PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14

vasudevan31355
25th April 2016, 10:08 PM
அன்றைய லக்ஸ் சோப் விளம்பரத்தில் ஜொலிக்கும் நடிகை யாரென்று தெரிகிறதா?

https://careershapers.files.wordpress.com/2014/05/jayalalitha.jpg?w=474

vasudevan31355
25th April 2016, 10:12 PM
இது எம்.ஜி.எம் லோகாவுக்காக (Metro-Goldwyn-Mayer) எடுக்கப்பட்ட படமாம். அடேங்கப்ப்பா! அந்த சிங்க உறுமலையும், அதையும் தூக்கிச் சாப்பிடும் சிம்மக்குரலோன் உறுமலையும் பறக்க முடியுமா? அல்லது மறுக்கத்தான் முடியுமா?

https://careershapers.files.wordpress.com/2014/05/mgm_logo.png?w=474

https://careershapers.files.wordpress.com/2014/05/mgm.jpg?w=474&h=329

eehaiupehazij
25th April 2016, 10:27 PM
For Your Lion's share in all threads .... Vasu Sir!

https://www.youtube.com/watch?v=fEmnwUcbf1o

Our NT Lion roared once!!


https://www.youtube.com/watch?v=H6UKp2NpnaA

chinnakkannan
26th April 2016, 01:03 AM
தேவிகாவின் பிறந்த நாளுக்கு வரமுடியாமல் சி.கவிற்கு ஏகப்பட்ட வேலைகள்..ம்ம் தெரியாத பாட்லாம் போடத் தெரியாததனால்..

நம்
கண்கள் செய்த பாவம் காதல் கொண்டது இதில்
கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது பிரிவு என்பது

சுமை தாங்கியில் சோஓஓ கமாய்.. தேவிக்யூட்டி..

https://youtu.be/WLky4knFpf0


கொடைக்கானல் போய்ட்டு வந்தவுடனே இருக்கற்வங்களைச் சூடாக்கணுமா.. நற நற.. (ஹூம் நீங்க நெனைக்கற அர்த்தத்துல இல்லை வாஸ்ஸூ) முற்றிய முகமாமில்லை..

மு.முன்னவுடனே நினைவுக்கு வ்ருவது இந்தக் கதா நாயகி தான்..

அவரும் பாடற பாட்டு நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி... ஒருபாட்டிலேயே கதை சொல்லியிருப்பார் பாக்யராஜ்..


https://youtu.be/0lcsMwTpZyY

நிற்க.. இந்த என் அன்னை செய்த பாவம் பாடல் நினைக்கும் போதெல்லாம் என் கண்கள் செய்த பாவம் உன்னைப்பார்த்தது தான் நினைவுக்கு வரும்..ஜெ தானே..யாருக்கும் வெட்கமில்லை படம் தானே தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை..

chinnakkannan
26th April 2016, 01:09 AM
லக்ஸ் விளம்பரத்துக்கு இந்த சமயத்துல லைக் போடலாமா வேணாமான்னு குழப்பமா இருக்கு..

madhu
26th April 2016, 04:30 AM
ஆஹா... முள்ளுக்கு ரோஜா சொந்தம்.. நல்ல பாடல்களுக்கு நாம் நண்பர்கள் எல்லோருமே சொந்தம்.. இந்தப் பாடலின் வீடியோ ஏறக்குறைய தமிழக அமைச்சர்கள் சிலரின் பதவி போல காணாம்ல் போய் திரும்பி வந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தது.. அதனால்தான் நானே வெட்டி எடுத்து போஸ்ட் செய்திருக்கிறேன். யூடியூப் மகானுபாவர்கள் எத்தனை நாள் அனுமதிப்பார்களோ ? ( கண்ணான கண்ணுறங்கு கட்டழகு பூவுறங்கு பாட்டை சிடி-யிலேயே வெட்டிட்டாங்க )

வாசுஜி.. கொடைக்கானல் சென்று திரும்பி நீங்க குளிர்ச்சியாக போஸ்ட் செஞ்சு சிக்காவை சுடு நெருப்பாக கொதிக்க வச்சிட்டிங்களே ? :எல்.ஓ.எல்.:

பிற்காலப் படங்கள் பலவற்றிலும் பல நடிகைகளும் அப்படித்தான். முகம் முற்றியது போலவே நடிப்பும் முதிர்ந்திருக்கும். பிள்ளைச்செல்வம் படம் நான் டி.வி.யில்தான் பார்த்தேன். ஆனால் ஒரிஜினல் "லாஸ்ட் இன் த டெஸர்ட்" தி.நகர் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்து நாய்க் குட்டியைக் கடிக்க கழுதைப் புலி வரும் காட்சிகளில் உய்ய் உய்ய் என்று கத்தி துரத்தி இருக்கிறேனாக்கும்.

சி.செ.சார்... சுமைதாங்கி, வாழ்க்கைப்படகு இரண்டுமே ஜெமினியின் இதமான நடிப்பால் மனம் தொட்ட படங்கள். வெயில் நேரத்துக்கு பனம் நுங்கு போல பாடல்கள்.

சிக்கா...

உமக்கே உமக்காக... உம் கண்ணிரண்டும் செய்த புண்ணியம்.... ம்ம்... ( பாதிப் பாட்டுக்கு வீடியோ வெள்ளித்திரை காட்டும்.. என்ன செய்வது ? யாருக்கும் வெட்கமில்லை )

https://www.youtube.com/watch?v=xLw5Y60xxzI

RAGHAVENDRA
26th April 2016, 08:20 AM
வாசு, மது, சி.செ., சி.க.
தேவிகா பிறந்த நாளை அமர்க்களமாகக் கொண்டாடி விட்டோம்.. எல்லோருக்கும் நன்றியும் பாராட்டும்.

RAGHAVENDRA
26th April 2016, 08:21 AM
வாசு சார்
பிள்ளைச் செல்வம் படத்திற்கு ஏதோ ஒரு பத்திரிகை எழுதிய விமர்சனம் தொல்லைச் செல்வம்.
ஆனாலும் படம் சென்னை பிளாசாவில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்ற ஊர்கள் தியேட்டர்கள் நிலவரம் தெரியாது.

RAGHAVENDRA
26th April 2016, 08:23 AM
மது சார்
வெகுளிப்பெண் என்றால் முள்ளுக்கு ரோஜாவும் வளையோசையும் தான் நினைவுக்கு வரும். கண்ணான கண்ணுறங்கு பாடலை அநியாயத்திற்கு டிவிடியில் வெட்டி விட்டார்கள். அல்லது அவர்களுக்குக் கிடைத்த பிரதியே அப்படியோ..அருமையான பாடல். நிர்மலாவை குழந்தை போல் மடியில் வைத்து தேவிகா தூங்க வைப்பார்.
பாட்டை ரேடியோவில் கேட்டால் தூங்கலாம்.

vasudevan31355
26th April 2016, 08:26 AM
கொடைக்கானல் கொண்டாட்டத்திற்கு வாழ்த்தி அனுப்பிய கொடையுள்ளங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.

நன்றாக என்ஜாய் செய்துவிட்டு வந்தோம். வழக்கமாக கொடைக்கானல் சர்ச் அழ வைத்தது. தேவனைத் தன்னைப் பார்க்கும்படி வேண்டிய தெய்வத்தின் நினைப்பு வாட்டி வதைத்தது.

மதுண்ணா சொன்னபடி இடங்களைப் பார்த்தோம். பேரிஜம் ஏரிக்கு பெர்மிஷன் வாங்கவேண்டுமாம். ஆனால் பூம்பாறை ட்ரிப்தான் டாப். கொடையிலிருந்து பூம்பாறை செல்லும் அந்த 14 கிலோமீட்டர் பிரயாணமும் சொர்க்கபுரிதான். பள்ளத்தில் இறங்கி மேட்டில் பிரம்மிப்பாக காட்சி தரும் அடர்ந்த ஆள் அரவமில்லாத பைன் மரக்காடுகள் ஃபைன். மற்றபடி கோகர்ஸ் வாக், பில்லர் ராக், சூசைட் பாயின்ட், பைன் பாரஸ்ட், குணா பாறை என்று எல்லாமே அருமை. கிளைமேட் அருமைதான். அப்படியும் இரவில் ஒரு சமயம் ரூமில் புழுக்கம். போட்டிங் கொஞ்சம் போர்தான்.

வரும்போது நீண்டநாளாக உண்ண வேண்டுமென்று நினைத்திருந்த ஒரிஜினல் 'திண்டுக்கல் தலைபாக்கட்டு' ஆசை நிறைவேறியது.வெகு சுவை. ஆனால் ரொம்ப காஸ்ட்.........லி. பர்ஸ் இளைத்துவிட்டது. அரை பிளேட் 210 ரூவா. அதுவே கால் வயிற்றுக்கு காணாது. அதனால்தான் ஒரு பய இல்லை கடையிலே. ஆதிராம் சார் அட்வைஸ் பண்ணது போல இதுமட்டுமே வெட்டிச்(ஆடு)செலவு.

ஆதிராம் சார் வந்தால் அவரோடு சாத்தனூர் பயணம் மேற்கொள்ள ரெடி. நம் வினோத் சார் கூட போன் செய்து 'எப்போ... எப்போ' என்று ஆவலாக விசாரித்து தானும் வருவதாக கூறியுள்ளார். ஏனென்றால் அவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை ஆயிற்றே.

rajraj
26th April 2016, 09:16 AM
vasu : Plan on enjoying 'Grand Canyon' next year ! :)

vasudevan31355
26th April 2016, 10:27 AM
நன்றி ராகவேந்திரன் சார்.

மறக்கமுடியாத கலைஞர்களை அவர்கள் பிறந்த நாளில் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் நினைவு கூர்ந்து நாமும் சந்தோஷமடைந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த மதுரகானங்களுக்கு தனி இடம் உண்டு. தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

http://freetamilmp3.in/index.php?dir=A%20to%20Z%20Tamil%20Mp3/V/Veguli%20Pen&p=1&sort=0

ஆமா. 'நீதான் மோகினியா?' உண்டா... இல்லை அதுவும் கத்தரிக்கு இரையானதா?

vasudevan31355
26th April 2016, 11:01 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

52-ஆவது பதிவு

https://i.ytimg.com/vi/MgCnxkfhfMQ/hqdefault.jpg

52

'அம்மம்மா! ஓ..அம்மமம்மம்மா '

கொஞ்சம் நடுவில் வேலைப்பளு காரணமாக நின்று போய் இருந்த பாலாவின் தொடர் மீண்டும் இப்போது.

'அன்புச் சகோதரர்கள்'

ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பு.

வசூல் வேட்டை செய்த இன்னொரு கருப்பு வெள்ளை படம். நான்கு அன்பு சகோதர்களுக்கிடையே நடைபெறும் பாசப் போராட்டங்கள்தான் இந்தப் படத்தின் கரு. இப்போதைய தொலைகாட்சி சீரியல்களை ஞாபகப்படுத்தும் காட்சிகளை இப்படத்தில் அப்போதே காணலாம்.

நட்சத்திரப் பட்டாளம். அனைவர்க்கும் சம பங்கு வாய்ப்பு. 'உங்கள் அபிமான நட்சத்திரங்கள் அனைவரும் ஒருங்கே இணைந்து நடிக்கும்' என்று சாமர்த்த்தியமாக டைட்டில் ஓடும். ஏன் வம்பு?

மூலக்கதை பிரபாகர் ரெட்டி. வசனம் ஏ.எல்.நாராயணன்.

எஸ்.வி.ரங்காராவ், மேஜர், ஏ.வி.எம்.ராஜன், ஜெய் நால்வரும் சகோதரர்கள். ராவிற்கு இணை கிடையாது. மேஜருக்கு அதற்கு பதிலாக இரண்டு. ஒன்று ஜமுனா.

https://i.ytimg.com/vi/5dv1OBK1fTA/maxresdefault.jpg

ஜமுனா ('ராணி' மாலினி தேவி ஜமுனா மிடுக்கு 'ஜம்' அபாரம்) நல்ல வில்லியாம். இரவல் குரல் வில்லி. யார் குரல்? மேஜரைப் பழி வாங்கத் துடிக்கும் வில்லி. இன்னொன்று நேற்றைய நாயகி தேவிகா. ராஜனுக்கு ராணி பிரமிளா. இன்னொரு கெட்ட வில்லி.

ஜெய்க்கு 'வெண்ணிற ஆடை' ஜோடி.

பாட்டை மட்டும் தொட்டு வைக்கலாம் என்றால் பழக்கம் விடுவேனா என்கிறது.:) விவரமாகத் தந்தால்தான் மனசு திருப்தி அடைகிறது.

இசை மகாதேவ மாமாதான். கிடார் ஓசையிலிருந்தே ஈஸியாக கண்டுபிடித்து விடலாம்.:) கனகசபை தயாரிக்க, திரைக்கதை இயக்கம் லக்ஷ்மி தீபக். அதிகம் பரிச்சயமில்லை.

'முத்துக்கு முத்தாக' என்ற பிரளயப் பாடல் அனைவரையும் கவர்ந்தது அனைவரும் அறிந்ததே. நால்வர் கூட்டணியில் நானிலம் போற்றிய ஒரு பாடல். கண்டசாலாவின் பின்னாளைய சூப்பர் ஹிட். ராவிற்கு மிகப் பொருத்தமான குரல்.

அப்புறம் 'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்... உங்களுக்காச்சி...எங்களுக்காச்சி பார்ப்போமா' என்று ராட்சஸி ரகளைப் பாடல். ஜெய், 'வெண்ணிற ஆடை' கல்லூரி குரூப் கலாய்ப்பு கானம். 'நீயா நானா... ஆம்பளையா பொம்பளையா' போட்டி.

சோ 'ஜெய்சங்கர் ஜெய்சங்கர் ஜெய்சங்கர் ஜெய்' என்று டைமிங்காக பாடுவார் அப்போதைய ஜெய் முன்னணியை பின்னணியாக வைத்து. 'ஆப் கி கஸம்' (1974) படத்தின் 'Jai Jai Shiv Shankar' பாடலுக்கு முன்னோடி போல இருக்கும். தமிழன் எல்லாவற்றுக்கும் முன்னோடிதானே! ஆம்பளையை உயர்த்தி சௌந்தரராஜன் பாடுவார். ரொம்ப ரொம்ப ரேர் சாங். ராட்சஸியின் குரலில் இடையே வரும் 'ஜுகு ஜுகு ஜுகு ஜுகு ஜுகு ஜுங் ஜுகு ஜுகு ஜுகு' வழக்கம் போல அவருக்கு மட்டுமே சாத்தியம்.

'குதிரை ஏறினா மதுரை வீரனா?' என்று ஒருவரி இப்பாடலில் உண்டு.

ஆதி சார், சின்னா!

நானும் மதுரை பாட்டு ஒன்னு போட்டுட்டேன்.:) நிர்மலா உடை விஷயத்தில் அப்படியே இந்தி மும்தாஜைப் பின்பற்றுவார். இருந்தாலும் அம்சம்தான். ஜெய், நிர்மலா டீஸிங் எப்பவுமே நல்லாத்தான் இருக்கும். 'பூவா தலையா' ஒன்று போதாதா? 'shut up' என்கிறீர்களா? அதுவும் சரிதேய்ங்.... இந்தப் பாட்டு ஒன்னும் அவ்வளவு ஜோர் இல்லை. ஆனா ஜாலியாக இருக்கும்.

ம்ம்..இப்படியே போனால் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். நம் தொடர் பாடலுக்கு வந்து விடுகிறேன்.

ஜெய், நிர்மலா ஒன்று சேர்ந்து அண்ணி பிரமிளாவை வெறுப்பேற்றும் பாடல் ஒன்று உண்டு. இதில் நம் தொடர் நாயகர் பாடுவார். .

ஈஸ்வரி ரகளைகள் டாப். பாலா கம்பீரக் குழைவில் அட்வைஸ் அளிப்பார். கடற்கரை காட்சிகள் கண்ணுக்கு இதம். ஆனால் பிரமிளா வதம்.:) ஜெய் சுறுசுறு. நிர்மலா தாவணி கடலைவிட குளிர்ச்சி என்று சொல்லாவிடில் சின்னா வைவார்.:)

பிரமாதமான பாடல் ஒன்றுமில்லைதான். ஆனால் கணக்கில் சேருமே!

https://i.ytimg.com/vi/g49Ek-uyzsU/maxresdefault.jpg

அம்மம்மா! ஓ..அம்மமம்மம்மா!
அம்மம்மா!... அம்மமம்மம்மா!
என்னம்மா! நீ பெண்ணம்மா!
அதை மறந்திடலாமா?... சொல்லம்மா!
வீட்டையும் நெனச்சுக்கம்மா
ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

அம்..மம்மா! அம்மமம்மம்மா!
என்னம்மா! நீ பெண்ணம்மா!
அதை மறந்திடலாமா?... சொல்லம்மா!
வீட்டையும் நெனச்சுக்கம்மா
ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

பூப்போலே இருக்கணுமம்மா பொண்ணுங்க கையி
அதை மனசில வை

பிள்ளையைப் பெத்து தொட்டிலைக் கட்டு
பாசம் உண்டாகும்

குவா!

உன் உள்ளத்துக்கும் இல்லத்துக்கும் பாலம் உண்டாகும்
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

ஆடாத ஆட்டம் ஆடும் சங்கதி என்னம்மா?
ஆடாத ஆட்டம் ஆடும் சங்கதி என்னம்மா?
காலில் சங்கிலி போடம்மா

அ ...வீட்டையும் நெனச்சுக்கம்மா

ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

அம்மம்மா!

ஹேய்!

அம்மமம்மம்மா!

ஹேய்!

என்னம்மா! நீ பெண்ணம்மா!
அதை மறந்திடலாமா?... சொல்லம்மா

வீட்டையும் நெனச்சுக்கம்மா

ஹா ஹா ஹா ஹா!

ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

ஹா ஹா ஹா ஹா!

ஹேய்...ராரா...

ஹ... வாயாடி வம்புக்கு போனா வாங்கிக்க வேணும்

ஒதை (ஜெய் 'வெண்ணிற ஆடை'யை இப்படியா உதைப்பது?..பாவம்...பச்சை மண்ணைப் போய்)

தந்தா தாங்கிக்க வேணும்

வாழும் வீடும் வளர்ந்த வீடும் பெருமைப் பெற வேண்டும்
வந்தாளம்மா லட்சுமி என்று ஊரே சொல்ல வேணும்

தாயார்கள் வாழ்ந்ததிலெல்லாம் தத்துவம் உண்டம்மா
தாயார்கள் வாழ்ந்ததிலெல்லாம் தத்துவம் உண்டம்மா
அது சத்திய வாழ்வம்மா

ஆஹா1 நீ என்ன அதிசயமா?

நான் என்ன சொல்லணுமா?

அம்மம்மா!

ஹே........ய்

அம்மமம்மம்மா!

ஹே........ய் (ராட்சஸி கனைப்பு இருக்கிறதே! சான்ஸே இல்லை. நக்கல் அப்படியே புகுந்து புறப்படுதே )

என்னம்மா! நீ பெண்ணம்மா!
அதை மறந்திடலாமா?... சொல்லம்மா
வீட்டையும் நெனச்சுக்கம்மா
ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

கல்லூரி பாடத்திலே நீ பார்த்தது என்ன?

என்ன?

அங்கே படித்தது என்ன?

என்ன?

வீட்டுக்குளே காட்டுத் தர்பார் நடத்திடச் சொன்னாரா? (யம்மோவ்...'ரா'வுக்கு என்ன ஒரு அழுத்தம் ராட்சஸி தருவது!)

உஹாஹா!

வீ(றா)ராப்பாக பேசுவதேதான் வேதம் என்றாரா?

மேலான ராணி என்றாலும் மென்மை வேண்டுமம்மா!
மேலா.....ன ராணி என்றாலும் மென்மை வேண்டுமம்மா!
குலத் தன்மை வேண்டுமம்மா!

வீட்டையும் நெனச்சுக்கம்மா

ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

அம்மம்மா! அம்மமம்மம்மா!
என்னம்மா! நீ பெண்ணம்மா!
அதை மறந்திடலாமா?... சொல்லம்மா!
அ...வீட்டையும் நெனச்சுக்கம்மா
ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

அம்மம்மா! அம்மமம்மம்மா!
என்னம்மா! நீ பெண்ணம்மா!
அதை மறந்திடலாமா?... சொல்லம்மா!
அ...வீட்டையும் நெனச்சுக்கம்மா
ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

லல்லல லல்லலலா
ஜூஜூஜூ ஜூஜூஜூஜூ


https://youtu.be/2Xol0LR_NLw

இதே படத்தில் பாலா இன்னொரு டூயட் பாடியிருப்பார். 'எதிர்பார்த்தேன்' என்று எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். எதற்காக? 'உங்களுக்காக'. வரும் விரைவில். அதுவரை தேவை பொறுமை.

சரி! கிளம்பட்டுமா?

JamesFague
26th April 2016, 12:47 PM
I will also join if there is any plan for Sathanur Dam tour by our friends.

rajraj
27th April 2016, 07:00 AM
From thirumalai dheivam (1973)

yezhumalai irukka enakkenna manak kavalai.........


http://www.youtube.com/watch?v=TNfbqL2R6bk

I still remember a concert by K.B.SundarambaL I attended in 1954 in Mayavaram (Mayiladuthurai). It lasted nearly six hours. Compare that to two hour cncerts these days ! :(

vasudevan31355
27th April 2016, 08:22 AM
vasu : Plan on enjoying 'Grand Canyon' next year ! :)

அருமை ராஜ்ராஜ் சார்.

இப்போதே என்னுடைய சந்தோஷத்துடன் கூடிய வாழ்த்துக்கள். ஜமாயுங்கள். உங்களுக்காக ஒரு முன்னோட்டம். பிரம்மாண்டத்தின் அடையாளமோ?:)


https://youtu.be/_hoGpYyn4Bs

rajraj
27th April 2016, 08:45 AM
Thanks vasu ! :). I have visited Grand Canyon three or four times. If you are visiting I will definitely accompany you. I don't drive long distance these days. You will have to learn American driving ! :lol:




அருமை ராஜ்ராஜ் சார்.

இப்போதே என்னுடைய சந்தோஷத்துடன் கூடிய வாழ்த்துக்கள். ஜமாயுங்கள். உங்களுக்காக ஒரு முன்னோட்டம். பிரம்மாண்டத்தின் அடையாளமோ?:)

madhu
27th April 2016, 09:03 AM
வாசு ஜி... ஒரு கௌபாய் டிரஸ், தொப்பி வாங்கிக்கிட்டு குதிரை சவாரியும் கத்துகிட்டால்... கர்ணன் இயக்கிய பட ஹீரோவைப் போல் டகடக் டகடக்னு கிராண்ட் கான்யானை வலம் வரலாம்.... ( ராட்சசி குரலில் பாடிக்கிட்டு ஆட யாரும் வரமாட்டாங்க ... ஆமாம் சொல்லிட்டேன் )

vasudevan31355
27th April 2016, 10:06 AM
'உள்ளத்தில் குழந்தைகளடி'

மதுரை, தஞ்சை ஊர் பாடல்கள் ஓய்ந்தன.

இப்போது கொஞ்சம் வேறு எடுக்கலாம்.

தமிழ்ப் படங்களில் நாயகனோ, நாயகியோ மனவளர்ச்சி குன்றி குழந்தைகள் போல குறும்புகளும், குழப்பங்களும் செய்ய அவர்களுக்கு ஆதரவாக, அன்பாக இன்னொரு கதாபாத்திரம் இருக்குமல்லவா? அந்த கதாபாத்திரம் இந்த வாலிபக் குழந்தைகள் எது செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவர்கள் மேல் அன்பைப் பொழியும். பாசத்தைப் பிழியும். அப்படிப்பட்ட சில பாடல்களை பார்த்தால் என்ன என்று தோன்றியது.

முதலில் 'கை கொடுத்த தெய்வம்'.

குழந்தை போல மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள்.

'களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ!
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்'

என்று கோபம் தலை உச்சிக்கேற, ஊரார் அவளை 'புரிந்து கொள்ளவில்லையே' என்ற ஆதங்கத்தில் கடிந்து கொள்வதைப் பாருங்கள். வேட்டியை சற்றே உயர்த்திப் பிடித்து, உள்மனதில் ஊராரின் பொய்யுரைகளை நினைத்து நெஞ்சடைத்து, ஆத்திரம் பொங்க, சாவித்திரி குழந்தைக்காக 'பாவிகளா! அப்படியெல்லாம் அந்தப் பெண் மீது அபாண்டப் பழி சுமத்தாதீங்கய்யா... உருப்படவே மாட்டீங்க' என்று உயர்த்திய வேட்டியை கால்களுக்கு மத்தியில் சைட் போஸில் லாவகமாக செருகி, ஆட்காட்டி விரலை உயர்த்தி, அதிலேயே கடுங்கோபத்தைக் காட்டி, அதற்கு மேல் விழி பெருக்கி, கண்களின் உருட்டல்களிலேயே அவள் புனிதமானவள் என்று ஊரார்க்கும், நமக்கும் உணர்த்தி, அந்த வெகுளிப் பெண்ணுக்காக உருகுவதை கண் இமைக்காமல் பாருங்கள்.


https://youtu.be/Wt6A8uxdZD0

அடுத்து

'கண்ணன் என்ன சொன்னான்? சிறு பிள்ளையே! கண்ணீர் வர காரணம் ஏன் கொடி முல்லையே?' என்று ஜெயதேவி அழும் 'குமாரி' ஸ்ரீதேவி குழந்தையை மடியில் கிடத்தி, 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்று ஆறுதல் கானம் இசைப்பதை பாருங்கள். பாடலின் பல்லவி வரிகளின் டியூன் இன்னும் என்னை ஆச்சர்யப்படுத்தும். அப்படியே சாதரணமாக ஆரம்பித்து அப்படியே எங்கெங்கோ அந்த பாடலின் டியூன் போகும் போது 'ராஜா'வுக்கு ஓடிச் சென்று ரோஜாச் செண்டு கொடுத்தால் என்ன என்று தோன்றும். அப்படியே அதிலிருந்து சில ரோஜாக்களை எடுத்து இசையரசிக்கும் கொடுத்து விடலாம். அற்புதம்.


https://youtu.be/0lVX_Z15NF8

அதே 'ச்சுப்பிரமணி' ஸ்ரீதேவிக் குழந்தையை மடியில் கிடத்தி 'மூன்றாம் பிறை' நாயகன் உதடு வெதும்பி 'கண்ணே! கலைமானே!' என்று கண்கள் கலங்க பாடி, தன்னுடைய குருவுக்கு சிஷ்யனாக நடிப்பில் பரிமளிப்பதையும் காணுங்கள்.


https://youtu.be/EBz8-gRtf80

காதலியின் எதிர்பாரா தீ மரணத்தில் அதிர்ச்சிப் பைத்தியமாகி விட்ட இந்த வெகுளியை குணப்படுத்த 'எங்கிருந்தோ வந்த' 'கலைச்செல்வி' அறையிலேயே அடைபட்டுக் கிடக்கும் அந்த அழகு வாலிபனை இயற்கை எழில் சூழும் இடங்களுக்கு இட்டுச் சென்று அவனை குதூகலிக்க வைப்பதைக் காணுங்கள். (பின்னால் சின்னத்தம்பி 'அரண்மனை அன்னக்கிளி'யை எழில் பிரதேசங்களுக்கு கூட்டிச் சென்று 'போவோமா ஊர்கோலம்' பாடினார்) அவனுக்குப் பக்கத் துணையாய் இருப்பதையும் கவனியுங்கள். இருவரின் 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதம்'தானே!


https://youtu.be/NSN1vlRGy6k

'உள்ளத்தில் குழந்தையடி' என்று இருக்கும் ஸ்ரீப்ரியாவிடம் பாசம் கா(கொ)ட்டும் அண்ணனும் அண்ணியும்.

'கண்ணுக்கு நீ ஒரு கன்னிப் பொண்ணு...என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு... உண்ணடியோ சோறு உண்ணடியோ...ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ?' என்று தேங்காயும், அண்ணியும் (யார் ஸ்ரீவித்யாதானே?) அன்பொழுக பாடுவதைக் கேளுங்கள். பாடல் வரிகள் அற்புதம். சீர்காழி, வாணி ஜெயராம் காம்பினேஷன் அரிதான தூள். 'இயக்குனர் திலகம்' படம் என்று நினைவு.


https://youtu.be/h_FT4NazftM

இது கொஞ்சம் வேறு. மனவளர்ச்சி குன்றிய இவன் உருவத்திலே மனிதன் என்றாலும் இவனுக்கு பின்னணியில் ஒலிக்கும் ஜேசுதாஸின் குரலே துணை.:) சிரிப்பைத்தவிர வேறேதும் அறியா அன்பன். ஆனால் ஒரே முறை அழுதான். 'யாருக்காக அழுதான்'? விம்ம வைக்கும் வித்தியாச நாகேஷ். ஜெயகாந்தன் பட்டறையின் வைரம். மனம் முழுக்க பாரம்.


https://youtu.be/Vpdfvitmyao

இனி நண்பர்கள் வேறு குழந்தைகளைத் தேடித் தரலாம்.:)

chinnakkannan
27th April 2016, 01:09 PM
ஹாய் வாசு.. கலக்கல் தான் போங்க உங்க குழந்தை உள்ளம்.. ஹப்புறம் கேட்டுச் சொல்றேன். ஸிமிலர்லி ஐ டிண்ட் ஹியர் த எஸ்பிபி சாங்க் ஆல்ஸோ.. கேட் சொல்றேன்..ம்ம்

குழந்தை உள்ளம் மனமுதிர்ச்சி அடையாத நபர் என்றெல்லாம் பார்த்தால் இன்னொரு கமல் நினைவுக்கு வருவாரே..

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா..சிப்பிக் முத் :)

chinnakkannan
27th April 2016, 06:09 PM
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா

https://youtu.be/9tLYhiSVLv0

Richardsof
27th April 2016, 06:40 PM
https://youtu.be/Ct9d7iXQWJs

vasudevan31355
28th April 2016, 08:03 AM
'உள்ளத்தில் குழந்தைகளடி'

'குமரி வடிவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ'

மார்கண்டேயன் மடியில் மலங்க மலங்க கண்களை உருட்டி விழித்து, குழந்தையாய் சிவாவின் கட்டைவிரலை பிடித்து கடித்து சரிதா செய்த நடிப்பு அக்னி சாகசம்.

சிவா கொடுத்து வைத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் எல்லாப் படங்களிலும் பெண்களிடம் மாட்டித் திண்டாடுவார். அதுவும் ரெண்டு ரெண்டு.:)


https://youtu.be/AF-ZL8snxws

vasudevan31355
28th April 2016, 08:16 AM
'உள்ளத்தில் குழந்தைகளடி'

'கேனையிலும் கேனையின்னு கேலியும் செஞ்சாங்க' என்று இந்த அப்பாவி மூர்த்தி (இந்த ஒரு படத்தோட ஆள் காலின்னு நினைக்கிறேன்) ஊரார் கேலியை உதறித் தள்ளி தேவயானியை சந்தோஷப்படுத்துகிறார் ராஜா குரலில்

'உன் பக்கத்துல ஒரு பூவ வச்சா அந்த பூவும் மயங்கிப் போகும்'

தேவயானிக்கு பிரில் வைத்த ஜாக்கெட் என்றால் ரொம்பப் பிடிக்குமோ? நிறையப் படங்களில் இப்படி வருவார்.


https://youtu.be/h3SPQ1IrMzM

vasudevan31355
28th April 2016, 08:43 AM
'உள்ளத்தில் குழந்தைகளடி'

இந்தப் பாடல் கொஞ்சம் என்னைப் புரட்டிப் போட்ட பாடல் என்று சொல்லலாம். எப்போது கேட்டாலும் மனம் வலிக்கும். அப்பாவி லூஸ் சர்க்கரையின் (வினீத்) மேல் அருணாவின் தங்கை (நந்தினி) தாமரைக்கு காதல். அதனால் வேதனை. ஜானகியின் பின்னணியில் ஒலிக்கும் சாகாவரம் பெற்ற பாடல். ஒவ்வொருமுறையும் கேட்கையில் உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாவது நிஜம்.

ஜானகி மிக அம்சமாகப் பாடிய ஒருசிலப் பாடல்களில் முதலிடத்திற்கு இப்பாடல் போட்டி போடும். ராஜாவின் மனம் உருக்கும் இசை...

அதுவும்,

'கனவே எனத் தெரிந்தே அதை நினைக்கும் மனமே' வரிகளில்:clap: பாடல் ஆசிரியரும், இசைஞானியும், ஜானகியும் நீயா நானா என்று போட்டி போடுவார்கள். அவ்வளவு அம்சம் அந்த வரி.

பரதன் என்ற கலைஞனின் அற்புதமான பாடல் படமாக்கல், இயற்கை சூழல், நந்தினியின் (முன்னால் வைதேகி என்று பெயர் வைத்திருந்தார்) அளவான பரிதாபப்படவைக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் என்று ஏகத்துக்கு என் நெஞ்சை அள்ளிய பாடல்.

http://i1.ytimg.com/vi/r0YLuo_zVGg/mqdefault.jpghttps://i.ytimg.com/vi/5Wa135tLQCQ/hqdefault.jpg

பிரதாப் போத்தன், சுரேகா நடித்த 'தகரா' மல்லு தமிழில் 'ஆவாரம்பூ' ஆனது. இரண்டுமே கவர்ச்சியை அள்ளித் தெளித்தவை. தமிழைவிட மலையாளத்தில் சுரேகா கூடுதல்.

ஆனால் பாடல்களில், இசையில் ராஜா பிளந்து கட்டினார். ஒவ்வொரு பாடலும் பெரும் வரவேற்பை பெற்றன.




https://youtu.be/YtTGh8WfgSc

vasudevan31355
28th April 2016, 08:55 AM
'உள்ளத்தில் குழந்தைகளடி'

'பெண்ணின் பெருமை'யை நிலை நாட்ட நடிகையர் திலகம் தோற்றத்தில் வாலிபனாயும், குணத்தில் குழந்தையாகவும் இருக்கும் அரைக்கிறுக்கு கணவன் ஜெமினியை மணந்து, அவன் குணம் தெரிந்து, வெளியே சொல்ல முடியாமல் மனம் புழுங்கி தனக்குத்தானே முதலிரவில் பாடும் பாடல். நடிகையர் திலகம் அந்தப் பட்டத்திற்கு பெருமை சேர்ப்பதை கண் கூடாக இப்பாடலில் காணலாம். முகம் சோக ஜாலங்கள் நிகழ்த்துகிறது. ஜெமினியின் அப்பாவி நடிப்பும் ஜோர்.

'மாசில்லாத எனது வாழ்வும் மலரக் கூடாதோ' அருமையோ அருமை.

'இதய வானில் ஒளியை வீசும் இன்ப நிலாவே'


https://youtu.be/MVnWTFyJAoE

vasudevan31355
28th April 2016, 09:04 AM
'உள்ளத்தில் குழந்தைகளடி'

குணாவைப் பற்றி முழுதும் தெரிந்த புரிந்த வரல்ஷ்மியின் ஆறுதல். 'குணா'வைப் பற்றிதான் நம் எல்லோருக்கும் தெரியுமே! அதனால் அதிக விளக்கம் தேவையில்லை.

உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்?


https://youtu.be/AbfqLijGqeI

இதே பாடல் ரேகாவிற்கும் உண்டு.


https://youtu.be/DHyAMW9Lr-Q

Gopal.s
28th April 2016, 09:40 AM
ராகவேந்தர்,

எனக்கு தெரிந்த ஒரே வக்கிரம் ,இந்த பாடல் மட்டுமே.

வக்ர துண்ட மகாகாய

https://www.youtube.com/watch?v=EiLkqPOTWP8


நான் சந்திரசேகர் ஆள் என்று நினைக்கிறீர்கள்.

எனக்கு சந்திரசேகரை பிடிக்கும்.உங்களையும் பிடிக்கும். அவர் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களை மட்டுமே பிடிக்காது.

உங்களின் ஊமை பெண் என்னை அசைத்து விட்டாள் .தொடருங்கள்.

Richardsof
28th April 2016, 10:04 AM
1974
http://i66.tinypic.com/2lk8k9i.jpg

Richardsof
28th April 2016, 10:08 AM
http://i67.tinypic.com/2u4r6s0.jpg

Richardsof
28th April 2016, 11:28 AM
1963

http://i65.tinypic.com/1znbou9.jpg

Richardsof
28th April 2016, 11:31 AM
1963

http://i63.tinypic.com/qrewxg.jpg

rajraj
29th April 2016, 06:13 AM
From avan(1953), Tamil dubbed version of aah(hindi)

aahaa naan indru arindhu konden.

http://www.youtube.com/watch?v=TdKLZCowt70


From the Hindi original

jo mein jaanti unkeliye....

http://www.youtube.com/watch?v=al3gdqrc7N4

RAGHAVENDRA
29th April 2016, 10:50 PM
வாசு சார்
மதுர கானம் திரியில் தங்களுடைய உள்ளத்தில் குழந்தையடி குறுந்தொடர் தங்களுடைய அபார உழைப்பையும் அதற்கான கருவைத் தேர்ந்தெடுக்கும் தங்களுடைய தனித்திறமையினையும் மிகவும் ரசித்துப் பாராட்டி எழுத வேண்டும் என எத்தனித்தேன். முத்தாய்ப்பாக தலைவரின் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடலும் இடம் பெறும் என எதிர்பார்த்தேன். ஏமாற்றாதது மட்டுமல்ல, இதை விட சிறப்பாக இப்பாடலைப் பற்றி யாரும் எழுதி விட முடியாது என்கிற அளவிற்கு எழுதி இம்மய்யத்தில் தங்களுடைய உயர்ந்த இடத்தை அப்படியே ஸ்திரப்படுத்திக்கொண்டு விட்டீர்கள்.

அது மட்டுமல்ல


அவர் ஆயிரத்தில் ஒருவரல்ல...
லட்சத்தில் ஒருவரல்ல...
கோடியில் ஒருவரல்ல....

அந்த ஒருவர் ஒருவர்தான். வேறு எவரும், எதுவும் அவருக்கு இணை, ஈடு இல்லை.


இந்த வரிகளின் மூலம் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் குளிரச் செய்து விட்டீர்கள்.

உண்மையிலேயே உள்ளத்தில் குழந்தையான நாயகனுக்கு, இப்பாடலின் மூலம் இதை விட சிறந்த அஞ்சலி செய்ய முடியுமா என்பது ஐயமே.

தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
30th April 2016, 07:47 AM
இளமை ஜெயமாலினியும், 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' புகழ் நடிகரும், நடன மாஸ்டருமான சின்னி பிரகாஷும் (நினைத்துப் பார்க்கிறேன்... என் நெஞ்சம் இனிக்கின்றது...) பாடும் ஒரு ஜாலியான பாடல்.

பாடலின் ஆரம்ப வரிகளாக வரும் அந்த புரியாத பாஷை வரிகளும் அமர்க்களம்.

