின்னுகின்றன. அதுவும் சரண இரண்டு வரிகளை கேட்க கேட்க பரமசுகம். திரும்ப ஒரு முறை பாடுவார். சும்மா குரலில் வழக்கத்தைவிட குழைவும், இளமையும் அதிகமாகக் கொஞ்சும். அந்த 'னோ' க்களின் எண்ட் எக்ஸலென்ட். 'தன்னை' எனும் போது அவரின் தனித்தன்மை அப்பட்டமாகத் தெரியும்.

அது போல'கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ' என்று பாலா முதல் தடவி பாடி முடித்து இரண்டாவது தரம் பாடும் போது அந்த இடைப்பட்ட இரத்தில் மிக அழகான ம்யூசிக் பிட் ஒன்றை 'மன்னர்' மனம் மயக்கத் தருவார். அதே போல ஈஸ்வரி 'மஞ்சள் முகத்தை'ப் பாடும் போதும் இடையில் அற்புதமான இசை. பல்லவி வரிகளான 'உத்தரவின்றி உள்ளே வா' வரிகளின் பின்னணியில் 'டங்டடங்டங்... டங்டடங்டங்' பேஸ் கிடார் ஒலி இந்தப் பாடலை எங்கோ தூக்கிச் சென்று விடும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355060/VTS_16_1.VOB_000211175.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355060/VTS_16_1.VOB_000211175.jpg.html)

அந்த வரிகளின் போது பார்க்கின் அந்த க்ரில் கம்பிகளின் சிறிய பாலத்தில் காஞ்சனா ஓடி வந்து நின்று சேனலைப் பிடித்தபடி ஒரு காலை அகற்றி வைத்து இடுப்பை அழகாக அசைத்து மூவ்ஸ் தருவார். அள்ளிக் கொண்டு போகும். அதற்கு முன் ஓடி வரும் ரவியின் வழக்கமான ஒரு ரவுண்ட் டர்னும் உண்டு.

பின்னால் ஈஸ்வரி 'மஞ்சள் முகத்தை'த் தொடர்வார்.

பாடகர் திலகம், குழைவுத் திலகம், ராட்சஸி, எம்.எஸ்.வி கூட்டணி. இனிமைக்குக் கேட்கணுமா? காமெடி நடிகர் தானே என்றெல்லாம் எண்ணாமல் அப்போதய 'சூப்பர் ஸ்டாரினி' காஞ்சனா 'வெண்ணிற ஆடை' மூர்த்தியுடன் டூயட் செய்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. (இப்போதும் சில முன்னணி நடிகைகள் சந்தானம், வடிவேலு, கவுண்டமணியுடன் காமடிக்காக சில டூயட்கள் சேர்ந்து பண்ணியிருக்கிறார்கள்).

காஞ்சனாவுடன் ஆடும் நாகேஷ், ரவி இருவருமே பாடுவார்கள்.

மூர்த்திக்குப் பாடல் கிடையாது. அப்போது பெண் குரல் ஈஸ்வரி மட்டுமே.

நாகேஷ் பாடும் போது காஞ்சனவிற்குப் பாடல் கிடையாது. டி.எம்.எஸ்.மட்டுமே.

ரவி பாடும் போது காஞ்சனாவும் பாடுவார் இணைந்து. ஏனென்றால் படத்தில் உண்மையான ஹீரோ ரவி அல்லவா! அதனால் நாயகன் நாயகி இருவருக்கும் சமமாக பாடல் வரிகள். பாலா, ஈஸ்வரி இருவர் குரலும்.

ஈவ்னிங்கில் படம் பிடித்திருப்பது தெரியும்.

எப்படி பார்த்துப் பார்த்து யோசித்து யோசித்துப் பண்ணியிருக்கிறார்கள் பாருங்கள்!

அந்தக் காலத்தில் டூயட் எல்லாம் பார்க்குகளில்தான் பெரும்பாலும். அந்தப் பார்க்குகளை இப்போது பாடல் காட்சிகளில் பார்க்கும் போது என்னவோ ஒரு இனம் புரியா சந்தோஷம் கிட்டுகிறது. இந்தப் பாடலில் கூட பாருங்கள். காட்சிகளுக்குப் பின்னால் எவ்வளவு அழகான பச்சைப் பசேல் தென்னை மரங்கள்... அடர்த்தியாய் வளர்ந்து உயர்ந்த வாழை மரங்கள்...ச வுக்கு கன்றுகள்... குரோட்டன்ஸ்கள். இப்போதிருக்கும் தென்னை மரங்களை, வாழை மரங்களைப் பார்த்தால் அந்த சந்தோஷம் கிடைப்பதில்லையே.

ஒரே பாடலில் மூன்று ஆண்கள்...ஒரு பெண். பாடக பாடகியோ மூவர். பாடலோ மூன்றரை நிமிடங்களே. அதில்தான் எத்தனை மனநிறைவு! மகிழ்ச்சி! ஈகோ இல்லாமல் நடிக நடிகையர் பங்களிப்பு. முழுத் திருப்தி அளிக்கும் பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355060/VTS_16_1.VOB_000248522.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355060/VTS_16_1.VOB_000248522.jpg.html)

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி
அந்தப்புரத்தில் நண்பன் இருக்க
இந்தப் புறத்தில் வா... வா வா... நீ வா

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

ஆ..............ஆ

பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண
அ ஆஆ.....
பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண
புடவையின் அழகென்ன! கூந்தலின் அளவென்ன!
புடவையின் அழகென்ன! கூந்தலின் அளவென்ன!
ஏழையைக் கண் பாரம்மா!
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே! பாராதே!
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே!
சுபாஷினி!... மதாங்கினி!
சுபாஷினி!... மதாங்கினி!
தோழர்கள் பார்வையில் கேலிகள் ஆகுமுன்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ
கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ

மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ
மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ
வண்ணம் மலர்ந்து எண்ணம் கலந்து மின்னல் மயக்கம் கொள்ளாதோ
மின்னல் மயக்கம் கொள்ளாதோ

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

chinnakkannan
2nd November 2015, 05:42 PM
sema paattu vaasu.. enakku..woodlands la utkaarnthukkittu rama prabha.."enakku oru thEnum thiNai maavum koNarka.." enach cholvathu eppOthum ninaivu vanthu smile thaanagavE varum.. mm

veet pOi type paNRen..

madhu
2nd November 2015, 08:30 PM
hayyo.. உ.இ.உ.வா என்க்ம் ரொம்ப் பிட்ச் பட்ம்....

இதே பாட்டுதானே சின்ன பார்ட் மட்டும் கடேசியில் சுபம் போடும்போதும் வரும்... ? ( அப்போ ரமாபிரபாவும் பாடுவதாக நினைவு... சரிதானா வாசுஜி ? )

தேனாறு தவிர பாலு ஆறு இல்லாமல்..இன்னொரு தர்மாவதி பாட்டு இருக்கே...

eehaiupehazij
2nd November 2015, 09:15 PM
சுகமான சுமைதாங்கி சாங்க்ஸ் !!


கதாநாயகியை முதுகில் உப்புமூட்டை சுமந்து நடப்பதற்கும் கைகளில் அள்ளியெடுத்து தட்டாமாலை சுற்றுவதற்கும் அவள் நினைவுகளை மனதில் தாங்கி சுமப்பதற்கும் முதுகெலும்பும் இடுப்பு டிஸ்கும் கைகளும் கால்களும் நமது சுமைதாங்கி நாயகர்கள்க்கு எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் ..!!

https://www.youtube.com/watch?v=wswafBU5kNc

https://www.youtube.com/watch?v=nN1qWkvy-DQ

rajeshkrv
2nd November 2015, 10:10 PM
ஜி

அடி தூள்

உத்தரவின்றி உள்ளே வா படமும் சரி பாடல்களும் சரி அமர்க்களம்

ரவி காஞ்சனா ஜோடி கன கச்சிதம்
மெல்லிசை மன்னரோ இசை ராஜ்ஜியம்

ரமா பிரபா தான் நாயகி என்னைக்கேட்டால். சிறு வேடமென்றாலும் அப்படியே நம்மை பார்த்துக்கொண்டிருக்க செய்பவர் (இருளும் ஒளியும் குட்மார்ணிங் சிஸ்டர் உட்பட)

உத்தரவின்றி உள்ளே வா, மாதமோ ஆவணி, காதல் காதல் என்று பேச, தேனாற்றம் கரையினிலே என எல்லாம் இருந்தாலும்
உன்னைத்தொடுவது இனியது எனக்கு மிகவும் பிடித்த பாடல்

மாலிக்கு நல்ல ரோல். நன்றாக செய்திருப்பார். நாகேஷ், வெ.ஆ.மூர்த்தி எல்லாம் பற்றி சொல்லனுமா என்ன .. எப்பவுமே டாப் தான்
தேங்காயும் தான். காஞ்சனாவை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று அவர் படுத்துவது ... அடேயப்பா

படம் செம ரகளை உங்கள் எழுத்து அதைவிட ரகளை என்னமோ போங்க அட நம்ம சிக சாயல் தொற்றிக்கொண்டுவிட்டதே . அச்சச்சோ :)

chinnakkannan
2nd November 2015, 10:13 PM
ஹச்சோ இப்படி மூட்டை சுமக்க விட்டுட்டீஙக்ளே சி.செ..

லிரிக்னா டைப் பண்ணிடலாம்.. சுமக்கறதுன்னா.. கொஞ்சம் கஷ்டமாச்சே

முதலில் ந.தி பாடல்களில் மனதில் தேடி...

இதுவரை பார்த்த பாடல்கள்

பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை

ராஜ வீதி பவனி வந்தது..

பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சுருக்கு லவ் பண்ணடி கண்ணு


இதுலயும் வருதே... கொஞ்சம் மாறி..
.

https://youtu.be/a5hvybCycNA



சரி ஈ ஈ.. இந்தப் பாட்ல முதல்லயே இருக்குன்னு சம்சயம்..அப்புறம் ஏன் முதல்லையே போடலைன்னா கேக்கப் படாத்..(மத் பாட் பார்த் ரெப்ரெஷ் பண்ணிக்கிட்டேன் :) மெமரியைன்னா)

முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப்பொண்ணுக்கு நான்மோகனமாப் பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு

https://youtu.be/maX9RR9PHWg

ம்ம் இன்னும் பார்த்துச் சுமக்கணும் :)


ஆனா கமல் பாட்டுல ஏற்கெனவே ராகவேந்தர் சார் கொடுத்த சும்மா நிக்காதீங்க மனசுல நினைவு வந்துடுச்சு :)

chinnakkannan
2nd November 2015, 10:14 PM
ஜி வணக்கம்

சர்ரூ, ரமாப்ரபா ஹப்புறம் யார்னு தெரியப்படுத்தினா தன்யனாவேன் :)

rajeshkrv
2nd November 2015, 10:30 PM
ஜி வணக்கம்

சர்ரூ, ரமாப்ரபா ஹப்புறம் யார்னு தெரியப்படுத்தினா தன்யனாவேன் :)

என்ன இப்படி கேட்டுட்டேள்...
எனக்கு பிடித்த இன்னொருவரின் பாடல் (காதோரம் லோலாக்கு போட்டுவிட்டீரே . தன்யானேன் )

chinnakkannan
2nd November 2015, 10:47 PM
உ.இ.உ வா வுக்கு ஃபுல் பாட் வாசு முழுக்க அனலைஸ் பண்ணதுக்கப்புறம் தான்வருவேன்.. நான் ஆர்வக் கோளாறுல்ல எதையாவது சொல்லிடப்படாதுல்லா..

*

ம.தி பாடல்களில் தேடினேன்..

பார்த்த பாடல்கள்

கடலோரம் வாங்கிய காத்து

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவுவந்தது..

இதுவரை சிக்கவில்லை..இன்னும் பார்க்கணும் (எஸ்வி சாரை வரவழைக்க வழி..:) )

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலாவில் கமல் உப்பு மூட்டை தூக்கறாரான்னு முழுக்கப் பார்த்தேனா.. ம்ஹூம் இல்லை.. பாட் டும் போட முடியாது..எஸ்பிபி..நெய்வேலி திட்டும்..:)

chinnakkannan
2nd November 2015, 11:11 PM
தூங்கறதுக்குமுன்னாடி நல்ல மெலடி பாட் நானும் பாக்கறேன் நீங்களும் பாருங்க..

தேன் சிந்துதே வானம் - படம் எப்படி இருக்கும்


உன்னிடம் மயங்குகிறேன்..ஜேசுதாஸ்..

https://youtu.be/pl6AQ0C6mOE?list=PLuUMhbxM7Kq0Ew0cLOTJebRKB7Wyxz4i 9

rajraj
2nd November 2015, 11:48 PM
From Mooga Manasulu(1964)

naa paata nee nota palakali chelaka.......

http://www.youtube.com/watch?v=c-q9OihUQYI

From Hindi remake Milan(1967)

Sawan ka mahina paawan kare shor........

http://www.youtube.com/watch?v=rFwNA79OViw

From the Tamil remake Praptham(1971)

santhanathil nalla vaasam eduthu....

http://www.youtube.com/watch?v=aIxwObKYgug

The tunes seem to be different. But, the context is the same ! :)

madhu
3rd November 2015, 08:16 AM
vathiyarayya...

tamil remake film name Praptham illaiyo ? engal kudumbam perusu... innum kooda pazhasu.. ( adhuve kannada school master-in dubbing enru ninaikiren )

rajraj
3rd November 2015, 08:31 AM
vathiyarayya...

tamil remake film name Praptham illaiyo ? engal kudumbam perusu... innum kooda pazhasu.. ( adhuve kannada school master-in dubbing enru ninaikiren )

Thanks madhu ! You are right. Corrected!

RAGHAVENDRA
3rd November 2015, 08:43 AM
vathiyarayya...

tamil remake film name Praptham illaiyo ? engal kudumbam perusu... innum kooda pazhasu.. ( adhuve kannada school master-in dubbing enru ninaikiren )

Engal Kudumbam Perisu and School Master Kannada separate productions.

EKP is an original Tamil film.

RAGHAVENDRA
3rd November 2015, 08:55 AM
வாசு சார்
உத்தரவின்றி உள்ளே வா..
ஏராளமான புதிய தலைமுறை ரசிகர்களை பாலுவிற்கு உண்டாக்கிய பெருமை படைத்த பாடல்.
குறிப்பாக மாதமோ ஆவணி அந்தக் காலத்தில் பல இளம்பெண்களை பாலாவின் ரசிகர்களாக மாற்றியதை நான் பார்த்திருக்கிறேன்.
உத்தரவின்றி உள்ளே வா வெளியான சென்னை சித்ரா தியேட்டரில் பாவாடை தாவணியுடன் பல கல்லூரி மாணவிகள் பகல் காட்சியில் இந்தப் பாடல் முடிந்தவுடன் எழுந்து போய் விடுவார்கள்.
எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களோடு இரு துருவம் படமும் தீபாவளிக்கு வெளிவருவதாயிருந்தது. அது தள்ளிப்போய் உத்தரவின்றி உள்ளே வா படத்தோடு வெளியானது. சுமதி என் சுந்தரி வரும் வரையில் சித்ராவில் உத்தரவின்றி உள்ளே வா திரையிடப்பட்டது என நினைவு.
அந்தப் பொங்கலில் நமக்கு ஒரே சமயத்தில் மவுண்ட் ரோட்டில் மூன்று தியேட்டர்களில் தலைவரின் படங்கள் - சாந்தியில் எங்கிருந்தோ வந்தாள், அதற்கு அடுத்த தியேட்டரான தேவி பேரடைஸில் சொர்க்கம், வெலிங்டனில் இருதுருவம்.

மறக்க முடியாத நாட்கள்.

இப்போது படத்திற்கு வருவோம். காலேஜ் ஹாஸ்டலில் மதிய வேளையில் கிராமஃபோன் ரிக்கார்டுகளில் பாடல்களைப் போடுவார்கள். சில நாட்கள் சாப்பிடக் கூட மறந்து விடுவேன். நேராக ஹாஸ்டலுக்கு போய் பாட்டுக் கேட்பது தான் முதல் வேலை. ஒரு மணி நேரம் போவது தெரியாது. அதில் தான் ஏராளமான பாடல்கலைக் கேட்டு ரசித்திருக்கிறேன். அதில் உத்தரவின்றி உள்ளே வா பாடலுக்கு தனியிடம் உண்டு. அதுவும் அந்த பகல் வேளையில் இந்த மாதமோ ஆவணி பாடலைக் கேட்டால் அப்படியே உண்ட களைப்புடன் பல நண்பர்கள் தூங்கியே விடுவார்கள். அப்படி ஒரு சொக்க வைக்கும் பாடல். உத்தரவின்றி உள்ளே வா பாடலை எப்போது கேட்டாலும் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. அப்படி ஒரு சூப்பர் ஹிட் மியூஸிகல் திரைப்படத்தின் முதல் பாடலை அட்டகாசமாக எழுதியிருக்கிறார்கள்.

தங்களுக்கு பாராட்ட சொல்வதற்கும் எங்களுக்கு நீங்களே பாடம் எடுத்து விடுங்கள். மொழியில் வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறோம்.

chinnakkannan
3rd November 2015, 10:26 AM
//தங்களுக்கு பாராட்ட சொல்வதற்கும் எங்களுக்கு நீங்களே பாடம் எடுத்து விடுங்கள். மொழியில் வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறோம் // ட்ரூ.. ஒரு விஷயம் எழுதறதோ ஒரு கவிதை கதை கட்டுரை எழுதறதோ எனக்கு க் கொஞ்சம் மெனக்கெட்டா வந்துடும்.. அதாவது வந்தது போலக் காண்பிக்கும்..ஆனா ஒரு பாட்டு ந்னு ஒண்ணு எடுத்து..

அதை சின்சியரா அனலைஸ் பண்ணி(அதுக்காக குப்பையாய் இருந்தாலும் படத்தைப் பார்த்து) ஒவ்வொருவரி, ஒருவாயசைப்பு,லொக்கேஷன் டைமிங்க்ஸ் எல்லாம் சொல்றதுங்கறது கொஞ்சம் கஷ்டம் தான் (அதுவும் நகைச்சுவை கலந்து) இதுல பக்கெட்-ஃப்ரோஷன் ஷாட் எடுத்து அதைப் போடுவது- பின் கலர் கலர் எழுத்துக்களுக்கு ஃபாண்ட் கலர்னு கமெண்ட் கொடுத்து..

பின் வரிவரியா ஸ்பெல் செக் பண்ணிப் போடறதுங்கறது க்ரேட் தான்..எதுக்காக இந்த மாதிரி பண்ணனும்..

நம் போன்ற நண்பர்களுக்காகவா.. படிக்கும் வாசகர்களுக்காகவா..

ஆமாம் என்றாலும் இன்னொன்றும் உண்டு..எதை எழுதுவதானாலும் சுவாரஸ்யமாக இ ருக்க வேண்டும், இன்னிக்கு மட்டும் படிச்சுட்டு யர்ரும் மறந்துடக் கூடாது -பின்னால பலவருஷம் கழிச்சுப் படிச்சாலும் நமக்கும் சுவாரஸ்யமா இருக்கவேண்டும்- பிறருக்கும் இருக்க வேண்டும் என மனதுக்குள் தோன்றிய சின்சியாரிட்டி -எழுத்து ஒரு தவம்..அதை இனிதே செய்யவேண்டும் என்ற எண்ணம் -இது எல்லாருக்குமே சுலபத்தில் வாய்க்காது- வாசுவிற்கு ஆரம்ப முதலே வாய்த்திருக்கிறது..எனில் கலக்கிக் கொண்டிருக்கிறார்..ருப்பார்..

வாழ்த்துக்கள் வாசு..நன்றி.. உம்மைத் தெரிவது இனியது :) உம்மைத் தெரிந்தது இனியது எம் வாழ்க்கையில் :)

rajeshkrv
3rd November 2015, 11:11 AM
மிஸ்ஸம்மா (தெலுங்கு)
மிஸ்ஸியம்மா (தமிழ்)
மிஸ் மேரி (ஹிந்தி மற்றும் மலையாளம்)

மலையாளத்தில் பிரேம் நசீர்

ஏ.ஆர்.ரகுமானின் தந்தை திரு ஆர்.கே.சேகர் இசை

எனையாளும் மேரி மாதாவிற்கு இணை

நீ எண்டே வெளிச்சம் இசையரசியின் குரலில். வரிகள் ஸ்ரீகுமாரன் தம்பி

https://www.youtube.com/watch?v=nxaESMvOjkw

பிருந்தவானமும் நந்தகுமாரனும் பாடலின் இணை

மணிவர்ணன் இல்லத்த விருந்தாவனம்

https://www.youtube.com/watch?v=OgH6BhbnpyE

ஜமுனாவின் வேடம் நம் ஜெயாவிற்கு

rajeshkrv
3rd November 2015, 11:17 AM
குமார சம்பவம் திரையில் தேவராஜனின் இசையில் லீலாம்மா மற்றும் ராதா ஜெயலெக்*ஷ்மியின் குரல்களில் மிகவும் கடினமான பாடல்

ஆடல் : ராஜஸ்ரீ மற்றும் ஸ்ரீவித்யா

https://www.youtube.com/watch?v=-v_gM-V1TmM

vasudevan31355
3rd November 2015, 04:46 PM
அடேங்கப்பா!

'உத்தரவின்றி உள்ள வா' படத்துக்கும், அதன் பாடல்களுக்கும்தான் எவ்வளவு ரசிகர்கள்! எத்துணை ரசிப்புத்தன்மை!

பாலா தொடரின் பதிவைப் பாராட்டிய அத்தனை பேருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி!

ஜி, மதுண்ணா, சித்தூரார், வினோத் சார், ராகவேந்திரன் சார், கோபு சார், சின்னா, ஆதிராம் சார் அனைவருக்கும் நன்றிகள்.

vasudevan31355
3rd November 2015, 05:09 PM
ராகவேந்திரன் சார்!

கொன்னுட்டீங்க! சுவையான தகவல்கள். 'உத்தரவின்றி உள்ளே வா' ரிலீஸ்... அவ்வமயம் வெளியான நடிகர் திலகத்தின் 'இரு துருவம்' பற்றிய குறிப்புகள்... (1971 பொங்கலில் நமக்கு ஒரே சமயத்தில் மவுண்ட் ரோட்டில் மூன்று தியேட்டர்களில் நீங்கள் சொன்னபடி தலைவரின் 3 படங்கள் - சாந்தியில் 'எங்கிருந்தோ வந்தாள்', அதற்கு அடுத்த தியேட்டரான தேவி பேரடைஸில் 'சொர்க்கம்', வெலிங்டனில் 'இருதுருவம்'. உத்தரவின்றி உள்ளே வா மற்றும் இருதுருவம் படங்களின் பொங்கல் ரிலீஸின் போது (1971 ஜனவரி 14) சொர்க்கமும், எங்கிருந்தோ வந்தாளும் வெற்றிகரமாக 78 ஆவது நாட்களை தொட்டிருந்தன. இதற்கு முன்னம் நடுவில் நவம்பர் 11-ல் (1970) எனக்கு மிக மிகப் பிடித்த, எங்கள் கடலூரில் ஷூட்டிங் எடுக்கப்பட்ட தலைவரின் 'பாதுகாப்பு' படமும் வெளியாகியிருந்தது அல்லவா! இது போதாது என்று தொடர்ந்து பிப்ரவரி 6 ம்தேதி 'தங்கைக்காக' வேறு ரிலீஸ்.) இளைஞிகளையும் கவர்ந்த 'உத்தரவின்றி உள்ளே வா' பாடல்கள்....ஹாஸ்டலில் பாடல் கேட்டு மகிழ்ந்த அனுபவங்கள்... என்று இனிக்க இனிக்க பசுமையான அன்றைய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பெருமகிழ்ச்சியில் அனைவரையும் ஆழ்த்தி விட்டீர்கள்.

பதிவுகளுக்கான மேலதிக தகவல்கள் தருவதில் தாங்கள், ஆதிராம் சார், முரளி சார், நமது கார்த்திக் சார் இவர்கள் நால்வரையும் அடித்துக் கொள்ளவே முடியாது.

நான் சிட்டியில் இல்லாததால் இந்த விவரங்களெல்லாம் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடலூரோடு கட்டுண்டது என் சினிமா வாழ்வு. பின் 'ஞான ஒளி' தேடித் தேடி பல ஊர்கள். சென்னை நிகழ்வுகளைப் பற்றி நீங்களும், கார்த்திக் சாரும் உங்கள் நினைவலைகளை எழுதும் போது 'அடடா! நாம் சென்னையில் இல்லாது போய் விட்டோமே...இருந்திருந்தால் இவர்களைப் போல பல விஷயங்களை எழுதி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே' என்று சற்று பொறாமை கூட உங்கள் இருவரின் மேல் ஏற்பட்டதுண்டு. ஆனால் சென்னை நிகழ்வுகள், சின்னா, முரளி சாரால் மதுரை நினைவுகள், கிருஷ்ணா சாரால் நெல்லை நினைவுகள் என்று எனக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்தான். அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றி!

ரவியின் 'உத்தரவின்றி உள்ளே வா' நமது இன்னொரு 'சுமதி என் சுந்தரி' என்று சொன்னால் மிகையில்லைதானே?

vasudevan31355
3rd November 2015, 05:56 PM
ஆதிராம் சார்,

'சுடரும் சூறாவளியும்' படத்தின் பாலா பாடல் பதிவைப் படித்துப் பாராட்டியதற்கு நன்றி.

'சுடரும் சூறாவளியும்' பற்றி ரிலீஸ் சமயத்தில் குகநாதன் கூறியதை நன்கு நினைவு வைத்து தக்க தருணத்தில் அதைப் பதிவிட்டு பாலா தொடரின் பதிவைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. ஜெயா என்றாலே குகநாதன் சொக்கிப் போவார்.:)

குகநாதன் தயாரித்து கதை வசனம் எழுதிய 'தெய்வக் குழந்தைகள்' படத்தில் ஜெய் ஜோடி இவர்.

இந்தப் படத்தில்

'நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லோ
மின்னலை வீசும் கண்ணல்லோ
வா வா'

என்ற மிக மிக அருமையான பாடல் ஒன்று ஜெயாவுக்கு சுசீலா குரலிலும் சி.ஐ.டி சகுந்தலாவுக்கு ஈஸ்வரி குரலிலும் ஒலிக்கும். என் உயிரான பாடல் இது.

இதே ஜெயா கொஞ்சம் குண்டடித்து 'கிரஹப்பிரவேசம்' படத்தில் சிவக்குமாரின் ஜோடியாக வருவார்.

அருமையான தகவல்களுக்கு நன்றிகள் ஆதிராம் சார்.

madhu
3rd November 2015, 07:02 PM
Engal Kudumbam Perisu and School Master Kannada separate productions.

EKP is an original Tamil film.

தாங்க்ஸ் ராகவ்ஜி... அதிமதுரா அனுராகா பாட்டு ரெண்டு படத்திலும் வருதே ! அதனால் அப்படி நினைத்தேன். அப்படின்னா அது ரீமேக்கா ?
விக்கியில் பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கன்னடம், தமிழ் இருமொழிகளிலும் எடுத்த படம் என்று கொடுத்திருக்காங்க...
இதில்தானே நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் ? ( பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆசிரியரைக் காக்கும் மாணவனாக )

இதே கதை மீண்டும் ஜெமினி, சௌகார் நடித்து ஸ்கூல் மாஸ்டராக வந்ததோ ?

vasudevan31355
3rd November 2015, 09:38 PM
ஜி!

மிக அருமையாக 'குட் மார்னிங் சிஸ்டர்' ஞாபகப்படுத்தி ரமாபிரபா நினைவலைகளை தட்டி எழுப்பி விட்டீர்கள்.

