View Full Version : காக்கா முட்டை - தமிழ் சினிமா இட்ட தங்க முட
joe
14th June 2015, 09:32 PM
காக்கா முட்டை - தமிழ் சினிமா இட்ட தங்கமுட்டை !
விருது படமென்றால் அழுது வடிய வேண்டியிருக்குமோ என மாசு , தூசு வகையறாக்களுக்கு முண்டியடிப்போருக்கு .. போலி சோகம் , உணர்ச்சி சுரண்டல் இல்லாத உண்மையான மாஸ் படம் காக்கா முட்டை .
சின்ன காக்கா முட்டை .. நடிகண்டா .. நீ நடிகண்டா !!
This movie deserves a thread.
One of the best movies I have seen and definitely proud moment for Tamil cinema
joe
15th June 2015, 01:04 PM
காக்கா முட்டை மீது ஏதாவது தீண்டாமை இருக்குதா என்ன?
அல்லது காக்கா முட்டை இங்கு எனக்கு மட்டும் தான் அற்புதமான படமா தோன்றுதா?
Cinemarasigan
15th June 2015, 01:53 PM
நம்ம hub-ல உங்களைத்தவிர யாரும் இன்னும் பாக்கல போல.. உங்கள் பதிவை பார்த்ததற்குப் பிறகு தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தோணுது..
joe
15th June 2015, 02:17 PM
நம்ம hub-ல உங்களைத்தவிர யாரும் இன்னும் பாக்கல போல.. உங்கள் பதிவை பார்த்ததற்குப் பிறகு தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தோணுது..
சினிமா ரசிகன் அதுவும் தமிழ் சினிமா ரசிகன் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.. நான் உத்தரவாதம் ..கண்டிப்பா பாருங்க.
PARAMASHIVAN
15th June 2015, 04:21 PM
Heard lots of good reviews, yet to watch it as "Original DVD " is not yet available over here ...
NOV
15th June 2015, 08:32 PM
Joe, I watched the movie 10 days ago and posted this:
Kaakkaa Muttai - what a well-made film!
I am personally proud of parallel cinema in Tamil!
Thoroughly enjoyable and highly recommended - DON'T miss it!
Many Hubbers have already watched it and gave it positive reviews.
neenga thaan late. :p
cinema
15th June 2015, 10:05 PM
Vikatan Review
தமிழ் சினிமாவின் 'பொன் முட்டை’ இந்தக் 'காக்கா முட்டை’. உலகத்துக்கான தமிழ் சினிமா இது!
சென்னை மாநகரத்தின் 'சிங்காரச் சென்னை’ அந்தஸ்துக்காக, நகர வாழ்வில் இருந்து ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, விளிம்பைத் தாண்டியும் துரத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை மனம் நிறையக் கரிசனத்துடன் அணுகி, தமிழ் சினிமாவின் பெருமிதப் படைப்பாக மிளிர்கிறது 'காக்கா முட்டை’. இயக்குநர் மணிகண்டனுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறான் விகடன்!
'ஒரு பீட்சா சாப்பிட வேண்டும்’ என ஆசைப்படும் குப்பத்துச் சகோதரர்கள் இருவரும், அந்த ஆசைக்கு அடுக்கடுக்காக வரும் முட்டுக்கட்டைகளும்தான் இந்த 'முட்டை’க் கதை. சுவாரஸ்யம் என்ற பெயரில் வழக்கமான வணிகச் சமாசாரங்களைத் திணிக்காமல், கதை ஓட்டத்திலேயே அத்தனை சுவாரஸ்யங்களையும் அள்ளித் தந்திருப்பது அசல் வெற்றி.