ஹோய் லேலே செண்டே கியா
ஹோய் லேலே லூகா கோரா
சொகு தின மொக காரி
கொலேலே
கொலேலே
கொலேலே

ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் மோகமா
மெதுவா சிரிச்சேனே எதுக்கு
தெரியும் உனக்கு

ஜானகியின் டிரேட் மார்க் பாடல். உடன் பாலாவும். இந்த மாதிரிப் பாடல்களுக்கு ராஜாவை விட்டால் யார்? அத்தனை இசைக்கருவிகளும் நர்த்தனம் புரியும். கிடார், டோலக், புல்லாங்குழல், தபலா, பாங்கோஸ், மிருதங்கம் உள்ளிட்ட அனைத்து இசைக்கருவிகளின் பங்கையும் மிகச் சரியாகக் கலந்து கொடுத்திருப்பார் இப்பாடலில் ராஜா. இடையிசையை அனுபவித்துக் கேளுங்கள். வரிகள் சற்று எளிமையாக இருந்தாலும் மியூசிக்கில் அதகளம்தான். பாடலினூடே வரும் கோரஸும் மனம் மயங்க வைக்கும்.


https://youtu.be/X2csdZ9ZuGA

vasudevan31355
30th April 2016, 08:43 AM
ஆந்திரப் பெண்மணியாக ஆச்சி எப்படி அசத்துகிறார்? தெலுகும், தமிழும் கலந்து பாடி சொந்தக் குரலில் சொக்க வைக்கிறார். அவருக்கு சொல்லித் தரணுமா? அடி தூள். கூட நீலுவும், சோவும். 'துக்ளக்'கை வெறுப்பேற்ற நீலு விடம் சரசம். 'சோ'வை 'வாரு வாரு' என்று வாரி நக்கல். நீலுவின் அப்பாவி வழிசலைப் பார்த்து புரிந்தவர்கள் உள்ளுக்குள் 'க்ளுக்'குவார்கள்.

கோழி முட்டைக் கண்ணாரு, அரவாடு என்று 'சோ'வை அநியாத்துக்கு கிண்டல் அடிப்பார் ஆச்சி. நீலுவுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படும் தெலுங்குப் படத்தின் பெயரை பாருங்கள். 'சீக்ரெட் ஏஜென்ட் கோடாச்சாரி' யாம்.:)

http://chaibisket.com/wp-content/uploads/2015/03/Gudachari-116-ChaiBisket.jpg

(Gudachari 116' என்று கிருஷ்ணா, ஜெயலலிதா நடித்து 1967-ல் ஒரு படம் வந்தது. என் பிரியமான கீதாஞ்சலியும் உண்டு அதான் பக்கெட். ஹி..ஹி.):) இந்தப் படம் பார்க்கத்தான் ஆச்சி ஆசைப்படுகிறார் போல

அதுவும் நாயுடு ஹோட்டலில் டபுள் ரூமாம். கூட துணைக்கு அரைக்கிறுக்கு சோவையும் கூப்பிட்டுகிட்டு போகணுமாம். எப்படி இருக்கு கதை பாருங்கள்!

ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேலே ஆசை எப்படி வச்சாரு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்

ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேலே ஆச எப்படி வச்சாரு

அம்மாயி ஊரு இந்தப் பக்கம் நெல்லூரு
அப்பாயி மீரு அந்தப் பக்கம் குண்டூரு
குண்டூர் மாமா நெல்லூர் மாமி
குண்டூர் மாமா நெல்லூர் மாமி
சம்பந்தி ஆனாரு
கொஞ்சுற போதும் கோங்குரா தின்னு
குஸ்திக்கு நின்னாரு

மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்

அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சி
அரைகுறையாப் போச்சு
அரவாடோடே காதல் செஞ்சேன்
ஆபத்தாப் போச்சு

அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சி
அரைகுறையாப் போச்சு
இந்த அரவாடோடே காதல் செஞ்சேன்
ஆபத்தாப் போச்சு

கொஞ்சிப் பேச ஒச்சாரு
கோழி முட்ட கண்ணாரு
கொஞ்சிப் பேச ஒச்சாரு
கோழி முட்ட கண்ணாரு
குத்துக்கால தரையில நட்டு
குஷியா நின்னாரு

மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்

சூலூர்ப்பேட்டைக்கு சாயங்காலம் ஹனிமூன் போத்தாமா
'சீக்ரெட் ஏஜென்ட் கோடாச்சாரி' சினிமா சூஸ்தாமா
நாயுடு ஹோட்டலில் டபுள் ரூம் எடுத்து நாளைக்கு ஒஸ்தாமா
நாயுடு ஹோட்டலில் டபுள் ரூம் எடுத்து நாளைக்கு ஒஸ்தாமா
நமக்குத் துணையா அரவாடயும் கூட்டிட்டுப் போவோமா

மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்

ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
அட எம் மேலே ஆச எப்படி வச்சாரு

'அருணோதயம்' படத்தில் கொஞ்சம் மறந்து போன பாடல். பார்த்து சிரியுங்கள்.


https://youtu.be/VELGIj82CkY

chinnakkannan
30th April 2016, 09:13 AM
ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் மோகமா// ஆமா வாசு ஏன் ஒரு வாரமா காணோமேன்னு நினச்சா பாட் போட்டுட்டீங்க..( நான் கணக்குல வீக்) பாட் பொறுமையா ஃபுல்லா கேட்டேனாக்கும்.. ஆரம்ப கால ஜெயமாலினி முழுவுடையில் லுக்கிங்க் குட்.. ( எல்லாமே மூடி இருந்தால் தான் அழகு என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்) அதுக்கப்புறம் சட்டையைக் கழட்டினாலும் கண்கள் உறுத்தவில்லை..இயல்பான அழகாய் இருந்தது என அந்தக்காலத்தில் என் சித்தப்பா சொல்லியிருந்தது நினைவில்! ஆமா என்னவாக்கும் படம் பேர் போடவேயில்லையே..
என் பிரியமான கீதாஞ்சலியு// ம்ம் கிருஷ்ண குமாரிலருந்து கீதாஞ்சலியா கு வில் யார்..குமாரியா ((விஜயவை வெட்டி விட்டு) :) பட் அருணோதயம் ரிலீஸின் போது கண் சின் பையன். எனில் ஈ பாட் நினைவில் இல்லை..ரீரன்னில் பார்த்தபோது கூட கோல்ட் ஃப்ளேக் ப்ளெய்ன் பெட்ட்ர் எனப் பட்டதால் வெளியே சென்றுவிட்ட நினைவு..(இப்பக்கூட ஈ பாட் பார்க்கத்தோணலை ஸாரி) நன்றி ஃபார் த ரைட் அப்ஸ்..

chinnakkannan
30th April 2016, 09:24 AM
உ கு வில் தேவயானி பஃப் கை பாட் முதல் தடவை கேட்கிறேன்.. ம் அந்த ஆடவரை முன் பார்த்த நினைவில்லை

பிரதாப் போத்தன், சுரேகா நடித்த 'தகரா' மல்லு தமிழில் 'ஆவாரம்பூ' ஆனது. இரண்டுமே கவர்ச்சியை அள்ளித் தெளித்தவை. தமிழைவிட மலையாளத்தில் சுரேகா கூடுதல்.

ஆனால் பாடல்களில், இசையில் ராஜா பிளந்து கட்டினார். ஒவ்வொரு பாடலும் பெரும் வரவேற்பை பெற்றன. // நதியோரம் கரையோரம் பாட் டும் முதலில் இப்போ தான் கேக்கறேன்.. நைஸ்.. அதில் வேறொருபாட் உண்டோன்னோ. பட் நந்தினிக்கும் இதன் பின்னர் வாய்ப்பெதுவுமில்லை.. தகரா போஸ்டர் பார்த்த நினைவு..இந்த சுரேகா ஈ நாடு தானே..

chinnakkannan
30th April 2016, 09:33 AM
ஜெய், நிர்மலா ஒன்று சேர்ந்து அண்ணி பிரமிளாவை வெறுப்பேற்றும் பாடல் ஒன்று உண்டு. இதில் நம் தொடர் நாயகர் பாடுவார். .

ஈஸ்வரி ரகளைகள் டாப். பாலா கம்பீரக் குழைவில் அட்வைஸ் அளிப்பார். கடற்கரை காட்சிகள் கண்ணுக்கு இதம். ஆனால் பிரமிளா வதம். ஜெய் சுறுசுறு. நிர்மலா தாவணி கடலைவிட குளிர்ச்சி என்று சொல்லாவிடில் சின்னா வைவார்.

பிரமாதமான பாடல் ஒன்றுமில்லைதான். ஆனால் கணக்கில் சேருமே!// ஓய் பிங்கி பிங்க்கி பாங்க்கி என ரோஸ்கலர்ல எழுதினா சின்னா எப்படிப் படிக்கும்... இந்த பாட் ரொம்ப சுமார் தான் அப்புறமா கேட்கலாம்னு இருந்தேனா..இப்பதான் பார்த்தேன்.. தாவணி போட்டிருந்தாலும் லாங்க் ஷாட்டில் போட்டது தப்பு என ஆன்றோர்கள் சொல்வார்கள்.. :)

ஸ்ரீதேவி தான் என நினைக்கிறேன் பிழிபய் பிழிய அழுகை.. சின் வயதில் பார்த்தது தான் பின் ரீரன்னெல்லாம் பார்க்கவில்லை..

ஹப்புறம் உ.கு ல் நடுவில் நைஸாக ஏதோ சாமி ஸ்லோகம் கேட்டதே..என்ன ஒரு ஐரனி.. :)

vasudevan31355
30th April 2016, 10:41 AM
ஹப்புறம் உ.கு ல் நடுவில் நைஸாக ஏதோ சாமி ஸ்லோகம் கேட்டதே..என்ன ஒரு ஐரனி.. :)

நான் வரல நைனா இந்த கோ(பா)லாட்டத்திற்கு.:)

vasudevan31355
30th April 2016, 10:55 AM
//இந்த சுரேகா ஈ நாடு தானே//

mm.

https://i.ytimg.com/vi/miOHdaVpiDE/hqdefault.jpg

Richardsof
30th April 2016, 11:59 AM
CONGRATULATION C.K SIR
SUPERB
http://i67.tinypic.com/15wxmhz.jpg
POSTINGS.

yoyisohuni
30th April 2016, 02:18 PM
பிடித்த பாடல்களை பகிர்கிறேன். உங்களைப் போல் பத்திபத்தியாய் எனக்கு எழுத தெரியாதே. நினைவில் வைத்திருந்ததற்கு நன்றி வாசு அவர்களே!

நீ இல்லாத இடமே இல்லை. அல்லாஹ். சோ ராமசாமியின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று "முகம்மது பின் துக்ளக்" .


மனம் வெளுக்க எதுதானுண்டு. நபிகள் வேதம் உண்டு.

https://www.youtube.com/watch?v=I0M6mgDA3nI

chinnakkannan
30th April 2016, 03:38 PM
பிடித்த பாடல்களை பகிர்கிறேன். உங்களைப் போல் பத்திபத்தியாய் எனக்கு எழுத தெரியாதே. நினைவில் வைத்திருந்ததற்கு நன்றி வாசு அவர்களே!// இப்படில்லாம் சொன்னா விட்டுவிடமாட்டோம் காட்டுப் பூச்சி.. ஒரு குட்டிப்பாராவாவது வேணும் நும்.. இப்படி ச் சொன்ன சி.செ வயணமா கட்டம் போட்டு வண்ணமா அழகா எழுதிண்டு இருக்கார்.. திடுதிப்னு நான் ஜெமினியை சந்தித்த கதைன்னுஎழுதினார் (இப்போ இன்னொண்ணும் எழுதுவார்..எழுதுவீங்க தானே சி.செ) ஸோ நீங்களும் எழுதுங்க..

chinnakkannan
30th April 2016, 03:43 PM
நன்றி எஸ்வி சார்....நானே கவனிக்கவில்லை.. கடைசி நூறு பாட்டுக்குப் பாட்டில் போய்விட்டது என நினைக்கிறேன்..

மன்மதன் வந்தான் தேரோடு இங்கே
காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட்பட்...


https://youtu.be/lXHee4fDiv8

மாம்பழத் தோட்டம் இருந்தாலும் என்னால் பார்க்க மட்டும் தான் முடியும்.. சாப்பிட முடியாது .. ஷூகர் கண்ட்ரோல் :sad:

chinnakkannan
30th April 2016, 04:01 PM
https://youtu.be/MWzXg4PNYzQ

இந்தப் பாட் வாசு போட்டாச் சா என்ன..

Gopal.s
30th April 2016, 05:41 PM
ரவி-பிரமிளா நடிப்பில் வள்ளி தெய்வயானை என்றொரு படம்.1972 அல்லது 1973 வாக்கில்.பிரமிளா இரட்டை வேடம். இந்த படத்தில் டி.ஆர்.பாப்பா போல ரேடியோ இசையில் பிரபலம் ஆன தியாகராஜன் என்பவர் இசை. பூத்திருந்து காத்திருந்தேன் சந்தோசம் -சோகம் என்று இரண்டு முறை. (சோகம் நன்றாக இருக்கும்)

இதில் ஒரு surprise package தனசேகரன் -மல்லிகா என்பார்கள் பாடிய (ஷோபா-சுரேந்தர் போல குரல் சாயல்.பின்னால் ஷோபா-சுரேந்தர் பிரபலம் ஆனது மாலை இளம் மனதில் ஆசைதனை தூண்டியது)
மலர்களில் ராஜா. இதற்கு வாயசைத்தது படத்தின் நாயக-நாயகி அல்ல.
சசி குமார் -பானுமதி . செம பிரபலம் இந்த பாடல்.

https://www.youtube.com/watch?v=qQTPVO8N3Bs

Gopal.s
30th April 2016, 05:43 PM
Congrats Chinnu.Keep it up.

Vasu, aayiraththil oruththiyamaa nee -Word by word ,we analysed in person. But in print,again it moved me a lot.Thanks.

RAGHAVENDRA
30th April 2016, 09:27 PM
Chinnakannan Sir
Congratulations for 9000 super postings.

Russellmai
1st May 2016, 07:17 AM
மையம் திரியில் 9000 பதிவுகளைக் கடந்தமைக்கு சின்னக்கண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

madhu
1st May 2016, 07:48 AM
சிக்கா.... தடைகள் எதிலும் சிக்காத சிக்கா....9000 பதிவுகள் கண்ட பெருமைக்குரிய பெருந்தகை சிக்கா..

வாழ்க வளமுடன் !!!

madhu
1st May 2016, 07:49 AM
கோபால் ஜி..

மலர்களின் ராஜா ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்..

அதன் பின் சமர்ப்பணம் படத்தில் அதே ஜோடி பாடிய பாடல் ஓரளவு பிரபலம்.

தந்தைக்கு ஒரு பிறவி தாயாருக்கோ இரு பிறவி

https://www.youtube.com/watch?v=bf6rubjPbMk

madhu
1st May 2016, 07:52 AM
வாசுஜி..

ஹி ஹி.. நல்ல வேளை.. ஈ நாடு பிரபல போஸ்டர் படத்தைப் போட்டுடுவீங்களோன்னு நெனச்சுட்டேன் !!

eehaiupehazij
1st May 2016, 08:26 AM
Congrats SiKa for crossing your workaholic 9000!
with Love from GG's Treasure Pleasure!

May 1 இன்று உழைப்பாளர் பெருமை நாள் !

https://www.youtube.com/watch?v=yfx1kel88PE

https://www.youtube.com/watch?v=7rc90ZMn-MA

eehaiupehazij
1st May 2016, 08:30 AM
SiKa! Congratulations for your threading achievements spreading over 9K!!
For your hard work with devotion and dedication ... thanks giving from NT (Nermai+Thiramai) thread!!!

May 1 உழைப்போர் மேன்மை தினம் இன்று! உழைப்பால் உயர்ந்தவர்தம் நினைவுகளைப் போற்றுவோம் !

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ?
உழைப்பின் பலன் மட்டுமே இனிக்கும் !

உழைப்பும் நேரம் தவறாமை மற்றும் நேர்மை என்னும் நடிகர்திலக உதாரண குணங்களைக் கடைப்பிடிக்கும் போதுதான் மேன்மை பெறும் !

https://www.youtube.com/watch?v=YtejNDSHCKk

https://www.youtube.com/watch?v=geYyN5_QYKg

https://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo

rajraj
1st May 2016, 08:52 AM
chinnakkaNNan: You took 10 years for 9000 posts. You are in the last stretch to reach 10000. You better hurry up and do it in one month ! :lol: Congratulations ! :)

vasudevan31355
1st May 2016, 09:25 AM
rare one

http://2.bp.blogspot.com/--rhQvMb7VZ8/VBbMQ3VD7cI/AAAAAAAAEg0/a9H5tYmIfQw/s1600/VaniJayaramSingingForChembaiMemorialMusicCollege%2 CPalghatForTheSilverJubileeFunctionIn1982.jpg

vasudevan31355
1st May 2016, 09:29 AM
வாசுஜி..

ஹி ஹி.. நல்ல வேளை.. ஈ நாடு பிரபல போஸ்டர் படத்தைப் போட்டுடுவீங்களோன்னு நெனச்சுட்டேன் !!

மதுண்ணா!

அவ்ளோவ் சுளுவா மாட்டிக்குவோமா?:) என்ன நாஞ் சொல்றது?....

vasudevan31355
1st May 2016, 09:33 AM
https://lh3.googleusercontent.com/VwU2OOszQrJ-NaV5r1ByPgXJ0Rqz9NES6LB0VhAOMngiWwj-BVdugw8SysmXCTkRAFL6

சின்னா!

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்.

'தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த அமுதுக்கு சின்னக் கண்ணன் என்று பேர்'

ம்ம்.ம்ம்ம்..9000 பெருகட்டும்.

vasudevan31355
1st May 2016, 10:33 AM
'மேதினம் உழைப்பவர் சீதனம்'

http://www.comments20.com/wp-content/uploads/2012/04/May-Day-Graphics-37.gif

அனைவர்க்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.

அதை முன்னிட்டு அற்புதமான இந்த பாட்டாளி பாடல்.

'வாழ்க வாழ்க பாட்டாளி
தாழ்வில்லாத வழியை இங்கே
அமைத்திட வாரும் கூட்டாளி'

'வாழ்க வாழ்க பாட்டாளியே
வாழ்க வாழ்க பாட்டாளியே'

1957- ல் வெளிவந்து பாடல்களாலேயே மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்ட 'Naya Daur' இந்திப் படம் தமிழில் 'பாட்டாளியின் சபதம்' என்று 'டப்' ஆனது. பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் அமுது. திலீப், வைஜயந்தி ஜோடி இந்தி ரசிகர் மனதில் நங்கூரமாய் ஆழப் பதிந்தது.

'Saathi Haath Badhana' என்ற தொழிலார்களின் புகழ் பரப்பும் பாடல் இப்படத்தில் மிகப் பிரசித்தம். அந்தப் பாடலைத்தான் தமிழில்

'வாழ்க வாழ்க பாட்டாளி'

யாகக் காணப் போகிறீர்கள். அப்படியே இந்தி ஒரிஜினல் வடிவத்தையும்.

ஓ.பி.நய்யரின் விஸ்வரூப இசை இந்தப் படத்தின் பாடல்களை மறக்க முடியாமல் செய்து விட்டது. படப்பிடிப்பும் அபாரம்.

இந்தியில் ஆஷாவும், ரபியும் பின்னியெடுக்க அதையே தமிழில் டி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பின்பற்றியிருப்பார்கள். இந்திப் பாடல்களை தமிழில் மொழி பெயர்ப்பது சற்று கடினம் என்பதால் தமிழ்ப் பாடல் இந்தி போல் வராது. அது தவறில்லை. இந்தப் பாடலும் அப்படித்தான். ஆனால் சுசீலா குரலில் வளம் பெறுவதை மறுக்க முடியாது. (முக்கியமாக 'பாட்டாளி' என்ற வார்த்தையை 'பட்டாளி' என்று சுசீலா சுருக்கி சுகம் தருவதை உணராமல் விட்டு விடாதீர்கள்)

அதே போல பாடலின் கோரஸ் குரல் ஜாலங்களை விட்டு விடுவதற்கில்லை. விட்டுவிட்டால் பாவியாகி விடுவேன். மீதி விளக்கங்களை ராஜ்ராஜ் சார் தருவார்.

வாழ்க தொழிலாளர் வர்க்கம்.

'வாழ்க வாழ்க பாட்டாளி'


https://youtu.be/INxSA-bXUyU

'Saathi Haath Badhana'


https://youtu.be/pWgTQa9Cm0o

chinnakkannan
1st May 2016, 10:46 AM
நன்றி..வாழ்த்துச் சொல்லிய கோபால் ராகவேந்தர் மதுண்ணா ராஜ்ராஜ் வாஸ்ஸூ சிவாஜி செந்தில் கோபு அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி..

மேதினம் பற்றிய பாடல் என்றால் நினைவுக்கு வருவது சிவப்பு மல்லி..மேதினம் உழைப்பவர் சீதனம் எரிமலை எப்படிப் பொறுக்கும் சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் அந்த ..க்தவு திறக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால்வராது நீதி என சிவந்த கண்களுடன் விஜயகாந்த் தாடி ஒட்டியகன்னமாய் சந்த்ரசேகர்..(அ காலப் படங்களில் சாவதற்காகவே இவரைப் போட்டுப் படுத்துவார்கள்) இதுவும் ஸ்ரீதேவி தியேட்டர் தான்..ஒரு மதியக்காட்சி போய் வீட்டிற்கு வந்து இரண்டு மெடாசின் போட்டாலும் தலைவலி போகவில்லை..

ஷாந்தி கிருஷ்ணா ஒல்லி ஒல்லியாய் கொஞ்சம் ஏதோ வியாதியோ என்று என்னும்படி வெளிறி இருப்பார்.. பன்னீர் புஷ்பங்களில் அறிமுகம் இது இரண்டாவது என நினைக்கிறேன் பின் மணல்கயிறு பின் ஸ்ட்ரெய்ட்டாக விஜயோ சூர்யாவோ யாருடைய அக்காவாக நேருக்கு நேர்..ஹப்புறம் இன்று என்ன ஆனார் எனத் தெரியாது (இதான் சிக்காங்கறது.. கொக்கி போட்டுட்டோம்ல)

எனில் அந்த மிக மனம் கவர்ந்த எரிமலை எப்படிப் பொறுக்கும் பாட்டாளி பாட்டை நான் இங்கே உங்களுக்காக...போடமாட்டேன்...போங்க..அதுக்குப் பர்த்தியா...


https://youtu.be/PsHJIb--hG8

உங்க்ளுக்குல்லாம்லீவ் எனக்கு வொர்க்காக்கும்..:)

vasudevan31355
1st May 2016, 10:57 AM
கோபால் சாருக்காக மீள்பதிவு. ('மனதை மயக்கும் மதுர கானங்கள்' பாகம் 1)

இன்றைய ஸ்பெஷல் (5)

மிக மிக அரிய பாடல்

1973 -ல் வெளிவந்த, தாயகம் பிக்சர்ஸ் தயாரித்த 'வள்ளி தெய்வானை' படத்தின் மிக மிக அபூர்வ பாடல். அபூர்வ பாடகர்கள் இப்பாடலைப் பாடியுள்ளார்கள். தனசேகர், மல்லிகா என்ற பாடகர்கள்தான் அவர்கள்.

http://i1.ytimg.com/vi/qQTPVO8N3Bs/hqdefault.jpg

'மலர்களின் ராஜா
அழகிய ரோஜா'

என்று தொடங்கும் மிக அழகிய பாடல்.]

http://i1.ytimg.com/vi/jev64yvxsRA/hqdefault.jpg

மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்
தங்கராஜா ராஜா ராஜா மகராஜா

காதலின் ராணி
கலைதரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி ராணி ராணி மகராணி

மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்
தங்கராஜா ராஜா ராஜா மகராஜா

ஊரினில் உறவைத் தேடிடும் நினைவு
பருவத் தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு

ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை

பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
அமுதத் தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்

தலைமுறை புகழின் குலம் நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர்வளம் சேர்ப்போம்.

பாரத வீரர் மார்பினில் இணையும் (தேசிய நடிகர் சசிகுமாருக்கு புகழ்க் கிரீடம்)
பாவையின் மனமே கனி போல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்த்திடும்
பேதம் அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்

மலர்களின் ராஜா
அழகிய ரோஜா

என் இதய வானில்
இன்ப ராணி ராணி ராணி மகராணி

லா ல லா லாலா....லா ல லா லாலா

கேட்க கேட்க அவ்வளவு இனிமை.

மல்லிகாவின் மந்திரக் குரல். (அதுவும் 'பாரத வீரர் மார்பினில் இணையும்' எனும் போது ஒரு ஹை பிட்ச் தூக்குவார் பாருங்கள்! வார்ரே வா!)

சற்றே நடுங்கும் குரலில் எம்.எல்.ஸ்ரீகாந்தை நினைவு படுத்தும் தனசேகரன்.

என்.எஸ்.தியாகராஜன் என்பவர் இப்படத்தின் இசையமைப்பாளர்.

இப்பாடலை வீடியோவில் அப்லோட் செய்த TFM Lover அவர்களுக்கு மிக்க நன்றி!

இப்பாடலுக்கு youtube ல் comment பட்டியலைப் பார்க்கும் போது ஒரு இன்ப ஆச்சர்யம்.

இப்பாடலுக்கு இசை அமைத்திருந்த என்.எஸ்.தியாகராஜன் அவர்கள் தன் கருத்தை இங்கு பதிவு செய்து TFM Lover அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்த போது என் நெஞ்சு நெகிழ்ந்தது உண்மை.

(I am the music director N.S.Theyagarajan of this song and was looking for it.Thanks a lot for uploading TFML!)

அதுவும் பாடலின் ஆரம்ப இசையும், இடையிசையும் அட்டகாசமான அட்டகாசம். இப்படிப்பட்ட திறமைசாலிகள் எல்லாம் எங்கு போனார்கள்?

அதுவும் மல்லிகா 'மலர்களின் ராஜா' என்று கொஞ்சுவதும் தொடர்ந்து
அழகிலே 'ர்ர்ர்ர்ரோஜா'... என்று ரோஜாவுக்கு அழுத்தம் தந்து பாடுவதும் நம்மை வியக்க வைத்து விடும்.

தேசிய நடிகர் சசிகுமாரும், குமாரி பானுமதியும் பாடும் டூயட் பாடல் இது. நான் கூட இப்பாடலைப் பார்ப்பதற்கு முன் பயந்தேன் அருமையான இப்பாடலை எப்படிப் படமாக்கியிருப்பார்களோ என்று. நல்லவேளையாக பாடலைக் கெடுக்காமல் எடுத்திருப்பார்கள். ]

'அகத்தியர்' திரைப்படத்தில் சிவக்குமாருடன் பானுமதி.

http://www.thehindu.com/multimedia/dynamic/01439/26frBanuma_thi_1_j_1439124g.jpg

எம்.பானுமதி நடிகர் திலகம் நாடகக் குழுவில் பெரும் அங்கம் வகித்தவர். நிறைய படங்களிலும் நடித்துள்ளார். கோபால் உச்சி குளிர்ந்து மகிழ்வாரே 'காதல் ஜோதி' படத்தில் 'ஓம் மேல கொண்ட ஆச' ன்னு. அந்தப் படத்தில் விதவையான இளம்பெண்ணாக (!) பானுமதி நடித்திருப்பார். சற்று முற்றிய முகம் இவருக்கு. இதனால் இளமை மிஸ்ஸிங். 'வியட்நாம் வீடு' படத்தில் நாகேஷுடன் ஜோடியாக 'மை லேடி... கட் பாடி... நீயே எந்தன் ஜோடி' பாடலுக்கு ஆடியிருப்பார். 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் சூலமங்கலம் சகோதரிகள் பாடும் புகழ் பெற்ற பாடலான 'திருத்தணி முருகா... தென்னவர் தலைவா!' பாடலுக்கு நாட்டியம் சிறப்பாக ஆடியிருப்பார் பானுமதி. நிறைய தொலக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

காதலர்கள் டூயட்டிலேயே நமது தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்துவது அற்புதம். இப்போது படங்களில் தேசியக் கொடியை யார் காட்டுகிறார்கள்? டாஸ்மாக் கடைகளைத் தான் காட்டுகிறார்கள். ]

பல பேர் இப்பாடலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டிருந்தாலும் மறந்திருக்கக்கூடும். இப்போது கேளுங்கள். ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.]


http://www.youtube.com/watch?v=qQTPVO8N3Bs&feature=player_detailpage

இப்படத்தில் ரவிச்சந்திரன் பிரமிளா இணை. (பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே) திரைக்கதை இயக்கம் தில்லை ராகவன்.

vasudevan31355
1st May 2016, 11:09 AM
ரவி-பிரமிளா நடிப்பில் வள்ளி தெய்வயானை என்றொரு படம்.1972 அல்லது 1973 வாக்கில்.பிரமிளா இரட்டை வேடம். இந்த படத்தில் டி.ஆர்.பாப்பா போல ரேடியோ இசையில் பிரபலம் ஆன தியாகராஜன் என்பவர் இசை. பூத்திருந்து காத்திருந்தேன் சந்தோசம் -சோகம் என்று இரண்டு முறை. (சோகம் நன்றாக இருக்கும்)



இதுவும் கோபாலருக்காக.

மகிழ்ச்சி


https://youtu.be/aPS5hWoHG-w

சோகம்


https://youtu.be/CzT_J9Tu_hc

RAGHAVENDRA
1st May 2016, 11:18 AM
தாடி ஒட்டியகன்னமாய் சந்த்ரசேகர்..(அ காலப் படங்களில் சாவதற்காகவே இவரைப் போட்டுப் படுத்துவார்கள்)

Yes, அந்தக் காலத்து சௌகார் ஜானகன், ஸ்ரீரஞ்சனன்...

RAGHAVENDRA
1st May 2016, 11:19 AM
வாசு சார்
வள்ளி தெய்வானை பாடலைப் பற்றிய தங்கள் மீள்பதிவு, எத்தனை முறை படித்தாலும் சலிக்காத விறுவிறுப்பான நடையில் சுவாரஸ்யமாயிருக்கிறது.
பாராட்டுக்கள்.

vasudevan31355
1st May 2016, 02:42 PM
மதுண்ணா! ராகவேந்திரன் சார்,

நீராட்டுத் தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டிப் பேசட்டுமே
மேலாகக் கிள்ளைகள் ஆராத்தித் தட்டோடு
தாலாட்டுப் பாடட்டுமே.

படம் வரும்போதோ, அதற்கு முன்னாலோ மேற்கண்ட வரிகளில் ஒரு வார்த்தை மாறி இருந்ததா? அது பற்றி சர்ச்சை எதுவும் எழுந்ததா? ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. 'கண்மணி ராஜா'க்களாக உங்களை நினைத்துக் கேட்கிறேன். சந்தேகம் தீர்க்க. ப்ளீஸ்.

Gopal.s
1st May 2016, 04:16 PM
பாடல்களால் ஒரு பாலம் : இரயிலில் ஓர் ஒயில்
- அபுல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தமிழில்,

திரைப்படம்: சிவகாமியின் செல்வன்

பாடலாசிரியர்: புலமைப்பித்தன்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

திரையில்: சிவாஜி கணேசன், ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ.



இந்தியில்,

திரைப்படம்: ஆராதனா

பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி

இசை: எஸ்.டி.பர்மன்

பாடியவர்: கிஷோர் குமார்

திரையில்: ராஜேஷ் கன்னா, சுஜித் குமார், ஷர்மிளா டாகூர்



'சலசல சலசல இரட்டைக்கிளவி

தகதக தகதக இரட்டைக்கிளவி

உண்டல்லோ தமிழில் உண்டல்லோ' என இரட்டைக்கிளவியை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவைத்தவர் வைரமுத்து.

பல்லவியின் இரண்டு அடிகளின் கடைசியிலும் இரட்டைக்கிளவிகள். தொடர்ந்த இரண்டு சரணங்களின் கடைசி அடிகளிலும் இரட்டைக்கிளவிகள். அவற்றின் முன்னே கச்சிதமாகப் பொருந்துகின்ற முதலடிகள். இப்படி நகாசு வேலையை திரைப்பாடலில் செய்துவைத்தவர் புலமைப்பித்தன்.

ஜிகுஜிகு, ஜிலுஜிலு, குளுகுளு, கிளுகிளு இவையே அந்த இரட்டைக்கிளவிகள்.

அது ஒரு குளிர்ப்பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை படர்ந்திருக்க, அதனிடையே கோடு கிழித்தாற்போல இருப்புப்பாதை. இருப்புப் பாதையையொட்டி அதனுடன் இணையாகச் செல்லும் சாலை. அங்கே செல்லும் இரயிலின் வேகம் ஒன்றும் காற்றைக் கிழித்துப் பறப்பதாக இல்லை. சாலையில் செல்லும் எந்த வாகனமும் இரயிலின் வேகத்தோடு கூடவே செல்வதற்குத் தோதுவான வேகம்.

இரயிலின் சன்னலின் ஓரத்தில் ஓர் ஒயில் அமர்ந்திருக்கிறாள். தடிமனான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே வருகிறாள். புத்தகத்தை ஒயில் படித்தாளோ இல்லை படிப்பதாகப் பாவனை செய்தாளோ எவரும் அறியார். ஆனால், இரயிலுடன் கூடவே சாலையில் வாகனத்தில் வந்த இளஞன் ஒருவன் ஒயிலைப் படித்துக்கொண்டே வந்தான். அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து அவனது மனதையும் புரட்டிப் போட்டாள். அவள் புரட்டிப் போட்டதில் அவனது மனதில் காதல் விழித்துக்கொண்டது. காதல் வந்தால் கவிதையும் கூடவே வரவேண்டுமல்லவா, வந்தது.

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று

மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே

ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே!

பெண்மை என்னும் தென்றல் ஒன்று

என்னைத் தொட்டுக் கொஞ்சும் இன்பம் ஹே

ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹே!

காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி - இரு

கண்களில் மையெழுதி!

கண்டுகொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி - அவள்

கோடியில் ஓரழகி!

தொட்டுத் தொட்டு கட்டுக் கதை

இட்டுச் சொல்லும் பட்டுக் கண்கள்! ஹோ!

குளுகுளு குளுகுளு குளுகுளு ஹே!

நேற்றிரவு நல்ல பால்நிலவு - எந்தன்

நெஞ்சினில் ஓர் கனவு!

வந்தவள் யார் இந்தத் தேவதையோ - இவள்

வார்த்தைகள் தேன்மழையோ!

செல்லக் கன்னம் வெல்லம் என

மெல்லமெல்ல கிள்ளக்கிள்ள! ஹோ!

கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹே!

தமிழ்த் திரையில் இரயிலில் ஒயிலாகத் தோன்றியவர் வாணிஸ்ரீ. உடன் செல்லும் வாகனத்தில் சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும். புத்தகத்தைப் பார்ப்பதும், சிவாஜியைப் பார்ப்பதும், பின்பு அலட்சியமாக முகத்தைச் சுழித்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிப்பதுமான பாவனையில் துவங்கி, மெல்லமெல்ல பாடலில் ஒலிக்கும் வர்ணனைகளை ரசிக்கத் துவங்கி, இதழோரத்தில் தோன்றும் புன்னகையுமாக வாணிஸ்ரீ.

Rajesh Kanna, Sharmilaஆராதனாவில் ஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அலட்சியமாகப் பார்க்கும் பார்வையை ஓரிரு வினாடிகள் வீசுவாரென்றால், அடுத்த வினாடி பொய்யான கோபப் பார்வையை வீசுவார். பிறகு புத்தகத்தில் முகம் புதைத்துக்கொள்ளும் பாவனையில் சில வினாடிகளும், மெதுவாகப் புத்தகத்தை விலக்கி அவனது பாட்டில் இருக்கும் நாயகி தான்தானா என்னும் சந்தேகம் தன்னை ஆட்கொண்டது போன்ற முகபாவனையில் சில வினாடிகளாகளுமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே பல உணர்வுகளை வெளிப்படுத்துவார்.

இப்படியான முகபாவங்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்த் திரையில் வந்துகொண்டே இருக்கின்றன. துவக்கத்தில் கொஞ்சம் விலகி நிற்கவேண்டுமென நினைப்பதும், பிறகு இணைந்துகொள்வதுமாக பார்க்கின்ற படங்களிலெல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் வந்துபோனாலும் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்குக் காரணம் நமது மனதில் இயல்பாகவே வேர்விட்டிருக்கும் மென்மையான உணர்வுகளும், திரையில் தோன்றுகின்ற நடிக நடிகையர் மேலிருக்கும் அபிமானமுமே. இந்த அபிமானங்கள் வளர்ந்து சார்பு நிலையை உருவாக்காமலிருந்தால் அது நடுநிலை.

காட்சியில், திறந்த ஜீப்பினை ஓட்டிக்கொண்டு ஏ.வி.எம்.ராஜன் சிவாஜியின் நண்பராக அவ்வப்போது சிந்தும் புன்னகையுடன் வர, தனக்கே உரிய அற்புதமான உதட்டசைவில் சிவாஜி, புலமைப்பித்தன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணிக்கு உயிரூட்டிக்கொண்டு வர, மூன்று நிமிடங்களில் பெரிய காதல் நாடகத்தையே திரையில் அரங்கேற்றிக் காட்டிய பாடலிது.

இந்தியில் இதன் மூலவடிவில் ராஜேஷ் கன்னாவும், சுஜித் குமாரும் ஜீப்பில் வர, இரயிலில் ஷர்மிளா டாகூர்.

இந்தித் திரையில் எழுபதுகளில் ராஜேஷ் கன்னாவுக்கு இருந்த அங்கீகாரம் அபாரமானது. கொஞ்சம் தேசபக்தி, கொஞ்சம் அம்மா பாசம், கொஞ்சம் தங்கைப் பிரியம், கொஞ்சம் காதல், மிகமிகக் கொஞ்சம் வீரம் இப்படியான கலவையில் வெற்றிப் படங்களின் நாயகனாகவே அவர் வலம் வந்துகொண்டிருந்தார்.

இந்தப் பாடல் காட்சியில் ராஜேஷ் கன்னாவின் நண்பராக வண்டியை ஓட்டிக்கொண்டு வருகின்ற சுஜித் குமார் வங்காளத்தைச் சேர்ந்தவர். மிதுன் சக்ரபோர்த்தியின் வருகைக்கு முன்பு வரையில் வங்காளத்திலிருந்து வந்து பிரபலமாகக் காலூன்றிய நடிகர் என சுஜித் குமாரைச் சொல்லலாம். பின்னாளில் சுஜித் வில்லனாகிப்போனார்.

ஷர்மிளா டாகூருக்கும் வாணிஸ்ரீக்கும் இயல்பாகவே பொருந்துகின்ற உயரமான சிகை அலங்காரமும், இந்தியில் இருந்ததைப் போலவே தமிழிலும் ஆண்களின் உடையமைப்பில் நேபாளபாணித் தொப்பியும், ஜிகுஜிகுவென பாடலுடன் சேர்ந்து ஒலிக்கும் இரயிலின் சத்தமும், சிலநேரங்களில் இந்தியைப் பார்க்கிறோமா தமிழைப் பார்க்கிறோமா என யோசிக்கச் செய்யும்.

தமிழில் சரணத்தில் கவிஞர் சொல்கிற கனவில் வந்த தேவதை, இந்தியில் பாடலின் பல்லவியிலேயே வந்துவிடுகிறாள்.

மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ

ஆயே ருத்து மஸ்தானி கப் ஆயேகி தூ

பீத்து ஜாயே ஸிந்தகானி கப் ஆயேகிதூ

சலே ஆ தூ சலே ஆ!

