View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
[
14]
15
16
uvausan
31st August 2015, 06:23 AM
காலை வணக்கம்
திரையில் பக்தி
கேள்வி-பதில் தொடர்கிறது
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/sun4_zpsfaafmlrl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/sun4_zpsfaafmlrl.jpg.html)
uvausan
31st August 2015, 06:25 AM
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பகுதி 1
கேள்வி :
கண்ணா - நீ கருமையாக இருக்கிறாய் . இருந்தாலும் உன்னை மறுப்போர் இல்லை , கண்டு வெறுப்போர் இல்லை - அதே கருமை நிறம் தான் எனக்கும் - ஆனால் என்னை விரும்புவோர் யாருமே இல்லையே கண்ணா ? என்ன தவறு செய்து விட்டேன் ?, இங்கு வந்து பிறந்ததை விட --- வெளி அழகுதான் முக்கியமா? , உள்ளம் அழுக்காக இருந்தால் பரவாயில்லையா ?? உனக்கும் ஒரு சட்டம் . எனக்கு ஒரு சட்டமா? - சிலையாக இருப்பதால் உன்னை ஒன்றுமே கேட்கக்கூடாதா ? - ஒரு பெண் இங்கே புலம்புகிறாள் - கண்ணன் எதுவுமே தனக்கு சாதமாக கொடுக்கவில்லை என்ற ஏக்கம் பாடலாக வருகிறது ... மணம் பார்க்க மறுப்போர் முன் தன்னை கண்ணன் படைத்துவிட்டானே என்ற கோபம் !!
https://www.youtube.com/watch?v=xO1RW80P8YU
கேள்வி : அந்த பெண்ணோ கருமை நிறம் கொண்டவள் - இந்த பெண்ணுக்கு என்ன குறை ? ஏன் இவளும் கண்ணனைத்திட்ட வேண்டும் ? கங்கையில் ஓடுவது தண்ணீர் அல்ல - நாங்கள் சிந்தும் கண்ணீர் என்று ஏன் புலம்ப வேண்டும் ? - எல்லாவற்றிக்கும் கண்ணன் தான் பொறுப்பேற்க வேண்டுமா ?
https://www.youtube.com/watch?v=2-HUJ9PPqHI
uvausan
31st August 2015, 06:27 AM
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பகுதி 2
பதில்
இறைவனை நாம் என்ன வேண்டுமானாலும் திட்டலாம் - அவன் நம்மை திருப்பித்திட்டப்போவதில்லை - ஆனால் அவன் நமக்கு நல்லது செய்தபின் நன்றி சொல்கிறோமா என்றால் பதில் இல்லைதான் - எல்லாமே கிடைத்துவிட்டால் இறைவனை யார் நம்ப போகிறார்கள் - அவனை ஏன் வணங்க போகிறோம் ? அவனை ஒன்று மட்டுமே கேட்க வேண்டும் - இறைவா பிரச்சனைகள் வரட்டும் - அதை சமாளிக்கக்கூடிய திறமையை எனக்கு கொடு - இப்படி கேட்டுப்பாருங்கள் - உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்ச்னைகளுக்கு பிரச்சனைகள் வந்துவிடும் . கேட்டதும் கொடுப்பவன் அவன் - கேட்பதில் ஒரு நியாயம் , தர்மம் இருக்க வேண்டும் - நம் வேண்டுதல்கள் பிறரை அழிப்பதற்காக இருக்ககூடாது . பிறர் மனங்களை புன்படுத்துவதற்க்காக இருக்கவே கூடாது .பிறர் சிரிக்க வேண்டும் , மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள் - நீங்கள் கேட்காமலேயே உங்கள் வாழ்விலும் அதே வரன் கிடைக்கும் .....
https://www.youtube.com/watch?v=vTHQM9IpCS8
https://www.youtube.com/watch?v=Q9fRIouXfqI
uvausan
31st August 2015, 06:29 AM
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பகுதி 3
கேள்வி :
இறைவன் ஏன் சிலையாகி விட்டான் ? யாராவது இதற்கு காரணமா ? பல இதிகாசங்களில் இறைவன் மனிதனுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்ததை அறிகிறோம் . ஆனால் எவ்வளவு அழைத்தாலும் இப்பொழுது அவன் ஏன் வருவதில்லை ? கீதையில் கண்ணன் சொல்கிறான் - எப்பொழுதெல்லாம் தர்மம் தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் - தர்மம் இப்பொழு தற்கொலை செய்துகொள்ளத்துடிக்கிறதே ஏன் அவன் தான் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பு தருவதில்லை ??
https://www.youtube.com/watch?v=aZJfSm4do6o
uvausan
31st August 2015, 06:31 AM
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பகுதி 4
பதில் - அவன் அவனாக வருவதில்லை - நம்மிடையே என்றுமே இருக்கிறான் - பெற்றவர்களாக , முதியவர்களாக , குழந்தைகளாக , ஏழைகளாக , மனைவியாக , நண்பனாக , குருவாக --- இதோ அந்த கேள்விக்கு ஒரு பதில்
https://www.youtube.com/watch?v=9mzZVgQRzwg
நாளை வேறு கேள்வி -பதில்களுடன் சந்திப்போம் .
madhu
31st August 2015, 09:18 AM
ரவி சார்...
தெய்வத்தைப் பற்றி தெளிவாக எழுதறீங்க.. !!
அவதாரம் என்றால் இறங்கி வந்தவர் என்றுதான் அர்த்தமாம். அப்படி இறங்கினாலும் கொள்கையிலேயே நின்றவன் ராமன். அதனால் அது நம்மால் சட்டென்று எட்ட முடியாத விஷயமாகத் தோன்றிவிடுகிறது. கண்ணனோ எல்லோருக்கும் பிடித்த மாதிரி எல்லாவற்றையும் செய்திருப்பதாக பாகவதம் சொல்கிறது. அதனால் சுலபமாக நெருங்கக் கூடியவனாகத் தோன்றுகிறான்.
அதனாலேயே பெரியோர் ராமன் சென்ற பாதையில் நட என்றும் கண்ணன் சொன்ன சொல்லின்படி நட என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
தெய்வம் மானுஷ்ய ரூபேண: எனவும் மனிதனும் தெய்வமாகலாம் எனவும் சொற்றொடர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன..
காற்றடித்தால் அவன் வீடாவான்.. கடுமழையில் அவன் குடையாவான் .. ஆற்றாதழுதால் அழுத கண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான் ..
ஒரு கதை உண்டு... நதிக்கரை ஓரமாக இருந்த கிராமத்தில் ஒரு சர்ச். அதில் கடவுள் நம்பிக்கை மிகுந்த பாதிரியார் ஒருவர் இருந்தார். ஒரு முறை அதிகமான வெள்ளம் வந்து கிராமமே மூழ்கும் நிலை ஏற்பட்டது. கிராமத்தலைவர் ஓடி வந்து "எல்லா மக்களும் கிளம்பறாங்க.. வாங்க சாமி.. போகலாம்" என்றார். அதற்கு பாதிரியார் "இறைவன் என்னைக் காப்பான். நான் வருவதற்கில்லை" என்று சொல்லி விட்டார். வற்புறுத்தியும் வராததால் தலைவரும் போய் விட்டார். வெள்ளம் அதிகமானதும் பாதிரியார் சர்ச்சின் முதல் மாடிக்கு ஏறி நின்று கொண்டார். அப்போது பெருகிய வெள்ளத்தில் படகில் சென்ற சிலர் "சாமி... படகுக்கு வந்துடுங்க.. தண்ணி அதிகமாகுது" என்று அழைக்க "இறைவனை நம்புகிறேன். அவன் வந்து காப்பாற்றுவான்" என்று திரும்பிக் கொள்ள அவர்கள் போய் விட்டனர். வெள்ளப் பெருக்கு பொங்கியெழ பாதிரியார் சர்ச்சின் உச்சியில் இருந்த சிலுவையை அணைத்தபடி தொங்கிக் கொண்டிருந்தபோது அரசாங்கக் அனுப்பி வைத்த ஹெலிகாப்டர் வந்து கயிறைப் போட பாதிரியார் ஏற மறுத்தார். "என் இறைவன் வந்து காப்பாற்றுவான்" என்றபோது தண்ணீர் அதிகமாக அவர் அதற்குள் மூழ்கிப் போனார்.
மேலுலகத்தில் பாதிரியாரின் ஆன்மா இறைவன் முன் நின்றது. சோகத்துடன் அவர் இறைவனை நோக்கி " நீங்கள் வந்து காப்பாற்றுவீர்கள் என்றிருந்தேன். இப்படி என் நம்பிக்கையை உடைத்து விட்டீர்களே" என்று கலங்கினார்..
இறைவன் சொன்னான். "அது தவறு. நான் மூன்று முறை உன்னைக் காப்பாற்ற வந்தேன். முதல் முறை கிராமத்தலைவர் மூலம். பின் படகில் வந்தவர்கள் மூலம்.. கடைசியாக அரசாங்கத்தின் மூலம். ... நீ என் அழைப்பை ஒதுக்கி விட்டால் நான் என்ன செய்ய முடியும் ? நீ உலகத்தில் வாழ விருப்பம் என்றால் உலகத்தைக் கடவுளாக பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். நீ எல்லாவற்றையும் வேண்டாம் என்று சொன்னதால் உன்னை என்னிடமே அழைத்துக் கொண்டேன். அவ்வளவுதான்"
ஆத்திகம் பேசும் அன்பருக்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்.
https://www.youtube.com/watch?v=ClhP4qHFPEs
chinnakkannan
31st August 2015, 10:10 AM
hi. good mornng all...
ரவி..என்ன தான் பக்திப் பரவசமாய் எழுதறீங்க என்றாலும் காலங்கார்த்தால விஜயகுமாரியோட பாட்டும் செளகார் ஜானகியோட பாட்டும் ஒண்ணா போட்ட உம்மை.... என்ன செய்தால் தேவலை :)
rajeshkrv
31st August 2015, 10:12 AM
ரவி ஜி
டேப் ராதா மாணிக்கத்தின் கேளுங்கள் தரப்படும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அந்த குரலே நம்மை அந்த பாடலுக்குள் இழுத்து செல்லும்
நன்றி நன்றி
uvausan
31st August 2015, 11:01 AM
CK - நமக்குள் எவ்வளவு வேறுபாடுகள் பார்த்தீர்களா ? உள்ளத்தால் ஒன்று பட்டாலும் பார்க்கும் கோணத்தில் வேறு படுகிறோம் . விஜயகுமாரியும் , சௌகார் ஜானகியும் என் கண்களுக்குத் தெரியவே இல்லை - இருவருமே p .சுசிலா வாகத்தான் எனக்கு தெரிந்தனர் . கல்லாக சிலருக்கு தெரியும் கடவுள் , மற்ற சிலருக்கு உயிராக , ஜோதியாக தெரிவதுபோல !!! பார்க்கும் பார்வை , கோணங்கள் மாறுபடும் போது அர்த்தங்கள் அனர்த்தங்களாகி விடுகின்றன - இல்லையா CK ?? :):smokesmile:
uvausan
31st August 2015, 11:10 AM
மது சார் - உங்கள் உள்ளுக்குள் ஒளிந்திருந்த ஒரு அசாத்தியமான மது அவர்களையும் வெளிக்கொண்டு வந்து விட்டீர்கள் - என் பதிவுகளுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாக இதை கருதுகிறேன் . எவ்வளவு அருமையான கருத்துக்கள் - என்னால் இப்படி எழுதவே முடியாது சார் ... ஸ்ரீ ராமனை யும் , கண்ணனையும் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் - எழுதிக்கொண்டே இருக்கலாம் . சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம் -
Rama has rules over substances – Krishna has substances over rules
In other words , Rama is rule bound king and Krishna is rule breaker to sustain dharma – cause is same but effect is different .
ஒரு முறை எல்லா தேவர்களும் பரந்தாமனிடம் சென்று கேட்டனராம் - " பிரபு - நீங்கள் எடுத்த அவதாரங்களில் உங்களுக்கு கடினமான , மிகவும் பிடித்த அவதாரம் எது ? "
மாதவன் சொன்னான் " எனக்கு சவாலாக அமைந்த அவதாரம் " ராமன் " - மற்ற அவதாரங்களில் என் தெய்வத்தன்மை நிறைந்திருக்கும் - ஆனால் இதில் முழுக்க முழுக்க மனிதனாக வாழ்ந்தேன் - நல்ல பண்புகளுடன் , ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் சிறிதும் மாறாமல் வாழ்வது என்பது எவ்வளவு கடினமான அனுபவம் ... மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் மனித அவதாரத்தைத்தான் விரும்புவேன் ..... "
மிக்க நன்றி சார் , பொறுமையுடன் என் பதிவுகளை படிப்பதற்காக --
uvausan
31st August 2015, 11:11 AM
ரவி ஜி
டேப் ராதா மாணிக்கத்தின் கேளுங்கள் தரப்படும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அந்த குரலே நம்மை அந்த பாடலுக்குள் இழுத்து செல்லும்
நன்றி நன்றி
ராஜேஷ் - பொறுமையுடன் படிப்பதற்கும் , பாடல்களை ரசிப்பதற்கும் மிகவும் நன்றி
chinnakkannan
31st August 2015, 11:13 AM
//பார்க்கும் பார்வை , கோணங்கள் மாறுபடும் போது அர்த்தங்கள் அனர்த்தங்களாகி விடுகின்றன - இல்லையா ck // :) மிகச் சரி ரவி :)
RAGHAVENDRA
31st August 2015, 12:19 PM
நேற்று 30.08.2015 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில், நாம் தேர்ந்தெடுத்த பாடல்களும் பின்னணி இசையும் பல்வேறு பங்களிப்பாளர்களை அதில் கொண்டு வரவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே அமைந்தன. இதனால் பல பாடல்களை நம்மால் இதில் சேர்க்க முடியவில்லை. இவர்கள் இருவரின் இணையில் வெளிவந்த படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அவற்றிலிருந்து ஒரு மாலை நேர நிகழ்ச்சிக்காக நம்மால் எவ்வளவு இடம் பெறச் செய்ய முடியுமோ அதைக் கருத்தில் கொண்டே நிகழ்ச்சி நிரலை அமைத்தோம்.
இதில் இடம் பெற்ற பாடல்களாவன -
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே - புதையல்
தாழையாம் பூ முடிச்சு - பாகப் பிரிவினை
பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு
மயங்குகிறாள் ஒரு மாது - பாச மலர்
நான் பேச நினைப்பதெல்லாம் - பாவ மன்னிப்பு
புதிய பறவை - முகப்பிசை
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை - படித்தால் மட்டும் போதுமா
இது வேறுலகம் - நிச்சய தாம்பூலம்
பந்தல் இருந்தால் கொடி படரும் - பந்தபாசம்
ஆறோடும் மண்ணில் - பழநி
ஓ..லிட்டில் ஃப்ளவர் - நீலவானம்
தெய்வ மகன் - சிதார் இசை
மகராஜா ஒரு மகராணி - இரு மலர்கள்
பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி
ஆகாயப் பந்தலிலே - பொன்னூஞ்சல்
சிவந்த மண் - பார்வை யுவராணி பாடலுக்கு முந்தைய வெளிநாட்டுச் சுற்றுலாக் காட்சி
சொர்க்கம் பக்கத்தில் - எங்க மாமா
பொன்மகள் வந்தாள் - சொர்க்கம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் - பாதுகாப்பு
ஐ வில் சிங் ஃபார் யூ - மனிதரில் மாணிக்கம்
இனியவளே என்று பாடி வந்தேன் - சிவகாமியின் செல்வன்
ராஜா - ரந்தாவா வுடனான சண்டைக் காட்சி
அலங்காரம் கலையாத - ரோஜாவின் ராஜா
கங்கை யமுனை - இமயம்
தலைவன் தலைவி - மோகன புன்னகை
சுமதி என் சுந்தரி - இறுதிக் காட்சி
ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன்தான் மனிதன்
மெல்லிசை மன்னரின் பேட்டி - தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி
தேவனே என்னைப் பாருங்கள் - ஞான ஒளி
தெய்வத்தின் தேரெடுத்து - பாட்டும் பரதமும்
கௌரவம் - கேஸ்கட்டுக் காட்சி
ஞான ஒளி - கருவிசை - மூன்று காட்சிகள்
தங்கப் பதக்கம் - கருவிசை - இரு காட்சிகள்
ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை
மெல்லிசை மன்னரின் பேட்டி - எங்கே நிம்மதி பாடலைப் பற்றி
எங்கே நிம்மதி - புதிய பறவை
உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்
நிகழ்ச்சியில் முரளியின் சூப்பரான தொகுப்புரை (வழக்கம் போல) மக்களிடம் பெருத்த கரகோஷத்தைப் பெற்றது.
பாடல்களைத் தொகுக்கின்ற வேலையே முந்தைய நாள் தான் முடிவடைந்தது. நேற்று காலையும் இருவரும் வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே தொகுப்புரை எவ்வாறு இருக்க வேண்டும் என்ன சொல்ல வேண்டும் என்கின்ற திட்டமிடலை மேற்கொள்ள இயலவில்லை. ஆதலினால் இருவருமே அந்நேரத்தில் பாடல்களைப் பற்றிய விவரங்களை மக்களிடம் Extemporeயாக எடுத்துரைத்தோம். படங்களின் வெளியீடு மற்றும் அதன் தொடர்பான விவரங்கள், பங்கேற்பாளர்கள் போன்ற விவரங்களை முரளி தன்னுடைய அபார நினைவாற்றலால் எடுத்துக் கூற, அவ்வப்போது அந்தப் பாடல் அல்லது அந்தப் பின்னணி இசைக் கோப்புகளில் உள்ள சிறப்பம்சங்களை அடியேனும் எடுத்துக் கூறினோம். லோசான டென்ஷனோடு தான் நாங்கள் நிகழ்ச்சியைத் துவக்கினோம், இருந்தாலும் ஒவ்வொரு பாடல் அல்லது இசை முடிந்த பின்னும் பலத்த கரகோஷத்துடன் ஆடியன்ஸ் வரவேற்றது மகிழ்ச்சியைத் தந்தது. அது மட்டுமல்ல, தொகுப்புரைகளும் பல இடங்களில் கரவொலியைப் பெற்றது, எங்களுக்கு ஊக்கமளித்தது.
பந்த பாசம் படத்தில் இடம் பெற்ற பந்தல் இருந்தால் கொடி படரும் பாடலையும் பாதுகாப்பு படத்தில் இடம் பெற்ற ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் பாடலையும் பலர் நேற்றுத் தான் முதன் முதலில் பார்தததாகக் கூறினார்கள். இது எங்களுடைய தேர்விற்குக் கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.
பின்னணி இசைக் கோப்புகள் தேர்வும் மிகவும் சிரமமான காரியமாகவும் சவாலாகவும் விளங்கியது. மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவருடைய முழுத்திறமையையும் காட்டுவதற்கு அதிக வாய்ப்பளித்தவை நடிகர் திலகத்தின் படங்களே என நான் சொல்லுவேன்.
பல்வேறு விதமான உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த காட்சிகளை நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் மட்டுமே அதிகம் காண முடியும் என்ற கோணத்தில் பார்த்தால் அத்தனையிலும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையமைப்பின் பல்வேறு பரிமாணங்களை நாம் காண முடியும். இது மற்ற படங்களில் அந்த அளவிற்குக் கிட்டியதா என்பது கேள்விக்குறியே. எனவே இந்த அடிப்படையில் அவருடைய பின்னணி இசைக்காட்சித் தேர்வும் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.
முகப்பிசையைப் பொறுத்த மட்டில் எடுத்த வுடனேயே எங்கள் இருவருக்குமே ஒரு சேரத் தோன்றியது புதிய பறவை டைட்டில் இசையே. எனவே அதனைத் தேர்ந்தெடுத்தோம். அதில் இடம் பெற்றிருந்த இசைக்கருவிகள், குறிப்பாக பாங்கோஸ் ஒலி, ஒரு விதமான திகிலை பார்வையாளரிடம் உண்டாக்கி படத்திற்கு அங்கேயே ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து விட்டது.
ராஜா படத்தின் சண்டைக்காட்சியைப் பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். எதார்த்தம், இயற்கை என்றெல்லாம் கூறப்படுவது சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்திற்கே உரியது என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்த காட்சி என்பதால் ரந்தாவாவுடனான சண்டைக்காட்சியை எடுத்துக்கொண்டோம். எதிரி அடிக்கிறானா, முகத்தில் குத்துகிறானா, உதைக்கிறானா என்பது எதுவும் தெரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரே டிஷ்யூம் டிஷ்யூம் என ஒலி எழுப்பப் பட்ட காலத்தில் மெல்லிசை மன்னர் சண்டைக் காட்சிகளில் மிகவும் அதிக சிரத்தை எடுத்து கவனம் செலுத்தி ஒலியமைப்பைக் கொண்டு வருவார். பஞ்ச் விழும் போது மட்டுமே அந்த பஞ்சுக்கான ஒலியினை ஒலிப்பதிவாளரின் உதவியுடன் இணைப்பார். அதே போல் பலசாலியான எதிரியுடன் மோதும் போது நடிகர் திலகம் இரண்டு மூன்று முறை அடி வாங்குவதும், எதிரி காலால் உதைக்கும் பொழுது அதனை எதிர்க்க முடியாமல் விழுவதும் மிகவும் யதார்த்தமானதாகும். அதன் பிறகு வாலிபன் என்கிற முறையில் உள்ள சுறுசுறுப்பின் காரணமாக எதிரியை அநாயாசமாக எதிர்கொண்டு சமாளிப்பதும் இயல்பான சண்டைக் காட்சிக்குஉதாரணங்கள்.
எனவே இதற்கேற்ப மெல்லிசை மன்னர் சண்டைக்காட்சிக்கான பின்னணி இசையை மிகச் சிறப்பாக அமைத்திருப்பார். குறிப்பாக மான் கொம்பினை எடுத்துக்கொம்டு ரந்தாவா குத்த வரும் போது பாங்கோஸின் ஒலியில் தாளம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.
இறுதியில் கதாநாயகன் தோல்வியும் அடையாமல் வெற்றியும் அடையாமல் தன் முதலாளியால் காப்பாற்றப்படுவது போன்ற காட்சியமைப்பு, நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு இயல்பான பாத்திரப்படைப்புகளைக் கொண்டவை என்பதற்கு மற்றோர் சான்று.
சிவந்த மண் திரைக்காவியத்தின் பின்னணி இசையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தவிர்க்க இயலாததாகும். இந்தக் காலத்தில் கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பாடல் கம்போஸிங்கிற்கே இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறார்கள். கடைசியில் அங்கிருந்து அவர்கள் கம்போஸ் செய்வது ஏதேனும் ஒரு குத்துப்பாட்டாக இருக்கும் அல்லது வெளிநாட்டு இசைத்தட்டுகளில் இருந்து உருவிய மெட்டாக இருக்கும். ஆனால் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் மெல்லிசை மன்னர் இங்கிருந்தவாறே பல வெளிநாட்டு இசையமைப்புகளைத் தன் இசையமைப்பில் அபாரமாக கொண்டு வந்திருப்பார். அதிலும் இந்தப் பின்னணி இசை, நாயகன் நாயகி இருவரும் ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுலா செல்வது போல வரும் கனவுக் காட்சியாகும். கனவுக்காட்சி தானே யார் கேட்கப்போகிறார்கள் என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று உரிமை எடுத்துக்கொள்ளாமல் அதிலும் முழு ஈடுபாட்டுடன் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டு வந்தது மெல்லிசை மன்னரின் தன்னம்பிக்கைக்கும் அபார திறமைக்கும் எடுத்துக்காட்டு.
இந்தக் காட்சி 7 நிமிடங்களுக்குப் படத்தில் இடம் பெறுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நெடுந்தகடுகளில் இக்காட்சியில் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டி இடம் பெறவில்லை. இந்த இரண்டு நிமிட ஸ்பெயின் புல் ஃபைட் காட்சியில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன. அதை மேற்கோள் காட்டுவதற்காகவே இது தேர்வு செய்யப்பட்டது.இதுவும் பலருக்கும் காணக் கிடைக்காத அரிய பொக்கிஷமாகும்.
இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட் காட்சியில் பின்னணியில் ட்ரம்பெட், சாக்ஸஃபோன், ட்ராம்போன் போன்ற மேல்நாட்டு இசைக்கருவிகளை மெல்லிசை மன்னர் மிக அற்புதமாகக் கையாண்டிருப்பார். அந்தப் பின்னணி இசையின் மெட்டு, இந்த நிகழ்ச்சியை நடிகர் திலகம் பார்ப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். கிட்டத்தட்ட லைவாக ஒளிப்பதிவு செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். அதில் நடிகர் திலகத்தை நாம் கவனித்தோமானால் அவருடைய அப்சர்வேஷன் பவர் புரியும், இதையெல்லாம் எடுத்துக் கூறத்தான் இந்தக் காட்சி.
சரி இப்போது இந்தக் காட்சியின் முக்கியத்துவத்திற்கு வருவோம். புல்ஃபைட்டில் காளை மாட்டை அடக்கும் மேடடார் என்கின்ற அந்த வீரனின் உடல் மொழி நடிகர் திலகத்தை மிகவும் பாதித்திருக்கிறது போலும். மற்றவர்கள் எல்லோரும் சண்டைக்காட்சியில் லயித்திருக்க, இவரோ அந்த வீரனின் உடல் மொழியை கவனித்திருக்கிறார்.
இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட்டில் வரும் அந்த வீரனின் உடல் மொழியைத் தான் நடிகர் திலகம் பொன் மகள் வந்தாள் பாடலில் தனக்கே உரிய பாணியில் அநாயாசமாக பிரயோகித்து உலகிலேயே ஸ்டைல் சக்கரவர்த்தி என்றால் நடிகர் திலகம் மட்டும் தான் என்று நாமெல்லோரும் தோள் தட்டும் அளவிற்கு புகுந்து விளையாடியிருப்பார்.
இதே போன்று இந்த காட்சியில் ஒலித்த பின்னணி இசையின் மெட்டும் பொன் மகள் வந்தாள் பாடலின் சரணத்தின் மெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவும் குறிப்பிடக்காரணம், ஒவ்வொரு பாடலுக்கும் காட்சிக்கும் தேர்விடலில் எங்களுக்கு எந்த அளவிற்கு சிரமம் இருந்தது என்பதைக் கூறவே.
நிகழ்ச்சியைக் கண்டுகளித்து, நம்மையெல்லாம் பாராட்டிய அன்புச் சகோதரர் ராம்குமார், மெல்லிசை மன்னரின் புதல்வர் கோபி, மற்றும் மெல்லிசை மன்னரின் புதல்வியரான லதா, சாந்தி, மற்றும் ஏராளமான ரசிகர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் முரளி சார்பிலும் என் உளமார்ந்த நன்றி.
chinnakkannan
31st August 2015, 02:00 PM
ராகவேந்தர் சார்.. மிக அருமையான தொகுப்பு.. மிக அருமையான பாடல்கள்..அதைப்பற்றி வெகு அழகாக விளக்கியுள்ளீர்கள்..உங்களுக்கும் முரளி சாருக்கும் எங்களது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. செம விவரணை..
வீடியோ எதுவும் எடுத்திருக்கிறீர்களா..யூட்யூப் அல்லது இங்கு தரவேற்ற இயலுமா.. நாங்க்ளும் கண்டு களிப்போமே..
இருவருக்கும் மறுபடியும் எங்கள் / நண்பர்களின் சார்பாக மறுபடியும் பாராட்டுக்கள்..
uvausan
31st August 2015, 02:08 PM
Ragavendra Sir - fantastic - no words to praise . A well articulated and nicely executed event . Many people can wonderfully articulate but may not have the inherent skill to execute and some people are good only in execution and incapable of articulating . You and Murali have the blend of both . Hats Off !!
madhu
31st August 2015, 02:30 PM
ராகவ் ஜி...
பாடல்களின் வரிசையைப் படிக்கும் போதே ஒவ்வொரு பாடல் காட்சியாக மனதுக்குள் படம் ஓடிவிட்டது. ( ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் பாடல் எனக்கு என்றுமே மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. டி.எம்.எஸ்ஸின் குரலில் மயக்க வைக்கும். "இறைவன் ஆலய மணி... இதுவும் தேவனின் பணி.. அணிந்த மங்கல அணி... அன்பு இல்லறம் இனி என சின்ன சின்ன வரிகளை ஒவ்வொன்றாக வரிசையாக அவர் பாடும்போது சுலபமாக பாட முடிவது போல இருக்கும். ஆனால் நாம் பாடிப் பார்த்தால் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல தோன்றும். நடிகர் திலகத்தின் முக பாவனையை கவனித்துப் பார்த்தால் அந்த வரிகளுக்குள் இருக்கும் உணர்வு என்ன என்பது நமக்கு ஈசியாக புரிந்து போகும்... ஐ லவ் தட் சாங் )
முரளியின் நினைவாற்றலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இருவரும் இணைந்து ஒரு சாதனையே செய்திருக்கிறீர்கள்.. Kudos !!
vasudevan31355
31st August 2015, 03:11 PM
ராகவேந்திரன் சார்,
'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி. அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியை வெகு அம்சமாக விவரித்து ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் மேலிடுகிறது.
'ராஜா' படத்தின் சண்டைகாட்சியைத் திரையிட்டமைக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள். என் உயிரோடு கலந்து விட்ட சண்டைக்காட்சி என்று உங்கள் அனைவருக்குமே தெரியும். முரளி சாருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள். பாடல்களின் தேர்வுக்கு நிச்சயம் சிரமப்பட்டிருக்கத்தான் நேரிட்டிருக்கும்.
மதுண்ணா சொன்னது போல 'ஒரு நாள் நினைத்த காரியம்' பாடலைப் பற்றி நாம் இருவரும் இன்றுவரையிலும் கூட செல்லில் பல தடவை பேசி மகிழ்ந்து இருக்கிறோம். ஏனென்றால் 'பாதுகாப்பு' படத்தின் பாதி ஷூட்டிங்கும் எங்கள் கடலூரில் நடந்தது அல்லவா?
அருமையான வர்ணனை. நேரிலே கண்டு களித்தது போலவே உணர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
vasudevan31355
31st August 2015, 03:11 PM
'ஒரு நாள் நினைத்த காரியம்'
https://youtu.be/zfMywNFfLSg
vasudevan31355
31st August 2015, 06:52 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
30
'நினைத்தால் நான் வானம் சென்று'
பாலா தொடரில் முப்பதாவது பாடலாக வருவதும் இதற்கு முந்தைய தொடரின் படமான 'நான்கு சுவர்கள்' தான்.
http://tamilthiraipaadal.com/files/1971/Nangu_Suvargal/Nangu%20Suvargal.jpg
'நான்கு சுவர்கள்'
இந்தப் படத்தைப் பற்றி போன தொடரில் சொல்லி விட்ட நிலையில் அது பற்றி வேண்டாம் என விட்டுவிடுகிறேன்.
http://i.ytimg.com/vi/qHq-5mogk84/hqdefault.jpg
வாணிஸ்ரீக்கும், ரவிக்கும் காதல். அழகான கோவாவிலே டூயட். வாணிஸ்ரீ அதீதமான மேக்-அப்பில் வெள்ளையாகத் தெரிகிறார். ரவி குறைந்த முடி டோப்பாவுடன் அழகாகவே இருக்கிறார். வழக்கமான அவரது ஏர் ஹோஸ்டஸ் கொண்டை ஸ்டைல் மாறாமல் அப்படியே உண்டு. நான் முன்னம் சொன்னபடி இதுவும் முழுதும் கோவாவிலே எடுக்கப்பட்ட பாடல்தான். அருமையான படப்பிடிப்பு. சிறிய கப்பல் ஒன்றில் இருவரும் செல்லும்போது பின்னணி இசைக்குத் தக்கவாறு அழகான அளவான மூவ்ஸ் கொடுப்பது நன்றாக இருக்கும். பின்னாலேயே ஒரு பெரிய கப்பல் கிராஸ் ஆவதும் கண்ணுக்கு அழகு.
பாடலின் ஆரம்ப இசை அமர்க்களம். ரவி நிற்கும் ஸ்டைல்களில் 'நடிகர் திலகம்' பெரும் பங்கு வகிக்கிறார். மாலை மயங்கும் இருள் காட்டி மறுபடி வெயிலைக் காட்டும் கன்டின்யூட்டி நெருடலும் உண்டு. 'மெல்லிசை மன்னர்' வழக்கம் போல.
பாலாவும், சுசீலாவும் வழக்கமாகப் பாடி இருப்பார்கள். அப்படி ஒன்றும் ரொம்ப ஈர்ப்படையச் செய்யும் பாடல் இல்லை. சுமார் ரகமே! ஹிட்டிலும் கோட்டை விட்டது. சொல்லும்படி விசேஷமாக ஒன்றும் இல்லை. பாலாவின் பஞ்ச்களும் இல்லை. கேட்டு வைக்கலாம். அதை விட பார்த்துக் கொண்டே கேட்பது இன்னும் கொஞ்சம் பெட்டெர். எண்ணிக்கையில் ஒன்று கூடும்.
http://i.ytimg.com/vi/YRMHhOPBi7E/maxresdefault.jpg
ஆஹாஹஹா ஆஹாஹஹா
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண்மீனால் பூ ஒன்று
சீர் கொண்டு உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம் தெய்வவீணை நாதம்
வானவீதி ஓரம் தெய்வவீணை நாதம்
கேட்கும்போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
லா...ஆஹா ஆஹா ஹஹஹஹா
தேவமாதர் கூட்டம் காமதேவன் ஆட்டம்
ஆடும்போதே நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்
தேவமாதர் கூட்டம் காமதேவன் ஆட்டம்
ஆடும்போதே நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண்மீனால் பூ ஒன்று
சீர் கொண்டு உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
லாலா லல்லலல்லா
லாலா லல்லலல்லா
லாலா லல்லலல்லா
uvausan
31st August 2015, 08:07 PM
வாசு - என்னவோ எனக்கு பாலா பாடினதைப்போல தெரியவில்லை - நீங்கள் பாடினது போலத்தான் இருக்கிறது . அருமையாக ரசிப்பவர் தான் உண்மையாக பாட முடியும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார் . என் அம்மா சிறந்த கர்னாடக பாடகி - ராகங்கள் அவளுக்கு அத்துப்படி - அவள் திறமை, வாழ்க்கை சென்ற வேகத்தில் குடத்தில் வைத்த ஒளி போல உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டது ( தெய்வமகனில் - கண்ணன் சிவாஜி சொல்வார் - அந்த மஹாலக்ஷ்மியின் மகனா இவன் - ஹ ---- - அதுபோல் நானும் என்னைப்பற்றி சொல்லிக்கொள்வேன் - அந்த அன்னைக்கு இப்படி ஒரு ஞான சூன்யமா என்று !!) - ஒன்று மட்டும் புரிகிறது - உங்கள் ரசனைக்கு நீங்கள் திரை உலகில் பாலாவிற்கு போட்டியாக , அவரை விட அதிக புகழுடன் இருந்திருக்க வேண்டிய ஒருவர் ; அப்படி இருந்திருந்தால் - நான் இப்பொழுது " வாசு " என்ற நெடுந்தொடரில் 30 வது இலக்கத்தை இங்கு பதிவிட்டுக்கொண்டிருந்திருப்பேன் ----------
RAGHAVENDRA
31st August 2015, 08:34 PM
பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி சி.க., ரவி, மது, வாசு .
தங்களுடைய ஊக்கமும் ஆதரவும் இருந்தால் இது போன்று மேலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
மது பாதுகாப்பு பாடலைத் தேர்வு செய்யும் போது உங்கள் ஞாபகம் வந்தது. நீங்களும் அந்தப்பாடலைக் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள்.
விவிதபாரதி ஆரம்பித்த புதிதில் படம் வருவதற்கு முன்னரே இப்பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகி வந்தது. நடுவில் டாப் டென் பாடல்கள் போட்டியில் பத்திற்குள் இடம் பெற்றதும் நினைவில் உள்ளது.
தாங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் அன்னாளில் மிகப் பிரபலம். பல ரசிகர்கள் இந்த வரிகளை முணுமுணுத்ததை நானும் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடல் படத்திற்கு ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சரியாக படம் அமையாத காரணத்தால் பெற வேண்டிய வரவேற்பை இப்பாடல் பெறவில்லை.
வாசு சார் குறிப்பிட்டது போல கடலூர் துறைமுகம் கடற்கரை படத்தில் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
RAGHAVENDRA
31st August 2015, 08:48 PM
வாசு சார்
நினைத்தால் நான் வானம் சென்று ... எனக்கு மிக மிக பிடித்த பாடல். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் அவருடைய தனி பாணியில் அமைக்கப் பட்டது. பின்னால் இந்தக் காதலுக்கு இடையூறு ஏற்படக் கூடும் என்பதை உணர்த்தும் விதமாக இப்பாடலை அதிக சந்தோஷ உணர்வினைக் கொண்டு வராமல் வெறும் காதல் உணர்வை மட்டுமே கொண்டு வந்திருப்பார். பல காதல் பாடல்களில் காதலோடு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கும். ஆனால் இப்பாடலில் அதை சற்றுக் குறைவாகவே கிட்டத்தட்ட இல்லாத மாதிரி அமைத்திருப்பார். படத்தின் அந்த சூழ்நிலை காரணமாக பாடலில் பாலாவை அடக்கி வாசிக்க வைத்திருப்பார். அதையும் மீறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் (விண்மீனால் பூகொண்டு நானும் வருவேன்) என்ற இடத்தில் தன்னுடைய வழக்கமான குறும்பை நுழைக்க முயற்சித்திருப்பார். இது இசைத்தட்டில் தெளிவாகத் தெரியும். ஆனால் படத்தில் ஃப்ளாட்டாக இருக்கும்.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் நான் கேட்டுக்கொண்டே இருக்க விரும்பும் அருமையான பாடல்.
வாணிஸ்ரீக்கு மிகவும் கோரமான ஒப்பனை அமைத்து பாடலைக் குட்டிச்சுவராக்கியிருப்பார்கள். தியேட்டரில் இது மிகவும் பளிச்சென்று தெரியும். படத்தின் தோல்விக்கு இந்த ஓவர் மேக்கப்பும் ஒரு காரணம்.
vasudevan31355
31st August 2015, 08:50 PM
'தாய் பிறந்தாள்'
மது அண்ணா!
'பொன்னூஞ்சல் கட்டி வைத்து
பூவை என்னை ஆட்டி வைத்து
பார்த்திருக்கும் மன்னவரே! என்னவரே!
பக்தியே என்னுலகம் பொன்னுலகம்
உந்தன் பக்தியே என்னுலகம் பொன்னுலகம்'
பானுமதி, முத்துராமன், சாரதா நடித்த இந்தப் 'தாய் பிறந்தாள்' படத்தில் ஜானகி பாடிய பாடல் இது. பாடலும் நன்றாகவே இருக்கும்.
https://youtu.be/rfD61l-eMxQ
இதே படத்தில் குழந்தை பெயர் சூட்டு விழாவில் சி.ஐ.டி.சகுந்தலாவும், சாரதாவும் பாடும் பாடல் ஒன்று. சகுந்தலாவுக்கு வழக்கம் போல ராட்சஸி, சாரதாவுக்கு சுசீலா என்று பின்னணி. சகுந்தலா தழையத் தழைய கட்டிய பட்டுப் புடவையுடன் ஆடி சின்னாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார் குடும்பப் பெண்ணாக.
'கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி
கொண்டாடும் இன்பம் அல்லவோ'
ஈஸ்வரி ஆரம்பத்தில் சந்தோஷமாக பாடி முடித்ததும், சாரதா மனதில் சோகமாக இருப்பதை சுசீலா மைண்ட் வாய்ஸில் பாடுவார். அற்புதமாக இருக்கும்.
(பேரக் குழந்தைக்கு ஆசைப்படும் பானுமதி (பானுமதியின் அற்புதமான நடிப்பு நிறைந்த படம் இது) தன் மகன் முத்துராமனுக்கு பணக்கார சகுந்தலாவை திருமணம் செய்து வைக்க சகுந்தலாவோ குழந்தை பெற்றுக் கொள்ள பிடிக்காமல் கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிடுகிறார். இதைக் கண்டுபிடித்து ஆத்திரப்படும் பானுமதி சகுதலவைக் கண்டிக்க, சகுந்தலா புகுந்த வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குப் போய் விட, தன் தம்பி மகள் சாரதாவை முத்துராமனுக்கு மறு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார் பானுமதி. சகுந்தலாவை சாரதா சந்தித்து இந்த விஷயத்தை சொல்ல, சகுந்தலா ஒரு நரித்தந்திரம் தீட்டி சாரதா முத்துராமனை திருமணம் செய்து குழந்தை பெற்றவுடன் குழந்தையைத் தன்னிடம் ஒப்படைத்து விட்டு விலகிப் போய் விட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார். வீட்டுக்கு மறுபடியும் பழைய மருமகளாக மன்னிப்பு கேட்டும் நுழைந்து விடுகிறார். சாரதா கர்ப்பமாகி குழந்தை பெற, அவரிடம் சத்தியத்தை சகுந்தலா ஞாபகப்படுத்த, சாரதா பிள்ளையைக் கூட பெயர் சூட்டும் விழாவில் கொஞ்ச முடியாத சோகத்தில் ஆழ்கிறார். இந்த சிச்சுவேஷனில் அந்தப் பாடல்.)
'ஊரார்கள் வாழ்த்தி உன்னை
பாராட்டும் வேளையிலே
பேர் சூட்ட முடியாமல்
பெற்ற மனம் ஏங்குதடா'
அமைதியாகப் பாடிக் கொண்டே வருபவர் 'மகனே! மகனே! நீ வாழ்க! என்று ஒரு வேகம் எடுப்பார் பாருங்கள். அம்சம் போங்கள்.
https://youtu.be/HnPN91Lxwmg
vasudevan31355
31st August 2015, 08:57 PM
மது அண்ணா! ராகவேந்திரன் சார்!
'உந்தன் பக்தியே என்னுலகம் பொன்னுலகம்'
வரிகளை மட்டும் கேட்கும் போது அப்படியே,
'அது விழிவழியே குலமகளே பண்பாடு' கேட்பது போலவே இல்லை?:) ('வழி வழியே வந்த தமிழ் பண்பாடு') உங்களுக்கு?
https://youtu.be/usrSfiXS9m4
chinnakkannan
31st August 2015, 09:15 PM
. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம் -
Rama has rules over substances – Krishna has substances over rules
In other words , Rama is rule bound king and Krishna is rule breaker to sustain dharma – cause is same but effect is different .
ஒரு முறை எல்லா தேவர்களும் பரந்தாமனிடம் சென்று கேட்டனராம் - " பிரபு - நீங்கள் எடுத்த அவதாரங்களில் உங்களுக்கு கடினமான , மிகவும் பிடித்த அவதாரம் எது ? "
மாதவன் சொன்னான் " எனக்கு சவாலாக அமைந்த அவதாரம் " ராமன் " - மற்ற அவதாரங்களில் என் தெய்வத்தன்மை நிறைந்திருக்கும் - ஆனால் இதில் முழுக்க முழுக்க மனிதனாக வாழ்ந்தேன் - நல்ல பண்புகளுடன் , ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் சிறிதும் மாறாமல் வாழ்வது என்பது எவ்வளவு கடினமான அனுபவம் ... மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் மனித அவதாரத்தைத்தான் விரும்புவேன் ..... "
--
**
ரவி..உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.. முதலில் கிருஷ்ணாவதாரம் பற்றி கொஞ்சம் படித்து, கொஞ்சம் நிறையக்கேட்டு,எழுதிப் பார்த்தது- எனது முயற்சியான பூமாலை தொடுத்த பாமாலையிலிருந்து திருப்பாவை இருபத்து நான்காம் பாடல்..
மீள்பதிவு..
**
நண்பர் கோபால் கிருஷ்ணன் ஒரு குட்டிக் கவிதை எழுதியிருந்தார்.
கவிதையின்
வாமன அவதாரம்
ஹைக்கூ
இதேபோல கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும் குட்டியாய் எழுதி பார்க்கலாமா? எப்படி எழுதலாம்?
கிருஷ்ணாவதாரம்
மஹாவிஷ்ணுவின்
அவதாரங்களில்
”ஹைக்கூ”
என்ன இது? கிருஷ்ணன் செய்த செயல்களெல்லாம் பெரிதாயிற்றே. அவனது விளையாட்டுக்கள், வேடிக்கைகள், உபதேசங்கள் எல்லாம் நிறைய உள்ளனவே. அப்படி இருக்கையில் கிருஷ்ணாவதாரத்தை எப்படி ஹைக்கூ எனச் சொல்லலாம்?
இப்படி அர்த்தம் கொள்ளக் கூடாது! மஹாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களின் தாத்பர்யம் கிருஷ்ணாவதாரத்தில் அடங்கி உள்ளது என அர்த்தம்.
“ஹை, சும்மா கதை விடக்கூடாது. மற்ற அவதாரங்களை விடுத்து ராமாவதாரத்தை எடுத்துக் கொண்டால் ராமனுக்கு ஏக பத்தினி. கிருஷ்ணனோ ஏகப் பட்ட கோபிகைகளுடன் இருந்ததாக வருகிறது. எப்படி? எனக் கேள்வி வரும்.
இராமாவதாரம் ஆதர்ச புருஷாவதாரம். இராமர் தன் சக்தியை வெளியிடாமல் சாதாரண மனிதன் போலவே நடந்து கொள்கிறார். உலகிற்கு உதாரண புருஷனாக விளங்குகிறார். தாம் பரம்பொருள் என்ற நினைவு அவருக்கு எப்போதும் இல்லை. ஆனால் கிருஷ்ணாவதாரமோ, பூர்ணாவதாரம். தாம் பரம்பொருள் என்பதை அவ்வப்போது காட்டிக் கொண்டார். தமது சக்தியை உணர்த்தியும் பேசியும் புரிய வைக்கிறார்.
“தங்கள் கணவன் மார்கள், மக்கள் ஆகியோரை மறந்து கண்ணனிடம் ஈடுபட்டிருந்தனர் கோபியர்” என பாகவதத்தில் வருகிறது. ‘அடடா, கண்ணன் இப்படியா ‘ என நினைக்கக் கூடாது.
நெருப்பு அழுக்கை எரித்துத் தூய்மைப் படுத்துகிறது. ஆனால் அழுக்கின் சேர்க்கையால் தீ அழுக்குப் படுவதில்லை. பரம்பொருள் என்ற நிலையில் சகல ஜீவராசிகளையும் மயக்கி நின்றான் கண்ணன். தெய்வீக நாதனைப் பழித்து அவன் செய்த காரியங்களைப் பிறர் மனதாலும் கருதக் கூடாது. சகல உயிர்களிடத்தும் ஊடுருவி நிற்கும் சக்தியான பரம்பொருளுக்கு ஆண், பெண், கணவன்,மனைவி என்ற பாகுபாடு ஏது? செயல்களைப் பாதிக்கும் சுகதுக்கங்கள் கடவுளைப் பற்றுமோ?
( மனசாட்சி: ரொம்ப ஆழமா ஆன்மிகம் பேசறா மாதிரி இருக்கு?
நான்: சில விஷயங்களை இப்படித் தாம்ப்பா சொல்ல முடியும்!)
கண்ணனிடம் ஈடுபாடு கொண்டு கோபியர்கள் இருந்தார்கள் என்றால், கணவர்கள் ஏன் கோபங்கொள்ளவில்லை? கண்ணன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் அவன் மனைவி இருந்தாள், இந்தமாயை அடிக்கடி வற்புறுத்தப் படுகிறது. கண்ணன் விளையாடியது, விந்தை காட்டியது, வாதம் தொடுத்தது, வெண்ணெய் திருடியது, வழி மடக்கியது, கண்கலங்கச் செய்தது, குழல் ஊதி எழுப்பியது, ஜலக்ரீடை புரிந்தது, ஆடைகளைக் கவர்ந்து கொண்டது அனைத்தும் பெண்களிடத்தில் தான், உலகம் மாயை, ஆணும் பெண்ணும் மாயத்தோற்றங்கள். உண்மையில் உள்ளது ஒன்றே- அது அவன் தான்! அனைத்தையும் மறந்து அவனைச் சரணடைந்தால் காக்கும் பொறுப்பு அவனுடையது. அவன் எங்கும் இருப்பவனாகையால் எப்போதும் வந்து காப்பான்! இந்த உண்மையைத் தான் கிருஷ்ண லீலைகள் நிரூபிக்கின்றன.
இன்றைய பாடலில் ஆயப் பெண்கள் விரும்பின படியே கண்ணன் சிங்காசனத்திலிருந்து நடையிடத் தொடங்கினான். அதைக்கண்ட ஆயப் பெண்கள் அவனது நடையழகில் தங்களை மறந்து அவனது திருவடிகளுக்கும் குணங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்கள்.
**
“அன்றிவ் வுலகம் அளந்தா யடி போற்றி
சென்றவருத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய்குணம் போற்றி
வென்று பகை கொடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே யேந்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்..
**
மென்மையான – தொட்டாலே கன்றிச் சிவந்துவிடும் மெல்லடிகளைக் கொண்டு முன்னொரு காலத்தில் காடும் மேடுமான இந்த உலகத்தை அளந்தாயே. அத்திருவடிகளுக்கு எந்தக் குறையும் வராமல் இருக்கவேண்டும் என்று நாங்கள் பல்லாண்டு பாடுகிறோம்!
கல்லும் முள்ளும் நிறைந்த காட்டில் பல நூறுகாதங்கள் சென்று குகையில் புலியைப் பார்ப்பது போல, இராவணனை அவனுடைய இருப்பிடமான இலங்கையிலேயே வென்ற உன்னுடைய திறமைக்குப் பல்லாண்டு!
ஒரு வண்டியில் ஆவேசித்திருந்து உனக்குத் தீமை செய்ய முயன்ற சகடாசுரன் அழியும் படியாகத் திருவடிகள் உதைத்தவனே, தாயும் உதவிக்கு வராத அந்த நேரத்தில் உன்னைக் காத்துக் கொண்ட புகழுக்குப் பல்லாண்டு!
உன்னைக் கொல்ல இரு அசுரர்கள் கன்றாகவும், விளாங்கனியாகவ்வும் நிற்க, கன்றை விளாங்கனி மீது எறிந்து இருவரையும் அழித்தவனே, அப்படி எறிந்த போது மடங்கி நின்ற உன் திருவடிகளுக்குப் பல்லாண்டு!
தனக்கு விழா எடுக்காததால் கோபம்கொண்டு இந்திரன் கல்மழை பொழிந்த போது கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் பசுக்களையும் காத்தவனே, இப்படித் தீங்கு புரிந்த இந்திரனையும் மன்னித்து அருள் புரிந்த உன்னுடைய குணத்துக்குப் பல்லாண்டு!
பகைவர்களை வென்று அழியச் செய்யும் உன் கையிலுள்ள வேலுக்கும் பல்லாண்டு! இவ்வாறு உன் வீரச் செயல்களையும் புகழ்ந்து பாடுவதையே பயனாகக் கொண்டு நாங்கள் வந்தோம், எங்களுக்கு நீ இறங்கி அருள் புரிய வேண்டும்!
**
உட்கருத்து:
இப்பாடலில் பகவானது விரோதிகளைச் சொல்வது போல மனிதனுடைய விரோதிகளை ஆண்டாள் நமக்குச் சொல்கிறாள்:
• மஹாபலி – அகங்காரம்
• இராவணன் – காமம்
• சகடன் – மோகம்
• வத்ஸன் – லோபம்;
• கபித்தன் (விளாமரம்) – ஆச்சர்யம்
• இந்திரன் – குரோதம்
இந்த ஆறு விரோதிகள் அழிந்தால் இறைவன் தென்படுகிறான்!
**
https://youtu.be/GQ_3boKlnjI
(அடுத்த போஸ்டிலும் கண்ணன் வருவான் )
RAGHAVENDRA
31st August 2015, 09:16 PM
வாசு சார்
தங்களின் யூகத்தில் நியாயம் உள்ளது. மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடல் என்றாலும் ஏற்கெனவே கேட்ட பாடலை நினைவூட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் குறிப்பிட்ட பாடல் மட்டுமின்றி, பாக்தாத் பேரழகி படத்தில் இடம் பெற்ற நவாபுக்கொரு கேள்வி பாடலையும் நினைவூட்டும்.
RAGHAVENDRA
31st August 2015, 09:17 PM
சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் கரு வளருமாம்.
பானுமதி சொல்கிறார்..
இதைப்பற்றி திரையில் பக்தி நிபுணர்கள் சொல்ல வேண்டும். ஓவர் டூ சி.க. அண்ட் ரவி.
https://www.youtube.com/watch?v=8MknCfgaLLI
chinnakkannan
31st August 2015, 09:22 PM
பூமாலை தொடுத்த பாமாலையின் மீள் பதிவு..
**
திடீரென்று மனது குதூகலிக்கிறது. உணர்வுகள் பொங்கி எழுகின்றன. எதையாவது எழுதத் தோன்றுகிறது. பேனா எடுக்கிறோம்.. எழுதுகிறோம்..
நேற்றுப் பார்த்து
நேற்றுப் பார்த்து
நேற்றுப் பார்த்ததை
நினைத்துப் பார்க்கையில்
நேற்றுப் பார்த்தது
நிழற்கனவாகி
நாளை வந்திட..,
மறுபடி நேற்று!
என்று எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறோம். நவீன கவிதை என அது பிரசுரமாகி விடுகிறது! பத்திரிகையைத் தடவித் தடவிப் பார்க்கிறோம். நாம் எழுதியதை மறுபடி மறுபடி படித்துப் பார்க்கிறோம். நமக்கே அப்போது தான் ஏதோ புரிய ஆரம்பிக்கிறது! நம் மனது மகிழ்கிறது. உடனே மறுபடி
மனம் மகிழ்ந்திட
மனம் மகிழ்ந்திட
கண்ட மகிழ்ச்சியில்
மனம் மடிந்திட,
அந்தரத்தில் நிற்பதென்னவோ
உடல்!
என்று இன்னொன்று எழுதிவிடுகிறோம்!
மஹா விஷ்ணுவிற்கும் ஆசை வந்தது. தானே வேறு உருவில் இருப்பதைப் பார்ப்பதற்கு. என்ன செய்தார்?
துவாரகாபுரியில் ஒரு அந்தணன் இருந்தான். அவனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தே பிறந்தன. ஒவ்வொரு முறையும் அரசவைக்குச் சென்று ‘அரசன் ஒழுங்காக ஆட்சி செய்தால் பிரஜைகளுக்கு இவ்விதம் நேரா” எனச் சொல்லி இறந்த குழந்தைகளை எரித்து வந்தான். ஒன்பதாம் முறையும் குழந்தை இறந்தே பிறக்கவே – அந்தணன் அரண்மனைக்குச் சென்று நிந்தித்தான். “என் குழந்தைகளைக் காப்பதற்கு யாரும் இல்லையா?” எனக் கதறினான்.
கண்ணன் அப்போது துவாரகையில் இல்லை. அர்ச்சுனன் மட்டும் இருந்தான். அவன் அந்தணனிடம் “ நீர் கவலைப் படாதீர். உமதுஅடுத்த குழந்தைக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என வாக்குக் கொடுத்தான். பத்தாவது குழந்தையின் பிரசவத்தின் போது வில்லேந்தி, எமன் எப்படி வருகிறான் என்று பார்க்கும் வண்ணம் நின்றான் அர்ச்சுனன்.
குழந்தை பிறந்தது; இறந்தது; மறைந்தது. அந்தணன் அழுகையுடன் கேலி செய்தான். “ முன்பாவது உடல் இருக்கும், இப்பொது அதுவும் இல்லை. நல்ல காவல்!” அர்ஜூனன் வெட்கப் பட்டு உயிரை விட யத்தனிக்கையில், கண்ணன் வந்தான்.
‘வா, நாம் போய் மீட்டு வருவோம்” என இருவரும் வாயு ரதத்தில் ஏறித் தேடினார்கள். சக்கிர வளாகிரி என்ற இடத்தில் ஒரே இருள். தனது திருவாழியால் இருளைக் கிழித்து ரதத்தைச் செலுத்த கடைசியில் கண்டது என்ன?
ஒளிமயமாக விளங்கும் நகரில் பரப்பிரம்மரான நாராயணன் ஆதி சேடன் மீது பள்ளி கொண்டிருப்பதைப் பார்த்தனர். விஷ்ணு “ உங்கள் இருவரையும் காண வேண்டும் என்று இங்குள்ள முனிவர்களும் முக்தர்களும் விரும்பினர். அதானாலேயே அந்தணனின் குழந்தைகளை மறைத்தேன். அவர்கள் இங்கே உயிருடன் இருக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்லலாம்” என்றார். கிருஷ்ணார்ச்சுனர்கள் அந்தணனிடம் குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்க அந்தணன் மகிழ்ந்தான்.
தான் எடுத்த அவதாரத்தை, தானே பார்க்க வேண்டுமென விஷ்ணுவையும் ஆசைப்பட வைத்தது கிருஷ்ணாவதாரம்.
**
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருந்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
**
https://youtu.be/pOFRis0UM58
*
vasudevan31355
31st August 2015, 09:36 PM
சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் கரு வளருமாம்.
பானுமதி சொல்கிறார்..
இதைப்பற்றி திரையில் பக்தி நிபுணர்கள் சொல்ல வேண்டும். ஓவர் டூ சி.க. அண்ட் ரவி.
அப்பாடி!
நான் பொழச்சேன்.:)
uvausan
31st August 2015, 10:11 PM
பூமாலை தொடுத்த பாமாலையின் மீள் பதிவு..
**
திடீரென்று மனது குதூகலிக்கிறது. உணர்வுகள் பொங்கி எழுகின்றன. எதையாவது எழுதத் தோன்றுகிறது. பேனா எடுக்கிறோம்.. எழுதுகிறோம்..
நேற்றுப் பார்த்து
நேற்றுப் பார்த்து
நேற்றுப் பார்த்ததை
நினைத்துப் பார்க்கையில்
நேற்றுப் பார்த்தது
நிழற்கனவாகி
நாளை வந்திட..,
மறுபடி நேற்று!
என்று எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறோம். நவீன கவிதை என அது பிரசுரமாகி விடுகிறது! பத்திரிகையைத் தடவித் தடவிப் பார்க்கிறோம். நாம் எழுதியதை மறுபடி மறுபடி படித்துப் பார்க்கிறோம். நமக்கே அப்போது தான் ஏதோ புரிய ஆரம்பிக்கிறது! நம் மனது மகிழ்கிறது. உடனே மறுபடி
மனம் மகிழ்ந்திட
மனம் மகிழ்ந்திட
கண்ட மகிழ்ச்சியில்
மனம் மடிந்திட,
அந்தரத்தில் நிற்பதென்னவோ
உடல்!
என்று இன்னொன்று எழுதிவிடுகிறோம்!
மஹா விஷ்ணுவிற்கும் ஆசை வந்தது. தானே வேறு உருவில் இருப்பதைப் பார்ப்பதற்கு. என்ன செய்தார்?
துவாரகாபுரியில் ஒரு அந்தணன் இருந்தான். அவனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தே பிறந்தன. ஒவ்வொரு முறையும் அரசவைக்குச் சென்று ‘அரசன் ஒழுங்காக ஆட்சி செய்தால் பிரஜைகளுக்கு இவ்விதம் நேரா” எனச் சொல்லி இறந்த குழந்தைகளை எரித்து வந்தான். ஒன்பதாம் முறையும் குழந்தை இறந்தே பிறக்கவே – அந்தணன் அரண்மனைக்குச் சென்று நிந்தித்தான். “என் குழந்தைகளைக் காப்பதற்கு யாரும் இல்லையா?” எனக் கதறினான்.
கண்ணன் அப்போது துவாரகையில் இல்லை. அர்ச்சுனன் மட்டும் இருந்தான். அவன் அந்தணனிடம் “ நீர் கவலைப் படாதீர். உமதுஅடுத்த குழந்தைக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என வாக்குக் கொடுத்தான். பத்தாவது குழந்தையின் பிரசவத்தின் போது வில்லேந்தி, எமன் எப்படி வருகிறான் என்று பார்க்கும் வண்ணம் நின்றான் அர்ச்சுனன்.
குழந்தை பிறந்தது; இறந்தது; மறைந்தது. அந்தணன் அழுகையுடன் கேலி செய்தான். “ முன்பாவது உடல் இருக்கும், இப்பொது அதுவும் இல்லை. நல்ல காவல்!” அர்ஜூனன் வெட்கப் பட்டு உயிரை விட யத்தனிக்கையில், கண்ணன் வந்தான்.
‘வா, நாம் போய் மீட்டு வருவோம்” என இருவரும் வாயு ரதத்தில் ஏறித் தேடினார்கள். சக்கிர வளாகிரி என்ற இடத்தில் ஒரே இருள். தனது திருவாழியால் இருளைக் கிழித்து ரதத்தைச் செலுத்த கடைசியில் கண்டது என்ன?
ஒளிமயமாக விளங்கும் நகரில் பரப்பிரம்மரான நாராயணன் ஆதி சேடன் மீது பள்ளி கொண்டிருப்பதைப் பார்த்தனர். விஷ்ணு “ உங்கள் இருவரையும் காண வேண்டும் என்று இங்குள்ள முனிவர்களும் முக்தர்களும் விரும்பினர். அதானாலேயே அந்தணனின் குழந்தைகளை மறைத்தேன். அவர்கள் இங்கே உயிருடன் இருக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்லலாம்” என்றார். கிருஷ்ணார்ச்சுனர்கள் அந்தணனிடம் குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்க அந்தணன் மகிழ்ந்தான்.
தான் எடுத்த அவதாரத்தை, தானே பார்க்க வேண்டுமென விஷ்ணுவையும் ஆசைப்பட வைத்தது கிருஷ்ணாவதாரம்.
**
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருந்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
**
*
ck - அருமை -- இது -- இது -- இதைத்தான் ( இப்படிப்பட்ட பதிவுகளையும் ) எதிர்ப்பார்த்தேன் உங்களிடம் - மிக்க நன்றி
uvausan
31st August 2015, 10:15 PM
ரவி..உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.. முதலில் கிருஷ்ணாவதாரம் பற்றி கொஞ்சம் படித்து, கொஞ்சம் நிறையக்கேட்டு,எழுதிப் பார்த்தது- எனது முயற்சியான பூமாலை தொடுத்த பாமாலையிலிருந்து திருப்பாவை இருபத்து நான்காம் பாடல்..--- ck
ஏன் மாறுபடுகிறீர்கள் ? எங்கே மாறு படுகிறீர்கள் ? புரியவில்லை - இருந்தாலும் ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் தயார் . நீங்கள் தயாரா ??
chinnakkannan
31st August 2015, 10:52 PM
ராகவேந்திரர் சார், முருகா எனக்கொரு வரம்வேண்டும் அழகிய பாட்டு.. முருகனை சீருடைலாம் போட்டுபள்ளிக்கு அனுப்பும் பானுமதி ஆசை அழகு..
*
ஆறா மனத்திற்காய் ஆற்றலுடன் சிந்தையினுள்
வேறாய் நினைக்காமல் வேலனை – நீராடி
போவாய்நீ கோவிலுக்கு பொன்விரதம் தான்முடித்தே
போவேக மாகவே போ
(ஈற்றடி என் குரு நாதர் பேரா.பசுபதியாருடையது)
-
எனில் சஷ்டி விரதம்:
ஐப்பசி மாதம் பிரதமை திதியில் இருந்து சஷ்டி வரை விரதம் இருந்து, சஷ்டியில் முருகனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவேற்றினால் ஆயிரமாயிரம் ஆண்டு தவம் செய்த பலனை பெறலாம் என்பது நம்பிக்கை
எப்படி விரதம் ஆரம்பித்ததாம்..
பிரதமையில் சிவனிடம் பிறந்த நெற்றிக்கண் பொறிகள், துதியையில்
கௌரியின் கர்பத்திலிருந்து திருதியையில் அக்கினியிடம் கொடுக்க அவன் அதைப் பெற்று சதுர்த்தியில் கங்கையிடமிருந்து பஞ்சமியில் கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட ஆறு முகமும் பன்னிரண்டு கையும் பெற்று வளர்ந்த நாள்.
இது தான் கந்தசஷ்டி விரதம் ஆரம்பிக்கக் காரணமாயிருந்ததாம்..
*
ஆரண முனிவர் வானோர் அங்(கு) அதன் மற்றை வைகல்
சீரணி முருகவேட்கு சிறப்பொடு பூசையாற்றி
பாறணம் விதியில் செய்தார் பயிற்றும் இவ்விரதம் தன்னால்
தார் அணி அவுணர் கொண்ட தம் பதத் தலைமை பெற்றார்.
(கந்த புராணம்)
(வேதம் உணர்ந்த முனிவர்களும், தேவர்களும் அந்த சஷ்டித் தினத்திற்கு அடுத்த தினமாகிய சப்தமியில் திருவருட் சிறப்பமைந்த முருகப்பிரானுக்கு வெகு சிறப்பாக விசேட பூசை செய்து விதித்ததன் பிரகாரம் பாராயணம் செய்தார்கள். அனுஷ்டிக்கும் இந்த விரத விசேஷத்தினாலே, தேவர்களும் முனிவர்களும்- மாலையை அணிந்த அசுரர்கள், தம்மிடமிருந்து கவர்ந்துகொண்ட தத்தம் பதத்தின் தலைமையை மீண்டும் பெற்றார்கள்.)
*
சஷ்டி திதியில் சூரனைப் போரில் முருகப்பெருமான் வதைத்ததே சஷ்டிக்கும் சூரனுக்கும் உள்ள தொடர்பு எனக் கந்த புராணம்கூறுகின்றதாம்..
*
அப்போ பானுமதி சொல்றது என்னவாம்..
தேடிப்பார்த்தால்..
சஷ்டி என்பவள் ஒரு திதிதேவதை ஆவாளாம்..அது என்ன திதி..
குறித்த மாதத்தில் சூரியனோடு சமமாக நின்ற சந்திரன் சூரியனைப் பிரிந்து கிழக்கு நோக்கிப் பூமியைச் சுற்றி வந்து திரும்பவும் சூரியனைச் சந்திக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தை முப்பதாகப் பிரித்து, வளர்பிறை பிரதமை முதல் தேய்பிறை அமாவாசை ஈறாக முப்பது திதிகள் வகுக்கப்படுகின்றது.
இத் திதிகள் வளர்பிறை பிரதமை முதல் அமாவாசை ஈறாக பதினைந்தும், தேய்பிறை பிரதமை முதல் பௌர்ணமி ஈறாக பதினைந்துமாக முப்பதாகின்றன
. அமாவாசை முதல் பௌர்ணமி ஈறாக வரும் திதிகளை சுக்கில பட்ச திதி அல்லது பூர்வ பட்ச திதி என உரைப்பர். பௌர்ணமி முதல் அமாவாசை ஈறாக வரும் திதிகளை கிருஷ்ணபட்ச திதி அல்லது அபரபட்ச திதி என்று உரைப்பர்.பூர்வ பட்சம் வளர்பிறை.. அபரபட்சம் தேய்பிறை..
இத் திதிகளுள் பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து வரும் முதல் திதி பிரதமை எனப்படுகிறது. இரண்டாவது திதி துதியை எனப்படுகிறது. மூன்றாவது திதி திருதியை எனப்படுகிறது. நான்காவது திதி சதுர்த்தி எனப்படுகிறது. ஐந்தாவது திதி பஞ்சமி எனப்படுகிறது. ஆறாவது திதி சஷ்டி எனப்படுகிறது
ஆக மற்ற திதிகள் அப்புறம் பார்க்கலாம்.. எனில் ஆறாவது திதியான சஷ்டி திதிக்கு ஒரு தேவதை உண்டு.. இவள் பிரம்ம தேவனின் மானஸ புத்ரி.. தேவசேனை எனப் பெயர்..
முருகப்பெருமானுக்கு – தேவாசுர யுத்தம் சமயத்தில்- தேவசேனைகளுக்குத் துணையாக உதவி புரிந்த தேவதை ஆதலின் சஷ்டி திதி விருப்பமுடையதாக மாறினாள்..
புத்ரபாக்யமில்லாதவருக்குப் புத்திர பாக்கியம் மட்டுமன்றி கரு உருவாவதில் இருந்து பெற்றெடுக்கும் வரை எந்த விகல்பங்களும் வராமல் அருளுபவள்..
சஷ்டி விரத காலத்தில் முருகனையும், சஷ்டி திதிப் பெண்ணையும் வணங்கியவண்ணம் விரதமிருந்தால் புத்திர பாக்கியம் பெறுவார்களாம்..
*
எனில் பானுமதி பாடுவது சரியே!
**
https://youtu.be/sPP3s7DjccA
*
ராகவேந்தர் சார்..அடியேன் சிறுவன் .. கொஞ்சம்படித்துப்பார்த்து எழுதிப் பார்த்திருக்கிறேன்.. பிழையிருப்பின் பொறுக்கவும்..
chinnakkannan
31st August 2015, 11:00 PM
//ஏன் மாறுபடுகிறீர்கள் ? எங்கே மாறு படுகிறீர்கள் ? புரியவில்லை - இருந்தாலும் ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் தயார் . நீங்கள் தயாரா ??//
இது தான்..
//ஒரு முறை எல்லா தேவர்களும் பரந்தாமனிடம் சென்று கேட்டனராம் - " பிரபு - நீங்கள் எடுத்த அவதாரங்களில் உங்களுக்கு கடினமான , மிகவும் பிடித்த அவதாரம் எது ? "
மாதவன் சொன்னான் " எனக்கு சவாலாக அமைந்த அவதாரம் " ராமன் " - மற்ற அவதாரங்களில் என் தெய்வத்தன்மை நிறைந்திருக்கும் - ஆனால் இதில் முழுக்க முழுக்க மனிதனாக வாழ்ந்தேன் - நல்ல பண்புகளுடன் , ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் சிறிதும் மாறாமல் வாழ்வது என்பது எவ்வளவு கடினமான அனுபவம் ... மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் மனித அவதாரத்தைத்தான் விரும்புவேன் ..... " //
நான் கிருஷ்ணாவதாரம் என எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது..அவ்வளவு தான் :)
chinnakkannan
31st August 2015, 11:26 PM
ck - அருமை -- இது -- இது -- இதைத்தான் ( இப்படிப்பட்ட பதிவுகளையும் ) எதிர்ப்பார்த்தேன் உங்களிடம் - மிக்க நன்றி
நன்றி ரவி..Tamil literature section il பாசுரம்பாடி வா தென்றலே யில் திருப்பாவைப் பாடல்கள் உரை பதிந்திருக்கிறேன்..
rajeshkrv
1st September 2015, 02:47 AM
ஆஹா ராகவ் ஜி
அருமை அருமை
உங்களை தொடர்ந்து சி.கவும், ரவி ஜியும், நம்ம வாசு ஜியும் கலக்கோ கலக்கென்று கலக்கி விட்டனர்
அனைத்து பதிவுகளும் அற்புதம்
ரவி நீங்கள் உங்கள் தாய் பற்றியும் உங்களைப்பற்றியும் சொன்ன பதிவு நெஞ்சை கனக்கச்செய்தது.
நீங்கள் ஞான சூன்யமா ஆஹா அப்போ நாங்கள் எல்லாம் முழுச்சூன்யம் போங்கள்
uvausan
1st September 2015, 06:17 AM
காலை வணக்கம்
திரையில் பக்தி
கேள்வி -பதில்கள் தொடர்கின்றன
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/sun_zps6eqqy4za.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/sun_zps6eqqy4za.jpg.html)
uvausan
1st September 2015, 06:19 AM
திரையில் பக்தி
கேள்வி -பதில்
கேள்வி :
பதிவு -1
காசேதான் கடவுளடா - அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா ---- நிரந்தரம் இல்லாத ஒன்று , நம்மிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் . வாழ்க்கையில் அதை அடைவது மட்டுமே ஒரு பெரிய குறிக்கோளாக இருக்கின்றது . போதும் என்ற எண்ணம் வருவதே இல்லை - நம் கடைசி பயணத்தில் நம்முடன் கூட வராத இந்த பணம் நாம் வாழும்போது நம் நிம்மதியை தொலைக்க வைக்கின்றது , உறவை முறிக்க வைக்கின்றது , இளமையை முதுமையாக்கின்றது . பணம் ஒன்று மட்டுமே இருந்தால் போதுமா ?? போதும் என்று சொல்லும் சில பாடல்கள் ......
uvausan
1st September 2015, 06:20 AM
https://www.youtube.com/watch?v=qHkjZ_ceV-c
https://www.youtube.com/watch?v=m-C6pguvrYw
https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே !
.
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே
.
முத்துக்க*ள் சிரிக்கும் நில*த்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்க*ள் சிரிக்கும் நில*த்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்க்க*த்தின் வ*ன*ப்பை ரசிக்கும்
சித்த*த்தில் ம*ய*க்கும் வ*ள*ர்க்கும்
யோக*மே நீ வா
வைர*மோ என் வ*ச*ம்
வாழ்விலே ப*ர*வ*ச*ம்
வீதியில் ஊர்வ*ல*ம்
விழியெல்லாம் ந*வ*ர*ஸ*ம்
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
.
செல்வ*த்தின் அணைப்பின் கிட*ப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் ந*ட*ப்பேன்
செல்வ*த்தின் அணைப்பின் கிட*ப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் ந*ட*ப்பேன்
ராஜ*னாக* !
இன்ப*த்தில் ம*ன*த்தில் குளிப்பேன்
என்றென்றும் சுக*த்தில் மித*ப்பேன்
வீர*னாக* !
திரும*க*ள் ச*ம்ம*த*ம் த*ருகிறாள் என்னிட*ம்
ம*ன*திலே நிம்ம*தி
ம*ல*ர்வ*தோ புன்ன*கை
.
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே......
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*...
https://www.youtube.com/watch?v=9cBpl6Adb-w
uvausan
1st September 2015, 06:22 AM
பதில் :
இல்லை குணம் தான் முக்கியம் , அன்புதான் பிரதானம் . கடவுள் வெறும் பணத்தால் மகிழ்பவர் அல்ல - நாம் பிறருக்கும் செய்யும் உதவிகளிலும் , இரக்க குணத்தில் மட்டுமே அவனை அடையமுடியும் . இதுதான் நம்முடன் என்றும் கூட வருவது , நிலையானது
https://www.youtube.com/watch?v=QBVKYfEyMeo
உன் அன்பு ஒன்று தான் என் செல்வம் - உன் திருநாமத்தை உச்சரிக்கும் போது வரும் சுவை - அதற்கு ஈடாக அந்த வைகுண்டமே கிடைத்தாலும் எனக்கு அது தேவை இல்லை ... உன்னை என்றும் நினைக்க என்னை பழக்கி விடு கண்ணா -- உன் அருள் எனக்கு இருக்கும் பொழுது இந்த சொர்க்கம் எனக்கு ஒரு தூசி - இப்படி ஆண்டாலும் , ஆழ்வார்களும் பாடுகின்றனர் - உண்மையை உணர்ந்து கொண்டாய் என்று கண்ணனும் சிரிக்கிறான் ------
https://www.youtube.com/watch?v=MFQvEfKgaLk
uvausan
1st September 2015, 06:24 AM
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பதிவு -2
கேள்வி : உண்மையான பக்தி என்பது என்ன ? பல யாகங்கள் செய்து , பல லக்ஷ செலவில் , எல்லோரும் வியக்க , ஆடம்பரமாக செய்யும் பூஜைகள் இறைவனை உண்மையில் மகிழ்விக்கின்றனவா ?
பதில் : இல்லவே இல்லை --- உண்மையான அன்பைத்தான் அவன் எதிர்ப்பார்க்கிறான் - கலப்படம் இல்லாத அக்மார் அன்பு . ஆடம்பரமான பூஜைகள் , மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்ற நினைப்பில் செய்யும் ஆடம்பர செலவுகள் இதில் எதுவுமே அவனை மயங்க வைக்காது - உங்களுக்கு முதலில் உண்மையாக இருங்கள் - அவன் உண்மையாக உங்களுடன் இருக்க துடிப்பான் ....
https://www.youtube.com/watch?v=etdRwDzNDAA
திரையில் பக்தி நாளை நிறைவேறும் ------
rajraj
1st September 2015, 08:13 AM
From avan(1953), Tamil dubbed version of Aah(1953)(Hindi)
Ekaanthamaam immaalaiyil......
http://www.youtube.com/watch?v=dgSX-7E1HRI
From the Hindi original
Ye sham ki tanhaiyaan.....
http://www.youtube.com/watch?v=G2jsjAiXbZ8
From the Telugu dubbed version Prema Lekhalu(1953)
Ekaanthamu.......
http://www.youtube.com/watch?v=cIYv04feIJI
rajeshkrv
1st September 2015, 08:54 AM
வணக்கம்
vasudevan31355
1st September 2015, 09:00 AM
ரவி சார்,
http://www.thehindu.com/multimedia/dynamic/00448/2008051751051101_448656e.jpg
இந்தப் பைத்தியக்கார சிவனின் பக்திக்கு ஒரு ஈடும் உண்டோ! 'பேடர கண்ணப்பா' கன்னடப் படமே தமிழில் 'வேடன் கண்ணப்பா' ஆனது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஹீரோ.
'சிவனே என்றவுடன் மனதில் மோகம் உண்டாகிடுதே
இன்னமும் உன்னோடு இருப்பதற்காசையும் மிகுந்திடுதே
ஹிரதயமும் நினைந்துருகி நிந்தன் உருவினில் மயங்கிடுதே'
நமது 'பாடகர் திலக'த்தின் குரலைக் கேட்கும் போது 'நடிகர் திலகம்' தான் நினைவுக்கு வருகிறார்.
https://youtu.be/CcrJsdwK52M
இதே பாடலை கன்னடத்தில் பாருங்கள். சிதம்பரம் ஜெயராமன் பாடியிருப்பார்.
