View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4
Pages :
1
[
2]
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
uvausan
26th May 2015, 08:31 AM
கருவின் கரு - பதிவு 17
ஒரு உண்மை சம்பவம்
நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் இல் தந்தையின் அஸ்தியுடன் , அம்மாவையும் அழைத்துக்கொண்டு வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்தேன் - எவ்வளவோ தடவைகள் இருவருடனும் நான் பல தடவைகள் இதே வண்டியில் அவர்களை அழைத்து சென்றுள்ளேன் - இந்த தடவை முதன் முறையாக என் தந்தை என் மடியில் அஸ்த்தியாக அமர்ந்து வந்து கொண்டிருந்தார் . தாயின் கண்கள் வற்றி பல நாட்கள் ஆகிவிட்டன - கண்களில் இருந்த பார்வையும் தான் .... அவள் நெஞ்சில் என்றும் நான் தான் நிழலாடிக்கொண்டிருப்பேன் - அன்று பார்வை மங்கிப்போனதால் அவள் கண்களில் நிழலாக ஆடிக்கொண்டிருந்தேன் ... வண்டி வாரணாசியை எட்டிப்பிடித்தது - பாரமான இதயத்துடன் அம்மாவுடன் இறங்கினேன் -- wheel chair இல் அம்மாவை உட்க்காரவைத்து வண்டியில் எப்படியோ ஹனுமான் காட் வந்தடைந்தேன் - பட்ட வேதனை 13 நாட்கள் ரூபத்தில் இன்னும் தன்னை அதிகப்படுத்திக்கொண்டது . வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்பதை அங்கு வந்து குமியும் சடலங்களும் , கங்கையில் அடித்துச் செல்லும் சரியாக வேகாத உடல்களும் சொல்லிக்கொண்டே இருந்தன ..
13 நாட்கள் இருந்து இருவரும் தந்தையை வழி அனுப்பி வைத்தோம் - அம்மா என் கைகளை தேடி பற்றிக்கொண்டாள் - " ரவி - அப்பாவின் காரியத்தை சிரத்தையாக பண்ணி அவரை வழி அனுப்பி வைத்தாய் - எனக்கு ஒரு உதவி செய்வாயா ? - எனக்கும் இதே மாதிரி செய்துவிடு - காசியில் இருந்து புறப்பட்ட உன் தந்தையை நான் காசியிலிருந்து தான் கிளம்பி பிடிக்க வேண்டும் - இது தான் என் கடைசி ஆசை - நீ செய்வாய் எனக்குத்தெரியும் "
இதயத்தில் ஒரு ரோடு என்ஜின்யை இறக்கியது போல இருந்தது அந்த வார்த்தைகள் . அம்மா நீ என்னுடன் நிறைய ஆண்டுகள் இருப்பாய் - வார்த்தைகள் கண்ணீரில் , கங்கையை விட வேகமாக அடித்து செல்லப்பட்டன ......
அம்மாவை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு - மீண்டும் ஒரு முழுக்கு போட கங்கையில் இறங்கினேன் . என் அருகில் ஒரு நடுத்தர வயது ஜோடி சேர்ந்து குளித்துக்கொண்டிருந்தது - சற்று தூரத்தில் ஒரு 80 வயது இருக்கலாம் - ஒரு தாய் - அமர்ந்து இருந்தாள் - கையில் துளசி மாலை - உதடுகள் ராம நாமத்தை சொல்லிக்கொண்டிருந்தன ..
" என்னங்க - உங்களைத்தானே - சீக்கிரம் கிளம்ப வேண்டும் - வண்டிக்கு நேரம் ஆகிக்கொண்டுருக்கின்றது "
" மனோ அம்மாவை இப்படியேவா ---- வார்த்தைகளை மென்றுகொண்டிருந்தான் ரகு என்னும் ரகுவரன் ..
" எவ்வளவு தடவை சொல்வது உங்களுக்கு - இந்த பக்கமாக சென்று விடலாம் ---- உங்கள் அம்மா தானே காசியில் உயிரை விட வேண்டும் என்று விரும்பினாள் -- ம்ம் கிளம்புங்கள் - திடீரென்று எங்கிருந்துதான் இந்த அம்மா பாசம் வந்து விட்டதோ உங்களுக்கு " மனைவியின் வார்த்தைகள் தடித்தன .
மெதுவாக அந்த தாயிடம் சென்றேன் - " என் ரகுவை தெரியுமா உங்களுக்கு - இங்கு தான் அவனும் , அவள் மனைவியும் குளித்துக்கொண்டிருந்தார்கள் - இரு அம்மா 5 நிமிடங்களில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனான் - பாவம் அவன் இன்னும் சாப்பிடவே இல்லை - இங்கு எங்கேயாவது அவனை பார்த்தீர்கள் என்றால் நான் அவன் சொன்னபடி எங்கும் நகரவில்லை - இங்குதான் உட்க்காந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா ?
ரகு அவளிடம் இல்லை ஆனால் நம்பிக்கை இருந்தது - வாயில் ராமனையும் , மனதில் ரகுவையும் சுமந்து கொண்டிருந்தாள் - கங்கைக்கு ஆரத்தியாம் - எதற்கு ? இதோ கங்கைக்கு புண்ணியம் சேர்க்கிறாளே இவளுக்கு அல்லவா ஆர்த்தி எடுக்க வேண்டும் ! அவளை மெதுவாக அருகில் இருக்கும் சங்கர மடத்தில் சேர்த்தேன் - 10 மாதங்கள் யாரையோ அவள் சுமந்தாள் - அவளுக்கு நான் ஒரு மாதம் மட்டுமே போதுமான உதவியை செய்ய முடிந்தது - என் நம்பரை சங்கர மடத்தில் கொடுத்துவிட்டு மாதம் மாதம் அனுப்பும் பணத்தில் அங்கு இருந்த கருவறைகளுக்கு பிரசாதம் கொடுக்க சொன்னேன் ..
ஓடி வந்து என் அம்மாவின் இரு கைகளையும் இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் - நான் ரகு அல்ல ரவி -- அம்மாவை விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ளவில்லை - எனக்கு அவள் என்றுமே வேண்டும் -- வண்டி வாரணாசி யை விட்டு கிளம்பியது ...
" எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் - அன்னை வளர்ப்பினிலே !" பாடல் காற்றில் மிதந்து வந்தது..
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக்
கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னச்சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்-----
https://youtu.be/FKBuAklupx4
https://youtu.be/jLgJ42Uy8qs
uvausan
26th May 2015, 08:43 AM
கருவின் கரு - பதிவு 18
கன்றின் குரலும் , கன்னித்தமிழும் சொல்லும் வார்த்தை - அம்மா அம்மா
கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா
அம்மா
அனாதைகளுக்கு அவன்தானே எல்லாமே - எல்லாம் இருந்தும் அம்மாவை அனாதையாக விடுபவர்களுக்கு ????
https://youtu.be/SXyrrFIdQbs
uvausan
26th May 2015, 08:46 AM
இந்த பாடலை ஒருவர் அழகாக இணையதளத்தில் அலசியிருப்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .
செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
எங்க மாமா (1970)
பியானோவில் ஒரு தாலாட்டு!
இத்தொடரில் பியானோ பாடல்கள் விவரிப்பில் மிகக் கடினமான பாடல் இப்பாடல் தான் என்று நான் கருத பல காரணங்கள் உள்ளது. இசையின் ஒரு சில அங்கங்களை நன்கு குறிப்பிட்டு விவரித்து மகிழலாம். உதாரணமாக தாள வகைகள், ஸ்வரங்கள், பாடல் உணர்த்தும் பொருள் - போன்றவை. ஆனால் ஒரு குழந்தையின் சிரிப்பை விவரிக்க முடியுமா? சிறு வயது தாலாட்டுப் பாடலைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வை எடுத்துரைக்க முடியுமா?
அது போல் கடினம் நிறைந்ததுதான் மெல்லிசை மன்னரின் உணர்ச்சிப் பெருக்கு மிகுந்த பாடல்களை விவரிப்பது. அது மனம் வருடும் தாலாட்டாக இருந்துவிட்டால் 'கடினம்' என்பது இயலாமையாக மாறுகிறது. எனினும் துணிந்து என்னால் இயன்ற வரை இப்பாடலைப் பற்றி எழுதுகிறேன்.
அமைதியான முன்னிசை. மெல்லிய டிரம்ஸ் சப்போர்ட்டுடன் கொண்ட வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன் இதமாய்த் தொடங்க, தாலாட்டுக் குரலாக டி.எம்.எஸ் இன் ஹம்மிங்க் "ல லா லா லால லா" என்று!
செல்லக் கிளிகளாம் பள்ளியிலே (பியானோ பிட்)
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள்
ஏன் தூங்கவில்லை
இடையிசையில் குழலும் வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன் ஒன்றோடொன்று விளையாடும். இடையிசை முடிகையில் அற்புதமான விசில்... மனத்தை அப்படியே வருடும் விதமாய்! விசில் முடிய முடிய அழகாக பியானோ சரணத்திற்கு எடுத்துக் கொடுக்கும். ஒரு பாடலின் முன்/இடையிசைகளிலும், அது அழகாகப் பாடகருக்குப் பாடலை எடுத்துக் கொடுக்கும் அழகிலும் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவரே!
சரணத்தில் கவியரசர் கண்ணதாசனின் உணர்ச்சி வரிகளுக்கு மெல்லிசை மன்னர் ஊட்டிய அழகைப் பாருங்கள்.
ஒரு ஆணித்தனமான கருத்தை மிக மெல்லியதாக இசைத்தாற்போல்....
கன்றின் குரலும்
கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை
அம்மா அம்மா (குழல் பிட்)
கருணை தேடி
அலையும் உயிகள் (இந்த இடத்தில் உருக்கம் மனத்தில் பாயும்)
உருகும் வார்த்தை
அம்மா அம்மா
தொட்டிலை ஆட்டுவது போல், பாடல் மேலும் கீழுமாக பயணிப்பது அற்புதம்!
கீழே போகிறது பாடல்....பின்னணியில் அமைதி...
எந்த மனதில்
பாசம் உண்டோ
அந்த மனமே
அம்மா அம்மா
மெதுவாக மேலே போகிறது....
இன்பக் கனவை
அள்ளித் தரவே (இந்த இடத்தில் பாடலின் உருக்கம் கதையின் இறுக்கத்தை உணர்த்துவதாக இருக்கும்!!!....... மெல்லிசையே, நீ வாழிய!!!)
இறைவன் என்னைத்
தந்தானம்மா
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை !!
இரண்டாம் இடையிசையில் இரண்டு லேயர் வயலினுடன் டபுள் பாஸ் ஆர்கெஸ்ட்ரேஷனை அவ்வளவு அழகாக அமர்த்தியிருப்பார்.
மனத்தில் நமக்கே தெரியாமல் எங்காவது ஒரு சிறு காயமோ, கவலையோ இருந்தாலும் அதைத் தேடிச் சென்று வருடி இதம் கொடுத்துவிடும் இப்பாடல் !!! படத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் குழந்தைகளை உறங்கச் செய்யும் தன்மையே இதற்குச் சாட்சியானது!
பாடலில் நடிகர் திலகத்தின் கண்களில் தான் எத்தனை மிளிர்ச்சி !!! 'நடிப்பு' எனும் வார்த்தை இவர் திரையில் வாழ்ந்த வாழ்க்கையை குறைவு படுத்துவதாக உள்ளது !!!
மெல்லிசை மன்னர் - கவியரசர் - நடிகர் திலகம் கூட்டணியில் இப்பாடல் ஒரு சகாப்தம் என்பது உண்மையே!!
இசை என்பதை விளக்க: "இசை புனிதமானது; உணர்ச்சிகள் அதில் மிகுதியானது; அது பிரபஞ்சத்தைக் கடக்க வேண்டும்; உள்ளுணர்வுகளைத் தொட வேண்டும்;" என்று சிரமப்பட்டு விளக்கங்கள் தர அவசியமில்லை. "இசை என்பது மெல்லிசை மன்னரின் நல்லிசை போல் இருக்க வேண்டும்" என்று ரத்தினச் சுருக்கமாக கூறிவிட்டு பெருமிதமாக விடை பெற்று வரலாம். மற்ற அனைத்து விளக்கங்களும் அதில் அடங்கி விடும்!
uvausan
26th May 2015, 08:56 AM
கருவின் கரு - பதிவு 19
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே - அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே !!
குழந்தை கமலஹாசனனின் அற்புதமான பாடல் - காலத்தையும் கடந்து நிற்கின்றது . அநாதை அநாதை என்று சொல்கிறோம் - உண்மையில் யார் அநாதை ? தாயை தவிக்க விடுபவர்களும் , தர்மத்தை சூறையாடுபவர்களுமே உண்மையில் அநாதைகள் - காலம் அவர்களுக்கு இப்பொழுது சற்றே கருணை காட்டினாலும் , அவர்கள் ஒதுக்கப்படுவார்கள் ஒரு நாளில் - உள்ளத்தில் நல்ல உள்ளங்களை நிம்மதியாக உறங்க வைக்காதவர்கள் , உறங்கும் போது அநாதைகளாகத்தான் இருப்பார்கள் - இதை நான் சொல்லவில்லை - காலம் சொல்கின்றது -------
https://youtu.be/Axcrmw8OD4A
uvausan
26th May 2015, 08:57 AM
கரு தொடரும் -----
rajeshkrv
26th May 2015, 09:07 AM
Ravi,
arumai
gkrishna
26th May 2015, 10:28 AM
கடந்த ஞாயிறு அன்று மேற்கண்ட நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத ஒரு மாலை பொழுதாக அமைந்தது .பாடும் நிலா பாலுவின் என்றும் இளமை மாறாத குரலுடன் இன்றைய இளம் பாடகர்கள் இணைந்து பாடினார்கள். (விஜய் சூப்பர் சிங்கர் சோனியா நல்ல இணையாக விளங்கினார்). நேற்று பதிவிட மறந்து இன்று காலை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாள் இதழில் இது பற்றிய செய்தி வந்த உடன் நினைவிற்கு வந்து பதிவிடுகிறேன்.
http://cache.epapr.in/507358/2868e48e-3285-41f0-a86d-2747898155ec/600x909-600x909/1x1.png
http://media.newindianexpress.com/SPB.jpg/2015/05/25/article2832631.ece/alternates/w620/SPB.jpg
CHENNAI: WÜhistlepodu might have been the buzzword among the fans of Chennai Super Kings at the IPL Finals, as they cheered frantically for their team to win. However ‘Whistlepodu’ had been doing the rounds at the Isai Saral concert, by S P Balasubrahmanyam, which was organised by Kadayam R Raju, on Sunday, as fans could not resist humming and whistling along with each song that he sang.
One was amazed at the fact that despite being the D-Day for CSK, a fair number of people, who have been ardent followers of each of the songs sung by him, still gathered to listen to the enchanting voice of SPB. The evening kicked off by the performances of singers like Solomon, Nirmala, and others who might be lesser known to the music loving crowd, or who might have been a part of such concerts before. However, the perfection with which they sang was enough to keep the audience engrossed.
Sonia, from Airtel Super Singer 4, performed with so much precision, that a young singer like her performed, alongside the legend. The songs that they performed were Idhu Oru Nila Kaalam, Andru Vandadhu Ore Nila, Janani Janani Jagam Nee Agam Nee and others, following the most awaited moment came when SPB ushered in the spirit of celebration of music, with the song Paatu Thalaivan Paadinal from the film Ithaya Kovil.
The first few gamagams itself garnered the best response from the audience.
Next was Naan Pesa Vanthen from the 1976 film Paalooti Valartha Killi, which is in itself became an instance of how long and musical, his career has been. After listening to the song Ange Varuvadhu Yaaro from Netru Indru Naalai, one came to a realisation that his evergreen voice could still capture the essence of happiness and romance, through his effective voice modulation.
Though, the audience kept on demanding popular hits that he performs on stage, SPB giddily said the songs which were lesser performed, but have a qualitative spirit, have to be sung more often. Hence, the songs performed were more of the lesser performed songs by SPB.
Other songs that were sung were Meenamma Meenamma from Rajadhi Raja, Nandha En Nila from the film Nandha En Nila. However, the loudest cheers came when he sang a few lines of Tere Mere Bheech Main from Ek Duje Ke Liye, and the entire auditorium lingered with fans chanting ‘Once More’, only to go listen to a parody, wherein he gave his best wishes to CSK.
The songs covered a wide range of genres and actors, starting from MGR, Rajnikanth, Kamal Hassan and others, which yet again became an instance to show how his voice suited each and every one of them.
The evening saw the lively performance of SPB, for whose musical charm, it seemed that age has not withered his flair for music, as fans from all age groups equally enjoyed his songs.
The sponsors included ADT Saral, Dinamani, New Indian Express, Cinema Express, Tamizhan Channel, The Chennai Silks, Vasantha Bhavan, Vasana Furnitures, YBM Construction and Repose.
http://d2na0fb6srbte6.cloudfront.net/read/imageapi/clipimage/506622/3bb35a06-fad1-41e9-a07d-8685c89774e2
kalnayak
26th May 2015, 10:35 AM
சி.க.,
உங்கள் அன்னையின் நினைப்பில் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்து விட்டீர்கள். தாயைப் பற்றிய கவிதை நினைவுகளும் நெஞ்சை தொடுகின்றன. என்னமோ போங்க. பாடல்களினால் கவரப்பட்டு நானும் சொல்லத் துடிக்குது மனதை முதல் நாளே தேடித் பிடித்து பார்த்தேன். நினைத்துப் பார்த்தால்... என்னவோ போங்க.
chinnakkannan
26th May 2015, 10:50 AM
hi good morning ravi, rajesh, kal nayak..
ரவி..அஸ் யூஸ்வல் குட்.. இதே டைப் தான் நான் சொன்ன நண்பர் ஆனந்த்ராகவ்வின் சிறுகதை..
கல் நாயக் நன்றி.. ம்ம் துரத்தும் நினைவுகளுக்கு என்ன சொல்வது
ராஜ் ராஜ் சார்.. யெஸ் மிதிலா விலாஸ் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன் படித்ததில்லை..இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்குமா தெரியவில்லை..பட்.. ஒன் திங்க்.. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகன்னாதன் தேவன் - இப்போதும் க்ளாஸ்..கையிலெடுத்தால் படித்துவிட்டுத்தான்வைத்தேன்..
டாக்டர் திரிபுர சுந்தரியின் ஆப்பிரிக்காகண்டத்தில் பல ஆண்டுகள் படித்தீர்களா.. நன்றாக இருக்கும்.
kalnayak
26th May 2015, 10:50 AM
வாசு,
நீங்கள் சொல்ல வரும் நடிகர், நடிகைகள் யாரென்று படிப்பவருக்கு தெரியும் வரை விட மாட்டீர்கள் என்பதற்கு நடிகை கீதாஞ்சலி மற்றும் தெலுங்கு நடிகர் ராமக்ருஷ்ணாவை பற்றி நீங்கள் வரைந்த கட்டுரை ஒன்று போதும். நன்றி. வயதான போடோவிற்கு சி.க. கொடுத்த கமெண்ட் (கீ இ பு போ யா அ) எப்படி? 'இப்ப ஏதாவது படத்தில் நடித்தால் தெரியனுமொன்னோ!' என்று சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.
kalnayak
26th May 2015, 10:55 AM
ரவி,
கருவின் கருவில் உங்கள் உருக்கும் எழுத்துக்கள் எங்களை நினைவில் நெருக்கும் தொடராய் இருக்கிறது. பாராட்டுக்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம் மற்றும் உலக நாயகனின் பாடல்களுக்கு நன்றிகள்.
chinnakkannan
26th May 2015, 11:00 AM
சந்தைக்குப் போனீன்னா சலிக்காம மீனுவாங்கி
…சாயங்காலம் கொழம்புவச்சு கொடுத்திடுன்னு சொன்னீங்க
மந்தைபோன ஆடுகள்ளாம் மறக்காமப் பட்டியிலே
..மாஞ்சுமாஞ்சு வந்துடுச்சே மச்சானொன்னைக் காங்கலியே
சந்தனமா மஞ்சபோட்டு பக்குவமா மசாலரைச்சு
..சட்டியிலே வச்சுபுட்டேன் கொதிக்குமணம் தெரியலையா
நொந்தகண்ணு வலிக்குதய்யா நேரத்துல தான்வாய்யா
..நெஞ்சுக்குள்ள ஒமச்சுமந்து நிக்குறது நெனைப்பிலையா
https://youtu.be/pqzzI855yns
kalnayak
26th May 2015, 11:11 AM
பூவின் பாடல் 11: "செவ்வந்தி பூ மாலை கட்டு! தேடி வந்தாள் ஜோடி சிட்டு ! சிங்காரமாய் மேடை இட்டு ! சேர போறேன் மேளம் கொட்டு !"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்ம ராமராஜனின் அற்புதமான பூமாலைப் பாடல். பாடல்... ம் ம் ம். உடன் ஆடுபவர் நடிகை ராகசுதா. எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்து பாடும் நிலா பாலுவும் சித்ராவும் பாடியிருக்கும் பாடல்.இது ஒரு காதல் டூயட் பாட்டு. மத்தபடி பாடலோட அழகை நீங்கதான் பார்த்து புரிஞ்சி இங்கே சொல்லணும்.
https://www.youtube.com/watch?v=eYAgFaJCtCk
தங்கத்தின் தங்கமாமே இவர்? தெரிஞ்சவங்க இதையும் சொல்லுங்க.
Gopal.s
26th May 2015, 11:20 AM
ரவி/சின்ன கண்ணன்,
சில சமயம் craftiness ,intelligence &information நிறைந்த journalistic flair பதிவுகளை விட, ஆத்ம சுத்தியோடு இதயத்தில் இருந்து வரும் பதிவுகள் அனைவர் மனதையும் தொடும். அந்த ரக பதிவுகள் நிறைய வருகின்றன உங்கள் இருவரிடம் இருந்து. ரவி, உங்களின் பதிவுகள் ரொம்பவே மனதை அலை பாய வைக்கிறது.
சி.க - NRI ஆக இருப்பதற்கு கொடுக்க படும் மிக பெரிய விலையே உறவுகளின் இறுதி நாட்களின் அருகிருப்பு பாக்கியம் இழப்பதே. இந்த அனுபவம். சித்ரா ரமேஷ் என்ற பெண் எழுத்தாளர் தன்னுடைய பறவை பூங்கா என்ற சிறுகதை தொகுப்பில் தன பிதாமகன் என்ற சிறுகதையில் இதை மிக வேறு பரிமாணத்தில் காட்டியிருப்பார். சமீபத்தில் நான் படித்த மிக சிறந்த சிறுகதை தொகுப்பு.
இந்த நேரத்தில் இன்னொன்றை குறிக்க விழைகிறேன். சில அருமை நாம் உணர்வதில்லை. உலகிலேயே கொடுத்து வைத்தவர்கள் என் குழந்தைகள். ஆம். அவர்களே சொன்னது. அவர்கள் இருவருக்கும் நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று வரை ,வகுப்பு தோழர்கள்,பழகும் தோழர்கள்,சொந்தங்கள் அனைவருக்கும் இல்லாத கொடுப்பினை. தாய்,தந்தை வழி பாட்டி,தாத்தாக்கள் நால்வரும் ஆரோக்யத்தோடு இருப்பது. (நால்வரும் 80 வயதுக்கு மேல்) நால்வருமே படு ஆரோக்யமாக தன வாழ்வை தானே நடத்தி செல்பவர்கள்.(அம்மம்மா,அம்மப்பா,அப்பம்மா,அப்பப ்பா நால்வரும்)
என்ன ஒரு கொடுப்பினை என் மக்களுக்கு.
kalnayak
26th May 2015, 11:35 AM
நிலாப் பாடல் 77: "வெண்ணிலாவே வெள்ளைப்பூவே வா வா. வெட்கமென்ன ஆடை வேண்டாம் வா வா"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவும் வழக்கமான காதல் பாட்டுதாங்க. காதலியை வெண்ணிலாவேன்னு கூப்பிடற பாடல்தான். பின்னாட்களில் வந்த நிலாப் பாடல்களில் எனக்கு இதுவும் மிகப் பிடித்த பாடல். நல்ல கவிதை வரிகளுக்கு ஆடுவது போல அட்டகாசமாக வித்யாசாகர் இசை அமைத்திருக்கிறார் (எங்காவது ஆங்கிலத்தில் இதுமாதிரி முன்பே இசை அமைத்து விட்டார்கள் என்றால் நமது ஜுகல் பந்தி புகழ் ராஜ்ராஜ் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.) மனோவும் சித்ராவும் பாடியிருக்கிறார்கள். எழுதியவர் விபரம் அடியேனுக்கு கிடைக்கவில்லை. தெரிந்தவர் தெரிவிக்க தெரிந்து கொள்வோம். அர்ஜுனும் மீனாவும் நடனக் குழுவினருடன் ஆடுகிறார்கள். கண்டு களியுங்கள்.
https://www.youtube.com/watch?v=NUyF8j_frwU
செங்கோட்டைக்கும் இதுக்கும் சம்பந்தம் உண்டு என்கிறவர்களைப் பார்த்து என்ன சொல்வது?
gkrishna
26th May 2015, 02:24 PM
கவிஞர் வாலி வரைந்தளித்த காதல் ஓவியம்!
வார்த்தையில் சொன்னால் ஒரு காவியம்!
நண்பர் வினோத் சந்திரோதயம் திரைப்படம் வெளிவந்து 49 ஆண்டுகள் கழிந்து விட்டன என்று நினைவு கூர்ந்து இருந்தார் . கவிஞர் வாலியின் வாலிப வரிகள் நினைவுகளை பின்நோக்கி ஓடவிட்டன.
காதலியின் அருமையை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார்
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ?
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ?
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ?
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?
இந்த பாடலில் கீழ்க்கண்ட இரண்டு விதமான சரணம் படித்த நினைவு சார் எது சரி
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ?
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ?
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
ரீங்காரம் செய்யும் இசைஅரசியின் ஹம்மிங் .
இதே மாதிரி மனதை கவர்ந்த இன்னொரு ஹம்மிங் 'சிட்டு குருவி முத்தம் கொடுத்து ' பாடலில் வரும் .காமிரா வானத்தை நோக்கி இருக்கும். இசைஅரசியின் ரீங்காரம் மட்டும் கேட்கும். நம்ம NT யின் தலை கீழே குனிந்து பின்னர் நிமிர்ந்து உதடை (தன் உதடை தான் :) ) தடவி கொள்ளும். நமக் 'கோ' !
50 வருடங்கள் கழிந்தாலும் மனதை விட்டு அகலாத பாடல் காட்சிகள்
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTACRT54dbzsKwz_X0MtE8v_nliArmOl QSBA-4Gz9rAK4IY7_hOhttps://i1.ytimg.com/vi/i-F-cZ0j5Pc/hqdefault.jpg
http://3.bp.blogspot.com/-ibY5cpqt068/UhR_ZtHx9kI/AAAAAAAAAVM/jbLrrdEg8hE/s1600/susheela.jpg
gkrishna
26th May 2015, 02:55 PM
நண்பர்கள் கல்நாயக் /வாசு/ரவி/சி கே
உங்களுக்கு எப்படி அருமையான தலைப்பு ஒன்று கிடைத்து அதில் தொடர்ச்சியாக பாடல்கள் வெளியிடுகிறீர்கள் ?
ரவி - கருவின் கரு /1000 கரங்கள் நீட்டி
கல்நாயக் - நிலாப் பாடல்
சி கே - என்னமோ போங்க
வாசு - சொல்லவே வேண்டாம்
என்னமோ போ "கோபாலா-:mrgreen:" நமக்கு தான் ஒன்னும் செட் ஆகவில்லை :cry2:
kalnayak
26th May 2015, 03:05 PM
நண்பர்கள் கல்நாயக் /வாசு/ரவி/சி கே
உங்களுக்கு எப்படி அருமையான தலைப்பு ஒன்று கிடைத்து அதில் தொடர்ச்சியாக பாடல்கள் வெளியிடுகிறீர்கள் ?
ரவி - கருவின் கரு /1000 கரங்கள் நீட்டி
கல்நாயக் - நிலாப் பாடல்
சி கே - என்னமோ போங்க
வாசு - சொல்லவே வேண்டாம்
என்னமோ போ "கோபாலா-:mrgreen:" நமக்கு தான் ஒன்னும் செட் ஆகவில்லை :cry2:
நண்பர் gkrishna ji அவர்களே,
அற்புதம். 'என்னமோ போ "கோபாலா-:mrgreen:" நமக்கு தான் ஒன்னும் செட் ஆகவில்லை' என்ற தலைப்பில் நீங்கள் எழுதப் போகும் பாடல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
எல்லோரும் கண்டு மகிழ அஜய் டிவி அவார்ட்ஸ்:
https://www.youtube.com/watch?v=9t8XTz-jQEs
gkrishna
26th May 2015, 03:15 PM
நண்பர் கல்நாயக்
சான்சே இல்லை . செம டைமிங் .:)
'போட்டு :shoot: "
Gopal.s
26th May 2015, 07:58 PM
நண்பர் கல்நாயக்
சான்சே இல்லை . செம டைமிங் .:)
'போட்டு :shoot: "
கவலையே வேண்டாம். கோபாலாவிற்கா பஞ்சம்?
வாங்க வாங்க கோபாலையா (ஆடியோ மட்டும்)
கோபாலன் எங்கே உண்டோ
கோபாலா கோபாலா மலையேறு கோபாலா
கோபியர் கொஞ்சும் ரமணா கோபாலகிருஷ்ணா
தைரியமா எடுங்க கிருஷ்ணா.
rajeshkrv
26th May 2015, 09:07 PM
வி.கே.ஆர் சொல்லும் ராமாயணம்
https://www.youtube.com/watch?v=uS3qRXQSxR0
chinnakkannan
26th May 2015, 09:19 PM
//ரகு அவளிடம் இல்லை ஆனால் நம்பிக்கை இருந்தது - வாயில் ராமனையும் , மனதில் ரகுவையும் சுமந்து கொண்டிருந்தாள் - கங்கைக்கு ஆரத்தியாம் - எதற்கு ? இதோ கங்கைக்கு புண்ணியம் சேர்க்கிறாளே இவளுக்கு அல்லவா ஆர்த்தி எடுக்க வேண்டும் ! அவளை மெதுவாக அருகில் இருக்கும் சங்கர மடத்தில் சேர்த்தேன் - 10 மாதங்கள் யாரையோ அவள் சுமந்தாள் - அவளுக்கு நான் ஒரு மாதம் மட்டுமே போதுமான உதவியை செய்ய முடிந்தது - என் நம்பரை சங்கர மடத்தில் கொடுத்துவிட்டு மாதம் மாதம் அனுப்பும் பணத்தில் அங்கு இருந்த கருவறைகளுக்கு பிரசாதம் கொடுக்க சொன்னேன் ..// ரவி..கொஞ்சம் எக்கச்சக்க வேலை அவசரத்தில் ஒருவரி கமெண்ட் தான் இட முடிந்தது.. நிஜம்மாகவே பெரிய மனதய்யா உமக்கு..ம்ம் நான் இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.. தொடருங்கள் உங்கள் சேவையை..
கல் நாயக் ..ஒம்மை யார் சொ.து.ம பார்க்கச் சொன்னார்கள்.. நான் தான் சொன்னேனில்லை..சரி சரி பயந்திருந்தால் மோர் சுடவைத்துக் குடிக்கவும்!
//இந்த நேரத்தில் இன்னொன்றை குறிக்க விழைகிறேன். சில அருமை நாம் உணர்வதில்லை. உலகிலேயே கொடுத்து வைத்தவர்கள் என் குழந்தைகள். // கோ... டச் வுட்.. வெரி நைஸ்.. அப்புறம் நன்றி..எங்களை உங்கள் மனதிற்கருகான நண்பர்களாக நினைத்து இதை ச் சொன்னதற்கு.. ஓய்..அதிலயும் ஒரு அலட்டல்..கொடுத்து வைத்தது ஒம்ம குழந்தைகள் மட்டுமல்ல நீரும் தான்..அகெய்ன் டச் வுட்..
சித் ரா ரமேஷ் கதைகள் படித்ததில்லை ஊர் செல்லும் போது வாங்கிப் படிக்கிறேன்..என்னபதிப்பகம்..
ஆம்..என்.ஆர்.ஐ வாழ்க்கையில் இது சகஜம் தான் என்றாலும் தனக்கென்று வரும்போது தான் ஒரு ச்சிலீர் பகீர்.. நிறையப் பார்த்தாச்சுங்க.. நெள வெய்ட்டிங்க் ஃபார் த அழைப்பு
வயசாய்டுச்சோல்லியோ வேதாந்தமாத் தான் யோசிக்க வேண்டியிருக்கு லொக் லொக் (என்னடா இருபத்தெட்டுல்லாம் ஒரு வயசா.. அதானே தாங்க்ஸ் மன்ச்சு :) )
களைத்துதான் விட்டது காலத்தில் நெஞ்சம்
அழைப்புக்கே ஏங்குதே ஆம்..
*
கல் நாயக்..இன்னும் வீடியோஸ் பார்க்கலை பார்த்துட்டு ஹோம்வொர்க்ல சொல்றேன்..
கிருஷ்ணா.. இங்க்லீஸ் பதிவு படிக்கலை.. தமிழ் சந்த்ரோதயம் படித்தேன்..என்னா பாட்டுங்கோ அது.. நைஸ்.. அது என்ன தலைப்புக்கு என்ன வீடியோ கல் நாயக் போட்டிருக்கார்.. பாக்கணுமே..
கோபாலன் பற்றிய சாங்க்ஸில் கோபாலரே விட்ட பாட்டு..:)
https://youtu.be/9WkssnWrwxE
chinnakkannan
26th May 2015, 09:28 PM
கல் நாயக் சிரி சிரின்னு சிரிச்சுக்கிட்டு இருக்கேன்..இப்ப முக்கா தான் பார்த்திருக்கேன்.. தாங்க்ஸ் ஃபார் த கனெக்*ஷன் ஆன் அஜய் அவார்ட்ஸ்..:)
chinnakkannan
26th May 2015, 09:54 PM
கோபாலன் எத்தனை கோபாலனடி :)
இன்னும் நிறைய இருக்கே.. விட்டு ப் போனதை வாசு சொல்லமாட்டாரா என்ன (பயம்ம்மா இருக்கு.;.எதுக்கும் தொணைக்கு அவரை வச்சுக்கலாம் :) )
//பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா//
ஊலால்லா ஊலாலா இது வெஸ்டர்ன் கானா கோபாலா//
//ராமன் நீயல்லவே சீதை துணைகொள்ளவே
கோபாலன் அவதாரமே//
//கோபாலன் சாய்வதோ கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ பூவை மனதில்//
//வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய்கோபாலனே பூ முத்தம் தந்தவனே//
RAGHAVENDRA
26th May 2015, 10:10 PM
ஆஹா கிருஷ்ணாஜி
தங்களுக்கு அருமையான தலைப்பு ... கோபாலா..
இந்தத் தலைப்பில் தாங்கள் எழுத முற்பட்டால்..
கோபாலனோடு நான் ஆடுவேனே...
https://www.youtube.com/watch?v=9WkssnWrwxE
chinnakkannan
26th May 2015, 10:45 PM
ஹை..வாங்க வாங்க ராகவேந்தர் ஜி.. முதலில் உங்களுக்கு லட்சம் தொட்டதற்குவாழ்த்து..மென்மேலும் பெருகட்டும்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..:) ஓ..ரொம்ப ஃபார்மலா இருக்கா..எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்..
கோபாலனோடு நான் ஆடுவேனே போட்டாச்சே கொஞ்சம் முன்னாடி தான் :)
chinnakkannan
26th May 2015, 10:46 PM
*
என்னமோ போங்க – 11
**
அமெரிக்காவிலிருந்து வந்திருந்தான் ஒரு நண்பன் பல வருடம் முன்பு..முகத்தில் சோகம்..
என்னடா
ஆண்டவன் நமக்கெல்லாம் துரோகம் பண்ணிட்டார்டா
என்னடா என்ன விஷயம்
நம்மளை எல்லாம் இந்தியால்ல போய்ப் படைச்சுட்டார்டா..பெரு(Peru) மாதிரி இடத்தில படைச்சுருக்கலாம் (சமீபத்தில் தான் –அதாவது அப்போதைய சமீபத்தில் போய்ட்டு வந்தானாம்..) .. என்னா ஸ்பானிஷ் பொண்ணுங்கங்கற ரொம்ப அழகா இருந்தாங்கடா…..
மேலும் மேலும் வருத் வருத் வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தான் அவன் இருந்த சில நாட்களில்.. (ஸ்பானிஷ் பெண்ணுங்க அவ்ளோ அழகா இருப்பாங்களா கிருஷ்ணா)
*
அது போல வே எனக்கும் இன்று ஒரு மனக்கிலேசம் ( ஹை கிலேசம் நியூ வர்ட் தானே.. கவலை..) ஏற்பட்டது..அதுவும் தேடிக்கொண்டிருக்கும் போது இந்தப் பாட் பார்த்ததால்.. ஒரு பட்டிக்காட்டானாகப் பிறந்திருந்தால் அதுவும் அன்றையகாலகட்டத்தில் பிறந்திருந்தால் இப்படிப் பெண்கள் எல்லாம் பாடுவார்கள் தானே.. சே மதுரை சிட்டி மேனாய்ப் பிறந்து விட்டோமே ..ம்ம்
என்னமோ போங்க..
( நடுல்ல ஹீரோவை ஆணுமில்லை பெண்ணுமில்லை எனச் சொல்வதெல்லாம் டூமச் யுவர் ஹானர்)..
*
ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
உருவைக் கொஞ்சம் மாற்றட்டுமா
பிள்ளை வயசு பெரிய மனசு
கண்ணால் உலகம் காட்டட்டுமா
https://youtu.be/fVHXXESWw8g
எல் ஆர் ஈஸ்வரி அண்ட் கோரஸ் + ரவிச்சந்திரன்+ ராஜஸ்ரீ படம் நானும் நீயும்னு போட்டிருக்கு… அந்த பிள்ளை வயசுவில் எல்.ஆர் ஈ கொடுக்கற அழுத்தம் இருக்கே..ஆஹா..
*.
chinnakkannan
26th May 2015, 10:50 PM
*.
என்னமோ போங்க – 12
*
அள்ளும் நினைவில் அழகான மாலையாய்ப்
பள்ளியும் பள்ளிகொளும் பார்
ஆக இந்தப் பள்ளிப்பருவம் இருக்கிறதே நினைச்சாலே மனசெல்லாம் ரெக்கைகட்டிப் பறக்குமாங்காட்டியும்.. அது இருந்தப்ப ஏதாவது கவலை உண்டா..ம்ஹூஹீம்.. ஹோம்வொர்க் டீச்சர் பக்கத்து சீட் பொண்ணு அவளோட ஜாஸ்தி மார்க்.. அடுத்த வகுப்பு.. நிறையப்பாடம் இருக்குமே..லீவ்ல என்ன வெளையாட்டு விளையாடலாம் (இந்தக்காலப் பசங்க மாதிரி டூர்லாம் போனதில்லை) கில்லி கபடி கிளியாங்கிளியா,கிரிக்கெட், ஃபுட்பால், செஸ், கேரம், கார்ட்ஸ் ஏஸ் ம்ம் அதெல்லாம் ஒரு காலம் ஆனா அது இருக்கறப்ப கொஞ்சம் டென்ஷனாத் தான் இருந்திருப்போம் இல்லியோ..
இங்க பாருங்க பள்ளி மாணவிகள்..ஜாலியா ஜீப்பில் டூர் போறாங்க.பாவாடை சட்டை தாவணி தான்..
தாவணி நன்றாய்த் தழுவிடவும் மென்குரலில்
லாவணி பாடிடும் லாவண்யம் – பூவெனவேத்
துள்ளித் திரிந்துதான் துன்பமின்றிப் பாடுவது
அள்ளுதே நம்நெஞ்சை ஆம்..
ம்ம் பாட்டு நல்லாத் தான் இருக்கு..இப்படி வயல் ஆறுன்னு அலைஞ்சு திரிஞ்சா உடம்பு என்னத்துக்காறது..படிக்கவேணாமோ. .என்னமோ போங்க...
*
மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும் தடைகள் கிடையாது
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும் கவலை இனி ஏது
எண்ணம் போலவே துள்ளி ஆடடி
வண்ணப்பாவையே விந்தை காணும் நேரம் இங்கே வா வா வா
மாஞ்சோலைக் குயிலொன்றின் குரல் கேளடி
மகிழ்ந்தாடும் அதற்கிங்கு சிறை ஏதடி
சாய்ந்தாடிச் சதிராடும் மலர்ச்சோலைகள்
சரியாக ஜதி போடும்கிளிப் பிள்ளைகள்..
மனமங்கு தாவுதே பின்பாட்டுப் பாடுதே
இளம் தென்றல் வீசுதே
கைத் தாளம் போடுதே
வெண் மேகம் பூத்தூவும் என் பாதையில்
மென் காற்றுத் தாலாட்டும் என் மேடையில்
ஏனென்று கேட்காத ராஜாங்கத்தில்
எதிர்பாட்டு எனக்கேது என்வாழ்க்கையில்
தேவாதி தேவர்கள் நல்வாழ்த்துக் கேளடி
ராஜாதி ராஜனும் என் காலில் தானடி
(லிரிக்ஸ் நல்லா இருந்துச்சா.. கேட்டுக் கேட்டு டைப்படிச்சேங்க்ணா)
https://youtu.be/2xCsZW6cwGA
அழகான மெலடி.. பார்வதி என்னைப் பாரடி என்னும் படமாம் ஹீரோயின் யாராக்கும்..?
அப்புறம் வாரேன்..:)
rajeshkrv
27th May 2015, 01:24 AM
என்னமோ போங்க சி.க அட உங்க தொகுப்பைத்தான் சொன்னேன்.. சும்மா பட்டய கிளப்புறீக ... தூள்
rajraj
27th May 2015, 01:47 AM
From Devadas(1953)
ulage maayam vaazhve maayam......
http://www.youtube.com/watch?v=Uid7ZFPkt3M
From the Telugu version
jagame maayaa........
http://www.youtube.com/watch?v=nZCHsIegkaE
uvausan
27th May 2015, 07:37 AM
Good Morning
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150524-WA0005_zpsi4ztbxxb.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150524-WA0005_zpsi4ztbxxb.jpg.html)
http://i1021.photobucket.com/albums/af337/babysinthebasket/Cute-Baby.jpg (http://media.photobucket.com/user/babysinthebasket/media/Cute-Baby.jpg.html)
uvausan
27th May 2015, 07:47 AM
கருவின் கரு - பதிவு 20 :(:(
உண்மை சம்பவம் -2
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன . இந்த சம்பவம் என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த ஒன்று .
உமா, என் மனைவி அவசர அவசரமாக என்னை எழுப்பினாள் - " என்னங்க ? எழுந்திருங்க - நேற்று எவ்வளவோ சொல்லியும் இப்படி தூங்கினால் என்ன அர்த்தம் ? "
உமா citibank இல் director ஆக இருக்கிறாள் - நானும் தனியார் அலுவகத்தில் vice chairman ஆக இருக்கிறேன் - குழந்தைகள் இருவர் - இருவரும் MS படித்துக்கொண்டுருக்கிண்டார்கள் USA வில் . என்னுடன் 80 வயதை கடந்த அம்மா -. அப்பா தவறி இரண்டு வருடங்கள் ஆகின்றது - ஒரே மகனாக இருப்பதால் அம்மாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் எனக்கே கிடைத்தது . நாங்கள் இருவரும் வேலை செய்வதாலும் , இரவு நீண்ட நேரம் கடந்து இல்லத்திற்கு வருவதாலும் அம்மாவை சரியாக கவனித்துக்கொள்ள முடியவில்லை - அந்த வயதில் அவர்களுக்கு வரும் மிக கொடுமையான வியாதி என்ன தெரியுமா ?