எந்தன் கனவினில் வந்த தேவதையும் நீயோ

இந்த வசந்தத்தின் மொத்த சுகந்தமும் நீயோ

என்னில் வாழவந்த காவியப்பெண்ணாக நீயோ

வருவாய்! நீ வருவாய்!

(இது வார்த்தைக்கு வார்த்தையான மொழிமாற்றம் அன்று. பொருளை உள்வாங்கிக்கொண்டு பாடலின் வரிகளைத் தமிழில் அதே மெட்டிற்குப் பொருந்தும்படியாக மாற்றி எழுதியது. ஓரளவிற்குதான் வரிகள் பொருந்தும். இனி தொடரப்போகும் எல்லா மொழிமாற்றங்களும் இப்படித்தான் இருக்கும்.)

காதலின் வீதியும் தோட்டத்து மலர்களும்

எங்கும் தோன்றும் வண்ணமயமும்

உன் காதலின் கீதத்தைக் கேட்கத் துடிக்கும்!

(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)

ப்யார்கி கலியான் பாகோன்கி கலியான்

சப்ரங்கு ரலியான் பூச்ரஹிஹை

கீத் பன்ஹட்டுபே கிச்தின் காயேகி தூ

(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)

இந்தியில் இந்தப் பாடலில் ஒலித்த ஒரு குறும்பு தமிழில் ஒலிக்கவில்லை. அவளை வர்ணித்துக்கொண்டே செல்லும் பாடலின் முடிவில் நாயகன் நாயகியை செல்லமாகச் சீண்டிப்பார்ப்பான். 'என் கனவில் வந்த தேவதையே நீ எப்போது என்னுடன் வருவாயோ, எப்போது காதலின் கீதம் பாடுவாயோ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே, கடைசியில், 'எனக்கு நம்பிக்கையில்லை, உன்மேல் உண்டானது போலவே இன்னொருத்தியின் மீதும் காதல் உண்டாகாது என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அப்படி உண்டாகிவிட்டால் நீ வருத்தப்படுவாய்' என்று சொல்கிறான்.

க்யா ஹை பரோஸா ஆஷிக் தில்கா

அவுர் கிஸிபே யே ஆஜாயே

ஆகயாதோ பஹூத் பச்தாயேகி தூ

(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)

நாளையென் கனவில் இன்னொரு கீதம்

தோன்றும் வேளை பாதை மாறும்

நீ கனலாகி என்னை அன்று சூழக்கூடும்!

(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)

இப்படிக் காதலில் துடித்த அவர்கள் சிருங்காரத்தில் துடித்த பாடல் ஒன்றும் இதே திரைப்படத்தில் இருக்கின்றது.

Gopal.s
1st May 2016, 04:30 PM
C.V.Rajendran Films



Anubavam Pudhumai (1967) Galatta Kalyanam (1968) Nil Gavani Kadhali (1969) Veettuku Veedu (1970) Pudhiya Vazhkai (1971) Sumathi En Sundari (1971) Nawab Naarkali (1972) Raja (1972) Needhi (1972) Nyayam Ketkirom (1973) Ponnunjal (1973) Manidharil Manikkam (1973) En Magan (1974) Sivagamiyin Selvan (1974) Vani Rani (1974) Thrimurthy (1975) Dulhan (1975) Maalai Sooda Vaa (1975) Unakkaga Naan (1976) Galate Samsara (1977) Kittu Puttu (1977) Singaporenalli Raja Kulla (1978) Vazhthungal (1978) Preethi Madu Thamashe Nodu (1979) Adalu Badalu (1979) Kamala (1979) Ullasa Paravaigal (1980) Usha Swayamvara (1980) Garjanai (1981) Garjane (1981) Garjanam (1981) Do Dil Diwane (1981) Thyagi (1982) Sangili (1982) Lottery Ticket (1982) Prema Mathsara (1982) Sandhippu (1983) Naane Raja (1984) Vaazhkai (1984) Raja Veettu Kannukkutty (1984) Sahachariyam (1984) Ungal Veetu Pillai (1984) Hum Nahin Jhukenge (1985) Unakkaga Oru Roja (1985) Perumai (1985) Puthiya Theerppu (1985) Chiranjeevi (1985) Poi Mugangal (1986) Raja Nee Vaazhga (1986) Anand (1987) Poorna Chandra (1987) Chinnappadass (1989)

RAGHAVENDRA
1st May 2016, 05:07 PM
வாசு சார்
சிவகாமியின் செல்வன் தெலுங்கில் கன்னவாரி கல்லலு என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்தது. 1975 ஜனவரி 1 என நினைக்கிறேன் (வருடம் துல்லியமாக நினைவிலில்லை). அன்று நாங்கள் திருப்பதிக்கு சாமி தரிசனம் சென்று விட்டு திரும்பும் போது மறுநாள் மாலையாகி விட்டிருந்தது. அங்கு பிரதாப் தியேட்டரில் கன்னவாரி கல்லலு என்ற படம் அப்போது தான் வெளியாகி இருந்தது. போஸ்டர் பார்த்தால் நம்ம சிவகாமியின் செல்வன் காட்சிகளைப் போன்றே இருந்தது. அதிலும் வாணிஸ்ரீ ஆனால் நாயகன் ஷோபன் பாபு. எப்படித் தான் இருக்கிறது பார்ப்போமே என்று உள்ளே போனது தப்பாகிப் போனது. நமக்கும் அதற்கும் ரொம்ப தூரம். அநியாயத்திற்கு வாணியை வீணடித்திருந்தார்கள். அவர் ஒருவர் மட்டுமே ஆறுதல். பாடல்கள் கொஞ்சம் பரவாயில்லை. கொடுமை என்னவென்றால், உள்ளம் ரெண்டும் பாடல் காட்சியை நாயகன் தண்ணீரில் ஸ்கேட்டிங் செய்வது போலவும், நாயகன் படகில் அமர்ந்து பார்ப்பது போலவும்... வாழ்க்கையே வெறுத்து விட்டது. பாடல் காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு தூங்கி விட்டோம். வாழ்க்கை வெறுத்துப் போவது என்றால் என்ன என்பதை அன்று தான் தெரிந்து கொண்டோம்.

யாம் பெற்ற இன்பத்தை (இன்பமா அது ... துன்பத்திலும் துன்பம் பெருந்துன்பம்).. நீங்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக யூட்யூபில் தேடினால் கிடைக்கவில்லை. இரு பாடல்கள் மட்டும் காணொளிகள் உள்ளன. ஆனால் அதில் ஆடியோ ஒலிக்கவில்லை.

பார்த்து தான் வையுங்களேன்..

https://www.youtube.com/watch?v=DZ8JNAyfxNM

இனியவளே பாடல் தெலுங்கில்

https://www.youtube.com/watch?v=Ll7inf7FmIE

மேள தாளம் பாடல் தெலுங்கில்..

RAGHAVENDRA
1st May 2016, 05:13 PM
சில பாடல்கள் ஆடியோவில் உள்ளன

https://www.youtube.com/watch?v=EXoEgKENwYk

எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது

https://www.youtube.com/watch?v=v7OXo22P23M

உள்ளம் ரெண்டும்

https://www.youtube.com/watch?v=aHYpmajM_L8 -

ஆடிக்குப் பின்னே ஆவணி மாதம்

https://www.youtube.com/watch?v=-xxkeuJURUY

என் ராஜாவின் ரோஜா முகம்

chinnakkannan
1st May 2016, 09:18 PM
குழந்தை போல மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள். //

வாஸ்ஸூ..கொஞ்சம் லேட்டு தான்..பதிலிடுவதற்கு..பட்..வெகுளி வேற மனவளர்ச்சி குன்றியங்கறது வேறயோல்லியோ.. அந்தப் பொண்ணுக்கு வெகுளியான வெள்ளந்தியான சுபாவம்.. கட்டக் கடோசில எஸ் எஸ் ஆர் கிட்டக்க சீறுவார் பாருங்க நதி.. நானா இருந்தா அந்தாளைத் தேடிப் பிடிச்சு வெட்டிப் போட்டிருப்பேன்..உன்னைமாதிரி ஓடி வந்திருக்க மாட்டேன் என.. அது ஒரு வாவ் காட்சியோன்னோ.. அதே போல ஒல்லி ஒல்லி ஹைஹை விஜயாவையும் தன்னையும் சம்பந்தப் படுத்தி மற்றவர்கள் பேசுவதை எஸ் எஸ் ஆரிடம் பொங்குவது.. இன்னொரு வாவ்.. கடோசில்ல சாவித்ரியை அனாவசியமா சாகடித்திருக்க வேண்டாம் என்பது எனக்கு அந்தக்காலத்திலிருந்தே ஒரு எண்ணம்..

பேஸிக்கா பார்த்தா அந்தப் பெரிய மனிதரோட பொண்ணு சரியில்லைன்னு ஊர் சொல்றதுக்கெல்லாம் பெம ரங்காராவ் வேதனைப்படறதும் சரியில்லைன்னு தான் படறது இப்போ.. ஆள்படை அம்பு இருக்கறச்சே எம் ஆர் ராதாவை ஆள் விட்டாவது அடிச்சுருக்கலாமில்லை அந்தப் பெரியவர்..

ம்ம் மறுபடிஒருக்கா பாக்கணும்..

madhu
2nd May 2016, 04:42 AM
மதுண்ணா! ராகவேந்திரன் சார்,

நீராட்டுத் தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டிப் பேசட்டுமே
மேலாகக் கிள்ளைகள் ஆராத்தித் தட்டோடு
தாலாட்டுப் பாடட்டுமே.

படம் வரும்போதோ, அதற்கு முன்னாலோ மேற்கண்ட வரிகளில் ஒரு வார்த்தை மாறி இருந்ததா? அது பற்றி சர்ச்சை எதுவும் எழுந்ததா? ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. 'கண்மணி ராஜா'க்களாக உங்களை நினைத்துக் கேட்கிறேன். சந்தேகம் தீர்க்க. ப்ளீஸ்.

எனக்குத் தெரிந்த வரை இந்தப் பாடலில் "போராட்டிப் பேசட்டுமே" என்று எஸ்.பி.பி.பாடியிருந்தார். அது பற்றிய சர்ச்சைகள் வெகு நாள் வரை நடந்து கொண்டுதான் இருந்தன. படம் ரிலீசானபோது நான் பார்க்கவில்லை. பல காலம் சென்று நான் பார்த்த சமயத்திலும் அது போராட்டி என்றுதான் இருந்தது. அந்த ஒரிஜினல் வெர்ஷன் இங்கே http://shakthi.fm/ta/album/show/d87d1c99. எப்போது மாற்றினார்கள் என்று தெரியவில்லை

ஆடியோவில் போராட்டியவர் வீடியோ வெர்ஷனில் பாராட்டுகிறார்

https://www.youtube.com/watch?v=DysYMqUTQWk

madhu
2nd May 2016, 05:03 AM
கடோசில்ல சாவித்ரியை அனாவசியமா சாகடித்திருக்க வேண்டாம் என்பது எனக்கு அந்தக்காலத்திலிருந்தே ஒரு எண்ணம்..

எனக்கும் அதே எண்ணம்.. ( ந.தி. தாலி கட்டியதும் சாவித்திரி கண்ணைத் திறந்து சிரித்து அவர் கண்ணையும் துடைப்பார் என்று எதிர்பார்த்தபடி இருந்தேன் ) இப்படி ஒரு எண்ணத்தை எல்லார் மனசிலும் வரவழைத்ததுதான் படத்தின் வெற்றி.

vasudevan31355
2nd May 2016, 07:43 AM
//எனக்குத் தெரிந்த வரை இந்தப் பாடலில் "போராட்டிப் பேசட்டுமே" என்று எஸ்.பி.பி.பாடியிருந்தார்.//

கரெக்டாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். கிரேட்.:clap: அதை மனதில் வைத்துதான் சந்தேகம் கேட்டேன். தெளிவு படுத்தியதற்கு ஒரு 'ஓ'.

இதே போல பி.பி.எஸ்.'பொன்னித் திருநாளி'ல், சுசீலாவுடனான ஓர் டூயட் பாடலில் 'வீசு தென்றலே வீசு வேட்கை (சரியா?) தீரவே வீசு' வார்த்தை தவறு செய்திருப்பார்தானே? அது பாடலாசிரியர் தவறா அல்லது பாடகர் தவறா என்று தெரியவில்லை.

'பாடு கோகிலம் பாடு
பாசமாக நீ பாடு'

என்பதை

'பாடு கோகிலம் பாடு
பாட்டமாக நீ பாடு'

என்று பாடியது போல ஞாபகம். ஒருவேளை நான்தான் தவறு செய்கிறேனா? உங்களுக்கு இது பற்றி தெரிந்தால் கூறவும். இல்லையென்றால் வேதாளம் விக்ரமாதித்தனிடம் சொன்னது போல ஆகி விடும்.:)

அது போல

'பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை'

'நிச்சய'மாக இந்த வரி சரியா?:) 'பணங்கள்' என்று வருமா?

Gopal.s
2nd May 2016, 07:44 AM
Telugu version of Sivagamiyin selvan- Direction S.S.Balan- My dear Uncle. But it is a mokkai version.

RAGHAVENDRA
2nd May 2016, 07:51 AM
வாசு சார்
பாராட்டி போராட்டி... இதோடு சிலோன் ரேடியோ போராடியே விட்டது. ரிக்கார்டில் போராட்டி என்று தானிருக்கும். ஏதோ ஒரு அறிவிப்பாளர் புண்ணியவான் போனால் போகட்டும் என்று ஒரு சப்பைக்கட்டு விளக்கம் கூட கொடுத்தார். யார் ஞாபகமில்லை. வைக்கோல் போரை அவர்கள் ஆட்டும் போது அது எப்படி ஆடுகிறதோ அது போல மனம் காதல் வசப்பட்டவர்களை ஆட்டிப்பார்க்கும் என்று ஒரு விளக்கம். இதையறிந்தவுடன் படத்தில் மாற்றி விட்டார்கள். இசையமைப்பாளரின் கவனத்திற்கு இந்த விவாதம் போனவுடன் படத்தில் அவர்களே மாற்றி விட்டார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதைப் போல பல பாடல்கள்.

RAGHAVENDRA
2nd May 2016, 07:56 AM
வீசு தென்றலே வீசு பாட்டைப் பற்றியும் வேறு சில பாட்டுக்களைப் பற்றியும் கேட்டிருந்தீர்கள்.

பி.பி.எஸ்.ஸாகட்டும், எஸ்.பி.பாலாவாகட்டும், ஜேசுதாஸாகட்டும்... தமிழ் உச்சரிப்பு என்பது சற்று யோசிக்கவேண்டிய விஷயம் தான். ஆனால் பாலாவைப் பொறுத்த மட்டில் துவக்க காலத்தில் சற்று தடுமாற்றம் இருந்திருந்தாலும் போகப் போகத் திருத்திக் கொண்டு அருமையாகப் பாடப் பழகி விட்டார். திருச்சி லோகநாதன், டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பலரின் தாய்மொழி தமிழாக இருந்ததால் அவர்களின் உச்சரிப்பில் சிறிதும் பிழை இருக்காது. ஆனால் பி.பி.எஸ். அவர்களைப் பொறுத்த மட்டில் சில எழுத்துக்கள் தடுமாற்றமே. ல ர வாக மாறலாம். பல எழுத்துக்கள் துல்லியமாக உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது. இன்றும் அவற்றை கவனித்தால் தெரியும். ஜேசுதாஸ் கேட்கவே வேண்டாம். இதர மொழியைத் தாய் மொழியாய்க் கொண்டு தமிழில் மிகத் தெளிவாய் உச்சரித்துப் பாடக் கூடியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள், ஜெயச்சந்திரனும் மலேசியா வாசுதேவனும் ஆவர்.

பெண் பாடகியரைப் பொறுத்தமட்டில் உச்சரிப்பில் பிழை செய்வர்கள் அவ்வளவாக இல்லை.

RAGHAVENDRA
2nd May 2016, 07:59 AM
'பாடு கோகிலம் பாடு
பாசமாக நீ பாடு'


நல்லவேளை மோசமாக நீ பாடு என்று சொல்லாமல் விட்டார்களே..

vasudevan31355
2nd May 2016, 08:47 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

53-ஆவது பதிவு

'எதிர்பார்த்தேன்...உன்னை எதிர்பார்த்தேன்'

https://i.ytimg.com/vi/n9h7blgFqQk/maxresdefault.jpg

நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கச் சொன்ன பாலா பாடல்.

'அன்புச் சகோதர்கள்' படத்திலிருந்தே.

மன்னிக்கவும். பாடல் வெகு சுமார்தான். டியூன் வறட்சி. மாகாதேவனுக்கே வெளிச்சம். 'சப்'பென்று ஒரு டூயட் பாடல். அருமையான பாலாவின் பாடல்களை இதுவரை பார்த்த நமக்கு இப்பாடல் ஒரு ஏமாற்றமே. சுரத்தே இல்லாமல் இருக்கும். போர். என்னைப் பொருத்தவரை சோடை போன சொத்தைப் பாடல். உங்களுக்கெப்படியோ?

பாடலில் வீணையின் பங்கு அதிகம். வெளிப்புறப் படப்பிடிப்பு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355084/2erfg.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355084/2erfg.jpg.html)

நாயகி முன்னால் இரு கைகளையும் ஊன்றி புல்வெளியில் சாய்ந்திருக்க, அவளுக்கருகே பக்கவாட்டில் படுத்தவாறு அந்த கைகளுக்கு கீழே முகம் நுழைத்து, கீழிருந்தபடி அவள் முகத்தை பார்ப்பது ஜெய்சங்கருக்கு வாடிக்கை.:) நிறையப் படங்களில் இது போலச் செய்வார். (மேலே உள்ள படத்தை கவனிக்க) சில சமயங்களில் இவர் எங்கு பார்க்கிறார் என்பது நமக்கே குழப்பமாய் இருக்கும். 'ஜம்பு' பார்த்தவர்கள் இதை நன்றாக உணருவார்கள்.:)

கவிழ்ந்து படுத்தபடி நிர்மலா தரையில் நீச்சல் அடித்தபடி இருப்பார்.:) உட்கார்ந்த இடத்திலேயே காதலிக்கும் வேலையை கச்சிதமாக முடித்து விடுவார்கள் ஜெய்யும், நிர்மலாவும். பாடலின் நடுவில் வரும் ஹம்மிங் கூட அவ்வளவு சுகமில்லை.

அப்போதைய காதல் பாடல்களில் 'மடல் விடும் வாழை' பெரும்பாலும் வராமல் போகாது.:) சின்னா! கவிதை வடிவில் அர்த்தமெல்லாம் கூறி விடாதீர்கள்.:)

'படர்ந்திருக்க' என்பதை பாலா இன்னும் சரியாக முடித்திருக்கலாம். நிறைய தரம் கேட்க வைத்துவிட்டார். சரியா என்பது மது அண்ணா கையில் உள்ளது.

கேமரா டிராலி ஒரு ரோஜாப் பூவைக் கவர் செய்து காதலர்களை 'தேமே' என்று தண்டமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

பாடல் முடியும்போது பாருங்கள். நிர்மலா ஏதோ கடமைக்கு படுத்திருக்கும் ஜெய் மீது சாய்ந்து அணைத்து அணைத்து எழுந்திருப்பார். இயக்குனரோ அல்லது நடன இயக்குனரோ சொல்லிக் கொடுத்ததை அப்படியே கிளிப் பிள்ளை போலச் செய்வார் நிர்மல்.

ஒளிப்பதிவு 'பளிச்'தான். ஜெயசங்கரின் 'கருகரு' எண்ணெய் தடவிய முடி பொறாமைப்பட வைக்கும். நிர்மலா அஸ் யூஷுவல்.

ஒன்றும் சொல்லிக் கொள்ள இயலாத பாடல். சுசீலாவின் தெள்ளத் தெளிவான உச்சரிப்பு பெரும் ஆறுதல்.

எதிர்பார்த்து ஏமாந்த பாட்டு. பாட்டு பிடித்தவர்கள் என் மேல் கோபம் கொள்ளாமல் மன்னித்தருள்க.:)

இதே பாலா பின்னாளில் இன்னொரு 'எதிர்பார்த்தேன்' பாடி அசத்தோ என்று அசத்தி எதிர்பார்த்ததற்கும் மேலாக தூள் கிளப்பியதை பின்னால் தொடரில் பார்க்கலாம்.

இனி பாடல் வரிகள். உள்ளது உள்ளபடியே. (பாடல் வரிகள் பெரும்பாலும் 'க' வில் முடிவதை கவனிக்க):)

எதிர்பார்த்தேன்
உன்னை எதிர்பார்த்தேன்
சொல்லமுடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக

அதற்காக

எதிர்பார்த்தேன்
உன்னை எதிர்பார்த்தேன்
சொல்லமுடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக

அதற்காக

ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்

பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும்புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும்புல்வெளி இங்கே படர்ந்திருக்க

காய் பழுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
காய் பழுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க

உன் மடி வேண்டும் நான் படுக்க

கண் உறக்கமில்லாமல் நான் துடிக்க

எனக்குன் மடி வேண்டும் நான் படுக்க

கண் உறக்கமில்லாமல் நான் துடிக்க

அதற்கா...க

எதிர்பார்த்தேன்

ம்

உன்னை எதிர்பார்த்தேன்
சொல்லமுடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக... ஆங்?

அதற்காக

ஆ............ ஆ

மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

ம்ஹூம் ஹூம்.........ம்

மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

குளிர்தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இடம் கொடுக்க
குளிர்தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இடம் கொடுக்க

ஒருவரையொருவர் மறைத்திருக்க

அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

நாம் ஒருவரையொருவர் மறைத்திருக்க

அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

அதற்கா....க

எதிர்பார்த்தேன்

ம்ஹூம்

எதிர்பார்த்தேன்
உன்னை எதிர்பார்த்தேன்
சொல்லமுடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

ம்ஹூம் ஹூம் ஹூம்

ம்ஹூம் ஹூம் ஹூம்

ம்ஹூம் ஹூ...ம் ஹூம்
ம்ஹூம் ஹூம் ஹூம்


https://youtu.be/n9h7blgFqQk

madhu
2nd May 2016, 09:09 AM
வாசு ஜி..

சில பாடல்களில் உச்சரிப்பு சரியாகக் கேட்காத காரணத்தால் சரியாகப் பாடி இருந்தாலும் கூட தவறான வார்த்தையாக காதில் விழ சான்ஸ் உண்டு. அந்த வகையில் சுசீலா, ஈஸ்வரி போன்றோரின் குரல் தெளிவால் பாட்டை பதிவு செய்கையில் ஏதேனும் காரணத்தால் தவறாக உச்சரித்திருந்தால் கூட அப்போதே கண்டுபிடித்து சரி செய்திருப்பார்கள்.

பாலுவுக்கு கொடுத்த பாடல் வரிகளில் தவறு இருந்திருக்கலாம். போராட்டி என்பது தமிழ் வார்த்தையா இல்லையா என்பது பற்றி அவருக்குத் தெரிய நியாயமில்லை. அத்னால் எழுதிக் கொடுத்ததைப் பாடி இருப்பார். அல்லது அவர் தெலுங்கில் எழுதிப் படித்திருந்தாலும் தவறு நடந்திருக்க வாய்ப்பு உண்டு.

அந்தமான் காதலியின் பாடல் "திருக்கோயிலா" அல்லது "தெருக்கோயிலா" என்று ஒரு ஆராய்ச்சி வெகு நாள் நடந்தது. ( எனக்கென்னவோ திருக்கோயில் என்று தான் கேட்கும்..).

// அன்பு சகோதரர்கள் பாடல் நான் கேட்கவில்லை. முதல் முறை கேட்டதுமே மறந்து விட்டேன் //

vasudevan31355
2nd May 2016, 09:21 AM
//சில பாடல்களில் உச்சரிப்பு சரியாகக் கேட்காத காரணத்தால் சரியாகப் பாடி இருந்தாலும் கூட தவறான வார்த்தையாக காதில் விழ சான்ஸ் உண்டு//

நிச்சயமான நிஜம். ஆனா நம்ம உயிர் போகுதே.:)

vasudevan31355
2nd May 2016, 09:23 AM
//( எனக்கென்னவோ திருக்கோயில் என்று தான் கேட்கும்..).//

எனக்கும் அப்படியேதான் ஆரம்பத்திலிருந்தே தோன்றும். என் வரையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

vasudevan31355
2nd May 2016, 09:23 AM
// அன்பு சகோதரர்கள் பாடல் நான் கேட்கவில்லை. முதல் முறை கேட்டதுமே மறந்து விட்டேன் //

:)

chinnakkannan
2nd May 2016, 10:22 AM
எதிர்பார்த்தேன் கொஞ்சம் சுமார் பாட் தான்..வெ.ஆ. நீ ஓகே..

தெருக்கோவிலே ஓடி வா ந்னு தான் எனக்குக் கேட்டது.. இந்தப் பச்சைகிலிக்கொரு என அர்த்தமே மாறிய பாட்டு நினைவுக்கு வருகிறது :)

chinnakkannan
2nd May 2016, 10:30 AM
பணங்க்ள் பணம் ரெண்டுமே ப்ளூரல் தான்..பணம் என்பது சிங்குலர் ல வரவே வராது..

eehaiupehazij
2nd May 2016, 07:00 PM
The Mission on GG's Vision to capture the traits of Love defining boundaries!!!

The Good Old Golden Era of GG Melody and Melancholy!

அது ஒரு ஜெமினி கணேசனின் நிலாக் காலம்! தமிழ்த் திரை தேன்மதுர கானங்களின் விழாக் கோலம்!!
மனதை மயக்கிய ஜெமினியின் இன்பவியல் துன்பவியல் பாடல் நினைவலை நீந்தல்கள் !!


Gemini Ganesan.....the inevitable screen personality in Tamil Movie history....the debonair actor who could bring in a sort of decency and diligence to the love and family based screen plays.....he could enthrall the audience with his suave and corporate looks earning the respect by virtue of his educational background and easy mingling with his colleagues and associates in filmdom...He had a strong opinion that movies should be enjoyed as a part of entertainment to our minds and none should succumb to the craze on film actors....that's why he even kept himself away from fanfare though he was also construed as one of the trinity of Tamil Movie arena!!

The most distinguishing success element that kept GG on his stardom's throne as the King of Love was the fantastic synchronization of his play back voices from AMRaja and PBSreenivas in his earlier and medieval days and SPB or Jesudas in his later days and occasionally TMS too for some situational songs but with lot of voice modulations!!

In fact, GG's career's backbones were PBS and AMR as the melodious songs by them for GG still rule the roost in TV slots!! It is amazing to observe that some the pronunciations perfectly bring out the traits of GG himself!!

நிலவே நீ சாட்சி! பகுதி 1 :

A small GG step on to Moon.....but a giant leap for mankind who are fascinated by love!!


ஜெமினி கணேசனின் காதல் இனிமை ததும்பும் பாடல் காட்சியமைப்புக்களில் குளிர் வெண்ணிலாவும் ஒரு செட் பிராபெர்டி ஆனதில் வியப்பில்லைதான் !
செண்டிமெண்டாக பெரும்பாலான காதல் காட்சிகளை நிலவின் பின்புலத்திலேயே சமாளித்து விட்டார் காதலின் நிரந்தர சக்கரவர்த்தி !
நிலவும் கௌரவ பாத்திரத்தில் தோன்றி மனதை ஈர்த்த ஏ எம் ராஜா Vs பி பி சீனிவாஸ் மனதை வருடும் மதுர கானங்களின் அணிவகுப்பு !

ஜெமினியின் இன்பவியல் பாடல் நினைவலை நீந்தல்!!

வாராயோ வெண்ணிலாவே ...நிலவையே காதல் தூதுவராக through AMRaajaa channel பணி நியமனம் செய்கிறார் அகில லோகங்களிலும் காதல் சாம்ராஜ்ஜியத்தின் ஏகபோக சக்கரவர்த்தி!

https://www.youtube.com/watch?v=K6fGw2kf6xY

நிலவுப்பெண்ணும் மதிமயங்கிய வெண்மதியாக காதல்மன்னரின் புவி ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு பூமிக்கு இறங்கி வர எத்தனிக்கும்போது எவ்வளவு இதமாக பதமாக பிபி சீனிவாஸின் உருகும் குரல் குழைவில் அறிவுரை பகர்கிறார் காதல் சாணக்கியர் ஜெமினிகணேசன்!

ஜெமினியின் துன்பவியல் பாடல் நினைவலை நீந்தல் !!

https://www.youtube.com/watch?v=1zD1Aj5c0qs

adiram
2nd May 2016, 07:20 PM
தாடிக்கார சேட்டனுக்கு இவ்வளவு சப்போர்ட்டா?.

நான் பலமுறை கேட்டும் என் காதுக்கு அது 'தெருக்கோயிலே' என்றுதான் விழுந்தது. அதே சமயம் வாணியம்மா அழகாக 'திருக்கோயிலே' என்று கொஞ்சுவார்.

என் கருத்துக்கு வலு சேர்க்கும் தகவல் ஒன்று. மெகா டிவி நிகழ்ச்சியில் எம்.எஸ்.வி. அவர்கள் சொன்னது. தெருக்கோயிலை திருக்கோயிலாக்க எவ்வளவோ தாஸண்ணாவிடம் போராடியும் முடியாமல் போக, அப்படியே ரெக்கார்ட் பண்ணிவிட்டு, பின்னர் இயக்குனர் முக்தாவிடம் "இந்தப்பாடலை ஏதாவது தெருக்கோடியிலுள்ள கோயில் அருகே படமாக்குங்கள். பொருத்தமாக இருக்கும்" என்றாராம் எம்.எஸ்.வி.

chinnakkannan
2nd May 2016, 08:54 PM
என்றாராம் எம்.எஸ்.வி.// ஓவர் டு ராகவேந்தர் சார்..(ஆமா ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் ரெக்வஸ்ட் ஏன் ஏத்துக்கலை..ஓ ஃபாலோ பண்ணா பொதுமா :) )

chinnakkannan
2nd May 2016, 09:17 PM
எதிரெதிர் பாடல்கள் (Antonym பாடல்கள் எனத் தமிழில் சொல்வார்கள்)

ஸினானிம் அண்டனிம், ஹோமோனிம்னா என்னவாம்..ஆங்கிலத்திலேயே படிச்சுடலாமா..
Antonyms are two words that have opposite meanings. Synonyms are words that have the same or nearly the same meaning. Homonyms are words that are pronounced the same, and are sometimes spelled the same, but have different meanings.

எனில் இங்கே பாடலின் முதல் வார்த்தையை வைத்து அடுத்த பாட் அதற்கு ஆப்போஸிட் என வைத்துத் தொகுக்கலாமா..

நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
தாய் நாட்டின் நாக ரீகம் தெரிந்து நடப்பவள் எவளோ அவளே
ந பெ மி ந பெ..

https://youtu.be/_bEg5I3WdFE

இங்க பாருங்க கெட்ட பெண்மணி மிக கெட்ட பெண்மணி..( ஈ பாட் இப்பதான் கேக்கறேன்) தங்கவேல் ராகினி..

https://youtu.be/VMs9qnSgBF0

chinnakkannan
2nd May 2016, 09:35 PM
எதிரெதிர் பாடல்கள்.. 2

வீசிடும் காற்றில் விகசித்தே கற்பனைகள்
பேசிடும் பல்நூறாய் பெண்ணிலவே – மாசிலா
தூய எழிலணங்கே சுந்தரியே உன்னழகை
வார எழுத்திலையே வா..

பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலுவகைகுணமும் நிறைந்தே நடை போடு.. (ஜெ.பா)

https://youtu.be/omfaWZjatBk

வாசு எழுதாத வண்ணகுரல் தானுண்டா
பேசுங்கள் என்றாலும் போவென்பேன் – ஆசுகவித்
தோற்றத்தில் தானிங்கு தோரணமாய் இட்டிடும்
ஆற்றலைக் கொண்டவர் ஆம்..
(ச்சும்மா பாராட்டி வச்சுக்குவோம்..பின்னால உபயோகப் படும்)

பேசக்கூடாது பேச்சில் வரும் சுகம்..

https://youtu.be/8lFb3vES6h0

chinnakkannan
2nd May 2016, 09:52 PM
எதிரெதிர் பாடல்கள்.. 3

ஏட்டில் எழுத்தில் இயற்கையில் பல்வாறாய்
காட்டிடும் காட்சிகள் கண்களிலே – கூட்டியே
இங்கெழுத வந்தாலோ ஏனென்று கேட்கின்றீர்
பொங்கியே பேசுவேன் போ(ம்)

பேசு இன்னும் இருக்கே..

பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்..

இந்த விடியும் வரை காத்திரு பார்தது சேலத்தில்..சேலத்தில் ஒரு தெருவா இரண்டு தெருவா என நினைவில்லை..போனால் ஒரே தியேட்டர்கள்.. ஒரு சனி மாலை என நினைக்கிறேன்..நானும் என் அக்கா கணவரின் தம்பியும் சென்று என்னபடம் பார்க்கலாம் என செலக்ட் செய்து – இது புதுசாச்சே.. நல்லா இருக்குமா.. பாக்யராஜ்படம் டிக்கட் கிடைக்குதான்னு பார்க்கலாம் என ட்ரை பண்ணியதில்…ஆச்சரியம் கிடைத்து விட்டது (ஏசி.. நாலோ ஐந்தோ நினைவு..அக் அத்திம் என்ன சொல்வார்கள் என சின்னதாய்க் கலக்கல் – திரும்பியதில் எதுவும் சொல்லவில்லை..பத்திரமாய் எடுத்துச் சென்ற பணத்தின் மிச்சத்தைக்கொடுத்தால் எல்லாம் நோக்கு என்றுவிட்டார்கள்)

https://youtu.be/EV0qTcWrkH8

பொய்மையும் வாய்மையுரைத்துபுரை தீர்த்த
நன்மை பயக்குமெனின்..

பின்ன இந்தப் பாட்டுக்கு எதுவும் தோணலையே..சரி ஒருவிருத் போட்டுப் பார்க்கலாம்..

வளவள வென்றே பேசி
…வயணமாய் அலைகள் நீட்டி
பளபள தோற்றங் கொண்டே
…பாங்குடன் இருக்கும் ஆறாய்
கலகல கண்ணன் இங்கே
..கனிவுடன் எழுதிப் பார்க்க
மளமள பேசா மல்தான்
…முடித்திடு என்றால் மாட்டேன்..

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்றும் பந்தம் என்றும் சொன்னால் பாவமே

https://youtu.be/8jH8vAR0VqU

eehaiupehazij
2nd May 2016, 10:37 PM
மனிதன் மாறிவிட்டான் என்கிறார் நடிகர்திலகம்

https://www.youtube.com/watch?v=Yhrp0_XgjdQ

மனிதன் மாறவில்லை என்கிறாரே காதல் மன்னர் !!

https://www.youtube.com/watch?v=2mgBe1Z4-D8

eehaiupehazij
2nd May 2016, 10:51 PM
பெண்களில்லாத உலகத்திலே ..
https://www.youtube.com/watch?v=TwO31yVw8vY
நீ இல்லாத உலகத்திலே
https://www.youtube.com/watch?v=FMwt_ANhryY

RAGHAVENDRA
3rd May 2016, 12:17 AM
சி.க. சார்
ஆதிராம் மெகாடிவியில் வந்தது என்று அருமையாக இடம் பொருள் ஏவல் எல்லாம் சொல்லி தன் கருத்தை வலியுறுத்திய பிறகு சந்தேகம் வரலாமா...
இந்த கேள்வி கேட்ட உங்களுக்கு விஜயகுமாரி பாடலை தொடர்ந்து 24 மணி நேரம் பார்க்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்.

RAGHAVENDRA
3rd May 2016, 12:19 AM
FB Friend Request அனுப்பியுள்ளீர்களா... எந்தப் பெயரில் என எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். எப்போது எனவும் கூற வேண்டுகிறேன். சில requestகள் இன்னும் pendingஇல் உள்ளன. அவற்றில் இருந்தால் உடனடியாக இணைத்துக் கொள்ளலாம். தங்களுடன் நட்பு வட்டத்தில் இணைய மிகவும் ஆவலாயுள்ளேன்.

RAGHAVENDRA
3rd May 2016, 12:21 AM
சி.செ. சார்
தங்கள் ரூட்டே தனி. தூள் கிளப்புங்கள்.

madhu
3rd May 2016, 04:26 AM
சிக்கா...

எதிரெதிர் பாதையில் ஒரே நேரத்தில் பயணமா ? பேஷ்

Richardsof
3rd May 2016, 09:27 AM
1947 - 1948- 1950 TAMIL CINEMA ADVT.

MAKKAL THILAGAM MGR- FIRST HERO MOVIE -1947
http://i63.tinypic.com/20u21r5.jpg

Richardsof
3rd May 2016, 09:28 AM
http://i63.tinypic.com/2q311eh.jpg

Richardsof
3rd May 2016, 09:28 AM
http://i66.tinypic.com/2w33jns.jpg

Richardsof
3rd May 2016, 09:29 AM
http://i66.tinypic.com/2yns807.jpg

Richardsof
3rd May 2016, 09:30 AM
http://i66.tinypic.com/fbexib.jpg

Richardsof
3rd May 2016, 09:31 AM
http://i68.tinypic.com/i41ixv.jpg

Richardsof
3rd May 2016, 09:32 AM
http://i63.tinypic.com/43sea.jpg

Richardsof
3rd May 2016, 09:33 AM
http://i68.tinypic.com/2e1x6rl.jpg

Richardsof
3rd May 2016, 09:34 AM
http://i65.tinypic.com/2pyuyw9.jpg

Richardsof
3rd May 2016, 09:35 AM
http://i67.tinypic.com/im31og.jpg

Gopal.s
3rd May 2016, 09:43 AM
Esvee,

Nice Exhibits. Where from you are sourcing them?

chinnakkannan
3rd May 2016, 09:56 AM
FB Friend Request அனுப்பியுள்ளீர்களா... எந்தப் பெயரில் என எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். எப்போது எனவும் கூற வேண்டுகிறேன். சில requestகள் இன்னும் pendingஇல் உள்ளன. அவற்றில் இருந்தால் உடனடியாக இணைத்துக் கொள்ளலாம். தங்களுடன் நட்பு வட்டத்தில் இணைய மிகவும் ஆவலாயுள்ளேன்.சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி வீஆர் சார்..கண்ணன் ராஜகோபாலனாக்கும் பெயர்.. என் முகமும் உங்களுக்குத்தெரிந்திருக்கும் இப்போது :)

chinnakkannan
3rd May 2016, 10:03 AM
இந்த கேள்வி கேட்ட உங்களுக்கு விஜயகுமாரி பாடலை தொடர்ந்து 24 மணி நேரம் பார்க்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்//எம் எஸ் வின்னா அதாரிட்டி நீங்க தானே ராகவேந்தர் சார்..மீன்ஸ் யூ நோ மோர் அபெளட் தட் இல்லியோ.. அதனால உங்களைச் சொன்னேன்..அதுக்காக வி.கு பாட் பார்க்கச் சொன்னா என் செய்வேன்..விக் விக் விக்..

madhu
3rd May 2016, 10:14 AM
வி.கு பாட் பார்க்கச் சொன்னா என் செய்வேன்..விக் விக் விக்..

