View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
Pages :
1
2
3
4
[
5]
6
7
8
9
10
11
12
13
14
Russellxor
24th October 2015, 07:49 AM
நூற்றுக்கு நூறென மார்க்கு வாங்கிய (சின்னக்கண்ணன் சார்)நூர்ஜஹானுக்கு வாட்சு
தவப்புதல்வனின்
கிண்கிணி பாடலின் இடையில் வரும் வரி
vasudevan31355
24th October 2015, 07:53 AM
சின்னாவை ஒரே ஒரு சந்தேகம் தானே கேட்கிறோம் ராகவேந்திரன் சார்? அவர் நம்மை யாராக்கும் கேட்டு மண்டை காய வைக்கிறார்தானே! அதான்! வேற ஒண்ணுமில்ல.
சக்தி லீலை 1972. கங்கா கௌரி 1973. இரண்டிலும் ஜெமினி சிவன். மேடம் பார்வதி. உறுவ ஒட்ட்ருமையும் ஒன்றாக இருக்கும். சிவனுக்கும் ஒரே காஸ்ட்யூம். பார்வதிக்கும் கிட்டத்தட்ட அப்படியே. ஏன் சந்தேகம்? படத்தைப் பார்த்து முடிவு கட்டிடுவோம். எனக்கும் அந்த சந்தேகம் ஓடிட்டிருக்கு.
ராட்சஸி பற்றி காலையில சொல்லலைன்னா வேலை ஓடாது. அப்படியே பக்தி பாட்டுமாச்சு. மேடத்துக்கு ஈஸ்வரிதான் எவ்வளவு பொருத்தம்!
அந்த ஆக்ரோஷ பாட்டு. மறக்க முடியாது. மேடம் பார்வதி நாட்டியமும்தான் புன்னகை அரசிக்கு முன்னால். புன்னகை அரசி முன்னாடியே வேற சக்தியா? நெய்வேலிக்கே கரியா? பண்ரூட்டிக்கே பலாப்பழமா?
'சக்தி வந்தாளடி
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும்
நல்வாக்கு தந்தாளடி'
https://youtu.be/ralchqn-28A
vasudevan31355
24th October 2015, 07:58 AM
ராகவேந்திரன் சார்,
ரங்கா ராட்டினம் ஸ்டில் தந்து ஆனந்தமாக சுற்ற வைத்து விட்டீர்கள். நிஜமாகவே கற்பக விருட்சம் தாங்கள். தன்னைத் தானே மறந்திருந்த சௌகார் அருகில் அந்த ரவிச்சந்திரன் டிரைவர் ஸ்டில். இப்போது நன்றாக நினைவுக்கு வந்து விட்டது. மறந்திருந்த பழைய விஷயங்கள் நினைவுக்கு வரும் போது அதன் சுகமே அலாதிதான் சார்.
RAGHAVENDRA
24th October 2015, 07:59 AM
வாசு சார்
சக்தி லீலை என்றாலே முதலில் இந்தப் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது. சிலோன் ரேடியோவில் போட்டு தாளிச்சிட்டாங்க.. இந்தப் பாட்டை தினமும் காலையில் போடாமல் இருந்ததே இல்லை.
இங்கே யாரோ சரோ விசிறி இருக்காங்க இல்லே... அவங்களுக்காகன்னு வெச்சிக்கலாம்.. காலைப் பொழுதை வரவேற்கிற மாதிரியும் வெச்சுக்கலாம்.
https://www.youtube.com/watch?v=MfzOncU6UnY
சி.க. சார் இந்தப் பாட்டில் நூறு வராங்காட்டியும் நூறு ஆயிரம் முறை ரேடியோவில் கேட்டிருக்கோமில்லே.. அப்போ அதில் நூறு அடங்கும் தானே
vasudevan31355
24th October 2015, 07:59 AM
செந்தில்வேல்,
உங்கள் நினைவு சக்திக்கு நான் தரும் மார்க்கும் அதுவே.:)
RAGHAVENDRA
24th October 2015, 08:01 AM
ஒரு வேலையாக போக வேண்டியுள்ளது.
மதியம் சந்திப்போம்...
vasudevan31355
24th October 2015, 08:18 AM
வாசு சார்
சக்தி லீலை என்றாலே முதலில் இந்தப் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது. சிலோன் ரேடியோவில் போட்டு தாளிச்சிட்டாங்க.. இந்தப் பாட்டை தினமும் காலையில் போடாமல் இருந்ததே இல்லை.
இங்கே யாரோ சரோ விசிறி இருக்காங்க இல்லே... அவங்களுக்காகன்னு வெச்சிக்கலாம்.. காலைப் பொழுதை வரவேற்கிற மாதிரியும் வெச்சுக்கலாம்.
உண்மைதான் சார். மறக்க முடியுமா? மண் குடத்தில் ஆற்றில் குடத்தில் தண்ணீர் எடுக்க செல்லும் போது வானில் தேரில் சென்று காமுறும் காத்தவீரியன் (சரியா?) சௌந்தர்யத்தில் மனம் தடுமாறும் சரோ... ஆற்றோடு கரைந்து போகும் மண்பாண்டம்...கோப முனி பதி மேஜர் , தந்தை சொல் தட்டாமல் தவறு செய்த தாயின் தலை வெட்டும் ஓவர் மகன் பரசுராமன் ஸ்ரீதர். அருமையான வண்ணம். ஆரம்பமே சூடு.
கடலூர் துறைமுகம் கமரில் இரண்டு மூன்று தடவை பார்த்த ஞாபகம். படத்தின் எல்லாக் காட்சிகளும் நினைவில் நிற்கின்றன. உஷாநந்தினி கூட பார்வதியாக வருவார். சிவக்குமார் நாரதர். ராமண்ணா இயக்கம். எனக்குப் பிடித்த பக்திப் படம்.
rajeshkrv
24th October 2015, 08:51 AM
ji!
thoongalaya?:)
nalaikku leave haiyya jolly
vasudevan31355
24th October 2015, 09:02 AM
appo fulla ingathaan irukkanum. samarthonno!:)
vasudevan31355
24th October 2015, 09:04 AM
'saro' nnaa like saramaariyaa vizhuthe!:)
JamesFague
24th October 2015, 09:20 AM
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 27: காதலர்களின் இசைவழித் துணை!
சிறிய படங்கள், பெரிய படங்கள், நட்சத்திர நடிகர்களின் படங்கள், புதுமுகங்கள் நடித்தவை என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல், தான் இசையமைத்த எல்லா படங்களுக்கும் அற்புதமான பாடல்களை வாரி வழங்கியவர் இளையராஜா. அவரே தயாரித்த படத்தில் பாடல்களின் இனிமைக்குக் கேட்கவும் வேண்டுமா? ‘இளையராஜா பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஆனந்த கும்மி’ (1983) படம் முழுவதும் பொங்கி வழிந்தது இன்னிசை.
பிற்காலத்தில் பார்த்திபனின் ‘பொண்டாட்டி தேவை’ படத்தின் மூலம் அறியப்பட்ட அஸ்வினியும் புதுமுக நடிகரும் நடித்த இந்தப் படத்துக்குக் கதை வசனம் வைரமுத்து. இயக்கம் கோகுல கிருஷ்ணன். பல காரணங்களால் தோல்வியடைந்த இப்படம், இன்றும் அதன் பாடல்களுக்காக நினைவுகூரப்படுகிறது.
எண்பதுகளில் இளம் பிராயத்தைக் கடந்து வந்தவர்களை, உருவமற்ற ஆன்மா போல் பற்றிக்கொண்டுவிட்ட பாடல் ‘ஒரு கிளி உருகுது’. எஸ். ஜானகி, எஸ்.பி. ஷைலஜா இணைந்து பாடிய இப்பாடல், நாயகன் மற்றும் நாயகியின் இளம் பிராயத்தைக் காட்டும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல். கள்ளமற்ற பிஞ்சு உள்ளங்களுக்கு இடையே துளிர்க்கும் அன்பின் பாடல். அடர்ந்த மரங்களின் இடைவெளி வழியே பரவும் தென்றலின் குளுமையுடன் ஒலிக்கும் புல்லாங்குழலுடன் பாடல் தொடங்கும்.
கிளிகளையும் மைனாவையும் பற்றிப் பாடும் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் ஆக்கிரமித்திருப்பது குயில்தான். குறிப்பாக முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழலும், அதைப் பிரதியெடுக்கும் குரலில் ஜானகியும், ஷைலஜாவும் பாடும் ‘குக்கூ… குகுகூ’ எனும் ஹம்மிங்கும் ஏதோ ஒரு நதிக்கரையின் மரக்கிளைகளில் அமர்ந்து பாடும் குயிலைக் காட்சிப்படுத்தும். இரண்டாவது நிரவல் இசையில் அன்பின் நெகிழ்வை உணர்த்தும் சாரங்கி இசையை வழியவிட்டிருப்பார் இளையராஜா.
பிள்ளைப் பிராயத்துப் பாடல் என்பதால், ஜானகி, ஷைலஜாவின் குரல்களிலும் குழந்தமையின் குதூகலம் தொனிக்கும். இப்பாடலின் இன்னொரு வடிவத்தை எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘தளிருக்கும் மலருக்கும் காதல்… தனிமையில் சிறு சிறு ஊடல்’ எனும் வரிகளில் எஸ்.பி.பி.யின் குரலில் தொனிக்கும் பாந்தம் ஆத்மார்த்தமானது.
இப்படத்தின் மற்றொரு பாடலான ‘ஓ வெண்ணிலாவே… வா ஓடி வா’ பாடலை எஸ்.பி.பி. - ஜானகி ஜோடி பாடியிருக்கும். காதலுக்கு ஏற்படும் தடையால் மனமுடைந்து நிற்கும் நாயகனையும் நாயகியையும் ஆற்றுப்படுத்தும் கனவுப் பாடல் இது. டூயட் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் இனம்புரியாத வலியை உணர முடியும். இந்தப் பாடலையும் தொடங்கி வைப்பவர் ஷைலஜாதான். ‘ஆனந்த கும்மியடி… வானமெல்லாம் கேட்கட்டும்’ எனும் தொகையறாவுக்குப் பின்னர், ஆர்ப்பாட்டமான தாளமும், நெகிழ்வூட்டும் ஷெனாயும் சேர்ந்து ஒலிக்கும்.
தற்காலிகச் சந்தோஷ மனநிலையில் திளைக்கும் காதலர்களின் உணர்வைப் பாடலின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஷெனாய், கிட்டார் என்று வரிசையாகத் தொடரும் இசைக் கருவிகளுக்குப் பிறகு, ரணங்களை வருடும் மயிலிறகின் மென்மையுடன் வளமான வயலின் கூட்டிசை ஒலிக்கும். வருத்தமான மனநிலையில் இப்பாடலைக் கேட்கும்போது இந்த ஒற்றைக் கணத்தில் நம் மனது உணரும் உணர்வுகள் வார்த்தையில் அடங்காதவை. இரண்டாவது சரணத்தில், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை அற்றுவிட்டதுபோன்ற அழுகைக் குரலில் ‘இனிமேல் பிறவி வாராது’ என்று பாடுவார் ஜானகி.
அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக, ‘காதல் மாலை சூடும் வேளை… அழுகை ஏனோ, கூடாது’ என்று எஸ்.பி.பி. பாடுவார். காதலனின் ஆறுதல் வார்த்தைக்காக அழுகையை அடக்கிக்கொண்டாலும், ஆற்றாமையில் தவிக்கும் மனதின் தேம்பும் குரலில், ‘நிலவே நீயும் தூங்காதே…’ என்பார் ஜானகி. எழுதப்பட்ட பாடல் வரிகளை இசையுடன் பாடுவது மட்டும் பாடகர்களின் பணியல்ல; கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் கலை அது என்பதை ஆத்மார்த்தமாகப் பதிவுசெய்திருப்பார் ஜானகி. இசை ரசிகர்களால் அவர் ஆராதிக்கப்படுவதன் முக்கியக் காரணம் ஆத்மார்த்தமான பாடும் முறைதான்.
குதூகலமும் குறும்பும் நிரம்பித் ததும்பும் குரலில் எஸ்.பி.பி. பாடும் ‘தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி’ பாடல், உற்சாகம் வழியும் இசையமைப்பைக் கொண்டது. மிகத் துல்லியமான ஒலிப்பதிவைக் கொண்ட இப்பாடலில் ஆர்ப்பாட்டமான ட்ரம்ஸ், புத்துணர்வூட்டும் கிட்டார், மவுத்தார்கன், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளின் அற்புதமான கலவை இப்பாடலில் உண்டு. கண்ணாடி இழைகளால் உருவாக்கப்பட்ட உலகில் பயணம் செய்யும் உணர்வைத் தரும் பாடல் இது. ‘பாடல் நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்’ எனும் வரிகளில் வைரமுத்துவின் குறும்பு மின்னும்.
ஜானகி, எஸ்பிபி பாடும் ‘ஊமை நெஞ்சின் ஓசைகள்’ பாடல் காதலின் பிரிவு தரும் வேதனையைப் பதிவுசெய்த பாடல்களில் ஒன்று. இப்பாடலின் நிரவல் இசையில் நெகிழ்ந்துருகும் சாரங்கி கண்களை நனைத்துவிடும். எதிர்ப்புகளால் மருகிக் கிடக்கும் காதல் ஜோடி மீதான இரக்கத்துடன் இளையராஜா பாடும் ‘திண்டாடுதே ரெண்டு கிளியே’ பாடலும் இப்படத்தில் உண்டு. அந்த வகையில் காதலர்களின் இசைவழித்துணையான இளையராஜா அவர்களுக்குத் தந்த ஆறுதல் பரிசு இந்த ஆல்பம்!
JamesFague
24th October 2015, 09:23 AM
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: பூக்கள் தடுமாறுகின்றன
ஒன்றுபோலவே தோன்றினாலும் கற்பனையும் வர்ணனையும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. மலராகவும் நிலவாகவும் பெண்களை உருவகப்படுத்திப் பாடுவது கற்பனை. அந்த மலரும் நிலவும் உன்னை விட மேலானது அல்ல. அதை விட நீ அழகானவள். சிறந்தவள் என்று பாடுவது வர்ணனை. இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சூழலில் தன் காதலியை வர்ணிக்கும் இந்தி, தமிழ்ப் பார்வைகளைப் பார்ப்போம்.
இந்திப் பாட்டு.
படம். பூல் பனே அங்காரே (பூ ஒன்று புயலானது)
பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி. பாடியவர்: முகேஷ்
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி.
பாடல்:
சாந்த் ஆஹே பரேங்கே
பூல் தாம்லேங்கே
ஹுஸ்னிக்கி பாத் சலேதோ
சப் ஆப் கி நாம் லேங்கே
பொருள்:
நிலவு பெரு மூச்சுவிடுகிறது
பூக்கள் தடுமாறுகின்றன
அழகைப் பற்றிப் பேசினால்
அனைவரும் உன் பெயரைச் சொல்கின்றனர்
கண்ணே உன் முக அழகு
காலையில் தோன்றும் கதிரொளி
எங்கு நீ இல்லையோ அங்கெல்லாம்
தங்குவது காரிருள் மட்டுமே
எப்படி பிறகு நீ இல்லாத பிரிவு
உன் நினைவைப் பற்றிக் களங்கம் கூறும்
அரும்பை விட மென்மையான் கண்கள்
விரும்புகின்ற கற்கண்டு போல பேச்சு
கங்கை நதி தீரம் உன் கன்னங்கள்
மங்கையின் கூந்தல் சொர்க்கத்தின் பாதை
தேவதைகள் உன் பொருட்டுத் தம் தலையில்
பாவத்தின் பழியைப் பரிசாய் ஏற்கும்
இனிய தென்றலும் வீசாமல் இராது
இடிக்கும் மேகமும் பேசாமல் இராது
நேர்த்தியான உன் உள்ளம் கண்டு
சாத்தியமாக்குவான் இறைவன் அப்போழ்தில்
பாறைகள் அதனால் மென் நரம்புகள் ஆகும்
நிலவு பெரு மூச்சுவிடுகிறது
பூக்கள் தடுமாறுகின்றன
அழகைப் பற்றிப் பேசினால்
அனைவரும் உன் பெயரைச் சொல்கின்றனர் .
இதே அளவு மென்மையான ஏக்கத்தைத் தமிழுக்கே உரிய நடையில் வெளிப்படுத்துகிறது தமிழ்ப் பாடல். இந்திப் பாடல் காதலியின் அழகைக் கண்டு பிரமித்துப்போன பாவனையில் அமைந்திருக்க, தமிழ்ப் பாடலோ காதலியின் அழகைக் கண்டு உற்சாகத்தில் துள்ளுகிறது. இரண்டு பாடல்களுமே இயற்கையின் அழகைவிடவும் தன் காதலியின் அழகை மேலாகச் சொல்கின்றன. “உன் அழகைப் பார்த்து நிலவு பெருமூச்சு விடுகிறது, பூக்கள் தடுமாறுகின்றன” என்று ஒரு காதலன் சொல்ல, “உன்னுடைய குளிர்ச்சி நிலவுக்கு இல்லை, நீ சிந்தும் ஒளியை அந்த மலர் சிந்தவில்லை” என்று இன்னொரு காதலன் உருகுகிறான்.
படம்: தெய்வத் தாய். இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
பாடல்: வாலி. பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்
பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப்
பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நான் இல்லை
நானில்லாமல் அவள் இல்லை.....
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சைச் சேர்த்தாள்
தீயோடு பஞ்சைச் சேர்த்தாள் ...
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
கலை அன்னம் போல் அவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போல் அவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னைச் சேர்த்தாள்
தன்னோடு என்னைச் சேர்த்தாள் ....
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
rajeshkrv
24th October 2015, 09:29 AM
Raghav ji saronna enakku pidikkumnu directaaa sollalame :)
vasudevan31355
24th October 2015, 10:19 AM
சின்னா!
http://sim01.in.com/3ec5f91f5dcf4428fbc18b5d28d23dac_m.jpg
'இந்திரன் சந்திரன்.(தெலுங்கு ஒரிஜினல் 'இந்த்ருடு சந்த்ருடு'...'இந்தியில் "மேயர் சாப்")
நேற்று மாதிரியே கமல் நடித்த தெலுகு படத்தின் 'டப்'. அதே இளையராஜா இசை. ஆனா ஜோடி விஜயசாந்தி. கமல் ஹீரோ. மேயர் மற்றும் நாயகன்.
சின்னா சொன்னா 'நூறு' இதில் வரும். இதுவும் எனக்கு மிக மிக மிக பிடித்தமான பட்டு.
'நூறு நூறு நூறு முத்தம் பூப்போலே
ஹொயன்னா ஹொய்ன்னா...
கேளு கேளு கேக்கும் போது தந்தாலே
ஹொயன்னா ஹொய்ன்னா...
காதல் மன்னா கை மேல் மெய் பட்டு
கனியும் மொட்டு வாய்யா நீதான்
சூடும் இங்கு ஏற பாய் போட
நானும் இங்கு ஆனேன் ....
http://4.bp.blogspot.com/-nGvMEZvO6AU/UPWABkTx6fI/AAAAAAAAK6A/w2QOmCfMqgI/s1600/Indiran-Chandran.jpg
ஆரம்பத்தில் கமலும், விஜயசாந்தியும் பரிமாற்றுக் கொள்ளும் முத்தப் பரிமாற்றங்களுக்குதான் எவ்வவளவு சப்தம்! (முத்த சத்தம் கொடுத்த 'ராஜா' வுக்குத்தான் முத்தம் தர வேண்டும்... கையில்):)
பாலாவும் சித்ராவும் கலக்கல்.
சரண டியூன் அமர்க்களம்.
'அந்தியில் தென்றலில் பூ மணக்கும் நாழியாச்சு (சித்ரா பின்னுவார்)
தேன்துளி நான் தர தீண்டி மெல்ல ஆசையாச்சு
ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ
சின்ன மலர் தென் சொட்டாதோ
வண்ண மலர் தோள் தொத்தாதோ'
சித்ரா தொடர,
பாலா,
'பொன்னான ஒரே முத்தம் தந்து
புண்ணாச்சா மலர்ப்பாவை இதழே!' (என்னா ஒரு மொழி பெயர்ப்பு!):-D
என்று அமர்க்களம் பண்ணுவார்.
சின்னா! பாலாவின் அந்த 'ச்சீ ச்சீ' வெட்கம் பொம்பளை மாதிரி அடி தூள். கமல் கால்களை அப்படி அகட்டி வைப்பார்.
தெலுங்கு வார்த்தைகளுக்கு உதட்டசைவுக்கு ஏற்ப தமிழில் வார்த்தைகள் போடுவது ரொம்பக் கடினம்தான். தெலுங்கில் அர்த்தம் வேறு. தமிழில் அர்த்தம் வேறு என்று இருக்கும். அதனால் நடிக நடிகையர் செய்யும் பாவனைகளுக்கும், பாட்டிற்கும் சில சமயங்களில் சம்பந்தம் இருக்காது.
'ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ'
வரிகளுக்கு கமல் செய்வதில் சம்பந்தமே இருக்காது. பின்னால் கையை சுட்டிக் காட்டுவார். தெலுங்கில் அர்த்தத்துக்குத் தக்கபடி அது சரியாக இருக்கும். (அங்கே 'நானாகாரு' வாட்ச் பண்றார் என்பது போல அர்த்தம்) தமிழில் 'அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ?' என்று சம்பந்தமில்லாத வரிகள் உதட்டசைவுக்காக வேற மாதிரி வந்து உட்கார்ந்து இருக்கும். அதனால் தமிழில் பார்க்கும் போது நடிப்பசைவுகள் மாறுவது போல் தெரியும்
எப்படியிருந்தால் என்ன! இசைக்கும், ரசனைக்கும் மொழி ஒருதடையே அல்ல.
அருமையான ராகமும், அமர்க்களமான மியூஸிக்கும் கொண்ட
ரொம்ப அற்புதமான சாங்.
'வாடைதான் என் நரம்பை வீணையாக மீட்டுமம்மா
கோதையின் பாட்டுதான் ஆசை அம்பு போடுமம்மா'
'நானும்தான் காணத்தான் ராஜலீலை
தாகமே கூடுது தொட்ட வேளை'
ரொம்ப அருமையான சாங்.
பி.எல்.நாராயணா
https://i.ytimg.com/vi/AGha2qaljoc/mqdefault.jpg
நடுநடுவில் இருவரையும் மறைந்து வாட்ச் பண்ணி கண்டக்டர் விசில் ஊதி டைரெக்ட் பண்ணப் பார்க்கும் அந்த ஒல்லி தெலுகு நடிகர் பி.எல்.நாராயணா செம இன்ட்ரெஸ்ட்டிங்:)
https://youtu.be/QO09_Dk2Ru0
இதுவே தெலுங்கு ஒரிஜினல் 'இந்த்ருடு சந்த்ருடு' வில். பெண்குரல் ஜானகி.
'Dora Dora Donga Muddu Dobuchi in Indrudu Chandrudu'
http://2.bp.blogspot.com/-jYkF_C6XzNs/UiXZzOmRcAI/AAAAAAAAERE/DgXfETtdrRY/s1600/TeluguFilm_IndruduChandrudu.jpg
https://youtu.be/e_czt3mnK_0
தமிழ்ப் பாட்டுக்கு ஈஸியா அலசி பதிவு போட்டுடலாம் சின்னா! ஆனா இந்த தெலுகு டப்பிங் பாட்டிற்கு பா(ட்)டு பட வேண்டியதா இருக்கு. ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து தப்பில்லாம தரணுமே!:)
எனக்குப் புடிச்ச பாடல் அப்படிங்கறதால பாலா பாடல் ஆய்வு போல பெரிசாப் போச்சு.:) பாலா பாடல் ஆய்வு போலவும் ஆச்சு.:)
rajeshkrv
24th October 2015, 10:32 AM
indran chandran songs vaali .. nooru nooru & kadhal ragamum :thumbsup:
rajeshkrv
24th October 2015, 10:54 AM
தை பிறந்தால் வழி பிறக்கும் தெலுங்கு வடிவம்
மாதவபெத்தி சத்யம் மற்றும் இசையரசி
https://www.youtube.com/watch?v=ZEwNQIcY6sU
rajeshkrv
24th October 2015, 10:54 AM
ஆகாயம் கொண்டாடும் .. யேசுதாஸ் இசையரசி குரல்களில் நல்ல பாடல்
இசை இளையகங்கை (இளையராஜா அல்ல)
https://www.youtube.com/watch?v=oq1XdLfdAc0
chinnakkannan
24th October 2015, 10:57 AM
//cika tanku tanku .. ippadi oru varnanai enakka enakke enakka// You deserve more than this rajesh.
//சின்னா!
இது யாராக்கும்?//
//வாசு சார்
சின்னாவின் தலையை ரங்கராட்டினம் போல சுற்ற வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே..//
வாசு, ராகவேந்தர்..
கன்ன மிளைத்திருக்க கண்களிலோ மின்னலென
வண்ணப் படமிலையே வாகாக – எண்ணத்தில்
மிஞ்சி மலர்ந்தென்றும் மேனி சிலிர்க்கவைக்கும்
மஞ்சுளா என்றவொரு மான்…
ஹி ஹி..அப்படின்னு வாசு சொல்வார்.. ஆன்ஸர் கரீட்டா..
செந்தில்வேல் … நூறு நூறு முத்தம் கொடுத்தாயே ஹொய்யன்ன ஹொய்யன்னா (ஒய்னு கேக்காம ஹொய்னு கன்னடால்ல கேக்கறாங்களோ) பாட்டுக்கு நன்றி.. ஹச்சோ.. கமலோட இளமைக்குறும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்..கொய்ங்க் கொய்ங்க்னு மேலேற்றப்பார்க்க விஜயசாந்தி அம்மணி நாசூக்காய் விலக்குவது…ம்ம்..அப்புறம் அந்த ஜெயலலிதா என்று இன்னொரு அம்மணி உண்டு படத்துல இல்லியோ..
நூறு மார்க்கு வாங்கிய நூர்ஜஹானுக்கு வாட்ச்சு.. இந்த வரி வராம.. நூர்ஜஹான்னு ஒரு பாட்டுல வரி வருமேன்னு மனசுக்குள்ள குடைந்து கொண்டிருந்தேன்..சமர்த்தாய் அதைச் சொல்லிவிட்டீர்கள் செந்தில்வேல் தாங்க்ஸ்..
//சி.க. சார் இந்தப் பாட்டில் நூறு வராங்காட்டியும் நூறு ஆயிரம் முறை ரேடியோவில் கேட்டிருக்கோமில்லே.. அப்போ அதில் நூறு அடங்கும் தானே// ராகவேந்தர் சார்..யெஸ் கேட்டிருக்கோம்..பட் யூ டோண்ட் பிலிவ் இட்.. இதே பாட்டை ராஜேஷீக்கு த் தரலாம்னு சில நாள் முன்பு எடுத்துப் பார்த்தேன்..பட் கொஞ்சம் சர்ரூக்கு இளமை கம்மியா எனக்குப்பட்டதால விட்டுப்புட்டேன்.. நீங்க கொடுத்துட்டீங்க.. (ராஜேஷ் ஹாப்பி அண்ணாச்சி!)
வாசுவிற்காக..
போட்டாச் பாட் ஒண்ணு..
பார்த்தாலும் பார்த்தேன் நான் உம்மைப்போலப் பார்க்கலை
https://youtu.be/Wrav2EzFvEA
அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் இன்னும் சாப்பிடலை.. என்ன பண்ணலாம்..கமல் வழியை ஃபாலோ பண்ணலாம்..
பசி எடுக்கற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்.. பட்டாம் பூச்சி..கமல் ஜெய்சித்ரா..எஸ்பிபி வர்றச்சே நீங்க பட்டாம்பூச்சி படத்தப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு எழுதுங்க..இப்ப நான் தர்றேன் உங்களுக்கு பரிசாக..வாசு..
https://youtu.be/VvvpS7fyp4g
வரிகள் புலமைப் பித்தனாம்..இது ரொம்ப நாள் முன்னாலேயே கேட்டு பாடல் வரிகளை க் கேட்டு டைப்பண்ணி வச்சுருந்தேன் (புலமைப் பித்தன் இல்லாமலும் இருக்கலாம்..(இப்போதே சேஃபா சொல்லி வச்சுக்கறது நல்லது)
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னைக் கேக்கனும்
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதைக் கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதை சொல்லக்கூடாதோ
இள ராஜாத்தி புது ரோஜாப்பூ இதைத் தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதை சொன்னால் தீராதோ
சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன
சேலைத் திரையினில் ஆடும் நவரசம் மேடை சுகமென்ன
கன்னப்பழம் இது தின்னத்தருவதில் காயம் படலாமோ
காயம் தனிமையில் கூடும் ரகசியம் காட்டித்தரலாமோ
கண்டவர் கண்படும் முன்னாலே என் கைப்பட ஆறிடும் தன்னாலே
காலநேரம் பார்க்காம மேளச்சத்தம் கேட்காம
ஆசை மட்டும் வந்தால் என்னாவது
அச்சம் கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் பெண்னானது
நீயும் நானும் ஒன்றானோம் நீரும் நீரும் என்றானோம்
ஊஞ்சல் நெஞ்சில் வைத்து நான் ஆடவா
ஒன்றில் உந்தன் முன்பே கொஞ்சம் போராடவா
இன்றொரு பாதி நாளை பாதி
பாதியில் நில்லாது வாலிப வேகம்
ஹோப் யூ ஆல் வில் லைக் த ஸாங்..
பின்ன வாரேன்
**
chinnakkannan
24th October 2015, 10:58 AM
வாசு எல்லார்க்கும் சேர்த்து அலசி ஹோம் வொர்க் செய்யறச்சே சைலண்ட்டா கமல் விஜ்சாந்த் பாட் போட்டுட்டேளே.. படிச்சுட்டு வாரேன்..
rajeshkrv
24th October 2015, 10:59 AM
சில படங்கள் பெரிய இயக்குனரே இருந்தாலும் மொக்கையாக அமைந்து விடும்
அப்படி ஸ்ரீதரே இயக்கிய தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை ஆனால் பாடல்கள் அருமையோ அருமை
அப்படி மதுரை வானொலி அடிக்கடி ஒலிபரப்பியே எனக்கு பிடிக்கவைத்த பாடல்
மன்னவனே மன்னவனே
பாலு ஜானகி
https://www.youtube.com/watch?v=SzDmhozbmSk
rajeshkrv
24th October 2015, 11:02 AM
சாமி போட்ட முடிச்சு
நீலவேணி அம்மா நீலவேணி
முரளி சிந்து மற்றும் ஆர் சுந்தர்ராஜன்
https://www.youtube.com/watch?v=KjdNIzFjavM
Russellxor
24th October 2015, 11:05 AM
ஆசை நூறு வகை
chinnakkannan
24th October 2015, 11:05 AM
//தமிழ்ப் பாட்டுக்கு ஈஸியா அலசி பதிவு போட்டுடலாம் சின்னா! ஆனா இந்த தெலுகு டப்பிங் பாட்டிற்கு பா(ட்)டு பட வேண்டியதா இருக்கு. ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து தப்பில்லாம தரணுமே!
எனக்குப் புடிச்ச பாடல் அப்படிங்கறதால பாலா பாடல் ஆய்வு போல பெரிசாப் போச்சு. பாலா பாடல் ஆய்வு போலவும் ஆச்சு.// நைஸ் வாசு.. ரொம்பக் கஷ்டம் தான் அலசறது..
இந்திரன் சந்திரன் துபாயில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி வீடியோவில் பார்த்த படம்..விமர்சனமெல்லாம் படிக்காமல் பார்த்த நினைவு.. சடனாக வந்த நல்ல மசாலாப் படம்..
ஏடாகூடமாகக் கமல் குறும்பு செய்வார்.. அது போல க்ளைமாக்ஸ் ... என்ன தான் மேயர் கமலின் குளிர்சாதன அறையில் வைத்த உடலை மாற்றி வைத்தாலும் யாருக்குமே தெரியாதா என்ன என மிகப் பெரிய லாஜிக் ஓட்டை இருக்கும்.. பட் சுவாரஸ்யமாகப் போகும்..
தாங்க்ஸ் வாசு..
chinnakkannan
24th October 2015, 11:17 AM
//தெலுங்கு வார்த்தைகளுக்கு உதட்டசைவுக்கு ஏற்ப தமிழில் வார்த்தைகள் போடுவது ரொம்பக் கடினம்தான். தெலுங்கில் அர்த்தம் வேறு. தமிழில் அர்த்தம் வேறு என்று இருக்கும். அதனால் நடிக நடிகையர் செய்யும் பாவனைகளுக்கும், பாட்டிற்கும் சில சமயங்களில் சம்பந்தம் இருக்காது.
'ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ'
வரிகளுக்கு கமல் செய்வதில் சம்பந்தமே இருக்காது. பின்னால் கையை சுட்டிக் காட்டுவார். தெலுங்கில் அர்த்தத்துக்குத் தக்கபடி அது சரியாக இருக்கும். (அங்கே 'நானாகாரு' வாட்ச் பண்றார் என்பது போல அர்த்தம்) தமிழில் 'அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ?' என்று சம்பந்தமில்லாத வரிகள் உதட்டசைவுக்காக வேற மாதிரி வந்து உட்கார்ந்து இருக்கும். அதனால் தமிழில் பார்க்கும் போது நடிப்பசைவுகள் மாறுவது போல் தெரியும்
எப்படியிருந்தால் என்ன! இசைக்கும், ரசனைக்கும் மொழி ஒருதடையே அல்ல. //
வெரி ட்ரூ வாசு.. இசைக்கும் ரசனைக்கும் மொழி ஒரு தடையே அல்ல.. என்னா வாக்கியம்.. அட்சர லட்சம் பெறும்..
ஆனாக்க…
ரொம்ப நாளைக்கு முன்னால் சலங்கை ஒலி பாடல்கள் அத்தனையும் எழுதியது வைரமுத்து என்றாலும்..சாகர சங்கமம் பாடல்கள் – மொத்தமா ஒரு சிலவா என நினைவில்லை..மொழிபெயர்ப்பு படிக்க நேர்ந்தது..
அப்படியே ஸ்ட்ரெய்ட் ட்ரான்ஸ்லேஷன்.. வைரமுத்து அப்படியே ட்ரான்ஸ்லேட் செய்தாரா அல்லது தமிழிலிருந்து தெலுங்கு போச்சா தெரியாது..
தெனாலி யை டப்பிங்க் செய்து எஸ்பிபி தெலுங்கில் வெளியிட்டார்.. கமலுக்கு அவர் வாய்ஸ்கொடுத்திருப்பார்..அவ்வளவாகப் பொருந்தாதிருந்த நினைவு..
ஆனா புதுசா பாட் எழுதி வார்த்தைகளை மடக்கி ஓரளவிற்குப் பொருத்தமா எழுதறதுல தமிழ்ப் பாடலாசிரியர்கள் கெட்டிக்காரர்கள் – தமிழ்ப்படங்களுக்கு – இல்லியோ..
chinnakkannan
24th October 2015, 11:18 AM
ஆசை நூறு வகை
செந்தில் வேல்..இது நல்லபாட் தான்..ஆனா என்னோட விருப்பம் என்னன்னா..
இதை இரண்டு பாராக்களுக்கு மிகாமல் - கூட எழுதினாலும் தப்பில்லை- அலசிப் போட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு பரிசு தருவேன்.. :)
vasudevan31355
24th October 2015, 11:29 AM
//தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை//
ஜி!
அது லாஜிக் இல்லாத ஜாலியான காமெடி கலகலப்பு. அப்போ ரொம்ப எல்லோராலும் ரசிக்கப்பட்டது. செம வெற்றியும் கூட. உங்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது? தேங்காய், மோகன், மூர்த்தி என்று செம காமெடி. அப்புறம் ஜெயஸ்ரீ, பபிதா என்று இளவட்டங்கள். மைக் மோகன். ஜாலி படம்ஜி!
chinnakkannan
24th October 2015, 11:31 AM
சர்ப்ரைஸா நீலவேணி அம்மா நீலவேணி பாட்டு
கூட ரெண்டு வரி எழுதியிருக்கலாம் ராஜேஷ்.. படம் பார்க்கும்போது ரசித்துக் கேட்ட பாட்டு..இப்பத்தான் மறுபடி பார்க்கறேன் கேக்கறேன்.. தாங்க்ஸ்
லிரிக்ஸ் கீழே
தோணி மீது பாடும்குயிலு
தோழியோடு போகும் மயிலு
ஜாடை காண ஆளை காண ராகம் கூட்டிப் போனதோ
ஆத்து மேல போகும் தோணி
அதுக்கு மேல ராஜா ராணி
பாட்டுக் கேட்டு நோட்டம் போட
பார்வை தேடிப் பாயுதோ (சிந்து அழகா இருக்காங்க இல்லியோ)
தேடித் தேடிப் பாரய்யா
சின்ன மயிலு நானய்யா
தேவலோக ராணி போல வாழுகின்ற ஆளய்யா
கூந்தலென்ன ஆலம் விழுதோ
குங்குமம் தான் காலைப் பொழுதோ (வாவ் சிம்ப்பிள் அண்ட் பியூட்டிஃபுல் வர்ணனை)
சேர்ந்த ரெண்டு சேரன் வில்லு
புருவமாகிப் போனதோ..
கண்கள் ரெண்டும் மீனோ மானோ
கன்னம் ரெண்டும் பூவோ பொன்னோ
சின்ன வாயில் என்ன சாயல்
பவளமாக ஆனதோ..(அனதர் வாவ்..)
பார்த்தது தான் இல்லையே
பறித்திடாத முல்லையே
பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் கேட்டிடாத கேள்வியே..
நீலவேணி அம்மா நீலவேணி
(ஆஹா காலங்கார்த்தால லிரிக்ஸ டைப்பண்ண வச்சுட்டீரே ராஜேஷ்..உம்மை..சிந்து மாக்கடல்ல தான் நீந்த வைக்கணும்!)
சிந்து அழகான நடிகை..பட் சின்னவயதில் மரணித்தது சோகம் தான்..
chinnakkannan
24th October 2015, 11:34 AM
வாசு.. அவர் தெ.எ.தொ ந்னு சொல்லி போட்ட படம் தந்துவிட்டேன் என்னை.. அது தான் மொக்கை என்றார் ( நான் பார்த்ததில்லை) ஆனால் படத்தில் இன்னொரு பாட் போட்டிருக்கிறேன் பாகம் 3ல்..
தெ எ தொ போர் தான்..ஆனால் பாடல்களினால் போர் தெரியாமல் போயிருக்கும்.. திடீர்னு திரு நீர் மலை காமெடி கடைசியா வரும் என நினைவு.. அதில் படம் போர் என்பதையே மறந்து விடுவோம்..
//தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை//
ஜி!
அது லாஜிக் இல்லாத ஜாலியான காமெடி கலகலப்பு. அப்போ ரொம்ப எல்லோராலும் ரசிக்கப்பட்டது. செம வெற்றியும் கூட. உங்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது? தேங்காய், மோகன், மூர்த்தி என்று செம காமெடி. அப்புறம் ஜெயஸ்ரீ, பபிதா என்று இளவட்டங்கள். மைக் மோகன். ஜாலி படம்ஜி!
rajeshkrv
24th October 2015, 11:38 AM
//தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை//
ஜி!
அது லாஜிக் இல்லாத ஜாலியான காமெடி கலகலப்பு. அப்போ ரொம்ப எல்லோராலும் ரசிக்கப்பட்டது. செம வெற்றியும் கூட. உங்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது? தேங்காய், மோகன், மூர்த்தி என்று செம காமெடி. அப்புறம் ஜெயஸ்ரீ, பபிதா என்று இளவட்டங்கள். மைக் மோகன். ஜாலி படம்ஜி!
I meant thanthu vitten ennai
vasudevan31355
24th October 2015, 11:43 AM
சின்னா! உங்ககிட்ட பிடிச்ச குணம் எல்லா வரிகளையும் ஒண்ணு விடாம படிச்சு கருத்து சொல்றது. அது பதிவு போடறவங்களுக்கு உற்சாக மன நிலையைக் கொடுக்கும்தானே! அதுக்காக உமக்கு என்னுடைய தேங்க்ஸ்.
//தெனாலி யை டப்பிங்க் செய்து எஸ்பிபி தெலுங்கில் வெளியிட்டார்.. கமலுக்கு அவர் வாய்ஸ்கொடுத்திருப்பார்..அவ்வளவாகப் பொருந்தாதிருந்த நினைவு.?//
'சிப்பிக்குள் முத்து' படத்திலேயே சுத்தமா பாலா குரல் கமலுக்கு பொருந்தலை. கமல் கொஞ்சம் கிரீச். பாலா பேஸ். பாடல்களுக்கு சரி! வாய்ஸ் டப்பிங்ற்கு ம்ஹூம்.
பசி எடுக்கிற நேரம் வந்துடுச்சு. உம்மா லிரிக்ஸ் பார்த்ததும் பறந்து போயிடுச்சு.
மஞ்சு செல்லத்தை மறக்காம ஞாபகம் வச்சு என் வாயை அடைச்சி சூப்பரா எங்க ஆளைப் பத்தி ஒரு கவிதையும் எழுதிட்டீரே! உமக்கு விரைவிலேயே தெலுங்கிலே மஞ்சுவோட பாட்டு ஒன்னு போடறேன்.
vasudevan31355
24th October 2015, 11:44 AM
I meant thanthu vitten ennai
athane paarthen.:)
vasudevan31355
24th October 2015, 11:48 AM
//திரு நீர் மலை காமெடி கடைசியா வரும் என நினைவு.. அதில் படம் போர் என்பதையே மறந்து விடுவோம்.//
ஆமா சின்னா! சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடும். லாரி மழைத் தண்ணியிலே போகும் போது தேங்காய் டிரைவரை சொல்றது.
'ஓசியிலேயே லாரி கழுவுறான் பார்':)
vasudevan31355
24th October 2015, 01:11 PM
சின்னா!
கண்டு பிடிச்சுக்கோங்க:)
ஊரெங்கும் பாரு
உல்லாச டூரு
நூற்றுக்கு நூறு
எல்லாமே ஜோரு
அடுத்தது
நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
Russellxor
24th October 2015, 02:17 PM
சின்னக்கண்ணன் சார்
உங்களுக்காக
ஓபனிங்இசையில் உற்சாகத்தை அளித்த பாடல் முடியும் வரை உற்சாகத்தை கூட்டினாலுமஅந்தஓபனிங் இசையே காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
இசைக்கப்பட்ட வாத்தியங்கள்தான்.ஆனாலும் புதிது புதிதாக வித்தியாசமாக கொண்டு வந்தார் பாருங்கள் அங்கே தான் இளையராஜா இனியராஜா.பாடலின் சிறப்பே வித்தியாசமான இசை சேர்ப்புகள்.
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா (2)
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)
..........ஆசை நூறு வகை.........
முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவே
..........ஆசை நூறு வகை.........
என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்
..........ஆசை நூறு வகை........
RAGHAVENDRA
24th October 2015, 02:44 PM
Raghav ji saronna enakku pidikkumnu directaaa sollalame :)
பதிவு எண் 1010 ...
