PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14

RAGHAVENDRA
11th June 2016, 06:34 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/mmm300grtg_zps5mfzbjzv.jpg

JamesFague
11th June 2016, 08:48 AM
Courtesy: Tamil Hindu

மறக்கப்பட்ட நடிகர்கள் 6 - துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா


“கண்ணா கண்ணா வாராய்… காதல் என்னைப் பாராய்…ஜாலம் பண்ணாதே இப்போ நீ எங்கே போறாய்” என்ற ஜிக்கியின் குரலில் அமைந்த புகழ்பெற்ற பாடலுக்கு ஒய்யாரமான அசைவுகளில் நடனம் ஆடிக்கொண்டு ‘மாயமனிதன்’(1958) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சந்திரகாந்தா. இந்தப் படத்தின் நாயகன், ஏவி.எம்.மின் ‘சம்சாரம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்ரீராம்.

இந்தப் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பிறகு நாயக நடிகராக உயர்ந்தார் அசோகன். ‘இன்விசிபிள் மேன்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி டி.பி. சுந்தரம் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகு நடனம், நடிப்பு இரண்டுக்காகவும் கொண்டாடப்படும் முன்னணி நட்சத்திரமாக சந்திரகாந்தா உயர்ந்தார்.

காவிரியின் மகள்

கீழத் தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயிலாடி என்ற கிராமம்தான் சந்திரகாந்தாவின் சொந்த ஊர். இந்த ஊரின் நிலக்கிழார் டி.என். குஞ்சிதபாதப் பிள்ளை, டி.ஆர். ராமாமிர்தம் தம்பதிக்கு ஏழு குழந்தைகள். அவர்களில் ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் சந்திரகாந்தா. திராவிட இயக்கத்தின் மீது தீவிரப் பிடிப்பு கொண்ட குடும்பம்.

சந்திரகாந்தாவின் அக்கா வத்சலாவை திருமணம் செய்துகொண்டவர் எஸ்.எஸ்.பி. லிங்கம் என்கிற வேதாசலம். இவர் அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர். அண்ணா, சென்னை வரும்போதெல்லாம் ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலையில் வசித்துவந்த வேதாசலம் வீட்டில்தான் தங்குவார்.

சிறு வயது முதலே நடனத்தில் சந்திரகாந்தாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. 9-ம் வகுப்பு படித்து முடித்திருந்த சந்திரகாந்தா, பள்ளி விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்தார். அப்போது சந்திரகாந்தாவும் அவரது அண்ணன் சண்முகசுந்தரமும் (`கரகாட்டக்காரன்’ புகழ்) அண்ணாவின் வாழ்த்துகளைப் பெற்று அவரது அன்புக்குரியவர்கள் ஆனார்கள்.

வேதாசலம் வீட்டில் அண்ணா தங்கியிருக்கும் தருணங்களில் அவரைக் காண அங்கே வருவார் ‘நடிப்பிசைப் புலவர்’ என்று நாடக ரசிகர்களால் அழைக்கப்பட்ட கே.ஆர். ராமசாமி. ‘கலைவாணர்’ என்.எஸ். கிருஷ்ணன் நினைவைப் போற்றும் வகையில் ‘கிருஷ்ணன் நாடக சபாவை 1943-ல் தொடங்கிய கே.ஆர்.ஆர், சமூக சீர்திருத்த நாடகங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தி, திராவிட இயக்கத்துக்கு வலு சேர்த்துவந்தார். இவரது நாடக சபாவுக்காகவே அண்ணா நாடகங்களை எழுதிவந்த காலம் அது.

ஒருமுறை வேதாசலம் வீட்டுக்கு அண்ணாவைக் காண வந்த கே.ஆர்.ஆர்., வீட்டின் ஓர் அறையில் நட்டுவாங்கம் செய்யும் சத்தம் ஒலிப்பதைக் கேட்டு, அந்த அறையில் நுழைந்தார். அங்கே 14 வயதுப் பருவப் பெண்ணாக லட்சுமிகாந்தத்தின் (இதுதான் சந்திரகாந்தாவின் இயற்பெயர்) துள்ளலான நடனத்தைக் கண்டார்.

வேற்று மனிதர் ஒருவர் வந்திருக்கிறார் என்று வெட்கப்பட்டு ஆட்டத்தை நிறுத்திவிடாமல் ஆடிக்கொண்டிருந்தார் சந்திரகாந்தா. நடனம் முடிந்ததும் குருவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வந்தவர், கே.ஆர்.ஆருக்கும் வணக்கம் செய்தார். ஆச்சரியப்பட்ட கே.ஆர்.ஆர்., “என்னைத் தெரியுமா?” என்று கேட்டார். “உங்களைத் தெரியாத பேதையா நான்?” என்று துடுக்காக பதில் சொன்ன அந்தக் கணத்தில் தனது நாடகத்துக்குக் கதாநாயகி கிடைத்துவிட்டதாக நினைத்தார் கே.ஆர்.ஆர்.

15 வயதில் தொடங்கி கே.ஆர்.ஆரின் பல பிரச்சார நாடகங்களில் நடித்துச் சிறந்த நாடக நடிகையாகப் புகழ்பெற்றார் லட்சுமிகாந்தம். ஒரு நாடகத்தில் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர் சந்திரா. அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க வந்திருந்தார் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன்.

நாடகத்தின் முடிவில் “இந்த நாடகத்தில் சந்திராவாக மிகச் சிறப்பாக நடித்த காந்தம், நாடகக் கலைக்குக் கிடைத்த அரிய சொத்து” என்று பாராட்டினார். நெடுஞ்செழியன் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து கே.ஆர்.ஆர்., லட்சுமிகாந்தத்துக்கு `சந்திரகாந்தா’ என்று பெயர் சூட்டினார். லட்சுமிகாந்தம் என்ற புகழ்பெற்ற மற்றொரு நடிகையும் இருந்ததால் பெயர் மாற்றம் சந்திரகாந்தாவுக்குக் கைகொடுத்தது.

நவரச நாயகி

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைவது அபூர்வம் என்ற காலகட்டம் அது. அப்போது முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வெற்றிகொடுக்க விரும்பினார் ‘சிட்டாடல்’ என்ற புகழ்பெற்ற பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து இயக்கிய ஜோசப் தளியத். அந்தப் படம் ‘விஜயபுரி வீரன்’.

குழு நடனங்களில் டான்ஸராகப் புகழ்பெற்றிருந்த சி.எல். ஆனந்தனைக் கதாநாயகனாகவும் ஹேமலதா என்ற புதுமுகத்தைக் கதாநாயகியாகவும் அறிமுகம் செய்த தளியத், இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சந்திரகாந்தாவை ஒப்பந்தம் செய்தார். ஏ.சி. திருலோகச்சந்தர் திரைக்கதை எழுதியிருந்த இந்தப் படத்தில் சாந்தியாக நடித்து கதாநாயகியைவிடப் புகழ்பெற்றார் சந்திரகாந்தா.

அடுத்து கே.சங்கர் இயக்கத்தில் 1963-ல் வெளியான ‘இது சத்தியம்’படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர். படத்திலிருந்து விலகிக்கொள்ள அவருக்குப் பதிலாக அசோகன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை சந்திரகாந்தா. ரா.கி. ரங்கராஜன் வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக எழுதி புகழ்பெற்று பின் திரைப்படமான இந்தப் படத்துக்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.

“சரவணப் பொய்கையில் நீராடி உனைத் தந்தருள் என்றேன் முருகனிடம்” என்ற அந்தப் புகழ்பெற்ற பாடல் காட்சியில் ஆற்றில் குளித்தபடி நடித்தார் சந்திரகாந்தா. அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது இந்தப் படம் (இதே படத்தில் இடம்பெற்ற “சிங்கார மனசுக்குத் தேரைக்கட்டி, சின்னச் சின்ன இடையில் பூவைக்கட்டி” என்ற பாடலில் நடனமாடி, துணை நடிகையாக அறிமுகமான ஹேமமாலினி அடுத்த சில ஆண்டுகளில் இந்திப் பட உலகில் புகழ்பெற்ற கதாநாயகியானார்).

அடுத்த ஆண்டே ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இசைச் சித்திரமான ‘கலைக்கோயில்’ படத்தில் கதாநாயகியாக நடித்து மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி பெண் ரசிகர்களின் அன்பையும் பெற்றுக்கொண்டார் சந்திரகாந்தா.

சவாலும் துணிச்சலும்

சி.எல்.ஆனந்தன், அசோகன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர் ஆகியோர் மீண்டும் மீண்டும் சந்திரகாந்தாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த பிறகு எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிக்க அன்றைய கதாநாயகிகள் மறுத்தார்கள். ஆனால் சந்திரகாந்தா இதில் விதிவிலக்கான நட்சத்திரம் மட்டுமல்ல, சவாலான கதாபாத்திரங்களைத் தயங்காமல் ஏற்று நடித்ததால் ‘துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா’ என்றும் பெயரெடுத்தார்.

சிறந்த குரல்வளம், சிறந்த நடனத் திறமை, தரமான நடிப்பு ஆகியவற்றில் முத்திரை பதித்த அவரை நவரசத் திலகமாக உயர்த்தின அவர் ஏற்ற துணிச்சலான கதாபாத்திரங்கள். முத்துராமன் ஜோடியாக ‘முத்து மண்டபம்’படத்தில் அழகும் ஆபத்தும் இணைந்த பெண்ணாக, நாட்டியக் கலைஞர் குமுதவல்லி, நவயுக மங்கை கனகவல்லி ஆகிய இரண்டு பரிமாணங்களில் நடித்து ஆச்சரியப்பட வைத்தார்.

தன் திரைவாழ்வின் தொடக்கத்தில் இருந்த சந்திகாந்தா பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘பந்தபாசம்’(1962) படத்தில் சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணத்துக்காக ஏங்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டார்.

தேவர் தயாரித்து இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படத்தில் மீண்டும் மாற்றுத் திறனாளியாக நடித்துக் கவர்ந்த சந்திரகாந்தா, ‘துளிசிமாடம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது உட்பட சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார்.

சிவகாமி கலை மன்றம்

புதிய கதாநாயகிகளின் படையெடுப்பு மிகுந்திருந்த 60-களின் இறுதியில் சினிமாவிலிருந்து முற்றாக விலகிய சந்திரகாந்தா, செங்கல்பட்டு நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு மணவாழ்வில் இணைந்தார்.

இந்தத் தம்பதியின் ஒரே மகள் தீபா. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மென்பொருள் துறையில் பணியாற்றிவருகிறார். 1978-ல் மறைந்த சந்திரகாந்தா திரையிலிருந்து விலகியபின் ‘சிவகாமி கலை மன்றம்’ என்னும் நாடக மன்றத்தைத் தொடங்கி பல புகழ்பெற்ற நாடகங்களையும் நடத்தினார். இவற்றில் பல திரைப்படங்களாகியிருக்கின்றன.

madhu
11th June 2016, 09:21 AM
சந்திரகாந்தாவைப் பற்றி எண்ணும்பொழுது சிறந்த நடனக் கலைஞரான இவர் "பொன்னியின் செல்வி" என்ற நாட்டிய நாடகத்தை நடத்தியதாக நினைவு. ( ஆதிமந்தி, ஆட்டன் அத்தி, மருதி ஆகியோரை பாத்திரங்களாகக் கொண்ட இதே கதையை ( மன்னாதி மன்னன் திரைப்படக் கதைதான் ) ஜெயலலிதாவும் "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற பெயரில் நாட்டிய நாடகமாக்கி நடித்ததாகவும் நினைவு.

சரிதானா என்பதைப் பெரியவங்க சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Richardsof
11th June 2016, 09:35 AM
15.4.1956

சுதேசமித்திரன் தின இதழ் வெளியிட்ட மக்கள் திலகத்தின் மதுரை வீரன் -திரைப்பட விமர்சனம்


http://i65.tinypic.com/iqc3rp.jpg

adiram
11th June 2016, 02:59 PM
அன்புள்ள வாசு சார்,

தாங்கள் எத்தனை முறை ராஜாவைப் பற்றி எந்தெந்த கோணங்களில் எழுதினாலும் படிக்க படிக்க சுவையே தவிர சலிப்பில்லை. எப்படி ராஜாவை எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் சுவாரஸ்யமாக இருக்குமோ அது போலவே.

ராஜாவில் நமது விஸ்வம் பங்களிப்பு பற்றிய உங்களது வர்ணனை அருமை. கதாநாயகன் அறிமுகம் ஆவது வரையில் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு செல்வார். அலட்டிக் கொள்ளாத அலட்சிய நடிப்பு நம்மை மிகவும் கவரும். கைது செய்யப்பட்டு கமிஷனர் முன் நிறுத்தியபோதும் கமிஷனர் சிங்கப்பூரில் இருக்கும் கடத்தல் மன்னனின் போட்டோவைக் காட்டி மிரட்டும்போது கொஞ்சம் கூட பயமின்றி அசால்ட்டாக பதிலளிக்கும் அழகே தனி.

லாக்கப்பில் ராஜாவுடன் அறிமுகம் ஏற்பட்டதும் அதற்கெனவே காத்திருந்தவர் போல பொறுப்பை ராஜாவின் தோளில் சுமத்தி விட்டு மறைந்து விடுவார். அதிலிருந்து ராஜாவின் அட்டகாசம்தான் படம் முழுக்க. க்ளைமாக்சுக்கு சற்று முன் மீண்டும் விஸ்வத்தின் அட்டகாசம் தொடரும். மீண்டும் அறிமுகம் ஆகும்போதே கமிஷனரிடம் அவர் போனில் பேசும் அலட்சியம். "கமிஷனர் சார், என்னை ஏமாற்ற முடியாது. ஒருத்தர் குரலை ஒருமுறை கேட்டுவிட்டால் மறக்க மாட்டேன்" என்று சர்வ அலட்சியமாக சொல்வதும் "எங்க தொழிலில் பாவ புண்ணியம் பார்க்க கூடாது சார்" என்று கமிஷனரையே மிரட்டுவதும்,

க்ளைமாக்சில் ராஜாவின் அம்மாவாக தன்னால் கடத்தி வரப்பட்ட பண்டரிபாய் பாபுவின் அம்மா என்று அறிந்து தடுமாறுவதும், தன் அனைத்து நம்பிக்கைகளும் தகர்ந்து போய் பாஸின் முன் நிலைகுலைந்து நிற்கையில் அப்போது அங்கு வரும் ஜம்புவின் (கே.கண்ணன்) விளக்கத்தால் மீண்டும் விஸ்வம் விஸ்வரூபம் எடுத்து, தன்னை ஏமாற்றிய சகோதரர்களை சாட்டையால் விளாசுவதும் என 'விஸ்வம்' மனோகரின் பங்கு ராஜாவில் மகத்தானது.

adiram
11th June 2016, 03:46 PM
அயணம் என்றால் பயணம் என்று அர்த்தமாம்..நமக்கெல்லாம் ராமாயணம் தெரியுமில்லையா.. ராமாயணம் என்றால் ராமனின் பயணம்.. என அர்த்தம்..

எனில் நாமும் இன்னொரு அயணம் எழுதிப் பார்க்கலாமா..

சிம்ரனயனம். – 2 (ஹை.. சிம்ரனின் நயனம் என்றும் வ்ருகிறதே!)

ஓ... அயணம் என்றால் இப்படி அர்த்தமா?

60-களின் மத்தியில் (துப்பாக்கி பிடிக்குமுன்) ஆனந்த விகடனில் எம்.ஆர்.ராதா தன் சுய சரிதையை எழுதி வந்தார். அதற்கு அவரிட்ட தலைப்பு "ராதாயணம்". நாத்திகரான இவர் ராமாயணத்துக்கு போட்டியாக பெயர் வைத்தாரோ என்று நினைத்தேன். இப்போ அர்த்தம் புரிந்தது.

adiram
11th June 2016, 04:02 PM
சந்திரகாந்தா தமிழ்த் திரையில் மறக்க முடியாத பெயர். அவர் பற்றிய கட்டுரையில் முரடன் முத்து, கறுப்புப்பணம் படங்களை குறிப்பிடாதது குறையே.
நான் உன்னைச் சேர்ந்த செல்வம் (கலைக் கோயில்)
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்தேன் (முரடன் முத்து)
உந்தன் ராஜசபை இங்கு வாராதோ (கறுப்புப்பணம்)
பாடல்கள் மறக்க முடியாதவை.

தன் அண்ணன் சண்முகசுந்தரத்தின் மனைவி நடிகை ரமாபிரபா, முறையான விவாகரத்து பெறாமல் சரத்பாபுவுடன் "ஓடிப்போனபோது" நேரில் போய் ரமாபிரபாவை பளார் பளாரென்று விளாசிவிட்டு வந்தவர் சந்திரகாந்தா.

சுத்தமான தமிழ் பேசும் நல்ல நடிகை.

eehaiupehazij
11th June 2016, 10:51 PM
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ.....

நம்மில் நிறையப் பேருக்கு மழையில் நனையப் பிடிக்கும்...... சேற்றில் கால்பதித்துக் கூத்தாட ....?

https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo


மழையில் நனைந்தால் சேறு கரைந்துவிடப் போகிறது !

https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

மனதில் சேற்றை வாரியிறைத்த மங்கையரை நினைத்திட்டால்.....

https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg

rajeshkrv
12th June 2016, 03:35 AM
சந்திரகாந்தா தமிழ்த் திரையில் மறக்க முடியாத பெயர். அவர் பற்றிய கட்டுரையில் முரடன் முத்து, கறுப்புப்பணம் படங்களை குறிப்பிடாதது குறையே.
நான் உன்னைச் சேர்ந்த செல்வம் (கலைக் கோயில்)
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்தேன் (முரடன் முத்து)
உந்தன் ராஜசபை இங்கு வாராதோ (கறுப்புப்பணம்)
பாடல்கள் மறக்க முடியாதவை.

தன் அண்ணன் சண்முகசுந்தரத்தின் மனைவி நடிகை ரமாபிரபா, முறையான விவாகரத்து பெறாமல் சரத்பாபுவுடன் "ஓடிப்போனபோது" நேரில் போய் ரமாபிரபாவை பளார் பளாரென்று விளாசிவிட்டு வந்தவர் சந்திரகாந்தா.

சுத்தமான தமிழ் பேசும் நல்ல நடிகை.

Main role was the brahmin athai for Muthuraman in Nathayil muthu. I loved her acting in this movie. She was on par with S.Varalakshmi


Vasu ji, madhunna i'm trying to be back but not sure if i can be back fully

madhu
12th June 2016, 03:50 AM
Vasu ji, madhunna i'm trying to be back but not sure if i can be back fully

உன்னால் முடியும் தம்பி.

RAGHAVENDRA
12th June 2016, 06:49 AM
Come back Rajesh. You don't think you lost her. She is very well with you. You continue your routine and she will be taking part in all your ventures.
God bless You with enough strength and will power.

eehaiupehazij
12th June 2016, 08:03 AM
சேற்றில் மலர்ந்த செந்தாமரைகள் !

https://www.youtube.com/watch?v=euICZmupFJ0

https://www.youtube.com/watch?v=XLWbdfXk-HU

rajeshkrv
12th June 2016, 09:52 AM
Come back Rajesh. You don't think you lost her. She is very well with you. You continue your routine and she will be taking part in all your ventures.
God bless You with enough strength and will power.

will try Raghav ji.

chinnakkannan
12th June 2016, 10:27 AM
வாங்க ராஜேஷ்.. நாங்க இருக்கோம் எங்க பிரார்த்தனைகள் இருக்கு..

eehaiupehazij
12th June 2016, 05:56 PM
With Love from the Treasure Island of GG!

The Cosmology and Seismology of Love!!

கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....

The cosmic power of sky controls earth.....the seismic power of lady confuses the lad!


உலகின் நிகழ்வுகளைக் கண்ணுற்று மகிழவே நமக்கு இறைவன் கண்களைத் தந்திருந்தாலும் காதல் பருவத்தில் அகக்கண் மூடி புறக்கண் திறப்பது காதலியின் வனப்பை ரசித்திடவே!

மண்ணில் அரும்பும் துரும்பும் கரும்பும் விண்ணை நோக்கியே விரும்பும் திரும்பும்! மண்ணில் நிகழ்வுகள் விண்ணின் பார்வையிலேயே!!
காதலியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான் காதலன்....காதலன் விண்ணைப் பார்க்கிறான்....காதலியோ மண்ணைப் பார்க்கிறாள்....
பார்வைகள் நேர்கோட்டில் சந்திக்கும்போதோ பிரளய பூகம்பம்...மின்னல் பூக்கள்.....பாசமழை....

நேற்றுவரை அவன் யாரோ என்ன பேரோ....

அண்டாகாகசம் அபூகாகுசூம்.....மூடிடு சீசே!

இன்றுமுதல்... இவள் வேறோ இவன் வேறோ.....

அண்டாகாகசம் அபூகாகுசூம்..... திறந்திடு சீசே!


இதுதான்...இந்தப் பார்வையின்சங்கமம்தான்....புவிமாந்தரின் காதல் மந்திர மாளிகையின் கதவுகள் திறந்திடும் கடவுச்சொல்!

மண்ணை நோக்கி விண்ணையும் இறங்க வைக்கும் பெண்ணின் கண்களே காதலின் கலங்கரை விளக்கம்......காதல் மாலுமிக்கோ விண்ணில் நின்று வழிகாட்டும் துருவநட்சத்திரம்!! விண்ணும் மண்ணும் வாழ வைக்கும்.... நம்மைக் காதலில் வீழ வைக்கும்..... பிரம்மாஸ்திரங்களே பெண்ணும் கண்ணும் !!

The cosmic power anchors the love!

https://www.youtube.com/watch?v=9sFXN-3Ju7c

The seismic power cracks the love!!

https://www.youtube.com/watch?v=RggMJODLIac

chinnakkannan
12th June 2016, 09:33 PM
பகுதி : 3

குர்குமா லோங்கா (அட திட்டல்லாம் இல்லீங்க) ஒரு மருத்துவ மூலிகையாகும்..இதன் தண்டில் உள்ள கிழங்கானது அழகிய ந்ங்கையர்க்கு மேலும் அழகூட்டும்..பல வித மருத்துவ குணங்கள் உள்ள இந்த மூலிகையின் இயற்பெயர் தமிழில் …மஞ்சள் என்பதாகும்..

வஞ்சி எழிலினை வாகாகக் கூட்டுவது
மஞ்சள் கிழங்கினால் ஆம்..

சஞ்சலங் கொண்டேன் சாகவா என்றே
வஞ்சியென் உள்ள வாட்டமும் அறியான்
கொஞ்சிய கோவும் கோதையைப் பிரிய
மஞ்சளும் சற்றே மாறலு மாச்சே..

என ஒரு சங்க காலப் பெண் காதலன் பொருள் சேர்க்கப் பிரிந்ததை நினைந்து புலம்புகிறாளாக்கும்..
ஹச்சோ மறந்துட்டேனே.. ஆமாம் தலைப்பு வைக்கத்தான்.. பரவாயில்லை எழுதப் போவது தமிழ் சினிமாவில் தலைப்பு என்ற கான்செப்டையே விட்டொழித்தவர் என்று கான்செப்ட் புகழ் செந்திலும் சில ஆன்றோர்களும் சொல்லியிருக்கிறார்கள்! :)

சரி தலைப்பு.. சிம்ரனாயனம் -பகுதி 3


நாம் பார்க்கப் போகும் பாடலில் அப்படிப் பட்ட சிம்ரன் கிடையாது அடக்க ஒடுக்கமான ஆனால் மஞ்சள் பூசாத பஞ்சாபிப் பெண்ணாக ஆரம்பத்தில் வந்து பின் மஞ்சள் பூசி.. கனவே கலையாதேயில் வருவாராக்கும்..

எண்ணமது ஈடேற ஏந்திழையின் உள்ளத்தில்
கண்ணனின் தோற்றத்தைக் கண்டிங்கு – பொன்னென
மின்னும் முகமதியும் மீண்டும் பொலிவுறவே
முந்தினாள் மஞ்சளிடத் தான்..

ம்ம் பஞ்சாபிப் பெண் தமிழ்ப் பையன் காதல்..ஈடேறிச்சுன்னு நினைகக்றச்சே வேறு என்னவெல்லாமோ நடந்து கதை வேறு விதமாகப் போகும்.. சிம்ரன் நன்னாயிட்டு நடிச்சுருப்பார்..
*

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்று

தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடேறுதே

ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூறுதே

பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சிந்துதே கண்ணீரும் சிந்துதே

எண்ணம் போல் வாழ்வு கண்டேன் எல்லோரும் வாழ்த்தட்டுமே
முன்னூறு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமே

ஏழு பிறப்பினிலும் மறு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட

ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே

பாடியது அனுராதா பட்வல்..கொஞ்சம் மென்மைக்குரலாய் ஏதோ ஒன்று ஈர்க்கிறது..

ம்ம் இனி பாட்..

https://youtu.be/Wlkbs2mZYCk?list=PLjity7Lwv-zqny1nVV2qaZEsDw2mb8L-l

அடுத்த பாடலில் சிம்முவை விட நாயகனை விட நடனத்தில் அசத்துபவர் இன்னொருவர்.. என்னவாக்கும் அந்தக்காதல் பாடல்..

ஆமாம் எங்கெங்கே அந்தப் பாட் அப்புறமா போடுவேன்.- இன்னொரு அத்தியாயத்தில்ல்..:)

பின்ன வாரேன்..

eehaiupehazij
12th June 2016, 09:40 PM
Gap filler....

Cosmology and Seismology of Love with the King of Romance!!


கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....

The cosmic power of sky controls earth.....the seismic power of lady controls the lad!


பெண்ணைப் பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை.....
கண்ணைப் பார்த்தும் ஏன் கவிதை வரவில்லை
பெண்ணையும் கண்ணையும் தவிர்த்து விண்ணையும் மண்ணையுமே பார்த்துத் தவிக்கும் காதல் மன்னர் !

https://www.youtube.com/watch?v=Ypri1gs9U_k

chinnakkannan
12th June 2016, 10:05 PM
பண்ணினைப் பாடுகின்ற பாவையர் கண்ணிலே
வண்ணங்கள் துள்ளியே வாடாத மாலைகளாய்
இன்னும் பலவாய் இருக்கு மெழிற்காட்சி
எண்ணி லடங்காது தான்..

ம்ம் க க்கும் பெக்கும் என்னோட காண்ட்ரிப்யூஷன்..

கன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது

பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல

அமர்ந்த வண்டும் வண்டல்ல
ஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல

https://youtu.be/oVWMAwvi2kA

eehaiupehazij
12th June 2016, 10:28 PM
பண்ணினைப் பாடுகின்ற பாவையர் கண்ணிலே
வண்ணங்கள் துள்ளியே வாடாத மாலைகளாய்
இன்னும் பலவாய் இருக்கு மெழிற்காட்சி
எண்ணி லடங்காது தான்..

ம்ம் க க்கும் பெக்கும் என்னோட காண்ட்ரிப்யூஷன்..

Super சி க! நீங்களும் சின்னக் கலைவாணரே!!
பெக்கடித்தால் கக்க வேண்டியிருக்கும் என்பதை எவ்வளவு அழகாக கக்கும் பெக்கும் என்று கான்ட்ரிப்யுட் பண்ணியிருக்கிறீர்கள் !

கக்கும் பெக்கின் கிக்குக்காக விக்கும் திக்கும் மக்கு காதல் (தோல்வி) ரன்னர் !

https://www.youtube.com/watch?v=QeFCsvtZCO8

chinnakkannan
13th June 2016, 12:42 AM
ஹச்சோ க விற்கும் பெ விற்கும் அஃதாவது கண்ணுக்கும் பெண்ணுக்கும் என்று தானே சொல்லவந்தேன்..ஹச்சோ ஹச்சோ :)

eehaiupehazij
13th June 2016, 07:33 AM
பெண்ணும் கண்ணும்........ மக்கள் கலைஞரும் கலைநிலவும் ....அவரவர் பாணியில் !

https://www.youtube.com/watch?v=CR6Cc2Cge74

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk

eehaiupehazij
13th June 2016, 08:03 AM
ஒரே பாடல் இரு நாயகர்கள்... இரு வேறு பாடகர்கள்... இரு வேறு சூழல்களில் !

நான்கு சுவர்கள் திரைப்படம் ஜெய் சங்கர் ரவிசந்திரன் இணைவில் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்து அந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த வெற்றியைத்
தராவிட்டாலும் அருமையான வண்ணப் பதிவில் இனிமையான இசையில் தேனான பாடல்களால் ரசிகர்களை ஈர்த்த படம் !
கைகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் ரவி (SPB) வாணிஸ்ரீயுடன் டூயட் பாடி ஜெய்யை உசுப்பேற்றுகிறார்!
ஜெய்யும் (TMS)தனக்கு சூழல் வாய்க்கும் போது விஜயலலிதாவுடன் ரவி பாடிய பாட்டையே பாடி ரவியை கடுப்பேற்றுகிறார் ...ரவியும் நடுநடுவே வசனத்தால் அடிக்கிறார் !

https://www.youtube.com/watch?v=bXkkNe7Kk8c

https://www.youtube.com/watch?v=oC1om5nJZPk

eehaiupehazij
13th June 2016, 08:23 PM
One song...different actors, singers and situations!

Paar makale paar song aval paranthu ponale then pachai maram ondru song in Ramu...anbu malarkale song in Naalai namadhe.?

rajeshkrv
13th June 2016, 09:42 PM
situational song for me

https://www.youtube.com/watch?v=FKRozvRwkjY

eehaiupehazij
13th June 2016, 11:58 PM
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு!


அன்பு நேசம் காதல் பரிவு பாசம் எல்லாம் குடிபுக நினைக்கும் இடங்களே மனம் இதயம் நெஞ்சம் .....என்ன வித்தியாசம் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. ஆனாலும் நேசம் நேராக தஞ்சம் புகும் இடமே நெஞ்சம்...அன்பு மிஞ்சும் மனமே நெஞ்சம் ...காதல் கொஞ்சும் இதயமே நெஞ்சம் ..என்று நம்புகிறேன் !

நெஞ்சம் நிறைந்த நெஞ்சத்தைத் துளைத்த நெஞ்சம் தொலைந்த நெஞ்சம் கிஞ்சித்தும் மறக்கவொன்னாத மதுர கானங்கள் ...எனது நெஞ்சிருக்கும் வரை !

No.1 :நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுவரை ஓர் நினைவு தந்தாய் ....சாந்தி !

பாடலின் தெளிந்த நீரோடை வரிகளாகட்டும் இசை நேர்த்தியாகட்டும் சுசீலாம்மாவின் தேனினுமினிய குரல் குழைவாகட்டும் நடிகர்திலகத்தின் சதனார் விசிலின் உதட்டுக் குவிப்பசைவாகட்டும் தேவிகாவின் எழிலாகட்டும் எனது நெஞ்சைவிட்டு நீங்காத பாடல்களில் தனியிடமே !


https://www.youtube.com/watch?v=sQpeP2lLBFg

eehaiupehazij
14th June 2016, 12:38 AM
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு![QUOTE]

No.2

அன்புக்கும் காதலுக்கும்தான் நெஞ்சம் என்றில்லாமல் கோபத்தின் கொள்ளிடமாகவும் அது மாறிவிடும் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பொறுமையை சோதித்திடும் போது ! நடிகர்திலகத்தின் அகக்கோபம் முகபாவத்திலே ....பராசக்தி

https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo

No.3 :

எதிர்மறை எண்ணங்கள் உதிர்ந்து நேர்சிந்தனைகள் நெஞ்சிருக்கும் எங்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையைப் புகுத்தும்போதும் ....நெஞ்சிருக்கும் வரை ..

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU

eehaiupehazij
14th June 2016, 08:12 AM
நெஞ்சம் மறக்கவோன்னாத மதுர கானங்களின் அணிவகுப்பு ....மரியாதை நடிகர்திலகத்துக்கு !
தமிழ்த் திரை கண்ட மிகச்சிறந்த காதல் காட்சிய்மைப்புக்களில் இதமானது !

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு கண்ணில் குடியிருக்கும் காதலியின் நிலைமை உணர்த்தும் கண்ணியமான காட்சியமைப்பு !!

No. 4 வெள்ளித்திரையோ வண்ணத்திரையோ புதிரை உள்ளடக்கிய காதல் நெஞ்சத் திரை இரும்புத்திரையா பனித்திரையா பட்டுத் துணித்திரையா ?! ....இல்லை வெறும் மண்குதிரையா?!

https://www.youtube.com/watch?v=R5xuTfQcHeA

eehaiupehazij
14th June 2016, 11:33 AM
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி ....பாரதியின் பாரதிரும் நெஞ்சின் நிலைப்பாடு நடிகர்திலகத்தின் நெஞ்சில் தஞ்சம் !

