PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

uvausan
26th August 2015, 08:59 PM
பதிவு 1

குருவிடம் செல்லும் முன் அதை ஒற்றிய கிரகத்தைப்பற்றிய சில உண்மைகளை ஆராயலாம் - இந்த குரு வினால் ஒருவர் வாழ்க்கையில் என்னல்லாம் பழங்கள் வருகிறது என்பதையும் பதிவு 2இல் பார்ப்போம் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/jupiter_zpsgepx1rsj.png (http://s818.photobucket.com/user/jravikumar/media/jupiter_zpsgepx1rsj.png.html)

Jupiter is the largest planet in the solar system. Fittingly, it was named after the king of the gods in Roman mythology. In a similar manner, the ancient Greeks named the planet after Zeus, the king of the Greek pantheon.Jupiter is the fifth planet from the Sun and the largest planet in the Solar System. It is a giant planet with a mass one-thousandth that of the Sun, but is two and a half times that of all the other planets in the Solar System combined. Jupiter is a gas giant, along with Saturn (Uranus and Neptune are ice giants).

rajeshkrv
26th August 2015, 09:00 PM
ரவி ஜி

எனது திரையில் பக்தி யும் உமது தெய்வங்களும் சேர்ந்தே இருக்கட்டுமே
ஏன் தொடரக்கூடாது.. தொடருங்கள் ப்ளீஸ்

அதே போல் ஆச்சார்ய தேவோ பவா .. ஆம் குருவிற்கு வணக்கம் சொல்வது மிகவும் அவசியம். தொடருங்கள்

uvausan
26th August 2015, 09:01 PM
பதிவு 2

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/c1chAKAuMM6KC5fYSjNaTTl72eJkfbmt4t8yenImKBVvK0kTmF 0xjctABnaLJIm9_zpsbve9mvrd.jpg

வேதநூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவன் ஆகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே நின்தாள்
அடைக்கலம் போற்றி போற்றி

குரு பகவான் கொடுக்கும் பலன்களைத் தெரிந்து கொள்வோம். குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்க்கும் பொருள் சேமிப்பிற்கும் சகல சௌபாக்கியத்திற்க்கும் புத்திர பாக்கியத்திற்க்கும் அன்பிற்கும் பண்பிற்கும் காரகராகவும் ஓளிபடைத்த மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குபவராகவும் தலைவணங்காத தலைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார். புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார்.

'குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.

uvausan
26th August 2015, 09:03 PM
பதிவு 3 - குறள்


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?.


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

uvausan
26th August 2015, 09:03 PM
பதிவு 4 : குருவின் பெருமைகளை சொல்லும் சில திரைப்பட பாடல்கள்

https://www.youtube.com/watch?v=NBKIOSc-37s

https://www.youtube.com/watch?v=SrNCISphgO8

https://www.youtube.com/watch?v=xrkpCqTpwhg

RAGHAVENDRA
26th August 2015, 09:14 PM
ரவி
குரு பக்தியை வலியுறுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட படம் தான் ஸ்கூல் மாஸ்டர். தமிழ் சினிமா வரலாற்றில் குருபக்தி என்கிற வார்த்தைக்கு விளக்கமாய் உடனே நினைவுக்கு வருவதும் இப்படமே. 70களில் வெளிவந்த ஸ்கூல் மாஸ்டர் தமிழில் மெல்லிசை மன்னரின் இசையில் எல்.ஆர். அஞ்சலி குழுவினர் பாடிய மிகச் சிறந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த, ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா பாடலாகும்.

முதல் சில வரிகள் நினைவில் உள்ளன.

ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே பெருகி வாங்கடா
வானரப் படை பாலம் போட்டது ராமனுக்காகவே - இந்த
மாணவர் படை சேவை செய்வது குருவினுக்காகவே..

அருமையான பாடல். இதனுடைய ஆடியோ அல்லது வீடியோ எதுவுமே இணையத்தில் உள்ளதாகத் தெரியவில்லை.

vasudevan31355
26th August 2015, 09:15 PM
ரவி சார்,

அவ்வளவு எளிதில் மறக்கக் கூடிய பதிவுகள் அல்ல உங்கள் பதிவுகள். அழகான சிறு கதைகள், அறிவுறுத்தும் விஷயங்கள் என்று அம்சமான, உபயோகமான தலைப்புகளில் பாடல்கள் மூலம் நீங்கள் திரிக்கு தந்தது ஏராளம். உழைப்பும் அதிகம். இப்படி இருக்க திடீரென்று மறந்து விட்டோம் என்று ஏன் வீணே சந்தேகம் வந்தது? வரலாமா? குளியல் காட்சிகள், தலையணை பாடல்கள் எல்லை மீற வில்லையே! அது ஒரு ஜஸ்ட் ஜாலிதானே! அதைக் கூட செந்தில் சார் இப்போது தவிர்த்து விட்டாரே. எவ்வளவு அருமையான அபூர்வப் பாடல்கள் நடுவே வருகின்றன!

தங்களின் 'குரு' பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நிச்சயம் தங்கள் பாணியில் அமர்க்களமாகத் தருவீர்கள் என்றும் நம்புகிறேன்.

rajeshkrv
26th August 2015, 09:25 PM
vanakkam Ji
vanakkam raghav ji

vasudevan31355
26th August 2015, 09:26 PM
vanakkame Ji

RAGHAVENDRA
26th August 2015, 09:33 PM
வணக்கம் ராஜேஷ்

chinnakkannan
26th August 2015, 09:33 PM
மீள் பதிவு



தொழில் பாட்டுக்கள் - 1

மாதா பிதா குரு தெய்வம்.. என்பதில் முதலில் மாதா..

தன்னுள்ளே தானடக்கி தன்னுயிர்போல் பேணிவந்த
அன்னையவள் போலுண்டா ஆம்..

பிதா…
நீண்டிருக்கும் வாழ்க்கை நிலைத்தே இருப்பதற்கு
ஈன்றவர் செய்தாரே ஆம்..

எனில் அடுத்து வருவது குரு.. அதற்குப் பின் தான் தெய்வமெல்லாம்.. குரு.. வழி நடத்துபவர்..கற்பிப்பவர்.. மொழியாகட்டும் தொழிலாகட்டும்.. கற்காமல் ஒரு மனிதன் மேல் வந்த்தில்லை..

ஆரம்ப காலப் பள்ளியாசிரியர்கள் மேல் நிலைக் கல்வி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் என நீள் வரிசை உண்டு எல்லாருக்கும்.. என்னைப் பொருத்தவரை இன்று வரை எல்லாரிடமும் கற்றுக்கொண்டு தான் வருகிறேன்.. தொலைபேசியிலோ நேரிலோ பேசும் போதுகூட குரு என்று தான் பேசுவேன்..பேசிக் கொண்டிருக்கிறேன்..

வாழ்க்கை நெடும்பயணம்.. தொடர்ந்துகொண்டிருக்கும் வாழ் நாட்களில் தினமும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்..

பதினைந்து வருடங்களுக்கு முன் இதே மன்ற மையத்தில் வந்த போது.. தமிழ் கற்கக் கசக்கவா செய்கிறது கண்ணா வா எனப் பிடித்து எனக்குத் தமிழ்ப்பால் புகட்டிய மேலான ஆசிரியர்கள் பேரா. பசுபதி, சொல்லின் செல்வர் ஹரியண்ணா, பேரா. அனந்த், கலைமாமணி இலந்தை, நண்பர் அபுல் கலாம் ஆசாத். இன்னும் எண்ணிலா ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன்..

தங்கள் பதவி என்னவாகிலும் இருந்தாலும் அதை விட்டு எனக்குச் சொல்லிக் கொடுத்து திருத்திய அவர்களின் மனப்பாங்கு தான் என்னே.. (இன்னும் திருந்தவில்லை என்பது வேறு விஷயம்..) அவர்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நமஸ்காரங்கள்..

இந்தப் பாடல் நூற்றுக்கு நூறு படத்தில் வருவது.. ஆசிரியர் என்பவரும் மாணவராக இருந்து வந்தவர் தான்.. மாணவர்களைப் பார்க்கும் போது ஆசிரியர்களுக்கு பெருக்கெடுக்கும் உற்சாகம் ஊற்றாய் ப் பெருகி வரும் பாடல் இது..

கன்னை எடுத்தோமா
கண்ணால் குறிபார்த்தோமா
கன்னெனச் சுட்டோமா
கண்ணழகு நாயகியருடன் பாடினோமா என்றிருந்த ஜெய்சங்கர்
கண்கலங்க வைத்துவிடுவார்
பார்ப்போரைத் தன் நடிப்பால்.. வித்தியாசமான படம்.. அழகிய பாடல்..


உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்ture=player_detailpage

rajeshkrv
26th August 2015, 09:37 PM
ji
Oru malayala padal ungalukkaga
music babukka

https://www.youtube.com/watch?v=ye3Aqs-fkRQ

vasudevan31355
26th August 2015, 09:40 PM
ராகவேந்திரன் சார்,

'ராதா' என்ற படம் தங்களுக்கு நினைவிருக்கும். முத்துராமன், பிரமீளா நடித்தது. மேஜரும் உண்டு. இதில் சுசீலா அம்மா பாடிய அருமையான பாடல் ஒன்றை நினைவு படுத்திக் கொள்வோமா?

கண்ணா! கண்ணா! கண்ணா!

உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
இங்கே ஏங்குகிறேன் தனியாக

http://www.inbaminge.com/t/r/Radha/

vasudevan31355
26th August 2015, 09:41 PM
//ji
Oru malayala padal ungalukkaga
music babukka//

கண்டிப்பாக பார்க்கிறேன் ஜி. நன்றி! நன்றி!

RAGHAVENDRA
26th August 2015, 10:08 PM
வாசு சார்
ஆஹா.. பேஷாக.. இதன் பின்னால் ஒரு சுவையான விஷயம் உள்ளது.

நான் முதன் முதலில் பதிவு செய்த ஆடியோ கேஸட்டில் இடம் பெற்ற பாடலாயிற்றே... இதன் கூட பதிவு செய்த பாடல்களில் குறிப்பிடத்தக்க இன்னோர் பாடல், தலைப்பிரசவம் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் பாலா பாடிய அருமையான பாடல், கண்ணோடு மீனைக் கண்டு கண்ணாடி மேனி கண்டு...

கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாலாவின் இனிமையான குரல்...

சரணத்தில் மெல்லிசை மன்னர் தாளத்தை மாற்றி விடுவார்.

கேட்டுப்பாருங்கள்..

http://www.inbaminge.com/t/t/Thalai%20Prasavam/

RAGHAVENDRA
26th August 2015, 10:11 PM
அந்த கேஸட்டில் இடம் பெற்ற இன்னோர் அபூர்வமான பாடல்... இந்த பாடல் எனக்கு போனஸாக கடைக்காரரின் தேர்வாக பதிந்து விட்டார். அவசரக்காரி படத்தில் சங்கர் கணேஷின் இசையில் இடம் பெற்ற பாடல்...கடைக்காரர் தயவில் அப்போது தான் முதன் முதலில் கேட்டேன்.

இதுவும் பாலாவின் சூப்பர் வாய்ஸ்..

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்...

(சி.க. சார் ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது.. சமர்த்தாக இருக்கோணும்)

கேட்டுத்தான் பாருங்களேன்..

http://www.inbaminge.com/t/a/Avasarakari/

eehaiupehazij
26th August 2015, 10:13 PM
எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் உள்ளத்தின் கண்களே !
பகுதி 2 : ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகத்தின் உருவகம்!

பகுத்து தொகுத்து ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகம் உருவகப் படுத்திய ஈசனின் குணாதிசயங்களை முறைப்படுத்தி அவ்வையாராக முத்திரை பதித்த கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் அம்மையார் எப்படிக் கணீரென்று நமது மனங்களில் மணி மண்டபம் எழுப்புகிறார் !!!!

https://www.youtube.com/watch?v=FmMeyulf0Ec

chinnakkannan
26th August 2015, 10:35 PM
(சி.க. சார் ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது.. சமர்த்தாக இருக்கோணும்) :)

செக்கச் செவந்த செந்தாமரை
தின்னு பார்த்த செம்மாதுளை
உன்னைப் போல பொம்பளைய
உலகில் எங்கும் பாக்கலையே..

மையைப் போடாம மயக்கிப்புட்டே
மனசைப்பறிக்காம பறிச்சுப்புட்டே
ஆவலை மீறியே சேவலைத் தேடியே
ஆவலாய்க் கோழி போல் ஓடி வந்தேன்..

அட அட அடடா ராகவேந்தர் சார்..எழுதினது சங்ககாலப் புலவர் போலத் தெரிகிறதே.. :)


கோழியது தன்னலகைக் கூராக்க அங்கே
...குனிந்துகொண்டே பாறையிலே மூக்கை வைத்து
ஊழியெனக் காற்றடிக்க அசையா நிற்கும்
..ஒயிலான ஆலமரம் போலத் திண்மை
நாழியது பாராமல் இரண்டு பக்கம்
.. நன்றாகத் தீட்டுதற்போல் நங்கை நீயும்
ஆழியென புதைந்திருக்கும் உள்ளம் இங்கே
..அலைகடலாய்ப் பொங்கியதால் செய்கின் றாயோ...

என அந்தக்கால ப் புலவர் சின்னக் கண்ணனார் எழுதியிருக்கார்..!

(தாங்க்ஸ் ராகவேந்தர் சார்..கொஞ்சம் கோப மன நிலையில் இருந்தேன்.. பாட்டெழுத விட்டுப்புட்டீக)

ஹப்புறம்..வாசு சார்..வந்துட்டேன்..:)



கிட்ட வந்தாலே கோபம் வரும்
விட்டு போனலோ தாபம் வரும

என்னமோ போங்க..

madhu
27th August 2015, 03:56 AM
வாசுஜி...

மரத்தைத் தவிர வேறு பாடல் எதுவும் தோணலியே !!! யோசித்துப் பார்க்கிறேன்.

ராகவ்ஜி...
ஓடி வாங்கடா.. பாட்டை அடிக்கடி பாட்டுக்குப் பாட்டு திரியில் பதிவதுண்டு. ஒரு நண்பர் அது ஸ்கூல் மாஸ்டரில் இல்லை என்றும் என் சொந்தச் சரக்கு என்றும் கூட சொல்லியிருக்காரு... ( அது மாஸ்டருக்காக வீடு கட்டுவதற்கு பசங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பணி புரியும்போது பாடும் பாட்டு இல்லையா ? )

கண்ணோடு மீனைக் கண்டு கூட நிறைய பேருக்குத் தெரியவில்லை. யூடியூபில் காணொளி இல்லை என்றால் அந்தப் பாட்டு பல பேருக்குத் தெரியாமல் போய் விடுகிறது... ராதா, தலைப்பிரசவம் எல்லாம் அப்படித்தான் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஏதோ ஆடிப்பெருக்கு அன்று "ஆடியிலே பெருக்கெடுத்து" பாட்டைப் பதிந்து சிலர் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.

