View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4
Pages :
1
2
3
4
5
[
6]
7
8
9
10
11
12
13
14
15
16
Gopal.s
20th June 2015, 08:19 AM
விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே எழுதியவற்றின் மறு பதிப்பு.நான் கேட்டது,உணர்ந்தது,படித்தது ,அனைத்தின் தொகுப்பு. ஆனால் அவர் பாதிப்பில் என் பார்வையின் பதிப்பே. (உலக இயக்குனர்கள் முடிந்ததும் தொடர்வேன்)
Gopal.s
20th June 2015, 08:36 AM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.
இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.
நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.
நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.
இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வ ீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மிக மிக பிரத்யேக திறமையாக குறிப்பிடுவது பாடல்களின் போக்கை முன் கூட்டியே தீர்மானிக்காத ஒரு நீக்கு போக்கான தன்மை.(nebulous ).இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ராகங்கள்,தீர்மானமான நோட்ஸ் எதுவுமே அவசியமில்லாதவை. சில சத்தங்கள், அவற்றின் மன கிலேசங்கள்,உணர்வுகள்,அதிர்வுகள் போதுமானவை .அவற்றை வைத்து trial &error என்ற பாணியில், ஒரே வார்த்தையையோ, வரிகளையோ வித விதமாக உச்சரித்து , சோர்வேயில்லாமல் முப்பது நாற்பது tune கொடுப்பாராம். (டி.கே.ராமமுர்த்தி வேறு ரகம்.பாடல்கள் பிடிக்க வேண்டும். முன்தீர்மானம் செய்வார்.எனக்கு என்ன கொடுப்பது என்று தெரியும் என்று ஒன்றிரண்டு மட்டுமே தருவாராம்). இவர்களுக்கிடையே உள்ள முக்கிய வித்யாசமே இதுதான். ராமமூர்த்தியை குருவாக மதித்து,அவரிடம் இசை கற்றாலும், அவரை மிஞ்சி field இல் பலமாக நிற்க இதுவே முக்கிய காரணமானது.
பாடகர்களும் ,என்னிடம் குறிப்பிடுவது, அவர்களின் improvisation சுய தன் முயற்சியில் செய்ய படும் சோதனைகள்,நகாசுகளை அனுமதிப்பாராம். இரு முறை ,மூன்று முறை பாடி காட்டும் போது வெவ்வேறு மாற்றங்களை காட்டுவாராம். மேதை என்பதன் அறிகுறியே அதுதானே?
இவர் பாடல்களுக்கு ,ஒரு எதிர்பாரா புது புதிர் தன்மை அளித்தது ,இந்த ஒரு குணமே. மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு ராகத்தை மனதில் வைத்து,பாடல் கட்டமைப்பை உருவாக்குவது போல எம்.எஸ்.வீ செய்ததே இல்லை.(கர்ணன் போன்ற படங்கள் விதிவிலக்கு). தோன்றிய படி போகும் பல்லவி,சரணங்களினுடே ,ராகம் ஒன்றோ ,இரண்டோ,மூன்றொ கூட புதையலாம். ஆனால் அவை ஒட்டு போட்ட சட்டையாக தோன்றாமல், ஒரு யூகிக்க முடியாத புதிர்த்தன்மை கொண்டு, எம்.எஸ்.வியின் வெகு ஜன பிடித்தம் பற்றிய பரிச்சயம்,இசையறிவு கொண்ட தயாரிப்பாளர்,மற்றும் இயக்குனர்களின் தேர்வுகள்,அந்த தேர்வுகளுக்கு எம்.எஸ்.வீ அளித்த வற்றாத எண்ணிக்கை கொண்ட tunes , பிறகு அதற்கான இசை தொகுப்பை நிர்ணயிக்கும் முறை,இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ,இவற்றால் அவர் பாடல்கள் தனித்து தெரிந்ததில் அதிசயம் என்ன?
மேலும் தொடர்வோம், உதாரணங்கள்,விளக்கங்கள்,சுட்டிகள் இவற்றோடு?எங்கே வேறு பட்டார் என்ற ஆணித்தரமான விளக்கங்களோடு.(நானே உணர்ந்தவை,மற்றோரிடம் தெரிந்தவை எல்லாமே தொகுத்து).இவை முற்றிலும் வேறு பரிமாணத்தோடு ,மற்றும் வித்தியாச புரிதலோடு.
எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.
இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.
அடானா ராகத்தை பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S ) அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம், படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங ்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.
ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.
தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???
ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.
எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )
எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு 4 உதாரணங்கள் .
1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?
2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.
3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.
4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)
எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.
இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.
ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.
ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)
எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.
இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.
chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.
கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.
இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.
அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.
மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.
சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?
இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.
நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.
அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக் ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெ ட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.
அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.
இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.
"நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.
கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.
"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.
ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.
"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.
பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
Russellrqe
20th June 2015, 10:58 AM
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றில் மைல் கற்களாய் அமைந்த திரைப்படங்கள் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவையாகும். மேலும் இவ்விரண்டு திரைப்படங்களையும் தானே இயக்கிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. 1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 எனும் கண்காட்சியை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் காண வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதால், இப்படத்தின் திரைக்கதையோட்டம் ஜப்பான் நோக்கித் திரும்பியது.
எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கே உண்டு. அவ்வரிசையில் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. இத்திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னரை ஒப்பந்தம் செய்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். திரைப்படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள், அனைத்தும் முத்துப் பாடல்கள் எனலாம். கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், புலவர் வேதா ஆகிய கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இன்றும் மின்னுகின்றன. இப்பாடல்கள் பதிவான பின் எம்.ஜி.ஆர். அவர்கள் மெல்லிசை மன்னரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். மெச்சிப் புகழ்ந்தாராம்.
அப்பாடல்களில் ஒன்று இதோ, கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் தமிழ் வார்த்தை விளையாட்டு நடக்கிறது பாருங்கள்.
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ
பத்மஸ்ரீ கே.ஜி.யேசுதாஸ் பி. சுசீலா குரல்களில் இழைந்து வரும் இசைத் தென்றல் இது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அபூர்வ ராகம் இது. காட்சியமைப்பும் காண வெகு கச்சிதமாய் மக்கள் திலகத்தின் திரைச் சரித்திரத்தில் மற்றுமொரு மாணிக்க மகுடம். கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இளமை நந்தவனம் நர்த்தனமிடுகிறது, அதற்கு மெல்லிசை மன்னரின் இசை கவரி வீசி விடுகிறது! வாழ்க்கையின் அன்றாடப் பரபரப்பிலிருந்து சற்று விலகி இளைப்பாற இப்பாடல் அழைக்கிறது…
தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ
தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ
வண்ணப் பாவை
கன்னித் தேனை
கன்னம் என்னும்கிண்ணம்
கொண்டு உண்ணச் சொன்னாளோ
தங்கத் தோணியிலே
தவழும் பொன்னழகே
நான் கனவில் வந்தவளோ
உன் மனதில் நின்றவளோ
மின்னல் கோலம் கண்ணில்
போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில்
யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை
என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச்சொல்ல
காதல் உண்டானதோ
(தங்கத் தோணியிலே)
அல்லி பூவைக் கிள்ளிப்
பார்க்க நாள் என்னவோ
கிள்ளும்போதே கன்னிப்
போகும் பூ அல்லவோ
அஞ்சும் கெஞ்சும் ஆசை
நெஞ்சம் நாணம் விடாததோ
அச்சம் வெட்கம் விட்டுப்
போனால் தானே வராததோ
(தங்கத் தோணியிலே)
https://youtu.be/I-qRFUpdqME
courtesy -thiru கவிஞர் காவிரிமைந்தன்.
Gopal.s
20th June 2015, 10:58 AM
Bicycle Thieves -Vittorio De Sica - Italy -1948.
நான் மட்டுமல்ல உலக பட இயக்குனர்கள் ஜப்பான் முதல் ஈரான் வரை ,சத்யஜித்ரே,பிமல்ராய்,முதல் பாலுமகேந்திரா வரை தெய்வமாய், நியோ ரியலிச படங்களின் தந்தையாய் தொழும் நபர் விட்டோரியோ டிசிகா . இவரின் நூறாவது பிறந்த நாளை கானடா நாட்டு montreal சூதாட்ட விடுதியில் ,நண்பர்களுடன் கொண்டாடினேன்.(7 ஜூலை 2001) இது முடிந்து ஊர் திரும்பியதும் (ஜகர்தா) இந்திய தூதர் தந்த விருந்தில் இருக்கும் போது ,நம் தெய்வம் நடிகர்திலகம் மறைந்த செய்தி வந்து என்னை மீளா துயரில் வீழ்த்தியது.
neo Realism என்ற பாணியை துவங்கியவர் ரோசலினி என்ற இத்தாலிய இயக்குனரே (1945இல்).இதை தொடர்ந்தவர் நமது டிசிகா Sciuscia (1946),Bicycle Thief (1948) போன்ற படங்களில். 5 முறை ஆஸ்கார் விருது வாங்கியவர் குருவாக ஏற்றது ரோசலினி ,சார்லி சாப்ளின் ஆகியோரை. சிறு வயதில் வறுமையில் வாடியவர், பிறகு நாடகம்,படத்துறை என்று பெரிய அளவில் சாதித்தார்.சூதாட்டத்தில் நாட்டம் கொண்டு பெருமளவில் இழந்தவர்.(சூதாட்ட விடுதியில் நாங்கள் நூறாம் ஆண்டு கொண்டாடிய காரணம்).
சக சூழலில், சக மனிதர்களின் பிரச்சினையை எடுத்து அதை கலை சார்ந்த அழகுணர்ச்சியுடன்,உண்மை தன்மை கெடாமல் கொடுப்பதே Neo Realism .தீர்வு கொடுப்பதை விட,தீர்வை நாடி நம்மை ஓட வைக்கும்.மனத்தை ஈரமாக்கி ,துயர் துடைக்க வழி இல்லையெனினும்,துயரில் பங்கு பெரும் மனிதம் வளர்க்கும். தொழில் முறை நடிகர்களை நாடாமல் அமெச்சூர் நடிகர்களை வைத்தே படம் எடுத்தார்.(தொழில் முறை நடிகர்கள் டப்பிங் கொடுத்ததாக நினைவு).
உலகத்திலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படைப்பாக கருத படும் படைப்பு இது.பல உன்னத படங்கள் ஒரு புத்தகத்தை மையமாக கொண்டே இருக்கும். இதுவும் லுஜி பர்டோலோனி என்பவரின் நாவல் .சத்யஜித் ரே இந்தியாவின் வறுமையை வெளிச்சமிட்டு புகழடைபவர் என்ற குற்ற சாட்டு எழுந்தது போல, இவர் இத்தாலியின் வறுமையை வெளிச்சமிட்டு உலக புகழ் சேர்ப்பதாக ,இத்தாலியில் குற்றசாட்டு எழுந்தது. அதையும் மீறி ,இவர் படைப்பும்,ஐவரும் காலத்தில் அழியா புகழ் அடைந்தனர்.
அமெரிக்க Great Depression காலத்திலும், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலக போருக்கு பின்னரும் சொல்லொணா வறுமை,வேலையில்லா திண்டாட்டம், இளம் தலை முறையின் கொதிப்பு, அதிகரித்த குற்றங்கள் என்று எல்லா சவால்களையும் சந்தித்தன. இதை பற்றி அந்தோனியோ ,மனைவி மரியா, மகன் ப்ருனோ சுற்றி பின்ன பட்ட சுருக்க கதை ,உலகம் போற்றும் classic படமானது.
வேலையில்லா அந்தோனியோ, போஸ்டர் ஓட்டும் வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு தேவை ஒரு சைக்கிள். மனைவி,தனது உயர் ரக (கல்யாண சீதனம்) விரிப்புகளை அடகுக்கு கொடுத்து பணம் வாங்குகிறாள். முதல் நாளே சைக்கிள் திருடு போய் ,அதை மீட்க அவன் படும் பாடு, மகனும் சேர்ந்து அவனுடன் படும் துயர் கதை. இறுதியில் பாடு பட்டும் தன் உடமையை மீட்க முடியாத விரக்தியில்,இன்னொரு சைக்கிள் ஐ களவாட போய் பிடிபட்டு, இறுதியில் உடமையாளரால் மன்னிக்க பட்டு,மகனுடன் வருத்தம்,விரக்தி,மீளா வறுமை,செயலற்ற நிலையுடன் அவமானமும் சுமந்து செல்லும் துயரம்.
இதன் பாதிப்பில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி தந்த அற்புத படைப்பே பொல்லாதவன்.வருங்கால பொழுது போக்கு படங்களுக்கு புது பாதை போட்ட படைப்பு.
Russellrqe
20th June 2015, 05:16 PM
''கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது.''
மக்கள் திலகம் எம்ஜிஆர் .
அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .
''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
என் பதிவு .1
நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.
''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
என் பதிவு -2
நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.
அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
என் பதிவு -3
ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்
அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
என் பதிவு 4
முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
என் பதிவு - 5
ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.
உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
என் பதிவு -6
ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.
ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.
சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.
ஆதிராம்
என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .
வேண்டுகோள்
உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்
''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
அஸ்ஸலாமு அலைக்கும் !
Gopal.s
20th June 2015, 05:31 PM
குமார்,
மொக்கை பதிவுகளாய் போடாமல், ஆழமான சுவாரஸ்ய விஷயம் உள்ள பதிவுகளாய் போட்டு ,நான் உட்பட பலரை இந்த திரிக்கு வரவழைத்த கார்த்திக் ,சாரதா மற்றும் நல்ல பதிவாளர்கள் கல்நாயக் ,ஆதிராம் இவர்கள் மீது நீங்கள் தொடுத்திருக்கும் அஸ்திரம், அதுவும் இடம் மாறி வந்து, ஆச்சர்யம் அளிக்கிறது. நண்பர்களிடம் ,நான் கேள்வி பட்ட வரை தாங்கள் ஒரு தரமான நடிகர்திலகம் ரசிகர் என்பதே.
எதையுமே நிரூபிக்கும் வரை வீண் குற்றம் சுமத்துவது ,தங்களை போன்ற முதிர்வுற்ற பதிவருக்கு அழகல்ல. என்ன பெரிய ஒற்று வேலை? சதி செயலா புரிகிறீர்கள் நீங்கள்?
தேடி துரத்தி வந்து தாக்குமளவு என்ன தவறு நேர்ந்தது குமார்?
இன்னொன்றும் கூறி கொள்கிறேன். எனக்கு தனி தனியாகவே இந்த பதிவர்களின் மேல் மலையளவு மதிப்புண்டு. இவர்கள் எல்லோரும் ஒன்று என்றால் ,அவர் திறமையில் மலைத்து நின்று வணங்குவேனே தவிர, ரசனையற்று பழி சுமத்தி அவரை காய படுத்த மாட்டேன்.
Russellrqe
20th June 2015, 06:06 PM
திரு கோபால்
என்னை பற்றி சிறிதளவு தெரிந்து கொண்ட உங்களுக்கு என்னுடைய நன்றி . எல்லா பதிவாளர்கள் மீதும் எனக்கு மரியாதை மதிப்பு உண்டு .
என்னுடைய நீண்ட நாள் ஆதங்கத்தை வெளி வருபடி செய்தவர் திரு ஆதி . திரியில் பலருக்கும் இந்த உண்மைகள் தெரியும் .
நீங்கள் ஆத்திரத்தில் பதிவு போட்டு உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள் . முதுகு சொரியும் பட்டியலில் கோபாலும் சேர்ந்தார் என்ற
அவப்பெயர் வேண்டாம் .இனி சம்பந்த பட்டவர்கள் விளக்கமளித்தால் போதும் .ஆதி எம்ஜிஆர் திரியில் மட்டும் வரவில்லையே ? மதுர கானம் திரியில் வருகிறாரே . எனவேதான் நான் இங்கும் பதிவிட்டேன் .சரியான பதில் கிடைத்தவுடன் நானும் அமைதி காக்கிறேன் .
நீங்கள் ஒதுங்கி இருக்கவும் . முடியாது என்றால் ஆதியின் நிழற்படம் இங்கே பதிவிடவும் .
Gopal.s
20th June 2015, 06:42 PM
குமார்,
என்னிடம் ஆதியின் புகை படம் உள்ளது. அது அவர் 6 மாத குழந்தையாக இருந்த போது எடுத்தது. பரவாயில்லையா?போடலாமா?:-d
adiram
20th June 2015, 07:48 PM
டியர் ரவி சார்,
உங்களின் 'கருவின் கரு' தொடர் வேள்வி உண்மையிலேயே பெரிய சாதனைதான் தாயின் பெருமைகளை மிகத்தெளிவாக அழகாக உணர்த்தியுள்ளீர்கள். தாய்ப்பாசம் அற்றவர்களும் உங்கள் பதிவுகளைப் படித்தால் மனம் திருந்தி தாயின் அருமையை உணர்வார்கள். கங்கை கரையில் தாயை அனாதரவாக விட்டு வந்தவர்கள் படித்து உணரவேண்டிய பொக்கிஷப்பதிவுகள்.
இணைக்கப்பட்ட பொருத்தமான பாடல்கள் மட்டுமல்லாது, அவற்றோடு இணைத்து தந்த உண்மைச்சம்பவங்கள் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தன.
உங்கள் கடின உழைப்பு நிச்சயம் போற்றுதலுக்குரியது.
adiram
20th June 2015, 07:51 PM
டியர் கோபால் சார்,
நீங்கள் என்மீது வைத்திருக்கும் மலையளவு நம்பிக்கைக்கு, அதைவிட அதிகமான நன்றிகள்.
uvausan
20th June 2015, 08:33 PM
நன்றி திரு ஆதிராம் - உங்களைப்பற்றிய சர்ச்சைகள் மனதிற்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தாலும் , விடாமல் எல்லா பதிவுகளையும் படிக்கும் குணமும் - படித்ததோடு நிற்காமல் உடனே மனமுவந்து பாராட்டும் நல்ல எண்ணமும் உங்கள் நல்ல உள்ளத்தை எடுத்துக்காட்டுகின்றது .
Russellisf
20th June 2015, 10:12 PM
புரட்சி தலைவரின் 'தொழிலாளி' திரைப்படத்தில் வரும் பாடலிருந்து சில வரிகள்...
'இருப்பதைக்கொண்டு
சிறப்புடன் வாழும்
இலக்கணம் படைத்தவன், தொழிலாளி
உருக்குப் போன்ற
தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன், தொழிலாளி
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்
...
ஆண்டவன் உலகத்தின் முதலாளி'
இப்பாடலுக்கே உரித்தான சில சிறப்பு அம்சங்கள்...
முதலாவதாக, முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இசையமைக்கப்பட்டிருக்கும் ஒரு இனிமையான பாடல்.
குறிப்பாக, குறைந்தயளவு இசைக்கருவிகள் பயன் படுத்தப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக, நமது அன்பிற்குறிய, மறைந்த TMS அவர்கள், மிகவும் தாழ்ந்த சுருதியில் (Low Pitch) பாடிய பாடல்.
குறிப்பாக, TMS அவர்களின் பாடல்களை அவ்வளவு எளிதாக பாடிவிட முடியாது.
பாட்டில் எங்கேயாவது உயர்ந்து சுருதி (Hi Pitch) கலந்திருக்கும், நிச்சயம் பட முயற்சிப்பவரின் காலை வாரிவிடும்.
ஆனால் இந்த பாடலை எவர் வேண்டுமானாலும் பாட முயற்ச்சிக்கலாம்.
மூன்றாவதாக, தலைவர் மிகவும் அமைதியாக தரையில் அமர்ந்து பாடும் பாடல், அதுவும் ஒரு தத்துவப்பாடல்.
மிக எளிதாக, மிகவும் இயற்கையாக, முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த உடலசைவுகளையும் காட்டியிருக்க மாட்டார்.
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்களாக ஏன் ஒரு 'தொழிலாளி' மட்டும் இருக்க வேண்டும்?
மேல்மட்டத்தில் உள்ள துறைகளில் பணிபுரிபவர்கள், ஏன் இதை கடைபிடிக்கக் கூடாது?
மேல்மட்டத்துறைகளில் உள்ள நிறுவனங்களில், ஏன் இத்தனை ஆடம்பரம், விளம்பரங்கள்?
தேவையற்ற விஷயங்களுக்கு பொருளாதாரத்தையும், நேரத்தையும், ஏன் செலவிட வேண்டும்?
இவையெல்லாம் குறைந்தால், உருக்குப் போன்ற தன் கரத்தை நம்பி ஓங்கி நிற்கும் தொழிலாளியின் வாழ்வு மலர, ஏன் வழி பிறக்காது?
இப்பொழுது இருக்கும் நிலை தொடர்ந்தால், கல்லை கனியாக மாற்றும் தொழிலாளியின் கவனம் ஒரு நாள் திரும்பும்.
அப்பொழுது (அதில்), நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் அரும்பும் நிலை உருவாகும்.
courtesy venkatrao fb
Russellisf
21st June 2015, 12:15 AM
ஊருக்கு உழைப்பவன்” படத்தில் ஜேசுதாஸ் பாடிய “பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்” ஒரு சூப்பர் ஹிட் பாடல்...
இந்தப் பாடல் காட்சிக்காக முதலில் இரண்டு , மூன்று பல்லவிகள் எழுதப்பட்டனவாம்...
அதில் ஒரு பாடலின் பல்லவி...
"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது
இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது
இது இறைவனுக்கும் புரியாது"
இயக்குனர்..இசையமைப்பாளர் ...எல்லோரும் இந்தப் பாடலை ரசித்து ஓகே சொல்லி விட்டாலும் , எம்.ஜி.ஆர் மட்டும் ஒன்றுமே சொல்லாமல் அமர்ந்திருந்தாராம்...
எல்லோரும் எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்க்க ..
"நீங்க சொல்றது போலவே இந்தப் பாட்டு நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத்தான் பாப்புலராகும்... ரொம்ப கேட்சிங்கா இருக்கு"என்றாராம் எம்.ஜி.ஆர்....
அப்புறம் என்ன..? பல்லவியோடு சரணமும் உருவாகி பாடல் பதிவானதாம்...
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்”
“வான மழைத் துளி யாவும்
முத்தாக மாறாது
வண்ணமிகு மலர் யாவும்
உன் போல சிரிக்காது
தேடி வைத்த பொருள் யாவும்
தேன் மழலை ஆகாது
திருவிளக்கின் ஒளியழகும்
உன் அழகைக் காட்டாது..”
இந்தப் பாடல் வரிகளை ஜேசுதாஸ் எந்த உணர்ச்சியோடு பாடினாரோ..?
ஆனால் இதற்கு வாயசைத்து நடிக்கும்போது எம்.ஜி.ஆரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்..?
# “எது நடக்கும் எது நடக்காது
இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது
இது இறைவனுக்கும் புரியாது..”
courtesy net
Russellisf
21st June 2015, 12:22 AM
உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லையென்றால்
நீங்கள் சரியான ஜால்ரா என்று புரிந்து கொள்ளுங்கள்..”
என்றார் நண்பர்...!
உண்மைதான்...!
இதோ..ஒரு இனிய பாடல் உருவாக எத்தனை காரசாரமான கருத்து மோதல்கள் உருவாக வேண்டியதிருக்கிறது.....!
# ‘இளைய நிலா பொழிகிறது’ ....
‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை , முதலில் ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதி இருந்தாராம்....
படித்துப் பார்த்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் ...“அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லையே... அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடுங்களேன்..”என்று சொல்ல ..வைரமுத்து மறுக்க...ஆர்.சுந்தரராஜன் சொன்னாராம்...” எனக்கு அது புரியலீங்க..”.
வைரமுத்து உடனே , “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பட்டென்று பதில் சொன்னாராம்..
“இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டைக்கு போய் விட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.
இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.... கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
“இல்ல ஸார்.. ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்று விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமல் விறைப்பாக நின்றாராம் ஆர்.சுந்தரராஜன்....!
அப்புறம்தான் ‘சலவை நிலா’வை ....‘இளைய நிலா’வாக மாற்றிக் கொடுத்தாராம் இளையராஜா ..!
“சலவை”நிலாவை விட இளையராஜாவின் “இளைய நிலா”தானே இனிமையாக இருக்கிறது...?
வைரமுத்து அன்று ஏன் அத்தனை அடம் பிடித்து நின்றார் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை...!
# “அடம் பிடிக்கும் குழந்தைகளை , அம்மாக்கள் “தரதர” வென இழுத்துப் போவதைப் போல ...
காலம் எனும் தாய் ,
இளையராஜாவையும் , வைரமுத்துவையும் எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டாள்..”
# இளையராஜாவுடன் இணைவது பற்றி , வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன..
“நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.
நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.இப்போது முடியுமா?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?"
# “பூங்காற்று திரும்புமா..?”
j
courtesy net
vasudevan31355
21st June 2015, 08:21 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
10
http://i.ytimg.com/vi/ukezvBWyqNo/hqdefault.jpg
'பொன்னென்றும் பூவென்றும்'
படம்: 'நிலவே நீ சாட்சி'
இசை: 'மெல்லிசை மன்னர்'
பாடலாசிரியர்: 'கவிஞர்' வாலி
பாலாவின் தொடரில் அடுத்து வரும் பாடலின் படமும் இதற்கு முந்தைய தொடரில் நாம் பார்த்த அதே 'நிலவே நீ சாட்சி' படம்தான்.
ஹைய்யா! ஜாலி! கதை எழுத வேண்டிய அவசியமில்லை. போன தொடரிலேயே படத்தைப் பற்றி விவரம் தந்தாயிற்று.
பாலு பாடிய பாடல்களில் உச்ச நிலை தொடும் பாடல். ஜெய், விஜயா காதல் பாடல் என்றாலும் இப்பாடலை பாலு ஒருவரே பாடி அசத்துவார்.
ஆனால் பாடல் மனதில் பதிந்த அளவிற்கு காட்சி பதியாமல் அம்பேல். சுரத்தே இல்லாமல் ஜெய் பாடுவது, சம்பந்தமே இல்லாமல் விஜி பாடல் முழுக்க செயற்கையாக சிரித்துக் கொண்டே இருப்பது, ஒரே ஒரு மரம், அதன் பின்னால் ஆர்ட் இயக்குனரின் கை வண்ணத்தில் வரையப்பட்ட நிழலுருவு மரங்கள் என்று பாடலுக்கான காட்சியமைப்பு போர்தான்.
வாலி இப்பாடலின் நாயகர். வார்த்தை சித்தர்.
'மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து'
இதைவிட ஒரு காதலன் மோகம் கொண்டு தன் காதலியை வர்ணித்து விட முடியாது.
http://i.ytimg.com/vi/q7GhGUNjRj4/hqdefault.jpg
'கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி'
என்று கற்பனையில் வாலி கலக்குவதை எவரும் ரசிக்காமல் இருக்க முடியாது.
அது மட்டுமா?
'இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி'
என்று காதலியின் மீது காதலன் பாடும் வார்த்தைகள் அர்த்தம் நிறைந்தது. அதில் காதலனின் ஏக்கமும் நிறைந்திருப்பதை நாம் உணரலாம்.
'ம் ம்ம்ம் ஹூம்
ஹா ஹாஹாஹாஹாஹா'
என்று பாலா படுசுவாரஸ்யமாய்த் பாடலைத் தொடங்க, பின்னால் கிறங்க வைக்கும் கிடாரின் பின்னணி முழங்க, எப்படிப்பட்ட சுகமான பாடலை நாம் அனுபவிக்கத் தொடங்குகிறோம்! வயலினின் பின்னணி சுகமாய் நெஞ்சை வருடும்.
பல்லவி முடிந்து முதல் சரணம் தொடங்குவதற்கு முன்னும், அதே போல மூன்றாவது சரணம் ஆரம்பிக்கும் முன்பும் ஒலிக்கும் அந்த சாக்ஸ்போனின் இனிய இசையை இன்று முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். தொடர்ந்து வரும் சந்தூரின் அழகே அழகு. பாடல் முழுதும் பின்னால் உருண்டு கொண்டிருக்கும் பாங்கோஸ் பரவசம் தரும்.
'மெல்லிசை மன்னர்' தன் அற்புத இசையாலும், டியூனாலும் நம்மை மிரள வைத்த படம் இது.
குறிப்பாக இந்தப் பாடலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. எந்த வயதினரும், எந்த தலைமுறையும் கேட்டால் சொக்கிப் போக வைக்கும் பாடல் இது.
விஜய் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை பாடினால் பாடுபவருக்கு வெற்றி நிச்சயம்.
பாலா மிக மிக மிக மிக அனுபவித்து, குழைத்து, நமக்கு அளித்த காயகல்ப சஞ்சீவி இந்தப் பாடல்.
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
(இடையிசை கலக்கல்)
மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
கோடை வசந்தங்கள் குளிர் காலம் என்று
ஓடும் பருவங்கள் கணநேரம் இன்று
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
(இடையிசை கலக்கல்)
கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரை சொல்லி
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
https://youtu.be/ukezvBWyqNo
rajeshkrv
21st June 2015, 09:10 AM
வாங்க ஜி
rajeshkrv
21st June 2015, 09:19 AM
நிலவே நீ சாட்சி
அருமையான பாடல்கள்
நன்றி ஜி
chinnakkannan
21st June 2015, 09:44 AM
Hi good morning to all from Gurgaon!..
Congrats to ravi for completing the karuvin karu series part 1.
Thanks vasu sir for nilave nee satchi
Thanks Rajesh, Gopal for the feed back on Julia. Gopal I didn't try any baani of Sujathaa..Just I tried to write on that movie, Thanks for your naermaiyana comments about me . I also used to write in 5 punai peyarkaL chinnakkannan, kr.iyengar, Gayathri srinivas,Xavier dasan, kannan rajagopalan in old days. ippo chinnak kannan only. ennai patri enna ninaikkireerkaL.. (Ithu thaan vambai vilai koduththu vaanguvathu enbathu)
Day before yesterday went to haridwar and returned yesterday mid night. Tomorrow again starting another tour for a week.
Welcome kumar sir do contribute about the songs of ma.thi.
I will read and try to come as and when
Russellrqe
21st June 2015, 10:52 AM
கடலூர், இரும்புக்கோட்டை, சென்னை, சவூதி அரேபியா முதலிய இடங்களில் கோல்மாலுக்குப் பெயர் பெற்றது 'கோபால்' கல்பொடி. பொய்களை முத்துப் போல் பிரகாசிக்க செய்வது கோபால் பல்பொடி. தில்லுமுல்லுகளுக்குத் துணை போவது கோபால் பற்பொடி. ஏமாந்த சோணகிரி கோபால் பற்பொடி.
கோபால்,
ஒரு ஆள் பல வேஷம் போட்டு இங்கிருப்பவர்கள் எல்லோரையும் மாற்றி மாற்றி ஏமாற்றி நான் வேறு அவர்கள் வேறு என்று நம்ப வைப்பது மோசடி செயல்தானே. நல்ல பதிவுகள் தருபவர்கள் ஒரே பெயரில் தரலாமே. நல்லதோ கேட்டதோ தாங்கள் ஒரே பெயரில் நேர்மையாக பதிவிட வில்லையா? ஒரு ஆள் நான் அவனில்லை என்று சாமர்த்தியம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த தில்லுமுல்லுகளுக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. குற்றம் செய்பவரை விட குற்றம் செய்ய தூண்டுபவருக்குதான் தண்டனை அதிகம்.
ஒரு நபர் 5 பேராக வந்தாலும் அந்த ஏமாற்று வேலையை ரசிக்கிறேன் என்று அந்த நபர் பலவேஷம் கட்டுபவர்தான் என்று மனப்பூர்வமாக திரியில் ஒத்துக் கொண்டதற்கும், தைரியமாகத் திரியில் பதிந்து உண்மையை உணர்த்தியதற்கும் உங்களுக்கு மிகவும் நன்றி. ஆமாம்!
ஆறு வயது ஆதி குழந்தை போட்டோ உங்களிடம் எப்படி வந்தது?
Gopal.s
21st June 2015, 11:53 AM
குமார்,
அவர் என்ன ஏமாற்றி பணம் பிடுங்கினாரா? அல்லது பலரை மணந்தாரா?(நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில்)
திரியை சுவாரஸ்யமாக்கினார். மார் தட்டி சொல்லுவேன், எனக்கு முன்னாள் நடிகர்திலகம் திரிக்கு வந்த பலர் ,அத்திரியை சுவாரச்யமாக்கி மையத்துக்கு பெருமை சேர்த்தனர். நல்லவர்,நேர்மையாளர் என்று மொண்ணை பதிவுகளை போட்டு வெறித்தனமாக செயல்படும் போர் ஆட்களால் திரி சுவாரஸ்ய படவில்லை.
அப்படி அவர் பல பெயரில் பதிவுகள் போட்டதால் என்ன கேடு வந்தது?
திரிக்கு சுவாரஸ்யம் சேர்த்து வள படுத்தியது பெரிய குற்றமா என்ன ? பல பெயரில் வருவது மட்டும் மோசடியல்ல. தவறான தகவல்கள், பொய்யானவற்றை தூக்கி பிடித்தல் எல்லாமே மோசடி. ஒரு தலை பட்சமாக வழிபாடு செய்வது பகுத்தறிவு மோசடி.
நீங்கள் ஏன் இவ்வளவு மோசமாக தாக்குகிறீர்கள் என்பது புரியவில்லை. Administator ,Moderators இவர்களிடம் புகார் செய்வதை விட்டு ,நிரூபணமாகாத ஒன்றை சொல்லி ஏன் ஒரு அங்கத்தினரை கொதிப்படைய செய்கிறீர்கள்?அவர்கள் இருவரும் சேர்ந்து வந்து உங்களை சந்தித்தால் முகத்தை எங்கு கொண்டு வைப்பீர்கள்?
நான் திரும்ப சொல்கிறேன். என்னை போன்ற சிலர் திரிக்கு வந்த காரணம் முன்னோடிகள் கார்த்திக்,சாரதா,முரளி போன்றோர்தான்.
நான் உங்களை கேலி செய்து தாக்க நேரம் பிடிக்காது. ஆனால் பம்மலார் உங்களை பற்றி மிக உயர்வாக குறிப்பிட்டுள்ளார். என் மதிப்புக்குரிய உங்களிடம் ,தற்காலிக பொறுமை காட்டுவதில் எனக்கு தயக்கம் இல்லை.
காற்றாலையுடன் Don Quixote போல மோதாதீர்கள்.
Gopal.s
21st June 2015, 12:49 PM
La Strada -Federico Fellini - 1954.
வாழ்க்கை என்பது நாம் காணும் நிகழ்ச்சிகளின் தொகுப்போ, நாம் படிக்கும் கேட்கும் விஷயங்கள் மட்டுமேயல்ல.ரியலிசம் மட்டும் உண்மையோ கலையோ ஆகாது.விஷயங்களை நம் மனம் வாங்கி கொள்ளும் முறை,அது சார்ந்து நம் மனம் நமக்கு காட்டும் முறைமை,உள்மன புயல்கள்,தேவையற்ற பயங்கள் ,வக்கிரங்கள், வன்மங்கள்,துயர் சிந்தனைகள்,நிழலான பகிர முடியாத எண்ணங்கள்,பிரத்யேக மன பிறழ்வுகள்,குற்ற உணர்வுகள்,சில நேரம் துன்பத்திலும் எள்ளும் வினோத குணம், வாழ்க்கையில் சேர்த்து கட்ட பட்டாலும் நேர்கோட்டில் வராத இரு பிரத்யேக குண விசேஷம் கொண்டவர்களின் சந்திக்காத மன உணர்வுகள்,அவர்கள் ஒருவர் வாழ்கையை மற்றவர் பாதிப்பதை உள்மன படிமங்களாக்குவது போன்ற ஆழமான விஷயங்களை ,மன விளையாட்டு பயிற்சியை,சத்தியமாக ரியலிச படங்களால் அணுகவே முடியாது.
Fellini புரிந்து கொள்ள படுவதற்கே ,தேர்ந்த ஆய்வாளர்களின் துணையுடன், படிப்பறிவு (துறை சார்ந்த),மனோதத்துவ பின்னணி,அழகுணர்ச்சி ,பல உலக படங்கள் பார்த்த தேர்ச்சி,இவை இருந்தாலே சாத்தியம். அப்படி ஒரு பாணி. Fantasy எனப்படும் மன பிரமை,Baroque என்ற கலை போல மிகை தன்மையுடன் நகர்வு சார்ந்த ஒருங்கிணைக்க பட்ட கலையுணர்வு, பூமியின் தன்மையுடன் (Earthiness )இணைவு பெற்றால் மட்டுமே நிகழும் அற்புத தருணங்கள். சிறு சிறு விஷயங்களும் நேர்த்தியாக காட்ட படும்.இது ஒரு Hollywood படங்கள் போல பொதுமையுடன் ,நீர்க்க செய்த வியாபார கலையல்ல. ஒரு மனிதன் தன் மனத்தை, அதன் தருணங்களை,அதன் சலனங்களை நம் மனத்தோடு பகிர என்னும் பிரத்யேக கலை படங்கள்.உள்மன விவரிப்பு படிமங்கள்,மனோதத்துவம் சார்ந்த யதார்த்தம்,மன உணர்வுகளின் மேன்மை-மென்மை -வறுமை-துயரம்-கொடூரம்-குழப்பம் இவற்றை மனிதம் கெடாமல் நம்மோடு பகிரும் ஒரு நேர்மையான நேர்த்தியான கலை.
இந்த படம் Zampano என்ற தெருவில் வித்தை காட்டி பிழைக்கும்(சங்கிலியால் கட்டி இழுக்கும் பல விளையாட்டு) ஒருவன் ,ரோஸா என்ற உதவி பெண் இறந்து விட்டதால், அவளுக்கு பதிலாக கேல்சொமினா என்ற அவளது தங்கையை 10,000 லிரா (இத்தாலிய காசுகள் சுமார் 600 ரூபாய் ) கொடுத்து வாங்கி உதவியாக வைத்து கொள்கிறான்.அவளிடம் மனித தன்மையற்ற குரூரம் காட்டி அனுதினமும் வதைக்கிறான்.அவன் ஒரு circus ஒன்றில் பணி புரிய நேரும் போது Matto என்ற கோமாளி கலைஞன் அவர்களை எதிர்கொள்கிறான். அவனுக்கு எதிலும் எப்போதும் விளையாட்டு மனநிலை இருந்தாலும் ,எந்த ஒன்றும்,எந்த ஒருவரும் ஒரு காரணத்தோடு படைக்க பட்டவர்களே என்ற மனிதம் நிறைந்த எண்ணங்கள் கொண்டவன். சம்பனோ வும் மட்டோ வும் ஆரம்பம் முதலே மோதல். ஒரு அசந்தர்ப்பமான தருணத்தில் மாட்டோ ,சாம்பநோவால் மடேர் மடேரென்று அடித்து கொல்ல பட்டு விடுகிறான்.(சாகும் போது மாட்டோ-என் வாட்ச் உடைந்து விட்டதே) .இந்த சம்பவத்துக்கு பிறகு மணந்து கொள்ள சொல்லும் கேள்சொமினா வை நிராகரித்து,நடை பிணமாக இருக்கும் அவளை விட்டு ஓடி விடுகிறான். அவள் நினைவுகளால் துரத்த பட்டு ,இறுதியில் கண்ணீர் வடிப்பதுடன் படம் முடிகிறது.
fellini தன் Autobiography என்று இதனை வர்ணித்துள்ளார்.உள் மனத்துயர் ,ஒரு லேசு பாசான (diffused )குற்றவுணர்வு,நிழல் ஒன்று மேல்தொங்குவது போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டு ஒரு மன சித்திரமாக உருவானவள் கேள்சொமினா. Zampano ,சிறு வயதில் பார்த்த பன்றிகளுக்கு காயடித்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு பெண் பித்தனின் உண்மை பாத்திரம்.இவை வைத்து உருவானது. Fellini படங்களிலேயே அவருக்கு அதிகம் சிரமம் தந்த படம்.(நேரம்,பொருள்,மன உளைச்சல்),Antony Quinn தான் Zampano .
இவரின் பிற படங்கள் La Dolce Vita , 8 1/2, Amarcord .Nino Rota இந்த படத்திற்கு தந்த இசை கவனிக்க பட வேண்டியது. காட்சிகள் படமாக்கம் மிக ஆழ-அழுத்தம் கொண்டு பலமான காட்சி அதிர்வை தரும். ஒரு perfectionalist Fellini .
Russellzlc
21st June 2015, 05:18 PM
நண்பர்களுக்கு வணக்கம்.
வேலை கடுமையாக இருந்ததால் சில நாட்களாக திரிக்கு வர முடியவில்லை. மன்னிக்கவும்.
வாசு சார்,
‘ஆயிரம் ஆயிரம் அற்புத காட்சிகள் எங்கும்’ மிகவும் அபூர்வமான பாடல். இதுபோன்ற அடிக்கடி நினைவுக்கு வராத பாடல்களை தேடி எடுத்துக் கொடுப்பதிலும் அதற்கான உழைப்பிலும் உங்களை யாரும் மிஞ்ச முடியாது. பொன்னென்றும் பூவென்றும் பாடலும் தங்கள் விளக்கமும் அருமை.
‘நீராழி மண்டபத்தில்’ பாடல் பதிவுக்கும் நன்றி. அந்த பதிவை திரு.எஸ்.வி. எங்கள் திரியில் மீள்பதிவு செய்து, அதை நான் மீண்டும் எடுத்துப் போட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தேன். பார்த்தீர்களா?
கிருஷ்ணா சார்,
நடிகர் சிவக்குமாரின் பேஸ்புக் பக்கம் பதிவு சுவையாக இருந்தது. அப்போதைய காபி, சாப்பாடு, முடி திருத்தும் கட்டணம் விலையை பார்த்தால் பெருமூச்சு வருகிறது. நன்றி.
ரவி சார்,
//இன்று மருத்துவ மனையில் பிறப்பதால் அடிக்கடி மருத்துவ மனைக்கு போகிறோம்//
சிந்திக்க வைக்கும் வார்த்தைகள். நீங்கள் கூறியுள்ள கதைகளும்.
கருவின் கருவை முதல் பாகத்தை வெற்றிகரமாக முடித்ததற்கும் அசாத்திய உழைப்புக்கும் பாராட்டுக்கள்.
அன்பே வா படத்தில் சிம்லாவுக்கு ஓய்வுக்காக செல்லும் மக்கள் திலகம், பர்ஸில் பணத்தை கத்தையாக திணிப்பதை பார்த்து திரு.நாகேஷ் அவர்கள் , ‘சார், கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. நமக்கு தொழில் நோட்டு அடிக்கிறதா?’ என்று தியேட்டரே சிரிப்பால் குலுங்க கேட்பார். அது மாதிரி நான் கேட்கிறேன். ‘உங்களுக்கு சைடுல நவரத்ன பிஸினஸ் உண்டா?’ (சாரி சார். மன்னிக்கவும். விளையாட்டுக்கு கேட்டேன்) நவரத்ன மாலையில் பாடல்களோடும் கருத்துக்களோடும் இல்லாமல் நவரத்னங்களைப் பற்றியும் அபூர்வ தகவல்களை தந்து அசத்தி விட்டீர்கள். பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.
கல்நாயக்,
எங்கே ரொம்ப நாளா காணோம்? பூ பாடல்கள் என்னாச்சு? வேண்டுமானால் நீங்கள் சின்னவர்தான் என்பதை ஒப்புக் கொண்டுவிடுகிறேன். கூச்சப்படாமல் வாருங்கள்.
குமார் சார்,
இணையதளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட தங்களின் தங்கத்தோணியிலே பதிவும் மற்றும் சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களின் பதிவும் அருமை.
சின்னக்கண்ணன்,
நீங்கள் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் பதிவுகளில் இருந்து தெரிகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் அளிப்பதாய் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
21st June 2015, 05:20 PM
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ...
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். பி.பி.எஸ். தேன்குரலில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் பாடும் ‘இளமை கொலுவிருக்கும்...’ பாடல். (சுசீலா அவர்களின் குரலில் சாவித்திரி அவர்கள் பாடும் காட்சியை பெண்கள் தினத்தில் சின்னக்கண்ணன் பதிவிட்டதாக நினைவு. நான் சொல்வது பி.பி.எஸ் பாடுவது) மனதை மயக்கும் பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில் நாமே நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற உணர்வு. கவிஞரின் அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் வரிகள்.
இந்தக் காட்சியில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் காதல் மன்னர் என்பதை நிரூபித்திருப்பார். நீச்சல் குளத்தில் அவரது ஜலக்ரீடை தாங்க முடியாது. கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் குளத்தில் மேலேயிருந்து குதிக்கும்போது பின்னால் திரும்பி நின்றபடி டைவ் அடிப்பார்.
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே...
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும் மனம் வருமா
...எவ்வளவுதான் பொன் நகையும் பொருட்களும் இருந்தென்ன?
அவையெல்லாம் இனிய மொழி பேசுமா? பூவைக்குத்தான் அவை மாலையிடப் போகிறதா?
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா
...செல்வம் நிலையற்றது என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் கவிஞர். அதை அனுபவபூர்வமாய் உணர்ந்தவர் கவிஞர். அப்போதெல்லாம் இந்தியாவில் ஜனாதிபதிக்குத்தான் அதிக சம்பளம். இப்போது போல இல்லை. அதனால்தான் கவிஞர் ஒருமுறை தன் நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். ....‘இந்திய ஜனாதிபதியை போல சம்பளம் வாங்குகிறேன். இந்தியாவைப் போல கடன்பட்டிருக்கிறேன்’’ என்று தனது நிலையைக் கூட கவித்துவமாய் குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட நிலையற்ற செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? என்று கேட்கிறார். அமுது நமக்கு எப்படி கிடைக்கப் போகிறது? நாம் என்ன தேவர்களா? சோறுதான். ஆனால், இன்முகத்துடன் சிரித்தபடி மனைவி அந்த சோற்றை பரிமாறினாலே அது அமுதாம். நயமான உவமை.
இயற்கையின் சீதனப் பரிசாய் விளங்கும் பெண்களின் பல சிறப்புகளை கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடமாக விளங்கும் வார்த்தைகள்.
‘அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ’
பெண்களுக்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும் தாய்மை என்பதுதான் பெண்மையின் உயர்ந்த சிறப்பு. அந்த தாயன்புக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லையே.
உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் கூட தான் மிகவும் நேசித்த காதலி (கடைசி நேரத்தில் மணந்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டபோது (தற்கொலை செய்யவில்லை என்று இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது) மார்போடு ஒரு புகைப்படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அது இவா பிரான் படமல்ல. அவரது தாயின் படம். இது ஒன்றே போதுமே, கல்லுக்குள்ளும் ஈரம் வைக்கும் தாயின் சிறப்பை விளக்க.
சின்னக்கண்ணன்,
குழந்தை பாட்டோடு வருகிறேன் என்றேன். குழந்தைகள் பாட்டை போட்டு விட்டேன்....... என்ன பார்க்கிறீர்கள்? பள்ளி ஆசிரியையாக வரும் சாவித்திரி அவர்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாடலையும் ரசித்தபடியே அருங்காட்சியகத்தை பார்வையிடுவார். அங்கு மீ்ன் தொட்டியில் உள்ள மீன்களை பார்த்தபடி எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் பாருங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Richardsof
21st June 2015, 05:35 PM
http://i58.tinypic.com/5fnjiq.jpg
PLAY BACK SINGERS P.LEELA ..GHANTASALA ...S.JANAKI
Richardsof
21st June 2015, 05:37 PM
http://i61.tinypic.com/2uh5rty.jpg
P.SUSEELA - GHANTASALA - S.JANAKI
Richardsof
21st June 2015, 05:39 PM
http://i62.tinypic.com/2ebznso.jpg
SPB- GS- PBS
Richardsof
21st June 2015, 05:40 PM
http://i61.tinypic.com/qybl2w.jpg
ACTRESS SAVITHRI
Richardsof
21st June 2015, 05:41 PM
http://i59.tinypic.com/246jtq8.jpg
Richardsof
21st June 2015, 05:42 PM
http://i59.tinypic.com/14il6xe.jpg
THEN PRIME MINISTER LB SASTHRI-1966
ACTRESS DEVIKA
Gopal.s
21st June 2015, 05:53 PM
உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் கூட தான் மிகவும் நேசித்த காதலி (கடைசி நேரத்தில் மணந்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டபோது (தற்கொலை செய்யவில்லை என்று இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது) மார்போடு ஒரு புகைப்படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அது இவா பிரான் படமல்ல. அவரது தாயின் படம். இது ஒன்றே போதுமே, கல்லுக்குள்ளும் ஈரம் வைக்கும் தாயின் சிறப்பை விளக்க.
கலை வேந்தன்,
வருகைக்கு நன்றி.
ஹிட்லர் பற்றி வேண்டுமென்றே மோசமான கருத்தாங்கங்கள் பரப்ப பட்டு ,அவருக்கு கடன் பட்ட ஜெர்மன் மக்களையும் வாயடைக்க செய்தது.
தனிப்பட்ட முறையில் ஹிட்லர் ஒரு ஒழுக்க சீலன். தாயின் மீதும்,தாய்நாட்டின் மீதும் சொல்லொணா பற்று.சுத்த சைவர் .எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கேளிக்கையில் நாட்டம் இல்லாதவர். ஊழல் கிடையாது. பெண் பித்தன் கிடையாது. நேரத்தை மதிப்பவர்.
வெர்சேல் உடன்பாடு அநியாயமானது. ஜெர்மன் மக்களை அடக்கியாள மற்றவர் செய்த சதி. பத்தே உறுப்பினர் கொண்ட கட்சியில் பின்னணியில்லாமல் நுழைந்து, சில வருடங்களில் ஜெர்மனியின் ஆட்சியை பிடித்தவர். முதல் ஆறு ஆண்டுகள் அவர் தலைமையில் ஜெர்மனி கண்ட வளர்ச்சி ,எந்த ஆட்சியிலும் நினைத்தும் பார்க்க முடியாதது. இரண்டாம் உலக போருக்கு அவரை காரணமாக சொன்னாலும்,போருக்கு பின் அனைத்து பொருளாதாரம்,தொழில்துறை,விஞ்ஞானம் எல்லாம் எல்லா நாடுகளிலும் வளர்ச்சியே பெற்றது.(நம் சேர சோழ மன்னர்களை போல உபயோகமற்ற போரல்ல)
அவரின் கொலை வெறி தாக்குதல், யூதர்களை பற்றி முழு ஐரோப்பாவுக்கும் இருந்த வெறி அவர் மூலம் நிறைவேற்ற பட்டது. முழு உலக மனசாட்சியும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். தவறுதான் எனினும் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கும் அநீதியை எதில் சேர்க்க?இன்னொன்று தெரியுமா,டைம் பத்திரிகை ஹாலோகாஸ்ட் பற்றி வாயே திறக்கவில்லை அப்போது.(தெரிந்தும்)
வரலாறு திரிக்க படுகிறது. களப்பிரர் ஆட்சி இருண்ட காலம் என்று நாம் படித்திருப்போம். ஆனால் மூவேந்தர் ஆட்சியில் நிலமெல்லாம் கோவில் அல்லது மேல்சாதி கையில். களப்பிரர் வந்து நிலசீர்திருத்தம் செய்து உழைக்கும் மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தனர். பிறகு ஆட்சி மாறிய பிறகு அவை பறிக்க பட்டு திரும்பவும் மேல்சாதி கையில்.களப்பிரர் ஆட்சி பற்றிய வரலாறு திட்டமிட்டு துடைத்தெறிய பட்டாலும், ஒரே ஒரு பாடல் குறிப்பு ,மேற்கண்டதை குறித்து நிற்கிறது.களப்பிரர் காலமே உழைப்போரின் பொற்காலம்.
இன்னொன்று .நான் பட்டங்களை உபயோக படுத்தி பெருமை படுவதில்லை என்று சிறு வயதில் முடிவெடுத்த காரணம். என்று எல்லா தொழில் செய்வோரும் தங்கள் பெயரின் முன் தங்கள் தொழிலை குறிப்பிட்டு பெருமை கொள்ளும் காலம் வருமோ,அன்றே நாம் மருத்துவர்,ஆசிரியர் என்று தொழில் குறித்து பெயருடன் போடலாம்.அல்லது ஜாதி குறிப்பை போல தொழில் சார்ந்த அடை களும் தவிர்க்க படவே வேண்டும்.(சில தொழில்களை பற்றி தவறான புரிதல் தொடரும் வரை)
madhu
21st June 2015, 06:05 PM
ஆனால் பாடல் மனதில் பதிந்த அளவிற்கு காட்சி பதியாமல் அம்பேல். சுரத்தே இல்லாமல் ஜெய் பாடுவது, சம்பந்தமே இல்லாமல் விஜி பாடல் முழுக்க செயற்கையாக சிரித்துக் கொண்டே இருப்பது, ஒரே ஒரு மரம், அதன் பின்னால் ஆர்ட் இயக்குனரின் கை வண்ணத்தில் வரையப்பட்ட நிழலுருவு மரங்கள் என்று பாடலுக்கான காட்சியமைப்பு போர்தான்.