No.5 கப்பலோட்டிய தமிழன்

https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg

eehaiupehazij
14th June 2016, 12:01 PM
மனித வாழ்வில் மறதி என்னும் கசப்பு மருந்தே மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது படைத்தவனாகிய இறைவனின் படைப்பு வினோதமே !
ஆனாலும் பழையதை மறந்து புதிய பறவையாக வட்டமிட திட்டமிடும்போது மறந்ததை எல்லாம் நெஞ்சத்தின் நினைவில் மீட்டுக் கட்டம் கட்டிட வந்ததையா ஒரு பழைய பறவை !! எந்த திரைக் கதாபாத்திரமும் இவ்வளவு நெஞ்சுவலி தரும் இன்னல்களை சந்தித்ததில்லை ! அந்த வேதனைகளை வெளிப்படுத்தியதில் உலகநடிகர் எவரும் நமது திலகத்தை மிஞ்சியதுமில்லை !
அவர் நமது இதயக் குடிலில் வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..... மறந்ததே என்ன நெஞ்சமோ !

No. 6 : புதிய பறவை!

https://www.youtube.com/watch?v=vkMpyPk6Mss

https://www.youtube.com/watch?v=VwZc1nQTWzQ

JamesFague
14th June 2016, 12:34 PM
Superb melody from Manidharil Ithanai Nirangala


https://youtu.be/tu5z65CsMJs

raagadevan
14th June 2016, 08:38 PM
Gap filler...

"Don't You Need Somebody..." by RedOne

This is the Official Song of Euro 2016

https://www.youtube.com/watch?v=6fBZBntjEOA

Featuring:

Akon
Alex Sparrow
Ali B
Aseel
Bibi
Cristiano Ronaldo
Dave Stewart and Kaya Stewart.
Dr. Simon Ourian
Enrique Iglesias
French Montana
Howie Mandel
James Rodriguez
Jay McGuinness
Aliona Vilani
Jean-Claude Van Damme
Jennifer Lopez
John Maman
Just Jared
Kaitlin Bristowe
Karina Bazan
Kevin McHale
Kristina Bazan
Maître Gims
Max Schneider
Mesut Özil
Mila Jovovic
Momo
Mr Brainwash
Perez Hilton
Priyanka Chopra
David Luiz,
Blaise Matuidi
Josh Norman
R City
Rafael Nadal
Randy Jackson
RedOne
Ryan Seacrest
Serayah
Shaggy
Simobb
Tal
Thanh Bui
The Band Perry

eehaiupehazij
15th June 2016, 10:55 AM
Mood and Mind Moderators!

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!


மாயா வினோதங்கள் நிறைந்த நீர்க்குமிழியாய்த் தோன்றி மறையும் வாழ்வுச் சுழற்சியின் முற்றுப்புள்ளி மரணத்திற்குப் பிறகு நாம் ஐக்கியமாகப் போகும் மண்ணோ விண்ணோ......நமது ஆவி நீங்கிய பூதவுடல் இறுதியாகக் கிடத்தப்பட்டு சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டு....சமரசத் தேரேறி மனித வாழ்வில் நாம் ஆர்ப்பரித்திட்ட பேதங்கள் அடங்கி இறைவனின் பாதங்களை சேர்ந்திட உதவும் உந்துதளம் Spring Board தொல்லைகள் ஏதுமின்றியே தூங்கிடும் வீடாம் சு(இ)டுகாடே!

மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!

(கண்கெட்ட பின்) ஞானோதயம் No.1 : ரம்பையின் காதல்.....!

https://www.youtube.com/watch?v=ATBNyaWxTr4

eehaiupehazij
15th June 2016, 11:09 AM
Mood and Mind Moderators!

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!

மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!

உயிர் இருக்கும் வரையே நிலைக்கும் உறவுகள்....துறந்த உயிரின் ஆத்மா இனி நினைவஞ்சலி நிழற்படமே!

வீடு வரை உறவு..... வீதி வரை மனைவி..... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ!

பிறந்தவுடன் இன்பத் தாலாட்டு....இறந்தவுடன் துன்ப ஒப்பாரி.....இசையிலும் பேதங்கள் வாழ்வியல் வேதங்களே


(கண்கெட்ட பின்) ஞானோதயம் No.2 பாதகாணிக்கை ......மண்ணில் மறையும் விண்ணில் உறையும் அமர ஆத்மாக்களுக்காக!

https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw

eehaiupehazij
15th June 2016, 11:32 AM
Mind Menders and Mood Moderators!

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!

மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!

போனால் போகட்டும் போடா....இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!

(கண்கெட்ட பின்) ஞானோதயம் No.3 பாலும் பழமும் ......வந்தவரெல்லாம் தங்கி விட்டால்...இந்த மண்ணில் நமக்கே இடமேது!

https://www.youtube.com/watch?v=xJv69gO4dBA

NT at his best....!

நடிகர்திலகத்தின் சமரச சாம்ராஜ்ஜியம்....முடி சூடிய மன்னரும் முடிவில் ஒருபிடி சாம்பலே!!

https://www.youtube.com/watch?v=hBWh4TrnUeQ

https://www.youtube.com/watch?v=EYjTYoi1i7M&list=RDEYjTYoi1i7M

RAGHAVENDRA
15th June 2016, 03:38 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/t31.0-8/s960x960/13392209_1140922105968921_3532810583924631373_o.jp g

RAGHAVENDRA
15th June 2016, 03:42 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13417647_1133813560002648_6544960302583991623_n.jp g?oh=228197fcd017fa9c485d044e389c577b&oe=58051E9E

Gopal.s
16th June 2016, 08:04 AM
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி -1966

அதுவரை Road movies என்ற genre ,hollywood காரர்களுக்கே ரொம்ப அரிது.(You only live twice,Persons in Hiding (1939??),They live by night,Gun Crazy,Breathless(1960),The Sadist(1964) போன்ற ஒரு சில.

இந்திய அளவில் Road movies முன்னோடி ,மெட்ராஸ் டு பாண்டிச்சேரியே .

விவித பாரதி என்ற வினோத banner இல் பீம்சிங் மேற்பார்வையில் திருமலை மகாலிங்கம் இயக்கிய இந்த படம், suspense ,thrill ,நகைச்சுவை ,romance ,புதுமை அத்தனையும் கொண்டு A ,B ,C அனைத்து தரப்பினரையும் ஒரு சேர சந்தோஷ படுத்திய படம்.கதை-வசனம் -உசிலை த. சோமநாதன் (சபாஷ்). மகா வெற்றி பெற்ற ஆரம்ப ரவிச்சந்திரன் படங்களில் ஒன்று (B .S .ரவிச்சந்திரன் என்று டைட்டில் ) .கொஞ்சம் சரோஜாதேவி சாயலடிக்கும் கன்னட நடிகை கல்பனாவின் ஒரே தமிழ் படம்.அழகன் ரவியின் இணையில் ஜொலிப்பார். ரவியும்,வில்லன் கள்ளபார்ட் நடராஜனும் பின்னுவார்கள்.நாகேஷ்,கருணாநிதி,பக்கோடா காதர் என்று செம காமெடி அணிவகுப்பு. படம் போவதே தெரியாது.

படத்தின் மற்றுமொரு சிறப்பு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி யின் இசை. பிரிந்த பின் இவரை ஆதரித்தவர்கள் முக்தா, மேகலா ,ராமண்ணா, பீம்சிங் போன்றோர். ராமமூர்த்தி ,கண்ணதாசனை தவிர்த்தே வந்தார். (இந்த படத்திற்கு 5 பாடலாசிரியர்கள்.)கண்ணதாசன் ,தன் சுயநல நோக்கிற்கு,இரட்டையர்களை பிரித்தார். (இதை பற்றி ஏற்கெனெவே, எழுதியுள்ளேன்)இந்த படத்தில் ஹாய் Friend dear க்கு என்ன, மலரை போன்ற,பயணம் எங்கே,என்ன என்ன நெஞ்சுக்குள்ளே என்ற ஜாலி பாடல்கள் ,ரவியின் நடன திறமை,சின்னி-சம்பத் choreography யில் மிளிரும்.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அசைய விடாமல் அசத்திய இந்த வெற்றி படம் பாம்பே டு கோவா என்று எஸ்.ராமநாதன் (தமிழிலிருந்து ஹிந்தி ரீமேக் புகழ்,இருதுருவம் இயக்குனர்) ஹிந்தியில் எடுத்தார். அமிதாப் பின் ஆரம்ப கால சுமார் வெற்றி படங்களில் ஒன்று. (ஒரிஜினல் கிட்டே வர முடியவில்லை)இதில் பயணம் எங்கே பாடலின் ஹிந்தி பதிப்பான தேக்ஹா நா ஹைரெ சொஜானா என்ற பாடல் அந்த கால மாணவர்களின் விருப்பம். (ஜெய் ஜெய் சிவ சங்கர் இன்னொன்று.)

https://www.youtube.com/watch?v=OybNT11fIvg

https://www.youtube.com/watch?v=-Ju_SPo1tKQ

Gopal.s
16th June 2016, 08:06 AM
Our Heart Felt condolenses to A.C.Thirulok Chandar. One of the respected Script Writer,Director and well read person.

rajraj
16th June 2016, 08:12 AM
From sundaramurthi naayanaar

thalaiye nee vaNangaai......


http://www.youtube.com/watch?v=sZAmRkNpD0Y

I was taught this song when I was in elementary school. I don't know whether they still teach thevaram in schools ! :)

Gopal.s
16th June 2016, 11:48 AM
காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் பேத்தியை அறிமுகம் செய்யும் மிஷ்கின்! Posted by: Manjula Published: Wednesday, June 15, 2016, 15:33 [IST]

சென்னை:பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இயக்குநர் மிஷ்கின் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கியவர் ரவிச்சந்திரன். இவரது பேத்தி தான்யா தற்போது மாடலிங் செய்து வருகிறார். இந்நிலையில் தான்யாவை ஒரு புகைப்படத்தில் பார்த்த மிஷ்கின் தன்னுடைய அடுத்த படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். மிஷ்கின் நடித்து வரும் சவரக்கத்தி படத்திற்குப் பின் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்குகிறார். இந்த 2 படங்களுக்குப் பின் தான்யா நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். நாயகன், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர். ஆக்ஷனை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாத்தா போல பேத்தியும் தமிழ் சினிமாவில் தடம் பதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

eehaiupehazij
17th June 2016, 05:59 PM
The world is small...the earthly life too! Enjoy the sweetness of life even as controversies are not uncommon...that too when the nostalgia gets a shake like this....NT-ACT combo!

Enjoy the foot tapping dance steps, yodeling and whistling interludes....

இனிதான இவ்வுலகில் நாளை பொழுது யாருக்கென்று கேள்வி கேட்டு பதில் தேடு !

https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

eehaiupehazij
18th June 2016, 07:41 AM
From the Treasure Island of GG with Love!

The mini-series Story of how GG was conferred with a Doctor of Philosophy in Love Technology and Management!


Love making....an art ...or a science...or a scientific art....or an artistic science?!

Enjoy the scientists cum artistes making love through tussles! The dreamy way of illusions and hallucinations....mirages and miracles...

GG deserves a doctorate in his invincible and monopolized doctrine of Love Technology and Management!

Love Triangle Thesis Chapter I : Love at first sight(s) with fights!


Tamil clippings are not available....enjoy the Hindi version of GG's mega saga Vanjikkottai Valiban as Raj Thilak with co-scientists Vaijayanthimala and Padmini!! The clash of these two science titans put the Chief scientist of Love in a quandary as they start dancing and singing vying with each other!!

https://www.youtube.com/watch?v=LSNC1XTeAj4

Psychiatrist Vaijayanthi mesmerises the Love slave GG and transforms him to the then Prince of Love by illusions and hallucinations...of course ending as mirage rather than a miracle...as Padmini intervenes in the love processing...

https://www.youtube.com/watch?v=ljaDR2XNHtQ

GG excels all other actors in one unique trait of him....the L-rays radiating from his mischievous and mirthful eyes! Besides the quintessential body language for expressing the definitions for different kinds of love, GG's eyes were so powerful like a laser beam emitter...no chance...the celebrated Emperor of on-screen love always proves his prowess through his sight of collimation upon the lover girl...like a spider's net...what a Midas' magical touch...in executing a love project...!!


https://www.youtube.com/watch?v=CFSKXUrnLLA

GG's elite thread fondly remembers the thespian of scintillating music of those days Shri.C. Ramachandra for his meticulous and immaculate tunes that made this movie an evergreen musical extravaganza too!!

madhu
18th June 2016, 01:07 PM
Tamil clippings are not available....



ஏன் ? ஏன் ? ஏன் ?

https://www.youtube.com/watch?v=yaV33vZWHyU


https://www.youtube.com/watch?v=rA8qDcGNlOs

eehaiupehazij
18th June 2016, 02:44 PM
பாடல் காட்சிகள் தமிழில் கிடைக்கப் பெற்றாலும் இந்த ஆய்வுக்குரிய அரிய சீன்கள் தமிழில் தரவேற்றம் செய்யப்படவில்லையே மது சார் !

vasudevan31355
19th June 2016, 10:47 AM
இரண்டு,மூன்று நாட்களாக இந்த இரு பாடல்களும் மனதிலே ஓடிக் கொண்டே இருக்கின்றன. திடீரென்று சம்பந்தமே இல்லாமல் சில பாடல்கள் நீண்ட நாட்கள் மறந்திருந்த நிலையிலே நெஞ்சிலே புகுந்து 'என்னை கவனிக்கப் படாதா' என்று கெஞ்சுவது போலத் தோன்றும். சட்டென்று புறந்தள்ளிவிடவும் இயலாது. இதிலே ஒரு வேடிக்கை பாருங்கள். இரண்டு பாடல்களுமே வளைகாப்பு பாடல்கள். இத்தனைக்கும் வீட்டிலோ, வெளியிலோ வளைகாப்பு விசேஷங்களுக்கும் செல்லவில்லை. இரண்டு பாடல்களும் சொல்லி வைத்தாற்போல் பொட்டில் அடித்தது போல சுற்றி சுற்றி வருகின்றன. திருப்பி திருப்பி ரீவைண்ட் ஆக ஆக இந்தப் பாடல்களின் சுவைகளும் கூடிக் கொண்டேதான் போகின்றன முன்னமே அடிக்கடி சுவைத்திருந்தாலும் கூட.


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355093/eee.jpg

முதலாவது 'நீலவான'த்தில் கள்ளமில்லாமல் சிரித்து வட்டமிட்டு பறக்கும் தேவிகா சிட்டு. மகன் வயிற்றில் வளருகிறான் என்ற பொய் சேதி அறியா உண்மை சந்தோஷத்தில் உறவினர், உற்றார் மத்தியில் தோழிகளின் கிண்டல்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மத்தியில் தேவிகாவின் அந்த முகத்தில்தான் கைகள் மூடிய, எத்தனை நாணம் கலந்த மகிழ்ச்சி! சும்மாவா சொன்னார் நடிகர் திலகம் 'நீலவானம்' படம் பற்றி. 'தேவிகாவின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்' என்று. 'நடிப்பின் இமய'மே பாராட்டு படித்து விட்டதே தேவிகாவைப் பற்றி.

பொய் வளைகாப்பு நடப்பதைப் பார்த்து கமுக்கமாகக் கண்ணீர் விடும் சீதாலஷ்மி, சஹஸ்ரநாமம் பரிதாபம்.

குமாரி பத்மினியும், ராஜஸ்ரீயும் சுசீலா, ராட்சஸி குரலில் இந்த அற்புதமான பாடலைப் பாட சுவையோ சுவை. சுசீலா, ஈஸ்வரியில் யாருக்கு மார்க் போடுவது என்றே தெரியவில்லை. போட்டா போட்டி இருவருக்கு. வெற்றி நமக்கு. பாடலின் பரிதாபமான சிச்சுவேஷனை ஆரம்ப ஷெனாயின் லேசான சோகமே காட்டிக் கொடுத்து விடும்.

'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் வந்து கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தினில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட'

என்ன தமிழ்! என்ன தமிழ்!

'சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக'

வரிகள் சுசீலா குரலில் மிளிரும் அழகை எப்படி வர்ணிக்க? அப்படியே தெள்ளத் தெளிவான வெண்கலக் குரல் பஞ்சர் பஞ்சராக்கிவிடும் நம்மை. 'ஆஹா! சுசீலாதான் டாப்' என்று மனதுக்குள் சர்டிபிகேட் தந்து கொண்டிருக்கும்போதே 'இதோ நான் இருக்கிறேன்... அதற்குள் முடிவெடுத்து விடாதே' என்று என் ராட்சஸி அடுத்த வரிகளை கேப்ச்சர் பண்ணி அமர்க்களப்படுத்தும் போது மனம் படும் பாட்டை சொல்லிவிட முடியாது.

'தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக....மல்லிகைச் செண்டாக' என்று முடிவில் ராட்சஸி அதிர்வுகள் கொடுக்கும் போது 'ஈஸ்வரிதான் டாப்' என்று எழுந்து நின்று கத்தத் தோணும்.

ரெண்டு பேரும் சேர்ந்து வேர்வையை நீண்டு வழிந்தோடச் செய்யும் அழகு.

'வேர்வை வழிந்தோ......ட'

குழந்தை வளரும் கர்ப்பப்பையை 'தாமரைக் கோவில்' என்று கற்பனை செய்து பார்த்த கவிஞனின் திறமைதான் என்ன!

குமாரி பத்மினி குடும்பக் குத்துவிளக்கு என்றால் ராஜஸ்ரீ சற்றே கவர்ச்சி விளக்கு. ரெண்டுமே அழகுதான்.

ஒன்றை நிச்சயம் கவனியுங்கள்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக் கூடிய அந்த சில வினாடிக் காட்சி. தூக்கிச் சாப்பிடுபவர் யார்? வேறு யார்? நடிகர் திலகம் அல்லாமல் வேறு யார்?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355092/nadai.jpg

பொய் வளைகாப்பு அங்கே தேவிகாவுக்கு நடந்து கொண்டிருக்க, இங்கே டெல்லியில் அகில உலக டாக்டர்கள் மகாநாடு புற்றுநோய் மருத்துவத்திற்காக நடந்து கொண்டிருக்க, தேவிகாவின் புற்றுநோய் குணத்திற்காக டாக்டர்கள் ஒன்று கூடியிருக்கும் கான்பிரன்ஸ் ஹாலின் வெளியே தவிப்புடன் புகை பிடித்தபடி ஒரு ஸ்டைல் வாக் கொடுக்கும் நடிகர் திலகம் அந்த ஒரு நிமிடத்தில் நான் முன்பு சொன்ன அத்தனை ஜாம்பவான்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார். அதாவது முதல் சரணத்திற்கு முன்பாக ஒலிக்கும் இடையிசையில் கான்பிரன்ஸ் ஹாலின் கதவுப்பக்கம் திரும்பி நிற்பவர் அப்படியே திரும்பி சற்றே லாங்க்ஷாட்டிலிருந்து படிக்கட்டுகளின் கீழ் இருக்கும் காமிராவை நோக்கி வருவார். காமெரா கீழிருந்து நடிகர் திலகத்தை ஃபோகஸ் செய்தபடி இருக்கும். சிகரெட்டை வாயில் வைத்து ஒரே ஒரு 'பப்' இழுத்தபடி அவர் ஸ்டைலாக அந்த சோக நிலையிலும் நடக்கும் அந்த வாக். அடடா! கைகளோடு கரெக்ட்டாக பிட்டாகியிருக்கும் அந்த கனகச்சிதமான கருப்பு கலர் ஷர்ட் அவரை இன்னும் அழகாக காண்பிக்கும். 'தம்'மை வாயிலிருந்து கைகளால் எடுத்து சிகரெட்டைப் பிடித்திருக்கும் அந்த அழகு நம்மை நிலைகுலைய வைத்துவிடும். சோகத்திலும் சுகம் அளிக்கக் கூடிய மூன்றே வினாடி ஜோரான காட்சி இது.

ஒரு விநாடிக் காட்சியை ரசிக்க வைத்து ஓராயிரம் பக்கங்களுக்கு அதை எழுத வைக்க நடிகர் திலகத்தை விட்டால் யாருண்டு?

தவிப்புடன் 'தம்'மடித்து, தன்னிலை கொள்ளாமல் நடை பயிலும் நடிகர் திலகத்தின் அந்த நடைக்கு ஈடு இணை எதுவும் சொல்ல முடியுமா?

இரண்டாவது சரணம் தொடங்குமுன் வரும் இடையிசையிலும் அவர் டாக்டர்கள் கைவிட்ட நிலையில் அவர்களிடம் அண்ணியாருக்காக வருத்தமாகக் கெஞ்சுவதும், விரக்தியாக முகபாவங்கள் காட்டுவதும் ஏ.ஒன்.

அற்புதமான பாடல். லிட்டில் பிளவரும், 'ஓடும் எண்ணங்'களும் 'ஹோ'...'ஓஹோஹோ' என்று இன்றுவரை பிரம்மாண்டம் படைக்க, இந்த வளைகாப்பு பாடல் சற்று பின்தங்கியிருந்தாலும் சற்றும் குறைவில்லாத பாடல்.

'நீலவான'த்தின் மூன்று பாடல்கள் எப்படி ஆரம்பிக்கின்றன என்று பாருங்கள்.

'ஓ லஷ்மி...ஓ ஷீலா'

'ஹோ...லிட்டில் பிளவர்'

'ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே!'

எல்லாமே 'ஓஹோஹோ'தானே!

'சொல்லடா வாய் திறந்து' சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.

'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் வந்து கைகள் கலந்தாட'


https://youtu.be/OsjT3YkKlGc

இதே போன்ற அடுத்த பாடல் என்னவாயிருக்கும் என்று ஊகியுங்கள் பார்க்கலாம்.

eehaiupehazij
20th June 2016, 03:05 AM
Part 2
External Evaluator's comments on this thesis project report!
Doctor of Philosophy in Love Technology and Management!


Love making....an art ...or a science...or a scientific art....or an artistic science?!

Enjoy the scientists cum artistes making love through tussles! The dreamy way of illusions and hallucinations....mirages and miracles...

GG deserves a doctorate in his invincible and monopolized doctrine of Love Technology and Management!

Love Triangle Thesis Chapter I : Love at first sight(s) with fights!


External Examiner 1 Akineni Nageswara Rao of Tollywood had thoroughly gone through this piece of work done by GG in association with Padmini and Vaijayanthi! Based on his wide and bitter experience with Love Technology and Management side, he preferred to send this comment!

https://www.youtube.com/watch?v=52Mquy3K4yQ

Then GG also included this correction in this thesis work!
He conducted an experimental trial on Love Failure Analysis with Sarojadevi as an additional test material...

https://www.youtube.com/watch?v=lJ0nG4emURA

But still one or two more comments on Love is expected from other examiners!

eehaiupehazij
20th June 2016, 03:27 AM
Part 3
External Evaluator's comments on this thesis project report!
Doctor of Philosophy in Love Technology and Management!


Love making....an art ...or a science...or a scientific art....or an artistic science?!

Enjoy the scientists cum artistes making love through tussles! The dreamy way of illusions and hallucinations....mirages and miracles...

GG deserves a doctorate in his invincible and monopolized doctrine of Love Technology and Management!

Love Triangle Thesis Chapter I : Love at first sight(s) with fights!


External Examiners 2 and3 Piran of Bollywood and PS Veerappa of Kollywood had thoroughly gone through this piece of work done by GG in association with Padmini and Vaijayanthi! Based on their negative image and experience with Love Technology and Management side, they preferred to send this comment!
They asked GG, Vaijayanthi and Padmini to demonstrate their power of love in their personal presence before approving GG as the Chief Scientist of Love and declaring him as the Emperor of Love!

Then GG also included this correction in this thesis work!

https://www.youtube.com/watch?v=eOrY54-cKxY&list=PLdyumIqkwU0hwwFsRhzjlqN6ulv2Tbmus

PSV and Piran said Shabaaaash on GG's good thesis work on Love and conferred him the honorary doctoral degree and the title as the King of Romance!!

rajraj
20th June 2016, 04:52 AM
Happy Father's Day ! :)

Gopal.s
20th June 2016, 08:10 AM
வாசு,

உனக்கு தெரியுமோ ,தெரியாதோ, எனக்கு இருபெண்கள் பாடும் பாட்டுக்களில் அப்படி ஒரு மயக்கம். அதுவும் சுசிலா ஈஸ்வரி என்றால் கேட்கவே வேண்டாம்.(உனது மலர் கொடியிலே உச்சம்)

தமிழில் பல பாடல்கள். தோழியர் இல்லையென்றால் வளைகாப்பு, இல்லையென்றால் ஒரு நாயகனுக்காக இரு நாயகியர் என்று கணக்கு வழக்கில்ல்லாமல்.

நீலவானத்தில் இந்த பாடலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு படிக்கும் காலத்தில் நண்பன் அருள் என்று ஒருவன். நானும் அவனும் இந்த பாடலில் தோய்வோம் .

நாம் இந்த பாடலை பற்றி பேசியிருக்கிறோமா என்று நினைவில்லை.
என் மனம் புரிந்தது போல ,அற்புத எழுத்தில் என்னை குளிர்வித்திருக்கிறாய்.

இன்னும் ஒரு வருட காலம் என் சாபம், விமரிசன, குட்டுக்கள் ,திட்டுக்கள்,ஆகியவற்றிலிருந்து உனக்கு விலக்கு அளிக்க படுகிறது.
உனக்கு மட்டுமல்ல ,என் மனம் கவர் பதிவுகளை யார் போட்டாலும் இந்த சலுகை உண்டு(ராகவேந்தர் .உட்பட) அது ஒரு மாதமா, மூன்று மாதமா,ஓரிரு வருடங்களா என்பது,எவ்வளவு கவர்கிறது என்பதை பொறுத்தது.

என் எழுத்துக்களை போல் ,வந்தால் ஆயுட்கால தள்ளுபடியும் பரிசீலிக்க படும்.

rajraj
21st June 2016, 07:30 AM
Once in a while I will post songs from Hollywood musicals.

Here is one from My Fair Lady

Rain in Spain.

http://www.youtube.com/watch?v=uVmU3iANbgk

eehaiupehazij
21st June 2016, 07:57 AM
Dear Rajraj sir

My Fair Lady starring Rex Harrison and Audrey Hepburn is one of my everlasting fav. It was in a way a role model movie for incorporating songs with conversation interludes, like our Tamil movies Uyarndha Manithan's andha naal gyaapakam..NT spinning a walking stick....Raja Raja Chozhan's Thendralodu udan pirandhaal...
Thanks for kindling my nostalgia!

https://www.youtube.com/watch?v=2gX3lPSd8Xc
senthil

Gopal.s
21st June 2016, 08:10 AM
My pick and Two all time favourite .

https://www.youtube.com/watch?v=325jxJIJkJM

https://www.youtube.com/watch?v=7cO49cmcAYs

eehaiupehazij
21st June 2016, 11:52 AM
The Movie Come September starring 6'4" Rock Hudson with Gina Lola Brigida was a wholesome entertainer with its fantastic theme music that was played during its time in many theatres before lifting the screens!! TKRamamoorthy,the music duo with MSV also made a neat copy of this in TR Ramanna's blockbuster with Ravi! Naan....

https://www.youtube.com/watch?v=te7I_ta7Vzc

desi version by TKRamamoorthy in Naan!

https://www.youtube.com/watch?v=UJddfwD0ZEI

Gopal.s
21st June 2016, 11:55 AM
கவிஞர் மாயவநாதன் ,1971 இல் மறைந்து விட்டாலும் ,இன்றும் தமிழ் உள்ளங்களில் வாழும் கவிஞர். பிடிவாத காரர். அதனாலேயே ,கண்ணதாசன்,வாலி போல வலம் வந்திருக்க வேண்டியவர், நெஞ்சங்களில் நிலைத்ததோடு சென்று விட்டார்.

கொஞ்சம் இசையறிவு கொண்டோருக்கு புரிந்திருக்கும். தமிழ் ,அதன் சுவை, மெருகு, கதையோடு பயணிக்கும் கருத்து வரிகள், இசையோடு கொஞ்சி இணையும் பாடலின் அழகுணர்ச்சி, இவற்றில் கண்ணதாசனுக்கும் மேலே. கிட்டத்தட்ட வாலி இவர் உயரம் தொடலாம். (கண்ணதாசனை குறைக்கவில்லை. அவருடைய உயரம் ,சிறப்பு வேறு விதம்)

எனக்கு ஒவ்வொரு பாடகர்களின்,இணைப்பு பாடாக-பாடகிகள் பாடிய பாடல்களில் சிறந்ததை தேர்ந்தெடுத்தால் ,அது மாயவனாதன் பாடலாகவே வருவது தற்செயல் கிடையாது. இவர் பண்ணியதோ கிட்டத்தட்ட 10 படங்கள். (படித்தால் மட்டும் போதுமா,பந்தபாசம்,இதயத்தில் நீ,பூம்புகார்,தொழிலாளி,மறக்க முடியுமா,லட்சுமி கல்யாணம் ,கற்பூரம்,திருவருள் ,மகிழம்பூ அவ்வளவே) அவற்றில் 25 -30 பாடல்கள் அதிகபட்சம்.

அதற்குள் இவ்வளவு உயரிய பாடல்களா? திரையுலகமும்,சமூகமும் கருணையற்றது.

டீ.எம்.எஸ், பீ.பீ.எஸ் இணைப்பில் பொன்னொன்றை விட சிறந்த பொன்னாக நான் போற்றுவது.

https://www.youtube.com/watch?v=cvd75tQbqhU

சீர்காழியின் உள்ளத்தை விட நல்ல பாடலாக என் தேர்வு.

https://www.youtube.com/watch?v=Lls3IwzcaiI

சுசீலாவின் சொன்னது நீதானா அடுத்த என் விருப்பம்.

https://www.youtube.com/watch?v=EIHehxRKJv8

சுசீலா ஈஸ்வரி இணைப்பில் உனது மலருடன் முதலிடம் பெரும் பாடல்.

https://www.youtube.com/watch?v=bL7DYi0CZYk

வரிகளில் வசீகர வீரியம். இசையில் காரிய மிக்க வீரியம்.பாடகியின் சிறந்த பாடல்களில் ஒன்று.(கே .பீ .எஸ் )

https://www.youtube.com/watch?v=vklojRruYBs

டீ.எம் .எஸ்.,சுசீலாவின் கொஞ்சல் பாடல்களில் முதன்மை.cute ரக பாடல்.(பாடல் மட்டுமே)

https://www.youtube.com/watch?v=WvlTf0_rgdI

பக்தி பாடல்களில் தோய்ந்த சூலமங்கலத்தின் வித்தியாச பாடல்.

https://www.youtube.com/watch?v=VfrR60-A1Uo

போதுமா? திறமையை தலை வணங்குவோம். மாயவன் செய்த தமிழ் மாயம் ,இசை தமிழ் சாதனை காலாகாலத்துக்கும் போற்றுதலுக்குரியது.

vasudevan31355
21st June 2016, 08:39 PM
கோ,

அருமை. திலகத்திற்கு அடுத்து நாம் நிறைய மாயவநாதனைப் பற்றி செல்லில் பேசியிருக்கிறோம் இன்று உட்பட. மதுரகானங்களிலும் மாயவனாதன் பற்றிய முழுத் தகவல்களும் தந்திருக்கிறோம். நிஜமாகவே அற்புத திறமை கொண்ட பாடலாசிரியர். அவருடைய பாடல்களை அற்புதமாகப் பதிவிட்டு இன்று தூங்க விடாமல் செய்து விட்டீர்கள்.

எனக்கு 'வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்' ரொம்பவும் பேவரைட். வெகு வித்தியாசமான பாடல். சூலமங்கலத்தின் பாடல்களிலேயே இதுதான் எனக்கு மிகப் பிடித்தம். உடன் இசையரசி வேறு. கைகளின் வடிவத்தை வேலாக்கிப் பார்த்த இந்த மகா கவிஞன் உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைக்கிறான். இந்தப் பாடலுக்கு இசை அமைத்த டி.பிராமச்சந்திரனைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். 'கற்பூரம்' படத்தில் கற்பூரம் போல மனதில் தீப்பிடிக்க வைக்கும் பாடல்கள். 'நிலவே உனக்கு குறையேது' ஒன்றே போதும். ஸ்ரீகாந்த், மணிமாலா நெருக்க ஜாஸ்தி பாடலின் இசை பரணி பாடற்குரியது. தாராபுரத்தாரின் விரும்பத்தக்க நடுங்கல்கள் இன்னொரு புறம். ஒரிஜினல் காதல் மணம் புரிந்த ஜோடி இன்னொரு புறம். அப்போதைய அலட்டலில்லாத இளம் ராஜன். நாடக சினிமாக்கம். 'அழகு ரதம் பொறந்து அது அசைஞ்சி அசைஞ்சி' மனதில் நடந்தது. விந்தனின் ஒளிப்பதிவு. 'கற்பூரம்' திறமைகளின் சங்கமம். முடிந்தால் டி.பி.ஆரைப் பற்றியும் சொல்லவும்.


https://youtu.be/iWV_hi_CjxE

RAGHAVENDRA
21st June 2016, 08:42 PM
சீர்காழியின் உள்ளத்தை விட நல்ல பாடலாக என் தேர்வு.

I fully endorse...


சுசீலாவின் சொன்னது நீதானா அடுத்த என் விருப்பம்.

தண்ணிலவு தேனிறைக்க என்று மாற்றவும்.


டீ.எம்.எஸ், பீ.பீ.எஸ் இணைப்பில் பொன்னொன்றை விட சிறந்த பொன்னாக நான் போற்றுவது.

சிறந்த என்று சொல்வதை விட சமமானது என்று நான் சொல்வேன்.

மாயவநாதன் - பட்டுக்கோட்டை ஒரே wavelength..