கோழி முட்டை வாங்கக்கூட 'வசதி’ இல்லாத குப்பத்துச் சகோதரர்கள் விக்னேஷ் (பெரிய காக்கா முட்டை), ரமேஷ் (சின்ன காக்கா முட்டை) இருவரும் காக்கா முட்டையைக் குடித்து உடலுக்குப் புரதம் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அந்தச் சொற்பப் புரதச்சத்தையும் சிறுவர்களிடம் இருந்து பறித்துக்கொள்கிறது புதிதாகக் கட்டப்பட்ட ஒரு பீட்சா கடை. கடையின் திறப்பு விழாவில் நடிகர் சிம்பு பீட்சா சாப்பிடுவது, சுண்டி இழுக்கும் விளம்பரங்கள்... என சிறுவர்களுக்கு பீட்சா மீது பைத்தியமே பிடிக்கிறது. ஒரு கிலோ மூன்று ரூபாய் எனக் கரி அள்ளிச் சம்பாதிக்கும் சிறுவர்களால், 300 ரூபாய் சம்பாதிக்க முடிந்ததா, அப்படிச் சம்பாதித்தாலும் பீட்சா சாப்பிட முடிந்ததா... எனத் தடதடப்பும் படபடப்புமாகக் கடக்கிறது படம்!
'குப்பத்துச் சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டால் என்ன நடக்கும்?’ என்ற ஒற்றைக் கேள்வியில் தொடங்கும் சினிமா, நுகர்வுக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் உலகமயமாக்கல், எளிமையும் அழகும் நிறைந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கை, நகரத்து மனிதர்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத... அவர்கள் அறிந்தேயிராத விளிம்புநிலை மக்களின் வாழ்வு... எனப் பல விஷயங்களை, போகிறபோக்கில் போட்டுத் தாக்குகிறது.
இதே சைதாப்பேட்டை பாலத்தை நாம் எத்தனை முறை கடந்திருப்போம்? பாலத்துக்கு அந்தப் பக்கம் வசிக்கும் இந்த மனிதர்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அநாவசியத்தை அத்தியாவசியமாக 'மாற்றும்’ விளம்பரங்கள், பொங்கித் தின்ன அரிசி இல்லாத வீட்டில் பொழுதுபோக்க இரண்டு 'விலையில்லா’ டி.வி பெட்டிகள், சினிமாவில் ஹீரோ எகிடுதகிடாகப் பேசுவதை வீட்டில் வயதுக்கு மீறிப் பிரதிபலிக்கும் சிறுவர்கள், 'ஃப்ளெக்ஸ் பேனர்’ அரசியல், 'கெட்டுப்போனாத்தான்டா நூல் நூலா வரும்’ என வெள்ளந்தியாக வெளிப்படும் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் உணவு அரசியல், 'பீட்சாதான் வேணும்... அப்பா எல்லாம் வேணாம்’ எனும் அளவுக்கு மகனை முறுக்கேற்றும் போலி நாகரிக அழுத்தங்கள், சென்னையின் காஸ்ட்லி ஸ்தலங்களுக்குள் தங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பூர்வகுடிகளின் தயக்கம், ஊடகங்களின் சென்சேஷன் பசி... என ஏராளமான விஷயங்கள், சின்னச் சின்னக் காட்சிகளாகவும் கலீர் சுளீர் உரையாடல்களாகவும் மனதில் ஆணி அடிக்கின்றன!
தூக்கத்தில் டவுசரை ஈரமாக்கும் ஓப்பனிங்குடன் அட்டகாசமாக அறிமுகமாகும் ரமேஷ§ம், 'அவன் சாப்பிட்ட பீட்சாவைக் கொடுப்பான்... அதை நீ வாங்கித் தின்னுவியா?’ என, தம்பியை அதட்டும் விக்னேஷ§ம் அதகளம்... அமர்க்களம்! பாட்டி சுடும் பீட்சாவைச் சாப்பிட்டு கடுப்படிப்பதும், 'தண்ணி வண்டி’யைத் தள்ளு வண்டியில் இழுத்து வந்ததற்குக் காசு கிடைத்ததும் கண்கள் விரிவதுமாக, படம் முழுக்கப் பசங்க ராஜ்ஜியம்.