அவசரக்காரி... யார் நடித்த படம் ? சத்யராஜ் வில்லனாக இருந்து நல்லவனாக மாறும் படமா ?

ரவிஜி..

குரு என்றுமே தனித்துவம் நிறைந்தவர். மாதா, பிதா, உறவுகள் ஆகியோர் சொந்தத்தால் இணைந்தவர்கள். நட்போ மனதால் இணைந்தது. தெய்வம் பக்தியால் இணைந்தது. இவை எதுவும் இல்லாமல் நமக்கு அறிவு, பண்பு, வாழும் வகை ஆகியவற்றை கொடுக்கவே வருபவ அல்லவோ குரு !

எங்கள் வாத்தியார் என்று ஒரு படம் ( என நினைக்கிறேன் ).. கஷ்டப் படும் குருவுக்காக மாணவர்கள் உதவ முயலும் கதை.
அருமையாக இருக்கும். ( படம் வெற்றி பெற்றதா என்று தெரியவில்லை )

ராஜேஷ்..

அடுத்த தோட்டத்தின் வாசனைப் பூக்களை அள்ளிக் கொடுக்க உங்களால்தான் முடியும் !!! சுப்பர்ப் !

vasudevan31355
27th August 2015, 06:21 AM
//கிட்ட வந்தாலே கோபம் வரும்
விட்டு போனலோ தாபம் வரும//

சின்னா!

நான் தத்தி தள்ளாடும் தகரக் குடம்:)

vasudevan31355
27th August 2015, 06:24 AM
ராகவேந்திரன் சார்!

'துள்ளல் போடுது என் மனமே' 'கண்ணோடு மீனக் கண்டு' பாடல் கேட்டு. என்ன ஒரு பாட்டு! தொடரில் வரும் கண்டிப்பாக.

vasudevan31355
27th August 2015, 06:45 AM
இன்று இரண்டு முத்தான பாடல்கள்

சுசீலா அம்மாவின் இன்னொரு முத்தான பாடல். தேவிகா அண்ணி குட்டிப் பெண் ராஜியைக் கொஞ்சிக் குலாவி மகிழும் பாடல். தேவிகா சற்று வயது முதிர்ந்து தெரிந்தாலும் அழகாக இருக்கிறார். ஹேர் ஸ்டைல் பேசுகிறது.

http://raretfm.mayyam.com/pow07/images/deiveegauravu.jpg

'தெய்வீக உறவு' படத்தின் தேன் பாடல் இது. நாயகன் ஜெய். இசை 'திரை இசைத் திலகம்'

இனிமையான தாலாட்டும் தென்றல் சுகம் இப்பாடலில்.

மரம் பழுத்தால் பறவையெல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னையென்று பேரெடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்

(மரம் பழுத்தால்)

வனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கின்றேன்
வனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கின்றேன்
வாழை இல்லை நாரெடுத்து வளர்க்கொடியில் மலரெடுத்து
மாலை என்று பெயர் கொடுப்பான் உலகிலே
அந்த மகிமைதன்னை சொல்வதென்ன மொழியிலே

(மரம் பழுத்தால்)

கோடி பெறும் கோபுரமே! குறையாத தேன் குடமே!
கனிக்குலையே உன் அழகை ரசிக்கின்றேன்
கோடி பெறும் கோபுரமே! குறையாத தேன் குடமே!
கனிக்குலையே உன் அழகை ரசிக்கின்றேன்
காலம் என்றும் துணை இருந்து கண்மணியே உனை வளர்க்க
தினமும் அந்த இறைவனிடம் கேட்கின்றேன்
நம் தெய்வீக உறவை எண்ணிக் களிக்கின்றேன்

(மரம் பழுத்தால்)


https://youtu.be/GVpFZMj_GD0

vasudevan31355
27th August 2015, 07:00 AM
அதே 'தெய்வீக உறவு' படத்தில் மேஜிக் ராதிகாவும், மனோகரும் ஜோடி போட்டு இணையும் அபூர்வப் பாட்டும் ஒன்னு இருக்கு.

https://i.ytimg.com/vi/B8c7tTO-hE8/hqdefault.jpg

ராட்சஸி பாடியிருப்பார். மனோகர் மனோகரமாக பிளாக் அண்ட் பிளாக்கில் அழகாக இருப்பார். ராதிகாவும் ஓகே. ராட்சஸி வழக்கம் போல பின்னல். ரகளை.

'செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்காரப் பெண்மை கண்டு
சொல்லாத சேதி சொன்னதோ?!

என்று உச்சரிக்கும் போது அமர்க்களம். இந்தப் படத்தில் எ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ நடித்திருக்கிறார்கள் என்று பாடலை அப்லோட் செய்த Best of Tamil and Telugu Movies - SEPL TV தகவல் சொல்கிறது. எங்கே போய் அழ?

அறிமுகமா நான் புதுமுகமா
துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட
உன்னை அழைக்கணுமா
அழைப்பிதழை அனுப்பணுமா

செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்காரப் பெண்மை கண்டு
சொல்லாத சேதி சொன்னதோ
உள்ளம் சொர்க்கத்தைத் தேடுகின்றதோ

செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்காரப் பெண்மை கண்டு
சொல்லாத சேதி சொன்னதோ
உள்ளம் சொர்க்கத்தைத் தேடுகின்றதோ

பாலாடை வண்ணம் தொட்டு
மேலாடை மின்னும் மொட்டு
தாளாது மோகம் தந்ததோ
அந்த தாகத்தில் வேகம் வந்ததோ

(அறிமுகமா)

கண்ணோரம் தோட்டமிட்டு
கனி ஊஞ்சல் ஆடவிட்டு
உண்ணாத கோலம் என்னவோ:)
இந்த உலகத்தில் லாபம் என்னவோ

கண்ணோரம் தோட்டமிட்டு
கனி ஊஞ்சல் ஆடவிட்டு
உண்ணாத கோலம் என்னவோ
இந்த உலகத்தில் லாபம் என்னவோ

பொல்லாத ஆசை வந்து
தள்ளாடும் அல்லிச் செண்டு
உன் மார்பில் சாய வேண்டுமா
இன்னும் உயிரெல்லாம் பாய வேண்டுமோ

(அறிமுகமா)


https://youtu.be/B8c7tTO-hE8

vasudevan31355
27th August 2015, 07:11 AM
மது அண்ணா!

'சமுத்திர ராஜகுமாரியை' ஞாபகப்படுத்தி விட்டீர்களே!:) சரி! தொடரில் பார்த்துக் கொள்ளலாம்.

vasudevan31355
27th August 2015, 07:16 AM
ரவி சார்,

உங்கள் குரு கண்ணீர் வடிக்கிறாரே!

'நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்'

நாகேஷ் 'மெல்லிசை மன்னர்' குரலில் பாடுகிறார்.

'என்றோ புலவன் பாடியதை நான்
இன்றே பாடுகிறேன்'


https://youtu.be/b8T-eFv0vFo

vasudevan31355
27th August 2015, 07:19 AM
பிள்ளைகளால் கைவிடப் பட்ட 'school master' (Hindi) குருவுக்கு பழைய மாணவனான நடிகர் திலகம் வாழ்வு அளிப்பதைப் பாருங்கள். 2011 ல் நான் 'you tube' ல் அப்லோட் செய்தது.


https://youtu.be/q8vxKpQy2RM

madhu
27th August 2015, 07:37 AM
வாசு ஜி... தெய்வீக உறவைச் சொன்னதும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வந்தது..

ஜெய்யின் போஸை எல்லாம் கவனியுங்க.. ஹிஹி

முத்து நகை பெட்டகமோ முன் கதவு ரத்தினமோ
கட்டழகுத் தாமரையோ காரோட்ட வந்ததுவோ

https://www.youtube.com/watch?v=QhGXkM1IIBI

eehaiupehazij
27th August 2015, 08:03 AM
எண் ஒன்றை சிலாகிக்கும் விதமாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தும் வாசு சாரின் பாடும் நிலா பாலாவின் குரல் குழைவில் குட்டி ஜெமினி ராஜன் நிர்மலா இணையில் தெய்வம் பேசுமா என்னும் மறக்கப்பட்ட படத்திலிருந்து மறக்க முடியாத மதுர கீதம் !

https://www.youtube.com/watch?v=VlCqmLDN5ds

chinnakkannan
27th August 2015, 11:17 AM
Good morning all

like laam veetku pOi paat kaet thaan pOduvEn..

அது சரி..தெய்வீக உறவுல்ல இன்னொரு தேவிகா பாட் இருக்குமே.. அதை ஏன் விட்டுப் புட்டீஹ..

**


காலங்காலையிலே கொஞ்சம் வேதாந்த சிந்தனை ப்ரதோஷமும் அதுவுமா..

யோசிச்சுப் பார்த்தா வாழ்க்கையே ஒரு நாடக்ம் தானே

வேடம் பலகொண்டு விந்தைமிக வாழ்வில்
வேகமாய்ச் செல்பவ ரே - இங்கு
நாடகம் போலத்தான் வாழ்விலே ஆட்டங்கள்
முடியவும் கலையுமய்யா - காற்றில்
கலந்திட மறையுமய்யா..

ஊடலில் பாடலில் ஆடலில் சாடலில்
கூடி ஒளிந்திருந்தீர் - பல
உண்மைகள் தெளிந்திருந்தீர்
தூறலாய்த் துளிகளாய்ச் சேர்ந்த மழைபொலும்
வாழ்வதில் மகிழ்ந்திருந்தீர் - சுகம்
ஆயிரம் கண்டிருந்தீர்..

நாடகம் முடிந்திட நேரமும் உண்டென
நாவலர் எழுதிவைப்பார் - நல்ல
பாவலர் பாடி வைப்பார் - வாழ்வின்
நாடகம் முடிவது எங்ஙனம் என்பதும்
ஈசன் அறிந்திடுவான் - வேளை
வரவும் அழைத்திடுவான்..

ம்ம் இன்னும் எழுதலாம் டைம் இல்லியோன்னோ..


*

சரி ஈ.ஈ..எதுக்காக இது இப்போ.. எஸ்.. அதே தான்..


டி.ராஜேந்தரின் பாட்

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
காதல் நாடகம் அரங்கிலேறுதாம்..

மைதடவும் விழியோரம்
மோகனமாய் தினமாடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்..

ம்ம் கிளிஞ்சல்கள்... பூர்ணி..

இன்னும் எத்தனை நாடகம் இருக்கிறது

இந்த நாடக்ம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா

நாடகம் நிறைவேறும் நாள் உச்சக் காட்சி நடக்குதம்மா - கமல்

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே - ம.தி

புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் - ந.தி

அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம் - ம.தி.

பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ. செளசெள கார்


நாளை வருவது யாருக்குத் தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலக் கிளியே
நாடகத்தின் கதையும் புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு

நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன...

மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கள நாடகம் ஆட வந்தாயே

நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ..

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்

சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட

நடிகனின் காதலி நாடகம் ஏனடி..

என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் கண்டது

நான் நால்வகை நாடகம் ஆடிடும் (பாட் கேட்டதில்லை பார்த்ததிலலை..ஜெ.கு ஆடறாஙக் மெளனமா!)

எப்போது நாடகத்தை ஆரம்பிக்கலாம்..

நாடகம் ஆடும் கலைஞனடா...போனால் போகட்டும் போடா

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்..

நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்..

**

விளையாட்டா நாடகம் போட்டா நிறைய ப் போய்க்கிட்டே வருதுங்க.. நின்வில் வந்தது பாதி..வாசு.. பண்ணியது மீதி!


இன்னும் விட்டுப்போன நாடகங்கள் போடப் போறீங்க தானே :)

eehaiupehazij
27th August 2015, 12:10 PM
எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
எண் இரண்டு

இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் !

நடிகர்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !

காதல் என்பது சுகானுபவமே ..காதலர்கள் கருத்தொருமித்து காத்திடும் வரை...கருத்து விரிசலில் காதல் சுவர் ஆட்டம் கண்டால் ...மனித மனமும் விரிசல் கண்டு...இரண்டாகிறதே!
காதலியை நினைத்து வாழ்ந்திட ஒரு மனம் ....அவளை மறந்து வாழ்ந்திட இன்னொரு மனம்....Dr Jekyll and Mr Hyde போல!!

இரண்டின் முதலிடம்: இரண்டாட்டத்தில் திண்டாடும் வசந்த மாளிகை வேந்தர் !!

https://www.youtube.com/watch?v=Z2VHhYADomI

Place 2 : Raja / இரண்டிலொன்று நீ என்னிடம் சொல்லு ..பூவா தலையா...காயா பழமா...உண்டா இல்லையா....

https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY

இரண்டு கைகள் நான்கானால் ....இருவருக்கேதான் எதிர்காலம்!!

[url]https://www.youtube.com/watch?v=G8U1ACU5Hdk

uvausan
27th August 2015, 12:18 PM
வாசு , " ஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று " இந்த பாடல் நடிகர் திலகத்தின் " குரு தக்க்ஷணையில் " பத்மினி பாடுவது போல வரும் . இந்த பாடல் "வாசு வாசு" பண்ணிப்பார்த்ததில் உங்களிடம் மட்டுமே உள்ளது என்று தெரிய வந்தது - பதிவேற்றம் இங்கு செய்ய முடியுமா ??

JamesFague
27th August 2015, 12:54 PM
The strike comes to an end at NLC. Hope Mr Neyveliar will report for duty anytime.

uvausan
27th August 2015, 12:59 PM
குருவே சரணம் !!

A young student went to consult his teacher about a problem. "I just can't handle this by myself" said the student. "Everybody tells me that I am useless, stupid and ignorant. How can I change? ". "Sorry, Son, I am too busy right now with my own problems" Said the teacher. But a second later he said: "Maybe if you can help me with my problem, I'll have time to help you with yours"

"Of course, Sir" said the student, wondering how he could possibly help his teacher. The teacher pulled a gold ring off his finger and said:. "Get on your horse and take this ring to the market. When you get there, try to sell the ring at the best price possible, but do not sell it for less than 1 gold coin"

The boy took the ring and went to the market. The merchants were curious to find out what he was asking for it. When they heard the price they all started laughing. Some offered him a silver coin or even copper but the boy would not budge. Disappointed with his failure he rode back to his teacher.

