PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14

chinnakkannan
17th October 2015, 09:28 AM
திருப்பங்கள் நு ஒரு படம்..அதுல ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன் நு பாட் கேட்டேன்..எஸ்.பி.பி வாணிங்கறதால போடலை.. பட் அது இன்னா படம்..ஆக்ட் கொடுத்தவுக யாரு...டீடெய்ல்ஸ் ப்ளீஸ் :)

vasudevan31355
17th October 2015, 09:28 AM
சின்னா!

ஆதிராம் போல எழுத முயற்சித்து நடுவில் நீங்களாய் வந்து மாட்டிக் கொண்டீரே. பாவமய்யா நீங்கள்.

ஆதி பரவாயில்லை. உம்மை மாதிரியே எழுத முயன்று பாதி தேறினார்.

ஆனால் ஒன்று. நீர் இளைத்தால் நல்லாயிருக்க மாட்டீர். ஆதி குண்டானால் நல்லாயிருக்க மாட்டார். (ஆனால் ஆதியை நான் இதுவரை பார்த்ததில்லையே... ஏன் உம்மையும்தான்.):)

chinnakkannan
17th October 2015, 09:33 AM
//ஆதி பரவாயில்லை. உம்மை மாதிரியே எழுத முயன்று பாதி தேறினார்.// ஓய் இந்த வம்பு தானே வேணாங்கறது.. அவர் ரொம்ப ஜாஸ்தி ‘புகை’ விட்டார் :) ஹப்புறம் டூயட் பாட் எழுதறப்ப ஆதி மாதிரி சீரியஸ்ஸா ஆக்டர் டைரக்டர் அப்புறம் புள்ளி விவரம்லாம் கொடுக்க எனக்குத் தெரியாது.. தெரிந்ததெல்லாம் இயற்கைக்காட்சி + ஹீரோயின் அழகு :)

500 என்ன ஆயிரமே உம்மால் முடியும் வி வில் வெய்ட் ஃபார் தட்..

chinnakkannan
17th October 2015, 09:36 AM
வாங்க ராகதேவரே.. நலமா :)

மண்ணில் இந்தக் காதலன்றி மூச்சு விடாமல் பாடிய பாடல்னு சொன்னாலும் மூச்சு விட்டுத்தான் பாடுவேன் என்று எஸ்.பி.பி சொல்லியிருக்கிறார்.. பட் எனக்கு சர்ப்ரைஸ் அந்தக் காலகட்டத்தில எப்படி இருந்ததுன்னா - அது கங்கை அமரன் எழுதினதுன்னு தெரிஞ்சப்ப.. நைஸ் ஸாங்க்.. தாங்க்ஸ்..

நீங்க இருந்தா காத்திருந்த மல்லி மல்லி பாட் போட்டிருப்பீங்க அமிர்த வர்ஷினில்லன்னு நினைச்சுக்கிட்டேன் நேத்து :)

chinnakkannan
17th October 2015, 09:44 AM
சரி காலங்கார்த்தால சுறுசுறுப்பா ஒருபாட் கேக்கலாம்..ஓ காரணம் சொல்லணுமா.. ஸாரி பாட்ங்க..:)

https://youtu.be/MdRvX69mPw4

rajeshkrv
17th October 2015, 09:50 AM
சின்னா!

வெடுக் வெடுக் கென்று பேசி சிரிக்க வைத்த அந்தக்கால சி.தி.ராஜகாந்தம்,

பார்த்தவுடனே சிரிக்க வைக்கும் அங்கமுத்து

ஆச்சிக்கு காமெடியில் ஈடான காந்திமதி

தேன் கிண்ணம் போன்ற சில படங்களில் காமெடி வழங்கிய விஜயசந்திரிகா

அப்புறம் ஹீரோயின் பட்டியலிலிருந்து மாறி பக்கென்று சிரிக்க வைத்த

ஈவி.சரோஜா (நிறையப் படங்களில் தங்கவேலு, சந்திரபாபுவுடன். அப்புறம் கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணி தோழிகளுடன் சேர்ந்து விரட்டி குத்துப்பாட்டு. பாதிப் பாட்டு முடிந்தவுடன் கதாநாயகன் கடுப்பாகி அதே பாட்டைப் பாடி இவரை விரட்டுவார். )

நம்ம பத்மினியின் தங்கை ராகினி உத்தம புத்திரனில்

நான் சொல்லும் ரகசியம் மாதிரி சில படங்களில் காமடியில் கொடி கட்டிய ஜி.சகுந்தலா குறிப்பா உயர்ந்த மனிதன்

அப்புறம் என் அண்ணன், பணம் படைத்தவன் படங்களில் கீதாஞ்சலி

நிறையப் படங்களில் குள்ள வனிதா

பாக்கியராஜின் ஆஸ்தான சரஸ்வதி

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட அற்புதமான காமடி நடிகை ஷோபனா (வடிவேலுடன் ஒரு படத்தில் குறத்தியாக வருவார்)

இப்போ அதிகமாக மல்லு ஷகீலாவும் நகைச்சுவை செய்கிறார்.

புரொபெஷனலா இவங்கல்லாம் ஆச்சி மாதிரி நகைச்சுவை நடிகைகள் இல்லையென்றாலும் நம்மை நன்கு சிரித்த வைத்தவர்களே

இன்னும் இருக்கு.

அம்முக்குட்டி கூட

ஊர்வசியின் அக்கா கல்பனா எல்லோருமே நல்ல நகைச்சுவை நடிகைகள் தான்

வாசு ஜி என்ன சொல்லுங்க எனக்கு முத்துலெட்சுமி ரொம்ப பிடிக்கும்

vasudevan31355
17th October 2015, 09:53 AM
வாங்க ராகதேவரே.. நலமா :)

அது கங்கை அமரன் எழுதினதுன்னு தெரிஞ்சப்ப.. நைஸ் ஸாங்க்.. தாங்க்ஸ்..



அது இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாட்டுதானே சின்னா!

rajeshkrv
17th October 2015, 09:53 AM
வணக்கம் ஜி

இதோ எங்க ஊர் கண்ணகியின் தெலுங்கு வடிவம்
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்

https://www.youtube.com/watch?v=hkzD1a5Zg6E

vasudevan31355
17th October 2015, 09:56 AM
//எனக்கு முத்துலெட்சுமி ரொம்ப பிடிக்கும்//

எனக்கும் ரொம்பப் பிடிக்குஜி! ரொம்ப இயற்கையா அலட்டலே இல்லாம வெடுக்குன்னு பேசி எக்ஸ்பிரஷன்ஸ் தருவாங்க.

rajeshkrv
17th October 2015, 09:58 AM
ஜந்த்யாலா .. அருமையான படங்கள் கொடுத்தார்
அபப்டி ஒரு படம்
நாலுகு ஸ்தம்பாலாட்டா

ராஜன் நாகேந்திராவின் இசையில் பாலுவும் இசையரசியும் பாடும் அருமையான பாடல்

https://www.youtube.com/watch?v=zJ1vLDQNbos


இந்த டியூனை நதீம் ஷ்ராவன் அப்படியே தூக்கிவிட்டனர் ஹிந்தியில்
ரிஷிகபூர் திவ்யபாரதி நடித்த தீவானாவின் போட்டு பேரும் வாங்கிவிட்டார்

https://www.youtube.com/watch?v=fsYJV47FFcc

vasudevan31355
17th October 2015, 10:04 AM
அதத்தான் எண்ணி சிரிச்சேன்

அப்புறம் வரும் வரி சின்னாவுக்கு:)

---கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே:)

chinnakkannan
17th October 2015, 10:25 AM
அது இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாட்டுதானே சின்னா!

இல்லீங்கோவ்.. படத்துல பாவலர் வரதராஜன்னுசொல்வாங்க.. பட் ஒரு இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி சொன்னார் கங்கை அமரன் எழுதினதுன்னு.. அதைக் கன்ஃபர்மும் பண்ணிக்கிட்டேன்..

மெதுவாக மெதுவாக வே புரியலையே

டி.பி முத்துலட்சுமி.. அதான் தெரியுமே தானே..

முன்னாடியே ஒரு நகைச்சுவைக் காட்சி பற்றி எப்பவோ கேட்டிருந்தேன்..இங்கயா வேற எங்கன்னு நினைவில்லை..

மியூசிக் டைரக்டர் கிட்ட சிச்சுவேஷன் சொல்றார் ஒருத்தர்

தசரதன் செத்துப் போய்ட்டார் மக்கள்லாம் அழறாங்க

மியூசிக் டைரக்டர் கண் மூடி உள்வாங்கி.. ஹே ஹே தசரதா ஹோ ஹோ தசரதா எனப் பாட்டுக் கொடுக்க..ப்ரொட்யூஸர் .. நல்லாத்தான் இருக்கு ஆனா தசரதர் போனதுக்கு மக்கள்லாம் சந்தோஷமாயிட்டாப்ல இருக்கே

சரி என்று விட்டு ஓஓஓஒ தஸ்ஸ ரத்தா...ஆஆஆ தஸ்ஸா ரதா என ப் பாட எல்லாருக்கும் அழுகை வருகிறது..இது ரொம்ப உருக்கமால்ல இருக்கு என்பார் ப்ரொட்யூஸர்..

இது எந்தப் படம்..இதை ஆடியோவில் சிலோன் வானொலியில் மட்டும் கேட்டிருக்கிறேன்..

rajeshkrv
17th October 2015, 11:02 AM
ஜி
இதோ தூங்க போகும் முன் உமக்காக ஒரு கன்னட பாடல்

ஓ முகிலே பெள் முகிலே

https://www.youtube.com/watch?v=TYoQQBtC_G8

rajeshkrv
17th October 2015, 11:11 AM
இல்லீங்கோவ்.. படத்துல பாவலர் வரதராஜன்னுசொல்வாங்க.. பட் ஒரு இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி சொன்னார் கங்கை அமரன் எழுதினதுன்னு.. அதைக் கன்ஃபர்மும் பண்ணிக்கிட்டேன்..

மெதுவாக மெதுவாக வே புரியலையே

டி.பி முத்துலட்சுமி.. அதான் தெரியுமே தானே..

முன்னாடியே ஒரு நகைச்சுவைக் காட்சி பற்றி எப்பவோ கேட்டிருந்தேன்..இங்கயா வேற எங்கன்னு நினைவில்லை..

மியூசிக் டைரக்டர் கிட்ட சிச்சுவேஷன் சொல்றார் ஒருத்தர்

தசரதன் செத்துப் போய்ட்டார் மக்கள்லாம் அழறாங்க

மியூசிக் டைரக்டர் கண் மூடி உள்வாங்கி.. ஹே ஹே தசரதா ஹோ ஹோ தசரதா எனப் பாட்டுக் கொடுக்க..ப்ரொட்யூஸர் .. நல்லாத்தான் இருக்கு ஆனா தசரதர் போனதுக்கு மக்கள்லாம் சந்தோஷமாயிட்டாப்ல இருக்கே

சரி என்று விட்டு ஓஓஓஒ தஸ்ஸ ரத்தா...ஆஆஆ தஸ்ஸா ரதா என ப் பாட எல்லாருக்கும் அழுகை வருகிறது..இது ரொம்ப உருக்கமால்ல இருக்கு என்பார் ப்ரொட்யூஸர்..

இது எந்தப் படம்..இதை ஆடியோவில் சிலோன் வானொலியில் மட்டும் கேட்டிருக்கிறேன்..

முத்துலெட்சுமி செய்யாத வேடமில்லை
பாரடி கண்ணே கொஞ்சம் பாடலுக்கு முன் எல்லோரையும் வரவேற்பார் . அந்த 2 நிமிடத்திலேயே நகைச்சுவை கொட்டும்
வாங்கோ வாங்கோ எங்களுக்கு ஆதரவு தாங்கோ தாங்கோ

vasudevan31355
17th October 2015, 02:13 PM
மதுண்ணா!

என்னை ரொம்பவும் கவர்ந்த பாடல். பல சிறப்புக்கள் கொண்டது.

'சத்தியம் தவறாதே' படத்தில் அதே தலைப்பை பல்லவியின் முதல் வார்த்தையாகக் கொண்டு பாடல் ஆரம்பிக்கும்.

அடடா! இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. என் உள்ளத்தில் தனி இடம் பிடித்த பாடல். ஷோசலிஷக் கருத்துக்களை மிக எளிமையாக எடுத்துரைக்கும் பாடல்.

'மாஸ்டர்' ஸ்ரீதர் மெரினாவில் சுண்டல் விற்றுக் கொண்டே பாட, வெகு சிம்பிளாக, பாடலுக்குத் தோதாக கொட்டாங்கச்சி வயலின் இசைக்கு ஜெயகுமாரி பாவாடை, தாவணியுடன், வறுமையைக் காட்டும் கட்டங்கள் போட்ட ஜாகெட் அணிந்து, குப்பத்துப் பெண்ணாக உடம்பை வளைத்து ஆடுவார். சி.என்.பாண்டுரங்கனின் அற்புதமான இசைப் பின்னணி. பெருந்தலைவர், பேரறிஞர், ஔவை, கண்ணகி, மகாத்மா சிலைகள் என்று பாடல் முழுதும் கடற்கரையில் உள்ள சிலைகளின் மத்தியிலேயே நகரும்.

பாடலின் இடையில் வரும் 'தானே தந்தனா... தனே தந்தனா' என்று ஒலிக்கும் கிராமப் பின்னணி குரலும் இசையும் அப்படியே 'பாகப்பிரிவினை'யின் 'தாழையாம் பூமுடிச்சி' பாடலை அச்சு அசலாக ஒத்திருக்கும்.

'களை எடுக்காத பயிர் போலே
கடற்கரையில் கூடுது கூட்டம்'

என்னும் அருமையான உதாரணம்.

மீன் பிடிக்க கட்டுமரத்தில் பயணிக்கும் மீனவனுக்கு காற்று பலமாக, அதுவே புயலாக வீசினால் தொந்தரவு...அதனால் அவன் வாட்டமடைவான்' என்பதை அழகாக பாட்டில்

'கட்டுமரத்தை நம்பும் மனிதருக்கு
காற்று வீசினால் வாட்டம்
புயல் காற்று வீசினால் வாட்டம்'

என்று விளைக்கியிருப்பார் பாடலாசிரியர். (யார்?... சுரதாவா?)

சூரியன், மழை, காற்று இவை எல்லாம் தெய்வம் தந்த சோஷலிசமாம் ! ஆனால் நாட்டை சுரண்டும் கூட்டத்திற்குப் பெயர் 'டோட்டலிச'மாம்.:) என்ன அழகான நிஜமான விளக்கம்!

ஆனால் எப்போது நிலைமை சரியாகுமாம்? குனிந்து கிடக்கும் ஏழை துடித்தெழுந்தால் சமரசம் கிடைத்து விடுமாம்.

'தாய் நாட்டை மறக்கக் கூடாது...சத்தியம் தவறக் கூடாது...தன்மானத்தையும் இழக்கக் கூடாது....எவர் உரிமையையும் தட்டிப் பறிக்கக் கூடாது' என்று அம்சமான அறிவுரைகள் கொண்ட கருத்துப் பாடல்.

பாடலைப் பாடியவர் யார் என்பது பெருங்குழப்பம். ஒரு இணையதளத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்று படித்த ஞாபகம். ஆனால் கண்டிப்பாக 'பாப்பா' இல்லை.

ஆனால் டைட்டிலில் பிரேமா என்று ஒரு பெயர் போடுவார்கள். அவராகத்தான் இருக்குமோ என்று ஒரு சந்தேகம். ஆனால் இவரை சுத்தமாகத் தெரியாது. 'தானே தந்தனா' தருவது பொன்னுசாமி என்று நினைவு.

எல்லாவற்றுக்கும் மேலே மிகப் பாடலுக்குப் பொருத்தமான அந்த பிஞ்சுக் குரல் நெஞ்சைச் சுண்டித்தான் இழுக்கிறது. மறப்பதற்கு வெகு நேரம் பிடிக்கிறது.

'மாஸ்டர்' ஸ்ரீதரின் மாறாத அலட்டலில்,

சுண்டல்...சுண்டல்...

சத்தியம் தவறாதே
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
தட்டிப் பறிக்காதே தன்மானம் இழக்காதே
உரிமையைத் தட்டிப் பறிக்காதே
தன்மானம் இழக்காதே

(சத்தியம் தவறாதே)

களை எடுக்காத பயிர் போலே
கடற்கரையில் கூடுது கூட்டம்
ஓ...........ஓ
களை எடுக்காத பயிர் போலே
கடற்கரையில் கூடுது கூட்டம்
கட்டுமரத்தை நம்பும் மனிதருக்கு
காற்று வீசினால் வாட்டம்
புயல் காற்று வீசினால் வாட்டம்

(சத்தியம் தவறாதே)

சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோஷலிசம்
சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோஷலிசம்
நாட்டை சுரண்டும் கூட்டம்தான் டோட்டலிசம்
ஏழை துடித்தெழுந்தால் வரும் சமரசம் (சத்தியம்)

(சத்தியம் தவறாதே)

ஊருக்கு உழைப்பவன் யாருங்க ஓ.....ஓ.....ஓ....

(மகாத்மா காந்தி சிலையைக் காட்டிவிட்டு)

ஊருக்கு உழைச்சவன் பாருங்க
இங்கு ஊரை ஏய்ப்பவனும் உண்டுங்க
சிறுவன் சொல்வதை கேளுங்க
நீங்க சிந்தனை செய்து பாருங்க
சுண்டலை கொஞ்சம் வாங்குங்க

(சத்தியம் தவறாதே)

மதுண்ணா!

ஒரு ஜோக். ஒரு இணையத்தில் இப்பாடலின் வரிகளைக் கொலை செய்து வைத்திருந்தார்கள் வழக்கம் போல. அதில் முக்கியமான ஒன்று.

'ஏழை துடித்தெழுந்தால் வரும் சமரசம்' என்னும் வரிகளை மாற்றி,

'ஏழை குடித்திருந்தால் வரும் சமரசம்':)

என்று போட்டார்களே ஒரு போடு!:)

தெரிந்து எழுதினார்களோ... தெரியாமல் எழுதினார்களோ.... இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. அதில் உண்மையும் இருக்கிறது.:)

இந்தப் பாட்டின் ஆடியோ, வீடியோ கேட்க, பார்க்க ஆவலாய் இருக்கிறேன். நண்பர்கள் ப்ளீஸ்.

Russellmai
17th October 2015, 02:37 PM
தமிழ் காமடி நடிகையர் பட்டியலில் விடுபட்டவர்கள்
டி.ஏ.மதுரம்
ரமா பிரபா
கோவை சரளா
குமாரி சச்சு

vasudevan31355
17th October 2015, 03:02 PM
//மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!//

மீன்ஸ் தமிழ் சினிமாவில் நடித்த நகைச்சுவை நடிகைகள்..

சின்னதாய் லிஸ்ட் போட்டால்

டி.ஏ.மதுரம் - என் எஸ் க்ருஷ்ணன் - திரு நீலகண்டர்

நாகேஷ் - மாதவி - ( அதே கண்கள்)

மனோரமா

கோவை சரளா

நாகேஷ் சச்சு கா. நே

நாகேஷ் ரமாப் ப்ரபா - உ.இ. உ வா..

வெண்ணிற ஆடை மூர்த்தி - அந்தக் கூழாங்கல் மின்சார மோகினி - வெண்ணிற ஆடை படம் (பெயர் மறந்துவிட்டது)



மதுமிதா ( ஒருகல் ஒரு கண்ணாடி)

வேற யார் லாம் இன்பெட்வீன் இருக்காங்க..

ஓ. தங்கவேலு சரோஜா
தங்கவேலு - முத்துலட்சுமி (அதான் தெரியுமே)

இவங்க தான் அத்தை நமஸ்காரம் பண்ணிக்கம்மா..என நாகேஷ் சொல்ல அத்தை தொபீல் என விழ தியேட்டர் அலறும் - கலாட்டா கல்யாணம் - அவர் பெயர் மறந்து விட்டத்..

வேறு யாராக்கும் இருக்காங்க..

கோபு சார்,

விடுபடவில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலை சின்னா அழகாக முன்னமேயே தந்து விட்டாரே. நீங்கள் பார்க்கவில்லையா?

adiram
17th October 2015, 03:02 PM
வாசு சார்,

வீடியோவும் இல்லாமல் ஆடியோவும் இல்லாமல் எப்படி இவ்வளவு சுத்தமாக பாடல் வரிகளை டைப் செய்தீர்கள்?. பாட்டுப்புத்தகம் உதவி?.

மாஸ்ட்டர் ஸ்ரீதர் என்றால் எனக்கும் எப்போதும் பயம். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறத்தி மகனின் 'அஞ்சாதே நீ அஞ்சாதே' பாடலில் ஸ்ரீதர் உடன் கோணவாய் ஜெயசித்ராவை பார்த்து நொந்து போனேன். இரண்டுமே அலட்டல் கேசுகள்.

பாடல் வரிகள் கொலைபற்றி படித்ததும் சில நாட்களுக்கு முன் முகனூலில் ஒருவர் தில்லானா மோகனாம்பாள் பற்றி எழுதியிருந்த வரிகளும், படித்துவிட்டு நான் வயிறுவலிக்க சிரித்ததும் நினைவு வந்தது. அவர் எழுதியது..

' "மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்ற படம்'.

chinnakkannan
17th October 2015, 03:19 PM
//உடன் கோணவாய் ஜெயசித்ராவை // அவங்க உணர்ச்சி வசப்பட்டா மட்டும் தான் வாய் கோணுவார்..என்று ஆன்றோர்கள் சொல்வார்கள் :)


//"மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" // :)

adiram
17th October 2015, 03:59 PM
காமெடியில் கலக்கிய கதாநாயகியர் பட்டியலில் 'தில்லுமுல்லு' சௌகாரை மறந்தது ஏனோ.

Russellmai
17th October 2015, 04:47 PM
வாசு சார்,
மறதி அதிகமாகி விட்டது.
அன்புடன் கோபு.

vasudevan31355
17th October 2015, 06:43 PM
வாசு சார்,

வீடியோவும் இல்லாமல் ஆடியோவும் இல்லாமல் எப்படி இவ்வளவு சுத்தமாக பாடல் வரிகளை டைப் செய்தீர்கள்?. பாட்டுப்புத்தகம் உதவி?.

'.

ஆதி சார்,

பாட்டுப் புத்தகம் இருந்திருந்தால் முதலில் அதைப் பதித்திருப்பேனே! ஆதி முதலே அந்தப் பாடல் எழுத்துக்கு எழுத்து மனப்பாடம்.:) நான்கு வருடங்களுக்கு முன்' விஜய்' தொலைக்காட்சியில் 'சத்தியம் தவறாதே' முழுப் படமும் பார்த்தேன். அப்போது 'முத்துக் குளிப்பவரே' பாடல் மட்டும் ரிகார்ட் செய்தேன். மற்ற பாடல்களை துரதிருஷ்டவசமாக ரிகார்ட் செய்யாமல் மடத்தனம் செய்து விட்டேன். (அப்போது 'மதுர கானங்கள்' தொடங்கவில்லை) அதற்குப் பிறகு இப்படத்தை போட்டார்களா என்று தெரியவில்லை. இப்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய படம் போடுவதையே நிறுத்தி விட்டு அந்த சேனல் முழுநேரமும் ஆள் செலெக்ட் செய்யும் டிவி ஆகி விட்டது.:) இவர்கள் நிறைய பழைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய! அதற்கு முன்னர் தியேட்டரிலும் இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அதுவும் 'முத்துக் குளிப்பவரே' பாடலும், 'சத்தியம் தவறாதே' பாடலும் சிறுவயதிலேயே நெஞ்சில் நிலைத்து விட்டன. காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. பின் ரவி திரிக்காக இணையத்தில் நான் தரவேற்றிய (தரவேற்றிய நாள் Dec 19, 2011) 'முத்துக் குளிப்பவரே' பாடல் தவிர இப்படத்தின் வேறு வீடியோ இருப்பதாகத் தெரியவில்லை. அதன் பிறகு வேம்பார் மணிவண்ணன் அவர்கள் அப்பாடலை இந்த வருட ஆரம்பத்தில் 'யூ டியூபி'ல் தரவேற்றியிருந்தார். அவரும் இப்படத்தின் வேறு பாடல்களை தரவேற்றியிருக்கிறாரா என்று தேடினால் அதுவும் இல்லை. ம்...பார்ப்போம். கிடைக்காமலா போய் விடும்?

'முத்துக் குளிப்பவரே' பாடல் பற்றி ரவி திரியில் நான் எழுதிய பதிவுக்கான லிங்க். அதைப் பற்றி கார்த்திக் சார் கூட அழகாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

http://www.mayyam.com/talk/showthread.php?8017-Kalai-Nilavu-RAVICHANDRAN/page15

vasudevan31355
17th October 2015, 06:45 PM
வாசு சார்,
மறதி அதிகமாகி விட்டது.
அன்புடன் கோபு.

கோபு சார்,

உங்களைவிட அதில் நான் மன்னன். நம்ம சின்னா சக்ரவர்த்தி.:)

vasudevan31355
17th October 2015, 06:52 PM
' "மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்ற படம்'.

ஜனகராஜ் நிழல்கள் ரவியிடம் பாடுவதா?:)

vasudevan31355
17th October 2015, 06:54 PM
//மெதுவாக மெதுவாக வே புரியலையே//

புரியாமலேயே இருக்கட்டும்.:) மதுண்ணா கூட சொல்லாமல் தவிர்த்திடுவார்.:)

vasudevan31355
17th October 2015, 06:56 PM
//ஆன்றோர்கள் சொல்வார்கள்//

உங்களைப் போன்ற சான்றோர்களும்.:)

adiram
17th October 2015, 07:48 PM
இப்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய படம் போடுவதையே நிறுத்தி விட்டு அந்த சேனல் முழுநேரமும் ஆள் செலெக்ட் செய்யும் டிவி ஆகி விட்டது.:) இவர்கள் நிறைய பழைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய!