துண்டுப் பிரசுரம் பார்த்து பீட்சா சுடும் அந்தப் பாட்டி சாந்திமணி... அழகு அப்பத்தா! மருமகளின் திட்டுக்களில் இருந்து பேரன்களைக் காபந்து பண்ணுவதும் 'ஹோம்மேடு பீட்சா’ முயற்சியில் கலகலப்பது என பாச-நேசமாக ஜொலிக்கிறார். சினிமா கேரியரில் ஐஸ்வர்யாவுக்கு இது அர்த்தமுள்ள அடையாளம். அழுக்கு மேக்கப், எப்போதும் சோகம்... என வளையவருபவர், மகன் படுக்கையை நனைப்பதை நிறுத்தும்போதும், 'ரொம்ப அடிச்சுட்டாங்களா?’ எனப் பதறும்போதும்... ரசனை உணர்வுகளைக் கடத்துகிறார். ரமேஷ் திலக், 'பழரசம்’ ஜோ மல்லூரி, கரியை எடைக்கு வாங்கும் அக்கா, 'முந்திரிக்கொட்டை’யாகச் சொதப்பும் கிருஷ்ணமூர்த்தி... என ஒவ்வொருவருமே கச்சிதமான காஸ்ட்டிங்.
பாட்டி குளிக்கும்போது கேரிபேக்கில் தண்ணீர் பிடித்து வருவது, 30 ரூபாய் திருட்டுக் கேபிளுக்கு நுகர்வோர் உரிமை மறுக்கப்படுவது என, குப்பத்துக் காட்சிகளில் அத்தனை இயல்பு. 'தமிழ் சினிமாவின் பிஞ்சிலேயே பழுத்த சிறுவர்களு’க்கு எதிர் துருவமாக படத்தின் கதை நாயகர்களான சிறுவர்கள் இருப்பது பெரும் நிம்மதி. 'அடிக்கக் கூடாதுனு பாலிசி வெச்சிருக்கேன்’ எனும் அம்மாவின் வளர்ப்பில் நேசமும் நேர்மையுமாக வளர்பவர்களை, சமூகம் எப்படியெல்லாம் கறைப்படுத்தக் காத்திருக்கிறது என்பது திரைக்கதையில் அழுத்தமாகப் பின்னப்பட்டிருக்கிறது.
'ஏன்... சிம்பு ரசம் சாதம் சாப்பிட மாட்டானா?’, 'கெட்டுப்போனாத்தான்டா நூல் நூலா வரும்’, 'சத்தியமா நம்மளை உள்ளே விட மாட்டாங்க’, 'இல்லாதவங்க இருக்கிற இடத்துல கடை போட்டு ஏன் உசுப்பேத்தணும்’ - நக்கலும் நையாண்டியுமாகக் கடக்கும் ஆனந்த் அண்ணாமலை, ஆனந்த் குமரேசன் கூட்டணியின் வசனங்கள், சிரிப்பு செருப்பு அடிகள்.
படத்தில், சிம்பு நடித்திருக்கிறார்... சிம்புவைக் கலாய்க்கிறார்கள்... 'நான்தான் லவ் பண்ணலைனு சொல்லிட்டேன்ல’ என ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் சிம்பு. ஹேய்... சூப்பரப்பு!
எது மாதிரியும் இல்லாத புது மாதிரி சினிமாவின் அந்த க்ளைமாக்ஸ், அத்தனை நெகிழ்ச்சி. எந்தச் செயற்கைப் பூச்சும் இல்லாமல் கண்களைக் கலங்கச்செய்யும் ஈர அத்தியாயம். ஏரியாவையே பதறவைத்த ஏக களேபரங்களுக்குப் பிறகு, பீட்சா குறித்து இரண்டு காக்கா முட்டைகளும் அடிக்கும் அந்த கமென்ட்... கலக்கல்!
இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பதில் எத்தனை வசதி என்பதை ஒவ்வோர் ஒளிச்சிதறலிலும் நிரூபித்திருக்கிறார் மணிகண்டன். இண்டு இடுக்கு, சந்துபொந்து, வீட்டுக்கூரை... எனச் சிறுவர்களோடு சிறுவர்களின் மனநிலையிலேயே பயணிக்கிறது படம். ஆக்ஷன் அவசரமோ, மாஸ் பன்ச் நவரசமோ இல்லாத 'ரியல் டைம்’ நிகழ்வுகள்தான் படம் முழுக்க. அதிலும் கச்சித டைமிங்கால் சீனுக்கு சீன் விறுவிறுக்கவைக்கிறது கிஷோரின் எடிட்டிங். மிஸ் யூ கிஷோர்! 'கறுப்பு கறுப்பு கறுப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து...’ பாடலில் மெல்லிசையுடன் மென்சோகம் படரவிடுகிறது ஜி.வி.பிரகாஷின் இசை. 'விட்டமின் ப’ போஷாக்கு இல்லாமல் முடங்கிக்கிடக்கும் இப்படியான 'முட்டை’களைப் பொறிக்கச்செய்ய, தயாரிப்பாளர்கள் தனுஷ§ம் வெற்றிமாறனும் முன்வந்ததற்கு வாழ்த்துகள்.
குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்குக் கதை சொன்ன, அதுவும் உலகமயமாக்கலின், உணவு அரசியலின், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன 'காக்கா முட்டை’... நம் சினிமா!
60/100
After Hey Ram 60 marks for a tamil movie. It has been more than 15 years since Tamil movie scored 60 in Ananda vikatan.
A.ANAND
16th June 2015, 02:14 PM
KAAKA MUTTAI CONTINUES ITS STRONG RUN AT THE BOX OFFICE
http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/kaaka-muttai-has-grossed-close-to-84-crores-after-10-days-in-tamil-nadu.html
srimal
16th June 2015, 09:53 PM
உண்மையில் தனுஷ் / வெற்றிமாறன் கூட்டனியை பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட சிறந்த படம் எடுத்தத்தோடு நில்லாமல் எல்லோரையும் பார்க்க வைத்ததற்கு...
ஒவ்வொரு காட்சியும் வசனமும் ரசிக்கும்படியும் சிந்திக்கும்படியும் எடுத்த directorக்கு வாழ்த்துக்கள்.... அடுத்த படம் என்னவோ ??
காக்கா முட்டைகளை மறக்க முடியாது... சிறந்த கதாபாத்திரங்கள் மற்றும் சிறந்த நடிகர்கள்.... I respect their innocence and values...
citycenter INOXல் படம் பார்த்துவிட்டு திரும்பும்போது சில காக்கா முட்டைகள்( I will withdraw that word if anyone finds it offensive ) அங்கு ஓடிவிளையாடுவதை கண்டு மகிழ்ந்தேன்... எப்போதும் பார்க்கும் காட்சிதான் என்றாலும் இன்று நிறைவாக இருந்தது...கொஞ்சம் கவலையாகவும் தான்...!!!
uruzalari
16th June 2015, 10:42 PM
ஒவ்வொரு காட்சியும் வசனமும் ரசிக்கும்படியும் சிந்திக்கும்படியும் எடுத்த directorக்கு வாழ்த்துக்கள்.... அடுத்த படம் என்னவோ ??
குற்றமும் தண்டனையும் - Almost completed I guess.
Some info regarding it from October 2014
http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/manikandan-will-do-kutramum-dhandanaiyum-next.html
Kaaka Muttai fame Manikandan is ready for his next even before his debut movie is hitting the screens. The director is all set to direct and also crank the camera for his second movie Kutramum Dhandanaiyum with Aal fame Vidharth set to play the lead.
The movie is believed to be an action thriller with no songs. The director quotes, "This movie of mine will be a complete contrast to Kaaka muttai. It will have no songs stopping the intended narration. It will be an uncompromising product in terms of treatment and handling of the core concept I have conceived.