ரமாபிரபா

http://i.ytimg.com/vi/Er4ARez4pGk/hqdefault.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355062/VTS_03_1.VOB_004379350.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355062/VTS_03_1.VOB_004379350.jpg.html)

'லில்லி லல்லி ஜிம்மி ஜிப்பி ரோஸி ரோஸி ராணி' என்று நாய்க்குட்டிகளோடு கொஞ்சி அவைகளை மேய்த்து மகிழும் இளம் அரைப்பைத்திய, சகஸ்வரநாமத்தின் செல்லப் பெண்ணாக, வாரிசுக்காக செல்வத்தின் இரண்டாந்தரமாக கட்டி வைக்க பெரிசுகளால் ஜோதிட முடிவு செய்யப்பட்ட நேரத்தில் 'வாரிசுக்காகத்தான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன்...வாரிசு பெற்றுக் கொடுத்ததும் நான் எங்காவது போய் விடுவேன். அப்புறம் நீங்களும், வள்ளி அக்காவும் சுகமாக வாழலாம் ' என்று நம் 'செல்வ'த்தின் மேல் அக்கறை காட்டும் வெகுளி முறைப்பெண் ரத்னாவாக.



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355062/Irulum%20Oliyum%20Tamil%20Full%20movie%20-%20YouTube.mp4_000766756.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355062/Irulum%20Oliyum%20Tamil%20Full%20movie%20-%20YouTube.mp4_000766756.jpg.html)

அக்காள் முறை ஏழை வாணிஸ்ரீ அம்மா சுந்தரிபாயால் கொடுமைப் படுத்தப்படும் போது அவருக்காகப் பரிந்து பேசி, பார்ப்பவர்களையெல்லாம் 'குட் மார்னிங் சிஸ்டர்...குட்மார்னிங் பெரியப்பா...குட்மார்னிங் மம்மி' என்று சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து கிராக்குத்தனமாய் 'இருளும் ஒளியும்' புரியாத ரமாவாக.



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355061/avasara.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355061/avasara.jpg.html)

'சூரக்கோட்டை இளையராஜா' என ஜோராக புருடா விடும் திகிடுதத்த ஏமாற்றுப் பேர்வழி நாகேஷிடம் ஏமாந்து மனதையும் பறி கொடுத்து, வெண்மை உடையில் அவருடன் 'வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்' பாடி, இறுதியில் நாகேஷின் களவாணித்தன உண்மை தெரிந்து கலங்கும், இதயங்களைத் தேடி அலையும் பணக்கார பரிதாப மனைவி கமலாவாக.



https://i.ytimg.com/vi/XC-7SeeGYfk/hqdefault.jpg

அறிந்தும் அறியாத, இரண்டுங்கெட்ட வயசு ஸ்கூல் பெண்ணாக டீச்சர் காஞ்சனாவுடன் ஊர் சுற்றி, நாகேஷை விவரம் புரியாமல் 'சாந்தி நிலைய'த்தில் காதலித்து 'கண்கள் தேடுவது...உள்ளம் நாடுவது...மெல்லப் பேசுவது...ஒன்று சேருவது' எனப் பாட்டுப் பாடி மகிழும் பாவாடை சட்டை அணிந்த இளம் பெண் கீதாவாக.



http://padamhosting.me/out.php/i84187_uiuv7.png

'நாதா... நாதா' என்று சர்வசதா காலமும் நாகேஷின் உயிர் எடுக்கும் பூர்வ ஜென்மப் பைத்தியமாக 'உத்தரவின்றி உள்ளே வந்த' மோகினியாக.



https://image.tmdb.org/t/p/original/3EFfXR2wMCatDmP8yA0KK7KYhAB.jpg

'காசேதான் கடவுளடா' கும்பலில் கேட்ட பொருள் கேட்ட மாத்திரத்தில் கிடைக்காத பட்சத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசி துவம்சம் செய்து, தாண்டவம் ஆடி, மயங்கி விழுந்து, பின் தெளிந்து எழுந்து, 'இங்கே என்ன நடந்தது?' என்று அப்பாவியாய் கேள்வி கேட்கும் பைத்திய கேஸ், நாயகி லஷ்மியின் பெயரை தன் பெயராகக் கொண்டு குழப்பம் ஏற்படுத்தும் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் ரமாவாக.



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355061/vasa.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355061/vasa.jpg.html)

வி.கே.ஆர். நாகேஷ் இரு 'குக்' களிடம் மாற்றி யாரைக் காதலிப்பது என்று குழம்பி, பெரிய அடுக்கு சாப்பாட்டுக் கேரியரில் நாகேஷ் சதி வேலையால் வி.கே.ஆர் மாற்றிக் கொடுக்கும் பச்சை மீன், முட்டை, கோழி என்று ஏமாந்து, அதையே,சமைத்த வாக்கில் நாகேஷ் தரும் போது ஆனந்தமாய் சாப்பிட்டு மகிழ்ந்து,

(நாகேஷ் ஒவ்வொரு கிண்ணமாக சாப்பாட்டுக் கேரியரை ரமாபிராபாவிடம் திறந்து காட்டும்போது

'இது என்ன சொல்லு?'

எனக் கேட்க அதிலுள்ள அவித்த முட்டையைப் பார்த்து ரமாபிரபா,

'முட்டை' என்று ஆனந்தமாகக் கூற,

அதற்கு நாகேஷ் தரும் பதில்

'ஆமாம்! கோழியே வச்சது':)

எப்படி சிரிக்காமல் இருப்பது?)

நாகேஷின் 'ஜகஜகா'வுக்கு அர்த்தம் புரியாமல் 'என்ன?' என்று கேட்க, நாகேஷ் அதற்கான பதிலை காதில் கிசுகிசுக்க 'ச்சீ ! இவ்வளவுதானா?' என்று அலட்சியம் காட்டி நம்மை அலற வைக்கும் 'வசந்த மாளிகை' ஜமீனின் சராசரி வேலைக்காரி முத்தம்மாவாக.

கணவன் நாகேஷ் (பட்டாக்கத்தி பைரவனின் கைத்தடி) கொஞ்சம் ஜொள்ளுப் பேர்வழி என்று தெரிந்து இரவில் அவனை ஊர் சுற்ற விடாமல் கால்களை கயிற்றால் பிணைத்து கண்காணிக்கும் குழந்தை பெற்ற 'பச்சை உடம்புக்கா(ரி)ர பொசஸிவ் மனைவியாக.



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355061/47%20natkal.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355061/47%20natkal.jpg.html)

பாரிஸில் கணவனிடம் மாட்டிக் கொண்டு தப்ப முடியாமல் '47 நாட்கள்' சித்ரவதை அனுபவிக்கும் சிவசங்கரியின் ஜெயபிரதாவை அவனுடன் ஒரு ஹோட்டலில் கண்டு, அவள் நிலைமை புரிந்து, அவனறியாமல் நைஸாக சுண்டு விரல் நீட்டி, அவளிடம் சைகை காட்டி, ஜெயப்பிரதாவை பாத்ரூம் வரச் சொல்லி, அந்தப் பெண்ணின் கதை கேட்டு, பரிதாபப்பட்டு, அவள் தாய்நாடு திரும்ப டாகடர் சரத்பாபு (நிஜ வாழ்க்கையில் ஒரிஜினல் கணவர்) மூலம் உதவி செய்யும் மனிதாபிமானமுள்ள, வாயில் சிகரெட் புகைய, ஜீன்ஸும், ஷர்ட்டும், தொப்பியுமாக கலக்கும் தமிழ் பேசும் நடுத்தர வயதுப் பெண்மணியாக.


இப்படி பலதரப்பட்ட வேடங்களில் சிறப்பாக நடித்து, ஆரம்பத்தில் லூஸுத்தனமான ரோல்களில் நடித்தாலும் அதிலும் வித்யாசம் காட்டி, தெலுங்கிலும் கொடி கட்டிப் பறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை ரமாபிரபாவை மறக்க முடியுமா?

rajeshkrv
3rd November 2015, 10:10 PM
ஜி வணக்கம்

யெஸ் யெஸ் ரமாபிரபா .. மனோரமா, சச்சு இவர்களுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல. தமிழ் தெலுங்கு இரண்டிலும் நன்றாக பேசக்கூடியவர் மிகவும் அற்புத கலைஞர்
ஏனோ தமிழில் இன்னும் நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து ..


வெண்ணிலா நேரத்திலே வேணுகானத்தை மறக்கமுடியுமா ரமாவையும் மறக்க முடியுமா

chinnakkannan
3rd November 2015, 11:58 PM
இப்படி ரமாப் ப்ரபா அனலிஸிஸ் நன்னாயிட்டுப்பண்ணிட்டீங்களே வாசு(என்னோட ஃபேவரிட்- காசே தான் கடவுளடா..மாட்டேன்னு சொல்லாதீங்க அம்புட்டு தான்..:) )

*

வழக்கம் போல மறதி என்னை ஆக்கிரமிச்சுடுத்து.. யோசிச்சாலும் யார் அந்த ஹீரோயின்னு நினைவுக்கு வரலை..அதனாலென்ன பாட் போட்டுடலாம்..

எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ

https://youtu.be/WXElzxBUM9I

chinnakkannan
4th November 2015, 12:02 AM
இன்னொரு பாட் அதுலயே

மலரைப் போன்ற பருவமே..விழிகள் காட்டி நடப்பதேன்..

https://youtu.be/ZTKHm9Ry6EQ

மெட்ராஸ் டு பாண்டிச்சேரி பார்த்ததில்லை..

rajeshkrv
4th November 2015, 02:04 AM
இப்படி ரமாப் ப்ரபா அனலிஸிஸ் நன்னாயிட்டுப்பண்ணிட்டீங்களே வாசு(என்னோட ஃபேவரிட்- காசே தான் கடவுளடா..மாட்டேன்னு சொல்லாதீங்க அம்புட்டு தான்..:) )

*

வழக்கம் போல மறதி என்னை ஆக்கிரமிச்சுடுத்து.. யோசிச்சாலும் யார் அந்த ஹீரோயின்னு நினைவுக்கு வரலை..அதனாலென்ன பாட் போட்டுடலாம்..

எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ



கன்னட கல்பனா

கர்ணனில் கடைசியில் பூமாதேவியாக/தர்மதேவியாக வருவாரே அவர் தான்

madhu
4th November 2015, 04:33 AM
கல்பனா தெரியாதா ? ஐயகோ சிக்கா...

ராஜேஷ்... தர்மதேவின்னு சொல்லிட்டீங்க... ஓகே... "நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்" என்று சுசீலாம்மா பாடும் கட்டிலா தொட்டிலா பாட்டுக்கு நடித்தவர் என்றும் சொல்லலாம்.

ஆனால் அந்த மலரைப் போன்ற பாட்டு அந்தக் காலத்து தேசிய கீதமாக இருந்தது.... நினைவுக்கு வருதே!....
இன்னும் கூட அந்த ஃபீலிங்ஸ்...யெஸ்.... அந்த ஃபீலிங்ஸை மிஞ்ச வேற பாட்டு கிடையாது. ! ரவி அண்ட் டி.எம்.எஸ் ராக்ஸ் ! இன்னமும் !

rajeshkrv
4th November 2015, 05:57 AM
கல்பனா தெரியாதா ? ஐயகோ சிக்கா...

ராஜேஷ்... தர்மதேவின்னு சொல்லிட்டீங்க... ஓகே... "நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்" என்று சுசீலாம்மா பாடும் கட்டிலா தொட்டிலா பாட்டுக்கு நடித்தவர் என்றும் சொல்லலாம்.

ஆனால் அந்த மலரைப் போன்ற பாட்டு அந்தக் காலத்து தேசிய கீதமாக இருந்தது.... நினைவுக்கு வருதே!....
இன்னும் கூட அந்த ஃபீலிங்ஸ்...யெஸ்.... அந்த ஃபீலிங்ஸை மிஞ்ச வேற பாட்டு கிடையாது. ! ரவி அண்ட் டி.எம்.எஸ் ராக்ஸ் ! இன்னமும் !

கரெக்ட் மதுண்ணா.
கட்டிலா தொட்டிலா, சாது மிரண்டால், தென்னங்கீற்று என்று சொல்ல நினைத்தேன்.. ஏனோ கர்ணன் நிறையவாட்டி பார்த்திருப்பார் என்று நினைத்து அப்படி சொன்னேன்

rajraj
4th November 2015, 06:35 AM
A video clip on MKT:

http://www.youtube.com/watch?v=mt3QY7ifOUA

I will post the songs featured in this clip and also the MKT songs I sing, one at a time ! :)

vasudevan31355
4th November 2015, 08:31 AM
மதுண்ணா!

http://www.thehindu.com/multimedia/dynamic/00257/27KIMP_OLDGOLD_257965f.jpg

இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படம் அனைவருக்கும் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியது. இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் என்று வெவ்வ்வேறு கால கட்டத்தில் வந்ததாலும், மொழி மற்றும் டப்பிங், ரீமேக், நடிகர்கள் சம்பந்தமாய் அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கையே.

அதனால் எனக்குத் தெரிந்தவரை இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' சந்தேகம் பற்றிய விளக்கங்களை இங்கே தருகிறேன். இதோ விவரங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355064/new.jpg

'ஸ்கூல் மாஸ்டர்' கன்னடத்தில்தான் முதலில் தயாரிக்கப்பட்டது. வெளியானது 1958-ல். (பிறகு தான் இந்தியில்... 1959-ல்) தமிழில் 'டப்' செய்யப்படாமல் நேரிடையாக 'எங்க குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழில் அதே ஆண்டில் வெளியானது. கன்னடத்தில் நடித்த அதே நடிகர்களே தமிழிலும் நடித்திருந்தனர். கன்னட வாடையாகவே இருக்கக் கூடாதே என்று தமிழில் 'குல தெய்வம்' ராஜகோபாலை காமெடிக்கு போட்டிருப்பார்கள். (கன்னடத்தில் அந்த மொழி நகைச்சுவை நடிகர்) சரோஜாதேவியும் தமிழுக்கு அப்போது பரிச்சயம்.



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355065/sdfgh.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355065/sdfgh.jpg.html)

இதே 'ஸ்கூல் மாஸ்டர்' 1959-ல் இந்தியில் (கரண்திவான், ஷகீலா, சரோஜாதேவி, பந்துலு ) பந்துலு தயாரிப்பில் வெளிவந்த போது இதே ரோலை நடிகர் திலகமே இந்தியிலும் செய்திருந்தார். அப்போது ஒல்லியாக இருப்பார். ('மாஸ்டர்' ரோல் பந்துலுவிற்கே).



1964-ல் மலையாளத்திலும் வெளிவந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படத்தில் கௌரவ நடிகராக நடித்திருந்தார் சௌகார் ஜோடியுடன். மலையாளத்தில் 5 வருடங்கள் சென்று இப்படம் வந்ததால் இதில் திலகம் சற்று குண்டாகத் தெரிவார். 'ஸ்கூல் மாஸ்டர்' ரோல் 'திக்குரிச்சி சுகுமாரன் நாயருக்கு. இந்தப் படம் வெளிவந்த அதே தேதியில்தான் நடிகர் திலகத்தின் 'பச்சை விளக்கு' படமும் வெளிவந்ததாக நினைவு.

'ஸ்கூல் மாஸ்டர்' மலையாளத்தில் நடிகர் திலகம் நடிப்பு பற்றி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355063/sm.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355063/sm.jpg.html)

இறுதியில் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஸ்கூல் மாஸ்டர் 'திக்குரிச்சி'யை ரயில்வே ஸ்டேஷனில் கண்டு, வேண்டுமென்றே சிறை பிடித்து, மாஸ்டரின் இழந்த வீட்டிற்கு திரும்ப வரவழைத்து, தான்தான் மாஸ்டரின் சீடன் என்று காட்டிக் கொள்ளாமல் கழுத்தில் அங்கவஸ்திரத்துடன் வேட்டி சட்டை அணிந்து, 'இது நம் வீடுதான்' என்று திகைத்து நிற்கும் மாஸ்டர் தம்பதிகளை மிரட்டுவது போல பாவனை செய்து, சொந்தக் குரலில் மலையாள மொழியை அவ்வளவு அழகாகப் பேசி கலக்கி விடுவார் நடிப்பின் ஆசான்.

'திக்குரிச்சி'யிடம் 'போலாம்' என்று சொன்னவுடன் அவரும் வெளிக் கிளம்ப 'அவிடல்லா' என்று மிரட்டி 'Sit down' என்று சேரில் அமர வைத்து அவர் கையில் ஒரு பேப்பர் தந்து

'இனி ஈ வீடு விட்டுப் போவில்லன்னு எழுதணும்'

என்பார் படுகம்பீரமாக பின்னே கைகள் கட்டியபடி. 'திக்குரிச்சி' சுகுமாரன் நாயர் எழுத பேனா தேடியவுடன்,

'எந்தா...பேனா இல்லே ஹேய்! வல்லிய ஸ்கூல் மாஸ்டர்! (என்ன ஒரு நக்கல்!) ஒரு பேனா இல்லா. ம்...என்ட பேனா'

என்று மாஸ்டர் சிறு வயதில் தனக்கு ஞாபகார்த்தமாகக் கொடுத்த பழைய பேனாவை அவரிடம் நீட்டுவார்.

பின்,

'எழுதணும்... ஈ பேனா வச்சோடு .(என்ன அழகான எக்ஸ்ப்ரெஷன்) எண்ட ஓர்மைக்காயிது கலையாது சூச்சிக்கணும்'

(தப்பாய் இருந்தால் எல்லோரும் ஷமிக்கணும். ஞான் மலையாளம் அறியில்லா.):-D

என்று அந்தப் பேனாவை தன்னிடம் தரும் போது மாஸ்டர் சொன்ன அதே வார்த்தைகளை அவரிடம் சொல்வார்.

அதை வைத்து மாஸ்டர் அது தன்னுடைய மாணவன் ஜோனி என்று தெரிந்து எல்லையற்ற பாசத்தில் நடிகர் திலகத்தைக் கட்டிப் பிடித்து ஆனந்தப்பட, நடிகர் திலகமும் அது 'தான்'தான் என்பதை அமைதியாக தலையாட்டுதல் மூலம் கண்கள் கலங்கிய நிலையில் உணர்த்தி கொஞ்சமாக அழுதபடி மாஸ்டரை தழுவிக் கொள்வாரே!

என்ன உணர்ச்சிமயமான ஒரு காட்சி!

நடிகர் திலகம் ஏற்ற இறக்கங்களுடன் தந்து சொந்தக் குரலிலேயே மலையாளம் பறையும் போது மெய் சிலிர்த்துப் போகிறது. ரொம்ப ஆச்சர்யமாகவும், புதுமையாகவும் இருக்கிறது.



இப்போது நான் மேலே தந்துள்ள 'ஸ்கூல் மாஸ்டர்' இந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களின் நடிகர் திலகத்தின் ஸ்டில்களைப் பாருங்கள். உருவ வித்தியாசத்தை முதலில் உணரலாம். பின் ஒரே காட்சியில் நடிகர் திலகம் இரு மொழிகளிலும் தரும் முக பாவனைகளிலும் வித்யாசம் உணரலாம்.



இதுவல்லாமல் ஜெமினி 'ஸ்கூல் மாஸ்டரா'க நடிக்க, அவருடன் சௌகார் இணைய, தமிழில் மீண்டும் 'ஸ்கூல் மாஸ்டர்' தயாராகி 1973 ல் வெளிவந்தது.

http://i.ytimg.com/vi/dvIQFMz771Q/hqdefault.jpg

'பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ'

'தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே'

போன்ற காலத்தால் அழியாத புகழ் பெற்ற பாடல்கள்.

இந்தி, மலையாளம், கன்னட 'ஸ்கூல் மாஸ்டர்' களில் நடிகர் திலகம் ஏற்றிருந்த கௌரவ ரோலை தமிழில் நடித்திருந்தவர் முத்துராமன்.



இதே 'ஸ்கூல் மாஸ்டர்' பெயரில் விஷ்ணுவர்த்தன், சுஹாசினி, அவினாஷ் நடித்து கன்னடத்தில் 2010 ல் இன்னொரு படம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://2.bp.blogspot.com/_fKMLChf_W00/S1lxS2Jfz-I/AAAAAAAAA6A/tmDk9krt-48/s400/school-master-kannada+(1).jpg

அப்பாடி!

vasudevan31355
4th November 2015, 09:14 AM
மலையாளம்

http://mymoviemall.com/FilmImg_123/Thmp7359school-master.jpg

http://s1.dmcdn.net/DchMV.jpg

http://i.ytimg.com/vi/LA6XTyynYJs/hqdefault.jpg

vasudevan31355
4th November 2015, 09:17 AM
ஹிந்தி

http://2.bp.blogspot.com/-yra0yZ2XP18/UFAvkQGmlbI/AAAAAAAA0qs/IXKs5SfAeiE/s400/02_14_47_vcd%2Bschool%2Bmaster.jpg

http://www.onlinefmradio.in/videos/thumbs/2-QPifGnfHs.jpg

https://i.ytimg.com/vi/fdcDWKojRw8/hqdefault.jpg

vasudevan31355
4th November 2015, 09:20 AM
கன்னடம்

http://www.kannadastore.com/images/School-Master-Old-DVD.jpg

http://mymoviemall.com/SongImg/Song1497School-Master-Kannada-Movie-Cover.jpg

http://img.youtube.com/vi/PcKsVM0twHA/0.jpg

http://www.chitraloka.com/images/history/school_master_old.jpg

http://i.ytimg.com/vi/VI1SxHj8ImI/maxresdefault.jpg

rajeshkrv
4th November 2015, 09:21 AM
hindi bhagbanum school master than

vasudevan31355
4th November 2015, 09:41 AM
மதுண்ணா!

நான் 'you tube' ல் அப்லோட் செய்த (Sep 7, 2011) 'ஸ்கூல் மாஸ்டர்' ஹிந்தி படத்தில் 'நடிகர் திலகம்' சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் வீடியோ காட்சி.


https://youtu.be/q8vxKpQy2RM

madhu
4th November 2015, 09:50 AM
கரெக்ட் மதுண்ணா.
கட்டிலா தொட்டிலா, சாது மிரண்டால், தென்னங்கீற்று என்று சொல்ல நினைத்தேன்.. ஏனோ கர்ணன் நிறையவாட்டி பார்த்திருப்பார் என்று நினைத்து அப்படி சொன்னேன்

ராஜேஷ்.... சிக்கா சொல்ற "கர்ணன்" படமெல்லாம் வேற..வேற..வேற... ( நான் எஸ்கேப்... நீங்களும் ஓடிடுங்கோ )

madhu
4th November 2015, 09:54 AM
அப்பாடா... வாசுஜி உதவியால் ஸ்கூல் மாஸ்டர் பற்றிய விவரம் தெரிஞ்சு போச்..
நன்றி... நன்றி.. நன்றி....

RAGHAVENDRA
4th November 2015, 09:55 AM
சிக்கா சொல்ற "கர்ணன்" படமெல்லாம் வேற..வேற..வேற... ( நான் எஸ்கேப்... நீங்களும் ஓடிடுங்கோ )

அந்தக் கர்ணன் எந்தத் தடையுமின்றி அள்ளி அள்ளிக் கொடுத்தான்.

இந்தக் 'கர்ணன் எவ்வளவு கொடுக்க' நினைத்தாலும் தடையுள்ளதே..

chinnakkannan
4th November 2015, 10:20 AM
ராஜேஷ்.... சிக்கா சொல்ற "கர்ணன்" படமெல்லாம் வேற..வேற..வேற... ( நான் எஸ்கேப்... நீங்களும் ஓடிடுங்கோ )

ஹாய் குட்மார்னிங்க் ஆல்

என்னங்க இது மதுரைக்கு வந்த சோதனையாச்சு.. ஞான் கல்ப் யாருன்னு தானே கேட்டேன்..கர்ணன் நான் எங்க இழுத்தேன்..தொடர் ஆரம்பிச்சது வாஸ்ஸு..ம்ம் பாவம் சிக்கா..

rajeshkrv
4th November 2015, 10:49 AM
ஸ்கூல் மாஸ்டர் சந்தேகம் வந்தாலும் வந்தது ஜி வந்து மாஸ்டர் கணக்கா பாடம் எடுத்துட்டாரே .. வாசு ஜி போய் மாஸ்டர் ஆயிட்டார் டும் டும் டும் :)

rajeshkrv
4th November 2015, 10:50 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

என்னங்க இது மதுரைக்கு வந்த சோதனையாச்சு.. ஞான் கல்ப் யாருன்னு தானே கேட்டேன்..கர்ணன் நான் எங்க இழுத்தேன்..தொடர் ஆரம்பிச்சது வாஸ்ஸு..ம்ம் பாவம் சிக்கா..

என்னவோய் கல்ப்ஸ் யாருன்னா கேட்டீர்.. அந்த நடிகை யாருன்னு ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரின்னா கேட்டீர் .. இப்போ கல்ப்ஸ்ன்னு பேறெல்லாம் தெரியர்தே

adiram
4th November 2015, 10:55 AM
வாசு சார்,

ஸ்கூல் மாஸ்டர் மற்றும் ரமாப்ரபா தகவல்கள் நன்றாக இருந்தன.

rajeshkrv
4th November 2015, 11:09 AM
அதே போல் நவாப் நார்காலி, பட்டணத்தில் பூதம்
நாய்க்கு பேரு வைச்சியே சோறு வைச்சியா

vasudevan31355
4th November 2015, 11:18 AM
ஆதிராம் சார்.

அதிர்ச்சியே அடைய வேண்டாம்.:)

வில்லி வேடம் அப்படிங்கிறதாலே தள்ளி விட்டுட்டேன். (நிஜ வாழ்க்கையிலும் சரத்பாபுவுக்கு வில்லி மனைவிதான்) எழுதனது எல்லாமே அவர் அப்பாவியாய் நடித்த வேடங்கள். இன்னும் இருக்கே. இதுக்கே ஒவ்வொரு டிவிடியா தேடி போட்டோ எடுக்க நேரம் ஆயிடுச்சி.

ஆமாம்! அது என்ன பெரிய புராணம் சேக்கிழார் புராணம் மாதிரி ரமாப்ரபா புராணம். ஜாலியாக ரசித்தேன்.:)

vasudevan31355
4th November 2015, 11:19 AM
அதே போல் நவாப் நார்காலி, பட்டணத்தில் பூதம்
நாய்க்கு பேரு வைச்சியே சோறு வைச்சியா

superji!

vasudevan31355
4th November 2015, 11:20 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

என்னங்க இது மதுரைக்கு வந்த சோதனையாச்சு.. ஞான் கல்ப் யாருன்னு தானே கேட்டேன்..கர்ணன் நான் எங்க இழுத்தேன்..தொடர் ஆரம்பிச்சது வாஸ்ஸு..ம்ம் பாவம் சிக்கா..

ஏம்பா எல்லாரும் புள்ளையை காலங்காத்தால அழ வச்சுட்டீங்க.:(

rajeshkrv
4th November 2015, 11:22 AM
ஆதிராம் சார்.

அதிர்ச்சியே அடைய வேண்டாம்.:)

வில்லி வேடம் அப்படிங்கிறதாலே தள்ளி விட்டுட்டேன். (நிஜ வாழ்க்கையிலும் சரத்பாபுவுக்கு வில்லி மனைவிதான்) எழுதனது எல்லாமே அவர் அப்பாவியாய் நடித்த வேடங்கள். இன்னும் இருக்கே. இதுக்கே ஒவ்வொரு டிவிடியா தேடி போட்டோ எடுக்க நேரம் ஆயிடுச்சி.