வாசு ஜி
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காமெரா கட் செய்யாமல் ஒரே ஷாட்டில் எடுத்த பாடல் என்பதுதான் இந்தப் பாடலின் தனித்தன்மை. அந்தக் காலத்தில் இந்த அளவு புதுமையாகச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்திருப்பதால் அந்த ஒரே மர செட்டை மன்னித்து விடுங்கள்.
Gopal.s
21st June 2015, 06:35 PM
பாருங்கள் நண்பர்களே சின்ன கண்ணனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் ,பல பெயர்களாம்?இவரை யாராவது கண்டிக்கவா முடியும்?(என்னை தவிர?)
இது ஒரு சாதாரண சுவாரசியம் கூட்டும் உத்தி. அத்தனை பெயர்களும் அவருடையதே (ஆதிராம்) என்று வைத்து கொண்டாலும்,எல்லா பெயரிலும் சிவாஜி ரசிகராகத்தானே இனம் காட்டி கொண்டார்?என்ன பிரச்சினை என்றே புரியவில்லை. பன்முக எழுத்து திறன் கொண்ட ரா.கி.ரங்கராஜன் போன்றோர் கடைபிடித்த நடைமுறை உத்தித்தானே?
அன்றைய வாசகர்களுக்கு இதை பற்றி தெரிவிக்கவும் இல்லையே?
Gopal.s
21st June 2015, 06:49 PM
தொடரும் தவறுகள்.
பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை இனம் காட்டிய தி.க வின் இளம் எழுத்து மற்றும் நடிப்பு புயல்கள் விவரமற்று முட்டாள்தனமாக மத நம்பிக்கைகளை நாடகம் மூலம் பரப்பினர்.
ரத்த கண்ணீர் என்ற நாடகம் திருவாரூர் தங்கராசு எழுதி, எம்.ஆர்.ராதா நடித்தது. இது பகுத்தறிவு வாதிகள் நடத்திய நாடகமாக அறிய படுகிறது. இதை விட அபத்தம் வேறெதுவும் இல்லை.
1)அநீதியை தட்டி கேளுங்கள் என்கிறது பகுத்தறிவு. எதிராக கொதித்தெழுங்கள் என்பது பகுத்தறிவு. தாயை உதைத்தவனை,மனையாள் கெடுத்தவனை,கெட்ட விஷயங்களில் தோய்ந்தவனை ,விதி தொழு நோயால் தண்டிப்பது படத்தின் கரு.இது மத நம்பிக்கைக்கு ஈடானது.
2)அப்படியே விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் வேசிகளை நாடியவன் வெட்டை நோய், மேக நோய் வர வாய்ப்புள்ளதே தவிர தொழு நோய் வரவே வாய்ப்பில்லை.
3)தொழுநோய் கடவுளின் தண்டனை என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை ஒட்டியது ,இந்த படம் போகும் போக்கு.
ஆனால் ஒரே சீர்திருத்தம் மனைவிக்கு மறுமணம்.
எப்படி எல்லோரும் கவனிக்காமல் விட்டனர்?(தி.க) ஆனால் சுவாரஸ்ய படமே.
rajraj
22nd June 2015, 02:04 AM
Happy Father's Day ! :)
rajeshkrv
22nd June 2015, 03:05 AM
கோபால், குமார் மற்றும் பலர் . இது மதுர கான திரி. இங்கே சண்டை வேண்டாம்
அவரவருக்கு தனிப்பட்ட அஞ்சல் உள்ளதே அங்கே வைத்துக்கொள்ளுங்களேன் உங்கள் சண்டையை.
ஏன் இங்கே வந்து பலரும் உங்கள் வாக்குவாதத்தை படிக்க்வேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவு செய்கின்றீர்கள்.
இந்த திரி பாடல் பற்றிய திரி .. ப்ளீஸ் பாடல்களை தொடரவிடுங்கள்
Gopal.s
22nd June 2015, 05:07 AM
பூச்சாண்டி உஷ்.... சமத்தா சாப்பிடலைன்னா ,அப்புறம் அந்த ஒத்த கண்ணன்கிட்டே பிடிச்சு கொடுத்துடுவேன்.
vasudevan31355
22nd June 2015, 07:03 AM
வாசு ஜி
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காமெரா கட் செய்யாமல் ஒரே ஷாட்டில் எடுத்த பாடல் என்பதுதான் இந்தப் பாடலின் தனித்தன்மை. அந்தக் காலத்தில் இந்த அளவு புதுமையாகச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்திருப்பதால் அந்த ஒரே மர செட்டை மன்னித்து விடுங்கள்.
மதுண்ணா!
நன்றி! இதுவரை எனக்குத் தெரியாது. இப்போது உங்கள் மூலமாக அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி. உங்கள் பதிவைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை பார்த்தேன். உணர்ந்தேன். மன்னிப்பைவிட அப்போதைய புதிய முயற்சிக்கு பாராட்டியே விடலாம். தங்கள் உடல்நிலை எப்படியுள்ளது? இறைவன் தங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நலமுடன் இருக்க ஆசி தருவான். நன்றி மதுண்ணா.
vasudevan31355
22nd June 2015, 07:12 AM
http://www.families.com/wp-content/uploads/media/100_01.jpg
ரவி சார்!
'கருவின் கரு' நூறு பதவுகள் அற்புதமாக முடித்து மீண்டும் அரும் சாதனை புரிந்துள்ளீர்கள். அசுர உழைப்பு. எவ்வளவு அருமையான தாய்மை நிறைந்த தகவல்கள்! அதற்கேற்ற பாடல்கள். முத்தாய்ப்பாய் மாணிக்கங்கள், கோமேதகங்கள், பவழங்கள். சாதனை பதிவுகள் என்பது மட்டுமல்ல இவ்வளவு குறுகிய காலத்தில் என்பதும் பெரும் சாதனை.
இரண்டு நாட்களாய் ரொம்ப பிஸி. அதான் கொஞ்சம் லேட்.
தங்கள் பொன்னான உழைப்பிற்கு நன்றிகள் 1000.
நூறுக்கு நூறு மார்க் வாங்கிய தங்களின் 'கருவின் கரு'விற்கு அடுத்து நீங்கள் தரப் போகும் அடுத்த அமர்க்களத்திற்கு பெயர் என்ன?
vasudevan31355
22nd June 2015, 07:39 AM
கலை சார்,
பாராட்டிற்கு நன்றி. ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகளை ரசித்ததற்கும் நன்றி!
//‘நீராழி மண்டபத்தில்’ பாடல் பதிவுக்கும் நன்றி. அந்த பதிவை திரு.எஸ்.வி. எங்கள் திரியில் மீள்பதிவு செய்து, அதை நான் மீண்டும் எடுத்துப் போட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தேன். பார்த்தீர்களா?//
பார்த்தேன் சார். அப்போதே பார்த்து விட்டேன். அதற்கும் தங்களுக்கு என் நன்றி!
கலை சார்,
அழகான பாடலை எடுத்து அதைவிட அழகாக அப்பாடலை அலசியுள்ளீர்கள். 'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்' படப் பாடல்கள் எல்லாமே அருமை. குறிப்பாக நீங்கள் பதிந்துள்ள இளமை கொலுவிருக்கும் பாடல்.
நீங்கள் சொன்னது போல அப்போதே நீச்சல் குளக் காட்சிகளில் தூக்கல்:)...அதாவது கிளாமர் தூக்கல்தான். உங்கள் குழந்தைப் பாட்டு இணைப்பு சாமர்த்தியத்தையும் ரசித்தேன்.
தாய்மை பற்றி அப்பாடலில் வந்திருக்கும் வரிகளைப் பற்றிய தங்கள் விளக்கமும், அதற்கு தோதாய் ஹிட்லரின் கதையும் அருமை.
நல்ல பாடலை நல்ல கருத்துக்களோடு தந்ததற்கு நன்றி!
rajraj
22nd June 2015, 09:04 AM
From Anarkali(1955)
jeevithame sabalamo........
http://www.youtube.com/watch?v=ltl4zpyX-2c
From Telugu version Anarkali(1955)
jeevithame saphalamu.........
http://www.youtube.com/watch?v=Nmho6PcQ61M
From the Hindi original Anarkali(1953)
Yeh zindagi usiki hai......
http://www.youtube.com/watch?v=1eFso_5-bFc
A song in the same tune from Kaveri
en sindhai noyum theerumaa....
http://www.youtube.com/watch?v=ODjPNvmvHWM
A few weeks back the pomegranate bushes in our backyard started blossoming. Now they are fruits. Hope the birds leave some for us. The blossoms reminded me anarkali meaning pomegranate bloom. Strictly kali in Sanskrit means bud.
Enjoy !
vasudevan31355
22nd June 2015, 10:26 AM
பூச்சாண்டி உஷ்.... சமத்தா சாப்பிடலைன்னா ,அப்புறம் அந்த ஒத்த கண்ணன்கிட்டே பிடிச்சு கொடுத்துடுவேன்.
ஒத்த கண்ணன் மொரட்டுப் பய.:) கொலை கூட செய்யத் தயங்க மாட்டான்.:) பாசத்துக்குக் கட்டுப்பட்டவன். கொடுவா எடுத்தா குலை தள்ளிய வாழைகள் கும்பல் கும்பலாய்ச் சாயும்.
புடிச்சிக் கொடுக்க போலீஸ் நண்பன் என்ன பாடு பட்டான்னு பச்சப் புள்ளையும் சொல்லுமே.:)
ஆனா அன்பு... அன்பு ஒன்னுக்குத்தான் கட்டுப் படுவான் ஒத்த கண்ணன். என் உயரில் கலந்த கண்ணன். எங்கள் அண்ணன். நடிப்பின் மன்னன். குணத்தில் அவனே இவன். இவனே அவன்.
Russellrqe
22nd June 2015, 03:51 PM
தமிழ் திரை உலகில் மறக்க முடியாத தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில் நடை பெற உள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து 16 படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டவர் . தேவரின் எம்ஜிஆர் படங்கள் அனைத்திற்கும் கே வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்துள்ளார் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . தமிழ் திரை உலகின் மறக்க முடியாத மனிதர் .
மறக்க முடியாத பாடல்கள் சில
1. ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
2. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
3.காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
4.ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
5.தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
6. தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
7.என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
8.அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
9.மக்களை ஒருவன் மதிப்பது கடமை
மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை
துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்
துணை இல்லாவிடில் திறமையும் தூங்கும்.. தூங்கும்
10.எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனியாருக்கு இங்கே கிடைக்கும்
11.கன்னத்தில் என்னடி காயம் -
இதுவண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு -
பனிக்காற்றினிலே வந்த வெடிப்பு
12.வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும்
13நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
14.மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..
15. நடப்பது அறுபத்தெட்டுஇது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு?
16.ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க் கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க் கணும்
uvausan
22nd June 2015, 04:53 PM
கருவின் கரு - 102
பாகம் 2 - தந்தை
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150622-WA0001_zpsgzqtiic8.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150622-WA0001_zpsgzqtiic8.jpg.html)
uvausan
22nd June 2015, 04:54 PM
கருவின் கரு - 102
பாகம் 2 - தந்தை
மாணிக்க வாசகர் தன் திருவாசகத்தில் இறைவனை " என் தந்தையே - உனக்கு ஒப்பாக சொல்ல ஒருவரும் இல்லை " கீழ்கண்டவாறு " பிடித்த பத்தில் சொல்கிறார் "
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
தந்தை தாயினும் கருணை உடையவன் - வெளிபடுத்துவதில்லை - எதையுமே ஒரு கடமையாக அவன் எடுத்துக்கொள்வதால் , அவனுக்கு அங்கே எதிர்பார்ப்புக்கள் இல்லை . மகன் , மகள் உயர்வடைய வேண்டும் வாழ்க்கையில் என்பது ஒன்றே அவனுடைய சிந்தனை , செயல்பாடு .. தன்னலம் பார்க்காதவன் . தாயின் பெருமைகளை கூறிய நாம் , தன்னலம் கருதாமல் நம்மை வளர்த்த தந்தையின் பெருமைகளை பாகம் இரண்டில் பார்ப்போம் -- இந்த பாகம் இந்த திரியில் உள்ள எல்லா நல்ல உள்ளம் கொண்ட அனைத்து தந்தையகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்
Gopal.s
22nd June 2015, 04:55 PM
குமார்,
தேவர் படங்களில் ரசிக்க கூடிய ஒரே அம்சம் (only saving Grace )கே.வீ.மகாதேவன் பாடல்கள் மட்டுமே. எனக்கு பிடித்த பாடல்கள்.
1)காதல் எந்தன் மீதில் என்றால்
2)எவரிடத்தும் தவறுமில்லை
3)என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்.
4)ஆண்டவன் உலகத்தின் முதலாளி
5)சீட்டு கட்டு ராஜா ராஜா
6)வெள்ளி நிலா முற்றத்திலே
7)உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
8)ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
9)காவேரி கரையிருக்கு
10)தொட்டு விட தொட்டு விட தொடரும்
11)கன்னத்தில் என்னடி காயம்
12)தொட்டால் எங்கும் போன்னாகுமே
13)ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்
14)காட்டுக்குள்ளே திருவிழா
Gopal.s
22nd June 2015, 05:03 PM
ரவி,
வாழ்த்துக்கள். தாங்கள் தந்தை குலத்தையும் மதிப்பதற்கு.
தந்தைகள் போற்ற படுவதில்லை. சகித்து கொள்ளவே படுகிறார்கள் என்பதை பொய்யாக்கிய நடிகர்திலகத்தின் சில படங்கள், சேரனின் தவமாய் தவமிருந்து தவிர தந்தைமையை நாம் போற்றியதேயில்லை. தாய்மை என்பது உள்ளுணர்வு.(Basic Instinct ).தந்தைமை என்பது தியாகத்தால் கட்டமைக்க படுவது. தன் உணர்ச்சிகளை,ஆசைகளை தீய்த்து கொண்டு குடும்பத்துக்காகவே வெந்து மடிந்த பலரை அறிவேன்.
தாய்க்கு நூறு என்றால் தந்தைக்கு நூற்று ஓரு பதிவுகளாவது வேண்டும் உன் கைவண்ணத்தில். ஒரு வரி விடாமல் படிக்க நானிருக்கிறேன்.ஜமாய் ராஜா.
uvausan
22nd June 2015, 05:05 PM
கருவின் கரு - 102
பாகம் 2 - தந்தை
உறவுகள் மாறிக்கொண்டே இருக்கும் - அதை நாம் உணர்வதில்லை - 5 வயதில் மகன் சொல்லுவான் " எங்க அப்பாதான் சூப்பர் அப்பா !" - இதே பாத்து வயதானவுடன் அந்த மகன் சொல்லுவான் " எங்க அப்பா நல்லவரு , அப்பப்ப கத்துவாரு ! " - தன் பதினைந்தாவது வயதில் " அம்மா , உங்க வீட்டுக்காரரிடம் சொல்லிடு , அப்பப்ப என் ரூட் இல் வராரு , மரியாதை இல்லை "
20 வயதில் ----- " எப்படி அம்மா ?1 எப்படி ?! இந்த ஆளப்போய் கல்யாணம் செய்துக்கிட்ட ? 30 வது வயதில் -----" சார் ! நான் என் அப்பாவோட பேசறதில்லை . நான் என்ன செய்தாலும் தப்பு என்கிறார் சார் ! இந்த ஆளோட எவன் பேசுவான் ?"
இதே 40 வயதில் " அப்பா கத்திக்கிட்டே தான் இருப்பாரு ஆனால் நல்லவரு !!" அவனுக்கே 50 வயதாகி விட்டால் சொல்லுவான் " எங்க அப்பா எங்களை எப்படி வளர்த்தார் தெரியுமா ? my daddy is great ! "
எங்க அப்பா கிரேட் என்று 5 வயதில் சொன்னது , திரும்பி வருவதற்கு 45 வருடங்கள் ஒரு மகனுக்குத் தேவைப்படுகிறது - இதுதான் மாற்றம்
நம் தந்தை செய்தவைகள் சரியே என்று நாம் சொல்லும் தருணம் வரும் போது , நாம் செய்வதெல்லாம் தவறு என்று சொல்ல நமக்கு நம் பிள்ளைகள் வந்துவிடுகிறார்கள் !! மாற்றங்கள் என்பது ஒரு கழிவு நீரைப்போல - அந்த நீர் நதியில் கலக்கின்றது - நதி ஓடுவது நின்று விட்டால் பிறகு அது நதி இல்லை , ஒரு சாக்கடைத்தான் ! எந்த மாற்றம் வந்தாலும் நான் பயணிக்கிறேன் என்று இருப்பவன் தான் தந்தை - அவனுக்கு சோர்வு வருவதில்லை ! தோல்வியும் வருவதில்லை .........
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் --- என்ன அழகான பாடல் - ஒரு சிங்கத்தின் கைகளிலே ஒரு குட்டி சிறுத்தை தாலாட்டப்படுவதைப் இங்கே பார்க்கிறோம்
https://youtu.be/ayXXXujt3Fo
uvausan
22nd June 2015, 05:20 PM
திரு கலை - முதலில் பிடியுங்கள் என் பாராட்டை - 800 பதிவுகள் - பாதி பதிவுகள் பலரை பாராட்டவே செலவழித்து விட்டீர்கள் . நவரத்தின வியாபாரம் நான் செய்வதை எப்படியோ கண்டு பிடித்து விட்டீர்கள் - எங்களுக்கு branches கிடையாது - முழு வியாபாரமும் ஹைதராபாத் இல் தான் - நீங்கள் வந்தால் 20-30% தள்ளுபடி தர முயற்ச்சிக்கிறேன் - எல்லா deal உம் cash இல் தான் - கொஞ்ச நாளில் வியாபாரத்தை இன்னும் விவர்தி செய்து துபாயில் தங்கி விடலாம் என்று யோசனை ......
சார் , நவரத்தினங்களை உயர்த்துவது அதன் தனிப்பட்ட குணங்கள் - இவைகளைப்பற்றி சொல்லாவிட்டால் அதைவிட அன்னை உயர்ந்தவள் என்று சரியாக என்னால் சொல்லமுடியாமல் போய்விடுமோ என்ற ஒரு பயத்தில் நவரத்தினங்களை அதிகமாக விவரித்தேன் அவ்வளவு தான் - படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி
uvausan
22nd June 2015, 05:24 PM
வாசு - உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - நீங்கள் உற்ச்சாகப்படுத்தவில்லை என்றால் என்னால் ஒரு பதிவாவது இங்கு போட்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே !
uvausan
22nd June 2015, 05:28 PM
திரு கோபால் - மிகவும் நன்றி - நல்ல பதிவுகளை நீங்கள் பாராட்டிய தவறியதே இல்லை . ஒருவித பயத்துடன் தான் என் பதிவுகளை இங்கு இடுகிறேன் - உங்கள் அலசலில் என் பதிவுகள் தடையாக வந்து விடக்கூடாதே என்றுதான் .... "படிக்காத மேதை " என் அலசலை மீண்டும் பதிவிட்டதற்க்கும் என் மனமார்ந்த நன்றி .
uvausan
22nd June 2015, 05:37 PM
ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்காக - "திரையில் பக்தி" தொடரவேண்டும் என்பதற்காக ----
"தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றி வேல் - தெய்வ பக்தி உள்ளவர்க்கு கைகொடுக்கும் வீர வேல் ----"
How God Answers our Prayers?
A True Incident
Dr. Ahmed, a well-known cancer specialist, was once on his way to an important conference in another city where he was going to be granted an award in the field of medical research.
He was very excited to attend the conference and was desperate to reach as soon as possible. He had worked long and hard on his research and felt his efforts deserved the award he was about to obtain.
However, two hours after the plane took off, the plane made an emergency landing at the nearest airport due to some technical snag. Afraid, that he wouldn't make it in time for the conference, Dr. Ahmed immediately went to the reception and found that next flight to the destination was after ten hours. The receptionist suggested him to rent a car and drive himself down to the conference city which was only four hours away.
Having no other choice, he agreed to the idea despite his hatred for driving long distances.
Dr. Ahmed rented a car and started his journey. However, soon after he left, the weather suddenly changed and a heavy storm began. The pouring rain made it very difficult for him to see and he missed a turn he was supposed to take.
After two hours of driving, he was convinced he was lost. Driving in the heavy rain on a deserted road, feeling hungry and tired, he frantically began to look for any sign of civilization. After some time, he finally came across a small tattered house. Desperate, he got out of the car and knocked on the door. A beautiful lady opened the door. He explained the matter and asked her if he could use her telephone.
However, the lady told him that she doesn't have a phone or any electronic gadget but told the doctor that if could come inside till weather improves.
Hungry, wet and exhausted, the doctor accepted her kind offer and walked in. The lady gave him hot tea and something to eat. The lady told him that he can join her for prayers for which dr Ahmed smiled and said that he believe in hard work only and told her to continue with her prayers.
Sitting on the table and sipping the tea, the doctor watched the woman in the dim light of candles as she prayed next to what appeared to be a small baby crib.
Every time she finished a prayer, she would start another one. Feeling that the woman might be in need of help, the doctor seized the opportunity to speak as soon as she finished her prayers. The doctor asked her what exactly she wants from the God and enquired if God will ever listen or listen to her prayers. He further asked about the small child in the crib for whom she was apparently making a lot of prayers.
The lady gave a sad smile and said that the child in the crib is his son who is suffering from a rare type of cancer and there is only one doctor Ahmed who can cure him but she doesn't have money to afford his fee and moreover Dr Ahmed lives in another far off town. She said that God has not answered her prayer so far but said that God will create some way out one day and added that she will not allow her fears to overcome her faith.
Stunned and speechless Dr Ahmed was in tears which were rolling down his cheeks. He whispered, God is great and recollected sequence of events. ....there was malfunction in the plane, a thunderstorm hit, and he lost his way; and all of this happened because God did not just answered her prayer but also gave him a chance to come out of materialistic world and give some time to the poor hapless people who have nothing but rich prayers.
https://youtu.be/JF7lwmfaNTs
Gopal.s
22nd June 2015, 06:41 PM
கல்யாண மண்டபம் படத்தில் பீ.பீ.எஸ் -சுசிலா இணைவில் (கே.வீ.எம் இசை) ரவிச்சந்திரன் -மாலதி இணையில்.(அசப்பில் ஈ.வீ.சரோஜா மாதிரி இருப்பார்). ரவி ,நடிகர்திலகத்துக்கு அடுத்த தமிழக ஆணழகன். இந்த உடையிலும் அசத்தல். பாட்டுக்கு தகுந்த மாதிரி அடக்கி வாசிக்கிறார். படு பாந்தமான பாடல். படமாக்கம். எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.
https://www.youtube.com/watch?v=KwAm_UuufDc
Gopal.s
22nd June 2015, 08:38 PM
Breathless -Jean Luc Godardt - French -1960.
இவர் ஒரு விமரிசகர்,நடிகர்,சினிமாடோ கிராபர் ,திரைகதையாசிரியர்,எடிட்டர்,இயக்குனர் தயாரிப்பாளர்.(உங்களுக்கு ராஜேந்தர்,பாக்யராஜ் ஞாபகம் வந்தால் டெட்டால் விட்டு குளித்து விட்டு வாருங்கள்)
கோடர்ட் ,தரமான படம் என்ற பழைய கோட்பாட்டை தகர்த்தவர். புதுமை விரும்பி.புது இயக்குனர்களால் சோதனை முயற்சி படங்கள் வர பிரயத்தனம் மேற்கொண்டவர்.இருத்தலியல் (existentialism )மார்க்ஸிஸம் இரண்டிலு ஈடுபாடு கொண்டவர். பிற்கால படங்களில் ஒரு மனிதம் கலந்த போராட்ட முரண்களை மார்க்ஸீய பின்னணியில் அணுகியவர். அரசியலை படங்களில் பேசியவர். அந்த கால நியூ வேவ் படங்களின் முன்னோடிகளான ட்ரூபோ ,ரெஸ்னாய் இவர்களுடன் இணைந்து பிரெஞ்சு படங்களை உலக அளவில் தர படுத்தியவர்.
நாம் பார்த்த ,பார்த்த இருக்கிற உலக இயக்குனர்கள் scorsese ,Tarantino ,Soderberg ,betrolucci ,pasolini ,karvai போன்றவர்கள் இவரால் உந்த பட்டு உருவானவர்களே.
இந்த படம் மைக்கேல் என்ற இளம் குற்றவாளி, கார்திருட்டில் ,ஒரு போலிசை சுட்டு விட்டு ,தப்பிக்கும் ஓட்டத்தில் பேட்ரீஷியா என்ற அமெரிக்க இளம் பெண்ணை (தெருவில் பேப்பர் விற்கும் ,journalism படிக்கும் மாணவி)கண்டு ,அவளால் அவளிருப்பிடத்தில் ஒளித்து வைக்க படுகிறான்.அவன் இத்தாலிக்கு தப்பி செல்ல பண முயற்சியில் இறங்கி, அந்த பெண்ணையும் வச படுத்துகிறான்.(seduction )அவனால் கர்ப்பமாகும் பெண்ணே ,அவனை காட்டியும் கொடுத்து அவன் சாவுக்கு காரணமாகிறாள். கடைசியில் சாகும் போது அவன் சொல்லும் வரிகள் படத்துக்கு முத்தாய்ப்பு.
ஒரு சாதாரண கதையை எடுத்து,அதனை நோக்கமில்லாமல் செலுத்தி,பல வித digressions என்று சொல்ல படும் திருகு வேலைகள் செய்து, புனித நோக்கங்களின் பின்னாலுள்ள நேரத்தின் அர்த்தமின்மை என்பதை புதிய பாணியில்,அலட்டாமல்,சுவாரஸ்யமாக சொன்ன படம். காட்சிகளின் புதுமை,பலம், jump cut என்ற எடிட்டிங் பாணி (இதன் பிறகே பிரபலம் அடைந்தது. சிகப்பு ரோஜாக்கள் ஞாபகம் உள்ளதா).இந்த படத்தை உலக அளவில் பேச படும் படமாக்கியது.
இயக்குனரின் பிற படங்கள் A Woman ,Contempt ,Week End போன்றவை.
RAGHAVENDRA
22nd June 2015, 09:14 PM
ரவி
இறை வரிசையில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் உள்ளத்தால் தாயின் அன்பிற்கும் பாசத்திற்கும் எள்ளளவும் குன்றாத தந்தையின் பங்கினைப் பற்றிய தங்கள் கருத் தொடர் நெஞ்சில் பெருந்தொடராய் பாதிப்பேற்படுத்தும் என்பதுறுதி.
தொடருங்கள்.
RAGHAVENDRA
22nd June 2015, 09:15 PM
ராஜேஷ்
திரையில் பக்தி தொடரில் அபூர்வமான பாடல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
uvausan
22nd June 2015, 09:19 PM
ரவி
இறை வரிசையில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் உள்ளத்தால் தாயின் அன்பிற்கும் பாசத்திற்கும் எள்ளளவும் குன்றாத தந்தையின் பங்கினைப் பற்றிய தங்கள் கருத் தொடர் நெஞ்சில் பெருந்தொடராய் பாதிப்பேற்படுத்தும் என்பதுறுதி.
தொடருங்கள்.
நன்றி சார் .... உங்கள் பாராட்டைப்பெறாமலேயே பாகம் இரண்டை ஆரம்பித்து விட்டேனே என்று கவலைப்பட்டேன் - தக்கசமயத்தில் பாராட்டுக்களைக்கொடுத்து உற்சாகபடுத்தி விட்டீர்கள் . மீண்டும் நன்றி
RAGHAVENDRA
22nd June 2015, 09:20 PM
அபூர்வ கானங்கள்
சிலர் தழுவல் என்பார்கள். சில சமயங்களில் ஒரே மாதிரி எண்ண ஓட்டத்தில் படைப்பாளிகளின் படைப்புகள் அமைந்து விடும் என்பார்கள்.
ஆனால் ஒரே மாதிரி எண்ண ஓட்டங்களுக்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா தெரியவில்லை.
பாடல்கள் அருமையாக உள்ளன. அதை மறுக்க முடியாது.
1. கானல் நீர் படத்தில் பானுமதி அவர்களின் இசையமைப்பில் அவர் பாடிய பாடல்
https://www.youtube.com/watch?v=WKC3N9Ny-6Q
2. காசி திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் அருமையான பாடல்
https://www.youtube.com/watch?v=KKCK7zpXo8Q
rajeshkrv
22nd June 2015, 10:26 PM
ரவி ஜி
திரையில் பக்தி தொடரும்.
ராகவ் ஜி
ஆம் அபூர்வமான பாடல்களும் தொடரும் .. நன்றி
rajeshkrv
23rd June 2015, 03:45 AM
திரையில் பக்தி -7:
http://www.sruti.com/images/papanasam.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/M.K.Thyagaraja_Bhagavathar.jpg/220px-M.K.Thyagaraja_Bhagavathar.jpg
திரையில் பக்தி என்பது ஒருவேளை இவர்களிடமிருந்து தான் ஆரம்பித்ததோ
ஆம் பாப நாசம் சிவனும் தியாகராஜ பாகதவர் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக்கூட்டணி
எண்ணற்ற பாடல்கள் இன்றளவும் பிரபலம்.
அப்படி ஒரு பக்தி ரசம் சொட்டும் பாடல் தான் திரு நீலகண்டர்(1939)’ல் வந்த
சிதம்பர நாதா திருவருள் தா தா என்ற பாடல்
சிவனைப்பற்றி சிவனே எழுதிய பாடல் . இசை வேந்தர் தியாகராஜ பாகவதரின் குரலில் நம்மை பரவசப்படத்தான் வைக்கிறது.
சிதம்பர நாதா திருவருள் தாதா
சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன்
சிதம்பர நாதா ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
பதஞ்சலியும்
பதஞ்சலியும் புலியும் பதஞ்சலியும் புலியும்
பதஞ்சலியும் புலியும் பதஞ்சலியும்
பதஞ்சலியும் புலியும் பணியும் குஞ்சித பதனே
குஞ்சித பதனே சஞ்சிதமகலாதா
குஞ்சித பதனே சஞ்சிதமகலாதா
சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன்
சிதம்பர நாதா ஆஆஆஆஆ
நன்று தீதும் அறியேன் நொந்தேனே
நன்று தீதும் அறியேன் நொந்தேனே
ஞானமில்லேன் உன்னை நம்பி வந்தேனே
நன்று தீதும் அறியேன் நொந்தேனே
ஞானமில்லேன் உன்னை நம்பி வந்தேனே
மன்றிலாடும் மணியே மன்றிலாடும் மணியே
மன்றிலாடும் மணியே மன்றிலாடும் மணியே
மன்றிலாடும்
மன்றிலாடும் மணியே செந்தேனே
வாதா அறுவகைத் தீயில் வெந்தேனே
வாதா அறுவகைத் தீயில் வெந்தேனே
சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன்
சிதம்பர நாதா ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
https://www.youtube.com/watch?v=aI9AFL7Rg_0
Gopal.s
23rd June 2015, 05:05 AM
திரையில் பக்தி -7:
http://www.sruti.com/images/papanasam.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/M.K.Thyagaraja_Bhagavathar.jpg/220px-M.K.Thyagaraja_Bhagavathar.jpg
திரையில் பக்தி என்பது ஒருவேளை இவர்களிடமிருந்து தான் ஆரம்பித்ததோ
ஆம் பாப நாசம் சிவனும் தியாகராஜ பாகதவர் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக்கூட்டணி
எண்ணற்ற பாடல்கள் இன்றளவும் பிரபலம்.
ராஜேஷ்,
சிதம்பர நாதா ஒரு அற்புத பாடல். எம்.கே.டி குரல் வளம் தனி. எம்.கே.டி-பாபநாசம் சிவன்- ஜி.ராமநாதன் இணைவு சங்கீதத்துக்கு கொடை .கர்நாடக சங்கீதம் பரிச்சயமாகாத காலத்திலேயே (பினாட்கட்களின் self taught வகைதான் நான்)இவர்களுடைய சொப்பன வாழ்வில்,அன்னையும் தந்தையும் தானே,தீன கருணாகரனே நடராஜா ,வதனமெ சந்த்ர பிம்பமோ, மன்மத லீலையை போன்ற பாடல்களை அவ்வளவு ரசித்திருக்கிறேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி.
rajraj
23rd June 2015, 05:20 AM
Rajesh,
Good to see MKT songs here. If you want lyrics in a hurry please visit MKT thread in memories of yesteryears section. :)
uvausan
23rd June 2015, 07:33 AM
மிகவும் அருமை ராஜேஷ் . என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் . என்ன குரல் வளம் - இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் - சிவன் அவர்களின் " நானொரு விளையாட்டுப் பொம்மையா " பாடலும் மிகவும் பிரசித்தம் . கேட்டுருக்கிண்டீர்களா ?
ராகம் நவரஸ கன்னட தாளம் ஆதி
பல்லவி
நானொரு விளையாட்டு பொம்மையா - ஜகன்னாயகியே உமையே உந்தனுக்கு (நானொரு)
அனுபல்லவி
நானிலத்தில் பல பிறவி எடுத்து திண்டாடினது போதாதா உந்தனுக்கு (நானொரு)
சரணம்
அருளமுதைப் பருக அம்மா அம்மாவென்றலுருவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுள்ளம் இரங்காதா உந்தனுக்கு (நானொரு)
வரிகள் நம் இயல்பான வாழ்க்கையின் ஒரு எதிரொலி ......
uvausan
23rd June 2015, 07:34 AM
Good Morning :)
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Fathers-Day-Quotes-From-Son-In-English_zpsnxghyx4v.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Fathers-Day-Quotes-From-Son-In-English_zpsnxghyx4v.jpg.html)
uvausan
23rd June 2015, 07:40 AM
கருவின் கரு - 103
பாகம் 2 - தந்தை
உண்மை சம்பவம் 14
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அதிகமாக அப்பாவுடன் நான் பேசியதில்லை - அவர்கள் திருமணம் செய்துகொண்டு 18வருடங்களுக்குப் பிறகுதான் பிறந்தேன் - என்றுமே அப்பாவிடம் ஒரு வித பயம் . ஏதாவது விவாதித்தால் , உடனே மரியாதை தெரிகிறதா பார் உன் மகனுக்கு - எதிர்த்துப்பேசுகிறான் என்பார் . எல்லாமே எனக்கு அம்மா தான் - கல்லூரியில் , அந்த ஸ்டேட் லேயே முதல் மாணவனாக தேர்வானேன் --- நல்ல பெயருடன் காதலும் கேட்க்காமலேயே வந்தது ---- பானு சந்தித்த முதல் நாளிலேயே அம்மா, அப்பாவை மறக்க வைத்துவிட்டாள் ---காதல் வளந்தது - உள்ளே பயமும் வளர்ந்தது - அப்பாவிடம் எப்படி சொல்வது ? -----
அம்மாவிடம் ஓடினேன் - ஆச்சாரம் மிகுந்தவள் - தன் மருமகளைப்பற்றி அவளை சுற்றி ஒரே பெரிய கற்பனைக்கோட்டையையே கட்டி வைத்திருந்தாள் . ஒரே நிமிஷத்தில் அதைப்போட்டு உடைக்கப்போகிறேன் -- அப்பா ---- கேட்கவே வேண்டாம் - ஒரு பூகம்பத்தை வீட்டுக்குள் ஏற்படுத்திவிடுவார் ---
அம்மாவிடம் மெதுவாக பானுவின் புகைப்படத்தைகாட்டினேன் - ஏதோ கிழித்துப்போட்ட பேப்பரை பார்த்ததுபோல அம்மா அதை பார்த்துவிட்டு ரசம் கொதிக்கிறதா என்று பார்க்க சென்றுவிட்டாள் ---
முதல் முயற்ச்சியே தோல்வி ..... பானுவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தால் ------ ஒருவேளை அம்மாவிற்கு பிடித்து விட்டதென்றால் அப்பாவை அவள் சமாதனம் செய்துவிடுவாள் ----
இரண்டாவது கட்டம் - பானுவை வீட்டிற்கு கூடிக்கொண்டு வந்தேன் அப்பா வீட்டில் இல்லாத சமயத்தில் --- அம்மாவிடம் அறிமுகம் செய்தேன் --- வீட்டுக்கு யார் வந்தாலும் செய்ய படும் அதே உபசரணைகளைத்தான் அம்மா அவளுக்கும் செய்தாள் - பானு சென்ற பிறகு அம்மாவிடம் ஒரு மாறுதலும் இல்லை -- ஒரு பதிலும் இல்லை .சில மாதங்கள் செலவழிந்து விட்டது - பானுவை மறக்க முடியவில்லை - புதிய படிப்பிலும் நாட்டம் இல்லை - இவ்வளவு வருத்தமாக இருந்தாலும் ஏனோ தாடி மட்டும் வளரவே இல்லை .
அம்மாவிடம் இருந்து செய்தி வந்தது - " ராஜன் உனக்கு பெண் பார்த்தாகிவிட்டது - உடனே புறப்பட்டு வரவும் -அம்மா !"
மனம் கணத்தது - என் வாழ்க்கையை என் விருப்பபடி அமைக்ககூடாதா ? அப்பா அம்மா பிறகு எதற்க்காக ??? " என்னவோ கேள்விகள் - விரைந்தேன் வீட்டுக்கு - நான் ஒன்றும் ஒரு கைபொம்மை அல்ல என்று சொல்ல ---அங்கே நான் கண்ட காட்சி --- நிச்சியதார்த்தம் எனக்கும் , என் உள்ளத்தில் இருக்கும் பானுவுக்கும் தான் ---- எப்படி இது ? அப்பா எப்படி ஒத்துக்கொண்டார் ? ஒன்றுமே புரியவில்லை - ஒரு பக்கம் எல்லை இல்லாத சந்தோஷம் , மறு பக்கம் அப்பாவை சரியாக புரிந்துகொள்ளவில்லையே என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை ... என் கதவை யாரோ தட்டினார்கள் -- அப்பா தான் நின்று கொண்டிருந்தார் --- " ராஜன் ஒரு சந்தோஷத்தைப் பெற நாங்கள் 18 வருடம் தவம் இருந்தோம் - உன் சந்தோஷத்தை ஒரு நொடியில் அழித்து விட எப்படி எங்களுக்கு மனம் வரும் ?
உன் வாழ்க்கை என்பது ஒரு காத்தாடியில் கட்டப்பட்ட ஸ்ட்ரிங் யைப்போல , அந்த ஸ்ட்ரிங் யை வெட்டி விட்டால் , காத்தாடி இன்னும் சுதந்திரமாக பறக்கும் , இன்னும் உயரே பறக்கும் -- சற்று நேரத்தில் ஒய்ந்து கீழே விழுந்து விடும் - உறவுகளும் , நமது பண்பாடுகளும் , நண்பர்களும் , குடும்பமும் உன் வாழ்க்கை என்கிற காத்தாடியில் கட்டப்பட்டுள்ள ஸ்ட்ரிங் - அதை நீ நீக்க நினைத்தால் அந்த கீழே விழும் காத்தாடியின் நிலைமை தான் உனக்கும் . நீ காதலிப்பதை தவறாக சொல்லவில்லை - உன் வயது அப்படி -- ஆனால் ஸ்ட்ரிங் காக நாங்கள் இருக்கிறோம் - கவலைப்படாதே !" "Never go away from culture, family, friends and relationships as they help keep you stable while you are flying high."
அப்பா !!--- எவ்வளவு நேரம் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேன் என்று இன்று வரை கணக்கு போட முடியவில்லை - அப்பா தந்த தைரியத்தால் இன்னும் கீழே விழாமல் மேலே உயர உயர பறந்து கொண்டிருக்கிறேன் ......
https://www.youtube.com/watch?v=OlE0EAbVZcY
uvausan
23rd June 2015, 07:47 AM
கருவின் கரு - 104
பாகம் 2 - தந்தை
இவர் மனத்தில் தான் எத்தனை ஆசைகள் - தனக்கு ஒரு மகன் பிறப்பான் , அவன் தன்னைப்போலவே இருப்பான் --- நல்ல இடத்தில் பிறக்க குழந்தைகளுக்கும் கொடுத்து வைக்க வேண்டும் - அதிகமாக இருக்கும் இடத்தில் பிறந்தால் பெற்றவர்கள் குப்பைத்தொட்டியை நாடும் காலமாக மாறிக்கொண்டு வருகிற இந்த உலகத்தில் அன்பை சொரியும் ஒரு தந்தை கிடைத்து விட்டால் அந்த குழந்தையின் வளர்ச்சியில் குறைவேது ??
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்
ஹேய்..
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளின் பொருள் தேடிச் செல்வான்
நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று
ஏழை முகம் பார்த்து சொல்வான்
ஏழை முகம் பார்த்து சொல்வான்
(எனக்கொரு மகன் பிறப்பான் )
கல்லைக் கனியாக்க கனவை நனவாக்க
கையில் ஏர் கொண்டு வருவான்
சாந்தி வழி என்று காந்தி வழி சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான்
உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
(எனக்கொரு மகன் பிறப்பான் )
https://www.youtube.com/watch?v=DGpjKCDashs
uvausan
23rd June 2015, 07:59 AM
கருவின் கரு - 105
பாகம் 2 - தந்தை
இங்கே பாருங்கள் - இவர் மனம் ஒடிந்து ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ -- என்று பாடுகிறார் - இரு பாடல்கள் , ஆனால் கருத்து ஒன்றே ! தன் இயலாமை , முடியாமை - இந்த ஆமைகளின் நடுவே அற்புதமாக பிறந்த ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது - காதலில் பெருமை இல்லாத கடமையில் ஈன்ற ஒரு குழந்தையை எப்படி பேணி பாதுக்காப்பது என்ற கவலை ---- இருந்தாலும் சந்தோஷத்தை அவரால் மறைக்க முடியவில்லை - வார்த்தைகளில் வேதனை - உள்ளத்தில் ஒரு இனம் புரியாத ஆனந்தம் - கலந்த நடிப்பு , பாடல் , கருத்துள்ள வரிகள் - இந்த குழந்தையும் புண்ணியம் செய்த குழந்தைதான் இப்படி ஒரு தந்தை கிடைக்க
மண்வளர்த்த பொறுமை எல்லாம் மனதில் வளர்த்தவளாய், கண்மலர்ந்த பெண்மயிலை நான் அடைந்தேன்.. நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம்வரை தாய்மனதை காத்திருப்பேன்.. தங்கமகனே!
https://youtu.be/CSD1juEt_eY
RAGHAVENDRA
23rd June 2015, 09:44 AM
ரவி
தந்தை பாடல்களில் ஊடே நுழைந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பகிர்ந்து கொள்ள தாங்கள் அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.
ஒரு தந்தை தன் பிள்ளையை எப்படியெல்லாம் மனதில் நேசிக்கிறான், அதுவும் சிறு வயதில் தாயை இழந்து தான் வளர்க்கும் பிள்ளையின் மேல் அவனுடைய பாசம் எந்த அளவிற்கு இருக்கிறது.. இது போன்ற சூழ்நிலை பலருடைய வாழ்வில் நேரிட்டிருக்கலாம். சிலரோ அல்லது பலரோ, சந்தர்ப்பத்தின் வசமாகவோ அல்லது தேவைக்காகவோ மறுமணம் செய்வதுண்டு. அப்போது தன் குழந்தையை சிலர் எப்படி வளர்ப்பதெனத் தெரியாமலோ அல்லது எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டோ இருக்கலாம். இது சராசரி ஆண்களின் நிலைப்பாடாக கடந்த காலங்களில் இருந்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி எத்தனையோ பேர் தன் உயிருக்குயிரான மனைவியின் மேல் தாங்கள் வைத்துள்ள அன்பின் காரணமாக மறுமணம் செய்து கொள்ளாமல் தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளார்கள். அப்படிப்பட்ட தந்தைமார்களின் மனநிலையை சித்தரிக்க இதை விட சிறந்த பாடல் இருக்கவே முடியாது எனக் கூறலாம்.
இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் பாடகர் திலகத்தின் குரலில் பொழியும் பாசத்தை அப்படியே உணர்வு பூர்வமாக திரையில் வடித்துள்ள நடிகர் திலகம் தமிழகத்தின் பொக்கிஷம் என்பதற்கு இப்பாடல் மிகச்சிறந்த உதாரணம்.
இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் முக உணர்வுகளைப் பற்றித் தனியாக நடிகர் திலகம் திரியில் Definition of Style தொடரில் பின்னர் காண்போம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த வசீகரமான முகத்தை வைத்துக் கொண்டு டூயட், சண்டை என சாமான்யமான விஷயங்களை செய்து வணிக ரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தால் ......
இந்தப் பாட்டு மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வில்லையென்றால் அங்கே மனதே இல்லையென்று பொருள்.
https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM
பாடல் வரிகளே சொல்லி விடும்
நான் பெற்ற செல்வாம் நான் பெற்ற செல்வம்
நலமான செல்வம் தேன்மொழி பேசும்
சிங்காரச் செல்வம் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்
தொட்டால் மணக்கும் ஜ்வ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
தொட்டால் மணக்கும் ஜ்வ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் நீ
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்
அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
பண்பே அறியாப் பாவியர்கள்
பண்பே அறியாப் பாவியர்கள்
வாழுகின்ற பூமியிது நீ அறிவாய் கண்ணே
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்...
நன்றி யூட்யூப் இணைய தளம்
இதே போன்று தன் பிள்ளையைப் பற்றி மனைவியும் கணவனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இப்பாடலும் தந்தையின் மேன்மையை மிகச் சிறப்பாகக் கூறுகிறது. ஒவ்வொரு வரியும் என்ன அற்புதமான தத்துவத்தைக் கூறுகிறது..
பணம் படைத்தவன் படத்திலிருந்து, மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
http://www.inbaminge.com/t/p/Panam%20Padaithavan/
vasudevan31355
23rd June 2015, 09:57 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
11
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்'
http://i.ytimg.com/vi/Z9rjDWeGfQM/hqdefault.jpg
பாலா தொடரில் மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்களின் படப் பாடல். பத்மினி பிக்சர்ஸ் 'தேடி வந்த மாப்பிள்ளை'(1970)படத்திலிருந்து.
அக்மார்க் எம்.ஜி.ஆர் டிரேட் மார்க் பாடல். ஒரு வித்தியாசம். பாடகர் திலகத்திற்குப் பதிலாக பாலா.
பெரும்பாலும் எம்.ஜி.ஆர் அவர்களின் இன்ட்ரோ பாடல்களை டி.எம்.எஸ் அவர்கள் பாடக் கேட்டு பழகிப் போன காதுகளுக்கு அதுவும் சுறுசுறு பாடலை பாலா பாடிக் கேட்டதில் தனி சுகம் இருந்ததை, இருப்பதை மறுக்க முடியாது. கொஞ்சம் குரல் பொருந்தாமல் இருந்தாலும், தாய்ப் பாசத்தோடு கொள்கைப் பிடிப்பும் உள்ள பாடல் ஆதலால் பாலாவும் சிறப்பாகப் பாடி இந்தப் பாடலை சூப்பர் டூப்பர் வரிசையில் கொண்டு வந்து சேர்த்து விட்டார். எம்.ஜி.ஆர் அவர்களின் மிகச் சிறந்த பாடலாகவும், மிக இலகுவாக அனைவரும் எளிதில் பாடிப் பார்க்கும் பாடலாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் பாடலாகவும், தாயின் பெருமை பேசும் பாடலாகவும் பல சிறப்புகளைப் பெற்று விட்டது இப்பாடல்.
பாலாவுக்கு இன்னொரு வெற்றி. காதல் பாடல்களில் மட்டுமல்ல...பாசத்தோடு கூடிய வீர உணர்ச்சிப் பாடல்களிலும் தன்னால் சோபிக்க முடியும் என்று நிரூபித்த பாடல் இது.
http://i46.tinypic.com/t68411.jpg
எம்.ஜி.ஆர் அவர்கள் இப்பாடலில் வழக்கத்தை மீறிய சுறுசுறுப்புக் காட்டுவார். நீலக் கலர் பேண்ட்டும், சிகப்புக் கலர் பட்டுச் சட்டையுமாக மனிதர் சின்னப் பிள்ளை போல அங்கும் இங்கும் தாவி, ஆடி, ஓடி, சோபாவைத் தாண்டி, மாடிப்படிகளின் பிடிகளிலிருந்து வழுக்கித் தவழ்ந்து, அன்னை வேடம் பூண்டிருக்கும் எம்.வி ராஜம்மாவையும் சுறுசுறுப்பாக்கி பாடலை மேலும் விறுவிறுப்பாக்குவார்.
அவரது கையில் இருக்கும் நீல நிற சூட்கேஸ் அப்படியே Sony Vaio லேப்டாப்பை நினைவூட்டி இந்தக் காலத்திற்கும் பொருத்தமாய் இருப்பது போல் தோன்றுகிறது. பாடலுக்கேற்றவாறு அதிலேயே தாளமும் போடுவது பொருத்தமே.
கல்லூரிப் படிப்பு முடித்து விட்டு வரும் மகன் தாயிடம் தான் அங்கிருந்து வங்கி வந்த பரிசுக் கேடயத்தை உடனே காட்டாமல் கொஞ்சம் ஆட்டம் காட்டி, போக்குக் காட்டி, தாயின் பெருமை எத்தகையது என்பதை தரணிக்கு உணர்த்தி பாடும் பாடல்.
ரவி சாரின் கருவின் கரு நினைவுக்கு வருகிறது.
http://chennai.localtiger.com/images/movies/tamil/stills/karnan-2.jpg
கலரில் தாய் வேடம் 'ஞான சௌந்தரி'க்கு. கணவர் எடுத்த படத்தில் நாயகனுக்குத் தாய். இவர் கொஞ்சம் உதடுகளை குவித்து சிறுபிள்ளை சாக்லேட் கிடைக்காமல் வெம்புவது போல் அழுவது மிக இயல்பாய் இருக்கும். இரக்கத்தையும் வரவழைக்கும். கர்ணனில் குந்தி தேவியாய் நடிகர் திலகத்துடன் இவர் வாழ்ந்த அந்த வரம் கேட்கும் காட்சி சாகா வரம் பெற்ற காட்சி அன்றோ! இவரைப் பார்த்தாலே குந்தி தேவியாகத்தானே தெரிகிறார்.
வாலி தாயின் பெருமைகளை மகன் விளக்குவது போல அருமையான வரிகளைத் தர, குரலில் பாலா அதைப் புரிந்து கொண்டு இளம் வழுக்கைக்குரலில் இனிமையாகப் பாட, தாய்ப் பாடல் என்றால் அது ஸ்லோவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதியை மாற்றி அதை சுறுசுறுப்பு பாடலாக எம்.ஜி.ஆர் அவர்கள் மாற்றிக் காட்ட, 'மெல்லிசை மன்னர்' எளிமையான, இனிமையான இசை தர, பாடல் ஹிட்ட்டடிக்காமல் வேறென்ன செய்யும்?
http://i.ytimg.com/vi/RvH7gem64nE/hqdefault.jpg
'தேடி வந்த மாப்பிள்ளை' நிஜமாகவே ஒரு ஜாலிப் படம். படம் நெடுக இழையோடும் காமெடி இப்படத்தின் தனிச் சிறப்பு. பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டும் ரகம். எம்.ஜி.ஆர், ஜெயா, ஜோதிலஷ்மி, (படத்தின் மிகப் பெரிய பலம் இவர்...கொடி கட்டிப் பறப்பார் இந்த 'பிக்பாக்கெட் ராணி' ஹீரோயினை பின்னுக்குத் தள்ளி) அசோகன், சோ, மேஜர் என்று அவரவர்களும் ஜாலியாக பண்ணியிருப்பார்கள்.
'மாணிக்கத் தேரில் மரக்கதக் கலசம் மின்னுவதென்ன' பாடலின் சீரியல் விளக்குகளின் அலங்காரம் இப்போது கூட நம்மை வியக்க வைக்கும்.