ராஜேஷ் ... அது வாசு போட்டதாக்கும்...
chinnakkannan
24th October 2015, 03:59 PM
//சின்னக்கண்ணன் சார்
உங்களுக்காக
ஓபனிங்இசையில் உற்சாகத்தை அளித்த பாடல் முடியும் வரை உற்சாகத்தை கூட்டினாலுமஅந்தஓபனிங் இசையே காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
இசைக்கப்பட்ட வாத்தியங்கள்தான்.ஆனாலும் புதிது புதிதாக வித்தியாசமாக கொண்டு வந்தார் பாருங்கள் அங்கே தான் இளையராஜா இனியராஜா.பாடலின் சிறப்பே வித்தியாசமான இசை சேர்ப்புகள்.//
தாங்க்ஸ் செந்தில்வேல் ஷார்ட் அண்ட் ஸ்வீட்.. நமக்கு இசையும் பிடிக்கும்..பட் லிரிக்ஸ் கொஞ்சம் பார்ப்பேன்..
ஒட்டப்பாலம் சாத்து நாயருக்கும் பாப்புல்லி அம்மாளுவிற்கும் மலேஷியாவில் பிறந்தவர் மலேஷியா வாசுதேவன் என அழைக்கப்பட்ட வாசுதேவன்.. குடும்பத்தில் எட்டாவது பையன்..இருப்பினும் என்ன பாடலில் இண்ட்ரஸ்ட்
அப்படி இப்படி என்று இருந்துவிட்டு சென்னையில் நடித்த படம் ரத்தப் பேய்... வந்ததா தெரியாது..
முதலாய் ப் பாடிய பாடல் பாலு விக்கிற பத்மா.. என்ற பாட்டாம்..கேட்டீர்கள் என்றால் ஏ. எல் ராகவன் என்று நினைப்பீர்கள்..
https://youtu.be/0iX_zxJ5bB0
ஏதோ ஒரு பேட்டியில் சொன்ன நினைவு.. ரஜினிக்காக முதன் முதலாகப் பாடிய பாடல் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பார்.. யூ நோ..அடுத்த வாரிசு இல் ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியஸ் ரஜினியாய் வித்யாசமாக இருப்பார் ரஜினி..அப்படி ஆடும் பாடல் இந்த ஆ. நூ. வ.. கொஞ்சம் பயந்து பயந்து தான் பாடினாராம் ம.வா.. ( எனப் படித்த நினைவு)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ... என்னும் பாட்டில் திறமை நன்னாவே தெரியும்..காடு பொட்டக்காடு பாட்டில் டிஃபரண்ட்டாகப் பாடியிருப்பார்..
சரி.. நமக்கு ஆசை நூறுவகை பாட் போட்டுடலாமா..
https://youtu.be/W5UURAXGN50
chinnakkannan
24th October 2015, 04:20 PM
எல்லோரும் கொண்டாடுவோம் பாட் நினைவுக்கு வருது வாசு..அடுத்த பாட் தெரிலை..
அப்புறம்..
செந்தில்வேல்..
என்னை/ நம்மைப் பொறுத்தவரை என்னன்னாக்க...( நைசா எல்லாரையும் சேர்த்துக்கிட்டேன்) தேவிகாவையும் ரசிக்கணும் தேவிஸ்ரீயும் தெரியும்னு சொல்லணும்
விஜயலட்சுமி எல் லும் தெரியணும் விஜய லட்சுமி விஷாலும் தெரியணும்
கவிதாவும் தெரியணும் காதம்பரி நயனையும் பிடிக்கணும்
ஸ்ரீதேவியும் பிடிக்கும் ஸ்ரீ திவ்யாவும் பிடிக்கணும் இல்லியோ ( ஹப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன் :) )
இதோ விக்ரம் ப்ரபு, ஸ்ரீதிவ்யா இன் வெள்ளைக் காரத் துரை.. நல்லபாட் அண்ட் லிரிக்ஸ்.
https://youtu.be/RU-JANr5GtU
Russellxor
24th October 2015, 04:37 PM
[QUOTE=chinnakkannan;1263065]//சின்னக்கண்ணன் சார்
"ஏதோ ஒரு பேட்டியில் சொன்ன நினைவு.. ரஜினிக்காக முதன் முதலாகப் பாடிய பாடல் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பார்.. யூ நோ..அடுத்த வாரிசு "
தர்யுத்தம் படத்தில் ரஜினிக்காக ஒரு தங்கரதத்தில்பொன் மஞ்சள் நிலவு பாடியிருக்கிறாரே அதற்கு முன்பே.அதற்கு முன்பும் கூட பாடி இருக்கலாம்..
நான் தவறாகச் சொல்கிறேனோ
ஏனெனில்
உங்களுக்குத் தெரியாத பாடல்களா?
chinnakkannan
24th October 2015, 04:54 PM
எனக்குத்தெரியாத பாடல்கள்(கேட்டது காதளவு..கேட்காதது உலகளவு!) சொல்லத் தான் ஜாம்பவான் போலக் குயில்களாய் வாசுமதுண்ணாராகவேந்தர் ஆதிராம் இருக்கிறார்களே.. நீர் சொல்வதும் சரியாக இருக்கலாம்.. லெட்ஸ் வெய்ட் அண்ட் ஸீ..உங்களுக்காக இளையராஜா ரெண்டு பாட் போடட்டா... ஏற்கனவே போட்டாச் தான்..பட் எப்பக் கேட்டாலும் எங்கிட்டோ போய்டுவோம்..
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட..
https://youtu.be/SkVXuZtN3Js
என்னைத் தொட்டு அள்ளிக்க்கொண்ட மன்னன் பேரும் என்னடி.. ஆபேரி ராகம்..(ஹை..ராகதேவனை இழுக்கலாம் :) )
https://youtu.be/qPXU269QmK8
ரெண்டுமே கார்த்திக் மோனிஷா.
இதுபற்றி நானும் ராகவேந்திரா சாரும் பேசியிருக்கோம் பாகம் மூணு என நினைவு..
RAGHAVENDRA
24th October 2015, 05:37 PM
எனக்குத்தெரியாத பாடல்கள்(கேட்டது காதளவு..கேட்காதது உலகளவு!) சொல்லத் தான் ஜாம்பவான் போலக் குயில்களாய் வாசுமதுண்ணாராகவேந்தர் ஆதிராம் இருக்கிறார்களே.. நீர் சொல்வதும் சரியாக இருக்கலாம்.. லெட்ஸ் வெய்ட் அண்ட் ஸீ..உங்களுக்காக இளையராஜா ரெண்டு பாட் போடட்டா... ஏற்கனவே போட்டாச் தான்..பட் எப்பக் கேட்டாலும் எங்கிட்டோ போய்டுவோம்..
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட..
https://youtu.be/SkVXuZtN3Js
என்னைத் தொட்டு அள்ளிக்க்கொண்ட மன்னன் பேரும் என்னடி.. ஆபேரி ராகம்..(ஹை..ராகதேவனை இழுக்கலாம் :) )
https://youtu.be/qPXU269QmK8
ரெண்டுமே கார்த்திக் மோனிஷா.
இதுபற்றி நானும் ராகவேந்திரா சாரும் பேசியிருக்கோம் பாகம் மூணு என நினைவு..
spellbound..
சரியாக இதே நேரத்தில் இதே இரண்டு பாடல்களை நான் நினைத்து, யூட்யூபில் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரம் வேறு வேலை பார்த்து விட்டு வந்து பார்த்தால் அதே நேரத்தில் தாங்களும் இதே இரண்டு பாடல்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள்..
இந்தப் படமே மனதில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
பெட்டியில் விளையாட்டாக நாயகியை அடைத்து வைத்து அதிலேயே அவள் மாண்டு போவதாகத் தானே கதை சி.க. சார்?
chinnakkannan
24th October 2015, 05:47 PM
அதே தான் ராகவேந்திரா சார். நீங்கள் சொல்லித் தான் நான் இந்தப் படம் பார்த்தேன்..முதலில் பாடல் கேட்டு - என்னைத் தொட்டு- பாட்டு- அதைப் போட நீங்கள் விளக்கமாய் எழுதியிருந்தீர்கள்.. மோனிஷா..அகால மரணம் அடைந்தது வருத்தம் என எழுதியிருந்தேன்.. இன்றைய முக நூலில் என் எழுத்தாள நண்பர்- குருமார்களில் ஒருவர்- இரா. முருகன் இந்தப் பாட்டைக் குறிப்பிட்டிருந்தார்..எனில்மறுபடி பார்த்து..இங்கும் போட்டேன்..வெரி நைஸ் ஆஃப் யூ.. நீங்களும் பார்த்தது.. இது தான் நண்பர்களின் ஒருமித்த சிந்தனை எனச் சொல்வது.. தாங்க்ஸ்..
chinnakkannan
24th October 2015, 06:56 PM
அட ராமா.. நாங்க தப்புக் கண்டுபிடிக்க வருவீங்கன்னா சொன்னோம்..விஷயம் தெரிஞ்சவங்க இருக்காகன்னு தானே சொன்னோம்..உங்க பேரையும்போட்டிருந்தோமே.. டாங்க்ஸூங்க்ணா..:)
rajeshkrv
25th October 2015, 12:09 AM
அது உங்களுக்கு சொன்னது அல்ல, எனக்கு நானே சொல்லிக்கிட்டது. (மனசாட்சியின் குரல்)
nanri for the correction :)
raagadevan
25th October 2015, 07:15 AM
திரைப்படம்: அழகன்
இயக்குனர்: கே. பாலசந்தர்
நடிப்பு: மம்மூட்டி & பானுப்ரியா
வரிகள்: புலமைப் பித்தன்
இசை: மரகதமணி (also known as வேதநாராயணா, கீரவாணி, கொடூரி கீரவாணி, எம். எம். கீரவாணி & எம்.எம் க்ரீம்)
ராகம்: கரஹரப்ரியா
பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சாதனா
https://www.youtube.com/watch?v=T7HDqhUXNSc
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும் தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம் தான் வரல
காதலில் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித் தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்று தான் வந்தது
சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம் தான்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
rajeshkrv
25th October 2015, 07:46 AM
திரைப்படம்: அழகன்
இயக்குனர்: கே. பாலசந்தர்
நடிப்பு: மம்மூட்டி & பானுப்ரியா
வரிகள்: புலமைப் பித்தன்
இசை: மரகதமணி (also known as கீரவாணி, கொடூரி கீரவாணி, வேதநாராயணா, எம். எம். கீரவாணி & எம்.எம் க்ரீம்
ராகம்: கரஹரப்ரியா
பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சந்தியா
https://www.youtube.com/watch?v=T7HDqhUXNSc
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும் தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம் தான் வரல
காதலில் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித் தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்று தான் வந்தது
சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம் தான்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
RD female singer is
sadhana and not sandhya
raagadevan
25th October 2015, 07:53 AM
You are right; thank you Rajesh! I rechecked on the movie DVD, and corrected my posting! :)
rajeshkrv
25th October 2015, 07:57 AM
welcome RD good to see u in this thread
raagadevan
25th October 2015, 08:00 AM
Thank you Rajesh. I try to drop in on and off! :)
rajeshkrv
25th October 2015, 08:17 AM
Superb song by ISayarasi & Udutha sarojini(ondru serndha anbu maaruma fame)
https://www.youtube.com/watch?v=85Sti1vTXvk
RAGHAVENDRA
25th October 2015, 08:37 AM
வணக்கம் ராஜேஷ்
இசையரசியின் உறவினர் தீபங்கள் ஏற்றும் பாடலைப் பாடிய சந்தியாவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அழகன் பாடலைப்பாடிய சந்தியாவும் ஒன்றா.
ஏனென்றால் தேவதை படத்தில் தான் சந்தியா பாடகியாக அறிமுகமானார் என பத்திரிகைகள் அப்போது குறிப்பிட்டன. தேவதை 1997ம் ஆண்டு, அழகன் 1991ம் ஆண்டு என நினைக்கிறேன்.
rajeshkrv
25th October 2015, 09:05 AM
வணக்கம் ராஜேஷ்
இசையரசியின் உறவினர் தீபங்கள் ஏற்றும் பாடலைப் பாடிய சந்தியாவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அழகன் பாடலைப்பாடிய சந்தியாவும் ஒன்றா.
ஏனென்றால் தேவதை படத்தில் தான் சந்தியா பாடகியாக அறிமுகமானார் என பத்திரிகைகள் அப்போது குறிப்பிட்டன. தேவதை 1997ம் ஆண்டு, அழகன் 1991ம் ஆண்டு என நினைக்கிறேன்.
azhagan padal padiyadhu Sadhana endra padagi sir. Sandhya devathai/iruvar thaan arimugam
RAGHAVENDRA
25th October 2015, 09:08 AM
OK Rajesh. Tnx.
JamesFague
25th October 2015, 10:23 AM
Courtesy:Tamil Hindu
நினைவுகளின் சிறகுகள் : குமாரி கமலா - வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
இந்திய விடுதலைத் திருநாள், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, பாரதி விழா நேரங்களில் தமிழர்களின் மனங்களில் நினைவுப் பதியம் போட்டு மிக நெருக்கமாகிவிடுவார் குமாரி கமலா. 1934 ஜூன் 16-ல் மயிலாடுதுறையில் பிறந்தவர்.
‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’, ‘வெற்றி எட்டுத் திக்கு என்று கொட்டு முரசே!’, ‘ஆஹா காந்தி மகான்!’ போன்ற பாடல்கள் செவிகளைக் குளிர வைக்கும். அவ்வேளையில் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் நிறைவாக கமலாவின் நடனம் புதுப் பொலிவுடன் ’பொதிகை’யை ஆக்கிரமிக்கும்.
நிச்சயமாக அது ஒரு பாக்கியம் கமலாவுக்கு.
தமிழ் சினிமாவின் ஆரம்ப கால பொம்மலாட்டங்களில் கமலாவின் நாட்டியம் டூரிங் டாக்கீசுகளில் கல்லா கட்ட உதவியது.
இரு கரு நாகங்களைத் தன் தோள்களில் போட்டுக் கொண்ட மாதிரி 13 வயது கமலாவின் இரட்டை ஜடையும், பாவாடை சட்டையும் ‘அண்ணா... அண்ணா’ என்கிற பாசமிகு குரலும் ’நாம் இருவர்’ படத்துக்கு மெருகூட்டியது.
தொடக்கத்தில் மும்பைவாசி கமலா. ஐந்து வயதுக்கெல்லாம் கதக், அப்புறம் பரதம் என அவரது முழங்கால்கள் நர்த்தனமாடியே முழு வளர்ச்சி அடைந்தன. சந்துல்ஷா தயாரித்த ‘யூத் லீக்’ இந்திப் படம் கமலாவுக்கு ஆடுவதற்கு முதலில் சந்தர்ப்பம் அளித்தது. (தமிழில் ’வாலிபர் சங்கம்’) யதாஷ் சர்மாவின் இயக்கத்தில் பார்வை இழந்த பாலகியாக நடனமாடிய அனுபவம் கமலாவுக்கு உண்டு.
இரண்டாம் உலகப் போருக்குப் பயந்து தமிழகம் திரும்பியது கமலாவின் குடும்பம். மயிலாப்பூர் அப்பு முதலித் தெருவில் வாசம். வழூவூர் ராமையா பிள்ளையிடம் பரதப் பயிற்சி தொடர்ந்தது. கமலா முதலில் ஆடிய நேரடித் தமிழ்ப் படம் பி.யூ. சின்னப்பா நடித்த ‘ஜகதலப்பிரதாபன்.’ ‘பட்சிராஜா’ ஸ்ரீராமுலு நாயுடு கமலாவின் நடனம் ஒன்றைப் பார்த்துவிட்டு வழங்கிய வாய்ப்பு.
கமலாவின் பாதங்களை சினிமா காமிரா வெகுவாகப் படம் பிடித்தது. ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் தயாரிப்புகள் கமலாவின் நடனங்கள் இல்லாமல் வெளிவராது என்கிற நிலைமை உண்டானது. குறிப்பாக ’நாம் இருவர்’ முரசு நடனம். மெய்யப்பச் செட்டியார் அதை கமலாதான் ஆட வேண்டும் என்று கண்டித்துச் சொல்லிவிட்டார். திரையின் இரு புறமும் வெவ்வேறு கமலாக்கள் ஆடிக் காண்போரைக் கவர்ந்தனர். இந்தி, தமிழ்,மலையாளம், கன்னடம், சிங்களம் என்று எல்லை கடந்தும், கமலாவின் கால்கள் பேசின.
பராசக்தி சினிமாவில் ’ஓ! ரசிக்கும் சீமானே!’ பாட்டுக்கான ஆட்டம், கமலாவை இளைஞர்களிடத்தில் நிரந்தரமாகக் கொண்டுசேர்த்தது. 1958-ல் சிவாஜி- சாவித்ரி இணைந்து நடித்த காத்தவராயனில் கோபிகிருஷ்ணா - கமலா சேர்ந்து ஆடியிருக்கிறார்கள். அவர்களது சிவன்-பார்வதி நடனம் படத்துக்குக் கூடுதல் சிறப்பைக் கொடுத்தது.
அகிலனின் ‘பாவை விளக்கு’ 1960 தீபாவளிக்கு டாக்கியாக வெளியானது. அதில் நடிகர் திலகத்துடன் காதலி ‘செங்கமலமாக’நடிக்கும் அதிர்ஷ்டம் கமலாவுக்குக் கிடைத்தது. ‘பாவை விளக்கு’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே, ‘வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி’, ‘நான் உன்னை நினைக்காத’, ‘சிதறிய சலங்கைகள் போல’ உள்ளிட்டப் பாடல் காட்சிகள் காலத்தால் கமலாவை மறக்கச் செய்யாது.
கவிஞர் கண்ணதாசனின் எழுச்சிப் படைப்பு ‘சிவகங்கைச் சீமை’. அதில் கதாநாயகி கமலா. படத்தின் க்ளைமாக்ஸில் மழையில் கமலா ஆடிடும் பரதம் மெய்சிலிர்க்க வைக்கும். ‘கனவு கண்டேன் நான், கன்னங்கருத்த கிளி’ ஆகிய பாடல்கள் கமலாவுக்குத் தனிப் புகழைத் தேடித் தந்தன. கல்கியின் ’பார்த்திபன் கனவு’ படமானது. சிவகாமியாக மாமல்லர் எஸ்.வி. ரெங்காராவுடன் நடித்தவர் கமலா.
‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் வெற்றியிலும் கமலாவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. ‘பிரம்மன் தாளம் போட’ என்று தொடங்கும் பாடலில் கமலா-குசலகுமாரி ஆடிய ‘சிம்ம நந்தனம் ஆடிடும் முன்னே மயூர பந்தனம் செய்யட்டுமா...’ போட்டி நடனம் விறுவிறுப்பூட்டியது. ஏறக்குறைய நாலு நறுக்கான இந்தப் படங்களோடு, நடிப்பில் கமலாவின் பங்களிப்பு நிறைவு பெற்றது.
இந்தி தெரிந்திருந்தும் வைஜெயந்திமாலா, பத்மினி போல் அகில இந்தியாவிலும் வெற்றிகரமான கதாநாயகியாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. ‘அது ஏன்?’ என்கிற கேள்விக்கு மிக நேர்மையாகப் பதில் அளித்துள்ளார் கமலா.
“உண்மையைச் சொல்லப்போனால் நடனம் வந்த அளவுக்கு எனக்கு நடிப்பு வரவில்லை. அதோடு நீள நீள டயலாக் வேறு.ஒரு தடவை பேசும்போது கொஞ்சம் தடுமாறிவிட்டாலும் போதும்; மறுபடியும் முதலில் இருந்து பேச வேண்டும். இப்போது மாதிரி டப்பிங் வசதியெல்லாம் கிடையாது. நமக்காக இன்னொருவர் குரல் கொடுப்பதை அனுமதிக்க மாட்டார்கள். திரையில் நடிக்கிறவரே முழு வசனமும் பேசியாக வேண்டும். நீண்ட நெடிய உரையாடலில் வார்த்தைகளோ முகபாவங்களோ விடுபட்டுப் போனால் மறுபடியும் பேசச் சொல்வார்கள். ‘அய்யோ கடவுளே!’ என்று மனசு அலறும். இப்படியொரு டென்ஷன் தேவையா என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. நமக்கு நன்கு தெரிந்த நடனத்தை மட்டும் தொடரலாம் என்று முடிவு செய்தேன்.”
1971-ல் ‘செண்டா’ என்கிற மலையாளப் படத்தில் கமலாவின் நாட்டியம் கடைசியாக இடம்பெற்றது. உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர் ஆர். கே. லட்சுமணனுடன் ஏற்பட்ட திருமண பந்தம் 1960-ல் முடிவுக்கு வர, 1964-ல் மேஜர் லட்சுமி நாராயணனின் திருமதி ஆனார் கமலா. ஒரே ஒரு ஆண் வாரிசு. பயாஸ்கோப்பிலிருந்து விடுபட்ட பின்னர் முழு மூச்சுடன் தன்னை நாட்டியக் கலைக்காக கமலா அர்ப்பணித்துக்கொண்டார். இங்கிலாந்து அரசி எலிசெபத்தின் அவையில், லண்டனிலும் பின்னர் சென்னையிலுமாக இரு முறை கமலாவின் நாட்டியம் நடைபெற்றது.
‘சென்னை ராஜ்பவனில் ராணிக்கு முன்னால் நான் ஆடிய பாம்பு நடனம் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ஒண்டர்ஃபுல் என்று நீண்ட நேரம் என்னைப் பாராட்டியபடியே இருந்தார்.’- குமாரி கமலா.
1970-ல் இந்திய அரசின் பத்மபூஷன் விருது கமலாவின் ஆடற்கலைக்கு மகுடம் சூட்டியது. இரண்டு கணேசன்கள், எஸ்.எஸ். ஆர். படங்களில் பங்கேற்ற கமலா, எம்.ஜி.ஆருடன் நடித்தது கிடையாது. ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். ஆட அழைத்தும், கமலா அதில் இடம்பெறவில்லை. காரணம் அதிக வேலைப் பளு.
1981-ல் நியூயார்க்கில் குடியேறினார் கமலா. அங்கு ’ஸ்ரீ பரத கலாலயா’ என்கிற நாட்டியப் பாடசாலை ஒன்றையும் அமைத்தார். அதற்குப் பிறகு சுற்றமும் நட்பும் அழைத்தால் தாயகம் வந்து போவது நிகழ்ந்தது.
chinnakkannan
25th October 2015, 11:26 AM
ஹாய் குட் மார்னிங்க் கமலா ஸாரி.. குட்மார்னிங்க் ஆல் :) எல்லாம் எஸ்.வாசுதேவரின் கட்டுரை படித்ததால் வந்தது :)
குமாரி கமலாவின் நாட்டியத்திற்கும் மற்றவர்களின் நாட்டியத்திற்கும் என்ன வித்தியாசம்.. நடனம் தெரியாதவர்களுக்கும் கு.க ஆடும் நடனத்தில் நுணுக்கம் தென்படும்..ஒருவித பிரமிப்பு உண்டாகும்..நிறைய படங்கள் பார்த்திருந்தாலும் கொஞ்சம் விவரமறிந்து பார்த்த படம் பாவை விளக்கு (ஒரு இனிய சர்ப்ரைஸ் என்னவெனில் வெகு நீளமான படம் போரடிக்காமல் இருந்தது தான்... ந.தியின் இளமை நடிப்பு எம்.என். ராஜத்தின் குறும்புகலந்த நடிப்பு. வி.கே.ஆர், செளகாரின் இறுதிக்காட்சியில் குழந்தை பறிகொடுக்கும் சோகம்(?), பண்டரிபாய் யின் முதல் ஓரிரு காட்சிகளிலேயே அவர் பாத்திரத்தின் முடிவு( திரைக்கதாசிரியர் வெரி ஸ்மார்ட்) அண்ட் இனிய பாடல்கள் ப்ளஸ் குமாரிகமலாவின் இரு நடனங்கள்)
இரவில் நானுனை நினைக்காத நேரமுண்டோ பாடல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது..
https://youtu.be/Ft1373kIm1c
எதற்காக வெட்டிக் கோபத்தில் பிரிய வேண்டும் என்பது இதுவரைக்கும் புரியாத ஒன்று..அத்தை மகளை அதற்குப் பிறகு தான் மணப்பார் ந.தி.இல்லியோ..அதே போல பம்பாயில் நடன மங்கையாக ஆக வேண்டிய அவசியமென்ன என்பதெல்லாம் கொஞ்சம்புதிர் தான் (படக்கதை கொஞ்சம் வெகு மங்கலாக அவுட் ஆஃப் போகஸில் இருட்டில் எடுத்த புகைப்படம் போலத் தானிருக்கிறது நினைவில்(இன்னும் எத்தனை வித்தியாசமா புகைக்குப் பர்த்தியா கண்டுபிடிக்கணுமோ தெரியவில்லை :))
பட் பாட்..வெரி நைஸ்..
ராஜ் ராஜ்சாரும் நிறைய ப் பாடல்கள் போட்டிருக்கிறார்..
கொஞ்சும் சலங்கை.. கறுப்பு வெள்ளை என நினைத்து வீடியோவில்பார்த்த போதுசர்ப்ரைஸாகக் கலர்.. அந்த நடனப் போட்டியில் வாசுவின் குசலகுமாரி(?!)யை விட கமலாவின் நடனம் நன்றாக இருக்கும்.. கு.குவின் நடனம் ச்சும்மா தயிர்வடைதுள்ளிக்குதிப்பது போல இருக்கும் :) ( நானிப்போ பார்க்கலை..முன் பார்த்ததை நினைவில் வைத்து எழுதுகிறேன்..)
https://youtu.be/SGjJKqFgcAs
ம்ம் கமலாபத்தி பேச ஜாம்பவான்களை அழைக்கிறேன்..:)
vasudevan31355
25th October 2015, 11:29 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
45
'மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று'
http://i58.tinypic.com/e7c9d3.jpg
'வைராக்கியம்'
அரியவைகளை அற்புதமாய் ரசிக்கும் மதுண்ணா, ராகவேந்திரன் சார் மற்றும் ஆதிராம் சாருக்கு இப்பாடலை மகிழ்ச்சியுடன் அர்ப்பணிக்கிறேன். (சின்னா! கோபம் வேண்டாம். உங்களுக்கு வேறு பாடல் நிச்சயம் உண்டு):)
இன்றைய பாலாவின் தொடரில் மிக மிக அபூர்வமான ஒரு பாடல். இப்படி ஒரு பாடலை பாலு பாடியிருக்கிறாரா என்பது எண்பது சதவீதம் பேருக்குத் தெரியாது. மிக ஆச்சர்யம். பெரும்பாலானோர் கேட்காத பாடலும் கூட. அதனால் என்ன? பாலாவின் அனைத்துப் பழைய பாடல்களையும் எப்படியாவது ஒன்று விடாமல் தந்து அவரையும், உங்களையும் மகிழ்விக்கத்தானே இந்தத் தொடர்?
'வைராக்கியம்' 1970-ல் வெளிவந்த படம். இயக்கம் ஏ.காசிலிங்கம். 'அன்னை பிலிம்ஸ்' கே.ஆர் பாலன் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு. கதை, வசனம் மதுரை திருமாறன். பாடல்கள் 'ஜி'யின் பிரியப்பட்ட வாலி. ('ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்ற அற்புதமான வரிகள்) ஒளிப்பதிவு விஜயன்.
எஸ்.எஸ்.ஆர், ஜெமினி, நிர்மலா, ஜோதிலட்சுமி, நாகேஷ், ஓ.ஏ.கே தேவர், சந்திரகாந்தா, தேங்காய் என்று ஏக நட்சத்திரக் கூட்டம்தான். ஒரு அபூர்வமான படம். இந்தப் படம் எப்போது திரும்ப வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இப்போதுதான் கனிந்தது.
என் நினைவு சரியாக இருக்குமானால் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிப்படங்களான, அதுவும் ஒரே தேதியில் (29.10.1970) வெளியாகி 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்த 'எங்கிருந்தோ வந்தாள்', 'சொர்க்கம்' படங்களின் தீபாவளி வெளியீட்டோடு வந்த படங்களில் 'வைராக்கிய'மும் ஒன்று என்று நினைக்கிறேன்.
கடலூர் நியூசினிமாவில் ராமாபுரத்து ரசிகர்களுடன் தீபாவளி அன்று காலைக் காட்சி 'எங்கிருந்தோ வந்தாள்' முடித்துவிட்டு, மதியம் மேட்னி பாடலியில் 'சொர்க்கம்' முடித்துவிட்டு, அப்படியே ஈவ்னிங் ஷோ முத்தையாவில் 'வைராக்கியம்' படம் பார்த்தது நினைவில் இருக்கிறது. படங்களையெல்லாம் பார்த்து முடித்து விட்டு முந்திரிக் காடுகளின் வழியே, பார்த்த படங்களைப் பற்றிப் பேசியபடியே இரவு 12 மணிக்கு பொடி நடையாக ராமாபுரம் போய் சேர்ந்ததும் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு வயது பத்து.
ம்..அந்த பொற்காலமெல்லாம் இனி ஏது?
கழைக்கூத்தாடி எஸ்.எஸ்.ஆர். அவர் தங்கை நிர்மலா, தாய் காந்திமதி. சிறு வயதாய் இருக்கும் போது தந்தையைக் கொன்ற ஓ.ஏ.கே தேவரை பழி தீர்க்க எஸ்.எஸ்.ஆர் இறுதி வரை வைராக்கியமாய் இருந்து அப்பாவி போல நடித்து போலீஸை ஏமாற்றி இறுதியில் தேவரை கொலை செய்வதுதான் கதை. இடைச் செருகலாக நிர்மலாவைக் காதலிக்கும் வில்லனின் மகன் பணக்கார ஜெமினி, அப்புறம் வாசு, தேவர் கைங்கரியத்தில் ராஜவைரம் திருட்டுப் போனதால் பைத்தியமாக ஆகிவிடும் ஜோதிலட்சுமியின் தந்தை, ஜோதிலட்சுமிக்கு வைரத் திருட்டு பற்றி தெரிந்து கொள்ள உதவும் அவர் தோழி சந்திரகாந்தா, (இறுதியில் 'புதிய பறவை' சரோஜாதேவி ரேஞ்சிற்கு துப்பறியும் பெண் போலீஸ் அதிகாரி), வில்லனின் தம்பி இன்னொரு வில்லன் எம்.ஆர்.ஆர்.வாசு, அவரின் நல்ல மகன் நாகேஷ், வைரம் பற்றிக் கண்டுபிடிக்க கழைக் கூத்தாடி வேடம் போடும் ஜோதி, (அப்படியே எஸ்.எஸ்.ஆர் மீதும் காதல்) தேவரைக் கொன்ற எஸ்.எஸ்.ஆரின் கொலைப் பழி ஜெமினி மீது விழ அவர் தலை மறைவு, பின் எதிரி வீட்டிலேயே காந்திமதியிடம் அடைக்கலம், தந்தையைக் கொன்றவனின் குடும்பத்தில் தங்கை நிர்மலாவை வாழ வைக்கப் பிடிக்காத எஸ்.எஸ்.ஆர், ஆத்திரத்தால் ஜெமினியைக் கொல்ல முயன்று தவறி தாயின் உயிரைக் கத்தியால் பறிக்கும் எஸ்.எஸ்.ஆரின் கண் மூடித்தனமான ஆத்திரம், இறுதியில் செய்த பாவங்களுக்கு காந்தி, இயேசு, அண்ணா இவர்கள் புத்திமதிக் குரலில் மனம் திருந்தி தங்கையை ஜெமினிக்கு மணம் முடித்து சிறை செல்லும் இலட்சிய நடிகர், எல்லாப் படங்களிலும் வரும் 'உங்களுக்காகவே காத்திருப்பேன்' என்று டயலாக் அடித்து அழும் ஜோதி,:) இன்னொரு வில்லன் கைது என்று கதை செம ஜோராகவே விறுவிறுப்பாகவே செல்லும்.
'இலட்சிய நடிக'ரின் வைராக்கிய நடிப்பு சில இடங்களில் டாப். சில இடங்களில் வேஸ்ட். சொதப்பல். ஜெமினி வழக்கம் போல. ஆனால் இளமை, அழகு கூடுதல். நிர்மலாவுடன் நளின டூயட். நிர்மலா கழைக்கூத்தாடிப் பெண் வேடத்திலும் அழகு. ஜோதிக்கு அமர்க்களமான கிளப் டான்ஸ். ஜொலிக்கும் அழகு. 'அக்கா'.... சண்முக சுந்தரத்தின்:) குண்டுத் தங்கை சி.ஐ.டி சந்திரகாந்தா நடிப்பில் ஊதி விடுகிறார். நாகேஷ், தேங்காய் எல்லாம் இருந்தும் சிரிப்புக்கு பஞ்சம். ஓ .ஏ.கே தேவர், எம்.ஆர்.ஆர்.வாசு பார்த்து புளித்துப் போன வில்ல(ங்க ):) நடிப்பு.
பாடல்கள் அருமை. ஆனால் எஸ்.எம்.எஸ்ஸின் ஒரே ஸ்டீரியோ பாணி. ஈஸ்வரிதான் பாடல்களின் ராணி.
இப்பத்தான் இந்தப் படத்தின் மற்ற பாடல்களை திரியில் பார்த்தோம். அதனால தொடர் பாடலைத் தவிர மற்ற பாடல்களை விட்டு விடுகிறேன். நீங்களும் பாவம்.:)
சரி! தொடரின் பாடலுக்கு வருவோம்.
கழைக் கூத்தாடி நிர்மலாவை விரும்பும் தன் மகன் ஜெமினியின் காதலை முறியடிக்க தந்தை ஓ.ஏ.கே தேவர் ஒரு சதித் திட்டம் தட்டுகிறார். நிர்மலாவையும், அவர் அண்ணன் எஸ்.எஸ்.ஆரையும், அவர் தோழன் வி.கோபாலகிருஷ்ணன் மூவரையும் இரவோடு இரவாக குடிசையோடு வைத்துக் கொளுத்த முடிவு செய்கிறார்.
ஆனால் இதை அறியாத ஜெமினி யதேச்சையாக எஸ்.எஸ்.ஆரை அவர் குடிசையில் சந்தித்து, நிர்மலாவைக் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதை சொல்லி, அவர் தாயை அழைத்து வரச் சொல்லி கிராமத்துக்குக் காரில் அனுப்பி விடுகிறார். இப்போது குடிசையில் ஜெமினியும், நிர்மலாவும் மட்டுமே. எஸ்.எஸ்.ஆரின் கழைக்கூத்தாடி தோழன் வி.கோபாலகிருஷ்ணனை நாகேஷ் அகஸ்மாத்தாக ஒரு நாடகத்திற்கு நடிக்க அழைத்துச் சென்றுவிடுகிறார். தன் மகனே குடிசையில் நிர்மலாவுடன் இருப்பதை அறியாத ஓ.ஏ.கே தேவர் தன் திட்டப்படி குடிசையைக் கொளுத்திவிட்டு எஸ்.எஸ்.ஆர், நிர்மலா, கோபாலகிருஷ்ணன் எரிந்து போனதாக நினைத்து மகிழ்கிறார். பின் தம்பி வாசுவுடன் நாகேஷ் நடத்தும் நாடகத்திற்கு செல்கிறார்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355054/Vairakiyam%20HD%20DVD%20Full%20Movie%20black%20amp %20white%20-%20YouTube.mp4_004512945.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355054/Vairakiyam%20HD%20DVD%20Full%20Movie%20black%20amp %20white%20-%20YouTube.mp4_004512945.jpg.html)
இப்போது நாடகக் காட்சிதான் பாடல் காட்சி. 'நவீன பட்டினத்தார்' என்ற நாடகம்.
காமுக மன்னனாக வி.கோபாலகிருஷ்ணன் ராஜ உடை தரித்து, மது, மங்கை என்று காமக் களியாட்டங்களில் மூழ்கிக் கிடக்க, அங்கு வரும் நாகேஷ் சாமியார் அவருக்கு 'அதெல்லாம் வேண்டாம்' என்று புத்தி சொல்ல, கோபம் கொண்ட கோபாலகிருஷ்ணன் சாமியாரைப் பழி வாங்க அவரிடம் நைஸாகப் பேசி விஷம் கலந்த அப்பத்தைத் தர, அதில் விஷம் இருப்பதை தெரிந்து கொண்ட நாகேஷ் சாமி கோபம் கொண்டு அந்த அப்பத்தை அங்கே இருக்கும் வீட்டின் மேல் எறிய சாமியாரின் கோபத்தாலும், சாபத்தாலும் அந்த வீடு பற்றி எரிய, படத்தின் கதைக்குத் தோதாக நாடகக் காட்சி. ஓ.ஏ.கே தேவர் நாடகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கொல்ல நினைத்த கோபாலகிருஷ்ணன் நாடகத்தில் நடிப்பதைப் பார்த்ததும் மேலும் அதிர்ச்சி அவருக்கு.
இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.
பாலாவின் பங்கு வி.கோபாலகிருஷ்ணனுக்கு. ஆரம்ப கால பாலாவின் பாடல். நாகேஷ் சாமியாருக்கு அமர்க்களமாக டி.எம்.எஸ்.குரல்.
இதில் இன்னொரு விசேஷம். கோபாலகிருஷ்ணனை மயக்கும் ராஜநர்த்தகி நடன நடிகைக்கு கௌசல்யா என்பவர் அருமையாக குரல் தந்திருப்பார். கிட்டத்தட்ட சுசீலா அம்மாவின் குரல் போலவே இருக்கும். கண்டு பிடிப்பது கஷ்டமே.
'இருப்பதை ரசிக்கட்டும் இளமை
அந்த இளமைக்கு நான்தான் தலைமை
ஆஹா ஆ..ஹா ஆஹாஹா
இருப்பதை ரசிக்கட்டும் இளமை'
ஆஹா! கௌசல்யா வாய்ஸ் அருமை. வளமை. இனிமை.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355054/Vairakiyam%20HD%20DVD%20Full%20Movie%20black%20amp %20white%20-%20YouTube.mp4_004350313.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355054/Vairakiyam%20HD%20DVD%20Full%20Movie%20black%20amp %20white%20-%20YouTube.mp4_004350313.jpg.html)
கோபாலகிருஷ்ணனுக்கு பாடல் காட்சி அதுவும் ஆரம்ப பாலாவின் குரலில் என்பது அதிசயம்தானே. அதனாலேயே இப்பாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
வி. கோபாலகிருஷ்ணன் என்றாலே நடிகர் திலகத்துடன் அவர் நடித்த 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும்' பாடலும், மற்றும் 'துளசி மாடம்' படத்தில் 'ஆடும் மயிலே ஆட்டம் எங்கே' பாடலும் மட்டுமே ஞாபகத்திற்கு வரும். அப்புறம் 'திக்குத் தெரியாத காட்டில்' படத்தில் சச்சு கோஷ்டியுடன் வுடன் பாடும் 'குளிரடிக்குதே கிட்ட வா' மற்றும் 'பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்' பாடல்களும் வி. கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. (பழைய படங்கள் சிலவற்றிலும் பாடல் காட்சிகளில் இவர் நடித்துள்ளார். நானே ராஜா, பாசவலை) (இன்னும் இருந்தால் ஆதிராம் சார் அழகாகச் சொல்வார்).
இப்போது 'வைராக்கியம்' படத்தில் இவருக்குப் பாடல் காட்சி. மது அருந்தும் மன்னனாக நன்றாகவே தள்ளாடி நடித்திருப்பார். பாலாவின் குரலும் குடித்தவன் குரலாக கோ.கிருஷ்ணனுக்கு நன்றாகப் பொருந்துகிறது.
நாகேஷுக்குப் பாடும் 'பாடகர் திலக'த்தின் திறமை 'நஞ்சைக் கலந்தனையா?' என்ற அதிர்ச்சி வரியிலேயே புலப்பட்டுவிடும். அவ்வளவு ஜோராக பாவங்கள் வெளிப்படும் அவரிடமிருந்து. பாராட்ட வாரத்தை ஏது? நாகேஷ் சாமியார் ஆட்டமும், பாட்டமும் அமர்க்களமப்பா!
பாலா அற்புதம். அப்போதே. எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். இந்தப் பாடலில் ஆரம்ப கால பாலாவின் குரல் போல் இல்லாமல் பின்னால் வந்த பாலாவின் குரல் போல் பாலா அவ்வளவு குரலை மாற்றிப் பாடி இருப்பார். மது அருந்திவிட்டு மயக்கத்தில் பாடுவது போல வேறு பாட்டின் பின்னணி இருப்பதால் வாய் குழறி வார்த்தைகள் தடுமாற்றத்தோடு பாலா கலக்கியிருப்பார் அவருக்கு கொஞ்ச பாகமே என்றாலும்.
அதுவும் 'தகுமோடா...சொல்லத் தகுமோடா' ரொம்ப சூப்பர்.
குடிபோதையில் உளறும்,
'உள்ளே எவண்டா பயலே?
கொண்டு வாடா சோடா!
பாலாவின் குரல் குடி வெறி உளரலாக ஓஹோ! ஓஹோ!
'சாமி யாரப்பா? இந்த சாமி யாரப்பா?
ஒழுங்கா சொன்னா கேக்காதப்ப்பா'
ஒருமுறை சொன்னா உரைக்காதப்பா
விருந்தையும் மருந்தையும் கொண்டு வாடாப்பா
வரிகளில் விறுவிறு கிண்டல்.
'வைராக்கியம்' பட டைட்டில் காட்சியில் பின்னணி என்று போடும்போது,
வெறுமனே 'பாலசுப்ரமணியம்' என்று போடுவார்கள். எஸ்.பி.இனிஷியல் இருக்காது.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355054/Vairakiyam%20HD%20DVD%20Full%20Movie%20black%20amp %20white%20-%20YouTube.mp4_000079709.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355054/Vairakiyam%20HD%20DVD%20Full%20Movie%20black%20amp %20white%20-%20YouTube.mp4_000079709.jpg.html)
பாடல் ஒன்றும் அப்படி இனிமையெல்லாம் கிடையாது. நாடகப் பாடல் என்பதால் வசனநடை அதிகம் உள்ள பாடல். அதனால் எடுபடாமல் போயிற்று. இதனால் பாலாவும் இந்தப் பாடலில் வெளியே தெரியாமல் போய் விட்டார். ஆனால் நல்ல கருத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் நல்ல பாடலே.
பாலாவின் இந்த அரிய பாடலை தர முடிந்ததே என்ற திருப்தி எனக்கு. இந்தப் பாடலை நமது திரிக்காக 'யூ டியூபி'ல் இன்று அப்லோட் செய்தேன்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355054/Vairakiyam%20HD%20DVD%20Full%20Movie%20black%20amp %20white%20-%20YouTube.mp4_004438999.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355054/Vairakiyam%20HD%20DVD%20Full%20Movie%20black%20amp %20white%20-%20YouTube.mp4_004438999.jpg.html)
பாலா
மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று
அந்த மயக்கத்திலே வரும் பாட்டு
மலர் இதழைத் திறந்து கொஞ்சம் காட்டு
அந்த இனிய சிரிப்பில் சுவை கூட்டு
மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று
கௌசல்யா
இருப்பதை ரசிக்கட்டும் இளமை
அந்த இளமைக்கு நான்தான் தலைமை
ஆஹா ஆ..ஹா ஆஹாஹா
இருப்பதை ரசிக்கட்டும் இளமை
பாலா
ஓஹோ
கௌசல்யா
அந்த இளமைக்கு நான்தான் தலைமை
பாலா
ஆஹா
கௌசல்யா
உச்சி முதல் பாதம் வரை
தொட்டவுடன் மெய் சிலிர்க்கும்
பச்சைக்கிளி கொச்சை மொழி
பேசி வந்து கை அணைக்கும்
பாலா
மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று
டி.எம்.எஸ்.
