View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4
Pages :
1
2
[
3]
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
vasudevan31355
1st June 2015, 09:24 PM
நானும் 'கலை' 'கலை'ன்னு பினாத்த ஆரம்பிச்சுட்டேன்.:) கடவுளே! இது எங்க போய் முடிய போவுதோ!:)
uvausan
1st June 2015, 09:40 PM
கருவின் கரு - பதிவு 30:-D:smile2:
ஒரு தாயின் தியாகத்தையும் அன்பையும் 5 பருவங்களாக விவரிக்கலாம் - தத்ரீ (Dhatree) - அதாவது குழந்தையை சுமப்பவள் - இந்த நிலையில் அவள் செய்யும் தியாகங்களுக்கு அளவே இல்லை - ஒரு பெண் தாய்மை என்ற நிலையை அடையும் போதுதான் அவளின் உள்ளே ஒளிந்திருக்கும் கருணை ஒரு கருவாக உருவாகிறது .
இரண்டாவது இடம் ஜனணி (Janani) - குழந்தையை ஈன்றுபவள் - இங்குதான் அவளின் சுயநலம் , தனக்கு என்று வாழ்தல் என்னும் குணங்கள் கொல்லப்படுக்கின்றன - தாய்மை கருவாக வெளி வருகிறது ( A child gives birth to a mother )
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் .
அடுத்தது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end ) - பல வருடங்கள் தன் குழந்தையை சுமக்குகின்றாள் - இளமை உதிர்ந்த இலைகளாக கீழே விழ , முதுமையின் கொடுமையிலும் அவனுக்காகவே வாழ்கிறாள் - அவள் தவம் செய்யும் இடத்திற்கு , யாரோ " முதியோர் இல்லம் " என்ற தவறான பெயரை கொடுத்துள்ளனர் - மேற்கொண்ட வரிசையில் சில பாடல்களை ரசிப்போமா ?
பருவம் 1- தத்ரீ
https://youtu.be/3LwFGJSX1h8
https://youtu.be/gCx-8SwvAe8
https://youtu.be/YS14kSchpog
chinnakkannan
1st June 2015, 10:30 PM
ஆஹா.. மாஞ்சு மாஞ்சு கண்ணா செலக்ட் பண்ணின அவனோட கவிதைகள்ளயும் (?!) பாட்டுல்லயும் மச்சினி தான் பிடிச்சதாங்க்காட்டியும்..
நான் கொஞ்சம் சின்ஸியர் சிகாமணியாக்கும்.. ஹோம் ஒர்க்னு வந்துட்டா ஆரம்பத்துலருந்து தான் செய்வேன்.. ராஜேஷோட ரேர் சாங்க்ஸ் கேக்கணும்.. நான் போட்ட சாங்க்ஸையே கேக்கணும்! பட் மச்சினி கூப்பிடறாளே..!
//I object your honour. There is a song from the popular Vijay film "Poove Unakkaaga"//
//மண் வாசனை.. இதனுடைய மணமே தனி. மழை பொழிந்து சில நேரம் கழித்து அடிக்கும் போது நாசியெங்கும் இதமான மணம் பரவும்.. OF COURSE, it should be an undiluted village..
ஆனால் இங்கே பாருங்கள்.. மழை வந்தால் மண் மணக்காதாம்.. மச்சினச்சி வந்தால் தான் மணக்குமாம்.. //
கல் நாயக், ராகவேந்திரா சார்.. நன்ற்ற்றி..மொதல்ல இதைத் தான் கேட்டேன்.. பாட்டு நல்லா இருந்தது..முரளி விஜி.. மேலேயும் இதை ஆடிக்கிட்டிருப்பாங்களோ.. நாகேஷ் டான்ஸ் அஸ்யூஸ்வல்.. நம்பியாருக்குத்தான் டான்ஸ் வராது ( இதுக்கு யாராவது பாட் போட மாட்டாங்களா என்ன)
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ணக்கிளி பறக்குது
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒண்ணு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசலெங்கும் கோலம் போட
நல்ல பாடல். கொடுத்தமைக்கு நன்றி.. :)
*
ஆஹா வாசு சார்.. நீரல்லவோ கலா ரசிகர் .. இப்படி அனுபவிச்சு எழுதப்பட்ட வரிகளை
அனுபவிச்சு எழுத உங்களால மட்டுமே முடியும். :)
(இன்னும் பாட்டு கேக்க ஆரம்பிக்கலை)(ஆரம்ப வரிகளைச் சொன்னேன்..
மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
ஜும்பாயே...ஆகும்பையே
அட மாமனுக்குத் தெரியுமா என் மனசு கெட்டாச்சு
ஜும்பாயே....ஆகும்பையே...
அடி மோகினியே ராகினியே இப்படி வாடி
உன் முன்னழகும் பின்னழகும் எத்தனை கோடி
அது என்ன விலை நான் என்ன விலை
நான் மோகினி இரவினில் முக்கனி கனி"
ஐ திங்க் இந்தப் பாட்டை இரண்டு கவிஞர்கள் எழுதியிருப்பாங்கன்ணு நினைக்கறேன்.. இந்த ஜூம்பாயே ஆகும்பையே மட்டும் ஒரு கவிஞர் எழுதியிருப்பார்!
*
அல்லிப் பூவின் அழகே அழகு தனி அழகு
அள்ளிக் கொண்டு மதனா பழகு நீ பழகு
அம்மான் கைகள் தொடவும் பூ மலர மலர
பெண்மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற (சே ரவியும் கல் நாயக்கும் மிஸ் பண்ணிட்டாங்களே!) :)
படபடவென இவள்மனம் துடிக்குது அட இளமைக்கு பிடிக்கலையா/இழுக்கில்லையா/விருந்தில்லையா
இரு கனிகளும் கிளையின்றித் துடிக்குது
இந்த அணிலுக்கு மனமில்லையா
இரு இதழுக்கும் இதயத்துக்கும் அறிந்தவன் இவனில்லையா
இடை அழைக்குது இடைவெளி தடுக்குது
அடி மன்மதன் அம்புக்கு மனிதரில் இடமில்லையா..
நீ பகலவன்/பகலுக்கு பத்தினியா…
காட்டுக்குள்ளே பாடும் என் பாடல் புதுசு
காதல் முத்தம் போடு அது தானே பரிசு ( நல்லாக் கேக்கறான்யா):)
இன்பம் தேடித் தானே உருகாதோ மனசு
என் பெண்மை கொண்ட ஆசை என்னாளும் இளசு
இருவிழிகளும் ஒருமுறை துடிக்கையில் பல கனவுகள் மலர்கிறதே
புது விடை சொலும் இள மன சிலம்புகள் தினம் புலம்பிட மழை வருதோ
இவன் தொடுகையில் உயிர்வரை சிலிர்க்குது அட இது ஒரு புதுசுகமோ
தினமொருமுறை உறவுக்கு இவள்மனம்
தவிக்குது கொதிக்குது துடிக்குது
துணை வருமோஓ ஓ சுகமென்று சொல்லியதோஒஒ
(ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு)
சலி சம்புடுன்னா சமக்குல்லோ செல்லி செண்டகொச்சிண்டி
செலி செண்டகொச்சே டடுக்குல்லோ கில்லி கிண்டா கிச்சிண்டி..
இடி சக்கனி சிக்கனி செக்கிலி கில்லி…
( நா இந்த ஆட்டைக்கே வரலை!) :)
*
இரண்டுபாடல்களுக்கும் (தமிழ், தெலுங்கு) மனமார வயிறு குலுங்க சிரிக்க வைத்ததற்கும்.,
வெங்கடேஷ்,ஸ்ரீதேவிக்கு மறுபடி ஆக்ஷன் கட் கொடுத்து ஒவ்வொரு வரியாய்
என்னை நகலெடுக்க வைத்ததற்கும் (அது என்னாங்க கிடுகிடுன்னு ஓடறாங்க பாடறச்சே),
அப்புறம் மஞ்சள் பச்சை டிரஸ்ஸை அடிக்கடி பார்க்க வைத்து
ஸ்ரீதேவி ரைட் ஆங்கிள்ட் ட்ரையாங்கிளாட்டம் கை உயர்த்தி அப்பப்ப பாடுவதை
மறுபடிமறுப்டி பார்க்க வைத்து ( இது தான் ஓய் நிஜம்ம்மான சதி..பரவால்லை ஹி ஹி) :)
இப்போது வீக் எண்ட் வரும்போது இந்தப் படத்தையும் பார்க்கவைப்பதற்கும் மிக்க்க நன்றி வாசுசார்..
*
மனைவியின் தங்கை வந்தாள்
…மாசிலா நிலவாய் என்முன்
சுனையென இளமை பொங்க
..சுகந்தநீ ராடல் செய்தே
இணைந்தநல் லிதழ்பி ரித்தே
…இனிமையாய்க் கண்ணைக் கொட்டி
கணையினை விட்ட அம்பாய்
..கனித்தமிழ் பேச லுற்றாள்..
*
அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்! :)
*
அப்புறம் வாரேன்..
rajraj
1st June 2015, 10:58 PM
(அடுத்த சதித் திட்டத்திற்கு உங்க எல்லோரோட உதவியும் தேவை):)
sadhi thittam? I thought thiis was a friendly hub ! :lol:
chinnakkannan
1st June 2015, 11:26 PM
//பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்.
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .//
ரவி சூப்பர்.. நெகிழ வைக்கும் கவிதை..ச்சும்மா பூந்து விளையாடறீங்க..
*
chinnakkannan
1st June 2015, 11:49 PM
என்னமோ போங்க 16
**
ஓரவிழிப் பார்வையிலே உள்ளமெலாம் தந்தவளை
…ஊடிநின்று கேள்வியினைக் கேட்கின்றான் வாலிபனும்
பாரமென இளமனதை வாட்டுகின்ற வேட்கையிலே
..பாவையவள் நூலிடையை பற்றித்தான் கேட்கின்றான்
ஆரமென நாணத்தில் அன்னமது நடைமறந்து
..ஆணழகன் கேள்விக்குப் பதில்சொல்லும் நாடகந்தான்
வாரம்போய் வருஷம்போய்ப் பலவிதமாய் ஆனாலும்
..வரமெனவே தொடர்ந்துவிடும் காதல்தான் தெரியாதா..
தெரியலையா..என்னமோ போங்க..
*
பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனா..
https://youtu.be/vTEwKW26kI0
டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி..என்னவாக்கும் படம்..
*
chinnakkannan
2nd June 2015, 12:03 AM
என்னமோ போங்க - 17
*
முன்பு எழுதியது நினைவில் ( போன போஸ்ட் கவிதை புச்சு)
இயல்புதனை மறந்த காலத்தை விட
இருந்த காலம் எப்பொழுது...
ரகசியமாய்ப்
பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
மயிலிறகை
புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
கண்ணை இறுக்க மூடி
தூக்கம் வரும் வரை
இரவெல்லாம் சாமியை வணங்கி
காலையில் பார்த்தால்
வளராமல் போக
கண்ணீல் குளம் கட்டி அழுத போது..
ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
ஏன் போட்ட
எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
ஏண்டி நா போடவேஇல்லையே
எனப் பதறித்
தண்ணீர் தந்த அம்மாவிடம்
கண் சிமிட்டிச் சிரித்த போது...
பருவ நிலைக்கேற்ப
மாறுதலடைந்ததால்
கண்களில் கொஞ்சம் கனவு,
கொஞ்சம் பூரிப்பு
கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
ஏற்பட்ட பெருமிதம்...
கண்ணாடி காட்டும் முக அழகில்
ஏற்படும் மெலிதான கர்வம்...
எதற்கும் குறைவில்லை..
இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
ரொம்ப பயம்மா இருக்கு
அம்மா சொல்ல
அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
வேலை கிடைத்தாலும் சரிதான்..
இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
வயதை மறந்து ஓடிச் சென்று
அப்பாவை கட்டிக் கொண்டு
தாங்க்ஸ்பா சொன்ன போது...
இயல்பாகத் தானிருந்தேன்...
கல்லூரியிலும் பின் வேலையிலும்
எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..
பின்..எப்படி..
கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..
பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
இந்தா பையன் ஃபோட்டோ..
பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..
அப்பா காட்டிய புகைப்படத்தில்
உன்னைப்பார்த்ததில்...
கொஞ்சம் முகம் மலர ...
நாணமும் உடன் வர
உள்ளே ஓடி
வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
இன்னொன்றும் புரிந்த்து..
அது நிரந்தரம் என.......
***..
கரெக்ட் தானே பொண்ணுங்கள்ளாம் ஸ்விட்ச் போட்டா மாதிரி எப்படி மாறறாங்க.. என்னமோ போங்க
ம்ம் இங்க இந்தப் பொண்ணு என்னவாக்கும் பாடுது
*
உயிர் நீ உனக்கொரு உடல் நான்.
உடல் தொட்டால் இன்பக் கடல் நான்
வளைந்தால் கொடி போல் வளைவேன் நான் (கொஞ்சம் கஷ்டம் தான்)
விழுந்தால் மடிமேல் விழுவேன் நான்..
பிறந்தது பிறந்தாள் உனக்கெனப் பிறந்தாள்
வளர்ந்தாள் காதல் அமுதம்
கனவிலும் தொடர்ந்தே நிழலென நடந்தே
வருவாள் வாழ்வு முழுதும்..
*
https://youtu.be/_M-oUzzMORs
chinnakkannan
2nd June 2015, 12:19 AM
என்னமோ போங்க - 18
*
கல்யாணம்னாலே எல்லாருக்கும் ஒருவித மயக்கம் நடுக்கம் - ஆணாகட்டும் பெண்ணாகட்டும் உள்ளூர இருக்கத் தான் செய்யும்..
ஆனா குஷியா வெளிக்காட்டிக்கறதுங்கறது கொஞ்ச பேர் தான்.. அதில் ஆண்களோட பெர்சண்டேஜ் ஜாஸ்தி தான்..
பெண்கள் ரேர் தான்..
இங்கபாருங்க இந்தப் பொண்ணு..படத்தோட டைட்டில் மலை நாட்டு மங்கையாம்.. ஆனா படிச்ச பொண்ணாட்டமா கல்யாணத்தைப் பத்தி எப்படிக் கனவு
காணுது பாருங்க..தப்பில்லைங்கறீங்களா.. நானும் என்ன தப்புன்னா சொன்னேன்.. என்னமோ போங்க
*
https://youtu.be/qhLwwr_ldBQ
chinnakkannan
2nd June 2015, 12:21 AM
கருவின் கரு - பதிவு 30// ஒம்ம கிட்ட இருந்து நான் கற்றுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கே.. நீரும் என் குருக்களில் ஒருவராகி விட்டீர்கள் ரவி.. நன்றி..(கடைசிப்பருவத்திற்கு எப்படி முதியோர் இல்லம் வரும்..ஸ்லோகத்தில..அந்தக்காலத்திலயும் அப்படி இருக்கா என்ன)
RAGHAVENDRA
2nd June 2015, 06:57 AM
அபூர்வ கானங்கள்
https://www.youtube.com/watch?v=RW6BUF7kOPA
Piano ... என்னென்ன மாயமெல்லாம் செய்கிறார் மன்னர். அதுவும் துவண்டு கிடக்கும் மனதைத் தேறுதல் செய்து தைரியம் தரும் பாடலுக்கு பியானோ என்னவாய் இவரிடம் ஏவல் செய்கிறது. மனிதன் என்பவன் பாடலுக்கு சற்றும் குறையாத சிறப்பு வாய்ந்த இப்பாடலைத் தரவேற்றிய நண்பருக்கு நன்றி. பால்குடம் படத்திலிருந்து துணிந்து நில் பாடல் பாடகர் திலகத்தின் குரலில்..
பியானோ மட்டுமா.. ட்ராம்போன், அக்கார்டின், விசில், புல்லாங்குழல், வயலின் எல்லாமே அமர்க்களமான இசை ராஜ்ஜியம்.. கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம்..
பாடல் வரிகள்.. தனியே ஒரு திரியே ஆரம்பிக்கலாம். அவ்வளவு உண்மையான வரிகள்..
RAGHAVENDRA
2nd June 2015, 07:09 AM
அபூர்வ கானங்கள்
https://www.youtube.com/watch?v=X-DmutNZq7s
ஆர். பார்த்தசாரதி இசையில் பால் மனம் படத்திலிருந்து பாடகர் திலகம் குரலில் இனிமையான பாடல்
RAGHAVENDRA
2nd June 2015, 07:12 AM
அபூர்வ கானங்கள்
நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி..
[அங்கே யாருப்பா நீலமேகம்ங்கிறது. போய் கொஞ்சம் கண்ணாடி கொண்டு வாப்பா]
https://www.youtube.com/watch?v=7EO_17Y3Dpc
RAGHAVENDRA
2nd June 2015, 07:15 AM
அபூர்வ கானங்கள்
அபூர்வ கானங்கள் என்றாலே உண்மையிலேயே அபூர்வ கானங்கள்.. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இதைக் காணும் வாய்ப்பு...
துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு.. ரவியின் உற்சாகத் துள்ளல் பாடல்..
[யாரங்கே.. கொஞ்சம் முதுகைக் காட்டி நில்லப்பா.. சொறிவதற்கு ஒருவர் ஓடி வருகிறார்...]
https://www.youtube.com/watch?v=txxK71TQkH0
அவன் ஒரு பைத்தியக்காரன்.. பாட்டு வரிங்க...
https://www.youtube.com/watch?v=suu9LVvP6gQ
uvausan
2nd June 2015, 09:02 AM
Good Morning
http://i870.photobucket.com/albums/ab265/spinach-gunk/horsemamaandbabylove.jpg (http://media.photobucket.com/user/spinach-gunk/media/horsemamaandbabylove.jpg.html)
uvausan
2nd June 2015, 09:12 AM
கருவின் கரு - பதிவு 31
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன --- தாயின் முகத்தை பாருங்கள் - அதில் தான் என்ன பெருமை !!- சுமையாக கருதப்படாத ஒரு கரு அவளை சுமையாக நினைப்பதேன் ? பாரமாக நினைக்காத ஒரு கருவூலம் , காற்றே வராத சிறையில் அடைபடுவதேன் ? - தியாகத்தின் உருவம் - தீயில் கருகுவதேன் ? - பொன்னில் பதிக்கப்படவேண்டிய வைரங்கள் , தரையில் சிதருவதேன் ? ஒரு தென்றலை சுனாமி ஏன் விழுங்க வேண்டும் ?????? கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் !!!!!
https://youtu.be/r8bMJxS07sY?list=PLnu7a4lRkGRv7QfCHOr3LsJVzhSTBiyN 1
https://youtu.be/qqKiKcMhyNQ?list=PLnu7a4lRkGRv7QfCHOr3LsJVzhSTBiyN 1
uvausan
2nd June 2015, 09:13 AM
கருவின் கரு - பதிவு 32
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ---
https://youtu.be/tS00FrWVe1I?list=PLnu7a4lRkGRv7QfCHOr3LsJVzhSTBiyN 1
https://youtu.be/1E-jz0FlYeU?list=PLnu7a4lRkGRv7QfCHOr3LsJVzhSTBiyN1
uvausan
2nd June 2015, 09:14 AM
கருவின் கரு - பதிவு 33
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ---
https://youtu.be/K4IvX4d8F44?list=PLnu7a4lRkGRv7QfCHOr3LsJVzhSTBiyN 1
https://youtu.be/LQKSy1IjGqY?list=PLnu7a4lRkGRv7QfCHOr3LsJVzhSTBiyN 1
uvausan
2nd June 2015, 09:15 AM
கருவின் கரு - பதிவு 34
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ---
https://youtu.be/ZH3WqUeW8xE?list=PLnu7a4lRkGRv7QfCHOr3LsJVzhSTBiyN 1
https://youtu.be/WQiG5qhia90?list=PLnu7a4lRkGRv7QfCHOr3LsJVzhSTBiyN 1
uvausan
2nd June 2015, 09:16 AM
கருவின் கரு - பதிவு 35
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ---
https://youtu.be/sKbXOvYiwl8?list=PLAp0uCQgJMAPEY_tCeM_LMkqsGbkDlZU f
https://youtu.be/jxFwHhOK2aA
chinnakkannan
2nd June 2015, 10:00 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
இன்னிக்கு நிறைய ஹோம் வொர்க் இருக்கும் போல இருக்கே :) ஈவ்னிங்க் தான் பாக்கணும் கேக்கணும் எழுதணும்..
ரவி..என்ன பாடல்கள் மட்டும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. எழுதுங்கள் ஐயா..
rajeshkrv
2nd June 2015, 11:01 AM
காலை வணக்கம்
uvausan
2nd June 2015, 11:17 AM
Quote
"தாயின் முகத்தை பாருங்கள் - அதில் தான் என்ன பெருமை !!- சுமையாக கருதப்படாத ஒரு கரு அவளை சுமையாக நினைப்பதேன் ? பாரமாக நினைக்காத ஒரு கருவூலம் , காற்றே வராத சிறையில் அடைபடுவதேன் ? - தியாகத்தின் உருவம் - தீயில் கருகுவதேன் ? - பொன்னில் பதிக்கப்படவேண்டிய வைரங்கள் , தரையில் சிதருவதேன் ? ஒரு தென்றலை சுனாமி ஏன் விழுங்க வேண்டும் ?????? கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் !!!!!"
Unquote
CK இவ்வளவு கேள்விகள் கேட்டுள்ளேன் - ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை - இன்னும் என்ன எழுதுவது ??? - எழுதும் திறமை இல்லாததால் தானே வீடியோ போட்டு மழுப்ப வேண்டியிருக்கின்றது ??
சுமக்கும் பாடல்களின் இன்பத்தில் உண்மையில் எழுத்துக்கள் வர மறுக்கின்றது .........
vasudevan31355
2nd June 2015, 11:21 AM
//மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
ஜும்பாயே...ஆகும்பையே//
சின்னா,
நீரல்லவோ மாணவர். வாத்தியார் சொல் தட்டாத மாணவர்.:)
சரி! ஹோம் வொர்க் முடிச்சாச்சு. மார்க் என்னன்னு பார்த்துடலாமா?
அதுக்கு முன்னாடி நண்பர் சின்னாவுக்கு.
உங்க பதிவைப் படிச்சு சிரிக்கிறேன் சிரிக்கிறேன் காலையிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். வயிறு புண்ணா போச்சு சின்னா.
நீங்க போட்ட பதிவிலேயே விழுந்து விழுந்து நான் சிரிச்ச பதிவு.
பாவம் புள்ள. ரொம்பத்தான் வாட்டி எடுத்துபுட்டேன். புள்ளையும் ஒழுங்கா சொன்னத செஞ்சுடுத்து.
சரி பின்னூட்டம் இடுறேன். அப்புறம் முதுகு சொறியறேன்.:)
//ஆஹா வாசு சார்.. நீரல்லவோ கலா ரசிகர் .. இப்படி அனுபவிச்சு எழுதப்பட்ட வரிகளை
அனுபவிச்சு எழுத உங்களால மட்டுமே முடியும்//
நன்றி!
//ஐ திங்க் இந்தப் பாட்டை இரண்டு கவிஞர்கள் எழுதியிருப்பாங்கன்ணு நினைக்கறேன்.. இந்த ஜூம்பாயே ஆகும்பையே மட்டும் ஒரு கவிஞர் எழுதியிருப்பார்!//
சின்னா! உமக்கும் ரெண்டு மூளை.:)
//காதல் முத்தம் போடு அது தானே பரிசு ( நல்லாக் கேக்கறான்யா)//
யப்பா! விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன் சின்னா. சூப்பர். நல்லாக் கேக்குறான் நாயகன் நான் சொன்னா சின்னா கேக்குற மாதிரியே இல்ல.:)
//(ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு)//
'வெண்ணிற ஆடை' மூர்த்தியை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டீரே அய்யா!:) யப்பா! இன்னும் வயிறு வலிக்குதுடா சாமி.
( நா இந்த ஆட்டைக்கே வரலை!)
சின்னா! இது டாப்போ டாப். ரோட்டில் போகும் போது கூட நெனச்சாலே சிரிப்பு வருது. நீங்க பாட்ட எழுத பட்ட பாட்ட இத விட சோகமா சொல்லி சிரிக்க வைக்க முடியாது.:)
( இது தான் ஓய் நிஜம்ம்மான சதி..பரவால்லை ஹி ஹி)
குழந்தே சமத்து. புரிஞ்சுன்னுட்டுது. ராஜ்ராஜ் சார் வேற அங்க முழிச்சுகிட்டு இருக்கார் ஒண்ணுமே புரியாமலே.:)
//அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்!//
ஓய்! சீட் நுனிக்கு வரவழைத்து விட்டு இப்படி சீட்டிங் பண்ணிட்டேளே. புடி சாபம் !:)
சரி! மனைவியின் தங்கை மூணாங்கிளாஸ் படிச்சா அந்த மனைவியின் தந்தை மகா விஷமக்காரர் போல இருக்கே!:) சும்மா கவிதைக்கு தானா? இல்லே நெசமாவேதானா?:) பாவம் மாமியார். குலமா குணமா?
rajeshkrv
2nd June 2015, 11:29 AM
இன்று பக்தி என்று சொல் கூட இல்லாத படங்கள் வரும் நிலையில்
பக்தி படங்களும் பக்தி ரசம் சொட்ட பாடல்களும் நிறைய வரத்தான் செய்தது அந்த காலத்தில்
ஏதோ பெயருக்கு பக்தி படம் என்றில்லாமல் மிகவும் சிரத்தையாக படமெடுத்து நம்மை கட்டி போட்டவர்களும் உண்டு
குறிப்பாக ஏ.பி. நாகராஜன் போன்றவர்கள் ..
அப்படிப்பட்ட பாடல்கள் கொஞ்சம் அலசலாம்
முதல் பாடல்
சொல்ல சொல்ல இனிக்குதடா
பக்தி பாடல்களை மகாதேவன் மாமா போல் எவரும் செய்யவில்லை செய்யவும் முடியாது
இது போல் பாட எந்த பெண் பாடகியாலும் பாட முடியாது அப்படிப்பட்ட பெண் பாடகி பிறக்கவும் இல்லை
சிலர் வந்து அப்படியெல்லாம் இல்லை பாட சிலர் இருக்கிறார்கள் என்பார்கள் . சொல்லலாம் சொல்லட்டும்
அது அவர்கள் இஷ்டம் .. எனக்கு என்ன நஷ்டம்
சரி விஷ்யத்து வருவோம்..
அப்படிப்பட்ட பாடல்
கவியரசரின் அழகு தமிழ், இசையரசியின் குரல், சாவித்திரியின் நடிப்பு என அமர்க்களமான பாடல்
இந்திய அரசு கண்களை மூடிக்கொண்டு தான் இருந்திருக்கும் இது போன்ற பாடலுக்கு தேசிய விருது தராமல் விட்டது,
அந்த மட்டிற்கும் கே.வி.எம்க்கு கொடுத்தார்களே என சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்
https://www.youtube.com/watch?v=ZCEVEOB7hao
vasudevan31355
2nd June 2015, 12:09 PM
சரி இப்போ உங்க பேப்பர திருத்தப் போறேன் சின்னா!
//அம்மான் கைகள் தொடவும் பூ மலர மலர//
பொன் மலரே மலர
//பெண்மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற//
உன் மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற
//படபடவென இவள்மனம் துடிக்குது அட இளமைக்கு பிடிக்கலையா/இழுக்கில்லையா/விருந்தில்லையா//
மூன்றுமில்ல.:)
இளமைக்கு விடை சொல்லய்யா
//இரு கனிகளும் கிளையின்றித் துடிக்குது
இந்த அணிலுக்கு மனமில்லையா//
இரு கனிகளும் கிளை விட்டு குதிக்குது:)
//இரு இதழுக்கும் இதயத்துக்கும் அறிந்தவன் இவனில்லையா//
இரு இதழுக்கும் இருவகை ருசியென
தினம் அறிந்தவன் இவனில்லையா
//அடி மன்மதன் அம்புக்கு மனிதரில் இடமில்லையா//
அடி மன்மதன் அம்புக்கு மடிதனில் இடமில்லையா
//நீ பகலவன்/பகலுக்கு பத்தினியா…//
பகலுக்கு:)
இருவிழிகளும் ஒருமுறை துடிக்கையில் பல கனவுகள் மலர்கிறதே
சில கனவுகள் மலர்கிறதோ
//தினமொருமுறை உறவுக்கு இவள்மனம்
தவிக்குது கொதிக்குது துடிக்குது//
மிக தவிக்குது
//சுகமென்று சொல்லியதோஒஒ//
சுக அலைகளில் துள்ளியதோ
சலி சம்புடுன்னா சமக்குல்லோ செல்லி செண்டகொச்சிண்டி
செலி செண்டகொச்சே டடுக்குல்லோ கில்லி கிண்டா கிச்சிண்டி..
இடி சக்கனி சிக்கனி செக்கிலி கில்லி…
( நா இந்த ஆட்டைக்கே வரலை!)
நானும்தான்.:)
சின்னா!
பேப்பர் திருத்தியாச்சு. மார்க் பத்துக்கு ஏழு. கண் விழிச்சி வொர்க் பண்ணியதுக்கு பிளஸ் ஒரு மார்க். ஆனா வாத்தியார்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம (ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு) இப்படி எழுதினதுக்கு 2 மார்க் மைனஸ்.:) அதனால் பத்துக்கு ஆறு.
எபோவ் ஆவரேஜ். கீப் இட் அப் கண்ணா.:) இன்னும் நல்ல்லா முயற்சி செய்யணும்:)
vasudevan31355
2nd June 2015, 12:21 PM
ஸாரி ரவி! பேப்பர் திருத்த லேட் ஆயிடுச்சு.
அப்புறம்...
சுமக்கும் பாடல்கள் சுகம் தருகின்றன. ஏன்? ஏன்? ஏன்?
ஏன் இத்தனை கேள்வி? விடை சொல்ல முடியாத கேள்வி. எதிர்க் கேள்வி ஒன்று.
நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா? அல்லது சாப்பிடுவதற்காக வாழ்கிறோமா?:)
இதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
ஆமாம்! இன்னும் எஸ்.எம்.எஸ்ஸில் நூறு ரூபாய் வந்து சேரலியே?:) காலையிலிருந்து வெயிட்டிங். பந்தயமா கட்றீங்க பந்தயம்...:)
ரவி!
அக்கையாக்கு சீமந்தம் அமர்க்களம். எனக்குப் பிடித்த கிருஷ்ணகுமாரி. நன்றி. பிற கரு பாடல்களுக்கும் சேர்த்துதான்.
vasudevan31355
2nd June 2015, 12:21 PM
//கவியரசரின் அழகு தமிழ், இசையரசியின் குரல், சாவித்திரியின் நடிப்பு என அமர்க்களமான பாடல்
இந்திய அரசு கண்களை மூடிக்கொண்டு தான் இருந்திருக்கும் இது போன்ற பாடலுக்கு தேசிய விருது தராமல் விட்டது,
அந்த மட்டிற்கும் கே.வி.எம்க்கு கொடுத்தார்களே என சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்//
mmm....
vasudevan31355
2nd June 2015, 12:23 PM
கல்நாயக் வாங்கோ. ஜாலியா இருக்கு. நீங்களும் கலந்துக்கோங்க.
vasudevan31355
2nd June 2015, 12:25 PM
ராகவேந்திரன் சார்,
நன்றி!
அவன் ஒரு பைத்தியக்காரன் டைமிங் பாடலா? அபூர்வ பாடல்களுக்கு நன்றி! ஆமாம். துள்ளி ஓடும் புள்ளி மானை எப்படி பிடித்தீர்கள்? சூப்பர்.
chinnakkannan
2nd June 2015, 12:37 PM
வாசுங்க்ணா..அப்புறம் வாரேன்..இப்ப கொஞ்சம் க்விக் ரிப்ளை
//சரி! மனைவியின் தங்கை மூணாங்கிளாஸ் படிச்சா அந்த மனைவியின் தந்தை மகா விஷமக்காரர் போல இருக்கே! சும்மா கவிதைக்கு தானா? இல்லே நெசமாவேதானா// உடன் பிறந்த தங்கை கிடையாது..சித்தி பொண் உண்டு.. பட் இது சும்மா..கறபனையே
ஆறு மார்க் தானா.. இந்த சுக அலைகளில் துள்ளியதோ, இருவகை ருசி (அதெப்படிங்காணும்!) இதக் கண்டு பிடிச்சதுக்கே உமக்கு ஒரு பெரிய ட்ரீட் தரணும்.. உன் மான் பெண் மான் ரெண்டும் கிட்டத்த்ட்ட ஒண்ணு தானே.. கிளை விட்டு ஓகே..பட் பகலுக்கு பத்தினியா கேப் ஃபில்லர்னு நினைக்கறேன்..அந்த சிலம்பு புலம்பி மழை வருதோ அது ஓகேயா ரொம்ப சிரமப் பட்டேன் அதுக்கு..ஆல்ஸோ இந்த இளமைக்கு விடை சொல்லய்யா.. எப்படி க் கண்டு பிடிச்சீங்க.. கரெக்டாவும் பொருந்துது
அப்புறம் மைனஸ் மார்க்குக்கு ரீவேல்யுவேஷன் அனுப்பலாமா..
இப்படித் திறமையா எழுதின கவிஞர் வைரமுத்துவைப் பாராட்டியே தீரணும் இல்லியோ..
மிக்க நன்றி..மறுபடி அப்புறம் வாரேன்..
uvausan
2nd June 2015, 02:54 PM
வாசு - நான் கடலூருக்கு என் அன்னையுடன் சென்று கொண்டிருந்தேன் - நெய்வேலியைத்தாண்டிக்கொண்டிருந்தேன் . அம்மாவிடம் ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியை எழுப்பினேன் ( என் எல்லா கேள்விகளுமே சிறுபிள்ளைத்தனம் கொண்டதுதான் - என்ன செய்வது பால்மனம் இன்னும் மாறவில்லை ) -- அம்மா " சிவகாசிக்கும் , நெய்வேலிக்கும் என்ன ஒத்துமை ?"
என் அம்மா சிரித்துக்கொண்டே சொன்னாள் - அவள் எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரசி என்பது உங்களுக்கும் புரியும் .
" ஒற்றுமை என்று ஒன்றும் இல்லை , சில வேற்றுமைகள் உண்டு - ஒரு உதாரணம் சொல்கிறேன் --- சிவகாசியில் காசை கரியாக்குகிரார்கள் - நெய்வேலியில் கரியை காசாக்கிரார்கள் . சிவகாசியில் முதுகை சொறிபவர்கள் உண்டு - நெய்வேலியில் முதுகை வருடி தருபவர்கள் அதிகம் - அணிலுக்கு ராமன் வருடியதைப்போல ---அங்கு இருப்பவர்கள் - நெய்யிற்கு எப்படி என்றும் குறையாத மணம் உண்டோ அதைப்போல - அவர்கள் சொல்லுக்கு என்றுமே பெருமை உண்டு - வார்த்தை மாற மாட்டர்கள் - அப்படி மாறினால் அடுத்த வினாடி உயிர் வாழ மாட்டர்கள் ----"
எவ்வளவு உண்மை அவள் வார்த்தைகளில் வாசு !!
uvausan
2nd June 2015, 03:09 PM
Quote :
எதிர்க் கேள்வி ஒன்று.
நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா? அல்லது சாப்பிடுவதற்காக வாழ்கிறோமா?
இதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
ஆமாம்! இன்னும் எஸ்.எம்.எஸ்ஸில் நூறு ரூபாய் வந்து சேரலியே? காலையிலிருந்து வெயிட்டிங். பந்தயமா கட்றீங்க பந்தயம்...
Unquote :
வாழ்வதற்காக சாப்பிடுவதும் இல்லை - சாப்பிடுவதற்க்காகவும் வாழ்வதும் இல்லை - உங்கள் இரண்டு கேள்வியும் தவறு வாசு - பிறர் வாழ்வில் நாம் வாழ்கிறோம் - நாம் மற்றவர்களுக்காக வாழும்போது பிறரின் தவம் பலிக்கின்றது .
நாம் செய்துகொண்ட பந்தயம் - நேற்று நீங்கள் பேப்பர் திருத்தும் வேலையில் இருந்ததால் உங்களுக்கு சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்காது . நான் ஜெய்த்தால் நீங்கள் முன்பு என்னை விலைக்கொடுத்து வாங்கிய அதே தொகையை தர வேண்டும் - நீங்கள் தப்பித்தவறி ஜெயித்து விட்டால் எனக்கு நீங்கள் ஒன்றும் தர வேண்டாம் என்பதே !! நீங்கள் எனக்கு தரும் ஒரு அறிய வாய்ப்பை தவறி விட்டீர்கள் ........
uvausan
2nd June 2015, 03:16 PM
ராஜேஷ் - அருமையான பதிவு - மிகவும் அழகாக , அருமையான பாடலுடன் ஆரம்பித்து உள்ளீர்கள் . இதில் வரும் வரிகள் இன்னும் புதுமையாகவும் , பக்தி மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது - முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் ; அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும் ---- ஆஹா - என்ன வரிகள் - உலகத்திற்கே அவள் தாயானாலும் , தன் குழந்தை என்று வரும் போது சற்றே சுயநலம் வரத்தான் செய்கிறது ----- தொடருங்கள் ---
uvausan
2nd June 2015, 03:20 PM
ராகவேந்திரா சார் உங்கள் அபூர்வ கானங்கள் - மதுர கானங்களை விட ஒரு படி முன்னே போய் விட்டது - எப்படி இவ்வளவு புதையல் உங்களுக்கு மட்டும் ? பொறாமையாக இருக்கின்றது
chinnakkannan
2nd June 2015, 03:55 PM
//சிவகாசியில் காசை கரியாக்குகிரார்கள் - நெய்வேலியில் கரியை காசாக்கிரார்கள் // மதுரையிலும் அப்படி கரியைக் காசாக்கிய நபர் இருந்தார்..என் தந்தையார்.. வைத்திருந்தது ஒரு கரிக் கடை.. நகைக்கடை வீதியில். அவரது நகைக்கடை நண்பர்கள் தீபாவளியின் போது அவரிடம் சொல்லும் கமெண்ட் - நாங்கள்ளாம் வெடி வாங்கி காசை க் கரியாக்கறோம்,.. நீங்க கரியைக் காசாக்கறீங்க..
அதுசரி..ரவி..என்னை மட்டும் கவனிக்கவில்லையே :sad: :)
chinnakkannan
2nd June 2015, 04:24 PM
ஒரே வெய்யில் வெளியில்... ம்ம் என்ன பண்ணலாம் .. மழை பெய்ய வைக்கலாம்!
https://youtu.be/lixQIbX06EE
RAGHAVENDRA
2nd June 2015, 05:13 PM
படத்தின் அபூர்வத் தன்மையைக் கருத்தில் கொண்டு இதுவரை அதிகம் யாரும் பார்த்திராத திரைப்படம் துள்ளி ஓடும் புள்ளி மான்...
நம் மதுரகானத் திரி நண்பர்களுக்காக ..
முழுப்படம்...
தரவேற்றிய ராஜ் வீடியோ விஷனுக்கு நன்றி
https://www.youtube.com/watch?v=Rf0zNSUj8cI
இதில் ஒரு விசேஷம்.. இயக்குநர் எல்லா நடிகர்களையும் இயக்கும் போது நடிகர் திலகத்தை நினைத்து இயக்கியிருப்பார் போல.. ஒருத்தர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் அவருடைய நடிப்பை அப்படியே பின்பற்றியிருப்பார்கள்.
குறிப்பாக க்ளைமாக்ஸில் ரவி, ஆவேசம் வந்திருச்சு என்று சண்டைக்கு தயாராகும் கட்டம். மற்றும் ஒரு முகத்தில் ஏனிந்த ஒன்பது பாவம் பாடல் காட்சியில் நாயகனை அப்படியே நடிகர் திலகத்தைப் போல் நடிக்க வைத்திருப்பார்கள்.
RAGHAVENDRA
2nd June 2015, 05:27 PM
இந்தப் பாட்டுக்காக முதல் நாள் முதல் காட்சியில் ரவியைப் பார்க்க ஓடினோம்... ஆனால்..
என் கேள்விக்கென்ன பதிலாய் ஏமாற்றி விட்டது...
ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்.. இந்த பல்லவியை காதலன் காதலியைக் கேட்பது போய் இயக்குநர் தியேட்டரில் ரசிகர்களைப் பார்த்துக் கேட்கும் படி யாகி விட்டது.
இதற்கு மேலும் இந்த படத்தை ஓட வைக்க ரசிகர்கள் இசைவார்களா என்ன... துள்ளி ஓடும் புள்ளி மானாய் படம் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது...
திரை இசைத் திலகத்தின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸின் இனிய குரலில் அருமையான பாடல்...
துள்ளி ஓடும் புள்ளி மான் படத்திலிருந்து..
இப்பாடலை இதற்கு முன் கேட்டிருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அநேகமாக வாசுவையும் என்னையும் தவிர வேறு யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்..
https://www.youtube.com/watch?v=0JNPs8hgFdU
Russellzlc
2nd June 2015, 05:32 PM
‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’
வாசு சார்,
//நானும் 'கலை' 'கலை'ன்னு பினாத்த ஆரம்பிச்சுட்டேன்.:) கடவுளே! இது எங்க போய் முடிய போவுதோ//
நீங்கள் சிறந்த கலை ரசிகர் என்று எனக்கு தெரியும். ஆனால் கலை மீது (கொலை) வெறி கொண்டவர் இல்லை. அதனால் எல்லாம் நன்றாகவே முடியும். பி கேர் ஃபுல் (எனக்கு சொல்லிக் கொண்டேன்)
ரவி சார்,
உங்களுக்கு கவிதையும் எழுத வருமா? பாராட்டுக்கள். தாய் பற்றி நேற்று நீங்கள் எழுதிய கவிதை அருமை. அதிலும்,
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .
... வரிகள் என்னைக் கண்கலங்க வைத்தன. தாயை இழந்த உங்களின் சோகம் வரிகளில் தெரிகிறது. இயற்கையின் வழியே தாயை காணும் உங்களுக்கு தாயின் ஆசி இயற்கையாகவே உண்டு.
சின்னக்கண்ணன்,
//அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்! //
*
//அப்புறம் வாரேன்..//
..........எங்கே கிளாசுக்கா?
ராகவேந்திரா சார், தங்களின் அபூர்வமான வீடியோ பதிவுகளுக்கு நன்றி.
கிருஷ்ணா சார், கல்நாயக் எங்கே?
..........................................
ஒரு பெரியவர். அவரை ஜகத்குரு என்று அழைப்பார்கள். ஒருமுறை அவர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்றபோது, ஒருவர் அவர் தங்கியிருந்த இடத்தில் அவரை சந்தித்து, ஒரு குறிப்பிட்ட மதத்தின் குருவாக இருக்கும் உங்களை இந்த உலகத்துக்கே குரு என்று சொல்கிறார்களே? அதை எப்படி ஏற்க முடியும்? நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெரியவர், ‘‘அப்படியா? நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் ஜகத்குரு என்று சொல்லும்போதெல்லாம் இந்த ஜகமே எனக்கு குரு என்பதாகத்தான் நினைக்கிறேன்’ என்றார். கேள்வி கேட்டவர் வெட்கி, அந்தப் பெரியவருக்கு வணக்கம் தெரிவித்து போய்விட்டார். அந்தப் பெரியவர்...
சின்னக் கண்ணன், நீங்கள் பக்தி கொண்டிருக்கும் காஞ்சி மகா பெரியவரேதான் அவர். 1966-ம் ஆண்டு ஐ.நா. சபையில் எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடுவதற்காக அவர் கொடுத்த பாடல்தான் உலகையே அன்பால் வென்று எல்லாரும் சுகமாக வாழ வேண்டும் என்பதை விளக்கும் ‘மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி....’
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாடுகளுக்குள்ளே சண்டை ஏது? போர் ஏது? வசுதேவ குடும்பகம் என்பதுபோல உலகமே ஒரு குடும்பமாகிவிடுமே?
அப்படிப்பட்ட நிலை வந்தால்......... இதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனும் ‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்...’ என்கிறார்.
உலகமே ஒன்றானால் தனியுடமை கொடுமை ஏது? அந்த நிலை அடையவேண்டும் என்ற உணர்வு நமக்கு வேண்டும். அந்த உணர்வு வந்தால் அயராமல் உழைப்போம். தனியுடமை பேசும் மனிதரையும் ஒதுக்கிவிடுவோம்.
உணர்வெனும் கனலிடை
அயர்வினை எரிப்போம்
ஒரு பொருள் தனி எனும்
மனிதரைப் பிரிப்போம்
பிரிப்பது என்றால் அவர்களை பிரித்து துரத்துவது என்று அர்த்தமல்ல. அவர்களை பிரித்து இனம் கண்டு பின்னர் திருத்த வேண்டும். சூழ்நிலையால் தவறு செய்யும் மனிதர்களையும் பண்படுத்தி நேர் வழியில் திருத்தும் கதையமைப்பைக் கொண்ட மக்கள் திலகம் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம் பெற்ற புரட்சிக் கவிஞரின் ‘புதியதோர் உலகம் செய்வோம்.’ பாடல் மிகவும் அருமையான சிந்திக்கத் தூண்டும் பாடல்.