(கனவுக்காட்சி மின்சார ஒளி அமைப்பு கே.சாத்தையன், கே.ஆர்.பாலகிருஷ்ணன் என்று தனியாகவே டைட்டில் போட்டு எலெக்ட்ரீஷியன்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்)
அது மட்டுமல்ல... எனக்கு மிக மிகப் பிடித்த தொட்டுக் காட்டவா, (பியானோ இசையில் பித்து கொள்ள வைப்பார் மன்னர்) சொர்க்கத்தைத் தேடுவோம் ... தபலா மாமா டோலக்கு பாட்டி, ('பாடகர் திலகம்' போதை கொண்டவன் குரலில் பரவசம் கொள்ள வைப்பார்) இடமோ சுகமானது, (அடடா! என்ன ஒரு பாடல்! என்ன படமாக்கம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்! ஜோதியே பாதி ஆக்கிரமிப்பு செய்வார்.) அட ஆறுமுகம், ராட்சஸியின் குரலில் 'ஆடாத உள்ளங்கள் ஆட' ('ஆடுவது உடலுக்கு விளையாட்டு' 'குமரிக் கோட்டம்' படப் பாடலை நினைவுபடுத்தும் பாடல். இதில் என்ன கொடுமை என்றால் இணையத்தில் சில தளங்களில் இந்தப் பாடலை 'குடியிருந்த கோயில்' படத்தின் பாடல் என்று தவறாக தகவல் தந்துள்ளனர். 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' பாடலால் இந்தக் குழப்பம் போல. கொடுமைடா சாமி!) என்று இனிக்க இனிக்க பாடல்கள். படம் போவதே தெரியாது.
எம்.ஜி.ஆர் படங்களிலிருந்து கொஞ்சம் பாதை விலகி வித்தியாசம் காட்டும் 'கலகல' மாப்பிள்ளை. கலர்ஃபுல் மாப்பிள்ளை.
இத்தனை அம்சங்கள் இருந்தாலும் தன் தனித்துவக் குரலால் பாலாவும் தன் பங்கிற்கு 'வெற்றி மீது வெற்றி வந்து' அவரைச் சாரும்படி செய்து கொண்டது இன்னும் மகத்துவம் அல்லவா!
ஹேட்ஸ் ஆஃப் பாலா.
http://i.ytimg.com/vi/73Ew2YCWqR4/hqdefault.jpg
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பதுண்மை அல்லவோ
பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பதுண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
உண்ணாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் பன்னீராகும்
அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் பன்னீராகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவளால்தான் நனவுகள் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவளால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
https://youtu.be/Z9rjDWeGfQM
Gopal.s
23rd June 2015, 10:10 AM
Thedi vantha mappillai- One of my favourites also.
uvausan
23rd June 2015, 11:04 AM
ரவி
தந்தை பாடல்களில் ஊடே நுழைந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பகிர்ந்து கொள்ள தாங்கள் அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.
என்ன சார் - பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லுகிறீர்கள் ? உங்களுக்கு இல்லாத உரிமையா ?? - இந்த பாடலை நாளை போடுவதாக இருந்தேன் - ஆனால் இவ்வளவு அழகாக நீங்கள் வர்ணித்தைப்போன்று கண்டிப்பாக என்னால் எழுதி இருக்க முடியாது ... மாணிக்க கட்டிலை பாகம் ஒன்றில் கவர் செய்து விட்டேன் ..... நன்றி மீண்டும் , இந்த பாகத்தில் பங்கு ஏற்று கொள்வதற்கு .
uvausan
23rd June 2015, 11:17 AM
வாசு - இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - தாயை புகழும் பாடல் என்பதால் மட்டும் அல்ல - பாடல் முழுவதும் ஒரு positive vibe ஏற்படும் - பாலாவின் குரலும் , ம .தி போன்றே வெகு சுறுசுறுப்பாக இருக்கும் - அந்த காலத்தில் 100க்கு 40 மார்க் வாங்கினவன் கூட தன் அம்மாவிடம் இந்த பாடலைத்தான் பாடுவான் .. இந்த பாடல் மிகவும் பிரபலம் ஆகி தேர்தல் மேடைகளில் பின்பு முழங்க தொடங்கியது --
இப்பொழுதெல்லாம் எங்களால் பாலாவிற்கும் வாசுவிர்க்கும் அதிக வித்தியாசங்களை கண்டு பிடிக்க முடிவதில்லை - இருவரும் தடம் பதித்தவர்கள் - ஒருவர் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார் - இன்னொருவர் அலசி , ஆழமாகத் தோண்டி , பாடல்களை எடுத்துவந்து , தூசிகளை கலைந்து , மெருகு ஊட்டி இந்த திரியில் எல்லோரையும் மயக்கிக்கொண்டிருக்கிறார் ..
Russellrqe
23rd June 2015, 11:19 AM
என் மதிப்பிற்குரிய '' நடமாடும் இசைபல்கலைகழக வேந்தர் '' திரு வாசுதேவன்
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை . ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர் கூட இந்த அளவிற்கு தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் பாடல்களை அனுபவித்து இருப்பார்களா ? என்பது சந்தேகம் .
நடு நிலைமையோடு உணர்வு பூர்வமாக பாடல்களை மிக அழகாக பூமாலை தொடுக்கும் உங்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பாக அன்பு ''மலர் மாலை '' அணிவிக்கிறோம் .
தொடரட்டும் தங்கள் அருமையான பணி .
Russellrqe
23rd June 2015, 11:23 AM
திரு ரவி
மாதா , பிதா , குரு , தெய்வம் வரிசையில் மாதாவின் மகிமைகள் எல்லாம் அருமை .
பிதாவின் மகிமைகளை மிக மகிழ்வுடன் ரசித்து படித்து கொண்டு வருகிறேன் .வாழ்த்துக்கள் .
vasudevan31355
23rd June 2015, 12:43 PM
கோபால்,
'பூத்திருக்கும் விழி எடுத்து' பூரித்து ரசித்தேன்.
வீடியோவில் ஏ.எம்.ராஜா பாடிய பாடல்கள் என்று தவறான தலைப்பு. என்னதான் சொல்வது?
அதே போல மாலதி ஒரு அபூர்வப் பூ. அதிகம் தென்பட்டதில்லை. எம்.எஸ்.மாலதி என்று பெயர். அழகுப் பதுமைதான். பக்கவாட்டில் லேசாக மணிமாலா சாயலும் உண்டு.
இவர் நடிகர் திலகத்துடன் ஒரு படத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட முறைப்பெண் ரோல். சின்னையா சின்னையா என்று நடிகர் திலகத்தை சுற்றி வருவார். என்ன படம் என்று தெரிகிறதா?
vasudevan31355
23rd June 2015, 12:54 PM
குமார் சார்!
வேலைப் பளுவினால் மதுர கானங்கள் திரியில் தங்களை உடனே வரவேற்க முடியாமல் போய் விட்டது. இப்போது அன்புடன் வரவேற்கிறேன். வருக! வருக!
தாங்கள் பழைய பாடல் விரும்பி என்று கேள்விப்பட்டேன். தேவர் படங்களில் இருந்து தாங்கள் தேர்ந்தெடுத்து அளித்த பாடல்கள் பட்டியலையும் பார்த்தேன். அருமை.
தங்களிடம் பழைய பாடல்கள் பற்றிய ஆவணங்கள் இருந்தால் அவற்றை இங்கே பதித்து அனைவரையும் இன்புறச் செய்ய வேண்டுகிறேன்.
தங்கள் அன்பு பாராட்டிற்கு நன்றி. நீங்கள் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிப் பாராட்ட வேண்டாம்.
இங்கு மது அண்ணா, கோபால், ராஜேஷ்ஜி, ராகவேந்திரன் சார், முரளி சார், ராஜ்ராஜ் சார், கிருஷ்ணா போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
குறிப்பாக மது அண்ணா. அவரின் தமிழ் சினிமா மற்றும் பாடல்கள் பற்றிய அறிவு இந்த நிமிடம் வரை என்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அற்புதமான விஷயங்களை தன்னகத்தே கொண்ட மாமனிதர் அவர். அவர் முன்னால் நாங்கள் ஒன்றுமே இல்லை.
மதுர கானத்தில் தங்கள் சேவையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நன்றி!
vasudevan31355
23rd June 2015, 01:00 PM
ரவி சார்,
நன்றி! தந்தையர் தொடருக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். சாதனைகளை சர்வ சாதரணாமாக செய்வது போல் இருந்தாலும் இதன் பின்னால் உள்ள உங்களின் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.
//இவ்வளவு வருத்தமாக இருந்தாலும் ஏனோ தாடி மட்டும் வளரவே இல்லை//.
ரசித்து சிரித்தேன். தந்தையர் தொடரில் ஏராளமான நடிகர் திலகத்தின் பாடல்கள் உண்டு. அதனால் நீங்கள் இன்னும் மகிழ்வுடன் பதியலாம்.
vasudevan31355
23rd June 2015, 01:03 PM
ஆதிராம் சார்,
'நிலவே நீ சாட்சி' பாடலை ரசித்து 'லைக்' இட்டதற்கு மிக்க நன்றி! இந்த மாதிரிப் பாடல்கள் நீங்கள் மிகவும் விருப்பம் கொள்பவை என்று தெரியும். தங்கள் உயர் ரசனைக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
vasudevan31355
23rd June 2015, 01:06 PM
ராகவேந்திரன் சார்,
'நான் பெற்ற செல்வம்' பாடல் அலசல் சுகம். ரசித்துப் படித்தேன். 'பண்பே அறியாப் பாவியர்கள்' என்று நிறுத்தி மீண்டும் பாடும்போது நடுவில் வரும் அந்த இடையிசை உள்ளத்தை உடைக்கும். உருக்கும். மிக்க நன்றி சார்.
இந்தப் பாடலில் நடிகர் திலகம் எப்படி வாயசைக்கிறார் என்று இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் ஒருமுறை பார்த்தாலே போதும். இப்போதெல்லாம் நட்சத்திரங்கள் எங்கே வாய் திறக்கிறார்கள்? டாஸ்மாக் பாரைத் தவிர.
adiram
23rd June 2015, 02:32 PM
டியர் ரவி சார்,
இலக்கியங்களிலும் திரைப்பாடல்களிலும், மேடைப்பேச்சுக்களிலும், பட்டிமன்றங்களிலும் அதிகம் பேசப்படாத, பல நேரங்களில் அறவே பேசப்படாத பரிதாபத்துக்குரிய தந்தைக்குலம் பற்றி தாங்கள் தொடர் துவங்கியிருப்பது மனதுக்கு இதமளிக்கிறது.
ஈன்று புறந்தருதல் தாயின் கடனாயினும் அவனை சான்றோனாக்குதல் தந்தையின் கடன் என்று புற்னானூறு பேசியதை மறந்து இன்று தந்தையர்கள் அறவே போற்றப்படுவதில்லை. பட்டிமன்றப் பேச்சாளிகளின் பார்வையில் தந்தை என்றாலே அவனை டாஸ்மாக் கடை வாசலில் நிற்கும் சில ஆண்களைக்கொண்டு மதிப்பிடும் அவல நிலைதான் உள்ளது. பெரும்பாலான தந்தையரின் தியாக வாழ்க்கை போற்றப்படுவதில்லை.
இந்நிலையில் நீங்கள் துவங்கியிருக்கும் தொடர் மகத்தான ஒன்று என்பதில் ஐயமில்லை.
தந்தையரின் புகழ் பாடும் தொடர் பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Gopal.s
23rd June 2015, 02:37 PM
Cries and Whispers - Ingmar Bergman - Sweden - 1972
ஒரு சிறிய நாட்டில் வசித்து கொண்டு (ஸ்வீடன்)நம்மை விட மிக மிக குறைந்த ஆட்களே பேசும் மொழியில் ,குறைந்த முதலீட்டில்,hollwood ,U .S போல வியாபார நிர்பந்தங்களுக்கு பணியாமல் ,பிரத்யேக படங்களை,யாரோ நம் அந்தரங்கத்தில் ஊடுருவியதை போல பதட்டம் தரும்,சினிமா மட்டுமே கண்டுணரக்கூடிய வார்த்தைகளற்ற மௌன ரகசியத்தை படங்கள் மூலம் பேசியவர் பெர்க்மன். இன்றும் கூட யாராவது நல்ல படம் தந்தால் ,பெர்க்மன் feel வருகிறது (உ.ம் மெட்டி,தேவர் மகன்)என்று சொல்ல வைத்த இயக்குனர் உலக அளவில் பேர் பெற்ற பெர்க்மன்.
நாம் சாவு,நோய் ,இதையெல்லாம் வெறுக்க கற்று, பிரிக்க முடியாத அவைகளுடன் ரகசிய சிநேகம் கொள்ள மறுக்கிறோம். பெர்க்மன் படங்கள் நம்பிக்கை,ஏமாற்றம்,சூன்யம்,மன பிறழ்வுகள்,நோய்,சாவு இவற்றை ஒரு அதீத மனித உணர்ச்சி குவியலுடன் ,ஒரு புதிர் தன்மையோடு ,அழகான கலையுணர்ச்சியோடு ,மனதுக்கு அருகில் சேர்த்தவை.
இந்த படம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு தனி பங்களாவில் ,சாவுடன் போராடும் ஆக்னெஸ் என்ற சகோதரியை பார்க்க வரும் மரியா ,கரீன் என்ற உடன் பிறப்புக்கள்,அன்னா என்ற மத நம்பிக்கையில் ஊறிய பணிப்பெண் இவர்களை சுற்றி படரும்.அமானுஷ்ய உணர்வு தரும் படம். அவள் இறந்து விடுவாளோ என்ற பயம் ஒரு புறம்,இறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். நினைவுகள் பின்னோக்கி போகும் flashback . அவர்களின் சிறுவயது வாழ்க்கை,அது சார்ந்த நினைவலைகள்,எண்ண எழுச்சிகள்,, மரியாவின் டாக்டர் நண்பனுடனான காதல்,தோல்வியில் முடியும் திருமணம்,கரின் தன்னை தானே துன்புறுத்தி,தன பெண்ணுறுப்புக்களை சிதைத்து கொண்டு கணவனை விரட்டி விடும் மிரட்சியான காட்சிகள்,அக்னேஸ் தன்னுடைய அம்மாவின் மீது வைத்த அளவு கடந்த அன்பு என்று போகும்.இதில் தன குழந்தையை சிறு வயதில் இழந்த அன்னா மட்டுமே சற்று நிதானமாக பிரச்சினையை அணுகுவார்.இறந்து விடும் அக்னேஸ் திரும்பி வந்து அவர்களின் நேசத்தையும் ,கவனிப்பையும் யாசிப்பது என்று படம் முடியும்.
பெண்களின் மனோதத்துவம் அற்புதமாக கையாள பட்டிருக்கும்.முழுக்கவும் சிவப்பு விரிப்புகள் ,வெண்ணிற பொருட்கள் என்று வண்ணங்களின் வினோதம் மனோதத்துவ பின்னணியுடன் இணையும். காமெரா மேன் Nykvist மாயாஜாலம் புரிவார்.(ஆஸ்தான கேமரா மேன் ). பெர்க்மென் தன்னுடைய நடிக நடிகைகளை எல்லா படத்திலுமே திரும்ப திரும்ப பயன்படுத்துவார்.(Ullman -நாயகியாய் சுமார் எட்டு படங்களில்).
சினிமா,தொலைகாட்சி,நாடகம் என்று இயங்கிய பெர்க்மன் உணர்ச்சிகளின் குழந்தை. 4 மனைவி,4 துணைவி,கணக்கில்லா பிள்ளைகள் என்று. பின்னாட்களில் வரி ஏய்ப்புக்காக charge sheet பெற்று மன உளைச்சலில்,படங்களை துறந்து நரம்பு தளர்ச்சி நோய்க்கு ஆட்பட்டார்.(பின்னர் விடுவிக்க பட்டாலும்)
மகேந்திரனுடன் இப்படத்தை குறிப்பிட்டே, மெட்டியுடன் ஒப்பிட்டேன். (அவருக்கு DVD கொடுத்தேன்).இதை பேட்டியிலும் குறிப்பிட்டார்.(நடிகராக போகிறார் போல?)
இவரின் ரசிக்க பட வேண்டிய பிற படங்கள் Seventh Seal ,Wild Strawberries ,Persona .
adiram
23rd June 2015, 02:55 PM
டியர் வாசு சார்,
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' பாடலை மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள். அதிசயமில்லை, அது உங்களுக்கு கைவந்த கலை.
பாலாவின் அந்த நாளைய குரலில் பாடல்களைக் கேட்பது தனிச்சுவை. (இப்போது எஸ்.பி.பி.சரண் அந்த்பாடல்களைப் பாடும்போது பாலாவின் அன்றைய குரல் எட்டிப் பார்க்கிறது).
தேடிவந்த மாப்பிள்ளையின் பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாக மனத்தைக் கவர்பவை. 'மாணிக்கத்தேரில்' ஒன்றுதான் சற்று வழக்கமான ஒன்று. அந்தப்பாடலுக்காக சாத்தனூர் அணை பூங்கா முழுவதும் சீரியல் செட் அலங்காரம் செய்யப்பட்டு இரவுக்காட்சியாக படமாக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பு முடிந்தபின்னும் இரண்டு நாட்கள் அந்த அலங்காரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெற்றி மீது பாடலை மெல்லிசை மன்னர், பாலா இவர்களோடு சேர்ந்து எம்.ஜி.ஆரும் அதிகப்படியான சுறுசுறுப்பால் களைகட்டச்செய்வார். அதனால் அந்தப்படத்திலேயே அதிக ஹிட் ஆன பாடலாக இது அமைந்துவிட்டது.
பாடல் ஆய்வின் இடையே நடிகர்திலகத்தின் கர்ணனை செருகியதன்மூலம் உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் நடிகர்திலகம் ஆக்கிரமித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
இன்னொரு திரியில் உங்கள் 'என்னதான் முடிவு' அலசல் அருமை.
அடுத்த பாடல் என்ன?. "பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா'" தானே?.
uvausan
23rd June 2015, 04:39 PM
Cries and Whispers - Ingmar Bergman - Sweden - 1972
நாம் சாவு,நோய் ,இதையெல்லாம் வெறுக்க கற்று, பிரிக்க முடியாத அவைகளுடன் ரகசிய சிநேகம் கொள்ள மறுக்கிறோம். பெர்க்மன் படங்கள் நம்பிக்கை,ஏமாற்றம்,சூன்யம்,மன பிறழ்வுகள்,நோய்,சாவு இவற்றை ஒரு அதீத மனித உணர்ச்சி குவியலுடன் ,ஒரு புதிர் தன்மையோடு ,அழகான கலையுனர்ச்சியோடு ,மனதுக்கு அருகில் சேர்த்தவை. .
மிகவும் அழகாக வர்ணித்துள்ளீர்கள் - வாழ்க்கையின் எதார்த்தங்களை அப்படியே எடுத்துக்கொள்ள இன்னும் நம்மில் பலருக்கு பக்குவம் வருவதில்லை - இப்பொழுது படங்கள் எப்படி வந்தாலும் , கிராபிக்ஸ் என்று தெரிந்தும் கைத்தட்டுகிறோம் - அவர் படங்கள் வந்த ஒரு காலக்கட்டத்தில் அந்த நம் பக்குவம் ஒரு போதுமான முதிர்ச்சியை அடையாமல் இருந்தது வருந்ததக்கதே !
uvausan
23rd June 2015, 05:10 PM
திரு ரவி
மாதா , பிதா , குரு , தெய்வம் வரிசையில் மாதாவின் மகிமைகள் எல்லாம் அருமை .
பிதாவின் மகிமைகளை மிக மகிழ்வுடன் ரசித்து படித்து கொண்டு வருகிறேன் .வாழ்த்துக்கள் .
மிகவும் நன்றி திரு குமார் - முதலில் நீங்கள் இங்கு வந்து பதிவுகள் இடுவதற்கு - பக்கத்து வீடுதான் என்றாலும் நீங்கள் இங்கு வருவதற்கு பல யுகங்கள் ஆகி உள்ளன --- ம .தி யின் படங்கள் மட்டும் அல்லாமல் உங்களுக்கு மிகவும் பிடித்த ந .தி யின் படங்களின் பாடல்களையும் , மற்ற விருப்பமான நடிகர்களின் பாடல்களையும் உங்கள் பாணியில் நீங்கள் சொல்லப்போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம் ....
uvausan
23rd June 2015, 05:20 PM
டியர் ரவி சார்,
இலக்கியங்களிலும் திரைப்பாடல்களிலும், மேடைப்பேச்சுக்களிலும், பட்டிமன்றங்களிலும் அதிகம் பேசப்படாத, பல நேரங்களில் அறவே பேசப்படாத பரிதாபத்துக்குரிய தந்தைக்குலம் பற்றி தாங்கள் தொடர் துவங்கியிருப்பது மனதுக்கு இதமளிக்கிறது.
ஈன்று புறந்தருதல் தாயின் கடனாயினும் அவனை சான்றோனாக்குதல் தந்தையின் கடன் என்று புற்னானூறு பேசியதை மறந்து இன்று தந்தையர்கள் அறவே போற்றப்படுவதில்லை. பட்டிமன்றப் பேச்சாளிகளின் பார்வையில் தந்தை என்றாலே அவனை டாஸ்மாக் கடை வாசலில் நிற்கும் சில ஆண்களைக்கொண்டு மதிப்பிடும் அவல நிலைதான் உள்ளது. பெரும்பாலான தந்தையரின் தியாக வாழ்க்கை போற்றப்படுவதில்லை.
இந்நிலையில் நீங்கள் துவங்கியிருக்கும் தொடர் மகத்தான ஒன்று என்பதில் ஐயமில்லை.
தந்தையரின் புகழ் பாடும் தொடர் பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
திரு ஆதிராம் எங்கே உங்களை தொலைத்து விட்டோமோ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் ஒரு புது பொலிவுடன் வந்ததற்கு நன்றி . உங்கள் பாராட்டுக்கள் மேலும் என்னை மிகுந்த பொறுப்புணர்ச்சி உடையவனாக ஆக்குகிறது . ஒரு சின்ன வேண்டுகோள் -- ஏதாவது நகைச்சுவையுடன் நான் பதிவுகள் போட்டால் அதை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் பாருங்கள் - ஒரு பிரச்சனையும் வராது ..... மீண்டும் என் நன்றி ! பதிவுகளை விடாமல் படிப்பதற்காக ......
vasudevan31355
23rd June 2015, 08:20 PM
இதோ ராட்சஸியின் வெளியே தெரியாத இந்தப் பாடலைக் கேளுங்கள்.
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/1466194_727566720670072_6109904554307139175_n.jpg? oh=dbbf2fde7642880cfed64936040ae7c2&oe=55E8FDCF
சாதாரண வார்த்தைகள் இந்த அபூர்வ பெண்மணியால் எப்படி அழுத்தமாக உச்சரிக்கப்பட்டு நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது என்று. பாடலின் டியூன் சுமார்தான். ஆனால் இந்த அரக்கியின் குரல் அம்சமாய் இதயத்தில் பதிகிறது. பாடலில் பாடி நடிக்கும் இந்த நடிகையின் பெயர் மீராதேவி என்று நினைவு. ராகவேந்திரன் சார் உதவி செய்வார் என்று நினைக்கிறேன். 'தங்க வளையல்' என்ற படத்தில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்க கேட்க சுகமாக இருக்கிறது. குறிப்பாக பாடல் முழுக்க வரும் கிடாரின் ஓசை நம்மை சுண்டி இழுக்கிறது.
மிக மிக மிகத் தெளிவான பாடல்.
சொல்லத் தெரியவில்லை
சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை
சொல்லித் தெரியவில்லை
சொல்லித் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்
சொல்லித் தெரியவில்லை
கட்டிலுக்கு வாய் இருந்தால்
என்ன சொல்லும்
கட்டினவன் மேனிதனை
கட்டச் சொல்லும்
சொல்லத் தெரியவில்லை
சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை
சொல்லித் தெரிவதில்லை
மெட்டியிலே சத்தம் வந்தால்
என்ன சொல்லும்
மெல்ல மெல்ல பாடமெல்லாம்
சொல்ல சொல்லும்
சொல்லித் தெரிவதில்லை
தங்கவளை கைகளிலே
என்ன சொல்லும்
தங்கிவிட கைக்குள் வளை
என்று சொல்லும்
இரவும் விடிந்து விட்டால்
என்ன செய்வாய்
வரவுக்கும் செலவுக்கும்
வாழ்த்துச் சொல்வேன்
சொல்லத் தெரியவில்லை
சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை
சொல்லித் தெரிவதில்லை
https://youtu.be/Xmhd10w0Ouw
uvausan
23rd June 2015, 08:55 PM
Breaking News - CNN-IBN , NDTV , JAYA TV , SUN TV , VENDAR TV , DISCOVERY Channel ---------
நெய்வேலியில் இப்பொழுது தோண்டும் இடமல்லாம் நிலக்கரி கிடைப்பதில்லை - திடுக்கிடும் உண்மை
சில மாதங்களாக நெய்வேலியில் நிலக்கரி தோண்டும் போது கிடைப்பதில்லை என்ற உண்மை இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது - இதனால் நிலக்கரி தட்டுப்பாட்டு ஏற்பட்டு மின்சாரம் உற்பத்தியாவது முழுவதும் நின்று போகலாம் என்ற அச்சமும் மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது - நமது நிருபர் தேவன் வாசு என்ன சொல்லுகிறார் என்று கேட்ப்போம் ...
தேவன் வாசு : சில மாதங்களாக பாலா என்னும் (மர்ம )மனிதர் சுரங்கத்தில் பல ஆயிரம் அடிகளில் பல சிறந்த பாடல்கள் கிடைப்பதாகவும் அதை அவர் புதுப்பித்து உயிர் கொடுத்து வெளி கொண்டு வருவதாகவும் அவர் அதிகம் தோண்டினதால் நிலக்கரி கிடைப்பது நின்றுபோய் வெறும் பழைய பாடல்கள் தான் கிடைப்பதாகவும் கூறியது நினைவு இருக்கலாம் - இன்று நிலக்கரி சுரங்கத்தின் பொறுப்பாளர்கள் இதுதான் உண்மை என்று பகிங்கரமாக ஒத்துக்கொண்டுள்ளனர் - அவர்கள் இனி நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்தின் பெயரை மாற்றி L .R .E பாலா என்று வைக்கப்போவதாகவும் கூறினர் - அவர் அலசல்களை மக்கள் மகிழ்ந்து கேட்பதால் நெய்வேலிக்கும் , ஏன் இந்தியாவிற்க்குமே மின்சாரம் இனி தேவை இல்லை என்றும் உற்சாகத்துடன் கூறினர் - இப்படி எமது நிருபர் தேவன் வாசு கூறினார் ------
RAGHAVENDRA
23rd June 2015, 10:15 PM
வாசு சார்
பிடியுங்கள் வாழ்த்துக்களை.. அட்டகாசமான பாடலைத் தந்து மகிழ்ச்சிக்கடலில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளீ்ர்கள்.
ஈஸ்வரியால் மட்டுமே பாட முடிந்த இது போன்ற பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
இதோ இந்த வரிசையில் இன்னோர் முத்து. ரவியின் பாஷையில் சொல்வதானால் உண்மையிலேயே சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இதுவரை யாரும் அதிகம் கேட்டிராத பாடல்.
கலைநிலவு ரவி, ஷீலா இணையில் மஞ்சள் குங்குமம் படத்திற்குப் பிறகு வந்த அம்மா அப்பா படத்திலிருந்து மாப்பிள்ளை நீயல்லவோ என்ற சூப்பர் பாடல். குரலில் இது போன்ற வித்தைகளை வேறு யாரால் செய்ய முடியும்.
https://www.youtube.com/watch?v=kf0lbaQ7ahg
RAGHAVENDRA
23rd June 2015, 10:34 PM
வாசு சார்
ஒரு அபூர்வமான எஸ்.பி.பி.யின் பாடல். குரலை இழைந்து இழைந்து பாடியுள்ள இப்பாடலை முதன் முறையாகக் கேட்போரும் சொக்கி விடுவர். இப்பாடல் வரிசையில் வரும் போது இதைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதுங்கள். அது வரை நாங்கள் பார்த்தும் கேட்டும் ரசிக்கிறோம். தாங்கள் எழுதியபிறகு அதை உணர்ந்து அனுபவிப்போம்.
ராசி நல்ல ராசி படத்திலிருந்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம்...
https://www.youtube.com/watch?v=EfdIPOgIc_w
RAGHAVENDRA
23rd June 2015, 10:50 PM
இந்தப் பாட்டைச் சொன்னால் தான் அம்மா அப்பா படம் உடனே ஞாபகத்திற்கு வரும். எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குழந்தை குரலில் கொஞ்சும் பாடல். உருகவும வைக்கும். தன் தந்தையையும் தாயையும் தேடும் ஒரு குழந்தையின் கீதம்.
https://www.youtube.com/watch?v=LRzGxKjr114
RAGHAVENDRA
23rd June 2015, 10:58 PM
கே.ஜே.ஜேசுதாஸின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல்
ஒரு குடும்பத்தின் கதை படத்திலிருந்து...
மலைச்சாரலில் ஒரு பூங்குயில்..
https://www.youtube.com/watch?v=QvjZWID8Pxs
RAGHAVENDRA
23rd June 2015, 11:01 PM
நெடுந்தகட்டில் இப்பாடல் இடம் பெறவில்லை என எண்ணுகிறேன்.
ஜீவனாம்சம் படத்திலிருந்து சூப்பர் ஹிட்.. பாடல்..
https://www.youtube.com/watch?v=rrKVYoStFos
RAGHAVENDRA
24th June 2015, 06:46 AM
http://msvtimes.com/images/rare/msv7.JPG
ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் தூங்குகின்ற கவியரசே,
தூங்கியது போதும்.. இறங்கி வாருங்கள்.
உங்கள் பேனா இல்லாமல் மெல்லிசை மன்னரின் ஹார்மோனியம் வாடி வதங்குகிறது..
vasudevan31355
24th June 2015, 07:53 AM
http://i.ytimg.com/vi/waibIlcflEQ/sddefault.jpg
கோபால், ராகவேந்திரன் சார் இருவரும் மிக அழகாக கவிஞரைப் பற்றி சொல்லியிருந்தார்கள். இதோ கவிஞர் நம்மை நம்பிக்கை கொள்ளச் செய்யும் வகையில் எழுதிய அற்புதமான பாடல்.
'பொற்சிலை' என்ற திரைப்படத்தில். சீர்காழியின் குரலில்.
நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
பசியென்று வந்தவர்க்கு புசி என்று தந்தவரை பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்றும் பெண்ணென்று ஆண்டவன் செய்து வைத்த ஜாதியும் இரண்டேயடா
தலைவன் நீதியும் ஒன்றேயடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா
சத்தியத்தின் சோதனையை சகித்துக் கொண்டிருந்தால் வெற்றியைக் காண்பாயடா
அதுவே வேதத்தின் முடிவாமடா
வெற்றிக்கு வித்திடும் கண்ணதாசனின் இந்தப் பாடல் என்னுள் கலந்த ஒரு பாடல்.
காதலா காமமா தத்துவமா தனித்துவமா மதமா மனிதமா... எது வேண்டுமோ எடுத்துக் கொள் என்று இறுமார்ந்து நிமிர்ந்த கவிஞனே!
எழுத்துக்களால் தமிழைச் செதுக்கியவனே!
உன்னை மறப்பது எங்களை மறப்பதற்கு சமம்.
https://youtu.be/doM1ydGU5bw
vasudevan31355
24th June 2015, 07:59 AM
MSVTimes.com.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/papercutting03.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Mellisai%20Mannar%20MSV/papercutting03.jpg.html)
vasudevan31355
24th June 2015, 08:50 AM
http://msvtimes.com/images/rare/msv3.jpg
இன்று பிறந்த நாள் காணும் எம்.எஸ்.வி.
இனிமை என்ற ஒன்றைத் தவிர வேறெதுவுமே எங்களுக்குத் தந்தறியாத நீ நீடுடி வாழ்க!
இந்த மனிதரைப் பற்றி என்ன சொல்ல!
http://chennaionline.com/images/gallery/2014/June/20140624103119/MSV_10.jpg
ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் இவருடைய குரல் வளத்தாலும் என்னைக் கவர்ந்தவர். செம ஜாலியான குரல் இவருக்கு. ஆழ்நிலைப் பாடல்கள் இவருக்கு அல்வா மாதிரி. இதயத்தில் சுளுவாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தி அதிலிருந்து மீள முடியாமல் செய்வார். கன்னாபின்னாவென்று பாடல்களை எடுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கு ஏற்றது மட்டும். ஆனால் அது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியது முடிந்த மட்டும்.
'சம்போ சிவ சம்போ' ஜாலியாகட்டும்...
'அல்லா... அல்லா' அருமையாகட்டும்...
'ஆராதனா'வை வென்ற 'எதற்கும் ஒரு காலம் உண்டு' பின்னணி ஆகட்டும்...
'இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே!" என்று சமநிலை சங்கீதமாகட்டும்...
'கண்டதைச் சொல்லுகிறேன்' என்ற கவிஞனின் நிலையைக் காட்டுவதாகட்டும்...
செம அமர்க்களம்தான்.
ஆனால் மனிதர் உணர்ச்சிப் பெருக்கில் வரிகள் முடிந்து 'ஹோ' என்று இரைச்சல் இட்டாரானால் நம் கண்களில் கண்ணீர் நிச்சயம்.
உதாரணம் ஒன்று சொல்லவா?
https://youtu.be/1uAkUH_2bzc
காவியப் படமான 'காவியத் தலைவி'யில் 'நேரான நெடுஞ்சாலை...ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு' என்று இவர் ஆரம்பிக்கும் போதே குரல் கூராக நம் நெஞ்சைத் துளை போட ஆரம்பிக்கும். இதயமும் சுக்கு நூறாகிப் போகும்.
யாருக்கோ பிறந்த மகளைத் தன் மகளாக பாவிக்கும் ஜெமினி அப்பனின் அன்பை இந்த 'மெல்லிசை' மன்னன் தன் 'வல்லிசை' குரல் பாவத்தால் அழுந்த வெளிப்படுத்தி இமயத்தின் பாரத்தை நம் இதயத்தில் ஏற்றி வைப்பானே!
'இழந்ததோர் சிப்பியில்
வெளிவந்த முத்தினை
என் மகள் என்றழைத்தான்
இதயத்தில் எழுதினான்'
என்று.
இரும்பும் உருகுமே...இந்தக் குரலாலும், அந்த விவரிக்கவே முடியாத உணர்ச்சிப் பெருக்கு இசையாலும்.
உண்மைதான். இவரைப் போன்ற இசையமைப்பாளர் 'எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை'தான்.
ஜாலியான தத்துவத்தை குரல் வடிவில் தருவதிலும் மன்னனே!
ஊரை ஏமாற்றி வாயாலேயே உலையில் போடும் 'மிஸ்டர் சம்பத்'தின் தகிடுததங்களை ஒட்டுமொத்த சமூகத்தின் சாடலாக இம்மன்னன் டைட்டிலிலேயே ஜாலியாக ஹிப்பிகள் குரலுடன் இணைந்து எகத்தாளமாகப் பாடுவானே!
கேளுங்கள்.
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
பச்சைப் புளுகே விற்பனை ஆகுது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
தர்மம் நீதி கற்பனை ஆனது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
பத்து அவதாரம் எடுத்தால் என்ன
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
பாவம் இன்னும் ஆட்டம் போடுது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
நாளும் இப்போ கெட்டுப் போனது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
காலம் எழுதும் தீர்ப்பு என்னவோ
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
(முடித்து விட்டு 'ரீரீரீரி ரரி ரபி பப்பப்பா பபாப்பப்பபப' என்று ஒய்யார சத்தம் எழுப்புவார் பாருங்கள். 'நினைத்தாலே இனிக்கும்')
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
(விசிலின் (விசுவின்) விஸ்வரூபத்தைக் கேட்க மறக்காதீர்கள்)
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
மெல்லிசை மன்னரே! தாசனுடன் நீ சேர்ந்து படைத்திட்ட காவிய கானங்கள்தான் எத்தனை! எத்தனை!
உன் பிறந்த நாளில் உன் பாதம் தொட்டு உன்னை வணங்கி உன்னால் இசை வாழ வாழ்த்துகிறோம்.
https://youtu.be/FMgnnB_h2Yo
Russellrqe
24th June 2015, 10:27 AM
இன்று நம்முடைய திரை உலகின் பொற்கால மூவேந்தர்களின் ஆட்சியில் தளபதிகளாக இருந்த கவியரசர் மற்றும் மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் .
https://youtu.be/YzK2WA8lbGY
https://youtu.be/OgxbMqQvnFU
Russellrqe
24th June 2015, 11:06 AM
இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், ‘மெல்லிசை மன்னர்’ என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதன் (M.S.Viswanathan) பிறந்த நாள் இன்று (ஜூன் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (1928) பிறந்தவர். 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.
l நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.
l சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.
l எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
l பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
l ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.
l கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
l இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.
l ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.
l மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களை தன் இசையால் மகிழ்வித்துவருகிறார். இவரது இசைக்கு மயங்கும் ரசிகர்கள் இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
THANKS - THE HINDU TAMIL
JamesFague
24th June 2015, 12:07 PM
Courtesy: Tamil Hindu
கண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்!
இன்று - ஜூன் 24: கண்ணதாசன் பிறந்தநாள்
அர்த்தங்களின் சுமையற்ற கண்ணதாசனின் வரிகள் தருவது தித்திப்பும் மயக்கமும்…
அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: 'வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'
எத்தனையோ முறை நான் கேட்ட பாடல் அது. அழகான சொற்களைக் கொண்டு நிரப்பப்பட்ட பாடல் அது என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று அந்த மஞ்சள் கொன்றை அந்தப் பாடலை எனக்குத் திறந்து காட்டியது. அந்த மஞ்சள் கொன்றையின் மலர்கள்தான் வசந்த காலத்தின் வைரமணி நீரலைகள் என்று எனக்குத் தோன்றியது. மனம் எவ்வளவு விசித்திரமானது. தனது நினைவறையில் எல்லாவற்றையும் கொட்டிவைத்து, சம்பந்தமில்லாததுபோல் தோன்றும் இரு விஷயங் களுக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதை ஏதோ ஒரு தருணத்தில் திடீரென்று உணர்த்திவிடுகிறது. மஞ்சள் கொன்றை அந்தப் பாடலைத் திறக்க, அந்தப் பாடல் எனக்கு வசந்த காலத்தைத் திறந்தது. நிழற்சாலை ஒன்றின் நடைபாதையில் பரவசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். கொய்யா, மாம்பழம், நாவற்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம் என்று வசந்தத்தின் வெவ் வேறு வண்ணங்கள் அந்த நடைபாதையில் போகும் வழியெல்லாம் தள்ளுவண்டிகளில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. வசந்தம் இன்னும் விரிந்து கொண்டே போனது. அன்று, வசந்தத்துக்கு என் கண்களைத் திறக்கச் செய்தார் கண்ணதாசன்.
காதுகளின் கவிஞன்
கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.
தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, 'போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் 'இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி 'இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, 'இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! 'மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கிறாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
என் வேதனை கூறாயோ?
ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:
தன் கண்ணனைத் தேடுகிறாள்
மனக் காதலைக் கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று
அதனையும் கூறாயோ...
தேன்பனி!
சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் 'மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: 'அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.
பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. 'பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:
'மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு'
(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)
'பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனிபோல நாணம் அதை மூடியதேனோ'
(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) 'முதிராத நெல்லாட ஆடஆட
முளைக்காத சொல்லாட ஆடஆட'
(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)
'இளைய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்'
(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)
தேன்மூடிய சிருங்காரம்
காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், 'அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வளுக்கு, அவன் 'ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப் பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறி விடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:
'தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...
அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்
கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண் டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். 'உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் 'கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.
கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, 'சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே!
உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!
uvausan
24th June 2015, 12:20 PM
கண்ணனுக்கு தாசன் என்ற பெயரை சுமந்தாய் - தமிழ் அன்னைக்கு நீ தொடுத்த மாலைகளை அவள் இன்னும் சுமந்து கொண்டுதான் இருக்கிறாள் ....
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்றாய் - ஒரு கோல மயில் உன் துணையாக இருந்த வேளையில் - இந்து மதத்தின் இருப்பிடத்தை அறிந்துகொண்டாய் - வார்த்தைகளில் வேதாந்தம் விளையாடியது ----
மரணம் இல்லை உனக்கு என்றாய் - நாங்கள் மரணம் அடைந்துவிட்டோம் - நீ இன்னும் வாழ்கிறாய் ; உன் படைப்புகள் வாழும் .
https://www.youtube.com/watch?v=kfj0fXnq5xs
uvausan
24th June 2015, 12:21 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/father-day-poems-from-daughter3_zpsmnrul4lo.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/father-day-poems-from-daughter3_zpsmnrul4lo.jpg.html)......
uvausan
24th June 2015, 01:42 PM
கருவின் கரு - 106
பாகம் 2 - தந்தை
உண்மை சம்பவம் 15
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன .
நேற்றிரவு,
தூங்கும் முன் என் மகன் என்னிடம் கேட்டான் .
"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"எப்ப தூக்கம் வரும்பா?"
"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."
"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
"கடவுள்..."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
"கடிக்காது. கண்ணா .."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
ஏய் ! தூங்க மாட்ட நீ - நாளை அப்பாவிற்கு மீட்டிங் இருக்கு - என் மனைவியின் உண்மையான புலம்பல் ----
"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்...."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"தப்பு செய்ததால்தானே கொசுவை .அடிக்க வேண்டியுள்ளது ." - கண்ணா - ஒரு பாட்டு பாடட்டுமா ??" - கண்ணன் விடுவதாக இல்லை
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்கு பசிக்குது..."
"கொசு இட்லி சாப்பிடுமா?"
"அதெல்லாம் பிடிக்காது..."
"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
" குடிக்காது கண்ணா ..."
என் மனைவி பிரம்பைத் தேடிக்கொண்டிருந்தாள் , என்னை அடிக்கவா , கண்ணனை அடிக்கவா என்று தெரியவில்லை ....
"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
"கேளு செல்லம் "
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்கு பல்லே இல்லை..."
"பிறகு எப்படி கடிக்கும்?"
கேள்விகள் நிற்கவில்லை - என் உறக்கம் நின்று போய்விட்டது - 5 மணிக்கு வைத்த அலாரத்தை தட்டி நானே எழுப்பினேன் ..... எத்தனை கேள்விகள் கண்ணனிடம் ? எவ்வளவு ஆர்வம் கேள்வி கேட்பதில் - பொறுமையை இழந்தால் இந்த மழலையை அனுபவிக்க முடியுமா ? பொறுமை இல்லையெனில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் என்ன அர்த்தம் ? இந்த அரிய நாட்கள் பிறகு எனக்கு கிடைக்காமல் போகலாம் -- டைரியில் எழுதிக்கொண்டேன் ------
காலம் வேகமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கு எடுத்துக்கொண்டதைப்போல ஓடியது . இன்று எனக்கு வயது 80.
கண்ணனுடன் போஸ்டன் இல் இருக்கிறேன் - கண்ணனும் , அவன் மனைவி இந்துவும் இங்கு வேலை செய்கிறார்கள் - என் மனைவி எனக்கு விடை கொடுத்து 5 வருடங்கள் ஓடிவிட்டன . கண்ணனின் வீட்டில் இருக்கும் ஒரு அவுட் ஹௌசில் குடியிருப்பு - எனக்கு கம்பெனி நான் எழுதிய இந்த டைரியும் , கடந்த கால எண்ணங்களுமே ------ கண்ணன் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் என்னுடன் 10 நிமிடங்களாவது செலவழிப்பான் -- மற்ற நாட்களில் அவனை பார்ப்பது முடியாத காரியம் .. அன்று ஞாயிறு - கண்ணன் என்னை பார்க்க வரும் வேலை --- 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன் , வாக்கிங் ஸ்டிக் ரெடி -- மெதுவாக மழைச்சாரல் வேறு - கண்ணன் என்னிடம் வருவதை மழை தடுத்து விடுமோ ?? மழையை சென்னை தமிழில் திட்டினேன் - போஸ்டன் மழை - அதற்க்கு எங்கே சென்னை தமிழ் புரியப்போகிறது - திட்ட திட்ட மழை அதிகமானது .
கண்ணன் வந்துவிட்டான் --- அப்பா மழையாக இருக்கிறது - என் காரில் கொஞ்ச தூரம் போய்விட்டு வரலாம் என்றான் - கண்ணனுடன் வெளியில் போவது எனக்கு முக்கியமில்லை - அவனுடன் 5 நிமிடமாவது சேர்ந்து இருக்க வேண்டும் - இதோ இங்கேயே இருக்கலாம் --- கட்டிலை சுற்றி மருந்துகளாக இருக்கிறது - அவனை எப்படி இங்கே உட்க்கார சொல்வது - மனம் வரவில்லை -- என் டைரியுடன் புறப்பட்டேன் .. டைரி எதற்கு அப்பா - வெறுமன வாருங்கள் ...... டைரி என் கையில் தான் இருக்கும் ---- காரில் அமர கண்ணன் உதவி தேவைப்பட்டது .... பேசாமல் ஒட்டி செல்லும் அந்த சாரதியிடம் சில கேள்விகளை கேட்டேன் - என் எல்லா கேள்விகளுக்கும் உணர்ச்சியற்ற ஒரே பதில் " ம்ம் " - கார் ஒரு இடத்தில் நின்றது - சற்றே இறங்க முயற்சித்தேன் - கண்ணனின் சூடான வார்த்தைகள் அந்த காரின் radiator யை விட அதிகமாக என்னை தாக்கியது ... கூட்டி செல்வதை ஒரு கடமையாக கருதிகிறான் கண்ணன் - அவனுடன் நேரத்தை செலவழிப்பதை பாக்கியமாக கருதுகிறேன் நான் ..... வீட்டுக்குத் திரும்பினோம் - டைரியை மறந்து காரில் விட்டு விட்டேன் .... அடுத்த ஞாயிறு தான் அது எனக்கு திருமா கிடைக்கும் ..... கண்ணனை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை - சற்றே கண்களை மூடிக்கொண்டேன் ----
"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?" --- கண்ணனின் மழலை கேள்விகள் காதுகளில் ரீங்காரம் இட்டன ....... " அப்பா ! ---- " தடித்த குரல் - கண்ணனாக இருக்குமோ ? கண்களைத்திறந்தேன் - அங்கே கண்ணனும் இந்துவும் நின்று கொண்டிருந்தார்கள் - இவ்வளவு சீக்கிரமாகவா இன்னொமொரு ஞாயிறு வந்து விட்டது ? -- அப்பா உங்கள் டைரி --- முதல் தடவையாக படித்தேன் --- ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்துக்கொண்டான் - எவ்வளவு தவறு செய்து விட்டேன் ! என்னை வளர்க்க என்னவெல்லாம் தியாகங்கள் செய்தாய் - எவ்வளவு கேள்விகள் உன்னை கேட்டு புனிதனானேன் -- அவன் வார்த்தைகளை கண்ணீர் தடுத்தது ----- இந்த ஒரு நாளுக்காக என் வயது 90 ஆக மாறினாலும் எனக்கு கவலை இல்லை --- எனக்கு என் கண்ணன் கிடைத்துவிட்டான் ---- அன்று முதல் ஞாயிறு தினமும் வந்தது.
https://youtu.be/Lm12ehPcZaw
uvausan
24th June 2015, 01:52 PM
கருவின் கரு - 107
பாகம் 2 - தந்தை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !
தந்தையே உலகம் என்று சொல்லும் மகள் - அவளையே சுற்றி வரும் தந்தை - இந்த உறவை புரிந்துக்கொள்ள யுகங்கள் தேவைப்படும் - பத்து மாதங்கள் சுமக்கும் தாயின் அன்பு பேசப்படுகிறது - நெஞ்சத்தில் , உயிரில் , எண்ணங்களில் வாழ்க்கை முழுவதும் மகளை சுமக்கும் தந்தை ஏனோ காணாமல் போய் விடுகிறான் --- வேதங்கள் வணங்கும் அந்த உறவை இந்த பாடல் எதிரொலிக்கும் ----
https://youtu.be/RqHeQH-UR-8
uvausan
24th June 2015, 02:01 PM
கருவின் கரு - 108
பாகம் 2 - தந்தை
வெறும் பாசம் கொடுத்து மகன் கெட்டு போய் விடக்கூடாதே என்று கண்டிப்பும் சேர்த்து மகனுக்கு ஊட்டுகிறான் -- அந்த கண்டிப்பு அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் இருக்கும் இடைவெளியை அதிகரித்துக்கொண்டே போகிறது - கிடைக்கும் வெற்றியெல்லாம் அவன் சிந்திய வேர்வைகளிளிருந்து என்பதை மகன் உணரும் போது அவன் அப்பா இருந்த இடம் " TO LET" ஆகி விடுகிறது ------
https://youtu.be/rlodgGOuxkc
uvausan
24th June 2015, 02:11 PM
கருவின் கரு - 109
பாகம் 2 - தந்தை
மகளிடம் தன் உயிரை வைத்திருக்கிறான் இவன் - அவன் மனைவியோ மனதை வேறு யாரிடமோ வைத்திருக்கிறாள் - கணவன் சந்தர்ப்பவச கொலை காரன் - மானத்தை இழக்கிறான் கூடவே மகளின் பாசத்தையும் --எல்லாத்தையும் பொறுத்துக்கொண்ட இவனால் மகளின் வெறுப்பை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை - எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீ தான் என் அன்னை - என் மகளே என்கிறான் ---- மகள் புரிந்துகொள்கிறாள் இறுதியில் - கங்கையில் நீராட வேண்டியவள் தந்தையின் கண்ணீரில் தன் தவறுகளை கழுவிக்கொல்கிறாள் - நடிப்பும் எதார்த்தமும் போட்டி போட்டுக்கொண்டு சிவாஜி என்ற அந்த மாமனிதருக்குள் ஒளிந்துகொள்ளும் ......
https://youtu.be/LEw6U2BhHDI
vasudevan31355
24th June 2015, 03:38 PM
'தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு'
கோபால் சார்!
அடேங்கப்பா!
நம் எத்தனை நாள் கனவு நிறைவேறுகிறது?
எட்டு வயதில் சிலோன் வானொலியில் கேட்டு ரசிக்கத் துவங்கிய பாட்டு. கேட்டுக் கேட்டு மனதில் தங்கிப் புதைந்து போனது. அடிக்கடி கோபால், ராகவேந்திரன் சார் போன்றவர்களுடன் பேசும்போது பூதாகாரமாக வெளியே புறப்பட்டு வரும். அன்று முழுக்க முழுக்க ஆட்சி செலுத்தி விட்டு பின் கொஞ்சம் அடங்கும். இது போல நிறைய தடவை. சம்பந்தம் இல்லாமல் நடு இரவில் ஞாபகத்திற்கு வந்து உயிரை வாங்கும். தூக்கம் கெடுக்கும். அடுத்த நாள் டூ வீலரில் செல்லும்போது கூட பாடலின் முதல் நான்கு வரிகளை உதடு உச்சரித்துக் கொண்டே இருக்கும். பாடல் இடம் பெற்ற படமோ அபூர்வமானது. நடுவில் பார்க்கவே சந்தர்ப்பம் கிடைக்காதது. பாடலும் அப்படியே.
கோபாலும் நானும் பேசும்போது இப்பாடலைப் பற்றி நிறைய தடவை அகமகிழ்ந்து பேசியிருப்போம். இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடி வேறு அமர்க்களம். இருவருக்கும் ரவியைப் பிடிக்கும். அவர் சேட்டைகள் மிகவும் பிடிக்கும்.
எப்போது கிடைக்கும் என்று ஏங்கியிருந்த அந்தப் பாடல் இப்போது தேடுகையில் காணொளியாக கிடைத்தது.
https://lh3.googleusercontent.com/proxy/LIrxmMjTVn8yikRdgva_HHCsvcDN-dzHfhihfkg78zEP-Gsmb8PrmMJ-8Mgp2JdVbFUEzAdMDdWKY0OPLO5TMQ=w426-h320-n
'மெல்லிசை மன்னர்' இசையமைத்த 'ஓடும் நதி' படத்தில் பாடகர் திலகம் பாடிய பாடல். ரவி மனைவி ஷீலாவுடன் துள்ளல் ஆட்டம் போட்டு பாடும் பாடல்.