கட்டப்பா! என்னைக் கட்டப்பா
எப்பனே! கட்டப்பா என்னைக் கட்டப்பா
பக்தன் என்றால் என்னைக் கட்டப்பா
நீ பாவி என்றால் பெண்ணைக் கட்டப்பா
எட்டப்பா!
அப்பா! எப்பா! எப்பா!
பாலா
யாய்!
தகுமோடா! சொல்லத் தகுமோடா!
நீ புத்தி சொல்லத் தகுமோடா!
வருமோடா! இளமை வருமோடா!
வருமோடா! இளமை வருமோடா!
விட்டுப் போனால் இளமை வருமோடா!
ஏடா! மூடா! இங்கிருந்து போடா!
உள்ளே எவண்டா பயலே!
கொண்டு வாடா சோடா!
டி.எம்.எஸ்
கள்ளை உண்டு காதல் பெண்டு
ஆஹா கள்ளை உண்டு காதல் பெண்டு
உறவைத் தேடும் உலகப்பா
நீ மாயையை விட்டு விலகப்பா
ஆஹா! ஆஹா! ஆஹா! எப்பா!
மையல் கொண்ட கைகளினாலே
மையல் கொண்ட கைகளினாலே
மங்கையைக் கட்டும் உலகப்பா
உன் மனத்தைக் கட்டிப் போடப்பா
பாலா
சாமி யாரப்பா? இந்த சாமி யாரப்பா?
ஒழுங்கா சொன்னா கேக்காதப்ப்பா!
ஒருமுறை சொன்னா உரைக்காதப்பா!
விருந்தையும் மருந்தையும் கொண்டு வாடாப்பா!
டி.எம்.எஸ்
புத்திக்கு வேணும் மருந்து
புத்திக்கு வேணும் மருந்து
நான் சொன்னதைக் கேட்டு திருந்து
நான் சொன்னதைக் கேட்டு திருந்து
ஞானப் பாலைக் குடிச்சேன்
எனக்கு ஏண்டா மருந்து
பாலா
ஹாஹாங்க்!
அப்படி சொன்னா எப்படி?
நான் இனிமே உங்க சொற்படி
இந்தாங்க சாமி! அடியேன் விருந்து
நெய்யிலே செய்த அப்பம்
இது நெய்யிலே செய்த அப்பம்
நீங்க உண்ண வேணும் என் விண்ணப்பம்
டி.எம்.எஸ்
ஆஹா!
நஞ்சைக் கலந்தனையா?
என்னைக் கொல்ல நினைத்னையா?
நஞ்சைக் கலந்தனையா?
என்னைக் கொல்ல நினைத்னையா?
அட பஞ்சப் பயலே! பாவிப் பயலே
என்ன நடக்குது பார்! டபார்!
பாலா
சாமி!
டி.எம்.எஸ்
ஏன்?
பாலா
சாமி!
டி.எம்.எஸ்
என்ன?
பாலா
எரியுதே!
டி.எம்.எஸ்
எரியட்டும்
பாலா
எரியுதே!
டி.எம்.எஸ்
எரியட்டும்
பாலா
எரியுதே!
டி.எம்.எஸ்
எரியட்டும்
நல்லா எரியட்டும்!
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
இந்த அப்பன் இட்ட தீ உந்தன் வீட்டிலே
அப்பனே!
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
தன்வினை தன்னைச் சுடும்
https://youtu.be/wZZq3mFeQTg
chinnakkannan
25th October 2015, 10:08 PM
//கடலூர் நியூசினிமாவில் ராமாபுரத்து ரசிகர்களுடன் தீபாவளி அன்று காலைக் காட்சி 'எங்கிருந்தோ வந்தாள்' முடித்துவிட்டு, மதியம் மேட்னி பாடலியில் 'சொர்க்கம்' முடித்துவிட்டு, அப்படியே ஈவ்னிங் ஷோ முத்தையாவில் 'வைராக்கியம்' படம் பார்த்தது நினைவில் இருக்கிறது. படங்களையெல்லாம் பார்த்து முடித்து விட்டு முந்திரிக் காடுகளின் வழியே, பார்த்த படங்களைப் பற்றிப் பேசியபடியே இரவு 12 மணிக்கு பொடி நடையாக ராமாபுரம் போய் சேர்ந்ததும் நினைவுக்கு வருகிறது. //
மூன்றுபடமா..ஒரே நாளிலா.. யோசித்தால் நான் மூன்று படங்கள் பார்த்ததே இல்லை.. இரண்டு நினைவு இருக்கிறது.. இரண்டு தடவை.. ப்ளஸ்டூ முடித்த சமயம் மதுரை மினிப்ரியாவில் நூல்வேலி (தீபாவளி அன்று ) மதியக்காட்சி பின் தங்கத்தில் மஹாலட்சுமி எனஒரு சொதப்பல் படம். ஈவ்னிங்க் ஷோ என நினைவு.. இரண்டாவது தடவை சில ஆண்டுகள் சென்று அய்யம்பேட்டையில் சகோதரி வீட்டில் தங்கி படித்த சமயம்..தஞ்சாவூரில் தான் புதுப்படம் ரிலீஸ் என்பதால் காலையில் பஸ் பிடித்து மார்னிங்க் ஷோ மரகத வீணை என ஒரு படம் அண்ட் நூன்ஷோ உயிரே உனக்காக..பின் ஈவ்னிங்க் பஸ் ஏறி அ.பே சென்ற நினைவு..
இப்போது நிலமையே வேறு டிவியில் வரும் படங்களையும்பார்க்க ப்பிடிப்பதில்லை.. தியேட்டரில் நல்லது என்று பார்க்கலாம் என இருந்தது சற்றே சமீபத்தில் மாறியிருக்கிறது.. நண்பர் ஒருவரால்.. டிவிடி பார்க்கவேண்டுமென்று வாங்கி ப் பார்க்காத படங்களே ஏராளம்..!
பாட் கேக்கலாம்னா சுத் சுத் துனு சுத்துது..யூட்யூப்லும் அவ்வண்ணமே.. நீங்களே சுமார் என எழுதியிருப்பதால்.. பிறிதொரு சமயம் பார்க்கிறேன்..பட் கதைல்லாம் படிச்சாலே தல சுத்துது சாமியோவ்..பார்த்து எழுதறதுக்கு எவ்ளோ பொறுமை வேணும்.. தாங்க்ஸூ.. அண்ட் நடத்துங்க..
RAGHAVENDRA
25th October 2015, 10:37 PM
வாசு சார்
எல்லோரும் டூ-இன்-ஒன், த்ரீ-இன்-ஒன் என்று வெளுத்துக்கட்டுவார்கள். தாங்களோ மல்டி-இன்-ஒன் ஆக விளங்குகிறீர்கள்.
வைராக்கியம் படப்பாடலைப் பற்றிய தங்கள் பதிவைச் சொல்ல வேண்டுமென்றால் இப்படித்சான் சொல்ல வேண்டும்.
படத்தில் நடித்துள்ளவர்களைப்பற்றி,
பாடலைப்பாடியவர்களைப்பற்றி,
இசையமைத்த எஸ்எம்எஸ் பற்றி,
படம் வெளியான சூழலைப்பற்றி
எனப் பல்வேறு விதமான கோணங்களில் இப்படத்தைப்பற்றியும் இப்பாடலைப்பற்றியும் தாங்கள் எழுதியுள்ளது, தங்களுடைய அசாத்தியமான திறமையைக்காட்டுகிறது.
வைராக்கியம் 1970ல் வெளிவந்த படமே. ஆனால் தீபாவளிக்கு வந்ததாக நினைவில்லை. ஏனென்றால் தீபாவளிக்கு சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், காவியத்தலைவி, மாலதி நான்கு படங்கள் மட்டுமே வந்த ஞாபகம்.
இவ்வளவு அபூர்வமான பாலா பாடலை அவரே நினைவில் வைத்திருப்பாரா தெரியவில்லை.
பாராட்டுக்கள்.
rajeshkrv
26th October 2015, 06:15 AM
வாசு ஜி,
பாலா தொடர் அருமையாக தொடர்கிறது. வாழ்த்துக்கள்
சமீபத்தில் தான் வைராக்கியம் பார்த்தேன்.. பாடல் நன்று காட்சியும் நன்று
படம் கொஞ்சம் சலிப்பு இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்
vasudevan31355
26th October 2015, 07:56 AM
வணக்கம்ஜி!
நலமா! பாலாதொடர் பாராட்டிற்கு நன்றிஜி! தங்கள் அனைவரது ஆதரவினாலும், ஒத்துழைப்பினாலும் பாலா தொடரை சந்தோஷத்துடன் செய்ய முடிகிறது. மது அண்ணா காணோமே!
லீவ் எல்லாம் முடிந்ததா? ஜாலியாக என்ஜாய் செய்தீர்களா? என்னென்ன மூவி பார்த்தீர்கள்? நானும் ரௌடிதான்' நல்லா இருக்காமே! சின்னா சொன்னார். நான் நேத்து குருவி அப்படின்னு ஒரு மொக்கை படத்தைப் பார்த்து மட்டையாயிட்டேன். விதி...யாரை விட்டது? நீங்கள் தாய்நாடு வரும் நாளை ஆவலுடன் எதிபார்க்கிறேன்.
vasudevan31355
26th October 2015, 08:02 AM
சின்னா!
பாலா தொடர் பாராட்டிற்கு தேங்க்ஸ்.
//மூன்றுபடமா..ஒரே நாளிலா//
நீங்க வேற!
காலை காட்சி ஜல்லிக்கட்டு, மதியம் கிருஷ்ணன் வந்தான், ஈவ்னிங் மற்றும் நைட் ஷோ தெய்வ மகன் என்று 4 ஷோக்களும் நாள் முச்சூட பார்த்த காலமெல்லாம் உண்டு.:) மறுபடி அடுத்த நாள் தெய்வ மகன்.
RAGHAVENDRA
26th October 2015, 08:03 AM
ரசிகர் - 10 எண்றதுக்குள்ளே ஒரு டிக்கெட் குடுங்க..
திரையரங்கு கவுண்டர் ஊழியர் - இருந்தாத் தானே தரமுடியும்..
ரசிகர் - நானும் ரௌடி தான் ஒரு டிக்கெட் குடுங்க..
தி.க.ஊ. - என்ன மிரட்றீங்களா..
ரசிகர் - எங்கிட்டே மோதாதே டிக்கெட் குடுங்க..
தி.க.ஊ - இதென்னப்பா வம்பாப் போச்சே.. இவன் என்ன மிரட்றானா டிக்கெட் கேக்கிறானா.. வர வர படத்துக்கு என்ன பேர் வைக்கிறதுன்னே விவஸ்தை இல்லாமப் போச்சு..
vasudevan31355
26th October 2015, 08:03 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். காவியத்தலைவி, மாலதி இரண்டுமே ரிலீசில் பார்க்கவில்லை. பிற்பாடு பார்த்ததுதான்.
vasudevan31355
26th October 2015, 08:04 AM
//தி.க.ஊ - இதென்னப்பா வம்பாப் போச்சே.. இவன் என்ன மிரட்றானா டிக்கெட் கேக்கிறானா.. வர வர படத்துக்கு என்ன பேர் வைக்கிறதுன்னே விவஸ்தை இல்லாமப் போச்சு..//
:):):):):)
vasudevan31355
26th October 2015, 08:09 AM
சின்னா!
ஊரெங்கும் பாரு
உலாச டூரு
நூற்றுக்கு நூறு
எல்லாமே ஜோரு
வரிகள் இடம் பெற்ற படம் 'திருமலை தென்குமரி'. 'அழகே தமிழே நீ வாழ்க' எனத் தொடங்கும் பாடல்.
vasudevan31355
26th October 2015, 08:23 AM
சின்னா!
//பாட் கேக்கலாம்னா சுத் சுத் துனு சுத்துது..யூட்யூப்லும் அவ்வண்ணமே//
அருமையா ஓடுதே! இப்போ கூட பார்த்தேனே! உங்க சிஸ்டத்தில எதாவது ப்ராபளமா?
vasudevan31355
26th October 2015, 08:28 AM
ஜி!
உடுத்தா சரோஜினி என்ற அருமையான பாடகியின் பாடலை அளித்து பாலை வார்த்தீர்கள். அற்புதம். இசையரசி குரலும், சரோஜினி குரலும் அருமை.
ஜெய் ஜெய் ராம்
ஜானகிராம்
சூப்பர் ராஜேஷ்ராம்.
vasudevan31355
26th October 2015, 08:34 AM
இதுவும் சரோஜினி பாடிய பாடல்தானே! உடன் ஜமுனாராணிதானே!
https://youtu.be/vEc7TXz1NNM
vasudevan31355
26th October 2015, 08:47 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/547555/82acbbb4-c91a-4bc9-9ad5-cb8e2b063a9f
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/547555/f9b958f9-4c42-409a-b433-38814432d40b
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/547555/d7e40ef8-41dc-4225-91db-a69d50420f6c
vasudevan31355
26th October 2015, 08:51 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/547555/779d7cd3-f7ba-44ff-b0ef-fd0bd4de35b7
vasudevan31355
26th October 2015, 09:04 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521642/b78bf9ff-b738-4220-9c85-b5de023e9dd0
vasudevan31355
26th October 2015, 09:04 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/541161/007e69f0-4aa9-4c7e-a746-c9e7088dd415
vasudevan31355
26th October 2015, 09:05 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521642/c296524c-f97d-4930-b3a9-6f10cc012978
RAGHAVENDRA
26th October 2015, 09:06 AM
உடுதா சரோஜினி அல்லாமல் எம்.எஸ்.சரோஜினி என்பவரும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடியிருக்கிறார்.
தேவதாஸ் பாடலைப் பாடியவர் அவர் தான் என நினைக்கிறேன்.
vasudevan31355
26th October 2015, 09:08 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/f7b86cf0-c7b7-46ed-af6d-39449ac739e6
vasudevan31355
26th October 2015, 09:09 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/aa5fd4ad-53fc-498c-8028-0ff8cc18942a
vasudevan31355
26th October 2015, 09:09 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/521634/d6f99dfc-e000-4ba5-adb5-037b8953143f
vasudevan31355
26th October 2015, 09:11 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/083d58ca-8038-4644-a88b-4d24da0b08ac
rajeshkrv
26th October 2015, 09:11 AM
வணக்கம்ஜி!
நலமா! பாலாதொடர் பாராட்டிற்கு நன்றிஜி! தங்கள் அனைவரது ஆதரவினாலும், ஒத்துழைப்பினாலும் பாலா தொடரை சந்தோஷத்துடன் செய்ய முடிகிறது. மது அண்ணா காணோமே!
லீவ் எல்லாம் முடிந்ததா? ஜாலியாக என்ஜாய் செய்தீர்களா? என்னென்ன மூவி பார்த்தீர்கள்? நானும் ரௌடிதான்' நல்லா இருக்காமே! சின்னா சொன்னார். நான் நேத்து குருவி அப்படின்னு ஒரு மொக்கை படத்தைப் பார்த்து மட்டையாயிட்டேன். விதி...யாரை விட்டது? நீங்கள் தாய்நாடு வரும் நாளை ஆவலுடன் எதிபார்க்கிறேன்.
pudhu padam ellam avlova paakradhillai
nalame .. nalame.
vasudevan31355
26th October 2015, 09:12 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/17f6d67f-f7e3-4026-b933-c713a2dbdff1
vasudevan31355
26th October 2015, 09:13 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/6e69c97c-148d-4412-8839-85fdcfe9cdc7
vasudevan31355
26th October 2015, 09:14 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/d4937809-bd3f-4646-a6d0-ac48d66f7e49
vasudevan31355
26th October 2015, 09:15 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/83ed22d9-e2e3-4453-9b2c-aeea1541a33c
rajeshkrv
26th October 2015, 09:16 AM
சத்யம் என்ற இசையமைப்பாளர் ..
அதை இதை உல்டா செய்து டியூன் செய்வதில் வல்லவர்
அதே சமயம் நல்ல சில டியூன்களையும் கொடுத்துள்ளார்
இதோ அற்புதமான கன்னட பாடல் சத்யம் இசையில் பி.பி.எஸ் மற்றும் இசையரசி குரல்களில்
https://www.youtube.com/watch?v=zTmvkDuLXgM
இதே மெட்டை தெலுங்கில் சோலாவாக்கினார்
https://www.youtube.com/watch?v=Bdxs_alRxI4
rajeshkrv
26th October 2015, 09:18 AM
https://scontent-dfw1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12191452_1154168761279568_3489518004736168787_n.jp g?oh=9c90a70a1abae3670b08de6c681967f9&oe=56BB8A08
vasudevan31355
26th October 2015, 09:19 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/676f5beb-bccd-4315-9a1c-d0a0ffb7fbbf
RAGHAVENDRA
26th October 2015, 09:35 AM
https://scontent-dfw1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12191452_1154168761279568_3489518004736168787_n.jp g?oh=9c90a70a1abae3670b08de6c681967f9&oe=56BB8A08
மனிதனும் தெய்வமாகலாம் ... பால் பொங்கும் பருவம் பாடல் பதிவு..
vasudevan31355
26th October 2015, 09:52 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/499560/dabb60e1-9d0b-47e4-bc76-b5e887410164
vasudevan31355
26th October 2015, 10:15 AM
ராகவேந்திரன் சார் (உறுதிப் படுத்தவும்)
உடுத்தா சரோஜினி இவர்தானாம்
http://1.bp.blogspot.com/_BbJAArGDIEA/R3vaLvFpdfI/AAAAAAAABg4/CK0MOR13ggs/s320/IMG1634A.jpg
இவர் கே.ராணி
http://4.bp.blogspot.com/_BbJAArGDIEA/R3wP8PFpdqI/AAAAAAAABiQ/kGjS3k6BOM0/s320/IMG1636A.jpg
இவர் ஏ.பி.கோமளா
http://4.bp.blogspot.com/_BbJAArGDIEA/R3xfNPFpdtI/AAAAAAAABio/uJEgcWySv3Q/s1600/IMG1632A.jpg
இவர் பாலசரஸ்வதி தேவி
http://4.bp.blogspot.com/_BbJAArGDIEA/R3xmXPFpdvI/AAAAAAAABi4/oXLgvSnC_ik/s1600/IMG1623A.jpg
இவர் ஜமுனாராணி
http://1.bp.blogspot.com/_BbJAArGDIEA/R3xdqfFpdsI/AAAAAAAABig/zqNuNSQZU24/s1600/IMG1633A.jpg
rajeshkrv
26th October 2015, 10:16 AM
லதிகா என்ற பாடகி 80’களில் சில நல்ல பாடல்கள் பாடினார்
இதோ கிருஷ்ணசந்திரனுடன் பாடும் அழகான பாடல்
https://www.youtube.com/watch?v=UKsgnUfdH6Q
rajeshkrv
26th October 2015, 10:18 AM
வாசு ஜி
உடுத்தா சரோஜினிக்கு இசையரசியின் டிரஸ்ட் மூலமாக உதவி செய்தார்
இதோ உடுத்தா சரோஜினி இப்பொழுது
https://www.youtube.com/watch?v=YMgUSNF3V-4
vasudevan31355
26th October 2015, 10:30 AM
arumaiji! mugam appadiyethaan irukku
rajeshkrv
26th October 2015, 10:32 AM
பாலசரஸ்வதி முதலில் நடிக்கவும் செய்தார்.
ராஜேஸ்வரராவ் - பாலசரஸ்வதி சேர்ந்து கச்சேரிகளும் பாடுக்களும் நிறைய பாடியது உண்டு.
madhu
26th October 2015, 01:14 PM
எல்லோருக்கும் வணக்கமுங்க... கொஞ்சம் உடல் நிலை மக்கர் செய்யுது..
பல்லாக்கு போல வண்டி பாதியிலே நிப்பதாலும் தள்ளாத வயது என்பதாலும் கொஞ்சம் ரெஷ்ட் எடுத்துக்கிட்டு வர்ரேன்.
அதுவரைக்கும் மன்னிச்சுக்குங்க சாரே !
vasudevan31355
26th October 2015, 01:34 PM
மதுண்ணா!
உடல்நிலையை முதலில் கவனித்துவிட்டு நன்கு ஒய்வு எடுத்துவிட்டு வாருங்கள். உடல்நிலைதான் மிக முக்கியம்.
chinnakkannan
26th October 2015, 03:11 PM
எல்லோருக்கும் வணக்கமுங்க... கொஞ்சம் உடல் நிலை மக்கர் செய்யுது..
பல்லாக்கு போல வண்டி பாதியிலே நிப்பதாலும் தள்ளாத வயது என்பதாலும் கொஞ்சம் ரெஷ்ட் எடுத்துக்கிட்டு வர்ரேன்.
அதுவரைக்கும் மன்னிச்சுக்குங்க சாரே !
மதுண்ணாவ்..டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த். அப்பப்ப முடிஞ்சப்ப வந்து க்ளக்ஸ் சொல்லிட்டுப் போய்டுங்க..:)
வாசு, ஒரே படத்தை ரெண்டு வாட்டி கண்டின்யுவஸ்ஸாவா.. அது கொஞ்சம் கஷ்டமோன்னோ.. உங்களை யாரு குருவில்லாம் பாக்கச் சொன்னா..கத்தின்னு இன்னொண்ணு இருக்கு (எல்லாரும் பயமுறுத்தினதால நான் டிவில கூட பாக்கலை) விஜய் படத்துல துப்பாக்கிக்கப்புறம் சொல்லிக்கற மாதிரி எதுவும் வரவில்லை என்று தான் சொல்லவேண்டும்..சூர்யா இன்னும் பின் செல்லவேண்டும் - கஜினி. அஜீத் வீரம் படத்தில் கொஞ்சம் பார்க்க வைத்துவிட்டார்..வேதாளம் எப்படியோ தெரியாது..பத்து என்றதுக்குள்ளயும் ரிசல்ட் ரிவ்யூ..அவ்வளவாக மனம் தொடவில்லை..தீபாவளிக்கு முன்னால்யே தூங்காவனம் ரிலீஸாம் உண்மையா..
எனிவே தியேட்டர்ல க்யூல நின்னு பார்த்த வழக்கம் அறவே நின்னு ரொம்ப நாளாச்சு இல்லியோ..
chinnakkannan
26th October 2015, 03:12 PM
வாஸ்ஸு.. தீபாவளிக்காவது புது பக்கெட் வாங்குங்க..பழைய பக்கெட் தொல்லைதாங்க முடியலை :) ஒரே பாட்டி படமாப் போடுது :)
vasudevan31355
26th October 2015, 07:03 PM
வாஸ்ஸு.. தீபாவளிக்காவது புது பக்கெட் வாங்குங்க..பழைய பக்கெட் தொல்லைதாங்க முடியலை :) ஒரே பாட்டி படமாப் போடுது :)
சின்னாச்சி!
அவுங்களையெல்லாம் யாருன்னு நெனச்சீக. ம்.. அதெல்லாம் பாட்டிதான். ஆனா பாட்டு பா(ர்)ட்டிங்க.:) காலத்தை குரலால் ஜெயிச்சவங்க. அவுங்க போட்டோ கிடைக்கறது குதிரைக் கொம்பு. அவங்க யாருன்னு எல்லோரும் தெரிஞ்சிக்கணும் இல்லையா? ஒவ்வொருத்தவங்க குரலும் மணி மணி.
குறிப்பா ராணி பாட்டை கூகுள் பண்ணி கேட்டுப் பாருங்க. பாலசரஸ்வதி என்ன அழகு பார்த்தீங்களா?:)
vasudevan31355
26th October 2015, 07:04 PM
//வாசு, ஒரே படத்தை ரெண்டு வாட்டி கண்டின்யுவஸ்ஸாவா//
'ஞானஒளி' காவியத்தைத் தொடர்ந்து 3 தரம் பார்த்திருக்கேன்.
rajeshkrv
26th October 2015, 08:55 PM
vanakkam
chinnakkannan
26th October 2015, 08:59 PM
//குறிப்பா ராணி பாட்டை கூகுள் பண்ணி கேட்டுப் பாருங்க. பாலசரஸ்வதி என்ன அழகு பார்த்தீங்களா// பாலசரஸ்வதி ரொம்ப அழகாக்கும்னு என் தாத்தா சொன்னது நினைவில் - காலங்கார்த்தாலே கார்க்கண்ணாடியில்படிந்திருக்கும் பனித்துளிகளை காருள்ளிருந்து பார்த்தால் எப்படி காட்சி மங்கலாகத் தெரியுமோ அதுபோல - மங்கலாக வருகிறது..
கே. ராணிய கூகுள்பண்ணிப் பார்க்கணுமாங்காட்டியும்.. பின்ன எதுக்கு நாங்க ஒம்ம வச்சிருக்கோம் :) சரி ஈஈ.. தேவதாஸ்ல பாட் பாடியிருக்காங்க போல இருக்கே..( நாகூர் ஹனீபா கூடவும் பாடியிருக்கார்..பாடல்கள் கேட்டதில்லை)
உறவும் இல்லை பிரிவும் இல்லை ஒன்றுமே இல்லை
எனது வாழ்வின் இன்ப ஜோதி எங்கே போனாயோ
https://youtu.be/C7HUrJJPi3w
chinnakkannan
26th October 2015, 09:16 PM
ராணி பாடல்கள் என யோசித்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத் தான் எனச் சொல்லவேண்டும்..
ஹப்புறம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்..
சீட்டுக்கட்டு ராஜா ஓ இதில் ராணியில்லியோ.. :) ராஜாராணி ஜாக்கி வாழ்வில் என்னபாக்கி
ராணி மகாராணி வேகவேகமாகவந்த நாக ரீக ராணி
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுமே நீ கண்ணே என் மனசை விட்டுச் செல்லாதே..
நான்மங்காத்தா ராணி போல வாரேன்
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
சரி லிஸ்ட் தொடரலாம்.. கே. ராணி பாட் கேட்டுக்கிட்டே..
நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அனுராகம்..
பெற்ற தாய் படத்திலிருந்து எம். என் நம்பியார், பி.ஷாந்த்தா.. பாடியவர் கே.ராணி ஏ.எம்.ராஜா
https://youtu.be/z6TRXARSgR8
chinnakkannan
26th October 2015, 09:36 PM
ராணி கானலிஸ்ட் தொடர்கிறது..
மகராஜா மகராணி இந்த இருவருக்கும் ஒரு குட்டி ராணி
மகாராஜன் உலகை ஆளுவான் இந்த மகாராணி அவனை ஆளுவாள்
//நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க// அப்ப சோப் இல்லியா..சே அழுக்கே போகாது..
ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும்பொட்டும் அள்ளிக்கட்டி
**
கே.ராணி பற்றி வேம்பார்மணிவண்ணன் என்ன சொல்கிறார்..
///இன்னிசை ராணி" பாடகி - கே ராணி--
************************************************** *******
21-7-1951-ல் வெளிவந்த " மோகனசுந்தரம்" படத்தில் பி லீலாவுடன் இணைந்து "ஒயிலான மயிலாட்டம்" என்கிற பாடலை பாடி அறிமுகமானார் கே ராணி... ஆனால் அதே வருடம் (29-10-1951) சிங்காரி படத்தில் எஸ் வி வெங்கட்ராமன் இசையில் கே ஹெச் ரெட்டியுடன் இணைந்து அவர் பாடிய தஞ்சை ராமய்யா தாசின் " ஒரு ஜான் வயிறே இல்லாட்டா" பாடல் கே ராணிக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்தது ... அதே படத்தில் இன்னொரு பாடல் "கோணாத மரத்தினிலே" - பாடல் தஞ்சை ராமையாதாஸ் - இணைந்து பாடியவர் கே ஹெச் ரெட்டி ...
1952-ல் டி எம் எஸ் சுடன் அவர் இணைந்து பாடிய "கல்யாணி" படத்தில் இடம் பெற்ற " இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே" பாடல் தமிழ் திரை உலகின் சிறந்த பாடல்களில் ஒன்றாய் பதிவாகியது... "தர்மதேவதா" 1952-ல் ராமசந்திரனுடன் அவர் இணைந்து பாடிய " ஜோரான மின்னல் போலே" பாடலும் புகழ் பெற்றது...
தொடர்ந்து 1953-ல் சி ஆர் சுப்பாராமன் இசையில் வெளிவந்த "தேவதாஸ்" பாடல்கள் - "எல்லாம் மாயை தானா" , "உறவும் இல்லை பகையும் இல்லை" இரண்டும் தேவ கானமாய் ஒலித்தன.. இதே ஆண்டு "திரும்பிப்பார் படத்தில் ஏ எம் ராஜாவுடன் இணைந்து "கன்னியரின் வெள்ளை மனம் போல்"- "சண்டிராணி" படத்தில் தனியாக "வாராமலே வந்த நாளிதே" பாடல்களைப் பாடினார் ...
பி சுசீலா அறிமுகமாகிய "பெற்றதாய்" (1953) படத்தில் இரண்டு பாடல்கள் கே ராணிக்கு... "மாமயில் போல் ஆடி"( "நிலாவிலே ஒய்யாரம்" ... இரண்டுமே மெய்மறக்க செய்யும் பாடல்கள்...
சுசீலாவிற்கு இணையான இனிய குரல் கொண்ட ராணி அவர்களுக்கு பின்னாட்களில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை... இது தமிழ் திரை இசை உலகிற்கு ஒரு இழப்புதான்... பின்னாட்களில் ஒன்றிரண்டு பாடல்களையே அவர் பாடினார்... அதில் குறிப்பிடத்தகுந்தவை... அழகிய தாமரை கண்ணா( -(குழந்தைகள் கண்ட குடியரசு 1960) இன்பம் கொண்டாடும் மாலை -(இந்திரா என் செல்வம் 1962),
"இன்னிசை ராணி" பட்டம் கே ராணிக்கு "கர்மவீரர்" காமராஜர் அளித்தது... இதிலிருந்தே ராணி அவர்களின் குரல் இனிமையை நாம் உணரலாம்... //
**
ஸோ கே. ராணியைப்பத்தித் தெரிஞ்சுக்கிட்டதால மகுடம்காத்த மஙகையில் டி.ஏ. மோத்தி,ஜிக்கி டூயட் பாக்கலாம் கேக்கலாம் :)
ஆஹா என்னைப் பார் மன்னா - அந்தக்காலத்திலேயே அழகா சுடிதார் அண்ட் பெண்டண்ட்.. வெரி நைஸ் இல்லியோ.. யாராக்கும் இருவரும்..(திட்டினாலும் விளக்கம் கிடைக்குமே)
https://youtu.be/czIe3-xYbos
இருந்தாலும்கே.ராணியின் ஒயிலான மயிலாட்டம் தான் முதல் பாடலாமே..
குமாரி கமலாவின் ஒயிலான மயிலாட்டம்..
https://youtu.be/2a8Ze9brR8w
chinnakkannan
26th October 2015, 09:50 PM
துடிக்கும் வாலிபமே
நொடிக்குள் போய்விடுமே
அதற்குள் காண்பதெல்லாம்
ஆனந்தமே!ஆனந்தமே!
ம்ம்ம்..
பாலசரஸ்வதி பாடல் லில்லி ராஜ சுலோச்சனா..ஸேட் டி.எஸ். பாலையா நடித்த படம் மர்ம வீரன்.. பாடல் எழுதியவர் தான் இனிய சர்ப்ரைஸ்..
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
https://youtu.be/WSm32IYa_mc
Russellxor
26th October 2015, 10:03 PM
ராணி பாடல்கள்...
ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசை கொண்டாள்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
எ.ரா.பொ.மே.
RAGHAVENDRA
26th October 2015, 11:59 PM
ராணி மகா ராணி .... அவங்க பாட்டு மயம் போநீ...
என்று கூறாமல் கூறுகிறார்களோ நண்பர்கள்..
இதோ ஒரு ராணி இறுமாப்புடன் கூறுகிறார்...
இவர் ஆடாத ஆட்டமில்லையாம், பாக்காத உலகமில்லையாம்,,கேக்காத சேதியில்லையாம்...
சி.க. சார் இந்தப் பாட்டு உங்களுக்காக... பக்கெட்டாக தண்ணி இறைத்து துள்ளி விளையாடுங்கள்...
மெல்லிசை மன்னரின் தூள் துள்ளல் பாடல்...
https://www.youtube.com/watch?v=dktadb2ZWyk
ஆயிரம் ஜென்மங்கள் படத்திலிருந்து..
ஆஹா.. இந்தக் குரலுக்கு இந்த உலகமே ஆடுகிறதே,,, இந்தக் குரலுடன் இந்த உலகமே பாடுகிறதே...
இசையரசி இருக்க நமக்கென்ன மனக்கவலை..
rajraj
27th October 2015, 01:28 AM
For ChinnakkaNNan and other kumari kamala fans ! :)
From Parthiban Kanavu(1960)
munnam avanudaiya naamam kEttaaL........
http://www.youtube.com/watch?v=LNpUXxr1ERk
The singer is MLV. It is appar thevaram !
vasudevan31355
27th October 2015, 07:21 AM
சின்னா!
ஹாய் உம்மை ராணி காலத்துப் பாட்டிப் பாட்டைப் போட வச்சு ராணி பத்திய குறிப்பையும் எழுத வச்சுட்டேன் பார்த்தீங்களா? சக்சஸ் கிராண்ட் சக்சஸ்.:)
ஆனால் கலக்கிட்டீரே அய்யா! ராணி தாண்டவம் ஆடிட்டீரே! பாஸ் மார்க்குக்கு மேலே வாங்கிபுட்டீர்.:)
ராணி வார்த்தைப் பாடல்களும் கன ஜோர். எல்லாவத்தையும் நீயே போட்டுட்டீர். சரி! ராத்திரி பன்னெண்டு மணிக்கு நைட் ஷிப்ட்ல ரோசன பண்ணிப் பார்த்தா ராணி எதுவும் சிக்கல. காலையில பஸ்ல வர்றச்ச டபக்குன்னு இந்த ராணி ஞாபகத்துக்கு வந்தா. இது ராஜா உங்களுக்கு.:)
https://youtu.be/Tds0mQpiXb0
vasudevan31355
27th October 2015, 07:24 AM
நீ ஒரு மகராணி
நான் ஒரு கலைஞானி
நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
https://youtu.be/BvP7bGPvQmU
rajeshkrv
27th October 2015, 07:25 AM
ஹ்ம்ம்
சின்னாவிற்கு கலக்க கற்றுக்கொடுக்கனுமா என்ன
ராணி ராணின்னு ஒரே புலம்பல்
போதாதற்கு நீர் வேற எடுத்து கொடுக்கிறீர்.... என்ன நடக்க போகுதோ??
சரி சரி ராணி மகாராணி போட்டாயிற்றா...
மலை ராணி முந்தானை
ஒரு ராஜா ராணியிடம்
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகுமே
vasudevan31355
27th October 2015, 07:31 AM
ராஜா வாடா தங்கக் கட்டி
ராணி வாடி சிங்கக்குட்டி
பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி
பொங்கும் அழகு பவழப்பெட்டி
சின்னா!
அதியற்புதமான பாடல். ஜானகி அருமையாகப் பாடியிருப்பார். (அந்த சிரிப்புதான் கொஞ்சம் இடிக்கும். 'உம்மா'வும்) ஜென்டில் மேனும், சுமலதாவும் குழந்தைகளுடன். ஜெயச்சந்திரன் அசத்தல்.
https://youtu.be/sCQiynBwteI
vasudevan31355
27th October 2015, 07:32 AM
//ராணி ராணின்னு ஒரே புலம்பல்//
ஆமா! 'ராணி யார் குழந்தை'? :)
vasudevan31355
27th October 2015, 07:39 AM
சின்னா!
இந்த பாட்டு உமக்கு உமக்காகவே மட்டும்.:) வேற யாருக்கும் கிடையாது.:) இந்தப் பாட்டைப் போட்டு நேத்து செஞ்ச பாவத்தை போக்கிக்கிறேன்.:)
'ராஜாராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி?
கிழ ரஜினி 'நெற்றிக்கண்'ணில் யாரை பாக்கி வைத்தார்? என்னா கும்மாளம்?
https://youtu.be/OLa9B-r5hns
rajeshkrv
27th October 2015, 07:43 AM
காதல் மகராணி
மகராணி மகராணி மாளிகை மகராணி
மங்கையரில் மகராணி
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
என்ன மகராணி அழகு அழகு அழகு
rajeshkrv
27th October 2015, 07:44 AM
//ராணி ராணின்னு ஒரே புலம்பல்//
ஆமா! 'ராணி யார் குழந்தை'? :)
எனக்கும் அதே டவுட்டு ..
vasudevan31355
27th October 2015, 07:49 AM
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை
காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி
என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ
காதல்ராணி கட்டிக்கிடக்க
ராஜா மகன் ராஜாவுக்கு
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி
rajeshkrv
27th October 2015, 07:50 AM
காட்டு ராணி கோட்டையிலே
காட்டு ராணி முகத்தை காட்டு ராணி
ராஜா ராணி ராஜ்ஜியம்
எகிப்து ராணி உனக்கு எதுக்கு தலகாணி
rajeshkrv
27th October 2015, 07:53 AM
காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே( செவ்வந்தி )
நானே மகராணி மகாராணி இந்த நாடாளும் ( எஸ்.வரலெட்சுமியின் குரலில் எனக்கு பிடித்த பாடல்)
vasudevan31355
27th October 2015, 07:54 AM
//எனது வாழ்வின் இன்ப ஜோதி எங்கே போனாயோ//
அது
'எனது வாழ்வின் புனிதஜோதி எங்கே சென்றாயோ?' சின்னா!:)
இந்தப் பாட்டைக் கேட்டால் கண்கள் கலங்கி விடும் சின்னா!:(
கெடுது செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது? நீர் கண்டிப்பாக இல்லை சின்னா!:)
rajeshkrv
27th October 2015, 07:55 AM
ரொம்ப பாடல்கள் போட்டுவிட்டேன்
கடைசியாக எனக்கு பிடித்த மகராஜனோடு ராணி வந்து சேரும்
vasudevan31355
27th October 2015, 07:56 AM
//நானே மகராணி மகாராணி இந்த நாடாளும் ( எஸ்.வரலெட்சுமியின் குரலில் எனக்கு பிடித்த பாடல்)//
பாட்டு போடுங்களேன்...கேப்போம்.
vasudevan31355
27th October 2015, 07:58 AM
ரொம்ப பாடல்கள் போட்டுவிட்டேன்
கடைசியாக எனக்கு பிடித்த மகராஜனோடு ராணி வந்து சேரும்
'இந்த ராஜ்ஜயோகம் காலம்தோறும் வாழும்'. அதா?
rajeshkrv
27th October 2015, 08:03 AM
ஜி என்ன ஒற்றுமை இருவருக்கும்
rajeshkrv
27th October 2015, 08:04 AM
//நானே மகராணி மகாராணி இந்த நாடாளும் ( எஸ்.வரலெட்சுமியின் குரலில் எனக்கு பிடித்த பாடல்)//
பாட்டு போடுங்களேன்...கேப்போம்.
https://www.youtube.com/watch?v=YbaupkJZchs
rajraj
27th October 2015, 08:41 AM
From Sorgavasal(1954)
Raajaa magaL raaNi pudhu rojaa malar meni.......... by K.R.Ramasami
http://www.youtube.com/watch?v=PF_Fmf4empU
raagadevan
27th October 2015, 09:52 AM
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
வரிகள்: வைரமுத்து
இசை: எ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: சித்ரா & ஸ்ரீநிவாஸ்
http://www.youtube.com/watch?v=at3srgvO8t4
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ
கவிதை தேடித் ருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...
chinnakkannan
27th October 2015, 10:13 AM
குட்மார்னிங்க் ஆல்.. ராகதேவன் அது பிறை வந்தவுடன் நிலா வந்ததென.. கொஞ்சம் மாற்றிவிடுங்கள்..:)
chinnakkannan
27th October 2015, 10:21 AM
ஆஹா.. ஒரே ராணி பாடல்கள்..அழகு.. இனிமேல் தான் கேக்கணும்..ஈவ்னிங்க்..
செந்தில்வேல் சுருக்கமா எழுதியிருந்தது தெரிலை ஆர் புரிலை..
ராகவேந்தர்,ராஜேஷ்,வாஸ்ஸூ நன்றி..
ராஜேஷ்.. ஒரு பாட் போட்டீங்களே ஊடால.. ஒருவரில..எகிப்து ராணி உனக்கு எதுக்கு தலைகாணி.. ஹி ஹி.. நரசிம்மா.. (தானே)மனம் விட்டு சிரிக்கலாம்..பாவம் திருப்பதிசாமி..டைரக்டர் இரண்டு தெலுகு அப்புறம் இது எடுத்து ரிலீஸாகுமுன்னே கார்விபத்தில் காலமாகிவிட்டார். வெகு சின்ன வயது..
இந்த் எங்கே எனது கவிதை..பாடலும் சரி படமாக்கப் பட்ட விதமும் சரி.. சமீபத்தில் (?!) வந்த பாடல்களில் உருக வைத்த பாடலுள் ஒன்று.. தாங்க்ஸ் ஆர்டி..
chinnakkannan
27th October 2015, 10:22 AM
ராஜ் ராஜ் சார்..உங்களை எதிர்பார்த்தேன். இன்ஃபேக்ட் ஆல் பழைய பாட்ஸ் உங்களை நினச்சே உங்க கிட்ட நினைவலைகள் கேக்கணும்னு டைப்பண்ணினேன்..குமாரி கமலா பாட்ஸூக்கும் மற்ற பாட்ஸூக்கும் நன்றி..
rajeshkrv
27th October 2015, 10:31 AM
சிகா...அன்று நீலவேணியை ஞாபகப்படுத்தி விட்டேனோன்னோ .. இதோ அதே வரிசையில் சில
https://www.youtube.com/watch?v=IxWX0w4m6_g
https://www.youtube.com/watch?v=4iF3h13NWYU
https://www.youtube.com/watch?v=g5sQFTGQDsA
https://www.youtube.com/watch?v=zuBA6moO1MY
raagadevan
27th October 2015, 10:35 AM
குட்மார்னிங்க் ஆல்.. ராகதேவன் அது பிறை வந்தவுடன் நிலா வந்ததென.. கொஞ்சம் மாற்றிவிடுங்கள்..:)
chikkaa... enna solreenge neenga!? ;)
chinnakkannan
27th October 2015, 10:37 AM
//கிழ ரஜினி 'நெற்றிக்கண்'ணில் யாரை பாக்கி வைத்தார்? என்னா கும்மாளம்?// தாங்க்ஸ் வாஸ்ஸூ.. இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டில் வயலின் தான் நினைவுக்கு வருகிறது..
தேவதாஸ் பாட்டு சொன்னாற் போலவே வெகு சோகமாக இருந்தது.. அப்படியும் பாஸ் மார்க்குக்கு மேல தானா.. ஸாரி.. ராணி ஆராய்ச்சில ரொம்ப நேரம் உட்கார முடியலை.. நேற்று ஈவ்னிங்க் விஸிட்டர்ஸ் வந்துட்டாங்க..
ராணி யார் குழந்தையா.. தெரியாது..ஆனா ராணின்னு அறிமுகமாகி பின் வேறு பெயரில் ஓ போடு பாட்டில் பிரபலமானார் அந்த நடிகை..