"The feeling of being unwanted ; being ignored " . இதை அப்பொழுது நான் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை . முழு நேர வேலைக்காரி அம்மாவை விட அதிகமான தேவைகளுடன் வருவதால் எங்களுக்கு ஒத்து வரவில்லை .
மீண்டும் உமாவின் அதட்டல் - எழுந்தாச்சா ? சீக்கிரம் கிளம்புங்கள் - இன்று எனக்கு போர்டு மீட்டிங் - சாயிந்தரம் கம்பெனியில் நம் இருவருக்கும் பாராட்டு விழா - மறக்காமல் அம்மாவை பவானி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு ஆபீஸ் செல்லுங்கள் - இதோ அம்மாவிற்கு தேவையான உடுப்புகள் , மருந்துகள் , அவள் விரும்பி படிக்கும் திருவாசகம் ,.....
"உமா ! அம்மாவை கண்டிப்பாக முதியோர் இல்லத்தில் சேர்த்து தான் ஆக வேண்டுமா ? பாவம் நிமிடத்திற்கு ஆயிரம் முறை விசு என்று கூப்பிடுவாளே , என்னை விட்டு தனியாக எப்படி அங்கு வசிப்பாள் ?"
" முருங்கை மரம் ஏறியாகி விட்டதா ? படித்து படித்து சொன்னேன் - மீண்டும் மீண்டும் அதே கேள்வி ? கம்பெனியில் vice chairman ஆக இருந்து என்ன குப்பை கொட்டுகிறீர்கள் ? இந்த சின்ன விஷயத்தைகூட சமாளிக்கத்தெரியாமல் ? "
இல்லை உமா - அம்மா பாவம் - எனக்காக ------" உமா கிளம்பி சென்று 5 நிமிடங்கள் ஆகி விட்டன . உள்ளே அம்மாவின் அழகிய குரலில் திருவாசகம் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தது .
" திகைத்தால் தேற்றி அருள வேண்டும் " என்ற தலைப்பின் கீழ் வரும் பாடலை கணீரெண்டு பாடிக்கொண்டிருந்தாள்
" கூறும் நாவே முதலாகக்
கூறும் கரணம் எல்லாம் நீ !
தேறும் வகை நீ ! திகைப்பும் நீ !
தீமை , நன்மை , முழுதும் நீ !
வேறு ஓர் பரிசு , இங்கு ஒன்று இல்லை ;
மெய்ம்மை , உன்னை விரித்து உரைக்கின் ,
தேறும் , வகை என் ? சிவலோகா !
திகைத்தால் , தேற்ற வேண்டாவோ !
வேண்டத்தக்கது அறிவோய் நீ !
வேண்ட , முழுதும் தருவோய் நீ !
வேண்டும் அயன் மாற்கு , அரிவோய் நீ !
வேண்டி என்னைப்பணி கொண்டாய் ;
வேண்டி , நீ யாது அருள் செய்தாய் ?
யானும் அதுவே வேண்டின் அல்லால் ,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் ,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே !
மெதுவாக அம்மா என்று அழைத்தேன் - அதில் உயிர் இல்லை .
" என்ன விசு , ஆபீஸ் போகல்ல ? உடம்புக்கு என்ன ? எதோ மாதிரி இருக்கிறாய் - உமா எங்கே ஆபீஸ் சீக்கிரம் போகவேண்டும் என்றாளே ?" அம்மாவின் அக்கறை தோயிந்த வார்த்தைகள் -----
" அம்மா உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் - உன்னை ஒரு புது இடத்திற்கு கூட்டி செல்லபோகிறேன் - அங்கு எல்லா வசதிகளும் உண்டு - மருத்துவர் எப்பொழுதும் இருப்பார் - உன் வயதை எட்டியவர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள் --- மேலே வார்த்தைகள் வர மறுத்தன ...
" விசு , எல்லாம் சரி நீ அங்கு இருப்பாயா ? உமா இருப்பாளா ? - அது என்ன மாதிரியான இடம் ?. அப்பா வாழ்ந்த இந்த வீட்டை விட்டு ஏன் அங்கு அழைத்துச்செல்கிறாய் ? - நான் இங்கு இருப்பதில் உனக்கு ஏதாவது கஷ்ட்டமா ? அப்படியானால் போகிறேன் !"
வாசலில் யாரோ அழைக்க விரைந்து சென்றேன் . சிறிது நேரம் கழித்து அம்மாவிடம் மீண்டும் பேச அவளிடம் சென்றேன் - உறங்கி விட்டாள் --- அம்மா , நான் சொல்ல வந்தது என்ன வென்றால் --------
அம்மாவின் கைகள் chill ஆக இருந்தது - மூச்சுக்காற்று நின்று 5 நிமிடமாவது ஆகியிருக்கும் .. யாரோ என்னை முதுகில் ஓங்கி அடித்ததைப்போன்று இருந்தது .
என் மொபைல் , என் மனவியைப்போலவே அலறியது - மறுப்பக்கம் உமாதான் " என்ன அம்மாவை சேர்த்து விட்டீர்களா ? என்ன சொன்னாள் ? "
என் உள்ளம் கதற , உதடுகள் மட்டுமே அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தது " ம்ம் அம்மாவை சேர்த்துவிட்டேன் ( இறைவன் காலடியில் ) , அவள் ஒன்றுமே சொல்லவில்லை "
என்னை விட்டு ஒரு நிமிடம் பிரிந்து இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவளின் உயிர் பிரிந்தது - பிரிந்து தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறேன் -------
கடல் என்ற அவள் கருணையில் , நான் பயணிக்க நினைத்தது ஒரு காகித கப்பலில் - மணலால் வீடு செய்து அவளின் கண்ணீரில் அதை கரைய வைத்தேன் - அவள் முகத்தைப்பார்க்காமல் யாருடைய முகத்தையோ பார்த்துக்கொண்டுருக்கிறேன் - அவள் கொடுத்த நிழலை விட்டு காண நீரில் இளைப்பாருகின்றேன் .........வாழ்க்கை கடிகாரத்தை யாரவது திருப்பி வையுங்களேன் - அவளிடத்தில் நான் நாள் முழுவதும் , ஏன் என் ஜென்மம் முழுவதும் மன்னிப்பு கேட்க்கவேண்டும் , அவள் மடியில் விழுந்து அழ வேண்டும் !!
https://youtu.be/3ZOAMaT3ZnE
uvausan
27th May 2015, 07:50 AM
கருவின் கரு - பதிவு 21
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் - அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும் ---- அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா? அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா......
என் சின்ன சின்ன வெற்றியையும் ரசிப்பாயே - உன்னை ரசிக்காமல் வேலை வேலை என்றிருந்தேனே !
என் காலில் சிறியதாக அடிபட்டதற்கு - கண்களில் இருந்து இரத்தத்தை அல்லவோ அன்று சிந்தினாய் !!
உனக்கு இரத்தம் கொடுக்க நானோ காசை அல்லவா எண்ணினேன் !!
நல்ல மனைவி எனக்கு வேண்டும் என்று - நீ சுற்றாத கோயில் இல்லை !
நீ நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு நாளும் கோயிலை நான் நினைத்ததே இல்லை !!
நீ எனக்காக வாழ்ந்தாய் - நான் எனக்காகவே வாழ்ந்தேன் !!
நீ சாப்பிட்டதை விட விரதம் ( பட்டினி ) இருந்த நாட்கள் அதிகம் - நானோ பட்டினியை புத்தகத்தில் தான் படித்திருக்கிறேன் ---
எங்கேயோ சென்று விட்டாய் -- இன்னுமொரு பிறவி என்று ஒன்றிருந்தால் நான் உனக்கு தாயாக பிறக்கவேண்டும் - உன்னை என் மடியில் வைத்து சீராட்ட வேண்டும் - இது தான் என் கடைசி ஆசை ---- இறைவன் என்று ஒருவன் இருந்தால் , எனக்கு செவி சாய்க்கட்டும் .........
தெய்வம் மனிதனாக வந்து வாழ்வதை படித்திருக்கிறோம் - ஒரு மனித பிறவி தெய்வமாக வாழ்வதை தாயின் மூலமாகத்தான் பார்க்கமுடியும் , படிக்க முடியும் .
https://youtu.be/Z9rjDWeGfQM
uvausan
27th May 2015, 08:11 AM
கருவின் கரு - பதிவு 22
அவன் முகம் அழகு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கும் - அவன் இதயமோ கருணை என்றால் - buy one get two free என்று சொல்லும் - அவன் அழகில்லை என்பதால் அவன் தந்தை அவனை தூக்கி எறிந்தான் , வீட்டிலிருந்தும் , மனதிலிருந்தும் --- தாயின் மடி கனத்தது - கருவறையில் இரத்தம் கசிந்தது - வெளி அழகினால் என்ன பயன் - அழியக்கூடியது ! உள் மனம் மன்மதனாக இருக்கின்றதே - அதுவல்லவோ நிரந்தரம் .... கண்கள் பார்த்திருக்காத மகனை தேடுகின்றது - பத்து மாதங்கள் குடியிருந்த அந்த கருவறையை பார்க்க மகனும் துடிக்கிறான் - கருவாகவே மீண்டும் உள்ளே சென்று விட்டால் , அவளின் நிழலில் மீண்டும் இருக்கலாமே -- மனம் ஏங்குகிறது - யாரோ பாடும் பாடல் அவர்களின் எண்ணங்களை இணைக்கிறது ..
https://youtu.be/mU-GlbPlong
uvausan
27th May 2015, 08:23 AM
கருவின் கரு - பதிவு 23
தாயை மதித்தால் ( மிதிக்காமல்) வெற்றி மீது வெற்றி வருவதுடன் புவியரசோடு நமக்கும் ஒரு சரியாசனம் கிடைக்குமே ---- அந்த உலக மாதாவிற்கும் , நம்முடைய மாதாவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை - அவள் கோவில்களில் கல்லாக இருக்கிறாள் - நாம் நம் மனதை கல்லாக்கி நம் தாயை அதில் அமரவைத்து அழகு பார்க்கிறோம் !!:(
https://youtu.be/Fm7QOXpd3jU
uvausan
27th May 2015, 08:24 AM
ஒரு ரசிகரின் அலசல் இந்த பாட்டைப்பற்றி
ஒரு அதிகாலையில் உறக்கம் விழித்த போது, என்னவோ தெரியவில்லை.. அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் இந்த பாட்டைக்கேட்க வேண்டுமென்று எண்ணம் வந்தது - இணையதளம் சென்று யூட்யூப் சென்றேன்.. முதல் பாட்டே இது தான் இருந்தது ! குறைந்தது ஐந்து முறை அணு அணுவாக ரசித்தேன் - முதல் முறை டி எம் எஸ்ஸின் அருமையான தமிழ் உச்சரிப்புக்கு - இரண்டாம் முறை நடிகர் திலகத்தின் முக பாவம் அற்புதமான நடிப்பு மூன்றாம் முறை காளியாக நடித்த நடிகையின் அற்புதமான நடனம் - நான்காம் முறை திரை இசை திலகம் மகாதேவனின் அருமையான இசை ஐந்தாம் முறை கண்ணதாசன் வரிகளுக்காக அவர் உட்பட டைரக்டர் தயாரிப்பாளர் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களின் அருமையான ஒருங்கிணைப்பு ! ஐந்து நிமிடத்தில் இயல் இசை நாடக முத்தமிழின் அனைத்து அம்சங்கங்களும் சாரமாக அமைந்த பாடல்..... அருமை அருமை அருமை...
uvausan
27th May 2015, 08:25 AM
கரு தொடரும்
uvausan
27th May 2015, 08:31 AM
CK - உங்கள் " என்னமோ போங்க " அருமை - என்னிடம் இருக்கும் பல குறைகளில் முக்கியமான ஒன்று , multitasking ability இல்லாதது - ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் மனம் அதை சரியாக முடிக்கும் வரை வேறு இடத்தில் கவனம் செலுத்துவதில்லை - இதனால் பலர் போடும் நல்ல பதிவுகளை ரசித்து உடனுக்குடன் பாராட்டுக்களை தெரிவிக்க மறந்து விடுகிறேன் . என்ன செய்வது -- இப்படியே வளர்ந்து விட்டேன் - மிகவும் ரசிக்கும் படியாக இருக்கின்றது - பாராட்டுக்கள்
rajeshkrv
27th May 2015, 10:46 AM
வணக்கம்.
திரு நெளஷாத் அவர்களுடன் இசையரசி மற்றும் அவர் கணவர், உடன் லதா மங்கேஷ்கர், சீர்காழியார்
https://scontent-dfw1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11009896_1067981359898309_4286801872561117362_n.jp g?oh=55215c1470e9ee8303c875dfc4b00b30&oe=55F7C664
rajeshkrv
27th May 2015, 10:56 AM
இரு திலகங்களின் பாடல்களுடன் இனிதே துவங்குவோம்
நடிகர் திலகம்... இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
கவியரசரின் வார்த்தை ஜாலமா, இசையரசியும் ஏழிசை வேந்தரும் பாடிய விதமா
அபிநய சரஸ்வதி அழகு பொம்மையாக குறிப்பாக வலது கை கடிகாரம் என fashionஆக இருக்க
அடிபட்ட காலுடன் நடிகர் திலகம் நடக்கும் அழகே அழகு.. நடிப்பெல்லாம் institute'ல் படித்து கற்று கொள்ள முடியாது என்பது பலருக்கு தெரியவில்லை
அதெல்லாம் தானே உள்ளே இருக்கனும்..
ஆம் கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா
https://www.youtube.com/watch?v=4rvNInoT6Sc
மக்கள் திகலம் பாடல்
நாயகியையும் தாண்டி ஒரு நாயகன் ஸ்க்ரீன் ப்ரஸன்ஸ் எப்பொழுதுமே இருக்கக்கூடியவர் நடிகர் திலகம்.
அதுவும் சரோவுடம் இவர் சேர்ந்தாலே துள்ளலான காதல் (எனக்கு ஜெ-யுடன் மக்கள் திலகத்தை விட சரோவுடன் தான் மிகவும் பிடிக்கும்)
அப்படி ஒரு துள்ளல் இங்கே
வாலி ஐயாவை புகழுச்சிக்கு இழுத்து சென்ற பாடல்
திருக்குறள் போல் இரண்டு அடிகளாக வரும் பாடல்
இவர் தொட்டால் பூ என்ன செடியே மலருமே
ஆம் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
https://www.youtube.com/watch?v=QUmytxOMkHo
kalnayak
27th May 2015, 12:10 PM
நண்பர் gkrishnaa அவர்களே,
உங்கள் கோபாலா தலைப்பிலான பாடல்களுக்கு அனைவருமே வழிமொழிந்து விட்டோம். பலர் பாடல்களையும் எடுத்துக் கொடுத்து விட்டனர். நீங்கள் கோபாலனோடு நிறுத்திக் கொள்ளாமல் க்ருஷ்ணாவிலும் தொடரவேண்டும்.
gkrishna
27th May 2015, 12:50 PM
நண்பர் gkrishnaa அவர்களே,
உங்கள் கோபாலா தலைப்பிலான பாடல்களுக்கு அனைவருமே வழிமொழிந்து விட்டோம். பலர் பாடல்களையும் எடுத்துக் கொடுத்து விட்டனர். நீங்கள் கோபாலனோடு நிறுத்திக் கொள்ளாமல் க்ருஷ்ணாவிலும் தொடரவேண்டும்.
கிரிதர கோபாலா பாலா
கிரிதர கோபாலா பாலா
கிரிதர கோபாலா
எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் கானக்குயில் எம் எஸ் சுப்புலட்சுமியின் 'மீரா' திரைபடத்தில்
http://www.youtube.com/watch?v=UllBnLtWEDE
gkrishna
27th May 2015, 01:49 PM
நடிகர் திலகம் திரியில் நண்பர் முத்தையன் அம்மு வெளியிட்ட நிழல் படங்கள் மற்றும் முரளி சார்/ராகவேந்தர் சார் பதிவிட்ட அவன்தான் மனிதன் பாடல்
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்தில் உள்ளது தான் உலகம் …இது அறிவிற்கு புரிகிறது…ஆனால் மனதிற்கு புரியவில்லையே…… ஆட்டுவிப்பவனும் நீயே …அரவணைப்பவனும் நீயே……உன்னால் முடிகிறது
என்னால் முடியவில்லயே கண்ணா (சின்ன) ! கல்நாயக் மன்னா ! ரவி அண்ணா ! கோபாலா திண்ணா :)
சில தத்துவ பாடல்கள் மனதை சுமை ஆக்கும் அல்லது போரடிக்கும் ஆனால் இந்த பாடல்
மனதில் ஒரு குறுகுறுப்பு கேட்கும்போது ஒரு இனிமை, எதார்த்தம் நிறைந்து ஆறுதல் அறிவுரை
http://4.bp.blogspot.com/_AWdXXZHnANM/TI50OkBlkUI/AAAAAAAAB9M/1gC4HNYpjts/s640/shivaji1145210.jpg
பாடலின் வரிகள் அனைத்தும் மனதில் கல்வெட்டாக பதித்து வைக்க வேண்டியவை…..கவியரசர் வரிகளுக்கு MSV இசை உயிராக இருக்க TMS குரல் இதய துடிப்பாக மாற கேட்கும் நமக்கோ வாழும் நொடியின் நிதர்சனத்தை சொல்லிவிட்டு போகிறது ……
https://m.ak.fbcdn.net/external.ak/safe_image.php?d=AQCbVF270S5zE6ex&w=158&h=158&url=http%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FHLzDV7iApBM%2F maxresdefault.jpg&cfs=1&upscale=1
chinnakkannan
27th May 2015, 02:29 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
ரவி, கல் நாயக் கிருஷ்ணா இனிய மதிய வணக்கம்..
உள்ளே வந்து படித்தாலும் கூட பின்னூட்டம் இட இயலவில்லை..
ரவி, காகிதத்தில் கப்பல் செய்து, யார் தருவார் இந்த அரியாசனத்திற்கும் அன்னைக்கும் லிங்க் பண்ண உஙக்ளால் மட்டுமே முடியும்..
கிருஷ்ணா.. என்னா பாட்டு தெரியுமா அது..
ஸிச்சுவேஷன் இதானாம்.. ந.தி வீட்டுக்குப் போறச்சே ஒரு கொயந்தை வருது கிஷ்ணா வேஷம் போட்டுக்கிட்டு.. அதுக்கு எழுதணுமாம்.. சொன்னாங்க.. எழுதிட்டேன்..இந்தா ட்யூன் போட்டுக்கறது உன்னோட பாடு..
வாட்.. எம்.எஸ்.வி கவிதையை வாங்கி ப்படிக்க..வாவ் வரிகள்..
தலையைக் கலைத்து எண்ணங்களை முன்னிலைப் படுத்தி ட்யூன் போட்டுப் பார்த்தால் ம்ஹூம் சிக்கவேயில்லை..நிறைய ட்யூன் போட்டுப் பார்த்தாலும் வார்த்தைகள் அமர மறுக்க ஒரு சொர்ண கணப் பொழுதில்..யுரேகா..ட்யூச் சிக்கி வார்த்தைகள் அமர வந்த பாடல் தான் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா.. (இப்படி எம் . எஸ்.வி யே சொல்லவில்லை..கொஞ்சம் ட்யூன் போட சிரமப்பட்ட பாடல் என்று சொல்லியிருக்கிறார்..
http://www.adrasaka.com/2013/02/10_14.html )
படம் (சின்ன வயதில்) பார்க்கையில் கண்கள் கலங்க வைத்து உணர்ச்சி வசப்படவைத்த (பக்கத்திலிருந்த கேர்ள்ப்ரண்ட்டை அணைக்கப் பார்க்க அவள் விலக்..ச்ச் டூப்புங்க.. அப்ப நான் ரொம்பச் சின்னப் பையன்..) பாடல் இது
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.. எனக்குப் பிடித்த ப்ளாட்டின வரிகள் இவை..
ம்ம் கிருஷ்ணா கிருஷ்ணா ஜி..:)
chinnakkannan
27th May 2015, 02:31 PM
ரவி, ராஜேஷ் ரசித்தமைக்கு நன்றி
ராஜேஷ்.. கொடிஅசைந்ததும் காற்று வந்ததா வும் தொட்டால் பூ மலரும் பாடலும் அன்று படைக்கப் பட்ட தேன்கள்.. இட்டமைக்கு நன்றி..
kalnayak
27th May 2015, 02:40 PM
பூவின் பாடல் 12: "நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலயராசாதான் பாடி கிறாரு. அப்ப அவருதானே மியூசிக் போட்டு கீறனும். என்னமோ போங்க இரண்டில் ஒன்றா படம் பார்த்தேனா இல்லையான்னே தெரியல. நம்ப ராம்கி ஆக்ட் கொடுத்து கிறாரு. நதியா கீறாங்க. ராசாவோட சித்ரா பாடி கீறாங்க. பாட்டு ஆரம்பத்துல கீரோயின் தலையிலேந்து விலர பூவை எடுத்து வச்சிகினு இன்னாத்துக்கு 'நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்'-னு கீரோ பாடணும். அடுத்தது சொல்றாரு கேட்டுக்குங்க - காதலின் கோயில் வாழும் தேவிக்காகன்னு. இன்னாத்த சொல்றது? நீங்களே கேட்டுக்குங்க.
https://www.youtube.com/watch?v=urJuVL-iH9A
chinnakkannan
27th May 2015, 02:43 PM
நான் ஒரு சந்தர்ப்பத்தில் - சில நாள் சென்று போடலாம் என இருந்தபாட் கல் நாயக்.. ம்ம் ஓ.கே ஓகே :) அண்ட் தாங்க்ஸ்..
கண்ணா பாட் போட்டாரா கிருஷ்ணா. சடுதியில் ஐந்து நிமிடத்திலெழுதிப் பார்த்தேனா..இதோ..
இன்னுமென்ன வேண்டுமென்று கண்ணா என்னை
..இயற்கையான சிரிப்புடனே கேட்டே விட்டாய்
வண்ணமென வாலிபந்தான் போச்சே பின்னர்
..வாட்டமுற வைக்கின்ற முதுமை கூட
கண்சிமிட்டிப் பார்த்துத்தான் சொல்லும் நன்றாய்
..காலனவன் எண்ணுகின்றான் நாட்க ளென்று
எண்ணங்கள் மயங்குகையில் கண்ணா கண்ணா
..ஏற்றமுற உன்நினைவே வேண்டும் கண்ணா..
kalnayak
27th May 2015, 02:45 PM
நண்பர் gkrishna அவர்களே,
அருமை. அருமை. எம். எஸ். எஸ். அவர்களின் பாடலுடன் பிரமாதமாக துவங்கிவிட்டீர்கள். கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது. நன்றி. தொடருங்கள்.
kalnayak
27th May 2015, 02:50 PM
நன்றி ராஜேஷ் ஜி,
நீங்கள் பதிவிட்ட இரண்டு பாடல்களும் எனக்கும் மிக பிடித்தமானவை. கொடி அசைந்ததும் பாடலில் நடிகர் திலகத்தின் நடையும், தொட்டால் பூ மலரும் பாடலில் மக்கள் திலகத்தின் ரசனையும் ரசிக்கத் தகுந்தவை. முதல் பாடல் கவியரசர் அல்லவா. இரண்டாம் பாடல் வாலிபக் கவிஞர். அற்புதமான கவிதைகள். இரண்டிற்கும் இசை அமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். இரண்டிலும் உடன் நடித்தவர் கன்னடத்துப் பைங்கிளி. காட்சி அமைப்பிலும் சிறந்தொங்கிய பாடல்கள். வழங்கியமைக்கு மீண்டும் நன்றி.
kalnayak
27th May 2015, 03:07 PM
chi.ka.,
அவன்தான் மனிதன் படம் பற்றி நடிகர் திலகம் திரியில் முரளி அவர்கள் பதிவிட்ட பின்பு அங்கும் இங்கும் அதிகமாக விவாதிக்கப்படும் பாடலாக 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடல் விளங்குகிறது. நான் மிகச் சிறிய வயதில் மதுரையில் (எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை) என் அம்மாவுடன் போய் பார்த்து என்றும் என் நினைவில் வாழும் திரைப் படமாகவும், என் நெஞ்சில் கலந்த பாடலாகவும் இதை நினைக்கிறேன். மிகச் சிறிய வயதில் மதுரைக்கு வந்த போது பார்த்ததால் என் அம்மா அடிக்கடி அங்கே படம் பார்த்தோம் என்று சொல்லி நினைவு படுத்துவார்கள். கடைசிப் பாடலான 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று' பாடலும் வாழ்வியல் தத்துவத்தை விளக்குவதாகவே படுகிறது. இதில் கவியரசரை வெல்ல இன்னும் ஒரு கவிஞர் வர முடியாது என்றே தோன்றுகிறது. பாடிய பாடகர் திலகத்தைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது. நாமெல்லாம் பார்த்து, கேட்டு ரசிக்க கொடுத்து வைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக 'விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா' - என் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருக்கிறது. விவரம் புரியாத வயதில் பார்த்து மனதில் ஏற்றி வைத்து கால ஓட்டத்தை கணக்கிட வைத்துக் கொண்டு இருக்கிறது இந்த திரைப் படமும் இதன் பாடல்களும். என்னமோ போங்க.
uvausan
27th May 2015, 03:18 PM
திரு கல்நாயக் - இன்னொமொரு விஷயம் - எங்கோ படித்தது - பொதுவாக ந.தி பாடலை கேட்டப்பிறகு, அதை தன்னுள் வாங்கிக்கொண்டு பிறகுதான் அந்த பாடலுக்கு நடிக்க வருவாராம் - ஆனால் இந்த பாடல் ஒரு விதிவிலக்கு - அந்த situation யை மட்டும் மனதில் வாங்கிக்கொண்டு நடிக்க ஆரம்பித்தாராம் - TMS இப்படித்தான் பாடியிருப்பார் என்று சொல்லி விட்டாராம் - என்ன நடிப்பு ஞானம் பாருங்கள் - ம்ம் எல்லாம் அவருடைய அன்னையின் கருணை , ஆசிர்வாதங்கள் --------
gkrishna
27th May 2015, 03:28 PM
chi.ka.,
அவன்தான் மனிதன் படம் பற்றி நடிகர் திலகம் திரியில் முரளி அவர்கள் பதிவிட்ட பின்பு அங்கும் இங்கும் அதிகமாக விவாதிக்கப்படும் பாடலாக 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடல் விளங்குகிறது. நான் மிகச் சிறிய வயதில் மதுரையில் (எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை) என் அம்மாவுடன் போய் பார்த்து என்று என் நினைவில் வாழும் திரைப் படமாகவும், என் நெஞ்சில் கலந்த பாடலாகவும் இதை நினைக்கிறேன். மிகச் சிறிய வயதில் மதுரைக்கு வந்த போது பார்த்தால் என் அம்மா அடிக்கடி அங்கே படம் பார்த்தோம் என்று சொல்லி நினைவு படுத்துவார்கள். கடைசிப் பாடலான 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று' பாடலும் வாழ்வியல் தத்துவத்தை விளக்குவதாகவே படுகிறது. இதில் கவியரசரை வெல்ல இன்னும் ஒரு கவிஞர் வர முடியாது என்றே தோன்றுகிறது. பாடிய பாடகர் திலகத்தைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது. நாமெல்லாம் பார்த்து, கேட்டு ரசிக்க கொடுத்து வைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக 'விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா' - என் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருக்கிறது. விவரம் புரியாத வயதில் பார்த்து மனதில் ஏற்றி வைத்து கால ஓட்டத்தை கணக்கிட வைத்துக் கொண்டு இருக்கிறதுஇந்த திரைப் படமும் இதன் பாடல்களும். என்னமோ போங்க.
நண்பர் கல்நாயக்
'அவர் தான் மனிதர்' மலரும் நினைவுகள் அருமை.
ராகவேந்தர் சொன்ன மாதிரி இரண்டாம் பாதியில் சோகத்தை சற்று குறைத்து இருந்தால் படம் ரேஞ்சே வேறே . ACT யின் problem இது . 'அன்புள்ள அப்பா' வை கொஞ்சம் டிங்கரிங் பண்ணி பிரகாஷ் ராஜ் 'அபியும் நானும்' ஹிட் ஆக்கிட்டார்.
chinnakkannan
27th May 2015, 03:35 PM
(எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை)//ஓய்..கல் நாயக்..அது சென் ட்ரல் சினிமா..அங்கு தான் நானும் பார்த்தேன்..
அன்னெஸஸரியாக ந.தியை அழவிடுவது, அவர் சொத்துக்கள் இழப்பதுபோல் காட்டுவதெல்லாம் அந்தக்காலப் படங்களில் தொடர்ந்ததாக நினைவு..அந்த மேட்ச் பாக்ஸ் சீன் ஆரம்பத்தில் அவரது ஃபேக்டரி பின் முத்துராமனுடையதாக மாறியவுடன் அவருடைய ப்ராண்ட் தெரிவது..
கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள்னு காட்டவேண்டியது தான்..அதற்காக கடைசிவரை இழப்பதாக - உயிர் வரைக்கும் என்று காட்டவேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயம்..எனக்கு அன்றும் கோபம் இன்றும் கோபம்..ம்ம்
நன்னா ஊறின த.வ போல ஜெயலலிதா.. சரி காதல் தியாகம் (ஹப்பா ந.தி எஸ்கேப்னு பெருமூச்சு விட்டேன்) நு வச்சுண்டாலும் கூட ரொம்ப ஏழையா ஆகி அந்தக் குழந்தையும் சாகடிச்சு.. என்னமோ போங்க..
chinnakkannan
27th May 2015, 03:37 PM
பா.பொ.பா.போ - 1
(பாட்டுக்குப் பொருத்தமா (சினிமா) பாட்டுப் போடுங்க..
கண்ணனைத் தேடித் தேடி
..கண்களும் பூத்த தேடி
சின்னதாய்க் குமிழ்சி ரிப்பு
..சீருடன் நடையுங் கொண்டே
பண்ணினைக் குழலி சைக்க
...பாங்குடன் வருவேன் என்றே
சொன்னவன் காணோ மேடீ
...சொல்லுவாய் வரமாட் டானா..
கொஞ்சம் ஓரிரு பாரா ரைட் அப்பும் வேணும்..(போடலைன்னா நானே எழுதிடுவேன் உஷார்)
*
கிருஷ்ணாஜி..எனி கோபம்..
chinnakkannan
27th May 2015, 03:38 PM
அஞ்சு நாளில் ஸ்டார் கொடுத்த மாடரேட்டர்ஸிற்கும் ஆக்கிய நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி..:)
kalnayak
27th May 2015, 03:55 PM
பா.பொ.பா.போ - 1
(பாட்டுக்குப் பொருத்தமா (சினிமா) பாட்டுப் போடுங்க..
கண்ணனைத் தேடித் தேடி
..கண்களும் பூத்த தேடி
சின்னதாய்க் குமிழ்சி ரிப்பு
..சீருடன் நடையுங் கொண்டே
பண்ணினைக் குழலி சைக்க
...பாங்குடன் வருவேன் என்றே
சொன்னவன் காணோ மேடீ
...சொல்லுவாய் வரமாட் டானா..
கொஞ்சம் ஓரிரு பாரா ரைட் அப்பும் வேணும்..(போடலைன்னா நானே எழுதிடுவேன் உஷார்)
*
கிருஷ்ணாஜி..எனி கோபம்..
சி.க.,
இது பொருத்தமாக இருக்குமா என்று பாருங்களேன்.
https://www.youtube.com/watch?v=Tmft-OHXOIo
படத்தோட பேரு? அட. மதுர கீதம் தானுங்க.
chinnakkannan
27th May 2015, 03:57 PM
kal nayak ji. Thanks ... paattu pugaiya ninaivil..veet pOi kEt paakkaraen okyaa. :)
kalnayak
27th May 2015, 04:05 PM
kal nayak ji. Thanks ... Paattu pugaiya ninaivil..veet poi ket paakkaraen okyaa. :)
ok. Ok.
gkrishna
27th May 2015, 04:08 PM
கண்ணா உங்கள் மீது கோபமா ? எனக்கா ? எதற்கு
புரியவில்லையே ! .
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
http://4.bp.blogspot.com/-3JUxfSpzHGg/UmfrCOQFMjI/AAAAAAAAKbY/6ceCnnH5y3o/s640/ranggan.jpg
kalnayak
27th May 2015, 05:04 PM
பூவின் பாடல் 13: "பாடுவோம் பூ மாலை சூடுவோம் ஆடும் மயில் வண்ணமே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~
செங்கமலத் தீவின்(?) புதிய ராணிக்கு தோழிகள் பாடி வாழ்த்தும் பாடல். பூவில்லாமல் காயுமில்லை. "பொறுமையில்லாமல் வெற்றியுமில்லை. பாவையரின் மானம் காக்க நடந்து வர" அழைக்கிறார்கள். நடித்திருப்பவர் எவரென்று கேட்டால் பக்கெட் பக்கெட்டாக எடுத்துத் தருபவர் இருக்கையில் நமக்கென்ன கவலை. வேறு என்ன கவலையென்றால், கூப்பிட்டுப் போவதைப் பார்த்தல், கவுண்டமணியை பூமிதிக்க அழைத்துச் செல்வது போல் இருக்கிறதே. பாவம் என்றுதான். பாடலின் மேற் விவரங்கள் தந்து ஆதரிக்க வேண்டும்.
https://www.youtube.com/watch?v=D6aIyGqXf-A
kalnayak
27th May 2015, 05:15 PM
பூவின் பாடல் 14: "பூமாலைப் போட்டுப்போன மாமா வருவதற்குள்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்க பாருங்க ஒரு லேடி என்னமா புலம்புதுன்னு.... ஓ!!! இது அந்த காலத்து லேகியம் விற்கும் முறையா? பிதாமகன் சூர்யாவிற்கு முன்னோடி!!! குறும்பாடல். நானே பாடலைப் பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை. இது எனக்கே போட்டியாக மிக சிறியதாக இருக்கிறதே!!! சரி பரவாயில்லை. தங்கப் பதுமையின் பாடலை கேட்டு மகிழுங்கள். குலதெய்வமும், டி.பி. முத்துலக்ஷ்மியும் பாடலுக்கு வருகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=spCnIOxbxyg
பூமாலை பாடல்கள் முற்றிற்று. தெரிந்தவர் தொடரலாம். பூவின் பாடலில் பூமழை பாடல்கள் வருகின்றன.
gkrishna
27th May 2015, 05:25 PM
கவிஞனும் கண்ணனும்
குழந்தை ஆண் தான். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை. இருந்தும் செல்லம் கொஞ்சும் போது நாம் ஆணைப்
பெண்ணாக்கி பெண்ணை ஆணாக்கி அழைத்து மகிழ்கிறோம்.
(முரளி சார் சொன்னது போல் பாலும் பழமும் திரை படத்தில் மனைவியை சிவாஜி டா போட்டு பேசுவது போல்)
இதையும் மீறி குழந்தையை செல்ல நாய்க்குட்டி, கிளி, என்றும் சில பேர் அக்றிணைப் பொருளாகக் கூட கொஞ்சுவது அதீத ப்ரேமையால். இது இயற்கையாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உண்மை அல்லவா?
எனக்கு தெரிந்த ஒருவர் ஸ்ரீ குருவாயூரப்பனை தனது செல்லக் குழந்தையாக ஏற்றுக்கொண்டு வீடெங்கும் எங்கு நோக்கினும் குட்டி கிருஷ்ணனின் பல வித ரூப தரிசனம்.
அவர் படுக்கையில் அருகே ஒரு சிறு குட்டிக் கட்டில் (தொட்டில்) , அதில் மெத்தை, போர்வை, தலையணை, அதில் குட்டி கிருஷ்ணன் படுத்துக்கொண்டிருப்பான். அவனுக்கென்று தனி உடைகள், ஆபரணங்கள். பார்த்து பார்த்து ஊர் ஊராக சென்று வாங்கி சேர்த்து வைத்திருக்கிறார் அந்த கிருஷ்ண ப்ரேமி.
அவரோடு அவனும் சாப்பிடுவான். இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
வீட்டில் ரேஷன் கார்டில் இல்லாத வாக்காளர் பட்டியலில் இல்லாத ஒரு குடும்ப நபர் அந்த குட்டி கிருஷ்ணன். வெளியே எங்கு போனாலும் அவனிடம் சொல்லிக்கொண்டு போவது. அவனுக்கும் ஏதாவது வாங்கி வருவது.... இதுபோன்று
வேறு சில நண்பர்களையும் நான் அறிவேன். அவர்கள் தெய்வங்களையே தம்மோடு இணைத்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் அனைவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
நம்மில் பலரோ, கோவிலுக்கே செல்லாதவர்கள், கோவிலுக்கு போனாலும் மனதை வெளியே உள்ள செருப்பில் நிலைத்து நிறுத்தி, வெங்கடேசன் முன் நின்று கொண்டு அடுத்த கணமே ஜருகண்டி என்று பிடித்து தள்ளப்படுவதற்கு முன் அவனைப் பார்க்கக் கிடைத்த சில நிமிஷங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு இயந்திரமாக கை கூப்புபவர்கள்.
ஒருவருக்கு கண்ணன் குழந்தையாக அதுவும்
பெண் குழந்தையாக தோன்றினான்
.அவர் அவனைக் கொஞ்சுவதைப் பார்ப்போமா ?
''என் கண்ணம்மா, குழந்தை, நீ சின்னஞ் சிறு கிளியடி, , எனது செல்வக்களஞ்சியம். அம்மம்மா. எத்தனை கஷ்டங்களடி துன்பங்கள், அவை எல்லாவற்றிலிருந்தும் நான் தேறி, விடு பட்டு, வாழ்வில் அடுத்த கட்டம் முன்னேற வைத்தவளே நீ தான்.
கண்ணம்மா, உன்னை நான் எப்படிப்பார்க்கிறேன் தெரியுமோ? என் கனி அமுதாக. என்னுடன் பேசுகின்ற தங்கப் பதுமையாக. அழகான ஓவியமாக. நான் ''வாடி, வாடி என்னருகே என்று உன்னைத் தேடி தேடி வருவேன். உன்னை அள்ளி அப்படியே மார்புற அணைத்துக் கொள்ள நெஞ்செல்லாம் ஆசையோடு வருவேன். நீ என்ன செய்வாய் தெரியுமா? ஆடிக்கொண்டே என்னருகே வருவாய்.
என் தேனினும் இனிமையான சுவையே கண்ணம்மா என்று கூப்பிடுவேனே, நீ ஓடி வருவாயே, அதைப் பார்த்து என் உள்ளம் எப்படியெல்லாம் பனிமலை மேல் இருப்பதுபோல் குளிரும் தெரியுமா?
எங்காவது வெளியே சென்று வீடு திரும்புவேன். என் கண் உன்னைத் தான் முதலில் தேடும். நீ விளையாடிக் கொண்டிருப்பாய் எங்காவது. நான் உன்னை நெருங்குவதற்கு முன்னரே, என் மனம் ஆவி எல்லாம் அங்கே ஓடிப் போய் உன்னைக் கட்டித் தழுவுமே.''
உச்சி முகர்தல் ஒரு சிறந்த அனுபவம். எத்தனை பெற்றோர்கள் அதனை அனுபவித்திருக்கிறார்கள்
அது கொடுக்கும் இன்பம் ஷாம்பூ வாசனைக்கும் அப்பாற்பட்டது . என் பேரன், என் பேத்தி, என்று பாட்டி தாத்தா ஒரு புறம் உரிமை கொண்டாடட்டும். தந்தை தாய்க்கு கிடைக்கும் இன்பம் எவ்வளவு அவர்களை பெருமிதத்திலும் யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்திருக்கிறதே என்ற கர்வத்திலும் உயர்த்திக் காட்டும்.
''சார் உங்க பையன், ரொம்ப ஸ்மார்ட் பெல்லோ, படு கெட்டிக்காரன். ஒரு கணக்கு கொடுத்தேன். பளிச்சுன்னு பதில் சொன்னான் சார். அசந்து போய்ட்டேன். ஐ க்யூ ஜாஸ்தி அவனுக்கு. எப்படி சார் உங்க பையனை இப்படி வளர்த்தீர்கள்?'' ரொம்ப அறிவாளி உங்க பையன், ரொம்ப வினயமானவன், அழகன், ஆள் மயக்கி, படிப்பு விளையாட்டு எல்லாத்திலேயும் உங்க பையன் தான் சார் முதல்'' என்று ஊரில் பலர் மெச்சும்போது நான் இந்த உலகத்தில் இல்லை. வானுலகில் மிதந்தேன்.
(சமீபத்தில் நண்பர் கோபாலுக்கு கூட இப்படி நடந்ததாக தன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் '.ஈன்ற மகனை பெரிதுவக்க சான்றோர் என்று கேட்ட தாய்')
''கண்ணம்மா உன் பட்டுக் கன்னத்தில் முத்தமிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒரு ரகசியம். இழுத்து பிடித்து அணைத்து இச் சென்று ஒரு கன்னத்தில் முத்தம் பதிக்கும்போது காசு கொடுக்காமலேயே, டாஸ்மாக் போகாமலேயே நிறைய கள் வெறி என் நெஞ்சில் ஏற்பட்டு விடுமே. அப்படி ஒவ்வொரு தரமும் உன்னை இருக்கிப் பிடித்து அணைத்துக் கொள்ளும் போதேல்லாம் என் கண்ணம்மா, எனக்கு நினைவே அழிந்து விடும். நான் யார், என்ன பெயர், எந்த ஊர், என்ன உலகம் என்றே தெரியாத ஒரு உன்மத்தத்தின் உச்சியில் ஒரு இன்ப போதை எனக்கு தானாகவே லயித்துவிடும். எனக்கு அதிலேயே இருக்க ரொம்ப ரொம்ப ஆசை கண்ணம்மா.
யாராவது ஏதாவது உன்னைச் சொன்னாலோ, உனக்கு எங்காவது அடிபட்டாலோ, உனக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்து விட்டாலோ, நீ விசனத்தோடு பொங்கி வரும் அழுகையோடு, முகம் சிவப்பாக நிற்பதைக் கண்டால் எனக்கு உலகமே சுற்றுமடி கண்ணம்மா. என்னன்னவோ பயங்கரமான எண்ணங்கள் நெஞ்சில் தோன்றி என்னை அடியோடு குலைத்து விடும். உன் ஒரு நெற்றிச் சுருக்கத்தில் என் நெஞ்சு பதினாயிரம் சுக்கலாக வெடித்து விடுமே. பித்தம் பிடித்தவனாகி விடுவேனே. வேண்டாம், அந்த அனுபவம், வேண்டவே வேண்டாம் கண்ணம்மா அந்த துன்பம் .
அந்த மாதிரி ஒரு கணம் நீ துன்பத்தில் ஆழ்ந்து உன் கண்ணிலிருந்து முத்துக் களாக கண்ணீர் வந்தது என்றால் நான் தொலைந்தேன். அங்கே சொட்டுவது உன் கண்ணீராக இருக்காது கண்ணம்மா, அங்கே என் உதிரம், என் ரத்தம் கொதித்து ஆறாக நெஞ்சிலிருந்து பொங்கி எழுந்து வெள்ளமென பெருகி ஓடும்.