ஆள் செலக்ட் பண்ணாத மற்ற நேரங்களில் வடநாட்டு சீரியல்களை குரல்மட்டும் மாற்றி போட்டு அறுக்கிறார்கள்.

rajeshkrv
17th October 2015, 07:54 PM
ஆள் செலக்ட் பண்ணாத மற்ற நேரங்களில் வடநாட்டு சீரியல்களை குரல்மட்டும் மாற்றி போட்டு அறுக்கிறார்கள்.

adhu verum mugasthuthi paadum TV aagi vittadhu :)

rajraj
17th October 2015, 09:08 PM
அமிர்த வர்ஷினிப் பாட்டுக்கு நன்றி..அனேகமாய் நாளைக்கு மழை வரும்..:) என நினைக்கிறேன்..பட் ஏற்கெனவே உள் நாட்டில் பெய்து கொண்டு இருக்கிறதாம்..பார்க்கலாம்..

Did it rain? :)

rajraj
17th October 2015, 09:36 PM
I remember watching Parasakthi in a touring talkies in 1952. Here is a song from Parasakthi.

poomalai neeye puzhudhi maN mele.......

http://www.youtube.com/watch?v=fdQzKA7I2GE

The original tune from Dupatta(1952)

sanwariya koi pukare.....

http://www.youtube.com/watch?v=QymmIj-MYLQ

I still remember the conversation I had with my neighbour. Next morning he asked me about the movie and the story.
Then he asked me about what I liked and what I disliked. I told him that a dance was obscene(aabaasam). I told him about 'Oh rasikkum seemaane' song and dance where the dancer's skirt goes up. He just smiled. Only years later I learned that such scenes were common in Hindi movies. Those were the days of innocence ! :lol:

chinnakkannan
17th October 2015, 11:49 PM
Did it rain? :)

நான் இருக்கும் ரூவியில் ம்ஹூம்.. உள் நாட்டில் பெய்ததாகக் கேள்வி.

eehaiupehazij
18th October 2015, 12:01 AM
Scene Stealers

இச்சையின் பச்சை அடையாளம் !
Tattoos !


மனதுக்குப் பிடித்தவர்களின் பெயரையோ உருவத்தையோ மனம் கவர்ந்த வாசகங்களையோ மேனியில் பச்சை குத்திக் கொள்ளும் கலாசாரம் நியாண்டர்தால் வம்சா வழியாக இன்றும் ஏதோ ஒரு ரூபத்தில் அழிக்கமுடியாத கலாசாரமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது !
ஊசிகளில் வண்ணக்கலவைகளை ஏற்றி பச்சை குத்துவது சற்று வலி தரும் முறையே !
மருதாணி மாதிரி தடவிக் கொள்ளும் பச்சை நாள்பட நாள்பட தேய்ந்து அழிந்து விடும்!!
காதல் இனிக்கும்போது அழியாவண்ணம் காதலி பெயரை இச்சையோடு பச்சை குத்தும் எத்தனையோ காதல் புரவலர்கள் காதல் கசந்தவுடன் அதை அழிக்கப் படாத பாடு படுவதும் .....பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் !
இங்கே ஒருவர் தனது காதலி சோனாவை கையில் பச்சை பதித்து மானசீக வாழ்வில் உல்லாச உலகில் சல்லாபித்துஅடிக்கும் கூத்து காலங்கள் கடந்தும் நினைவுகளில் பதிந்து விட்ட பசுமையே !!


Watch from 21:00! Enjoy Thangavelus Monkey shadow comedy elements daringly copied by Vivek!!

https://www.youtube.com/watch?v=xB17PFR1WPg

eehaiupehazij
18th October 2015, 02:28 AM
அக்கரைப் பச்சை ! / Thunderball
Foreigners' Tattoo Mania!
வெளிநாட்டினரிடம் அக்காலம் தொட்டே பச்சை குத்திக் கொள்ளும் பாஷன் மோகம் அதிகம் !
தனக்குப் பிரியமானவர் மட்டுமன்றி தான் சார்ந்திருக்கும் நிறுவனம் சார்ந்த சின்னங்களையும் பச்சை குத்திக் கொள்வதுண்டு !
ஜேம்ஸ் பாண்ட் படமான தண்டர்பாலில் வில்லன் கோஷ்டியை சேர்ந்த ஒருவர் சார்ந்திருக்கும் இயக்கத்தின் பச்சையைக் கையில் பதித்திருப்பது கண்டு
ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரி தனது அலுவலக தனிச் செயலாளரான மணிபென்னியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் காட்சி சுவாரஸ்யமானதே!

அதே பச்சை முத்திரை வில்லியின் மோதிரத்திலும் இருப்பதை உன்னிப்பாகக் கவனிப்பார் பாண்ட் !

https://www.youtube.com/watch?v=uG7jXkqe_bU

vasudevan31355
18th October 2015, 07:57 AM
சிவாஜி செந்தில் சார்,

பச்சை குத்துவதைப் பற்றி அப்போதே தமிழில் ராட்சஸி அழகா பாடிட்டாரே! இதை விடவா?

வாழ்க்கை வாழ்வதற்குத்தானே!

'பச்ச குத்தலயோ...
பச்ச குத்தலயோ'....

'அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்க மலை'

அடடா! இந்தப் பாடகிதான் மேற்கண்ட வரிகளை எவ்வளவு அழகாகப் பாடி ஆனந்தப்பட வைக்கிறார்! இப்படியெல்லாம் பாட முடியுமா!

'ஊசியிலைக் காடுகளில் வாசம் செய்யும் ஜாதியம்மா
மாசுபட சம்மதியோம் மான் ஜாதிக் கூட்டம் அம்மா'

Pollution பற்றியும் அப்போதே பாடி வச்சாச்சு.

ராட்சஸியின் 'அழகா...ன' உச்சரிப்பைக் கவனியுங்கள். அவ்வளவு அழகாக இருக்கும்.

பல்லவி முடிஞ்சதும் வரும் அந்த 'டங்கு டங்கும் டங்கு டங்கும் டங்கு டங்கும்' இசை நெஞ்சிலே பாய்ந்து துள்ளும்.

தொடரும் அந்த 'ஒஒஒஓ...ஹோய்' ஹம்மிங் இன்னும் மயக்கும். ஹம்மிங் தருவது ஈஸ்வரியா சுசீலாவா என்று குழப்பம் நேரும்.

பச்சை குத்துவது எப்படி என்ற விளக்கங்கள் வேறு.

'பச்சை இலை வெட்டி வந்து
பாலெடுத்து மை வடித்து
அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா'

என்னென்ன உருவங்கள் பச்சை குத்தப்படும் என்ற விவரம்.

'மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி
நானெழுதும் ஓவியங்கள் போகாதம்மா

நீரினிலே கரைவதில்லை
நெருப்பினிலே கரைவதில்லை'

(கல்விக்குப் போட்டியோ)

'இளமையிலே தீட்டிய பச்சை
இறுதி வரை அழிவதில்லை'

தொலைந்து போன பிள்ளைகளை கண்டு பிடிக்க உதவுவது பச்சைக் குத்தாம். குடும்பப் பாட்டு போல குடும்பப் பச்சை.

'பெற்றவரை விட்டு விட்டு சென்றுவிட்ட பிள்ளைகளை
கண்டு கொள்ளப் போடுவது பச்சையம்மா'

காத்து, கருப்புகள் அண்டாதிருக்கவும் பச்சைதான் குத்தணுமாம். அதில் கூட 'சுற்றிவரும் தேவதைகள்' என்று எவ்வளவு கண்ணியம் வார்த்ததைகளில்!

'சுற்றிவரும் தேவதைகள் பற்றாமலே இருக்க
குத்தி வைக்கும் மந்திரமே பச்சையம்மா'

'சாமி பேர் எழுதி வைத்தால் தலைமுறைக்குக் காவல் வரும்
தேவி பெயர் எழுதி வைத்தால் தினம் தினமும் துணையிருக்கும்'

'அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்க மலை'

'டாட்டூ' எல்லாம் நம்ம தமிழ் கல்ச்சர்கிட்டே டப்பா ஆடிடும் சார். எல்லாவற்றுக்கும் முன்னோடி முத்தமிழ்தானே!

எது இல்லை தமிழிலே? பச்சை குத்துவதைப் பற்றியே ஒரு முழு திரைப்படப்பாட்டு. கவிஞரின் கைவண்ணத்தில். பச்சை பச்சையான பாடல்கள் புழங்கும் இக்காலத் திரைப்படப் பாடல்களை ரசிக்கும் சிகாமணிகள் யாராக இருந்தாலும் சரி... பச்சை குத்துவதைப் பற்றிய, பசுமையான நெஞ்சில் நிறைந்த இந்தப் பாடலை, வளமான குரல் வளத்தோடு இப்போது ஒருமுறை கேட்டுப் பாருங்கள். வெட்கித் தலை குனிவீர்கள்.

இப்படி ஒரு பாடலை இதற்கு முன்னும் கேட்டிருக்க முடியாது. பின்னும் கேட்க முடியாது. 'மெல்லிசை மன்னர்' தரும் அந்த துள்ளலிசை புல்லாங்குழல் ஓசை ஒன்று போதும்.

அதுதான் கோல்டன் டேய்ஸ். திரும்ப வரவே வராது.


https://youtu.be/7HIzrUxbN5M

eehaiupehazij
18th October 2015, 08:05 AM
why are tattoos permanent?

https://www.youtube.com/watch?v=Fs9rR4W0EeA

tattoo processes

https://www.youtube.com/watch?v=Z8_VAW3j5X8

rajraj
18th October 2015, 08:48 AM
tatto is like our marudhani. We do it during DeepavaLi time! :) Good topic for the season ! :lol:

madhu
18th October 2015, 09:47 AM
வாசுஜி..

சத்தியம் தவறதே பாட்டு பாடியவர் கண்டிப்பாக எம்.எஸ்.ஆர் இல்லை.. அந்தக் குரல் இப்பவும் என் காதில் கேட்குது. ஒரு வேளை நீங்க சொல்லும் பிரேமாவாக இருக்கலாம். its unique.. ... பாலு பாடல்கள் மெதுவாகவே ( சிக்கா ? ) பதியுங்கள். சிறப்பாக இருக்க அதுவும் ஒரு காரணம்.

அழகான மலையாளம்.... ஈஸ்வரியின் பாடல்களில் என் மனசுக்குள் பச்சை குத்திய ஒன்று.


தொடரும் அந்த 'ஒஒஒஓ...ஹோய்' ஹம்மிங் இன்னும் மயக்கும். ஹம்மிங் தருவது ஈஸ்வரியா சுசீலாவா என்று குழப்பம் நேரும்.
அட..அட..அட... நான் அது பி.சுசீலாவேதான் என்று முன்னொரு காலத்தில் ரேடியோ மேல் காதை அழுத்தி வைத்து கண்டு பிடிக்க முயற்சி செய்ததுண்டு..
இன்னும் சில பாடல்களில் கூட இது போன்ற சந்தேகங்கள் வந்ததுண்டு.

இது டைட்டில் பாட்டு ... இதோ வீடியோ

( படக்காட்சியில் "ஊசியிலை வரிகளைக் காணும்.. வெட்டிட்டாங்களோ ?)

https://www.youtube.com/watch?v=t4ukPtTU9PU

RAGHAVENDRA
18th October 2015, 10:03 AM
சத்தியம் தவறாதே பாடலைப் பாடிய பெண் பாடகி பிரேமா தான் என எனக்கும் நினைவு.

சத்தியம் தவறாதே படத்தின் இசையமைப்பாளர் சி.என்.பாண்டுரங்கன் அவர்களுடைய வீட்டின் மாடியில் என் நண்பன் தன் பெற்றோருடன் வசித்து வந்த போது அடிக்கடி அவனைப் பார்க்கப் போவதுண்டு. அப்போது ஒரு முறை அவன் கூறிய செய்தி, தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவரை ரவிச்சந்திரன் படத்தில் பாட வைத்திருக்கிறார் என்பதாகும். அப்போது படத்திற்குப் பெயர் வைத்திருக்கவில்லை. ஒரு வேளை அதுதான் இந்தப்பாடலாக இருக்கலாம்.

rajeshkrv
18th October 2015, 10:11 AM
அழகான மலையாளம் பாடல் அருமை அருமை

அதே போல் இதோ ஒரு மலையாளப்பாடல் .. தமிழ் தெலுங்கு கன்னடா பற்றி பேசுகிறது

https://www.youtube.com/watch?v=M-uRrrD_pvE

chinnakkannan
18th October 2015, 10:15 AM
ஹாய் குட் மார்னிங்க் ஆல்..

ஆஹா பச்சை குத்துதல் பாடல்கள் விளக்கங்கள் எல்லாவற்றிற்கும் தாங்க்ஸ் சி.செ வாசு.. ஈவ்னிங்க் போய்ப் பார்க்கறேன்

பச்சைன்னவுடனே நினைவுக்கு வர்றது லேட்டஸ்ட் ஸாங்க் தான்

பச்சை த் தீயே ந்னு தமன்னா தாவும் டூயட் பாகுபலி

பச்சை நிறமே பச்சை நிறமே அலைபாயுதே மேடி

பச்சை மாமலை போல் மேனி - ந.தி திருமால் பெருமை

பச்சை வண்ண சேலைகட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா - ந.தி

பச்சை வண்ணக் கிளிவந்து பழம் கொடுக்க - கண்ணன் வருவான்

பச்சை மூக்குத்தி வைரம் நீராடி ப் படிக்கும் பண்பாட்டுக் கவிதை - மதனமாளிகையில்..

ஓஹ்.. நிறப் பாட்டு இல்லியோ..பச்சை குத்தி எனத் தேடினால் இந்தப் பாட் வருதே..

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாடிசைப்பார்
நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க


https://youtu.be/plXOkVhLYNg

paat eppadi irukkum.. veet pOi ketkaren :)

raagadevan
18th October 2015, 10:33 AM
vaNakkam kaNNaa... I liked your dEvathai song... and here is a dhEvan magaL song.
It is different from the typical tfm song; but I hope you like this one!!! :)

https://www.youtube.com/watch?v=T2fADM8DXks&feature=player_embedded

chinnakkannan
18th October 2015, 04:04 PM
முக நூலில் படித்த இந்த விஷயத்தை இங்கு சொல்லக் காரணங்கள் சில

1. சுஜாதாவின் வாக்கியம் :“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”

2. இந்த இடுகை எழுதியவர் ப்ரியா படத்தை திரும்பத்திரும்பப் பார்த்தோம் என எழுதியிருக்கிறார் ஆச்சரியமாக இருக்கிறது..ஏனெனில் குமுதத்தில் தொடராகப் படித்து விட்டு ஆவலாக ஸ்ரீதேவி தியேட்டருக்கு (ஆதிராம் ம்க்கும் :) ) ச் சென்று பார்த்து ஏமாற்றமடைந்த படம்..எஸ்பெஷலி க்ளைமாக்ஸில் அந்த அடுக்குமாடி அபார்ட்மெண்ட்ஸில் இருந்து பூச்சாடியை ஸ்ரீதேவி எத்துவாராம் படக்கென ஜன்னல் திறக்குமாம் அதைவைத்து ரஜினி காப்பாற்றுவாராம்..அட போங்கப்பா எனப் பார்த்த போதே தொன்றியது..

அப்படியே நாவல் வந்தது போலவே கொஞ்சூண்டு பாட்காட்சிகள் சேர்த்து எடுத்திருந்தால் வெகு நன்றாக வந்திருக்கும்..


3. இது பற்றி சுஜாதா சொன்னதை ஏற்கெனவே படித்திருக்கிறேன்..அதுபோல அவரது திரைக்கதை எழுதுவது எப்படி நூலில் அவரது எழுத்தின் மாற்றங்கள் நன்றாக வெளிப்படும்..உதாரணத்திற்குச் சொன்ன படம் உள்ளம் கேட்குமே..(வெகு அழகான படம்)

4. ம்ம்ம்.. பாடல் ஒன்று பார்க்க ஆவல் வந்தது :)

முக நூலில் எழுதியிருந்தவர் ஜான் துரை அஸீர் செல்லையா..

//சுஜாதா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கண்ணில் பட்டது...

‘ப்ரியா’ ..

இந்தப் படம் 1978 இல் வெளியானது நன்றாக ஞாபகம் இருக்கிறது... ஆனால் திரும்ப திரும்ப திரையரங்குகளுக்குப் படை எடுத்த நாங்கள் , எத்தனை தடவை இந்தப் படத்தைப் பார்த்திருப்போம் என்பது எங்களுக்கே ஞாபகம் இல்லை...

எங்கள் எல்லோருக்கும் பிடித்த இந்த “ப்ரியா” ஒரே ஒருவருக்கு மட்டும் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை..
“ப்ரியா”வைப் பிடிக்காத அந்த ஒருவர்.... அந்தப் படத்தின் கதையை எழுதிய சுஜாதா..

இதோ..அது பற்றி சுஜாதா...

“.... ‘ப்ரியா’ சினிமாவானது ஒரு கூத்து...

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். ஆனால் கதை இஷ்டத்திற்கு மாற்றப்பட்டது...

..இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது...”

# “பிரியா” கதை , சினிமாவுக்காக சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை , சுஜாதாவால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

சிறிது காலத்திற்குப் பின் சுஜாதா எழுதிய 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்' என்ற கதையில் , கணேஷும், வசந்த்தும் இப்படி உரையாடுவது போல எழுதி தன் குமுறலைக் கொட்டித் தீர்த்துக் கொண்டார் சுஜாதா ...

### “வசந்த் அதிகக் கோபத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.

ஏராளமான காகிதங்களின் மத்தியில் 77 உறிஞ்சிக் கொண்டிருந்த கணேஷ் அவனை நிமிர்ந்து பார்த்து "எதுக்காக இப்படி வெட்டியா நடக்கிறே? என்ன ஆச்சு வசந்த்?"

"அந்த ஆள் மேல கேஸ் போடணும் பாஸ்."

"எந்த ஆள்? எந்த கேஸ்?"

"எழுத்தாளர் சுஜாதா! இந்த மாதிரி நம்ம ரெண்டு பேரையும் கேலிக்கிடமா படம் எடுக்க அனுமதிச்சதுக்கு."

"என்ன படம்?"

"ப்ரியா."

"எழுத்தாளர் என்ன செய்வார்? அவர் புஸ்தகத்திலே சரியாத்தானே எழுதியிருந்தார்?"

"படம் எடுத்தவர்கள் பேரில போடலாம்னு பார்க்கிறேன்."

"அவுங்க என்ன செய்வாங்க? புஸ்தகத்திலே இருந்த மாதிரி படம் எடுத்தா படம் போண்டி ஆயிடும்...... .......இதுக்கெல்லாம் கோவிச்சுண்டா என்ன ஆறது? விட்டுத் தள்ளு. படம் ஓடறது பாரு. கிளி, டால்பின்னு என்னமோ கலந்து கட்டி இருக்காங்களாமே?"

கணேஷ் வாய்விட்டுச் சிரித்தான்.

"என்ன இருந்தாலும் எனக்கு சமாதானமாகலே பாஸ். நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா..."

"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்க. ஒரு லாயர் கேஸ் போடவே கூடாது. கேஸ் போட வைக்கணும்."

# இப்படி எழுதித் தன் குமுறலைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் சுஜாதா.... கொந்தளிப்பு குறைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க ஆரம்பித்தார்...

சினிமாவின் சூத்திரங்களுக்கு ஏற்ப தன்னை “அப்டேட்” செய்து கொண்டார்...

அவரின் அசத்தல் வசனங்கள் அனைவரையும் கவரும் அளவுக்கு , சினிமாவை தன் வசப்படுத்திக் கொண்டார்...

# இதோ..சில சாம்பிள்கள்.....

# அந்நியனில் தன் உள்ளங்கையில் முத்தமிட்ட நந்தினியிடம் ரெமோ: “ஹேய் என்ன கைல முத்தம் குடுக்கிற .... நான் என்ன போப்பாண்டவரா..?”

#“தப்புல ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜெல்லாம் சொல்ல, அது என்ன பனியன் சைஸா?”

# சரி... சினிமாவை அடியோடு வெறுத்த சுஜாதா , காலப்போக்கில் அந்த சினிமாவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வெற்றியும் பெற்றது எப்படி..?

சுஜாதா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது...

“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”


# நிஜம்தானே...!!!

எவ்வளவு பெரிய உண்மையை , எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார் சுஜாதா..?!!

ஆம்...“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”//

https://youtu.be/5GA2rHlWYxE

vasudevan31355
18th October 2015, 04:49 PM
ரிலாக்ஸ் பாடல்.

ரொம்ப நாளைக்கு அப்புறம்.

கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.

http://padamhosting.me/out.php/i58872_RTS1.jpg

காலையிலிருந்து 'அழகான மலையாள' ஈஸ்வரியே ராட்சஸத்தனமாக மன ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

சரி! இன்னொரு பாடலைத் தந்துவிடலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்

ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.

எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...

நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.

http://i.ytimg.com/vi/B86Gk92C7MM/maxresdefault.jpg

கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.

'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,

ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.

இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.

'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'

'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'

அடேயப்பா! என்ன வரிகள்!

அடுத்த வரி டாப்.

தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,

'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)

மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.

அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,

எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,

'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு:)... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்':)

என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.

எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,

'படார் படார் படார்
படார் படார் படார்'

என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,

எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,

'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு

படார் படார் படார்
படார் படார் படார்'

என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.

'படார் படார் படார்
படார் படார் படார்

எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...

(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)

இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'

என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,

'நிப்பாட்டு'

என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.:)

'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.

நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)

http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg

தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.

'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்':)

எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!

நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.

'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.

'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்:)
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'

இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.

'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'

மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,

இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,

இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.

ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.

'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'

என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!

'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'

எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.

'லவ்லி பியூட்டி கமான் சார்!'

எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்

'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'

என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)

அப்படியே இசை மாறும்.

ஈஸ்வரி,

'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'

எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)

பதிலுக்கு எம்.ஜி.ஆர்,

'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'

இப்போது மேடம் டர்ன்.

'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'

(அப்படிப் போடு அருவாள!):)

எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.

'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'

ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.

'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'

(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)

இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.

'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'

மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.

'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே

வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.

அப்பாடா!

பாடல் முடிவடையும்.

எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.

பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.

எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.

எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.

'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார்.:) 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!

நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.

நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!


https://youtu.be/B86Gk92C7MM

madhu
18th October 2015, 05:28 PM
வாசுஜி....

படார் படார்னு இப்பவே தீபாவளியை ஆரம்பிச்சுட்டீங்க.... எப்படி புகழ்வேன் ? என் உள்ளம் உந்தன் ஆராதனை.. என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை !!

சிக்கா... சுஜாதா சொன்னது அக் மார்க் நிஜம்... புரிந்து கொள்வதுதான் சிரமம்.

வாசு ஜி...

மறுபடி... ஹி ஹி.. இன்னொரு பாட்டு பற்றி டவுட்டு ( சத்தியம் தவறாதே என்றதும் ஏனோ இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது )

"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா" என்ற பாட்டு எந்தப் படம் ? ( ஏற்கனவே கேட்டுட்டேனா ? அதுவும் மறந்து போச்சு )... ராகவ்ஜி ... ப்ளீஸ்

ஒரு பாரா அரை குறையாக நினைவில் இருக்கு..

மாடல் இது கொஞ்சம் புதியதம்மா - எங்க
மாமியாரைப் போல இது பெரியதம்மா
காரு முன்னாலே ரெண்டு காளையக் கட்டு - அட
காளை இல்லேன்னா என் மாமியைக் கட்டு

( சிக்காவுக்கு ரொம்ப பிடிக்கும் :) )

eehaiupehazij
18th October 2015, 06:22 PM
Enjoy this monotony breaker though not related to GG!

முளைத்து மூணு இலை விடாத காதல் (பயிர்) மன்னன் ?!
பாய் படுக்கையில் மூச்சா போகும் வயதில் ஒரு ஸ்மூச்சர் Smoocher Boy !!

https://www.youtube.com/watch?v=ug3-Q7eLSz4

RAGHAVENDRA
19th October 2015, 06:54 AM
வாசு சார்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் அற்புதமான பின்னணி இசையோடு அவருடைய புகழ்க்கிரீடத்தில் மற்றோர் வைரமாக மின்னும் திரைப்படம் ராமன் தேடிய சீதை. அதில் இடம் பெற்ற படார் படார் பாடலை இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்கத் தூண்டும் வண்ணம் தங்கள் எழுத்து வன்மையால் ஈர்த்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.

vasudevan31355
19th October 2015, 07:31 AM
வாசு ஜி...

மறுபடி... ஹி ஹி.. இன்னொரு பாட்டு பற்றி டவுட்டு ( சத்தியம் தவறாதே என்றதும் ஏனோ இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது )

"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா" என்ற பாட்டு எந்தப் படம் ? ( ஏற்கனவே கேட்டுட்டேனா ? அதுவும் மறந்து போச்சு )


இல்லே! கேக்கல்ல.:)

மதுண்ணா!

அமிர்தாஞ்சன் ப்ளீஸ்.:) ஆனா ஏற்கனவே கேட்ட நியாவகம் இருக்கு. புடிச்சிடுவோம் கண்டு.:)

vasudevan31355
19th October 2015, 07:35 AM
வாசு சார்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் அற்புதமான பின்னணி இசையோடு அவருடைய புகழ்க்கிரீடத்தில் மற்றோர் வைரமாக மின்னும் திரைப்படம் ராமன் தேடிய சீதை. அதில் இடம் பெற்ற படார் படார் பாடலை இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்கத் தூண்டும் வண்ணம் தங்கள் எழுத்து வன்மையால் ஈர்த்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.

நன்றி ராகவேந்திரன் சார்.

முற்றிலும் உண்மை. 'ராமன் தேடிய சீதை' படத்தின் பாடல்கள் சிரஞ்சீவியானவை, 'மெல்லிசை மன்னர்' தூள் கிளப்பிய படம் இது. எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த முதலிடத்தில் இருக்கும் பாடல் 'என் உள்ளம் உந்தன் ஆராதனை' என்று பலமுறை குறிப்பிட்டுள்ளேன். படமே கூட எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதுதானே!