மகராணி நிறைய இருக்கு.. ராணி தான் கம்மி..’வாசு’ தேடலில் இளமைக்காலங்கள் யோகமுள்ள ராணி கிடைத்தது பாட் கேட்டதில்லை அல்லது நினைவில்லை என்பதால் போடவில்லை..
chinnakkannan
27th October 2015, 10:39 AM
chikkaa... enna solreenge neenga!? ;)
பிரை ந்னு முதல் வரி பிறை.. அப்புறம் இரண்டாவது ரிப்பீட் ஆகும்போதும் தப்பா இருக்கு மாத்திடுங்க :) (ஹி ஹி..என்ன தான்கண்ணடிச்சாலும் தப்ப முழுசா கரெக்ட் செய்யலையேங்காணும் :) )
raagadevan
27th October 2015, 11:01 AM
பிரை ந்னு முதல் வரி பிறை.. அப்புறம் இரண்டாவது ரிப்பீட் ஆகும்போதும் தப்பா இருக்கு மாத்திடுங்க :) (ஹி ஹி..என்ன தான்கண்ணடிச்சாலும் தப்ப முழுசா கரெக்ட் செய்யலையேங்காணும் :) )
Whatever...!!! Chinna... I write Tamil listening to the song/conversation, and writing it (in my own limited Thamizh vocabulary) the way the words sound! :) Needless to say, my initial posting (of the song) had some errors! :) Haha... So what!? :)
http://www.youtube.com/watch?v=2qrk-NQw3Ls
chinnakkannan
27th October 2015, 11:06 AM
இதோ ஒரு ராணி இறுமாப்புடன் கூறுகிறார்...
இவர் ஆடாத ஆட்டமில்லையாம், பாக்காத உலகமில்லையாம்,,கேக்காத சேதியில்லையாம்...
சி.க. சார் இந்தப் பாட்டு உங்களுக்காக... பக்கெட்டாக தண்ணி இறைத்து துள்ளி விளையாடுங்கள்...
மெல்லிசை மன்னரின் தூள் துள்ளல் பாடல்...//ஹ்ச்சோ இந்தப் பாட் எனக்கு நினைவில்லை ராகவேந்தர் சார்..தாங்க்ஸ்..கேட் சொல்றேன்..
//Whatever...!!! Chinna... I write Tamil listening to the song/conversation, and writing it (in my own limited Thamizh vocabulary) the way the words sound! Needless to say, my initial posting (of the song) had some errors! Haha... So what!? // ஹிஹி..சும்மா சொன்னேன் ராகதேவன் :) போடச்சொன்னா போட்டுக்கறேன் :) பாட்கும் தாங்க்ஸ்
raagadevan
27th October 2015, 07:59 PM
ஹிஹி..சும்மா சொன்னேன் ராகதேவன் :) போடச்சொன்னா போட்டுக்கறேன் :) பாட்கும் தாங்க்ஸ்
நன்றி; வணக்கம் சின்னக்கண்ணா! :) Everyone: Please continue correcting the mistakes I make when writing Tamil.
chinnakkannan
27th October 2015, 09:46 PM
அந்தக்காலக் காதலுக்கும் இந்தக்காலக் காதலுக்கும் என்ன வித்தியாசம்..
காதலன் மீது காதலைக் கொண்ட காரிகை (பின்ன காதலனோட மாமாவையா லவ் பண்ணுவா) அவன் வராமல் எவ்வ்ளோ தவிக்கறா..
நெஞ்சமெலாம் நிறைந்தவனை நினைத்ததனால் நித்திரையும்
…நேர்வழியாய் வாராமல் நிலைகுலைந்து நின்றிடவும்
பஞ்சுமனம் அஞ்சுவிழி கொஞ்சுமொழி வஞ்சியவள்
…பாடுகிறாள் கானமதைப் பாய்ந்துவந்த வேட்கையினால்
மிஞ்சிடுமோ இன்பமுந்தான் மீண்டுவந்து நங்கையெனை
…மீட்டுவனோ காதலனும் வீணையைப்போல் எனப்பலவாய்
விஞ்சுகின்ற எண்ணவலை வான்மீதில் சென்றங்கே
…விண்மீன்கள், வெள்ளி நிலாக் கூட்டத்தையை அழைக்கிறதே..
ம்ம் இந்த அம்மா அந்தக்காலத்துல என்ன சொல்லுதாக…
*
பங்குனி மாதத்தில் ஓர் இரவு
பால்போல்காய்ந்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
அங்கே தனியே தவித்தது பெண்ணழகு..
காதல் தலைவன்வரவில்லையாம்
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
தூது விட்டாலும் பதிலில்லையாம்
அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்..
மல்லிகை மலரை நெருப்பென்றாள்
மணியோசை தனை இடி என்றாள்
மெல்லிய பனியை மழையென்றாள்
தன் மேனியையே வெறும் கூடென்றாள்
காலடி ஓசை கேட்டுவிட்டாள்
அந்தக் கட்டழகன் முகம்பார்த்துவிட்டாள்
நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே..
*
https://youtu.be/YjMXGGozrzg
கே. ஆர் .விஜயா இன் தாழம்பூ
**
அதே இது இந்தக் காலமில்லை ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால..
இந்தக் கன்னிக்கு காதலன் பிரியவெல்லாம் இல்லை..கூடவே இருக்கான் ஆனா தாலாட்டுப் பாடுதா.. பின்ன கள்ளி..கல்யாணங்கட்டி சீக்கிரமாவே ஆரீரோ பாடணுமாம் அவளோட குழந்தைக்கு.. ஸோ காதலுக்கே ஆராரோ சொன்னா..அவனும் பாடறான்..
*
காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் கொன்றாயே கண்ணே நீ யாரோ?
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னில் நானே வெளியில் தேடாதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
மனசு மனசு இன்று வளையோசை ஆனதே
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே
இணைவதனால் இதழ் இணைப்பதனால் இந்த முத்தம் தீராதே
நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே
காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள் நாம்
எரியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்
தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே
பிரிவதனால் விதி முடிவதனால் இந்த காதல் சாகாதே
நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே
*
https://youtu.be/DpNJYJhGXCE
நரசிம்மா விஜயகாந்த் இஷா கோபிகர்..பாடியவர்கள்..மஹாலஷ்மி ஐயர், சாய்சிவன்..(கொஞ்சம் எஸ்பிபி சாயல் தெரியுதுல்ல)
chinnakkannan
27th October 2015, 10:39 PM
காதல் கொண்ட உள்ளங்களில் காதலனை விட காதலிக்குக் கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கும்..எந்தக் காலத்திலும்
ஹேய் யூ.. இப்படியே வாஸ்ஸப் ஐஎமோன்னு எத்தனை நாளா பேசிக்கிட்டே இருக்கறது
இப்ப என்ன செய்யணுங்கற
அந்த ஃப்ளாட் பாத்தியா க்ரோம்பேட்ல.. பிடிச்சுருக்கா
ஓயெஸ் அதான் லோன் போட்டுட்டேன் அட்வான்ஸ் கொடுத்துட்டேன்னு சொன்னேனே அடுத்த ஜூலைல ரெடியாய்டும்
அந்த எஃப் டில்லாம் நம்ம கல்யாணத்துக்கப்புறம் நம்ம ரெண்டு பேர் பேர்லயும் மாத்துவ தானே..இ..ஆர் எஸ் அக்கெளண்ட்ல..
ஏற்கெனவே விசாரிச்சு வச்சுட்டேன் நோப்ராப்ளம் டியர்..
உங்க அப்பா அம்மா உங்க அண்ணனோட குர்கான் போய்டுவாங்க தானே நம்ம கல்யாணத்துக்கப்புறம்..
பின்ன..அவங்களுக்கு இந்த சென்னை க்ளைமேட் ஒத்துக்கலைம்மா..
ஓஒஹ்.. ஸோ ஸ்வீட்.. ஐ லவ்யூ டியர்.. அப்ப ஜாலியா ஜூலைலயே கல்யாணம் வச்சுக்கலாம்..என்ன சொல்றீங்க..
சரி ஈ ஈ.. மாயாஜால்ல வேலை மெனக்கெட்டு இங்க்லீஷ் படத்துக்கு மேட்னி ஷோ வந்துருக்கறது இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கறதுக்கா ஹனி.. இருக்கறது லாஸ்ட் ரோ..கொஞ்சம் கிட்ட வாயேன்
ஸ்ஸு.. அதெல்லாம் ஜூலைக்கு அப்புறம் தான்..புதுப்படம் புதுப்படமாப் பார்க்கறது தான் அழகு..திருட்டு டிவிடில பார்த்தா சார்ம் போய்டும்.. என்ன சொல்றீங்க
என்ன சொல்வான் அவன்..திருதிருன்னு முழிக்கத் தானே செய்வான்..:)
இதான் இந்தககாலத்து லவ்..
*
ஆனா அந்தக் காலத்தில ஜெமினியும் சர்ரூவும் கேள்வி கேட்டுக்கிட்டே டூயட்பாடியிருக்காங்க..அழகா..
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
மழலை போல தமிழில் பேசி மயங்க வைத்தாயே
நான்
மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே
சிரிக்கும் போது சிரிப்பதெல்லாம் ஆசையல்லவா
கையில் அணைக்கும் போது அணைப்பது தான் காதல் அல்லவா
கண்ணைப் பறித்துக் கொள்ளவா
ஏன் எடுத்துச்செல்லவா
ஒரே கேள்வி..
குழிவிழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா
உனைக்
குழந்தையாக்கி மடியில் வைத்து பாட்டுப் பாடவா (எவ்ளோ நைஸா கேக்கறார் பாருங்க)
மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா (அது சரி..பார்த்து புள்ள..)
கையில் அள்ளி அணைக்கவா
கதை சொல்லி முடிக்கவா
நான் சேர்த்து அணைக்கவா
முகம் பார்த்து சிரிக்கவா (லூஸாம்மா நீ)
*
https://youtu.be/ls1bgVa0PmE
*
மாமா இசை என்பதனால் வாஸ்ஸூ
சர்ரூ என்பதால் ராஜேஷ்
பி.பி.எஸ் என்பதால் ராகவேந்தர்
ஜெமினி என்பதால் சி.செ
பழைய்ய பாட் என்பதால் மதுண்ணா
ஹையா ஒரே பாட்ல அஞ்சு மாங்காய் அடிச்சாச் :)
eehaiupehazij
27th October 2015, 10:45 PM
Congrats for crossing your 8K mark sika!
chinnakkannan
27th October 2015, 11:31 PM
ஹச்சோ சி.செ.. தாங்க்ஸ்..நான் கவனிக்கலையே..
உங்களுக்காக..
தெய்வம்மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம்
உந்தன்முகத்தோடு வந்த மணம்பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன் மணம்..
மலரிருக்கும்கைகளிலே மணம் இருக்கும்
அந்த மணத்தினிலே குலமகளின் குங்குமம் இருக்கும்
குணமிருக்கும் இடத்தினிலே குலம் இருக்கும்
அந்த குலத்தினிலே திருமகளின் துணையிருக்கும்
கொத்து மஞ்சள் முகத்தினிலே பொட்டு வைத்து
அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டுவைத்து
பட்டுப் போன்ற கூந்தல் தன்னைக் கட்டிவைத்து
அதில் பருவத்தையும் உருவத்தையும் சுட்டி வைத்து....
நன்றி சொல்ல வேண்டுமந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேரவைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டுமிந்த தலைவனுக்கு
என்னை நாயகியாய்க் கொள்ள வந்த இறைவனுக்கு (எப்போதும் இப்படித் தாம்ப்பா ஆரம்பிக்கும் :) )
*
எங்க வீட்டுப் பெண் ஏவிஎம் ராஜன்..பொண் புஷ்ப லதாவா..இல்லை தானே..
https://youtu.be/4Gz7wNu0dJo?list=PLp9Xhah4CdIurP9rqK2-FoSxnnKjwlSJd
chinnakkannan
27th October 2015, 11:37 PM
ஏனோ என்னாளும் இல்லா ஆனந்தம்..
(மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் பிபிஎஸ் பிஎஸ் எஸ் ஜே- இது வரை ஏன் இந்தப் பாட் நான் பாக்கவே இல்லை :))
ஜெமினி ஜெயந்தி அஞ்ச்சலி..
https://youtu.be/9MmqE_lmBx8?list=PLp9Xhah4CdIurP9rqK2-FoSxnnKjwlSJd
rajraj
28th October 2015, 05:00 AM
இது வரை ஏன் இந்தப் பாட் நான் பாக்கவே இல்லை :))
Because you are not old enough ! :lol:
RAGHAVENDRA
28th October 2015, 06:37 AM
காதலன் மீது காதலைக் கொண்ட காரிகை (பின்ன காதலனோட மாமாவையா லவ் பண்ணுவா) அவன் வராமல் எவ்வ்ளோ தவிக்கறா..
அந்தக் காலம்னு எழுதினீங்களோ பொழைச்சீங்களோ... தப்பிச்சிட்டீங்க..
Russellmai
28th October 2015, 07:11 AM
மையம் திரியில் எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு
சின்னக்கண்ணன் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.
RAGHAVENDRA
28th October 2015, 09:03 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/grtgscikafw_zpsq0q5dsqy.jpg
JamesFague
28th October 2015, 09:06 AM
Mr CK
Congrats for reaching another milestone. Do post in NT's Thread also.
raagadevan
28th October 2015, 09:22 AM
திரைப்படம்: சந்திரோதயம் (1966)
குரல்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விச்வநாதன்
நடிப்பு: I wonder who! :)
https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ...
raagadevan
28th October 2015, 09:46 AM
Vaali's original version of the last charanam was as follows:
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாரவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...
The sensor board did not like those lines; so Vaali rewrote the charanam as:
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாஙகத் துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...
Russellmai
28th October 2015, 09:51 AM
சின்னக்கண்ணன் சார்,
எங்க வீட்டுப் பெண் திரைப்படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன்
நடித்திருப்பவர் பணமா பாசமா திரைப்படத்தில் நடித்த விஜய நிர்மலா.
கோபு.
adiram
28th October 2015, 11:05 AM
இந்த மய்யத்தில் தனக்கென்று ஒரு எழுத்துப் பாணியைக் கைக்கொண்டு மிக அருமையாக, அற்புதமாக "எட்டாயிரம்" பதிவுகளைத் தந்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கும் இனிய நண்பர் "சின்னக்கண்ணன்" அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
குறுகிய காலத்தில் எட்டாயிரம் பதிவுகளை எட்டுவது என்பது ஒரு அரிய சாதனைதான் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் மதுரகானங்களோடு மட்டும் ஐக்கியமாகிவிடாமல், நடிகர்திலகம் திரியிலும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டுமென விரும்புகிறோம்.
வாழ்த்துக்களுடன் ஆதி.
rajeshkrv
28th October 2015, 11:10 AM
4 ஆயிரம் 8 ஆயிரம் மாமா பிஸ்கோத்து
ச்சும்ம்ம்மா
8 ஆயிரம் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சி.க
chinnakkannan
28th October 2015, 02:20 PM
அன்பான ராகவேந்திரர், எஸ்.வாசுதேவன், கோபு, ராஜேஷ், ஆதிராம்.. அனைவரது வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
என்ன நன்றிப் பாட்டு போடறதுன்னு தெரியலை.. சரி..சிருஷ்டி டாங்க்கே பாட் போடலாம்னு போட்டுட்டேன்..:)
என்னாளும் ஆனந்தம்....ம்ம்ம்ம்
https://youtu.be/mRWj5knSvC0
madhu
28th October 2015, 04:20 PM
சிக்கா...
எட்டாத உயரம் அல்ல எட்டாயிரம் இன்னும்
எத்தனையோ எட்ட வேண்டும் நீர் சீக்கிரம்
ஆமா.. அதென்ன பழைய பாட் என்பதால் மதுண்ணா... எனக்கு புத்ப் பாட் புடிக்தா என்ன ?
இந்தப் பாட்டும் புடிக்கும் தெரிஞ்சுக்குங்
https://www.youtube.com/watch?v=1pnQsFBh1XU
madhu
28th October 2015, 04:27 PM
வாசுஜி...
இந்த ராணியை மறந்துட்டீங்களா ?
https://www.youtube.com/watch?v=IfXqcYLG0eg
Russellxor
28th October 2015, 04:29 PM
சின்னக்கண்ணன் சார்
8000 பதிவுகள் கண்டமைக்கு
வாழ்த்துக்கள்.
பதிவுகளை விட
உற்சாகமான வார்த்தைளும்
துள்ளல் வரிகளும்
மீண்டும் படிக்கத் தூண்டுவதும்
உங்கள் எழுத்துக்களின் சிறப்பு.
நன்றி.
madhu
28th October 2015, 04:33 PM
இந்த ராணியெல்லாம் வந்தாச்சா...
திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி - உதயா
வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் - அடுத்த வாரிசு
நெனச்சதெல்லாம் நடக்கபோற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான் தானே தேனீ - உறவாடும் நெஞ்சம்
sss
28th October 2015, 05:07 PM
நரசிம்மா விஜயகாந்த் இஷா கோபிகர்..பாடியவர்கள்..மஹாலஷ்மி ஐயர், சாய்சிவன்..(கொஞ்சம் எஸ்பிபி சாயல் தெரியுதுல்ல)
இந்த பாட்டு பாடிய சாய்சிவன் இப்போது உயிருடன் இல்லை என்பது சோகம்...
இவர் மகள் ஹரிப்பிரியா AIRTEL சூப்பர் சிங்கரில் புகழ் பெற்றவர் என்பது தெரியும் தானே ....
https://www.youtube.com/watch?v=E4fjh5aq3JQ
rajeshkrv
28th October 2015, 08:43 PM
இந்த ராணியெல்லாம் வந்தாச்சா...
திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி - உதயா
வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் - அடுத்த வாரிசு
நெனச்சதெல்லாம் நடக்கபோற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான் தானே தேனீ - உறவாடும் நெஞ்சம்
மதுண்ணா வந்தாத்தான் இந்த ராணிகள் எல்லாம் வராங்க
chinnakkannan
28th October 2015, 09:41 PM
இந்த பாட்டு பாடிய சாய்சிவன் இப்போது உயிருடன் இல்லை என்பது சோகம்...
இவர் மகள் ஹரிப்பிரியா AIRTEL சூப்பர் சிங்கரில் புகழ் பெற்றவர் என்பது தெரியும் தானே ....
சுந்தர பாண்டியன் சார்..
எகிப்து ராணி ராஜேஷ் நினைவூட்டியதால் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.. தேனா.. டபக்கென்று அந்தப் படத்தில் மனதைக் கொய்தபாடல் இந்தப் பாட்டைத் தேடியதில் சிக்கியது... காதல் ஆராரோ.. வெகு அழகான மெலடி..(வரிகள் யுக பாரதி) ஐ திங்க் படம் பார்த்ததற்கு அப்புறம் நேற்றுத் தான் மறுபடி பார்க்கிறேன்..கேட்கிறேன்.. வெகுவாகக் கவர்ந்தது குரலும் கூட....
ஆனால்..
இந்தத் தகவல் எனக்குப் புதிது..சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பார்த்தேன் தான்..பட் கொஞ்சம் போரடிக்க விட்டுவிட்டு ஃபைனல் மட்டும் பார்த்த நினைவு.. இப்போது அதுகூடப் பார்ப்பதில்லை (சிங்கர் 5).
ஹரிப்ரியாவின் தந்தை சாய்சிவன் என்பது ஆச்சர்யம் ப்ளஸ் அவர் மறைவு சோகம்..அடுத்த சிங்கர் 4 லில் டெடிகேட் செய்து ஹரிப்ரியா பாடி ப்பேசியது ரொம்ப உருக்கமாக இருந்தது..
அவர் வேறு ஏதாவது பாடல்கள் பாடியிருக்கிறாரா தெரியவில்லை..தேடினால் கிடைக்கவில்லை..
மிக்க நன்றிங்க..
chinnakkannan
28th October 2015, 09:45 PM
அன்பான மதுண்ணா, செந்தில்வேல் தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி..உங்களுக்காக என் டில்லி டூரில் ஒரு பகுதி..!
*
இரண்டு வருடங்களுக்கு முன்னால் என நினைவு..
குர்கானில் என் ஒன்று விட்ட மகள் வீட்டிற்குச் சென்றால் அவள் கணவர், “சித்தப்பா டில்லிக்கு மெட்ரோல போய் சாந்த்னி செளக்ல இறங்கி ரெட் ஃபோர்ட் பாத்துட்டு வரலாம்..கொஞ்சம் நடக்கணும்..ஆனா திரும்பறச்சே சூப்பர் சமோசா, ஜிலேபி, லஸ்ஸி வாங்கித் தருவேன் சரியா” எனச் சொல்ல ”என்னய்யா.. நடக்கணுமா என ஒரு சின்ன முறை முறைத்து பின் சிரித்து “சரி” எனில் சலோ டெல்லி – ஒரு சுபயோக சுபதினமான ஞாயிற்றுக்கிழமை காலை..
சாந்த்னி செளக் ரயில்வேஸ்டேஷனை மக்களுடன் கடந்து தபக் தபக் என்று இருபுறமும் உள்ள கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே பட்டப் படக்கிற வெய்யிலில் கொஞ்சூண்டு ஒற்றைக் கோடாய் நெற்றியில் வியர்வை வழிய செங்கோட்டை சென்று பார்த்துவிட்டு வந்தோம்..(ஒருகைட் பச்சக் கென காடுகளில் தென்படும் அட்டை போல (ஆமாம் டெல்லி வெயிலுக்கு அட்டைலாம் உதிர்ந்து போய்டும்) ஒட்டிக்கொண்டு எங்களுக்குஎல்லா இடங்களைப் பற்றியும் ஆங்கில விளக்கம் வேறுஅளித்தான்..
கொஞ்சம் நிறுத்து நிறுத்து..ஏதோ சொன்னியேப்பா..
எதுங்க..
மும்தாஸ் மகல்..
அதோ அந்தக் கார்னர்ங்க..
எனில் முதன் முதல் மும்தாஜ் மஹல்…! அங்கே மும்தாஜ் உபயோகப்படுத்திய உடை பொருட்கள் எல்லாம் பார்த்தோம்..
பட் டோட்டல் ரெட் ஃபோர்ட்டே ஒரு பரந்து விரிந்த பரப்பு.. முழுக்கப் பார்த்து மறுபடி நடந்து வெளியேறக் குட்டியாய் வயிற்றுக்குள்ளிருந்து யாரோ தட்ட.
”இவரே”
“என்ன சித்தப்பா”
“த்ரீலெட்டர் வேர்ட் விச் வில் மேக் மி ஸ்மைல் “ சொல்ல
“அல்வா இங்க நல்லா இருக்காது”என்றார் அந்த ப் படுபாவி..பின் சிரித்து இதோ இன்னும் அரைக்கிலோ மீட்டர்..
நடந்து சாப்பிட்ட சூடான சமோசாவும், ஜிலேபியும் கூடவே ச்சாயும் மறக்கவே முடியாது..
அது சரி அதுக்கென்ன இப்பங்கறீங்களா.. ஹி ஹி..
அதோஅதோ ஒரு செங்கோட்டை…
இதோ இதோஒரு தேன்கோட்டை..
https://youtu.be/KsAl7ezgb_U
http://tamil.nativeplanet.com/delhi/attractions/red-fort/
வரிகள் புலமைப் பித்தன் (தகவல் உபயம் மிஸ்டர் கார்த்திக்கா எஸ்.வி சாரா இன் முதல் பாகம்)
chinnakkannan
28th October 2015, 10:02 PM
கோபு சார்.. விஜய நிர்மலான்னு சொன்னதுக்கு தாங்க்ஸ்.. ஆனாக்க எனக்கு எப்பவும் வி. நி, புதுவெள்ளம் மன்ச்சு மறந்து மறந்து போய்டுது..ஏன்னே தெரியலை :)
ஆதிராம் .. திடீர்னு ஒரு கேள்வி கேட்டதைப் படிச்சதா நினைவு..வீட்டுக்கு வந்து ஆன்ஸர் பண்ணலாம்னு தேடினா அந்தப் பதிவையே காணோம்..என்னன்னு சொன்னீங்கன்னா நான் கொஞ்சம் தேடுவேன்...
chinnakkannan
28th October 2015, 10:49 PM
சிக்கா...
எட்டாத உயரம் அல்ல எட்டாயிரம் இன்னும்
எத்தனையோ எட்ட வேண்டும் நீர் சீக்கிரம்
ஆமா.. அதென்ன பழைய பாட் என்பதால் மதுண்ணா... எனக்கு புத்ப் பாட் புடிக்தா என்ன ?
இந்தப் பாட்டும் புடிக்கும் தெரிஞ்சுக்குங்
தெகிடி பாட்டுக்கு நன்றி மதுண்ணா.. அதுல பார்த்தேள்னாக்க தெகிடி நல்ல சஸ்பென்ஸ் படம்..கொஞ்சம் ஃபேமஸான ஹீரோ போட்டு எடுத்திருக்கலாம்..அஷோக் செல்வனும் குறைவிலாமல் நடித்திருப்பார்.. செம முழி கொண்ட ஜனனி அய்யர்..கொஞ்சம் மஞ்சள் வெண்ணிலா போல வட்ட முகம்..பளீர் பல்வரிசை (கோல்கேட்டா க்ளோஸப்பா)
படம்பார்க்கும்போதே வரிகள் வித்தியாசமாக இருக்கேன்னு நோட் பண்ணினேன்..பட் மறுபடி கேட்க பார்க்க ச் சந்தர்ப்பம் வரவில்லை.. நீங்க கொடுத்தீஙக்.. ஸோ..
லிரிக்ஸ் எழுதினது கபிலனாம்.. (இவர் கபிலன் வைரமுத்து இல்லைன்னு நினைக்கறேன்)
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உன்னை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடீ
முதன் பெண் தானே நீ தானே
எனக்குள் நானே ஈர்ப்பேனே
**
நல்லாத் தான் இருக்கு வரிகள்..என்னைக் கவர்ந்த புது(?) பாடல்
யுகபாரதி..தனக்கென ஒரு கோடெழுதி தாண்டாத கவிஞர்..எனக்கு மிகப் பிடிக்கும்..
சிவப்பதிகாரத்தில் சட்டென மனம் கொய்யும் இரண்டாவது பாடல் (முதல்பாட் சித்திரையில் என்ன வரும்)
அடிதொட முடிதொட
ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை
பொடிபட பொடிபட
நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை
முடிதொட முகந்தொட
மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிட பருகிட
ஏக்கம் இளகிட
கூடும் அனலிது குளிர்வீசும்
தளும்பினேன் எனைநீதொட
மயங்கினேன் சுகம்சேர்ந்திட
குலுங்கினேன் உடல்கூசிட
கிறங்கினேன் விரல்மேய்ந்திட
பாய்ந்திட ஆய்ந்திட
காணுகின்ற காதல்
என்னிடம் – நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்
உடலெது உடையெது
தேடும் நிலையிது
காதல் கடனிது அடையாது
இரவெது பகலெது
தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது
கனவெது நினைவெது
கேட்கும் பொழுதிது
காமப் பசிவர அடங்காது
வலமெது இடமெது
வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது
உறங்கலாம் அதிகாலையில்
ஒதுங்கலாம் இனிமாலையில்
தயங்கலாம் இடைவேளையில்
நிரம்பலாம் உயிர்ச்சோலையில்
கூடலில் ஊடலில்
காணுகின்ற காதல்
என்னிடம் – நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்
அற்றை திங்கள் வானிடம்
அல்லிச் செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல்
என்னிடம் – நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்
ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனா என நினைவில்லை..பட் மிக மனங்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று..(ராகதேவன் என்னவாக்கும் ராகம்)
மறக்காததற்குக் காரணம் ஹீரோயின் மம்தா மோகன் தாஸ்.. அழகு மட்டுமல்ல அவரது மனவுறுதியினாலும் தான்..இன்னும் நோயை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்..
https://youtu.be/bv5nXXBFzKM
rajeshkrv
28th October 2015, 11:20 PM
Chinna kabilan veru, kabilan vairamuthu veru
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQJZtYfgHrzYXGSyeeUAGDP5lfSyGXTp 27dwPzC3iurw7u5U5mB
vasudevan31355
29th October 2015, 07:15 AM
என் சின்னக் கண்ணா! செல்லக் கண்ணா!
http://cs624018.vk.me/v624018870/97ab/TKZLER4YYnc.jpg
8000 பதிவுகளை அள்ளித் தெளித்து விட்டீர்களே இதுவரை! ஒவ்வொன்றுக்கும் கடின உழைப்பு. ஏனோதானோ என்றில்லாமல் கருத்துச் சிரத்தை காமெடி வாக்கியங்களுடன். அப்படியே கவிதை வடிவங்களிலும். ஒவ்வொன்றையும் படித்து கருத்துக் கூறும் சுவாரசியம்.
அது போல மற்றவருக்கு நன்மை விளைவிக்கும் அதிக சந்தேக பதிவுகள். நைசாக வேலை வாங்கும் திறன். எல்லாம் நன்மைக்கே. உவகையாய் பதில் சொல்லக் கூடிய சந்தேககங்கள்.
புதுத் தேடலில் கொஞ்ச நாளாய் மனம் அவ்விடத்தில் லயித்துக் கிடப்பதும் இந்தப் பாம்பு அறியும்.:)
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...
உம்மைவிட அதிக சந்தோஷம் பெறுபவன் அடைபவன் நானே!
vasudevan31355
29th October 2015, 08:00 AM
சின்னா!
இதோ இன்னும் சில ராணிகள்.
உமக்குப் பிடித்த (எனக்கு நன்றாகத் தெரியும்)
'கல்லூரி ராணிகாள்
உல்லாசத் தேனிகாள்'
அப்புறம்
'முகத்தில் முகம் பார்க்கலாம்' படத்தில் நம்ம ரேடான் ராதிகா நம்ம முன்னாள் வில்லன் ஸ்ரீகாந்த் முன்னால் 'நான் ஒரு ராணி' என்று நீச்சல் குளத்தில் பிகினியில் பின்னி எடுக்கும் ஜானகியின் அருமையான பாடல்.
ராதிகாவை அப்போது பார்க்கும் போது அப்படியே சிங்கள முகம் அப்பட்டமாகத் தெரிகிறது. குண்டு மூஞ்சி..வெளியே தெரியும் பெரிய பளீர் பற்கள் என்று. அதுவும் சைட் போஸ்களில் இலங்கைப் பெண் போலவே தோற்றமளிக்கிறார். இப்போது பார்த்தால் அப்படியா இருக்கிறார் சித்.................தி.
நல்ல பாடல் சின்னா. பாருங்கள்.
https://youtu.be/pMo_sKabmH0
அடுத்து,
கமலின் 'காதல் மகராணி கவிதைப் பூ விரித்தாள்' (போட்டாச் தெரியல!?)
'பக்காத் திருடன்' படத்துல 'பெண்ணே வா சின்ன ராணி' நாகேஸ்வரராவும், ஜமுனாவும்.
'மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி'
'நான் சின்ன ராணி செவத்த ராணி' சில்க் டான்ஸ். அதிசயப் பிறவிகள் படத்துல
https://youtu.be/kaiIEG674Xo
'மாயாவி'யில,
'சீட்டுக்கட்டு ராணி போல தேடி ஒன்னக் கொண்டு வந்து விட்டு விட்டு ஓடலாமா'? புருஷன், பொண்டாட்டி நடிச்சது.:)
'என்ன மகராணி அழகு அழகு' பாலா தொடர்ல டீடெயில்ஸ் பார்க்கலாம்.
'அழகுராணி கதை இது' நீங்க அடிக்கடி மறந்து போகும் மஞ்சு பாடல்.
'அந்த சில நாட்கள்' படத்துல 'ராஜா ராணி ராஜ்ஜியம்'
'சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் ச்சம் ச்சம்' பிரபு பாடலில் (மை டியர் மார்த்தாண்டன்)'ராணி தேனி வாநீ'
'மைக்'கும், பூர்ணிமா பாக்கியராஜும். (ராஜா ராணி ராஜ்ஜியம்)
'பார்வை யுவராணி கண்ணோவியம்'
'குட்டி' படத்தில் 'சின்ன மகராணி சிரிக்கும் சிரிப்பு கோயில் மணியோசை போல'
https://youtu.be/wdJsLaPY5x4
'சரசராணி கல்யாணி' (ராஜா தேசிங்கு)
'ஜிம்போ' படத்துல 'நான் ராணி...அன்பே நீ'
https://youtu.be/wfnNESEcFu8
RAGHAVENDRA
29th October 2015, 08:57 AM
சி.க. சார்
உங்க சின்ன ராணி இந்த செல்ல ராணிக்கு சீனத்துப் பட்டு மேனியாம்...
நான் சொல்லவில்லை.. பாட்டிலேயே வருது..
https://www.youtube.com/watch?v=bVQR2CR_EG0
என்ன மாதிரி பக்திப்படம் தாய் மூகாம்பிகை.. அதில் தான் இந்தப் பாட்டு...
rajeshkrv
29th October 2015, 10:24 AM
https://www.youtube.com/watch?v=mQ_pbrKUtuE\
https://www.youtube.com/watch?v=NEzw0wyWs14
rajeshkrv
29th October 2015, 10:30 AM
https://www.youtube.com/watch?v=yvdesv4jjaw
https://www.youtube.com/watch?v=_grTzzFwm-4
https://www.youtube.com/watch?v=iuAYogSS-Ao
https://www.youtube.com/watch?v=BJTfWIfKORU
JamesFague
29th October 2015, 11:21 AM
Courtesy: from facebook
An epic classic film Karnan...a film which can never be made again .
Most of the main people involved in the making of the movie are no more with us ..but what a legacy they have left behind....and superb songs....
http://youtu.be/3QhGXfzrGeA
கண்ணுக்கு குலமேது ....
கண்ணா கருமைக்கு இனம் ஏது.................
படம் : கர்ணன் ( 1964)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் TK . ராம மூர்த்தி
பாடியவர் :பி.சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
கண்ணுக்கு குலமேது (2)
கண்ணா கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
விண்ணுக்குள் பிரிவேது.. கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது .. கண்ணா
இழப்புக்கு இருளேது..
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
பாலில் இருந்து…. ஆ..ஆ
பாலில் இருந்து நெய் பிறக்கும்.. கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்து குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கொடுப்பவர் இல்லாம்.. கொடுப்பவர் எல்லாம் மேலாவார்
கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் அல்லவோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே..
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
Richardsof
29th October 2015, 12:17 PM
8000 பதிவுகள் வழங்கிய திரு சின்னகண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
எத்தனை கவிதைகள்
எத்தனை நயமான கதைகள்
புதுமையான பாடல்கள்
அத்தனையும் அருமை .
ராணிக்கான என்னுடைய பங்களிப்பு
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் .
https://youtu.be/dBuAD62LTxA
chinnakkannan
30th October 2015, 12:03 AM
வாழ்த்துக்கள் சொன்ன அன்பு நண்பர்கள் வாசுவிற்கும் எஸ்வி க்கும் மிக்க நன்றி..வேலைப்பளு காரணமாக எதுவும் எழுத இடவில்லை..
ஆஹா எத்தனை ராணிகள் வாசு,ராகவேந்தர்,ராஜேஷ், எஸ்வி.. மிக்க நன்றிஒவ்வொன்றாய்ப் பார்க்க வேண்டும்..
chinnakkannan
30th October 2015, 12:31 AM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash2/t31.0-8/966710_10200610969347773_364198676_o.jpg
இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே தினத்தில் நான் என்ன எழுதினேன் என்று ஃபேஸ் புக் சொன்னது.. இந்த ச் சிரிக்கின்ற பெண்ணிற்கு கட்டளைக் கலித்துறை ஒரு நண்பர் எழுத நான் சில க.;க.து மற்றும் எழுசீர் விருத்தம் எழுதிப் பார்த்தேன்..பார்த்தேனா..
கள்ளச் சிரிப்பதும் கண்பார்வை காட்டியே நின்றிருக்க
உள்ள உவகை உதட்டில் விரிந்தே மலர்ந்திருக்க
செல்கின்ற தென்றல சிலிர்ப்புடன் மங்கையைத் தீண்டிடவும்
துள்ளியே பார்த்தவென் தூயநெஞ்சின் சூடும் அறியாயே
ஓடி ஒளிய ஓரிடம் தடுக்க விழுந்ததுவும்
வாடி முகவலியில் வண்ணம் மாற வசைந்ததுவும்
பாடிப் பறந்தே பலவிடம் சென்ற பரவசமும்
ஊடி வருகுமே இத்தென்றல் தீண்டிடும் வேளையிலே
வாடி பயிரால் உருகிய வள்ளலார்தான் வந்தாலென்
தோடியில் தேன்போல் தீந்தமிழில் பாடுபவர் வந்தாலென்
மோடியோ மேல்யாரோ மானிலத்தில் ஜெயித்தே நின்றாலென்
ஊடி இளமை உணர்வில் சிரிக்கின்றேன் ஏகம்பனே.
கண்ணன் நினைப்பில் கனிவுடன் பார்த்திடும் பார்வையதோ
கன்னச் சிவப்பின் காரணம் களிப்பெனக் காட்டுகையில்
தென்றலும் மென்மையாய் தேவதை தோளில் வருடுகையில்
எண்ணம் மயங்கியே எள்ளிச் சிரித்தவள் நின்றனளே
சிரித்தவிழி ரசிப்புடனே சீராக நோக்கிவிடும்
..சேயிழையாள் நினைப்பினிலே யாரோ
தரித்தகரு ந் தொப்பியிலே தயக்கமுடன் மென்தென்றல
..தாவித்தான் அணைப்பதுவும் ஏனோ
விரிந்திருக்கும் செவ்விதழில் வீண்பெருமை தான்கொண்டே
...வெண்பற்கள் பளிச்சிடுதல் கண்டீர்..
புரிந்திருக்கும் பாவையிவள் பாழ்மனதைப் பலவாறாய்
..போராட வைத்திடுவாள் என்றே...
*
ஆஹா அனுஷ்கா புராணம்பாடியாச்சு அவரைப் பற்றிச் சொல்லாம இருந்தா எப்படி..
முப்பத்து நான்கு வயதான அனுஷ்கா ஷெட்டிக்கு அவர் பிறந்த போது அம்மா அப்பா வைத்த பெயர் ஷ்ஷ்ஸ்வேதா..
தெலுங்கில் அறிமுகமாகியிருந்தும் தமிழில் உஸ்ஸரமாக மாதவனின் ஜோடியாக தனது இருபத்து ஆறாவது வயசில் (அவஸ்யம் வயஸ் சொல்லணுமா கண்ணா.. பின்ன மன்ச்சு..ஒரு ஜி.கே தானே) ரெண்டு படத்தின் மூலம் அறிமுகம்.. ஆனால் பொண்ணு உசரம்..டூயட் எடுத்தா ஹீரோவால குட்டி ஸ்டூல் போட்டுத் தான் முத்தா தரமுடியும்.. எனில்..ஒழுங்கா ப் பார்க்க முடியலை என்பதாலோ என்னவோ பைபை என தமிழ் ரசிகர்கள் டாட்டா காட்ட தெலுகு சின்னாலு..வாவா.. என அரவணைத்து ஆசிர்வதிக்க பிரபல நடிகையாய் ப் பின் தமிழில் அருந்ததியாய் டப் பிக்கப்பட்டு வர அந்தப் படம் காட் தீயாக ஓட பின் என்ன தமிழிலும் மார்க்கெட் பிக்கப் ப்தான்..வேட்டைக்காரனில் விஜய் சிங்கம் ஒன்று இரண்டு என விலாவாரியாக விலா தெரிய உலா வந்து..இப்போது ருத்ரம்மா தேவி..
வாசு சொன்ன டெக்னிக்..அதாவது கீழான இடத்தில் ஹீரோ அதே போல் கொஞ்சம் மேலான இடத்தில் ஹீரோயின்..இதை இவருக்கு பயன் படுத்தத்தான் செய்கிறார்கள்..இல்லையேல் தள்ளித் தள்ளி லாங்க் ஷாட்..
செல்லமாய் மாதவன் மொபைலா மொபைலா என இன்பத் தமிழில் நான் உந்தன் போஸ்ட் பெய்டா ப்ரீ பெய்டா சொல் சொல் எனக் கேட்கும் ரெண்டுபாடல்..ம்ஹூம் ரெண்டு படப் பாடல்..ஹய்யய்.யோ எனக் பயம்மா இருக்கு :) பாடல் மெலடி தான்..
https://youtu.be/JzrMU6YvEkM
அம்மணி யோகா டீச்சர் என்பது அடிஷனல் தகவல்..
என் இதயம் ஒரு முறை துடிக்கிறதே எடுத்த லொக்கேஷன் மஸ்கட்டிலிருந்து துபாய் பார்டர் போகும் வழி..
பின்ன ஹோம் வொர்க் பண்ணிட்டு வாரேன்..
vasudevan31355
30th October 2015, 08:05 AM
சின்னா!
http://www.tamilserialstoday.com/wp-content/uploads/how-anushka-gain-weight-for-inji.jpg
நான் நெனச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. அனுஷ்கா பத்திதான் சொல்றேன். நானே எழுதனும்னு நினைச்சேன். நீங்க அமர்க்களமா சொல்லிட்டீங்க. என்னப் (எண்ணப்)பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
அனுஷ்காவை 'ரெண்டு' படத்தை ரெண்டுமுறை பார்த்தபோதே:) இவுக பெரியா ஆளா வருவாங்கன்னு மனசுல பட்டுச்சு. நீங்க சொன்னா மாதிரி நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் ஆச்சுதான். ஆனால் அப்புறம் செம பிடி.
அனுஷ்காவை நான் நடிகைன்னு குறிப்பிடாம அந்தப் பெண் என்றுதான் சொல்லுவேன்.
இந்தப் பெண்ணைப் பிடித்துப் போனதற்கு வலுவான காரணம் ஒன்று உண்டு.
நீங்க நினைப்பது போல மாதவனோட ரெண்டு படத்துல வர்ற டூ பீஸ் எல்லாம் இல்லை.:)
அனுஷ்கா மட்டுமே துணிவாக சில கதாபாத்திரங்களை இப்போதைய நடிகைகளில் தேர்ந்தெடுத்தவர். சரித்திரப் படங்கள் திரும்ப வந்து வெற்றி வாகை சூடுவதற்கும் இந்தப் பெண்ணும் ஒரு காரணம்தானே! இப்போது நடக்கும் பலத்த ஹீரோயின் போட்டிகளுக்கு நடுவே அதுவும் கொஞ்சம் வயது முதிர்ந்தாலும் அவர் ஹிஸ்டாரிக்கல் கலக்கலை துணிவுடன் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது பாராட்ட வேண்டிய அம்சம்தானே!
விதவிதமான கேரக்டர்களை அவர் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல...அதற்காக ரொம்பவும் சிரத்தை எடுத்து மெனக்கெடுவார். எத்தனை பேரை இப்படி காட்ட முடியும்?
'வானம்' படத்தில் விலைமாது கேரக்டரில் இவர் நடித்தது அதுவும் ஆபாசக் கலப்பில்லாமல் நடித்தது மகா துணிச்சல். மத்த நடிகையாக இருந்தால் இமேஜ் அது இது என்று புரூடா விடுவார்கள்.
'தெய்வத் திருமகன்' படத்தில் அமர்க்களமான பெண் வக்கீல் வேடம். தூள் பண்ணியிருப்பார்.
'இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யாவை விரட்டி விரட்டிக் காதலித்து உயிர்துறக்கும் பெண்ணாக, வேற்று கிரக முரட்டு பெண்ணாக வித்தியாசம்.
'சிங்கம்' போன்ற படங்களில் வழக்கமான கிளாமர் ஹீரோயின்
'ருத்ரமாதேவி'யில் இளவரச ஆண் வேடம், அப்படியே இளமை பொங்கும் இளவரசியாக இரண்டு கேரகடர்களை ஒரே பாத்திரத்தில்.