ஆஹா... எதையோ சொல்ல வந்து எங்கோ போய்விட்டது. மகா பெரியவரை பற்றி சொன்னேனே. இன்று அவரது பிறந்த நாள். அவரது நினைவோடு புரட்சிக் கவிஞர் பாடலை மக்கள் திலகம் பாடும் காட்சியை ரசிப்போமே.
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
2nd June 2015, 05:53 PM
கலைவேந்தன்,
நான் எங்கும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறேன். வாசு, சி.க., ராஜேஷ், ரவி, ராகவேந்திரா, நீங்கள் எழுதுவதையெல்லாம் படிக்கவே நேரம் போத மாட்டேனென்கிறது. நான் எழுத என் அலுவல் பணி விடமாட்டேன் என்கிறது. அதனால் நீங்கள் கேட்ட (இல்லை இல்லை. சொன்ன) மக்கள் திலகம் பாடல் இதோ (audio only):
https://www.youtube.com/watch?v=RJpSmTTmvFI
மத்தபடி எழுதறப்ப நல்லாத்தான் எழுதறேள். என்னைப் பத்தி மட்டும் தப்பா புரிஞ்சிகறேள். ஏன்?
Russellzlc
2nd June 2015, 05:58 PM
நன்றி கல்நாயக், வீடியோ கிடைக்கலையா?
காலையிலேருந்து திரியில் பார்க்கலையேன்னு கேட்டேன். மற்றபடி நீங்கள் பெரியவர்னு சரியாத்தானே புரிஞ்சுண்டுருக்கேன்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
madhu
2nd June 2015, 06:41 PM
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஒலித்த "புதியதோர் உலகம் செய்வோம்" சந்திரோதயம் படத்தின் டைட்டில் சாங் என்பதால் வீடியோ தனியாக கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.
kalnayak
2nd June 2015, 06:53 PM
நன்றி கல்நாயக், வீடியோ கிடைக்கலையா?
காலையிலேருந்து திரியில் பார்க்கலையேன்னு கேட்டேன். மற்றபடி நீங்கள் பெரியவர்னு சரியாத்தானே புரிஞ்சுண்டுருக்கேன்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
உங்க பெரிய மனசு யாருக்கு வரும் - வயசுல என்னை விட பல மடங்கு அதிகமானவரு நீங்க, உங்களை விட மிகச் சிறியவனை பெரியவர்-னு மரியாதை போட்டு கூப்பிடறதை பார்க்கிறப்போ, நான் மட்டும் இல்லை உலகத்தில பார்க்கிற எவருமே உங்களை விட (அதாவது கலைவேந்தனை விட) பெரியவர் யாரும் இருக்கவே முடியாதுன்னு சூடம் அணைச்சு சத்தியம் பண்ணுவாங்க.
kalnayak
2nd June 2015, 07:06 PM
பூவின் பாடல் 21: "பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ பூமாதுளை"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அது என்னவோ தெரியலைங்க. இந்த பாட்டுன்னா ஒரு விதமா ஈர்க்குதுங்க. ராசா, பாரதிராஜாவோட கூட்டணி போட்ட இரண்டாவது இன்னிங்க்ச்ல என்னா மாதிரி பாட்டு போட்டிருக்கார் பாருங்க. நடிகர்கள பத்தி இன்னா சொல்லலாம். நாயகன், நடிகை ராதாவின் தம்பியாம் பேரு தெரியலைங்க. நாயகி அஷ்வினி (கிழக்கு சீமையிலே படத்துல கூட ஆக்ட் விட்டதுங்க). எஸ். பி. பி.யும் ஜானகி அம்மாவும் பாடியிருக்காங்க. புது நெல்லு புது நாத்து பத்தலைன்னு இந்த பூப்பூத்த சோலை வேற வருதுங்க.
https://www.youtube.com/watch?v=cSVQRrqHD1M
chinnakkannan
2nd June 2015, 08:23 PM
//சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஒலித்த "புதியதோர் உலகம் செய்வோம்" சந்திரோதயம் படத்தின் டைட்டில் சாங் என்பதால் வீடியோ தனியாக கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.//எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவனின் குரலோ :) வாங்க மதுண்ணா.. உடம்பு தேவலாமா..
rajeshkrv
2nd June 2015, 08:28 PM
பூவின் பாடல் 21: "பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ பூமாதுளை"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அது என்னவோ தெரியலைங்க. இந்த பாட்டுன்னா ஒரு விதமா ஈர்க்குதுங்க. ராசா, பாரதிராஜாவோட கூட்டணி போட்ட இரண்டாவது இன்னிங்க்ச்ல என்னா மாதிரி பாட்டு போட்டிருக்கார் பாருங்க. நடிகர்கள பத்தி இன்னா சொல்லலாம். நாயகன், நடிகை ராதாவின் தம்பியாம் பேரு தெரியலைங்க. நாயகி அஷ்வினி (கிழக்கு சீமையிலே படத்துல கூட ஆக்ட் விட்டதுங்க). எஸ். பி. பி.யும் ஜானகி அம்மாவும் பாடியிருக்காங்க. புது நெல்லு புது நாத்து பத்தலைன்னு இந்த பூப்பூத்த சோலை வேற வருதுங்க.
https://www.youtube.com/watch?v=cSVQRrqHD1M
Radha's brother Ramarjun
uvausan
2nd June 2015, 09:01 PM
கலை சார் , எனக்கு நன்றாக கிறுக்க வரும் - இதைப்போய் நீங்கள் கவிதை என்று சொன்னால் - காளமேக புலவர்களின் மனம் வலிக்காதா ?
ஒன்று நிச்சயம் சார் , கம்பர்கள் வாழும் இந்த திரியில் கட்டு தரியான எனக்கும் கவி பாடும் திறமை வருவதில் வியப்பில்லையே !!
என் தாயை மட்டும் மனதில் வைத்து கருக்குள் கருவை ஆரம்பிக்க வில்லை - முகம் காணாத எவ்வளவோ தாய் மார்கள் , அழத்தெரியாமல் அழுதுகொண்டிருக்கும் அந்த கற்பகிரகளுக்கு ஒரு சிறிய அஞ்சலி செய்யவ்வே ஆரம்பித்தேன் - அவ்வளவே !
uvausan
2nd June 2015, 09:08 PM
கலை அண்ட் கல்நாயக் - நீங்கள் உங்கள் சந்தேகத்தை கன்னித்தீவு மாதிரி தொடர்ந்துகொண்டே செல்கிறீர்கள் - உங்கள் இருவரையும் விட மிகவும் குறைந்த வயதுள்ள பிள்ளைகளான எங்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதாக தெரியவில்லை - நீங்கள் இருவருமே இப்படி இருந்தால் அடுத்ததற்கும் அடுத்த தலைமுறையான எங்களுக்கு யார் வழி காட்டுவார்கள் ? சீக்கிரம் ஒருமனத்த முடிவுக்கு வாருங்கள் --- :-d:)
chinnakkannan
2nd June 2015, 09:31 PM
**
உலகத்திலேயே மிகத் துன்பமாய் ஒலிப்பது எது.. வரிசையாக நிறையச் சொன்னாலும் கொஞ்சம் வேதனையைத் தூண்டுவது பெண்ணின் அழுகை..
இப்படித்தான் தோன்றியது அந்த அண்ணனுக்கு.. எப்பொழுதும் இன்னிசை, சிரிப்பொலிகள் என்று கேட்டிருந்த காதுகள் இன்று சோகத்தைக் கேட்கின்றனவே…
யார்..யாரது…
நான் நான் தானண்ணா.. – அழுகையின் குமுறலில் வார்த்தைகள் குழறலாக வர அவனுக்குப் புரியவில்லை
பார்த்தான்..தெரியவில்லை..எனில் வந்தவள் ஒரு மெல்லிய சீலையால் மோவாய் மூக்கு கன்னம் எல்லாம்மூடியிருந்தாள்..கண்கள் மட்டும் கலங்கிச் சிவந்து அழுது களையிழந்து..
யாரிவள்..மிகப் பரிச்சயமான கண்கள்.. இந்தக் குரல்.. மிகப் பரிச்சயமான குரல்..ஓ என் தங்கை..
தங்கையே.. என்ன ஆயிற்று..
அண்ணா – மெல்லிய சீலையை ஒரு கணம் விலக்கி மறுபடி மூடிக்கொண்டாள்.. அடடா.. இது என்ன மாபாதகம்.. மூக்கை யார் வெட்டினார்கள்.. என் தங்கையை அப்படிச் செய்வதற்கு யோசிப்பவர் கூட உண்டா..இருக்காது
இவள் எதன் மீதாவது விழுந்து விட்டாளா.. எந்த ஆயுதமாயிருக்கும்..
என்ன ஆயிற்று தங்கையே…
தங்கை கலங்கிக் கலங்கிக் கூறினாள் “அண்ணா.. கானகத்தில் இருவரை ச் சந்தித்தேன்.. மூத்தவர் பால் ஆசைபட்டேன்..என்னை மணம்புரியச் சொன்னேன்.. மறுத்தார்.. இளையவரைக் கேள் என்றார்..அந்த இளையவரால் எனக்கிந்த நிலை…ஆனால் அண்ணா..அந்த மூத்தவர் இருக்கிறாரே..அவருக்கு ஒரு மனைவி..அவள்…”
என ஆரம்பித்த தங்கை சிரிக்க ஆரம்பித்தாள்..
“என்ன சொல்.. தங்கையே..”
அவள் அழகைச் சொல்லி மாளாது அண்ணா.. அவள் போன்ற அழகி உன்னுடன் இருக்கத் தகுந்தவள் என்று தான் அவளைக் கவரப் பார்த்தேன்..ஆனால் அண்ணா.. “ மேலும் சிரிப்பு..
பெண்கள் சாமான்யமாக பிற பெண்ணை அழகு என்று சொல்வதில்லை..இது அண்ணனுக்கும் தெரியும்..
சொல் இவளே..
“கயிலையில் இருக்கும் பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான்.. திருமாலோ திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான். தன்னுடைய தேவியான கலைமகளைத் தன் நாவிலேயே வைத்திருக்கிறான் பிரம்மன்..இப்படி மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரைத் தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள்..
நீயோ மும்மூர்த்திகளை விடவும் கீர்த்தி பெற்றவன்..
மின்னலை விட மிக நுண்ணிய இடை கொண்ட அந்த அழகு நங்கை – செம்பொன்னால் செய்த சிற்பத்தைப் போன்ற சீதையை- அடையும் போது அவளை எங்கே வைத்துவாழ்வாய் நீ என நினைத்தேன் .. சிரிப்பு வந்தது..”
அண்ணன் ராவணனினுள் சீதையின் அழகு புகுந்து கொண்டது தங்கை சூர்ப்பனகை சொன்ன வார்த்தைகளினால்.
.
இதைத் தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன் கீழ்வரும் வரிகளில் சொல்கிறார்..
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!"
சரி.. கம்பனை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ.. கவியரசர் கண்ணதாசனுக்கும் அவரை மிகப்பிடிக்கும்..
கம்பன் சொன்னதை தான் புனைந்தபாடலிலும் கையாண்டிருக்கிறார்..
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பாற் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.
(நெட்டில் படித்ததை கொஞ்சம் பெப்பர் சால்ட் போட்டுத் தந்திருக்கிறேன்)
அழகாய்த் தான் இருக்கிறது..ஆனால் இந்தப் பரமகுரு என்பது பிரம்மனா.. ரெண்டு பக்கம் என்பது நாவுக்கு உண்டு என்பதால் சொல்கிறாரா.. இல்லை.. அவர் சொல்வது பரமகுரு –பரமனுக்கும் குருவான முருகன் தனது தேவியர் இருவரையும் இரண்டு பக்கமும் வைத்தான் என்பது..
அச்சோ.. இப்போ பாட்டை மறுபடி கேட்க வேண்டுமே..
பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போன்றொரு அம்மாஞ்சி ராஜா.. யாரம்மா..
ந.தி. + பத்மினி..
https://youtu.be/eG0R0U_cqWo
கவிதையிலும் கலைகளிலும் பழக்கமில்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே – ந.தியின் முகபாவங்கள் மிகவும் ரசிக்கும் விதமாக இருக்கும்..
*
வியட் நாம் வீடு. இதுவும் மதுரை ஸ்ரீ தேவி தான்..வெகு சின்ன வயதில் ஆஸ்யூஸ்வல் அம்மா கூட்டிச் சென்று காட்டியிருக்கிறார்.. பின் நினைவு தெரிந்த பிறகு பார்த்தது துபாய் தான்..வீடியோ. தான்..
ஆனால் அந்தவாடி ரமணி போடி ரமணி மட்டும் படம் பார்த்து வந்த பிறகு சொல்லிக் கொண்டே இருப்பேன் என சகோதரி சொல்லியிருக்கிறார். (யாராக்கும் அந்த ஆக்ட்ரஸ்) என் அண்ணன் அந்த வீடு ஷேப்பில் இருக்கும் பாட்டுப் புத்தகம் வாங்கிவந்தவுடன் புரட்டிப் பார்த்தது நினைவிருக்கிறது..
குமுதத்தில்கூட ஏதோ போட்டி வைத்து பிரஸ்டீஜின் மூக்குக் கண்ணாடி, கைத்தடி எல்லாம் ந.தியே பரிசாக வழங்கும்படி ஏற்பாடு செய்திருந்ததை பைண்ட் செய்யப் பட்ட புத்தகத்தில் படித்த நினைவு..
ந.தியின் கம்பீரம்..உன் கண்ணில் நீர்வழிந்தாலில் துவளும் மனோபாவம், எஸ்.வி.ராமதாஸின் அலட்சியத்துக்குக் காட்டும் பதில் அலட்சியம்.. ம்ம் மறக்க முடியாது..ம் மறுபடி ஒரு தடவை பார்க்க வேண்டும் பார்த்து ஒரு இருபது வருடம் இருக்கும்..
uvausan
2nd June 2015, 09:59 PM
கலை , ck - நீங்கள் எவ்வளவு அழகாக ஆன்மிகத்தை திலகங்களின் பாடல்களுடன் இணைக்கிறீர்கள் - தனி திறமை வேண்டும் - இவர்கள் சாதித்த சாதனைகளிலே மிக உயர்ந்த சாதனை - இவர்கள் பாடல்களை எந்த சப்ஜெக்ட் உடனும் இணைக்க ஏதுவானவை . நாம் பார்க்கும் கான்னோட்டமும் ஒரு முக்கிய காரணம் . நடத்துங்கள் - ரசிக்க காத்திருக்கிறோம் .
vasudevan31355
2nd June 2015, 11:01 PM
கலை,
நீங்கள் கேட்டது 'பல்லாண்டு வாழ்க' படத்தின் 'புதியதோர் உலகம் செய்வோம்' பாடல். ஆனால் நண்பர்கள் 'சந்திரோதயம்' படத்தின் டைட்டில் பாடல் என்று நினைத்து விட்டனர் போலும். சில நாட்களுக்கு முன் தாங்கள் 'ஒருதாய் மக்கள்' படத்தின் 'நீங்க நல்லா இருக்கணும் எல்லோரும்' பாடல் பற்றி ஒரு ஆய்வு அளித்திருந்தீர்கள். (பதிவு எண் 22) அதற்கு நான் அளித்த பதில் பதிவில் தற்போது நீங்கள் கேட்டிருந்த 'புதியதோர் உலகம் செய்வோம்' பல்லாண்டு வாழ்க படப்பாடலைப் பற்றி குறிப்பிட்டிருந்ததாக நினைவு. சரியாக நினைவில்லை. அதனாலென்ன? இப்போது உங்கள் விருப்பப் பாடல் இதோ.
பை தி பை தங்கள் ஜகத்குரு கதை ஆணவக்காரர்களுக்கு ஒரு சவுக்கடியே. நல்ல உயர்தரமான பதிவு என் உயிர் நண்பரே! சொறிந்து விட்டேன்.:)
https://youtu.be/FK7-9blwaIg
அப்படியே 'சந்திரோதயம்' படத்தின் பாடலையும் கேட்டு விடலாமா?
https://youtu.be/RJpSmTTmvFI
கலை,
'சந்திரோதயம்' படத்தின் டைட்டில் பாடலாக பார்க்க விருப்பம் இருந்தாலும் பார்த்து விடலாம். முழுப்படம் என்று இருந்தாலும் ஆரம்பத்திலேயே டைட்டில் சாங்காக வந்து விடுவதால் சுலபமாக பார்த்து விடலாம். உங்கள் சொறிதலுக்காக வெயிட்டிங்.:)
https://youtu.be/ROu-uUyg4gM
rajeshkrv
3rd June 2015, 01:41 AM
ராஜேஷ் - அருமையான பதிவு - மிகவும் அழகாக , அருமையான பாடலுடன் ஆரம்பித்து உள்ளீர்கள் . இதில் வரும் வரிகள் இன்னும் புதுமையாகவும் , பக்தி மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது - முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் ; அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும் ---- ஆஹா - என்ன வரிகள் - உலகத்திற்கே அவள் தாயானாலும் , தன் குழந்தை என்று வரும் போது சற்றே சுயநலம் வரத்தான் செய்கிறது ----- தொடருங்கள் ---
நன்றி ரவி. தொடர்கிறேன்... ஏதோ என்னால் முடிந்த வரை.
uvausan
3rd June 2015, 08:21 AM
Good Morning
http://i667.photobucket.com/albums/vv39/marie58_bucket/Animals/378e3c30b82bfbfeadf88a0d99118ff0.jpg (http://media.photobucket.com/user/marie58_bucket/media/Animals/378e3c30b82bfbfeadf88a0d99118ff0.jpg.html)
uvausan
3rd June 2015, 09:08 AM
கருவின் கரு - பதிவு 36
கங்கையில் குளிப்பதால் பாவம் தீருமா ?
காட்சி 1: இடம் கைலாசம்
ஒரு முறை இறைவிக்கு பெருத்த சந்தேகம் . உலக அன்னைக்கே சந்தேகம் என்றால் , அந்த இறைவன் தானே தீர்த்து வைக்க முடியும் . தேவி கேட்டாள் , " கங்கையில் குளிப்பவர் எல்லோருக்கும் புண்ணியம் என்றால் , அவர்களுக்கு சொர்க்கம் நிச்சியம் தானே இறைவா ?"
இறைவன் சிரித்தான் - ஒரு உண்மை அவன் சிரிப்புக்கு பின் ஒளிந்து இருந்தது . " தேவி ஏன் இந்த திடீர் சந்தேகம் ? மற்றவர்களுக்கு வரலாம் . எல்லாம் தெரிந்த உனக்கு வரலாமா ?"
" மற்றவர்கள் தெரிந்துகொள்ளத்தான் கேட்க்கிறேன் - கொஞ்சம் சொல்லுங்கள் "
இறைவன் சொன்னான் " தேவி இந்த தடவை சொல்லப்போவதில்லை ; செய்து காட்டுகிறேன் . வா இருவரும் காசிக்கு செல்வோம் சற்றே வயதான தம்பதிகளாக !"
எல்லாம் புரிந்தவள் , புரியாத வண்ணம் திகைத்தாள் .
.
காட்சி 2.: இடம் காசி , கங்கை கரை
ஒரு வயதான மூதாட்டி தன் இளைத்த குரலில் , அழுத வண்ணம் கூக்குரலிடுகிறாள் -- " யாராவது காப்பாத்துங்களேன் - எனது கணவர் - ஓடும் கங்கையில் விழுந்துவிட்டார் . அவருக்கு நீந்த தெரியாது ( எல்லோரையும் நீந்த வைத்து கரை சேர்ப்பவனுக்கு நீந்த தெரியாதாம் !!). அவரின் மூச்சு முட்டுவதைபாருங்கள் ! - யாரவது உதவி செய்யுங்களேன் !"
வழக்கம் போல எல்லோரும் அங்கு கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள் .. இதன் நடுவில் ஒரு வாலிபன் ஓடி வந்தான் . " தாயே கவலைப்படாதீர்கள் . நான் காப்பாத்துகிறேன் உங்கள் ஆசியுடன் !"
அந்த மூதாட்டி உடனே " இருப்பா ! இங்கு உன்னை விட வயதானவர்களும் , பலசாலிகளும் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் - நீ மட்டும் ஏன் காப்பாத்த வருகிறாய் ?. சரி அப்படியே வந்ததும் வந்தாய் - ஒரு நிபந்தனையையும் கேள் !"
வாலிபன் திகைத்தான் ,காப்பாற்ற நிபந்தனையா ??? - என்ன தாயே விரைந்து சொல்லுங்கள் !. பெரியவர் முழுகி விடப்போகிறார் ."
" மகனே ! நீ அவரை காப்பாற்ற வேண்டுமென்றால் , நீ பாவம் இதுவரை எதுவும் செய்யாதவனாக இருக்கவேண்டும் - அப்படி இருந்தால் தான் உன்னால் அவரை காப்பாற்ற முடியும் !"
சுற்றி இருந்த கூட்டம் கலைந்தது - "பார் இந்த கிழவியின் திமிரை ! காப்பாற்ற யாரவது வர மாட்டார்களா என்று அழுதாள் , வந்தவனிடம் conditions வேறு போடுகிறாள் . பாவம் செய்யாதவர்கள் யார் இருக்கிறார்கள் ? இவள் கணவன் செத்து மடியட்டும் - யாருக்குமே பாவம் பார்க்க கூடாது !!"
அந்த வாலிபன் உடனே கங்கையில் குதித்தான் - விரைந்து வந்து " தாயே என் பாவங்கள் எல்லாம் போய் விட்டது - இப்பொழுது அந்த பெரியவரை காப்பற்ற ஆணை இடுங்கள் "
பெரியவரும் மறைந்தார் ! பெரிய நாயகியும் மறைந்தாள் - தேவிக்கு இப்பொழுது அந்த உண்மை புரிந்தது . நம்பிக்கை வேண்டும் - நன்றாகவே எல்லாம் நடக்கும் என்ற மன உறுதி வேண்டும் "
இது எப்பவோ நடந்த கதை - இன்றோ கங்கையில் குளித்தும் - குளித்தால் நம் பாவம் கண்டிப்பாக போகும் என்ற திட நம்பிக்கை இருந்தும் பாவம் சூழ்ந்தவர்களாகத்தானே இருக்கிறோம் . எவ்வளவோ மூதாட்டிகள் இன்றும் என்னை காப்பாற்றுங்கள் , என் கணவனை காப்பற்றுங்கள் என்று தானே கங்கையின் மடியில் அமர்ந்து கொண்டு அழுத வண்ணம் இருக்கிறார்கள் - தாயையும் , தந்தையையும் அங்கு விட்டு செல்பவர்கள் செவிடர்களாகத்தானே திரும்புகிறார்கள் !!!!!!!!
"உலக அன்னையே ! மீண்டும் இந்த சந்தேகத்தை இறைவனிடம் எங்களுக்காக கேட்ப்பாயா ?"
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ----
https://youtu.be/RKvR0aDgsUc
https://youtu.be/bjDz6hFmFRE?list=PLaXMlM881uiUUO9K7LElB0-4SgqJMUa1H
uvausan
3rd June 2015, 09:10 AM
கருவின் கரு - பதிவு 37
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ----
https://youtu.be/kLr8HJiLH3Y?list=PLaXMlM881uiUUO9K7LElB0-4SgqJMUa1H
https://youtu.be/of00-2LeHoA
uvausan
3rd June 2015, 09:11 AM
கருவின் கரு - பதிவு 38
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ----
https://youtu.be/hhRiJ_8AkJI
https://youtu.be/IEebDOrLr0M
rajeshkrv
3rd June 2015, 10:32 AM
வணக்கம்.
திரையில் பக்தி -2
பக்தி என்பது பக்தி படங்களில் தான் என்றில்லை, தெய்வத்தை தொழுவது, கதாகாலட்சேபம் என பல வகையில் அன்று எவ்வளவோ வகையில் பக்தி மலரத்தான் செய்தது.
கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பது போல் பல நீதிகளை வெறும் சேதியாக சொல்லாமல்
கதையூடே சொல்லிய திறமை அன்று பலருக்கு இருந்தது..
அப்படி ஒரு படம் செளபாக்யவதி. ஜெமினி சாவித்திரி ஜோடியில் வெற்றி படம்
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையில் பாட்டுக்கோட்டையின் வரிகள்
ஏழிசை வேந்தர் தமிழிசைச்செல்வர் திரு டி.எம்.எஸ் ஐயாவின் கம்பீர குரலில் நடராஜனை தொழுதால் வராமல் இருப்பாரா என்ன
தில்லையம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
https://www.youtube.com/watch?v=qUORRGYe1y4
chinnakkannan
3rd June 2015, 10:53 AM
hi good morning all
ஒருபக்கம் அன்னை (ரவி) ஒரு பக்கம் பக்தி ( ராஜேஷ்) எனக் கலக்கலாகப் போகிறது.. நான் இன்னும் எதுவும் எழுதவே ஆரம்பிக்கலை..
கல் நாயக்கின் பூ பாடல்களும் அமர்க்களம்.. ஆனால் எனக்கு இன்னும் வேண்டுமே..
ஹோம் வொர்க் அனேகமாய் நாளை இரவு தான் செய்வேன் என நினைக்கிறேன்..
ராகவேந்தர் சார்..துள்ளி ஓடும் புள்ளி மானின் கதைச்சுருக்கம் வரைக.. அதைப்போட்டால் ஆப்பரேட்டர் ரூமிலிருந்து வரும் மெஷின் சத்தம் ப்ளஸ் செளண்ட் வேறு கொஞ்சம் கம்மி.. எனில் பார்க்க இயலவில்லை..
கலை நன்றி.. ஜகத்குருபற்றிய கட்டுரையும் பாடலுக்கும்..தொடர்ந்த வாசுவின் பாடல் பங்களிக்கிற்புக்கும் ஒரு ஓ..
பின்ன வாரேன்..
chinnakkannan
3rd June 2015, 11:01 AM
pazhaiya kavithai.. pazhaiya paattu!
வியாதி வர்றதுக்குக் காரணமே
இந்த திருஷ்டி தான்’
மடியில் தம்பியை வைத்து
சூட்த்தை மூன்றுமுறை சுற்றுவதற்கு முன்
அம்மா சொன்னதும்;
வளர்ந்த பின்
‘எட்டு மிளகாய் போட்டு
சுத்திப் போட்டு அடுப்பில போட்டேங்க..
கமறவே இல்லை..
பாருங்க பசங்களுக்கு..ரொம்ப திருஷ்டி’
என்று பதறிச் சொன்னதும்;
காதலித்துக் கடிமணம் புரிந்த
வடக்கத்திய மனைவி என்னிடம்
‘நஸர் உத்தார்னேகேலியே
இந்த கட் பண்ணின நிம்புவை
மூணு டைம் சுத்தி பாஹர் போடு’
என்று மழலைத் தமிழில் சொன்னதும்;
எனக்கு திருஷ்டிக்கு
முற்றுப் புள்ளி வைப்பதை விட.
அவர்களது அன்பின்
’கமா’ வாகத்தான் தோன்றியது...
*
https://youtu.be/TwO31yVw8vY
chinnakkannan
3rd June 2015, 11:21 AM
ரவியின் கருவின் கரு..தொடர்பாக (?!) என்னுடைய பழைய கவிதை (?!)பாட்டுக்குப் பாட்டிலிருந்து எடுத்தது நான்கு வருஷம் முன்னால் எழுதியது..
*
சிவாய நாமஹ..
இப்படித்தான் அந்தக்காலத்தில
என்னோடவீட்டுக்காரர்..ஒன்னோட தாத்தா
கடுதாசில்ல ஆரம்பிப்பாக..
நல்லா இருக்கியாப்பா..
நா ஒன் பாட்டி எழுதறேண்..
என்னது..ரெண்டு சுழி ன தான் போடோணும்..
நா செளக்கியம் நீ செளக்கியமாப்பா..
நீ எனக்கு அனுப்பிச்ச
ஐ நூறு டாலர் வந்துச்சுன்னு
ஒன் மதனி சொன்னா..
ஐயாயிரம் ரூபாயாமே..
அவ்வளவு எதுக்குப்பா
இந்த குருட்டுக் கிழவிக்கு...
ஏற்கெனவே
ஒம் மதனி
காலேல கேப்பக் கஞ்சி,
மத்தியானம் நீர்சோறு
ராத்திரில்ல ரெண்டு பூவ்ன் ப்ழம் கொடுக்கா..
ராசா சாப்பாடு தாம்ப்பா..
சீரணம் ஆவணும்ல..
நல்லாத்தான் இருக்கேன்
கொல்லப்பக்கத்தில
மாட்டுக்கொட்டாய் கிட்ட இருக்கற ரூம்புல தான்..
என்ன ஒடம்புல சுகராம்..
கம்பவுண்டர் நெதக்கும் ஊசி போடறார்..
என்ன ராத்திரில்ல் தட்வித் தடவி
பாத்ரூம் போறது தான் கஷ்டம்...
அதான் விழாம வந்துடுவம்ல..
நீ அமெரிக்கா போயும் நாளாச்சு பாரு..
எப்போ என்ன்பாக்க இந்த கள்ளந்திரிக்கு வருவ..
ம்ம்
என்னால தான் ஒன்ன பாக்க முடியாது..
கொஞ்சம் ஒன்னோட கை பிடிச்சுக்கலாமேப்பா..
அண்ணன்கிட்டயும் சொல்லி அலுத்துப்புட்டேன்
ஒங்கிட்ட சொன்னானா
முடிஞ்சா நா இருக்கறச்சயே வா..
இல்ல என்னப்பத்தி தகவல் கெடச்சா
கண்டிப்பா வந்து என்னப் பாக்கோணும்..செரியா..
ஏய் என்ன புள்ள நீ அழுவுற்..
இந்த லெட்டர ஏதோ ஈமெயிலாமே
அதுல
பக்கத்து வீட்டு படிக்கற் புள்ள மூலமா
அனுப்பறேன்...
ம்ற்க்காம பாக்க வா ராசா..
உசிரோட பாத்தா இன்னும் சந்தோஷம்..
***
uvausan
3rd June 2015, 12:17 PM
CK
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150315-WA0002_zpspv44p8ck.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150315-WA0002_zpspv44p8ck.jpg.html)
kalnayak
3rd June 2015, 02:31 PM
கலை அண்ட் கல்நாயக் - நீங்கள் உங்கள் சந்தேகத்தை கன்னித்தீவு மாதிரி தொடர்ந்துகொண்டே செல்கிறீர்கள் - உங்கள் இருவரையும் விட மிகவும் குறைந்த வயதுள்ள பிள்ளைகளான எங்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதாக தெரியவில்லை - நீங்கள் இருவருமே இப்படி இருந்தால் அடுத்ததற்கும் அடுத்த தலைமுறையான எங்களுக்கு யார் வழி காட்டுவார்கள் ? சீக்கிரம் ஒருமனத்த முடிவுக்கு வாருங்கள் --- :-d:)
உங்களைப் போலவே சொல்லிக் கொண்டிருக்கும் கலையை உண்மை பேசவைத்து விட்டு உங்களிடம் வருகிறேன் ரவி.
உங்களுக்குத் தெரியோமோ என்னவோ. அவரிடம் யாரோ பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் 108 என்ற எண்ணை 18, 18 என்று சொல்வதோடு அதுதான் தன் வயதும் என்று கிளிப் பிள்ளையாய் இருக்கிறார். இல்லை அவ்வளவு வயதில்லை அவர் சொன்னாலும் 81 வயதிற்கும் மேலான முதிர்ச்சி அவர் எழுத்தில் படுகிறது என்பதை படிக்கும் நண்பர்களோடு பேசும்போது சொன்னார்கள். ஏன் என்றால் அவர்களது 95 வயதிற்கும் மேலான தாத்தாக்கள், கொள்ளுத்தாத்தாக்கள் இப்படித்தான் பேசுகிறார்களாம். ஏன் அவர் எழுத்தில் நீங்களே உணரவில்லையா? 81 என்ற எண்ணையும் அவர் மாற்றிக்கொண்டு 18, 18 என்று கிளிப் பிள்ளையாய் இருக்கலாம்.
Russellzlc
3rd June 2015, 04:08 PM
உடம்பு சுத்துது அதனால..
வள்ளல் வாசு சார்,
மிக்க நன்றி, தங்கள் வீடியோ பதிவுகளுக்கு. என்ன கேட்டாலும் கொண்டு வந்து விடுகிறீர்கள். கல்நாயக் கூறியது போல நீங்கள் எந்திரரோ?
ரவி சார்,
பாராட்டுக்கு நன்றி. கருவின் கரு கலக்குகிறீர்கள்.
சின்னக் கண்ணன்,
வியட்நாம் வீடு பாடலுக்கு இதுவரை கேட்டறியாத விளக்கம். சுவையாக இருந்தது. அந்த விளக்கத்தோடு காட்சியைப் பார்த்தால் மேலும் சுவை.
கல்நாயக்,
எதற்கு வம்பு? உண்மையை பேசிவிடுகிறேன். வயதில் மட்டுமல்ல, அறிவில், அன்பில், அடக்கத்தில் மட்டுமல்ல, தன்னை சிறியவனாக்கி விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையிலும் நீங்களே பெரியவர். (சைக்கிள் கேப்பில் பிளேனை விடும் ரவி சாரை பாத்தீங்களா? பிள்ளையாம்.)
வாசு சார் 4 நாட்களுக்கு முன் , ‘மதுரகானம் திரி இளைப்பாறும் திரி. அங்கு சண்டை போட முடியாது. பாரபட்சம் காட்ட முடியாது’ என்று இன்னொரு திரியில் கூறியிருந்தார். முடியாதுக்கும் கூடாதுக்கும் வேறுபாடு உண்டு. முடியும் ஆனால் கூடாது என்பது கட்டுப்பாடு. ஆனால், முடியாது என்பது வாய்ப்பில்லை என்று அர்த்தம். சண்டையிடவும் பாரபட்சம் காட்டவும் நம்மால் முடியவே முடியாதே, அந்த எண்ணமே இங்கு வராதே. வாசு சாரின் ஒவ்வொரு எழுத்தும் சத்தியம். மகிழ்ச்சியாக உள்ளது. (கல்நாயக், இவ்வளவு தூரம் சொல்கிறேனே, பெரியவர் என்று உங்களை ஒப்புக் கொள்ளக் கூடாதா?)
-----------------------------------------------------
டாஸ்மாக் இணையதளத்தில் மதுவகைகள் என்னென்ன? எப்படி இருக்கும்? எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளதாம். மது குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றம். மதுக்கடைகளிலும் மது பாட்டில்களிலும் கூட குடிக்கு எதிரான வாசகங்கள் உண்டு. அப்படி இருக்க, அரசின் இணையதளத்திலேயே மது பற்றி விளம்பரம் தவறு என்றும் அதை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
விட்டால் இந்தப் பாட்டையும் சேர்த்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. காஞ்சித் தலைவன் படத்தில் ஏ.எல். ராகவன் பாடியுள்ள,
உலகம் சுத்துது எதனால?
நம்ப உடம்பு சுத்துது அதனால..
(பாடல், நீர் மேல் நடக்கலாம் என்ற சரணத்துடன் ஆரம்பிக்கும்)
சூரியனை சுற்றும் பூமி தன்னைத்தானே சுற்றியபடி செல்கிறது என்கிறது அறிவியல். ஆனால், அது சுழல்வது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. மது உள்ளே போனால் உலகம் சுத்துமாம். ஏன்? நம் உடம்பு சுத்துகிறதே? சுவையான விளக்கம்.
பாடலுக்கு திரு.எம்.ஆர்.ராதா அவர்கள் நடித்திருப்பார். எல்லாரும் குடித்துவிட்டு கோஷ்டியாக ஆடுவார்கள். திரு.ராதா ஏற்கனவே விவகாரமான ஆள். குடித்தது போல நடிப்பது என்றால் கேட்க வேண்டுமா?
கன்னம் சிவக்குது எதனால?
கன்னிப் பொண்ணு அதனால
கன்னத்தில் ஒண்ணு.... என்று இழுத்தபடியே
கன்னத்தை அவர் காட்டும்போது ‘சப்’ என்று ஒரு அறை விழும். விரசமும் கலக்காமல் அப்படி விரசமாக கேட்க நினைத்தால் என்ன கிடைக்கும் என்பதை விளக்கும் வகையில் நகைச்சுவையான முறையில் காட்சி அமைப்பும் பாடல் வரிகளும்.
1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் கழகம் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு 57ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் முதல் முறையாக 15 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. தேர்தல் வியூகம் வகுப்பதிலே காங்கிரஸ்காரர்கள் (அப்போதைய) வல்லவர்கள். அடுத்த தேர்தலில் இந்த 15 தொகுதிகளும் குறிவைக்கப்பட்டன. சரியாக அந்த 15 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது.
அந்த பத்ம வியூகத்தில் பேரறிஞர் அண்ணாவும் தப்ப முடியவில்லை. காஞ்சிபுரம் தொகுதியிலே பஸ் முதலாளியும் காங்கிரஸ் வேட்பாளருமான நடேச முதலியாரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில் குறிவைக்கப்பட்ட 15 தொகுதிகளில் போட்டியிட்டவர்களில் 14 பேர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.
ஒருவர் மட்டும் தப்பினார். நிலவரம் அறிந்ததாலோ என்னவோ, குளித்தலை தொகுதியில் இருந்து தஞ்சை தொகுதிக்கு மாறி போட்டியிட்டார். அங்கும் போட்டி எளிதாக இல்லை. (திராவிட இயக்க கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எனக்கு சாதி பெயரை குறிப்பிடுவதில் விருப்பமில்லை. என்றாலும் நான் குறிப்பிடப்போகும் பின்வரும் பிரமுகர்கள் பெயரோடு சாதி பிரிக்க முடியாதபடி ஆகிவிட்டதால் நானும் குறிப்பிடுகிறேன், மன்னிக்கவும்)
கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், வலிவலம் தேசிகர், குன்னியூர் சாம்பசிவ அய்யர், வடபாதிமங்கலத்தார் என்று அழைக்கப்பட்ட பெருநிலக்கிழார் வி.எஸ்.தியாகராஜ முதலியார் (இவர் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தக்காராக இருந்தவர். அப்போது நடந்த சுவையான சம்பவத்தை நேரம் கிடைக்கும்போது பார்ப்போம்) போன்றோர் ஆண்ட ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவிலே போட்டி.
தஞ்சையிலே யாகப்ப நாடார் என்றால் எல்லாருக்கும் தெரியும். பெரும் தனவந்தர். அவரது பெயரில்தான் யாகப்பா டாக்கீஸ் அமைந்திருந்தது. (இப்போது இருக்கிறதா என தெரியவில்லை) அவரது திருக்குமாரர் பரிசுத்த நாடார்தான் காங்கிரஸ் வேட்பாளர். தொகுதி மாறி, கடும் போட்டியில் காங்கிரசாரின் பத்ம வியூகத்தை உடைத்து வெற்றி பெற்ற அந்த கெட்டிக்காரர்தான் மேற்கண்ட பாடலை எழுதியவர்.
தெரிந்திருக்குமே. இன்று 92வது பிறந்த நாள் விழா காணும் திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள். அவரது அரசியலில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், சும்மா சொல்லக் கூடாது. சில விஷயங்களில் மனுஷர் sharp மட்டுமல்ல, shark.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
RAGHAVENDRA
3rd June 2015, 04:21 PM
https://www.youtube.com/watch?v=bUFQoLEIiqM
மக்கள் கலைஞர் ஜெய்யின் நினைவு தினம் இன்று. இப்பாடலை விட சிறந்த நினைவூட்டல் இருக்குமோ...
chinnakkannan
3rd June 2015, 05:30 PM
கலை நன்னா எழுதியிருக்கேள்..ஆனா பாடடு தான் கிடைக்கலை..//sharp மட்டுமல்ல, shark.// :) நீரும் தான்,,கரெக்டா விஷயத்தைப் புகுத்துவதில்.. :) .
kalnayak
3rd June 2015, 05:33 PM
உடம்பு சுத்துது அதனால..
கல்நாயக்,
எதற்கு வம்பு? உண்மையை பேசிவிடுகிறேன். வயதில் மட்டுமல்ல, அறிவில், அன்பில், அடக்கத்தில் மட்டுமல்ல, தன்னை சிறியவனாக்கி விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையிலும் நீங்களே பெரியவர். (சைக்கிள் கேப்பில் பிளேனை விடும் ரவி சாரை பாத்தீங்களா? பிள்ளையாம்.)
கலை,
அப்படியே விவகாரத்தை மாத்திட்டீங்களே. இங்கே பிரச்சினை, நான் பெரியவனா, சின்னவனா என்பதில்லை. நானும் உங்கள் வலையில் விழுந்துட்டேன். இங்கு உள்ள அனைவருக்கும் வயதில் மிக பெரியவர் நீங்கள்தான் என்பது. எப்படியோ அதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இந்த பிரச்சினையை இவ்வளவு சீக்கிரம் முடித்து வைப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மற்ற எல்லோரும் நம்மை அடிக்க வருவதற்கு முன்பு ஒப்புக்கொண்டு என்னை மட்டுமில்லாமல் உங்களையும் காப்பாற்றிக்கொண்டதில்தான் உங்கள் வயதின் முதிர்ச்சி, அனுபவ அறிவு பளிச்சிடுகிறது. திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள் பிறந்த நாளை அலசி ஆராய்ந்த முறையும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக உள்ளது.
uvausan
3rd June 2015, 06:22 PM
கலை , கல்நாயக் - உங்கள் கன்னித்தீவு தொடர்ந்து கொண்டே இருக்கின்றதே:) - உங்கள் இருவரிடம் இருந்து, சிறியவர்கள் நாங்கள் பல கற்றுக்கொள்ள வேண்டும் . உங்கள் இருவரிடம் இருந்தும் நான் தனிப்பட்ட முறையில் இதுவரை கற்றுக்கொண்டது :
1. பெரியவர்களாக இருந்தும் இருவரும் அதை ஒப்புக்கொள்ளாததது .
2. தன்னடக்கம்
3. முதிர்ச்சி நிறைந்த எழுத்தோட்டங்கள் .
4. ஆரோக்கியமான , என்றுமே முடிவடையாத விவாதங்கள் .
இன்னும் எவ்வளவோ - சொல்லிக்கொண்டே போகலாம் - திருடன் போலீஸ் விளையாட வேண்டும் - கொஞ்ச நேரம் தான் வீட்டில் அனுமதி - விடிந்தால் quaterly exam வேறு . நண்பர்கள் வேறு அழைத்துக்கொண்டே இருக்கிண்டார்கள் - இவ்வளவு தான் எழுத நேரம் கிடைத்தது .
கல்நாயக் சார் ! எழுத்தின் முதிர்ச்சியை வைத்து ஒருவரின் வயதை கண்டுபிடிக்க முடியுமா ? அப்படி முடியும் என்றால் என் வயது 6 க்கு மேல் தாண்டியிருக்க சாத்தியமே இல்லையே . இன்னுமொரு உதாரணம் - திரு ஞானசம்பந்தருக்கு 4 வயது கூட நிரம்பாமல் பல முதிர்ச்சி நிறைந்த பாடல்களை பாடியுள்ளாரே ! கலையின் பக்கமா என்று கேட்காதீர்கள் - ஒரு சின்ன சந்தேகம் அவ்வளவே !!:)
vasudevan31355
3rd June 2015, 06:30 PM
ரவி
சுமக்கும் பாடல்கள் மூலம் நல்ல தெலுங்குப் பாடல்கள் கிடைகின்றன. கங்கை கதை அருமை. முக்கயமாக நளதமயந்தி. அந்துலேனி கதா. (அவள் ஒரு தொடர்கதை...'ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்'. ) கலக்குங்கள்.
vasudevan31355
3rd June 2015, 06:32 PM
கல்நாயக்,
வயதுச் சண்டை வம்பு ஓயாதோ? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குற மாதிரியும் தெரியுதே. நல்லா ஓய்வெடுத்து விட்டு வாங்க. பாகம் 3 ஐ ஓய்வெடுக்காமல் கொண்டு போனீங்க. அதனால இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். தப்பில்லை. ஆனாலும் வீ ஆர் வெயிட்டிங்.
"பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ பூமாதுளை" பாடலுக்கு ஸ்பெஷல் நன்றிகள். வாவ்...என்ன பாட்டு அது! டேப் ரெகார்டரில் பதிவு செய்த சாமியாரின் 'விசிறி' கேசட்டை போட்டு தலையணை அருகில் இரவில் இந்த பாடலை எத்தனை முறை என்னுடைய இருபத்தொன்பதாவது வயதில் கேட்டிருப்பேன். இப்போது என்னுடைய வயது 53. இன்னும் கூட சில சமயம் அப்படிக் கேட்டு மகிழ ஆசை. ஆனால் டேப் ரெகார்டர் அவுட்.