RAGHAVENDRA
19th October 2015, 08:00 AM
நன்றி ராகவேந்திரன் சார்.

முற்றிலும் உண்மை. 'ராமன் தேடிய சீதை' படத்தின் பாடல்கள் சிரஞ்சீவியானவை, 'மெல்லிசை மன்னர்' தூள் கிளப்பிய படம் இது. எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த முதலிடத்தில் இருக்கும் பாடல் 'என் உள்ளம் உந்தன் ஆராதனை' என்று பலமுறை குறிப்பிட்டுள்ளேன். படமே கூட எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதுதானே!

ஆமாம். சந்தேகமில்லை. வழக்கமான எம்.ஜி.ஆர். படங்களின் உடையலங்காரம் இந்தப் படத்தில் கிடையாது. முற்றிலும் வித்தியாசமாக, இன்னும் சொல்லப்போனால் என் உள்ளம் உந்தன் ஆராதனை பாடலை அடிக்கடி நடிகர் திலகம் வாணி ஜோடியை கற்பனை செய்து மகிழ்வேன். இன்னும் அட்டகாசமாக அமைந்திருக்கும். ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர். படங்களிலேயே காஸ்ட்யூமில் நம்பர் 1. குறிப்பாக ஈஸ்வரியின் குரலில் பாடும் இந்தப் பாடலை என் உள்ளம் என்றுமே ஆராதனை செய்து கொண்டே இருக்கும். நான் முன்னர் குறிப்பிட்டது போல் நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டிய பாடல்கள் என நாம் பட்டியலிட்டோமானால் இந்தப் பாடலுக்கு நிச்சயம் அதில் இடம் உண்டு.

ஒளிப்பதிவு, இசையமைப்பு, பின்னணி இசை, வெளிப்புறப் படப்பிடிப்பு இடங்கள், குறிப்பாக இந்தப் படத்தின் சிறப்பம்சமே அந்த கருப்புக்கண்ணாடி தான். ராமன் தேடிய சீதை படம் வந்த போது இந்த கூலிங்கிளாஸுக்கு நல்ல மவுசு ஏற்பட்டு அந்தப் பெயரைச் சொல்லியே பல கடைகளில் விற்பனை செய்தனர்.

நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டிய படம் என்று எண்ணி எண்ணி நான் பல முறை ஏங்கியிருக்கிறேன்.

vasudevan31355
19th October 2015, 08:03 AM
ராகவேந்திரன் சார், மதுண்ணா,

ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் திரைப்படத்தில் 'ஏன்னா நீங்க எங்கே போறேள்?' என்று ஒரு சூப்பர் பாடல் ஒன்று உண்டு. ('மெல்லிசை மன்னர்' பிய்த்து உதறி பேயாட்டம் ஆடிவிடுவார் விடுவார் இந்தப் பாடலில்). 'பத்ரகாளி' படத்தில் சிவக்குமாரிடம் ராணி சந்திரா அவர் வெளியே பார்த்த ஆட்டத்தை வீட்டிலேயே 'கேட்டேளே அங்கே அதப் பார்த்தேளா இங்கே' என்று பாடி ஆடிக் காட்டுவாரே. அதே காட்சியமைப்புத்தான் இந்தப் பாடலுக்கும். ஆனால் 'ராமன் தேடிய சீதை' முன்னாலேயே வந்து விட்டது.

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க நாடகத்தில் ஆடுபவர் மேடம். அவரது கணவனாக ராகினி ஆண் வேடத்தில் கோட் சூட் போட்டுக் கொண்டு தண்ணி அடிப்பார் விக்கிக் கொண்டே.
வெளியிலே ஹோட்டலில் கேபரே பார்த்துவிட்டு அதே போல ஆட்டத்தை மனைவி ஜெயாவிடம் ராகினி எதிர்பார்ப்பார். ஆச்சாரமாய் சேலை அணிந்திருக்கும் ஜெயா கணவர் ராகினியின் ஆசையை நிறைவேற்ற அதே போல நாகரீக உடை மாற்றி ஆடிக் காட்டுவார். (மேடம் அநியாயத்துக்கு கிளாமர்.):)

இதுதான் நாடகக் காட்சி.

ஜெயா மேடத்திற்கு வழக்கம் போல ராட்சஸி குரல் தந்து கலக்கல்.

இப்போதுதான் ஒரு சந்தேகம். நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும்.

ஆண் வேடம் போட்டிருக்கும் ராகினிக்கு குரல் தந்த பாடகி யார்?

அந்தக் குரல் நம் ஆச்சி மனோரமாவின் குரல் போல் உள்ளதே! (குறிப்பாக 'முடியுமா நீ முன்னாலே... நீ முடிஞ்சா ஆடு என் முன்னாலே').....அந்தக் குரல் ஆச்சியுடையதுதானே?

அந்தப் பாடலில் ஆச்சி கிடையாது. ஆனால் படத்தில் உண்டு. ஒருவேளை ஆச்சியே ஜெயாவுடன் அந்த நாடகக் காட்சியில் நடிக்க இருந்து பின் அதில் ராகினி நடித்தாரா? அதனால் முன்னமேயே மனோரமா பாடலைப் பாடி விட்டாரா?

அல்லது அது மனோரமா குரல் இல்லாமல் வேறு யாருடைய குரலாவதா? டைட்டிலில் பின்னணி பாடியவர்கள் பட்டியலில் ஆச்சி பெயர் இல்லை.

ஆனால் குரல் ஆச்சி குரல் போலவே இருக்கு.

நான்தான் குழம்புகிறேனா?

தெளிவுபடுத்தவும். ப்ளீஸ். வரலாறு தெரிந்து கொள்ள வல்லிய ஆசை. ஸ்கூலில் படிச்சப்ப கூட வரலாற்றை இப்படி புரட்டியதில்லை.:)


https://youtu.be/wLJDZvrmA0A

RAGHAVENDRA
19th October 2015, 08:12 AM
வாசு சார்
அந்தக் குரல் இசையரசியின் குரலாகத்தான் எனக்குப் படுகிறது. தங்கள் சந்தேகம் நியாயமானது.

RAGHAVENDRA
19th October 2015, 08:13 AM
"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா" என்ற பாட்டு எந்தப் படம் ? ( ஏற்கனவே கேட்டுட்டேனா ? அதுவும் மறந்து போச்சு )... ராகவ்ஜி ... ப்ளீஸ்

இன்னும் ஆராய்ச்சி செய்துகொண்டு தானிருக்கிறேன்... மது...

vasudevan31355
19th October 2015, 08:29 AM
இது நமது 'ஜி' க்கு.

அதே 'ராமன் தேடிய சீதை'யில் வெளியே தெரியாத எட்டு வரி சுசீலாவின் அதிசயம்.

பொறுமையிலே பூமகளாய்
கொண்ட பேரழகில் திருமகளாய்
பசியில் அமுதளிக்கும் அன்னையுமாய்
காதல் அரவணைப்பில் கனிகையுமாய்
ஊழியத்தில் பணிப்பெண்ணாய்
அறிவை உரைப்பதிலே அமைச்சனுமாய்
வாழுகின்ற பெண் எவளோ அவளே
வளமார்ந்த குலமகளாம்.

vasudevan31355
19th October 2015, 08:30 AM
ராகவேந்திரன் சார்

'ராமன் தேடிய சீதை' திரைப்பட டைட்டிலில் 'சூலமங்கலம்' ராஜலஷ்மி பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் பாடிய பாடல் என்னன்னு தெரியலையே.

vasudevan31355
19th October 2015, 08:32 AM
"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா"

மதுண்ணா!

பாடல் பாடியவர், நடித்தவர் விவரம் ஞாபகம் இருக்கா? ஆனால் கேட்டிருக்கேன்.

vasudevan31355
19th October 2015, 08:43 AM
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் மற்றும் அவர் சார்ந்த பாண்டவர் அணிக்கு நமது மதுர கானங்கள் திரியின் மனமார்ந்த,உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். விஷாலுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

http://www.thehindu.com/multimedia/dynamic/02586/TH16_VISHAL_PAN_TH_2586596f.jpg

vasudevan31355
19th October 2015, 09:24 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355045/04.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355045/04.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355045/05.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355045/05.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355045/06.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355045/06.jpg.html)

madhu
19th October 2015, 09:29 AM
"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா"

மதுண்ணா!

பாடல் பாடியவர், நடித்தவர் விவரம் ஞாபகம் இருக்கா? ஆனால் கேட்டிருக்கேன்.

ஆ.... உம்.... ஆ,..... உம்..
பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா..
பட்டணத்து வீதிகளில் ஊருகோலம் போகட்டும் மெல்லம்மா மெல்லம்மா மெல்லம்மா

இப்படி ஆரம்பிக்கும்

பாட்டும் மட்டும்தான் நினைவிருக்கு. ட்யூன் நினைவிருக்கு.. அனேகமாக தாராபுரம் சுந்தரராஜன், ஜமுனா ராணி/ஈஸ்வரி குரல் என்று ஞாபகம்

rajeshkrv
19th October 2015, 09:33 AM
Jaya'kku starting ISayarasi thaan Vaasu ji

madhu
19th October 2015, 09:34 AM
வாசுஜி...

ராமன் தேடிய சீதையில் கன்னிமரான்னு பாடுவது சூலமங்கலம் இல்லையோ ?

rajeshkrv
19th October 2015, 09:37 AM
ratchasi for JAya and the other voice sounds like Vasantha

rajeshkrv
19th October 2015, 09:38 AM
வாசுஜி...

ராமன் தேடிய சீதையில் கன்னிமரான்னு பாடுவது சூலமங்கலம் இல்லையோ ?

anna correct .. soolamangalame thaan (listened AGAIN AND IT'S SOOLAMANGALAM)

rajeshkrv
19th October 2015, 09:41 AM
http://www.4shared.com/download/_kJ2ME7rba/RAMAN_THEDIYA_SEETHAI.png?sbsr=939312cdbb43a979526 2910a574dcc2c37919f2ad309a74a&lgfp=3000

vasudevan31355
19th October 2015, 10:06 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355047/0120aac9-68cf-47f1-9087-8b5b1b213246.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355047/0120aac9-68cf-47f1-9087-8b5b1b213246.jpg.html)

vasudevan31355
19th October 2015, 10:07 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355046/ma.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355046/ma.jpg.html)

vasudevan31355
19th October 2015, 10:09 AM
ஜி

உமக்காகவும், மதுண்ணாக்காகவும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355048/suseela1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355048/suseela1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355048/suseela2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355048/suseela2.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355048/suseela3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355048/suseela3.jpg.html)

vasudevan31355
19th October 2015, 10:13 AM
Jaya'kku starting ISayarasi thaan Vaasu ji

athu raatchasi maathiri irukkuji. innoru tharam kettuttu sollungalen. pls.

raagadevan
19th October 2015, 10:15 AM
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ
.......................................

முல்லைப் பூப் பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே...

https://www.youtube.com/watch?v=woM_xpM3a3g

vasudevan31355
19th October 2015, 10:16 AM
மதுண்ணா!

'சூலமங்கலம்' ன்னு நம்பவே முடியலையே. அப்படியே ஆச்சி குரல் மாதிரி இருக்கே. குழப்பம்.

ஜி!

வசந்தா 'திருவளர் செல்வியோ' வில் வழக்கம் போல ஹம்மிங்.,

vasudevan31355
19th October 2015, 10:17 AM
முல்லைப் பூப் பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே...

அடடா! அருமை. என்ன பாடல் அது! வாவ்...

vasudevan31355
19th October 2015, 11:03 AM
இது சின்னாவுக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355049/sinna.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355049/sinna.jpg.html)

madhu
19th October 2015, 12:14 PM
வாசு ஜி...

நல்லா காதை அமுக்கி வச்சு கவனிங்க.. சூலமங்கலம் குரல் கேக்குதே...

vasudevan31355
19th October 2015, 01:09 PM
கேட்கிறேண்ணா! கேட்கிறேன். ஹெட் போனில் கேட்கிறேன். ஆனா காலையிலிருந்து கேட்டு கேட்டு ஒரு காதுதான் மிச்சமிருக்கு.:)

chinnakkannan
19th October 2015, 02:05 PM
Hi good afternoon all.

கொஞ்சம் எக்கச்சக்கமாய் வேலை ப்ளஸ் உ. நி ச இல்லாமல் இருக்கா.. ஸோ எழுதவும் முடியலைகேக்கவும் பார்க்கவும் முடியலை..

வாசு, அம்மா கதைமிக அருமை.. படம் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. இது போல வெகு அழகிய படம் என் முக நூல் நண்பர் ஆனந்த் ராகவ் கதை வசனம் எழுதிய குறும்படம் மெளனமே வார்த்தையாய் நினைவில் வந்தது.. உங்கள் பார்வைக்கு..

http://www.littleshows.com/short-film.php?movsa=mov_830976#small_box

madhu
19th October 2015, 02:52 PM
வாசுஜியின் அம்மாவும் பிரமாதம்.. சிக்காவின் மௌனமும் பிரமாதம்.

rajeshkrv
19th October 2015, 10:39 PM
கேட்கிறேண்ணா! கேட்கிறேன். ஹெட் போனில் கேட்கிறேன். ஆனா காலையிலிருந்து கேட்டு கேட்டு ஒரு காதுதான் மிச்சமிருக்கு.:)

pinne soolamangalam leela pondra Ganamana kuralgal kettal oru kaadhu thaan minjum :) just kidding..

vasudevan31355
19th October 2015, 10:56 PM
ji

mudiyala.:)

Russellxor
19th October 2015, 11:01 PM
தீர்த்தக்கரைதனிலே செண்பகத்தோட்டத்திலே
Tamil Song - Thai Pongal - Theertha Karai Thanile…: http://youtu.be/9e-LrD3QQ_k

இந்தபாடலை டி.வி.சேனல்கள் ஒளிபரப்புவது இல்லையோ?
இல்லை நான் பார்க்கவில்லையோ?
பாத்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

Russellxor
19th October 2015, 11:04 PM
நாளெல்லாம் பவுர்ணமி
படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று

poongathe poongathe ponavale: http://youtu.be/CAxkgm6V0bU

Russellxor
19th October 2015, 11:10 PM
tamil love song from nangoooram: http://youtu.be/3X1Lm4mz28Y

Russellxor
19th October 2015, 11:20 PM
Maalai Velai - Samandhi Poo: http://youtu.be/gR7mRvdnXDE

Russellxor
19th October 2015, 11:20 PM
இசை மலேசியாவாசுதேவனா?
வாசு சார் தான் தெளிவுபடுத்தவேண்டும்.

Kanavugalay: http://youtu.be/fdHd5y5i8wM

vasudevan31355
20th October 2015, 05:56 AM
இசை மலேசியாவாசுதேவனா?
வாசு சார் தான் தெளிவுபடுத்தவேண்டும்.


செந்தில்,

நல்ல பாடல்களை நினைவு கூர்ந்துள்ளீர்கள். நன்றி!

'சாமந்திப்பூ' படத்திற்கு இசை 'மலேஷியா நான்' தான். ஆனால் பலர் இளையராஜா என்று சொல்லுவார்கள். 'மாலை வேளை' எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதே போல 'கனவுகளே' பாடலும். பாடல்களை அருமையாகத் தந்திருப்பார். அவர் சிவக்குமாருக்குப் பாடும் இன்னொரு பாடலும் அருமையோ அருமை.இசைத்தட்டின் அட்டையில் இசை மலேஷியா வாசுதேவன் என்று போட்டிருப்பதை என்லார்ஜ் செய்து நீங்கள் பார்க்கலாம்.

http://s.ecrater.com/stores/47612/481f518e249ca_47612b.jpg

'ஆகாயம் பூமி என்றும் ஒன்றா' மலேஷியாவின் வளமான குரலில். சோகத்தில்.


https://youtu.be/1wVjoIrspiM

vasudevan31355
20th October 2015, 06:18 AM
ராஜ்ராஜ் சார்

இது உங்களுக்காக.:)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355050/raj.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355050/raj.jpg.html)

vasudevan31355
20th October 2015, 06:25 AM
ராஜ்ராஜ் சார்

இதுவும் உங்களுக்காக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355051/ms1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355051/ms1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355052/m.s2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355052/m.s2.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355051/ms3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355051/ms3.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355051/ms4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355051/ms4.jpg.html)

vasudevan31355
20th October 2015, 06:37 AM
ராகவேந்திரன் சார்,

இது உங்களுக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355053/1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355053/1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355053/2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355053/2.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355053/3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355053/3.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355053/4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355053/4.jpg.html)

vasudevan31355
20th October 2015, 06:38 AM
'ஜி' க்கு ஸ்பெஷலாக.

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/592308/5042cb44-6373-4e58-b8ed-dd4f7707658c

vasudevan31355
20th October 2015, 07:08 AM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/592308/e409b315-24b0-4e6d-82f8-3908fb84683f

rajeshkrv
20th October 2015, 07:24 AM
ji photo super :)

RAGHAVENDRA
20th October 2015, 07:30 AM
வாசு சார்
தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ள சினிமா எக்ஸ்பிரஸ் தொடர் ஒவ்வொன்றுமே இங்கு நம் ஒவ்வொருவருக்குமே அரிய பொக்கிஷமாகும். நண்பர் பொன். செல்லமுத்து அவர்களின் விரிவான ஆய்வின் அடிப்படையில் வெளிவரும் இத்தொடர் தமிழ்த்திரையிசையுலகிற்கு மிகப்பெரி்ய வரலாற்று ஆவணமாக விளங்கும். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

RAGHAVENDRA
20th October 2015, 07:31 AM
msvtimes.com இணைய தளத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மெல்லிசை மன்னரின் புகழ் பாடும் மற்றுமோர் இணைய தளம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/FBCOVER_zpshvsdylau.jpg

மிக விரைவில்...

rajeshkrv
20th October 2015, 08:02 AM
vanakkam rhagav ji

RAGHAVENDRA
20th October 2015, 08:28 AM
வணக்கம் ராஜேஷ்

rajeshkrv
20th October 2015, 09:51 AM
வெற்றிக்கு வாலி ஐயாவின் ரகசியம்

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்

https://www.youtube.com/watch?v=pQE6VM3yNxY

காலங்கள் கடந்தாலும் அன்றைய சூழலுக்கு ஏற்ப வெற்றியின் ரகசியம்
கேட்டுக்கோ

https://www.youtube.com/watch?v=HgIGnHbLGwI

கேட்டுக்கோ
லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்

அதே எதிர் நீச்சலை அனிருத் இப்படி உருவாக்கியுள்ளார்

https://www.youtube.com/watch?v=hO5lQX110zM

vasudevan31355
20th October 2015, 10:11 AM
மதுண்ணா, ராகவேந்திரன் சார்,

எனக்கு மிக மிக பிடித்த எம்.எஸ்.முராரி இசையமைப்பில் 1991-ல் வெளிவந்த 'மலைச்சாரல்' என்ற படத்தில் அற்புதமான மலைப் பின்னணி இசையில் அட்டகாசமான ஒரு பாடல்.

ஷைலஜாவின் மென்கீற்றுக் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் இருக்கிறது. முராரியின் இசைக்கருவிகள் மனதில் முகாந்திரமிட்டு அமர்ந்து கொள்கின்றன.

இடைவிடாது ஒலித்து ஆரம்பிக்கும் அட்டகாச பாங்கோஸ் இசை. உடன் ஒலிக்கும் 'ஹோலே... ஹோலே' ஆண், பெண் காட்டுக் குரல் கோரஸ்கள்.

ஹோ ஹோ சாமி
ஓடி வந்தேன் சாமி
சேதி சொல்ல
தேடி வந்தேன் சாமி
நீதி சொல்ல இங்கே
நாதியில்லை சாமி
நாளை என்ன ஆகும்
நல்ல வழி காமி

ஷைலஜா கொன்னுட்டார் போங்க. ஒவ்வொரு இசைக்கருவியும் செய்யும் அமர்க்களம் அருமையோ அருமை.

கேட்கிறேன்...கேட்கிறேன்...கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

http://play.raaga.com/tamil/album/Malai-Chaaral-songs-T0003915

rajeshkrv
20th October 2015, 10:20 AM
ஜி

நம்ம அடிபோடி பைத்தியக்காரி
ஆம் தாமரை நெஞ்சம் கன்னடத்தில் முகில மல்லிகே (வி.எஸ். நரசிம்மன் இசையில்)
இசையரசியுடன் வாணி

https://www.youtube.com/watch?v=Egdx-FKCYo8

முழுப்படம் இதோ

https://www.youtube.com/watch?v=4YFd0rGKffM

rajeshkrv
20th October 2015, 10:37 AM
வித்யாசாகரின் அருமையான இசையில்
ஹரிஹரன் சித்ரா குரல்களில் அருமையான பாடல்

வித்யாசாகருக்கு மாநில விருது பெற்றுத்தந்த படம்

https://www.youtube.com/watch?v=JsjwxqSlezM

madhu
20th October 2015, 12:40 PM
வாசு ஜி..
ஹோ ஹோ சாமி இப்போதான் கேட்கிறேன்... ( எல்லா பாட்டுமே இப்போதுதான் கேட்பதாக நினைக்கிறேன். நல்ல மலை மியூசிக்க்... டங்க் டக் ).. அருமையாக அந்த மூடைக் கொண்டு வந்திருக்கார் முராரி. மலைச்சாரல் என்றால் குயிலி போஸ்டர் மட்டும்தான் நினைவில் இருக்கு.. சிக்காவே சரணம்.

vasudevan31355
20th October 2015, 01:06 PM
வாசு ஜி..
மலைச்சாரல் என்றால் குயிலி போஸ்டர் மட்டும்தான் நினைவில் இருக்கு.. சிக்காவே சரணம்.

:):):):)

madhu
20th October 2015, 01:32 PM
வாசுஜி..

பல்லாக்கு போல வண்டியைத் தள்ளிக்கிட்டு போய் சேர்க்கும் முன்.. இன்னொரு உதவி...

இது சுசீலாம்மா குரல் என்று ஞாபகம்... பாடலின் நடுவில் வரும் ரெண்டே வரிகள்...
" ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்று - அதை
உணர்ந்த பின் காதலர் சங்கம் என்று"

இதைப் பாடிப் பார்த்தால் டியூன் "தளதள தளதள தளவென அலையிருக்க - இளம் தாமரைப் பூவினில் மணமிருக்க" என்பது போல தோன்றியது. ஆனால் அவன் பித்தனா படத்தின் "மாப்பிள்ளை மனசுக்கு பிடிக்கலையா" பாட்டை யூடியூபில் பார்த்தால் இந்த வரிகள் வரலை. இது எந்தப் பாட்டில் வருகிறது என்று ஏதாவது சொல்லுங்க...

chinnakkannan
20th October 2015, 03:24 PM
மதுண்ணா..

ஊடுதல் காமத்திற்கு ந்னு சர்ச் பண்னா இந்தப் பாட் வருது திருக்குறள்


ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். #1330

காமத்திற்க்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
மு.வரதராசன்

உணர்ந்த பின் நு போட்டாலும் ஒரு பாட்டும் வரலை..

காதலர் சங்கம் நு போட்டா மதுரா நகரில் தமிழ் ச் சங்கம்னு வருது..ஹூம்..பெண் மனசு மட்டுமல்ல சமயத்தில் சக ஆணின் மனமும் புரி படுவதில்லை :)

madhu
20th October 2015, 05:08 PM
சிக்கா... இப்படி பல விதமா சுவர்ணமுகி டான்ஸ் மாதிரி வளைச்சு வளைச்சு இந்தப் பாட்டைத் தேடி கூகுல் செஞ்சுட்டுதான் இங்கே வந்தேன்... சிக்காமல் போயிடுச்சு.. ஆனா நம்ம திரி வலையில் மாட்டாம போகாது...

vasudevan31355
20th October 2015, 09:57 PM
மதுண்ணா!

"தளதள தளதள தளவென அழகிருக்க
இளம் தாமரைப் பூவினில் மணமிருக்க
கலகல கலகல கலவென ரதியிருக்க
இரு கைகளில் நடுவினில் இடம் இருக்க"

'அவன் பித்தனா' படத்தில் சச்சு பளபளவென பாடும் வரிகள்.

நீங்கள் சொல்வது?!....பார்ப்போம்.

ட்ரை பண்ணுவோம்.

அதுக்கு முன்னே ஒரு சின்ன சந்தோஷம்.

"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா" என்று நீங்கள் கேட்ட பாடலின் படம் 'அன்னை சொன்ன சொல்'. ஒருவழியா நம்ம பேராசிரியர் உதவி செஞ்சாரு. அப்புறம் பாடலைத் தள்ளி விட்டவங்க நம்ம டி.எம்.எஸ்ஸும், ஜமுனாராணி அக்காவுமாம்.:) இசை மாமாவாம்.

மதுண்ணா!

அதுல ஒரு சுசீலாம்மா பாட்டு இருக்குது. கேட்டிருக்கீகளா?

'அடிக்கிறது டூப்பு
அதுல இவர் டாப்பு
புத்தியிலே ச்சீப்பு
பொண்ணே கண்டா சோப்பு'

ஈவ்னிங்தான் மொத தபா கேட்டேன். சுமார் ரகம்.

அது இல்லாம பல்லவியில பாடகர் திலகம் 'காதலுக்கு' எடுக்க சுசீலா 'நாலு பக்கம்' முடித்து நாலுவரி இப்படியே போகும் பாடல் ஒன்னு. நன்கு தெரிந்த பாடல்தான். (ஆமா! அது இந்தப்படம்தானா?)

காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி

நீங்க கேட்ட பாடலை நான் கேட்டிருக்கேன். காதாலேயும் அப்புறம் கையாலேயும்.:) கிடைச்சுடும்னு நம்பிக்கை இருக்கு. பொறுப்போம்...இசை ஆள்வோம்.