வரிகள் வளமானவை. ரவி உருவத்தில் திலகத்தின் ஜெராக்ஸ் என்றால் இப்பாடலில் உடையிலும். உள்ளே பனியன் தெரிய வெளியே அதே மெலிதான ஷர்ட். பாடலின் ஆரம்பத்தில் கால்களை முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாக வளைத்து சுழற்றியபடியே பின்னால் செல்வது பின்னல். இது அவருக்கே உரித்தானது.
ஷீலாவுடன் நெருக்கம் அதிகம் தெரியும். ரவியிடம் இன்னொரு அம்சம் பிடிக்கும். அடிக்கடி நிறைய செய்வார். பாடலின் போது லேசாக மார்பு குலுங்க ஷோல்டர்களைத் தூக்கி ஒரு வசீகரச் சிரிப்பை உதிர்ப்பார். ரொம்ப அழகாய் இருக்கும். முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி தொடங்கி இரண்டாவது வரியின் போது அதாவது 'தன்னை நடக்கவிட்டு' எனும்போது இதை நன்றாக கவனிக்கலாம். முடிந்தவுடன் வரும் இசையில் சுழன்று ஆட்டம் போடுவதும் ஜோர்தான். இதுவும் பின்புறமாகத்தான்.
'இழுத்துப் போடுது
ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்'
வரிகளில் ஷீலாவின் ஜடையைப் பின்பக்கம் கைகளால் இழுத்து சுற்றியபடியே பின்னாலேயே ஒரு ஸ்டெப் வைத்து அப்படியே அள்ளுவார். பின்னால் வரும் ஸ்டெப்களும் சர்வ சாதாரணமாக அலட்சியம் காட்டும்.
நீளமுக ஷீலா சீலா மீன் போல் வழு வழு. குட்டைப் பாவாடையுடன் மிஸஸ் ரவிச்சந்திரன் நல்ல ஜோடி.
டி.எம்.எஸ் இளமை ததும்ப அடி பின்னி எடுத்திருப்பார்.
இந்தப் பாடலை சற்று வித்தியாசப் படுத்தியிருப்பார் குரலில். அதாவது மூக்கடைத்த ஜலதோஷம் பிடித்தவர் குரல் எவ்வாறு இருக்குமோ அதே போல பாடியிருப்பார். ஆனால் அவ்வளவு அழகாக இருக்கும். டியூனோ ரொம்ப ரொம்ப அழகு.
அதே போல மூன்று சரணங்களிலும் 'ஒஹஹோ' போட்டு வார்த்தைகளை திரும்ப உடன் சேர்ப்பது இனிமையிலும் இனிமை.
ஒஹஹோ பெண் ஒன்று
ஒஹஹோ கண் ஒன்று
ஒஹஹோ வண்ணங்கள்
ஒஹஹோ எண்ணங்கள்
ஒஹஹோ கண்ணல்ல
ஒஹஹோ பெண்ணல்ல
இப்படி.
ஒரு இடத்தில் 'ஒஹஹோ..ம்ஹூஹூம்' என்று அர்த்தமே இல்லாமல் அசத்தல் ஹம்மிங்.
இந்தப் பாடலில் ஒரு வரி ரொம்ப அமர்க்களம்.
'அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள் பெண்ணல்ல'
கவிஞன் கலக்கிட்டான்யா.
('நான்தான் உன்னிடம் முழுசாக தஞ்சம் புகுந்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டேனே.. அப்புறம் என்னத்துக்கு இவ்வளவு பிகு? அடிமையானவன் கிட்ட போய் ஆதிக்கம் செய்யலாமா?')
சோமபானம், சுரா பானம் எல்லாம் இந்தப் பாட்டுகிட்ட என்ன பண்ணும்? டாஸ்மாக்கையும் மிஞ்சும் டக்கர் பாட்டு.
தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு
தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு
வைரத்திலே தட்டு
மலர்களிலே மொட்டு
பறவைகளில் சிட்டு
பறக்குதடி பட்டு
தரையில் நாட்டியம்
ஆடுது ஆடுது பெண் ஒன்று
இடையின் கோலத்தைத்
தேடுது தேடுது கண் ஒன்று
ஒஹஹோ பெண் ஒன்று
ஒஹஹோ கண் ஒன்று
ஒஹஹோ பெண் ஒன்று
ஒஹஹோ கண் ஒன்று
தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு
பூவிதழோ கிண்ணம்
புன்னகையோ மின்னும்
மாந்தளிரோ கன்னம்
மனமில்லையோ இன்னும்
இழுத்துப் போடுது
ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்
வளைத்துப் போடுது
ஆசையில் ஓடிய எண்ணங்கள்
ஒஹஹோ..ம்ஹூஹூம்
ஒஹஹோ..ம்ஹூஹூம்
ஒஹஹோ வண்ணங்கள்
ஒஹஹோ எண்ணங்கள்
தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு
மரகதப் பூ மஞ்சம்
மணக்குதடி நெஞ்சம்
விருந்து கொள்வேன் கொஞ்சம்
விழுந்து விட்டேன் தஞ்சம்
விழுந்த நெஞ்சினை வேடிக்கை பார்ப்பது
கண்ணல்ல
அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள்
பெண்ணல்ல
ஒஹஹோ கண்ணல்ல
ஒஹஹோ பெண்ணல்ல
ஒஹஹோ கண்ணல்ல
ஒஹஹோ பெண்ணல்ல
தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு
https://youtu.be/KtPnKooiFh4
Gopal.s
24th June 2015, 05:50 PM
வாசு,
எழுந்தது முதலே இன்று நல்ல சகுனம். காலையில் நடிகர்திலகத்தின் திருவிளையாடல் அவதாரத்தை தரிசித்து கண் முழித்தேன்.
கண்ணதாசன்,எம்.எஸ்.விஸ்வநாதன் அவதரித்த திருநாள். நண்பர் மகேந்தரனுடன் 30 நிமிட அரட்டை ,இங்கே வந்து பார்த்தால் உன் என்னதான் முடிவு. கண் மூடி திறக்கும் நேரம் தங்கள் சலங்கை கட்டி.
ஒரு பெரிய வியாபாரம் முப்பது நாட்களாக இழுத்தது முடிவுக்கு வந்து பேரு மகிழ்ச்சி. you tube திறந்தால் நான் நாளாக தேடும் ரவி-ராஜஸ்ரீ இணையில் வந்த நீயும் நானும் படத்திலிருந்து யாரடி வந்தார்.
இன்றுதான் உனக்கு பிரியாமான roshomon எழுத போகிறேன்.
இதோ யாரடி வந்தார்.எல்.ஆர்.ஈஸ்வரி கிழி கிழி என்று கிழித்த பாடல்.(டி.எம்.எஸ் repeat சுமார்தான்) ரவி வித்யாசமான கெட்-அப் . கிட்டத்தட்ட Modern Tarzan போல.நம்ம இன்றைய ஹீரோதானே மியூசிக் ?(எம்.எஸ்.வீ?)
https://www.youtube.com/watch?v=ftAIYlFavQA
Gopal.s
24th June 2015, 07:49 PM
Roshomon - Akira Kurosawa -Japanese -1950
Dont believe everything you hear .There are always three sides to a story. Yours,Theirs and the Truth........
பல பாத்திரங்கள்.பலவித மாற்று கூற்றுக்கள்,தன சுயநலமா அல்லது
தற்காப்பா ,ஒன்றுக்கொன்று முரண்பட்டு மாறுபடுவது ,அதுவும் பேச வந்த அல்லது விசாரணைக்கு வரும் ஒரே விஷயத்தை பற்றி. இந்த படம் உண்மையை கண்டறிவதில் ,அதன் இறுதியை இறுதி செய்வதில் அலையாமல் நிஜத்திற்கு பன்முகங்கள் உண்டு என்று காட்டிய படம்.
இந்த படம் ஒரு period Drama என்ற வகை.
கிகோரி என்ற விறகு வெட்டி Roshomon Gate (City Gate of Kyoto )என்ற இடத்தில் ஒரு வழிப்போக்கனுடன் இளைப்பாறும் போது , ஒரு கொலை செய்ய பட்டு கிடந்த சமுராய் உடலை பார்த்ததாக சொல்வான்.அங்கு வரும் இன்னொரு மத போதகர் சமுராய் தன மனைவியோடு காட்டு வழி போவதை பார்த்ததாக கூறுவார்.
இது விசாரணைக்கு வரும். முதலில் கொள்ளை காரன்(தஜமாறு) சாட்சி சொல்வான். தன மனைவியோடு போகும் சமுராயை ,பழைய வாட்கள்,கேடயங்கள் சேகரத்தை பார்க்கும் சாக்கில் அழைத்து அவனை கட்டி போட்டு அவன் மனைவியை (கோடரியால் தற்காத்து கொள்ள முயலுவாள்) Seduce செய்து கணவன் எதிரிலேயே உறவு கொண்டு விடுவான்.ஆனால் இருவர் எதிரில் இந்த நிகழ்ச்சி நடந்ததால் ,அவமான படாமல் தப்பிக்க ,தன் கணவனுடன் போராடி அவனை கொல்ல சொல்வாள்.தஜோமொரு ,சமுராயை ஜெயித்து கொன்று விட , அந்த விலையுயர்ந்த கவசத்தோடு மனைவி ஓடி விடுவாள்.
பிறகு அந்த மனைவியின் சாட்சி.கொள்ளைக்காரன் கற்பழித்து விட்டு ஓடி விட, தன்னை மன்னிக்க சொல்லி கணவனை கெஞ்சுவாள்.தன்னை கொன்று விட சொல்லுவாள். ஆனால் ஒரு வெறுப்பு கலந்த உதாசீனத்தொடு கணவன் பார்க்க ,மயக்கமுற்று விடுவாள்.எழுந்து பார்த்தால் மார்பில் கோடரியுடன் கணவன். அதை எடுத்து தன்னை மாய்த்து கொள்ள முயன்று தொல்வியுருவாள்.
பிறகு ஒரு மீடியம் மூலம் ,இறந்த சமுராயை கூப்பிட்டு அவனை சொல்லச் சொல்ல ,அவன் வேறு விதமாக சொல்லுவான்.வன்புணர்ச்சி செய்த கொள்ளைகாரன் ,தன்னோடு வந்து விடும் படி சமுராய் மனைவியை அழைக்க அவள் ஒப்பு கொண்டு கணவனை கொன்று விட சொல்கிறாள்.அதனால் வெறுப்படையும் தஜமுறு ,அவளை கொல்வதா வேண்டாமா என்று யோசித்து,சமுராயை விட்டு விட்டு சென்று விடுகிறான்.சமுராய் வெறுப்பில் தன்னை தானே மாய்த்து கொள்ள, அந்த கோடரியை யாரோ ஒருவர் மார்பிலிருந்து எடுப்பார்.
விறகு வெட்டி ,எல்லா கதையும் தப்பு என்று மறுத்து,தான் கண்டதாக ஒன்றை சொல்லுவான். தஜமுறு ,சமுராய் மனைவியை மணந்து கொள்ளும் படி கேட்க, அந்த பெண் சமுராயை தப்பிக்க விடுகிறாள்.ஆனால் கேட்டு போன பெண்ணிற்காக போராட கணவன் மறுக்க ,இருவர் ஆண்மையையும் பழித்து போராட தூண்டுகிறாள் அப்பெண்.சண்டை நடக்கும் போது தப்பியோடும் அப்பெண்ணை ,வென்ற கொள்ளை காரனால் பிடிக்க முடியவில்லை.
அப்போது விறகு வெட்டி,வழிப்போக்கன்,மத போதகர் ,அனாதையாக விடப்பட்ட குழந்தை ஒன்றை பார்க்க,அதன் ஆடையை திருடி போக நினைக்கும் வழிபோக்கனை கண்டிப்பான் விறகு வெட்டி.வழிபோக்கனோ, சாட்சி சொல்ல முன்வராத விறகு வெட்டியே கோடாலியை திருடியவன் என்று குற்றம் சாட்டி ,ஒரு திருடன் இன்னொருவனை குறை சொல்ல தகுதியில்லை என்று போய் விடுகிறான்.மத போதகனோ எல்லோரும் சுயநலமாக செயல் படுவதால் மனிதத்தில் நம்பிக்கை இழப்பதாக நொந்து கொள்வான். பிறகு விறகு வெட்டி,அந்த குழந்தையை எடுத்தணைத்து,தன்னுடைய ஆறு குழந்தைகளுடன் ஏழாவதாக வளர்த்து கொள்வதாக எடுத்து போவான். மனிதம் வாழும் நம்பிக்கையுடன் மழை நின்று மப்பு விட்டு சூரியன் தோன்றுவதில் படம் முடியும்.
இந்த பட இயக்குனர் அகிரா குரோசவா ,மேற்கத்திய நாடுகளால் பெரிதும் கொண்டாட பட்டவர். பலருக்கு ஊக்கு சக்தியாக,வழிகாட்டியாக விளங்கிய இயக்குனர்.இவரின் ikiru ,idiot ,seven samurai ,red beard முதலிய படங்கள் குறிப்பிட பட வேண்டியவை. இவர் திரைக் கதையே படத்தின் ஜீவன் என்று நம்பியவர். ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமாக கவனம் செலுத்தியவர். திரைக்கதை எழுதுவது,design மேற்பார்வையிடுவது,நடிகர்களுக்கு ஒத்திகை ,ஒவ்வொரு ஷாட்டையும் தீர்மானிப்பது,எடிட்டிங் ,முதலான எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவாராம்.
உதாரணமாக seven samurai படத்துக்காக ,ஆறு பெரிய புத்தக குறிப்புகள்,சமுராய்களின் நடை,உடை,பாவனை,சாப்பாடு பேச்சு ,நடத்தை (அவர்கள் எப்படி காலனி அணிவார்கள் என்பது உட்பட)அனைத்து குறிப்புகளை எடுத்ததுடன் ,பல சமுராய் குடும்பங்களை அழைத்து ,நடிப்பவர்களை திருத்த சொல்வாராம்.
இவருக்கு நடித்த, இசையமைத்த,கேமரா இயக்கிய எல்லோரையும் குரோசவா குழு என்றே அழைப்பார்களாம். கேமரா ,எடிட்டிங்,இசை எல்லாவற்றிலும் பல புதிய நுணுக்கங்களை கையாண்டவர்.சப்தங்களை அளவறிந்து பயன்படுத்தியவர்.மியகாவா கேமரா . ஹயசாகா இசை. Toshiro miffune ஆஸ்தான நடிகர்.(பல நடிப்பு முறைகளில் நடிகர்திலகத்தை நினைவு படுத்துவார்)
வெளிச்சம்- நிழல்-இருள் எல்லாம் குறியீடுகள். பல பல சிந்தனையை தூண்டியவை.
ஆனால் இவர் நேரடி கதைசொல்லி, மேற்கத்திய பாணியில் சமரசம் செய்தவர், ஜப்பான் உலக போரில் அடைந்த அவமானத்தை சமாளிக்கும் போக்கில் படமெடுத்தவர்,படங்களில் பெண்களை போற்றாதவர் ,இவரை விட யசிஜிரா ஒசுவே சிறந்த இயக்குனர் என்று மேற்கத்திய விமர்சகர்களாலும், ஜப்பான் விமர்சகர்களாலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர்.
எந்த விமரிசனமும் ,அதீத திறமைசாலியான இவர் புகழை குறைக்க முடியாமல்(,(நம் நடிகர்திலகம் போல) இவர் நூற்றாண்டின் சிறந்த இயக்குனராக பெயர் பெற்றார்.
vasudevan31355
24th June 2015, 08:18 PM
கோபால்.
http://nihilist.fm/wp-content/uploads/2015/01/clap_clap_clapping_by_Anima_en_Fuga.jpg
அனுபவித்து ஒவ்வொரு எழுத்தாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கதையை மற்றவருக்கு வாயால் சொல்வது கூட ரொம்பக் கடினம். ஆனால் அகிரா கதை சொல்லும் தேர்ச்சி அதே நேர்த்தியை உங்கள் எழுத்தில் காணுகிறேன். இது வெறும் புகழ்ச்சியோ அல்லது தூக்கி வைத்துக் கொண்டாடுதலோ இல்லை. சகல திறமையும், உணமையான ரசிப்புத் தன்மையும் கொண்ட ஒரு அற்புதமான ரசிகனுக்கு, விமர்சகனுக்கு ஒரு ரசிகனாக நான் தரும் மரியாதை. ஏற்றுக் கொள்ளுங்கள். மய்யத்தின் கொண்டாடப்படவேண்டிய மகுடம் நீங்கள். உங்களால் உலக சினிமாக்களின் தரங்களைப் பற்றி இப்போது இலகுவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஆத்ம நண்பனாக நான் பெருமிதம் கொள்கிறேன்.
Toshiro miffune
http://i.ytimg.com/vi/mzK0ug1dqdk/maxresdefault.jpg
'Roshomon' பற்றி என்ன சொல்ல? எனக்கு 10 பக்கங்கள் கூட போதாது. ஒரே வார்த்தை. இணையே இல்லா உலகத் தரம். அவ்வவளவுதான் சொல்ல முடியும். இதில் நடித்த நடிகர்கள் பெரும்பாலும் seven samurai படத்திலும் பங்கு பெற்றிருப்பார்கள் முற்றிலும் வித்தியாசமாக. இல்லையா?
vasudevan31355
24th June 2015, 08:34 PM
தேங்க்ஸ் கோ.
யாரடி வந்தார்? எம்.எஸ்.விதான் தந்தார்.
கோ,
ஒன்று கவனித்தீர்களா?
ராட்சஸி 'ஹாய்லல்லோ... ஹாய்லல்லோ... ஹாய்லல்லல்லோ' முடித்தவுடன் அருமையான கிடார் பீட் ஒன்று மூன்று முறை வரும். (டிங் டிங் டிங் டங்க்... டிங் டிங் டிங் டங்க்... டிங் டிங் டிங் டங்க்) சொக்கிப் போகணும் கோ. இது போல நிறைய சங்கதிகள் 'ஒளி விளக்கு' படத்தின் 'யய்யய்ய... நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்' மற்றும் 'ருக்குமணியே பர பர பர' பாடல்களில் பிரம்மாண்டமாய் உண்டு.
இதே 'நீயும் நானும்' படத்தில் ராட்சஸி மிகப் புதுமையாய் பாடிய பாடல் ஒன்றும் உண்டு. வழக்கம் போல ரகளை அல்லாமல் வேறென்ன?
'லவ் ஈஸ் எ கேம்பிள்' (இதையே 4 முறை வெவ்வேறு விதமாக ராட்சஸி உச்சரிக்கும் ஆச்சர்யம். அதுவும் நான்காவது முறை செமையாக இழுத்து (கே....ம்பிள்) உச்சரிப்பது ஓஹோ!) என்று ஆரம்பித்து ஆர்ப்பாட்ட பாங்கோ மற்றும் கிடார் பின்னியில் 'இரவிலே ஒரு உலகம்...இருவரிடையே கலகம்' என்று தொடரும். ரவி, நாகேஷ் காபரே மங்கை விஜயஸ்ரீயுடன் ஆடுவது 'சுகம் எதிலே' 'பறக்கும் பாவை'யை நினைவூட்டும்.
பாருங்களேன்.
https://youtu.be/p3EulmzMV0A
rajraj
25th June 2015, 03:20 AM
Rajesh,
Here is another MKT song from Haridas ((1944).
ennudalthanil ee moithapodhu ungaL kaNNil muL thaithaarpol......
http://www.youtube.com/watch?v=-wNS_KtnKew
vasudevan31355
25th June 2015, 07:21 AM
ரவி சார்,
தந்தை (கருவின் கரு) தகதகக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக மனதை நெகிழச் செய்யும் அந்த கொசுக் கதை. அருமை. பிள்ளைகளை வளர்க்க. ஒரு தந்தை எப்படியெல்லாம் பாடுபடுவான் என்பதை சொல்லாமல் சொல்கிறது. பிள்ளைகளின் கேள்விகளுக்கே இந்த நிலை என்றால் அவர்களை படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
நடிகர் திலகத்தின் 'கவரிமான்' பாடல் விளக்கமும் அழகு.
அருமையாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
vasudevan31355
25th June 2015, 09:54 AM
'தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ'
'தாய்க்குப் பின் தாரம்'
ரவி சார்,
http://i.ytimg.com/vi/orO_mD4Obes/hqdefault.jpg
http://i58.tinypic.com/28medtt.jpg
நடிகர் திலகத்தின் 'அன்னையின் ஆணை' படத்தில் 'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை' பாடலை தங்கள் 'கருவின் கரு'வில் அலசி விட்டீர்கள்.
இப்போது தந்தை தொடரில் அசத்துகிறீர்கள்.
உங்கள் அனுமதியோடு தந்தை பெருமை பறை சாற்றும் ஒரு அற்புதப் பாடலை இங்கே நான் பதிந்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
http://i.ytimg.com/vi/EUSZoQRjnyU/hqdefault.jpg
இந்தப் பாடலும் ஒரு அரிதான பாடல்தான்.
சதிகாரர்களின் சதியால் தந்தையின் உயிர் காளையின் கொம்புகளுக்கு பலியாகி, காலத்தின் கோலத்தால் காலனிடம் போய் சேர்ந்துவிட, அக்கிரமக்காரர்களால் அடைத்து வைக்கப்பட்ட மகன் தப்பி ஓடி வந்து, தந்தையைப் பார்க்க முடியாமல் இடுகாட்டில் அவர் தகனமாவதைப் பார்க்கிறான். தலையில் அடித்து அழுகிறான். துடித்துத் துவல்கிறான். தவித்துப் புலம்புகிறான். தந்தையின் சிதையை கண்ணீரால் அணைக்க முயற்சி செய்கிறான்.
அவர் நினைவாக அரற்றுகிறான். பிதற்றுகிறான்.
'தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவன் என்றால் விந்தை உண்டோ
சர்வமும் அவன் என்றால் விந்தை உண்டோ'
பிள்ளைக்குத் தந்தைதான் சர்வமும். இதில் ஆச்சர்யம் கொள்ள என்ன இருக்கிறது? பெற்றவள் மடி சுமந்தது மாதம் பத்து என்றால் தகப்பன் சுமந்தது அவன் சாகும் வரை அல்லவா! அன்னைக்கு ஈடு இணை இல்லை. தந்தையும் அவ்வாறே போற்றப்பட வேண்டும்.
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அவ்வையின் பொன்மொழி வீணா?
ஆண்டவன் போலே நீதியை புகன்றாள்
அனுபவமே இதுதானா?'
'நீங்க சாப்பிடுங்க' என்று மனைவி சொன்னால் 'அவன் சாப்பிட்டானா?' என்று முதலில் பிள்ளையைப் பற்றிக் கேட்பவன் தந்தைதானே!
மனைவி கணவன்பால் கொண்ட பற்றால் முதலில் அவனுக்குப் பரிமாற 'முதலில் அவனுக்கு வை... எனக்கென்ன?' என்று மனைவியை மகனுக்குத் தெரியாமல் முறைப்பவன் தந்தையே.
அது மட்டுமா? தனது தட்டில் இருப்பதைக் கூட எடுத்து 'அவனுக்கு இந்தப் பொரியல் என்றால் ரொம்பப் பிடிக்கும்' என்று அவன் தட்டில் வைத்து உணவோடு சேர்த்து பாசத்தை ஊட்டுபவனும் தந்தையே.
பிள்ளையின் எதிர்காலம் ஒன்றையே தனது லட்சியமாகக், குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த தந்தையை கண்ணீருடன் இந்த மகன் நினைத்துப் பார்க்கிறான். அவன் என்ன சொல்லி வருந்துகிறான் பாருங்கள்!
'உயிரோடு மன்றாடி' என்று தந்தை தனக்காக உருக்குலைந்து போனதை நினைத்து வருந்துகின்றான். இந்த ஒரு வார்த்தையிலேயே தந்தையின் பெருமையை முழுவதுமாக அவன் நமக்கு உணர்த்தி விட்டான்.
'உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர்பார்த்த தந்தை எங்கே?
உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர்பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா'
தந்தைக்கு மூட்டிய சிதையை, அதில் எரிந்து போன அவரின் சதையை, கதை போல் ஆன அவர் வாழ்வை நினைத்து விதியால் அவர் வெந்து தணிந்ததை இப்படி நொந்து பாடுகிறான். அவ்வைப் பாட்டியின் பொன்மொழி கூட அவனுக்கு இக்கணம் பொய்யே.
'காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதிதானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதிதானா?
தந்தை கனலானார் விதிதானா?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அவ்வையின் பொன்மொழி வீணா?
அவ்வையின் பொன்மொழி வீணா?'
பாடகர் திலகத்தின் நா தழுதழுத்த உச்சஸ்தாயி குரலில், உயிரிழந்த உத்தமத் தந்தையின் (ஈ.ஆர் சகாதேவன்) நினைவாக திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் சோகத்துடன் நடிக்க, 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் தந்தை குலத்தின் பெருமை பேசும் உடல் சிலிர்க்க வைக்கும் பாடல்.
ஆனால் இந்தப் பாடலை படத்தில் பார்க்காமல் முதன் முதல் வெளியில் கேட்பவர்களுக்கு நடிகர் திலகத்தின் படப் பாடல் போலவே தோன்றும்.
https://youtu.be/8DAR54U70g8
ஹைய்யா! நானும் ஒரு தந்தைப் பாடல் எழுதி விட்டேனாக்கும். :)
uvausan
25th June 2015, 11:05 AM
வாசு - கொஞ்சம் கோபாலிடம் இருந்து கடன் வாங்கிய வார்த்தைகள் இவை ----
"எப்படி என் மனதை படிக்கிறீர்கள் வாசு !" - நேற்று ஹைதராபாதில் கொஞ்சம் தோண்டினதில் கிடைத்த பாடல் இது - தூசியை தட்டுவதற்குள் இந்த பாடல் பறந்து நெய்வேலிக்கு சென்று விட்டதே !!!
இந்த பாடல் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறது பாருங்கள் - என் கையில் அகப்பட்டு சிக்காமல் உங்கள் கை வண்ணத்தில் மலர்ந்து மீண்டும் எல்லோரையும் கேட்க்கத்தூண்டுகிறது . நன்றி வாசு ....
uvausan
25th June 2015, 11:13 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Best-father-day-daughter-beautiful-quotes-2015_zpso4qynpp8.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Best-father-day-daughter-beautiful-quotes-2015_zpso4qynpp8.jpg.html)
uvausan
25th June 2015, 11:20 AM
கருவின் கரு - 110:smile2::)
பாகம் 2 - தந்தை
பால் சாதத்தில் அன்பை உணர்த்தினாள் அம்மா - ஆனால் ஒரு கை அழுத்தத்தில்
எல்லாவற்றையும் உணர்த்துவார் அப்பா
பிறர் முன்னால் என்னை ஹீரோ ஆக்குவாள் அம்மா - முன்னாலும் சொன்னதில்லை ;
பின்னாலும் சொல்லித்தெரியாது -
கிடைக்கும் என் கப்புக்களில் அப்பாவின் கண்ணீரின் கறை கண்டிப்பாக இருக்கும் ....
அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை
உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது
எனக்கு கிடைத்தது ஒரு வரம் என்று தெரியாது - அந்த வரத்திடம்
பல வரங்கள் கேட்டுக்கொண்டே இருந்தேன் - இறைவனிடம் இறைவனைப்பற்றி பேசுவது போல்
சொல்லிக்கொடுத்ததில்லை திட்டியதும் இல்லை இல்லை என்றும் சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்கூறியதும் இல்லை இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை...இருந்தும் காட்டிக் கொடுத்த
கண்ணீரைத்துடைக்க இன்று அப்பாவும் இல்லை..
நண்பனாக இருந்தாய் - தவறு செய்யவில்லை
ஆசானாக இருந்தாய் - கிடைத்த பட்டங்களுக்கு முடிவு இல்லை
அப்பாவாக இருந்தாய் - நீ தான் என் பலம் என்று உணர்தேன்
எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும்
அப்பாவை போல் யார் இருக்க முடியும்..?
அப்பா சொன்னது நினைவிற்கு வந்தது
So when tomorrow starts without me
Don't think we're far apart,
For every time you think of me
I'm right here in your heart.
https://youtu.be/0PSBmL2cL-E
uvausan
25th June 2015, 11:38 AM
கருவின் கரு - 111
பாகம் 2 - தந்தை
மதி நடித்த படங்களில் அவருக்கும் , எனக்கும் பிடித்தபடம் " பெற்றால் தான் பிள்ளையா " . சுறுசுறுப்பாக ஓடியாடி சண்டை போட்டு , காதலில் ஒரு புதிய இல்லக்கியத்தை சொல்லிகொடுத்து , பாடல்களால் அனைவரையும் மயக்கும் இவரிடம் உணர்ச்சிகள் இவ்வளவு கொட்டிக் கிடக்கின்றதே என்று என்னை அயர வைத்த படம் . முதலில் கிடைத்த குழந்தையை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிப்பார் -- பிறகு அதே குழந்தைக்காக வாழத்துடிப்பார் - இடையில் கிடைத்த காதல் அவரை கட்டிப்போடாது - அந்த குழந்தையின் பெற்றோர்கள் வந்து முறைப்படி நீதி மன்றத்தில் அந்த குழந்தையை திருப்பிக்கேட்டுக்கும் போது அவருடன் சேர்ந்து நாம் எல்லோருமே " பெற்றால் தான் பிள்ளையா " என்று கத்துகிறோம் - MGR படம் என்று பறைச்சாற்றுவது தேவை இல்லாமல் திணிக்கப்பட்ட ஒரு சண்டை காட்ச்சி மட்டுமே - படம் முழுவதும் மதி நம்மை கட்டிப்போட்டுவிடுவார் - பாசம் என்பது பெறாமலும் வரலாம் என்பதை உலகிற்கு அருமையாக எடுத்து சொன்ன படம் ....
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
(செல்ல)
நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க
கெஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான்
கண்ணால் கொடி வளர்த்து
காதல் மலர் பறித்து
பெண்ணில் குழல் முடிக்க
வள்ளல் தருவான்
(செல்ல)
ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும்
வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே
உன்னை நினைவில் வைத்து
நினைவை மனதில் வைத்து
மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே
(செல்ல)
https://youtu.be/3UG6vVlwZyc
https://youtu.be/miHGvS385h0
uvausan
25th June 2015, 12:21 PM
கருவின் கரு - 112
பாகம் 2 - தந்தை
மகராஜா ஒரு மகாராணி ---- இந்த தந்தையிடம் தான் எத்தனை மகிழ்ச்சி - பெருமிதம் , பூரிப்பு - தன் மகளுடன் எப்படி விளையாடுகிறார் ?? ஒவ்வொரு மகளும் இதைத்தான் தன் தந்தையிடம் எதிர் பார்க்கிறாள் - ஒவ்வொரு தந்தையும் தன் குழந்தைகளுடன் குழந்தையாக இருக்கத்தான் விரும்பிகிறான் - காலம் என்னும் சக்கரம் மட்டும் ஓடாமல் இருந்தால் அல்லது சற்றே மெதுவாக சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?!! பத்து மாதங்கள் சுமப்பவளும் சுமக்க முடியாத பிணைப்பு - அப்பா - மகள் உறவு ! இதை எழுதி தெரிந்துகொள்ள முடியாது - உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டிய உன்னதமான உறவு ----
https://youtu.be/YifS0OtnvPA
uvausan
25th June 2015, 12:24 PM
கருவின் கரு - 113
பாகம் 2 - தந்தை
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
கண்ணதாசன் தினமும் வாழும் பாடல் இது - பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்ல ஒரு தொல்லை -------
https://youtu.be/Fo_dKWe-MoE
Gopal.s
25th June 2015, 01:07 PM
வாசுவும் ,நானும் பேசி கொண்டிருந்த போது ,ஏன் கேமரா ,இசை பற்றி விலாவரியாக எழுத கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.
நான் சொன்னேன். கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற கணக்காக ,இவ்வளவு சுளுவாக எழுதியும் இரண்டே ரசிகர்கள். வாசுவும்,ராகவேந்தரும்.ரசனை உள்ளதாக பீற்றி கொள்ளும் முரளியும், நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டர் ஆக மாறி விட்டார். இந்த அழகில் ஆழமான விஷயங்களா ,மூச்.....
வாசுவிடம் பேசியதற்காக கொஞ்சமே கொஞ்சம்.
இந்த படம் ரோஷோமோன் ஒரு சராசரி கேமரா லென்ஸ் வைத்து deep -focus முறையில் எடுக்க பட்டது .மூவர் சம்பந்த பட்ட close -up ஷாட் படத்தின் கருவின்கருவை காட்டி விடும்.
இந்த படத்தில் ஒவ்வொருவர் விவரிப்பிலும் 80% ஒற்றுமை. அங்கங்கே அவரவர் வசதிக்கு கொஞ்சம் மாறுபடும். இதை cameraman ஒவ்வொரு விவரிப்பிலும் காட்டும் வித்தியாச கோணங்கள் அபாரம். இத்தனைக்கும் சூரிய ஒளியில் ,கண்ணாடியை reflector போல வைத்து காட்டில் எடுக்க பட்ட காட்சிகள் ஜால விளையாட்டு.
ஒளியையும் ,நிழலையும், மழையையும்,சூரியனையும்,மப்பு மந்தாரத்தையும் கதாபாத்திர எண்ண எழுச்சிகள்,,மற்றும் குறியீடுகளாய் அமையும். இறுதி காட்சி அதற்கு சான்று. (இரண்டே செட் ரோஷோமோன் வாயில்,விசாரணை இடம்.மீதி காட்டில்.)
அந்த கால படங்களில் 200 சாட் இருந்தாலே பெரிசு. 407 ஷாட்கள் எடுத்து எடிட் டருக்கு செம வேலை. அழகாக டெக்னிகல் திறமை,அனுபவம் எல்லாவற்றையும் காமெரா,எடிட்டிங் காட்டி விடும் இயக்குனர் தலைமையில்.
குரசோவா வுக்கு மௌன படங்கள் மிக பிரியம். படங்களில் மௌனம் பெரும் பங்கு வகித்தாலும் (இரைச்சல் படங்களை இன்னும் கடினமாக்கி விட கூடும்). இவர் பாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கு தக்க அப்போது பிரபலமான பாடல்,இசை ஆகியவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் பாரம்பரிய இசை. அதிலும் counter -point என்பதில் பிரியம். (இளையராஜா ரசிகர்களிடம் கேளுங்கள்)
குரசோவா ,அப்பா இறந்ததும் புதிய பறவை கோபால் ரேஞ்சில் விரக்தியுடன் உலவும் போது ,ஒரு துள்ளலிசை கேட்டு மூட் மாறியதிலிருந்தே counter -point ரசிகராகி விட்டார்.படத்திலும் பரவலாக உபயோகிப்பார்.
பின்னாட்களில் ,seven samurai ,படத்திலிருந்து Long Lenses ,Telephoto Lenses ,உபயோகித்து,பல காமிராக்களில் படம் பிடித்து, தொகுப்பில் ,நடிகர்களே எதிர்பார்த்திராத நடிப்பை,இயல்பாக கொண்டு வந்து விடுவாராம்.பின்னாட்களில் அகல திரைக்கும் போனார்.
கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே இவர் எடிட்டிங் நேர்த்தி அலாதி. வெட்டிலிருந்து ,எடிட்டிங் படத்தின் ஓட்டத்தோடு செல்லும் படி அமையும்.காமிராவை ஒரு நடிகர் அல்லது இடத்தின் அருகாமைக்கு கொண்டு சென்று பின் நகர்வதை, கிரேன் ஷாட் வைக்காமல்(Tracking Shots with Dissolve ),jump Cut match செய்து சாதித்தாராம். இதன் தன்மையே அலாதி.
இத்தனைக்கும் இவர் படங்கள் நேர்கோட்டில்,சாதாரமாக, சம்பவங்களின் தொகுப்பில் ,பழைய பாணியிலே நகரும் தன்மையுடையது. ஆனால் படமாக்கும் விதத்தில்,திரைகதை நேர்த்தியில் பள பள புதுமையில் அனைவரையும் கட்டி விடும்.
vasudevan31355
25th June 2015, 01:14 PM
//இந்த படத்தில் ஒவ்வொருவர் விவரிப்பிலும் 80% ஒற்றுமை. அங்கங்கே அவரவர் வசதிக்கு கொஞ்சம் மாறுபடும். இதை cameraman ஒவ்வொரு விவரிப்பிலும் காட்டும் வித்தியாச கோணங்கள் அபாரம். இத்தனைக்கும் சூரிய ஒளியில் ,கண்ணாடியை reflector போல வைத்து காட்டில் எடுக்க பட்ட காட்சிகள் ஜால விளையாட்டு.//
http://cdn.gunaxin.com/wp-content/uploads/2011/07/rashomon-1.jpg
https://thevoideck.files.wordpress.com/2010/12/screen-shot-2010-12-10-at-pm-10-46-08.png
http://lisathatcher.files.wordpress.com/2012/07/rashomon1.jpg
Russellrqe
25th June 2015, 01:19 PM
தந்தை - மகன் பாசம் பற்றிய உங்கள் பதிவில் இடம் பெற்ற தாய்க்கு பின் தாரம் படப்பாடல்நல்ல தேர்வு . தாங்கள் விளக்கிய விதமும் அருமை .பாராட்டுக்கள வாசுதேவன் சார் .
vasudevan31355
25th June 2015, 01:27 PM
//இரண்டே செட் ரோஷோமோன் வாயில்//
http://41.media.tumblr.com/37ee5b4ad3991115dc0fda8d0f8947a2/tumblr_mvbey7iowK1rmg6igo3_r1_1280.jpg
http://41.media.tumblr.com/1fb432bf374a97bdeb9989f814d50bc1/tumblr_mvbey7iowK1rmg6igo4_r2_1280.jpg
http://40.media.tumblr.com/c0d670713596bbc0d215e37173a82493/tumblr_mvbey7iowK1rmg6igo2_1280.jpg
http://40.media.tumblr.com/16bdcd08b009f63f362d6955ddbbdd9d/tumblr_mvbey7iowK1rmg6igo1_1280.jpg
“Rashomon” actually refers to the Rajomon gate; the name was changed in a Noh play written by Kanze Nobumitsu. “Rajo” indicates the outer precincts of the castle, so “Rajomon” means the main gate to the castle’s outer grounds. The gate for my film Rashomon was the main gate to the outer precincts of the ancient capital—Kyoto was at that time called “Heian-Kyo.” If one entered the capital through the Rajomon gate and continued due north along the main thoroughfare of the metropolis, one came to the Shujakumon gate at the end of it, and the Toji and Saiji temples to the east and west, respectively. Considering this city plan, it would have been strange had the outer main gate not been the biggest gate of all. There is tangible evidence that it in fact was: The blue roof tiles that survive from the original Rajomon gate show that it was large. But, no matter how much research we did, we couldn’t discover the actual dimensions of the vanished structure.
As a result, we had to construct the Rashomon gate to the city based on what we could learn from looking at extant temple gates, knowing that the original was probably different. What we built as a set was gigantic. It was so immense that a complete roof would have buckled the support pillars. Using the artistic device of dilapidation as an excuse, we constructed only half a roof and were able to get away with our measurements. To be historically accurate, the imperial palace and the Shujakumon gate should have been visible looking north through our gate. But on the Daiei back lot such distances were out of the question, and even if we had been able to find the space, the budget would have made it impossible. We made do with a cut-out mountain to be seen through the gate. Even so, what we built was extraordinarily large for an open set.
When I took this project to Daiei, I told them the only sets I would need were the gate and the tribunal courtyard wall where all the survivors, participants, and witnesses of the rape and murder that form the story of the film are questioned. Everything else, I promised them, would be shot on location. Based on this low-budget set estimate, Daiei happily took on the project.
Later Matsutaro Kawaguchi, at that time a Daiei executive, complained that they had really been fed a line. To be sure, only the gate set had to be built, but for the price of that one mammoth set they could have had over a hundred ordinary sets. But, to tell the truth, I hadn’t intended so big a set to begin with. It was while I was kept waiting all that time that my research deepened and my image of the gate swelled to its startling proportions.
– Akira Kurosawa | Something Like An Autobiography
vasudevan31355
25th June 2015, 01:33 PM
http://image.slidesharecdn.com/6mcmh-rashomon-141201004929-conversion-gate01/95/6-mcmh-rashomon-3-638.jpg?cb=1417395240
vasudevan31355
25th June 2015, 01:34 PM
http://www.asharperfocus.com/images/Rasho04.jpg
vasudevan31355
25th June 2015, 01:35 PM
https://s-media-cache-ak0.pinimg.com/736x/bc/a1/3f/bca13f8bbb0acc3814f24b550d523cfd.jpg
vasudevan31355
25th June 2015, 01:38 PM
http://miblogeslom.files.wordpress.com/2009/01/akira-kurosawa2.jpg
vasudevan31355
25th June 2015, 01:43 PM
கோ
ரோஷமான் வாயிலில் 'ஹோ' வென்ற இரைச்சலுடன் பெய்யும் அந்த சாரல் மழை மறக்கவே முடியாதது. நிஜ மழையோ அது என்று நம்ப வைக்கும். ஒளிப்பதிவு அபாரம்.
https://youtu.be/kkDhQVUKkyY
vasudevan31355
25th June 2015, 01:53 PM
//இத்தனைக்கும் சூரிய ஒளியில் ,கண்ணாடியை reflector போல வைத்து காட்டில் எடுக்க பட்ட காட்சிகள் ஜால விளையாட்டு.//
Rashomon - A Ghastly Discovery
https://youtu.be/GXygJmtnvm0
Gopal.s
25th June 2015, 01:54 PM
Thanks Vasu for supporting posts. They had some difficuluty in picturising the rain shower. They tainted the water in Black to get that effect.
adiram
25th June 2015, 02:04 PM
டியர் ரவி சார் & வாசு சார்,
தந்தையின் சிறப்பைக்கூறும் உங்கள் இருவரின் பதிவுகளும் அருமையோ அருமை. நிச்சயம் தந்தையின் இடம் ஈடு செய்யமுடியாத ஒன்றே.
உங்கள் பதிவுகள் என் கடந்தகால வாழ்க்கைக்கு அழைத்துச் சென்று நினைவலைகளை எழுப்பி விட்டு மனதில் ரீங்காரம் இடச்செய்கின்றன. தந்தையைப்பற்றி நினைக்கத்தான் எவ்வளவு இருக்கிறது..!.
என்னுடைய சிறுவயதில் விரல்பிடித்து நடந்து வீட்டுக்கு வெளியே இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறது என்று நடைபயில வைத்த என் அப்பா.
வீட்டுக்கு வரும்போதெல்லாம் பையன் தன கையில் எதையாவது எதிர்பார்ப்பான் என்று எதாவது தின்பண்டத்தோடு வந்து மகிழ்ச்சியூட்டிய அப்பா. சில நேரங்களில் மறந்து போய் வீட்டு வாசல்வரை வந்துவிட்டாலும் திரும்ப கடைக்குப்போய் பிஸ்கட் பாக்கெட்டாவது வாங்கிவந்து வீட்டில் நுழையும் அப்பா.
ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது (வாசு சொன்னதுபோல) சுவையான உணவுகளை தான் சிறிது மட்டுமே சாப்பிட்டு, முக்கால்வாசிக்கு மேல் எனது தட்டில் எடுத்து வைத்த அப்பா.
கல்லூரியில் இண்டர்வியூவுக்காக நான் வரிசையில் நின்றபோது, சற்று தள்ளி, உட்காரக்கூட இடம் கிடைக்காமல் கால்கடுக்க நின்று கொண்டிருந்த என் அப்பா. (அந்த நேரத்தில் என் ஒரே கனவு, படித்து முடித்து சம்பாதிக்கும்போது பணத்தாலேயே என் தந்தைக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென்பதே). ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாக இருந்தது.
இன்ன தேதிக்குள் கல்லூரி பீஸ் கட்டவேண்டும் என்று சொல்லிவிட்டால், கெடு நெருங்க நெருங்க ஓவர்டைம் செய்து தன்னை வருத்தி, அப்படியும் பற்றாக்குறை ஏற்பட்டால் கடன் வாங்கி வந்து என் படிப்புக்கு சிறு இடையூறும் வராமல் பார்த்துக்கொண்ட அப்பா.
பட்டப்படிப்பு முடிந்து பல்கலைக்கழக சான்றிதழைப் பார்த்ததும் அதற்காகவே காத்திருந்தது போல சில நாட்களிலேயே 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்ற ஒற்றை வார்த்தையோடு விடைபெற்று விட்டார்.
கலைஞர் கருணாநிதி ஒரு உதாரணக்கதை சொல்வார். மழை கொட்டும் காலங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழுது, பயிரிட்டு, சில நாட்களில் அறுவடை செய்து தங்கள் உழைப்பின் பலனான நெல் மூட்டைகளில் சாய்ந்து கொண்டு, தங்களுக்கு இந்த வளத்தைத் தந்த மேகத்துக்கு நன்றி சொல்ல அண்ணாந்து பார்க்குபோது அங்கே மேகங்கள் இருக்காது, நீலவானம் வெறிச்சோடி இருக்கும்.
இன்று ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கிறேன். அனுபவிக்க என் தந்தை இல்லை. தாயின் வடிவில் என் தந்தையையும் பார்க்கிறேன்.
உங்கள் தொடர் என் போன்ற பல்லாயிரம் வாசகர்களின் நினைவலைகளை நிச்சயம் கிளறிவிடும். அதுவே உங்கள் தொடரின் வெற்றி.
RAGHAVENDRA
25th June 2015, 02:29 PM
ஆதிராம்
தங்களின் தந்தையாாரின் நினைவுகள் தங்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வகையில் உள்ளவை. அதனால் தான் தங்கள் எழுத்தில் அவை உயிர் பெற்று அனைவருக்குள்ளும் ஊடுருவும் சக்தியைப் பெறுகின்றன. நெஞ்சைத் தொடும் நெகிழ்வினை ஊட்டுவது தாயாரின் நினைவு மட்டுமல்ல, தந்தையாரின் நினைவும் தான்.
தங்களின் உள்ளம் உருக்கும் பதிவிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
25th June 2015, 02:33 PM
வாசு சார்
தாய்க்குப் பின் தாரம் என்பார்கள். ஆனால் தந்தைக்குப் பின் ...
ஈடு செய்ய முடியாத அன்பும் பாசமும் அதனையும் மீறி, தன் பிள்ளையை ஒரு மனிதனாக உருவாக்குவதில், அவனை சுயமாக நிற்க வைப்பதில் ஒரு தந்தையின் கடமை உணர்ச்சியும் ஈடுபாடும் அக்கறையும் யாராலும் தர முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ரவி எடுத்துள்ள இந்த கருவின் கரு தொடரில் தந்தையின் பங்கு பற்றிய பாகத்தில் தங்களின் தாய்க்குப் பின் தாரம் பாடல் தேர்வு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
அதே போல்,
ரோஷமான் திரைப்படத்தைப் பற்றிய கோபாலின் பதிவிற்கு துணைப்பதிவுகளாய்த் தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் நிழற்படங்கள் அமைந்து வலுவூட்டியுள்ளன.
தங்களுக்கும் என் பாராட்டுக்கள்.
uvausan
25th June 2015, 02:40 PM
கலைஞர் கருணாநிதி ஒரு உதாரணக்கதை சொல்வார். மழை கொட்டும் காலங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழுது, பயிரிட்டு, சில நாட்களில் அறுவடை செய்து தங்கள் உழைப்பின் பலனான நெல் மூட்டைகளில் சாய்ந்து கொண்டு, தங்களுக்கு இந்த வளத்தைத் தந்த மேகத்துக்கு நன்றி சொல்ல அண்ணாந்து பார்க்குபோது அங்கே மேகங்கள் இருக்காது, நீலவானம் வெறிச்சோடி இருக்கும்.
இன்று ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கிறேன். அனுபவிக்க என் தந்தை இல்லை. தாயின் வடிவில் என் தந்தையையும் பார்க்கிறேன்.
திரு ஆதிராம் - அருமையான வரிகள் - பொன்தட்டில் பதிக்க வேண்டியவைகள் . இதே நிலையில் தான் நானும் இன்று இருக்கிறேன் - சென்னையில் triplicane அருகில் உள்ள Akbar Sahib Street இல் 1 BHK ஹௌசில் என் பெற்றோர்கள் குடியிருந்தனர் . வந்து போகும் நண்பர்களும் , உறவினர்களும் மிகவும் அதிகம் - நான் படிக்க வேண்டும் என்பதில் என் தந்தை எடுத்துக்கொண்ட முயற்ச்சிகள் , செய்த தியாகங்கள் - இவற்றைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் . எது கேட்டாலும் வாங்கித்தருவார் - இத்தனைக்கும் வீடு முழுவதும் கடன் . தான் பட்ட கஷ்ட்டங்கள் எதையுமே என்னை நினைத்துப்பார்க்க கூட என் தந்தை அனுமதிக்க வில்லை . முதல் தடவை நான் என் சம்பளத்தில் ஒரு பெரிய வீடு வாங்கியதும் என் அப்பாவிற்கு என்று தனி அறை தர வேண்டும் - அவர் பெயரை வீட்டுக்கு வைக்க வேண்டும் -- இவ்வளவு ஆசைகளுடன் படித்தேன் -- வீடு வாங்கினேன் , நினைத்ததற்கும் பெரிதாக - அப்பாவின் போட்டோ வைத்தான் மாட்ட முடிந்தது ... லிவர் Cirrhosis அப்பாவை யாருக்கும் தெரிவிக்காமலேயே தன்னுடன் அழைத்துச்சென்று விட்டது -------
RAGHAVENDRA
25th June 2015, 02:40 PM
கோபால்
அகிரா குரோஸவா ஆசிய கண்டத்தைச் சார்ந்தவர் என்றாலும் உலக அளவில் அவருடைய சிறப்பைப் போற்றும் மனப்பான்மை அமெரிக்கர்களுக்கு இருந்தது வியப்பிற்குரிய விஷயம். இனவெறி, நிறவெறி போன்றவற்றையெல்லாம் கடந்து அமெரிக்காவிலும் அவருடைய புகழ் பரவியது அவருடைய படைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
குரோஸவா ... உலகின் இரண்டாம் மிக நீளமான திரைப்படத்தைப் படைத்த பெருமையையும் தன்னுடைய ரன் படத்தின் மூலம் பெற்றவர். 9 மணி நேரம் அப்படம் நீண்டது. அதைவிட ஜெர்மனியின் ஹெய்மத் திரைப்படம் நீளமாக 16 மணி நேரம் ஓடியது. இவையிரண்டும் Feature Film வகையறாவைச் சார்ந்தவை. இவையன்றி பரீட்சார்த்தத் திரைப்படங்கள் நேரம் காலம் கணக்கின்றி நாள் கணக்கிலும் நீண்டிருக்கின்றன.
ஆனால் 9 மணி நேரமானாலும் தொய்வின்றி ரன் படத்தை எடுத்துச் சென்றிருப்பார் குரோஸவா. இருந்தாலும் தன்னுடைய முத்திரையைப் பதிக்காமல் விடவில்லை.
இது போன்ற இன்னும் பல இயக்குநர்கள் பற்றி நாம் விவாதிக்கலாம். நெஞ்சம் மறப்பதில்லை திரியில் இயக்குநர்களைப் பற்றியும் நாம் எடுத்துக் கொள்வோம்.
uvausan
25th June 2015, 02:52 PM
அன்புள்ள ராஜேஷ் ,
வணக்கும் . உங்கள் " திரையில் பக்தி " எழுதிக்கொண்டது . நலம் . நலமறிய ஆவல் . ஒன்றிண்டு பதிவுகள் என்னை போட வைத்தீர்கள் - பிறகு உங்களை காண வில்லை . குறுகிய பதிவுகள் " திரையில் பக்தி " குறைந்துகொண்டு வருகிறது என்பதை மறைமுகமாக தெரிவிக்கின்றதா ? எனக்கு புரியவில்லை .. உங்கள் எழுத்து வண்ணத்தில் கருவின் கரு என்ற தலைப்பில் யாரோ இங்கு ஒருவர் எழுதுகிறாராமே - அவரை எண்ணிக்கையில் மிஞ்சிவிடும் அளவிற்கு பதிவுகள் வரும் என்று உங்களிடம் தஞ்சம் புகுந்தேன் - நீங்கள் என்னை சரியாக , வேகமாக உபயோகிக்காதது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது .... சீக்கிரம் வந்து என்னை உற்ச்சாகப்படுத்துங்கள் ..