"I'm sorry Sir" Said the boy". I failed you, I could have gotten some silver or copper but not gold"

"Well" Said the teacher"We must discover the true value of the ring. Get on your horse again and go to see the goldsmith. He will know the true value of the ring, but do not sell to him, no matter what he offers you"

A short ride later the boy reached the goldsmith .He gave him the ring to examine. The go ldsmith looked carefully at it, weighed it and said:

"Tell your teacher that if he wants to sell today, . I can only give him 50 gold coins for it"

"50 gold coins???" Screamed the boy ".

Yes.." Said the goldsmith". But in a little while I believe I'll be able to offer 70.." The boy rushed back to tell the good news to his teacher. After listening to his student's story, the teacher said:

"You, and every single one of us are like that gold ring - A precious treasure. But it takes a wise expert to be able to see our true value". This story speaks to me on so many levels.

First, I am a jeweler myself and it's amazing to see the difference between the quality of stones and metals. It also takes special people to see the true value each one of us brings as a person. So don't listen to the naysayers at the peanut gallery like those people at the market. Seek counsel only from experts who can recognize your true and unique value.

https://www.youtube.com/watch?v=iBKn4lunE28

https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU

https://www.youtube.com/watch?v=BdVMVgb3Q5I

https://www.youtube.com/watch?v=OFxBVbCFa9w

https://www.youtube.com/watch?v=knnxzjPzi6o

uvausan
27th August 2015, 01:03 PM
The strike comes to an end at NLC. Hope Mr Neyveliar will report for duty anytime.

Great news Sir ! our all prayers are answered . It is time to thank the almighty profusely for showering on us with all good news !!

vasudevan31355
27th August 2015, 01:40 PM
நண்பர்களே!

எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாத நிலையில் ஸ்ட்ரைக் தற்காலிகமாக முடிந்துள்ளது. இன்று நைட் ஷிப்டிலிருந்து வேலைக்குப் போகச் சொல்லி யூனியன் கூறியள்ளது. எந்த ஒப்பந்தமும் இன்னும் கையெழுத்தாகவில்லை. 'இப்போது வேலைக்குச் செல்லுங்கள்... பிறகு என்னவென்று சொல்கிறோம்' என்று யூனியன் சப்பை கட்டு கட்டுகிறது. இவ்வளவு நாள் போராடியும் சிறிதேனும் முன்னேற்றம் இல்லை. தொழிலாளர்கள் முகத்தில் கவலை ரேகைகள் மாறவே இல்லை. நிர்வாகமும், அரசாங்கமும் பிடித்த பிடியிலேயே நிற்கின்றன. கிட்டத்தட்ட இதுவரை ஒவ்வொரு தொழிலாளிக்கும் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் இழப்பு. இன்னும் கூடுதலாகவே! மீடியாக்களும், ஊடகங்களும் விஷயம் புரியாமல் வேலை நிறுத்தம் சுமூகமாக முடிந்தது என்று செய்திகள் அறிவிக்கின்றன. நிர்வாகம் அதே 10 சதவீத ஊதிய உயர்வில்தான் இன்னும் நிற்கிறது. இன்னும் எந்தவிதமான சுமூக நிலையும் எட்டப்படவில்லை. எட்டப்படும் என்ற அரைகுறை நம்பிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இடி அமீன் ஆட்சி, ஹிட்லர் ஆட்சி, முசோலினி ஆட்சி எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நெய்வேலி நிர்வாகம். திறமையற்ற வாய் சொல்லில் வீரரடி யூனியன்கள் வெற்று வீரப் பேச்சுகளோடு சரி! தொழிலாளிகள் மிகவும் கொதிப்படைந்து போய் இருக்கின்றனர். இன்று விதியே என்று வேலைக்குச் செல்ல வேண்டியதுதான். இழந்திருக்கும் இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இதுவரை ஆறுதல் கூறியும், பிரேயர் செய்தும் எங்களுக்கு உறுதுணையாய் நின்ற நம் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 35 நாட்களாக மதுர கானமும், நடிகர் திலகம் திரியும், வீர பாண்டியக் கட்ட பொம்மனும், திரிகளின் நண்பர்களுமே எனக்கு பெரும் ஆறுதலும், துணையுமாய் இருந்தது. இதை மறக்கவே முடியாது. தொலைபேசி வாயிலாகவும், தனி மடல் மூலமாகவும், திரிகள் மூலமாகவும், நேரிலும் ஆறுதல் அளித்து ஆதரவு தெரிவித்த அத்துணை நல் இதயங்களுக்கும் மீண்டும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

உங்கள் ஆசிகளினாலும், ஆதரவினாலும், வேண்டுதல்களினாலும் இன்னும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் அப்படியே உள்ளது.

நன்றி! நன்றி! நன்றி!

madhu
27th August 2015, 01:58 PM
வாசு ஜி...

சரியான முடிவு கிடைக்கும் வரை எதுவுமே முடிந்ததாக எண்ண வேண்டியதில்லை. பிரார்த்தனைகளுக்கான பலன்கள் தாமதம் ஆகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது. விரைவிலேயே எல்லாம் சுபமாக முடியட்டும்

vasudevan31355
27th August 2015, 02:12 PM
வாசு , " ஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று " இந்த பாடல் நடிகர் திலகத்தின் " குரு தக்க்ஷணையில் " பத்மினி பாடுவது போல வரும் . இந்த பாடல் "வாசு வாசு" பண்ணிப்பார்த்ததில் உங்களிடம் மட்டுமே உள்ளது என்று தெரிய வந்தது - பதிவேற்றம் இங்கு செய்ய முடியுமா ??

ரவி சார்!

'கூகுள் கூகுள்' பண்ணிப் பார்த்தீர்களா? உங்கள் ஞாபகசக்திக்கு ஒரு ஷொட்டு. 'யூ ட்யூப்' ரைட்ஸ் பிரச்னை இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக 'ஒன்றே ஒன்றை' தரவேற்ற முயற்சிக்கிறேன்.

அது இல்லாமல் இன்னொன்று.

இதுவும் 'குருதட்சணை'யே.

தனக்கு கல்வி அறிவு புகட்டிட்ட குரு பத்மினி டீச்சருக்கு பாலாஜியுடன் கல்யாண ஏற்பாடு முடிந்துவிட, சந்தோஷமாக சிஷ்யர் நடிகர் திலகம் குரு பத்மினியிடம் பாடும் பாடல்.

கெட்டி மேளம் கொட்ட வச்சி
கட்டச் சொல்லித் தாலி தந்து
கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே
அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே

மாப்பிள்ளையை நிக்க வச்சி
மணமகள பக்கம் வச்சி
மலராலே செய்திடுவேன் அர்ச்சனை
நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை

குருதட்சணை... குருதட்சணை

குருவுக்கு காணிக்கை செலுத்தி அவரைப் பெருமைப்படுத்தும் இந்த சிஷ்யரை விட்டு விடலாமா?


https://youtu.be/oZYWlUn2_cA

vasudevan31355
27th August 2015, 02:14 PM
வாசு ஜி...

சரியான முடிவு கிடைக்கும் வரை எதுவுமே முடிந்ததாக எண்ண வேண்டியதில்லை. பிரார்த்தனைகளுக்கான பலன்கள் தாமதம் ஆகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது. விரைவிலேயே எல்லாம் சுபமாக முடியட்டும்

உண்மை மது அண்ணா! நிச்சயமாக தங்கள் ஆசீர்வாதத்தால் நல்லதே நடக்கும். நன்றி!

madhu
27th August 2015, 02:16 PM
வாசு , " ஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று " இந்த பாடல் நடிகர் திலகத்தின் " குரு தக்க்ஷணையில் " பத்மினி பாடுவது போல வரும் . இந்த பாடல் "வாசு வாசு" பண்ணிப்பார்த்ததில் உங்களிடம் மட்டுமே உள்ளது என்று தெரிய வந்தது - பதிவேற்றம் இங்கு செய்ய முடியுமா ??

இந்தப் பாட்டா ரவி ஜி ?

https://www.youtube.com/watch?v=DRo6BwvPKJc

vasudevan31355
27th August 2015, 02:21 PM
இந்தப் பாட்டா ரவி ஜி ?



சபாஷ் மது அண்ணா! அதுவேதான்.

'ஒன்றே' க்கு ஸ்பெல்லிங் பார்த்தீங்களா?:grin:

madhu
27th August 2015, 02:40 PM
வாசு ஜி...
இது போலத்தான் பல பாடல்கள் சரியான வார்த்தைகளை நாம் உபயோகித்து தேடினால் கிடைக்கவே கிடைக்காது.. அதனால் நான் தப்பு தப்பாக டைப் செஞ்சுதா தேடுறது வழக்கம்.. கிக்கிக்கி.... அப்படித்தான் சிக்கிச்சு இந்தப் பாட்டும்..

vasudevan31355
27th August 2015, 02:45 PM
வாசு ஜி...
இது போலத்தான் பல பாடல்கள் சரியான வார்த்தைகளை நாம் உபயோகித்து தேடினால் கிடைக்கவே கிடைக்காது.. அதனால் நான் தப்பு தப்பாக டைப் செஞ்சுதா தேடுறது வழக்கம்.. கிக்கிக்கி.... அப்படித்தான் சிக்கிச்சு இந்தப் பாட்டும்..

:):):):):)

vasudevan31355
27th August 2015, 02:49 PM
'விஜயா' படத்துக்கு 'vijaya' ன்னு டைப் அடிச்சா படம் கிடைக்காது. 'vijeya' அப்படின்னு அடிக்கணும்.:)

vasudevan31355
27th August 2015, 03:13 PM
மதுண்ணா!

சுசீலாம்மா பாடிய ஒரு அருமையான பாடல். கிட்டத்தட்ட 'தேடி தேடி காத்திருந்தேன்' மாதிரியே மனதை மயக்கும். இந்தப் பாடலுக்கும் நான் வாழ்நாள் அடிமை.

கண்ணா....மணிவண்ணா
முகுந்தா முராரே ம் ..ஹூம்

கனவு கண்டேன் கண்ணா!
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா!
மனமெனும் சோலையில் மலர் பறித்தே
நான் மனமெனும் சோலையில் மலர் பறித்தே
நான் மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ!
மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ!

(சரண வரிகள் ராக்கெட் வேகத்தில் பறக்கும்)

பந்தல் மீதொரு கூந்தல் தோரணம்
வாழைகள் ஆடிடக் கண்டேன்
வாடும் மங்கள மேளம் தாளமும்
ஊர்வலம் போய் வரக் கண்டேன்
மாதர் கூட்டம் கைகளில் தாங்கும் மஞ்சள்
குங்குமம் கண்டேன்
மாலை சூடும் மங்கை நானும்
மாயக் கருணையைக் கண்டேன்

(அடடாடா! இப்போ பாடுவார் பாருங்கள்).....

ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே!
ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே!

இது 'பாதபூஜை' படம்தானே! படத்தில் இந்தப் பாடல் உண்டா? வீடியோ இருந்தால் போடுங்கண்ணா! கண்ணன், கிருஷ்ணன் இமேஜ்களுடன்தான் பாடலின் வீடியோ கிடைக்கிறது.

என்ன பாட்டு! என்ன பாட்டு! என்ன குரல்! என்ன இனிமை!

கேட்டுக் கொண்டே இருக்கலாமே!


https://youtu.be/YCvYMjmzogo

uvausan
27th August 2015, 04:07 PM
வாசு - வாழ்த்துக்கள் சீக்கிரமாய் அமைந்தால் , வரமும் சீக்கிரமே கிடைக்கும் என்பார்கள் . சுமூகமான முடிவுடன் தான் strike விடை பெற்றது என்று நினைத்தேன் . மது சார் சொன்னதுபோல் " பிரார்த்தனைகளுக்கான பலன்கள் தாமதம் ஆகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது. விரைவிலேயே எல்லாம் சுபமாக முடியட்டும்" .
உங்கள் மகிழ்ச்சியில் தான் எங்கள் இன்பமும் அடங்கி உள்ளது .

uvausan
27th August 2015, 04:35 PM
ரவி சார்!

'கூகுள் கூகுள்' பண்ணிப் பார்த்தீர்களா? உங்கள் ஞாபகசக்திக்கு ஒரு ஷொட்டு. 'யூ ட்யூப்' ரைட்ஸ் பிரச்னை இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக 'ஒன்றே ஒன்றை' தரவேற்ற முயற்சிக்கிறேன்.

அது இல்லாமல் இன்னொன்று.

இதுவும் 'குருதட்சணை'யே.

தனக்கு கல்வி அறிவு புகட்டிட்ட குரு பத்மினி டீச்சருக்கு பாலாஜியுடன் கல்யாண ஏற்பாடு முடிந்துவிட, சந்தோஷமாக சிஷ்யர் நடிகர் திலகம் குரு பத்மினியிடம் பாடும் பாடல்.

கெட்டி மேளம் கொட்ட வச்சி
கட்டச் சொல்லித் தாலி தந்து
கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே
அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே

மாப்பிள்ளையை நிக்க வச்சி
மணமகள பக்கம் வச்சி
மலராலே செய்திடுவேன் அர்ச்சனை
நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை

குருதட்சணை... குருதட்சணை

குருவுக்கு காணிக்கை செலுத்தி அவரைப் பெருமைப்படுத்தும் இந்த சிஷ்யரை விட்டு விடலாமா?



நன்றி வாசு - நல்ல நடிப்பு - ஒரு நல்ல ஜோடியை , டீச்சர் / மாணவன் என்று பிரித்து வயத்தெரிச்சலை வேறு வாங்கி கொள்வார்கள் - ஆனால் அந்த வயத்தெரிச்சல் அவர் நடிப்பில் நாம் சுத்தமாக பார்க்க முடியாது . ஒரு உண்மை மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அருமையாக எடுத்துக்காட்டுவார் நடிகர் திலகம் .

uvausan
27th August 2015, 04:36 PM
இந்தப் பாட்டா ரவி ஜி ?



Yes sir . very fast and prompt action . many thanks sir

uvausan
27th August 2015, 04:38 PM
Very correct Vasu. Mesmorising song . Song deserves to be added in the music folder of our cell phones .

uvausan
27th August 2015, 04:39 PM
Vasu - for U

https://www.youtube.com/watch?t=23&v=YofxxvjzSLM

eehaiupehazij
27th August 2015, 04:55 PM
எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
எண் இரண்டு

இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் ! PART 2/2

மக்கள்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !
கண்களிரண்டும் விடி விளக்காக .....
https://www.youtube.com/watch?v=KSFTdt6I1n8
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ ...
https://www.youtube.com/watch?v=-xYZh6kgbk0

chinnakkannan
27th August 2015, 05:50 PM
வாசு.. மதுண்ணா சொன்னாற்போல் பலன் கிடைக்க தாமதம் ஆகிறது.. கிடைக்காமற் போகாது..எங்கள் ப்ரார்த்தனைகள் என்றும் உங்களுடன்..