உன்னைப் பொத்தி பொத்தி வளர்க்கிறேன் கண்ணம்மா. என் கண்ணின் பாவை மட்டுமல்ல பார்வையும் கூட நீ தானடி தெய்வமே.
எனக்கு என்று தனியாக ஒரு உயிர் இருக்கிறது என்று யாரேனும் நினைத்தால் அவர்களைப் போல் விஷயம் அறியாதவர்கள் உலகத்திலேயே கிடையாது. எனக்கு உயிர் இருக்கிறது ஆனால் அது என்னிடம் இல்லையே. அதைத் தான் உன் உயிர் என்று நான் உன்னுள் வைத்திருக்கிறேனே.
நீ மழலையில் பேசும் போதெல்லாம் நான் மயங்கிப்போய் விடுவேனே. எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்கள் என்னை வாட்டும். தூக்கமின்றி தவிப்பேன். அப்போதெல்லாம் உன் ஒரு பேச்சு, மழலை மொழி, என் அத்தனை துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் தூக்கி வெளியே எறிந்துவிடுமே.
விடியற்காலையில் பூக்கள் மலிந்த தோட்டத்தில் உலாவிய அனுபவம் உண்டா?. பூக்களைப் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?. உங்களுக்குத் தெரியுமே நேற்றில்லாமல், சிறு மொட்டாக நேற்றுப் பார்த்து, காத்திருந்து, அது இன்று காலை கண்கள் தேடும்போது அழகாக விரிந்து ''என்னைப் பார்த்தாயா, நான் அழகா இல்லையா?'' என்று கேட்டிருக்குமே?
அப்போது இருக்கும் மன நிலை தான் உனது முல்லைச் சிரிப்பில் கண்ணம்மா. நெஞ்சில் ஈவு இரக்கம் இல்லாதவனையும் அந்த முல்லை மலர் முன் கொண்டு நிறுத்துங்கள். அவன் மூர்க்கம் அனைத்தும் தொலைந்து அவன் சன் மார்க்கம் பெறுவானே. நான் சந்தோஷப்படுவதில் என்ன ஆச்சர்யம்.
[color=red]
ஒரு குழந்தையை அதன் தந்தை தனது நண்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ''அம்பி! அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டு.''
ஆறு வயது அம்பி அம்பி மாமாவை பார்த்தான்.(நன்னா கவனிச்சேளா கோந்தையும் அம்பி ,மாமாவும் அம்பி ) சிரித்தான்.
"அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டுடா. சீக்கிரம் ''.
''அம்பி பேசுடா பயலே நான் கேட்க காத்திருக்கிறேன்'' என்றார் அந்த மாமாவும்
அம்பி பேசினான். '' மாமா மர்கயா''
அம்பியின் அப்பாவுக்குஇந்தி தெரியாது. சந்தோஷமாக மாமா பக்கம் திரும்பும்போது மாமா வெளியே சென்று வெகு நேரமாயிருந்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
கண்ணம்மா, உன் பேச்சுக்கள் எனக்கு இன்பக் கதைகள். எத்தனை பெரிய பெரிய ஆசிரியர்களின் புத்தகம் படித்தாலும் உன் வார்த்தை போல் அவை எனக்கு இனிக்கவில்லையடி.
புத்தகம் அறிவைத் தந்தது. அன்பைத் தரவில்லை. நீ அன்பையே புத்தகமாக தருகிறாயே கண்ணம்மா. அன்பே தெய்வம் என்பது உன்னில் நான் அறிந்த பாடம்.
நான் நகைகள் நிறைய வாங்கி நெஞ்சில் மார்பு மறைக்க அணிவதில் விருப்பமில்லாதவன். விருப்பமிருந்தாலும் அதை ஆசை நிறைவேற வசதி இல்லாதவன். எனக்கு இப்படிப்பட்ட நகைகள் தரக்கூடிய பெருமை, இன்பம், சுகம், எல்லாமே, உன்னை மார்புறத் தழுவும்போது கிடைக்கும் போது நான் அனுபவிக்கிறேனே அதற்கு கால் தூசியாகுமா? எனக்கு வாழ்வில் பெருமிதம் உறுவதற்கு, சுகமடைய, ஈடிணை அற்ற நான் பெற்ற சங்க நிதி பத்ம நிதி எது தெரியுமா, நீ, நீ, நீயே கண்ணம்மா. என் செல்வமே.
இது வரை நீங்கள் படித்தது என் கற்பனையல்ல. நான் ரசித்து மகிழ்ந்த மகாகாவி சுப்ரமணிய பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை என்று கண்ணனை குழந்தையாக பாவித்து அனுபவித்த மகா காவியம். இதோ அது:
கண்ணம்மா - என் குழந்தை
சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! ... 1
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே! . ... 2
ஓடி வருகையிலே - கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! ... 3
உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ! ... 4
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ! ... 5
சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6
உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7
சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8
இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9
மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ? ... 10
http://www.youtube.com/watch?v=O0VNOCKk7UI
http://static.paadalvarigal.com/pvt100/1364.jpg
chinnakkannan
27th May 2015, 05:27 PM
க்ருஷ்ணா.. என்னோடு பேசாமல் இருந்த மாதிரி பிரமை..அதான் கேட்டேன்..அது சரீஈஈ.. நீங்க்ள் போட்டிருந்த புகைப்படத்தில் நான் ந.தி யா அவர் எங்கே நான் எங்கே ....ஆனால் உங்களை வயதான ரங்காராவாக ஒத்துக்கொள்ளவே மாட்டேன் :)
அதுக்குள்ள ஒரு நீள போஸ்ட் படித் விட் வரூ..
gkrishna
27th May 2015, 05:39 PM
எல்லோருடைய குட்டி கண்ணன் செல்ல கண்ணன் நீங்க சி கே
உங்களுக்காக ஒரு பாட்டு
அரும்பு விழி குறும்பு மொழி
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
பிரிந்த போதிலும் உன் நினைவு வாழட்டும்
தாய்க்கு ஒரு பிள்ளை
பாடல்: சின்ன கண்ணனே.. நான் தந்தை
பின்னணி: ஏ.எம்.ராஜா
---------------------------------------------------------------
Song: Chinna Kannane..Naan Thanthai
Singer: A.M.Raja
http://www.mediafire.com/?4r9019am8un296z
http://www.youtube.com/embed/D23veiafaDs?
வாசுவின் இன்றைய ஸ்பெஷல் (91)
chinnakkannan
27th May 2015, 05:42 PM
//விடியற்காலையில் பூக்கள் மலிந்த தோட்டத்தில் உலாவிய அனுபவம் உண்டா?. பூக்களைப் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?. உங்களுக்குத் தெரியுமே நேற்றில்லாமல், சிறு மொட்டாக நேற்றுப் பார்த்து, காத்திருந்து, அது இன்று காலை கண்கள் தேடும்போது அழகாக விரிந்து ''என்னைப் பார்த்தாயா, நான் அழகா இல்லையா?'' என்று கேட்டிருக்குமே?//அம்பி பேசினான். '' மாமா மர்கயா'' //
க்ருஷ்ணா ஜி.. க்ருஷ்ணா க்ருஷ்ணா.. அழகாக எழுதியிருக்கிறீர்கள்.. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா அனுபவித்து..( ம்ம் கண்ணா நாளுக்கு நாள் உனக்கு போட்டி ஜாஸ்தியாகிட்டே வருதேடா ரவி, கிருஷ்ணா, கல்நாயக்னு...- மன்ச்சு சந்தோஷமா இருக்கு..ஆனாக்க எதுக்கும் நித்தி கிட்ட அப்ளைபண்ணிப்பாக்கட்டா சன்யாசியாய்டறேனே..:) )
kalnayak
27th May 2015, 06:09 PM
பூவின் பாடல் 15: "பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மக்கள் திலகத்தின் மிகப் புகழ் பெற்ற பாடல். வண்ணத்தில் தோய்த்தெடுத்திருக்கிரார்கள். மணமகன், மணமகளை பார்க்க பாடல் ஆரம்பம். என்ன மக்கள் திலகம் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து ஆட தங்கை சாரதா தன் அண்ணனை பார்த்து நேரில் சந்திக்க வரும்போது அந்த கட்டையுடன் போராடி வருவதைப் பார்ப்பதற்கு நமக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது. கண்ணீர் விட்டு அழுவதைப் பார்பதற்கும் சிரமமாய் உள்ளதே. காரில் வந்து இடித்தவர்களாவது 'எதற்கம்மா இப்படி' என்று கேட்டு உதவக்கூடாதா? மக்கள் திலகம் கிரீன் சட்டை, பேன்ட் அணிந்து பாடலுக்கு நடித்தது பாடலை எவர்க்ரீன் ஆக்கி விட்டது.
https://www.youtube.com/watch?v=csBahBsXvaA
gkrishna
27th May 2015, 06:15 PM
சி கே
நான் உங்களுக்கு போட்டியா ? சான்சே இல்லை .
நீங்க NT ன்னா நான் NS (நடிப்பு சுடர்)
நீங்க S ன்னா நான் ES (எவர்சில்வர்)
அண்ணன் கல்நாயக்கை பாருங்க பின்னி பெடல் எடுக்கிறார்
கிரீன் - எவர் கிரீன்
https://i.ytimg.com/vi/csBahBsXvaA/hqdefault.jpg
kalnayak
27th May 2015, 06:17 PM
பூவின் பாடல் 16: "மங்கலப் பூமழை பொங்கிடும் திருமேனி மணவறை நாடுகிறாள்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~
அப்பாடி ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த படத்து பேர பார்க்கிறேன். சின்ன வயசுல பாத்தது. கே. ஆர். விஜயாவிற்கு வாணி ஜெயராம் அம்மா பாடி இருக்காங்க. முதன் முதலாக அமெரிக்காவில் எடுத்த படம் என்று வெளி வந்தது. அதற்காகவே அழைத்துச் செல்லப்பட்டேன். நயாகரா நீர்வீழ்ச்சி ஞாபகம் இருக்கிறது. ஜெய் சங்கர் கதாநாயகனாக நடித்திருந்தார். மெல்லிசை மன்னர் மியூசிக் போட்டுருக்காரு. பாத்துக்கோங்க பாட்டை.
https://www.youtube.com/watch?v=gcH15LovIz4
ஒரே வானம் ஒரே பூமிக்கே இம்மாம் சண்டை வந்துனு கீது. இதுக்கு மேல இருந்திருந்தா இன்னா ஆவறது?
vasudevan31355
27th May 2015, 07:53 PM
ரவி,
கருவின் கரு பிரமாதமாக செல்கிறது.நிறைய விஷயங்கள் உபரி தகவல்கள் என்று. பாடல்களும் பொருத்தம். உங்கள் விஸ்வரூபம் தொடரட்டும்.
vasudevan31355
27th May 2015, 07:55 PM
சி.க,
கோபாலனோடு நீங்கள் ஆடிய பாடலுக்கு நன்றி! கொஞ்சம் ஜாக்கிரதையாகவே ஆடவும். புலி பதுங்கி இருக்கிறது.:-d கூட ராகவேந்திரன் சார் வேறு.
'என்னமோ போங்க 11' ஐ எனக்காகவே போட்டீரோ? ராட்சஸி ஊஞ்சலில் நம்மை இழுத்து அமர வைத்து விடுவார்.
//அந்த பிள்ளை வயசுவில் எல்.ஆர் ஈ கொடுக்கற அழுத்தம் இருக்கே..ஆஹா..//
பெரிய மனசு. என் பிரிய செல்லத்தை பாராட்டியதற்கு நன்றி! இந்த பதிவுதான் தங்களின் பதிவுகளிலேயே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.:-d
vasudevan31355
27th May 2015, 07:57 PM
நாயக்,
சிஸ்டம் வைரஸால் தாக்கப்பட்டது. இன்றுதான் full format பண்ணினேன். அதனால் உங்களுடைய பதிவுகளை இனிதான் படிக்க வேண்டும்.படித்து விட்டு எழுதுகிறேன். மன்னிக்க.
vasudevan31355
27th May 2015, 07:59 PM
மூன்றாம் முறை காளியாக நடித்த நடிகையின் அற்புதமான நடனம்
யாரென்று தெரியுமா? தெரிந்தவர்கள் கூறவும். இல்லையென்றால் சி.க வீட் மோர் சுட வைத்து குடிக்க வைக்கப்படும். :)
vasudevan31355
27th May 2015, 08:01 PM
//பார்வதி என்னைப் பாரடி என்னும் படமாம் ஹீரோயின் யாராக்கும்..?//
தரேன்.:)
vasudevan31355
27th May 2015, 08:02 PM
//இந்த பாடலில் கீழ்க்கண்ட இரண்டு விதமான சரணம் படித்த நினைவு சார் எது சரி//
சென்சார் கைங்கரியம் கிருஷ்ணா. ரெண்டுமே சரி. இருந்தாலும் அந்த இதழ்....:)
vasudevan31355
27th May 2015, 08:04 PM
//கடந்த ஞாயிறு அன்று மேற்கண்ட நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத ஒரு மாலை பொழுதாக அமைந்தது .பாடும் நிலா பாலுவின் என்றும் இளமை மாறாத குரலுடன் இன்றைய இளம் பாடகர்கள் இணைந்து பாடினார்கள். (விஜய் சூப்பர் சிங்கர் சோனியா நல்ல இணையாக விளங்கினார்). நேற்று பதிவிட மறந்து இன்று காலை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாள் இதழில் இது பற்றிய செய்தி வந்த உடன் நினைவிற்கு வந்து பதிவிடுகிறேன்.//
அருமை கிருஷ்ணா. இது பற்றி நாம் போனில் பேசி விட்டாலும் பதிவு டாப். பாலா மேல் கொண்ட மதிப்பு இன்னும் உயர்கிறது. பாலாவை நாம் பார்க்க வேண்டுமே!
uvausan
27th May 2015, 08:15 PM
வாசு - வருக வருக - பதிவுகளை நீங்களும் படிக்கின்றீர்கள் என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி
uvausan
27th May 2015, 08:26 PM
கிஷ்ணாஜி - உங்கள் கவிஞனும் கண்ணனும் பதிவு மிகவும் அருமை - எனக்கு என்றுமே ஒரு குறை உண்டு - பாரதியாருடைய பாடல்களை இந்த திரியில் தொகுத்து அவரின் மேன்மையை இன்னும் உயர்வடைச் செய்ய வேண்டும் என்பதே - அந்த அளவிற்கு எனக்கு கற்பனைத் திறனோ , எழுத்து திறனோ இல்லை - நீங்களோ , திரு கல்நாயக் அவர்களோ எடுத்து எழுதினால் ரசிக்கும் திறன் மட்டுமே எனக்கு உள்ளது - பாரதியை இந்த தலைமுறை யார் என்று முழுவதும் கேட்க்கும் முன்பே நாம் இந்த அலசலை இங்கு நிறைவேற்றவேண்டும்
uvausan
27th May 2015, 08:34 PM
திரு கல்நாயக் - உங்கள் பூவின் பாடல் தொகுப்பு அருமை - சொல்ல வேண்டுமே என்று சொல்லவில்லை - அனுபவித்து சொல்கிறேன் - எங்கிருந்து தான் உங்களுக்கு பாடல்கள் தென்படுகின்றதோ ?! சில பாடல்களை கனவில் கூட நான் கேட்டதில்லை -- சூடி கொடுத்த சுடர் கொடி போல அருமையான வாடிப்போகாத பூக்கள் - இவை காகித பூக்கள் அல்ல - காகிதத்தில் எழுதி சரித்திரமாக்க வேண்டிய பூக்கள் ......
uvausan
27th May 2015, 08:41 PM
திரு ராகவேந்திரா சார் - உங்கள் பிறந்த நாளில் நீங்கள் ஆரோக்கியமாகவும் , எங்கள் எல்லோருக்கும் சிறந்த வழிக்காட்டியாகவும் பல யுகங்கள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் . எங்களுக்கு உங்கள் பிறந்த நாளைத் தெரிவித்த திரு வினோத் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி
vasudevan31355
27th May 2015, 09:19 PM
வாசு - வருக வருக - பதிவுகளை நீங்களும் படிக்கின்றீர்கள் என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி
என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? யாருடைய பதிவையும் ஒரு எழுத்தும் விடாமல் படித்து விடுவேன். பதில் அளிக்கத்தான் கொஞ்சம் தாமதமாகி விடும். உங்களுடைய எழுத்துக்களில் நல்ல மெருகு ஏறி வருகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான 'மகாகவி காளிதாஸ்' படப் பாடல்களை அளித்ததற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
chinnakkannan
27th May 2015, 09:30 PM
ராகவேந்திரா சார்.. விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இது போல் பல பிறந்த நாள் கண்டு மிகச் சிறப்பாக சந்தோஷமாக இனிமையாக மிகப் பொலிவாக இன்னும் என்னவெல்லாமோ ‘க’ சேர்த்து வெகு அழகாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்..
ராகவேந்தர் பிறந்த நாளையொட்டி.......
யாரங்கே நாட்டியம் ஆரம்பமாகட்டும்...:)
அகந்தையது கண்மறைக்க ஆடிய பாவை
அகத்தைத் திறக்கத்தான் அன்பாய் - இகத்தினில்
வண்ணமாய்ப் பாச்சரத்தை வாகாய்த் தொடுத்துவிட
கண்கள் திறந்தன காண்..
*
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
*
https://youtu.be/lk2yKmx3zYU
*
chinnakkannan
27th May 2015, 09:35 PM
நீங்க nt ன்னா நான் ns (நடிப்பு சுடர்)
நீங்க s ன்னா நான் es (எவர்சில்வர்)’// கிருஷ்ணா :) :) இப்படியெல்லாம்காம்ப்ளெக்ஸ் வச்சுக்கப்படாது..:)
**
ஹச்சோ நிறைய ஹோம் வொர்க் சேர்ந்து போச்சே.. முதல்ல பாத்துட்டு அப்புறம் எழுதணும்..
*
வாங்க வாசு .. அது சரி ஈஸ்வரி பாட்டுன்னாலே வடகிழக்குல இருக்கற வாழைத்தோப்பை எழுதிக் கொடுத்துவிடுவீர்கள் என எனக்குத் தெரியுமே :)
rajeshkrv
27th May 2015, 09:40 PM
யாரென்று தெரியுமா? தெரிந்தவர்கள் கூறவும். இல்லையென்றால் சி.க வீட் மோர் சுட வைத்து குடிக்க வைக்கப்படும். :)
எல்லா முறையுமே குமாரி பத்மினிதானே
chinnakkannan
27th May 2015, 10:02 PM
Celebration of Raghavendra Sir's Birthday continues...
நாட்டியம் தொடர்கிறது....
ஆடும் அருள் ஜோதி வெகு அழகான பாடல்
கலைவாணர் மறைந்த பிறகு திருமதி மதுரம் எடுத்த படம் என நினைக்கிறேன்.. ரிலீஸான கால கட்டத்தில் ஓடவில்லை.. மதுரை சாந்தியில் வெகு நாட்களுக்கு முன் பார்த்தது..கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய், ஆடும் அருள் ஜோதி , மன நாட்டிய மேடையில் ஆடினேன் என இனிய பாடல்கள் இருந்தும் கொஞ்சம் அழுத்தமான கதை இல்லை என நினைக்கிறேன்..ம்ம்
பாடல் கேட்க இனிக்கும் எம்.எல்.வி அண்ட் சீர்காழி கோவிந்தராஜன்..
https://youtu.be/qSZoPaRwHC0
vasudevan31355
27th May 2015, 10:09 PM
கல்நாயக், சி.க,
நீங்கள் கேட்டிருந்த 'தங்கத்தின் தங்கம்' ராகசுதா பற்றி.
http://i2.wp.com/www.kollytalk.com/wp-content/uploads/2014/11/Ragasudha-old-photo.jpg?resize=507%2C351
https://lh3.googleusercontent.com/-NXq4c046ebU/VSYODH1cQ8I/AAAAAAAAGks/GLPqk6juaCg/w640-h400-p-k/Thangathin%2BThangam_ktv.jpg
அம்மாவும் மகளும்
https://lh3.googleusercontent.com/-hgMliVtpox8/UiQzbu_-M0I/AAAAAAAAABw/lrudC6ZFbXo/w451-h452-no/photo-0012.jpghttp://i.ytimg.com/vi/bWsx5ivgQA0/sddefault.jpg
இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான நடிகை கே.ஆர்.சாவித்திரியின் (இவரது கணவர் சிவம்) மகள் ஆவார்.
'மன்னடியார் பெண்ணின்னு செங்கோட்ட செக்கன்' என்ற மலையாள காமெடி படத்தில் (யம்மாடியோவ்!) கால் தடம் பதித்தவர். ராகசுதா ‘தங்கத்தின் தங்கம்’ என்ற படத்தில் ராமராஜன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர். தமிழில் சத்யராஜ் நடித்த 'அய்யர் ஐபிஎஸ்' ,படத்திலும் நடித்திருந்தார். தமிழச்சி, ஜல்லிக்கட்டு காளை, ஊட்டி, ராஜஸ்தான், உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
https://pbs.twimg.com/media/B2POQq1CIAA888D.jpg
http://2.bp.blogspot.com/-sPj8EsB-Dnk/VGbF3-Ga0jI/AAAAAAAAoMw/Zd46BBcSuGA/s1600/Actor%2BRanjith%2B-%2BRagasudha%2Bswathi%2BSecond%2BMarriage%2BPhoto. jpg
https://youtu.be/Vf4Q8iDNc0I
https://i.ytimg.com/vi/8ycp3HVWN5M/hqdefault.jpg
தமிழில் ரஞ்சித் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தாரே (மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, நட்புக்காக, வள்ளுவன் வாசுகி, பொன்விலங்கு, தர்மா) அவரை காதலித்து மணம் புரிந்து கொண்டு வழக்கம் போல பிரிவு. (இதே ரஞ்சித் இதற்கு முன் 'வள்ளி' பிரியாராமனை திருமணம் செய்து கொண்டு அது விவாகரத்தில் முடிந்தது இரு பிள்ளைகள் கையிருப்பில்.)
ராகசுதா ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். ராகசுதா சுவாமி நித்யானந்தா குரூப்பில் சேர்ந்து மீடியாக்களுக்கு நல்ல தீனி கொடுத்தவர். ராகசுதாவுக்கு அனுஷா என்ற நடிகை தங்கையும் உண்டு.
கல்,
இப்போ நீங்க நிம்மதியா தூங்குவீங்களோ இல்லையோ தெரியாது நான் நிம்மதியாத் தூங்குவேன். :)
vasudevan31355
27th May 2015, 10:12 PM
எல்லா முறையுமே குமாரி பத்மினிதானே
வணக்கம்ஜி! முதல் சுடு மோர் உமக்குத்தான்.:)
vasudevan31355
27th May 2015, 10:14 PM
வாங்க வாசு .. அது சரி ஈஸ்வரி பாட்டுன்னாலே வடகிழக்குல இருக்கற வாழைத்தோப்பை எழுதிக் கொடுத்துவிடுவீர்கள் என எனக்குத் தெரியுமே :)
அப்போ மேற்க இருக்குற மாந்தோப்ப யாருக்கு எழுதிக் கொடுக்குறதாம்?:)
vasudevan31355
27th May 2015, 10:16 PM
ராகசுதா என்றவுடனே உடன் லைக் போட்டுட்டீங்களே ஜி! நீங்க நீங்கதான்.:)
chinnakkannan
27th May 2015, 10:21 PM
ஆஹா.. வாசுங்க்ணா.. எள்னு கேட்டா இதயம் நல்லெண்ணெயா வந்து என் இதயத்தைக் குளிர்வித்தீர்களே.. :) மிக்க நன்றி..ராகசுதா என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்..இவர் தான் ராக சுதா எனத் தெரியாது..பார்வதி என்னைபாரடி இரண்டாவது படமாகயிருக்கும் என நினைக்கிறேன்..இவராவது ர வோட வாழறாரா..
அது குட்டி பத்மினியில்லைன்னா வேறு யாரு :thinking: :)
chinnakkannan
27th May 2015, 10:22 PM
அப்போ மேற்க இருக்குற மாந்தோப்ப யாருக்கு எழுதிக் கொடுக்குறதாம்?// அது இன்னிக்கே எனக்கே கிடைச்சாலும் கிடைக்கும் :)
chinnakkannan
27th May 2015, 11:59 PM
என்னமோ போங்க – 13
*
ஊர்வலம் என்றால் என்ன..ப்ரொஸஸன் என்று தமிழில் சொல்வார்கள்..அதாவது நாலுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு காரியமாகக் கூடி தெருவில் நடந்து செல்வது என்று வைத்துக் கொள்ளலாமா..
மாப்பிள்ளை ஊர்வலம், கட்சி ஊர்வலம், என நிறையவே வரும்.. கல்லூரி மாணவிகள் பஸ்ஸில் செல்வதைப் பார்த்தால் இளம் சிட்டுக்களின் ஊர்வலம் என சில பலகல்லூரி மாணவர்கள் சொல்வார்கள்..
இங்க பாருங்க இந்த அந்தக்கால இள நங்கை என்னவாக்கும் செய்யறாள்..
முத்தாகப் பற்களுமே மோகனமாய்த் துலங்கிடவே
..மூடிவைத்த இதழ்திறந்து மோகினியும் மென்னகத்து
குத்திவிடும் ஈட்டியென கூர்விழியின் கீழிமைகள்
…குளிர்வாகப் படபடத்து பார்வையிலே பனித்தூவி
சித்தமதைக் கலைத்துவிடும் சீரழகு நடையாலே
…சிரித்திங்கே ஜதியுடனே தோகைமயில் ஆட்டமென
வித்தைகள் பலவாறாய்க் காட்டித்தான் பாடுகிறாள்
…விந்தையிது வஞ்சியிவள் மொத்தவெழில் ஊர்வலமோ..
(ஹப்பா எப்படியோ ஆரம்பிச்சு ஊர்வலம்னு முடிச்சுட்டேன்)
*
இளம்பெண்ணுக்கே உரித்தான ஆசை கனா இவளுக்கும் இருக்கு..ஆனா அது நானில்லை என்கிறாள் எல்லா ஆசையையும் சொல்லி..ம்ம் என்னமோ நாணம்னு சொல்வாங்களே அதுவா இருக்கலாமா.. ம்ம் என்னமோ போங்க..
*
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
ராஜாக்கள் எல்லோரும் சீர்கொண்டு வருவார்களோஓஓ
மை வண்ணம் கலையாத கண் என்ன
https://youtu.be/fw6CW7Ry0Kc?list=PLbwjytqZWqzT5yhydnw60IEJoJTa5mD8 V
அன்னையும் பிதாவும் இல் வாணிஸ்ரீ…கூட தோழிகளில் ஒருவர் ஜெயந்தியா
..
chinnakkannan
28th May 2015, 12:11 AM
*
என்னமோ போங்க – 14
**
கையில் உள்ள எட்டணாவை ப் பத்துமுறை எண்ணுவான்
சத்தமின்றி எண்ணுவான் கஞ்ச ராஜா
தேனிலவு என்றாலும் தனியாய்த் தானே போவானே’ என வைரமுத்து எழுதிய ஒரு பாட்டில் வரும்..
தேனிலவு என்பது என்ன.. கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் தங்களது உள்ளத்தையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்வதற்காக செல்லும் ஒரு குளிர் பிரதேசம் சரி செல்லும் ஒரு இடம்..என ஆன்றோர்கள் சொல்வார்கள்..
பெண்ணுக்கோ மயக்கம்..யாரென்று தெரியாதே.. இப்படி அம்மா அப்பா பார்த்துக் கட்டி வைத்துவிட்டார்களே என்று..ஆணுக்கும் மயக்கம் தான்..எப்படி தன்னை, தன் பேச்சுக்களை, இவளுக்கு ப் புரியவைப்பது என்று.. அப்படி மெல்ல மெல்ல இச்சையுடன் ஆசையுடன் அன்புடன் பண்புடன் இன்னும் என்னமெல்லாமோவுடன் அணுக சிறந்த இடம் அறிந்தவர்கள் யாரும் இல்லாத நல்ல இடம் என்பதைத் தான் தேனிலவு என வைத்துவிட்டார்கள் போல..
இங்கே என்ன..கல்யாணம் நடந்து முடிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஒன் டே ஒன் டே ஒன் பாய் ஒன் கேர்ள்
ஆசை ஓசை கேட்கும் ஜாடையில் பாடலாம்
வானில் வருவது வெள்ளி மூன்
வாழ்வில் வருவது ஹனி மூன்..
*
நல்லாத் தான் பாட்டுப் பாடி ஆடறாங்க நாகேஷ் மற்றவங்கள்ளாம்.. நின்னுண்டிருக்கற ஹீரோ ஹீரோயின் ஏன் அசட்டுத் தனமா சிரிக்கறாங்க..ஓ..அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கறீங்களா.. அதுவும் சரிதான்..என்னமோ போங்க..
https://youtu.be/M4TVvD0wKKs?list=PLbwjytqZWqzT5yhydnw60IEJoJTa5mD8 V
*
ஜெய்ஷங்கர் ஜெயலலிதா நாகேஷ்.. படம் நீ..(சரிதானா)
*
chinnakkannan
28th May 2015, 12:18 AM
[QUOTE=vasudevan31355;1228606]சி.க,
கோபாலனோடு நீங்கள் ஆடிய பாடலுக்கு நன்றி! கொஞ்சம் ஜாக்கிரதையாகவே ஆடவும். புலி பதுங்கி இருக்கிறது.:-d கூட ராகவேந்திரன் சார் வேறு. // ராத்திரி வேளைல இந்தப் பயமுறுத்தலை மறுபடி படிச்சுட்டேனா (மொதல்லபடிச்சப்ப தெரியலை) இப்ப குப்புன்னு வேர்க்குது.. எதுக்கும் வாசு சார் நம்ம பக்கெட்லாம் ஒளிச்சு வச்சுக்கலாமா கொஞ்ச நாள் :)
uvausan
28th May 2015, 06:34 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150527-WA0000_zpsho6kjbep.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150527-WA0000_zpsho6kjbep.jpg.html)
http://i1161.photobucket.com/albums/q513/dotcomdesigns/Funny-Baby-laughing.jpg (http://media.photobucket.com/user/dotcomdesigns/media/Funny-Baby-laughing.jpg.html)
uvausan
28th May 2015, 06:46 AM
கருவின் கரு - பதிவு 24
உண்மை சம்பவம் : 3
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன .......
அன்று எனக்கு interview ஒரு பெரிய அலுவுலகத்தில் - பெரிய position - இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் ஒரு வீடு வாங்கலாம் , ஒரு கார் வாங்கலாம் , அம்மாவை ஒரு நல்ல மருத்துவரிடம் காட்டவேண்டும் - எப்பொழுதும் இருமிக்கொண்டே இருக்கிறாள் --- என்னவோ நினைவுகள் , ஆசைகள் ... அம்மாவிடம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டேன் - இருமிக்கொண்டே என்னை ஆசிர்வதித்தாள் ---
புதியதாக நுழைந்த அலுவுலகத்தில் என்னைப்போல இன்னும் இருபது பேர் வந்திருந்தனர் -- சரியாக கூட சாப்பிடாமல் வேறு வந்துவிட்டேன் - பசி வேறு ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தது ----
பியூன் குரல் கொடுத்தான் - இங்கே யாரப்பா அருண் ? உள்ளே கூப்பிடுகிறார்கள் ---
ஒரு வித பயத்துடன் , மன உளைச்சலுடன் உள்ளே சென்றேன் --
நான்கு பேர் அமர்ந்து இருந்தார்கள் - கூரை சரியில்லை என்று நினைக்கிறேன் - அந்த நால்வரில் ஒருவர் மேலேயே பார்த்துக்கொண்டிருந்தார் ---
உங்கள் பெயர் ?
அருண் ---- அருண் சாரதி --
அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள் --- எல்லாவற்றிலும் 90 % மேல் விழுக்காடு -விளையாட்டுக்களில் முதன்மை - நான் எழுதி எடுத்துச்சென்ற ப்ரோக்ராம்ஸ் யை பார்த்தார்கள் - பல கேள்விகள் - பொறுமையாக விடை அளிக்க தயாரானேன் - திடீரென்று உள்ளே ஒருவர் நுழைந்தார் - எல்லோருமே எழுந்து நின்றார்கள் , நானும் எழுந்தேன் --- அவர்தான் அந்த கம்பெனியின் MD யாம் ---
அவர் என்னைப்பார்த்தார் - அருண் ஒரே ஒரு கேள்விதான் உங்களிடம் கேட்க போகிறேன் .
உன் அம்மா என்ன செய்கிறாள் ? - கேள்வியே புதுமையாக இருந்தது - படித்த படிப்புக்கு சற்றும் சம்பந்தமே இல்லை --- வார்த்தைகளை முழுங்கினேன் .
மீண்டும் அதே குரல் சற்றே கடினமாக -- அம்மா என்ன செய்கிறாள் ?
சார் ! அம்மா வேலை செய்கிறாள் -- ஒரு வீட்டில் பத்து பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கின்றாள் - அவள் பெரும் கூலியில் தான் படித்தேன் - எனக்கு அப்பா இல்லை - பிறந்தவுடன் போய் விட்டார் --
Interview postponed - என்று சொல்லிவிட்டு அந்த ரூமை விட்டு அவர் போய் விட்டார் - ஒன்றுமே புரியவில்லை - என்ன தப்பாக சொல்லிவிட்டேன் - அம்மா ஏழை என்றால் இந்த கம்பெனியில் வேலை கிடைக்காதா - படித்த படிப்புக்கு மதிப்பு இல்லையா ? நெஞ்சில் பல கேள்விகள் - அதிர்ப்தியுடன் எழுந்தேன் --- சற்று நேரத்தில் பியூன் என்னை MD கூப்பிடுகிறார் என்று சொல்லி , அவரிடம் அழைத்துச் சென்றான் ---
அருண் உட்க்கார் ---- உன் interview இன்று இல்லை - நாளை -- உன் அம்மாவின் கைகளை நன்றாக பார்த்து விட்டு நாளை என்னை சந்திக்க வா ----
குழப்பத்திற்கு மேல் குழப்பம் -- அன்று அம்மாவை அருகில் இருக்கும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன் - அப்பொழுது MD சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன -- அம்மாவின் கைகளை உன்னிப்பாக அன்று தான் பார்த்தேன் - எல்லா ரேகைகளும் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தன - கைகள் சந்திர மண்டலத்தில் இருக்கும் மேடு பள்ளங்கள் குறைவு என்று பறைச்சாற்றிகொண்டிருந்தன - இரத்த ஓட்டம் அந்த பகுதிகளுக்கு வந்ததே இல்லை . கைகளில் கண்ணாடி வளையல் கூட இல்லை --- இந்த கைகளா எனக்கு தினமும் அன்னத்தை பிசைந்து எனக்கு ஊட்டி விட்டது ---- அவள் கைகள் என் கண்களை பொத்தின ----
மீண்டும் interview ---
" அருண் , வா - உன் அம்மாவின் கைகளை பார்த்தாயா ? "
" கண்களில் வரும் நீர்தான் அவருக்கு பதிலாக அமைந்தது "
" எல்லோருடைய உழைப்பையும் நீ புரிந்து கொள்ள வேண்டும் , மதிக்க வேண்டும் - உன்னுடைய பதவி மிகவும் பெரியது , முக்கியமானதும் கூட -- நீ எப்படி பிறருடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீ சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும் -- மற்றவர்களின் உழைப்பையும் , தியாகத்தையும் மதிக்காதவர்கள் என் கம்பெனியில் வேலை செய்ய முடியாது - வேலை செய்யக் கூடாது - என் அம்மா ஒரு அரசாங்க மருத்துவமனையில் தினமும் கூட்டி பெறுக்கும் ஆயா - அவளிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது இந்த ஒரு பண்பைத்தான் - உன் கண்ணீர் நீ அந்த பண்பை கடைப்பிடிப்பாய் என்று சொல்கிறது - எப்பொழுது இங்கு நீ சேறப்போகிறாய் ??
" அம்மா " என்று கதறி அழுதேன் - ஓடிக்கொண்டே இருக்கிறேன் அவளின் கைகளில் ரேகைகளாக இருக்க --------
https://youtu.be/h5zpKtO4uDg
rajeshkrv
28th May 2015, 07:06 AM
ஆஹா.. வாசுங்க்ணா.. எள்னு கேட்டா இதயம் நல்லெண்ணெயா வந்து என் இதயத்தைக் குளிர்வித்தீர்களே.. :) மிக்க நன்றி..ராகசுதா என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்..இவர் தான் ராக சுதா எனத் தெரியாது..பார்வதி என்னைபாரடி இரண்டாவது படமாகயிருக்கும் என நினைக்கிறேன்..இவராவது ர வோட வாழறாரா..
அது குட்டி பத்மினியில்லைன்னா வேறு யாரு :thinking: :)
இந்தாங்க குமாரி பத்மினி படம்
இவக கண்காட்சியில் சிவகுமாருக்கு ஜோடி.
பின்னே பல படங்களில் இரண்டாம் நாயகி வேடம்
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQsIa7Fcs-w8c0l6Ci2sfdIYTKU7gEnEg3YvP2ZWR2lp3SvlqjZ
RAGHAVENDRA
28th May 2015, 07:15 AM
அகந்தையது கண்மறைக்க ஆடிய பாவை
அகத்தைத் திறக்கத்தான் அன்பாய் - இகத்தினில்
வண்ணமாய்ப் பாச்சரத்தை வாகாய்த் தொடுத்துவிட
கண்கள் திறந்தன காண்..
திறந்த கண்கள் மூடாமல் இருக்கத்தான்
சின்னக்கண்ணன் அளித்தாரே பாக்கள்தான்
பாக்களிலே அவரளித்த வாழ்த்தைத்தான்
பாசத்தின் பிரதியென்று கூறித்தான்
ஏற்கின்றேன் அன்புடனே நானும் தான்..
தங்கள் தொடர் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி சி.க. சார்
அதோடு
வாழ்த்துரைக்க காத்திருக்கும் அத்துணை நெஞ்சிற்கும் தான்.
RAGHAVENDRA
28th May 2015, 07:19 AM
சி.க., கிஜி, ராஜேஷ், ரவி, கல்நாயக் என அனைவரின் பங்களிப்பில் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. காலை சென்று மாலை வருவதற்குள் பக்கங்கள் பல ஓடுகின்றன. எதற்கு பதில் சொல்வது, எனத் தெரியாமல் முழிக்கின்றேன். ஒவ்வொன்றிற்கும் தான்.
ஒன்றே ஒன்று சொல்லி விட்டால் போதும்.. அது அனைவருக்கும் சென்று சேர்ந்து விடும்.
மதுர கானம் திரி தொடங்கி மனம் மயங்க இந்த வாய்ப்பளித்த வாசு சாருக்கு நன்றி சொன்னால் இங்கு ஒவ்வொருவருக்கும் நன்றி சொன்னாற்போல்..
[க்கும்.. நான் திருவிளையாடல் பிள்ளையார் கட்சியாக்கும்.. நோகாமல் நொங்கு தின்ன... ]
vasudevan31355
28th May 2015, 07:39 AM
Happy Birth day Raghavendran sir.
http://thumbnails103.imagebam.com/26605/dcd94e266041328.jpg
http://www.jucoolimages.com/images/birthday_cakes/birthday_cakes_01.gif
vasudevan31355
28th May 2015, 07:42 AM
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்களுக்கு என்னுடைய சிறப்பு பிறந்த நாள் பரிசு பதிவு
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
4
'பால'சுப்ரமணியத்தின் பாடல்களில் அடுத்து நாம் காணப் போகும், கேட்கப் போகும் பாடல் 'மிஸ்டர்' சம்பத்' (1972) படத்திலிருந்து.
http://www.inbaminge.com/t/m/Mr%20Sampath/folder.jpg
'பால் குட'த்தில் ததும்பிய பாலின் குரலோன் 'மல்லிகைப்பூ' வங்கி வந்து, 'இயற்கை என்னும் இளையகன்னி' யைக் கூட தனக்கு 'அடிமைப் பெண்' ணாக்கித் தன் அழகுக் குரலால் அனைவரையும் ஆளத் துவங்கியிருந்த நேரம்.
'ஆரம்பம் யாரிடம்?' என்று இசையரசியிடம் பாலா கொஞ்ச,
'உன்னிடம்தான்' என்று இசையரசி பதில் கூவ,
சுவையான பாடல் கிடைத்தது 'மிஸ்டர் சம்பத்'தில்.
நமது 'துக்ளக்'தான் ஹீரோவே. திரைக்கதை, வசனம், இயக்கமும் இவரே! வாய் சாமர்த்தியத்தால் ஊரை ஏய்த்து உலையில் போட்டு அனைத்தையும் முதலை போல் விழுங்கி வைக்கும் பாத்திரம். லட்டு தின்பது போல அவருக்கு.
http://i.ytimg.com/vi/1qthYNLwvD4/hqdefault.jpg
ஆச்சியிடம் இவர் நைசாகப் பாடி, ('அலங்காரம் போதுமடி') அவருடைய ஒவ்வொரு நகையாகக் கேட்டு வாங்கி, இறுதியில் 'பாக்கி' என்று ஆச்சியிடம் (ஆச்சியின் பெயர் பாக்கியம். செல்லமாக சோ 'பாக்கி... பாக்கி' என்று கூப்பிடுவார்) சிலேடையாகக் கேட்க, அதற்கு "ஆச்சி ஏது பாக்கி? எல்லாத்தையும்தான் கழட்டிகிட்டீங்களே!" என்று அப்பாவியாகப் புலம்ப, இதையெல்லாம் எப்படி மறக்க முடியும்? இல்லையா ராகவேந்திரன் சார்?
உடன் ஆச்சி, முத்துராமன், குகநாதனின் குடும்பத் தலைவி ஜெயா என்று நட்சத்திரங்கள். நாடக வாசனை காமெடி தோரணம். புத்திசாலித்தன நகைச்சுவை புத்தியில்லாதவர்கள் கூட ரசிக்கும் அளவிற்கு. சரி! படத்தை விட்டு விடுவோம்.
பாடலுக்கு வருவோம். சிறுவயது முதற்கொண்டே என் மனதில் சிருங்கார ரீங்காரமிடும் பாடல். கன்னிக் குரல் பாலா நிஜ கானக் குயில் சுசீலா அம்மாவுடன் குழைந்து தந்த பாடல்.
முத்துராமன் ஒரு திரைப்பட இயக்குனர். தான் இயக்கும் ஒரு படத்திற்கு 'மெல்லிசை மன்ன'ரை வைத்து ஒரு பாடலுக்கு டியூன் கம்போஸ் செய்ய சொல்கிறார். 'மெல்லிசை மன்ன'ரும் அருமையாக தன் குழுவினரை மேய்த்து:) இனிய ஒரு பாடலை உருவாக்கித் தருகிறார்.
பாடலைக் கேட்டு கனவில் மிதக்கிறார் 'நவரசத் திலகம்'. படத்தின் ஹீரோயின் ஜெயாவை டைரெக்டர் முத்துராமன் உண்மையிலே காதலிக்கிறார். படத்தில் பாடலுக்கு நடிக்கும் ஹீரோ வேறு. தன் கற்பனையில் அந்த ஹீரோவை ஒதுக்கிவிட்டு அவருக்கு பதிலாக முத்துவே ஜெயாவுடன் டூயட் பாடுவதாக கற்பனை. பாடல் 'மெல்லிசை மன்னர்' கம்போசிங்கில் துவங்க, அப்படியே அவுட்டோர் நோக்கி பாடல் காட்சியாக நகருகிறது.