RAGHAVENDRA
21st June 2016, 08:46 PM
வாசு சார்
டி.பி.ராமச்சந்திரனைப் பற்றியும் நாம் சற்று விரிவாக அலச வேண்டும். ஜி.ராமநாதன் அவர்களின் ஆஸ்தான தபேலா மிருதங்கம் போன்ர தாள வாத்தியக் கலைஞராக பணியாற்றி பழுத்த அனுபவம் பெற்று பின்னாளில் தனி இசையமைப்பாளராக தன்னுடைய தனி முத்திரையை ஆழமாக பதித்தவர்.

சினிமா பாடல்கள் மற்றும் படங்களின் பெயர்களை வைத்து பின்னாளில் வெளிவந்த பல கலப்படப் பாடல்களுக்கு, மனம் ஒரு குரங்கு படத்தில் இவர் இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் ஈஸ்வரி குரலில் வெளிவந்த பியூட்டிஃபுல் பாடலை முன்னோடியாகக் கூறலாம்.

அதிலேயே பாடகர் திலகத்தை மென்மையான இயல்பான குரலில் அருமையான டைட்டில் பாடலை பாட வைத்திருப்பார்.

தாங்கள் கூறியது போல் கற்பூரம் அவருடைய தனித்துவத்தை காட்டும் படம்.

vasudevan31355
21st June 2016, 10:26 PM
//சினிமா பாடல்கள் மற்றும் படங்களின் பெயர்களை வைத்து பின்னாளில் வெளிவந்த பல கலப்படப் பாடல்களுக்கு, மனம் ஒரு குரங்கு படத்தில் இவர் இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் ஈஸ்வரி குரலில் வெளிவந்த பியூட்டிஃபுல் பாடலை முன்னோடியாகக் கூறலாம்.//

மீள்பதிவு

இன்றைய ஸ்பெஷல் (44)

http://i.ytimg.com/vi/WB4p7JKH5nU/hqdefault.jpg

இன்று ஒரு அருமையான காமெடிப் பாடலை இன்றைய ஸ்பெஷலாகத் தருகிறேன். அப்போதைய ஹிட். இப்போது மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

மனம் ஒரு குரங்கு' படத்தில் ராட்சஸி, சீர்காழி கலக்கி எடுக்கும் பாடல்.

சோவுக்கு ஒரு காமெடி டூயட். அப்போதைய சினிமாப் படங்களின் பெயர்களை பயன்படுத்தி காமெடிக் காதலர்கள் பாடும் பாடல். சுத்த தமிழிலும், கர்னாடக சங்கீதத்திலும், பக்திப் பாடல்களிலும் பட்டை கிளப்பும் சீர்காழி ஆங்கிலத்தில் பாடும் போதே தானாக வந்து விடுகிறது சிரிப்பு நமக்கு. ஈஸ்வரியின் ஆங்கில உச்சரிப்பு தமிழையும் விஞ்சுகிறது. டி.பி.ராமச்சந்திரன் அவர்கள் இசை (இவர்தானே இசை?) மேலை நாட்டு இசையைத் தழுவி இருந்தாலும் பியூட்டிஃபுல். சோ திரைக்கதை வசனம் எழுதிய படம் இது. வி.டி.அரசு தயாரித்து ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி இயக்கி வெளிவந்த படம்.

Beautiful
marvelous
Excellent

Beautiful marvelous Excellent
very very Excellent
நீ பிறந்திருக்க வேண்டியது england

Beautiful marvelous Excellent
very very Excellent
நாம் பிறந்திருக்க வேண்டியது england

இளமைப் பூங்கா அள்ளித் தந்த
நானும் ஒரு பெண்
நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான்
ஆயிரத்தில் ஒருவன்.

இளமைப் பூங்கா அள்ளித்
தந்த நானும் ஒரு பெண்
நீ தட்டிக் கழித்த பேர்களிலே
நான் ஆயிரத்தில் ஒருவன்.

இன்பக் கடலில் நீந்திட வந்த
படகோட்டி
இன்பக் கடலில் நீந்திட வந்த
படகோட்டி

இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு
வழிகாட்டி

Beautiful

Excellent

கல்யாணம் என்ற ceremony
அது காதலர்க்கு தரும் company
கல்யாணம் என்ற ceremony
அது காதலர்க்கு தரும் company

குழந்தை குட்டிகள் too many
பெறக் கூடாது அம்மணி
குழந்தை குட்டிகள் too many
பெறக் கூடாது அம்மணி
அம்மணி அம்மணி

ஓஹ்ஹஹோஹ்ஹோ (ஈஸ்வரியின் ஒரு வினாடி ஓஹோ)

Beautiful
Beautiful
marvelous
marvelous
Excellent
very very Excellent

நாம் பிறந்திருக்க வேண்டியது england

taxi meter ஐப் போல ஓடுது இருவர் உள்ளம்
அதைத் தடுத்து நிறுத்த கட்டிடுவோம் நம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்

வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
நான் போட்டேன் பூமாலை
வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
நான் போட்டேன் பூமாலை

இளமங்கை உனக்கு என்னை இதுவரை
காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை

நீ கைகொடுத்த தெய்வம்
என்னைத் தேடி வந்த செல்வம்
நீ கைகொடுத்த தெய்வம்
என்னைத் தேடி வந்த செல்வம்

லாலலா லலலலாலாலா
லாலலா லலலலாலாலா
ஹோஹஹோ ஹோஹஹோஹோ ஹோ

Beautiful marvelous Excellent
very very Excellent
நாம் பிறந்திருக்க வேண்டியது england

Gopal.s
22nd June 2016, 02:57 AM
டீ.பீ. ராமச்சந்திரன் நினைவு கூறல் அருமை.சீர்காழியை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.குரல் மட்டும் சற்று இளமை மிளிர்ந்திருந்தால் டீ.ம்.எஸ் க்கு சவால் விட்டிருப்பார் திரையிசையில். இவருடையது பிர்க்கா சாரீரம். (டீ.எம்.எஸ் சற்றே பிசிறு தட்டும் கார்வை சாரீரம்) ஆனால் உணர்வுகளை கொட்டி ,தமிழின் அழகு மிளிர பாடும் அற்புத பாடகர். தோற்பது போல பாட மறுத்து ,திருவிளையாடல் (பாலமுரளி) ,தவப்புதல்வன் (உலகின் முதலிசை) போன்ற படங்களில் வாய்ப்புகளை மறுத்தார். ஆனால் டீ.எம்.எஸ் ஈகோ பார்க்காமல் இவரிடம் தோற்பது போல அகத்தியரில் பாடினார்.

இவரின் உற்சாக, காதல் உருக்க ,குத்து பாடல்களை ரொம்ப கவனிக்காமல் விட்டு ,அசரீரியாகவே ஆக்கி விட்டோம்.

இன்பம் எங்கே என்ற ஜாலி பாடல் ஒரு கிழி கிழிக்கிறார் .

https://www.youtube.com/watch?v=ud7dJmsRBss

சுப்பு ஆறுமுகத்தின் பாடல் டீ.கே.ராமமூர்த்தி இசையில் காதலின் துடிப்பை, உருக்கத்தை,மேன்மையை,மென்மையை குழைத்து தேனாக சீர்காழி பாடலுடன் சேர்ந்து இழைவார்.

https://www.youtube.com/watch?v=8DmiOf4ciFM


டீ.ஆர்.பாப்பாவின் இதமான கூத்தாடும் குத்துக்கு சீர்காழியின் எகத்தாள ,ஜெகஜ்ஜால குரல் மாயம்.

https://www.youtube.com/watch?v=Exb2N3uX-IQ&list=RDExb2N3uX-IQ#t=1

rajraj
22nd June 2016, 07:48 AM
Thanks for kindling my nostalgia!


You are welcome senthil ! :). You also brought back old Bangalore memories with 'Come September' video clip! :)
I watched Come September as a student in IISc, Bangalore. Our weekend routine used to be visiting South Parade (MG Road), browse a book store, have dinner in Koshy's and watch a movie. It was a nice break from the overloaded curriculum. Only after I came here as a student I found out that IISc course load was about two and a half times the load here ! :(. It prepared me well for studying here ! :lol:

raagadevan
22nd June 2016, 11:31 AM
Happy World Music Day (June 21) to all my musical friends...

Anoushka Shankar & Norah Jones; half-sisters and daughters of maestro Ravi Shankar...

https://www.youtube.com/watch?v=kEJSWIftX98

https://www.youtube.com/watch?v=HS8rwRwmwRE

eehaiupehazij
22nd June 2016, 01:33 PM
With Love from the Swimming Pool of GG's Treasure Island!

Life-buoy! Floating Life!!

முங்க வைக்கும் மூழ்க வைக்கும் மிதக்க வைக்கும் நீந்த வைக்கும் நனைய வைக்கும் மதுரகானங்கள் ! குறுந்தொடர் .....


ஓடுகிற தண்ணீரோ நிற்கிற தண்ணீரோ குடிக்கிற தண்ணீரோ கொட்டுகிற மழையோ விழுகிற அருவியோ ஆர்ப்பரிக்கும் கடலலையோ பீறிடும் ஊற்றோ .....
தண்ணீரில்லாத வாழ்க்கை .....? சிலசமயம் தண்ணீருக்குள் நாம் ....சிலசமயம் நமக்குள் தண்ணீ .....எப்படியோ ....தரையில் கால் படாமல் மிதக்கும் மிதவை வாழ்க்கை சுகமே !


பகுதி 1 நீரில் நீந்தல் ....swimmers...

Gemini Ganesan was not only known for his unique school of Love coating but also for his contemporary skills in swimming, water skiing, Horse riding,driving...

இளமை கொலுவிருந்த போது back dive நீச்சல் பாய்ச்சல் வீரர் ஜெமினி கணேசன் ....!

https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM

இளமை பொலிவிழந்தபோது நீச்சல் கன்னிகளை கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்க்கும் மேய்ச்சல் மன்னர் !

https://www.youtube.com/watch?v=-r_C8nuj1dw

eehaiupehazij
22nd June 2016, 02:06 PM
Life-buoy! Floating Life!!

முங்க வைக்கும் மூழ்க வைக்கும் மிதக்க வைக்கும் நீந்த வைக்கும் நனைய வைக்கும் மதுரகானங்கள் ! குறுந்தொடர் .....


ஓடுகிற தண்ணீரோ நிற்கிற தண்ணீரோ குடிக்கிற தண்ணீரோ கொட்டுகிற மழையோ விழுகிற அருவியோ ஆர்ப்பரிக்கும் கடலலையோ பீறிடும் ஊற்றோ .....
தண்ணீரில்லாத வாழ்க்கை .....? சிலசமயம் தண்ணீருக்குள் நாம் ....சிலசமயம் நமக்குள் தண்ணீ .....எப்படியோ ....மிதக்கும் மிதவை வாழ்க்கை சுகமே !


பகுதி 1 நீரில் நீந்தல் ....swimmers...

1.2

கன்னியரைக் கவிழ்ப்பதில் காதல் மன்னரின் நீச்சல் திறமை கண்டு சொக்கிப்போன நடிகர்திலகம் உள்ளிட்ட மற்ற ஹீரோக்களுக்கும் நீர்மேல் ஆசை வந்ததில் வியப்பென்ன மதுரகான மன்னர்களே !

1.2.1. NT and Balaji....Padiththaal Mattum Podhuma!

https://www.youtube.com/watch?v=rUmL6PFD1OE

1.2.2.Desi James Bond with KRV!...Pattanaththil Bootham!

https://www.youtube.com/watch?v=CR6Cc2Cge74

1.2.3. Desi Gene Kelly Ravi with Jeyalalitha! Naan....

https://www.youtube.com/watch?v=7J-V40IzJK0

eehaiupehazij
22nd June 2016, 07:32 PM
Life-buoy! Floating Life!!

முங்க வைக்கும் மூழ்க வைக்கும் மிதக்க வைக்கும் நீந்த வைக்கும் நனைய வைக்கும் மதுரகானங்கள் ! குறுந்தொடர் .....


ஓடுகிற தண்ணீரோ நிற்கிற தண்ணீரோ குடிக்கிற தண்ணீரோ கொட்டுகிற மழையோ விழுகிற அருவியோ ஆர்ப்பரிக்கும் கடலலையோ பீறிடும் ஊற்றோ .....
தண்ணீரில்லாத வாழ்க்கை .....? சிலசமயம் தண்ணீருக்குள் நாம் ....சிலசமயம் நமக்குள் தண்ணீ .....எப்படியோ ....மிதக்கும் மிதவை வாழ்க்கை சுகமே !


பகுதி 2 நீரில் மிதத்தல் ....water skiers...

மனிதன் தண்ணீரில் மிதந்து நடக்க எத்தனிக்கும்போது கால்கள் உறுதியாக நீரின் மேல் மிதவைப் பலகையில் பதிந்திருக்க வேண்டும் .....காதலியோடு சேர்ந்து மிதவை நடை பயிலும்போது ....இன்னும் கவனமாக .....

https://www.youtube.com/watch?v=WekowqRIO1E

ஆனால் சோகம் தலைக்கேறி தண்ணீ உள்ளே போய் தரையில் கால் படாமல் மனிதன் மிதக்கும்போது .....கால்கள் தள்ளாடத்தானே செய்யும் !!

https://www.youtube.com/watch?v=QeFCsvtZCO8

rajraj
23rd June 2016, 08:01 AM
From MakkaLai petra maharasi (1957)

maNappaarai maadu katti maayavaram yeru pootti.......

http://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg

vasudevan31355
23rd June 2016, 10:55 AM
//Farming. season starts//

Which place?:)

vasudevan31355
23rd June 2016, 11:12 AM
செந்தில்வேல் சார்,

'ஓடம்' நதியினிலே செல்லும்போது 'தண்ணீர் சுட்டு சரஞ்சரமா' பாய்ந்து 'குளிக்கப் போன குமரிப் பெண்'ணை 'குய்யோ முய்யோ' என அலற வைத்து 'மலர் எது? என்று நீந்தும் அழகியை கருப்பு ஜில் கண்ணாடியில் பார்த்து ரசித்து, இருக்கும் இடத்தை விட்டு' இல்லாத இடத்துக்கு வந்து, 'ஞானத்தங்கம்' பாடி, அடியார்க்கு ஆற்றிலே துணி துவைத்துக் கொடுக்கும் திருக்குறிப்புத் தொண்டனை மழையிலே சோதித்து, 'மந்தார' மலரை நனைய வைத்து, ரசித்து ரசிக்க வைத்த உங்கள் 'காதல் மன்ன'ரின் நீரலை லீலைகள் எழுத நீண்ட நேரம் பிடிக்கும் போல் இருக்கிறதே! அப்புறம் ஆதிராம் சார் வந்தால் மதுர கானமா இல்லை மன்னர் கானமா என்று சந்தேகம் கேட்பாரே! நான் ஓடி விடுகிறேன்.

eehaiupehazij
23rd June 2016, 01:32 PM
வாசு சார்
நீங்கள் நினைப்பதே சரி
குறுந்தொடராக முடிக்க முடியாதுதான்! ஏனென்றால் எல்லா ஹீரோ ஹீரோயின்களும் முங்கி மூழ்கி நனைந்து நீந்தி மகிழ்ந்த கதைகள் நெடுந்தொடர் மகிழ்வலைகளே !

eehaiupehazij
23rd June 2016, 02:12 PM
Life-buoy! Floating Life!!

முங்க வைக்கும் மூழ்க வைக்கும் மிதக்க வைக்கும் நீந்த வைக்கும் நனைய வைக்கும் மதுரகானங்கள் ! குறுந்தொடர் .....


ஓடுகிற தண்ணீரோ நிற்கிற தண்ணீரோ குடிக்கிற தண்ணீரோ கொட்டுகிற மழையோ விழுகிற அருவியோ ஆர்ப்பரிக்கும் கடலலையோ பீறிடும் ஊற்றோ .....
தண்ணீரில்லாத வாழ்க்கை .....? சிலசமயம் தண்ணீருக்குள் நாம் ....சிலசமயம் நமக்குள் தண்ணீ .....எப்படியோ ....மிதக்கும் மிதவை வாழ்க்கை சுகமே !


பகுதி 4 நீரில் கால் மட்டும் நனைத்தல் ....


காதல் கைகூட கல்யாண மன்னனாகவும் ஆகிவிட முடிவு செய்யும் காதல் மன்னர் நீச்சல் சாகசமெல்லாம் இந்த வயதில் தனக்கு ஒத்துவராது என்பதைப் புரிந்துகொண்டு(ஆனாலும் காதலியைக் கவிழ்க்க வேண்டி மன்னர் பாறை பாறையாய் தாவித்தாவி ஸ்டண்டடிக்கிறாரே!!) கதாநாயகி மட்டும் மந்தார மலராக முங்குவதை கால் மட்டும் நனைத்துக் கொண்டு பாடல் வலை விரிக்கிறாரே !

https://www.youtube.com/watch?v=PnEV1CYEpy8

eehaiupehazij
23rd June 2016, 04:56 PM
Tit-Bits! தத்து பித்து தாறுமாறு தக்காளி சோறு !!

Part 1

Risk / Rusk Factors ..... Water Skating /Water Skiing / Water Surfing!!

அப்பாவி கோலிவுட்! அ(ட)ப்பாவி ஹாலிவுட் /பாலிவுட் !!


பெரும்பாலான தமிழ் படங்களில் வரும் சாகச சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் பாலிவுட் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம் ?!
அப்படியல்ல மண்ணின் மைந்தர்களே .... தேன் நிலவு (1961) திரைப்படத்தில் அப்பாவி மன்னர் டூப் போடாது ஒரிஜினலாக ரிஸ்க் எடுத்து வைஜயந்திமாலாவைக் காதலில் ரஸ்காக்க நிகழ்த்திய வாட்டர் ஸ்கேட்டிங் என்னும் இதுவரை உறியடிக்கப்படாத முறியடிக்க முடியாத சாதனையை ஹாலிவுட் Timothy Dalton ஜேம்ஸ் பாண்டும்(1989) பாலிவுட் ஷம்மிகபூரும் (1967) பிரதியெடுக்கும் அ(ட)ப்பாவி சீன்கள் !

License to Kill (1989) James Bond OO7 Timothy Dalton's water skating/skiing/surfing!

https://www.youtube.com/watch?v=ApA68jVsqFs

An Evening in Paris (1967) Shammiji's water skating/skiing improvised in color over the B/W Then Nilvau of GG(1961)

https://www.youtube.com/watch?v=qO_wiMkg88g

GG's daring bare body oho enthan baby water skating love stunt with Vaijayanthi! (1961)!!

https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k

eehaiupehazij
23rd June 2016, 07:41 PM
All are welcome to GG's Treasure Island to enjoy all water sports adventures.....this one is the last...exclusive!

Part 6 : Underwater gimmicks by GG vs JB!

நீருக்குள்ளேயே சர்வசாதாரணமாக நடந்து சென்று நாகலோகத்தைக் கொலம்பஸ் போல கண்டறிந்து மகுடி வாசிக்காமலேயே நாகராணியையே ஆடவைத்து போதையேற்றியவர் காதல் மன்னர்! ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரிகூட நீருக்கடியில் ஜீவித்திருக்க முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் வாயில் ரெஸ்பிரேட்டர் சகிதம்தான் தண்டர்பாலில் கடலுக்குள் நீரடி சாகஸம் செய்ய முடிந்தது!

நீரடி நாகலோகத்தில் காதல்மன்னரின் அதிரடி காதல் சாகசம்!!

........ஸ்ஸ்ஸ்ஸா(ஆ)பத்தில் முடிந்தாலும்.....!!

https://www.youtube.com/watch?v=237n4Co-5fY

பாவம் .... ஏதோ ஜேம்ஸ்பாண்டால் முடிந்தது......!!

https://www.youtube.com/watch?v=aNL3POV6OoI

The End of GG's Water World!

eehaiupehazij
23rd June 2016, 07:49 PM
Come Back Vasu Sir!

rajraj
23rd June 2016, 11:52 PM
//Farming. season starts//

Which place?:)


It should have started in Kaveri delta? :). Depends on water level in Mettur dam and water level in Kaveri ! :)

eehaiupehazij
24th June 2016, 08:02 AM
Tit-Bits! தத்து பித்து தாறுமாறு தக்காளி சோறு !!

From GG's Tresure Island with Love!

அப்பாவி கோலிவுட் அடப்பாவி ஹாலிவுட் / பாலிவுட்


Part 2

ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் (1965) திரைப்படத்தில் ஜெமினி சாவித்திரி பைக் பாடல் ஷோலேயிலும் (1975)இண்டியானா ஜோன்ஸிலும் (1989) காப்பியடிக்கப்பட்டதாமே !

GG-Savithri combo in atandem bike ride!

https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA

Dharmendhar-Amitabh tandem bike ride!!

https://www.youtube.com/watch?v=l_hlBHE3c-A

Sean Connery - Harrison Ford bike ride!!!

https://www.youtube.com/watch?v=9jQaruH1aIE

RAGHAVENDRA
24th June 2016, 08:51 AM
https://c1.staticflickr.com/3/2603/4134806259_117ca962b2.jpg

இரு மேதைகளின் பிறந்த நாளின்று..

தமிழ்த்திரையிசையுலகை வாழ வைக்கும் தெய்வங்கள்...

சாகாவரம் பெற்ற பாடல்களை அளித்த இவர்களின் நினைவைப் போற்றுவோம்.

RAGHAVENDRA
24th June 2016, 08:52 AM
https://www.youtube.com/watch?v=YAh_oC23hIY

மெல்லிசை மன்னரைப் பற்றிய கவிஞரின் பேச்சு

RAGHAVENDRA
24th June 2016, 08:53 AM
கவியரசரின் வரிகளால் மெல்லிசை மன்னரின் இசையமைப்பு சிறந்து விளங்கியதா இல்லை மெல்லிசை மன்னரின் இசையால் கவியரசரின் வரிகள் சிறந்ததா..

விடை சொல்ல முடியாத கேள்வி... இதோ இது போல..

https://www.youtube.com/watch?v=4rvNInoT6Sc

Gopal.s
24th June 2016, 09:02 AM
விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே எழுதியவற்றின் மறு பதிப்பு.நான் கேட்டது,உணர்ந்தது,படித்தது ,அனைத்தின் தொகுப்பு. ஆனால் அவர் பாதிப்பில் என் பார்வையின் பதிப்பே. ( தொடர்வேன்)



எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.

இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.

நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.

நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.

இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வ ீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மிக மிக பிரத்யேக திறமையாக குறிப்பிடுவது பாடல்களின் போக்கை முன் கூட்டியே தீர்மானிக்காத ஒரு நீக்கு போக்கான தன்மை.(nebulous ).இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ராகங்கள்,தீர்மானமான நோட்ஸ் எதுவுமே அவசியமில்லாதவை. சில சத்தங்கள், அவற்றின் மன கிலேசங்கள்,உணர்வுகள்,அதிர்வுகள் போதுமானவை .அவற்றை வைத்து trial &error என்ற பாணியில், ஒரே வார்த்தையையோ, வரிகளையோ வித விதமாக உச்சரித்து , சோர்வேயில்லாமல் முப்பது நாற்பது tune கொடுப்பாராம். (டி.கே.ராமமுர்த்தி வேறு ரகம்.பாடல்கள் பிடிக்க வேண்டும். முன்தீர்மானம் செய்வார்.எனக்கு என்ன கொடுப்பது என்று தெரியும் என்று ஒன்றிரண்டு மட்டுமே தருவாராம்). இவர்களுக்கிடையே உள்ள முக்கிய வித்யாசமே இதுதான். ராமமூர்த்தியை குருவாக மதித்து,அவரிடம் இசை கற்றாலும், அவரை மிஞ்சி field இல் பலமாக நிற்க இதுவே முக்கிய காரணமானது.

பாடகர்களும் ,என்னிடம் குறிப்பிடுவது, அவர்களின் improvisation சுய தன் முயற்சியில் செய்ய படும் சோதனைகள்,நகாசுகளை அனுமதிப்பாராம். இரு முறை ,மூன்று முறை பாடி காட்டும் போது வெவ்வேறு மாற்றங்களை காட்டுவாராம். மேதை என்பதன் அறிகுறியே அதுதானே?

இவர் பாடல்களுக்கு ,ஒரு எதிர்பாரா புது புதிர் தன்மை அளித்தது ,இந்த ஒரு குணமே. மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு ராகத்தை மனதில் வைத்து,பாடல் கட்டமைப்பை உருவாக்குவது போல எம்.எஸ்.வீ செய்ததே இல்லை.(கர்ணன் போன்ற படங்கள் விதிவிலக்கு). தோன்றிய படி போகும் பல்லவி,சரணங்களினுடே ,ராகம் ஒன்றோ ,இரண்டோ,மூன்றொ கூட புதையலாம். ஆனால் அவை ஒட்டு போட்ட சட்டையாக தோன்றாமல், ஒரு யூகிக்க முடியாத புதிர்த்தன்மை கொண்டு, எம்.எஸ்.வியின் வெகு ஜன பிடித்தம் பற்றிய பரிச்சயம்,இசையறிவு கொண்ட தயாரிப்பாளர்,மற்றும் இயக்குனர்களின் தேர்வுகள்,அந்த தேர்வுகளுக்கு எம்.எஸ்.வீ அளித்த வற்றாத எண்ணிக்கை கொண்ட tunes , பிறகு அதற்கான இசை தொகுப்பை நிர்ணயிக்கும் முறை,இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ,இவற்றால் அவர் பாடல்கள் தனித்து தெரிந்ததில் அதிசயம் என்ன?

மேலும் தொடர்வோம், உதாரணங்கள்,விளக்கங்கள்,சுட்டிகள் இவற்றோடு?எங்கே வேறு பட்டார் என்ற ஆணித்தரமான விளக்கங்களோடு.(நானே உணர்ந்தவை,மற்றோரிடம் தெரிந்தவை எல்லாமே தொகுத்து).இவை முற்றிலும் வேறு பரிமாணத்தோடு ,மற்றும் வித்தியாச புரிதலோடு.

எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.

இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.

அடானா ராகத்தை பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S ) அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம், படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங ்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.

ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.

தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???


ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.

எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )

எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு 4 உதாரணங்கள் .

1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?

2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.

3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.

4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)

எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.

இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.


ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.

ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)

எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.

இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.

chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.

கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.

இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.

அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.

மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.

சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?


இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.

நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.

அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக் ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெ ட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.

அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.

இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.

"நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.

கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.

"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.

ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.

"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.

பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Gopal.s
24th June 2016, 09:24 AM
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.

கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.

அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.

1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.

2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)

3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)

4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.

5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )

கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.

Gopal.s
24th June 2016, 10:30 AM
எனக்கு தமிழ் படங்களின் காதல் காட்சிகளில் முதலிடத்தில் வருவது வசந்த மாளிகை பிளம் காட்சி . அடுத்து சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு,அடுத்து மடி மீது தலை வைத்து அன்னை இல்லம்,அடுத்து வைஜயந்தி-சிவாஜி இரும்புத்திரை,அடுத்து பத்மினி-சிவாஜி தில்லானா மோகனாம்பாள்,தெய்வப்பிறவி,புதையல்,அடுத்து நாலு பக்கம் அண்ணன் ஒரு கோயில்.

ஜீப்பில் அண்ணனும் அண்ணியும் ஏறி செல்லும் போதே அண்ணனின் விஷம பார்வை வார்த்தைகள்.ஆரம்பமாகி விடும்.(பறக்கறதை தடுக்க கூடாது ) அண்ணி ,அனாயசமாக ,ஓடற ஜீப்பிலே நெருப்பு பத்த வைப்பாங்க. அண்ணியை பாத்தாலே பத்திக்குமே, அந்த பச்சை வண்ண புடவையில் .(அதனாலேயே அண்ணனோட வார்த்தை ,செயல்கள் கொஞ்சம் பச்சையாகவே இருக்கும்) ஜெர்க்கின்னில் அண்ணன் அழகுன்னா அழகு .ஜோடி பார்த்தாலே ராசா- ராணிக்கு ஆதிவாசிகளை போல் நாமும் திருஷ்டி கழிப்போம்.

பிறகு ஆதிவாசிகளின் மோதிர சடங்கு. நடனம். அண்ணன் ,ஆரம்பத்தில் மிதமான பிகு பண்ணி ஆரம்பிப்பார்.அதகளம். சுறுசுறுப்பு, அழகுணர்ச்சி, பாங்கு ,தாள இசைவு அனைத்தும் கொண்ட முழுமை. ஒரு இடத்தில் அண்ணியுடன் ஆடிக்கொண்டே கண்ணை சுழற்றுவார் பாருங்கள் ,அண்ணனால் மட்டுமே முடியும். ஆதிவாசிகள் வரிசையில் குதித்து மித ஓட்டத்துடன் கைகளை புறத்தே வீசி ஒரு ஸ்டெப் பண்ணுவார் பாருங்கள் ,அடடா??? மாமாவின் பின்னணி காட்சியை எங்கோ கொண்டு வைக்கும் (அடியம்மா ராசாத்தி இந்த காட்சிக்கா?)

மழை வந்த பிறகு மனசு நனைய ஆரம்பிக்கும். ஆனால் உடனே அதை தணலாக்கும் அண்ணன். புதிய பறவையிலும் இப்படி ஒரு காட்சியில் கண்ணியமான சிட்டு குருவியாவார் அண்ணன். இந்த படத்தில் முழுசாக கெட்டு திருந்திய கேஸாச்சே?காதலுடன் காமமும் தகிக்க வேண்டாமா தனிமையில்?

ஆடும் கதவை மூடும் அண்ணன் ,பார்வையில் படும் படியா அண்ணி முந்தானையை பிழிவது? அண்ணனின் பார்வையில் அப்படியே காமம் தகிக்கும்.passion கலந்த ஒரு erotic பார்வை.இப்படி ஒரு காந்த பார்வை உலகத்தில் எவனுக்கய்யா வாய்க்கும்?(குடிமகனே பாடலின் இரண்டாவது சரணம் interlude வரும் போது அந்த ஒரு வினாடி பார்வை ஈர்ப்பு, கலைமகள் பாடலில் ஒரு விகசிப்புடன் கூறிய குழப்ப பார்வை, போங்கப்பா) பிறகு நின்று கொண்டு பசி தீர்க்கும் பிளம் கடிப்பார் பாருங்கள், கடிக்க ,சுவைக்க நினைத்ததை அவர் செய்திருந்தால் கூட நமக்கு அப்படி ஒரு கிக் ஏறுமா என்று தெரியாது. அப்படி.... அப்படி ....

பிறகுதான் அண்ணன் யாருமே எதிர்பார்க்காத ஒன்றை செய்வார். கொள்ளிக்கட்டை எடுத்து சிகரெட் பற்ற வைப்பது.பிறகு ஒதுங்கி போகும் அண்ணியை ஸ்ஸ் ...ஸ்ஸ்ஸ் என்று அழைக்கும் கிக்கான அழைப்பு. இங்கே வா என்ற பார்வை அழைப்பு. தூது விட்டு தன் மனதை அவிழ்ப்பது. (பாலமுருகன் வசனம் அருமை)அண்ணிக்கு இது புரிந்ததால் சங்கடம்,நாணம்,விழைவு, மெல்லிய காதல் உணர்வு, குழப்பம்,சம்மதம்(மயக்கமும்,மௌனமும்) என்று கலப்புணர்வுகளை அண்ணி ,அண்ணனின் காம காதலுக்கு தோதாக அனுசரித்து வெளியிடுவார் பாருங்கள்,ஜோடின்னா இதுதான்யா ஜோடி என கூவ தோன்றும்.

இதற்கு பின்னணி இசையில் மாமா செய்யும் ஜாலம் ,காட்சியை எங்கோ தூக்கி நிறுத்தும்.

இந்த காட்சி நம் மனதை ரசவாத வித்தை செய்து ,நமக்கும் இருக்கும் காதலுணர்வை தட்டி எழுப்பி தவிக்க விடும்.

eehaiupehazij
24th June 2016, 11:38 AM
கணக்கற்ற காதல்கீதங்களை மன்னருக்காக வாரிவழங்கிய கவியரசர் கண்ணதாசனின் 90வது பிறந்த தின நினைவலைகள்!


அமரர் ஜெமினி கணேசனுக்காக கவியரசர் செதுக்கிய பாடல் வரிகளின் ஓவிய காவிய சிற்பத் தொகுப்பில் முதலிடம் சுமைதாங்கிக்கே!

சோகப்பூச்சு கோலோச்சினாலும் மனசாட்சியின் மாட்சிமை தாங்கிய சொல்லாட்சி கடினமான கலக்கமான மயக்கமான குழப்பமான தருணங்களிலும் ஏழ்மையிலும் எழுச்சி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு காலத்தையும் வென்று நின்று குன்றிலிட்ட விளக்காய் வழிகாட்டும் தன்னம்பிக்கைப் பாடல் பொக்கிஷமே !

பின்னாளில் கவியரசருக்கு ஈடுகொடுத்து புகழேணியில் ஏறிட தனக்கு உத்வேகமளித்த ரோல்மாடல் பாடல் என்று கவிஞர் வாலி நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களால் என்றென்றும் ஆராதனை செய்திட்ட அமர கானம் பெருமைமிகு ஜெமினி திரி சார்பாக...கவியரசரின் பாதகாணிக்கையாக!!

https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM

https://www.youtube.com/watch?v=9puG1QBN1iI

eehaiupehazij
24th June 2016, 08:23 PM
அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!