ஆமா! படம் பெயர் தெரிஞ்சுடுத்து. யார் நடிகர்கள்னு இப்போ ஏதாவது தெரியுதா?

அடுத்ததை தேடணும். இனிய வதை.:)

rajeshkrv
20th October 2015, 10:18 PM
ஜி வணக்கம்

vasudevan31355
20th October 2015, 10:51 PM
vanakkamji! vaango! nallaa thoongineengalaa?:)

RAGHAVENDRA
20th October 2015, 11:26 PM
வாசு சார்
ஒரு வழியாக பேராசிரியரின் உதவியால் பாடலைப் பற்றிய தகவல் கிடைத்து விட்டது.

அன்னை சொன்ன சொல் .. ஜோதி சித்ரா என்ற கம்பெனி எடுத்த படம்...

இவர்கள் பொய் சொல்லாதே என்று ஒரு படம் எடுத்து 1971ம் ஆண்டு வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் ஞாபகம் உள்ளன. இரண்டுமே ரவி நடித்த படங்கள். அன்னை சொன்ன சொல் படம் வெளியானதா என்பது தெரியவில்லை. ஆனால் பேசும் படம் பத்திரிகையில் தொடர்ந்து செய்தியும் நிழற்படங்களும் இடம் பெற்று வந்தது மட்டும் ஞாபகம் இருக்கிறது.

பொய் சொல்லாதே படத்தில் ராஜஸ்ரீ ஜோடி. அதற்கும் கே.வி.எம். அவர்கள் தான் இசை. எடிட்டர் பாலு அவர்களின் இயக்கத்தில் வந்த படம் என நினைக்கிறேன்.

அன்னை சொன்ன சொல் படத்தில் ரவி குடுமியுடன் காட்சியளிக்கும் ஸ்டில் ஒன்று பேசும்படம் பத்திரிகையில் போட்டிருந்தார்கள்.

ஆனால் இந்தப் பாடலை ஓரிரு முறை மட்டுமே கேட்டிருக்கிறேன். நீண்ட நாட்களாக மறுபடியும் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

madhu
21st October 2015, 06:49 AM
வாசுஜி, ராகவ்ஜி.....

அது ஜமுனா ராணி என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் டி.எம்.எஸ் என்பதில் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கு. என் காதில் கேட்கும் பாடல் டி.எம்.எஸ் குரலாக இல்லியே ! ஐயகோ !

மேலும் இது அன்னை சொன்ன சொல்தானா ? ஏனென்றால் சத்தியம் தவறாதே படப் பெயரைக் கேட்டதும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. இப்போ ராகவ்ஜி பொய் சொல்லாதே என்றதும் இது ஒரு வேளை பொய் சொல்லாதே படம்தானோ என்று ஒரு சந்தேகம் கூட வருது... ( இல்லாட்டி எனக்கு ஏன் சத்தியம் தவறாதே உடன் பொய் சொல்லாதேவை இணைத்து பட்டர்ஃப்ளை எஃபெக்ட் வந்திருக்கு ? )

பாட்டு கிடைச்சா அட்லீஸ்ட் பாடியவர்கள் யாருன்னு தெரிஞ்சுக்கலாம். வெயிட்டிங்,,,,



பாட்டு கிடைச்சு கேட்டுட்டா முடிவுக்கு வந்து விடலாம்.

RAGHAVENDRA
21st October 2015, 07:08 AM
http://retireearlylifestyle.com/blog/wp-content/uploads/2012/04/confusion.jpg

vasudevan31355
21st October 2015, 07:59 AM
மதுண்ணா!

மயங்கவே வேண்டாம். நிச்சயம் கண்டு பிடித்து விடலாம். ஆமாம்! மற்ற இரண்டு பாடல்கள் கேட்டாயிற்றா?

madhu
21st October 2015, 08:01 AM
மதுண்ணா!

மயங்கவே வேண்டாம். நிச்சயம் கண்டு பிடித்து விடலாம். ஆமாம்! மற்ற இரண்டு பாடல்கள் கேட்டாயிற்றா?

எங்கே எங்கே லிங்க் எங்கே ?

vasudevan31355
21st October 2015, 08:30 AM
ராகவேந்திரன் சார்,

அன்னை சொன்ன சொல், பொய் சொல்லாதே இரண்டு படங்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அறிமுகத்திற்கு நன்றி! ஆனால் ரவி குடுமி வைத்த போஸ் சின்னா பாணியில் புகை.:smile:

vasudevan31355
21st October 2015, 08:35 AM
எங்கே எங்கே லிங்க் எங்கே ?

காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி

இதை நிச்சயம் கேட்டிருப்பீங்க. இதுவும் அன்னை சொன்ன சொல்தானா என்று உறுதி செய்யுங்கள்.

http://cooltoad.com/music/song/ac6514059eb99c14a22a71a89b9640e5

vasudevan31355
21st October 2015, 08:40 AM
அடுத்தது சுசீலாவின் பி கிரேட் பாடல். இது வேற ஒரு பைலா கிடைச்சுது. அப்புறம் நான் மீடியா பயர்ல நேத்து அப்லோட் பண்ணினேன். கேட்டுட்டு சொல்லுங்கோ.:smile:

'அடிக்கிறது டூப்பு
அதுல இவர் டாப்பு
புத்தியிலே ச்சீப்பு
பொண்ணே கண்டா சோப்பு'

http://www.mediafire.com/download/j6mcm657q8y6f80/adikkirathu_doopu.ra

vasudevan31355
21st October 2015, 08:47 AM
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

http://www.ishafoundation.org/blog/wp-content/uploads/2013/10/ayudha-pooja-2013-6-640x360.jpg

vasudevan31355
21st October 2015, 09:14 AM
'கலைமகன்' இன்று எனக்கிட்ட ஆணை.

'குழந்தையின் கோடுகள் ஓவியமா?
இந்த குருடன் வரைவது ஒரு காவியமா?
நினைந்ததை உரைத்தேன் புலவர்களே!
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்!

கலைமக(ன்)ள் எனக்கொரு ஆணையிட்டாள்
சில காவியப் பொருள்களைத் தூது விட்டாள்

அலையெனும் எண்ணங்கள் ஓட விட்டாள்
அதை ஆயிரம் உவமையில் பாட விட்டாள்
பாட விட்டாள்'

'சாகுந்தல'த்தை சபையில் அரங்கேற்றும் சாகா வரம் பெற்ற புலவன். அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து சாதனை படைக்கும் கலைத் தெய்வம். பனை ஓலையில் எழுத்தாணி பிடித்து

பெற்ற வரத்தால் பிழை புரிந்த சூரனிடம்
பட்டதெலாம் தேவர் குலம் பதைத்தே
முறையுரைக்க
கற்றை சடை முடியான்
கண்ணைத் திறந்ததுவும்
கந்தன் பிறந்ததுவும்
கைவேல் எறிந்ததுவும்
சந்தக் கவிதையிலே சாற்றினேன்
தாய் கொடுத்த இந்த மழலையையும்
ஏற்றருள்வாய் தாயகமே!
தாயகமே! தாயகமே

என்று 'நடிகர் திலகம்' காவிய அரங்கேற்றம் பண்ணும் போது அது நிஜ சபையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 'கந்தன் பிறந்ததுவும்' வரியில் திலகம் பின் பக்கம் உடல், கழுத்து இவற்றறை பின்னிழுத்து ஓலையில் முன் எழுதும்போது மூவேந்தனும் மண்டியிட்டு அடிபணிய மாட்டானா இந்த நடிப்பு வேந்தனின் நயங்களைப் பார்த்து?

வீணை ஓசையிடையே சுசீலாம்மா,

'காதல் மணம் கொண்ட பாசம்
இந்த கவிஞனின் மேக சந்தேசம்'

பாடும் போது நாடி நரம்புகள் சிலிர்த்தெழாதோ!

'சூரசம்ஹார சம்பவம்
கவி சொல்லும் குமார சம்பவம்
தாரகன் வீழ்ந்த சம்பவம்
கவி தந்த குமார சம்பவம்'

என்று விறுவிறுப்புமாய், வீரக் கொப்பளிப்புமாய் இசையரசி பாடும்போது இன்னல்கள் அனைத்தும் அந்தக் கணத்தில் மறைந்து மாயமாகும்.


https://youtu.be/HpPOKaKrbrU

rajeshkrv
21st October 2015, 09:31 AM
https://www.youtube.com/watch?v=ezPW2J1VB60

madhu
21st October 2015, 10:42 AM
வாசுஜி... சர்க்கரைப் பொங்கல் பேஷ் பேஷ்...

எல்லோருக்கும் ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்

// காதலுக்கு நாலு பக்கம் ... கேட்ட நினைவே இல்லை.. ஆனா டமுக்குடப்பா டியாலோ...டியாலோ... அடிக்கிறது டூப்பு பாட்டு ஞாபகத்துக்கு வந்திருச்சு. படம் பெயர்தான் நினைவுக்கு வரலை :( //

chinnakkannan
21st October 2015, 11:02 AM
hi happy saraswathi poojai

Bu t we are celebrating tomorrow only naalaikku thaan navami muzhukka irukkaam.. :)

aahaa கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் என்னா பாட்.. நினைவூட்டலுக்கு நன்றி.. ரேர் சாங்க்ஸ் அப்புறம் நிறைய சாங்க்ஸ் இனிமே தான் கேக்கணும்.. நிறைய ஹோம் வொர்க் பெண்டிங்..

குடுமி ரவி யைப் பார்த்துபுகை வராது வாசு.. கூட ராஜஸ்ரீயும் இருக்குமே அதான் :)

காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி// வீட் போய் கேட் ஃபுல் பாட் லிரிக்ஸ் எழுதணும்.. :)

vasudevan31355
21st October 2015, 11:12 AM
வாசுஜி... சர்க்கரைப் பொங்கல் பேஷ் பேஷ்...

எல்லோருக்கும் ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்

// காதலுக்கு நாலு பக்கம் ... கேட்ட நினைவே இல்லை.. ஆனா டமுக்குடப்பா டியாலோ...டியாலோ... அடிக்கிறது டூப்பு பாட்டு ஞாபகத்துக்கு வந்திருச்சு. படம் பெயர்தான் நினைவுக்கு வரலை :( //

மதுண்ணா!

அந்த ரெண்டு பாட்டுமே 'அன்னை சொன்ன சொல்' தான்னு கலெக்ட் பண்ண அத்தனை விவரமும் சொல்லுது.

'காதலுக்கு நாலு பக்கம்' நான் நிறைய தடவை கேட்டிருக்கேன். ஆனா சுசீலா பாட்டு நேத் கேட். நீங்க இதில் மட்டும் நேரெதிர்.:smile:

vasudevan31355
21st October 2015, 11:14 AM
hi happy saraswathi poojai

Bu t we are celebrating tomorrow only naalaikku thaan navami muzhukka irukkaam.. :)

aahaa கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் என்னா பாட்.. நினைவூட்டலுக்கு நன்றி.. ரேர் சாங்க்ஸ் அப்புறம் நிறைய சாங்க்ஸ் இனிமே தான் கேக்கணும்.. நிறைய ஹோம் வொர்க் பெண்டிங்..

குடுமி ரவி யைப் பார்த்துபுகை வராது வாசு.. கூட ராஜஸ்ரீயும் இருக்குமே அதான் :)

காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி// வீட் போய் கேட் ஃபுல் பாட் லிரிக்ஸ் எழுதணும்.. :)

ஆரு இவிக? எங்கிட்டோ கண்ட மாதிரி இருக்கே!:smile:

vasudevan31355
21st October 2015, 11:28 AM
காணவில்லை

ரவி சார்

ஐந்தடி. நாலு அங்குலம். நல்ல சிகப்பு கலர். கொஞ்ச நாளாக திடீரென காணவில்லை. பகுதி பகுதியாக பதிவுகள் போடுபவர். ஹைதராபாதை சேர்ந்தவர். நல்ல ஆன்மீகவாதி. மகாபாரதக் கதைகள், ராமாயணக் கதைகள் சொல்வதில் வல்லவர். கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஒரு நல்ல ராமன் புகைப்படம் பரிசாக அளிக்கப்படும்.


கிருஷ்ணா சார்!

நல்ல உயரம் பிளஸ் வெண்தாடி கொஞ்சம். ஒல்லி உருவம். சினிமா புள்ளி விவரங்கள் நன்கு தெரிந்தவர். காமெடி ரசனை அதிகம். தக்காளி மேல் பிரியம் கொண்டவர். கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு இன்றைய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு பரிசு. இவருக்குத்தான் காஸ்ட்லி பரிசு.

கல்நாயக்

அடிக்கடி காணாமல் போய் விடுவார். பூக்கள் மேல் பிரியம் ஜாஸ்தி. கடலூர்க்காரர். திடீரென வருவார். தொடர்ச்சியாகக் காணாமல் போய் விடுவார். எப்பவாவது வந்து லைக் போடுவார். ஒரு முழுத் திரியையும் தாங்கக் கூடிய சக்தி இருந்தும் இப்போது சக்தி இழந்து விட்டார். கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கூடை ரோஜாப்பூ வழங்கப்படும்.

எஸ்.வி என்கிற வினோத் சார்

போட்டோ, ஆவணங்கள் போடுவதில் வல்லவர். எம்.ஜி.ஆர் மேல் பிரியம் ஜாஸ்தி. எப்படியாவது எதிலாவது சம்பந்தப்படுத்தி ஒரு எம்.ஜி.ஆர் வீடியோ பாடல் ஒன்று போட்டு விடுவார். அது கூட இப்போ இல்லை. கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு 'ஒளி விளக்கு' பரிசு.

கார்த்திக் சார்

போனால் திரும்பி வர ஒன்றிரண்டு வருடங்கள். 'இரும்பு' மனசு கொண்டவர். நாம்தான் அடிக்கடி 'கோட்டை' விடுகிறோம். நல்ல அறிவாளி. நடிகர் திலகம் மேல் பிரியம் ஜாஸ்தி. நிறைய வதந்திகளுக்கு உள்ளானவர். சா தா மனிதரே அல்ல. நல்ல பாராட்டும் குணம் இவரிடம் உண்டு. நல்ல விஷய ஞானம் உள்ளவர்.

பட்டியல் தொடரும்.

chinnakkannan
21st October 2015, 05:47 PM
//ஒரு நல்ல ராமன் புகைப்படம் பரிசாக அளிக்கப்படும்.// family photo vaa single ramanaa :)

//இன்றைய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு பரிசு. இவருக்குத்தான் காஸ்ட்லி பரிசு. // :)

//கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கூடை ரோஜாப்பூ வழங்கப்படும்.// நான் அடிஷனலா எப்போதாவ்து சந்திக்க நேர்ந்தால் அவருக்கு நிலாக் காட்டுவேன் - பேக் க்ரெளண்டில் தாஜ் மகால்... :)

//அது கூட இப்போ இல்லை. கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு 'ஒளி விளக்கு' பரிசு. // :) வெள்ளி தானே..

//நல்ல பாராட்டும் குணம் இவரிடம் உண்டு. நல்ல விஷய ஞானம் உள்ளவர். // இவரைக் கண்டு பிடிச்சா ப்ரைஸ் தரமாட்டீங்களா.. சரி நான் தர்றேன்.. ஒரு ஆவணப் படம் ராகவேந்திரர் எஸ்.வி உங்களிடமிருந்து கேட்டு..அவருக்குப் பிடித்த நடிகை ஃபோட்டோ (யார்னு ஓலமிட்டுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன் :) )


https://youtu.be/9z5RZltyqaw

தோழர்களை அழைத்ததனால் தோழா தோழா பாட் போட்டேன் என்பதை :)

ஆஹக்கூடி என்னை மிஸ் பண்ணலயாங்காட்டியும் .. ம்ம்..வெச்சுக்கறேன் :sad: :)

vasudevan31355
21st October 2015, 06:01 PM
//ஆஹக்கூடி என்னை மிஸ் பண்ணலயாங்காட்டியும் .. ம்ம்..வெச்சுக்கறேன்//

உம்மை மிஸ் பண்ணுவதா? நடக்குமா? அச்சச்சோ! ஒருபக்கம் குழந்தை அழுதுடுச்சே! ஒருவேளை நீங்கள் காணாமல் போய் இருந்தால் உங்களைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் பழைய விலை மதிக்க முடியாத 'பேசும்படம்' இதழ் ஐந்தும், 'பொம்மை' பத்திரிகை ஐந்தும் பரிசாக அறிவித்திருப்பேன். ஏனென்றால் அதுதான் உயர்ந்த பரிசு. எங்குமே கிடைக்காதது. வேண்டுமானால், செந்தில் வேலையும், ராகவேந்திரன் சாரையும் கேட்டுப் பாருங்கள்.

vasudevan31355
21st October 2015, 07:20 PM
//(யார்னு ஓலமிட்டுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன் )

ஆலம் இட்டுக் கரைத்து கேட்டாலும் சொல்ல மாட்டீர்களோ!:p

vasudevan31355
21st October 2015, 07:57 PM
மதுண்ணா!

'வண்டி' கிடைச்சுடுத்து. கொடுத்து உதவியவங்க நம்ம அருமை நண்பர் சுந்தரபாண்டியன் அவர்களும், பெரிய மனது கொண்ட பேராசிரியரும். சிரமம் பாராது தேடி அளித்த இருவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நீங்கள் கூறியது உண்மை. அது டி.எம்.எஸ்.குரல் இல்லை. 'அய்யகோ!' சரிதான்.:smile: தாராபுரத்தார் குரல் மாதிரி இருக்கு.

இந்தாங்க உங்க ஆசைப்பாட்டு. தள்ளித் தள்ளி ஓட்டாதீங்க.:p

http://www.mediafire.com/listen/qw6errmu178j92i/ANNAI+SONNA+SOL+-+KJR%2C+TMS+GROUP+-+Pallakku+pola+vandhu++-+Music+KVM+%40.mp3

vasudevan31355
21st October 2015, 08:45 PM
'நீலாவுக்கு நெறஞ்ச மனசு'

தங்கவேலு பல கெட்-அப்களில்.

எல்லா வாத்தியங்களையும் வாசிச்சுக்ட்டு, டிப்டாப்பாக டிரெஸ் பண்ணி மேலை நாட்டு டான்ஸ் ஆடி..

யப்பா!

கொஞ்சம் வித்தியாசம்.

எஸ்.சி.கிருஷ்ணன் குரல் இல்லாம திருச்சி லோகநாதன். லோகநாதன் டிக் டிக் டிக் மியூசிக்கிற்கு நிறைய ஆங்கல வார்த்தைகள் கலந்து பாட்டிய பாட்டு இதுவாத்தான் இருக்கணும்.

ஒரிஜினாலிட்டி
ஒசந்த குவாலிட்டி
பார்டி
பியூட்டி
பெர்சனாலிட்டி
லவ்வுவதே என் டியூட்டி
நைஸ் கண்ணாட்டி
டிபிகல்டி
மேரேஜ் செய்யாட்டி
எம்ப்டி
'எஸ்'ன்னு சொல்லாட்டி

எல்லாம் 'டி'

எத்தனை இங்க்லீஷ் வார்த்தைகள் தமிழில் கலந்த தங்க்லீஷ் பாட்டு!

கையில தட்டு வச்சிருக்கும் வேலைக்காரி யார் தெரியுதா?


https://youtu.be/GKJypJCJW38

rajeshkrv
21st October 2015, 08:56 PM
https://www.youtube.com/watch?v=JNSBVpOqHSg

rajeshkrv
21st October 2015, 08:56 PM
https://www.youtube.com/watch?v=yaBC_hsOLjc

rajeshkrv
21st October 2015, 08:57 PM
https://www.youtube.com/watch?v=3KevLZpT_5I

rajeshkrv
21st October 2015, 08:59 PM
ஜி வணக்கம்

RAGHAVENDRA
21st October 2015, 09:05 PM
http://www.jeyamohan.in/wp-content/uploads/2015/04/thumb.jpg

வாசு சார்
அருமை நண்பர் சுந்தரபாண்டியனுக்கும் பேராசிரியருக்கும் உளமார்ந்த நன்றி.
இந்த பொக்கிஷத்தை வெளிக்காட்டிய தங்களுக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்

RAGHAVENDRA
21st October 2015, 09:08 PM
நீலாவுக்கு நெறஞ்ச மனசு
நம்ம வாசுவுக்கும் தான்..

ஒரிஜினாலிட்டி... பாட்டில் கையில் தட்டை வைத்திருக்கும் அந்த பாட்டி..இரண்டழுத்து இனிஷியலில் இரண்டாம் எழுத்து டி...

madhu
22nd October 2015, 04:08 AM
Ahaa... வாசுஜி... ஃபார் தி சாங் ஆஃப் வண்டி.....தாங்க்ஸ் எ லாட்டி... ( அடச்.. இந்த தங்கவேலு பாட்டைக் கேட்டதிலிருந்து எல்லாத்துக்கும் ஒரு டி சேர்ந்து வருதே... ஓகே ஒகே...)

அது கண்டிப்பா தாராபுரம்தான் (அப்போ காதுக்குள் கேட்ட குரல் கரீட்டுதான் )..

இன்னும் ஒரே ஒரு சந்தேகம்.. அது அன்னை சொன்ன சொல்தானா ... இல்லாட்டி ஒரு வேளை பொய் சொல்லாதேவாக இருக்குமா ? ( ஏனென்றால் பாடியவர் டி.எம்.எஸ் என தப்பாக குறிப்பிட்டிருப்பது போல படமும் மாறி இருக்க சான்ஸ் இருக்கே ).

இதுக்கு யாரு புரூஃப் கொடுப்பாங்க... ? ஆண்டவனே நீ இருந்தா சொல்லு !

rajeshkrv
22nd October 2015, 06:00 AM
Ahaa... வாசுஜி... ஃபார் தி சாங் ஆஃப் வண்டி.....தாங்க்ஸ் எ லாட்டி... ( அடச்.. இந்த தங்கவேலு பாட்டைக் கேட்டதிலிருந்து எல்லாத்துக்கும் ஒரு டி சேர்ந்து வருதே... ஓகே ஒகே...)

அது கண்டிப்பா தாராபுரம்தான் (அப்போ காதுக்குள் கேட்ட குரல் கரீட்டுதான் )..

இன்னும் ஒரே ஒரு சந்தேகம்.. அது அன்னை சொன்ன சொல்தானா ... இல்லாட்டி ஒரு வேளை பொய் சொல்லாதேவாக இருக்குமா ? ( ஏனென்றால் பாடியவர் டி.எம்.எஸ் என தப்பாக குறிப்பிட்டிருப்பது போல படமும் மாறி இருக்க சான்ஸ் இருக்கே ).

இதுக்கு யாரு புரூஃப் கொடுப்பாங்க... ? ஆண்டவனே நீ இருந்தா சொல்லு !

ungalukke theriyalainna andha AAndavukke theriyaadhu :)

RAGHAVENDRA
22nd October 2015, 06:40 AM
Launched

www.mellisaimannar.in

website for MSV ... in Tamizh

RAGHAVENDRA
22nd October 2015, 07:47 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/msv/mellisaimannarwebsite/231015PROGFW_zpsygy11jjh.jpg

மெல்லிசை மன்னருக்கு இசை அஞ்சலி நிகழ்ச்சி மேற்காணும் நிரல்படி நாளை 23.10.2015 மாலை நடைபெற உள்ளது. அழைப்பிதழ் வேண்டுவோர் நமது நண்பர் திரு ரவி.ரங்கசாமி அவர்களை 9962027654 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

madhu
22nd October 2015, 07:57 AM
Launched

www.mellisaimannar.in

website for MSV ... in Tamizh

வாழ்த்துகள்..... ( வாழ்த்து சொல்ல அங்கே இடமில்லையே ! ) மேலும் "தொடர்பு" கொள்ளச் சொல்லும் லிங்க் பழங்கால முறையில் அவுட்லுக் எக்ஸ்பிரஸை அழைக்கிறது. நேரடியாக சேதியைச் சொல்லும்படி செய்ய முடியாதா ?

RAGHAVENDRA
22nd October 2015, 08:50 AM
வாழ்த்துகள்..... ( வாழ்த்து சொல்ல அங்கே இடமில்லையே ! ) மேலும் "தொடர்பு" கொள்ளச் சொல்லும் லிங்க் பழங்கால முறையில் அவுட்லுக் எக்ஸ்பிரஸை அழைக்கிறது. நேரடியாக சேதியைச் சொல்லும்படி செய்ய முடியாதா ?

நிச்சயமாக மது சார். தங்களுடைய அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி.
தாங்கள் கூறியவாறு அங்கேயே கருத்துக்களைக் கூறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சற்றே அவகாசம் தேவைப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இவ்வசதி இணைக்கப்பட்டு விடும்.

rajeshkrv
22nd October 2015, 09:01 AM
Raghav ji,
Website super :)
Vaazhthukkal

RAGHAVENDRA
22nd October 2015, 09:06 AM
வாசு சார்

1-g, 4-t பாட்டுக்கும் நினைவூட்டியதற்கும் மீண்டும் பாராட்டுக்களும் நன்றியும்

raagadevan
22nd October 2015, 09:39 AM
சின்னக்கண்ணா... While doing a google search, I came across the following posting by yourself:

"சில காலம் அட்லீஸ்ட் ஒருவருடம்கழித்து ஸ்ரீதர் சிவகுமார் ஜெயஸ்ரீயை வைத்து எடுத்தார்.. தலைப்பு யாரோ எழுதியகவிதை.. க்ளைமாக்ஸை மாற்றி டாக்டர் அந்த் க் கணவனிடம் செர்த்து வைப்பதாகச் செய்திருந்தார் என நினைக்கிறேன்..அதனாலேயே அது தோல்வி அடைந்திருக்கும்..(இதையே தழுவி பாக்யராஜ் வீட்ல விசேஷங்க எடுத்தார் பிற்காலத்தில்)

இதில் பலபாடல்கள் இருந்தாலும் தெரிந்தபாடல்.. கேஜே ஜேசுதாஸ் வாணி ஜெயராம்..இசை இளைய ராஜா..