இப்படிக்கு உங்கள்
"திரையில் பக்தி "
Gopal.s
25th June 2015, 03:05 PM
ஆதிராம்,
அப்படியே தந்தை உயிரோடு இருந்தாலும் லட்ச லட்சமாக மகன்கள் தந்தைக்கு கனகாபிஷேகம் செய்து விட போகிறார்களாக்கும். எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை குறை பட்டு கொண்டது. அமெரிக்கா போனப்புறம் இவங்களுக்கு பிசுனாரிதனம் அதிகமாயிடுச்சு. 50 டாலர் அனிப்பிச்சுட்டு ,ஏதோ பெரிய தொகை போல ஆறுமாசம் அனத்துறாங்க. இந்த பாவனை உருகல்களில் 1% உண்மையிருந்தால் கூட கண்ணீர் கதைகள் எவ்வளவு குறைந்திருக்கும். என்னவோ எழுதி பார்க்க நல்லாயிருக்கு.
Gopal.s
25th June 2015, 03:20 PM
நம் இந்தியர்கள் ,வறுமையை தேசிய பெருமையாக கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் முக்கால்வாசி தாய் தந்தையர் எந்தவித accountability இல்லாமல் பிள்ளை பெறுவதை ஒரு விலங்குகளின் கடமை போல செய்து ,ஒரு இலட்சியமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்தவர்களே.
எனக்கு தெரிந்து ஒரு தந்தை (நிறைய தந்தைகள் .ஒரு உதாரணம்),ஒரு வேலைக்கும் ஒழுங்காக போகாமல் வாய் சவடாலில் காலம் தள்ளியவர்.(என்னை வேலைக்கு வைக்க எவனுக்குமே தகுதியில்லை ரீதியில்).பிற ஜாதிகளை பற்றி துச்சமாக பேசுபவர். ஐந்து பெண்கள். வெளிநாட்டிலிருந்த மனைவியின் தம்பி தயவில் ,சுமாராக படித்த ஒரு மகனுக்கு வேலை கிடைத்து, அவன் சகோதரிகளை கரையேற்றினான்.
இவ்வளவு உதவாக்கரையான தந்தைக்கு ,மிக பெரிய அளவில் மகாராஜாக்கள் லெவெலுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி கொள்ளும் ஆசை. நான் அந்த நண்பனுக்கு சொன்ன அறிவுரை. உன் அப்பனை உட்கார வைத்து அறுபது பழைய செருப்புகளை கோர்த்து செருப்பு மாலை போடு.(ஒன்றை நான் இலவசமாக தருகிறேன்). மிக நெருங்கிய நண்பனான அவன், என்ன பெரியவாளை பத்தி இப்படி பேசிட்டேள் என்று பேசுவதை நிறுத்தி விட்டான்.
இன்னும் கல்யாணம் ஆகாமல் தாய் பெண் ஒருத்தியை வைத்திருக்கும் அவன் சமீபத்தில் என்னிடம் confess பண்ணியது. என் வாழ்க்கையை கெடுத்த அவருக்கு நீங்க சொன்ன மாதிரிதான் பண்ணியிருக்கணும்.
உதவாக்கரை தகப்பன்களுக்கு தங்க தட்டில் மரியாதை. எம்.ஏ.எம் போன்றவர்களுக்கு மகன்களால் தொல்லை. இந்த முரண்பாட்டை எங்கு போய் சொல்ல???
இப்படியும் ஒன்றல்ல,இரண்டல்ல,நிறைய........
kalnayak
25th June 2015, 03:32 PM
நண்பர்களே வணக்கம்.
இடையறாது அலுவலகப் பணியில் முழுகியமையால் திரிக்குக் கூட வரமுடியவில்லை. பலருக்கும் தெரியும் நான் விடுமுறை நாட்களில் (எல்லா ஞாயிறு மற்றும் சில சனிக் கிழமைகள்) எழுதுவதில்லை. அலுவல் நாட்களில் சிறிது நேரம் ஒதுக்கி படித்து எழுதி வந்தேன். தற்போது அலுவல் மிக அதிகமானதால் படிக்கக் கூட வருவதில்லை. நான் வந்து படித்துக் கூட பல நாட்கள் ஆகி விட்டது. இப்போதும் எனக்கு அவ்வளவாக நேரம் இல்லை. கிடைக்கும் சிறிது நேரத்தில் என்ன படிக்க முடியுமோ படித்து பதில் எழுதுகிறேன். யாராவது என்னை நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வருகிறேன் படித்து விட்டு. நன்றி.
kalnayak
25th June 2015, 03:40 PM
ரவி,
நூற்றுக்கணக்கான பதிவுகளை கருவின் கருவாக தாய் மீது எழுதி முடித்து விட்டு தந்தையைப் பற்றி எழுதிக் கொண்டு வருகிறீர்கள். இதிலும் நூற்றுக்கணக்கான பதிவுகள் பதிக்க வாழ்த்துக்கள். நவரத்தினம் வியாபாரம் செய்வது குறித்து மகிழ்ச்சி. திரியை கலகலப்பாக கொண்டு செல்வது கண்டு மகிழ்ச்சி. நன்றிகள்.
Gopal.s
25th June 2015, 03:45 PM
நண்பர்களே வணக்கம்.
இடையறாது அலுவலகப் பணியில் முழுகியமையால் திரிக்குக் கூட வரமுடியவில்லை. பலருக்கும் தெரியும் நான் விடுமுறை நாட்களில் (எல்லா ஞாயிறு மற்றும் சில சனிக் கிழமைகள்) எழுதுவதில்லை. அலுவல் நாட்களில் சிறிது நேரம் ஒதுக்கி படித்து எழுதி வந்தேன். தற்போது அலுவல் மிக அதிகமானதால் படிக்கக் கூட வருவதில்லை. நான் வந்து படித்துக் கூட பல நாட்கள் ஆகி விட்டது. இப்போதும் எனக்கு அவ்வளவாக நேரம் இல்லை. கிடைக்கும் சிறிது நேரத்தில் என்ன படிக்க முடியுமோ படித்து பதில் எழுதுகிறேன். யாராவது என்னை நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வருகிறேன் படித்து விட்டு. நன்றி.
அதையேன் கேட்கிறீர்கள் கல்நாயக் ,நீங்கள் இல்லாத போதும் உங்களை சுற்றியே,பற்றியே பேச்சு. என்ன பேச்சு என்பதை படித்து புரிந்து கொள்ளுங்கள்.:-d
kalnayak
25th June 2015, 03:52 PM
கோபால்,
ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசவா பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ரோஷோமோன் பற்றிய திறனாய்வு (அப்படிச் சொல்லலாமா? ஒரு முறை நடிகர் திலகம் திரியில் அங்கே பதிகின்ற பதிவுகளுக்கான அகராதி ஒன்றை நீங்கள் வெளியிட்டீர்கள். அது உடனடியாக கிடைக்காததால் சரி பார்க்க முடியவில்லை. நீங்கள் இருக்கும்போது அது எதற்கு?) அதற்கான உத்வேகத்தை தூண்டி விட்டது. வழக்கம் போல் வாசுவின் பக்கெட்-உம், ராகவேந்திராவின் கூடுதல் விவரணங்களும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. படம் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். சிறுவர்கள் இருக்கும் வீட்டு சூழ்நிலை அனுமதிக்குமா தெரியவில்லை.
வழக்கம்போல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள். நன்றி.
kalnayak
25th June 2015, 03:59 PM
அதையேன் கேட்கிறீர்கள் கல்நாயக் ,நீங்கள் இல்லாத போதும் உங்களை சுற்றியே,பற்றியே பேச்சு. என்ன பேச்சு என்பதை படித்து புரிந்து கொள்ளுங்கள்.:-d
என்ன அது? முழுவதும் பார்த்து விட்டு வருகிறேன். கோபால்.
adiram
25th June 2015, 04:00 PM
ஆதிராம்,
அப்படியே தந்தை உயிரோடு இருந்தாலும் லட்ச லட்சமாக மகன்கள் தந்தைக்கு கனகாபிஷேகம் செய்து விட போகிறார்களாக்கும். எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை குறை பட்டு கொண்டது. அமெரிக்கா போனப்புறம் இவங்களுக்கு பிசுனாரிதனம் அதிகமாயிடுச்சு. 50 டாலர் அனிப்பிச்சுட்டு ,ஏதோ பெரிய தொகை போல ஆறுமாசம் அனத்துறாங்க. இந்த பாவனை உருகல்களில் 1% உண்மையிருந்தால் கூட கண்ணீர் கதைகள் எவ்வளவு குறைந்திருக்கும். என்னவோ எழுதி பார்க்க நல்லாயிருக்கு.
டியர் கோபால் சார்,
அது சுஜாதா அவர்களின் பார்வை, அல்லது அவர் சந்தித்த நபர்கள் மூலம் அறிந்த அனுபவங்கள். அதற்காக எல்லோரும் அப்படியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே.
என் தந்தை இருந்திருந்தால் நிச்சயம் தங்கத்தட்டில் வைத்து தாங்கியிருப்பேன். அதன் அடையாளம், என் ஜனனத்தின் மறுபாதியான என் தாய் இன்று என் வீட்டில் ஏர்கண்டிஷன் அறையில் தன் மிச்ச நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார். என் அறையிலும் அண்ணனின் அறையிலும் கூட ஏ.சி. கிடையாது. மின்விசிறி மட்டும்தான். என் அண்ணியும், என் மனைவியும் அவர் பெறாத இரண்டு மகள்களாக சிறப்பாக கவனித்து வருகின்றனர். நான் அருகில் இல்லாவிட்டாலும் தினம்தினம் ஸ்கைப் மூலம் பேசி வருகிறேன்.
நீங்கள் சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. பெற்றோரை முதியோர் இல்லத்தில் எறிந்துவிட்டு, மாதாமாதம் சிறிது பணத்தை மட்டும் விட்டெறியும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
என்னைப்பொருத்தவரை முதியோர் இல்லங்கள் என்பது பிள்ளைகள் இல்லாத அனாதை முதியோர்கள் மட்டும் வசிக்கும் இடமாக இருக்க வேண்டும்
Gopal.s
25th June 2015, 04:00 PM
கோபால்,
ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசவா பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ரோஷோமோன் பற்றிய திறனாய்வு (அப்படிச் சொல்லலாமா? ஒரு முறை நடிகர் திலகம் திரியில் அங்கே பதிகின்ற பதிவுகளுக்கான அகராதி ஒன்றை நீங்கள் வெளியிட்டீர்கள். அது உடனடியாக கிடைக்காததால் சரி பார்க்க முடியவில்லை. நீங்கள் இருக்கும்போது அது எதற்கு?) அதற்கான உத்வேகத்தை தூண்டி விட்டது. வழக்கம் போல் வாசுவின் பக்கெட்-உம், ராகவேந்திராவின் கூடுதல் விவரணங்களும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. படம் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். சிறுவர்கள் இருக்கும் வீட்டு சூழ்நிலை அனுமதிக்குமா தெரியவில்லை.
வழக்கம்போல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள். நன்றி.
திறனாய்வு என்பது சரியல்ல. திறன் கொண்ட இயக்குனர்களை,படங்களை தேர்வு செய்து ,அவற்றை அணுக வேண்டிய முறைமை பற்றி கற்றதை,உணர்ந்ததை,கேட்டதை சொல்லும் Film Appreciation articles என்பதே சரியானது. நடிகர்திலகம் பற்றி நான் எழுதிய சில திறனாய்வு வகையில் வரும்.
RAGHAVENDRA
25th June 2015, 04:01 PM
கோபால்
தங்கள் கூற்றில் யதார்த்தம் இருக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் பாசம் என்பது எந்தக் காலத்தையும் கடந்தது. வெளிப்படுத்த சந்தர்ப்பமில்லாமல் இருக்கலாம், அல்லது தாங்கள் கூறுவது போல் மனமில்லாமலும் இருக்கலாம், ஆனால் பாசம் என்பதே இல்லாமல் போகாது. பெரும்பான்மையானவர்கள் தாங்கள் கூறிய வகையறாக்களில் அடங்குவார்கள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், அதற்கு இக்காலத் தாய்மார்கள், குடும்ப சூழ்நிலைகள் இவையும் காரணமாகின்றன. மகனுடைய முன்னிலையிலேயே தந்தையும் தாயும் புரியும் வாக்குவாதங்கள், சச்சரவுகள், சிலசமயம் கைகலப்புகளும் கூட, இவையெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் எல்லை மீறும் போது தந்தை என்ற உறவு முற்றிலும் அதன் புனிதத் தன்மையை இழந்து விடுகிறது. தந்தை என்கிற இடம் எப்படிப்பட்டது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த தந்தையே சந்தர்ப்பம் தருவதில்லை, தாயாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
ஆனால் இந்த சந்தர்ப்பங்களும் இரு தரப்பட்ட குடும்பங்களில் தான் அதிகம் நிகழ்கின்றன. முற்றிலும் பொருளாதாரம் அடிமட்ட நிலையில் உள்ள குடும்பங்கள்.. இவற்றில் தன் பொருளாதார நிலையையோ குடும்பத்தையோ சிறிதும் சிந்தியாமல் குடித்து அழிக்கும் தகப்பன்மார்கள். இரண்டாவது பொருளாதாரத்தில் மேல்நிலையில் உள்ள குடும்பங்கள். இவற்றில் பெற்றோர் இருவருமே பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. வருவாய்க்கு இருக்கும் முன்னுரிமை அவர்களின் வாரிசுகளுக்கு இல்லை. ஆனாலும் பொருளாதாரத்தில் என்னதான் கீழே இருந்தாலும் அங்கே பாசம் விலகியதில்லை.
இவற்றையெல்லாம் மீறி சென்ற தலைமுறை வரையிலும் நடுத்தரக் குடும்பங்களிலும் குடும்ப உறவுகளும் பந்த பாசங்களும் நல்ல நிலையில் தான் இருந்து வந்தன. ஆனால் தற்போதைய தலைமுறை தான் திசையின்றி போகும் பாதையின்றி, வழிகாட்ட பெற்றோரின்றி சென்று கொண்டிருக்கிறது.
எனவே தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள சமூக கோளாறுகளுக்கு பெற்றோர்களே காரணமாவர் என்பது என் தாழ்மையான கருத்து.
இவற்றையெல்லாம் தாண்டி, இன்னும் எத்தனை தலைமுறையானாலும் பெற்றோர் செய்யத் தவறியதை, தவறுவதை, செய்து காட்ட, குடும்ப உறவுகளைப் பற்றி மக்களுக்குப் புரிய வைக்க, தாய் தந்தை மட்டுமின்றி சகோதர பாசத்தையும் மக்களுக்கு உணர்த்த, அதன்படி அவர்கள் நடந்து கொள்ள, பல்வேறு சமூகப் பள்ளிகள் செய்ய முடியாதவற்றை, பல்வேறு தலைமுறைகள் கூற முடியாததை,
திரைப்படங்கள் செய்து காட்டும்..
ஆமாம்..
நடிகர் திலகம் என்னும் கலைவாணியின் வடிவம், மேற்கூறிய அனைத்து சமுதாயப் பணிகளையும் தன் திரைப்படங்களின் மூலம் இன்னும் பல்வேறு தலைமுறைகளுக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும்.
அப்போது, உலகெங்கிலும் உறவுமுறை பற்றிய பாடங்களுக்கு இலக்கணமாய் நடிகர் திலகத்தின் நடிப்பு அமைந்து வழிகாட்டிக்கொண்டே யிருக்கும்.
எனவே கவலை வேண்டாம்.
adiram
25th June 2015, 04:09 PM
என்ன அது? முழுவதும் பார்த்து விட்டு வருகிறேன். கோபால்.
அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை தலைதூக்கும் விஷயம்தான்.
kalnayak
25th June 2015, 04:31 PM
ஓ!
புதிதாய் மதுர கானத் திரிக்கு வருகை தந்துள்ள அண்ணன் வரதகுமார் சுந்தராமன் அவர்களின் எல்லாம் தெரிந்த ஆனால் அவரே நம்பாத பதிவில், ஆதிராமிற்கு அர்ச்சனை ஆரம்பித்து என்னை கலாய்த்திருக்கிறார். வருகிறேன், அவருக்கான பதிலோடு விரைவில். பெயரை நான் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் சொல்லும் பெயரைக்கூட ஒழுங்காக சொல்லத்தெரியாத அண்ணன்? நான் அண்ணன் சொன்னால்... ? பலருக்கு இங்கே புரிந்திருக்கும். ஆனால் என்னுடைய பதில் முந்தைய என் அண்ணன் பதிவுகளாக இராது. எனக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனம் வருத்தமுறாதவாறு சற்று யோசித்து பதில் தருகிறேன். அதற்கு முன் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். காமாலைக் கண் கொண்டவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்.
adiram
25th June 2015, 05:23 PM
கல்நாயக் சார்,
வேண்டாம் விடுங்கள். இப்போதுதான் திரி அமைதியடைந்து அதன் பாதையில் சீராக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் சர்ச்சை வேண்டாம்.
இதனால் திரியிலுள்ள நண்பர்கள் ராஜேஷ் போன்றவர்களும், 'இது போன்ற சர்ச்சைகள் இங்கு வேண்டாம். எங்களை அமைதியாக பதிவிட விடுங்கள்' .என்று சொல்லி விட்டனர்.
ஆகவே மீண்டும் சர்ச்சை வேண்டாம். நாம் என்ன கரடியாக கத்தினாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.
Russellisf
25th June 2015, 05:49 PM
ஜூன் 24 - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 87-வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் ‘எம்எஸ்வி டைம்ஸ்.காம்’ சென்னையில் ஒரு இசை அரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பல்வேறு பரிணாமங்களை எடுத்துக்காட்டிய இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
எம்.எஸ்.வி இசையில் வெளியான ‘அன்பே வா’, ‘கௌரவம்’ ஆகிய படங் களில் அவர் பின்னணி இசைக்கோர்ப் பில் செலுத்திய நேர்த்தியை செல்லோ சேகர் (குன்னக்குடி வைத்தியநாதன் மகன்) இந்நிகழ்ச்சியில் விவரித்தார்.
‘தூது சொல்ல ஒரு தோழி’, ‘சட்டி சுட்ட தடா கை விட்டதடா’ ஆகிய பாடல்களில் உள்ள தனித்தன்மையை ‘கிடார்’ பாலா விளக்கிப் பேசினார். கரஹரப்ரியா ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் வெவ்வேறு நுட்பத்தைப் பயன்படுத்தி இசையமைத்ததை இசையமைப்பாளர் தாயன்பன் எடுத்துக்கூறினார்.
‘கலங்கரை விளக்கம்’, ‘உத்தர வின்றி உள்ளே வா’ ஆகிய படங்களில் இடம்பெற்ற டைட்டில் பாடல்களின் வழியே படத்தின் கதையைச் சொல் லும் எம்.எஸ்.வியின் தனித்த அடை யாளத்தை எடுத்துக்கூறினார், ஆடிட்டர் மற்றும் மெல்லிசைப் பாடகர் வி.பால சுப்ரமணியன். எம்.எஸ்.விஸ்வநாத னின் லய வேலைப்பாடல்கள் பற்றிய பரிணாமத்தை ‘வெள்ளிக்கிண்ணம் தான்’ உள்ளிட்ட சில பாடல்களை முன் னிலைப்படுத்தி எம்.எஸ்.சேகர் பேசி னார். நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி, திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமன், இசையமைப்பாளரும், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றியவரும், லால்குடி ஜெயராமனின் ‘தில்லானா’ இசைத்தட்டு உருவாக்கத்தில் மேற்கத் திய இசையமைத்து பியூஷன் இசைக்கு வழிவகுத்தவருமான ஷ்யாம் ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ராம் லஷ்மணன், எம்.எஸ்.வி. வைத்தி ஆகியோர் தொகுத்தளித்தனர்.
இந்த விழாவில் எம்.எஸ்.விஸ்வ நாதன் பற்றி நல்லி குப்புசாமி பேசிய தாவது:
30 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ்.வியோடு நெருங்கி பழகும் அனுபவம் பெற்றவன் நான். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை விழா வுக்கு அவரே நேரில் வந்து அழைப் பிதழ் கொடுப்பார். ‘எதுக்குங்க நீங்க வரணும். சொல்லி அனுப்பினா நான் வந் துடுவேனே’ என்று கூறினால்கூட கேட்க மாட்டார். அவர் வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வது பெருமையான விஷயம்.
எம்.எஸ்.விக்கு நடிக்க வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஒரு நாடகத்தில் கோவலன் வேடம் போடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் எம்.எஸ்.வி குட்டையாக இருப்பதால் அவர் தேர்வாகாமல் போய் விட்டார். ‘என்னை குட்டை என்று தவிர்த் தவர்கள், கண்ணகி வேடம் போட்டவரை நெட்டை என்று கூறி நீக்க வேண்டியது தானே’ என்று கோபப்பட்டார். ‘அதெல் லாம் விடுங்க சார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னைக்கு நாங்க இப்படி சிறப்பான பாடல்களை கேட்டி ருக்க முடியாதே’ என்று சொன்னோம்.
1973-74களில் தினம் ஜவுளிக் கடைக்கு போகிறேனோ இல்லையோ, கண்ணதாசனைப் பார்ப்பதற்காக கவிதா ஹோட்டலுக்கு சென்றுவிடு வேன். எம்.எஸ்.விக்கும் தனக்கும் உள்ள நெருக்கம், வேடிக்கையான அனுபவங் களை எல்லாம் கவிஞர் மணிக்கணக்கில் சொல்வார். அதுதான் நட்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்பி.முத்துராமன் பேசும்போது, “ஜெய்சங்கர் நடிப்பில் ‘துணிவே துணை’ படத்தை இயக்கினேன். படத் தில் முதல் சில காட்சிகளில் வசனம் இல் லாமல் எம்.எஸ்.வியின் திகில் இசை தான் முக்கிய அங்கமாக இருக்கும். அந்த இசை, படத்தை அவ்வளவு நேர்த்தியாக நகர்த்திச் செல்லும்.
ஒருமுறை, கண்ணதாசன் இறந்து விட்டார் என்று எம்.எஸ்.வி வீட்டுக்கு செய்தி வருகிறது. மார்பிலும், தலை யிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத படி கண்ணதாசன் வீட்டுக்கு போகிறார், எம்.எஸ்.வி. அங்கே ‘வாப்பா விசு’ என்று கண்ணதாசன் குரல் கேட்கிறது. ‘ஏண்ணே.. இப்படி!’ என்று படபடத்து நிற்கிறார்.
‘நான் இறந்துபோனால் நீ எப்படி கதறி அழுவாய் என்பதை நான் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தேன்’ என்று கண்ண தாசன் கூறியிருக்கிறார். அதுதான் நட்பு. கவியரசருக்கு சிலை வைத்த பெருமை எம்.எஸ்.விக்குத்தான் சேரும்’’ என்றார்.
ஷ்யாம் ஜோசப் பேசும்போது, “பாட்டை பாமர மக்களும் கேட்க வேண்டும். கேட்ட மாத்திரத்திலேயே அதை அவர்கள் பாட வேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு அவசியமாக இருந்தது. இசையில் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ரேன்ஞ் என்று ஒரு கட்டத்தை சொல்வோம்.
அதை எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்கிற வித்தை அறிந்தவர், எம்.எஸ்.வி. சங்கீதத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு மேல் செய்தவர் எம்.எஸ்.வி’’ என்றார்.
adiram
25th June 2015, 06:19 PM
யுகேஷ் சார்,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பற்றிய சிறப்பான பதிவுக்கு நன்றி
விழாவில் மெல்லிசை மன்னர் கலந்து கொண்டாரா?. (அவருக்கு உடல்நலம் சரியில்லைஎன்று சொன்னார்களே. அதனால் கேட்டேன்).
வழக்கமாக வருடா வருடம் இந்த நாளில் கண்ணதாசனின் சிலைக்கு எம்.எஸ்.வி. மாலை அணிவிக்கும் செய்தி தொலைக்காட்சிகளில் வரும். நேற்று அந்த செய்தியையும் காண முடியவில்லை.
Russellisf
25th June 2015, 07:17 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsazpelf6h.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsazpelf6h.jpg.html)
kalnayak
25th June 2015, 07:26 PM
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்திப்போம்.
kalnayak
25th June 2015, 08:13 PM
''கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது.''
மக்கள் திலகம் எம்ஜிஆர் .
அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .
''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
என் பதிவு .1
நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.
''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
என் பதிவு -2
நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.
அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
என் பதிவு -3
ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்
அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
என் பதிவு 4
முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
என் பதிவு - 5
ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.
உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
என் பதிவு -6
ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.
ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.
சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.
ஆதிராம்
என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .
வேண்டுகோள்
உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்
''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
அஸ்ஸலாமு அலைக்கும் !
"நன்றாக போய்க்கொண்டிருக்கும் திரியில் வேண்டாம் வம்பு" என்று இருக்க முடியவில்லை. என் மீது சொல்லப்பட்டிருக்கும் அவதூறுக்கு நான் பதில் சொல்லாவிடின், அவதூறு உண்மையாக்கப்படும், என்னுடைய நண்பர்களும் இந்த அவதூறு உண்மையோ என்று எண்ணக்கூடும். முந்தைய கல்நாயக்காக நான் இருந்திருந்தால் "ஆமாம் நானும் ஆதிராமும் ஒருவர்தான்" என்று சொல்லி இருந்திருப்பேன். இப்போதைக்கு நிறைய பதிவுகளை இங்கு நான் இட்ட பிறகும் அவ்வாறு தொடர விரும்ப வில்லை. எனவே இது என்னை தங்கள் நண்பனாக நினைக்கும் நண்பர்களுக்கு மட்டுமே.
ஆதிராமிற்கும், எனது ஊரைச்சேர்ந்த நண்பர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் பிரச்சினை என்றால் அவர்களாகவே தீர்த்துக் கொள்வார்கள். நடந்திருக்கிறது. நண்பர் ஆதிராமும் கண்டிக்கப்பட்டார். முடிந்தது பிரச்சினை. இப்போது ஆதிராம் தொடர்கிறார். வாசு அவர்களை பாராட்டுகிறார். தெரிந்ததுதானே. இதில் இருந்து நான் ஆதிராம் அல்ல என்று எப்படி இவர்கள் தெரிந்து கொள்வார்கள்? யாரேனும் கேட்கலாம்.
ஆதிராம் சில அல்லது பல பெயர்களில் எழுதி இருக்கலாம். அதை அவர் ஒப்புக்கொண்டும் இருக்கிறார். அதற்காக அதில் நானும் ஒருவன் என்பதை எப்போதாவது யாராவது எந்த ஆதாரத்தொடாவது சொல்லி இருக்கிறார்களா என்றால் இல்லை. அதுமட்டுமில்லை. எங்கள் இருவரின் எழுத்துக்களை யாராவது தொடர்ந்து படித்து வந்தால் இருவரின் நடைமுறைகளை (ஸ்டைல்) கட்டாயமாக கவனிக்க முடியும். யாராவது அதை அலசி ஆராய்ந்து செய்து இருவரும் ஒருவர்தான் என்று விஞ்ஞான முறையில் நிருபித்திருக்கிறார்களா? குறை சொல்லும் அண்ணன் கொண்டுவரட்டும் அந்த நிருபணங்களை. யாரோ, எங்கோ பிதற்றுவதை இங்கே எடுத்து வந்து வாந்தி எடுப்பவரை என்னவென்று சொல்வது?
இரண்டாவதாக 'ஆதிராமும், நானும் ஒருவர்தான் என்று பலர் சொல்கிறார்கள், பலர் சொல்கிறார்கள்' என்று சொல்லி வம்பிழுக்கும் அண்ணன், நடிகர் திலகம் திரியில் திரு முரளி ஸ்ரீநிவாசன் அவர்கள் என்னைப் பற்றி சொல்லி இருந்தார் - எனது கணிப்பொறியில் இருந்து கல்நாயக் என்ற பெயரில் மட்டுமே பதிவுகள் இடப் படுகிறது என்று. அதை கவனிக்க கண்கள் கெட்டுப் போய்விட்டனவா அந்த பிரகஸ்பதிக்கு?
மூன்றாவதாக இந்த திரியில் பலரும் உற்றுக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும் - நண்பர் ரவி அவர்களின் கருவின் கரு தொடரில் உருக்கமாக தாயைப் பற்றி அவர் எழுத ஆரம்பித்த போது, ஆதிராம் சொல்லியிருந்தார் - தனது தாயை நினைத்து, அவர்களை உடன் இருந்து கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுவிட்டு தாயகம் கூட திரும்பி வந்துவிடலாம் என்று நினைப்பதாக என்று. பின்பு நான் எழுதி இருந்தேன் - எனது தாய் மறைந்து எட்டு வருடங்களுக்கு மேலாகி விட்டன, எனது நினைவில் என்றும், எப்போதும் இருக்கிறார்கள் என்று. இதை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் - உண்மை எது, பொய்மை எது என்பது. இதற்கு மேலும் நானும் ஆதிராமும் ஒருவர் என்று நினைக்கும் வரதக் குமார்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நானே புதிய திரியில் சந்திக்கிறேன்.
எங்களுக்காக எழுதவந்து பல்பொடி விளம்பரத்திற்கு உதவிய எங்கள் நடிகர் திலகம் குழாம் நண்பர் கோபால் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். நான் கடலூர்காரன் என்பதை நன்றாக அறிந்தவர் வாசு. என்னை முதன் முதலில் எழுத வைத்து அழகு பார்த்தவர் அவர்தான். அவரும் உண்மைகளை நன்றாக அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன். நான் எழுதாத சமயத்தில் எனக்கு அழைப்பு விடுக்கின்ற நண்பர்கள் ரவி மற்றும் கலைவேந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள். எனக்கு கவிதை எழுத கற்றுக் கொடுத்து, இங்கே நிறைய எழுத உற்சாகம் கொடுக்கும் சி.க. வை என்னால் மறக்க முடியாது. எனக்குத் தெரியாத பல விவரங்களை சொல்லி என்னைத் தேற்றிக் கொண்டிருக்கும் நண்பர்கள் ராஜேஷ் ஜி அவர்களுக்கும், திரியில் வந்து நல்ல பல விவரங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா அவர்களுக்கும், ஜுகல் பந்தி மூலம் கலக்கிக் கொண்டிருக்கும் சீனியர் ராஜ்ராஜ் அவர்களையும் நான் நினைவில் கொள்ளவேண்டி உள்ளது நன்றி சொல்வதற்கு. நடிகர் திலகம் புகழ் பரப்புவதே தன் பணி எனக்கொண்டிருக்கும் எங்கள் சீனியர் நண்பர் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல திரு. வினோத் அவர்களையும், மற்றும் யுகேஷ் பாபு அவர்களும்(எங்களுக்குள் முன்பு மோதல் இருந்ததால் - நாங்கள் அரிதாகவே ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வோம்.) நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒருவர் சொன்னதால் மட்டுமே இருவர் ஒருவராக முடியாத நண்பர் ஆதிராமுக்கும் எனது நன்றிகள். கல்யாணப் பரிசு தங்கவேலு எழுத்தாளர் பைரவன் போல வேடமிட்டது நினைவிற்கு வருகிறது, இவர்கள் என்னை உங்களையாக வேடமிடுவது.
இப்போது நான் அந்த மோதல் முறைகளை கைவிட்டதால் மட்டுமே இப்படி ஒரு பதிவு. இல்லை எப்போதும் போல மோதல் பதிவுகள் வேண்டுமென்றால் கொடுக்க நான் தயார். நீங்கள் தடை செய்யாமல் இருக்க வேண்டுமே. இது போதவில்லை என்றால், அண்ணன் வரதக் குமார் அவர்களே, உங்கள் பதிவை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து எனது பதில் பதிவை கொடுக்கிறேன்.
நீண்ட பதிவாகி விட்டது. மன்னிக்கவும். அடுத்த முறை இவ்வளவு நேரம் கிடைத்தால், மற்றவர்களின் பிரத்யேக பதிவுகளை படித்து எனது கருத்துக்களை பகிர்வதுடன் எனது பூவின் பாடலுடன் வருகிறேன். அதுவரை வணக்கம்.
rajeshkrv
26th June 2015, 03:50 AM
ரவி
ஆஹா திரையில் பக்தியே பேசுவதாக என்ன அருமையாக ஒரு கேள்வி கேட்டுள்ளீர்
சில காரணங்களால் வர இயலவில்லை. திரையில் பக்தி எங்கும் போகவில்லை. தொடரும்.
Richardsof
26th June 2015, 05:22 AM
இனிய நண்பர் திரு கல் நாயக்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் விரிவான பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி .நம் இருவருக்கும் என்றுமே கருத்து மோதல் வந்ததில்லையே . திரு குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது . சென்னயில் இருக்கும் நீங்கள் ஒரு முறைசென்னயில் வசிக்கும் திரு குமாரை நேரில் சந்தித்து விட்டால் எல்லோருடைய குழப்பங்களும் தீர்ந்து விடும் .செய்வீர்களா கல்நாயக் ?
Gopal.s
26th June 2015, 06:56 AM
இனிய நண்பர் திரு கல் நாயக்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் விரிவான பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி .நம் இருவருக்கும் என்றுமே கருத்து மோதல் வந்ததில்லையே . திரு குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது . சென்னயில் இருக்கும் நீங்கள் ஒரு முறைசென்னயில் வசிக்கும் திரு குமாரை நேரில் சந்தித்து விட்டால் எல்லோருடைய குழப்பங்களும் தீர்ந்து விடும் .செய்வீர்களா கல்நாயக் ?
எஸ்வி,
எங்கள் திரியில் எல்லோருமே கௌரவமான நபர்கள். அவர்கள் தங்கள் இருப்பை நிரூபிக்கும் அவசியம் வேண்டாதவர்கள். ஒருவர் என்ன பொய் சொன்னாலும் தாய் இல்லை என்று பொய் சொல்ல மாட்டார்கள். இனியாவது ,எங்கள் திரி சார்ந்தவர்களை அனாவசியமாக காய படுத்தாதீர்கள்.
அப்படி நிரூபணம் அவசியமானால், நான் ஒரு இடத்தில் ரிஜிஸ்தர் வைக்கிறேன். போட்டோ ஐடீ காண்பித்து ,உங்கள் திரியை சார்ந்த எல்லோரும் கையெழுத்து போட்டு விட்டு போன பிறகு(கலைவேந்தன்,ராஜா,மசானம், உட்பட) ,ஆதிராம், கல்நாயக் போன்றோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்ற ஏற்பாடு செய்கிறேன்.
vasudevan31355
26th June 2015, 07:16 AM
டியர் வாசு சார்,
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' பாடலை மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள். அதிசயமில்லை, அது உங்களுக்கு கைவந்த கலை.
பாலாவின் அந்த நாளைய குரலில் பாடல்களைக் கேட்பது தனிச்சுவை. (இப்போது எஸ்.பி.பி.சரண் அந்த்பாடல்களைப் பாடும்போது பாலாவின் அன்றைய குரல் எட்டிப் பார்க்கிறது).
தேடிவந்த மாப்பிள்ளையின் பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாக மனத்தைக் கவர்பவை. 'மாணிக்கத்தேரில்' ஒன்றுதான் சற்று வழக்கமான ஒன்று. அந்தப்பாடலுக்காக சாத்தனூர் அணை பூங்கா முழுவதும் சீரியல் செட் அலங்காரம் செய்யப்பட்டு இரவுக்காட்சியாக படமாக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பு முடிந்தபின்னும் இரண்டு நாட்கள் அந்த அலங்காரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெற்றி மீது பாடலை மெல்லிசை மன்னர், பாலா இவர்களோடு சேர்ந்து எம்.ஜி.ஆரும் அதிகப்படியான சுறுசுறுப்பால் களைகட்டச்செய்வார். அதனால் அந்தப்படத்திலேயே அதிக ஹிட் ஆன பாடலாக இது அமைந்துவிட்டது.
பாடல் ஆய்வின் இடையே நடிகர்திலகத்தின் கர்ணனை செருகியதன்மூலம் உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் நடிகர்திலகம் ஆக்கிரமித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
இன்னொரு திரியில் உங்கள் 'என்னதான் முடிவு' அலசல் அருமை.
அடுத்த பாடல் என்ன?. "பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா'" தானே?.
நன்றி ஆதிராம் சார்.
உண்மைதான். 'மாணிக்கத் தேரில்' பாடல் படப்பிடிப்பு முடிந்ததும் அலங்கார ஒளிவிளக்குகள் பொதுமக்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த மேலதிக தகவலை இங்கு நினைவுபடுத்தியதற்கு நன்றி!
இதற்குத்தான் நீங்கள் வேண்டுமென்பது. அருமையான சுவையான தகவல்களை தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
'என்னதான் முடிவு? படித்து ரசித்ததற்கும் என் நன்றிகள்.
'பௌர்ணமி நிலவு' விரைவில் ஒளி வீசும்.
வேலைப்பளுவால் தாமதமான நன்றி சொல்ல வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.
vasudevan31355
26th June 2015, 07:22 AM
ராகவேந்திரன் சார்!
பதினாறு அடி பாய்கிறீர்கள். மிக அபூர்வமான 'அம்மா அப்பா' படத்திலிருந்து 'மாப்பிள்ளை நீயல்லவோ' என்ற சூப்பர் பாடல் அளித்து திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். அடேயப்பா! எத்தனை நாட்கள் ஆயிற்று இந்தப் பாடலைக் கேட்டு? நிஜமாகவே அனுபவித்துக் கேட்டும், பார்த்தும் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல வார்த்தை இல்லை வேந்தரே!
என் ராட்சசியின் குரல் அல்லவா!
அதே போல அபூர்வ ஜோடியாய் ஜெய், விதுபாலா பாடும் ராசி நல்ல ராசி படப் பாடலுக்கும் நன்றி! இதுவும் மறைந்து போன ஒரு பாடலே!
'மலைச்சாரலில் ஒரு பூங்கொடி'பற்றி சொல்லவும் வேண்டுமோ!
uvausan
26th June 2015, 07:52 AM
Good Morning
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/unnamed_zps9txntt5r.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/unnamed_zps9txntt5r.jpg.html)
uvausan
26th June 2015, 08:01 AM
கருவின் கரு - 114
பாகம் 2 - தந்தை
உண்மை சம்பவம் 16
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன )
என் நண்பன் சீனு - ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான் - அவனுடைய புத்திசாளித்தனதிர்க்கும் , செய்யும் உழைப்பிற்கும் தனியார் துறையில் வேலை செய்திருந்தால் இன்று அவன் வாழும் நிலைமை பல மடங்கு உயர்ந்திருக்கும் ........என்னவோ அவன் தன் மனதை மாற்றிக்கொள்ளவே இல்லை . அவன் என்னுடன் பேசும்போதெல்லாம் அவன் திறமையை எண்ணி வியர்ந்திருக்கிறேன் - அவன் ஆசைகள் அளவானவை - எதற்குமே அவனிடம் ஒரு எல்லை இருந்தது - அவனுக்கு இரண்டு மகன்கள் - முதல்வன் பள்ளியை முடித்துவிட்டு இன்ஜினியரிங் காலேஜ் செல்லவேண்டும் - இரண்டாவது இப்பொழுதுதான் 10வது ...... அவன் மனைவியும் அவனைப்போல - தன் குழந்தைகள் தான் அவர்கள் உலகம் - விருந்தோம்பலில் அவர்களுக்கு எந்த விதத்திலும் நான் இணயாக மாட்டேன் ..
அன்று வெள்ளிக்கிழமை - சீனுவின் வீட்டிருக்கு சென்றிருந்தேன் - அவன் மனைவி மட்டும் தான் இருந்தாள் .. " வாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வந்துவிடுவார் - நீங்கள் வந்தால் இருக்கச்சொன்னார் !"
" ஆமா சீனு தனக்கு வெர்டிகோ problem என்று சொன்னானே ! இப்ப எப்படி இருக்கு ? "
" எங்க கேட்கிறார் - நேற்று பையனின் interview க்கு அவன் தூங்கின பிறகு கூட இவர் முழித்திருந்து படித்துக்கொண்டு இருக்கிறார் - laptop தான் அவருக்கு முதல் மனைவி "
சீனு வந்துவிட்டான் " ஏய் நீ எப்படா வந்த ? " - மிகவும் தளர்ந்து இருந்தான் - முகத்தில் அழிக்கமுடியாத ஒரு சோகம் . கண்கள் சரியான தூக்கத்தைப்பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கும் "
"சீனு ! நான் உன் உயிர் நண்பன் - என்ன problem உனக்கு - இரண்டு நாளா ஆபீஸ்க்கு கூட போகல ---- "
" அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை --- everything is fine ........ யாருக்கு என்று புரியாமல் குழம்பினேன் ....
சீனுவாக சொல்லாமல் , அவனிடம் இருந்து ஒன்றையும் கறக்க முடியாது .......
சீனுவின் மகன் மகிழ்ச்சி கலந்தும் கலக்காமலும் ஓடி வந்தான் " அங்கிள் எனக்கு சென்னை SRM இல் seat கிடைத்துவிட்டது - அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை - ஆஸ்பத்திரிக்கு கூடிக்கொண்டு போகிறோம் -----
நானும் கண்ணு முண்ணு தெரியாமல் சீனுவைப்பார்க்க ஓடினேன் --- பல மருத்துவர்கள் புடை சூழ நடுவில் என் சீனு படுத்திருக்கிறான் --- சீனு உனக்கு என்ன ?? உதடுகள் மனதுடன் சேர்ந்து புலம்பின ..
சில நாட்கள் ஓடின -- சீனுவை அவன் வார்டில் பார்க்கப்போயிருந்தேன் --- " என் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டான் -- " ரகு ! நான் என் மகனைப்பற்றி வெறும் கனவுகள் தான் கண்டேன் - நீ அந்த கனவுகளில் வரவில்லை - ஆனால் நீதான் என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய் - இரண்டு இலக்ஷம் யார் தருவார்கள் இந்த காலத்தில் ??? "
"சீனு -- எனக்கு பிள்ளையா குட்டியா - நான் ஒரு தனி மரம் -- இந்த உதவி கூட அதுவும் உனக்கு நான் செய்யமாட்டேனா ?? இது நமக்குள் இருக்கட்டும் - உன் மகன் நன்றாக படித்து பெரிய ஆளாக வரவேண்டும் - அதுதான் என் விருப்பமும் .... பிள்ளைகளுக்காக தன்னையே மெழுகுவர்த்தியாக பண்ணிக்கொண்டவன் சீனு - அவனுக்கு ஒரு சிறிய முறையில் உதவி செய்யக்கூடிய அந்த பாக்கியத்தை கொடுத்த இறைவனை நான் என்றுமே மறப்பதில்லை ....
இந்த பாடல் திரு ராஜ் ராஜ் அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் பிடிக்கும் பாடல் என்று நினைக்கிறேன்
https://youtu.be/VsJ-TDXJgIQ?list=PL4091AF071027ECDB
RAGHAVENDRA
26th June 2015, 08:16 AM
தாய் தந்தை தவறு செய்தால் தங்கமே நீ மாற்றி விடு...
இப்படி பெற்றோரே பிள்ளைய அறிவுறுத்தி நல்வழிப் படுத்தும் அற்புதமான பாடல்..
பிள்ளையின் கடன் என்ன.. பெற்றோரின் கடன் என்ன...
இதோ தந்தை தாய் இருவருமே இணைந்து பிள்ளைக்கு அறிவுறுத்தும் அபூர்வமான பாடல்..
வள்ளி தெய்வானை படத்தில் மலர்களின் ராஜா பாடலை அளித்த அதே டீமின் இன்னோர் அருமையான பாடல்..
சமர்ப்பணம் படத்திலிருந்து தனசேகரன் மல்லிகா பாட என்.எஸ்.தியாகராஜன் இசையில்...
தந்தைக்கு ஒரு பிறவி, தாயாருக்கோ மறுபிறவி,
ரவி, மேலே நீங்கள் சொன்ன சீனு கதையைப் படித்தவுடன் மனதில் தோன்றிய பாட்டு இது.
http://www.inbaminge.com/t/s/Samarppanam/
பாடலின் வரி ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டும் அர்த்தமுள்ள வரிகள்.
விஜயகுமார் நடிகர் திலகத்தைப் போலவே ஒப்பனையும் செய்து கொண்டு அதே பாணியைக் கடைப்பிடித்து நடித்த படம்.
1974ல் வெளியான போது பார்த்தது. அதற்குப் பிறகு இதுவரை சந்தர்ப்பம் கிட்டவில்லை.
uvausan
26th June 2015, 08:19 AM
கருவின் கரு - 115
பாகம் 2 - தந்தை
தாயை நவரத்தினங்களால் அலங்கரித்தோம் - தந்தையை எந்த நகையால் அலங்கரிப்பது - மற்றவர்களை அலங்கரிக்கும் அவனை ஒரு சின்ன புகழ்மாலைக்குள் அடக்கமுடியுமா - முடியும் மேற்கில் சூரியன் உதிக்கும் என்றால் -- ஒரு சிறிய முயற்சி - புதிய கண்ணோட்டத்தில் .
அவனுடைய பாசத்தை கூறு போடவில்லை - இரண்டு /மூன்று பாகங்களில் அலசலாம் என்று ஒரு சின்ன ஆசை .
1. தந்தையும் மகளும்
2. தந்தையும் மகனும் - பல பரிமாணங்கள்
முதலில் தந்தையும் மகளும் :
இந்த பந்தத்தை விளக்க தனி வேதம் வேண்டும் - ஒரு மனிதன் ரிலையன்ஸ் இன் " complete man " ஆவது தனக்கு மகள் பிறந்தபோது தான் - இது மிகை அல்ல - இதனால் மகன்கள் மட்டுமே இருப்பவர்கள் தயவு செய்து கோபிக்க வேண்டாம் ( எனக்கும் ஒரு மகன் உண்டு )- கடைசி வரை பாசத்தின் அளவுகோல் அப்படியே இருப்பது மகளிடம் மட்டும் தான் - பல உண்மை சம்பவங்களை இதற்க்கு சார்பாக என்னால் கூற முடியும் - அதானால் தான் சொல்கிறேன் - இந்த பந்தத்தை விளக்க முடியாது - அனுபவிக்க வேண்டும் . மீண்டும் இந்த பதிவை தொடருவோம் சில பாடல்களை ரசித்தபின் ---- ரசிக்க வைப்பவர் - ?? வேறு யார் - எதற்குமே பொருத்தமான நபர் அவர் ஒருவர் தானே !
rajraj
26th June 2015, 08:23 AM
இந்த பாடல் திரு ராஜ் ராஜ் அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் பிடிக்கும் பாடல் என்று நினைக்கிறேன்
Thanks. I like all MKT songs. This is also from Haridas in the raga Chenchurutti.
uvausan
26th June 2015, 08:27 AM
கருவின் கரு - 116
பாகம் 2 - தந்தை
மகள் தன்னுடன் இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்க மாட்டாளா என்று நெஞ்சார ஏங்குபவன் -- அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தபின் அவனை விட அதிகமாக சந்தோஷம் அடைபவர்கள் யாருமே இருக்க முடியாது .....
https://youtu.be/YKo4y7B1iWI
vasudevan31355
26th June 2015, 08:29 AM
ரவி சார்!
தந்தை கருவின் கரு தொடரில் அம்சமாக நடிகர் திலகத்தின் 'இரு மலர்கள்' படப் பாடலான 'மகராஜா' பாடலைப் போட்டு தூக்கத்தைக் கெடுத்ததற்கு உங்களுக்கு என்ன தண்டனை அளிப்பது?
http://i.ytimg.com/vi/RpgUkozdBpI/hqdefault.jpg
எனக்கும், முரளி சாருக்கும் உயிரோடு கலந்த பாட்டு. நிச்சயம் ரசிக வேந்தர் சண்டைக்கு வருவார். அவருக்கும் இது உயிர்தான். அப்புறம் கோ வருவார். இப்படிப் போய்க் கொண்டேதான் இருக்கும்.
எவ்வளவு அழகு நடிகர் திலகம்! மன்மதனுக்கெல்லாம் மன்மதன் அவர்.
'ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா' வை
மகள் ரோஜாரமணி இவரிடம் கேட்டு கோரிக்கை வைக்க,
வாயைப் பிளந்தவாறே 'டக்'கென்று மனைவி பக்கம் திரும்பி 'அதான் சொல்றாளே...அப்புறம் என்ன? ரெடியாகிறது'....என்று ராணியம்மாவை மனது வைக்க கைஜாடை காட்டி அழைத்து,
'ஆகட்டும் தாயே! அது போல் நீங்கள் நினைத்தை முடிப்பேன் மனம் போல'
என்று மகளின் கட்டளைக்கு மகிழ்ச்சியுடன் அடிபணிந்து,
அப்படியே மனைவியை அணைத்து, ஓரக்கண்களால் 'தன்னம்பிக்கை'யை கண்களில் காட்டி, பெருமிதம் பொங்க, ஆண்மை நிறைந்த சிங்கமாய் கட்டிலுக்கு உள்ளுக்குள் ரெடியாவதை, அடுத்த தொட்டிலுக்கு மனைவியை ரெடியாகச் சொல்வதை மறைமுகமாக இவர் காட்டும் தோரணை இருக்கிறதே! ஒரு சில வினாடிகளே! அந்தக் கண்கள்தான் எப்படியெல்லாம் விரிந்து சுருங்கி ஜாலங்கள் புரிகின்றன! அந்த புருவங்கள்தான் என்ன மாதிரி ஏறி இறங்குகின்றன!
ரவி! அப்படியே உங்களை.... ஆ....நற... நற.
uvausan
26th June 2015, 08:30 AM
கருவின் கரு - 117
பாகம் 2 - தந்தை
மகளை தாயாக நினைப்பவன் தந்தை - இப்படிப்பட்ட உயர்ந்த மதிப்பு எந்த நவரத்தின கற்களுக்கும் கிடையாது ------
https://youtu.be/jkjpKFIij38
uvausan
26th June 2015, 08:34 AM
கருவின் கரு - 118
பாகம் 2 - தந்தை
மகள் மட்டுமே அதிகமாக உரிமை எடுத்துக்கொள்ளுவது தந்தையிடம் மட்டும் தான் - உயிரின் உயிராய் , கருவின் கருவாய் இருப்பவள் அவள் மட்டும் தானே !
https://youtu.be/yXnbMxFpT7A
uvausan
26th June 2015, 08:39 AM
கருவின் கரு - 119
பாகம் 2 - தந்தை
கண்களில் கண்ணீரைத்தேக்கி , நெஞ்சில் பாசத்தைத் தேக்கி , வார்த்தைகளில் வாழ்த்துக்களைத் தேக்கி , வசதிகளில் கடன்களைத்தேக்கி , உடம்பில் வியாதிகளைத்தேக்கி , மெழுகுவர்த்தியில் ஒளியைத்தேக்கி வாழும் ஒரு அப்பாவியின் பெயர் " அப்பா " !!!
https://youtu.be/026qHaAnsFc
vasudevan31355
26th June 2015, 08:41 AM
தந்தை - மகன் பாசம் பற்றிய உங்கள் பதிவில் இடம் பெற்ற தாய்க்கு பின் தாரம் படப்பாடல்நல்ல தேர்வு . தாங்கள் விளக்கிய விதமும் அருமை .பாராட்டுக்கள வாசுதேவன் சார் .
நன்றி குமார் சார்.
uvausan
26th June 2015, 08:44 AM
தாய் தந்தை தவறு செய்தால் தங்கமே நீ மாற்றி விடு...
இப்படி பெற்றோரே பிள்ளைய அறிவுறுத்தி நல்வழிப் படுத்தும் அற்புதமான பாடல்..
பிள்ளையின் கடன் என்ன.. பெற்றோரின் கடன் என்ன...
இதோ தந்தை தாய் இருவருமே இணைந்து பிள்ளைக்கு அறிவுறுத்தும் அபூர்வமான பாடல்..
வள்ளி தெய்வானை படத்தில் மலர்களின் ராஜா பாடலை அளித்த அதே டீமின் இன்னோர் அருமையான பாடல்..
சமர்ப்பணம் படத்திலிருந்து தனசேகரன் மல்லிகா பாட என்.எஸ்.தியாகராஜன் இசையில்...
தந்தைக்கு ஒரு பிறவி, தாயாருக்கோ மறுபிறவி,
ரவி, மேலே நீங்கள் சொன்ன சீனு கதையைப் படித்தவுடன் மனதில் தோன்றிய பாட்டு இது.
http://www.inbaminge.com/t/s/Samarppanam/
பாடலின் வரி ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டும் அர்த்தமுள்ள வரிகள்.
.