ஆமாம்! அது என்ன பெரிய புராணம் சேக்கிழார் புராணம் மாதிரி ரமாப்ரபா புராணம். ஜாலியாக ரசித்தேன்.:)

நிஜ வாழ்க்கையில் சரத்பாபு வில்லனாயிட்டார் சார். ரமாவின் அத்தனை சொத்தும் சரத்திடம்

JamesFague
4th November 2015, 11:26 AM
இந்தக் 'கர்ணன் எவ்வளவு கொடுக்க' நினைத்தாலும் தடையுள்ளதே..[/QUOTE]


As per the wish of Mr VR sir we can remove Mr C K from the post so that everyone will enjoy the Karnan series without

any cut.

RAGHAVENDRA
4th November 2015, 11:53 AM
அடுத்த இலைக்கு பாயசம் வைக்கலியேன்னு என்னா கவலை அல்லாருக்கும்....

RAGHAVENDRA
4th November 2015, 11:54 AM
வாசு சார்

நாசமா நீ போனயா....

இருங்க இருங்க... இது நவாப் நாற்காலி வசனமோன்னோ அதான்...

JamesFague
4th November 2015, 01:21 PM
Courtesy: Tamil Hindu

சினிமா எடுத்துப் பார் 33: எங்க வீட்டுப் பிள்ளை!


எஸ்பி. முத்துராமன்




ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒவ்வொரு திருப்பம் ஏற்படும். அந்தத் திருப்பம் உயர்த்தியும் விடும், சமயத்தில் கீழே தள்ளியும் விடும். அப்படி ஒரு சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டது. என் தாய் வீடான ஏவி.எம் ஸ்டுடியோவில் எடிட்டிங் அப்ரண்டீஸ் ஆக சேர்ந்து உதவி எடிட்டராகி, உதவி இயக்குநராகி, துணை இயக்குநராகி 16 ஆண்டுகாலம் வேலை பார்த்தேன். என் குடும்பத்தினருடன் இருந்த நேரத்தைவிட ஏவி.எம் ஸ்டுடியோவில்தான் அதிக நேரம் இருந்திருக்கிறேன்.

அப்படி ஒரு காலகட்டத்தில் சித்ராலயா கோபுவின் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தை ஏவி.எம். செட்டியார் அவர்கள் பார்த்தார்கள். சிறப்பான அந்த நாடகத்தை வாங்கி படமாக எடுக்க முயற்சித்தார்கள். நாடகத்துக்கு கதை, வசனம் எழுதிய சித்ராலயா கோபுவை வைத்தே, படத்தையும் இயக்க முடிவெடுக்கப்பட்டு அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

படத்தை எடுக்கும் பொறுப்பை ஏவி.எம். செட்டியார் அவர்கள் தன் மூத்த மகன் முருகன் சாரிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் முருகன் சார் என்னை அழைத்து ‘‘இந்தப் படத்தில் சித்ராலயா கோபுவுக்கு உதவி இயக்குநராக பணி புரியுங்கள்’’ என்று கூறினார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நானும், கோபுவும் சமகாலத்தில் வேலை பார்த்த வர்கள். நான் சீனியர் இயக்குநர்கள் பலரிடமும் உதவியாளராக பணிபுரிந் திருக்கிறேன். ஆனால், கோபு அவர்களுடன் உதவி இயக்குநராக வேலை செய்வது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. முருகன் சார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன். அடுத்த நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தேன். எப்போதும் முழு ஈடுபாட்டு டன் வேலை பார்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருப்பவன். ஆனால், இந்தப் படத்தில் என்னால் அப்படி செய்ய முடியுமா என்ற சந்தேகம் வந்தது.

அடுத்த நாள் திங்கள்கிழமை. ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் பணிவுடன் ஒரு கடிதம் எழுதினேன். அதில் ‘‘இவ்வளவு காலம் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை வைத்திருந் ததற்கு நன்றி. வெளியே சென்று படம் இயக்க அனுமதி கொடுக்க வேண்டும்’’ என்று எழுதியிருந்தேன். அதை செட்டியார் அவர்கள் படித்துவிட்டு, ‘‘அவனுக்கு ரொம்ப நாட்களாக வாய்ப்பு கொடுக்கணும்னு இருந்தோம். அதைக் கொடுக்கலை.

வெளியே படம் பண்ணப் போறேன்னு சொல்கிறான். அவனுக்கு முறையே என்னென்ன செய்ய வேண்டுமோ செய்து முழு திருப்தியோடு அவனை அனுப்புங்கள்’’ என்று மகன்களை அழைத்து சொன்னார். ஸ்டுடியோவில் எல்லோரிடமும் பிரியா விடை பெற்று, கடைசியாக சரவணன் சாரைப் பார்க்கப் போனேன்.

‘நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டால் நான் அப்போ தும், இப்போதும், எப்போதும் சொல்கிற ஒரே வார்த்தை ‘ஏவி.எம்.சரவணன் அவர்களை’ என்பதுதான். அவர்தான் என் வழிகாட்டி. அவரைப் பார்த்துதான் வெள்ளை உடை அணிந்தேன். லைட் பாய் தொடங்கி தொழிலபதிபர் வரைக்கும் யார் வீட்டு விஷேசம் என்றாலும் கண்டிப்பாக வாழ்த்துச் சொல்ல சென்று வர வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொண்டுதான் இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.

பத்திரிகையாளர்களை, ஊடக நண்பர்களை அவர் மதிக்கும் பாங்கை பார்த்து மதித்து நடக்கிறேன். கோபத்தை தவிர்க்கிறேன். அனைவரிடமும் அன்பு காட்டுகிறேன். இப்படி நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருவரும் அன்று சந்திக்கும்போது ஒருவித ‘சோகம்’. இருவர் கண்களிலும் கண்ணீர்.

‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பின்போது, ‘‘ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேமராவில் என்ன லென்ஸ் போடுவது என்பதை கேமரா மூலம் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயம் டைரக்டர் வியூ ஃபைண்டர் வந்தது. இதில் பார்த்தால்போதும் கேமராவில் பார்க்க வேண்டியதில்லை. அதனை வாங்குமாறு இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தர் அவர்கள் சரவணன் சாரிடம் கூறினார்கள். சரவணன் சார் என்னை அந்தக் கடைக்கு அனுப்பினார். கடையில் இரண்டு வியூ ஃபைண்டர் மட்டுமே இருந் தன. சரவணன் சாரிடம் சொன்னேன். ‘‘அந்த இரண்டையுமே வாங்கி வந்து விடுங்கள்’’ என்றார். வாங்கி வந்தேன்.

அந்த இரண்டில் ஒன்றை இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரிடம் சரவணன் சார் கொடுத்தார். இன்னொன்றை அவரே வைத்துக்கொண்டார். ‘‘நீங்கள் என்றைக்காவது ஒருநாள் இயக்குநராக வருவீங்க என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறி எனக்கு அந்த வியூ ஃபைண்டரை பரிசாக அளித்தார். அத்தனை ஆண்டுகாலம் அதை அவர் எனக்காக பாதுகாத்து வைத்திருந்தார் என்று நினைக்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. நான் இயக்கிய எல்லா படங்களுக்கும் அந்த வியூ ஃபைண்டரைப் பயன்படுத்தினேன். என் லெட்டர் பேடு, முகவரி அட்டை அனைத்திலும் அந்த வியூ ஃபைண்டரைத் தான் முத்திரையாக வைத்திருக்கிறேன். அந்த அடையாளங்கள்தான் சரவணன் சாருக்கு நான் தெரிவிக்கும் நன்றி. எனக்கு சரவணன் சார்தான் பலம்!

அந்தச் சூழலில்தான் வி.சி.குகநாதன் அவர்கள் ‘‘நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வைத்திருக்கிறேன். அந்த ஸ்கிரிப்ட்டை நீங்கள் இயக்குங்கள்’’ என்று வாய்ப்பளித்தார். அவர் எனக்குக் காலத்தினாற் செய்த உதவி அது. அந்தப் படம் ‘கனிமுத்து பாப்பா’. இந்தப் படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி, ஜெயா, குழந்தை நட்சத்திரமாக தேவி நடித்தார்கள். இசையமைப்பாள ராக ராஜு. என் முதல் ஐந்து படங் களுக்குப் பாடல்களை பூவை செங்குட்டு வன்தான் எழுதினார்.

நான் பெரிய படங்களை இயக்குவதற்குச் சென்ற காலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அதில் எனக்கு இப்போதும் வருத்தம்தான். அண்ணா சொன்னதுபோல் சூழ்நிலைக் கைதியாக ஆனதால் அவரைத் தொடர்ந்து பாடல் எழுத வைக்க முடியாமல் போனது. ‘கனிமுத்து பாப்பா’ நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு வெற்றிப் படமாகவும் பெயர் பெற்றது.

சுப்ரமணிய ரெட்டியார்தான் ‘கனி முத்து பாப்பா’ படத்துக்கு நிதி உதவி செய்தார். அவரைப் பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். படங்களைத் தயாரிப் பதற்கு முன் படப்பிடிப்பு நடக்கும் சினிமா ஷூட்டிங்களுக்கு சென்று என்னென்ன செலவுகள் எப்படி ஆகிறது என்பதை கற்றுக்கொண்டவர். கிட்டத்தட்ட 6 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களையே சுற்றி சுற்றி வந்து எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சினிமா தொழிலுக்கு வந்தார்.

என் இரண்டாவது படம் ‘பெத்த மனம் பித்து’. அது பெண்கள் படம். திரையரங்கில் காலை 11 மணி காட்சிக்கு 75 சதவீதம் பெண்கள் இருப்பார்கள். பெண்கள் மத்தியில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். நடிகையர் திலகம் சாவித்ரியின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமா? 100 நாட்கள் ஓடி விழா கொண்டாடப்பட்டது.

ஏவி.எம்.செட்டியார் அவர்கள் தலைமையில், கலைஞர் கருணாநிதி விருது வழங்க 100-வது நாள். விழா மேடையில் ஏவி.எம்.செட்டியார் அவர்கள், ‘‘இந்தப் படத்தை இயக்கிய முத்துராமன் எங்க வீட்டுப் பிள்ளை’’ என்று பாராட்டினார். அடுத்து பேசிய கலைஞர் அவர்கள், ‘‘என்னோட தொண்டருக்கும் தொண்டன் அண்ணன் இராம.சுப்பையாவின் பையன் முத்துராமன். அவர் எங்களுக்குத்தான் முதல் சொந்தம்’’ என்றார். அன்றைக்கு இருவரும் என்னை உரிமை கொண்டாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. படம் 100 நாள் ஓடியதால் எங்கள் குழுவுக்குத் திரையுலகில் நல்ல குழு என்ற பெயர் வந்தது. அடுத்த கட்டம் என்ன?

- இன்னும் படம் பார்ப்போம்...

chinnakkannan
4th November 2015, 02:10 PM
என்னவோய் கல்ப்ஸ் யாருன்னா கேட்டீர்.. அந்த நடிகை யாருன்னு ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரின்னா கேட்டீர் .. இப்போ கல்ப்ஸ்ன்னு பேறெல்லாம் தெரியர்தே

ஓய் நீர் சொன்னதுக்கப்புறம் தானே சொன்னேன்.. நீர் தானே எனக்குச் சொன்னது ம்ம்

chinnakkannan
4th November 2015, 02:13 PM
இந்தக் 'கர்ணன் எவ்வளவு கொடுக்க' நினைத்தாலும் தடையுள்ளதே..


As per the wish of Mr VR sir we can remove Mr C K from the post so that everyone will enjoy the Karnan series without

any cut.[/QUOTE]

ஹை.. அஸ்கு புஸ்கு.. போஸ்ட் நீங்களா கொடுப்பீங்களாம்.. அப்புறம் எடுத்துக்குவீங்களாம்..ம்ஹ்ஹூம் முடியாத்.. (பெரிய கத்திரியா வச்சுருக்கேன்..மொதமொத போஸ்ட் போடறதுக்கு முன்னாடி எனக்கு அனுப்பிச்சா - நான் (மட்டும்) பார்த்து அப்புறம் வெட்டுவேன் :)

yoyisohuni
4th November 2015, 02:58 PM
nangooram padathil super paatu

aboorva paadal padangalin serppilirundhu. kathai surukkam irundhaal ittu nirappungal.

https://www.youtube.com/watch?v=3X1Lm4mz28Y

JamesFague
4th November 2015, 03:06 PM
Mr C K

Thangal sitham Engal Bakkiyam. Enjoy.

chinnakkannan
4th November 2015, 05:28 PM
ரெண்டு பேருமே வாஸ்ஸூக்குப் பிடிக்கும்.. அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.. நாராயண நாராயண :)

*

முக நூலில் படித்தது : பரிசல் காரன் என்பவரின் இடுகையிலிருந்து :

சூப்பர் சிங்கர் போட்டிக்கு சென்ற வாரம் ஒரு பிரபல பாடகி வந்திருந்தார். அவர் இனிஷியல் எல்.ஆர். என்பது உங்களுக்கான க்ளூ. அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு அவர் பெயர் ஈ-யில் ஆரம்பித்து ரி-யில் முடியும் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது.

(கண்டுபிடிச்சு, “அவங்க எனக்குப் பிடிச்சவங்க.. எப்படி நீ அவங்களை விமர்சிக்கலாம்”னு என்னைத் திட்டீட்டீங்கன்னா..?)
சிறப்பு விருந்தினராக வந்த அவர், பாடிய போட்டியாளர்களைப் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார். ‘நல்லாத்தான் பாடற தம்பி.. ஆனா...’ என்று அவர் ஆரம்பித்தாலே போட்டியாளர்கள் முகம் சுண்ட ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் மனோ தாங்கமுடியாமல், ‘அம்மா.. நீங்க உங்க அளவுக்கு பெர்ஃபெக்*ஷனை இவங்ககிட்ட எதிர்பார்த்தா..’ என்று நாசூக்காக சொல்ல, அவரும் சளைக்காமல், ‘என் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல..’ என்று அதற்கும் பிரசங்கம் கொடுத்தார்.

**
இந்த வாரம் சிறப்பு விருந்தினராய், வேறொரு பாடகர் வந்தார். அவரும் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தான் செய்தார். சிரித்துக் கொண்டே இந்திந்த தப்பு பண்ணீருக்கீங்க என்கிறார்.

சாண்ட்விச் போல, போட்டியாளர் பாடி முடித்ததும், பாராட்டில் ஆரம்பித்து - பாராட்டில் முடிக்கிறார். நடுவில் பட்டும்படாமல், ஆனால் அழுத்தமாக குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

அவர் என்ன சொன்னாலும், போட்டியாளர்கள் முகத்தில் அவ்வளவு ஒரு பிரகாசம். (நம் முகத்திலும்தான்)

’என்னா எக்ஸ்ப்ரஷன் தம்பி..”, ’என்னை விட பெட்டரா பாடிருக்கீங்க தம்பி’ என்றெல்லாம் சொல்கிறார். போதாதற்கு ஒரு போட்டியாளரிடம், ‘எனக்கு மட்டும் உங்க குரல் இருந்திருந்தா, நான் எங்கயோ போயிருப்பேன்’ என்றாரே பார்க்கலாம். எத்தனை எத்தனை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மனுஷன் என்று நினைத்துக் கொண்டேன்.

பேர் ஏதோ.. எஸ். பி. பாலசுப்ரமணியம் என்று பேசிக் கொண்டார்கள்.

லவ் யூ மேன்!!!!

**

சி.க சொல்வது : நான் சூப்பர் சிஙக்ர் பார்த்தே ரொம்ப நாளாச்சு..

abkhlabhi
4th November 2015, 06:10 PM
வர்ணணை திலகமே,

தங்களின் பாடல்களின் வர்ணணையை பற்றி என்ன வென்று சொல்வது. உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை .
பாட்டுக்கு ஒரு படகோட்டி என்று சொல்வதுண்டு . "பா" வுக்கு "ப " என்பதாலோ . என்னுடைய அப்பிப்ராயம் , பாட்டுக்கு ஒரு உ உ வா என்று தான் சொல்வேன். 40 வருடங்கள் ஆன பிறகும் , பாடல்கள் சிரஞ்சீவியாக இருக்கின்றன.

மாதமோ ஆவணி பாடலை தான் எல்லோருடைய first choice. என்னுடைய choice - "காதல் காதல் என்று"

மனம் பாரமாக, மனநிலை தெளிவாக இல்லாத பொது, இந்த படத்தில் வரும் நாகேஷ் - ரமா - தே.சி நகைசுவை காட்சிகளை , அவர்கள் பேசும் வசனங்களை, நானே பேசுவது போல் பேசி கொள்வேன் (மனதில்).

என்னுடைய மொபைலில் , இந்த படத்தில் ஒலி - ஒளி இரண்டும் உள்ளன.

திரு. ராகவேந்திரா , எழுதியது போல் ....தங்களுக்கு பாராட்ட சொல்வதற்கும் எங்களுக்கு நீங்களே பாடம் எடுத்து விடுங்கள். மொழியில் வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறோம்.



உன்னை தொடுவது இனியது பாடலின் இசை , கலாட்டா கல்யாணம் பட தலைப்பில் வரும் .

chinnakkannan
4th November 2015, 10:26 PM
பெண்ணுக்கு சுகம் என்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும் நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ.. ரொம்பகஷ்டப் பட்டு மெட்டுக்குப் பாட்டு எழுதியிருக்காங்கன்னு நினைக்கேன் :)

லத்து ஓகே..ரவி..ஒல்லி.. ஏதோ ஒண்ணு இடிக்குது

https://youtu.be/U4I2yH0cQiY

rajraj
5th November 2015, 12:35 AM
From ThiruneelakaNtar(1939)

Deena karuNakarane nataraja neelakaNtane.....

http://www.youtube.com/watch?v=eZwQrnUZF8Q

vasudevan31355
5th November 2015, 08:11 AM
பாலா சார்!

என்ன ஆச்சர்யம்! நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு நாட்களாகி விட்டது தங்களுடன் பேசி மகிழ்ந்து. மதுர கானங்களை தாங்களும் படித்து வருகிறீர்கள் என்பதை நினைக்கும் போது பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நடிகர் திலகம் திரியில் கூட தாங்கள் தென்படுவதில்லை. அப்போதெல்லாம் எவ்வளவு அபூர்வமான தகவல்களை, சுட்டிகளை தாங்கள் தருவீர்கள்! மறக்க முடியாத காலங்கள்.

தங்களின் அன்புப் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி! 'உத்தரவின்றி உள்ளே வா' படமும், பாடல்களும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை உங்கள் பதிவின் மூலமும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

உண்மைதான். 'கலாட்டா கல்யாணம்' படத்தின் டைட்டிலில் 'உன்னை தொடுவது இனியது' பாடலின் இசை முன்னமேயே ஒலித்து விடும். (கதை கோபு-ஸ்ரீதர் என்று போடும் போது) அதுவும் ஆரம்பத்தில் விசில் ஒலியில். இதை மறக்காமல் நினைவு வைத்திருக்கும் தங்களைப் போன்ற ஜாம்பவான்களின் கீழ் பணி புரிவது நிச்சயம் பெருமைப்படத்தக்க ஒன்று.

தாங்கள் நடிகர் திலகம் திரியிலும், அதே போல மதுர கானங்கள் திரியிலும் இனி தவறாமல் பங்கு கொண்டு பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

vasudevan31355
5th November 2015, 08:15 AM
காட்டுப் பூச்சி சார்,

நங்கூரம் படத்தின் 'ஒரு பார்வை பார்க்கும் போது' அபூர்வ பாடலுக்கு நன்றி! பாலா பதிவிலும் இந்தப் பாடல் வரும். நீங்கள், பாலா சார் மதுர கானங்களில் வந்து பங்கு கொள்வது அளவில்லா ஆனந்ததைத் தருகிறது. விரைவில் 'நங்கூரம்' பட கதை சுருக்கம் தர முயற்சிக்கிறேன். தொடர்ந்து மதுரகானங்களில் பங்கு கொண்டு சிறப்பித்து தர வேண்டுகிறேன்.

vasudevan31355
5th November 2015, 08:16 AM
மதுர கானங்களில் பங்கு கொண்டு பெருமைப்படுத்தும் பாலா சார், காட்டுப் பூச்சி சார் இருவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

vasudevan31355
5th November 2015, 08:24 AM
சின்னா!

ரொம்ப நன்றி! இன்னும் கஷ்டப்பட வேண்டும். நல்ல நல்ல பதிவுகளை கொடுக்க வேண்டும்.

என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்? பாலா, ஈஸ்வரி இருவருமே என்னை மிகவும் பாதித்தவர்கள். ஈஸ்வரியின் அதீத ஈடுபாடு, பெர்பெக்ஷன் அவரை மிகவும் எதிர்பார்க்க வைக்கிறது. எனக்கு பெர்பெக்ஷன் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அதற்கு என்னுடைய பதில் சின்னா! ஹய்! சின்னா புரிஞ்சுண்டு சிரிப்பது தெரியுது. நாங்க வுட்டுக் கொடுத்திடுவோமா?

கல்ப்ஸ் பத்தி பத்தி பத்தியா முந்தைய பாகங்களில் போட்டாச்சே! மறந்தாச்சா!

'பெண்ணுக்கு சுகம்' என்பதும் சுகமே.

//பார்த்து அப்புறம் வெட்டுவேன்//

நாங்களும் வெட்டுவோமில்ல.:)

vasudevan31355
5th November 2015, 08:26 AM
//நிஜ வாழ்க்கையில் சரத்பாபு வில்லனாயிட்டார் சார். ரமாவின் அத்தனை சொத்தும் சரத்திடம்//

ஜி! கொஞ்சம் டீடெயில் ப்ளீஸ். ஆர்வமாய் இருக்கு.

vasudevan31355
5th November 2015, 08:40 AM
ஆனால் அந்த மலரைப் போன்ற பாட்டு அந்தக் காலத்து தேசிய கீதமாக இருந்தது.... நினைவுக்கு வருதே!....
இன்னும் கூட அந்த ஃபீலிங்ஸ்...யெஸ்.... அந்த ஃபீலிங்ஸை மிஞ்ச வேற பாட்டு கிடையாது. ! ரவி அண்ட் டி.எம்.எஸ் ராக்ஸ் ! இன்னமும் !

நிஜம்தான் மது அண்ணா!

'Stop' பண்ணவே மனமில்லாமல் 'Listen' பண்ணிக் கொண்டே proceed செய்து கொண்டிருக்கும் பாடல்.

அடடா! என்ன மாதிரி பாடல். முடிக்கும் போது 'லால்லால்லா லலலா.... லால்லலா லலலா' என்று முடிப்பாரே..ஐயோ!

'ஒருமுறை தவறினால் மறுவழி இல்லையே' முடிந்தவுடன் வரும் அந்த 'டக் டக் டக் டடூட்டு' உருட்டல் உற்சாகம்.

ரவியின் ஷர்ட் டிசைன் டாப். ஆயிரத்தில் ஒரு பாடல்.


https://youtu.be/a__fbcTyXqI

rajeshkrv
5th November 2015, 08:45 AM
//நிஜ வாழ்க்கையில் சரத்பாபு வில்லனாயிட்டார் சார். ரமாவின் அத்தனை சொத்தும் சரத்திடம்//

ஜி! கொஞ்சம் டீடெயில் ப்ளீஸ். ஆர்வமாய் இருக்கு.

அதாவது ரமாபிரபா சம்பாதித்ததெல்லாம் சரத்தின் கையில்..
மீண்டும் நடிக்க வந்த காரணம் சரத் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டதால்.
சரத் எப்பவும் கேளியும் உல்லாசமாகவும் இருந்தார் இருக்கார் ... :)

vasudevan31355
5th November 2015, 08:57 AM
RamaPrabha face to face


https://youtu.be/PcFuVaYwArw

vasudevan31355
5th November 2015, 09:01 AM
விமானத்தில் வித்தியாசமாக சுவாரஸ்யமான பேட்டி.


https://youtu.be/CrDuT9XlVpA

rajeshkrv
5th November 2015, 09:24 AM
ஆர் கேவுடன் ஆம் நான் முன்பே பார்த்துள்ளேன் ந்ல்ல பேட்டி

vasudevan31355
5th November 2015, 09:52 AM
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.

குறுந்தொடர் 3

http://i.ytimg.com/vi/i1R9yh1s2W8/hqdefault.jpg

http://i.ytimg.com/vi/oU3QABINtYM/sddefault.jpg

விஜயலலிதா இடுப்பில் பாங்கோஸ் வளையங்களை வைத்துக் கட்டி , ரிப்பன் டிரெஸ் உடுத்த விட்டு, உச்சந்தலை ஜடை பின்னலில் அவரை ஜெயசங்கர் கொள்ளைத் தலைவரின் மேற்பார்வையில் சூப்பராக ஆட வைத்திருப்பார் கர்ணன். அவர் காலம் என்றைக்கும் வெல்லும்.:)

ஈஸ்வரி வழக்கம் போல வெல்லுவார்.

உதடுகளை நாக்கால் வழித்து, கண்களால் அப்படியே சொக்கி செருக வைக்கும் கலையில் கை தேர்ந்தவர் விஜி. 'அஞ்சல் பெட்டி 520' 'ஆதி மனிதன்' பாடல் போல மறுபடி இதிலும் ஆதிவாசி டிரெஸ் வரும். சகுந்தலை போல கைகளில் பூ வளையங்கள்...கழுத்தில் மல்லிகைப் பூ பிளாஸ்டிக் மாலை. கர்ணனின் கொடுத்த வைத்த தொப்பி அணிந்த அடியாள் கும்பல்கள் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகள் செய்த நேரம் போக மீதி நேரங்களில் அடிபணிந்து அமர்ந்து இந்த மாதிரி ஆட்டம் பார்க்கும்.:) இவர்கள் பண்ணும் சேட்டைகளை, கோமாளித்தனங்களை கர்ணனின் காமெரா நடுநடுவில் கவ்வும்.

'ஆம்பல் ஆம்பல்... வௌவல் வௌவல்' மாளிகை போன்ற பிரம்மாண்டமான அரங்கில் ஜெய் ஏன் கம்பளிப்போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆட்டம் பார்க்கிறார் என்று தெரியவில்லை. கூட்டத் தலைவர் என்றால் பயத்தில் குளிர் நடுக்கம் வந்து விடும் போல.:)

சிலந்திக் கூடு வளையங்கள் போன்ற செட்களின் மத்தியில் எப்படியெல்லாம் காமெராவின் லென்ஸ் எப்படியெல்லாம் சுழலுகிறது! முடியை விரித்து சைடில் முடிக்கற்றைகளுக்கிடையே விஜியின் முகத்தை கர்ணன் காமெராவில் காண்பிப்பது கொள்ளை அழகு.

ஈஸ்வரியின் ஈடு இணையில்லா குரல் வளம். பாங்கோஸ்களை உருட்டி விளையாடும் சங்கர்-கணேஷ். வண்ணத்தை விட கருப்பு வெள்ளையில் அழகாகத் தெரியும் விஜயலலிதா. சுழன்று சுழன்று பல்வேறு வித்தைகள் புரியும் காமெரா என்று

காலத்தை வென்ற பாடல்.:)

பெண்ணொரு கண்ணாடி
பார் கொல்லுது முன்னாடி
பாலைப் போலே தேகம்
அந்த தேகம் காதல் ராகம்
பாடச் சொல்வேன் உன்னை
பாடிட வேண்டும் என்னை

ரம் ரம்மா... ஜின்ஜின்னா
ரம் ரம்மா... ஜின்ஜின்னா

உள்ளங்கையில் ரேகை என்ன பார்த்துவிடு பார்த்துவிடு
ஒன்றுக்கொன்று சொந்தமுண்டா சொல்லி விடு சொல்லிவிடு
எனக்கென்ன ராசி உனக்கென்ன ராசி
இருவரும் கலந்தால் கைராசி

நிஜமாகே 'ரம்'மான 'ஜின்' பாடல்தான்.