என் உண்மையான வயதை சொல்லிபுட்டேன். ஆனா கல்லும், கலையும் கொல்லுதுங்க.:) இப்பவாவது உண்மை வருதா இல்லை கன்னித் தீவா தொடருதான்னு பார்க்கலாம்.:)
vasudevan31355
3rd June 2015, 06:32 PM
ராஜேஷ்ஜி!
குருஜி என்று இனி அழைக்கலாம்.:) பக்தி மணம் கமழ்கிறதே!
'திரையில் பக்தி' புதிய தொடருக்கு வாழ்த்துக்கள். நிறைய பாடல்கள் வருமே! இதிலும் அரிதானவற்றை எதிர்பார்க்கலாமா?
vasudevan31355
3rd June 2015, 06:33 PM
சி.க,
'நஸர் உத்தார்னேகேலியே' பழைய கவிதை என்றாலும் புதுக் கவிதை வகையை சார்ந்தது. நன்னாயிட்டு. உம்முடைய 'வியட்நாம் வீடு' பதிவு மனதை பிசைகிறது. ஒன்று இப்படி இம்சிக்கிறீர். இல்லை 'ஜம்'சிக்கிறீர்.:)
ரெண்டுமே டாப்தான்.
vasudevan31355
3rd June 2015, 06:34 PM
ராகவேந்திரன் சார்,
பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள். 'துள்ளி ஓடும் புள்ளி மான்' படமெல்லாம் திருமப்ப் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இப்போது அது தகர்ந்தது. வாழ்க ராஜ் வீடியோ விஷன். இது போல நடிகர் திலகத்தின் வெளிவராத படங்களைத் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டால் கோடி புண்ணியம். முக்கியமாக அவள் யார், வளர் பிறை, நல்ல வீடு, செந்தாமரை, கண்கள், மனிதனும் மிருகமும் இன்னும் சில. நம்பிக்கையும் துளிர்விடுகிறது.
உண்மைதான் ராகவேந்திரன் சார். யானை வளர்த்த வானம்பாடி மகன் பண்ணின இந்த ஒரு கொடுமையால் புள்ளிமான் துள்ளியே மிரண்டு ஓடி விட்டது. ஆனால் லஷ்மியுடன் நடிக்கக் கிடைத்த அந்த ஒரு வாய்ப்பை அவர் தனக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பது மட்டும் பாடலின் இறுதிக் காட்சியில் தெரிகிறது. :)
ஆனால் ஜேசுதாஸ் குரல் இனிமை. ஆனால் அவர் குரலில் ஒன்பது பாவம் இல்லை ஒரு பாவமும் வராது.:) (ஸ்டீரியோ டைப்) பாவம். நல்ல பாடகர். ஆனால் பாவம் வராத பாடகர். அது அவரது சுபாவம் போல.:) இருந்தாலும் அவரது பல பாடல்கள் சுகானுபவம்.
அரிய பாடல்களை நான் அளிக்கிறேன் என்கிறீர்கள். நீங்கள் மட்டும் என்னவாம்? மிக அரிய படத்தையும், பாடலையும் அளித்து தூள்பரத்தி விட்டீர்களே!
'நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி'..ரொம்ப ரசித்துப் பார்த்தேன். இனிமை அதிகம். அதுவும் பல்லவியில்.
நன்றி சார்.
chinnakkannan
3rd June 2015, 06:52 PM
//உம்முடைய 'வியட்நாம் வீடு' பதிவு மனதை பிசைகிறது. ஒன்று இப்படி இம்சிக்கிறீர். // ஓய் ஒம்ம அளவுக்கு ந.தி பத்தி எழுத வராதுங்காணும்.. நன்னா இருக்கா இல்லியா.. :)
vasudevan31355
3rd June 2015, 07:04 PM
கலை,
நன்றி! ஷார்ப் அண்ட் ஷார்க் இரண்டுக்கும் சொந்தக்காரரை, எதிரணி தலைவராய் இருந்தாலும் அவருடைய பிறந்த நாளில் அவரை மறக்காமல் நினைவு வைத்து அவர் இயற்றிய பாடல் அதுவும் மிக அரிதான, கூடவே எனக்கும் பிடித்த பாடலை அளித்தததின் மூலம் நிஜமாகவே அறிவில் பெரிய மனிதர் (தப்பிச்சுட்டேன்):) என்று நிரூபித்து விட்டீர்கள்.
அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள் கலை. நன்றிகள். ராதா அட்டகாசம். ஆனால் இந்தப் பாடலில் ஏனோ குள்ளமாய்த் தெரிவார்.
இன்னும் சிரிக்க வைத்தபடி யோசிக்க வைக்கும் சில வரிகள்.
கலக்கம் வருது எதனாலே
கலயம் பொங்குது அதனாலே
சொர்க்கம் தெரியுது எதனாலே
மயக்கம் வருது அதனாலே
கண்ணைக் கவருது எதனாலே
இவ கன்னிப் பெண்ணு அதனாலே
'கன்னிப் பொண்ணு ம்ம்ம்' (என்று இழுப்பார் 'ரகளை'ராகவன்)
கேலியான கேள்விகள் வினயமான பதில்கள் என்று வித்தியாசப் பாடல் அவருடைய தனி முத்திரையோடு.
இந்தப் படத்தில் இன்னொரு அருமையான பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. புகழ் பெற்ற பாடல் இல்லை. ஆனால் என் நெஞ்சில் நிலைத்து நின்று விட்ட பாடல்.
ராட்சஸி குழுவினருடன் பாடிய
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தில் மடி இருக்கு
தலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கண்ணே கனியமுதே உன்னால் எந்தன் உயிர் இருக்கு.
ஐலேசா ஐலசா ஐலேசா
என்ன அழகான மீனவ சமூகப் பாடல்!
இதோ நீங்கள் கேட்ட பாடல்.
பாடல் 1.07இல் ஆரம்பிக்கும் கலை சார்.
https://youtu.be/1oBCKXlEio8
kalnayak
3rd June 2015, 07:11 PM
ரவி கோவிச்சுக்காதீங்க கோவிச்சுக்காதீங்க. கலையோடு டூ விட்டுட்டேன் அவரோட வயச பேசற விஷயத்தில. நிறுத்திட்டேன். அப்புறம் உங்க வயசைப் பத்தி பேசுனா கோபால் அண்ணாத்தை மட்டுமில்லை, சாதுவா இங்க இருக்கிற பலரும் சேதுவா மாறிடுவாங்க. அதனால இப்ப விட்டுடறேன். இந்தாங்க பிடிங்க இன்னொரு பூவின் பாடல்
பூவின் பாடல் 22: "பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி. பூவ பறிக்கவும் நேரமிருக்கா."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~
சரத்குமாரும், அழகான மீனாவும் ஆட சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைத்து பாடும் நிலாவும் பாட்டை நிறுத்தி மறைந்த நிலா சொர்ண லதாவும் பாடியிருக்கிறார்கள். நல்ல பாடல்தான். அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் டெம்போ ஏற்றிக் கொண்டு போயிருக்க வேண்டுமோ. என்னவோ தெரியவில்லை. பாடல் முடிந்தபின் சற்று ஏமாற்றமாக இருப்பது போல் ஒரு உணர்வு. மத்தபடி நீங்க கேட்காத பாட்டையா இங்க நான் போட்டுட்டேன், எனக்கு எதுவும் கூலி தர.
https://www.youtube.com/watch?v=sjyyloTpBes
vasudevan31355
3rd June 2015, 07:14 PM
//வாசு சார் 4 நாட்களுக்கு முன் , ‘மதுரகானம் திரி இளைப்பாறும் திரி. அங்கு சண்டை போட முடியாது. பாரபட்சம் காட்ட முடியாது’ என்று இன்னொரு திரியில் கூறியிருந்தார்//
கலை சார்,
நடிகர் திலகம் திரியை மற்ற சாதாரண திரிகள் போல 'இன்னொரு திரி' என்று தாங்கள் சாதரணமாக குறிப்பிட்டிருக்க வேண்டாம் என்பது தாழ்மையான கருத்து. 'நடிகர் திலகம் திரி' என்றே தாங்கள் குறிப்பிட்டிருக்கலாம். ஹப்பில் எப்போதும் கொடி கட்டிப் பறக்கும் முதன்மையான திரியை 'இன்னொரு திரி' என்று பொத்தம் பொதுவாக நீங்கள் அறியாமல் சொல்லியிருந்தால் கூட என் மனது என்னவோ அதை ஏற்க மறுக்கிறது அது தவறு இல்லை என்று தெரிந்த போதும் கூட.
தவறாக ஏதும் பட்டால் மன்னித்து விடுங்கள்.
என்ன சார் செய்வது? நாங்கள் தொழும் தெய்வம் ஆயிற்றே! அப்படியே பழகி விட்டேன்... இல்லை 'விட்டோம்'.
Russellzlc
3rd June 2015, 07:32 PM
வாசு சார்,
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். உள்நோக்கத்தோடு சொல்லவில்லை. வேகமாக எழுத்து வேகத்தில் வந்து விட்டது. உங்கள் மனம் புண்படும்படி கூறியதற்கு மன்னிக்கவும். நடிகர் திலகம் திரி என்றே குறிப்பிட்டிருக்கலாம். இனி அப்படியே குறிப்பிடுகிறேன். மன்னிப்பு கோர வேண்டியது நான்தான். நீங்கள் அல்ல. மீண்டும் மன்னிக்கவும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
3rd June 2015, 07:34 PM
ரவி,
கருவின் கருவில் உங்கள் புண்ணியத்தில் நல்ல ஆன்மீக கதைகளும், அருமையான தெலுங்கு, மலையாளப் பாடல்களும் கேட்டு தாயைப் பற்றி நிறையவே சிந்தித்து அதிகமாக புண்ணியம் செய்து கொள்கிறோம். நன்றி.
kalnayak
3rd June 2015, 07:40 PM
ராஜேஷ் ஜி,
மன்னிக்கவும் உங்கள் பக்திப் பாடல் தொடருக்கு என்னுடைய கருத்துக்களை உடனடியாக பதியாததற்கு. நிஜமாக பக்திப் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நிச்சயமாக இவ்வளவு விவரங்களோடு என்னால் எழுதி இருக்க முடியாது. உங்களுக்கே தெரியும் தப்பும் தவறுமாய் நான் எழுதி, நீங்கள் திருத்தவோ வாசு கூடுதல் விவரம் தரவோ கேட்டுக் கொண்டிருந்திருப்பேன். இதெல்லாம் இல்லாமல் அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது நீங்கள் எழுதும் பக்தி தொடர். வாழ்த்துகள் மற்றும் நன்றியுடன்.
நிறைய எழுத வேண்டும் என ஆசை. ஆனால் நேரமின்மை, இந்த சிறிய பாராட்டு மற்றும் நன்றி அறிவித்தலோடு முடிக்க வைக்கிறது.
Russellzlc
3rd June 2015, 07:41 PM
அவசரத்தில் நன்றி சொல்ல மறுந்து விட்டேன் வாசு சார். பாடலை தரவேற்றியதற் நன்றி. நானும் திரு.ராதா குள்ளமாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். சற்று முன்னோக்கி வளைந்ததால் இருக்குமோ?
கல்நாயக், டூ விட்டாலும விடுவீர்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அப்படித்தானே?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
vasudevan31355
3rd June 2015, 07:50 PM
கலை சார்!
தங்கள் கண்ணியத்திற்கும், பெருந்தன்மைக்கும், உயர் குணத்திற்கும் மிக மிக நன்றிக் கடன் பட்டவனாகிறேன். பதிவுக்கான தங்கள் நன்றிக்கும் என் அன்பு பதில் நன்றிகள்.
kalnayak
3rd June 2015, 07:53 PM
ராகவேந்திரா அவர்களே,
நீங்கள் கொடுக்கும் அரிதான ஒவ்வொரு பாடலுக்கும் பெரிய நன்றி பதிவுகள் இடலாம். என்ன செய்வது கிடைக்கும் குறைந்த நேரத்தில் செய்ய முடியவில்லையே.
துள்ளி ஓடும் புள்ளிமான் திரைப்படம். நான் இப்படி ஒரு படத்தை கேட்டதாக கூட நினைவு இல்லை. எப்போது நேரம் கிடைக்கிறதோ கட்டாயம் பார்கிறேன். பாடல்களின் பதிவிற்கும் நன்றி.
அடுத்து மக்கள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளுக்கு கொடுத்த பாடல் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் இதற்காக ஒரு தனித்துவமான நன்றி.
vasudevan31355
3rd June 2015, 07:53 PM
//உம்முடைய 'வியட்நாம் வீடு' பதிவு மனதை பிசைகிறது. ஒன்று இப்படி இம்சிக்கிறீர். // ஓய் ஒம்ம அளவுக்கு ந.தி பத்தி எழுத வராதுங்காணும்.. நன்னா இருக்கா இல்லியா.. :)
டாப்புல இருக்குற டாப்பை கவனிக்கலியா சின்னா?:)
kalnayak
3rd June 2015, 08:04 PM
வாசு,
இப்படி நாங்கள் கேட்கும் விவரத்திற்கு பக்கெட் எடுத்து கொடுத்தும், எங்கள் சந்தேகங்களை தீர்த்தும், சில பிரச்சினைகளால் மன உளைச்சல் பட்டு எழுதியும், ... உமது நேரம் சரியாகப் போய் விடுகிறது. இவைகளுக்கெல்லாம் நேரம் ஒதுக்காமல் நீங்களாக பாடலின் விவரத்தை உங்கள் பாணியில் எடுத்துக் கொடுத்தால்... அம்மாடி. நினைத்துப் பார்க்கவே பிரமாதமாக உள்ளது. என்ன செய்வது சிலவற்றை இழந்தால்தான் சிலவற்றை பெறமுடிகிறது. சில தடங்கல்களும் நடந்து விடுகின்றன. என்ன செய்வது? விட்டுத் தள்ளுங்கள். தொடருங்கள் உங்கள் மதுர கானப் பணியை. ரசிப்பதற்கு காத்திருக்கிறோம்.
நமது நடிகர் திலகம் திரியிலும் நீங்கள் தொடர வேண்டும். இது எனது வேண்டுகோள்.
kalnayak
3rd June 2015, 08:06 PM
சி.க.
நேரமின்மை, உங்கள் பதிவுகளை படித்தாலும் விவாதிக்க முடியவில்லை. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் நன்றி.
vasudevan31355
3rd June 2015, 08:10 PM
ராகவேந்திரன் சார்,
சரியாக ஜெய் அவர்களின் நினைவு தினத்தை ஞாபகம் வைத்து அவர் பாடலைத் திரியில் தந்தமைக்காக தங்களுக்கு மதுர கானங்கள் திரியின் சார்பாக
https://youtu.be/VXHH1TH3vwA
vasudevan31355
3rd June 2015, 08:16 PM
நன்றி கல்நாயக்.
உண்மைதான். நேரம் சரியாக இருக்கிறது. பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் வேறு முக்கியம். எல்லாவற்றுக்கும் பதிலும், நன்றியும் அளிக்க ஆசை இருந்தாலும் முடிவதில்லை. ஆனால் முடிந்த மட்டும் முக்கியமானவைகளுக்காகவாவது பின்னூட்டங்கள் தர வேண்டும். பதிவர்களுக்கும் உற்சாகம் பிறக்கும். நானும் என்னால் ஆனவரை கொடுக்க முயற்சிக்கிறேன்.
அடுத்த பாலா பதிவை ரெடி செய்ய மூன்று நாட்களாக முயல்கிறேன். முடியவில்லை. தாங்களும் நேரம் இல்லாமல் தவிப்பது நன்றாகப் புரிகிறது.
RAGHAVENDRA
3rd June 2015, 08:25 PM
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வாசு சார், கல்நாயக் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.
ராஜேஷ் சார்,
பக்தி மணம் கமழும் பாடல்கள் மட்டுமின்றி, இதர மொழிகளிலும் அருமையான பாடல்களை அதுவும் அபூர்வமான பாடல்களைப் பகிர்ந்து கொண்டு இத்திரியின் மதுரத்தை இன்னமும் கமழ வைக்கிறீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
3rd June 2015, 08:28 PM
அபூர்வ கானங்கள்
காஞ்சனா, மோகினி, முனி என டிவி. வழியாக நம் வீட்டுக் கதவுகளைப் பேய்கள் தட்டுகின்றன. டிரைலர் வழியாகவோ முழுப்படம் மூலமாகவோ நடக்கிறது.
ஆனால் இதெல்லாம் ஜூஜூபி.. நாங்களெல்லாம் அந்தக் காலத்திலேயே கதவைத் தட்டிப்புட்டோமே என இங்கே ஒரு குரல் வருகிறது பாருங்கள்..
ஆனால் இது இனிமையான குரல்.. இன்றைய வாழ்க்கையின் தத்துவத்தை அன்றே சொல்லிவிட்ட பாடல்.
சி.என். பாண்டுரங்கன் இசையில், வேம்பார் மணிவண்ணன் புண்ணியத்தில் ஏ.எம். ராஜாவின் குரலைக் கேட்போமா..
படம் - கதவைத் தட்டிய மோகினிப்ப பேய்.. வாழ்க்கை என்பது சீட்டாட்டம்.
https://www.youtube.com/watch?v=jrd2AUMKklM
RAGHAVENDRA
3rd June 2015, 08:38 PM
அபூர்வ கானங்கள்
வாசு சார் கோபித்துக் கொள்ளாதீர்கள், முன் கூட்டியே போட்டு விட்டேனே என்று. தாங்கள் எழுதும் போது அதனுடைய சிறப்பே தனியாய்த் தெரியும். இன்று ஜெய் நினைவாக இடம் பெறுகிறது.
படம் - ராஜாவுக்கேத்த ராணி
இசை விஜய பாஸ்கரி
குரல்கள் - எஸ்.பி.பாலா, வாணி
அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
https://www.youtube.com/watch?v=HB11Arzw6oI
RAGHAVENDRA
3rd June 2015, 08:53 PM
அபூர்வ கானங்கள்
உண்மையிலேயே இதுவும் அபூர்வமான கானம் தான். இளைய திலகம் பிரபு அவர்களின் ஆரம்ப காலப் படம், நலந்தானா விலிருந்து மெய்மறந்து நம்மை சொக்க வைக்கும் இனிய பாடல்.. கல்யாண மாலை சூடி...
இந்தப் பாட்டெல்லாம் மீண்டும் காணவும் கேட்கவும் வாய்ப்பளிக்கும் நண்பர்களுக்கும் யூட்யூப் இணைய தளத்திற்கும் நன்றி.
https://www.youtube.com/watch?v=SVKQ8rBnOBs
uvausan
3rd June 2015, 08:57 PM
ரவி,
கருவின் கருவில் உங்கள் புண்ணியத்தில் நல்ல ஆன்மீக கதைகளும், அருமையான தெலுங்கு, மலையாளப் பாடல்களும் கேட்டு தாயைப் பற்றி நிறையவே சிந்தித்து அதிகமாக புண்ணியம் செய்து கொள்கிறோம். நன்றி.
நன்றி பல கல்நாயக் சார் . இப்படி மற்றவர்களுடைய பதிவுகளை தேடிக்கண்டுபிடித்து , இருக்கும் உங்கள் குறுகிய நேரத்திலும் பாராட்டுவதால் தான் உங்களை மிகவும் பெரியவர் என்று சொல்கிறோம் . இப்படிப்பட்ட நற்குணம் எங்களைப்போன்ற சிறியவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது - பாருங்களேன் - அழகான "பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி. பூவ பறிக்கவும் நேரமிருக்கா." என்ற பாடலை எனக்காக பதிவு செய்து உள்ளீர்கள் - பாராட்ட உடனே தோன்றுகிறதா எனக்கு - இல்லையே பெரியவர்கள் பெரியவர்கள் தான் - நாங்கள் நாங்கள் தான்
RAGHAVENDRA
3rd June 2015, 09:00 PM
https://www.youtube.com/watch?v=4l4W6hFzWLs
இன்னும் பல நாட்களுக்கு உங்களுக்குள் ஒரு ஹேங்ஓவரை ஏற்படுத்தப் போகிற பாடல்...
வரிகள்.. ஜீவனுள்ள வரிகள்.
எப்போதாவது அத்தி பூத்தாற்போல காவியமாய் அமையக் கூடிய பாடல் வரிகள் இப்பாடலுக்குள் இடம் பெற்று, இப்பாடலின் இலக்கியத்தரத்தை எங்கோ இட்டுச் செல்லுகின்றன.
முதல் வரியே மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பாடியுள்ளார் பாலா.
ஒரு பார்வை பார்க்கும் போது மனம் பாடும் நூறு பாட்டு..
மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு...
வாசு சார். இந்தப் பாடல் உங்களுக்காகவே... எஸ்.பி.பாலாவின் பழைய பாடல்களைப் பற்றித் தாங்கள் எழுதும் தொடரில் இப்பாடல் இடம் பெறும் போது..
இப்போதே சொல்லி வைக்கிறேன்.
தங்கள் பதிவே ஓர் காவியமாகி விடும்.
நங்கூரம் படத்திலிருந்து காமினி ஃபொன்சேகா, லக்ஷ்மி இணையில் காலத்தால் அழியாத காவியப் பாடல்..
மெல்லிசை மாமணி மற்றும் இலங்கை இசையமைப்பாளர் இணை இசையில்
uvausan
3rd June 2015, 09:29 PM
ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்கு ஒரு சிறு காணிக்கை -
மன்னிக்கவும் , சுருக்கமாக எழுத தெரியவில்லை . பொறுமையாக படிக்கவும் . கிருஷ்ணனை பலரும் பல விதமாக நிந்திப்பதை கேட்ருக்கிறேன் - அவன் நினைத்திருந்தால் , பாரத போரை நிறுத்தி இருக்கலாம் - பல அப்பாவிகளின் உயிர் தப்பி இருக்கும் . அவன் நினைத்திருந்தால் , தர்மரின் சூதாட்டத்தை நிறுத்தி இருக்க முடியும் - அவன் செய்ததெல்லாம் திருட்டுத்தனம் , பொய் , பித்தலாட்டம் என்று சொல்பவர்கள் அதிகம் - நம் தாயையே நம்மால் சிறப்பாக புரிந்துக்கொள்ள முடியவில்லை - கிருஷ்ணனையா புரிந்துகொள்ள போகிறோம் ? இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது இதுவரை புரியாத , தெரியாத பல உண்மைகள் கிருஷ்ணன் வாயில் இருந்தே நாம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் . இந்த பதிவு எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.
கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
(கண்ணனின் அற்புத விளக்கம்)
***************************
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.
இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''
''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.
விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.
அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.
மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:
''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.
அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.
தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.
'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;
என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..
. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.
''அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.
''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன்
. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.
''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.
அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?.
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது
மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று நீ
விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ..
.
என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ
காண்டீபம் நழுவவிட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
துணிந்து நில் தர்மம் வாழ
.
புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப்
புண்ணியம் கணணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க...
.
பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே.
https://youtu.be/PaH4SszP2bY
chinnakkannan
3rd June 2015, 09:36 PM
ராகவேந்தர் சார்
உங்கள் அபூர்வ கானங்கள் ஒவ்வொன்றாய் கேட்டு வருகின்றேன்..
ஒரு பார்வை பார்க்கும் போது மனம் பாடும் நூறு பாட்டு..
மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு// கோடி வார்த்தைகளை சேர்த்து வைத்துக் கொண்ட வெள்ளம்..// நைஸ் இதுவரை கேட்டதில்லை லஷ்மி தெரிகிறது மற்றவர் (லோ பட்ஜெட் படமா..பாவம் லஷ்மி ப்ளவ்ஸ் கிழிஞ்சிருக்கு!)
கல்யாண மாலை சூடிபாட்டும் நன்றாக இருந்தது.. பாஸ்கர், கீர்த்திசுரேஷின் அம்மா(எனக்கு அப்படித்தான் தெரியும்) மேனகா..ம்ம்
கதவைத் தட்டிய மோகினிப் பேய் – போஸ்டர் பார்த்த நினைவு.. வாழ்க்கை ஒரு சீட்டாட்டம், அப்புறம் ஜெய் ஸ்ரீதேவி அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு கேட்டிருக்கிறேன்..
ஜெய்க்காக க் கொடுத்த உள்ளத்தின் கதவுகள் கண்களடா எனக்கு மிகவும் பிடிக்கும்..
ம்ம்
நானும் அடுத்த போஸ்ட்ல ஒரு ஜெய் பாட் போடறேன்.. ஆண்டவா “போட்டாச்’ சா இல்லாம இருக்கணுமே :) a.g kku nandri ragavendra sir :) (innum niraiya paat ketkanum)
rajeshkrv
3rd June 2015, 09:39 PM
ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்கு ஒரு சிறு காணிக்கை -
மன்னிக்கவும் , சுருக்கமாக எழுத தெரியவில்லை . பொறுமையாக படிக்கவும் . கிருஷ்ணனை பலரும் பல விதமாக நிந்திப்பதை கேட்ருக்கிறேன் - அவன் நினைத்திருந்தால் , பாரத போரை நிறுத்தி இருக்கலாம் - பல அப்பாவிகளின் உயிர் தப்பி இருக்கும் . அவன் நினைத்திருந்தால் , தர்மரின் சூதாட்டத்தை நிறுத்தி இருக்க முடியும் - அவன் செய்ததெல்லாம் திருட்டுத்தனம் , பொய் , பித்தலாட்டம் என்று சொல்பவர்கள் அதிகம் - நம் தாயையே நம்மால் சிறப்பாக புரிந்துக்கொள்ள முடியவில்லை - கிருஷ்ணனையா புரிந்துகொள்ள போகிறோம் ? இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது இதுவரை புரியாத , தெரியாத பல உண்மைகள் கிருஷ்ணன் வாயில் இருந்தே நாம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் . இந்த பதிவு எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.
கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
(கண்ணனின் அற்புத விளக்கம்)
***************************
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.
இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''
''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.
விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.
அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.
மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:
''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.
அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.
தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.
'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;
என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..
. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.
''அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.
''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன்
. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.
''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.
அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?.
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது
மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று நீ
விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ..
.
என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ
காண்டீபம் நழுவவிட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
துணிந்து நில் தர்மம் வாழ
.
புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப்
புண்ணியம் கணணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க...
.
பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே.
https://youtu.be/PaH4SszP2bY
ரவி அருமை அருமை. இது எனக்கு எதுக்கு காணிக்கை. எல்லாம் கண்ணனுக்கே....
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ... முத்துராமனின் பதட்டமும் என்.டி.ஆரின் அந்த கம்பீர தோற்றமும் விளக்கமும் அடேயப்பா
இன்றும் கர்ணன் போல் ஒரு திரைப்படம் எடுக்க யாருமிலலை நடிக்கவும் யாருமில்லை
நன்றி நன்றி நன்றி ...
chinnakkannan
3rd June 2015, 10:22 PM
//பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?.//
ரவி, உத்தவ கீதை – உத்தவரின் கேள்வி பதில்களை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி ( நான் காதல்பற்றி போஸ்ட் எழுதிக்கிட்டிருக்கேன்..ம்ம் என் வயசு அப்படி)
பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரெளபதியின் அறச்சீற்றம் தான் நினைவுக்கு வருகிறது..
'நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் – என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை.புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், -- என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; -- புவி
தாங்குந் துருபதன் கன்னிநான். – நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -- பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ!
ம்ம்
என் செய்கேன்?’ என்றே இரைந்தழுதாள். பாண்டவரை
மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்
பின் பின் பின் இறுதியில்..
பலவிதமாய்க் கண்ணனை அழைக்கிறாள்
‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!
காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” -- என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை
நாணழியா திங்குக் காத்தருள்வாய்.
‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,
சரண் – கண்ணா நீயே கதி என்ற பிறகு தான் கண்ணன் வருகிறான்..
பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; -- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ!
*
நீங்கள் சொன்ன பிறகு தான் –முன்பேபடித்திருந்தாலும்- இப்போது பாஞ்சாலி சபதத்தைப் படிக்கையில் – கண்ணன் மீது நம்பிக்கை என்பது கடைசியில் கொள்வதால் கடைசியில் வருகிறான் கண்ணன் என்பது
என்னைக் கொஞ்சம் இலக்கியம் படிக்க வைத்துவிட்டீரய்யா..!
*
உத்தவ கீதை சொன்னீர் – இங்கு
நித்தமும் ஒளியினைப் பெருக்க வந்தீர்..
நன்றி ரவி அகெய்ன்
chinnakkannan
3rd June 2015, 10:59 PM
என்னமோ போங்க - 19
*
என்னமோ வேற என்னவெல்லாமோ எழுதணும்னு நினச்சுருந்தேனா.. ரவியோட உத்தவகீதையைப் படிச்சுட்டு பாஞ்சாலி சபதமும் கொஞ்சம் படிச்சேனா.. என்னாச்சுன்னாக்க…
சிந்துப் பாட்டு எழுதணும்னு ஆசை வந்துடுச்சா.. புத்தகம் எடுத்துப் படிச்சு ரெஃபர் பண்ணி எழுதிப் பார்த்தேன்..
கலைநிலவாய்ப் பொலிந்தவளும் கனிந்து வந்திட – நிலை
கண்டவனும் நிலைகுலைய அழகும் நின்றதே
மலையனைய நெஞ்சகத்தில் காதல் பொங்கிட – அந்த
மன்னவனைப் பாவையெழில் மெல்லத் தின்றதே
சிலையதுவா சொர்ணத்தில் வார்த்த மேனியா – உளம்
சீர்படுத்தும் எனநினைத்தால் கொள்ளை கொள்ளுதே
உலையெனவே உணர்வினையே கொதிக்க வைத்தவள் – இவள்
உடையழகும் இடையழகும் மெல்லக் கிள்ளுதே..
*
சரியா ஓகேயா வந்துருக்கா
இதுக்குப் பொருத்தமா பாட்டுல்லாம் தேடலையே..ஏற்கெனவே எடுத்து லிரிக்ஸும் ஏற்கெனவே அடிச்சு வச்சுருந்தேனா..ஸோ போட்டுடலாமா..
என்னபண்றது சொல்லுங்க எந்தக்காலத்துலயும் இந்தக் காதல் இருக்கே, தொடரும் தொடரும் இது தொடர்கதை போலத் தொடரும்.. என்னமோ போங்க..
முதலில் பாடல் வரிகள்
*
அழகிய தென்னஞ்சோலை
அமைதி உலாவும் மாலை
இளையவன் ஒருவன் வந்தான் அங்கு
இயற்கையில் எதையோ கண்டான்
தொடரும் தொடரும் இது
தொடர்கதை போலத் தொடரும்
குளிர்ந்தது தென்றல் காற்று – இசை
கொடுத்தது தென்னங்கீற்று
எழுந்தது சலங்கையின் ஓசை
நெஞ்சை இழுத்தது ஏதோஆசை
ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
ஓசை வரும் திசை பார்த்தான்
அங்கு ஒருத்தியின் கனிமொழி கேட்டான்
மரகதம் போல் அவள் மேனி – திரு
மஞ்சள் முகம் கொண்ட தேனி
அருகினிலே மெல்ல நடந்தாள் அவன்
அழகிய மார்பினில் விழுந்தாள்
தானே விழுந்ததனாலே அவன்
தழுவிக்கொண்டான் கைகளாலே
மானே கனி இதழாலே முத்தம்
வழங்கெனக் கேட்டான் மேலே
இப்படியும் ஒரு பெண்ணா அதில்
இத்தனை மொழி சொல்லும் கண்ணா
கைப்பிடியில் அவள் கிடந்தாள் இரு
கன்னங்களில் மழை பொழிந்தாள்
இரவினில் ரகசியம் கேட்டு ஓர்
இதயத்தில் இதயத்தைப் போட்டு
விடியும் வரை விளையாட்டு அன்று
முடியவில்லை அந்தப் பாட்டு
தொடரும் தொடரும் இது
தொடர்கதை போலத் தொடரும்
லலலாலலலா
*
https://youtu.be/UPYW9QwGE8E
இளமை தேவிகா, இளமை ஜெய்.. தெய்வீக உறவாம் படம் பேரு..
பின்ன வாரேன் :) (ஹோப் போட்டாச் இல்லை தானே :) )
rajraj
4th June 2015, 02:07 AM
There were some posts about filial bond.
Here is a song about motherly love, except that it is not by a son.
From Mangaiyar Thilakam (1955)
Nee varavilai enil aadharavedhu......
http://www.youtube.com/watch?v=r4H5gzfuBlo
From Bhabi ki chudiyan(1961), Hindi remake of Mangaiyar Thilakam
Tum se hi ghar ghar......
http://www.youtube.com/watch?v=v323AKmk5E0
I still remember Mangaiyar Thilakam after nearly 60 years. Sivaji Ganesan and Padmini act in the movie, but in different roles. Watch the movie if you like. I posted the Tamil song in a different thread a few months back.
Both songs are set to Darbari Kanada, one of my favorite ragas ! :)
uvausan
4th June 2015, 07:21 AM
Good Morning
http://i756.photobucket.com/albums/xx208/basikp/animals/6.jpg (http://media.photobucket.com/user/basikp/media/animals/6.jpg.html)
uvausan
4th June 2015, 07:24 AM
கருவின் கரு - பதிவு 39
சுமக்கும் பாடல்களை சுவைத்தோம் ,ரசித்தோம் - இனி தாயின் இரண்டாவது பருவமான ஜனணி ( குழந்தையை ஈன்றுபவள் ) யை பற்றி தெரிந்து கொள்ளலாமா ?
ஒரு பெண், தாய் என்ற உன்னத நிலையை குழந்தையை பெற்றுக் கொள்வதன் மூலம் தான் அடைகிறாள் . அதற்குள் அவள் சந்திக்க வேண்டிய துன்பங்கள் , விஷம் தோய்த்து வரும் வார்த்தைகள் - மலடி அவள் - அவளை எதையும் தொடச்சொல்லாதே என்று சொல்லும் பஞ்சாங்க உலகம் - அப்பப்பா - எவ்வளவு எதிர்ப்புக்களை அவள் சந்திக்க வேண்டியுள்ளது .. மீறி குழந்தையும் வந்து விட்டால் , ஒ - மீண்டும் பெண் குழந்தைதானா - ஒரு வாரிசு பெற்றுத்தர துப்பில்லை ---- இப்படி தேள் கொட்டும் வார்த்தைகள் - அவள் மட்டும் தான் இதற்க்கு காரணமா ?? யார் கேட்பது ??
குழந்தையை கண்டவுடன் - பட்ட துன்பங்கள் சிறகடித்து பறந்து விடுகின்றன --- பாசம் அங்கே பாலாக சொரிகின்றது --- கனவுகள் அவளை சுற்றி ரீங்காரம் பண்ணுகின்றன - என்ன மகிழ்ச்சி அவள் முகத்தில் !!!! தன்னை மெழுகு வர்த்தியாக பாலை சொரியும் போதே ஆக்கி கொள்கிறாள் - அவள் சுமப்பது தொடர்கின்றது .
பாடல்களில் ஆனந்தம் இருந்தால் கவிதைகள் தானே தேரோட்டும் ---
ஆண்; நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
பெண்;அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
மிகவும் நேர்தியான வரிகள் அற்புதம்.
https://youtu.be/LKOwry1Re5E
ஜனணி தொடர்வாள் -----
uvausan
4th June 2015, 07:29 AM
கருவின் கரு - பதிவு 40:):)
ஜனணியின் தொடர்ச்சி :
யாழ் இனிதா ? குழல் இனிதா ? --- இல்லவே இல்லை - ஒரு குழந்தையின் மழலையை கேளுங்கள் - பிள்ளையாய் இருந்துவிட்டால் தொல்லையே இல்லையே ----
https://youtu.be/F1LUoeNkZFk
uvausan
4th June 2015, 07:34 AM
கருவின் கரு - பதிவு 41
ஜனணியின் தொடர்ச்சி :
அம்மா , குழந்தையின் முதல் வார்த்தை - "அம்மா " அவள் தன் மகனிடம் இருந்து கேட்க்க விரும்பும் கடைசி வார்த்தை ---------
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மழலியால் யாவும் தேனும் மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேனோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஓ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நாள் தோரும் காவல் நின்று
நம்மைக் காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதி ராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வரவேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னைக் கண்டு
இரு தோளில் மாலைச் சூடும் மகராணி யாரோ இங்கு
ஒளிவதற்கு எதிர்காலம் உண்டு
உறவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மீனாட்சி கையில் கொண்டு அரும்பூரும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்
உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரைக் கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கொரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
https://youtu.be/Eex3aDWiFfY
rajeshkrv
4th June 2015, 07:36 AM
கருவின் கரு - பதிவு 41
ஜனணியின் தொடர்ச்சி :
அம்மா , குழந்தையின் முதல் வார்த்தை - "அம்மா " அவள் தன் மகனிடம் இருந்து கேட்க்க விரும்பும் கடைசி வார்த்தை ---------
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மழலியால் யாவும் தேனும் மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேனோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஓ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நாள் தோரும் காவல் நின்று
நம்மைக் காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதி ராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வரவேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னைக் கண்டு
இரு தோளில் மாலைச் சூடும் மகராணி யாரோ இங்கு
ஒளிவதற்கு எதிர்காலம் உண்டு
உறவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மீனாட்சி கையில் கொண்டு அரும்பூரும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்
உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரைக் கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கொரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
https://youtu.be/Eex3aDWiFfY
எனக்கு மிகவும் பிடித்த பாடல். நன்றி ரவி
வாலி ஐயாவின் வரிகளும், சுனந்தாவின் குரலும், சுகன்யாவின் இயல்பான நடிப்பும்.. அபாரம் .. ராஜாவின் இசை ...
uvausan
4th June 2015, 07:39 AM
கருவின் கரு - பதிவு 42
ஜனணியின் தொடர்ச்சி :
அம்மா - நீ அன்று என்னை தனியாக சுமந்தாய் !
அன்று நீ சிரித்தாய் - நான் அழுதேன் !!
இன்று நான் உன்னை சுமக்குகின்றேன் மூன்று பேர் உதவியுடன் !!!
நான் இன்னும் அழுதுகொண்டுதான் அம்மா இருக்கிறேன் !!!!!!!
--------------------
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சக் கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா - இப்ப
கலகலன்னு சிரிச்சிக்கிட்டு என்னப் பாரம்மா
(சின்ன...)
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - குங்குமம்
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - உனக்கு
கொய்யாப்பழம் பறிச்சு தாரேன் அழுகை கூடாது
(சின்ன...)
https://youtu.be/2C4rQHhS5dA
uvausan
4th June 2015, 07:47 AM
கருவின் கரு - பதிவு 43
ஜனணியின் தொடர்ச்சி :
அம்மா - உனக்கு நான் உன் வாழ்க்கை முழுவதும் பாரமாய் இருந்துவிட்டேன் - ஆனால் உன்னை அல்லவோ என் பாரம் என்று நினைத்தேன் - எனக்கு நரகத்திலும் இடம் கிடையாதே தாயே - இந்த பாவத்தை எத்தனை கங்கையில் முழுகி நீக்கிக்கொள்ள போகிறேன் ! திரும்பி வந்து விடம்மா - உன் பாதங்களை என் குருதியால் குளிப்பாட்ட வேண்டும் .....
-----------------------
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதறும்
சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதறும்
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
https://youtu.be/c_3KefG0vxQ
uvausan
4th June 2015, 07:52 AM
ஜனணி தொடர்வாள்
uvausan
4th June 2015, 08:02 AM
Ck - நீங்கள் சொல்வதிலும் , திரு கல்நாயக் சொல்வதிலும் , மிகுந்த முரண்பாடு உள்ளது - காதல் பாடல்களை மட்டும் ஒருவர் போடுவதால் அவர் என்றுமே மார்கண்டேயனாகவும் , பாடல்களில் முதுர்ச்சி இருந்தால் , அந்த ஒருவர் 90 வயதிற்கும் அதிகமாக இருக்ககூடும் என்று நீங்கள் இருவரும் சொல்வது --- எங்கோ உதைக்கின்றதே !! - இந்த சின்ன வயதில் நான் உங்கள் தத்துவங்களை புரிந்துகொள்வேன் என்று நீங்கள் இருவரும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது உங்கள் இருவரின் வயதிற்கும் , அனுபவத்திற்கும் , முதுர்ச்சிக்கும் அழகல்ல - காதலுக்கு வயதில்லை - வாத்தைகளில் பக்குவம் 4 வயதில் கூட வரலாம் என்பதே என்னுடைய வாழ்க்கை அனுபவம் ..:)
அன்புடன்
chinnakkannan
4th June 2015, 10:18 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ரவி .. ஜனனி நைஸ்.. :) ஈவ்னிங்க் கேட்கிறேன் சொல்கிறேன்..
உங்களை யார் வயதானவரென்று சொன்னது..லேட்டஸ்ட் பிங்க் கோட் பார்த்தாலே தெரிகிறதே :) மீன்ஸ் நீங்கள் சமர்த்தா தத்தூஸ் எழுதறீங்க.. எனக்கு அந்த மாரி எழுத வல்லைன்னு தானே சொன்னேன்..எதுக்காக வயசெல்லாம் இழுக்கறீங்க யுவர் ஹானர்..
chinnakkannan
4th June 2015, 10:19 AM
ராஜேஷ்.. கோட்க்கு ரிப்ளை பண்ணும் போது முழுதாகத்தரவேண்டியதில்லையே.. கொஞ்சம் டெலீட் பண்ணி ப் போடுங்களேன்..இது சின்ன ரெக்வஸ்ட்..
rajeshkrv
4th June 2015, 10:25 AM
ராஜேஷ்.. கோட்க்கு ரிப்ளை பண்ணும் போது முழுதாகத்தரவேண்டியதில்லையே.. கொஞ்சம் டெலீட் பண்ணி ப் போடுங்களேன்..இது சின்ன ரெக்வஸ்ட்..
Naan quote panradhe illa. romba naal kazhichu mannava mannavakku thaan potten
ok will delete & put
rajeshkrv
4th June 2015, 10:26 AM
Ck - நீங்கள் சொல்வதிலும் , திரு கல்நாயக் சொல்வதிலும் , மிகுந்த முரண்பாடு உள்ளது - காதல் பாடல்களை மட்டும் ஒருவர் போடுவதால் அவர் என்றுமே மார்கண்டேயனாகவும் , பாடல்களில் முதுர்ச்சி இருந்தால் , அந்த ஒருவர் 90 வயதிற்கும் அதிகமாக இருக்ககூடும் என்று நீங்கள் இருவரும் சொல்வது --- எங்கோ உதைக்கின்றதே !! - இந்த சின்ன வயதில் நான் உங்கள் தத்துவங்களை புரிந்துகொள்வேன் என்று நீங்கள் இருவரும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது உங்கள் இருவரின் வயதிற்கும் , அனுபவத்திற்கும் , முதுர்ச்சிக்கும் அழகல்ல - காதலுக்கு வயதில்லை - வாத்தைகளில் பக்குவம் 4 வயதில் கூட வரலாம் என்பதே என்னுடைய வாழ்க்கை அனுபவம் ..:)
அன்புடன்
அப்ப பக்தி பாடல்கள் போடும் என்னை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்
rajeshkrv
4th June 2015, 10:31 AM
மறந்த பாடல்களின் தொடர்ச்சி
இது சித்ரா வந்த புதிதில் பாடிய பாடல். சித்ராவின் குரல் சன்னமாக இருக்கும். இளையராஜா கொஞ்சம் அடக்கியே வாசிச்சுருப்பார்.
வாலி ஐயாவின் வரிகளில்
மலரே பேசு மெளன மொழி
https://www.youtube.com/watch?v=v22MQ4kf3BE
chinnakkannan
4th June 2015, 11:00 AM
மலரே பேசு மெளன மொழி நல்ல பாடல் ராஜேஷ்.. தாங்க்ஸ்.. கோச்சுக்கலையே..:)
நீர் ஞானசம்பந்தர்ங்காணும்.. மதுரை பொன்னுக்கோனார் பால் கடையில் பசும்பால் அருந்தினீரே! ( நினைவிருக்கா.. கிருஷ்ணன் கோவில் பக்கத்திலன்னு நினைவு)
chinnakkannan
4th June 2015, 11:47 AM
பதினைந்தாம் தேதிவரை வெய்யிலாம்..கடுமையாக இருக்குமாம்.. இன்று 47 நாளை 48 என டிகிரி கூடினாலும் ஹ்யுமிடிட்டியும் 38 வரை இருப்பதால் அனல் பறக்கிறது.. நேற்றிரவு பத்து மணிக்கு கீழே ஃப்ளாட் டை விட்டு எதற்கோ சென்ற போழ்தில் ஒரே சோஓஓகம்.. தக தக தக எனத்தகித்த்து..
வீடுவந்து அடங்கவும் கொஞ்சம் சமயமானது.. படுக்கையில் படுத்தாலும் (பதினொன்றரை) உறக்கம் வரவில்லை. ஏசி தானிருப்பினும் என்னமோ ஒரே மனதுக்குள் குடை குடையென்று ஒரு துன்பம்..