வரப்போகும் 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக மெனக்கெட்டு குண்டுப் பெண்ணாக நடிக்க இருபது கிலோ எடை கூட்டி அர்ப்பணிப்பு.
படத்துக்குப் படம் உடல் வருத்தி உழைத்து வித்தியாசக் கேரக்டர்களை தெரிந்தெடுக்கும் வித்தியாசமான நடிகை.
இந்த ஒரு காரணத்திற்காகவே இவரை எனக்கு நிரம்பப் பிடிக்கும்.
உங்களுக்கும் பிடித்ததில் ரொம்ப சந்தோஷம். திறமை எங்குள்ளதோ... வித்தியாசம் எங்குள்ளதோ அங்கே நாம் சென்று பாராட்டுத் தெரிவிப்பதுதானே முறை?
வெறும் கேட் வாக் நடந்து வந்து போகும், ரசிகர்களை முக அழகு கொண்டு மற்றுமே ஏமாற்றி கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் இவர் சேர மாட்டார். இதுவே அனுஷ்காவின் தனி சிறப்பு.
chinnakkannan
30th October 2015, 09:36 AM
வாசு,
அபீத குஜாம்பாள், குசலகுமாரி, கிருஷ்ண குமாரியானாலும் சரி அனுஷ்கா முதலோனார் ஆனாலும் சரி சமர்த்தாய் அழகாய் அலசுகிறீர்க்ள்..
யெஸ்..சொன்னாற்போல அந்தப் பொண்ணை ரெண்டில் பார்த்த போது ( பிகினி ட்ரஸ் அல்ல) அழகா இருக்கு ஆனா பொண்ணு ஹைட்டு என மனதுள் ஓடியது (ரெண்டு த்ரில்லர் படமென்பது ஒரு விஷயம்..பொசுக்கென்று அந்தக் கேரக்டரை மரணிக்கவும் வைத்துவிடுவார்கள்) அப்புறம் கம்பேக் ஆனது அருந்ததி தான்..ஆனாக்க..
நான் விக்ரமார்க்குடு (தமிழ் சிறுத்தை) டப்பண்ணப்பட்ட தமிழ் ப் படத்தைப் பார்த்தேன்.. நன்னாயிட்டு செய்திருந்தார்..கிளாமர் தான் எனினும்(டைஜஸ்ட் பண்ணக் கஷ்டமான விஷயம் ரவி தேஜா (விக்ரம் போல கொஞ்சம்வயசானதுக்கப்புறம் ஃபேமஸ் ஆன ஹீரோ) ஜிந்த்தாத்தா பாடல்
தெ.தி யில் லாயராக..( போனால் போகிறதென்று பாக்ஸ் ஆஃபீஸிற்காக பாட்டு)
நல்ல வேளை இரண்டாம் உலகம் பார்க்கவில்லை..
பாகுபலியில் அவ்வளவாக உபயோகப் படுத்தாமல் ச்சும்மா கைதி ராணியாக வைத்திருந்தது கஷ்டமாக இருந்தது (தமன்னாவின் புயல் அழகில் (க்ராஃபிக்ஸூம் விளையாடியிருந்தது) மறந்தும் போயிருந்தது)
ருத்ரம்மா தேவி பார்க்கவில்லை பார்க்க வேண்டும்..
ஆடிட்டர்கள் வந்து திட்டுவதற்கு முன் பழைய பாட் ஏதாச்சும் போட்டுடுவோமா..
படம் பேர் எங்கள் குடும்பம் பெரிசு.. நம் ரசனையும் கொஞ்சம் பர்ந்து விரிந்தது தானே :) அ.கா மட்டுமில்லாமல் இ.கா விலும் ரசிப்போமே..
உதயகுமார் செளகார் ஜானகி..
அதி மதுரா அனுராகா
ஜீவிதமே சுக போகம்
அதி மதுரா அனுராகா
சமரசம் தான் வைபோகம்
சந்ததமும் நலமாகும்
சமரசம் தான் வைபோகம்
சந்ததமும் நலமாகும்
https://youtu.be/byxebapXh8Q
JamesFague
30th October 2015, 09:44 AM
Courtesy: Dinamani
பானுமதி: 2. கைக்குட்டை காதலும்... பாவுறமா பாடலும்!
அறிமுகப்படுத்திய சி. புல்லையாவின் இயக்கத்தில் அடுத்து ‘மாலதி மாதவம்’ பானுமதியைச் சட்டென்று கதாநாயகியாக உயர்த்தியது. தொடர்ந்து தர்மபத்தினி, கருட கர்வ பங்கம் என்று பிசியானார். புகழ் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தத் தருணத்தில் ‘பானுமதிக்குள்ளும்’ காதல் பூத்தது!
பானுமதியின் காதல் கதை அவரைப் போலவே சுவாரஸ்யம் நிறைந்தது.
‘பட உலகிலே எனக்குக் கோபக்காரி, ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு பட்டப் பேரு உண்டு. அந்தக் காலத்தில் லவ் சீன்னா ஹீரோவும் ஹீரோயினும் கையைப் புடிச்சிக்கிட்டு ஹாய்யா நடப்பாங்க. தோள்ல சாஞ்சுக்குவாங்க. இதுக்கு மேலே லவ் சீன்ஸ் எப்படி எடுக்கணும்னு அப்பத் தெரியாது.
படத்துக்காக அக்ரிமென்ட் போடும் போதே ‘ஹீரோ என் கையைப் பிடிக்கக் கூடாது. தோள்ல சாயக் கூடாது’ன்னெல்லாம் எங்க அப்பா கண்டிஷன் போட்டாரு.
ஆடம்பரங்களோ சினிமா ஸ்டாருங்கிற ஜிகுஜிகுவோ எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. எங்கப்பா எனக்குக் கொடுத்த ட்ரெயினிங் அந்த மாதிரி.
என்னை நான் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாத்தான் நினைச்சுக்கிறேன். அதனால இன்னும் எங்க வீடு சாதாரணமாதான் இருக்கும். சினிமா ஸ்டார் மாளிகை மாதிரி ஆடம்பர அமைப்பைப் பார்க்க முடியாது. இதை நான் பெருமையாவே சொல்லிக்கிறேன்.
1941ன்னுல மெட்ராஸூக்கு வந்தோம். பக்தி மாலான்னு ஒரு படம். வட நாட்டுக்காரர் ஒருத்தர் எடுத்தார். அதுல மீராபாய் மாதிரி ஒரு கேரக்டர். அந்தப் படத்துக்காக நான் மொதல்ல டான்ஸ் கத்துக்க வேண்டி வந்தது. அதுவரைக்கும் எனக்கு டான்ஸே தெரியாது. அதில் நான் நாட்டியம் நல்லா பண்ணல. அதனாலயே அந்தப் படத்தைப் பார்க்க எனக்கே பிடிக்காது.
அதுக்கப்புறம் ஸ்டார் கம்பைன்ஸ் ‘கிருஷ்ண பிரேமா’ வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் வளர்ந்த நேரம்.
அதை ராமகிருஷ்ண ப்ரேமம்னு கூடச் சொல்லலாம்.கிருஷ்ண பிரேமா படத்தை இயக்கியவர் ஹெச். வி. பாபு. அவரது உதவியாளர் பி.எஸ். ராமகிருஷ்ணராவ். எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. அதற்குக் காரணம்-
‘ராமகிருஷ்ணா ரொம்பவும் சங்கோஜி. நல்லவர். பெண் பிள்ளைகள் இருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.
அப்போது எனக்கு மிகச் சரியாகப் பதினாறு வயது. இருந்தாலும் எத்தனையோ யுகங்களாக அவரை நான் இதற்கு முன்பாகவே உணர்ந்து வந்தவள் போல் ஓர் உணர்வு நெஞ்சில் ஊறிக் கொண்டு இருந்தது.
அன்றைய படப்பிடிப்பில் நாரதர் வேடத்தில் சூர்யகுமாரி என்னுடன் நடித்தார். நிஜமாகவே ரோஜாப்படுக்கையில் என்னைப் படுக்க வைத்தார்கள். அதில் முள்ளும் இருந்தது. நன்றாக என் விரலில் குத்தி விட்டது. ரத்தம் வர ஆரம்பித்தது.
சூர்யகுமாரி பதறிப்போனார். ‘அய்யோ பானு ரத்தம் கொட்டுது. யாராவது துணி கொண்டு வந்து சுத்தி விடுங்களேன்... ’ என்று சத்தம் போட்டார்.
அப்போது ராமகிருஷ்ணா உடனே ஓடோடி வந்து தன் கைக்குட்டையை எடுத்துத் தயங்கியபடியே, என் விரலில் சுற்றி பேன்டேஜ் போடுவது போல கட்டி வைத்தார்.
அவர் எங்கிருந்தாலும் எந்த வேலையில் ஈடுபட்டு இருந்தாலும் எனது பார்வை மட்டும் அவர் பக்கம் தான் இருக்கும். அன்று அவர் விரலில் வடிந்த ரத்தத்தை நிறுத்துவதற்காகக் கட்டிய கைக்குட்டையை நான் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டேன்.
அவர் பேசறது என்ன மொழி, என்ன ஜாதின்னு கூட சரியாத் தெரியாது. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் சிஸ்டர் மூலமா சொன்னேன்.
ஐவேஜியுள்ள குடும்பத்தில் பிறந்து விட்டு போயும் போயும் ஒரு அனாதையையா மணந்து கொள்வது? ஒரு காலும் முடியாது’ என்றார் அப்பா.
ஆனால் பானுமதி அதற்கெல்லாம் அஞ்சுவாரா என்ன? முழு பலத்தோடுத் தன் தந்தையை எதிர்த்துக் காதலரைக் கல்யாணம் செய்து கொண்டார்.
‘எங்கப்பா ஒரு வழியா சம்மதிச்சிட்டாரு. ஆடி மாசத்துல ஆகஸ்டு எட்டாம் தேதி 1943ல் டவுன்ல, வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல எங்க கல்யாணம் நடந்தது.
அதுக்கப்புறம் சினிமாவில் நான் நடிக்கக்கூடாதுன்னு ரெண்டு பேருமா சேர்ந்து முடிவெடுத்தோம். ஆறு மாசம் வீட்டுலயே சமைச்சுக் கிட்டு இருந்தேன். பானுமதி.
பாவம் பொம்மராஜூ வெங்கட சுப்பையா. தன் பெண் கர்நாடக இசைப் பேரரசியாக வர வேண்டும் என்று மனமாற ஆசைப்பட்டவர். பானுமதியின் அற்புதமான குரல் வளத்தின் காரணமாகவே அவரை சினிமாவில் நடிக்க அனுமதித்தவர். மகளின் காதல் கணவர் தன் பாசக்குயிலை கூண்டில் அடைத்து விட்டாரே... ’ என்று வருந்தினார்.
கெஞ்சாத குறையாக மாப்பிள்ளையிடம் ‘பாட்டுன்னா பானுவுக்கு உசிர். அவளைத் தயவு செய்து பாடவாவது அனுப்புங்களேன். ’ என்றார்.
ராமகிருஷ்ணாவுக்கு மனைவியை முழு நேர குடும்பஸ்திரியாகப் பார்ப்பது மட்டுமே பிடித்திருந்தது. சபை வெளிச்சங்களில் புகழின் மேடைகளில் பானுவைக் காணக் கண்கள் கூசின.
மருமகன் பிடிவாதமாக மறுத்து விட்டார். ரோஷக்கார மாமனார் அதற்கு மேல் வேதனையைச் சகிக்க முடியாமல் நொந்து போய் சொந்த ஊருக்கே திரும்பினார்.
நடிகை லட்சுமியின் தந்தை ஒய். வி. ராவ். சிந்தாமணி படம் மூலம் தியாகராஜ பாகவதரை சிகரத்துக்கு அழைத்துச் சென்ற சிறந்த டைரக்டர். திருமணத்துக்கு முன் சித்தூர் வி. நாகையா -பானுமதி ஜோடியாக நடித்த படம் ‘தாசில்தார்’. ஒய்.வி. ராவின் இயக்கத்தில் வெளியானது. அமோக வெற்றி பெற்றது.
சமூக கவுரவத்துக்காக ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து நடைப் பயிற்சி செய்யும், தாசில்தாரின் அப்பாவி மனைவியாக, பானுமதி மிக வித்தியாசமான நடிப்பில் கொடி கட்டிப் பறந்தார்.
வித்தை உள்ள இடத்தை வியாபாரிகள் தேடி வந்தார்கள்.
‘பானுமதியின் திறமைகள் ஏற்கனவே நிருபிக்கப்பட்டவை. உங்களால் எத்தனை நாள்கள் அதற்குத் தடை போட முடியும்? உங்கள் காதல் மனைவி பானுமதியை நீங்கள் கொண்டாடும் விதம் அபாரம். ரொம்ப காலம் உங்கள் வைராக்கியம் நீடிக்காது.’ என்கிற ரீதியில் தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்துகளை ராமகிருஷ்ணாவிடம் தெரிவித்தார்கள். அதை அவர் சட்டை செய்யாமல் தொடர்ந்து பிடிவாதம் காட்டினார்.
பட அதிபரும் இயக்குநருமான பி. என். ரெட்டி, ராமகிருஷ்ணாவைச் சந்தித்தார்.
அடுத்து எடுக்க இருக்கும் ‘ஸ்வர்க்க ஸீமா’ தெலுங்கு படத்தில் நாட்டுப்புறத்து சுப்புலட்சுமியாகவும் நாடக நடிகை சுஜாதாவாகவும் இரட்டை வேடங்களில் பானுமதி நடிக்க வேண்டும் என்றார். அவ்விரு கதாபாத்திரங்களிலும் பானுமதியைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது, தயவு செய்து ஸ்வர்க்க ஸீமாவை மட்டும் ஒப்புக் கொள்ளுமாறும் தொடர்ந்து வற்புறுத்தினார்.
இனம் புரியாத இயலாமையில் ராமகிருஷ்ணாவின் ரத்தம் கொதித்தது. மற்றவர்களைப் போல் இல்லாமல் பி.என். ரெட்டி மீண்டும் மீண்டும் தேடி வந்து நச்சரிப்பது எரிச்சலை உண்டாக்கியது.
ஒரு நாள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விட்டது.
‘சொன்னால் புரிந்து கொள்ளுங்கள். எல்லாரும் என் சொல் பேச்சு கேட்டு வாயை மூடிக்கொண்டு போகும் போது நீங்கள் என்ன உசத்தி?’ என்றார் ராமகிருஷ்ணா காட்டமாக.
பொறுத்தது போதும் என்று ரெட்டி பொங்கி எழுந்து விட்டார். படைப்பாளிகளை அவமதிப்பவர்களைச் சும்மா விடுவதாவது?
‘பானுமதி ஒப்பற்ற நட்சத்திரமாக ஒளி வீச நான் மெனக்கெட்டு வற்புறுத்திச் சொல்கிறேன். மனைவி சினிமாவில் செல்வாக்கு பெறுவதை நிஜத்தில் சகித்துக் கொள்ள முடியாதவர் நீங்கள். எங்களிடம் தவறாக நடந்து கொள்கிறீர்கள். இது தானா உங்கள் புருஷ லட்சணம்?'
வறட்டு கவுரவம் அப்போதும் தீரவில்லை ராமகிருஷ்ணாவுக்கு.
‘சரி. சரி. நீங்கள் இத்தனை கெஞ்சிக் கேட்டதால் ஸ்வர்க்க ஸீமாவில் மட்டும் பானுமதி நடிக்க அனுமதி தருகிறேன்’ என்றார்.
‘பி.என். ரெட்டி வந்து ஸ்வர்க்க ஸீமாவில் நடிக்கக் கூப்பிட்டாரு. என் கணவர் அனுப்ப மாட்டேன்னு சொன்ன பிறகும் அவரை கம்பல் பண்ணி, சம்மதிக்க வெச்சு, என்னை நடிக்க வெச்சாரு.’- பானுமதி.
பானுமதியை பிறவி நடிகை எனலாம். அவர் ஏற்றுக் கொண்ட வேடங்கள் இன்றளவும் பேசப்படுவதற்கு அவரது கூடுதலான ஈடுபாடு முக்கிய காரணம். கதாபாத்திரங்களை மெருகேற்றுவதில் அவர் காட்டிய கடின உழைப்பும் கற்பனையும் அலாதியனவை. தொடக்கக் காலத்திலிருந்தே மிகச் சுதந்தரமான நடிகையாக பானுமதி தன்னை அடையாளம் காட்டியதால் அவருக்கு எதுவும் கை கூடியது.
ப்ளான்ட் அன்ட் சான்ட் ஆங்கில சினிமாவைத் தழுவி உருவானது ஸ்வர்க்க ஸீமா. அதில் மாறுபட்ட இரு பெண்களைத் தன் மனக்கண்ணில் கொண்டு வர பானுமதிக்கு உதவியது அதன் நாயகி ரீடாஹேவர்த். பானுமதியின் அபிமான ஹாலிவுட் ஸ்டார்.
ஏறக்குறைய ரீடாவின் பாதிப்பு பானுமதியின் அனைத்துப் படங்களிலும் பட்டுப் புடைவையின் ஜரிகையாக ஜொலித்தது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்ட முதல் வெற்றிச் சித்திரம் ஸ்வர்க்க ஸீமா.
பச்சையாகச் சொன்னால் ரீடாஹேவர்த்தை அப்பட்டமாக காபி அடித்தவர் பானுமதி. அதை அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
‘ஸ்வர்க்க ஸீமாவில் நான் சிறப்பாக நடிக்கக் காரணம் ரீடா ஹேவரின் ப்ளான்ட் அன்ட் சான்ட் நடிப்புதான். உத்தம் குமாரைப் பார்த்து ஏ. நாகேஸ்வர ராவ் எனது கானல் நீர் படத்தில் நடிக்கவில்லையா...? ’ -பானுமதி.
ரீடா ஹேவர்த் ப்ளான்ட் அன்ட் சாண்டில் பாடிய பாடலைத் தன் இஷ்டத்துக்குப் படப்பிடிப்புத் தளத்தில் மெல்ல ஹம் செய்து கொண்டிருந்தார் பானுமதி.
‘ஒஹ்ஹோ... பாவுறமா’
ஒலித்த நொடிகளிலிருந்து ஸ்வர்க்க ஸீமாவின் ஹீரோ மற்றும் இசை அமைப்பாளர், பாடகரான சித்தூர் வி. நாகையாவுக்கு கேட்கத் திகட்டாத கானமாக தேனிசை பொழிந்தது. லவ் டூயட்டுக்கானப் பல்லவி கிடைத்து விட்டது என்றார்.
ஏராளமானப் பாடல்களைத் தன் சொந்தக்குரலில் பாடி சூப்பர் ஹிட் ஆக்கிய ஒரே நாயகி பானுமதி. அவை அத்தனையிலும் அவரது பங்களிப்பு இசை அமைப்பாளருக்குச் சமமாகவே இருக்கும். அதற்கான பூர்வாங்க வேலைகள் ஸ்வர்க்க ஸீமாவிலேயே தொடங்கி விட்டன.
பாவுறமா பாடலில் நாகையாவுடன் சேர்ந்து சரணங்களுக்கான மெட்டமைத்தவர் பானுமதி.
‘எனக்குப் பிடித்த இசையைப் பாடி நான் ஆரம்பிச்சு விடுவேன். மியூசிக் டைரக்டரை இன்ஸ்பைர் பண்ணுவேன். அவங்க வேறே ரூட்டுக்குப் போயிடாம என் ரூட்டுக்குத் திருப்பி விடுவேன். என்னோட வழி எப்பவும் சாஸ்திரீய இசை. ’ - பானுமதி.
அந்நாளில் பாவுறமாவைக் கேட்டுப் பைத்தியம் பிடித்தவர்கள் போல் அலைந்து திரிந்து, அந்த ஒரு பாடலுக்காகவே ஸ்வர்க்க ஸீமாவை தினமும் கண்டு களித்தவர்கள் சாட்சாத் தமிழர்கள். ஆந்திராவை விடத் தமிழ் நாட்டில் தான் ஸ்வர்க்க ஸீமாவுக்கு அமோக வசூல் என்று குறிப்பிட்டார் பி.என். ரெட்டி.
பி.என். ரெட்டியின் கருத்துக்கு வலிமை சேர்த்தது ‘குண்டூசி’ சினிமா பத்திரிகை ஆசிரியர் கோபாலின் ஸ்வர்க்க ஸீமா பட விமர்சனம்.
‘சுப்புலட்சுமி-சுஜாதா இருவருக்கும் தோற்றம். பேச்சு. நடை. உடை. பாவனைகள் ஆகியவற்றில் என்ன நேர்மாறான மாறுதல்!
இருவருமே பானுமதி என்றால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். புறா நடனத்தை என்னவென்று வர்ணிப்பது!
பாவுறமா என்று புறாவைத் தடவிக் கொடுக்கும் போது குரலில் என்ன கொஞ்சல்! என்ன இனிமை! மற்ற எல்லா அம்சங்களையும் விட பாவுறமா பாட்டும் நாட்டியமும் தான் வெற்றி அளித்தது என்பது உண்மை.’
வாலிப இதயங்களில் பானுமதியைப் பச்சை குத்திக் கொண்டத் தமிழர்கள் அவரைத் தங்கள் தோள்களில் வைத்துக் கூத்தாடாத குறை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!
இலட்சக்கணக்கான வாலிபர்களின் ஆசை வெள்ளம் முரட்டுத்தனத்தால் உருவான ராமகிருஷ்ணா என்கிற முள்வேலியை அடித்துச் சென்றது.
உச்சக்கட்டப் புகழில் இருந்தாலும் பானுமதிக்கு எப்போதும் சினிமாவை விட குடும்பம் மிக முக்கியம். காதல் கணவருடன் கனிவோடு இல்லறம் நடத்தி ஆண் குழந்தையைப் பெற்றார். பரணி என்று பெயர் சூட்டினார்கள்.
பானுமதி புத்திசாலி. தென்னகமெங்கும் அவருக்காக ஸ்டுடியோ அதிபர்கள் காத்திருந்தார்கள். தன்னை வைத்து மற்றவர்கள் காசு பண்ணுவதற்கு முன்பாக, நாமே ஒரு படக் கம்பெனி தொடங்கினால் என்ன என்று தோன்றியது. உடனடியாக பரணி பிக்சர்ஸ் உருவானது.
பிள்ளையும் பிறந்தாயிற்று. அவன் அப்பாவுக்கு உத்தியோகம் வேண்டாமா? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். வீட்டில் புட்டிப் பால் கலக்கிக் கொண்டிருந்த ராமகிருஷ்ணாவை சினிமா டைரக்டர் ஆக்கினார்.
புருஷனும் பெண்டாட்டியும் சேர்ந்து பாடுபட்டதில் பரணி பிக்சர்ஸ் தெலுங்கில் நன்கு கால் பதித்தது. அதற்கு அவர்களது முதல் தயாரிப்பான ‘மதன மாலா’ படம் உதவியது. பானுமதி நடித்துத் தமிழகத்திலும் நன்றாக ஓடி வசூல் செய்தது.
தனக்குத் தமிழிலும் நல்ல வரவேற்பு இருப்பதை உணர்ந்தவர் பானுமதி. பரணி பிக்சர்ஸ் மூலம் நேரடியாக அறிமுகமாக விரும்பினார்.
1944 ஹரிதாஸில் பாகவதர் பெற்ற வெற்றிக்கு அடுத்து 1945ல் ஏவி.எம்.மின் ஸ்ரீவள்ளி தென்னாட்டை வசூலில் புரட்டிப் போட்டது. அதில் ஹீரோ டி.ஆர். மகாலிங்கம்.
பாகவதர், சின்னப்பாவை விட இளங்காளையான மகாலிங்கம் தனக்குக் கட்டுப்பட்டு நிற்பார் என்பது பானுமதியின் தீர்க்கமான முடிவு. 1952ல் ‘பராசக்தி’ சிவாஜி வரும் வரையில் தமிழ் சினிமாவை தன் பாடல்களால் நிரப்பியவர் டி.ஆர். மகாலிங்கம். அவருக்கு நல்ல கிராக்கி இருந்ததால் பரணி பிக்சர்ஸின் முதல் தமிழ்ப் படத்தில் அவரை நாயகனாக்கினார் பானுமதி.
பி.பானுமதி - டி.ஆர். மகாலிங்கம்
நடிக்கும்
பரணி பிக்சர்ஸ்
புலந்திரன்
அப்படியோர் விளம்பரத்தைப் பார்த்ததும் கோடம்பாக்கம் பரபரப்பானது.
chinnakkannan
30th October 2015, 09:46 AM
எஸ் வாசு தேவன் சார்.. தினமணி டாட் காமில் அந்தக் கனவுக் கன்னிகள் தொடரே நல்லாத் தான் இருக்கு.. இது மூன்றாவது நடிகை..பானுமதி.. முதல் இருவர் 1. பத்மினி 2. சாவித்ரி ( நிறைய தகவல்கள் கிடைக்கின்றன)
chinnakkannan
30th October 2015, 09:53 AM
S.vasudevan உங்களுக்காக ...ஓஹோ பவுரமா...
https://youtu.be/xp6DUv30iMU
ஹச்சோ..இது ஒஹ்ஹோ புள்ளி பாவுரமா ந்னு வருதே..ராஜேந்திரப் பிரசாத், ரம்யா கிருஷ்ணன்.. பட் பாட் நல்லா இருக்கே :) எனக்குத் தெரிந்து கவர்ச்சியே இலலாத நளினமான கலர் தெலுங்குப் பாட்டே இது தான் ( கண்ணா யூ ஆர் ஓப்பனிங்க் த பண்டோரா’ஸ் பாக்ஸ் :) )
chinnakkannan
30th October 2015, 09:59 AM
பானுமதி இன்னிக்கு நைட்ல கனவுல வந்து சபிக்கறதுக்கு முன்னாடி..ஒரிஜினல் ஒஹ்ஹொ பவுரமா வும் போட்டுடலாம்.. ராஜ் ராஜ் சார்..இ படம் பார்த்திருக்கேளா..
https://youtu.be/9NCFS8uJg6U
vasudevan31355
30th October 2015, 12:16 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
46
' அன்பு வந்தது என்னை ஆள வந்தது'
http://www.oktamil.com/wp-content/uploads/2015/03/SudarumSura0001.jpg
http://oi67.tinypic.com/alq6iw.jpg
'சுடரும் சூறாவளியும்'
இன்றைய பாலாவின் தொடரில் அன்பான ஒரு பாடல். ஆழமான ஒரு பாடல். நம்மை என்றுமே ஆள வந்த பாடல். தெய்வ சொர்க்கமான பாடல்.
1971-ல் வெளிவந்த 'சுடரும் சூறாவளியும்' திரைப்படத்தில் இருந்து பாலா பாடிய பாசப் பாடல். இது வரை காதல் ரசம் சொட்டும் கலக்கல் பாடல்களை தனியாகவும், ஜோடியுடனும் பாடி வந்த பாலா 'ஸோலோ'வாக தனித்து, ஒரு தந்தையின் தன்னிகரில்லா பாசத்தை குழந்தைகளிடம் பாடிக் காட்டும் பாலாவாக வித்தியாசமான திறமையில் பரிமளித்தார். சிகரங்கள் தொட்டார்.
எஸ்.ஆர் புட்டண்ணா கனகல் என்ற கன்னடப் பட இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் 'சுடரும் சூறாவளியும்'. (இந்த இயக்குனர்தான் 'இருளும் ஒளியும்' படத்தின் இயக்குனர். சிறந்த கன்னடப் படங்களின் ஒன்றான 'நாகரஹாவு' படத்தின் இயக்குனர்.) வி.சி.குகநாதன் 'சித்ரமாலா' கம்பைன்ஸ் என்ற பெயரில் ஏ.வி.எம்.பேனர் உதவியுடன் தயாரித்த இப்படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெயா, 'வெண்ணிற ஆடை' நிர்மலா, எம்.ஆர் .ஆர்.வாசு, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் பெயரைக் கேட்டாலே பல பேர் நடுங்குவார்கள். ஏன்? ஹாரர் மூவியா? இல்லை..இது ஒரு அதீத சோகம் ததும்பும் படம் 'துலாபாரம்' போல. இவ்வளவு சோகத்தை அப்போது ஜனங்களிடம் தாங்கக் கூடிய மனப்பக்குவம் இல்லை என்பதால் இந்தப் படம் நல்ல எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி எதிர்பாராவிதமாக தோல்வியடைந்தது. ஆனால் படத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
சரி! அப்படி இந்தப் படத்தின் சோகம் கொப்புளிக்கும் கதைதான் என்ன? என் நினைவுக்குத் தெரிந்தவரை சொல்ல முயற்சிக்கிறேன்.
'சுடரும் சூறாவளியும்' கதை.
தாயில்லாத தன் இரண்டு பிள்ளைகளை (ஒரு ஆண், ஒரு பெண்) தந்தை ஜெமினி பாசத்துடன் வளர்க்கிறார். தன் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க அவர் சட்ட விரோதமான சமூகக் குற்றங்களை செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸ் விரட்டி ஜெயிலுக்குப் போக, பின் வில்லன் எம்.ஆர்.ஆர் வாசுவால் பெங்களூரில் அடைக்கலம் தரப்பட்டு அவராலேயே மதுவுக்கு முழு அடிமை ஆகிறார். எம்.ஆர்.ஆர்.வாசு ஆட்டுவித்தபடி ஆடி சமூகக் குற்றங்களை புரிகிறார். எம்.ஆர்.ஆர்.வாசு கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலுக்குத் தலைவன். அதை பேங்கில் கேஷியரைக் கைக்குள் போட்டுக் கொண்டு நல்ல நோட்டாக மாற்றித் தருவது ஜெமினியின் வேலை.
அனாதையான பிள்ளைகளை எஸ்.எஸ்.லட்சுமி பாட்டி வளர்க்கிறார். இப்போது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகின்றனர். அண்ணன் முத்துராமன். தங்கை ஜெயா. பாட்டி இப்போது இல்லை. முத்துராமன் தன் தங்கை ஜெயா மேல் உயிரையே வைத்திருக்கிறார். அந்த கிராமத்தில் தன் தாயின் பெயரில் ஒரு மாவுமில் தொடங்கி நடத்தி அந்த வருமானம் மூலம் ஜீவனம். போஜனம். வாழ்க்கை. தங்கை ஜெயா படிக்காத ஒரு அப்பாவி.
http://s2.dmcdn.net/aOr1.jpg
முத்துராமன் படிக்க வைக்கும் அவர் நண்பன் சந்திரமோகன் பட்டணத்தில் படிப்பு முடித்துவிட்டு கிராமம் வருகிறார். சிறுவயது முதலே பழகி வந்த நண்பனின் தங்கை ஜெயாவை அவர் காதலிக்கிறார். இது முத்துவுக்குத் தெரியவர அவர் மனம் மகிழ்கிறார். தன் தங்கையை சந்தோஷமாக சந்திரமோகனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
அதே கிராமத்தில் ஒரு ஹாஸ்பிடல் வைத்து நடத்தும் டாக்டர் நிர்மலா முத்துராமனைக் காதலிக்கிறார்.
சந்திர மோகன் பேங்கில் கேஷியர் வேலை கிடைத்து பெங்களூர் பயணிக்கிறார். அங்கு வசதிகள் செய்து கொண்டு பின் ஜெயாவை அங்கு அழைத்துச் செல்வதாக கூறிச் செல்கிறார். பேங்க்கில் கேஷியராகவும் வேலைக்குச் சேர்ந்து வீடு தேடுகிறார். இதை அறிந்து சந்தோஷப்படும் முத்து தங்கையை தீர்க்க சுமங்கலியாய் வாழ வாழ்த்தி ஆசீர்வதிக்கிறார்.
இப்போது பேங்கில் புது கேஷியராக சந்திரமோகன் இருப்பதால் அவரிடம் கள்ள நோட்டுக்களை நல்ல நோட்டுக்களாக மாற்ற முடியாது என்பதால் எம்.ஆர்.ஆர்.வாசு ஜெமினியிடம் எப்படியாவது சந்திரமோகனுடன் தந்திரமாகப் பேசி அவரை தன் இருப்பிடத்திற்கு வரவழைக்கும்படி பணிக்கிறார். ஜெமினியும் சந்திரமோகன் தன் மருமகன் என்ற விவரம் தெரியாமல் வீடு காட்டுவதாக கூறி அவரை வாசுவின் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து விடுகிறார். அங்கு கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுக்களாய் மாற்றித் தரும்படி வாசு சந்திரமோகனை வற்புறுத்த, அதற்கு மோகன் மறுக்க, இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. சண்டையில் மோகன் வாசுவின் கழுத்தை நெரிக்க, அதைப் பார்க்கும் குடிகார ஜெமினி தன் பாஸை சந்திர மோகன் கழுத்தை நெரிப்பதைப் பார்த்து எஜமான விசுவாசத்தில், கோபத்தில் மது பாட்டிலால் அவர் தலையில் 'அடிஅடி'யென்று அடித்து விடுகிறார். அடியால் ரத்த வெள்ளத்தில் சந்திரமோகன் குற்றுயிரும், கொலையுயிருமாய் விழ, அவரைத் தூக்கிப் தெருவில் போட்டு விடச் சொல்கிறார் வாசு. யாரோ எடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க, அங்கே சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து விடுகிறார் சந்திர மோகன்.
கோபத்தில் குடிவெறியில் தான் சந்திரமோகனைக் கொலை செய்து விட்டதை, அவர் இறந்து விட்டதை அறிந்து எண்ணித் துடிக்கிறார் ஜெமினி. குடியால்தானே இந்த நிலைமை என்று குடியை ஒதுக்குகிறார்.
சந்திரமோகன் இறந்ததை முத்துராமனிடமும், ஜெயாவிடமும் தெரிவித்தால் அவர்கள் மிக அதிர்ச்சியடையக் கூடும் என்பதால் பேங்க் மேனேஜர் மகாலிங்கம் அவசரத் தந்தி ஒன்றை முத்துவிற்கு அனுப்ப, முத்து என்ன ஏது என்று புரியாமல் பெங்களூர் வந்து சந்திர மோகன் இறந்ததை அறிந்து பேரதிர்ச்சியாகிறார். கணவன் இறந்ததைச் சொன்னால் தங்கை ஜெயா உயிரை விட்டு விடக் கூடும் என்பதால் கிராமம் திரும்பி தங்கையிடம் எதுவும் சொல்லாமல் மறைத்துவிடுகிறார். 'அதிக வேலையிருப்பதால் மோகன் கிராமம் வர இயலவில்லை' என்று தங்கையிடம் பொய் சொல்லி மோகன் போடுவது போல அடிக்கடி தங்கைக்கு லெட்டெர் போட்டு அவளைச் சமாளிக்கிறார். தீர்க்க சுமங்கலியாய் வாழ வாழ்த்திய தங்கையை அமங்கலியாய் பார்க்க மனமிலாமல், உண்மையைச் சொல்ல முடியாமல் நெருப்பில் அகப்பட்ட புழுவாகத் துடிக்கிறார் முத்துராமன்.
இதற்கிடையில் வாசுவின் பிடியிலிருந்து தப்பி முத்துவின் கிராமத்தில் வந்து மயங்கி விழும் ஜெமினியை ஜெயா காப்பாற்றி வீட்டில் தங்க வைக்க, அங்கிருக்கும் தன் மனைவி போட்டாவைப் பார்த்த ஜெமினி ஜெயா தன் மகள் என்று தெரிந்து தான் யாரென்பதை சிறுவயதில் குழந்தைகளிடம் பாடிக் காட்டிய 'அன்பு வந்தது... என்னை ஆள வந்தது' பாடலைப் பாடிக்காட்ட, ஜெயா ஜெமினி தன் தந்தை என்று தெரிந்து கொண்டு மிகவும் சந்தோஷப் படுகிறார். தன் அண்ணன் முத்துவிடம் ஓடிச் சென்று ஜெயா விஷயத்தைச் சொல்ல, முத்துவும் மனம் மகிழ்ந்து தந்தையிடம் ஓடிவருகிறார். பிரிந்த குடும்பம் இப்போது ஒன்று சேர்ந்து இருக்கிறது. ஆனால் சந்தோஷம்?!...
ஜெமினிக்கு தன் மகள் ஜெயாவுக்கு திருமணம் நடந்திருப்பது தெரிய வர, தன் கணவன் யாரென்று காட்ட சந்திர மோகன் போட்டவை கொண்டு வந்து தந்தை ஜெமினியிடம் காட்ட, ஜெமினி அதைப் பார்த்து பெரிய அதிர்ச்சியை மேலும் அடைகிறார். ஏனென்றால் தன் மகளின் தாலியைப் பறித்தது தந்தை அவரே அல்லவா? தன் மருமகனையே தன் கையால் கொன்றதை எண்ணி நரகவேதனை அடைகிறார் ஜெமினி. மேலும் அவள் கணவன் இறந்தது அவளுக்குத் தெரியாமல் முத்துராமன் மறைத்த விஷயத்தையும் அவர் மூலமாகவே அறிந்தும் கொள்கிறார். ஆனால் முத்துராமனுக்கு தன் தந்தைதான் கொலையாளி என்பது தெரியாது.
ஜெயா கர்ப்பமாய் வேறு இருக்கிறார். முத்து சந்திரமோகன் பெயரில் அடிக்கடி தங்கைக்கு கடிதம் எழுதும் விஷயத்தை நிர்மலா கண்டு பிடித்து விட்டு முத்துவிடம் காரணம் கேட்க முத்து எல்லா உண்மைகளையும் நிர்மலாவிடம் கூறுகிறார்.
இப்போது சந்திர மோகன் கொலையுண்ட விஷயம் முத்துராமன், ஜெமினி, நிர்மலா மூவருக்கும், பெங்களூர் போலீஸுக்கும் மட்டுமே தெரியும். ஆனால் கொலையாளி ஜெமினி என்பது வாசுவுக்கு மட்டுமே தெரியும். போலீஸ் துப்பு துலக்கி வாசுவை விசாரிக்க, வாசு கொலையாளி ஜெமினி என்று காட்டிக் கொடுத்துவிடுகிறார்.
தானும் கைதாகிறார்.
'எத்தனை நாளுக்கு தங்கையிடம் அவள் கணவன் இறந்த விஷயத்தை ஒளித்து வைக்க முடியும்?' என்று முத்துராமன் புலம்ப, நிர்மலா அதற்கு ஒரு வழி சொல்கிறார். 'ஜெயா பிரசவம் ஆகி குழந்தை பெறும்வரை இந்த விஷயத்தை மறைத்துவைத்து பின் சொல்லலாம்...அப்போது குழந்தைக்காகவாவது வேண்டி ஜெயா உயிருடன் இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமல்லவா?' என்ற நிர்மலாவின் திட்டத்தை முத்து ஒப்புக் கொள்கிறார்.
இதற்கிடையில் போலீஸ் ஜெமினியை குறி வைத்து அந்த கிராமத்திற்கு வருகிறது. அந்த நேரத்தில் ஜெயாவிற்கு பிரசவ வேதனை வர, டாக்டரான நிர்மலா ஜெயாவுக்கு பிரசவம் பார்க்க, பிரசவத்தில் தன் எண்ணம் போலவே... தன் அண்ணன் முத்துவின் ஆசீர்வாதம் போலவே... கணவன் இறந்தது இறுதி வரை தெரியாமல் சுமங்கலியாகவே உயிரை விடுகிறார் ஜெயா. ஜெயா இறந்த அதிர்ச்சி செய்து கேட்டு மகளின் கால்களைப் பிடித்து மன்னிப்புக் கேட்டபடி அதிர்ச்சியில் தன் உயிரையும் விடுகிறார் ஜெமினி.
போலீஸ் முத்துராமனை விசாரித்து சந்திரமோகனைக் கொன்றது அவர் தந்தை ஜெமினி தான் என்ற உண்மையை உடைக்க, இதைக் கேட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்த முத்துராமன் நிர்மலா மூலம் தங்கையும் இறந்து விட்ட அதிர்ச்சியையும் கேட்டு மனம் சுக்குநூறாகிப் போகிறார். கோபத்துடன் மைத்துனன் சாவுக்கான காரணத்தை தன் தந்தையைக் கேள்வி கேட்கப் போனவருக்கு இன்னுமோர் அதிர்ச்சி தந்தை ஜெமினியின் மரணம்.
தாயை இழந்து, தந்தையையும் இழந்து, ஆசையாய் வளர்த்த தங்கையையும் இழந்து தங்கை பெற்ற குழந்தையோடு முத்துராமன் உறைந்து நிற்க, அவருக்கு ஆதரவாய் இனி 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஒருவரே!
அப்பாடா! போதுமா கதை?!
சோகம்..சோகம்..சோகம்...அதிர்ச்சி..அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
இப்படி இருந்தால் எப்படி படம் ஓடும்? ம்.
ஜெமினி தாடியும், மீசையும் வைத்து குடிகாரனாய் மருமகனை கொலை செய்து மனவலியால் துடிப்பது என்று நடிப்பு அருமை. குடிகார அடிமைத்தனத்தை அப்பட்டமாகக் காட்டுகிறார். முத்துவும் ஒரே வரியில் சொல்வதென்றால் பாவப்பட்ட நடிப்பு. ஜெயா வரும் காட்சிகள் ஆறுதல். அழகாக குடும்பப் பெண்ணாக அப்பாவியாக பாசத்தை அண்ணன் மீதும், கணவன் மீதும் பொழிகிறார்.
தெலுங்கு சந்திர மோகன் ஜெயாவின் கணவராக பாந்தம் பிளஸ் அழகு. மாமனாரிடமே பரிதாப உயிர்விடல். சுருளி, தேங்காய், மனோரமா, 'டைப்பிஸ்ட்' கோபு இருந்தும் முழு நீள சோகச் சித்திரம். (சோகம், அதிர்ச்சி என்று எத்தனை முறை டைப் அடித்தேன் என்று சின்னாதான் எண்ணிச் சொல்லவேண்டும்) கண்ணீர் துடைக்க கர்சிப் பத்தாது. டவல்தான் வேண்டும்.
பாடல்கள் குறிப்பாக தொடரின் பாடல் மிக மிக அருமை. ஜெமினி தந்தை தன் சிறுவயது மகன், மகளுடன் ஊர் சுற்றியபடி பாடும்,
'அன்பு வந்தது...என்னை ஆள வந்தது' பாடல்.
இதே பாடலை முத்துராமன், ஜெயா இருவரும் வளர்ந்து பெரியவர்களான பின் பாடும் பாடல்
அடடா! பாடகர் திலகமும் தன் பங்கிற்கு பட்டை கிளப்புவார். முத்துவும் ஜெயாவும் அண்ணன் தங்கையாக வயல்வெளிகளில் என்ன சுறுசுறுப்பு. அற்புதமான பாடலாக்கல். குழந்தைக் குரல் அப்படியே மாறி டி.எம்.எஸ்ஸுக்கு மாறியவுடன் மனிதர் கம்பீரமாக 'ஆ....என்று ஹம்மிங் தந்து ஆரம்பிப்பாரே! ஆஹா!
'கண்ணிரண்டு கடவுள் தந்தான் தங்கையைக் காண'
'தெய்வம் பார்த்த பிள்ளை போல தங்கையைப் பார்ப்பேன்
செல்வம் பார்த்த ஏழை போல நிம்மதி காண்பேன்'
என்று பாவங்களைக் கொட்டி சுறுசுறுவென அவர் பாடும் போது... அடடா! என்ன சொல்வது? அவர் அவர்தான்... அவருக்குப் பின்னாடி தான் எவரும்.