*

சி.செ..ரெண்டுல இப்பத்தான் கண்கள் ஆரம்பிச்சுருக்கீர்..ம்ம் இன்னும் கன்னத்துக்கு வர எவ்ளோ நேரம் ஆகுமோ :) நான் பாட் சொல்ல மாட்டேனே :)

uvausan
27th August 2015, 05:52 PM
செந்தில் சார் ..எந்த " எண் " வரையில் உங்கள் அற்புதமான பதிவுகள் வரக்கூடும் ? ஏன் கேட்கிறேன் என்றால் " 243" எண்ணில் எனக்கு சில பாடல்கள் தெரியும் , "அந்த எண் " பதிவு வரும்போது உங்களுடன் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசை தான் !!

RAGHAVENDRA
27th August 2015, 06:10 PM
ரவி
எனக்கு ஒரு கோடியில் ஒரு சில பாடல்கள் தெரியுமே.. எப்போ வருமோ சான்ஸ்...

eehaiupehazij
27th August 2015, 06:15 PM
RaviG
We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!

Why 143 left RaviG?

Raghavendhar Sir

I know counting only from zero to ten!!
Crores ...Ten power seven!!
I invite contributions from you all for numbers more than 10!!

senthil

chinnakkannan
27th August 2015, 06:16 PM
இரு நூறு முன்னூறு, ஆயிரம் அப்புற்ம் கோடி தான் இருக்கு லட்சத்துல பாட் இல்லை.. ஆமா..அதென்ன 243.. எனக்கு 247 தான் தெரியும்..!

Russellxor
27th August 2015, 06:32 PM
நடிகர்திலகமும் இளைய திலகமும்

1பொட்டு வைத்த முகமோ.
பொட்டு வச்சதாரு

2நிலவைப் பார்த்து வானம் சொன்னது.
நிலவொன்று கண்டேன்.

3.மல்லிகை முல்லை
மல்லியே சின்ன முல்லையே

4.சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
சொந்த சுமைய தூக்கி தூக்கி

5.மெல்லநட மெல்ல நட மேனி
மெல்ல மெல்ல நடந்து வந்தது

6.அழகு தெய்வம் மெல்லமெல்ல
அழகு நிலவு சிரிக்க மறந்ததே

7.பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
பூ பூத்த செடியக் காணோம்

8.காலம் மாறலாம்
காலம் எனும் ஏட்டினிலே

9.சீவி முடிச்சு சிங்காரிச்சு
சீவி சிணுக்கெடுத்து

10.சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
சின்னச்சின்ன சொல்லெடுத்து

chinnakkannan
27th August 2015, 06:36 PM
//We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!// பதினாறு வயதினிலே கவுண்டமணி சொல்வது போல்... ஐயா என்ன சொல்றாக.. புரியலீங்க..

கடைசி வரி..ஜிஜி தீவுக்குத் திரும்பப் போறீங்க்ளா..ஏஏஏஏன்..

eehaiupehazij
27th August 2015, 06:38 PM
ஆசை ஆசை ! ஆசை ஆசை !!

ஆசையே துன்பத்தின் ஆணிவேர் என்பது புத்தரின் அருளோசை !
ஆடையில்லாதவன் அரை மனிதன் அதுபோலவே ஆசையில்லாதவர் அரைகுறை மனிதரே !!

ஆக்கபூர்வமான ஆசைகளே நாட்டின் வீட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம்!
பற்றற்றவரால் இப்பூமிக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஆசைகளே முன்னேற்றத்தின் படிக்கட்டுக்கள் !! பேராசையே பெருநஷ்டம்!!

தேடலே ஆசையின் விளைவு ! தேடல்களால்தான் நடிகர்திலகமும் காதல் மன்னரும் மக்கள்திலகமும் புகழுச்சியில் கோலோச்சி நமக்கெல்லாம் வழிகாட்டிகளாக நிலைக்க முடிந்தது ! காடு வாவா என்றாலும் ஆசை நம்மை நீங்குவதில்லை!! பிறப்பு முதல் இறப்பு வரை ரகம்ரகமாக எத்தனை ஆசைகள் நமது கனவுகளில் விதைக்கப்பட்ட கவிதைகளாக உலா வருகின்றன !!

பஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்படும் பிஞ்சுப் பருவம் ! கண்டதெல்லாம் கடலையான விடலைப் பருவம்!காதலை ஆராதிக்கும் வாலிபப் பருவம் !! குடும்பத்தை நேசிக்கும் சுமைதாங்கி வாழ்க்கைப் பருவம்! மனைவியை காதலிக்கும் வயோதிகப் பருவம்! கடவுளின் காலடி தேடும் உயிருதிர் பருவம்!!

மண்ணில் வந்து மண்ணில் வாழ்ந்து மண்ணையே சேரும்வரை ஆசைகள்தான் எப்பேர்பட்ட வண்ணக்கலவைகளான எண்ணச் சிதறல்கள்!!

காதல் மன்னரின் ஆசைப் பாடல்கள் !

ஆசையினாலே மனம்! ...அஞ்சுது கெஞ்சுது தினம்

https://www.youtube.com/watch?v=aKeGYz325cA

ஆசைப்பட்டது நானல்ல ...

https://www.youtube.com/watch?v=5JEw7WM2_1c

chinnakkannan
27th August 2015, 06:39 PM
பத்துக்கு மேல ந்னு யோசிச்சுக்கிட்டிருக்கறச்சே டொய்ங்க்னு இந்த லைன் நினைவுக்கு வந்தது..

பதினோரு மணியானால் சிரிப்போம் கண்ணே..
பனிரெண்டு மணியானால் அழுவோம் கண்ணே
நம் வீட்டில் டைம் டேபிள் அது தான் கண்ணே

ம்ம் என்ன பாட் எனத் தேடிப்பார்த்தால் அவர் எனக்கே சொந்தம் பாட்..

ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு பெண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக


எஸ்.பி.பி.. போட்டா வாசு சார் திட்டுவார்..:)

chinnakkannan
27th August 2015, 06:44 PM
பதினாறு இருக்கு பதினெட்டு இருக்கு இருபது கோடில்ல இருபது இருக்கு அப்புறம் முப்பது நாற்பது ஐம்பது அறுபது போகுது..எழுபதுலருந்து 99 வரைக்கும் பாட் இல்லைன்னு நினைக்கிறேன்..சரியா சி.செ..

madhu
27th August 2015, 06:45 PM
மதுண்ணா!

சுசீலாம்மா பாடிய ஒரு அருமையான பாடல். கிட்டத்தட்ட 'தேடி தேடி காத்திருந்தேன்' மாதிரியே மனதை மயக்கும். இந்தப் பாடலுக்கும் நான் வாழ்நாள் அடிமை.

கனவு கண்டேன் கண்ணா!
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா!

இது 'பாதபூஜை' படம்தானே! படத்தில் இந்தப் பாடல் உண்டா? வீடியோ இருந்தால் போடுங்கண்ணா! கண்ணன், கிருஷ்ணன் இமேஜ்களுடன்தான் பாடலின் வீடியோ கிடைக்கிறது.

என்ன பாட்டு! என்ன பாட்டு! என்ன குரல்! என்ன இனிமை!

கேட்டுக் கொண்டே இருக்கலாமே!


https://youtu.be/YCvYMjmzogo

வாசு ஜி...

இது இணையத்தில் குழப்பப் பட்ட இன்னொரு பாட்டு... இது பாதபூஜை படமே இல்லை. ஏ.வி.எம்.ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த பாசதீபம் படம்.
( ஹி ஹி.. பாதபூஜை சென்னை அண்ணா தியேட்டரில் 1974 தீபாவளிக்கு முதல் நாள் மாட்னி ஷோ பார்த்து விட்டு அன்னைக்கு நைட் உஸ்மான் ரோடில் அவசரமாக ரெடிமேட் சட்டை வாங்கிக் கொண்டு காலையில் பட்டாசு வெடித்தேன்... பாசதீபம் ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி தியேட்டரில் என் அப்பா, அம்மாவுட நைட் ஷோ போயிட்டு தூங்கி விட்டேன் :) )

என்ன ஒரு ஒற்றுமை ? இன்னைக்குத்தான் இந்தப் பாட்டைப் பற்றி தூத்துக்குடி பேராசிரியரைக் கேட்டிருந்தேன். அவரும் ஆடியோ அனுப்பினார். ஆனால் ஆடியோவில் ஒரு சரணம்தான் இருக்கு.. பாட்டுக்கு ரெண்டு ஸ்டான்ஸா உண்டு..

ரொம்ப நாளாச்சு... ரெண்டாவது சரணத்தின் வரிகள் சில மறந்து போச்சு... It goes like..

................................ கண்டேன்
சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
பாலும் பழமும் கண்டேன் அதிலே பரந்தாமன் உனைக் கண்டேன்

கனவு கண்டேன் கண்ணா...

பேராசிரியரிடம் பட வீடியோ இருப்பதாக சொன்னார். கண்டுபிடித்துக் கொடுத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.. காத்திருப்போம்.

eehaiupehazij
27th August 2015, 06:49 PM
பதினாறு வயதினிலே கவுண்டமணி சொல்வது போல்... ஐயா என்ன சொல்றாக.. புரியலீங்க..

கடைசி வரி..ஜிஜி தீவுக்குத் திரும்பப் போறீங்க்ளா..ஏஏஏஏன்.. சிக

ஒண்ணுமில்லே சிக

ஜிஜி திரியை ஒரு நானூறு பக்கம் இழுத்து அட்லீஸ்ட் அவருக்காக ஒரு புல் திரெட்டாவது இருக்கணும்னு நினைக்கிறேன் ...அதுதான் அவருக்கு என்னுடைய
நடிகர்திலகம் திரி சார்ந்த நன்றிக்கடனாக இருக்கும் !! ஜஸ்ட் இரண்டுமாதங்கள் கான்சென்ட்ரேஷன்! ஒரு பத்து விதமான கான்செப்ட் அவருக்காக ஸ்கெட்ச் பண்ணியிருக்கிறேன் ! கொஞ்சம் விடியோ ஆய்வுகள்...அவ்வளவுதான்!

மதுர கானம் வேகமெடுத்து விட்டது ..விரைவில் இலக்கு 400 வந்துவிடும். நிறைவுக்குள் எண் கான்செப்டை முடித்துவிட்டு ஜிஜி திரி ஒரு ஷேப்புக்குவந்ததும் திரும்பி விடுவேன் ! இந்தவாரத்தில் எண் கான்செப்டை முடித்துவிடுவேன்!!

செந்தில்

eehaiupehazij
27th August 2015, 06:59 PM
You are right sika!
100 has a song but from 70 to 99 no songs!
senthil

vasudevan31355
27th August 2015, 07:00 PM
எஸ்.பி.பி.. போட்டா வாசு சார் திட்டுவார்..:)

நிச்சயமா....தெரியுது இல்ல:)....தெரிஞ்சுகிட்டே செஞ்சா எப்படி?:) உங்களை நெய்வேலி நிர்வாகத்துக்கிட்ட பிடிச்சிக் கொடுக்கப் போறேன். நான்தான் டைம் டேபிள் போட்டுட்டேன் இல்ல:)

madhu
27th August 2015, 07:08 PM
You are right sika!
100 has a song but from 70 to 99 no songs!
senthil

பாட்டுக்கு நடுவுல நம்பர் வரலாமா ?

அப்படின்னா "இப்போது எழுபத்தைந்து... இன்னும் நூறாண்டு.. இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு" என்றெல்லாம் பாட்டு இருக்கே ?

vasudevan31355
27th August 2015, 07:16 PM
மது அண்ணா !

அருமை! எனக்கு 'பாத பூஜை'யா என்று ரொம்ப நாளாக சந்தேகம். அதற்கு முன் இந்தப் பாடல் 'அம்மன் அருள்' என்று கூட நினைத்தது உண்டு. இப்போது நீங்கள் சொல்லித்தான் 'பாச தீபம்' என்று தெரிகிறது.

அண்ணா! எப்படியோ ஒருவழியாக யோசித்து

சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
பாலும் பழமும் கண்டேன் அதிலே பரந்தாமன் உனைக் கண்டேன்

வரிகளைக் கொண்டு வந்து விட்டீர்கள். சபாஷ்! நானும் இதே வரிகளைத் திரும்பத் திரும்ப பாடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதிய வரிகள் மிகச் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கும் ஞாபகம் வருகிறது. அதில் கடைசி வரியின் கடைசி வார்த்தையாக

.'........பிருந்தாவனமும் கண்டேன்' என்று என்னையுமறியாமல் என் வாய் முணுமுணுக்கிறதே! சரியோ தவறோ நான் பாடியது?:)

vasudevan31355
27th August 2015, 07:20 PM
பாட்டுக்கு நடுவுல நம்பர் வரலாமா ?

அப்படின்னா "இப்போது எழுபத்தைந்து... இன்னும் நூறாண்டு.. இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு" என்றெல்லாம் பாட்டு இருக்கே ?

'ராஜா உன் உள்ளம்தானே பொய்யைச் சொல்லாது':) 'மழைக்கால மேகம்... மகராஜன் வாழ்க!'

ஆமாம்! 'இன்றோடு 75' ஆ?" 'இப்போது 75' ஆ? மறுபடியும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டு விட்டீர்களே!:)

vasudevan31355
27th August 2015, 07:40 PM
ஒருவேளை 'பரந்தாமன் உனைக் கண்டேன்' வரிகளைத்தான் 'பிருந்தாவனமும் கண்டேன்' என்று மாற்றிப் பாடி வைக்கிறேனா?:) 'பரந்தாமன் உனைக் கண்டேன்' மிகச் சரியான வரி ஆயிற்றே!:confused2:

vasudevan31355
27th August 2015, 07:41 PM
ராகவேந்திரன் சார்! ஹெல்ப் ப்ளீஸ்!

vasudevan31355
27th August 2015, 07:44 PM
'இப்போது எழுபத்தைந்து' சரிதான் மதுண்ணா!

uvausan
27th August 2015, 08:37 PM
RaviG
We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!