GV Prakash Kumar will take care of the music department with Vidharth's brother Muthukumar Kaaliswaran under the banner Don films producing it. I'm planing to start the film by January of 2015 and release it at the earliest".
uruzalari
16th June 2015, 11:28 PM
Looks like the title is a little different or changed from the earlier one based on Manikandan's interview today. He has finished the film :)
http://www.hindustantimes.com/regional/kaaka-muttai-i-ve-been-judged-by-my-clothes-and-appearance-says-director/article1-1359219.aspx
What are your future projects?
I have finished my next movie titled Kuttramae Thandanai which means crime itself is punishment. It’s a thriller.
A.ANAND
17th June 2015, 12:55 PM
https://www.youtube.com/watch?v=VPre6KTyGas
bekas endra kurdis padathoda inspiration innu sila peru sollarangga..
A.ANAND
19th June 2015, 01:47 PM
https://www.youtube.com/watch?v=2rbDZ3Otnzw&feature=youtu.be
uruzalari
21st June 2015, 11:57 AM
Manikanadan about the origin and making of the film. Also about himself and how he became a director
https://www.youtube.com/watch?v=kPQj6tTl5Uc&feature=youtu.be
balaajee
3rd July 2015, 11:52 AM
My expectation grew high by positive reviews of hubbers, Media, Magazine ...but luckily movie fulfilled my expectation.
+
• movie was live
• Entire Cast & Crew
• Cinematography
• Direction(hard to believe as debutant Dir)
-
• nope
My respect for PRODUCER DHANUSH have raised SKYHIGH....Hats off....He is a true lover of CINEMA.
PARAMASHIVAN
3rd July 2015, 02:55 PM
The film is being screened in UK, but only one show , Ridiculous ..
balaajee
3rd July 2015, 03:01 PM
The film is being screened in UK, but only one show , Ridiculous ..
It had a good run in Tamilnadu...
PARAMASHIVAN
3rd July 2015, 03:17 PM
It had a good run in Tamilnadu...
I know, but such "critically acclaimed " films are never shown in Europe.. but the distributers are willing to show famous actors films, even though their movies will be marana mokkais, ....
balaajee
3rd July 2015, 03:43 PM
I know, but such "critically acclaimed " films are never shown in Europe.. but the distributers are willing to show famous actors films, even though their movies will be marana mokkais, ....
Its business at last...
Poornima
3rd July 2015, 06:02 PM
one of the best I've watched in a really long time. bittersweet, beautiful.
had apprehensions on this because at times, films tracing lives of the marginalised get preachy and judgmental.
to make a thoroughly entertaining film based on material like this is no mean feat.
the kids are terrific. ishwarya rajesh too.
hope manikandan inspires another wave of brilliance in Tamil films.
balaajee
7th July 2015, 11:20 PM
காக்கா முட்டை படத்துக்கு மேலும் ஒரு விருது!
மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘காக்கா முட்டை’. படத்தின் ரிலீஸ் தேதி முதல் இப்போது வரை தேசிய விருது துவங்கி பல விருதுகளை பெற்றுவருகிறது. அடுத்ததாக படத்திற்கு கே.பாலசந்தர் திரை விருது கிடைத்துள்ளது.
ஜூலை 9ம் தேதி பாலசந்தர் பிறந்தநாளை முன்னிட்டு அறக்கட்டளை ஒன்று பாலசந்தரின் ஆஸ்தான சீடர் கமல் ஹாசன் கைகளால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் திறப்புவிழாவையடுத்து பாலசந்தர் கடைசியாக நடித்த ‘உத்தம வில்லன் ‘ படம் திரையிடப்பட இருக்கிறது.