அப்புறம்,
http://i1.ytimg.com/vi/TfKsg64d-Yg/hqdefault.jpg
முத்து, நிர்மலாவின் அற்புத டூயட்டான
'அனுபவம் தானே வர வேண்டும்' (டி.எம்.எஸ், ஈஸ்வரி குரலில். டி.எம்.எஸ் நடிகர் திலகத்திற்கான குரலில் பாடியிருப்பார்).
http://i.ytimg.com/vi/7XtTCKO5suQ/hqdefault.jpg
ஜெயா கர்ப்பமாய் இருக்கும் போது குழந்தை பொம்மையுடன் ஜானகி குரலில் பாடும்,
'முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு' சூப்பர்.
(இந்தப் பாடலைக் கேட்கும் போது 'ரகசிய போலீஸ் 115' படத்தின் 'உன்னை எண்ணி என்னை மறந்தேன்' சுசீலா பாடல் ஞாபகத்திற்கு வரும். ஆனால் காரணம் தெரியாது).
இசை 'மெல்லிசை மன்னர்'. கேட்கவா வேண்டும்? குடும்பப் பாடல் பின்னலோ பின்னல். இருதரம். இரண்டும் அமர்க்களம்தான்.
தொடரின் பாடல் பாலா ஜெமினிக்குப் பாடுவது. குழந்தைகளுடன் 'எங்க மாமா' ரயிலில், படகில் ஜெமினி அருமையான நடிப்பைத் தந்திருப்பார். அப்பா ஜெமினிக்கு இளம் பாலா குரலையும், அதே பாடலை பின்னால் பிள்ளை முத்துராமனுக்கு சீனியர் டி.எம்.எஸ்ஸையும் மாற்றிப் பாட வைத்து ரிஸ்க் எடுத்து அதில் பெருவெற்றியும் பெற்றிருப்பார் 'மெல்லிசை மன்னர்'. ரசிக்கவேண்டிய துணிச்சல்தான்.
'ஹஹ்ஹஹ்ஹா' என்ற ஜெமினியின் சிரிப்புடன், பாலா ஒரு அருமையான தந்தையாகவே மாறி பாச உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார் இந்தப் பாடலில். 'காதல் பாடல்களில் மட்டுமல்ல ... பாசப் பிணைப்புள்ள பாடல்களிலும் பட்டை கிளப்புவேன்' என்பது போல அவ்வளவு அழகாக, அம்சமாக பாடி நெஞ்சில் நிறைவார் பாலா.
பாடல் உங்க வீட்டு ஹிட்அல்ல... எங்க வீட்டு ஹிட் அல்ல....அப்படி ஒரு பயங்கர ஹிட். தாய், தந்தை, அண்ணன், தங்கை குடும்பம் என்று தமிழகத்தின் ஒட்டு மொத்தக் குடும்பங்களும் கேட்டு கேட்டு, பாடிப் பாடி, ரசித்தது ரசித்து மகிழ்ந்த பாடல். வானொலிகள் அத்தனையையும் ஆக்கிரமிப்பு செய்த பாடல்.
ஏனோ இந்தப் பாடலை அவ்வளவாக இப்போதெல்லாம் தொலைக்காட்சி சேனல்கள் கண்டு கொள்வதே இல்லை. இந்தப் படமும் அபூர்வமான ஒரு படமாகவே ஆகி விட்டது. சூப்பர் சிங்கர் போன்ற பிரபல இசை நிகழ்ச்சிகளிலும் கூட இந்தப் பாடல்கள் எல்லாம் வரவே வராது.
ஈஸ்வரி நடுவராக உட்கார்ந்தால் ஆதிராம் சார் சொல்வது போல் 'அவளுக்கென்ன...அழகிய முகம் மட்டுமே' பாடப் படும். பாலா அமர்ந்தால் 'தங்கத் தாமரை மகளே' இப்படி பாடப்படும். வெளிச்சத்திற்கு வராத வைடூரியங்களை இவர்கள் எடுக்கவே மாட்டார்கள். சே! எரிச்சலும், கோபமும்தான் மிஞ்சுகிறது.
தாயை இழந்த பிள்ளைகளுக்கு தந்தை தரும் ஆறுதல், தெம்பு, அரவணைப்பு அனைத்தும் இந்தப் பாடலில் மொத்தமாகத் தெரியும். அதை பரிபூர்ணமாக அப்படியே உணரலாம்.
பிள்ளைகளை நல்லபடியாய் வளர்க்க, தகப்பன் நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைக்கும் வரிகள்.
'நாலு பேர்கள் வாழும் வாழ்வும் நாமும் வாழலாம்
தினம் நல்லாடை நகைகளோடு மலர்கள் சூடலாம்'
அதே போல்
'தாயில்லாவிட்டால் என்ன? தாய்க்குத் தாயாக தகப்பனுக்குத் தகப்பனாக இருந்து உங்களை நான் காப்பாற்றுவேன். கைவிட மாட்டேன். அப்படியே நான் இல்லாமல் போனாலும் கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்'
என்று கதைக்குத் தகுந்த அருமையான வரிகள்.
(ஜெமினி பின்னால் பிள்ளைகளை விட்டு பிரியப் போகிறார் என்பதை முன் கூட்டியே பாடல் வரிகள் சொல்லி விடும்)
வெண்ணையை எடுத்து உருக்குவது போல பாலா குரல் பாசத்தில் உருகும். 'தெய்வ சொர்..க்கம் வந்தது' என்று 'கேப்' விட்டு பாடும் போது சொர்க்கமே தெரியும்.
'மன்னர் குலப் பிள்ளைகள் போல் மகுடம் சூட்டுவேன்' வரிகளில் நிஜமாகவே மகுடம் சூடுவார் பாலா.
'அண்ணனோடும் தங்கையோடும் தந்தை வாழுவேன்'
எனும் போது நம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிடச் செய்திடுவார் நம் அருமை பாலா.
கேட்க கேட்கத் திகாட்டாத தெள்ளமுது இந்த அமிர்தப் பாடல் என்றால் அது எள்ளளவும் மிகையில்லை.
http://i.ytimg.com/vi/9LjEGEkxhtY/hqdefault.jpg
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்..க்கம் வந்தது
நாலு பேர்கள் வாழும் வாழ்வும் நாமும் வாழலாம்
தினம் நல்லாடை நகைகளோடு மலர்கள் சூடலாம்
நாலு பேர்கள் வாழும் வாழ்வும் நாமும் வாழலாம்
தினம் நல்லாடை நகைகளோடு மலர்கள் சூடலாம்
கண்ணிரெண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்
கண்ணிரெண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்
காலம் வெல்லும் வெல்லும் என்று உறுதி கொள்ளலாம்
உறவு கொள்ளலாம்
தாயில்லாத பிள்ளை தன்னை நான் விட மாட்டேன்
நானில்லாத போது தேவன் கைவிட மாட்டான்
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்
வாடா மலர் போலே உங்களைக் காப்பேன்
வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்
வாடா மலர் போலே உங்களைக் காப்பேன்
மன்னர் குலப் பிள்ளைகள் போல் மகுடம் சூட்டுவேன்
நீ மங்கையாகும் போது கையில் வளையல் போடுவேன்
வாழ்த்துப் பாடுவேன்
மஞ்சளோடும் மலர்களோடும் வாழ்ந்திடச் செய்வேன்
அண்ணனோடும் தங்கையோடும் தந்தை வாழுவேன்
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
லாலலாலலா
லால லாலலாலலா
ம்ஹூம் ம்ஹூஹூம்
ம்ஹூம் ம்ஹூம்ஹூம் ஹூம்
https://youtu.be/BRSsZ9ctbzY
vasudevan31355
30th October 2015, 12:26 PM
பேஸ் புக் மூலம் 10 வருடங்களுக்குப் பின் இணைந்த, மலேஷியாவின் நிஜ சகோதர சகோதரி பாடும் 'அன்பு வந்தது'.
தம்பி பாடலில் பரவாயில்லை. அக்கா பாடலில் ரொம்ப சுமாரோ சுமார்.
https://youtu.be/HB0PPinNIYw
chinnakkannan
30th October 2015, 12:38 PM
ஆடலுடன் பாடலைக் கேட்டு (பார்த்து) ரசிப்பதிலே ஒரு சுகம் சுகம் சுகம்..ப்ஹா...
நன்றி: ராஸேஸ்குமார் ( நம்ம ராஜேஷ் தாங்க) முக நூல் பக்கத்திலிருந்து..
https://www.facebook.com/433284786773453/videos/709423955826200/
vasudevan31355
30th October 2015, 12:45 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
47
'அன்பு வந்தது என்னை ஆள வந்தது' (சோகம்)
http://www.oktamil.com/wp-content/uploads/2015/03/SudarumSura0001.jpg
http://oi63.tinypic.com/2eai5vl.jpg
'சுடரும் சூறாவளியும்'
இதே 'அன்பு வந்தது' பாடல் மறுபடி இரண்டாம் முறை வருகையிலும் பாலா ஜெமினிக்கு சோகமாக 4 வரிகள் பாடி, பின் பாடல் எல்.ஆர்.அஞ்சலி குரலிலும், (சிறுவயது முத்துராமனுக்கு) அதன் பிறகு டி.எம்.எஸ், ஜானகி குரலிலும் தொடரும். ஜெமினி அறையில் தனித்து இருந்து மது அருந்தியபடி குழந்தைகளை நினைத்து வருந்திப் பாடுவார். அதனால் இந்தப் பாடலிலும் பாலா உண்டு. மது அருந்திய தடுமாற்றக் குரலில் பாலா மனம் வெதும்பிப் பாடுவார்.
https://youtu.be/uEjX8BPNFV4
yoyisohuni
30th October 2015, 12:54 PM
super sir marubadi padam partha feel koduthirukeenga
JamesFague
30th October 2015, 01:10 PM
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 28: நெஞ்சில் உள்ளாடும் கீதம்!
தெய்வ சங்கல்பம் அல்லது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு இதுதான் ‘கவிக்குயில்’(1977) படத்தின் கதைக் களன். கடவுள் கண்ணன் மீது மிகுந்த பக்தி கொண்ட கோபால் (சிவகுமார்), பிருந்தாவனத்தின் கண்ணன் போலவே புல்லாங்குழல் மீது காதல் கொண்டவன். வசதியான குடும்பத்தில் பிறந்து, கண்ணன் பக்தியால் புல்லாங்குழல் சகிதம் வெவ்வேறு ஊர்களுக்கு அலைந்து திரிபவன். கனவில் கண்ணனால் அடையாளம் காட்டப்படும் ராதா (ஸ்ரீதேவி) மீது காதல் கொள்வான். அந்த ஏழைப் பெண்ணின் மனதில் வார்த்தைகளற்ற கீதம் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அவள் மனதுக்கு மட்டும் தெரிந்த அந்த மெட்டை கோபால் வாசித்துக்காட்ட இருவருக்கும் இடையில் காதல் ஜனிக்கும். தேவராஜ்-மோகன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, செந்தாமரை ஆகியோரும் நடித்திருப்பார்கள். இந்த தெய்வீகக் காதல் கதைக்குத் தனது உயிர்ப்பான இசையை வழங்கியிருப்பார் இளையராஜா.
ராதா மனதிலிருந்து கோபாலின் குழலுக்குக் குடிபெயரும் அந்த கீதம்தான் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’. கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய இப்பாடல் இளையராஜாவின் இசைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. காற்றில் கலந்து வரும் அந்த ரகசிய மெட்டின் குழலோசை தரும் பரவசம் ஸ்ரீதேவியை மட்டுமல்ல; நம்மையும் தொற்றிக்கொள்ளும். காந்தர்வ குழலோசையின் திசை நோக்கி ஸ்ரீதேவி ஓடிச் செல்லும்போது தடதடக்கும் ஜலதரங்கமும், பரிதவிப்பை உணர்த்தும் வயலின் இசைக்கோவையும் பரவசத்தின் சதவீதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். பக்தி, காதல், பெருமிதம் என்று உணர்வுகளின் அலையில் மிதக்கும் குரலில் மெய்சிலிர்க்க வைப்பார் பாலமுரளி கிருஷ்ணா. மலைகளுக்கு நடுவே பரந்து கிடக்கும் சமவெளி முழுவதும் எதிரொலிக்கும் புல்லாங்குழலிசையைப் பாடல் முழுவதும் பரவவிட்டிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் மனதின் ஏக்கத்தின் எதிரொலிபோல், காதல் கொண்ட குயிலின் பிரிவுத் துயரின் வெளிப்பாட்டைப் போல் ஒலிக்கும் புல்லாங்குழல், காலத்தையே உறையவைத்துவிடும். ‘உன் புன்னகை சொல்லாத அதிசயமா’ எனும் வரி பஞ்சு அருணாசலத்தின் மிக அழகான கற்பனை.
இப்பாடலின் இன்னொரு வடிவத்தை ஜானகி பாடியிருப்பார். காதலனால் ஏமாற்றப்பட்டதாகக் கருதி, தனது முடிவைத் தேடி மலை மீது ஏறிக்கொண்டே நாயகி பாடும் பாடல் இது. கொந்தளிக்கும் மனநிலையும் சுயஇரக்கமும் கலந்த உணர்வை நிரவல் இசையில் உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாடலில் ஏமாற்றத்தையும் திகைப்பையும் பிரதிபலிக்கும் வயலின் இசைக்கோவை ஒன்று கடந்துசெல்லும். கதையின் மொத்த சாரத்தையும் அந்த இசை உணர்த்திவிடும்.
ஏமாற்ற உணர்வை வெளிப் படுத்தும் இன்னொரு பாடல் ஜானகி பாடிய ‘உதயம் வருகின்றதே…’. சாரங்கி, வயலின் சகிதம் மனதை நெகிழவைக்கும் பாடல் இது. இப்பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ‘மானத்திலே மீனிருக்க மருதையில நானிருக்க’ எனும் தொகையறாவைப் பாடியவர் இளையராஜாவின் ஆசான்களில் ஒருவரும், புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஜி.கே. வெங்கடேஷ்.
ரஜினி படாபட் ஜெயலட்சுமி ஜோடிக்கும் பாடல் உண்டு. ரஜினியை நினைத்து படாபட் பாடும் காட்சியில் இடம்பெறும் ‘மானோடும் பாதையிலே’ பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். சுஜாதா முதன்முதலில் பாடிய ‘காதல் ஓவியம் கண்டேன்’ பாடலும் இப்படத்தில் இடம்பெற்றதுதான். புதிதாக மலரும் பூவின் சுகந்தத்துடன் ஒலிக்கும் இப்பாடலின் முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் மெல்லிய கோரஸ், மேலும் சுகம் சேர்க்கும். பாலமுரளி கிருஷ்ணா பாடிய மற்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு. ‘ஆயிரம் கோடி காலங்களாக’ என்று தொடங்கும் அப்பாடல், கிருஷ்ணனைப் போற்றும் அசல் பக்திப் பாடல்!
இப்படத்தின் மிக முக்கியமான பாடல் ஜானகி பாடிய ‘குயிலே கவிக்குயிலே’. குருவிகளின் சிணுங்கலுடன் தொடங்கும் இப்பாடலில் முகப்பு இசை, மாயாஜாலங்களை நிகழ்த்தக் கூடியது. வயலின் கோவை அடுக்கின் மேலே ஷெனாய் ஒலி பரவும்போது காலத்தின் பின்னோக்கிய பயணம் நம்மை எங்கோ இழுத்துச்சென்றுவிடும். மனிதர்களின் குறுக்கீடற்ற இயற்கைப் பிரதேசத்தைப் போர்த்தியிருக்கும் பிரம்மாண்ட நிழல், கொஞ்சம் கொஞ்சமாக விலக, இயற்கையின் பேரழகு நம் கண் முன்னே விரிவது போன்ற உணர்வை, பாடலின் முகப்பு இசை தரும். இளமையின் பூரிப்பில் திளைக்கும் பெண், தனது விருப்பத்துக்குரிய ஆணுக்கான எதிர்பார்ப்பு பற்றி இயற்கையிடம் பகிர்ந்துகொள்ளும் காட்சியமைப்பு அது. தென்றலின் தீண்டல் தரும் சுதந்திர உணர்வுடன் தனது காதல் ஆசையை வெளிப்படுத்தும் பெண்ணின் அந்தரங்க உணர்வு. மிக மெல்லிய அந்த உணர்வைத் தனது இசையில் நுட்பமாக வெளிக்கொணர்ந்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசை நம்மை உரசியபடி கடந்துசெல்லும் தென்றல், ஆளரவமற்ற அந்தப் பிரதேசத்தின் தாவரங்களை அசையச் செய்வது போன்ற உணர்வைத் தரும். கிட்டார், வயலின், ஷெனாய் இசைக் கலவையை அதில் ஒலிக்க விடுவார் இளையராஜா. மூன்று சரணங்களைக் கொண்ட இப்பாடலில், இந்த இசையைத் தொடர்ந்துவரும் இரண்டாவது சரணத்தை வித்தியாசமான மெட்டில் அமைத்திருப்பார்.
கேட்பவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் பாடல்களைக் கொண்ட இப்படத்துக்கு ‘கவிக்குயில்’ என்ற பெயர்தான் எத்தனை பொருத்தமானது!
JamesFague
30th October 2015, 01:12 PM
Courtesy: Tamil Hindu
சினிமா ரசனை 22: திகில் கதைகளின் தந்தை!
உலகெங்கும் பிரபலமானவை ‘ஹாரர்’ வகையைச் சேர்ந்த திகில் திரைப்படங்கள். இந்த வகையில் நாவல்களை எழுதும் எழுத்தாளர்களும் ஏராளம். அவர்களில் எட்கர் ஆலன் போ(Edgar Allan Poe) ஹாரர் கதைகளின் தந்தையாக உலகெங்கும் வழிபடப்படுபவர். உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதியவர். இவரது துப்பறியும் கதாபாத்திரமான அகஸ்டி டுபின் (Auguste Dupin), பல படங்களில் இடம்பெற்றுள்ளது. நாவல்களில் இடம்பெற்ற உலகின் முதல் துப்பறிவாளர் கதாபாத்திரமும் இதுவே. இவர் எழுதிய பல கதைகள் திரை வடிவம் பெற்றுள்ளன. அவ்வகையிலும் உலகம் முழுக்கப் புகழ்பெற்றவர் அவரே.
ஆனால், நாற்பதே வருடங்கள் உயிர்வாழ்ந்த ஆலன் போவின் வாழ்க்கையில் துயரமே அதிகமும் நிறைந்திருந்தது. 1809-ல் பிறந்து, 1849-ல் மறைந்த போ, ஒரு சிறுகதை எழுத்தாளர். கவிஞர். வறுமையில் வாடியவர்.
துரத்தப்பட்ட எட்கர்
எட்கரின் தாய் எலைஸா, ஒரு சிறந்த நாடக நடிகை. எட்கருக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது அவரது தந்தை, குடும்பத்தையே விட்டுவிட்டு ஓடிவிட்டவர். ‘போ’வின் மூன்றாவது வயதில், அவரது தாயாரைக் கடுமையான காசநோய் தாக்கியது. தனது இருபத்துநான்காவது வயதில் இறந்தார் எலைஸா. இரண்டரை வயதுக் குழந்தை எட்கரின் மனதைத் தாக்கிய கடுந்துயரம் இது. ஒரு பெண்ணிடமிருந்து மரணத்தால் பிரியும் அனுபவம், வாழ்வில் முதன்முறையாக அவருக்கு நேர்ந்தது.
இதன்பின் எட்கரை வளர்த்த தாயான ஃப்ரான்ஸெஸ் ஆலனும் காசநோயால் பாதிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில், எல்மைரா ராய்ஸ்டர் (Elmira Royster) என்ற பெண்ணின் மேல் காதல்வயப்பட்ட எட்கருக்கு, அப்பெண்ணுடன் நிச்சயமும் ஆகிறது.
பள்ளிப் படிப்பை முடித்த எட்கர், விர்ஜீனியா பல்கலைக் கழகத்துக்குச் செல்கிறார். அங்கு பயில்கையில், படிப்புக்கும் வாழ்க்கைக்குமான பணத் தேவை அவரது கழுத்தை நெரித்தது. தனது வளர்ப்புத் தந்தையான ஆலனைத் தொடர்புகொண்டார். பெண் பித்தரான ஆலனோ, எட்கரைத் துரத்தியடித்தார். மகனுக்குப் பணம் எதையும் அனுப்ப மறுத்தார்.
பத்திரிகை ஆசிரியர்
தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் தனது கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் இரண்டாயிரம் டாலர்கள் கடனில் மூழ்கிய ஆலன் குடிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் படிப்பைத் தொடர முடியாமல் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி பாஸ்டனுக்குச் சென்றார். அங்கே பிழைப்புக்கு வேறு வழியில்லை என்பதறிந்து தனது பத்தொன்பதாவது வயதில், ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்கள் ராணுவச் சேவைக்குப் பின் தனது அத்தையான மரியா க்ளெம்மின் வீட்டில் தங்கி வாழத் தொடங்கினார். அவரது பன்னிரெண்டு வயது மகள் விர்ஜீனியாவின் மேல் காதல் வயப்பட்டார். ராணுவத்தில் இருந்த இரண்டு வருடங்களில், இரண்டு கவிதைத் தொகுப்புகளை (Tamerlane and Other Poems, Al Aaraaf) வெளியிட்டிருந்தார் எட்கர். பிறகு ‘Southern Literary Messenger’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் எட்கர். இந்தப் பத்திரிகையில் இவர் எழுதிய புத்தக விமர்சனங்கள், பெரும் புயலைக் கிளப்பின. சராசரி எழுத்தாளர்கள் ஒருவரையும் அவர் மன்னிக்கவில்லை. விளாசித் தள்ளினார்.
துயரிலிருந்து பிறந்த எழுத்து
இதே சமயத்தில், விர்ஜீனியாவுடன் எட்கரின் திருமணம் நடக்கிறது. எட்கருக்கு 26 வயது. விர்ஜீனியாவுக்கோ 13 வயது. சட்டப் பிரச்சினைகளைச் சமாளிக்க, விர்ஜீனியாவுக்கு 21 வயது என்று சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டு இத்திருமணம் நடக்கிறது. ஆண்டு 1842. தனது பத்தொன்பதாம் வயதில், இருமும்போது விர்ஜீனியாவின் வாயிலிருந்து ஒருதுளி ரத்தம் வெளிவருகிறது. உடனடியாகவே அது காசநோய் என்று கண்டுகொள்கிறார் எட்கர். மரணம் விர்ஜீனியாவைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்று அஞ்ச ஆரம்பித்து, மறுபடியும் பெருங்குடியில் மூழ்கினார்.
விர்ஜீனியாவுடன் வாழ்ந்த காலங்களில்தான் எட்கரின் புகழ்பெற்ற படைப்புகள் ஒவ்வொன்றாக வெளியாயின. வாழ்க்கையின் இருண்ட தருணங்களில் அவர் எப்போதும் மூழ்கியிருந்ததால், தனது மனதின் அடியாழத்தில் ஒளிந்திருந்த வாழ்க்கையைக் குறித்த பயத்தை, தன் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தத் தொடங்கினார் எட்கர். மரணங்களைப் பற்றியும், மரண பயத்தைப் பற்றியும் அவரது படைப்புகள் பேசத் தொடங்கின. ‘Murders in the Rue Morgue’ வெளிவருகிறது. இக்கதையே ஆர்தர் கானன் டாயலுக்கு, ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்க உந்துதலாக அமைந்தது. அவ்வகையில், உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதுகிறார் எட்கர்.
அவர் எழுதிய ஒரு படைப்பு, புகழின் உச்சத்திற்கு அவரைக் கொண்டுசென்றது. அதுதான் The Raven என்ற கவிதை. எழுதிய ஆண்டு ஜனவரி 1845. இன்றளவும் உலகம் முழுதும் கொண்டாடப்படும் கவிதை இது. இதன் முழு வடிவத்தை இன்றும் இணையமெங்கும் விவரமாகவே படிக்கலாம்.
வறுமையின் கைப்பாவையாக
எட்கரின் வாழ்வின் இருண்மையை முழுதாக வெளிக்கொணர்ந்த அந்தக் கவிதையை, பல இடங்களில் படிக்கச்சொல்லி அவருக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. எட்கரிடம் இருந்தது ஒரே கோட்டு. கூடவே, கிழிந்த சட்டை ஒன்று. ஆகவே, சட்டை அணியாமல், கோட்டை கழுத்து வரை இறுக்கமாகப் போட்டுக்கொண்டே இக்கவிதையைப் பல மேடைகளில் படித்திருக்கிறார் எட்கர். ஆனால் அங்கீகாரம் கிடைத்ததே தவிர பணம் கிடைக்கவில்லை. தனது வாழ்வையே கவிதையாக உருமாற்றிய அந்தக் கவிஞனின் மனம், படாதபாடு பட்டது. குளிர்காலத்தில், தனது ஒரே கோட்டையும் மனைவி விர்ஜீனியாவுக்கு அணிவித்துவந்தார் எட்கர். பணம் சம்பாதிப்பது மட்டும் அவரால் முடியவில்லை. எழுத்தால் மட்டுமே பணம் என்றே வாழ்ந்ததால், சமுதாயம் அந்த இலக்கியவாதியைப் புறக்கணித்தது. அவனது படைப்புகளை மட்டும் படித்து, அவனது வாழ்வை வாழ அவனுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் அளிக்க மறுத்தது.
ஆண்டு 1847. விர்ஜீனியா இறந்தார். மனைவியை இழந்ததால் கடுமையான மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார். 1849. திடீரென ஒரு நாள் காணாமல் போனார் எட்கர். என்ன நடந்தது என்றே இன்றுவரை எவருக்கும் தெரியவில்லை. சில நாட்கள் கழித்து, ஒரு தெருவில், அளவில் பொருந்தாத உடைகள் அணிந்து, மயக்கமுற்றுக் கிடந்த எட்கரை, மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். அக்டோபர் 7 1849. அதிகாலையில் திடீரென விழிப்பு அடைகிறார் எட்கர். ‘கடவுளே.. எனது பரிதாபத்துக்குரிய ஆன்மாவைக் காப்பாயாக’ என்ற வார்த்தைகளை மிகத் தெளிவாக உச்சரிக்கிறார்.
மரணமடைகிறார் எட்கர் ஆலன் போ. அது அவரது நாற்பதாவது வயது. மிகப் பெரிய ஆளுமையாக வாழ்ந்திருக்க வேண்டிய எட்கர், இப்படியாக அகால மரணம் அடைந்தார்.
உலகெங்கும் இன்றும் பல திரைப்படங்கள் எட்கர் ஆலன் போவின் கதைகளையும் கவிதைகளையும் மையமாக வைத்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவரது படைப்புகளைப் பற்றிப் பல ஆய்வுகள் நடக்கின்றன. திரைப்படங்களில் ‘ஹாரர்’ என்ற வகையில் படம் எடுக்க விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் எட்கர் ஆலன் போவைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அப்படங்களில் பல்வேறு அடுக்குகளில் பல ஆழமான விஷயங்களைப் பற்றிப் பேச முடியும்.
chinnakkannan
30th October 2015, 03:07 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/grtgscikafw_zpsq0q5dsqy.jpg
அன்பின் ராகவேந்திரா சார்..
எட்டாயிரம் பதிவுகளுக்கு நீங்கள் எனக்குக் கொடுத்த இந்த வாழ்த்து.. உங்களுக்கும் பொருந்தும்..
உங்களுக்காகவே சிம்பாலிக்காக வாசு பாட் போட் விட்டார்..
அன்பு வந்தது எம்மை ஆள வந்தது.. உங்கள் அன்பினால் எங்களை ஆள்கிறீர்கள்..சில பல வருடங்கள்(ம்க்கும் :) ) குறைவாக இருப்பதால் - வாழ்த்துச் சொல்ல வயதில்லை.. வணங்குகிறேன் :)
chinnakkannan
30th October 2015, 03:22 PM
அன்பின் வாஸ்ஸூ..
மதுரை..அந்தக்காலம்... சின்னக் குட்டிக் கண்ணன்...
என்ன ஆச்சு..
வீடு...வீட்டின் கொல்லைப்புறம் எட்டி வலது கைப்புறம் பார்த்தால் ஸ்ரீ தேவி தியேட்டர் தெரியும்..
ம்ஹூம்...சு.சூ அங்கு ரிலீஸ் ஆகவில்லை..ஆனதா தெரியாது
பட்..
ஸ்ரீதேவி தியேட்டர் கட் அவுட், வலது கைப்புறத்தில் இருக்கும் சுவரில் ஒட்டப் பட்டிருக்கும் போஸ்டர்கள் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸில் தெரியும்..
ஆனால்..
சாலையைக் கடந்தால் தான் ஸ்ரீதேவி தியேட்டர்
அதற்கு எதிரில் சாலையின் மறுபுறம் தியேட்டர் வாசலைப் பார்த்தபடி ஒரு மளிகைக் கடை இருந்தது
அந்த மளிகைக்கடையின் சைட் சுவற்றில் பலபலப் போஸ்டர் கள் ஒட்டப்பட்டிருப்பது கண்ணுக்குத் தெரியும்..( நினைவில் முதலாவதாக மறக்க முடியாமல் வருவது பெரிய ஆங்கில ஏ எழுத்துக்குக் கீழ் பரிதாபமாய்க் கெஞ்சியவண்ணம் இருக்கும் சுமியின் கருப்பு வெள்ளைப் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் - அவளும் பெண் தானே :) :
ஆனால் அந்த சுவரில் தான் இந்த கவித்துவமான தலைப்பைக் கொண்ட சுடரும் சூறாவளியும் படப் போஸ்டர் பார்த்திருக்கிறேன்.. படம் பார்த்ததில்லை.. எந்த தியேட்டர் ரிலீஸ் என்பதும் நினைவில் இல்லை..
இந்த அன்பு வந்தது என்னை ஆள வந்தது வெகு அழகான பாடல்.. நிறைய தடவை ரேடியோ சிலோனில் கேட்டிருக்கிறேன். (எந்த ரேடியோ..அது இன்னொரு போஸ்ட் :) )
வரி விடாமல் உங்கள் - நீங்கள் எழுதிய சு.சூ திரைப்படக் கதை படித்தேன்.. நிஜமாகவே பொறுமை ஜாஸ்தி உங்களுக்கு..ஆனால்கொஞ்சம் சின்னச் சின்ன ட்விஸ்ட் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்திருந்தால் நன்றாகவே எடுத்திருக்கலாம் தான்.. (அனாவசிய ஜெயா, ஜெமினி, சந்திர மோகனின் மரணங்கள் இல்லியோ)
மிக்க நன்றி வாசு..எங்கே ராகவேந்த்ரா சாருக்காக ஒரு சூப்பர் பாடலை எடுத்துவிடுங்கள்.. நான் அடுத்த போஸ்டில் சுமாரான பாடலுடன் வருகிறேன் :)
chinnakkannan
30th October 2015, 03:59 PM
இப்போதெல்லாம் மணி, நிமிடம் நொடி என நேரத்தைக் கணக்கிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். சுலபமாய் செல் ஃபோனிலேயே டைம் பார்த்து விடுகிறோம்..வாட்ச் எல்லாம் கண்டு பிடிக்காத அந்தக் கால ராஜாக்கள் காலத்தில் என்ன நடந்தது..
நாழிகை ஜாமம் என்று தான் கணக்கிட்டார்கள்
காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு வரை - பகல் ஜாமங்கள் நான்கு - அதாவது ஜாமம் என்றால் மூன்று மணி நேரம்..
மாலை ஆறு முதல் காலை ஆறுவரை - இரவு ஜாமங்கள் நான்கு - காலை ஆறுவரை..
நாழிகை எனப்பார்த்தால் 24 நிமிடங்கள் ஒரு நாழிகை
இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம்
ஏழரை நாழிகை 3 மணி நேரம் - ஒரு ஜாமம்..
இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கியிருந்த வேளையில் அந்த யெளவன வாலிபன் கையிலிருந்த நூலேணியைக் கோட்டையின்
மேற்புறத்தில் மிகச் சிரமப்பட்டுப் பொருத்தி ஏறி பின் இறங்கி அங்கே அடர்ந்த தோப்புக்கிடையில் ஒளிந்திருந்த மாளிகையின்
திட்டிவாசலை நோக்கிப் பையப் பைய நடந்தால் அது படக்கென த் திறக்க அங்கு எதிர்ப்பட்ட ஒரு பேரெழில் மங்கை,”என்னாச்சு மாமா
பன்னிரண்டு மணியாச்சே.. சாப்பிட வேணாமா” என்றாள்..
அஃதாவது .. இரவின் மூன்றாம் ஜாமம் ஆரம்பம் என்றால் பன்னிரண்டு மணி நள்ளிரவு என அர்த்தம்..
அப்புறம் மூகூர்த்தம் என்பது என்னனாக்க..(யாருப்பா அங்க கொட்டாவி விடறது :) )
மூன்றேமுக்கால் நாழிகை முகூர்த்தம் என்பார்கள் ஒன்றரை மணி நேரம்..அதுவும் திருமணம் போன்றவற்றிற்கு நல்லமுகூர்த்த நாளாய் பெண் பையன் ஜாதகத்தைப் பார்த்து நாள் குறிப்பார்கள்..
இன்று ராகவேந்திராசார் 8000 பதிவுகள் ஆன நாளும் நமக்கு முகூர்த்த நாளே..
*
வின்ஸ்டன் என்ற ப்ராண்ட் சிகரெட் உண்டு.. நான் குடித்ததில்லை..ஆனால் சின்ன வயதில் அண்ணன் குவைத்திலிருந்து திரும்பிய நாளில்
அப்பாக்கு எதிரேயே சூட்கேஸ் திறந்து எடுத்து என்னிடம் கொடுக்க நான் முழி முழி என முழிக்க, அப்பாவும் ஒரு புதிர்ப்பார்வை பார்க்க
கடகடவெனசிரித்து.. இது சிகரெட் மாதிரியான ரேடியோப்பா..பேட்டரி போட்டுக் கேக்கலாம்..எனச் சொன்னார் அண்ணா..
ஸோ அந்த ரேடியோவில் குட்டி பேட்டரி போட்டாலும் கணீர் என சீர்காழி போலெல்லாம் பாடாது..கொஞ்சம் மெலிதாய்த்தான் ஒலிக்கும்..ஆனால் அதுவே எனக்குப்பெரிய பொக்கிஷம்.. எனில் ஸ்கூல் விடுமுறையில் ரேழியில் மதியத்தில் தூங்குவதற்கு முன் ஒரு மூலையில் வைத்துக் கேட்டுக் கொண்டிருப்பேன்.. கனகாரியமாக மூன்று டு நான்கு தூங்கி நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் இசைக்களஞ்சியம் தென் ஆறுமணி உள்ள ப்ரோக்ராமகளைக் கேட்டிருக்கிறேன்..
அப்படிக்கேட்டபாடல்களில் ஒரு பாட்டை இன்று தான் பார்த்தேன்..
யெஸ் முகூர்த்த நாள்..
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்
காணிக்கையாய்க் கொண்ட சோம சுந்தரர் கண்களுக்கும் முகூர்த்த நாள் முகூர்த்த நாள்..
ஆனிப் பொன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டாடிட ஆனியிலே முகூர்த்த நாள்
ஆவணி வீதியில் மாப்பிள்ளை பெண்ணுடன் ஊர்வலம் போகும் முகூர்த்த நாள்.
நாணத்தில் மேனி நடுங்கிடும் வண்ணம் நலங்கு வைக்கும் முகூர்த்த நாள்
தான் தின்னும் கனியில் பாதியைக் கொடுத்து சாப்பிடச் சொல்லும் முகூர்த்த நாள்..
தோழியர் கூடி சீர்முறை பாடி தூங்க வைக்கும் முகூர்த்த நாள்..
தூங்கிடும் போதே கிழவியை அனுப்பி தூதுவிடும் முகூர்த்த நாள் (டபக்குன்னு கையால வெட்கப்பட்டு முகம் மூடிக்கறாங்க..ஓ)
(கூட இருக்கறவர் ஏன் கெமிஸ்ட்ரி லாப் ல புகுந்த ஹிஸ்டரி ஸ்டூடண்ட் மாதிரி மெஞ்ஞெ மெஞ்ஞேன்னு பார்க்கறார்னு புரியலை!)
பாட்டு முடிஞ்சுடுத்தேன்னு பார்த்தா பாடிய ஹீரோயின் பொசுக்குன்னு அருவில விழுந்து படுத்துண்டே குளிக்க ஆரம்பிச்சுடுது..ஹூம்..பாக்ஸ் ஆஃபீஸ்க்காக......
ஹீரோயின் விஜய நிர்மலாமாதிரியிருக்கார்..ஆனா அவரில்லை ஹீரோ தெரிந்தாற்போல இருக்கிறது..ஆனால் அழகிய பாடல்..
https://youtu.be/JCCvsVubTGY
இந்த முகூர்த்த நாள் பாடலை ராகவேந்திரருக்கு டெடிகேட் பண்றேன் :) சுசீலாம்மா வாய்ஸ் வெகுஅழகு..
இந்தப் படத்துல இன்னொரு பாட்டும் இருக்கு.. அது அடுத்த போஸ்ட்
chinnakkannan
30th October 2015, 04:07 PM
இந்தப் பாட்டுக் கேட்ட பிறகு தான் ஹீரோயின் போன பாட்டில் கேட்ட பார்த்த பொண்ணில்லை எனத் தெரிகிறது..
அந்தப்பொண்ணும் செத்துப்போச்சு போல (பேரு உமாவாம்) ஆனா திடீர்னு கே.ஆர்.விஜயா வந்து பாடவும் அவர் தான் ஆவின்னு தப்பா நினைச்சுக்கிட்டேன்.. ஜெய் நன்னா முழிக்கிறார்..பின்னால முகூர்த்த நாள் பொண்ணும் வந்து பாடுது..
அதாவது படப்படி அந்தப் பொண் ஜெய்யோட தங்கச்சி போல.. ஆமாம் முகூர்த்த நாள் என்ன கதை..
நடந்தது, நேற்று முடிந்தது
இன்று நடப்பதே வாழ்வில் புதியது
என்று நினைப்பது தான் வாழ்வென்பது…உண்மை தானே..
சுசீலாம்மா எல்.ஆர்.ஈஸ்வரி..
https://youtu.be/gcY08lvHdvA
madhu
30th October 2015, 06:22 PM
சிக்கா...
சூரியன் போயி சந்திரன் வந்தாச்சு... நீங்க முகூர்த்த நாளிலேயே இருக்கீங்களே....
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு... ண்டு.. டு..
madhu
30th October 2015, 06:24 PM
வாசுஜி...
பாலு வரிசையில் இதெல்லாம் எப்போ வருமோ தெரியாது... ஆனா.. சுருளி குரலில் பாலு பாடிய பாடல்கள் எத்தனை ?
எனக்குத் தெரிஞ்சு ...
கொஞ்சம் ஒதுங்கு - வசந்த காலம்
கண்ணே கண்ணான கண்ணா - பெண்ணுக்கு யார் காவல்
சின்ன நாக்கு சிமிழி மூக்கு - ஓடி விளையாடு தாத்தா
கொக்கரக்கோ கொக்கரக்கோ - ஒரு மரத்துப் பறவைகள்
( இதெல்லாமே பாலுதானே ? )
வேறு ஏதாவது இருக்கா ?
vasudevan31355
30th October 2015, 06:41 PM
சின்னா!
முகூர்த்தநாள் படத்தில் வரும் அந்த தங்கை விஜயநிர்மலா அல்ல. அது சந்தியா ராணி என்ற அதிகம் வெளியே தெரியாத நடிகை.
RAGHAVENDRA
30th October 2015, 06:47 PM
சி.க.
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அதுவும் இசையரசியின் ஈடு இணையற்ற குரலில் அந்நாளில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடலை அளித்தமைக்கு இன்னும் நன்றி. கல்யாணங்கள் அந்தக் காலத்தில் வீடுகளில் நடப்பதுண்டு. தெரிந்தவர்கள் வீடுகளில் சாப்பாட்டு பந்திக்கு இடம் தருவார்கள். கல்யாண வீட்டில் அலங்காரம் செய்து ஸ்பீக்கர் செட் வைத்து அமர்க்களப் படுத்துவார்கள். அப்போது தவறாமல் சில பாடல்களை ஒலிபரப்பி விட்டு அப்புறம் தங்கள் அபிமான நடிகர் படப்பாடல்களை ஒலிபரப்புவார்கள். அபிமான நடிகர் என்றால் என்ன - ரெண்டே பேர் தான் - ஒண்ணா சிவாஜி இல்லையா எம்.ஜி.ஆர்.. இப்படி ஊரே ரெண்டு பட்டு கிடந்த காலத்தில் யாருடைய அபிமானி வீடாக இருந்தாலும் தவறாமல் ஒலிக்க ஆரம்பித்தது இந்தப் பாடல். இந்தப் பாடலும் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், மணமகளே மணமகளே வாவா பாடலும் கண்டிப்பாக ஒலிபரப்பாகும்.
அப்படி பம்பர் ஹிட்டாகி இசையரசியை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்த பெருமை இப்பாடலுக்கு உண்டு.
படம் வருவதற்கு முன்பே ஹிட்டான இப்பாடலினால் படத்திற்கும் நல்ல விளம்பரம் கிடைத்தது. இந்தப் பாட்டு கே.ஆர். விஜயாவிற்காக்கும் என்று அவருடைய ரசிகர்கள் ஜம்பமாக திரிந்ததும் உண்டு - ஆம், கற்பகம், இதய கமலம் போன்ற படங்களின் மூலம் வெற்றி நாயகியாக மட்டுமின்றி புன்னகையரசியாகவும் அடையாளம் காணப்பட்டார் கே.ஆர்.விஜயா - எனவே இந்தப் பாட்டிற்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு.
பி.மாதவனின் முதல் தயாரிப்பு என நினைக்கிறேன். அருண் பிரசாத் மூவீஸ் மாதவன்-பாலமுருகன் கூட்டணி உதயமானது இந்தப் படம் மூலமே என்பது என் நினைவு. ஒளிப்பதிவு கூட வின்சென்ட் என்று தான் ஞாபகம். ஆனால் இந்தப் பாடல் கே.ஆர்.விஜயாவுக்கு இல்லை என்று தெரிந்ததும் புஸ்ஸென்று அடங்கி விட்டது படத்தின் ரிஸல்ட். அந்தப் புதுமுக நடிகரின் பெயர் ஈஸ்வர் என நினைக்கிறேன். ஏனென்றால் ஜெய்யின் காதல் பறவை தயாராகும் போது தான் இந்தப் படமும் தயாரானது. அப்போது பேசும் படத்தில் ஒரு புதுமுகம் படத்தைப் போட்டு ஈஸ்வர் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அது மறந்து விட்டது. ஆனால் முகூர்த்த நாள் படத்தில் இவரைப் பார்த்ததும் இவர் தான் ஈஸ்வரோ என்ற சந்தேகமும் வந்தது. இன்னும் அது தீர்ந்த பாடில்லை. பழைய பேசும்படம் வீட்டில் இருந்தால் தேடிப்பார்க்கிறேன்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
பாடலின் துவக்கத்தில் ஒரு அக்கார்டின் பிட் வரும்.. ஆஹா... அது ஒன்றே போதும்...கே.வி.எம்.மின் பெயர் சொல்ல..
மற்ற அனைத்துப்பாடல்களுமே போனஸ்.
RAGHAVENDRA
30th October 2015, 06:56 PM
வாசு சார்
என்ன சொல்வது..