சின்னா! 'ரம்' பாடலாச்சா! குளிருக்கு இதமாதான் இருக்கு.:) அதுக்காக ஜெய் மாதிரி கம்பளி போர்த்திக்காதீங்க.

அப்புறம் இதுல என்ன சென்ஸார் பண்ணுவீங்க?:)


https://youtu.be/LSNZdo8E1i4

rajeshkrv
5th November 2015, 09:58 AM
விஜி சூப்பர் ஜி

vasudevan31355
5th November 2015, 10:31 AM
மதுண்ணா! சின்னா! ஜி!

subject to change:)

எம்.ஜி.ஆர் அவர்களின் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் அவரின் ஒரு சில அதிகம் புகழ் பெறாத பாடல்களும் உண்டு. இந்தப் பாடல்களும் கொஞ்சமும் சுவை குன்றாதவை. அந்த மாதிரி பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.

சுறுசுறுப்பாக எம்.ஜி.ஆரை அதிகம் அங்கும் இங்கும் ஓட விடாமல் அவரை கட்டிப்போட்ட கெட்டிப் பாடல். அடக்கியே வாசிக்க வைக்கப்பட்டிருப்பார். பல்லவிக்கும், சரணங்களுக்குமான இடையிசை ஓஹோ! மாமா கெட்டி.

மேடத்தின் 'முகராசி' ஓஹோ! கொள்ளை அழகு.

டி எம்.எஸ், சுசீலாவின் கிரேட் ஜாப்.

சுசீலா அமைதியாக விட்டுவிட்டு எடுக்கும் அந்த

'என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகு...மோ'

பல்லவி வரி பலே பலே ஜோர். திரும்ப திரும்ப காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கும் பலம் வாய்ந்தது.

'ஹோ'!

மறுபடி மறுபடி கேட்டாலும் தாளாத இன்பங்கள் தொடர்ந்து உண்டாகுதே!

பாடலின் முடிவில்

'சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ'

என்று கண்கள் சொக்கி மெய்மறந்த நிலையில் மேடம் பாடும்போது ஜெயாவின் தோள்பட்டையில் கண்மூடி முகம் புதைத்திருக்கும் எம்.ஜி.ஆர் அது படப்பிடிப்பு என்பதையும் சற்றே மறந்து அந்தப் பாடலின் வரிகளை, அதற்கான இசையை தன்னையறியாமல் லயித்து, ரசித்து, தலையாட்டி

'கொண்டாடுமோ' வில்

'மோ' என்ற வார்த்தையை மனம் மயங்கி மேடத்துடனேயே சத்தமில்லாமல் உச்சரிப்பது கண்கூடாகத் தெரியும். நல்ல ரசனைக்காரர். நீங்களே பாருங்கள்.


https://youtu.be/QDvz7NXSVbQ

vasudevan31355
5th November 2015, 10:48 AM
'காலம் வெல்லும்' படப் பாடலின் கெட் -அப் போலவே 'அஞ்சல் பெட்டி 520' பட

'ஆதி மனிதன்
காதல் புரிந்தான்
ஆடை அணிந்தான்
ஜாடை புரிந்தான்'

பாடலின் கெட்-அப்பில் விஜி.

https://i.ytimg.com/vi/gq47se5z-YI/hqdefault.jpg

பாடலின் ஆரம்பத்தில், முடிவில் ஒலிக்கும் பியானோ இசை புகழ் பெற்ற வேறு ஒரு பாடலில் அப்படியே வரும்.:).சின்னா! எஸ்கேப் ஆக முடியாது.:)


https://youtu.be/fEki02P3ys4

vasudevan31355
5th November 2015, 11:09 AM
பாலா சார், சரியாக சொன்னீர்கள்.

மெல்லிசை மன்னர் இதுபோன்ற விஷயங்களில் சமர்த்தர். பாலாஜி தயாரித்த 'சுஜாதா' படத்தின் "நீ வருவாயென நானிருந்தேன்" பாடலின் ட்யூனை அதற்கு ஓராண்டு முன்பே வந்த நமது 'ரத்தபாசம்' படத்தின் டைட்டில் இசையாக தந்திருப்பார்.

அதுபோல மன்மதலீலை படத்தின் "மன்மத லீலை மயக்குது ஆளை" பாடல் ட்யூனை அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் வந்த நமது தங்கப்பதக்கம் படத்தின் தீம் மியூசிக்காக தந்திருப்பார்.

https://pbs.twimg.com/media/Bn8vlaDIgAAykiP.png

madhu
5th November 2015, 07:01 PM
பாடலின் ஆரம்பத்தில், முடிவில் ஒலிக்கும் பியானோ இசை புகழ் பெற்ற வேறு ஒரு பாடலில் அப்படியே வரும்.:).சின்னா! எஸ்கேப் ஆக முடியாது.:)


எந்தப் பாட்டுன்னு தெரியலியே... ! ஒரு வேளை என் அங்கிளுக்கு தெரிஞ்சிருக்கலாம்..

chinnakkannan
5th November 2015, 09:29 PM
//மறுபடி மறுபடி கேட்டாலும் தாளாத இன்பங்கள் தொடர்ந்து உண்டாகுதே!

பாடலின் முடிவில்

'சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ'

என்று கண்கள் சொக்கி மெய்மறந்த நிலையில் மேடம் பாடும்போது ஜெயாவின் தோள்பட்டையில் கண்மூடி முகம் புதைத்திருக்கும் எம்.ஜி.ஆர் அது படப்பிடிப்பு என்பதையும் சற்றே மறந்து அந்தப் பாடலின் வரிகளை, அதற்கான இசையை தன்னையறியாமல் லயித்து, ரசித்து, தலையாட்டி

'கொண்டாடுமோ' வில்

'மோ' என்ற வார்த்தையை மனம் மயங்கி மேடத்துடனேயே சத்தமில்லாமல் உச்சரிப்பது கண்கூடாகத் தெரியும். நல்ல ரசனைக்காரர். நீங்களே பாருங்கள். //

வாசு.. தூள்.. இந்தப் பாட் எனக்கும் பிடித்த ஒன்று..பட்.. இதை இங்கு போட்டாச்சா இல்லையான்னு தெரியாம லிங்க் எடுத்து வச்ச்ருந்து அப்படியே மறந்தும் விட்டேன்.. அதுவும் நன்மைக்கே.. நீங்க ரசிச்சா என்ன நான் ரசிச்சா என்ன :) நைஸ்.. இதுல பாருங்க.. இன்னொரு பாட் டும் இந்த டைப் ஃபேமஸா இல்லியான்னு தெரியாது.. நானும் அவ்வளவாக க் கேட்டிராத ஆனால் இளமை இளமை ம.தி சர்ரூ நன்னாவே ஆடவும் பாடவும் செய்றாங்க..

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உங்கள் கைகளில் வரவும் வேண்டுமா..

மெளத் ஆர்கன் ஒலி.. மிக அழகு...

https://youtu.be/l3-cs57NsRg?list=PLuUMhbxM7Kq0Ew0cLOTJebRKB7Wyxz4i9

ஆசைகள் தொடங்கும் நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்… மஞ்சத்திலே..

மாந்தளிர் மேனி என்னருகே..
மன்னவன் தோள்கள் என்னருகே (

(ம்ம் இந்த மாதிரி நாசூக்கான வரிகள் தான் என் காதுல விழுது.. நான் என்ன பண்ணுவேன் :) )

chinnakkannan
5th November 2015, 10:09 PM
எதையோ தேடித் துழாவினா இந்தப் பாட் (போட்டாச்சில்லைன்னா என்னோட லக்) கிடைச்சது..

ராசாவீட்டுப்பிள்ளை – ஜெய் – ஜெயலலிதா..

நல்லாத் தான் இருக்கு..உடனே வரிகளை டைப்பினேன்..
*

ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா

ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா..
( அப்ப படத்துல ஹீரோ பேரு ராஜா ஹீரோயின் பேரு மீனா சரிதானே)

குங்குமச் சிவப்புக் கன்னத்திலே ஒரு கோலம் வரையட்டுமா (ரொம்பக் குட்டியா இருக்குமோ..எத்தனை புள்ளி)

இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்குக் கோவில் எழுப்பட்டுமா.. (இப்பத் தாங்க புரியுது.. பிற்காலத்துல ஏன் ஒரு நடிகைக்கு கோவில் வந்ததுன்னு…இந்தப் பாட்டு பார்த்து இன்ஸ்பயர் ஆகி இருக்கணும்ம்..)

அத்தை மகனுக்குப் பள்ளி கொள்ள ஒரு மெத்தை விரிக்கட்டுமா (அதுக்கெதுக்கு இவ்வளவு ராகம் இழுக்கணும்)
அவன் சந்தனமேனி சொந்தம் கொண்டாட விட்டுக்கொடுக்கட்டுமா..( ஓஹோ)

பருவத்தின் பாட்டுக்குமுதன் முதலாகப் பல்லவி சொல்லட்டுமா
அந்தப் பல்லவி சொன்ன நல்லவர்கைகளில் சரணம் ஆகட்டுமா (ஆஹா என்னா சிலேடை)

தென்றல் காற்றே தென்னங்கீற்றே
இன்னும் ஏனடி அச்சம்
அச்சம் என்பது பெண்மை மறந்தால் என்ன இருக்கும் மிச்சம் (அதுஞ்சரிதேன்)

ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா(ஹச்சோ கார் பின்னாடியே போகுது..பாருங்க ப்ரதர்..):)

https://youtu.be/7EFD3fqh91w

RAGHAVENDRA
5th November 2015, 10:23 PM
வாசு சார்
ஆதி மனிதன் பாடலில் பியானோ மட்டுமல்ல, அக்கார்டின் அப்படியே மீண்டும் இன்னோர் பாடலில் ஒலிக்கிறது...
ஆனால் வேறு தாள கதியில்...

ஒரு க்ளூ.. அது ரயிலில் பாடும் பாட்டு...

RAGHAVENDRA
5th November 2015, 10:28 PM
பெண் ஒரு கண்ணாடி பாடலில், சொல்லப்போனால் சங்கர் கணேஷ் இசையமைத்த இது போன்ற பல பாடல்களில், முக்கிய இடம் பெற்ற இசைக்கருவி,

http://www.kohnmusicstore.com/trombone.jpg

TROMBONE

இந்த இசைக்கருவியை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்றால், உயர்ந்த மனிதன் படத்தில் என் கேள்விக்கென்ன பதில் பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும்.

ஒரு ஆர்க்கெஸ்ட்ராவின் Brass Section எனப் படும் பிரிவில் இது இடம் பெறும். ட்ரம்பெட், சாக்ஸஃபோன் போன்ற இசைக்கருவிகள் இதில் அடங்கும்.

rajeshkrv
5th November 2015, 10:42 PM
பெண் ஒரு கண்ணாடி பாடலில், சொல்லப்போனால் சங்கர் கணேஷ் இசையமைத்த இது போன்ற பல பாடல்களில், முக்கிய இடம் பெற்ற இசைக்கருவி,

http://www.kohnmusicstore.com/trombone.jpg

TROMBONE

இந்த இசைக்கருவியை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்றால், உயர்ந்த மனிதன் படத்தில் என் கேள்விக்கென்ன பதில் பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும்.

ஒரு ஆர்க்கெஸ்ட்ராவின் Brass Section எனப் படும் பிரிவில் இது இடம் பெறும். ட்ரம்பெட், சாக்ஸஃபோன் போன்ற இசைக்கருவிகள் இதில் அடங்கும்.

raghavji super

chinnakkannan
5th November 2015, 11:17 PM
//பாடலின் ஆரம்பத்தில், முடிவில் ஒலிக்கும் பியானோ இசை புகழ் பெற்ற வேறு ஒரு பாடலில் அப்படியே வரும்..சின்னா! எஸ்கேப் ஆக முடியாது// ஹச்சோ தெரியலையே.. ராகவேந்திரர் வேற சஸ்பென்ஸ் கூட்டறாரு..நான் இந்த விஷயத்திலெல்லாம் அப்பாவிக் குட்டிக் கண்ணன்...

chinnakkannan
5th November 2015, 11:19 PM
//என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்? பாலா, ஈஸ்வரி இருவருமே என்னை மிகவும் பாதித்தவர்கள். ஈஸ்வரியின் அதீத ஈடுபாடு, பெர்பெக்ஷன் அவரை மிகவும் எதிர்பார்க்க வைக்கிறது. எனக்கு பெர்பெக்ஷன் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அதற்கு என்னுடைய பதில் சின்னா! ஹய்! சின்னா புரிஞ்சுண்டு சிரிப்பது தெரியுது. நாங்க வுட்டுக் கொடுத்திடுவோமா? // ஹய்..இப்படியெல்லாம்கூட எஸ்ஸ்கேப் பண்ணலாமாங்காட்டியும்.. இப்போ என்னோட ஹோம்வொர்க் ரிவர்ஸ்ல போய்க்கிட்டிருக்கு..இனிமே தான் கா.வெ பாக்கணும் :)

chinnakkannan
5th November 2015, 11:28 PM
//சிலந்திக் கூடு வளையங்கள் போன்ற செட்களின் மத்தியில் எப்படியெல்லாம் காமெராவின் லென்ஸ் எப்படியெல்லாம் சுழலுகிறது! முடியை விரித்து சைடில் முடிக்கற்றைகளுக்கிடையே விஜியின் முகத்தை கர்ணன் காமெராவில் காண்பிப்பது கொள்ளை அழகு. // சொன்னாற்போலவே அழகு தான்..சொல்லாமலேயே பாதித்தூக்கத்தில் கூந்தலைத் தடவி..ன்னு வரிகள் நினைவுக்கு வருது..

ம்ம் வெட்டுறதுன்னா அந்தக் கண்ணாடியத் தான்வெட்டணும்.. :) படம் லோ பட்ஜெட்டா என்ன..துணில்லாம் கிழிஞ்சிருக்கு.. :) தாங்க்ஸ்ங்க்ணா..

chinnakkannan
5th November 2015, 11:36 PM
ஜூகல் பந்தி...

முதலில் வேகம் பின் மெது மறுபடி வேகம்..

ராக் அண்ட் ரோல்

https://youtu.be/56vqU9lnxF8?list=RDa63IlNFGip8


முதலில் மெதுவாய் மெலடி பின் வேகம்..பின் மெலடி

இளமை நாட்டியச் சாலை...

https://youtu.be/z_RhVGxJheY

chinnakkannan
5th November 2015, 11:48 PM
ரொம்ப நாளாச்சு ஈ பாட் கேட்டு..

அஹ அஹ ஹஹஹ்ஹா அஹஹ ஹஹஹா.. எல்.ஆர்.ஈ ஹம்ம்மிங்க்..

பார்வை ஒன்றே போதுமா..பல்லாயிரம் சொல் வேண்டுமா..( பாவம் பாட் முடிஞ்சதும் பொண் (ப்ரேமா தானே..புதுமுகம் தானே.. சொல்லப் போறீங்க தானே :) ) பரிதாபமாச் செத்துப்பூடும்..

ஆனாக்க அன்றும் இன்றும் ஹிட்

https://youtu.be/DQorDbcR40k

chinnakkannan
6th November 2015, 12:13 AM
தூக்கம் வருது..என்ன பண்ணலாம்..என்னமோ ஒரு நல்ல ஸ்ரீதேவி பாட் கேட்டுட்டுத் தூங்கலாம்..

தேவராகம் மலையாளம்கரிவரி வண்டுகள் ஜெயச்சந்திரன்.. ஸ்ரீ தேவி..

https://youtu.be/51KrHvLc_Bk

rajraj
6th November 2015, 12:34 AM
Fugue

http://www.youtube.com/watch?v=XLH47I9b0a0

rajraj
6th November 2015, 12:39 AM
Trumpet by Al Hirt

http://www.youtube.com/watch?v=advYgQC1mMw

Al Hirt is one of my favorite musicians. Unfortunately my sons did not learn any wind instruments. Just violin, piano and a few other stinged instruments!

rajraj
6th November 2015, 12:44 AM
Trombone

http://www.youtube.com/watch?v=ToIdgjI3u4Q


Have fun ! :)

vasudevan31355
6th November 2015, 09:00 AM
சின்னா!

சூப்பர் கண்ணா! கொடுங்கள் இப்படிக் கையை. குலுக்கி நன்றி சொல்கிறேன்.

'ராஜா வீட்டுப் பிள்ளை' பாடல்கள் என்றால் எனக்கு அப்படி ஒரு கிரேஸ்.

'ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா'

அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்போது இன்னும் பெட்ரோலை ஊற்றுகிறீர்கள்.

'ஏ ...குட்டி....(டொய்ங்....):) ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும்.. ம்.... 'ஹ'...அலட்சிய குரல்களை மறக்க முடியுமா?

டி.எம்.எஸ். சொல்லும் 'தவறுதலாக... தவறுதலாக... தவறுதலாக' தவறிப் போயும் தவற விட்டு விடக் கூடாது.

இதில் பூ விற்கும் பெண்ணாக மேடம் சுட்டித்தனமாக நடித்திருப்பார். ராட்சஸி பாடும் அருமையான பூ விற்கும் பாடல். ஒரு காலத்தில் காரில் பயணிக்கும் போது இதனைப் பாடலையே திரும்பத் திரும்பப் போட்டு பயணிக்கும் மற்றவர்களின் எரிச்சலையும், கோபத்தையும் வாங்கிக் கட்டிக் கொண்டதுண்டு.

அப்புறம் திட்டியவர்களை விட்டு விடுவோமா?:) பதிலுக்கு '...தெரியுமா கற்பூர ......?' என்று காய்ந்து விடுவதும் உண்டு. ஈஸ்வரி பாட்டை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் 'பொசுக்'கென்று கோபம் வந்து விடும். அதுவும் பாதியில் நிறுத்திவிட்டால் ரண தாண்டவமே ஆடி விடுவேன். பாவம் எங்க சொந்தக்கார மக்கா.:)

அரும்பாய் இருந்தது நேத்து
இது அழகா சிரிக்குது பூத்து
வாசன வீசுது வாவென பேசுது
அம்மா உங்களைப் பாத்து

பிச்சிப்பூவு
மல்லிப்பூவு
அல்லிப்பூவு
அரளிப்பூவு
முல்லைப்பூவு
மகிழம்பூவு
தாழம்பூவு
தாமரப்பூவு
செவ்வந்திப் பூ
ரோஜாப்பூ
சம்பங்கிப் பூ....வு

("முப்பது பைசா மூணு முழ"த்திற்கு முன்னோடி)

எம்மாடி! ஒரே மூச்சில் இந்த ராட்சஸி பண்ணும் ரகளை தான் அவரிடம் இன்றைய தலைமுறையில் இத்தனை பெர்பெக்ஷனை எதிர்பார்க்க வைக்கிறது. எஸ்.எஸ்.எம் எஸ்ஸின் இசை சுறுசுறுப்பு மிரள வைக்கும் ஈஸ்வரியின் இன்ப அலறலுக்கு ஈடாக.

ராட்சஸி இரண்டாவது சரணம் முடித்து முடிவில் ராட்சஸி தெலுகு டப்பிங் வசன பாணியில்:) சொல்லும்

'ஒஹொ அம்மோய்' தேவாமிர்த டானிக்.

சும்மாவா பேர் வச்சோம்?:)


https://youtu.be/0LeDyRHh7LI

vasudevan31355
6th November 2015, 09:39 AM
சின்னா!

அதே போல 'என்னைக் காதலித்தால்' பாடலும். கிரேட் ஒன். ('ஆசை முகம்' படமே நன்றாக இருக்கும். ராகவேந்திரன் சார் சொல்வது போல நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்ததுண்டு. கோபாலும் நானும் இது பற்றி நிறையப் பேசியதுண்டு)

அவர் வார்த்தைகளைத் தொடங்க... இவர் அதை முடிக்க வாவ்...இன்னா பாட்டு அது!

அதே போல அம்சமா இன்னொன்னு இருக்கே!

'நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா'

'பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா... இல்லை நானா'

இந்த ஒரு வரி போதுங்காணும். போதும். :)


https://youtu.be/_IaUhArhuks

chinnakkannan
6th November 2015, 10:28 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்...:)

//'பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா... இல்லை நானா'

இந்த ஒரு வரி போதுங்காணும். போதும்.// வாஸ்ஸூ.. என்னா பாட்ட்ங்க இது.. வெரி நைஸ்..என் உளங்கவர்ந்த பாட் இது..காலங்கார்த்தால வெள்ளிக்கிழமை லீவ் நாள்ல சமர்த்தா குளிச்சு ஒம்மாச்சி கும்புட்டுட்டு பெரியாழ்வார்கிட்ட கொஞ்சம் பேசிட்டு பார்த்தா இந்தப் பாட்டு..டயட் ப்ரகாரம் என்னோட ப்ரேக்ஃபாஸ்ட் ஒரு கப் தேங்காய். சாப்பிட்டுக்கிட்டே கேட்டேன்..கேட்டுக்கிட்டே சாப்பிட்டேன் ( ரெண்டும் ஒண்ணு தானோ.. கொஞ்சம்மெல்லிய கோடு இருக்காக்கும் :) ) ஆனா இப்போ மறுபடி பசிக்குது :)

அதே மாதிரி அந்த பூப் பாட்டும் நைஸ். தாங்க்ஸ்.. முன்னாடி ரொம்ப காலம் முன்னாடி கேட்டிருக்கேன்..

ம.தி பாட்ல இன்னும் அவ்வளவா ஃபேமஸான்னு தெரியாது..ம.தியோட ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த ஞாபகம் மனசுக்குள் புகையாய் ( ரொம்ப நாள்க்கப்புறம் யூஸ் பண்றேன் ஆதிராம்!) கதை எல்லாம் நினைவில்லை.. கல்பனா தியேட்டரில் ஒரு மேட்னி ஸ்கூல் போன காலத்தில் அம்மா கூட்டிக்கிட்டுப் போன நினைவு..

சபாஷ் மாப்பிளே..

வாரி முடித்த குழல் எனக்கே தான் சொந்தமென்று
வானத்துக் கார் முகிலும் சொல்லுதே..

மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாமே துள்ளுதே..

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது..

வண்ண மலர் என்றும் வண்டுக்குத் தான் சொந்தம்
வழங்கிடும் மதுவாதான் ஆனந்தம்

தந்தப் பல் எழில்வந்து தன்னினம் தான் என்று
பொங்கும் கடல் முத்துபண் பாடுதே


குங்கும இதழ்கண்டு கோவைக் கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே

கொத்தும் கிளிக்கே தான் கோவைக் கனிசொந்தம்
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது..


சீர்காழி பி.எஸ்.. நல்ல பாட்..

https://youtu.be/DrE38byXnTE

chinnakkannan
6th November 2015, 10:35 AM
இன்னொரு யாருக்கு யார்... அதே ஆசை முகம்

யாருக்கு யார் என்று தெரியாதா (ஆசை முகம் தானே பிற்காலத்தில் ஃபேஸ் ஆஃப் என ஆங்கிலத்தில் வந்தது?!)

திருமண மேடை தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் (அந்தக்கால மூன்று குடை ஜிமிக்கி நல்லா இருக்குங்க்ணா)

ஊரார் வார்த்தை கேட்காமல்
உற்றார் முகத்தைப்பார்க்காமல்
நேராய் நெஞ்சில் நின்றவரே
நினைவால் என்னை வென்றவரே..( சுருட்டை முடி கலையாம இருக்கே.. ஒட்டியிருப்பாங்களோ :) )


https://youtu.be/vkuX2uxrUOs

madhu
6th November 2015, 11:16 AM
ரொம்ப நாளாச்சு ஈ பாட் கேட்டு..
அஹ அஹ ஹஹஹ்ஹா அஹஹ ஹஹஹா.. எல்.ஆர்.ஈ ஹம்ம்மிங்க்..


சிக்கா.... எனக்கு எல்லாம் மறந்து போச்... இந்தப் பாட் மட்டும் நினைவுக்கு வந்த்....

https://www.youtube.com/watch?v=jeNylQThAZ4

rajeshkrv
6th November 2015, 11:17 AM
Aasai mugam .... appaye plastic surgery etc.. nalla padam .. NT nadithirundhal adhu oru madhiri irundhirkkum. MGR too not bad. adhuvum andha Ramdoss turned MGR did so well.

madhu
6th November 2015, 11:33 AM
ஆசை முகம் .... முகமூடி கதை... அழுத்தமான கதையும் கூட... டெலிபோனுக்கு வாசனை பூசும் பெண்ணாக சரோஜாதேவி என்று நினைக்கிறேன்... பசித்தவன் முன்னே பழமாய்.... வாசுஜி... செம ரசனை... :)

சிக்கா.... வாசுஜி மாதிரி விவரமா.. விளக்கமா... வியாசம் எழுதுங்க.. எனக்கும் படித்து ரசிக்க தோதா இருக்கும்.

vasudevan31355
6th November 2015, 11:52 AM
இன்றைய சிறப்புப் பாடல்.

அடுத்தது

மதுண்ணா

ராகவேந்திரன் சார்

இருவருக்கு....இருவருக்கு மட்டுமே ஒரு அரிய, அருமையான, அற்புதமான, ஈடு இணையில்லாத, ஜோரான, வித்தியாசமான, இனிமையான, அமர்க்களமான. சூப்பரான, கலக்கலான இன்னும் என்னென்ன இருக்கோ அவ்வளவும் சேர்த்து ஒரு பாடல். பாடலின் டியூனும், இசையும், குரலும், நடனமும், கோரஸும் வியப்பின் ஆச்சர்யக்குறிகள்.

பாடல் தொடங்கி ஒரு நிமிடம் ஐந்து செகண்டகளுக்கு சாக்ஸ், கிடார், என்று விதவிதமான இசைக்கருவிகளின் ஆதிக்கம்.

அப்படியே ராஜஸ்ரீயின் அமர்க்களமான பாடலுக்கான அறிமுகம். குழுவினருடன் கிளப் டான்ஸ். தம்மடித்து டான்ஸ் பார்க்கும் கனவான் முத்துராமன்.

தொட்டுப்பார்
தொடும்போது இன்பம் இன்பம்
துள்ளாத உள்ளம் துள்ளும்
மலர்ப் போன்ற கன்னம் கன்னம்

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா

மொட்டுப்பார்
புதுத்தேனை சொட்டும் சொட்டும்
உயிர்க்காதல் கிட்டும் கிட்டும்
இளம்பாவை வண்ணம் மின்னும்

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா

சிட்டுப்பார்
புதுப்பாடல் சொல்லும் சொல்லும்
அள்ளும் நெஞ்சை அள்ளும் அள்ளும்
உனக்காக கொஞ்சம் கொஞ்சும்

கண்ணிலே வரும் வெண்ணிலா

தொட்டுப்பார்
தொடும்போது இன்பம் இன்பம்
துள்ளாத உள்ளம் துள்ளும்
மலர்ப் போன்ற கன்னம் கன்னம்

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா

மொட்டுப்பார்
புதுத்தேனை சொட்டும் சொட்டும்
உயிர்க்காதல் கிட்டும் கிட்டும்
இளம்பாவை வண்ணம் மின்னும்

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா


சிட்டுப்பார்
புதுப்பாடல் சொல்லும் சொல்லும்
அள்ளாமல் நெஞ்சை அள்ளும் அள்ளும்
உனக்காக கொஞ்சம் கொஞ்சும்

கண்ணிலே வரும் வெண்ணிலா

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா

கண்ணிலே வரும் வெண்ணிலா

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா

கண்ணிலே வரும் வெண்ணிலா

அடடா! அடடா!