அழுவதில் கூட VIK.. VIK.. என்று VIஜய Kuமாரி பேரைச் சுருக்கி அழுவது நியாயமா சிக்கா ?

chinnakkannan
3rd May 2016, 10:41 AM
எதிரெதிர் கானங்கள்

நிறைய நல்ல பாட்டுல்லாம் இருக்கு வி.கு நடிச்சதுல..ம்ம் மனசுல என்னை விட்டு ஓடிப் போக முடியுமா என்று தான் மனசுல வராங்க..அதுக்காக சந்தடி சாக்கில எதிரெதிர் கானங்கள் ல போட்டுடலாம் ஏன்னாக எ வி ஓ போ மு க்கு அப்புறம் வருவது யாராக்கும்..

https://youtu.be/Q9c9x4Af_f0

தவமாய்க் கிடந்ததால் தானாய்க் கனிந்ததா
தமன்னா அழகுதான் தான்..

ஓடோ ஓடோ ஓடோடிப் போறேங்கறாங்க..விட்டுடுவோமா..

https://youtu.be/_p7wbUzXBnk

JamesFague
3rd May 2016, 10:59 AM
Mr CK.

Given a Friend request in FB.



S Vasudevan

madhu
3rd May 2016, 07:10 PM
சரி... நானும் சிக்காவுக்கு துணையாக எதிரெதிர் பாட்டு போடறேன்.


இங்கே சந்தோஷம் பொங்கும் ஒரு வீட்டில் ஒரு தங்கை முருகனை அழைக்கிறாள்..

வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே என்று... ஏன் ? அட... அதுதாங்க படத்தோட பேரு

https://www.youtube.com/watch?v=SD1WGCUcVgU

சோகத்தில் மூழ்கிய காதலி பதில் கொடுக்கிறாள் இங்கே... மல்லிகா...

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

https://www.youtube.com/watch?v=PN3OJSSWiNk

chinnakkannan
3rd May 2016, 09:30 PM
தாங்க்ஸ் மதுண்ணா வருவாயாக்கும் வருவேன்க்கும்..

**
எதிரெதிர் பாட்டுக்கள்..

பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும் மெளனமே போதாதா..

ஐஸ்வர்யா ராஜேஷ்..அடுத்து யார்னு தெரியலை..பட் பாட் நல்லா இருக்கு..

https://youtu.be/-g2HIxZaju8

இந்தம்மா என்ன சொல்றாங்க

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே உன் இதயம் மீட்டுகிறேன்..

https://youtu.be/MUZ4FIxYGLs

புது பத்மப்ப்ரியாக்கு பழைய பத்மப்ரியா ரொம்ப அழகு என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்..அடங்காமலே அலைபாய்வதேன்.. என்னமோ போங்க..:)

chinnakkannan
3rd May 2016, 09:44 PM
எதிரெதிர் கானங்கள் - 6

ந.தி என்னடான்னா சொல்லாதே யாரும் கேட்டால்னு அழகாச் சொல்றார்..

வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும்பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும்.

உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடைபோட்டால்
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..

விதியென்று ஏதுமில்லை வேதங்கள் வாழ்க்கையில்லை
உடலுண்டு உள்ளமுண்டு முன்னேறு மேலே மேலே

அந்தக் காலத்தில் இந்தப் பாட் எவ்ளோ தடவை கேட்டிருப்பேன் பாடியிருப்பேன்..ம்ம் ஆனா கதா நாயகிப்பஞ்சம் தான்..ஆ ஊன்னா ந.திக்கு கே.ஆர்வியைப் பிடிச்சுப்போட்டே படுத்தினாங்க..
.

https://youtu.be/s0Qt6uD8CZQ

இந்தப் பாட்டோட முதல் அடி சொல்லாதே யாரும் கேட்டால்..இதையே தலைப்பா வச்சு ராஜ்பரத் ஒருபடம் எடுத்தார்..அவ்ளவு த்ரில்லா இல்லை..(பட ரிலீஸ் ஸ்ரீ தேவி தான்)


ந.தி அப்படிச் சொன்னா இந்தப் பொண்ணு வேறொரு கான்செப்ட்ல சொல்லாயோ வாய் திறந்துன்னு முழியும் முழியுமா கேட்குது ஆனா அவளோட சோகம் பார்ப்பவரிடம் பதியத் தான் செய்கிறது...

https://youtu.be/czhul3eoTtI

eehaiupehazij
3rd May 2016, 10:03 PM
Vis-s-vis songs!!

எதிரெதிர் நேரெதிர் மதுரகான எதிரொலிகள்!

யாருக்காக இது யாருக்காக .....புலம்பும் நடிகர்திலகம்!

https://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8

உனக்காக எல்லாம் உனக்காக ....சிலம்பும் சந்திரபாபு!

https://www.youtube.com/watch?v=oglrB4w6jaY

eehaiupehazij
3rd May 2016, 10:13 PM
Vis-a-vis Songs!

எதிரெதிர் நேரெதிர் மதுரகான எதிரொலிகள்!

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ....காதல் மன்னரின் பாசிடிவ் திங்கிங்....எடுப்பான தாபம்!!

https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் எஸ் எஸ் ஆரின் கடுப்பான சாபம்!

https://www.youtube.com/watch?v=pM-GnE-76R4

vasudevan31355
3rd May 2016, 10:24 PM
சின்னா எனக்கு நேரெதிராக பாடல்கள் போட்டுக் கொண்டிருக்கிறார். ஐ மீன் எனக்கு நேராக எதிரே சூப்பர் பாடல்களை ஜோர் தலைப்பு கொடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொன்னேன். ம்..கான்செப்ட்ட்டு...

மதுண்ணாவும் வேல்முருகனின் துணையுடன் மதுர கானங்களின் மாளிகை வாசலில் வந்து மயக்க அடி தூள்.

நான் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? ஆனால் ஒரே ஒரு சின்ன மாற்றம். நான் இரண்டு பாடல்கள் போட மாட்டேன். ஒரே பாடலில் கான்செப்ட்டை முடித்து விடுகிறேன். சிக்கனமாக இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் அறிவுரை.:)

காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை

காதலிக்க நேரமுண்டு
கன்னியுண்டு காளையுண்டு.

சிக்கா! அடிக்க வராதீங்க.:) தோ... ஓடியே போயிட்டேன். எஸ்கேப்.


https://youtu.be/rYXr0rvZ2Vk

eehaiupehazij
3rd May 2016, 10:30 PM
Vis-a-vis Songs!!

எதிரெதிர் நேரெதிர் மதுரகான எதிரொலிகள்!


மனிதரைப் பற்றி மனிதர் மன ஓட்டங்கள் !!
மண்ணில் தோன்றிய மனிதரெல்லாம் மண்ணுக்குள்ளேயே மறைவதும் விண்ணுக்குள்ளே உறைவதும் உலக நியதியே !!

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் அவன் ஏனோ மரம்போல் வளர்ந்து விட்டான் ...விரக்தி ஏனோ திரைக்காதலின் நிரந்தர மன்னவரே!!

https://www.youtube.com/watch?v=Wd2A_M6kgLo

யாரடா மனிதன் அங்கே? கூட்டிவா அவனை இங்கே! என்ன செய்யப் போகிறீர்கள் நடிப்பின் நிலையான மன்னவரே!

https://www.youtube.com/watch?v=Di6a4VogInA

தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா ....ஐந்து மனிதராகப் பிரிந்து பதில் தேடும் மன்னாதி மன்னரே!

https://www.youtube.com/watch?v=zwOSls9qlqY

vasudevan31355
3rd May 2016, 10:35 PM
மதுண்ணா!

மதுர கானங்கள் பாகம் 4 ல் பாலா தொடரில் நான் எழுதிய 'வருவாயா வேல்முருகா'. மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு.


எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



(நெடுந்தொடர்)

14

'வருவாயா வேல்முருகா '

'ஏன்' படத்தின் இன்னொரு அருமையான பாலாவின் பாடல். மிக மிக அருமையான பாடல். அந்தப் பாடல்தான் பாலாவின் தொடரில் அடுத்து வருவது.

அண்ணன் சிரமப்பட்டுப் படித்து பி.ஏ.பட்டம் வாங்கி வருகிறான். அவன் பட்டம் வாங்க அல்லும் பகலும் இறைவனிடம் வேண்டிய அன்புத் தங்கையிடம் இந்த சந்தோஷ விஷயத்தைச் சொல்லுகிறான். தங்கை மகிழ்ச்சி அலைகளில் துள்ளிக் குதிக்கிறாள். அண்ணன் தனக்கு அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து விட்டதாகவும், இனி அந்த சின்ன வீட்டில் குடித்தனம் நடத்த வேண்டாம்...பெரிய வீடாகப் பார்க்கலாம் என்று கூறுகிறான்.

தங்கை அந்த வீட்டின் வாசலில் தன் அண்ணன் வக்கீல் என்பதை பெருமையுடன் உணர்த்த 'ராமு பி.ஏ' என்று போர்டு வைத்து அழகு பார்க்கிறாள். அவள் மனமெல்லாம் மகிழ்ச்சி.

அழகாகப் பாடவும் ஆரம்பிக்கிறாள்.

லா லா
லா ல ல ல ல லா

என்று மிக இனிமையாக ஹம்மிங்குடன் பாடல் தொடங்குகிறாள். அவளுடன் சேர்ந்து அவள் அண்ணனும் பாடி மகிழ்கிறான்.

'மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கை என் கோயிலிலே'

என்று அந்த மங்கை மயங்கிப் பாட, அண்ணன் அந்த வரிகளில்

'மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோயிலிலே'

என்று 'மங்கை' யின் இடத்தில் 'தங்கை' யை வைத்து மகிழ்கிறான்.

அண்ணனுக்குத் தங்கையும், தங்கைக்கு அண்ணனும் துணை தேடி மகிழும் வரிகள்.

'திருமணத் திருநாளுக்கு வரும் விருந்தினர்கள் இந்தப் பாவையின் உறவினர்கள்' என்ற வளமான, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத, எதிர்பாராத திடீர் தித்திப்பு வரிகள். பொருத்தமென்றால் பாடலுக்கு அப்படிப் பொருந்தும் பொருத்தம்.

'திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
அவர் பாவையின் உறவினர்கள்'

கண்ணதாசன் ஒருவனாலேயே முடிந்த ஒன்று.

http://i.ytimg.com/vi/SD1WGCUcVgU/hqdefault.jpg

வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கை என் கோயிலிலே

வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள்
தீபம் ஏற்றும் தங்கையின் கோயிலிலே

அண்ணனுக்குப் பெண் பார்க்க
வரும் என் அண்ணியை என் கண் பார்க்க

ஹாஹா ஹா ஹா ஹா....(அற்புதம்... அற்புதம்)

அண்ணனுக்குப் பெண் பார்க்க
வரும் என் அண்ணியை என் கண் பார்க்க

என் தங்கையின் துணையை நான் பார்க்க
அந்த இன்பத்தை நீ பார்க்க

நீ வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோயிலிலே

மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்

ஹாஹா ஹா ஹா ஹா....

மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்

திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
அவர் பாவையின் உறவினர்கள்

நீயும் வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கை என் கோயிலிலே

முன்னவனோ ஆலமரம்
தம்பி முளைத்து வரும் சின்ன மரம்

எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம்
எங்கள் வாழ்வே அன்பு மாயம்

நீ வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கை என் கோயிலிலே

பாடல் முடிந்து பார்த்தால் அந்தப் பேதை தங்கை அண்ணனை நினைத்து கனவு காணுகிறாள்.

அண்ணனாக ஏ.வி.எம்.ராஜனும், தங்கையாக லஷ்மியும் வழக்கம் போல. இவர்களை யார் பார்த்தார்கள்?

பாடலின் உண்மையான நாயகர்கள் பாலா, மற்றும் டி.ஆர்.பாப்பா மற்றும் சரளா.

கோடி முறை கேட்டாலும் திகட்டாத தேவ கானமோ இந்தப் பாடல்!

அடடா! 'இப்படியெல்லாம் பாடல்கள் இருக்குமா'?! என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கும் பாடல். அணு அணுவாகக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று உணர்வீர்கள்.

இந்தப் பாடலை அபூர்வமான பின்னணிப் பாடகி எஸ்.சரளா தொடங்கும் போதே டோட்டலாக நாம் ஆ(ல்)ள் அவுட் ஆகி விடுவோம்.

லா லா லா
லா ல ல ல ல லா

என்று இந்த வசியக் குரல் பெண்மணி பின் தொடர்ந்து 'லலல லலல லலல லலலலலா லலாலா' என்று இந்த ஹம்மிங்கை முடிக்கும் போது பாடலுக்குபோகவே மனசு வராது. அந்த ஹம்மிங்லேயே ஒன்றிப் போய் ரீவைண்ட் பண்ண ஆரம்பித்து விடுவோம் நம்மை அறியாமலேயே.




சரளா பற்றி ஒரு சிறுகுறிப்பு (இலவச இணைப்பு)

சரளா ஒரு அருமையான குரல்வளம் கொண்ட பாடகி. நிறைய இஸ்லாமிய பக்திப் பாடல்கள் பாடியவர்.

முக்தாவின் 'தேன் மழை' காமெடிப் படத்தில் அறிமுகம். 'என்னடி! செல்லக் கண்ணு...எண்ணம் எங்கே போகுது?' மிக அருமையான பாடல் இது. சச்சு விஜயாவிடம் பாடுவது போல் வரும்.

'பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா?' தாராபுரம் சுந்தரராஜனுடன் இணைந்து 'பொம்மலாட்டம்' படத்தில். இதுவும் முக்தாவின் படம்தான்.

அப்புறம் 'நினைவில் நின்றவள்' அதே முக்தாவின் படத்தில் 'நந்தன் வந்தான் கோவிலிலே' என்ற அருமையான பாடல். சச்சுவிற்குப் பாடுவார்.

மூன்றுமே முக்தாவின் முத்தான காமெடிப் படங்கள்.

முக்தாவின் படங்களில் சச்சுவுக்கு நிறையப் பாடல்கள் பாடியது சரளாதான்.

அவ்வளவு ஏன்? நம் 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் கூட 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் அவருடனேயே இணைந்து,

'ஒனக்கெனத்தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நெலவிருக்கு'

என்ற அழகான பாடலைப் பாடியிருப்பார். (கிட்டத்தட்ட ஜென்ஸியின் குரல் போல)

இஸ்லாமியப் பாடல்களில் கொடி நாட்டியவர்.

http://www.inbaminge.com/t/allah/Nag...uslim%20Songs/

'எல்லாமே நீதான்
வல்லோனே அல்லா'

பாடலை எவரால் மறக்க முடியும்?

'சிந்தனையில் மேடை கட்டி
கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் எடுத்து
எந்தனையே பாட வைத்தான்'

என்று 'திருமலை தென்குமரி' திரைப்படத்தில் 'சீர்காழி'யுடன் சரளா இணைந்து பாடிய பாடல் மிகவும் பிரசித்தம். (இந்தப் பாடல் 'திருவருட்செல்வர்' படத்தில் இடம் பெற்றதாக பல இணைய தளங்கள் கூறும் கொடுமையை எங்கே போய் முட்டிக் கொண்டு அழ?!)

சரளா இப்போது கோயமுத்தூர் ஆசிரமம் ஒன்றில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஆசிரமத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறாராம். பிள்ளைகளுக்கு இசைப் பயிற்சியும் அளிக்கிறாராம்.

சரளா பற்றிய அபூர்வ வீடியோவை இணையத்தில் தேடித் பிடித்தேன். அதில் சரளா வயதானவராக சிறிது நேரம் பேட்டி தருகிறார். ஆனால் அவர் தான் பாடிய பாடல்களைப் பாடிக் காட்டும் போது குரல் வளம் அப்படியே உள்ளது. மிகவும் எளிமையாக காணப் படுகிறார். பாவமாயும் பரிதாபமாயும் இருக்கிறது. சரளா பற்றிய அற்புத பொக்கிஷம் இந்த வீடியோ. அவசியம் பாருங்கள்.

பாலா தொடரில் அவருடன் பாடிய இந்தப் பாடகியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்.


https://youtu.be/pfEa61HHehk

இப்போது தொடருக்கு மீண்டும் வந்து விடுவோம்.

உடன் வருவார் தொடரின் நாயகர். குரல் ஜாலங்களின் மன்னர். மிக அழகான வெண்ணெய்க் குரலுடன். அப்படியே குரல் மெழுகாய் உருகும். மிக இளமையான, இதமான வெண்கலக் குரல். அண்ணன் தங்கை பாச உணர்வுகளை வெகு அழகாகப் பிரதிபலிப்பார். பாலசுப்ரமணியம் பாடிய வேல்முருகன் பாட்டு.

வழக்கம் போல அம்சம். இனிமையைக் குழைத்துத் தந்து தன் முத்திரையை நிலைநாட்டும் அந்த அமர்க்களமான இடம் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று

'அண்ணனுக்குப் பெண் பார்க்க-வரும்
என் அண்ணியை என் கண் பார்க்க'

என்று சரளா முடித்தவுடன் ஒரு ஹம்மிங் எடுப்பாரே இந்த பாலாடைப் பாடகர் பாலா! என்னத்தை சொல்ல!

'ஹாஹா ஹா ஹா ஹா....என்று தொடர்ந்து 'ம்ஹூம் ம்....ம்' என்று ஒரு பிரளயமே நிகழ்த்துவாரே! உடம்பு அப்படியே சில்லிட்டுப் போகுமே! நாம் நார்மலுக்கு வர நாளாகுமே!

பாலா! இந்த ஒரு ஹம்மிங் போதுமய்யா! நீ வேறெதுவும் பாடவே வேண்டாம். அடப் போய்யா!

இதுவரை பாலாவின் பாடல்கள் பதின்மூன்று எழுதியிருக்கிறேன். சில பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும். எது டாப் என்று எழுதுவது சிரமம். இப்போதும் மாட்டிக் கொண்டேன்.

இதுதான் டாப். இந்தப் பாடல்தான் டாப்.

இந்த இன்பக் குழப்பத்தை இந்த இனிய குரலோன் அன்றி வேறு யார் தர முடியும்?

இதற்கு மேல் வேண்டாம்.

சொர்க்கத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.


https://youtu.be/SD1WGCUcVgU

vasudevan31355
3rd May 2016, 10:48 PM
சரி! சரி! முறையாவும் ஒன்னு தந்துடறேன்.

எங்களது சொந்தம் 'நடிகர் திலகம்' இல்லாமலா? அவருடனான எங்கள் 'சொந்தம் எப்போதும் தொடர்கதை'தானே!

அது 'முடிவே இல்லாதது'. 'எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனியகதை' அவர் கதை. அவரை எங்களோடு சேர்த்த தெய்வம் எழுதிய அருமைக் கதை இது. அப்பாடா! மனம் குளிர்ந்தது.


https://youtu.be/G--UBBW58n4


அவர் இல்லாமல் எங்களுக்கு ஒரு

'சொந்தமுமில்லே! ஒரு பந்தமுமுல்லே'


https://youtu.be/z1XXa7ryFNY

eehaiupehazij
3rd May 2016, 11:05 PM
vis-a-vis Songs!!

கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும் .........

https://www.youtube.com/watch?v=lBMcYqu8ZV4

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை !!

https://www.youtube.com/watch?v=hRG9jnx1Jks

RAGHAVENDRA
3rd May 2016, 11:12 PM
https://www.youtube.com/watch?v=AzkXkL5q7FE

எதிரெதிர் கான்செப்டில் நாங்களெல்லாம் வாசு சார் கட்சியாக்கும். ஒரே பாட்டில் சொல்லிடுவோமில்லே..

பாருங்க.. இல்லேன்னு ஆரம்பிச்சு ஆமாம்னு முடிக்கிறதை..

இப்படி நிலையில்லாத மனசை வெச்சி காதலில் இறங்கினா என்ன ஆகுமோ.. இந்தக் காலக் காதல் மாதிரி ஆகிடுமோ...

madhu
4th May 2016, 03:03 AM
சி.செ.ஜி, ராகவ்ஜி, வாசு ஜி... செம தூள்.. எதிரெதிர் பாட்டுன்னு சொன்னதும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோமே !!

ஒரே பாட்டில் எதிரெதிர் கான்செப்ட் வராப்பல நானும் ஒண்ணு போட்டுக்குறேன்.. இதுல முதல் வரி அப்படியேதான் இருக்கும். ஆனால் அந்த முதல் வரியில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில் எதிராக மாறிவிடும்..

தேரேது சிலையேது திருநாள் ஏது ? தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது என்று சொல்லும் நாயகி தேரேது சிலையேது திருநாள் ஏது ? தெய்வம் போல் மனிதரெல்லாம் மாறும்போது என்று உல்டாவாக்கிடுறாங்க.

https://www.youtube.com/watch?v=ApkZdanwh8s

madhu
4th May 2016, 03:07 AM
ம்ம்.. அப்புறம் ஒரே படத்திலிருந்து எதிரெதிர் பாடல்கள்

காதோடுதான் நான் பாடுவேன் என்று எப்போதும் அருவியாய் ஆர்ப்பரிக்கும் ஈஸ்வரி

https://www.youtube.com/watch?v=s4TdHTtuVQ8

நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் என்று எப்போதும் சாரல் மழையாய் நனைக்கும் சுசீலாம்மா

https://www.youtube.com/watch?v=0mnfdli34Gw

போனஸாக... இப்படியாகத்தானே ஜெயந்திக்கு ஈஸ்வரியும், வாணிஸ்ரீக்கு சுசீலாவும் எதிர்ப்பாடல்கள் பாடிவிட்டு ஒன்றாகப் பாடும்போது குரலை எதிரெதிராக மாத்திக்கிட்டாங்க..

https://www.youtube.com/watch?v=H2MVMOYJp3I

Gopal.s
4th May 2016, 07:17 AM
Blast from Past.

1)சிந்துபைரவி.

சிறு வயதில் ஒரு பாடலை கேட்டால் அப்படியே அசந்து நின்று உருகி ,அழுது கொண்டிருந்தாலும் ,நிறுத்தி கவனிப்பேனாம்.

நாஸ்திக பேயான நான் ,ஒரு பக்தி பாடலில், பள்ளி நாட்களில் ,ஒரு பாடலில் மெய் மறந்து கடவுளை உணர்வேன்.அனைத்து விழாக்களிலும் நான் பாடும் முதன்மை பாடல் அது.

ஒரு கல்யாண விழாவில் ,நாதஸ்வரம் வாசித்தவர் ஒரு திருப்புகழ் வாசிக்க ,பதினான்கு வயது சிறுவனான நான் அம்மாவிடம் ஒரு ஐந்து ரூபாய் கேட்டு வாங்கி அவர் காலடியில் கண்ணீருடன் வைத்தேன்.

பிறகு ,ஸ்ரீநிவாசன் youth coir நண்பியான சுதா வெங்கட்ராமன் (இப்போது ரகுராமன்) ஒரு முறை ஒரு எம்.எல்.வீ பாடலை பாடும் போது ,என்னை மறந்து சிலையாக சமைந்தேன்.

ஒரு ஆறாண்டுகள் கழித்து ,திருமணாகி ,முதல் மகன் இரண்டு வயதில் இருந்த போது ,கதறி கதறி இரு மணிகள் அழுது கொண்டிருந்த போது ,இசையை ஓரளவு தெரிந்து ,விஷயம் தெரிந்ததால் ஒரு பாடலை ,அவன் காதில் முணுமுணுத்தேன்.அப்படியே அழுகை ,நின்று குழந்தை முகத்தையே வெறித்தான்.

நான் உங்களை மேளகர்த்தா,சம்பூர்ணம்,ஸ்வர பிரவாகம் என்றெல்லாம் technical ஆக சோதிக்க போவதில்லை.(ஏற்கெனெவே ரொம்ப புரியும் படி எழுதுவதாக நல்ல பெயர்).ராகங்கள் என்னளவில் ஏற்படுத்திய இசைவுகள்,அசைவுகள்,அலைவுகள் ,சுவடுகள், இவைதான்.

சிந்து பைரவி ராகம் ஒரு துடிப்புடன், சோக மயமான உயிர்காதலுடன் ,பக்தியை குழைத்து இதயத்தில் வர்ணமாக தேய்த்தால் எப்படி இருக்கும் ? அப்படி பட்ட அற்புத என் ஊன் உயிருடன் கலந்த ,சினிமா இசையமைப்பாளர்களுக்கும் உகந்த ஒன்று.

நான் குறிப்பிட்ட முதல் பாடல், என்னை யாரென்று எண்ணி எண்ணி .(பாலும் பழமும்)

இரண்டாம் பாடல் சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே(திருவருட்செல்வர்).

சுதா பாடிய பாடல்- வெங்கடாசல நிலையம்.

நான் என் மகனின் காதில் முணுமுணுத்தது-என்ன சத்தம் இந்த நேரம்(புன்னகை மன்னன்).

என் மனம் கவர்ந்து என்னை கதற வைக்கும் பாடல் அன்னமிட்ட கைகளுக்கு(இரு மலர்கள்)

புரிந்ததா சிந்து பைரவியின் சந்தம் என் சொந்தம் ?.

2)சுப பந்துவராளி.

மனதிற்குள் ஒரு வெறுமை அல்லது தோல்வி மனப்பான்மை.அதை உணர்ந்து மென்று கொண்டே, சிறிது நம்பிக்கை பெற வேண்டும். பிரிவை உணர்ந்து துக்க பட்டு ,சிறிதே ஆசுவாசமும் அடைய வேண்டும்.

ஒரு மெல்லிய இழையில் ஓடும் மெலடி உன் உள்ளத்தின் நாண்களை வீணை மாதிரி மீட்ட வேண்டுமா?

சிறு வயதில் tape recorder எல்லாம் பார்த்தேயிராத போது ,ஒரு பாடலை கேட்கும் போதெல்லாம் ,இரவு பதினோரு மணிக்கு மேல் ஊரடங்கிய பின் ,இந்த பாடலை கேட்டால் என்று மனம் ஏங்கும் .பின்னாளின் பீ .டெக் படிக்கும் போது ,மூன்றால் வருட ஹாஸ்டல் வாழ்க்கையில் அந்த கனவு நிறைவேறியது.

அந்த பாடல்- உன்னை நான் சந்தித்தேன்.

அப்படியே கண்களில் நீர் துளிர்க்க,அந்த நீரை வெளியே விடவே மனமின்றி கண்களை மூடி ,ட்ரான்ஸ் அனுபவம் பெற்றேன்.இதை மீறியா தியானம் எல்லாம்??

இந்த ராகம் ,உன் உணர்வின் தன்மையை உணர்த்தி,ஆசுவாசமும் தந்து விடும். உண்மை நடப்பையும் மறைத்து மனதுக்கு திரையிடாமல்,அதே நேரம் மனதை அலை பாய செய்யாமல் ,மென்மையாய் திட படுத்தும்.பொய் நம்பிக்கை தராமலே.

கேளுங்கள் இந்த ராகத்தின் கீழ்கண்ட அதிசய பாடல்களை....

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே-அவன்தான் மனிதன்.
கேளடி கண்மணி பாடகன் சந்ததி-புது புது அர்த்தங்கள்.
ராமன் எத்தனை ராமனடி- லட்சுமி கல்யாணம்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே- அலைகள் ஓய்வதில்லை.
விழியோரத்து கனவோ இங்கு -ராஜ பார்வை.
வைகறையில் வைகை கரையில் -பயணங்கள் முடிவதில்லை.

இது ஒரு மேளகர்த்தா, சம்பூர்ண ராகம்.சப்த ஸ்வரங்களுடன்(ஆரோகணம் அவரோகணம்)

குறிப்பாக ஆட்டுவித்தால், உன்னை நான் இரண்டும் இரவில் தனிமையில் கேளுங்கள்.கண்ணீருடன் ,கண் மூடுவீர்கள்.

Gopal.s
4th May 2016, 07:30 AM
In Indian classical music, 'Sampūrṇa rāgas (संपूर्ण, Sanskrit for 'complete', also spelt as sampoorna) have all seven swaras in their scale. In general, the swaras in the Arohana and Avarohana strictly follow the ascending and descending scale as well. That is, they do not have vakra swara phrases (वक्र, meaning 'crooked').

In Carnatic music, the Melakarta ragas are all sampurna ragas, but the converse is not true, i.e., all sampurna ragas are not Melakarta ragas. An example is Bhairavi raga in Carnatic music (different from the Bhairavi of Hindustani music). Some examples of Melakarta ragas are Mayamalavagowla, Todi, Sankarabharanam and Kharaharapriya.

3)மாயா மாளவ கௌளை .

நான் ஏற்கெனெவே கூறிய படி இந்த ராகத்தை technical ஆக அலச போவதில்லை.ஒரு ராகம் என்றால் என்னவென்றே தெரியாத பாமரனாக என்னிடம் அது ஏற்படுத்திய கிளர்ச்சிகளை,உணர்வுகளை விவரித்து ,அதற்கு பெயர் எனக்கே பிறகுதான் தெரிந்ததால்,இது ஒரு புது பாதையில் விவரணை. தொடரும் அன்பர்களுக்கு நன்றி.போரடித்தால் சொல்லுங்கள் .நிறுத்தி விட்டு உங்களோடு அரட்டையில் ஜாலியாக பங்கு பெறுகிறேன்.

தமிழில் ஓடி கொண்டேயிருக்கும் பாடல்கள் சொற்பம். அப்படி ஒரு அற்புத பாடல் .இத்தனைக்கும் கதாநாயகர் விபத்தால் ஊனமுற்றிருப்பார்.உட்கார்ந்தே நாயகியின் சித்திரத்தை வரைய தலை படுவார்.அவளை சகுந்தலையாக வரித்து. பின்னழகி சகுந்தலையோ துள்ளி துள்ளி ஓடி நம் மனதை அலை பாய வைப்பார்.

பார்த்த உடனே எனக்குள் அதிர்வை ஏற்படுத்திய ஒரு வித்தியாச படத்தில் இந்த பாடல். கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

உங்கள் மனதை மலர்ச்சியாக்கி ஜெட் வேகத்தில் ஓட செய்து இலகுவாக்கி ,காதல் உணர்வை ஊட்டி ,கேள்விகளையும் எழுப்பி பதிலும் தரும் இதத்தை இந்த ராகம் கொடுக்கும். எல்லா நேரமும்,காலமும் எப்போது இந்த ராகத்தை கேட்டாலும் மனம் வானில் பறக்கும்.

மற்றொரு எனக்கு பிடித்த படத்தில் பிடித்த பாடல்.நாயகன் இடம் மாறியிருப்பான்.திடீரென ஸ்பெயின் மாடுபிடி விளையாட்டாய் ஒரு அற்புதமாக கோரியோ க்ராப் செய்யப்பட்ட துள்ளிசை. ராட்சச பாடகிக்கு ,எனக்கு பிடித்த பம்பிளிமாஸ் செக்ஸி பாம் ஒருத்தியின் காளை சண்டை ஆட்டம்.சிறு வயதில் நான் மிக ரசித்த படம்,மற்றும் பாடல்.சரிவிகிதத்தில் அனைத்தும் கொண்ட எங்கள் எம்.எஸ்.வீ சாரின் அழியா உற்சாக பாடல்.

"துள்ளுவதோ இளமை"

இப்படி ஒரு கிளாஸ் மற்றும் மாஸ் பாடலை தர முடிந்த ஒரு அற்புத ராகமே மாயா மாளவ கவுளை.

என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ- அருண கிரி நாதர்.

மதுர மரி கொழுந்து வாசம்-எங்க ஊரு பாட்டு காரன்.(போச்சு முரளி !!!)

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்-முள்ளும் மலரும்.

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்-கோபுர வாசலிலே.

மாசறு பொன்னே வருக- தேவர் மகன்.

பூவ எடுத்து ஒரு மாலை-அம்மன் கோவில் கிழக்காலே.

பூப்போலே உன் புன்னகையில் -கவரி மான்.

சொல்லாயோ சோலை கிளி - அல்லி அர்ஜுனா .

4)சாருகேசி .

சிறிய வயதில், தாத்தா பெரிய கிராமபோன் வைத்து கொண்டு ,family தோசை சைசில் ரெகார்ட் போட்டு கேட்பார்.உச்ச ஸ்தாயியில் அலறும் அந்த குரல் என்னை ஒன்றும் கவரவில்லை.(அந்த கால cult சூப்பர் ஸ்டார் பாகவதர்).இன்று டி.எம்.எஸ் சில பாடல்கள் நீங்கலாக இதே உணர்வைத்தான் கொடுப்பார். கால,ரசனை மாற்றம்.ஆனாலும் ஒரு ஐந்து பாடல்களின் music content என்னை மிக கவரும்.அப்படி என்னை ஈர்த்த ஒன்றுதான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?"

என் சிவாஜி மன்ற முதிய நண்பர் (அவருக்கு அப்போது 50 வயது.நான் பதினொன்று),மன்றத்தில் உட்காரும்போதெல்லாம் இரண்டு பாடல்களை பாடுவார்.(மற்றதை இன்னொரு சந்தர்ப்பத்தில்)அதில் ஒன்றை எனது பள்ளி பாட்டு போட்டிக்கு என்னை தேற்றி முதல் பரிசு வாங்க செய்தார். அந்த பாடல் "வசந்த முல்லை போலே வந்து".

நான் ,என் தங்கை உட்கார்ந்து லிஸ்ட் போட்டு பழைய பாடல்களை (பாண்டி பஜார் அருகே ஒரு கடை) டேப் செய்து கேட்போம்.(pre -recorded அலர்ஜி .நிறைய குப்பை சுமந்து வரும்).அப்போது எங்கள் லிஸ்டில் தவறாமல் முதலாக (இன்றும்தான்)இடம் பெரும் உன்னத அழியா இசை அதிசயம் "தூங்காத கண்ணென்று ஒன்று".

இந்த ராகமும் மேளகர்த்தா சம்பூரணம்தான். ஒரு ராகம் மெல்லிய காதல் உணர்வை கிளர்ந்தெழ செய்து ,உங்கள் காதலியிடம் உங்கள் உணர்வை அமைதியாக சொன்ன பிறகு, ஒரு திருப்தியை தருமே ?அதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த உணர்வுடன் ,இனிய தாலாட்டை கலந்து கண் மூடினால் வரும் பரம சுகத்தை இந்த ராகம் அனுபவிக்க வைக்கும்.

இந்த ராகத்தில் எனது மற்ற தேர்வுகள்

மலரே குறிஞ்சி மலரே -டாக்டர் சிவா.
தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.
முத்து குளிக்க- அனுபவி ராஜா அனுபவி.
சின்ன தாயவள் தந்த-தளபதி.
உதயா உதயா - உதயா.
ஊரெங்கும் தேடினேன் - தேன் நிலவு.

Gopal.s
4th May 2016, 07:47 AM
5)நட பைரவி.

ஓங்காரத்துடன் முழக்கம் போல அப்படியே positive energy level கூடிய நிறைய பாடல்கள் வந்து கொண்டிருந்த காலம்.டி.எம்.எஸ். கொடி நாட்டி ,கோலோச்சி கொண்டிருந்த வசந்த காலம்.அப்போது ஒரு நடிகர் கை காலை ஒரே மாதிரி அசைத்து (ஆனால் கொஞ்சம் நடன பாங்கு கெடாமல்),cliched என்றாலும் ,விசையுறு பந்தினை போல அந்த முழக்கத்தின் வீறு கெடாமல்,பாமர மக்களின் நாயகனாக high energy உடன் அந்த பாடல்களுக்கு பரிமாணம் கொடுத்து கொண்டிருந்தார்.எனக்கு பிடித்த பாடல்களேயாயினும் எல்லாம் ஒரே பாணியாக தெரியும்.

பிறகுதான் அதோ அந்த பறவை போல,நான் ஆணையிட்டால், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்று எம்.எஸ்.வீ.,டி.கே.ஆர் இணைவுக்கு தோதாக கை கொடுத்த ராகம் நட பைரவி என்ற மேளகர்த்தா ராகமே என்று புரிந்தது.

open voice இல் பாடும்போது எழுச்சியையும்,ஹஸ்கி குரலில் பாடும் போது காம கிளர்ச்சியையும் மீட்ட கூடிய படு ஜனரஞ்சக ராகம் இது..இப்படி வீர எழுச்சியுடன் கூடிய நம்பிக்கையையும், erotic காதலின் மலர்ச்சியையும் ஒரு ராகம் கொண்டு வர முடியுமானால் தமிழர்களின் காதல்,மானம்,வீரம் என்ற அடிப்படைக்கு தோதான தமிழர்களின் ராகம்தானே?

எனக்கு பிடித்த நட பைரவியின் மற்ற பாடல்கள்.

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் -அன்பே வா.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து- நினைத்ததை முடிப்பவன்.
நினைக்க தெரிந்த மனமே- ஆனந்த ஜோதி.
கொடியிலே மல்லிகை பூ - கடலோர கவிதைகள்.
வெண்ணிலாவின் தேரிலேறி - டூயட்.
வசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே.
மடை திறந்து ஆடும் நதியலை நான்- நிழல்கள்.
புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை.
ஒ பட்டர் பிளை - மீரா.
என் இனிய பொன்னிலாவே -மூடுபனி
கடவுள் அமைத்து வைத்த மேடை -அவள் ஒரு தொடர்கதை.
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு -கிராமத்து அத்தியாயம்.

6)பாகேஸ்வரி(பாகேஸ்ரீ?)

எனக்கு சிறு வயதில் ஒரு obsession உண்டு.(இன்றும்).நான் விரும்பும் பொருளையோ,ரசிக்கும் விஷயங்களையோ,நண்பிகளையோ இன்னொருவர் விரும்பினாலே பொத்து கொண்டு வரும்.அந்த ஒரு குறிப்பிட்ட பாடலில் எனக்கு அப்படி ஒரு மோகம். அந்த பாடலில் வேறு ஒருவன் துர்பாக்ய நிலையை உணர்த்த அதிகபட்சமாய் நிகழ்ந்திருக்க கூடிய சாத்திய கூறு ஒன்று அழகாக வரைய பட்டிருக்கும்.அந்த வைர வரிகள் "அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் எனையே படைத்து விட்டான்". இந்த பாடல் என்னவோ எனக்கே சொந்தம் என்று நினைத்து கொண்டாடி கொண்டிருந்தேன், இன்று எந்த டி.வீ யை பார்த்தாலும் தெரிகிறது தமிழ்நாடே இன்றும் கொண்டாடி களிக்கும் பாடல் என்று.

என் மகன் ஒரு பாடலை கேட்டு பாடகருக்கு ரசிகனாகி ,எனக்கு அவரை தெரியும் என்று கண்டு,சென்னை வரும் போது நேரம் ஒதுக்கி என்னை கூட்டி அவரை பார்க்க ,அப்போது இடி படாத உட்லண்ட்ஸ் drive -in சென்றோம். பீ.பீ.எஸ் அவர்களை கண்டு சுமார் இரு மணிநேர அரட்டை.12 வயது பையனிடம் அந்த 80 வயது மனிதர் பேசிய குதூகல பேச்சு. (நிலவே என்னிடம் நெருங்காதே)

பாக்யஸ்ரீ ராகத்தில் அமைந்த இப்பாடல் "ராமு" ராகம் என்றே குறிக்க படுவதாக எம்.எஸ்.வீ என்னிடம் குறிப்பிட்டார்.எல்லாமே சரியாக அமைந்த classic இன்று வரை தமிழறிந்த எந்த குடிமகன் எந்த வயதில் இருந்தாலும் ஈர்ப்பதில் அதிசயம் என்ன? இந்த ராகம் உங்கள் மனதில் உங்களாலேயே அறிய படாத இடத்தை போய் நிரப்பி ,வருடும் சுகத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலுமா?