ம்ம் வாசு சார் மற்றவர்கள் அனலைஸ் செய்திருக்க மாட்டார்க்ள் என நினைக்கிறேன்.. நாராயணா காப்பாத்து..

பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக..."

Hmmm... "இசை இளைய ராஜா.."! Really??? :) All the songs in யாரோ எழுதிய கவிதை were composed by the famous Bengali musician/singer Ananda Shankar who was the son of renowned dancer Uday Shankar and the nephew of sitar maestro Ravi Shankar.

rajeshkrv
22nd October 2015, 10:20 AM
ராஜா ஜிக்கிக்கு சில பாடல்கள் கொடுத்தார்
அபப்டி ஒரு பாடல் இதோ

https://www.youtube.com/watch?v=ezpM6Hyw4mg

rajeshkrv
22nd October 2015, 10:25 AM
சுபாவின் எதிர்காற்று மலையாளத்தில் அர்த்தம் என்றும் தமிழில் எதிர்காற்று

நல்ல படம்
ராஜாவின் இசை
ராஜா இல்லா ராணி என்று ராணிதான் (மதுரை வானொலி அதிகம் ஒலிபரப்பிய பாடல்)
உமாரமணன் உடன் நெப்போலியன் என்ற அருண்மொழி

https://www.youtube.com/watch?v=dxdIkMIbJEM

vasudevan31355
22nd October 2015, 02:42 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

44

'இன்று முதல் செல்வமிது '

'வீட்டுக்கு ஒரு பிள்ளை'

'ராமன்' பிக்சர்ஸ் ராமண்ணாவின் புதுமைச் சித்திரம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்திலிருந்து பாலாவின் இன்றைய தொடர் பாடலைப் பார்க்கலாம்.

https://antrukandamugam.files.wordpress.com/2013/08/g-varalakshmi-jaisankar-veettukku-oru-pillai-1971.jpg?w=637&h=366

ஜெயசங்கர், (இருவேடங்களில்) எம்.ஆர்.ஆர்.வாசு, மனோகர், நாகேஷ், சுருளி, சசிகுமார், உஷா நந்தினி, ஜி.வரலஷ்மி, சி.ஐ.டி.சகுந்தலா நடிக்க, இப்படத்திற்கு மூலக்கதை கொட்டாரக்கரா. 1971 ஆம் வருடம் தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் பாபு, திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் நீரும் நெருப்பும், கோபாலகிருஷ்ணனின் ஆதி பராசக்தி போன்ற பெரிய படங்களுடன் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'.

வசனம் சுப்பு ஆறுமுகம். ஒளிப்பதிவு அமிர்தம். இசை 'மெல்லிசை மன்னர்'

பாடல்கள் கவிஞர். இயக்கம் கனக சண்முகம். டைரக்ஷன் மேற்பார்வை ராமண்ணா.

கதை.

மேல்நாடு சென்று படித்துத் திரும்பும் அதே சமயம் தமிழ்க் கலாச்சாரத்தை மறக்காத, ஏழைகளுக்கு நிலத்தைத் திருப்பிக் கொடுக்க ஆர்வம் காட்டும் பணக்கார ஜமீன் வாரிசு நாயகன் ஜெய், சொத்துக்காக அவரை ஒழித்துக் கட்ட சதித்திட்டம் போடும் வில்லி சித்தி வரலஷ்மி, அவரது அல்லக்கைகள் மானேஜர் வாசு மற்றும் தம்பி என்னத்தே கன்னையா, ஜெய் காதலிக்கும் கிராமத்துக் கிளி உஷா நந்தினி, நல்ல டிரைவர் நாகேஷ், வரலஷ்மியின் நாகாரீக கவர்ச்சி மகள் நாட்டிய சகுந்தலா, அவருக்கு வெளிநாட்டு புகழ் அரங்கேற்ற ஆசை காட்டும் டூப்ளிகேட் வெளிநாட்டு ஏஜண்ட் சசிகுமார், தங்கையின் தாறுமாறு போக்கைக் கண்டு கொதிக்கும் அண்ணன் ஜெய், மானேஜர் வாசுவுடன் கள்ளக்காதல் புரிந்தது ஜெய்க்குத் தெரிந்ததால் அவரை வில்லி வரலஷ்மி டைம்பாம் காரில் வைத்து சாகடிக்க, எதிர்பாராமல் திரும்ப அதே உருவில் வேறொரு ஜெய் வருகை, கெட்ட கும்பலுக்கு அது நாயகன் ஜெய் இல்லை என்று அதிர்ச்சி, மீண்டும் வந்த புது நாயகனைக் கொல்ல சதித்திட்டங்கள், இறுதியில் புதிய பறவை பாணியில் வரலஷ்மி வாயாலேயே அவர்தான் ஜெய்யை பாம் வைத்து கொலை செய்தவர் என்று கக்க வைக்கும் போலீஸ், மாட்டிக் கொண்ட வில்லி மலையிலிருந்து கீழே விழுந்து தற்கொலை, இறுதியில் யாருமே எதிர்பாராத இன்னொரு ஆண்டி கிளைமாக்ஸ் என்று கரம் மசாலா பக்காவாக கலந்து தந்து கலக்கிய படம். வசூலில் வாகை.

கிளைமாக்ஸ் சொல்லியே ஆக வேண்டும். இப்போதைக்கு சப்பென்று இருக்கலாம். அப்போதைக்கு அது சூப்பர்தான்.

அதாவது ஜெய் காருக்கு சித்தி வரலஷ்மி கோஷ்டி டைம் பாம் வைக்க, அது தெரியாமல் காரில் செல்லும் ஜெய்யிடம் வழியில் லிப்ட் கேட்கிறார் டிப்-டாப் மனோகர். லிப்ட் கொடுக்கும் ஜெய்சங்கரிடமே அவர் பொருள்களைக் கொள்ளை அடித்து, அவரை கீழே இறக்கி விட்டுவிட்டு, அவரை அடித்துப் போட்டுவிட்டு காரையும் திருடிச் சென்று விடுகிறார். இப்போது காரில் ஜெய்க்குப் பதிலாக மனோகர். டைம் பாம் வெடித்துக் கார் சிதறி மலையிலிருந்து உருண்டு மனோகர் இறந்துவிட, இறந்தவர் ஜெய் தான் என்று தவறான முடிவெடுத்துவிடுகிறது பின்னால் துரத்தி வந்து கண்காணிக்கும் வரலஷ்மி கும்பல். காரிலிருந்து இறக்கிவிடப்பட்ட ஜெய் போலீசில் புகார் செய்யப் போக, அங்கே நாயகன் ஜெய் உருவத்தை ஒத்த சற்று வயதான சி.ஐ.டி ஆக இன்னொரு ஜெய். போலீஸ் ஜெய் ஒரிஜினல் ஜெய்யை தன் பராமரிப்பில் வைத்துவிட்டு, அவராக ஆக மாறி கொலைக்கான காரணகர்த்தாக்களைக் கண்டுபிடிக்க மீண்டும் வில்லி வீட்டுக்குப் போக, அவரையும் கொலை செய்ய வரலஷ்மி திட்டம் போட இறுதியில் அனைத்துத் சதித் திட்ட்டங்களும் பணால். இறுதியில் போலீஸ் ஜெய் எல்லா முடிச்சுக்களையும் அவிழ்க்க ஒரிஜினல் நாயகன் ஜெய் உஷாவுடன் சேர்ந்து படம் பார்த்தவர் அனைவரையும் சந்தோஷமாக வீட்டுக்கு சிரித்த முகத்துடன் அனுப்பி வைக்கிறார்.

கலர்ப் பிள்ளை. அதனால் ஜெய் முதற்கொண்டு அனைவருக்கும் லிப்ஸ்டிக் செக்கச் செவேல்.

அதே போல இன்னொரு சிறப்பம்சம். பாடல்கள். 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' பாட்டுக்கு ஒரு படம். விஸ்வநாதனின் விஸ்வரூபம். பாடல்கள், பின்னணி இசை என்று பிரம்மாண்டம். டைட்டில் இசை 'ராஜா' போல. (தர தகுர தகுர தகுர தகுத தா..)

சித்தி அனுப்பி வைத்த வில்லன்களுடன் ஜெய், நாகேஷ் டிஷ்யூம் செய்ய, அப்படியே மோதி நிற்கிற ஸ்டில்கள் மத்தியில் டைட்டில் அதம் பறக்கும். லோ டிக்கெட் விசில் சப்தமும்தான். 'பரபர' டைட்டில். இன்றும் ரசிக்க, பரவசமடைய முடிகிறது.

பாட்டுக்கு ஒரு ஈஸ்வரி. (வாசு! காலரைத்தூக்கி விட்டுக் கொள்ளுப்பா!) சும்மா அம்மணி அமளிதுமளி.

சி.ஐ.டி.சகுந்தலா வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் அண்ணன் ஜெய்க்கு ஆட்டம் போட்டு பார்ட்டி வைப்பார். அட ராமண்ணா!

'நாகரீகம் வருக! நவநாகரீகம் வருக!'

ஈஸ்வரியின் அதே முத்திரை. 'ஹரே ராம் கிருஷ்ணா ராம்' பஜனையுடன்.

http://s1.dmcdn.net/BN9gc/x240-R6m.jpg

ஜெய் உஷாநந்தினியை வயல்வெளி காடுகளில் துரத்தி விரட்டி 'பாடகர் திலகம்' குரலில் பாடும்,

'நான் போட்ட புள்ளி...ஒரு மாற்றமில்லை...கல்யாணமான கன்னிப் பெண்ணே பொன்னம்மா'

ஜாலியோ ஜாலி கலாய்ப்பு. அமிர்தத்தின் அழகான வெளிப்புறப் படப்பிடிப்பு. அம்சமான பாடல்.

மறுபடி சகுந்தலாவின் மின்னல் வேக ஆட்டம். ராட்சஸி தாண்டவமாடிவிடுவார் சகுந்தலாவை விட. ஆனால் சகுந்தலாவின் மிகக் கடினமான ஸ்டெப்கள் நிஜமாகவே வியப்பைத் தரக் கூடியவை. ஒரு தொலைகாட்சி சேனலில் அவர் சொன்னது.

"இதுவரை நான் ஆடிய ஆட்டங்களிலேயே நான் சிரமப்பட்டு ஆடியது இந்தப் பாடலுக்குத்தான். அவ்வளவு கடினமான நடனம். இப்போதுள்ள கவர்ச்சி ஆட்ட நடிகைகளுக்கு சவால் விடுகிறேன். இது போல ஆடிக் காட்டுங்கள் பார்க்கலாம்"

அவர் சொன்னது உண்மையும் கூட.

என்ன பாடல்? அடடா! என்ன பாட்டு! என்ன டான்ஸ்!

http://s2.dmcdn.net/BNswq/x240--vt.jpg

'பெண்ணென்றால் நானன்றோ!
சொல்லுங்கள் வேறுண்டோ!'

'பாடகியென்றால் நீயன்றோ! இது போலப் பாட வேறுண்டோ!என்று ராட்சஸியைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. அதுவும்,

'சொன்னால் புரியும்...சொல்ல என்னால் முடியும்' என்று தெனாவட்டாக ஆணி அறைவாரே! அய்யோ! அமர்க்களம்.

http://i.ytimg.com/vi/qwRZ3o6PLOU/mqdefault.jpg

அடுத்து குழந்தையைக் கொஞ்சுவது போல வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்த ஜெய் குழந்தையை ஜானகி குரலில் உஷாநந்தினி கொஞ்சும் பாட்டு.

'ஏண்டா ராஜா என்ன வேணும்
எதைக் கேட்டாலும் அதை நான் தருவேன்
என்ன கண்டு பயந்தாய் சொல்லு ராஜா'

நாடாக் கட்டிலுக்குக் கீழ் நாட்டுக்கட்டை ரேஞ்சிற்கு உஷாநந்தினி பாடும்போது தியேட்டரில் பீடா, டீ ஸ்டால் காத்து வாங்கும். இதுவும் செம லோக்கல் பாட்டு.

ஜெயசங்கரின் பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டு வில்லி வரலஷ்மி வீட்டை விட்டு கிளம்ப அதை வாட்ச் செய்யும் உஷாநந்தினி ஈஸ்வரி குரலில் கிளப்பும்

'ஆட்டக் கடிச்சா மாட்டக் கடிச்சா
ஆளக் கடிச்சா எங்கத்தையம்மா'

பாடல் ஏக ரகளை. அப்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலம் இந்தப் பாடல். செம நக்கல், நையாண்டிகள் நிறைந்த பாடல். ராட்சஸி தமிழ்நாட்டின் பல ஊர்களில் மேடைக் கச்சேரி செய்யும் போது இந்தப் பாடலை பாடச் சொல்லி மக்கள் விருப்பப்படுவார்கள். அந்த அளவிற்கு ஹிட்டான பாடல்.

ஈஸ்வரியை புகழ் உச்சியில் கொண்டு சென்ற லோ கிளாஸ் பாடல்.

அப்புறம் கிளைமாக்ஸிற்கு முன்னால் ஜெய், நாகேஷ், உஷா நந்தினி வில்லி கோஷ்டியிடம் பேய்கள் கணக்காக ஒகேனக்கல் மலை அருவியில் ஆர்ப்பாட்ட இசையின் பின்னணியில் சண்டையிட்டுப் பாடும்,

'கொண்டுவா நீதி கெட்டவனை நேர்மையற்றவனை கடவுள் முன்னே.
தண்டனை பாதி இங்கு வரும் மீதி அங்கு வரும் விடுவதில்லை'

அமர்க்களமான, படு அமர்க்களமான, இன்னும் அமர்க்களமான பாடல். டி எம்.எஸ், சீர்காழி, ஈஸ்வரி சாறு பிழிந்து விடுவார்கள். 'பென்ஹர்' குதிரை மாதிரி உஷா நந்தினி என்ன ஆட்டம்...என்ன ஓட்டம். (ரவி நாகேஷின் 'அன்று கண்ட முக'த்தின் 'வாடா மாச்சான் வாடா' பாடல் பாணிப் பாடல் இது)

http://i.ytimg.com/vi/XuNvDjyKpLo/hqdefault.jpg

இப்போது அம்சமான பாலாவின் தொடரின் பாட்டு.

தண்ணி போட்டுகிட்டு, மழையில் பனைமட்டையோடு கத்தி பிடித்து, தள்ளாடி தள்ளாடி ஜெயசங்கரை கொலை செய்யச் சுற்றும் ராமண்ணாவின் ஆஸ்தான கண்ணான 'என்னத்தெ'.

மழை 'கொட்டோ கொட்'டென்று கொட்ட, வீராணம் சிமெண்ட் குழாய்களில் ஒயிட் ஜிப்பா அணிந்து ஜெய் சிகப்புப் புடவை, கால்களில் தண்டை, இடுப்பில் ஒட்டியாணம் அணிந்த கிராமத்து கனகாம்பர மங்கை உஷாநந்தினியுடன் செட்டில் உரசி உறவாடும் அருமையான ஜிலுஜிலு குளு குளு காதல் டூயட்.

'இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது'

பால்வடியும் குரலோனின் பசுமையான, நெஞ்சம் மறக்க முடியாத காதல் கானம். 'கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி' போல பாலாவின் குரல் பாடல் முழுதும் ஆரம்பத்திலிருந்தே இதமாக நம்மை இன்பலோகம் இழுக்கும்.

பாலாவுக்கு பொருத்தமாக ஹம்மிங் தேவதை வசந்த வசந்தா. பாலா பாட வேண்டும்...இந்த வசந்த தேவதை ஹம்மிங் தர வேண்டும். காணி நிலம் வேண்டும்...பராசக்தி காணி நிலம் வேண்டும். அங்கு கயிற்றுக் கட்டிலில் இளநீர் அருந்தியபடி இன்பமாக இந்தப் பாடலை மதுரகானங்கள் நண்பர்களுடன் கேட்டு கேட்டு பார்த்து பார்த்து மகிழ வேண்டும். பாலா, வசந்தாவைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ வேண்டும். நிறைவேறுமா? எண்ணம் நிறைவேறுமா?

பாலா பல்லவி முடித்தவுடன் வசந்தா தரும்,

'லாலாலாலாலா லாலா லாலா
லாலாலாலாலா லாலா லாலா'

ஹம்மிங் லாலா கடை லட்டு.

'எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்'

http://i.ytimg.com/vi/BvACUJth-YQ/hqdefault.jpg

என்று வரிகள் மீண்டும் ஒலிக்கும் போது சிமெண்ட் குழாயில் ஜெய் குழந்தை போல முட்டி போட்டு நகர்ந்து வர, உஷாநந்தினி இரு கைகளையும் சிமெண்ட் குழாயில் முன் வைத்து, தாங்கிப் பிடித்து உடல் வளைத்து, பெண்டாகி ஈரத்துடன் நிற்கும் அந்த போஸ்...சந்நியாசியைக் கூட சம்சாரி ஆக்கிவிடும். சமரசத்துக்கே இடமில்லை.

'கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்'

என்று பாலா முடித்ததும்

வசந்தா தரும் அந்த சுகமான,

'யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா
யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா'

ஹம்மிங்

வார்ரே வாய்யா!

உஷா ஜெய் முதுகு மீது குழாய்க்குள் ஒய்யாரமாக அமர்ந்து...அதே போல் ஜெய் உஷா முதுகு மீது...ஏக ரகளைக் காதல். பாடல் முழுதுமே கட்டுக்கடங்காதக் குதிரையாய்த் திரிகிறார் உஷா நந்தினி. அம்மணியின் உடம்பு கேள்விக்குறி, கமா, ஆச்சர்யக்குறியாக வளைந்து, நெளிந்து, நிமிர்கிறது. பார்ப்பவர்கள் உடலும்தான்.

குழாய்களின் நுழைவுப் பக்கத்தில் மின்னலை உணர்த்துவதற்காக செட்டில் ஆர்க் வெல்டிங் வைப்பார்கள் போலிருக்கிறது. நடுநடுவில் கத்தி காட்டி மிரட்டி ஆள் உயர மரத்துப் பொந்தில் கன்னையா ஒளிந்து கொள்வது...
அவரைப் போல வரும்?... ஆனா வராது.

'பொன்னைத்தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று'

என்று ஜெய் உஷாநந்தினியை அலேக்காகத் தூக்கும் போது, அப்போது உஷாநந்தினி ஜெய் தோள்களில் சாய்ந்து குப்பற வளையும் போது அந்த மழைப் பாட்டிலும் நமக்கு 'குப்'பென்று வியர்த்து பின் உடல் சில்லிட்டு விடும்.

அதே போல,

'பொன்னிலே போதை இல்லை
உன்னிடம் கண்டேன் இங்கு'

வரிகள் முடிந்தவுடன்

'ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்
ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்'

என்று வசந்தா பின்னி எடுக்க, அந்த வரிகளின் டியூனுக்குத் தோதாக அங்கிருக்கும் ஆலமரத்தின் விழுதுகளை காதலர்கள் ஊஞ்சல் போலப் பிடித்து தொங்கியபடி ஆடுவது அருமை.

வசந்தா ஹம்மிங் முடித்ததும் பாலா 'ம்ம்ம்ம்'....என்றும் பின் 'ஓஓ...ஹோ' என்று தொடர்வது அருமையிலும் அருமை.

இடையிசை டிரம்பெட்டில் கலக்கும். பல்லவி வரிகளில் கவனித்தால் 'கிளிங் கிளிங்' என்ற மழைத்துளி தெறிப்பது போன்ற ஓசை இடைவிடாது அற்புதமாக ஆங்காங்கே ஒலிக்கும். மழை சிச்சுவேஷனை இசை மழை அப்பட்டமாக அப்படியே நமக்குக் கா(கொ)ட்டும்.

'கைகளால் அத்தான் தன்னை
கைது செய் காதல் பெண்ணே'

எனும் போது தரையில் தவழும் நாயகியின் கால்களைப் பிடித்து, வேகமாக இழுத்து ஜெய் அவரை அணைத்துக் கொள்வது சிலுசிலுப்பு.

சிமெண்ட் பைப்பின் மேலும், ஆலமரத்தின் அடிவேர் சந்து, பொந்துகளிலும் காதல் ஆட்டங்கள் கன்டின்யூ ஆகும். பாம்புகள் ஊர்வது போல சேற்றில் இருவரும் மாறி மாறி ஊர்ந்து வந்து நம்மை கூர்ந்து கவனிக்க வைப்பார்கள்.

கன்னுக்குட்டி போல 'லாலி லாலி லா லாலி லாலி' என்று உஷாநந்தினி முட்டியிட்டு, தலையாட்டியபடி சேற்றில் நகர்ந்து வருவதும் ஜோர். பாடல் முழுவதும் உஷா நந்தினி உற்சாக நந்தினி. மக்கள் கலைஞருடன் மகா நெருக்கம். கவர்ச்சி சற்று எல்லை மீறி இருக்குமே தவிர ஆபாசம் எள்ளளவும் இருக்காது என்பது இப்பாடலின் மிகப் பெரிய வெற்றி. அமிர்தம் ஒரு சிமெண்ட் பைப்பிற்குள் ஏகப்பட்ட வித்தைகளை காமெரா மூலம் செய்து காட்டுவார். திறமை.

இந்த மாதிரிப் பாடல்களில் ஆய்வு எழுதுவது சிரமாக இருக்கிறது. பாலா திறமையை மட்டும் எடுத்து எழுதவும் முடியவில்லை. மற்றவர்களின் திறமைகளை எடுத்துச் சொல்லாமலும் திருப்திப்படவில்லை. எல்லாமே அருமையாய் இருக்கும் போது எதை எழுதுவது? எதை எழுதாமல் விடுவது என்று பெருங்குழப்பம்.

பாலாவின் கேரியரில் கோமேதகப் பாடல். ஒவ்வொரு எழுத்தையும் அனுபவித்துப் பாடியிருப்பார்.

'கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்' என்பதில் சொர்க்கத்தை நமக்குக் கொண்டு வந்து காட்டுவார். 'சொர்க்கம்' என்பதை அழுத்தி பேஸ் வாய்ஸில் உச்சரிக்கும் போது மயங்காத மனம் யாவும் மயங்கும். பாடல் முழுதும் அவர் கொஞ்சமும் அலட்டாமல் அலுங்காமல் நலுங்காமல் நூல் பிடித்த மாதிரி அப்படியே வெல்லப் பாகு நீள்வதைப் போல ஒரே சீராக ஸ்ருங்கார ரசம் சொட்ட சொட்டப் பாடியிருப்பார்.

மிக வித்தியாசமான டூயட். பாடலும். வெயிலின் சூட்டிற்கு இதமான தென்றல் போல், மழையின் குளிருக்கு பதமான வெயில் போல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுகம் தரும் அற்புதமான அமிர்தப் பாடல். எங்கயோ நம்மை இனம் புரியாத லெவலுக்கு அழைத்துச் செல்கிறது எப்போது கேட்டாலும் இந்தப் பாடல்.

ஜெயசங்கரின் டூயட்களில் 'என்றும் செல்வம்' இந்தக் காதல் பாடல்.

http://i.ytimg.com/vi/LHIyEd6D0s4/hqdefault.jpg

ம் ஹூம் ம் ஹூம்
ம் ஹூம் ம் ஹூம்

அஆ.........................ஆ

இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது

லாலாலாலாலா லாலா லாலா
லாலாலாலாலா லாலா லாலா

இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது

(அழகான டிரம்பெட் ஓசை)

எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்

ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்
ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்

எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்
கொடுத்தேன் கண்ணில் முத்தம்
கொண்டுவா கொஞ்சும் சொர்க்கம்
கொண்டுவா கொஞ்சும் சொர்க்கம்

யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா
யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா

இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது

பொன்னைத்தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று
பொன்னைத்தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று
பொன்னிலே போதை இல்லை
உன்னிடம் கண்டேன் இங்கு
உன்னிடம் கண்டேன் இங்கு

ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்

ம்ம்ம்ம்

ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்

ஓஓ......ஹோ

(நடுவில் சந்தூர் இசையும், பின் டிரம்பெட் ஒலியும் இழையும்)

கைகளால் அத்தான் தன்னை
கைது செய் காதல் பெண்ணே
முத்துப் போல் இங்கே மெல்ல
சித்திரம் தந்தால் என்ன
சித்திரம் தந்தால் என்ன

லாலி லாலி லா லாலி லாலி
லாலி லாலி லா லாலி லாலி

இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது

ம் ஹூம் ம் ஹூம்
ம் ஹூம் ம் ஹூம்
ம் ஹூம் ம் ஹூம்
ம் ஹூம் ம் ஹூம்


https://youtu.be/XuNvDjyKpLo

vasudevan31355
22nd October 2015, 03:03 PM
http://sim05.in.com/4f36ccae6019c32049b40ba7c28ee0ac_m.jpg

ஜி.வரலஷ்மி என்ற பாந்தமான, சாந்தமான, பழைய காலத்து நடிகையை ஜெய்க்கு வில்லி சித்தி ரோல் கொடுத்து, அவரை மது அருந்த வைத்து, இங்கிலீஷ் பேச வைத்து ஒருவழியாக்கியிருப்பார்கள். இதில் மானேஜர் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் கள்ள உறவு வேறயாம். மேக்-அப் கொடூரம். வில்லித்தனமும்தான்.

https://antrukandamugam.files.wordpress.com/2013/08/g-varalakshmi-mrr-vasu-veettukku-oru-pillai-1971-1.jpg?w=642&h=364

இந்த நடிகை நடிகர் திலகத்தை வைத்து 'ஹரிச்சந்திரா' என்ற படத்தை நெடுங்காலமாய்த் தயாரித்தார். அவரே சந்திரமதியாகவும் ஹீரோயின் ரோல் செய்தார். இவர்தான் 'வாழ்விலே ஒரு நாள்', 'நான் பெற்ற செல்வம்' போன்ற படங்களில் நடிகர் திலகத்தின் நாயகி. எம்.ஜி.ஆர் அவர்களுடன் 'குலேபகாவலி' படத்தில் ஒரு ஜோடியாக வருவார். ('மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ')

vasudevan31355
22nd October 2015, 03:17 PM
'ஹரிச்சந்திரா' படத்தில் நடிகர் திலகத்துடன் ஜி.வரலட்சுமி

http://d382j8j5g7zlk1.cloudfront.net/images/overlays/Harichandra.jpg

vasudevan31355
22nd October 2015, 03:19 PM
'நான் பெற்ற செல்வம்' பட விளம்பரத்தில் ஜி.வரலட்சுமி.

http://directorksomu.com/images/Films/nps_1.jpg

chinnakkannan
22nd October 2015, 03:43 PM
சின்னக்கண்ணா... While doing a google search, I came across the following posting by yourself:

"சில காலம் அட்லீஸ்ட் ஒருவருடம்கழித்து ஸ்ரீதர் சிவகுமார் ஜெயஸ்ரீயை வைத்து எடுத்தார்.. தலைப்பு யாரோ எழுதியகவிதை.. க்ளைமாக்ஸை மாற்றி டாக்டர் அந்த் க் கணவனிடம் செர்த்து வைப்பதாகச் செய்திருந்தார் என நினைக்கிறேன்..அதனாலேயே அது தோல்வி அடைந்திருக்கும்..(இதையே தழுவி பாக்யராஜ் வீட்ல விசேஷங்க எடுத்தார் பிற்காலத்தில்)

இதில் பலபாடல்கள் இருந்தாலும் தெரிந்தபாடல்.. கேஜே ஜேசுதாஸ் வாணி ஜெயராம்..இசை இளைய ராஜா..