'சிவனே என்டொடனே மனசே' என்று தொடங்கும். (ஆடியோ கொஞ்சம் மேட்ச் ஆகவில்லை. அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.)
இரண்டு வெர்ஷனுமே அருமையாக உள்ளன.
https://youtu.be/4jIBlH0wSDY
vasudevan31355
1st September 2015, 09:04 AM
ஆஹா! வாருங்கள் ராஜேஷ்ஜி! வணக்கம். நேற்று சுசீலாம்மா பாடலை தங்களை நினைத்துக் கொண்டேதான் பதித்தேன்.
rajeshkrv
1st September 2015, 09:08 AM
வந்தேன் வந்தேன் ஜி
பாடல் கேட்டேன் சூப்பர்.
நினைத்தால் நாம் வானம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
rajeshkrv
1st September 2015, 09:11 AM
ஜி
மெல்லிசை மன்னரின் இசையில் இசையரசியின் குரலில்
https://www.youtube.com/watch?v=j0ZXlboPn1E
rajeshkrv
1st September 2015, 09:14 AM
https://www.youtube.com/watch?v=2RGD6EPvtlQ
rajeshkrv
1st September 2015, 09:18 AM
ஷரபஞ்சாரா கல்பனா
கிருஷ்ணவேனி வாணிஸ்ரீ
ஜி இரண்டு பாடல்களும் உமக்காக
மதுண்ணா உங்களுக்கும் தான்
https://www.youtube.com/watch?v=Z6FQGXh7HmY
https://www.youtube.com/watch?v=PPcOmPVBNyk
rajeshkrv
1st September 2015, 09:41 AM
ஜி
இசையரசி, ஜிக்கி, ஜானகி குரல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இசையரசியும் ஜிக்கியும் கலக்கியிருப்பார்கள்
https://www.youtube.com/watch?v=6l74MbrQfys
vasudevan31355
1st September 2015, 09:53 AM
அனைத்துப் பாடல்களுக்கும் நன்றி ஜி! நிதானமாக கேட்டுவிட்டு எழுதுகிறேன்.
rajeshkrv
1st September 2015, 10:05 AM
வாணிக்கு மிக நல்ல மலையாள பாடல்கள் கிட்டி
அதில் இது மிகவும் சிறந்த பாடல்
சலீல் செளத்ரி அவர்களின் இசையில்
https://www.youtube.com/watch?v=oa_T3NbimiI
vasudevan31355
1st September 2015, 10:25 AM
எது எது எங்கே இருக்கணுமோ அது அது அந்த இடத்தில் இருந்தால்தான் அழகு. காமெடி என்றால் காமெடியோடு நிற்கலாம். அதை விடுத்து நடிகர் திலகம் மாதிரி நடிப்பதாக எண்ணிக் கொண்டு நடிகர் திலகத்தின் பிரதான நாயகியையே ஜோடியாக்கிக் கொண்டு இப்படி சோதனை செய்யக் கூடாது. விஜயாவும் இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. பாடல் என்னவோ நல்ல பாடல்தான். ஆனால் காட்சியில் குமட்டுகிறது. 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' படத்தின் பெயர். ஆனால் திட்டிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது.
https://youtu.be/t1beX4qHfIg
RAGHAVENDRA
1st September 2015, 10:29 AM
எது எது எங்கே இருக்கணுமோ அது அது அந்த இடத்தில் இருந்தால்தான் அழகு. காமெடி என்றால் காமேடியோடு நிற்கலாம். அதை விடுத்து நடிகர் திலகம் மாதிரி நடிப்பதாக எண்ணிக் கொண்டு நடிகர் திலகத்தின் பிரதான நாயகியையே ஜோடியாக்கிக் கொண்டு இப்படி சோதனை செய்யக் கூடாது. விஜயாவும் இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. பாடல் என்னவோ நல்ல பாடல்தான். ஆனால் காட்சியில் குமட்டுகிறது. 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' படத்தின் பெயர். ஆனால் திட்டிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது.
பேசாமல் படத்தின் பேரை நான் குமட்டிக்கொண்டே இருப்பேன் என்று வைத்திருக்கலாம்.
இந்த லட்சணத்தில் படத்தின் பேரில் ஒரு எழுத்தை தலைகீழாகப் போட்டு வேறு நம்மைப் படுத்துவார்கள்.
chinnakkannan
1st September 2015, 11:19 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..
படம் போர் பாட் நல்லா இருக்கும்ங்கறீங்க வாசு.. சில சமயங்களில் காட்சி நல்லா இருக்கும்.. பாட் ஸோ ஸோ தான்..அதுபோல பாடல்கள் போடலாமே..
ஏனெனில் இன்று எழுதிய வெண்பாக்கள் முகநூலில்
*
Qantab beach, Muscat
காந்தாரி இன்றிருந்தால் கண் திறந்து பார்த்திடுவாள்
காந்தாப் கடற்கரையின் பேரழகை - சீண்டியே
செல்லும் கடலலைகள் திரும்பிவந்து முட்டுவதும்
அள்ளிடும் நெஞ்சினை ஆம்..
திரைகட லோடித் திரவியமாய்ப் பாடலிலே
திரைப்படத்தில் காட்டுவார் தேர்ந்தே - கரையினில்
வெண்மணற் பாதையில் வேகமாய் நாயகியும்
மென்மையாய் ஆடுவாள் ஆம்..
(இங்கு எடுக்கப்பட்ட பாடல்கள் - தத்துவமான - எச்சூச்மி மிஸ்டர் கந்தசாமி -சுச்சியின்குரல்,
சூர்யா வின் ஒரு படம், பாவனாவின் தீபாவளி படத்தில் ஒரு பாடல்)
*
எச்சூச்மி பாட்டை யூட்யூபில் பார்த்து மனம் மகிழலாம் :)
raagadevan
1st September 2015, 11:27 AM
வாணிக்கு மிக நல்ல மலையாள பாடல்கள் கிட்டி
அதில் இது மிகவும் சிறந்த பாடல்
சலீல் செளத்ரி அவர்களின் இசையில்
Here is another song that fits the description of "வாணிக்கு மிக நல்ல மலையாள பாடல்கள் கிட்டி"; composed by Salilda...
https://www.youtube.com/watch?v=OqAqczHdP2M
vasudevan31355
1st September 2015, 11:53 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
31
'மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக'
'நீதிதேவன்'
இன்று பாலாவின் தொடரில் மிக அரிய பாடல் ஒன்று. 'நீதிதேவன்' என்ற படத்தின் பாடல் தான் அது. 1971-ல் வந்த படம். இந்தப் படத்தைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நாயகன் ஜெயசங்கர். இசை 'திரை இசைத் திலகம்' கே.வி. மகாதேவன் அவர்களாம். இயக்கம் ஆர்.தேவராஜன் என்று இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன
மிக அருமையான பாடல். பாலா சுசீலாம்மாவுடன் பாடிய டூயட்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று. குழைத்த சந்தனம் போல குரல் குழைவுகளில் ஜாலம் காட்டியிருப்பார் பாலா வழக்கம் போல. சுசீலாவும் நல்ல ஈடு. பாடல் வரிகளில் சுத்த தமிழ் நிரப்பபட்டு மனதிலும் உவகை நிரப்பப் படுகிறது. நாயகன் கேள்விகளை பல்லவியில் கேட்க அப்படியே தொடரும் நாயகி.
'இளம் கூந்தலின் சாலைக்குக் கீழே '
'அதில் மணவினை பெறலாமா' என்ற புதுமை வரிகள்.
அதே போல ரொம்ப ரசிக்கக் கூடிய, புரிந்து விட்டால் தேனை விட இனிக்கக்கூடிய இனிப்பான வரிகளைப் பாருங்கள்.
'செங்கனி இதழ்களின் மேலே
அது தேன்மொழி பேசிடும் போதே
பங்குக்கு நாலென பழங்கள் பறித்து
பந்தியில் இடலாமா
அதை நான் பசியுடன் பெறலாமா'
அருமையான கற்பனை வளம் பாடலாசிரியருக்கு.
'எப்போதும் இது தப்பாதென்பதை
இதயத்தில் அறிவோமா'
என்று சுசீலா அம்மா அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பதை பாராட்டாமல் இருக்கவே முடியாது.
இப்படத்தைப் பற்றி விவரங்கள் வந்தவுடன் காட்சிகளை இங்கு இணைத்து பின் தெரிவிக்கிறேன். இப்படத்தைப் பற்றியோ, இப்பாடலைப் பற்றியோ தெரிந்தால் அது பற்றித் தெரிவிக்கும்படி மது அண்ணாவையும், ராகவேந்திரன் சாரையும் அழைக்கிறேன். அதுவரை இப்பாடலின் ஆடியோவைக் கேட்டு மகிழுங்கள்.
மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக
என் மனதைத் தரலாமா
நான் மடியில் வரலாமா
காணிக்கையான பின் ஆனிப்பொன் ஊஞ்சலில்
கவிதைகள் பெறலாமா
அதிலே கனவுகள் வரலாமா
மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக
என் மனதைத் தரலாமா
நான் மடியில் வரலாமா
காணிக்கையான பின் ஆனிப்பொன் ஊஞ்சலில்
கவிதைகள் பெறலாமா
அதிலே கனவுகள் வரலாமா
குங்குமச் சாந்துக்கு மேலே
இளம் கூந்தலின் சாலைக்குக் கீழே
மங்கலமாய் ஒரு முத்தம் கொடுத்திட
மாப்பிள்ளை வரலாமா
அதில் மணவினை பெறலாமா
செங்கனி இதழ்களின் மேலே
அது தேன்மொழி பேசிடும் போதே
பங்குக்கு நாலென பழங்கள் பறித்து
பந்தியில் இடலாமா
அதை நான் பசியுடன் பெறலாமா
மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக
என் மனதைத் தரலாமா
நான் மடியில் வரலாமா
மேடிட்ட மணலினில் படுத்து
சிறு கோடிட்ட புன்னகை விரித்து
தேனிட்ட முகத்துக்கு நானிட்ட நகைகளை
சோதனை இடலாமா
இன்ப வேதனை படலாமா
பொங்கிடும் ஆற்றினில் குளித்து
வரும் போதையிலே மனம் நனைத்து
சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட
சரசம் பெறுவோமா
அதிலும் சமரசம் அறிவோமா
முப்பால் முழுவதும் படித்து
அதற்கப்பாலும் நடை எடுத்து
எப்போதும் இது தப்பாதென்பதை
இதயத்தில் அறிவோமா
காலை உதயத்தில் எழுவோமா
லாலல்ல லாலல்ல லாலல்ல லாலல்ல
லலலா லலலால்லா
லாலல்ல லலலா லலலால்லா
லலலா லலலால்லா
http://www.inbaminge.com/t/n/Neethi%20Devan/
vasudevan31355
1st September 2015, 12:00 PM
//சில சமயங்களில் காட்சி நல்லா இருக்கும்.. பாட் ஸோ ஸோ தான்..அதுபோல பாடல்கள் போடலாமே..//
ஒன்னு போடறது...
chinnakkannan
1st September 2015, 12:58 PM
ஏற்கெனவே நீங்க போட்டீங்களே.. ரவி, வாணிஸ்ரீ பாட்டு..
vasudevan31355
1st September 2015, 01:03 PM
ஏற்கெனவே நீங்க போட்டீங்களே.. ரவி, வாணிஸ்ரீ பாட்டு..
அப்புறம் வேற ஒண்ணுமே இல்லையா சின்னா! மதிய ஷிப்ட்டுக்கு கிளம்பறேன். நைட் வந்து பார்ப்பேனாக்கும். கபர்தார்.:)
chinnakkannan
1st September 2015, 01:36 PM
சமர்த்தா போய்ட்டு வந்துட்டு ஆராய்ச்சி பண்ணிப் போடுங்க.. நானும் ட்ரைபண்றேன் :)
uvausan
1st September 2015, 09:09 PM
வாசு - எங்களுக்குப்பாராட்ட , இது வரை உபயோகிக்காத வார்த்தைகளை கண்டு பிடித்து எழுத கொஞ்சம் கூட கால அவகாசம் தராமல் குறைந்த இடைவெளியில் மீண்டும் பாலாவை கூட்டிக்கொண்டு வந்தால் நாங்கள் என்ன செய்வது - எந்த நீதி தேவனுக்காவது இது அடுக்குமா ?? -
இப்படி பண்ணலாமா ? பாராட்டுக்களை முதலில் போட்டு விடுகிறோம் , பிறகு பாலாவை அழைத்து வாருங்கள் ......
chinnakkannan
1st September 2015, 11:21 PM
வாசு.. எப்போதோ கேட்டது போல் வெகு மெல்லிய புகையாக நினைவிருக்கிறது மாணிக்கப் பதுமைக்கு.. ஆடியோவை வெகுவாக ரசித்தேன்..
கவிஞர் வாலியாய்த் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்..கொஞ்சம் சாயல் தெரிகிறது..ஓவர் டு வாலி தாஸ் இன் அமெரிக்கா..:)
காணிக்கையான பின் ஆனிப்பொன் ஊஞ்சலில்
கவிதைகள் பெறலாமா
அதிலே கனவுகள் வரலாமா
24 காரட்ல ஊஞ்சல்ல கவிதைகல் பெறணுமாம்.. நைஸ்.. அப்புறம் எதுக்கு கனவு..
குங்குமச் சாந்துக்கு மேலே
இளம் கூந்தலின் சாலைக்குக் கீழே
மங்கலமாய் ஒரு முத்தம் கொடுத்திட
மாப்பிள்ளை வரலாமா
அதில் மணவினை பெறலாமா
நெற்றியிலே முத்தம் கொடுக்கறதுக்கு அழகான வரிகள்..பட் காதலன்லாம் நெத்திலயா கொடுப்பான் ?
அழகான பாடல் .. நானும் தேடிப்பார்த்தா நீதி தேவன் மயக்கம் சாங்க்ஸ் தான் வருது.. ஓவர் டூ சென்னை மதுண்ணா..
vasudevan31355
2nd September 2015, 07:52 AM
வாசு..
நெற்றியிலே முத்தம் கொடுக்கறதுக்கு அழகான வரிகள்..பட் காதலன்லாம் நெத்திலயா கொடுப்பான் ?
பர்ஸ்ட் நெத்தியிலே
அப்புறம்
இளம் கூந்தலின் சாலைக்குக் கீழே:)
uvausan
2nd September 2015, 08:05 AM
இதையும் CK விற்கு சொல்லிவிடுங்களேன் - இன்னும் அதே சாலையில் பயணம் செய்தால் நெய்வேலியில் இருக்கும் சுரங்கத்தையும் அடைந்துவிடலாம் :smokesmile:
uvausan
2nd September 2015, 08:07 AM
காலை வணக்கம்
திரையில் பக்தி
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/sun_zpsplydv9bp.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/sun_zpsplydv9bp.jpg.html)
uvausan
2nd September 2015, 08:08 AM
திரையில் பக்தி
இறைவன் ஒருவனே - நாம் தான் அவனுக்கு பல ரூபங்கள் தருகிறோம் - பல பெயர்களினால் அழைக்கிறோம் - அவனும் கருணை கூர்ந்து , நாம் எந்த பெயரை வைத்துக்கூப்பிட்டாலும் நம்மிடம் ஓடோடி வருகிறான் .எந்த ரூபமும் , மற்ற ஒன்றைக்காட்டிலும் உயர்ந்ததோ , தாழ்ந்ததோ அல்ல . எல்லா ரூபங்களும் சொல்லும் பொதுவான கருத்து ஒன்றுதான் - அன்புடன் இருங்கள் , அன்பைக்காட்டுங்கள் - அஹிம்சையால் என்னை நீங்கள் அடைய முடியாது என்பதே ! - இந்த பாடல் மேல் சொன்ன கருத்துக்களுக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு .
https://www.youtube.com/watch?v=FUAz0pWVwXQ
uvausan
2nd September 2015, 08:09 AM
திரையில் பக்தி : ( நிறைவு பகுதி )
“இதுவும் கடந்து போகும்”
..............................................
ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்.
ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.
தொடர்ந்து புத்தரை நோக்கி,
“புத்தரே, நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்.
ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது.
எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி
மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும்.
நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.
உங்களைக் குருவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றது அக்குரல்.
மௌனமாக சிரித்த புத்தர்,
“இதுவும் கடந்து போகும்” இதுதான் அந்த மந்திரம் என்றார்.,
“இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாக
மூன்று முறை சொன்னார்.
அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது.
நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.
“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
இம் மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது.
இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்”
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார்.
இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.
அடுத்து இருந்த அழகான பெண்,
“என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது,
“இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..
ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது,
“இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சோர்ந்து விட மாட்டீர்கள்.
தாய் , தந்தையர்களை என்றுமே கோபிக்காதீர்கள் - உங்கள் முன்னேற்றத்துக்கும் , நீங்கள் இன்று நல்ல நிலைமையில் இருப்பதற்கும் அவர்கள் தான் மூலக்காரணம் . அவர்கள் ஆசியின்றி நீங்கள் துரும்பைக்கொட்ட உங்கள் பக்கம் சேர்க்க முடியாது . இதுவும் கடந்து போகும் " என்பதால் இருக்கும் பொது உங்கள் மனதில் வையுங்கள் - முதியோர் இல்லம் வேண்டாம் .
மனைவியை என்றும் ஆத்மார்த்தமாக பாராட்டுங்கள் - அவள் தான் உங்கள் வெற்றியின் ஆணிவேர் . சக்தி இல்லாமல் சிவமே இல்லாத போது , நாம் எந்த மூலை ?? "இதுவும் கடந்து போகும் " - தாமதிக்காதீர்கள் இன்னொருவரை மனமார பாராட்ட !!
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்வில்
வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.
அவர்கள் இருக்கும்போது போது கொளரவிப்பீர்கள்.
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்.
எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.
“இதுவும் கடந்து போகும்” என்பதை
உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும்.
தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள்,
சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் தினமும்
இதை மனதில் சொல்லிக்கொண்டே இருங்கள்.
ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியே.,
===============
https://www.youtube.com/watch?v=kyMAzrkDOe8
https://www.youtube.com/watch?v=GMi3TMNImKE
uvausan
2nd September 2015, 08:19 AM
தினமும் செய்ய வேண்டியவை
1)சோகத்தை >>> Delete செய்யுங்க
2)சந்தோஷத்தை >>> Save செய்யுங்க
3)சொந்தங்களை >>> Recharge செய்யுங்க
4)நட்புகளை >>> Down load செய்யுங்க
5)எதிரிகளை >>>Erase செய்யுங்க
6) உண்மையை >>>Broad cast செய்யுங்க
7)துக்கத்தை >>>Switch off செய்யுங்க
8)வேதனையை >>>Not reachable செய்யுங்க
9)பாசத்தை >>> In coming செய்யுங்க
10)வெறுப்பை >>>Out going செய்யுங்க
11) சிரிப்பை >>>In box செய்யுங்க
12)அழுகையை >>> Out box செய்யுங்க
13)கோபத்தை >>>Hold செய்யுங்க
14) இன்முகத்தை >>>Send செய்யுங்க
15) உதவியை >>>Ok செய்யுங்க
16) இதயத்தை >>> Vibrate செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day everyday
https://www.youtube.com/watch?v=0kGMCSvuQx8
uvausan
2nd September 2015, 08:22 AM
எல்லோருக்கும் இனிய வணக்கங்கள் . இந்த மதுரகானத்திரியின் மூலம் என் நீண்ட நாள் ஆசை ஒன்றை நிறைவேற்றிக்கொண்டேன் . ஒரு பெரிய வட்டத்தை பூர்த்தி செய்துவிட்ட மகிழ்ச்சி . என்னைப்பொருத்த வரையில் தெய்வம் என்று ஒன்று தனியாக எங்குமே இல்லை. கீழே இருக்கும் நபர்களை multiply பண்ணினால் அந்த கூட்டு தொகையின் பெயர் தான் தெய்வம் .
(பெற்றவர்கள் )( மனைவி)( நண்பர்கள்)( குரு) = தெய்வம் . ஒரு வகுப்பில் கணித ஆசிரியர் மாணவர்களை ஒரு கேள்வி கேட்டார் .
What is the sum total of
(x-a) * (x-b) * (x-c ) ----- upto ( x-z) ??
யாருமே பதில் சொல்ல முடியாமல் தவித்தனர் . ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து , "சார் , விடை பூஜ்யம் " என்றான் . ஆசிரியருக்கு மிகவும் ஆச்சிரியம் , தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் " எப்படி பூஜ்யம்?" என்றாய் ?
அவன் உடனே சார் , x-a ; x-b என்று சொல்லிக்கொண்டு வரும் போது
( x-x) என்று வரும் - அது ஜீரோ என்பதால் எல்லாமே ஜீரோ வாகி விடுகிறது என்றான் . இந்த உதாரணத்தையே இங்கும் உபயோகிக்கலாம் . பெற்றோர் , மனைவி , நண்பர்கள் , குரு என்ற இந்த வரிசையில் ஒருவரை நாம் மதிக்காமல் விட்டாலும் - பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருப்பவனை பார்க்கவே முடியாது .
என் பதிவுகளை படித்து மனமுவந்து பாராட்டிய அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி . பல பாடல்கள் விட்டுப்போய் இருக்கலாம் - ஆனால் சொல்ல வந்த கருத்துக்களில் நான் குறை வைக்க வில்லை .
இங்கு இருக்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட அந்த இறைவனை மனமுருகி வேண்டிக்கொள்கிறேன் .
https://www.youtube.com/watch?v=CMfbEd5aggI
https://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw
https://www.youtube.com/watch?v=UlocUamrLqQ
uvausan
2nd September 2015, 08:35 AM
சிலை விஷயத்தில் நாமும் சிலையாகி நிற்கிறோம் - மெரினாவை விதவையாக்குவதில் எவ்வளவு பேர்களுக்கு மகிழ்ச்சி --- நன்றி என்று எழுதிய வார்த்தைகளில் உள்ள மை காய்வதற்குள் , நெஞ்சில் இரத்தம் என்னும் மையை கசிய செய்து விட்டார்கள் . உறங்குபவர்களுக்கு அங்கு இடம் உண்டாம் - தமிழை , தேச பக்தியை , இந்த தேசத்தை தலை நிமிர்ந்து நிக்க வைத்தவனை , அங்கே தொடர்ந்து நிக்க வைக்கக்கூடாதாம் ---- குடி போதையில் செல்லும் கார்கள் அங்கே , அந்த சிலையினால் , நிமிர்ந்து நிற்கும் அந்த வெண்கல சிலையினால் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளுமாம் -- அதனால் ஒழுங்காக ஒட்டிச்செல் , உனக்காக உன் குடும்பம் வீட்டில் விழி மேல் வழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று நிமிர்ந்து சொல்லும் சிலை அங்கே இருப்பதில் நியாயம் இல்லையாம் - முதுகு எலும்பு இல்லாத மக்கள் , நடிகர்கள் , குனிந்து , குனிந்தே , தமிழனின் மானத்தை புதைத்தவர்கள் நடுவே இந்த ஒரு சிலையாவது நிமிர்ந்து நிக்கட்டும் ......... இதுவும் கடந்து போகட்டும் -----
RAGHAVENDRA
2nd September 2015, 08:49 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/statueverse2915_zpsiji5t3t1.jpg
rajeshkrv
2nd September 2015, 09:58 AM
திரையில் பக்தி
இந்த படத்தில் எந்த பாடலை சொல்வது
எல்லாமே விட்டல மகிமைதான்.. அருமை அருமை.
நான் சிறு வயதில் பார்த்து ரசித்த படங்களில் இதுவும் ஒன்று. (சாந்தா சக்குபாய், சக்ரதாரி)
இதோ நாகய்யா புஷ்பவல்லி, ஜெமினி நடிப்பில் அற்புத படம் (பக்த கோர கும்பர்)
https://www.youtube.com/watch?v=thkAc0mbNfM
vasudevan31355
2nd September 2015, 10:52 AM
தங்கப் பெட்டியுடன் ஹோட்டலில் ஸ்ரீகாந்த். வெற்றுடம்பு மனிதர்களுக்கு நடுவே ஆடும் பாவை ஜெயகுமாரி. கழுகு போல கண்காணிக்க வரும் இளமை விஜயகுமார். ஆர்ப்பாட்ட இசை. திகிலடயைச் செய்யும் ஆண் குரல்கள்.
'நீயோ தங்கமுள்ள பெட்டி
நானோ இன்ப வெல்லக் கட்டி'
என்று ஸ்ரீகாந்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஜெயகுமாரி. கேபரெட் பாடல்களுக்கென்றே அவதாரம் எடுத்த ராட்சஸி குரல்.
'அன்னம் இங்கே ஆடுகின்றது.
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது
என்னை யாரும் தொட்டதில்லை
கன்னம் காயப்பட்டதில்லை'
பாடல் கலக்குகிறது கோரஸின் துணையோடு. பாடலின் இறுதியில் ஈஸ்வரியின் 'தா தரதுரு தரதுரு தரரா' க்களைக் கேட்கத் தவறாதீர்கள்.
'மாணிக்கத் தொட்டில்' படத்தில் இதுவரை அதிகம் நீங்கள் கேட்டறியாப் பாடல்.
https://youtu.be/H1spMbPvdNA
vasudevan31355
2nd September 2015, 11:38 AM
ஒரு ஜோர் பாடல். நாயகன் ஓ.கே. ஆனால் நாயகி உவ்வே.... இடிக்கிறது. பாடகர் திலகம் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் 'ஜீவனாம்சம்' திரைப்படத்தில்.இந்த குமாரி செய்யும் அக்கிரமங்களை நினைத்தால் மனம் கொதிக்கிறது. எப்படி இப்படியெல்லாம்? சே! பாடலை பார்க்கும் ஆசையே விட்டுப் போகிறது.
https://youtu.be/9G2vXxxt-9Y
vasudevan31355
2nd September 2015, 12:27 PM
இன்னொரு அற்புதமான பாடல். அதே ஜெய்தான். டி.எம்.எஸ் கலக்கி எடுத்து விடுவார். சுசீலா அம்மாவும் பிய்த்து உதறி விடுவார்கள். ஜெய், முகமூடி அணிந்து பாரதி, சோ, விஜயஸ்ரீ, குமாரி ராதா அனைவரும் கலந்து கொள்ளும் பாடல். பாரதி, விஜயஸ்ரீ, ராதா எல்லோருக்குமே சுசீலா வாய்ஸ்தான். அதே போல ஜெய், சோ இருவருக்குமே டி.எம்.எஸ் பாடுவார். பர்த் டே கப்புக்குள் நிற்கும் பர்த் டே கேர்ள் விஜயஸ்ரீ. க்ரூப் டான்சர்ஸ் மூவ்ஸ் அருமை. குறிப்பாக பெண் டான்சர்ஸ்.
இசை சாம்ராஜ்யமே நடக்குமிந்தப் பாட்டில். டிரம்பெட், சாக்ஸ், கிடார், பியானோ என்று சகல இசைக்கருவிகளுக் கலந்து கட்டி விளையாடும்.
எனக்கு அப்போதிலிருந்து மிகவும் பிடித்த பாடல் இது.
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
நினைத்தால் மணக்கும்
கிடைத்தால் இனிக்கும்
தங்க நிறம் வண்டாடும் பூமுகம்
மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
முல்லை இனம் என்னென்ன வண்ணங்களோ
தங்க நிறம் வண்டாடும் பூமுகம்
மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
முல்லை இனம் என்னென்ன வண்ணங்களோ
(நினைத்தால்)
முத்தங்கள் சிந்தாதது
முந்தானை பின்னாதது
கன்னங்கள் பொன்னானது
கையோடு சேராதது
முத்தங்கள் சிந்தாதது
முந்தானை பின்னாதது
கன்னங்கள் பொன்னானது
கையோடு சேராதது
மானோ மீனோ மாங்கனி தானோ
வாழைப் பூவில் ஊறிய தேனோ
மானோ மீனோ மாங்கனி தானோ
வாழைப் பூவில் ஊறிய தேனோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
தித்திக்கும் செம்மாதுளை
சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது
அச்சாரம் கொள்ளாதது
தித்திக்கும் செம்மாதுளை
சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது
அச்சாரம் கொள்ளாதது
வேலோ வில்லோ விழியொரு பாவம்
மேலும் மேலும் விளையுது ராகம் (பாரதி அட்டகாசம் பண்ணுவார். கோரஸ் அருமை)
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
பாலூறும் பெண்மயிலே பல்லாக்கு செய்தானம்மா
ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
பாலூறும் பெண்மயிலே பல்லாக்கு செய்தானம்மா
நானோ நீயோ மாப்பிள்ளை யாரோ
யாரோ யாரோ யார் அறிவாரோ
நானோ நீயோ மாப்பிள்ளை யாரோ
யாரோ யாரோ யார் அறிவாரோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
https://youtu.be/NbSzzahJ4tc
Richardsof
2nd September 2015, 01:12 PM
anbu vazhi
https://youtu.be/VPdWZyuJvRM
Richardsof
2nd September 2015, 01:13 PM
https://youtu.be/w1tnYCgOqIs
Richardsof
2nd September 2015, 01:14 PM
https://youtu.be/ukKJcqTRK8c
madhu
2nd September 2015, 01:47 PM
வாசு ஜி..
எனக்கும் "மாணிக்கப் பதுமைக்கு" பாட்டு மட்டும்தான் தெரியும். நீதிதேவன் படம் பற்றி எதுவுமே நினைவில் இல்லை.. ஆனால்... இன்னொரு பாட்டு கேட்க நல்லா இருக்கும்.. அதை யோசிச்சு சொல்றேன். ...
ஏ.வி.எம்.ராஜன், காஞ்சனா நடித்து "நியாயம் கேட்கிறேன்" என்று ஒரு படம் வந்தது. அதில் டி.எம்.எஸ் பாடும் "வேர்வைத்துளிகளே பேசுங்கள்" மற்றும் "கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை" என்ற இரு அழகான பாடல்கள் நினைவில் இருக்கின்றன. அதிலேயும் ஒரு டூயட் பாடல் கேட்ட நினைவு...
ராகவ்ஜி, வாசுஜி... மற்ற நண்பர்கள் யாருக்கேனும் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க..
vasudevan31355
2nd September 2015, 10:47 PM
மதுண்ணா!
'நீதிதேவன்' படத்தில் சீர்காழி ஈஸ்வரி இணைந்து பாடும் பாடல் ஒன்று உண்டு.
'கோடையிலே மழை பொழிஞ்சி
ஓடையிலே நீர் நெறஞ்சி
காடு செழிச்சுதுன்னு கொட்டு மேளம்
அய்யா... கனவு பலிச்சிதுன்னு கொட்டு மேளம்'
இந்தப் பாட்டை சொல்றீங்களா? அல்லது வேறயா?
vasudevan31355
3rd September 2015, 09:29 AM
மதுண்ணா!
ஒரு டவுட். 'நியாயம் கேட்கிறேன்' என்று ஆனந்தபாபு நடித்து ஒரு படம் வெளிவந்தது. நன்றாகத் தெரியும். அப்படியே விஜயலலிதா போன்ற முக அமைப்பு கொண்ட தேவிபாலா என்பவர்தான் நாயகி.
ஏ..வி.எம்.ராஜன் நாயகனாக நடித்த படம் 'நியாயம் கேட்கிறோம்' என்று ஞாபகம். 1973-ல் வந்த படம் என்று நினைவு.
நீங்கள் சொன்னது போல்
கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி
அங்கு சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்
புரட்சியைத் தந்ததும் சிறைச்சசாலை
பல புத்தகம் பிறந்ததும் சிறைச்சாலை
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர
இறைவன் படைத்ததும் சிறைச்சசாலை
என்று வரிகள் கொஞ்சம் நினைவுக்கு வருகின்றன. சரியா தவறா என்று தெரியவில்லை. தேடிப் பிடித்து விடுவோம்.
RAGHAVENDRA
3rd September 2015, 09:36 AM
வாசு சார்
மது சொல்வது போல் ஏவிஎம் ராஜன் நடித்த படம் நியாயம் கேட்கிறேன்.
ஆனந்த் பாபு நடித்த படம் தான் நியாயம் கேட்கிறோம்.
நியாயம் கேட்கிறேன் படத்தில் மாமா இசையில் ஒரு சூப்பர் டூயட் பாடல் உள்ளது. பல்லவி வரிகள் நினைவுக்கு வரவில்லை.
நினைவு படுத்திப்பார்க்கிறேன்.
rajeshkrv
3rd September 2015, 09:44 AM
வாசு சார்
மது சொல்வது போல் ஏவிஎம் ராஜன் நடித்த படம் நியாயம் கேட்கிறேன்.
ஆனந்த் பாபு நடித்த படம் தான் நியாயம் கேட்கிறோம்.
நியாயம் கேட்கிறேன் படத்தில் மாமா இசையில் ஒரு சூப்பர் டூயட் பாடல் உள்ளது. பல்லவி வரிகள் நினைவுக்கு வரவில்லை.
நினைவு படுத்திப்பார்க்கிறேன்.
nyayam ketkirom thaane old movie .. nyayam ketkiren is Anand babu
i remember madhu anna or some one talking about Kannan pirandadum siraichalai & Vervai thuligale
vasudevan31355
3rd September 2015, 10:05 AM
http://www.photofast.ca/files/products/1806.jpg
vasudevan31355
3rd September 2015, 10:06 AM
ஜி!
வாங்கோ! வாங்கோ! வணக்கம். நலமா?
vasudevan31355
3rd September 2015, 10:24 AM
ஆனந்த் பாபு நடித்த 'நியாயம் கேட்கிறேன்' படத்தின் டைட்டில்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/Untitledn.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/Untitledn.jpg.html)
chinnakkannan
3rd September 2015, 10:27 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
திரையில் பக்தி வெகு அழகாக முடித்த ரவிக்கு ஒரு ஓ..
*
ம்ம் பாட்ஸ் லாம் கேக்கணும்..கேக்காம இருக்கயே இது நியாயமான்னு கேக்கப் படாத் :)
*
நேற்று ஓமான்பற்றி எழுதிய பாக்கள்..
*
Oman - 4
முயலாமை என்றகதை மொட்டவிழ்ந்து இங்கே
சுயமாக ஆமைகள் சூரில் – தயங்காமல்
பற்பல காதங்கள் பாங்காகத் தான்கடந்து
முட்டைகள் இட்டிடு மே..
சிறுகப்பல் போலவே சீர்மை மிகவாய்
பொறுமையாய் ஆமை பொறுப்பாய் – நறுவிசு
நன்றாகக் கொண்டே நகர்ந்தே கடலிலே
மெள்ளமாய்ச் சேர்ந்திடு மே..
(இந்த வருட ஆரம்பத்தில் பெளர்ணமியன்று Sur சென்றது வித்தியாசமான அனுபவம்.. இரவு பதினொன்றரைக்கு மேலே நிலா சிரிக்க கீழே கடல் மணல் சற்றே வித்தியாசமாய்ப் பரந்து விரிந்திருக்க விரைவாக நடக்கலாம் என்று பார்த்தால்…ம்ஹூஹூம் முடியவில்ல..
ஏனாம்.. ஏனென்றால் ஒரு அடி வைத்தால் அடுத்த அடி கால் தொபுக்கடீரென்று உள்ளே போனது..ஏனெனில் அந்தக் கடற்கரையில் அந்த சீஸனின் போது எங்கிருந்தோ வரும் கடலாமைகள் நல்ல இடமாய்ப் பார்த்து முட்டை போடுவதற்கு கிடுகிடு என்று பள்ளம் தோண்டி த் தோண்டிப் பார்க்குமாம்..சரியில்லை இது முட்டையிட வசதிப்படாது என நினைத்தால் மறுபடி மணல் போட்டு மூடிவிடுமாம்..அந்த மணல் தொளதொள என இருப்பதால் கால்கள் தொபுக்..என உள்ளே போகும்..
முன்னால் நிலாவெளிச்சத்தில் கைட் ஒல்லியாய் ப் போக பதினைந்து பேர் கொண்ட குழுவாகிய நாங்கள் மெல்ல மெல்ல மெல்ல பார்த்து நடக்க கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் கடந்ததும்..கைட் எதிர்பாராமல் உறவினரைப் பார்த்த காதலி மிரண்டு காதலனிடம் சொல்வது போல உதட்டில் கைவைத்து ஷ் என்று சொல்லி ஓரிடத்தில் காட்ட.. ஒரு பெரிய ஆமை அந்த நிலவொளியில் மூன்பாத் எடுத்துக் கொண்டிருந்தது..
இல்லை இல்லை..மெல்ல நகர்ந்தது..
நாங்கள் மூச்சு மெல்ல மெல்ல விட்டு ஆர்வமாய்ப் பார்க்க அது மெள்ள நகர..கடற்கரை மணலில் அது இருந்த இடம் ஒரு செவ்வகப் பள்ளமாய் ஆக..கொஞ்சம் கொஞ்சமாய் கடல் நோக்கி நகர.. பீரங்கி வண்டிகளில் இரண்டு ட்ராக் வரும் – இது ஒற்றை ட்ராக்காட்டமாக கோடுகிழித்து மெல்ல மெல்ல மெல்ல கடலை நோக்கி நகர்ந்து.. கடலை அடைந்தே விட்ட கணத்தில்…
என்னாச்சுன்னா அம்புட்டு தான்..சாக்லேட் தர்றேன் வா என்றவுடன் தாவுமே குழந்தை, தமன்னாவைப் பார்த்தவுடன் குதிக்குமே மனசு.. அதைப்போலே ஒரே தாவல் தான்..பின் கடலலைகள் அதைத்தாலாட்டியதோ அல்லது அது தான் கொஞ்சியதோ தெரியவில்லை..அப்படியே நீந்தி நீந்தி மறைந்தும் விட்டது..
கைட் அந்த ஆமைக்கு 45 வயதிருக்கும் எனச் சொன்னான்
முட்டைகள் பார்க்க முடியவில்லை.. வேறு இருஆமைகள் தொலைவிலிருந்து பார்த்தோம் (அதுகளுக்கு இருபத்தைந்து வயதாம்..ம்ம் கிட்டப் போகவேண்டாம் எனச் சொல்லியதால் போகவில்லை)
பின் திரும்பினோம் வேகமாய் ஆமை நினைவுகளைச் சுமந்து..(தூக்கம் வந்ததும் இன்னொருகாரணம்..)
**
https://youtu.be/1WCxSHN4aUE
வெகு அழகான பாட்டு..வெகு அழகான நடை..
vasudevan31355
3rd September 2015, 10:31 AM
//வெகு அழகான நடை//
சின்னா! உங்கள் நடையைப் போலவே.:)
chinnakkannan
3rd September 2015, 12:10 PM
//சின்னா! உங்கள் நடையைப் போலவே.// Thank you.. naan chinnak kutti yaanai.. avar Imayam.. irunthaalum thanks :)
RAGHAVENDRA
3rd September 2015, 02:21 PM
வாசு சார்
ம்...ம்... உங்களை நெருங்க முடியுமா... சபையோர்களே நியாயம் கேட்கிறேன்... இது சரியா.. இப்படியா வாசு சார் போட்டுத் தாக்குவது...