இந்த ராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள்.

காணா இன்பம் கனிந்ததேனோ?- சபாஷ் மீனா.

கலையே என் வாழ்க்கையை திசை மாற்றினாய்-மீண்ட சொர்க்கம்.

பொன்னெழில் பூத்தது புது வானில்- கலங்கரை விளக்கம்.

மழை வருது மழை வருது- ராஜா கைய வச்சா

Gopal.s
4th May 2016, 07:55 AM
7)ஆபேரி(கர்நாடக பெயர்)/பீம்ப்ளாஸ் (ஹிந்துஸ்தானி )

டி.எம்.எஸ் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல பாடல்களை தந்துள்ளாரோ ,அந்த அளவு சொதப்பியும் உள்ளார்.His voice is more enjoyable in Bass and baritone. high Octave(Tenor and counter tenor) with nasal tone is not at all bearable. His is a karvai not Birka sareeram and this is a limitation in some fine notes.

ஆனால் எனக்கு பிடித்த ஒரு பாடலை கேட்கும் போது ,ஆரம்பத்தில் தொண்டையை உருட்டி ஒரு பிர்க்கா கொடுப்பார்..பிறகு பூ என்று சொல்லும் போதே கட கட உருட்டல்.அப்படியே தென்றல் என்னை தடவி கொஞ்சுவது போல அந்த பாடல் இதம்.நடித்த ,படமாக்கிய விதத்திலும் மந்த மாருதம் தவழும்.ஊட்டி வரை உங்களை கூட்டி போக போவதில்லை.பூமாலையில் ஓர் மல்லிகை இப்போதே தயார்.

சகோதர ராகங்களான ஆபேரி ,பீம்ப்ளாஸ் ஒரே சாயல் கொண்ட கரகர ப்ரியா என்ற மேளகர்த்தா ராகத்தின் தத்து குழந்தை(மகாராஜன் உலகை ஆளாமல் போனது எனக்கு வருத்தமே.ஏன் கட் பண்ணினார்கள்?)

இந்த ராகத்தின் வசீகரம் சொல்லி மாளாது. cheers சொல்லி கிளாஸ் இடிபடாமல்,மாலை வேளையில் பீச் காற்றை தனியாக அல்லது ஒத்த நண்பர்களுடன் அனுபவிக்கும் சுகத்தை இந்த ராகம் நமக்கு தரும்.

என்னை கவர்ந்த மற்றவை.

வாராய் நீ வாராய்- மந்திரி குமாரி.
நாதம் என் ஜீவனே- காதல் ஓவியம்.
தேவதை போலொரு- கோபுர வாசலிலே.
கண்ணோடு காண்பதெல்லாம்-சரணம் மட்டும் ,பல்லவி வேறு.
சிங்கார வேலனே தேவா- கொஞ்சும் சலங்கை.
இசை தமிழ் நீ செய்த -திருவிளையாடல்.
நாளை இந்த வேளை பார்த்து- உயர்ந்த மனிதன்.
வசந்த கால கோலங்கள்-தியாகம்.
ராக்கம்மா கைய தட்டு- தளபதி.

8)சக்கரவாகம்.(கர்நாடக பெயர்)/ஆஹிர் பைரவ் (ஹிந்துஸ்தானி)

தமிழ் இசை சக்ரவர்த்தி சீர்காழி அவர்களின் மறக்க முடியாத ,ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் ஒரு உலக தமிழ் நடிகன் மரண மூச்சை நினைவுறுத்தி தொண்டையில் முள் உருள செய்யும் அதிசய பாடல்.ஆரம்பம் எங்கேயோ பாட்டை கொண்டு நிறுத்தும். சரணம் சரஸாங்கி சாயல் என்று டி.கே.ராமமூர்த்தி விளக்கினார்.அவர் போட்ட பாடலல்லவா? அந்த அபிமானம். (குறுக்கே ஒரு இசை அரசியல் வந்து நாம ஏம்பா பேசி போரடிக்கணும் ,ஜனங்க பாட்டை கேட்கட்டும் என்று வெட்ட கண்ணதாசன் விழாவில் அந்த அடக்க திலகத்தின் சாயம் வெளுத்தது) "உள்ளத்தில் நல்ல உள்ளம் " விட்டு கொடுத்து ஒதுங்கி நின்றது.(சொந்தமில்லை என்பதாலோ என்னவோ இந்த காவியம் மறு வெளியீட்டில் சக்கை போடு போட்டு விழா எடுக்கும் போது கேரளா வல்லிசை வேந்தர் ஒதுங்கியே நின்றார்.)

சக்கரவாகம் ,ஆரம்பமே களை கட்டும் ரக ராகம்.உருக்கத்தை வார்த்து எடுத்து உருக வைத்து உலுக்கும்.இது ஒரு மேளகர்த்தா சம்பூரணமே .

என்னை கவர்ந்த மற்றவை.

மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு-அமர்க்களம்.
கற்பனைக்கு மேனி தந்து காற்சலங்கை-பாட்டும் பரதமும்.
பிச்சாண்டி தனை கண்டு- கங்கா கௌரி.



9)கல்யாணி .

65 ஆவது மேளகர்த்தா ராகமான இது மெல்லிசைக்கு இசைவான classic ,semi classic,Gazhal ,melody,folk ,என்று எல்லா ரக பாடல்களுக்கும் தோது. மனோரஞ்சித மலர் போல காதலென்றால் காதல்,பாசமேன்றால் பாசம்,குதூகலமென்றால் குதூகலம் என்று இந்த ராகத்தின் plasticity சொல்லி மாளாது.தமிழில் அதிக பட்ச மெல்லிசை ,இந்த ராகத்தில்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சிறு வயதில் ,நடிகர்திலகத்தின் பரம ரசிகரான எங்கள் அம்மா வழி தாத்தாவுடன் 1968 இல் இந்த படம் குடந்தை ஜுபிட்டர் திரையரங்கில் பார்த்தேன்.(எங்கள் குடும்பத்தில் அனைவருமே நடிகர்திலகத்தின் பக்தர்கள்).ஒரு அரச சபையில் நடன காட்சி. சரி. அந்த கால வழக்க படி நிரவல் காட்சி என்று அசுவாரஸ்யமாய் இருந்தேன்.(அப்போதெல்லாம் எவ்வளவு ரீல் என்று அடித்து கொள்வார்கள். ஒரு ரீல் கிட்டத்தட்ட 1000 அடி10 நிமிட படம்)ஆனால் பல திரை ஒன்றால் பின் ஒன்றாக விரிந்து ,ஒரு அற்புத நடன நடை. நடன மாதுவிடமிருந்து அல்ல. நடைக்கென்றே பிறந்த உலக நடிகனின் தாளத்தோடு இசைந்த சிருங்கார நடன நடை.இந்த பாடலை connoisseurs என்று சொல்ல படும் பல இசை மேதைகள் சிலாகித்து ,இதற்கு மேல் கல்யாணியில் என்ன சாதிக்க முடியும் என்று திரை இசை திலகத்தை போற்றி புகழ்ந்த பாடல் "மன்னவன் வந்தானடி தோழி".

அண்ணன் தங்கை பாசமென்றாலே உருக்கம் நிறைந்த demonstrative பாணியில் அமைந்த போது ,ஸ்ரீதர் அழகாக நட்போடு தங்கை மனதை உணரும் மென்மையான அண்ணனை காட்டிய அற்புத பாடல். கசல் (gazal )பாணியில் இரட்டையர் இசையமைப்பில் ,தமிழில் வந்த பாடல்களிலேயே சிறந்தவைகளில் ஒன்றாக நான் சிலாகிக்கும் பாடல்."இந்த மன்றத்தில் ஓடி வரும்". இந்த இடத்தில் இரட்டையர்களின் மேதைமையை நான் புகழ்ந்தே ஆக வேண்டும். ராஜா இசையமைப்பில் ராகங்களை சுலபமாக இனம் காணலாம்.இரட்டையர் இணைவில் அது மிக கடினம்.தமிழின் மிக மிக சிறந்த பாடல்களின் பொற்காலம் என்றால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவில் 60 முதல் 65 வரையே.

நாயகனை முழு படமும் ஊனமுற்றவராக சித்திரித்த ,நடிப்பில் இன்றும் எல்லோருக்கும் benchmark ஆக திகழும் பாக பிரிவினை படத்தில் (அடடா ,அந்த ஆரம்ப குதூகல நடனம்)இமேஜ் பாராது உலக நடிகன் எருமை ஏறிய folk wonder (வடக்கு சாயலில்)தாழையாம் பூ முடிச்சு.

பாரதியின் ஜனரஞ்சக தெரிந்த பாடல்கள் பல இருக்க ,அவரின் படு வித்யாசமான தனி பாடலான ,இன்றைய பேரரசுகளுக்கு அன்றே விட்ட சவாலான பாடல் நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..இதை தேர்வு செய்து இசையமைத்த ஞானிக்கு எனது ஆத்மார்த்த நன்றிகள்.

இப்போது தெரிகிறதா இந்த ராகத்தின் வீச்சு.ஜனரஞ்சகம்.வித்தியாச range . அதுதான் கல்யாணி.

இந்த ராகத்தில் மற்ற சுவையான பாடல்களில் சில.(அத்தனையும் லிஸ்ட் போட முடியாது.)

துணிந்த பின் மனமே - தேவதாஸ்.
சிந்தனை செய் மனமே- அம்பிகாபதி.
முகத்தில் முகம் பார்க்கலாம்-தங்க பதுமை.
அத்திக்காய் காய் காய்- பலே பாண்டியா.
கண்ணன் வந்தான் -ராமு.
அடி என்னடி ராக்கம்மா- பட்டிக்காடா பட்டணமா.
இசை கேட்டால் புவி அசைந்தாடும்-தவ புதல்வன்.
வெள்ளை புறாவொன்று- புது கவிதை.
நதியிலாடும் பூ வனம்- காதல் ஓவியம்.
ஜனனி ஜனனி- தாய் மூகாம்பிகை.
அம்மா என்றழைக்காத- மன்னன்.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி- தளபதி.
உப்பு கருவாடு ஊற வைத்த சோறு-முதல்வன்.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை-அங்காடி தெரு.

chinnakkannan
4th May 2016, 10:36 AM
சி.செ, ராகவேந்தர், வாஸ்ஸூ, மதுண்ணா..அடி தூள்..கலக்கல் பாட்டுக்கள்.. தாங்க்ஸ்ங்க்ணாவ்ஸ் :)

சிசெயில் (சிவகாமியின் செல்வனில்) நானில்லை இல்லை இல்லையில் ந.தி மடிக்கணினி உபயோகப் படுத்தி இருப்பார் என முன்னம் எழுதிய நினைவு :)

கோவின் ராகங்களும் படிக்க வேண்டும்..விரிவாக விரைவாக ஈவ்னிங்க் எழுதுகிறேன்..

Gopal.s
4th May 2016, 11:14 AM
10)மோகனம்.

பெயரிலேயே மோகனம் சுமந்து நிற்கும் இந்த ராகம் நிஜத்திலேயே வசீகர மோகனம் கொண்டது. மனதை இதமாய் வருடி ,காற்றில் மிதக்க விடும் உணர்வை தரும் இதமான மெலடி சுமந்த சுலப மெல்லிசை ராகம்.

அல்லிரானியாய் நிற்கும் ஒரு முசுட்டு பெண்ணை(நண்பனின் தங்கை) டீசிங் செய்யும் துரு துரு இளைஞன், வீட்டின் எதிரில் மொட்டை மாடியில் பாடுவதாக (அதுவன் கம்பன் கண்ட சீதை படிக்கும் நாயகியை குறி வைத்து) வரும் பாடல் என்னை டீன்களில் பித்தாக்கிய ஒன்று. மெல்லிசை மன்னர் சகாப்தம் முடிந்தது என்று கொக்கரித்தவர்கள் வாயை fevicol போட்டு ஒட்டிய பாடல்."கம்பன் ஏமாந்தான் ".

அதிர்ஷ்டமில்லாத ஒரு அருமையான இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா.இவரை மாதிரி ஒரு திறமைசாலி ,தமிழ் திரையுலகில் ஒதுங்கிய காரணம் சமரசமற்ற போக்கு.முன்கோபம்,திலகங்களின் ராஜ்யத்தில் டி.எம்.எஸ் ஐ ஒதுக்கியது (வயசான டி.எம்.எஸ் இன்னொரு இளையவரால் ஒழிக்க பட்டார்.),இவை அவரை அந்நிய படுத்தி விட்டது.நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இவரை ஒதுக்கி, எம்.எஸ்.வீ - டி.கே.ஆர் அணுக பட்ட போது ,பெருந்தன்மையாக அனுமதி பெற வந்த எம்.எஸ்.வீ (உண்மையாகவே நல்ல குணம்)யுடன் இவர் சொன்னது. நான் தூக்கி போட்டதை யார் எடுத்தால் என்ன?இவரை அந்த குணம் தூக்கி போட்டு விட்டது. கல்யாண பரிசு,தேன் நிலவு, ஆடி பெருக்கு போதுமே. இவர் பெயரை இன்னும் 5000 ஆண்டுகள் சொல்ல? கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டெர்ன் என்று இவர் தொட்டு சீராட்டிய பாணிகள் ,மற்றோருக்கு ராஜ பாட்டை போட்டன.தேன் நிலவில் "நிலவும் மலரும் பாடுது" நம்மையும் நிலவொளி -ஓடம் போக வைக்காதா?

கேமரா மேதை பிரசாத் எனக்கு உவப்பான ஒருவர். புதிய பறவை போதுமே? ரவி ,கே.ஆர்.விஜயா இணைவில் சூப்பர்-ஹிட் படமான இதய கமலத்தில்"மலர்கள் நனைத்தன பனியாலே" ,பிரசாத் அதிசய பட பிடிப்பில் பனியை துல்லியமாக காட்டுவது போல ,நம் மனதில் பனியின் குளுமையை கொடுக்கும் திரை இசை திலகத்தின் அதிசயமல்லவா?

எனக்கு பிடித்த பிற பாடல்கள் (மோகனம்)

அமுதை பொழியும் நிலவே- தங்க மலை ரகசியம்.
என்னை முதல் முதலாக பார்த்த போது -பூம்புகார்.
என்ன பார்வை உந்தன் பார்வை-காதலிக்க நேரமில்லை.
சங்கே முழங்கு- கலங்கரை விளக்கம்.
குழந்தையும் தெய்வமும்- குழந்தையும் தெய்வமும்.
தேன் மல்லி பூவே- தியாகம்.
நின்னுகோரி வர்ணம் வர்ணம்-அக்கினி நட்சத்திரம்.

11)பிருந்தாவன சாரங்கா.

சொந்தங்களுக்குள் காதல் எண்ணங்களை பரிமாறி கொள்வது,சொந்தங்களை சீராட்டுவது(குழந்தைகளையும் சேர்த்தே), காதலியிடம் உருகி நீதான் என் மனதில் என்று அழுத்தி சொல்வது ,இவற்றுக்கேன்றே ஒரு ராகம் உள்ளதா? உள்ளேன் ஐயா என்று உங்கள் முன் ஆஜர் ஆவது பிருந்தாவன சாரங்கா.

சிறு வயதில் மூன்று படங்கள் என்னை உலுக்கும்.இவ்வளவு வித்யாசமான கதை கரு, திரை கதை மற்றும் கலை மேதையின் நடிப்பு மூன்றிலும். படித்தால் மட்டும் போதுமா,ஆலய மணி,புதிய பறவை. முற்றிலும் வேறு பட்ட சிந்தனையில் புத்தம் புதிய நமக்கு பழகாத கதையமைப்பு கொண்டவை. இரண்டு இணை பிரியா சகோதரர்கள் (ஒன்று விட்ட) .ஒருவன் sophisticated படிக்காத வேட்டை காரன். மற்றவன் polished படித்த மென்மையான மனிதன். இருவரும் ஒருவருக்கு பார்த்த பெண்ணை மற்றவர் சென்று பார்த்து அங்கீகரிக்க ஏற்பாடு செய்து ,வந்த பிறகு எண்ணங்களை பரிமாறி கொள்ளும் மைல் கல் காட்சி.இதில் படித்தவனின் எண்ணம் திரிபு பட என் விழியில் நீ இருந்தாய் என அப்பாவி வேட்டை காரனும், உன் வடிவில் நான் இருந்தேன் என படித்த வக்கிரமும் பாடும் இந்த பாடலும் இன்றும் எல்லோராலும் நேசிக்க படும் அதிசயம்.டி.எம்.எஸ் ஒரு கட்டை குறைக்க,பீ.பீ.எஸ் ஒரு கட்டை ஏற்ற ,இந்த இரண்டு நேர்த்தியான பாடல் திலகங்களின் அபூர்வ சங்கமம்."பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை".

இருவர் மேல் எனக்கு அலாதி பற்று. இருவருமே அவரவர்க்கு உரிய அங்கீகாரம் பெறாத மேதை பால்கேக்கள். இருவரும் பெற வேண்டிய இடம் என் மனதில் நிஜமாகாத நிழலாகவே தொடர்கிறது. அடிமைகள், மற்றும் சிலகம்மா செப்பிந்தி என்சற படங்களை தழுவி இயக்குனர் சிகரம் தந்த நிழல் நிஜமாகிறது.ஈர்ப்பு நிறைந்த வசீகரம்.இரு துருவங்களாக கமல்,சுமித்ரா.love teasing concept வைத்து இதற்கு மேல் எதுவும் செய்ய இல்லை என்று பாலு-கமல்-சுமித்ரா கூட்டணி இறுதி செய்து விட்ட முத்திரை படம். தோதுவாய் சரத்-ஷோபா-ஆனந்து. உறுத்தாமல் மௌலி (suspect list லே கூட இல்லியா).ஒரு பாதிக்க பட்டு பெண்ணுக்கு காப்பளனான ஒருவன் தன் ஒரு முனை பட்ட தன்னலமற்ற அன்பால் அந்த பெண்ணின் மனதிலும், அல்லிராணி காதலில் விழுந்தாலும் புகை படர்ந்த சந்தேகத்தால் ,தன் காதலை தள்ளி வைத்து போடும் நாடகம். இரண்டையும் இணைத்து சொந்தங்களின் மன ஓட்டத்தை ,போராட்டத்தை சொன்ன மெல்லிசை மன்னர் தான் யார் என்று ஊருக்குணர்த்திய பாடல். "இலக்கணம் மாறுதோ,இலக்கியம் ஆனதோ".

70 களில் ,horny teen -ager (இன்றும் அப்படித்தான் .மனிதன் மாறவில்லை.அவன் மயக்கம் தீரவில்லை)ஆக நான் வலம் போது ,ஒரு பாடல்,அது படமாக்க பட்ட பரபரப்பான சூழ்நிலை,அற்புதமான இசை,நடித்தவர்களின் தோதுவான erotic Enactment &expressions என்று கிக் ஏற்றி படத்தின் வெற்றிக்கே துணை செய்தது.அந்த பாடல் "நாலு பக்கம் வேடருண்டு".

இந்த ராகத்தில் எனது மற்ற விருப்பங்கள்.

1)பூவரையும் பூங்கொடியே- இதயத்தில் நீ.
2)முத்து நகையே உன்னை- என் தம்பி.
3)சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே-வீர பாண்டிய கட்டபொம்மன்.
4)இது குழந்தை பாடும் தாலாட்டு-ஒருதலை ராகம்.
5)நெஞ்சாங்கூட்டில்- டிஷ்யூம்.

Gopal.s
4th May 2016, 12:21 PM
12)பேஹாக்.

தாயின் கையை பிடித்து புல்தரையில் நடக்கும் சுகத்தை அனுபவித்ததுண்டா?காதலியின் கரம் கோர்த்து கடற்கரையில் நடந்த த்ரில் எத்தனை பேருக்கு வைத்திருக்கும்? அப்படியே ஒரு மெல்லிய உருளு தளத்தில் சுகமாய் உருண்டு எழுந்த செல்ல அனுபவ நுகர்ச்சி வேண்டுமா?நல்லாவே அனுபவிக்க வேண்டிய மென்னடை சுக ராகம்.

தமிழில் அத்தனை பாடகர்களும் தொண்டை புடைக்க கத்தி ,சங்கீதத்தை MKT பாணியில் ஓலமாக்கி குதறி கொண்டிருந்த போது (பாவம் bass ,barritone பாடகர் TMS ஐயே உச்ச ஸ்தாயி ஓலத்தில் படுத்தி எடுத்தனர் இசையமைப்பாளர்கள்)அப்போது மென்மை இசையை இசையாக்கி நமக்கு ஆறுதல் கொடுத்தது ஏ.எம்.ராஜா வும்,ஏ.எல்.ராகவனும். ஆனால் ராஜா பல் கடித்து உதடு பிரிக்காமலும்,ராகவன் ஏனோ கொஞ்சம் இனிமை குறைவாகவும் இருந்ததால் கிஷோர் ,ரபி என்று தஞ்சமடைந்த இசை வெறியர்களை தமிழை நோக்கி படையெடுக்க வைத்த வசந்த பாடல்.பிறந்த நாள் விழா கண்ட கண்ணதாசன்-எம்.எஸ்.வீ, டி.கே.ஆர் இணைவில் ,ஒரு velvet குரல் ,மென்மையான ஆண்மை குறையாத ஒரு அதிசய பாடகரின் வாழ்விலும் வசந்தம் தந்த அந்த அதிசய பாடல் "காலங்களில் அவள் வசந்தம்."

அந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம் . திரைக்கதை,நடிப்பு அத்தனையிலும் விந்தை புரிந்த அந்த படத்தில் சத்தமில்லாமல் முதலிடத்தை ஒரே பாடலில் கவர்ந்தார் ஒரு அதிசய பாடலாசிரியர்.(கண்ணதாசனை இந்த படத்தில் ஓரம் கட்டிய அவர்,சித்திர பூவிழி வாசலில் வாலியை ஓரம் கட்டினார்.) மாயவநாதன்.தெய்வ பாடகி அம்மா சுசிலாவின் மெலடி,பாடலின் அழகு, சாவித்திரியின் பாந்தம் எல்லாம் சேர்ந்து இன்றும் நம்மை சொக்க வைக்கும் ராகம்" தண்ணிலவு தேனிறைக்க".

erotic என்ற ஒரு ரக ரசனையே தமிழில் கொண்டு வந்த புண்ணியம் செய்தவர் நடிகர்திலகம். தன மனம் கவர்ந்த எழில் நாயகி தேவிகாவுடன் நம் மனதை துடிக்க வைத்த (அமைதியின் நிசப்தமும்,சர வெடியின் படபடப்பும் இணைய முடியுமா?முடியுமே)என்று காட்டிய திரை இசை திலகத்தின் பாடலில் உச்ச பட்ச chemistry காட்டிய டி.எம்.எஸ் -சுசிலா இணைவில், பிறந்த நாள் நாயகன் கண்ணதாசனின் சிரஞ்சீவி பாடல் "மடி மீது தலை வைத்து".

தான் நேசித்த பெண்ணை அடைய நினைத்த பெண் பித்தன் ,தன் அனைத்து தீ வழிகளையும் நேசத்திற்கு ஈடாக அடகு வைத்து, வழி தவறேயாயினும் அடைந்த பெண்ணை ,இனிய கற்பனையால் இணைய விழையும் குதூகல கற்பனை முதலிரவு கானம். வேட்டி சட்டையில் ஒரு ஆண் மகன் எவ்வளவு அழகாக திகழ முடியும் என்பதை திராவிட மன்மதன் உலகுக்கு உணர்த்திய தேவ கானம்.திரை இசை திலகத்தின் "கண்ணெதிரே தோன்றினாள் "

இந்த ராகத்தின் மற்ற தேர்வுகள்.

பாவாடை தாவணியில் - நிச்சய தாம்பூலம்.

ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்- தெய்வத் தாய்.

அவள் ஒரு நவரச நாடகம்- உலகம் சுற்றும் வாலிபன்.

ஆடி வெள்ளி தேடி உன்னை - மூன்று முடிச்சு.

13)ரீதி கவுளை.

கர கர பிரியாவின் ஜன்ய ராகம். எக்கச் சக்க வக்கிர பிரயோகங்களுடன் பாடகரின் கற்பனையை தூண்டி சுடர் விட செய்து ,கேட்போரை சொக்க செய்யும்.
தாளத்தையும், நீளத்தையும் (metre ) பொறுத்து புது அவதாரம் எடுக்கும் சாத்தியமுள்ள ராகம் ,இது உங்கள் ஆசையை தூண்டி மானசீக காதலில் திளைக்க செய்யும். உங்கள் வயதை குறைக்கவல்ல மார்கண்டேய மாத்திரை போன்ற ராகம்.

கர்நாடக ராகங்களிலேயே மிக பெருமை மிக்கதான இந்த ராகத்தில் எந்த பாடலும் ரொம்ப பிரபலாகவில்லை 70 வரை. (ராகவேந்தர் சொன்ன தெனாலிராமன் பாடல் நான் கேட்டதில்லை).

எனக்கு தெரிந்து இந்த ராகத்தில் வந்த முதல் பாடல் சுபதினம்(1969) படத்தில் கே.வீ.மகாதேவன் பெயரில் வெளி வந்த "புத்தம் புது மேனி இசை தேனி தூங்கும் மலர் வண்ணமோ " என்ற பாலமுரளியின் பாடல்.(அசலாக டி.ஜி.லிங்கப்பா போட்ட பாடல். டி.ஜி.லிங்கப்பாவின் மற்றொரு பாடலான குங்கும பூவே சந்திர பாபுவால் கடத்த பட்டு மரகதத்தில் எஸ்.எம்.எஸ் பெயரில் வந்தது.)அற்புதமான பாடல்.
இதையடுத்து சின்ன கண்ணன் அழைக்கிறான் ,கவி குயிலில். அடுத்து
தலையை குனியும் தாமரையே ஒரு ஓடை நதியாகிறது படத்தில்.

வசீகரமான பாடல் அழகான ராட்சசியே ,முதல்வனில். சமீபத்தில் james vasanthan போட்ட கண்கள் இரண்டால் படு பிரபலமாகி படத்தையே தூக்கி நிறுத்தியது.

Gopal.s
4th May 2016, 12:30 PM
ஒரே ராகத்தில் உருவானதாக சொல்ல பட்டாலும்,இவ்வளவு வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன?

இங்குதான் இசையமைப்பாளர்களின் மேதமை நிற்கிறது.(கீழ்கண்டவற்றை இசையின் தன்மை கெடாமல் மக்களின் ரசனையை அடிநாதமாய் பிடித்து அவர்களை கேட்ட உடனே அல்லது கேட்க கேட்க (acquired )அடிமை கொள்ள வேண்டும்)

1)ராகத்தின் tempo எனப்படும் metre மாற்றுவது.
2)சுருதி (Tonic )மாற்றி பாடலின் tone மாற்றுவது.
3)ஸ்வரங்களின் அணிவகுப்பில் விளையாடி,கமகம் (ornamentation ),கற்பனை (kalpana ) என்று ஒரு பிடி பிடிப்பது.
4)பல கலப்பு ராகங்கள் உருவாக்கி விளையாடுவது.
5)Musical arrangements மற்றும் interludes விளையாட்டுக்கள்.
6)தாளங்களில் மாற்றங்கள் மற்றும் புத்திசாலி கலப்படங்கள்.(rhythm Arrangement )

தாளங்களை(Clap ) பற்றி சுளுவாக சொல்லலாம்.

1)ஒரு தட்டு தொடையில் தட்டினால் அனுத்ருதம்(U ) ஒரு அக்ஷரம்..
2)ஒரு தட்டு தொடையில் தட்டி ,ஒரு வீச்சு காற்றில் வீசினால் த்ருதம் .(0) 2 அக்ஷரங்கள்.
3)ஒரு தட்டு தொடையில் தட்டி சுண்டு விரல்,மோதிர விரல்,நடு விரல் என்று கணக்காக்கி விளையாடுவது லகு(1) .(ஒரு தட்டு இரு விரல் என்றால் 3 அக்ஷர திச்ர ஜதி.ஒரு தட்டு மூன்று விரல் என்றால் சதுச்ர ஜதி 4 அக்ஷரம்.ஒரு தட்டு நான்கு விரல்கள் என்றால் கண்ட ஜதி 5 அக்ஷரங்கள்.ஒரு தட்டு 6 விரல்கள் என்றால் மிஸ்ர ஜதி 7 அக்ஷரங்கள். ஒரு தட்டு 8 விரல்கள் என்றால் சங்கீர்ண ஜதி 9 அக்ஷரங்கள் )
4)சதுஸ்ர ஜதி அடிப்படையில் 4 அக்ஷரங்கள் கொண்ட லகு என்று எடுத்து தாளங்களை அலசினால் சுலபம்..

ஆதி தாளம் என்பது 100(ஒரு தட்டு மூணு விரல் எண்ணி ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு ஒரு வீச்சு)- 8 அக்ஷரங்கள்.

ரூபக தாளம் என்பது U 0 (ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு)-3 அக்ஷரங்கள்.

மிஸ்ர சாப்பு என்பது ஒரு தட்டு இரண்டு விரல் ,ஒரு தட்டு ஒரு வீச்சு,ஒரு தட்டு ஒரு வீச்சு .7 அக்ஷரங்கள்.

இது மாதிரி நிறைய.

தாளத்தில் விளையாடி ஒவ்வொரு பாட்டுக்கும் புது மெருகு கொடுக்கலாம்.

இசை மிக சுலபம். கற்பனை வார்த்தைகளாக திரிந்து கெட்டு போகாமல் சுருதி சுரமாகவே பிறவியில் அமையுமென்றால்.

Gopal.s
4th May 2016, 01:31 PM
14)காப்பி ராகம் /பிலு ராகம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு ராகங்களுமே அண்ணன் தம்பி போன்றவை

காப்பி ராகத்தை பொறுத்த வரை light classical என்ற வகைக்கே ஏற்படுத்த பட்ட ராகம். அமைப்பிலேயே பலவித கற்பனைகளுக்கு இடமளித்து ,இசையமைப்பாளர்களை மகிழ்விக்கும் மாலை தென்றல்.

மாலையில் காப்பி குடித்து கொண்டே கேட்டு மகிழலாம்.பக்தி,நெகிழ்ச்சி,காதல்,உருக்கம்,உல்ல ாசம் எல்லாமே இந்த ராகம் தன் note களில் உள்ளடக்கியது.நிறைய இசையமைப்பாளர்களின் ,நிறைய தமிழ் பாடல்களில் புகுந்து புறப்பட்ட ராகம்.

எனக்கு சிறு வயதில் டி.எம்.எஸ் ரசிகனாக இருந்ததனால்தானோ என்னவோ உரத்த ஓங்கார இசை பிடித்தே இருந்தது.அப்போது இலக்கிய மொழி ஈடுபாட்டினால் பாடல்களில் சங்கம் தேடும் இயல்பினால் ஒரு பாடல் என்னை ஸ்தம்பிக்க வைத்தது."சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே". கண்ணதாசன் முதல் முதலில் தான் வசனகர்த்தா அல்ல கவிஞனே என்று ஸ்தாபிக்க தன் நண்பர்களை துணை கொண்டு (விஸ்வநாதன்-ராமமூர்த்தி)மாலையிட்ட மங்கை எடுத்தார்.(நன்றி சிவகங்கை சீமை,முழு கவிஞன் நமக்கு கிடைத்தான்).ஒரு ஆணின் சிருங்காரமும் ஒரு பெண்ணின் உரத்த குரலும் இணைந்த வினோத குரலான் டி.ஆர்.மகாலிங்கத்தின் "செந்தமிழ் தென் மொழியாள் ".

அந்த காதல் செவிலி மங்கையோ ,ஒரு மருத்துவனை மணந்து இனிய இல்வாழ்க்கை கண்டு மகிழுங்கால் ,அய்யகோ க்ஷயம் வந்து நொந்து கணவன் கடமை துறந்து அவளே கதியென கிடக்க (உயிர் போச்சா இருக்கா,ஐ அம கமிங் ,ஐயம் கமிங்),கணவனை கடமைக்கு இழுக்க தன்னை துறந்து சென்று வெளிநாட்டில் நோய் குணம் கண்டு கணவனை எண்ணி பாடும் தெய்வ திருப்பாடகி அம்மா சுசிலாவின் "காதல் சிறகை காற்றினில் விரித்து".

கல்லூரி மூன்றாம் வருட படிப்பின் போது ,ஒரு தீபாவளியை முன்னிட்டு ஹாஸ்டல் சிறைவாசம் துறந்து ,நெய்வேலி ஊர் சென்றேன். வழக்கம் போல நண்பர்களுடன் மெயின் பஜார் என்று சொல்ல படும் ஊரின் ஒரே ஷாப்பிங் மால் அருகேயான ஒரு டீக்கடையில் (பட்டாசுடன்)ஒரு பாடல்.(அப்போது ரிலீஸ் ஆகாத)அப்படியே உலுக்கி போட்டது அந்த தாள கட்டும் பாடலின் அமைப்பும் கருவிகளின் துல்லியமும். உடனே அந்த இசை தட்டில் பட பெயர் பார்த்தேன் .பிரியா-ஸ்டீரியோ போனிக் என போட பட்டிருந்தது. இன்று வரை என்னை அடிமை கொண்ட அந்த பாடல் "ஏ பாடல் ஒன்று ராகம் ஒன்று ".

காப்பியில் என்னை கவர்ந்த மற்ற காப்பி கானங்கள்.

அன்னையும் தந்தையும் தானே- ஹரிதாஸ்.
மதுரா நகரில் தமிழ் சங்கம்- பார் மகளே பார்.
அந்த சிவகாமி மகனிடம்-பட்டணத்தில் பூதம்.
கண்ணே கலை மானே- மூன்றாம் பிறை.
காதல் ரோஜாவே- ரோஜா .
என் மேல் விழுந்த மழைத்துளியே-மே மாதம்.
அன்ப அன்பே கொல்லாதே-ஜீன்ஸ்.
உருகுதே உருகுதே ஒரே பார்வையாலே-வெய்யில்.

பிலு ராக அதிசயங்கள்-

உனது மலர் கொடியிலே -பாத காணிக்கை.
மலர்களிலே பல நிறம் -திருமால் பெருமை.
கேட்டதும் கொடுப்பவனே- தெய்வ மகன்.
அண்ணன் ஒரு கோவில் என்றால்-அண்ணன் ஒரு கோவில்.

Gopal.s
4th May 2016, 01:39 PM
15)கீரவாணி.

ஒரு ராகம் ,உங்கள் அறியாத உள்மன அடுக்குகளில் புகுந்து, நீங்கள் அறியாத உணர்வுகளை கிண்டி ,இன்ப விகசிப்பை தந்து ,இன்னும் தேடு தேடு என்று உங்கள் கண்களை சொக்க வைக்கிறதா?

இந்த ராகத்தை நினைக்கும் போது ,இளையராஜாவை எண்ணாமல் இருக்க முடியாது.இந்த ராகத்துக்கே புது பரிமாணம் கொடுத்தவர்.அவருக்கு பட்டமே கொடுக்கலாம் கீரவாணி ராஜா என்று.

இது ஒரு அசல் கர்நாடக மேளகர்த்தா ராகம். இதற்கு மிக நெருங்கிய இன்னொரு மேளகர்த்தா சிம்மேந்திர மத்யமம்.இதன் ஜன்ய ராகம் கல்யாண வசந்தம் ஒரு அபூர்வ ராகமாகும்.இது ஹிந்துஸ்தானிக்கும் இங்கிருந்து சென்றது.(நம் மேளகர்த்தாவை அவர்கள் thaat என்பார்கள்)மேற்கத்திய இசையில் மிக பிரபல ராகம் இது (harmonic Minor Scale ).மேளகர்த்தா ராகம் 12 சக்கரமாக ஆறு ஆறாக பிரிக்க பட்டுள்ளது.இது நாலாவது சக்கரம் 4 வேதத்தையும் குறிக்கும் பகுப்பில் வரும்.

என்னுடைய மிக மிக நெருங்கிய குடும்ப நண்பரும் ,பிரபல இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் land mark commercial படமாக வந்த ஜானி.(எனக்கு அவ்வளவு பிடிக்காவிட்டாலும் ,அற்புதமான சில அழகுணர்ச்சி காட்சிகள் கொண்டது)காதலனை ,காதலை காற்றில் தேடும் அந்த பாடக காதலியின் மழையில் ,ரசிகரின்றி பாடும் மேடை பாடலின் ,ஜானகியின் தேடும் குரலில் ,ராஜாவின் அபூர்வ உன்னத இசையமைப்பு. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ".இது வரை இந்த மாதிரி பாடல் எங்கே தேடினாலும் காணவில்லை.

அந்த அபூர்வ இரட்டையர் தமிழின் இசை பொற்காலத்தை நிர்ணயித்த ,தமிழின் மிக சிறந்த பாடல்களை தந்த இணை.அவர்களையே ஒரு பாடல் composition படுத்தி எடுத்ததாம்.முற்பிறவி சூழ்ந்த ,இப்பிறவி ஜோடி பாட வேண்டிய இதயத்தை பல பிறவிகளுக்கு அலைய விட வேண்டிய haunting melody .பல மாதங்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவர்களை சோதித்து குதித்தோடி வந்த அதிசயம் "நெஞ்சம் மறப்பதில்லை".

தமிழுக்கு புதிதான ஹிந்துஸ்தானி-கர்நாடக-மேற்கத்திய பாணிகளில் புகுந்து புறப்பட்டு trend -setter ஆக சாதித்த அந்த பாடக-இசையமைப்பாளரின் , இசைக்காகவே இன்றும் பேச படும் அபூர்வ தேனிலவின் ,இன்றும் உங்கள் மனதை குதிரையேற்றி ,வானுக்கு அனுப்பும் "பாட்டு பாடவா".(boogey boogey rhythm என்ற மேற்கத்திய இணைப்பில்)

கீரவாணியில் என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்-நெஞ்சில் ஓர் ஆலயம்.

எனை காணவில்லையே நேற்றோடு-காதல் தேசம்.

பூங்காற்றிலே - உயிரே.

என்னை தாலாட்ட வருவாளோ- காதலுக்கு மரியாதை.

பாடி பறந்த கிளி- கிழக்கு வாசல்.

போவோமா ஊர் கோலம்- சின்ன தம்பி.

இன்பமே உந்தன் பேர் - இதய கனி.

மன்றம் வந்த தென்றலுக்கு- மௌன ராகம்.

மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு -பொன்னு மணி.

மனிதா மனிதா இனி உன் விழிகள்-கண் சிவந்தால் மண் சிவக்கும்.

16)சிம்மேந்திர மத்யமம்.