வரிகளின் முடிவில் வரும் வார்த்தைகளை இரண்டு தரம் வித்தியாசமான முறையில் பாடும்போது நாம் நம்வசம் இழந்துவிடவேண்டியதுதான். கடுமையான டியூன். பாடல் வரிகள் பளபளக்கின்றன. 'அம்மா எங்கே? அம்மா எங்கே?' என்று ராஜேஷ்ஜியைக் கேட்கத் தோன்றுகிறது.

ஆண் கோஷ்டியினர் மாறி மாறி இறுதியில் பாடும்,

'கண்ணிலே வரும் வெண்ணிலா

கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா'

சுகங்களின் சொர்க்கம்.

இப்படியெல்லாம் பாட முடியுமா? இப்படியெல்லாம் டியூன் போட முடியுமா? இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா? இப்படியெல்லாம் நடனம் அமைக்க முடியுமா?

ஆச்சரியமே இறுதியில் மிஞ்சுகிறது.

இசைக்கருவிகளுக்கேற்ற அருமையான நடன அசைவுகள். மனதை விட்டு அகலுவேனா என்கிறது இப்பாடல்.

இன்று முழுக்க ஏன் இந்த வாரம் முழுதும் இந்தப் பாடல்தான்.

என்னைப் புரட்டிப் போட்ட பாடல் என்றால் மிகையில்லை.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.:)


https://youtu.be/wcbxlgKTcYA

rajeshkrv
6th November 2015, 12:01 PM
Telephone cleaning lady madhunna

JamesFague
6th November 2015, 12:24 PM
Courtesy:Tamil Hindu

காற்றில் கலந்த இசை 29: அக உலகின் கணணீர் தேசம்




கடந்த காலத் தவறுகளின் நிழல்கள் பின்தொடர, கனத்த மனதுடன் வளையவரும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பழைய நினைவின் ஏதோ ஒரு கீற்றின் ஸ்பரிசமும் கனத்த மனதை உடைந்து வெடிக்கச் செய்துவிடும். அப்படியான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான சில பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் ‘தியாகம்’(1978). வங்காள மொழியிலும் இந்தியிலும் ‘அமானுஷ்’ எனும் பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் வடிவம் இப்படம். பிரதான பாத்திரங்களில் சிவாஜி, லட்சுமி. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடல்சார் வாழ்விடத்தில் நடக்கும் கதை இது. பணக்கார நாயகன், சூழ்ச்சி வலையொன்றில் சிக்கி, குடிகாரனாக மாறிவிட, அவனைக் காதலித்த பெண் கலங்கி நிற்கும் கண்ணீர்க் காவியம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து மொழிகளிலும் அந்தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற இசையை வழங்கியிருந்தார்கள் இசையமைப்பாளர்கள். தமிழ் வடிவத்துக்கு இசை இளையராஜா. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவரது குரலுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ் போன்றவர்களுக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்களின் நவீனத் தன்மையை, டி.எம்.எஸ்.ஸுக்காக அவர் தந்த பாடல்களில் காண முடியாது. மாறாக, எம்.எஸ்.வி. இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் நீட்சியாகவே அப்பாடல்களை இளையராஜா உருவாக்கினார் என்று சொல்லலாம். எனினும், பாடல்களின் மெட்டிலும், நிரவல் இசையிலும் பழமையும் புதுமையும் கலந்த இனிமையைத் தந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘தேன்மல்லிப் பூவே’ பாடல் ஒரு உதாரணம். டி.எம்.எஸ். ஜானகி பாடியது. கடற்கரையோரத் தென்றலின் ஸ்பரிசத்துடன் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில் பூவை மொய்க்கும் வண்டின் ரீங்காரத்தைப் போன்ற புல்லாங்குழலை ஒலிக்க விடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் ‘செல்லோ’ இசை, பிரம்மாண்டமான புல்வெளிப் பரப்பின் மீது திரட்சியான கருமேகங்களின் நகர்வைக் கண்முன் நிறுத்தும். தொடர்ந்து வீணை, வயலின் இசைக் கலவையின் சாம்ராஜ்யம் என்று அற்புதமான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல் இது.

‘வருக எங்கள் தெய்வங்களே’ எனும் குழுப் பாடலில் டி.எம்.எஸ்.ஸுடன் நாகூர் யூசுப், கெளசல்யா போன்றவர்கள் பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ். பாடிய மற்றொரு முக்கியமான பாடல் இப்படத்தில் உண்டு. அது, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ பாடல். செய்யாத குற்றத்துக்காக வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன் தன் மனதின் குமுறல்களை வேதனையுடன் வெளிப்படுத்தும் பாடல் இது. கடல் மேற்பரப்பின் சிற்றலைகளில் மிதந்தபடி செல்லும் படகின் மேல் தளத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பு. மனதின் துயரங்களைக் கடல் காற்றுடன் கரையவிடும் பாடல். டி.எம்.எஸ்.ஸின் மெலிதான் ஹம்மிங்கைத் தொடர்ந்து ஒலிக்கும் குழலோசை, ரணத்தின் மீது வருடிக்கொடுக்கும் மயிலிறகின் மென்மையுடன் ஒலிக்கும்.

சுயஇரக்கமும் தத்துவார்த்த மனநிலையும் கலந்த குரலில் அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். மனதை நெகிழச் செய்யும் வயலின், ஆழ்மனதின் விம்மல்களை வெளிப்படுத்தும் கிட்டார், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் துயர நினைவுகளின் தொகுப்பாக ஒலிக்கும் புல்லாங்குழல் என்று எளிமையான இந்தப் பாடலில் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும். இரண்டாவது நிரவல் இசையில், வயலின் இசைக் கோவைக்கு நடுவே ஒலிக்கும் சாரங்கி ஒரு கணமேனும் கண்ணீரை வரவழைத்துவிடும்.

இப்பாடலின் மிகப் பெரிய பலம் கண்ணதாசன். ‘பறவைகளே பதில் சொல்லுங்கள்.. மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’, ‘தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே… தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ போன்ற வரிகளை கண்ணதாசனைப் போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘வசந்தகால கோலங்கள்’. இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.

முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை!

JamesFague
6th November 2015, 12:28 PM
Courtesy: Tamil Hindu

சூழல் ஒன்று பார்வை இரண்டு: மனிதரின் பொய்முகம்



இப்போதெல்லாம் கிளைமாக்ஸ் சண்டைக்கு முன்பு நாயகனும் நாயகியும் குத்தாட்டம் போடுகிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முந்தைய நாயகர்களோ தன்னந்தனியாகக் கொள்கை விளக்கப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். வில்லனோடு சண்டை போட்டு அடித்துத் துவைப்பதற்கு முன்பு நாயகன் தன்னுடைய செயலுக்கான நியாயத்தை முன்வைப்பதாக இந்தப் பாடல் இருக்கும். வரவிருக்கும் மோதலுக்கான முன்னுரையாக அமைந்து ரசிகர்களைத் தயார்படுத்தும்.

ஏதேனும் ஒரு பொது நிகழ்வில், அல்லது விழாவில் மாறுவேடம் பூண்டு நாயகன் பாடுவார். அல்லது ஒரு கலை நிகழ்ச்சியினூடே பூடகமாகப் பாடுவார். முன்பெல்லாம் அடிக்கடி பார்க்கக்கூடியவையாக இருந்த இந்தப் பாடல்கள் செறிந்த கருத்தும் சிறந்த இசையையும் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட இரண்டு பாடல்களைப் பார்ப்போம்.

இங்கே நாம் காணவிருக்கும் இந்திப் பாடல் இடம்பெற்ற ‘இஜ்ஜத்’ திரைப்படத்தில் ஜெயலலிதா, ஜும்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

திரைப்படம்: இஜ்ஜத் (மாண்பு மரியாதை)

பாடலாசிரியர்: சாஹீர் லுத்யான்வி

பாடியவர்: முகம்மது ரஃபி

இசை: லட்சுமிகாந்த்-பியாரிலால்.

பாடல்:

க்யா மிலியே ஐஸே லோகோன் ஸே

ஜின் கீ ஃபித்ரத் சுப்பீ ரஹே

நக்லீ சேஹரா சாம்னே ஆயே

அஸ்லி சேஹரா சுப்பீ ரஹே

பொருள்:

மனதின் இயல்பு மறைந்து கிடக்கும்

மனிதரால் அடையும் பயன் என்ன?

(அவர்) பொய்மை முகம் புகும் நம் எதிரில்

மெய்மை முகமோ மெல்ல மறையும்

தன்னிடம் இருந்தே தன்னை மறைக்கும்

(அவர் தம்) உண்மை அடையாளம்

உணர்வது எங்கனம்?

எதனால் அவரின் புகழை ஏற்றம் செய்வது

எதை அர்ப்பணித்து இன்பம் அடைவது?

பாதி அவர்தம் குணங்கள் வெளியில்

மீதி குணங்கள் உறங்கும் நெஞ்சில்

உள்ளம் மகிழும் ஓசைகள் இயற்றி

கள்ளம் மிகுந்த பேச்சில் விரிப்பர்

உறவுகள் நீங்கள் என உயர்வாய்க் கூறி

இரவின் மடியில் இன்பம் தேடுவார்

ஆன்மா அழகின் ஆழம் வெளிப்புறம்

மேன்மை உடலின் மிடுக்கு உட்புறம்

ஒவ்வொரு இடமும் ஊரும் மக்களும்

எவரின் ஏய்ப்பால் எய்தினர் துன்பம்

அவர்தாம் அரங்கிலும் வெளியிலும் அமர்ந்து

கருணை, தர்மம் எனக் கதைப்பார் ஐயோ

செய்க தானம் எனச் செப்பும் இவர்

செய்த கொள்ளை உறங்கும் வீட்டில்

பார்ப்போம் எதுவரை இவரின் பொய் முகம்

ஆர்ப்பரிக்கும் முழக்கத்திற்கு ஆட்படும்

அழகை அச்சாரமாக்கும் ஆடையின் துணையுடன்

எதுவரை இக்கள்ள வாழ்க்கை எழுந்து நிற்கும்?

மக்களின் பார்வையில் எதுவரை மறையும்

இக்கணம் வரையில் மறைந்த யதார்த்தம் .

பொய்மை முகம் புகும் நம் எதிரில்

மெய்மை முகமோ மெல்ல மறையும்.

பொய்முகத்துடன் சமுதாயத்தில் உலாவும் நயவஞ்சகர்களைச் சற்றே கடுமையான தொனியில் சாடும் இந்தப் பாடலின் அதே கருத்துக்களைச் சிறிது தத்துவார்த்த தொனியுடன் தருகிறது தமிழ்ப் பாடல். கொள்கைப் பாடல்களில் அழுத்தமான உடல் மொழியை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆர்., வழக்கத்துக்கு மாறாக, மென்மையான உடல் மொழியுடன் இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார். பொய்முகங்களைச் சாடுவதற்குப் பதிலாக, விரக்திப் புன்னகையுடன் நொந்துகொள்ளும் தொனியில் அமைந்த இந்தப் பாடல் கருத்திலும் காட்சி அமைப்பிலும் இன்றும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.

படம்: தாய் சொல்லைத் தட்டாதே (1961)

இசை: கே.வி. மகாதேவன்

பாடியவர்: டி.எம். செளந்தர்ராஜன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடல்:

போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியைக் கொடுத்தானே

அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து

பூமியைக் கெடுத்தானே

மனிதன் பூமியைக் கெடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்

சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்

அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை இறைவன்

பார்வையில் வைத்தானே

புலியின் பார்வையில் வைத்தானே

இந்தப் பாழும் மனிதன் குணங்களை மட்டும்

போர்வையில் மறைத்தானே

இதயப் போர்வையில் மறைத்தானே

கைகளைத் தோளில் போடுகிறான்

அதைக் கருணை என்று அவன் கூறுகிறான்

பைகளில் எதையோ தேடுகிறான்

கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியை கொடுத்தானே

JamesFague
6th November 2015, 12:33 PM
Courtesy: Tamil Hindu


சிறப்புக் கண்ணோட்டம்: இது திவாகர் தீபாவளி!



அவ்வப்போது முழுநீள நகைச்சுவைப் படங்களை எழுதி நடித்தாலும், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் புதிய புதிய கதைக் களங்களில் விறுவிறுப்பான டெஸ்ட் மேட்ச் ஆடுவது கமலின் தனித்துவம். தீபாவளிப் பரிசாக கமல் தனது ரசிகர்களுக்குத் தரும் ‘தூங்காவனம்' படமும் அந்த வரிசையில்தான் வருகிறது. 2011-ல் வெளியான ‘ஸ்லீப்லஸ் நைட்' என்ற பிரெஞ்சு படத்தின் மறு ஆக்கம் என்று படக் குழு வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும் இது அந்தப் படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்கா என்பது இதுவரை தெரியவில்லை.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ‘திவாகர்’ என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல். மனைவியைப் பிரிந்து தனது 14 வயது மகனுடன் வாழ்கிறார். எதிர்பாராமல் அவரிடம் சிக்குகிறது பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பை ஒன்று. அதைத் தனது அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று முதல் தகவல் அறிக்கையைத் தயார்செய்யத் தனது இருக்கையில் அமரும்போது ஒரு போன். போதை மருந்துப் பையைக் கொடுத்துவிட்டு மகனை அழைத்துச் செல்லும்படி நட்சத்திர ஹோட்டலும் நைட் கிளப்பும் நடத்தும் ஊரின் மாஃபியா மனிதர் சொல்ல, போதை மருந்துப் பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.

இதற்கிடையில் கமலின் டிபார்ட்மெண்டிலிருந்து அவரது நடவடிக்கையைக் கண்காணிக்கக் கிளம்புகிறது ஒரு குழு. கமல் போதை மருந்துப் பையைக் கொடுத்து மகனை மீட்டாரா, இல்லையா? தன்னை மோப்பம் பிடிக்கக் கிளம்பிய தனது துறையின் சகாக்களிடம் கையும் களவுமாகச் சிக்கினாரா ஆகிய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அதிரடி ஆக்*ஷன் த்ரில்லராக விரிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறது படம்.

கமல் நடித்த ஆக்*ஷன் படங்களில் இதுவரை இல்லாத வண்ணம் இந்தப் படத்தின் ஆக்*ஷன் காட்சிகள், சேஸிங்குகள் ஆகியவற்றை ஹாலிவுட்டுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில் படமாக்கியிருக்கிறார்களாம். காரணம் 'ஸ்லீப்லஸ் நைட்' படத்தின் பணியாற்றிய கில்லஸ் கோன்செய், சில்வியன் கேபட், வெர்ஜின் அர்னாட் ஆகிய சண்டை இயக்குநர்கள் ‘தூங்காவனம்' படத்திலும் பணியாற்றியிருக்கிறார்கள்.

நீண்டகாலமாகத் தன்னுடன் பணியாற்றிய தன் இணை இயக்குநர் ராஜேஷை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஆக்கி அழகுபார்த்திருக்கிறார் கமல். த்ரிஷா, மதுஷாலினி, ஆரண்யகாண்டம் சோமசுந்தரம், த்ரிஷயம் ஆஷா சரத், உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் போதிய முக்கியத்துவம் கதையில் இருக்கிறதாம். வில்லன்கள் குழு படத்தின் முக்கியமான ஆச்சிரியங்களில் ஒன்று. பிரகாஷ்ராஜ், சம்பத்ராஜ், கிஷோர், யூகிசேது என்று மாஃபியா வலைப்பின்னலில் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக மிரட்டியிருக்கிறார்கள் என்கிறது படக் குழு.

வேதாளம் முருங்கை மரம் ஏறினால்!?

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற ‘வீரம்’ படத்தின் மூலம் இணைந்த அஜித் - இயக்குநர் சிவா - தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘வேதாளம்’. முதல்முறையாக அஜித்துடன் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேர்ந்திருக்கிறார். மற்றொரு முன்னணிக் கதாநாயகியான லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாக நடித்திருக்கிறார். அனிருத் அஜித் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் என்கிற பரபரப்புகளைத் தாண்டி இந்தப் படத்தின் கதை மீது ஏகப்பட்ட ஊகங்கள்.

நமக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி அஜித் இந்தப் படத்தில் ஆவியாகவோ பேயாகவோ நடிக்கவில்லை. அதேபோல இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களிலும் நடிக்கவில்லை.

இது பாட்ஷா படத்தைத் தொட்டுக்கொண்டு அஜித்துக்கு ஏற்ப ஆல்டர் செய்யப்பட்ட ஒரு கதை என்று சொல்கிறார்கள். தன் தங்கை லட்சுமி மேனனுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார் அமைதியான அஜித். ஆனால் பழைய எதிரிகள் அஜித்தின் தங்கையைக் கடத்தி அவரைச் சீண்டுகிறார்கள். பொறுமை இழக்கும் அஜித் தனது பழைய முகத்தைக் காட்டுகிறார். இறுதியில் தனது எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் வேதாளம்.

இந்தப் படத்தில் தனக்குத் தங்கையாக நடித்த லட்சுமி மேனனின் நடிப்பை டப்பிங் பணியின்போது பார்த்த அஜித் வியந்துபோய் தயாரிப்பாளருக்கு போன் செய்து கூறி, கூடுதலாகச் சம்பளம் தரும்படிக் கூறினாராம்.

அஜித்தின் உயிருக்கு உயிரான நண்பராகவும் பிறகு அவரைக் காட்டிக்கொடுக்கும் துரோகியாகவும் மங்காத்தா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடமேற்ற அஷ்வின் இதில் நடித்திருக்கிறார். இவர்களோடு சூரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், லொள்ளுசபா சாமிநாதன், தாபா என்று முதல் பாதிப் படம் முழுக்க இவர்களது காமெடியில் படம் குலுங்கப்போகிறதாம்.

அனிருத் இசையில் ‘ஆளுமா டோலுமா’ குத்துப்பாடலும் ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கும் டூயட் பாடலும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்.

செரிமானத்துக்கு இஞ்சி முரப்பா!

இந்த இரண்டு படங்களையும் பார்த்து செரிமானம் ஆகாவிட்டால் எப்படி? அதற்காகவே புதுமுகங்கள் நடிப்பில் ‘இஞ்சி முரப்பா’ என்ற படமும் துணிச்சலுடன் ரிலீஸ் ஆகிறது. எஸ். ஏ. சந்திரசேகரின் உதவியாளரான எஸ். சகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி சோனி சிறிஷ்டா என்ற மற்றொரு புதுமுகம்.

தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணன், அவளது அனுமதியில்லால் காதலில் விழுந்தால் அந்தக் காதலுக்கு வரும் புது மாதிரியான சோதனையை நகைச்சுவையுடன் சித்தரிக்கும் ‘கமர்ஷியல் இஞ்சிமுரப்பா’வாம் இந்தப் படம்.

இந்த மூன்று நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் சல்மான் கான் - சோனம் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரேம் ரதன் தாங் பயோ’ என்ற இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ மெய் மறந்தேன் பாராயோ’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

madhu
6th November 2015, 01:25 PM
வாசு ஜி...

தொட்டுப்பார்.. பாட்டு அந்தக் காலத்திலேயே ஒரு வித்தியாசமான பாட்டாகத்தான் உணரப் பட்டது... அதாவது எனக்கு...

அது பேய்ப்படம்.. மர்மப்படம் என்று சொல்லி எங்களை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு பெரியவங்க ( வயசானவங்க எங்களுக்கு காவல் )
கூட்டமாக போய் பார்த்து விட்டு வந்து கதை சொன்ன படம்..

எல்.ஆர் பாடவேண்டிய பாட்டை அசத்தலாகப் பாடி ஆட வைத்தவரைப் பற்றி சொல்ல ராஜேஷ்தான் வரணும்..

"பாடி வரும் நிலவோ", " நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்கு தெரியும்", "ஆனாலும் நிலவு வந்தால்", "நிலவு பிறந்த நேரத்திலே" என்று படத்தின் பல பாடல்களிலும் வந்து கொஞ்சும் நிலா இந்தப் பாட்டில் வராமல் இருக்குமா ?

பாப்பா பாப்பா கதை கேளுன்னு சொல்லி சிக்காவை அழைப்போம்...

வாசுஜி.... என்னால் டைப் அடிக்க முடிஞ்சது இவ்வளவுதான்.. ராகவ்ஜி எனும் சுனாமி வந்து முத்து, பவளம் என அள்ளிக் கொட்டப் போகுது....

vasudevan31355
6th November 2015, 01:53 PM
வாசு ஜி...

தொட்டுப்பார்.. பாட்டு அந்தக் காலத்திலேயே ஒரு வித்தியாசமான பாட்டாகத்தான் உணரப் பட்டது... அதாவது எனக்கு...



எனக்கு(ம்)

vasudevan31355
6th November 2015, 01:54 PM
வாசு ஜி...

ராகவ்ஜி எனும் சுனாமி வந்து முத்து, பவளம் என அள்ளிக் கொட்டப் போகுது....

நானும் உங்களைப் போலவே எதிர்பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன் மதுண்ணா!

vasudevan31355
6th November 2015, 02:01 PM
NT nadithirundhal adhu oru madhiri irundhirkkum.

vera madhiri:lol2:

chinnakkannan
6th November 2015, 04:32 PM
//பாப்பா பாப்பா கதை கேளுன்னு சொல்லி சிக்காவை அழைப்போம்...// அஃதெல்லாம் வேண்டாம் மதுண்ணா.. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹிந்திப்பாட்டோட தமிழ் வெர்ஷன் ஆஹா ஆஹா இன்று தேன் நிலவு கொடுத்து அழைச்சுட்டீங்களே..

நெஞ்சுக்குத்தெரியும்.... நினைவுக்குப் புரியும் - இந்தப் பாட் ரேடியோ சிலோன்ல ஈவ்னிங் பாட்டும் பதமும் ல.. அம்மா அப்பா சேர்ந்து இருந்தால் வாழ்க்கையில் நெஞ்சுக்கு நிம்மதி - என்பது போல வார்த்தை போட்டு - நெஞ்சுக்கு என்று வரும் போது இந்தப் பாட்டை மயில்வாகனமோ அப்துல் ஹமீதோ போடுவார்..ஆஹா ஒரு மாதிரி ச்சிலீர் என்று இருக்கும் ஈவ்னிங்க் டயத்திலேயே.. அப்புறம் இப்போதுசமீபத்தில் தான் பார்த்துக் கேட்டேன்..

அதே படத்தில் தொட்டுப்பார் பாட்டு வழங்கிய வாஸ்ஸூவிற்கு நன்றி.. பாட் கேட் படித் ரசித் செய்ய என்னமோ இன்னும் கைவரவில்லை மதுண்ணா செய்றேன்..

இப்போ ஆஜா ஆஜா கேக்கலாமா..

https://youtu.be/x8ZrN_pizyQ

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் துபாயில் வீக் எண்ட் பார்ட்டிகளில் - ஹோட்டலில் மியூசிக் ட்ரூப் இருந்தால்- நான் விரும்பிக் கேட்ட பாடல் இதுவே..

Russellxor
6th November 2015, 10:51 PM
நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
எந்த ராணியும்நிக்கனும்
கையக்கட்டி கையக்கட்டி

முன்புஅடிக்கடி ஒலிக்கும் இந்தப்பாடல் என்னபடம்?

RAGHAVENDRA
6th November 2015, 10:54 PM
அடடா.. அசத்தலான பாட்டைப் போட்டு வாசு தூள் கிளப்பியிருக்கிறாரேன்னு படிச்சிட்டு வந்தா, முத்து பவளம் முக்கனி சக்கரையெல்லாம் எதிர்பாக்கிறாங்களே...

என்ன செய்யலாம்...

சட்டியில் இருப்பதைக் கொட்டி விடுவோம். அது முக்கனியோ சக்கரையோ முத்தோ பவளமோ ,,, அவரவர் தீர்மானித்துக் கொள்ளட்டுமே...

வேதா என்ற மாபெரும் இசை மேதையைத் தமிழுலகிற்குத் தந்த இறைவனுக்கு முதலில் நன்றி சொல்வோம்...

அம்மா எங்கே அவருடைய மாஸ்டர்பீஸ் என்றே சொல்ல வேண்டும்...

சின்ன வயதில் அம்மா எங்கே படமென்றால் முதலில் ஞாபகத்திற்கு வந்தது பாப்பா பாப்பா கதை கேளு தான்..

ஆனால் படமோ பேய்ப் படம்... இப்போ என்னென்னமோ பேய்ப் படம் எடுக்கிறாங்களாமே... அதையெல்லாம் ஓரங்கட்டி விட்டு இந்தப் படத்தை டிஜிட்டலில் எடுத்து வெளியிட்டால்... வசூல் அள்ளி விடும்...

கொஞ்சம் விவரம் தெரிந்து பாடல்களில் நாட்டம் வந்த போது முதலில் ஈர்த்தது நான் வணங்கும் தெய்வம் நீயே பாடல் தான். ரொம்ப நாள் இந்தப் பாட்டு வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ரேடியோவில் கேட்கும் வரை. அதற்கு முன் சவுண்டு சர்வீஸ், கல்யாணம், மீட்டிங் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தான் கேட்டதுண்டு. அப்போதெல்லாம் தி.மு.க. காங்கிரஸ் மீட்டிங் தவிர, மற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லா பட பாடல்களும் போடுவார்கள். ரேடியோவில் அறிவிப்பு கேட்கும் வரை அம்மா எங்கே படத்தில் பாப்பா பாட்டும், சுசீலாவின் நிலவு பிறந்த நேரத்திலே பாட்டும் தான் தெரியும். நெஞ்சுக்குத் தெரியும் பாட்டை ரிக்கார்டில் ஒலிபரப்பியதே எனக்கு தெரிந்து கிடையாது. ரிலீஸான போது படம் பார்ப்பதற்குத் தடை.. அதனால் சில ஆண்டுகள் கழித்து மறுவெளியீட்டில் தான் பார்க்க முடிந்தது. படம் முழுக்க வேதாவின் இசை படத்தின் திகிலுணர்வைக் கூட்டிக்கொண்டே இருக்கும்.

தொட்டுப்பார் பாட்டு மட்டுமல்ல, நெஞ்சுக்குத் தெரியும் பாட்டிலும் ரொம்ப நேரம் இசைக்குப் பிறகு தான் சுசீலாவின் குரல் ஒலிக்கும். அது கூட தாளம் எதுவும் கிடையாது. மிகவும் யதார்த்தமாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைத்திருப்பார். என்னதான் தழுவல் என்றாலும் அதை அவர் கொண்டு வந்த விதம் வேறு யாராலும் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு அற்புதமாக இருக்கும்.

அம்மா எங்கே .. வேதாவின் ரசிகர்களுக்கு திகட்டாத தேனமுது

எப்போது கேட்டாலும் சலிக்காத, அலுக்காத அந்த விருந்திலிருந்து ஒரு பகுதி...

நான் வணங்கும் தெய்வம் நீயே கண்ணான கண்ணா..

https://www.youtube.com/watch?v=umlAWeYHyNU

வாசு சார் நினைவுகளை மீட்ட வைத்ததற்கு மிக்க நன்றி.

chinnakkannan
6th November 2015, 11:10 PM
செந்தில்வேல்,

எம்.ஹெச் சிவண்ணா ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், அவர் மனைவி தேவரம்மா.. அவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் மஞ்சுளா..கன்னடத்திலிருந்து வந்து தமிழ்ப்புதுவெள்ளத்தில் நனைந்ததால் கன்னட மஞ்சுளா என அழைக்கப் பட்டார்.. கன்னடத்தில் நிறைய படங்கள் தமிழில் சில அவ்வப்போது சி.க நினைவிலிருந்து நழுவி பின் வாசுவிடம் திட்டு வாங்கி நினைவு படுத்தப் படுபவர்..