மிகவும் நன்றி சார் - நீங்களும் , வாசுவும் இந்த தலைப்புக்கு மிகவும் சிரமப்பட்டு பாடல்களை கொண்டு வந்து தருகிண்டீர்கள் - எல்லாமே அபூர்வ பாடல்கள் - பொக்கிஷங்கள் - மிகவும் நன்றி மீண்டும்
vasudevan31355
26th June 2015, 08:47 AM
மீள முடியவில்லை. 'மன்னிக்க வேண்டுகிறேன்'. அருமையான பாடல்கள் நிறைந்த படம். எஸ்கேப்.:)
http://padamhosting.me/out.php/i123783_vlcsnap-2011-11-02-14h34m54s136.pnghttp://padamhosting.me/out.php/i123784_vlcsnap-2011-11-02-14h37m34s195.pnghttp://padamhosting.me/out.php/i123782_vlcsnap-2011-11-02-14h35m34s24.png
http://padamhosting.me/out.php/i123781_vlcsnap-2011-11-02-14h34m33s178.pnghttp://padamhosting.me/out.php/i123780_vlcsnap-2011-11-02-14h33m20s214.pnghttp://padamhosting.me/out.php/i123779_vlcsnap-2011-11-02-14h35m22s157.png
http://padamhosting.me/out.php/i123778_vlcsnap-2011-11-02-14h34m12s231.pnghttp://padamhosting.me/out.php/i123777_vlcsnap-2011-11-02-14h31m53s120.pnghttp://padamhosting.me/out.php/i123785_vlcsnap-2011-11-02-14h33m37s136.png
vasudevan31355
26th June 2015, 08:51 AM
http://i.ytimg.com/vi/gcIMRuugcPU/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/FfGqjXfIYlQ/0.jpg
http://i.ytimg.com/vi/YifS0OtnvPA/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/0D8stjYCp9Y/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/CH1eAJBQiwA/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/7stOo7PkNT8/hqdefault.jpg
vasudevan31355
26th June 2015, 08:57 AM
http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00004.jpghttp://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00005.jpg
http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00003.jpghttp://thiruttudvd.net/wp-content/uploads/2014/02/IruMalargal00001.jpg
vasudevan31355
26th June 2015, 09:02 AM
ஆதிராம் சார்!
தங்கள் தந்தையார் பற்றி தாங்கள் மனம் நெகிழ இங்கே அளித்திருந்த பதிவு நான் உட்பட எல்லோரயும் பாதித்து விட்டது என்று இங்கு வந்த பதில் பதிவுகளிலிருந்தே உணரமுடிகிறது. கண்ணீர் வரச் செய்யும் பதிவு. தங்கள் தாயார் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
vasudevan31355
26th June 2015, 09:04 AM
வாருங்கள் கடலூர் நண்பர் கல்நாயக் அவர்களே! தங்கள் பூப்பதிவுகளை தொடர்ந்து தருக. இனி இடைவெளி விட்டால் உரிமையுடன் கோபித்துக் கொள்வேன். சரியா?
vasudevan31355
26th June 2015, 09:07 AM
ஜி! எங்கே போனீர்கள்? சொல்லிவிட்டுப் போகக் கூடாதா? எங்கே எங்கே நிறையக் கேள்விகள் போங்கள்.. வந்து பாலை வார்த்தீர்களே!:)
vasudevan31355
26th June 2015, 09:15 AM
ராகவேந்திரன் சார்,
கவலையே வேண்டாம். எங்கள் ரசிக வேந்தர் கவலைப்படலாமா?
இதோ! உங்கள் நெடுநாள் ஆசையைக் கொஞ்சம் தணித்துக் கொள்ளுங்கள். இப்போது பாருங்கள். வித்தியாசமான மல்லிகா,(கொஞ்சம் கிறீச்) தனசேகரன் குரல்களில் 'தந்தைக்கு ஒரு பிறவி...தாயாருக்கோ மறுபிறவி,. இனிமையான வித்தியாசம்.
கையகலக் கண்ணாடி அணிந்து வித்தியாச தோற்றத்தில் ஒரு அருமையான தந்தையாய் மகனுக்கு நற்கருத்துக்கள் கூறும் விஜயகுமார்.
உடன் பாந்தமாய் விதுபாலா. குழந்தையாய் பேபி இந்திரா.
அருமையான பாடல். நினைவூட்டலுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.
https://youtu.be/bf6rubjPbMk
vasudevan31355
26th June 2015, 09:47 AM
'வானத்தில் பறந்து வல்லரசு நாடு கண்டு வருவாய் நியூட்டனைப் போல்
என்றும் வாழ்வில் நீ உயர்ந்து'
என்று அன்றைய தகப்பன் மகனுக்கு நல்வாழ்த்து சொன்னான்.
அதற்கப்புறம் வந்தவன்
'அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான் அடியேனும் அந்நாளில் செய்தேனப்பா'
என்று பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்தான்.
இப்போதோ அப்பனும் பிள்ளையும் ஒன்றாக சேர்ந்து தண்ணியடிக்கிறான்.
தண்ணி இல்லாத தமிழ்ப்படமே இல்லை.
'பார்' காட்டாத படமே இல்லை.
பீர் இல்லாமல் பிக்சரே இல்லை.
நடப்பது கலிகாலம்தானே!
kalnayak
26th June 2015, 09:49 AM
இனிய நண்பர் திரு கல் நாயக்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் விரிவான பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி .நம் இருவருக்கும் என்றுமே கருத்து மோதல் வந்ததில்லையே . திரு குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது . சென்னயில் இருக்கும் நீங்கள் ஒரு முறைசென்னயில் வசிக்கும் திரு குமாரை நேரில் சந்தித்து விட்டால் எல்லோருடைய குழப்பங்களும் தீர்ந்து விடும் .செய்வீர்களா கல்நாயக் ?
எஸ்வி,
தங்கள் பதிலுக்கு நன்றி. இங்கு எழுதுபவர்கள் எல்லோரும் தாங்கள் உண்மையிலேயே இருப்பவர்கள்தான் என்று ஒன்று கூடி நிருபித்து விட்டு எழுதிக் கொண்டிருந்தால், அதை நான் மட்டும் செய்யாது இருந்தால், நீங்கள் என்னை அண்ணன் வரதக்குமார் அவர்களை சந்திக்கச் சொல்லி கேட்பதில் நியாயம் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் இவ்வாறு நீங்கள் கேட்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. சந்தித்தால் குழப்பம் தீர்ந்துவிடும் என்கிறீர்கள். சந்திக்காவிட்டால்...? நகைச்சுவை பதிவு என்று உங்கள் நகைச்சுவையும் சூப்பர்!!! இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு வேண்டியவர்கள் என்னை நம்புகிறார்கள் அது போதும். வேறு யாருக்கும் நான் எந்த ஒன்றையும் நிரூபிக்க வேண்டியதில்லை.
kalnayak
26th June 2015, 09:52 AM
எஸ்வி,
எங்கள் திரியில் எல்லோருமே கௌரவமான நபர்கள். அவர்கள் தங்கள் இருப்பை நிரூபிக்கும் அவசியம் வேண்டாதவர்கள். ஒருவர் என்ன பொய் சொன்னாலும் தாய் இல்லை என்று பொய் சொல்ல மாட்டார்கள். இனியாவது ,எங்கள் திரி சார்ந்தவர்களை அனாவசியமாக காய படுத்தாதீர்கள்.
அப்படி நிரூபணம் அவசியமானால், நான் ஒரு இடத்தில் ரிஜிஸ்தர் வைக்கிறேன். போட்டோ ஐடீ காண்பித்து ,உங்கள் திரியை சார்ந்த எல்லோரும் கையெழுத்து போட்டு விட்டு போன பிறகு(கலைவேந்தன்,ராஜா,மசானம், உட்பட) ,ஆதிராம், கல்நாயக் போன்றோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்ற ஏற்பாடு செய்கிறேன்.
நன்றி கோபால், இதற்கு நான்முழு ஒத்துழைப்பு தர தயார்.
kalnayak
26th June 2015, 09:54 AM
வாருங்கள் கடலூர் நண்பர் கல்நாயக் அவர்களே! தங்கள் பூப்பதிவுகளை தொடர்ந்து தருக. இனி இடைவெளி விட்டால் உரிமையுடன் கோபித்துக் கொள்வேன். சரியா?
வாசு, உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமாக.
இரு மலர்கள் பக்கெட் நன்றாக இருக்கிறது.
பூவின் பாடல் அடுத்த பதிவில்.
vasudevan31355
26th June 2015, 10:13 AM
'திருப்பம்' படத்தின் ஸ்டில் 'தங்கப்பதக்கம்' என்று தவறாக 'சினிமா எக்ஸ்ப்ரஸ்' இதழில் (15 மே 1996) குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஒன்றுக்கு இரண்டு தரம் பத்திரிகை நடத்தும் நிர்வாகிகள் கவனிக்கவே மாட்டார்களா? அதுவும் நடிகர் திலகம் என்றால் கேட்கவே வேண்டாம்.
vasudevan31355
26th June 2015, 10:14 AM
வாசு, உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமாக.
கடலூர் பெருமை கொள்கிறது.
Russellrqe
26th June 2015, 10:28 AM
https://youtu.be/9TjIYnP8jP4
kalnayak
26th June 2015, 10:30 AM
பூவின் பாடல் 25: "பூவ பூவ பூவ பூவப் பூவே பூவ பூவ பூவ பூவப் பூவே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~
திரை அரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பதை மக்கள் குறைத்து விட்டிருந்த நேரம். பாடல்கள் கேசட்டுகளில் வருவதுடன், சீடி மற்றும் டீவீடிக்களில் நல்ல விற்பனையில் சென்று கொண்டிருந்த காலம். எங்கிருந்தோ காற்றின் வழியே வந்த இந்த பாடல் என்னை கவனம் ஈர்த்த கணம், நான் கடலூரில் இருந்து பாண்டிக்கு சென்று கொண்டிருந்தேன். அருகில் இருந்த எனது சகோதரன் (கசின்) சொன்னான் "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்று புதுப்படம், "பாட்டெல்லாம் கேட்டுப் பார்க்கலாம்" என்றான். யார் படம் என்று கேட்டேன். சூரியா நடித்தது, வசந்த் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜ இசை என்றான். கேசட் வாங்கி கேட்டுப் பார்த்தேன். எனக்கு நன்றாகவே பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருந்திருக்கும்.
நக்மா நடித்து முடித்து இன்னொரு தங்கையும் நடித்து முடித்திருந்த காலம். இந்தியில் காதலுக்கு மரியாதையில் நடித்த நக்மாவின் இளைய சகோதரி இதில் அறிமுகம் என்றறிந்தேன். அவரே அஜித்தின் 'வாலி'யிலும் சிறிய பாத்திரம். பின்பு அவரே சூரியாவின் மனைவியாக ஆகி இப்போது '36 வயதினிலே' ஆனது காலம் உருவாக்கிய வரலாறு.
'பூவெல்லாம் கேட்டுப்பார்' ஒரே கதையை பலர் மறு உருவாக்கம் செய்த படம்தான். இது இயக்குனர் வசந்த்தின் பார்வையில். இதை தொலைக்காட்சியில்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்க முடிந்தது. பாடல் முழுவதும் பல பூக்களைக் காட்டுகிறார்கள். என்ன சொல்வது, ஜோதிகா துள்ளிக்குதித்து, பல உடற்பயிற்சிகள் செய்து நடனமாடி பூக்களிடம் அவ்வப்போது சில கேள்விகள் கேட்கிறார்கள். அவ்வப்போது பூக்களுக்கெல்லாம் ஒரே பாராட்டு மழைதான். மற்றபடி பாட்டுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. கேட்கவும் நன்றாகவே இருக்கிறது.
பாடியது யார்? யாராவது கேட்பீர்களோ இல்லையோ. சொல்லிவிடுகிறேன். நித்யஸ்ரீ மகாதேவன்.
https://www.youtube.com/watch?v=47T9Mtqo09g
poova poova poova poova poove(3)
poova poova poove
poove undhan maeniyil aedho oru vaasanai
neeyum kooda kadhal kondaayo?
poova poova poova poova poove(3)
poova poova poove
ovoru naaLum oru azhagil poothu nee kulinginaai
vanna vanna idhazhgalai ellam enge nee vaanginaai?
poova poova poova poova poove(3)
poova poova poove
vannagalodu malarugiraai vasanaiyodu vaazhugiraai
parithidum pozhudilum sirikindraai
poove siru poove unai pol vaazhndidum vaazhkaye vendume
nee oru naaLil ulagai aaLum raani
needhaane endrum ennakku nalla thozhi
poove undhan maeniyil aedho oru vaasanai
neeyum kooda kadhal kondaayo?
poova poova poova poova poove(3)
poova poova poove
vasandham vandha saedhiyinai vandukku eppadi solvayo?
vannathila vaasathila irandiluma?
thaenai nee thandhu edhai nee peruvai poove poove
un thaegam theendi parandhu sendra vandu
pira poovai paarthal kobam unnakku varuma?
poove undhan maeniyil aedho oru vaasanai
neeyum kooda kadhal kondaayo?
poova poova poova poova poove(3)
poova poova poove
poove undhan maeniyil aedho oru vaasanai
neeyum kooda kadhal kondaayo?
poova poova poova poova poove(3)
poova poova poove
இதற்கு ஆண் குரல் பாடல் ஒன்றும் உண்டு. பாடியவர் உண்ணிக்கிருஷ்ணன். இத்திரைப் படத்தின் பாடல்கள் எல்லாவற்றையும் எழுதியவர் கவிஞர் பழனி பாரதி
RAGHAVENDRA
26th June 2015, 10:42 AM
கல்நாயக் சார்
அத்திப்பூத்தாற்போல வராமல் தொடர்ந்து அன்றாடம் மலரும் மலர்களாய் இங்கு பங்கெடுத்து பூக்களிலிருந்து தேனெடுத்துத் தாருங்கள் என வேண்டுகிறேன்.
கடந்த பல ஆண்டுகளில் உள்ளத்தைத் தொடும் பாடல்களாய் அமைந்திருந்தவற்றுள் இப்பாடலுக்கு இடம் உண்டு. இதுபோல் இன்னும் பாடல்களைப் பகிர்ந்து கொள்க.
RAGHAVENDRA
26th June 2015, 10:45 AM
குமார் சார்
சற்று நேரத்திற்கு முன் தான் நடிகர் திலகத்தை மனதில் வைத்து உருவ அமைப்பை வடித்து சமர்ப்பணம் படத்தில் நடிகர் விஜயகுமாரை இயக்குநர் நடிக்க வைத்ததைப் பற்றி எழுதியிருந்தேன். இதே அடிப்படையில் மாஸ்டர் பிரபாகரை நடிகர் திலகத்தின் இளவயது உருவகமாகவே அமைத்திருந்தார் ஏபி.என். அவர்கள். வா ராஜா வா படம் முழுதும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மாஸ்டர் பிரபாகரின் ஒவ்வொரு அசைவையும் நடிகர் திலகத்தை மனதில் வைத்தே செதுக்கியிருந்தார் இயக்குநர். உண்மை எது பொய் எது பாடலில் முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழியைப் புகுத்தி மாஸ்டர் பிரபாகரை நடிக்க வைத்திருந்ததை இப்பாடலில் நாம் காணலாம்.
நடிகர் திலகத்தை நினைவூட்டும் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
26th June 2015, 10:48 AM
வாசு சார்
சமர்ப்பணம் பாடல் காணொளிக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களுக்குப் பின் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு உளமார்ந்த நன்றி, தரவேற்றிய நண்பருக்கும் தங்களுக்கும்.
இந்நாளைய தகப்பன் பிள்ளை உறவு முறை பற்றிய தங்கள் கருத்து நெஞ்சைத் தொடுவதாக உள்ளது.
இருமலர்கள். .. ஆஹா.... அட்டகாசம்...
தலைவர் இல்லாமல் வாசுவின் பதிவா.. தூள் கிளப்புங்கள்.
vasudevan31355
26th June 2015, 01:45 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
மிக மிக ஸ்பெஷல் பதிவு
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
12
'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்'
பாலா தொடரில் அடுத்து வருவது 'வீட்டுக்கு வீடு' (1970) செம ஜாலி காமெடிப் படம்.
http://padamhosting.me/out.php/i91403_NEWMovie02.avisnapshot00.28.062011.06.2522. 58.05.jpghttp://padamhosting.me/out.php/i91404_NEWMovie02.avisnapshot00.36.332011.06.2523. 00.42.jpg
ஜெய், லஷ்மி, முத்துராமன், 'வெண்ணிற ஆடை' நிர்மலா, நாகேஷ், வி.கே.ஆர், மேஜர் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி' என்று நட்சத்திரக் கும்பல். நகைச்சுவைக் கும்பல். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கென்றே எடுக்கப்பட்டு ஓஹோ என்று ஓடிய படமும் கூட.
துணிச்சல் பெண்ணான லஷ்மி அப்பாவுக்குப் பயந்த கோழையான பணக்கார ஜெய்யைக் கல்யாணம் செய்து கொள்கிறார். இருவரும் முத்துராமன் வீட்டிற்கு குடித்தனம் வருகின்றனர். அங்கு லஷ்மியின் தோழி நிர்மலா அவர் கணவர் முத்துவால் கொடுமைப் படுத்தப்பட, அதைக் கண்டு லஷ்மி கொதித்து தோழியின் வாழ்விற்காக குரல் கொடுத்து போராட ஆரம்பிக்கிறார்.
நிர்மலாவின் ஒரே ஆதரவான பெரியப்பா (முத்துவின் லட்சணம் தெரிந்தவர்) திடீரென வெளியூரில் இறக்க நேரிட, அவர் இறக்கும் தருவாயில் தன்னிடமுள்ள ரூபாய் இரண்டு லட்சத்தை மகள் நிர்மலாவுக்குத் தரும்படி மானேஜர் வி.கே.ஆரிடம் சொல்லி விட்டு இறக்கிறார். ஆனால் ஒரு கண்டிஷன். (முத்து மேல் நம்பிக்கை இல்லாததால்)
.
முத்துவும் நிர்மலாவும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான், அதை மானேஜர் வி.கே.ஆர் சில நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கி கண்ணால் பார்த்து ஓ.கே சொன்னால்தான் பணம் நிர்மலாவிற்கு சேரும்.
அப்படி ஒரு கண்டிஷன்.
ஆனால் அது நடக்க சாத்தியமில்லாமல் முத்து கெட்ட பழக்கங்களுடன் ஒரு பெண்ணிடம் வேறு அடிமைப்பட்டுக் கிடக்கிறார். முத்துராமன் இல்லாத சூழ்நிலையில் நிர்மலாவின் நல்வாழ்விற்காக வேண்டி லஷ்மி தன் கணவனான ஜெயசங்கரை நிர்மலாவின் கணவன் என்று வி.கே.ஆரிடம் பொய் சொல்லி நாடகமாட வேண்டிய கட்டாயம். நேரம்.. சூழ்நிலை.
அதை நம்பும் வி.கே.ஆரும் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்துவதைப் பார்த்துவிட்டுத்தான் பணத்தைத் தர முடியும் என்று சில நாட்கள் அங்கேயே தங்கியும் விடுகிறார். உடன் அவரின் உருப்படாத மகன் கிடார் நாகேஷ். வி.கே.ஆர் முன்னால் தர்ம சங்கடத்துடன் லஷ்மியின் கட்டாயத்தின் பேரில் ஜெய், நிர்மலா பல்லைக் கடித்துக் கொண்டு கணவன் மனைவியாக நடிக்கிறார்கள்.
வெளியே தங்கியிருக்கும் முத்துராமனிடம் பணம் கிடைக்கப் போகும் விஷயத்தைச் சொல்லி லஷ்மி, ஜெய் இருவரும் அவரை வீட்டிற்குக் கூட்டிவருகின்றனர். இப்போது முத்து லஷ்மியின் கணவனாக நடிக்க வேண்டும்.
ஜோடி மாறி பணத்துக்காக கள்ள நாடகம். ஆனால் நல்ல நாடகம். நல்லதுக்காக நாடகம். ஜோடிகள் வி.கே.ஆருக்காக மாறி மாறி வேடம் போடுவதும் வி.கே.ஆர் ஏமாந்த சமயத்தில் ஒரிஜினல் கணவன் மனைவி ஒன்று சேர்வதுமாக கும்மாளக் கதை. இதை நாகேஷ் கண்டுபிடித்து விட்டு தந்தை வி.கே.ஆரிடம் நிரூபிக்கப்படும் பாடு மீதி கதை. லஷ்மியை ஒருதலையாய் பேயாய்க் காதலிப்பதும் இடைச் செருகல். இறுதியில் எல்லாக் குழப்பமும் முடிந்து சுபம்.
கலகலவென்று நகரும் படம். ஒரு இடம் கூட சலிப்புத் தட்டாது. நடிகர்கள் அனைவரும் நல்ல காமெடி ஒத்துழைப்பு.
இதே படத்தை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து பின்னால் ராமநாராயணன் 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' என்று ஒரு கூத்து எடுத்தார் ராம்கி, விந்தியா, விவேக், ரோஜா, கோவை சரளா கும்பலுடன்.
http://padamhosting.me/out.php/i91400_NEWMovie02.avisnapshot00.13.132011.06.2522. 54.31.jpghttp://padamhosting.me/out.php/i91401_NEWMovie02.avisnapshot00.25.212011.06.2522. 55.50.jpghttp://padamhosting.me/out.php/i91405_NEWMovie02.avisnapshot01.10.452011.06.2523. 01.26.jpghttp://padamhosting.me/out.php/i91406_NEWMovie02.avisnapshot01.16.422011.06.2523. 01.47.jpg
லஷ்மி
'டாண்.. டாண்' வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. அலட்சிய நடிப்பு கொடி கட்டுகிறது.
நிர்மலா
பரிதாபமான முத்துவின் மனைவி. கணவனே கண் கண்ட தெய்வம் அவன் கொடுமைக் காரனாய் இருந்தும்.
ஜெய்
பயந்தாங்கொள்ளிக் கணவன். லஷ்மியின் ஜோடி. அடுப்பங்கரை நளன். இடுப்பில் புடவை போல் தூக்கிக் சொருகப்பட்ட வேட்டியுடன் கரண்டியும் கையுமாய் மனிதர் செமையாய் சமையல் அமர்க்களம்.
முத்துராமன்
குடி கூத்தி, சீட்டாட்டம், ரேஸ் அத்தனைக்கும் அதிபதி. நிர்மலாவை நிர்மூலமாக்கும் கணவர்.
வி.கே.ஆர்
கண்காணிப்பு குடுமி மானேஜர். பிள்ளை நாகேஷின் தொல்லைகளை ஹேண்டில் பண்ணும் விதமே தனி. சரளமான காமெடி டயலாக்ஸ் சகட்டு மேனிக்கு. கொஞ்சமும் அலட்டல் இல்லாமல். ('சங்கீத மழை' "மழையிலேயே பாடுவானோ?!!)
http://2.bp.blogspot.com/-ZbnGfMDTuRw/T9XDXxV_krI/AAAAAAAABTM/TtmqDiVbHMA/s1600/nagesh.JPG
நாகேஷ்
உண்மை நாயகர். 'சங்கீத மழை' பட்டு பாகவதர். கிடார் வைத்து கிடுகிடுக்க வைப்பார் காமெடியில். ஜோடிகள் மாறுவதைக் கண்ணால் கண்டு 'ம்ம். மாட்டிகிட்டான்'...'ம்ம். மாட்டிகிட்டான்' என்று சொல்லி தந்தையை தடுமாறச் செய்வது ஒன்றே போதும்,.
மேஜர்
வழக்கமான பணக்காரத் தந்தை. ஜெய்க்கு.
'மேஜிக்' ராதிகாவும் உண்டு கவர்ச்சிக்காக.
http://padamhosting.me/out.php/i91402_NEWMovie02.avisnapshot00.25.372011.06.2522. 56.19.jpg
சி.சுந்தரம் அளிக்கும் பாபு மூவிஸ் 'வீட்டுக்கு வீடு'. கவிஞரின் பாடல்களுக்கு அற்புதமான இசை தந்தவர் 'மெல்லிசை மன்னர்'.
சுசீலா, ராட்சஸி, சாய்பாபா, பாலா பாடல்களைப் பாடியிருப்பார்கள்.
ஒளிப்பதிவை கர்ணனும், பாஸ்கர் ராவும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கதை வசனம் காமெடி கோபு. அன்றைய 'கிரேஸி' மோகன்.
இயக்கம் சி.வி.ராஜேந்திரன். தெளிவான, குழப்பமான திரைக்கதைக்கு குழப்பமில்லாத அம்சமான இயக்கம்.
இயக்கத்தில் இவர் 'ராஜா'
'நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி',
சாய்பாபாவின் 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' (நான் இந்தப் பாடலுக்கு வாழ்நாள் அடிமை)
'நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே' (ராட்சஸி)
'தொட்டுத் தொட்டுப் பார்த்தால்' (சுசீலா அமர்க்களம்)
போன்ற அமர்க்களமான பாடல்கள்.
இப்போது தொடரில் பார்க்கப் போவது பாலா, ராட்சஸி இணைவில் யாரும் இணையே செய்ய முடியாத ஒரு அற்புதப் பாடல்.
'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு'
http://padamhosting.me/out.php/i91399_NEWMovie02.avisnapshot00.06.352011.06.2522. 53.44.jpg
லஷ்மி, ஜெய் இருவரின் டூயட்.
தொடை நடுங்கி ஜெய் அடுத்தவர்களுக்கு பயந்து பயந்து, லஷ்மியை ஒளிந்து ஒளிந்து காதலிக்க, துணிவோடு லஷ்மி வெளியே வந்து துள்ளாட்டம் போடுவார். லஷ்மி மிக எளிய நைலக்ஸ் சேலை அணிந்து தலை நிறைய கனகாம்பரம் வைத்திருப்பார். ஜேம்ஸ்பாண்டுக்கும் ஜே!
'லாலாலாலால்லா' என்று லஷ்மி ஈஸ்வரியின் குரலில் பாடலை உற்சாகமாய்த் தொடங்க, பயந்து ஒளிந்தபடி ஜெய் 'ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்' என்றபடி 'மாட்டேன்' என்று முரண்டுபிடிக்க, ரகளையாய் பாடல் ஆரம்பிக்கும். கவிஞரின் தமிழ் வரிகள் அமுதமோ அமுதம்.
'லாலாலாலால்லா
ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்
லாலாலாலால்லா
ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்
லா... லா...
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசயக் கனவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசயக் கனவு
நவரச நிலவு
அதிசயக் கனவு
நவரச நிலவு
அதிசயக் கனவு
பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன்னழகு
லாலால்லா..லாலா...லாலால்லா
பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன்னழகு
மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு
லாலால்லா..லாலா...லாலால்லா
மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு
கற்பனை அற்புதம்
காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும்
தோன்றுமே காவியம்
கற்பனை அற்புதம்
காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும்
தோன்றுமே காவியம்
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசயக் கனவு
தேன் சுவையோ இல்லை நான் சுவையோ
என தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடகப் பார்வையில்
கதை நாளும் சொல்லிவிடு
பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய
பருவ கால இசையே
பார்த்தது மட்டும் போதுமா
ஒரு பாடம் சொல்லிவிடு
வந்தது கொஞ்சமே
வருவதோ ஆயிரம்
ஒவ்வொரு நினைவிலும்
உலகமே நம்மிடம்
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசயக் கனவு
ஹோய் நவரச நிலவு
ஹோ அதிசயக் கனவு
ஹாங் நவரச நிலவு
அ தி சயக் கனவு
அடா! அடா! அடா! என்ன பாடல்! பாலாவும் ராட்சஸியும் துவைத்துக் காயப் போட்டு விட்டார்கள் இந்தப் பாடலை. பாலாவின் அந்த அலட்சிய குரல் பாவங்கள்...ஏற்ற இறக்கங்கள்.
'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு'
எட்டு வார்த்தைகளையும் ஒரே சமயத்தில் ஒன்றாக்கி அவர் கொஞ்சும் வித்தையை மிஞ்ச வேறு யார்?
அதற்கு ஈடு கொடுக்கும் ஈஸ்வரியின் வித்தை ஜாலங்கள்.
(லாலால்லா..லாலா...லாலால்லா)
'கற்பனை அற்புதம்' என்று பாலா ஆரம்பித்து பின் அதையே திரும்ப இன்னும் பேஸ் வாய்ஸில் அழுத்தமாய்க் கொடுப்பாரே. இது கற்பனையையும் மீறிய அற்புதம் அல்லவா? 'மைவிழி நாடகப் பார்வையில்' எனும் போது 'மைவிழி'யை இவர் உச்சரிக்கும் விதம் அசத்தலோ அசத்தல்.
இரண்டாவது சரணத்தில் வரும் 'வந்தது கொஞ்சமே' முதல் சரணத்தின் 'கற்பனை அற்புதம்' போல ரிப்பீட் ஆகாமல் நமக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சும். இன்னொரு முறை பாலா திரும்ப பாட மாட்டாரா என்று மனம் ஏங்கும். அவ்வளவு ஏன்?... கோபமே கூட வரும்.
பாடல் முடியும் போது இவர் 'ஹோய்.. நவரச நிலவு' என்று கொஞ்ச, ராட்சஸி அது பங்கிற்கு 'ஹோ... அதிசயக் கனவு' என்று பதில் கொஞ்சல் கொஞ்ச,
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று நாம் கெஞ்ச,
உலகத்தின் இன்பத்தை எல்லாம் ஒன்றாக்கித் தரும் பாடல்.
பாலாவின் வைரக் கிரீடத்தில் ஒரு மாணிக்கம் இந்தப் பாடல் என்று நன் கூற மாட்டேன்.
வைரக் கிரீடமே இந்தப் பாடல் என்றுதான் கூறுவேன்.
'மெல்லிசை மன்னர்' வீடு கட்டி அடிப்பார்.
பாடலின் ஆரம்பத்தில் உன்னிப்பாகக் கேளுங்கள். 'அங்கம் புதுவிதம்' என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் விசு ஒரு அருமையான சங்கதி பின்னணி கொடுத்திருப்பார். அப்படியே நடிகர் திலகத்தின் 'சிவந்த மண்' படத்தின் 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலின் துவக்கத்தில் அந்த சங்கதியை ஒரு 70% அப்படியே உணரலாம்.
https://youtu.be/JqD6SRwLHuE
Murali Srinivas
26th June 2015, 02:19 PM
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
கோடானு கோடி நன்றிகள் to ரவி & வாசு.
வாசு, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை! அதிலும் " மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா" என்ற வரிக்கு வலது கையை இடுப்பிலிருந்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக உயர்த்துவாரே, அந்த இடத்திலேயே நான் சரண்டர்.
வேண்டாம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்
வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!
RAGHAVENDRA
26th June 2015, 02:53 PM
வாசு சார்
அந்நாட்களில் வீட்டுக்கு வீடு ஒலித்த பாடல் இன்று வீட்டுக்கு வீடு அதன் பெருமையை வாசு சார் உரைப்பதற்கு மிகவும் பேறு பெற்றுள்ளது என்றே சொல்வேன். பாடலைக் கேட்பதற்கு முன் தங்கள் பதிவைப் படிதது விட்டுக் கேட்டால் அதன் சிறப்பு இன்னும் அதிகம் தெரியும்.
மேடைகளில் திக்குத் தெரியாத வீட்டில் என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்ட போதே நான் பார்ததிருக்கிறேன். இதே நடிகர்கள் தான், நாகேஷ் உட்பட. அரங்கமே அதிரும் ஒவ்வொரு சபா மேடையிலும். அது மட்டுமின்றி விவித் பாரதி தொடங்கப்பட்ட போது, வண்ணச்சுடரில் தினமும் இரவு 9.15 மணிக்கு சில நாட்களுக்கு இந்நாடகத்தை ஒலிபரப்பினார்கள். தேன்கிண்ணம் முடிந்தவுடன் விவித்பாரதியை அணைத்து விடாமல் இந்நாடகத்தையும் கேட்பேன். படமாக்கப்பட்ட விதமும் அருமை. தொய்வின்றி இயக்கியிருப்பார் சி.வி.ஆர்.
மெல்லிசை மன்னரிடம் இசையில் தங்களுக்கென தேவையானவற்றை அருமையாக வாங்கத் தெரிந்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் சி.வி.ஆர்.
பாராட்டுக்கள்.
Gopal.s
26th June 2015, 03:10 PM
L 'Avventura(1960)/L'Notte(1961)/L'Eclisse(1962)- Trilogy-Italy- Michel Angelo Antonioni.
ஒரு கவிதையை, நாவலை திரையில் பார்த்து ,அதே உணர்வை காணொளி ஊடகம் மூலம் அதிசய உணர்வை அனுபவித்துள்ளீர்களா?படத்தை நகர்த்த கதை மாந்தர்களின் உள்ளுணர்வும் அவர்களது மன நிலை மட்டுமே போதும் , கதை சம்பவங்கள் தேவையே இல்லை, அப்படி நிகழ்ந்தாலும் கதையை மேலெடுத்து செல்லாமல், அவர்களே மீதி கதாபாத்திர உணர்வுகளை பார்வையிடுவது போல ,உணர்வின்,மாறும் மனநிலையின்(moods ),விரக்தி, சோர்வு,அயர்ச்சி (Boredom )இவற்றை திரையில் உணர்ந்து வாழ்க்கையோடு ஐக்கியம் கண்டிருக்கீர்களா?
நாடக முறையில் கதைசொல்லல், நடைமுறை யதார்த்தம் இவற்றை தூக்கி கடாசி விட்டு , nerration என்னும் சொல்லும் முறையை மாற்றி அமைத்த கவி இயக்கினர் நடைமுறைக்கு விளங்காத ,கடினமான mood pieces (துரித மனநிலை மாற்றங்களின் துண்டுகளை இணைத்தல்) விளக்கமாக ,விஸ்தாரமாக படங்களில் தொடுப்பார். படிமங்கள்,(images ),அமைப்பு முறை (Design )என்பதில் கவனம் செலுத்தி,கதாப்பாத்திரங்களின் விஸ்தார கதை சொல்லல் முறையை தவிர்ப்பார்.ஒரு வித்யாசமான ,மாறுபாடான அமைப்பு ,அது சார்ந்த பார்வை கோணங்கள்,பாத்திரங்களின் நடப்பு முறைகள் என்பது சினிமாவுக்கு எத்தனை சாத்தியங்கள் உள்ளது என்று நமக்கு உணர்த்தி விடும். ஒரு துரித நிகழ்தல் என்பதை தவிர்த்து சின்ன சின்ன விஷயங்களை ,கூரிய பார்வையில் ,மிக மிக விஸ்தார கவனத்துடன் செதுக்குவார்.
apu trilogy என்று சத்யஜித் ரே யின் பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,அபுர் சன்சார் சொல்ல படுவது போல Adventure ,Night ,Eclipse என்று பொருள் படும் மூன்று படங்கள் trilogy என்ற வகை.
நான் சுருக்கி பின்னணி கொடுத்தாலும் ,இவை கதை கேட்டு ரசிக்க வேண்டிய படங்களல்ல. பார்த்து உணர வேண்டிய காவியங்கள்.(சன் டீவீ ,கலைஞர் டி.வீ திரைக்காவியங்கள் நினைவு வந்தால் மூளையை dry wash கொடுத்து பின் இங்கு வரவும்)
L 'Avventura அன்னா ,கிளாடியா என்று நண்பிகளையும்,அன்னாவின் ஆண் நண்பன் சாண்ட்ரா என்பரை சுற்றி சுழலும். அன்னா ஒரு அசாதாரண சூழ்நிலையில் மாயமாகி விட ,அவளை தேடியலையும் கிளாடியா,சான்டிரா ஈர்க்க பட, கிளாடியா ஒரு குற்ற உணர்வுடன் இதனை அரை மனதுடன் அணுகுகிறாள். இறுதியில் ,ஒரு நிகழ்வு ,சாண்ட்ரா ஒரு சந்தர்பத்தில் தவறி விட,கிளாடியா குற்றவுணர்வு குறைந்து ஏற்கும் மனநிலைக்கு வருகிறாள். இந்த படம் ஒரு உள்மன பயணம். காட்சியமைப்புக்கள் ,விஸ்தாரமாய் சொல்ல படும் உணர்வு நிலைகள் என்று ஒரு அற்புத படைப்பு.
L 'Notte என்பது கியோவன்னி என்ற கதாசிரியனுக்கும்,லிடியா என்ற அழகான மனைவிக்கும் இடையேயான திருமண பந்தம் சலிப்பும்,அலுப்பும் கொண்டு முறிவை நோக்கி நகரும்.கடைசியில் அவர்கள் வேகத்துடன் ,உறவில் திளைப்பதில் முடியும்.அவன் எனக்கு inspiration இல்லை நினைவுகள் மட்டுமே உள்ளன என்பதும், ஏதாவது செய்யத்தானே வேண்டும் என்று அவள் சொல்வதும்,கணவன் இன்னொரு பெண்ணிடம் அதீத நட்பு விழையும் போது பொறாமை கூட இல்லாத சலித்த மனநிலை அடைவதும்,தன்னை ஒரு காலத்தில் அடைய விரும்பிய நண்பனின் மரணம்,கணவன் தனக்கு எழுதிய பழைய காதல் (அவனுக்கே நினைவில்லாத)கடிதத்தை படிக்க கொடுப்பதும், விருந்தில் பைத்தியக்காரதனமான விரோத உணர்வில்(உப்பு பெறாத விஷயங்களில்) விருந்தினர் ஒருவரையொருவர் கலாய்ப்பதும் ,ஒருவருக்கும் வாழ்க்கையில் உந்துதலோ,நோக்கமோ அற்றிருப்பதை பல்லிளிக்க வைக்கும்.
L 'Eclisse முடிவு trilogy . விட்டோரியோ ,ரிக்கார்டோவின் விருப்பமின்றியே மண மன முறிவுடன் தாயிடம் செல்கிறாள்.அங்கு பியரோ என்ற பங்கு சந்தை தரகனை பார்த்து விருப்பம் கொள்ள ,இறுதியில் இருவருமே குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாக சொல்லி ,இருவருமே வராத முடிவு. அப்பப்பா ,ஒரு கதையில் கூட கதாசிரியர் இவ்வளவு ஆழம் கொடுக்க முடியுமா?பங்கு சந்தை காட்சிகள் (அந்த கால), அங்கு ஒருவருக்கு இரங்கல் நேரத்தின் போதும் மணியடிப்பதும்,அது முடிந்தவுடன் ,உடனே பரபரப்பு திரும்புவதும்,இறந்த மனிதனை பற்றி கவலை படாமல் பியரோ ,காரில் விழுந்த ஒடுக்கி பற்றி கவலை படுவதும்,அம்மாவும் பணம் பற்றிய சிந்தையில்,இவள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க மறுப்பதும்,இவளுக்கே தப்பிப்பே இல்லாத ஆயுள் கிரகணம் பிடித்து விட்டதை காட்டும்.
என் எழுத்தை தொடர்ந்து மற்றதை பார்க்க மனமில்லை என்றாலும், இந்த மூன்று கவிதைகளையாவது பார்த்து சுவையுங்கள்.
vasudevan31355
26th June 2015, 03:15 PM
முரளி சார்,
நீங்கள் கேட்ட 'ஸ்டெப் பை ஸ்டெப்' திலகத்தின் ஸ்டில்.
http://i61.tinypic.com/65qxl4.jpg
http://i59.tinypic.com/oapslj.jpg
http://i58.tinypic.com/33tscqv.jpg
http://i59.tinypic.com/2wp8481.jpg
vasudevan31355
26th June 2015, 03:18 PM
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
கோடானு கோடி நன்றிகள் to ரவி & வாசு.
வாசு, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை! அதிலும் " மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா" என்ற வரிக்கு வலது கையை இடுப்பிலிருந்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக உயர்த்துவாரே, அந்த இடத்திலேயே நான் சரண்டர்.
வேண்டாம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்
வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!
அந்த நாள் நான் அங்கிருப்பேன் முரளி சார்.
adiram
26th June 2015, 06:06 PM
வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!
முரளி சார்,
அதாவது, காமெடி என்ற பெயரில் ப்ரொபசர் நாகேஷ், மனோரமா, அவர்கள் குழந்தை குட்டிகளுடன் அடிக்கும் கூத்தை வெட்டி எறிந்துவிட்டுத்தானே.
kalnayak
26th June 2015, 07:30 PM
பாலாவின் "அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்" பாடல் பதிவில் சுருக்கமாக வீட்டுக்கு வீடு படம் பார்க்க வைத்து விட்டீர்கள். எனக்கு நல்ல அறிமுகம். வழக்கம் போல் உங்கள் அற்புதமான பதிவு. நன்றி வாசு.
vasudevan31355
26th June 2015, 08:40 PM
நன்றி கல்ஸ். கதை வேண்டாமென்றால் மனது கேட்கவில்லை. பிடித்த படமும் கூட. அதான்! கொஞ்சம் வேலையும் நிறைய வாங்கி விட்டது. ஆனால் இந்தப் பாடல் என்றால் அப்படி ஒரு பைத்தியம்.
பூவ பூவப் பூவே பாட்டு உங்களுக்கு பிடிபட்ட பின்னணியை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். கல்ஸ்! எனக்கு ஜோதிகா தையா தக்கா என்று பெண்மையின் நளினம் கொஞ்சமும் இல்லாமல் குதிப்பது பிடிக்கவே பிடிக்காது. ('மணிசித்திரத்தாழு' படத்தில் ஷோபனாவைப் பார்த்துவிட்டு 'சந்திரமுகி'யில் ஜோதிகாவைப் பார்க்க கடுப்பாகவே இருந்தது. அலங்கோல அருவருப்பு. சுத்தமாக ஜோதிகாவை அறவே பிடிக்காது). அதனாலேயே இந்தப் பாட்டு எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.
ரெண்டாவது அது என்ன பூவ பூவப் பூவே என்றே புரியவில்லை. பூவே என்றால் சரி. பூவ பூவப் பூவே என்றால் என்ன? இந்த சினிமாக்காரர்கள் எதை வேண்டுமானாலும் எழுதி நம் தலையில் கட்டுவார்கள். ரொம்பநாள் எனக்கு இந்தப் பாடல் கூவ கூவ கூவே என்றுதான் விழுந்தது.
இன்று உங்களால்தான் அது பூவே என்று தெரிந்தது. அதற்காக உங்களுக்கு நன்றி! உங்கள் உழைப்புக்கும் நன்றி!
rajeshkrv
26th June 2015, 10:12 PM
மெல்லிசை மன்னர் குணமடைந்தார். நேற்று தான் திரு முக்தா ரவி
(முக்தா ஸ்ரீனிவாசனின் மகன்) தன் தந்தையுடன் சென்று மெல்லிசை மன்னரை பார்த்துவிட்டு வந்தனர்
சிறிது உணவும் உண்டாராம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள்
வாசு ஜி.
என்றுமே சலிப்பு தட்டாத படம் வீட்டுக்கு வீடு. ஜேம்ஸ் பாண்ட் இமேஜ் உள்ள ஜெய் இதில் மிகவும் அழகாக சில இடங்களில் நளினமாகக்கூட நடித்திருப்பார். ஆஹா அருமை அருமை
நாகேஷ், ஜலகண்டேஸ்வரா வீ.கே.ஆர் என ஆர்பாட்டம்
பாந்தமான நிர்மலா எப்போதுமே அழகு .. லெக்*ஷ்மி மிடுக்கு
வீட்டுக்க்கு வீடு என்றுமே சலிக்காத மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்
rajeshkrv
26th June 2015, 10:24 PM
ஜி
எனக்கு ஜோவை பிடிக்கு, தையா தக்கா என்று குதித்தாலும் ஒரு குறும்பு இருக்கும்
எல்லோரும் என்ன சிம்ரனை போல் இடுப்பை ஆட்டியே ஆட வேண்டுமா.. நின்ற இடத்திலேயே ஆடிய நடிகையர் திலகம் உண்டு .. அதுவும் அழகுதான் ....
சரி சரி .. உமக்கு பிடிக்காது எனக்கு பிடிக்கும் அவ்வளவுதேன்............:)
Gopal.s
27th June 2015, 05:30 AM
Knife in the Water -Roman Polanski -Polish -1962
ஒரே கருவில் உருவான Schindler 's List என்ற உலக புகழ் மொக்கை இயக்குனர் Steven Spielberg (உண்மை கதை)படத்தை பார்த்து விட்டு, கிட்டத்தட்ட இதே கருவில் உருவான இன்னொரு உண்மை கதை சார்ந்த (Wladyslaw Szpilman )pianist படம் பார்த்தவர்களுக்கு யார் உண்மை கலைஞன் ,எப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது புரிந்திருக்கும்.
ரோமன் போலன்ஸ்கி யும் இரண்டாம் உலக போரில் போலந்து நாட்டில் கிட்டத்தட்ட தப்பி பிழைத்தவர். இவர் உண்மை கதையையே யாராவது சினிமா ஆக்கலாம்.அமெரிக்கா வில் வாழ்ந்த போது இவர் மனைவி ,ஒரு குடும்பத்தால் கொலை செய்ய பட்டார். இவரே ஒரு மைனர் சிறுமியை கற்பழித்த குற்றத்தில் கிட்டத்தட்ட கைதாகும் நிலைக்கு சென்று தப்பினார்.(பின்னால் வளர்ந்த அந்த பெண்ணிடம் மன்னிப்பும் கோரினார்)பிரான்ஸ் நாட்டில் அடைக்கலமானார்.
பல கிரிக்கெட் ஆட்கள் (விஸ்வநாத்), Debut வில் century போடுவது போல ,முதல் படமே இவருடைய மிக சிறந்த படமாகி விட்டது விந்தை.உலக அளவில் கொண்டாட பட்டது.
மூன்றே பாத்திரங்கள். அந்த்றேஜ் என்ற கணவன்,கிறிஸ்டினா என்ற மனைவி,பெயர் தெரியாத அவர்களுடன் ஒட்டி கொள்ளும் வழிப்போக்கன்-இளைஞன். முழுக்க படகிலேயே நடக்கும் கதை. ஆனால் ஒன்றரை மணிநேர மனதத்துவ இயங்கு நிலை பாடம். உறவுகள்,அது சார்ந்த அசூயை(envy ),பொறாமை (jealousy ) என்று 90 நிமிட சுவாரஸ்ய பயணம்.
அன்றேஜ் தன மனைவி க்ரிஸ்டினாவுடன் உல்லாச பயணம் செல்லும் போது ,ஒரு வழிப்போக்கன் lift கேட்டு ஏறி கொள்ள அவனையும் அழைத்து செல்கிறான்.தண்ணீர் விளையாட்டுக்கள் அறியாத அவனுக்கு போதிக்கிறான் . ஆனால் போக போக கிரிஸ்டினாவுக்காக,இருவருக்கும் பொறாமையால் மோதல் போக்கு அதிகரித்து, ஆத்திரம் தூண்ட பட்டு ,கைகலப்பில் இளைஞன் தண்ணீரில் விழுந்து விடுகிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்று அவன் தெரிவித்திருந்ததால், அவனை தேடி பார்த்து இயலாமல்,கரைக்கு நீஞ்சி செல்கிறான் கணவன். காவலர்களை அழைத்து வர. ஒளிந்திருக்கும் இளைஞன் (தண்ணீரில்) படகுக்கு வந்து, நிர்வாணமாக சூரிய குளியல் செய்யும் கிரிச்டினாவுடன் ,வாக்குவாதத்துக்கு பிறகு உறவு கொண்டு விடுவான். பிறகு குதித்து தன் வழியே போய் விடுவான். கரைக்கு வந்த பின், கணவனுடன் செல்லும் கிறிஸ்டினா ,இதனை கணவனிடம் தெரிவிக்க........
ஒரு மனதத்துவ படம் ,சுவாரஸ்யமாக மூன்றே பாத்திரங்களை வைத்து ,90 நிமிடம் உலகத்தையே அதிசயிக்க வைத்து, ஒரு இயக்குனரின் மிக சிறந்த முதல் படமாக கொண்டாட பட்டது.
உலக பட ரசிகர் அனந்து ,இதிலிருந்து உருவி,பாலசந்தருக்கு மூன்று முடிச்சு போட உதவினார்.(ஆனால் கேவலமான பாலசந்தர் பாணி முடிச்சு. )
போலன்ஸ்கி யின் பார்த்து ரசிக்க வேண்டிய மற்ற படங்கள் Repulsion ,Rosemary 's Baby ,Pianist .
Gopal.s
27th June 2015, 05:45 AM
என் உளமார்ந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. மெல்லிசை மன்னர் குணமாகி விட்டார். இவருடன் கழித்த மாலை பொழுதுகள்,மனதில் நிழலாடுகின்றது.
vasudevan31355
27th June 2015, 07:43 AM
ஜி
எனக்கு ஜோவை பிடிக்கு, தையா தக்கா என்று குதித்தாலும் ஒரு குறும்பு இருக்கும்
எனக்குக் கூட ஜோதிலஷ்மியை ரொம்ப பிடிக்கும்ஜி. ஹி...ஹி...தையா தக்கா என்று குதித்தாலும் ஒரு அக்குறும்பு இருக்கும்.:)
Russellrqe
27th June 2015, 08:55 AM
வாசு சார்
எனக்கும் ஜோதி லக்ஷ்மியை பிடிக்கும் . என்னமா டான்ஸ் பாருங்கள் .இந்த பாட்டில் .
https://youtu.be/TXkUdYztEt8
uvausan
27th June 2015, 10:09 AM
பூவின் பாடல் 25: "பூவ பூவ பூவ பூவப் பூவே பூவ பூவ பூவ பூவப் பூவே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~
திரை அரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பதை மக்கள் குறைத்து விட்டிருந்த நேரம். பாடல்கள் கேசட்டுகளில் வருவதுடன், சீடி மற்றும் டீவீடிக்களில் நல்ல விற்பனையில் சென்று கொண்டிருந்த காலம். எங்கிருந்தோ காற்றின் வழியே வந்த இந்த பாடல் என்னை கவனம் ஈர்த்த கணம், நான் கடலூரில் இருந்து பாண்டிக்கு சென்று கொண்டிருந்தேன். அருகில் இருந்த எனது சகோதரன் (கசின்) சொன்னான் "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்று புதுப்படம், "பாட்டெல்லாம் கேட்டுப் பார்க்கலாம்" என்றான். யார் படம் என்று கேட்டேன். சூரியா நடித்தது, வசந்த் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜ இசை என்றான். கேசட் வாங்கி கேட்டுப் பார்த்தேன். எனக்கு நன்றாகவே பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருந்திருக்கும்.
திரு கல்நாயக் - பூக்களின் நறுமனத்தை சுவைக்க எவ்வளவு நாட்கள் காக்க வைத்து விட்டீர்கள் - இது அநியாயம் சார் ----- தொடருங்கள்
uvausan
27th June 2015, 10:13 AM
மெல்லிசை மன்னர் குணமடைந்தார். நேற்று தான் திரு முக்தா ரவி
(முக்தா ஸ்ரீனிவாசனின் மகன்) தன் தந்தையுடன் சென்று மெல்லிசை மன்னரை பார்த்துவிட்டு வந்தனர்
சிறிது உணவும் உண்டாராம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள்
ராஜேஷ் - கூட்டுப் பிராத்தனைகளுக்கு என்றுமே பலன் அதிகம் - msv நலமுடன் என்றும் வாழ்வார் - இது இங்கு இருக்கும் எல்லா நல்ல உள்ளங்களுடைய வேண்டுதல்
uvausan
27th June 2015, 10:17 AM
வாசு - வீட்டுக்கு வீடு உங்களைப்போல ஒருவர் இருந்தால் தமிழின் சுவையும் , பழைய நினைவுகளுக்கு ஒரு அஞ்சலியும் தினமும் கிடைக்கும் - படம் பார்க்கத்தூண்டும் அலசல் -- வாசுவின் கையிலிருந்து வந்தால் அதன் மனமே தனி தான்
uvausan
27th June 2015, 10:33 AM
Good Morning
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images_zpsy1vu791z.png (http://s818.photobucket.com/user/jravikumar/media/images_zpsy1vu791z.png.html)
uvausan
27th June 2015, 10:40 AM
கருவின் கரு - 120:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
உண்மை சம்பவம் 17
எல்லோருக்கும் என் வணக்கங்கள் .என் பெயர் விஜி - இந்த திரி " அம்மாவையும் அப்பாவை"ப்பற்றி எழுத ஒரு அருமையான வாய்ப்பை தருகிறது என்று என் நண்பர்களால் கேள்விப்பட்டேன் . மறந்து போகும் ஜீவன்களை மறக்காமல் பூஜிக்கும் இந்த திரிக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள் . என் அப்பாவைப்பற்றி நான் புரிந்துகொண்ட அளவிற்கு எழுதலாம் என்று நினைக்கிறேன் - இந்த பந்தம் ஒரு தெய்வீகம் -- அந்த இறைவனின் உறவைக்கூட அழகாக விவரித்துவிடலாம் - ஆனால் இந்த உறவை விவரிக்க முடியவே முடியாது - எவ்வளவோ கவிகள் பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளி உள்ளார்கள் . உண்மைதான் - ஆனால் அவர்கள் விவரித்தது 50% அளவிற்குக் கூடத்தேறாது ..