Part 3 : Pasamalar Vs Dr No!

1961ல் நடிகர்திலகத்தின் வாழ்நாள் பெருமைப்படமான பாசமலர் வெளிவந்தது. நடிகர்திலகத்தின் நடிப்பு வைரப்பட்டைகளே பிரதானம் எனினும் சாவித்திரி ஜெமினியின் பாந்தமான நடிப்புப்பக்கங்களும் மறக்க முடியாதவையே! தகுதிக்கு மீறி தங்கை மீதுகாதல்கொண்ட மன்னரை ஜேம்ஸ் பாண்ட் கோட்ஸூட் கெட்டப்பில் ஷூட் பண்ணும் வெறியுடன் பாய்ந்து வரும் நடிகர்திலகம் 'அண்ணன் ஒரு கோயில் தங்கை வெறும் தீபம்' என்றெல்லாம் பின்னாளில் வெளிவரப்போகும் நடிகர்திலகத்தின் பட டைட்டில்களை ஜெமினியிடம் முன்கூட்டியே யூகித்து சாவித்திரி வசனமழை பொழியும்போது துக்கம் தாங்க முடியாமல் கண்களில் அருவியாகப் பொங்கும் கண்ணீரைத் துப்பாக்கித் தோட்டா வெடித்துவிடும் என்ற பயமில்லாமல் துப்பாக்கி நுனியால் துடைக்கும் காட்சியில் ரசிகக் கண்மணிகளின் அலப்பறை தியேட்டர்களை அதிரவைக்கும்....இன்றுவரை!!
அந்தக்கணம் முதலே மன்னருக்கு துப்பாக்கி அலர்ஜி வந்து பின்னாளில் எந்தப்படத்திலும் துப்பாக்கியைத்தொட்டதேயில்லையாம்!!


https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0

1962ல் வெளிவந்த Dr No அகில உலக முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் போஸ்டர்களில் நடிகர்திலகத்தின் அதேமாதிரி கோட் சூட்டில் தொப்பி கறுப்புக்கண்ணாடி சகிதம் ஷான் கானரி களமிறங்கி அதே போஸில் துப்பாக்கி நுனியால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டிருப்பதை என்னத்தை சொல்ல!!

https://www.youtube.com/watch?v=BobR6M8FYE4

eehaiupehazij
24th June 2016, 11:38 PM
தத்து பித்து தத்துவ முத்து 1

காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!

Inflated Balloon Vs Deflated Body!

காற்று நிரப்பப்பட்ட பலூன் தரையிலிருந்து மேலெழும்பி ஆகாயம் நோக்கி மேலே செல்லும்....ஆனால்....உயிர்மூச்சுக் காற்று அடைபட்டிருக்கும் வரையே நமது சரீரபலூன் தரையிலிருக்கும்....காற்று நீங்கினாலோ....ஆகாயம் சென்ற பலூன் பூமிக்குக் கீழிறங்கும்....சரீர ஆத்மாவோ தரையிலிருந்து விண்ணுக்குத் தாவும்...வினோதமே!

என்னதான் மாப்பிள்ளை மச்சினன் உறவு மெச்சப்பட்டாலும்....ஜெமினிக்கும் சிவாஜிக்கும் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வித்தியாசமும் உண்டு....
நடிப்புக்காற்று நிரப்பப் பட்டபலூன் போல நடிகர்திலகம் ஆகாயம் வரைகூட பயணித்து நடிப்புப் பூமியின் அற்புத அழகை ரசிக்க எண்ணுவார்....

https://www.youtube.com/watch?v=rfMUil39Kwc

காதல்மூச்சு நிரம்பிய மன்னரோ பூமியிலேயே கால் பதித்து காதலியோடு ஆகாய நிலவு நட்சத்திர மேக சூரியன்களை ரசிப்பதில் திருப்தியடைவார்...ஆகாய மார்க்க ரிஸ்கெல்லாம் நமக்கேன் ஸ்வாமீ...

https://www.youtube.com/watch?v=XChwaujC198

eehaiupehazij
25th June 2016, 12:05 AM
தத்து பித்து தத்துவ முத்து 2

காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!

இந்தமாதிரி தத்துவ முத்தெல்லாம் நமக்கு வெத்து என்று......

கலைநிலவு ரவிச்சந்திரன் கார் டயருக்கு காற்றடித்து காதலியர் உள்ளங்களை நிரப்புவதில் கவனம் செலுத்துகிறார்....கண்டிப்பதற்கு ஒரு கோபால் இல்லாததால்....

https://www.youtube.com/watch?v=Ka9Ghod_Sxo


கொலைநிலவு ஜேம்ஸ்பாண்டோ வில்லன் உடம்புக்கு Capsule காற்றடித்து அவன் உயிர்மூச்சை பலூனாக்கி ஆகாயம் அனுப்புகிறார்!

https://www.youtube.com/watch?v=Myc6HpJzgaU

eehaiupehazij
25th June 2016, 12:31 AM
காயமே இது பொய்யடா..Vs மெய்யடா


https://www.youtube.com/watch?v=n3ByI1Hf6-0


https://www.youtube.com/watch?v=HoYttsb4h4E

rajraj
25th June 2016, 08:01 AM
The daily calendar in our home says it is KaNNadasan's birthday. It brought back memories of my days as an engineerig student in Annamalai University.

Somu (S.D.Somasundaram} was my room mate in my first year. One day after lunch I went to my room to pick up my T-Square ( somu's gift) and instrument box. To my surprise I saw KaNNadasan and Nanjil Manoharan sitting on one of the cots. I was so stunned I did not say anything. They smiled at me and smiled back and went to my class.

May his name and fame live forever ! :). kaNNadasan naamam vaazhga !

eehaiupehazij
25th June 2016, 01:04 PM
அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!

Part 5 : Goldfinger (1964) vs Manalane Mangaiyin Paakkiyam (1957)!

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத ஜேம்ஸ்பாண்ட் கிளைமாக்ஸ் கோல்டுபிங்கர் திரைப்படத்தின் இறுதியில் ஷான் கானரி வில்லனிடம் மோதும் சூப்பர் சண்டைக்காட்சியே ! இந்தப்படம் 1964ல் வெளிவந்து மொத்த உலகத்தையும் ஜேம்ஸ்பாண்ட் பைத்தியமாக ஆட்டி வைத்தது !

https://www.youtube.com/watch?v=9H8UkrKN2rQ

எனக்கென்னமோ இந்தக் காட்சியின் கரு காதல்மன்னரின் உன்னத மந்திர தந்திர மாயாஜால காவியமான மணாளனே மங்கையின் பாக்கியம் கிளைமாக்சிலிருந்து தழுவப்பட்டதோ என்று ஒரு சந்தேகம் ஏனென்றால் இந்தப்படம் 1957ல் வெளிவந்து கலக்கியதய் மறக்க முடியாது !

https://www.youtube.com/watch?v=uXGK5mzeQjQ

eehaiupehazij
25th June 2016, 06:29 PM
ஜெமினி பெட்டி Vs ஜேம்ஸ்பாண்ட் பெட்டி !


ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவர் தனது விஞ்ஞான தொழில்நுட்ப உபகரணங்களை வேவு பார்க்கும் நோக்கில் விமானத்திலோ காரிலோ நடந்தோ ஒரு சூட்கேசில் வைத்துகொண்டு செல்லும் காட்சிகள் தவறாமல் இடம் பெறும் !
ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் திரைத்தோற்ற வடிவமைப்பில் அவரது 6 அடி 2 அங்குல உயரமே ஏனைய ஜேம்ஸ்பாண்ட் நடிகர்களுக்கும் வரையறுக்கப்பட்ட உயரம் . சாவில்ரோ தையல் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அவரது கருநீல கோட்சூட் டை தொப்பி கறுப்புக்கண்ணாடியுடன் இந்த சூட்கேஸைக் கையில் பிடித்தபடி ஜேம்ஸ் பாண்டின் தீம் மியூசிக்குக்கு இணங்க ஷான் கானரி நடக்கும் கம்பீரம் வர்ணிக்க வார்த்தைகளற்றதே !
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தாக்கத்தை நமது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பயன்படுத்தியதில் இந்த ஜேம்ஸ்பாண்ட் பெட்டி என்று வர்ணிக்கப்படும் சூட்கேஸ் அல்லது பிரீப்கேஸும் தவிர்க்க முடியாத செட் ப்ராப்பர்டி ஆகிவிட்டது வரலாற்றுப்பதிவே !
1962ல் முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோவில் ஆரம்பித்து இவ்வகை ஜேம்ஸ்பாண்ட் பெட்டிகளும் பல்வேறு பரிணாம பரிமாண மாற்றங்களைக் கண்டுகொண்டே இருப்பதும் இன்றுவரை தொடர்கதையே ! அதேவருடம் வெளிவந்த சுமைதாங்கி காவியத்தில் காதல் மன்னர் சோகசக்கரவர்த்தியாக மயக்கமா கலக்கமா பாடல் காட்சியின் இரண்டாவது பதிப்பில் இதே பெட்டியை ஜெமினி பெட்டியாக்கி நடை பயிலுவார் ... எந்தப்பெட்டி முதல் பேட்டி என்று அனுமானிக்க முடியவில்லை ....ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் பெட்டிதான் முதல் என்று அறிவுக்குத் தெரிகிறது ....ஆனால் ஜெமினிபெட்டியே முதல் என்று உணர்ச்சி உரைக்கிறது ....எனது கலக்கமான மயக்கத்தை மனதின் குழப்பத்தை வாழ்க்கையின் நடுக்கத்தை நீக்குவீர்களா .....நீக்குவீர்களா ?!

From Russia with Love....

https://www.youtube.com/watch?v=Vu4yHOssCJA

https://www.youtube.com/watch?v=9puG1QBN1iI

ஸ்ரீதர் நடிகர்திலகத்தின் கையிலும் இந்த பெட்டியை முன்பே கொடுத்து விட்டாரே !

https://www.youtube.com/watch?v=fj59rURInr0

rajraj
26th June 2016, 02:46 AM
From Rama Rajyam (1947)

veeNaa madhura madhura.......

http://www.youtube.com/watch?v=jbwg8awzoRg


From the Hindi original Ram Rajya(1943)

bina madhur madhur kachbol........

http://www.youtube.com/watch?v=4JJfdVjjTYE

eehaiupehazij
26th June 2016, 04:05 AM
Towards the 15th Heavenly Abode of NT....Nostalgic glimpses!

Pin-hole Licence and Pin-drop Silence : Shot-cuts from NT's Start-Cut World !!

நடிப்பின் நாடித்துடிப்பின் 15வது நினைவஞ்சலி மீள்பார்வை!

படப்பிடிப்பின் ஊசித்துவாரம் கண்டு ரசித்த நடிப்பின் நாசித்துவாரம் (NT)!


நடிப்பின் குத்தகைதாரரின் பாத்திரப்படைப்பில் மூழ்கி ஸ்டார்ட் சொல்லி கட் சொல்ல மறந்த தருணங்கள் வரலாற்றுப் பதிவுகள்!

பராசக்தியின் கோரட் சீன்,மனோகராவின் சங்கிலிப் பிணைப்பின் துடிப்பு, தெய்வமகனின் முப்பரிமாண விஸ்வரூபம், கர்ணனின் மரணாவஸ்தை, பாசமலரின் கைவீசம்மா, நவராத்திரியில் நவரசம், தில்லானாவின் நாதஸ்வர முகபாவங்கள், விக்கிரமனின் உக்கிரம், புதியபறவையாக நிம்மதி தேடியவரின் மன ரணங்கள், .........நினைவலைகள் என்றுமே ஓய்வதில்லை!

ஷாட்-கட் 1 : பார்த்தால் பசி தீரும்!....பாத்திரப்படைப்பின் தன்மை புரிந்த நடையலங்காரம்!

குண்டடிபட்டு பாதிக்கப்பட்ட நடையின் வெளிப்பாட்டை அதன் தொடர்ச்சி விடாமல் பாடல் முழுவதும் விந்தி நாமும் கண்ணிமைக்க மறுக்கிறோம்!
கட் சொல்ல மறந்து காமிராவும் விந்துகிறது!

https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU

eehaiupehazij
26th June 2016, 07:50 PM
Space Management songs!

பற்றாக்குறை இடத்தையும் பட்டா போட்ட மதுர கானங்கள் !


பீச், பார்க்,கடல், ஏரி, ஹைவேய்ஸ், ஆகாயம், அணைக்கட்டு, பூங்காக்கள், ஊட்டி, கொடைக்கானல், வெளிநாடுகள் .....ஓடியாடி பாட்டுப்பாடி காதலிக்கவோ சோகத்தைக் கொட்டவோ இடபஞ்சமில்லை ! ஆனால் பெட்ரூம், பாத்ரூம், நீச்சல் குளங்கள், நைட்கிளப்..... கிணறு ....ஏன் ...ஒரு கார் ஒரு பெட்டிக்குள் கூட காதலர்களை அடைத்துப் பாடியாட வைக்க முடியும் என்ற உலகசாதனையை செய்த பெருமை தமிழ் திரையையே சாரும் .....இடமேலாண்மை இட ஒதுக்கீடு போலவே அவசியமே !!

இதில் சாதனையாளர் கலை நிலவு ரவிச்சந்திரனே !

https://www.youtube.com/watch?v=ZW9Paey3kps

பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி ,,,,

(not available)


நடிகர்திலகத்தையும் குறுகிய இடத்தில் அடைத்து விட்டாரே ராமண்ணா !

https://www.youtube.com/watch?v=lnObODMJnHY

madhu
27th June 2016, 04:04 AM
பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி ,,,,

(not available)



இதோ.....

https://www.youtube.com/watch?v=Yh2_2g_-1wg

rajeshkrv
27th June 2016, 07:01 AM
திரையில் பக்தி தொடரை தொடரலாம் என நினைக்கிறேன்

raagadevan
27th June 2016, 07:01 AM
Friends: Being non-Tamil and non-Hindu, this took a lot of listening, transliteration
and writing for me to come up with this one! I invite you all to feel free to correct
the mistakes that I have made! :)


https://www.youtube.com/watch?v=HSvuxO-BlGk

பக்தியால் யான் உன்னைப் பலகாலும்
பற்றியே மாத்திருப் புகழ் பாடி
பக்தியால் யான் உன்னைப் பலகாலும்
பற்றியே மாத்திருப் புகழ் பாடி
பக்தியால் யான் உன்னைப் பலகாலும்
பற்றியே மாத்திருப் புகழ் பாடி
பக்தியால் யான் உன்னைப் பலகாலும்
பற்றியே மாத்திருப் புகழ் பாடி
திருப் புகழ் பாடி... பாடி...

முத்தனா மாறனைப் பெறுவாழ்வின்
முத்தியே சேர்வதற்க் கருள்வாயே
முத்தனா மாறனைப் பெறுவாழ்வின்
முத்தியே சேர்வதற்க் கருள்வாயே
பக்தியால் யான் உன்னைப் பலகாலும்
பற்றியே மாத்திருப் புகழ் பாடி
திருப் புகழ் பாடி

உத்தமா தான சர்குணர்நேயா
உத்தமா தான சர்குணர்நேயா
ஒப்பிலா மாமணி கிறிவாசா
உத்தமா தான சர்குணர்நேயா
ஒப்பிலா மாமணி கிறிவாசா
வித்தகா ஞானசத் திணிப்பாதா
வித்தகா ஞானசத் திணிப்பாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே
வித்தக ஞானசத் திணிப்பாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே
வேலாயுதப் பெருமாளே
வேலாயுதப் பெருமாளே... பெருமாளே...

rajraj
27th June 2016, 07:04 AM
RD: This verse is from Thiruppugazh. If you search for thiruppugazh you will find the verse in Tamil and English (transliteration).

Here is one link! :)


http://www.kaumaram.com/thiru/nnt0567_u.html

eehaiupehazij
27th June 2016, 08:26 AM
[QUOTE=madhu;1300242]இதோ.....

Chummaaa...pottu vanginen Boss!!...

Maestro of contemporary Musical extravaganza RD Burman's 77th Birth day commemoration....

https://www.youtube.com/watch?v=DBCZWNfoR3k&list=PLEE849D64E9E082AA&index=1

https://www.youtube.com/watch?v=2rvoiBkDePY

https://www.youtube.com/watch?v=uQz4h4kBMkQ

JamesFague
27th June 2016, 03:23 PM
Touching song from Thaikku oru Thallattu


https://youtu.be/YeqTlqSqTXo

JamesFague
27th June 2016, 03:37 PM
Evergreen Melody Song


https://youtu.be/C9muhp0Upuc

eehaiupehazij
27th June 2016, 05:48 PM
IPC section Prison Space Management songs!!

இண்டியன் பீனல் கோட் ....செக்ஷன்படி....கவலையில்லாமல் கம்பி எண்ணும் மாப்பிள்ளை கானங்கள்!

பெரும்பாலும் கதாநாயகர்கள் மாமியார் வீட்டுக்குள் கட்டம்போட்ட யூனிபார்மில் கட்டம்கட்டி அடைக்கப்படுவது சட்டம் என்னும் இருட்டறையில் வக்கீலின் வாதம் ஒளிராமல் அணைந்து போவதால்தானே! யாரை எங்கே வைப்பது....தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வினாலும் தர்மமே இறுதியில் வென்று ஹீரோ ரிலீஸ் ஆவதே தமிழ்த்திரை வட்டத்தின் சட்டதிட்டம்!!

https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14

eehaiupehazij
27th June 2016, 06:13 PM
Bogie Space Management! Foot-board songs!

நான் சின்னஞ்சிறு பிள்ளை....என் கண்ணில் காதல் இல்லை!!
இந்த வயதிலும் ரயிலில் ஜன்னல் தொங்கல் ஏனோ காதல்மின்னலே!
காதலின் மாமன்னர் வந்தபோதும் கன்னி(ள்ளி)யின் நெஞ்சில் காதல் எண்ணம் அரும்பவில்லையாமே!!

https://www.youtube.com/watch?v=NK-9e0YrdE8

rajraj
28th June 2016, 05:06 AM
From maadhar kula maaNikkam

Sri lalitha dhayabariye.......


http://www.youtube.com/watch?v=vIzERLyWmtU


rajesh: I will post some bhakthi songs. They will be from old movies. Hope you don't mind.

madhu
28th June 2016, 06:46 PM
திரையில் பக்தி தொடரை தொடரலாம் என நினைக்கிறேன்

Yes.. Rajesh.. !!

eehaiupehazij
28th June 2016, 09:38 PM
4 G Spectrum Sandal GG!!

1 G :R. Ganesh....when he got introduced to movies...credited in Miss Malini,Avvaiyaar..Missiyammaa...

https://www.youtube.com/watch?v=kJSv4ZXgFD8

2 GG : Gemini Ganesan.....The studio name became his identity!Gemini then onwards meant only GG!

https://www.youtube.com/watch?v=4Hf0zQDtAGg

3 GGG : Gentleman Gemini Ganesan! He had epitomized decent love scenes of Tamil Cinema!!

https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs

4 GGGG : Generation Gap Gemini Ganesan :movies later with Kamal,Karthik.....but GG outshined them!!

https://www.youtube.com/watch?v=qwOfuiBbmac

rajraj
30th June 2016, 01:01 AM
From ThiruneelakaNtar (1939)


neelakaNtaa....

http://www.youtube.com/watch?v=RqLGx2RVgj4

rajeshkrv
30th June 2016, 02:09 AM
ankil please carry on.

madhu
30th June 2016, 09:04 AM
ankil please carry on.

why ankle ? directly start from head !!

rajraj
1st July 2016, 06:47 AM
From Yaam irukka bayam yen

paathi mathi nadhi.............

http://www.youtube.com/watch?v=FDMcv6CjglI

eehaiupehazij
1st July 2016, 09:48 AM
கப்ஸாக்கதைகளின் கான மதுரங்கள்!

பகுதி 5

Heavenly Bodies Invited by Moonraker GG!

GG believed that of all the heavenly bodies surrounding our planet and floating in the Universe, Moon always comes to rescue him in all sorts of his situations related to the success and failure of his helm of affairs in his love life!!


பெரும்பாலும் மனித வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை தனிமனித சுகதுக்கங்கள் குடும்பசூழல் சார்ந்த சுமைகளால் கடமைகளால் நேரும் இன்ப துன்பங்கள் துயரங்கள் கோபதாபங்கள் விருப்பு வெறுப்புகள் நியாய அநியாயங்கள் சண்டை சச்சரவுகள் வரவு செலவுகள் போக்குவரத்துக்கள் லாப நஷ்டங்கள் கணக்கு வழக்குகள் அலைச்சல்கள் உளைச்சல்கள்......இவற்றிலேயே கவனம் செல்லும் போது நம்மை சுற்றியிருக்கும் காற்று நீர் வன வானமண்டலங்களில் நாம் மனதை ஈடுபடுத்த முடிவதில்லை.....நாம் நம்மை சுற்றியுள்ள கிரகங்களால் அவற்றின் நீள்வட்டப்பாதை சுழற்சிகளால் கண்காணிக்கப்பட்டு நமது கபாலத்தில் தலைவிதியாக நிர்ணயம் செய்யப்பட்டு பூமியோடு அதன் புவியீர்ப்பு விசையோடு சேர்ந்து நாமும் நமது வாழ்க்கை நிகழ்வுகளும் சுழல வேண்டியுள்ளது. எனவேதான் கடவுளின் விசையேற்றப்பட்ட படைப்புப் பொம்மைகளான நாம் கடவுளையும் நம்விதிசார்ந்த கிரகங்களையும் இசைவான பொம்மை வடிவங்களாக்கி வழிபாடுகள் நடத்தி அவர்களை திருப்திப்படுத்த பூஜைபுனஸ்காரங்கள் திருவிழாக்கள் அர்ச்சனைகள் செய்கிறோமோ.....?!

மற்ற உணர்வுகள்எப்படியோ.....காதல் மன்னரால் உருவகப் படுத்தப் பட்டு உயிர்ப்பிக்கப் பட்ட மென்மையான மேன்மை நிறைந்த காதல் உணர்வுகளுக்கு உற்ற வழிகாட்டியாக நிலவை மட்டுமே பூமிக்கு வரச்சொல்லி அழைப்பனுப்பினார் மன்னர்!

நிலாவே வா நில்லாதே வா.....வா வெண்ணிலா உன்னைத்தானே.....அமுதைப்பொழியும் நிலவே என் அருகில் வராததேனோ..என்றெல்லாம்எத்தனையோ பேர் அழைத்தும் செவிமடுக்காத நிலாப்பெண்ணரசி காதல் மன்னரின் வசீகரிக்கும் புவியீர்ப்பு தாள முடியாமல் பூமிக்கு வருகிறாள்.

https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ


( சின்னாமற்றும் வாசுவுக்குப் பிடித்த) விஜயகுமாரியின் அவதாரமாக பூமிக்கு வந்த நிலவை வரவேற்று இடைக்கால ரொமான்ஸ் அடிக்கிறார் மன்னர்!

https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U

சாவித்திரி, விஜயா, சரோஜாதேவி, பத்மினி,வைஜயந்தி,தேவிகா... விருந்தாளியாக பூமிக்கு வந்த நிலவரசி நிரந்தரமாக தங்களுக்கு சக்களத்தியாகி விடுவாளோ என்று பயந்து தேவலோக மகளிர்நல மன்றத்திற்கு பெட்டிஷன் போடுகிறார்கள்!

பூவுலக தேவதைகள் கடுப்பாகி மன்னரை வெறுப்பேற்றி பூமிக்கு தேடியோடி வந்த நிலவுப்பெண்ணை நெருங்காதே என்று விரக்தியோடு வழியனுப்ப வைக்கிறார்கள்!!

https://www.youtube.com/watch?v=1zD1Aj5c0qs

எட்டாத கனிக்கு கொட்டாவி விட்டு ஏமாந்த மன்னர் மீண்டும் வானத்துக்கு ஜம்படித்த நிலாவைப் பார்த்து மருகி இப்படிப் பாடுகிறார்!!

https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM

eehaiupehazij
1st July 2016, 11:28 AM
It was a 'honey' Moon when they made love with GG witnessed by the Moon!! But when the Moon came down to romance GG they all branded it 'Saney' Moon as a competitor!!

நிலவே தங்களுக்கு காதல் போட்டியாளராக மாறினால்....எப்படி நம் பூலோக தேவதைகள் சகிப்பார்கள்!

Boating Pappy's ( Padmini) love keeping Moon as her witness!!

https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE

https://www.youtube.com/watch?v=D2YsvbhzLCk


Vaijayanthi's Honey Moon with GG boating!

https://www.youtube.com/watch?v=3Z1AmqECfDY

Moonlight romance with Savithri!

https://www.youtube.com/watch?v=zW0zS9YBKQU

eehaiupehazij
1st July 2016, 09:56 PM
Acrobat Irrigator GG!

காணக் கண்கோடி வேண்டுமே காதல்மன்னர் கவலைநீரேற்றும் அழகைக் கண்ணுற !


மோட்டாரும் பம்புசெட்டும் இல்லாத கடைக்கோடி கிராமப் புற வயல்களில் நீர்பாய்ச்சிட உதவும் பழைய ஸீஸா டைப்பிலான நீளக்கட்டை மீதேறி அந்தர ஸ்டண்ட் பாலன்ஸ் சாகசங்கள் செய்தபடி காதல்மன்னர் கிணற்றிலிருந்து நீரிறைக்கும் அழகைப் பார்ப்போமே !! மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சைப் புள்ளையாட்டம் ......இந்த சின்னஞ்சிறு உலகத்தில் !!

https://www.youtube.com/watch?v=b2zMe5OOu6U

eehaiupehazij
2nd July 2016, 08:40 AM
Jumping Jack Bouncing Back!! The dash and verve of GG at his youth phase!


மனித வாழ்வியல் வயதில் வாலிபமே வனப்பும் வாளிப்பும் துள்ளலும் துணிச்சலும் மின்னலடிக்கும் பருவம் !

காதல் மன்னரும் தனது இளமை வசீகரிப்புக்கள் நிறைந்து சரீர ஆற்றல் மிகுந்திருந்த காலகட்டத்தில் குதித்து கர்ணமடித்து வாலிபத் துள்ளல்களை நம்பகத்தன்மையுடன் குளோசப் ஷாட்களில் தனது தனித்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் . அவரது வாலிப வனப்புக்கும் துணிச்சலான டூப் போடாத ஒரிஜினல் சாகசங்களுக்கும் வஞ்சிக் கோட்டை வாலிபன், தேன்நிலவு, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், சாந்தி நிலையம் போன்ற படங்களில் அவரது திறமை வெளிப் பாட்டுக்குத் தீனி கிடைத்தது .

மனித வாழ்க்கை நிகழ்ச்சி நிரல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கோடுகாட்டிடும் இப்பாடல் காட்சியமைப்பில் சில க்ளோசப் ஷாட்களில் மக்கள் மனத்திரையில் பனித்திரை மன்னர் மன்னரே !

https://www.youtube.com/watch?v=mB7JGB5azO8

vasudevan31355
2nd July 2016, 09:51 AM
செந்தில் சார்,

உங்கள் காதல் மன்னர் மட்டுமல்ல. திரு.எம்.ஜி.ஆர் அவர்களும், அடையாளம் தெரியா அறியாப்பருவ முத்துராமனும் இணைந்து கவலை நீரேற்றுவதையும் 'அரசிளங்குமரி'யில் காணலாம்.

'தந்தனத்தானே ஏலேலோ'


https://youtu.be/sbQ-H0iOpzo

vasudevan31355
2nd July 2016, 10:06 AM
இங்கே விஜயகாந்த் ஏத்தம் இறைக்க, உடன் பாடும் ராதாவின் எகத்தாளமும் ரசிக்கத்தக்கதே.

'ஏத்தமய்யா ஏத்தம்'


https://youtu.be/XQMBoLRAkGM

vasudevan31355
2nd July 2016, 10:10 AM
மது அண்ணா!

இரு நடிகைகள் ஏற்றம் இறைத்து பாடுவது போல தமிழில் ஒரு பாட்டு உண்டல்லவா! ஞாபகம் வருவேனா என்கிறது.

eehaiupehazij
2nd July 2016, 10:18 AM
Fearless Bull Fighter GG.....so long as the legs of the Ox/Bull are tied!!

Building Strong....Basement Weak!?

எந்த வீரதீர சாகச நாயகரும் சற்றே தொடை நடுங்கும் விஷயம் மிருகங்களுடன் மற்றும் பாம்பு போன்ற விஷஜந்துக்களுடன் ந(க) டிக்க நேரிடும்போதே!

அஞ்சாத சிங்கம் என் காளை அது பஞ்சா(ய்)ப்புக்கே பறக்கவிடும் ஆளை....என்றெல்லாம் அலப்பறை பண்ணும் பத்மினிக்கு பாடம் புகட்ட முயற்சிக்கும் ஜல்லிக்கட்டு காதல்காளை கற்றுக்கொண்டதாம் இந்தப் பாடத்தை!

https://www.youtube.com/watch?v=jGh3im8Q9l8

திமிரும் காளையின் திமிலே திமிலோகப்படும் வண்ணம் பயங்கர எக்ஸ்பிரஷன்களை காதல்மன்னர் படம்போடுவதைப் பார்த்து Building Strong Basement weak ஆக பாடம் கற்றுக்கொண்ட காளையே கதிகலங்கும் மன்னரின் சாகசம்!

https://www.youtube.com/watch?v=Uqw4qR4z9F8

vasudevan31355
2nd July 2016, 10:33 AM
மதுண்ணா!

இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். விஸ்வநாதன் அவர்களின் வசீகரக் குரலில்.

'ஏர் உழவர் மனசு வச்சா எங்கேயும் நெல் விளையும்
குளம் பார்த்து வலை விரிச்சா கூட்டமா மீன் கிடைக்கும்
கொள்வதற்கும் கொடுப்பதற்கும் மனசுதானே காரணமாம்'

தடுமாறும் முத்துராமனுக்கு துள்ளல் பாட்டில் ஆறுதல் சொல்லும் பிரமீளா. முத்து இந்தப் படத்தின் சொத்துதான்.

'நல்லாத்தான் யோசிக்கிறீங்க.
நமக்கென்ன கொறஞ்சி போச்சு'

நல்லா மட்டும்தான் பாடத் தெரியும் நம்ம சுசீலா அம்மாவிற்கு.

'மானம்தான் பெருசு என்று சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா'

'அவன் ஒரு சரித்திரம்' படத்தின் டைட்டில் பாடல் மியூசிக் முன்னமேயே சொந்தத்தில் இப்பாடலில் இடையிசையாய் ஒலிக்கும்.

என் உளம் கவர்ந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். பாடல் ப்ளீஸ்.

eehaiupehazij
2nd July 2016, 01:10 PM
Monotony breaker and Mooderators!

மதுரகானத் திரியின் மதுஜியை தேடி கடலினக்கர போய் தேன்மதுர கானங்கள் அலையடித்த செம்மீன் மது வருகிறார்!

https://www.youtube.com/watch?v=DfOnKToBdkU

https://www.youtube.com/watch?v=HoIyiJ88Yq4

madhu
2nd July 2016, 08:34 PM
மதுண்ணா!

இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

'நல்லாத்தான் யோசிக்கிறீங்க.
நமக்கென்ன கொறஞ்சி போச்சு'

என் உளம் கவர்ந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். பாடல் ப்ளீஸ்.

இதோ


https://youtu.be/Zbi4zv-OuEI

eehaiupehazij
3rd July 2016, 08:28 AM
Mooderators!

The six bags great WWW Wrestler GG!

ஜெமினியின் சாந்தமான கொழுகொழு குழந்தை முகவெட்டு குத்துசண்டை வீரராக அவரை இமாஜின் பண்ணுவதில் கொஞ்சம் புன்முறுவலையே வரவழைக்கிறது! ஆனாலும் மன்னர் Ben Hur Charlton Heston கெட்டப்பில் ஒரேசமயம் இரண்டு six-bag மாமிசமலை மல்யுத்த வீரர்களுடன் மோதுவது ஏவிவிட்ட பத்மினிக்கே சிரிப்பூட்டும் போது நாம் எம்மாத்திரம்!

https://www.youtube.com/watch?v=CJIzSGiE4oc

அதேவருடம் (1966) வெளிவந்த அன்பேவா திரைப்படத்தில் எம்ஜியார் மல்யுத்தவீரர் நெல்லூர் காந்தாராவை சுமந்து வீசும் காட்சி!

Sitting Bull என்று வர்ணிக்கப்படும் மாமிசமலை காந்தாராவ் VAT 69 (ஊ)ஏற்றிக்கொண்டு MGM சிங்கம் /கர்ணன் சிவாஜி மாதிரி கர்ஜிக்க முயற்சிப்பது கம்பி வளைப்பதெல்லாம் சற்று நகைச்சுவையே!

https://www.youtube.com/watch?v=UYJlHdQeJ0I

சார்லி சாப்ளினின் இந்த குத்துசண்டை .....Boxing சூப்பர்!


https://www.youtube.com/watch?v=v8RkNHmSgns

madhu
3rd July 2016, 08:46 AM
மது அண்ணா!