=========

செந்தில் சார் , நீங்கள் CK வின் நெருங்கிய நண்பர் என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும் , அதற்காக அவர் மாதிரியே எழுத வேண்டுமா ??- நீங்கள் எதோ சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது , என்ன என்பதுதான் புரியவில்லை .

chinnakkannan
27th August 2015, 08:39 PM
//விரைவில் இலக்கு 400 வந்துவிடும். நிறைவுக்குள் எண் கான்செப்டை முடித்துவிட்டு ஜிஜி திரி ஒரு ஷேப்புக்குவந்ததும் திரும்பி விடுவேன் ! இந்தவாரத்தில் எண் கான்செப்டை முடித்துவிடுவேன்!!// அப்படி எல்லாம் தனியா ப் போக விட்டுடுவோமா.. நானும் வர்றேன்..வாஸ் மதூஸ் எல்லாம் ரேர் சாங்க்ஸோட வருவாக..அஃப்கோர்ஸ்.. ராக்ஸ் ஆல்ஸோ வில் ராக் :) ஹச்சோ என்னை மறந்ததேன் தென்றலேன்னு அமெரிக்கால்லருந்து குரல் கேக்குது..

uvausan
27th August 2015, 08:42 PM
இரு நூறு முன்னூறு, ஆயிரம் அப்புற்ம் கோடி தான் இருக்கு லட்சத்துல பாட் இல்லை.. ஆமா..அதென்ன 243.. எனக்கு 247 தான் தெரியும்..!

யாருக்கும் புரியாத ஒரு எண்ணை எழுதினால் தான் , உங்கள் கவனம் சட்டென்று திரும்பும் /கிடைக்கும் என்ற " எண் " ணத்தில் அந்த எண்ணை வரைந்தேன் ..... அதை ஒற்றிய பாடல்களை இனிமேல் தான் வாசு வாசு செய்து கண்டுபிடிக்க வேண்டும் ck !!

chinnakkannan
27th August 2015, 08:47 PM
//அதற்காக அவர் மாதிரியே எழுத வேண்டுமா ??- நீங்கள் எதோ சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது , என்ன என்பதுதான் புரியவில்லை .// ரஙி சார்..:) என்னோட , சி.செயோட எழுத்துக்களே புரியலைன்னு சொன்னா கவிதைக்குக் கவிதை இழையில் கோபாலோட கவிதைகள்ளாம் படிச்சீங்கன்னா என்ன ஆவீங்கன்னு தெரியலை :) சரீ ஈ.. நானும் தானே அவரோட ஃபர்ஸ்ட் லைன் புரிலைன்னு சொன்னேன்..

inhibition னு வாசு பண்ணிப் பார்த்தா..கடைவிளைப் பொருள் தடுத்தல்னு ஒருஅர்த்தம்..(எனக்குப் புரியலை)இன்னொரு பேஜ்ல தடைகக்ட்டுச் செய்தல் தடைக்கட்டுத் தடுப்பாணை விலக்கி வைப்பு... மிக்ஸட் இன்ஹிபிஷன்ஸ்க்கு கலப்புத் தடுப்பான்கள்..னு வருது..சரி ரவி.. அந்த லைன்ஸ்க்கு எனக்குப் புரிஞ்ச அர்த்தம் அடுத்தபோஸ்ட்..:)

chinnakkannan
27th August 2015, 08:52 PM
//RaviG
We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!//

ரவிஜி
நாங்கள் உங்களைக் காதலிக்கிறோம் அல்லது நாங்கள் உங்களை வெறுக்கிறோம்..பாடல்கள்!! அதாவது, ஆனியின் மேலே, முதலாளி,
இந்த இழையானது தடைகளின்றி வெகுவாய் ஈர்க்கும் வண்ணம் வாழ்வியல் சூழல் கொண்டுள்ளதாக நான் உணர்கிறேன்..
நான் ஜிஜியின் தீவுக்குப் (அப்பாவோடதா, பொண்ணோடதா?!) போவதற்கு முன் இரண்டே இரண்டுகான்செப்டுக்கள் கருக்கள் மட்டுமே..மர்மம்!

(ரவி, சி.செ..ச்சும்மா நகைச்சுவைக்காகத் தமிழ்ப்படுத்தினேன்.. மனம் புண்படும்படி எழுதி இருந்தால் மன்னிக்க)

uvausan
27th August 2015, 09:12 PM
//RaviG
We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!//

ரவிஜி
நாங்கள் உங்களைக் காதலிக்கிறோம் அல்லது நாங்கள் உங்களை வெறுக்கிறோம்..பாடல்கள்!! அதாவது, ஆனியின் மேலே, முதலாளி,
இந்த இழையானது தடைகளின்றி வெகுவாய் ஈர்க்கும் வண்ணம் வாழ்வியல் சூழல் கொண்டுள்ளதாக நான் உணர்கிறேன்..
நான் ஜிஜியின் தீவுக்குப் (அப்பாவோடதா, பொண்ணோடதா?!) போவதற்கு முன் இரண்டே இரண்டுகான்செப்டுக்கள் கருக்கள் மட்டுமே..மர்மம்!

(ரவி, சி.செ..ச்சும்மா நகைச்சுவைக்காகத் தமிழ்ப்படுத்தினேன்.. மனம் புண்படும்படி எழுதி இருந்தால் மன்னிக்க)

CK/ செந்தில் சார் - இருவரும் சேர்ந்து நேற்று புதியதாக வாங்கிய சட்டையை கிழிக்க வைத்து விட்டீர்கள் . நல்ல வேலை வீட்டில் பாய் கிடையாது - இருந்திருந்தால் அதற்கும் ஒரு வழி பிறந்திருக்கும் .

All said and done - CK - hats off to your sense of humour . :smokesmile:

rajeshkrv
27th August 2015, 09:40 PM
வாசுஜி...

மரத்தைத் தவிர வேறு பாடல் எதுவும் தோணலியே !!! யோசித்துப் பார்க்கிறேன்.

ராகவ்ஜி...
ஓடி வாங்கடா.. பாட்டை அடிக்கடி பாட்டுக்குப் பாட்டு திரியில் பதிவதுண்டு. ஒரு நண்பர் அது ஸ்கூல் மாஸ்டரில் இல்லை என்றும் என் சொந்தச் சரக்கு என்றும் கூட சொல்லியிருக்காரு... ( அது மாஸ்டருக்காக வீடு கட்டுவதற்கு பசங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பணி புரியும்போது பாடும் பாட்டு இல்லையா ? )

கண்ணோடு மீனைக் கண்டு கூட நிறைய பேருக்குத் தெரியவில்லை. யூடியூபில் காணொளி இல்லை என்றால் அந்தப் பாட்டு பல பேருக்குத் தெரியாமல் போய் விடுகிறது... ராதா, தலைப்பிரசவம் எல்லாம் அப்படித்தான் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஏதோ ஆடிப்பெருக்கு அன்று "ஆடியிலே பெருக்கெடுத்து" பாட்டைப் பதிந்து சிலர் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.

அவசரக்காரி... யார் நடித்த படம் ? சத்யராஜ் வில்லனாக இருந்து நல்லவனாக மாறும் படமா ?

ரவிஜி..

குரு என்றுமே தனித்துவம் நிறைந்தவர். மாதா, பிதா, உறவுகள் ஆகியோர் சொந்தத்தால் இணைந்தவர்கள். நட்போ மனதால் இணைந்தது. தெய்வம் பக்தியால் இணைந்தது. இவை எதுவும் இல்லாமல் நமக்கு அறிவு, பண்பு, வாழும் வகை ஆகியவற்றை கொடுக்கவே வருபவ அல்லவோ குரு !

எங்கள் வாத்தியார் என்று ஒரு படம் ( என நினைக்கிறேன் ).. கஷ்டப் படும் குருவுக்காக மாணவர்கள் உதவ முயலும் கதை.
அருமையாக இருக்கும். ( படம் வெற்றி பெற்றதா என்று தெரியவில்லை )

ராஜேஷ்..

அடுத்த தோட்டத்தின் வாசனைப் பூக்களை அள்ளிக் கொடுக்க உங்களால்தான் முடியும் !!! சுப்பர்ப் !

மதுண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகை மனக்குமோன்னோ ??

eehaiupehazij
27th August 2015, 10:19 PM
Numerals rule the roost!!

எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் ஆட்டுவித்திட்ட அமுத கான வரிசை !
எண் மூன்று


மூன்று என்பது மும்மூர்த்திளை ஆராதிக்கும் / மூவேந்தர்களை குறிக்கும் / முக்கனிகளை நினைவூட்டும் / சமுத்திர முக்கூடலை மனத்திரையில் விரிக்கும் / கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்கள்......முப்படை அணிவகுப்பு, நீளம் அகலம் ஆழ/உயரம் முப்பரிமாணம்....

திரையுலகப் பொருத்தவரை நடிகர்திலகம் /மக்கள்திலகம்/ காதல் மன்னர் என்னும் முப்பரிமாண நடிகவேந்தர்களைக் கண்முன்னே நிறுத்தும் !
அரசியலிலும் மூன்று என்பது மந்திர வார்த்தையே ....

எண் மூன்று மக்கள்திலகம் அதிகமாகப் பெருமைப் படுத்தியதே!

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...கடமை...அது கடமை...MGR என்ற மூன்றெழுத்து பொழுதுபோக்கு மனமகிழ் மந்திரவாதி பாடி ஆடுகிறார் !

https://www.youtube.com/watch?v=cvgOHwXNrFA

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ...மு க முத்து முயல்கிறார்...நகலெடுக்க!

https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY

மதுரையில் பறந்த மீன்கொடி ராஜஸ்ரீ முக்கனியாய் மூவேந்தர் ராஜ்ஜியமாய் ஒன்றான தமிழகமாக வர்ணிக்கப் படுகிறார் ..காதல் மன்னரின் புகழ் பெற்ற
பைஜாமா ஜிப்பா கெட்டப்பில் !!

[url]https://www.youtube.com/watch?v=v7PePTO-xYI

மூன்று தமிழும் ஓரிடம் வந்து பாடவேண்டும் காவிய சிந்து ....நாளை நமதே!

[url]https://www.youtube.com/watch?v=aoj1z1KnWwk


மூன்று சார்ந்த பாடல்களின் அணிவகுப்பு இனி நண்பர்களின் பங்களிப்பிலே !

rajraj
27th August 2015, 10:31 PM
From PuNyavathi(1956), Tamil dubbed version of Snehaseema(1954) (Malayalam)

kaNNum moodi uranguga.....

http://www.youtube.com/watch?v=qZ7KcXpzORo

From the original

KaNNum pootti uranguga.......

http://www.youtube.com/watch?v=pn8O69xtB7U


Happy ONam ! :)

( It will be sleepy ONam iif you listen to these songs a few times. Have ONam fun ! :) )

RAGHAVENDRA
27th August 2015, 10:40 PM
மது
ஸ்கூல் மாஸ்டரில் நீங்கள் சொன்னது போல், மாணவர்கள் ஆசிரியரின் வீட்டைக் கட்டித் தருவது போல காட்சியமைப்பு. அதில் தான் அந்தப் பாடல் இடம் பெறும்.

ஏதோ ஒரு மாத இதழில், சத்யராஜ் வந்த புதிதில் தான் முதலில் ஒப்பந்தமாகி நடித்த படமாக அவசரக்காரி படத்தைத் தான் குறிப்பிட்டிருந்தார். ஆனால் படம் நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து ஒரு வழியாக 1981ல் வெளியானது. சட்டம் என் கையில் 1978ல் வெளியானது. இந்தப் படம் ஒப்பந்தமாவதற்கு முன்பாகவே அவசரக்காரி படத்தில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்றால் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்தே படம் வெளியாகியுள்ளது.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் திரைப்பட வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்கள்

தயாரிப்பு - ஆனந்த் கிரியேஷன்ஸ்
தணிக்கை - 03.06.1981
வெளியீடு - 05.06.1981

அதாவது கல்தூண் வெளியான வாரத்திற்கு அடுத்த வாரம் வெளியிடு.

தயாரிப்பு - ஏ. ரத்தினம்
இயக்கம் - கே.எஸ். மாதங்கன்
வசனம் - கே.எஸ். மாதங்கன்
இசை - சங்கர் கணேஷ்
ஒளிப்பதிவு - விஸ்வம் நடராஜ்

நடிக நடிகையர் - மோகன் குமார், ரூபா சக்கரவர்த்தி -

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/Avasarakkari.jpg

uvausan
27th August 2015, 11:09 PM
Pookaleyum pookaletheyum varavelkunna chithra salabhangale pole namukorumichu e ‘Ponnonathe’ varavelkam evarkum
“Happy Onam”

எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள் - வாருங்கள் எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Happy-Onam-2015-SMS-WISHES_zpsizsrkyjm.png (http://s818.photobucket.com/user/jravikumar/media/Happy-Onam-2015-SMS-WISHES_zpsizsrkyjm.png.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/1220365935_62c4b151e1_z_zpsfv9vbztz.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/1220365935_62c4b151e1_z_zpsfv9vbztz.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Sutterstock-Sambhar_zpsqfzya2uq.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Sutterstock-Sambhar_zpsqfzya2uq.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Aviyal_zpsddzvryxa.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Aviyal_zpsddzvryxa.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Parippu_zpsgogrbnp6.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Parippu_zpsgogrbnp6.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Payasam_zpsgm0emsjd.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Payasam_zpsgm0emsjd.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Pappadum_zpsvp151tqs.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Pappadum_zpsvp151tqs.jpg.html)

uvausan
27th August 2015, 11:15 PM
https://www.youtube.com/watch?v=rt7VMzu8qhM

https://www.youtube.com/watch?v=JkBA5C0lfrI

rajeshkrv
27th August 2015, 11:21 PM
https://www.youtube.com/watch?v=v1YogTe9onE

madhu
28th August 2015, 06:00 AM
எனிக்கு என்னும் வளர இஷ்டமாண ஓணப்பாட்டு இதே !

படம் : விஷுக்கனி ( பாட்டு ஓணம்.. படம் விஷுவா ? )
ஜேசுதாஸ்
பிரேம் நசீர், விதுபாலா

பூவிலி பூவிலி பொன்னோணமாயி....

ம்ம்ம்.. இது நம்ம கற்பகம் படத்தின் ரீமேக்காமில்ல,... கே.ஆர்.விஜயா ரோல்தான் விதுபாலாவுக்காம்... இந்த மாதிரி டூயட் பாட்டு தமிழில் கிடையாதே... வாலி பாடல்களை சுசீலா பாடுவார்... அதுவே அதகளமாக இருக்கும்..