எனக்கு கிடைத்த அப்பா மாதிரி உலகத்தில் யாருக்குமே கிடைத்திருக்க முடியாது - இதை மிகுந்த கர்வத்துடனும் , பெருமையுடனும் சொல்கிறேன் - போட்டிக்கு வருபவர்கள் வரலாம் .
நாங்கள் இரட்டையர்கள் - நாங்கள் பிறந்தவுடன் அப்பா சொர்க்கத்தில் ஒரு பெரிய வீட்டையே கட்டிக்கொண்டு விட்டதாக அம்மா சொல்லி கேள்வி -- அவ்வளவு சந்தோஷம் ... இத்தனைக்கும் AG ஆபீஸ் வேலைதான் - பெரிதாக பணத்தைப் பார்க்காத குடும்பம் - வீட்டில் கட்டில் , sofa இல்லாவிட்டாலும் , போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அப்பாவிற்கு கடன் இருந்தது ... ஆனாலும் அவர் முகத்தில் வேதனை ரேகைகள் என்றுமே படர்ந்தது இல்லை -- எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் சொல்லாமலேயே உணர்ந்தவர் -
பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்லும் இந்த காலத்தில் , குப்பைத்தொட்டிகள் அம்மாவாகும் இந்த காலத்தில் இரண்டும் பெண்கள்காக பிறந்தோம் - ஐயோ பெண்ணா - அவ்வளவு தான் என்று சொல்பவர்கள் நிறைந்து இருக்கும் இந்த உலகத்தில் இரு பெண்களைப்பெற்று தலை நிமிர்ந்து நடப்பவர் என் தந்தை - கண்களில் பாசம் என்றுமே வாடாது - மனதில் என்றுமே எங்கள் நினைவுகள் தான் -- எதிலும் எங்களுக்கு வேற்றுமையை காண்பித்ததில்லை - ஒரே கலரில் துணிமணிகள் , அலங்காரங்கள் - பொம்மைகள் ......
அம்மாவிற்கும் பெருமைதான் என்றாலும் மனதில் எப்படி இவர்கள் இருவரையும் ஆளாக்கப்போகிறோம் என்ற ஒரே கவலை -- அப்பாவும் அதிகமாக சேமிக்காமல் எங்கள் இருவருக்கும் வாரி வாரி செலவழிப்பதை அம்மா விரும்பவில்லை -- அதனால் எங்கள் உரிமை அப்பாவிடம் அதிகமாக வளர்ந்தது ....
எங்களுக்கு 3 வயது ஆகும் வரை வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான் -- கவலை எங்கள் வீட்டில் வேலை செய்ய மறுத்தது .. பிரச்சனை எனக்கு மூன்றாம் பிறையைப்போல , மூன்றாம் வயதில் ஆரம்பித்தது - ஆம் பேச்சு தடைப்பட்டு வர ஆரம்பித்தது . அ --- ம் --- மா ஒரு வார்த்தையைச் சொல்ல 10 நிமிடங்கள் தேவைப்பட்டது
{ Stuttering — also called stammering or childhood-onset fluency disorder — is a speech disorder that involves frequent and significant problems with the normal fluency and flow of speech. People who stutter know what they want to say, but have difficulty saying it. For example, they may repeat or prolong a word, syllable or phrase, or stop during speech and make no sound for certain syllables.
Stuttering is common among young children as a normal part of learning to speak. Young children may stutter when their speech and language abilities aren't developed enough to keep up with what they want to say. Most children outgrow this developmental stuttering.
Sometimes, however, stuttering is a chronic condition that persists into adulthood. This type of stuttering can have an impact on self-esteem and interactions with other people.}
அப்பா உடைந்தே விட்டார் - என்னைக் கூட்டிக்கொண்டு , காண்பிக்காத தெய்வங்கள் இல்லை , போகாத மருத்துவர்கள் இல்லை - பணத்தை முதன் முதல் எங்கள் வீட்டில் தண்ணீரை விட அதிகமாக உபயோகிப்பதைப் பார்த்தோம் . என்னுடைய பிரச்சைனகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகவும் வளர்ந்தது - என் தங்கைக்கு கடவுள் அருளால் எந்த பிரச்சைனைகளும் இல்லை ... ஒரே கிளாஸ் , ஒரே வகுப்பு -- நண்பர்களின் கேலிப்பேச்சுக்கள் - இதற்க்கு தலைவியே என் தங்கை தான் - ஸ்கூலில் " அம்மா " என்று சொல்லு என்று எல்லோரும் கேட்க்க என்னை அழ விடுவாள் - என் அப்பாவிற்கும் எனக்கும் கண்ணீர் வற்றிப்போய் அம்மாவிடம் தான் கடன் வாங்கி அழுதோம் . அப்பாவிற்கு வேறு வேலை கிடைத்தது - நாசிக்கில் வேலை - வந்து சேர்ந்ததும் , சேராததுமாக ஷ்ரிடி சாய் யை தரிசிக்க சென்றோம் - நடை சாத்தி விட்டபின்பும் அப்பா எழுந்தக்கவே இல்லை -- அவனிடம் முறையிட்டு முறையிட்டு கண்கள் வீங்கி போயிருந்தன - மெதுவாக அப்பாவின் மடிக்குத்தாவினேன் --- என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டு விழும் கண்ணீருடன் அதை நிறுத்த சண்டை போட்டுக்கொண்டிருந்தார் .
ஒரு மருத்துவர் இரட்டையர்களில் உங்கள் கவனம் என் மீது அதிகமாக இல்லை அதனால் தான் நான் திக்குகிறேன் என்று வேறுசொல்லி என் தந்தையை என்னிடம் இருந்து பிரிக்கப்பார்த்தார் .. நானும் அழுதேன் - புரிந்தது பாதி - புரியாதது பாதி .
நாட்கள் நகர்ந்தன - இப்பொழுது நான் 6வது வகுப்பு - திக்குவதில் அதிகமான முன்னேற்றம் இல்லை - ஒரேஒரு முன்னேற்றம் - என் தங்கை என்னை இப்பொழுது முன்னே மாதிரி களாய்ப்பதில்லை .. நெருக்கமாய் பழக ஆரம்பித்தாள் .
ஸ்கூலில் அன்று பேச்சுப்போட்டி - தயிரியமாக என் பெயரைக்கொடுத்து விட்டேன் - அப்பாவிடம் கூட சொல்லவில்லை - என் தங்கை என்னைப்பார்த்து சிரித்தாள் - அதில் கேலி இல்லை - அக்கரை இருந்தது . தமிழ் டீச்சர் என்னிடம் " விஜி எதற்கு இந்த விஷப்பரிட்ச்சை - பல ஸ்கூல்கள் கலந்துகொள்ளக்கூடிய போட்டி - வேணுமென்றால் உன் தங்கை கலந்துகொள்ளட்டும் !" - முடியவே முடியாது விட்டுக்கொடுக்க மாட்டேன் --- அப்பாவை நினைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன் -- எப்படி முடித்தேன் என்றே தெரியவில்லை - ஒரே கரகோஷம் -- பேச்சில் எங்குமே தடை வரவில்லை --- அப்பாவிடம் மெடலை காட்ட ஓடினேன் --- அப்பா -- அப்பா உன்ன மகள் இனி திக்க மாட்டாள் ------
அப்பாவும் நானும் எவ்வளவு தடவைகள் அந்த கோல்ட் மெடலுக்கு முத்தம் கொடுத்திருப்போம் என்று கணக்கு வைக்கவில்லை - அப்பாவின் நம்பிக்கை - அவர் என் மீது வைத்த பாசம் , அன்பு , அக்கரை என் கறையை முழுவதும் போக்கியது - இப்பொழுதெல்லாம் ஷ்ரிடிக்குச்செல்வது எங்கள் வாழ்க்கையில் ஸ்கூல் /ஆபீஸ்க்கு தினமும் செல்வதைப்போல ஆகிவிட்டது - தெய்வ நம்பிக்கை ஜெயித்தது - அதை விட என் அப்பாவின் பாசம் வெற்றி பெற்றது என்று சொன்னால் அது மிகை யாகாது .... இப்பொழுது சொல்லுங்கள் நான் எவ்வளவு அதிர்ஷ்ட்ட சாலி என்பதை - இப்படி ஒரு அப்பா எனக்கு கிடைத்ததற்கு நான் என்ன தவம் செய்தேன் ! என் பதிவை பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் ----
வணக்கம்
விஜி
https://youtu.be/AlwB7poNlok
uvausan
27th June 2015, 10:48 AM
கருவின் கரு - 121
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
காற்றடிச்சா மகளுக்கு காவலாக நிற்ப்பாரு
காற்றடிச்சா சூரியனை கைது செய்ய பார்ப்பாரு - அதுதான் என் அப்பா
ராஜேஷ் இந்த கன்னட பாடல் உங்களுக்காக --
https://youtu.be/NEoxMB77cws
uvausan
27th June 2015, 10:56 AM
கருவின் கரு - 122
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
தாயில்லை எனக்கு என்றிருந்தேன் - தாயாக வந்தாள் -
மகன் இல்லை என் சிதைக்கு நெருப்பூட்ட என்றிருந்தேன் -
மகளாக வந்தாள் - எனக்கும் மரணமே இல்லை என்று சொன்னாள் .
காத்திருந்தேன் அவளுக்கு மணம் முடிக்க --- வாழ்ந்த பந்தம்
உடைந்து விடுமோ என்றே பயந்தேன் - ஒரு மகாராஜனை
கொண்டுவந்தாள் , எனக்கு மகனாக்கினாள் -----
மகளை விட்டு வெகு தூரம் செல்ல நினைத்தேன் - கால்கள் கிளம்பின
மனம் தொடரவில்லை
நீ தானம்மா எனக்கெல்லாம் என்று சொன்னேன் - அப்பா நீ என் வரம்
என்றாள் ..
https://youtu.be/T1zD-Taq9hQ
uvausan
27th June 2015, 11:01 AM
கருவின் கரு - 123
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
30 வருடங்கள் சென்றன திருமண வாழ்க்கையில் -
மனைவி என்னை இன்னும் புரிந்துகொள்ளவில்லை - மகள் என்னை புரிந்துகொண்டதைப்போல நானே என்னை இன்னும் புரிந்துக்கொள்ள வில்லை ---------
https://youtu.be/ERgis9fP7GI
uvausan
27th June 2015, 11:07 AM
கருவின் கரு - 124
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மாறாத உறவு என்று ஒன்றிருந்தால் அதுதான் தந்தை மகள் உறவு -
மறக்கமுடியாத உறவு என்று ஒன்றிருந்தால் அதுதான் அப்பா -மகள் உறவு
தெய்வங்கள் வாழும் உறவில்லே என்ற நம்பிக்கை ஒன்றிருந்தால் அந்த உறவுதான் மகள் தந்தை உறவு -
மீண்டும் பிறந்தால் வேண்டும் உறவு என்று ஒன்றிருந்தால் அதுதான் அப்பா மகள் உறவு
https://youtu.be/0o2CgqhJ0xU
uvausan
27th June 2015, 11:09 AM
கருவின் கரு - 125
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
https://youtu.be/D1XYn-al8lE?list=RDKPFq22tQfG4
uvausan
27th June 2015, 12:21 PM
கருவின் கரு - 126
பாகம் 2 - தந்தை[/COLOR][/SIZE]
தந்தை - மகள் பந்தம் [/B]
இந்த பாடலை திரு கோபாலுக்கு சமர்ப்பிக்கிறேன் -நிதர்சன உண்மை வரிகள் .... இதயம் தொடும் குரலில் ..one of the best melodious songs of MS Viswanathan,
https://youtu.be/6rQCM1jo8T0
vasudevan31355
27th June 2015, 12:50 PM
'துலாரி'யும் 'கல்யாணி'யும்
ராஜ்ராஜ் சாருடன் உரையாடி நீண்ட நாட்களாகி விட்டது.:) இன்று அவருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க ஆசை.:)
ராஜ்ராஜ் சார்,
உங்கள் 'ஜுகல் பந்தி' பாடல்களுக்கு முதல் ரசிகன் நான்தான். 'ஜி'யும் இந்த லிஸ்ட்டில் சேருவார்.
இன்று ஒரு அருமையான 'ஜுகல் பந்தி' பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
1949-ல் வெளி வந்த 'துலாரி' படம் பற்றி உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்தப் படத்தின் பாடல்கள் நம்மை இன்பக் கிறுக்கு பிடிக்க வைப்பவை.
நௌஷாத்தின் நயமான இசையில் மிக மிக மிக அருமையான பாடல்கள்.
குறிப்பாக ரஃபி பாடிய 'Suhani Raat Dhal Chuki...Na Jaane Tum Kab Aaoge '
'என்ன இனிமை! அப்படியே சொக்கிப் போகலாம் சார்.
அதை விட்டுவிடுவோம்.
இதே படத்தில் ரஃபியும், லதாவும் பாடிய 'Mil milake gayenge ho ho do dil yaha' பாடலைப் பற்றி என்ன சொல்ல! சுரேஷ், மதுபாலா இருவரும் அவ்வளவு ஜென்டிலாகப் பண்ணியிருப்பார்கள்.
1952 ல் 'கல்யாணி' என்ற பெயரில் ஒரு படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வந்தது. நம்பியார் நாயகனாக நடித்த முதல் படம் அது. அந்தப் படத்தில் ஒரு பாடலில் நான் மேலே குறிபிட்டுள்ள 'Mil milake gayenge ho ho do dil yaha' பாடலின் டியூனை உபயோகப்படுத்தி இருப்பார்கள்.
தமிழில் இப்படத்திற்கு எஸ்.தட்சணாமூர்த்தியும், ஜி.ராமநாதனும் இசை அமைத்திருந்தார்கள்.
கண்ணதாசன் அப்போதுதான் திரைப்பாடல்கள் எழுத ஆரம்பித்திருந்த நேரம்.
இந்தப் பாடலைப் பாடிய ஆண் பாடகர் யாரென்று கேட்டால் அசந்து போவார்கள். பெண் குரல் கே. ராணி என்பதும் அவ்வளவு எளிதில் அறிய முடியாத ஒன்றுதான்.
சரி! ஆண்குரல் யார்? நமது 'பாடகர் திலக'மேதான். ஆனால் கண்டுபிடிக்கவே முடியாது. 'பாடகர் திலகம்' அவரது குரலில் இந்தப் பாடலைப் பாட, அப்போது அது மறுக்கப்பட்டு, அந்த சமயம் மிகவும் புகழ் பெற்று இருந்த கண்டசாலா அவர்களின் குரல் சாயலில் பாடுமாறு அவரிடம் வற்புறுத்தப்பட்டது.
வேறு வழியில்லாமல் 'பாடகர் திலகம்' குரலை மாற்றிப் பாட வேண்டியதாயிற்று.
'இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே'
மண நாளே இதுதானே! ஓஹோ! ஆஹா!
என்ற பாடல்தான் அது.
ஆனாலும் பாதகமில்லை. அதே இனிமைதான். ஆனால் இது 'பாடகர் திலகம்' பாடியது என்று சொன்னால்தான் தெரியவே வரும்.
இப்போது முதலில் ஒரிஜினல் இந்திப் பாடலைப் பார்ப்போம்.
https://youtu.be/zeHQMZ5DhnM
'கல்யாணி' படத்தின் வீடியோ பாடல்கள் கிடைக்காததால் 'வேம்பார்' திரு.மணிவண்ணன் அவர்கள் 'துலாரி' படத்தின் 'Mil milake gayenge ho ho do dil yaha' பாடலின் ஆடியோவை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் அதே டியூனில் ஒலிக்கும் 'கல்யாணி' படத்தின் பாடலான 'இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே' பாடலின் ஆடியோவை இணைத்துவிட்டார்.
ராஜ்ராஜ் சார்,
'Nagaree yeh...
har ghum sey aajad hai ...
aabad hai ...
'இது போலே....
சுகமும் நான் காண்கிலேன்':)...
'நான் காண்கிலேன்':)
https://youtu.be/nYzajziXn6Q
adiram
27th June 2015, 01:45 PM
[QUOTE=vasudevan31355;1234338] எனக்கு ஜோதிகா தையா தக்கா என்று பெண்மையின் நளினம் கொஞ்சமும் இல்லாமல் குதிப்பது பிடிக்கவே பிடிக்காது. ('மணிசித்திரத்தாழு' படத்தில் ஷோபனாவைப் பார்த்துவிட்டு 'சந்திரமுகி'யில் ஜோதிகாவைப் பார்க்க கடுப்பாகவே இருந்தது. அலங்கோல அருவருப்பு. சுத்தமாக ஜோதிகாவை அறவே பிடிக்காது). அதனாலேயே இந்தப் பாட்டு எனக்கு பிடிக்காமல் போய் விட்டது. QUOTE]
+1
எனக்கும் ஜோதிகாவைப் பிடிக்காது. எந்த முகபாவமும் இல்லாத மரக்கட்டை நடிகை. இந்த ஜோதிகா, அசின், அஞ்சலி இவர்களையெல்லாம் எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.
தசாவதாரம் கிளைமாக்ஸில் அசின் பண்ணும் அழும்பு கடுமையான எரிச்சலை உண்டுபண்ணும். முதல்படம் வெற்றியடைந்ததும் ஓவராக அலட்டிக்கொண்டு காணாமல் போன சந்தியாவும் இப்பட்டியலில் இடம்பெறுபவரே.
JamesFague
27th June 2015, 02:49 PM
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 10: இரவு, வானம், மவுனம், இசை
கழுகு’ படத்தில் ரதி, ரஜினி
1980-களில் வெளியாகி வெற்றிபெற்ற பல திரைப்படங்கள் முதிர்ச்சியான ரசிகர்களுக்கானவை யாக அல்லாமல், சிறுவர்களுக் காகவே எடுக்கப்பட்டதாக இப்போது தெரிகிறது. தர்க்கரீதியான கேள்விகளை அலட்சியம் செய்தபடி தன் போக்கில் நகரும் அவ்வாறான படங்கள் தமிழில் பல உண்டு.
ஆனாலும், சாகசங்களை விரும்பும் இளம் மனங்களுக்குப் பெரும் விருந்து படைத்த படங்கள் அவை. அப்படியான சாகசப் படங்களில் ஒன்று எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் ரஜினி, ரதி நடித்த ‘கழுகு’. காதல் திருமணம் செய்துகொள்ளும் ரஜினி-ரதி ஜோடிக்குப் திருமணப் பரிசாக ஒரு பேருந்து வழங்கப்படும்.
படுக்கை, குளியல் வசதிகள், சமைக்கும் கருவிகள் என்று சகல வசதிகளுடன் ஒரு நகரும் வீடாக இருக்கும் அந்தப் பேருந்தில், நெருங்கிய நண்பர்களின் துணையுடன், இதுவரை அறிந்திராத பகுதிகளுக்கு அவர்கள் பயணம் செய்வார்கள். புதிய இடம் ஒன்றில் அவர்கள் சந்திக்கும் மர்மமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. படம் முழுவதும் குதூகலம் தரும் பயணத் துணையாக, இளையராஜாவின் இசை கூடவே பயணிக்கும்.
மலைக் காற்றின் தீண்டல்
பாடல்களில் இசைக் கருவிகளுக்கு மாற்றாக, குரல்களை வைத்து இளையராஜா செய்த பரிசோதனைகள் நிறைய உண்டு. முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்த பாடல்கள் அவை. இப்படத்தில் இடம்பெறும், ‘பொன்னோவியம்… கண்டேனம்மா எங்கெங்கும்’ பாடல் அவற்றில் ஒன்று.
பசுமையான மலைப் பாதைகளின் வழியாகச் செல்லும் பேருந்துக்குள் இருந்தபடி, இயற்கையை ரசிக்கும் காதலர்கள் பாடும் பாடல் இது. ‘லலலலலா…’ என்று பல குரல்களின் சங்கமமாக ஒலிக்கத் தொடங்கும் ஹம்மிங்குடன், துள்ளலான தாளம் இனிமையைக் கூட்டும். ‘பொன்னோவியம்…’. என்று எஸ். ஜானகியின் குரல் தொடங்கும்போது மலைக் காற்றின் ஸ்பரிசத்தை உணர முடியும். இயற்கையின் வசீகரத்தைக் கொண்டாடும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாகப் பாடியிருப்பார் இளையராஜா.
முதல் சரணத்துக்கு முன்னதான நிரவல் இசையில் ஒலிக்கும் குரல்கள், கொண்டாட்டத்தில் துள்ளும் என்றால், இரண்டாவது சரணத்துக்கு முன்னதான நிரவல் இசை சலனமற்று உறைந்து கிடக்கும் நதிக்கரையின் அமைதியைக் கண்முன் நிறுத்தும். ‘ம்ம்ம்..ம்ம்ம்’ என்று ஆண் பெண் குரல்கள் இணைந்து ஒலிக்கும்போது, இயற்கை தேவதைகளே இளம் ஜோடியை வாழ்த்துவதுபோல் இருக்கும்.
இளையராஜா பாடிய பெரும்பாலான டூயட் பாடல்களில் அவருக்குத் துணையாகப் பாடியிருப்பவர் எஸ். ஜானகிதான். தனது அபாரமான கற்பனை வீச்சின் நுட்பங்களை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட பாடகி என்பதால், தான் பாடும் பாடல்களில் ஜானகியின் குரலை இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும். இருவரும் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இப்பாடல்.
கனவில் ஒலிக்கும் பாடல்
ஆயிரக் கணக்கான திரைப் பாடல்களைப் பாடியவர்களுக்குக் கிடைக்கும் புகழ், சிலருக்கு ஒரே பாடல் மூலம் கிடைத்துவிடும். இப்படத்தில் இடம்பெறும் ‘காதல் எனும் கோவில்’ பாடலைப் பாடிய சூலமங்கலம் முரளி அந்த வகையைச் சேர்ந்தவர். சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ராஜலட்சுமியின் மகன் இவர். சில பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால், சினிமாவில் அவர் பாடிய பாடல், அநேகமாக இது மட்டும்தான். பல உயரங்களுக்கு அனாயாசமாகப் பறந்து செல்லும் குரல் இவருடையது.
இந்தப் பாடல் உருவாக்கும் கற்பனை மிக நுட்பமானது. மாலை நேரத்தின் மஞ்சள் நிறம் கரைந்துவிடாத இரவின் தொடக்கம். கடல், மலை, மரங்கள் என்று எதுவுமே இல்லாத பரந்த சமவெளி. பூமியைத் தொட்டுக்கொண்டே புரளும் பிரம்மாண்டமான திரையாக வானம். அதில் ஆங்காங்கே நட்சத்திரங்கள்.
அசையாதச் சித்திரமாக விரிந்திருக்கும் இந்த கனவுப் பிரதேசத்தின் அமைதிக்கு நடுவில் மென்மையாக ஒலிக்கத் தொடங்குகிறது கிட்டார். சற்று நேர நடைக்குப் பின்னர் மெதுவாக ஓடத் தொடங்குவதுபோல், தொடக்க இசைக்குப் பின்னர் வேறுபட்ட திசையில் பாடல் திரும்பும். வேகம் கூடும் கிட்டாருடன், புல்லாங்குழல் ரகசியமாகக் கொஞ்ச, பாடல் தொடங்கும்.
நிரவல் இசையில் வயலின் சேர்ந்திசையில், விமானம் தரையிலிருந்து வானத்துக்கு ‘டேக்-ஆஃப்’ செய்யும் அற்புதத்தை உணர முடியும். சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்ட இசை இது. தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் மிதந்து செல்லும் உணர்வைத் தரும் இப்பாடல் தரும். கனவுகளில் தோன்றும் நிலப்பரப்பின் இசை வடிவம் என்றும் இந்தப் பாடலைச் சொல்லலாம்.
கோடை விடுமுறைச் சுற்றுலாவை நினைவுபடுத்தும் ‘ஒரு பூவனத்தில’ எனும் பாடலை எஸ்.பி.பி. பாடியிருப்பார். சிறு மலர்கள் அடர்ந்திருக்கும் புல்வெளி மீது தரைவிரிப்பைப் பரப்பி அமர்ந்துகொண்டு கேட்க வேண்டிய பாடல் இது. போலிச் சாமியாரின் மர்மங்களை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் ரஜினி ஆடிப் பாடும் ‘தேடும் தெய்வம்’ எனும் பாடலைத் தனக்கே உரிய உற்சாகத்துடன் பாடியிருப்பார் மலேசியா வாசுதேவன்.
JamesFague
27th June 2015, 02:53 PM
Courtesy: Tamil Hindu
சினிமா ரசனை 4: உயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா!
‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்ஸிகோ’ படத்தில்
நீங்கள் ஒரு இயக்குநராக இருந்தால், ஒரு திரைப்படம் எடுக்க உச்சபட்சமாக என்னென்ன சோதனைகளை எதிர்கொள்வீர்கள்? ஒரு மாத காலம் தன் உடலையே மருந்துகளைப் பற்றிய பரிசோதனைகளுக்காக ஒப்புக்கொடுத்து, பல விதமான வாதைகளை அனுபவித்து, அதன் மூலம் திரட்டிய பணத்தில் படம் எடுத்து உலகப் புகழ் பெற்ற ராபர்ட் ரோட்ரிகஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
திரைப்படத் துறையில் ரோட்ரிகஸைப் போல உத்வேகமூட்டும் ஒரு நபரைக் காண்பது மிகவும் அரிது. யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று இன்றும் உறுதியாக நம்புபவர் அவர். அவரைப் பின்பற்றியே பலரும் தனியாளாகப் படம் எடுத்திருக்கின்றனர். ஒரு மிகப் பெரிய குழுவை வைத்துக்கொண்டு படம் எடுப்பதையோ, பலகோடி டாலர்கள் கொட்டுவதையோ விரும்பாத நபர் அவர். படமெடுப்பதில் கிட்டத்தட்ட ஒருவித கெரில்லா ஸ்டைலைப் புகுத்தியவர்.
அவரது ஊக்கமூட்டும் முயற்சிகளைப் பற்றிய கட்டுரைதான் இது. திரைப்படம் என்பது பலரும் சேர்ந்து பணியாற்றும் ஒரு துறை. இயக்குநர் என்பவர்தான் எந்த ஒரு திரைப்படத்துக்கும் தலையாய நபர். என்றாலும், அவரின் கீழ் ஏராளமானவர்கள் பணியாற்றினால்தான் எந்த ஒரு திரைப்படமும் முழுமையடையும். அப்போதுதான் அந்த இயக்குநரின் பார்வை மழுங்காமல் திரைப்படத்தில் இடம்பெறும். ஆனால், கடந்த சில வருடங்களாக, குழு சார்ந்து பணியாற்றும் முறை மெதுவே தகர்ந்து, உலகம் முழுக்கவே மெல்லமெல்லத் தனியாகவே படமெடுக்கும் முறை அதிகரித்துவருகிறது.
எப்படியென்றால், ஒரு நபருக்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியாவது முயற்சி செய்து ஒரு கேமராவைத் தயார் செய்கிறார். தனது மனதில் இருக்கும் கதையை விரிவாக எழுதிக்கொண்டு, அந்தக் கதை நடக்கும் களத்துக்குச் செல்கிறார்.
அங்கே இருக்கும் நிஜமான மக்களை வைத்துக்கொண்டு, அவர்களிடம் பேசி, அவர்களையே கதாபாத்திரங்களாக ஒப்பந்தம் செய்துகொள்கிறார். இவரே ஒளிப்பதிவாளராகவும் மாறி, படத்தை எடுக்கிறார். பின்னர் எடிட்டிங், டப்பிங், ஒலிக்கலவை முதலியே எல்லா வேலைகளையும் இவரே செய்து படத்தை முழுமையாக உருவாக்குகிறார். இதுதான் உலகெங்கும் பிரபலமாக இருக்கும் One man film crew என்ற வகை. பல வருடங்கள் முன்னரே ஹாலிவுட்டில் சிலர் முயன்று பார்த்து வெற்றியடைந்த விஷயம் இது.
படிக்கும்போது மிக எளிதானதாக இது தோன்றலாம். ஆனால், நிஜத்தில், திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற வெறி மூளை முழுதும் ஆக்கிரமித்தால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம் இது.
உதாரணமாக, ராபர்ட் ரோட்ரிகஸ் என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே குறும்படங்கள் மூலமாக மிகவும் திறமைசாலி என்று பெயர் எடுத்திருந்தார். இந்தக் குறும்படங்களும் மலிவான கேமரா ஒன்றில் தனது சகோதர சகோதரிகளை வைத்து இயக்கியவைதான். ஆனாலும், அவரது அபாரமான திறமையால் பல திரைவிழாக்களில் அவை பரிசு வாங்கின (‘Bedhead’ என்ற குறும்படம் இன்றைக்கும் பிரபலம்).
இதனால் உந்தப்பட்டு, முழு நீளத் திரைப்படம் ஒன்றை எடுக்கும் முயற்சியில் ரோட்ரிகஸ் இறங்குகிறார். ஆனால், அவரிடம் கையில் ஒரு பைசா கூடப் பணமில்லை. என்றாலும் மனம் தளராமல், படம் எடுக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுகிறார் ரோட்ரிகஸ். மிகக் குறைந்த பட்ஜெட் என்றால்கூட, 7,000 டாலர்கள் ஆகும் என்று தெரிகிறது. படத்தை எடுக்க இந்தப் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது?
ரோட்ரிகஸின் ஊரில் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் உண்டு. அங்கே சென்று நம்மை நாமே சோதனை எலியாக ஒப்புக்கொடுத்தால் பணம் கிடைக்கும். இப்படி, ஒரு மாதப் பரிசோதனைக்கு 3,000 டாலர்கள் கிடைப்பது தெரிந்துகொண்டு, அங்கே உடனடியாக சென்று தன் பெயரை ரோட்ரிகஸ் பதிவுசெய்துகொண்டார்.
தினமும் அடிக்கடி ஊசி போட்டு ரத்தம் எடுப்பார்கள். ஆனால், அட்டகாசமான சாப்பாடு கிடைக்கும். சில பல சோதனைகளுக்குப் பின் ரோட்ரிகஸ் தேர்வாகிறார். உள்ளே நுழைகிறார். முதல் நாளில் பல முறை ரத்தம் எடுக்கிறார்கள். அவர்களின் மருந்தை உடலில் செலுத்துகிறார்கள். நரக வேதனை. பொறுத்துக்கொள்கிறார் ரோட்ரிகஸ்.
ஒரு வாரம் கழித்து, அங்கே கிடைக்கும் 24 மணி நேர ஓய்வில் திரைக்கதையை எழுத ஆரம்பிக்கிறார். அங்கு இருக்கும் இன்னொரு நபரும் இவருக்கு நண்பராக ஆக, அவரிடமும் இன்னொரு 3,000 டாலர்கள் தேறுகிறது. பாக்கிப் பணத்தை எப்படியோ அங்குமிங்கும் புரட்டுகிறார்.
பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்து, ஒரு நண்பரிடம் இருந்த ஆரிஃப்ளெக்ஸ் கேமராவை இரண்டு வாரங்கள் கடனாக வாங்கிக்கொள்கிறார். படம் நடக்கும் களமான மெக்ஸிகோவின் சிற்றூர் ஒன்றுக்குச் சென்று, அங்கிருப்பவர்களை வைத்தே படத்தை முடிக்கிறார். படத்தின் டப்பிங், எடிட்டிங் ஆகியவற்றுக்கு ரோட்ரிகஸ் கஷ்டப்பட்டது தனிக்கதை. ஆனால், மனம் தளராமல் படத்தை எடுத்து முடித்து இறுதியான வடிவத்தைத் தயார் செய்கிறார்.
இப்படி எடுக்கப்பட்ட படம், பற்பல சம்பவங்களுக்குப் பின்னர் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கே பரிசும் பெறுகிறது. உலகெங்கும் பிரபலமான இயக்குநராக மாறுகிறார் ரோட்ரிகஸ். அந்தப் படம் - எல் மரியாச்சி (El Mariachi). இதன்பின் அதன் இரண்டாம், மூன்றாம் பாகங்களையும் (Desperado, Once upon a Time in Mexico) வெளியிடுகிறார். இன்று ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உடையவர். ஆனால் வயதோ நாற்பதுகளில்தான்.
இவரது வாழ்க்கை, திரைப்படம் எடுக்க விரும்பும் அனைவருக்கும் அவசியம் உற்சாகமூட்டக்கூடியது. ஏழை இளைஞனாக இருந்த அவர் எப்படித் தனது முதல் படத்தைத் தனியொரு ஆளாக எடுத்தார் என்ற அருமையான கதையை ‘Rebel Without a Crew' என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார். திரைப்படம் எடுக்கும் தாகம் உள்ள அனைவரும் அவசியம் பலமுறை படிக்க வேண்டிய புத்தகம் இது.
vasudevan31355
27th June 2015, 03:17 PM
ரவி சார்,
'மகளுக்காக'
http://i.ytimg.com/vi/oyIo0e9RYng/hqdefault.jpg
இதோ மகளுக்காகவே தந்தை வாழ்ந்து வாழ்க்கையை இழந்த கதை. மகளுக்காகக் கொள்ளையடித்து ஒரு குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போகும் தந்தை (ஏ.வி.எம்.ராஜன்) தன் சிறுவயது மகளை நண்பனின் கண்காணிப்பில் நம்பி விட்டு விட்டுப் போகிறான். ஆனால் நண்பனோ மகளைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி, அவளைத் தனியே தவிக்க விட்டு, ஜெயிலில் இவனைச் சந்தித்து அவன் மகளுக்காக சம்பாதித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் எங்கிருக்கிறது என்று கேட்டு வாங்கி பிடுங்கித் தின்கிறான்.(எம்.ஆர்.ஆர்.வாசு) மகளும் பெரியவளாகி விட்டாள் (ஜெயா). சூழ்ச்சி, வஞ்சகம் தெரியவர சிறையிலிருந்து தப்பி மகளைக் காண ஓடுகிறான் தந்தை.
புகையாக, கொஞ்சமாக என் மனதில் நிழலாடும் 'மகளுக்காக' படத்தில் வரும் பாடலின் சிச்சுவேஷன் இதுதான்.
ஜெயிலிருந்து தப்பி, காவலர்கள் வலை விரித்துத் தேட, தன் மகளைப் பார்க்க ஓடோடி வரும் இந்த பரிதாபத் தந்தையின் தணியாத ஆசையைப் பாருங்கள். அவனுடைய ஆர்வத்தையும், வேகத்தையும் பாருங்கள். காட்டாற்று வெள்ளம் போல கட்டுப்படுத்த முடியாத அவன் கால்களைப் பாருங்கள். மகளைச் சந்திக்கப் போகும் மகிழ்ச்சி அவன் முகத்தில் பொங்குவதைப் பாருங்கள். காடு, மலை இவைகளைத் தாண்டி மகளைப் பார்க்க ஓடுவதைப் பாருங்கள். ஜெயில் தண்டனை, கொடுமை இவற்றால் தாடி மீசையுடன் உருக்குலைந்து போன முகம் அதையெல்லாம் மீறி மகளின் முகத்தைப் பார்க்கப் போவதால் மதியாய் ஒளி வீசுவதைக் காணுங்கள். எதுவுமே அவன் கண்களுக்குத் தெரியவில்லை. உடல், உள்ளம், உயிர் அனைத்திலும் அவன் மகளைச் சுமந்து திரிகிறான்.
அதுதான் தந்தை...அதுதான் பாசம். இந்தத் தந்தை 'தந்தை' என்ற அனைத்து இலக்கணங்களுக்கும் உட்பட்டவன். உதாரணமானவன். பாசத்திலிருந்து கொஞ்சமும் தடம் புரளாதவன். மகளுக்காகவே உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பவன். மகள் வாழ்வேதான் அவன் வாழ்வு.
அவன் பாடும் பாடலைக் கேளுங்கள்.
https://i.ytimg.com/vi/qxvXHrSo2FE/hqdefault.jpg
இனிமேல் எனக்கென்ன கவலை
இனிமேல் எனக்கென்ன கவலை
என் இதயம் பார்ப்பது மகளை
உறவே எனக்கவள் எல்லை
இனி உலகம் வேறேதும் இல்லை
உறவே எனக்கவள் எல்லை
இனி உலகம் வேறேதும் இல்லை
ஆசைமகளே ஆசை மகளே
எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
வாழ்வது உனக்காக
இனிமேல் எனக்கென்ன கவலை
பாலில் நனைந்து தோளில் வளர்ந்த
பச்சைக் கிளிக்காக
நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன்
மகளே உனக்காக
பாலில் நனைந்து தோளில் வளர்ந்த
பச்சைக் கிளிக்காக
நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன்
மகளே உனக்காக
வாசலில் நின்று வரவேற்பாயோ
மகளே எனக்காக
நான் வந்ததும் உந்தன் மடியினில் கிடப்பேன்
தாயின் நினைவாக
ஆசைமகளே ஆசை மகளே
எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
வாழ்வது உனக்காக
இனிமேல் எனக்கென்ன கவலை
பதினான்காண்டு ராமன் காட்டில்
வாழ்ந்தது வனவாசம்
அந்த பாண்டவர் கூட்டம் காட்டில் இருந்ததை
பாரதக் கதை பேசும்
இதுநாள் வரையில் நானும் வாழ்ந்தது
எல்லாம் எதற்காக
அந்த இறைவன் தடுத்தால் நானும் எதிர்ப்பேன்
மகளே உனக்காக
ஆசைமகளே ஆசை மகளே
எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
வாழ்வது உனக்காக
இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே
இருந்தேன் நானம்மா
என் எண்ணம் முடிந்தது
கண்ணும் குளிர்ந்தது
வருவேன் இனி அம்மா
இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே
இருந்தேன் நானம்மா
என் எண்ணம் முடிந்தது
கண்ணும் குளிர்ந்தது
வருவேன் இனி அம்மா
காட்டிலிருந்து கண்ணீர் வடித்தேன்
கண்மணி உனக்காக
நான் கடமையைச் செய்தேன் வருவது வரட்டும்
வாழ்வே அதற்காக
ஆசைமகளே ஆசை மகளே
எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
வாழ்வது உனக்காக
இனிமேல் எனக்கென்ன கவலை
என் இதயம் பார்ப்பது மகளை
உறவே எனக்கவள் எல்லை
இனி உலகம் வேறேதும் இல்லை
இனிமேல் எனக்கென்ன கவலை
பாடலைப் பார்க்காதவர்கள், கேட்காதவர்கள் கேட்டால் 'நடிகர் திலகம்' நினைவுக்கு வருவது அவர்கள் தவறல்ல.
ஏ.வி.எம்.ராஜன் தந்தை வேடத்தில் தன்னை நடிகர் திலகமாகவே ஆக்கிக் கொண்டு, மாற்றிக் கொண்டு நடிக்க முயற்சி செய்து கொஞ்சம் வெற்றி பெறுவார்.
டி.எம்.எஸ்ஸிடம் நடிகர் திலகத்துக்கு பாட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது.
ரவிச்சந்திரன் கூட ஜெயாவின் ஜோடியாய் நடித்திருப்பார் என்று நினைவு.
ஜெயாவுக்கு ஈஸ்வரி ராட்சஸி பாட, ரவி கிடார் வாசித்து 'அட என்னாங்க ஆண்டவனே பாட்டுக் கேட்க ஆசையா?' என்ற அபூர்வ பாடல் ஒன்றும் நினைவில் இருக்கிறது
ராகவேந்திரன் சார் கிளியர் பண்ண வேண்டுகிறேன்.
எப்படியிருந்தாலும் மகளுக்காக தந்தை உருகும் பாடலில் இப்பாடல் தலையாய பாடல்தான்.
https://youtu.be/oyIo0e9RYng
uvausan
27th June 2015, 05:28 PM
வாசு - மறுபடியும் திரு கோபாலிடம் இருந்து கடன் வாங்க வேண்டியுள்ளது -- " எப்படி என் மனதை படித்தீர்கள் ?" - கடைசியில் எழுதலாம் என்று நினைத்தேன் - என்னிடம் இருந்து நெய்வேலிக்கு தப்பிசென்ற புண்ணியம் செய்த பாடல்களுள் இதுவும் ஒன்று . 100 பதிவுகளில் நான் எழுதுவதை நீங்கள் ஒரே பாடலில் அலசி தனி முத்திரை பதித்து விடுகிறீர்கள் ..... எனக்கு avmr நடிப்பு அவ்வளவாக பிடிக்காது - அலட்டல் அதிகம் நடிப்பு என்ற பெயரில் - இவர் " தெய்வத்தில்"நடிப்பதைப்பார்த்து தெய்வமே தேவரை விட்டு ஓடிவிட்டதாக கேள்வி . மிகவும் அடக்கி வாசித்த படம் " தில்லானா மோகனாம்பாள் " . ஆமாம் - தலையான பாடல் இதுதான் என்று எழுதி இருக்கிறீர்கள் ---- அங்கு தான் கொஞ்சம் உதைக்கிறது -
தாயின் வாழ்வு முடிந்துபோனால் தந்தைக்கு என்று யாரும் இல்லை
தந்தை வாழ்வு முடிந்துபோனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை - ஒருவராக வாழ்கின்றோம் - பிரிவதர்க்கோ இதயமில்லை -----
இந்த பாடலை விடவா வேறு எந்த பாடலும் - தந்தை மகள் உறவை சொல்வதில் தலையாக இருக்க முடியும் ( கவனிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் !)
மீண்டும் நன்றி என்னுடன் சேர்ந்து பயணம் செய்வதற்காக !!
adiram
27th June 2015, 07:21 PM
டியர் ரவி சார்,
தங்களின் கருவின் கரு தொடர் மிக அருமையாக பயணிக்கிறது.
விஜியின் பள்ளிப்பருவ சம்பவம் மனதை கனக்க வைத்தது.
எங்கிருந்து பிடிக்கிறீர்கள், இவ்வளவு பொருத்தமான உண்மைச் சம்பவங்களை?. ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமான இணைப்புகள்.
அற்புதம் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை (நானும் முரளி சாரின் தீவிர ரசிகன்)
adiram
27th June 2015, 07:35 PM
டியர் வாசு சார்,
நான் 'மகளுக்காக' படம் பார்த்தபோது இந்தப்பாடல் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. (என்னிடம் ஏ,வி.எம். ராஜனின் தனிப்பாடல்களில் முதலிடம் பாடகர் திலகத்தின் பாடல்களில் 'காசேதான் கடவுளப்பா' , பாலா பாடல்களில் 'திருமகள் தேடிவந்தாள்' )
ஆனால் உங்கள் பதிவைப்படித்தபின் 'மகளுக்காக' பாடலின் மீதும் சற்று பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் பாடலில் ராஜனை இன்னும் சற்று முதுமையாக காட்டியிருக்கலாமோ என்று தோன்றியது.
நல்ல அருமையான ஆய்வு. சிறப்பான பதிவு.
ரவி சார்,
தில்லானாவில் ராஜன் எடுபட்ட காரணம், அவரைப்பேச விடவில்லை. விட்டிருந்தால் இழுத்து இழுத்து பேசி ஒருவழி ஆ(க்)கியிருப்பார். நல்லவேளை ஏ.பி.என்.கடிவாளம் போட்டார்.
vasudevan31355
27th June 2015, 07:36 PM
நன்றி ரவி சார்.
அப்படி அல்ல அது. நீங்கள் வேற ரூட்டில் போய் விட்டீர்கள்.:)
இந்தப் படத்தின் உயிர் நாடியே அந்தத் தகப்பன் பாசம்தான். பாடலில் அது இன்னும் பிரதிபலிக்கும்.
நீங்கள் கூறிய வரிகளில்
//தாயின் வாழ்வு முடிந்துபோனால் தந்தைக்கு என்று யாரும் இல்லை
தந்தை வாழ்வு முடிந்துபோனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை - ஒருவராக வாழ்கின்றோம் - பிரிவதர்க்கோ இதயமில்லை -----//
இதில் மகளைப் பற்றியே வரவில்லையே! (மகளைப் பற்றிய பாடல் என்றாலும்) இது மகளை நடுவில் தெரியாமல், அறியாமல், புரியாமல் பிரிந்து பின்பு வேதனைப்படும் தந்தை புலம்பல். இது வேறு. பிரிவுத் துயரம் மட்டுமே பாடலின் பிரதானம்.
'யாருமில்லை எனக்கே என்று ஓடி விட்டாய் என் மகளே'
என்று பின்னாடிதான் வரிகள் வரும்.
ஆனால் 'மகளுக்காக' படத்தில் பாடலின் வரிகளைக் கவனியுங்கள். ஆரம்பம் முதல் மகளுக்காகவே வாழ்ந்து, மகளுக்காகவே சிறை சென்று, மகளுக்காகவே மடியும் தந்தையின் பாசக்குரல்.
பாடலின் ஒவ்வொரு வரியையும் மீண்டும் படிக்கவும்.
பாடல் முழுதுமே மகளைப் பற்றியது. வேறு எதுவுமே இருக்காது.
ஆகவே வரிகள் முழுதும் மகள் பாசம் மட்டுமே உணர்த்தப்படுவதால் பாடல் சிறந்தது என்று கூறியுள்ளேன். நடிப்பை வைத்தோ கதையை வைத்தோ, நடிகரை வைத்தோ அதைக் கூறவில்லை. அதனால்தான் அப்படிக் கூறினேன்.
இந்த இடத்தில் நீங்கள் நடிகர் திலகத்தைப் போட்டுக் குழப்பிக் கொண்டீர்கள்:) என்று புரிகிறது. பாசத்துக்கு அவர் பாடல்கள்தான் டாப் என்று சொல்ல வருவதும் புரிகிறது. ஆனால் அது வேற டிபார்ட்மெண்ட். அப்படி இருப்பதும் பாராட்டுதலுக்கு உரியதுதான்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
kalnayak
27th June 2015, 07:37 PM
Want to share this link: 'அண்ணா.. சாப்பிடுங்க..' மருத்துவமனையில் எம்எஸ்விக்கு உணவு ஊட்டிய இளையராஜா!
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ilaiyaraaja-feeds-msv-at-hospital-229734.html
kalnayak
27th June 2015, 07:58 PM
நன்றி கல்ஸ். கதை வேண்டாமென்றால் மனது கேட்கவில்லை. பிடித்த படமும் கூட. அதான்! கொஞ்சம் வேலையும் நிறைய வாங்கி விட்டது. ஆனால் இந்தப் பாடல் என்றால் அப்படி ஒரு பைத்தியம்.
பூவ பூவப் பூவே பாட்டு உங்களுக்கு பிடிபட்ட பின்னணியை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். கல்ஸ்! எனக்கு ஜோதிகா தையா தக்கா என்று பெண்மையின் நளினம் கொஞ்சமும் இல்லாமல் குதிப்பது பிடிக்கவே பிடிக்காது. ('மணிசித்திரத்தாழு' படத்தில் ஷோபனாவைப் பார்த்துவிட்டு 'சந்திரமுகி'யில் ஜோதிகாவைப் பார்க்க கடுப்பாகவே இருந்தது. அலங்கோல அருவருப்பு. சுத்தமாக ஜோதிகாவை அறவே பிடிக்காது). அதனாலேயே இந்தப் பாட்டு எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.
ரெண்டாவது அது என்ன பூவ பூவப் பூவே என்றே புரியவில்லை. பூவே என்றால் சரி. பூவ பூவப் பூவே என்றால் என்ன? இந்த சினிமாக்காரர்கள் எதை வேண்டுமானாலும் எழுதி நம் தலையில் கட்டுவார்கள். ரொம்பநாள் எனக்கு இந்தப் பாடல் கூவ கூவ கூவே என்றுதான் விழுந்தது.
இன்று உங்களால்தான் அது பூவே என்று தெரிந்தது. அதற்காக உங்களுக்கு நன்றி! உங்கள் உழைப்புக்கும் நன்றி!
நன்றி வாசு.
நானும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் ஜோதிகா விஷயத்தில். பூவா பூவா பாடலில் ஆடும் ஆட்டம் கேவலம் என்றால் சந்திரமுகி படத்தில் அதை விட. ஜெயா டிவியில் வந்த இளைய ராஜாவின் இன்னிசை மழை நிகழ்ச்சியில் இளையராஜாவே யுவனின் இசை பற்றி நகைச் சுவையாக யுவன் இசை அமைத்தால் எப்படி இருக்கும் என்று சொன்னார். நீங்கள் "கூவ கூவ" என்று இந்த பாடலை சொன்னதும் அதுதான் நினைவுக்கு வந்தது. முதன் முதலில் தெளிவாக நான் கேட்டு விட்டதால் எனக்கு பிடித்துப் போனதோ என்னவோ. இல்லை அதை அதிக முறை கேட்டதால் பிடித்ததோ என்னவோ தெரியவில்லை. இந்த பாடலை விட 'சுடிதார் அணிந்து வந்த' என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
kalnayak
27th June 2015, 08:09 PM
வாசு,
'மகளுக்காக' பட பாடல் 'இனிமேல் எனக்கென்ன கவலை' பதிவு சுகம். இங்கேயும் உங்கள் 'ஞான'த்தை பார்க்கிறேன். ராஜ்ராஜ் சாருக்கான ஜுகல் பந்தியும் அருமையிலும் அருமை.
என்ன எங்கள் பதிவுகளுக்கு போட்டியாக நீங்கள் பதிவுகள் இட்டு எல்லோரது துறையிலும் பதிவுகள் இட்டு எங்கள் எல்லோரது வாக்குகளையும் நீங்களே வாங்குவது என்று முடிவு செய்து விட்டீர்களா? இல்லை நாங்கள் எல்லோரும் சேர்ந்து உங்களை எழுத வைத்துக் கொண்டு இருக்கிறோமா? எங்கள் பதிவுகளுக்கு உங்கள் பதிவுகள் வலுக் கூட்டுகின்றன. எல்லாமே சுகம். சுபம்.
kalnayak
27th June 2015, 08:20 PM
ரவி உங்கள் பதிவுகளைப் பற்றியும், மற்றவர்களின் பதிவுகளைப் பற்றியும், அடுத்த பூவின் பாடலையும் திங்கட் கிழமை எழுதுகிறேனே.
uvausan
27th June 2015, 09:01 PM
ஒரு நடிப்பு நல்ல பாடலை கொலை பண்ணுமா ?? - ஒரு சின்ன அலசல்
https://www.youtube.com/watch?v=8e17naoTrmE
நல்ல பாடல் - இயற்கையை இந்த பாடல் வர்ணித்த மாதிரி அவ்வளவு அழகாக வேறு எந்த பாடலும் சொன்னதில்லை என்று சொல்லலாம் - பாடியவர் மிகவும் பிரபலமானவர் - எல்லோர் மனதிலும் வசிக்கிறவர் . இசை ராஜா - இசையும் ராஜா தான் - படத்தை டைரக்ட் பண்ணியவர் நம் கோபாலின் நெருங்கிய நண்பர் ...இத்தனை அற்புதங்கள் இருந்தும் தன் முத்திரை பதித்த நடிப்பினால் நம் கண்களை மூடிக்கிகொள்ள வைத்தவர் திரு சரத் பாபு அவர்கள் . பாடலை பாருங்கள் -----
உணர்ச்சியே இல்லாத முகம் - தேவையே இல்லாத இடத்தில் சிரிப்பு - மலைச்சரிவுகளில் சில இடங்களில் நேர் பாதைகளும் வரக்கூடும் - அங்கே 360 டிகிரி யில் வலது புறம் steering யை திருப்புவார் , உடனே நேரே செல்லும் அதே பாதையில் 360 டிகிரி யில் streeing யை இடது பக்கம் திரும்புவார் - பார்வை மலைகளின் பக்கம் இருக்கும் - ரோடில் இருக்காது - இரண்டும் பக்கம் streeing யை த் திருப்பியும் வண்டி நேராக ஓடும் --- இவரது சேட்டைகளைக்கண்டு பின்னே உட்காந்திருக்கும் பெண்கள் கூட்டம் எப்படி வண்டியிலிருந்து குதிக்காமல் இருக்கிறார்கள் என்றே புரியவில்லை .... ஆடியோ வில் கேட்க்க வேண்டிய பாடலை TV யில் பார்த்துவிட்டோமே என்ற மன வருத்தத்துடன் டிவி யை நிறுத்தினேன் ( இன்று டிவி யில் முள்ளும் மலரும் )
வாசு சார் - AVMR யை சற்றே நினைத்துப்பார்த்தேன் சரத் பாபு இடத்தில் -- சரத் பாபு நன்றாகவே பண்ணியுள்ளார் என்றே தோன்றுகிறது .