முதலில் சாலையில் நிற்கும் படத்தின் ஹீரோவிடம் சிம்பிள் சுடிதார் அணிந்த நாயகி ஜெயா (புலி நக ஷேப்பில்:) நெற்றியின் முன்னால் முடி தொங்க அழகாக இருப்பார்)
"ப்ளீஸ்! இப்ப என்ன டைம்?"
என்று காதலாகி சுசீலா அம்மாவின் குரலில் கேட்க,
அதற்கு அந்த ஹீரோ,(யாரோ!?)
"பரவாயில்ல! நல்ல டைம்தான்" என்று இருபொருள் பட, பாலாவின் குரலில் தன் பதில் காதலை மொழிய,
அந்த நான்கரை நிமிட நேரமும் நான்காயிரம் தரம் கேட்டாலும் இனிமை குறையாத பாடல் கிடைக்க ஆரம்பிக்கிறது.
ஆட்களே இல்லாத அந்தக் கால மரங்கள் நிறைந்த நம்மை ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் நிழலான ஒற்றை தார் சாலை. பட ஹீரோ மறைந்து இப்போது அந்த இடத்தில் முத்து.
'ம்ஹூம்' என்று இசையரசி மென்மையாக ஹம்மிங்கில் பாடலைத் தொடங்க,
அதே ஹம்மிங்கை பாலா திருப்பி வழங்க,
ஹம்மிங் மீண்டும் தொடர,
பாலா 'யாயயயா' என்று கொஞ்சுவது தென்றல் சுகம். (இதையே ஆயிரம் முறை கேட்கலாம்)
இரண்டாவதாக வரும் ஹம்மிங்கில் சுசீலா 'ம்ஹூம்' ஹம்மிங்கை 'ம்ஹூம்ஹூம்' என்று அதியற்புதமாக மாற்றி பின்பு 'ஆஹாஹஹா' என்று கொஞ்சுவாரே! அடடடா! ஜென்மம் சாபல்யம் அடைந்து விடலாம்.
'ஆரம்பம் யாரிடம்?
உன்னிடம்தான்...
ஆசை கொண்டு சொல்ல சொல்ல...
ஆனந்தம்தான் மெல்ல மெல்ல'
http://i.ytimg.com/vi/wv7EmwzAPbw/hqdefault.jpg
அப்படியே காதலர்கள் அங்கு வரும் பஸ்ஸில் ஏற, 'மெல்லிசை மன்ன'ரின் பிரிய 'பலகுரல் மலையாள மன்னன்' சதன் கண்டக்டர் பையை அக்குளில் செருகி 'ஆ போ ரைட்' என்று விசில் தர, பஸ்ஸில் பாடல் தொடரும் 'சிட்டுக்குருவி' போல.
"யாரேனும் பார்த்தால் என்னா..வது?' (சுசீலாம்மா கலக்கல்)
ஜெயா அஞ்சல். (அச்ச உணர்வை அழகாக வெளிப்படுத்துவார்)
'காதோடு சொன்னால் தேனாவது'
நவரசம் கெஞ்சல்.
'ஆனாலும் வேகம் ஆகாதது'
ஜெயா போய்க் கோபம்.
'போனாலும் காலம் வாராதது'
என்று கவலைப்படும் முத்து.
டாப் கியரில் பாடல் எகிற ஆரம்பிக்கும் பஸ்ஸைப் போல.
அடுத்த சரணம் ஜெயா, முத்து பீச்சில் கைகோர்த்து ஓடியபடி.
"ஆசை துடித்த போதிலும் அச்சம் விடலாமா?
பாவை அச்சம் விடலாமா?"
என்று ஜெயா சுத்த தமிழ்ப் பெண்ணாய் நாண,
"நேரம் நல்ல நேரம்... நாணம் வரலாமா?
இன்று நாணம் வரலாமா?"
என்று முத்து காரியத்தில் கண் வைக்க,
"நானென்ன சொல்வது மேலும்? (சுசீலாம்மா அமர்க்களம் புரிவார்)
காலம் வர வேண்டும்...
எதற்கும் காலம் வரவேண்டும்"
என்று ஜெயா ஆன்ஸர் அளிக்க,
'மாலை நாடகமானால் ஒத்திகை தர வேண்டும்
இன்றே ஒத்திகை தர வேண்டும்'
என்று முத்து முத்தாரமாய் அச்சாரம் கேட்டு அப்ளிகேஷன் போட,
சுகமோ சுக பாடல் கிடைக்கிறது நமக்கு.
அடுத்த சரணம் இருவருக்கும் திருமணம் நடந்து, முதலிரவு கொண்டாடி, பிள்ளை ஒன்றை பெற்று,
'இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம்'
என்று அன்றைய சிகப்பு முக்கோண விளம்பர அட்வைஸ் போர்டு காட்டி பாடல் முடியும்.
"மூடிக் கிடக்கும் பூவிதழ் முத்திரை இட வேண்டும்
முதல் முத்திரை இட வேண்டும்
மேலும் ஒன்றைக் கேட்டால் ஆயிரம் தரவேண்டும்
மீண்டும் ஆயிரம் தரவேண்டும்
பேசிய வார்த்தை போதும் பழகிப் பார்ப்போமா
சுகம்('நாம்') பழகிப் பார்ப்போமா?
(சென்ஸார் புண்ணியத்தால் சுகம் 'நாம்' என்று ஆனது)
காலம் முழுதும் காதல் கவிதை சொல்வோமா
இது போல் கவிதை சொல்வோமா!"
ஆஹா! ஆஹா! என்ன ஒரு பாடல்! என்ன ஒரு குரல்வளம்! என்ன பாடகர்களின் ஜோடிப் பொருத்தம்! என்ன ஒரு மெலடி! என்ன ஒரு டியூன்! என்ன வெரைட்டியான இசையமைப்பு!
டி,எம்,எஸ், சுசீலா இணைந்து காலத்தால் அழியாத பாடல்கள் பல தந்து இருக்க, சற்றே அலுப்புத் தட்டிய நிலையில் சுனாமித் தென்றலாய் வந்து சேர்ந்தார் பாலா. சுசீலாவுடன் மென்மை குழைத்து இவர் பாடிய பாடல்கள் இளசுகளின் நெஞ்சங்களை வருடின. (அப்போ நான் இளசுதானே!):) இன்றும் வருடிக் கொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட பாடல்களில் இது தலையாய வரிசையில் சேர்ந்தது.
எம்.எஸ்.வி பாடலுக்கு மியூஸிக் போடுவதில் இருந்து தொடங்கும் பாடல்.
'வரவு எட்டணா செலவு பத்தணா' என்று பாடிய சிறுமி ஜெயா 'வாலைக் குமரி'யாக வாழைத்தண்டு போல் சுசீலா குரலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். முத்துவும் வழக்கம் போல் கடிக்காமல் சமாளித்து விடுவார். (பாலா முத்துவுக்கு அதிகமாக பாடல்கள் பாடியுள்ளார். எல்லாம் பின்னால் வருகின்றன)
'மெல்லிசை மன்ன'ரைப் பற்றி சொல்வது வேஸ்ட் திருப்பதி லட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்வதைப் போல.
இந்தப் பாட்டைப் பற்றி எழுதியதில் அவ்வளவு மனத்திருப்தி கிடைத்தது எனக்கு. ரொம்ப நாள் ஆசையும் கூட.
http://i.igcinema.com/MovieImages/ed348aba-6727-4c6e-ba83-758e27a61a66.jpg
பாலாவின் மணி மகுட டூயட்.
https://youtu.be/wv7EmwzAPbw
rajraj
28th May 2015, 07:52 AM
A song for chinnakkaNNan to get over the heat where he lives:
From Naam iruvar (1947)
T.R.Mahalingam sings
kOdaiyile iLaippaatrik koLLum vagai kidaitha kuLir dharuve.......
http://www.youtube.com/watch?v=KkdY71gPNFE
Enjoy ! :)
RAGHAVENDRA
28th May 2015, 07:55 AM
வாசு சார்
தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி.
சும்மாவா ...
மதுர கானம் திரியின்
ஆரம்பம் யாரிடம்... உங்களிடமாயிற்றே...
ஆசை கொண்டு இங்கு ஒவ்வொருவரும் இத்திரியைக் கொண்டு செல்ல செல்ல
ஆனந்தம் தான் சொல்ல சொல்ல..
உளமார்ந்த நன்றி
மிஸ்டர் சம்பத் பாடலைத் தந்தமைக்கும் தான்...
uvausan
28th May 2015, 08:20 AM
கருவின் கரு - பதிவு 25
அனாதை குழந்தைகளின் ஒட்டு மொத்தக்குரல் - -
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை -- ஓரிடம் நீ கொடுத்தாய்
கிருஷ்ணா கிருஷ்ணா - அதை உலகத்தில் வாழவிடு
https://youtu.be/sPFnxjnsJug
uvausan
28th May 2015, 08:23 AM
கருவின் கரு - பதிவு 26
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
தேடிப் பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணாம்பூச்சியே வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
நான் தூங்கும் முன்னே நீ தூங்கிப் போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே என் தெய்வப் பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்குன் துணை இன்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே
நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வான் எங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பெரிதில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண் முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணை சேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை
எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
கண்ணே நீயும் என் உயிர் தானே
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்
https://youtu.be/4ZHtn74VSnY
uvausan
28th May 2015, 08:34 AM
கருவின் கரு - பதிவு 27
Shiv Khera's experience in Singapore: A lesson from a Taxi Driver ( the greatness of a mother)
Six years ago in Singapore I gave a taxi driver a business card to take me to a particular address. At the last point he circled round the building. His meter read 11$, but he took only 10. I said Henry, your meter reads 11$ how come you are taking only 10. He said Sir, I am a taxi driver, I am supposed to be bringing you straight to the destination. Since I did not know the last spot, I had to circle around the building.
Had I brought you straight here, the meter would have read 10$. Why should you be paying for my ignorance ? He said Sir, legally, I can claim 11$ but ethically I am entitled to only 10. He further added that Singapore is a tourist destination and many people come here for three or four days. After clearing the immigrations and customs, the first experience is always with the taxi driver and if that is not good, the balance three to four days are not pleasant either.
He said Sir I am not a taxi driver, I am the Ambassador of Singapore without a diplomatic passport. My mother always advised me that I should be honest and not to earn my livelyhood through wrong means . She is my god and always with me to take me in a right path.
In my opinion he probably did not go to school beyond the 8th grade, but to me he was a professional. To me his behavior reflected pride in performance and character. That day I learnt that one needs more than professional qualification to be a professional and what we are today is all becuase of our mothers - salute to the noble soul .
In one line be a "Professional with a human touch and Values " that makes all the more difference.
Knowledge, skill, money, education, all comes later. First comes Integrity.
Professionalism: It’s NOT the job you DO, It’s HOW you DO the job.”
உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு
உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்.
https://youtu.be/mvFXcGqC8Rw
uvausan
28th May 2015, 08:37 AM
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி - கருவிற்கு மூன்று நாள் விடுமுறை - உங்கள் எல்லோருக்கும் 3 நாட்கள் தான் விடுதலை ----
நன்றி
vasudevan31355
28th May 2015, 09:39 AM
இதுவரை பாலாவின் பாடல்கள்.
1.மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் (பால் குடம்)
http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1223953#post1223953
2.ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா. (அடிமைப் பெண்)
http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1224467#post1224467
3. இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்)
http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1226259#post1226259
4.ஆரம்பம் யாரிடம் (மிஸ்டர் சம்பத்)
http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page35
rajeshkrv
28th May 2015, 09:52 AM
காலை வணக்கம் ஜி,
பாலா பாடல்கள் அருமை..
rajeshkrv
28th May 2015, 10:30 AM
சில பாடல்கள் வெளிவந்த காலங்களில் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் அதிகம் ஒலித்து பின் களையிழந்து காணாமலே போய்விடும்
அப்படி சில பாடல்கள்
சிறகே இல்லாத பூங்குருவி
https://www.youtube.com/watch?v=2DMa8WBWQoU
வா சகி வா சகி
https://www.youtube.com/watch?v=8VtZIFQGUII
அர்விந்த் ஸ்வாமி, மம்முட்டி, ஆம்னி மற்றும் சாக்*ஷி நடித்த புதையல் படத்தில் உமாரமணன் ஹரிஹரன் பாடல்
https://www.youtube.com/watch?v=xzf-SzDSkrE
வெண்ணிலவில் மல்லிகையில் அழகான பாடல்
ரோஜாவின் சொந்த தயாரிப்பு. அதிரடிப்படை.. ராஜாவின் பாடல்கள் எல்லாமே அருமை
குறிப்பாக பாலு சித்ராவின் இந்த பாடல்
https://www.youtube.com/watch?v=ng2xn7XE6gg
எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன . ஐ லவ் இந்தியாவில் அழகான கானம்
வாலி ஐயாவின் வரிகள்
https://www.youtube.com/watch?v=mMHXo_38f20
மீண்டும் வருவேன்
kalnayak
28th May 2015, 10:34 AM
டியர் Raghavendra அவர்களே,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு பல் வளங்களும் பெற்று நோய் நொடியின்றி குடும்பத்தாருடன், உறவுகள் மற்றும் சுற்றத்தார், நண்பர்களுடன் இன்று போல் என்றும் இனிய உறவு கொண்டு வாழ வாழ்த்துகிறேன்.
kalnayak
28th May 2015, 10:51 AM
வாசுதேவன் ஜி,
ஒரு சின்ன தப்பு நடந்து போச்சி. நான் தங்கத்தின் தங்கம் படத்தில் நடித்த ராகசுதாவைப் பற்றி கேட்கவில்லை. அந்த படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் கேட்டிருந்தேன். நடிகை ராகசுதா கே. ஆர். விஜயாவின் உறவு என்றும், நித்த்யானந்தாவின் சிஷ்யை, நடிகர் ரஞ்சித்தை இரண்டாம் மணம் முடித்தார் என்றும் அறிவேன். ஆனால் நீங்கள் கூடுதல் விவரம்தான் கொடுத்துள்ளீர்கள். அதுதான் விவாஹரத்து போன்ற மேற்படி விவரங்கள்தான். அவர்தான் 'பார்வதி என்னைப் பாரடி' என்ற படத்தில் நடித்தார் என்று நமது சி.க. தப்பாக எடுத்துக் கொண்டு விட்டார். 'பார்வதி என்னைப் பாரடி' படத்தை நான் இரண்டு முறை பார்க்க நேர்ந்தது. 1993-ல் வெளிவந்தது. அதில் சித்தப்பா சரவணன் நாயகனாக நடித்திருந்தார். பாடல்கள் எல்லாமே அருமை. நம்ம ராசாதான் இசை. நாயகியாக நடித்தது ஒரு கன்னட நடிகை. அந்தப் படத்தில் பார்வதி என்று பெயர் கொடுத்திருந்தார்கள். சில பத்திரிகைகளில் ஸ்ரீ பார்வதி என்று குறிப்பிட்டார்கள். அந்த படத்தின் தோல்விக்கு பின்னர் அந்த நடிகை தமிழில் வந்தாரா இல்லையா என்று தெரியவில்லை.
மற்றபடி நான் கேட்ட நடிகை 'செங்கமலத் தீவு' படத்தில் 'பாடுவோம், பூமாலை சூடுவோம்' பாடலின் ராணியாக வரும் நடிகையைத்தான்.
vasudevan31355
28th May 2015, 10:57 AM
//ஒரு சின்ன தப்பு நடந்து போச்சி//
right.:)
chinnakkannan
28th May 2015, 11:06 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
//நாயகியாக நடித்தது ஒரு கன்னட நடிகை. அந்தப் படத்தில் பார்வதி என்று பெயர் கொடுத்திருந்தார்கள். சில பத்திரிகைகளில் ஸ்ரீ பார்வதி என்று குறிப்பிட்டார்கள். அந்த படத்தின் தோல்விக்கு பின்னர் அந்த நடிகை தமிழில் வந்தாரா இல்லையா என்று தெரியவில்லை// அதானே.. சின்னக்கண்ணனை எப்படில்லாம் ஏமாத்தறாங்க பாருங்க கல் நாயக்.. :)
//பார்வதி என்னைப் பாரடி' படத்தை நான் இரண்டு முறை பார்க்க நேர்ந்தது. 1993-ல் வெளிவந்தது. அதில் சித்தப்பா சரவணன் நாயகனாக நடித்திருந்தார். பாடல்கள் எல்லாமே அருமை.// ஆமாம் கல் நாயக்.. நானும் கேட்டேன்..இங்கே போட முடியாத ஒரு மழைப்பாட்டு கூட ஒன்று உண்டு..(மிட் நைட் மசாலா ஆகிவிடும்) நன்னாயிட்டு இருந்தன..ஆமாம் என்னவாக்கும் கதை..
.
kalnayak
28th May 2015, 11:29 AM
என்ன பார்த்து எப்பிடி இப்பிடியெல்லாம் நீங்க கதை கேட்கலாம் சி.க?
எனக்கு அவ்வளவு முழுசா நியாபகம் இருக்கா தெரியலையே. எதோ எனக்கு தெரிஞ்சதை வச்சி சொல்றேன். நம்ம நாயகன் அன்பான அம்மா அப்பா உள்ள ஆனால் ஒரு வேலைக்கும் போகாத (அதாவது வேலை-வெட்டிக்குப் போகாத ஆளில்லை - வேலைக்குப் போகாம, வெட்டியா திரியிற) ஆள். ஸ்கூல் போற ஊர்லையே பெரிய பணக்கார நாயகிக்கு நம்ம நாயகன் மேல 'அது' வந்துடுறது. ரெண்டுபேரும் அவங்க அவங்க தொழில மட்டம் போட்டு ஊரை சுத்துறாங்க. நாயகனுக்கு அவரைப் போலவே வெட்டியா திரியிற சில நண்பர்கள். நாயகியின் அப்பாதான் வில்லன். இதுக்கு மேல கதையை நான் சொன்னால் எல்லாரும் அடிக்க வந்துடுவாங்க. நீங்களே நிரப்பி முடிச்சிகோங்க. இதை சொல்ல வேணாம்தான், இருந்தாலும் எதுக்கு ஒரு சஸ்பென்ஸ் வச்சிக்கிட்டுன்னுதான்: கடைசியிலே வழக்கம்போல காதலர்கள் ஒண்ணா சேர்ந்துடுவாங்க.
vasudevan31355
28th May 2015, 11:36 AM
http://i.ytimg.com/vi/RO5tJrpqUJg/hqdefault.jpghttps://antrukandamugam.files.wordpress.com/2013/09/rajsree-cl-anandan-sengamala-theevu-1962.jpg?w=593&h=342
http://i.ytimg.com/vi/9Uy4E7qqpAk/maxresdefault.jpg
கல்ஸ்,
'செங்கமலத் தீவு' ராணி யாருன்னு தெரியலையா? ஆச்சர்யமா இருக்கே!. அது நம்ம 'நீலவானம்' ராஜஸ்ரீ கல்ஸ். சின்ன வயசு. அதான் உங்களுக்கு அடையாளம் தெரியலையோ?
ராஜஸ்ரீ ஒரு சில படங்களில் இது போன்ற ரோல்களில் வருவர். 'மகளே உன் சமத்து' அதில் குறிப்பிடத் தக்கது
புஷ்பலதா இன்னொரு ஹீரோயின்.
சி.எல். ஆனந்தன் காலம். சி.எல்.ஆனந்தன் இருந்தா அப்பல்லாம் நம்ம எஸ்.வி.ராமதாஸும் கூட இருப்பார். வழக்கமான ஆனந்தன் மூவி.
பாடல்கள் பிரபலம். இசை மாமா என்று நினைவு.
பேசியது நானில்லை கண்கள்தானே (எம்.எஸ்.ராஜேஸ்வரி)
சிந்தித்தால் சிரிப்பு வரும்...மணம் நொந்தால் அழுகை வரும்
என்னை பார்த்தா பரிகாசம்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் (கள்ளபார்ட் நடராஜனுக்கு இந்த சாங்)
நான் ஒன்று நினைத்தேன் நடக்க வில்லை (உங்க ராணி அழுவாச்சி பாடல்)
கண்ணால் பேசுவோம் கையை வீசுவோம் .....கவர்ச்சி ஆட்டம்.(எங்க ஆள் பாடியது)
எனக்கு தெரிஞ்சு அம்புடுதேன்.
kalnayak
28th May 2015, 11:40 AM
வாசு நன்றி.
சிறிது சந்தேகம் இருந்தது. இருந்தாலும் பிரிண்ட் சரியில்லையா. ராஜஸ்ரீ என்று உறுதியாக சொல்ல முடியாமல்தான் யாரென்று கேட்டேன். முழுமைப் படுத்திவிட்டீர்கள். வாசுன்னா வாசுதான்.
vasudevan31355
28th May 2015, 11:40 AM
இங்க என்னடான்னா போட்டோ பக்கெட் கேக்குறாக
வீட்டுல என்னடான்னா தண்ணி பக்கெட் கேக்குறாக
வேலையிலே என்னடான்னா நிலக்கரி பக்கெட் வீலை பழுது பார்க்க சொல்றாக.
என்ன நம்ம பொழப்பு பக்கெட்டாவே ஆகிப் போச்சு.
kalnayak
28th May 2015, 11:59 AM
பூவின் பாடல் 17: ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூ மழை நெஞ்சிலே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
இங்க பாருங்க அயன் படத்திலே பூமழை நெஞ்சிலே-ன்னு ஆடிப் பாடறதை. இன்னா ஆட்டம் ஆடறாங்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையில யப்பா.
ஆண்:
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
பெண்:
என் கையில் வளைந்த என் மீது மிதந்த
மாலையில் நடக்கின்ற நினைவு நீ
ஆண்:
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகிலே
பெண்:
ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே
ஆண்:
இதழ் பூவென்றால் அதில்
தேன் எங்கே இங்கு பூவேதான்
தேன் தேன் தேன் தேன் தேன்
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
பெண்:
இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டினேன்
உனைக் கண்டு உனைக் கண்டு இரசித்தேன்
ஆண்:
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே
பெண்:
சுடும் பூங்காற்றே சுட்டுப் போகாதே
இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய்
ஆண்:
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
https://www.youtube.com/watch?v=rDdu-gXe58M
ஆமா அயனுக்கும் இந்த படத்துக்கும் இன்னா சம்பந்தம் பேரா வைக்கிறதுக்கு?
chinnakkannan
28th May 2015, 12:35 PM
வாசு ஜி..உங்க நிலைமையைப் பார்த்தா எனக்கு பக்கெட் பக்கெட்டா கண்ணீர் வருது.. இந்தப் பாட்டில உங்களப் பத்தியே சொல்லியிருக்காக..
நாங்க ஏதாவது கேட்டா நீங்க உடனே கொடுத்துடுவீங்க (ஸ்ரீபாரதி அல்லது பார்வதி கிடைக்கலைன்னா என்ன செய்வீங்க..ஒரு ஆல்ட்ர்னேட் கொடுத்துடுவீங்க :) ) தானே..
மலர்கள் கேட்டேன்
வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
உனையே தருவாய் (பயந்துடாதீங்க..பாட்டு லைன்ஸ்.. நாங்க கேக்கல்லாம் மாட்டோம் உங்க் வீ.காரமமா கோச்சுக்குவாங்க)
ஓ.கே கண்மணி.. பார்த்திருக்க மாட்டீங்கன்னு தெரியும் நித்து மேனன், துல்கர் சல்மான்..பாட்டு ந்ல்லாயிருக்கும்
https://youtu.be/Ez1JN5OkJX0
இங்க என்னடான்னா போட்டோ பக்கெட் கேக்குறாக
வீட்டுல என்னடான்னா தண்ணி பக்கெட் கேக்குறாக
வேலையிலே என்னடான்னா நிலக்கரி பக்கெட் வீலை பழுது பார்க்க சொல்றாக.
என்ன நம்ம பொழப்பு பக்கெட்டாவே ஆகிப் போச்சு.
gkrishna
28th May 2015, 07:06 PM
ஆனந்த விகடன் பொக்கிஷம்
'தேவர்மகன்' ஷூட்டிங்... அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்... கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், 'தத்ரூபமா அழணும்பா' என்றிருந்தார். 'ஷாட் ரெடி!' என்று குரல் கேட்டதுமே... 'ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா... ஐயா!' என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. 'கட், கட்' என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, 'இங்க வாடா' என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். 'நீ ஒருத்தன் அழுதா போதுமா... மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!' என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!"
- வடிவேலு (9.3.97)
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ8iKnShumBeejDTu26y4ZYGZW6gNqsq _QPjc6eYoTwDisobZO5QA
gkrishna
28th May 2015, 07:08 PM
இன்று பிறந்த நாள் காணும் பிதாமகர் ராகவேந்தர் அவர்களை வணங்கும்
http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/Karnan0011.jpg
என்.டி. ராமராவ் பிறந்த தினம்: மே 28- 1923
gkrishna
28th May 2015, 08:01 PM
வாசு நீங்கள் எழுதி உள்ள பாடும் நிலா பாலாவின் 4வது பாடல் இடம் பெற்ற மிஸ்டர் சம்பத் 1972 இல் நெல்லை ரத்னாவில் பார்த்தேன் . என் இனிய நண்பர் ஒருவர் நம்பி ராஜன் மற்றும் அவர் தம்பி ஸ்ரீனிவாசன் . இருவரும் என்னோடு இந்த திரை படம் பார்க்க வந்து இருந்தார்கள். இன்று இருவருமே US இல் . இடைவேளையில் நமக்கு முறுக்கு,தட்டை ,கடலை மிட்டாய் தின்பது வழக்கம். அதுவும் அந்த பண்டங்கள் இருக்கும் அலுமினிய தட்டை முறுக்கு விற்பவர் தலைக்கு மேல் தூக்கி கொண்டு வேட்டியை மடித்து கொண்டு (நீல அல்லது சிகப்பு கலர் டிரௌசெர் தெரிய ) 'முறுக் முருக அரிசி முறுக்' (ரவும், றவும் அவ்வப்போது குரலில் பிசிறும் ) விற்று கொண்டு வரும் அழகே அழகு.
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT-AVFucgoK35N6ijsHbDSf6oP1mPibWi4cl9euXm5HBLKfc3ke
இந்த படத்தில் இருப்பதை விட தகடாக இருக்கும் .
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSLbevKeLVQakMNgKzwOVdR6D-y98eY9_Qt3Z45t7uQkFQBbeM3
அதே போல் முள்ளு முறுக்கு என்று அழைக்கப்படும் தேன்குழல் கிறிஸ்ப் ஆக இல்லாமல் சவுக் சவுக் என்று இருக்கும்.அதை தின்பதற்கு ஒரு கூட்டமே ரெடியாக இருக்கும்
அந்த பழக்கத்தில் அதை வாங்குவதற்கு அவர்களிடமும் கொஞ்சம் காசு கேட்கலாம் என்று நினைத்து அவர்களை அணுகிய போது 'டாய் இதை எல்லாம் சாப்பிட கூடாது வவுறு பணால் ஆயிரும் எங்க அம்மா எங்களுக்கு வேற ஒரு பண்டம் கொடுத்து இருக்காங்க' என்று சொல்லி கொண்டே அவர்கள் டிரௌசெர் பையில் இருந்த எடுத்த பண்டம் இருக்கிறதே ஆளுக்கு ஒரு அரை தேங்காய் மூடி . சரி பாதியாக உடைத்து கொண்டு வந்து இருந்தார்கள். இருவரும் முன் பல்லால் கொருவி எடுத்து விட்டார்கள்.மீதி படம் முழுவதும் .:mrgreen:
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ3DnJEdkSLvDN4yUEUQKBWq3PHo-LHjV2vu8FbdQoG46p6o2GMqQ
மிஸ்டர் சம்பத் பற்றி படித்த ஒரு தகவல்
1947-ல் ஆர்.கே.நாராயணின் நெருங்கிய நண்பரான ஜெமினி ஃபிலிம்ஸ் அமரர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களால் தயாரிக்கப்பட்டு, திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இயக்கி, மிஸ்டர் சம்பத்தாகவும் நடித்து, திரு.பரூர் எஸ்.அனந்தராமன் அவர்கள் இசையில் மிஸ் மாலினி என்ற பெயரில் இக்கதை திரைப்படம்மாக்கப்பட்டது.
இதில் புஷ்பவல்லி, ‘ஜாவர்’ சீதாராமன், சுந்தரிபாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல் மன்னன் ஜெமினி கணேசன் அறிமுகமான படம் இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.
இது ஒரு சிறந்த சமூக திரைப்படமாக கருதப் பட்டாலும், வசூலில் ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் ஜனரஞ்சக சமாச்சாரங்கள் எதுவும் இல்லாததே படத்தின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாகும். இப்படம் குறித்து திரு.ராண்டார் கை அவர்கள் தி ஹிந்து நாளிதழில் எழுதியுள்ளார்
பின்னர் 1952-ல் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள் இதே கதையை மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்து இயக்கினார். இதில் நாட்டியப் பேரொளி பத்மினி மிஸ் மாலினி-யாக நடித்துள்ளார். ஹிந்தியிலும் படம் பெரிய அளவில் சாதிக்கவில்லை.பி பி ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து 1951 இல் வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில் தான்
1972-ல் இதே கதையை திரு.சோ அவர்கள் இயக்கி நடித்து மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஒரு படம் வந்தது. இதில் சோ தான் மிஸ்டர் சம்பத் ஆக நடித்திருப்பார். 'சோ', 'விவேக் சித்ரா' சுந்தரம் ஆகியோருடைய உதவியால் 20 பங்குதாரர்களை சேர்த்து, 'மிஸ்டர் சம்பத்' என்ற படத்தை தயாரித்தார்.
இந்தக் கதையில் ஒரு விசேஷம், கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர் எல்லாம் ஒருவரே! 'மிஸ் மாலினி'யில் கொத்தமங்கலம் சுப்பு நடித்த இந்த வேடத்தில், 'மிஸ்டர் சம்பத்'தில் 'சோ' நடித்தார்.
அவருடைய நடிப்பு பிரமாதமாக அமைந்தது. படம் வெற்றிகரமாக ஓடியது
http://lh3.googleusercontent.com/_563DQEzTL2s/StGGN1wwcgI/AAAAAAAABTg/Nl71uxpb6yI/s1600/VHIF02145.jpghttp://www.thehindu.com/multimedia/dynamic/00961/2008072550391601_961348e.jpgMiss Malini
‘மிஸ்.மாலினி’யில் ஒரு நல்ல பாடல் உண்டு
‘மைலாப்பூர் வக்கீலாத்து
மாட்டுப்பொண்ணாவேன்...
வைகாசி ஆனி மாதம்
குத்தாலம் போவேன்
வைரத்தோடு பட்டுப்புடவை
வகைவகையாய் போடுவேன்
வாத்தியாரை டியூஷன் வைத்து
ஹிந்துஸ்தானி பாடுவேன்...’
வாசு நானும் கொஞ்சம் நிம்மதியாக தூங்குவேன் :)
RAGHAVENDRA
28th May 2015, 08:18 PM
பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி கல்நாயக் மற்றும் கிருஷ்ணாஜி..
rajeshkrv
28th May 2015, 09:01 PM
ராகவ் ஜி. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
chinnakkannan
28th May 2015, 10:50 PM
*
முதலில் ஹோம் வொர்க்..
ராஜ் ராஜ் சார்
கோடையில் இளைப்பாறிக்கொள்ள வகைகிடைத்த குளிர் தருவே – அழகான பாடல் நன்றி.. டி ஆர் எம் கணீர்க்குரல் அண்ட் கடைசியில் வருவது வெகுகுட்டியானகுமாரி கமலா தானே..
ம்ம் இங்கயா தாமரைக் குளம் ப்ளஸ் மரமா.. பொசுங்கிடும்.. அதுவும் போன செவ்வாயன்று (முந்தா நாள்) 49டிகிரி..மதியம் அலுவலகத்தை விட்டு எதற்கோ வெளி வந்தால்.. அனல் காற்று ஹ்யுமிடிட்டியும் அதிகம்..இன்றுகொஞ்சம்பரவாயில்லை 45 தான் இருக்கும் என நினைக்கிறேன்.வலை எல்லாம் பொய் சொல்கின்றன..
*
கல் நாயக்..
பூமாலை இத்தனை சடுதியில் முடிக்க வேண்டுமா என்ன.. அது சரி திடீர்னு என்ன அயன் பாட்டு.. அயன் பேருக்கு ஒரு சொதப்பல் எக்ஸ்ப்ளனேஷன் வேறு கொடுத்திருப்பாங்க.. பூமழை..ம்ம் தமன்னா ஓகே.. ( இத விட ஓ ஹானி ஆனி ஹானி ஆனி ந்னு ஒருபாட் வரும்..அது கொஞ்சம்பிடிக்க்கும் எனக்கு)
என்ன ஒரு புரட்சிகரமான கதை பார்வதி என்னைப் பாரடி..பார்ப்பதற்கு ஆவல் மிகுகிறது!.. நன்றி கல் நாயக்.. :)
மங்கலப் பூமழை பொங்கிடும் திருமேனி இதுவரை கேட்டிராத பாட்டு..ஓய்.. மலை ராணி முந்தானை தழுவத் தழுவ பாட்டு தான் நினைவுக்கு வருது..கே.ஆர்.விக்கு அமெரிக்கர் தான் நாயகரோன்னோ.. பார்த்த்தில்லை.. விமர்சனத்தில் விதுபாலாவை கோல்ட் ஃபிங்கர் படத்தில் வருவது போல் காருக்குள் வைத்து க் கொல்வார் வில்லன் எனப் படித்திருக்கிறேன் குமுதம் விமர்சனத்தில்..
பூ மழை தூவி தெரிந்த நல்லபாடல்.. பூமாலைபோட்டுப்போடும் மாமா கேட்டதில்லை..செங்கமலத் தீவு பாட் பார்க்கிறேன்..கண்ணன் எங்கே பாட் பொருத்தமாய் இருந்தத்.. தாங்க்ஸ்ங்க்ணா..
*
க்ருஷ்ணா..
ந.தி பற்றிய நியூஸ்- வடிவேலுடையது ( அவர் அதிர்ஷ்டம் தேவர்மகனில் ந.தி கூட நடித்தது..), மிஸ்டர் சம்பத் பற்றிய தகவல்களுக்கு.. நன்றி..
முறுக்கு நினைவுகள் சுவை..ஹையாங்க்.. பல் வலிக்க்குமே..
*
வாசு .
ராஜஸ்ரீ செங்கமலத் தீவு தெரியலையாம்.. எனக்கும் கூட கொஞ்சம் டவுட்டாகத் தான் இருந்தது.. இந்த மலரைப்பறித்தாய் தலையில் வைத்தாய் எனக்கு மிகப் பிடித்த பாடல் ..பேசியது நானில்லை கண்கள் தானே, சிந்தித்தால் சிரிப்பு வருமும் பிடிக்கும்.. நீங்கள் போட்ட ஸ்டில்களும் பிடிக்கிறது! :)
*
மிஸ்டர் சம்பத் வீடியோகாஸட் வந்த காலத்தில் வீடியோ வாங்கி ப்ரிண்ட் சரியில்லாததால் பார்க்க விட்டுப் போன படம்..
(புலி நக ஷேப்பில் நெற்றியின் முன்னால் முடி தொங்க அழகாக இருப்பார்) objection your honour..திருப்பி வைத்தபிறைச்சந்திரன் போல இருக்கிறது முடி..
சரியாக நெற்றியில் சந்திரனும் பாதிப்
பிறையாய்த் திரும்புதற் போலே – விரியாமல்
ஆடிய காற்றில் அசைந்தாடும் முடியழகைப்
பாடியே பார்க்கிறேன் பார்..
ஓ..பஸ்ல் ஏறி உட்கார்ந்ததுக்கப்புறம் புலி நகம் தெரியுதுங்ணா..ஆனா சற்றே குண்டாய் இருக்குல்ல சுருள் முடி..ம்ம்
புலிநகம் நெற்றியில்..மான் விழிகள் கீழே….
ஒல்லி ஒல்லி 8 font எழுத்தைப் போல விகசிக்கும் ஜெயா அழகு தான்.. முத்து..ம்ம் என்னமோ போங்க.. :)
(அப்போ நான் இளசுதானே!) இப்பவும் தான்..ரசனையில்..
ஆரம்பம் யாரிடம் உங்களிடம் தான் – நான் கற்றேன்…கிறேன்…பேன் குருஜி..
System வைரஸால் பாதிக்கப்பட்ட்து என்று எழுதியிருந்தீர்களே.பேக் அப் எடுத்து வைத்துக் கொள்கிறீர்கள் தானே..
*
ரவி,
வேலையில்லா பட்டதாரி பாட்டை விட தாயிடம் வாழவில்லை க்ருஷ்ணா க்ருஷ்ணா பாட் தான் பிடிக்கும்
.. என்ன திடீர்னு மூணு நாள் லீவ்..ம்ம் பத்திரமா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க.. நான் அடுத்த மாசம் 3வது வாரத்திலிருந்து சுட்டி..
டாக்ஸி ட்ரைவர் கதை சற்றே தாயே உனக்காகவை நினைவு படுத்துகிறது..சிவகுமாரும் செல்லுமிடமெல்லாம் – எங்க அம்மா சொன்னாங்க எங்க அம்மா சொன்னாங்க என்று ஒரு வசனம் பேசுவார்..ம்ம்
*
ராஜேஷ்..
சிறகே இல்லாத பூங்குருவி, ஒன்று வானத்தில் தவிக்கிறது – இதுவரை கேட்டதில்லை..குஷ்பூ சுரேஷ் ஜோடியா.. குலோப்ஜாமூனும்(அந்தக்கால), ஆமைவடையுமா.. யார் ரூம்போட்டு யோசிச்சுருப்பாங்க..
உனக்குத்தெரியாமல் உன்னைப் படித்தவள் வாசுகி வா சகி..
புடவையது மென்மையாய் பூவிலாமல் நெய்தால்
அடமாய் அழகுவரும் ஆம்..
ப்ளெய்ன் ஸாரீஸ் எப்போதுமே அழகு பெண்களுக்கு என்று ஆன்றோர் சொல்வார்கள்..ஆனால் மம்முட்டி கட்டம்போட்ட சொக்காயில் நன்றாக இருக்கிறார். இந்தம்மா என்னதான் இளமையாய் இருப்பதாக குளித்துக் குதித்துக் காட்டினாலும் கொஞ்சம் சுமார் தான் இல்லியோ..யாராக்கும் அது..
பாட்டு நைஸ்..
*
பூத்திருக்கும் வனமே வனமே
பூப்பறிக்க இதுதான் தினமே..
ஆரம்பத்தில் வரும் ஸாக்ஸஃபோன் அப்புறம்கார் அப்புறம் மம்முட்டி அப்புறம்
இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் இவள் உந்தன் திருமதி..ம்ம்சாக்ஷி.. சுருக்கமா வீட்ல எப்படிக் கூப்பிடுவாங்களாம்..சாக்ஸ்ன்னா..
பாடல் உமாரமணன்..பூங்கதவே தாள் திறவாய்ல ஹைபிட்சுக்குப் போகும் குரல் கொஞ்சம் அடக்கி மனதை வருடுகிறது..பாடலும் தான்..
*
வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்..
கேட்டிராத பாடல்..ஃப்ராங்க்கா கேட்டீங்கன்னா இந்த ரோஜா ..வில் கம் அண்ட்ர் விஜயகுமாரி ஃபேமிலி..ஆர் கேடகரி.. எனக்கு என்னவோ பிடிக்காது..பாட்டு நன்னாயிருக்கு.. போட்டிருக்கற தங்க நெக்லஸ் நன்னாயிட்டு இருக்கு..
*
ஐ லவ் இந்தியா என்ன பட்ஜெட் படமா என்ன.. பாடல் ஆரம்பத்திலேயே துண்டு விழறா மாதிரி இருக்கு… நாய் வேற துரத்துது..ஆ… அதானே பார்த்தேன் நாயகர் எக்ஸர் ஸைஸ் பண்ணிகினு இர்க்கார்.. சரத்.. அந்தம்மா ஓடி வந்து தொபுக்கடீர்னு அவர் மேல ஒக்காந்துக்கிட்டது கூட பரவாயில்லை..எங்கிருந்தோ எனை அழைத்தது உந்தன் கானம் தானான்னு குதிரைகளைப் பார்த்துக் கேக்கறது ரொம்பத் தப்போன்னோ..
என் மனதில் அன்பை விதைத்ததென்ன உந்தன் மோகம் தானா..(இதுவும் ரொம்ப மோசம் ஆண் மேலேயே பழி போடப் படாது) ம்ம் ஒரு கணம் ராஜகுமாரி ட்ரஸ் அடுத்தகணம் கடற்கரையில் ஹாஃப் ட்ராயர்.. எல்லாம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபீஸ்காக..கொரியோக்ராஃபி கொஞ்சம் இடிக்குது..ஹீரோயினும் ரொம்ப சரத்தை இடிக்கிறார்.. பாட்டு சுமார் தான் பிகாஸ் ஆஃப் மீசிக்..
ஆக ஒரே கல்லுல அஞ்சு மாம்பழங்கள்(ஒண்ணு கொஞ்சம் புளிப்பு நீலமா இருக்கும்..மாம்பழ வகையைச் சொன்னேங்க) கொடுத்தமைக்கு நன்றி ராஜேஷ்..
*
rajraj
29th May 2015, 02:19 AM
ChinnakkaNNan: If you like to watch Baby Kamala dance
here is 'Aaduvome PaLLu Paaduvome' also from Naam Iruvar (1947.
The singer is D.K.PattammaL :
http://www.youtube.com/watch?v=RaiiUr0v5UU
vasudevan31355
29th May 2015, 10:09 AM
பல் வலிக்கிறது கிருஷ்ணா! முறுக்கு தின்னு நாளாச்சு.:)
ஹிந்தி 'மிஸ்டர் சம்பத்'தில் விதவிதமான கெட்-அப்களில், ஸ்டேஜில் எனது அபிமான சம்ஷத் பேகம் குரலில் பத்மினி வேறு வேறு டியூன்களில் பாடும் பாடல். (Laila Laila Pukaroon ) இந்தப் படத்தில் மோதிலால் தான் ஹீரோ. (சி.க, மோதிலால் நேரு எப்ப சினிமாவில் நடித்தார் என்றெல்லாம் கேள்வி கேட்கப் படாது.) :)
https://harveypam.files.wordpress.com/2010/06/vlcsnap-31640.png
vasudevan31355
29th May 2015, 10:16 AM
சில அபூர்வ நிழற்படங்கள்
இணையத்திலிருந்து.
தாதா சாஹேப் பால்கே இயக்கிய 'ராஜா ஹரிச்சந்திரா' (May 3, 1913) படத்தின் ஸ்டில்.
http://www.missmalini.com/wp-content/uploads/2013/05/FM-raja_harishchandra1-530x398.jpg
http://www.missmalini.com/wp-content/uploads/2013/05/Dadasaheb-Phalke-directing-a-scene-for-Raja-Harischandra.jpg
vasudevan31355
29th May 2015, 10:22 AM
//நீங்கள் போட்ட ஸ்டில்களும் பிடிக்கிறது!//:):)
gkrishna
29th May 2015, 10:23 AM
கண்ணனும் கவிஞனும்
http://media-images.mio.to/various_artists/K/Kakkai%20Chiraginiley%20-%20Bharathiyar%20Songs%20From%20Films/Art-350.jpg
அலகிலா விளையாட்டுடையான்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே தான். தெய்வத்தை மஹாகவி பாரதி, அதுவும் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்த அந்த ஆயர்பாடிக் கண்ணனை எவ்வாறு அனுபவித்தார் என்று இதுவரை பார்த்தோமே கவனமிருக்கிறதா?.