அத்தை மடி மெத்தையடிக்கு பதிலாக அங்கே வந்த மலர்க்கொடி போலே வர்ணத்தொடி போலே இனிமையான பாடல்.. ஜானகி, ஜேசுதாஸ் ரெண்டு வெர்ஷன் உண்டு..

https://www.youtube.com/watch?v=0b77FTESl-I

vasudevan31355
28th August 2015, 07:27 AM
ஓணம் பண்டிகையை ஒட்டி இதோ தாஸேட்டன் பாடிய ஒரு அற்புத மிக அபூர்வ பாடல். படமும் மிக அபூர்வமான ஒரு படமே. 'பணம் தரும் பரிசு' இதுதான் படத்தின் பெயர். அதிகம் யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது. இந்தப் படத்தின் நாயகன் யார் தெரியுமா? எம்.ஜி.ஆர் அவர்களின் பிரியத்துக்குரிய அவருடைய மந்திரிசபையில் இடம் பெற்ற திருச்சி சௌந்தரராஜன் அவர்கள்தான். நாயகி வி.ஆர்.திலகம். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நடேசன் என்பவராம். ஜேசுதாசுடன் ஜானகி இணைந்து இந்த அற்புதப் பாடலைப் பாடியிருப்பார். ஜேசுதாஸின் ஆரம்பகால ஜெம்களில் மிகவும் குறிப்பிடத் தகுந்த பாடல். நீங்கள் கேட்டவுடன் டக்கென்று நினைவுக்கு வரலாம்.

பருவம் ஒட்டிப் பழகும் போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலே காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே

ஜானகி மிகவும் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார். ஜானகியா அது?!....நம்பவே முடியல சாமி. பாடலை நிறுத்தவே மனம் வரவில்லை. குரல்கள் இனிமையிலும், அழகான டியூனிலும், உள்ளத்தை கொள்ளை கொள்கிறது இந்தப் பாடல்.

http://www.mediafire.com/download/bt4hck4uxksc54z/Panam+Tharum+Parisu-Paruvamutti+Pazhagum+Podhu-KJJ_SJ-.mp3

vasudevan31355
28th August 2015, 08:03 AM
மது அண்ணா!

வணக்கம். அதே 'பணம் தரும் பரிசு' படத்தில் இன்னொரு ரகளை பாடல். 'மானைத் தேடி மச்சான் வரப் போறான்' டைப்பில். சரோஜா என்ற பாடகி அசத்தோ அசத்து என்று அசத்துகிறார். கோரஸும் அமர்க்களம். யார் அண்ணா இந்த அபூர்வ மியூஸிக் டைரக்டர் நடேசன் என்பவர்? போட்டுத் தாக்கு தாக்கு என்று தாக்கி விட்டாரே இந்தப் பாடலில். செமையாக இருக்கிறது.

https://farm9.staticflickr.com/8524/8640592198_d9a2649296.jpg

கன்னிப் பெண்ணே...கன்னிப் பெண்ணே
காதல் ஏனடி?
காதலித்தால் வாழ்வினிலே துயரம்தானடி

காதல் என்ற மூன்று எழுத்திலே உலகமே ஆடுதடி! (சிவாஜி செந்தில் சாரின் மூன்று எண்ணுக்கும் உதவும்):)
கடவுளும் வெல்லும் காதலுக்கீடு உலகத்தில் இல்லையடி!
ஆமாம்! உலகத்தில் இல்லையடி!

இதற்குப் பிறகு வரும் கோரஸ் பாருங்க. அருமையோ அருமை.

தரர பம்ப்பபம் தரர பம்ப்பபம் தரர பம்ப்பபபா

('ய் யாஹூ'......என்ன அற்புதமாக குரல் எழுப்புகிறார்!)

தரர பம்ப்பபம் தரர பம்ப்பபம் தரர பம்ப்பபபா

நாடு கெட்டதும் காதல் காதல்
நகரம் கெட்டதும் காதல் காதல்
பண்பு கெட்டதும் காதல் காதல்
படிப்பு கெட்டதும் காதல் காதல்

மதுண்ணா! ரகளை! ரகளை! கேட்டுட்டு சொல்லுங்கோ! கண்டிப்பா கேட்டிருப்பீங்கதானே?

http://www.mediafire.com/download/75ddkclb5qlo42k/1057.PANAM+THARUM+PARISU+-+KANIP+PENNAE+KANIP+PENNAE++KUTTYSSK1057+++SAROJA+ +group++%40+PANAM+THARUM+PARISU.mp3

eehaiupehazij
28th August 2015, 08:25 AM
ഓണാസംസകൾ ! ஓணாசம்சகள்!
இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள் !

ஈகானம் எந்தோ எனிக்கு வளர இஷ்டமானு !

https://www.youtube.com/watch?v=Uoz5cjRS0aU

vasudevan31355
28th August 2015, 08:27 AM
சிவாஜி செந்தில் சார்,

அபூர்வ பாடல்கள் இன்ட்ரெஸ்ட்ல உங்களை மறந்துட்டேன். நீங்க 1,2,3,4 எண் கான்செப்ட் தந்து நான் பாட்டு போடல. அதனால இப்ப நான்கு எண்ணுக்கும் சேர்த்து ஒரே பாட்டு. வாங்கிங்க. ஹி... ஹி... ஹி. வேற வழியில்லே.


https://youtu.be/EDQ_icr_BJA

chinnakkannan
28th August 2015, 09:36 AM
ஹாய் ஆல்

அனைவருக்கும் ஓணம் நல் வாழ்த்துக்கள்..

முன்பெல்லாம்.. நான்கு வருடங்களுக்கு முன்.. இங்கு ஆனந்த பவன் என்னும் ஹோட்டலில் ஓணம் சாத்யா - ஓணம் விருந்து என மத்யானத்தில் தாலி செய்வார்கள்..ச்சும்மா தலை வாழை இலை போட்டு விதவிதமாக வெகு நன்னாயிட்டு இருக்கும்..இப்போது கிடையாது..வெகு சில ஹோட்டல்களில் மட்டும் உண்டு.. ம்ம் நான்போக முடியாது...டயட்ட்!

ஓணம் விருந்து க்கு நன்றி ரவி..பாடல்களுக்கும் நண்பர்களுக்கு நன்றி


ம்ம் எனிவே ஹாப்பி ஓணம் அகெய்ன்..

rajeshkrv
28th August 2015, 09:49 AM
அருமையான மலையாள பாடல் இதோ

யுக யுக தாளம் யுக யுக ராகம்

https://www.youtube.com/watch?v=icK54NUmmcU

madhu
28th August 2015, 09:55 AM
வாசு ஜி...

பருவமொட்டி பாடல் நல்லா தெரியும்.

கன்னிப் பெண்ணே ! கன்னிப் பெண்ணே !


இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன். ஆனால் வேறு எதுவுமே நினைவில்லை. படம், பாடியவர் எல்லாமே நீங்க சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்.
கம்ப்ளீட்டா க்ளீன் ஸ்லேட்... ஆனா பாட்டு.... பிரம்ம்மாஅதம்..

vasudevan31355
28th August 2015, 10:16 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

29

'ஓ மைனா...ஓ மைனா'

http://i.ytimg.com/vi/dxm0UC_qIRY/hqdefault.jpg

'நான்கு சுவர்கள்'

பாலா தொடரில் இன்று இதுவரை எழுதிய பாலா பாடல்களையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டு ஏப்பம் விட்ட பம்பர் பாடல் பற்றி பேசப் போகிறோம். பேய் ஹிட். பிசாசு ஹிட்டடித்த பாடல்.

பாலச்சந்தர் இயக்கிய 'நான்கு சுவர்கள்' படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டிகளெல்லாம் ஒலித்த,

'ஓ மைனா...ஓ மைனா' பாடல்தான் இன்று உங்களை மகிழ்விக்கப் போகிறது.

ஜெய், ரவி என்ற அப்போதய இரண்டாம் நிலை சூப்பர் ஸ்டார்கள் கை கோர்த்து, அட நிஜமாகவே கைகளை சங்கிலியால் கோர்த்துக் கொள்ள, ரவி தன் காதலி வாணிஸ்ரீயுடன் கோவாவின் பிரம்மாண்ட கடற்கரைகளில் மலைப் பாறைகளுக்கு நடுவே பாடும் பாடல்.

இந்தப் பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது இன்று வரையிலும் கூட.

ரவி, ஜெய் ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் முரட்டு இளைஞர்கள். ஜெய் குடிகாரர். இதனால் வருத்தமுரும் ரவிக்கும், ஜெய்க்கும், அடிக்கடி தகராறு நடக்கிறது. இவர்களுக்குத் தாய் போல இருக்கும் சௌகார் 'ஒன்றாக இருந்தாலாவது ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வீர்களா என்று பார்ப்போம்?' என்று இருவர் கைகளையும் சங்கிலியால் பிணைத்து விடுகிறார். இருவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் கடற்கரை பக்கம் வர, அங்கு தன் காதலி வாணிஸ்ரீயின் நினைவாக ரவி வாட, அதைப் புரிந்து கொண்ட ஜெய் வாணியை ரவிக்குக் காட்டுகிறார். சங்கிலியுடன் ஜெயசங்கரை அருகில் வைத்துக் கொண்டே ரவி வாணியிடம் ஓடி ஓடி 'ஒ மைனா' பாடலைப் பாடுகிறார்.

என்ன ஒரு பாடல்?! பாலாவின் கேரியரில் மறக்க முடியாத மரகதப் பாடல்.

'ஓ ஓ ஓ ஓஹோ' என்று ஹம்மிங் எடுத்து 'லா லாலா' என்று பாலா தொடங்கும் போது நம் உடல் சில்லிட்டுப் போகும். இந்தப் பாடலை முணுமுணுக்காதவர்களே இருக்க முடியாது. அவ்வளவு பிரபலம். வானொலி, பூங்கா, கல்யாணம் என்று அத்தனை நிகழ்ச்சிகளிலும் எதிரொலித்த பாடல். பாலாவை 'சூப்பர் சிங்கராக' ஆக்கிய பாடல்.

பாடலின் வெளிப்புறக் காட்சி பிரம்மாண்டங்கள் அதுவரை தமிழ் உலகம் காணாதவை. கற்பாறைகளும், அலையில்லாத கடலும், வளைந்த தென்னை மரங்களும் நம்மை கோவாவுக்கே அழைத்துச் செல்வது போல பரவசமூட்டுகின்றன.

சங்கிலி கைகளைப் பிணைத்திருக்க, ரவி ஜெயசங்கரை இழுத்தபடியெல்லாம் ஓடி ஓடி வாணியை லவ்ஸ் விடுவது புதுமை. ரசிக்கத்தக்கது. ஜெய் நன்றாகவே பண்ணியிருப்பார் சற்று வழக்கத்திற்கும் மாறாக. ரவி அஸ் யூஷுவல். வாணி பேன்ட், ஷர்ட்டில் தலையில் கேப் அணிந்து கியூட்.

இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பாலச்சந்தர் போய் இப்படி படம் எடுக்கலாமா என்றெல்லாம். அதில் ஓரளவிற்கு உண்மையும் இருந்தது. ஆனால் பாலு கதை, இயக்கத்தில் கோட்டை விட்டிருந்தாலும் அவருக்கே பிடித்தமான, உரித்தான பாறைகளில் மோதும் கடல் அலைகள், அருமையான லொகேஷன்கள், அப்புறம் விஜயலலிதா, சௌகார் என்று அவர் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.:)
இப்படத்தின் நாயகர் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன்தான். ஒரே வார்த்தை. எக்ஸலன்ட்.

'மெல்லிசை மன்னரி' ன் உழைப்பு அபாரம். இந்த ஒரு பாடலால் படத்தின் மற்ற பாடல்கள் பஸ்பமாகிப் போயின.

இன்னொரு முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதே பாடலை ரவியை வெறுப்பேற்ற ஜெய் விஜயலலிதாவுடன் அதே லொகேஷன்களில் பாடுவார். அது பாலா பாடல் அளவிற்கு பிரபலமாகவில்லை. பாடியது யார் தெரியுமா? நம் 'பாடகர் திலகம்'தான். ஆனால் பிரமாதத்திலும் பிரமாதம்.

ஆனால் என் கருத்தைச் சொல்லி விடுகிறேன். இப்பாடலில் ரவி ஜெய்க்கு சொல்லும் புத்திமதி வசனங்கள் நடுநடுவே வரும். ('மானல்லடா இது... தேனல்லடா இது') இப்பாடலை சௌந்தர்ராஜன் பாடுவதை என்ன சொல்லிப் பாராட்ட!? சும்மா தெனாவட்டும், திமிருமாக அவர் பாடுவதை இன்று முழுக்கக் கேட்கலாம். பாலா 'ஓ மைனா' என்று குழைவார் என்றால் டி.எம்.எஸ். கம்பீரத்துடன் அழுத்தம் கொடுத்து 'ஒ மைனா' பாடுவார். 'உன் கிளியை நீ அணைத்தால் என் கனியை நான் சுவைப்பேன்' என்ற எகத்தாளம் ஒன்று போதும்.

இந்தப் பாடலை அதிகம் பேர் கேட்டிருக்க மாட்டார்கள். பாலா பாட்டை மட்டுமே கேட்டிருப்பார்கள். ஆனால் இரண்டு பாடலகளையும் ஒரு தராசில் வைத்து நியாயம் கேட்டால் தராசின் முள் நடுவில் நிற்காமல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மாறி மாறி சாய்ந்து கொண்கொண்டேதான் இருக்கும். தீர்ப்பளிப்பது ரொம்பக் கஷ்டம். வைஜெயந்திமாலா, பத்மினி போட்டி நடனத்திற்கு தீர்ப்பு சொல்வது போல. அதில் ஜெமினி முடிவு எட்டப் படுவதற்கு முன்னரேயே விளக்கை அணைத்து அரங்கை இருட்டாக்கி விடுவார். இங்கு யார் உதவுவது?

ஆனால் என் தீர்ப்பு என்ன தெரியுமா? பலமுறை கேட்டு கேட்டு எது நன்றாய் இருக்கிறது என்று குழம்பி குழம்பி இறுதியில் இரு இழை வித்தியாசத்தில் என் ஓட்டு போனது யாருக்குத் தெரியுமா? சாட்சாத் டி.எம்.எஸ்.பாடிய 'மைனா'வுக்குத்தான். மன்னிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட சொந்த கருத்துதான். இந்தப் பாடலைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

பாலாவுக்கு அனைவரும் திருஷ்டி சுற்றி போட வேண்டும் இப்பாடலை அவர் பாடி சிறப்பித்ததற்கு. என்ன குரல்! என்ன குரல்!