கன்னடத்தில் நல்ல நடிகையாக நடித்திருந்தாலும் உடல் நிலை சரியில்லாமல் போனதாம்.. பின் ஒரு சுபயோக சுப வேளையில் தமிழ் டைரக்டர் கம் கன்னட டைரக்டர் அமிர்தத்தை மணம் புரிந்து கொண்டாராம்..பட் பட்.. 86 இலேயே தற்கொலையோ அல்லது உடல் நலக் குறைவின் காரணமாகவோ இறந்து விட்டாராம்.. என விக்கிப் பீடியா சொல்கிறது..

ஸோ.. நீங்கள் கேட்ட ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிப் பாடலில் நடித்தவர் அவரே


https://youtu.be/LP0G59trly4

rajeshkrv
6th November 2015, 11:11 PM
நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
எந்த ராணியும்நிக்கனும்
கையக்கட்டி கையக்கட்டி

முன்புஅடிக்கடி ஒலிக்கும் இந்தப்பாடல் என்னபடம்?

pudhuvellam
music: M.B.Srinivasan
Lyrics: vaali
singer:P.Susheela
Actress: Kannada Manjula

Russellxor
6th November 2015, 11:20 PM
சிம்பொனிக்காக வெளிநாடு சென்று வந்த இளையராஜா அந்த சிம்பொனி இசைக்கோப்புகளில் சிலவற்றை இரண்டு படங்களுக்கு பயன்படுத்தியதாக அப்போது செய்தி
பத்திரிக்கைகளில் வந்தது.
அந்த இரண்டு படங்கள்
1.ராஜகுமாரன்
2.மகாநதி

ராஜகுமாரனில் ஒரு சங்கீதம் இப்போது கேட்கலாம்.

பொட்டு வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
கட்டி வச்சதாரு யாரு யாரு
தாலியை தேதிகுறிச்சு*
வெட்டி வச்சதாரு யாரு யாரு
வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

ஆலான பேரு வேரோடு போச்சு
ஆவாரம் காண வீணாகலாச்சு
தாயே உன் தாலி சேதாராமாச்சு
தீயோடு சேர்ந்து தீயாகிப்போச்சு
கண்டாங்கிச்சேல வண்ணச்சோலை வெறும் நூலாச்சு
செண்டான மாலை இந்த வேளை அந்த நூலாச்சு
தாங்காத பாரம் யார் தாங்கக்கூடும்
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

கூண்டோடு சாய்ஞ்சு தூங்காம தேங்கி
நீ பாட கேட்டேன் தாலாட்டு பாட்டு
ஊராரும் கூடி உன் பேரை கூறி
ஒப்பாரிப்பாட்டை இப்போது கேட்டேன்
கல்லான சாமி முகம் காமி இது பொய்தானா
இல்லாது போனால் இங்கு நீ வாழ்ந்தது மெய்தானா
ஆகாயம் சாய்ஞ்ச்சா ஆதாரம் யாரு
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

சோகம்
Pottu Vachathu Yaaru - Prabhu,Sujatha - Sad Song …: http://youtu.be/qrMUDKS5tEo

சந்தோசம்
Pottu Vachathu Yaaru | Rajakumaran | Tamil Film S…: http://youtu.be/oYxupGjcQDw

Russellxor
6th November 2015, 11:23 PM
தகவலுக்கு நன்றி
சின்னக்கண்ணன் சார்
rajeshkrvsir

Russellxor
6th November 2015, 11:26 PM
இளையராஜாவுக்காகவும்
பாலுவுக்காகவும்...


ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

ஆண் : அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்

பெண் : அத அடகு வைக்காம
காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை

பெண் : மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

***

ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப்போல கண்டானங்கே மொட்டுப்போல ரோசா

பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு
சொன்னான் அவன் லேசா

ஆண் : ஹஹ்ஹஹ்ஹா

பெண் : காணாதத கண்டா அப்போ ஆனானய்யா பாஸா

ஆண் : என்னாச்சு...இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதும் ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு

பெண் : அட வாய்யா மச்சானே...
யோகம் இப்போ உண்டாச்சு...

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை

பெண் : மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

***

பெண் குழு : ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டி மேளம் போட
எட்டிப் பார்க்கும் ஆவாரம்பூ வெட்கத்தோடு ஓட...

ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட

பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்ட வரும் எப்போதும்

ஆண் : அட வாய்யா ராசாவே
அய்யா இப்போ உன் நேரம்

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

ஆண் : அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்

பெண் : அத அடகு வைக்காம
காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

rajeshkrv
7th November 2015, 08:04 AM
ஜெயசந்திரன் குரலில் பதிவு செய்து பின் ஏனோ மெட்டு பிடித்து போய் தானே ஜானகியுடன் பாடிவிட்டார் ராஜா

இதோ ஜெயசந்திரன் குரலில் வள்ளி வள்ளி என வந்தான். ஜெயசந்திரன் குரலிலேயே இருந்திருக்கலாம்

https://www.youtube.com/watch?v=LQ4VkK7rwgc

RAGHAVENDRA
7th November 2015, 08:28 AM
ராஜேஷ்
ஜெயச்சந்திரன் சிறந்த பாடகர். அதுவும் என்னைப் பொறுத்த மட்டில் ஜேசுதாஸை விட எனக்கு ஜெயச்சந்திரன் குரல், அதிலுள்ள உச்சரிப்பு சுத்தம், இவையெல்லாம் மிகவும் பிடித்தமானவை.
ஆனால் மேலே தெய்வவாக்கு பாடலை ஜெயச்சந்திரன் பாடியதைக் கேட்ட பொழுது இளையராஜா செய்தது சரியென்றே படுகிறது. ஜெயச்சந்திரன் பாடிய இந்தப் பாடலைப் பொறுத்த மட்டில் சங்கீத அம்சம் தான் தூக்கலாகத் தெரிகிறதே தவிர, அந்தப் பாடலுக்குரிய ஜீவன் சற்று குறைவு தான். இளையராஜா பாடிய பாடலைக் கேட்காமல் இருந்திருந்தால் தாங்கள் கூறியது போல் ஜெயச்சந்திரன் பாடியது சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் எப்படிப் பாடினாலும், இந்தப் பாட்டில் இளையராஜாவின் குரலில் இருக்கும் அந்த ஜீவன், தராசை அவர் பக்கம் சாய்ந்து நிறுத்துகிறது.
இது என் தனிப்பட்ட அபிப்ராயம்

RAGHAVENDRA
7th November 2015, 08:45 AM
மிகவும் அரிதான பாடல்கள் அடங்கிய நெடுந்தகடு உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது. அதனுடைய நிழற்படம் இதோ நம் பார்வைக்கு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/UKSONGSCOLLN01F.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/UKSONGSCOLLN01R.jpg

vasudevan31355
7th November 2015, 09:41 AM
சின்னா! செந்தில்வேல்,

http://kannadaonlinemoviez.com/wp-content/uploads/2012/08/0361.jpg

கன்னட மஞ்சுளா 'பப்ளிமாஸ்' என்று ரசிகர்களால் போற்றிக் கொண்டாடப்பட்டவர். நல்ல ரவுண்டான அழகான குழந்தை போன்ற முக அமைப்பு உடையவர். ஹோனெனஹள்ளி என்ற ஊரில் 1951-ல் பிறந்தவர். இவருடைய தந்தை ஷிவண்ணா ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இயக்குனர் அமிர்தத்தை மணந்த இவருக்கு அபிஷேக் என்ற மகன் உண்டு. அபிநயா என்று தத்தெடுத்து வளர்த்த பெண்ணும் உண்டு.

தன்னுடைய 14-அவது வயதில் நாடகத்தின் மூலம் கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் மஞ்சுளா. பின் 'மனே கட்டி நோடு' என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகம். ஒரு சிறு ரோலில். பின் 'யாரா சாக்ஷி' என்ற படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.

ராஜ்குமார், விஷ்ணுவர்தன், சங்கர்நாக், ஸ்ரீநாத் போன்ற பிரபலங்களுடன் கதாநாயகியாக பல படங்கள். இதில் ஸ்ரீநாத், மஞ்சுளா ஜோடி மட்டும் 35 படங்கள். சம்பதிகே சவால், எரடு கனசு, சீதாராமு, ஸோசே தண்டா சௌபாக்கியா, கிட்டு பிட்டு (விஷ்ணு, துவாரகீஷ்) முகன சேடு, மரியாதா ஹாடு, மங்கு திம்மா, பலே ஹுடுகா, பட்டனக்கே பந்த பத்னியரு போன்ற ஹிட் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர். திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளையும் பெற்று இறுதியில் டிப்ரெஷன் தாளாமல் கோழையாய் தற்கொலை செய்து கொண்ட பாவப்பட்ட நடிகை. ஸ்டவ் விபத்தில் இவர் இறந்ததாகவும் செய்தி உண்டு. உடல் எடை கூடியதின் உபாதை காரணமாக தற்கொலை முடிவெடுத்தார் என்று சொல்வோரும் உண்டு.

https://i.ytimg.com/vi/HghmxZjjQ5c/hqdefault.jpg

ராஜ்குமாருடன் 'சம்பதிகே சவால்' படத்தில் மஞ்சுளா. இந்தப்படம்தான் செந்தில்வேல் தம்பி கேட்ட புது வெள்ளம் படத்தின் கன்னட ஆக்கம். தமிழில் சிவக்குமாரின் பாத்திரம் ராஜ்குமாருக்கு. கன்னடத்திலும் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி மஞ்சுளாதான். கன்னடம் முதலில் (1974). தமிழ் பின்னால் (1975) என்.வி.ஆர் பிக்சர்ஸ் கன்னட உரிமையை வாங்கி கே.விஜயன் இயக்கத்தில் 'புது வெள்ள'த்தை விட்டது. படம் அமோக வெற்றி.
படமும் ஜோர். பாடல்கள் சுசீலாம்மா, எம்.பி.ஸ்ரீநிவாசன் கூட்டணியால் எம்பிக் குதித்து 'துளித்துளி'யாய்க் கீழே விழாமல் எட்ட முடியா உயரத்திற்குச் சென்றது. சிவக்குமார் 'எருமை அண்ணாச்சி... நம்ம பொறுமை என்னாச்சி?' என்று பாடகர் திலகத்தின் குரலில் பாடல் ஒன்றை எருமை மீது அமர்ந்து பாடி வருவார். கன்னடத்திலும் இது போல ராஜ்குமாருக்குப் பாடல் உண்டு. ஆனால் கன்னடத்தில் இசை நமக்கெல்லாம் தொடுவதென்ன தென்றலோ தந்த ஜி.கே.வெங்கடேஷ். இந்தப் படத்திலும் அவருக்குத் துணையாக நம் இளையராஜாவின் பங்குண்டு.

கன்னடத்தில் 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி'


https://youtu.be/vlW1pg7OANU

'மயூரா' என்ற ராஜ்குமாரின் பிரம்மாண்டமான கன்னட படத்தில் மஞ்சுளா ஹீரோயின்

http://i.ytimg.com/vi/DkJH0QklBfU/hqdefault.jpg

'இரடு கனசு' படத்தில் ராஜ்குமாருக்கு இரு ஜோடிகள். ஒன்று மஞ்சுளா, இன்னொன்று நேற்றைய விவாத கல்பனா.

http://kannada.filmibeat.com/img/2015/01/30-1422598387-eradu-kanasu4.jpg

'சீதா ராமு' படத்தில். சங்கர் நாக் இந்தப் படத்தில் ஹீரோ

http://www.chitraranga.com/images/sita%20ramu/4.jpg

'பெஸுகே' என்ற கன்னடப்படத்தில் ஸ்ரீநாத்துடன் மஞ்சுளா

http://i3.ytimg.com/vi/2jhz6kBEdAs/movieposter.jpg?v=4f4617e5

'குருசிஷ்யா' படத்தில் விஷ்ணுவர்த்தனுடன்

http://s1.dmcdn.net/G24F/1280x720-DwL.jpg

சங்கர் நாக்குடன் மஞ்சுளா

http://www.chitraloka.com/images/gallery/Actors/shankarnag/thumbs/shankar%20nag%20seetha%20ramu%20gallery80_l.jpg

'தோட்ட ராமுடு' படத்தில் சலம் என்ற நடிகருடன் மஞ்சுளா. 'இரு மாங்கனி போல் இதழோரம்' பாடலின் சாயலில் இருவருக்கும் ஒரு டூயட் உண்டு.


https://youtu.be/x6fBT_iAejY

JamesFague
7th November 2015, 10:21 AM
Namma Neyveliarukku Manjula endra perai kettale alathi Inbam than. Ennama details vanthu vizhuthu. Mr CK and

Mr Senthilvel ithu pothuma allathu ennum konjam venuma.

vasudevan31355
7th November 2015, 10:32 AM
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.

குறுந்தொடர் 4

கர்ணனின் 'கங்கா'

https://i.ytimg.com/vi/sODrzapjHjI/hqdefault.jpg

திருடனாய் இருந்து பின் திருந்தி வாழும் தந்தை மேஜர் வளர்க்கும் வீர மகன் ஜெய் குடி, பெண் போதையில் மூழ்கிக் கிடக்க, மேஜரை அவருடைய பழைய விரோதிகள் வில்லன் அசோகன், கண்ணன், ஓ.ஏ.கே தேவர், ராமதாஸ் குரூப் திரும்ப திருடனாக்க முயற்சிக்க, மேஜர் மறுக்க, நாலு பக்கமும் குதிரைகளில் மேஜரின் கை கால்களைக் கட்டி திசைக்கு ஒரு பக்கமாக இழுத்து அவரைத் துடிக்க துடிக்க கொலை செய்கின்றனர் வில்லன் கூட்டம்.

அப்புறம் என்ன? பழி வாங்கல்தான். மகன் ஜெய் தந்தையைக் கொன்றவர்களை ஒவ்வொருவராக பழி தீர்த்துக் கொன்று தந்தை மேஜரின் சமாதியில் கொண்டு வந்து போட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும்:) கதாநாயகி ராஜ்கோகிலாவோடு.

https://i.ytimg.com/vi/4_PlYjW9GKs/hqdefault.jpg

படம் முழுக்க குதிரை, ரேக்ளா துரத்தல்கள், 'டுமீல்... டுமீல்' என்று முழங்கும் துப்பாக்கிகள் என்று படம் முழுதும் புழுதி பறக்கும்.கர்ணனின் அசாத்திய உயிரைவிடும் பிரயோஜனமில்லாத உழைப்பு. ஆனால். கல்லா நிறையும். ராஜ்கோகிலாவின் ஆற்றுக் குளியல் இன்றைக்கும் ஆச்சர்ய அதிசயம்தான். சென்ஸார் தாண்டி சாதனை.

ஆனால் அந்த கிராமத்தை, அக்கிரமம் பண்ணும் அசோகனின் கொடூரத்தை, யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் நாய் சுற்றும் தெருக்களை கர்ணனின் காமெரா அமர்க்களமாக படம் பிடித்திருக்கும். பின்னால் இரட்டையர்களின் புழுதி பறக்கும் மியூஸிக்... நிஜமாகவே தெருவில் புழுதி பறக்கும் மியூஸிக்:) (விஷ்ஷ்.....என்று) அருமை.

https://i.ytimg.com/vi/M5yZZPPukqA/hqdefault.jpg

மேஜர் குதிரைகளில் கட்டி சாகடிக்கப்படுவது 'கர்ண':)கொடூரம். நம் கைகால்கள் பிய்த்துக் கொண்டு போவது போன்ற பயங்கர உணர்வு. ஜெய் மேல் அக்கறை கொண்ட தாய் எஸ்.என்.லட்சுமி. நாகேஷ் படு அறுவை.

http://i.ytimg.com/vi/lZMGu4L5GS0/hqdefault.jpg

ராமகிருஷ்ணன் என்ற ஆஜானுபாகுவான நடிகர் இந்தப் படத்தில் அறிமுகமாகி 'கங்கா' ராமகிருஷ்ணன் ஆனார். கர்ணன் படங்களில் மட்டும் கட்டாயம் இருப்பார்.:)

படத்தில் ஒரு அட்டகாசமான கிளப் சாங். சங்கர் கணேஷ் இரட்டையர்கள் ஹென்றி டேனியல், தாஸ் துணையுடன் புகுந்து விளையாட, ராட்சஸி ரகளை கச்சேரி நடத்துவார். அப்போது மிகவும் ஹிட். கச்சேரி மேடைகளில் கூட ஈஸ்வரி இப்பாடலைப் பாடி நான் கேட்டிருக்கிறேன். ஏனோ தானோ பாடல் போலத் தோன்றும். ஆனால் கில்லியடிக்கும்.

ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு

சி.ஐ.டி சகுந்தலாவின் கையில் இரண்டு பெரிய கர்சிப் துணிகளுடன் பாங்க்ரா டான்ஸ் டைப் கவர்ச்சி ஆட்டம். ஓ.ஏ.கே தேவரின் முறைத்த, வெறித்த பார்வை, 'கௌபாய்' ஜெயசங்கரின் உஷார் பார்வை, அங்கங்கே நிற்கும் கொள்ளைக் காரர்களின் கழுகுப் பார்வை, (எல்லோர் வாயிலும் கட்டை சுருட்டு) சுழன்றடிக்கும் கர்ணனின் காமெரா, அதை விட கண்ணதாசனின் சிறப்பான போதை வரிகள்.

'மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு'

அட்டகாசமான வரிகள். சிச்சுவேஷனுக்குத் தகுந்தாற் மாதிரி.

'வேகம் வர மோதிப் பார்க்கலாம்'

'பாவை எனை வஞ்சி என்று சொன்ன சொல்லை
அனுபவம் காட்டட்டும்'

இதற்கு அர்த்தம் எப்படிக் கூற முடியும்?

'சங்கு பிளந்து அங்கம் வடித்து
ஜாடைகளில் மேடை போட்டது'

அடேயப்பா! உச்சம் தொட்ட வரிகள்.:)

'கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்'

அருமை! ஆட்டம் முடிந்தவுடன் அம்மாவைக் கேட்கணுமாம். 'கோட்டையும், கோபுரமும் என்னய்யா பெரிய அழகு! என்னை விடவா?'

'நாளை வரை வாழப் போகும் வீரன்
என்னைத் திருமணம் செய்யட்டும்'

'செத்துப் போகும் வீரனுக்கல்லா நான். நாளை வரை வாழக் கூடிய வீரனாக இருக்கணும் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள'

'ரகளை' ராட்சஸி.

பொறக்கணும்பா! இன்னொருத்தி பொறக்கணும். நெத்தியில் அடித்த மாதிரி வார்த்தைகள் வந்து விழும்.

அதுவும்

பதம் பதம் இது பரம பதம்'

இருக்கிறதே. அருமையிலும் அருமை. திரும்பத் திரும்ப அதையே கேட்கத் துடிக்கும் மனசு. 'பதம்' முடிந்தவுடன் பாம்பு சீறுவது போல் ஒரு 'ஸ்' 'ஸ்' சத்தம் வரும் பாருங்கள்!

'தேடுங்கள் சிவந்த கண்ணோடு' முடித்துவிட்டு ஒரு 'யா' அப்படியே வெட்டுமய்யா நம்மளை. கூச்ச நாச்சம், சபை நடுக்கம் எதுவும் இருக்காது. அழுத்தம் திருத்தமாக கருத்துக்கள் நம் நெஞ்சில் ஊன்றப்பட்டு விடும்.

'ஹோய்னா... ஹோய்ன ஹோய்ன ஹோய்ன ஹோய்' திடீர்க் கலக்கல்.

என்ன பாடகி! என்ன பாடகி! ஆர்ப்பாட்டத்துக்கு இந்த அரக்கியைத் தவிர வேறு யார்? கண்ணியத்துக்கு 'அவர்' என்றால் கலாட்டாவுக்கு 'இவர'ல்லவோ!

உலகம் உள்ளமட்டும் வாழட்டும் இந்த 'கலாட்டா கழுகு'.

http://i.ytimg.com/vi/DUxuQc8PJS8/maxresdefault.jpg

இனி பாடலின் முழு வரிகள்.

ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு

ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு.... யா

கட்டிப் பிடித்தால் முத்தம் கொடுத்தால்
காதலிலும் போதை ஏறலாம்
கொட்டிக் கொடுத்தால் கொஞ்சி அணைத்தால்
வேகம் வர மோதிப் பார்க்கலாம்

கட்டிப் பிடித்தால் முத்தம் கொடுத்தால்
காதலிலும் போதை ஏறலாம்
கொட்டிக் கொடுத்தால் கொஞ்சி அணைத்தால்
வேகம் வர மோதிப் பார்க்கலாம்

பாவை எனை வஞ்சி என்று சொன்ன சொல்லை
அனுபவம் காட்டட்டும்

ஸ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம்

ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு.... யா

சங்கு பிளந்து அங்கம் வடித்து
ஜாடைகளில் மேடை போட்டது
செண்டு நடுவில் வண்டு அமர்ந்து
ஆடைகளை மூடி வைத்தது
மாது என்னை பூவை என்று
சொன்ன சொல்லை
மதுவுடன் பாருங்கள் (மது அண்ணாவுடனா!)

ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்ன ஹோய்
ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்

பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்

ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு யா

கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்.

கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்.
நாளை வரை வாழப் போகும் வீரன்
என்னைத் திருமணம் செய்யட்டும்

ஸ் ஹா ஸ் ஹா ஹா ஹா ஹா

பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம்

ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு


https://youtu.be/h8iRUBd-RtM

chinnakkannan
7th November 2015, 11:02 AM
Namma Neyveliarukku Manjula endra perai kettale alathi Inbam than. Ennama details vanthu vizhuthu. Mr CK and

Mr Senthilvel ithu pothuma allathu ennum konjam venuma.

மிஸ்டர் எஸ்.வாசுதேவன்.. ஒரே பெயர்னா இப்படி சப்போர்ட் பண்றதா..இதெல்லாம் கம்மியாத் தந்துருக்கார் வாசு..(தீபாவளிக்கு அல்வா கிளறிக்கிட்டிருக்கறதா ஒரு தகவல் வந்துச்சு :)) ஆனாக்க.. என்ன.. நான் கொஞ்சம் குறளாட்டமா சுருக் சொல்லியிருந்தேன்..(கன்னட படங்கள் பத்தி விஷயங்களும் தெரியாது..அதுவும் ஒரு காரணம்) அவர் விளக்கவுரையா பக்கெட் பக்கெட்டாத் தந்துட்டார்..அவருக்கு ஒரு பெர்ரிய தாங்க்ஸ்..ஒங்களுக்கு ஒரு குட்டி தாங்க்ஸ்..:) செந்தில்வேல் அடுத்து யாரைப் பற்றிக் கேக்கப் போறார்.. ஜெயபாரதியா இருக்குமோ:)

chinnakkannan
7th November 2015, 11:12 AM
அதுவும்

பதம் பதம் இது பரம பதம்'

இருக்கிறதே. அருமையிலும் அருமை. திரும்பத் திரும்ப அதையே கேட்கத் துடிக்கும் மனசு. 'பதம்' முடிந்தவுடன் பாம்பு சீறுவது போல் ஒரு 'ஸ்' 'ஸ்' சத்தம் வரும் பாருங்கள்// நைஸ் வாசு..இந்தப் பாட் ரொம்ப நாள் முன்னால் கி.த முப்பது வருடம் முன் கேட்டது போல் நினைவு.. பட்..எதிரியைக் கட்டிப்பிடிக்கறேன்னுசொல்லிவிட்டு கடைசியில் ஜெய்யையே கட்டி ப்பிடிக்கிறார் பாருங்கள் சி.ஐ.டி.சகுந்தலா அது நல்ல ட்விஸ்ட் (படம் பார்க்காத என்னைப் போன்றோருக்கு)

ஆமா இதை எழுதறதுக்காக மறுபடி படத்தைப் பார்த்தீஙக்ளா என்ன.. பட் வாஸ்ஸூ..இந்தப் பாட்டுக்கு நல்ல டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கொடுத்திருக்கலாம்.. சிஐடியும் சரி டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் சரி சகிக்கலை..

JamesFague
7th November 2015, 11:38 AM
நெய்வேலியார் அவர்களே,

நம்ம சின்னகன்னணன் அடுத்த ஆட்டம் பாம் உங்களிடம் ஜெயபாரதி என்ற ரூபத்தில் கேட்கிறார்.
அந்த ஹல்வாவையும் அவருக்காக கிண்டவும்.

rajeshkrv
7th November 2015, 11:55 AM
அருமை
மஞ்சுளா ஒரு காலகட்டத்தில் கன்னடத்தில் முன்னணி கதாநாயகி

தமிழிலும் நடித்திருந்தார் (புதுவெள்ளம், எடுப்பார் கைப்பிள்ளை)

rajeshkrv
7th November 2015, 11:58 AM
https://www.youtube.com/watch?v=RVt8PeM3HeA

rajeshkrv
7th November 2015, 11:58 AM
manjula's son

vasudevan31355
7th November 2015, 12:33 PM
நெய்வேலியார் அவர்களே,

நம்ம சின்னகன்னணன் அடுத்த ஆட்டம் பாம் உங்களிடம் ஜெயபாரதி என்ற ரூபத்தில் கேட்கிறார்.
அந்த ஹல்வாவையும் அவருக்காக கிண்டவும்.

இந்த தபா மாட்டிக்கிற மாதிரி இல்லே வாசு.:) சின்னா பத்தி கன்னா பின்னான்னு புரிஞ்சி வச்சிருக்கீங்களே!:) ஜெய் ஹோ! பாரதி ஹோ! ரதி ஹோ நிர்வேதம் ஹோ!:)'பேசும் தெய்வமா'ய் 'மோகனப் புன்னகை' புரியாதீர்கள் வாசு. 'புதிய வாழ்க்கை' வாழுங்கள். அப்புறம் 'தலைவன்' 'அனுபவி ராஜா அனுபவி' என்று உம்மை சபிக்கப் போகிறார். பிறகு 'மைக்கேல் மதன காமராசனு'க்கு யார் பதில் சொல்வது? இருங்க. யாரோ கூப்பிடறாக. 'இதோ இவிடே வரே'.:)

chinnakkannan
7th November 2015, 01:57 PM
இந்த தபா மாட்டிக்கிற மாதிரி இல்லே வாசு.:) சின்னா பத்தி கன்னா பின்னான்னு புரிஞ்சி வச்சிருக்கீங்களே!:) ஜெய் ஹோ! பாரதி ஹோ! ரதி ஹோ நிர்வேதம் ஹோ!:)'பேசும் தெய்வமா'ய் 'மோகனப் புன்னகை' புரியாதீர்கள் வாசு. 'புதிய வாழ்க்கை' வாழுங்கள். அப்புறம் 'தலைவன்' 'அனுபவி ராஜா அனுபவி' என்று உம்மை சபிக்கப் போகிறார். பிறகு 'மைக்கேல் மதன காமராசனு'க்கு யார் பதில் சொல்வது? இருங்க. யாரோ கூப்பிடறாக. 'இதோ இவிடே வரே'.:)

//நெய்வேலியார் அவர்களே,

நம்ம சின்னகன்னணன் அடுத்த ஆட்டம் பாம் உங்களிடம் ஜெயபாரதி என்ற ரூபத்தில் கேட்கிறார்.
அந்த ஹல்வாவையும் அவருக்காக கிண்டவும்.// இப்படியெல்லாம் ச்சின்னக் கொயந்தைய கலாய்க்க வாசு ஸ்கொயர் கிட்டக்க ஹ்ருதயமே இல்லையா.. வாடகைக்கு ஒரு ஹ்ருதயமாவது வாங்கி வச்சுக்க ப் படாதோ :)

Russellxor
7th November 2015, 09:07 PM
திரி தகவல் களஞ்சியம்

மதுரகானங்களின் என்சைக்ளோபீடியா


வாசு சாருக்கு
எந்தப்பட்டத்தை கொடுக்கலாம்
நண்பர்களின் வாக்கெடுப்புக்கு விட்டுவிடலாம் என நினைக்கிறேன்.