தந்தையாக, ஆசானாக, சீடனாக, சிறு பெண் கண்ணம்மாவாக, சேவகனாக பார்த்தது ஒருபுறம் இருக்க, இன்று அவனை ஒரு குறும்புக்கார சிறுவனாக சித்தரிக்கிறார்.
கோகுலத்தில் பிருந்தாவனத்தில் கண்ணனின் (மதுர கானம் சி கே,வாசு போல) விஷமங்களை அவன் தாய் தந்தை எப்படியெல்லாம் நாளொரு புகாரும் பொழுதொரு சமாதானமுமாக எதிர்கொள்ள நேர்ந்தது என்பதை எப்படி பாரதியாரால் கற்பனை செய்யமுடிகிறது என்று வியப்போருக்கு ஒரே விடை ''கொண்டை இருப்பவள் முடிந்து கொள்கிறாள்''.
பாரதியார் பாரதியார் தான். மீசையும், முண்டாசும் நெற்றியில் கீற்றாக குங்குமமும் கழுத்து வரை யில் பட்டனோடு கருப்புக் கோட்டும் மட்டுமே ஒருவரை அமரகவி ஆக்குமா?. சுதந்திர நாட்களில் எத்தனைபேர் நேருவைப் பார்த்து தாங்களும் ஒரு வெள்ளை குல்லாவை அணிந்துகொண்டார்கள், நேரு ஆக முடிந்ததா ?
சுருட்டு புடிச்சவன் எல்லாம் சர்ச்சில் இல்லை
தாடி வைச்சவன் எல்லாம் தாகூர் இல்லை
மீசை வைச்சவன் எல்லாம் பாரதி இல்லை
கோட்ல் பூ வைச்சவன் எல்லாம் நேரு இல்லை
ஆயர்பாடியில் நந்தகோபனை அவன் நண்பர்கள் பிடுங்கி எடுத்தனர்'
''ஏன் அமைதியில்லாமல் இருக்கிறாய். யசோதாவும் எப்போதும் ஒரு தடுமாற்றத்தோடு சில நேரம் சந்தோஷம் சில நேரம் நடுக்கமாகவும் உள்ளாளே . என்ன நடக்கிறது இங்கே?
'' என்னத்தை சொல்வேன் போங்கள் ?''
ஏதோ பத்து காத தூரம் ஓடினாற் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆயாசமாக இருக்கிறாயே நந்த கோபா ''
''என்னத்தை சொல்வேன் எல்லாம் அந்தப் பயல் செய்யும் லூட்டி? ஊர் வம்பை விலைக்கு வாங்கி வந்து விடுகிறான்.
பொழுது விடிந்தால் பொழுது போனால் அவனுக்காக மற்றவரிடம் மத்யஸ்தம், தாஜா செய்வதற்கே சக்தி போய் விடுகிறதையா.''
''ஒ, அப்படி என்ன செய்கிறான் உங்கள் பையன்? '' என்று அங்கு மிங்கும் அவன் கண்ணில் தென் படுகிறானா என்று பார்த்துக்கொண்டே கேட்பார் நந்த கோபனின் நண்பர். அவர் பயம் அவருக்கு தெரியும். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் பின்னால் அவன் ஏதாவது விஷமம் செய்துவிட்டால்? ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிவிட்டால்? இருந்தாலும் அப்படி என்னதான் செய்கிறான் அவன் என்று தைரியமாகவே கேட்டுவிட்டார்.
''சொல்கிறேன் கேளுங்கள் ' என்று ஒரு காலை நீட்டிக் கொண்டு ஒரு காலை மடித்துக்கொண்டு திண்ணையில் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு ஆரம்பித்தார் தந்தை.
''உமக்கு தெரியும் இல்லையா, இந்த தெருவில் 16வீடுகள், அதில் 13 வீட்டில் இளம் பெண்கள். ஏறக்குறைய ஒரே வயது. சிலதுகள் சற்று பெரியது சின்னது. ஆனால் அவர்கள் எப்போதுமே அவனுடன் சேர்ந்து தான் விளையாடுவார்கள். நம் பயலும் அவர்களோடு சேர்ந்து கொள்ளாத நாளே இல்லை. ஆண் பிள்ளை என்றாலும் அவனை அவர்களுக்குப் பிடிக்கும். எல்லோரோடும் பேசி மயக்குபவன். அவர்களுக்கு ஜோடியாக விளையாடுபவன். புதிது புதிதாக ஏதாவது சொல்லுவான், செய்வான். அவன் சுவாரசியமானவன் என்று அவனையும் சேர்த்துக் கொள்வார்கள். அங்கு தான் ஆபத்து உருவாகும்''.
''ஏன், என்ன பண்ணுவான் ?''
''அவனோடு விளையாடினாலும் தினமும் யாராவது ரெண்டு பெண்ணாவது எங்கள் வீட்டுக்கு வந்து யசோதாவிடம் அவனைப்பற்றி ஏதாவது ஒரு குறை சொல்லாத நாளே கிடையாது. விளையாட்டு விளையாட்டு விளையாட்டு. தீராத விளையாட்டு அவனுக்கு, இந்த கண்ணன் பயலுக்கு. ஆமாம் அவன் பெயர் கண்ணன் தான். குறும்புக்கு மற்றொரு பெயர் கண்ணன் அல்லவா?''.
''ராதே இந்தாடி கொய்யாப்பழம் என்று ஒரு பெரிய பழத்தை எங்கோ மரத்தில் பறித்து, அந்தப் பெண் ராதாவுக்கு கொடுத்தான். அவள் ''நீ நல்ல கண்ணன் டா (கல்நாயக் போல) . எப்படி டா உனக்கு தெரியும் எனக்கு கொய்யாப்பழம் பிடிக்கும்'' என்று சொல்லி ஆசையாய் அதை வாங்கி வாயில் வைத்து கடிக்குமுன்பாக மின்னல் வேகத்தில் அவள் வாயில் ஒரு கடி படும் முன்பே அந்த பழத்தைத் தட்டி விடுவான். அது கீழே விழுவதற்குள் அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு தான் ஒரு கடி கடித்து கால் பழம் அவன் வாயில் சென்றுவிடும்.
அவள் அழுவாள்.கெஞ்சுவாள். ''கண்ணா கண்ணா தரேன் என்று சொல்லி தந்து ஏனடா ஏமாற்றுகிறாய், கொடுடா'' என் கண் இல்லையா என் அப்பன் இல்லையா நீ '' என அவன் பின்னே கெஞ்சி சரணடையும்போது போனால் போகிறது இந்தா'' என்று கடித்த பழத்தை அவளுக்குக் கொடுப்பான்.
யாராவது ஒருவர் வீட்டிலிருந்து நிறைய நெய் சர்க்கரை தின் பண்டங்கள் நிறைய கொண்டுவருவான். அவனுக்கு தான் எல்லா வீட்டிலும் செல்லமாயிற்றே.'' எல்லோரும் வாருங்கள் உங்களுக்கும் தருகிறேன்'' என்று அவர்கள் அத்தனைபேரும் ஆசையோடு ஓடி வர, கைக்கெட்டாத உயரத்தில் அதை மேலே வைத்து விட்டு, வேண்டுவோர் எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு தானே கொண்டுவந்தேன்'' என்று அவர்களை திண்டாட வைப்பான். ரொம்ப கெஞ்சினால் கொஞ்சம் எடுத்து தருவான்.
ஒரு பெண் ரொம்ப அழகானவள். உன்னைப்பார்த்தால் மான் மாதிரி இருக்கிறாய் என்று அவளைப் பற்றி எல்லோர் எதிரிலும் புகழ அந்தப் பெண்ணுக்கு உச்சி குளிர்ந்தது. அவனைச்சுற்றி அவன் சொன்னதெல்லாம் செய்தது. அருகில் அது வந்ததும் நறுக்கென்று அதை வலிக்க வலிக்க இடுப்பில் கிள்ளி விட்டு ஓடி விட்டான். அந்த பெண் வலியோடு ஓலம் இட்டுக்கொண்டு தன வீட்டுக்குள் ஓடியது. கேட்க வேண்டுமா அதன் தாய் முகத்தைத் தூக்கிக்கொண்டு இங்கே யசோதையிடம் முறையிட வந்துவிட்டாள்.''
''பிரேமா இங்கே வாயேன் உனக்கு ஒரு அழகான பூ நந்தவனத்தில் பறித்துக் கொண்டு வந்திருக்கிறேன்'' என்று அந்தப் பூவை அவளிடம் காட்ட அவள் பெருமிதத்தோடு ஓடிவந்தாள். மற்ற பெண்கள் '' கண்ணா, எங்களுக்கும் பறித்துக் கொண்டுவந்து தாயேன்'' என்று கெஞ்ச பிரேமாவின் அருகில் சென்று ''நீ கண்ணை மூடிக்கொள் உன் தலையில் நானே இதை அழகாக சூட்டுகிறேன்'' என்றான். அந்தப் பெண்ணும் அவனை நம்பி கண்ணை மூடிக்கொண்டு நிற்க ராதையின் தலையில் அந்தப் பூவை சூட்டிவிட்டு ஓடிவிட்டான். ஏமாந்த பிரேமா அவனைத் துரத்தினால் அகப்படுவானா?
இதையும் கேளப்பா. ஒரு நாள் ஒரு வீட்டில் விசேஷம் ஒரு பெண் தனது பிறந்த தினம் என்பதற்காக தானும் நீளமாக தலையைப் பின்னி, தாழம்பூ வைத்து மற்ற தோழிகளுக்கும் பின்னி எல்லோரும் தாழம்பூ மணம் கம கமக்க விளையாடிக் கொண்டிருந்தனர். வந்து விட்டான் இந்த ராக்ஷசன். அவன் கவனம் அவர்கள் பின்னல் மேல் சென்றது. ஒளிந்து கொண்டே அவர்கள் அறியாமல் பின் பக்கமாக வந்து அவர்களது பின்னலை பிடித்து இழுத்து விட்டு யார் என்று அவர்கள் பார்க்குமுன்பு ஓடிவிட்டான்.
இதுபோல் தான் ஒருநாள் கோவிலில் விசேஷம் என்று மைதிலி என்ற பெண் புதிதாக நீல வண்ணச் சேலை ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு வந்தது.'' எங்கே காட்டு உன் புடவை ரொம்ப புதிதாக அழகாக இருக்கிறதே என்று அதைப் பார்ப்பதுபோல் அருகே வந்து அந்த புடவையில் நிறைய சேற்றைப் பூசிவிட்டு ஓடினான். அழுது புலம்பி ஊரையே கூட்டிவிட்டது அந்தப் பெண். யசோதை எப்படியோ அந்த பெண்ணின் தாயை சமாதானம் செய்து அன்று சாயந்திரம் ஒருவாறு அனுப்பி வைத்தாள்
''அடடா பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத பிள்ளையாக இருக்கிறான் உன் வீட்டுக் கண்ணன். இவ்வளவு விஷமமா இந்த 6 வயதிற்குள். அதுசரி அவன் எங்கே சங்கீதம் படித்தான். ஒரு புல்லாங்குழலில் வெகு நன்றாக ஊதுகிறானே. நாங்கள் அதிசயிப்போம். எப்படி இந்த நந்தகோபன் பிள்ளை இவ்வளவு நன்றாக குழல் ஊதுகிறான் என்று. ''
''அதை ஏன் கேட்கிறீர்கள். எங்கள் குடும்பத்தில் இதுவரை யாருமே இப்படி ஒரு வாத்தியம் உபயோகித்ததில்லை. எதிலுமே இந்தப் பயல் கண்ணன் தானே முதல்வன். ஒருநாள் சில பயல்களோடு யமுனா நதிக்கரையோரம் ஒரு மூங்கில் கொத்தில் இருந்து ஒரு சில மூங்கில் கொண்டுவந்தார்கள். இவன் அதில் ஒன்றை எடுத்து வெட்டி, துளை போட்டு, ஊத ஆரம்பித்தான். எங்கிருந்தோ மந்திரம் போட்டது போல் இசை வெள்ளம்!!
எப்படி அவனுக்கு இது முடிந்தது என்று அடிக்கடி யோசித்தால் களைப்பு தான் வரும். இந்த ஊரே திரண்டு அவன் பின்னே ஓடும். கையில் இருந்த வேலையைப் போட்டுவிட்டு மந்திரத்தால் கட்டுண்டது போல் அல்லவோ அந்த பெண்களும், அவர்கள் தாய்மார்களும் மற்ற கோபியரும் இந்த ஊரில் அவன் வாசிக்கும் இடத்துக்கு ஓடுகிறார்கள்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பசுக்களும் கன்றுகளும், பறவைகளும் இதில் கூட்டு. எப்போது ஆரம்பிப்பான் எப்போது முடிப்பான் என்று யாருக்குமே தெரியாது. கண்ணன் பயல் ரொம்ப வினோதமானவன். அவன் செய்யும் விஷமங்களுக்காக தண்டனை கொடுக்கவேண்டும் என்று கோபமாக அவனருகில் செல்வேன். என்னவோ மாயம் செய்து விடுவான். ஒரு சிரிப்பில் நான் அவன் அடிமையாகி அவனை வாரி அணைத்து முத்தமிட்டு விட்டு திரும்புவேன். நானே இப்படி என்றால் யசோதையைப் பற்றி சொல்லவா வேண்டும்?.
உண்மையிலேயே யமுனையின் சல சல நீரோட்டத்தில், மாலைவேளையிலும், அதி காலை சிலு சிலு குளிரிலும் வித விதமான நறுமண போதையில், மரங்களின் அசைவில், செடி கொடிகளின் ஆட்டத்தில் தென்றல் புகுந்து வீச எண்ணற்ற மயில் மான் பசு கன்று ஒன்று சேர்ந்து இந்த கோபியர்களின் கூட்டத்திற்கு இடையே ஒரு மரக்கிளையில் அமர்ந்து அந்த கண்ணன் குழல் ஊதும்போது கண்ணை மூடி கேட்பேனே! ஆஹா! அந்த இன்பத்திற்கு மாறாக ''இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்''.
ஒரு பெண் அடிக்கடி வாயைத் திறந்து சிரித்துக்கொண்டிருந்தாள் , என்ன தோன்றியதோ அவனுக்கு. அருகே ஓடிக் கொண்டிருந்த ஆறு ஏழு பெரிய கருப்பு நிற கட்டெறும்புகளைப் பிடித்து அவள் வாயில் போட்டு விட்டான். பயந்துபோன பெண் அப்படியே துப்பிவிட்டு பேச்சு வராமல் உளறலோடு ஓடி விட்டது. எல்லாருமே கொல்லென்று சிரித்து விட்டார்கள்.
கண்ணன் குறும்புகளை பட்டியல் போட்டு காணாது. ஒரு புத்தகமே தனியாக எழுதவேண்டும். நான் சொல்வது எல்லாமே அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் தான்.
''ஏய், வாடி விளையாடலாம் என்று வீடு வீடாகப் போய் அந்த பெண்களை கூட்டி வருவான். ''நீ போடா எங்களுக்கு வேலை நிறைய இருக்கிறது என்றால் கூட விடமாட்டான். கையைப் பிடித்து தர தர என்று இழுத்துக் கொண்டு ஓடுவான். சின்னக் குழந்தைகளைக் கூட விடமாட்டான். எல்லோரோடும் அவனுக்கென்று ஒரு தனி விளையாட்டிருக்கும். மும்முரமாக பாதி விளையாட்டில் திடீரென்று காணாமல் போய்விடுவான். வீட்டுக்கு ஓடிவந்துவிடுவான். அவர்கள் அவனைத்தேடி கூட்டமாக வருவார்கள். அவன் எங்கோ ஒளிந்து கொள்வான்.
நம்ம கண்ணன் கிட்டே ஒரு சாமர்த்தியம் என்ன தெரியுமா? எல்லோருக்கும் நல்லவன்.
அம்மா, அப்பா, பாட்டி, அத்தை, சித்தி எந்த வீட்டிலும் அவன் நல்ல பிள்ளை என்ற பெயர் வாங்கும் திருட்டுப் பிள்ளை.
கூசாமல் பொய் சொல்வான். தான் செய்ததை அப்படியே அபாண்டமாய் அடுத்தவன் செய்தான் என்று நம்பும்படியாக நடிப்பான். ஆளுக்குத் தகுந்தபடி மன நிலையை அந்த வயதிலேயே தெரிந்து அதன் படி நடந்து அவர்களை தன் வழிக்குக் கொண்டுவரும் சமர்த்தன். என்ன சொக்குப் பொடி போடுவானோ தெரியாது கோகுலம் ஆயர்பாடி பிருந்தாவனம் பூரா அவன் ஆட்டுவித்தபடி ஆடாத பெண்ணே கிடையாது போங்கள் '' என்று நண்பனிடம் சொல்லி முத்தாய்ப்பு வைத்தார் நந்தகோபன் .
உண்மையிலேயே இன்றும் அந்த கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை தான் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லையே. பாரதியாரின் கற்பனையில் ஊறிய இந்த அற்புதப் பாடலை கீழே படியுங்கள். நான் மேலே எழுதியது ஒரு சிறு விளக்கம் தான்.
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)
4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)
5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற்
கீ
தம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)
6.
அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)
7.
விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)
8.
அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)
9.
கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத)
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSewLIyksgkDKifEmPojWNV2ym2gys7b zHjtcqKHfKw5YO1mKhz6Q
http://www.youtube.com/watch?v=eukHv4p6RwU
rajeshkrv
29th May 2015, 10:30 AM
சி.க தங்களது நீண்ட பதிலுக்கு நன்றி.
மறந்து போன சில நல்ல பாடல்களின் தொடர்ச்சி
சிஷ்யா என்று ஒரு படம் கார்த்திக் கவுண்டமணி காமெடி
ஜோவின் அக்கா ரோஷினி நடித்தது
யாரோ அழைத்தது போல்
https://www.youtube.com/watch?v=GrTF8ssly8k
நதியோரம் வீசும் தென்றல் (கார்த்திக் ராஜாவின் இசையில்)
https://www.youtube.com/watch?v=CAy5CjKBCJQ
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் .. வாலி ஐயாவின் வார்த்தை ஜாலம்
ரகுமான் லாவண்யா
https://www.youtube.com/watch?v=OR-yfekClP8
ஆதாமும் ஏவாளும் போலே வேண்டாம் வேண்டாம் .. இந்த வேண்டாம் கோரஸ் அப்பொழுது மிகவும் பிரபலம்
https://www.youtube.com/watch?v=yTr5APsr0Qg
kalnayak
29th May 2015, 10:46 AM
கிருஷ்ணா அவர்களே,
தீராத விளையாட்டுப் பிள்ளை... கலக்கிவிட்டீர்கள். என்னமாய் எழுதுகிறீர்கள். ஒரே மூச்சில் படித்து இதை எழுதுகிறேன். இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டை சுதா ரகுநாதன் பாடியது உங்களுக்காக.
https://www.youtube.com/watch?v=zLI9w1hTEqU
குமாரி கமலாவின் தீராத விளையாட்டுப் பிள்ளையும் இதோ:
https://www.youtube.com/watch?v=GrFQwZwKjBc
நீங்கள் கொடுத்த முறுக்குகளுக்கும் தேங்காய்க்கும் நன்றி.
chinnakkannan
29th May 2015, 11:07 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ராஜேஷ் நியூ ஓல்ட் ரேர் சாங்க்ஸிக்கு நன்றி..
ராஜ் ராஜ் சார்..ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே பாட்டுக்கு நன்றி..பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்..இந்த மாதிரி சாங்க்ஸ் போடும் போது உங்களது அனுபவங்கள் சுவாரஸ்யமானவை இருந்தால் எழுதுங்களேன்..
கிருஷ்ணா ஜி… பஹூத் அச்சா.. வெகு அழகாக அனுபவித்து தீராத விளையாட்டுப் பிள்ளை. எழுதியிருக்கிறீர்கள்..எப்போது எந்த சமயத்திலும் கேட்டாலும் அலுக்காத பாடல்.. காலங்கார்த்தால சுகானுபவத்திற்கு நன்றி..
கல் நாயக் கொடுத்த தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டுக்களும் ஜோர்
பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம்பாடச் சொல்லி வம்புக்கிழுப்பான்
எனக்கது தெரியாதென்றால் அவளை நெஞ்சுருகக் கிள்ளிவிட்டு
அவள் அழும் போது இதாண்டி முகாரி என்பான்
விஷமக்காரக் கண்ணன்…. இதோ அருணா சாய்ராமின் பாடல்….
https://youtu.be/muWreK9rmk8
*
காட்டு மிருகங்களெல்லாம் என்னைக்கண்டால் ஓடிவரும்
போகவேணும் தாயே தடை சொலாதே நீயே
மாடுமேய்க்கும் கண்ணே (கண்ணா) போகவேண்டாம் சொன்னேன்
https://youtu.be/TEh3vpbpfA4
*
kalnayak
29th May 2015, 11:34 AM
பூவின் பாடல் 18: "பூ மழையோ பொன் மழையோ பொன்னான வசந்தத்தின் அழைப்புகளோ"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தெலுங்கு டப் படமா தெரியலையே. பானு சந்தர் நடிச்சிருக்காக. தெலுங்கு நடிகை யமுனாவோ (என்னவோ?) நடிச்சிருக்காக. கேட்க நல்லாத்தான் இருக்கு. மேற்கொண்டு விவரம் தெரியலைங்க.
https://www.youtube.com/watch?v=eWmhrYpKVWc
gkrishna
29th May 2015, 11:58 AM
http://i254.photobucket.com/albums/hh101/dharmil16/31.jpg
இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்ன கண்ணன் யார் தெரிகிறதா ?
chinnakkannan
29th May 2015, 12:35 PM
[img]https://www.facebook.com/photo.php?fbid=643768685740559&set=a.126229200827846.23098.100003223017209&type=1[img]
பச்சப் புள்ள நெஞ்சுக் குள்ற
…பழகும் எண்ணம் என்னவோ
பச்சத் தோடு பச்ச சீலை
..பச்சப் பொட்டும் பேசுது
இச்சுப் போட்டு போன மச்சான்
..எப்போ வருவா னென்பதாய்
மிச்சம் மீதி வைத்தி டாமல்
.மீனு கண்ணு பேசு.து
*
https://youtu.be/xAWGS5tB9Lw
chinnakkannan
29th May 2015, 12:36 PM
ஒரு அழகிய வரைந்தபடம் போடலாம் எனப் பார்த்தால் வரமாட்டேன் என்கிறது.. ஸாரி..
யாருஙக்.. பாவனா?!
vasudevan31355
29th May 2015, 12:40 PM
பூவின் பாடல் 18: "பூ மழையோ பொன் மழையோ பொன்னான வசந்தத்தின் அழைப்புகளோ"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தெலுங்கு டப் படமா தெரியலையே. பானு சந்தர் நடிச்சிருக்காக. தெலுங்கு நடிகை யமுனாவோ (என்னவோ?) நடிச்சிருக்காக. கேட்க நல்லாத்தான் இருக்கு. மேற்கொண்டு விவரம் தெரியலைங்க.
கடலூர் நண்பா! சென்னை நண்பா!:)
http://3.bp.blogspot.com/-KTtcso70w_M/Uv4SABP1OhI/AAAAAAAAHy8/yoRxFswWR74/s1600/Arasiyalvathi.jpghttp://i1.ytimg.com/vi/KB2ueTyv4Wc/mqdefault.jpg
அந்தப் படத்தின் பெயர் 'அரசியல்வாதி'. நாயகி யமுனாதான். 1992-இல் தெலுங்கில் இருந்து வந்த மொழி மாற்றுப் படம். திரைக்கதை, இயக்கம் கே.ரங்காராவ். ஆனால் ஒரிஜினல் தெலுங்குப் படத்தின் பெயர் 'உதயமம்'. இது 1989 இல் வெளிவந்தது. தமிழாக்கம் மூன்று வருடங்கள் சென்றே. இசை ராஜ்-கோட்டி. பக்கா மசாலா. தெலுங்கில் கே.எஸ்.சந்திரசேகர் என்பவர் மியூசிக்.
தமிழுக்கு வசனம் ஆரூர்தாஸ். நீங்கள் பதிந்த அந்த அழகான பாடலை இயற்றியவர் கவிஞர் முத்துலிங்கம். பாலாவும் சித்ராவும் பாடியிருப்பார்கள். தெலுங்கில் பாலாவிற்கு பதில் ஜேசுதாஸ் பாடியிருப்பார்.
தெலுங்கிலும் கேட்க இனிமைதான்.
'புவ்வுல தோ... நவ்வுல தோ' என்று தெலுங்கில் தொடங்கும்.
இந்தாங்க... டவுன்லோட் பண்ணி கேளுங்க.
http://supermp3.in/telugu_download.php?letter=u&movie=Udyamam%20Mp3%20Songs&song=Puvvula%20Tho%20Navvula%20Tho&down=aHR0cDovL3NvbmdzcGs4LmNvbS9kYXRhL1RlbHVndS9VZ HlhbWFtL1B1dnZ1bGElMjBUaG8lMjBOYXZ2dWxhJTIwVGhvW0d hbmEuUEtdLm1wMw==
'அரசியல்வாதி'
http://i.ytimg.com/vi/8kYCdjBRAHU/maxresdefault.jpg
http://i.ytimg.com/vi/ROD4fxZkW00/maxresdefault.jpg
http://i.ytimg.com/vi/UQzSbiR3UdE/maxresdefault.jpg
http://i1.ytimg.com/vi/sY2hJ4W1bM0/maxresdefault.jpg
chinnakkannan
29th May 2015, 01:02 PM
*
பாட்டியின் டிரங்குப் பெட்டியினுள்
..பொன்னின் நிறத்தில் ஒருபுடவை
காட்டன் துணிதான் என்றாலும்
..காண்பாள் திறந்தே எப்பொழுதும்
நாட்டம் ஏனென நேற்றவளை
..நயமாய்க் கேட்க வெட்கித்தான்
’வேட்கை யுடனே உன் தாத்தா
..முதலில் தந்தார்” என்றாளே..
*
https://youtu.be/cepwzi21AkE
chinnakkannan
29th May 2015, 01:07 PM
***
*
வாய்ப்புக் கிடைக்குமென
எதிர்பார்க்கவில்லை..
வழியில் தான் சந் தித்தேன்..
சற்றே குண்டாய் இருக்கிறான்..
மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
கண்களில் சற்றே சுருக்கம்..
இரண்டு குழ ந்தைகளாம்..
பெயர் விஜய் வினிதாவாம்..
என் பெயர் இல்லை..
மனைவி சுகமாம்..
வேலைபரவாயில்லையாம்..
குடும்பம் ஊரிலாம்..
ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
கேள்விகளுக்குப் பதில் வந் த்து
கேள்விகள் வரவில்லை..
நானும் சொல்லவில்லை..
சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
கைகுவித்தேன்..
அவனும் கைகுவிக்கையில்
தெரிந்த்து
நான் கொடுத்த கடிகாரம்....
*
https://youtu.be/qRfefwEmFxk
chinnakkannan
29th May 2015, 01:26 PM
ச்ச்சும்மா ச்சும்மா பழைய பாட்டே தான் கேக்கமுடியுமா என்ன..அஃதாவது பழைய ஜொள் போவதும் புதிய ஜொள் வருவதும் உலகின் நியதி..
கொஞ்சம் வேதாந்தமாப் பார்த்தா – சின்ன வயசுலயும் ஜொள் வருது..போற வயசுலயும் வருது..
*
எவ்வளவோ பெரிய கணித மேதைக்கும் புரிபடாத கணக்கு ஒன்று இருக்கிறது..என்னவாம்..
அதற்கு முன்:
அவன் அழகன் பணக்காரன் தினமும் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக் கோப்பாய் வைத்திருப்பவன்.. என்னைப் போலுண்டா எனக் குட்டி அகங்காரம் மனதில் உண்டு அவனிடம்..
அவள்.. பார்ப்பவர் கண்களைக் கவரும் பேரழகி..திடீரென்று பிரம்மனின் மனதுக்குள் தோன்றிவிட்ட்தாம் –இதற்கு முன்னால் படைத்த்தை விட மிகச் சிறந்த்தாய்ப் படைக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ஓவியம்..அவளுக்குள்ளும் கொஞ்சம் தற்பெருமை உண்டு..தான் சிறந்த அழகி என்று..
ஆனால் இருவரைப்பார்த்தும் ஒன்று கெக்கெக்கே எனச் சிரிக்கிறது.. அது தான் காலம்..காலத்தின் கணக்கில் இறுதி விடையாக வருவது..ம்ம் மூப்பு அல்லது முதுமை..முதுமை மனிதன், மனுஷியின் ஆணவம் தொபுக்கடீர் எனத் தலைகுப்புற விழும் இடம்.. அப்போது என்ன செய்ய வேண்டுமாம்..
இந்தப் பாட்டு அதைச் சொல்கிறது..
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
நாலு அடி தொடர்ந்து நடக்க முடியாமல் மூச்சு வாங்கும்..சின்னதாய் ஒரு கம்பை வைத்துத் தான் நடக்க வேண்டும்.. லொக் லொக் என இடைவிடாத இருமல் வர உடல் நொந்து, மூச்சு விடக் கஷ்டப் பட்டு இருக்கும் போது என்னவாகும்.. தொண்டையிலிருந்து பொங்கி வரும் வாந்தி...
அந்தளவுக்கெல்லாம் ஆவதற்கு முன், ஓ அகங்காரம் கொண்ட மனுஷ மனுஷியே...திருவையாறிலிருக்கும் ஐயாரப்பனை.. ஐயாறு என்று அழைத்துக் கடைத்தேறுவாயாக.. ம்ம் பாட்டு நல்லா இருக்கு இல்லையா..
*
So நாம கடைத்தேறனும்னா ப.பா வே வேணும்னு அடம்பிடிக்கக் கூடாது..அதையே இந்தக்கால க் கவிஞர் பெட்ரோ மாக்ஸ் லைட்டே தான் வேணுமா எனக் கேட்கிறார்!
https://youtu.be/eY3V9C7gxbc
*
ஜூகல் பந்தியாய் பழைய பாட்..
https://youtu.be/bC8JBGjbtWo
எஸ்கேப்ப்ப்:)
kalnayak
29th May 2015, 02:02 PM
வாசு, வாசு... விவரங்களை பக்கெட் பக்கெட்டா அள்ளி கொடுத்து கொல்லுறீங்களே!!! உங்களுக்கு எப்பிடிதான் நன்றி சொல்றது?
புள்ளி வச்சா கோலம் போடறவங்களை பார்த்திருக்கேன். இப்பிடி பாட்டை சொன்னால் வரலாறையே கொண்டுவருவதில் உங்களை மட்டும்தான் பார்க்கிறேன். வேற வழியில்லை எனக்கும். இந்தாங்க பக்கெட் பக்கெட்டா நன்றிகள். 'அரசியல்வாதி' தெலுங்கு பாட்டு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் கேட்கிறேன்.
kalnayak
29th May 2015, 02:10 PM
சி.க.,
இன்னைக்கு என்ன ரொம்ப குஷி மூடோ? கவிதைகளும் காதல் பாட்டுகளோடு வந்துனுகீது?
பூப்பறிக்க நீயும் - நல்ல ஜாலி பாட்டு.
அத்தானின் முத்தங்கள் - அருமை அருமை. பிரமாதம்-னு நானும் சொல்லணுமோ?
மறக்கமுடியவில்லை - எனக்கு என்னவோ அவ்வளாவாக பிடிக்கவில்லை, எஸ்.பி.பி. குரல் வளமாக்குகிறது. இது பாலச்சந்தர் இயக்கிய ஜாதிமல்லி படம்தானே. பார்த்திருக்கேன். பாடல் எப்பவோ மறந்து போச்சி.
அப்புறம்தான் உங்க ... பழைய பாட்டு கேட்பவர்களுக்கு அறிவுரை சொல்லி பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் பாட்டு போட்டீர்கள். சரி அப்புறம் எதற்கு சூப்பரான கண்ணாலே பேசி பேசி பாட்டை போட்டு தகர்க்கின்றீர்கள்?
kalnayak
29th May 2015, 04:53 PM
பூவின் பாடல் 19: "வானம் தூவும் பூமழையே, பூமி பூத்த பொன்மலரே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~
இங்க பாருங்க ஒரு அருமையான பூவின் பாடல். படத்து பேரு 'புன்னகை பூவே'ங்க.நாயகன் நந்தாவும் நாயகிரேகா வேதவ்யாஸ்-ம் ஆடியிருக்காங்க. 'பனித்துளிகள் புல்லில் வடிகின்றதே. தேன்துளிகள் பூவில் வடிகின்றதே' எனக்கு இந்த வரிகளை கேட்கிறப்போ 'என்னமோ போங்க'ன்னுதான் சொல்லத் தோணுது. ஹரிஷ் ராகவேந்திராவும், கோவை ரஞ்சனியும் பாடியிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, தான் ராசாவோட புள்ளைதான்னு இதுல காட்டியிருக்கிறாருங்க.
https://www.youtube.com/watch?v=7RbXf9FJe6o
kalnayak
29th May 2015, 05:09 PM
பூவின் பாடல் 20: "வானில் பூமழை சிந்தியதோ, வெள்ளை மல்லிகை துள்ளியதோ"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~
இதுவும் அருமையான பூமழைப் பாடலுங்க. எஸ்.பி.பி. மற்றும் ஜானகி அம்மா பாடியிருக்காங்க. இது 2010-ல் வெளிவந்த இதய கீதம் படமாம். 1950-ல் வந்த இதய கீதம் படம் ரொம்ப புகழ் பெற்றது போல. அதைப்பற்றி நம்ம கலைவேந்தன் அவர்கள்தான் விவரம் சொல்லணும். நெட்ல 1950 படத்துக்கு நெறைய விவரம் இருக்கு. 2010-ல் வந்த இந்த படத்துக்கு அவ்வளவு விவரம் நெட்-ல கிடைக்கலை. வெறும் ஆடியோ மட்டும் கேட்டு ரசிச்சிக்கோங்க.
https://www.youtube.com/watch?v=FledBRlUSQ4
vasudevan31355
29th May 2015, 06:05 PM
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~
1950-ல் வந்த இதய கீதம் படம் ரொம்ப புகழ் பெற்றது போல. அதைப்பற்றி நம்ம கலைவேந்தன் அவர்கள்தான் விவரம் சொல்லணும்.
கல்,
ஆனாலும் இவ்வளவு குறும்பு ஆகாது.:) கலையின் வயதை அவரது வாயாலேயே சொல்ல வைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு 'லதா' ரேஞ்சுக்கு செயல்படுவது என் போன்ற மண்டூகத்துக்குக் கூட நன்றாகப் புரிகிறது.
அவர் கூட ராஜா ஹரிச்சந்திரா பற்றி முழு விவரம் கல்நாயக்கிற்குத் தெரியும் என்று புகுந்து புறப்படப் போகிறார் பாருங்கள்.:)
ஹய்யா! செம ஜாலி! வயசுச் சண்டையை பார்ப்பதில்தான் எத்தனை சுகம்!:)
vasudevan31355
29th May 2015, 06:13 PM
கல்ஸ்,
அதிகம் கேட்காத நடுத்தர மற்றும் புதிய பாடல்களை பூவின் பாடல்களாகத் தந்து ரசிக்க வைக்கிறீர்கள். நிஜமாகவே மண்டையை உடைத்துக் கொண்டுதான் இப்படிப்பட்ட பாடல்களை தெரிவு செய்ய வேண்டும். அந்த தெளிவு தங்களுக்கு அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சுவை தருகிறது. முக்கியமாக இதய கீதம், புன்னகைப் பூவே பாடல்கள்.
வித்தியாசப் பாடல்களுக்கு என் வியந்த நன்றிகள். (கடலூர் வாசியா கொக்கான்னானாம்)
kalnayak
29th May 2015, 06:35 PM
கல்,
ஆனாலும் இவ்வளவு குறும்பு ஆகாது.:) கலையின் வயதை அவரது வாயாலேயே சொல்ல வைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு 'லதா' ரேஞ்சுக்கு செயல்படுவது என் போன்ற மண்டூகத்துக்குக் கூட நன்றாகப் புரிகிறது.
அவர் கூட ராஜா ஹரிச்சந்திரா பற்றி முழு விவரம் கல்நாயக்கிற்குத் தெரியும் என்று புகுந்து புறப்படப் போகிறார் பாருங்கள்.:)
ஹய்யா! செம ஜாலி! வயசுச் சண்டையை பார்ப்பதில்தான் எத்தனை சுகம்!:)
வாசு,
கலைவேந்தன் என்கிட்டே ஏற்கனவே ஒத்துக்கொண்டுவிட்டார், நான் அவரை விட வயதில் மிக மிக சிறியவன் என்று (அந்த பூக்கள் விடும் தூது பற்றி நீங்க சொன்னீங்க இல்லையா. அப்பவே.) அதுவும் சரிதான் நீங்கள் சொல்வது போல ராஜா ஹரிச்சந்திரா பற்றி விவரம் என்னிடம் கேட்பார்தான். ஏனென்றால் நான் நெட்டில் நன்றாக தேடி, கிடைக்கும் விவரத்தை கொடுத்து விடுவேன் என்று அவரும் புரிந்து கொண்டுள்ளார். மற்றபடி ஒரு முறை சொல்லியிருந்தேன் இன்னும் அவர் பிறக்கவே இல்லையென்று. அதற்குதான் பதில் இல்லை. வாஸ்தவம் தானே. பிறந்திருந்தால் பதில் கொடுத்திருப்பார் அல்லவா?
அப்புறம் உங்களை நீங்களே மண்டூகம் என்றால் உங்களுக்கு நான் மண்டூகத்தின் மண்டூகம் ஆவேன்.
அப்புறம் பாடல்கள் தேர்விற்கு பாராட்டியதற்கு நன்றி. நானும் கடலூர் வாசி என்பதில் பெருமைதான். தமிழும் கற்றுக்கொடுத்து, பிழைக்கவும் வழி செய்து கொடுத்த ஊர் அது. பிழைப்பதற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் தமிழில் எழுதுவதில் ஒரு பரம திருப்தி. எனது கடலூர் வருகை தற்சமயம் மிகவே குறைந்துள்ளது. ஏதாவது விஷேசம் என்றால் வருவேன். பார்க்கலாம். அதற்கு நீங்கள் கிடைக்க வேண்டுமே!!!
vasudevan31355
29th May 2015, 06:52 PM
கல்நாயக்,
நீங்கள் பதிந்திருந்த பாடலின் படம் 'இதய கீதம்' தான். இதைப் பற்றியும் எனக்குத் தெரிந்தததை தங்களுக்குத் தந்து விடுகிறேன்.
இந்தப் படம் நீங்கள் குறிப்பிட்டபடி 2010-இல் வெளிவந்ததல்ல. இதுவும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்த படம் தான். நாகேஸ்வரராவின் புதல்வர் நாகார்ஜுனாவும், அவரது துணைவியார் அமலாவும் ஜோடியாக நடித்த படம்.
http://myshortfilms.in/wp-content/uploads/2014/10/prema-yuddham-1990-telugu-full-movie-nagarjuna-amala-mohan-babu.jpg
தெலுங்கில் இப்படம் 1990 மார்ச்சில் வெளிவந்தது. அதே வருடம் தமிழில் 'இதய கீதம்' என்று டப் செய்யப்பட்டு வந்தது. தெலுங்கில் இப்படத்தின் பெயர் 'பிரேமா யுத்தம்'
நாகார்ஜுனன், அமலா ஜோடி தெலுங்கில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்த சமயம். அவர்களுக்குள் காதல் மலர்ந்த பருவமும் கூட. இப்படத்திற்கு இசை ஹம்சலேகா. 'பருவ ராகம்' படத்திற்கு இசை அமைத்து எல்லோரையும் தன் பக்கம் திரும்ப வைத்தாரே! அவரேதான்.
நீங்கள் பதிந்திருந்த பாடலை மறுபடி ஒருமுறை நீங்களே கண்ணை மூடிக் கொண்டு கேளுங்கள். 'டபக்'கென்று அப்பாடலுக்கு இசை ஹம்சலேகா என்று கண்டு பிடித்து விடுவீர்கள்.
நான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் இப்படத்தை அப்போதே கேசட்டில் பார்த்து விட்டேன். 'இதய கீதம்' படத்தை மூன்று முறைக்கு மேல் பார்த்து விட்டேன்.
பாடல்கள் அருமை. அமலா இளமை. நாகார்ஜுனா வளமை. நான் அப்போ ரொம்ப விரும்பிப் பார்த்த படம். காதல் பிளஸ் ஆக்ஷன் மூவி. அமலா நாகர்ஜுனனுடன் படு நெருக்கம். ரொம்ப கிளாமரா இருப்பார். (இந்தப் பாடலின் துவக்கத்திலேயே நான் சொல்வது உண்மை என்று உணருவீர்கள்)
ராஜேந்திர சிங் பாபு என்பவர் இப்படத்தின் இயக்குனர். கிரிபாபு, மோகன்பாபு என்று எல்லா பாபு வில்லன்களும் உண்டு.
நீங்கள் தமிழில் தந்த 'வானில் பூ மழை சிந்தியதோ' என்ற அந்த அருமையான பாடலை இப்போது நான் தெலுங்கில் தருகிறேன். உங்கள் குறை இப்போது தீர்ந்து போகும். சி.கவும் குஷி மூடில் இருக்கிறார். அவரும் அமலாவைப் பார்த்ததும் அடங்குவார்.
இதோ
'சுவாதி முத்யபு ஜல்லுலலோ' (தமிழில் மொழி மாற்றத்தில் 'வானில் பூ மழை சிந்தியதோ')
https://youtu.be/KB0YBOXYUg8
kalnayak
29th May 2015, 07:17 PM
வாசு அற்புதம் அற்புதம்.
எனக்கு வாஸ்தவமான ஒரு சந்தேகம் வருது - நீங்க ஒரு எந்திரரோ-ன்னு!!! யப்பா என்ன டேட்டா, என்ன டேட்டா, 'சுவாதி முத்யபு ஜல்லுலலோ' பார்த்தாகி விட்டது. பக்கா தெலுகு படமாக இருக்கிறது. நீங்கள் சொன்ன அமலா நாகார்ஜுன் நெருக்கம் உண்மை. (சி.க. குஷி நிச்சயம் தொடரும். சந்தோஷம்தானே சி.க., நமது வாசு இருக்க என்ன கவலை. குஷி குஷிதான்.) உண்மைதான் என் குறை தீர்ந்து போனது அந்த பாடலின் படமான 'இதய கீதம்' பட விவரம் தெரிந்ததால். தெலுங்கிலும் பாடல் நன்றாக இருக்கிறது. தமிழிலும் அப்படியே. ஹம்சலேகா இசை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
vasudevan31355
29th May 2015, 08:04 PM
நன்றிகள் கல்நாயக்.