இரு நடிகைகள் ஏற்றம் இறைத்து பாடுவது போல தமிழில் ஒரு பாட்டு உண்டல்லவா! ஞாபகம் வருவேனா என்கிறது.

ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும் :)

rajraj
4th July 2016, 05:58 AM
Happy Independence Day ! Have fun with fireworks (where permitted) :)

raagadevan
4th July 2016, 07:16 AM
Happy Independence Day ! Have fun with fireworks (where permitted) :)

வணக்கம் ராஜ்! :) Is it already August 15 in the USA? :)

vasudevan31355
4th July 2016, 03:16 PM
ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும் :)

ஒருவழியா மண்டை காய்ஞ்சி கண்டுபிடிச்சேன். நம்ம கன்னக்குழி ஸ்ரீப்ரியா, ராங் நெம்பர் விஜயா என்று ரெண்டு 'யா' அழகிகளும் ஏத்தம் இறைக்க ராஜாவின் அற்புதமான மெட்டு. ஜானகி மற்றும் இன்னொருவர் குரல்களில். ஜானகி இப்பாடலுக்கு பாந்தமாக பொருந்துவார். ஸ்ரீப்ரியாவுக்கும்தான். ஆனால் அழகில் விஜயா ஒருபடி மேலே போவார். ஏற்றத்திலேயும்தான்.:) ப்ரியா கவலை நீர்க் கழியை என்னமாய் உலக்கை இறக்குவது போல இறங்குகிறார்! வாயசைப்பும் கரெக்ட். குறிப்பாக அந்த 'ஹோய்'.

ஒருபொடியாய் ஒண்ணு ஓடிவாடா ராமா
காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
லாபமடா சாமி

ஏத்தம் இறைச்சி காத்துக் கிடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் நின்னு
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வராதோ.... ஹோய் என்னைத் தேடி

காவலர்கள் துரத்த, ரஜினி தப்பித்து ஓடிவர, ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கும் பிரியா பாடலின் இடையே வரப்பில் ஓடிவரும் ரஜனியைப் பார்த்து விட்டு 'என் சாமியும் வந்தாச்சு என்னைத் தேடி' என்று பாடல் வரியை மாற்றுவதும் ஜோர்.

'தந்தனத்தானா தந்தனத்தானா தந்தனத்தானா' பெண்கள் கோரஸ் வாவ். ராஜா the கிரேட்.

பைரவி பட டைட்டிலில் பின்னணி டி.எம்.சௌந்தரராஜன், ஜானகி என்று இருவர் பெயர்கள் மட்டுமே காட்டுவார்கள்.

ஆனால் மேற்சொன்ன பாடலில் ஜானகியுடன் சேர்ந்து ஒய்.விஜயாவிற்காகப் பாடும் அந்த மாயக் குரல் மயக்குகிறது.

'பையன் பொறந்தா பொங்கலும் உண்டு மங்களம் உண்டு
கொத்து மொழக்கு (சரியா? வெத்தலத் தட்டு ஊர்வலம் உண்டு'

என்று தனியாகத் தெரியும் அந்த அல்வாக் குரல் யாருடையது? சசிரேகா?... டைட்டிலில் பெயர் போட வில்லையே? ஒய்? ராகவேந்திரன் சார், மதுண்ணா ப்ளீஸ்.

ரகளை பாட்டு.


https://youtu.be/HEt78wgK-1E

rajraj
5th July 2016, 12:16 AM
From Chandralekha (1948)

baalan karuNai...............


http://www.youtube.com/watch?v=yM5DDO0eK2c

eehaiupehazij
5th July 2016, 01:57 PM
Take Diversion!! Beach Musics!!

Ocean Drownees and Beach Saviors!!

கடல் ஜல்லிகள் ....காதல் பல்லிகள்!!

கடலலை இரைச்சலில் பயமுறுத்தும் பின்னணி இசைக்கோர்ப்புக்கள்!


திரைக்கதை வாழ்க்கை சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களில் முக்கியமானது வெறுப்பின் உச்சத்தில் விரக்தி மேலிட கதாநாயகி கடலில் மூழ்கப் போவதாய் ஜல்லியடிப்பதும் கதாநாயகர் பதறிப்போய் உதறலெடுத்து நாயகியைக் காப்பாற்ற கடலுக்குள் ஓடுவதும்!! மேலைப்படங்களும்விதிவிலக்கல்ல!!

https://www.youtube.com/watch?v=q7v9ClAH1LI

https://www.youtube.com/watch?v=IDhaiDfXfok

https://www.youtube.com/watch?v=p1Kjr7Rqltg

eehaiupehazij
5th July 2016, 10:37 PM
Take Diversion!

கிறுகிறுக்க வைக்கும் தமிழ்த்திரை கிளைமாக்ஸ் ஆன்டிக்ளைமாக்ஸ் காட்சிகள்!

பகுதி 1 ....டிரைவர்....இன்னும் கொஞ்சம் வேகமாய் போங்களேன் பிளீஸ்.....சீன்கள்!


இறுதிக்காட்சியில் வீட்டைவிட்டு எஸ் ஆன நாயகியையோ நாயகரையோ தேடி கண்டுபிடிக்க குடும்பமே ஒருகாரை வாடகைக்கு மடக்கி டிரைவரை வேகமாகப் போ போ என்று டார்ச்சரடிக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் தமிழ் சினிமாவில் சாதாரணமப்பா/////அப்பப்பா.......

என்னதான் வேகமாகப் போனாலும் நிறைய தடங்கலும் ஸ்பீடுபிரேக்கர் எருமைகள் ஆட்டு மந்தைகள்...திடீர் மழை மின்னல்....பஞ்சர்...விபத்து என்று ஆண்டி கிளைமாக்ஸும் கச்சை கட்டிக்கொண்டு கூடவே வரும்!

இத்தனையையும் தாண்டி நாயகியையோ நாயகரையோ கண்டுபிடித்துவிட்டாலும் கிளைமாக்சில் அவர்களது திடீர் முடிவுகள் பகீரென்று தூக்கிவாரிப் போட வைத்து நம்மை நொந்து நூலாக வைப்பதும் சகஜமே!

சுமைதாங்கியும் வசந்தமாளிகையும் கொஞ்சம் விதிவிலக்கே!

https://www.youtube.com/watch?v=518Acx77m10&index=43&list=PL6eYJImIZdQ4s_z4dXQ2n6gDQPWfhgoCg

https://www.youtube.com/watch?v=iOPxomAm8q4

eehaiupehazij
6th July 2016, 02:05 PM
Take Diversion!

Part 3 : Hero need not always win!

A Hero...the bread winner for his family need not always be a fight winner....sometimes he also succumbs to circumstantial sabotages by the vilain group or his sidekicks...easily!

https://www.youtube.com/watch?v=JSKf_pGsT3E&list=PL6eYJImIZdQ7hox7f52D4KfAth7BigIVA&index=19

https://www.youtube.com/watch?v=5Yj102jIwHQ

vasudevan31355
6th July 2016, 09:54 PM
//இறுதிக்காட்சியில் வீட்டைவிட்டு எஸ் ஆன நாயகியையோ நாயகரையோ தேடி கண்டுபிடிக்க குடும்பமே ஒருகாரை வாடகைக்கு மடக்கி டிரைவரை வேகமாகப் போ போ என்று டார்ச்சரடிக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் தமிழ் சினிமாவில் சாதாரணமப்பா/////அப்பப்பா.......

என்னதான் வேகமாகப் போனாலும் நிறைய தடங்கலும் ஸ்பீடுபிரேக்கர் எருமைகள் ஆட்டு மந்தைகள்...திடீர் மழை மின்னல்....பஞ்சர்...விபத்து என்று ஆண்டி கிளைமாக்ஸும் கச்சை கட்டிக்கொண்டு கூடவே வரும்!

இத்தனையையும் தாண்டி நாயகியையோ நாயகரையோ கண்டுபிடித்துவிட்டாலும் கிளைமாக்சில் அவர்களது திடீர் முடிவுகள் பகீரென்று தூக்கிவாரிப் போட வைத்து நம்மை நொந்து நூலாக வைப்பதும் சகஜமே!//

செந்தில் சார்.

சபாஷ். சிரித்து மாளவில்லை.:) நீங்கள் அதற்குள் கிளைமாக்ஸுக்கு தாவி விட்டீர்கள். அவ்வளவு ஏன்? பட ஆரம்பத்திலேயே டிரைவரை 'வேகமாகப் போ போ' என்று டார்ச்சரடிக்கும் நமது புன்னகை அரசி 'ஊட்டி வரை உறவி'ல் உண்டே. விஜயலஷ்மியை காரில் அடித்துப் போட்டுவிட்டு போனதும் நமது தலைவர் ஓடி வந்து உதவி செய்து காரில் அடித்துப் போட்டுப் போனவரை சாடுவாரே ஒரு சாடு. 'சண்டாள பயலுக'. (அதெல்லாம் தலைவர்தான்)

eehaiupehazij
7th July 2016, 02:59 AM
Take Diversion 5

Between the Deep Sea and the Devil! இருதலைக் கொள்ளி எறும்பாக.....


குடும்ப உறவுகளின் உரசல்களே தமிழ் சினிமாவின் சென்டிமென்டுகளின் மொத்த அடையாளம் !
கதாநாயகனோ கதாநாயகியோ....பாத்திரத்தின் வாழ்க்கை நல்லாத்தானே போயிட்டு இருக்கு என்று நினைக்கும்போதே வில்லங்கங்கள் குடும்ப
உறவுகளிடமிருந்தே வில்லம்புகளாகக் கிளம்பிவரும் இருதலைக்கொள்ளி சிச்வேஷன்கள் ....மசாஜ் பார்லரில் முழு உடம்பையும் எண்ணையில் முக்கிநீவி விடுவது போன்ற உணர்வைத் தோற்றுவித்து பொங்கிப்பொங்கி கண்ணீரில் கன்னங்களில் கோலமிட்டு வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தில் யாரையும் நம்பவிடாமல் குழப்பத்தை உண்டு பண்ணுவதில் தமிழ் படங்களே என்றும் டாப் !!
பாசமலரின் இந்த முக்கியமான குடும்பவில்லியின் குழப்படியால் மன்னரும் திலகங்களும் கொதிக்கும் சாம்பாரில் கரைந்த புளியாய் கொப்பளித்துக் குமுறுவதை பார்த்து விட்டு வந்ததும் எங்க அப்பாவைப் பெத்த பாட்டியிடம் அம்மாவும் எங்க அம்மாவைப் பெத்த பாட்டியிடம் அப்பாவும்முன்னைபோலப்பேசிக்கொள்ளாமலிருந்ததைக் கண்ணாரக் கண்டு வளரும்போதுதான் திரை சென்டிமென்டுகளின் தாக்கம் மனதில் சுரீரென்று உரைக்கத்தொடங்கியது!
ரியல் லைஃப் வேறு ரீல் லைஃப் வேறு என்பதை புரிந்து கொள்ளவே நிறைய ஆண்டுகளாயிற்று!! எங்கே நாமும் கைவீசம்மா கைவீசு ரேஞ்சுக்குப் போய்விடுவோமோ என்று தங்கையை பார்க்கும்போது லேசாகப் பயந்ததுமுண்டு !!
இருதலைக் கொள்ளி எறும்பாக ஜெமினிக்கும் சிவாஜிக்கும் இடையே சாவித்திரி படும்பாடு இப்போது பார்த்தாலும் ஏற்படுத்தும் தாக்கம் மாறவில்லை !!

https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk

eehaiupehazij
7th July 2016, 04:59 AM
குய்யோ முறையோ கீதகூவல்கள் !

சேவல் 2 கூவல் 1

பிரச்சினை என்ற வெள்ளி முளைக்கும்போது பேச்சுலர் சேவல்கள் பேச்சிலராகி குய்யோமுறையோ என்று கூவிகூவி ஊரைக்கூட்டுமாம்!
கிடைத்தற்கரிய பிரம்மச்சாரி வாழ்க்கைப் பாதையில் நதிமூலம் ரிஷிமூலம் தெரியாத குழந்தை இடறினால் ...... இப்படித்தானே கூவ முடியும் !!

https://www.youtube.com/watch?v=UlWMzNfdliY

சேவல் 1 கூவல் 2
ஜோடிக்கோழி த்ராட்டிலில் விடும்போது துன்பமழையில் நனையும் சேவல் இப்படித்தானே கேவிக்கேவிக் கூவும்!

https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg

eehaiupehazij
7th July 2016, 08:06 AM
கார்மேகம் கண்டகவும் நர்த்தன மயிலாள் !

தோகை விரித்தாடும் மயிலின் ஆனந்த நடனம் நமது நாடி நரம்புகளை சுண்டி மகிழ்வலைகளால் இதயத்தை சுரண்டிவிடும் !
கார்மேகமாக நடிகர்திலகம் குடைவிரிக்கும்போது நர்த்தனமயில்களும் தோகை விரிப்பது இயல்பே !


https://www.youtube.com/watch?v=ZthbaddX8do

https://www.youtube.com/watch?v=nlwqwn793Xk

rajraj
7th July 2016, 08:27 AM
From Mallika(1957)

mangamal vaLarum singara natanam..........


http://www.youtube.com/watch?v=Ee3CK-dBfD8


From Payal(1957), HIndi remake of Mallika

Chali radhika........


http://www.youtube.com/watch?v=CT51AA1CRyI

RAGHAVENDRA
10th July 2016, 01:57 PM
http://llerrah.com/images6/happyanniversarytop.jpg

இன்று மணநாள் கொண்டாடும் நமது இனிய மது தம்பதியருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா நலனும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப நீடுழி வாழ்க.

https://www.youtube.com/watch?v=Rmhx_FiOMfQ

eehaiupehazij
10th July 2016, 02:36 PM
Happy Anniversary Madhuji!

Fill up mirth and joy.....

https://www.youtube.com/watch?v=tL1vfSBN1a4

rajraj
10th July 2016, 09:36 PM
Happy Anniversary madhu ! :)

eehaiupehazij
11th July 2016, 04:24 AM
From GG's Treasure Island with Love!

GG....The Prisoner of 'ngaaa'....! ங்கா....

மனம் மகிழ்ந்த மழலைகள்

குழந்தைகள் குடியரசு ,,,,முடியரசரும் அன்புச்சங்கிலி அடிமை மன்னரே!

காதலில் முடிசூடா சக்கரவர்த்தியாக வலம் வாந்தாலும் குழந்தைகள் சாம்ராஜ்ஜியத்தில் ஜெமினி கணேசன் அன்புச்சங்கிலி பிணைக்கப்பட்ட ஆயுள் அடிமை மன்னராகவே அன்பை வெளிப்படுத்தினார்

பால்வடியும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் நான் கிடந்தேன்!
ஈரேழு மொழிகளிலும் என்ன மொழி கள்ளமற்ற பிள்ளை மொழி !?
காதலில் கன்னியரை விலங்கிட்ட முடிச்சக்கரவர்த்தி மழலையிடம் மண்டியிட்டு அன்புச்சங்கிலி அடிமையானதில் வியப்பென்ன ?!

https://www.youtube.com/watch?v=5p4AUtrmVVU

கண்ணசைவில் காதலியரை கவிழ்த்திட்ட காதலின் மாமன்னன் பிஞ்சுக்குழந்தையின் கால்விரல்களில் கவிழ்ந்து முத்தமிடும் அடிமைமன்னன் ஆகிவிட்டாரே !

https://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo

rajraj
11th July 2016, 06:19 AM
From kubera kuchela (1943)

aaNdaruL jagadamba..........


http://www.youtube.com/watch?v=2w7iocf7Fsw

RAGHAVENDRA
13th July 2016, 03:28 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13680736_1153234758060528_2019026859361642570_n.jp g?oh=fcafdae80a3423b6e1129a79360b8cb1&oe=582C8473

madhu
13th July 2016, 08:06 PM
ராகவ்ஜி, சி.செ.ஜி, வாத்தியாரையா...

அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் !!

rajeshkrv
13th July 2016, 08:52 PM
madhunna happy anniversary

rajraj
14th July 2016, 08:30 AM
From Akbar (1961), Tamil dubbed version of Mughal E Azam

undhan sabaiyil endhan vidhiyai.......

http://www.youtube.com/watch?v=gctkrVBkpKQ


From the Hindi original

teri mehfil mein kismat.....


http://www.youtube.com/watch?v=DadAS_q63Zk

madhu
14th July 2016, 07:02 PM
madhunna happy anniversary

Thank you Rajesh.. இன்று... இப்போது... சிக்காவை நேரில் பார்த்து பிரம்ம்மித்து போனேன். மிஸ்டர் மஸ்கட் .. அவர் ஒரு தங்க பிஸ்கட்.
சும்மா ரொம்ப நாள் பழகியவர் போல ஜாலியாக பேசி பழகியவர் உடன் கிளம்ப வேண்டிய சூழ் நிலை. மீண்டும் சந்திப்போம்

சிக்கா.. உங்கள் அன்புக்கு நான் அடிமை. :bow: // வாசுஜி... உங்களை ரொம்ப மிஸ் செஞ்சோம் //

vasudevan31355
15th July 2016, 09:57 PM
சின்னா! மதுண்ணா!

மன்னிக்க...மன்னிக்க. சின்னவை பார்க்க சென்னை வர எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இங்கே பணியில் முடக்கிப் போட்டு விட்டார்கள். ஷட்-டவுன் பீரியட் என்பதால் லீவும் எடுக்க இயலாத சூழல். இந்த தடவையும் சின்னாவை மிஸ் பண்ணியாயிற்று. மது அண்ணாவையும் தான். கோபால் சாரையும் கோட்டை விட்டு விட்டேன். போன் கூட எடுக்க நேரமில்லை.

மது அண்ணா! தாமதாக வாழ்த்தினாலும் மனமுவந்து தங்களுக்கான மணநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அருளால் தங்கள் குடும்ப வாழ்வு இன்று போல் என்றும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

மதுர கானங்கள் வழக்கம் போல மணக்கட்டும்.சிறக்கட்டும்.

ராஜேஷ்ஜி! தங்களை இங்கே மீண்டும் பார்க்கையில் ஆறுதலாக இருக்கிறது. வருக! வருக.

ராஜ்ராஜ் சார் நலமா? எப்படி இருக்கிறீர்கள்?

ராகவேந்திரன் சார், கோபால் சார் நலம்தானே? மற்றும் வினோத் சார், ஆதிராம் சார், செந்தில்வேல், வாசுதேவன் சார், ராகதேவன் சார், முரளி சார் மற்றும் அனைவரும் சுகம்தானே!

RAGHAVENDRA
16th July 2016, 06:27 AM
சி.கா..
குடுத்துட்டீங்களே.டேக்கா..
கடுக்கா நேக்கா...

சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே உங்களைப் பாக்க...

ஹ்ம்ம்... அடுத்த முறையாவது பார்ப்போம்..

Anyway All the Best

eehaiupehazij
16th July 2016, 08:43 AM
கல்தோன்றி மண்தோன்றா கற்கால காவியத் தேன்மதுரங்கள் (மண்ணில் மனிதன் தோன்றியும் மனிதம் தோன்றா) தற்கால மன ஓட்டங்களில்!

https://www.youtube.com/watch?v=yfx1kel88PE

https://www.youtube.com/watch?v=9mzZVgQRzwg

https://www.youtube.com/watch?v=CtaUn2jlpYY

https://www.youtube.com/watch?v=hJ7GdrID5LI

கல்லும் கனிந்திடும் காலம் வருமா ?

Richardsof
16th July 2016, 09:34 AM
சமூக பொறுப்பு

திரையுலகத்துக்கு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். முன்பு திரைப்படங்கள், மனித பண்புகளை வளர்ப்பது, தேசப்பற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டன என்று கூறுவதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஆனால், அண்மை காலங்களில் டி.வி. தொடர்கள், குடும்பபெண்களின் உயர் பண்புகளை அழிக்கும் விதமாக, பெண்களை ‘வில்லியாக’ சித்தரிக்கின்றன. திரைப்படங்களில் எல்லாம் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள், கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. கொடூர குற்றவாளி கதாபாத்திரம் எல்லாம் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர்.

இதனால், ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது. குற்றம் செய்வது தப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் விதமாக நடித்தார்கள். அவர்களது திரைப்படங்கள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியது.

ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு, சினிமாதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, முன்னணி கதாநாயகர்கள், கெட்டவனாக நடிப்பதற்கு முன்பு, தன்னுடைய நடிப்பு, சமுதாயத்தில், குறிப்பாக தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டும். நடிகர்கள், சினிமாவில் மதுகுடிப்பது, சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்க்கவேண்டும். அதன்மூலம் இந்த கெட்ட பழக்கங்கள், தன்னை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

வருமானம் முக்கியமல்ல

எனவே, திரையுலகத்தினர், குறிப்பாக முன்னணி கதாநாயகர்கள், தங்களது திரைப்படங்கள் சமுதாயத்துக்கு நன்மைகளை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, அதிக வருமானத்தை தரவேண்டும் என்று நினைக்கக்கூடாது. குறிப்பாக தன்னுடைய திரைப்படம் தவறான தகவல்கள், சமுதாயத்துக்கு சொல்லும் விதமாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார்.

JamesFague
16th July 2016, 09:34 AM
Courtesy: Tamil Hindu

மறக்கப்பட்ட நடிகர்கள் 7: ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!



ஒரு நடிகை எப்படிப்பட்ட பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கணுமே தவிர, எதிர்ப்புஉணர்வைக் காட்டக் கூடாது. திறமை இருக்குமானால் ஒரு நடிகைக்கு எந்த வேஷமும் நடிக்கக் கூடியதுதான். சிரமத்தைப் பாராமல் வசனத்தை மனப்பாடம் செய். போகப் போக நடிப்பது சுலபமாகிவிடும்.”

திமிறிக்கொண்டு வெளியேறத் துடித்த இளம் தெலுங்கு நடிகைக்கு, இதமாக எடுத்துச் சொல்லி நடிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இயக்குநர் பஞ்சுவுக்கு. கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையரில் ஒருவர். மு.கருணாநிதியின் உரையாடலைப் பார்த்துப் பயந்து, பேசக் கஷ்டப்பட்டு பராசக்தியில் சிவாஜியின் தங்கை ‘கல்யாணி’யாக நடிக்க மறுத்து விலக விரும்பினார் ஸ்ரீரஞ்சனி.

விலகிச் சென்றவர் விரும்பி வந்தார்

ஸ்ரீரஞ்சனி நடித்த வாஹினி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘வர விக்ரயம்’, ‘குணசுந்தரி கதா’ ஆகியவை ஆந்திராவில் பிரமாதமாக ஓடியவை. ‘எனக்கு அழுகை பிடிக்காது. ஆனால் நீங்கள் என் மனத்தைத் தொட்டுவிட்டீர்கள்!’ என்று ‘வரவிக்ரயம்’ படத்தில் அறிமுகமான பி. பானுமதியின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார் ஸ்ரீரஞ்சனி.

நடிக்கத் தெரிந்தவர். ஆயினும் கலைஞரின் கன்னித் தமிழ் உதடுகளில் ஒட்டாமல் ஓட்டம் பிடித்தது.

இரட்டை இயக்குநர்களின் கடின உழைப்பின் பலன், ஸ்ரீரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாணியாகச் செதுக்கப்பட்டார்.

தொடர்ந்து அதே பராசக்தி படக் குழு. பி.ஏ. பெருமாளின் நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு. கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். தோற்றத்திலேயே அச்சுறுத்தும் முரட்டு ஹீரோவுடன் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முதல் நாள் ஷூட்டிங். ஸ்ரீரஞ்சனி நிஜமாகவே நடுநடுங்கினார்.

“என்னைப் பற்றி ஏதாவது சொல்லி சிலர் பயமுறுத்தி இருப்பாங்க. அதைக் கேட்டுட்டு நான் ஒரு ரோக்- அப்படின்னு டிசைட் பண்ணி இருப்பே இல்ல. உண்மையில் நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். நீ பயப்படாமே வொரி பண்ணிக்காமே ஃப்ரீயா நடி பொண்ணே” என்று சுந்தரத் தெலுங்கில் மனம் திறந்து பேசிய எம்.ஆர். ராதாவின் மனம் திறந்த பேச்சுக்குப் பிறகே அவருடைய மனைவியாக ‘ரத்தக் கண்ணீ’ரில் நடிக்கும் தைரியம் ஸ்ரீரஞ்சனிக்கு வந்தது.

எம்.ஜி.ஆர். - சிவாஜிக்கு இணை

1952-ல் பராசக்தி, 1954-ல் இல்லற ஜோதி, ரத்தக்கண்ணீர் என ஸ்ரீரஞ்சனி நடித்தவை பகுத்தறிவுப் பாசறை முத்திரைகளோடு இன்றும் பரபரப்பாகப் பேசப்படுபவை. சிவாஜி கணேசனின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்த இல்லற ஜோதி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. அடையாறு ஏரியில் எம்.ஜி.ஆருடன் படகில் டூயட் பாடி நடித்த படம் ‘குமாரி’. அது முகவரியற்றுப் போனது.

சார்லி சாப்ளின் நடித்துப் பெரும் வெற்றிபெற்றது சிட்டி லைட்ஸ். ஜெமினியின் தயாரிப்பாக அது ‘ராஜி என் கண்மணி’ என்ற தலைப்பில் தமிழுக்கு ஏற்ப உருமாறியது. டைட்டில் ரோலில் ஸ்ரீரஞ்சனிக்குக் கிடைத்த மிக அரிய சந்தர்ப்பம்.

‘மல்லிகைப்பூ ரோஜா... முல்லைப் பூ வேணுமா...

தொட்டாலே கை மணக்கும் பட்டான ரோஜா’

என்று பாடி நடிக்கும் பார்வையற்ற பூக்காரியாக ஸ்ரீரஞ்சனியை வாரி அணைத்துக்கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.

காதலிக்குக் கண் கிடைக்கக் காரணம் காதலன் நாயகன் டி.ஆர்.ராமசந்திரன். காதலியோ கண் மருத்துவரை மணந்துகொள்ள, ஏமாந்துபோவார். ராமச்சந்திரன் முதன்முதலில் முழு நீள குணச்சித்திர நடிகராக இந்தப் படத்தில் மாறியிருந்தார்.

‘ராஜி என் கண்மணி’

எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராஜி என் கண்மணி’ தோல்வியைச் சந்தித்தது.

“ஜெமினி ஸ்டுடியோ எனக்குக் கிட்டாத பொருளாகத் தோன்றியது. அதில் தயாராகும் ஒரு படத்துக்கு நான் ஹீரோயின் என்றவுடன் பெருமை பிடிபடவில்லை. ஜெமினிக்குள் நுழைந்து நானும் மேக்-அப் போட்டு கதாநாயகியாக நடித்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினேன். காரணம் ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’.

அதில் நடித்த வசுந்தரா தேவியின் தீவிர ரசிகை ஆனேன். வசுந்தரா தேவி ஒரு விதமாகப் பளபளக்கும் ஆடை அணிந்து, தோள்களைக் குலுக்கி ஆடிய நடனம் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது. அவர்தான் எனக்கு சினிமா மீது மோகத்தை உண்டாக்கினார்.

‘ராஜி என் கண்மணி’யின் டைரக்டர் கே.ஜே. மகாதேவன். கல்கியின் ‘தியாக பூமி’ படக் கதாநாயகன். ஹாலிவுட் படங்களில் அலாதி மோகம் அவருக்கு. பல மேல் நாட்டுப் படங்களைப் பார்த்து, ஏதேதோ ஐடியாக்களைத் தமிழ்ப் படத்தில் புரியவைக்கப் பார்த்தார். ஆனால் ஜனங்களுக்குப் புரியவில்லை” என்று 1971-ல் பேட்டியளித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

ஏமாற்றமும் ஏற்றமும்

‘விக்ரமாதித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடி என்று நம்பவைத்து, கடைசியில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் இணை சேர்ந்த ஏமாற்றமும் ஸ்ரீரஞ்சனிக்கு உண்டு. ஸ்ரீரஞ்சனியின் இயற்பெயர் மகாலட்சுமி. சினிமாவுக்காக அவரது அக்காவின் பெயரான ஸ்ரீரஞ்சனியைச் சூட்டிக்கொண்டார். அக்காவின் மீது அவ்வளவு பாசம். அவரது அக்கா சினிமாவில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீரஞ்சனிக்கு ஏற்றம் தந்து கொண்டாடிய ஆந்திரத் திரையுலகம் என்ன காரணத்தாலோ அவரை ஜூனியர் ஸ்ரீரஞ்சனி என்றே அழைத்தது.

சினிமா நடிகைகள் செயற்கை வெளிச்சத்தில் கதறி அழுது, இன்னொரு குடும்பத்துக்காக மெழுகாகக் கரைந்து உருகி ஓடி ஒளி தருவது ஸ்ரீரஞ்சனிக்கும் நேர்ந்தது.

தன் அக்காவின் அகால மறைவுக்குப் பிறகு, அக்காவின் கணவர் நாகமணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் தவிர்க்க முடியாத பொறுப்பு ஸ்ரீரஞ்சனிக்கு. தொடர்ந்து அரிதாரம் பூச அதிக அவகாசம் அமையவில்லை.

வெற்றிகரமாக ஓடிய டி.ஆர். ராமண்ணாவின் ஓரிரு வண்ணச் சித்திரங்களில், ஸ்ரீரஞ்சனியை ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு வி.எஸ். ராகவனின் மனைவியாகவும் பிரமிளா, பி.ஆர். வரலட்சுமி, ஜெயசித்ரா ஆகிய அன்றைய அறிமுக நடிகைகளின் தாயாராகவும் பல படங்களில் நடித்த ஸ்ரீரஞ்சனிக்கு ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழையடி வாழை’ திரைப்படத்தில் மனத்துக்கு நிறைவான வேடம் அளித்தார். அடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸின் வெற்றிப் படமான ‘பூக்காரி’யில் மு.க. முத்துவின் அன்னையாகத் தோன்றினார் ஸ்ரீரஞ்சனி.

JamesFague
16th July 2016, 09:37 AM
Mr CK


If I know about your arrival to Chennai I could have come & met you.

eehaiupehazij
16th July 2016, 02:18 PM
Fire in the shadow of Ash...thy name is GG!

From the treasure archipelago of GG!!

நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!


வாழ்வியல் சந்தர்ப்ப சூழல்கள் நம்மை துன்பவியல் அனுபவங்களில் ஆழ்த்திய நிகழ்வுகள் சகஜமே !

சில சமயங்களில் நமது வேதனைகளுக்கு காரணமானவரையோ நம்மை துன்பக்குழியில் தள்ளியவரையோ ஏமாற்றியவரையோ சந்திக்க நேரும்போது நீறு பூத்த நெருப்பாக ஒரு கோபம் தலைதூக்கிய வெறுப்பு மனதில் கனலாக கொழுந்து விட்டு எரிவது இயல்பே !இருப்பினும் பண்பாளர்கள் சினத்தை நீறு பூத்த நெருப்பாக வைத்துக்கொண்டு புத்திசாலித்தனமான வழிகளில் பழி தீர்க்கும் திரைக்கதையமைப்புக்கள் ஏராளம் !

அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !

பகுதி 1 வஞ்சிக்கோட்டை வாலிபன் / ராஜ் திலக்!

அன்னையை கொடுஞ்சிறையில் கண்டிழந்திட்ட கோபம்....தங்கையை கொன்ற கயவனை பழிதீர்க்க நெஞ்சம் நிறைய வெஞ்சினம்....நீறுபூத்த நெருப்புடா...
என்பதை பிரேமுக்கு பிரேம் ஜெமினி வாழ்ந்து காட்டிய தமிழ்த்திரை மறக்கவொண்ணாத மாபெரும் காவியம் !!

Perceive the greatness of GG the world class actor par excellence and the doyen for his finest portrayal of a vengeance laden youth!


https://www.youtube.com/watch?v=yp_HD9rbUwo

https://www.youtube.com/watch?v=ZAmoFNFta6Y

https://www.youtube.com/watch?v=1YeTEq9DLBc

https://www.youtube.com/watch?v=TcN9536Xx-o

eehaiupehazij
16th July 2016, 02:52 PM
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!

அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !

பகுதி 2 பார்த்தால் பசி தீரும்!!

சந்திரபாபுவின்அலுவலக குளறுபடியால் அண்ணன்நடிகர்திலகம் அலுவல் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை சிக்கலில் விட்டுவிட்டாரோ என்று நீறு பூத்த நெருப்பாக கனன்று பாட்ட்டாலடிக்கும் மன்னர் !

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

eehaiupehazij
16th July 2016, 05:42 PM
Guest entries / Gap fillers from GG thread!

நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!


அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !


பகுதி 3 ராமு

கொள்ளையர்களால் மனைவியை இழந்து மகனும் பேச்சிழந்து நிற்கையில் முகமறியாக் கொள்ளையனைப் பொசுக்க வேண்டும் என்னுமளவு வெஞ்சினம் மேலோங்கி குரோதம் நிறைந்த விழிகளுடன் நீறு பூத்த நெருப்பராக மன்னர் பிழம்படித்த காவியம் ராமு !