ஏசியின் உறுமல்..அப்புறம் வெளியில் கேட்கும் சில பல நுண்ணிய ஓசைகள் கேட்டவண்ணம் கண்ணை இறுக்க மூட “என்ன சேட்டா.. உறக்கம் வல்லையா” என அன்புடன் கேட்டு வந்த லஷ்மி மேன்னைப் புற்ம் தள்ளித்தூங்கியே விட்டேன்..
இப்போது யோசித்தால் தூக்கம் எப்படி வருகிறது.. ஓசையெல்லாம் ஒதுக்கிக் கான்செண்ட்ரேட் செய்தால் வந்துவிடுகிறது..
இதுவே தேவாரத்திலும் வ்ருகிறது..
ஓசையெலாம் அற்றால் ஒலிக்குந் திருச்சிலம்பின்
ஓசைவழிச் சென்றங் கொத்தொடுங்கில் – ஓசையினின்
அந்தத்தான் அத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து.
ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியே சென்று ஒத்து ஓடுங்கின் ஓசையினின்
அந்தத் தானத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்து ஒத்தான் அத்தான் மகிழ்ந்து.
இறைவன் பரமன்.. உலகில் உள்ளபற்றுகளை விட்டவர்களுக்கு சிவனின் பாதம் கிடைக்கும்..அவர்கள் கீழே வைக்கப் பட்ட மணியின் நாக்கைப் போல அமைதியாக இருப்பர்.
அப்படிப் பட்டவர்களுக்கு என்ன ஆகிறதாம்..
இப்படி பற்றுவிடுபவர்களுக்கு உலகத்தில் உள்ள இக ஓசைகள் ஒரு பொருட்டே அல்ல. அப்படி இறைவனாகிய பரமசிவனின் திருவடிகளில் இருப்பவர்களுக்கு அந்த ப் பரமனின் காற்சிலம்பின் ஒலி மட்டும் தனியாக்க் கேட்குமாம்..
அதுவும் அதைக் கேட்டவண்ணம் இருந்தால், அந்த ஒலியைத்தொடர்ந்தவண்ணம் இருந்தால் தில்லையம்பல ராஜாவாகிய அவனும் உடன் சிவகாமியம்மையும் ஆடும் திரு நடனக் காட்சியைத்தந்து இறைவன் அடியார்களுக்கு அருளுவானாம்..
இப்படி திருக்களிற்றுப்பாடியார் கூறுகிறார்..
*
சிலம்பு பிறந்த்தம்மா சிவலிங்கச் சாலையிலே
பிரம்பு பிறந்த்தம்மா பிச்சாண்டி சன்னிதியில்
உடுக்கை பிறந்த்தம்மா உருத்திராட்ச பூமியிலே
பம்பை பிறந்த்தம்மா பளிங்குமா மண்டபத்தில்.. என்கிறார் கண்ணதாசன்..
*
செங்கலின் வண்டு சிலம்பு புலம்பொடு – என்கிறார் அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர்..
அவரையே பாட வச்சுடலாம்.. கொஞ்சம் வெய்யில் குறைக்கறதுக்கு அபிராமி கிட்டச் சொல்லி சிவன் கிட்ட ச் சொல்லிடுவார்..இல்லியோ
*
https://youtu.be/rY6w6LBxesQ
uvausan
4th June 2015, 01:10 PM
CK -எங்கேயோ ( இந்த வெயில்லிலே ) போயிட்டீங்க !!:smile2:
RAGHAVENDRA
4th June 2015, 03:05 PM
திலக சங்கமம் & Sivaji Ganesan Definition of Style 24
குங்குமம்
வணங்காமுடி மிக உயரமான கட்அவுட்டின் மூலம் தமிழ் சினிமா விளம்பர வரலாற்றிலும் சிவாஜி ரசிகர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் மோகன் ஆர்ட்ஸ் மோகன். நடிகர் திலகத்தின் மேல் உயிரையே வைத்திருந்தார். அது இன்னும் அவருடயை குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வரையிலும் தொடர்வது சிறப்பு.
அவருடைய சொந்த பேனரான ராஜாமணி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த பாசமலர் உலகப் புகழ்பெற்று வரலாற்றில் இடம் பெற்றது. அதனுடைய பிரம்மாண்டமான வெற்றி அந்நாட்களில் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதனுடைய தொடர்ச்சியாக நடிகர் திலகத்தை வைத்து அடுத்த படம் தயாரிக்கத் திட்டமிட்டார் மோகன். இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்க, விறுவிறுப்பான மர்ம நாவலாக அமைந்த கதை படமாக்கப்பட்டு குங்குமம் என்று பெயரிட்டு வெளிவந்த்து. படத்தில் பல சிறப்புகள் அமைந்தன.
1962ம் ஆண்டில் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று நடிகர் திலகம் அமெரிக்க விஜயம் மேற்கொண்டபோது அங்கு பல இடங்களுக்கு சென்று திரையுலக, நாடக மற்றும் வானொலி அறிவியல்களைப் பற்றி கண்டும் கேட்டும் அறிந்து கொண்டார். அவ்வாறு அங்கு அவர் சென்ற பல இடங்களில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அணிவகுக்க குங்குமம் படத்தின் டைட்டில் காட்சிக்காகவே மக்கள் திரையரங்கைப் படமெடுத்தனர். அது மட்டுமின்றி சென்டிமென்டாக குங்குமம் பாடலும் மக்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்று சொல்வது போல், நடிகர் திலகம் பெண் வேடமிட்டு நடித்ததும் இப்படத்தில் தான். இதுவும் இன்று வரை ரசிகர்களால் சிலாகிக்கப் படும் காட்சியாக உள்ளது.
http://i1.ytimg.com/vi/spkV_Gbhs2w/0.jpg
குங்குமம் திரைப்படத்தின் கதைச் சுருக்கம், ஆங்கிலத்தில் -
விக்கிபீடியா இணையதளத்தில் - http://en.wikipedia.org/wiki/Kungumam_(film)
குங்குமம் திரைப்படத்தைப் பற்றி NOV அவர்களின் அருமையான கருத்துரை -
http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1134167&viewfull=1#post1134167
இப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறிப்பாக ஸ்டைல் மிகவும் பிரசித்தி பெற்றது. பூந்தோட்டக் காவல்காரா பாடல் காட்சியில் அவர் இரு கைகளையும் சொடுக்குப் போட்டவாறே நடந்து வரும் காட்சி ரசிகர்களின் பேராதரவை எப்போதும் பெறும், பலத்த கரகோஷம் விண்ணை முட்டும்.
விஜயகுமாரி நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்தாலும் புதுமுகம் சாரதாவின் இளமைத் தோற்றமும் ஈடு கொடுத்து நடித்த சிறப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவ்வாறு பல சிறப்புகளைத் தன்னுள் அடக்கியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது அந்த நடிப்புக் கடவுளின் வித்தியாசமான நடிப்பும் மேனரிஸமும்.
பாடல்களைப் பொறுத்தவரையில் ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியவை.
ஒரே ஒரு பாடல் ... கே.வி.எம். என்ற பெயர் இருக்கும் வரை பாடப்படும் பாடல்... எஸ்.ஜானகி அவர்களுக்கு, சிங்கார வேலனே பாடலுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் புகழ் தேடித்தந்த பாடல்.. தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் பாடல்.. தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டிகளில் போட்டியாளர்களால் தவறாமல் பாடக்கூடிய பாடல்.. இப்படி பல சிறப்புப் பெற்ற பாடல் ... சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ... இப்பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.
சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இன்று நாம் காண இருக்கும் இப்பாடல் காட்சி.
https://www.youtube.com/watch?v=gvBo0RVbInY
பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசையரசி சுசீலா இவர்கள் இணைந்து பாடி, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் காலத்தை வென்று நிற்கும் அட்டகாசமான பாடல் தூங்காத கண்ணென்று ஒன்று. இந்தப் பாடலின பாதிப்பில் ஒரு படத்திற்கு தலைப்பாகவே இப்பல்லவி பயன்பட்டதிலிருந்தே இதனுடைய சிறப்பை உணரலாம்.
வித்தியாசமான ஒலியில் இனிமையாக ஒலிக்கும் வீணையுடன் தொடங்குகிறது பாடல். பின் வயலின் தொடரும் போது மாருதி ராவின் கேமிரா மெல்ல நாயகியை நோக்கிச் செல்கிறது. இயக்குநர்களின் இசை ரசனை இப்பாடல் முழுதும் தெரிகிறது. அதற்கு உதாரணமாக, கிடாரின் தாள லயத்திற்கேற்ப நாயகி ஊஞ்சலாடுவதாக அமைத்திருக்கிறார்கள். நாயகி பல்லவியைப் பாடுகிறாள், தூங்காத கண்ணென்று ஒன்று. நாயகியின் பல்லவி முடிகிறது. ரசிகர்களின் ஆரவாரம் ஆரம்பிக்கிறது.
பக்கவாட்டில் பார்த்தவாறு பாடத்துவங்குகிறார் நடிகர் திலகம். பாடியவாறே மிகவும் நளினமாக மெதுவாக முகத்தை இடப்புறம் திருப்பி நேர் பார்வையில் பாடுகிறார். கைகள் கட்டிக் கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். தான் மாறுவேடத்தில் நடிப்பதற்காக ஏற்றிருக்கும் அந்த ஆசிரியர் வேடத்திற்குரிய மரியாதையை அந்த கைகட்டுதலில் கொண்டு வருகிறார். தந்தாயே நீ என்னைக் கண்டு என்ற வரிகளின் போது காலைக் கீழிறக்கி மீண்டும் இடப்புறம் திரும்பும் ஒய்யாரம். கை கட்டுதல் அப்படியே உள்ளது. இப்போது நாயகி பாட, இவர் பார்வையாளர் திசையில் நம்மைப் பார்த்த கோணத்தில் நடந்து வரும் கம்பீரம்... ஆஹா... உடனே உதட்டைப் பிரிக்காமல் ஒரு புன்முறுவல்.. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்... வினாடி 1.04. ல் இந்த வசீகரம் ... இடம் பெறுகிறது. இப்போது அவர் முன்னால் அதே கம்பீரத்துடன் நடக்க, காமிரா பின் தொடர்கிறது, நாமும் தான். கதவைத் திறக்கிறார். ... கட்...
இப்போது இந்த 1.11 விநாடியில் அந்த ராட்சஸ ஸ்டைல் களேபரம் துவங்குகிறது.. கதவைத் திறக்கிறார்.. முற்றாத இரவொன்றில் நான் வாட என்ற வரிகளைப் பாடும் போது அந்த உடம்பை ஸ்டைலாக ஆட்டியவாறு நடந்து வரும் அழகு, முடியாத கதையொன்றை நீ பேச,, இந்த வரிகளின் போது குனிந்து கைகளை கட்டை மேல் வைத்து அவளைப் பார்க்க முற்படும் போது ,, எதற்கு தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்துக கொள்கிறாய், விட்டு விடு எனச் சொல்லும் பொருளில் தன் பார்வையை வீசுவது, ஸ்டைலின் உச்சகட்டமாய் இடது கையை முகவாய்க்கட்டை அருகில் கொண்டு செல்லும் அழகு, பூவோடு சேர்ந்து மணக்கும் நாரைப் போல், புதுமுகம் என்ற பதட்டம் சிறிதும் இன்றி நாயகி சாரதா அதே ஸ்டைலில் அட்டகாசமாக தன் உணர்வை இசையரசியின் ஜீவனுள்ள குரலில் வெளிப்படுத்துகிறார். அடுத்த பல்லவி தொடங்க, நாயகிக்கு பதிலாக இவர் பாடுகிறார், தீராத விளையாட்டு திரைபோட்டு விளையாடி நாம் காணும் உலகிங்கு ஒன்று இந்த வரிகளில் உள்ள உள்ளர்த்தத்தைக் கூட தன் விழிகளிலேயே அதுவும் அந்தக் கண்ணாடியைத் தாண்டி நமக்கு உணர்த்தும் உச்சகட்ட நடிப்பினை அளிக்க இவர் ஒருவரால் தான் முடியும். ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களுக்கு இந்த இடத்தில் சிறப்பு சபாஷ்.
இப்பாடலில் திரை இசைத் திலகத்தின் உத்தி மிகவும் பாராட்டுக்குரியது, புதுமையானதும் கூட, பாடலின் இனிமை, பாடல் வரிகளில் உள்ள ஆழம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரணத்திற்கும் பல்லவிக்கும் இடையே மிகச் சிறிய நேரமே , சில வினாடிகளே, இடையிசை இடம் பெறுகிறது, அதுவும் பெரும்பாலும் வீணை வயலின் புல்லாங்குழல் மட்டுமே...
அடுத்து.. சூப்பரோ சூப்பர்..
வெகுதூரம் நீ சென்று நின்றாலும் விழி மட்டும் தனியாக வந்தாலும் என்று முதன் முறை பாடும் போது ஸ்டைலாக நடந்து வந்து அமர்வது, கண்ணாடியைக் கழட்டுவது, கண்ணைத் துடைப்பது, இரண்டாம் முறை பாடும் போது அதே உணர்வு, வேகத்துடன் அப்படியே ஒருக்களித்து சாய்வது, வலது கை படுக்கையில் ஊன்றிக் கொள்ள, இடது கை ஒரு ஃப்ரேமை மட்டும் பிடித்துக் கொள்கிறது. இதைத் தொடர்வது இன்னும் அட்டகாசம். ஒரு கையில் அந்த ஒரு ஃபிரேமைப் பிடித்து ஸ்டைலாக ஆட்டியவாறு, ஒய்யாரமாக படுத்திருக்கும் அந்த போஸில் அவர் பாடும் போது நாம் எங்கோ போய் விடுகிறோம். அதுவும் அந்த விழிமட்டும் தனியாக வந்தாலும் என்கிற வரியைப் பாடும் போது கண்ணாடி இப்படியும் அப்படியும் அசையும் போது, அந்தக் கண்ணாடியைக் கூட ரசிக்க வைத்து விடுகிறார் மனிதர். கண்ணாடிக்கும் உயிர் கொடுக்கும் மனிதர் இவர் மட்டும் தான்.. தொடர்ந்து நாயகி சரணத்தை முடித்து வைக்க, இறுதியாக பல்லவி தொடங்குகிறது. ஒருக்களிப்பில் இருந்து எழுகிறார்.. மேஜைக்கருகில் செல்கிறார். விக்கைக் கழட்டுகிறார்.
விக்கைக் கழட்டினால் பார்க்க சகிக்காது என்பார்கள். .. ஆனால் இவரோ ... விக்கைக் கழட்டிய பிறகு இன்னும் அழகாக அல்லவோ காட்சியளிக்கிறார்.
பாடல் முடிகிறது.. ஆனால் நாம் .. இன்னும் அதிலிருந்து மீளவில்லையே..
கை தானாக இந்தப் பாடல் காட்சியை REPLAY செய்யும் வகையில் க்ளிக் செய்கிறதே...
vasudevan31355
4th June 2015, 03:18 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
5
அடுத்து பாலாவின் இன்னொரு ரசமான பாடல். 'மாலதி' திரைப்படத்திலிருந்து.
அதற்கு முன்னால் 'மாலதி' படத்தின் முன்னோட்டம்.
'மாலதி' (1970)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-7.jpg
நடிகர்கள்: ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சரோஜாதேவி, வரலக்ஷ்மி, நாகேஷ், சுந்தரராஜன், 'தேங்காய்' சீனிவாசன்
படம் வெளி வந்த ஆண்டு: 29-10-1970
தயாரிப்பு:-சித்ரா புரொடக்ஷ்ன்ஸ்
பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன்
மூலக்கதை:-கோமதி சுப்ரமணியம்
இசை: "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்.
திரைக்கதை,வசனம், இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
'இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த படம். 'காதல் மன்ன'னும், 'கலை நிலா'வும் இணைந்து நடித்த குடும்பச் சித்திரம்.
'கதை:
ஜெமினியும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்பவசத்தால் சரோஜாதேவி ரவியைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. ரவி குடிகாரனாகவும், பெண் பித்தனாகவும் அலைய, சரோஜாதேவி பொறுமை காத்து பழைய காதலனையும் ஆறுதல்படுத்தி, தன் குடிகாரக் கணவரைத் திருத்த சபதமெடுத்து, அவனால் பற்பல இன்னல்களை அனுபவித்து இறுதியில் அவனைத் திருத்தி வெற்றிவாகை சூடுவதே கதை.
இயக்குனர் திலகத்தின் குடும்ப செண்டிமெண்ட் வசனங்கள் ஆழாமாயும், கருத்துள்ளதாகவும் இருந்தது.
http://padamhosting.me/out.php/i71911_vlcsnap199310.png
ரவியும் குடிகாரனாகவும் பெண் பித்தனாகவும் நன்றாகச் செய்திருப்பார். தான் செய்பவை தவறுகள் என மனைவி உணர்த்தியபின் உணர்ந்து மீண்டும் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதும், தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் மனைவியிடம் புலம்புவதும் ரவிக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்த இடங்கள். அதை அவரும் நன்றாகப் புரிந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார். ஜெமினி ஆரம்ப கால சரோஜாதேவியின் காதலனாக வந்து காதல் லீலைகளில் ஈடுபடுவது வழக்கம் போல. 'சிவந்தமண்' மேஜிக் ராதிகாவும் உண்டு. இவரும் K.S.G.யின் நிறையப் படங்களில் நடித்துள்ளார். (சின்னஞ்சிறு உலகம்' படத்தில் கே. ஆர் விஜயாவுக்கு அடுத்தபடியான ஹீரோயினாக வருவார். 'புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி'...என்ற பாடல் கூட அவருக்கு கோஷ்டியுடன் உண்டு).
ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் அபிநயசரஸ்வதிக்கு படம் நெடுக சுமைதாங்கியாய் வேலை. சற்று வயது முதிர்ந்த இரண்டாவது ரவுண்ட் வந்த சரோஜாதேவியை இதில் காணலாம். எனவே டூயட் சீன்கள் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் இந்தக் கால ஹீரோயின்களை விட நன்றாகவே சோபிப்பார். (இந்தக் கால இளசுகளின் சுடிதாரை அப்போதே அணிந்து அசத்தியிருப்பார்) தேங்காய் ரவியின் நண்பனாக வந்து சகல பழக்கங்களையும் ரவிக்கு கற்றுத் தருகிறார். அவருக்கு அது ச்சும்மா..என்பது போல.
K.S.G.யின் ஆஸ்தான நடிகை வரலக்ஷ்மி இல்லாமலா?... நாகேஷ் கிச்சு கிச்சு மூட்டுகிறார். மேஜரும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-13.jpg
மீண்டும் ஒரு சாகா வரம் பெற்ற மார்க்கண்டேய டூயட். பாலா சுசீலா இணைவில்.
இந்தப் பாடலை கேட்க கேட்க கற்பனையையும் மீறிய சுகம்தான். சுகமோ சுகம்தான்.
அடித்தார் இந்த தடவையும் லக்கி பிரைஸ் ஜெமினி. இயற்கை என்னும் இளைய கன்னி துணையுடன் காஞ்சனாவுடன் 'சாந்தி நிலைய'த்தில் ஆட்டம் போட்டவர் 'மாலதி'யில் அபிநய சரஸ்வதியுடன் ஸ்டுடியோ கடற்கரை செட்டில் 'கற்பனை கை வந்தபடி' ஆட்டம் போடுகிறார். இப்போதும் அவருக்கு பாலா குரல்.
ராஜேஷ்ஜியின் செல்ல நாயகிக்கு அவருடைய செல்லப் பாடகி பின்னணி.
ஒரு ஈச்ச மரம், இரண்டு சவுக்கு மரம், இரண்டு மூன்று மணல் திட்டுக்கள் ஒரு மீன் வலை, நான்கைந்து கட்டுமரம் என்று அன்றைய வழக்கமான கடற்கரை செட். கஞ்ச செட். ஆனால் உறுத்தாது. கே.எஸ்.ஜி சிக்கனக்காரர். வசனம் வண்டி வண்டியாக எழுதுவதில் ரொம்ப தாரளக்காரர்.:) ஆனால் மனுஷர் பக்திப் படமென்றால் பணத்தை 'கற்பக' விருட்சமாக வாரி இறைப்பார். (ஆதி பராசக்தி, தசாவதாரம்) போட்ட முதலீட்டை மூன்றாக எடுப்பார். அப்புறம் பாலாபிஷேகம், அடுக்குமல்லி என்று கருப்பு வெள்ளையிலும் பணம் கறப்பார்.
'சிக்'கென்ற உடையில் சரோஜாதேவி. எப்போதும் அழகுதான். எளிமையாக ஜெமினி. செட்டை சுற்றி ஓட்டம்.
பாலா வழக்கத்தை விடவும் இனிமை. முன்னால் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் மனிதர் இன்னும் பின்னி குழைவுகளைக் கொடுப்பார்.
http://i.ytimg.com/vi/f2hoKR5rdfE/hqdefault.jpg
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.
சுகமோ சுகம்... சுகமோ சுகம்.
'கற்பனையோ கை வந்ததோ' என்பதை இப்பாடல் முழுதும் அவர் உச்சரிக்கும் விதமே அலாதி. 'கற்பனையோ' என்னும் போது 'க'வுக்கும், 'ப'வுக்கும் நன்றாக அழுத்தம் கொடுத்து, மற்ற வார்த்தைகளுக்கும் தேவையான அழுத்தத்தை விட இன்னும் அதிகம் கொடுத்து (நல்ல பேஸ் வாய்சில் ஆரம்பிப்பார்) அலம்பல் பண்ணி நம்மை இன்பப் புலம்பல் புலம்ப விடுவார் பாலா.
(சுகமோ சுகம்... சுகமோ சுகம் என்ற குழைவில் சுகம் நிஜமாகவே தாலாட்டும்)
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.
சுகமோ சுகம்... சுகமோ சுகம்.
அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்
('நீ பார்த்த பார்வை'... சற்றே சுசீலா வார்த்தைகளை இழுத்து உச்சரிப்பார். இது ஒரு தனி சுகம்)
அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்!
உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே
இல்லை கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே
(பனங் கள்ளிலா? தென்னங் கள்ளிலா?:) காதலி கையில் விழுவது போதை தரும் கள்ளில் விழுவது போலவாம். கண்ணதாசா! நீயெல்லாம் இறந்திருக்க வேண்டுமா? இருந்திருக்க வேண்டாமா?)
யாரும் சொல்லித் தெரியாத இன்பக் கலையே
அதை அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே
பார்த்தது...
போதுமா?
கேட்டது...
வேண்டுமா?
சுகமோ சுகம்...
சுகமோ சுகம்...
சுகமோ சுகம்.
(இப்போது வரும் இடையிசையை எப்படி புகழ்வது? டிரம்பெட்டின் அந்த மயக்கும் ஓசை. விசு விஸ்வரூபம் எடுப்பார் இந்த இடத்தில். கவனித்துக் கேளுங்கள்.)
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னை சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னை சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
என்னைக் கட்டி வைத்த விலங்கோ
கண்கள் இரண்டும்
(காதலன் கண்கள் இரண்டும் இவளை முழுதும் பூட்டும் விலங்காம் இவளுக்கு)
அங்கு வெட்டி வைத்த கரும்போ
கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே
என்னைக் கொடுத்தேன்
(அடடா! கவிஞன் 'நங்கூரம்' போட்டு நிற்கிறாரய்யா இந்த வரியில். காதலியைப் பார்த்து பார்த்து ரசித்து ரசித்தே அவளிடம் தன்னைக் கொடுத்து விட்டானாம். பார்த்ததற்கே இப்படி என்றால்...)
அங்கு காதலென்னும்
அமுதை அள்ளிக் குடித்தேன்.
பார்த்தது...
போதுமா?
கேட்டது...
வேண்டுமோ?
சுகமோ சுகம்...
சுகமோ சுகம்...
சுகமோ சுகம்.
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.
சுகமோ சுகம்... சுகமோ சுகம்.
வரிகளும், இசையும், பாலாவும், சுசீலாவும் போட்டி போடுகின்றனர். ஆரோக்கியமான போட்டி. வெற்றி நமக்கு. கோடையில் நுங்கு நீர் போல, வாடையில் மல்லிகை போல, வசந்தத்தில் தென்றல் போல, குளிரில் குமுட்டி அடுப்பைப் போல எல்லாக் காலங்களிலும் எல்லையில்லாக் களிப்பை நமக்கு ஊட்டும் அதியற்புத பாடல் இது.
https://youtu.be/f2hoKR5rdfE
kalnayak
4th June 2015, 03:53 PM
பூவின் பாடல் 23: "பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்த பூப்பூ பாடல் பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கிய படத்திலிருந்து. அழகான கதாநாயகன் அரவிந்த சுவாமி என்ன, இந்தியிலிருந்து வரும் அழகு தேவதை கஜோல் என்ன, நடனப் புயல் பிரபு தேவா என்ன, இசைக்கு ஏ. ஆர். ரகுமான் என்ன. இத்தோடு பிரபலமாகிக்கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் முதல் படம். ஏவிஎம்மின் பிரமாண்ட தயாரிப்பு. எதிர்பார்ப்பு எகிறாமல் என்ன செய்யும்? அப்புறம் என்ன வழக்கம் போல்தான் என்றாலும் பாடல்கள் ஓரளவு எதிர்பார்ப்பை திருப்தி படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த பூப்பூக்கும் ஓசை பாடல் வைரமுத்து எழுத (வரிகளைப் பார்த்தாலே சொல்ல முடிகிறதே), பாடகி சுஜாதா பாட, கல்லூரி மாணவிகள் ஒரு நடன நிகழ்ச்சிக்கு பாடி ஆடுவதாக வந்தது. இளமைதான். என்ன சி.க.வை நினைவு படுத்துவது போலவும் ஒரு வரி இருக்கிறது. "பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்". இதெல்லாம் சரி இந்த வரிகளுக்கு யாராவது பொருள் விளக்கம் தந்தால் சந்தோஷப்படுவேன். பாருங்களேன் சி.க.வே கொடுத்திடுவார்.
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே
கோரி கோரி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராகே தையா
சரி இந்த பாடல் என்ன சங்கீதத்திற்கு விளக்கமா கொடுக்கிறது? என்னமோ போங்க (சி.க.விற்கு நன்றி)
பாடல் வரிகள் இதோ:
-------------------------------
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
பூப்பூக்கும் ஓசை..
பட்சிகளின் குக்குக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப் பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம் அட சரிகமபதநிசரீ..
பூப்பூக்கும் ஓசை..
கண் தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்கானா தூரத்தில் சுதி சேறும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே
கோரி கோரி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராகே தையா
பூப்பூக்கும் ஓசை..
சிட் சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுளர்த்தும் ஓசை சங்கீதம்
கரைக்கொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைத்தட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே
கோரி கோரி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராகே தையா
பூப்பூக்கும் ஓசை..
காணொளி இதோ:
---------------------------
https://www.youtube.com/watch?v=HTNlQqVeVxI
எதிர்பார்த்து படம் பார்த்தவர்களுக்கு மின்சாரக்கனவாக இருந்தது.
chinnakkannan
4th June 2015, 03:53 PM
ரவி நன்றி :)
ராகவேந்தர் சார்.. நேற்றே கண்டுபிடித்து அதுபற்றி எழுதிஆனால் அது சம்பந்தப்படாத அமலா பாடல் போட்டு மறுபடி டெலீட்டும் செய்துவிட்டேன்.. தூங்காத கண்ணென்று ஒன்று.. எனக்கும் மிகப்பிடித்த பாடல் (குங்குமம் பார்த்தது மதுரை செல்லூர் போத்திராஜாவில்) முற்றாத இரவொன்றில் நான் வாட- என கல்லூரிப்பருவத்தில் ஒரு கதை எழுதிய நினைவு.. நன்றாக எழுதிஉள்ளீர்கள் நன்றி..
வாசுங்ணா..
அழகிய தென்னஞ்சோலை - நேற்று தேடிய போது ம்ம அர்கைவ்ஸில் தென்பட்வில்லை..இன்று பார்த்தால் ஆரம்ப பாகத்தில் 222வில் கொடுத்திருக்கிறீர்கள்..எப்படி பார்க்க விட்டேன் பட் நான் லிரிக்ஸ்லாம் கொடுத்திருக்கேனாக்கும்..
மாலதி பற்றி நீங்கள் பதிந்ததாக நினைவு.. அதே ஆர்கைவ்ஸில் நீங்கள் எழுதியதை ப் படித்ததாக நினைவு..பட் இந்தப் பாடலா தெரியவில்லை..
//பார்த்தது...
போதுமா?
கேட்டது...
வேண்டுமா? //
நல்ல பாட்டு. ஆனா கரும்பு கருப்பால்ல இருக்கும்.. ச.ஜோ கருப்ப்ங்கறாரா ரவிச்சந்திரன் :)
//வரிகளும், இசையும், பாலாவும், சுசீலாவும் போட்டி போடுகின்றனர். ஆரோக்கியமான போட்டி. வெற்றி நமக்கு. கோடையில் நுங்கு நீர் போல, வாடையில் மல்லிகை போல, வசந்தத்தில் தென்றல் போல, குளிரில் குமுட்டி அடுப்பைப் போல எல்லாக் காலங்களிலும் எல்லையில்லாக் களிப்பை நமக்கு ஊட்டும் அதியற்புத பாடல் இது.// செல்ஃபோனுக்கு அப்பா தரும் ரீசார்ஜைப் போல, -
. வாடையில் மல்லிகை நல்லாவா இருக்கும் ப்ரெளன் கலர்னா ஆகும்.. கோடையில் நுங்கா.. அப்படின்னா என்ன..குளிரில் குமுட்டி அடுப்பு ஹை ஹீட்டர்லாம் வந்துடுத்தே :)
நன்னா எழுதியிருக்கேள்.. நன்றி ( குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துல என்ன சொல்வாங்க ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளிவிடுஙகன்னு..ஆனா ஒங்க இடைவெளி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு ..அடிக்கடி எழுதுங்கோ :) )
chinnakkannan
4th June 2015, 03:56 PM
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை// வாரும் கல் நாயக்.. நேத்துக்கு வருத்வருத் வருத்தமெல்லாம் பட்டிருந்தீங்க நோ ப்ராப்ளம்..
பாருங்க ஓசைக்குஇந்தப் பாட் போடலாம்னு நினைச்சு க் கடைசியில அபிராமி ப்ட்டர் கிட்டபோய்ட்டேன்.. பார்த்த நீங்க குடுத்துட்டீங்க..அழகான பாட்.. படம் அவ்வளவா எனக்குப் பிடிக்கலை.. நன்றி..
gkrishna
4th June 2015, 04:54 PM
அன்பு வாஸ்,கல்ஸ்,கலைஸ்,ராஜேஸ்,ராஜ்ஸ்,ரவிஸ்,கன்ஸ் (சி கே)
சில பல சொந்த மற்றும் அலுவலக பளுவினால் ஜோதியில் சங்கமிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
பதிவுகள் அனைத்துமே அருமை . எதை சொல்ல எதை விட.
இன்று பாடும் நிலா பாலுவின் பிறந்த நாள் . வாசுவின் மாலதி பாடல் அதற்கு வாழ்த்தாக அமைந்து விட்டது. இதில் பாலாவின் இன்னொரு பாடல் கூட உண்டு 'சிடு சிடு சிடு சிடுவென எங்கே போவோம் . சிடு சிடு சிடு சிடுவென எங்கும் போவோம் ' செட் போட்டு காதல் மன்னன் அபிநய சரஸ்வதி ஸ்கூட்டர் ஓட்டுவது போல் ஒரு பாடல் வரும். ரவி அபிநய சரஸ்வதி ஜோடி rare combination .
http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/74/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF_dvd. jpg/222px-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF_dvd. jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-12.jpg
சி கே கூறியது போல் வாசுவின் முத்தான பதிவு மாலதி பற்றியது
பதிவு 2121 ஜூலை 2014 'மாலதி' (1970) ஒரு சிறப்பு பிளாஷ்பேக்
1970 தீபாவளி ரிலீஸ் -நடிகர் திலகத்தின் சொர்க்கம்,எங்கிருந்தோ வந்தாள்,காவிய தலைவி ,மாலதி எல்லாமே நெல்லையில்
சொர்க்கம் - நெல்லை பாபுலர்
எங்கிருந்தோ வந்தாள் - நெல்லை ரத்னா
காவிய தலைவி - நெல்லை பார்வதி
மாலதி - நெல்லை லக்ஷ்மி
நன்றி வாசு நல்லதொரு மலரும் நினைவுகளை அசை போட வைத்ததற்கு
gkrishna
4th June 2015, 05:20 PM
இன்று காலை எனக்கு என் நண்பர் (அவரை நாங்கள் செல்லமாய் கூப்பிடுவது அம்பி (துணிவே துணை அசோகன் அழைப்பது போல் கூபிடுவோம்-அம்பி அண்ணனை அள அள) அனுப்பி இருந்த மின் அஞ்சல் .ஒரு ப்ளாக் படித்ததாகவும் உடன் என் :mrgreen: நினைவு வந்ததாகவும் இதை நகல் எடுத்து அனுப்பி இருக்கிறார் .
நண்பர் கலை மற்றும் வினோத் அவர்களுக்கு சமர்ப்பணம் இந்த பதிவு
http://i48.tinypic.com/jgp088.jpg
இது வெளிவராத படம் - நம்ம வாத்யார் என்றும் சொல்லி உள்ளார் .
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இணைந்து நடித்த 28 படங்களின் பட்டியல்
மக்கள் திலகமும் , புரட்சித் தலைவியும் இணைந்து நடித்துள்ள படங்கள் 28 , 14 வண்ணப் படங்களும் , 14 கருப்பு வெள்ளை படங்களிலும் நடித்த படங்கள் வெளி வந்துள்ளது .
28 படங்களின் பெயர்களும் , அவர்கள் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர்களும் முறையே :
09/07/1965 - ஆயிரத்தில் ஒருவன்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( மணிமாறன் / பூங்கொடி )
10/09/1965 - கன்னித்தாய்
கதாப்பாத்திரங்களின்பெயர் : ( சரவணன் / சரசா )
18/02/1966 - முகராசி
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( ராஜ்/ஜெயா )
27/05/1966- சந்திரோதயம்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( சந்திரன்/தேவி )
16/09/1966 - தனிப்பிறவி
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( முத்தையா/மாலதி )
19/05/1967 - அரச கட்டளை
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( விஜயன்/மதனா )
07/09/1967 - காவல் காரன்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( மணி /சுசீலா )
11/01/1968 - ரகசிய போலீஸ் 115
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( ராமு /லீலா )
23/02/1968 - தேர்த்திருவிழா
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( சரவணன் / வள்ளி )
15/03/1968 - குடியிருந்த கோயில்
கதாப்பாத்திரங்களின் பெயர் : (ஆனந்த் /ஜெயா )
24/04/1968 - கண்ணன் என் காதலன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கண்ணன்/மல்லிகா )
27/06/1968 - புதிய பூமி
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கதிரவன்/ கண்ணம்மா )
15/03/1968 - கணவன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( முருகன்/ராணி )
20/09/1968 - ஒளி விளக்கு
கதாப்பாத்திரங்களின் பெயர் -( முத்து / கீதா )
21/10/1968 - காதல் வாகனம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( பாலு / ராதா )
01/05/1969 - அடிமைப்பெண்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( வேங்கைய்யன் - ஜீவா )
07/01/1969 - நம் நாடு
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( துரை / அம்மு )
14/01/1970 - மாட்டுகாரவேலன்
கதாப்பாத்திரங்களின் பெயர் -( வேலன் / லலிதா )
12/05/1970 - என் அண்ணன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( ரங்கன் / வள்ளி )
29/08/1970 - தேடி வந்த மாப்பிள்ளை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( சங்கர் / உமா )
09/10/1970 - எங்கள் தங்கம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( தங்கம் / கலா )
26/01/1971 - குமரிக்கோட்டம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கோபால் / குமரி )
18/09/1971 - நீரும் நெருப்பும்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( மணிவண்ணன் / காஞ்சனா )
09/12/1971 - ஒரு தாய் மக்கள்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கண்ணன் / ராதா )
13/04/1972 - ராமன் தேடிய சீதை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( ராமன் / சீதா )
15/09/1972 - அன்னமிட்ட கை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( துரைராஜ் / சீதா )
10/08/1973 - பட்டிக்காட்டுப் பொன்னையா
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( பொன்னையா / கண்ணம்மா )
JamesFague
4th June 2015, 05:30 PM
Courtesy: Tamil Hindu
எஸ்.பி. பாலசுப்ரமணியம் 10
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றவரும் பன்முகத் திறன் கொண்டவருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S.P.Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜுன் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் (1946). தந்தை ஒரு இசைக் கலைஞர். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். காளஹஸ்தி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யும் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யு.சி.யும் பயின்றார். இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
# தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல் பரிசை வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் முதலில் வந்த இவருக்கு வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமல் இருப்பதற்காக மூன்றாம் ஆண்டு வேண்டுமென்றே இரண்டாவது பரிசு என அறிவித்தனர்.
# அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, இவர்தான் எல்லோரையும்விட சிறப்பாக பாடினார் என்று நிர்வாகிகளிடம் வாதாடி முதல் பரிசைப் பெற்றுத் தந்தார். வெள்ளிக் கோப்பையும் கிடைத்தது.
# சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் தொழில் கல்வி பயின்றார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடினார். தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். தமிழில் முதன் முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார்.
# ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.
# முறையாகக் கர்நாடக இசையைப் பயிலாத இவர், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்காக தேசிய விருதைப் பெற்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவது இவரது சிறப்பம்சம்.
# 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.
# 1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.
# கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
# 60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது.
chinnakkannan
4th June 2015, 05:40 PM
கிருஷ்ணா..வாங்க வாங்க ஆக்சுவலா இன்னிக்கு நைட் போய்ட்டுக் கேக்கணும்னு இருந்தேன்.. நினைத்தேன் வந்தீர் நூறுவயது..:) பாவம் நீங்க இல்லாம ஒண்டியா பக்கெட்டோட எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா வாசு :)
வி.வீ ல அந்த வாடி ரமணி யார்னுகேட்டேன்..யாருமே (யாரு.. யாரோ :) ) கண்டுக்கல.. நீங்களாவது கண்டுண்டு சொல்லுங்கோ..:)
chinnakkannan
4th June 2015, 05:43 PM
ஒரு சின் விளக்கம்.. நுங்கா அப்படின்னா என்ன - என்பதற்கு அதை அருந்தி ஒரு சில யுகங்கள் ஆகிவிட்டதென அர்த்தம் :)
vasudevan31355
4th June 2015, 06:46 PM
//நல்ல பாட்டு. ஆனா கரும்பு கருப்பால்ல இருக்கும்.. ச.ஜோ கருப்ப்ங்கறாரா ரவிச்சந்திரன்//
சின்னா!
பதிவை ஒழுங்கா படித்தீரா இல்லையா?
"ச.ஜோ கருப்ப்ங்கறாரா ரவிச்சந்திரன்" அப்படின்னு போட்டிருக்கிறீரே! சின்னப் புள்ளைக்கும் புரியற மாதிரி ஜெமினி பாடலின் நாயகன் அப்படின்னு எழுதியிருக்கேனே! எப்படி திடீர்னு ரவிச்சந்திரன் முளைத்தார்?:)
இப்போ புரியுதா ஏன் மார்க் கம்மியா வாங்குகிறீர்கள் என்று?:) ஒழுங்கா படிக்கணும். தெரியுதா?:)
vasudevan31355
4th June 2015, 06:49 PM
//வாடையில் மல்லிகை நல்லாவா இருக்கும் ப்ரெளன் கலர்னா ஆகும்//
நான் வாசத்தை சொன்னேனாக்கும். வாடையில் வாடா மல்லிகை ரொம்ப மணக்கும் தெரியுமோ! பிராக்டிகலா பார்த்ததில்லையா?:)
vasudevan31355
4th June 2015, 06:56 PM
நன்னா எழுதியிருக்கேள்.. நன்றி ( குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துல என்ன சொல்வாங்க ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளிவிடுஙகன்னு..ஆனா ஒங்க இடைவெளி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு ..அடிக்கடி எழுதுங்கோ )
அண்ணா! நேற்று கல்நாயக் என் நிலைமையை அழகாக தன் பதிவில் உணர்த்தியிருந்தார். அதற்கு என்னுடைய பதிலைப் பார்த்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.
இந்த ஹோம் ஓர்க்கும் ஒழுங்கா பண்ணால.:) இன்னொரு முறை இது மாதிரி செஞ்சா பேரெண்ட்ஸ் கூட்டிட்டு வரவேண்டியிருக்கும்.:)
நேரமே இல்லை சின்னா! தெர்மலில் ஒர்க் ஜாஸ்தி வாட்டி எடுக்கிறார்கள். சல்பர் பூமி. அனல் தாங்கல.:(
ஆனா போட்டுக்கிட்டுதானே இருக்கேன்.
Richardsof
4th June 2015, 06:58 PM
Krishna sir
thanks for your detailed list about our makkal thilagam mgr- jaya movies list with characters name.
vasudevan31355
4th June 2015, 06:59 PM
வெயிலை குறைக்க எஸ்.வி.சுப்பையாகிட்ட சிபாரிசு பண்ணதுக்கு நன்றி சின்னா.:) உனக்கு நிகர் வருமோ!
vasudevan31355
4th June 2015, 07:06 PM
ஹாய் கிருஷ்ணா!
எங்கே ஒளிந்து கொண்டீர்? நான்கைந்து நாட்களாய்க் காணோம்?
நீங்க இல்லாம பக்கெட்ட தூக்க முடியல ஒண்டியாய்.:)
மாலதி பற்றிய பின்னூட்ட பதிவுக்கு நன்றி! உங்கள் பழைய நினைவுகளுக்கும் நன்றி! தம்பி அம்பிக்கும் நன்றி!
//28 படங்களின் பெயர்களும் , அவர்கள் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர்களும் முறையே//
நல்ல நினைவூட்டல் கிருஷ்ணா! நன்றி! திரு எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் தோன்று அரிய புகைப்படம் பற்றி அறிய நானும் ஆவலாய் உள்ளேன். கலை சார் உதவுவார் என்று நம்புகிறேன்.
vasudevan31355
4th June 2015, 07:11 PM
வாசுதேவன்
பாலா பிறந்த நாளில் அவரைப் பற்றி தமிழ் ஹிந்துவில் வெளிவந்த கட்டுரையை இங்கே பதித்ததற்கு மிக நன்றி!
vasudevan31355
4th June 2015, 07:12 PM
வினோத் சார்!
வாங்கோ! வாங்கோ! நன்னா இருக்கேளா? சாப்ட்டேளா? சுகம்தானே! உங்களை வரவழைக்க கிருஷ்ணாதான் லாயக்கு.
vasudevan31355
4th June 2015, 07:16 PM
இந்தாங்க கண்ணா!
வயிறு குளிர சாப்பிடுங்க.
http://www.thehindu.com/multimedia/dynamic/01866/KA28NUNGU_G7S8MKVS_1866063f.jpg
https://lh3.googleusercontent.com/_tQ-YR5eXQJc/TdYK3N3gioI/AAAAAAAAReA/q3l_xLNJCAc/s640/005.JPG
http://pratheep.com/wp-content/uploads/2012/05/nungu-kernel1.jpg
http://1.bp.blogspot.com/-WEKvGHj1_28/VWRswcaQJAI/AAAAAAAALKE/XMysnxpCotE/s1600/IMG_8040.JPG
Russellzlc
4th June 2015, 07:50 PM
வாசு சார்,
அட்டகாசம். அருமையான பாடலை கொடுத்து ரசிக்கவைத்துள்ளீர்கள். என்ன ஒரு கடின உழைப்பு. குறைச்சலாக பார்த்தாலும் 2 மணி நேரம் பிடித்திருக்கும் என்பது என் கணிப்பு. இன்று திரு.எஸ்.பி.பி. அவர்களின் பிறந்தநாள். அதற்காக அவர் பல்லாண்டுகள் ‘சுகமோ சுகம்’ என்று வாழ அவரது பாடல் மூலமே வாழ்த்தியிருக்கிறீர்கள்.
//(பனங் கள்ளிலா? தென்னங் கள்ளிலா? காதலி கையில் விழுவது போதை தரும் கள்ளில் விழுவது போலவாம். கண்ணதாசா! நீயெல்லாம் இறந்திருக்க வேண்டுமா? இருந்திருக்க வேண்டாமா?) //
என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். நன்றி.
கிருஷ்ணா சார் பதிவிட்டுள்ள ஸ்டில், ‘என் அண்ணனு’க்குப் பிறகு வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்து போட்டோ ஷூட்டோடு நின்று போன ‘நம்ம வாத்தியார்’ என்று பெயரிடப்பட்ட படம். பின்னர், வீனஸ் பிக்சர்ஸார் மக்கள் திலகத்தை வைத்து ஊருக்கு உழைப்பவன் படத்தை தயாரித்தனர்.
ராகவேந்திரா சார்,
தூங்காத கண்ணென்று ஒன்று பாடலுக்கு தங்களின் விளக்கமும் பிரமாதம். ரசித்துப் படித்தேன். உங்கள் உழைப்பும் வணங்கத்தக்கது. நன்றி.