சிறு வயதில், ஒரு படம் வெளியாகும் செய்தி தெரிந்து, அந்த படம் போகும் நாளை எண்ணியே 20 நாள் கழித்த அனுபவம் உண்டா?(மாசம் முதல் பத்தில் ரிலீஸ் ஆவது ,அப்பாவிடம் டிக்கெட் சில்லறை வாங்குவதை சுளு வாக்கும்)

ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்து ,அவள் வாங்கி சென்றும் ,ஒரு பத்து நாட்கள் reaction இல்லாத,இன்ப எதிர்பார்ப்பில் மிதந்திருக்கிறீர்களா?

கல்யாணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள். கல்யாண நாளை எண்ணி எண்ணி காலம் கடத்தியதுண்டா?கல்யாணம் முடிந்த பிறகு ,குல தெய்வம் காவடி எடுத்த பின்பே முதலிரவு.காவடிக்கு இன்னும் ஐந்து நாட்கள் . துடித்திருக்கீர்களா வர போகும் இன்பத்தை எதிர்பார்த்து?

இந்த ராகம் ஒரு anxiety (positive ) என்ற ஒரு உணர்வை கொடுக்கும்.
காத்திருப்பு,எதிர்பார்ப்பு ஒரு இன்ப காரியத்துக்காக என்று இந்த ராகம் எல்லாம் இன்பமயம் என்ற உணர்வை கொடுக்கும்.

ஐயோ, இந்த ஜோடி வாழ்க்கையில் இணைந்திருக்க கூடாதா என்ற எதிர்பார்ப்பு எல்லா ரசிகர்களுக்கு அளித்த ஒரு all time pair சிவாஜி-பத்மினி.(நடிகர்திலகமும் ,நண்பர் சிதம்பரத்திடம் வெளியிட்டுள்ளார். பத்மினி ,இலங்கை எழுத்தாளர் முத்து லிங்கத்திடம் ) பின்னால் வர போகும் இந்த ஜோடியின் சீனியர் அறிமுகம் பப்பிம்மாவிற்கு.என்.எஸ்.கே தயவில் மணமகள் படத்தில்.பின்னால் பணத்தில் (1952) இந்த ஜோடி இணைந்தது. பப்பி வேடிக்கையாக எனக்கு தாலி கட்டிய(ஷூட்டிங் ) பின்பே மனைவிக்கு(நிஜத்தில்) என்பார்.அந்த அறிமுக படத்தில் பிரபல நடன பாடல் "எல்லாம் இன்ப மயம்."

தான் காதலித்த பெண்,தன் நண்பனை விரும்புவது அறிந்து ,தன் ஆசை துறந்து ,நண்பனுக்கே அவளை மணமுடிக்கிறான்.(மிரட்டி)ஒரு சகோதர ஸ்தானத்தில் நின்று. அவள் பூமுடிக்கும் நாளை கற்பனை கண்டு ,ரகு ராமன் வரவேற்க சிவராமன்-ராஜேஸ்வரி திருமணம் இனிதே நிறைவுற்று விடை பெறுகிறான்.(எங்கே விடை பெற விட்டார் நண்பர்?ஒரேயடியாகவல்லவா விடை கொடுத்து விடுவார்?) அந்த Epic Song "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி".

டீன் ஏஜில் இருக்கும் போது நான் நினைப்பதுண்டு. இயக்குனர் ஆனால் இந்த வாழ்கையை பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று. அப்போது வாழ்க்கையில் இரண்டே பருவம். குழந்தை(கல்யாணம் வரை)-வாலிபன்(கல்யாணம் ஆனதும்).இரண்டுங்கெட்டான் பருவத்திற்கு மதிப்பே இல்லை. நண்பன் ஒரு நாள் என்னிடம் சொன்னது.... தேவிகலா சென்று பார்.உன் கனவை கோகிலா இயக்குனர் திருடி விட்டார் என்று.அழியாத கோலங்களாய் அப்படம். இதை தொடர்ந்து இன்னொரு ஸ்ரீதர் உதவியாளர்களின் (ஸ்ரீதர் ஒ மஞ்சு அரை வேக்காடு) தொடர்ந்த முயற்சி பன்னீர் புஷ்பங்கள். எனது பிரிய பாடகி உமா ரமணன் (நல்ல வேலை ராஜா புண்ணியம் வைத்து ஜானகி தவிர்த்தார்) அருமையான குரலில் "ஆனந்த ராகம் கேட்கும் காலம்".

சிம்மேந்திர மத்யமம் மற்ற பாடல்கள்.

தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா-கோபுர வாசலிலே.

தாஜ் மகால் தேவையில்லை அன்னமே-அமராவதி

நீ பௌர்ணமி என்றும் என் வாழ்விலே-ஒருவர் வாழும் ஆலயம்.

Gopal.s
4th May 2016, 01:58 PM
17)ஆபோகி.

உலகத்தில் எங்குமே துன்பமில்லை, ஆனந்தம் மட்டுமே எஞ்சியுள்ளது என்று நம்ப ஆசை படுகிறீர்களா?கண்களின் வார்த்தைகள் புரிந்து,காலை நேர பூங்குயிலை தரிசித்து,ரதத்தில் வந்த விருந்தாளிக்கு ,வணக்கம் பல முறை சொல்லி , வசந்த காலம் வந்ததை எண்ணுங்கள் புரியும்.

அந்த அபூர்வ இரட்டையர்கள் பிரிந்ததாய் வந்த செய்தி இசை வெறியர்களை குலுக்கி போட்டது.விஸ்வநாதனோ கற்பனை சுரங்கம்.(விஸ்வ நாதம் என்று பிரியத்தோடு குறிப்பார் என் நண்பர் விஸ்வேஸ்வரன்).public relation விஷயத்தில் கரை கண்டவர். ராமமூர்த்தி ஞான கடல். அத்தனை மேளகர்த்தாவும் அத்துபடி. விஸ்வநாதனின் குரு. balancing of archestra ,இணைப்பு ராகங்கள் என்று கரை கண்டவர்.இந்த மேதைகளின் இணைப்பு தமிழ் திரை இசையுலகின் பொற்காலம். அங்கங்கே பாக பிரிவினை போன்று தந்திருந்தாலும் ,விஸ்வரூபம் எடுத்தது 1960 இல் மன்னாதி மன்னனில் இருந்து,பாவ மன்னிப்பில் உச்சம் தொட்டு ஆயிரத்தில் ஒருவன்(1965) வரை தொடர்ந்தது.முதலில் இணைந்தது பணம் படத்தில்(1952).பிரிவிற்கு பல காரணங்கள். விஸ்வநாதன் ,தன் குருநாதரின் குடி பழக்கமே என்றார்.கலை கோவில் தோல்வி எதிரொலிப்பு என்று ஒரு புறம்.ராமமூர்த்தி திட்டமிட்டு ஒதுக்க படுகிறார் என்று ஒரு சாரார்.(சர்வர் சுந்தரம் அவளுக்கென்ன ஒரு sample ).இன்னொரு சாரார் ராக்ஷசியை காரணம் காட்டினர்.எது எப்படி இருந்த போதும் பிரிய கூடாத ஜோடியின் பிரிவு.நான் இருவரின் இணைப்பும் மீண்டும் நேராதா என்று ஏங்கிய கோஷ்டி.(சத்யராஜ் படமொன்றில் தள்ளாத வயதில் இணைந்த போது வருந்திய கோஷ்டியும்)இருவருமே பாதிக்க பட்டார்கள். ராமமூர்த்தி ரொம்பவே .ஆனாலும், நான்,காதல் ஜோதி,மறக்க முடியுமா,மூன்றெழுத்து,தங்க சுரங்கம்,சாது மிரண்டால் ,தேன்மழை போன்ற படங்களில் மேதைமை பளிச்சிட்டது.(தனி பெயரில் வெளியானாலும் இணைப்பிசை கொண்ட நீ,கலங்கரை விளக்கம்,நீலவானம் போன்றவற்றிலும்). ஒரு பாடல் போதும் ராமமூர்த்தி யார் என்று உலகிற்கு புரிய வைக்க. ஷெனாய் ஓலத்தோடு "வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ" என்று ஏங்க வைத்த பாடல். இசை ரசிகர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு.

இந்நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை எழுத்து மன்னன் கோபுவிற்கு சங்கீதம் என்றால் உயிர். ஸ்ரீதரை இழுத்து விட்டார். இரட்டையர்கள் தயாரிப்பில்,இசையில் கலைக்கோவில். ஸ்ரீதரிடம் ஒரு பிரச்சினை .எடுத்தால் ஓஹோ என்று.இல்லை தரை மட்டம்.(பாலச்சந்தர் போல consistency இருக்காது).கலைக்கோவில் படு போர். ஆனால் பாடல்கள்? இந்த படத்தின் "தங்க ரதம் வந்தது வீதியிலே".

ஜனநாயக நாட்டில் ,சர்வாதிகார தர்பார். அன்னையும் மைந்தனும்.ஏதேதோ அம்ச திட்டங்கள். தன்னை காத்து கொள்ள.(மக்களிடம் காத்து கொள்ள இயலாதது வேறு விஷயம்) இதற்கு ஜால்ரா போட்டு ஒரு boring பிரச்சார படம்.(சூட்டோடு சூடாக வரி விலக்கு வேறு).ஆனால் இந்த படம் வரும் முன்னே ,எல்லா மேடையிலும் ஆரம்ப வரவேற்பு பாடலாக அலங்கரிக்க தொடங்கி பட்டி தொட்டியெங்கும் popular . படத்திற்கு பலரை ஈர்க்க காரணமானது.
"வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே".

இந்த ராகத்தின் மற்ற பாடல்கள்.

கண்களின் வார்த்தைகள் பு ரியாதோ- களத்தூர் கண்ணம்மா.
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே- வைதேகி காத்திருந்தாள் .
காலை நேர பூங்குயில் - அம்மன் கோவில் கிழக்காலே.

18)ஹம்சத்வனி.

காதல் வயப்பட்டு விட்டீர்கள். காதலி ஒப்பு கொண்டு விட்டாள் .ஆனாலும் ஊருக்கு தெரியாமல்,உலகுக்கு தெரியாமல் ரகசியம் காத்து, உங்களுக்குள்ளேயே மருகி, சுகம் காக்கும் விகசிப்பை, உணர வேண்டுமா?ரகசியமாக அடையும் சுகத்தை ,திருட்டு சுகத்தை ஊரறியாமல் உணரும் சந்தோசம். இந்த பிரத்யேக உணர்வு தரும் ராகம் ஹம்சத்வனி.

அந்த பாடலையும் ,ஜோடியையும் நிறைய பேர் குறை சொன்னார்கள்.அதனாலேயோ என்னவோ ,அந்த பொன்னூஞ்சல் ஆடிய ஜோடியின் இந்த வித்தியாச கானத்தில் எனக்கு ஒரு ஈர்ப்பு. சாதாரண கனவு பாடல் மார்கழி மாதத்து பனியும் அந்த மங்கையை கண்டதும் பணியும் என்ற அபூர்வ வரி கொண்டது.highlight ஆணின் விருப்பமும்,பெண்ணின் செல்லமான மறுப்பும் ஸ்வரத்தின் வழியாக சொல்ல பட்டது. டி.எம்.எஸ்.-சுசிலா பின்னியிருப்பார்கள்.சிவாஜி-உஷாநந்தினி ஜோடி எனக்கு பிடித்தம். குன்னக்குடி கொடி நாட்டிய வித்தியாச பாடல். "பால் பொங்கும் பருவம் "(படமும் பாடலும் நிறைய பேருக்கு பிடிக்காது)

வாழ்வில் இணைந்த அந்த ஜோடியின் முதல் படம்.வழக்கம் போல தெரு ரௌடியிடம் காதலில் விழும் இன்ஸ்பெக்டர் மகள். ஆனால் பாடலும் ,படமாக்கமும் வித்யாசம்.(படமும்தான்-அமர்க்களம்)பரத்வாஜின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு".

எல்லாம் அம்சமாய் நிறைந்த 100% திருப்தி என்பார்களே, அதை அளித்த 2000களின் பாடல். அன்றலர்ந்த தாமரையாய்,அன்று பறித்த வெள்ளரியாய் ,சரியாய் பழுத்த ஸ்ட்ராபெரியாய் சிம்ரன். சந்திரபாபு-விஜய் சரிவிகித கலப்பாய் பிரபுதேவா. அற்புத நடன அமைப்பு.சரியான படமாக்கம். ரகுமானோ என்று திகைக்க வைத்த புதிய ஒருவரின் அற்புத composition -interludes -B G M .(ரஞ்சித் பாலொட் ) "மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே "

அந்த பிரபலத்தின் (மதுரைதான்)இரண்டாவது படைப்பு.நடிகர்திலகம் வெள்ளிவிழா கேடயம் வழங்கிய தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்று. இளைய ராஜா கிராமத்து பின்னணியில் கலப்பிசையில் பெடலெடுத்த கிழக்கே போகும் ரயில்.ஆனாலும் இந்த பாடல் படத்திலில்லை."மலர்களே நாதஸ்வரங்கள்". அருமையான பாடல்.வெட்ட பட்டது நீளம் கருதி.ஆனால் அதே இயக்குனரின் இன்னொரு அரை வேக்காட்டு ரொமாண்டிக் த்ரில்லெர் .இசை புயலின் விஸ்வரூபம்.எடு படாத படத்தில் ஒரு composition marvel . "தீகுருவியாய் தீங்கனியென தீபொழுதினில் தீண்டுகிறாய்." கண்களால் கைது செய்யா விட்டாலும் ,காதுகளால் என்னை கைது செய்த இணைப்பு-படைப்பிசை அபூர்வம்.

இந்த ராகத்தில் மற்ற பாடல்கள்.

வனிதா மணியே - அடுத்த வீட்டு பெண்.
ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்-மகாநதி.

Richardsof
4th May 2016, 03:20 PM
http://i66.tinypic.com/15fjiub.jpg

Richardsof
4th May 2016, 03:21 PM
http://i63.tinypic.com/rihkz8.jpg

Richardsof
4th May 2016, 03:22 PM
http://i65.tinypic.com/dgrke8.jpg

Richardsof
4th May 2016, 03:23 PM
http://i63.tinypic.com/2i7tyk8.jpg

Richardsof
4th May 2016, 03:24 PM
http://i66.tinypic.com/1epea9.jpg

Richardsof
4th May 2016, 03:25 PM
http://i63.tinypic.com/25qah6v.jpg

Richardsof
4th May 2016, 03:26 PM
http://i66.tinypic.com/1zoduz7.jpg

eehaiupehazij
4th May 2016, 09:35 PM
Vis-a-Vis Songs!


For friends from Manathai Kavarum Madhura Kaanangal!!

எதிரெதிர் நேரெதிர் மதுரகான எதிரொலிகள்!



சிரிக்கத் தெரிந்த அழத் தெரிந்த ஒரு மேம்பட்ட புவியினமே மனித இனம்!
மனித வாழ்வில் சிரிப்பும் அழுகையும் மாறி மாறி வருவது இயல்பே !!
சிரிப்பில்தான் எத்தனை வகை..... அழுகையிலும் அப்படியே!! உள்ளே சிரித்துக் கொண்டு வெளியே அழுவதும் வெளிப் போக்காக அழுவது போலஉள்ளூர ரசித்து சிரிப்பவரும் உண்டே !! ....

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டுமே ஆணவ சிரிப்பு....
MT's mission!

https://www.youtube.com/watch?v=lPfUcBCYews

நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்...அழுதுகொண்டே சிரிக்கின்றேன்!! NT's vision!!

https://www.youtube.com/watch?v=9q4V0baIp4k

யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன.?!
GG's mission-vision!!

https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM

madhu
5th May 2016, 03:49 AM
சி.செ.ஜி..

GG's duet mission-vision

சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்''

https://www.youtube.com/watch?v=T27GLHlJKe0

rajraj
5th May 2016, 05:37 AM
Here is a song in Mohanam:

From Meera (1947)

kaatrinile varum geetham.......

http://www.youtube.com/watch?v=tYV0eFgEO58



chinnakkaNNan: You have to find the Hindustani equivalent of Mohanam yourself ! :lol:

Richardsof
5th May 2016, 01:42 PM
RARE PICS, SCENES AND ADVTS- OLD TAMIL MOVIES. 1955-1961

http://i67.tinypic.com/11lsol3.jpg

Richardsof
5th May 2016, 01:44 PM
http://i65.tinypic.com/zwkkfl.jpg

Richardsof
5th May 2016, 01:45 PM
http://i67.tinypic.com/amtptx.jpg

Richardsof
5th May 2016, 01:49 PM
http://i65.tinypic.com/2qtkdom.jpg

Richardsof
5th May 2016, 01:50 PM
http://i66.tinypic.com/2iqmx3s.jpg

Richardsof
5th May 2016, 01:52 PM
http://i66.tinypic.com/ilbsr5.jpg

Richardsof
5th May 2016, 01:53 PM
http://i64.tinypic.com/121x5yg.jpg

Richardsof
5th May 2016, 01:54 PM
http://i68.tinypic.com/m7gq6t.jpg

Richardsof
5th May 2016, 01:57 PM
http://i65.tinypic.com/20rkxhc.jpg

Richardsof
5th May 2016, 01:58 PM
http://i68.tinypic.com/2gw9fl3.jpg

Richardsof
5th May 2016, 02:00 PM
http://i66.tinypic.com/za0ht.jpg

Richardsof
5th May 2016, 02:01 PM
http://i64.tinypic.com/21j624h.jpg

Richardsof
5th May 2016, 02:04 PM
http://i68.tinypic.com/2me22vk.jpg

Richardsof
5th May 2016, 02:05 PM
http://i68.tinypic.com/20gimwg.jpg

Richardsof
5th May 2016, 02:07 PM
http://i66.tinypic.com/rr6q6d.jpg

Richardsof
5th May 2016, 02:08 PM
http://i64.tinypic.com/2itro29.jpg

RAGHAVENDRA
5th May 2016, 02:33 PM
வினோத்
அபூர்வமான சினிமா விளம்பரங்களின் அணிவகுப்பு அந்நாளைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வருகிறது. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

eehaiupehazij
5th May 2016, 04:47 PM
Vis-a-vis songs!!

எதிரெதிர் நேரெதிர் கான மதுரங்கள் !!

இரவும் பகலும் !


இரவென்பது இன்பக் கனவலைகளின் சொர்க்க பனிப்பாளக் குழைவே !
பகலென்பது துன்ப நனவலைகலின் நரக எரிமலைக் குழம்பே !

இரவும் வரும் பகலும் வரும் ....


https://www.youtube.com/watch?v=S5j2Pq82HbE

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று !

https://www.youtube.com/watch?v=-iq8FhWdQKQ


இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்,,,,,,,,,,இதுவே எங்கள் உலகம்!!


https://www.youtube.com/watch?v=1L6vb7z0V1s

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை ?!

https://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M

madhu
5th May 2016, 05:18 PM
வினோத் ஜி..

பார்க்க பார்க்க மனம் மகிழ்கிறது. நிதானமாக ஒவ்வொரு போஸ்டராக பார்த்து ரசிக்கிறேன். அந்த கால விமர்சனமும் அற்புதம். மனம் நிறைந்த நன்றி

chinnakkannan
5th May 2016, 09:03 PM
எதிரெதிர் கானங்கள்

//இந்த வெய்யில்ல இப்படி கருத்திட்டியேன்னு கரிசன பார்வை கிடைக்காதது, கருப்பா இருக்கிறதால வரும் ஒரே ஒரு மனக்கஷ்டம்!! // முக நூலில் ஒரு நண்பர் எழுதி வருத்தப் பட்டிருந்தது இது..

நிறம் எப்படி இருந்தா என்ன மனசு வெள்ளந்தியா வெள்ளையா இருந்தா போதுமில்லையா.. என்ன சொல்ல வர்றேன்னாக்க

ஆப்போஸிட்னு பார்த்தா கருப்பு க்கு ஆப்போஸிட் வெள்ளைங்கறோம்.. வேற நிறத்துக்கு அப்படிச் சொல்ல முடியுமா..

இந்தப் பொண்ணு (வேற வழியில்லை வி.கு தான் நானும் ஒரு பெண்ணில்) தான் கருப்பா இருக்கறதால கல்யாணம் நடக்காம மற்றவர்களோட இகழ்வுக்கு ஆளாகிட்டோமேன்னு அழறாங்க நானும் ஒரு பெண்ணில்.. அது அந்தக் காலம் தானே..

இந்தக்காலத்துல என்னன்னா பொண்ணே சந்தோஷப் படுது..கருப்பான கையாலே என்னைப் புடிச்சான்..காதல் என்காதல் பூ ப் பூக்குதம்மா ந்னு கற்பூர நாயகியே கனகவல்லி மெட்டில பாடி ஆடவும் செய்யுது...

https://youtu.be/GCqnVjFVJAk

ஆனா இந்த வெள்ளந்தி மனசு வெள்ளை மனசு மனிதனுக்கு இருக்கா என்ன..

வெள்ளமென வாழ்வதன் வேகத்தில் நன்றாகக்
கள்ளமாய்ப் வந்த கருப்பு

எனச் சொல்லலாம்..இந்த் நாகேஷுக்கு க் குழந்தைக்குத்தான் வெள்ளை மனசுன்னு நினைச்சுண்டு பாடறார்..

https://youtu.be/p7F3cit3zuE

*

காலை மாலைக்கும் நிறைய பாட்டு

காலை நேரக் காற்றே வாழ்த்துச் சொல்லு
மாலை எனை வாட்டுது மண நாளை மனம் தேடுது..

காலையும் நீயே மாலையும் நீயே - ஹை ஒரே பாட்டுல வந்துடுத்தே..

chinnakkannan
5th May 2016, 09:13 PM
நேற்று கோபாலின் ராக மறு இடுகைகளைப் படித்து எழுதினேன்..கடைசியில் கொஞ்சம் பெர்ஸனல் சமாச்சாரம் எழுதி இட்டிருந்தேன்..அப்படியே நிறுத்தவும் செய்துவிட்டேன்.. கொஞ்சம் சோகமானேன்..

பின் .. அதுவே கூடாதென டெலீட்டும் செய்து விட்டேன்..கொஞ்சம் யோசித்தால் modify செய்து பகிர்வதில் தவறென்று படவில்லை இப்பொழுது.. எனில் இப்போது இடுகிறேன்..

*
கோ..

சிந்துபைரவி ராகம் எனத் தேடியதில் கிடைத்த்தில் பிடித்தது..( நீங்கள் சொன்ன பாடல்கள் தவிர)

வதனமே சந்த்ர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ
மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி

சுபபந்து வராளி..

சுபன்னு போட்டுட்டு சோஓஒகப் பாட்டா இருக்கு.. நீங்கள் சொன்னதிலும் நான் பார்த்ததிலும்..

இந்த நாடகம் அந்த் மேடையில் எத்தனை நாளம்மா
காலமகள் கை கொடுப்பாள் சின்னய்யா.. விக் விக் விக்..

மாயா மாளவ கெளளை..

திலீபன் அந்த மாலை வேளையில் அந்த வீட்டிலருகே உள்ள மரத்தடியில் நின்ற போது குப்பென்று மல்லிகை மணம் அவனைச் சூழ்ந்தது..அப்படியே உயிரை உலுக்குவதுபோல் வீணையின் ஒலி.. கொஞ்சம் ஆழக் கேட்டால் ராகமும் அவனுக்குப் புரிந்தது.. மாயா மாளவ கெளளை”

ஜாவர் சீதாராமனின் உடல், பொருள் ஆனந்தியில் வரும் வார்த்தைகளை – சற்று முன்பின் இருக்கலாம் – நினைவிலிருந்து எழுதுகிறேன்..
ஒரு ஜோரான த்ரில்லர் எனச் சொல்லலாம்..

அதில் நீங்கள் சொன்னபாடல் துள்ளுவதோ இளமை மிகப்பிடிக்கும்..

நான் பார்த்ததில் பிடித் பாடல்கள்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (இதை எப்படி விட்டீங்க)
பூங்கதவே தாழ் திறவாய்.. (ரொம்பவே பிடிக்கும் கேட்க மட்டும்)

4 பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எழுத்தாளர் சாருகேசியை ஒரு இலக்கிய சிந்தனை சந்திப்பில் சந்தித்திருக்கிறேன்..

அப்புறம்..தையத் தக்கா எனக் குதித்து ராகவேந்திர ரஜினி பாடப் பாட ஆடிடும் பூங்கொடியான அம்பிகை… ஆடமுடியாமல் முழித்து திடுக்காகி நிற்க வைக்கும் ராகம் சாருகேசி.. ஸ்வாமி ராகம் பெயரைச் சொல்லி என்னை அபினயிக்க விடாமல் செய்துவிட்டீர்களே என அடிபம்ப்பின் கைப்பிடி மாதிரி வளைந்து வணங்குவார். இதைத்தவிர சாருகேசிபற்றி எனக்குத் தெரியாது ( மற்ற எல்லா ராகங்களும் கூடத் தான்) ஆனால் அந்தப் பாட்டே சாருகேசி ராகம் என இப்போது தான் தெரியும்..

ஆடற்கலையே தேவன் தந்தது
ஆடல் காணீரோ ஓ திருவிளையாடல் காணீரோ..

5.நட பைரவி.. ஹை.. நீங்கள் போட்ட பாட்ஸ் எல்லாம் எனக்கும் பிடிக்குமே..
உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா
போடச் சொன்னா போட்டுக்கறேன் போடும் வரை கன்னத்திலே..

இதுவரை எழுதியதில் பிழை இருந்தால் நான் எடுத்த லிங்க்கையே சாரும்..என்னைத் திட்டுவதாய் இருந்தால் கொஞ்சிக் கொஞ்சி த் திட்டவும்..
இல்லை என்றால்..கன்னத்தில்…

போடச்சொன்னா போட்டுக்கறேன்..

https://youtu.be/CLdYx1CQmSU

6 பாகேஸ்வரி..

மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை..

7 ஆபேரி சிங்கார வேலனே தேவா பற்றி முன்பு எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன் ..நிங்ஙள் எழுதின எல்லாப் பாட்ம் என்குபிடிக் கும்..
பழமுதிர்ச் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி.. எனி டைம் பிடிக்கும்..

8 சக்ரவாஹம்..
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.. ஒருகாலத்தில் அடிக்கடி கேட்டு முணுமுணுத்த பாட்டு..ம்ம்

9 க்ல்யாணி

சொன்ன எல்லாப் பாட்மே பிடிக்கும்…என்றாலும்..

ஆடும் அருள் ஜோதி.. ராகம் தாளம் bhaவம் சேர்ந்த பரதக்கலை.. பாட் ரொம்பப் பிடிக்கும்.. முகத்தில் முகம் பார்க்கலாமும்..

மோஹனம்.

நிலவும் மலரும் பாடுது
பழகத்தெரிய வேணும்
மலர்கள் நனைந்தன பனியாலே.

பிருந்தாவன சாரங்கா..

ரங்கா புர விஹாராவில் முன்பு நிறையவே உருகியிருக்கிறேன்..இன்ன ராகம் எனத் தெரியாது..
சொன்ன பாடல்கள் எல்லாம் மனம் கவர்ந்தவை..

முத்து நகையே உன்னை நானறிவேன்..எனக்கு மிக ப் பிடித்த உருக்கமான பாடல்..

கண்ணழகு பார்த்தால் பூவெதற்கு
கையழகு பார்த்தால் பொன்னெதற்கு
காலழகு பார்த்தால்
காலழகு பார்த்தால் தெய்வத்திற்குக்
கருணை என்றொரு பேர் எதற்கு..

ந.தியின் முக உணர்ச்சிகளும் மறக்க முடியாது தான்..

https://youtu.be/f2gQqwbeJRM

மிச்ச ராகங்களுக்கு அப்புறம் வரேனே..

eehaiupehazij
5th May 2016, 10:41 PM
காதல் சாணக்கியர் ஜெமினி கணேசனின் அ(ர்த்த சா)ஸ்திரம் 1


முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது.....வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான்....அகராதியும் வேறுதான்!!

https://www.youtube.com/watch?v=daJdkHGeZ00

chinnakkannan
5th May 2016, 10:46 PM
சி.செ.. மனிதனுக்கு சிரிப்புன்னு ஒண்ணு இருந்தா அழுகைன்னு ஒண்ணும் வரும்..அதத் தான் இந்தப் பாட்டில ஒரு தாத்தா சொல்றார்.. நீங்க சொல்றது அவருக்கு எப்படித்தெரிஞ்சது..!

சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி..

https://youtu.be/H1iem7zAu_A

சிந்தித்தால் சிரிப்பு வ்ரும் மனம் நொந்தால் அழுகைவரும் செங்கமலத் தீவில் ஆனந்தன் பாடுவது..

என் எஸ்/ கே யோட சிரிப்பு எனக்குப்பிடிக்கும்..

https://youtu.be/2jDfOtcHe-o
சங்கீதச் சிரிப்பு..க்ளாஸ்…

chinnakkannan
6th May 2016, 12:18 PM
எதிரெதிர் கானங்கள்

ஒரே ஒரு ஆள் நடந்து போனா தனியா நடக்கறான் என்போம் அதுவே பலர் அஞ்சுக்கும் மேலே நடந்தா..கூட்டம்னும் சொல்வோம் ஒரு வித ஆர்டரோட நடந்தா ஊர்வலம்னும் சொல்வோம் இல்லியோ

எனில் தனி - க்கு ஆண்டொனிம் ஊர்வலம்னு வச்சுக்கலாமா..

தனியாத் தவிக்கிற வயசு
இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு என்கிறார் சந்திரபாபு..

https://youtu.be/r8qEpG0H9Ls

இங்கே ரவிச்சந்திரன் லஷ்மி... ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று ந்னு என்ன சொல்றாங்கன்னாக்க.. பாட் கேப்போமே..

https://youtu.be/dhik1ooA6LE

பட் ஏன் இந்தப் பாட்டுக்கு எல்.ஆர்.ஈ ஐத்தேர்வுபண்ணினாங்கன்னு தெரியலை..

Richardsof
6th May 2016, 03:31 PM
http://i63.tinypic.com/9bd6c1.jpg

Richardsof
6th May 2016, 03:47 PM
நான் பதிவிட்ட பழைய திரைப்படங்களின் விளமபரங்கள் மற்றும் இதர செய்திகளை பார்த்து பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு கோபால் , திரு ராகவேந்தரன் திரு சின்னக்கண்ணன் திரு நெய்வேலி வாசுதேவன் , திரு மது , திரு கோபு அனைவருக்கும் அன்பு நன்றி .

yoyisohuni
6th May 2016, 06:13 PM
மோகன் தனக்கென தனியாய் முத்திரைப் பதித்தவர். அன்னாளில் கமலஹாசனைப் காபி அடிக்கிறார் என பேசப்பட்டாலும், தன் முத்திரையை எண்பதுகளில் அழுத்தமாய் பதித்தார். மைக்கை பிடித்து நின்றாலே, பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். மேடைப் பாடகராய் இவர் நின்றது போல் இன்னொருவரால் அவ்விடத்தை நிரப்ப முடியாது. இளமைக்காலங்கள் போன்ற சுமாரான படங்கள் கூட பாடல்களால் வெகுவாக கவரப்பட்டன. பாடலுக்காக வாழ்தவர் பலர். இவர் பாடலுக்காகவெ நடித்தவர். இப்படத்தின் எல்லா பாடல்களும் நெஞ்சை அள்ளும். ஈரமான ரோஜாவை கேட்டும் பார்த்தும் வரிகளை மனதில் நிருத்தியும் நெகிழாத நெஞ்சம் குறைவு.

ஆனால் இன்று நான் பகிரப்போவது அதே படத்தில் இசை மேடையில் இசைக்கப்படும் இன்னொரு பாடல்.

https://www.youtube.com/watch?v=UQOpoPLqbZ8

eehaiupehazij
6th May 2016, 08:39 PM
The Mirror cracked!!

இப்புவி கண்ட நிகரற்ற உளவியல் தத்துவ மேதை சிக்மண்ட் பிராய்ட் 160 வது பிறந்த தினம் இன்று!

https://www.youtube.com/watch?v=R0w0db2zR7Q

https://www.youtube.com/watch?v=PNLV_QT09i0

https://www.youtube.com/watch?v=mQaqXK7z9LM

நினைவு கூர்வதில் பெருமை கொள்கின்றன நடிகர்திலகம் சிவாஜிகணேசன் / காதல் மன்னர் ஜெமினி கணேசனுக்கான மேன்மைத் திரிகள் !!

How an elite and educated person becomes a split personality by circumstances and cheats and avenges the world using his intelligence in an intellectual way exploiting the weakness of women,as exemplified in an incomparable performance ever given by an actor of calibre like NT or GG!! In line with the Freud's theory on mental fissures and fractures that can destabilize the behavioral pattern and equilibrium inside a man who avenges the ignorance of the society on him (by NT) and the negligence of the weaker sex..(by GG)..!! Hats off to NT/GG for their lifetime performances with elegance and diligence!!

https://www.youtube.com/watch?v=oo-A6DLaD2A

https://www.youtube.com/watch?v=ij9bR4B_11c

eehaiupehazij
6th May 2016, 08:43 PM
Larger than Life Night Club songs in NT films!!


Night club entertainment had never been in our culture! However, inspired by Hollywood and Bollywood movies, this became a part and parcel of our screen entertainment segments though larger than life dances, songs, Casino Royale type card play, booze and even stunts are included!!

Night Club songs are mostly the forte of LR Eswari but P Suseela too had contributed occasionally in NT movies!

The Number One Spot as regards a night club ambiance goes always to Pudhiya Paravai with the scintillating voice of P Suseela synchronizing with the stylish and effervescent mood changes depicted in an overwhelming presence and presentation by the one and the only one NT!!

Night Club Song 1 : Pudhiya Paravai / Parththa Gyaapagam Illaiyo....by P. Suseela!

மறதி என்னும் மாமருந்து இல்லாவிடில் மனக்காயங்கள் ஆறும் வழி தெரியாது மனித இனம் வாழும்போதே நரக வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான் !

சோகங்களை முற்றிலும் மறக்கும் வரை எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று அலைந்து திரிந்து அவ்வப்போது மது மயக்கத்தை நாடுவதும் மங்கையின் ஆதுர அணைப்பை தேடுவதும் ஒருவழிப் பாதையான நிரந்தரமற்ற தீர்வே !!

சோக உணர்வுகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு மனதை பதமாக்கும் உணர்வு வெளிப்பாடுகளை நடிகர்திலகம் வெளிப் படுத்தியிருக்கும் விதமே அலாதி !!
சிக்மண்ட் பிராய்ட் கூட பொறாமைப்படும் அளவு உளவியல் ரீதியான பாடல் ஆடல் இசை தெரபியை சௌகார் நடைமுறைப் படுத்தியிருக்கும் விதமும் அபாரம் !!

https://www.youtube.com/watch?v=go40tKa90yI

eehaiupehazij
7th May 2016, 08:31 PM
08/05/2016

Happy Mothers' Day wishes and greetings from GG's elite thread!

அமரர் ஜெமினி கணேசன் மேன்மைத் திரி சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் சிறுவயதிலே பிரிந்த அன்னையை சிறையிலே மகன் சந்திக்க நேரும் உருக்கமான இறுக்கமான சூழலில் ஜெமினியின்
உன்னதமான உணர்ச்சிக் குவியலான தாய்ப் பாசம் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்புப் பாடமே !
(தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை....ஹிந்தி பதிப்பான ராஜ்திலக்கில் நடிப்புச்செல்வம்....பாஷை எதுவானால் என்ன...அன்னையின் பாசம் புரிந்திட.....)

https://www.youtube.com/watch?v=yp_HD9rbUwo

https://www.youtube.com/watch?v=3AGYwrZixLo

eehaiupehazij
7th May 2016, 08:51 PM
நேரம் தவறாமை, திறமை, நேர்மை, தமிழ் உச்சரிப்புப் பாவனைகளின் நேர்த்தி, நடிப்பாளுமை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை மீது காட்டிய அன்பு
பாசம் பக்தி ...வாழ்ந்து காட்டிய உதாரண மாமனிதர் நடிகர்திலகத்தின் கண்ணியத் திரி சார்ந்த உலக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!

https://www.youtube.com/watch?v=b1PuDk_WyS0

From telugu version of Deiva Makan!

https://www.youtube.com/watch?v=mU-GlbPlong

chinnakkannan
7th May 2016, 10:08 PM
எங்கே எங்கே என்மனது
அது அங்கே இருந்தால் தந்துவிடு..

https://youtu.be/o7wJs0g8pk8

chinnakkannan
7th May 2016, 10:12 PM
சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்..அவள் இப்படித் தானிருப்பாள்.. பாரதி தானே..

https://youtu.be/LB2DTr6Qw74

chinnakkannan
7th May 2016, 10:20 PM
எப்போ கேட்டாலும் இனிக்கும் பாட்டு..

கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ
மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ
பார்வை மோதும் வேளை பருவராகம் இசைத்ததோ
பார்வை மோதும் வேளை பருவராகம் இசைத்ததோ
நாணம் விடாதோ அம்மம்மா பெண்களே
வேண்டும் நிதானம் அம்மம்மா ஆண்களே

என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
கொதிக்கும் இந்த உடலை குளிரச்செய்ய வழியென்ன
கொதிக்கும் இந்த உடலை குளிரச்செய்ய வழியென்ன
கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி
கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி
வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ
தருவார் தராமல் பெண் மேனி தூங்குமோ

என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்

அந்த ஒரு செகண்ட் இசையில்லாத மெளனம் பேசும் வார்த்தைகள் தான் என்னே!



https://youtu.be/nzgPY0NlTT4

vasudevan31355
7th May 2016, 11:43 PM
08/05/2016


வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் சிறுவயதிலே பிரிந்த அன்னையை சிறையிலே மகன் சந்திக்க நேரும் உருக்கமான இறுக்கமான சூழலில் ஜெமினியின்
உன்னதமான உணர்ச்சிக் குவியலான தாய்ப் பாசம் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்புப் பாடமே !

http://i.ytimg.com/vi/AG3axqhnioI/maxresdefault.jpg

ஜெமினி திரியில் நான் முன்னம் எழுதிய (30th May 2015) பதிவிது. இங்கே இப்போது பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.



வஞ்சிக் கோட்டை திவானின் மகன் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டு, கொடுஞ்சிறையில் வெந்து தணிந்து, வேதனை அனுபவிக்க, பக்கத்து சிறையில் சொந்தத் தாயும் அடைபட்டுக் கிடக்க, தாய் அறையின் கல்லுடைத்து தப்பி வந்து மகனிடம் வந்து சேர, அதுவரை அநாதை என்று தன்னை எண்ணிக் கொண்டிருந்த மகன் தாய் தன் மகனை அடையாளம் கண்டு வரலாறு கூறி அவன் அநாதை இல்லை என்று ஆறுதல் அளித்து அள்ளி மகிழும் போது ஆனந்தம் பொங்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான். சிறையிலிருந்து தப்பி வெளியேற சிறைக் கற்களை தாயுடன் சேர்ந்து பெயர்க்கிறான். தப்ப வழி கிடைக்கும் சமயத்தில் தாய் தன் உயரை விடுகிறாள். துவல்கிறான்... அழுகிறான்... புரள்கிறான்... புலம்புகிறான்.... துடிக்கிறான் துன்பத்திலேயே உழன்ற மகன்.

அற்ப நேரம் அன்னையுடனான அன்னியோன்யத்தை எண்ணி அழுகிறான். கொள்ளி போடவும் கொடுஞ்சிறையில் வழி ஏதுமில்லை.