மகோன்னத நடிப்பின் சிகரம் தொடும் மன்னர் நமக்களித்த மறக்க முடியாத திரைச் சுவடி இக்காட்சியே !

https://www.youtube.com/watch?v=viCLnZsAA8I&list=PL6eYJImIZdQ7hox7f52D4KfAth7BigIVA&index=17

https://www.youtube.com/watch?v=lKWJDWGkDMY&list=PL6eYJImIZdQ7hox7f52D4KfAth7BigIVA&index=30

eehaiupehazij
16th July 2016, 09:19 PM
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!


அமரர் ஜெமினியின் இயல்புற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !

பகுதி 4 : சாந்தி நிலையம்

என்ன இருந்தாலும் தனது புத்தி சுவாதீனமற்ற மனைவியின் மேலிருந்த ஆழ்மன அன்பால் மனைவியின் அண்ணன் பாலாஜியின் பிளாக் மெயிலை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத மன்னர் நீறு பூத்த நெருப்பாக உள்மனதில் புகைந்து கொண்டிருந்த கோபக்குமுறலை நெருப்புப் பிழம்பாக சீறியடித்து பாலாஜியை ஒரு வழி பண்ணுகிறார் ....!


https://www.youtube.com/watch?v=UswWKRO_Am4

eehaiupehazij
16th July 2016, 09:45 PM
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!


அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !

பகுதி 5
பூவா தலையா ?!


இத்தனை காலமாக ரகசியங்களை மறைத்து தன்னை ஒரு கோழை மாப்பிள்ளையாகவே நடத்தி வந்திருக்கிறார் என்பது ஜெய் மூலம் அம்பலமானதும் நீறு பூத்த நெருப்பாக மவுனம் காத்த மன்னர் பொங்கியெழுந்து சுழற்றுகிறார் சவுக்கை ! அடி சக்கை....!
ஆனால் ஒரு பெண்மணியிடமா மன்னரே தங்கள் வீரத்தைக் காட்டுவது .....கொஞ்சம் சறுக்கலே!

https://www.youtube.com/watch?v=xc__tSEQL8M

eehaiupehazij
16th July 2016, 10:32 PM
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
பகுதி 6
உன்னால் முடியும் தம்பி / ருத்ரவீணா


முதிர்ந்த வயதிலும் மன்னரின் நடிப்புத்திறன் புடம்போட்ட பொன்னாகவே ஒளிர்ந்தது !
பழமைவாதியாக தனயன் கமலஹாசனின் /சிரஞ்சீவியின் புதுமைப் போக்கும் தார்மீக சிந்தனைகளும் பிடிக்காமல் பிள்ளையையே வெறுத்து ஒதுக்கும் நீறுபூத்த நெருப்பான உணர்வுகளை வெகு இயல்பாக யதார்த்தமாக மனதில் ஆணியடிக்கும் வண்ணம் மீண்டும் நிரூபித்து பாராட்டுக்களை அள்ளினார் மன்னர் !

https://www.youtube.com/watch?v=ejgrwT5TigQ

https://www.youtube.com/watch?v=fyWWn8vGrkw

To my eyes, Rajanikanth's Kabali make up closely resembles that of GG's make up in this movie....of course Rajini is in coat-suit!!

vasudevan31355
16th July 2016, 10:52 PM
மதுண்ணா!

தங்களின் மணநாள் பரிசாக ஏதாவது தர வேண்டும் என்று தோன்றியது. சரி! என்ன தரலாம்? மண்டை காய்ந்து இறுதியில் என்னுடைய குரலில் ஒரு அருமையான ஹிந்திப் படப் பாடலை பாடி அதை பரிசாகத் தரலாமே என்ற விபரீத ஆசை தோன்றியது. இரண்டு நாள் மெனக்கெட்டு பிராக்டிஸ் செய்து ஒருவழியாக பாடி முடித்து மீடியா ஃபயரில் அப்லோட் செய்தேன். என்னடா இது நல்ல பரிசாகத் தருவான் என்று நினைத்தால் இப்படி சோதனைக்குள்ளாக்கி விட்டானே என்று நீங்கள் வருத்தமும் படலாம். நீங்கள் செய்த புண்ணியம் அவ்ளோவ்தான்.:) முதலிலேயே மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

ராகவேந்திரன் சார், ராஜ்ராஜ் சார் இருவரும் கண்டிப்பாக மன்னித்து விட வேண்டும்.

'ஜி'யும் என்னை மன்னிக்க.

மதுண்ணா! நல்லதோ கெட்டதோ சந்தோஷமாக இந்தப் பரிசை தருகிறேன். மனமுவந்து ஏற்றுக் கொள்ளவும்.

இதோ 'ஜுவல் தீஃப்' படத்திலிருந்து கிஷோர் அமர்க்களப்படுத்திய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான 'yeh dil na hota bechara' இப்போது என்னுடைய குரலில் உங்கள் அனைவரையும் பாடாய்ப் படுத்தப் போகிறது.:) உங்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.:) அடிக்கணும்னு நினைப்பவர்கள் இப்போதே கியூவில் நிற்கலாம்.

டவுன்லோட் செய்து கேட்க.


http://www.mediafire.com/download/hrwgwi232790prw/%27yeh+dil+na+hota+becharaa%27+by+vasudevan.3gpp

RAGHAVENDRA
17th July 2016, 06:49 AM
அந்த கோப்பினிலே ஒரு ரகசியம்
அதை நீயும் கேட்பது அவசியம்
அதன் குரலுக்குள்ளே ஒரு வசியம்
அதைக் கேட்பது தான் சுகமே....

ஒரு புதிய பாடகர் உதயமாகினார்
மதுர கானங்களின் திரியிலே

...

வாசு சார் கலக்கல்...

madhu
17th July 2016, 07:19 AM
வாசு ஜி...

ஆஹா... ஓஹோ... யோட்லிங் எல்லாம் செஞ்சு கலக்கிட்டு இப்படி எல்லாம் நைசா போஸ்ட் போட்டா நாங்க நம்பிடுவோமாக்கும்...

நிஜமாகவே உங்க குரல் ரொம்ப கிளியரா இருக்கு... சாதாரணமாக என்னை மாதிரி ஆசாமிங்க பாடினா தகரத்தில் ஆணியால் கீறின மாதிரி ஒரு சத்தம் வரும். இங்கே பிருகா எல்லாம் அனாயாசமாக வருது... கண்டிப்பா அடுத்த தடவை சந்திக்கிறபோது நீங்க எக்கசக்கமா பாட வேண்டி இருக்கும்.. விக்ஸ் டிராப்ஸ், ஸ்ட்ரெப்சில்ஸ், மிளகு ரசம், புளிப்பு மிட்டாய் எதுவேணாலும் கொண்டு வரேன்.. தொண்டை சரியில்லைன்னு எல்லாம் கதை விட்டு தப்பிக்க முடியாது..

எது வந்த போதும்.... இந்த அன்பு போதும் :bow:

vasudevan31355
17th July 2016, 12:00 PM
வாசு ஜி...

விக்ஸ் டிராப்ஸ், ஸ்ட்ரெப்சில்ஸ், மிளகு ரசம், புளிப்பு மிட்டாய் எதுவேணாலும் கொண்டு வரேன்.. தொண்டை சரியில்லைன்னு எல்லாம் கதை விட்டு தப்பிக்க முடியாது..



உங்களை பார்த்துட்டாலே அல்லாம் போச்சு.:) ஹோகயா. (மகிழ்ச்சி,பய,மரியாதை) கண்டிப்பா அத்தனையையும் கொண்டு வாங்க. குறிப்பா மிளகு ரசம்.:) பாட்டை சகிச்சுகிட்ட உங்களுக்கும், ரசிக வேந்தருக்கும் நன்றி.

raagadevan
17th July 2016, 03:36 PM
//முதிர்ந்த வயதிலும் மன்னரின் நடிப்புத்திறன் புடம்போட்ட பொன்னாகவே ஒளிர்ந்தது !
பழமைவாதியாக தனயன் கமலஹாசனின் /சிரஞ்சீவியின் புதுமைப் போக்கும் தார்மீக சிந்தனைகளும் பிடிக்காமல் பிள்ளையையே வெறுத்து ஒதுக்கும் நீறுபூத்த நெருப்பான உணர்வுகளை வெகு இயல்பாக யதார்த்தமாக மனதில் ஆணியடிக்கும் வண்ணம் மீண்டும் நிரூபித்து பாராட்டுக்களை அள்ளினார் மன்னர் !//

https://www.youtube.com/watch?v=IrdBqPv7Aq0

eehaiupehazij
17th July 2016, 08:12 PM
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!

பகுதி 8 சரசுவதி சபதம்!


விதி வசத்தால் பெண்தெய்வத்தின் அருள்பார்வை கடாட்சத்தில் கடைந்தெடுத்த கிராமப்புற கோழை மாவீரனாக உருமாற்றம் பெற்று அதேபோல யானை மாலை போட்டதால் ராணியாகி விட்ட கோவை சரளா டைப் (ஷாஜஹான்) பிச்சைக்காரியிடம் தளபதியாகப் பதவி பெறுகிறார்!!

கட்டழகனான தன்னை விட்டுவிட்டு தங்களைப்போலவே விதியின் சதியால் திடீரென்று பேச்சுவரப் பெற்று வசனமழை பாடல் சாரல் ஜெயிலிலும் ஆடல்பாடல் என்று தூள்கிளப்பும் கதியற்ற கவிஞனை தன்னைப் பாராட்டி பாடியே தீர வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதைத் தவிர நாட்டு மக்களுக்கான நன்மை பற்றி நினைக்காத ராணியிடமும் வாயாடிக் கவிஞனிடமும் தீராத கோபத்தை நீறுபூத்த நெருப்பாக பென்ஹர் சார்ல்டன் ஹெஸ்டன் கெட்டப்பில் வாயில் பெட்ரோல் ஊற்றி தீயேயாக உமிழும் வித்தைக்காரன் போல் இடிச்சிரிப்பு வீரப்பா உள்ளங்கை பிசையும் நம்பியாராக மாறி கிலியூட்டுகிறார் மன்னர்!!

https://www.youtube.com/watch?v=YIPFopNqSos

நடிகர்திலகம் கிடத்தப்பட்டிருக்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சூழலில் ஜெமினி ஏவிய யானை காலைத் தூக்கும்போது நடிகர்திலகம் மற்றும் மன்னரின் எக்ஸ்பிரஷன்கள் எனக்கு கோல்டுபிங்கர் ஜேம்ஸ் பாண்ட் வில்லனின் லேசர் பீம் கொஞ்சம் கொஞ்சமாக தாக்க முன்னேறும்போது ஷான் கானரி காட்டும் ஜேம்ஸ் பாண்ட் முகபாவனைகளையே நினைவுபடுத்தி வதைக்கிறதே !!

NT taking over Sean Connery/James Bond OO7 position, GG taking over the Bond villain Gert Forbe's position and the Elephant's pillar leg simulates the Laser Beam......HAAAAA HAAAHAAAAA!

https://www.youtube.com/watch?v=FZxzC3X5ww8

eehaiupehazij
17th July 2016, 08:57 PM
அசை போட வைக்கும் திருச்சி லோகநாதரின் இசைப் பாடல் மதுரங்கள் !


ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பது மேம்போக்கான புத்த ஞானமாக இருக்கலாம் .... ஆனாலும் ஆசையே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் ஆதாரம் .....சைக்கிளிலிருந்து செல்போன் வரை ....

அலை போன்ற ஆசையில் இலை போட்டுப் பரிமாறுகிறார் இசை விருந்தை !

https://www.youtube.com/watch?v=ydi-WAnlXfE&list=RDydi-WAnlXfE

eehaiupehazij
17th July 2016, 09:07 PM
அசை போட வைக்கும் திருச்சி லோகநாதரின் இசைப் பாடல் மதுரங்கள் !


காலங்கள் மாறிக்கொண்டேயிருந்தாலும் கதிரவனின் களப்பணி மாற்றமற்றதே ...திருச்சி லோகநாதரின் அமரத்துவம் பெற்ற இப்பாடலும் அந்த வரிசையே !

வாராய் நீ வாராய் ....போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய் ...
செல்வோமே இசைமலையின் சிகரம் கண்டிட ....

https://www.youtube.com/watch?v=T32rZg8M4xs

eehaiupehazij
17th July 2016, 09:54 PM
அசை போட வைக்கும் திருச்சி லோகநாதரின் இசைப் பாடல் மதுரங்கள் !

கடோதகஜானாரின் கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் ....காட்சி உருவாக்கத்திற்கேற்ற லோகநாதரின் கனத்த குரலும் ஹஹஹஹ சிரிப்பும் பிரமாதமே ....மாயாபஜாரின் மறக்க முடியாத ...பொறாமைப்பட வைக்கும் ரங்காராவின் சாப்பாட்டு தர்பார் ...

https://www.youtube.com/watch?v=qe0i-cHYeNc

eehaiupehazij
17th July 2016, 11:52 PM
நெற்றிக்கண் வழி நீறு பூத்த நெருப்புப் பிழம்பு(டா!) ஜெமினி கணேசன் !

10 நிறைவுப் பகுதி
திருநீறு பூசிய எரிமலைக்குழம்பு சிவனார் ஜெமினி கருணையில் வந்தவரே ஆறுமுகக் கந்தன் !

https://www.youtube.com/watch?v=EhzzZHOJH3U

vasudevan31355
18th July 2016, 12:13 PM
ஒரு அருமையான பாடல். நல்ல சிச்சுவேஷனும் கூட. ஆனால் நல்ல நடிகை இருந்தும் அவரின் அன்றைய உருவத்தால், அவருக்கு பொருத்தமில்லா நடனத்தால் இப்பாடல் உரிய பலனை அடையாமல் போனது. சுசீலா அம்மாவின் அற்புதமான பாடலின் சூழலை உணர்ந்த குரல் பாவங்கள். அதற்கேற்ற அந்த பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்கள் கருணையோடு பரிதாபப்பட்டு நெகிழச் செய்யும் மன்னரின் துள்ளாட்டத்தோடு கூடிய உருக வைக்கும் இசை.

https://upload.wikimedia.org/wikipedia/en/9/91/Thirudan_Poster_.jpg

திருடனான கணவன் திருந்தி வாழும் போது வறுமைக்கு உள்ளாகிறான். மனைவியும், குழந்தையும் உணவு கூட இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை. நல்லவனாய் மாறினாலும் திருடன் என்ற முத்திரை மாறாததால் சமூகம் அவனுக்கு வேலை தர மறுக்கிறது. பாலின்றித் தவிக்கும் தன் குழந்தையின் நிலைமை கண்டு அவன் துடிக்கிறான். தவிக்கிறான். மனைவி அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் படுக்கையில் விழுகிறான். அரண்டு பிதற்றுகிறான். அவன் உடல்நிலை மோசமாகிறது. படுக்கையில் படுத்தபடியே 'யாராவது வேலை கொடுங்களேன்' என்று அரற்றுகிறான். அவனை படுக்கையில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் மனைவி அவனை கட்டிலுடன் சேர்த்து சேலையால் கட்டிப் போடுகிறாள் அழுதபடியே. ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர, டாக்டர் மருந்து எழுதித் தந்து சத்துள்ள ஆகாரமாக அவனுக்குத் தரச் சொல்லி செல்ல, மனைவி செய்வதறியாது நிற்கிறாள் வறுமையின் கொடுமையை நினைத்தபடியே.

இப்போது அவள் ஒரு முடிவெடுக்கிறாள். ஹோட்டலில் நடனமாடி, வருவாய் ஈட்ட முடிவு செய்து, அட்வான்ஸும் வாங்கி கணவனுக்கு மருந்துகள் வாங்கி வருகிறாள். கணவன் இவையெல்லாம் 'எப்படி வாங்கினாய்?' என்று வினவ, தான் வேலைக்குப் போவதாகக் கூறுகிறாள். கணவன் அதை எண்ணி துயரமடைகிறான். அவள் கணவனிடம் வேலைக்குப் போவதாகத் சொன்னாளே ஒழிய, தான் ஹோட்டலில் நடனமாடிச் சம்பாதிப்பதாகச் சொல்லவில்லை.

இப்போது அவள் ஹோட்டலில் நடனமாடச் செல்ல, வீட்டில் தனியே இருக்கும் கணவனிடம் வருகிறான் அவனுடைய பழைய பாஸ். அவனை மறுபடி திருட்டுத் தொழிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் திருந்தியவனோ தீர்மானமாக அதற்கு மறுக்க, அவனுடைய கொள்ளையர் தலைவன் அவன் மனைவி ஹோட்டலில் பல பேர் அறிய மானத்தை விட்டு நடனமாடி சம்பாதிப்பதை விட திருடுவது எவ்வளவோ மேல் என்று அவன் மனைவி நாட்டியமாடுவதை அவனிடம் போட்டு உடைக்க, அதைக் கேட்டு அதிர்ந்து, உறைந்து போகிறான் கணவன். கோபம் தலைக்கேற தான் பாஸுடன் ஹோட்ட்டலுக்கு புறப்படுகிறான்.

அங்கே கணவனுக்காக தன் மானத்தையே விட்டு நடனமாடுகிறாள் அவன் மனைவி.

திருந்திய திருடனான கணவன் வேடத்தில் நடிகர் திலகம். கேட்கவே வேண்டாம். மனைவி ரோலுக்கு கே.ஆர்.விஜயாதான். கொள்ளைக்கார பாஸ் பாலாஜி.

ஹோட்டலில் நடனமாடும் ரோல் சற்றும் பொருந்தா விஜயா. உடல் பருமன் உடன் பயமுறுத்துகிறது. மரியாதைக்குரிய நாயகி என்று பெயர் எடுத்தது விட்டதால் உடல் முழுதும் மறைத்த கோபிகாஸ்திரி கவர்ச்சி டிரெஸ் விஜாவிற்கு சூட் ஆகவில்லை. இந்த மாதிரி நடனமும் அவ்வளவாக அவருக்குப் பழக்கமில்லை.

என் ஆசை என்னோடு
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா ஹா ஹா மயக்கந்தான்
ஓஹோஹோ
அஹா அஹா அஹாஹா
அஹா அஹாஹா

(என் ஆசை என்னோடு)

கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
கோலத்தின் அலங்காரம் பழகாதவள்
பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
பாவத்தை பிறர் காண சகியாதவள்
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

கேட்டால்.....

உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
ஓ மயக்கந்தான்

(என் ஆசை என்னோடு)

மதுக் குடத்தினில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல
வடித்த பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல
மணமுள்ள மலர் காண கொடியானவள்
வாழ்கின்ற துணைக்காக கனியானவள்
வழி கண்டு சபை தேடி சிலையானவள்
மானத்தின் நிழலோடு கலையானவள்
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

கேட்டால்....

உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
ஓ மயக்கந்தான்
(என் ஆசை என்னோடு)

'புன்னகை அரசி'யை புறந்தள்ளிவிட்டு பாடலை முழுவதும் ஆக்கிரமிப்பது இசையரசியே. பாடலின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதை நம் உள்ளங்களில் உணர்வோடு உணர்த்தும் வித்தையில் கைதேர்ந்த குரல்காரி இந்த பார் போற்றும் பாடகி. நடிகையின் முக பாவங்களையும், உடல் பாவங்களையும் ஒரே ஒரு குரல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

'ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு'

என்று வரிகள் முடித்து

'கேட்டால்'........

என்று ஒரு வார்த்தை கேட்டு, சிறிது நிறுத்தி,

'உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான் ஓ மயக்கந்தான்'

என்று தபேலா வாத்தியங்களுக்கிடையே சுசீலா பாடும் இந்தப் பாடல் என்னுள் ஆழப் புதைந்தது. 'நடிப்புத் திருடன்' என்ற பிரளய சுனாமியால் இந்த பாடல் காணாமல் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்பதும் ஒரு புறம் உண்மையே. இருந்தாலும் மதுர கானங்கள் இதையெல்லாம் வெளிக்கொணரத்தானே உருவாக்கப்பட்டது?

கதையறிந்து, காட்சியறிந்து காவிய வரிகள் படைக்க கண்ணதாசனை விட்டால் யார்? விரசம் எதிர்பார்க்கும் பத்து ஆண்களுக்கு மத்தியில் பத்தினி ஒருத்தி தன் மானத்தையும் காத்துக் கொண்டு, அதே சமயம் நாட்டியமும் ஆட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் காலத்தின் கோலத்தை நினைத்து தன் நிலையை எண்ணிப் பாடும் வரிகள் அருமை. 'அனைத்தும் பெண்ணே' என்பதை 'உலகமே ஆடும் பெண்ணோடு' என்ற ஒரே வரியில் கலக்கிய இவனல்லவோ கவி!

மனைவியை ஹோட்டலில் நடனமாடும் கோலத்தில் பார்த்துவிட்டு அவளைத் 'தரதர'வென வீட்டுக்கு இழுத்து வந்து,ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் மறுபடி கத்தி, துப்பாக்கி எடுத்து திருட்டுத் தொழிலுக்குப் போவதை பலவேறு முக பாவ உணர்ச்சிகளால் நமக்கும் அவளுக்கும் உணர்த்தும் நடிகர் திலகத்தின் பேராற்றல் நடிப்பு எப்பேற்பட்டதையும் மறக்கடிக்கச் செய்யும் மாயா ஜால வித்தை. அதை வெல்ல எவரால் முடியும்?

ராகவேந்திரன் சார்,

உங்களுக்காகவே இந்தக் காட்சியையும் சேர்த்து பாடலுடன் இணைத்துள்ளேன். மூலவர் இல்லாமலா?

('Youtube'-ல் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இன்று நான் அப்லோட் செய்தது)


https://youtu.be/Dn5pz-nGQB4

RAGHAVENDRA
18th July 2016, 09:07 PM
Nadigar Thilagam Film Appreciation Association (NTFAnS) Next Programme.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13775877_1156693601047977_3925322253052228713_n.jp g?oh=df9dc79e330355012cf6346b7d4aa72e&oe=583091B4

rajeshkrv
18th July 2016, 10:51 PM
ஒரு அருமையான பாடல். நல்ல சிச்சுவேஷனும் கூட. ஆனால் நல்ல நடிகை இருந்தும் அவரின் அன்றைய உருவத்தால், அவருக்கு பொருத்தமில்லா நடனத்தால் இப்பாடல் உரிய பலனை அடையாமல் போனது. சுசீலா அம்மாவின் அற்புதமான பாடலின் சூழலை உணர்ந்த குரல் பாவங்கள். அதற்கேற்ற அந்த பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்கள் கருணையோடு பரிதாபப்பட்டு நெகிழச் செய்யும் மன்னரின் துள்ளாட்டத்தோடு கூடிய உருக வைக்கும் இசை.

https://upload.wikimedia.org/wikipedia/en/9/91/Thirudan_Poster_.jpg

திருடனான கணவன் திருந்தி வாழும் போது வறுமைக்கு உள்ளாகிறான். மனைவியும், குழந்தையும் உணவு கூட இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை. நல்லவனாய் மாறினாலும் திருடன் என்ற முத்திரை மாறாததால் சமூகம் அவனுக்கு வேலை தர மறுக்கிறது. பாலின்றித் தவிக்கும் தன் குழந்தையின் நிலைமை கண்டு அவன் துடிக்கிறான். தவிக்கிறான். மனைவி அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் படுக்கையில் விழுகிறான். அரண்டு பிதற்றுகிறான். அவன் உடல்நிலை மோசமாகிறது. படுக்கையில் படுத்தபடியே 'யாராவது வேலை கொடுங்களேன்' என்று அரற்றுகிறான். அவனை படுக்கையில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் மனைவி அவனை கட்டிலுடன் சேர்த்து சேலையால் கட்டிப் போடுகிறாள் அழுதபடியே. ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர, டாக்டர் மருந்து எழுதித் தந்து சத்துள்ள ஆகாரமாக அவனுக்குத் தரச் சொல்லி செல்ல, மனைவி செய்வதறியாது நிற்கிறாள் வறுமையின் கொடுமையை நினைத்தபடியே.

இப்போது அவள் ஒரு முடிவெடுக்கிறாள். ஹோட்டலில் நடனமாடி, வருவாய் ஈட்ட முடிவு செய்து, அட்வான்ஸும் வாங்கி கணவனுக்கு மருந்துகள் வாங்கி வருகிறாள். கணவன் இவையெல்லாம் 'எப்படி வாங்கினாய்?' என்று வினவ, தான் வேலைக்குப் போவதாகக் கூறுகிறாள். கணவன் அதை எண்ணி துயரமடைகிறான். அவள் கணவனிடம் வேலைக்குப் போவதாகத் சொன்னாளே ஒழிய, தான் ஹோட்டலில் நடனமாடிச் சம்பாதிப்பதாகச் சொல்லவில்லை.

இப்போது அவள் ஹோட்டலில் நடனமாடச் செல்ல, வீட்டில் தனியே இருக்கும் கணவனிடம் வருகிறான் அவனுடைய பழைய பாஸ். அவனை மறுபடி திருட்டுத் தொழிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் திருந்தியவனோ தீர்மானமாக அதற்கு மறுக்க, அவனுடைய கொள்ளையர் தலைவன் அவன் மனைவி ஹோட்டலில் பல பேர் அறிய மானத்தை விட்டு நடனமாடி சம்பாதிப்பதை விட திருடுவது எவ்வளவோ மேல் என்று அவன் மனைவி நாட்டியமாடுவதை அவனிடம் போட்டு உடைக்க, அதைக் கேட்டு அதிர்ந்து, உறைந்து போகிறான் கணவன். கோபம் தலைக்கேற தான் பாஸுடன் ஹோட்ட்டலுக்கு புறப்படுகிறான்.

அங்கே கணவனுக்காக தன் மானத்தையே விட்டு நடனமாடுகிறாள் அவன் மனைவி.

திருந்திய திருடனான கணவன் வேடத்தில் நடிகர் திலகம். கேட்கவே வேண்டாம். மனைவி ரோலுக்கு கே.ஆர்.விஜயாதான். கொள்ளைக்கார பாஸ் பாலாஜி.

ஹோட்டலில் நடனமாடும் ரோல் சற்றும் பொருந்தா விஜயா. உடல் பருமன் உடன் பயமுறுத்துகிறது. மரியாதைக்குரிய நாயகி என்று பெயர் எடுத்தது விட்டதால் உடல் முழுதும் மறைத்த கோபிகாஸ்திரி கவர்ச்சி டிரெஸ் விஜாவிற்கு சூட் ஆகவில்லை. இந்த மாதிரி நடனமும் அவ்வளவாக அவருக்குப் பழக்கமில்லை.

என் ஆசை என்னோடு
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா ஹா ஹா மயக்கந்தான்
ஓஹோஹோ
அஹா அஹா அஹாஹா
அஹா அஹாஹா

(என் ஆசை என்னோடு)

கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
கோலத்தின் அலங்காரம் பழகாதவள்
பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
பாவத்தை பிறர் காண சகியாதவள்
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

கேட்டால்.....

உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
ஓ மயக்கந்தான்

(என் ஆசை என்னோடு)

மதுக் குடத்தினில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல
வடித்த பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல
மணமுள்ள மலர் காண கொடியானவள்
வாழ்கின்ற துணைக்காக கனியானவள்
வழி கண்டு சபை தேடி சிலையானவள்
மானத்தின் நிழலோடு கலையானவள்
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

கேட்டால்....

உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
ஓ மயக்கந்தான்
(என் ஆசை என்னோடு)

'புன்னகை அரசி'யை புறந்தள்ளிவிட்டு பாடலை முழுவதும் ஆக்கிரமிப்பது இசையரசியே. பாடலின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதை நம் உள்ளங்களில் உணர்வோடு உணர்த்தும் வித்தையில் கைதேர்ந்த குரல்காரி இந்த பார் போற்றும் பாடகி. நடிகையின் முக பாவங்களையும், உடல் பாவங்களையும் ஒரே ஒரு குரல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

'ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு'

என்று வரிகள் முடித்து

'கேட்டால்'........

என்று ஒரு வார்த்தை கேட்டு, சிறிது நிறுத்தி,

'உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான் ஓ மயக்கந்தான்'

என்று தபேலா வாத்தியங்களுக்கிடையே சுசீலா பாடும் இந்தப் பாடல் என்னுள் ஆழப் புதைந்தது. 'நடிப்புத் திருடன்' என்ற பிரளய சுனாமியால் இந்த பாடல் காணாமல் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்பதும் ஒரு புறம் உண்மையே. இருந்தாலும் மதுர கானங்கள் இதையெல்லாம் வெளிக்கொணரத்தானே உருவாக்கப்பட்டது?

கதையறிந்து, காட்சியறிந்து காவிய வரிகள் படைக்க கண்ணதாசனை விட்டால் யார்? விரசம் எதிர்பார்க்கும் பத்து ஆண்களுக்கு மத்தியில் பத்தினி ஒருத்தி தன் மானத்தையும் காத்துக் கொண்டு, அதே சமயம் நாட்டியமும் ஆட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் காலத்தின் கோலத்தை நினைத்து தன் நிலையை எண்ணிப் பாடும் வரிகள் அருமை. 'அனைத்தும் பெண்ணே' என்பதை 'உலகமே ஆடும் பெண்ணோடு' என்ற ஒரே வரியில் கலக்கிய இவனல்லவோ கவி!

மனைவியை ஹோட்டலில் நடனமாடும் கோலத்தில் பார்த்துவிட்டு அவளைத் 'தரதர'வென வீட்டுக்கு இழுத்து வந்து,ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் மறுபடி கத்தி, துப்பாக்கி எடுத்து திருட்டுத் தொழிலுக்குப் போவதை பலவேறு முக பாவ உணர்ச்சிகளால் நமக்கும் அவளுக்கும் உணர்த்தும் நடிகர் திலகத்தின் பேராற்றல் நடிப்பு எப்பேற்பட்டதையும் மறக்கடிக்கச் செய்யும் மாயா ஜால வித்தை. அதை வெல்ல எவரால் முடியும்?

ராகவேந்திரன் சார்,

உங்களுக்காகவே இந்தக் காட்சியையும் சேர்த்து பாடலுடன் இணைத்துள்ளேன். மூலவர் இல்லாமலா?

('Youtube'-ல் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இன்று நான் அப்லோட் செய்தது)



arumai ji

rajraj
19th July 2016, 12:16 AM
Good to hear you sing vasu (a Hindi song) ! :). . Here is another Hindi song for you to practice and sing for chinnakkaNNan ! :)

Chaliye kunjanmo........... from the Malayalam movie 'Swathi ThirunaaL' .


http://www.youtube.com/watch?v=wi1iib6mKiw


This is a Hindi composition by Swathi ThirunaaL in the raga Brindavana Saranga.


( vaathiyaar velai ennai vittu poga maattengudhu. adhaan indha assignment ! :lol: )

vasudevan31355
19th July 2016, 02:17 PM
ராஜ்ராஜ் சார்,

நன்றி!

கிஷோர் பாடிய இந்தப் பாடல் அம்சமானது. அளவானது. அழகானது. அமைதியானது. அமர்க்களமானது.

'Chalti Ka Naam Gaadi' காமெடி கலக்கல் படத்தில் மகா அழகி மதுபாலாவுடனான மதுவூற்று பாடல்.

'Ek Ladki Bhigi Bhagi Si'. என்ன அழகான குரல் கிஷோருக்கு!

Ek ladki bhigi bhagi si
Soti raaton mein jaagi si
Mili ik ajnabi se
Koyi aage na peechhe
Tum hi kaho ye koyi baat hai, hmm



https://youtu.be/mxYNdy-0CEs

இதே பாடல் தமிழில் 'சுதந்திரம்' என்ற படத்தில் அர்ஜுன், ரம்பாவிடம் சிக்கி சீரழிவதையும் பாருங்கள்.

கொஞ்சம் சில்லுன்னு இருந்தா என்னம்மா
நீ சிரிப்பதை ரசிச்சா என்னம்மா
இந்த நாள் போனபின் நாளை வாராதம்மா
ரெண்டு கோக் வாங்குறேன் கொஞ்சம் கூலாவம்மா

கொடுமைடா சாமி!


https://youtu.be/Pdh5fRBlRHI

vasudevan31355
19th July 2016, 09:21 PM
சுசீலா அம்மாவின் இன்னொரு பிடித்தமான பாடல். கண் தெரியாத சரோ, காலில்லாத சௌகார் பங்கு கொள்ளும் பாடல் 'கண்மலர்' படத்தில். அதிகம் பிரபலமில்லைதான். ஆனால் ஈர்க்கக் கூடிய ஆற்றல் உண்டு.

அடி ஆயீ ஆயீ ஆயீ ஆயீ கல்யாண காலமடி
கச்சேரி மேளமடி பொற்கோல மேடையிலே
பூப்போட்ட வாசமடி


குறமகள் வள்ளியொரு முருகனைக் கண்டாளாம்
குலமகள் வள்ளியொரு கண்ணனைக் கண்டாளாம்
முருகனும் வள்ளியுமோ திருத்தணி சென்றாராம்
கண்ணனும் வள்ளியுமோ தனித்தனி நின்றாராம்.