நான் இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மற்ற திரிகளில் பங்கு பெற்றதை விட மதுர கானங்களில் தாங்கள் அதிகம் சந்தோஷத்துடன் பங்கு பெற்றதாக சொல்லியிருந்தீர்கள். நிஜமாகவே எனக்கு மிகப் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மதுர கானங்கள் அந்த அளவிற்கு தங்களை ஈர்த்தது ஒரு புறம் இருந்தாலும் தாங்கள் பாகம் மூன்றின் நாயகராக சி.கவுடன் சேர்ந்து சற்று டல்லடித்த இந்தத் தேரை வடம் பிடித்து இழுத்து அற்புத பங்களிப்பைத் தந்தீர்களே! அதை என்னால் மறக்க இயலாது. அதற்காக மீண்டும் என் நன்றிகள். சி.கவுக்கும்தான். பிள்ளைகள் படிப்பின் காரணமாகவும், சில சொந்த அலுவல்கள் காரணாமாகவும் நான் அப்போது ஒன்றிரண்டு மாதங்கள் முழுமையாக பங்கு பெற இயலாமல் போனது. இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி விட்டேன். தற்போது கிருஷ்ணாவும் சேர்ந்து கொண்டு ஜமாய்க்கிறார். ராஜ்ராஜ் சாரின் ஜுகல் பந்தி பங்களிப்பும் சுவை குன்றாத ஜோர். ராஜேஷ் அரிய பாடல்களுடன் பின்னுகிறார். ராகவேந்திரன் சாரும். இன்னும் பெயர் விட்டுப் போன நண்பர்களும் தங்கள் ஒத்துழைப்பை மிகச் சிறப்பாக நல்கி வருகிறார்கள். அனைவருக்கும் மிக்க நன்றி!
vasudevan31355
29th May 2015, 08:08 PM
வாசு,
பிழைப்பதற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை.
ஒருபக்கம் உங்கள் பதிவைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் வாஸ்தவமான உண்மை. தமிழன் ஏமாளியே! எங்கும் அவன் ஏயக்கப்படுவான். சொன்னா மாதிரி பிழைப்புக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
vasudevan31355
29th May 2015, 08:10 PM
வாசு,
எனது கடலூர் வருகை தற்சமயம் மிகவே குறைந்துள்ளது. ஏதாவது விஷேசம் என்றால் வருவேன். பார்க்கலாம். அதற்கு நீங்கள் கிடைக்க வேண்டுமே!!!
நீங்கள் கடலூர் வரும் போது சொல்லுங்கள். அடுத்த நிமிடம் நான் அங்கு இருப்பேன் எந்த வேலை இருப்பினும். உங்களை சந்திக்கும் மகிழ்ச்சியை விட வேறு என்ன இருக்கிறது நடிகர் திலகத்தின் அங்க அசைவுகளை ரசிப்பதைத் தவிர.
chinnakkannan
29th May 2015, 08:57 PM
கல் நாயக் வாசு.. இருவரும் பட்டையைக் கிளப்புகிறீர்கள்..
கல் நாயக் இன்னிக்கு குஷி மூடாக எழுத நினைத்தேன்..ஆனால் எழுதாமல் முன் பு எழுதிய பாட்டுக்களையே வைத்து எழுதிவிட்டேன்.. கம்ப்யூட்டரில் இருக்கும் படத்தை எப்படி அப்லோட் செய்வது வாசுஜி..
ஹப்புறம்.. பூமழை பாடல்களும் வெரி நைஸ்.. முதல் பாடல் கேட்டேன் நாகார்ஜூன் பாட் கேக்க வேண்டும் பட் அந்த ப் படம் பார்த்த நினைவு.. நாகார்ஜூன் அமலா திருமணத்துக்கு முன் எடுத்த படம் தானே? ஒரு விளம்பர ஏஜன்ஸியில் சேருவார் நாகார்ஜூன்.. செப்பலுக்கான ஒன் லைன் ஸ்லோகன் சொல்லச் சொல்லுவார் அமலா..
Where ever you go I am there என்பார் நாகார்ஜூன்.. சொர்ண புஷ்பம் சற்றே சிவந்து முறைக்க புன்னகையுடன் செப்பலைச் சொன்பேன் என்பார் நாகார்ஜுன் இதானா எனத் தெரியவில்லை..
வாசு ஃபோனில் கிருஷ்ணாவுக்கும் ஊக்க டானிக் கொடுத்து வாருங்கள்..அவருடைய எழுத்துக்களும் சொர்ண புஷ்பத்தின் கன்னத்தைப் போல பாலீஷ் போட்ட ஆப்பிளாய்ப் பளபளக்கின்றன!
கல்ஸ் நீங்கள் இருப்பது சென்னையா வேறெங்கு..
வாசு .. பாலும்பழமுமிற்கு உங்களது பின்னூட்டம் ஜோர்.. ஆக்சுவலாகப் பார்த்தீர்களென்றால் - யாருமே சொல்லாதது- அமெரிக்கையாய் மெத்த ப் படித்த டாக்டராக வெகு அழகாக ந.தி நடித்திருப்பார்... சரோஜாதேவி வெகு பொருத்தமென்றாலும் இழுத்துப் போர்த்தி வருவது கொஞ்சம் கோபம் தான்..திடீரென கடைசியில் தங்கையை அவர் யார் நாகேஸ்வர ராவிற்கு மணம் செய்து கொடுப்பது மட்டுமே இடிக்கும்..தொழில்பாட்டுகளில் வரும் என நினைக்கிறேன் - எழுதினால்.
அந்த எம்.ஆர்.ராதா சொல்லும் சீன்..அது சரி..டாக்டர் நா நர்ஸ் கல்யாணம் பண்ணிக்கணும் நிஜம்மாகவே நன்றாக இருக்கும்.. நான்பேச நினைப்பதெல்லாமில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை போன்ற வரி பாடல்களில் தென்படுவது வெகு அபூர்வம்.. ம்ம் ஆனால் அதைப் படிக்க நிறையவே வெகுபின்னால் போக வேண்டி இருந்தது.. நன்றுங்காணும்.. கீப் இட் அப்..:)
இன்னிக்கும் வெய்யில் தான்..தாங்கவே முடியவில்லை..வீட்டில் இருந்தாலும் கூட கண்ணைக் கட்டுகிறது ஹ்யுமிடிட்டி.. என்னதான் ஏஸிக்குள் இருந்தாலும் ஒரு நொடி அனல் காற்று பட்டால் உடம்பு அமலாவாகப் போகிறது..ஸாரி டைப்போ..அலமலத்துப் போகிறது!
chinnakkannan
29th May 2015, 09:00 PM
//ராஜ்ராஜ் சாரின் ஜுகல் பந்தி பங்களிப்பும் சுவை குன்றாத ஜோர். // அதான் அவர்கிட்ட ஒரு தொடர் வேற கேட்டிருக்கேனே..தருவார்..இல்லீங்களா..
vasudevan31355
29th May 2015, 09:06 PM
கல்நாயக்,
நாகார்ஜுனன், அமலா நடித்து ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த 'சிவா' தெலுங்குப்படம் (அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பு) தமிழில் 'உதயம்' என்ற பெயரில் வெளியாகி பட்டை கிளப்பி ஓடியது தங்களுக்குத் தெரியும். இதன் விளைவே நாகார்ஜுனாவும், அமலாவும் நிறையப் படங்களில் இணைந்தது. காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. 'உதயம்' படத்திற்கு இசை நம் 'இசைஞானி' பாடல்கள் ரொம்பப் பிரபலம். தெலுகு 'டப்' பாடல்கள் போலவே இராது. இந்தப் படம் 'இதய கீதம்' படத்திற்கு முன்னமேயே வெளியாகி விட்டது. அதாவது 1989 அக்டோபரில் 'சிவா' வெளியானது. அதே வருடத்தில் உதயமும் தமிழில் வந்து விட்டது. இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. இதே வருடம் சூப்பர் ஸ்டார் நடித்த 'சிவா' தமிழ்ப்படமும் வெளியானது என்று நினைவு. ஆக தெலுங்கிலும், தமிழிலும் 'சிவா' என்ற பெயரில் தனித்தனியாக படம் வெளியாயின. அதனால்தான் நாகர்ஜுனன் நடித்த 'சிவா' தெலுங்குப் படத்தை ரஜினியின் 'சிவா' படத்தால் அதே பெயரில் வெளியிடாமல் 'உதயம்' என்ற பெயரில் வெளியிட்டிருப்பார்கள் என்பது என் கணிப்பு. நாகர்ஜுனன் படம் 'ஷிவா' (shiva) என்றே உச்சரிக்கப்பட்டது. ரஜினியோடது (siva). இது அமிதாப்ஜி நடித்த 'கூன் பஸினா' இந்திப் படத்தின் ரீமேக். அமிதாபிற்கு ஜெமினி மகள் ஜோடி. தமிழில் ரஜினிக்கு ஷோபனா.
அது மட்டுமல்ல. இந்த தம்பதி ஜோடி கிராயி தாதா, நிர்ணயம், சின்ன பாபு போன்ற படங்களிலும் இணைந்து நடித்து இளசுகளை சுண்டி இழுத்தனர்.
http://i.ytimg.com/vi/PiQIhtfeyes/maxresdefault.jpg
இதே தம்பதியரின் குழந்தை அகில் 'சுட்டிக் குழந்தை' படத்தில் நடித்து தன் தாத்தா, அப்பா, அம்மா, பெயரைக் காப்பாற்றியது. தபுவும், நாகார்ஜுனாவும் இதில் நடித்திருந்தார். இது baby's day out ன் தழுவல் என்று அனைவருக்கும் தெரியும்.
vasudevan31355
29th May 2015, 09:11 PM
udhayam (1989)
http://i80.servimg.com/u/f80/18/11/56/22/udhaya10.jpg
http://i80.servimg.com/u/f80/18/11/56/22/udhaya11.jpg
chinnakkannan
29th May 2015, 09:12 PM
என்னமோ போங்க 15
கண்ணன், யசோதை, நந்தகோபர் பற்றிய தகவல்களெல்லாம் பாகவதத்தில் நிறையவே வரும் என நினைக்கிறேன்..
ஆனாக்க நந்தகோபரும் யசோதையும் டூயட்டா கிஷ்ணாவைக் கொஞ்சியிருக்காகளா..தமிழ் சினிமாவில மட்டும் தான் கொஞ்சுவாங்க போலருக்கு..என்னமோ போங்க
மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு
செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு
*
https://youtu.be/gGis1r5R2nc
டி.எம்.எஸ் சூலமங்கலம் ராஜலஷ்மி ( குரல் தனியாகத் தெரியும்) ஹீரோ (யாருக்கு வேணும்) ஹீரோயின் யார்..!
vasudevan31355
29th May 2015, 09:20 PM
//திடீரென கடைசியில் தங்கையை அவர் யார் நாகேஸ்வரராவிற்கு மணம் செய்து கொடுப்பது மட்டுமே இடிக்கும்//
நாகேஸ்வரராவ் எங்கிருந்து வந்தாரய்யா? ஒரு வேளை இன்று நிறைய நாகார்ஜுனனைப் பற்றி பதிவுகள் போட்டதால் அவர் அப்பா ஞாபகத்தில் 'பாலும் பழமும்' சாப்பிட்டீர்களோ?(அந்த மனிதருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.):)இல்லை அமலா என்றதும் அனைத்தையும் மறந்துடுவீர்களோ?:)
அது மலையாளக் கரை பிரேம் நஸீர் அய்யா பிரேம் நஸீர்.
vasudevan31355
29th May 2015, 09:35 PM
//ஹீரோ (யாருக்கு வேணும்)//
அடப் பாவி மனுஷா!:) நாங்க விட்டுடுவோமா? அது ராஜ பாண்டியன். நடிகர் திலகம் நாடக மன்றத்தில் முக்கியமான ஒரு நடிகர். 'தங்கப் பதக்கம்' நாடகத்தில் மகன் ரோல் செய்தவர்
'பாரத விலாஸ்' படத்தில் நடிகர் திலகத்தையும், 'சி.ஐ.டி' சகுந்தாலாவையும் இணைத்து படம் பிடித்து, நடிகர் திலகத்திடம் பணம் கறக்கும் வில்லன். நாலணா திருவிழா கண்ணாடி போட்டு காமெராவை தோள்களில் தொங்க விட்டிருப்பார். பாவம் இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
சரி! இப்படிச் சொன்னால் ஈஸியாக கேட்ச் செய்து விடுவீர்கள். உங்கள் வழிக்கே வருகிறேன்.:)
என் ராட்சஸி பாடும் அதியற்புத பாடல் 'மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும் நியூ வேவ் கேர்ள்' பாடலில் இவரைப் பாருங்கள்.(பாடல் முடியும் போது சூயிங்கம் மென்றபடி என்டர் ஆவார்). 'பாரத விலாஸி'ல் சகுந்தலாவின் காபரே. இப்போது வாயெல்லாம் பல்லாக இருக்குமே.:) அதான் எங்க சி.க.
சி.க.
இன்னைக்கு முழுக்க ஒரு மார்க்கமாவே இருக்கீக. என்ன சமாச்சாரம்? ம்..
vasudevan31355
29th May 2015, 09:44 PM
சி.க
அதே 'தாலாட்டு' படத்தில் ராஜபாண்டியனுக்கு சௌந்தர்ராஜன் ஒரு அருமையான பாடல் பாடுவார். கண்களில் நீர் வந்து விடும் கேட்டால்.
'விளக்கில்லாமல் கணக்கெழுதி' என்று தொடங்கும் அந்த பாடல் மனதை உருக்கும். வரிகள் பிரமாதம். ராஜேஷ் தரவேற்றுவார்.:)
இன்னொரு வருத்தப்படக் கூடிய செய்தி.
நீங்கள் பதிந்த 'மல்லிகைப் பூ போட்டு' பாடலின் நாயகன், நாயகி இருவருமே தற்கொலை செய்து கொண்டவர்கள். விந்தையாக இல்லை?
vasudevan31355
29th May 2015, 09:47 PM
//ஹீரோயின் யார்..!//
https://oldmalayalamcinema.files.wordpress.com/2012/03/vijayasree-in-lanka-dahanam.jpg?w=665
http://i.ytimg.com/vi/9oCR6E9LRgY/hqdefault.jpg
விஜயஸ்ரீ. (வரதப்பா... வரதப்பா கஞ்சி...)
'பாபு'வில் தலைவர் ஜோடி.
http://matineestars.com/malayalam/actress/vijayasree/vijayasree-1.jpg
vasudevan31355
29th May 2015, 09:50 PM
நஸீருடன் விஜயஸ்ரீ
http://www.thehindu.com/multimedia/dynamic/01792/17TVKZ_1792855f.jpg
rajeshkrv
29th May 2015, 10:21 PM
hello ji
vasudevan31355
29th May 2015, 11:03 PM
vanakkam ji
chinnakkannan
30th May 2015, 01:30 AM
வாசு சார்..
அது மலையாளக் கரை பிரேம் நஸீர் அய்யா பிரேம் நஸீர்.//இன்னைக்கு முழுக்க ஒரு மார்க்கமாவே இருக்கீக. என்ன சமாச்சாரம்? ம்.// வீக் டேஸ்ல ரொம்ப எக்கச் சக்க வொர்க் அண்ட் ப்ராப்ளம்ஸ் ஃபேஸ் பண்ணி சால்வ் பண்ணிண்டு இருந்தேனா..ஆட்டமேட்டிக்கா வீக் எண்ட்ல ஒடம்பு ஒரு அசத்து அசத்தி களைப்பா இருந்துச்சா..அதான்..புதுசாவும் ஒண்ணும் பாட் எழுதத் தோணல.
இப்பத் தான் ‘மாஸ்” பார்த்துட்டு வந்தோமா (ரொம்ப நாளைக்கப்புறம் எங்க ஃப்ளாட்ஸ் பக்கத்த்ல ஒரு நாலெட்டுல ஒரு தியேட்டர் - குட்டி காம்ப்ளெக்ஸ்- முன்பு ஹிந்தி இங்க்லீஷ் மட்டும் போடுவார்கள்- இப்ப தமிழ்- அதுவும் மதுரை தேவி நினைவு வேற் வந்துச்சா புதுசா ஏதாவது போட்டா -பார்க்கலாம்னு நினைக்கற் படத்தப்போய் பாக்கற்து வழக்கம்)இப்பத் தான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.. ம்ம் உடன் பதில் ( என்னா ஒரு சின்சியாரிட்டி)
பக்தி மார்க்கம்போக வேண்டிய முப்பத்தஞ்சு வயசுல ஒருமார்க்கமா இருக்கற்தும் தப்பு தேன் :)
ஆஹா ரெண்டு பேர் பற்றிய விளக்கத்துக்கும் நன்றி.. ப்ரேம் நஸீர்னு தான் பட்டது..அதை அடிக்கற்ச்சே விருந்தினர்கள் வந்துகாலிங்க் பெல் அடிச்சாங்களா செக் பண்ணாம போஸ்ட் பண்ணிட்டேன். ஸாரி.. அந்த மின்மினிப் பூச்சிகள் மறுபடி பார்க்கறேன்.. சிஐடிய இப்பப் பார்த்தா சுடுமோர் குடிக்கவேண்டிவரும் நாளைக்குப்பார்க்கறேன்..ஆனா ஹீரோயின் மேலே ஏன் உஙக்ளுக்குக் கோபம்..அவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே..:)
chinnakkannan
30th May 2015, 01:34 AM
இன்னொரு வருத்தப்படக் கூடிய செய்தி.
நீங்கள் பதிந்த 'மல்லிகைப் பூ போட்டு' பாடலின் நாயகன், நாயகி இருவருமே தற்கொலை செய்து கொண்டவர்கள். விந்தையாக இல்லை?// நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது.. கஷ்டமாகவும் இருக்கிறது..
விஜயஸ்ரீ என்பது போலப் பட்டது..ஐ திங்க் வெகு இளமையாய் இருந்ததால் தெரியவில்லை.. அழகாப்படத்தப்போட்டு விட்டுட்டீங்க..தாங்க்ஸ்..கொஞ்சம் வெய்ட்.. அடுத்த எ.போ ரெடி பண்றேன் :)
chinnakkannan
30th May 2015, 01:53 AM
என்னமோ போங்க – 16
*
அழகான பாட்டு தான்.. ஜெமினி வாணிஸ்ரீ குழந்தை உள்ளமாம்..செய்யும் செயலெல்லாம் பெரிய பசங்க மாதிரி இருக்கு.. ஆனா டீசண்ட் பாட்டுதான்.. டக்டக்டக டக்னு அழகான பேக் க்ரெளண்ட் மியூசிக் தான்.. மூணு நாளுக்கு முன்னால பார்த்து மூணு நாலுவாட்டி கேட்டும் விட்டேன்..ஆனாலும் என்னங்கறீங்களா
அர்த்தம் புரியலை. ,முதல் மூணுவரி.குன்ஸா இதுவோன்னு நினைக்கத் தோணுது..இருந்தாலும் இடிக்குது.. பூ வண்டா பூ வந்தான்னும் கன்ஃப்யூஷன். அவ மனசு முத்துச் சிப்பின்னு வெச்சுக்கிட்டாலும் மோனத்தில் ஆழ்ந்தது யார் காதலனா..அவளேவா.. முதல் நாள் மயக்கம்னும் சொல்லமுடியாதே..பூல்லாம் போட்டிருக்கே..அப்பத் தானே முதலிரவே..(ஏதாவது வெவகாரமான அர்த்தம்னா பி.எம் பண்ணுங்க..). ம்ம் என்னமோ போங்க..
இதுக்காகவே வேலை மெனக்கெட்டு கேட்டு கேட்டு டைப் அடிச்சேன்..இந்தப்பாண்டியனின் சந்தேகம் தீர்க்க யார் வருவார்
பட் கொஞ்சம் யோசிச்சதுல(போஸ்ட் பண்ணினதுக்கப்புறம்) இது இரண்டாவது நாளோ..முதல் நாள் இன்பக் கதைகளைப் பத்திப்பேசறாங்கன்னு படுது..அப்படித்தானே..
*
முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடிகொண்டதே இன்பத் தேன் வந்து
முதல் நாள் மயக்கம் வரக்கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு..
கலைமகள் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ..
கலைகளின் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ
முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடைமெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக
தேன் தரும் நிலவே நீசாட்சி
தென்றல் காற்றே நீசாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி..
https://youtu.be/PZBo_B9vEx0
*
chinnakkannan
30th May 2015, 02:01 AM
நாலணா திருவிழா கண்ணாடி போட்டு காமெராவை தோள்களில் தொங்க விட்டிருப்பார். // நாலணாக்குஇப்பல்லாம் கண்ணாடி கிடைக்காதில்லை..:) ச்சின்ன வயசுல் பார்த்திருக்கிறேன்..வொய்ட் ஃப்ரேம் இந்தப்பக்கம் நீலக்கலர் ப்ளாஸ்டிக் பேப்பர் இந்தப்பக்கம் சிகப்புக் கலர் போட்டிருக்கும் இல்லியோ..
chinnakkannan
30th May 2015, 02:17 AM
*
என்னமோபோங்க. – 17
பையன் பார்க்க லட்சணமா இருக்கான்..சரி..பொண்ணுக்கும் பிடிச்சுருக்கு உறவுக்காரப்பையன் வேற..பின் ஏன் அப்பா அப்ஜக்ட் பண்றார்..என்னபண்றது.. கதை நகர்றனுமே..
அதுவும் அப்பாக்கு ப் பிடிக்கலைன்னாலும் தமிழ் சினிமா கதா நாயகிகள் சொந்த அத்தைபையனைத் தான் கொஞ்சுவார்கள்.. அப்படித்தனிமையில் தேடிக் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது அப்பா வந்து விட என்னாகும்..மகள் ஒளிந்து கொள்வாள். ஊருக்குப் போக வேண்டிய அப்பா போகாமல் இருக்க.. ஏதாவது வழி செய்து அப்பாவின் கண்முன்னேயே அல்லது மாமாவின் கண்முன்னேயே டூயட்பாடுவார்கள் என்பது த.சி விதி போல..
இங்கும் முத்து, தேங்காய் ப்ளஸ் அழகிய மோஹினியாய் லத்து.. தோட்டத்தில் ஆடறதை அப்பா தேங்காய் ஏன் பயந்து பாக்கணும்.. லத்து பொண்ணுன்னு தெரியாதா..ஏதோ பாட்டு போடணும்னு சிச்சுவேஷன் க்ரியேட் பண்ணியிருக்காங்க போல..என்னமோ போங்க..
*
பன்னிரண்டு மணியடித்தால்..
உன்னை நான் நினைப்பேன்..
என்னை நான் மறப்பேன்..
https://youtu.be/9iZ9_Et1ISs
*
அன்பு ரோஜா படத்தின் பெயராம்..எப்படி இருக்கும்
அப்புறம் வாரேன்..:)
rajeshkrv
30th May 2015, 07:53 AM
காலை வணக்கம்
ஒரு கடினமான பாடல் இசையரசியின் குரலில்.
எஸ்.ராஜேஸ்வரராவ் அவர்களின் இசையில் .
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானும் ஹரிஹரனும் அவரது முகனூல் பக்கத்தில் இந்த பாடலைப்பற்றியும் இசையரசி பற்றியும் மிகவும் பெருமையாக பேசியிருந்தார்கள்
https://www.youtube.com/watch?v=U_FL9-_gHlA
மோகினி பஷ்மாசுரா திரையில்
குறைந்த வரிகள் கடினமான பாடல்.. குரல் மட்டுமே
vasudevan31355
30th May 2015, 08:29 AM
சி.க,
'முத்துச் சிப்பிக்குள்ளே' சூப்பர். ஆமாம்...நான்தான் பாலா பழைய பாடல்களை தொடராகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேனே! இதெல்லாம் பின்னாடி விவரமா வருதே. பாலா பாட்டா (பன்னிரண்டு மணியடித்தால்) தேடித் பிடிச்சு போட்டா நான் அப்புறம் எப்படி தொடராக போட்றதாம் கண்ணா?:) (உங்க ரேர் சாங் பக்தி எனக்குப் புரியுது கண்ணா):) அவர் எனக்கே சொந்தம்.:)
என்னோட நெடுநாள் ஆசை என்ன தெரியுமா? அனைத்து பாலா பழைய (புதிது அல்ல) பாடல்களும் முழு விவரத்தோட நம்ம எல்லார்கிட்டேயும் சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ல இருக்கணும்.:) எப்ப வேணுமானாலும் எடுத்து பார்த்து படித்து அனுபவிக்கணும். பாலாவுக்கும் பார்சல் பண்ணி தந்துடணும். அதுக்கு ரெண்டு வருஷங்களாவது ஆகும். (ஒன்னு தெரியுமா? பாலாவிடம் அவர் பாடிய பழைய பாடல்கள் பிரபலமானது தவிர எதுவுமே கைவசம் இல்லையாம். கிருஷ்ணா சொன்னார். ஆச்சர்யமாக இல்லை?) எனவே அவருக்கு எல்லாத்தையும் ஒன்னு விடாம தரணும். அதனாலே இன்னும் வேகம் கூடுது. அது சம்பந்தமாத்தான் முழு மூச்சா பாலா பாடல்களை விவரங்களோடு சேகரித்து இங்கு தொடராக அளித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் சிரமப்படக் கூடாதே என்பதற்காகத்தான் தொடரின் பாடல்கள் பதிவின் லிங்கையும் தருகிறேன்.
நீங்க இங்கே வரும் போது நாம எல்லோரும் பாலாவை நேரே பார்த்து பாடல்களைத் தந்துடலாம். ஓ.கே வா?:)
vasudevan31355
30th May 2015, 09:00 AM
ஜி! அருமை!அருமை!
rajeshkrv
30th May 2015, 09:41 AM
vaanga ji
nalama
RAGHAVENDRA
30th May 2015, 09:55 AM
வாசு, கல்நாயக், ராஜேஷ், சி.க., கிருஷ்ணாஜி,
திரியை சூப்பராய்க் கொண்டு செல்கிறீர்கள்.. பாராட்டுக்கள்.
தாலாட்டு, ராஜ பாண்டியன், விஜயஸ்ரீ, நாகார்ஜுன், அமலா, சிவா, உதயம்... பழைய பாலா, டாபிக் எப்படியெல்லாம் ரூட் போடுதுப்பா... நடுநடுவில் ரம்பாவின் சீனியர் ஏ.சகுந்தலாவின் மின்மினி மடல் வாழை ....ழகு.. என ஒரு மார்க்கமான பயணம் வேறு..
எங்கே போனால் என்ன . எப்படியோ எல்லோரும் ஒண்ணா அசெம்பிளாயிடறீங்க.. அது போதும்...
vasudevan31355
30th May 2015, 10:13 AM
http://i.ytimg.com/vi/AG3axqhnioI/maxresdefault.jpg
வஞ்சிக் கோட்டை திவானின் மகன் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டு, கொடுஞ்சிறையில் வெந்து தணிந்து, வேதனை அனுபவிக்க, பக்கத்து சிறையில் சொந்தத் தாயும் அடைபட்டுக் கிடக்க, தாய் அறையின் கல்லுடைத்து தப்பி வந்து மகனிடம் வந்து சேர, அதுவரை அநாதை என்று தன்னை எண்ணிக் கொண்டிருந்த மகன் தாய் தன் மகனை அடையாளம் கண்டு வரலாறு கூறி அவன் அநாதை இல்லை என்று ஆறுதல் அளித்து அள்ளி மகிழும் போது ஆனந்தம் பொங்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான். சிறையிலிருந்து தப்பி வெளியேற சிறைக் கற்களை தாயுடன் சேர்ந்து பெயர்க்கிறான். தப்ப வழி கிடைக்கும் சமயத்தில் தாய் தன் உயரை விடுகிறாள். துவல்கிறான்... அழுகிறான்... புரள்கிறான்... புலம்புகிறான்.... துடிக்கிறான் துன்பத்திலேயே உழன்ற மகன்.
அற்ப நேரம் அன்னையுடனான அன்னியோன்யத்தை எண்ணி அழுகிறான். கொள்ளி போடவும் கொடுஞ்சிறையில் வழி ஏதுமில்லை.
இருந்தால் என்ன?
அன்னையைப் புதைக்க அங்கேயே சவக்குழி தோண்டுகிறான். அதுவரை இருந்த பொறுமை அறவே அழிந்து பொங்கி எழுகிறான். சிறைக்கு வரும் காவலாளியைத் தாக்கி, மற்றவர்களையும் தாக்கி தான் குடும்பத்தை நாசம் செய்த வஞ்சகனை பழி வாங்கத் தப்புகிறான் தண்ணீரில் குதித்து.
மகனாக ஜெமினி. தாயாக கண்ணாம்பா. உணர்ச்சிமிகு கட்டங்கள். தாயும் மகனும் சிறையில் சந்திக்கும் காட்சி உணர்சிக் குவியல்களின் சங்கமம்.
தாடியும் மீசையுமாய் பொலிவிழந்த முகத்துடன் நலிந்த, உருக்குலைந்த தோற்றத்துடன் நடிப்பில் உருக்குலையாத ஜெமினி.
சோகங்கள் கவ்வ தாயைப் பார்த்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சியை காட்டுவதிலாகட்டும்...தாய் தான் பறி கொடுத்த தங்கையை பற்றிக் கேட்டதும் துவண்டு 'அவளை எமனிடம் பறி கொடுத்து விட்டேனம்மா' என்று கதறுவதாகட்டும்... அனாதையாகக் காரணமாயிருந்த அப்பாவின் மேல் கொள்ளும் கோபமாகட்டும்... அவர் நல்லவர் என்று சொல்லி அன்னை நம்பிக்கையூட்ட, பின் அவர் மேல் கொள்ளும் தாபமாகட்டும்... அன்னை தன் மடியில் உயிர்விடும்போது நிலை குலைந்து சிலை போல அசைவற்றுப் போவதாகட்டும்... அவளின் துயரங்களை நினைத்து துன்பப் படுவதாகட்டும்... சிலிர்த்தெழுந்து சிறு கடப்பாரையில் மாதாவின் அடக்கத்திற்கு மண் தோண்டுவதாகட்டும்... உள்ளே கிடந்த வீரம் வீறு கொண்டு எழுந்து அங்கு வரும் வீரர்களை உருண்டு புரண்டு சாயப்பதிலாகட்டும்...
அம்மா அம்மா என்றே ஆயிரம் ஆண்டுகள்
அழுது புரண்டாலும்
மகனே!
அன்னை வருவாளோ!
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ!
முன்னை தவமிருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
பொன்னைப் போலே உன்னை
போற்றி வளர்த்திட்ட
அன்னை வருவாளோ!
கொள்ளி இடவும் வகையில்லை
என்றே நீ கொடுஞ்சிறையில்
கலக்கம் கொள்ளாதே!
அள்ளி இட அரிசி இல்லையென்றால் என்ன?
அன்பை சொரிவாய் மகனே!
கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு
என்று 'இசைச் சித்தர்' தனக்கே உரிய பாணியில் பின்னணியில் உருகிப் பாட,
ஜெமினி இந்தக் காட்சிகளில் நம் மனதை தன் ஆழமான அழும் நடிப்பால் தோண்டி விடுவார். அந்த இயல்பான சோகம் அதுவும் தாய் இறந்தவுடன் அவர் காட்டும் அவர் மேல் கருணை பிறக்க வைக்கும் முகபாவங்கள் முத்திரைதான். அவருடன் சேர்ந்து நம் கண்களும் கலங்கத்தான் செய்யும்.
'வஞ்சிக் கோட்டை வாலிபனி'ல் என்னை மிக மிக பாதித்த காட்சி இது.
rajeshkrv
30th May 2015, 10:30 AM
மறந்து போன பாடல்கள் தொடர்ச்சி
மிஸ்டர் மெட்ராஸ் (பல படங்களின் உல்டா)
வித்யாசாகரின் இசையில் வாலி ஐயாவின் வரிகள்
பூங்காற்று வீசும் -- பாலாவின் குரலில் அழகு பாடல்
https://www.youtube.com/watch?v=6cWkkI6Bbzw
வந்தாளப்பா வந்தாளப்பா
https://www.youtube.com/watch?v=OqtAY6Ha9UU
அழகா அழகா சிரித்தால் அழகா .. பிரபு சுவலட்சுமி
https://www.youtube.com/watch?v=W8fv6NIHqB0
அப்பாஸ் சிம்ரன் கொஞ்ச காலம் நிறைய படங்கள் நடித்தார்கள் .. ஹ்ம்ம்ம்ம்ம்
அழகான பாடல் . சிற்பியின் இசையில் ஹரிஹரன் குரலில்
நீ இல்லை நிலவில்லை
https://www.youtube.com/watch?v=I7vtecDaU2Q
chinnakkannan
30th May 2015, 10:32 AM
ஹாய் குட் மார்னிங் ஆல்
வாசு சார்..
//அவர் எனக்கே சொந்தம்.// ஷ்யூர் அண்ட் ஸாரிங்க்ணா.. நான் பாடல்களில் கேட்பது இனிமை ப்ளஸ் லிரிக்ஸ் மட்டுமே..இன்னின்னார் எனப்பார்ப்பதில்லை.. அப்படி நான்பார்த்து செலக்ட் பண்ணி வைத்திருந்ததைத்தான் தொடர்கிறேன் - டாபிக் எழுதும் போதுமட்டும் பாட்டு லிங்க் கொடுத்து அதன் தொடர்பாய் அப்போது என் சிந்தையில் என்ன ஓடுகிறதோ அதை எழுதிவிடுவேன்..அம்ம்புட்டு தேன்..
இனி கேர்ஃபுல்லா இருக்கேன்..உமக்கு எஸ்.பி.பி எனக்கு கே.பி.எஸ்.. ஓகேயா :) ம்ஹூம் நான் ஒத் கொள் மாட்டேன்!
வஞ்சிக் கோட்டை வாலிபனில் கண்ணாம்பா - சிறையில் ஒரு இனிய சர்ப்ரைஸாக வருவார்..வந்து ஜெமினி தான் ரஜா சொல்லி டொப்க் கென மரணிப்பது - விறுவிறுப்பான கதையோட்டத்தில் படம் முடிந்த பிறகு நெஞ்சில் நிற்காமல் போய் விட்ட ஒன்று - வெகு ஜனங்களின். அதுவும் அந்த கண் கண் சொந்த் பாட் தானெல்லாரும் நினைவில் வைத்திருப்பார்கள்..இல்லியோ
நன்னாயிட்டு எழுதியிருக்கேள்..ரவிக்கு Gap filler மாதிரி :)
chinnakkannan
30th May 2015, 10:37 AM
இந்தப் பூச்சுடவா இருக்கே ராஜேஷ்..அதான் சிம்ரனின் முதல் படமாக வரவேண்டியது ஒன்ஸ்மோர் முந்திக் கொள்ள (ஆர்...விஐபி?) இது இரண்டாவது படம்.. பார்க்க வெகு அழகு.. நடிப் சுத்தமாய் வராது..ஆனால் படம் ஆச்சர்யமாய் கொஞ்சம் கலகல எனப் போகும் - மணிவண்ணன் கல்பனா காமெடியால்.. நாகேஷும் உண்டு.. பாடல்களும் நன்றாக இருக்கும்..
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் தீ வரும்
நான் கொஞ்சம் அணைக்க
என் கன்னம் சிவக்க
இது பற்றி எழுத வாசு சார் அவர்களை அழைக்கிறேன்.. எஸ்.பி.பி ஸாங்க்..
vasudevan31355
30th May 2015, 11:00 AM
இது பற்றி எழுத வாசு சார் அவர்களை அழைக்கிறேன்.. எஸ்.பி.பி ஸாங்க்..
நோ!நோ!நோ!:)
கண்டிப்பாக இல்லை. இளையராஜா வருகைக்கு முந்திய பாலாவின் பழைய பாடல்கள் மட்டுமே. அப்புறம் இளையராஜா இசையில் பாலாவின் ஒன்றிரண்டு. அவ்வளவே!
பிறகு வந்த பாடல்களில் பாலாவை அவ்வளவாக எனக்கு பிடிப்பதில்லை. 'தங்கத் தாமரை மகளே' போன்ற ஒரு சில பாடல்கள் மட்டுமே விதிவிலக்கு.
குரலும் இனிமை குறைந்து தடிப்பாயிற்று. இசைக்கருவிகளின் ஆதிக்கம் வேறு பாலாவின் இனிமையைக் குறைத்தது. ரஜனி கமல் படங்களில் ஹீரோயிசம் தலை தூக்கியதால் பாலா இரண்டாம் தரமானார். ஒருதரம் இரண்டு தரம் அத்தோடு சரி!
நமக்குத் தேவை 70' களின் பாலா. 'கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேக' பாலா. வழுவழு வழுக்கைக் குரல் பாலா.
vasudevan31355
30th May 2015, 11:01 AM
//நான் பாடல்களில் கேட்பது இனிமை ப்ளஸ் லிரிக்ஸ் மட்டுமே..இன்னின்னார் எனப்பார்ப்பதில்லை//
??????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!
JamesFague
30th May 2015, 11:18 AM
Courtesy: Tamil Hindu
‘பாசம்’ படத்தில் எம்.ஜி.ஆர். | படம் உதவி: ஞானம்
இயற்கைக் காட்சிகளை ரசிக்காதவர் யார் இருக்க முடியும்? ஆனால் இவை நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் ஒரே மாதிரியானவை அல்ல. வனத்திலும் நிலத்திலும் வாய்க்கால் ஓரத்திலும் பயணிக்கும் தருணங்களில் இயற்கைக் காட்சிகள் தரும் உணர்வை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தும் இரண்டு பாடல்களைப் பார்ப்போம்.
எனக்கென எதுவும் இல்லை, எல்லாம் பொது என்கிறது இந்திப் பாடல். இயற்கையின் அழகெல்லாம் எனக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்கிறது தமிழ்ப் பாடல். இரண்டுமே இயற்கையை வெவ்வேறு விதமாக ஆராதிக்கின்றன.
இந்திப் பாடல்
படம்: பரிச்சய் (அறிமுகம்). பாடலாசிரியர்: குல்ஜார்; பாடியவர்: கிஷோர் குமார்; இசை: ஆர்.டி. பர்மன்.
பாடல்:
முசாஃபிர் ஹூம் யாரோன்
ந கர் ஹை ந டிக்கானா
முஜே சல்த்தே ஜானா ஹை
பஸ் சல்த்தே ஜானா
ஏக் ராஹ் ருக் கயீ தோ அவுர் ஜுட் கயீ
மே முடா தோ ராஹ் சாத் சாத் முட் கயீ
…
பொருள்:
நான் ஒரு வழிப்போக்கன் - நண்பனே
வீடு, இருப்பிடம் எதுவும் எனக்கில்லை
சென்றுகொண்டிருப்பதே என் பணி - ஓரிடம்
நின்றுகொண்டிருக்காமல். எப்பொழுதும்
பயணித்துவந்த பாதை ஒன்று பாதியில்
நின்று போய் பயணம் நின்றது - உடன்
வேறு திசையில் திரும்பிய என்னுடன்
திரும்பியது என்னுடைய பயணப் பாதையும்
(ஏனெனில்) என் இருப்பிடம் இருப்பது
இறக்கை கட்டிவிடும் காற்றில் அல்லவா
பகல் இங்கே தடுத்து பக்கம் அமர்த்தினால்
இரவு அங்கே சைகையால் எனை அழைக்கும்
காலையும் மாலையும் என் கவின் தோழர்கள்.
நான் ஒரு வழிப்போக்கன் -நண்பனே
வீடு, இருப்பிடம் எதுவும் எனக்கில்லை
சென்றுகொண்டிருப்பதே என் பணி.
தமிழ்ப் பாடல்
படம்: பாசம்; இசை: விஸ்வனாதன், ராமமூர்த்தி;
பாடல்: கண்ணதாசன்; பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்.
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
chinnakkannan
30th May 2015, 03:27 PM
??????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!// கேள்விக்குறியும் ஆச்சர்யக் குறியும் ஜாஸ்தியாக இருக்கிறதே..:) சரி சரி பார்ப்பது பிக்சரைசேஷன்.. ரொம்பப்பார்க்க மாட்டேன் பாடற்து யார்னு..சிலசமயங்களில்.. அது சரி 70 களின் பாலா 80களின் பாலாவும் பிடிக்குமே..
சரி சரி..(வீக்லி பர்சேசஸ்க்கு வெளில நிலா உலா போனோமா இப்பத்தான் வந்தோம்..ஹப்ப்ப்பா.. பெருமூச்..:)
காலீல போடலையோன்னோ இப்ப போடறேன்..காதல் காதல்காதல் சாங்க்..இது பாக்கறச்சேல்லாம் எனக்கு ஸ்கூல் நினைவு வரும்.. ஸ்கூல் டேஸ்ல நான்போட்ட ட்ராயர் டைப்பில் சிம் போட்டிருப்பாங்க! :) not kodu.. plain ...
https://youtu.be/9CxCZg9_IE0
chinnakkannan
30th May 2015, 04:05 PM
எஸ்.வாசுதேவன் இரண்டுமே அழகியபாடல்கள்.
//எனக்கென எதுவும் இல்லை, எல்லாம் பொது என்கிறது இந்திப் பாடல். இயற்கையின் அழகெல்லாம் எனக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்கிறது தமிழ்ப் பாடல். இரண்டுமே இயற்கையை வெவ்வேறு விதமாக ஆராதிக்கின்றன// (ஹப்பாடா.. கொஞ்சம் கீழிறங்கி அழகா ஒருவரி இருவரி கோட்ஸ் லாம் எழுதறீங்க அழகா.. நன்றி.. இன்னும் எழுதுங்கள்)
. என்ன கிஷோர் ஜஸ்ட்லைக் தட் தத்துவம்.. உலகம்பிறந்தது எனக்காக பாஸிட்டிவ் அப்ரோச்..
கிஷோர் பாட் கொஞ்சம் என் ஸ்டைலில் எழுதிப் பார்க்கட்டுமா..
ஆற்றில் செல்லும் சிற்றலையாய்
…அலைந்தே திரியும் என்வாழ்க்கை
பாட்டில் சொல்ல விழைகின்றேன்
…பாதம் போக்கில் செல்கின்றேன்
வாட்டும் உளமோ எனக்கில்லை
…வரட்டும் எதுவும் எனவிருப்பேன்
காற்றாய் பூமி வானத்தில்
…கனிவாய் நடுவில் வாழ்கின்றேன்..
//முசாஃபிர் ஹூம் யாரோன்
ந கர் ஹை ந டிக்கானா
முஜே சல்த்தே ஜானா ஹை
பஸ் சல்த்தே ஜானா
ஏக் ராஹ் ருக் கயீ தோ அவுர் ஜுட் கயீ
மே முடா தோ ராஹ் சாத் சாத் முட் கயீ//
https://youtu.be/_nCi5kwD1Y8
**
ம.தியின் துள்ளல் கலந்த ஓட்டம் ..துள்ளும் இசை துள்ளும் வரிகள்..
துள்ளிடும் தென்றலும் விரைந்து சென்று
…தூறலைக் காற்றில் கலந்து நிற்கும்
எள்ளிடும் சிரிப்பாய்ப் பூக்கள் மெல்ல
….எண்ணமும் வண்ணமாய்க் காட்டு மங்கே
அள்ளிடும் வனப்பை இயற்கை அன்னை
..என்றுமே இருப்பில் வைத்து நிற்பாள்
கள்ளமாய்ச் சிரிக்கும் விதியின் செய்கை
..கணமெதும் அறியாள் அவளு மன்றோ…
இயற்கை அன்னையை வணங்குதலில் ஆரம்பித்து சொந்த அன்னையை வணங்குதற்போல இருக்கும் பாடல் வரிகள்.. பட் முழுக்க யோசித்தால் இயற்கையைத் தான் சொல்கிறது எனப் படுகிறது.. படம் நான் பார்த்ததில்லை..
https://youtu.be/Wu_2npFoJWg
இன்னும் இன்னும் எழுதுங்கள் எஸ்.வாசுதேவன் ஸார்… :)
JamesFague
30th May 2015, 05:25 PM
Thanks for your compliments Mr CK. I am just reproducing the article which appeared in the Tamil Hindu and it will be a
huge task to write like you. I will try to do it when I have the necessary facility.