இருந்தால் என்ன?

அன்னையைப் புதைக்க அங்கேயே சவக்குழி தோண்டுகிறான். அதுவரை இருந்த பொறுமை அறவே அழிந்து பொங்கி எழுகிறான். சிறைக்கு வரும் காவலாளியைத் தாக்கி, மற்றவர்களையும் தாக்கி தான் குடும்பத்தை நாசம் செய்த வஞ்சகனை பழி வாங்கத் தப்புகிறான் தண்ணீரில் குதித்து.

மகனாக ஜெமினி. தாயாக கண்ணாம்பா. உணர்ச்சிமிகு கட்டங்கள். தாயும் மகனும் சிறையில் சந்திக்கும் காட்சி உணர்சிக் குவியல்களின் சங்கமம்.

தாடியும் மீசையுமாய் பொலிவிழந்த முகத்துடன் நலிந்த, உருக்குலைந்த தோற்றத்துடன் நடிப்பில் உருக்குலையாத ஜெமினி.

சோகங்கள் கவ்வ தாயைப் பார்த்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சியை காட்டுவதிலாகட்டும்...தாய் தான் பறி கொடுத்த தங்கையை பற்றிக் கேட்டதும் துவண்டு 'அவளை எமனிடம் பறி கொடுத்து விட்டேனம்மா' என்று கதறுவதாகட்டும்... அனாதையாகக் காரணமாயிருந்த அப்பாவின் மேல் கொள்ளும் கோபமாகட்டும்... அவர் நல்லவர் என்று சொல்லி அன்னை நம்பிக்கையூட்ட, பின் அவர் மேல் கொள்ளும் தாபமாகட்டும்... அன்னை தன் மடியில் உயிர்விடும்போது நிலை குலைந்து சிலை போல அசைவற்றுப் போவதாகட்டும்... அவளின் துயரங்களை நினைத்து துன்பப்படுவதாகட்டும்... சிலிர்த்தெழுந்து சிறு கடப்பாரையில் மாதாவின் அடக்கத்திற்கு மண் தோண்டுவதாகட்டும்... உள்ளே கிடந்த வீரம் வீறு கொண்டு எழுந்து அங்கு வரும் வீரர்களை உருண்டு புரண்டு சாயப்பதிலாகட்டும்...

அம்மா அம்மா என்றே ஆயிரம் ஆண்டுகள்
அழுது புரண்டாலும்
மகனே!
அன்னை வருவாளோ!
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ!
முன்னை தவமிருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
பொன்னைப் போலே உன்னை
போற்றி வளர்த்திட்ட
அன்னை வருவாளோ!
கொள்ளி இடவும் வகையில்லை
என்றே நீ கொடுஞ்சிறையில்
கலக்கம் கொள்ளாதே!
அள்ளி இட அரிசி இல்லையென்றால் என்ன?
அன்பை சொரிவாய் மகனே!
கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு

என்று 'இசைச் சித்தர்' தனக்கே உரிய பாணியில் பின்னணியில் உருகிப் பாட,

ஜெமினி இந்தக் காட்சிகளில் நம் மனதை தன் ஆழமான அழும் நடிப்பால் தோண்டி விடுவார். அந்த இயல்பான சோகம் அதுவும் தாய் இறந்தவுடன் அவர் காட்டும் அவர் மேல் கருணை பிறக்க வைக்கும் முகபாவங்கள் முத்திரைதான். அவருடன் சேர்ந்து நம் கண்களும் கலங்கத்தான் செய்யும்.

'வஞ்சிக் கோட்டை வாலிபனி'ல் என்னை மிக மிக பாதித்த காட்சி இது.

eehaiupehazij
8th May 2016, 12:09 AM
வாசு என்பதன் விரிவாக்கம் வார்த்தைகளின் சுரங்கம் என்பதே !


சில திரைப்படங்களின் சில காட்சிகள் கல்வெட்டுக் கீற்றாய் மனதில் ஆழமான வடுவாய்ப் பதிந்து அந்தப் பிரமிப்பிலிருந்து நம்மால் என்றுமே விடுபட இயலாது என்பதற்கு அமரர் ஜெமினி கணேசனின் சாகாவரம் பெற்ற நடிப்புப் பதிவுகளில் இக்காட்சியும் ஒன்றே !!

ஒரே அலைவரிசையில் நமது எண்ணங்கள் இருக்கின்றன என்று பெருமைப் படுத்தியமைக்கு நன்றி வாசு சார் !
செந்தில்

chinnakkannan
8th May 2016, 12:36 AM
வ. கோ வாலிபனில் எனக்கு வைஜயந்தி மாலா ரொம்ப ப் பிடிக்கும்.. அனாவசியமாகச் சாகடித்தது பிடிக்காது..

eehaiupehazij
8th May 2016, 08:01 AM
பிஎஸ் வீரப்பா ஏன் மந்தாகினியைக் கொன்றார்? என்றுபாகுபலி ராஜமௌலியாரிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வோம் வஞ்சிக்கோட்டை வாலிபன் 2 எடுத்து வைஜயந்தியின் பாத்திரத்தை உயிர்ப்பித்து சின்னக் கண்ணரை குஷிப்படுத்திட!!

vasudevan31355
8th May 2016, 09:47 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355086/drftyghui.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355086/drftyghui.jpg.html)

காபரே கானங்களில் மட்டுமல்ல....கண்ணீர் வரவழைக்கும் கானங்களிலும் கில்லாடி ராட்சஸி. வறுமையில் வாடும் குமாரி ஷீலா வயிற்றுப் பிழைப்புக்காக தன் தங்கைகளுடன் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தும் பரிதாபம். ஈஸ்வரியின் குரலில் ஈட்டியாகத் துளைக்கிறது இதயத்தை இப்பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் அடிவயிறு என்னையுமறியாமல் கலங்குவதை உணருவேன். மூன்றெழுத்தில் எனக்குப் பிடித்த முத்தான முதல் பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355086/1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355086/1.jpg.html)

பாடலின் இன்னொரு விசேஷம் ஈஸ்வரியுடன் என்னுடைய இன்னொரு பிடித்தமான பாடகி சரளா கூட்டணி அமைத்ததுதான். சரியான சளைக்காத சரளா இணை...துணை... வேறென்ன வேண்டும்?

மது அண்ணாவும், நானும் இப்பாடலைப் பற்றி செல்லில் பேசி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அவருக்கும் மிக மிக பிடித்த பாடல். ஆனால் பாடலின் வீடியோ மிஸ்ஸிங். விரைவில் தர முயற்சி செய்கிறேன்.

தெய்வத்தின் கோவில்
தெய்வந்தான் இல்லையே
மனிதனின் பூமி
மனிதன்தான் இல்லையே
அவை இரண்டும் இல்லா வேளையிலே
ஏழைப் பெண்கள் வீதியிலே

முதலாவது சரணத்தில்,

'வாழ்வது எங்கள் ஆசை
ஒரு மாளிகை ராணியைப் போ...ல '

என்று முடித்து ஈஸ்வரி எடுக்கும் அந்த ஹம்மிங் சோகம். நெஞ்சக் காணியை அப்படியே குல்கந்து குரல் ஏர் பூட்டி உழுகிறது. வறுமையின் கொடுமையும், இளமைக்கால இன்னலையும் அந்த ஹம்மிங் ஒரே சேர பிரதிபலிக்கும்.

பின்வரும் இசையே இல்லாமல் வரும் வரிகளும் வறுமையை உணர்த்துவதே.

'ஆண்டவன் காட்டிய பாதை
ஒரு ஆண்டியின் பிள்ளையைப் போலே'

'தன்னைத்தானே காணும் உலகில் என்னைக் காண்பார் யாரம்மா?'

என்ற ஈஸ்வரி பாடும் வரிகளிலேயே அவர்களின் வறுமைக் கதை நமக்கு உணர்த்தப்படுவிடும்.

'யாரம்மா?' என்று ஈஸ்வரி முடித்தவுடன் சரளா குழுவினர் உடன் தொடரும் அந்த இரண்டு முறை 'யாரம்மா' இடியாக இருதயத்தில் இறங்கும்.

இதற்குப் பின்

சரளா சரளமாகப் பின்னுவார். டோட்டலாக பாடலைக் கேப்சர் பண்ணிவிடுவார். ஈஸ்வரிக்கே சவால் விடுவதுபோல இருக்கும்.

'தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தான்
எங்கு சொல்வாய் ஏனம்மா?'
(மதுண்ணா! இந்த வரி கொஞ்சம் டவுட். சரி பார்க்கவும். காது பஞ்சர்):)

(அந்தக் குரலில் அவர் பாடிய இஸ்லாமிய தனிப்பாடல்கள் கண்டிப்பாக நம் நினைவுக்கு வந்துபோகும்).

ஷீலா மெச்சூர்டான அக்கா என்பதால் ஈஸ்வரி அவருக்கான சோக வரிகளை விரக்தியாக வெளிப்படுத்துவார். உடன் தங்கை விவரமறியா இளம்பெண் என்பதால் அவளுக்காகப் பாடும் சரளா குரலில் ஈஸ்வரியை விட அதிகமாக தழுதழுப்பில் சோகம் காட்டுவார். என்ன ஒரு புரிதல் தன்மை!

இப்போது பாடல் சோகத்தின் விளிம்பிற்கு சற்றே உச்ச ஸ்தாயியை அடையத் தொடங்கும்.

'கருணை நெஞ்சைத் தேடித் தேடி கண்ணீர் சிந்தும் பெண்ணம்மா
பெண்ணம்மா
பெண்ணம்மா'
கடமை என்று ஒருவர் வந்தால் காலில் விழுவேன் நானம்மா'

முடித்தவுடன் ஈஸ்வரியின் மீண்டும் இரக்கத்தை வரவழைக்கும் சோக ஹம்மிங்.

பாடலென்றால் அப்படி ஒரு பாடல் இது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது இப்பாடல் நினைவுக்கு வராமல் போனதில்லை.

'மூன்றெழுத்'தில் இப்பாடலில் என் மூச்சிருக்கும் என்றும்.


https://youtu.be/zkflWIukjvQ

Gopal.s
8th May 2016, 03:00 PM
சின்ன கண்ணன்,

சுஜாதாவை நான் நேரில் பார்த்த போது சொன்னவை. என் எழுத்திலேயே ஐந்தில் ஒரு பகுதிதான் ரசிகர்களால் மேய படுகிறது. அந்த ஐந்து யானை பார்க்கும் குருடர் போல அவரவர் ரசனை க்கேற்ப தீர்மானம் பெறும் என்றார். தாங்கள் கண்ணாடி முன்னே நிற்பவர் போலும் ,எழுதி குவிப்பது ,பாட்டுக்கு பாட்டு போன்ற சில்லறை காரியங்களில் ஈடுபட்டு பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பது போன்று ஈடுபடாமல் ,படிக்க கற்று கொள்ளுங்கள்.

இந்த பதிவுகளின் நோக்கம் ,ராகங்களின் பெயரல்ல. விவரணை அல்ல. அவை என் மனதில் விளைத்த தாக்கங்கள். சில சுவாரஸ்ய வாழ்வின் இணையான சினிமா நிகழ்வுகள். சற்றே இணைப்புக்காக மற்ற பாடல்கள் சாம்பிள் .

சாறை விட்டு சக்கையை சுவைக்கும் சராசரி போல ,ராகங்களை கூகிளில் மேய்ந்து இன்னும் சில பாடல்கள். இதில் கல்லெல்லாம்,மலர்கள் பாடல்களுக்கு உரிய விவரணை பகுதிகளை படிக்காமல் விட்டு விட்டதாக எழுதினால்?

கார்த்திக், முரளி,ராகவேந்தர்,வாசு ,மது,சாரதி மற்றும் நான் மற்றோர் எழுத்தை ஒன்று விடாமல் படிப்போம். நான் மதிக்கும் பதிவரான தாங்கள் எனக்கு தொடர்ந்து ஏமாற்றமே அளிக்கிறீர்கள்.தயவு செய்து ,பங்கு பெரும் திரியில் மற்றவர் எழுத்தை முழுதும் படியுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

chinnakkannan
8th May 2016, 09:15 PM
கண்டிப்பாக கோபால்.. அப்படியே செய்கிறேன். நன்றி.

madhu
9th May 2016, 04:53 AM
ஆஹா... ரெண்டு நாளா நெட்வொர்க் இல்லை. வாசுஜி... அது "தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் ஏனம்மா ?" ... ஆனால் துன்ப"ம்" என்று சரளா அழுத்திப் பாடவில்லை. அதனால் கேட்பவர்களுக்கு கொஞ்சம் தொந்தரவு :)

vasudevan31355
9th May 2016, 07:17 AM
ஆஹா... ரெண்டு நாளா நெட்வொர்க் இல்லை. வாசுஜி... அது "தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் ஏனம்மா ?" ... ஆனால் துன்ப"ம்" என்று சரளா அழுத்திப் பாடவில்லை. அதனால் கேட்பவர்களுக்கு கொஞ்சம் தொந்தரவு :)

சூப்பர் மதுண்ணா. நிறையமுறை கேட்டும் பிடிபடவில்லை. வார்த்தைகளும் பொருந்தவில்லை. "தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் ஏனம்மா ?" என்பது அழகாகப் பொருந்துகிறது. அதுதான் சரி. நன்றியோ நன்றி.

vasudevan31355
9th May 2016, 07:23 AM
வினோத் சார்,

கிடைத்தற்கரிய அந்தக் கால பொக்கிஷ விளம்பரங்களைப் பதிவிட்டு மதுரகானத்திற்கு தனி மகுடம் சூட்டியதற்கு நன்றி. அந்த விளமபரங்களை இங்கே பதிவிட தாங்கள் எடுத்துக் கொண்ட சிரமம் நானன்றிந்ததே. PDF format இல் உள்ள விளம்பரங்களை jpeg பைலாக ஆக கன்வெர்ட் செய்து பின் tiny picture மூலம் ஒவ்வொன்றாக அப்லோட் செய்ய வேண்டும். நாங்கள் நோகாமல் உங்கள் உழைப்பில் இந்த அரிய விளம்பரங்களைக் கண்டு களிக்கிறோம். மேலும் விளம்பரங்கள் தங்கள் கைவண்ணத்தில் தெள்ளத்தெளிவாக மின்னுகின்றன. நன்றிகள் பல.

vasudevan31355
9th May 2016, 07:23 AM
சின்னா!

கனவில் நடந்த கல்யாண ஊர்வலத்தை மீண்டும் நடத்தி காட்டியதற்கு நன்றி. என் சிந்தையில் கலந்த பாடல். மெய்மறக்கச் செய்வதில் முதலிடம்.

vasudevan31355
9th May 2016, 07:26 AM
நீண்ட நாட்களுக்குப் பின் காட்டுப் பூச்சியாரின் தயவில் இளமைக்காலங்களில் மிகவும் ரசித்த இசைமேடையை மீண்டும் அனுபவித்துச் சுவைத்தேன். நன்றி காட்டுப் பூச்சியாரே. ஒரு சிறு விண்ணப்பம். தங்கள் பெயர்க்காரணம் கேட்டு நண்பர்கள் என்னிடம் போனில் நச்சரிக்கிறார்கள். விளக்கம் அளிக்கவும். எனக்கும் சேர்த்துத்தான்.:)

vasudevan31355
9th May 2016, 07:28 AM
//பட் ஏன் இந்தப் பாட்டுக்கு எல்.ஆர்.ஈ ஐத்தேர்வுபண்ணினாங்கன்னு தெரியலை..//

அது ஒன்றுமில்லை சின்னா! சிம்பிள். லஷ்மிக்கு ஈஸ்வரியின் குரல் லட்சனமாகப் பொருந்தும். அதான்.

chinnakkannan
9th May 2016, 07:52 AM
அது ஒன்றுமில்லை சின்னா! சிம்பிள். லஷ்மிக்கு ஈஸ்வரியின் குரல் லட்சனமாகப் பொருந்தும். அதான்.// வாஸ்ஸூ.. தாங்க்ஸ்.. சரி சரி வேற என்ன பாட்ஸ் இருக்குலஷ்மி எல ஆர் ஈஸ்வ்ரி காம்பினேஷன்ல..எடுத்து விடுங்களேன்..:)

Richardsof
9th May 2016, 09:21 AM
இனிய நண்பர் திரு வாசு சார்
தங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி .கடந்த கால தமிழ் படங்களின் விளம்பர டிசைன் , மற்றும் புதுமையான விளம்பரங்களை காணும் போது ஏற்படும் மகிழ்சிக்கு அளவே இல்லை

vasudevan31355
9th May 2016, 11:29 AM
மதுண்ணா!

மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டேன். நீங்கள் சொன்னது போல சரளா துன்பம் என்பதில் 'ம்' என்பதை விட்டுவிட்டதால் வந்ததுதான் இவ்வளவு வினையும். நானும் நூறு முறையாவது கேட்டிருப்பேன்.

'இருந்தால்'... 'இருந்தான்' என்பதை கண்டுபிடிப்பதும் கஷ்டமாகவே இருந்தது.

உங்கள் காதுகளுக்கு ஒரு 'கபாஷ்':)

இப்போதான் மனம் நிம்மதியாயிற்று. அப்பாடா!

madhu
9th May 2016, 03:07 PM
அது ஒன்றுமில்லை சின்னா! சிம்பிள். லஷ்மிக்கு ஈஸ்வரியின் குரல் லட்சனமாகப் பொருந்தும். அதான்.// வாஸ்ஸூ.. தாங்க்ஸ்.. சரி சரி வேற என்ன பாட்ஸ் இருக்குலஷ்மி எல ஆர் ஈஸ்வ்ரி காம்பினேஷன்ல..எடுத்து விடுங்களேன்..:)

ம்ம்ம்.. எனக்குத் தெரிஞ்ச சில பாடல்கள்..

உலகம் நமது வீடென்று - திருமாங்கல்யம் ( செம்ம பாட்டு.. )
அங்கம் புதுவிதம் - வீட்டுக்கு வீடு
மெல்லப் பேசுங்கள் - காசேதான் கடவுளடா
பட்டிக்காடா பட்டணமா - மாட்டுக்கார வேலன்
மாதென்னைப் படைத்தான் - ராஜராஜசோழன்

madhu
9th May 2016, 06:38 PM
மது அண்ணாவும், நானும் இப்பாடலைப் பற்றி செல்லில் பேசி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அவருக்கும் மிக மிக பிடித்த பாடல். ஆனால் பாடலின் வீடியோ மிஸ்ஸிங். விரைவில் தர முயற்சி செய்கிறேன்.



வாசு ஜி.... கஷ்டப்பட வேண்டாம். வீடியோ இதோ...

https://youtu.be/JMymkPogqpo

RAGHAVENDRA
9th May 2016, 07:49 PM
இதோ லக்ஷ்மி நடிக்க ராட்சசியின் பின்னணிக் குரல்...

https://www.youtube.com/watch?v=eR_T85Ahyfg

மாட்டுக்கார வேலன் படத்திலிருந்து...

vasudevan31355
9th May 2016, 08:47 PM
நன்றி மதுண்ணா!

ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாடல் இதோ இணையத்தில் முதன்முதலாக உங்கள் மூலமாக. நெடுநாள் ஆசை நிறைவேறியது. நன்றிகள் ஆயிரம். பல பேர் மறந்தே போய்விட்ட பாடல். இப்படி ஒரு பாடல் 'மூன்றெழுத்து' படத்தில் உள்ளதா என்பதே பலருக்கும் தெரியாது. ரசனை ஒத்த நண்பரது நட்பே நன்மகிழ்ச்சியைத் தரும் என்பதற்கு தாங்கள் ஒரு சிறந்த உதாரணம்.

chinnakkannan
9th May 2016, 09:15 PM
அது என்ன உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்னு போட்டுசெம்ம பாட்னு கமெண்ட் வேற..இன்னிக்கு 44 டிகிரி தான் மீன்ஸ் 111 டிகிரி..இருந்தாலும் 108னே வெப்ல போட்ருக்காங்க ம்ம் சரின்னு குட்டியா வெளிய அந்த தகிக்கிற் ஹ்யுமிடிட்டில கொஞ்சம் நிழலா ஒதுங்கி தம் போட்டாலும் நினைவுக்கு வரலை.. அதுவும் திருமாங்கல்யம் முத்ராமன் ஜெயலலிதான்னா எங்கிட்டிருந்து லஷ்மி வந்தாங்கன்னு யோசிக்கறச்சே ஒரு மாதிரி குன்சா லஷ்மி இருக்கறது நினைவுக்கு வர அகெய்ன் தோல்விதான்.. வீட் வந்து கேட்டதற்கு அப்புறம் தான் அது ஆனந்தம் தம் ஆனந்தம்னு தெரிஞ்சது..

இப்பவும் 40 ட்கிரி செல்சியஷ்.. இரவு 7.42க்கும்ம் சரி பாட் கேக்கலாம் மதுண்ணாவ்..

https://youtu.be/4SbhOkSgE34


ஹப்புறம் எல்.ஆர்.ஈஸ்வ்ரி லஷ்மி சாங்க்ஸ் நு லிஸ்ட் போட்டா ( ராகவேந்தர் சார் பட்டிக்காடா பட்டணமா பாட்கு தாங்க்ஸ்..மதுண்ணா லிஸ்ட்கும் தாங்க்ஸ்..வாசு பொருத்தம் பார்த்ததுக்கு தாங்க்ஸ் :) ) ஓ ல்ஷ்மி ஓ ஷீலா பாட் தான் வருது..வெயிலோன்னோ எல்.ஆர்.ஈ பாட் பொருத்தமா போட்டுட்டேன்..வாடைக்காற்றம்மா( நற நற) :)

https://youtu.be/zmqwLbZzmCg

vasudevan31355
9th May 2016, 09:24 PM
மதுண்ணா!

பாடலை சிலமுறை பார்த்து, கேட்டு ரசித்தேன். சில விஷயங்கள் புலப்பட்டன.

ஷீலாவுக்கு ஈஸ்வரி குரல். உடன் ஆடும் ராஜி பாப்பாவிற்கு சரளா குரல். தங்கைகளாக வரும் பெண்களுக்கு சரளாவும், வேறு ஒருவரும் குரல் தந்திருப்பார்கள் போல. முதல் சரணம் முடிந்தும் பிரபாகருக்கும், ராஜிக்கும் அதே கோஷ்டிக் குரல்கள்.

இரண்டாவது சரணத்தில்,

'தன்னைத்தானே காணும் உலகில் என்னைக் காண்பார் யாரம்மா'

என்று ஷீலா நொந்து பாடும் போது அவருக்கு குரல் ராட்சஸிதான்.

அடுத்தவரியாக ஒலிக்கும் பிரச்னை பண்ணிய வரியான,:)

'தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் ஏனம்மா?'

வரிகளை சரளா பாடியிருப்பார். நேற்று நான் எழுதும்போது குரல் மாறுவதால் அந்த வரி வேறு யாருக்கோ இருக்கும் என்று நினைத்து எழுதினேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை...இதுவரை ஈஸ்வரி குரலில் பாடிவந்த ஷீலா 'டமாலெ'ன சரளா குரலில் அடுத்த வரியான மேற்சொன்ன வரிகளுக்கு வாயசைப்பார். ஆக குரல்கள் மாற தொடர்ந்து பாடுவது ஷீலா மட்டுமே. அநேகமாக ராஜிக்குதான் அந்த வரி போய் இருக்க வேண்டும். எப்படியோ ஷீலாவுக்குப் போய் விட்டது. இதுதான் கோட்டை விடுதல் என்பதோ!

அடுத்த வரியான 'கருணை நெஞ்சைத் தேடித் தேடி கண்ணீர் சிந்தும் பெண்ணம்மா' வரிகளை மீண்டும் ஷீலாவுக்காக வழக்கம் போல ஈஸ்வரி பாடுவார்.

எப்படி இருந்தாலும் தரமான பாடல் என்பதில் அனைத்தையும் மறந்து விடலாம். பாடல் இன்னும் கொஞ்சம் நீளமாய் இருந்திருக்கலாம். இது ராட்சஸி ரசிகனின் ஆசை.:)

vasudevan31355
9th May 2016, 09:34 PM
சின்னா!

உங்க விஜயகுமாரியை விட புஷ்பலதா நூறு பங்கு மேல்.:) ஏ.வி. எம்.ராஜனைக் கேட்டா சொல்வார். ஆமாம்! ராஜன் விஜயகுமாரியோடு ஜோடி சேர்ந்து ஏதாவது நடிச்சிருக்கிறாரா? அதே போல எஸ்.எஸ்.ராஜேந்திரன் புஷ்பலதாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறாரா? அப்படி இருந்தா பாட்டு போடுங்க. நான் நைட் ஷிப்ட் போயிட்டு நாளைக்கு வந்து பார்க்கிறேன்.

'உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்' என்னுடய மிகப் பிடித்தங்களில் ஒன்று. ஆனந்தம்.

chinnakkannan
9th May 2016, 09:39 PM
வாஸ்ஸூ.. இப்படி ரெண்டு காம்பினேஷன்கொடுத்து தேடுன்னா நான் எந்து செய்யு.. சமர்த்தா ஆஃபீஸ் போய்ட்டு வாங்க..நாளைக்குள்ற முடியுதான்னு பார்க்கறேன்..

chinnakkannan
9th May 2016, 09:42 PM
எஸ்.எஸ்.ஆர் புஷ்பலதாவோட சேர்ந்து நடித்திருக்கிறார் ஆனா ஜோடியா இல்லை..வானம்பாடில்ல..இல்லியோ..

ஆயிரம் வால்ட்டு மின்சாரம் அமைந்துகிடக்குது உடம்புக்குள்ள
கையைத் தொட்டா ஷாக்கடிக்கும் கவனிச்சுக்கோகொஞ்சம்கவனிச்சுக்கோ..

https://youtu.be/kVcSYM4cdNk

chinnakkannan
9th May 2016, 09:59 PM
வாசு சார்..இந்தப் பாட்டு தான்பாடணும் போல இருக்கு...அவருக்கென்ன ஆஃபீஸ் போய்ட்டார்..அகப்பட்டவன் நானல்லவோன்னு..விக் விக் வி..

இந்த பதிலுக்கு பதிலில் வி.கு வுக்கும் ஏ.வி.எம் ராஜனுக்கும் கல்யாணமே ஆகறா மாதிரி சீன்..(என்னா காம்பினேஷன்)

https://youtu.be/Tk9CPbK2rQY

ஏழெட்டுப் பெண்கள் எந்தன்பக்கம் பாட்டை நீங்கள் போட்டு வியாசம் எழுதியதாய் நினைவு..சரிதானே..

அவள் ஜாதிப் பூவென சிரித்தாள்..விக் விக் விக்..உங்களுக்காக..

ட்ரெய்னும் குதிரையும்..ஓய் நான் பாட்டில வர்ற சீன் சொன்னேன்..

ஆனா பாட் நன்னாதான் இருக்கு கேட்டால்..

https://youtu.be/oSWPerLIOMw

madhu
10th May 2016, 03:58 AM
ஹாஹா... கலர் படம் எதுக்கு சிக்கா ? கருப்பு வெள்ளை போதாதா ? எல்லாம் தெய்வ சங்கல்பம்

https://www.youtube.com/watch?v=tPBeCH465Ok

madhu
10th May 2016, 04:03 AM
வாசுஜி... அந்த துன்ப வரியை நீங்க நல்லா கவனிக்கணும் என்றுதான் ஷீலாவுக்கு சரளாவை பின்னணி கொடுக்கச் சொல்லி அந்தக் காலத்திலேயே ஒரு பட்டர்ஃப்ளை எஃபெக்ட் இருந்திருக்கு !! ( இந்த மாதிரி குளறுபடிகள் இருக்கும் பாடல்களைக் கண்டு பிடித்து பதியும் பணியை சிக்கா தலையில் சுமத்தினால் என்ன ? ) :think:

Richardsof
10th May 2016, 08:44 AM
1973


http://i67.tinypic.com/mtxa1d.jpg

Gopal.s
10th May 2016, 08:55 AM
எனக்கு பாலாஜியை பிடிக்கும். சிவாஜியின் நண்பர் என்பதால் மட்டுமல்ல. இவர் Y .G .மகேந்திராவிற்கு மாமா முறை.(அம்மா மலையாள கரையோரம் கவி பாடிய குருவி) சிறு வயதில் ஒன்றும் வசதியாக தெரியவில்லை.

ஆனால் படி படியாக முன்னேறி,ஜெமினி போன்ற புண்ணியவான்களின் கருணையால் ,நடிகரானார். ஹீரோவாக,வில்லனாக என்று அவதாரங்கள். ஜெமினி மறுத்தததால்
படித்தால் மட்டும் போதுமாவில் அற்புத வாய்ப்பு. பிறகு பலே பாண்டியா.

பிறகு தனக்கு வாழ்வு கொடுத்த ஜெமினியை வைத்து அண்ணாவின் ஆசை. தங்கை ,சிவாஜியுடன் இணைப்பு கொடுத்து குபேரனாக ஆக்கியது.சிவாஜியின் திருப்பு முனை படம். (எதிர் முகாம் ,கைகால் நடுங்க ,குடும்ப படம் தேட வைத்தது.ஒரே நாளில் இரு படங்கள் பாலச்சந்தர் கதை-வசனத்தில். மெழுகுவர்த்தி என்று ஒன்று ஞாபகம்.)

பிறகு சிவாஜியின் 17 படங்கள். குடும்பம் ஒரு கோவில் வரை.

பாலாஜியின் நடனம்-துடிப்பு படு ஜாலியாக இந்த பாட்டில். சீர்காழி குரல் கொஞ்சம் இளமையாக இருந்திருந்தால் டி.எம்.எஸ் ஐ விழுங்கி இருப்பார். (50களில் எதிர் முகாம் பாடும் குரலே சீர்காழிதானே?)

https://www.youtube.com/watch?v=ud7dJmsRBss

Richardsof
10th May 2016, 08:58 AM
http://i66.tinypic.com/24xoz2d.jpg

Richardsof
10th May 2016, 08:59 AM
http://i67.tinypic.com/1zycyg6.jpg

Richardsof
10th May 2016, 09:00 AM
http://i67.tinypic.com/295qv55.jpg

Richardsof
10th May 2016, 09:01 AM
http://i63.tinypic.com/2jg8nx4.jpg

Richardsof
10th May 2016, 09:02 AM
http://i65.tinypic.com/11tndqh.jpg

Richardsof
10th May 2016, 09:03 AM
http://i67.tinypic.com/o77mlx.jpg

Richardsof
10th May 2016, 09:07 AM
http://i67.tinypic.com/ek2vrm.jpg

Richardsof
10th May 2016, 09:08 AM
http://i68.tinypic.com/2gugw3b.jpg

Richardsof
10th May 2016, 09:09 AM
http://i65.tinypic.com/350j8lw.jpg

RAGHAVENDRA
10th May 2016, 09:33 AM
வினோத்
அபூர்வமான விளம்பர நிழற்படங்களுக்கு பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
10th May 2016, 09:34 AM
மனமுள்ள மறுதாரம்...எனக்கு மிகவும் பிடித்த சீர்காழியின் பாடல்...
இது போல பல உண்டு. விழிவாசல் அழகான மண்டபம், மூங்கில் மரக்காட்டினிலே, தட்டுத்தடுமாறி நெஞ்சம்... இதுபோல எத்தனையோ பாடல்கள்.

vasudevan31355
10th May 2016, 10:00 AM
,வினோத் சார்,

அமர்க்களம். ஷீலா நர்ஸாக நிற்க, இங்கே சகுந்தலா முறைக்க, நடுவில் ஹிப்பி ஸ்டைல் ஷர்ட்டில் ரவி அழகாய் இருக்க மஞ்சள் குங்குமம் யாருக்கோ?

டாக்டர் சிவகுமாரிடம் பிரமிளா என்ன சொல்லி சொந்தம் கொண்டாடுகிறார்?

மணிப்பயல் ராஜன் ஏன் அப்படியே நடிகர் திலகம் போலவே அநியாத்துக்கு காப்பி அடித்து போஸ் கொடுத்து நிற்கிறார்?

நாணயம் படம் வந்ததா? பாடல்கள் உள்ளதா?

vasudevan31355
10th May 2016, 10:01 AM
//விழிவாசல் அழகான மண்டபம்//

ஆஹா! என்ன ஒரு பாடல்!

vasudevan31355
10th May 2016, 10:22 AM
'பிரார்த்தனை' படம் விளம்பரம் கண்டதுமே அந்த வித்தியாசமான பாடல் 'டக்'கென்று நினைவுக்கு வந்து விலகுவேனா என்கிறது.

காதல் பிறந்தது
ஆவல் எழுந்தது
காவல் கடந்தது
ஹா....

என்று சுசீலா 'ரூப் தேரா மஸ்தானா பாணியில்' மோகமாய், தாபமாய் ரேடியோவில் (எம்மாம் நீட்டு நேஷனல் பானாசோனிக் ரேடியோ) பாடிக்கொண்டிருக்க, ஸ்லோமோஷனில் ராஜனும் (கொடுத்து வைத்த ராஜன்) நிர்மலாவும் ஒன்று சேர்ந்து ஒரு கொத்து திராட்சையை நடுவில் வைத்து தங்களுடைய இதழ்களால் பங்கு போட்டுக் கொள்ள சின்னாவின் நாடித்துடிப்பு எகிறுவது நிச்சயம். (நிர்மலா எவ்வளவு அழகாக திராட்சைக் கொத்தைக் கவ்வுகிறார்!) ஸ்லோமோஷனில் நிர்மலாவின் அசைவுகள் அற்புதம். வழக்கம் போல டிரஸ் கொள்ளை அழகு. இந்த மனிதர் வேற நிர்மலாவை அப்படியே அலேக்காகத் தூக்கி, எங்கெங்கோ தட்டி..... கோபால்....இது அடுக்குமா?

பாடலில் கிடார் கிறுகிறுக்க வைக்கிறது.

'இன்னும் உண்டு இன்பம் என்று எண்ணும் வரையில் தழுவு
கன்னம் என்னும் ஏட்டில் உந்தன் சின்னம் நூறு எழுத்து'

என்னும் வரிகளிலும், பல்லவி வரிகளிலும் பயங்கர போதை ஏற்றுகிறார் சுசீலா. யப்பா! சுசீலாவா அது?... தூள் கிளப்பி விட்டார் போங்கள். வரிகளில் விளையாடுகிறார் வாலிபக் கவிஞர். இசை யார் என்று நினைத்தீர்கள்? மெல்லிசை மன்னர்களில் பின்னவர். விஸ்வரூபம். பாடல் முழுதும் இளமை விளையாட்டு. போதை தெளிய வெகுநேரம் பிடிக்கும்.


https://youtu.be/iYlTIjjk4ig

chinnakkannan
10th May 2016, 10:30 AM
.(அம்மா மலையாள கரையோரம் கவி பாடிய குருவி)// யார் அவர்.

இன்பமெங்கே பாடலை எதிரெதிர் கானத்திற்காக இடலாம் என முன்பு நினைத்திருந்தேன்.. நல்லபாட்டு தாங்க்ஸ்..

தாங்க்ஸ் ஃபார் தெய்வ சங்கல்பம் மதுண்ணா வீட் போய் கேட்கிறேன்..

vasudevan31355
10th May 2016, 10:34 AM
இன்னொரு அற்புதமான 'ஹேப்பி பர்த்டே' பாடலும் 'பிரார்த்தனை'யில் உண்டு. நிர்மலாவிற்கு. சுசீலா குரலில்.

நேற்று வரை 16
இன்று முதல் 17
நான் வாழ நல்வாழ்த்து சொல்லுங்கள்
எல்லோரும் நில்லுங்கள்

நிர்மலாவின் சுறுசுறுப்பு ஜோர். ஜிப்பா ஸ்ரீகாந்த் சின்னதாய் இடுப்பை குலுக்குவார். ராஜனின் இம்சை வழமை போல.:)


https://youtu.be/p3HLROpeVZY

இப்போ மது அண்ணா, ராகவேந்திரன் சாருக்கு மட்டும்.

சுசீலா ம்..ம்..ம்...ம்..ம்..ம்...ம்..என்று ராகம் இசைக்கும் போதெல்லாம் பின்னாளில் வந்த இன்னொரு பாட்டு ஞாபகத்திற்கு வருகிறதே. இப்போது பிடித்துக் கொண்டிருப்பீர்கள்.

ம்..ம்..ம்...ம்..ம்..ம்...ம்..
சந்தோஷ நேரங்கள்
ம்..ம்..ம்...ம்..ம்..ம்...ம்..
சங்கீதம் கேளுங்கள்

அந்த ம்..ம்..ம்...ம்..ம்..ம்...ம்.. மட்டும் அப்படியே இல்லை?


https://youtu.be/4dAEbpp-3bE

chinnakkannan
10th May 2016, 10:35 AM
//சின்னாவின் நாடித்துடிப்பு எகிறுவது நிச்சயம். // ஓய்..ஈவ்னிங்க் தான் பார்க்க முடியும் :) பார்த்துச் சொல்கிறேன்..

உமக்காக ஒரு தொண்டர் பாடல்..சிக்கிஸ்தொண்டா!

நீச்சலுடை கூட அந்தக் காலத்தில் அளவாக அழகாக அணிந்திருக்கிறார்கள். பாடல் கேட்கக் கேட்கப் பிடித்தும் விட்டது..(ரெண்டு நாளா போடலாமா வேணாமான்னு யோசிச்சுப் போட்டுட்டேன்) பெண்குரலில் வரும் ஒய்..ஒய் அழகு..பாடல் ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் குட்டி க் குட்டி ஸ்டெப்ஸ் அழகு..


https://youtu.be/Dv0lLfKcOBk

vasudevan31355
10th May 2016, 11:09 AM
சின்னா!

எங்களுக்கு போடத் தெரியாதாங்காட்டியும். ஆனாலும் உம்ம துணிச்சல் நமக்கு வராது'ம்மா' ஸாரி வராதுப்பா.:)

RAGHAVENDRA
10th May 2016, 11:46 AM
சிக்கான உடையைத் தேர்ந்தெடுத்த சி(க்)கா
போட்டிடுக நாயகிக்கு சொக்கா...

என்று எழுதத் தான் தோன்றுகிறது...
என்ன செய்வது.. எனக்கு அந்தளவிற்கு ஞானம் இல்லையே...

RAGHAVENDRA
10th May 2016, 11:48 AM
வாசு சார்
நமது மெல்லிசை மன்னரின் பிரார்த்தனை படப்பாடலில் தாங்கள் சுட்டிக்காட்டிய அந்த ம்ம்ம்ம்... ஹம்மிங்கின் பாதிப்பில் தான் பார்வையின் மறுபக்கம் பாடல் உருவாகியிருக்கலாம் என்பதாகத் தான் எனக்கும் தோன்றுகிறது.

RAGHAVENDRA
10th May 2016, 11:49 AM
பிறந்த நாள் வாழ்த்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பிறந்த நாள் கொண்டாடுபவரே சொல்கிறாரே... ஏதேனும் அரசியல் கட்சியில் இருந்திருப்பாரோ...?

vasudevan31355
10th May 2016, 03:01 PM
பிறந்த நாள் வாழ்த்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பிறந்த நாள் கொண்டாடுபவரே சொல்கிறாரே... ஏதேனும் அரசியல் கட்சியில் இருந்திருப்பாரோ...?