எனிவே அந்த ஏவிஎம் ராஜன் படம் டைட்டில் றேனோ றோமோ .... சிவிஆர் சார் இயக்கியது.. கேவிஎம் இசை அது மட்டும் கண்டிப்பாகத் தெரியும்..
sss
3rd September 2015, 02:27 PM
மதுண்ணா!
ஒரு டவுட். 'நியாயம் கேட்கிறேன்' என்று ஆனந்தபாபு நடித்து ஒரு படம் வெளிவந்தது. நன்றாகத் தெரியும். அப்படியே விஜயலலிதா போன்ற முக அமைப்பு கொண்ட தேவிபாலா என்பவர்தான் நாயகி.
ஏ..வி.எம்.ராஜன் நாயகனாக நடித்த படம் 'நியாயம் கேட்கிறோம்' என்று ஞாபகம். 1973-ல் வந்த படம் என்று நினைவு.
நீங்கள் சொன்னது போல்
கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி
அங்கு சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்
புரட்சியைத் தந்ததும் சிறைச்சசாலை
பல புத்தகம் பிறந்ததும் சிறைச்சாலை
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர
இறைவன் படைத்ததும் சிறைச்சசாலை
என்று வரிகள் கொஞ்சம் நினைவுக்கு வருகின்றன. சரியா தவறா என்று தெரியவில்லை. தேடிப் பிடித்து விடுவோம்.
வாசு அண்ணா அவர்களே
http://www.mediafire.com/listen/434j4y2sz1ipjks/NIYAAYAM_KEYTKKIROM_-_Kannnan_Piranthathum_SSKRSDECK19B3TMS.mp3
என்னிடம் உள்ள பாடல் இதோ உங்களுக்கு ... உபயம் நமது தூத்துக்குடி வள்ளல் பேராசிரியர் திரு கந்தசாமி அவர்கள்
இது தவிர வியர்வை துளிகளே (TMS) மற்றும் கல்யாணத்தை (TMS & PS ) பாடலும் உள்ளன..வேண்டுமா ?
நன்றி
சுந்தரபாண்டியன்
uvausan
3rd September 2015, 02:36 PM
மதிய வணக்கம்
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Picture1_zpswmyeqblf.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Picture1_zpswmyeqblf.jpg.html)
vasudevan31355
3rd September 2015, 02:41 PM
வாசு அண்ணா அவர்களே
http://www.mediafire.com/listen/434j4y2sz1ipjks/NIYAAYAM_KEYTKKIROM_-_Kannnan_Piranthathum_SSKRSDECK19B3TMS.mp3
என்னிடம் உள்ள பாடல் இதோ உங்களுக்கு ... உபயம் நமது தூத்துக்குடி வள்ளல் பேராசிரியர் திரு கந்தசாமி அவர்கள்
இது தவிர வியர்வை துளிகளே (TMS) மற்றும் கல்யாணத்தை (TMS & PS ) பாடலும் உள்ளன..வேண்டுமா ?
நன்றி
சுந்தரபாண்டியன்
நன்றிகள் பல சுந்தரபாண்டியன் சார். கண்டிப்பாக அனைத்துப் பாடல்களையும் தாருங்கள். பொக்கிஷமாக போற்றி வைத்துக் கொள்கிறோம். இதைவிட ஆனந்தம் என்ன இருக்கிறது?
vasudevan31355
3rd September 2015, 02:43 PM
அன்பு சுந்தரபாண்டியன் சார்,
பேராசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மது அண்ணாவும், நம் ராகவேந்திரன் சாரும் மிக்க சந்தோஷம் அடைவார்கள்.
vasudevan31355
3rd September 2015, 02:44 PM
மதிய வணக்கம் ரவி சார்.
uvausan
3rd September 2015, 02:51 PM
நகைச்சுவை உணர்வு ஒரு வரம்!
ஒரு புதிய பதிவு . புதிய கண்ணோட்டத்தில் . இதுவும் ஒரு நெடும் தொடர் அல்ல . சற்று மாறுப்பட்ட கருத்துக்கள் . இப்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் , " இதுவும் கடந்து போகும் " என்று நாம் சொல்லிக்கொண்டாலும் , மனதில் ஆழமான வலி இருப்பது உண்மைதான் . சற்று சூழ்நிலையை மறக்க இந்த தலைப்பை எடுத்துக்கொண்டேன் . "சிரிப்புக்கு " "நகைச்சுவைக்கு " அதிகமாக நாம் முக்கியத்துவம் தருவதில்லை . வாழ்க்கை ஒரு இயந்திரமாகவே ஓடுகிறது . நகைச்சுவை நிறைந்த பதிவுகளை நாம் இங்கு போடாவிட்டாலும் , பேசாவிட்டாலும் , சம்பந்தப்பட்ட பாடல்களை தொகுத்து வழங்க இருக்கிறேன் . ரசிக்கலாமா ??
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/nagaichchuvai2_zpsjnrvojjc.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/nagaichchuvai2_zpsjnrvojjc.jpg.html)
வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலையளிக்கும் நபரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த வாழ்க்கையானது துன்பங்களால் நிறைந்தது.
நாள்தோறும் ஏதேனும் ஒரு சோதனையோ அல்லது கவலையோ ஒவ்வொரு மனிதனுக்குமே ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி உணர்வை அடைய ஒவ்வொருவருமே விரும்புகின்றனர். மகிழ்ச்சியை உடனடியாகவும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக தரக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால், நகைச்சுவை உணர்வு. இந்த நகைச்சுவை உணர்வுள்ள மனிதர் அனைவராலும் விரும்பப்படும் ஒருவர். இவர் தனக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் எப்போதுமே சந்தோஷத்தை தருபவராக இருக்கிறார்.
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/nagaichchuvai4_zpsdraa1kli.png (http://s818.photobucket.com/user/jravikumar/media/nagaichchuvai4_zpsdraa1kli.png.html)
எப்போதும் தன்னை துரதிருஷ்டவாதியாகவே நினைத்துக்கொண்டு, தான் உள்ளிட்ட எல்லோரையும் குறைகூறிக் கொண்டிருக்கும் மனிதர்களை யாரும் விரும்புவதில்லை.
உருளுவது தலையா, தலைப்பாகையா?
19ம் நூற்றாண்டில், ஈரான் நாட்டில் பஹாய் சமயத்தைச் சார்ந்த ஒருவருக்கு பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் அந்நாட்டின் ஷியா அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. சிரச்சேதத்தின் மூலம் அந்த மரண தண்டனையை நிறைவேற்றத் திட்டம். களத்திற்கு கொண்டுசென்று அவரது குனிந்த தலையை கொலையாளி வெட்டுகையில் குறி தவறி அவரின் தலைப்பாகையின் மீது கத்திப் பட்டு அந்த தலைப்பாகை உருண்டு ஓடியது. அந்த சூழ்நிலையிலும் அந்த பஹாய் சிரித்துக்கொண்டே கூறியதாவது, "உருண்டு ஓடுவது எனது தலையா அல்லது தலைப்பாகையா?" என்பதுதான். தனது உயிர்போகும் தருவாயில்கூட, தனது நகைச்சுவை உணர்வின் மூலம் அந்த இடத்தில் கலகலப்பைக் கொண்டு வந்தார். இதுபோன்ற ஒரு மனிதர் அநியாயமாக இறக்கிறாரே என்று அங்கிருந்த காவலர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் வருந்தியிருக்கக்கூடும். நகைச்சுவை உணர்வானது ஒரு மனிதனை எந்த சூழலிலும் சந்தோஷமாக வைக்கும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் புலனாகிறது.
முகலாய பேரரசர் அக்பர் கூட நகைச்சுவை உணர்வுகொண்ட பீர்பாலை தனது அமைச்சர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார். மிகப்பெரிய பேரரசை பலவித நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆண்ட அக்பருக்கு, பீர்பால் போன்றவர்களின் நகைச்சுவை உணர்வு சந்தோஷத்தையும், நிம்மதியையும் அளித்தது.
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/nagaichchuvai3-1024x680_zpsjak8hny3.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/nagaichchuvai3-1024x680_zpsjak8hny3.jpg.html)
வித்தியாசம் அறியுங்கள்
நகைச்சுவை உணர்வு என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் இருப்பது முக்கியம். பிறரை கேலியும், கிண்டலும் செய்வது(பல திரைப்படங்களில் வருவதுபோல்) நகைச்சுவையல்ல. அதெல்லாம் திரைப்படங்களுக்குத்தான் ஒத்துவரும். நிஜ வாழ்வில் நகைச்சுவை என்பது நமது எதிரியைக்கூட நண்பராக மாற்றுவதாய் இருக்க வேண்டும். பிறரை ஏளனம் செய்வதற்கும், நகைச்சுவை உணர்வுக்கும் சமயத்தில் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக இருப்பதுபோல் தோன்றும். ஆனாலும் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். இதை மட்டும் நீங்கள் அறிந்துவிட்டால், மிகவும் வெற்றிகரமான மனிதராக நீங்கள் இருப்பீர்கள்.
நகைச்சுவை உணர்வில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், நமது குறைகளின் மீது நாமே சிரித்துக் கொள்வதாகும். நமது குறைகளை உணர்ந்து நாமே சிரித்துக் கொள்வதன் மூலம் அது நாளடைவில் திருத்தப்படும். இதன்மூலம் மற்றவர்கள் அதைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்கலாம்.
ஒருவேளையில் ஈடுபட்டிருக்கும்போது சீரியசாக இருக்க வேண்டும் என்று பலரும் பொதுவாக அறிவுரை சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, பிறரிடம்கூட எதையும் பேசாமல் இருந்து, நமது வேலையைப் பற்றி மட்டுமே பேசுவது என்று அர்த்தமல்ல. அப்படியெனில், அதுபோன்ற ஆலோசனைகளை உதறித் தள்ளவும். உலகின் பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்.
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/nagaichchuvai1_zpsvqzpfwnw.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/nagaichchuvai1_zpsvqzpfwnw.jpg.html)
சில முக்கிய நன்மைகள்
* நல்ல நகைச்சுவை உணர்வானது, தகவல்தொடர்பில் உள்ள தடைகளைத் தகர்த்து, நீங்கள் ஒரு அணுகக்கூடிய நபர்தான் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறது.
* தப்பெண்ணங்களைத் தடுத்து, நட்புரீதியான சூழலை உருவாக்குகிறது.
* அகந்தையைக் கலைந்து நம்பிக்கையை அதிகரிக்கிறது.
* மற்றவர்களின் உணர்வுகள் புண்படாமல், சிலவகை செய்திகளைத் தெரிவிக்க, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு உதவுகிறது.
* பகைமை மற்றும் தப்பெண்ணம் போன்றவைகளின் கடும் எதிரியாக நகைச்சுவை உணர்வு விளங்குகிறது.
* பிறரின் மீது நேர்மறை எண்ணத்தையும் வழங்குகிறது.
நகைச்சுவை உணர்வு வாழ்வில் இந்தளவிற்கு நன்மைகளை வழங்குகையில், அதை நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது? உண்மையில் அது எளிதான விஷயமில்லைதான். சரியான நேரத்தில் சரியான இடத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது உண்மையிலேயே ஒரு மாபெரும் கலை. இது சிலருக்கு இயல்பிலேயே இருக்கும். பலர் இந்தக் கலையை முயற்சி செய்துதான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு
உங்களின் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை. எப்போதும் தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் போக்கவும் உங்களுக்கே உங்களின் நகைச்சுவை உணர்வு துணைபுரியும். நீங்கள் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க வேண்டியதில்லை. உங்களையும், உம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும் சந்தோஷப்படுத்தினாலே போதும். வாழ்க்கை என்றும் இனிக்கும்.
இது கலியுகம் என்பதை விட இயந்திரயுகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். காரணம் இன்று மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடே இல்லறம் செய்ததின் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப்போனார்கள்.
இடுக்கண் வருங்கால் நகுக (துன்பம் வரும்போது சிரியுங்கள்), வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற பழமொழிகளை எல்லாம் மறந்த இனமாய் தமிழினம் வாழ பழக்கப்பட்டு வருகிறது.
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”
-என பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர்,தனது தொல்காப்பியத்தில் மனிதர்களின் எட்டு வகையான உணர்வுகளை பதிவு செய்ததில், நகை(சிரிப்பு) இதற்கே முதலிடம் வகுத்துள்ளார் என்றால் சிரிப்பின் மகத்துவத்தை நாம் அறிய வேண்டும்.
இன்றைய இயந்திர உலகில் மனிதன் தன் சுயத்தை, மனிதன் தன் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதும் ஓய்வற்ற உழைப்பு,போதிய ஊதியமின்மை,பணத்தேவை,பேராசை போன்ற காரணங்களே மனிதன் உண்மையாக சிரிக்க மறந்ததற்கு காரணம் எனலாம்.
இனி சிரிப்புக்களை சுமந்து வரும் சில பாடல்களை ரசிப்போம்
chinnakkannan
3rd September 2015, 03:09 PM
ரவி...எனக்கு அழுவாச்சியா வருது...உங்களை மாதிரி சப்ஜெக்ட் பிடிச்சு எழுத முடியலையேன்னு.. :)
என்னுடைய நண்பர் ஒருத்தர்..அவரும் என்னைப் போலவே டயட்..ப்ளஸ் ஆ.அ.கா.ஜ எல்லாம் செய்பவர்.. ஸோ
டயட் ப்ரகாரம் ஈவ்னிங்க் அவர் சென்று மூன்று முட்டை ஆம்லெட் சாப்பிடுவது வழக்கம்.. நைட் டின்னர் மோர் தான்..
கா.ஜ நாளில் ஈவ்னிங் எனக்கு ஃபோன்..
கண்ணா
என்னாச்சு
அதாவது வழக்கம் போல ஈவ்னிங்க் போய் எக் ஆர்டர் பண்ணினேனா..அப்புறம் தான் இன்னிக்கு சாப்பிடக்கூடாதுன்னு நினைவு வந்தது..
அப்புறம் என்ன பண்ணினே..
வேறென்ன செய்ய..ஆம்லெட்ல ஆனியன் போடாதேன்னுட்டேன் :)
**
sss
3rd September 2015, 03:16 PM
நன்றிகள் பல சுந்தரபாண்டியன் சார். கண்டிப்பாக அனைத்துப் பாடல்களையும் தாருங்கள். பொக்கிஷமாக போற்றி வைத்துக் கொள்கிறோம். இதைவிட ஆனந்தம் என்ன இருக்கிறது?
http://www.mediafire.com/listen/uz0kmv03agnj04v/Viyarvai_Thuligale_TMS_Niyayam_Ketkurom.mp3
http://www.mediafire.com/listen/iqts94pd1qbobpv/Kalyaanathai_TMS_PS_Niyayam_Ketkurom.mp3
uvausan
3rd September 2015, 03:42 PM
CK - ஒரு பக்கம் 108 காயத்ரி - இன்னொருபக்கம் - ஒரு கருவை வெளிவராமல் உள்ளே தள்ளுவிக்கும் செயல் - உங்களை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை - நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? ( டண்ட டண்ட டையிங் ---- back ground music )
uvausan
3rd September 2015, 03:45 PM
நகைச்சுவை உணர்வு ஒரு வரம்! பதிவு 1
இந்த பாடல் இன்றைய சூழ்நிலைக்கும் எவ்வளவு பொருத்துகிறது பாருங்கள் !!
https://www.youtube.com/watch?v=54qGTIOkuww
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
லாரடி லாரடி லாரடி பாரடி
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்குங் கூட ஓட்டு
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு
நல்ல கணக்கை மாத்து,
கள்ளக் கணக்கை ஏத்து
நல்ல நேரம் பாத்து
நண்பனயே மாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
https://www.youtube.com/watch?v=7cT4XQiwxYE
chinnakkannan
3rd September 2015, 03:59 PM
வயதாக ஆக எண்ணங்களுக்கும் வயதாகின்றது..
ஒரு மாதிரி கொஞ்சம் விட்டேத்தியான மனோபாவம் வருகிறது..
கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
நல்ல இடமா அமையணும்
என நினைத்து மறு நொடி மறந்தும் போகிறது..
ம்ம் என்னவாழ்க்கை இது என சலிப்பும் உண்டாகின்றது
ஆழ்கடலில் குதிந்தங்கே நீச்ச லிட்டு
...அணுஅணுவாய் அங்குமிங்கும் தேடித் தேடி
மீள்வதற்காய் முத்தெடுத்து மேலே வந்து
..மீண்டுந்தான் கடலினிலே மூழ்கி மூழ்கி
வீழ்ந்துநிதம் தேடுவதா பூமி வாழ்க்கை
..விரக்தியினிலே மன்முந்தான் சலிப்பைக் கொள்ள
பாழ்நெஞ்சே கேள்வாழ்க்கை இஃதே மாயை
.. பரமனவன் பதம்நாடு நிஜமும் அதுவே..
என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டியதாகிறது..
இதையே ஒள்வை நாலடியில் சொல்கிறார்..
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
வாழ்க்கையில ஒருஸ்டேஜில் விரும்பிய பொருள் மறு ஸ்டேஜில் அவ்வளவாய் ஆர்வத்தைக் கூட்டுவதில்லை..
கல்லூரி இளைஞனிடம் போய் இந்தாடா இது தான் நீ ஆசைப்பட்டு விளையாடிய பேட்ட்ரி கார் என்றால் ஓ.கேயா சொல்வான்..ம்ஹூம் என்று
தான் சொல்வான்..
எனில் சிறுவயதில் குட்டிக்கார் மீதுகாதல் பின் இளமையில் பெரிய கார், பெரிய கைகாரி மீது காதல்கள்..
அதுவே கல்யாணம் கண்டு காட்சி எல்லாம் கண்டு குடும்பசூழலில் உழன்று வயதானால்..காதலும் கசந்துவிடும்..
பின் என்ன தான் செய்வது..
வாழ்க்கை ஆரம்பத்தில் :அறவேலைகள் பல செய்யவேண்டும். பின் தீய எண்ணம் கொள்ளாமல் நல்லவழியில்
பொருள் ஈட்டவேண்டும்..கண்ணுக்கினிய காதலியை மணந்து அல்லது அம்மா அப்பா சொன்னதனால் கண்ணுக்கினியவளை
மணந்து கருத்து வேறுபாடு கொள்ளாமல் ஜாலியாக இருந்து குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு இருப்பதே இன்பமாகத் தான் இருக்கும்..ஆனால்
வயதனால் இம்மூன்றையும் விட்டு இறைவனை நினைந்தால் பேரின்ப வீடு என்னும் மொட்சம் நமக்குக் கிட்டுமாம்..
ம்ம்
*
சரி இந்த ஜோடிகள் என்ன சொல்றாங்க..
https://youtu.be/KlK5J-LEF1c
uvausan
3rd September 2015, 04:32 PM
நகைச்சுவை உணர்வு ஒரு வரம் ! :-D:):smile2::???:
பதிவு 2
குலுங்க குலுங்க சிரிக்கும் போது எல்லோருமே குழந்தையாகி விடுகிறோம் - கவலைகள் , காற்றில் வால் இல்லாத பட்டம் போல மிதக்கின்றன ...
https://www.youtube.com/watch?v=MWlbSAfCnq0
சிரிப்பில் உண்டாகும் ராகம் - அபூர்வ ராகம் - அனுபவித்தால் தான் இந்த ராகத்தை புரிந்து கொள்ள முடியும்
https://www.youtube.com/watch?v=hkkByqt0qgU
vasudevan31355
3rd September 2015, 06:26 PM
ரவி சார்!
உங்களுடைய புதிய தலைப்பு நான் எப்போதுமே மிக மிக ரசிக்கக் கூடியது. சிரிப்பைப் பற்றிய தங்களது பல்வேறு முன்னோட்டக் கருத்துக்களை ரசித்தேன். பதிவைப் பார்த்தாலே குபீர் சிரிப்பை வரவழைக்கப் போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. சிரிப்பு சம்பந்தமான திரைப்பட பாடல்களையும் இணைத்து தருவதற்கு நன்றிகள். எப்போதும் போல இந்தத் தலைப்பையும் பின்னி எடுத்து விடுவீர்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சிரிப்பாய் சிரிப்பதற்கு பதில் வாழ்க்கையில் கள்ளமில்லாமல் சிரித்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான்.
தெனாலி ராமனுக்கு ராயர் ஒரு விஷயத்தில் மரண தண்டனை கொடுத்தவுடன் மற்றவர் ராமன் மீது இரக்கம் காட்ட ராயரை வேண்ட, அதற்கு கிருஷ்ண தேவராயர் 'சரி! உன் இஷ்டப்படியே உன் இறப்பு இருக்க முடிவு செய்து கொள். நீ எப்படி இறக்க விரும்புகிறாய்? எனக் கேட்க, அதற்கு ராமன் 'அரசே! நான் கிழவனாகி இருக்க விரும்புகிறேன்' என்று போட்டானே ஒரு போடு. புத்திசாலித்தனம் கலந்த மேதையின் அறிவார்ந்த நகைச்சுவை அல்லவா அது! தானும் தப்பித்து மற்றவர்களையும் மகிழ்வித்த அதி புத்திசாலித்தனமான நகைச்சுவை உணர்வு. இது போல நிறைய சங்கதிகள் தங்கள் பதிவில் வரப்போகிறது என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.
vasudevan31355
3rd September 2015, 08:33 PM
வாழ்க்கை என்பது இப்படி யதார்த்தத்தை மீறி இருக்கக் கூடாது. வயது மீறி வரம்பு மீறி உறவுகள் அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதை மிக அழகாக விளக்கும் பாடல். கல்யாணம் என்பது விளையாட்டல்ல. அதில் விபரீத விளையாட்டுக்கள் விளையாடுவது பெரும் தீங்கில் போய் முடியும். அபூர்வ ராகங்கள் அபஸ்வர ராகங்களாகி விட்டால் இப்படித்தான் எல்லோரும் கைகொட்டி சிரிப்பார்கள் இல்லையா ரவி சார்?
'இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று' என்று சொல்லிய இயக்குனர் 'இவருக்கு ஜோடி இவரா?' என்று எல்லோரையும் வாய் பிளக்க வைத்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஷேக் முகம்மது பாடிய பாடல். முகக் கோணல்களில் ஊரார் சிரிசிரியென்று சிரிக்க, வயதொத்தாத ஜோடிகள் வருந்தி ஒடியும் அளவிற்கு கேலிக்கு ஆளான கதை.
https://youtu.be/fQsH_Wcep68
chinnakkannan
3rd September 2015, 08:56 PM
:) :) ஓய் திட்டறீரா பாராட்டறீரா..
நகைச்சுவை உணர்வு ஒரு வரம் எனப் போட்டுவிட்டு சிரிப்பைச் சுமந்து வரும் பாடல்கள் போடும் ரவிக்கு ஒரு ஓ :) அவரது உழைப்பு நம் எல்லோருக்கும் தேவை..
‘’ நல்ல நேரம் பார்த்து
நண்பனையே மாத்து” எதற்காக ச் செவ்வெழுத்துக்கள் எனத் தெரியவில்லை..
*
கை கொட்டிச் சிரிப்பார்கள் நல்ல பாடல் தான்.. உங்கள் உபபதிவுகள் எல்லாம் மிக அருமையாக இருக்கின்றதுவாசுசார்..:)
ரவி சார்!
உங்களுடைய புதிய தலைப்பு நான் எப்போதுமே மிக மிக ரசிக்கக் கூடியது. சிரிப்பைப் பற்றிய தங்களது பல்வேறு முன்னோட்டக் கருத்துக்களை ரசித்தேன். பதிவைப் பார்த்தாலே குபீர் சிரிப்பை வரவழைக்கப் போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. சிரிப்பு சம்பந்தமான திரைப்பட பாடல்களையும் இணைத்து தருவதற்கு நன்றிகள். எப்போதும் போல இந்தத் தலைப்பையும் பின்னி எடுத்து விடுவீர்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சிரிப்பாய் சிரிப்பதற்கு பதில் வாழ்க்கையில் கள்ளமில்லாமல் சிரித்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான்.
தெனாலி ராமனுக்கு ராயர் ஒரு விஷயத்தில் மரண தண்டனை கொடுத்தவுடன் மற்றவர் ராமன் மீது இரக்கம் காட்ட ராயரை வேண்ட, அதற்கு கிருஷ்ண தேவராயர் 'சரி! உன் இஷ்டப்படியே உன் இறப்பு இருக்க முடிவு செய்து கொள். நீ எப்படி இறக்க விரும்புகிறாய்? எனக் கேட்க, அதற்கு ராமன் 'அரசே! நான் கிழவனாகி இருக்க விரும்புகிறேன்' என்று போட்டானே ஒரு போடு. புத்திசாலித்தனம் கலந்த மேதையின் அறிவார்ந்த நகைச்சுவை அல்லவா அது! தானும் தப்பித்து மற்றவர்களையும் மகிழ்வித்த அதி புத்திசாலித்தனமான நகைச்சுவை உணர்வு. இது போல நிறைய சங்கதிகள் தங்கள் பதிவில் வரப்போகிறது என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.
vasudevan31355
3rd September 2015, 08:57 PM
மதுண்ணா!
சுந்தரபாண்டியன் சார் புண்ணியத்தால் பலவருடங்களுக்கு முன் கேட்ட
'கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா
கம்பன் சொன்ன வார்த்தையெல்லாம் நான் சொல்லவா
கண்ணே நான் சொல்லவா'
பாடலை மனதார கேட்டு ரசித்தேன்.
இப்பாடலின் சரணங்கள் இப்போது கேட்டவுடன் நன்றாக நினைவுக்கு வந்து விட்டன. இதில் வேடிக்கை பார்த்தீர்களா? அப்படியே இந்த டியூனை நடிகர் திலகத்தின் 'உத்தமன்' படத்தில் 'நாளை நாளை என்றிருந்தேன்' டூயட்டில் மகாதேவன் யூஸ் பண்ணியிருப்பார்.
'கல்யாணத்தை மனதில் வைத்து' பாடலில்
'குழல் வளர்ந்து கொடிகளைப் போல் பாதம் தழுவுது
குறுகுறுத்த விழியில் வண்டு மோகம் பாடுது'
என்ற சரணங்களை கவனித்தால் 'உத்தமன்' பட 'நாளை நாளை என்றிருந்தேன்' பாடலின்
'பூமியெங்கும் பச்சை சேலை மணமகள் கோலம்
பூத்த பூக்கள் பார்க்கும் பார்வை விழிகளின் ஜாலம்'
சரண டியூனை அப்படியே ஒத்திருக்கும். ம்.:)
vasudevan31355
3rd September 2015, 09:04 PM
சின்னா!
எங்கேயும் அதிகம் கிடைக்காத ரேர் சாங்க்ஸ் எவ்வளவு போடுறோம். கேக்குறீரா?:) அதை விட்டு சண்டை மூட்டி விடப் பாக்குறீரே!
10 விஜயகுமாரி பாட்டைப் போட்டால்தான் நீரெல்லாம் அடங்குவீர்.:)
uvausan
3rd September 2015, 09:16 PM
" கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
நல்ல இடமா அமையணும்" - ck
ck - மிகவும் இந்த வரிகளை ரசித்தேன் - இப்படிப்பட்ட மனப்பக்குவம் , கட்டுப்பாடு - சற்றே என்னை மீண்டும் சிந்திக்க வைத்தன - உண்மையில் ck தான் எழுது இருக்காரா - அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி அதை இந்த தமிழ் திருச்சபையில் வந்து வாசிக்கிறார என்று தான் புரியவில்லை .... என் அடுத்த பதிவின் தலைப்பு " புரிந்த புதிரும் , புரியாத ck வும் "
chinnakkannan
3rd September 2015, 09:26 PM
" கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
நல்ல இடமா அமையணும்" - ck
ck - மிகவும் இந்த வரிகளை ரசித்தேன் - இப்படிப்பட்ட மன பக்குவம் , கட்டுப்பாடு - சற்றே என்னை மீண்டும் சிந்திக்க வைத்தன - உண்மையில் ck தான் எழுது இருக்காரா - அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி அதை இந்த தமிழ் திருச்சபையில் வந்து வாசிக்கிறார என்று தான் புரியவில்லை .... என் அடுத்த பதிவின் தலைப்பு " புரிந்த புதிரும் , புரியாத ck வும் "
ரவிங்காணும்.. மனப்பக்குவம்ங்கறது வேறு.. ஜாலியா இருக்கறதுங்கறது வேறு..தவிர மற்றவர்களிடமிருந்து காப்பி அடித்தால் அதைச் சொல்லும் மனத்திட்பமும் எனக்கு இருக்கிறது என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்..:)
எனக்கு நகைச்சுவை உணர்வுகொஞ்சம் கம்மி தான்.. எப்படித் தெரிஞ்சது தெரியுமா..கடந்த பத்து நிமிஷமாய்ச் சிரிச்சுண்டே இருக்கேங்காணும்.. எதுக்குத்தெரியுமா..ஒரு கல்லூரி மாணவி என நினைக்கிறேன்..ஃபுல் ஹிலாரியஸா அதேசமயத்துல பக்குவமாகவும் எழுதியிருக்காங்க..நீங்களும் சிரிப்பதற்காக..
*
நன்றி மிஸ் விவி.. முக நூல்
*
ப்ரூக்பீல்ட் மாலில் ஒரு படம் பார்க்கப் போனால் ஒரு டிக்கெட் விலை 120 ரூபாய். ஆன்லைன் புக்கிங் செய்தால் இன்னும் கூடுதல் கட்டணம். தியேட்டர் ஏரியாவுக்குள் போகும்போது பையை சோதனையிடுவார்கள். சாப்பாடு எதுவும் கொண்டு போகக் கூடாது.
எப்போதுமே பசியில் இருக்கும் நாங்கள் (வளர்ர புள்ளீங்கல்ல) எப்படியாவது எச்சில் முழுங்கிக் கொண்டு உட்கார்ந்தாலும் பக்கத்து சீட்காரர்கள் மினி மீல்ஸும் ஆளுயர கோக் டம்ளரும் வாங்கிக் கொண்டு வந்து உட்காரும் போது அவர்களுக்கு எங்களால் வயிற்று வலி வந்துவிடக் கூடாதென்னும் ஒரே நல்லெண்ணதோடு food court போனால் கிராஸ்கட் கமலா ஸ்டோர் வாசலில் பத்து ரூபாய்க்கு விற்கும் பாப்கார்னை 80 ரூபாய் என்பான். 20 ரூபாய் பாப்கார்னை 120 ரூபாய் என்பான்.
டிக்கெட் காசுக்கே பர்சை வழித்து சில்லறை பொறுக்கி கொடுத்திருப்போம். மறுபடி காலேஜ் பேக் ஹேண்ட் பேக் என எல்லாவற்றிலும் துழாவி ஒரு 100 200 தேற்றி எல்லாருக்குமாக ஒரே ஒரு பாப்கார்ன் ஒரே ஒரு கோக் (ஸ்ட்ரா எடுக்க மறந்துடாதீங்கடி) வாங்கி வெற்றிக் களிப்போடு தியேட்டருக்கு திரும்புவதற்குள் பாதி படம் ஓடிவிடும். (இருக்கற 100 ரூபாய்க்கு பாப்கார்ன் மட்டுந்தான் வாங்க முடியும்ன்னு தெரிஞ்சாலும் வரிசைல நின்னு ஏய் ஐஸ்க்ரீம் வாங்கலாமா ஏய் காம்போ வாங்கலாமா ஏய் துபாய வாங்கலாமான்னு கொஞ்ச நேரம் கன்பீசன்ல திணறற வரைக்கும் ஆப்பரேட்டர் அன்கிள் படம் போடாமயா இருப்பாரு?)
அதிலும் ஒருத்தி உண்டு. அவள் கையில் பாப்கார்ன் போனால் மொக்கைப் படமாக இருந்தாலும் மெய்மறந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே படத்தில் லயித்துவிடுவாள். அதனால் கடைசியாக தான் அவள் கையில் பாப்கார்ன் கொடுப்போம். மீறி முதலிலேயே அவள் எடுத்துவிட்டால் அவள் அதைத் திருப்பி தரும் வரை ஸ்க்ரீனை பார்க்காமல் அவளைப் பார்த்துக்கொண்டிருப்போம். (இரு தரேன் குறுகுறுன்னு பார்க்காத)
இந்த கேப்பில் 'எங்க இருக்க வீட்டுக்கு எப்ப வருவ அங்கேர்ந்து கரெக்டா பஸ் ஏறிடுவேல்ல' என எல்லாருக்கும் வரிசையாக போன் வேறு. படம் முடித்து வெளியே வரும்போது வெளியே பெருமழை பெய்து ஓய்ந்திருக்கும். "இவளே பஸ்ஸுக்கு காசிருக்குல்ல?இல்லாட்டி இந்தா பத்து ரூபாய்" என ஒருத்தி நீட்டுவாள்.
'தமிழே எனக்கு கொஞ்சம் தான் புரியும் இதுல மலையாள படத்துக்கு வேற இழுத்துட்டு வரீங்களேடி' என புலம்பிக்கொண்டே இந்திக்காரி கிளம்புவாள். நிவின் பாலி வீட்டில் தோட்டக்காரியாகவாவது சேர வேண்டும் என திட்டம் போட்டுக்கொண்டே வீட்டுக்கு கிளம்பி வருவோம்.
இதே ப்ராசஸ் அடுத்த மாதமும் தொடரும்.
#நாங்க_படம்_பாக்க_போற_கதை
uvausan
3rd September 2015, 09:29 PM
வாசு - உங்கள் கண்ணப்ப நாயினார் பதிவுகள் மிகவும் அருமை - உங்களின் தன்னடக்கம் - என்னை புல்லரிக்க வைத்துவிட்டது - எனது குல தெய்வமான குசலாம்பாள் சமேத சரளாநாதேஸ்வரர் அவரை வணங்கி , புள் அரித்த இடங்களில் தடிப்பு வராமல் இருக்க விபூதியை உடலெங்கும் தடவிக்கொண்டேன் . சில கொப்பளங்கள் மறைந்துவிட்டன .. யார் சொன்னது உங்களுக்கு ஆன்மிகம் வராது என்று ?? நீங்கள் எழுதுவதில்லை .. நீங்களும் எழுதினால் , நான் துண்டைக்காணோம் , துணியைக்காணோம் என்று என்றோ ஓடியிருப்பேன் . அருமையான பாடல்கள் . திருவருட்செல்வரில் இந்த வேடத்தை நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டும் - நடிப்பில் உருகி இறைவன் தன் கண்களை தோண்டி ந .தி க்கு கொடுத்திருப்பார் . பக்தி என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் நம் இந்து மதத்திலிருந்து சொல்ல வேண்டுமென்றால் ஒன்று கண்ணப்பர் அடுத்த ஒன்று ஆண்டாள் . மிக்க நன்றி
chinnakkannan
3rd September 2015, 09:29 PM
" கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
நல்ல இடமா அமையணும்" - ck
ck - மிகவும் இந்த வரிகளை ரசித்தேன் - இப்படிப்பட்ட மன பக்குவம் , கட்டுப்பாடு - சற்றே என்னை மீண்டும் சிந்திக்க வைத்தன - உண்மையில் ck தான் எழுது இருக்காரா - அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி அதை இந்த தமிழ் திருச்சபையில் வந்து வாசிக்கிறார என்று தான் புரியவில்லை .... என் அடுத்த பதிவின் தலைப்பு " புரிந்த புதிரும் , புரியாத ck வும் "
எதனால் இந்தக் கமெண்ட் என எனக்குப் புரியவில்லை ரவி.. நான் என்ன தவறாக எழுதுகிறேன்..ஏதேனும் ஜல்லி அடிக்கிறேனா.. போர் அடிக்கிறதா.. சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்கிறேனா..சொன்னால் திருத்திக் கொள்வேன்..
மண்டபத்தில் எழுதி வாங்கி இடுவேன் என்று எப்படி கேவலமாக என்னைச் சிந்திக்கப்போயிற்று ரவி.. ? ..
uvausan
3rd September 2015, 10:03 PM
என்ன ck இது?? , இப்பொழுது தானே நகைச்சுவை பகுதி என்று ஆரம்பித்தேன் - அதற்குள் உங்கள் புரிதலில் தவறு வந்து விட்டதே !!! - நீங்கள் ஜாலியாக எழுதும் நபர் - உங்கள் எழுத்துக்களில் இருந்த ஒரு முதிர்ச்சியைப்பற்றி சொன்னேன் - இது உங்களுடைய பதிவுதானா என்று ...... மற்றபடி நீங்கள் தவறாக எழுதும் நபரும் அல்ல , நானும் மற்றவர்கள் மனம் புண் படும் படி எழுதும் நபரும் அல்ல . இனி இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
rajraj
4th September 2015, 06:57 AM
From Senthamarai(1962)
vaaraNam aayiram soozha valam seidhu........
The video clip begins with margazhi thingaL followed by vaaraNam aayiram soozha....
http://www.youtube.com/watch?v=t-BlQubHy_4
I am taking a break for two weeks to visit my sons ! :)
vasudevan31355
4th September 2015, 08:28 AM
//எனது குல தெய்வமான குசலாம்பாள் சமேத சரளாநாதேஸ்வரர் அவரை வணங்கி , புள் அரித்த இடங்களில் தடிப்பு வராமல் இருக்க விபூதியை உடலெங்கும் தடவிக்கொண்டேன்//
அடாடாடா! அந்தப் புண்ணியத்தல ஷேத்திரம் எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்கோ! போயிட்டு சேவிச்சுட்டு வந்துடறேன்.:) அப்படியே விபூதி பார்சல் கொஞ்சம் அனுப்பி வையுங்களேன். உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.:)
uvausan
4th September 2015, 08:38 AM
CK - காலை வணக்கம் . இன்னும் என் மீது தவறான புரிதல் தொடர்கிறது என்று நினைக்கிறேன் . PM இல் எழுத வேண்டியதை இங்கு பதிவிடுகிறேன் . தருமியின் நடையில் உங்களை சித்தரித்ததின் நோக்கம் உங்களுக்கு இறை அருள் இயற்கையாகவே அமைந்துள்ள வரம் என்பதை சுட்டிக்காட்டவே - அங்கே இறைவன் எழுதி கொடுத்த பாடலைத்தானே தருமி படித்தான் . அதே போல இறைவியின் அருளால் கவிதை நடைக்கு நீங்கள் ஒரு கண்ணனாக இருக்கிண்டீர்கள் . உங்கள் சௌந்தரிய லஹரியின் உரையை மறக்க முடியுமா ? நினைத்துப் பார்த்தாலும் என்னால் அப்படி எழுத முடியாது . கோபம் வந்தால் நமக்கு உள் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் திறன் குறைந்துவிடுகிறது . சொன்ன விளக்கங்கள் இன்னும் உங்களுக்கு நம்பிக்கையத்தரவில்லை என்றால் - என்னுடைய Unconditional Apologies - என்னுடைய வரிகள் உங்களை வெப்பமாகத் தாக்கினதற்காக . எனக்கு நானே ஒரு தண்டனையையும் அளித்துக்கொள்கிறேன் . நீங்களாக ( கோபம் தணிந்து ) அழைத்தால் மட்டுமே என் பதிவுகளை தொடர்வேன் - அதுவரை கட்டாய ஒய்வு - சரியா ?? உங்களிடம் இருந்து இன்று நான் கற்றுக்கொண்ட பாடங்களில் இன்று நான் கற்றுக்கொண்டது கடலளவும் பெரிது - " நகைச்சுவை என்பது ஒரு பால கயிறு போன்றது - கவனாமாக கையாளவேண்டும் .நாம் நகைச்சுவை என்று நினைத்து எழுதுவது பிறருக்கும் அப்படியே அமையும் என்று சொல்ல முடியாது " நன்றாக புரிந்துகொண்ட நண்பர்களுக்கும் இது ஒரு விதிவிலக்கு அல்ல ".
