PDA

View Full Version : சவரக்கத்தி - வில்லனாக இயக்குநர் மிஷ்கின்



balaajee
16th July 2015, 01:45 PM
இயக்குநர் ராம் நாயகன், இயக்குநர் மிஷ்கின் வில்லன், தொடங்கும்போதே பரபரப்பை ஏற்படுத்தும் சவரக்கத்தி

இயக்குநர் ராம் மற்றும் மிஷ்கின் கலவையில் உருவாகிவரும் படத்தின் பெயர் சவரக்கத்தி. மிஷ்கினின் உதவி இயக்குநரான ஆதித்யா இயக்கும் இப்படத்திற்கு மிஷ்கின் கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

http://img.vikatan.com/cinema/2015/07/16/images/savarakatthi.jpg
இயக்குநர் ராம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூர்ணா நாயகியாக நடிக்கிறார். மிஷ்கின் தன் உதவியாளருக்காகவே இக்கதையை எழுதி இயக்கவைத்திருக்கிறார். மேலும் இப்படத்தை மிஷ்கினின் லோன் உல்ஃப் ப்ரோடெக்*ஷன் நிறுவனமே தயாரிக்கிறது.

இப்படத்தை பற்றி மிஷ்கின் கூறியதாவது “நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் குழந்தையை மீண்டும் பெற்றெடுப்போம், அதற்கான கதைத்தளமே சவரக்கத்தி” என்றார். PC ஸ்ரீராமின் உதவியாளரான கார்த்திக் ஒளிப்பதிவில், பிசாசு இசையமைப்பாளர் அரோ குரோலியின் இசையில் படம் உருவாகிவருகிறது.

ராம் மற்றும் மிஷ்கின் ஆகிய இருவருமே தங்களுக்கென்று தனித்தன்மை கொண்டவர்கள், இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் செய்தியால் இந்தப்படம் திரையுலகினரால் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

balaajee
16th July 2015, 01:47 PM
POSTER

http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=4256&d=1436979216&thumb=1 (http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=4256&d=1436979216)

balaajee
16th July 2015, 01:53 PM
சவரக்கத்தி பூஜை!
http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111773.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111773) http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111774.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111774)[/URL] http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111784.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111783) http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111788.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111787) http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111791.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111791) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111792) http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111806.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111805)[URL="http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111808"] http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111808.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111807) http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111809.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111809) http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111810.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111810) http://img.vikatan.com/album/2015/07/yzyyjh/thumb/111811.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111811) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4488&p_id=111812)

balaajee
17th July 2015, 02:26 PM
மிஷ்கின் பட தொடக்க விழாவுக்கு இடம் கொடுத்த நடிகர்

இயக்குநர் மிஷ்கினின் லோன்உல்ப் நிறுவனம் தயாரிப்பில் அவரிடம் உதவியாளராக இருந்த ஆதித்யன் இயக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் படம் சவரக்கத்தி. இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ராமும் நாயகியாக பூர்ணாவும் நடிக்கிறார்கள். படத்தைத் தயாரிப்பதோடு படத்தின் கதையை எழுதி வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார் மிஷ்கின்.

இந்தப்படத்தின் தொடக்கவிழா நடிகர் செல்வாவின் வீட்டில் நடந்திருக்கிறது. மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் முக்கியவேடத்தில் நடித்திருந்தார் செல்வா. அதற்காக மிஷ்கின் தயாரிக்கும் படத்தின் தொடக்கவிழாவைத் தன் வீட்டில் நடத்தியிருக்கிறார். பொது இடத்தில் நிகழ்ச்சியை நடத்தாமல் வீட்டிலேயே நடத்த என்ன காரணம்?

அதே நாள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி அஞ்சலி நடந்தது. அதையொட்டி தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் அன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் முன்னரே நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருந்த மிஷ்கின், பொது இடங்களில் வைக்க வேண்டாம் என்றும் அதனால் தான் செல்வா வீட்டிலேயே நிகழ்ச்சியை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
முகமூடி படத்தில் நடிக்க வைத்து, செல்வா நன்கு பேசப்பட்டதால் அதற்கு காரணமான மிஷ்கினுக்கு நன்றிக்கடன் செய்யும் விதமாக தன் வீட்டிலேயே தொடக்க விழாவை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.