சின்னக்கண்ணன்,
அபிராமி பட்டர், தேவாரம் விளக்கம் அற்புதம். ஆமாம், இரவு 10 மணிக்கு மேல் எதற்கு ஃபிளாட்டை விட்டு கீழே சென்றீர்?
கிருஷ்ணா சார்,
மக்கள் திலகம், செல்வி ஜெயலலிதா ஸ்டில் அட்டகாசம். படங்கள் விவரங்களுக்கும் நன்றி. தலைப்பும் சூப்பர்.
கல்நாயக்,
டூ விட்டது சரியாகி விட்டதா? ரொம்ப கோபித்துக் கொள்வதால், உங்களைவிட நான் சிறியவன் என்று ஒப்புக் கொள்கிறேன்(அறிவில்).
ரவி சார்,
உங்களுக்கு 6 வயதுக்கு மேல் தாண்டியிருக்க சாத்தியமில்லையா? ஆனாலும் இவ்வளவு ஆசை கூடாது சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
uvausan
4th June 2015, 07:57 PM
CK/கலை - உங்களுக்காக இந்த பதிவு .
கல்யாண மந்திரங்கள்
கல்யாணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் தெரியாததால் இளைஞர்களும் பெண்களும் அதுபற்றி அசட்டையாய் இருக்கின்றனர். மந்திரங்களின் அர்த்தங்களை விஷயம் தெரிந்த ஒருவர் கல்யாணத்திற்கு முன்பே விளக்கிச் சொல்லிவிட்டால், மணமக்கள் புரிந்து கொண்டு, அக்கறையுடன் சடங்குகளைச் செய்வார்கள். இதே முறையை உபநயனம் மற்றும் இதர காரியங்களுக்கும் கையாளலாம்.
- ஐயன்.
சென்னையில் ஒரு வாலிபருக்கு திருமணம். இருபத்தைந்து வயது போல் இருப்பவர். பெரியவாள் மேல் அவ்வளவு பக்தி, மரியாதை.
முஹுர்த்தம் அதிகாலை. முடிந்தவுடன் அவசர அவசரமாக ஒரு டாக்ஸி பிடித்து நேராக காஞ்சிபுரம், ஸ்ரீ மடம்.
மணக் கோலத்திலேயே, ஐயனிடம் ஆசிவாங்கிவிட துடிப்பு, பையனிடம்.
9 மணிபோல் ஸ்ரீமடம் வந்தாயிற்று.
அதுவரை எல்லோரிடமும் சிரித்து பேசிக்கொண்டு தான் இருந்தார் ஐயன். இந்த புதுமண தம்பதியிடம் மட்டும் முகம் கொடுத்து பேசவில்லை. அதுமட்டுமல்ல. மற்றவரிடம் பேசுகிறார். இவர்கள் எதுவும் பேசினால் மட்டும், முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
வந்தவர்களுக்கோ பெருத்த ஏமாற்றம். கவலை, வருத்தம். மணநாள் அதுவுமாக ஏன் ஐயன் நம்மிடம் மட்டும் முகம் கொடுத்து பேசவில்லை. சின்னஞ்சிறியவர்கள் தானே?
கூட இருந்தவர்கள் சொல்லிப் பார்த்தனர். 'குழந்தைக்கு கல்யாணம். பெரியவா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க பட்டணத்திலே இருந்து டாக்ஸி பிடிச்சு வந்திருக்கா. பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்'.
10 மணி போல் ஆனது. தெய்வம் பேசிற்று.
'என்னைப் பார்க்கணும் ன்னு சாஸ்த்ரிகள் கிட்டே மந்திரத்தை எல்லாம் வேக வேகமா சொல்லச் சொல்லிட்டு இங்கே வந்தானாக்கும். வேத மந்திரத்துக்கு இல்லாத அனுக்ரஹ விசேஷம் என்கிட்டே மட்டும் இருக்கா என்ன?'.
குழந்தைகள் துடியாய் துடித்தனர்.
மனம் இரங்கினாள் வேத மாதா.
'அப்பாக்குட்டி சாஸ்த்ரிகளை நான் கூப்டேன்னு அழைச்சிண்டு வாங்கோ'.
அப்பாக்குட்டி சாஸ்த்ரிகள் ஸ்ரீ மடத்தின் வேத விற்பன்னர்.
என்னவோ, ஏதோ என்று அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். பெரியவா கூப்பிடுகிறார் என்றால் ஸ்ரீ மடத்தில் எல்லோருக்குமே ஒரு பதற்றம் இருக்கும்.
'நீ என்ன பண்றே? என்ன பார்க்கற அவசரத்திலே, இந்த குழந்தேள், கல்யாண மந்த்ரத்தை கூட முழுசா பண்ணாம இங்கே வந்துட்டா. இந்த குழந்தேளை அழைச்சிண்டு போய் அத்தனை கல்யாண மந்தரத்தையும் சொல்லி, அதுக்கு அர்த்தத்தையும் சொல்லிக் கொடுங்கோ'.
பிராயசித்தமாக திரும்பவும் மந்திரம் காதால் கேட்பது என்று சொல்லி இருக்கிறது.
அப்பா குட்டி சாஸ்த்ரிகளும் ஐயன் இட்ட கட்டளையை 10 மணி முதல் மாலை 4 வரை ரொம்ப கர்ம ஸ்ரத்தையாக நிறைவேற்றி பின்னரே குழந்தைகளை திரும்பவும் ஐயனிடம் அழைத்து வந்தார்.
'வேதம் ஒங்களை ஆசிர்வாதம் பண்றதைவிடவா நான் ஆசிர்வாதம் பண்ணிடப் போறேன். சாஸ்திரம், சம்ப்ரதாயம், வேதம் இதுக்கெல்லாம் ஸ்ரத்தையா இரு. என்னோட ஆசிர்வாதம் எப்பவும் ஒன் கூடவே இருக்கும். என்னைத் தேடிண்டு பார்க்க ஸ்ரமப் பட்டுண்டு வரவே வேண்டாம்.'
அதே சமயம், ஏகாம்பரேஸ்வரர் சந்நிதியில் இருந்து ஒன்றுக்கு இரண்டாக ரெட்டை மாலை பிரசாதம் வந்தது.
'நீ அவன் கழுத்துலே போடு. அவன் ஒன் கழுத்துலே போடட்டும். இதைவிட ஒசந்ததா வேற என்ன பிரசாதம் ஒங்களுக்கு நான் தரமுடியும்' என்றார் வேதம் வாழ வந்த வித்தகர்.
குழந்தைகள் கதறித் தீர்த்துவிட்டன.
இப்படியும் ஒரு காருண்யமா?
கருணைக்கு கையும், காலும் முளைத்தால் அது தான் மஹா பெரியவா...
https://youtu.be/NQzGsG7Ru8w
uvausan
4th June 2015, 08:03 PM
Krishna sir
thanks for your detailed list about our makkal thilagam mgr- jaya movies list with characters name.
வினோத் சார் , மக்கள் திலகதைப்பற்றி ஏதாவது போட்டால்லொழிய இந்த பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டீர்கள் போல் உள்ளதே - உங்களை வரவழைக்க வேண்டுமென்றால் எங்கள் மற்ற எந்தவிதமான பதிவுகளாலும் முடியாது போலிருக்கின்றது .. எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லை ....
uvausan
4th June 2015, 08:15 PM
இன்று திரியின் சுவை எல்லோருடைய sugar அளவையும் தாண்டியிருக்கும் . ஒருவருக்குமே மற்றவர்களின் பதிவுகளை படிக்க கண்டிப்பாக இன்று நேரம் இருந்திருக்க முடியாது ( என்னையும் சேர்த்துதான் ) - அடேயப்பா வாசுவின் " (நான்)பாலா பிரளயத்தையே உண்டு பண்ணுகின்றது - நொங்குவின் சுவையுடன் .. கல்நாயக் அவர்களின் பூவின் பாடல்கள் நறுமணத்தை இந்த திரியில் அள்ளி வீசியவண்ணம் உள்ளது - என்னமோ போங்க ! எதை சொல்வது எதை எழுதுவது என்றே புரியவில்லை - சற்றே காற்று அடித்து ஓயிந்து விட்டது என்று நினைக்கும் போது , ராஜேஷின் அருமை பதிவுகள் , கிருஷ்னாஜியின் பிரவேசம் , ராகவேந்தரின் குங்கும திலக சங்கமம் - கலையின் நன்றி பதிவு , CK வின் பதிவுகள் ------- திருஷ்ட்டி சுத்தி போடுங்கள் வாசு , இந்த திரிக்கு .
rajeshkrv
4th June 2015, 08:23 PM
மலரே பேசு மெளன மொழி நல்ல பாடல் ராஜேஷ்.. தாங்க்ஸ்.. கோச்சுக்கலையே..:)
நீர் ஞானசம்பந்தர்ங்காணும்.. மதுரை பொன்னுக்கோனார் பால் கடையில் பசும்பால் அருந்தினீரே! ( நினைவிருக்கா.. கிருஷ்ணன் கோவில் பக்கத்திலன்னு நினைவு)
ஏன் இல்லை . நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறதே.. ஹி ஹி:)
rajeshkrv
4th June 2015, 08:30 PM
வாசு ஜி
பாலா பாடல்களின் தொடர் அருமை. குறிப்பாக மாலதி.. அருமையான பாடல்கள்
செல்ல நாயகி செல்லப்பாடகி தூள் காம்பினேஷன்.. வயது ஒன்றும் முதிர்ந்துவிடவில்லை. இன்று முதிர்ந்ததெல்லாம் இளசு என்று மார்தட்டிக்கொண்டு வருகின்றன .. நீங்க வேற.. சரி சரி சூடு தனியத்தான் நுங்கு கொடுத்துவிட்டீரே பின்னே என் காதிலிருந்து புகை வராது வராது...
ரவி, சி.க மற்றும் கிருஷ்ண விஜ்யம் மீண்டும் என தூள் கிளப்புகிறது திரி.
ராகவ் ஜியின் திலக சங்கமம் அபாரம்.
இந்த குசும்பு கோபாலைத்தான் காணவில்லை :)
vasudevan31355
4th June 2015, 08:44 PM
இந்த குசும்பு கோபாலைத்தான் காணவில்லை :)
உமக்கு நேரம் சரியில்லையோ?:)
vasudevan31355
4th June 2015, 08:45 PM
வாசு ஜி
பாலா பாடல்களின் தொடர் அருமை. குறிப்பாக மாலதி.. அருமையான பாடல்கள்
செல்ல நாயகி செல்லப்பாடகி தூள் காம்பினேஷன்.. வயது ஒன்றும் முதிர்ந்துவிடவில்லை. இன்று முதிர்ந்ததெல்லாம் இளசு என்று மார்தட்டிக்கொண்டு வருகின்றன .. நீங்க வேற.. சரி சரி சூடு தனியத்தான் நுங்கு கொடுத்துவிட்டீரே பின்னே என் காதிலிருந்து புகை வராது வராது...
ரவி, சி.க மற்றும் கிருஷ்ண விஜ்யம் மீண்டும் என தூள் கிளப்புகிறது திரி.
ராகவ் ஜியின் திலக சங்கமம் அபாரம்.
நன்றி ஜி!
vasudevan31355
4th June 2015, 08:53 PM
இன்று திரியின் சுவை எல்லோருடைய sugar அளவையும் தாண்டியிருக்கும் . ஒருவருக்குமே மற்றவர்களின் பதிவுகளை படிக்க கண்டிப்பாக இன்று நேரம் இருந்திருக்க முடியாது ( என்னையும் சேர்த்துதான் ) - அடேயப்பா வாசுவின் " (நான்)பாலா பிரளயத்தையே உண்டு பண்ணுகின்றது - நொங்குவின் சுவையுடன் .. கல்நாயக் அவர்களின் பூவின் பாடல்கள் நறுமணத்தை இந்த திரியில் அள்ளி வீசியவண்ணம் உள்ளது - என்னமோ போங்க ! எதை சொல்வது எதை எழுதுவது என்றே புரியவில்லை - சற்றே காற்று அடித்து ஓயிந்து விட்டது என்று நினைக்கும் போது , ராஜேஷின் அருமை பதிவுகள் , கிருஷ்னாஜியின் பிரவேசம் , ராகவேந்தரின் குங்கும திலக சங்கமம் - கலையின் நன்றி பதிவு , CK வின் பதிவுகள் ------- திருஷ்ட்டி சுத்தி போடுங்கள் வாசு , இந்த திரிக்கு .
உண்மைதான் ரவி சர். இன்று எல்லோருமே அசத்தோ அசத்து என்று அசத்தி விட்டார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரித்தான சிறப்பு முத்திரைகளோடு. முழுக்க படிக்க நேரம் பிடிக்கும். நம் திரி சரித்திரம் படைக்கும்.
உங்களுடையது மட்டும் என்ன? குறைந்ததா? உங்கள் உழைப்பு எல்லோரையும் விட இன்னும் அதிகமாயிற்றே. அதுவும் ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு விஷயத்தை போதனையை அருமையான பாடல்களோடு தருகின்றனவே. அதுவும் வேற்று மொழிப் பாடல்கள் அட்டகாசம். கருவிற்கு மொழி ஏது? இப்படி எழுத ரவிக்கு இணை ஏது?
உங்களிடம் எனக்குப் பிடித்ததே இந்த அபார உழைப்பும், உற்சாகமும்தான். எழுத்தில் மேன்மை கூடி ஜொலிக்கிறது. பெரிய பதிவுகள் நிரம்ப நேரம் பிடிக்கும். ஆனால் எவ்வளவு அருமையான விஷயங்கள் சிறு சிறு கதைகளுடன் பொருத்தமாக தங்கள் தொடரில் பாடல்களுடன் போதனையுடன் கிடைக்கின்றன!
நிஜமாகவே அனுபவித்துப் படிக்கிறேன் ரவி. தொடருங்கள் இது போலவே.
vasudevan31355
4th June 2015, 08:55 PM
ஏன் இல்லை . நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறதே.. ஹி ஹி:)
பால் பொங்கும் பருவம்.:)
vasudevan31355
4th June 2015, 08:59 PM
கலை சார்,
நம்ம வாத்தியார் தகவல்களுக்கு நன்றி! பாராட்டுக்களுக்கும்தான்.
rajeshkrv
4th June 2015, 09:04 PM
என்ன ஜி
நலம்தானே
vasudevan31355
4th June 2015, 09:31 PM
கல்ஸ்,
நீங்கள் பூ.. என்று ஊதித் தள்ளும் பூவின் பாடல்களில் நிறைய வித்தியாசங்களைத் தருகிறீர்கள். புது நெல்லு புது நாத்து பாடல் இன்னும் என்னை வாட்டுகிறது.
மின்சாரக் கனவு பாடலும் நன்று.
உங்கள் ஒரு வரி பன்ச்சும் அருமை.
//எதிர்பார்த்து படம் பார்த்தவர்களுக்கு மின்சாரக்கனவாக இருந்தது//
இன்னொன்று தெரியுமா? எனக்கு காஜலை அறவே பிடிக்காது. ஆனால் இந்திப்பட உலகம் தூக்கி வைத்து ஆடியது. நீண்ட முகம். நர்கீசும் இதே கேஸ்தான். ஆனால் நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்வார். நீளமுகம் பார்த்தாலே நீண்ட தூரம் ஓடி விடுவேன். அழகு என்றால் அரை டஜன் என்ன விலை என்பவர் காஜல். அவரை எப்படி ரசித்தார்கள் என்பது ஆச்சர்யம் எனக்கு. அவரை தவறாக சொல்ல வில்லை. என் ரசனையைத் தான் சொல்கிறேன்.
நீள்மூஞ்சி நடிகைகள் லிஸ்ட் இருந்தா நண்பர்கள் கொடுங்கோ. இன்னிக்கு எல்லோருக்கும் செம வொர்க் இல்லையா? பார்த்து பிடிச்சவங்க ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. பிடிக்காதவங்க சாபம் விடாதீங்க.
நீளமுக நாயகிகள்.
காஜல்
http://celebrityroutine.com/wp-content/uploads/2013/09/Kajol-Bra-Size.jpg
http://www.tellychakkar.com/sites/www.tellychakkar.com/files/styles/display_665x429/public/images/story/2010/02/03/kajol600.jpg?itok=BLI38Pul
நர்கீஸ்
http://www.fantastikasia.net/IMG/jpg/stupeur2_centre.jpg
http://www.bollyspice.com/images/feature-images/11may_nargis10.jpg
பிரியா ஆனந்த்
http://imggal.com/images/2013/02/20/Priya20Anand20in20123420Movie20Photos202A6JnL.jpg
http://www.breezemasti.com/gallery/data/media/335/priya-anand-tamil-actress-stills-11.jpg
லக்ஷ்மி ராய்
http://www.idlebrain.com/news/functions1/lakshmirai-launch-shreenikethan/images/lakshmirai-launch-shreenikethan29.jpg
http://iphonewallpapers-hd.com/thumbs/hottest_lakshmi_rai_picture-t2.jpg
நம்ம குதிரை
http://cinemachaat.files.wordpress.com/2012/08/sangarshana_nalini-as-rekha.png
இந்தி நளினி ஜெய்வந்த்
http://cineplot.com/gallery/wp-content/uploads/2012/11/nalini-jaywant-new.jpg
vasudevan31355
4th June 2015, 09:38 PM
என்ன ஜி
நலம்தானே
nalameji! bakthi thodar attakaasam. theriyaatha paadalkalum venume!
chinnakkannan
4th June 2015, 09:48 PM
//நல்ல பாட்டு. ஆனா கரும்பு கருப்பால்ல இருக்கும்.. ச.ஜோ கருப்ப்ங்கறாரா ரவிச்சந்திரன்//
சின்னா!
பதிவை ஒழுங்கா படித்தீரா இல்லையா?
"ச.ஜோ கருப்ப்ங்கறாரா ரவிச்சந்திரன்" அப்படின்னு போட்டிருக்கிறீரே! சின்னப் புள்ளைக்கும் புரியற மாதிரி ஜெமினி பாடலின் நாயகன் அப்படின்னு எழுதியிருக்கேனே! எப்படி திடீர்னு ரவிச்சந்திரன் முளைத்தார்?:)
இப்போ புரியுதா ஏன் மார்க் கம்மியா வாங்குகிறீர்கள் என்று?:) ஒழுங்கா படிக்கணும். தெரியுதா?:)
இல்லீங்ணா அது டைப்போ.. ஜெ க்குப் பதிலா ரவின்னு எழுதிட்டேன்..ஷமிக்கணும்..சந்துலசிந்துபாடறச்சே இப்படி மிஸ்டேக் வரும்..வீடுன்னா - ராஜ ராஜ சோழனோட காலத்து நீதிபதி மாதிரி இரண்டு பேர் கூற்றையும் பல படி கேட்டு முடிவெடுப்பது போல- எழுதுவதை மறுபடி செக் பண்ணி போஸ்ட் பண்ணதுக்கப்புறமுமொரு முறை செக் பண்ணுவேன் - சொல் குற்றம் பொருள் குற்றம் இருக்கிறதா என ..அப்புறம் வாசகங்கள் தேன்சிந்துதே வானம் ஜெய்சித்ரா சிவகுமார் மாதிரி நெருக்க்கமாக இருப்பதாக ப் பட்டால்.. கொஞ்சம் தொப் தொப் நு எண்டர் பட்டனைத் தட்டி ஸ்பேஸ் விடுவேன்..
இதை அடித்த போது திரும்பிப் படிக்கக் கூட ச் சந்தர்ப்பம் கிடைகக்வில்லை..அதான்..
அப்புறம்
வாவ் நுங்கு எவ்ளோ காலம் ஆயிடுச்சு தெரியுமா வாசு சார்..மிக்க நன்றி..! இந்த த் தடவை கிடைக்குதா பாக்கணும்..:)
*
அதாகப் பட்டது மதுரை மேலூர் சாலையில் கொஞ்சம் உள்வாங்கி (ஒத்தக்கடையோ ஒத்தக்கடை தாண்டியோ என நினைக்கிறேன்) ஒரு சாலை போகும்..அந்த சாலையில் ஓரிரு கிலோமீட்டர்கள் நடந்தால் திருமோகூர் வரும் என நினைவு..
பற்பலவருடஙக்ளுக்கு முன்னால் என்ன ஆச்சுன்னாக்க
ஒரு யுவன் யுவதி அப்புறம் கூட யுவனின் அக்கா அத்திம் பேர் அப்புறம் அவர்களது பெண் குழந்தை..யுவதியுடன் ( நல்லவேளை) யாரும் கூட வரவில்லை.. பஸ்ஸுக்கு டைமாகும் என ஒத்தக்கடையிலிருந்து (அல்லதுவேறு ஊரா நினைவில்லை)கொஞ்சம் பொடி நடையாக அ ந்தக் காலைவேளையில் அவ்வளவாக வெயில் இல்லாததால் நடக்க ஆரம்பித்தோம்.. இரண்டு பக்கமும் தென்னை மரங்களாயிருந்த நினைவு..இப்பவும் இருக்கிறதா எனத்தெரியாது..
அ,அ, கு மூவரும் கொஞ்சம் முன்னால் போக பின்னால் கலருடன்(மதுரை பாஷை) அடியேன்..(அப்போதெல்லாம் கடல வழக்கில் இல்லை) அந்த யுவதி அத்திம்பேரின் தூரத்துச் சொந்தம் என நினைக்கிறேன்..வீடு அனேகமாய் தவிட்டுச் சந்தை என நினைவு( மீனாட்சி தியேட்டருக்கு அடுத்த ஸ்டாப் இப்பவும் இருக்கிறதா தெரியாது)
என்ன பேசினோம் எனக் கேட்டால் ஒன்றும் சுவாரஸ்யமில்லை..அந்தப் பெண் செய்ண்ட் ஜோசப் 10வதா ப்ளஸ் ஒண்ணா நினைவில்லை.. நான் கல்லூரி இரண்டாம் வருடம் என நினைவு.. வழக்கம் போல காலேஜ் , அவள் அவளுடைய ஸ்கூல் - அரட்டை வம்பு எனப் பேசியதாய் நினைவு.. சப்பென்று இருக்கில்லை..இல்லை இல்லை
டபக்கென்று அவள் தடுக்கிவிழ நான் தாங்கிக் கொள்ளலாம் என யோசிப்பதற்குள் அவளே சமாளித்து நின்று விட்டாள் (இடியட்- அதாவது நான்) என்ன ஆச்சும்மா ( ஒண்ணும் ஜாஸ்தில்லாம் பதட்டப் படலைகேட்டேளா) ஸ் ஆ என்றாள் ..கண்ணில் கொஞ்சம் நீர்..காரணம் கால் கட்டை விரல்.. கல்.. அவள் அதன் மேல் மோதியதால் என்னவோ சற்றுத் தொலைவில் சிரித்தபடி விழுந்திருக்க அவளுக்கு வலி அண்ட் கா க விரலில் கொஞ்சம் ரத்தம் சின்ன மனோரஞ்சிதப் பூ கணக்காக பூத்திருந்ததா..
கொண்டுவந்திருந்த கூடையை இறக்கி வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் என் கர்ச்சீப்பை நனைத்து ( அக்கா அத்திம் கொஞ்சம் தள்ளியே போயிருந்தார்கள்..குழந்தை எதற்காகவோ அழுததால் ஜோ ஜோ என்றவண்ணம்) கட்டச் சொல்லி பாவம் அந்த பாவாடை சட்டை தாவணிப் பெண் சற்றே விந்தி விந்தி நடக்க என் மனமும் விந்தியது..
என்ன செய்யலாம் என்னும்பொழுது கண்களில் தட்டுப் பட்டான் அவன்..
எங்கிருந்தோ வந்தான் ரங்கா ரங்கா என்பது போல சைக்கிள் பின் கட்டப்பட்ட கீற்றுக்களில் கர்வமாய் அமர்ந்திருக்கும் நுங்குகள்..
அய்யா உங்களுக்கும் தரச் சொன்னாருங்க..
தொலைவில் ஒரு நிழலில் நின்றோ அமர்ந்தோ இருந்த அத்திம்பேரைக் கைகாட்ட சரி என்றேன்/றோம்
சும்மா சொல்லக் கூடாதுங்க்.. நாங்க ரெண்டு இளசுகளும் இளசு இளசா நுங்கை வெட்டி வெட்டி அவன் கொடுக்க டபக் டபக்கென (அவள் செப்பு வாய் நான் என் அவதார வாய்..! முழுங்கினோம்..எவ்ளோ நல்லா இருந்தது தெரியுமா..
அதன் பின் ஒரு நாலைந்து தடவை தான் சாப்பிட்டிருப்பேன் நுங்கு.. அவ்ளோ டேஸ்ட் வந்ததில்லை..
அப்புறம் கோவில் போய் பெருமாள் சேவித்து கட்டிக்கொண்டிருந்த புளியோதரை தயிர்சாதம் சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்டுத் திரும்பினோம்..
அந்த யுவதியை அப்புறம் ஓரிரு முறை பார்த்திருப்பேன் அக்கா வீட்டில். அம்புட்டு தான்.. ஒரு மெல்லிய புன்சிரிப்பு கொஞ்சம் ஹாய் ..அப்புறம் ஒரு வருடத்தில் சென்னைக்கு அவள் அப்பாவிற்கு மாற்றல் என க் கேள்வி.. நோ மீட்டிங் ஆஃப்டர் வேர்ட்ஸ்.. கொஞ்சம் தகவல் மட்டும் கிடைத்தது.. பிஎஸ்ஸி படித்து சமர்த்தாய்க்கல்யாணம் கட்டிக்கிட்டு பம்பாயோ டெல்லியோபோனதாக..
முகம் கூட மறந்துவிட்டது.. கூட நடந்தபோது தாவணியில் கிளம்பிய சுகந்தம் மட்டும் நினைவில்.
இப்படியா க் கிளறி விடறது.. கண்ணா பாவம்.. :)
*
https://youtu.be/8cs59MDTu_w
chinnakkannan
4th June 2015, 10:00 PM
அபிராமி பட்டர், தேவாரம் விளக்கம் அற்புதம். ஆமாம், இரவு 10 மணிக்கு மேல் எதற்கு ஃபிளாட்டை விட்டு கீழே சென்றீர்?// கீழே தாங்க்ணா ஓமான் எக்ஸ்ப்ரஸ்னு ஒரு ஹோட்டல் இருக்கு பார்சல் வாங்கச் சென்றேனாக்கும்.. இப்படியா பாப்பாவைச் சந்தேகப்படறது :)
ரவி.. பரமாச்சார்யாள் பற்றிய கட்டுரைக்கு நன்றி.. பாலகுமாரன் எழுதிய தலையணைப் பூக்கள் நாவல் படித்திருக்கிறீர்களா..அதில் அவரைத் தாமரை என்று தான் விளிப்பார் பாலகுமாரன்.. நாவலின் பின்புலத்தில் தாமரை இருப்பார்.. முடிந்தால் படித்துப் பாருங்கள்
chinnakkannan
4th June 2015, 10:04 PM
//நம்ம குதிரை// முரளிராஜேஷ் வாங்க..இது மதுரை ஜெய்ஹிந்த்புரம் குதிரையாக்கும்..எவ்ளோ ஈஸியா நெய்வேலிங்கறாங்க:)
தனுஜாவோட பொண் தானே கஜோல் ( என் சித்தப்பா சொல்லியிருக்கார்னு நினைவு.. அல்லது தப்பாக் கூட இருக்கும்!)
யாரோ ஜப்பானிய குருபேரை வெச்சுருப்பாங்கள்ள யா.. மூன்மூன் சென் அவங்க டாட்டர்ஸ் தானே ரீமா சென் ரியாசென்..அவஙகளும் நீளமுகமா.. (ம்ம் நினைவுக்கே வரமாட்டேங்குது..இந்த ச் சூட்டில.. யாராவது பக்கெட் வாட்டர் விட்டாப் பரவாயில்லை :) )
vasudevan31355
4th June 2015, 10:05 PM
//சும்மா சொல்லக் கூடாதுங்க்.. நாங்க ரெண்டு இளசுகளும் இளசு இளசா நுங்கை வெட்டி வெட்டி அவன் கொடுக்க டபக் டபக்கென (அவள் செப்பு வாய் நான் என் அவதார வாய்..! முழுங்கினோம்..எவ்ளோ நல்லா இருந்தது தெரியுமா..//
நுங்கு போட்டா நொங்கெடுக்கிற கதையா சொல்றீரு:)...ஆமா இந்தக் கதை எந்தப் படமாம்?
vasudevan31355
4th June 2015, 10:07 PM
//யாராவது பக்கெட் வாட்டர் விட்டாப் பரவாயில்லை//
அண்ணாச்சி!
இளிச்சவாயன் என்னைத்தானே சொல்றீக.:)
vasudevan31355
4th June 2015, 10:10 PM
http://cdn.shopify.com/s/files/1/0254/8311/products/PAR6F5CMFL1TQ7TQ3MK168UQL8OBPU_grande.jpeg?v=13783 60349
chinnakkannan
4th June 2015, 10:13 PM
ஆமா இந்தக் கதை எந்தப் படமாம்?// :) சொல்ல மாட்டேனே :)
vasudevan31355
4th June 2015, 10:13 PM
ராகவேந்திரன் சார்,
அருமையான பதிவுக்கு நன்றி! பொறுமையாக அனுபவித்துப் படித்து விட்டு எழுதுகிறேன்.
vasudevan31355
4th June 2015, 10:17 PM
மூன்மூன் சென், ரியாசென்.
http://images.indianexpress.com/2014/02/riyamoonmoon.jpg
http://www.missmalini.com/wp-content/uploads/2012/03/ummmm2.jpg
vasudevan31355
4th June 2015, 10:18 PM
kajol with tanuja
http://economictimes.indiatimes.com/thumb/msid-7844562,width-640,resizemode-4/kajol-and-tanuja.jpg
http://filmsofindia.in/images/newsimages/kajol%20tanuja%20tanisha.jpg
rajeshkrv
4th June 2015, 10:19 PM
nalameji! bakthi thodar attakaasam. theriyaatha paadalkalum venume!
தெரியாதோ நோக்கு தெரியாதோ .. எந்த பாடல் தான் உமக்கு தெரியாது.
சி.க ஆமாம் கஜோ உவேக் .. அசிங்கமான மூஞ்சி .. அவரையும் அழகாக்கி கொண்டாடினார்கள். ஆம்பள மாதிரி ஒரு மூஞ்சி .. என்ன செய்ய ..
பத்தாக்குறைக்கு அஜய் தேவ்கனும் ஒரு கன்றாவி மூஞ்சி வந்த புதிதில். அந்த கண் மட்டும்தான். பின்னாளில் அவராவது கொஞ்சம் நடிக்க கற்று கொண்டார்
ஜக்ம், பகத்சிங் என்று தன்னை மாற்றிக்கொண்டார். கஜோல் மாறவே இல்லை. மை நேம் இஸ் கான் வரை அதே லொட லொட மற்றும் குரங்கு மூஞ்சி.
அதென்னமோ அந்த கரன் ஜோகரைத்தான் கட்டி வைத்து உதைக்கனும்.. இத்து போன ராணி முகர்ஜீ, கஜோல் போன்றோரை மாத்தி மாத்தி தன் படங்களில் போட்டு அவர்களையுக் அழகான நடிகைகளான ஸ்ரீதேவி , மாதுரி ரேஞ்சுக்கு காட்டி புகழ் பெற வைத்தான்.. இடியட்
rajeshkrv
4th June 2015, 10:21 PM
அய்யோ தனுஜா பெயரே வேண்டாம்... கஜோலைவிட 100 மடங்கு சுமார் .. இவரும் கட்டைக்குரலுடன் ஆம்பள மாதிரி ஒரு தோற்றம். எப்படி ஹீரோயின் ஆனார் என்பது இன்றும் கேள்விக்குறி.
RAGHAVENDRA
4th June 2015, 10:39 PM
அபர்ணா சென் - மூணு மூணு சென் - ரியா சென் ..
அதென்ன மூணு மூணு சென் .. டோட்டல் போட்டா வேற மாதிரி யாகிடும்னு வாய்ப்பாட்டையே பேரா வெச்சிட்டாங்களாக்கும்...
rajeshkrv
4th June 2015, 10:44 PM
வாசு ஜி
உமக்கு ஒரு அருமையான மலையாளப்பாடல்
இசையரசி ஜமாய்க்கும் பாடல் இதோ
சாரதா, ஷீலா மற்றும் பிரேம் நசீர்
https://www.youtube.com/watch?v=JGnyPvW1QrM
rajeshkrv
4th June 2015, 10:45 PM
அபர்ணா சென் - மூணு மூணு சென் - ரியா சென் ..
அதென்ன மூணு மூணு சென் .. டோட்டல் போட்டா வேற மாதிரி யாகிடும்னு வாய்ப்பாட்டையே பேரா வெச்சிட்டாங்களாக்கும்...
ராகவ் ஜி, அது சுசித்ரா சென். மிகச்சிறந்த நடிகை. அவர் பெயரை கெடுக்கும் வகையில் பெண்ணும் பேத்திகளும் .. என்ன செய்ய ...
அபர்ணா சென் நடிகை மற்றும் இயக்குனர், கொன்கொனா சென் இவரது மகள்.
vasudevan31355
5th June 2015, 07:08 AM
தெரியாதோ நோக்கு தெரியாதோ .. எந்த பாடல் தான் உமக்கு தெரியாது.
சி.க ஆமாம் கஜோ உவேக் .. அசிங்கமான மூஞ்சி .. அவரையும் அழகாக்கி கொண்டாடினார்கள். ஆம்பள மாதிரி ஒரு மூஞ்சி .. என்ன செய்ய ..
பத்தாக்குறைக்கு அஜய் தேவ்கனும் ஒரு கன்றாவி மூஞ்சி வந்த புதிதில். அந்த கண் மட்டும்தான். பின்னாளில் அவராவது கொஞ்சம் நடிக்க கற்று கொண்டார்
ஜக்ம், பகத்சிங் என்று தன்னை மாற்றிக்கொண்டார். கஜோல் மாறவே இல்லை. மை நேம் இஸ் கான் வரை அதே லொட லொட மற்றும் குரங்கு மூஞ்சி.
அதென்னமோ அந்த கரன் ஜோகரைத்தான் கட்டி வைத்து உதைக்கனும்.. இத்து போன ராணி முகர்ஜீ, கஜோல் போன்றோரை மாத்தி மாத்தி தன் படங்களில் போட்டு அவர்களையுக் அழகான நடிகைகளான ஸ்ரீதேவி , மாதுரி ரேஞ்சுக்கு காட்டி புகழ் பெற வைத்தான்.. இடியட்
சபாஷ் சிங்கக் குட்டி! அப்படிப் போடு. அப்படியே என்னைய மாதிரியே இருக்கீங்களே ரசனையில்.
இருந்தாலும் வீருதேவ்கன் மகனை இப்படியா வாருவது? அப்பா சண்டை மாஸ்டர். அதனால் நல்லா சண்டை போடுவார். அந்த சிங் வேஷம் வேற நம்மை பாடா படுத்தும். என்ன சொல்லுங்க. மண்ணு மாதிரி வந்து நின்னாலும் சன்னி தியோலுக்கு சிங் வேஷம் சூப்பரா பொருந்தும்.
vasudevan31355
5th June 2015, 07:13 AM
அபர்ணா சென் இளம் வயதில்
http://img.india-forums.com/images/600x0/22936-aparna-sen.jpg
அம்மா அபர்ணா சென் இயக்கிய 'Mr. and Mrs. Iyer' படத்தில் மகள் கொன்கொனா சென்.
http://www.city.fukuoka.lg.jp/fu-a/files/FilmArchiveParagraph117imageja.jpg
vasudevan31355
5th June 2015, 07:16 AM
சுசிச்த்ரா சென் இளம் வயதில்
http://static.dnaindia.com/sites/default/files/2014/01/13/1948846.jpg
மிடில் வயதில்
http://i.ndtvimg.com/mt/movies/2014-07/suchitras-stable.jpg
http://images.jagran.com/suchitraa-sen-30-12-2013.jpg
vasudevan31355
5th June 2015, 07:21 AM
சுசித்ரா சென் பேத்தி ரெய்மா சென்
http://s1.images.ramdevengineering.com/raima-sen/sexy-raima-sen-pictures_2849.jpg
vasudevan31355
5th June 2015, 07:46 AM
அருமை ராகவேந்திரன் சார்.
http://www.tamilmp3songslyrics.com/lyricsimage/2008/Kungumam/Thoongaatha.GIF
திலக சங்கமத்தில் 'தூங்காத கண்ணென்று ஒன்று' பாடலை நடிப்பு வள்ளலின் அசைவுகளோடு அற்புதமாக படம் பிடித்து, 'மதுர கானங்கள்' தேருக்கும் வடம் பிடித்து, உங்கள் முத்திரையை தனியாக தடம் பதித்து உள்ளீர்கள். என்னா ஸ்டைல்! விக் கழற்றி சொந்த முடிவரும் போது அதை வேகமாக சில தடவைகள் கோதி விடும் போது மனத்தையும் கோதி கொத்தி விடுவார் அப்போதும். தலையை அப்படியே மேலே உயர்த்தி சிரித்தபடியே ஷர்ட் பட்டனை கழற்றுவது அருமையோ அருமை.
http://i.ytimg.com/vi/dk1sa4YN-WI/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/j7-cDxpGSic/hqdefault.jpg
பாடலின் முடிவில் கட்டிலை விட்டு எழுந்திருக்கும் அழகக் காணக் கண் கோடிதான் வேண்டும். 'துடிக்கின்ற சுகமென்று ஒன்று' என்னும் போது கட்டிலை விட்டு ஸ்டைலாக, ஒரு ஸைடாக எழுந்து காமெராவின் இன்னொரு சைடு ஆங்கிளுக்குத் தக்கபடி அற்புதமாகத் திரும்பி, பின் நடக்க ஆரம்பிப்பார் பின் பக்க போஸில். காமெராக் கோணங்களுக்குத் தக்கவாறு மிக துல்லியமாக முகத்தையும், உடலையும் கொண்டு வருவதிலும் இவரை மிஞ்ச எவரும் இல்லை.
அதனால்தான் பல முதல்தர காமேராமேன்கள் கூட அப்படியே இவர் நடிப்பில் நடிப்பு கிடக்கட்டும்... முதலில் இவரது குளோஸ்-அப் ஷாட்களில் மயங்கி, ஷாட் முடிந்தும் கூட காமெராவை நிறுத்த மறந்து, மெய் மறந்து, பிறகு இவர் சற்று கோபமாக குரல் கொடுத்தவுடன் சுயநினைவுக்கு வந்து காமெராவை நிறுத்திய கதை எவ்வளவோ இருக்கிறதே!
மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் ராகவேந்திரன் சார். திலக சங்கமத்துடன் நானும் சங்கமித்து விட்டேன். நன்றி!
uvausan
5th June 2015, 07:55 AM
Good Morning
http://i1278.photobucket.com/albums/y512/SHuysamen/Animals/2aab48b180de5f3a2935078099de053a.jpg (http://media.photobucket.com/user/SHuysamen/media/Animals/2aab48b180de5f3a2935078099de053a.jpg.html)
uvausan
5th June 2015, 08:01 AM
கருவின் கரு - பதிவு 44
ஜனணியின் தொடர்ச்சி :
உண்மை சம்பவம் -5
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அன்று மிகவும் டென்ஷன் ஆக இருந்தேன் . அதுவரையில் அப்படி ஒரு படப்படப்பு , கோபம் , பொறுமை இன்மை எனக்கு வந்ததே இல்லை - ஒரு பெரிய கம்பெனியில் MD யாக இருக்கும் நான் என் கீழ் வேலை செய்யும் பல நபர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்துதான் பழக்கம் . உணர்ச்சிவசப்பட்டால் என்னை லீடர் என்று ஒரு பியூன் கூட மதிக்க மாட்டான் - ஆனால் அன்று ஏனோ அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு இருந்தேன் .. இருக்காதே பின்னே ?? - 20000 கோடி மதிப்புள்ள ஆர்டர் government மூலம் எங்களுக்கு வரவேண்டியிருந்த நாள் அன்று - இதற்காக நான் பட்ட கஷ்ட்டங்களைப்பற்றி எழுத ஒரு தனித்திரியே வேண்டும் .
இன்னும் கடிக்க கை விரல்களில் நகங்கள் இல்லை - மற்றவர்களின் கைகளைத்தான் இரவல் வாங்க வேண்டும் ... இந்த ஆர்டர் மட்டும் கிடைத்து விட்டால் , நாட்டுக்கே ஒரு பெரிய infrastructure யை கொடுத்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கும் . எவ்வளவு பேர்களுக்கு வேலை வாய்ப்பை என்னால் தர முடியும் - நினைத்தாலே இனிக்கின்றது - கிடைத்தவுடன் ஒரு execution டீம் யை உருவாக்கவேண்டும் --- மனம் எங்கோ மிதந்து ---- இன்று மூன்று மணிக்குள் முடிவு தெரிந்துவிடும் . எங்களுடன் மோதியவர்களில் பலர் வெளிநாட்டினர் - பண பலமும் அதிகமாக விளையாடும் - எங்களின் பலமே - எங்களின் தன்னம்பிக்கையும் , உண்மையாக உழைப்பது மட்டுமே - இந்த திமிகலங்களுடன் மோதி ஜெய்க்க முடியுமா ??
என் டீம் என் பரபரப்பை பார்க்க முடியாமல் , என் cabin பக்கமே வரவில்லை . போன் அலறியது - சரோ தான் பேசினாள் " அம்மாவுக்கு மூச்சு தட்டுகிறது - உங்கள் பெயரைத்தவிர அவளின் உதடுகளில் வேறு எந்த வார்த்தையுமே வருவதில்லை . கஞ்சியை வேண்டா வெறுப்பாகத்தான் குடித்தாள் - அப்போலோ விற்கு அழைத்து செல்ல வேண்டும் - இன்று சீக்கிரம் வர முடியுமா ?"
" சரோ என் நிலைமை தெரியாமல் பேசுகிறாய் - இன்று ஆர்டர் வரும் நாள் - இங்கு நான் இருந்தாக வேண்டும் - chairmanக்கு பதில் சொல்ல வேண்டும் - அம்மாவை அழைத்துச்செல் - 3மணிக்கு மேல் வருகிறேன் " போனை தொடர விரும்பவில்லை .
மனம் பின்னோக்கி நகர்ந்தது - அம்மா என்னை தந்தையின் மறைவு தெரியாமல் வளர்த்தவள் - அவளுக்காக அவள் என்றுமே வாழ்ந்தவள் இல்லை - எவ்வளுவு தியாகங்கள் செய்திருப்பாள் - 18 வருடங்களுக்கு பிறகு நான் பிறந்தேனாம் - அவள் இருந்த தெருவில் அவள் பெயரை சொன்னால் யாருக்குமே தெரியாது - ஒ அந்த மலடியா - இப்படியே வலது பக்கம் போய் அப்பால ---- இப்படித்தான் அவளை அடையாளம் கண்டார்கள் . நான் பிறந்தவுடன் அவள் முகத்தில் கர்வம் நிரந்தரமாக குடி கொண்டது .
ஒவ்வொரு முறையும் என் வளர்ச்சிக்கு பின்னால் , வெற்றிக்கு முன்னால் அவள் தான் இருந்தாள் - என் ஆபீஸ் பிரச்சனைகளையும் அவளிடம் தான் பகிர்ந்து கொள்வேன் , பிறகுதான் என் சரோவிடம் .
அவளுக்கு தெரியும் - ஒரு மகத்தான ஆர்டர் எனக்கு இன்று கிடைக்கும் நாள் என்று.
எண்ண அலைகளை என் secretary கலைத்தாள் - " சார் உங்களை பார்க்க உங்கள் அன்னையார் வந்திருக்கிறார் "-- அம்மாவா , நம்ப முடியவில்லை - சரோ சொன்னாளே உடம்பு முடியவில்லை என்று - எப்படி என் ஆபீஸ்க்கு வந்தாள் , எதற்க்காக - அலை மோதின கேள்விக்குறிகள் ---
விழுந்தடித்துக்கொண்டு அம்மாவை என் cabin க்கு அழைத்துவந்தேன் - பல தடவைகள் அவள் இங்கு வந்திருக்கிறாள் - தனியாகவும் , என் மனைவியுடனும் - அம்மாவிருக்கு என் cabin ரொம்ப பிடிக்கும் - அவள் இருக்கும் போட்டோ என் குடும்பத்துடன் , அப்பாவின் போட்டோ , சுற்றி இருக்கும் வேலைப்பாடுகள் நிறைந்த அறை . கூப்பிட ஆட்கள் , மனதை சாந்தப்படுத்தும் A /C . சரோவின் கைகளால் சமைத்த அருமையான உணவின் வாசனை ------- பின்னொலியில் MS இன் இனிய குரல் மிருதுவாக - அம்மாவிற்கு பிடித்த பாடல் "குறை ஒன்றும் இல்லை கோவிந்தா "
" என்ன அம்மா - இவ்வள்ளவு தூரம் - சரோ உடம்பு சரியில்லை என்றாளே -- நானே வருவதாக இருந்தேன் .... "
இல்லை சேகர் - உன்னை காலையில் பார்க்க முடியவில்லை - சீக்கிரமாக போய் விட்டாய் - வரேன் அம்மா என்று இன்று சொல்லிக்கொள்ளவே இல்லை - மனது சரியில்லை - உனக்கு ஆர்டர் வேறு கிடைக்கவேண்டும் , பார்த்துவிட்டு போகலாம் என்று டிரைவரிடம் சொல்லி ( சரோவிற்கு தெரியாது நான் இங்கு வந்தது --) அழைத்துச்செல்ல சொன்னேன் .