நன்றி , அன்புடன்
vasudevan31355
4th September 2015, 08:41 AM
ரவி சார்,
உங்கள் அளவிற்கு பக்தியைப் பற்றி எனக்கெல்லாம் கொஞ்சமும் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் ஜெயகுமாரி, ஹலம், சரளா, குசலகுமாரி இப்படிப் பட்டவர்கள்தான். பக்கா லோ கிளாஸ்.:) என்ன பண்ணட்டும்? அப்படியே வளர்ந்துட்டேன்.:)
uvausan
4th September 2015, 09:01 AM
வாசு - நீங்களுமா ??? " நகைச்சுவை உணர்வு " என்று தப்பான ஒரு தலைப்பை அலச எடுத்துக்கொண்டது என் குற்றம் என உணர்கிறேன். புரிதல் என்பது அடிக்கடி விளக்கம் கொடுப்பது அல்ல . அதிகமாக உங்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு விட்டேனோ ?? மன்னிக்கவும்
rajeshkrv
4th September 2015, 09:04 AM
ci ka
ravi was trying to tell that usually your writings will be so humourous so is it you who wrote so maturely.he was just teasing you that's all
rajeshkrv
4th September 2015, 09:07 AM
வணக்கம் ஜி
vasudevan31355
4th September 2015, 09:33 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
32
'நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்'
'புன்னகை'
http://padamhosting.me/out.php/i27837_punnagai-10.pnghttp://padamhosting.me/out.php/i27845_punnagai-02.png
அடுத்து பாலா தொடரில் சோலோவோ டூயட்டோ இல்லை.
இது பட்டப்படிப்பு பெற்ற 5 நண்பர்கள் பட்டம் பெற்ற சந்தோஷத்தைக் கொண்டாடிக் குதூகலிக்கும் பாடல். காந்தி சிலைக்குமுன் 'உண்மை வழி நடப்போம்' என்று உறுதி எடுத்து 5 நண்பர்களும் உற்சாகமாக அந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
ஜெமினி, நாகேஷ், முத்துராமன், எம்.ஆர்.ஆர்.வாசு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இவர்கள்தான் அந்த 5 நண்பர்கள்.
அமுதம் பிக்சர்ஸ் 'புன்னகை' படத்திலிருந்து இந்தப் பாடல். திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பாலச்சந்தர்.
காரில் மதராஸை வலம் வந்தபடி, பீச்சில் ஜாலியாய் சுற்றியபடி, ஐவரும் செம கலாட்டா. ஜெமினியைப் பார்த்தால் படத்தில் நடிக்க வந்தவர் போலவே இல்லை. கூலிங் கிளாசெல்லாம் போட்டுக்கொண்டு நிஜமாகவே நண்பர்களுடன் ஊர் சுற்றுவதைப் போலவே அவ்வளவு இயல்பு. மற்ற எல்லோருமே பாடலுக்குத்தான் நடிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் நிஜ நண்பரகளாய் அரட்டை அடித்து என்ஜாய் செய்வது அமர்க்களம்.
ஜெமினி மெயின் என்பதால் அவருக்கு டி.எம்.எஸ்.அவர்களின் கணீர்க் குரல். மனிதர் என்னமாய் உணர்ந்து பாடுகிறார்! முத்துராமனுக்கு தொடரின் நாயகர் பாலாவின் குரல். நாகேஷுக்கு மிகப் பொருத்தமாக சாய்பாபாவின் குரல். கே.எஸ்.கோபாலகிருஷனுக்கு பாடல் இல்லை என்பதால் பின்னணி இல்லை. (கோரஸில் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்.) ஆக ஒவ்வொருத்தருக்கும் குரல் பொருத்த தேர்வு ஆஹா! ஓஹோ!
அதுவும் வாசுவிற்கு வீரமணியின் குரல் நன்றாகவே பொருந்துகிறது. அனுபவித்துப் பாடியிருக்கிறார். வீரமணி பாடிய சினிமாப் பாடல்கள் மிகக் குறைவு.
எதிர்கால இளைஞர்களின் கனவுகளை அதுவும் தனியாக வாசுவின் கனவை, அவருடைய கேரக்டருக்குத் தக்கபடி அவர் எதிர்பார்ப்பை பாடலில் உணர்த்தியிருப்பது சிறப்பு.
எம்.ஆர்.ஆர்.வாசு,
'மழையை வெயிலென்றும் மகனைத் தந்தை
என்றும் சொன்னாலென்ன?
மனது சொன்னபடி கால்கள் போனபடி
போனாலென்ன'?
என்று தன் இஷ்டத்திற்கு வாழ்க்கையை வளைக்க நினைத்து மாறுதல் வேண்டிப் பாடுவதும்,
அதற்கு ஜெமினி 'ஊரோடு ஒத்துப் போவதுதான் வாழக்கை...உன் இஷ்டத்திற்கு எதையும் மாற்றிக் கொள்ள முடியாது' என்று பொருள்பட,
'நீயும் ஊரோடு சேராமல் முடியாது
காலம் உனக்காகத் தானாக நடக்காது'
என்று உபதேசித்துப் பதில் சொல்லிப் பாடுவதும் டாப்.
பாடலின் முடிவில் நண்பர்கள் காரில் வேகமாக வளைவுகளைக் கடக்கும் போது காரின் பிரேக் சப்தம் ஒலிப்பதை பாடலில் காட்டியிருப்பது இன்னொரு புதுமை. அது பாடல் முடிந்தவுடன் நடக்கும் விபத்தை முன் கூட்டியே அறிவிப்பதாகவும் அமைந்து விடுகிறது.
படு கேஷுவலான நடிப்புடன் கூடிய கருத்துக்கள் மிகுந்த களை கட்டும் பாடல். கடல் அலைகளில் வாசுவுடன் ஜெமினி சில ஷாட்களில் அமர்க்களம் பண்ணுவார். குறிப்பாக சாய்பாபா பாடும்
'சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்'
வரிகளில் நாகேஷுடன்.
முத்துராமனையும், கோபாலகிருஷ்ணனையும் தனியே காண்பிக்கும் போது 'நெஞ்சிருக்கும் வரை' ஞாபகத்திற்கு வராமல் போகாது. அந்த நாயகரும் நினைவுக்கு வாராமல் இருக்க மாட்டார்.
http://sim03.in.com/2/1d0c9b3254632f98a81bef186b48bc70_ls_t.jpg
'நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
என்று தொடங்கும் வரிகள்'.
நான்கு அருமையான பாடகர்கள் பாடுவதால் அனைவருக்கும் சம வாய்ப்பு. பாலாவும் தன் பங்கிற்கு மிக அழகாகப் பாடியிருப்பார். ஆனால் 'பாடகர் திலகம்' கம்பீரத்தாலும், பாவத்தாலும் வழக்கம் போல முன்னை இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்.
இசை 'மெல்லிசை மன்னர்'. கோவர்த்தன், ஜோசப் கிருஷ்ணா இருவரும் உதவியாளர்கள். இந்த மாதிரிப் பாடல்களென்றால் விச்சுவிடம் உற்சாகம் பீறிட்டு எழுமே! மனிதர் விளையாடி விடுவார். முதல் சரணத்திற்கு முன் ஒலிக்கும் அந்த சாக்ஸ் இசை பிரமாதம். பாடல் முழுவதுமே உற்சாக இசை கொப்பளிக்கும். புல்லாங்குழல்களின் சின்ன சின்ன பிட்கள் அம்சம். பாங்கோஸ் உருட்டல்களும், ஆர்கன் வித்தைகளும் அமர்க்களம். நண்பர்கள் கடற்கரையில் ஓடி வரும் போது பின்னிப் பெடலெடுக்கும் இசைக்கருவிகளின் ஆதிக்கங்களை உன்னிப்பாகக் கேட்க மறந்து விடாதீர்கள்.
மிக மிக அற்புதமான அனுபவித்துக் கேட்க வேண்டிய முத்தான பாடல். பலவகையிலும் சிறப்புப் பெற்றது.
டி.எம்.எஸ்
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
பாலா
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
கோரஸ்
காலம் உங்களின் கைகளின் மேலே
பாலா
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
சாய்பாபா
ராமன் ஆளட்டும்... சோமன் ஆளட்டும்
ஆண்டாலென்ன?
காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம்
வாழ்ந்தாலென்ன?
பாலா
அந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வதும் குலம் காக்க
டி.எம்.எஸ்
அந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வதும் குலம் காக்க
பாலா
தாமரை கொண்ட தண்ணீர்
டி.எம்.எஸ்
தன்னறிவற்ற உன் வாழ்(வு)
பாலா
நிம்மதி கொள்ள முடியாது
ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ
டி.எம்.எஸ்
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
கோரஸ்
காலம் உங்களின் கைகளின் மேலே
வீரமணி
மழையை வெயிலென்றும் மகனைத் தந்தை
என்றும் சொன்னாலென்ன?
மனது சொன்னபடி கால்கள் போனபடி
போனாலென்ன?
டி.எம்.எஸ்
நீயும் ஊரோடு சேராமல் முடியாது
காலம் உனக்காகத் தனியாக நடக்காது
சாய்பாபா
சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்
ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ
பாலா
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
டி.எம்.எஸ்
மனிதன் பாவங்களை மனிதன் கேட்பதில்லை
ஆனாலென்ன
பொறுத்துப் பார்த்த பின்பு இறைவன்
கேட்பதுண்டு
கேட்டாலென்ன
வீரமணி
எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது
எந்தன் பாவங்கள் தேவனுக்குத் தெரியாது
பாலா
ஆடுவதென்று நீ ஆடு
பாடுவதேன்று நீ பாடு
ஓடுவதென்று நீ ஓடு
ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ
டி.எம்.எஸ்
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
கோரஸ்
காலம் உங்களின் கைகளின் மேலே
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
https://youtu.be/TwiWbFoDyEY
ராகவேந்திரன் சார்,
1978-ல் வெளிவந்த அமிதாப் நடித்து சூப்பர் ஹிட்டான 'Muqaddar Ka Sikandar' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'Rote Hue Aate Hain Sab' பாடலில் வரும் இசையை இந்தப் 'புன்னகை' படப் பாடலில் 'மெல்லிசை மன்னர்' கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்னமேயே அப்படியே தந்து அசத்தியிருப்பார். இந்தப் பாடலில் வரும் பல சங்கதிகளை கல்யாண்ஜி ஆனந்த்ஜி 'Rote Hue Aate Hain Sab' பாடலில் பயன்படுத்திக் கொண்டிருப்பது மிக நன்றாகத் தெரியும்.
JamesFague
4th September 2015, 10:09 AM
From Facebook
படத்தினால் பாடலா. . பாடலினால் படமா ?
இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் மறக்க. முடியாதவை.. மெல்லிசை மன்னரின் அற்புத படைப்பு... சிவாஜி KR.விஜயா ஜோடியின் அருமையான நடிப்பு,அழகிய கலர் படம்....அதுவும் ஊட்டியின் இயற்க்கை காட்சிகள்.. வேறு என்ன வேண்டும். நமக்கு..
http://youtu.be/3V6WCBctu6Q
அங்கே மாலை மயக்கம்
படம் : ஊட்டி வரை உறவு
குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : கண்ண்தாசன்
நடிகர்கள் : சிவாஜி, கே.ஆர்.விஜயா
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்க்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
(அங்கே)
ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
(அங்கே)
கேட்டுக் கொள்வது காதலின் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
ஆஹாஹாஹா..ஆஹாஹாஹா
ஓஹோஹோஹோ.ஹ¥ஹ¥ஹ¥ஹ¤ம்..
(அங்கே)
vasudevan31355
4th September 2015, 10:28 AM
வணக்கம் ராஜேஷ்ஜி!
vasudevan31355
4th September 2015, 10:31 AM
ரவி சார்!
எனக்கு எதுவுமே புரியவில்லை. உங்களைப் போல நானும் மிக நகைச்சுவையாக ஜாலியாக பதில் கூறியுள்ளேன். smiley பார்க்க வில்லையா நீங்கள்? அதற்குள் என்னென்னவோ உரிமை அது இது என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு விட்டீர்களே! நகைச்சுவை என்ற தலைப்பை தந்ததே நீங்கள்தானே! நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் அவசரப்படுகிறீர்களோ?:)சரி! 'புன்னகை' பதிவை புன்னகையுடன் படித்து விட்டீர்களா?:)
rajeshkrv
4th September 2015, 10:39 AM
வணக்கம் ராஜேஷ்ஜி!
vanakkam
nalam thaane
vasudevan31355
4th September 2015, 10:55 AM
நலமே! நலமே! நலமேஜி!
uvausan
4th September 2015, 10:57 AM
நன்றி வாசு - ஆபீஸ்ல் வேலையே ஒடவில்லை - உங்கள் மனதையும் புண்படுத்திவிட்டோமோ என்று - இந்த திரியின் பெரிய மகிமை - இங்கு யாருக்குமே எந்த விதமான Status Consciousness இல்லாததது தான் - பிறகு எங்கிருந்து வருகிறது " பக்கா லோ கிளாஸ் " என்ற வார்த்தைகள் ? உங்களைப்போல ஜன ரஞ்சகமாக எழுத முடியவில்லையே என்று பல தடவைகள் என்னை நானே கோபித்துக் கொண்டிருக்கிறேன் - எல்லாமே தெரிந்துக்கொள்ள வேண்டும் , எழுத வேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும் அந்த அளவிற்கு திறமையை வளர்த்துக்கொள்ள தவறிவிட்டேன் . ஒரு வேளை என் பதிவுகளில் வார்த்தைக்கு வார்த்தை smiley உபயோகித்திருந்தால் நீங்களும் , CK வும் தவாறன கண்ணோட்டத்தில் என் பதிவுகளை படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் . உங்கள் புரிதலுக்கு மீண்டும் நன்றி .
புன்னகை மிகவும் அருமையான படம் - உண்மை எல்லா சமயத்திலும் விலை போகாது என்பதை உணர்த்தும் உன்னத படம் . உண்மையின் எதார்த்தங்களை வலியுறுத்தும் கருத்துக்கள் நிறைந்த இருந்ததால் உண்மையில் விலை போகவில்லை . GG யின் அருமையான நடிப்பு , முடிவும் மிகுந்த சோகம் .. நல்ல படங்கள் ஓடுவதில்லை என்பதை உறுதியாக நிரூபித்த படம் - அருமையான பாலாவின் பாடலை தேர்ந்து எடுத்துள்ளீர்கள் வழக்கம் போல - அருமை . கொஞ்ச நாட்கள் திரியில் இருந்து ஒய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் வாசு - நன்றி மீண்டும்
vasudevan31355
4th September 2015, 11:16 AM
//கொஞ்ச நாட்கள் திரியில் இருந்து ஒய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்//
ரவி சார்
'புன்னகை'க்கு நன்றி!
நீங்கள் எப்போது என்னைப் புண்படுத்தினீர்கள்? நீங்களாகவே ஏதாவது நினைத்துக் கொள்வதா? எல்லாருமே ஜாலியாகத்தான் பதிவுகள் இடுகிறோம்.
நீங்கள் திரியை விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்வதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மாபெரும் குற்றம்.:) நாங்கள் விட்டு விடுவோமா என்ன? நகைச்சுவைப் பதிவுகளை ரசிக்கக் காத்திருக்கும் நேரத்தில் சீரியஸ் பதிவுகள் ஏன்? நோ. நோ. இனிமேல் 'மயிலே' எல்லாம் கிடையாது.:) ஆர்டர்தான். அப்புறம் இந்தக் குற்றத்துக்கெல்லாம் தரும் தண்டனை அநியாயத்துக்கு இருக்கும்.:) ரிலாக்சாக நகைச்சுவைப் பதிவுகளை இட வேண்டும். இதுவே இந்த மன்றத்தின் கட்டளை.:) இன்னும் சில தினங்களில் பாகம் 4 முடிவடையப் போகிறது தெரியுமோ?
madhu
4th September 2015, 11:56 AM
ரவி, வாசு, சிக்கா ஜீஸ்...
அந்த அய்யன் திருவள்ளுவரே உப்பு போட்ட மாதிரி ஊடல் இருந்தால்தான் எல்லாமே ருசிக்கும்னு கடேசில சொல்லிட்டுப் போயிருக்காரு..
நிலவுக்கும் நிழல் உண்டு ( ஆனா.... ) அந்த நிழலுக்கும் ஒளியுண்டு..
எதையும் பார்க்கும் கோணம் வேறுபட வாய்ப்புகள் அதிகம்.....
அட .... துக்கிணியூண்டு விஷயம்.. ஒரு வீடியோவைப் பதிந்து விட்டு... பாட்டு கேட்குது படம் தெரியலை என்று நான் எழுதினேன் ( என் மனசுக்குள் பாட்டை மட்டும் ரசிப்பதால் படத்தை கவனிக்கவில்லை என்று சொல்வதா க நினைப்பு )... ஆனா நம்ம வாசுஜி... படம் நல்லாத்தானே தெரியுது.. பாட்டும் நல்லாவே கேட்குதே என்று பதில் கொடுத்தார்.. அப்புறம்தான் அதுக்கு இப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என்றே புரிந்தது... (கிக்கிக்கீ)
ரவி ஜி... இதுக்காக வருத்தப்படுவதே தப்பு... உரிமையாக சண்டை போட வேண்டியவர் நீங்க. சிக்கா ஒரு சின்னக் குழந்தை. பேரிலேயே தெரியலையா ? அவரை வளர்த்து விட வேண்டிய கடமை நமக்கு இல்லையா ? திடீர்னு லீவு கேட்டா சரிப்படுமா ?
அருமையான பதிவுகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் ( ஆண்டவன் தயவில் இப்போதைக்கு உடல் நிலை ஒத்துழைக்கிறது.. தினமும் படிக்க முடிகிறது ).. இப்படி சொல்லலாமோ ?
https://www.youtube.com/watch?v=Q9c9x4Af_f0
vasudevan31355
4th September 2015, 12:13 PM
ரவி சார்!
பார்த்தீர்களா! மது அண்ணா எவ்வளவு அழகாக 'என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? என்று உங்களை எங்கள் சார்பாகக் கேட்டிருக்கிறார். அவர் உங்கள் பதிவுகளுக்கு பரம ரசிகர். சும்மா சின்ன பிள்ளை மாதிரி கோபிச்சுக்கக் கூடாது. நம் அனைவரின் பிரார்த்தனையும் மது அண்ணா பூரண நலம் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் என்பதே. கொஞ்சம் இயலாத நிலையிலும் கூட அவர் தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாது எவ்வளவு ஆர்வமுடன் மதுரகானங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்! அவர் மனம் இன்புறவாவது நாம் எல்லோரும் திரியில் பங்கு கொண்டே ஆக வேண்டும். ஒற்றுமையே இந்தத் திரியின் வலிமை என்பது எல்லோரும் அறிந்ததே. மது அண்ணா, மற்ற நண்பர்கள் வழி நடத்துதலில் இந்த திரி பல பாகங்கள் காண வேண்டும். இதுவே நம் விருப்பம். நன்றி மது அண்ணா!
vasudevan31355
4th September 2015, 12:14 PM
//அட .... துக்கிணியூண்டு விஷயம்.. ஒரு வீடியோவைப் பதிந்து விட்டு... பாட்டு கேட்குது படம் தெரியலை என்று நான் எழுதினேன் ( என் மனசுக்குள் பாட்டை மட்டும் ரசிப்பதால் படத்தை கவனிக்கவில்லை என்று சொல்வதா க நினைப்பு )... ஆனா நம்ம வாசுஜி... படம் நல்லாத்தானே தெரியுது.. பாட்டும் நல்லாவே கேட்குதே என்று பதில் கொடுத்தார்.. அப்புறம்தான் அதுக்கு இப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என்றே புரிந்தது... (கிக்கிக்கீ)//
:):):):):)
vasudevan31355
4th September 2015, 12:15 PM
//ரவி, வாசு, சிக்கா ஜீஸ்...//
superb.:)
vasudevan31355
4th September 2015, 01:21 PM
மது அண்ணா!
இதோ இன்னொரு நாரதர். நம்ம தேசிய நடிகர் சசிகுமார் 'சிசுபாலன்' படத்தில் நாரதராக. வேஷம் நன்றாகவே இருக்கிறது.
http://i58.tinypic.com/10mj152.jpg
eehaiupehazij
4th September 2015, 02:03 PM
இனிய நண்பர்கள் வாசு / சிக / ரவி / மது / ராஜ்ராஜ் / ராகதேவ் ...ஜீஸ் !
மதுரகானக் கடலில் சங்கமித்திட வெகுவேகமாய் முகத்துவாரம் நோக்கி ஓடும் கிளை நதி 4 விரைவில் கலந்திட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!
கொஞ்சம் இறுதிக்கட்ட வேலைப்பளு இருப்பினும் புதிய கிளை நதி பயணப்படும்போது படகிலேற வந்துவிடுகிறேன்!
வாசு சார் அந்த புன்னகை பதிவை பொன்நகையாக ஜெமினி திரியிலும் பதித்து விடுங்களேன் !
செந்தில்
vasudevan31355
4th September 2015, 03:14 PM
கண்டிப்பாக செந்தில் சார். அப்படியே செய்கிறேன்.
vasudevan31355
4th September 2015, 08:40 PM
'சொர்க்கம் நரகம்' படத்தில் ஒரு அற்புதமான பாடல். டி.எம்.எஸ் சுசீலா இணைந்து பாட நடித்திருப்பவர்கள் அழகு கலர்ப்பட நாயகி பத்மபிரியா மற்றும் விஜயகுமார்.
பூவும் பொட்டும் இங்கே
என் பூஜை தெய்வம் இங்கே
நான் உன்னைப் பிரிவது எங்கே
என் கண்ணா நீ ஓடி வா
மோகக் கூந்தலை அள்ளி முடித்தால் முன்னே நிற்பது நீதானே
மூடிய உதட்டில் பனித்துளி பட்டால் வாடைக் காற்றும் நீதானே
தொட்டுத் தழுவித் தோள்கள் இரண்டில் தொட்டில் போட்டவள் நீதானே
தொடரத் தொடர சுகமாய் இருக்கும் தொடர்கதை சொன்னவள் நீதானே
ஆஹா! ஆஹா! அருமை! அருமை! அழகான, ரசனைக்குரிய பாடல். சங்கர் கணேஷின் கைவண்ணத்தில் நீண்ட நாள் சென்று கேட்கையில் கரும்பாய் இனிக்கிறது.
https://youtu.be/kwSgA-sglVc
rajraj
5th September 2015, 02:03 AM
Happy Teachers' Day senthil ! :)
From thiruvaruL(1975)
kaNdukoNden kaNdukoNden naan unnai.........
You hear this line near the end--'kandhaa endru vandhavarkkellaam thandhaai kOdi....'
http://www.youtube.com/watch?v=Ry9zu6esLdo
VaNakkam from San Francisco,CA ! :)
madhu
5th September 2015, 03:51 AM
வாத்தியாரையா...
ஆசிரியர் தினத்தன்று உங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். நிலத்தின் வகையறிந்து அதற்கேற்ற விதைகளை விதைத்து அறிவுப்பயிர் வளர்த்து எதிர்காலம் சிறக்க வைக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்கள்.
அரை கிளாஸ் மிஸ் லூசி தொடங்கி மரகதம் டீச்சர், லோகாம்பாள் டீச்சர், புஷ்பராணி டீச்சர் என்று கோ-எட் பள்ளிக்குப் பின் லக்ஷ்மிகாந்தன் சார், சையத் சார், ஜி.டி.நரசிம்ம தாத்தாச்சாரி சார், புலவர் சூரியமூர்த்தி, சையத் சார், மந்திரம் சார் என உயர் நிலைப் பள்ளியிலும் பேரா.வி.வி.ராமன் சார், குரு.சுப்பிரமணியன் ஐயா, பாலு சார், மீனாட்சி சுந்தரம் சார், வெங்கட் சார் என கல்லூரியிலும் மனித உருவங்களாக வந்து வாழ்வெனும் சிற்பத்தை செதுக்கி வைத்த ஆசிரியர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி.
இன்னும் உபகோசலன் போல காணும் பொருட்கள் எல்லாம் ஆசானாகி பயிற்றுவித்து வளர்த்த காரணத்தால் உலகமெனும் ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.
rajraj
5th September 2015, 04:30 AM
Thanks madhu! :) As you know I was teaching in India before I left for the US for higher education with the intention to return to one of the IITs. It did not happen, thanks to IIT,Kanpur ! :( They did not respond in time! :( What shoud I say, 'ellaam nanmaikke' ? That is life! :)
வாத்தியாரையா...
ஆசிரியர் தினத்தன்று உங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். நிலத்தின் வகையறிந்து அதற்கேற்ற விதைகளை விதைத்து அறிவுப்பயிர் வளர்த்து எதிர்காலம் சிறக்க வைக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்கள்.
அரை கிளாஸ் மிஸ் லூசி தொடங்கி மரகதம் டீச்சர், லோகாம்பாள் டீச்சர், புஷ்பராணி டீச்சர் என்று கோ-எட் பள்ளிக்குப் பின் லக்ஷ்மிகாந்தன் சார், சையத் சார், ஜி.டி.நரசிம்ம தாத்தாச்சாரி சார், புலவர் சூரியமூர்த்தி, சையத் சார், மந்திரம் சார் என உயர் நிலைப் பள்ளியிலும் பேரா.வி.வி.ராமன் சார், குரு.சுப்பிரமணியன் ஐயா, பாலு சார், மீனாட்சி சுந்தரம் சார், வெங்கட் சார் என கல்லூரியிலும் மனித உருவங்களாக வந்து வாழ்வெனும் சிற்பத்தை செதுக்கி வைத்த ஆசிரியர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி.
இன்னும் உபகோசலன் போல காணும் பொருட்கள் எல்லாம் ஆசானாகி பயிற்றுவித்து வளர்த்த காரணத்தால் உலகமெனும் ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.
RAGHAVENDRA
5th September 2015, 07:10 AM
http://images.jagran.com/images/22_07_2013-guruteaching.jpg
http://i.ytimg.com/vi/K0Egd3F6RxU/hqdefault.jpg
Our sincere pranams to all our teachers
uvausan
5th September 2015, 08:24 AM
காலை வணக்கம்
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Picture1_zpsd75nvxmq.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Picture1_zpsd75nvxmq.jpg.html)
uvausan
5th September 2015, 08:25 AM
இன்று ஒரு இனிய நன்னாள் - உலகத்திற்கே ஜகத் குருவான ஸ்ரீ கிருஷ்ணன் பிறக்கும் நாள் . ஆசான்களை நினைவு கூறும் நாள் - இப்படி இரண்டும் சேர்ந்து அமைவது மிகவும் அரிது . இந்த நல்ல நாளில் , எனது பணிவான வணக்கங்கள் - திரு ராஜ்ராஜ் , திரு மது சார் ,திரு ராகவேந்திரா சார் , திரு செந்தில் சார் , திரு வாசு , திரு ராக தேவன் , திரு கோபு , திரு கலைவேந்தன் , திரு வினோத் , திரு குமார் , prof திரு செல்வகுமார் , திரு சின்ன கண்ணன் , திரு ராஜேஷ் மற்றும் இந்த திரியை படிக்கும் பல அன்பு நண்பர்களுக்கும் . எல்லோரிடமும் நான் பல அறிய விஷயங்களை கற்றுக்கொண்டதற்காகவும் , இன்னும் நிறைய கற்றுக்கொள்ள இருப்பதற்காகவும் --- ஒரு வகையில் குரு என்பவர் தனிப்பட்ட மனிதரே அல்ல - யாரிடம் எல்லாம் நாம் கற்றுக்கொள்கிறோமோ அவர்கள் எல்லாருமே ஒரு வகையில் நம் ஆசான்கள் தான் . திரு மது சார் தேக ஆரோக்கியம் , அவர் இடும் பதிவுகளில் இருக்கும் ஆரோக்கியத்தைக்காட்டிலும் மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .
https://www.youtube.com/watch?v=NBKIOSc-37s
uvausan
5th September 2015, 08:26 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150905-WA0010_zpsqsswiiuz.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150905-WA0010_zpsqsswiiuz.jpg.html)
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150905-WA0008_zpstryn0yki.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150905-WA0008_zpstryn0yki.jpg.html)
https://www.youtube.com/watch?v=c2ZwdkMaaLU
uvausan
5th September 2015, 08:33 AM
ஸ்ரீ கிருஷ்ணனைப்பற்றி திரையில் பல பாடல்கள் இருக்கின்றன - எல்லாவற்றையும் போடுவதென்றால் அதற்குள் இன்னொமொரு கிருஷ்ண ஜெயந்தி வந்துவிடும் . மனதில் ஆழமாக பதிந்த சில பாடல்களை மட்டும் இங்கு தருகிறேன் .
ஒரு மீள் பதிவு :
பகவான் கிருஷ்ணன் ஏன் பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
(கண்ணனின் அற்புத விளக்கம்)
*****************
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.
இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,
''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு மகாபாரதத்தில் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன.
அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப்போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’.
அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்:
''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''
''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்
.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று,
# 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?
போகட்டும்.
# விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.
தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
# தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.
# 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.
அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம்.
அதையும் செய்யவில்லை.
# மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.
மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
# ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார்.
''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி.
துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க,
கண்ணன் தொடர்ந்தான்:
''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.
அது விவேகம். ( தனக்கு தெரியாவிட்டாலும், தெரிந்தவர்களை அருகில் வைத்துக்கொள்ளவேண்டும், Management Principle)
தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,
'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?
( Ego)
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?
அல்லது,
அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா?
போகட்டும்.
தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம்.
ஆனால்,
அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.
'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டு விட்டேன், ஆனால்,
இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது.
கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;
என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான்.நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது பிரார்த்தனையால்என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா?
இல்லை.
அவளும் சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..
. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது கை பலத்தை முதலில் நம்பி, அது தோற்ற பின்பே, போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி.
அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.
( பைபிளிலும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றே உள்ளது. தட்டாத பட்சத்தில் கதவு திறக்கப்படாது என்பது உண்மை)
இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.
''அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன்.
ஆனால், ஏமாறவில்லை.
உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர்.
''கேள்'' என்றான் கண்ணன்.
''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன்
. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை.
நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.
''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம்பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.
அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக
முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.
ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்!
எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை.
https://www.youtube.com/watch?v=g3KYFQcXvsM
https://www.youtube.com/watch?v=PCiqqFVY4Xw
https://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA
uvausan
5th September 2015, 08:44 AM
https://www.youtube.com/watch?v=sPFnxjnsJug
https://www.youtube.com/watch?v=maf5T9fC_J4
https://www.youtube.com/watch?v=DIjy5z9GJi0
https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ
RAGHAVENDRA
5th September 2015, 09:06 AM
1978-ல் வெளிவந்த அமிதாப் நடித்து சூப்பர் ஹிட்டான 'Muqaddar Ka Sikandar' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'Rote Hue Aate Hain Sab' பாடலில் வரும் இசையை இந்தப் 'புன்னகை' படப் பாடலில் 'மெல்லிசை மன்னர்' கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்னமேயே அப்படியே தந்து அசத்தியிருப்பார். இந்தப் பாடலில் வரும் பல சங்கதிகளை கல்யாண்ஜி ஆனந்த்ஜி 'Rote Hue Aate Hain Sab' பாடலில் பயன்படுத்திக் கொண்டிருப்பது மிக நன்றாகத் தெரியும்.
ஆமாம் வாசு சார்,
ஆஹா.. எவ்வளவு நுணுக்கமாக கவனிக்கிறீர்கள். உங்களிடமிருந்து தப்ப முடியுமா.
மெல்லிசை மன்னரின் இசை எல்லோரையும் ஈர்ப்பதில் வியப்பென்ன.
நௌஷத் அவர்களே தன்னை வடநாட்டு எம்எஸ்வி என அழைத்துக் கொள்ள விரும்பினாரே. இதை விட வேறென்ன வேண்டும்.
RAGHAVENDRA
5th September 2015, 09:09 AM
thanks madhu! As you know i was teaching in india before i left for the us for higher education with the intention to return to one of the iits. It did not happen, thanks to iit,kanpur ! They did not respond in time! What shoud i say, 'ellaam nanmaikke' ? That is life!
I.I.T. kanpur missed a very good teacher. That's what we can say.
madhu
5th September 2015, 09:20 AM
ரவி ஜி..
உத்தவ கீதையை இத்தனை எளிதாக விளக்குவது உங்களால் மட்டுமே முடியும். இன்னும் .... இன்னும்..
rajeshkrv
5th September 2015, 09:36 AM
vanakkam
vasudevan31355
5th September 2015, 09:40 AM
ரவி சார்!
அமர்க்களம். பக்தியில் அவ்வளவு நாட்டமில்லாத என்னையே தங்கள் இன்றைய பதிவுகள் ஈர்த்து விட்டன. அனுபவித்துப் படித்துக் கொண்டிருக்கிறேன். பாடல்களும் பக்க பலம். எனது மனமுவந்த நன்றிகள்.
rajeshkrv
5th September 2015, 09:41 AM
ஆசிரியர் தினத்தன்று என் இணையதள ஆசான்களுக்கும் என் பள்ளி கல்லூரி வாழ்க்கை குருமார்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
rajeshkrv
5th September 2015, 09:41 AM
ஜி வணக்கம்
JamesFague
5th September 2015, 09:50 AM
Courtesy: Mr Aathavan Ravi Facebook
Aathavan Ravi
ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
சபை.
பருத்த உடலும் தடிமனான
கண்ணாடியுமாய் பார்வையாளர்
வரிசையில் ஒரு பாகவதர்.
பக்கத்தில் வந்தமரும்
போலீஸ்காரருக்கு
வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.
குயில் கூவலாய் ஒரு பெண்
பாட கச்சேரி துவங்குகிறது.
அழகாய்ப் பயணப்படும் அந்தப்
பாடலின் வழியில் ஒரு வேகத் தடை.
அந்தப் பெண்
திக்குகிறாள். திணறுகிறாள்.
பாட்டறிந்த பாகவதர்
மேடையேறுகிறார்.
பாடுகிறார்.
இனிக்கப் பாடுகிறார்.
இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.
அப்பப்பா...!
அந்தப் பாடலென்ன?
பாவனைகளென்ன?
அசைவுகளென்ன?
அபிநயங்களென்ன?
அணிந்திருக்கும்
மூக்குக்கண்ணாடிக்குள்
அழகாய் மிளிரும்
கண்களிலே,
அனைத்தும் உணர்ந்ததன்
விளக்கமென்ன..?
பாடும் உதடுகள் மீதினிலே
புன்னகை அமர்த்தும்
பழக்கமென்ன?
தன் திறம் காட்டுதல் மட்டும்
இல்லாமல்,
உடன் கலை செய்வோரையும்
உயர்த்தும் தன்மை என்ன?
ஓங்கி உயர்த்தி
குரல் தருதல்,
உடல் நிமிர்த்தியும்,தளர்த்தியும்
அசைவுறுதல்,
தூய இசையோடு ஒன்றி விடல்,
தொடையில் அழகாய்த்
தாளமிடல்..
அனைத்திலும் தெரியும்
உண்மையென்ன..?
பாடல் தொடர்கிறது.
தொடர்ந்து நகர்கிறது.
நகர்ந்து முடிகிற நேரத்...
..முதுகில் பிடுங்கிய
மூட்டைப் பூச்சி
நினைவூட்டியது..
அமர்ந்திருப்பது
திரையரங்கமென்றும், அந்தக்
கச்சேரி 'குங்குமம்' படக்
காட்சியென்றும்,
அந்தப் பாகவதர் நம் நடிகர்
திலகமென்றும்!
https://youtu.be/mS_DsFaQl28
Aathavan Ravi's photo.
JamesFague
5th September 2015, 09:58 AM
Courtesy: Mr Aathavan Ravi Face Book
ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
வைக்கட்டுமா?" என்று
கேட்டாள்..சரிவர சமைக்கத்
தெரியாத மனைவி.
கணவன்,அமைதியாகச் சொன்னான்.. "முதல்ல
ஏதாவது வை.சாப்பிட்டுப்
பாத்து பேரு வச்சுக்கலாம்"
என்று.
*****
சமைக்கத் தெரியாத பெண்களைக் கிண்டலடிக்கிற
விதமாய் அமைந்த அந்த
நகைச்சுவைத் துணுக்கு,
சிரிக்க வைத்தாலும், பசித்தும்
நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக் கவலைப்படவும் வைக்கிறது.
*****
பசி பொல்லாதது.
மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.
அவை அத்தனையையும் மறக்கடிக்கச் செய்து,மனிதன்
தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய வல்லது இந்தப் பசி.
*****
"பாபு" என்கிற திரைப்படம்.
"வரதப்பா..வரதப்பா"என்று
அதில் ஒரு பாடல்.
உழைத்துப் பசித்தவர்களின்
உணவு நேர சந்தோஷத்தை
இந்தப் பாடல் போல் எந்தப்
பாடலும் காட்டியதில்லை.
கலைப்பசியில் சுருண்டு கிடக்கும் நமக்கு இப்படி நடிகர் திலகம் போல் வேறு யாரும் நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
*****
பசியாறியவர்களின் வயிறு குளிர்வது போல, பார்ப்பவர்களின் நெஞ்சு குளிர்கிறது.
பளிங்கு போன்ற முகம்.படிய வாரிய தலைமுடி பாதி வரை மறைத்திருக்கும் நெற்றி.அதன் கீழ் உருண்டோடும் அந்த
இரண்டே கண்களுக்குள்
இன்னும் நூறு தலைமுறைகள்
தாண்டி வருபவனையும் தன் வசம் வசம் ஈர்க்கும் சக்தி
இருக்கிறது.
பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
மாடில்லாத மாட்டு வண்டி என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
கொணரும் அழகான பெண்ணொருத்தியால் களை கட்டி விடுகிறது.
"சமையல் எல்லாம் கலக்குது.
அது,சமத்துவத்தை வளர்க்குது.. சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது."
-மை ஊற்றினால் எழுதும்
பேனாவினால், உண்மையை
ஊற்றி எழுதியிருக்கிறார் அமர கவி.அய்யா.வாலி.