அன்பு வந்தது எம்மை ஆளவந்தது - அது
வாசு என்ற பேரில் எம்மை வாழ்த்துகின்றது..
சுடரும் சூறாவளியும் படத்தை பொறுமையோடு தியேட்டரில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்..
ஜெயாவுக்கு முதல் படம்...
குகநாதனின் தயாரிப்பில் முதல் படம்...
தமிழில் சந்திரமோகன் அறிமுகமான படம்...
குகநாதன் ஏவிஎம்மின் செல்லப்பிள்ளையாக இருந்தார் என்பதால் அவருக்கு உதவும் பொருட்டு ஏவிஎம் கூட்டு சேர்ந்து தயாரித்த படம். சித்ரமாலா கம்பைன்ஸ் தயாரித்த படம் இதே பேனரில் தான் ராஜபார்ட் ரங்கதுரையும் தயாரானது.
இவ்வளவு பாத்திரங்கள் மரணமடைந்தாலும் படத்தில் ஒருவிதமான பாதிப்பு மனதில் இருக்கத்தான் செய்தது. அதற்கு அடிப்படைக் காரணம் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை. படம் முழுமையிலும் அவருடைய ஆளுமை நம்மைக் கட்டிப்போட்டு விடும். அதுவும் பாலுவை பாடவைத்து இப்பாடலின் மேன்மையை மேலும் உயர்த்தி விட்டார். 1971ம் ஆண்டைப் பொறுத்த மட்டில் அதை பாலாவின் ஆண்டாகவே நாம் கொள்ள வேண்டும். உத்தரவின்றி உள்ளே வா தொடங்கி தீபாவளிக்கு வெளியான நீரும் நெருப்பும், பாபு வரையில் அந்த வருடம் ஒவ்வொரு பாட்டிலும் பாலுவின் குரல் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போனது. அதில் இந்தப் பாட்டிற்கு முக்கியமான பங்கு உண்டு.
பல நினைவுகளை அசை போட வைக்கிறது தங்களின் பாலா பாடல்கள் வரிசை.
தொடருங்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
madhu
30th October 2015, 07:01 PM
வாசுஜி...
பாலு வரிசையில் இதெல்லாம் எப்போ வருமோ தெரியாது... ஆனா.. சுருளி குரலில் பாலு பாடிய பாடல்கள் எத்தனை ?
எனக்குத் தெரிஞ்சு ...
கொஞ்சம் ஒதுங்கு - வசந்த காலம்
கண்ணே கண்ணான கண்ணா - பெண்ணுக்கு யார் காவல்
சின்ன நாக்கு சிமிழி மூக்கு - ஓடி விளையாடு தாத்தா
கொக்கரக்கோ கொக்கரக்கோ - ஒரு மரத்துப் பறவைகள்
( இதெல்லாமே பாலுதானே ? )
வேறு ஏதாவது இருக்கா ?
madhu
30th October 2015, 07:03 PM
ராகவ்ஜி..
உங்கள் எட்டாயிரந்து இரண்டு பதிவுகளுக்காக என் வாழ்த்துக்கள்.....
( ஹையா... மத்தவங்களை விட நான் அதிகமா வாழ்த்திட்டேன் )
ஒவ்வொரு பதிவும் முத்து மாணிக்க ரத்தினங்கள்.....
vasudevan31355
30th October 2015, 07:39 PM
வாசுஜி...
பாலு வரிசையில் இதெல்லாம் எப்போ வருமோ தெரியாது... ஆனா.. சுருளி குரலில் பாலு பாடிய பாடல்கள் எத்தனை ?
எனக்குத் தெரிஞ்சு ...
கொஞ்சம் ஒதுங்கு - வசந்த காலம்
கண்ணே கண்ணான கண்ணா - பெண்ணுக்கு யார் காவல்
சின்ன நாக்கு சிமிழி மூக்கு - ஓடி விளையாடு தாத்தா
கொக்கரக்கோ கொக்கரக்கோ - ஒரு மரத்துப் பறவைகள்
( இதெல்லாமே பாலுதானே ? )
வேறு ஏதாவது இருக்கா ?
மதுண்ணா!
இப்போ ஞாபகத்துக்கு வந்தது இதுதான். அப்புறம் கொஞ்சம் யோசிச்சி இருக்கான்னு சொல்றேன்.
அடி என்னோட வாடி-----ஒருமரத்துப் பறவைகள்.
(இந்தப் பாடலைப் பத்தி ரொம்ப ஜாலியா எழுதப் போறேன் தொடர்ல)
எங்கெங்கும் கண்டேனம்மா----உல்லாசப் பறவைகள். (எல்லாம் பறவைகளா இருக்கு):) பாலா சுருளிக்கா இல்ல மூர்த்திக்கான்னு குழப்பம். ஆனா மலேஷியா சுருளிக்கு பாடின மாதிரி மாதிரி தெரியுது.
வா மச்சான் வா வண்ணாரப் பேட்ட -----வண்டிச் சக்கரம்
vasudevan31355
30th October 2015, 08:02 PM
ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்புப் பாராட்டால் என்னை ஆண்டு விட்டீர்கள். இந்த நட்புச் சொந்தம் தெய்வ சொர்க்கம்தான்.
'மாணிக்க மூக்குத்தி'ப் பாடலைப் பற்றி மிக அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.
ஆமாம் ராகவேந்திரன் சார். 'முகூர்த்த நாள்' திரைப்படம் 1967ல் வெளிவந்தது. அருண் பிரசாத் மூவிசாருக்கு இது முதல் படம்தான். அப்படியே அதே கோஷ்ட்டி. ஆனால் இசை மட்டும் முதல் படத்திற்கு கே.வி.மகாதேவன். (வேறு படம் ஏதாவது மாம்ஸ் இசை அருண் பிரசாத் மூவிசாருக்கு அமைத்து இருக்கா?)
ஆனால் ஒளிப்பதிவு பி.என்.சுந்தரம் அவர்கள்.
நீங்கள் சொன்ன ஈஸ்வர் பற்றி நானும் பேசும்படம் பத்திரிகையில் படித்திருக்கிறேன். நல்ல நினைவு சக்தி தங்களுக்கு. அது என்றும் நிலைக்க வேண்டும் எங்களுக்காக.
அந்த நடிகர் பெயர் பெருமாள் ராஜ் என்று நினைவு. (ஒருவேளை ஈஸ்வர்தான் பெருமாள்ராஜ் என்று பெயர் மாற்றிக் கொண்டாரோ தெரியவில்லை)
உங்களுக்காக பெருமாள் ராஜ் அவர்களின் 'முகூர்த்த நாள்' படத்தை இங்கே பதிவிடுகிறேன். அவர் ஈஸ்வரா என்று கண்டுபிடிக்க முயலுவோம்.
http://oi64.tinypic.com/2rz4095.jpg
http://oi64.tinypic.com/2ueisdt.jpg
vasudevan31355
30th October 2015, 08:12 PM
ராகவேந்திரன் சார்
http://s13.postimg.org/s800tkkjb/oie_oie_overlay.gif
தங்களது 8000 பதிவுகளுக்கு என் சந்தோஷமான வாழ்த்துக்களும், நன்றிகளும். எப்போதும் போல எங்களுக்கு ஆசானாய் நின்று வழி காட்ட வேண்டும். தங்கள் பொன்னான அரிய பதிவுகளை அளித்து எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.
http://padamhosting.com/out.php/i39148_vlcsnap-2010-05-14-12h13m00s170.png
http://img.xcitefun.net/users/2010/11/214648,xcitefun-congrats-9.gif
vasudevan31355
30th October 2015, 08:27 PM
மதுண்ணா!
உங்களுக்காக இது.
'முகூர்த்த நாள்' திரைப்படத்தில் நம் அனைவருக்கும் பிடித்த மாதிரி ஏ.எல்.ராகவன், கே. ஜமுனாராணி குரலில் ஒரு ரேர் பாட்டு இருக்கே. நாகேஷ் மாதவி ஜோடியில்.
நாகேஷ் ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன் கணக்கில் ஒரு பாதி ஆணாகவும், இன்னொரு பாதி பெண்ணாகவும் ஆடுவார். ஜோராக இருக்கும்.
'ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
அழைத்தால் வரலாம்
அன்பைப் பெறலாம்
தொடலாம்... விழி படலாம்... உடல் குளிரலாம்'
ஒரு இடத்தில் சந்திரபாபு மாதிரி நாகேஷ் ஆடுவார்.
கேட்டிருக்கீங்களா?
vasudevan31355
30th October 2015, 08:58 PM
சின்னா!
'அன்பை' அன்பாக வாசித்ததற்கு நன்றி. 'சுடரும் சூறாவளியும்' பதிவுக்காகத்தான் இரண்டு நாட்களாக அதிகம் இங்கு வர முடியவில்லை.
அருமையான 'முகூர்த்த நாள்' படத்தின் 'மாணிக்க மூக்குத்தி' பாடலை தந்து சந்தோஷத்துடன் கூடிய பெண்டை எடுத்து விட்டீர். நடிக, நடிகையர் யார் என்று ஆராய்வதற்குள் மண்டை காய்கிறது.
அதைப் போல சூர்யன் போய் சந்தரன் வந்ததும் குளிர்ச்சிதான். இந்தப் பாட்டைரெகார்ட் செய்ய அப்போ 1980 வாக்குல நான் பட்ட பாடு. எங்கும் கிடைக்காம கடைசியில பாண்டியில ஒரு பாடாவதி கடையிலே கிடைச்சுது. இருந்து ரெகார்ட் பண்ணி கொண்டு வந்து வீட்டில் ஆனந்தமாக் கேட்டேன். இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்.
தேங்க்ஸ் சின்னா! 'முகூர்த்த நாள்' கதை சீக்கிரம் சொல்றேன். ஆனா அதுல பாலா பாட்டு இல்லேயே.:) பரவாயில்ல. கேட்டுட்டீர். இல்லன்னு சொல்ல முடியுமா? 'சுடரும் சூறாவளியும்' படம் பார்த்து கதை எழுதி செம டயர்ட். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. இன்னொரு நாள் சுருக்க சொல்றேன். கதை அப்படியே மனசுல ஓடுது.:)
chinnakkannan
31st October 2015, 12:33 AM
முகூர்த்த நாள் பற்றி வழக்கம்போல் தகவல்களை அள்ளி வழங்கிய ராகவேந்தர் சாருக்கு மிக்க நன்றி..அதைத் தொடர்ந்தும் தகவல்கள் தந்த வாசுவிற்கு ஒரு ஓ..
கதை சீக் சொல்ங்..
முகூர்த்த நாள் வீடியோ இருக்கா யூட்யூப்ல..சொன்னாப்ப்ல ஆம்பள பாதி பாட்டும் சர்ச் பண்ணினேன் கிடைக்கலை..
ஹப்பா ஒரு பாட்டு ரெகார்ட் செய்வதற்கு எவ்ளோ கஷ்டம் அந்தக்காலத்தில..ம்ம்
rajraj
31st October 2015, 02:51 AM
Here is an aambaLa song for chinnakkaNNan.
From nalla piLLai tamil dubbed version of albela((1951)
aambaLa nee jannal kitte summa signal paNNaadhe.....
http://www.youtube.com/watch?v=Xzl3pI8mE0s
If you like to listen to the Hindi original:
Shamm dahle kidki dahle..
http://www.youtube.com/watch?v=z3TqPd1XvjM
madhu
31st October 2015, 04:10 AM
வாசு ஜி..
முகூர்த்த நாள் டி.வி.யில்தான் பார்த்தேன். அதுவும் சில காரணங்களால் முழுசா பார்க்க முடியவில்லை. இந்தப் பாட்டு அதுல வரலையே ! இதுதான் ஆரம்பமா? டியூன் கேட்டால்தான் தெரியும் என்று நினைக்கிறேன்.
மூகூர்த்த நாளில் இதெல்லாம் மட்டும் ஏன் விட்டுப் போகணும்... சிக்கா... கேட்ச்.....
இது வீடியோ ( சூரியன் போயி )
https://www.youtube.com/watch?v=v1YfvuHZr3E
இது ஆடியோ மட்டும் ( பாட்டுக்கு பாட்டெடுப்பேன் )
http://cooltoad.com/music/song/eb292648c160d6bf6f60f01d15958ade
RAGHAVENDRA
31st October 2015, 06:28 AM
எட்டாயிரம் என்ன
எட்டு லட்சம் பதிவுகளும் போதாது
எம் தலைவனின் சிறப்பை எழுத
என்றாலும் இதுகூட சாத்தியமே
என்றால் அதன் பின்னால்
என்னருமை நண்பர்களே நீங்கள்
ஏராளமாய் அளித்த ஊக்கமும் ஆதரவும்
என்பதிலே கிஞ்சிற்றும் ஐயமில்லை...
அழகான குறள்நடையில் ஆதவன் ரவி
அருமை பெரியவர் ராமஜெயம்
அன்பான வரிகளிலே லோகநாதன்,
அவரோடு பரணி, சிவாஜி செந்தில்,
சிக்கென்ற வரிகளிலே சினா கானா,
மதுரசமாய் மயக்கவைக்கும் மது,
அட்டகாசமான பாணியிலே நெய்வேலியார்,
இன்னும் பெயர் விட்டுப் போனவர்கள்
யாராயிருந்தாலும் அனைவருக்கும்
அடியேனின் உள்ளத்தின் அடியிலின்று
அன்போடும் பணிவோடும் சொல்லுகின்றேன்
ஐயா அனைவர்க்கும்
நன்றி நன்றி.
RAGHAVENDRA
31st October 2015, 06:28 AM
சொன்னாப்ப்ல ஆம்பள பாதி பாட்டும் சர்ச் பண்ணினேன் கிடைக்கலை..
இதைத்தான் சொல்றது..
இது மேல் ஷாவனிஸம் இல்லையோ...:)
RAGHAVENDRA
31st October 2015, 06:34 AM
https://www.youtube.com/watch?v=t1YP6SWwF6g
முகூர்த்த நாள் என்றவுடன் ஏனோ இந்தப் பாட்டு ஞாபகம் வந்துடுச்சு...
இதில் இரண்டாவது வரியில் வரும் மூக்கணாங்கயிறு.. இதுவும் ஒரு படத்துக்குப் பேராயிடிச்சு..
vasudevan31355
31st October 2015, 07:17 AM
வாசு ஜி..
இது ஆடியோ மட்டும் ( பாட்டுக்கு பாட்டெடுப்பேன் )
அப்படிக்கா வீடியோவையும் பார்த்து வச்சுடலாம் மதுண்ணா.
தாளமுத்து மாரியம்மன் சந்நிதியில் தாளம் தப்பாமல் கரகாட்டம் ஆடும் கலைஞர் ஜெய். அவருடன் அழகான மூவ்ஸ் கொடுத்து அலட்டாமல் ஆடும் விஜயா. பாட்டிலேயே தத்தம் சாதனை வித்தைகளை போட்டிபோட்டு காட்டும் இருவரும் கலக்கல்தான்.
என்னாங்கிறேன் மாமா!
நீ என்னை ஏய்க்கலாமா
அட என்னாங்கிறேன் தங்கம்
நான் எலந்தங்காட்டு சிங்கம்
மகாதேவன் மகா ரகளை folk.
https://youtu.be/RlR4Q3t5pCY
rajeshkrv
31st October 2015, 09:49 AM
சின்னா!
முகூர்த்தநாள் படத்தில் வரும் அந்த தங்கை விஜயநிர்மலா அல்ல. அது சந்தியா ராணி என்ற அதிகம் வெளியே தெரியாத நடிகை.
sandhya raniya vijaya raniya (kannukkutti kannukkuti with sivakumar fame)
vasudevan31355
31st October 2015, 09:57 AM
வாசு ஜி..
முகூர்த்த நாள் டி.வி.யில்தான் பார்த்தேன். அதுவும் சில காரணங்களால் முழுசா பார்க்க முடியவில்லை. இந்தப் பாட்டு அதுல வரலையே ! இதுதான் ஆரம்பமா? டியூன் கேட்டால்தான் தெரியும் என்று நினைக்கிறேன்.
மதுண்ணா, ராகவேந்திரன் சார்,
அதுவேதான் ஆரம்பம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355055/ambala%20pathi%20pombala%20path%20aagalaam.avi_000 094680.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355055/ambala%20pathi%20pombala%20path%20aagalaam.avi_000 094680.jpg.html)
பாட்டோட வீடியோவே இருக்கு. 'யூ டியூப்ல' அப்லோட் பண்ண முயசிக்கிறேன். (ஜெயா டிவி ரைட்ஸ் ப்ராப்ளம்ஸ் குடைச்சல் கொடுப்பாங்க):)
இப்போ முதல்ல 'மீடியா பயர்'ல பாட்டோட ஆடியோவை வீடியோவிலிருந்து பிரிச்சி அப்லோட் செய்து தர்றேன். முதல்ல பாட்டை கேட்ச் பண்ணிக்கோங்க.
பாட்டு வரிகளையும் முழுசா படிச்சுட்டு கேட்டா ரொம்ப சுவைக்கும்.
காட்டுவாசிப் பொண்ணு மாதவியை கல்யாணம் பண்ணிக் கொண்டு அவதிப்படுவார் நாகேஷ்.
காட்டுவாசி உடையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மாதவியைப் (மாதவி படுகவர்ச்சி) பார்த்து ஏங்குவார் நாகேஷ். அப்படியே ஏக்கங்களை கனவு கண்டு பாடலாக ஆரம்பிப்பார்.
இந்தப் பாடலில் இரண்டு விசேஷங்கள்.
1. பாடலை ஜமுனாராணியும், ஏ.எல்.ராகவனும் பாடுவார்கள். இதில் நாகேஷ் ஒரு பாதி ஆணாகவும், மறு பாதி பெண் முக, உடை அலங்காரத்திலும் ஆடுவார். ஆண்பக்கம் காட்டி பாடும் போது நாகேஷுக்கு ராகவன் குரலும், அப்படியே பொம்பளை சைடு காட்டிப் பாடும் போது அதே நாகேஷுக்கு ஜமுனா ராணியும் குரல் கொடுத்திருப்பார்கள். சூப்பரப்பு. ஆகவே ஒரே நாகேஷுக்கு இரு பின்னணி குரல்கள்.
2. அடுத்து மாதவி நாகேஷுடன் இணைந்து பாதிப் பாடலுக்கு மேல் பாட ஆரம்பிப்பார். இபோது மாதவிக்கு ஜமுனாராணி குரல்.
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
அழைத்தால் வரலாம்
அன்பைப் பெறலாம்
தொடலாம்... விழி படலாம்... உடல் குளிரலாம்
(ஆம்பள பாதி)
காட்டுப் பொண்ண காதலிச்சேன்
மாட்டுப் பொண்ணா மாத்தி வச்சேன்
ஏ ஏ ஏ ஏ ஏ ஏய்...(வழக்கமா நாகேஷுக்கு ராகவன் பண்ணும் அமர்க்களம்)
காட்டுப் பொண்ண காதலிச்சேன்
மாட்டுப் பொண்ணா மாத்தி வச்சேன்
காலைப் புடிச்சேன் கையைப் புடிச்சேன்
காலைப் புடிச்சேன் கையைப் புடிச்சேன்
காரியம் நடக்கல...
இந்த செவிலிப் பொண்ணுக்கு சித்திரக் கண்ணுக்கு என்னைப் பிடிக்கல
ஓ...செவிலி...செவிலி...செவிலி செவிலி செவிலி.
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
இதுவரை ராகவன் பாடுவார். உடலில் ஒரு பாதி வெள்ளை உடையிலும், மறுபாதி கருப்பு உடையிலும் நாகேஷ் ஆடுவார்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355055/4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355055/4.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355055/3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355055/3.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355055/2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355055/2.jpg.html)
இப்போது நாகேஷ் ஒரே வேடத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பார். சைடில் திருபி கூந்தல், பூவுடன் பெண்ணாகக் காட்சி தந்து பாடுவார்.
இப்போ ஜமுனாராணி (பெண் தோற்ற நாகேஷுக்கு)
அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
ராகவன் (ஆண் தோற்ற நாகேஷுக்கு)
அழைத்தால் வரலாம்
ஜமுனாராணி (பெண் தோற்ற நாகேஷுக்கு)
அன்பைப் பெறலாம்
ராகவன்
தொடலாம்
ஜமுனாராணி
விழி படலாம்
ராகவன்
உடல் குளிரலாம்
(இப்போ இருவரும் சேர்ந்து நாகேஷ் ஒருத்தருக்கே பாடுவார்கள்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355055/1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355055/1.jpg.html)
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
(இப்போ மாதவி பாடுவார் ஜமுனாராணி குரலில்)
உறவிருக்கும் பகையிருக்கும் இந்த மனசி(ல்)லே
கை அடிக்கும் தொட்டு அணைக்கும் இளம் பொழுதிலே
உறவிரு(று)க்கும் பகையிரு(று)க்கும் இந்த மனசில்ல்ல
கை அடிக்கும் தொட்டு அணைக்கும் இளம் பொழுதிலே
('உறவிரு(று)க்கும் பகையிரு(று)க்கும்'...வரிகளில் ஜமுனாராணியின் அழுத்தமான உச்சரிப்பைக் கவனியுங்கள்):)
ஆயிரம்தான் இருக்கட்டுமே என் புருஷனடி
இவன் ஒனக்கு இல்லை எனக்கு மட்டும் அரசனடி
(நாகேஷின் பாதி பெண் தோற்றத்திடம் பொறாமையில் சவால் விடுவார் மாதவி):)
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
அழைத்தால் வரலாம்
அன்பைப் பெறலாம்
தொடலாம்..
விழி படலாம்...
உடல் குளிரலாம்
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
http://www.mediafire.com/download/pax4z62d5jcn2c7/ambala+paathi+pombala+paathi+aagalaam.mp3
vasudevan31355
31st October 2015, 10:08 AM
sandhya raniya vijaya raniya (kannukkutti kannukkuti with sivakumar fame)
அவர் வேற. இவர் வேற.
vasudevan31355
31st October 2015, 10:11 AM
super sir marubadi padam partha feel koduthirukeenga
மிக்க நன்றி காட்டு பூச்சி சார்.
chinnakkannan
31st October 2015, 10:26 AM
ஹாய் ஆல் குட் மார்னிங் :)
காலங்கார்த்தால பாட் கேக்க வச்சுட்டீங்களே..
நேத்துக்குப் பார்த்தீங்கன்னா - கல்யாணம் ஆகி இன்னும் வெட்கம் கலைக்கப் படாத புதுப்பெண் - தன்னிடம் வந்து ஒவரா “ஹச்ச்சோ.. ப்ரகாஷுக்க்கு என்னவொரு பியூட்டி வாச்சுருக்கா... அவன் மனசுக்குஏத்த மாதிரி” எனக் கன்னங்கிள்ளி முத்தம் கொடுக்கும் அவ்வளவாக வயசாகாத அவனது அலுவலகப் பெண்ணைப் பற்றி கணவனிடம் கேட்க எப்படி வெட்கப் படுவாளோ - அதுபோல உள்ளூர வெட்கப் பட்டு மண்டை வேறு காய்ந்தேன்..அதுவும் மதுண்ணா சூரியன் போய்ச் சந்திரன் வந்தாச்சு எனச் சொல்ல அதை வாசு வழி மொழிய.... விறுவிறுவென்று வாசுவின் அன்பு வந்தது எனை ஆளவந்தது லிரிக்ஸில் அந்த மாதிரி வரிகள் வருதா என சர்ச் வேறு செய்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..
காரணம் இந்தப் பாட்டை நான் கேட்டதே இல்லை..ம்ம் சரி என்று விடை கிடைத்த திருப்தியில் பாட் பார்த்தேனா..பாட்டும் திருப்தி..தாங்க்ஸ்.. :)
"என்னமோ பல எண்ணங்களெல்லாம் சின்னப் பொண்ணை வந்து தாக்குதே..”
தேயிலைத் தோட்டம் போட்டா என்ன தண்ணியில்லாம முளைக்குமா
காதலுக்கு ஒரு வேலியில்லாம பருவப் பயிரு முளைக்குமா..
அன்னிக்கும் இன்னிக்கும் மூணு வாட்டி கையைத் தொட்டதுல என்னாச்சு
உனக்கும் எனக்கும் உடம்புக்குள்ள மின்சாரம் தான் உண்டாச்சு..
சூரியன் போயி சந்திரன் வந்தா யம்மோ....
ஹச்சோ தாங்க்ஸ் மதுண்ணா... ஆம்பளபாதி பாட்டை இனிமேல் தான் கேக்கணும்..தாங்க்ஸ் வாசு..
RAGHAVENDRA
31st October 2015, 10:28 AM
வாசு சார்
முகூர்த்த நாள் டிவிடி வந்தாச்சு..
vasudevan31355
31st October 2015, 10:30 AM
ஜி!
இந்தாங்க
இது 'முகூர்த்த நாள்' சந்தியாராணி
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355056/MP2_Aug25_100140_0.avi_000609118.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355056/MP2_Aug25_100140_0.avi_000609118.jpg.html)
இது உங்க 'கண் கண்ட தெய்வம்' விஜயராணி:)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355057/viji.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355057/viji.jpg.html)
vasudevan31355
31st October 2015, 10:31 AM
வாசு சார்
முகூர்த்த நாள் டிவிடி வந்தாச்சு..
is it?
JamesFague
31st October 2015, 11:05 AM
Courtesy: Dinamani
பானுமதி: 3. எமனா இருக்குது...!
தினமும் ஒரு பக்கம் என்று பானுமதி தமிழ் கற்க ஆரம்பித்தார். அவர் முழுதாகத் தங்கு தடையின்றி தமிழ் வாசித்துத் தேற, எடுத்துக்கொண்ட மாதங்கள் பதினெட்டு.
‘பானுமதியுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட முடியாதா..?’ என ஏங்கினார்கள் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யூ. சின்னப்பாவும். பானுமதியுடன் ஜோடி சேருவதன் மூலம் மேலும் பிரகாசிக்க முடியும் என்று மனமார நம்பினர்.
‘தமிழ் சினிமாவில் பானுமதியை அறிமுகப்படுத்தும் திருப்பணியைத் தாங்கள் செய்ததாக, சரித்திரம் பேச வேண்டும்’ என்று இருவருமே நினைத்தார்கள்.
போட்டி போட்டுக் கொண்டு பி.யூ.சின்னப்பா நடித்த முருகன் டாக்கீஸ் ரத்னகுமாரிலும், நரேந்திரா பிக்சர்ஸ் ‘ராஜமுக்தி’யிலும், பானுமதியை ஒப்பந்தம் செய்தனர்.
‘ராஜ முக்தி’ பாகவதரின் சொந்தத் தயாரிப்பு. பூனாவில் பிரபாத் ஸ்டுடியோவில் ஒரே ஷெட்யூலாக ஆறு மாதத்தில் ஷூட்டிங் முடிக்கத் திட்டம். பானுமதி, வி.என். ஜானகி, பி.எஸ். வீரப்பா, ஆகியோருடன் எம்.ஜி.ஆரையும் அழைத்துக் கொண்டு பாகவதர் புறப்பட்டார்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கால் பாகவதர்-கலைவாணர் இருவரிடையே விரிசல் விழுந்தது. கிருஷ்ணன் - மதுரம் மட்டும் அல்ல, ராஜமுக்தியில் எம்.கே.டியின் வழக்கமான டீமும் வேலை செய்யவில்லை. இளங்கோவனுக்குப் பதிலாக வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன்.
முக்கியமாக பானுமதியைத் தொடாமலே நடித்தார் பாகவதர். அதற்கு டைரக்டரிடம் அவர் சொன்ன காரணம் பரிதாபகரமானது.
‘எனக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்பப் படக் கதை அமையட்டும். நான் மீண்டும் நல்ல பெயரைச் சம்பாதிக்க ‘ராஜ முக்தி’ உதவ வேண்டும்.’
முதலும் கடைசியுமாக பாகவதருடன் இரு நடனங்களுக்கு ஆடிப் பாடக் கூடிய அற்புதமானச் சந்தர்ப்பம் பானுமதிக்குக் கிடைத்தது.
ராஜமுக்தியை இயக்கியவர் எம்.ஜி.ஆரின் மானசீக குருவும், தமிழ் சினிமா சிற்பிகளில் ஒருவருமான ராஜா சந்திரசேகர்.
‘ரத்னகுமார் ரிலிசுக்கு முன் சீக்கிரத்தில் தன் படத்தை முடித்து, மறுபடியும் விஸ்வரூபம் எடுக்க விரும்பினார் பாகவதர்.
‘ராஜமுக்தியின் தரம் முக்கியம். அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்க மாட்டேன்.’ பிடிவாதமாக பாகவதருக்கு உடன்பட ராஜா சந்திரசேகர் மறுத்தார்.
டைரக்டரை மீறித் தன்னிச்சையாக பாகவதர் செயல்பட்டார். ஒழுங்காகப் பூர்த்தி பெறாமல் ராஜமுக்தி 1948 அக்டோபர் 9ஆம் தேதி வெளியானது.
பாகவதருக்கோ, பானுமதிக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையும் செய்யாமல் பெட்டிக்குள் முடங்கியது. தீமையிலும் ஒரே நன்மை எம்.ஜி.ஆர்.-வி.என். ஜானகி காதலுக்கான அஸ்திவாரம்!
என். எஸ். கிருஷ்ணனுடன் நடிக்கும் வாய்ப்பும் பானுமதியைத் தேடி வந்தது.
‘சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முழுமையாகப் பாமர மக்களிடம் சொல்ல, சொந்தப்படம் முக்கியம்’ என்பதை கலைவாணர் உணர்ந்த சமயம்.
மவுண்ட்ரோட் கேசினோ தியேட்டரில் ‘டீஸ் கோஸ் டு டவுன்’ ஓடிக் கொண்டிருந்தது.
‘அந்த ஆங்கில சினிமா நமக்கு உபயோகப்படும்.’ என்று கலைவாணரிடம் குணச்சித்திர நடிகர் எஸ். வி.சகஸ்ரநாமம் சிபாரிசு செய்தார்.
கிருஷ்ணன் -பஞ்சுவும் அந்த ஹாலிவுட் படத்தைப் பார்த்து விட்டு வந்தார்கள்.
அதுவரை ஹாஸ்யத்தில் உச்சம் தொட்ட கிருஷ்ணன் முதன் முதலாக ஹீரோ அவதாரம் எடுத்தார். என். எஸ். கிருஷ்ணனுக்குப் புதிய யோசனை தோன்றியது.
தன் எண்ணங்களை ‘அரசியலிலும் எழுத்திலும் பரபரப்பாகப் பேசப்படும், அண்ணாதுரையின் வசனம் மூலம் ஜனங்களிடம் பளிச்சென்றுப் பதிய வைத்தால் என்ன...?’
கலைவாணரின் மக்கள் செல்வாக்கும், புகழும் சிரஞ்சீவித்துவம் பெற்றவை. என்.எஸ். கிருஷ்ணன் அழைக்கிறார் என்றதும் அண்ணாவுக்கும் ஆனந்தம்.
அண்ணாவின் திரைக்கதை வசனத்தில், ’1949 பிப்ரவரி 2’ல் வெளியான முதல் டாக்கி நல்லதம்பி. அதில் வில்லி கம் நாயகியாக ’புஷ்பா’ என்கிற வேடத்தில் பானுமதி நடித்தார். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினர்.
பேன்ட் ஷ்ர்ட் போட்டு இன் செய்து நவ நாகரிக யுவதியாக, பானுமதி இளமை எழில் வீச கம்பீரமாகத் திரையில் தோன்றினார்.
பானுமதியின் ’கிளியோபாட்ரா’ நாட்டிய நாடகம் ’நல்லதம்பி’யின் சிறப்பு அம்சம்.
நல்லதம்பி பார்த்தது முதல் அண்ணா, ’கிளியோபாட்ராவாக’ ஆடிப்பாடிய பானுமதியின் ரசிகராக மாறினார். பின்னாளில் தன் கதைகளில் நாயகியாக நடிக்க பானுமதியை அண்ணா சிபாரிசு செய்தார். அதற்கு நல்லதம்பி நங்கூரம் பாய்ச்சியது.
தமிழில் பானுமதி நடித்த முதல் சமூகச் சித்திரம் நல்லதம்பி. சிறந்த பிரச்சாரப் படம் என்கிறப் புகழை அடைந்தது.
‘நல்லதம்பியில் நிறைய நல்ல விஷயங்கள் தெரிகிறது. பானுமதியின் நடிப்பு சோபிக்கிறது. தமிழ் உச்சரிப்பு பரவாயில்லை. இன்னமும் கூட நாக்கு திருந்த வேண்டும். அவர் ஆடியுள்ள ஆட்டம் ரசிகர்களைக் கவரக் கூடும். கிளியோபாட்ரா நடனக்காட்சி கண்ணுக்கு விருந்து.’
என்று ’குண்டூசி’ மனம் திறந்து பாராட்டியது.
...
‘பி.யூ. சின்னப்பாவுக்கு ’நடிக நாயகன், வசன வாருதி, இசை இறை’ என்று மூன்று பட்டங்களை ஒரு சேரத் தரலாமா?’
குண்டூசி சினிமா இதழில் 1949 நவம்பரில் ’மேச்சேரி தி. செ. ராமசாமி’ என்பவரின் கேள்வி அது.
சின்னப்பாவின் புகழுக்கு அதை விடக் கட்டியம் கூற வேண்டாம். அன்றைய சகலகலாவல்லவரான ஒரே கலைஞர்! அவர் பானுமதியுடன் இணைந்து நடிக்க விரும்பியதே இருவரின் மேன்மையைச் சொல்லும்.
பானுமதி ஒழுக்கத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தவர். பதிலுக்கு அவர் அடைந்த அவதூறுகள் ஏராளம்.
பி.யூ.சின்னப்பா என்றாலே அனைவருக்கும் சிம்ம சொப்பனம்! ரத்னகுமார் படத்தை புது டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு மிகுந்த பயபக்தியோடு இயக்கி வந்தனர்.
சரக்கடித்து விட்டு ஷாட்டுக்கு ரெடியாவது சின்னப்பாவுக்குச் சாதாரணம். ரத்னகுமார் ஷூட்டிங்கிலும் மது நீடித்தது. உடன் நடித்துக் கொண்டிருந்த பானுமதிக்கு, வித்தியாசமான அழுகிப் போன பழ வாடை காட்டிக் கொடுத்து விட்டது.
’எனக்குத் தலையை வலிக்கிறது’ என்று சொல்லி விட்டு மேக் அப் ரூமுக்குச் சென்றார் பானுமதி. அங்கிருந்து நைசாக வீட்டுக்கே கிளம்பிப் போய் விட்டார். அடுத்த காட்சிக்கு லைட்டிங் முடிந்ததும் தேடினார்கள். ஹீரோயினைக் காணோம் என்பது தெரிந்தது.
பானுமதியின் திடீர் ஓட்டத்துக்கான காரணத்தை பி.யூ. சின்னப்பா புரிந்து கொண்டார். அவருக்கு அவமானமும் ஆத்திரமும் அதிகரித்தது.
டைரக்டர்களிடம் சீறினார்.
‘நான் குடித்திருப்பது தவறு என்றால் அதை என்னிடமே நேரில் சொல்லி இருக்கலாம். யாருக்கும் தெரியாமல் தன் இஷ்டப்படி போகலாமா? இது தான் மரியாதையா?’
‘சின்னப்பா குடித்து விட்டு வந்தற்காக ஏற்கனவே கண்ணாம்பா, எல்லார் முன்பும் கண்டித்துள்ளார். யார் சொல்லியும் திருந்தாதவரை, ஒரு புதுமுகம் பிரமாதமாகப் பழி தீர்த்து இருக்கிறார்.’
என்கிற பேச்சு கிசுகிசுப்பாகக் கிளம்பியது. பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணாவிடம் முறையிட்டனர் இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு.
‘சின்னப்பா இதே மாதிரி குடித்து விட்டு வந்தால், இனி நான் நடிக்க மாட்டேன்’ தன் நிலைப்பாட்டில் பானுமதி உறுதியாக நின்றார்.
பி.யூ. சின்னப்பா என்கிற சிகரம் பானுமதியிடம் பணிந்தது. தண்ணி அடித்து விட்டு வருவதென்ன... படப்பிடிப்பில் பீடி குடிப்பதையும், கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைத்தார்.
ஜி.ராமநாதன் - சி.ஆர். சுப்பராமன் இருவர் இசையில், பி.யூ.சின்னப்பாவுடனும் சேர்ந்து பாடும் வாய்ப்பு பானுமதிக்கு ரத்னகுமாரில் கிடைத்தது. ’நீ தயை புரிவாயே, கலை மாதும் அலை மாதும், விழுது விட்டுத் தழைத்தோங்கி...’ என்று தொடங்கிய பாடல்கள் தமிழகமெங்கும் இனிமை சேர்த்தன.
பானுமதியின் புகழைக் காசு பண்ண முனைப்புடன் முதலில் களமிறங்கிய ரத்னகுமார், 1949 டிசம்பர் 15ல் மிகத் தாமதமாக வெளியானது.
மதுரையில் விமானத்திலிருந்து ’ரத்னகுமார்’ பட விளம்பர நோட்டீஸ்கள் வீசப்பட்டன. ஏனோ தரை டிக்கெட் ஜனங்கள் கூட ’ரத்னகுமார்’ பார்க்கத் திரண்டு வரவில்லை.
தமிழ் சினிமாவின் முதல் மூவேந்தர்களுடன் நடித்தும், பானுமதியின் முழுத் திறமையும் வெளிப்படாமல் இருந்தது. ’பாவுரமா’ பாடித் தெலுங்கில் பெற்ற மகுடம் தமிழில் சட்டென்று கிடைக்கக் காணோம்.
அடுத்து முரசு கொட்டிய ’அபூர்வ சகோதரர்கள்’ பானுமதிக்கு உரிய சிம்மாசனத்தைத் தமிழ் சினிமாவில் கொண்டு வந்து போட்டது.
‘அலெக்ஸாண்டர் டூமாஸ்’ எழுதிய நாவல் ’கார்சிகன் பிரதர்ஸ்’. ஹாலிவுட்டில் படமாகியது. அந்த இங்கிலீஷ் சினிமாவின் அப்பட்டமான காப்பி அபூர்வ சகோதரர்கள்.
ஜெமினியின் அபூர்வசகோதரர்களுக்கு ஆரம்பத்தில் என்ன காரணத்தாலோ ’காந்திமதி’ என்று பெயர் வைத்தார்கள். வைஜெயந்திமாலா கதாநாயகி. இளமை பூரித்து நின்ற வைஜெயந்தியிடம் வாசனுக்கு ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றியது. உடனடியாக பானுமதியை நாடினார்.
அபூர்வ சகோதரர்களில் வாய்ப்பு கிடைத்த விதம் குறித்து பானுமதி:
‘ராஜமுக்தியில் அமைச்சர் மகள் ’கன்னிகா வாக’ எனக்கு வில்லி வேஷம். தமிழில் இந்த மாதிரியான ரோலில் அறிமுகமாவதா என்று நான் யோசிக்கவில்லை. அந்த கேரக்டருக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைப் பின்பற்றினேன்.
ராஜமுக்தி படத்தில் என் பெர்ஃபாமன்ஸ் நல்லாயிருக்குன்னு எஸ்.எஸ். வாசன் பாராட்டினார். என்னாச்சு தெரியுமா?
அபூர்வ சகோதரர்கள் படம் கிடைத்தது. இரண்டே மாதங்களில் இரவு பகலாக மூன்று மொழிகளில் தயாரானது. முதலில் தமிழிலும் பிறகு இந்தியிலும் தனித்தனியாக எடுத்தார்கள். தெலுங்கிலும் டப் செய்தார்கள்.
யாருக்காகவும் காத்திருக்காமல் வாசன் காலை ஏழு மணிக்கே முதல் ஷாட் எடுப்பார். ஒரு நாள் காட்சி அமைப்பில் திருப்தி இல்லை. நான், எம்.கே. ராதா என அனைவரும் காத்திருக்க, நேரம் ஓடியவாறே இருந்தது. நாலு முறைக்கு மேல் ஒத்திகை பார்த்தும் தெளிவு ஏற்படாமல், இரவு பதினோரு மணிக்குத் தன் முதல் ஷாட்டை ஓகே செய்தார் வாசன்.
அப்ப என் மகன் பரணி குழந்தை. இந்த ரெண்டு மாசமும் என்னால் அவன் முகத்தைக் கூட சரியாப் பார்க்க முடியல. ஷூட்டிங் முடிஞ்சு வீடு திரும்பறப்ப அவன் தூங்கிக்கிட்டு இருப்பான். விடியகாலைல நான் கிளம்பறப்பவும் கண் விழிக்க மாட்டான்.
ஒரு தாயா என் மனம் சங்கடப்படும். சினிமாவில் என் பங்கை சரியாச் செய்ய வேண்டுமே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
இப்படித்தான் ஒரு நாள் விடிய விடிய படப்பிடிப்பு. தூங்காத சோர்வு எல்லார் கண்களிலும். வாசன் சார் என்னிடம் ’கொஞ்சம் பிரேக் பண்ணிட்டு தொடரலாமா’ன்னு கேட்டார்.
நானோ இல்ல சார்... பிரேக் விட்டோம்னா அப்புறம், நாம நினைக்கற வேகத்துக்குப் படப்பிடிப்பைத் தொடரமுடியாது’ன்னு பிடிவாதமா மறுத்திட்டேன்.
படம் வெளியாகி பெரிய வெற்றியை எட்டினப்போ, வாசன் சார் என்னோட சின்சியாரிடி பத்தியும் பாராட்டி இருக்கிறார்.
தன் மனைவி பட்டம்மாவிடம் வாசன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...?
‘தொழில் ஆர்வத்துல பானு என்னை விட எமனா இருக்குது!’
இதுக்கு மேலே என்ன பாராட்டு வேணும் ? சொல்லுங்க...’ - பானுமதி.
ஜெமினியில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், பானுமதியின் பரணி பிக்சர்ஸ் மிக மும்முரமாக உருவாக்கிய படம் ’லைலா மஜ்னு’ (தெலுங்கு).
அபூர்வ சகோதரர்களுக்கு முன்பாக 1949 செப்டம்பரில் வெளியாகி ஆந்திராவில் வசூல் சுனாமியை ஏற்படுத்தியது.
அந்தக் காலத்திலேயே தீபாவளிக்கு அரை டஜன் டாக்கிகளாவது வரும். ’மிகப் பிரம்மாண்டமான அபூர்வ சகோதரர்களோடு, தங்கள் படங்கள் போட்டியிட்டால் அவை வசூலில் கட்டாயம் தோல்வி அடையும்’ என்று மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
1949 அக்டோபர் 21ல் சென்னையில் வெலிங்டன், பிரபாத் தியேட்டர்களிலும் ’நிஷான்’ என்ற பெயரில் இந்தியிலும் ரிலீஸ் ஆனது. அதே நாளில் பானுமதி நடித்த மற்றொரு தமிழ்ப் படமான ’தேவமனோகரி’ பாரகனில் திரையிடப்பட்டது. அதில் ஹொன்னப்ப பாகவதர் ஹீரோ.
ஒரே நாளில் பானுமதி நடித்து மூன்று சினிமாக்கள் வெளியானது. இன்றைக்கும் ஒரு கலைஞரே நடித்து அதே தினத்தில், இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் வருவது அரிய சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. முதன் முதலில் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் பானுமதி!
நிஷானில் பானுமதி நாயகி. ஹீரோ மட்டும் எம்.கே. ராதாவுக்குப் பதிலாக ’சந்திரலேகா’ புகழ் ரஞ்சன்.