சினிமா, டிவி கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறக்கட்டளையின் சார்பாக, திரு. கே.பாலசந்தர் அவர்கள் சாதனைகள் புரிந்த நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு நடிகர், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் மற்றும் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.
http://img.vikatan.com/cinema/2015/07/07/images/kakkamuttai.jpg இயக்குநர் திரு.எஸ்பி.முத்துராமன் தலைமையிலான நடுவர் குழு கீழ்க்கண்ட கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.
கே.பாலசந்தர் நாடக விருது – மூத்த கலைஞர் திரு.காத்தாடி ராமமூர்த்தி
கே.பாலசந்தர் திரை விருது - திரு.மணிகண்டன் இயக்குநர் ”காக்கா முட்டை”
கே.பாலசந்தர் சின்னத்திரை விருது – திரு.திருமுருகன் இயக்குநர் & தயாரிப்பாளர் பாலகைலாசம்
சின்னத்திரை விருது – திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர்
இவ்விழாவில் நடிக நடிகையர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நாடகத்துறை, ,சின்னத்திரை, வெள்ளித்திரை உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
balaajee
17th July 2015, 02:52 PM
காக்கா முட்டை கதை பட்ட பாடு! - TAMIL HINDU
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02476/kakka_2476611g.jpg ‘காக்கா முட்டை’ படத்தின் நட்சத்திரங்களுடன் இயக்குநர் மணிகண்டன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02476/kakka1_2476610g.jpg
லொயோலா கல்லூரி முதல்வருடன் இயக்குநர் மணிகண்டன்
லொயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக் கலைகள் துறை பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதை, தேசிய விருதுபெற்ற ‘காக்கா முட்டை’ திரைப்படக் குழுவினருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன், கதையின் நாயகி ஐஸ்வர்யா, நாயகர்கள் பெரிய, சிறிய காக்கா முட்டைகளாக நடித்த ரமேஷ், விக்னேஷ் மற்றும் பாட்டியாக நடித்த சாந்திமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்வில் லொயோலா கல்லூரியின் முதல்வர் ஜி.ஜோசப், ஊடகத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு திரைப்படக் குழுவினரை கவுரவித்தனர். இயக்குநர் மணிகண்டன் தனது ஏற்புரையில் பேசும்போது, ‘‘பத்தாம் வகுப்புக்குப் பிறகு பாலிடெக்னிக் படிப்பைத் தொடங்கி, அதை முடித்துவிட்டு வேலை பார்க்க வந்துவிட்டேன். கல்லூரி கால அனுபவங்கள் இல்லையே என்று எப்பவும் ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.
உதவி ஒளிப்பதிவாளராக வேலைக்கு சேர்ந்து எட்டு ஆண்டுகள் உருண்டோடிய பிறகு சினிமாட்டோகிராபி சார்ந்த ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று இறங்கி ‘வின்ட்’ என்று ஒரு குறும்படத்தை எடுத்தேன். அது தந்த உற்சாகம்தான் கதைகள் எழுதி இயக்கும் எண்ணத்தை அதிகப்படுத்தியது. அதனால் என்னைச் சுற்றிய சூழ்நிலைகளிலிருந்து கதைகளை எழுதினேன். இந்தக் கதைகளோடு தயாரிப்பாளர்களை அணுகினால், ‘கதை நல்லா இருக்கு. இதை சிறுகதையா படிக்கத்தான் முடியும்’ என்றே அதிகமும் கூறினார்கள்” என்று காக்கா முட்டை படத்தின் கதை படமாகும் வரை தான் பட்ட பாட்டை உள்ளது உள்ளபடி அவர் உரைத்தபோது விழா அரங்கில் அமைதி.
மணிகண்டன் தொடர்ந்தார்... “காக்கா முட்டை கதையை சில தயாரிப்பாளர்களிடம் கொண்டுபோனேன். மூன்றாவதாக நான் சந்தித்த தயாரிப்பாளர் கதையை எடுக்க சம்மதித்தார். ஒளிப்பதிவு, இயக்கத்துக்கும் சேர்த்து ஐந்து லட்சம் சம்பளம் கொடுக்கவும் முன்வந்தார். சில நாட்கள் கழித்து கதையில் காதல் டிராக் மட்டும் சேர்த்தால் பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்றார். அதற்கு பதிலாக என் சம்பளத்தையும் 30 லட்சம் வரைக்கும் உயர்த்தித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தார்.