'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
வரிசைப்படுத்திப் பாடி விட்டு,
"எத்தனை லட்சுமி பாருங்கடா"
என்று நீளமாய்ப் பாடும் போது,
பெண்கள் கூட்டமொன்று வந்து
முறைக்க,"உங்களை இல்லம்மா" என்று சைகையால்
சொல்லிக் கொண்டே,பாடலுக்கு வாயசைப்பதையும்
அழகுறத் தொடரும் அய்யா
நடிகர் திலகத்தின் நடிப்பழகிற்காகவே,இந்தப்
பாடலைப் பார்க்கலாம்..
பத்தாயிரம் தடவை.
https://youtu.be/H8VkUxkMu8c
vasudevan31355
5th September 2015, 10:03 AM
இன்று கிருஷ்ண ஜெயந்தி. அனைவருக்கும் அந்த வெண்ணெய்த் திருடனின் பிறந்த நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த மாயக்கண்ணன் பிறந்த நாளில் அவனின் லீலைகளை மனதில் கொண்டே என்ன பாடல் இன்று இடலாம் என்று மண்டையைக் காய்ச்சியதில் திடீரென்று ஒரு பாடல் கிடைத்தது.
பொதுவாகவே கிருஷ்ணன், கண்ணன், கோபியர் சம்பந்தப்பட்ட பாடல் என்றாலே 'சட்'டென்று என் நினைவுக்கு வருபவர் 'வெண்ணிற ஆடை' நிர்மலா தான். இந்த சப்ஜெக்ட் பாடல்களுக்கு இவர் வெகு பொருத்தம். 'ராமன் எத்தனை ராமனடி', 'பிருந்தாவனத்திற்கு வருகின்றேன்' போன்ற பாடல்களே சாட்சி. ('பாசதீபம்' படத்தின் 'கனவு கண்டேன் கண்ணா' பாடலும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா பாடும் பாடல்தானே?) இவருடைய உடலமைப்பும் கோபிகாஸ்திரீ போலவே இருப்பதும் சிறப்புக்கு இன்னும் காரணம்.
தேவரின் 'துணைவன்' படத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா கோபியர் உடை அணிந்து பாடும் அருமையான பாடல்.
கோகுலத்தில் ஓர் இரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
கோபியர்கள் ஆடுகின்றார் கங்கைக்கரை வண்டாட்டம்
கொஞ்சினாள் முத்தமிட்டாள்
கோலமொழி பெண்ணொருத்தி
கன்னத்தில் வண்ணமிட்டாள்
கண்ணனுக்கு இன்னொருத்தி
சிரித்தாள் இதழ் விரித்தாள்
கனி பறித்தாள் புது பெண்ணாட்டம்
சேலை கொண்டு மெத்தையிட்டு
சேர்ந்து விட்டாள் பூவாட்டம்
பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை
பருவப் பெண்ணின் தலையினிலே ஒரு கட்டுப் பூவாடை
குங்கும உதடு கன்னத்தில் ஓடி கொஞ்சுது அத்தானை
கூடை போலே மூடிக் கொள்ளுது கொட்டடி முந்தானை
அழகிய விழி மீனினைத் தொட்டு
அள்ளுது பூந்தேனை இங்கே
அஞ்சிடும் பெண்மானின் கைகள்
ஆடுது ஆடுது அம்மானை
பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை
பருவப் பெண்ணின் தலையினிலே ஒரு கட்டுப் பூவாடை
ஒரு கட்டுப் பூவாடை
ஒரு கட்டுப் பூவாடை
எவ்வளவு அருமையான பாடல்! ஈஸ்வரியின் குரலும் நம்மை அப்படி ஈர்க்கும். சான்ஸே இல்லை. அப்படி ஒரு இனிமை. அதுவும் விடுவிடுவென்று 'பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை' என்று அவர் ஆரம்பிக்கும் போது மனது சொக்கிப் போகிறது.
ராகவேந்திரன் சார், மதுண்ணா!
ஒரு பெரிய குரல் குழப்பம். இந்தப் பாடலை ஜானகியும் சேர்ந்து பாடி இருக்கிறாரா? பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் குரல் அப்படியே ஜானகி போல் உள்ளதே! படத்தில் பாடுபவர் நிர்மலா மட்டுமே. இருகுரல்கள் ஒலி க்க அவ்வளவு வாய்ப்பில்லை. (சில படங்களில் விதி விலக்கு) ஆனால் ஜானகியும், ஈஸ்வரியும் சேர்ந்து பாடியிருக்கிறார்களா என்று சந்தேகமாய் இருக்கிறது. குரலைக் கண்டு பிடிப்பதில் சற்று சிரமமாய் இருக்கிறது. ஆனால் 'துணைவன்' பட டைட்டிலில் ஜானகி பெயர் இல்லை. ஈஸ்வரி மட்டும்தான் இருக்கிறது. தயவு செய்து சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.
எது எப்படியோ! மிக அருமையான பாடல் என்பதில் சந்தேகம் இல்லை.
http://www.dailymotion.com/video/xhcj82_gokulathil-oru-iravu-a-v-m-rajan-sowcar-janaki-tamil_music
vasudevan31355
5th September 2015, 10:06 AM
வணக்கம் ஜி! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
uvausan
5th September 2015, 10:29 AM
அருமை வாசு - அந்த மாய கண்ணன் உங்கள் அலுவுலக பிரச்சனைகளையும் கண்டிப்பாக தீர்த்து வைப்பான் . நம்பிக்கையுடன் இருங்கள் .
ஒன்றை இந்த மையம் திரியில் கவனித்தீர்களா ? திரியில் அருமையாக பதிவுகள் இடும் முக்கியமான நபர்கள் பெயர்களில் கண்ணனும் ஒளிந்திருக்கிறான் . தலைவனுக்கு உள்ள திறமை , . கருணை , அன்பு , குழல் ஊதுவதுபோல இனிமையான பதிவுகள் , மற்றவர்களை வழிக்காட்டும் திறன் , திரியை சாரதியாக ஓட்டும் அழகு , கண்ணனுக்கும் வருவது போல கோபதாபங்கள் இங்கு பதிவிடுபவர்களிடம் காண்கிறேன் - அந்த மாய கண்ணன் நம்மை ஆளுமை புரிவது மிகவும் அழகாக தெரிகிறது .
கண்ணன் மறைந்திருக்கும் நபர்கள் :
1. திரு ராகவேந்திரா ( கண்ணனையே நினைத்து கண்ணனாகவே மாறியவர் )
2. திரு ராஜ் ராஜ் ( கண்ணன் ராஜாக்கெல்லாம் ராஜா )
2. திரு மது ( மதுசூதனன் என்று கண்ணனுக்கு ஒரு பெயர் உண்டு )
3. திரு வாசுதேவன் ( 2) ( சொல்லவே வேண்டாம் - எல்லோரையும் மயக்கும் திறன் )
4. திரு கோபு ( கோபாலகிருஷ்ணன் என்ற பெயர் கண்ணனுக்கு உண்டு)
5. திரு கோபால்
6. திரு முரளி ஸ்ரீநிவாஸ்
8. திரு பார்த்த சாரதி
9. திரு ராதா கிருஷ்ணன்
9. திரு கிருஷ்ணா
10. திரு சின்ன கண்ணன்
11 திரு ராஜேஷ் - ( கண்ணன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்யும் வேளையில் மக்கள் அவனை அழைக்கும் செல்ல பெயர் இது )
12. திரு . கலை வேந்தன் ( பாரத போரில் பீஷ்மர் கண்ணனை ஒரு சில இடங்களில் அன்புடன் அழைக்கும் பெயர் இது )
13.திரு குமார் - விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் பெயர் இது
14. . திரு வினோத் ( கண்ணனை வினோத கிருஷ்ணன் என்று கோபியர் அழைப்பது உண்டு )
vasudevan31355
5th September 2015, 12:40 PM
கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்
http://www.photofast.ca/files/products/7417.jpg
நடிகர் திலகத்தின் பாடல் இல்லாமல் 'கிருஷ்ண ஜெயந்தி'யா?
இதோ அற்புதமான ஒரு பாடல்.
துள்ளி ஓடும் அந்த சின்னக் கண்ணனை அள்ளி வாரி,
'கண்ணா! மணிவண்ணா! ஆயர்குல மணிவிளக்கே எங்கள் மன்னா!
வண்ணப் பசுங்கிளியே! வார்த்தெடுத்த பொற்சிலையே!
எண்ணமெனும் சோலையிலே இசை பாடும் இளங்குயிலே
இசை பாடும் இளங்குயிலே!
எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான்
நல்ல செங்கமலச் சிரிப்பிரிக்கும் மன்னன் பாட்டுத்தான்'
'வா கண்ணா வா' என்று நம்மை அழைத்து என்றும் வற்றாத ஜீவனுள்ள நடிப்பைத் தந்து,
'நடிகர் திலகம்' இடுப்பொடித்து, பட்டு வேட்டியும், சிகப்பு வர்ணச் சொக்காயுமாய், இடுப்பில் அங்கவஸ்திரம் கட்டி, சுஜாதாவுடன் ஆடும்போது அள்ளிக் கொண்டு போகும்.
'சின்னக் கண்ணன் செல்லக் கண்ணன் சுட்டிப் பிள்ளைதான்
படுசுட்டி பிள்ளைதான்
அள்ளிக்கொண்ட கை மணக்கும் வண்ண முல்லைதான்'
(எங்கள் வீட்டில்)
'மணிவண்ணன் பாட்டுத்தான்
எங்கள் கண்ணன் பாட்டுத்தான்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
தட்டுங்கடி கையைத் தட்டுங்கடி'
கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் நடிகர் திலகம், வி.கே.ராமசாமி ஜெயகணேஷ், சுஜாதா, வடிவுக்கரசி, நாகேஷ் மற்றும் ஊர் மக்கள்.
'முத்துக்கருமணி சத்தமிட
வண்ணக் கோல வளையல்கள் ஓசையிட
சுத்திச் சுத்தி வந்து ஆடுங்கடி
சுந்தரக் கண்ணனைப் பாடுங்கடி'
(கொட்டுங்கடி)
இப்போது உறியடித் திருவிழா நடக்கும். வி.கே.ராமசாமி தொடை தட்டி உறியடிக்கப் போகுமுன் நடிகர் திலகத்தின் முகத்தில்தான் எத்தனை கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி! வி.கே.ஆர் உறியடிக்க முடியாமல் திணற, அடுத்து சுஜாதா நடிகர் திலகத்தை உறியடிக்கத் தள்ளிவிட, கம்பீரமாக களத்திற்குள் 'நடிகர் திலகம்' மீசையைத் தடவியபடி நுழைந்துவிட, சுற்றிலும் உள்ள பெண்மணிகள் இவர் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்ற, நடிகர் திலகம் எம்பி எம்பி உறியை அடிக்க முயல்வது வெகு அழகு.
இப்போது நெஞ்சு நிமிர்த்தி, மீசை முறுக்கி, பின்னால் வீரமாக பின்னோக்கி நடந்து சென்று, பின் படு ஸ்டைலாக ஓடி வந்து உறியை கம்பால் அடித்து பதம் பார்ப்பாரே! அதகளம்தான்.
கன்னிப் பெண்கள் மத்தியிலே கண்ணன் ஆட, நடிகர் திலகத்தின் கோலாகல கோலாட்ட நாட்டிய முத்திரைகள் ஆரம்பமாகும். கைகளில் இரண்டு கோலாட்டக் குச்சிகளை வைத்துக் கொண்டு என்ன அழகாக, வாகாக, நளினமாக ஸ்டெப்ஸ் வைப்பார் தெரியுமா!
'கோலாட்டம் இது கோலாட்டம்
கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்'
'நடிகர் திலகம்' அருமையான முக பாவத்தில் இரண்டு கால்களையும் ஒன்று மாற்றி ஒன்று வைத்து கோல்களைத் தட்டியபடி,
'கண்ணனின் திருமுகம் பாலாட்டம்'
என்று பாட,
'கண்கள் இரண்டும் வேலாட்டம்
கன்னம் தாமரைப் பூவாட்டம்
சிந்தும் புன்னகை பொன்னாட்டம்'
என்று சுஜாதா தொடர்வார்.
அடுத்து வழுக்கு மரம் ஏறும் போட்டி. எண்ணெய் தடவிய வழுக்கு மர உச்சி ஏறி, உச்சியில் இருக்கும் கலசப் பானையிலிருந்து பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இதிலும் சிலர் முயன்று தோற்க, நாயகர் வி.கே.ஆரை உசுப்பிவிட, வி.கே.ஆர் சந்தோஷத்துடன் தலையாட்டி சென்று பெரிய ஏணி ஒன்றை எடுத்து வருவாரே பார்க்கலாம்! ஏணியில் ஏறி பரிசுப் பொருளைக் கவர்வதற்காம்.
அடுத்து 'நடிகர் திலகம்' வழுக்கு மரத்தில் 'சரசர' வென கொஞ்சம் கொஞ்சமாக ஏற, கணவன் ஏறுவதைப் பார்க்கும் சுஜாதா கைகளால் 'அப்.. அப்' என்று சொல்வது போல கைகளை உயர்த்தி திலகத்தை உற்சாகப்படுத்துவார். (சுஜாதா ஆக்ஷனில் அசத்துவார் இந்த இடத்தில்) நடிகர் திலகமும் மேலே ஏறி கலசப் பானையை திறக்கும் போது ஆரவாரம், விசில் சப்தம் பறக்கும் திரையில் அல்லாமல் படம் பார்க்கும் திரை அரங்கு உட்பட. (சுஜாதாவின் முகத்தில்தான் எத்துணை பெருமை தாண்டவமாடுகிறது நடிகர்திலகம் கலசப் பானையைக் கைப்பற்றியவுடன்!)
இப்போது அப்படியே டிராக் மாறும்.
கண்ணன் 'நடிகர் திலகம்' மடியில் அமர்ந்திருக்க, ஆரத்தி எடுக்கப்பட்டு பாடல் தொடரும்.
கோகுல பாலா! எங்கள் கோதை மணாளா!
கோபியர்நேசா! வேணுகான விலாசா!
பொன்மணிக் கால்களில் கிண்கிணி கொஞ்சிடும்
புன்னகை மன்னா!
போக்கிரிக் கண்ணா!
மன்னன் தோளில் பூச்சாத்தி
மஞ்சள் நீரில் ஆராத்தி
நந்தகுமாரா!
நவநீத ஜோரா!
என்றும் உந்தன் பேர் வாழி!
அருமையான கிருஷ்ண ஜெயந்தி பாடல். வயதான நடிகர் திலகத்தின் சிறுபிள்ளை விளையாடுத்தனமான ஜாலி நடிப்பு. பார்த்து அனுபவியுங்கள். அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடுங்கள். நம் 'ரங்கனி'ன் புகழையும் சேர்த்துத்தான்.
https://youtu.be/HDIeuCA_g90
raagadevan
5th September 2015, 12:44 PM
இன்று கிருஷ்ண ஜெயந்தி.
Here is my respectful dedication to கிருஷ்ண ஜெயந்தி...
https://www.youtube.com/watch?v=5GhqpT0C6SE
uvausan
5th September 2015, 01:41 PM
தீவிரவாதிகளுக்கு மதம் உண்டா ??
ஒரு நாள் isis தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழி மறித்தனர்.
Isis தீவிரவாதி -
நீ எந்த மதம்?
அந்த மனிதர் -
நாங்கள் முஸ்லிம்
(அவர்கள் உண்மையில் கிருஸ்டியன்)
isisதீவிரவாதி -
அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்கலாம்.
(காரில் இருந்தவரின் மனைவி
நடுங்கிவிட்டாள்)
ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி
பைபிளில் இருந்து சில வரிகளை
கூறினார்.
Isis தீவிரவாதி -
சரியாக கூறினாய் நீ செல்லலாம்.
(கார் சிறிது தூரம் நகர்ந்ததும்)
அவரின் மனைவி -
"எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள், ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"
அவர் -
அவர்களுக்கு குரான் தெரியாது!
மனைவி -
அது எப்படி உங்களுக்கு தெரியும்.
அவர் சிரித்துக்கொண்டே
"அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்".
எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.
தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது......
uvausan
5th September 2015, 01:57 PM
வாசு - வா கண்ணா வா - பதிவு அருமை - இந்த பாடலைத் தேடினேன் - உடன் கிடைக்கவில்லை . ( ம்ம் -- எல்லோரும் வாசுவாகி விட முடியுமா என்ன ??) . நீங்கள் சொன்னது உண்மை - நடிகர் திலகத்தை நீக்கி , கண்ணன் பாடல்களை ரசிப்பது என்பது முடியாத காரியம் . இதோ இன்னும் சில பாடல்கள் - நம் நினைவுகளில் ரீங்காரம் இடுபவைகள் ---
https://www.youtube.com/watch?v=RvzIQsSnb-c
https://www.youtube.com/watch?v=eZyzQ4xq3JQ
https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
https://www.youtube.com/watch?v=Gra_9_lOTRc
https://www.youtube.com/watch?v=tDU7NB440bs
எல்லாத்துக்கும் சிகரமாக இந்த பாடல்
https://www.youtube.com/watch?v=GxG9EzeAXi4
Richardsof
5th September 2015, 03:17 PM
இனிய நண்பர் திரு ரவி சார்
என் பெயரும் கண்ணன் லிஸ்டில் இடம் பெற்று இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .இன்று ஆசிரியர் தினமும் கண்ணன் பிறந்த தினமும் மதுர கானம் திரியில் மிகவும் சிறப்பாக நண்பர்களால் கொண்டாடப்பட்டுள்ளது . மிக்க மகிழ்ச்சி .
https://youtu.be/2h7NZd76mtk
chinnakkannan
5th September 2015, 04:18 PM
பாரினில் வந்துவிட்டோம் பாழும் மனத்தினிலே
வேரிட்ட ஆசைகள் வீழ்வதெப்போ - தேர்போல்
அசைந்தாடி அங்குமிங்கும் அல்லலுறும் வாழ்வில்
இசைந்தாடி நிற்றல் எழில்
*
சகியே உன்னை நினைத்தால் நெஞ்சில்
..தடைகள் தகர்ந்தே எழில்கள் ஊறும்
உரமாய் நானும் உயரத் தானே
..உணர்வில் கலந்தே உயிராய் நின்றாய்
கரத்தை நீட்டி ககன வெளியில்
..காற்றைப் போலப் பறக்கவும் வைப்பாய்
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே..!
*
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்.. ( குட்மார்னிங்க் சொல்லலாம்னு தான் எழுத ஆரம்பித்தேன்..தொகுப்பதற்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..
*
ரவி,
தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்.. நீங்கள் உங்கள் சொற்களில் என்னை வென்று விட்டீர்கள். இறையருள் எனக்கிருக்கிறது என ச் சொல்லி.. (எல்லாருக்கும் தானே இருக்குங்காணும்) ( ஒ.சொ.வெ ஒ.சொ.கொ உதாரணம் பின்னால் சொல்கிறேன்..
உங்கள் குருக்களில் என்னையும் ஒன்றாய் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.. பன்னிரண்டு பதின்மூன்/றாவது இடமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்..ம்ம்..ஒன்பதாமிடத்தில் சொல்லியிருக்கலாம் ( என்னது ஒன்பதுல குரு.. லஷ்மிராய் உங்களுக்குப் பிடிக்காதா.. எனக்குத் தெரியாதே..) :)
*
நண்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்..
*
முன்பு எழுதிப் பார்த்த கண்ணனின் புதுக்கவிதை ஒன்று
*
ஒருத்திக்கு நடனம்
ஒருத்தியுடன் பாடல்
ஒருத்தியுடன் ஊடல்
ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
ஒருத்தியுடன் அழுகை
மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
எல்லாம்
அந்த மாயக் கண்ணனின் லீலை
இருந்தும்
ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
எங்கே எனக் கண்ணால் வினவ
அவள்
ஷ்..கண்ணன் என்னுள்..
மனதிற்குள்..
செய்யாதே தொந்தரவு என..
மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை..
*
முன்பு எழுதிப்பார்த்த கண்ணனுக்கான அந்தாதி..
*
முன்னால் எழுதிப் பார்த்த அந்தாதி..
*
எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
கண்ணன் கழல்களே காப்பு
காப்பதற் கென்றே குடையாகத் தான்பிடிக்க
ஆக்களுடன் சேர்ந்தங்கு மாக்களும் நின்றுவிட
பேய்மழையைப் பார்த்தே பயந்திருந்த கோகுலத்தைக்
காத்துத்தான் நின்றவன் காண்..
காண்பதோ சின்னக் குழந்தையின் தோற்றமெனில்
தீண்டிய பூதகியைத் தாக்கியே - மண்ணில்
விழச்செய்து வித்தைகள் வேடிக்கையாய்ச் செய்த
குழவிக் கிணையேது சொல்
சொல்ல நினைத்தாலே சோறதுவும் பானையிலே
துள்ளியே ஆர்ப்பரித்துத் தோயாமல் பொங்குதற்போல்
அள்ளிப் பெருகிடுதே கண்ணனவன் லீலையதும்
பள்ளிப் பருவத்தில் பார்..
பார்த்தான் பலவாறாய் பக்குவத்தைத் தானிழந்து
ஆர்ப்பரித்த காளிங்கன் தீச்செயலை – வேர்த்து
விறுவிறுத் தாடியே வெட்கிட வைத்தான்
துறுதுறு கண்ணனவன் தான்..
கண்ணனவன் தானங்கே கட்டிய கல்லிழுத்து
திண்ணமாய் நேர்நோக்கிச் செல்லுகையில் – மின்னலது
பட்டாற்போல் மரங்கள் பிரிந்தங்கே வீழவும்
தொட்டனர் சுட்டியின் தாள்
தாளால் விஷத்துடனே தீண்டிய பூதகியை
மீளா நிலைக்கணுப்பி மீண்டவன் –கேளாமல்
தாயிடம் தப்பித் தளிர்மண்ணைத் தின்னவும்
வாயில் தெரிந்த வுலகு..
உலகங்கள்: சுற்றுவதை ஒன்றாக்க் காட்டி
கலக்கத்தைத் தாயிடம் கூட்டி – படக்கென
அன்னையைக் கொஞ்சம் அணைத்தே அழுதிடுவான்
சின்னஞ் சிறுகண்ணன் தான்
சின்ன்ஞ் சிறுகண்ணன் தானென்று எண்ணாமல்
நன்றாய் இழுத்தே நாலுஅடி போடென்றே
கன்ன ஞ் சிவந்திருந்த கன்னியர்கள் சொல்கையிலே
பின்னலைப் பின்னுவான் பார்..
பார்க்கும் இடமெல்லாம் புன்னகைக்கு முன்வதனம்
ஈர்க்கும் பலவாறாய் என்பதனால் – சேர்த்திழுத்துக்
கண்ணிமை மூடவும் கண்ணா சிரிக்கின்றாய்
விண்ணினைக் காட்டுவா யா.
*
வெகு அழகான கண்ணன் பாடல் கீழே..எழுதியவர் யார் கவியரசர்..
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=rzd42y0l0CQ
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)
கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்
*
chinnakkannan
5th September 2015, 04:19 PM
*
தூங்குகிறான் தூளியிலே சின்னக் கண்ணன்
..சுற்றிநீயும் ஆட்டாதே விழித்துக் கொள்வான்
பாங்காக அவன்முறுவல் முகத்தில் தானே
..பரவசத்தைக் கூட்டுதடி அடியே தோழி
தேங்கிடுமே மென்காற்று அவனைச் சுற்றி
..தேகத்தை விட்டெங்கும் போகா வண்ணம்
நீங்கிடுமே நாம்பட்ட துயரம் எல்லாம்
..நீலவண்ணன் தரிசனத்தில் என்றும் தானே..
*
ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
https://youtu.be/cuP2jzhmnh4
*
chinnakkannan
5th September 2015, 04:20 PM
*
தேடும் பார்வை உன்னைக் காண அங்கும் இங்கும்
….நாடும் மனமோ நிலையில் லாமல் முன்னும் பின்னும்
ஓடிச் சென்றே அலைகள் போலே உந்தன் நினைவை
..ஊடி உணர்வை மேலும் மேலும் மயக்க வைக்கும்
வாடும் வஞ்சி என்னை நீயும் மகிழ வைக்க
…வாராய் கண்ணா வாவா விரைவில் இங்கே இங்கே
பாடும் பாடல் சுவையா என்று நானும் அறியேன்
..பக்தி அதனுள் உண்டே உனக்கும் தெரியும் கண்ணா..!..
கேட்க லாயிற்றே கண்ணனவன் குழலினிமை
…தெள்ளத் தெளிவாக தேனமுதாய்க் காதுகளில்
பார்க்க லாயிற்றே பரபரக்கும் விழிமலர்கள்
…பார்த்தன் திருவுருவம் வரும்திசையை நோக்கித்தான்
வேட்கை கொண்டவுளம் விரைவாக அங்குமிங்கும்
…வெட்கம் தனைவிட்டே அவனணைப்பை நாடித்தான்
வேர்த்து அலைபாயத் தவித்துநிற்க லாயிற்றே..
.மேவி அவளிடமே கண்ணனெப்போ வருவானோ
வாராதா கண்ணனவன் உருவம் கண்ணில்
..வந்துவக்க வைக்கவரும் காலம் என்றே
ஆறாக மனமுருகி அழைத்த பெண்ணின்
..அழகுமிகு பாடல்கள் கேட்ட வண்ணம்
வா ராதா என்றபடி வந்தான் அங்கே
..வஞ்சியவள் மனங்கவர்ந்த மாயன் மேலும்
பேறாகத் தந்துவிட்டான் தன்னைத் தானே
..பெண்மயிலும் கலந்துவிட்டாள் அவனில் அன்று
*
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Z-uribm60cM
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...
*
chinnakkannan
5th September 2015, 04:20 PM
காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ
*
http://www.inbaminge.com/t/r/Radha/Unnai%20Ethirparthen%20Kanna.eng.html
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வாவா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
இங்கு ஏங்குகிறேன் தனியாக..
படம் ராதா
*
chinnakkannan
5th September 2015, 04:22 PM
*
ராஜ் ராஜ் சார், சிவாஜிசெந்தில் – ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ப்ளஸ் என் நமஸ்காரங்கள் டு யூ.
*
மக்கு மாணவி தான் அவள்..
எதைச் சொன்னாலும்
குறைந்தபட்சம் நாலுதடவை சொன்னபிறகுதான்
ஏறும் என்றால் அதுவுமில்லை
முழுக்கச் சரியாய்ப் போட்டுவிட்டு
விடையில் தப்பு பண்ணுவாள்..
தனிக்கல்வி தான் என்றாலும்
கோபம் எனக்கு வந்ததால்
நன்றாகக் காதைத் திருக
பரவாயில்லை மிஸ்
எப்படியும் வர்ற பங்குனில கல்யாணம்
பண்ணிடுவாங்க
எனக்கோ கூட்டக்கழிக்க தெரியும்
அது போதும்
சொன்னாற்போல
ப்ளஸ் ஒன் முடித்த லீவில்
அவளுக்குக் கல்யாணம்
பெற்றோர் அழைப்பை வைக்க
போனபோது குட்டியாய்ப் புன்னகை
எங்க கணக்குடீச்சர் எனப் பெருமையாய்
அறிமுகம்
கொடுவாள் மீசை வேட்டிசட்டை மாப்பிள்ளையிடம்…
திரும்பும் போது அவள் அம்மா சொன்னார்..
நாலு நாத்தனார் மூன்று மச்சினனாம் அவளுக்கு
இவ தான் மூத்தவளாம்
சுதானமா இருக்குமா என்ன தெரியலையே
அவர் கவலை
எனக்குத் தொற்றிக்கொண்டு கல்யாண மண்டபத்திலிருந்து
வீடுவரை இருந்தது..
சில வருடங்கள் கழித்து
வேறு ஊருக்கு மாற்றலாகி
சென்னை எதற்கோ சென்றபோது
சந்தித்தேன் அவளை..
அதே மாணவிதான்..சற்றே புஷ்டியாய்
தொங்கத்தொங்க நகைகள்..அடுக்கிய வளையல்கள்
மின்னும் பேசரி..
பட்டுப் புடவை..யானை பார்டர்..ஆரெம்கேவியா..
அவள்தானா..இல்லை..
அவள் தான்..
ஹாய் மிஸ்..
அதே புன்னகை..
என்னடி இவளே எப்படி இருக்க
நான்மல்லிகா இல்லை மிஸ் மாதவி
மறந்துட்டீங்களா..பரவாயில்லை..
நல்லா இருக்கேன் மிஸ்..
நாலு நாத்தனாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு
தம்பிங்க மூணு பேருல ஒருத்தன் டோஹா ஒருத்தன் துபாய்
ஒருத்தன் பெங்களூரு
பொண்ணு தேடிக்கிட்டிருக்கோம்..
இவருக்கு பிஸினஸ்..தோ… அந்த மால்ல தான்
நாலு கடை..
ரெண்டு கடை நாந்தான் பாக்கணுமாம்
கணக்கு வழக்கெல்லாம் நாந்தேன்..
அட்மினும் நல்லா செய்றேனாம்..
குழந்தையா மிஸ்..எனக் கேட்டு கன்னஞ்சிவந்து
இப்பத் தான் நாலுமாசம்..
எல்லாம் செட்டிலாய்ட்டு வச்சுக்கலாம்னு
இருந்தோமா..இப்பத் தான் வேளை..
நீங்க செளக்கியமா..
என் கொஞ்சூண்டு கசங்கிய துப்பட்டாவினால்
கண்ணாடியைத் துடைத்த போது
அவளைக் காணோம்
பார்த்தால்
அருகில் வந்த பிஎம் டபிள் யூவில் அவள்..
மிஸ் ட்ராப் பண்ணட்டா..
வேணாம் மல்லிகா ஸாரி மாதவி..
பை மிஸ்
ஐ வோண்ட் ஃபர்கெட் யூ இன் மை லைஃப்..
நானும்…..!
*
உங்களுக்காக ஒரு ஜுகல் பந்தி (ராஜ் ராஜ் சார் பாணியில்.)
https://youtu.be/F5giBnun_4I
பணமா பாசமா 1968, இது 1969, அப்ப தமிழ்ப்பாட்டுதான் மொத வந்திருக்கணும்.
"மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல" பாட்டை யூட்யூபில் கேட்டு மகிழலாம்..சரி..போட்டுடறேன்..சேர்ந்தும் பாக்கலாம்!
https://youtu.be/uDk-a_Wfo98
chinnakkannan
5th September 2015, 04:23 PM
*
என்னவோ வெகு அழகிய பாடலான கோகுலத்தில் ஓர் இரவு.. வரவில்லை எனக்கு..எனில் தேடி எடுத்துப் பார்த்தேன்.. தாங்க்ஸ் வாசு ஜி. வா.கண்ணாவாவிற்கும்
இது முழுக்க முழுக்க எல்.ஆர் ஈஸ்வரி போலத் தான் தெரிகிறது..யூட்யூபில் ஜானகி பெயர் போடவில்லை..
ராகதேவன் ராஜ்ராஜ் ரவி,வரப்போகும் க.பாட்ஸ் தரப்போகும் மது அனைவருக்கும் நன்றி..
https://youtu.be/Npi3gVwyCRU
kalnayak
5th September 2015, 05:11 PM
அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
kalnayak
5th September 2015, 05:13 PM
நூறு வருடங்கள் வாழ்ந்தும் 18 வயதிலேயே வாழ்ந்து வருபவர் ஆயிரம் பதிவுகள் இட்ட பின்பு, தான் பதினெட்டே பதிவுகள்தான் இட்டதாக ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்? வாழ்த்துகள் கலைவேந்தரே!!!
madhu
5th September 2015, 05:15 PM
வாசு ஜி...
குரலில் கொஞ்சம் மாற்றம் இருக்கிறது. ஜானகியோ எனும்படி இசைப்பதிவு ஆகி இருக்கலாம். ஆனாலும் அந்த "ண்டாட்டம்" ஒரிஜினல் ஈஸ்வரி ஸ்டைல்.. அதை யாராலும் காப்பி அடிக்கவே முடியாது. அதனால் அங்கேயே முடிவு தெரிஞ்சு போச்சு.
கனவு கண்டேன் கண்ணாவும் நிர்மலாவுக்குதான். கால் சரியில்லாத பெண் என்று நினைவு. எப்போதும் அந்த கண்ணன் பொம்மையை வைத்துக் கொண்டே இருப்பாராம். பரங்கிமலை ரயில்வே கேட்டருகில் நிர்மலா உட்கார்ந்து கண்ணன் விக்ரகத்தை நிமிர்ந்து பார்க்கும் போஸ்டர் ஏறக்குறைய ஆறு மாதம் ஒட்டிய இடத்திலேயே பளிச்சென்று இருந்ததாக்கும்....
vasudevan31355
5th September 2015, 06:19 PM
சின்னா!
லேட்டா வந்தாலும் அமர்க்களப்படுத்தி விட்டீரே அய்யா! விஸ்வரூபம் எடுத்து விட்டீரே!
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே
அதுவேதான். மயக்கி விட்டாய் சின்னக் கண்ணா! நெனச்சேன். ஒன்பதுல குருன்னும் போதே லஷ்மிராய் பேர் வரும்னு நெனச்சேன். ஏமாற்றவே இல்லை அய்யா!
//ஒருத்திக்கு நடனம்
ஒருத்தியுடன் பாடல்
ஒருத்தியுடன் ஊடல்
ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
ஒருத்தியுடன் அழுகை
மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
எல்லாம்
அந்த மாயக் கண்ணனின் லீலை
இருந்தும்
ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
எங்கே எனக் கண்ணால் வினவ
அவள்
ஷ்..கண்ணன் என்னுள்..
மனதிற்குள்..
செய்யாதே தொந்தரவு என..
மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை//
வாசுவினுள் சினனா போல.
'கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்' முழுப்பாடலையும் அளித்து விட்டேரே! நன்றி!
'ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ'
எங்க ஆளாக்கும். நான் யாருக்கும் விட்டுத் தர மாட்டேன். எப்படி போடப் போச்சு என்று உம்மை திட்டவும் மாட்டேன். போனாப் போகுது. இன்னிக்கு உங்க பேருக்கு ஜெயந்தி. அதான் விட்டுக் கொடுத்திட்டேன். ஹ ஹா
உன்னை எதிர்பார்த்தென் கண்ணா போட்டாச். முடியல. போடாம இருக்க. ஓய்... பணமா பாசமா படத்து வருஷமெல்லாம் சொல்றீரு. விக்கியை நம்பாதேயும். காலை வாரி விட்டுடும். இந்தி நம்பியார் பாட்டுக்கு தேங்க்ஸ்.
vasudevan31355
5th September 2015, 06:23 PM
யாரோ 'கல்' மனது கொண்ட 'நாயக'ர் இங்கே வந்திருப்பதாக உணர்கிறேன்.:) நான் முன்பு வாக்குறுதி கொடுத்தது போல அவருடன் இன்று (மட்டும்) பேசுவதாக இல்லை. எனக்கு மட்டும் கல் மனது இருக்காதா? இன்று கிருஷ்ண ஜெயந்தி. நல்ல நாள் என்பதால் அவரை மனதார மீண்டும் இங்கே வரவேற்கிறேன். பேச்செல்லாம் நாளைக்குத்தான். கடலூர் காரவுகளுக்கு கல் மனது என்று நானும் நிரூபிச்சுட்டேன்.:) இருந்தாலும் மனசு கேக்கல.
வாங்கோ கடலூர் நண்பா!
vasudevan31355
5th September 2015, 06:25 PM
மது அண்ணா!
'கனவு கண்டேன் கண்ணா' போஸ்டர் விவரங்களுக்கு நன்றி. அதே போல ஜானகி குழப்பத்தை தெளிவு படுத்தியதற்கும். ஜானகி குரலிலும் எங்க ஆள் பாடும். யார் அது? இல்லே யாருன்னு கேக்குறேன். பின்னே ராட்சஸி என்று ஏன் பெயர் வைத்தோமாக்கும்.
vasudevan31355
5th September 2015, 06:27 PM
//போஸ்டர் ஏறக்குறைய ஆறு மாதம் ஒட்டிய இடத்திலேயே பளிச்சென்று இருந்ததாக்கும்//
ஆடு, மாடு எதுவும் இல்லாத ஏரியா போல.:)
uvausan
5th September 2015, 06:37 PM
CK - குற்றால அருவியில் குளித்தது போன்று இருந்தது:-D - உங்கள் கவிதை மழையில் எல்லோரையும் நனைத்து விட்டீர்கள்:-D . தவறாக உங்கள் பதிவை புரிந்து கொண்டு விட்டேன் , சாரி --- என்ற வரிகளைத் வெகு நேரம் தேடினேன் - நேரம் தான் வீணாயிற்று:-D ---- கவிதைகள் அந்த மாய கண்ணனுக்கு ஒரு சிறப்பான புகழாஞ்சலி ..:-D.
PS :
"smiley" அதிகமாக உபயோகித்து எனக்கு பழக்கமில்லை - தேவை இல்லாத இடங்களில் use பண்ணியிருந்தால் கண்டுகொள்ளாதீர்கள் - என்னுடைய பதிவுகள் எல்லாமே ஜாலியான பதிவுகள் தான் ...
uvausan
5th September 2015, 06:39 PM
கல் நாயக் சார் - இந்த கோகுலத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி
uvausan
5th September 2015, 06:50 PM
இறைவன் நாம் வழிபடும் உருவங்களில் இல்லை ; எண்ணும் தூய எண்ணகளில் , செய்யும் காரியங்களில் , பழகும் நண்பர்களில் இருக்கிறான் . மதங்களுக்கும் , நம் ஆசாரங்களுக்கும் அப்பார்ப்பட்டவன் அவன் - சிலர் அவனை கணபதி என்கின்றனர் , சிலர் கிருஷ்ணன் என்கின்றனர் , சிலர் ஏசு என்று அழைக்கிறார்கள் , சிலர் அல்லா என்று பூஜை செய்கின்றனர் . நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டால் , இறைவனும் ஒருவானாகவே நமக்குத்தெரிவான் ...
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150831-WA0022_zpsqhkpxnob.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150831-WA0022_zpsqhkpxnob.jpg.html)
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150901-WA0000_zpsphuuec9n.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150901-WA0000_zpsphuuec9n.jpg.html)
vasudevan31355
5th September 2015, 08:57 PM
மதுண்ணா!
ஜெய், எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ஆர்.வாசு,லஷ்மி நடித்த படம் 'ஆசீர்வாதம்'. இன்று ஆசிரியர் தினம் என்பதால் இந்தப் படம் ஏனோ மனசில் ஓடியது. எப்போதோ ஒருமுறை ஏதோ ஒரு சானலில் எழுந்திருக்காமல் பார்த்தது.
சுப்பையாவின் சொந்த மகன் வாசு. படிப்பில் கவனம் இருக்காது. ஆனால் சுப்பையா மாணவன் ஜெய் படிப்பில் கெட்டி. நீங்க சொல்லும் வாத்தியாரய்யா மாதிரி சுப்பையா மாணவன் ஜெய் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவார். மகனை அலட்சியப் படுத்துவார். இதைக் கண்டு சொந்த மகன் எம்.ஆர்.ஆர்.வாசு கறுவுவார். இப்படி லேசாக கதை ஞாபகம் இருக்கிறது. ஜெய் பட்டம் வாங்கி சுப்பையாவிடம் ஆசீர்வாதம் வாங்குவது போன்ற போஸ்டரும் நினைவில் இருக்கிறது.