அமைதியான அழகான எனக்கு நிரம்ப பிடித்தமான பாடல். இரண்டு நாட்களாக மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. சரி! எழுதி விடுவோம் என்று எழுதி விட்டு வீடியோ எடுக்க 'யூடியூப்' சென்று பாடலை பார்த்து ரசித்து விட்டு அற்புதமான இப்பாடலை அப்லோடு செய்த ரசனையுள்ள மகராஜன் யார் என்று பார்த்தால் அட நம்ம மதுண்ணா. அதானே பார்த்தேன்! அரவிந்த் கார்த்திக் என்ற பெயரில். ஒரே ரசனையை எண்ணி வியந்து இரட்டிப்பு சந்தோஷம்அடைந்தேன். நன்றி மதுண்ணா!


https://youtu.be/66oNFIFdjqA

rajraj
20th July 2016, 02:57 AM
May her sould rest in peace.

In her memory here is a song from hamari yaad aayegi(1961)

hamari tanhaiyan........


http://www.youtube.com/watch?v=rpYFab53aqM

vasudevan31355
20th July 2016, 10:46 AM
'மதன மாளிகை' யில் எம்.பி.சீனிவாசன் அவர்களின் இன்னொரு வித்தியாசம். இந்தி அல்காவிற்கு சுசீலா அம்மா குரல். போதையேற்றும் குரல். பிரவுன் கலர் செயற்கை சிகை அலங்காரத்தில் சிவக்குமார் பாவம். கிடார், சாக்ஸ் என்று வாசித்துத் தள்ளுகிறார். ஈஸ்வரிக்கு பதிலாக சுசீலாவை துணிச்சலுடன் பாட வைத்த சீனிவாசன் பாராட்டுக்குரியவர். ஆனால் 'துளித் துளி' அளவிற்கு இல்லை. என்றாலும் ரசிக்கலாம்.


https://youtu.be/-O423YRII3s

vasudevan31355
20th July 2016, 11:00 AM
ராஜ்ராஜ் சார்,

வருத்தமான செய்தி. பேகம் அவர்களின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'Ham Haal-e-Dil Sunayenge'. மதுமதியின் சலீல் சௌத்ரி இசைப் பாடல். அருமையான குரல் வளம் கொண்டவர். அதுவும் 'soon aye ke soon ye ke na soon ye' என்று அவர் பாடுவது அருமையிலும் அருமை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.


https://youtu.be/49cd1U8Z9zs

RAGHAVENDRA
20th July 2016, 03:32 PM
ஹையா...
சுக்ரியில் மது வந்தாச்சு..
இனிமேல் போதை தான் (இனிமையான மதுர கானங்கள் தரும் போதை தான்..)

:happydance:

vasudevan31355
21st July 2016, 10:05 AM
நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று.

நடிகர் திலகத்துடன் நான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355100/IMG.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355100/IMG.jpg.html)

உங்கள் அருகே உங்களுக்கு நிகராக எனக்கு சரியாசனம் தந்து, உங்கள் அருகில் அமரத் தயங்கிய என்னிடம் செல்லக் கண்டிப்பு காட்டி, என்னை உங்களோடு அமரச் செய்து, 'போட்டோ சரியாக விழவில்லை' என்று உங்கள் அனுபவ மதியால் கண்டு பிடித்து, 'மீண்டும் ஒருமுறை எடு' என்று புகைப்படக்காரரை சரியாக எடுக்கச் சொல்லி, என்னை அன்போடு அணைத்து அரவணைப்பு காட்டிய அன்பு தெய்வமே! எவருக்கு கிடைக்கும் இப்பேற்பட்ட பாக்கியம்!

நீ விண்ணுலகில் இருக்க நான் மண்ணுலகில் ஏன் இன்னும் வாழவேண்டும்?

Gopal.s
21st July 2016, 01:49 PM
எனது ஒரே தெய்வத்தின் நினைவு நாள் இன்று. (21 ஜூலை )

சமீபத்தில் சென்னை வந்திருந்த போது சிவகாமியின் செல்வன் 100 ஆவது நாள் அன்று எனது ஆதர்ச இணையின் படத்தை பார்த்து மகிழ்ந்ததுடன், வாணிஸ்ரீயை நேரில் கண்டு மகிழ்ந்தேன்.

இந்த இணையின் அத்தனை டூயட் பாடல்களும் உங்கள் பார்வைக்கு.

உயர்ந்த மனிதன்.-1968.

https://www.youtube.com/watch?v=F_6iBSY8yuw

நிறைகுடம்- 1969

https://www.youtube.com/watch?v=KcZwnJnkLak

வசந்த மாளிகை -1972

https://www.youtube.com/watch?v=ipjrLKWwJXM

சிவகாமியின் செல்வன் -1974

https://www.youtube.com/watch?v=YUxky21-Ybk

https://www.youtube.com/watch?v=dwrf7rPZdoM

https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA

ரோஜாவின் ராஜா -1976

https://www.youtube.com/watch?v=Xuqcf72OPdo

https://www.youtube.com/watch?v=LT0W3GKHYsw

இளையதலைமுறை-1977

http://www.dailymotion.com/video/x2eenyf_ilaya-thalaimurai-1977_music

http://tamilsongslyrics123.com/detlyrics/1981

நல்லதொரு குடும்பம்- 1979

https://www.youtube.com/watch?v=LUPOjuYD_hQ

RAGHAVENDRA
21st July 2016, 01:58 PM
Best of All

https://youtu.be/q21g7kBJLnA

Gopal.s
21st July 2016, 02:15 PM
My take

1)ethanai azhagu
2)kannoru pakkam
3)mayakkamenna
4)vellikinnanthan
5)melathalam
6)iniyavale
7)Sindhu nadikarai
8)alankaram kalaiyamal
9)Rojavin Raja

eehaiupehazij
21st July 2016, 08:07 PM
Remembering GG's friend with the understanding gesture...NT the greatest ever!

Ever lingering in our memories as the demigod of acting!
Days roll on with the energy on your thoughts....

senthil

Going to sleep imagining your lullaby only......

https://www.youtube.com/watch?v=SXyrrFIdQbs

chinnakkannan
22nd July 2016, 12:29 AM
ஹாய் ஹாய் ஹாய் :) ஹோப் ஆல் ஆர் ஆல்ரைட்...:) அண்ட் எவ்ரிதிங்க் இஸ் ஃபைன்...

ஏன் இந்தப் பாட் போடவே இல்லை.....பட் ஆடியோ தான் கிடைச்சது... ஜெயா மேக்ஸில் வீடியோ பார்த்த கையோடு தேடியதில் கிடைத்தது...


உன்னைத் தேடி வரும் எதிர்காலம்
அதை தெரிவிப்பதே இந்த நேரம்..

புதுவாழ்வு சுகமாகமனம் தானே காரணம்.. ந.தி.. நிம்மி...


https://youtu.be/HF3hkMVLCm4

Gopal.s
22nd July 2016, 07:33 AM
ஹாய் ஹாய் ஹாய் :) ஹோப் ஆல் ஆர் ஆல்ரைட்...:) அண்ட் எவ்ரிதிங்க் இஸ் ஃபைன்...

ஏன் இந்தப் பாட் போடவே இல்லை.....பட் ஆடியோ தான் கிடைச்சது... ஜெயா மேக்ஸில் வீடியோ பார்த்த கையோடு தேடியதில் கிடைத்தது...


உன்னைத் தேடி வரும் எதிர்காலம்
அதை தெரிவிப்பதே இந்த நேரம்..

புதுவாழ்வு சுகமாகமனம் தானே காரணம்.. ந.தி.. நிம்மி...


https://youtu.be/HF3hkMVLCm4

https://www.youtube.com/watch?v=kq-_sugzwGE

eehaiupehazij
22nd July 2016, 11:11 AM
Mukesh...the voice of RajKapoor....93rd birth day remembrance and nostalgia!

https://www.youtube.com/watch?v=mizFcOcO3Bo

https://www.youtube.com/watch?v=XQkYucs5ExY&index=1&list=PLA5359D59648150B5

https://www.youtube.com/watch?v=GmY3SJuekZk

rajraj
22nd July 2016, 11:19 AM
Surprise ! Surprise !

Just came home after watching Kabali in a local theatre !

An average movie! Nothing special Why so much hype? :lol:

eehaiupehazij
22nd July 2016, 07:03 PM
காதலுக்கு கண்ணில்லை !

பகுதி 1 வீரபாண்டிய கட்டபொம்மன் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே !


அமரர் ஜெமினிகணேசனின் அர்த்தமுள்ள காதல் சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
கட்டபொம்மனே திட்டுமளவு கட்டுப்பாடற்ற கண்ணில்லாத காதலர்கள் .....!!

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே அதை எண்ணி எண்ணி எந்தன் மனம் ஏங்குதே .....
கண்ணில்லாக் காதலையும் ஜெமினி கணேசன் வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிம்ப்ளி சூப்பர்ப் !

https://www.youtube.com/watch?v=jT5A2zgMpfA

eehaiupehazij
22nd July 2016, 09:05 PM
காதலுக்கு கண்ணில்லை !

பகுதி 2 ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு !


காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
காதல் வேகத்தில் கண்மண் தெரியாமல் விளக்கு கம்பத்தின் மேல் சரசரவென்று சறுக்குமரமேறி வழுக்கி விழுகிறார் மன்னர் !....!!

https://www.youtube.com/watch?v=V8bRDQI1FrI

காதல் ....கடமையென்றாலும் அந்தக் கடவுள் சொன்னாலும் ...ஒன்று சேர்ந்துவிட்ட நமது உள்ளம் பிரிந்து விடாது ..

கண்மூடித்தனமான நம்பிக்கையில் மன்னர் சைக்கிள் கேப்பில் ஆப்புவாங்கி கோட்டை விடுகிறாரே !

https://www.youtube.com/watch?v=na7YNbq3mGE

eehaiupehazij
23rd July 2016, 03:02 AM
காதலுக்கு கண்ணில்லை !

பகுதி 3 பாக்கியலட்சுமி
: சிங்கார சோலையாம்!!


காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
காதல் மோகத்தில் கண்மண் தெரியாமல் ரிஸ்க் எல்லாம் ரஸ்கே என்று வாழைப்பழ தோலில் வழுக்கி குட்டிக்கரணம் அடித்துக் குரங்குக் கூத்தாடுகிறார் மன்னர் !....!!

https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo

madhu
23rd July 2016, 05:42 AM
காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
காதல் மோகத்தில் கண்மண் தெரியாமல் ரிஸ்க் எல்லாம் ரஸ்கே என்று வாழைப்பழ தோலில் வழுக்கி குட்டிக்கரணம் அடித்துக் குரங்குக் கூத்தாடுகிறார் மன்னர் !...!!


இப்படி திரிந்தபோதுதான் "உதையும் கிடைக்கும் கன்னத்திலே (?)... உடைந்தது பற்கள் முப்பது ( மீதி ரெண்டு என்ன ஆச்சுங்கோ ) என்று காலையிலே வரும் பேப்பரிலே" என்றும் "கட்டம் போட்ட சட்டையைப் போட்டு கம்பியை எண்ணும் காலம் வரும்" என்றும் நாயகியால் மிரட்டப்பட்டதும் உண்டல்லவோ ?

https://www.youtube.com/watch?v=tKBMmZkwuvc

eehaiupehazij
23rd July 2016, 08:04 AM
காதலுக்கு கண்ணில்லை !

பகுதி 4 களத்தூர் கண்ணம்மா !: கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ....


காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
....!!

காதலியின் மனத்தாங்கலை மர ஊஞ்சல் தொங்கலில் கீழே விழுந்து விடுவோம் என்ற பயமே இல்லாமல் முன்னும் பின்னும் என்ன வேகம் மன்னா !

https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU&list=RD3vFw2qwKYCU&index=1

eehaiupehazij
23rd July 2016, 11:32 AM
காதலுக்கு கண்ணில்லை !

பகுதி 5 தேன் நிலவு !: கண்ணே உன்னைக் கண்ணால் காண காலம் இல்லையே ...
இன்னும் சொல்லவா அதில் மன்னன் அல்(ல)வா !! ....


காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் புறக்கண் திறந்து கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
....!!

மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் பனிக்குளிர் காஷ்மீரத்து ஏரிநீரலை மீது செம கட்டையுடன் அரைடிக்கட் விடலை டிராயருடன் கடலை போட்டுக்கொண்டே கட்டைப்பலகை மேல் நடக்கும் காதல் மன்னர் ....டூப் போடாமல் பேக் புரொஜெக்ஷன் இல்லாமல் திறந்த நெஞ்சுடன் காதலியுடன் கொஞ்சும் சலங்கையே ஜெமினி கணேசன் !

https://www.youtube.com/watch?v=3N5aOLuhypw

rajraj
24th July 2016, 06:32 AM
Mukesh's birthday is being celebrated.

Here is a song from avan, Tamil dubbed version of Aah (1953)

minnalpol aagum indha vaazhkkaiye

http://www.youtube.com/watch?v=jDIpi_Yb90g

Hindi original from aah

choti si ye zindagani......

http://www.youtube.com/watch?v=AE0SsrbgFZc

The singer in the cart is Mukesh.

chinnakkannan
29th July 2016, 02:40 PM
Jugal bandhi ஹி ஹி..

இளம் கன்னி உன்னைக் காண வந்தாள்... குபேரத் தீவு தேவிகா..

https://youtu.be/EUiD6OsORpY

ஜங்க்லீயில் ஷம்மிகபூர் சைரா பானு..

https://youtu.be/XDH8uzVcRds

rajraj
3rd August 2016, 07:27 AM
C.S.Jayaraman in manidhanum mirigamum(1953)

kaalam enum sirpi seyyum kavidhai thaai koviladaa.......


http://www.youtube.com/watch?v=3CByUVNgB2Q

raagadevan
6th August 2016, 02:35 AM
திரைப்படம்: அழியாத கோலங்கள் (1979)
வரிகள்: கங்கை அமரன்
இசை: சலில் சௌத்ரி
பாடகர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...

https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY


Hindi original by Lata Mangeshkar from the classic movie ANAND (1971):

https://www.youtube.com/watch?v=f75u1oLXzVM

Lata Mangeshkar's Bengali copy:

https://www.youtube.com/watch?v=cbfTaMTTdHA

rajraj
6th August 2016, 07:47 AM
From peN(1953)

kalyaaNam kalyaaNam.......

Chandrababu sings for veeNai Balachander.

http://www.youtube.com/watch?v=JgtZk34-5WM


From the Hindi remake Ladki

shaadhi shaadhi..............

http://www.youtube.com/watch?v=tya2ViAqh64

Gopal.s
9th August 2016, 09:09 AM
1950களில் நடிகர்திலகத்தின் பாடும் குரலாக இருந்தவர்களில் குறிப்பிட தக்கவர்கள் சிதம்பரம் ஜெயராமன்,சீர்காழி கோவிந்தராஜன் ,ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன். அது தவிர, கண்டசாலா,கிருஷ்ணன், சுந்தரம்,பீ.பீ.ஸ்ரீனிவாஸ் ,சந்திரபாபு,டி.ஏ. மோதி போன்ற பலரும் பாடி வந்தனர். நடிகர்திலகமும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் எல்லோரையும் ஆதரித்து வந்தார்.

ஆனால் 59இல் இருந்து நிலைமை தலை கீழ். டி.எம்.எஸ் குரல் நடிகர்திலகத்தின் அங்கீகரிக்க பட்ட குரலாக மாறி ,வெற்றி கூட்டணி ஆகி விட்ட படியால் ,நடிகர்திலகத்தால் எந்த சோதனைக்கும் இடம் கொடுக்க முடியாமல் போனது.

இரண்டு சுவாரஸ்யங்கள்.

பாலும் பழமும் படத்துக்கு பாடல் பதிவு முடிந்து படப்பிடிப்பு தொடங்க வேண்டிய தருணத்தில் டி.எம்.எஸ் க்கு கடும் ஜலதோஷம். பட குழுவினர் வேறு பாடகரை வைத்து முடிக்கலாம் என்று முடிவெடுத்த போது ,நடிகர்திலகம் சொன்னது. ஜலதோஷம் என்றாலும் டி.எம்.எஸ் பாடட்டும். டி.எம்.எஸ் பாடி கொடுத்தார் மென்மையான nasal tone இல்.(என்னை யாரென்று,நான் பேச ,பாலும் பழமும்) இதை கேட்ட சிவாஜி துள்ளி குதித்து தன் பேசும் குரலை முடிவு செய்து கொண்டார். விஞ்ஞானி மருத்துவருக்கு தூக்கி வாரிய இள நரை முடியுடன் ,மென்மையான மூக்கின் குரலே கதாபாத்திரத்துக்கு அமெரிக்கையான மெருகு அளிக்க முடியும் என்று. குறையே ,கூடுதல் நிறையானது நடிகர்திலகத்தின் மேதைமையால்.

குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ண பறவை பாடல் ,ஹிந்துஸ்தானி பாணியும் ,சுர பிர்காக்களும் நிறைந்த தனித்துவ பாடல். சீர்காழியின் பிர்கா சாரீரமே இதற்கு உகந்தது என்று முடிவு செய்து பாடல் பதிவு செய்தாயிற்று. ஆனால் நடிகர்திலகம் சொன்னது. அபசுரம் பாடினாலும் சௌந்தர்ராஜனே பாடட்டும்.(அந்த பாட்டில் டி.எம்.எஸ் திணறி தண்ணீர் குடித்திருப்பார். ஜானகியும் சுவற்றில் ஆணி போல கீறுவார்) அற்புதமான composition . காலத்தை வென்று நின்றாலும் பாடகர்களின் தேர்வு கேள்விக்குரியதே.கோபமாக இருந்த சீர்காழியை ,அவர் இசை நிகழ்ச்சியொன்றில் நடனமாடி நடிகர்திலகம் குஷி படுத்தி வழிக்கு கொண்டு வந்து விட்டார் என்பது வேறு விஷயம்.

Gopal.s
9th August 2016, 09:24 AM
மோகம் பிறந்ததம்மா

வாசுவிற்கும் எனக்கும் பிடித்த பாடல் மற்றும் situation . உங்களை துள்ளி குதிக்க வைக்கும் இசை மற்றும் சம்பந்த பட்ட நடிகர்களின் பாடகரின் தேர்ச்சியான ,உற்சாக,பங்களிப்பு. அடடா போட வைக்கும். இந்த உணர்வை எனக்கு தந்த மாற்று முகாம் பாடல்களில் முக்கியமானவை அச்சம் என்பது மடமையடா,உலகம் பிறந்தது, கண்ணென்ன கண்ணென்ன, நான் ஆணையிட்டால், மூன்றெழுத்தில் என் ,பெண்ணை பார்த்து, அதோ அந்த பறவை போல,சுகமெதிலே இதயத்திலா ,வெற்றி மீது வெற்றி வந்து,இடமோ சுகமானது ,சொர்க்கத்தை தேடுவோம்,தொட்டுக்காட்டவா,பம்பை உடுக்கை கொட்டி மற்றும் இப்போது நான் குறிப்பிட போகும் பாடல்.

சூழ்நிலை,மாறுவேடம் எல்லாம் வழக்கம் போலவே. எம்.எஸ்.வீ இணைப்பு கூத்து டப்பாங்குத்து,மேற்கத்திய இணைப்பிசை அப்பப்பா என்ன அருமை. டி.எம்.எஸ் குரல்,சம்பத்த பட்ட நாயகி நாயகர் புரிதல், சுறு சுறுப்பு, நடன பாங்கு,நளினம் அனைத்தும் பாடலுடன் இழையும். கிளாஸ் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு ஈர்ப்பு இந்த பாடலின் மீது. அதிகப்ரசங்கி தனமான வரிகள் தவிர்த்து கதைக்கு தேவையான பாடல்.(வாலிதானே) இந்த படத்தில் கலைஞர் குறும்பில் காலட்சேபம் மிளிரும். பாருங்கள் ,கேளுங்கள். வாசு உனக்கும் சேர்த்து.

எம்.எஸ்.வீ. இசையில் ஒரு விஷயம் கவனித்தால் ,பாடல்கள் உருமாறும் விதம். பாட்டொன்று கேட்டேன் பாசமலர் கிளாசிக் பாடலின் அடிநாதத்தில் ,அவர் இந்த ஜனரஞ்சகம் கொண்டு வந்திருக்கும் அதிசயம் விளங்கும்.

https://www.youtube.com/watch?v=4A0-Qg6YSLw

Gopal.s
9th August 2016, 11:06 AM
மறைந்த முன்னாள் கவர்ச்சி புயல் ஜோதிலட்சுமி அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அநுதாபங்கள் .

எங்கள் ஆஸ்தான கவர்ச்சி நடிகைகளான சகுந்தலா,விஜயலலிதாவை விட எங்களுக்கு பிரியமானவர்கள் ஜோதிலட்சுமி, ஆலம் ,விஜயஸ்ரீ,ஜெயக்குமாரி,ஜெயமாலினி ஆகியோரே. இங்கு ஜோதிலக்ஷ்மியை கவுரவிக்கும் வகையில் ஒரு எதிரொலி பாடல்.மற்றோருக்கும் ஒவ்வொரு பாடல் என் பிடித்தம்.

https://www.youtube.com/watch?v=N-YIQUgc0HQ

ஆலம் ,காஞ்சனா.

https://www.youtube.com/watch?v=osl4PNU_-lg

விஜயஸ்ரீ

https://www.youtube.com/watch?v=H8VkUxkMu8c

ஆலம்

https://www.youtube.com/watch?v=HKmHCXrEzlQ

ஜெய்குமாரி

https://www.youtube.com/watch?v=gyd4KUUjE70

ஜெயமாலினி

https://www.youtube.com/watch?v=gUqH2UkZNfc

Gopal.s
10th August 2016, 10:51 AM
பஞ்சு அருணாச்சலம் , மறைவு நமக்கு அதிர்ச்சி தரும் ஒன்று. இளையராஜா என்ற பொக்கிஷம் நமக்கு கிடைக்க காரணகர்த்தா., 1976இல் அன்னக்கிளி என்ற திருப்பு முனை படம் (16 வயதினிலே படத்திற்கு முன்பே வந்த trend setter )கிராமிய மணத்துடன், வெளிப்புற படப்பிடிப்பு எல்லாவற்றிலும் புதுமை விருந்தானது . மருத்துவச்சி என்ற செல்வராஜ் (முதல் மரியாதை) கதையே அன்னக்கிளி ஆனது.

கண்ணதாசனுக்கு உறவினர். பல்முனை வித்தகர். ரஜினி,கமல் இவர்களை வியாபார ரீதியாக வளர படிக்கல்லாக இருந்தவர்.

நடிகர்திலகத்தின் ரத்த திலகம் தயாரிப்பாளராக இவர் பெயர் இடம் பெற்ற நினைவு. அவன்தான் மனிதன்,கவரிமான் வெற்றிக்கு ஒருவன்,வாழ்க்கை என்ற படங்களுக்கு வசனகர்த்தா.

இவருடைய படங்களில் என்னை பெரிதும் கவர்ந்த படம் "அவர் எனக்கே சொந்தம்". இதில் வரும் ஒரு வீடு இரு உள்ளம் எனக்கு பிடித்த பாடலும் கூட.

பல கதைகளை உரு தெரியாமல் சிதைத்து திரைக்கதை அமைத்தாலும் (மகா கொடுமை காயத்ரி,இது எப்படி இருக்கு ,பிரியா,) வெற்றி பெற வைத்தவர்.

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

https://www.youtube.com/watch?v=kDLjdJ2we5c

Gopal.s
11th August 2016, 09:48 AM
உலகம் இவ்வளவுதான்(1969) என்று ஒரு படம். செம நாட் . ஒரு வரி கதை சொன்னால் துள்ளியெழ வைக்கும். ஒருவன் பெரியப்பாவுக்கு
(கெட்டவர்) கொடுத்த வாக்கு படி நல்லவனாகவும், அப்பாவுக்கு (நல்லவர்)கொடுத்த வாக்கு படி கெட்டவனாகவும் இருக்க வேண்டிய நிர்பந்தம். கிட்டத்தட்ட எங்கள் தங்க ராஜா, அந்நியன் அளவு வர வேண்டிய நாட் . குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் நாகேஷ்(ஹீரோ),சுப்பு ஆறுமுகம் (கதை-வசனம்),வேதாந்தம் ராகவையா (இயக்குனர்) கையில் மாட்டி சீரழிஞ்சு சிரிப்பாய் சிரித்தது.
சர்வர் சுந்தரம்,நீர்க்குமிழி,எதிர்நீச்சல் ,பனமாபாசமா படங்களின் வெற்றி நாகேஷை போட்டு ஹீரோவாக்கும் அசட்டு துணிச்சலை வேதாந்தம் ராகவையா, திருமலை மகாலிங்கம் ஆகியோருக்கு தந்ததால் , உலகம் இவ்வளவுதான்,சோப்பு சீப்பு கண்ணாடி போன்ற படங்கள். நடிகர்திலகத்தின் பாடும் குரலாய் உச்சத்தில் மிளிர்ந்த டி.எம் .எஸ், ங்கே என்று குரலை மாற்றி நாகேஷுக்கு பாட வேண்டிய கேவலம்.அவலம்.

உலகம் இவ்வளவுதான் படத்தின் கூட்டல் அம்சங்கள் ராஜஸ்ரீ,விஜயஸ்ரீ (வீணடிக்க படுவார்கள்), வேதாவின் இசை. ஒரு தத்துவ பாடல்(காலம் போற), ஒரு இரட்டை அர்த்த பாடல்(மாம்பழம் வாங்குங்க )இலந்தை பயம்,ஏழு வயசிலே இளநி பாணி. சென்சார் இருப்பது ரெண்டுதானுங்கவை படத்தில் நாலாக்கி , ராஜஸ்ரீயின் மாம்பழத்தை மாட்டின் மாம்பழம் ஆக்கினர். ,ஒரு படு ஜாலி வெஸ்டர்ன் (இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்), ஒரு குத்து (ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு).அப்போதெல்லாம் சோவுக்கும் பாடல் கொடுத்து விடுவார்கள். சோவும் வீணாக்கி தொலைவார்.(வானும் நிலமும் வீடு,ஊத்தி கொடுத்தாண்டி) வா வாத்யாரே விதி விலக்கு.

பாருங்களேன் எவ்வளவு ஜாலி இந்த உலகம் இவ்வளவுதான்.

https://www.youtube.com/watch?v=1z7c-hfeneM

Gopal.s
11th August 2016, 11:38 AM
தங்கை.

நடிகர்திலகத்தின் திருப்புமுனை படம். அவரை C centre superstar ஆக்கிய படம்.

புதிய பறவை போல Duets கிடையாது. எல்லாமே solo பாடல்கள்தான்.

ஆனால் பாடல்களுக்கான leads பிரமாதமாக இருக்கும்.(Hats off டு திரிலோக் team )

கேட்டவரெல்லாம்- பாட சொல்லி எல்லோரையும் கேட்ட பிறகு ,ஒன்றிலிருந்து பத்து idea சொல்லி அவர் NT பேரிலே வந்து.....

https://www.youtube.com/watch?v=qiHOx9uIhlQ

இனியது- காரில் ரேடியோ திருப்ப அது உப்பு ,புளி ,மிளகாய் விலைகளை பட்டியலிட ,சூழ்நிலை இறுக்கத்தை மறந்து சிரிப்பை கட்டுபடுத்தி ,மேஜர் உடன் உரையாடல் தொடர்வார் பாருங்கள் ,ஏன் இவரை தினமும் துதிக்கிறோம் என்று புரியும்.கட்டாயமாக
காரிலிருந்து இறக்கி விட பட்டதும் இந்த பாடல்....


https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

சுகம் சுகம்- கே.ஆர்.வீ , NT இடம் அவர் நிலையை கேட்க,வாக்குவாதம் முற்றி அவர் அறைந்து விட்டு நடக்க ஆரம்பிக்க இந்த பாடல்.(சிவாஜி-கே.ஆர்.வீ pair நன்றாக இருக்கும்)

https://www.youtube.com/watch?v=LR3Rl5P1Zro

நினைத்தேன் உன்னை- வில்லன்களின் பிளான். காஞ்சனாவின் சிவாஜி காதலினால் அவரை தப்பிக்க வைக்க என்று இறுக்கமான சூழல். சிவாஜி படு rugged handsome ஆக தெரிவார்.

வீடியோ காணோம்.

rajraj
12th August 2016, 01:16 AM
From Sivakami

arputha leelaigaLai yaar arivaar......


http://www.youtube.com/watch?v=C2rypZW8Rp0

raagadevan
14th August 2016, 01:44 PM
RIP...

Lyricist Na Muthukumar passes away

http://www.thehindu.com/entertainment/lyricist-na-muthukumar-passes-away/article8988360.ece?homepage=true

He won the National Award for these songs:

https://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw

https://www.youtube.com/watch?v=E7y9H-Rit6o

chinnakkannan
14th August 2016, 03:57 PM
நா.முத்துக்குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..மிக வருத்தமாக இருக்கிறது.. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..

rajraj
15th August 2016, 05:44 AM
Celebrate with this ong from Naam Iruvar (1947)


aaduvome paLLu paaduvome........

http://www.youtube.com/watch?v=RaiiUr0v5UU

-----------------------------------------------------------



Muthukumar: May his soul rest in peace.

Gopal.s
15th August 2016, 08:42 AM
நா.முத்துக்குமாரின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். நம்முடைய இன்றைய கலை இலக்கிய சூழ்நிலை ,நம்மிடையே இன்னொரு கம்பன்,பாரதி,கண்ணதாசன்,வைரமுத்து தோன்ற அனுமதிக்காதெனினும் , தாயை சிறு வயதில் இழந்து,தந்தையின் நூலகத்தில் தவழ்ந்து,ஓரளவு இலக்கிய பரிச்சயத்துடன், தன் முனைப்பில் முன்னேறிய முத்துக்குமார் ,தன்னுடைய தவறான பழக்க வழக்கங்களால் அற்ப ஆயுளில் தன்னுடைய தொழிலில் மேலும் உன்னதம் தொடும் வாய்ப்பை இழந்துள்ளார். ஓரளவு நல்ல கவிதைகளுக்கு முயன்றுள்ளார்.

ஆழ்ந்த வருத்தங்கள்.

rajraj
17th August 2016, 07:24 AM
From Motor Sundaram PiLLai(1966)

maname muruganin mayil vaahanam..........

http://www.youtube.com/watch?v=-uKUXueJYDc

rajraj
23rd August 2016, 02:32 AM
From Sakunthalai (1940)

engum nirai naadha brahmam.......

http://www.youtube.com/watch?v=aNcfPoTj1wQ

Gopal.s
25th August 2016, 09:10 AM
திரி நண்பர்களுக்கு கிருஷ்ணன் ஜெயந்தி வாழ்த்துக்கள்.

https://www.youtube.com/watch?v=tDU7NB440bs

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

rajraj
30th August 2016, 07:34 AM
From koodi vaazhndhaal kodi nanmai

pathumaithano..........

http://www.youtube.com/watch?v=bzbXItKaMYc


Original Hindi tune from New Delhi


nakhrewali.........


http://www.youtube.com/watch?v=DmHHx1JZ6pM

Gopal.s
31st August 2016, 08:43 AM
வரப்பிரசாதம் -1976

https://www.youtube.com/watch?v=fEXasWd3ol8

ரவியின் பிற்கால படங்களில் குறிப்பிட பட வேண்டிய படங்களில் ஒன்று. மாதங்கன் (காலம் வெல்லும் புகழ்) கதை -வசனத்தில் ,கே.சங்கரின் தம்பி கே.நாராயணன் இயக்கிய வெற்றி படைப்பு. ஜெயசித்ரா ஜோடியாக, விஜயகுமார் துணை நாயனாக நடித்தது.கோவர்தன் இசையில்(இளையராஜா துணை) கங்கை நதியோரம் மிக மிக பிரபலம்.

ஒரு குடும்ப பொழுது போக்கு திரில்லர் வகை விறுவிறுப்பான படைப்பு. ஒரு அசம்பாவித கொலையில் தன்னையும் ,தன்னை சார்ந்தவர்களையும் காக்க ,தன் நண்பன் சந்தர்ப்ப வசத்தால் மாட்டி கொண்டும் அவனை காக்க துணை போகாத நண்பனின் காதலி,பழி சுமந்து சிறையில் இருந்து தப்பிக்கும் நண்பனுக்கே விதிவசத்தால் மனைவியாகி (ஜட்ஜ் பெண் ),பழியை துடைத்து ,உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கதை.

ரவியை பற்றி சொல்லவே வேண்டாம். அமைதியான,இதமான,அளவான நடிப்பு. சற்றே முதிர்ந்த ,அழகிய தோற்றம் ,கனிந்த நடிப்பு திறனுடன், ஜெயசித்ரா போன்ற நல்ல நடிகையின் துணையுடன் நமக்கு full meal கிடைக்கும்.

மறைந்து வாழும் ,சந்தர்ப்ப வசத்தால் கணவனாகி விட்ட ,ரவியை காண வரும் ஜெயசித்ரா ,விரக்தியுடன் விலகும் கணவனை,தன்னுடைய உண்மை அன்பையும்,தன்னுடைய இறுக்கமான உணர்ச்சியையும் உணர்த்தி,கானகத்தில் இணையும் ஜோடிகளின் சோக-சுக கீதம் கங்கை நதியோரம். அற்புத சூழ்நிலை பாடல் மற்றும் இதமான ஜோடியின் நடிப்பு.

https://www.youtube.com/watch?v=vdy6TG6QSP0

Gopal.s
7th September 2016, 08:48 AM
மஞ்சள் குங்குமம்.-1973

ஒரு தரமான படம்.(மூலம் மலையாளம்) ரவி-ஷீலா தம்பதியினரின் சொந்த தயாரிப்பு.