அந்த சந்திப்பின்போது என் பைக்கில் பெட்ரோல் இல்லாமல் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்து போய் அவரைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறேன். ஏனோ, மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை. ‘இந்த கம்பெனிக்கு படம் செய்ய வேண்டாம் என்று மனம் சொல்கிறது’ என்று கூறிவிட்டு வெளியேறினேன். கதையைக் கெடுத்து லாபம் அடையக் கூடாது என்பது என் நோக்கமாக இருந்தது.” என்று நெகிழ வைத்தவர், வெற்றி மாறன் தனுஷ் இருவரையும் சந்தித்த கதையைக் கூறினார்.
“சென்னைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது, தயாரிப்பாளர் சொல்வதைக் கேட்டு சமரசம் செய்துகொள்ளலாமே என்று தோன்றும். வீட்டில் வந்து யோசித்தால் வேண்டாம் என்று மனம் மறுக்கும். நமக்கான படத்தை இரண்டாவது படமாகச் செய்யலாம். முதல் படத்தைத் தயாரிப்பாளர் உள்ளிட்ட நமக்கு வெளியில் இருப்பவர்களுக்காகச் செய்வோம் என்று நினைப்பேன். என்னைக் கேட்டால் நாம் நினைத்ததை முதல் படத்தில் செய்ய முடியவில்லை என்றால் பின் எப்போதுமே செய்ய முடியாது.
இயக்குநர் வெற்றி மாறனிடம் இந்தக் கதையைச் சொன்னபோதும்கூட ‘எதையும் மாற்றிக்கொள்ள மாட்டேன். ஏதாவது கருத்து இருந்தால் சொல்லுங்க’ என்று மட்டும் கூறினேன். அவருக்கும் சில காட்சிகளில் உடன்பாடில்லாமல் இருந்தது. நான் அதற்கான விளக்கம் கொடுத்தால் அதோடு விட்டுவிடுவார். வெற்றி மாறன், தனுஷ் இருவரும், தங்களுக்கு இருக்கும் சினிமா மீதான காதலால்தான் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள்.
அவர்கள் தயாரித்ததால்தான் படமும் வெளிவந்தது. சரியான மார்க்கெட்டிங் இருந்ததால்தான் வணிக வெற்றியும் கிடைத்தது. இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கும் விருது அங்கீகாரம் நல்ல படத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது” என்று கம்பீரம் முகத்தில் மின்னப் பேசியவர் நமக்குப் பிடித்த சினிமாவைச் செய்வதுதான் படைப்பாளிக்கு அழகு என்று அழுத்தம்திருத்தமாக அந்த விழாவில் பதிவு செய்தார்.
“நமக்குப் பிடித்த சினிமா என்பது, அதற்கு நாம் நேர்மையாக நடந்துகொள்வதுதான். நமது ஈகோவைக் கதைக்குள் கொண்டுபோகாமல், மற்றவர்களது ஈகோவும் அந்த கதையில் சேராமல் பார்த்துக்கொண்டு அதை சரியான பட்ஜெட்டில் எடுக்க வேண்டும். தவறினால் அது தப்பான சினிமாதான்.
படம் பார்க்கும் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து அவர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் வேலை செய்தால் நம் உணர்வைக் கண்டிப்பாகப் புரிந்துகொள்வார்கள். அதுதான் நம்மைத் தனித்து அடையாளப்படுத்தும்’’ என்று மணிகண்டன் பேசிமுடித்ததும் மாணவர்கள் ஓடிச் சென்று அவருக்குக் கைகுலுக்கித் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.