ம்ம் வாசு சார் மற்றவர்கள் அனலைஸ் செய்திருக்க மாட்டார்க்ள் என நினைக்கிறேன்.. நாராயணா காப்பாத்து..

பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக..."

Hmmm... "இசை இளைய ராஜா.."! Really??? :) All the songs in யாரோ எழுதிய கவிதை were composed by the famous Bengali musician/singer Ananda Shankar who was the son of renowned dancer Uday Shankar and the nephew of sitar maestro Ravi Shankar.

ஹச்சோ ராகதேவன்.. தாங்க்ஸ்..எப்ப்போதோ எழுதினது.. மறந்து தவறாக எழுதிவிட்டேன்..ஷமிக்கணும்.. ஆனந்த சங்கர் உதய் ஷங்கர் மகன், ரவி ஷங்கரின் உறவு என்ற தகவலுக்கு நன்றி.. :) ஆமா எதுக்கு இப்போ யாரோ எழுதிய கவிதை..ம்ம் ஜெயஸ்ரீயைப் பாக்கணும்னு தோணித்தாக்கும் :)

https://youtu.be/OlMBruITiTk

ஹி.ஹி.. நான் பார்க்காத கேட்காத வீடியோ உங்களுக்காக..

chinnakkannan
22nd October 2015, 03:46 PM
ம்ம் வரவர உஷா நந்தினி பாட்டாப் போட்டுக்கிட்டிருக்காங்கப்பா :) இன்று முதல் செல்வமிது பாட் ரொம்பப் பிடிக்கும்..அஸ்யூஸ்வல் வர்ணனை..

//உஷா ஜெய் முதுகு மீது குழாய்க்குள் ஒய்யாரமாக அமர்ந்து...அதே போல் ஜெய் உஷா முதுகு மீது...ஏக ரகளைக் காதல். பாடல் முழுதுமே கட்டுக்கடங்காதக் குதிரையாய்த் திரிகிறார் உஷா நந்தினி. அம்மணியின் உடம்பு கேள்விக்குறி, கமா, ஆச்சர்யக்குறியாக வளைந்து, நெளிந்து, நிமிர்கிறது. பார்ப்பவர்கள் உடலும்தான். // உங்க ரசனை எனக்கு எப்பவும் ஆச்சர்யக் குறி தான் :)

அமிர்தம் ஒரு சிமெண்ட் பைப்பிற்குள் ஏகப்பட்ட வித்தைகளை காமெரா மூலம் செய்து காட்டுவார். திறமை. // :)

இன்னும் இங்கு வந்திருக்கும் நிறைய பாட் நாளைக்காவது கேட்டு எழுதணும்

vasudevan31355
22nd October 2015, 03:50 PM
https://antrukandamugam.files.wordpress.com/2013/08/g-varalakshmi-ennathe-veettukku-oru-pillai-1971.jpg?w=593

'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்தில் ஒரு விறுவிறு காட்சி.

இரண்டாவதாக வந்த டூப் ஜெயசங்கரையும் (சிஐடி) தீர்த்துக்கட்ட வில்லி ஜி. வரலஷ்மி ப்ளான் போடுவார். எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ்,( நடிப்பார்) 'என்னத்தே' சகிதம் விஷம் கலந்த காப்பியை பிளாஸ்க்கில் ஊற்றி ஜெய் இருக்கும் வீட்டிற்கு எடுத்து வருவார். வீட்டின் மேல் ஏறி, கயிற்றில் சுரடு ஒன்றை மாட்டி, அந்தக் கொக்கியில் பிளாஸ்க்கை வைத்து, ஓட்டைப் பிரித்து மேலிருந்து கீழே இறக்குவார். அங்கே கீழே டேபிளில் இதே கலரில் இன்னொரு பிளாஸ்க் இருக்கும். விஷக் காப்பி உள்ள பிளாஸ்க்கை அந்த இடத்தில் வைத்துவிட்டு ஏற்கனவே அதே கலரில் இருக்கும் பிளாஸ்க்கை அந்தக் கயிற்றின் வழியாகவே எடுத்து விடுவதாக ப்ளான். வரலஷ்மி பிளாஸ்க்கை கயிற்றிலிருந்து விலக்கி கரெக்டாக டேபிளில் வைத்து விடுவார். பக்கத்தில் இருக்கும் பிளாஸ்க்கை கொக்கியில் மாட்ட எத்தனிக்கும் போது டேபிளில் உள்ள போட்டோ ஒன்றில் கயிறு கொக்கி பட்டு கீழே தவறி விழுந்து விடும். உள்ளே ஜெயசங்கர் வேறு அப்போது வந்து விடுவார். இப்போது இரண்டு பிளாஸ் க்குமே மேஜையில் இருக்கும். ஜெய் அதை கவனிக்க மாட்டார். கீழே விழுந்த போட்டாவை சற்று சந்தேகம் கொண்டு பார்த்து விட்டு, பின் அதைத் துடைத்து டேபிளில் மறுபடி வைப்பார் ஜெய். பின் வாஷ் டப் சென்று ஜெய் முகம் கழுவுவார். இதையெல்லாம் மேலே ஓட்டைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வில்லி வரலஷ்மி இந்த டயத்தில் மறுபடி ட்ரை பண்ணி மேலிருந்து கரெக்டாக விஷமில்லாத காபி உள்ள பிளாஸ்க்கில் கொக்கியில் மாட்டி கயிற்றை மேலே ஜெய் கவனிப்பதற்குள் இழுத்து விடுவார்.

பின் ஜெய்சங்கர் அங்கு அமர்ந்து விஷமுள்ள காபி உள்ள பிளாஸ்க்கை அறியாமல் திறந்து காபி அருந்துவார். இதை மேலே இருந்து பார்க்கும் வில்லி கீழே உள்ள தன் ஆட்களிடம் மேலிருந்து ஜெய்யைப் பார்த்தபடி நேரடி வர்ணனை செய்வார். ('இப்போ குடிக்கிறான்... குடிச்சிட்டான்') விஷக் காபி உள்ளே போனதும் ஜெய் தொண்டையைப் பிடித்துக் கொண்டு துடிப்பார். உயிருக்குப் போராடுவார். அப்படியே மேலே பார்க்கும் போது வரலஷ்மியைக் கவனித்து விடுவார். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. மேலே இருந்து வரலஷ்மியும் பயப்படாமல் ஜெய்சங்கரை நேரிடையாக பார்த்து அவர் அவஸ்தைப்படுவதைப் பார்த்து ஆனந்தப்படுவார்.

இந்தக் காட்சி 'பரபர'வென இருக்கும். ஜெய்யிடம் வில்லி மாட்டி விட வேண்டுமே என்ற ஆர்வமும், ஜெய் தப்பிக்க வேண்டுமே என்ற பதைபதைப்பும், எங்கே ஜெய் பிளாஸ்க்கைப் பார்க்காமல் விட்டுவிடுவாரோ என்ற கவலையும், விஷ பிளாஸ்க்கை வைத்துவிட்டு நல்ல பிளாஸ்க்கை வில்லி எடுத்தவுடன் அவள் மீது கோபமும், ஜெய் தெரியாமல் விஷமருந்தியவுடன் அவர் மேல் பச்சாதாபமும், 'உச்' கொட்டும் எண்ணமும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிறக்கும். எனக்கல்ல.

ஆனால் விறுவிறு சுறுசுறு பதை பதை காட்சிதான்.

chinnakkannan
22nd October 2015, 03:54 PM
//பாலாவுக்கு பொருத்தமாக ஹம்மிங் தேவதை வசந்த வசந்தா. பாலா பாட வேண்டும்...இந்த வசந்த தேவதை ஹம்மிங் தர வேண்டும். காணி நிலம் வேண்டும்...பராசக்தி காணி நிலம் வேண்டும். அங்கு கயிற்றுக் கட்டிலில் இளநீர் அருந்தியபடி இன்பமாக இந்தப் பாடலை மதுரகானங்கள் நண்பர்களுடன் கேட்டு கேட்டு பார்த்து பார்த்து மகிழ வேண்டும். பாலா, வசந்தாவைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ வேண்டும். நிறைவேறுமா? எண்ணம் நிறைவேறுமா?// தோப்பு மாதிரி இடத்துக்குப் போய் இள நீர் குடிச்சுக்கிட்டே சிடி ப்ளேயர்ல பாட் கேக்கத்தானே முடியும்.. மங்களூர் மடிக்கேரி அந்தப் பக்கம் தான் போய் பார்க்கணும் வின் ட்டர் டயத்துல.. பார்க்கலாம் கால்ம் கனிந்தால் எல்லாமே நடக்கும் வாசு.. :) வீடியோபாக்கணும்னா கொஞ்சம் குட்டி டிவி டிவிடி தான்..கார்ல வைக்கிறது..அத வச்சு த் தான்பார்க்க இயலுமில்லியோ..

chinnakkannan
22nd October 2015, 03:56 PM
வீட்கு ஒரு பிள்ளை சில பல வருடம் முன் பார்த்தது.. மதுரை கல்பனாவில் ரிலீஸ்..ஆனால் அப்போது பார்க்கவில்லை என நினைக்கிறேன்.. அவ்வளவாக நினைவுக்கு வரவில்லை.. ஒரு மாதிரி பனிமூட்டமாக நினைவில்.. பட்..

க்ளைமாக்ஸ் நு பார்த்தா இந்தப் படத்தைப் படிக்கும் போது பிரபு வின் மூடு மந்திரம் நினைவுக்கு வருகிறது..ரேகா ரேகா தான் கொலையாளி என எல்லாரையும் நம்ப வைத்துபின் ட்விஸ்ட் கொடுப்பார்கள்..

chinnakkannan
22nd October 2015, 04:00 PM
Launched

www.mellisaimannar.in

website for MSV ... in Tamizh

வாழ்த்துக்கள் ராகவேந்திரா சார்.. நினைவ்லைகளில் நாங்களும்பங்கு கொள்ள இயலுமா..இசை ரசிக்க மட்டுமே எனக்குத்தெரியும்..

vasudevan31355
22nd October 2015, 05:53 PM
மெல்லிசை மன்னரின் புகழ் பாடும் புதிய இணையதளமாம் http://www.mellisaimannar.in/ இணையதளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ராகவேந்திரன் சார். இணைய தளத்தில் இடம் பெறப் போகும் பல்வேறு இணைப்புகளை ரசிக்க ஆர்வமாய் உள்ளேன். திரை இசைப் பாடல்களை சிறுகுழந்தை கூட ரசிக்கும் அளவிற்கு சாதனைகள் நிகழ்த்திய இசையின் மன்னருக்கு மிகச் சிறந்த அர்ப்பணிப்பு இது. என் மனதார வாழ்த்துகிறேன்.

RAGHAVENDRA
22nd October 2015, 06:01 PM
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வாசு மற்றும் சி.க. சார்.

தங்கள் ஒவ்வொருவருடைய வாழ்த்தும் ஊக்கமும் உற்சாகமும் தருவதாய் உள்ளன.

தொடர்ந்து தங்களுடைய ஆதரவை எதிர்நோக்கி பயணம் தொடரும்.

RAGHAVENDRA
22nd October 2015, 06:10 PM
வாசு சார்
நடிகர் திலகத்திற்கு வாய்க்க வேண்டிய பல நல்ல பாடல்கள் மற்றவர்களுக்கு சென்று விட்டன. அதில் எனக்கு சற்று வருத்தமே. என்றாலும் சில பாடல்கள் படமாக்கப்பட்டதைப் பார்க்கும் பொழுது நல்ல வேளை தலைவருக்கு இந்த மாதிரி வாய்க்கவில்லையே என மன ஆறுதல் கொள்வதும் உண்டு.

ஆனால் நிச்சயமாக வீட்டுக்கு ஒரு பிள்ளை அப்படி ஒதுக்கிய பாடல் அல்ல. காரணம் இது நடிகர் திலகத்திற்கு பாலா பாடிய முதல் பாடலாயிற்றே. சொர்க்கம் படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல். கே.ஆர்.விஜயாவுடன் திருமணம் முடிந்தவுடன் முதலிரவில் பாடுவதாக இப்பாடல். வரிகளும் கதாநாயகனின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே எழுதப்பட்டிருக்கும். தன்னுடைய எதிர்கால கனவுகளை எண்ணியவாறே அவளை கல்யாணம் செய்த வேளை இதெல்லாம் நடக்கும் என்பதாக நினைத்துப்பாடுவதாக வரிகள் எழுதப்பட்டிருக்கும்.

"இன்று முதல் செல்வமிது என்னழகு தெய்வமிது வாழ்வு வந்தது" இந்த வரிகளிலேயே சொர்க்கம் பட கதாநாயகனின் பாத்திரத்தின் மன ஓட்டத்தை கவிஞர் கொண்டு வந்திருப்பார்.சிவந்த மண் படம் வெளியான போதே சொர்க்கம் படத்தின் 78 கிராமஃபோன் ரிக்கார்டுகள் வெளிவந்து விட்டன. பாலா வந்த புதிதில் குரல் மக்களை காந்தம் போல் கவர்ந்திழுத்த நேரம். எனக்குத் தெரிந்து பாலா பாடி வசந்தா ஹம்மிங் குரல் கொடுத்த பதிவு செய்யப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

பாலாவின் குரலில் மயங்கினாலும் அந்த ஹம்மிங், படத்தில் கே.ஆர்.விஜயாவின் பாத்திரத்திற்கு ஒத்து வருமா என தலைவர் ஐயம் எழுப்பி, அது எல்லோரிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி பின்னர் அப்பாடல் படமாக்கப்படவில்லை என்றும் அதற்காகவே புதியதாக அழகு முகம் பாடல் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டது எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் என்றால் எனக்குத் தெரிந்து அழகு முகம் பாடல் 78 இசைத்தட்டில் வெளியிடப்படவில்லை. அப்பாடல் படத்தில் தான் மக்கள் முதன் முதலில் கேட்டதாய் நினைவு. அதற்குப் பிறகு ரிக்கார்டிங் கம்பெனி சொர்க்கம் படப்பாடல்களை எல்பி இசைத்தட்டில் வெளியிட்ட போது அழகு முகம் பாட்டை சேர்த்ததாகத் தான் எனக்கு ஞாபகம்.

நினைவுகளை அசை போட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி வாசு சார்.

vasudevan31355
22nd October 2015, 06:15 PM
தேங்க் யூ ராகதேவன் சார்.

இதோ 'யாரோ எழுதிய கவிதை' இசையமைப்பாளர் பெயர்.

டைட்டிலிலிருந்து.

http://i60.tinypic.com/2qk5hf8.png

'ஆஹா ஆயிரம் சுகம்' 'யாரோ எழுதிய கவிதை' படத்திலிருந்து.


https://youtu.be/nXIGhhOtlc0

vasudevan31355
22nd October 2015, 06:22 PM
அருமை ராகவேந்திரன் சார். எவ்வளவு அரிய விஷயங்கள் தங்களிடம் புதைந்து கிடக்கின்றன! அது போல சரியான சந்தர்ப்பத்தில் வெளி வருகின்றன. ஏற்கனவே நான் தங்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது முழு விவரங்களையும் இங்கு அளித்தமைக்கு நன்றி!

கே.ஆர்விஜயா விஷயத்தில் தலைவருடைய சந்தேகம் நூற்றுக்கு நூறு நியாயமானது. அதனால் பாடலையே இழந்தாலும் பரவாயில்லை.:) குடும்பப் பெண்மணியாக விஜயா கதைக்குப் பொருத்தமானவர் என்பதற்காக ராமண்ணா அவரை சொர்க்கத்திற்காகத் தேர்ந்தெடுத்தார். அது இந்த மாதிரி சில இழப்புகளுக்கு காரணமாய் போய் விட்டது. ஆதிராம் சார் அவருக்குத் தெரிந்த தகவல்களை அருமையாக பரிமாறிக் கொள்வார் என்று நம்பலாம்.

vasudevan31355
22nd October 2015, 06:44 PM
மதுண்ணா!

'பணக்காரக் குடும்பம்' படத்தில் 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை' பாடல் கேட்டிருப்பீர்கள். வழக்கத்திற்கு மாறான மிக அமைதியான எம்.ஜி.ஆர் டூயட் பாடல் இது. இதில் ஒரு இடத்தில்

'பேச முடியாத பெருமை
இந்த இனிமை இனிமை இனிமை
இந்த'...... ..... .....

என்று சரோ தொடராமல் நிறுத்துவார்.

அப்போது மீதி 'இனிமை... இனிமை' வார்த்தைகளை புல்லாங்குழல் ஓசை நிறைவு செய்யும் வெகு இனிமையாக. நேர்த்தியாக.

அதே போல 'பாடகர் திலகம்'

'சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
சுகம்'..... ..... ......

என்று தொடராமல் நிறுத்துவார். அதே போல புல்லாங்குழல் இசை மீதி வார்த்தைகளை நிறைவு செய்யும்.

இப்போது உங்களுடைய ஃபேவரிட் பல்லாக்கு போல வண்டி' பாடலின் 'தள்ளம்மா... தள்ளம்மா... தள்ளம்மா' வரிகளின் டியூனை மட்டும் மேற்கண்ட 'இனிமை... இனிமை... இனிமை'...யுடன் மேட்ச் செய்து பாருங்கள். ஏதாவது புலப்படுகிறதா?:)

adiram
22nd October 2015, 08:07 PM
டியர் வாசு சார்,

இதெல்லாம் ரொம்ப அநியாயம். வீட்டுக்கு ஒரு பிள்ளையின் 'இன்றுமுதல் செல்வமிது' பாடலை பதிவிட்டு தூக்கம் தொலைக்க வைத்துவிட்டீர்கள். (அடிக்கடி இந்த அநியாயத்தை செய்யுங்கள்). இந்த வயதில் போய் தூக்கம் தொலைத்தாயா என்றெல்லாம் கேட்கக்கூடாது. உஷாநந்தினி எங்க காலத்து... ஸாரி நம்ம காலத்து கனவுக்கன்னிகளில் ஒருவர்.

வீட்டுக்கு ஒரு பிள்ளை நல்லதொரு பொழுதுபோக்குப்படம். அப்போதெல்லாம் மக்கள் கலைஞரின் வண்ணப்படங்களை காண்பது மிகமிக அரிது. அதிகம் கருப்பு வெள்ளையிலேயே ஜாலங்கள் நிகழ்த்தி வந்தார். (அவர் வில்லனாக மாறியபின் அவருக்கு வண்ணமாக வந்து குவிந்தது. நிச்சயம் இது கொடுமைதானே). இந்த படம் 71 தீபாவளிக்கு வந்து சக்கைபோடு போட்டதையும், பிரம்மாண்ட படங்களை பின்னுக்கு தள்ளியதையும் முன்பு கார்த்திக் சார் 'பாபு' திரைக்காவியத்தின் ரிலீஸ் தின மலரும் நினைவுகளில் விவரித்திருந்தார். வழக்கமான ராமண்ணாவின் பொழுதுபோக்கு மசாலா காவியம். பெரிய அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்தின் 'பெண்ணென்றால் நானன்றோ' பாடலுக்கு தவில் அடித்து அசத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். அவர் தவில் அடித்த பாடல்களில் இன்னொன்று நமது கௌரவத்தில் இதே ராட்சசி தூள் கிளப்பிய 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல். நம் எல்லோருக்கும் பிடித்த ஜெய்குமாரியின் அழகிய ஆட்டத்துடன்.

இப்படத்தின் வில்லி ஜி. வரலட்சுமியின் கணவர் பயில்வான் தாராசிங்கின் தம்பி பயில்வான் அஜீத்சிங். உலக அளவில் பல மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்.

ராமண்ணா படங்களின் டுயட்டுகளுக்கான லொக்கேஷன் நமக்கு தெரிந்ததுதான். பார்க், பீச், வெளிநாடு... ஊஹும்.
பறக்கும்பாவையில் பாத்ரூமுக்குள் டூயட்.
குமரிப்பெண்ணில் ரயில்பெட்டியில் டீசிங் பாடல்
நான் படத்தில் சின்ன பியட் காருக்குள் டூயட்
மூன்றெழுத்தில் சின்ன பெட்டிக்குள் டூயட்
தங்கசுரங்கத்தில் கிணற்றுக்குள் டூயட்
இந்தப்படத்தில் அவருக்கு கிடைத்தது வீராணம் குழாய்கள்.
அதையே அட்டகாசமாக பயன்படுத்தி நம்மையும் அசத்திவிட்டார்.

'இன்று முதல் செல்வமிது' பாடல் அந்தக்கால விவித்பாரதியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. அதை மிக விரிவாக அருமையாக ஆய்வு செய்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

அடடே மறந்துட்டேனே. ஆய்வின் இடையிடையே செருகப்பட்டிருந்த கிளுகிளு ஸ்டில்கள் அருமை.

RAGHAVENDRA
22nd October 2015, 08:28 PM
வாசு சார்
பறக்கும் பந்து பறக்கும் பாட்டைப் பற்றி நீங்கள் எழுதியவுடன் ஏனோ எனக்கு தேவன் கோயில் மணியோசை படப்பாடல் நினைவுக்கு வந்து விட்டது.

அந்தப் படத்தின் துவக்க விழாவன்று ரணணா ஸ்ரீதர் இசையில் இரு பாடல்கள் பதியப்பட்டது என நினைக்கிறேன். ஒரு பாடலின் பல்லவி புதிய உலகம் பிறக்கும் என்று துவங்கும். இரண்டாம் வரி கூட ... கதவு திறக்கும்... என்று வரும். இரண்டாம் வரியின் முதல் வார்த்தை ஞாபகத்திற்கு வரவில்லை. அருமையான ட்யூன். டி.எம்.எஸ். பி.சுசீலா பாடியது. அந்தப் பாடலையாவது அவர்கள் வெளியிட்டிருக்கலாம். அந்தக் காலத்தில் அது புதுமையான ட்யூன். நமது நண்பர் ஒருவர் அந்தப் படப் பூஜையன்று அங்கிருந்தார். சில தினங்களுக்கு முன் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் அந்த ட்யூனைப் பாடிக்காட்டினார். அது மட்டும் வந்திருந்தால் டி.எம்.எஸ். பி.சுசீலா இணையின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் வைரமாய் மின்னியிருக்கும். காரணம் நண்பர் பாடிக்காட்டும் போதே அது அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

chinnakkannan
22nd October 2015, 08:32 PM
//ராமண்ணா படங்களின் டுயட்டுகளுக்கான லொக்கேஷன் நமக்கு தெரிந்ததுதான். பார்க், பீச், வெளிநாடு... ஊஹும்.
பறக்கும்பாவையில் பாத்ரூமுக்குள் டூயட்.
குமரிப்பெண்ணில் ரயில்பெட்டியில் டீசிங் பாடல்
நான் படத்தில் சின்ன பியட் காருக்குள் டூயட்
மூன்றெழுத்தில் சின்ன பெட்டிக்குள் டூயட்
தங்கசுரங்கத்தில் கிணற்றுக்குள் டூயட்
இந்தப்படத்தில் அவருக்கு கிடைத்தது வீராணம் குழாய்கள்.
அதையே அட்டகாசமாக பயன்படுத்தி நம்மையும் அசத்திவிட்டார். // சூப்பர் லிஸ்ட் ஆதிராம் சார்..

காஜல் போல கூகுள் கூகுள் ஸாரி வாசு வாசு பண்ணிப்பார்த்ததில்

ராமண்ணா படத்தில்மிகப் பிடித்த பாடல்கள் என லிஸ்ட் போட்டேன்

அன்று வந்ததும் அதே நிலாவை விட கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பிடிக்கும்


மெளனம் கலைகிறது மயக்கம் வருகிறது.. ஓஹ்

இன்னும் நிறையச் சொல்லலாம்.. ஆனால் முடியாத்.. ஏனாம்.. கான்செப்ட் கிடைச்சுடுத்தே..

எனில் இன்று விஜயதசமியை முன்னிட்டு...

விஜய என ஆரம்பிக்கும்ஹீரோயின்களின் பாடல்கள்..

முதலாவதாக (ரொம்ப நாளாச்சு) வி.கு பாட் :)

நான்பாடும் பாட்டிலே வான் மீனும் தூங்குமே

https://youtu.be/v17bclS-eyc

chinnakkannan
22nd October 2015, 08:35 PM
விஜயதசமி ஸ்பெஷல்..

வி.கு பாட் டூ :) போனஸாக அசோகன்..