சேர்மன் அழைப்பதாக secretary சொல்ல , அம்மாவை இருக்க சொல்லிவிட்டு விரைந்தேன் - 10 நிமிடங்கள் - திரும்பினேன் அம்மாவை ஆஸ்பத்திரி உடனே கூட்டி செல்ல வேண்டும் என்ற நினைப்புடன் ------
" என் cabin காலியாக இருந்தது - அம்மாவை தேடினேன் - யாருமே பார்க்காத என் அம்மா அங்கு எப்படி இருந்திருக்க முடியும் ? என் மன பிரமையா ???
கடிகாரம் மூன்று மணியை எட்டிப்பிடித்தது - சரியாக 3.30 - போன் மீண்டும் பாடியது " சேகர் வாழ்த்துக்கள் ! ஆர்டர் கிடைத்துவிட்டது " ஒன்றுமே காதில் விழவில்லை - இதுவும் கனவோ ?? chairman என் அறையில் வந்து என்னை கட்டி தழுவிக்கொள்ளும் போது தான் இது உண்மை என்று தெரிந்தது - என் நீண்ட உழைப்பும் , கனவும் பலித்தது , என் அம்மாவின் ஆசி ஒன்றினால் மட்டுமே ..
" சேகர் இன்று முதல் நீயும் போர்டு member . அதற்கும் என் வாழ்த்துக்கள் " chairman குரல் எங்கோ ஒலித்தது . சரோவின் போன் - " அம்மா வை அப்போலோவில் அட்மிட் செய்துவிட்டேன் - மருத்துவர்கள் எதுவும் சொல்ல மறுக்கிறார்கள் - பயமா இருக்கு - சீக்கிரம் வாருங்கள் ---- சரோ -- போன் வைக்கும் சத்தம் ....
காரை எடுத்துக்கொண்டு ஓடினேன் --- ICU -- அம்மா வின் வெறும் எலும்புகளே உள்ள அந்த உடலில் பல tubes இணைக்கப்பட்டுள்ளன - அம்மாவை யாரோ கைபிடித்து இழுக்கிண்டார்கள் - போக மறுக்கிறாள் . என்னை பார்க்க வேண்டுமாம் ...
அம்மாவின் கைகளை தடவித்தருகிறேன் -- அம்மா ஆர்டர் கிடைத்து விட்டதம்மா - இன்று முதல் உன் மகன் ஒரு board of director ரும் கூட ..... அம்மா கண்ணைத்திறந்து பார் - உன் சேகர் --- என்னோடு பேசும்மா ---- கண்களை ஒரு முறை திறக்கின்றாள் - உதடுகளில் ஆசிர்வாதங்கள் முட்டிக்கொண்டு வருகின்றன - சேகர் நல்லா இரு - எல்லோருக்கும் உதவியாக இரு --- கடைசி வார்த்தைகள் ----- congratulation mesages எல்லாம் ஒரு நொடியில் condolence மெசேஜ் ஆக மாறியது
ஆர்டரின் நகலும் , என் உத்தியோக உயர்வுக்கான letter ம் அவள் காலடியை சரணடைகின்றன .இந்த புண்ணியவதியின் பாதங்களை விடவா நாங்கள் உனக்கு உயர்ந்தவர்களாக போய் விட்டோம் என்று என்னைப்பார்த்து சிரித்தன ..
https://youtu.be/P-p0zdfAUXg?list=PL55E378B393875957
https://youtu.be/sIw3Dhi3ZBg
uvausan
5th June 2015, 08:07 AM
கருவின் கரு - பதிவு 45
ஜனணியின் தொடர்ச்சி :
"அம்மா "- உதடுகள் அருமையாக இணையும் வார்த்தை - நீ இருக்கும் போது இணைந்தன - இன்று வெறும் "மா " என்று உதடுகளை பிரிக்கும் வார்த்தைகள் தானே என் நாக்கில் இருக்கின்றன -----
" வேறோர் தெய்வத்தை போற்றவில்லை, வேறோர் தீபத்தை ஏற்றவில்லை அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன், உன்னை அம்பிகையாய் தூக்கி வைத்தேன் "
https://youtu.be/MkNptelLpV0?list=PL55E378B393875957
uvausan
5th June 2015, 08:11 AM
கருவின் கரு - பதிவு 46
ஜனணியின் தொடர்ச்சி :
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
உன் வண்ணம்
உந்தன் எண்ணம்
நெஞ்சின்
இன்பம்
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
பொன்னின் தோற்றமும்
பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ
பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ
பூமுகம்
என் இதயம் முழுதும்
பூவென
என் நினைவைத்தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
மேகம் நீர் தரும்
பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும்
வாழ்வெல்லாம் நம் உறவின்
நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின்
சுகங்கள்
வாழும்
நாளும்
( மஞ்சள் வெயில்)
திரைப்படம் : நண்டு
https://youtu.be/25p9EQA4Hsc?list=PL55E378B393875957
uvausan
5th June 2015, 08:13 AM
கருவின் கரு - பதிவு 47
ஜனணியின் தொடர்ச்சி :
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
.
அழகிய கண்ணே.....
.
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
.
அழகிய கண்ணே.....
.
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
.
அழகிய கண்ணே.....
.
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
.
அழகிய கண்ணே.....
.
திரைப்படம் : உதிரிப்பூக்கள்,
வெளியான ஆண்டு : 1979,
இசை: இளையராஜா,
பாடியவர்: எஸ்.ஜானகி.
uvausan
5th June 2015, 08:15 AM
ஜனணி தொடர்வாள்
rajeshkrv
5th June 2015, 10:19 AM
திரையில் பக்தி-3
ஒரு படம் வருடக்கணக்காக ஓடியது என்றால் அது ஹரிதாஸ் மட்டும்தான்.
தியாகராஜ பாகவதர் அந்த பெண் பித்தன் வேடத்தில் ராஜகுமாரியுடன் ரொமான்ஸ் ஆகட்டும் பின் திருந்தி அடிபட்டு பக்தி ரசம் சொட்ட சொட்ட தெய்வபித்து பிடித்தவராக மாறுவதாகட்டும் எல்லாமே அருமை.
எப்படி மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடலை மறக்க முடியாதோ, அதே போல் கிருஷ்ணா முகுந்த முராரே பாடலை மறக்கவே முடியாது.
தந்தைக்கு காலை அமுக்கிக்கொண்டே இவர் பாடும் பாடல் மெய் சிலிர்க்கத்தான் செய்யும்.... இன்று கேட்டாலும் பக்தி ரசம் சொட்டும்
https://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA
gkrishna
5th June 2015, 10:41 AM
கவிஞனும் கண்ணனும்
(சின்ன) கண்ணா, வருகிறேன் உனைத் தேடி!
காதல் வயப்பட்டவனுக்கு கண்டதெல்லாம் சொர்க்கம் என்பார்கள். அவ்வளவு சந்தோஷம் அவன் மனதை நிறைத்திருக்கும்.
மனதைப் பறிகொடுத்தல் காதல் ஒன்றில் மட்டுமே சாத்தியம். சாதாரண மனிதர்களுக்கே, அல்ப ஜீவன்களுக்காகவே இவ்வாறு மனதை இழப்பதில் சந்தோஷம் என்றால் அந்த பரமாத்மாவிடம் காதல் கொண்டால், அவனுக்கே ஆளாமே என்றால், அவனாகவே ஆகிவிட்டால் எத்தனை சந்தோஷம் என்று யாராலாவது அளந்து சொல்ல முடியுமா?
இதுவே சிற்றின்பத்துக்கும் பேரின்பத்துக்கும் உண்டான வித்தியாசம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அமரகவி பாரதி தன்னை பெண்ணாக பாவித்து அவள் ஒருவன் மேல் மையல் கொள்கிறாள். அந்த ஒருவன் வேறு யாரோ அல்ல. புருஷோத்தமனான கண்ணன். அவனே காதலன். அந்த காதலில் அவள் படும் உணர்ச்சிகளை உயிருள்ளவையாக்கி மெருகூட்டிய தமிழில் பருகும்போது கிடைக்கும் ஆனந்தம் தான் உண்மையிலே பரமானந்தம்.
''என் உயிருக்குயிரான தோழியரே, என் மனத்தை பிளந்து உள்ளே ஓடும் உணர்ச்சிகளை கொட்ட முடியாமல் துடிக்கின்றேன்.
நேரம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. தூக்கம் நெருங்கவில்லையே. நீங்கள் இருப்பதும் நினைவில் இல்லையடி. கும்மாளமடிக்கிரீர்கள். எனக்கு ஏனோ சந்தோஷம் இல்லையே. இரவில் திருடும் திருடன் கூட தூக்கத்தில் ஆழ்ந்து கீழே பொத்தென்று விழும் நேரம் ஆனபோதிலும் பொட்டு தூக்கம் கூட என்னை அணுகவில்லையே.
வீட்டில் என்ன கோலாகலம் நடத்துகிறீர்கள். சத்தம் ஊரைக் கூட்டுகிறது. உங்களது உற்சாக கூச்சல். வீட்டில் அம்மா என்று ஒருவள் இருக்கிறாள் என்று கூட ஞாபகம் இல்லாமல் போய் விட்டதே.
உங்கள் பேச்சில் சாரம் இருக்கிறது என்கிறீர்கள். எனக்கோ சலிப்பு தான் வருகிறது.
எவ்வளவோ நாள் நானும் பொறுத்திருந்து பார்த்தாகி விட்டது. நாளுக்கு நாள் இது அதிகமாகத்தான் போகிறது.
கூனன் ஒருவன் வந்தான். மெதுவாக நாணிக் கோணி பின்னலிட்ட கொண்டையில் மலர்கள் கலைந்து கீழே விழுமாறு இழுத்தான் என்கிறீர்கள்.
ஒரு யானை மதம் பிடித்து வேகமாக பிளிரிக் கொண்டு வஞ்சியின் அருகில் ஓடியது, அவள் அலறிக்கொண்டே மூர்ச்சையுற்றாள் என்று கதை சொன்னீர்கள்.
வெண்ணைப் பானையிலிருந்த அத்தனை வெண்ணையும் தோழி ரோகிணி விழுங்கியதால் வயிற்று நோய் தாங்கவில்லை என்றீர்கள். சிரிப்பு வரவில்லை.
பண்ணையில் வேலையா யிருந்த ஒரு உழவன் மனைவியை பத்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டு ஆசையாய் முத்தமிட்டார்கள் என்றீர்கள்.
ஒரு பெண்ணுக்கு சோசியம் பார்த்து சொல்கிறேன் என்று ஒருவன் சொல்ல கை நீட்டினாள் . அவள் கையைப் பார்த்து விட்டு உனக்கு 40 அரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள வரப்போகிறார்கள் என்று ஒரு வாய் கஞ்சி குடித்து விட்டு அவளுக்குப் பரிசம் போட்டம் மாமன் வருவதற்குள் அந்த ஜோசியனின் நல்ல காலம் அவன் சென்றதை சொன்னீர்கள்.
ஒரு பெண்ணோடு கோபத்தில் மற்றவள் சண்டை போட்டாள் என்றீர்கள்.
வித்தைகள் கற்றவள் என்று ஒரு பெண்ணைப் பற்றியும் மேற்கு திசையில் அவ்வூர் மக்கள் பேசும் பல பாஷைகள் அவள் பேசுவாள் என்றெல்லாம் மூட்டை மூட்டையாக பொய் சொன்னீர்கள்.
எனக்கு ஏதடி தூக்கம்?
உங்களால் எனக்கு இம்சையாக தான் இருக்கிறது.
உங்கள் வாத்தியங்களை மூடி மூலையில் சார்த்துங்கள். வீணை, தாளங்கள் எனக்கு வேண்டவே வேண்டாம். கண்ணுக்கு தெரியாமல் எங்காவது கொண்டு வையுங்கள்.
கதவு ஜன்னல் எல்லாம் சார்த்துங்கள். முணுக் முணுக் என்று ஒரு சிறு தீபம் மட்டும் எரியட்டும் அதை மேல் பக்கம் சுவற்றில் மாடத்தில் வைத்து விட்டு இங்கிருந்து எல்லோரும் இடத்தைக் காலி செய்யுங்கள். உங்கள் வீட்டை பார்க்கபோங்கள்.
கண்ணா நீ என் மனதை ஆக்ரமித்த போது என் மனம் வேறு எதிலும் செல்லவில்லை என்பது புரிகிறதா?
தோழிகள் எல்லோரும் சென்று விட்டார்கள்.
என் நண்பி ஒருத்தி தூக்கமுன் கண்களை தழுவட்டுமே என்று அடிக்கடி பாடுவாள். என் கண்கள் தூக்கத்தை தழுவுமா?
கண்ணா உன்னை இன்றிரவு கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் அதற்கு முன்னாடி தூக்கம் வருமா நீயே சொல்?
வா கண்ணா வா, என் நண்பிகள் யாரும் இல்லை. எல்லோரையும் அனுப்பிவிட்டேன்.
என்ன சொல்கிறாய் நீ? என்னை வரச்சொல்கிறாயா கண்ணா?
இதோ வருகிறேன். உன்னைப் பார்க்க ஓடோடி வருகிறேன்.? சொல் எங்கே வரவேண்டும்?
என்னது? கடைத்தெருவில் கிழக்கே வெண்கல பாத்திரங்கள் செய்து விற்கும் வாணிகர் கடை வீதி இருக்கிறது. அங்கே, அந்த தெரு முனையிலா? எதிர்ப்பக்கம் இருக்கும் வெளி ஓரத்திலா?
அங்கே வந்தால் உனைக் கண்ணா, நான் காண முடியுமா, இதோ பறக்கிறேன்.
என் கண்கள் இந்த நிலையில் தூங்குபவையா?
உன்னைக்கண்டு இரு கரங்களாலும் கட்டி அணைப்பதற்கு முன் தூக்கம் வருமா ??
இந்த அழகான கற்பனையை தெள்ளு தமிழ் கவிதை வடிவில் படிக்கிறீர்களா? நான் வெறுமே தகர குவளையில் காற்று ஏற்படுத்துகிற சப்தத்தைப் போல ஏதோ எழுதினேனே தவிர இந்த கவிதை தரும் இன்பம் என் குவளையில் ஏது? பாரதியார் பாரதியார் தான்.
கண்ணன் - என் காதலன்
உறக்கமும் விழிப்பும்
நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி - உங்கள்
நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே - என்ன
தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! - அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், - மிகச்
சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . ... 1
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், ... 2
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், ... 3
எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். ... 4
(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? ... 5
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTsxW7tCS5JNJVrNTmttgOLDG_8ZBv1S q6O7o3K4HCQxmdNtYio
gkrishna
5th June 2015, 10:48 AM
ரவியின் ஜனணி படிக்கும் போது மீண்டும் ஒரு ஜனனம் எடுத்தது போல் இருக்கிறது.தொடருங்கள் .வாழ்த்துகள்.
ராஜேஷ் இன் பக்திரசம் படித்த உடன் மனதில் தோன்றிய ஒரு உணர்வு . நெல்லை மாவட்டத்தின் கிராமங்களின் பெயர்களில் கூட பக்திரசம் ததும்பியது...வாசுதேவநல்லுர் காசிதர்மம் பெரியகோவிலன்குளம் சிவசைலம் கோவிந்தபேரி ஸ்ரீவைகுண்டம்,ஆழ்வார் திருநகரி,வீர ராகவ புரம் பாபநாசம் தென்காசி ..எல்லா மாவட்டங்களிலும் இம்ம்மதிரி நிச்சயம் இருக்கும்
gkrishna
5th June 2015, 11:19 AM
ராஜேஷின் பக்திரசம் ஏற் 'படுத்திய' தாக்கம் -
''உள்ளங்கவர் கள்வன்......''
நம்மில் நிறைய பேர் பிறக்கு முன்பே தியாகராஜ பாகவதர் கொடி கட்டி பறந்தார். தமிழ் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் அவர் தான். அதோடு அவருடைய சிறப்பு அம்சம், முகம் கோணாமல் கந்தர்வ கானமாக பாடுவார். பாகவதரின் நடிப்பை விட பாடல்களுக்காகவே படங்கள் வருஷக்கணக்கில் ஓடின என்றால் அதுவே உண்மை. ஒரு படத்தில் குறைந்தது 25-30 பாட்டாவது இருக்கும். ஒவ்வொரு படமும் 3 மணிக்கு குறையாமல் ஓடும். கொடுத்த காசுக்கு ரசிகர் கள்மனம் நிறைந்து பாடிக்கொண்டே வீடு திரும்புவார்கள்.
எனக்கு தெரிந்து ரிக்ஷா வண்டி இழுத்துக்கொண்டு வரும் ஒருவர அவரது பெயர் கூட கோவிந்தசாமி அல்லது கோபால சாமீ
அவரின் favourite 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி '' பாடிக்கொண்டு தான் எங்களை ரிக்ஷாவில் இழுத்துச் செல்வார். கர்நாடக சங்கீதம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவ MKT ஒரு மூல காரணம் எனலாம். தமிழ் நாட்டில் முக்கால் வாசி பேர் ஜில்பா (பாகவதருடைய தலை முடி மாதிரி பின் கழுத்து வரை ) சிகை அலங்காரம் செய்து கொண்டு திரிந்தார்கள்.
முதல் வரிசை தெலுங்கு பாட்டு மட்டுமே பாடிய கர்நாடக இசை வித்வான்களுக்கு பாகவதர் மேல் உள்ளூர ஒரு பொறாமை உணர்ச்சி இருந்தது. காரணம் அவரது காந்த சக்தி தோற்றம், நெருங்க முடியாத கணீர் குரல், ஜன ஆகர்ஷணம். ஒரு சரியான ஜோடியாக பாபநாசம் சிவன் பாடல்கள் அவருக்கு அமைந்தது வரப் பிரசாதம்.
இது இருக்கட்டும்.
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/Chintamani_1937_film.jpg/200px-Chintamani_1937_film.jpg
சிந்தாமணி என்று ஒரு படம். சிந்தாமணி என்கிற வேசியாக நடித்தவர் அச்வத்தம்மா (நடிகை அஸ்வதம்மா புகைப்படம் கிடைக்குமா :) என்கிற இழுத்து போர்த்திய ஆந்திர பெண்மணி. அவள் படத்தை அனேக வீடுகளில் மாட்டி வைத்து ரசித்த காலம். மன்னார்குடியில் ஒரு வீட்டில் அரிசி குதிரின் மேல் அவள் படம் தொங்கியது கவனம் இருக்கிறது.
இணையத்தில் கிடைத்த நடிகை அஸ்வதம்மா புகைப்படம்
http://upload.wikimedia.org/wikipedia/en/1/18/Aswathamma_actress.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/3/32/SaraswathiStores_Chintamani_label.jpg
பாகவதர் தான் பில்வ மங்கள். பில்வ மங்கள் யாரா?
வேசி மீது கண்மூடித்தனமாக மையல் கொண்ட ஒரு வாலிபன். ஒரு இரவு. கொட்டும் மழையில் ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும் சிந்தாமணி வீட்டுக்கு போகவேண்டும் என்ற ஈர்ப்பு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் புரண்டோட அங்கு மிதக்கும் ஒரு பிணம் தோணியாகிறது. அக்கரை சேர்ந்தாலும் வேசி வீடு வாசல் சார்த்தபட்டிருக்கிறதே?.
உப்பரிகையில் அவள் குரல் கேட்க எப்படி மேலே செல்லலாம் என்று யோசிக்கும் பில்வமங்கள் ஒரு கயிறு கிளையில் தொங்குவதை கவனித்து அதைப் பிடித்துக்கொண்டு மரம் ஏறி அதன் வழியாக அவள் உப்பரிகையில் செல்கிறான்.
''ஏன் இந்த நேரம் வந்தாய்? ஏன் உன்மீது இவ்வளவு ரத்தம்? யாரையாவது கொலை செய்தாயா?''
'' நானா? கொலையா ?என் மீது ரத்தமா? ''
பிலவ மங்கள் திகைக்கிறான். சிந்தாமணி யோடு அவனும் வெளியே வந்து பார்க்க பெரிய பாம்பு ஒன்று செத்து உப்பரிகை அருகே கிடக்கிறது. அதன் ரத்தம் அவன் மீது எப்படி வந்தது?
பில்வ மங்கள் நடந்ததை சொல்கிறான். தீராக் காமம் காதல் வயப்பட்டு இரவு நேரம், மழை, வெள்ளம், பாம்பு எதையும் லட்சியம் செய்யாமல், ஒரு பிணத்தையே தோணி யாக யாக உபயோகித்து பாம்பைக் கயிறாக உபயோகித்து அவளை அடைந்தது அறிகிறாள்.
அழியும் இந்த தேகத்தில் மீது இத்தனை மோகம் கொண்ட நீ அழியாத பரந்தாமன் (அந்த வாசுதேவன்,கோபாலன் :)) மீது துளியாவது மனதை ஈடுபடுத்தினால் எத்தனை புண்யம் பெறுவாய். வலுக்கட்டாயமாக பாபத்தை சேர்த்து மூட்டை கட்டிக்கொள்கிறாயே என்று அவனுக்கு இதமாக சொல்கிறாள். கல்லும் கரையும் அவள் பக்திப் பேச்சு பில்வமங்களை சிதைத்து ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன் உருவாகிறான்.
பின்னர் லீலா சுகர் என்ற பெயர் கொண்டு அசாத்திய மாக ஒரு 108 ஸ்லோகங்கள் உருவாகிறது. அதுவே ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ரிதம்.
எனது நண்பர் ஒருவர் மும்பையிலிருந்து இந்த புத்தகத்தை நேற்று எனக்கனுப்பி ரசியுங்கள் என்று சொல்லுமுன்பே அசை போட ஆரம்பித்ததன் விளைவே இந்த பூர்வ பீடிகை.
ஜெய தேவர் அஷ்டபதி, கீத கோவிந்தம் என்னை எப்படி உலுக்கியதோ அதைப்போலவே இந்த புத்தகமும் என்னை ஈர்த்து விட்டது. இரு கண்களில் எந்த கண் உயர்ந்தது?
என்னை சிந்தாமணி பாடல்களால் கவர்ந்த MKT ஆத்மா சாந்தி பெறவும், மும்பை நண்பர் S விஸ்வநாதன் ஆயுர் ஆரோக்யத்துடன் நீண்டு வாழவும் அந்த கிருஷ்ணனையே ''சித் சோரை'' யே பிரார்த்திக்கிறேன்.
சிட்சோர் யார் என்று புரியவில்லையா ?சித் = சித்தம் சோர் = கள்ளன் . பில்வ மங்கள் இப்படித்தான் லீலா சுகராக மாறியபின் கிருஷ்ணனை அழைக்கிறார். தமிழில் அதி அற்புதமாக இதையே ''உள்ளங்கவர் கள்வன் ' என்று அழைக்கிறோம்.
http://www.youtube.com/watch?v=tA9ZgeE1fcA
http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=MMIR/2011/08/03/31/Img/Pc0311000.jpg
chinnakkannan
5th June 2015, 11:53 AM
வாங்க கிருஷ்ணா ஜி.. பில்வ மங்கள் பற்றி அடியேன் எழுதியிருந்த போஸ்டிற்கான லிங்க்..
http://www.mayyam.com/talk/showthread.php?11173-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B-%26%232965%3B%26%232997%3B%26%232992%3B%26%233009% 3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B-%26%232986%3B%26%233006%3B%26%232965%3B%26%232990% 3B%26%233021%3B-3/page344
gkrishna
5th June 2015, 12:10 PM
வாங்க கிருஷ்ணா ஜி.. பில்வ மங்கள் பற்றி அடியேன் எழுதியிருந்த போஸ்டிற்கான லிங்க்..
http://www.mayyam.com/talk/showthread.php?11173-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B-%26%232965%3B%26%232997%3B%26%232992%3B%26%233009% 3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B-%26%232986%3B%26%233006%3B%26%232965%3B%26%232990% 3B%26%233021%3B-3/page344
நன்றி சி கே. படித்தேன் .அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்
uvausan
5th June 2015, 01:00 PM
Ck - உங்கள் லிங்க் யை மீண்டும் படிக்கும் பாக்கியம் கிடைத்தது - அருமை என்ற ஒரு வார்த்தை போறாது .
uvausan
5th June 2015, 01:08 PM
கிருஷ்னாஜி - கண்ணன் உங்கள் காதலன் மட்டும் அல்ல - நம் எல்லோருடைய காதலனும் அவனே ! Treta Yuga வில் ஒரு கண்ணன் எல்லோரையும் ஆட்டிவைத்தான் - அவன் புல்லாங்குழலில் எழுந்தது மதுர கானங்கள் . இன்று அவனே சின்ன கண்ணனாக இங்கு வந்து எழுப்பும் மதுரகனாத்தில் நாமெல்லாம் மெய்மறந்து போகிறோம் - என்னமோ போங்க ! உங்கள் பதிவு எங்களை கட்டிப்போட்டு விட்டது - மீள பல நாட்கள் ஆகலாம் ....
vasudevan31355
5th June 2015, 01:14 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
6
அதே 'மாலதி' படத்தில் இன்னொரு உற்சாக வெள்ளம் கரை புரளும் பாடல்.
அதே பாலா சுசீலா குரல்களில்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-12.jpghttp://www.lambretta.org/img/x_LI125%20Series2.jpg
ஸ்கூட்டரில் சரோஜாதேவியை உட்கார வைத்து ஜெமினி ஓட்டிச் செல்வது போல ஆரம்பக் காட்சி. பேக் ப்ரொஜெக்ஷன் காட்சி சிறிது நேரம்.
அப்போதைய புகழ் பெற்ற லேம்பி அல்லது லேம்ப்ரேட்டா ஸ்கூட்டர் என்று நன்றாகத் தெரிகிறது. அப்போதைய ரிச் ஸ்கூட்டர். நிற்கும் ஸ்கூட்டரில் ஜெமினியும், சரோஜாவும் பயணம் போவது போல நன்றாக பிலிம் காட்டுவார்கள்.
தேளின் வால் போல சரோஜாவின் கன்னத்தில் விக் முடி சுருண்டு J போல இருக்க, பின்னால் பிகர் இருக்கும் குஷியில் காதல் மன்னன் நிற்கும் ஸ்கூட்டரின் ஹேண்டில் பாரை வளைத்து வளைத்து ஓட்டுகிறார்.
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.
பச்சைக் கிளி போல ஊரெங்கும் பறந்து
இச்சை மொழி பேசி எங்கெங்கும் திரிந்து
பார்த்தும் பாராமல் மகிழ்ந்தாலென்ன
பாடித் திரிந்தாலென்ன
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.
http://i.ytimg.com/vi/a2EKWRsXLoY/hqdefault.jpg
அப்புறம் நிஜ மகாபலிபுரத்தின் சாலையில் உண்மையாகவே ஜெமினி மிரண்டு மெதுவாக ஸ்கூட்டர் ஓட்ட, மகாபலிபுர ஒரிஜினல் சிற்பங்களைக் காட்டி, பின் மகாபலிபுர செட்டுக்கு வந்து விடுவார்கள். திக்கான கார்ட்போர்ட் அட்டையில் கடற்கரை கோவிலை வெட்டி தூரத்தில் வைத்து உண்மை என்று நம்ப சொல்வார்கள்.:)
சினிமாவில் இதெல்லாம் சாதரணமப்பா.
தென்றலும் கடலின் அலைகளும் கொஞ்சுமோ
உறவு தரும்படி கெஞ்சுமோ
பெண்ணைப் போல் வெட்கம் கொண்டு அஞ்சுமோ
மங்கையின் மனதில் இருப்பது கொஞ்சமோ
அலைகள் அடிப்பது நெஞ்சமோ
எண்ணினால் இன்பம் என்ன பஞ்சமோ
வலம்புரிச் சங்கு ஒன்று கரை வந்தது.
டக்கென்று பாடல் ஸ்பீட் எடுக்கும். பாலா திடீரென்று குத்துப் பாட்டு ரேஞ்சுக்கு இறங்க அதற்கேற்ற குத்தாட்டம் போட ஆரம்பிப்பார் ஜெமினி.
வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது
வலம்புரிச் சங்கு ஒன்று கரை வந்தது.
வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.
பல்லவன் மலையில் எடுத்தது சிலைகளோ
------------------------------------------?
அங்கே மன்னன் கொண்ட காதலோ
மன்னவன் எனையும் உனையும் எண்ணியே
கலைஞர் சிலரிடம் சொல்லியே
கட்டினான் சிற்பம் தன்னை கல்லிலே
பாண்டவர்க்குத் தேரெடுத்த கடலோரம்
பார்ப்பவர்க்கு இன்பம் உண்டு வெகு நேரம்
'ம்ஹூம் ம்ஹூம்' என்ற இசையரசியின் ஹம்மிங் இப்போது வரும். சரோஜாதேவி உதடுகள் குவித்து கொவ்வைப் பழத்தைக் கொத்த வரும் கிளி போல் பாவம் காட்டுவது ராஜேஷ்ஜிக்கு மட்டுமல்ல.:) நமக்குக் கூட என்னவோ போல்தான் உள்ளது. அப்படியே அந்த சுசீலாவின் லா லா லா லா ஹம்மிங்கையும் மறந்து விடலாகாது.
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.
ஜாலிப் பாடல். அப்படியே மாமல்லன் புகழும் பாடப்படும் இந்தக் காதல் டூயட்டில்.
பாலாவும், சுசீலாவும் சும்மா ஊதித் தள்ளியிருப்பார்கள்.
https://youtu.be/a2EKWRsXLoY
chinnakkannan
5th June 2015, 01:59 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
கொஞ்சம் பாகற்காய் ஜூஸ் சாப்பிட்டுக்கிட்டே பிஸியா இருந்தேனா (எதுக்குப் பாகற்காய் ஜூஸ்..அந்த சோகம் அப்புறம்) அதான் லைக் போட்டுட்டு லிங்க் கொடுத்துட்டு பேசாம இருந்தேனா.. இப்ப வந்துட்டேன் :)
கிருஷ்ணா ரவி நன்றிகள். வழக்கம் போல கண்ணா அண்ட் கருவின் கரு நைஸ்..
வாசுங்க்ணா..அந்த்ப் பாட் பார்த்துக் கேட்டேன் ஆர் கேட்டுப் பார்த்து இப்போ எழுதறேன்..
இந்த லேம்ப்ரட்டா ஸ்கூட்டர் அழகிய மிதிலை நகரினிலே சச்சு அந்த இன்னொரு ஆள்(வழக்கம்போல ஆம்பளை பேர் மற்ந்து போச்) கார் ஓட்டும் போது பின்னால் வருமில்லையா அல்லதுஅது பஜாஜ் சேட்டக்கா.. கல்லூரி காலத்தில் (இது உண்மை) ஒரு நண்பன் நடராஜன் என்று பெயர் .. அவர் அப்பா ஃபார்மசூட்டிகல்ஸ் ஹோல்சேல் ..எக்கச்சக்க பைஸா அப்பொழுது.. நாஙக்ளெல்லாம் பஸ்ஸில் வர அவன் வருவான் ஸ்கூட்டரில்..ஓரிரு முறை ஓட்டியிருக்கிறேன்.. நன்னா இருக்கும்
'//ம்ஹூம் ம்ஹூம்'என்ற இசையரசியின் ஹம்மிங் இப்போது வரும். சரோஜாதேவி உதடுகள் குவித்து கொவ்வைப் பழத்தை கொத்த வரும் கிளி போல் பாவம் காட்டுவது ராஜேஷ்ஜிக்கு மட்டுமல்ல. நமக்குக் கூட என்னவோ போல்தான் உள்ளது.// ஓய் ஆக்சுவலா அப்படியே லலாலா போடாமல் விட்டிருக்கலாம்.. ஜிஜிக்கு முத்தா கொடுப்பது போல அந்த உதடுக்குவிப்பு இருந்தது கொ.ப.கொ.வ கிளியாம்.. உம்மை நிஜக் கிளியை விட்டுக் கொத்தணும் :)
அந்த செட் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது இல்லியோ.. நல்ல கூர்மையான பார்வை..
//சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.//
போய்ட்டோமே மகாபலிபுரம் உங்க தயவாலே ஜெ. சர்ரூ கூட :) புறம் திரும்புங்க நன்றி ஹி ஹி..
*
சாலமன் பாப்பையா குரலில் படிக்கவும்..
அய்யா..லீவு நாளும் அதுவுமா சின்னக் கண்ணா தேவிகா படம் பார்க்கறது தப்பாய்யா.. சீரியஸா பாக்கலையே தொடரும் தொடரும் புது உறவுப் படத்தை - அதான் தெய்வீக உற்வு
படத்தை சின்சியரா ஓட்டி ஓட்டி ப் பாத்துக்கிட்டிருந்ததும் தப்பாய்யா..
ஒரு தேவிகாக்கு ரெண்டு தேவிகான்னு சொன்னதும் தப்பாய்யா.. சரி லீவ் நாள் காஃபி தான் வீட்லருந்து வருதுன்னு டம்ளரை வாங்கி சூடில்லையேன்னு கூட நினைக்காம டபக்குன்னு வாய்ல வார்த்துக்கிட்டது தப்பாங்க.. அப்புறம் தான் தெரிஞ்சது அது பாகற்காய் ஜூஸ்னு.. குடிச்சுட்டேன்..என்ன செய்றது :)
படம் சுமார் தான் அந்தப் பாட்டும் கட் மத்த பாட்லாம் இருக்கு.. அந்த தொடரும் தொடரும் பாட்டில ஒல்லியா த் தெரிஞ்சவர் படம் முழுக்க குண்டா வர்றாரே எப்படி எப்படி..தெரியலையே..
ம்ம் பின்ன வாரேன் :)
chinnakkannan
5th June 2015, 02:04 PM
//வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? .// பாரதியார் பாடலை மறுபடி படிக்கவும் அதுபற்றி எழுதியிருந்த விளக்கத்துக்கும் நன்றி க்ருஷ்ணா..
*
இந்தக் குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா - எனக்குத்தெரிந்து இரண்டு மூன்று உறவுகளின் அந்திம காலத்தில் அவர்கள் கேட்ட பாட்டு..எப்போது கேட்டாலும் நெஞ்சை அள்ளும்.. தாங்க்ஸ் ஃபார் த உ.ச ரைட் அப் அண்ட் நினைவூட்டல் ஆஃப் திஸ் ஸாங்க் ரவி..
JamesFague
5th June 2015, 02:47 PM
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 7: தென்றலின் ஒலி வடிவமாய் ஒரு குரல்
பூந்தளிர்
தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் பிரவேசம் நிகழ்ந்த ‘அன்னக்கிளி’ படத்தை இயக்கியவர்கள் தேவராஜ் மோகன் எனும் இரட்டை இயக்குநர்கள். திரையிசையின் எதிர்காலத்தையே மாற்றியமைத்த அந்தப் படத்துக்குப் பின்னர் அவர்கள் இயக்கிய பல படங்களுக்குத் தனது அற்புதமான இசையை அளித்தார் இளையராஜா. அந்த வரிசைப் படங்களில் ஒன்று ‘பூந்தளிர்’(1979). ‘அன்னக்கிளி’ படத்தில் நடித்த சிவகுமார், சுஜாதா ஜோடிதான் இந்தப் படத்திலும். நிஜ வாழ்வில் சிறந்த ஓவியரான சிவகுமார் இப்படத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞன் அஷோக்காக நடித்திருப்பார். மலையாளப் பெண்ணான மாயாவை (சுஜாதாவை) காதலித்துத் திருமணம் செய்துகொள்வான் அஷோக். காலமும் சூழலும் இருவரையும் பிரித்துவிடும். தனது காதல் கணவனைத் தேடிக் குழந்தையுடன் வரும் மாயாவும் இறந்துவிட அவர்களுக்குப் பிறந்த குழந்தை அநாதையாகத் திரியும். இறுதியில் அஷோக்கின் கலைதான் குழந்தையை அவனிடம் சேர்ப்பிக்கும்.
கிட்டத்தட்ட ‘அன்னக்கிளி’ படத்தின் அதே குழுதான் எனினும், அப்படத்தில் மூன்று அற்புதமான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி இப்படத்தில் ஒரு பாடல்கூடப் பாடவில்லை என்பது விசித்திரம். ஆனால், படத்தில் ஒரேயொரு பாடலைப் பாடியிருக்கும் ஜென்ஸி அந்தக் குறையே தெரியாமல் பார்த்துக்கொண்டார். இளையராஜா இசையில் அவர் பாடிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் தீவிர இசை ரசிகர்களின் சேகரிப்பில் பொக்கிஷங்களாகப் போற்றப்படுபவை. வருடிச் செல்லும் தென்றலின் ஒலி வடிவமாக நிலைத்துவிட்ட குரல் ஜென்ஸியுடையது.
குரலுலகின் தேவதை
இப்படத்துக்கு முன்னர் ‘அடி பெண்ணே’, ‘ஆடச் சொன்னாரே’ என்று பிரபலமான பாடல்களை ஜென்ஸி பாடியிருந்தாலும் இப்படத்தில் அவர் பாடியிருக்கும் ‘ஞான் ஞான் பாடணும்’ பாடலின் விசேஷம், அது அவரது தாய்மொழியான மலையாளத்தில் எழுதப்பட்டது என்பதுதான். தபேலாவின் துள்ளலான தாள நடையுடன் தொடங்கும் அந்தப் பாடலில் இசைக் கருவிகள் ஒன்றையொன்று சீண்டிக்கொண்டே விளையாடிச் செல்லும். பரவசப்படுத்தும் கிட்டாரின் ஒலி, சோகம் இசைக்கும் வயலின், ரகசியத்தைக் கிசுகிசுக்கும் புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டியிருப்பார் இளையராஜா. காதல் ஏக்கம் என்பதையும் தாண்டி, தனக்கு நேரப்போகும் துயரத்தை முன்பே அறிந்துகொண்ட மனதின் மென்சோகத்தின் வெளிப்பாடாக ஆத்மார்த்தமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. ‘மாங்குயில் ஜோடிகள் மெல்லக் கூவும் ரகசியம்’ என்று தொடரும் சரணத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து, அதை ஆமோதிக்கும் விதமாக வயலினும் புல்லாங்குழலும் மென்மையாக ஒலிக்கும். எங்கோ ஒரு மலையடிவார கேரள கிராமத்துக்குக் காற்றின் வழியே பயணம் செய்யும் அனுபவத்தைத் தரும் பாடல் இது.
தாம்பத்ய சங்கீதம்
‘அன்பே…’ எனும் வார்த்தையைக் காதலுடன் வயலினில் வாசித்துக் காட்ட முடியுமா? ‘வா… பொன்மயிலே’ என்று தொடங்கும் பாடலின் முகப்பு இசையைக் கேளுங்கள்! காதலில் திளைக்கும் கணவன், தன் மனைவியின் அழகை இயற்கையின் வனப்புடன் ஒப்பிட்டு வர்ணிக்கும் பாடல் இது. முதல் சரணத்துக்கு முன்னர் பல்லவியின் கடைசி வார்த்தையைப் பிடித்துக்கொண்டே விரிந்து செல்லும் இசைக்கோவையில் இளையராஜாவின் மேதமை மிளிரும். எஸ்.பி.பி.யின் குரல் தாம்பத்யத்தின் அழகைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும். ‘உயிரிலே கலந்து மகிழ வா..பொன்மயிலே’ என்று பல்லவியுடன் சங்கமிக்கும் சரணத்தின் முடிவில் எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரத்தின் பேரமைதியை உணர முடியும்.
பகலின் குரல்
காதல், சோகம் எனும் பட்டியல் வகைப் பாடல்களைத் தாண்டி, சூழலின் தன்மையை மென்மையாகப் பதிவுசெய்யும் பல பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். ‘மனதில்… என்ன நினைவுகளோ’ எனும் பாடல் அந்த வகையைச் சேர்ந்தது. எஸ்.பி.பி. ஷைலஜா பாடியிருக்கும் இப்பாடல் முழுவதும் டிரம்ஸ், எலெக்ட்ரிக் கிட்டார், சாக்ஸபோன் என்று மேற்கத்திய இசைக் கருவிகளின் துள்ளல் இருந்தாலும் அவற்றைத் தாண்டிப் புல்லாங்குழலின் இசை ஒரு யோகியின் பரிவுடன் பாடல் முழுதும் வருடிச் செல்லும். ‘பா..பாபா..’ என்று உற்சாகம் பொங்கும் குரலுடன் பாந்தமாகப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பரபரப்பாக இயங்கும் நகரின் பகல் நேரத்து அமைதி, அதன் இயல்பில் பதிவான பாடல் இது.
ஆதரிக்க யாருமின்றித் தனியே திரிந்துசெல்லும் தன் மகனை வாரியெடுத்து அணைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் தாயின் ஆன்மா பாடும் ‘ராஜா சின்ன ராஜா… பூந்தளிரே’ எனும் பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘கண்ணின் மணி என்னைக் கண்டுபிடி’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.
JamesFague
5th June 2015, 02:51 PM
Courtesy: Tamil Hindu
சினிமா ரசனை 1: அந்த மூவரில்... நீங்கள் யார்?
மிக மிக உயர்ந்த ரசனை கொண்டவர்கள் நமது தமிழ்நாட்டு சினிமா பார்வையாளர்கள் என்பது உண்மை. இவர்கள், எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி, அவை உன்னதமான படங்களாக இருந்தால், அந்தப் படங்களை மொழி தெரியாமலேயே மீண்டும் மீண்டும் பார்த்துப் பாராட்டி மகிழ்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல படங்கள் வெளியாகத் தாமதமாகும்போது, பொழுதுபோக்க வேண்டும் என்பதற்காக மிக மிக மோசமான படத்தைக்கூட ஒருதடவை அல்ல; பல தடவை பார்ப்பார்கள். முறையான சினிமா பற்றித் தெரிந்த எவரும் பார்த்துச் சிரிப்பார்களே என்ற வெட்க உணர்வு துளியும் இல்லாமல், நாகரிகத்தின் உச்சாணிக்கு நாம் போய்விட்டதாகச் சொல்லிக்கொள்ளும் இன்றைய காலகட்டத்திலும் நம் சினிமாக்களில் காதலன், காதலி டூயட் பாடியாடும் அலங்கோலம் அரங்கேறுகிறது. இந்த அலங்கோலத்தை இந்திய நாட்டைத் தவிர வேறு எந்தவொரு நாட்டின் சினிமாவிலும் பார்க்க முடியாது’.
‘சினிமாவும் நானும்’ என்ற நூலில் இயக்குநர் மகேந்திரன்.
தமிழ்நாட்டில் நிலவும் சினிமா ரசனையை இதைவிடத் துல்லியமாகக் கணித்துவிட முடியாது. ஒரு ‘சராசரி’ (இந்த வார்த்தையே கண்டிக்கத்தக்கது. ஏன் என்று சற்றுப் பின்னால் கவனிப்போம்) திரைப்பட ரசிகனாக இன்றைய தேதியில் நமக்குத் தேவையானது என்ன என்று யோசித்தால், ‘நல்ல திரைப்படம் பார்க்க வேண்டும்’ என்ற ஆசை எல்லாருக்குமே இருப்பதை மறுக்க முடியாது. இதில் ‘நல்ல’ என்பதுதான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.
இருவகை ரசிகர்கள்
ஒரு சாரார், ‘உலகின் சிறந்த திரைப்படங்களைப் போலவே தமிழில் திரைப்படங்கள் எடுக்கப்படும் காலகட்டம் வர வேண்டும்; அப்படங்களே எங்களைப் பொறுத்தவரையில் நல்ல படங்கள்’ என்கிறார்கள். இவர்கள் யார் என்று கவனித்தால், செர்கய் ஐஸன்ஸ்டைனில் தொடங்கி சமீபத்தில் வெளியாகியிருக்கும் இயக்குநர் டாட் ஹெய்ன்ஸ் இயக்கியிருக்கும் ‘கரோல் ’(Carol - 2015) திரைப்படம் வரையில் தேர்ந்தெடுத்தே பார்ப்பவர்கள். எல்லா உலக சினிமா விழாக்களுக்கும் தவறாமல் ஆஜராகிவிடும் தீவிரமான சினிமா நேசிப்பாளர்கள். இவர்களைப்பொறுத்தவரை சினிமா என்பது வணிகம் என்ற அம்சத்தைத் தாண்டி, கலை என்பதன் முழுமையான வெளிப்பாடு. ரித்விக் கட்டக், சத்யஜித் ராய், ஜான் ஆப்ரஹாம், ராமு காரியத், அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவன் நாயர், கிரீஷ் காஸரவள்ளி, கிரீஷ் கர்னாட், மிருணாள் சென், தபன் சின்ஹா போன்ற பல இயக்குநர்களின் படங்களைக் கரைத்துக் குடித்திருக்கும் தீவிர ரசிகர்கள் இவர்கள்.