Russellxor
7th November 2015, 10:23 PM
Namma Neyveliarukku Manjula endra perai kettale alathi Inbam than. Ennama details vanthu vizhuthu. Mr CK and

Mr Senthilvel ithu pothuma allathu ennum konjam venuma.
வாசு சார்
சூப்பர்.

chinnakkannan
7th November 2015, 10:56 PM
ஏற்கெனவே போட்ட பாட் தான் என நினைக்கிறேன்.இருந்தாலும் டி.எம்.எஸ்.. எஸ் எஸ் ஆர் குரல் போலவே பாடியிருப்பது இனிய ஆச்சர்யம் தான்..பாடலும் ஜோர்..

ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
--டிங்கிரி டிங்காலே

கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது
--டிங்கிரி டிங்காலே

நேற்று அம்மா எங்கே..இன்று அன்பு எங்கே..

https://youtu.be/eG6f5dKzVxA?list=PLavWHS_Nw0fNDu47A6nyKuR5URmKUbYS x

chinnakkannan
7th November 2015, 11:12 PM
மணமகன் தேவை வெகு நாட்களுக்கு முன்னால் எனது பள்ளி அல்லது பள்ளி முடித்து ந.தி படம் தேடித் தேடிப் பார்த்த கல்லூரி நாட்களில் பார்த்த படம் சிவாஜி, பானுமதி ஹிலாரியஸ் காமடி என நினைவிருக்கிறது.. ஜாவர் சீதாரமன் வெல்..வாட்டர் கொடுங்கள் என்று கேட்டு பானுமதி கிணற்றுத் தண்ணீர் கொடுத்து துப்புவதும் நினைவில்..மற்றபடி பம்பரக் கண்ணாலே பாட்டும் நினைவில்..இந்தப் பரிமளா கருணாநிதி என்ன கேரக்டர் என்ன ஏது என்பதுசுத்தமாய் நினைவிலில்லை..பாட்டு நினைவிலிருக்கிறது..

உன் எண்ணமெல்லாம் அறிவேனே நானே
ம்ஹுஹீம் மாட்டேன் உள்ளே விடமாட்டேனே

அழகில் பரிமளிக்கும் பாவாடைசட்டைதாவணி தேவிகா, கருணாநிதி..

https://youtu.be/scet2xX70Z0?list=PLavWHS_Nw0fNDu47A6nyKuR5URmKUbYS x

chinnakkannan
7th November 2015, 11:20 PM
அத்திப்பழ உதட்டில் பிறந்த ஆறுதல் வார்த்தைகளை
தித்திக்கும் தேன் தமிழில் குழைத்துத் தந்தவர் யார் தென்றலே..

கன்னிப் பருவமவள் மனதில் என்ன நினைத்தாளோ..

ஆஹா அருமையாக ரேடியோவில் வெகு ஆவலாய்க் கண்மூடிக் கேட்ட பாட்டு.. இங்கே அஸ்ஸோகன், பண்டரி பாய் எனப் பார்க்கிறேன்..இந்திரா என் செல்வம் படம்..


https://youtu.be/_XYlK36OIt0?list=PLavWHS_Nw0fNDu47A6nyKuR5URmKUbYS x

எப்போது கேட்டாலும் மெலடியால் உள்ளம் கொள்ளை கொள்ளும் பாடல் பி.பி.எஸ்...

chinnakkannan
7th November 2015, 11:41 PM
சி.செ ரொம்ப மோசம்.. Spectre பார்த்தாரா இல்லியான்னு சொல்லவே இல்லை :) ம்ம் வரவழைச்சுடலாம்

பட்டுக்கோட்டையார் பாட்.. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே..

கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உன்னைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே

கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே
ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே.

இதயத்தை காதலி தரமாட்டாளாம்..அதனால் நிலா போய் டபக்குன்னு பறிச்சுடணுமாம்.. பாவம் ஒய்ட் மூன் :)

ஜெமினிக்கு மீசை அழகா இருக்கு..

https://youtu.be/DwrhMYxyDlg?list=PL03C0571DBEEFA387

madhu
8th November 2015, 04:23 AM
சிக்கா....

அறியப்படாத ரகசியம், ரதி நிர்வேதம், னு ஒரு பக்கம் பார்த்தால் போதுமா ? ஜெயபாரதியின் மறுபக்கம் பாருங்க..

https://www.youtube.com/watch?v=T6cLcUZVNZ0

madhu
8th November 2015, 04:26 AM
வாசு ஜி...

கங்கா... படம் ரிலீசாகி பல வருடங்கள் கழித்துப் பார்த்தது... ஈஸ்வரியின் குரல் ஜாலங்கள் எப்போது கேட்டாலும் திகட்டாது. இங்கே நான் சிக்கா பக்கம்... பாட்டுக்கு ஏற்ற ஆட்டம் இல்லை என்றுதான் தோன்றும்.. ( நல்ல வேளை சென்சார் சிக்கா.. வரிகளை கவனிக்கவில்லை...)

ஆணா பெண்ணா சரித்திரம்.. ஆழம் பார்த்தால் தெரிந்திடும் இல்லையா ?

rajraj
8th November 2015, 06:42 AM
Zubin Mehta conducted the Australian Orchestra in Madras. Here is the article about the concert in the Hindu.

http://www.thehindu.com/news//cities/chennai/zubin-mehta-in-chennai/article7815034.ece

Here is a short video clip of the concert:

http://www.youtube.com/watch?v=9_gQL52K5JQ

The article says that the Australian opera singer Greta Bradman sang 'Una Voce Poco Fa' an Italian opera by Rossini.
No video clip from the Chennai concert is available. But, here she is singing the opera:

http://www.youtube.com/watch?v=v7iGmN69NEA

In an earlier interview he was lamenting about India not picking up Western Classical music. That is true considering the fact that the British ruled India for nearly 200 years ( East India company and British Monarchy). May be, India was too proud about its musical heritage. Or it may be due to the influence of Mughals in Hindustani music. Of course, Hindustani classical was promoted by the Mughals, in my opinion. Hindustani music has a lot of Khans and Begums ! :)

vasudevan31355
8th November 2015, 07:48 AM
வாசு ஜி...

கங்கா... படம் ரிலீசாகி பல வருடங்கள் கழித்துப் பார்த்தது... ஈஸ்வரியின் குரல் ஜாலங்கள் எப்போது கேட்டாலும் திகட்டாது. இங்கே நான் சிக்கா பக்கம்... பாட்டுக்கு ஏற்ற ஆட்டம் இல்லை என்றுதான் தோன்றும்.. ( நல்ல வேளை சென்சார் சிக்கா.. வரிகளை கவனிக்கவில்லை...)

ஆணா பெண்ணா சரித்திரம்.. ஆழம் பார்த்தால் தெரிந்திடும் இல்லையா ?

நெர்ர்ருங்கி நெர்ர்ருங்கி வரேன் மதுண்ணா!:)

raagadevan
8th November 2015, 09:16 AM
In an earlier interview he [Zubin Mehta] was lamenting about India not picking up Western Classical music. That is true considering the fact that the British ruled India for nearly 200 years ( East India company and British Monarchy). May be, India was too proud about its musical heritage. Or it may be due to the influence of Mughals in Hindustani music. Of course, Hindustani classical was promoted by the Mughals, in my opinion. Hindustani music has a lot of Khans and Begums ! :)

vaNakkam Raj! :) Here is a piece in which Zubin Mehta conducts the Bavarian State Orchestra along with Abhay Sopori and his group of Kashmiri Folk Musicians (with possibly a few Khans in the group, but no Begums)! The clip is from Ehsaas-e-Kashmir, a concert on 23 September 2014, organised by the German Embassy of India:

https://www.youtube.com/watch?v=KU_l3E9pC8Y

rajeshkrv
8th November 2015, 09:23 AM
jayabarathi was a very talented actress (other than the glamour quotient)

https://www.youtube.com/watch?v=qbXPq6C2yN0

https://www.youtube.com/watch?v=kG9OF_nmxE4

vasudevan31355
8th November 2015, 09:59 AM
//கன்னிப் பருவமவள் மனதில் என்ன நினைத்தாளோ.//

'தென்னங்கீற்று ஊஞ்சலிலே' போல அற்புதமான சாங் சின்னா! அருமையான பாடலை போட்டு அதம் பண்ணி விட்டீரே! சின்னா என் செல்வம்.:)

ஆனால்?....என்ன ஆனால்?.....வீடியோ பார்க்கவே மாட்டேன். ஸாரி . இதுகெல்லாம் கர்ணனின் வில்லன் சரிப்பட்டு வர மாட்டார். ஆடியோ மட்டும் ஆயிரம் முறை கேட்கலாம். கொடுமைடா சாமி! ரெண்டுமே! படுத்திவிடுவார்கள். அதுக்காக உம்மை மன்னிக்கவே மாட்டேன்.:)

அப்புறம் 'என்னருமைக் காதலிக்கு' நல்ல பாட்டு. கருணாநிதி வசனம் எழுதிய படம் என்று நினைவு. எல்லோரும் இந்நாட்டு மன்னர். கடலூர் பச்சையாங்குப்பத்தில் சுகந்தி என்ற டூரிங் டாக்கிஸில் பார்த்தது. சிறு வயதில் கத்திச் சண்டை, குதிரை, அரச கதை இதெல்லாம் பிடிக்கும் என்பதால், அதுவும் மழைக் காலத்தில் இப்படிப் பார்க்க ரொம்பவே பிடிக்கும் என்பதால் அடம் பிடித்து அம்மாவுடன் சென்று பார்த்த பத்தாவது நிமிடத்தில் தூங்கியே போய் விட்டேன். ஜெமினி இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். உம்மை மாதிரி, ஜி மாதிரி சரோவைப் பார்க்கலாம் என்ற எண்ணமெல்லாம் அந்த சிறு வயதில் இல்லை என்பதால் அதுவும் சான்ஸ் இல்லை.:) செம போர்.

ஆனா இந்தப் பாட்டைக் கேட்டா,

'ஓ வெண்ணிலா... ஓ வெண்ணிலா... வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா' ராணி சம்யுக்தா பாட்டு 'சட்'டுன்னு ஞாபகத்துக்கு வந்துடும்.

மதுண்ணாவிற்கும் அப்படியேதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.:)

//டி.எம்.எஸ்.. எஸ் எஸ் ஆர் குரல் போலவே பாடியிருப்பது இனிய ஆச்சர்யம் தான்.//

சத்தியமான நிஜம். அவரால் முடியாதது என்று ஒன்று உண்டா நடிகர் திலகத்தைப் போல.


//உன் எண்ணமெல்லாம் அறிவேனே நானே
ம்ஹுஹீம் மாட்டேன் உள்ளே விடமாட்டேனே//

ம்...கருணாநிதிக்கு தேவிகா ஆரம்பகால ஜோடி. முகம் அகன்று பின்னால் அம்சமாக களை கொண்ட தேவிகா போல இருக்க மாட்டார். ஆண்பிள்ளைக் களை கொஞ்சம் முகத்தில் குடி கொண்டிருக்கும்.

நல்ல பாடல்களுக்கு தேங்க்ஸ் சின்னா!

rajeshkrv
8th November 2015, 10:31 AM
Vanakkam Ji

chinnakkannan
8th November 2015, 10:47 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

வாசு..விரிவான பின்னூட்டத்திற்கு தாங்க்ஸ்..

கன்னிப் பருவமதில்..பாட்டு கேட்டு கொஞ்ச நேரம் காதுகளிலேயே ரீங்கரிச்சுக்கிட்டு இருந்தது.. இதுல பிக்சரைஸேஷன் பண்றச்சே யோசிக்க மாட்டாங்களா என்ன பண்டரிபாய் சூட் ஆவாரான்னு..அஸோகன் அது வேற..

எ இ ம கேள்விப் பட்டு மட்டும் இருக்கிறேன் பார்த்ததில்லை..ப.கோ கல்யாண சுந்தரம் எழுதிய மிகச் சில காதல் பாடல்களில் என்னருமைக் காதலிக்கும் ஒன்று..கல் நாயக் போட்டிருந்தாரா தெரியவில்லை..

ஓ வெண்ணிலாவும் நல்ல ஃபாஸ்ட் சாங்க்..அதுவும் எனக்குப் பிடிக்கும்..

//ம்...கருணாநிதிக்கு தேவிகா ஆரம்பகால ஜோடி. முகம் அகன்று பின்னால் அம்சமாக களை கொண்ட தேவிகா போல இருக்க மாட்டார். ஆண்பிள்ளைக் களை கொஞ்சம் முகத்தில் குடி கொண்டிருக்கும்.// ப்ரிண்ட் நல்லா இல்லாததனால அந்த ஆ.பி களை எனக்குத் தெரியலை! (ஹெள ஐ கேன் லெட் டெளன் தேவிகா?!) பட் உடலிலும் முகத்திலும் உணர்விலும் அசாத்திய இளமை.. ஒண்ணு கவனிச்சீங்களா இந்தப் பாட் சிச்சுவேஷன் ந.தி பாடியிருந்தா இன்னும் நல்லா இருக்கும் பட் வித் தேவிகா அஸ் ஜோடி.. நோ பானுமதி!

தாங்க்ஸ் வாஸ்ஸு..:)

vasudevan31355
8th November 2015, 12:00 PM
'வெண்ணிலா ஜோதியை வீசுதே'

'மணமகன் தேவை' படப் பாடல் அலசல்.

'The Fabulous Senorita' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலே 'மணமகன் தேவை'. 39 ஆவது படம் நடிகர் திலகத்திற்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355067/AVSEQ03.DAT_002448911.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355067/AVSEQ03.DAT_002448911.jpg.html)

'நடிகர் திலகம்' கண்டசாலா குரலில் கிடார் இசைத்து அப்படியே இங்கிலீஷ் பிக்சர்தான் பார்க்கிறோமோ, ஹாலிவுட்டில்தான் இருக்கிறோமா என்று எண்ணுமளவிற்கு மேற்கத்திய இசையில் பால்கனியில் நின்று பார்க்கும் பானுமதியை பார்த்து பாடல் இசைக்க, ஒரே பானுமதி இரண்டு பெண்ணாக நடித்து இன்னொரு பக்கம் வேக வேகமாகப் பாடும் 'முட்டைக் கண்ண'ரையும் சமாளிக்க... அடடா! மீசை மழித்து நடிகர் திலகம் என்ன ஒரு ஆங்கில நடிகர் தோற்ற தேஜஸ்! என்ன மாதிரி வாயசைப்பு! (கண்டசாலாவும் நடிகர் திலகத்தை மனதில் வைத்து அழுத்தந்திருத்தமாகப் பாடி அசத்தியிருப்பார்)

'வெண்ணிலா ஜோதியை வீசுதே
மண்ணிலே வெண்முலாம் பூசுதே
என் மனம் இன்பமே காணுதே'

என்று கண்டசாலா எம் கணேசப் பெம்மானுக்குப் பாட,

உடன் ஒலிக்கும் பானுமதியின் இனிமையான குரலை எதனுடன் ஒப்பிடுவது! எப்படி ஒப்பிடுவது!

'தென்றலே இனிமையாய் வீசுதே
கண்களே காதலைப் பேசுதே
என் மனம் இன்பமே காணுதே'

நடிகர் திலகம் கீழே படுஸ்டைலாக நின்றுகொண்டு கிடார் இசைக்கும் அழகைக் காணுங்கள். 'டை'யுடன் டிரஸ் அமர்க்களம். இன்னிங் அவ்வளவு அழகாக, பெர்பெக்டாக இருக்கும் அவருக்கு.

'அன்பினால் நெஞ்சமே ஆடிப்பாடுதே
ஆசையும் நேசமும் உன்னை நாடுதே
கொஞ்சிடும் கோகிலம் சொந்தமே ஆகிடும்
அந்த நாள் காணவே ஏங்குதே'

'பொட்டு வைத்த முகமோ'விற்கு 'சுமதி என் சுந்தரி'யில் பாலாவிற்குத் தக்கபடி நடிகர் திலகம் வாயசைத்தது இருக்கட்டும். அது 1971ல்.ஆனால் 1957ல் வந்த 'மணமகன் தேவை' படத்திலேயே தனக்குப் பொருந்தாத கண்டசாலா குரலையும் கூட தன் திறமையான வாயசைப்பினால் அப்போதே பொருந்த வைத்த சிங்கக் குட்டி அல்லவோ எங்கள் சூரக்கோட்டை சிங்கம்.

பானுமதி அதற்கு பதில் கொடுப்பார் பாருங்கள் 'ஷாவ்லின் டெம்பிள்' சைனா கதாநாயகி மாதிரி.

'அந்தநாள் விரைவிலே வந்து சேருமே
சிந்தனைக் கனவுகள் நனவு ஆகுமே (சூப்பர்)
பண்புறும் இலலறம்
மாசில்லா நல்லறம்
தன்னிலே மகிழலாம் என்றுமே'

பானுமதி 'வெண்ணிலா ஜோத்தியை' என்று உச்சரிப்பது வெகு அழகு.

கண்டசாலா நடிகர் திலகத்திற்கு இப்போது பல்லவி வரிகளைப் பாடி முடிப்பதற்கு முன்னாலேயே அங்கு 'ஓ'...என்று மறுபக்க பால்கனி பக்கம் ஹம்மிங் கேட்கும் .டி.ஆர்.ராமச்சந்திரன் பானுமதியைப் பற்றி உருகிப் பாட ஆரம்பித்து இருப்பார் அதே பானுமதியை சைட் அடித்துக் கொண்டு. பானுமதி பால்கனியின் மறுபக்கம் சென்று கோட் அணிந்து ராமச்சந்திரனுக்கு பரவச தரிசனம் தருவார்

'திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னையே தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்
முன்னாலே வாராய்
என்னை நீ பாராய்
திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னையே தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்'

இப்போது ராமச்சந்திரனுக்கு பானுமதி பதில் தருவார் பாட்டிலே.

'வந்தேனே ஓடி (நடிகர் திலகத்துக்கு கல்தா கொடுத்துவிட்டு)
நான் உன்னைத் தேடி
வாடாமலே ஆடாமலே
ஒ வா மன்னா என்னைப் பாராய்'

பானுமதி 'வா மன்னா' வை அவ்வளவு வேகமாக அற்புதமாக உச்சரிப்பார். அடுத்த வரிதான் இன்னும் சூப்பர்.

'மண் மீதிலே சில நாளிலே நீ மாப்பிள்ளை ஆகப் போகிறாய்'

விரலால் உதைப்பது போன்ற பாவம் காட்டி ராமச்சந்திரனுக்கு நம்பிக்கை மோசம் தரப் போவதை அழகாக முன்னமேயே காட்டி விடுவார் பானுமதி. எப்பேர்பட்ட நடிகை! இப்போதும் இருக்குங்களே! பாவம் முட்டைக் கண்ணர். நடக்கப் போவது தெரியாமல் ஏமாந்து பரிதாபமாக உருகுவார் காதலி மீது.

'என் காதிலே தேன் பாயுதே
உன் இன்பமான மொழியாலே
திண்டாடுதே என் உள்ளமே
நம் வருங்காலம் தன்னை எண்ணியே'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355067/AVSEQ03.DAT_002497821.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355067/AVSEQ03.DAT_002497821.jpg.html)

அப்படியே கண்டசாலா குரல் இப்போது மீண்டும் ஆரம்பமாக பானுமதி மறக்காமல் கோட்டை கழற்றி அங்கேயே அதை நிற்க வைத்துவிட்டு பழைய உடையில் நடிகர் திலகத்தின் பக்கம் போய் விடுவார். (தன் கோட் மட்டுமே இருந்தால் கூடப் போதும்...அதைப் பார்த்தே ராமச்சந்திரன் தன்னை மறந்து மணிக்கணக்கில் பாடிக் கொண்டிருப்பார். ...தான் இல்லையென்று கண்டுபிடிக்க மாட்டார் என்று பானுமதிக்கு அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு காதல் போதை பானுமதி மேல் ராமச்சந்திரனுக்கு)

இப்போது நடிகர் திலகம் பாடுவார்.

'ஆவியே ஈடில்லா உண்மைக் காதலால்
ஆனந்தம் பொங்குதே எனது வாழ்விலே'

இப்போது பானுமதி

'பூவிலே தேன்மணம்
மேவிடும் பொன்னைப் போல்
பூமியில் நாமினி வாழலாம்

தென்றலே இனிமையாய் வீசுதே
கண்களே காதலைப் பேசுதே
என் மனம் இன்பமே காணுதே'

என்று பாட, நடிகர் திலகம் 'வெண்ணிலா ஜோதியை வீசுதே' என்று மீண்டும் பல்லவி எடுக்க, அப்போது தன் கையில் உள்ள ஒற்றைப் பூவை பால்கனியிலிருந்து காதலாய் பானுமதி நடிகர் திலகத்தின் மீது வீச, அந்தப் பூ மேலிருந்து ஸ்லோவாக சுற்றியபடி அழகாக கீழே விழ, நடிகர் திலகம் பாடலைப் பாடிக்கொண்டே காதலில் வெற்றி அடைந்தவராய் அதை புதையல் கண்டது போல் குனிந்து பவ்யமாக எடுக்க, அந்த கண்கொள்ளாக் காட்சி வரும் வினாடிகள் என்ன ஒரு காவிய வினாடிகள்! அனுபவித்து ரசித்து உணர வேண்டிய காட்சிக் காதல்.

இப்போது அங்கே டி.ஆர்.ஆர்.ஓலமிட ஆரம்பிப்பார். பானுமதி அவர் பக்கம் ஓட ஆரம்பிப்பார்.

'திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னைத் தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்'

டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு 'பிதாபுரம்' நாகேஸ்வரராவ் என்பவர் குரல் தந்திருப்பார். இவர் குரல் வி.என்.சுந்தரம் என்ற பின்னணிப் பாடகரின் குரலை ஒத்திருப்பது போலத் தோன்றும். ('சிந்து பாடும் தென்றல் வந்து என்று ஒரு பாடலை 'நானே ராஜா' என்ற நடிகர் திலகத்தின் படத்தில் நடிகர் முஸ்தபாவுக்காக பாடி இருப்பார் சுந்தரம்)

https://i.ytimg.com/vi/0TBEL3q08PA/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/2nNjBVCHYo0/hqdefault.jpg

பாடல் என்னவோ ஒரு பெண் இரு ஆண்களை மாற்றி மாற்றி ஏமாற்றிப் பாடும் காமெடி பாடல்தான். ஆனால் அதையும் மீறி அந்தப் பெண்ணைக் காதலிக்கும் அந்த இரு ஆண்களின் ஆழமான காதலை கவித்துவமாகவும் சொல்லத் தவறவில்லை இந்த அற்புதப் பாடல். அந்தப் பெண்ணிற்காக வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இரு இளைஞர்கள். அவள் மீது உயிரையே வைத்து, முழுவதுமாகத் தங்களை மறந்து, அவள் காதலுக்காகவே ஏங்கும் ஏக்கப் பெருமூச்சு விடும் வாலிபர்கள். கண்மூடித்தனமான, கண்ணிய முரட்டுக் காதலர்கள்.

ஜி.ராமனாதனின் அருமையான மேற்கத்திய பாணி இசை நம்மை சுண்டி இழுக்கிறது. கண்டசாலாவின் குரல் காந்தமாக இழுக்கிறது என்றால் பானுமதியின் குரல் பலாச்சுளை கலந்த தேனாய் இனிக்கிறது. நடிகர் திலகத்தின் ஆழமான அமைதிக் காதலும், ராமச்சந்திரனின் ஆர்ப்பாட்டக் காதலுமாய் இருவேறு பரிணாமங்களை காட்டும் பாடல் மட்டுமல்லாது பானுமதியின் ஒரே நேர சமாளிப்பு ரெட்டை வேட நடிப்பிலும், அவரின் அமர்க்களமான குரலிலும் வேறு சேர்ந்து இன்னொரு பக்கம் இன்னும் தனியாக ஒளிர்கிறது...மிளிர்கிறது.

கமலின் பின்னாளைய சூப்பர் ஆள்மாறாட்ட மைக்கேல் மதன காமராஜ கலட்டா, 'நாம் இருவர் நமக்கு இருவர்' பிரபுதேவா கலட்டாக்களையெல்லாம் அப்போதே பானுமதி தனி ஒருவராக பிரமாதமாக செய்து காட்டி விட்டதைக் கண்டால் வியப்பு மேலிடுகிறது! 'அஷ்டாவதானி' என்றால் இவர்தானே! 'மணமகன் தேவை' படத்தில் பானுமதியின் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேட வேண்டும். அவருடைய 'மாஸ்டர் பீஸ்'களில் முக்கியமான ஒன்று 'மணமகன் தேவை'. படம் முழுதும் 'கலகல' ஜாலி டைப்.

பார்த்து சிரித்து ரசித்து வியந்து மகிழுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355067/AVSEQ03.DAT_002675673.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355067/AVSEQ03.DAT_002675673.jpg.html)


https://youtu.be/9Ulu2WlcFjc

சின்னா! இன்னைக்கு இந்தப் பாட்டை எழுதப் போறேன்னு கனவிலும் நினைக்கல. எல்லாம் உங்களால வந்தது.:) நீங்க 'மணமகன் தேவை' விளம்பரம் கொடுக்காம இருந்திருந்தா இது வந்திருக்காது. திடீர் சமையல். உப்பு, காரம், மணம், சுவை கம்மியா இருந்தா கொவச்சிக்காதீங்க.

chinnakkannan
8th November 2015, 02:59 PM
//சின்னா! இன்னைக்கு இந்தப் பாட்டை எழுதப் போறேன்னு கனவிலும் நினைக்கல. எல்லாம் உங்களால வந்தது. நீங்க 'மணமகன் தேவை' விளம்பரம் கொடுக்காம இருந்திருந்தா இது வந்திருக்காது. திடீர் சமையல். உப்பு, காரம், மணம், சுவை கம்மியா இருந்தா கொவச்சிக்காதீங்க// எனக்குத் தெரியும் வாஸ்ஸூ ஜி.. நன்றாக வாயைக்குவித்து ஊதி ஊதி மெல்லிதான ஒற்றைக் கண் நெருப்பு இருக்கும் ஊதுபத்தியை ஜொலிக்க வைத்து பின் அப்படியே நைஸாக எடுத்துப் போய் லட்சுமி (மேனன் )வெடிமீது வைக்க, அது மென்சிரிப்பு விரைவாய்ச் சிரித்துக் கொஞ்சம் உம்மென்று இருந்து விட்டு பின் “ஃபை ஃபை ஃபை கலாய்ச்சுஃபை” தன விஷம்ச் சிரிப்புடன் டப்ப்பார் என்று வெடிப்பது போலவே ... மெல்ல ம்ஹூஹும் மாட்டேன் பாட்டைப் பற்றி ஒருவரி எழுதிவிட்டுப் பேசாமலிருந்திருக்கிறீர்கள், பின் வெடிப்பீர்கள் என நினைத்திருந்தேன்..அதுபோலவே ஜோராக வெடித்துவிட்டீர்கள்..தாங்க்ஸ்.

இதுக்காகவே இந்த கிடார் பாட்டை(இதே படத்துல இன்னொரு பாட் இருக்கு கிடாரா வயலினான்னு தெரியலை ஆனா ந.தியும் டி.ஆரும் பானுவும் பாடுவதா நினைவு என எழுதாமல்) எழுதாமல் விட்டிருந்தேன்..