வஞ்சி என்றால் வஞ்சிப்பதோ
வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ..

https://youtu.be/ngFgQlu7KC0

vasudevan31355
22nd October 2015, 08:43 PM
pesum padam

http://i45.tinypic.com/a9xqaa.jpg

chinnakkannan
22nd October 2015, 08:45 PM
வி. ஸ்பெஷல் – 3

லேடி சேம்ஸ் பாண்ட் (சி.செ..எங்கே எங்கே.. யாரச் சொல்றீங்க.. சி.க.. இங்க்லீஷ் படத்தப் பத்தி உமக்குத்தான் தெரியும்.. ஒரு கட்டுரை தருவீங்க தானே) தமிழ் விசய லலிதா..

நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம்
பூமேடை நீ போட வா
ஆ..
நான் தரும் தேன்சுவை போதையில்
பொன்னூஞ்சல் நீ ஆடவா.. ( நல்லாத் தாம்மா சொல்றே)

யூ..டோண்ட் டச் மீ யூ.. (சரிம்மா. கத்தில்லாம் வச்சுருக்கயே..யாரும் தொடமாட்டாங்க!)

https://youtu.be/pLYyfyIS_0Y

vasudevan31355
22nd October 2015, 08:46 PM
சின்னா!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். குறிப்பாக 'புன்னகையில் ஒரு பொருள் வந்தது'. மிகவும் நன்றி!

chinnakkannan
22nd October 2015, 08:48 PM
போட்டாச் ஆர் இல்லியா :)

வேதாள உலகத்தைப் பத்தி ஒரு வியாசமே எழுதலாம் வர்றேன்..

vasudevan31355
22nd October 2015, 08:52 PM
சின்னா!

'நான் நால்வகை நாடகம்' பாடல் போட்டிருப்பதைப் பார்த்தால் ரொம்ப ரேர் சாங்க்லாம் பார்த்து பார்த்து தேடறா மாதிரி இருக்கு.:) கமான்.

vasudevan31355
22nd October 2015, 08:53 PM
போட்டாச் ஆர் இல்லியா :)



'இன்றைய ஸ்பெஷல்'ல:)

chinnakkannan
22nd October 2015, 08:54 PM
விஜய சந்திரிகா என்ன படமாக்கும்
விஜய ஸ்ரீ
எல். விஜயலட்சுமி
விஜயலட்சுமி (விஷால் புகழ்!)
விஜயலலிதா

இன்னும் எத்தனை விஜய உண்டு.?

rajeshkrv
22nd October 2015, 08:55 PM
Vanakkam ji

vasudevan31355
22nd October 2015, 08:55 PM
பேசும் படம் வருஷத்தைப் பார்த்த்தீரா?:)

vasudevan31355
22nd October 2015, 08:58 PM
வணக்கம்ஜி! நேத்து கரெக்ட்டா நைட் ஷிப்ட் கிளம்பும் போது வணக்கம்.:) இன்னைக்கும் அப்படியே. ஜாலியா விளையாட முடியலயே. சரி! நாளைக்கு வச்சுக்குவோம்.

உங்க பாட்டையெல்லாம் நாளைக்கு நிதானமா உட்கார்ந்து பார்க்கப் போறேன். இன்னைக்கு பாதி நாள் முழுக்க டயத்தை 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' இழுத்துட்டார்.:)

vasudevan31355
22nd October 2015, 09:00 PM
விஜய சந்திரிகா என்ன படமாக்கும்
விஜய ஸ்ரீ
எல். விஜயலட்சுமி
விஜயலட்சுமி (விஷால் புகழ்!)
விஜயலலிதா

இன்னும் எத்தனை விஜய உண்டு.?

ஜி! சின்னா என்னவோ கேக்குறார். பார்த்துக்குங்கோ!:) புள்ளையைத் தவிக்க விட்டுடாதீங்க.:) இன்னைக்கு என்னவோ விஜய மூட்ல இருக்கார். நான் நைட் ஷிப்ட் கிளம்பறேன்.

chinnakkannan
22nd October 2015, 09:04 PM
'இன்றைய ஸ்பெஷல்'ல:)

அதானே பார்த்தேன்.. என்னடா சைலண்ட் தாங்க்ஸ் வருதேன்னு..உதாரணத்துக்கு ரகுவம்சம்லாம் காளிதாசன் உவமைலாம் எடுத்து விடலாம்னு நினைச்சேனா.. விட்டுட்டேன்..

நீங்கள்யார் தமிழ் த் திரைப்பாடல் கள் எனும் சமுத்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்.. ஞான் அதில் சற்றே லயித்து விழுந்தே ஊசலாடும் காய்ந்த இலையை சரி காய்ந்த குண்டு இலையைப் போன்றவன் :)

chinnakkannan
22nd October 2015, 09:05 PM
ஆமாங்க.. இப்பத் தான் பாக்கேன்..வாவ்..1948.. எப்படி ஓய் இப்படி எல்லாம் வச்சுருக்கீர்..

chinnakkannan
22nd October 2015, 09:15 PM
வணக்கம் ராஜேஷ் ஜி..

vijaya bharathi nnu actress irukkaangalaa enna

rajeshkrv
22nd October 2015, 10:09 PM
வணக்கம் ராஜேஷ் ஜி..

vijaya bharathi nnu actress irukkaangalaa enna

enakku therinju illa

rajeshkrv
22nd October 2015, 10:25 PM
ஜி! சின்னா என்னவோ கேக்குறார். பார்த்துக்குங்கோ!:) புள்ளையைத் தவிக்க விட்டுடாதீங்க.:) இன்னைக்கு என்னவோ விஜய மூட்ல இருக்கார். நான் நைட் ஷிப்ட் கிளம்பறேன்.

vijaya T.Rajendar :)
vijaya samundeeswari(Savitiri's daughter though she is not an actress :))

RAGHAVENDRA
22nd October 2015, 10:28 PM
வாசு சார்
நைட் ஷிஃப்ட் முடிஞ்சு காலைலே வந்திருப்பீங்க...
ஹப்பிற்கு வந்தவுடனே உங்களுக்கு ஒரு ப்ளெஸண்ட் சர்ப்ரைஸ்...

அன்னை சொன்ன சொல் படத்தின் ஸ்டில்... இணையத்திலேயே முதன் முறையாக... அதுவும் உங்களுக்காக...

அங்கே ஒருத்தர் சுனாமி ஊர்லேந்து பறந்து வரப்போறார் பாருங்க...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/AnnaiSonnaSolfw_zpsqelep89m.jpg

chinnakkannan
22nd October 2015, 10:46 PM
வாசு சார்
நைட் ஷிஃப்ட் முடிஞ்சு காலைலே வந்திருப்பீங்க...
ஹப்பிற்கு வந்தவுடனே உங்களுக்கு ஒரு ப்ளெஸண்ட் சர்ப்ரைஸ்...

அன்னை சொன்ன சொல் படத்தின் ஸ்டில்... இணையத்திலேயே முதன் முறையாக... அதுவும் உங்களுக்காக...

அங்கே ஒருத்தர் சுனாமி ஊர்லேந்து பறந்து வரப்போறார் பாருங்க...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/AnnaiSonnaSolfw_zpsqelep89m.jpg

ஆஹா... என்னா ஸ்டில்..

ஓடம் பொன்னோடம்
அது உன்னோடும் என்னோடும் ஓடும்
ஓடட்டும் ஓடமென்ன இனி என்வாழ்வு உன்னோடு ஓடும்..

என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது

பொன்வண்ண நிலவதுவும் பூமியதைப் பார்த்தே
..பூஞ்சிட்டுக் கண்சிமிட்டும் கண்டதுண்டு நீரே
எண்ணமெலாம் பொங்கிவர அழகுதனை ஏந்தி
..எழில்நிலவும் வான்பார்க்கக் கண்டதுண்டா நீவிர்
கன்னமதில் கவிதைகளைப் படித்ததனால் காளை
..கண்முடிச் சொக்கித்தான் நிற்கின்றான் அன்றோ
வண்ணமிலா படமுந்தான் இருந்தாலும் என்ன
..வாகாக உளமதைனைக் கிளர்த்திடுது அன்றோ..

ம்ம் கொ. வை. ரவி நற நற.. :) ( ரொம்ப நேரம் தூங்காதடா..இளமேனி தாங்காது :) )

நன்றி ராகவேந்திரா சார்..
..

chinnakkannan
22nd October 2015, 10:49 PM
vijaya T.Rajendar :)
vijaya samundeeswari(Savitiri's daughter though she is not an actress :))

ரா ராஜேஷ் நற நற :)

rajraj
23rd October 2015, 04:54 AM
Don't be content with the cover page of pesum padam ! :lol:

Here is a bhaktthi song from vedhaLa ulagam.

aadhi parasakthi......

http://www.youtube.com/watch?v=9eIY80SRMXI

madhu
23rd October 2015, 05:19 AM
விஜய சந்திரிகா என்ன படமாக்கும்
விஜய ஸ்ரீ
எல். விஜயலட்சுமி
விஜயலட்சுமி (விஷால் புகழ்!)
விஜயலலிதா

இன்னும் எத்தனை விஜய உண்டு.?

விஜய நிர்மலா, விஜய சாந்தி பிடிக்காதா சிக்கா ?

madhu
23rd October 2015, 05:20 AM
வாசுஜி...

நான் இன்னமும் வீராணம் குழாய்க்கு உள்ளேதான் இருக்கேன். அதனாலே காரைத் தள்ள வர மாட்டேன்.

rajeshkrv
23rd October 2015, 08:22 AM
madhunna

malayalathai kalakkiya "Vijayasree"

aprom Vijayalakshmi-1 (friends pugazh)
vijayalakshmi -2(chennai 28)

chinnakkannan
23rd October 2015, 10:02 AM
விஜய ஸ்ரீ, விஷால் விஜயலட்சுமி சொல்லிட்டேனே..பட் ஃப்ரெண்ட்ஸ் விஜயலட்சுமி சொல்லலை.. நல்ல நடிகை.. சான்ஸ் தானில்லை..

vasudevan31355
23rd October 2015, 10:51 AM
1986-ல் 'ஒக ராதா இடரு கிருஷ்ணலு' என்று தெலுங்கில் ஒரு படம் வெளியானது. முழுக்க முழுக்க வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி. ஹீரோ யார் தெரியுமா. கமல். ஜோடி நம் எல்லோருக்கும் பிரியமான ஸ்ரீதேவிதான். இந்த நேரடி தெலுங்குப்படம் கமல், ஸ்ரீதேவி நடித்திருந்ததால் தமிழில் துட்டு பார்க்காமல் விடுவார்களா? தமிழில் 'டப்' செய்து வெளியிட்டு சுமாராக ஓடியது.

இப்படத்திற்கு மிகப் பெரிய பலம் இளையராஜாவின் இசை. மனிதர் அசத்தியிருப்பார். அப்போதெல்லாம் இப்படத்தின் பாடல்கள் மீது மிக பற்றுதல் ஏற்பட்டு TDK 90 ஆடியோ கேசட்டில் ரெகார்டிங் சென்டரில் பதிவு செய்த ஞாபகம் மட்டுமல்லா...இன்று வரை அப்பாடலின் தரம் அந்த கேசட்டில் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.

இளையராஜா வரும் வரை தெலுங்கு டப்பிங் பாடல்களை ஈசியாக கண்டுபிடித்து விடலாம். ராஜா வந்து அப்படி கண்டுபிடிக்க இயலாத அளவில் ஓரளவிற்கு அந்தக் குறையை சரி செய்தார். வார்த்தை ஜாலங்களும் அதற்கேற்றார் போல் மாறின.

முன்னமெல்லாம் இல்லாது போனா,:-D பாருங்க... (ச்சூடுக்கு தமிழ்), அப்புறம் பிரேமம், பிரேமை, ஒ..பெண்ணே! இந்த மாதிரி நிறைய வார்த்தைகள் பிற்காலத்தில் மாறிப் போயின. சரி! அதை விடுவோம்.

இந்தப் படத்தின் கற்கண்டுப் பாடல்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

'பருவம் உருக இதயம் துடிக்க
இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க
அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா'

ஜானகியும், பாலாவும் ஜோராப் பாடியிருப்பாங்க. கோபிகாஸ்திரி கோலத்தில் தாவணி அணிந்து ஸ்ரீதேவி அழகு இளமை. கமலும் சரியான இளமைத் துள்ளல். இதில் ஸ்ரீதேவி இடுப்பில் கயிற்றைச் சுற்றி அவரை பானை ஒன்றில் நிற்க வைத்து இந்த பூலோகக் கண்ணன் தயிர் கடைவது போல் கடைந்து வெண்ணெய் வேறு எடுத்துக் காட்டுவார்.:) (அந்த ஜாலி காமெடி கமல் இப்போது எங்கே! இப்போது அவர் நடிக்கும் படங்களில் காமெடி என்பது மருந்துக்குக் கூட இல்லையே! எப்படியெல்லாம் நம்மை சிரிக்க வைத்த நாயகன்! ம்... சிங்கீதம், கமல் இணைவுக் கலக்கல்கள், கமல், ரவிக்குமார் கலக்கல்கள் காலம் சரியான காமெடி காலம். பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், தெனாலி போன்று கமல் நடித்து காமெடிகள் வராதா என்று மனம் ஏங்குகிறது)

கோபிகாஸ்திரிகளுடன் கண்ணன் வேடத்தில் வி.ஜி.பி.கோல்டன் பீச்சில் கமல் புல்லாங்குழல் வாசித்து ஓடி வரும் போது வழியில் கிடக்கும் சாணத்தை காலணியில் மிதித்துவிட்டு அருகில் கிடக்கும் கல்லில் அதைத் தேய்த்து விடும்போது நமக்கு 'கிளுக்' கென்று சிரிப்பு வராமல் இருக்காது. அது போல கழுத்திலிருந்து இரு பக்கமும் தொங்கும் அங்கவஸ்திரத்தின் நுனியில் கலர்ப்பொடி வைத்து பறக்கவிட்டு தூசியில் தும்முவது செம வேடிக்கை.

பெரிய புல்லாங்குழல் செட்டில் அமர்ந்து ஆடியபடியே கமலும், ஸ்ரீதேவியும் குச்சி ஐஸ் தின்னுவதும் காமெடியே. காமெடியில் ஸ்ரீதேவி கமலுக்குத் தோதான இணை.

'முத்தம் வைத்தாலும் மடியில் விழுந்தாலும்
நித்தம் கள்ளூறும் ஸ்ரீதேவியே'

என்று பொருத்தமாக தேவியிடம் பாடுவது போல வார்த்தைகளை சாமர்த்தியமாக சேர்த்திருப்பார் பாடலாசிரியர். தமிழுக்கு தமிழுமாச்சு...கமல் ஸ்ரீதேவி ஜோடியை புகழ்ந்ததுமாச்சு.

ஸ்ரீதேவியிடம் கோலாட்டக் கழி வாங்கி கீழே வாட்டமாக வைத்து தன் கோலாட்டக் கழியால் அதை அடித்து கிட்டிப்புல் விளையாடுவார் கமல் செம ஜாலியாக.:) அடித்த புள் எங்கே போனது என்று தேடுவார் வேற. இந்த மாதிரி சின்ன சின்ன விஷுவல் காமெடி செய்வதில் அசகாய சூரர் கமல். (கமல் சார்! இந்த மாதிரி ஜாலியான ஒரு படம் கொடுங்கள் ப்ளீஸ்!)

பாடலில் அழகான தமிழ் வார்த்தைகள் தெலுங்கு என்று நம்ப முடியாத அளவிற்கு. கமல், ஸ்ரீதேவி என்பதால் பாடலின் நடனத்திற்கு சொல்லவும் வேண்டுமோ!

வெகு அழகான பாடல்.


https://youtu.be/OTfL7Sea1Ho

அதே பாடலை இப்போது ஒரிஜினல் தெலுங்கில் பாருங்கள்

'மதுர முரளி ஹ்ருதய ரவளி' (பருவம் உருக இதயம் துடிக்க) பாலாவும், ஜானகியும் தெலுகில்.


https://youtu.be/yrxYD24UUA8

vasudevan31355
23rd October 2015, 11:26 AM
அடுத்து கமலும், ஸ்ரீதேவியும் ஆடும் செம ஆட்டம்.

ராஜாவின் உற்சாக கொப்புளிக்கும் இசை. சும்மா தூள் பறக்கும். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப பாஸ்ட் பீட். அதே பாலாவும், ஜானகியும்.

எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டு. கேசெட்டே தேய்ந்து போய் விட்டது.

'ஜினுக்கு ஜினுக்கு ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு ஜினுக்கு' என்று பாலாவும், ஜானகியும் அதி வேகமாக பாட ஆரம்பிப்பார்கள். உடனே ராஜா தரும் அந்த உற்சாக இசை....வாவ்! சான்ஸ் நஹீ.

'பச்சை மணி பவழ மணி ஓம் மேனி
கட்டழகு வட்ட முக ராணி
குண்டுமல்லி பட்டுமல்லி ஒன் கண்ணு
கொஞ்ச வந்தா ஒட்டிக் கொள்ள எண்ணு
வாம்மா! கன்னிக் குயிலே! நான்தான் மாமா
ஏதோ காதல் ஜுரம் கண்டால் வரும்'

சும்மா பாலா பிய்த்து உதறுவார்.

ஜானிகியும் செம ஈடு.

'பட்டு மெத்த பஞ்சு மெத்த பூ மேனி' என்று.

ஸ்ரீதேவி என்ன அழகாகச் சிணுங்குவார் தெரியமா!

'தத்துகின்ற தத்தை இது மெத்தையிட்டு
ஒட்டி உறவாட நெஞ்சு வாட'

'அச்சடிச்ச சித்திரம் போல் இங்கொருத்தி
கண்ணோடு கண் பாட காதல் தேட'

என்ற சரண வரிகளுக்கு ராஜா அலை அலையாய் அவ்வளவு அழகாக டியூன் போட்டிருப்பார்!

அப்படியே கமல் பாலா குரலில்,

'நெஞ்சிரண்டு இஷ்டமானது
இதில் யாருக்கொரு கஷ்டமானது'

என்று கேட்டு வைக்க,

(கமல், ஸ்ரீதேவி காதலைக் காண சகியாமல் ஒளிந்து நின்று அவர்களின் காதல் களியாட்டத்தை வேடிக்கைப் பார்க்கும் ராவ் கோபால் ராவ். இது தெரிந்து வேண்டுமென்றே அவரைக் கலாய்க்க கமல் தேவி நெருக்கம்)

ஆஹா... ஜாலியோ ஜாலி!

குத்துன்னா செம குத்து. ஆனா டீசென்ட் குத்து.

ராஜா ராஜாதான்.

அப்புறம் ஸ்ரீதேவி வயிறு தள்ளி ஐந்தாறு குழந்தைகளுடன் வயதான மாதிரி இடுப்பு பிடித்து நடக்க, (அபாரம் ஸ்ரீதேவி! என்னமாய் பசங்களை மேய்த்துக் கொண்டு, அதே சமயம் டயர்டாக தள்ளு வண்டியில் ஒரு குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு நடந்து வருகிறார்!) கமல் அதே இளமையுடன், குறும்புடன், கழுத்தில் தொங்கும் பிளாஸ்க்குடன் ஒளிந்திருந்து பார்க்கும் ராவைக் கலாய்க்க பேன்ட்டை லூஸ் செய்து உள்ளாடையில் ஏதோ காட்டி வெறுப்பேற்ற:) அய்யோ! மதுண்ணா! சிரிச்சி சிரிச்சி கண்ணுல ஜலம் வந்துடுச்சு. சின்னா! நல்லா என்ஜாய் பண்ணி பாருங்க.:)


https://youtu.be/kSTTbXM2vEk

vasudevan31355
23rd October 2015, 11:48 AM
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா படத்தில் இன்னொரு அட்டகாசமான பாட்டு ஒன்னு உண்டு.

பாலா, ஜானகி பாடும் இன்னொரு அமர்க்களம்.

யாரம்மா தொட்டதோ
ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடியிடை

ஓயாம எங்குதோ
உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹோய் கொதிக்குதே

கையேதும் கொய்யாத பழமோ ஹோய்
கொத்தாது கிளி என்றும் விடுமோ
கடிச்சே பார்க்கும் பொழுதோ

சும்மாதான் கும்மாளப் பாட்டோ ஹோய்
சிறு பூவில் தேனுண்ணும் வண்டோ
இது போல் இது போல் உண்டோ

இளையராஜாவின் மறக்க முடியாத இன்னொரு 'டப்' பாடல்.

http://shakthi.fm/ta/album/show/84b86888

தெலுங்கில் ஆடியோ மட்டும்.


https://youtu.be/in5fRTO31fk

vasudevan31355
23rd October 2015, 12:03 PM
தமிழில் பாலா குரலில் கமல் ஸ்ரீதேவியை கிண்டலடித்துப் பாடும் பாடல்.

'ராதா! என்னுடனே வா வா!
வை வை தகதிமி
தை தை கதகளி
டக்குமுக்கு தாளம் வை'


https://youtu.be/FNoGH4iCu8c


இதே பாடலை தெலுங்கில் கமல் பாடியிருப்பார் அமர்க்களமாக. இந்தப் பாடலின் ஸ்டீரியோ சும்மா தனித்தனியாக பிரித்து மேயும்.

'வெய் வெய் தகதிமி
செய் செய் கதகளி
டக்குமுக்கு தாளம் வெய்'

கமலே தமிழிலும் பாடியிருக்கலாமே! தெலுங்கில் நன்றாக இருக்கிறதே.


https://youtu.be/ed6iRBynp7E

vasudevan31355
23rd October 2015, 12:20 PM
ராகவேந்திரன் சார்,

நீங்க சொன்னது போலவே ஷிப்ட் முடிச்சி வந்து பார்த்தா இன்ப அதிர்ச்சி. அப்படியே அசந்து போய் நின்னுட்டேன். சொல்லி ரெண்டு நாள் கூட ஆகலை. அதுக்குள்ளே எப்படியோ 'அன்னை சொன்ன சொல்' பட ஸ்டில் தேடி கண்டு பிடிச்சி கொடுத்திட்டீங்களே! ஜோரா இருக்கு. அநேகமாக 'காதலுக்கு நாலுபக்கம்' பாடல் காட்சியா இருக்குமோ?

ரொம்ப ரொம்ப நன்றி ராகவேந்திரன் சார். அசத்திட்டீங்க.

vasudevan31355
23rd October 2015, 12:48 PM
ஆதிராம் சார்!

மிக்க நன்றி! தங்களுக்கே உரித்தான பாணியில் ராமண்ணாவின் டூயட்டுகளுக்கான லொக்கேஷன் லிஸ்ட்டைக் கொடுத்து சிரிக்க வச்சுட்டீங்க. அதே போல மன்னரோட தவில் வித்தையையும் அழகா விளக்கிட்டீங்க. சபாஷ்!

இதுக்கு முன்னாலேயே அவர் 'பணக்காரக் குடும்பம்' படத்திலே கொட்டும் மழையில் எம்.ஜி.ஆர் அவர்களையே:) சரோஜாதேவியுடன் உட்கார வைத்து ஒரு பாடல் முழுக்க கட்டை வண்டிக்குக் கீழேயே எடுத்திருப்பார். (மழை, ஷவர், பெயிண்ட் இதெல்லாம் இல்லாம ராமண்ணா ஏது?):)

குலேபகாவலி படத்தில் ஜி.வரலஷ்மி குளியல் (கண்ணாலே பேசும்)
பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதி, மணிமாலா குளியல் (கட்டோடு குழலாட)
பணம் படைத்தவன் படத்துல புன்னகை அரசி கிணற்றடி குளியல் (அந்த மாப்பிள்ள)
நான் படத்தில் மேடம், ரவி நீச்சல் குளியல் (குவாக் குவாக்)
மூன்றெழுத்து படத்துல மேடம் பாத் டப் குளியல் (காதலன் வந்தான்)
தங்கச் சுரங்கம் படத்திலே நடிகர் திலகம் புண்ணியத்தில் காட்டில் கார் ஷவர் பாரதி பாத்
வைரம் படத்துல மறுபடி மேடம் குளியல் (இரு மாங்கனி போல் இதழோரம்)
பாக்தாத் பேரழகியிலே சுபா குளியல்
படத்தின் பெயரே 'நீச்சல் குளம்'. நிறைய குளியல்கள், கொலைகள்.

என்று ராமண்ணா தன் படத்து நாயகிகளை அநியாயத்துக்கு நனைய விடுவாரே!

சின்னா பாடு ஜாலி.

RAGHAVENDRA
23rd October 2015, 02:20 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/12039300_995810567136282_8518297928801647657_n.jpg ?oh=3c29faac37836fbdf5a1e454f09a2424&oe=56BAFAB7&__gda__=1455317310_e27214ac18bbda4203a383337c54c2f c

வாசு சார்
புகை மூட்டம் இதோ க்ளியர்...

vasudevan31355
23rd October 2015, 03:08 PM
வெளிவராத 'மெட்ராஸ் மைனர்' திரைப்படத்திலிருந்து ரவி.


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3801fd85-2c67-49aa-be8e-0fccfd9eb1a2.jpg

RAGHAVENDRA
23rd October 2015, 03:16 PM
சில நாட்களுக்கு முன் எப்படி இருக்குமோ என தலை சுற்ற வைத்த ராட்டினம்...

இதோ நம் பார்வைக்கு ரங்க ராட்டினம் திரைப்பட நிழற்படங்கள்

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10423283_995839957133343_8894672222272514148_n.jpg ?oh=f991444861388ac8d5681ce356d9adaf&oe=56CA88D2

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/1506651_995839943800011_2226964725266239232_n.jpg? oh=bec150cbf707e0731b286f326a350968&oe=56BCFC7B&__gda__=1456207503_672a36f17285da4ec895999703eaabb 7

vasudevan31355
23rd October 2015, 05:40 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566655/b5a10b99-574d-4e13-94d8-b9e0bc14eadb

JamesFague
23rd October 2015, 05:45 PM
Could anyone pls confirm whether Mr Madhu Anna has come out of the Veeranam Pipe.

vasudevan31355
23rd October 2015, 05:46 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566655/de93737b-f153-460c-938f-2f78e33b159f

vasudevan31355
23rd October 2015, 05:47 PM
ji!

enjoy!:)

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566655/fabd403d-bcd4-4479-bc82-8f40bae6cda8

vasudevan31355
23rd October 2015, 05:53 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/573990/91b63e83-fc8f-43a8-a297-3acaba2c069a

vasudevan31355
23rd October 2015, 05:56 PM
'கருந்தேள் கண்ணாயிர'த்தை 'நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆக தவறாகப் போட்டு விட்டார்கள்.:)

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/573990/c3f2b8d4-7f51-4d6c-bf31-2d11d765cf31

vasudevan31355
23rd October 2015, 06:00 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566655/fe9090ac-ddcc-4c24-846b-8366d14efa8c

vasudevan31355
23rd October 2015, 06:13 PM
மதுண்ணா!