முதல் வரி 'ஓ மைனா... ஓ மைனா' முடிந்ததும் வரும் அந்தக் குழலிசை நெஞ்சை அள்ளிக் கொள்ளும். அதே போல 'டங்க்டடங்க்டடைன்' என்று கணநேரத்தில் ஒலிக்கும் மெல்லிய கிடார் இசையும்.

பல்லவி முடிந்ததும் இழையும் அந்த சாக்ஸ் சாகசம் அற்பதம். இப்பாடலில் மன்னர் தரும் இசைக்கருவிகளின் ஆதிக்கத்தை எவரும் அவ்வளவு எளிதாக அளந்துவிட முடியாது. குறிப்பாக 'மைனா'வுக்குப் பின்னால் வரும் பாங்கோஸ் உருட்டல்கள். மிரட்டல்கள்.

'முன்னுரையை நான் எழுத
முடிவுரையை நீ எழுத'

எனும் போது 'முடிவுரையை.....யை' உச்சரிக்கும் விதமே அலாதி. இப்படி பாலாவின் பஞ்ச்கள் அளவாக, அழகாக இப்பாடலில் ஏராளம். கண்ணதாசன் வரிகள் கண்பட்டுப் போகும்.

'தாமரைப்பூ காலெடுத்து வீதி வலம் போவது போல்'

ஒன்று போதும் உதாரணத்திற்கு. 'வீதி வலம்' கவனிக்க. 'பொன் மீ...னா' என்பதை இவர் கொஞ்சியபடி குழைவில் தருவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.

http://i.ytimg.com/vi/fOen-ZcPRAY/hqdefault.jpg

லா... லால்லா
லாலாலா லலால்லா
லாலாலா லாலா லாலாலா
லாலாலாலாலா

ஓ மைனா! ஓ மைனா!
ஓ மைனா! ஓ மைனா!
இது உன் கண்ணா
பொன்மீனா
ஓடும் புள்ளிமானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளிமானா
பூவில் சிந்தும் தேனா

முன்னுரையை நான் எழுத
முடிவுரையை நீ எழுத
முன்னுரையை நான் எழுத
முடிவுரையை நீ எழுத
நம் உறவை ஊரறிய
நான் தரவா நீ தரவா
நம் உறவை ஊரறிய
நான் தரவா நீ தரவா
ஆட வந்த தோகை ஒன்று
தேடி வந்த மேகம் ஒன்று
ஆட வந்த தோகை ஒன்று
தேடி வந்த மேகம் ஒன்று
நாடறிந்த காதல் இன்று
நாணமென்ன வேண்டும் இங்கு
இரவென்ன பகலென்ன
இதிலென்ன தொடரட்டுமே

ஓ மைனா! ஓ மைனா!
ஓ மைனா! ஓ மைனா!
இது உன் கண்ணா
பொன்மீனா
ஓடும் புள்ளிமானா
பூவில் சிந்தும் தேனா

தாமரைப்பூ காலெடுத்து
வீதி வலம் போவது போல்
தாமரைப்பூ காலெடுத்து
வீதி வலம் போவது போல்
நீ நடந்த பாவனையை
நான் எழுத மொழியில்லையே
மேலிருந்து பார்த்த வண்ணம்
பாலிருக்கும் வெள்ளிக்கன்னம்
மேலிருந்து பார்த்த வண்ணம்
பாலிருக்கும் வெள்ளிக்கன்னம்
தூது சொல்லக் கேட்ட பின்னும்
காலம் என்ன நேரம் என்ன
வரவிடு தரவிடு இனிப்பது இனிக்கட்டுமே

ஓ மைனா! ஓ மைனா!
ஓ மைனா! ஓ மைனா!
இது உன் கண்ணா
பொன்மீனா
ஓடும் புள்ளிமானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளிமானா
பூவில் சிந்தும் தேனா

லா... லால்லா
லாலாலா லலால்லா
லாலாலா லாலா லாலாலா
ஹோஹோஹோ
ம்ம்ம் ஹூம்

madhu
28th August 2015, 11:14 AM
வாசு ஜி... excellent writeup...

கிக்கிக்கி... வழக்கம் போலவே .... எனக்கும் டி.எம்.எஸ் பாடிய ஓ மைனா ரொம்ம்ம்ம்ம்பப் புடிக்கும்... ஊர் சிரிக்கப் பண்ணாதேடா என்று கெஞ்சினாலும்

"சாட்சி வைத்து காதல் செய்யும் காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சியைத்தான் மாற்றி விட்டேன். காட்சியைத்தா திருப்புகின்றேன்"

அம்மாடியோ... என்ன ஒரு வயத்தெரிச்சல் இருந்திருந்தா இப்படி சொல்லத் தோணும் ? உணர்வு பூர்வமாக பாடுவது போலத் தோன்றும். பாலா எப்பவும் போல தேன் வடிய பாடிவிட்டு போயிருப்பார்

vasudevan31355
28th August 2015, 12:21 PM
அம்மாடியோ... என்ன ஒரு வயத்தெரிச்சல் இருந்திருந்தா இப்படி சொல்லத் தோணும் ? உணர்வு பூர்வமாக பாடுவது போலத் தோன்றும். பாலா எப்பவும் போல தேன் வடிய பாடிவிட்டு போயிருப்பார்

நன்றி மது அண்ணா!

உண்மை. அப்படியே என் மனதில் உள்ளதை பிரதி எடுத்து உங்கள் பதிவாக அளித்து விட்டீர்கள். பாலா தேனொழுக பாடினார் என்றால் டி.எம்.எஸ்.தேள் கொடுக்கு வாயில் வைத்துப் பாடுவார்.:) ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பாடகர் திலகத்தின் இந்த 'வயிற்றெரிச்சல்' பாட்டின் போது உங்களுடைய 'அம்மாடியோவ்' எனக்கும் எழும். மேலும் பாலா பாடல் அளவிற்கு அதைவிட சிறப்பான இந்தப் பாடல் பிரபலமாகவில்லையே என்று தனியாக ஒரு வயிற்றெரிச்சல் இன்னும் என்னுள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆத்திரமும் கூட சேரும். என்ன பண்ண! இப்போதான்... உங்கள் பதிலைப் பார்த்ததும்தான் 'ஆஹா நம்மைப் போலவே இன்னொருத்தரும் இருக்கார்' என்று கொஞ்சம் ஆத்திரம் தணிந்துள்ளது.

டி.எம்.எஸ். 'ஓடும்' என்று அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பார்.

'இப்ப புரியுதா?' ரகளையோ ரகளை.

அந்த 'ஹஹ்ஹஹ ஹஹ்ஹஹ ஹா' கம்பீரக் கொக்கரிப்பு.

'ஓமைனா' சொல்லிவிட்டு பின் அதையே மறுபடியும் கொஞ்சம் கேப் விட்டு ('ஓ...மைனா') சொல்லும் அற்புதம்.

'பெண்ணுக்கும் பேய்க்கும் பேதம் தெரியலையா? வேண்டாண்டா!' என்று ரவி சொன்னதும்,

'ஊரறிய கொஞ்சுவதில் உனக்கிருந்தால் எனக்கில்லையோ'

என்று

'நீ மட்டும் அன்னைக்கு கொஞ்சுனியே... நான் மட்டும் என்ன இளிச்சவாயனா?' என்ற அர்த்தத்தில் குரூரம் காட்டும் அந்தக் குரல் பாவம்.

அப்படியே அந்த வஞ்சம் மாறி காதலின் மேன்மையை, மென்மையை

'காதலெல்லாம் உண்மைதானே
காண்பதெல்லாம் பெண்மைதானே'

வரிகளில் கொண்டு வந்து இனிமை கூட்டுவார். 'தேனா?' அலட்சியமும் அட்டகாசம். பாவம் என்றால் அது இவர் ஒருவர் மட்டும்தான்.

அப்போதிலிருந்தே இந்தப் பாட்டின் மீது எனக்கு ஒரு தனி கண். இன்னொன்று. ஜெய் நல்ல ஒத்துழைப்பு.


https://youtu.be/NnT5TvBNIwc

chinnakkannan
28th August 2015, 01:08 PM
வாசு வழக்கம் போல பாலா பாட் அமர்க்களமான பாட்..அலசலும் நைஸ்.;.பட் ஒரு விஷயம் என்னன்னாக்க

இந்த டி.எம்.எஸ் பாட்டும் கேட்டதே கிடையாது.. ரொம்ப நாள் முன்னால் நா.சு சின்ன வயசுல பார்த்தது..அதற்கப்புறம் பார்க்கவில்லை.. எனில் டி.எம்.எஸ் சாங்க் சர்ப்ரைஸ் ஓனம்கிஃப்ட் ஃபார்மி.. சரி.ன்னு அது கேட்டுமுடிச்சா இன்னொரு பாட்டும் நன்னா இருக்கேங்க..

https://youtu.be/JVfuAws-lpY

இதுவும் பாலா குரல் மாதிரி இருக்கே..


நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

chinnakkannan
28th August 2015, 01:22 PM
இன்னொரு பாட் கிடைச்சது.. ஓணம் ஸ்பெஷல்னு வேணும்னா போட்டுக்கலாம்

பாவம் சுபா ஏன் வெறிச் வெறிச்சுன்னு வெ.ஆ. நியைப் பார்க்கிறார்.. கே.ஜே.ஜேசுதாஸ் பி.எஸ்.. எம்.பி.ஸ்ரீனிவாசன்..அவர்யாராம்..

பொன்னும்மயங்கும் பூவும் மயங்கும்
கண்ணில் பார்வை தன்னில் தெய்வம் வணங்கும்

என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்துப்போல் தோன்றும் அன்பு விளக்கு..


https://youtu.be/OhoR1v1OOCs?list=PL6686E7F08FAF6168

vasudevan31355
28th August 2015, 01:40 PM
சின்னா!

தேங்க்ஸ்.

'நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்'

தொடரின் அடுத்த பாட்டு. ஓ.கே வா?:)

அப்புறம் 'பொன்னும் மயங்கும்' போட்டாச். நானில்லை...நீங்களேதான். இதே சந்தேகக் கேள்விதான். அதற்கும் நான் பதில் அளித்திருக்கிறேன். இருந்தாலும் ஞாபகமறதி எல்லோருக்கும் பொது என்பதால் மறுபடியும் சொல்கிறேன். தப்பே இல்லை. 'வெறிச் வெறிச்'சுன்னு பார்க்குறது கன்னட மஞ்சுளா. அதாவது 'துளி துளி துளி துளி மழைத்துளி' மஞ்சுளா. அதாவது 'புது வெள்ளம்' மஞ்சுளா. படம் 'எடுப்பார் கைபிள்ளை'. இப்போ நினைவுக்கு வருதா? நீங்க யூ டியூப்' ல 'சுபா' ன்னு போட்டுட்டதனால சுளுவா ஏமாந்துட்டீங்க.:)

இதே படத்தில் 'அழகு ராணி கதை இது' பாடலுக்கு வடக்கத்திய நடனம் ஒன்றை மஞ்சுளா ஆடியிருப்பார். ஜெய் டோலக், புல்லாங்குழல் எல்லாம் வாசிச்சு நம்மை சோதனை செய்வார். அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்? பார்த்துடுங்க. அதில் கூட 'ராணி' யை விட்டு விட்டார்கள். சுசீலா அம்மா தெளிவாகப் பாடியிருப்பாங்க. அப்புறம் இன்ஸ்பெக்டர் யாருன்னு கேக்காதீங்க. கேட்டாலும் சொல்றேன்.:)


https://youtu.be/NEzw0wyWs14

eehaiupehazij
28th August 2015, 01:48 PM
ரவிஜி படைத்திட்ட ஓணம் விருந்து ஐட்டங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவைத்தந்தாலும் கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே சி க !
வாசு சார் உங்கள் பிரசினைகள் ஒரு தீர்வுக்கு வந்து கொண்டிருப்பது ஆறுதலே !

vasudevan31355
28th August 2015, 02:55 PM
சின்னா!

http://www.mbsreenivasan.com/images/mbs/gallery/3/4.jpg

இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் பத்திக் கேட்டிருந்தீங்க. ரொம்ப அருமையான அபூர்வமான இசையமைப்பாளர் அவர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகளில் பல பாடல்களுக்கு இசை அமைத்தவர் இவர்தான். அப்போது தூர்தர்ஷன் பார்த்து இருந்தீர்களானால் ஒரு நிகழ்ச்சிக்கும், இன்னொரு நிகழ்ச்சிக்கும் இடையே வரும் இடைவெளி நேரங்களில் ஒரு இசையமைப்பாளர் பல பாடகர்களை ஒரே மேடையில் கட்டி ஆண்டு கொண்டிருப்பார். அவர்தான் ஸ்ரீனிவாசன். கோரஸ் குரல்களை ஆழமாக நம் நெஞ்சில் பதிய வைப்பதில் வல்லவர். தேச பக்திப் பாடல்கள், குழந்தைகள் பாடல்கள், மத வழிபாட்டுப் பாடல்கள் என்று அருமையான இசையோடு பாடல்களை ஆழமாக நெஞ்சில் புதைப்பதில் ஸ்ரீனிவாசன் வல்லவர்.

'பாதை தெரியுது பார்' என்று 'திரிசூலம்' படத்தின் இயக்குனர் கே.விஜயன் ஹீரோவாக நடித்து ஒரு திரைப்படம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் படத்திற்கு இசை எம்.பி.ஸ்ரீனிவாசன்தான்.

பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி வித்தியாசமான குரல்களில் பாடி மிக மிக வித்தியாமான பாடலாய் ஒலித்த,

'தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையைத் தேடுது'

என்ற அருமையான பாடலை எவரால் மறக்க இயலும்? பாடலை இயற்றியவர் ஜெயகாந்தன்.

அது தவிர சிவக்குமார் நடித்த, என்.வி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'மதன மாளிகை' பாடல்களுக்கு இசையும் இவரே. விஜயன் இவருடன் 'பாதை தெரியுது பார்' படத்தில் பணி புரிந்ததால் தான் இயக்கிய 'மதன மாளிகை'க்கு இவரையே இசையமைக்க வைத்தார்.

'ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது'

'ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது' (நாயகி அல்கா என்னும் வடக்கத்திய இறக்குமதி)

உதூப்பின் ஆங்கிலப் பாடல் 'மேங்கோ ட்ரீ' (under a mango tree) ('மல்லிகைப் பூ') (தலைவர் 'ரோஜாவின் ராஜா' படத்தில் வாணிஸ்ரீயுடன் தியேட்டரில் இந்தப் பாடலைப் பார்ப்பார். சுகுமாரிக்கு மாறி சாக்லேட் கொடுத்து....):)

என்று அமர்க்களமான பாடல்கள் தந்தவர்.