இன்னொரு சாராரோ இவர்களுக்கு நேர் எதிரானவர்கள். ‘திரையரங்கு சென்றால் எங்களுக்குப் பொழுது போக வேண்டும். எங்களை சுவாரஸ்யப்படுத்தும் காட்சிகள் வர வேண்டும். அலுப்பே ஏற்படக் கூடாது’ என்பவர்கள். இவர்களுக்குத் தேவை வணிகப் படங்கள். இவர்களால் சென்ற பத்தியில் சொல்லியிருக்கும் இயக்குநர்களின் படங்களில் ஒன்றைக்கூட முழுமையாகப் பார்க்க இயலாது.
முக்கியமான மூன்றாம் குழு
இந்த இரண்டு நேர் எதிரான குழுக்களுக்கு இடையே அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத இன்னொரு கும்பலும் உள்ளது. இவர்கள்தான் திரைப்பட ரசிகர்களில் அதிகமான சதவிகிதம். இவர்களைத்தான் இயக்குநர் மகேந்திரன் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் உள்ள மேற்கோள் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் பெரும்பாலான திரை ரசிகர்களாகிய இவர்களுக்கு எப்படிப்பட்ட படங்கள் வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் கணினி, இணையம் ஆகியவற்றை அதிகமாக உபயோகப்படுத்தும் மக்கள் இவர்கள். இதன்மூலம் விரும்பியோ விரும்பாமலேயோ நல்ல படங்களின் தாக்கம் இவர்களைச் சென்று அடைந்திருக்கிறது. உடன் வேலை செய்யும் நண்பர்கள் சொல்லியோ, இணையத்தில் தேடியோ, தொலைக்காட்சியைப் பார்த்தோ, வலைப்பூக்கள், சினிமா பற்றிய புத்தகங்கள் ஆகியவற்றின் மூலமோ இவர்களுக்கு உலகின் சிறந்த திரைப்படங்கள் பற்றிய ஞானம் ஓரளவு உள்ளது. இவர்களால் அப்படிப்பட்ட படங்களை அவசியம் ரசிக்க இயலும். அதே சமயம், எப்போதுமே அப்படி இருக்காமல், அவ்வப்போது வணிகப் படங்களும் பார்த்து ரசிக்கக்கூடியவர்கள் இவர்கள்.
ஓராண்டுக்கு முன்னர் சென்னையில் உலகத் திரைப்பட விழாவின்போது லூஸியா திரையிடப்பட்டது. அந்தத் திரையரங்குகளில் நிரம்பிய கூட்டத்தால் பலரும் நின்றுகொண்டே அப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் படம் திரையிடப்பட்ட எல்லாச் சமயங்களிலும் இதேதான் நடந்தது. இது மட்டுமல்லாமல், இன்னும் உலகத் திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய புகழ்பெற்ற படங்கள் எல்லாவற்றுக்குமே நிரம்பும் பெரும்பாலான கூட்டம் இவர்களால்தான்.
இந்த வகையைச் சேர்ந்த ரசிகர்கள்தான் இப்போது இணையத்திலும் எந்தப் படம் வெளிவந்தாலும் உடனடியாக அதைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கின்றனர். எந்த நடிகருக்கும் ரசிகராக இல்லாமல், நடுநிலையாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க இவர்களால் முடிகிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் பல திரைப்படக் குழுமங்களில் இவர்கள்தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். தினந்தோறும் பல படங்களை இணையத்தின் மூலம் பார்த்துவிட்டு இக்குழுக்களில் இவர்கள்தான் அவற்றைப் பரிந்துரைக்கின்றனர். இந்தத் திரைப்பட ரசிகர்கள் நாள்தோறும் வளர்ந்தும் வருகின்றனர்.
அனுபவமாக மாறுமா?
இந்த வகைத் திரை ரசிகர்கள் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். “ஒரு திரைப்படம் என்பது கொடுக்கும் ஆழமான அனுபவத்தைத் தேடிச் செல்கிறோம்” என்பதே அது. அப்படம் எந்த மொழியில் இருந்தாலும் சரி; எந்த வகையாக இருந்தாலும் சரி; அது ‘லைஃப் இஸ் ஃப்யூட்டிஃபுல்’(Life is Beautiful) படமாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்; அதுவே ‘எ செர்பியன் பிலிம்’ (A Serbian Film) படமாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். அப்படங்களின் வாயிலாகச் சொல்லப்படும் கருத்துகளில் எங்களின் திரை ரசனையை நாங்கள் மேம்படுத்திக்கொள்கிறோம் என்பதே இவர்களின் நோக்கம்.
உங்களுக்காகவே
இந்த வகையைச் சேர்ந்த, தமிழகத்தின் பெரும்பாலான நடுநிலையான திரை ரசிகர்களுக்குத் தேவையான படங்கள் என்னென்ன? அவற்றின் மூலம் சொல்லப்படும் செய்திகள் என்னென்ன? அவற்றின் இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களும் அப்படங்களில் சொல்ல முயன்றவை என்ன? அந்த நோக்கம் நிறைவேறியதா? இதுபோன்ற இன்னும் பல விஷயங்களை ஒவ்வொன்றாக, தெளிவாக இத்தொடரில் கவனிக்க இருக்கிறோம். நீங்கள் தரமான திரைப்படங்களை விரும்புபவராக இருந்தால் உங்களுக்காகத்தான் இத்தொடர் எழுதப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இப்படங்கள் எப்படி உலக அளவில் பேசப்படுகின்றனவோ, அப்படிப்பட்ட படங்கள் தமிழகத்திலும் எடுக்கப்பட வேண்டும்; அவை மூலம் பல்வேறுபட்ட கருத்துகள் பேசப்பட வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். இடையிடையே சினிமா பற்றிய பல விஷயங்களும் உள்ளே வரும்.
ஆரம்பிக்கலாமா?
vasudevan31355
5th June 2015, 03:28 PM
//அந்த செட் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது இல்லியோ.. நல்ல கூர்மையான பார்வை..//
போட்டுகிட்டு இருக்கிற கண்ணாடி 12000 ரூவா சின்னா.:)
uvausan
5th June 2015, 04:44 PM
கல்நாயக் சார் , CK , கிருஷ்னாஜி , கலை சார் , ராஜேஷ்
உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் . உடனே நமக்கு -இந்த திரிக்கு தேவை disaster management plan . ஒவ்வொரு தடவையும் "பாலா " என்ற காட்டு வெள்ளம் அணையை உடைத்துக்கொண்டு நம்மையெல்லாம் அடித்துச்செல்கின்றது - நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் திணறுகிறோம் . மீண்டும் இந்த" பாலா" வெள்ளம் சீக்கிரமே மீண்டும் வரக்கூடும் . வருவதற்குள் எப்படியாவது நாம் அடித்துச்செல்லாமல் நம்மை பார்த்துக்கொள்ளவேண்டும் . உங்கள் யோசனை வரவேற்க்கப்படுகின்றன .
vasudevan31355
5th June 2015, 05:06 PM
இதுவரை பாலாவின் பாடல்கள்.
1.மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் (பால் குடம்)
http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1223953#post1223953
2.ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா. (அடிமைப் பெண்)
http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1224467#post1224467
3. இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்)
http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1226259#post1226259
4.ஆரம்பம் யாரிடம் (மிஸ்டர் சம்பத்)
http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page35
5. கற்பனையோ கைவந்ததோ (மாலதி)
http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page62
6. சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம் (மாலதி)
http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page69
7. 'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' (நவக்கிரகம்)
http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1230352#post1230352
vasudevan31355
5th June 2015, 05:13 PM
//(வழக்கம்போல ஆம்பளை பேர் மற்ந்து போச்//
உண்மையை ஒத்துக்கிறதில உம்மை மிஞ்ச ஆள் கிடையாது சின்னா.:)
vasudevan31355
5th June 2015, 06:02 PM
//அந்த இன்னொரு ஆள்(வழக்கம்போல ஆம்பளை பேர் மற்ந்து போச்) கார் ஓட்டும்//
சின்னா!
ஹரநாத் கதா:)
http://3.bp.blogspot.com/-ZUnlDVEGQYc/VEuK-e40pMI/AAAAAAAAC0A/KEbaMggtEFA/s1600/Harinath%2BRaju%2BRare.jpg
அவர் பெயர் ராஜா. 'அன்னை' படம் பார்த்திருப்பீர்களே! அதில் பானுமதியின் மகனாக படத்தில் (ஒரிஜினல் மகன் அல்ல) வருவார். பானுமதியின் அன்புக் குடைச்சலுக்கு ஆளாகும் பரிதாபமான முத்தையா, சௌகாரின் மகன். குமாரி சரஸ்வதி (சச்சு) அவருக்கு ஜோடி.
http://padamhosting.me/out.php/t5488_snapshot20080822171107.jpg
ஸ்ரீதரின் 'சுமைதாங்கி' படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம். 'மாம்பழம்' எல்.விஜயலஷ்மியை சுற்றும் 'ஆந்திரத்து வண்டு' இவர்தான்.
அடுத்து முக்கியமான படம் இவர் நடித்து 'எங்கிருந்தோ வந்தாள்' வில்லன் ரோல். நடிகர் திலகத்திற்கே வில்லன். நடிகர் திலகம் காதலிக்கும் ஜெயகுமாரி கிளியை அவரிடமிருந்து கொத்திப் பறித்து அனைவரயும் கொதிக்க வைத்த கழுகு. 'ஒரே பாடல் உன்னை அழைக்கும்' பாடலில் ஜெயகுமாரியுடன் திருமணக் கோலம் பூண்டு, சோகம் கவ்வப் பாடும் நடிகர் திலகத்தைச் சுற்றி வந்து வெறுப்பேத்தி ஆடுவார்.
அதுமட்டுமல்ல...
நடிகர் திலகம் பைத்தியம் பிடித்து அவரே கழுகாய் மாறி கொத்திய கிளி ஜெயலலிதா. அந்தக் கிளியை மேலும் கொத்த நினைக்கும் கழுகுதான் இந்த வில்லன் ராஜா.
இவர் தெலுங்குக்காரர். தெலுங்கில் இவர் பெயர் ஹரநாத் ராஜு. கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். நல்ல அழகர். தெலுங்கில் கொடி கட்டிப் பறந்தவர்.
நீங்கள் மேலே பார்க்கும் புகைப்படத்திலேயே அவர் எவ்வளவு கவர்ச்சிகரமானவர் என்று தெரியும்.
ஜமுனாவுடன் 'மா இன்ட்டி மகாலஷ்மி' படத்தில் நடித்தவர். 'மதன காமராஜு' படத்தில் காந்தாராவுடன் இணைந்து நடித்தார். விட்டாலாச்சார்யா இப்படத்திற்கு இயக்கம்.
கிருஷ்ணா! ஞாபகம் இருந்தால் சொல்லுங்கள். இப்படம் தமிழில் வெளி டப் செய்யப்பட்டு வெளிவந்து 'ஓஹோ' என்று கீற்றுக் கொட்டகைகளில் ஓடியது.:) பெயர் தெரியுமா?:)
http://i1.ytimg.com/vi/PSeqEmNkWrQ/0.jpg
இவர் நடித்த சில முக்கிய திரைப்படங்கள்.
ஸ்ரீ சீதாராம கல்யாணம்
குண்டம்மா கதா
பீஷ்மா
பாலண்டி யுத்தம்
பாலபாரதம்.
பெம்புடு கூத்ரு (தேவிகாவுடன்)
http://i.ytimg.com/vi/9cMHzNa8AbQ/maxresdefault.jpg
சௌகாருடன் (சௌகார் என்ன ஒரு அழகு!)
http://i.ytimg.com/vi/Wqk0LgUfzyQ/maxresdefault.jpg
தமிழில் கொஞ்ச படங்கள்தான். தெலுங்கில் அதிகம். நிறைய ஹிட்ஸ். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'வல்லவனுக்கு வல்லவன்' தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இவர் ஒரு ஹீரோ. இன்னொருத்தர் ரங்காராவ். இதில் இவருக்கு ஜோடி சௌகாரின் தங்கை கிருஷ்ணகுமாரி.
தமிழில் மனோகரும், அசோகனும் சாவித்திரியுடன் காவாலி பாடி நம்மை சித்ரவதை செய்வார்களே:) ('பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்') அந்தப் பாடலை இவர் தெலுங்கில் (Monagallaku Monagadu) ரங்காராவுடன் சேர்ந்து பாடுவார் அதே சாவித்திரியுடன்.
https://youtu.be/_OpBoV2gEGU
இவருக்கு தமிழில் குரல் கொடுப்பவர் பி.டி ரட்சகன் என்பவர்.
மது அரக்கனுக்கு அடிமையாகி 1986-ல் காலமானார். 1984-இல் வெளி வந்த 'நாகு' தான் இவரது இறுதிப் படம்.
ஜமுனாவுடன் இவர் நடித்த தெலுங்குப் பாடல் ஒன்றை தருகிறேன். (ஜமுனாவுடன் இவர் ஜோடி சேர்ந்தால் சக்சஸ்தான் ) பாருங்கள். டக்கென்று பிடித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தெரிந்த தமிழ்ப் பாடல்தான். அதுவே தெலுங்கில்.
https://youtu.be/XSXSe7M2l-o
'ஒரே பாடல் உன்னை அழைக்கும்'
https://youtu.be/xDtX1AgMsoU
'அழகிய மிதிலை நகரினிலே'...
https://youtu.be/xMLizOh0evg
'சுமைதாங்கி' படத்தில் இவரது ஜோடி எல்.விஜயலஷ்மி.
https://youtu.be/-h1qvzKYBLg
சி.க,
ஒரே ஒரு வரி போட்டு இப்படி முதுகில் வரி உண்டாக்கிட்டீரே! நியாயமா? உம்மை... நற நற.:) ஆசிரியருக்கே டெஸ்ட் வைக்கிற மொத மாணவரை இப்பத்தான் இந்த உலகம் பார்க்குது.
chinnakkannan
5th June 2015, 08:53 PM
ஹச்சோ..இது தான் நம்ம வாசுங்ணாங்கறது..
அட ஒரே ஒரு வரி கொடுத்தா இப்படி த் தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுக்கறீங்களே
அவர் பெயர் ராஜான்னுல்லாம் தெரியவே தெரியாது நீங்கள் சொல்லியிருக்காவிட்டால்.. நீங்கள் சொன்ன பிறகு தான் மற்ற படங்களும் நினைவுக்கு வருகின்றன..
இந்த அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் தெலுகு வெர்ஷனில் ஜமுனாவும் அவரோட கண்மையும் நன்னா இருக்குதில்லையோ..( ரொம்ப நாளா டாடி எனக்கொரு டவுட்டு.. பக்கத்திலோ காரிகை மேலே நிலவு கீழே வைக்கோல் போர் இந்தாள் என்னடானா கடிதம் லாம் எழ்தறறார்.. (தமிழ் ஜெய்யும் தெலுகு ராஜாவும்)
மாம்பழத்து வண்டு ஒரு செகண்ட்ல சித்தியோன்னு கன்ஃப்யூஸ் ஆகிட்ட்டேன் அப்புறம் நினைவு வந்தது..
//நடிகர் திலகம் பைத்தியம் பிடித்து அவரே கழுகாய் மாறி கொத்திய கிளி ஜெயலலிதா. // ந.தியும் ஜெயும் போட்டி போட்டுக்கிட்டு நடிச்சதாலேயோ என்னவோ அந்த சீன்ல நடிச்ச டார்ச்சும் உணர்ச்சி வசப்பட்டு நல்லா நடிச்சிருக்கும் ( முன்னாலேயே எழுதியிருக்கேன் நினைவிருக்கா)
காதல் கிளிகள்
பறந்த காலம்
கண்ணில் தெரியும்
நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி
கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால்
சொந்தம் புரியும்
ரொம்பப் பிடிச்ச வரிகள். ரொம்பப் பிடிச்ச பாட் அண்ட் ந.தி.. ம்ம்
அந்த பெம்புடு கூத்ரு தேவிகா ஸ்டில் வெரி நைஸ்..
என்.டி ஆர் படம் விட்டலாச்சாரியா டைரக்*ஷன்னா அந்தப் படம் மாய மோதிரமா.. ஹீரோயின் ராஜஸ்ரீ..
எல்லா ப் பாட்டுக்கும் ஸ்டில்களுக்கும் தகவல்களுக்கும் தனியா ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் வாசு
..
//ஆசிரியருக்கே டெஸ்ட் வைக்கிற மொத மாணவரை இப்பத்தான் இந்த உலகம் பார்க்குது// ஆசிரியர்னா இப்படித் தான் இருக்கணும்..கிட்டக்க வாங்க திருஷ்டி சுத்திப் போடறேன்..அண்ட் மிக்க தாங்க்ஸ்:)
இந்தாங்க குருதட்சணையா உங்களுக்கு.. இந்தப் பொண்ணு ஏதோ சொல்லுது
https://youtu.be/tppLDgyTvXk
(ஹைய்யா.. கருவின் கருவில குழந்தைப்பாட்டுக்குஇந்தப் பாட்டு ரவி போடறதுக்கு முன்னால நான் போட்டுட்டேனே!)
ஆமா அவன் பித்தனால விஜயகுமாரி தானே.. சச்சுக்கு என்ன ரோல் படம் பார்த்ததிலலை நன்னா இருக்குமா என்ன (ஹை அடுத்த தூண்டில்)
vasudevan31355
5th June 2015, 09:05 PM
//(ஹை அடுத்த தூண்டில்)//
தூண்டில்ல மீன் மாட்டாது நைனா:lol2:
இப்பிடில்லாம் பண்ணா அப்புறம் இன்னொரு தெலுகுப் பாட்டைக் கொடுத்து லிரிக்ஸ் எழுத வச்சுடுவேன். ஓஹோன்னானாம் வெள்ளைக்காரன்.
vasudevan31355
5th June 2015, 09:08 PM
//மாம்பழத்து வண்டு ஒரு செகண்ட்ல சித்தியோன்னு கன்ஃப்யூஸ் ஆகிட்ட்டேன் அப்புறம் நினைவு வந்தது..//
அதானே பார்த்தேன்.:slurp: எது முதல்ல நினைவுக்கு உமக்கு வருமோ அது கரெக்ட்டா வந்துடுதே!
vasudevan31355
5th June 2015, 09:10 PM
மாய மோதிரத்துல காந்தாராவ் மட்டும்தான். ரெண்டு ஹீரோ கிடையாது. இப்ப கண்டு பிடிங்க.
chinnakkannan
5th June 2015, 09:12 PM
//(ஹை அடுத்த தூண்டில்)//
தூண்டில்ல மீன் மாட்டாது நைனா:lol2:
இப்பிடில்லாம் பண்ணா அப்புறம் இன்னொரு தெலுகுப் பாட்டைக் கொடுத்து லிரிக்ஸ் எழுத வச்சுடுவேன். ஓஹோன்னானாம் வெள்ளைக்காரன்.
இப்படி ச் சொல்ல லாகுமோ ஐயா..
ஏதோ ஒரு உதவி நானும் என்னான்னு கேக்குறது
ஒரு மயக்கம் அந்தி மயக்கம் என்னை ஒண்ணாக வாட்டுறது
(வெகு அழகான எ.பி. பாட்டு உமக்கு..சமர்ந்த்தோன்னோ)
https://youtu.be/e37l-bZ6OhM
rajraj
6th June 2015, 05:53 AM
Krishna said he liked Ashtapathi. Here is one from Tenali Raman (Telugu)
Chandana charchita.......
http://www.youtube.com/watch?v=aSKkJw46Pn0
I posted more Ashtapathi in movies in Sanskrit Classical Compositions in movies thread ! :)
uvausan
6th June 2015, 08:45 AM
Good Morning
http://i199.photobucket.com/albums/aa117/vchartman/Spring/squirrelssharing.jpg (http://media.photobucket.com/user/vchartman/media/Spring/squirrelssharing.jpg.html)
uvausan
6th June 2015, 08:54 AM
கருவின் கரு - பதிவு 48
ஜனணியின் தொடர்ச்சி :
உண்மை சம்பவம் -6
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அன்று "பிரதோஷம் " . காலையில் இருந்தே அம்மா என்னிடம் application போட்டு விட்டாள் , கபாலீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச்செல்ல . இன்று ஆபீஸ் இல் ஏகப்பட்டவேலை - புதியதாக ஒரு MD சேருகிறார் - கொஞ்சம் முசுடாம் -- கோபம் வேறு அடிக்கடி வருமாம் - UP யை சேர்ந்தவர் . ஜானா விற்கு உடம்பு சரியில்லை - இன்று கண்டிப்பாக ஆஸ்பத்திரி கூட்டி செல்ல வேண்டும் - ஸ்கூட்டர் வேறு ஸ்டார்ட் ஆகவே இல்லை . குட்டிகளை ஸ்கூல்களுக்கு தயாராக்கவேண்டும் - இன்று அவர்களுடைய ஸ்கூல் பஸ் வராதாம் .
ஜானாவிடம் செல்கிறேன் -- " என்னங்க உங்கள் லீவு application என்னவாயிற்று ? குழந்தைகளுக்கு summer லீவ் ஆரம்பித்து விடும் - இந்த தடவையாவது அவர்களை ஏமாற்றாமல் ஊட்டிக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டும் "
"ஜானா , அம்மாவை ------"
" ஏன் உங்கள் தம்பி , தங்க கம்பி இருக்கிறாரே அவரிடம் இருக்கட்டும் - மூன்று நாட்கள் தானே !"
" ஜானா தம்பியின் நிலைமையை தெரிந்துமா இப்படி சொல்கிறாய் ? - மூன்று மாதங்களாக அவனுக்கு வேலை இல்லை . பாவம் - இதில் அம்மாவை எப்படி சமாளிப்பான் "
சண்டை வலுவானது . பீரங்கிகள் வெடித்தன ...... அடுத்த நிமிடம் நான் ஆபீஸ் இல் .
அம்மா என்றுமே தனக்கு என்று எதையுமே கேட்டதில்லை - தம்பிக்கு வேலை போன விஷயத்தை நான் சொல்ல வில்லை - ஒடிந்தே போய் விடுவாள் .. அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரை
" பணம் சம்பாதிப்பது --- குண்டூசியால் பள்ளம் தோண்டுவதுபோல ; செலவழிப்பது குண்டூசியால் பலூன் உடைப்பது போல "
புதிய MD வந்துவிட்டார் - மாலை மரியாதைகள் முடிந்தவுடன் ஒருவர் ஒருவராக அறிமுகம் .என் முறை வந்தது .
MD என்னிடம் மட்டும் எதையோ கேட்க்க விரும்பினார் - மீண்டும் தன் cabin க்கு அழைத்தார் - எல்லோருடைய கண்களும் இப்பொழுது என் மீது - வந்த முதல் நாளிலேயே MD இவனை கூப்பிடுகிறாரே - என்ன வசியம் செய்தான் இவன் ----
" ராஜு நீங்கள் இதற்க்கு முன் UP யில் இருந்தவரா ? உங்கள் அப்பா எங்கு வேலை செய்தார் ? எல்லாமே பர்சனல் கேள்விகள் - பொறுமையாக விடை அளித்தேன் . என்னுடைய வீட்டு விலாசத்தையும் வாங்கிக்கொண்டார் .
ஒரு மணி நேரம் permision எடுத்துக்கொண்டு அம்மாவை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்றேன் - ஜானவே தனியாக ஆஸ்பத்திரி சென்று வந்தாள் . 7மணி - வீடு வந்தடைந்த என்னை ஒரு BMW கார் வரவேற்றது . ஜானா ஓடிவந்தாள் " என்னங்க - உங்கள் MD உங்களை பார்க்க வந்திருக்கிறார் . 5நிமிடமாக காத்துகொண்டிருக்கிறார் .
" MD யா !! இவர் ஏன் என் வீட்டிற்க்கு ?????"
" ராஜு இவர்கள் தான் உன் அன்னையா ...... ?" MD பதிலுக்கு தாமதிக்காமல் அவள் காலில் விழுந்தார் -- " அம்மா என்னை தெரிகிறதா ? நான்தான் விசு - விஸ்வநாதன் - வாரணாசியில் உங்கள் வீட்டிற்க்கு அருகில் இருந்தேன் . மேலே படிக்க முடியாமல் சங்கர மடத்தில் சேர நினைத்த என்னை உங்கள் கணவர் கண்டுபிடித்து அழைத்துவர , நீங்கள் என்னை உங்கள் மகனாக நினைத்து உங்கள் வீட்டிலேயே தங்க வைத்து என்னை படிக்க வைக்க உங்கள் நகைகளை வேறு வித்து --- அம்மா உங்களை மீண்டும் பார்க்க முடிந்ததே , நான் செய்த பெரிய பாக்கியம் "
எனக்கு ஒன்றும் புரியவில்லை , ஜானா சிலையாகி 10 நிமிடங்கள் ஆகிவிட்டன - அம்மா இதுவரை என்னிடம் ஒரு வார்த்தை இதைப்பற்றி சொன்னேதே இல்லை ...
அம்மா குனிந்து MD யை தூக்கினாள் --- விசு உன்னை எவ்வளவு நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன் - ராஜுவை அப்பொழுது சுமந்து கொண்டிருந்தேன் உள்ளே - உன்னை வெளியே !!
"அம்மா என்னுடன் வந்துவிடுங்கள் , ராஜுவையும் அவன் family யையும் நான் பார்த்துக்கொள்கிறேன் . " MDயின் குரலில் கண்ணீரின் ஓட்டத்தின் சத்தத்தை உணர்ந்தேன் .
" விசு நீ இப்படி சொன்னதே போதும் - நன்றாக நீ இருக்க வேண்டும் "
MD எப்பொழுது கிளம்பினார் என்றே தெரியவில்லை - ஜானா மெதுவாக குரல் கொடுத்தவுடன் கண்களை திறந்தேன் . " என்னங்க அம்மாவையும் ஊட்டிக்கு அழைத்து செல்ல வேண்டும் - அம்மா வராவிட்டால் , எங்களுக்கு ஊட்டி தேவை இல்லை ---- குழந்தைகள் பாட்டியின் மடியில் கதைகளை பிடுங்கிக்கொண்டிருந்தன -- டிவி யை போட்டேன் -- பிரதோஷம் - இறைவன் தன் தேவியுடன் ரிஷபத்தில் வந்துகொண்டிருக்கும் காட்சி - கண்கள் டிவி யின் பக்கம் - கைகள் சேவித்தது அம்மாவின் பக்கம் -----------
https://youtu.be/gZLrOhpwbnA
uvausan
6th June 2015, 08:58 AM
கருவின் கரு - பதிவு 49
ஜனணியின் தொடர்ச்சி :
https://youtu.be/c2ZwdkMaaLU
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோஓஓஓஓஓஓ
பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ
முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோஓஓஓஓஓஓஓஓஓஓ
முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ
என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன்
இன்று தன்னை இழந்தேன்
சுகம் தன்னில் விழுந்தேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போஓஓஓஓஓஓஓஓஓஓ
கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ அது இன்பத் தவிப்போ
தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன்
பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன்
சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான்
அந்த கோதை சிரிப்பாள்அதைக் கண்டு ரசிப்பான்
அதைக் கண்டு ரசிப்பாள்
ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன்
என் அன்பைத் தருவேன்அந்த அன்பைப் பெறுவேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
uvausan
6th June 2015, 09:00 AM
கருவின் கரு - பதிவு 50:):smile2:
ஜனணியின் தொடர்ச்சி :
https://youtu.be/gGis1r5R2nc
மல்லிகைப் பூ போட்டு
கண்ணனுக்கு மங்கள நீராட்டு...
செண்பகப் பூ போட்டு
பாடு ஒரு செந்தமிழ் தாலாட்டு...
படம்: தாலாட்டு
uvausan
6th June 2015, 09:02 AM
கருவின் கரு - பதிவு 51
ஜனணியின் தொடர்ச்சி :
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
—
எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு
—
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
—
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணி குயில் படித்திடும் கவிதையின் இசையென
நீ தான் வந்தாயோ
—
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
https://youtu.be/UmCcv-4uv7k?list=PLAYPwgsXmKnuVIUcnlosUy2Dpg3Sax_8F
uvausan
6th June 2015, 09:04 AM
ஜனணி இன்னும் வருவாள்
vasudevan31355
6th June 2015, 09:23 AM
( ரொம்ப நாளா டாடி எனக்கொரு டவுட்டு.. பக்கத்திலோ காரிகை மேலே நிலவு கீழே வைக்கோல் போர் இந்தாள் என்னடானா கடிதம் லாம் எழ்தறறார்.. (தமிழ் ஜெய்யும் தெலுகு ராஜாவும்)
ரொம்ப அக்கப்போர்தான்:)
rajeshkrv
6th June 2015, 09:32 AM
( ரொம்ப நாளா டாடி எனக்கொரு டவுட்டு.. பக்கத்திலோ காரிகை மேலே நிலவு கீழே வைக்கோல் போர் இந்தாள் என்னடானா கடிதம் லாம் எழ்தறறார்.. (தமிழ் ஜெய்யும் தெலுகு ராஜாவும்)
ரொம்ப அக்கப்போர்தான்:)
போரடிக்காமல் அக்கப்போராவது அடிக்கிறாரே ... விடுவீரா :)
என்ன ஜி. நலம் தானே
rajeshkrv
6th June 2015, 09:56 AM
மாய மோதிரம் என்றவுடன் பல விட்டலாச்சார்யாவின் படங்கள் நினைவுக்கு வரும்
folklore அதாவது தெலுங்கில் ஜானபத கதைகளை அழகாக படமாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர்.
ராமாராவ், காந்தாராவ் என இருவரும் இவரது பல படங்களில் தூள் கிளப்பியவர்கள்
அப்படி ஒரு படம் பந்திபொட்டு .. அதிலும் கண்டசாலாவின் இசையில் இந்த பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்லும்
இந்த பாடல் படத்தில் இடம்பெற முதலில் விட்டலாச்சார்ய அனுமதிக்கவில்லை. பின் கண்டசாலா மற்றும் ராமாராவ் அவர்களின் வேண்டுகோளுக்காக
சேர்க்கப்பட்டு படத்தின் பிரபலமான பாடலானது
https://www.youtube.com/watch?v=q8Qi0Ua3ZXI
அதே படம் எல்லாம் அதே .. ஆனால் கன்னடம்.. ராஜ்குமார் லீலாவதி ..
இசையரசி மற்றும் கண்டசாலா கன்னடத்திலும்
வாசு ஜி உமக்காக உமக்காக இந்த பாடலும் இனிமையும் உமக்காக
https://www.youtube.com/watch?v=-Ry8xeDKnRY
vasudevan31355
6th June 2015, 10:05 AM
அருமை ஜி!
என்ன ஒரு சாங்! உத்தமபுத்திரன் நடிகர் திலகம் ஸ்டைல் டிரெஸ் போட்டு இருக்கிறார் ராஜ்குமார். 'அவர்கள்' ரஜினி அம்மா (லீலாவதி) ரொம்ப யங்காகத்தான் இருக்கிறார். ஆனால் கிருஷ்ணகுமாரியுடன் நெருங்கவே முடியாது.
தெலுங்கு ஒரு படி டாப். இது இந்த நாட்டாமையின் தீர்ப்பு. நல்ல பாடல்களுக்கு நன்றிஜி!
vasudevan31355
6th June 2015, 10:06 AM
ஜி! இதே ராகத்தில் இதே பாடலை தமிழில் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்.
vasudevan31355
6th June 2015, 10:13 AM
ஜி! நீங்களே கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி?
இப்போது நான் ஒன்று கொடுக்கிறேன். செம ஜாலி பாடல்.
விட்டாலாச்சார்யா இயக்கிய 'வீர குமார்' படத்தில் ஒரு இனிய பாடல். சற்றே பர்மா பின்னணி மியூசிக். காமெடியன்ஸ் சாங் தான். ஆனால் வெகு ஜோர்.
சி.க, கிருஷ்ணா நீங்களும் கேளுங்கள்.
https://youtu.be/OT1dpMv54u8
rajeshkrv
6th June 2015, 10:18 AM
அருமை ஜி!
என்ன ஒரு சாங்! உத்தமபுத்திரன் நடிகர் திலகம் ஸ்டைல் டிரெஸ் போட்டு இருக்கிறார் ராஜ்குமார். 'அவர்கள்' ரஜினி அம்மா (லீலாவதி) ரொம்ப யங்காகத்தான் இருக்கிறார். ஆனால் கிருஷ்ணகுமாரியுடன் நெருங்கவே முடியாது.
தெலுங்கு ஒரு படி டாப். இது இந்த நாட்டாமையின் தீர்ப்பு. நல்ல பாடல்களுக்கு நன்றிஜி!
கிருஷ்ணகுமாரி ஆம். அவர் முன் லீலாவதி ஒன்றுமே இல்லை.
தெலுங்கு சூப்பர் ....
vasudevan31355
6th June 2015, 10:27 AM
படம் 'வீரகுமார்'தான்
அழகு கிருஷ்ணகுமாரி ராணி (போர்) உடை கம்பீரமாகத் தரித்து சாரட் வண்டியில் தோழிகளுடன் பாடும் பாடல். கிருஷ்ணவேணி குரல் தந்திருப்பார்.
'ஆளும் தமிழ்நாட்டைப் பார்
அம்மலை மேல் கண் கொண்டு பார்'
பாடலாசிரியர் கில்லாடி. ஆந்திராப் பெண்ணை 'ஆளும் தமிழ் நாட்டைப் பார்' என்று பாட வைத்து விட்டாரே! அதே போல இன்னொரு மாங்காயும் அடிக்கிறார். ஒரிஜினல் தமிழ்ப்ப் படம் போல பார்ப்பவர்களை ஏமாற்ற 'தமிழ் நாட்டை' சேர்த்து விட்டார். ஏமாற நாங்கள் என்ன சின்னக் கண்ணனா?:)
சின்னக் கண்ணனுக்கு கிருஷ்ணகுமாரி இருந்தால் போதும்.:) ஆனால் இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.:)
https://youtu.be/s1efYrnKaJg
rajeshkrv
6th June 2015, 10:33 AM
இதோ ஒரு கிண்டல் கேலி பாடல்
இசையரசியுடன் ஜானகி
யாராரு என்னன்னு தான் சொல்றேண்டா கண்ணா
https://www.youtube.com/watch?v=xsanDUchQnE
RAGHAVENDRA
6th June 2015, 11:56 AM
எல்லோருக்கும் காலை வணக்கம்..
வாசு, ராஜேஷ்,
நீங்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட பாடலின் ஒரிஜினல் இதுவா கேளுங்கள்..
https://www.youtube.com/watch?v=U5sqT8gEk7o
பல்லவியின் முதல் வரி மெட்டு எடுத்துக் கொள்ளப் பட்டு அவரவர் மொழிக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளப்பட்டிருக்கலாம்.
ஆனால் தாங்கள் குறிப்பிட்டிருந்த கன்னடம், தெலுங்கு இரு பாடல்களின் முதல் வரி மெட்டுக்களும் கவலை இல்லாத மனிதன் பாட்டைத் தான் நினைவூட்டுகின்றன.
adiram
6th June 2015, 03:49 PM
//இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.. ஒரு ஹாய் நன்னாருக்கு எழுதினது என்று சொல்வது எநத விதத்தில் தவறாகும் எனத் தான் எனக்குத் தெரியவில்லை..//
மர மண்டைகளுக்கு புரிஞ்சா சரி!:)
நான் உருப்படியான பெரிய பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை (தெரியாது என்பதால்). இருந்தாலும் மற்றவர் பதிவுகளை பாராட்டுவதுண்டு. கணினி அடிக்கடி மக்கர் பண்ணுவதாலும், தமிழ் கன்வெர்ட்டர் அப்பப்ப ஸ்ட்ரைக் பண்ணுவதாலும் அனைத்து பதிவுகளுக்கும் பாராட்டு தெரிவிக்க முடிவதில்லை. பெரும்பாலும் 'தேங்க்ஸ்', 'லைக்ஸ்' மட்டும் போடுவதுண்டு.
இருப்பினும் நானும் அந்த 'மரமண்டைகள்' பட்டியலில் இருக்கிறேன்தானே?.
நெட்வொர்க் கோளாறால் ஒருவாரத்துக்குப் பின் நேற்றுதான் நடிகர்திலகம் திரிக்கு சென்றேன். புயலடித்து ஓய்ந்திருந்தது தெரிந்தது. ஆனால் 'காற்றழுத்த தாழ்வுநிலை' உருவாக காரணமான பதிவுகளை காணோம். திரி அமைதியடைந்தது கண்டு மகிழ்ச்சி. தங்கள் புறக்கணிப்பு கண்டு வருத்தம்.
uvausan
6th June 2015, 06:54 PM
ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்காக
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.
“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.
ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்..
இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான். ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.
பட்ட காலிலே படும் என்பது போல… எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.
“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.
மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.
“அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.
அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.
அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.
வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம்.
நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிகொள்ளவேண்டியதில்லை.
ஆகவே, சோதனை என்றால்… இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.
https://youtu.be/l0oSwaMH9x0
uvausan
6th June 2015, 08:34 PM
வாசு - இந்த பதிவு மதுர கானத்திரிக்கு தேவை இல்லாத ஒன்றுதான் - இருந்தாலும் சில விஷயங்களை நினைத்துப்பார்க்கும் நெஞ்சு பொறுக்கவில்லை - மனதை திறந்து பேச இந்த திரியை விட்டால் வேறு எங்கு சொல்ல முடியும் என்பதால் , இங்கு கொட்டித்தீர்க்கிறேன் - deviation க்கு மன்னிக்கவும் .
விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி?
மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி , ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது! முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர்!
நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது ! அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை ! அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா? மற்றவர்களுக்கு இல்லையா?
இதை ஊடகங்களில் விளம்பரம் செய்து பல கோடி மக்களீடம் சேர்க்கும் ஊடகங்களுக்கு பொறுப்பு இல்லையா? அதில் பிரச்சனை வந்தால் அதையும் விவாதாமாக்கி காசு பார்க்கும் அவங்களை கைது செய்ய வேண்டமா?
மேலும் இதற்கு அனுமதி வழங்கிய இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு கழக அதிகாரிகள் தண்டிக்கப் பட வேண்டாமா?
இதை விட மோசமான ஆபத்தை விளைவிக்கும், புகையிலை, போதைப்பாக்கு, மது உள்ளிட்ட பொருட்களை அனுமதிக்கும் அரசுக்கும் , அதை ஆளுகின்ற வர்கத்துக்கும் தண்டனை இல்லையா?
தயாரிக்கும் இடத்தில் தடுப்பதை விட்டு விட்டு தயாரித்தவனுக்கு தண்டனை வழங்குவதை விட்டு, அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகளை விட்டு விட்டு நடித்தவன், விற்றவன், வாங்கியவன் , பயன் படுத்துதுபவனை தண்டிக்கும் கேடுகெட்ட சட்டங்களை வைத்து எந்தத் தீமையையும் தடுக்க முடியாது!
பான் பராக் தயாரிப்பவனை விட்டுவாங்களாம்!
விற்கிறவனைப் பிடிப்பாங்களாம்!
சிகரெட் தயாரிப்பவன் விற்பவனை விட்டுடுவாங்களாம்!
பொது இடத்தில் புகைப் பிடிப்பவனை பிடிப்பாங்களாம்!
பிளாஸ்டிக் பை தாயாரிக்கிறவனை விட்டுடுவாங்களாம்!
கடையில் வைத்து சில்லறையில் விற்பவனை பிடிப்பாங்களாம்!
மதுவை அரசாங்கமே தயாரித்து விற்பாங்களாம்!
அதைக் குடிச்சிட்டு வண்டி ஓட்டினா பிடிப்பாங்களாம்!
கட்டிடம் இடிந்தால் கட்டினவனை பிடிப்பங்களாம்!
ஆனால் காசு வாங்கிக் கொண்டு அனுமதித்த அதிகாரிகளை விட்டுவாங்களாம்!
செம்மரத்தை கடத்துறவனை விட்டுடுவாங்களாம்!
கூலிக்கு மரம் வெட்டுறவனை சுட்டுருவாங்களாம்!
போங்கடா நீங்களும் உங்க சட்டமும்!
https://youtu.be/JgUOyi2TWyo
vasudevan31355
6th June 2015, 11:05 PM
ஆதி,
கூப்பிட்லாமில்லே?:)
உங்களைப் போய் அப்படிச் சொல்வேனா? நீங்கள் மரமண்டை அல்ல. மகா மண்டை.
எவ்வளவு விஷயங்களை தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து பல சிறு சிறு தவறுகளை மற்றவர் மனம் கோணாமல்... நன்கு கவனிக்கவும்... மற்றவர் மனம் கோணாமல் திருத்தி உள்ளீர்கள்!. அவ்வளவு விஷய ஞானம் உள்ளவர் தாங்கள்.
நீங்கள் அடிக்கடி இங்கு வராததுதான் மிகப் பெரிய குறை எங்களுக்கு. அதே போல பாராட்டைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை எழுதவில்லை.
//இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே//
மேற்கண்ட வரிக்கு மட்டுமே அந்த மரமண்டை பதில்.:)
நாம் கலந்து கட்டி 'அங்கு' விளையாடிய நாட்கள் பசுமையானவை. முக்கியமாக வைர நெஞ்சம், பாரத விலாஸ்.
உங்களுக்குத் தெரியாத தமிழ்த் திரைப்பட ரகசியமே இருக்க முடியாது.
அதை நீங்களும் பயன்படுத்திக் கொண்டு எங்களையும் பயனடையச் செய்ய வேண்டுகிறேன். தினம் ஒரு பதிவாவது தாங்கள் இங்கு இட வேண்டும். இது என் அன்பு வேண்டுகோள்.
நன்றி!
vasudevan31355
7th June 2015, 05:48 AM
சபாஷ் ரவி!
உங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். இதே கேள்விகள்தான் என் நெஞ்சிலும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இருந்து என்ன பயன்? நாம் இருப்பது இந்தியா ஆயிற்றே!
அருமையான ஆக்ரோஷ பதிவு. ஒவ்வொரு அரசியல்வாதியும் உணர வேண்டிய கருத்துக்கள்.
நீங்கள் சொல்வது போல் மீடியாக்கள் எல்லாத் தவறையும் செய்து விட்டு ஜம்மென்று தப்பிக் கொள்கின்றன. முக்கியமாக பத்திரிக்கைகள்.
உள்ளக் குமுறலை நடிகர் திலகத்தின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' பாடல் மூலம் தணிக்க வைத்ததற்கும் நன்றி! பொருத்தமான பாடல்.
vasudevan31355
7th June 2015, 05:53 AM
இறைவன் குடிசை எரித்து கப்பலில் வந்தவனை காப்பாற்றிய கதை அருமை. நம்பிக்கையே மனிதனது சாதனம். அதை தங்களது குட்டிக்கதை அருமையாக உணர்த்துகிறது.
பாலமுரளி கிருஷ்ணாவின் உன்னதக் குரல் 'அருள்வாயே' பாடலை எங்கோ உயரத் தூக்கிச் செல்கிறது.
நல்ல பாடலுக்கு நன்றி ரவி.
uvausan
7th June 2015, 08:07 AM
Good Morning
http://i199.photobucket.com/albums/aa117/vchartman/animals/LionCubs1.jpg (http://media.photobucket.com/user/vchartman/media/animals/LionCubs1.jpg.html)
uvausan
7th June 2015, 08:59 AM
கருவின் கரு - பதிவு 52
ஜனணியின் தொடர்ச்சி :
உண்மை சம்பவம் -7
அம்மாவின் " அயிகிரி நந்தினி " குரல் வந்தால் , கடிகாரத்தை சரியாக காலை 5மணிக்கு திருத்திக்கொள்ளலாம் . விடிந்தும் விடியாத அந்த காலைபொழுதில் அந்த மதுர கானம் அந்த தெருவையே தூங்கினது போதும் , எழுந்திரு , உனக்கு நன்றாக வாழ இன்னும் ஒரு நாள் வாயிப்பை இறைவன் கொடுத்திருக்கிறான் என்று சொல்வது போல இருக்கும் - அந்த தெருவில் அம்மாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது . அவளின் ஞாபக சக்தி , 10 தெருவைத் தாண்டி கௌரி என்னும் பசுவிற்கு சீமந்தம் செய்யும் நாள் முதல் கன்றை ஈன்றும் நாள் வரை , என் மகள் அணுவின் ஸ்கூல் பீஸ் கட்டும் கடைசி நாள் வரை எல்லாமே அம்மாவிற்கு அத்துப்படி -- காண்டக்ட் நம்பரை எல்லாம் மொபைலில் ஸ்டோர் செய்யும் அவசியமே அம்மாவிடம் கிடையாது - என்றோ பஸ்சில் சந்தித்த நபர் கொடுத்த நம்பரைக்கூட சாதரணமாக அயிகிரி நந்தினி சொல்வதுபோல சொல்லுவாள் . படிக்காதவள் - ஆனால் படித்த எவருக்கும் ஒரு சவாலாக இருப்பவள் . இப்படிப்பட்ட அம்மா எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமை படாத நாளே கிடையாது .