நாம ஊர்ஜிதப்படுத்திக்கிட்டது சரிதான்னு நினைக்கிறேன். ஜமுனாராணியோடு தாராபுரத்தார் 2 பாடல்களை பாடியிருப்பதாக தகவல் சொல்கிறது. அதில் ஒன்று உங்க 'பல்லாக்கு போல வண்டி'. சரியா?:)

படத்தில் 'தாராபுரம்' சுந்தரராஜன்.

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566653/1c9b5c16-98c7-495f-ae4a-83ef8f0f2994

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566653/cdaef445-d08e-47c1-8e6c-fa326311b928

vasudevan31355
23rd October 2015, 06:14 PM
இது தேன் கிண்ணமா இல்லை ஹலோ பார்ட்னரா?

http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566653/1b556455-21e7-459f-8635-35d2b20b27f0

vasudevan31355
23rd October 2015, 06:18 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566653/74fccaff-2ee6-4d03-b57e-4949ef535de7

vasudevan31355
23rd October 2015, 06:21 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/566653/8e75df97-8ba7-49c7-b923-ebe7c0576fd1

vasudevan31355
23rd October 2015, 06:39 PM
'அன்னையும் பிதாவும்' படத்தில் ராட்சஸி கலக்கல்

'பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகமது'

'வெண்ணிற ஆடை'க்கு காபரே ரேஞ்சில் ஒரு பாடல்.


https://youtu.be/6RZKWKDLXlc

chinnakkannan
23rd October 2015, 08:50 PM
வாசு.. வெ.ஆ. நி பாட் ராட்சஸி வாய்ஸ் நன்று (சம்பந்தமே இல்லாம ஆடறதா பட்டது..)
கண்கள் மாணிக்க க் கிண்ணம் என்
கன்னம் மரகத வண்ணம் .. (ம்ம் சிகப்புக் கண் பச்சைக் கன்னமா)
ஒன்பது மணிகளும் உன்னைக்கண்டு சிரிப்பது
தங்கமல்ல மங்கை தானே..

(ஏதோ மெட்டுக்கு வரிகளை ஃபில்லப் பண்ணிட்டாங்க போல.)

வாவா ஒரு இரவு ஒரு உறவு
வந்து ஆடிப்பார் வந்து தேடிப்பார் உனக்குப் புரியும்

கெட்டிக்காரனில் நாகேஷ்.. அப்புறம்..ஹ்ம்.. எனக்கு மறந்து போச் தெரியாதுன்னுல்லாம் சொல்ல மாட்டேன்..

நன்னா ஆடறாங்க நாகேஷும் அந்த அம்மணியும்..இதுலயும் எல்.ஆர். ஈஸ்வரியோட சிரிப்பு வருது!

https://youtu.be/RIbtVRei_AM

rajeshkrv
23rd October 2015, 08:53 PM
vaanga ji, cika

vasudevan31355
23rd October 2015, 08:59 PM
சின்னா!

//நன்னா ஆடறாங்க நாகேஷும் அந்த அம்மணியும்//

அது 'கெட்டிக்காரன்' புகழ் லீலா. இந்தப் படத்தில்தான் அறிமுகம். பொம்மை மாதிரி இருப்பார். இருந்தாலும் டான்ஸில் ஜாம்பவான் நாகேஷுடன் பயப்படாமல் ஆடுவார். கமல் நடித்த குரு படத்தில் முதலில் ரயில் காட்சியில் வருவார். வில்லனின் ஆளாக. அப்புறம் தேங்காய் சீனிவாசனுக்கு 'ஹலோ பார்ட்னர்' படத்தில் ஜோடி. சமீபமாக் கூட பாட்டை போட்டிருந்தேனே.:)


https://youtu.be/6jCaniwepqM

vasudevan31355
23rd October 2015, 09:00 PM
வணக்கம் ஜி! உங்களுக்கு ஒரு படம் போட்டிருந்தேனே.:)

vasudevan31355
23rd October 2015, 09:13 PM
சின்னா!

'குரு' படத்துல கையில் 'தம்'முடன் லீலா.

http://oi61.tinypic.com/2h2ehyq.jpg

chinnakkannan
23rd October 2015, 09:14 PM
'பருவம் உருக இதயம் துடிக்க
இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க
அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா' இந்தப் பாட் கேட்டிருக்கிறேன்..
ராதா! என்னுடனே வா வா! – இது கேட்டதில்லை..அதாவது ஓட்டிப் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன்..
//பச்சை மணி பவழ மணி ஓம் மேனி
கட்டழகு வட்ட முக ராணி
குண்டுமல்லி பட்டுமல்லி ஒன் கண்ணு// இந்தப் பாட்டும் கேட்டிருக்கிறேன்..படமே பார்த்த நினைவு இருக்கிறது ஸ்லைட் ஸ்மோக்காக..
கடைசி சீன் மட்டும்பார்த்தவுடன் படம்பார்த்தது நினைவு வந்தது.. நைஸ் வாசு தாங்க்.ஸ்

குட்டியாய் பரிசு. ஹோம் வொர்க் முடிச்சுட்டு தருவேன்..

ஆனாலும் ரொம்ப ஃபாஸ்ட் வாசு.. இப்பத்தான் ஒவ்வொரு பக்கமா பின்னால் போய்க்கிட்டிருக்கேன்.தாங்க்ஸ்.. அந்த தே. சீ பாட் முன்னாடியே பார்த்திருக்கேன்.. நீங்க போட்டதுக்கப்புறமல்ல..அதுக்கும் முன்னாடி என நினைக்கிறேன்..பார்த்து சொல்றேன்..


ஆதிபராசக்தியே டி.ஆர்.எம். தாங்க்ஸ் ராஜ்ராஜ் சார்..வேதாள உலகம் கட் பண்ணாத வெர்ஷன் சின்னக் கண்ணனாய் ஸ்ரீதேவியில் பார்த்து வியந்தபடம்..பின் கல்லூரிப்பருவத்திலும் பார்த்திருக்கிறேன்.. வே..தா…ள..ம்.. ரா..ஜீ..வி.. என சாரங்கபாணி சுற்ற வேதாளங்கள் எல்லாம் சுற்றி.. நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான் எனக் கும்மாளம் போடுவது நினைவிருக்கிறது..ம்ம் இன்னும் எழுதுவேன்

chinnakkannan
23rd October 2015, 09:15 PM
நைஸ்.. ஃபார் த லீலா ஸ்டில்..ஆமா.. இந்த அம்மணி யைப் பற்றி பய டேட்டா ப்ளீஸ்

chinnakkannan
23rd October 2015, 09:20 PM
வாங்க ராஜேஷ் நலமா..
ஹோம் வொர்க் கண்டின்யூஸ்….
//என்று ராமண்ணா தன் படத்து நாயகிகளை அநியாயத்துக்கு நனைய விடுவாரே!

சின்னா பாடு ஜாலி.//
குளியல் பாட்டு என்றால் டபக்கென நினைவுக்கு வருவதுகுளிக்கும் ஓர்கிளி..கொதிக்கும் நீர்த்துளி.. அப்புறம் சந்திரகாந்தா இன் மூன்று தெய்வங்கள் தேன் மழையிலே மாங்கனி நனைந்தது அப்புறம் சிவச்சந்திரன் ஸ்ரீப் ரியா பாட் மறந்துடுச்சு..வாசு நீங்கதான் போட்டிருந்தீங்க..
s.vasudevan sir.. நேற்று வீ.குழாயில் பார்த்தேன்..இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்.. மனுஷன் (மதுண்ணா) ப்ரமை பிடிச்ச மாரி இருந்தார்..போதாக்குறைக்கு ஓடப்பாட்டை ராகவேந்த்ரா போட்டுட்டாரா.. ஒடனே வர்றது கஷ்டம்..

ஹோம் வொர்க் தொடரும்..

vasudevan31355
23rd October 2015, 09:27 PM
//ஒடனே வர்றது கஷ்டம்..//

இன்னா அறிவு:)

vasudevan31355
23rd October 2015, 09:29 PM
//சிவச்சந்திரன் ஸ்ரீப் ரியா பாட் மறந்துடுச்சு..வாசு நீங்கதான் போட்டிருந்தீங்க..//

'ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை'.......'என்னடி மீனாட்சி' படம்.

பாலா தொடரில் பின்னலாம். ஒரே ஒரு வருஷம் பொறுத்துக்குங்க.:)

vasudevan31355
23rd October 2015, 09:35 PM
//குட்டியாய் பரிசு. ஹோம் வொர்க் முடிச்சுட்டு தருவேன்..//

ம்...குட்டி பரிசு:)

vasudevan31355
23rd October 2015, 09:36 PM
ஜி எங்க அடிக்கடி தாவிடிறார்?முக நூல் பக்கத்துக்கா?:)

chinnakkannan
23rd October 2015, 09:49 PM
மிக வித்தியாசமான டூயட். பாடலும். வெயிலின் சூட்டிற்கு இதமான தென்றல் போல், மழையின் குளிருக்கு பதமான வெயில் போல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுகம் தரும் அற்புதமான அமிர்தப் பாடல். எங்கயோ நம்மை இனம் புரியாத லெவலுக்கு அழைத்துச் செல்கிறது எப்போது கேட்டாலும் இந்தப் பாடல்.

ஜெயசங்கரின் டூயட்களில் 'என்றும் செல்வம்' இந்தக் காதல் பாடல். .// பாட் முழுக்கக் கேட்டேனா..டாடி எனக்கொரு டவுட்டு.. இது வீராணம்குழாய்கள் மற்றும்செட்டில் எடுக்கப்பட்டதா..அல்லது முழுக்கவே செட்டா..

vasudevan31355
23rd October 2015, 09:58 PM
டவுட் தனபால்:)

முழுக்கவே செட். ஆலமரம் உட்பட.

rajeshkrv
23rd October 2015, 10:21 PM
நைஸ்.. ஃபார் த லீலா ஸ்டில்..ஆமா.. இந்த அம்மணி யைப் பற்றி பய டேட்டா ப்ளீஸ்

andha leela thaan chinna vayadhu kanchana (in shanti nilayam)
iraivan varuvaan .... small leela to big kanchana :)

rajeshkrv
23rd October 2015, 10:22 PM
வாங்க ராஜேஷ் நலமா..
ஹோம் வொர்க் கண்டின்யூஸ்….
//என்று ராமண்ணா தன் படத்து நாயகிகளை அநியாயத்துக்கு நனைய விடுவாரே!

சின்னா பாடு ஜாலி.//
குளியல் பாட்டு என்றால் டபக்கென நினைவுக்கு வருவதுகுளிக்கும் ஓர்கிளி..கொதிக்கும் நீர்த்துளி.. அப்புறம் சந்திரகாந்தா இன் மூன்று தெய்வங்கள் தேன் மழையிலே மாங்கனி நனைந்தது அப்புறம் சிவச்சந்திரன் ஸ்ரீப் ரியா பாட் மறந்துடுச்சு..வாசு நீங்கதான் போட்டிருந்தீங்க..
s.vasudevan sir.. நேற்று வீ.குழாயில் பார்த்தேன்..இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்.. மனுஷன் (மதுண்ணா) ப்ரமை பிடிச்ச மாரி இருந்தார்..போதாக்குறைக்கு ஓடப்பாட்டை ராகவேந்த்ரா போட்டுட்டாரா.. ஒடனே வர்றது கஷ்டம்..

ஹோம் வொர்க் தொடரும்..

narayana adhu chandrakala .. kalavukkum kaanthavukkum vithyasam theriyadhavara irukkeera .. kala toppu .. kantha ok ok

eehaiupehazij
23rd October 2015, 10:38 PM
The iconic James Bond Briefcase in Tamil film songs!

ஜேம்ஸ் பாண்ட் சூட் கேஸ் பாடல்கள் !


கறுப்புக் கண்ணாடி தொப்பி அட்டகாசமான கோட் சூட் இவற்றோடு கழுத்தில் சூப்பர் டை கையிலோ குறிதவறாமல் சுடும் வால்தர் பிபிகே துப்பாக்கி சகிதம் கன்பேரல் வட்டத்துக்குள் கம்பீர நடை பயின்று திடீரென நம்மை நோக்கி குறி தவறாமல் சுடுபவர் ......எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் காலம் அழித்திட முடியாத அகில உலகின் நிரந்தர சூப்பர் டூப்பர் ஸ்டார் வானளாவிய ஒரே உலக வசூல் சக்கரவர்த்தி ஷான் கானரியின் திரை உருவகத்தால் ரசிக நெஞ்சங்களை அள்ளிய ஜேம்ஸ் பாண்ட் கற்பனை கதாபாத்திரமே !

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் தவறாமல் இடம் பெரும் புகழ்பெற்ற எத்தனையோ ஐட்டங்களில் நம்மை மிகவும் கவர்ந்தது அவர் விமானத்திலிருந்து இறங்கி நடந்துவரும் போது கையில் ஸ்டைலாக பிடித்திருக்கும் தொழில்ரீதியான மர்ம உபகரணங்கள் உள்ளடக்கிய சூட்கேஸ் அல்லது பிரீப் கேஸே !

இந்த சூடகேசால் கவரப்பட்ட நமது தமிழ்த்திரை நாயகர்களும் தம்மை ஜேம்ஸ் பாண்டாக உருவகப்படுத்திக் கொண்டு ஒரு சூட்கேஸை (உள்ளே எதுவுமிருக்காது என்பது நகைச்சுவையே !) தூக்கிக் கொண்டு பெரும்பாலும் பாட்டுப் பாடிக்கொண்டு கதாநாயகியுடனோ வில்லியுடனோ நடைபழகுவார்கள்!
நடிகர்திலகமும் மக்கள் திலகமும் மக்கள் கலைஞரும் ஜேம்ஸ் பாண்ட் பெட்டியால் கவரப்பட்டவர்களே !!

James Bond's Briefcase is a Pandora's Box!
If any one opens this gadget laden box...he or she ends up in hell!

https://www.youtube.com/watch?v=1DyfgdXt9dU

பகுதி 1 நடிகர்திலகத்தின் ஜேம்ஸ் பாண்ட் பெட்டி பாடல்கள்!

https://www.youtube.com/watch?v=uvknaw6In7Q

https://www.youtube.com/watch?v=fSe3lPOAhtY

chinnakkannan
23rd October 2015, 10:55 PM
பல்லாக்குப் போல வண்டி.. சொல்லம்மா அழகான பாடல்
//நைஸ் கண்ணாட்டி
டிபிகல்டி
மேரேஜ் செய்யாட்டி
எம்ப்டி
'எஸ்'ன்னு சொல்லாட்டி// நைஸ் பாட்டி சாங்க்.. நல்லமியூசிக்.. ஏனோ சொன்னா தெரியாது இன்று பார்த்த படத்தின் ஃபேஸ்புக் பாட்டி நினைவுக்கு வந்தாங்க..
சொல்லுங்கள் சுவை காவியம்…மஞ்சள் முகத்தை கொஞ்சம் நினைத்தால்.. ம்ம்ம் சுஜாதா சுடிதாரில் வந்த படம் இது ஒண்ணு தான்னு நினைக்கேன்.. தாங்க்ஸ் ராஜேஷ்.சிலோன்பாட்டாக்கும்

சாமந்திப் பூ கிருஷ்ணாவுடன் அலசியதாக நினைவு முதல் பாகத்தில் இல்லியோ..
Oru பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு..ஜ.வை ஜாக்கெட் லஷ்மி..யாராக்கும் ஹீரோ..தாங்க்ஸ் செந்தில்வேல் நல் பாட்.

கோடிவார்த்தைகளை சேர்த்துவைத்துக்கொண்ட உள்ளம்
ஊடி ஊடி அந்தப்பார்வை தேடுகின்ற வெள்ளம் ம்ம்ம்..

//முல்லைப் பூப் பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு// ithu enakkum pidiththapaad thanks raagadevan sir..unga original per mattum ennanu enakku ithuvarai ketkath thOnavE illaiye.. yEn…:)

aamaa vasu.. thideernu niraya cinema express pazhaiya book shopla vaangineengalaa enna :)

chinnakkannan
23rd October 2015, 10:57 PM
//narayana adhu chandrakala .. kalavukkum kaanthavukkum vithyasam theriyadhavara irukkeera .. kala toppu .. kantha ok ok// என்னது கலா தோப்பு காந்தா மரமா.. ஹி ஹி..புலிக்கு விரிச்ச (ரெண்டு பக்கெட் ஃபோட்டோ நெய்வேலி கிட்ட இருந்து எதிர்பார்த்தேன் சந்திர கலாக்கும் சந்திர காந்தாக்கும் :) ) வலைல்ல புள்ளி மான் நீர் அகப்பட்டீர்.. :)

chinnakkannan
23rd October 2015, 10:58 PM
வாங்க சி.செ. சார்..எப்போ அமெரிக்கா.. :) லேடி ஜேம்ஸ்பாண்ட் பத்தி யாரோ கேட்டிருந்தாக..கொஞ்சம் கவனிங்க :)

RAGHAVENDRA
23rd October 2015, 11:06 PM
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/573990/91b63e83-fc8f-43a8-a297-3acaba2c069a

வாசு சார்
அது கங்கா கௌரி இல்லையோ..

chinnakkannan
23rd October 2015, 11:18 PM
ப்ரியா பாட்டு ம்ம்ம் பாடல் ஒன்று ;ஸ்ரீதேவியில் பார்த்த போது பார்த்தது..அதற்கப்புறம் இப்போது தான் அதைப்பார்க்கிறேன் என நினைக்கிறேன்.. ரஜினி வெகு பிஸியாக இருந்து அவரைப் பற்றி ஹி இஸ் மெண்ட்டலி டிப்ரஸ்ட் பத்திரிகை நிருபரை அடித்தார் என தகவல்கள் வந்த காலகட்டம் என நினைக்கிறேன்..பட் பாடலில் இருவருமே இளமை..ஒரே டிரஸ் வெவ்வேறுலொகேஷன்களில் சிங்கப்பூரில் ஒரே நாளில் படமாக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்.. நல்ல பாட்..தாங்க்ஸ் சின்னா..

ஆஹா..அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்குமலை மேற்குமலை எங்கள் மலை..எனக்கு உசுரானபாட்..இப்பத்தான் கேக்கறேன்..பார்த்தப்ப இந்தப்பாட்டான்னு நினைவுக்கு வரலை.. கொஞ்சம் மேகமூட்டமா நினைவு இருந்துச்சு (இப்ப ஆதிராமால காப்பி அடிக்க முடியாதே) தாங்க்ஸ் வாசு..வீடியோ குட்த்த மதுண்ணாவுக்கும் ஒரு ஜப்பானிய வணக்கம்..சிரம் தாழ்ந்த வணக்கம்ங்க்ணா..பட் இதை டைட்டில் சாங்க்ல போட வக்க யோசனை சொன்னவங்களுக்கு நன்னா கிட்ட வான்னு சொல்லிபட்பட்னு அறையணும்..ஆமா ஆடறது யாரு (ஆரு அதானேபார்த்தேன்னு சொல்றது!)

rajeshkrv
23rd October 2015, 11:19 PM
idho MSV function snaps

https://scontent-mia1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11923602_1153035658059545_4048098240898954084_n.jp g?oh=d0c4ac3cfbac81538dae09ee77283cb1&oe=56C6E654

RAGHAVENDRA
23rd October 2015, 11:23 PM
idho MSV function snaps

https://scontent-mia1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11923602_1153035658059545_4048098240898954084_n.jp g?oh=d0c4ac3cfbac81538dae09ee77283cb1&oe=56C6E654

ராஜேஷ்
நானும் மேற்கண்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்தேனே. உங்களை சந்திக்கும் வாய்ப்பைத் தவற விட்டு விட்டேனே.. அடுத்த முறை மிஸ் பண்ணக்கூடாது.

chinnakkannan
23rd October 2015, 11:30 PM
சி.செக்காகவும் ராஜேஷ்கக்காகவும்...

நான் பாடியபாடல் மன்னவன்கேட்டு படையுடனே வந்தான்..

வாழ்க்கை வாழ்வதற்கே படம் பார்த்ததில்லை எப்படி இருக்கும்..ஆன்லைனில் இல்லியே..

https://youtu.be/qC_IXGS9SFY

chinnakkannan
23rd October 2015, 11:31 PM
ஒல்லியாய் குறுந்தாடியுடன் கண்களில்மின்னலுடன்மூச்சில் பிசுசிலாம்மா பேச்சில் வாலி கொண்டு ஒரு இளைஞரைப் பார்த்திருந்தீர்களானால் அவர் தான் ராஜேஷ்.., ராகவேந்தர் சார்..வெகு சமர்த்து..

eehaiupehazij
23rd October 2015, 11:38 PM
ありがと sika!

ஜப்பானிய நன்றி நவிலல்தான் !! Arigatho!

chinnakkannan
23rd October 2015, 11:56 PM
நூறாவது பக்கத்தை முன்னிட்டு

நூறு என வரும் பாட்டு

உங்களில் ஒருவன் நான் ..வாங்கிடுவேன் நூற்றுக்கு நூறு

நூறாண்டு காலம் வாழ்க

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்

கண்ணுக்குள் நூறு நிலவா

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

நூறு ஜன்மம் ராணி போல வாழப்போற பூமானே.. சிவ கார்த்திகேயன் அழகுஆத்மியா..(பட் நோலக்)

https://youtu.be/cfIunzhZJkw

chinnakkannan
24th October 2015, 12:03 AM
கேட்டுப் பாரு கேள்விகள் நூறு

நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள மெளனம் பேசியதே ஷாங்க்..

காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்

https://youtu.be/kwT6eo9Y5ig

chinnakkannan
24th October 2015, 12:11 AM
நாடறியும் நூறு மலை
நானறிவேன் ஸ்வாமி மலை..

சரி மிச்ச நூறில் வரும் சாங்க்ஸ் தருவதற்கு ராகவேந்திரர் வாசு மதுண்னா பாடு.. :)

https://youtu.be/KGo_K9OdsWA

RAGHAVENDRA
24th October 2015, 12:16 AM
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன் ...
நீதான் என் தலைவன் என்றால் நூறு ஜென்மம் நான் எடுப்பேன்...

...

ஆனால் பாட்டின் நடுவில் தான் நூறு வருகிறது..

chinnakkannan
24th October 2015, 12:16 AM
உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல துடித்தேன் போடலாம்னா.. அது எஸ்பிபி பாட்..எனில்

தவிக்குது தயங்குது ஒருமனது..

https://youtu.be/k8iyDV3Tk1M

chinnakkannan
24th October 2015, 12:17 AM
நடுல்லயும் நூறு வரலாம்..நோ ப்ராப்ளம்

RAGHAVENDRA
24th October 2015, 12:18 AM
https://www.youtube.com/watch?v=Z5c61mtTzA8

நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் உனைப்பிரிந்து வெகு தூரம் ஒரு நாளும் போவதில்லை...

RAGHAVENDRA
24th October 2015, 12:21 AM
நடுல்லயும் நூறு வரலாம்..நோ ப்ராப்ளம்

நீங்க சொல்றது சரிதான்.. இந்த திரியிலேயே நூறு நடுவிலே தான் வருகிறது..

இதோ உங்களுக்காக ஸ்பெஷல் நூறு பாட்டு..

https://www.youtube.com/watch?v=Hc6E_789nYY

இந்தப் பாட்டிலே நூறு ஸ்டைலை ஆராயலாமே...

chinnakkannan
24th October 2015, 12:28 AM
இப்படித் தூங்க விடாமப் பண்ணிட்டீங்களே ராகவேந்திரா சார் :) காரணம் பயம் :)

ஆமா நூறு பக்கம் வந்தாச்சே ஏன் இன்னும் ஸ்டார் தரலை :thinking:

மாயவா மாலவா ஷண்முகா வேலவா :) எமை ஆளும் வேலவா வா :)

rajeshkrv
24th October 2015, 12:57 AM
ராஜேஷ்
நானும் மேற்கண்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்தேனே. உங்களை சந்திக்கும் வாய்ப்பைத் தவற விட்டு விட்டேனே.. அடுத்த முறை மிஸ் பண்ணக்கூடாது.

raghav ji

Rajeswari from our Susheelamma group attended the function and sent the snaps
i live in USA

rajeshkrv
24th October 2015, 12:58 AM
ஒல்லியாய் குறுந்தாடியுடன் கண்களில்மின்னலுடன்மூச்சில் பிசுசிலாம்மா பேச்சில் வாலி கொண்டு ஒரு இளைஞரைப் பார்த்திருந்தீர்களானால் அவர் தான் ராஜேஷ்.., ராகவேந்தர் சார்..வெகு சமர்த்து..

cika tanku tanku .. ippadi oru varnanai enakka enakke enakka

vasudevan31355
24th October 2015, 06:54 AM
ji!

thoongalaya?:)

vasudevan31355
24th October 2015, 07:09 AM
சின்னா!

இது யாராக்கும்?

http://helloap.com/wp-content/uploads/2013/07/manjula-actress.jpg

RAGHAVENDRA
24th October 2015, 07:19 AM
சின்னா!

இது யாராக்கும்?

வாசு சார்
சின்னாவின் தலையை ரங்கராட்டினம் போல சுற்ற வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே..

Russellxor
24th October 2015, 07:44 AM
இந்திரன் சந்திரனில்
நூறு நூறு பாடல
் Nooru Nooru From Movie Indiran Chandran: http://youtu.be/QO09_Dk2Ru0