இப்படி பல பாடல்கள் பல நடிகர்களால் கொலை செய்யப்பட்டுள்ளன - இன்னுமொரு உதாரணம் - மதுரையில் பறந்த மீன் கொடியை ---------
இதற்கென்றே ஒரு புதிய திரியை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் -----
rajraj
27th June 2015, 11:04 PM
Good Morning from San Francisco,CA. I will be here for the next three weeks ! :)
rajeshkrv
28th June 2015, 07:03 AM
அங்கிள் வெகேஷன் எஞ்ஜாய் செய்யுங்கள்
vasudevan31355
28th June 2015, 07:10 AM
வணக்கம் ஜி!
நலம்தானே!
vasudevan31355
28th June 2015, 07:11 AM
நைட் ஷிப்ட் முடித்துவிட்டு வந்து பார்த்தால் ஜி ஆன்லைனில். வாவ்..
vasudevan31355
28th June 2015, 07:12 AM
//வாசு சார் - avmr யை சற்றே நினைத்துப்பார்த்தேன் சரத் பாபு இடத்தில் -- சரத் பாபு நன்றாகவே பண்ணியுள்ளார் என்றே தோன்றுகிறது .//
:):)
ரவி சார்,
'முள்ளும் மலரும் பதிவில் 'செந்தாழம்பூ' பாடல் பற்றி எழுதியது ஞாபகம் வருகிறது.
vasudevan31355
28th June 2015, 07:29 AM
ஜி!
சுசீலா அம்மா பாடிய ஒரு பாடல். திடுமென நினைவுக்கு வந்தது. 'முத்துச்சிப்பி' படத்தில் இருந்து. மேடம் ஜெய்யை நினைத்து படத்தில் பாடுவார்கள்.
'மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்துவண்ணச் சித்திரத்தின் முகம் பார்க்க
பக்கம் வந்து மெல்ல
பாடல் ஒன்று சொல்ல
வெட்கம் வந்து கிள்ள
சொர்க்கம் கண்டு கொள்ள'
ரொம்ப பிடிச்ச பாட்டுஜி! இருந்தா போடுங்களேன். காலையில் ஃபிரஷ்ஷா கேக்கலாம். எஸ்.எம்.எஸ் மியூசிக் டாப் ஜி.
'தூங்காத கண்ணே துடித்தது போதும்
துடியிடையே நீ துவண்டது போதும்
நீங்காத நினைவே அலைந்தது போதும்
நீ எதிர்பார்த்தது நடக்கும் எப்போதும்'
சும்மா இசையரசி புகுந்து விளையாடுவார். சுறுசுறு மியூசிக். நாகேஷ் அதிர்ச்சி செய்தியை சொல்லாமல் மென்று விழுங்குவார். நடுவில் 'என்னண்ணா?' என்று மேடம் நாகேஷிடம் கேள்வி கேட்பார்.
rajeshkrv
28th June 2015, 07:34 AM
ஜி நலமே
முத்துச்சிப்பி படமே சூப்பர்.. பாடல் அதைவிட சூப்பர்
rajraj
28th June 2015, 07:41 AM
அங்கிள் வெகேஷன் எஞ்ஜாய் செய்யுங்கள்
Thanks Rajesh. It is fun to be with grandchildren. My grand daughter always asks for a particular song she likes. You will be surprised to know what she calls the song! :) I will post it later. She also sings a few lines from a carnatic compositiion. I hope my son and daughter in law start her on music lessons soon !
RAGHAVENDRA
28th June 2015, 07:52 AM
Definition of Style 27 & திலக சங்கமம்
அன்னை இல்லம்
http://madrasmusings.com/Vol%2018%20No%2011/images/Houses0.jpg
ஆம், அன்னை இல்லம் என்றால் நம் நினைவுக்கு நடிகர் திலகம் வாழுகின்ற இந்த இடம் தான் நம் நினைவில் உடனே தோன்றுகிறது. அந்த அளவிற்கு நம்முள் கலந்து விட்ட அந்த இல்லத்தின் மேன்மை அவருடைய அந்தப் படத்திற்கும் கிட்டியது சிறப்பன்றோ..
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/aicollage_zpsa4c925c8.jpg
நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் அன்னை இல்லம் திரைப்படத்திற்குத் தனியிடம் உண்டு. அதே போல் ரசிகர்கள் நெஞ்சிலும் இதற்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக நடிகர் திலகத்திற்கு ஜோடியாக படங்களில் தேவிகா தான் சிறந்தவர் என்றும் அதுவரை பத்மினியை சிறந்த ஜோடியாக எண்ணியவர்களும் பந்த பாசம் பாவ மன்னிப்பு படங்களுக்குப் பிறகு தேவிகா வசம் சரணடைந்தவர்களும் ஏராளம் (அடியேன் உட்பட).
இயக்குநர் பி.மாதவன் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம் அன்னை இல்லம்.
அப்போதையை கால கட்டத்தில் சென்னையிலேயே உயரமான கட்டிடமான 14 மாடி ஆயுள் காப்பீட்டுத்திட்ட அலுவலக்க் கட்டிடத்தின் உச்சியில் உள்ள தளத்தில் சிவப்பு விளக்கு எரியுதம்மா பாடல் காட்சியின் ஒரு பகுதி படமாக்கப் பட்டது. இது அபூர்வமானதாகும்.
சென்னை காஸினோ திரையரங்கில் 100- நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டது அன்னை இல்லம்.
இது போன்ற பல சிறப்புகளைக் கொண்ட இத்திரைக்காவியத்தின் கதைச் சுருக்கம்,
(பாட்டுப்புத்தகத்தில் உள்ளவாறு)
வாழ்ந்தவன் தாழ்ந்து விட்டால் மீண்டும் அவனால் வாழ முடியாதா?
இந்த உலகில் கெட்டவர்கள்தான் வாழ்வுச் சக்கரத்தை சுலபமாக உருட்ட முடியுமா?
கெட்டுப்போன பிறகு, தனக்குத் தானே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களுக்காகவும் பகிரங்கமாக வாழ முடியுமா
இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைதான் 'அன்னை இல்லத்'தின் வரலாறு!
பரமேசன், கௌரி, குமரேசன், ஷண்முகம் - இது கயிலைநாதனின் தெய்வீகக் குடும்பம் அல்ல; கருணையே உருவான ஒரு மனித ஜீவனின் திருக்குடும்பம்!
'இல்லை' என்போருக்கு இல்லாது என்னாமல், அள்ளி அள்ளிக் கொடுத்தான். இறுதியில் அவனுக்கே இல்லை எனும் பொல்லாத நிலை வந்தது. மனைவியின் பிரசவத்துக்குப் பணம் தேவைப்பட்டது. கொடுத்தவர்களிடம் எல்லாம் கையேந்தினான் - யாரும் கொடுக்கவில்லை. மனம் மாறியது - குணம் மாறியது - கொலைகாரன் என்ற பழியோடு சட்டத்துக்கு பயந்து ஓடினான்.
வேடனின் வலையிலிருந்து தப்பிய மான் வேங்கையின் விழியில் பட்டது போல் நமது கொடைவள்ளல் ஒரு கொடியவனின் வலையில் சிக்கினான்.
வருடச் சக்கரம் இருபத்தைந்து முறைகள் சுழன்றது!
இந்த இடைக்காலத்தில் உலகில் எத்தனையோ மாற்றங்கள்!எத்தனையோ தோற்றங்கள்!பிரிந்து போன எத்தனையோ மனிதர்கள் கூடினர் - கூடியிருந்த எத்தனையோ உயிர்கள் பிரிந்தன! - ஆனால் நம் கொடைவள்ளலின் குடும்பமோ பிரிந்தது பிரிந்தபடியே தான் இருந்தது! அதற்காக உலகம் விடியாமலா போயிற்று? கருவிகள் இயங்காமலா இருநதது? இல்லை - இல்லை!
அந்தோ ?
ஒரு கணவன் - மனைவியைப் பிரிகிறான்.
ஒரு மனைவி - கணவனையும் மகனையும் பிரிந்தாள்.
ஒரு மகன் - தந்தையையும் தமையனையும் பிரிந்தான்.
இன்னொரு மகன் - தாயைப் பிரிந்தான்.
இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்க வேண்டியவர்கள். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலே இந்த உலகில் அவர்கள் பழகுகின்றனர்.
தந்தையும் மூத்த மகனும் ஒரு இல்லத்தில்!
தாயும் இளைய மகனும் இன்னொரு இல்லத்தில்!
இந்த இரண்டு இல்லங்கள் ஒன்று சேர்ந்தனவா!
- அன்னை இல்லம் திரைப்படத்தைப் பாருங்கள்
ராஜாமணி பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி பாசமலர், குங்கும்ம் படங்களை இணைந்து தயாரித்த, மோகன் ஆர்ட்ஸ் மோகன் மற்றும் எம்.ஆர்.சந்தானம் இருவரும் தனித்தனியே பட நிறுவனங்களைத் தொடங்கினர். அதில் எம்.ஆர்.சந்தானம் தொடங்கிய நிறுவனமே கமலா பிக்சர்ஸ். இந்த கமலா பிக்சர்ஸ் முதல் தயாரிப்பே அன்னை இல்லம். முலக்கதையை தாதா மிராஸி எழுதியிருக்க, திரைக்கதையை ஜி.பாலசுப்ரமணியம் அமைக்க, வசனம் ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். தனி ஒளிப்பதிவாளராக நடிகர் திலகத்தின் படங்களில் பி.என்.சுந்தரம் பணிபுரிநத முதல் படம். அன்னை இல்லம் படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பற்றிய முழுவிவரங்களைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1135586&viewfull=1#post1135586
கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து வாழ்கின்றன என்றால் கூடவே திரை இசைத் திலகத்தின் சிறப்பான இசையும் அதற்கு முக்கிய பங்காற்றியது. நடையா இது நடையா பாடல் எந்த அளவிற்கு மிகப் பிரபலமானதோ, அந்த அளவிற்கு விமர்சனத்தையும் சந்தித்தது. குறிப்பாக அந்தக் கால இளைஞர்கள் பெண்களை கேலி செய்ய இப்பாடலைப் பாடி, பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்தது பலருக்கு நினைவிருக்கும்.
ஆனாலும் இரண்டு பாடல்கள் மிகப் பெரும் அளவில் இன்றளவும் புகழ் பெற்று அன்றாடம் வானொலியிலோ தொலைக்காட்சியிலோ ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்பப் பட்டுத் தான் வருகிறது. அதில் ஒன்று மடிமீது தலைவைத்து என்ற பாடல்.
இன்னொரு பாடலே இன்றைய விரிவுரைக்கு காரணி. இந்த அளவிற்கு இப்பதிவிற்கு முன்னுரை தரவேண்டியதன் காரணம் பலருக்கு தேவைப்படலாம். இருக்கிறது. எடுத்துக் கொண்ட பாடலின் சிறப்பு அப்படி.
எண்ணிரண்டு பதினாறு வயது
சினிமா ... திரையரங்குகளில் புரொஜக்ட்ரில் 27 ஃப்ரேம்ஸ் ஒரு விநாடிக்கு என அசையும் அளவிலானது. அதே சினிமா, இன்றைய நவீன யுகத்தில், இணைய தளங்களில் மற்றும் நெடுந்தகடு சாதனங்களில் 29.97 அல்லது 30 ஃப்ரேம்ஸ் என்ற வேகத்தில் அசைகிறது. இந்த இரு வேறுபாடுகளுக்கும் காரணம் அவை வீசும் ஒளியின் வேகம், அதனுடன் பயணிக்கும் ஒலியின் வேகம் இவற்றின் அடிப்படையில் இவை வகுக்கப்படுவதேயாகும்.
இந்த அளவினை இங்கு குறிப்பிடக் காரணம், இக்காணொளியின் இப்பாடலின் நீளம் 4.05 நிமிடங்கள். அதில் நடிகர் திலகத்தின் காட்சி இடம் பெறுவது 0.30 முதல் 4.00 வரை. அதாவது 3.30 நிமிடங்கள், அதாவது 210 விநாடிகள். இந்த 210 விநாடிகளில் சராசரி 30 ஃப்ரேம்ஸ் என வைத்துக் கொண்டால், 6300 ஃப்ரேம்ஸ் வருகிறது.
இந்த 6300 ஃப்ரேம்களில் நடிகர் திலகம் தோன்றும ஒவ்வொரு ஃப்ரேமும் ஒவ்வொரு காவியம் படைக்கலாம் என்கின்ற அளவிற்கு அவருடைய உடல் மொழி, நடை, உடை அனைத்தும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைலைக் குறிப்பிட்டு எழுத விரும்புகிறேன்.
அதற்கு முன் ஒரு சிறிய Flashback. கடந்த பிப்ரவரி மாதம் நம் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அன்புக்கரங்கள் திரையிட்ட போது ஒரு இளம் ரசிகை, இப்பாடலைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார். குறிப்பாக நடிகர் திலகத்தின் வாயசைப்பிலேயே மொழியின் உச்சரிப்பு வேறுபாட்டைக் கண்டதாக மிகவும் ரசித்துக் கூறினார். இதைப்பற்றிய பதிவுகள் இங்கே மீண்டும் நம் பார்வைக்குத் தர விரும்புகிறேன்.
முரளி சாரின் பதிவு
இன்று மாலை நமது NT FAnS சார்பில் திரையிடப்பட்ட அன்புக் கரங்கள் திரைப்படம் நல்ல ஒரு மாலையை பரிசாக தந்தது. ஆழமான உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை நடிகர் திலகத்தின் நடிப்பை ஒரே அலைவரிசை ரசிகர்களோடு சேர்ந்து பார்ப்பது ஒரு சுவையான அனுபவம் என்றால் அந்த சுவைக்கு சுவையூட்டுவது போல் அமைந்தது ஒரு இளம் பெண்ணின் பேச்சு.
நமது அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இருபதுகளின் முதல் பகுதியில் இருக்கும் அந்த இளம் பெண் சபையில் ஒரு சில வார்த்தைகள் பேசலாமா என்று அனுமதி கேட்க பேசுங்கள் என்று சொன்னோம்.
சபையோருக்கு தன் வணக்கத்தை சொல்லிவிட்டு ஆரம்பித்த அந்த இளம் பெண் தன் தமிழில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி கூறிவிட்டு பேச்சை தொடங்கினார். காரணம் அந்தப் பெண் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் பம்பாய் மாநகரத்தில். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரும் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கின்றனர். அது மட்டுமல்ல வீட்டில் பேசுவது முழுக்க தமிழில் மட்டும்தான் என்பதோடு நின்று விடாமல் தமிழ படங்களையும் தமிழ் பாடல்களையும் பார்க்க வைத்திருக்கின்றனர். பழைய தமிழ் படங்கள் குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களை காண்பித்திருக்கின்றனர். தமிழை அதன் உச்சரிப்பு சுத்தியோடு கற்றுக் கொண்டது நடிகர் திலகதிடமிருந்துதான் என்று பெருமையாக குறிப்பிட்டார் அந்த இளம் பெண்.
வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் குடும்பம் என்பதால் திவ்யப்பிரபந்தங்கள், பாசுரங்கள் திருவாய்மொழி முதலியவற்றை கற்க ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண். அந்த நேரத்தில்தான் திருமால் பெருமை பார்க்கும் வாய்ப்பு அந்தப் பெண்ணிற்கு கிடைத்திருக்கிறது. ஆண்டாளைப் பற்றியும் பெரியாழ்வார் பற்றியும் படித்துக் கொண்டிருந்த தனக்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் உருவகப்பட்டது நடிகர் திலகத்தின் மூலமாகத்தான் என்று அந்தப் பெண் சொன்னபோது அரங்கம் கைதட்டி வரவேற்றது. அதே போன்று திருவிளையாடல் ஈசனையும் அந்தப் பெண் நினைவு கூர்ந்தார்.
இறுதியாக அந்தப் பெண் குறிப்பிட்ட விஷயம் அவர் எந்தளவிற்கு கிரகிப்பு தன்மை வாய்ந்தவர் என்பதையும் எத்துனை நுணுக்கமாக காட்சிகளை உற்று நோக்குபவர் என்பதை புலப்படுத்தியது. பொதுவாக தமிழில் ர மற்றும் ற ஆகிய இரண்டு எழுத்துக்கள் எப்படி வித்தியாசப்படுகின்றன அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் ஒரு குழப்பமே இருந்ததாகவும் அது அன்னை இல்லம் படத்தில் வரும் எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் காட்சியை பார்த்ததும்தான் தெளிவு கிடைத்ததாகவும் குறிப்பிட்ட அந்தப் பெண் அந்த வரிகளை சொல்லிக் காட்டினார்.
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்
என்ற வரியில் சுற்றி என்ற வார்த்தையில் வரும் ற வையும் சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் ர வையும் எப்படி உச்சரிக்க வேண்டும் எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எதை இலகுவாக உச்சரிக்க வேண்டும் என்பதை தன் வாயசைப்பினாலேயே சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம் என்றபோது அனைவரும் சிலிர்த்து விட்டனர். வாய்பிற்கு நன்றி கூறி விடைபெற்றார் அந்தப் பெண்.
அவரின் மனதிலிருந்து நேரடியாக வந்த அந்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்த நான் அவரின் பார்வையை சிலாகிக்கும் விதமாக ஒன்றை சுட்டிக் காட்டினேன். அவர் குறிப்பிட்ட அந்த அன்னை இல்லம் பாடல்காட்சியில் அந்த குறிப்பிட்ட வரிகளில் கடற்கரையில் பாறை மீது ஏறி நிற்கும் நடிகர் திலகம் தனக்கே உரித்தான அந்த கையை சற்றே மேலே தூக்கி நீட்டியவாறே பாடுவார். அந்த வசீகரத்தில் அனைவரும் தன்னை மறந்து அவரின் உடல்மொழியைதான் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி அவரின் வாயசைப்பை கவனித்த அந்தப் பெண்ணிற்கு பாராட்டுகளை தெரிவித்தேன்.
எந்த தலைமுறையையும் ஏன் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர்கள் அனைவரையும் கவரக்கூடிய ஒரே நடிகன் என்றென்றும் நமது நடிகர் திலகம் மட்டும்தானே!
அன்புடன்
மேற்காணும் பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?11021-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-14&p=1207943&viewfull=1#post1207943
அடியேனின் பதிவிலிருந்து..
8.2.2015 மாலை மறக்க முடியாத மாலை. தலைமுறைகளைத் தாண்டி நூற்றாண்டுகளைத் தாண்டி, பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல இலக்கண நூல்கள் செய்வதை தன் ஒரே ஒரு வாயசைப்பில் செய்து சரித்திரம் படைத்துள்ளார் நடிகர் திலகம்.
மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். இன்று மாலை அன்புக்கரங்கள் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் திரையிடப்பட்டபோது வந்திருந்த உறுப்பினர்களில் ஒருவர் இளைய தலைமுறையைச் சார்ந்தவர். அந்தப் பெண்மணி நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றால் அவர் அதை எப்படி உணர்ந்திருக்கிறார் என்பதை அறிந்த போது அது மெய் சிலிர்க்க வைக்கும் செய்தியாகி விட்டது.
தமிழின் சிறப்பான வல்லினம், மெல்லினம் இடையினம் இவை மூன்றையும் பாடங்களில் உச்சரித்து வகுப்பறையில் கேட்டிருக்கிறோம். நடிகர் திலகத்தின் உச்சரிப்பில் அதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவருடைய உதட்டசைவில் அந்த வேறுபாட்டை அவர் உணர்த்தியிருக்கிறார் என்பதையும் அதை இன்றைய தலைமுறை இளம்பெண் ஒருவர் கவனித்து ரசித்து அதைக் கூறிய போது ஆஹா.. நாம் எவ்வளவு பெரிய மேதையுடன் வாழ்ந்திருக்கிறோம் என மிகப் பெரிய கர்வம் ஏற்பட்டது. வாழ்ந்த வாழ்க்கையின் பயன் பூர்த்தியாகி விட்டது எனத் தோன்றியது.
எண்ணிரண்டு பதினாறு வயது .. இந்தப் பாடலில் ஒரு சரணத்தில் சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம் என்ற வரிகளின் போது அவருடைய ஸ்டைலையே பார்த்து ரசித்து மெய் மறந்து கை தட்டியிருக்கிறோம்.
மடையா அதற்கும் மேலே அந்தப் பாட்டில் விஷயம் இருக்கிறது எனப் பொட்டில் அடித்தாற்போல அந்த இளம் பெண் கூறியது இவ்வளவு வயதானால் என்ன எத்தனை முறை பார்த்திருந்தால் தான் என்ன நடிகர் திலகம் என்ற கடலில் நாம் ஓரிரு முத்துக்களைத் தான் நாம் எடுத்து அணிந்திருக்கிறோம் என மறைமுகமாக நம்மை சாடியது போல் இருந்தது.
சுற்றி என்ற வார்த்தையில் வரும் வல்லின ற விற்கு அதற்கேற்பவும், சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் இடையின ர விற்கு அதற்கேற்பவும் நடிகர் திலகம் தன் உதட்டசைவை வெளிப்படுத்தியிருக்கிறார் என அந்தப் பெண் எடுத்துரைத்த போது..
ஓ... எனக் கத்த வேண்டும் போலிருந்தது.. தலைவா என்று உரக்கக் கூறி இறைவனுக்கு நன்றியை மிகவும் பலத்த குரலில் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது..
நடிகர் திலகம் பாட்டிற்கு வெளிப்படுத்தும் உதட்டசைவை ஏளனம் புரிவோர்க்கு இது சரியான சவுக்கடி
அந்த இளம்பெண்ணிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அந்த வேறுபாட்டை நீங்கள் இப்போது கவனியுங்கள்.
இப்பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?11021-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-14&p=1207958&viewfull=1#post1207958
மேற்காணும் நிகழ்வின் போதே இப்பாடலைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டும் என எண்ணம் ஏற்பட்டது. இந்த அடிப்படையிலேயே இப்பதிவின் நீளம் அமைந்து விட்டது.
https://www.youtube.com/watch?v=i5LaULZ-vFo
இக்காட்சியின் துவக்கத்தில் கவனித்தால் தெரியும். முத்துராமன் கையில் ஒரு பூ இருக்கும். காதலியுடன் உரையாடும் அவரை கலாய்த்தவாறே வருகிறார் நடிகர் திலகம். நாணத்துடன் அவள் ஓடி விட, பதிலுக்கு முத்துராமன் நடிகர் திலகத்தை சீண்டுகிறார். உங்கள் காதல் விவகாரம் எப்படி. என்று. அதுவரை முத்துராமன் கையிலிருந்த பூவை நடிகர் திலகம் வாங்குகிறார். அங்கேயே ஆரம்பிக்கிறது அவரின் ஆளுமையும் ஸ்டைலும். வைப்ரஃபோன் போன்று ஒரு வாத்தியம் இரண்டு மூன்று முறை ஒலிக்க, ஒவ்வொரு முறைக்கும் பூவை உதிர்க்கிறார் நம்மவர். எண்ணிரண்டு பதினாறு வயது என்றவாறே எழுந்து நிற்கிறார். அந்த எழுந்திருக்கும் ஸ்டைலே அசத்த ஆரம்பித்து விடுகிறது. இப்போது, அக்கார்டின் ஆரம்பிக்கிறது. இந்த அக்கார்டின் ஒலிக்கும் போது என்ன ஸ்டைலாக கம்பீரமாக பூவை முகர்ந்தவாறே நடக்கிறார். இப்போது முத்துராமன் எழுந்து பின் தொடர்கிறார். மிகச் சிறப்பான ஒத்துழைப்பை இப்பாடலில் அவர் அளித்திருப்பார்.
முத்துராமன் உரிமையோடு தோளில் கை போடும் போது திரும்பி அவளைப் பற்றி பாட ஆரம்பிக்கிறார். இப்போது தாளம் துவங்குகிறது. இரு கண்களினாலும் பக்கவாட்டில் முத்துராமனைப் பார்த்தவாறே திரும்புகிறார். ஆஹா அந்த திரும்பும் ஸ்டைலை என்ன சொல்ல...உடனே இரு விரல்களைக் காட்டி அவள் கண்ணிரண்டை குறிப்பிடுகிறார். அடுத்த்து ஆஹா... மொத்த திரையரங்கிலும் ரசிகர்கள் இருக்கையிலிருந்து எழுந்து அரங்கத்தின் உத்தரத்தை தலையால் முட்டி விட்டு கீழிறங்கும் அளவிற்கு துள்ளிக் குதிக்க வைக்கும் ஒரு கண்ணடிப்பு... அதில் ஒரு புன்சிரிப்பு...
இப்போது இரு கைவிரல்களும் பாடலின் தாளத்திற்கேற்ப சொடுக்குப் போட்டவாறே அட்டகாசமான ஒரு நடை... இதை முத்துராமனும் ரசிக்கிறார்.
இப்போது ஈஸ்வரியின் ஹம்மிங்.. ஃப்ரேமின் இடப்புறம் நாயகன் வலப்புறம் நாயகி எனப்பிரிக்கிறார்கள் இயக்குநரும் படத்தொகுப்பாளரும். நல்ல கான்செப்ட். நாயகி நேர்நிலையில் காமிராவைப் பார்த்தவாறு வர அவளை நடிகர் திலகம் பக்கவாட்டில் பார்க்கும் வகையில் காட்சியை உருவாக்கிய விதம் லாஜிக்க்காவும் சிறப்பாக உள்ளது. பார்ப்பதற்கும் ரம்மியமாக உள்ளது. இந்த இடத்தில் ஃப்ரேமில் தனக்கு எதிரே நாயகி உள்ளதாக கற்பனை செய்து நாயகன் பாடுவதாக எடுத்துள்ளார்கள்.
நாயகி இறங்கி வர வர நாயகனான நடிகர் திலகம் ரசித்துக் கொண்டே இருக்கிறார். அவள் அழகாக புடவைத் தலைப்பை இங்குமங்குமாக அசைக்க, உடனே ஒரு ப்ளையிங் கிஸ்... இதையெல்லாம் எங்கள் தலைவர் அப்பவே பண்ணிட்டாராக்கும் .
காதலின் ஆழம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை எவ்வளவு அழகாக த்த்ரூபமாக வடித்துள்ளனர் இயக்குநரும் நடிகர் திலகமும். தன்னிலை மறந்த நிலையில் முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள் என்கிற சரணத்தைத் தொடங்கும் போது அவள் நினைவாகவே தரையை வெறித்துப் பார்ப்பதும், பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராக அவளை உருவகப் படுத்திப் பார்ப்பதுமாக ... எழுத்தை எந்த அளவிற்கு ஜீவனுடன் வடித்திருக்கிறார் நடிகர் திலகம்... இப்போது இரண்டாம் முறை அந்த டையினை இங்கும் அங்கும் ஆட்டும் நேர்த்தி ... என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல் முத்துராமனைப் பார்த்து தலையாட்டிய வாறே முக்கனியும் சர்க்க்ரையும் என்ற வரியை முதன் முறை பாடுகிறார்.
இப்போது மீண்டும் அந்த வரி. முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்.. ஆஹா.. கண்கொள்ளாக் காட்சி.. அவள் நினைப்பில் லயித்தவாறே தன் டையை முறுக்கிக் கொள்வதும், ஆனந்த்ப் புன்னகை புரிவதும் அப்போது அதற்குள் பல்லைக் கடித்தவாறே சிரிப்பதும்...
இப்போது பாருங்கள்.. கடற்கரை நீர்ப்பரப்பில் ரசித்துப் பாடியவாறே தலையை ஆட்டிக் கொண்டு நடப்பதை.. ஆஹா.. பிறவிப்பயன் அடைந்து விட்டோம் என ரசிகர்கள் பரவசத்தின் உச்சிக்கே அல்லவா செல்கிறார்கள். அதுவும் சும்மாவா, இடது கை சுட்டு விரலால் லேசாக மேலே சுட்டிக்காட்டி விட்டு மடக்கிக் கொள்ளும் ஒய்யாரம்.. உதட்டிலோ சொக்கவைக்கும் புன்னகை..
அந்த நிலையிலேயே அவர் மீண்டும் அவள் நினைவில் ஆழ்ந்து விட, படத்தொகுப்பாளரின் கைங்கரியத்தில் அந்த ஃப்ரேமிலேயே மேலெழும்புகிறாள் நாயகி.
இப்போது இரண்டு ஸ்டெப் எடுத்து வைத்து விட்டு நிற்கிறாள். அவள் காலந்தாளாம். இதை அவர் சொல்லிக் காட்டுகிறார். காலளந்த நிலையினில் என் காதலையும் அளந்தாள்.. இந்த வரிகளின் போது அவர் முகத்தைப் பக்கவாட்டில் காட்டுகிறார்கள். அப்போதும் நாயகனின் நினைவு காதலியிடம் தான் என்பதை சித்தரிக்கும் வகையில் பார்வையில் எங்கோ இருப்பது போல பார்வை.
இப்போது அடுத்த வரி, காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ... இந்த வரிகளின் போது தலையை இப்படியும் அப்படியுமாக அசைக்கும் அழகு..
இப்போது வருகிறது பாருங்கள்.. உலகத்திலேயே சிறந்த நடையழகனின் உன்னத நடையழகு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் மன்மத நடையழகு.. காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் என்ற வரிகளுக்கு அவர் காட்டும் அந்த ஸ்டைல்.. இன்னும் எத்தனை காலம் தவம் புரிந்தாலும் இப்படி ஓர் அழகு சுந்தரனை நம்மால் காண முடியாது என்று நம்மை அறுதியாகக் கூற வைக்கும்.
அதற்குப் பிறகு.. ஆஹா.. அற்புதம்... அந்த படகின் கொம்பைப் பிடித்துக் கொண்டே தன் உடம்பை இப்படியும் அப்படியுமாக மிக இயற்கையாக அசைத்து காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் என்ற வரியைப்பாடும் அருமையை...
இது தானய்யா இயற்கை நடிப்பு...
ஆஹா ... ஆஹா.. இப்போது அந்த மணல் முகட்டிலிருந்து பார்வையாளரை நோக்கி நடக்கும் வகையில் காட்சியமைப்பு. இப்போது அவருடைய நடையைப் பாருங்கள்..
இந்த மூன்றாவது சரணம் தான் உச்சம்.. இப்போது ஃப்ரேமின் இடது புறத்தில் நடிகர் திலகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் வலது புறத்தில் நாயகியான தேவிகாவின் நளினமான அசைவுகளும் அவருடைய மனக்கண் முன் நிழலாட, அவள் அதில் விடைபெறுவது போன்ற பாவனை காட்ட அவளுடைய அந்த அழகிய தோற்றம் தந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் புன்னகை மலர தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்து அதனை சித்தரிக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு.. அப்போது அங்கு புன்சிரிப்பு...
இப்போது தான் அந்த சரணம்.. மேலே குறிப்பிட்ட அந்த இளம் ரசிகையின் மனம் கவர்ந்த சரணம். முதன் முறை அந்த வரிகளைப் பாடும் போது சற்று லாங் ஷாட்டில் தலைவரின் அட்டகாசமான போஸ். இரு கைகளையும் பாக்கெட்டில் வைத்தவாறே பாடுகிறார். சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்.. இதை இரண்டாம் முறை சொல்லும் போது காமிரா அவருடைய முகத்தை க்ளோஸப்பில் கொண்டு வர, இங்கே தான் நடிப்பிலக்கணம் இன்னோர் எடுத்துக்காட்டை இயம்புகிறது. சுற்றி எனும் போது வல்லின ற விற்கான உதட்டசைவையும், சுவர் என்கின்ற போது இடையின ர விற்கான உதட்டசைவையும் வெளிப்படுத்தி தமிழிலக்கண வகுப்பே எடுத்திருப்பார் தலைவர்.
இப்போது சரணத்தின் முடிவில் வரும் வரியான துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம் என்கிற வரி இரண்டாம் முறை வரும் போது..
ஆஹா.. மீண்டும் தியேட்டர் அதிருதே.. கொட்டாய் பிச்சிக்கிட்டில்லே விழுது.. யாரங்கே இனிமே சிவாஜி படம் போடறதாயிருந்தா மொதல்லே ஸீலிங்ஸை ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. இவங்க குதிக்கிறதில்லாம நாமளும் குதிக்கிறோம்.. சீலிங்கே ஆடுதே... என தியேட்டர் உரிமையாளர் கூறுவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாகி விடுகிறதே.. இருவருமே நடந்தோம் என்கிற போது இரு கைகளையும் விரித்து தோளை சிலுப்புகிறாரே..
சும்மாவா முடிக்கிறார் பாட்டை.. நம்மையெல்லாம் கட்டிப்போட்டு விடுகிறாரே.. எங்கோ பார்த்தவாறே தன் இடது கை சுட்டு விரலால் சுட்டிக்காட்டியவாறே உதட்டில் புன்னகையுடன் ஒரு மாதிரி தலையைக் குனிந்து அவர் பார்க்கும் போது..
ஆஹா.. கடவுளே.. நீ உலகத்தில் எத்தனையோ சோதனைகளை மக்களுக்குத் தருகிறாய். எத்தனையோ தொல்லைகள் தருகிறாய்.. சொல்லொணா துயரங்களக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதறகாக எல்லாருமே உன்னை சபிக்கிறார்கள். அதில் நாங்களும் விதி விலக்கல்ல..
ஆனால் அத்தனையையும் மறக்க வைக்க எங்களுக்கு நடிகர் திலகத்தை அளித்தாயே.. இது போதும இறைவா.. உன்னுடைய இறைவன் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.. பிழைத்துப் போ...
uvausan
28th June 2015, 09:22 AM
ராகவேந்திரா சார் - அருமை , அற்புதம் இவைகள் எல்லாவற்றையும் தாண்டி எங்கோ போய் விட்டீர்கள்
uvausan
28th June 2015, 10:35 AM
Good Morning
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Happy-Fathers-Day-Quotes-Images-Sms-In-Hindi-Language1_zpsyowichep.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Happy-Fathers-Day-Quotes-Images-Sms-In-Hindi-Language1_zpsyowichep.jpg.html)
uvausan
28th June 2015, 10:39 AM
கருவின் கரு - 127
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
உண்மை சம்பவம் 18
ஆகாயம் வெண்மையாக இருந்தது - நடு நடுவே அந்த வெண்மை நிற முகத்தில் சில கருப்பு புள்ளிகள் - மழை வரக்கூடம் என்பதை சொல்லிக்காட்டின ... ஈசி chair இல் வினு கொடுத்த காபி யை சுவைத்துக்கொண்டிருந்தேன் -- வினு அந்த இனிய நேரத்தை சற்றே கலைத்தாள் " அப்பா வெறும் டம்ப்ளரை எவ்வளவு நேரம் சுவைத்துக்கொண்டு இருக்கப்போகிறீர்கள் -- இன்னும் கொஞ்சம் காபி வேண்டுமா ?? " அருகில் அமர்ந்த வினுவிடம் பேச்சுக்கொடுத்தேன் MPhil கிளினிகல் சைகாலாஜி - மணிப்பால் - லீவ் க்கு வந்திருக்கிறாள்
அதிகமாக கேள்விகேட்ப்பவள் வினு தான் - பிறகு என் மனைவி .. அன்று இப்படித்தான் ஒரு பிச்சைக்காரன் - தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான் - பொழுது போகவில்லை - வினு கூட இருப்பது தெரியாமல் அவனிடம் பேச்சுக்கொடுத்தேன் ..
பிச்சைக்காரன் :அய்யா,சாமி தர்மம் பண்ணுங்க,
நான் :உனக்கு பிச்சை போட்டா,அந்த காசுல குடிப்ப,
பிச்சைக்காரன் :எனக்கு குடிப்பழக்கமே ல்ல சாமி.
நான் :அப்ப சீட்டாட போவியா?
பிச்சைக்காரன் :எனக்கு சூதாட தெரியாது சாமி,
நான் :அப்ப உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லியா?
பிச்சைக்காரன் :டீ கூட குடிக்க மாட்டன்சாமி
நான் :அப்ப என் கூட வீட்டுக்கு வா.எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் என்ன ஆவான்னு என் பொண்டாட்டிக்கிட்ட காட்டனும்.
வினு என்னை ஒரு பிடி பிடித்துவிட்டாள் - என் பையில் இருந்த 10 ரூபாய் அவனிடம் சுலபமாக சென்றது .
என்னமா என்னுடன் ரொம்ப நேரமாய் உட்காந்துக்கொண்டு இருக்க இதுவரை உன்னிடம் இருந்து ஒரு கேள்வியும் இன்னும் வரவில்லையே !!!
அப்பா இன்று ஒரு கஷ்ட்டமான கேள்வி - இதற்க்கு நீங்கள் பதில் சொல்லிவிடுங்கள் - சொல்லிவிட்டால் நீங்கள் தான் என் கிரேட் அப்பா ----( கிரேட் அப்பா என்ற டைட்டில்யை விட்டு விடக்கூடாதே என்ற பயம் ஒருபுறம் - கேள்வியை வேள்வியாக நினைத்து பதில் சொல்ல தயாரானேன் ---)
உண்மையான பக்தி என்றால் என்ன ? தகுந்த உதாரணத்துடன் சொல்ல வேண்டும் . முடியுமா உங்களால் ?? வினுவின் நெருப்பான கணைகள் ....
சரியம்மா உதாரணத்தை ஒரு கதையாக சொல்லட்டுமா ? வினு சம்மதம் கொடுத்தாள் ---
" ஜப்பானில் உள்ளது அந்த புத்த விகார் - அங்கே ஒரு வயதான பௌத்தகுரு தங்கியிருந்தார் . ஒரு நாள் இரவு . கடுமையான குளிர் . அவரால் தாங்கவே முடியலே . மரத்திலே செஞ்ச புத்த சிற்பங்கள் அங்கே நிறைய இருந்தது . அதுலே ஒண்ணை எடுத்து அதுக்குத் தீ மூட்டி அந்த நெருப்பிலே குளிர் காய்ந்துகிட்டிருந்தார் . மர சிற்பம் தீ வைச்சதும் படபடன்னு வெடிக்க ஆரம்பித்தது . அந்த சத்தத்தைக்கேட்டதும் அந்த விகாரையின் குருவெளியே ஓடி வந்தார் . தெருவிலே திரிச்சிக்கிட்டிருந்த அந்தப்பெரியவரை இங்கே தங்க அனுமதித்ததே இவர் தான் .
மிகுந்த கோபத்துடன் " எங்கள் கடவுளை எரிச்சுட்டிங்களே ! - ன்னு சத்தம் போட்டார் ..
"அப்படியா ?" -ன்னு கேட்டுக்கிட்டே அந்த சாம்பலைகிளறினார் அந்த பெரியவர் . " என்ன செய்கிறீங்க ?" - ன்னார் இவர் .
" நான் எலும்புகளைத் தேடுகிறேன் !" -னார்
" நீங்க ஒரு பைத்தியம் -- இது ஒரு மரசிற்ப்பம் - இதுலே எலும்புகள் கிடையாது ! " - ன்னார்
அடுத்தநாள் இவர் ஒரு பைத்தியமே என்று ஊர்ஜிதம் செய்யும் அளவிற்கு இன்னொமொரு காரியம் செய்தார் --- ஒரு மைல்கல்லைத் புத்தராக நினைத்து பூஜை செய்துகொண்டிருந்தார் ..
இப்ப அந்த பெரியவர் சொன்னார் -" நீங்க ஒரு மரத்தை புத்தராக்கும் போது நான் ஏன் ஒரு மையில் கல்லைப்புத்தராக ஆக்கக் கூடாது ? - நான் இந்த கல்லுக்குள் புத்தரைப்பார்க்கிறேன் .. அன்றைக்கு ரொம்பவும் குளிராக இருந்தது - நான் எனக்குள் இருக்கும் புத்தரை பாதுகாக்கணும் - அதனால் வெளியே உள்ள புத்தரை எரித்தேன் - அது தவறில்லை . "உன்னுள் ஜோதியாக இரு " என்பது புத்தருடைய போதனை . என் புத்தர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார் - அந்த மரச்சிற்ப்பங்கள் வெயில்-மழையில் உணர்ச்சி இல்லாமே இருந்தது - அதனாலே அப்படி பண்ணினேன் !" ஆனா நீங்க என்ன பண்ணினீங்க ? நான் ஒரு மர புத்தரை எரிச்சதுக்காக உயிருள்ள புத்தரை வெளியே தள்ளி கதவைச் சாத்தினீங்க !"
உண்மையான பக்திங்கிறது இதுதான் வினு ! உனக்குள் ஜோதியாக இரு - வாழ்வது வெகு சுலபம் ----
அப்பா - என்னை கட்டிப்பிடித்துக்கொண்ட வினு என்னை விட்டு அகல வெகு நேரம் ஆனது . அவள் கண்களில் என்றும் தெரியாத ஒரு தோதியைப்பார்தேன் ......
https://youtu.be/XLWbdfXk-HU
vasudevan31355
28th June 2015, 10:41 AM
கலக்கலோ கலக்கல் ராகவேந்திரன் சார். கொன்று விட்டீர்கள் கொன்று.
அதுவும் தலைவர் பக்கவாட்டு போஸில் ஆமோதிக்கும் அந்த ஸ்டைலை குறிப்பிட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ். அந்த ஒரு நொடிக்கு எப்படி காத்திருப்பேன் தெரியுமா? இந்தக் காட்சி பற்றி நடிகர் திலகம் திரியில் எழுதியது கூட ஞாபகம் இருக்கிறது.
http://i59.tinypic.com/swtjcg.jpg
uvausan
28th June 2015, 10:43 AM
கருவின் கரு - 128
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
ஸ்ரீரங்க நாதரின் புகழ் மாலையில் ஆண்டாளகத்தெரியும் ஒரு மகள் -----
https://youtu.be/0pyiBeui4RI
uvausan
28th June 2015, 10:46 AM
கருவின் கரு - 129
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மகளின் மேல் வைத்திருக்கும் அன்பை மிக அழகாக எடுத்துச்சொன்ன படங்களில் "மகாநதி "யும் ஒன்று - கமலின் நடிப்பு மனதை உருக வைக்கும்
https://youtu.be/8dfApJpEnjQ
uvausan
28th June 2015, 10:48 AM
கருவின் கரு - 130:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
என்ன ஒரு பாடல் !! " கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும், இல்லாத உள்ளங்கள் உறவாகும் "
https://youtu.be/gOXox6BwOvw?list=PLpz0b5jwR3B85WMB21PFZ2yRZIo5XRZl-
uvausan
28th June 2015, 10:53 AM
கருவின் கரு - 131
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மடி மீது வளர்த்த பிள்ளை அடித்தாலும் வலிப்பது இல்லை அது போல நானும் உந்தன் சொல்லை தாங்கினேன் ..... எவன் மீதும் வருத்தம் இல்லை அவன் மீதும் வருத்தம் இல்லை ... விதி என்று தேர்த்தினேன்
https://youtu.be/FTRugpHHMRE?list=PLpz0b5jwR3B85WMB21PFZ2yRZIo5XRZl-
Gopal.s
28th June 2015, 06:52 PM
-deleted with warning-
Gopal.s
28th June 2015, 07:58 PM
Meghe Dhaka Tara (1960),Komal Gandhar (1961),Subarna Rekha (1962)-Rithwik Ghatak -Bengali,India .
என்ன ஒரேயடியாக ஈரான்,கொரியா,இத்தாலி என்று உதார் விடுகிறானே ,இந்தியாவில் யாருமே கண்ணில் படவில்லையா என்று சிலர் புலம்பல் கேட்கிறது. இதோ நான் மதிக்கும் யுகபுருஷன்,இயக்குனர் ரித்விக் கட்டாக்.
இவர் இணை கலை படங்களில் சத்யஜித்ரே ,மிருணாள் சென் இவர்களோடு பயணித்தாலும் என் பார்வையில் அவர்களை விட மிக சிறந்தவர். நேர்மையான,பாவனை தவிர்த்த படங்கள் தந்தவர். சிறிய சிறிய விஷயங்களிலும் கூர்மையான,குறிப்பான கவனம் செலுத்தி சமூக நடைமுறையை ,ரியலிச படங்களை, இடது சிந்தனைகளோடு தந்தவர்.
ஐம்பதே வயதில் மரித்தவர்,குடிக்கு அடிமையாகி,மனைவியை பிரிந்து,மனநிலை பாதிக்க பட்டு,மருத்துவமனையில் இரு ஆண்டுகள் கழித்தவர்.
நாடகத்தில் தொடங்கினார். மதுமதி(மறுபிறவி-ஆவி இன்னொரு உடலுக்குள் அடக்கம்)என்ற சிறந்த வெகுஜன படத்திற்கு திரைக் கதை எழுதியவர்.(பிமல்ராய் இயக்கம்)
மேலே சொன்ன முப்படங்களும் ,ரித்விக்கை மிக பாதித்த 1947 இன் பிரிவினை ,அது சார்ந்த சமூக,பொருளாதார,குடும்ப,அரசியல்,தனிமனித பிரச்சினைகள்தான் மூன்று படங்களின் மூலம்.
மேகே தாக்க தாரா , ஒரு பெண்ணின்(நீத்தா) நல்ல இயல்பு ,தியாகம் குடும்பத்தாரால் உபயோக படுத்த பட்டு, காதல்,வேலை,ஆரோக்கியம் இழந்து நிற்கும் போது கசக்கி எரிய பட்டு, சிறிதே ஆதரவு காட்டும் அண்ணனிடம் ,நான் வாழவே விரும்புகிறேன் என கதறி தோள் சாயும் பரிதாபம்.
கோமல் காந்தார் -இது இந்திய படங்களை முன்னெடுத்து செல்லும் முயற்சி. ஐரோப்பிய முறையில் தன் ரசனை,கருத்துக்கள் சார்ந்த தனிப்பட்ட படமாக்க முயற்சி.ஒரு இடது சாரி நாடக குழு (IPTA )அதில் விருகு,அனுசுயா என்ற பாத்திரங்கள். இலட்சியங்கள்,ஊழல்,கலைக்கும் வாழ்க்கைக்கும் ஆன தொடர்பு, கலையின் ஆளுமை,வர்க்க போராட்டம் என்று விவாதம் செய்து நகரும்.
சுபர்ண ரேகா, ஒரு தாழ்த்த பட்ட பையனை(அபி ) எடுத்து வளர்க்கும் பிராமணர்(ஈஸ்வர்) தன்னுடைய தங்கை சீதாவிற்கும் அபிக்கும் ஏற்படும் காதலை ஏற்க முடியாமல், அவர்கள் சேரியில் வறுமையில் உழன்று டிரைவர் ஆகும் அபி, ஒரு விபத்தில் மாட்ட,
வறுமை சீதாவை,ஒரு இரவு விடுதியில் தள்ள,ஹர பிரசாத் என்ற நண்பரின் உந்துதலால்,ஈஸ்வர் விரக்தியால்,தனிமையால் ,கல்கத்தா வந்து குடியில் தோய்ந்து,இரவு விடுதிக்கு வர, அங்கு அவர் தங்கையே அவருக்கு தேவை பூர்த்தி செய்ய வர, அவமானத்தால் உயிர்துறக்கும் தங்கையின் மகனை எடுத்து வளர்க்கிறார் ஈஸ்வர்.
குமார் சஹானி,மணி கவுல்,மீரா நாயர்,கேத்தன் மேத்தா,அடூர் என்று பல இயக்குனர்களின் உந்து சக்தி இந்த மேதை. இவர் படங்களை சுட்டு பல படைப்புகள். (reincarnation of peter proud ,karz ,எனக்குள் ஒருவன்,ஓம் சாந்தி ஓம் ,குல விளக்கு,மறக்க முடியுமா,அவள் ஒரு தொடர்கதை,மகாநதி ) .
நான் மிக மிக மிக மதிக்கும் இந்திய இயக்குனர்களில் முதல்வர்.
rajeshkrv
28th June 2015, 08:52 PM
கோபால் ஜி,
நீங்கள் ஏன் எல்லோரையும் எதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறீர். ஏதாவது தமிழ் சீரியல் பாதிப்பா.
உங்கள் தொடர் பிடித்தவர்கள் படிக்கிறார்கள், அவர்கள் கருத்துக்களை எழுதுகிறார்கள்
அவ்வளவு தான் அதற்காக இரண்டு கால் மிருகம் என்றெல்லாம் சொல்லுவது அ நாகரீகம். அப்படி சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது
மற்றவர்களைப்போல் நீங்களும் இந்த ஹப்பில் ஒரு அங்கம் அவ்வளவே.
நீங்கள் கொஞ்சம் ஜாஸ்தியாகவே எல்லோரையும் வசை பாடுவது அழகல்ல.
எல்லோரும் எல்லா நேரத்திலும் பொறுமை காக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை
பதிவிடுது நம் வேலை. யாரும் பார்க்கவில்லை லைக் செய்யவில்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
rajeshkrv
28th June 2015, 09:24 PM
ராஜேஷ்,
உன் உளறல் அத்து மீறுகிறது. நீயும் ஹப்பர், நானும் ஹப்பர் என்று சொல்வது,சுசிலாவும் பின்னணி பாடகி,மாலதியும் பின்னணி பாடகி என்று சொல்வது போல. எங்கே நிற்க வேண்டுமோ ,அங்கே நில்.உன் ஒன்றைரையணா கன்னட பாடல்களுடன் நிறுத்தி கொள்.
அறிவை வளர்த்து கொள் என்றால் ,ஒப்பு கொள்ளாமல்,பிதற்றாதே. உனக்கு இசையறிவும் இல்லை.எழுதும் திறமையும் இல்லை. அகந்தை இல்லை என்ற பிளஸ் பாயிண்ட் டும் அடி வாங்குகிறது.
எனக்கு லைக் தான் வேண்டுமென்றால்,எப்படி வாங்குவதென்று தெரியும்.
எல்லோருக்கும் ரசனை வளர்க்கும் முயற்சியில் இறங்க மாட்டேன். ஒரு curiosity கூட இல்லாதவன் செத்த பிணத்திற்கு சமம்.
உளறல் என்ற வார்த்தையெல்லாம் பேசுவது. எல்லோரையும் ஏக வசனத்தில் அழைப்பது இதெல்லாம் உங்கள் வயசிற்கு அழகு
எனக்கு எது இல்லை எது இருக்கிறது என்பது எனக்கு தெரியும். என்றுமே யார் மனதையும் நோகும்படி ஒரு பதிவிட்டது இல்லை
நீங்கள் என்னமோ கடவுள் போலவும் உமக்குத்தான் ரசனை உள்ளது போல் பிதற்றுவது அழகல்ல.
என் ஒன்றையணா கன்னட பாடல்களுடன் நிறுத்திக்கொள் என்று சொல்ல நீர் யாரய்யா...
உமக்குத்தெரிந்ததை நீர் இங்கே கொட்டுகிறீர் அதேபோல் நாங்கள் செய்கிறோம்.
ஹப் நாகரீகம் கூட இல்லாமல் சும்மா எப்போ பார்த்தாலும் மிருகம் அது இது என்று. நீங்கள் மிகச்சிறந்த ரசனையாளனாகவே இருங்கள்
எப்படி பேசவேண்டும் என்ற நாகரீகம் இல்லை என்றால் எந்த வகை ரசனை இருந்தும் ஒரு மன்னுக்கும் லாயக்கில்லை.
rajeshkrv
28th June 2015, 09:34 PM
அதுமட்டுமல்ல இது பொதுவான ஹப். இதில் நீர் என்னமோ எல்லாம் தெரிந்தவர் போலவும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுமே தெரியாத முட்டள்கள் போலவும் பேசுவது எவ்வளவு மட்டமான செயல்.
உங்களை எல்லோரும் இப்படி பேச வேண்டாம் என்று சொல்லிக்கொண்டுதானே வந்திருக்கிறார்கள். யார் சொல்லியும் நீங்கள் மாறவே மாட்டேன் என்று சொன்னால் ..............
ஜி என்று உங்களை அழைக்க மனமில்லை கோபால்.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.