Regards
chinnakkannan
30th May 2015, 06:37 PM
கொஞ்சம் போரடிக்கறா மாதிரி இருக்கே..
என்ன பண்ணலாம்..
கார் ஓட்டக் கத்துக்கலாம்..
கன்னியரின் கடைக்கண்பார்வை பட்டாலே வாலிபர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.. எங்கோ படிச்சது..
அதுவே இள நங்கை ஒருத்தி க்ளட்ச் கியர் நு கத்துக் கொடுத்தால்..ஆஹா நன்னாவே ஓட்டலாம்..காரை..( எனச் சொன்னாலும் கொஞ்சம்கான்ஸண்ட்ரேஷன் கிடைப்பது கஷ்டம்) என ஆன்றோர்கள் சொல்வார்கள்..!
*
இது clutch
இது ? gear
இது என்ன ?
accelerator
ஒஹொ !
இது ? brake
clutchசை மிதிச்சி gearய் மாத்தி
acceleratorரை கொடுக்கனும்
steeringகை பிடிச்சி
hornனை அமுக்கி
பாதையை பாத்து போகணும்
சமயத்தில் brakeகையும் போடனும்
ஹாஹா அப்பிடியா ok
புதுசு இது புதுசு
அழகென்னும் பரிசு கிடைத்தது புதுசு
அடிக்கடி மனசு துடிக்கிற வயசு
இளசு இது இளசு இளசு இது இளசு
பருவத்தில் இளசு பதினெட்டு வயசு
இதயங்கள் சிறிசு எண்ணங்கள் பெரிசு
இளசு இது இளசு
சத்தமிட்டு சத்தமிட்டு வண்டு வந்து பறக்கும்
முத்தமிட்டு முத்தமிட்டு வண்ணமலர் மயங்கும்
கொவ்வை நிற செவ்விதழை கொஞ்சுகின்ற போது
முக்கனியும் சக்கரையும் தித்திப்பது ஏது
நெஞ்சமொரு பஞ்சு மெத்தை கண்ணிரண்டும் விளக்கு
பிஞ்சு நடை அஞ்சிவரும் வஞ்சிமகள் எனக்கு
இன்றுமுதல் அன்பு மயில் உன்னருகில் இருப்பாள்
அந்திபகல் எப்போதும் கையணைத்து நடப்பாள் (அடிப்பாவி நம்பிக்கை இல்லையா .. கார் ஓட்டத் தான் கத்துக்கிட்டேனே)
https://youtu.be/hrUyqHBqMH8
chinnakkannan
30th May 2015, 07:20 PM
அதை ஏன் கேக்கறியள்.. மத்யானம் வெயிலா.. ஷாப்பிங்க் போனோமா பின்ன என்னவாக்கும் ஆச்சு. வீட் வர்றதுக்குமுன்னாடி காமத் ஹோட்டல் நார்த் இண்டியன்.. சப்பாத்தி நோ ரைஸ் தால், ghadi கடி, ஆலு சப்ஜி, பனீர் சப்ஜி என ஒரு கட்டுக் கட்டிட்டு வீட்டுக்கு வந்தும் தூக்கம் வந்திட்டில்லா..
ஏனோ தெரியலை.. இந்தவெய்யில் ஒத்துக்கறதில்லை எனக்கு அதுவும் 9 மன் த்ஸ் வெயில் என்று பழகிபலகாலம் ஆனாலும் இந்தவருடம் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருக்கிறது.. ஸோ என்னதான் வயிறு நிரம்ப ஒருகட்டு கட்டினாலும்.. ஹை.. கட்டு..
இந்தக்கட்டு இருக்கிறதே நிறைய அர்த்தங்கள்..
கட்டு – கட்டுக்கோப்பான நல்லவிதமான
கட்டு – அணை
கயிற்றினால் கட்டு – கயிற்றினால் பிணை..
கட்டு – ஃபுல்லா சாப்பிட்டேன் ( பிற்கால பேச்சு வழக்கு)
கட்டு – வெட்டி விடு என ஆங்கிலத்தில் டைரக்டர் சொல்வார்!
கட்டு – கன் ஸ்ட்ரக்ட் என்ற அர்த்ததிலும் வரும்
கட்டி – என்றாலும் அணை தான்.
ஆனால் கட்டி என்றால் ஸாலிடான பொருள் என்று ஆகிவிடும்
ஹிந்தியில் கட்டி என்றால் கா என்று அர்த்தம்..என் கேர்ள் ஃப்ரண்ட் சின்னவயதில் கட்டி விட்டுச் சென்றவள் தான் இன்று வரை காணேன்..விக் விக் விக்.
ம்ம் என்னெல்லாம் பாட்டு இருக்கு..
*
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா..
*
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
*
காளை வயது கட்டான சைசு களங்கமில்லா மனசு
*
கட்டோடு குழலாட ஆட
*
கட்டழகுப் பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
*
கட்டழகில் நிறைய உண்டு..பாடல்கள்..
நீ கட்டும் சேலை மடிப்பிலே நான் மயங்கிப் போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கிப் போனேனே
.
கட்டழகுத்தங்கமகள் திரு நாளாம்..
*
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ
*
கட்டழகு மேனியைப்பார் பொட்டும் பூவுமா
*
கட்டழகுப் பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்டமிடம் அத்தனையும் இன்பமின்றித் துன்பமில்லை
*
ஆக பார்க்கப் போவது..
*
கட்டுக்குலையாத மங்கை வண்ணம்
கட்டித்தங்கம்
விட்டுப்பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்
சொர்க்கம் சொர்க்கம்
பத்துப்பதினாறு முத்தம் முத்தம்
தொட்டுத்தரும் பாவை பட்டுக்கன்னம்
கட்டுக்குலையாத மங்கை வண்ணம்
விட்டுப்பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்
*
(ஏன்னாக்க இதுல கட்டியும் இருக்கு கட்டும் இருக்கே )
https://youtu.be/8K5G9cPjf8c
*
விட்டுப்போன கட்டு சொல்வீங்க தானே.. :)
*
chinnakkannan
30th May 2015, 07:23 PM
ம.தியோட இந்தப்பாட்டு ப் பிடிக்கும்..
கட்டழகே கட்டுக் கோப்பான அழகுன்னு அர்த்தம்..இங்கே கட்டான கட்டழகுன்னா.. கட்டுக்கோப்பான கட்டழகு..
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா
https://youtu.be/sA-BIvBMey8
*
vasudevan31355
30th May 2015, 08:18 PM
விட்டுப்போன கட்டு சொல்வீங்க தானே.. :)
*
கட்டு---புதினாக்கட்டு, கீரைக் கட்டு, கொத்தமல்லிக் கட்டு, புல்லுக்கட்டு.
(கட்டு என்ன விலை?)
கட்டு கட்டா ரூவா நோட்டு
கட்டு கட்டா திருநீறு
உடற்கட்டு
கட்டுமஸ்தான உடல்
கட்டி---வெல்லக்கட்டி
வாயைக் கட்டி வயித்தைக் கட்டி அப்புறம் வயித்துல கட்டி, மூளையிலே கட்டி, சலவைக் கட்டி
களிமண் கட்டி
கட்டிளங்காளை
நீர் யோசிங்காணும். எங்களையும் ஏன்?........ :)
இப்பவே கண்ணக் 'கட்டு'தே
vasudevan31355
30th May 2015, 08:31 PM
இந்தாங்க சி.க,
நீங்க போட்ட பாட்டையெல்லாம் கட்டும் பாட்டு.:) உங்களுக்கேத்த 'கட்டு' பாட்டு. 'கட்டு'ப்பாடோட கேளுங்க. பாருங்க.:)
'கட்டு மெல்லக் கட்டு..
தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு'
லட்டு மாதிரி பந்து போடுகிறீரே!:) ராட்சஸியாச்சே! விட்ருவோமா?:)
https://youtu.be/2C8PvdZlm_o
rajraj
30th May 2015, 08:53 PM
chinnakkaNNan: Here is another 'kattazhagu' song for you:
kaN padume pirar kaN padume nee veLiye varalaamaa un
kattazhagaana meniyai ooraar kaNNukku tharalaamaa
:)
chinnakkannan
30th May 2015, 10:08 PM
பாடினார் கவிஞர் பாடினார் – 9
*
ரொம்ப நாள் ஆனதினால recap மாதிரி போன அத்தியாயத்தின் இறுதிப் பகுதி
*
அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..
இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..
*
இனி
*
தானானா தானேனா தான தானா…
கால் டாக்ஸி தான்.. கம்பெனி செலவு.. நல்ல ஏஸி.. குளிரக் குளிர பின்சீட்டிலும் அடித்தது..ஆனால் அதை மீறியும் கவிஞர் பிறைசூடனுக்கு வியர்த்தது..
எழுத வேண்டியது டூயட் பாடல்.. தானானா தானேனா தான தானா…
அரை மணி நேரம் தாண்டியவுடன் சட்டென்று யோசனை..
ஒரு டீக்கடையோரம் நிறுத்தப்பா
நிறுத்தினார் டிரைவர்..இறங்கி ஒரு டீ போடுங்க என்று கேட்கும் போதே கவிஞரின் நெற்றி முடிச்சுகள் இயல்பு நிலைக்கு வந்தன.. ஏனெனில் அந்தக் கடையில் ஒலித்த பாடல் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
ஆஹா.. ஒரு பாடல் அவருடைய திரை வாழ்க்கைக்கான முதல் பாடலைப் பிரசவிக்கக் காரணமாயிருந்தது..
ட்ரைவர் பேப்பர் பேனா இருக்காப்பா
பேனா இருக்குங்க பேப்பர்..
டீக்கடைக்காரரே இருக்குங்களா..
இந்தாங்க கணக்கு எழுதற் நோட்புக் .. நீங்களே கிழிச்சுக்குங்க
கிழிக்காமல் மணி மணியாய் வரி வரியாய் வரிகள் பெஞ்சில் உட்கார்ந்தவாறே எழுதி விட்டார் முழுப்பாடலையும்..
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட
*
இதைக் கிழிச்சுக்குவாங்க..
நீங்க யாரு..
கவிஞன்..சினிமாப் பாட்டுக்கு எழுதப் போறேன்..
டீக்கடைக் காரர் முகத்தில் புன்னகை.. நினச்சேன்..சூழ்நிலை வெயில் எதுவும் பொருட்படுத்தாம வேக வேகமா எழுதினீங்களே.. நல்லதுங்க..அந்த நோட்புக்ல நா எதுவும் பெரிசா எழுதலை.. நான் எழுதினதைக் கிழிச்சுக்கறேன்.. நீங்களே நோட் வச்சுக்கங்க..என்னைக் கொஞ்சம் நினைவும் வச்சுக்கங்க..அதென்னங்க இங்க்லீஷ்ல சொல்வாங்களே.. ஆல் தி பெஸ்ட் சார்..
ஒரு கணம் வியப்பு, மறுகணம் மகிழ்ச்சி..பரபரவென அவர் கேட்ட காகிதங்களைக் கிழித்துக் கொடுத்து நோட்புக்குடன் டாக்சி ஏறி ஸ்டூடியோ சென்று இசையமைப்பாளர் இளையராஜாவிடம் சென்று கொடுத்தால் படித்த ராசாவின் நெற்றிச் சுருக்கங்கள் முதலில் தோன்றி மெல்ல மறைய புன்னகை மலர..எங்கே என தனது டீம் ஐக்கூப்பிட்டு பாடச் சொல்லி… ரீ ரெகார்டிங்க் அன்றே அப்பொழுதே..
இப்படித் தான் ஆரம்பித்தது பிறைசூடனின் திரைப் பயணம்.. இருப்பினும் தொடர்ச்சியாக இல்லை..சற்றே பிடிவாதக் குணம் கொண்டவராம்..திரைப்பாடல்களில் ஆழ்ந்த ஞானம்..
இவரைப் பார்த்தது முதன் முதலில் கலைஞர் டிவியில் வந்த ஒரு இசை நிகழ்ச்சி..பாடலாம் டூயட் பாடலை.. ஒவ்வொருபாட்டுக்கும் அதன் சூழலை வெகு அழகாக விளக்கியிருந்தார்.பிறைசூடன்.
சில பல நல்ல பாடல்களுக்குச் சொந்தக் காரர்…
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா – ராஜாதி ராஜா..ச்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி – உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் ( எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று)
சோலைப் பசுங்கிளியே – என் ராசாவின் மனசுல
கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
*
செம்பருத்தி ஆர்.கே செல்வமணியின் முதல், ரோஜாவின் முதல் படம் என நினைக்கிறேன்.. பானுமதியின் பேரன் பிரசாந்த்.. சோகமாய்ப்பாடும் பாடல் இவர் எழுதியது தான்..
*
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கரமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான்
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மைபா
சொல்லடி ஞானப்பெண்ணே
https://youtu.be/7CIew1Q45LM
*
பாட்டியைப் பற்றி பேரன் நினைந்து பாடும் பாடல் வெகு அழகாக இருக்கிறது தானே..
இவர் பாட்டெழுதிய இன்னொரு அழகான பாடல் அதுவும் ப்ரஷாந்த் தான்.. கூட 36 வயது அப்போது ஆகாத ஜோதிகா..
ம்...ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா எனை திருடி போன திரு ரசிகா
அதில் எனக்குப் பிடித்த வரிகள்:
உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்...
நமது தேடல்கள் தான் என்று முடிந்திருக்கிறது..எப்போதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறதுவாழ்வின் இறுதிவரை..
https://youtu.be/qlBPPRGX_4U
சுஜாதா எஸ்.பி.பி படம் ஸ்டார்..
இன்னும் இவர் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்..ம்ம்
*
எல்லா விதமாகவும் வெகு அழகாக இனிக்கும் தமிழில் அருவியாய் கொட்டக்கூடியவர் அந்த ப் பெரிய கவிஞர்.. எல்லாவிதமாக எழுதக் கூடியவர் என்றாலும் நாசூக்காய் சிருங்காரத்தை எழுதுவதில் வல்லவர்..ஆனால் அவருடைய தமிழ் இருக்கிறதே.. தமிழன்னை நாடி நரம்புகளில் பொங்கிப் பிரவாகிக்கிறாள் இன்றும் என்றே சொல்லவேண்டும்..
அவரிடம் டைரக்டர் சொன்ன சிச்சுவேஷன்..
*
அந்தப் பெண்ணுக்கு சிறுவயது. ஆனால் விதி வசத்தில் தொழில்- செய்வதில் ஈடுபடுத்தப் பட்டு விடுகிறாள்.. இருப்பினும் ஆழ் மனத்தில் ஒரு எண்ணம்..ம்ம் படிக்கவேண்டும் எப்படியாவது.. என .. இரவில் வேலை பகலில் படிப்பு..எப்படியோ தொடர்ந்துவிட மறு நாள் முக்கியப் பரீட்சை..இரவில் ஒரு வாலிபன் வர..என்னசெய்ய தொழிலாயிற்றே.. அவனிடம் கேட்கிறாள் “சீக்கிரம் விட்டுடுங்க..எனக்கு நாளைக்குப் பரீட்சை..”
வந்தவன் அதிர்கிறான்..அவனும் இது போன்ற அனுபவத்திற்குப் புதிதானவன்..அந்தச் சிறுமியின் கண்களைப் பார்க்கிறான்..பின் உள்ளறையில் கொஞ்சம்மறைவாய் படுக்கைக்கு அப்பால் பிரித்து வைக்கப் பட்டிருக்கும் புத்தகங்கள்..
நீ இப்பவே படி.. நான் இந்தப்பக்கம் தூங்கறேன்
அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர்.. பின் படிக்க ஆரம்பிக்கிறாள்..
காலப் போக்கில் அந்தப் பெண்ணை விடுதியிலிருந்து விடுவித்து திருமணமும் செய்து கொள்கிறான்.. அவள் கண்களிலிருந்து விழும் நீர்த்துளிகள் அவன் கால்களைக் கழுவுகின்றன
*
இதான் சிச்சுவேஷன் கவிஞரே.. இங்க ஒரு சாங்க் போடணும்..
போட்டுடலாம்..மெட்டு
இதோ.. இசையமைப்பாளர் சொல்ல கவிஞர் எழுதிய பாடல் என்ன , கவிஞர் யார் என்றால்..
ப்ளீஸ் வெய்ட் ஃபார் த நெக்ஸ்ட் எபிசோட்..
நா அப்புறம் வாரேன் :)
RAGHAVENDRA
31st May 2015, 01:17 AM
திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 23
குலமகள் ராதை
பொதுவாகவே தமிழ்த் திரையுலகில் ஆண்களைத் திரும்பத் திரும்பத் திரைப்படத்திற்கு வரவழைக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. அதை விட அதிகம் அதன் தோல்விக்கு உண்டு... வயது வித்தியாசமின்றி ஆண் இனம் சினிமாவில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி உள்செலுத்திக் கொண்டு ஆறுதல் தேடுவது காதல் தோல்விக் காட்சிகளிலும் அதனையொட்டிய பாடல்களிலும் தான். இது சினிமாவின் வெற்றிக்கு ஒரு ரகசியமாகக் கூட கொள்ளலாம்.
அப்படி ஆணினத்தை வரவழைக்கும் சக்தி காதல் தோல்விப் பாடல்களுக்கு உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன். அவர்களின் மனதில் தனக்கெனத் தனியிடத்தை கவியரசர் பெற்றார் என்றால் அதில் பெரும் பங்கு காதல் தோல்விப் பாடல்களையே சாரும்.
இதற்குப் பெரிதும் உதாரணமாக விளங்குவது இரண்டு பாடல்களைச் சொல்லலாம். நூற்றாண்டுத் தமிழ்த்திரையுலகில் மெல்லிசை மன்னர்கள் கொடிகட்டிய காலத்திலும் சரி, அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்கள் படைத்த காதல் தோல்விப் பாடல்களைப் போல் அமரத்துவம் பெற்ற பாடல்களை யாராலும் படைக்க முடியவில்லை என்பதே உண்மை.
அதுவும் இந்த இரண்டு பாடல்கள் -
குலமகள் ராதை படத்தில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
மற்றும்
வானம்பாடி படத்தில் கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் ..
இந்த இரண்டு பாடல்களும் அந்தக் கால இளைஞர்களை மட்டுமின்றி எக்கால இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய சிரஞ்சீவித்துவமான வரிகளைக் கொண்டு அமைந்தவை. இந்த அளவிற்கு காதல் தோல்வியின் வலியை ஆழமாக வேறு எந்தப் பாடலும் சித்தரிக்கவில்லை என்பது நிதர்சனம். எத்தனையோ பாடல்களை பதிலாக கூற முற்படலாம். ஆனால் தாக்கம் என்பது இந்த இரு பாடல்களுக்குப் பிறகே எனக் கூற முடியும்.
குறிப்பாக வெளியான நாள் தொட்டு இன்று வரை திரையரங்கில் ரசிகர்கள் தங்களை முழுதும் ஈடுபடுத்திக் கொள்வது குலமகள் ராதை படப்பாடலில் தான். ஒவ்வொரு வரியும் காதலில் தோல்வியடைந்தவர்கள் தங்கள் உள்மனதை வெளிப்படுத்தும் வகையில் உணர்ந்து பாடலோடு ஐக்கியமாகி விடுவதே இப்பாடலின் இமாலய வெற்றிக்குக் காரணம்.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல் இரு திலகங்களின் சங்கமத்தின் சிகரம் எனலாம். எவ்வாறு நடிகர் திலகம் மெல்லிசை மன்னர்கள் இணைந்த எங்கே நிம்மதி இறவாப் புகழ் பெற்றதோ அதற்குச் சற்றும் குறையாத பெருமை வாய்ந்த பாடல் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல்
நடிகர் திலகத்தின் நடை..
இதைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இப்பாடலில் காதல் தோல்வியைத் தன் நடையிலேயே சித்தரிக்கும் உன்னதத்தை என்னென்பது. அந்த மேட்டில் ஏறும் போதே அவருடைய நடையில் அந்த்த் துயர் தெரிய ஆரம்பிக்கிறது. அசரீரியில் அவருடைய குரல் அவளைப் பற்றிக் கூற நடையில் மெல்ல மெல்ல அதன் வீச்சு அதிகமாகிறது. அந்த அசரீரி முடியும் தருவாயில் வலது காலை வைத்த பின்னர் இடது காலை சற்றே தாமதித்து எடுத்து வைக்கும் போது அவர் வெளிப்படுத்தும் உணர்வு...
கோபம் கொப்பளிக்க பாடகர் திலகத்தின் குரல் துவங்குகிறது. ராதா ராதா... என ஒலிக்க அந்த இடி மின்னலுடன் துவங்குகிறது பாடல் காட்சி..
அந்த இடி மின்னலில் எவ்வளவு தான் உரத்த குரல் கொடுத்தாலும் காதில் கேட்காது என்பது நாயகனுக்குத் தெரியும் இருந்தாலும் அவனுடைய ஆற்றாமை அவள் காதில் விழவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கிறான். அந்த ராதா என்கின்ற குரலுக்கு தன் உதட்டசைவில் அழுத்தம் அளித்து தன் நடிப்பு ராஜ்ஜியத்தைத் துவக்குகிறார் நடிகர் திலகம்.,
அக்கார்டின் இசை, இடி ஓசை, கண்ணைப் பறிக்கும் மின்னல் இவற்றினூடே சற்றும் கவலைப் படாமல் அந்த இடி மின்னலை நோக்குகிறார் நடிகர் திலகம். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பல்லவியை துவக்குகிறார். இரண்டாம் முறை பாடும் போது பாடலின் வரிகளுக்கேற்ப தன் முகத்தை சுழற்றும் போது அதில் அந்த விரக்தி வெளிப்படுவதைப் பாருங்கள்.
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி வரிகளின் போது இரு கைகளையும் விரித்துப் பின் வலது கைகை மேலே தூக்கி கடவுளைச் சுட்டிக் காட்டி அவரைக் குற்றம் சாட்டும் போது அந்த கோபம் கடவுளின் மீதே வெளிப்படுத்துவதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் கொண்டு வருவதைப் பாருங்கள்.
இப்போது முதல் சரணத்தின் பின்னணி இசை துவங்குகிறது. மெல்ல அந்த மண்டபத்தை நோக்கிச் செல்கிறார். ஆஹா.. தொடர்வது கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அந்த அற்புத போஸ்...
மின்னல் பளிச்சிட உடனே ஸ்டைலாகத் திரும்பி மின்னலை நோக்கியவாறு, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என அந்த மின்னலுக்கே சவால் விடும் அலட்சியமான பார்வை,
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/DOSKMR01_zpsncglrh7v.jpg
உடனே திரும்பி நடை.. இரண்டு மூன்று ஸ்டெப்புகள்.. மண்டபத்தில் கால் வைக்கிறார். உடனே மின்னல்.. இன்னும் அதிக அளவில் அந்த அலட்சிய நோக்கு..
இப்போது வலது கையைத் தூணின் மீது வைத்து ஒரு கோபமான நிற்றல். நின்று பார்ப்பதிலும் ஒரு ஜீவனைக் கொணடு வருவது நடிகர் திலகம் மட்டுமாகத் தான் இருக்க முடியும்.
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை..
திரையரங்கை அதிர வைக்கும் வரிகள்... அதைப் பாடும் போது பாடகர் திலகத்தின் குரலில் வெளியாகும் கோபம்...அதைச் சொல்லும் போது இவர் முகத்தில் வெளிவரும் உணர்வு...
இதற்கு அடுத்த வரிகள் கொட்டகையின் கூரையை உடைத்து சீறிட்டுக கிளம்பும் வகையில் கரகோஷத்தை உருவாக்கும்..
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை..
இந்த வரியை இரண்டாம் முறை கூறும் போது தன் வலது கை சுட்டு விரலால் அனாயாசமாக கடவுளைச் சாடும் உடல் மொழி...
இப்போது பல்லவியில் காலம் செய்த கோலமடி வரிகளின் போது இரு கைகளையும் அகல விரித்து இரண்டையும் மேலே தூக்கும் போது கடவுளின் மீதுள்ள கோபத்தை இரு மடங்காக சித்தரிக்கிறார் நாயகன்.
அந்த கோபத்தைப் பாருங்கள்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/DOSKMR02_zpsquhw500v.jpg
இப்போது கோபத்தைக் கொட்டிய பிறகு மனம் உடைகிறது. விரக்தி திரும்புகிறது. நடை தளர்கிறது.
இப்போது மின்னலைக் காண கண்ணும் மனதும் கூசுகின்றன. கை தன்னையறியாமல் கண்ணை மூடுகிறது.. மெல்ல கண்களின் அந்த ஒளி வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக விரல்களால் கண்களைத் துடைத்துக் கொண்டே வர, நடை சற்றே வேகம் பிடிக்கிறது... இந்த நடையைப் பாருங்கள்..
இதில் தளர்வு, விரக்தி வெளிப்படுகிறது...
இப்போது அந்த சூழலை சற்றே மாற்றும் வகையில் திரை இசைத் திலகம் தன் மேதைமையை வெளிப்படுத்துகிறார். மழை நீர் சொட்டும் ஓசைக்காக அவர் பயன் படுத்தும் இசைக் கருவியின் ஒலியோடு இணைந்து ஒளிப்பதிவாளர் அந்த்த் தண்ணீர்ப் பரப்பை அப்படியே நகர்த்திச் செல்வது ... ஆஹா.. என்ன கவிதைத்துவம்... கருப்பு வெள்ளையில் காவயமே படைத்து விடுகிறார்கள் இந்த இடத்தில்...
இப்போது ஒலிக்கிறது அந்த வைர வரிகள்..
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்...
அந்த மழை நீரின் வீச்சையும் தாண்டி அந்தக் குளிரான சூழலிலும் கண்களில் அனல் தெறிக்கிறது நாயகனின் முகத்தில்.. அதைப் பாருங்கள்.. நடிகர் திலகத்தின் கண்கள் அந்த சூழலிலும் கோபத்தையும் உஷ்ணத்தையும் வெளிப்படுத்துவதையும் அதை அவ்வளவு அருமையாக ஒளிப்பதிவாளர் படம் பிடித்துள்ளதையும்.. அவருக்கு ஒரு சபாஷ்...
அந்த வரிகள்.. கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி..
ஆஹா கவியரசின் வரிகள் அண்டம் முழுதும் எதிரொலிக்கும் ஆரவார கரகோஷத்தைத் திரையரங்கில் பெறுகின்றனவே...
http://tamilnation.co/images/hundredtamils/kannadasan2.jpg
மழையென்றும் வெயிலென்றும் பாராமல் நாயகன் தவிக்க, காதலியோ தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாள்.. இந்த இடத்தில் திரை இரண்டாகப் பிரிக்கப் பட்டு நாயகன், நாயகி இருவரையும் சித்தரிக்கிறது..
இருவர மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி..
கடவுளை நேரடியாக அட்டாக் செய்து விடுகிறார் கவியரசர்.
அதை தீர்க்கமாகத் தன் குரலில் கொண்டு வருகிறார் பாடகர் திலகம்.
http://images.mathrubhumi.com/english_images/2013/May/26/03082_190285.jpg
தன் சுட்டு விரலின் வேகமான அசைவுகளால் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்து இறைவன் மீது காதலர்களுக்குக் கோபத்தை வரவழைக்கிறார் நடிகர் திலகம் தன் நடிப்பின் மூலம்..
காதல் தோல்விக்கு கடவுளைச் சாடும் இரு பாடல்களில் ஒன்றான இந்தப் பாடல் சாகா வரம் பெற்றதில் வியப்பென்ன..
குலமகள் ராதை எப்போது மறுவெளியீடு கண்டாலும் சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி காதல் வயப்பட்டு தோல்வியுற்ற ஆண்களையும் திரளாக வரவழைக்கும் உன்னதத் திரைக்காவியமாக விளங்கி மாபெரும் வெற்றி காண்பதின் ரகசியம் புலப்படுகின்றதல்லவோ..
இறுதியில் நமக்குத் தோன்றும் வரிகள்..
நீ ஏன் எப்போது பார்த்தாலும் சிவாஜி சிவாஜி என்று அலைகிறாயோ தெரியவில்லை. என சிலர் கூறுவதோடு,, செல்லமாக, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை கடவுள் செய்த குற்றம் என கடவுளையும் திட்டும் அளவிற்கு ரசிகர்களை உருவாக்கிய பாடல்...
பாடலைப் பாருங்கள்.. அணுஅணுவாக ரசியுங்கள்..
கவியரசரின் வரிகளை, திரை இசைத் திலகத்தின் உயிரோட்டமான இசையை. பாடகர் திலகத்தின் ஜீவனுள்ள குரலை..
http://1.bp.blogspot.com/-N3Bj0rfFCWk/Ut4uTMdizaI/AAAAAAAALeY/zPjVLiiZysk/s1600/KV+Mahadevan.JPG
பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி ஏன் இன்னும் ரசிகர்களை நடிகர் திலகம் பெறுகிறார் என்பதற்கு அத்தாட்சியான பாடலை...
https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg
Richardsof
31st May 2015, 06:10 AM
எம்ஜிஆர் பாடல்கள் என்றென்றும் ...
உற்சாகம்
நேர்மறை சிந்தனை
எளிமையான வரிகள்
சமூக சீர் திருத்த கருத்துக்கள்
இனிமையான இசை
மனதில் ஊடுருவும் எம்ஜிஆர் பிம்பம
நினைவில் நிலைத்து நிற்கும் காட்சிகள் .
இப்படி பல காரணங்கள் சொல்லி கொண்டே போகலாம் . என்னதான் உயர்கல்வி பெற்று , உயர்ந்த இடத்தில இருந்தாலும்
வயது ஏறிக்கொண்டே போனாலும் ,,இயற்கை குணங்கள் ( ஆத்திரம் , வன்மன் , கோபம் , எரிச்சல் ,தூண்டுதல் } கொண்டோர்களை மக்கள் திலகம் தன்னுடைய பாட்டின் மூலம் அறிவுரை கூறியுள்ளார் . திருந்துபவர்கள் உணர்வார்கள் .திருந்தாத உள்ளங்கள் ?
கடவுள் செய்த பாவம் .....
கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................
கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................
rajeshkrv
31st May 2015, 06:47 AM
வாங்க எஸ்.வி ஜி.
நலம்தானே
காலை வணக்கம் எல்லோருக்கும்
rajeshkrv
31st May 2015, 06:59 AM
இசையரசியின் அருமையான பாடல்களின் வரிசை. அருமை மற்றும் அரிதானவை
https://www.youtube.com/watch?v=sPZXpa0oSJ8
https://www.youtube.com/watch?v=qv2_3eift-s
https://www.youtube.com/watch?v=3gK20erhVpU
https://www.youtube.com/watch?v=y_Y81dFPLbQ
rajeshkrv
31st May 2015, 07:00 AM
https://www.youtube.com/watch?v=vUPZNLPH_Gc
rajeshkrv
31st May 2015, 07:07 AM
வாசு ஜி
இதோ இசையரசியும் ராட்சசியும் கலக்கும் படல்
https://www.youtube.com/watch?v=eOTccUVRUfU
vasudevan31355
31st May 2015, 08:13 AM
ஜி!
'பொண்ணு குடிச்சா' பாட்டை போன வாரம் கூட நடைப் பயிற்சியின் போது கேட்டுக் கொண்டே நடந்தேன். இப்போது நீங்கள் பதித்தே விட்டீர்கள். thanks.
vasudevan31355
31st May 2015, 08:20 AM
விஜயா, சோவின் 'ஒரு அசடாட்டம்', சொர்ணாவின் 'நன்றி சொல்ல வார்த்தை இல்லை கண்ணனே', சௌகார் சுஜாதாவின் 'மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு, 'என் செல்லக்கிளி' என்று விஸ்வரூபம் எடுத்து விட்டீர்களே ஜி! அனைத்தும் அரிதானவைதான்.
கொண்டாங்க உங்க முதுகை. சொறிந்து விடுகிறேன்.:) புரியுதா?:)
rajeshkrv
31st May 2015, 08:52 AM
விஜயா, சோவின் 'ஒரு அசடாட்டம்', சொர்ணாவின் 'நன்றி சொல்ல வார்த்தை இல்லை கண்ணனே', சௌகார் சுஜாதாவின் 'மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு, 'என் செல்லக்கிளி' என்று விஸ்வரூபம் எடுத்து விட்டீர்களே ஜி! அனைத்தும் அரிதானவைதான்.
கொண்டாங்க உங்க முதுகை. சொறிந்து விடுகிறேன்.:) புரியுதா?:)
இந்தாங்க முதுகு. கை எட்டுதா பாருங்க ஹி ஹி...
chinnakkannan
31st May 2015, 10:43 AM
ஹாய் ஆல்.. குட்மார்னிங்க்..
ஹாய் வாசு, ராஜேஷ்.
வாசு, புலி பாஞ்சுடுச்சா..:)
*
தமிழ் சீரியல்கள், ஹிந்தி சீரியல்கள் எதுவும் நான் பார்ப்பதில்லை.. சின்னதாய் உடலில் எனக்கு க் கொப்பளம் புறப்படும் பார்த்தால்..
முன்பு பார்த்த போது-
தமிழ் சீரியல் பெண்கள் புடவை அணிந்திருந்தால் முழுதும் மூடிய ரவிக்கை தான் அணிந்திருப்பார்கள்..இந்தக் கால சீரியல்களில் புடவை வயதானவர்கள் தான் அணிகிறார்கள்..இளவயது நங்கையருக்கெல்லாம் சுடிதார் தான்.
ஹிந்தி சீரியல்கள் தான் என் வீட்டில் ஓடும்.. நான் பாட்டுக்கு அடுத்த அறையில் அல்லது டிவி அறையிலும் கூட கம்ப்யூட்டர்/லேப்டாப்புடன் தான் இருப்பேன்..அப்படியும் சில பல கண்களில் படும் ..மனதில்பதியாது..
வெள்ளை வெளேர் ப் பன்னீர் மீது கொஞ்சம் கடலைமாவைக் கலந்தாற்போல பொன்னிறமஞ்சளில் ஹிந்தி சீரியலின் நங்கையரின் முதுகு தென்படும்.. காட்சியின் தேவைக்கேற்பவோ அலலது டைரக்டர் சொல்லியதாலோ என்னவோ ரவிக்கையின் பின்புறம் ஒரே ஒரு முடிச்சு மட்டும் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.. அல்லது ஜன்னல் அல்லது கண்ணாடி அணிந்திருக்கும் ரவிக்கைகளும் உண்டு ..அதைத்தாண்டியும் முதுகு தென்படும்..இதைப் பார்த்தாலும் பார்க்காதது போல் நான் கடமையே கண்ணாயிரமாக -பரப்பிரம்மமாக -எழுதிக் கொண்டிருப்பேன். அன்றி அந்த முதுகுகள் பற்றி எனக்கு எதுவும் தோன்றியது கிடையாது (உண்மைங்க.. நம்புங்க)
அதுவும் சொறிவது என்பது நினைத்துக் கூட ப் பார்க்காத விஷயம் ( நினைத்தால் அடி விழும் என்பது வேறு விஷயம்)
இது தான் எனது நிலைப்பாடு..
தாலாட்டுப் பாடிடும் தாயின் மொழிபோலே
பாராட்டு மாறிவிடும் பார்..
என்று முன்பு எழுதியிருந்தேன்
இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.. ஒரு ஹாய் நன்னாருக்கு எழுதினது என்று சொல்வது எநத விதத்தில் தவறாகும் எனத் தான் எனக்குத் தெரியவில்லை..
*
கோ, கட்டழகுப் பதிவு உங்களைக் கவர்ந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.. நன்றி..
vasudevan31355
31st May 2015, 11:06 AM
ஹாய் ஆல்.. குட்மார்னிங்க்..
ஹாய் வாசு, ராஜேஷ்.
வாசு, புலி பாஞ்சுடுச்சா..:)
புலி பாய்ஞ்சா யானை அதை தும்பிக்கையால் சுழற்றி அடித்து நீங்கள் பார்த்ததில்லையா? இப்போது பார்த்திருப்பீர்களே!:)
vasudevan31355
31st May 2015, 11:08 AM
//இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.. ஒரு ஹாய் நன்னாருக்கு எழுதினது என்று சொல்வது எநத விதத்தில் தவறாகும் எனத் தான் எனக்குத் தெரியவில்லை..//
மர மண்டைகளுக்கு புரிஞ்சா சரி!:)
chinnakkannan
31st May 2015, 02:01 PM
காதலி காதலர்களுக்குள் ஏற்படும் பொய்க்கோபத்திற்குப் பெயர் தான் ஊடல் (ஹை என்ன கண்டு பிடிப்பு)
முன்பு எழுதிய கவிதை..
நாமென்றால் நானென்றாய் நங்கை உந்தன்
.. நாயகந்தான் என்றுசொல மறுத்தே நீயும்
போமென்றாய் எங்கென்றால் விழித்துப் பார்த்து
..பொழுதிலையோ உமக்கென்றாய் மேலும் நானும்
பூமென்மை புலர்காலை போல இங்கே
...புள்ளினமாய்க் கற்பனைகள் கலந்து கட்டி
பூமியிலே உன்னோடு வாழப் பாடல்
..புனைந்தாலோ சிரிக்கின்றாய் ஏனோ மானே..
அந்தக் காலத்தில் தேவி தியேட்டரில் எஸ்வி.சேகர் நாயகனாகப் பார்த்தபடம்ஸ்பரிசம்..கல்லூரிக் காதல் கதை..அந்தக்கால சூழ் நிலைகளுக்கேற்ப கதானாய்கன் கதா நாயகி லவ் செய்ய கடைசியில் மரபுப்படி மங்களகரமாகச் சாகடித்திருப்பார்கள்..
அதில் ஒரு பாட் ..ஊடல்சிறு மின்னல்..குளிர் நிலவே வாடலாமா.( முன்பு கேட்டது தான்..காணொளியை இங்கு தருகின்றேன்..போய் த் தான் கேட்கவேண்டும்) பட் அதுவே வெவ்வேறு விதமான ராகங்க்ளில் பாடப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்..
https://youtu.be/6JaM79_gv6k
vasudevan31355
31st May 2015, 02:46 PM
ஆமாம்! ஹீரோயின் யார் சி.க?:)
chinnakkannan
31st May 2015, 02:51 PM
ஸ்ரீ லஷ்மின்னு போட்டிருந்த நினைவுங்க வாசு. இந்தப் படத்துக்கு அப்புறம் வரவில்லை என நினைக்கிறேன்..( திருவிளையாடல் டி.ஆர்.எம் மனைவி பாணியில்.. “எல்லாம் தெரிந்த தாங்களா இப்படிப் பேசுவது!”
ம்ம் இன்னொரு பழைய கவிதை..?!
*
தாபம் கொண்டு
பாராமல் பார்க்கும் பார்வை
எனக்குப் புரியாதா என்ன..
விமான நிலையம் போகிறேன்
என்றவுடன்
உன் அம்மா அப்பா
தங்கை தம்பி
குதிகுதித்து வந்து விட்டார்கள்..
ரெண்டு கார் எடுத்துக்கலாம்
என்று
பெருந்தன்மை வேறு..
இரண்டரை வருடம் பிரிந்திருந்து
நீ வருகிறாய் என
எப்படிச் சொல்வது..
கேட்டால் அவர்களும் தான்
அப்படி இருந்தார்கள் எனச் சொல்வார்கள்..
ஆனாலும் நீ மோசம்
ஏன்முகம் சுருங்கினாய்..
ஆசையாய்த் தானே
உன் தங்கை தம்பி
காரினுள் அருகில்...
அவ்வப்போது முறைப்பது
புரிகிறதெனக்கு..
தோ..இன்னும் ஒரு மணி நேரம் தான்..
வந்துவிடும் அண்ணா நகர்..
பொறுத்துக்கொள்..
ம்ம்..
இது நான் உனக்குச் சொல்லவில்லை
எனக்குச் சொன்னேன்..!
*
https://youtu.be/3vFw2qwKYCU
Russellzlc
31st May 2015, 07:18 PM
வாசு சார்,
தங்கள் புரிதலுக்கு நன்றி. மன்னிக்க வேண்டும். தயவு செய்து ஒரு வேண்டுகோள். நடிகர் திலகம் திரியில் இன்று நீங்கள் இட்ட பதிவில் (பதிவு 2606) 17 -வது வரியில் ‘நாகேஷைவிட நடிகர் திலகம்தான் டாப் என்று அள்ளிவிடும் அறிவிலிகளுக்கு.... ’ என்று உள்ளது.
அது.. ‘நடிகர் திலகத்தை விட நாகேஷ்தான் டாப் என்று அள்ளிவிடும் அறிவிலிகளுக்கு....’ என்று இருந்திருக்க வேண்டும். தயவு செய்து அதை சரியாக மாற்றி விடுங்கள். இல்லாவிட்டால் முதுகு சொறிவதற்காக வேண்டுமென்றே நீங்கள் நாகேஷை தூக்கி வைத்தும் நடிகர் திலகத்தை தாழ்த்தியும் எழுதியிருக்கிறீர்கள் என்று ‘கலை’ப்பற்று கொண்ட யாராவது சொல்வார்கள். எதற்கு வம்பு?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
31st May 2015, 07:20 PM
வாசு,
கலைவேந்தன் என்கிட்டே ஏற்கனவே ஒத்துக்கொண்டுவிட்டார், நான் அவரை விட வயதில் மிக மிக சிறியவன் என்று (அந்த பூக்கள் விடும் தூது பற்றி நீங்க சொன்னீங்க இல்லையா. அப்பவே.) அதுவும் சரிதான் நீங்கள் சொல்வது போல ராஜா ஹரிச்சந்திரா பற்றி விவரம் என்னிடம் கேட்பார்தான். ஏனென்றால் நான் நெட்டில் நன்றாக தேடி, கிடைக்கும் விவரத்தை கொடுத்து விடுவேன் என்று அவரும் புரிந்து கொண்டுள்ளார். மற்றபடி ஒரு முறை சொல்லியிருந்தேன் இன்னும் அவர் பிறக்கவே இல்லையென்று. அதற்குதான் பதில் இல்லை. வாஸ்தவம் தானே. பிறந்திருந்தால் பதில் கொடுத்திருப்பார் அல்லவா?
கல்நாயக்,
இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும்.
இதோ பதில் சொல்லி நான் பிறந்ததை நிரூபித்து விட்டேன். நான் பிறந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. இதோ, இப்போதும் சொல்கிறேன். ஆனால், நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. ஒரு வயது ஏறுவதையே என்னால் தாங்க முடியவில்லை. 18-ல் இருந்து 19 ஆவதைத்தான் சொல்கிறேன்.
அதையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எல்லாம்.... ஹூம்...உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமாயிருக்கு .. ராஜா ஹரிச்சந்திரா பற்றி உங்களுக்கே நன்கு தெரிந்த விவரங்களை நெட்டில் பார்த்து கூறியதாக நீங்கள் கூறினாலும் நாங்கள் நம்பத் தயாரில்லை.
சின்னக்கண்ணன்,
//வெள்ளை வெளேர் ப் பன்னீர் மீது கொஞ்சம் கடலைமாவைக் கலந்தாற்போல பொன்னிறமஞ்சளில் ஹிந்தி சீரியலின் நங்கையரின் முதுகு தென்படும்.. காட்சியின் தேவைக்கேற்பவோ அலலது டைரக்டர் சொல்லியதாலோ என்னவோ ரவிக்கையின் பின்புறம் ஒரே ஒரு முடிச்சு மட்டும் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.. அல்லது ஜன்னல் அல்லது கண்ணாடி அணிந்திருக்கும் ரவிக்கைகளும் உண்டு ..அதைத்தாண்டியும் முதுகு தென்படும்..இதைப் பார்த்தாலும் பார்க்காதது போல் நான் கடமையே கண்ணாயிரமாக -பரப்பிரம்மமாக -எழுதிக் கொண்டிருப்பேன். அன்றி அந்த முதுகுகள் பற்றி எனக்கு எதுவும் தோன்றியது கிடையாது (உண்மைங்க.. நம்புங்க)//
நம்பிட்டோங்க. ஆஹா...கடமையிலேயே என்ன ஒரு கண்.