:):):)

chinnakkannan
10th May 2016, 06:40 PM
முன்பு முக நூலில் மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே தினத்தில் பரதனைப் பற்றி எழுதியிருந்தேன்..

*

பரதன் மனைவி மிருதுளை தானே.. வெகு சின்ன வயதில் ஆனந்த விகடனில் வேள்வி என்ற கதை படித்த நினைவு..
பரதனை விட மிருதுளை பற்றி எழுதியிருப்பார்கள்..கொஞ்சம் பரதன் மீது கோபம் கூட வந்தது..மனைவியை ராமபிரான் திரும்பி வரும் வரையில் பிரிந்தே இருந்தாராம் பரதன்..என வந்தது அந்தக் கதையில்..எவ்வளவு உண்மை எனத் தெரியவில்லை..
ஏதோ எனக்குத் தெரிந்ததை வைத்து எழுதிப் பார்த்திருக்கிறேன்..
**
காத தூரம் நடந்து வந்து கசிந்துருகி நின்றவன்
பாதம் பட்ட பாது கையே போதுமென்று சொன்னவன்
வேத வித்தாம் ராமன் கூட இளையவனாய்ப் பிறந்தவன்
பேத மில்லா பாசங் கொண்ட பரதனவன் தெரியுமா..

அண்ணன் ராமன் காட்டில் வாழ அரண்மனையில் வாழ்கையில்
திண்ண மான நெஞ்சம் கொண்டு தவமுனிவர் போலவே
அன்னம் போன்ற நடையைக் கொண்ட அழகுமனை ஒதுக்கியே
எண்ணம் போல வாழ்ந்து அண்ணல் வந்தபின்னர் தந்தவன்…

நெருப்பு தன்னை மூட்டி வைத்து நேசத்தோடு பார்த்தவன்
விருப்ப மான அண்ணல் முகம் காணாமலே வெறுத்தவன்
வருத்தத் தோடு தாவி வாழ்வை முடிப்பதற்குப் போகையில்
நறுவி சாக அனுமன் வந்து சேதிசொல்ல வாழ்ந்தவன்

துறவு வாழ்க்கை வாழச் சென்ற அண்ணலையே நினத்ததால்
உறவு எதுவும் இலாமல் உளத்தில் அனலைத்தான் வளர்த்ததும்
புறமும் அகமும் நோகத் தரையில் பரிதவித்தே படுத்ததால்
பரதன் தன்மை போற்றி சொல்லிப் பாடிடுவோம் நாங்களே..

*

ந.தியின் நடிப்பு மறக்க இயலுமா என்ன..

https://youtu.be/HKrjD6Z2kOQ

madhu
10th May 2016, 06:58 PM
சிக்கா... பரதனின் மனைவி பெயர் மாண்டவி என்று நினைவு.... சீதா, ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி என்ற நால்வரும் ராம, லக்ஷ்மண, பரத,சத்ருக்னருக்கு பத்தினிகள் respectively.

madhu
10th May 2016, 07:00 PM
வாசுஜி... நீங்க கேட்ட கேள்விக்கு பதில்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..

chinnakkannan
10th May 2016, 08:49 PM
ஆக்சுவலாப் பார்த்தா மூணுவருஷத்துக்கு முன்னாலேயும் இதை நீங்க சொல்லியிருக்கீங்க மதுண்ணா..பட் ஏன் சேஞ்ச்பண்ணலைன்னா நான்படித்த கதை வேள்வியில் மிருதுளா என்றே குறிப்பிட்ட நினைவு.. நீங்கள் சொல்வது சரியே..சத்ருக்னனோட வைஃப் சுருத கீர்த்தி பேர் நீளமா இல்லை?


சிக்கா... பரதனின் மனைவி பெயர் மாண்டவி என்று நினைவு.... சீதா, ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி என்ற நால்வரும் ராம, லக்ஷ்மண, பரத,சத்ருக்னருக்கு பத்தினிகள் respectively.

chinnakkannan
10th May 2016, 09:39 PM
//பிரார்த்தனை' படம் விளம்பரம் கண்டதுமே அந்த வித்தியாசமான பாடல் 'டக்'கென்று நினைவுக்கு வந்து விலகுவேனா என்கிறது.

காதல் பிறந்தது
ஆவல் எழுந்தது
காவல் கடந்தது
ஹா....

என்று சுசீலா 'ரூப் தேரா மஸ்தானா பாணியில்' மோகமாய், தாபமாய் ரேடியோவில் (எம்மாம் நீட்டு நேஷனல் பானாசோனிக் ரேடியோ) // வாசு சூப்பரோ சூப்பர்... பாடலை முழுக்கப் பார்த்தேன்.. . நான் இதுவரை கேட்டிராத ஒன்று..முழ்க்க முழுக்க ஸ்லோமோஷனில் கொஞ்சம் வித்யாசமான் பாடல்..பாடிய விதம் வரிகள்..அழகிய நிர்மலா..அண்ட் எவ்விஎம் ராஜன் ( நற நற) வெய்ட் அடுத்த பாட் கேட் வர்றேன்.

chinnakkannan
10th May 2016, 09:47 PM
முதலில் ராகவேந்திரரின் கமெண்ட் படித்த போது புரியவில்லை..இப்போது பாடல் கேட்டபிறகு புரிகிறது..:) பாட்டு எனக்கு ரொம்பபிடிக்கிறது..பட் ம்ம்ம் சந்தோஷ நேரங்கள் முன்பு கேட்டிருக்கிறேன்..இப்போது பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது முதல் ம்ம்ம் அழகு..


பிறந்த நாள் வாழ்த்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பிறந்த நாள் கொண்டாடுபவரே சொல்கிறாரே... ஏதேனும் அரசியல் கட்சியில் இருந்திருப்பாரோ...?

chinnakkannan
10th May 2016, 09:51 PM
ராகவேந்தர் சார்.. :)

சிக்கான ஆடை சிரித்ததா இல்லையிலை
செக்கச் சிவந்த முகம்..

நு எழுத வ்ருது இப்போ எனக்கு.. ஹலோ ஸ்வாமி நான் என்னைச் சொன்னேன்..வெட்கமா இருக்கு..பட் உங்களுடைய இசை ஞானத்துக்கு முன்னால்.. அப்படின்னுசாவித்திரிக்கு சிங்கார வேலாவில் திக்கறாமாதிரி திக் திக்குனு ஹடிச்சுக்குது ஹார்ட்டு :)


சிக்கான உடையைத் தேர்ந்தெடுத்த சி(க்)கா
போட்டிடுக நாயகிக்கு சொக்கா...

என்று எழுதத் தான் தோன்றுகிறது...
என்ன செய்வது.. எனக்கு அந்தளவிற்கு ஞானம் இல்லையே...

eehaiupehazij
10th May 2016, 10:17 PM
A Bird's eye view on some Hollywood Love stories reminding us of GG...the debonair!
Part 1 : Robert Taylor comparable to GG!!

....reminiscence of WATERLOO BRIDGE starring Robert Taylor with Vivien Leigh...(famous Gone with the Wind heroine opposite to Clarke Gable)!a poignant love story woven in GG standards of dignified love and affection!!


The tale of love between a brave soldier and a dancing damsel....poles apart!
Robert Taylor the suave debonair hero reminding us of GG's traits!!


https://www.youtube.com/watch?v=Ee7HPhr25ug

https://www.youtube.com/watch?v=72d7N1stylU

https://www.youtube.com/watch?v=gdRrMSFcJRU&list=PL6eYJImIZdQ7hox7f52D4KfAth7BigIVA

rajraj
11th May 2016, 06:31 AM
From maadhar kula maanikkam

maasatru uyarndha maragathame........


http://www.youtube.com/watch?v=cce1nXtsq1w

vasudevan31355
11th May 2016, 11:36 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

54-ஆவது பதிவு

https://i.ytimg.com/vi/zRBI53uQ24s/hqdefault.jpg

'கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல'

அடுத்து தொடரில் 'அவள்' படத்தின் பாலாவின் டூயட். இந்தப் பாடலைப் பற்றி நான் என்ன சொல்ல!

1971-ல் வெளிவந்து இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கிய 'தோ ரஹா' என்ற இந்திப்படமே தமிழில் 'அவள்' ஆனது.

http://www.webmallindia.com/img/film/hindi/do_raha_1324894072.jpg

'அடல்ட்ஸ் ஒன்லி' முத்திரைப் படங்கள் தொடர்ந்து வெளிவர வழி வகுத்த ஒரு படம். 'தோ ரஹா' என்றாலே கற்பழிப்பு என்ற வார்த்தையை நெஞ்சில் நிலைக்க வைத்துவிட்ட பெருமை இப்படத்திற்கு என்றும் உண்டு.

வெளியே முகம் சுளித்துக் கொண்டே அகமலர்ந்து அன்றைய மக்கள் கூட்டம் இப்படத்தை பாரபட்சம் இல்லாமல் கண்டு களித்தது. மீசை அரும்பாத இளம் வாலிபர்கள் தீக்குச்சி உரசலின் கரியில் மீசை வரைந்து தியேட்டர் நிர்வாகத்தை ஏமாற்றி பார்த்த கதைகளும் நிறைய. (ஒரு தீக்குச்சி எனக்கு)

இந்தியில் ராதா சலூஜா இந்த ஒரே படத்தில் வானளாவிய புகழ் பெற்றார். ஸ்டைல் சத்ருகன் சின்ஹா, அமுல் பேபி அனில்தாவன், ரூபேஷ் குமார், இப்தகர் இப்படத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார்கள்.

'அவள்' படம் பல சிறப்பு அம்சங்களை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட ஒரு படம்.

தமிழில் தேசிய நடிகர் சசிகுமார், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் ('பிரகாஷ்' என்ற சப்போர்டிங் ரோல்) புதிய பரிணாமத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஆகியோர் நடித்திருந்தனர். டி.கே.பகவதி, பண்டரிபாய், சந்திரபாபு, மனோரமா உடன் நடித்திருந்தனர். இயக்கம் நடிகர் திலகத்தின் படங்களை இயக்கி வானளாவிய புகழ் பெற்ற ஏ.சி.திருலோக்சந்தர்தான். சுந்தர்லால் நஹாதாவின் தயாரிப்பு 'அவள்'.

உரையாடல்களை ஏ.எல்.நாராயணன் எழுதியிருந்தார். பாடல்களை வாலி இயற்ற, அப்பாடல்களுக்கு தங்கள் அசாத்திய திறமை கொண்டு, அற்புதமாக இசையமைத்து, இன்றுவரையில் வியப்பால் நம் விழிகளை விரியச் செய்த இரட்டையர்கள் சங்கர்- கணேஷின் மகத்தான பங்கை மறப்பதற்கே இல்லை. பின்னணி இசையும் பின்னியதுதான்.

http://tamilthiraipaadal.com/files/1972/Aval/Aval.jpg

இப்படத்தின் மூலம்தான் தமிழில் ஸ்ரீகாந்த் கற்பழிப்பு வில்லன் என்ற பொன்னான பட்டத்தை அடைந்து, அந்தப் படத்திலிருந்து தான் நடித்த பெரும்பாலான படங்களிலும் நடிகைகளின் சேலை, ஜாக்கெட் கிழித்து, துகிலுரிந்து அந்தப் பட்டத்திற்கு 'வானளாவிய அதிகாரம்' தனக்கே என்று முதலிடத்தில் தக்க வைத்துக் கொண்டார்.

இவர் செய்த இந்த துச்சாதனன் வேலைக்கு எத்தனை கிருஷ்ண பரமாத்மாக்கள் வந்தாலும் அத்தனை துரௌபதிகளுக்கும் சேலைகளை வழங்கி மானம் காத்திருக்க முடியாது. ஓடியே போய் இருப்பார்கள்.

பரிதாபத்துக்குரிய நாயகியாக குடிக்கு கணவனாலேயே அடிமையாகி, பின் நயவஞ்சக நண்பக் கயவனிடம் கற்பை பறிகொடுக்கும், முற்றிலும் புதுமையான, துணிச்சலான பாத்திரத்தில் நிர்மலா கவர்ச்சியிலும், கற்பழிப்புக் காட்சியிலும், பிளாக் பிகினியிலும் நடித்து, அனைவரையும் வாய்பிளக்க வைத்து அன்றைய இளம் ரத்தங்களை சூடாக்கி அனைவரது தூக்கத்தையும் கெடுத்து வைத்தார்.

கவர்ச்சியும், ஆபாசமும் பேசப்பட்ட அளவிற்கு படத்தின் தரம் பேசப்படவில்லை. நிஜமாகவே நல்ல படம். கதைக்குத் தேவையான காட்சிகள் சரியாகவே இருந்தன. காமக் கண்களோடு 'அவள்' பார்க்கப்பட்டதால் நல்ல கதை கண்காணிக்கப்படவில்லை.

சரி! அதையெல்லாம் விட்டு விடுவோம். பாடலுக்கு வருவோம். அதற்கு முன் இப்படத்தின் முக்கியமான பாடல்கள் என்ன என்று ஒருமுறை பார்த்து விடலாம்.

1.'Boys and Girls....வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்' என்று டி எம்.எஸ். தன் வாய்ஸை இளசுகளுக்காக மூக்கடைத்து மென்மையாக்கி பாடும் பின்னணிப் பாடல். கோஷ்டிகளின் 'ரிப்ப ரப்ப ரிப்ப ரப்ப' என்ற சங்கர்-கணேஷின் தனி முத்திரை உண்டு. (ஏழெட்டுப் பெண்கள் எந்தன் பக்கம் போல)

ஆதிராம் சாருக்கும், எனக்கும் மிகவும் பிடித்த சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்ட பாடல். வண்ணத்தில் வடிவழகாய் காட்சி அளிக்கும். எத்தனயோ அணைக்கட்டுக்கள் இருந்தாலும் சாத்தனூர் தனிதான். சின்னாவுக்குப் பிடித்த ஸ்லோமோஷன் காட்சிகள் அதே நிர்மலா அசைவுகளில் உண்டு.

http://i.ytimg.com/vi/E2AGeIhb4NA/mqdefault.jpg

2. மதுவெடுத்து, சசிகுமாரின் மலரடி நனைத்து,'பொறுத்திரு பழகி வரும் வரைக்கும்' என்று வேண்டுகோள் விடுத்து, பரிதாபமாய், சுசீலாவின் ஈடுயிணையில்லாக் குரல் ஜாலங்களில் நிர்மலா பாடும் 'அடிமை நான் ஆணையிடு' பாடலைப் பற்றி எழுத எனக்குப் பக்கங்கள் போதாது. இது பற்றி விரிவாக தனியாக எழுதுகிறேன். சுசீலாவின் 'டாப் டென்'னில் இது நிச்சயம் உண்டு எனக்கான வரிசையில். சங்கர் கணேஷின் 'டாப் ஒன்' என்று சொன்னால் மிகையில்லை.

(ராட்சஸிக்கு இதே பாணியில் 'எல்லோரும் பார்க்க... என் உல்லாச வாழ்கை' அவளுக்கென்று ஒர் மனப் பாடல் எனக்கென்று மட்டும் உருவானது)

3. இப்போது தொடரில் ஜொலிக்கப் போகும் பாடல்.

'கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல'

அடடா! இந்த வரிகளை டைப் பண்ணும் போது கைகள் கூட இனிக்கின்றதே! அப்போ மனம் எவ்வளவு குதூகலம் அடையும் என்று நினைத்துப் பாருங்கள். இதை ஒரு பாடலாகவே நான் பார்ப்பதில்லை. கேட்பதில்லை. இந்தப் பாடல் டெண்டுல்கர் கிரிக்கெட் சிறுவர்களுக்கு வழங்கும் 'சீக்ரெட் ஆப் எனர்ஜி' பூஸ்ட் போல. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி போல.

சோர்ந்து கிடக்கும் கிழவன் கூட இப்பாடலைக் கேட்டால் உடல் முறுக்கி எழுந்துவிடுவான் உற்சாகம் தாளாமல். நித்ய ஜீவ இளமை வாய்ந்த சாகா வரம் பெற்ற பாடல். இதயத் தமனிகளில் இன்ப இசைஆணி கொண்டு நானே எனக்குள் செதுக்கிக் கொண்ட சிற்பம் இந்தப் பாடல். நீர், நெருப்பு, மற்றும் எவற்றாலும் அழியாதது கல்வி என்பார்கள். அது போல எக்காலத்திலும் எவற்றாலும் அழியாத, அழிக்க முடியாத, அளவில்லா உற்சாகத்தைத் தரும் உன்னதப் பாடல். ஜீவகாந்தப் பாடல்.

பாலாவும், சுசீலாவும் சேர்ந்தால் கேட்கணுமா?....அதுவும் உல்லாசம் புரண்டு ஓடும் உற்சாகப் பாடல் என்றால் பாலா சிறகடித்துப் பறப்பார் என்றால், சுசீலா அந்த சிறகோடு நம்மையும் அணைத்துக் கொண்டு சேர்ந்து பறப்பாரே!

'அடிமை நான் ஆணையிடு' என்று அவரால் நம்மை அழ வைக்கவும் முடியும்...

'உனக்காகப் பிறந்தேனே.... உயிரோடு கலந்தேனே.... வா' என்று நம்மைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களை சந்தோஷ வசியம் செய்யவும் முடியும்.

உலகில் எந்த ஜீவனுக்கும், எந்த ஜீவராசிக்கும் இல்லாத சுகக்குரல். குயில்கள் பாடம் எடுத்துக் கொள்ளவேண்டிய ஒரே குரல்... ஒரே ஒரு குரல்... இந்த கலைத் தெய்வத்துக்குத்தான் என்று ஓங்கி நம்மால் குரல் கொடுக்க முடியும்.

பாலா பரவசத்தின் உச்சங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வார்.

இரட்டையர்களோ டபுள் உற்சாகத்தோடு இரண்டு படுத்துவார்கள்.

பாடலின் துவக்க இசையினூடே சசிகுமார் நிர்மலைப் பார்த்து 'கீதா... கீதா' என்று அழைத்தவாறே பாடல் துவங்கும். வாளிப்பான அந்த அழகுப் பெண் சிலையைப் பற்றியவாறு அணைக்கட்டின் அற்புத பார்க்கில் சசி பாலா குரலில் 'கீதா' என்று ஒருமுறை அழைக்க, அது இரண்டு முறை 'எக்கோ' ஆக திரும்ப ஒலிக்க, பாலாவின் வெண்கலக் குரல் கேட்டு கூனன் கூட நிமிருவான்.

http://i.ytimg.com/vi/6DE36xVE9dw/mqdefault.jpg

நீரூற்றுகளுக்கு மத்தியில் மகிழ்வாய் ஓடும் நிர்மலா மங்கை நிஜமாகவே மகிழ்ச்சி தரும் கங்கை போன்ற குளிர்ச்சிதான். புளூ கலர் பேண்டில் செருகிய எல்லோ கலர் ஷர்ட்டில் நடிகர் திலகத்தின் ஆஸ்தான பக்தனான இராணுவவீரர் 'தேசியத் திலகம்' சசிகுமார் 'உலக நடிப்பு குரு'வின் பாணியைப் பின்பற்றி மகிழ்வூட்டுவார். நடை உடை பாவனைகள் நடிகர் திலகத்தின் வழியே இருக்கும். அதனால் நன்றாகவே இருக்கும்.

'கீதா ஒரு நாள் பழகும் உறவல்ல' என்று பாலா முதலடி எடுத்து நம் நெஞ்சை இன்பமாகத் துளைத்தவுடன் சங்கர் கணேஷ் தரும் அந்த ரயிலோசை போன்ற (கூக்குகுங்... கூக்குகுங்) இசை அப்படியே நம் மேல் இன்ப, பரவச முத்துக்களைக் கொட்டும். இந்த முதல் வரிக்கே படத்துக்கு நாம் கொடுத்த காசு செரித்து விடும்.

'காதல் நீரில் தோன்றும் நிழலல்ல'

வரிகளில் ஆரம்பத்திலேயே பாலா உச்சங்களைத் தொட்டுவிடுவார். 'நிழலல்ல' என்பதின் முடிவெழுத்தை அவர் 'ல'............அஹஹ' என்று இழுத்து முடிக்கையில் முழு இன்பமும் நமக்குக் கிடைத்துவிடும்.

அடுத்து மீண்டும் பல்லவிக்கு வந்து 'கீ............தா' என்று 'கீ' வுக்கும், 'தா'வுக்கும் இடையில் இழுத்து ஒரு கேப் கொடுப்பார். ஆஹா! ஆஹா! செத்தான் அவனவனும்.

'வெண்ணிற ஆடை' அவர் பட்டத்து உடையிலேயே வெட்கப்பட்டு இந்தப் பக்கம் குட்டி நீர்த்தேக்கத்தின் வளைவு மேடு விளிம்பில் வேக நடை நடந்து வர, அவருக்குப் பேரலல்லாக சசியும் அந்தப் பக்கம் பாடியபடி நடந்துவர,

செம டக்கர்.

அதே போல 'கா...தலி'ல் 'கா' வுக்கு பின் சற்று இடைவெளிவிட்டு 'தல்' என்று பாடுவதும் ஜோர்.

இப்போ சும்மா இருப்பாரா சுசீலா?

'இருய்யா...தோ வர்றேன்' என்று பாலாவைப் பழி தீர்க்கப் புறப்படுவார்.

'ஊடலில் கொஞ்சம்

(லல்லல் லல்லல் லாலலா)

போய்வர எண்ணும்'

(லல்லல் லல்லல் லாலலா)

என்று சுசீலா சுவையளிக்க, சுசீலாவின் ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமாக பாலா,

'லல்லல் லல்லல் லால்லலா

என்று ஊடாலே புகுந்து புறப்படும் போது சோறு தண்ணி வேணாம் நமக்கு.

இதுவல்லாமல் பாலாவும் சுசீலாவும் மாறி மாறிப் பின்னுகையில் அவர்கள் குரல்களுக்குப் பின்னால் சங்கர் கணேஷ் நிகழ்த்தும் இசை ஜாலங்களைப் பற்றி சொல்லி மாளாது. அதுபாட்டுக்கு பாட்டுக்குத் தக்கவாறு விறுவிறுவென்று இணையாக வந்து சுகத்தை மேலும் பெருக்கிக் கொண்டிருக்கும். பாடலின் தரத்தையும் மேம்படுத்திக் கொண்டிருக்கும்.

'நிழலல்ல' என்று பாலா நிறுத்தியவுடன் இரட்டையர்கள் தரும் அந்த கிடாரின் சின்ன பிட் இரண்டு தரம் சுருக்க வருமே (டிங்.. டிங்) அது பாடலுக்கு செம மேட்ச்.

பிறகு வரும்

பூவையின் உள்ளம்...

(ஆ........ஆ)

புதுமலர் வண்ணம்

(ஓ ........ஓ)
என்று பாலா பாடும் போது இடையில் சுசீலா வந்து 'ஆ........ஆ' என்று ஹம்மிங் தந்து, முன்னால் குறுக்கிட்ட பாலாவை பக்காவாகப் பழி வாங்குவார்.

இருவரும் மாற்றி மாற்றி பழி தீர்த்துக் கொள்ள நமக்கு கோலாகலக் கொண்டாட்டம். பின்னால் சங்கர் கணேஷ் இவர்கள் வேறு இசையால் பாடும் இருவரையும் பழி தீர்த்துக் கொண்டிருப்பார்கள்.

(ஓ ........ஓ) பா(போ)டும் போது நிர்மலா காற்றில் அழகாக கைகளால் ஒரு 'S' கோலம் போடுவார்.

'உனக்காகப் பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே.... வா'

என்ற உயிர்ப்பான சுசீலாவின் குரலுக்கு உடம்புகளுக்கு முழுக்க அதிர்வு தந்து நிர்மலா அதிர வைப்பார் நம்மை.

இப்போது இடையிசை கிடாரின் கைங்கரியத்தில் இனிமையோ இனிமையோ என்று இனிக்கத் தொடங்கும். வயலின்களின் ஆதிக்கத்தோடு சேர்ந்து புல்லாங்குழல் ஒலிக்க, அதோடு இழையும் டிரெம்ப்பெட்டின் ஒலி மகுடிக்கு மயங்கிய நாகமாய் நம்மை சொக்க வைக்கும். பல்வேறு வாத்தியங்களின் ஒத்துழைப்பில் இடையிசை ராக்கெட் வேகத்தில் பயணிக்கும். துள்ளல், உற்சாகம் கரை கடந்து புரளும்.

சரணத்தில் பாலா

'நான் தொடும் வேளையில் மெல்ல' என்று சொல்ல,

அதற்கு சுசீலாம்மா

'துள்ள'' என்ற ஒரே வார்த்தையில் துவள,

பின் தொடர்ந்து,

'நால்வகை குணங்களும் செல்ல' என்று அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு அத்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாக பறி கொடுப்பதை நாசூக்காக நாயகனுக்கு நாயகி எடுத்துரைக்க,

நாயகன் நிர்மலாவை அப்படியே

'அள்ள'

பின் எடுக்கும் பாருங்கள் பாடலின் வேகம்...

'சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டுக் கொஞ்சவோ' என்று பாலா படுஸ்பீடாக எடுக்க,

பதிலுக்கு இசை அம்மா அதே வேகத்துடன்

'மோதுகின்ற காதல் வெள்ளம் போதுமென்று கெஞ்சுமோ'

என்று எசப்பாட்டு பாட,

பதிலுக்கு பாலா,

'இன்னுமென்ன சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ'

என்று காதலால் கடிய,

'கன்னம் என்ன மன்னன் வந்து தேனருந்தும் கிண்ணமோ?'

என்று செல்லக் கோபம் காட்டி, ஒரே ஒரு வினாடி கூடத் தாமதியாமல்:clap:

'நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா'

என்று நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பார் சுசீலா நிர்மலாவின் நடிப்போடு சேர்த்து.

https://i.ytimg.com/vi/DZNlHeWBHHQ/hqdefault.jpg

('இன்னுமென்ற சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ' என்று சசி கேட்டவுடன் நிர்மலா 'ஆமா' என்பது போல ஒரு சின்னத் தலையாட்டல் செய்வார். அற்புதமாக இருக்கும்)

'நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா'

என்று சுசீலா முடித்தவுடன் பின்னால் வரும் அந்த 'டொட் டொட் டொட் டொட டொட டொட் ' தொடர் டிரம்ஸ் ஒலி எவரும் எதிர்பாரா கல்கண்டு.

பெரிய வெண்சங்குகளின் மேல் சசி அமர்ந்திருக்க, பின்னாலிருந்து ஓடி வந்து நிர்மலா பின்பக்கம் அவரைக் கட்டி அணைப்பார். பின்னால் தெரியும் அந்த வெண்ணிற, ஆதிராம் சாருக்குப் பிடித்த பெரிய சந்திரபிறையும் மறக்கக் கூடியதா என்ன?

பின் இடையிசை பிரம்மாண்டம். வயலின், குழல் அற்புதங்கள் வேகமாக

கால் முதல் தலைவரை தழுவ

நழுவ

கொடியிடை பொடிநடை பழக

உருக

என்று பாலாவும், சுசீலாவும் மாறி மாறி குரலால் நம்மை உருக்க,

இரண்டாம் முறை இவ்வரிகள் மீண்டும் ஒலிக்கையில்

'கால் முதல் தலைவரை தழுவ' என்பதில் 'தழுவ' வை பாலா அப்படியே தழுவிக் கொஞ்சி விடுவார். அவர் ஒருவரால் மட்டுமே வார்த்தைகளை இவ்வளவு குழைவுடன் தழுவ முடியும்.

பதிலுக்கு 'நழுவ' என்பதில் சுசீலா நழு 'வ' என்று 'வ' வுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து அசத்தி விடுவார்.

'ஒட்டிக் கொண்டு ஒன்றிரண்டு கட்டுக் கதை சொல்லவோ'

என்ற நாயகனின் பேராசையை பாலா அற்புதமாக வெளிக்கொணர்வார்.

சுசீலாவோ

'இன்று அல்ல.. நாளை என்று எட்டி எட்டிச் செல்லவோ' என்று பொய்யான 'பிகு'க் குரல் தருவார்.

'தென்னஞ்சோலை தன்னைவிட்டு தென்றல் என்ன ஓடுமோ?' என்று பாலா கேள்வி கேட்க,

'கன்னிப் பெண்ணே தானே வந்து பின்னிக் கொண்டு ஆடுமோ'

என்று சுசீலா பெண்மையின் உண்மைத் தன்மையை பாந்தமாய் வெளிப்படுத்தி , உடன் தொடர்ந்து

'மணமாலை தர வேண்டும்
மறுநாளில் பெற வேண்டும் வா'

என்று அவனுக்கு வழியும் காட்டி, கல்யாணம் முதலில் முடி... அப்புறம் எல்லாவற்றையும் முடி' என்ற முடிவான பதில் தந்து இரண்டாம் சரணத்தை இனிதே முடிக்க,

மீண்டும் பல்லவி வரிகள் 'கீதா' என்று.

பல்லவி வரிகளின் பின்னே 'சிக் சிக் சிக் சிக் சிகு சிகு' என்ற சிருங்கார இசை சில்ரிக்க வைக்கும்.

என்ன பாடல்! என்ன இசை! நடிகர்களும் குறை வைக்கவில்லை. ஒளிப்பதிவு....இயற்கை எழில் சார்ந்த கூலான படப்பிடிப்பு..... பின்னிப் பெடல் எடுக்கும் சுசீலா அம்மா....ஈடு கொடுக்கும் தொடர் நாயகர் பாலா.

ஆழ்கடலில் தேடித் தேடி எடுத்தாலும் இத்தகைய இசை முத்து கிடைப்பது அரிதுதான். பாலா வெண்ணையை விழுங்கிக் கொண்டே இப்பாடலைப் பாடியிருப்பார் போலும். குரல் ஜாலங்கள், குழைவுகள் சொல்லி விடியாது.

முழுதும் படித்துவிட்டு மீண்டும் அனுபவியுங்கள். ஒருநாளைக்கு நான்கைந்து முறை நான் கேட்டு கேட்டு இன்புறுகின்ற பாடல். இந்தப் பாடலுக்கு நான் எழுதியிருக்கும் விதத்திலிருந்தே அதை நீங்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.


கீதா...
கீதா..
கீதா.

கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல

கீ...தா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல'

ஊடலில் கொஞ்சம்

(லல்லல் லல்லல் லாலலா)

போய்வர எண்ணும்

(லல்லல் லல்லல் லாலலா)

பூவையின் உள்ளம்...

(ஆ........ஆ)

புதுமலர் வண்ணம்

(ஓ ........ஓ)

உனக்காகப் பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே.... வா
கண்ணா! ஒரு நாள் பழகும் உறவல்ல

காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல


நான் தொடும் வேளையில் மெல்ல

துள்ள

நால்வகை குணங்களும் செல்ல

அள்ள

நான் தொடும் வேளையில் மெல்....ல

துள்ள

நால்வகை குணங்களும் செ.ல்ல

அள்ள

சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டுக் கொஞ்சவோ

மோதுகின்ற காதல் வெள்ளம் போதுமென்று கெஞ்சுமோ

இன்னுமென்ன சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ

கன்னம் என்ன மன்னன் வந்து தேனருந்தும் கிண்ணமோ
நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா
கண்ணா! ஒரு நாள் பழகும் உறவல்ல

காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல


கால் முதல் தலைவரை தழுவ

நழுவ

கொடியிடை பொடிநடை பழக

உருக

கால் முதல் தலைவரை தழு...வ

நழு...வ

கொடியிடை பொடிநடை பழக

உருக

ஒட்டிக் கொண்டு ஒன்றிரண்டு கட்டுக்கதை சொல்லவோ

இன்று அல்ல.. நாளை என்று எட்டி எட்டிச் செல்லவோ

தென்னஞ்சோலை தன்னைவிட்டு தென்றல் என்றும் ஓடுமோ

கன்னிப் பெண்ணே தானே வந்து பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தர வேண்டும்
மறுநாளில் பெற வேண்டும் வா
கண்ணா! ஒரு நாள் பழகும் உறவல்ல

கா...தல்.... நீரில் தோன்றும் நிழலல்ல


https://youtu.be/iT81ww76kWE

chinnakkannan
11th May 2016, 12:45 PM
//சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டுக் கொஞ்சவோ' எண்டு பாலா படுஸ்பீடாக எடுக்க,

பதிலுக்கு இசை அம்மா அதே வேகத்துடன்

'மோதுகின்ற காதல் வெள்ளம் போதுமென்று கெஞ்சுமோ'

என்று எசப்பாட்டு பாட,

பதிலுக்கு பாலா,

'இன்னுமென்ன சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ'

என்று காதலால் கடிய,

'கன்னம் என்ன மன்னன் வந்து தேனருந்தும் கிண்ணமோ?'

என்று செல்லக் கோபம் காட்டி, ஒரே ஒரு வினாடி கூடத் தாமதியாமல்

'நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா'

என்று நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பார் சுசீலா நிர்மலாவின் நடிப்போடு சேர்த்து. //

தி.ஜானகிராமன் எழுத்துக்கள் வாசித்திருக்கிறீர்களா வாசு.. சிறுகதைகள் ஒரு கேடகரி என்றால் நாவல்களும் ஒரு கேடகரி..ஆனால் அவை படிக்கும் போது நீரோட்டம் பாய்ந்த நதிக்கரையில் மெல்லிய காற்று வந்து குட்டிகுட்டி அலைகளைத் தள்ளிவிட அந்தக் காற்று மேனியில் படும் போது ஒருவித சிலிர்ப்பும் சுகானுபவ்மும் கொடுக்குமே..அதுபோல இருக்கும்.

அதே ஃபீலிங்க் தான் வாசு, உங்களது இந்தப் பதிவை படிக்கும் போது ஏற்படுகிறது..தி.ஜா காலத்தில் எல்லாம் லெஷராக அனுபவித்து எழுதியிருக்கும் எழுத்துக்கள் நமக்கே புலப்படும்..அதுபோலவே இந்த ப் பாடலையும் அனுபவித்துஎழுதியிருக்கிறீர்கள் (முழுக்கப் படித்தேன் ஓய்). மிக்க நன்றிங்காணும்..

அவள் நான்பார்க்காத படம். நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும் பாடல்கள் கேட்டிருந்தாலும்.. இன்ஃபேக்ட் நேற்று மமகா 1 ல் நீங்களும் மிஸ்டர் கார்த்திக்கும் இதுபற்றிப் பேசியதைப் படித்துக் கொண்டிருந்தேன்..எஸ்பெஷலி அடிமை நான் ஆணையிடு..

வீட் போய் பாட் கேட்கப் போகிறேன் என்று நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை.. நீங்கள் தான் எழுத்திலேயே பாடி விட்டீர்களே.. மிக்க தாங்க்ஸ் ஒன்ஸ் அகெய்ன்..

adiram
11th May 2016, 07:20 PM
டியர் வாசு சார்,

'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' சும்மா பிரித்து மேய்ந்து விட்டீர்கள். வெறுமனே லைக் மட்டும் போட்டு விட்டுப்போக மனம் வரவில்லை. நாலு வரிகளாவது எழுதினால் மட்டுமே என் மனதுக்கு நிம்மதி. அந்த அளவுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.

இளமை பொங்கி வழியும் அந்தப் பாடல் உங்கள் வர்ணனையில் மேலும் பொலிவுற்று விளங்குகிறது. பாலா - சுசீலா பங்களிப்பை பாராட்டும் அதே வேளையில் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷின் இசை பிரளயத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறீர்கள். ('தெய்வத்தின் கோயில் தெய்வம்தான் இல்லையே' பாடலில் ராமமூர்த்தியை மறந்தது போல இவர்களை மறந்து விடவில்லை. மறக்கவும் முடியாத பங்களிப்பு, உழைப்பு இவர்களுடையது). சங்கர் - கணேஷ் இசை திறமையை யார் எப்போது புகழ்ந்தாலும் எனக்கு பிடிக்கும்.

சாத்தனூர் அணைக்கட்டில் எடுக்கப்பட்ட Boys & Girls பாடலில் ஸ்லோ மோஷன் ஷாட்டுகள் ரசிகர்களை கவர்ந்தது. (வசந்த மாளிகைக்கு சற்று முன் 'அவள்' வந்து விட்டாள்). இப்படத்தின் பாடல்கள், குறிப்பாக 'கீதா ஒரு நாள் பழகும்' பாடல் தற்போது முரசு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. தொகுப்பாளருக்கு நன்றிகள். (காணக்கிடைக்காமல் இருந்த ஜெமினியின் 'சங்கமம்', 'சாந்தி நிலையம்' பாடல்களை சக்கை பிழிந்து விட்டார்கள்).

'கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல' பாடல் எப்போது பார்த்தாலும், கேட்டாலும் மனதுக்கு இதமான சுகம் பரவும். அந்த அளவுக்கு பாலாவும் சுசீலாவும் கொஞ்சுவார்கள். நாயகி 'வெண்ணிற ஆடையில்' அம்சமாக இருப்பார். அந்த களங்கமில்லா சிரிப்புக்கு எத்தனை கோடியும் (பதுக்கி வைத்து) கொடுக்கலாம். எந்த ஆணையமும் தலையிட முடியாது.

தொடர்ந்து அசத்துங்கள். வாழ்த்துக்கள்.

Richardsof
11th May 2016, 08:18 PM
RARE VIDEO -1966
ANNA - MGR- SIVAJI - SAROJADEVI - JAYALALITHA



https://youtu.be/7met-Mvtk14
COURTESY - PRADEEP BALU SIR

madhu
12th May 2016, 04:53 AM
'நிழலல்ல' என்று பாலா நிறுத்தியவுடன் இரட்டையர்கள் தரும் அந்த கிடாரின் சின்ன பிட் இரண்டு தரம் சுருக்க வருமே (டிங்.. டிங்) அது பாடலுக்கு செம மேட்ச்.

இந்த வரி ஒன்றே போதும் எந்த அளவுக்கு பாடல் ரசிக்கப்பட்டு விளக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு..

வாசுஜி.. உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !!

Gopal.s
12th May 2016, 08:52 AM
வாசு,

அலுப்பு சலிப்பே இல்லாத உன் விஸ்தார வர்ணனைகளுக்கு நான் என்றுமே ரசிகன். ஜாக்கெட் கழண்ட ராதா சலுஜா,வெண்ணிற ஆடை நிர்மலாவை பார்த்துத்தான் நான் போனேன். 13/14 வயதில்
165 செ .மீ உயரம்,அரும்பு மீசை வந்ததால் (ஒன்பது வயதில் map drawing) கொட்டகைக்கு ஐ ப்ரோ பென்சில் அவசியமில்லை.

ஆனால் அதையும் மீறிய விஷயங்கள் கொண்டது அவள். ரசிக்க கூடிய படம். அடிமை நான் ஆணையிடு, கீதா போன்ற பாடல்கள் எம்.எஸ்.வீ சிஷ்யர்கள் என்று இனம் காட்டும். ரொம்ப ரசித்தேன்.

Gopal.s
12th May 2016, 08:55 AM
esvee,

Amazing exhibits and video. Mu.ka also is there. Very Enjoyable. We appreciate your sincerity and Hardwork and pain staking effort to entertain us.Thanks Sir.:-D

Richardsof
12th May 2016, 09:01 AM
1974

http://i63.tinypic.com/2yoqp8x.jpg