ஜெமினியின்
அபூர்வ சகோதரர்கள்
’உணர்ச்சி மிகுந்த கதையுடன் கூடிய உன்னத சித்திரம்’
என்று சென்னை நகரமெங்கும் அட்டகாச விளம்பரங்கள் ரசிகர்களைப் பரவசப்படுத்தின.
‘சேலையால் தன் நெஞ்சுப் பகுதியை மூடாமல், இரு மார்புகளுக்கும் இடையில் தாவணி நுனியைச் சொருகி, கைகளில் தேநீர் நிறைந்த கப் அன்ட் சாசர்களை ஏந்தி, சுந்தரப் புன்னகை சிந்தும் பானுமதியின் கவர்ச்சிகரமான போஸால்’ எல்லா சுவரொட்டிகளிலும், பிரபல பத்திரிகைகளிலும் சிருங்கார ரசம் ததும்பியது.
அதைப் பார்த்து பார்த்து ரசித்த வாலிப, வயோதிக அன்பர்களின் உதடுகளில் ஜொள்ளு படிப்படியாக வழிந்தது.
‘காஞ்சனாவாக பானுமதி வெகு லாகவமாக நடித்திருக்கிறார். குறும்புக்காரப் பெண்ணாக நடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். காதல் காட்சிகளில் வெகு இயற்கையாகவும் அநாயாசமாகவும் நடித்திருக்கிறார்.
சமையற்காரியாக மாறி ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி, வீரர்களையெல்லாம் ஏமாற்றி கம்பி நீட்டும் காட்சியையும், காதலன் எம்.கே. ராதா முன்னிலையில் வேலைக்காரியாக பேசி நடிப்பதையும், ’பிரமாதம்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம்.
அந்தக் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் பலமுறை அபூர்வசகோதரர்கள் பார்ப்பார்கள் என்பது நிச்சயம். பானுமதி பாடும் ’லட்டு... லட்டு’ பாட்டு தமாஷ். மற்றும் அவர் பாடியுள்ள ’மானும் மயிலும், மனமோகனமே’ ’ஓடக்காரா...! ஓடக்காரா...! ஓடத்தில் ஏற்றி செல்வாயோ ?’ பாடல்கள் இனிமையோ இனிமை.’
‘புராணப்படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்’ என்கிறப் பட அதிபர்களின் கூற்றைப் பொய்யாக்கி விட்டது கற்பனை கதையான அபூர்வ சகோதரர்கள்’. என்று விமர்சனங்கள் உற்சாகப்படுத்தின.
அன்றைய ஹைடெக் ஓட்டல் மேஜைகள் ஒவ்வொன்றிலும், காஞ்சனாவின் (பானுமதி) மார்பளவு குட்டி குட்டி கட் அவுட்கள் காட்சி அளித்தன.
உடனடியாக அபூர்வ சகோதரர்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 1950 தைப் பொங்கல் அன்று ஆந்திராவெங்கும் அபூர்வ சகோதரலு ரிலிஸ் ஆனது.
வடக்கில் சந்திரலேகாவை அடுத்துக் குறுகிய காலத்தில் 1950 ஏப்ரலில் நிஷானும் வெள்ளிவிழா கொண்டாடியது.
adiram
31st October 2015, 01:36 PM
டியர் வாசு சார் & ராகவேந்தர் சார்,
முகூர்த்த நாள் அலசல் அருமை. படத்தைப்பற்றிய அருமையான தகவல்கள். ஜெ.யின் 'பவானி'யும் இதே காலத்தில் வெளியானதா?.
மாணிக்க மூக்குத்தி பாடலில் கே.ஆர்.விஜயா ரசிகர்கள் ஏமாந்தது இருக்கட்டும். நாம் உயர்ந்த மனிதனின் 'என் கேள்விக்கென்ன பதிலில்' ஏமாந்ததை விடவா?.
அந்தக்கால கல்யானப்பந்தல்களில் தவறாமல் ஒலிக்கும் பாடல் பட்டியலில் நம் 'வாராயென் தோழி' பாடலையும், 'பூமுடிப்பால் இந்த பூங்குழலி' பாடலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த ரிக்கார்டுகளை கொண்டுவரவில்லைஎன்றால் ஸ்பீக்கர் செட்காரனுக்கு திட்டு நிச்சயம்.
வாசு சார்,
நாகேஷ், மாதவி பாடலுக்காக எவ்வளவு சிரத்தையெடுத்துள்ளீர்கள். அப்பப்பா ரொம்ப பொறுமை வேணும் சார். 'திரியின் பீஷ்மர்' பட்டமெல்லாம் உங்களுக்கு சும்மா கிடைத்து விடவில்லை. அந்த அளவுக்கு உழைத்திருக்கிறீர்கள், உழைக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
vasudevan31355
31st October 2015, 02:01 PM
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.
http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-12-02/images/m-karnan-polladhavan-13-12-12.jpg
குறுந்தொடர் 1
"அடப் போப்பா! பெருசா கர்ணன் படத்து பாடலகளை போட வந்துட்டே...அதுல என்ன இருக்கப் போவது? ஒரே கவர்ச்சிதானே!" என்று பொய் சலிப்பு சலித்தவாறே ஆவலோடு பாடல்களைப் பார்க்கப் போகும் அன்பர்களுக்கு வணக்கம்.:) கர்ணன் படம்னா குதிரை விரட்டல், ரேக்ளா சேஸிங், பைக் சேஸிங், பனிமலை, பனிச்சறுக்கு சேஸிங், ஜாங்கோ டைப் 'டுமீல் டுமீல்' துப்பாக்கிகள், கௌபாய் சண்டைகள், கவர்ச்சி காபரேக்கள், துகில் உரியும் துச்சாதனர்கள், கொண்டை போட்டு சண்டை போடும் வில்லன்கள், நகைச்சுவை போலீஸ், நாயகி ஆற்றுக் குளியல், நாயகன் மேல் விழுந்து வைக்கும் நாயகி, கோவில் சொத்து, வில்லன் பறிப்பு, அண்ணன் இறப்பு, தம்பி பழி வாங்கல், முளைப்பாரி என்று அத்தனை அம்சங்களும் நிறைந்து பட ரிலீஸ் அன்று பெருங்கூட்டம் கூடி லோ கிளாஸ் நிரம்பி வழிந்து, வசூலை வாரிக் குவித்து, சென்சாரிடமிருந்து தப்பி வந்த காட்சிகள் முதல் நாள் மக்களைச் சென்றடைய, இரண்டாம் நாள் எல்லாம் 'கட்'டாகி ஏமாற்றத்துடன் திரும்பும் இளைஞர் மற்றும் முதியவர் கூட்டம், முதல் காட்சி பார்த்து அவர்களை வெறுப்பேற்றும் கூட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பெண்கள் தியேட்டர் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள்.
சங்கர் கணேஷ் மேற்கத்திய படங்களிலிருந்து இசை சுட்டு சர்ச் கோவில் மணியோசைகளின் பின்னால் தானும் குதிரைக் குளம்பொலிகளின் சத்தத்தோடு 'ஹா ஹா' கோரஸோடு டுமீல் டுமீல் சவுண்டு கொடுப்பார்.
ஹலம், ஜெயகுமாரி, விஜயலலிதா, ராஜ் கோகிலா, ராஜ் மல்லிகா, மோகனப்ப்ரியா, மாதவி, அனுராதா இப்படி காலத்திற்கேற்ற கவர்ச்சி நடிகைகள் கர்ணன் படங்களில் பங்கு பெறுவார்கள்.
செங்கல்பட்டு மலை உச்சியில் சண்டை போடும் ஹீரோவும், வில்லனும் அடுத்த நிமிடம் காஷ்மீர் பனி மலையின் மீது சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.:)
கர்ணன் படமென்றாலே ஜெய்சங்கர்தான் ஹீரோ என்னுமளவிற்கு ரொம்பவும் பாப்புலர் அவர். அசோகனே மெயின் வில்லன். விதவித கோமாளி வேடங்களில். இல்லையென்றால் மேஜர்.
சரி! கர்ணன் பட புராணம் போதும்.
ஆனால் அவர் படத்தில் பாடல்கள் அதுவும் ஈஸ்வரி பாடிய பாடல்கள் அற்புதமாகவே இருக்கும். நடன நடிகைகள் ஆடும் போது காமெரா சுழலும். நடனமாடும் கவர்ச்சி நடிகையின் கால் சுழன்று வந்து படம் பார்ப்பவர்களின் தலையைப் பதம் பார்த்து செல்லும்.:)
முதலில் கர்ணன் சொந்தமாகத் தயாரித்த இந்திராணி பிலிம்ஸ் 'காலம் வெல்லும்' படத்திலிருந்து சுசீலா பாடிய பாடல் ஒன்றை பாருங்கள். காபரே பாடலுக்கு சுசீலாம்மா குரல் தந்திருப்பார். ஆனால் பாடல் காபரே நடனப் பாடல் போல் அல்லாது ஸ்லோவாகவே செல்லும். கேட்கவும் நன்றாக, வித்தியாசமாக இருக்கும்.
http://i.ytimg.com/vi/gFrvX897Nt0/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/hBz-rBNg_VE/hqdefault.jpg
வெற்றுடம்புடன் பாங்கோஸ் உருட்டும் சதன், வில்லனை நோட்டம் விட தலையில் துணிக்கட்டுடன் கறுப்பு மேக்-அப் போட்டு மாறுவேடத்தில் கிடார் வாசிக்கும் ஹீரோ ஜெய், குடிபோதையில் காபரே நடனம் பார்க்கும் வில்லன் எம்.ஆர்.ஆர்.வாசு, கண்களை உருட்டும் கதாநாயகனின் நண்பன் கிராமத்தான் குடுமி நாகேஷ், அடியாள் போல உசிலைமணி, ஆட்டத்தைப் பார்க்க விடாமல் .ஜொள் விட்டு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் சுருளி கண்ணை மூடும் காத்தாடி ராமமூர்த்தி, (அப்பா! ஒரே பாட்டில் எத்தனை நடிகர்கள்!) அரபு உடை அணிந்து காபரே ஆடும் அழகே இல்லாத ஆண்முக பெண் டான்ஸர்.
அத்தனை பேரையும் கர்ணனின் கேமெரா தன்னுள் படம் பிடித்து அடக்கி வைத்துக் கொள்ளும். லைட்டிங் ஒர்க்குகள் அட்டகாசமாய் இருக்கும். நிழலுருவங்கள் பின்னும்.
'எல்லோரும் திருடர்களே! மனிதர்களே!
ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது
எல்லோரும் கவிஞர்களே
என் கண்ணைப் பார்த்து கதை எழுது'
அழகாகப் பாடி இருப்பார் சுசீலா. பாடலின் சரண முடிவில் 'இன்னும் என்ன?' என்று கிடார் ஒலிக்குப் பின் இவர் கேள்வி கேட்பது அருமை.
'தேவைக்கு மேலே சேமித்த செல்வம் ஏழை அடைய வேண்டும்'
என்ற எம்.ஜி.ஆர் அவர்களின் தத்துவம் கூட காபரே பாடலில் வரும். ஆனால் அதையெல்லாம் நாம் கண்டுக்கப் படாது.:)
ஆனால் சங்கர் கணேஷின் மியூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நல்லதோ கெட்டதோ புகுந்து விளையாடும். பாடலும் அருமை. நமக்கு அதுதானே வேண்டும்?
https://youtu.be/hBz-rBNg_VE
JamesFague
31st October 2015, 02:16 PM
Who will take the role of censor board for this short series of Karnan Padalgal?
RAGHAVENDRA
31st October 2015, 02:37 PM
வாசு சார்
காமிரா மேதை கர்ணன் பாடல்கள் தொடரும் உங்களுடைய தனித்தன்மையையும் அதன் சிறப்பையும் கட்டியங்கூறும் என்பது உறுதி.
தாங்கள் குறிப்பிட்ட மசாலா ஐட்டங்களைத் தாண்டி அந்த ஒளிப்பதிவின் பின்னால் அவருடைய உழைப்பு பிரமிக்கத் தக்கதாயிருக்கும்.
ஒரு குறிப்பிட்ட காட்சி என்றென்றும் மறக்க முடியாதது மட்டுமல்ல அதன் பின் அந்த அளவிற்கு ஆக்ஷன் த்ரில்லர் ஒளிப்பதிவில் அதிக படங்களை செய்த ஒளிப்பதிவாளரையும் கூற என்னால் முடியவில்லை. கர்ணன் அவர்களுக்குப் பிறகு பாபு அவர்களை சொல்லலாம். முரட்டுக்காளை க்ளைமாக்ஸ் ரயில் சேஸிங் காட்சி பாபு அவர்களின் திறமைக்கு மிகச் சிறந்த சான்று.
கர்ணன் ஒளிப்பதிவிற்கு வருவோம். தாங்கள் அவர் இயக்கிய படங்களோடு மட்டுமின்றி அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய படங்களிலிருந்தும் காட்சிகளை அல்லது பாடல்களை தேர்ந்தெடுக்கலாம்.
கர்ணன் ஒளிப்பதிவில் நான் குறிப்பிட வந்த காட்சி..
கங்கா படத்தில் ஒரே சமயத்தில் குதிரை மேல் அசோகனும் ஜெய்யும் ரேக்ளா வண்டியைப் பக்க வாட்டில் துரத்தி வரும் போது அந்த வண்டியின் இரு சக்கரங்களின் இடையே தூரத்தில் அந்த குதிரை வீரர்கள் துரத்தி வருவதை லைவாக படம் பிடித்திருப்பார். இது இன்று பார்த்தாலும் பிரமிப்பூட்டுகிறது. அதைப் படமாக்கிய விதத்தைப் பற்றி ஒரு முறை சொல்லியிருந்தார். இது போன்ற சேஸிங் காட்சிகளைப் படம் பிடிக்கும் போது காமிராவை உடலோடு நன்றாக இறுக்கிக் கட்டிக் கொண்டு விடுவாராம். அதன் பிறகு தன்னையும் இன்னோரு ஜீப்பில் பக்க வாட்டில் படுக்கவைத்து கட்டி விடச்சொல்வாராம். அந்த ரேக்ளா வண்டிகள் இரண்டும் ஒரே சீரான வேகத்தில் போக வேண்டும், அதன் பிறகு அந்த ஒளிப்பதிவு வண்டியும் அதே வேகத்தில் போக வேண்டும். கொஞ்சம் தப்பினாலும் காட்சி சொதப்பலாகி விடும். மிகவும் சிரமமெடுத்து தன் தொழிலில் முனைப்புடனும் ஈடுபாட்டுடனும் உழைத்தவர் கர்ணன்.
அந்த அற்புதமான ஒளிப்பதிவினை இதோ நாம் காணலாம்.
நான் குறிப்பிட்ட அந்தப் பகுதி 4.50 லிருந்து 5.00க்குள் வரும்.
https://www.youtube.com/watch?v=lSYryZ3IPZI
அவருடைய ஒளிப்பதிவில் வந்த மற்ற இயக்குநர் படங்களிலிருந்தும் பாடல்களை நாம் பகிர்ந்து கொள்ளலாம்.
vasudevan31355
31st October 2015, 02:42 PM
Who will take the role of censor board for this short series of Karnan Padalgal?
Chinna.:) He is a right person.
vasudevan31355
31st October 2015, 02:44 PM
//அவருடைய ஒளிப்பதிவில் வந்த மற்ற இயக்குநர் படங்களிலிருந்தும் பாடல்களை நாம் பகிர்ந்து கொள்ளலாம்.//
தாரளமாக ராகவேந்திரன் சார்.
JamesFague
31st October 2015, 03:08 PM
Mr Neyveliar,
Naan Ninaichen neengal sollivitirgal. Mr C K - the chairman of censor board for the karnan short series.
vasudevan31355
31st October 2015, 06:10 PM
Mr Neyveliar,
Naan Ninaichen neengal sollivitirgal. Mr C K - the chairman of censor board for the karnan short series.
:redjump::rotfl::boo::bluejump::happydance::cheer: :clap:
madhu
31st October 2015, 06:26 PM
வாசு ஜி..
மஹாபாரத கர்ணனை அந்த கண்ணன் தர்மத்தை வாங்கிக் கொண்டு மாட்டி விட்டான்... இன்று கர்ணனால் சின்னக் கண்ணன் ம்ம்ம்மாட்டி கிட்டாரு... !!
( எனக்கு கர்ணன் படத்தின் எல்லா எல்லார் ஈ பாடல்களும் கண்டிப்பாக வேண்டும்... இது நேயர் விருப்பம் )
RAGHAVENDRA
31st October 2015, 06:33 PM
வாசு ஜி..
மஹாபாரத கர்ணனை அந்த கண்ணன் தர்மத்தை வாங்கிக் கொண்டு மாட்டி விட்டான்... இன்று கர்ணனால் சின்னக் கண்ணன் ம்ம்ம்மாட்டி கிட்டாரு... !!
( எனக்கு கர்ணன் படத்தின் எல்லா எல்லார் ஈ பாடல்களும் கண்டிப்பாக வேண்டும்... இது நேயர் விருப்பம் )
அதே அதே
RAGHAVENDRA
31st October 2015, 06:34 PM
who will take the role of censor board for this short series of karnan padalgal?
objection your honour....
இங்கேயுமா...
RAGHAVENDRA
31st October 2015, 06:39 PM
//அவருடைய ஒளிப்பதிவில் வந்த மற்ற இயக்குநர் படங்களிலிருந்தும் பாடல்களை நாம் பகிர்ந்து கொள்ளலாம்.//
தாரளமாக ராகவேந்திரன் சார்.
நன்றி வாசு சார்.
இதோ டிரைலர்...
https://www.youtube.com/watch?v=8nAdIbrwrLs
RAGHAVENDRA
31st October 2015, 06:49 PM
https://www.youtube.com/watch?v=ygjqxrk-Hsc
இந்தப் பாடலை ஒளிப்பதிவு செய்தது காமிரா மேதை கர்ணன் என்றால் நம்புவீர்களா..
இவரா கங்கா படத்தின் ஒளிப்பதிவாளர் என்று வியப்பு மேலிடும் வண்ணம், இந்தப் பாடலில் ஒளிப்பதிவில் அவ்வளவு மென்மையாக செய்திருப்பார். நீலவானம் ... நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெறும். இதன் சிறப்பிற்கு கர்ணன் அவர்களின் ஒளிப்பதிவும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை. துவக்கத்தில் மிகவும் உயரத்திலிருந்து சாந்தி திரையரங்கின் வாயிலைக் காட்டுவதிலிருந்து அவருடைய உழைப்பு மிளிரிடும். எந்த அளவிற்கு ஆக்ஷன் படங்களில் மேதையாகத் திகழ்ந்தாரோ அதே அளவிற்கு குடும்பக் கதைகளைப் படமாக்குவதிலும் வல்லவராக இருந்தார். இந்தப் பாடல் அதற்கு ஓர் உதாரணம்.
vasudevan31355
31st October 2015, 06:58 PM
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.
குறுந்தொடர் 2
விஜயசித்ரா பிலிம்ஸ் பேனரில் கர்ணன் தயாரித்த படம்தான் 'பெண்ணை வாழ விடுங்கள்'. கர்ணன் தயாரித்த இந்த ஆரம்பகாலப் படத்திலேயே அவருடைய கைங்ரியங்கள் தெரிய ஆரம்பிப்பதை கண்கூடாகக் காணலாம்.:) இந்தப் படத்தின் இயக்குனர் தேவராஜன் என்றாலும் ஒளிப்பதிவு, தயாரிப்பு கர்ணன் என்பதால் அவர் மறைமுக இயக்கமும் செய்திருப்பார்.
இந்தப் படத்திலும் அவரது ஆஸ்தான நாயகன் ஜெய்சங்கர்தான். இது கொஞ்சம் குடும்ப சப்ஜெக்ட் என்பதால் 'புன்னகை அரசி' நாயகி. இன்னொரு பரிதாப நாயகி 'செம்மீன்' ஷீலா.
குடும்பப் படம் என்றாலும் ஜெய் குடிகாரர் அதுவும் வில்லன் எம்.ஆர்.ஆர்.வாசு அவருடைய ஆத்ம நண்பன் எனும்போது கர்ணன் ஜமாயக்காமல் விடுவாரா? அதை அல்வா மாதிரிப் பயன்படுத்திக் கொண்டு ஷீலாவுக்கு
பிரமிடுகள் மத்தியில் 'சிவந்தமண்' காஞ்சனா ரேஞ்சுக்கு ஒரு கவர்ச்சி ஆட்டமும், (அழகிலே கனிரசம்) கன்னட அழகு அகல முக சைலஸ்ரீக்கு ஒரு கவர்ச்சி ஆட்டமும் கொடுத்திருப்பார்.
மிதமிஞ்சிய போதையில் ஹோட்டலில் சைலஸ்ரீயுடன் ஜெய் ஆட்டம். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.எஸ். பாடலின் ஆரம்பத்தில் எஸ்.எம்.எஸ்.அழகாக குறும்புடன் கண்டசாலாவின் 'உலகே மாயம் வாழ்வே மாயம்' பாடலின் இசையை சாக்ஸ் மூலம் வழங்குவது அழகு. அப்போதெல்லாம் எஸ்.எம்.எஸ்.மியூசிக் கவர்ச்சி ஆட்டம் என்றால் தவறாமல் சைலஸ்ரீ இடம் பெறுவார். (முத்துச்சிப்பி, சமீபத்தில் திரி அலசிய 'வைராக்கியம்' இப்படி)
'மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்க'
'பாடகர் திலகம்' குடிகார பாவனையுடன் பாட, எஸ்.எம்.எஸ்.கேட்பார் இல்லாமல் மியூஸிக்கில் புகுந்து விளையாடுவார். இடையிசை பின்னி எடுக்கும்.
பாடலை பாருங்கள்.
அப்புறம் ஒரு கேள்வி. ஜெய் பாடப் பாட, உடன் ஆடும் சைலஸ்ரீ ஜெய் அருந்தும் போதையைவிட 'ஹா ஹா' 'ம் ஹூம்' 'ஓஹ்ஹோ' என்று ஒரு பாடகியின் குரலில் சிணுங்கி பாடல் முழுக்க நம்மை போதை ஏற்றுவார். அருமையான சிணுங்கல்கள்...சிரிப்புகள்.
அந்தப் பாடகி யார்?:)
https://youtu.be/P0-Us7gPeTI
vasudevan31355
31st October 2015, 07:01 PM
ராகவேந்திரன் சார்,
என்ன ஒற்றுமை! ஒரே நேரத்தில் இருவரும் 'கர்ணன்' படப் பாடல்களை ஐ மீன்:) 'காமெரா மேதை' கர்ணன் படப் பாடல்களைப் போடுகிறோம். தொடராக தந்து, நெம்பர் கொடுத்து வரிசைப்படுத்திக் கொள்ளுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன். பின்னால் இருவர் போடுவதையும் ஒன்றிணைத்து ஒன்றாகத் தந்து விடலாம். நன்றி சார்.
vasudevan31355
31st October 2015, 07:08 PM
//( எனக்கு கர்ணன் படத்தின் எல்லா எல்லார் ஈ பாடல்களும் கண்டிப்பாக வேண்டும்... இது நேயர் விருப்பம் )//
விருப்பம் நிபந்தனையில்லாமல் நிறைவேற்றி வைக்கப்படும்.:)
யப்பா! கர்ணனுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி போல. இப்போதே 4 பேர் ஆகிவிட்டதே சித்தூராரின் ஆதரவு உட்பட.:)
vasudevan31355
31st October 2015, 07:10 PM
ராகவேந்திரன் சார்,
'இங்கேயுமா?':) சிரிப்பை அடக்க முடியல சார். வயிறு வலிக்குது.
அப்புறம் 'நீலவானம்' காட்சிகள் போட்டு தூள் கிளப்பி விட்டீர்கள். ம்...அப்படியெல்லாம் படம் பிடித்த கர்ணன்தான்......
RAGHAVENDRA
31st October 2015, 07:37 PM
வாசு சார்
தாங்கள் கூறியவாறே தொடருவோம்.
பெண்ணை வாழ விடுங்கள் ... அதிலிருந்து தொடங்குவோம். இனி வருவது இரண்டாக இருக்கட்டும்.
RAGHAVENDRA
31st October 2015, 07:47 PM
வாசு சார்
என்ன தான் சொல்லுங்கள்.. அழகிலே கனிரசம்... அது தான் பாட்டு... அது தான் குரல்... அந்தப் பாட்டையும் நாம் பார்த்தாகணும்... என்ன ஒரு கம்போஸிஷன்..
அந்தப் பாட்டை அடிச்சிக்கவே முடியாது... ஒரு லட்சம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்...
இதைப் போடவில்லை என்றால் இந்தத் தொடருக்கே அர்த்தமில்லாமல் போய் விடும். அதுவும் ஈஸ்வரியாச்சே..
நீங்கள் கண்டிப்பாக இந்தப் பாடலைப் போடாமல் இருக்க மாட்டீர்கள். நீங்கள் மீண்டும் போடவும், தங்களுடைய எழுத்தில் இப்பாடலைப் பற்றிப் படிக்கும் வரையில் பார்த்துக்கொண்டிருப்போமே..
உங்கள் சார்பாக இதோ..
3. பெண்ணை வாழ விடுங்கள் - அழகிலே கனிரசம்
https://www.youtube.com/watch?v=j_OLdvar-do
தமிழ்நாட்டு ஓ.பி.நய்யார், எஸ்எம்எஸ் புகுந்து விளையாடி இருப்பார்.
அக்கார்டின், ட்ரம்ஸ், பாங்கோஸ், வயலின் எல்லாம் அட்டகாசம்...
RAGHAVENDRA
31st October 2015, 07:50 PM
மது இறங்க இறங்க..
பாடலில் ஒலிக்கும் பெண் குரல்...
சில நாட்களுக்கு முன் நாம் விவாதித்த அதே குரல் தான்..
கௌசல்யா....
chinnakkannan
31st October 2015, 08:15 PM
இது காலையில் எழுதி போஸ்ட் பண்ணினால் போகவே இல்லை.. அப்புறம் வெளியில் சென்று மதியம் வந்து தூங்கி எழுந்து பார்த்தால் கர்ணன் கர்ணன் பேச்சாயிருக்கே.. ஏதோ பதவில்லாம் கொடுத்திருக்கேள் :) ம்ம் ஒன்பை ஒன் பார்த்துட்டு வர்றேன்..
*
ஹப்பாடி..அதையும் ஒரே மூச்சா கேட்டுட்டேன்..ஆ.பா பொ.பா.. நல்லா இருக்கு வாசு.. மாதவி பத்திச் சொல்லிட்டு பக்கெட் போடாம இருந்தா எப்படி? :)
சரி இன்னிக்கு கொஞ்சம் காலீல வெளிய போறனா.. ஸோ மத்யானம் வர்றேன் நேத்து முகூர்த்த நாள்னு பாஸிட்டிவ்வா போட்டாச்..இன்னிக்கு என்ன பண்ணலாம் அதே பாஸிட்டிவ்வா...பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த இன்னொரு பாட்.... கேக்க மட்டும் செஞ்சுருக்கேன் பார்த்ததில்லை..
எங்கே ஊதுபத்தி..எங்கே லைட்டர்...
https://youtu.be/S8yHE8pFa0M
ஹப்பாடா திரி பத்த வைச்சாச்சு..ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்.. (படம் பார்த்ததில்லை.. இப்பத் தான் இது டைட்டில் சாங்க்னே தெரியும்..) எனில் எக்ஸ்ப்ளெய்ன் வித் ரெஃபரன்ஸ் டு தி காண்டெக்ஸ்ட் என அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன் :)
**
RAGHAVENDRA
31st October 2015, 08:27 PM
எக்ஸ்ப்ளெய்ன் வித் ரெஃபரன்ஸ் டு தி காண்டெக்ஸ்ட் என அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்
வாசு சார்
இதுக்குத் தான் நான் சென்ஸார் வேண்டாம்னு சொன்னேன்... இப்ப பாருங்க... போஸ்ட் வந்தாலே ஏதாவது கேக்கத் தோணுது...:smile2:
ஹ்ம்... இருந்தாலும் கேட்டாச்சு சொல்லித் தானே ஆகணும்..
சென்ஸார் ஆபீஸர் சரியான படத்தைத் தான் தேடிப் பிடிச்சிருக்கார்...
கேக்கறது ஏ படத்தைப் பத்தியாச்சே...
எப்படி சொல்லுவது, என்னத்தைச் சொல்லுவது...
இந்தப் படம் ஏன் ஏ சர்டிபிகேட்னு கேட்டா என்ன சொல்றது..
நாகேஷ் பேசற வசனத்துக்காகன்னு சொல்லலாமா..
இல்லை கதையின் போக்குக்காகன்னு சொல்லலாமா...
வேற எதுக்காகன்னு கேட்டா நான் என்னத்தை சொல்றது..
சரி அதை விடுவோம்...
பாட்டு சூப்பர் ஹிட்.... படம் எப்படி ...
படமும் சூப்பர் ஹிட்டாச்சே... கெயிட்டியில் ஹவுஸ்ஃபுல்லாகப் போச்சே..
எல்லாம் அந்த இங்கிலீஷ் முதல் எழுத்து செஞ்ச வேலை...
பாட்டும் சூப்பர் ஹிட்டாச்சே
வேறென்ன நினைவு ... ஆஹா அருமையான பாடல்...
புத்தம் புது மேனி ... பாலமுரளி குரலில் நம்மைக் கட்டிப் போட்டு விடுமே...
போதும் போதும் ஓவர் டூ வாசு சார்...
vasudevan31355
31st October 2015, 08:57 PM
சூப்பராக கண்டு பிடித்து விட்டீர்கள் சார். கிரேட். சின்னாவைக் குறி வைத்த கேள்வி. என்னா கிறங்கடிக்கும் ஒரு வாய்ஸ்! வசந்தா, ரமோலா, கௌசல்யா இவுங்கல்லாம் ஹம்மிங் கொடுத்து ஹக்கிரமம் பண்றதுக்குன்னே பொறந்த குயில்களோ? கௌசல்யா இமேஜ்தான் பார்க்கணும். 'கெட்டிக்காரி'யின் போட்டோ வேண்டுமே! எட்டு நாளிலே கிடைக்குமா?
vasudevan31355
31st October 2015, 09:07 PM
//மாதவி பத்திச் சொல்லிட்டு பக்கெட் போடாம இருந்தா எப்படி? //
அந்தத் தெய்வமே கலங்கி நின்னா
சென்சார் போர்டு ஆபிஸரே மாதவி பக்கெட் கேக்குறாரு. ஹய்யோ! ஹய்யோ!
சென்சார் போர்டு ஆபிஸரை மறுபரிசீலினை பண்ணனும் ராகவேந்திரன் சார். சின்னா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.
chinnakkannan
31st October 2015, 09:10 PM
ஆதிராம் சார்..
வழக்கம் போல் தகவல்கள் தகவல்கள்.. இதில் நீர் எங்களைப் பாராட்டுகிறீர்கள்..உம்மை எப்படிப் பாராட்டுவது..
குக நாதன் ஜெயா ஜோடி என்பது தெரியும்.. இன்ஃபேக்ட் தொண்ணூறுகளில் என் சகோதரியின் கணவர் அரசு வங்கியில் மேலாளராக இருந்த போது – நுங்கம்பாக்கம் கிளையோ, ஆயிரம் விளக்கு கிளையோ நினைவிலில்லை – திருமதி ஜெயா பணம் வித்ட்ரா செய்ய வந்தார்களாம்.. ச.கணவரிடம் வரவில்லை..பட் அங்கு வேலை பார்த்த காஷியர் வந்து சொன்னாராம்..ச.க வுக்கு இண்ட்ரெஸ்ட்லாம் இல்லை..தவிர யார் என்பதும் தெரியாது எனில் பார்க்கவெல்லாம் இல்லை.. பட் விடுமுறையில் சென்றிருந்த போது தமிழ் சினிமா தக்குணுண்டு தகவல் களஞ்சியமான (அப்பப்ப சொல்லிக்கணும் ) என்னிடம் ஜெயா யாரு எனக் கேட்டுவிட்டு இந்த விஷயம் சொன்னார்..
தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.. அனுஷ்கா பற்றி பிறிதொரு சமயம் எழுதலாம்..இ.இ. வ ந்தபின்பு.. ஓகேயா..
மூங்கில் மரக் காட்டினிலே கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்..
நாதமில்லை என்றால் கீதம் கிடையாது
ராகமில்லை என்றால் தாளம் கிடையாது
காதல் இல்லையென்றால் உலகம் கிடையாது
காதல் இல்லையென்றால் உலகம் கிடையாது
கண்கள் இல்லையென்றால் காட்சியும் கிடையாது
கண்கள் இருந்தென்ன காட்சியும் இருந்தென்ன
கொஞ்சும் மொழியில்லை குறிப்பும் தெரியவில்லை
பிஞ்சும் காயாகும் காயும் கனியாகும்
கனியில் சுவையிருக்கும் காலம் வந்தால் பலன் கொடுக்கும்
https://youtu.be/qoc8KkWUg28
சீர்காழி பிஎஸ் பாட்டு உங்களால் இப்போது தான் கேட்டேன் பார்த்தேன்..கல்யாண்குமார் இளமை..கூடவே குறுகுறு விழிப் பாவை சாயலுக்கு ஜெயந்தி, பத்மினி கொண்டிருக்கிறார்..சொல்ல மாட்டாங்களா என்ன..
இனிய பாட் சொன்னதற்கு நன்றி..
chinnakkannan
31st October 2015, 09:13 PM
*
வாசு.. கர்ணன் படத் தொடர் அமர்க்கள ஆரம்பம்.. ராகவேந்தரும் சேர்ந்துகொள்ள ஜூகல் பந்தியாய் ஆகிவிட்டது..
ஃப்ராங்க்கா சொல்லப் போனா, கர்ணன் ஒளிப்பதிவுசெய்த படங்கள் சில பார்த்திருப்பேனே அன்றி அவர் ஃபேமஸாகச் சொல்லப் பட்ட (?!) ஜம்பு,கங்கா பார்த்ததில்லை..ஜெ.மா (ஜெயமாலினி இல்லீங்க்ணா) ஜெயமாலா(தானா) (அல்லது ராஜ் கோகிலாவா..)வையும் திரையில் பார்த்ததில்லை..பட் கேள்விப் பட்டிருக்கிறேன். அதீத கவர்ச்சி என..
//செங்கல்பட்டு மலை உச்சியில் சண்டை போடும் ஹீரோவும், வில்லனும் அடுத்த நிமிடம் காஷ்மீர் பனி மலையின் மீது சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்// இது சகஜம் தானே
//ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது
எல்லோரும் கவிஞர்களே// இந்த வரிகளுக்கு மதுண்ணாவின் இருவரிக் குரல்/குறள் வேண்டும்.. :)
தேவைக்கு மேலே சேமித்த செல்வம் ஏழை அடைய வேண்டும்'// குறும்புக்காரப் பாடலாசிரியர் அண்ட் வாசு அடுத்த வரியில்வாங்க பழகலாம்ங்கறாங்க கேட்டீங்களா..
மாணிக்கம் வைரம் மரகதம் எல்லாம் அங்கம் எங்கும் உண்டு.. மரகதம் பச்சை தானே..ஏன் இப்படி ப் பச்சையாப் பேசுது இந்தம்மா..
//புகுந்து விளையாடும். பாடலும் அருமை. நமக்கு அதுதானே வேண்டும்?// அதே.. ரசித்துக் கேட்டேன்.. தாங்க்ஸ்
அடுத்து ராகவேந்தர்.. கங்கா கர்ணன் சீனுக்கு நன்றி..ஆனால் நீங்கள் சொன்ன நீலவானம் எழுத்தில் பார்த்திருக்கிறேன் என நினைவு.. அந்தப் பாட் கர்ணன் ஆஹா..ஓஹோ ஓடும் எண்ணங்களே..என் மிக ஃபேவரிட்..
//Naan Ninaichen neengal sollivitirgal. Mr C K - the chairman of censor board for the karnan short series.// பூனை கையிலேயே ப்ரிட்ஜ் முழுக்கப் பால் பாக்கெட் கொடுத்து ப்ரிட்ஜ் லாக் பண்ணிச் சாவி கொடுத்தா என்னா நியாயம்.. எஸ்,வாசுதேவன்..அதுக்கு நெய்வேலிவாசுவும் ஏகப்பட்ட ஐகான்களோடு குதிக்கறார்.. பட் ஒண்ணு சொல்லிக்கறேன்.. நான் கடமை தவற மாட்டேன்..:)
//மஹாபாரத கர்ணனை அந்த கண்ணன் தர்மத்தை வாங்கிக் கொண்டு மாட்டி விட்டான்... இன்று கர்ணனால் சின்னக் கண்ணன் ம்ம்ம்மாட்டி கிட்டாரு... !!
அதே அதே// அடடா என்னா சந்தோஷம்ப்பா உங்களுக்கு..
*
//மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்க'// வாஸ்ஸூ பாவம் ஏழைப்ரொட்யூஸர் எடுத்த பாடல் போட்டுப் புண்ணியம் தேடிக் கொள்கிறீர்கள்..பின்ன ஆடுகிற சைலண்ட்ஸ்ரீக்கு கிழிசலாடை கொடுத்திருக்கிறாரே..
ஹப்பாடி அது பாடகி கெளஸல்யா என ராகவேந்தர் சொன்னாரோ.. நான்பிழைச்சேனோ..
பட் பாட் சுமார் தான்..
*
அழகிலே கனிரசம் பாட் கேட்டிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்..தாங்க்ஸ் ராகவேந்தர் .
*
ஆனாக்க இடையில் என்ன நடக்கிறது – அதாவது திரியின் இடையில் எனப் பார்க்கவந்தால் சுபதின டீடெய்ல்ஸ்கொடுத்திருக்கிறீர்கள்..ஏஏ ப் படமா..ஏனாம்.. மிக்க நன்றி.. அப்புறம் முகூர்த்த நாள் அப்லோட் பண்ணிட்டீங்களா.. தேடினால் கிடைக்குமா..
*
சின்னாவைக் குறி வைத்த கேள்வி// இது எங்களுக்குத் தெரியாதாங்காட்டியும்.. :) அதான் மேலேயே - இதைப் படிக்கிறதுக்கு முன்னமேயே - எம் எஸ் வேர்ட்ல நான் தப்பிச்சேன்னு டைப்பண்ணிட்டோம்ல.. :)
vasudevan31355
31st October 2015, 09:19 PM
ஜி சொல்லியிருந்த, அதாவது 'கண்கண்ட தெய்வம்' 'கன்னுக்குட்டி... கன்னுக்குட்டி' பாடல் புகழ் விஜயராணி என்ற அழகு நடிகை எம்.ஜி.ஆர் அவர்களின் காவல்காரன் படத்தில் நாகேஷ், என்னத்தே கண்ணையா, அம்முக்குட்டி புஷ்பமாலா இவர்களுடன் நர்சாக காமெடி ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கீழே விஜயராணி இமேஜ் காவல்காரனில்.
http://i.ytimg.com/vi/ULzUrxb9uk0/hqdefault.jpg
https://i.ytimg.com/vi/o28E_7U7NnE/hqdefault.jpg
vasudevan31355
31st October 2015, 09:23 PM
//சீர்காழி பிஎஸ் பாட்டு உங்களால் இப்போது தான் கேட்டேன் பார்த்தேன்..கல்யாண்குமார் இளமை..கூடவே குறுகுறு விழிப் பாவை சாயலுக்கு ஜெயந்தி, பத்மினி கொண்டிருக்கிறார்..சொல்ல மாட்டாங்களா என்ன..//
சின்னா!
இந்தப் பாட்டைப் பத்தியும், அந்த நடிகை பத்தியும் நம்ம மதுர கானங்ள்ல பிரிச்சி மேய்ஞ்சாச்சு. லேசா ஞாபகப்படுத்துறேன். 'சபாஷ் மீனா' 'சபாஷ் மாப்பிள்ளை' ஆணழகி மாலினி. இப்போ உங்க நினைவுக்கு வந்து விடும். ரொம்ப மறக்கறீங்க.:)
vasudevan31355
31st October 2015, 09:24 PM
ஜெயமாலா(தானா)
ம்.
RAGHAVENDRA
31st October 2015, 09:26 PM
சுபதினம் ... ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும்..
முழுக்க முழுக்க நாகேஷுக்கான படம்... கல்யாண ஊர்வலத்திற்கு ஈடாக தூள் கிளப்பியிருப்பார்.. ஒரு மனிதன் மொத்தப்படத்தையும் தாங்கிப் பிடித்திருப்பார்..
எனக்கு மிகவும் பிடித்த பாட்டென்றால்...
சர்தான் போய்யா...
இருங்க.. இருங்க... உங்களை சொல்லவில்லை...
பாட்டில் வரும் வரியாக்கும்...
பொழுது விடிஞ்சா ரோதனையைத்தான் பாக்குறோமே கேக்குறோமே சர்தான் போய்யா..
நாகேஷ் படம் முழுதும் மெட்ராஸ் பாஷை பேசுவார்.. கண்டபடி பேசுவார்...பாட்டும் பாடுவார்...
ஆனால் மனுஷன் அதிலேயும் அந்த உணர்வு பூர்வமான காட்சிகளில் படத்தைத் தோளில் தாங்கி விடுவார்...
vasudevan31355
31st October 2015, 09:29 PM
//இதைப் படிக்கிறதுக்கு முன்னமேயே - எம் எஸ் வேர்ட்ல நான் தப்பிச்சேன்னு டைப்பண்ணிட்டோம்ல..//
இதுல எல்லாம் செம சாமர்த்தியம்.:)
chinnakkannan
31st October 2015, 09:30 PM
//சென்சார் போர்டு ஆபிஸரே மாதவி பக்கெட் கேக்குறாரு. ஹய்யோ! ஹய்யோ!// ஹச்சோ ஹப்படியா.. அப்ப்டின்னா என்கு வேண்டாம். மறுபடி சொல்றேன் நான் க த மா.. :) (எஸ்.வாசு நான் உமக்கு என்ன த்ரோஹம் செய்தேன்:sad: :) )
//ஆணழகி மாலினி. இப்போ உங்க நினைவுக்கு வந்து விடும். ரொம்ப மறக்கறீங்க// ஆமாங்க ஆமாம்.. ஸாரி
chinnakkannan
31st October 2015, 09:34 PM
//இதுல எல்லாம் செம சாமர்த்தியம்// நெசம்மா நம்புங்க.. நான் மொதல்லயே போட்டிருந்தேன்..அதுக்குள்ற நீங்க எழுதிட்டீங்க..( நான் செகப்பா இல்லாட்டியும் பொய் சொல்ல மாட்டேன் :) )
சுபதினத்துக்கு இப்படி ட்ரெய்லரா விட்டுக்கிட்டிருந்தா எப்படி..என்னவாக்கும் கதை..அப்பத் தானே நான் கோவிலுக்குப் போக முடியும்..ம்ம் அடுத்த படத்துப் பட்டி தொட்டிப் பாட்டு..( கண்டுபிடிங்க பாக்கலாம்)
vasudevan31355
31st October 2015, 09:44 PM
//சுபதினத்துக்கு இப்படி ட்ரெய்லரா விட்டுக்கிட்டிருந்தா எப்படி..என்னவாக்கும் கதை//
இன்னும் 'முகூர்த்த நாள்' கதையே முடியலையே சின்னா! அப்புறம்தான் சுபதினம். நீங்க நம்ப மாட்டீங்க. நான் இன்னும் பார்க்கல. ஆனா பாட்டுல்லாம் தண்ணி பட்ட பாடு.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.