வேலை கழுத்தை நெரிக்கிறது. விரைவில் பாட்டோடு வரேன்.
கிருஷ்ணா சார்,
உங்களின் கவிஞனும் கண்ணனும் பதிவு அருமை. ரசித்து படித்தேன். கோபாலா சீரியலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ரவி சார் எங்கே காணோம்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
vasudevan31355
31st May 2015, 07:55 PM
மாற்றி விட்டேன் கலை சார், நன்றி! மிகுந்த மனவருத்தத்தில் இருந்த போது எழுதிய பதிவு அது.
இன்னொன்று பார்த்தீர்களா கலை! என்னையுமறியாமல் அப்போதும் நடிகர் திலகம்தான் டாப் என்று எழுதியிருக்கிறேன் கவனித்தீர்களா? அதுதான் அவர் மீது உள்ள பக்தி. அதுதான் அவர் தந்த ஆசிகள். மறந்தும் கூட இன்னொருவர் டாப் என்று எழுத வரவில்லை. இயற்கையும் அனுமதிக்கவில்லை.
தங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி!
மற்றபடி டைமிங் 'சொறி' நையாண்டியை மிகவும் ரசித்தேன்.
Russellzlc
31st May 2015, 08:06 PM
நன்றி வாசு சார்,
உங்களின் நடிகர் திலகம் மீதான பக்தி பாராட்டுக்குரியது. உண்மைதான் சார், நமக்கு நமது நாயகர்களைத் தவிர வேறு யாரையும் டாப் என்று எழுத வராது. மற்றபடி, எனது வேண்டுகோளையும் தயவுசெய்து பரிசீலியுங்கள். அங்கும் தொடருங்கள். நீங்கள் அங்கு பங்கு கொள்வது எனக்கு மிகப்பெரிய பலம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
vasudevan31355
31st May 2015, 08:16 PM
சி.க,
http://i.ytimg.com/vi/wUsTdYkNTC0/hqdefault.jpg
http://www.maastars.com/Profiles/553_srilakshmi/images/thumbs/srilakshmi-1.jpg
கரெக்ட். ச்சும்மா சீண்டினேன். 'ஸ்பரிசம்' படத்தின் ஹீரோயின் பெயர் ஸ்ரீலஷ்மிதான். ஒரிஜினல் பெயர் மணப்புரம் ஸ்ரீலஷ்மி. சென்னையில் பிறந்தவர்.
ஆனால் ஆந்திரா வாழ வைத்தது. தற்சமயம் ஹைதராபாத்தில் வாசம்.
முதலில் காமெடியினி ஆக 1980 இல் 'சுவர்க்கம்' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகம். பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் என்று தலை காட்டல். தெலுங்கில் ஸ்வர்ண கமலம், சுபலக்னம் போன்ற படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. தெலுங்கில் நந்தி அவார்டெல்லாம் வாங்கியிருக்கிறார்.
நிறைய தொலைக்காட்சி சீரியல்களில் பிஸி.
படித்துவிட்டு முதுகு சொறிவீர்கள்தானே!
இன்னும் விவரம் வேணும்னா இதைப் பாருங்க.
https://youtu.be/kQfxEtWAWR4
chinnakkannan
31st May 2015, 08:53 PM
ஹாய் கலை.. வாங்க வாங்க .. செளக்கியமா.. பார்த்து நாளாச்சு..:) மிக்க நன்றி நம்பியதற்கு..
வாசு.. ஒரு வெண்பா பழசு எடுத்துப் போட்டேனா உங்களுக்காக...அப்புறம் நானே டெலீட் பண்ணிட்டேன்..ஸ்ரீ லஷ்மி அந்தப்படத்துக்கு அப்புறம் நினைவிலேயே இல்லை..இன்னும் அந்தபாட்டு வீடியோ கூட பார்க்கவில்லை..அட அட அடா.. தகவல்கள் கொடுக்கறதுக்கு உங்களை விட்டால் யார் இருக்கா :) பட் ஸ்ரீ லஷ்மிக்கு பெண் ஏதாவது நடிகையாய் இருந்தால் அவர் படத்தைப் போட்டிருக்கலாம்..யூத் கல்ஸ் அண்ட் கலை சந்தோஷப் பட்டிருப்பார்கள்!
vasudevan31355
31st May 2015, 08:57 PM
கலை சார்
நன்றி!
நண்பர்களுக்கு,
குறுகிய நோக்கம் கொண்டு நடிகர் திலகம் திரியை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நான் ஆரம்பித்த திரி மதுர கானங்கள் என்பது என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.
நடிகர் திலகத்தின் புகழ் எங்கும் வெளியே பரவக் கூடாது என்பது எனது லட்சிய வாழ்நாள் குறிக்கோள். நடிகர் திலகமே என் பரம எதிரி. என்ன செய்யலாம் என்று பார்த்தேன். மதுர கானங்களை ஆரம்பிக்கலாம் என்று உள்ளே குறுகிய கெட்ட நோக்கம் உருவாயிற்று. வஞ்சமாக ஆரம்பித்தும் ஆகி விட்டது.
அதில் மிகப் பெரிய வெற்றியும் கிடைத்தது. கூட நடிகர் திலகம் திரியின் நண்பர்களை விலைக்கு வாங்க அவர்களிடம் பேரம் பேசினேன். ஆளாளுக்கு தலா ஐந்து லட்சங்கள் கொடுத்து அவர்களை இங்கே வரவழைத்தேன். நடிகர் திலகம் திரியின் மீதான பகையை பழியை இப்படி அங்கிருப்பவர்களை இங்கு வரவழைப்பதன் மூலம் தீர்த்துக் கொண்டேன்.
பணம் வாங்கிய நண்பர்கள் சொல்லியபடி அங்கிருந்து இங்கே வந்து வாங்கிய பணத்துக்கு வஞ்சனை இல்லாமல் இங்கே பதிவுகளாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சின்னக் கண்ணனுக்குதான் இன்னும் இரண்டு லட்சம் தர வேண்டும். அவர் பரவாயில்லை வேண்டாம் என்று பெரிய மனது பண்ணி சொல்லியதோடு அல்லாமல் பதிவுகளையும் அதிகமாக அளித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சிலர் நட்புக்காக கௌரவ ரோல் செய்தனர் பணம் காசு வாங்காமலேயே. ஆனால் அவர்களை இங்கே தக்க வைக்க முடியவில்லை. நடிகர் திலகம் திரியிலேயே இருந்தார்கள். பின்னும் சில புதிதான நண்பர்கள் வேறு அங்கு உறுப்பினர்களாய் சேர்ந்து இருந்தனர். சரி! எல்லோரையும் இங்கு திரும்ப அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும்...முற்றிலுமாக நடிகர் திலகம் திரியை கூண்டோடு இல்லை இல்லை பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற வெறியுடன் பேரம் பேச ஒரு சாக்குப் பை நிறைய பண மூட்டையுடன் அங்கு போனேன். ஆனால் இன்று வகையாக கையும் களவுமாக ஒருவரிடம் மாட்டிக் கொண்டேன். இப்போது எனது குறுகிய நோக்கம் வெற்றி பெறவில்லை.தோற்று விட்டேன். அதற்கு பின் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!
எனக்கு என்ன வருத்தம் தெரியுமா! இங்கிருக்கும் நண்பர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்களே! அதுதான் பெரிய வருத்தம்.
நடிகர் திலகம் திரியில் மட்டும்தான் பதிவுகள் இட வேண்டும் என்று யாராவது சட்டம் போட்டு இருக்கிறார்களா? இல்லை இங்குதான் பதிவேன் இங்கெல்லாம் பதிய மாட்டேன் என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்களா?
சி.க சொன்னது போல் அவரவர்களுக்கு தெரிந்ததை ஜாலியாக பகிர்ந்து கொள்கிறோம். காசு, பணம் எல்லாவற்றையும் மீறி முகம் தெரியாத ஆனால் முத்திரை பதிக்கும் அன்பர்கள் தனக்குப் பிடித்த திரிகளில் ஆசையாய் வருகிறார்கள். கொஞ்ச நேரம் தங்கள் கவலைகளை மறந்து நமது எண்ணங்களை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இதில் என்ன முதுகு சொறிதல்? மாமனா மச்சானா?... முதுகு சொறிவதால் என்ன கிடைக்கப் போகிறது? நமக்கு எல்லோரும் முதுகு சொறியும் போது சுகமாக இருந்தது அல்லவா? அடுத்தவர்கள் சொறிந்து கொண்டால் மட்டும் கசக்கிறதா?
vasudevan31355
31st May 2015, 09:05 PM
பட் ஸ்ரீ லஷ்மிக்கு பெண் ஏதாவது நடிகையாய் இருந்தால் அவர் படத்தைப் போட்டிருக்கலாம்..யூத் கல்ஸ் அண்ட் கலை சந்தோஷப் பட்டிருப்பார்கள்!
கல்ஸ் கலை கேக்கலையே! கேட்டிருந்தா ஸ்ரீலஷ்மியொட குழந்தை வயசு படத்தை போட்டிருப்பேனே.:)
போட்டது உமக்காகங்காணும். அதை விட வயசான போட்டோ கிடைக்கலியேன்னு நானே நொந்து போய் இருக்கேன்.:)
chinnakkannan
31st May 2015, 10:34 PM
//போட்டது உமக்காகங்காணும். அதை விட வயசான போட்டோ கிடைக்கலியேன்னு நானே நொந்து போய் இருக்கேன்// ஓய்.. உமக்காக எல்.ஆர்.ஈ பாட்டுத் தேடிக்கிட்டிருந்தேன் பாருங்க எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் :)
நீங்க ஸ்ரீ லஷ்மி கொடுத்தா நான் ஐஸ்வர்யா கொடுக்கறேன்..
பாவம் புள்ள.. சின்ன வயசுல ஒல்லியா இருந்துச்சா..ரமேஷ் அர்விந்த் கொஞ்சம் ஷார்ட்டா கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு ஆடுது..ஆனா பாட் நல்லபாட்டுங்க்ணா..சரி அந்தப் பாட்ட அப்புறமா போடறேன்..
உங்களைப் பத்தி ஒரு பாட் இருக்கே.. அது போடறேன்..எங்கே கொஞ்சம் புறம் காண்பிங்க :)
**
எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார் என் வாழ்வில் நான்கண்ட மிக நல்லவர்
யாரோ என்ன பேரோ யாதிவர் சொந்த ஊரோ
ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது..
முதலாளி..தேவிகா… ஆனால் வாயசைப்புதான்கொஞ்சம் ஓடுது..
https://youtu.be/PE8VrcPxUTY
போனஸா ஒரு சைக்கிள் பாட்டு..
குங்குமப் பொட்டுக்காரா கோலக் கிராப்புக்காரா உன்னை நான் பிரியேனே
மத்தாப்பு சேலைக்காரி மகிழம்பூ ரவிக்கைக்காரி
புளிமூட்டை போலே நீயும் பின்னாலே ஏறி வந்தா
எளிதாக சைக்கிள் ஓடுமாம்..எஸ் எஸ் ஆர் ஒல்லி ஒல்லி தேவிகாட்ட சொல்றார் நற நற..:)
https://youtu.be/96217RrvV0U
rajeshkrv
31st May 2015, 11:29 PM
கல்ஸ் கலை கேக்கலையே! கேட்டிருந்தா ஸ்ரீலஷ்மியொட குழந்தை வயசு படத்தை போட்டிருப்பேனே.:)
போட்டது உமக்காகங்காணும். அதை விட வயசான போட்டோ கிடைக்கலியேன்னு நானே நொந்து போய் இருக்கேன்.:)
ஸ்ரீ லெக்*ஷ்மி தெலுங்கில் கொடி கட்டி பறந்தார். சுத்திவேலு மற்றும் பிரம்மானந்தம் இருவருக்கும் ஜோடியாக பல படங்களில் நடித்தார்
சமீபத்தில் பயணம் திரைப்படத்தில் மோகன்ராமின் மனைவியாகவும் நடித்தார்.
rajraj
1st June 2015, 01:31 AM
From Samsaram (1950)
kada kada loda lodaa vaNdi.....
http://www.youtube.com/watch?v=WfdDZeIiZuU
From the Telugu version Samsaram
Taku taku tamakula........
http://www.youtube.com/watch?v=wzMt896e_uA
From the Hindi version Sansar
khat khat gaadi.....
http://www.youtube.com/watch?v=dIwHuC0ZQJ8
Enjoy a bullock cart ride ! :) That is, if you can find one ! :lol:
A few years back we visited my ancestral villlage in Tanjore district. We thought it would be fun to ride a bullock cart.
There was no bullock cart. Bullock carts have been replaced by automobiles, motor cycles, scooters and tractors! :)
Gopal.s
1st June 2015, 04:15 AM
விளக்கத்திற்கு நன்றி நண்பர்களே. என் கோபத்திற்கு காரணம் புரிந்து வாசு நேற்றே எனக்கு 50 லட்சம் செட்டில் செய்து விட்டதால் தொடர்கிறேன்.(பின்னே ஐ.பீ.எல். போல எனக்குத்தானே அதிக பட்ச ஏல தொகை??)
எம்.எஸ்.வீ. பாதியில் தொங்கலில் நிற்கிறது. அதை முடித்து விட்டு, அடுத்து எடுக்க இருப்பது உலகளவில் என்னை கவர்ந்த இசை மற்றும் பாடகர்கள்,குழுக்கள். மதுர கானமும் globalise ஆக வேண்டாமா? தமிழில் அதிக பட்சம் ஒரு 1000 நல்ல பாடல்கள் கடந்த 80 வருடங்களில் தேறலாம். மதுர கானத்திலோ 6000 பாடல்களாவது குறிக்க பட்டிருக்கலாம். பிணங்களை புதை பொருள் ஆராய்ச்சி பண்ணுவது போல பண்ணினால்தான் இனி ஏதாவது தேறும்.
இதை பற்றி நேயர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
எதுவாக இருந்தாலும் ஜூலைக்கு பிறகே. பார்க்கலாம்.
rajeshkrv
1st June 2015, 09:41 AM
வாசு ஜி கேட்ட தாலாட்டு படப்பாடல் கிடைக்கவில்லை
ஆனால் அதே படத்தில் ஒரு அழகு பாடல்
https://www.youtube.com/watch?v=B-5J-_n_KNA
rajeshkrv
1st June 2015, 09:50 AM
கேலிப்பாடல்கள் என்றாலே ஒரு குதூகலம் தான்
இதோ
https://www.youtube.com/watch?v=7P0AO27ReZw
rajeshkrv
1st June 2015, 10:09 AM
மறந்து போன பாடல்களின் தொடர்ச்சி
அடடா இங்கு விளையாடும் புள்ளி மானே
ஜாலி ஆப்ரஹமின் அழகான குரலில் ராஜா இசை
https://www.youtube.com/watch?v=Vrj6RIEnZ60
ஆறடிச்சுவரு தான் ஆசையைத்தடுக்குமா கிளியே .. வாலி ஐயாவின் அழகான வரிகள்
https://www.youtube.com/watch?v=rreSgAoMzV0
தென்மதுர சீமையில..மீனாட்சி கோவிலில .. இது மிகவும் பிரபலமான பாடல்
https://www.youtube.com/watch?v=JLmfwnqhgqI
டி.வி.ஜியின் மகள் தேவி இவருக்கு ராஜா நிறைய வாய்ப்புகள் கொடுத்தார்
இது அவரின் நல்ல பாடல்
https://www.youtube.com/watch?v=xlEWXS5UmAo
rajeshkrv
1st June 2015, 10:30 AM
எஸ்.ராஜேஸ்வரராவ் அவர்கள் இசையரசியை மட்டுமே நம்பினார்.
அவரது குரலில் பல கடினாமான பாடல்களை உருவாக்கி அதை அவர் மட்டுமே பாட முடியும் என்று நிரூபித்தார்.
அவர் மகனான கோட்டியிடம் கேட்டபோது அவர் சொன்னது தான் உருவாக்கியதை 100% பாடக்கூடியவர் இசையரசி மட்டுமே என்று சொல்வாராம்
இதோ அதற்கு சான்று
https://www.youtube.com/watch?v=iqN4IC4VMV8
chinnakkannan
1st June 2015, 11:37 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
ராஜேஷ்.. கேலிப் பாடல்கள் குட்.. எனக்கு நினைவுக்கு வருபவை சிங்கார சோலையே, பறக்குது பறக்குது கண்ணாலே பச்சைப் புடவை தன்னாலே இழுக்குது எங்களை ஓடத்திலே, பூந்த மல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே, என்ன வேணும் நில்லு பாமா ம்ம்
கல்ஸ் ரவி காணோமே..
chinnakkannan
1st June 2015, 01:09 PM
சரிபார்த்துக் கொண்டேன்
பொட்டு சரியாய் இருக்கிறதா..
இந்த பிங்க் சுடிதாருக்கு ஓகேயா
லிப் க்ளாஸ் போட்டாச்சு
இந்த இயர்ரிங்க்ஸ் நே சூட்டபிளா இல்லை
ஓ இந்த கோரல் இஸ் குட்
போட்டுக்கலாம்..
காதில் போட்டுக் கொண்டு
ஆடுவதைப்பார்க்க
குட்.. அவன் சந்தோஷப் படுவானா..
வீட்டு மணி அழைப்பு
அவன் தான்..
மாடிப்படிக்கட்டில்
தாவிக்குதித்து இறங்க
சுண்டுவிரலில் கொஞ்சம்
அடி பலமாய்..
கண்ணில் வலி..
பொறுத்துக்கொண்டு
திறந்தால்
சிரிப்பூ முகத்தில்..
ஹை.. நல்லா இருக்கே
இந்த டிரஸ் உனக்கு..
தோடு புதுசா..
சுண்டுவிரல் தந்த வலி
போயே போச்சு
*
https://youtu.be/DNJ9kWmWKTQ
chinnakkannan
1st June 2015, 01:11 PM
விற்க முடியாது..
ஓவியன் கண்டிப்பாய்
தலையசைத்து மறுக்க்
வியப்பாய்த் தான் இருந்தது..
கண்காட்சியில்
அவனது மற்ற ஓவியங்கள் எல்லாம்
அழகு.. மிக அழகு..
இது கொஞ்சம் சுமார் தான்..
சின்னக் கிறுக்கலாய்
ந்திக்கரையில் இருக்கும் ஒரு
பெண்பற்றிக் கோட்டோவியமாய்....
ஒரு வேளை காதலியோ
மெல்லிய புன்முறுவல்..
இன்னும் கொஞ்ச்ம்
உற்று நோக்குகையில்...
ஒரு வேளை அந்த
ஓவியனின் பையன் வரைந்ததாய் இருக்குமோ..
அல்பாயுசில் அவன் இறக்க
இவன் தர மறுக்கிறானோ..
மறுபடியும் ஓவியனை நோக்க
அவன் முகத்தில் மாற்றமேதும் இல்லை..
நானும் எதுவும் கேட்கவில்லை..
வந்துவிட்டேன்..
எதற்காகக் கலைத்துக் கொள்ள வேண்டும்
என் கற்பனையை..
*
https://youtu.be/f2hoKR5rdfE
chinnakkannan
1st June 2015, 01:21 PM
தெரியாதா என்றால்
ஆம் என்றாய்...
எனக்குத் தெரிந்ததை
மிளகு உப்பெல்லாம் போட்டு
கொஞ்சம் நீட்டி முழக்கிச்
சொன்னால் கேட்டு விட்டு..
அதைப் பற்றியே
இன்னும் நிறையச் சொல்கிறாய்..
ஏன் முதலில் தெரியுமெனச் சொல்லவில்லை என்றால்
ஏதாவது சொல்கையில்
என் காதின் ஜிமிக்கியின் அசைவுகள்
உன் மனதை அசைக்கிறது என்கிறாய்..
ச்சீ போ
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
கிட்டே வா படவா..
*
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே -ன்னு தான் பாட்டு இருக்கு லேட்டஸ்டா எனில்.. ஜிமிக்கிக்குப் பதில் லோலாக்கு
https://youtu.be/U4r1JRy48R0
chinnakkannan
1st June 2015, 01:24 PM
எல்லாம் முன்பு எழுதியிருந்தவை..
***
உறுத்தினால் என்ன செய்வது..
இது தான் விதி
ஏற்க வேண்டியது தான்..
மூன்றாவது மாடி அடுக்ககத்தில்
பார்த்தால் கொஞ்சம் தள்ளி
ஒரு வீட்டின் மொட்டை மாடி, பின்
அந்தப் பக்கம் ஆரம்பித்து வளர்ந்திருக்கும்
நெடிதுயர்ந்த மரம்..
மாடியின் பாதி மறைந்திருக்கும்..
அந்தி வேளையில்
கசமுச கசமுச எனக் கூச்சலாய்க்
குருவிகள்
டபக் டபக் என அந்த மரக்கிளைகளில்
சரணடையும்..
அதிகாலையில் மறுபடி கசமுச..
இரைதேடக் கிளம்பும்
நிதப்படி விஷயம்..
குடிவந்தமுதல் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தஒலி
இன்னிசையாய் மாறிப்போனது நாட்பட..
திடீரென வந்த புயல்
மரத்தைசாய்க்க
ஓரிரு நாட்களில் முழுவதுமாய்
வெட்டுப்பட்டுக் காணமற் போக..
முதலில் தவித்த குருவிகள்
பின் அவையும் காணாமல் போக..
எப்போது வரும் என நினைப்பில்
நாட்கள் நகர்ந்த போது..
வீட்டில்
ஸ்ப்ளிட் ஏசி வைக்க வேண்டும்
மனைவி மகள் மகன் அடம்பிடிக்க
வேண்டாம் நேரா என்மேல் அடிக்கும்
ஒத்துக்காது என நான் மறுத்தாலும்
சரி என பொருத்தவேண்டியதாய்ப் போனது..
முன்னம் இருந்த ஜன்னல் ஏசியைக் கழட்டி
ப்ளைவுட்டால் மறைத்தால்..
ஒரு நாள் அதிகாலையில்
மறுபடி குய் குய்..
ஏசி ஓட்டையின் பின்புறம்
காணாமல் போயிருந்த குருவிகளில் சில
மறுபடியும் குடித்தனம்..
மாற்றத்திற்கு குருவிகள்
பழகிவிட்டன..
எனக்குத் தான் புதிய ஏசி
ஒத்துக்கொள்ளவில்லை
அடிக்கடி சரியில்லாமல் போகிறது உடம்பு
*
https://youtu.be/w0DuxkCIsEA
chinnakkannan
1st June 2015, 01:32 PM
பந்தயம் தான்.
ஒப்புக் கொண்டாயிற்று..
இதோ வந்தாயிற்று...
கிழவனாரின் கண்கள் சுழல
அடுக்குமாடிக் குடியிருப்பில்
மனங்கள், பணங்கள் வேறுபட்டிருந்தாலும்
மைதானத்தில் கூடியிருக்க..
கிழவர் வேட்டியை குறுக்கில்
கட்டிக் கொண்டார்..
நெற்றிக் குறுக்கில் பேரனின் குரல்..
தாத்தா
சர்க்கரை பிபி மாத்திரை
போட்டுக் கொண்டாயா..
கொஞ்சம் யோசி
உன்னால் முடியுமா..
முடியுண்டா
மனதில் உறுமி நிமிர்ந்தால்
அருகில் பேரனின் நண்பன்
இள் வயது
புதிய ஷீக்கள் கால்களில்
கைகள்
உடற்பயிற்சியில் உரமுடன்..
கைகால் நீட்டி வளைத்து
இவரைப்பார்த்த சிரிப்பில்
சினேகமில்லை..
கூடவே நிறைய அலட்சியம்..
பெரிசு..
சும்மா கூவாத
முடிஞ்சா எங்கூட
ஓடி வர முடியுமா..
நீ ஜெயிச்சா
நாங்க விளையாடவே மாட்டோம்
தோத்தா...
உசுப்பேற்ற
எழுபது வருடமாய்
உடன் வளர்ந்த ரோஷம்
விஸ்வரூபமெடுக்க..
சரிடா..
எதிர் கிரெளண்ட்ல ஒரு ரவுண்ட்
யார் முதல்ல வரான்னு பாக்கலாம்
நாள் குறித்து
இதோ வந்தாயிற்று..
நடுவராய் இருந்தவர்
ஒன்று இரண்டு மூன்று சொல்ல.
பெரிய புயலும் சின்னச் சூறாவளியும்
பறக்க
வெற்றிக் கம்பம் வந்ததும்
ஒருவர் மூச்சிரைக்க
மற்றவர் கொஞ்சம் மூச்சிரைத்து நின்று
கீழே விழ..
கூட்டத்தில் குரல்கள்.
அச்சச்சோ என்னாச்சு.
தெரியலையே
இந்த வயசுல இதெல்லாம் வேண்டாம் தானே
பார்க்காத ஒருவர் சொல்ல
என்ன சொல்றீங்க நீங்க..
விழுந்த்து கிழவனார் இல்லை.
பின்...
கூட்டத்ததை விலக்கி
பரிசோதித்த வைத்தியர் முகம் மாறித்
தோள் குலுக்க..
என்ன ஆச்சு..
மாரடைப்பாம்..ச்ச்
ரொம்பச் சின்ன வயசுப்பா..
இப்படி ஆச்சே...
கிழவனார்
மூச்சிரைப்பையும் பொருட்படுத்தாமல்
அடப்பாவி எழுந்திருடா
எழுந்திருடா விளையாடலாம்..
அச்சோ.. நான் தப்புப் பண்ணிட்டேனே
எனக் கதற..
பார்த்தவர்களுக்குப் புரிந்ததொன்று..
வாழ்க்கை மாறுவதற்கு
போதும் ஒரு நொடி..
இல்லைஇல்லை அதற்கும் குறைவாக.
*
https://youtu.be/lp6hxVyp5g4
vasudevan31355
1st June 2015, 01:35 PM
வாசுவையும் காணோம்.:)
vasudevan31355
1st June 2015, 01:51 PM
சி.க,
உங்களுடைய இன்றைய எல்லா பதிவுகளுக்கும் என் முதுகு சொறிவு. முதுகை காட்டுங்க.
chinnakkannan
1st June 2015, 01:51 PM
அதான் வந்துவிட்டீர்களே :) பெருமாளைப் பார்த்த மாதிரி இருக்கு..
*
ஜன்ம சாபல்ய்ம் அடைஞ்சுடும்
பெருமாளைப் பாத்தால் போதும்
என்று சொல்லிக் கொண்டிருப்பாள்
எதிர்வீட்டுப் பாட்டி..
அங்கிங்கே வேலை பார்த்து
சிறுகச் சிறுகச்
சேர்த்தும் வைத்திருந்தாள்...
ஒரு தடவை
விட்டுச் சென்ற மக்ன்
எதற்கோ வர
முகமெல்லாம் மலர்ச்சி..
சற்று நேரத்தில்
அவன் சென்றுவிட
என் வீட்டுக்கு வ்ந்தாள்..
என்ன என அம்மா கேட்டதிற்கு
ஏதோ கஷ்டமாம் கொஞ்சம்
துட்டு கேட்டான் கொடுத்தேன்
அடிப்பாவி..
ஒனக்கோ கொஞ்சம் தானே வ்ருமானம்...
இருந்தாலென்ன
பெருமாளுக்கு வச்சுருந்தது
எடுத்துக் கொடுத்துட்டேன்..
எப்படியும்
அங்க என்னை சேர்க்கப் போறவன்
இவன் தானே...
சொன்ன பாட்டியின் முகத்தில்
புன்சிரிப்பாய்
வழிந்து கொண்டிருந்தார் பெருமாள்.
*
https://youtu.be/7RJ1o69C6-s
chinnakkannan
1st June 2015, 01:52 PM
நான் மறத்தமிழன்.. புறம் காட்ட மாட்டேன் பகைவர்களுக்கு.. நண்பர்களுக்கு ஓகே..இந்தாங்க அண்ட் தாங்க்ஸ்.. :)
வீட்டுக்குப் போய் இன்னும் இருக்கு.. ரைட் அப் எழுதத்தான் நேரம் இல்லை..பட் ஐ வில் ட்ரை..
chinnakkannan
1st June 2015, 02:02 PM
கவனிப்பு நல்லது தான்
அதற்காக இப்படியா
இளவயது பாவாடை தாவணி மங்கை
பந்தியில்
அமர்ந்திருந்த வாலிபனுக்கு
சரமாரியாகக்
கண்களாலும் கைகளாலும்
பரிமாறிக் கொண்டிருக்க..
அந்தப்பக்கம் அமர்ந்தபடி பார்த்த நான்
பொறுக்கமுடியாமல் கேட்டேன்..
அந்தப் பொண்ணு அந்த ஆளோட காதலியா..
அருகிலிருந்தவ்ர் முறைத்தார்..
வாய் கூசாம இப்படிக் கேக்கறீங்களே..
அந்தப் பொண்
அவரோட மச்சினி...!
**
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்கோ மச்சினி யாருமில்லை..
*
மச்சினின்னு பாட்டே இல்லையே :)
*
https://youtu.be/dQZGgVJXXHg
kalnayak
1st June 2015, 04:14 PM
கவனிப்பு நல்லது தான்
அதற்காக இப்படியா
இளவயது பாவாடை தாவணி மங்கை
பந்தியில்
அமர்ந்திருந்த வாலிபனுக்கு
சரமாரியாகக்
கண்களாலும் கைகளாலும்
பரிமாறிக் கொண்டிருக்க..
அந்தப்பக்கம் அமர்ந்தபடி பார்த்த நான்
பொறுக்கமுடியாமல் கேட்டேன்..
அந்தப் பொண்ணு அந்த ஆளோட காதலியா..
அருகிலிருந்தவ்ர் முறைத்தார்..
வாய் கூசாம இப்படிக் கேக்கறீங்களே..
அந்தப் பொண்
அவரோட மச்சினி...!
**
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்கோ மச்சினி யாருமில்லை..
*
மச்சினின்னு பாட்டே இல்லையே :)
*
https://youtu.be/dQZGgVJXXHg
I object your honour. There is a song from the popular Vijay film "Poove Unakkaaga"
https://www.youtube.com/watch?v=pwX56KXBxsU
Coming back soon.
chinnakkannan
1st June 2015, 04:27 PM
Thank you. Come back soon..:)
chinnakkannan
1st June 2015, 05:47 PM
வாழும் பல்லிங்க..ஒண்ணும் செய்யாது...
வீட்டுக்காரர் சொன்னாலும்
புதுக்குடித்தனம் மனைவியுடன்
சென்றபோது கொஞ்சம்
பயம்மாகத் தான் இருந்தது..
அதுவும்
அது
படுக்கையறை,
குளியலறை,
சமையலறை
என
நாராயணக் கடவுள் போல
காட்சி தரும்..
பார்த்தால்
பதிலுக்கு வெறித்த பார்வை பார்த்து
ச்ச்ச் சொல்லும்..
மனைவி கிண்டல் செய்வாள்
என்ன இது பல்லிக்கெல்லாம் பயந்து..
ஒரு ஞாயிறுப் பொழுதில்
காலையில்
ச்ச் சத்தத்தில்
சட்டென விழிப்பு வந்ததில்
கொஞ்சம் பயந்து கத்த...
அவள் குங்குமமாய்ச் சிவந்து
வாயைப் பொத்தினாள்..
கத்தாதீங்க.. அது பல்லியில்லை
நான் தான்..!
*
https://youtu.be/Fk8WwgEX75g
chinnakkannan
1st June 2015, 06:11 PM
நல்லபடி யாய்க்கவிதை நெய்ய வேண்டும்
..நாவினிலே கலைமகளும் சொல்ல வேண்டும்
கல்லென்றே இருந்தமனம் கனிந்து இங்கே
..கனிவான சிற்பமென மாற வேண்டும்
வில்லினிலே சீறிவரும் அம்பைப் போல
…வெற்றிதரும் கற்பனைகள் மிளிர வேண்டும்
சொல்லரசி நாமகள்நீ என்னை வாழ்த்தி
..சோர்விலாமல் நற்கவிதை அருள வேண்டும்
https://youtu.be/uaZqO6KC8VA
vasudevan31355
1st June 2015, 06:49 PM
அன்பு சுந்தர பாண்டியன் சார்,
http://dkpattammal.org/ImagesDB/Gallery/VIP/DKP,Radha,Jayalakshmi,MSS,S-Janaki,-LR-Eswari-Vani-Jayaram.jpg
தங்களுடைய பிறந்த நாளுக்கு என் மனம் மகிழ்ந்த இதயபூர்வமான வாழ்த்துகள்.
என்ன ஆச்சர்யம்! இன்று மதியம்தான் தாங்கள் எனக்குப் பரிசாக அனுப்பிய பாலா பாடல்கள் டிவிடியை எடுத்து என்னென்ன பாடல்கள் இருக்கிறது என்று ஆராய்ந்தேன். டிவிடியின் மேல் தாங்கள் அன்புப் பரிசு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நான் தங்களை நினைத்துக் கொண்டே பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஈவ்னிங் பார்த்தால் ராகவேந்திரன் சார் தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.
மீண்டும் என் இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் SSS சார்.
chinnakkannan
1st June 2015, 07:01 PM
அன்பான சுந்தர பாண்டியன்அவர்களுக்கு
என் இதய பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
vasudevan31355
1st June 2015, 07:27 PM
ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் பாடல்.
//மச்சினின்னு பாட்டே இல்லையே//
http://gonizamabad.com/wp-content/uploads/2014/12/Kshana-Kshanam-Jaamu-Raatiri-Video-Song.jpg
சி.க,
உங்களுக்காக ரொம்ப ஸ்பெஷலாக இதுவரை யாருக்கும் தராத ஒரு பாடலைத் தர போறேன். நான் மட்டுமே பல வருடங்களாக பார்த்து ரசித்து வந்த பாடல். இப்போது உங்களுக்காக ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாடல். நான் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.
தெலுங்கில் வெங்கடேஷ், ஸ்ரீதேவி (நம்ம ஊர் மயிலேதான்) நடித்த ஒரு படம் ('Kshana Kshanam') தமிழில் டப் ஆகி வந்தது. தயாரிப்பு ஏ .எம்.ரத்னம். தமிழில் 'என்னமோ நடக்குது'. (புதுசில்லை) நம்ம ராம் கோபால் வர்மா இயக்கிய படம். படம் செம ஜாலி. ஒவ்வொரு பாட்டும் செம அமர்க்களம்.
மரகதமணி மியூசிக். பின்னி எடுத்துடுவார் மனுஷன்.
இந்தப் பாடல் காட்சிக்கு வருகிறேன். எதிரிகளிடமிருந்து தப்பி ஒரு காட்டுக்குள் ஒளிந்திருக்கிறார்கள் நாயகன், நாயகி இருவரும். காடு முழுவதும் ஓடி, ஓடி கால்கள் தேய்ந்து ஒரு சமயம் உட்கார்ந்து இருக்கும் போது கதாநாயகன் போராக பீல் பண்ணுகிறான். ஒரு ஆட்டம் பாட்டம் இல்லையே என்று சோம்பல் முறிக்கிறான். அப்படியே காட்டுவாசிகள் கூட்டம் கூடுகிறது.
'ஜும்பாயே....ஆகும்பையே.....ஆகும்பையே ..ஜும்பாரே,,,ஆகும்பையே'
என்று காட்டுவாசிகள் கத்திக் கொண்டே ஆட,
துவங்குகிறது ஆர்ப்பாட்டமான டான்ஸ்.
சும்மா ஸ்ரீதேவி ஆட்டத்தில் கவர்ச்சியாக பட்டை உரிக்க, கூட வசந்தமாளிகை எடுத்தவரின் வாரிசு உடன் சேர்ந்து ஆட பாலா, சித்ராவின் வளமான குரலுடன் கோஷ்டியினரின் கோரஸும் ஒலிக்க, காட்டுவாசிகளின் பின்னணியில் என்றும் திகட்டாத பாடல்.
ஆனால் யாரும் கேட்டிருக்க மாட்டீர்கள். இப்போது கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
சரி! திடீரென்று ஏன் இந்தப் பாட்டு உமக்கு?
காரணம் இருக்கிறது. 'மச்சினி' என்று பாட்டே இல்லை என்று எழுதினீரா? அதெப்படி இல்லை என்று கூற முடியும்?:) அதனால்தான் உமக்கு இந்தப் பாட்டு. (மாட்டினீரா):)
"மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
ஜும்பாயே...ஆகும்பையே
அட மாமனுக்குத் தெரியுமா என் மனசு கெட்டாச்சு
ஜும்பாயே....ஆகும்பையே...
அடி மோகினியே ராகினியே இப்படி வாடி
உன் முன்னழகும் பின்னழகும் எத்தனை கோடி
அது என்ன விலை நான் என்ன விலை
நான் மோகினி இரவினில் முக்கனி கனி"
சி.க,
பாட்டை கவனமாக முழுசா கேட்டு என்ஜாய் பண்ணுங்க. டப்பிங் பாட்டு போலவே இருக்காது. சூப்பரோ சூப்பர். முக்கியமா டவுன்லோட் பண்ணி வச்சி டெய்லி கேளுங்க. அப்படியே அடிமை ஆயிடுவீங்க. அப்புறம் பதிவு போடக் கூட வராம இந்தப் பாட்டையே கேட்டுகிட்டு இருப்பீங்க.
http://i2.ytimg.com/vi/6SePc9hkyI0/mqdefault.jpg
மஞ்சள் உடை அணிந்து, பச்சை உடை அணிந்து, தலையில் காட்டுப்பூக்கள் வைத்து நம்ம ஸ்ரீதேவி அமர்க்களம். என்ன சொல்லுங்க...எத்தனை பேர் வந்தாலும் மயிலுக்கு ஈடு இணை இல்லை.
சி.க ஒரு வேலை உங்களுக்கு தரேன்.
இந்த பாடலின் முழு வரிகளையும் கேட்டு நீங்கள் இங்கே லிரிக்ஸ் பதிய வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்.
வீடியோவில் சரியாக 4.45க்கு தொடங்கும் பாடல். ஆமாம் பிறந்த நாள் சுந்தர பாண்டியன் சாருக்கா? இல்லை உமக்கா?
அடிச்சீரய்யா லக்கி பிரைஸ் பாடலை.:)
இதோ பாடல்.
"மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு"
https://youtu.be/gxIcbN8ojDg?list=PL0b4qMr1J-4fbiBNWKEY3HEQa53asQbju
அப்படியே தெலுங்கிலேயும் பார்த்துடுங்க. தெலுங்கிலும் அருமை.
'Chali Champutunna Chamakkulo' (மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு)
https://youtu.be/iVxfklLI-rY
உமக்காக மெனக்கெட்டு இம்மாம் பெரிய பதிவு போட்டிருக்கேன். ஒழுங்கா ராட்சஸி பாட்டை போடும்.:)
RAGHAVENDRA
1st June 2015, 08:32 PM
சி.க. சார், வாசு சார்
மண் வாசனை.. இதனுடைய மணமே தனி. மழை பொழிந்து சில நேரம் கழித்து அடிக்கும் போது நாசியெங்கும் இதமான மணம் பரவும்.. OF COURSE, it should be an undiluted village..
ஆனால் இங்கே பாருங்கள்.. மழை வந்தால் மண் மணக்காதாம்.. மச்சினச்சி வந்தால் தான் மணக்குமாம்..
[ஹய்யா... சி.க. கேட்ட மச்சினச்சி பாட் வந்துடுச்சே...]
https://www.youtube.com/watch?v=pwX56KXBxsU
RAGHAVENDRA
1st June 2015, 08:33 PM
வாசு சார்
அரிதான பாடல்களைத் தேடிப்பிடித்து அளிப்பதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது..
தூள் கிளப்புங்கள்..
rajeshkrv
1st June 2015, 08:38 PM
vanakkam ji
vanakkam ellorukkum
uvausan
1st June 2015, 08:47 PM
எல்லோருக்கும் வணக்கம் - அருமையான பதிவுகளாக தொடரும் இந்த திரியில் சற்றே அன்னையின் புகழாஞ்சலியும் தொடருட்டுமே . யாருக்கும் மறுப்பு இருக்காது என்று நினைக்கிறேன் ......
கரு தொடர்கின்றது ---------
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150510-WA0012_zps1mmd8dav.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150510-WA0012_zps1mmd8dav.jpg.html)
uvausan
1st June 2015, 08:49 PM
கருவின் கரு - பதிவு 28
தாயின் மடியில் தலை வைத்து சற்றே உறங்க நினைக்கிறேன் - அவள் நினைவுகள் தான் படுக்கையாக வருகிறது - உலர்ந்த என் உதடுகள் சொல்ல சொல்ல , என் , வற்றிய கண்கள் இந்த கவிதையைப்படிக்கின்றது :
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீ உண்டதென்று சாம்பலும் எங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமல் நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமல் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப்போல் ஒரு மாமருந்தில்லை
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதிகொண்ட மானுடர் மயங்குவதென்ன
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்.
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .
அம்மாவின் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
போனவள் புண்ணியம் எம்முடன் சேர்க
https://youtu.be/zoolSQXL8ks
uvausan
1st June 2015, 09:05 PM
கருவின் கரு - பதிவு 29
எல்லாம் எனக்குள் இருந்தாலும் , என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம் ----
( thanks to சித்தூர் வாசு - இந்த பாடலை அலசும் முன் உங்கள் பதிவு வந்து விட்டது ) - இந்த பாடல் ஏற்படுத்தும் positive vibes யை சொல்ல வார்த்தைகளே இல்லை - தன்னம்பிக்கை , எல்லாமே தான் அனுபவிக்கத்தான் இறைவன் படைத்திருக்கான் என்ற ஆழ்ந்த கருத்துக்கள் - முடிவில் இதற்க்கெல்லாம் காரணம் ஒரு அன்னை என்று அழகாக முடிவடையும் வார்த்தைகள் ---
https://youtu.be/pLXWZDSy7FY
vasudevan31355
1st June 2015, 09:06 PM
vanakkam Rajeshji!
vasudevan31355
1st June 2015, 09:08 PM
ராகவேந்திரன் சார்! அருமை!
முதுகு காடுங்க.:) (புறமுதுகு இல்ல).:)
ஹப் நிர்வாகம் முதுகு சொறியற மாதிரி இன்னுன் ஏன் smiley போடல?:)
vasudevan31355
1st June 2015, 09:17 PM
ரவி,
வாங்க. குறுகிய நோக்கத்துக்குப் பின் (ஸாரி மீள முடியலப்பா) குறுகிய இடைவெளிக்குப் பின் 'துறுதுறு'ன்னு சுறுசுறுப்போட வந்திருக்கீங்க. 'அம்மா' அமர்க்களம் மீண்டும் ஆரம்பம். ஹய்! ரெட்டை அர்த்தம் வருதே. நான் உங்க பதிவுகளை சொன்னேன் சார். தாய்ப் பாடல்கள் பாடகர் திலகத்தின் குரல்களில் அமுதம்.
தங்கள் கைபேசி அழைப்புக்கு மிக்க சந்தோஷம். கலை போல நீங்களும் என் உயிருக்கு உயிரான நண்பர்.:) (அடுத்த சதித் திட்டத்திற்கு உங்க எல்லோரோட உதவியும் தேவை):)
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.