அன்று இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த விதி சற்றே என்னைப்பார்த்து சிரிக்க ஆரம்பித்தது . அம்மா என்னிடம்
" கோபி , மறந்து விடுகிறதடா - நீயும் சொல்லேன் மகிஷாசுர மர்த்தினியை " - சிரித்தேன் - அம்மா அம்பிகைக்கு வேண்டுமானாலும் மறந்து போகலாம் - நீ மறப்பது என்பது நடக்காத ஒன்று --- அம்மாவிற்கு யாரவது புகழ்ந்தால் கூட பிடிக்காது -- "போதும் கோபி - மேலே சொல்லு ---"
அம்மாவின் போக்கில் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன - ஒரு நாள் அணு எந்த கிளாஸ் இல் படிக்கிறாள் என்று கேட்டதும் சற்றே விழித்துக்கொண்டேன் .மது , என் மனைவி கண்டிப்பாக அம்மாவை டாக்டர் கிட்ட கூட்டிண்டு போக வேண்டும் என்று அடம் பிடித்தாள் .
"Alzheimer's disease (AD), also known as Alzheimer disease, or just Alzheimer's, accounts for 60% to 70% of cases of dementia. It is a chronic neurodegenerative disease that usually starts slowly and gets worse over time. The most common early symptom is difficulty in remembering recent events (short-term memory loss). As the disease advances, symptoms can include: problems with language, disorientation (including easily getting lost), mood swings, loss of motivation, not managing self care, and behavioural issues. As a person's condition declines, she or he often withdraws from family and society. Gradually, bodily functions are lost, ultimately leading to death. Although the speed of progression can vary, the average life expectancy following diagnosis is three to nine years." டாக்டர் பெரிய சொற்பொழிவையே நிகழ்த்தினார் - தலையே எனக்கு சுற்றியது .
"Mr கோபால கிருஷ்ணன் - கவலைப்படாதீர்கள் - உங்கள் அம்மா stage 1 . மிகவும் அன்புடனும், பொறுமையுடனும் அவளிடம் நடந்துகொள்ளுங்கள் - ---
அம்மா என்னையும் நீ மறந்து விடுவாயா ??? எண்ணங்களை சுமந்துகொண்டு வீடு வந்தடைந்தேன் - அம்மா சிரித்தாள் --- கோபி யாரை யாரால் மறக்க முடியும் - இந்த வியாதிகள் எல்லாம் நம்மிடம் இருந்து பணம் பிடுங்கவே வருகின்றன - இதையெல்லாம் தாண்டி , யாருமே பிடிக்க முடியாத இடத்தில் இருப்பதுதான் ஒரு தாயின் உள்ளம் , அவளின் அன்பு - இதற்க்கு ஒரு பெயர் கிடையாது - காலம் காலமாக உலகம் சுழல்கின்றது இந்த ஒரு சக்தியினால் தான் . போய் படு ---
அம்மாவை தினமும் குளிப்பாட்டும் ஒரு பாக்கியத்தைப்பெற்றேன் . அம்மாவுடன் தினமும் அமர்ந்து அவள் மறந்துபோகும் அயிகிரி நந்தினியை சொன்னேன் .
பொறுமை கிலோவிற்கு என்ன விலை என்று கேட்டவன் , பொறுமையின் அவதாரம் என்ற பெயரைப்பெற்றேன் . அந்த சில மாதங்கள் , கங்கையில் குளித்த புண்ணியம் , 1000 கோயில்களை கட்டிய சந்தோஷம் எனக்கு கிடைத்தது .
மதுவிடம் சொன்னேன் - அம்மாவை Alzheimer அழைத்துக்கொண்டு போய் விட்டது - இல்லை இல்லை அம்மாவை மறந்தவர்கள் தான் இந்த வியாதிக்கு அடிமையாகுகிறார்கள் - அம்மாவின் புகைப்படம் ஒரு மகிஷாசுர மர்த்தினியாக என்னைப்பார்த்து " உண்மைதான் " என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது ------
https://youtu.be/G_HwShd-vso
uvausan
7th June 2015, 09:04 AM
கருவின் கரு - பதிவு 53
கண்ணே கண்ணுருங்கு
https://youtu.be/Py1nibxW2Bg?list=PL9A1B433D505A6A1E
uvausan
7th June 2015, 09:06 AM
கருவின் கரு - பதிவு 54
"மலர்ந்தும் மலராத "- கண்ணீர் முட்டுகின்றதே !!!
https://youtu.be/shQfxUaJBa4
uvausan
7th June 2015, 09:10 AM
கருவின் கரு - பதிவு 55
காலமிது காலமிது ------
https://youtu.be/4mKDOiLnD-k
uvausan
7th June 2015, 09:13 AM
ஜனனியின் அடுத்த பருவம் நாளை
adiram
7th June 2015, 11:21 AM
டியர் ரவி சார்,
விளம்பர தண்டிப்பு பற்றிய உங்கள் பதிவு மிகவும் அருமை. அனைவர் மனத்திலும் உள்ளதை கொட்டிவிட்டீர்கள்.
தரக்கட்டுப்பாட்டு வாரியம்,
அனுமதித்த அரசுத்துறை,
சர்ச்சைக்குரிய பொருட்களை தயாரித்தவர்கள்,
மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த ஊடகங்கள்
அனைவரும் தண்டனைக்குரியவர்களே.
நட்சத்திரங்களுக்கும் இதுபோன்ற குட்டுக்கள் தேவையே.
இந்த விஷயத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் பாராட்டுக்குரியவர். விளம்பரத்துக்காக அவரை அணுகியபோது, "நான் உபயோகிக்காத எந்த பொருளையும் நான் விளம்பரப படுத்த மாட்டேன்" என்று மறுத்து விடுவாராம். எப்படியும் காசு பார்க்கவேண்டும் எனும் திரையுலகத்தில் இப்படியும் ஒரு அபூர்வ மனிதர். பாராட்டுக்குரியவர்.
adiram
7th June 2015, 11:55 AM
டியர் வாசு சார்,
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. தங்களின் "பழைய பாலா" தொகுப்பு மிக மிக இனிமை மட்டுமல்ல அபூர்வமும் கூட. ஒவ்வொரு பாடலும் மனதை கொள்ளை கொள்கிறது. என்னவொரு இனிமை, இந்தப்பதிவை எழுதும்போது நான் கேட்டுக்கொண்டிருப்பது "தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே". இந்தப்பாடலை ஐந்து நிமிடங்களில் எழுதிக் கொடுத்தாராம் கண்ணதாசன். அப்போது ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்த இளையராஜா சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியின்போது சொன்ன தகவல்.
அந்தப்பாடல் முடிந்து அடுத்த பாடல் துவங்கிவிட்டது. "கீதா... ஒருநாள் பழகும் உறவல்ல".
chinnakkannan
7th June 2015, 11:55 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்
கடுமையான ஜலதோஷம் ஜூரம் என டேப்லட் போட்டு ஞாயிறு வீக் ஆரம்பத்திற்கு வேலை பார்க்க வந்தாயிற்று.. ஆதிராம் நீங்க்ள் இருப்ப்து ஜித்தாவா ரியாத்தா.. இங்கு தண்ணீர் கஷ்டம் ஆரம்பித்தாகி விட்டது ..கடந்த இரண்டு தினங்களாக தண்ணீர் வராமல் கொஞ்சம்ப்ளாட் காம்பெளண்டில் இருக்கும் கிணற்றுத்தண்ணீர் மோட்டாரில் எடுக்கப் பட்டு பின் பக்கெட்டால் வீட்டிற்குக் கொண்டு வருகிறோம் (எந்த நேரத்தில் வாசு சாரைக் கிண்டல் பண்ணினேனோ.. )
மற்ற படி.. தண்ணீர் கண்ட பின்பு மாறும் எங்கள் கண்ணீர்..
பின்ன வாரேன்..
chinnakkannan
7th June 2015, 11:57 AM
கல் நாயக் தான் காணோம்.. ரவி.. அஸ் யூஸ்வல் அருமை..பட் முடித்த பிறகு தான் முழுமையாக கமெண்ட்டுவேன்..ராஜேஷையும் காணோம்..
adiram
7th June 2015, 12:18 PM
ஆதிராம் நீங்க்ள் இருப்ப்து ஜித்தாவா ரியாத்தா.. இங்கு தண்ணீர் கஷ்டம் ஆரம்பித்தாகி விட்டது ..கடந்த இரண்டு தினங்களாக தண்ணீர் வராமல் கொஞ்சம்ப்ளாட் காம்பெளண்டில் இருக்கும் கிணற்றுத்தண்ணீர் மோட்டாரில் எடுக்கப் பட்டு பின் பக்கெட்டால் வீட்டிற்குக் கொண்டு வருகிறோம் (எந்த நேரத்தில் வாசு சாரைக் கிண்டல் பண்ணினேனோ.. )
மற்ற படி.. தண்ணீர் கண்ட பின்பு மாறும் எங்கள் கண்ணீர்..
பின்ன வாரேன்..
டியர் சி.க.
நான் இருப்பது ஜித்தாவில் சரபியா ஏரியா. கேரள நண்பர்கள் அதிகம். இங்கும் கடும் வெயில் வாட்டுகிறது. கடல்நீரை குடிநீராக்கி தருவதால் செங்கடல் வற்றும்வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது.
chinnakkannan
7th June 2015, 01:51 PM
ஆதிராம் பதிலுக்கு நன்றி 15 ம் தேதிவரை இப்படித்தான் இருக்குமாம்..அப்புறம்.. பழகிவிடுமாம் :)
//கடல்நீரை குடிநீராக்கி தருவதால் செங்கடல் வற்றும்வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது.// இங்கும் அப்படித் தான்..ஆனால் ஏதோ ரிப்பேர் அல்லது ஏன் இப்படி என சரியான காரணம் தெரியவில்லை. டார்செய்ட் என்று ஒரு இடம் உண்டு அதில் கடந்த ஒருமாதமாக தண்ணீர் வரவில்லை.. இப்போது ஏரியா ஏரியாவாக வராமல் போய்க் கொண்டிருக்கிறது,..
uvausan
7th June 2015, 02:44 PM
ஆதிராம் சார் - நீங்கள் இங்கு வந்து பதிவுகளை படிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது . பதிவுகள் போடவும் வேண்டுகிறோம் . உங்கள் தாயார் எப்படி இருக்கிறார்கள் ? என் பணிவான வணக்கங்களை அவர்களுக்குச்சொல்லவும் .
இந்த "கருவின் கரு " ஆரம்பித்ததே மையம் திரியில் உள்ள அனைத்து நல்ல உள்ளகளைப்பெற்ற அந்த இனிய தாய் தந்தைகள் அனைவருக்கும் என் பதிவுகள் மூலம் ஒரு புகழாஞ்சலியத்தந்து வணங்கவே ..... பார்க்காத முகங்கள் - ஆனால் கையெடுத்து கும்பிட வேண்டிய நடமாடும் தெய்வங்கள் அவர்கள் இருவர் மட்டுமே
பதிவுகளில் தவறுகள் இருந்தால் எடுத்துச்சொல்லுங்கள் . திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்
chinnakkannan
7th June 2015, 09:23 PM
வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை..
கொஞ்சம் யோசித்தால் எக்கச்சக்கமாகப் புலப்படும்..எனது சுதா ஸ்டீஃபன் சுந்தர்ராஜன் என்ற கதையில் பின் வருமாறு எழுதியிருந்தேன்:
1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகரின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று கவுண்டர் அருகே சென்றதும் டிக்கட் இல்லை என்று மூடி விட, அழுக்காய் கைலி கட்டி இருந்த ஆளிடம் பேரம் பேசி 200 ரூபாயில் டிக்கட் வாங்கி உள்ளே சென்று படம் திராபையாய்ப் போய்விட, தலைவலியுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தால் குறுக்கே மைக்கை நீட்டி 'நாங்கள் சன் டிவியில் இருந்து வருகிறோம் படத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ' என்று கேட்கும்போது.
2. அழகாய் இருக்கிறாளே என்று நினைத்து கஷ்டப் பட்டு அப்துல் ரகுமான், மீரா போன்றவர்களின் கவிதையையெல்லாம் கோட் பண்ணி வெகு நேரம் செலவழித்து ஒரு கடிதம் எழுதி ஒரு பெண்ணிடம் ஒரு வாலிபன் சேர்த்தால் அதைப் படிக்காமலேயே அவனிடம் அவள் 'ஐ, லவ் யூ ' சொன்னால், அந்த வாலிபனுக்குச் சப்பென்று போய் வெறுத்து விடும்,
அது சரி இப்போது கோட் பண்ணுமளவிற்கு என்ன நேர்ந்தது..
என்ன நேரவில்லை.. தண்ணீர் திடீரென நின்று விட்டது .. பின் நண்பரிடம் பேசலாமென்றால் இன் டர் நெட் போனின் சிக்னல் வீக் காகி விக் விக்கென்று அழுகிறது.. போதாக்குறைக்குப் பொன்னியம்மா வந்தாளாம் என்ற சொலவடை போல என்னாச்சுன்னாக்க….
வெளியில் வெய்யில் எனில் வீட்டுக்குள்ளாறேயே இருந்தததால் ஏசி காற்றா அல்லது இன்னபிறவா தெரியவில்லை.. வீட்ல தாண்டா உனக்குத் தண்ணீர் வரவில்லை..இதோ உன் மூக்கிலேயே வரவழைக்கிறேன் என்று யாரோ கண்பட்டாற் போல ஸாரி மூக் பட்டாற்போல ஜலதோஷம் அதனால் தலைவலி அதனால் கண் கனத்தல் அதனால் சனி க்கிழமை முடிந்து அதனால் ஞா.கி வீக் ஆரம்ப ஆஃபீஸ்..
ஆஃபீஸில் போய் எல்லாரிடமும் மெல்லினமாய்ப் பேசப் பயந்து கொஞ்சம் முறுவல் கொஞ்சம் முகச்சீற்றம் என வைத்துக் கொண்டுவேலைபார்த்துக்கொண்டிருந்தேனா.. சரி லிட்டில் ஃபீவர் வர்றாமாதிரி இருக்கே என நினைத்து கொஞ்சூண்டு ரெண்டே ரெண்டு பனடால் நான்கு மணி நேர இடைவெளியில் போட்டுக் கொண்டால்.. ஜுரம் கூடுதற்போன்ற பிரமை..இலவச இணைப்பாய் லொக் லொக்..
வீட்டுக்கு கிளம்பும் போதாவது சும்மா இருக்கலாமில்லையா.. எடை பார்க்கலாம் டயட்டில் இருந்தோமே எனப் பார்த்தால் பழைய அதே எடை மூன்றிலக்க எண்.. கூட்டல் இரண்டு வரும்.. சோ ஓஓகம்.. பத்துகிலோ உடல் எடை மிச்சம் மூளை தான் (ஹை) என நினைத்தாலும் டயட்டில் இருந்த போது பத்து நாள் முன் மூன்றோ நான்கோ கிலோ குறைய அதனால் டயட்டை அலட்சியமாக விட்டு விட்டதில் இப்படி ஆகிவிட்டதே என வருத் வருத் தமா க இருந்தது..
சே இந்த எடை இருக்கிறதே..(ஹப்பாடி விஷயத்துக்கு வந்துட்டியா) எப்படியாவது குறைக்கவேண்டும் என்று சங்கல்பம்..ஆனால் விடுமுறையில் ஃபணால் ஆகுமா எனத் தெரியவில்லை..
சரி எடை போடும் பாடல்களைப் பார்க்கலாமா..ஹிஹி..
கண்ணில் துளிர்த்த நீருடன் பார்ட்டியில் ஹீரோயின் பாடும் போது மற்றவர்களெல்லாம் எப்படி சிரித் சிரித் ஆடுவார்களோ தெரியவில்லை..ஒருவேளை தமிழ் சினிமாவில் மட்டுமே இப்படியா..
சர்ரூ.. காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா- பொங்கும்
விழி நீரை அணை போடவா
என விக் விக்கென அழ சுற்றியிருப்பவர்கள் ஆட பின் எடைக்கு – எடை வார்த்தைக்கு வருவார்..
பொருளோடு வாழ்வும் உருவாகும் போது
புகழ் பாட பலர் கூடுவார்
அந்த புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உறையாடுவார்
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
சே..இங்கே எடைபோடப் படுவது அன்பு..அதுவும் சீப்பாக..ஐயோ பாவம் சர்ரூ..
*
அடுத்த இடை..ஸாரி எடை..
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ என்று ஜாலியாக க் காதல் பாட ஆரம்பிக்கும் ஹீரோ ரட்சகனில் என்ன சொல்றார்..
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...
எனக் கேட்டு விட்டு
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
என்றும் சொல்கிறான் காதலன்..அதாவது
இடையேன் மெலிந்தது ஏந்திழையோ காதல்
நடைபயின்று நின்றதால் தான்
என்பதையே காதலால தான் அந்தப் பொண்ணு லாஸ்ட் வெய்ட் என்கிறான்..சுஷ்மிதாசென் (இவங்க மூன்மூன்சென்னுக்கு ரிலேஷனா (ஹை வலை வீசியாச்சுன்னுல்லாம் சொல்ல மாட்டேனே))
*
காதல் நா என்ன செய்யும்.. தலை சுத்தும்.. அவனுக்கு அவள் நினைப்பு அவளுக்கு அவன் நினைப்பு.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நெனச்சுக்கிட்டே அவன் அவன்வீட்டுமொட்டை மாடியிலிருந்து நிலவைப்பார்க்க
அவளோ அவள் வீட்டு பால்கனின்னு தமிழ்ல சொல்லப் படற சாளரத்திலிருந்து பார்த்து பெருமூச்சு விட்டு எண்ணங்களை அலைபாய விட்டு உடலையும் வருத்திக் கொள்வாங்களா.. ஸாரி பிரதர்.. இவையெல்லாம் அந்தக்காலத்தில்
இப்ப இங்க பாருங்க..காதல் வந்துடுச்சு பொண்ணுக்கும் பையனுக்கும் என்ன பண்றாங்க.. ஒண்ணுமே பண்ணலை.. ச்சும்மா இருக்காங்க பாஸ்…
சும்மா சும்மா பேசி சும்மா சும்மா பழகி
ஆசை காட்டி ஆசை காட்டி ஆளகொன்னுட்டா
சார்லி சாப்ளின் என்னும் படத்தில் காயத்ரி ரகுராம் என்ற நடனமாடும் கொழுக்கட்டை ச் சிலையைப் பார்த்து பிரபு தேவா பாடும் பாடல்..
இங்கயும் எடை வருது..
காதலன் சொல்றான்.. ரொம்ப கன்ஃபீஷன் ஆய்ட்டான் போல..வள்ளுவனும் உன்னைப் போல் காமத்துப் பால் வடிக்கலைன்னு சொல்ல அந்த ப் பொண்ணு உச்சிகுளிர்ந்து
எடைக்கு எடை எடைக்கு எடை முத்தமிடலாமாங்கறா.. எந்த எடைன்னு சொல்லவே இல்லை..
//கல் நாயக்கிற்காக க் கொசுறாக ஒன்று..
கல் நாயக் இந்தப் பாட்டில் முற்றிலும் தேமா ஆன எழுசீர் விருத்தத்திற்கான ஒருவரி வருகிறது..
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா.//
*
பெண்கள் நாங்கள்.. எங்களுக்கு விருப்பமான ஆடை அணிகலன்களை அணிவோம்..அதனாலேயே எங்களை மட்டமாக எடை போடக் கூடாது அது தவறு என்கிறார் ஊர்மிளா மடோன்கர். அப்படி எடைபோட்டால் உம்மைக் கைது செய்து சட்டப்படி உள்ளே வைத்துவிடுவாராம் என்கிறார் இந்தப் பாடலில்
அக்கடான்னு நாங்க உடைபோட்டா
துக்கடான்னு நீங்க எடைபோட்டா தடா உமக்குத் தடா..
*
ம.தி என்ன கேக்கறார்..
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
இப்படிக் கவித்துவமாச் சொன்னா எல்.விஜயலஷ்மி மெல்ட் ஆகமாட்டாங்களா என்ன..
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
அதாவது அந்தம்மா சமர்த்தா அழகா ஆடறாங்களாம்..அவங்க மனசு அவங்க கிட்ட இல்லையாம்.. ம.தி.கிட்ட சொல்றாங்க நாசூக்கா..
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே சுகம் சுகம் சுகம்.. அழகியபாட்டு..
*
இந்தக் காதலன் அதாவது அஜீத் ச்சும்மாவாவது இருந்துருக்கலாம் அந்தப் பொண்பாட்டுக்கு செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமமாகாதோன்னு கவித்துவமாப் பாடிக்கிட்டிருககியில டவுட்டா அவங்களைத்தூக்கிப்பாத்துட்டு டபக்குன்னு கீழே விட்டும் விட்டுட்டு கேள்வி கேக்கறார்..
பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
அந்தம்மா வோட பதில் கேள்வி..
மொத்தத்தில் காதலின் எடை
என்ன ஆகும் இப்படி சோதிக்கிறாய்
அழகான பாடல் பவித்ரா படம்.
*
கல்யாணத்துக்கப்புறம் நார்மலா பீப்பிள் வில் புட் ஆன் வெய்ட் தானே.. ஆனா இப்படி இல்லையாம்.. ஏற்கெனவே காதலிச்ச பொண்ணு தான்..வேற ஒருத்தரைக் கல்யாணம்கட்டி க் கிட்டதும் அவரிடம்கொஞ்சம் முழு ஈடுபாடுஇல்லாம் இருக்கப் பார்த்தும் கூட கொஞ்சம் சிலபல சம்பவங்களால மனசும் அசைந்து கொடுக்குதாம்.. ஹஸ்பெண்ட் பால் ஈடுபாடு பட்டு கொஞ்சம் கொஞ்சமா த் தன்னைத் தானே மாத்திக்கறாங்களாம்..அதனால எடையும் குறையுதாம்..
இதைத்தான் ஈரம் படத்துல சுசித்ரா வாய்ஸ்ல அழகா சொல்றாங்க
தரை இறங்கிய பறவை போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுக்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக்குறைந்து போகிறேன்
https://youtu.be/p8Xhj7Ovz4g
*
இங்கபாருங்க ப்ரஷாந்த்தும் லைலாவும் வெளி நாட்டுக்கெல்லாம்போய் டூயட் பாடும் போதும் டவுட் வந்துடுச்சு.. (பார்த்தேன் ரசித்தேன்படம்)
ஆணா பெண்ணா யார் முதலில் காதல் சொல்வது சொல்
நீயே சொன்னால் Bridge-இன் எடை தாழ்ந்து போகுமா சொல்
இப்படிக் கேக்கச் சொல்ல அந்தப் பொண்ணு என்ன சொல்லணும்..ஆனாலும் அதுக்கு ரொம்ப்ப இதுங்க்க..அதான் குஷில சொல்வாரே விஜயகுமார் அடம்ங்க்க என்ன சொல்றாங்க குரல் கொடுத்த வசுந்தரா தாஸ்..(ஆண் குரல் சோனு நிகமாம்)
காதல் என்னும் பிச்சைதான் பெண்கள் இடுகிறோம் நில்
ஆண்கள் முதலில் கேளாமல் பிச்சை கிட்டுமா சொல்
இது கொஞ்சம் ஓவர் தான்..ஆனா க்க பாட்டு நல்லா இருக்கே. படம் பார்க்கும் போதுஓட்டி விட்டேன் என நினைக்கிறேன்..இப்ப கேக்கப் பாக்க நன்னா இருக்கு.. (ஆமா மஜ்னுவின் காதலி பெயர் கொண்டவர்க்கு கண்கள் சிரிக்கிறதா என்ன)
https://youtu.be/N5JnG5S9q4s
*
மறுபடியும் ம.தி.. பாட்டுக்குப் பாட்டெடுக்கும் போதுஎன்ன சொல்றார்
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலை முடித்து
பின்னலாய் சடைபோட்டு என் மனச எடை போட்டு
மீன் பிடிக்க வந்தவளை நான் பிடிக்க ப் போனேனே
மையெழுதும்கண்ணாலே பொய்யெழுதிப் போனாளே..
கொயட் இண்ட்ரஸ்டிங்க் தானில்லை..
*
இப்படி எடையைத் தேடித் தேடிப் பார்த்ததில அனேகமா பத்துக் கலோரியாவது குறைஞ்சிருப்பேன்னு நினைக்கறேன்..
நிறைய எடை புதுப்பாட்டு எடையா இருக்கு.. விட்டுப் போன பழைய பாடல் எடை தருவீங்க தானே..
பின்ன வாரேன்..:)
*
uvausan
8th June 2015, 07:38 AM
Good Morning
http://i727.photobucket.com/albums/ww271/pepeye2008/imghmBVS0.jpg (http://media.photobucket.com/user/pepeye2008/media/imghmBVS0.jpg.html)
uvausan
8th June 2015, 07:44 AM
கருவின் கரு - பதிவு 56
மூன்றாவது படிவம் : " அம்பா " - ஆரம்பம்
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
பிறந்த குழந்தைகள் எல்லாமே நல்ல குழந்தைகள் தான் என்றாலும் - அவர்கள் நான்றாக வளரவேண்டும் என்ற ஒரு நல்லெண்ணம் அவளை , குழந்தைகளை அவள் இருக்கும் வரை சுமந்துகொண்டே இருக்க வைக்கின்றது ... முடியும் வாழ்க்கை - முடிவில்லாத தியாகங்கள் - தொடரும் எண்ணங்கள் - தொடராத அவள் இளமை ; மூடும் விழிகளாக அவளின் குழந்தை - மூடாமல் காக்கும் அவள் இமைகள் - அப்பப்பா எத்தனை கனவுகள் - பட்டாம் பூச்சிகளைப்போல என்றுமே ஓயாத அவள் உழைப்பு - விட்டில் பூச்சிகள் போல விரைந்து முடிவடைகிறது அவள் வாழ்க்கை -----
முதலில் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் உறங்கும் மாயகண்ணைனை எழுப்பி விடுவோமா ?
https://youtu.be/WvJqVe_pxw0
uvausan
8th June 2015, 07:53 AM
கருவின் கரு - பதிவு 57
" அம்பா "
உண்மை சம்பவம் -8
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அன்று வெள்ளிகிழமை - டெல்லியில் ஒரு மீட்டிங் - 3மணிக்கு இண்டிகோ flight . இப்பொழுது 12மணிதான் ஆகிறது - வீட்டிலிருந்து 30 நிமிடங்களில் ஏர்போர்ட் சென்று விடலாம் - மேலும் வெப் செக்கின் பண்ணிவிட்டதால் சற்றே பால்கனியில் நின்றுகொண்டு விஜி போட்டுக்கொடுத்த காபி யை சுவைத்துகொண்டிருந்தேன் --- என்னுடைய garage பக்கம் இருந்து அந்த கருப்பு நாயின் ஓலக்குரல் கேட்டுக்கொண்டே இருந்தது ...
"விஜி ! என்ன இந்த நாய் நேற்று முதல் நம் வீட்டு அருகில் இருந்துகொண்டு கத்திக்கொண்டே இருக்கிறது ?- சனியன் - தொரத்திவிட்டாலும் இங்கேயே சுத்துகிறது - சத்தம் கொடுமையாக இருக்கிறது ! - முனிசிபாலிட்டிக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தாயா ?"
எனக்கு நாய் என்றாலே அலர்ஜி - அதுவும் கருப்பு நாயென்றால் அதற்க்கு எதிர்புறமாக ஓடுவேன் ..
விஜி , என் மனைவி , எனக்கு எது பிடிக்காதோ அதை அவள் கண்டிப்பாக விரும்புவாள் -- எனக்கும் , என் மனைவிக்கும் சேர்ந்து பிடிக்கும் ஒரே விஷயம் ஜல தோஷம் ஒன்றுதான் .
" என்னங்க அது ரொம்ப பாவங்க - பிள்ளயாண்டிருக்கிறது - நிறை மாதம் - எப்பவேண்டுமானாலும் குட்டிகளை போட்டுவிடும் - அது பிரசவ வேதனையால் கத்துகிறது - கொஞ்சம் கருணை காட்டுங்கள் "
விஜியின் கண்களில் கங்கையின் பிரவாகத்தைக்கண்டேன் -- எங்களுக்கு கல்யாணமாகி 15 வருடங்கள் ஓடிவிட்டன - இதுவரை ஆண்டவன் எங்களுக்கு அந்த குழந்தை பாக்கியத்தை ஏனோ தரவில்லை - செய்யாத தருமம் இல்லை , போகாத கோயில் இல்லை, பார்க்காத மருத்துவர்கள் இல்லை - விஜியின் வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட வரவில்லை . இருவரிடமும் எந்த பிரச்சனையும் இல்லையாம் --- கடவுள் அருள் செய்தாலொழிய இந்த ஜென்மத்தில் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை . தத்து எடுத்துக்கொள்ளலாம் -- ஏனோ விஜிக்கு அந்த topic யை எடுத்தாலே அழுகை வந்து விடுகிறது -- அவள் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை - நான் இழந்து பல நாட்கள் ஆகி விட்டன .
" விஜி உன் விருப்பம் - நான் செல்கிறேன் - நான் திரும்பி வருவதற்குள் இந்த நாய் இங்கு இருக்ககூடாது "
என் வேலை முடியவில்லை , வருவதற்கு 10 நாட்கள் ஆகிவிட்டது -- ஒரு சந்தோஷமான விஷயத்துடன் வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டிருந்தேன் - வெகு நாட்களாக வரவேண்டிய என் உத்தியோக உயர்வு கிடைத்த செய்தியை விஜியுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் - வேண்டுமென்றே ,போன் sms , whatsapp , ஈமெயில் , twitter , facebook எதிலுமே இந்த செய்தியை அவளுக்கு தெரிவிக்கவில்லை - suspene தொடருட்டுமே !!
வீட்டை வந்தடைந்தேன் -- அந்த கருப்பு நாயை பார்க்க முடியவில்லை - அதன் சத்தமும் கேட்கவில்லை -- விஜி அதை அனுப்பியிருப்பாள் - என் கோபம் அவளுக்கு ஒரு அச்சத்தை தந்திருக்கலாம் .
வீட்டில் விஜியும் இல்லை - எல்லா இடத்திலும் தேடினேன் விஜி கிடைக்கவில்லை --- மெதுவாக என்னுடைய பெரிய தோட்டத்திற்கு சென்றேன் - அங்கு நான் கண்ட காட்சி - பிரமிக்க வைத்தது .. விஜியின் மடியில் பால் போன்ற வெண்மை நிறத்தில் மூன்று labrador retriver -- அருகில் அந்த மூன்றின் தாய் -- என்னைப்பார்த்ததும் ஓடி வந்து என் கால்களை ஈரமாக்கியது - நாக்கினால் என் முகத்தை அலம்பியது - கண்களில் முட்டிவரும் கண்ணீர் - நன்றிகள் தோய்க்கப்பட்ட கண்ணீர் --
விஜி " மன்னிச்சிடுங்க - நான் தான் இங்கே இவைகளை கொண்டுவந்தேன் - பிரசவ வலியை நான் அனுபவித்ததில்லை - ஆனால் இந்த நாயின் மூலம் உணர்ந்தேன் -- 6 குட்டிகள் - மூன்றை நம் டிரைவருக்கு கொடுத்துவிட்டேன் -- இந்த மூன்றையும் நாமே வளர்க்கலாமா ?
மீண்டும் அவைகளின் தாய் என் முகத்தை நன்றியுடன் நக்கியது - என் மடியில் அதன் குட்டிகள் -- என் பயம் எங்கோ ஒளிந்துகொண்டது -- அந்த தாயின் உணர்ச்சிகளை முதல் முறையாக புரிந்துகொண்டேன்
labrador family என் வீட்டில் வந்த நேரம் விஜியும் விரைவில் தாய்மை அடைந்தாள் -- இதைத்தான் வரம் என்று சொல்வார்களோ - ??தாய்மையின் சக்தியை , அதன் வலிமையை , அதன் புனிதத்தை அந்த labrador retriver மூலம் , விஜியின் உதவியுடன் புரிந்துகொண்டேன் -------
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Labrador-Retriever-2_zpsvexkxvcn.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Labrador-Retriever-2_zpsvexkxvcn.jpg.html)
https://youtu.be/a7eEJ7Kl7BY
https://youtu.be/YMcg7TMj1RM
uvausan
8th June 2015, 07:59 AM
கருவின் கரு - பதிவு 58
" அம்பா "
என்னவெல்லாம் கனவுகள் - அந்த தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்னின் சிரிப்பில் - கனவுகள் வாழ்ந்தன - கனவாகவே !!
https://youtu.be/aGyhXnU05nk
uvausan
8th June 2015, 08:02 AM
கருவின் கரு - பதிவு 59
" அம்பா "
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியும் இடம் நீதானே
காற்றைப்போல நீ வந்தாயே
சுவாசமாகி நீ நின்றாயே மார்பில் ஊரும் உயிரே -----
https://youtu.be/GH77H2MuKXc
uvausan
8th June 2015, 08:07 AM
கருவின் கரு - பதிவு 60:):smile2:
" அம்பா "
பல கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் கடையில் கிடைக்காது அம்மாவின் அன்பு..
"கண்ணோடு இமை சேர்ந்த பந்தம் அம்மா நீ என்னோட சொந்தம்...
தாகம் தீராதே அம்மா உன் சொல்லில்...
வான் வரை பறந்தாலும் உன் காலடி என்கூடு
காலத்தால் அழியாதது என்றென்றும் நிலையானது
அது ஒன்று தான் "அம்மா உன்னோட அன்பு"-------
https://youtu.be/x7ElA695b08
uvausan
8th June 2015, 08:08 AM
" அம்பா " தொடருவாள்------
vasudevan31355
8th June 2015, 08:58 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
7
அடுத்த பாலாவின் பாடல் நம் எல்லோருடைய நெஞ்சிலும் பசுமையாய்ப் பதிந்த பாடல். அனைவரும் மனனம் செய்து வைத்திருக்கும் திருக்குறள் போல. 70 களின் பாடல்களில் மயங்கிய இப்போதைய 50 வயதைக் கடந்தவர்களுக்கு இப்பாடல் ஒரு காமதேனு. கற்பக விருட்சம்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? வயது, வரம்பு, காலம், இவற்றையெல்லாம் கடந்து நின்று காலம் வென்ற பாடல்.
ஒரு பாடகன் அதுவும் இளம் வயது வாலிபப் பாடகன்... அப்போதுதான் அறிமுகமாகி அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறான். தன் 'அல்வா'க் குரலால் அனைவரையும் அடிமையாக்கிக் கொண்டிருக்கிறான் கொஞ்சம் கொஞ்சமாக. இப்பாடலில் அவன் பாடவே இல்லை. உடன் பாடும் பாடகியுடன் சேர்ந்து வெறும் ஹம்மிங் மட்டுமேதான் தருகிறான். அதுவும் பாடலின் ஆரம்பத்தில், பாடலின் இடையில் மட்டுமே. கொஞ்ச வினாடிகள்தான்.
பாடல் முழுவதையும் ஆக்கிரமித்து இசை சாம்ராஜ்யத்தின் அரசி இன்ப அராஜகம் புரியும் வேளையில், இந்தப் பாடகன் அதையும் மீறி, அந்த இன்பத்தை இன்னும் அதிகமாக்கி, நம் மனசுக்குள் நம்மையே அறியாமல் அவனாக நுழைந்து, ஒரு சாதாரண ஹம்மிங் மூலம் இனம் புரியா இனிய சித்ரவதைகள் செய்கிறானே! நாடி நரம்புகளில் புகுந்து தன் குரல் ஜாலத்தால் அணுக்கள் ஒவ்வொன்றையும் சிலிர்க்க வைக்கிறானே! இவனை என்ன செய்தால் தகும்?
இவன் ஹம்மிங் மட்டும்தான் 'ஆஹாஹா' வா?
இல்லை...இவன் வாழைத்தண்டு குரல் 'ஆஹாஹா'
இவன் வாயைத் திறந்தால் 'ஓஹோஹோ'
இவன் குரல் குழைவுக்கு இணை யாரும் 'ம்ஹூம்' இல்லவே இல்லை.
இந்தப் பாடலிலும் இவன் மேலே சொன்ன மூன்று வார்த்தைகளைத்தான் உச்சரிக்கிறான். அதிலேதான் எத்தனை வகை நெளிவு! எத்தனை வகை சுளிவு!. என்ன ஒரு ஏற்ற இறக்கங்கள்! என்ன ஒரு குரல் பாவங்கள்! மாய ஜாலங்கள்! வழுக்கி விலகும் வெண்ணையை விடவும் மென்மையான குரல்.
இன்னும் கொஞ்சம் அந்த ஹம்மிங்கை இந்தப் பாடகன் நீட்டிப்பு செய்ய மாட்டானா என்று ஏக்கப் பெருமூச்சு நமக்கு ஏற்படாமல் போகாது.
http://www.photofast.ca/files/products/7115.jpg
'நவக்கிரகம்' படத்தில் நயமான பாடல். பாலச்சந்தரின் பட்டறையிலிருந்து தயாரான 'மெல்லிசை மாமணி' வி.குமாரின் இசையமைப்பில் சுசீலாம்மா தனக்கே உரிய தனி முத்திரையுடன் சுகந்த தென்றலாய் சுகம் தர, பாலா அவருடன் இணைந்து அந்த தென்றலினூடே கலந்து வரும் சந்தன வாசமாய் மணக்க, நம் நெஞ்சமெல்லாம் எப்போது இப்பாடலைக் கேட்டாலும் கற்கண்டாய் இனிக்க,
எவரும் மறக்க முடியாத 'எவர்கிரீன்' பாடலாக
இந்த
'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது'
பாடல் நம் எல்லோர் நெஞ்சையும் தொட்டு விட்டது.
.
அப்போதைய ஒரே ஒரு இளம் ஜோடியாய் பல திரைப்படங்களில் வலம் வந்த சிவக்குமாரும் ,லஷ்மியும் நடித்த இளமை கொஞ்சும் பாடல். காதலர்கள் கடற்கரையில் பாடும் காவிய கானம். லஷ்மியின் எளிமை, நாணம், சிவாவின் அழகு என்று பாடலுக்கு மேலும் மெருகு.
வி.குமார் என்ற ஹார்மோனியப் பெட்டி நாடக இசையமைப்பாளர் ஒருவர் நம் ஹார்மோன்களில் கலக்க காரணமாய் இருந்த பாடல். ஹார்ட்டின் அடித்தளம் வரை ஊடுருவிய பாடல்
ஹா...ஹாஹாஹா...
ம்ஹூஹூம்... ம்ஹூஹூம்
ஹா..ஹா..ஹாஹா
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது
கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது
ஆஹாஹா! ஓஹோஹோ! ம்ஹூஹூம்! லல்லல்லா!
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்துத் தெறித்த போது என்னை நனைத்தது
ஆஹாஹா! ஓஹோஹோ!
ஓஹோஹோ! ஆஹாஹா!
மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்த்தது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும்போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும்போது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
https://youtu.be/TJt9u51RkKs
RAGHAVENDRA
8th June 2015, 09:45 AM
வாழ்க்கையே வெறுத்துப் போகும் தருணங்கள் ... சிக சாரின் பட்டியலில் மேலும் ஒன்று.
நன்றாக விறுவிறுப்பாகப் போய்க் கொண்டே இருக்கும் சமயத்தில் திடீரென்று நிறுத்தி விட்டு அடுத்த பதிவில் பார்ப்போம் என்று சி.க. சார் சொல்வது மட்டும் என்னவாம்...
RAGHAVENDRA
8th June 2015, 10:09 AM
அபூர்வ கானங்கள்
படம் இளைய பிறவிகள்
இசை சங்கர் கணேஷ்
குரல்கள் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம்
https://www.youtube.com/watch?v=I9u4wadBuQU
RAGHAVENDRA
8th June 2015, 10:11 AM
அபூர்வ கானங்கள்
வாசு சார்
உங்களுக்கு நல்ல வேலை .... இந்தப் பாட்டைப் பற்றி எழுதி பட்டையைக் கிளப்பப் போகிறீர்கள்..
படம் - கண்ணாமூச்சி
குரல் - எஸ்.பி.பாலா
இசை -மெல்லிசை மாமணி வி.குமார்
https://www.youtube.com/watch?v=2LDlONlyDMQ
chinnakkannan
8th June 2015, 10:13 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
வாஸ்ஸூ, இன்னாங்க காலங்காலீல மனுஷன் வேலைபாக்கத்தாவலை..
//மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்த்தது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது//
என்னா பாட்டு..அது துளித்துளியாய் - அப்படின்னு அந்த அம்மா பாடறது காதுல தேன் , காஜ்ல் அகர்வால் சாரி டைப்போ காஜர் அல்வா (முந்திரி அல்வா) பாய்ச்சறா மாதிரி இருக்கும்.. அதுவும் சில் ப்ளாக் அண்ட் ஒய்ட் படங்கள்ல லஷ்மியோட அழகு நன்னாயிட்டே இருக்கும்.. சமயத்துல காம்பஸ எடுத்து நடுமூக்கில குத்தினா வட்டம் வரையலாம் அப்படி முகமும் வட்டமா இருக்கும்!
சூப்பர் பாட்டு நைஸ் ரைட்டிங்க்.. நன்றி
*
//நன்றாக விறுவிறுப்பாகப் போய்க் கொண்டே இருக்கும் சமயத்தில் திடீரென்று நிறுத்தி விட்டு அடுத்த பதிவில் பார்ப்போம் என்று சி.க. சார் சொல்வது மட்டும் என்னவாம்...// :) நன்றி ராகவேந்தர் சார்..
*
தெய்வம் த்ந்த பூவே பாட்டுக்கே ஒரு வியாசம் எழுதலாம் ரவி.. விட்டுட்டீங்களே...
இலங்கைப் பிரச்னை அது இதெல்லாம் ஒழுங்காக் கையாளலைன்னு படம் வந்த புதுசுல என்னமெல்லாமோ மணிரத்னத்தைப் பேசினாங்க..ஆனா அதெல்லாம் எடுத்துக்கவே படாது..படமென்ன
ஒரு வளர்ப்புத் தாய்க்கும் அவள் வளர்க்கும் மகளுக்கும் உள்ள உறவைப் பற்றியது
பெத்தாத் தான் புள்ளீங்களா..
அதுவும் தன்னை ப் பெற்ற தாய் வேண்டாம் என விலக அவளிடமிருந்து விலகி வரும் சிறுமி வந்து- பார்த்திபன் மகள்- மெல்ல்லிய பச்சக் சிம்ரன் கன்னத்தில் கொடுக்க சிம்ரன் கண்ணோரம் மெல்லிய நீர்.. பார்ப்பவருக்கும் தான்..
கொஞ்சம் மிக நெகிழவைத்த படம்.. நன்றி ரவி..
RAGHAVENDRA
8th June 2015, 10:17 AM
அபூர்வ கானங்கள்
இதை கானம் என்று சொல்லலாமோ.. ஒரு வார்த்தை கூட இல்லாமல் ஒரு பாட்டு.. வெறும் ஹம்மிங் மட்டுமே...
இதயம் பார்க்கிறது... படத்தில் யாதோங் கீ பாராத் படப் பாடலின் மெட்டை வெறும் ஹம்மிங் மட்டும் பாட வைத்திருக்கிறார்கள்..
https://www.youtube.com/watch?v=cepigF1zGeA
பெண் குரல் சசிரேகா..
ஆண் குரல்... மலேசியா வாசு வின் குரலாய்த் தெரிகிறது. தவறுதலாக எம்.எஸ்.வி. என்று போட்டிருக்கிறார்கள்.
RAGHAVENDRA
8th June 2015, 10:32 AM
அபூர்வ கானங்கள்
படம் - அழைத்தால் வருவேன்
பாடல் - சொந்தங்கள் திரும்பத் திரும்ப அழைக்கும்
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
https://www.youtube.com/watch?v=wUxGO6puYAM
kalnayak
8th June 2015, 10:40 AM
வாசு,
பாலாவின் பழைய பாடல்கள் சுகமான சுனாமியாக எங்களைத் தாக்கி இன்ப அதிர்வலைகளை எக்கச்சக்கமாக ஏற்றிக்கொண்டிருக்கிறது. சுவையான உணவும் அதிகமாக அதிகமாக திகட்டும். இந்த சுனாமி எங்களை தாக்கித் தாக்கி இன்னும் இன்னும் என்று ஏங்க வைக்கிறது.
'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' - உங்களுக்கு கொடுத்த இன்பத்தை எங்களுக்கும் கொண்டுவந்துவிட்டது. உண்மைதான் இந்த பாடல் எப்போது கேட்டாலும் நெஞ்சில் இனிக்கும் கற்கண்டுதான். பழைய பாலா பாடலில் மறக்காமல் இணைத்ததற்கு நன்றி.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.