"புகுந்த வீடு "புகழ் பட்டு (பட்டாபிராமன்)கிருஷ்ணன்-பஞ்சுவின் உறவினர் இயக்கம் ,சங்கர்-கணேஷ் இசையில் ரவி-ஷீலாவின் தரமான நடிப்பு இவை இருந்தும் பழைய மலையாள வாசனையால், குலவிளக்கு போலவே படம் கொஞ்சம் எடுபடாமல் போனது.

இன்று ஞாபக மிச்சமாக டி.எம்.எஸ் இந்த கோமாளி கட்டி வச்ச பாடலும்(ரவியின் trade mark அட்டகாச நடனம்),எஸ்.பீ.பீயின் என் காதல் கண்மணி (ஹீரோ செம ரொமான்டிக் மூட்,ஹீரோயின் வியாதி தீவிரத்தால் பாதி சாவில்) என்ற வித்தியாச களம் .

https://www.youtube.com/watch?v=TaYnSYKvYdc

https://www.youtube.com/watch?v=iGDLklzLT_Y

rajraj
7th September 2016, 09:51 PM
From Thaai ULLam(1952)

konjum puraave.........


http://www.youtube.com/watch?v=Z2daStyRpyY


Hindi tune from Nau Jawaan(1951)

thandi hawaaein.............


http://www.youtube.com/watch?v=I40I7wRYOJo

raagadevan
10th September 2016, 12:02 PM
Song: gOruvanka vaalagaane...
Movie: Gandeevam (1994)
Story/Screenplay/Direction: Priyadarshan
Music: M.M. Keeravani
Singers: S.P. Balasubrahmanyam, M.G. Sreekumar & Anuradha Sriram
Featuring: Akkineni Nageswara Rao & Mohanlal

https://www.youtube.com/watch?v=m4SHOnwlTJw&list=PLXUn1OZuy3OngSzuvBVNmEv6zSSt85ITP

rajraj
14th September 2016, 07:38 AM
ONam song from Michael Madana Kamarajan

sundhari neeyum sundharan gnaanum..........

http://www.youtube.com/watch?v=5jPmr1KaRLw

rajraj
16th September 2016, 07:31 AM
In CNAs Memory here is a song from Nallathambi(1949). for which he wrote the dialogue.

vignaanathai vaLarkka poreNdi..............


http://www.youtube.com/watch?v=CtpHv7KtZbA

rajraj
17th September 2016, 07:18 AM
In her memory here is a song she sang in her UN Concert in 1966.

kurai ondrum illai..........


http://www.youtube.com/watch?v=LkIKWN_JpYo






I attended her concert in Chicago in 1966 when I was a student. After the concert she mingled with the students and was kind enough to sign the booklet distributed in the concert. I still have the booklet. :)

rajraj
22nd September 2016, 08:10 AM
From Thirumalai Dheivam

thiruvaruL tharum dheivam thirumalai......


http://www.youtube.com/watch?v=madWI1FH30A

Gopal.s
22nd September 2016, 01:17 PM
பாடுபட்டு முன்னேறிய நடேசனை, போண்டியாக்கிய படம் என் கடமை. தோல்வி படமானாலும் , பாடல்கள் அருமை. அதிலும் குறிப்பாக இந்த பாடல் வித்யாசமான அமைப்பு. ரொம்ப கவனிக்க தரமான நல்ல பாடல். (சௌந்தர்ராஜனின் சீமாட்டி எனக்கு அறவே பிடிக்காது) யாரது யாரது, மீனே மீனே பாடல்களுடன் இரவினிலே பாடலும் அருமை.

https://www.youtube.com/watch?v=CZQwiqKUhX4

rajraj
26th September 2016, 07:49 AM
From Jimbo, Tamil dubbed version of Zimbo(Hindi)(1958)

nam aasai endra nal roja malar muLLindri vaaraadhe.......

http://www.youtube.com/watch?v=75xnJ-q1huM


From the Hindi original Zimbo

ye mana dil jise dhoonde.........

http://www.youtube.com/watch?v=MLcZc1wc4Gs

rajraj
4th October 2016, 06:50 AM
In his memory a song from Nam Iruvar

mahaan Gandhi mahaan


http://www.youtube.com/watch?v=k9Hfx1MNO9U

raagadevan
8th October 2016, 08:54 PM
Karaharapriya is my most favorite raagam, but Hamsadhwani is a close second.
I will be posting a few movie songs in Hamsadhwani in the next several weeks.
Here is an introduction to the raagam:

https://www.youtube.com/watch?v=XY-alYrWbqc

The first song I want to post is a duet composed by Salilda, sung by Manna Dey
and Lata Mangheshkar for the Hindi movie PARIVAAR...

Hamsadhwani #1:

https://www.youtube.com/watch?v=4jWb_pdmRqI

rajraj
11th October 2016, 09:54 AM
From kalyaNam paNNi paar
................ j j

yaaro yaaro...........


http://www.youtube.com/watch?v=4gHHCt5Yftc


From pelli chesi choodu (Telugu)

yevaro yevaro........

http://www.youtube.com/watch?v=_Yg9_puEP5M

rajraj
18th October 2016, 04:23 AM
In kaNNadasan's memory

paramasivan kazhuthil irundhu paambu kettadhu.....

http://www.youtube.com/watch?v=u2uTvseL6Rw

raagadevan
22nd October 2016, 10:00 AM
Hamsadhwani #2:

"உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது..."

https://www.youtube.com/watch?v=152LpHSXBr8

Chithra/Bhardwaj/Ajith & Shalini

rajraj
27th October 2016, 02:57 AM
From Samsaram (1948)

samsaram samsaram sakala dharma saaram........

http://www.youtube.com/watch?v=87aTACl1iUw


From the Hindi remake, Sansar(1951)

ye sansar ye sansar.......

http://www.youtube.com/watch?v=ZFCr4gynM9g

raagadevan
31st October 2016, 09:53 AM
Hamsadhwani #3:

"anuraagamE anuraagamE madhura madhuramaam anuraagamE..."

Film : Hello Darling (1975)
Lyrics : Vayalar Ramavarma
Music : M.K. Arjunan
Singer : K. J. Yesudas

https://www.youtube.com/watch?v=nX6hj9bxP-o

rajraj
7th November 2016, 06:56 AM
From vedan kaNNappa(1955)

sivane endravudan..........


http://www.youtube.com/watch?v=CcrJsdwK52M

raagadevan
13th November 2016, 10:13 AM
Legendary Canadian poet/songwriter/composer/singer Leonard Cohen is no more; RIP...

Here is the movie version of one of his classics, "Dance me to the end of love...",
from SCENT OF A WOMAN, featuring Al Pacino:

https://www.youtube.com/watch?v=IEVow6kr5nI

Cohen live, singing the same song:

https://www.youtube.com/watch?v=Ki9xcDs9jRk

rajraj
19th November 2016, 08:51 AM
From 4 Students

lajjaavathiye ennai asathura rathiye............

http://www.youtube.com/watch?v=J0P9vngzi70




From the Malayalam original For the people(2004)

lajjaavathiye...............




http://www.youtube.com/watch?v=sKc9dOcbdV4




From the Telugu remake, Yuvasena

Malleswarive...........

http://www.youtube.com/watch?v=eroNF85XhiY

rajraj
22nd November 2016, 10:34 PM
May his soul rest in peace.

In his memory here is a song from Kavikkuyil(1977):

chinnakkaNNan azhaikkiraan........


http://www.youtube.com/watch?v=wtfhzlOMi3M

Gopal.s
28th November 2016, 12:30 PM
அந்த இளம் ஜோடி எதிர்பாராத விதமாக மாலை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட கணவன்-மனைவியாகி விட்ட நிலையில் ,தனியறையில்.
பக்கத்து இலையில் பாயசம் ஏராளம் என்பது போல மற்றுமோர் இளம்ஜோடியின் கொஞ்சல் மறு அறையில்.

அந்த இளம் விமானி இவற்றில் தூண்ட பட்டு தன் காதலியை புதிதாக பார்க்கிறான்.அந்த பார்வை என்ன சொல்கிறது? அவள் அழகை ரசிக்கிறதா? தனக்கு கிடைத்த புதிய உரிமையில் அழகை விழுங்கி களிக்கிறதா? மெல்லிய அழைப்பு விடுகிறதா? தன் புணர்ச்சி வேட்கையை பறை சாற்றுகிறதா?அந்த காதலியோ ,இணங்கும் ஆசையிலா, புதிய உணர்வின் ,சூழ்நிலையின் பயம் கலந்த நாணமா,விழைவுக்கு பதில் விழைவா,அழைப்பிற்கு தூது விடும் கண்களா?

எழும் நாயகன் தன்னுடைய ஆண்மையின் எழுச்சியையும் குறிப்பால் உணர்த்தி கைகளில் முத்தமிட ,ஏற்றாலும் சிறிதே விலகும் பயம் கலந்த நாணம்.எத்தனை அழகு கொட்டி கிடக்குது,எப்படி மனதை தட்டி பறிக்குது ,அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது ஆனாலும் அச்சம்தான் தடுக்குது என்ற வரிகள் மௌனமான காதலர்களின் உடன் மொழியில் பாவத்தில் ,கண்களின் காவிய மொழியில் ,அனுசரணையான இணைவு நடிப்பில் அப்படியே நமக்கு இந்த காட்சியின் மிச்சத்தை கோடிகாட்டும்.

முதல் அனுபவம் பெற்றவர்களுக்கு புரியும். காதலர்கள் முதலில்
தொடு உணர்வு,தடவல், சிறிதே முன்னேறி முத்த பரிமாற்றம், இவற்றில் தயக்கம்,தடுமாற்றம்,சிறிதே awkwardness கலந்த அவசரம் பிறகு இணையை தூண்டும் காம இச்சை வெளியிடும் அழுத்தமான பிடிப்புகள்,ஆவேசம், பின் காம கட்டிப்பிடித்தல் ,பின்புறமாக கட்டி முத்தமிடும் முயல்வு ,காதலி காதலன் கையை விரும் இடத்திற்கு நகர்த்தல்,கடைசியில் உணர்ச்சி வயப்பட்டு புணர்ச்சிக்கு இயைதல் என்றுதான் போகும். அதை அப்படியே இந்த காதலர்கள் ,பல காதல்களுக்கு முன்னோடியான பாலபாடமாக்குவார்கள்.

அவனோ ,அவளை கால் முதல் தலைவரை தொட்டு தடவி, அவளின் நாணி விலகும் முயற்சியால் சிறிதே குறி தவறுவான்.தினம் வந்து கொஞ்சும் மலர்கொண்ட மஞ்சம் இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும் ,என்ற மஞ்சத்தில் பின்புற அணைப்பில் இதழை கேட்பான். இருவருக்குமே தயக்கம். கைகளை பிணைக்கும் போதும் இசைவின்மை தெரியும் சிறிதே முறுக்குவது போல.

பிறகு முகத்தை கைகளில் ஏந்தி முத்த பரிமாறல் .coat stand அருகில் எதிர்பார்ப்போடு நிற்கும் காதலியை பதமாக முத்தமிடும் முயல்வு. சிறிதே துணிவுடன் அவள் இடையின் முற்புறத்தில் விழைவின் இறுக்கத்தை விரலில் தேங்கிய தேய்த்தணைப்பு,திரைக்கு ஓடும் காதலியை ,தன்னுடைய வல்லணைப்பால் இடையின் பின்புறத்தின் கீழே இறுக்கி தன்னுடன் பிணக்கும் இறுக்கம்.தயங்கி விலகும் காதலியின் மார்பை தூண்டும் முயல்வு. பிறகு இறுக்கி அணைத்து ஆவேச முத்தம்.உதட்டு கனிக்குள் இருக்கும் சிவப்பு ,விழிக்குள் நடக்கும் விருந்தை படைக்கும். செந்தாழம்பூ மலரவும் ,சிந்தாமல் தேன் பருகவும் ஒரே சுகம் தினம் தினம்.

மஞ்சத்தில் சரியும் அவளோ ,இனி என்னால் விலக முடியாது என்று சரணாகதி பார்வை பார்க்க ,அவனோ படுக்கையில் சரியும் அவளை ஆவேச பின்புற அணைப்பில் இளக்குவான்.தலையணையை மார்புக்கு காவலாகவோ ,அல்லது இதமாகவோ அணைக்கும் அவளை, நானிருக்க இது ஏன் என்று தலையணை பிரித்து, நாயகியே அவன் கைகளை மார்புக்கு அணையாக கொண்டு செல்லும் நிலைக்கு சென்று ,இறுதி உணர்ச்சி வச பட்ட ஆவேச அணைப்பில் நெருப்பு பற்றி கொழுந்து விட்டு எரிந்து ,காதலர்களின் புணர்ச்சி என்ற காம காவியம் இறுதி காணும்.அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும் ......


ஆனந்தோ காமம் கரை கண்டவன். அவன் நினைத்தால் நொடியில் அரங்கேற்றி விடுவான் ஆசையை,ஆனாலும் அதற்கு அணை போட்டு விழைவை சொல்வான். இந்த அசோக் அனுபவமற்றவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலியுடன் உணர்ச்சி வச பட்டு காம சோதனையின் துடிப்பான பயத்துடன் அணையை உடைத்து காமம் வெல்வான்.

இது இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சிவாஜியும் ,வாணிஸ்ரீயும் நடித்து காட்டும் விந்தையை ரசியுங்கள். மெல்லிசை மன்னர் காட்சிக்குரிய தயக்கம், தூண்டல் ,அவசரம், ஆவேசம் இவற்றை தனது பாடல் மற்றும் பின்னணியில் தரும் அதிசயம், எஸ்.பீ.பீயின் இச்சை நிறைந்த இளம் குரல் என்று என் மதிப்பில் ரூப்பு தெரா வை விட இந்த சூழ்நிலைக்கு மேலான பாடல் எத்தனை அழகே.

https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA

Gopal.s
28th November 2016, 12:31 PM
அக நானூறு என்பது தமிழில் அக நாநூற்றொன்று என்று மாறிய அதிசயம் இதே மாதம் 15 ,53 வருடங்கள் முன் (15.11.1963)நிகழ்ந்தேறியது.மகளிருக்கு காமத்தை வெளியிடும் சுதந்திரம்,உடன் போக்கு என்று இன்று பேசும் பெண் உரிமைகளை சங்க காலத்திலேயே வழங்கிய தமிழ் சமூகமாயிற்றே?

ஒரு பெண்ணே தன்னுடைய விழைவை நாணம் துறந்து வெளியிட்டு ,நாணத்தை அழைப்பின் தூண்டிலாய் மாற்றிய அதிசயம் கண்டோம்.
61 முதல் 65 வரை காதல் ரசாயனத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த ஜோடியின் புணர்ச்சி விழைவு உணர்ச்சி பண் என்றால் நாங்கள் மெய் மட்டுமா மறப்போம்?அப்போது தமிழின் செயற்கை பெருந்திணை காதல் பொய்களையும் சேர்த்தே மறந்து துறந்தோம்.

மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்க (???)விரும்பும் ஏந்திழையாளின் அழைக்கும் விழிகள் தூக்கத்தின் உண்மை அர்த்தத்தை கூறி விடாதா? மறுநாள் எழும் விருப்பம் காலையல்ல?சேவல் குரலுக்கு தடை பின் மறுநாளும் ,மருகி நாட்களாகி விடுமே?இன்பத்தின் கதையை முடிக்காமல்,சேர்ந்தவர் உயிரும் பிரியாமல் இருக்க நாயகி முதல் மாதிரியாக தருவது தன்னுடைய விரல்களை அவன் இதழுக்கு காணிக்கையாக.அவன் அதை மென்மையான முத்தத்தால் அங்கீகரித்தாலும் ,அவனுக்கு புரியாதா அசல்கள் ,முன் இந்த மாதிரி எம்மாத்திரம் என்று?

விழிகள் கலக்கும் போது ,காதலன் கண்கள் காதலை வெளியிட,காதலியோ பொய் நாணத்தால் அதை மேலே இழுக்கும் முயல்வை காட்டுவார்.சிறிதே விலகி ஓடும் காதலி ,அவனால் இழுபட்டு இணைவின் சுகத்தின் எதிர்பார்ப்பை காட்டும் அதிசயம் நாயகியின் பாவத்தால்,கண்களால்,உடல்மொழியால் நமக்கே விளக்கி விடுமே? இரண்டற ஓருயிராக கலக்க விரும்பும் நாயகனுக்கா விளங்காது? இந்த ஓட்டம் இன்ப ஓட்டம் ஆயிற்றே?காமம் என்ற புத்தகத்தின் பக்கங்களை விட முன்னுரை பக்கங்கள் அதிகம் வேண்டும் என காம சாத்திரங்கள் உரைக்கிறதே?
முன்னுரைத்து காதலால் காமம் தூண்டி உயிரை இணைத்து காண வேண்டிய உன்னத விளையாட்டாயிற்றே?

இரவே இரவே விடியாதே ,இன்பத்தின் கதையை முடிக்காதே,சேவல் குரலே கூவாதே ,சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே என்று நாயகி அபிநயத்தால் ஆணையிடும் அழகில் இரவும்,சேவலும் கேட்டு விட்டால் நம் கதி?ஆனால் அந்த அழகுக்கு இரண்டும் இசையும் வாய்ப்பு அதிகமே.

இரண்டு உள்ளங்களும் வதை படும் உருண்டு விளையாடும்,நாயகரும் ஓடியே தொடர்வார்?பின் பேரின்பம் என்பது சும்மாவா கிடைக்கும்? உன்மத்தமான துரத்தல் விளையாடல். (இன்பத்தை துறக்காமல் துய்த்து கொண்டேயிருக்க)

வாயின் சிவப்பு விழியிலே,மலர்கண் வெளுப்பு இதழிலே என்பதற்கு இந்த நாயகி வண்ணங்களின் துணையின்றியே விளக்கமளித்து ,உள்ளத்தில் வண்ணம் கூட்டும் அதிசயத்தை காட்சியாக பாருங்கள்.

கடைசி இதமான அணைப்பில் காதலும் காமமும் இணையும் பாலத்தை கடந்து செல்லும் அழகு.(erotic )

காலடி தடங்கள் மட்டுமா அடையாளம் அழிந்து கலக்கின்றன ?செம்புல பெயனீர் போல அன்புடை உடல்களும் தான் கடந்தனவே? கலந்தனவே???நினைப்பின் தடத்தை விட்டு செல்லும் நம் மனதில் , அகழியில் வீசிய கல் அலைவுகளை விட்டு செல்வது போல.இவ்வளவும் நடப்பது அன்னை இல்லத்திலேயே.

சில பாடல்கள் மட்டுமே காட்சியுடன் ஒன்றி ,திரை காதலர்கள் உண்மையில் வாழ்வில் இணைகிறார்கள் என்ற பிரமையை ஏற்படுத்தும். அந்த மாதிரி கே.வீ..எம்மின் இரவின் இன்பத்தை கூட்டும் இசையில், கண்ணதாசனின் காம மையில் தோய்த்த எழுத்தில்,சிவாஜியும்-தேவிகாவும் அரங்கேற்றும் கூடல் நாடகம், காட்சி வடிவில்.

https://www.youtube.com/watch?v=w_R5KhMJlzs

Gopal.s
28th November 2016, 12:37 PM
A rare and unique Song by BalaMurali Krishna from SubhaDhinam. Probably first in Reeti Gowlai much ahead and better than chinna kannan. It is originally tuned by T.G.Lingappa but came in the name of K.V.Mahadevan ,MD for Subha Dhinam.

https://www.youtube.com/watch?v=fWelPVcwD9o

sivaa
30th November 2016, 11:53 PM
http://oi68.tinypic.com/osrfvm.jpg

கண்ணாம்பாள் ,எம் ஜீ ஆர்,பீ யூ சின்னப்பா
படம் தெரியவில்லை

chinnakkannan
9th December 2016, 04:42 PM
முக நூலில் அன்று எழுதியது :

**

”ஏதோ எனக்குத் தெரிஞ்சதை வாசிச்சேன் பாஸ்கரன்..”

“ம்ம் அதையும் பார்த்தேன் நீ அந்த ராகத்துல ஆரம்பிச்சு நடுல இன்னொரு ராகத்தையும் கலந்தே”
“ஓ சரியாச் சொல்றேளே..உங்களுக்கு வீணை வாசிக்கத் தெரியுமா..”

“ம்..கொடு”

“ஆஹா ரொம்ப நல்லா வாசிக்கறீஙக் பாஸ்கரன்..எப்ப கத்துக்கிட்டீஙக..”

“ஒரு வீணைக் கச்சேரிக்குப் போனேன். அங்கே வீணைச்சத்த்துக்கு மேல பஞ்ச் அடிக்கற சத்தம் தான் எனக்கு ஜாஸ்தியா வந்த்து..எழுந்திருச்சு கேட்டே விட்டேன்.. என்னய்யா வாசிக்கற நீன்னு..அதுக்கு வித்வான் ஞான சூன்யங்கள்ளாம் கச்சேரிக்கு வரக்கூடாது அப்படின்னார்.. ஞான சூன்யங்கள்ளாம் கச்சேரி மட்டும் பண்ணலாமான்னு கேட்டேன்..அதற்கு அந்த வித்வான் முதல்ல நீ வீணை கத்துண்டு வா.. அப்புறம் அதுக்கு பதில் சொல்றேன்னார்..
அதுக்காகவே தேடிப் பிடிச்சு கத்துண்டு கச்சேரி பண்ணேன்..அதுக்கு அந்த வித்வானும் வந்தார். பலபேர் முன்னிலைல என்கிட்ட நீ ஜெயிச்சுட்டேன்னார்..”

“வாவ் சூப்பர் பாஸ்கரன்”

“இல்லை இவளே..அவருக்கு முன்னால நான் தோத்துட்டேன்..அவருக்கு பலபேர் முன்னிலைல்ல தன்னோட தோல்வியை அக்செப்ட் பண்ணிக்கற தைரியம் இருந்த்து. அதுல இருந்து நான் வீணை வாசிக்கறதையே விட்டுட்டேன்..”
“இப்ப எதுக்காக வாசிச்சீங்க பாஸ்கரன் எனக்காகவா”

“இது நான் தோத்த இடம் இவளே.. நீ சுந்தரத்தைத் தான் காதலிக்கறேன்னு சொன்ன இடம்.. நான் சுந்தரத்துட்ட தோத்த இடம் அதான் வாசிச்சேன்..”
“பாஸ்கரன்..”

*

மேற்கண்ட உரையாடல் இடம்பெற்ற சீரியல் வந்தே மாதரம்.. பாரிஸ்டர் பாஸ்கரனாக சோ. தேவி ல்லிதா ஹீரோயின்..

எப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் காட்சி அது. பாரிஸ்டர் பாஸ்கரனாக.. குடிகார அறிவு ஜீவியாக அற்புதமாக நடித்திருப்பார் சோ.

*

சின்னக்கண்ணனாகிய ஏகலைவனாகிய எனக்குத் தான் எத்தனை துரோணர்கள்.. அதில் நான் கண்டிராத ஆனால் அனுபவித்த எழுத்துக்கள், நடிப்பு, குணம் இவற்றிற்குச் சொந்தக்காரர் சோ.என் மானசீக குரு.எழுத்துக்களில் நகைச்சுவை கலந்து எழுதுவதாகட்டும், சீரியஸான வசனமாகட்டும் ( நான் சமாளிச்சுண்டுட்டேன் ஓய்- சாஸ்திரம் சொன்னதில்லை) அவருக்கிணை அவர் தான்.

வெவ்வேறு தலைவர்களைப் பற்றி எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் தனது ஆஃபீஸ் பற்றியும் அதைப்பற்றிய ஆட்கள் பற்றியும் எழுதியிருப்பார்.. ஹிலாரியஸ்.

வெகு சின்ன வயதில் மதுரை வீட்டிற்கு திலகர் திடலில் நிறைய பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் கூட நான் விரும்பிச் சென்ற ஓரிரண்டு கூட்டங்கள் சோவினுடையவை.. அந்த கணீர்க்குரல்.. நேரில் தொலைவில் பார்த்தாலும் நின்று ஒலிபெருக்கியில் ரசித்துக் கேட்ட்து இன்னும் நினைவில்.

வால்மீகி ராமாயணம் இவர் எழுதிய உரை முழுக்கப் படித்திருக்கிறேன்.என்ன அழகாக எழுதியிருந்தார்.. நடு நடுவில் கம்ப ராமாயணக் கம்பேரிசன்.. மகாபாரதம் பேசுகிறது என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.. படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன்னால் என நினைக்கிறேன்..மனைவியின் ஒன்று விட்ட சகோதரியின் வீட்டிற்குச் சென்றால் இந்த்த் தெருவில் தான் இருக்கிறார் சோ என்றார். நன்றாகத் தெரியுமென்றும் சொன்னார்..பட் இண்ட்ரோ பண்ணுங்க எனக் கேட்காம ல் விட்டுவிட்டேன்.. கொஞ்சம் வெட்கம் தான்..ம்ம் ஐ மிஸ்ட் தட் சான்ஸ்.

இன்னும் இன்னும் நிறைய எழுதலாம் என் குரு நாதர்களில் ஒருவரான சோவைப் பற்றி பின் வருகிறேன்..

அவர் போய்விட்டாரா..யார் சொன்னது..என்னைப் போன்ற ஏகலைவன்களில் நெஞ்சினில் என்றென்றும் உயிர்த்திருப்பார்.
.
மேலே போய் எல்லாரையும் மகிழ்விப்பீர் குருவே..

raagadevan
10th December 2016, 11:07 AM
"நீ வருவாய் என நான் இருந்தேன்..."

Jayachandran / Kalyani Menon / Kannadasan / M.S. Viswanathan / Rajalakshmi, Saritha, and Shankar

https://www.youtube.com/watch?v=LWblg-F5Xnw

https://www.youtube.com/watch?v=UWv56Q0854Y

rajraj
11th December 2016, 11:27 PM
In his memory here is a song from VEdhaLa Ulagam

Theeraadha viLaiyaattu piLLai......


https://www.youtube.com/watch?v=Yo5iKfEThwg

rajraj
25th December 2016, 06:02 AM
Wishing you all a very merry Christmas ! :)


Here is Jose Feliciano wishing you a very merry Christmas:


Feliz Navidad.......

https://www.youtube.com/watch?v=XwRIBpw7EwU

rajraj
31st December 2016, 07:50 AM
From Bagapirivinai

Thazhaiyam poo mudichu....


https://www.youtube.com/watch?v=gkhMbyxVKKc




From kalasi Vunte kaladu sukam,Telugu remake of Bagapirivinai

Mooda banthi poolu..........



https://www.youtube.com/watch?v=oW3TeEYGelk



Happy New Year ! :)

rajraj
14th January 2017, 08:51 AM
A pongal song from kalyaaNikku kalyaaNam (1959)

Thai porandhaal vazhi porakkum...........


https://youtu.be/1Sr5KYLp6Hg

Gopal.s
16th January 2017, 08:10 AM
மறைந்த கலைச்செல்வியும் ,கலையுலக இளவரசன், இளைஞர்களின் கலைநிலவு ரவியும் இணைந்து மோட்டார் சுந்தரம் பிள்ளை முதல், அவளுக்கு ஆயிரம் கண்கள் வரை சுமார் 11 படங்களில் இணை. ரவிக்கு சரியான இணை என்றால் பாரதி, காஞ்சனா தவிர்த்து காலை செல்வி தான். விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடல் எந்த இலக்கணத்திலும் அடங்காது. டி.எம்.எஸ் -சுசீலா பாடிய விதமும் அப்படியே. பின்னணி இடையிசையும் அப்படியே. பொதுவாக காதல் பாடல்கள் உச்ச ஸ்தாயியில் துவங்காது .முழக்க பாடல்களே அவ்வாறு துவங்கும். காதலியை வரணும் வரணும் மகாராணி என்று வரவேற்பு முழக்கம். சுசீலா நடுவில் அஞ்சாதது பெண் என்பது என்பதை இரு வித வேறுபாட்டுடன் பாடி சரணத்திற்கு ஒரு மெருகு கொடுப்பதது அழகு.

ஜெயா ரவியுடன் இணையும் போது ஒரு உண்மையான அழகான இளமையான துடிப்பான இளைஞருடன் சேரும் ஒரு உண்மை ஈடுபாடு முகத்தில் தெரியும்.(இருவரும் ஸ்ரீரங்கம் வைஷ்ணவர்கள் )ரவி தனது ப்ராண்ட்மார்க் சரளத்துடன் அளவான பாடலுக்கேற்ற தளத்தில் தாளத்தில் வேகத்தில் மாயம் செய்ய ,ஜெயாவின் இசைவான தோதான அசைவுகள் அள்ளும்.

இதோ அந்த அற்புத பாடல் உங்கள் பார்வைக்கு (கௌரி கல்யாணம் 1966)

https://www.youtube.com/watch?v=SjTrGjj95YI

Gopal.s
16th January 2017, 08:24 AM
பிரான்சு நாட்டின் ஜாகீருக்கு நம் தமிழர்கள் அனைவரும் கடன் பட்டுள்ளோம். கிட்டத்தட்ட அழிந்து விட்டதென்று நாம் பெருமூச்சு விட்டு கொண்டிருந்த பழைய அபூர்வ தமிழ் பாடல்களை மீட்டெடுத்து ,நம்மை மாணவ பருவத்தின் வாயிலுக்கு அழைத்து செல்லும் இவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பொற்சிலை என்று ஒரு படம். 1968 /1969 இல் ஜெமினி-விஜயகுமாரி ஜோடியில் வெளிவந்த பார்க்க கூடிய படம்.இது கோவர்தன் அவர்களின் அபார இசையால்,பாடல்களால் பெரிதும் ஆவல் கிளறப்பட்டு ,சுமாராக வெற்றி கண்ட படம்.

நானும் வாசுவும் பல முறை ஏங்கி பேசிய பாடல்கள் ,அக்கரையில் அவனிருக்க (சுசீலா),அழகை பாடவந்தேன் (டி.எம்.எஸ்-சுசீலா),நாளை பொழுது உந்தன் (சீர்காழி) ஓம் மகா கணபதி (யேசுதாஸ் ),பட்டு கன்னம் முத்து பந்தல் (ஈஸ்வரி) என்று அதகள பாடல்கள். இது பாடல்களாக மீட்டெடுக்க பட்டாலும், காட்சி வடிவில் மிஞ்சுவது அழகை பாடவந்தேன்.

https://www.youtube.com/watch?v=ufdC38lwPfo

rajraj
17th January 2017, 07:24 AM
In his memory here is a song from " pallaaNdu vaazhga" (1975)

Ondre kulam endru paaduvom......


https://youtu.be/0ilQfNuGmTI

rajeshkrv
19th January 2017, 10:59 PM
https://www.youtube.com/watch?v=PQ3syXj-EvY

https://www.youtube.com/watch?v=NcPlsMemWLw

rajraj
21st January 2017, 07:59 AM
From Senjulakshmi


Paalkadalthanile

https://youtu.be/JfKg1kCo8EI



From the telugu version Senjulakshmi


Paala kadalippai


https://youtu.be/oBQZsprLh3Y

raagadevan
21st January 2017, 10:16 PM
//The song "I did it my way..." is moved to "World Music & Movies" thread.//

vasudevan31355
24th January 2017, 08:40 PM
http://i58.tinypic.com/o0ov20.jpg

அன்பு நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது மய்யம் இப்போது பழையபடி நேரிடையாக ஓப்பன் ஆகிறது. நம் நண்பர்கள் பலர் நேரிடையாக வர இயலாததால் மய்யம் சற்று பொலிவிழந்து காணப்பட்டது. இப்போது நிலைமை சரியாகிவிட்டது போல் தெரிகிறது. வழக்கம் போல பழையபடியே நேராக மய்யத்தில் இணையலாம்.

அனைத்து நண்பர்களும் பழையபடி கலந்து கொண்டு மதுர கானங்களை சிறப்பிக்க வேண்டுகிறேன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

vasudevan31355
24th January 2017, 08:47 PM
நிலைமை சரியாகி விட்டதால் மது அண்ணா! ஜி!, சின்னக் கண்ணன், ராஜ் ராஜ் சார், ராகதேவன் சார், கோபால், ஆதிராம் சார், வினோத் சார், கிருஷ்ணாஜி, முரளி சார், செந்தில்வேல், ரவி சார், மற்றும் பெயர்கள் விடுபட்ட அனைவரும் (மன்னிக்க) மதுர கானங்களில் மீண்டும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

rajeshkrv
24th January 2017, 11:18 PM
நிலைமை சரியாகி விட்டதால் மது அண்ணா! ஜி!, சின்னக் கண்ணன், ராஜ் ராஜ் சார், ராகதேவன் சார், கோபால், ஆதிராம் சார், வினோத் சார், கிருஷ்ணாஜி, முரளி சார், செந்தில்வேல், ரவி சார், மற்றும் பெயர்கள் விடுபட்ட அனைவரும் (மன்னிக்க) மதுர கானங்களில் மீண்டும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

vaanga ji. sowkkiyama

rajraj
26th January 2017, 08:07 AM
From Sri Murugan(1946)

U.R.Jeevarathnam sings

kolam kaN kuLira kaNden.......


https://youtu.be/MOj22YdTI0A