சொன்னாற்போலவே நல்ல பாட்டு..ஜோராய் எழுதியிருக்கிறீர்கள்..வீட் போய் கேட்டுவிட்டு மறுபடி சொல்கிறேன்..தாங்க்ஸ் அகெய்ன்..:)

vasudevan31355
8th November 2015, 07:59 PM
ராகவேந்திரன் சார்,

வேதா பற்றிய 'அம்மா எங்கே?' நினைவுகள் அருமை. நல்ல பதிவு. முக்கனி.. சக்கரை.. முத்து... பவளம் அத்தனையும் சேர்ந்ததுதான் தங்கள் பதிவு.

chinnakkannan
8th November 2015, 10:09 PM
தென்ற்லடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்தவேளையிலே

எங்கே சீரிஸில் இன்று “சுகம் எங்கே”

https://youtu.be/cQ2KYeweCQw


கே.ஆர் ராமசாமி சாவித்ரி விஸ்வ நாதன் அண்ட் ராமமூர்த்தி எக்ஸாக்ட்லி சிக்ஸ்டி ஒன் இயர்ஸ் அகோ..(அப்போ நான் போன ஜென்மத்தில இருந்தேன் :) )

chinnakkannan
8th November 2015, 10:16 PM
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒன்றும் தெரியாமலே
நெஞ்சம் வாடுதே வாடுதே...ஆஹா என்னா கானம்...

கே.ஆர்.ராமசாமி எஸ் ஜானகி..

எதையும் தாங்கும் இதயம்

இளம் கன்னி மனசிலே பருவ காளை வயசிலே
வரும் காதலுன்னு உனக்கு இன்னும் புரியலே..

https://youtu.be/VBI1Ijd_DF8

கே.ஆர்.ராமசாமி பற்றி ஏற்கெனவே அலசியாச்சா..இல்லைஎனில் மஸ்கட் அறுபத்து ஆறாவதுவட்டம் சார்பாக தலைவர் ராகவேந்திரனையும் பொருளாளர் வாசு அவர்களையும் பாடல் புரவலர் மதுண்ணாவையும் அழைக் அழைக்கிறேன் :)

chinnakkannan
8th November 2015, 10:34 PM
ராகவேந்தர், வாசு சார்,செந்தில்வேல் சி.செ எல்லாம் ந.தி பக்தர்கள்.. அப்ப நானு.. தக்கனூண்டு ரசிகன்..தம்மாத்தூண்டுன்னும் சொல்லலாம்.. ஆனால் தமிழில் சின்னஞ்சிறிய ரசிகன் ..யா.. என்ன சொல்லவந்தேன்..சின்னஞ்சிறிய.. நானும் சின்னஞ்சிறுசு..பார்க்கப் போவதும் சின்னஞ்சிறு - பாடல்கள். - ஆனால் வெகு ஆழமான பாடல்கள்..

**

சில பாடல்கள் சொல்லும் உணர்வினை விஷயஙகளை வார்த்தையில் வடிக்க ஏலாது..கொஞ்சம் அப்படியே உணர்வில் புகுந்து உயிரைத் தீண்டிவிடும் சில பாடலகள்..

இந்தப் பாடல் எழுதிய மகாகவி பாரதியார், உள்ள பூர்வமாகப் பாடிய எம்.எல்.வசந்தகுமாரி, வி.என்.சுந்தரம் (என்னுயிர் நின்னதன்றோ...எனச்சொல்லி நிற்கும் போது கொஞ்சம் மெய்சிலிர்க்கிறது... நெடு நாள் பிறகு கேட்கிறேன்..முதன் முதல் பார்க்கிறேன்..இளமை பத்மினி லலிதாவை விடுங்கள் பாலையா என்ன அழகு..

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே

ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!


https://youtu.be/O0VNOCKk7UI?list=RDVBI1Ijd_DF8

rajraj
8th November 2015, 10:41 PM
chinnakkaNNan: You are posting K R Ramasami songs? Don't be in a hurry to age! :lol:

chinnakkannan
8th November 2015, 10:58 PM
chinnakkaNNan: You are posting K R Ramasami songs? Don't be in a hurry to age! :lol:

ஏன் யங்க்ஸ்டர்ஸ்லாம் கே.ஆர்.ராமசாமி பாட் கேக்கப் படாதோ.. ராஜ் ராஜ் சார் :)

சின்னஞ்சிறுகண்மலர் செம்பவள வாய் மலர்

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள் சீர்காழி கணீர்க்குரல்

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா

சின்னச்சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதமா

சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்ன தான்புன்னகையோ

சின்னச்சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி ஒன்றாக வாழ்ந்தோம் ஒன்றாக

சின்னஞ்சிறு வேறென்ன இருக்கு..

rajraj
9th November 2015, 01:50 AM
From Thaai magaLukku kattiya thaali (1959)

chinnanchiru vayathu muthal serndhu naam pazhagi vandhom.......

http://www.youtube.com/watch?v=K_UVdj4Zwz0

RAGHAVENDRA
9th November 2015, 02:46 AM
https://www.youtube.com/watch?v=BfxJpn72_uI

RAGHAVENDRA
9th November 2015, 02:53 AM
பணமா பாசமா படத்தில் ஒரு பாட்டு உண்டே ... சின்னஞ்சிறு வீடு இது சிங்கார வீடு...

madhu
9th November 2015, 07:34 AM
சிக்கா...

சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே...

சினஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே

சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே

சின்னச் சின்ன...... என்று ஆரம்பித்தால் எக்கசக்காமாய் இருக்கும்.

eehaiupehazij
9th November 2015, 07:39 AM
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தீபத் திருநாள் பசுமை தீபாவளியாக

மலர்ந்திட திரிசார்ந்த நல்வாழ்த்துக்கள்

செந்தில்

eehaiupehazij
9th November 2015, 07:57 AM
சிக

https://www.youtube.com/watch?v=LTCihMCfSCU

JamesFague
9th November 2015, 08:31 AM
Mr CK

Why don't you start a series on Kabbadi in Tamil Cinema. Since, you are a chairman we can expect a lot of scenes without any cut so that all of them enjoy the same with Diwali. Idharkku kandippaga Nenjile Thunivu irrukka vendum.



Regards

RAGHAVENDRA
9th November 2015, 09:56 AM
சி.க. சார்
உங்களை எப்படி போட்டு வாங்குகிறார் பாருங்கள்.. சும்மாவா செந்தூரத்தில் திலகம் வைத்த பாண்டியாயிற்றே.. அதுதான் அவருக்கு கபடி நினைவு வந்து விட்டது.

rajraj
9th November 2015, 10:53 AM
chinnakkaNNan: Can we change 'chinnanchiru' to just 'chinna' ? :)

rajeshkrv
9th November 2015, 11:00 AM
https://www.youtube.com/watch?v=k6NrmLMN3Es

https://www.youtube.com/watch?v=hYOvgB2DtL0


https://www.youtube.com/watch?v=P_uFYt_yoTo

rajeshkrv
9th November 2015, 11:01 AM
https://www.youtube.com/watch?v=kc0tmHPEVOs

rajeshkrv
9th November 2015, 11:02 AM
https://www.youtube.com/watch?v=pm1F5n7Dvs8

rajeshkrv
9th November 2015, 11:04 AM
my fav seerkazhi song

https://www.youtube.com/watch?v=eoldjJS1OWI

chinnakkannan
9th November 2015, 11:33 AM
சின்னஞ்சிறுக்கு இவ்ளோ பாட்ஸா.. தாங்க்ஸ் டு ஆல்.. எல்லாமே நல்ல பாட் தான்..
*

காலங்கார்த்தால ஃபேஸ்புக்ல சூரியனைக் காணவில்லைன்னு கடைசி அடி..அஃதாவ்து ஈற்றடி (எங்கே கல் நாயக்) கொடுத்து வெண்பா கொடுத்திருந்தாங்க..எழுதிப் பார்த்தேன்..


கார்கால மெல்லாம் களிப்புடன் நின்றங்கே
ஊர்வலமாய்ப் போனகதை உள்ளத்தில் - நீர்பொங்கி
ஊறி மயக்கும் உணர்வினை என்னுடைய
சூரியனைக் காணவில்லை யே..


இதுக்குப் பொருத்தமா மனசுல முட்டின பாட் ரெண்டு.. என்னை மறந்ததேன் தென்றலே அப்புறம் பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் (சூரியன் எங்க வருதுன்னு கேக்க்ப் படாது :) ).. வைஜூவை விட சர்ரூ பிடிக்கும் (யாருக்கு யாருக்கோ) என்கறதால ப ச பா போ பாட்..

https://youtu.be/SaUc4S5E2Yg

வேற பொருத்தமான பாட் என்ன தோணுது

chinnakkannan
9th November 2015, 12:01 PM
இன்னொரு வெண்பா எழுதிப் பார்த்தேனா.. ஈற்றடி அண்டி வருமே அழகு..

போர்க்கோலங் கொண்டபடி பூவிழிகள் தான்சிவந்து
கார்கால விண்ணாய் கணப்பொழுதில் - நீர்க்கோலம்
கன்னத்தில் போட்டாலும் க்ன்னியுந்தன் ஊடலினால்
அண்டி வருதே, அழகு!



ம்ம்

ஊடல் பத்திப் பாட் நா தலையாயப் பாட் நிறைய இருந்தாலும்..இந்த ப் பெண்ண்ண் மானே கோபம் ஏனோ... ஓகே. இன்னொரு பாட் கேக்க நல்லா இருக்கறாமாதிரி இருக்கும்(ஹிட்) பார்த்தா கடிச்சுடும்..அது என்னன்னா முதன் முதலாகக் காதல் டூயட் பாட வந்தேனே..

இப்ப எந்தப் பாட்டை நான் போடறது? :) ரேர் ஊடல் பாட் சொல்ல மாட்டாங்களா என்ன..

madhu
9th November 2015, 01:17 PM
சிக்கா...

ஊடல் பாட் போட்றதுக்கு முன்னாடி நான் ஏற்கனவே கேட்ட "ஊடுதல் காமத்துக்கு இன்பம் என்று.. அதை உணர்ந்தபின் காதலர் சங்கம் என்று" என்ற வரிகள் வரும் பாட்டைக் கண்டு பிடிச்சு குடுங்க....

chinnakkannan
9th November 2015, 03:10 PM
நான் தான் அப்போதே முடியலைன்னு சொல்லிட்டேனே..

madhu
9th November 2015, 05:27 PM
நான் தான் அப்போதே முடியலைன்னு சொல்லிட்டேனே..

என்னது ? "அப்போதே முடியலை"ன்னு ஒரு படம் வந்ததா ? :rotfl:

RAGHAVENDRA
9th November 2015, 05:57 PM
மது..

அப்போதே சொன்னேன் கேட்டியா...::rotfl:

அப்படின்னு ஒரு படம் வந்தது... தெரியும்...

இது என்ன புதுசா...

RAGHAVENDRA
9th November 2015, 05:59 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/MSVDIVALI2015GRTGS2015_zpss9l2ol0u.jpg

chinnakkannan
9th November 2015, 06:13 PM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்..

madhu
9th November 2015, 06:44 PM
https://www.youtube.com/watch?v=MrFYNuieH0M

Russellxor
9th November 2015, 08:05 PM
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

eehaiupehazij
9th November 2015, 09:05 PM
தீபாவளித் திருநாளின் தீம் பாடல் என்றுமே காதல் மன்னர் தோன்றும் கல்யாணபரிசு பாடல் காட்சியே!!

இன்று புகையில்லா தீபாவளி என்னுமளவில் சுற்றுசூழல் மாசு தடுப்பாக வெடிகள் இல்லாத பசுமை தீபாவளி கொண்டாடுமளவு சுற்றுப்புற சூழல் காற்றிலும் நீரிலும் ஒளியிலும் ஒலியிலும் உணவிலும் உடையிலும் உணர்விலும் கெட்டுப் போனதாக உருவகப் படுத்தப்படும் நிலையில் தீப ஒளியில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்பதற்கு இப்பாடல் காட்சியே சாட்சியம் !!

.....சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு தீயேதுமில்லாமல் வெடித்திடும் கேப்பு ...இதுவே பசுமை தீபாவளி....பட்டுக்கோட்டையாரின் பார்வையில்...

https://www.youtube.com/watch?v=MrFYNuieH0M

Karaoke forms too...indelible kalyanaparisu diwali song!!

https://www.youtube.com/watch?v=9vyAfW_AjSc

https://www.youtube.com/watch?v=WUgWBQComsU

https://www.youtube.com/watch?v=VuR_75ahCPE

eehaiupehazij
9th November 2015, 09:21 PM
Gap filler!

Same Diwali song in the Hindi version Nasrana starring RajKapoor!


https://www.youtube.com/watch?v=V9Cr2RpVxxw

rajraj
9th November 2015, 09:22 PM
Happy DeepavaLi ! :) Celebrate with all sweets and kaaram - wheat halwa, almaond halwa, mysore pagu, adhirasam, paal kovaa,........, murukku, seedai, poochchi koodu, kaara boondhi, kaara sevu,.......... But, limit sugar intake ! :lol:

Also, play this song from Nayagan - naan sirithaal DeepaavaLi........

http://www.youtube.com/watch?v=1uf64EMKoN8

Have fun with mathaappu and 'cape'-u ! :)

Fireworks are banned here except for sparklers and fireworks that don't go above a few feet!

raagadevan
10th November 2015, 09:23 AM
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :)

rajeshkrv
10th November 2015, 11:16 AM
Ellorukkum Deepavali Vaazhthukkal

chinnakkannan
10th November 2015, 12:28 PM
தீபாவளி ஸ்பெஷல்…



*********



“ணிக்ணிக்ணிக் என ஏதோ ஒரு பூச்சியோ ராக்கோழியோ மெல்லிய குரலில் ராகம் பாடிச் சென்றுகொண்டிருந்தது..

வாசலைக் கடந்து யாரோ சைக்கிளில் மணியடித்தவாறே செல்வது கொஞ்சம் ஒலி கூட்டி ப் பின் மெல்ல மெல்லத் தேய்ந்துசெல்வதும் காதில் விழுந்தது..விழுந்ததா இல்லை..

பின் அவள் குரல் மட்டும் கேட்டது..யுகத்துக்கு அப்பாலா..வெகு தொலைவிலா..இல்லை..வெகு நெருக்கத்தில் காதுக்கருகே…”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் அவம்மேல ஒரு ராணி ஆசைப்பட்டாளாம்..ஒரு நா ராணி என்ன பண்ணாளாம்..ராஜாவின் கோட்டையை முற்றுகையிட்டுட்டாளாம்..இப்படி…”

பாபு கொஞ்சம் கஷ்டப் பட்டே உதடுகளை விடுவித்தான்..கோட்டைகளாய் கற்பனைசெய்யப்பட்ட உதடுகள்.. செய்தவள் தங்கம்..அவள் பார்வையில் கேள்விக்குறி..பாபுவுக்குள்ளும் சிந்தனைகள்.. நான் செய்வது சரிதானா..இது யமுனாவிற்குச் செய்யும் துரோகமில்லையா..

ஏதோ பேச வாயெடுத்தவனைப் பேச விடவில்லை அவள்..”

ஹல்லோ….வாசகாஸ்.. வெய்ட் வெய்ட்.. ஏற்கெனவே எனக்கு நல்ல்ல பெயர்.. இதில் இப்படி ஆரம்பித்தால் இன்னும் நல்லதாகிவிடும். அதுவும் தீபாவளியும் அதுவுமா..

ஹச்சோ ..தலைப்பு போட மறந்துட்டேன்.. திரையில் மலர்ந்த நாவல்கள்…

எனில் இது தி.ஜானகி ராமன் எழுதிய மோகமுள் நாவலில் வரும் (கொஞ்சம்மாறியிருக்கும்..ஏனெனில் நினைவிலிருந்து எழுதுகிறேன்) முக்கியக் காட்சியில் முக்கியப்பாத்திரங்களின் மனவோட்டம்..

http://d.gr-assets.com/books/1327812102l/5054443.jpg


அது சரீ ஈ ஈ..

யாராக்கும் பாபு யாராக்கும் தங்கம் யாராக்கும் யமுனா..யாராக்கும் பாபுவின் இசைக்குக் குரு நாதரான ரங்கண்ணா…

கதைச்சுருக்கம் சொல்லலாம் என நினைத்தால் திகைக்கிறது மனது..இத்தனைக்கும் மோகமுள் நாவல் படித்து ஒரு இருபத்தைந்து வருடத்திற்கு மேலிருக்கும்..மூன்று முறை புத்தகமாய் வாங்கி யாரோ எடுத்துக் கொண்டு போய்விட அடுத்த முறை போகும் போது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்..

இருப்பினும் அது புத்தகமாய் எனது கலெக்ஷனில் பெருமையாய் வீற்றிருக்க மட்டும் செய்யும்..பின் என்ன.. நாவலின் விரியும் கதாபாத்திரங்கள் மனதுள் பதிந்திருக்கிறதே..

இருப்பினும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் கீழே உள்ள இரண்டு லிங்க்ஸ் படித்து விட்டு என்னைத் தொடரலாம்..

http://www.kalachuvadu.com/issue-157/page86.asp

https://3konam.wordpress.com/2010/12/12/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%A F%8D%E0a/

சிலுசிலுவென்று மெல்லிய தென்றல் தடவிக் கொண்டிருக்க,படித்துறையில் அமர்ந்து காவிரியின் ஆற்று நீரில் கால் நனைத்திருக்கும் போது (கூடவே மரபுக்கவிதைப் புத்தகம் மடியில் இருக்கும்போது) ஏற்படும் சுகம் இருக்கிறதே.. அது போன்றஒரு சிலிர்ப்பு ஏற்படும் தி.ஜானகிராமனின் எழுத்துக்களைப் படிக்கும் போது.

அவரைப்பற்றி எழுதுவதென்றால் நிறைய எழுதலாம்..அவரது சிறுகதைகள் எனக்கு ரொம்பப்பிடிக்கும் நாவல்களில் மோகமுள், உயிர்த்தேன், அம்மாவந்தாள்..

மோகமுள்ளின் கதை எனச் சுருக்கமாய்ச் சொல்லவியலாது..

சின்னவயதிலிருந்தே தான் பார்த்திருந்த யமுனாவின் மீது ஈர்ப்பு – தன்னைவிட பத்து வயது மூத்தவள்- இருப்பினும் அது காதலா வெறும் மோகமா எனக் குழப்பங்கள் – இல்லை அது தான் தனது தான் தேர்ந்தெடுத்த இசைவாழ்வினைத் தொடரச் செய்வதற்கான விளக்கில் விடப்படும் நெய் எனப் புரிந்து கொள்கிறான்..என்ன பலவருடங்கள் ஆகிறது அதற்கு அவனுக்கும்.. அந்த வேட்கை, வேள்விக்கு ஆகுதியானபிறகு யமுனாவிற்கும்..( இதுகூட சரியாக எழுதியிருக்கிறேனா தெரியவில்லை)

நடுவில் அவன் வாழ்க்கையில் குறிக்கிடும் இளம்பெண் தங்கம்மா.. வயதில் முதியவருக்கு வாழ்க்கைப்பட்ட இளம் நங்கை..அவளுக்கு பாபுவிடம் வேண்டுவது உடலா..இல்லை எனமட்டும் இல்லை.. வாழ்க்கை.. அவளது தாபங்கள் அவளது வார்த்தையிலேயே கொஞ்சம் பார்க்கலாம்..

//“நேத்து நீங்க பாடினேள் பாருங்கோ. ‘மனசு விஷய’வா அதுதானே?”

“ஆமாம்.”

“இனிமேல் என் காதுபட அதைப் பாடாமல் இருக்கேளா?”

“ஏன்?”

“நீங்க பாடினா நல்லாத்தான் இருக்கு . . . பாட வேண்டாம்.”

“ஏன்?”

“என் கல்யாணத்தில் யாரோ ஒரு பெண் வந்து பாடினா அதை . . . எனக்கு அதைக் கேட்டால் பைத்தியம் பிடிச்சுப் போயிடும் போலிருக்கு.//

ஏனென்று பார்த்தால் அந்தப் பாடலின் சாரம்சம்.. விளக்கமாய் காலச்சுவடு லிங்க்கில் இருக்கிறது..

தங்கம்மாவிடம் ஏற்பட்ட மோக விழைவிற்குப் பிறகு யமுனாவிடம் அவளுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக பாபு புலம்புவதும் இதனால் தான்.. தங்கம்மாவின் மரணம் தற்கொலை அவனுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் எல்லாம் நாவல் படிக்கும்போது கண் முன்னே விரியும்..

இந்த நாவலை எப்படிப் படமாக எடுத்திருப்பார்கள் என்று மிக ஆவல் எனக்கு இருந்தது.. சிதைக்காமல் இருக்கவேண்டுமே என்றபயமும் இருந்தது..

http://ecx.images-amazon.com/images/I/81C1X%2BHuYWL._SL1444_.jpg

நல்லவேளை கூடுமான வரையில் சிதைக்காமல் அப்படியே பாபு யமுனா பாபு ரங்கண்ணா பாபு தங்கம்மா பாபு வைத்தி பாபு ராஜம் என கதாபாத்திரங்களுடன் பாபுவான அபிஷேக்கை ஒன்றி இருக்கும்படி எடுத்திருந்தார் ஞான ராஜசேகரன்..

கடைசியில் அப்ரப்ட்டாக டபக்கென இதற்குத் தானா என யமுனா சொல்லப் படம் முடிவது நாவல் படிக்காதவர்களுக்குப் புரிவது சிரமம்..அதுவே நாவலில் பல பக்கங்களுக்கு விரியும் ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகும்..

இந்தப் பதிவு கூட காலச்சுவடு பதிவைப் படித்ததனால் விரிவாக எழுதவில்லை..அதைப் பார்த்தாலே புரியும்


யமுனாவாக அர்ச்சனா ஜோக்லேகர், ராஜமாக விவேக். தங்கம்மா வாக யாரெனத் தெரியவில்லை..ஆனால் வெகு பொருத்தமான முழியும் முழியுமான பெண், ரங்கண்ணாவாக நெடுமுடி வேணு.. என வெகு பொருத்தமான பாத்திரத் தேர்வு..

http://padamhosting.me/out.php/i55835_vlcsnap2011010323h25m46s39.png



http://padamhosting.me/out.php/i55834_vlcsnap2011010323h24m14s140.png


மோகமுள் நாவலை என்றும் மறக்க முடியாது..அதைத் திரைப்படமாகத் தந்ததையும்..

அதில் உள்ள சில பாடல்கள்…

மெதுவாக இசை ஞானம் மனதோடு அரும்பும்

கமலம் பாத கமலம்..

https://youtu.be/KzCxeKXcY60

சொல்லாயோ வாய் திறந்து..

பாபு யமுனா ராஜம்

https://youtu.be/Q4WhrHfXF10

தங்கம்மா சொல்லாயோ வாய் திறந்து

https://youtu.be/czhul3eoTtI



நிறைய நாட்களாக எழுதவேண்டும் என்ற எண்ணம் முகிழ்த்து முழித்துக் கொண்டே இருக்க சரி எழுதிவிடலாமெனக் கொஞ்சம் கொஞ்சமாய் சில நாட்கள் ஒருவரி இருவரியாய் எழுதி..இதோ இட்டுவிட்டேன்.. எடிட்பண்ணி விட்ட விஷயங்கள் நிறைய.. சுவைக்குறைவின் மன்னிக்க..


வாசுவின் சிரமங்கள் செய்து பார்க்கும் போது தான் புரிகிறது.. பட் நான் இப்போது மோகமுள் பார்க்கவில்லை..முன்பு பார்த்தது தான்.. நேரம் கிடைத்தால் வார இறுதியில் பார்க்க வேண்டும்..

chinnakkannan
10th November 2015, 12:32 PM
தியாக ராஜ கீர்த்தனை பாடல் + ஆங்கில விளக்கம்..

https://youtu.be/73h2vrdhxcQ

If one becomes a slave to the evil propensities of the five senses, how can he meditate on the holy feet of SrI RAma? Then where is the prospect of obtaining His grace? Is it not as ridiculous as lending the door of one's cottage to a neighbor and standing guard at one's own, all night trying to drive away the dogs itching to enter? It is as foolish as a faithless housewife going out to get some bran, leaving behind a potful of cooked rice to be carried away by monkeys. To advise such silly ones is like initiating a deaf person by whispering a sacred text in his ears.

madhu
10th November 2015, 03:24 PM
சிக்கா...

சொல்லாயோ வாய் திறந்து பாடல் ( ஆண் குரல் ) படத்தில் ஒரு சரணம் மட்டுமே வரும். பாடுவது அருண்மொழியாம்.. ஆனால் ஆடியோ ரிலீசில் எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடி ரெண்டு சரணம் இருக்கு.... ( அருண்மொழியின் ஆடியோவும் இருக்கு...) எந்தக் குரல் உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்கோ..
( தேடி லிங்க் கொடுக்க முடியலை.. தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டு உடம்பு டயர்ட் ஆயிருச்சு.. நீங்களே கண்டு பிடிச்சு கேட்டுட்டு பதில் சொல்லுங்கோ )

chinnakkannan
10th November 2015, 05:38 PM
மதுண்ணா.. எம்.ஜி.ஸ்ரீகுமார் dhiறந்து ந்னு பாடறார்.. அருண்மொழி ‘திறந்து. மற்றபடி இரண்டுபேர் குரலுமே எனக்குப்பிடிச்சுருந்தது..

madhu
10th November 2015, 08:26 PM
மதுண்ணா.. எம்.ஜி.ஸ்ரீகுமார் dhiறந்து ந்னு பாடறார்.. அருண்மொழி ‘திறந்து. மற்றபடி இரண்டுபேர் குரலுமே எனக்குப்பிடிச்சுருந்தது..

ஸ்ரீவித்யா சொல்ற மாதிரி நீங்க ஒரு சொல்லத்தான் நினைக்கிறேன் சிவகுமார் ஜி...

rajraj
10th November 2015, 10:20 PM
. தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டு உடம்பு டயர்ட் ஆயிருச்சு..

You had sweets? You are sweet yourself ! :)

madhu
11th November 2015, 06:00 AM
You had sweets? You are sweet yourself ! :)

வாத்தியாரையா.... தாங்க்ஸோ தாங்க்ஸ்...

உ.அ.நா.இ. படத்தில் பார்த்திபன் ரம்பாவைப் பார்த்து சொல்லும் வசனம் நினைவுக்கு வருது ;)

rajraj
11th November 2015, 06:48 AM
உ.அ.நா.இ. படத்தில்

? Please expand ! :)

Richardsof
11th November 2015, 09:46 AM
RARE STILL
VANISREE GREETING JAISANKAR
http://i67.tinypic.com/34sqdk5.jpg

raagadevan
11th November 2015, 10:47 AM
Here's a classic featuring Jaisankar & Vanishree; ably helped by Kannadasan, V. Kumar, TMS & P. Susheela...

https://www.youtube.com/watch?v=B1GFVz3BNVw

Richardsof
11th November 2015, 10:47 AM
? Please expand ! :)

un aruge nan irunthal.

chinnakkannan
12th November 2015, 12:14 PM
வெகு அழகான பாடல் ராகதேவன்..

எனக்கு நினைவுக்கு வரும் இன்னொரு பாடல்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

உலகம் என் புகழ் பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
உள்ளத்தை காட்டிடும் கண்ணாடி...

ம்ம் புலவர் ல நிறைய பாட் இல்லை போல..

rajeshkrv
13th November 2015, 12:07 AM
https://scontent-dfw1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12208425_1162513553778422_1253097145525017046_n.jp g?oh=6e340ca5be0534993a0d8c08be7d5797&oe=56B78730