சில அற்புதமான பாட்டுக்கள். வழக்கம் போல ஜெய் பட புண்ணியத்தில்.
'இந்த நாள் நல்ல நாள்' என்ற அருமையான 'கோவை'யாரின் பாடல்
https://youtu.be/Xon9iOr58fk
ஒரிஜினல் சௌந்தர்ராஜனின் இன்னொரு அருமையான பாடல் சுப்பையாவிற்கு. மனசை அப்படியே கலங்கடிக்கும்.
'நெஞ்சம் நிறைய வரவேற்றான் நீ யாரென்று
அந்த நேரம் முதலே நினைக்கின்றேன் நான் யாரென்று
அந்நியன் போலே கேட்டானே நான் யாரென்று
அவனிடம் எப்படி சொல்வேன் நான் யாரென்று'
vasudevan31355
5th September 2015, 09:14 PM
இன்று ஆசிரியர் தினம். இந்த ஆசிரியர் ஒரு 'ஸ்கூல் மாஸ்டர்'. ஆனால் பாடலின் அப்லோடர் இவரை 'ஸ்கூல் டீச்சர்' என்கிறார்.:) பிள்ளைகளுக்கு 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதலாகும்' என்று பாடம் சொல்லி அறிவைப் புகட்டுவதைக் காணுங்கள்.
https://youtu.be/nPZnB0x0GI4
chinnakkannan
5th September 2015, 10:14 PM
CK - :-D . தவறாக உங்கள் பதிவை புரிந்து கொண்டு விட்டேன் , சாரி --- என்ற வரிகளைத் வெகு நேரம் தேடினேன் - நேரம் தான் வீணாயிற்று:-D ---- கவிதைகள் அந்த மாய கண்ணனுக்கு ஒரு சிறப்பான புகழாஞ்சலி ..:-D.
PS :
..
நன்றிங்க..
*
சிலப்பதிகாரத்தில் தன் மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு , சொல்லும் போது வேறு விதமாய்க் கூறி விடுகிறான் பாண்டிய மன்னன். அதனால் விளைந்தது விபரீதம்.
சினையவர் வேம்பன் தேரானாகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கு என்
தாழ் பூங் கோதை தன்கால் சிலம்பு
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென..
தாழ்ந்த மலர் மாலையுடைய அரசமாதேவியின் சிலம்பு ‘இவன் கூறிய கள்வன் கோவலன் கையில் இருக்குமானால், அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வருக” எனக் கூற எண்ணியவன் அவ்வாறு கூறாமல் “அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணர்க”. எனக் கட்டளையிட்டான் பாண்டியன்.//
இதே நிலமை தான் ரவி உங்கள் பதிவிற்கும்.. நிச்சயமாக அதை எழுதிய போது – பின்னால் இறையருள் என்றெல்லாம் நீங்கள் கூறினாலும் –உங்கள் மனதில் ஒன்றுமில்லை எனச் சொன்னாலும்- எழுதும்போது ஜஸ்ட் ஓ.கே.. நம்ம சி.கே. எதுவேணும்னாலும் சொல்லலாம் என்று தான் எழுதியிருந்தீர்…. அதைப் படிப்பவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்றெல்லாம் நினைக்கவில்லை.. எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் நான் எண்ணியவாறே தான்பட்டு என்னிடம் பி.எம்.மில் கோபப் பட்டார்கள்..
இப்படி இருக்கையில் நான் எப்படி உங்களிடம் ஸாரி சொல்ல இயலும்? விளையாட்டாய் நீங்கள் அதைக் கேட்கிறீர்கள்.. நானும் விளையாட்டாய் மறுக்கிறேன் ஓகேயா குரு..
இந்த குரு என்ற வார்த்தை நான் அன்றாடம் தினமும் உபயோகப் படுத்தும் வார்த்தை..ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒன்று கற்றுக் கொள்கிறோம்..என்னிடம் நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என எழுதியிருந்தீர்கள்..
நானும் கற்றுக்கொண்டேன்..இனி இன்னமும் ஒரிஜினலாக எழுத வேண்டும் என்று..அது எப்படி காப்பி அடிக்கிறேன் என்ற எண்ணம் ரவியைப் போன்ற எல்லாம் தெரிந்து எழுதுகின்ற,படிப்பறிவு மிக்க, மென்மையான பிறர்மனம் நோகவைக்காத நண்பர் மனதில் விளையாட்டாய்த் தோன்றியது என்று.. அதற்காகத் தான் நான் முன்பு எழுதியதில் தேடிப் படித்துப் பார்த்து இங்கு இட்டேன்..புதியதாக எழுதுவதையும் இடுவேன்
நீங்கள் இந்த வண்ணம் என்னிடம் நான் ஸாரி சொல்லவில்லைஎன ஜாலியாக வருத்தப் படாமல் இருந்திருந்தால் இந்த இடுகை வந்திருக்காது...
உங்களுக்காக நீங்கள் எழுதுகிறேன் என்று நீங்கள் ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள் - . . நான் எழுதுவது அப்படி இல்லை..எனக்காகவும்., எந்த கான்செப்டாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, படிப்பவர்களைப் படுத்தாமல் நன்றாக இருக்கவேண்டும், சில வருடம் கழித்துப்படித்தாலும் சுவையாக இருக்கவேண்டும் என்று தான் எழுதிப்பார்க்கிறேன்..ஒவ்வொரு தடவையும் கூடுதலான கவனத்துடன் எழுத முயற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன்..
இங்குள்ளவர்கள் ( நீங்கள் உட்பட) வித்தியாசமாக எழுதிப் பார்ப்பது அதனால் தான்.. தேடித் தேடி ரேர் சாங்க்ஸ் மக்கள் போடுவதும் அதனால் தான்..
என்ன புதியதாக எழுதவில்லை..எழுதவேண்டும் ரவி.. கொஞ்சம் ஆசீர்வதியுங்கள்..இப்போதைக்கு வாங்கிய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்..
குறள் என்ன ஆச்சு ரவி,..
நான் முன்பு எழுதிப் பார்த்த சில குறள்களைச் சொல்லட்டா..
*
*
முதல் சீரும் ஈற்றுச் சீரும் முரண்பட்டு இருக்கணுமாம் குறளில் (அதாவது ஆரம்பம் இலியானால வந்தா ஈற்றுச் சீர் நமீதால வரணும் smile emoticon ) கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்த்தேன்..
*
விரித்துச் சிரித்தாலே விண்வரை கண்ணாம்
திரித்தே உதட்டைக் குவி..
*
போலி பலவாறாய்ப் போனாலும் எப்போதும்
ஆழிபோல் பொங்கும் அசல்..
*
ஓடி உழைத்து உலகத்தில் புண்ணியங்கள்
தேடியே சேர்த்துநீ நில்
*
ஒல்லியாய் ஆக உழைத்தே இருந்தீரேல்
துள்ளிடும் நெஞ்சமும் குண்டு..
*
கதிரவன் வந்தால் கடலுள்ளே வீழ்ந்தே
மதியை இழக்கும் மதி
*
காட்டினில் மன்னர் கடுந்தவம் செய்திட
நாட்டமாய் விட்டிடுவார் நாடு..
*
vasudevan31355
5th September 2015, 10:21 PM
//தேடித் தேடி ரேர் சாங்க்ஸ் மக்கள் போடுவதும் அதனால் தான்..//
அண்ணா!
நடுவில நானும், மது அண்ணாவும் சிக்கிகினோமா?
chinnakkannan
5th September 2015, 10:28 PM
சின்னா!
லேட்டா வந்தாலும் அமர்க்களப்படுத்தி விட்டீரே அய்யா! விஸ்வரூபம் எடுத்து விட்டீரே!
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே
அதுவேதான். மயக்கி விட்டாய் சின்னக் கண்ணா! நெனச்சேன். ஒன்பதுல குருன்னும் போதே லஷ்மிராய் பேர் வரும்னு நெனச்சேன். ஏமாற்றவே இல்லை அய்யா!//
மிக்க நன்றி வாசு.. ஆயர்பாடி மாளிகையில் எஸ்பிபிங்கறப்பவே நெனச்சேன்.. நீர் படப்பாட்டுதான்போடுவீர்னு இதைப்போட்டுட்டேன்.. ஷமிக்கணும்ணா..
இந்த நாள் நல்ல நாளுக்கும் நன்றி..
அதென்ன பத்து விஜயகுமாரி பாட் போடுவீரோ வெவ்வெவ்வெவ்வே :)
chinnakkannan
5th September 2015, 10:28 PM
//தேடித் தேடி ரேர் சாங்க்ஸ் மக்கள் போடுவதும் அதனால் தான்..//
அண்ணா!
நடுவில நானும், மது அண்ணாவும் சிக்கிகினோமா?
இல்லீங்க..எல்லாரையும் தான் சொன்னேன்..:ஸீரியஸ் ஐகான்:
vasudevan31355
5th September 2015, 10:34 PM
//இதே நிலமை தான் ரவி உங்கள் பதிவிற்கும்.. நிச்சயமாக அதை எழுதிய போது – பின்னால் இறையருள் என்றெல்லாம் நீங்கள் கூறினாலும் –உங்கள் மனதில் ஒன்றுமில்லை எனச் சொன்னாலும்- எழுதும்போது ஜஸ்ட் ஓ.கே.. நம்ம சி.கே. எதுவேணும்னாலும் சொல்லலாம் என்று தான் எழுதியிருந்தீர்…. அதைப் படிப்பவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்றெல்லாம் நினைக்கவில்லை.. எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் நான் எண்ணியவாறே தான்பட்டு என்னிடம் பி.எம்.மில் கோபப் பட்டார்கள்..//
உங்கள் விளக்கம் அருமை சின்னா! உங்கள் வருத்தம் நன்றாகப் புரிகிறது. ரவியும் அப்படி சொல்லக் கூடியவர் அல்ல. ஆனால் தவறாக நினைக்கும்படி அமைந்து விட்டது துரதிருஷ்டவசமானது. உங்கள் மனம் இதனால் புண்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. சரி! ஓகே. லீவ் இட். இனி உங்களுக்குள் பனிப் போர் தேவையில்லை என்பது என் கருத்து. மன மாச்சர்யங்களை மறந்து மகிழ்ச்சியுடன் அதே நட்புடன் பதிவுகளை இட உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஏதாவது என்னுடைய கருத்து தவறாக இருந்தால் இருவருமே என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
அருமையான பதிவுகளை இருவரும் தொடர்ந்து அளித்து வருவதற்கு நன்றி!
chinnakkannan
5th September 2015, 10:35 PM
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்னு வாலிப வாலியில் வாலி எழுதியிருந்ததைப் படித்தேன்..
இனி வாலி சொன்னது அந்தப் புத்தகத்தில் இருந்து..:
தலைவன் பட வேலைகள் தாமதமாகிக் கொண்டே இருந்ததாம்..என்னவென்று கேட்டால் ம.தி வாலியிடம்..ஓய் நீர் தானே எழுதினீர் நீராழி மண்டபத்தில்... தலைவன் வாராமல் காத்திருந்தாள்னு..அதான் டிலே ஆகுது என்றாராம்..வாலி ம.தியிடம் “இல்லீங்ணா..தாமஸ் பிக்சர்ஸோன்னோ..அதான் தாமத பிக்சர்ஸுன்னு ஆகிவிட்டது” என ஏதோ சொல்லிச் சமாளித்தாராம்..
உயர்ந்த மனிதன் பாட்டு - முதலில் வாலி எழுதியது வெள்ளித் தட்டுத் தான் தங்கக் கைகளில்... ஏவிஎம் அவரைக் கூப்பிட்டு.. “கவிஞரே.. வெள்ளிங்கறது பணம் தட்டுங்கறது தட்டுப்பாடு..ஏன் இப்படி எழுதறீர் மாத்தும் என்றாராம்.. பின் அது வெள்ளிக் கிண்ணம் தா தங்கக் கைகளில் என மாறியதாம்..
இப்படிப் பட்ட வார்த்தைகளைத் தான் அறச் சொல் என்பார்களாம்..அவற்றைத் தவிர்க்க வேண்டும்.. எப்போதும் நல்ல சொல்லையே பேசவேண்டும்..அதுவும் நமது தமிழ் எப்படிப் பட்ட மொழி..
நன்றி: வாலிப வாலி நெல்லைஜெயந்தா தொகுப்பு
rajraj
5th September 2015, 10:42 PM
In your careers you experience a lot. Some incidents leave a lasting impression. Here is one from my teaching days.
One day after work I was walking towards my car in the parking lot. One of my students stopped me and said he wanted to talk to me. I asked him to see me in my office the next day. Then he said that it was not about the course. it was about me. I asked him to walk with me to my car. Then he said that I was the only professor who smiled at the students. I was surprised and shocked. I thanked him and he walked away. What does a smile cost? This was a student from the middle east (Saudi Arabia, I think). Foreign students need a little compassion. They are here far away from home and in a different culture. It reminded of my college days here and how I was treated ! :)
There are other incidents I remember.
raagadevan
5th September 2015, 11:20 PM
Happy Teachers' Day! :) On a lighter note, here's a "teachers special" movie song...
https://www.youtube.com/watch?v=iu12SVj7vhw
rajraj
6th September 2015, 02:12 AM
I.I.T. kanpur missed a very good teacher. That's what we can say.
Thanks Raghevendra ! :) Only later I understood why that happened. I wrote to them in January 68. They responded to my adviser in Sep 68 after I had accepted a position in the industry. My adviser suggested that I stick with the industry for five years and return to the university to teach or go to IIT,Kanpur. He responded to them telling them that I already accepted a job in the US ! That is the story in short. In fact it is a long story ! :) I think they were following theiir routine- advertise in May, call for interview in July and make an offer in Aug/Sep! Here we recruit year round!
uvausan
6th September 2015, 06:07 AM
காலை வணக்கம்
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Picture1_zpsybomueza.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Picture1_zpsybomueza.jpg.html)
uvausan
6th September 2015, 06:08 AM
நகைச்சுவை உணர்வு ஒரு வரம் ! ( தொடர்கிறது )
மற்றவங்க நமக்கு செஞ்ச நல்லதையெல்லாம் சுலபமாக நாம் மறந்துடறோம் . ஆனா அவங்க செய்த தீமைகள் நம்ம மனசிலே ஆழமாக பதிஞ்சு போயிடுது . அதுமட்டுமில்லே . பழிவாங்குவதற்கான தருணத்தை எதிர்பார்த்து மனம் காத்துகிட்டிருக்கு ! இதினாலே என்ன ஆவுது ? மனசிலே அமைதி இல்லே --- எப்பவும் பயந்து பயந்து வாழ்கிறோம் . நம்மவர்கள் சில பேர் பழிவாங்கற விதமே தனி .
ஒருத்தன் இன்னொருவனை போட்டு அடியோ அடின்னு அடிச்சிக்கிட்டிருந்தான் . அந்த வழியா வந்த ஒருவர் " ஏன்டா அவனை போட்டு இப்படி அடிக்கிறே ? " -ன்னார் .
" இவனைப் பழி வாங்கிறேன் " -ன்னான் அவன் .
" எதுக்காகப் பழி வாங்கறே ? " -ன்னார் .
" இவன் என் முகத்தை பார்த்து தேவாங்கு - ன்னு திடிப்புட்டான் சார் !" அப்படின்னான் .
" எப்போ திட்டினான் ?" -னு கேட்டார் அவர் .
" ஆறு மாசத்திற்கு முந்தி !" என்றான் அவன் .
" அதுக்கு ஏன் இப்ப அடிக்கிறே ?" -ன்னார் .
" நான் இன்னிக்குத்தான் சார் தேவாங்கை நேர்லே பார்த்தேன் !" - அப்படின்னான் அவன் ..
வாழ்க்கையிலே மகிழ்ச்சியும் , மன அமைதியும் வேணும்ன்னு நினைக்கிறவங்க , அடுத்தவங்க செய்த கெடுதல்களை மறந்துடணும் . அவர்கள் செய்த நன்மைகளை எப்பவும் மறந்து விடக்கூடாது .
https://www.youtube.com/watch?v=lPfUcBCYews
https://www.youtube.com/watch?v=wYyPpM_q7a0
https://www.youtube.com/watch?v=qe0i-cHYeNc
uvausan
6th September 2015, 06:14 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150419-WA0034_zpsqdnxqqvl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150419-WA0034_zpsqdnxqqvl.jpg.html)
இந்த குழந்தை கேட்கிறது - நான் ஒரு இந்துவா ? முஸ்லிம் ஆ ? இல்லை கிறிஸ்துவனா ?? - எவ்வளவு பேர்களால் தைரியமாக , மனத்தெளிவுடன் சொல்லமுடியும் , நீ இவர்களில் எதுவுமே இல்லை , ஒரு மனிதன் என்று ----- மத வேறுபாடுகள் மட்டுமே நம்மிடையே இல்லை என்றால் எவ்வளவு இன்பம் நம்மை எல்லாம் இன்னும் கட்டிப்போட்டிருக்கும் ????
uvausan
6th September 2015, 09:40 AM
Excellent interpration of Janamashtami!!!
The deeper meaning of Janamashtami|
The beauty in our ancient stories is that they were never made location-specific or time-specific. Ramayana or Mahabharata are not just events that happened a long time ago, they are happening everyday in our lives. The essence of these stories is eternal.
There is a deeper meaning to the story of Krishna’s birth too. Devaki symbolizes the body and Vasudev symbolizes the life force (prana). When prana rises in the body, joy (Krishna) is born. But the ego (Kamsa) tries to eliminate joy. Kamsa is Devaki’s brother which indicates that ego is born along with the body. A person who is happy and joyful does not create trouble for anyone. It is the one who is unhappy and emotionally wounded who ends up causing disruption. Those who feel injustice has been done to them end up being unjust to others out of their hurt ego.
The biggest adversary of ego is joy. Ego cannot survive and has to bow down where there is joy and love. A person can hold a very high position in society, but he melts in front of his own little child. When the child falls ill, however strong the person is, they feel a little helpless. Ego simply melts when confronted with love, simplicity and joy. Krishna is the epitome of joy, the quintessence of simplicity and the very source of love.
Devaki’s and Vasudev’s imprisonment by Kamsa signifies that when the ego takes over, the body feels like a prison. When Krishna was born, the prison guards fell asleep. The guards here are the senses which protect the ego because they are turned outward when awake. Inner joy sprouts in us when the senses turn inwards.
Krishna is also known as the butter thief. Milk is the essence of nourishment and curd is a cultured form of milk. When curd is churned, butter comes up and floats on top. It is nourishing and yet light, not heavy. When our intelligence is churned, it becomes like butter. When knowledge dawns in the mind, one gets established in one’s Self. Such a person remains unattached to this world and his mind does not sink in it. Krishna stealing butter is a symbolism depicting the glory of love. So attractive is Krishna’s charm and skill that he steals the minds of even the most dispassionate.
Why does Krishna have the peacock feather on his head? A king is responsible for the whole society and that responsibility can become a burden, which sits on the head as the crown. But Krishna fulfills all his responsibility effortlessly, like a game. A mother never feels taking care of her children is a burden. Similarly, Krishna wears his responsibility lightly and plays his roles colorfully, just like the peacock feather on his crown.
Krishna is the most attractive, joyful space within all of us. When there is no restlessness, worry or desire in the mind, you are able to get deep rest. And it is in deep rest that Krishna is born.
The message of Janamashtami is that it is time to bring a wave of joy in society. Become seriously joyful:):)
uvausan
6th September 2015, 09:51 AM
CK - இது உங்களுக்காக
https://www.youtube.com/watch?v=b_bwY89DXrQ
செந்தில் சார் உங்களுக்கு பிடித்த பாடலும் , நடிகரும்
https://www.youtube.com/watch?v=XkDPImBhfn8
மது சார் இது உங்களுக்காக
https://www.youtube.com/watch?v=HJXPseF4o3I
https://www.youtube.com/watch?v=B97apRB7Bpw
ராகவேந்திரா சார் / RD சார் இது உங்களுக்கு
https://www.youtube.com/watch?v=dfOuTx66bJU
ராஜ் ராஜ் சார் இது உங்களுக்கு
https://www.youtube.com/watch?v=mAP1ev_EZSQ
வாசு - இது உங்களுக்காக
https://www.youtube.com/watch?v=qeOPR2QNVF8
https://www.youtube.com/watch?v=3lkD7HlttAE
ராஜேஷ் இது உங்களுக்கு
https://www.youtube.com/watch?v=R_9-S_B8-Dw
வினோத் சார் / குமார் சார் / கலைவேந்தன் சார் - நம் எல்லோருக்கும் படித்த பாடல்
https://www.youtube.com/watch?v=2qAI__2gIc4
vasudevan31355
6th September 2015, 11:27 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
33
'ஒரு மல்லிகை மொட்டு'
'ரங்க ராட்டினம்'
அடுத்த பாலாவின் தொடரில் 'ரங்க ராட்டினம்' படப் பாடல். பாடல் என்றால் அப்படி ஒரு பாடல். பாடல் முழுக்க பாலாவின் ராஜாங்கம்தான். காதலியிடம் பாடும் மோகப் பாடலை பாலா கம்பீரத்துடன் வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பார். குழைவு பாதி, கம்பீரம் பாதி என்று பாடல் இவரது குரலில் களை கட்டும். பாடலின் துவக்க இசை மறக்கவே முடியாதது.
'ஒரு மல்லிகை மொட்டு' என்று பாலா குரல் எடுக்கும் போதே நம் மனம் சில்லெனப் பூத்து விடும். ஒவ்வொருமுறை 'மல்லிகை மொட்டு' என்று அவர் உச்சரிக்கும் சுகமே தனி. 'மழைத்துளி பட்டு' என்பதில் 'பட்டு' என்பதை அவர் பட்டும் படாதது போல இழுத்து வைத்து உச்சரிப்பது அருமை. அதன் பின்னாலேயே ஒலிக்கும் கிடாரும் பரம சுகம்.
தளிர் போன்ற இள மேனி
தொடும் ஆசை கொண்டு
குளிராமல் கொதிக்கின்ற
மனம் ஒன்று உண்டு
என்று விரகதாபத்தை கவிஞர் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்.
'உடலோடு உருவான பசி ஒன்று உண்டு'
எனும்போது காம உணர்வுகளை அமர்க்களமாக தன் குரலில் கொண்டு வருவார் பாலா.
'காவியத்தலைவி' வெற்றிக்குப் பின் சௌகார் ஜானகி சொந்தமாக எடுத்து சொதப்பி தோல்வி கண்ட படம். ஆனால் பாடல்களை அடித்துக் கொள்ளவே முடியாது.
இந்தப் படத்தை இதுவரை இதுவரை நான் பார்த்ததில்லை. பார்க்கும் வாய்ப்பு இன்னமும் கூடக் கிட்டவில்லை. ராகவேந்திரன் சாரிடம் போன் செய்யும் போதெல்லாம் அடிக்கடி 'இந்தப் படம் வந்து விட்டதா? கிடைக்குமா?' என்று கேட்பேன். இதுவரை இணையத்திலும் இப்படத்தைப் பற்றி தகவல்கள் இல்லையென்றுதான் நினைக்கிறேன்.
படத்தில் இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர் ரவிச்சந்திரன் ஆக இருக்க வேண்டும். அவர் திருடன் என்பது பாடலிலிருந்து நன்றாகத் தெரிகிறது. ('ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு') பின் மனம் திருந்தி தன் பிள்ளைக்கே காரோட்டியாய் வருவார் என்றும் இன்னொரு பாடல் மூலமாகத் தெரிகிறது.
ஆனால் பாடல்கள் அருமையோ அருமை. இசை 'மெல்லிசை மாமணி' வி .குமார் அவர்களா என்று யாராவது உறுதி செய்ய வேண்டும்.
ஏ.எம்.ராஜா, ஈஸ்வரி பாடிய,
'முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும்
உன் உள்ளம் என்னவோ'
பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.
சுசீலா பாடும் இன்னொரு பாடல் அதிகம் தெரியாதது.
'ஆத்தாடி பறக்குது காத்தாடி
ஆறேழு சிரிக்குது கூத்தாடி
அந்தப் பட்டம் பட்டமா
இந்தப் பட்டம் பட்டமா
ஆறேழு பட்டம் அந்தப்
பெண்ணுக்கல்லவா!'
மற்ற மேலதிக விவரங்களை ராகவேந்திரன் சாரும், மது அண்ணாவும் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஒரு மல்லிகை மொட்டு
மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
அதன் புன்னகை பட்டு
தன் மனம் கெட்டு
கொஞ்சிட வந்தது குளிர் கற்று
கொஞ்சிட வந்தது குளிர் கற்று
மல்லிகை மொட்டு
மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடை கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடை கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
தளிர் போன்ற இளமேனி
தொடும் ஆசை கொண்டு
குளிராமல் கொதிக்கின்ற
மனம் ஒன்று உண்டு
மல்லிகை மொட்டு
மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு
பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு
உடலோடு உருவான பசி ஒன்று உண்டு
விருந்தாக நீ உன்னைப் பரிமாறு இன்று
மல்லிகை மொட்டு
மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
https://youtu.be/SrTeN9Ll2wk
vasudevan31355
6th September 2015, 11:27 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
34
'தங்கத் தொட்டில் பட்டு மெத்தை'
'ரங்க ராட்டினம்'
இதே 'ரங்கராட்டினம்' படத்தில் பாலாவின் இன்னொரு கலக்கலும் உண்டு. முன்பு பார்த்தது காதல் உணர்வுகளை பிரதிபலித்தது என்றால் இது பாசத்தை அப்பட்டமாகக் காட்டுவது.
பிள்ளை என்று தெரிந்தும் சொல்லிக் கொள்ள முடியாமல் அவனுக்கே கார் டிரைவராய் இருக்கும் திருந்திய திருடன் தந்தையின் புலம்பல் இது. அருமையிலும் அருமை.
பாலா கொஞ்சமும் மாற்றாமல், மாறாமல் ஹஸ்கி வாய்ஸில் பாடலின் பொருள் அறிந்து சோகம் கவ்வ அழகாகப் பாடியிருப்பார். பரிதாபத்தையும் வரவழைப்பார்.
'வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான்' வரிகளில் 'சிரிப்பான்' என்பதை நொந்து சிரித்தபடியே பாடுவது ஏ கிளாஸ்.
மிக அருமையான பாடல். செமையாக ஹிட் அடித்ததும் கூட. பாடல் முழுதும் நம்ம்முடன் பயணிக்கும் பாலாவின் சோகம் மறக்க இயலாதது.
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
தன்னைத்ததானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை
தன்னைத்ததானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை
இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே
எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே
எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
கண்ணன் வந்தான் நண்பனுக்கு தேரோட்ட அன்று
கண்ணன் வந்தான் நண்பனுக்கு தேரோட்ட அன்று
தந்தை வந்தான் பிள்ளைக்காக காரோட்ட இன்று
வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு 'சிரி'ப்பான்
வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான்
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான்
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான் (பின்னால் மெல்லிய கிடாரின் பின்னணி)
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
தாலாட்டிலே
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்
http://www.inbaminge.com/t/r/Rangarattinam/
chinnakkannan
6th September 2015, 11:32 AM
ஹாய் குட்மார்னிங் வாசு..
ரங்க ராட்டினம் சிந்தாமணியில் பார்த்தது என நினைவு..படம் சுத்தமாக நினைவில்லை.ப்ளாக் அண்ட் வொய்ட் என நினைக்கிறேன்,, ரவிச்சந்திரன் தான்.. நானும் அதற்கப்புறம் பார்த்ததில்லை.
பாட்டு நல்ல பாடல்..கேட்டிருக்கிறேன் அடிக்கடி.. நன்றி
chinnakkannan
6th September 2015, 11:33 AM
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை நினைவிலில்லை வாசு..கேட்டு பின் எழுதுகிறேன்..
vasudevan31355
6th September 2015, 11:33 AM
சின்னா!
பி.எம். பார்க்கவும்.
vasudevan31355
6th September 2015, 11:38 AM
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை நினைவிலில்லை வாசு..கேட்டு பின் எழுதுகிறேன்..
ஆச்சர்யமாக இருக்கு சின்னா! நிச்சயம் கேட்டிருப்பீர்கள். கேட்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.
chinnakkannan
6th September 2015, 11:46 AM
நான் பதில் அனுப்பிவிட்டேன் வாசு..
chinnakkannan
6th September 2015, 12:10 PM
ரவி
//நம்மவர்கள் சில பேர் பழிவாங்கற விதமே தனி . // சூப்பர் :clap: ரொம்ப அருமையான விஷயம்..
நான் எழுதியதற்கு யெஸ் ஆர் நோ சொல்லாமல் இப்படி எழுதியதில் இருந்தே உங்களை வெளிப்படுத்திக் கொண்டு விட்டீர்கள்..
நிறைய நண்பர்களின் சொல்படி நான் உங்களை ஒதுக்கியிருக்கவேண்டும்.. என்னை நீங்கள் ஒதுக்குவதற்கு அதாவது இன்னோர் செய்வதற்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது.. விளக்கமும் கொடுத்திருக்கக் கூடாது
வெரி நைஸ் ஆஃப் யூ.. தொடருங்கள் உங்கள் எழுத்துக்களை.. சிந்தனைகளை, தெரிந்த வீடியோக்களை..
மிக மென்மையான மனசு உங்களுக்கு .யாரையும் நோக வைககாத மனசு.. ஒரு நண்பரைதவறு எதுவும் செய்யாத போது திட்டுவது உஙக்ளால் மட்டுமே முடியும்....
ஆனால் நான் ஒதுங்க மாட்டேன்.. எழுதிக் கொண்டே இருப்பேன் என்ன விதமான கமெண்ட்ஸ் நீங்கள் அடித்தாலும் சரி..
உங்க்ள் இடுகைக்கு இதுவரை நான் எதுவும் சொல்லவில்லை..பட் எனது விமர்சனங்கள் வ்ரும்.. எனது அறச்சீற்றத்தை நீங்கள் இனிமேல் பாருஙகள்..
அன்புடன் அன்பில்லாத ரவிக்கு
uvausan
6th September 2015, 12:51 PM
CK - இது என்ன வம்பா போச்சு?? - எது எழுதினாலும் , எப்படி எழுதினாலும் அந்து உங்களைப்பற்றித்தான் இருக்கும் என்று மீண்டும் என் மீது ஒரு பழியை சுமத்துகிறீர்கள் . குறிப்பாக உங்களிடம் இருந்து நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை . சொல்லாத கருத்துக்கள் , உங்களை மன வேதனை படுத்திருக்கும் என்று அறிந்ததால் " unconditional apology " வேறு கேட்டிருந்தேன் . என்னை ஒதுக்கச்சொல்லும் அளவிற்கு உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி . இந்த நகைச் சுவை உணர்வு வேண்டும் என்பதை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வில்லை என்று நினைக்கிறேன் - நல்ல கருத்துக்கள் என்பதால் பதிவிட்டேன் - சத்தியமாக உங்கள் நினைப்பே எனக்கு பதிவு இடும் போது வரவில்லை - நீங்களாக கற்பனை செய்துகொண்டு என்னென்னவோ எழுதுகிறீர்கள் . எனக்கும் பல நல்ல நண்பர்கள் உள்ளனர் - இந்த திரியினில் இனி தொடர்வதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற அவர்களின் அறிவுரையை இது வரையில் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை . இப்பொழுது உங்கள் பதிவினால் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது . இங்கு எல்லோரையும் என் சகோதர்களாகத்தான் , நல்ல நண்பர்களாகத்தான் நினைக்கிறேன் - நீங்கள் உட்பட - இனிமேலும் அன்பே இல்லாத என்னிடம் இருந்து அந்த உறவு முறை கண்டிப்பாக தொடரும் . நீங்கள் தொடருங்கள் - உங்களுக்கு போட்டியாகவோ , தொந்தரவாகவோ இனி நான் இங்கு வரமாட்டேன் - நன்றி
chinnakkannan
6th September 2015, 01:25 PM
CK - இது என்ன வம்பா போச்சு?? - எது எழுதினாலும் , எப்படி எழுதினாலும் அந்து உங்களைப்பற்றித்தான் இருக்கும் என்று மீண்டும் என் மீது ஒரு பழியை சுமத்துகிறீர்கள் . குறிப்பாக உங்களிடம் இருந்து நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை . சொல்லாத கருத்துக்கள் , உங்களை மன வேதனை படுத்திருக்கும் என்று அறிந்ததால் " unconditional apology " வேறு கேட்டிருந்தேன் . என்னை ஒதுக்கச்சொல்லும் அளவிற்கு உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி . இந்த நகைச் சுவை உணர்வு வேண்டும் என்பதை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வில்லை என்று நினைக்கிறேன் - நல்ல கருத்துக்கள் என்பதால் பதிவிட்டேன் - சத்தியமாக உங்கள் நினைப்பே எனக்கு பதிவு இடும் போது வரவில்லை - நீங்களாக கற்பனை செய்துகொண்டு என்னென்னவோ எழுதுகிறீர்கள் . எனக்கும் பல நல்ல நண்பர்கள் உள்ளனர் - இந்த திரியினில் இனி தொடர்வதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற அவர்களின் அறிவுரையை இது வரையில் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை . இப்பொழுது உங்கள் பதிவினால் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது . இங்கு எல்லோரையும் என் சகோதர்களாகத்தான் , நல்ல நண்பர்களாகத்தான் நினைக்கிறேன் - நீங்கள் உட்பட - இனிமேலும் அன்பே இல்லாத என்னிடம் இருந்து அந்த உறவு முறை கண்டிப்பாக தொடரும் . நீங்கள் தொடருங்கள் - உங்களுக்கு போட்டியாகவோ , தொந்தரவாகவோ இனி நான் இங்கு வரமாட்டேன் - நன்றி
மீண்டும் அன்பில்லாத ரவி..
ஒதுங்குவது தவறு..தொடர்ந்து எழுதி சந்தியுங்கள்.. நீங்கள் எனக்குப் போட்டியோ தொந்தரவோ இல்லை.
. இங்கு எழுதுவதில் அர்த்தமில்லைஎன்று எந்த நண்பர்கள் சொன்னார்கள் எனச் சொல்லவும் முடிந்தால்.
அவர்கள் பெயரைச் சொல்ல வேண்டாம் எனில் சரி பரவாயில்லை ..எதனால் உங்களை எழுதவேண்டாம் என்று சொன்னார்கள், இங்கு உங்களை யார் என்ன கிண்டல் செய்தார்கள் - எனச் சொல்லவும்..
ஏனெனில் அவர்கள் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்குமில்லையா.. இழை போரடிக்கிறதா..நான், வாசு, மது, ராஜ்ராஜ், ராஜேஷ்,எஸ்.வி, கலை, ராகவேந்தர்,கல் நாயக், ஆதிராம் எல்லோரும் கரெக்ட் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்.. (அவர்களைக் கேட்காமலேயே இதை எழுதுகிறேன்)
ச்சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என இஷ்டத்திற்குச் சொல்ல வேண்டாம் ரவி.. என்பதிவினால் விலகுகிறேன் என்றெல்லாம் சொல்லாதீர்கள்..உங்கள் பதிவுகளினால் தான் நீங்கள் விலகுகிறீர்கள் எனச் சொல்கிறீர்கள்..
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்..
உங்களிடம் எழுதியிருந்தேன் பி.எம்மில் நினைவிருக்கிறதா.. இங்கேயே நான் வரப் போவதில்லை.. வேறு இழைகளுக்குச் செல்கிறேன் என..பிகாஸ் நீங்கள் என்னால் மனம் நொந்ததாக எழுதியிருந்தீர்கள்.. எதுவுமே நான் சொல்லாத போது..எதனால் வந்தேன்.. எனில் இந்த ச்சூழல் எனக்குப் பிடிக்கும்..உங்களுக்கும் அப்படியே
நகைச்சுவை உணர்வான கதைகள் போடுவதாக நீங்கள் நினைப்பது உங்கள் நினைப்பு.. ஆனால் ஒரு ஆள் உங்களுக்கு ப் பதில் சொல்லி மாய்ந்து மாய்ந்து எழுதியிருந்தால் அதை ஜஸ்ட் லைக் தட் இக்னோர் செய்துவிட்டு முந்தா நாள் கிடைக்காத ஓணானை இப்ப அடிக்கிறேன் என்றெல்லாம் எழுதி விட்டு ச்சும்மா எழுதறேன் என்றால்..ஐயாம் சாரி.. என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது..மற்றவராலும்..
தைரியமாக வந்து உங்கள் பத்துப்பாட்டு வீடியோக்கள் மற்ற விஷயங்க்ளைத்தொடருங்கள்..
யார் என்ன எழுதினாலும் இன்னும் எழுதுங்கள் என்று ஊக்குவிப்பதில் முதலானவன் நான்.. வாசு முதலான மற்ற்வர்களும் அப்படியே..
தவறுகளை அப்படியே சுட்டியும் காட்டுவேன்..எழுத்துப் பிழை என முன்பொருமுறை சொன்ன போது அது உங்களுக்குப் பிடிக்கவில்லை..இன்னமும் அப்படியே தான் தொடர்கிறீர்கள்.. உதா: இருக்கிண்டீர்கள் தவறு இருக்கின்றீர்கள்..சரி..
மானாவாரியாக வீடியோ க்ளிப் ப்ளஸ் நெட்டில் எடுத்தது, ஸ்லோகங்கள் கருவின் கரு தந்தை என எடுத்து வீடியோபடஙக்ளை த் திரும்பத் திரும்பப் போட்டதினால் - இவை எல்லாம் சொல்லாமல் ரவி கொஞ்சம் இடைவெளி விடுங்கள் என நான் சொன்னது உங்களுக்கு மாபெரும் தவறாகப் போய்விட்டது.. அதற்கு ஆயிரத்தெட்டு குத்தல் பேச்சு வேறு என்னை மட்டுமின்றி சி.செயையும் கலாய்த்தீர்கள்..குளியலறை எல்லாம் எழுதுகிறார்கள் என்று..அவர் நிறுத்தியும் விட்டார்..இப்பொழுது தற்காலிகமாக நின்றும் விட்டார்..
இந்த மண்டப எழுத்திற்கு நான்பதில் கொடுக்க ஒரு நாள் தாமதம் செய்த போது என்ன சொன்னீர்கள்..இங்கும் கோப தாபமெல்லாம் இருக்கின்றது என்றீர் கிண்டலாக.. நினைவிலில்லையா
நேற்று வாசு ஒரு கண்ணன் பாட்டு ந.தி போட்டார்..அவரே சொல்லியிருக்கிறார் வீடியோ போட்டால் டவுன்லோட் ஆக நேரம் பிடிக்கிறது என்று.. என்ன செய்தீர்கள்.. எத்தனாவது முறை அந்தப் பாடல்கள் போடுகிறீர்கள் என்று யோசித்தீர்களா..
நானும் ந.தியின் ரசிகன் தான்..உங்கள் அளவு, மற்றவர்கள் அளவு இல்லாவிட்டாலும் வெகு தம்மாத்தூண்டு ரசிகன்.. ஆனால் ஏன் போடுவதில்லை அடிக்கடி.
உங்கள் உற்வு முறை - நண்பன் என்று நீங்களே சொல்லியிருப்பது உண்மையானால் மறுபடி வாருங்கள்..நீங்கள் சொல்வது போல உங்களுக்காகவே எழுதி இங்கு இடுங்கள். தவறு இருப்பின் எழும் விமர்சனங்களை எதிர் கொள்ளுங்கள்..
அன்புடன் அன்பில்லாத ரவிக்கு..
madhu
6th September 2015, 07:31 PM
வாசு ஜி..
ரங்கராட்டினம் படம் பார்த்ததில்லை. ஆனால் இரண்டு சௌகார் ஜானகிகள். ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் என்று இரு ஹீரோக்கள்.. "முத்தாரமே" பாடல் ஜெமினிக்கும் படித்த பணக்கார சௌகார் ஜானகிக்குமாக இருக்கலாம். இன்னொரு சௌகார் பைத்தியம். "காத்தாடி வாங்க காசு கொடுப்பியா" என்று விவிதபாரதி விளம்பரத்தில் குரல் கொடுப்பார். ஆத்தாடி பறக்குது காத்தாடி என்று பாடும் அவர் பைத்தியமாக இருக்கும்போது ஒரு மழை நாளில் ஒரு மல்லிகை மொட்டு பாடும் ரவியை சந்தித்திருக்கலாம். திருடனான ரவியை மணம் புரிந்தபின் ரவி போலிசில் சிக்கியிருக்கலாம். மீண்டு வந்து பார்க்கையில் பைத்தியம் தெளிந்து ஜெமினி வீட்டில் தங்கி இருக்கலாம். அவரிடமே டிரைவர் வேலை பார்க்கும் ரவி "தங்கத் தொட்டில்" பாடியிருக்கலாம். கடேசியில் ராட்டினம் தரைக்கு வந்து எல்லாம் சுபமாக முடிந்திருக்கலாம்.
இதெல்லாம் என் ஹேஷ்யம்தான்.. பாடல்களை வைத்துக் கொண்டு கதையை ஜோடித்தேன் :)
chinnakkannan
6th September 2015, 09:29 PM
//இதெல்லாம் என் ஹேஷ்யம்தான்.. பாடல்களை வைத்துக் கொண்டு கதையை ஜோடித்தேன்// ஹை..நல்ல கதையாய் இருக்கே மதுண்ணா.. .. கபாலி டிஸ்கஷன்ல கலந்துக்குங்கோ!.. இப்படி சொன்னா விட்டுருவோமா.. ஒழுங்காகப் படத்தைத் தேடிக் கண்டுபிடித்து படம்பார்த்துக் கதை சொல்க..
ரங்க ராட்டினம் எனத் தேடினால் ராட்டினம் படம் தான் வருகிறது.. நேற்று கிருஷ்ண ஜெயந்தி எல்லாம் கொண்டாடியாச்சா..
*
இன்று தான் எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி..
டயட்டில் இருப்பதால் நிறையச் செய்யவில்லை.. சீடை, வெல்லச்சீடை, தட்டை,பாதாம் கீர் மட்டும் தான்.. முதல் மூன்றையும்- ஸ்ரீ ராமன் போல் - இந்த டயட் இருக்கும் வரை இவற்றைச் சிந்தையாலும் தொடேன் என்றிருக்கிறேன்..தவிர...என்னன்னாக்க...
காலையிலிருந்து கொஞ்சம் விரத டைப்பாய்த் தண்ணீர் குடித்தேன்..ஈவ்னிங்க் வந்து பசி..இரண்டு கொய்யாக்காய்கள் உண்டபிறகு பசி அடங்கியது..என் தாய் தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்..கொஞ்சம் கொசுவர்த்திச் சுருள் வைத்துப் புகை புகையாய்ப் பின்னால் போனால்..
*
கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் நாளே அம்மா ஊறப்போட வேண்டியதெல்லாம் ஊறப் போட்டுவிடுவாள்..மாவு மெஷின் போன்ற சின்ன வேலைகள் எனக்கு..மிக்ஸி க்ரைண்டர் எல்லாம் வீட்டில் நுழையாத காலம்..வெகு சின்னக் கண்ணன்..எட்டு ஒன்பது வயது வைத்துக்கொள்ளுங்களேன்..
அதி அதிகாலையிலேயே எழுந்து குளித்து மடியாய் எல்லாவித பட்சணங்களும் ஒண்டி ஆளாய்ச் செய்வார் அம்மா.. அப்பா குளித்து கடை சென்றுவிட்டு மாலை ஆறுமணிக்கே கடை பூட்டி வந்துவிடுவார்..வந்து குளித்து சாலிக்கிராமத்தை எடுத்து பூஜை..
சொல்ல மறந்துவிட்டேன்.. மற்ற நாட்களில் எல்லாம் சந்தையில் சுலபமாகக்கிடைக்கும் நாவற்பழம் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிடைக்காது கொஞ்சம் அலைந்து திரிந்து வாங்கிவருவார் இரண்டாவது சகோதரர்.. (கொஞ்சம் வளர்ந்தபின் நான் போய்வந்திருக்கிறேன்)
பின் பூஜை.. ஒன்றரை மணி நேரம் நடக்கும்..பாலகிருஷ்ணனின் படம் (ரவிவர்மாவா வேறு யாரோ நினைவிலில்லை) வெள்ளி டப்பாவிலிருந்து சாலிக்ராமம் திறந்திருக்க அதில் பால்விட்டு அபிஷேகமா என நினைவிலில்லை..
பின் அம்மா பண்ணிய பட்சணங்கள் ஓமப்பொடி, தேன்குழல், முறுக்கு, தட்டை, சீடை, வெல்லச்சீடை,சுக்குவெண்ணெய், பழங்களில் நாவற்பழம்,ஆப்பிள், திராட்சை, கொய்யாப்பழம்,ஆரஞ்ச் வாழைப்பழம் இன்னும்பல எல்லாவற்றையும் நைவேத்தியம் செய்வார்.. நான் சகோதர சகோதரிகள் புடை சூழ நின்றிருப்பேன்..கண் மட்டும் பட்சணங்களில்..
கடைக்குட்டி என்பதனால் பூஜை முடித்து சேவித்து அட்சதைஎல்லாம் வாங்கிய பின் எனக்குத்தான்முதல் மரியாதை..பெருமாள் தேர்த்தம், சுக்குவெண்ணெய் பின் அம்மா எல்லாருக்கும் தட்டு கொடுத்துஎடுத்துக் கொள்ளச் சொல்வார்..(பட்சணம் கொஞ்சமா சாப்பிடுங்கடா..ராத்திரிக்கு(அப்போதே எட்டு ஆகியிருக்கும்) சாப்பிடணும்..
அப்பாவும் கொஞ்சம் ஒரு தட்டை சீடை வாயில் போட்டுக்கொண்டு அம்மாவிற்கும் கொஞ்சம் கொடுக்க- அது தான் அவர்கள் இருவரும் உண்ணும் முதல் உணவு அன்று..பின்னும் கூட கொஞ்சம் குறைவாகத் தான் இருவரும் சாப்பிடுவார்கள்,.
ம்ம்..அந்த நாளும் வந்திடாதோ..
*
ஊர்விட்டு வந்துபலவருடங்கள் போனாலும் கிருஷ்ணன் பிறந்த நாள் விசேஷம் தான்..வரையப்பட்ட குட்டிக்கால்கள் எல்லா இடத்திற்கும் சென்று வருவது ஒரு அழகு..
சொல்ல மறந்துவிட்டேன்..மதுரை எட்டுகட்டு வீட்டில் என் அம்மாவும் காலிடுவார்..அக்காக்களும் இட்டிருக்கிறார்கள்.. சட்டையே செய்யாமல் விளையாடி வந்த காலால் மாக்கால்கள் மீது அழித்தால் கோபம் வந்து அக்காகக்ள் கத்துவர்..இந்தக் கண்ணாவப்பாரேன் மிதிச்சுட்டுப் போறான்..போடி.. மறுபடி இரு..குழந்தையைத்திட்டாதே எனக் கைவேலை பார்த்துக்கொண்டே பதில் வரும்..
ம்ம்.. அந்த நாளும் வந்திடாதோ..
*
https://youtu.be/xx6mEHPaKIw
vasudevan31355
6th September 2015, 09:50 PM
தன்னைத்ததானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை
மது அண்ணா!
சௌகார் சுய நினைவு இல்லாதிருந்திருப்பாரோ! ரவிக்கும், அவருக்கும் ஏற்பட்ட உறவு ஏதோ ஒரு விதத்தில் மறந்து போய் ரவியை அவர் மறந்திருக்கக் கூடுமோ!
புலம்ப விட்டுட்டாங்களே!:) எப்படியாவது பிடிப்போம். ராகவேந்திரன் சார் பாட்டுப் புத்தகம் வச்சிருந்தா அதுல கதைச் சுருக்கம் இருக்கும் இல்லே! ஒரு ஸ்டில் கூட கிடைக்கலையே! என்ன இது நமக்கு வந்த சோதனை!:) அதுவும் இப்போ 1971 ல வந்த படம்தான்.
ஒருவேளை முரளி சார் பார்த்திருப்பாரோ! சின்னா பார்த்துட்டு ஞாபகம் இல்லேன்னு கையை ஈஸியா விரிச்சுட்டார். 'ஆசீர்வாதம்' கரெக்ட்டா? 'நெஞ்சம் நிறைய' பாடலைப் போடுவீர்கள் தானே!
vasudevan31355
6th September 2015, 09:54 PM
ராகவேந்திரன் சார்,
தங்களின் பங்களிப்பை தொடர வேண்டுகிறேன். அரிய பொக்கிஷப் பாடல்களை அள்ளித் தந்த நீங்கள் இப்போது திரிக்கு வருவது குறைந்து விட்டதே. தயவு செய்து தங்கள் பொன்னான அற்புத பதிவுகளை தினமும் தந்து நாங்கள் மகிழ்வுற தொடர வேண்டுகிறேன். நன்றி! அப்படியே 'ரங்க ராட்டினம்' பற்றியும்.....
chinnakkannan
6th September 2015, 09:57 PM
ஆச்சர்யமாக இருக்கு சின்னா! நிச்சயம் கேட்டிருப்பீர்கள். கேட்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.
கேட்டுட்டேன்னா.. கேட்டிருக்கேன் நினைவு வந்துடுத்து..
பாட்டு படத்துல ரவிச்சந்திரன் பாடற பாட்டுன்னு நினைக்கறேன்..
தன்னைத்ததானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை
பைத்திய செள மயங்கியிருந்தப்ப உணர்ச்சி வசப்பட்டுருப்பாரோ.. பின் ஏதோ காரணத்தினால் ரவிச்சந்திரன் பிரிய இங்கோ செளக்கு பிரசவம் ஆகிப் பைத்தியம் தெளிய..இபபடி இருக்குமோ..ஆனா..ரவிச்சந்திரன் காதலிச்சது புத்திசாலியான செளகார் (ரெண்டு செளகார்னு சொல்றீங்களே) ம்ம் என்னவோ போங்க.. :)
vasudevan31355
6th September 2015, 09:58 PM
//ரங்க ராட்டினம் எனத் தேடினால் ராட்டினம் படம் தான் வருகிறது//
நாங்கதான் அவஸ்தைப் பட்டுட்டோம் இல்லே.:) அப்புறம் ஏன்? இருந்தா ஏன் எழுத்துப் பதிவோடு விடறோம்? இருந்தாலும் உங்க முயற்சியைப் பாராட்டறேன் சின்னா!:)
vasudevan31355
6th September 2015, 10:00 PM
//பைத்திய செள மயங்கியிருந்தப்ப உணர்ச்சி வசப்பட்டுருப்பாரோ//
இன்னைக்கும் கரீட்டா உம்மை நிரூபிச்சிட்டீரே!:)
vasudevan31355
6th September 2015, 10:03 PM
பைத்திய செள மயங்கியிருந்தப்ப உணர்ச்சி வசப்பட்டுருப்பாரோ.. பின் ஏதோ காரணத்தினால் ரவிச்சந்திரன் பிரிய இங்கோ செளக்கு பிரசவம் ஆகிப் பைத்தியம் தெளிய..இபபடி இருக்குமோ..ஆனா..ரவிச்சந்திரன் காதலிச்சது புத்திசாலியான செளகார் (ரெண்டு செளகார்னு சொல்றீங்களே) ம்ம் என்னவோ போங்க..
படம் பார்த்த நீர் கொஞ்சம் மூளையைக் கசக்கி கதை சொல்வீர் எனப் பார்த்தால் புதுக் கதையா திரிக்கிறீர்?:)
'மீரா'வையெல்லாம் நல்லா ஞாபகம் வச்சிருக்கீர்.:) ராட்டினத்தில் கோட்டை விட்டுட்டீரே!
chinnakkannan
6th September 2015, 10:13 PM
//'மீரா'வையெல்லாம் நல்லா ஞாபகம் வச்சிருக்கீர். ராட்டினத்தில் கோட்டை விட்டுட்டீரே!// ஓய்.. படுத்திட்டீர்ங்காணும் என்னை..:)
வாழ்க்கையில செளகார்ஜானகி மூவீஸ்னு போட்டு யூட்யூபில தேடுவேன்னு நினச்சேபார்க்கலை.. பன்னிரண்டு பக்கம் பொறுமையா ( நற நறன்னு) பாத்துட்டுக் கிடைக்காம வர்றேன்..ம்ம் வாட்டு டூ ..வி.வில் வெய்ட் ஃபார் ராகவேந்தர்..
சொல்ல மறந்துட்டேன்.. இந்த அக்கா தங்கை படம் எப்படி இருக்கும்..:)
rajraj
6th September 2015, 10:13 PM
chinnakkaNNan: I think I am going to write a song with the opening line, " madhurai nagaril kaNNan vaLarndha andha naaLum vandhidaadho"! :)
chinnakkannan
6th September 2015, 10:14 PM
chinnakkaNNan: I think I am going to write a song with the opening line, " madhurai nagaril kaNNan vaLarndha andha naaLum vandhidaadho"! :)
ஓ.. பேஷா எழுதுங்களேன்.. தாங்க்ஸ் ராஜ் ராஜ் சார்..:)
vasudevan31355
6th September 2015, 10:38 PM
//
சொல்ல மறந்துட்டேன்.. இந்த அக்கா தங்கை படம் எப்படி இருக்கும்..:)
நிஜமாவே நல்ல படம் சின்னா! தேவர் பிலிம்ஸ் படத்தில தப்பி வந்த ஒரு சில நல்ல படங்கள்ல இதுவும் ஒன்னு. சௌகார், விஜயா நடிப்பு கொடி கட்டும். ஜெயசங்கரே நல்லா நடிக்க முயற்சி பண்ணியிருப்பார். மேஜரும் நன்றாகப் பண்ணியிருப்பார்.
பாட்டெல்லாம் தூள். சங்கர் கணேஷ் கலக்கல்.
'குருவிகளா குருவிகளா.... உல்லாசக் குருவிகளா' (காலேஜ் கேரோ சாங்) இதில் ஒரு வரி வரும். 'பாட்டிக்குப் பவுடரும் ஏன்? ஏன்?
'பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா' (சீர்காழியின் டாப் ரகம்)
'ஆடுவது வெற்றி மயில்' (செம டூயட். இந்தப் பாட்டின் மேல் பைத்தியமே எனக்கு)
'மாறி வரும் சொசைட்டி' ராட்சஸி முத்திரை....(ராகவேந்திரன் சாருக்கு ரொம்பப் பிடிக்கும்)
அவசியம் பாருங்கள் சின்னா! நல்ல மூவி. 100 நாள் ஓடின வெற்றிப் படமும் கூட.
படுக்கப் போற நேரத்தில வேலை வச்சுட்டீரே!:) விஜயகுமாரி பாட்ட இன்னும் 5 ஆட் பண்ணிடுறேன்.:)
குட் நைட் டு ஆல்.
chinnakkannan
6th September 2015, 10:47 PM
நிஜமாவே நல்ல படம் சின்னா! தேவர் பிலிம்ஸ் படத்தில தப்பி வந்த ஒரு சில நல்ல படங்கள்ல இதுவும் ஒன்னு. சௌகார், விஜயா நடிப்பு கொடி கட்டும். ஜெயசங்கரே நல்லா நடிக்க முயற்சி பண்ணியிருப்பார். மேஜரும் நன்றாகப் பண்ணியிருப்பார்.
// ஓ.. அப்படியா ரொம்ப தாங்க்ஸ் வாசு.பார்க்கிறேன்... நன்னா சமர்த்தா தூங்குங்க.. குட் நைட் ( 5 விகே எனக்க்கு வேண்டாம்ப்ளீஸ் :) )
rajraj
7th September 2015, 04:02 AM
September 7th is Labor Day in the US. To celebrate here is a song from AaLukkoru Veedu:
Seyyum Thozhile Dheivam......
http://www.youtube.com/watch?v=OT_94-mcgUw
raagadevan
7th September 2015, 09:31 AM
https://www.youtube.com/watch?v=aDA_QfJwXF0
madhu
7th September 2015, 10:17 AM
மது அண்ணா!
'ஆசீர்வாதம்' கரெக்ட்டா? 'நெஞ்சம் நிறைய' பாடலைப் போடுவீர்கள் தானே!
இந்தாங்கோ... புடிங்கோ
https://www.youtube.com/watch?v=YEQLZpJyOOE
eehaiupehazij
7th September 2015, 12:12 PM
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பதிவர்கள் பலவிதம் (பதிவுகள்) ஒவ்வொன்றும் தனிவிதம் .....
மனதை மயக்கும் நமது மதுர கான திரி அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஈர்த்து வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது பேதங்கள் தேவையில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து......
பதிவுகளுக்கு விமரிசனங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே ....தனிப்பட்ட முறையில் யாருடைய உணர்வுகளும் புண்படுத்தப் படாதவரை!!
இதுவரை பெரும்பாலும் நாம் முகமறியா நண்பர்களே !
பேதங்கள் தவிர்ப்போம் ....திரிமாண்பு காப்போம்! யாரும் யாருக்கும் போட்டியாளரோ பங்காளியோ பகையாளியோ விரோதியோ இல்லையே!!
eehaiupehazij
7th September 2015, 12:35 PM
புதியன காணலும் பழையன பேணலும்
புதுமைகள் பல்கிப் பெருகி வரும் யுகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைமையும் போற்றிப் பாதுகாத்திடல் அவசியமே!
காணற்கரிய பழைமைச் சிறப்பு மிக்க பொருட்களின் பின்னணியில் பொங்கிப் பெருகிய மதுர கானங்கள்
PART 1
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் !
பெட்ரோமாக்ஸ் ஒளியில் சிதறும் மதுர கானக் கீற்றுகள்
ஒளிரும் விளக்குகள்தான் எத்தனை வகை !!
அகல்விளக்கு, சிம்னிவிளக்கு, குத்துவிளக்கு, லாந்தர்விளக்கு, டார்ச் லைட் ...பெட்ரோமாக்ஸ் லைட்.....சீரியல் லைட், எமர்ஜன்சி லைட்....கலங்கரைவிளக்கு......மெழுகுவர்த்தி விளக்குகள்......விட்டு விட்டு எரியும் மெர்குரி விளக்கு..... எல்லாமே ஒளிவிளக்கே!
இருந்தாலும் பண்டிகை திருமண விழா ஊர்வலங்களில் மனிதரால் தோளில் சுமந்து செல்லப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் பெருமையே தனிதான்!
இன்று ஜெனரேட்டர் வழி ஒளியுமிழும் விளக்குகள் பிரபலமடைவதற்கு முன் பெட்ரோமாக்ஸ் விளக்குகளே நமது தேவையை ஈடு செய்தன!!
வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி மூலம் பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது !
இன்றும் பழமையை விட்டுத்தராது பாரம்பரிய முறைகளே மேல் என்று வாதிடுவோரெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும்'' ரக மனிதராகவே வகைப்படுத்தப் படுகிறார்கள் !
முதலில் பெட்ரோமாக்ஸ் லைட் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள ...
https://www.youtube.com/watch?v=VtnSkahpsGo
https://www.youtube.com/watch?v=YpS9AkgHCo0
https://www.youtube.com/watch?v=OVsncWv63FE
அரண்மனை படத்தில்
[url]https://www.youtube.com/watch?v=eY3V9C7gxbc
காலமெல்லாம் காதல் வாழ்க
https://www.youtube.com/watch?v=G6VwplX5kjQ
NEXT : வகைவகையான செல்போன்கள் சந்தைக்கு வந்து இன்று மனித சமூக நாகரிக வாழ்வின் கவசகுண்டலமாக மாறிவிட்ட போதும் பட்டனை அமுக்கும் விரல்விட்டு எண்வளையம் சுற்றும் ஆரம்பகால லேண்ட்லைன் போன்களே வேண்டும் என்று அடம் பிடித்தால் எப்படி?! அந்த போன்கள் எப்படி இருக்கும் என்பதை அதன் மதுரகான பாடல் பரிமாற்ற பயன்பாடுகளை இந்தத் தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது திரை நாயகரின் தீர்க்கதரிசனமான நோக்கம்!
madhu
7th September 2015, 01:32 PM
சிவாஜி செந்தில் ஜி..
படத்தின் பெயரிலேயே வெளிச்சம் கொண்ட "கியாஸ்லைட் மங்கம்மா" படத்திலிருந்து சீர்காழி கோவிந்தராஜன் இந்தப் பாடலில் பெட்ரோமாக்ஸ் ஜொலிக்குது பாருங்க
https://www.youtube.com/watch?v=v2zqNUhB9Yg
chinnakkannan
7th September 2015, 01:42 PM
வாங்க சிவாஜி செந்தில்..செளக்கியமா..
ஆஹா கியாஸ் லைட்டுனு நிறைய பாடல்கள் மனசுல் முட்டுது ஆனா விரலுக்கு வந்து வெளிச்சம் தர மாட்டேங்குது..! ஃபோன் நா எனக்கு பானுப்ரியா மம்முட்டி பாட் தான் நினைவுக்கு வருது..துப்பாக்கியில் விஜய் சொல்கிற மாதிரி உங்க போஸ்ட்க்கு ஐயாம் வெய்ட்டிங்க்..:) (பெ. மா.லை வேணும் என்ற குறும்பு புன்முறுவல் கொள்ள வைக்கிறது..டாங்க்ஸ்ங்க்ணா :) )
RAGHAVENDRA
7th September 2015, 02:17 PM
வாசு சார்
ரங்கராட்டினம் படத்தை சென்னை மிட்லண்ட்டில் வெளியான போது பார்த்து தான். அதிகம் நினைவில்லை என்றாலும் கதையை நீங்கள் அப்படியே சொல்லி விட்டீர்கள். பேசாமல் நீங்கள் படத்துக்குக் கதை, திரைக்கதை வசனம் எழுதலாம்.
சௌகார் ஜானகி பாத்திரத்திற்கு நினைவு சற்றே தப்பிய நிலை. முதலில் நல்ல சுயநினைவோடு இருக்கும் போது தான் அந்த டூயட் பாடல். டிரைவரை காதலித்ததற்காக எதிர்ப்புக் கிளம்ப எதிர்ப்பை மீறிக் கல்யாணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக்கொள்வார்கள். எதிர்பாராத விதமாக (அல்லது வேண்டுமென்றேவோ)காதலியின் நினைவு தப்பி விடும். இது தான் சாக்கு என்று கணவனைத் துரத்தி விடுவார்கள் என நினைக்கிறேன். பின் சந்தர்ப்பவசத்தால் அதே வீட்டில் டிரைவராக சேருகிறான். அப்போது குழந்தை ஒரு பாட்டுப்பாடச் சொல்லிக் கேட்க இது தான் சாக்கு என பாட்டுப் பாடுகிறான். அந்தப் பாட்டை அவள் கேட்கும் போதே மெதுவாக நினைவு திரும்பும் என நினைக்கிறேன்.
படம் அவ்வளவாக ஞாபகம் இல்லையென்றாலும் காருக்கருகில் குழந்தையை வைத்துப்பாட்டைப் பாடும் ரவியை ஞாபகம் இருக்கிறது.
ஒரு சில நாட்களாக கணினியில் பதிவிட சற்றே தயக்கம். முத்திரை குத்த மக்கள் காத்திருக்கிறார்கள்.
vasudevan31355
7th September 2015, 02:43 PM
நன்றி ராகவேந்திரன் சார்,
இங்கே யாரும் அப்படி இல்லை. நீங்கள் தாரளாமாக இங்கே பதிவிடலாம். அரிதான பாடல்களை எங்கள் மனம் மகிழத் தரலாம். பகிர்ந்து கொள்ளலாம். கண்டிப்பாகத் தாருங்கள். வாருங்கள் ரசிக வேந்தர் சார்.
vasudevan31355
7th September 2015, 02:45 PM
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பதிவர்கள் பலவிதம் (பதிவுகள்) ஒவ்வொன்றும் தனிவிதம் .....
மனதை மயக்கும் நமது மதுர கான திரி அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஈர்த்து வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது பேதங்கள் தேவையில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து......
பதிவுகளுக்கு விமரிசனங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே ....தனிப்பட்ட முறையில் யாருடைய உணர்வுகளும் புண்படுத்தப் படாதவரை!!
இதுவரை பெரும்பாலும் நாம் முகமறியா நண்பர்களே !
பேதங்கள் தவிர்ப்போம் ....திரிமாண்பு காப்போம்! யாரும் யாருக்கும் போட்டியாளரோ பங்காளியோ பகையாளியோ விரோதியோ இல்லையே!!
நூற்றுக்கு நூறு வழிமொழிகிறேன்.
vasudevan31355
7th September 2015, 02:47 PM
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்துடன் புகுந்து புறப்பட்டிருக்கும் கான்செப்ட் செந்தில் சார்,
வருக! வருக! வரும்போதே அமர்க்களமா? அருமை! ஆனால் கஷ்டமான தலைப்பு.:)
vasudevan31355
7th September 2015, 02:52 PM
செந்தில் சார்!
இந்தாங்க. என்னோட பெட்ரோமாக்ஸ் பங்கு. :)
இந்த மணமகளின் மாணவரைக் கோலத்தைக் காணுங்கள். காலங்களில் அவள் வசந்தம் அல்லவா? இவளுடைய திருமண ஊர்வலம் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் நடைபெறுகிறதே. (அப்பாடா! ஒரு பாட்டை போட்டுட்டு எஸ்கேப்)
https://youtu.be/l_AvSlukRM4
vasudevan31355
7th September 2015, 03:02 PM
சில பெட்ரோமாக்ஸ் விளக்குகள்
http://www.pelam.de/pics/petromax_abends.jpg
http://www.geocities.co.jp/Outdoors-River/8607/Petromax826-2-303-507.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/Dfr_px826.jpg/225px-Dfr_px826.jpg
http://i861.photobucket.com/albums/ab173/coleman-202/Petromax829BrunningTreutler.jpg (http://s861.photobucket.com/user/coleman-202/media/Petromax829BrunningTreutler.jpg.html)
http://www.classicpressurelamps.com/forum/gallery/1720/1384466003-light.JPG
RAGHAVENDRA
7th September 2015, 03:08 PM
ஒண்ணு தேடினா இன்னொண்ணு கிடைக்கும்னு சொல்வாங்க.,.
தையல்காரன் படத்தில் பார்த்திபன் பாடுவதாக வரும் ஒரு பாடல் காட்சியிலும், ராசாத்தி வரும் நாள் படத்தில் ஒரு பாடல் காட்சியிலும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஊர்வலத்தில் ஒரு பாடல் உண்டு. அதைத் தேடும் போது கிடைத்த அபூர்வ பொக்கிஷம்.
மெல்லிசை மன்னரின் இசையில் ராசாத்தி கல்யாணம் படத்தில் சித்ரா பாடிய சூப்பர் ஹிட் பாடல்..
http://tamilmusicz.com/files/18/Rasathi_Kalyanam/RAJATHI_ODI.mp3
முடியும் போது ஆஹா என்ன அற்புதமான தாளம் கைதட்டல் ஒலியில் கூட...
vasudevan31355
7th September 2015, 03:09 PM
இந்த 'ரௌடி ராக்கம்மா' ஸ்ரீவித்யா கவிதாவிடம் பாடும் பாடல். வாணி ஜெயராமின் குரலில்
'தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே'
ஆமா! கவிதாவுக்கு ஸ்ரீவித்யா படத்தில் உண்மையிலேயே தாயா? பாடலை உன்னிப்பா கவனியுங்கள். புரிந்து விடும். தாயும் மகளும் அழகில் போட்டி போடுகிறார்கள். (இதிலே பெட்ரோமாக்ஸ் லைட்டை தேடாதீர்கள்)
https://youtu.be/_v-tUmxKifQ
vasudevan31355
7th September 2015, 03:11 PM
ஒண்ணு தேடினா இன்னொண்ணு கிடைக்கும்னு சொல்வாங்க.,.
தையல்காரன் படத்தில் பார்த்திபன் பாடுவதாக வரும் ஒரு பாடல் காட்சியிலும், ராசாத்தி வரும் நாள் படத்தில் ஒரு பாடல் காட்சியிலும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஊர்வலத்தில் ஒரு பாடல் உண்டு. அதைத் தேடும் போது கிடைத்த அபூர்வ பொக்கிஷம்.
மெல்லிசை மன்னரின் இசையில் ராசாத்தி கல்யாணம் படத்தில் சித்ரா பாடிய சூப்பர் ஹிட் பாடல்..
http://tamilmusicz.com/files/18/Rasathi_Kalyanam/RAJATHI_ODI.mp3
முடியும் போது ஆஹா என்ன அற்புதமான தாளம் கைதட்டல் ஒலியில் கூட...
ஆஹா! இதுதான் வேண்டும் ராகவேந்திரன் சார் எங்களுக்கு. மதுர கானங்கள் அளித்து மனநிம்மதி பெறுங்கள்.
vasudevan31355
7th September 2015, 03:20 PM
அவ்வளவு ஏன்?
சமீபத்தில் வந்த 'அரண்மனை' படத்தில் கூட பெட்ரோமாக்ஸ் விளக்கின் புகழ் பாடப் படுவதிலிருந்தே அதன் மகிமை இன்னும் குறையவில்லை என்று தெரிகிறதே. பொய்ங் பொப்ப பொய்ங். பொய்ங் பொப்ப பொய்ங்
'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா'
https://youtu.be/eY3V9C7gxbc
chinnakkannan
7th September 2015, 04:35 PM
அடடடா... ஒரே பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சம் கண்ணக் கூச வைக்குதே.. பாக்கத்தான் முடியாது என்னால் ம்ம்..
விளக்கே நீ தந்த ஒளி நானே
விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்..
இதெல்லாம் ஜெனரல் விளக்குகள் இல்லியோ :)
chinnakkannan
7th September 2015, 04:36 PM
ரெளடி ராக்கம்மா - இப்படின்னுல்லாம் படம் வந்திருக்கா என்ன.. எங்கிட்டிருந்து தான் பிடிக்கறீங்களோ..ம்ம்
chinnakkannan
7th September 2015, 04:37 PM
நன்றி ராகவேந்திரன் சார்,
இங்கே யாரும் அப்படி இல்லை. நீங்கள் தாரளாமாக இங்கே பதிவிடலாம். அரிதான பாடல்களை எங்கள் மனம் மகிழத் தரலாம். பகிர்ந்து கொள்ளலாம். கண்டிப்பாகத் தாருங்கள். வாருங்கள் ரசிக வேந்தர் சார்.
நானும் வாசுவை த்தொடர்ந்து அவர் பாணியிலேயே வழி மொழிகிறேன் :) எம்.எஸ்.வி யோட ரேர் சாங்க்ஸும் அவர் போடுவார்னு பட்சி சொல்லுது..:)
chinnakkannan
7th September 2015, 04:38 PM
விளக்கு என வந்திருக்கும் படங்கள்
பாவை விளக்கு
பச்சை விளக்கு
ஒளி விளக்கு
குல விளக்கு
வேற இருக்கா..
madhu
7th September 2015, 05:20 PM
தெரு விளக்கு
அகல் விளக்கு
அணையா விளக்கு
குத்து விளக்கு
ஆயிரம் விளக்கு
பெண் குலத்தின் பொன் விளக்கு
மாலா ஒரு மங்கல விளக்கு
சிகப்பு விளக்கு ( இது ரெகுலர் படமான்னு கேக்கப்படாது )
விளக்கேற்றியவள் என்று கூட ஒரு படம் உண்டு
chinnakkannan
7th September 2015, 05:43 PM
சிகப்பு விளக்கு ( இது ரெகுலர் படமான்னு கேக்கப்படாது )// நிஜமாவே எனக்குத் தெரியாது.. விளக்கு மட்டுமா சிவப்புன்னு கண்ணதாசன் எழுதின நாவல் தலைப்பு மட்டும் நினைவில்..
மாலா ஒரு மங்கல விளக்கு யாராக்கும் ஆக்ட்ர்ஸ்
தெரு விளக்கு?
தாங்க்ஸ்மதுண்ணாவ்..
madhu
7th September 2015, 05:56 PM
சிக்கா.,,
எனக்கும் தெரியாது... மாலா ஒரு மங்கல விளக்கில் நாகையா, மாதுரிதேவி என்று இண்டர்னெட்டில் போட்டிருக்காங்க..
நான் ஆட நீ பாடு கண்ணா என்று சூலமங்கலமும் நான் பாட நீ ஆடு கண்ணே என்று பி.பி.எஸ்ஸும் தனித்தனியா பாடி இருக்கும் பாட்டு மட்டும் தெரியும்.
தெரு விளக்கு விஜயன், தீபா நடித்தது... "போடைய்யா ஒரு கடுதாசி.. இளம் பொண்ணோட நிலமையை யோசி" என்று ஜானகியும் இளையராஜாவும் பாடிய பாட்டு நினைவில் இருக்கு
அப்புறம் கார்த்திகை விளக்குன்னு ஒரு படம் இருக்குல்ல..
vasudevan31355
7th September 2015, 06:05 PM
நடிகர் திலகம் நடித்து 'விளக்கு எரிகின்றது' என்று ஒரு படம் வராமலேயே நின்று போனது. நம் முரளி சார் கூட நடிகர் திலகம் திரியில் இதுபற்றி முன்பொருமுறை அற்புதமான பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
அப்படியே இதே டைட்டிலில் செந்தில் சார் மனம் மகிழ ஒரு பாடல் தொடங்கும்.
'விளக்கு எரிகின்றது
வெளிச்சம் தெரிகின்றது
உறக்கம் கலைகின்றது
உலகம் தெரிகின்றது'
என்று 'ஏழைப் பங்காளன்' என்ற படத்திலிருந்து இந்தப் பாடல் வரும். வெளிச்சம் மங்கும் வேளையில் பார்த்துத்தான் வையுங்களேன். (காந்திஜியை ஜெமினி நினைத்துப் பார்த்த அளவிற்கு வேறு யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. சின்னஞ்சிறு உலகம், புன்னகை, ஏழைபங்காளன் என்று காந்தியை மறக்கவே மாட்டார்).
https://youtu.be/nFrwJ7MVwno
vasudevan31355
7th September 2015, 06:10 PM
போடய்யா ஒரு கடுதாசி.. இளம் பொண்ணோட நெலமையை யோசி
https://youtu.be/CZ6PLjSRqgQ
vasudevan31355
7th September 2015, 06:17 PM
சிக்கா.,,
தெரு விளக்கு விஜயன், தீபா நடித்தது... "போடைய்யா ஒரு கடுதாசி.. இளம் பொண்ணோட நிலமையை யோசி" என்று ஜானகியும் இளையராஜாவும் பாடிய பாட்டு நினைவில் இருக்கு
.
மதுண்ணா!
மதுரப் பக்கம் என் மச்சான் ஊரு
மச்சானும்தான் கண் வச்சான் பாரு
என்று இன்னொரு பாடலும் உண்டு என்று நினைவு. இந்தப் பாடலை கமல் தானே பாடியிருப்பார்? உடன் ஷைலஜா பாடுவாங்கன்னு நினைக்கிறேன். இசை கங்கை அமரன். விஜயன், தீபா நடித்திருப்பார்கள்.
vasudevan31355
7th September 2015, 06:26 PM
'எங்க வீட்டுப் பெண்' படத்தில் 'கார்த்திகை விளக்கு... திரு கார்த்திகை விளக்கு... கந்தன் வேலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு' என்று சுசீலா அம்மாவின் பாடல் ஒன்றும் உண்டு. விஜயநிர்மலாவின் அறிமுகப் படம் இது என்று நினைவு. அருமையான பாடல்.
https://youtu.be/O5i89m729cM
vasudevan31355
7th September 2015, 06:28 PM
//நான் ஆட நீ பாடு கண்ணா என்று சூலமங்கலமும் நான் பாட நீ ஆடு கண்ணே என்று பி.பி.எஸ்ஸும் தனித்தனியா பாடி இருக்கும் பாட்டு மட்டும் தெரியும்.//
https://youtu.be/mCcteUlweQA
madhu
7th September 2015, 07:03 PM
வாசு ஜி...
காதல் மன்னன் நடித்த "விளக்கு எரிகின்றது" பாடலைச் சொல்லிட்டீங்களா ? நான் எதிர்பார்த்தது வேறு பாட்டல்லவோ ?
https://www.youtube.com/watch?v=9kAupDGNsLM
eehaiupehazij
7th September 2015, 07:49 PM
விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான் ...முந்தானை முடிச்சு
https://www.youtube.com/watch?v=BiURPJLGOu8
விளக்கே நீ தந்த ஒளி நானே ..நிறைகுடம் நடிகர்திலகம் வாணியுடன்!
https://www.youtube.com/watch?v=AQq0mIJO-Qo
eehaiupehazij
7th September 2015, 07:59 PM
எஸ்வீ சாருக்காக வெய்டிங் !
வெள்ளிநிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய .....
https://www.youtube.com/watch?v=EMC5rd5wEi4
இறைவா உன் கோயிலிலே எத்தனையோ மணிவிளக்கு
[url]https://www.youtube.com/watch?v=FevCCrPz7Nc
eehaiupehazij
7th September 2015, 08:13 PM
மெர்குரி விளக்குகளிடையே படைத்தவனைப் பாடும் நடிகர்திலகம் !
https://www.youtube.com/watch?v=56JMIqJZ5xY
eehaiupehazij
7th September 2015, 08:18 PM
(காந்திஜியை ஜெமினி நினைத்துப் பார்த்த அளவிற்கு வேறு யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. சின்னஞ்சிறு உலகம், புன்னகை, ஏழைபங்காளன் என்று காந்தியை மறக்கவே மாட்டார்).
Thanks a lot Vasu Sir
சுமைதாங்கியையும் சேர்த்துக் கொள்ளலாம் ....மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.....
[url]https://www.youtube.com/watch?v=1LoJDdeO3lQ
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.