மலையாளப் படங்களிலும் ஆதிக்கம் செலுத்தியவர். அவார்டுகளும் வாங்கிக் குவித்தவர்.

இதோ அவர் இசையமைத்த 'மதன மாளிகை' படத்தின் ஆங்கிலப் பாடல்.


https://youtu.be/qhNLNJ-B904

RAGHAVENDRA
28th August 2015, 03:22 PM
வாசு சார்
தங்கள் கட்சியே நானும்..
ஆமாம்.. நான்கு சுவர்கள் படத்தைப் பொறுத்த மட்டில் ஓ மைனா பாடலை டிஎம்எஸ் பாடியதை நான் மிகவும் விரும்புவேன் ... பாடகர் திலகத்தின் குரல் மட்டுமின்றி ரவியின் குரலும் ஒலிக்கிறதே.. அதற்காக... மெல்லிசை மன்னரின் ரிதம்.. வித விதமாக தூள் கிளப்பியிருப்பார். வசன நடையோடு சேர்ந்த பாடல்.. இதற்கு முன் உயர்ந்த மனிதனிலும் இதே உத்தி... இவையெல்லாம் My Fair Lady ஆங்கிலப்படத்தின் பாடலை நினைவூட்டும் வண்ணம் அமைக்கப்பட்டவை.

RAGHAVENDRA
28th August 2015, 03:25 PM
நான் முதன் முதலில் வாங்கிய ஆடியோ சிடி, கிங் கம்பெனி பெயரில் வெளிவந்த ஜேசுதாஸ் ஹிட்ஸ் பாடல். அனைத்துமே ஜேசுதாஸ் வந்த 60களின் மத்தியில் வந்த படங்களின் பாடல்கள். அதில் இடம் பெற்ற முதல் பாடலே பணம் தரும் பரிசு படத்தில் இடம் பெற்ற பருவமொட்டிப் பழகும் போது பாடல் தான். அதே போல் அதனுடன் ஒரு எஸ்.பி.பாலா சிடியும் வாங்கினேன். அதில் இடம் பெற்ற முதல் பாடல், புதுச்செருப்பு கடிக்கும் படத்தின் சித்திரப்பூ சேலை பாடலே (இசை எம்.பி.சீனிவாசன்).

நடேஷைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இவர் மு.க.முத்து வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த இங்கேயும் மனிதர்கள் படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

RAGHAVENDRA
28th August 2015, 03:27 PM
எம்.பி.சீனிவாசன் காயர் மியூஸிக் எனப்படும் குழுப்பாடல் இசையமைப்பில் புகழ் பெற்றவர், பிரத்யேகமாக நிபுணத்துவம் பெற்றவர். ஆல் இந்தியா ரேடியோவில் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பாணியில் இவருக்கு அடுத்த தலைமுறையில் புகழ் பெற்றவர் திரு ஜேம்ஸ் வசந்தன்.

எம்.பி.எஸ்.சின் பாடல்கள் என்றுமே சிறப்பாக இருக்கும். தாகம் இவருக்கு புகழ் பெற்றுத் தந்த படங்களில் ஒன்று.

எம்.பி.சீனிவாசன் பாடல்களை வைத்து நாம் ஒரு தொடரே துவங்கலாம்.

madhu
28th August 2015, 03:27 PM
சிக்கா...

எம்.பி.சீனிவாசனின் இசையமைப்பில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல்... சுசீலாவின் தேன் சிதறும் குரலில்...புது வெள்ளமாய்...

https://www.youtube.com/watch?v=ueI41Mea_FQ

RAGHAVENDRA
28th August 2015, 03:28 PM
அனைவருக்கும் உளம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்.

chinnakkannan
28th August 2015, 03:28 PM
வாசு.. தாங்க்ஸ்ங்ணா.. என்னவாக்கும் பண்றது வயசாக ஆக நினைவும் முதுமையும் குறைகிறது! (போச்.. புரியலைன்னுகுரல் வரப் போகுது)

ஆஹா.. நானே தான் அந்த புதுவெ.மஞ்ச் போட்டேனா.. அந்த இன்னொரு பாட் இனிமே தான்கேக்கணும்..

பாதை தெரியுது பார்' என்று 'திரிசூலம்' படத்தின் இயக்குனர் கே.விஜயன் ஹீரோவாக நடித்து ஒரு திரைப்படம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் படத்திற்கு இசை எம்.பி.ஸ்ரீனிவாசன்தான். // சாமி சத்தியமா த் தெரியாதுங்காணும் :) ஹீரோயின் பேர் போட்டிருந்தீங்கன்னா தெரிஞ்சுருக்கலாம்..


அதே அல்காவோட ஒரு அரைகுறைப் பாட்டு ஸாரி அரைகுறை ட்ரஸ்ஸோட பாட் நீங்க போட்டிருந்ததா நினைவு.. அன்றொரு மேங்கோ ட்ரீயும் பிடிக்கும்.. ரொம்ப தாங்க்ஸ்..

இன்னிக்கு என்ன ஓணம் சாத்யா லஞ்ச் தெரியுமா சி.செ வாசு ரவி..அண்ட் ஆல்.. பீட்ரூட் ஒரு கப், கீரைக்கூட்டு ஒருகப்.. ஒரு கப் தயிர்.. ( நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு :sad: :) )

chinnakkannan
28th August 2015, 03:32 PM
ஆஹா அட அட அடடா..சின்னதா யாராம்னு ஒரே ஒரு வார்த்தைக் கேள்விக்கு அந்தக்கால இளவரசிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு(உவமை தப்போ..சரி மாத்திடலாம்) எடுக்க எடுக்கக் குறையாத அந்தக்கால நெற்களஞ்சியங்கள் போல - தகவல்கள் தரும் வாசு, ராகவேந்தர், மதுண்ணா- பாட்டு க்கு ஒரு ஓ...

தொடர் தானே.. இதோ..எங்கள் ர.வே.ராகவேந்தர் இருக்க எமக்கென்ன மனக்கவலை..:)

chinnakkannan
28th August 2015, 03:41 PM
அந்த இன்ஸ்பெக்டர் அழகு ராணி கதை இது பாட்டில ஓடி ஓடிப் போறார்ங்க்ணா.. நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல வில்லனா ராமதாஸைப் போலவே ஷீக்காலால சிகரெட்டை அணைக்கிற் ஹோட்டல் மேனேஜரா வருவாரே..அவர் தானே ( கண்ணா.. நீ ரொம்ப ப்ரில்லியண்ட்டா.. கரெக்டான ஆன்ஸர்னா ஒரு போஸ்ட் தப்புன்னா ரெண்டு போஸ்ட் கிடைக்கும்! ) :)

madhu
28th August 2015, 04:06 PM
சிக்கா...

ஹீரோயின் பேர் சொன்னா தெரியுமா ? பாதை தெரியுது பாரில் எல்.விஜயலக்ஷ்மி, தாகம் படத்துக்கு நந்திதா போஸ் ( நந்திதா தாஸ் இல்லீங்கோ )...
( எங்கேயோ எழுதி யிருந்தாங்க.... தென்னங்கீற்று பாடலுக்கு விஜயனும், காந்திமதியும் நடித்திருந்ததாக... கண்டிப்பா நம்பவில்லை.. யாருக்காவது
தெரிஞ்சா சொல்லுங்கோ )

eehaiupehazij
28th August 2015, 04:30 PM
CYCLE SONGS RECYCLED!
CYCLING AND SINGING / உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும்!

சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட இந்த யுகத்தில் ஜிம்முக்குப் போய் செலவு செய்து நிற்கும் சைக்கிளை ஓட்டி புறத்தில் உடல் எடை குறைக்க முயற்சி செய்கிறோம்! யோகா போன்ற இழுத்து இழுத்து மூச்சு விடும் பயிற்சிகள் மூலம் அகத்தில் சுத்தம் செய்கிறோம்!!
அந்தக்கால ஹீரோக்களும் ஹீரோயின்களும் திடகாத்திரமாக இருந்ததற்குக் காரணம் அவர்கள் சாலைகளில் சைக்கிளோட்டி சோலைகளில் மூச்சு வாங்கப் பாட்டுப் பாடியதே !

சைக்கிள் என்றாலே முதலில் நமக்கு நினைவில் வருவது காதல் மன்னரும் அபிநய சரஸ்வதியும் வாடிக்கை மறந்திடாமல் சைக்கிளோட்டி மோதி விழுந்து மூச்சிறைக்க காதல் மதுர கானம் காற்றில் பறக்கவிட்ட கல்யாண பரிசே !!

https://www.youtube.com/watch?v=XUFiNhC8CcA

சைக்கிளே தனக்கு ராசி என்றெண்ணி காரோட்டும் சாவித்திரியை கண்படுமே என்று துரத்தி துரத்தி கலாய்க்கும் காதல் மன்னர் !

https://www.youtube.com/watch?v=epP_PlwbiWE
சந்திப்போமா இன்று சந்திப்போமா....கல்யாண பரிசின் பாதிப்பில்! சித்தியில் முத்துராமனும் 'அலேக்' நிர்மலாவும்!
[url]https://www.youtube.com/watch?v=rZpItOq-pTM
மாலையும் இரவும் சந்திக்கும் அந்தி வேளையில் சைக்கிளில் விரைகிறார் கல்யாண் குமார் காதலியை வெளிச்சத்திலேயே பார்த்துவிட எண்ணி!!
[url]https://www.youtube.com/watch?v=dT1GM18diKg

நிற்கவைத்த சைக்கிளில் பேக் ப்ரோஜக்ஷ்னில் சைக்கிள் ஓட்டுவதாக பாவனைகளால் உடலும் உள்ளமும் உறுதி பெறுமா! அதனால் சைக்கிள் இருந்தாலும் இந்தப் பாடல்கள் இனிமையானவையே எனினும் ..ஓரங்கட்டி ஸ்டேண்ட் போடப்படுகின்றன!!!!

https://www.youtube.com/watch?v=bIaGXtTBgNs

https://www.youtube.com/watch?v=238QzYHpQ0k

eehaiupehazij
28th August 2015, 04:54 PM
ராகவேந்தர் சார்
உயர்ந்த மனிதன் மற்றும் நான்குசுவர்கள் மற்றும் ராஜ ராஜ சோழன் படங்களில் அமைக்கப் பட்ட வசனநடை அல்லது வசனங்கள் நடுநடுவே புகுத்தப் பட்ட பாடல்கள் ரெக்ஸ் ஹாரிசன் மற்றும் ஆத்ரே ஹெப்பர்ன் நடிப்பில் உருவான MY FAIR LADY (1964) திரைப்படத்தை அடியொற்றியவை என்பது என் தாழ்மையான கருத்து!

[url]https://www.youtube.com/watch?v=uVmU3iANbgk

THE SOUND OF MUSIC (1965) starring Julie Andrews and Christopher Plummer திரைப்படத்தை தழுவியே சில கலாசார மாற்றங்களுடன் காதல்மன்னர் காஞ்சனா இணைவில் சாந்தி நிலையம் வெளி வந்தது.... என்றும் மனதில் ரீங்காரமிடும் தேனிசைப் பாடல்களுடன்!!

RAGHAVENDRA
28th August 2015, 05:24 PM
ராகவேந்தர் சார்
உயர்ந்த மனிதன் மற்றும் நான்குசுவர்கள் மற்றும் ராஜ ராஜ சோழன் படங்களில் அமைக்கப் பட்ட வசனநடை அல்லது வசனங்கள் நடுநடுவே புகுத்தப் பட்ட பாடல்கள் ரெக்ஸ் ஹாரிசன் மற்றும் ஆத்ரே ஹெப்பர்ன் நடிப்பில் உருவான MY FAIR LADY (1964) திரைப்படத்தை அடியொற்றியவை என்பது என் தாழ்மையான கருத்து!

[url]https://www.youtube.com/watch?v=uVmU3iANbgk

THE SOUND OF MUSIC (1965) starring Julie Andrews and Christopher Plummer திரைப்படத்தை தழுவியே சில கலாசார மாற்றங்களுடன் காதல்மன்னர் காஞ்சனா இணைவில் சாந்தி நிலையம் வெளி வந்தது.... என்றும் மனதில் ரீங்காரமிடும் தேனிசைப் பாடல்களுடன்!!

நினைவூட்டியதற்கு மிக்க நன்றி சி.செ. சார். இரண்டு படங்களையும் பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் நீண்ட நாட்களாயிற்று என்பதால் சிறிய தடுமாற்றம். ஆம். வசன நடை பாடல்களாலேயே புகழ் பெற்றது தாங்கள் குறிப்பிட்ட மை பேர் லேடி தான். அதை எழுத நினைத்தவன், இந்த சௌண்ட் ஆஃப் மியூஸிக் எழுதி விட்டேன்.
சுட்டிக்காட்டியமைக்கு உளமார்ந்த நன்றி. பதிவிலும் திருத்தி விடுகிறேன்.

vasudevan31355
28th August 2015, 06:27 PM
வாசு சார்
தங்கள் கட்சியே நானும்..


ராகவேந்திரன் சார்,

தனிக்கட்சி தொடங்கிடலாமா?:)

நீங்கள் தலைவர். மது அண்ணா செயலாளர். செந்தில் சார் பொருளாளர். ஏன்னா அவர்தான் 1...2...3...என்று நோட்டுகளை நல்லா எண்ணுவார். நான் கொள்கை பரப்பு செயலாளர். ஆட்சிக்கு வந்தவுடன் ரவி சாருக்கு உணவு மந்திரி பதவி வழங்கி விடலாம்.:) சின்னா பதவி விரும்ப மாட்டார். அதனால் அவருக்கு பதவி கிடையாது. தொண்டர் பதவி வேண்டுமானால் போனாப் போகுதுன்னு தந்துடலாம்.:)

vasudevan31355
28th August 2015, 06:39 PM
ராகவேந்திரன் சார்,

நீங்கள் குறிப்பிட்ட 'இங்கேயும் மனிதர்கள்' படத்தில் அருமையான ஒரு பாடல். நடேஷ்தான் இசை.

மொட்டு விரிந்தது
முல்லை மலர்ந்தது சிரித்தேன்
கொஞ்சம் சிரித்தேன்
இங்கு ஒட்டுறவாடிட
உன்னிடம் என்னைக் கொடுத்தேன்
தேனை அள்ளிச் சுவைத்தேன்

மு.க.முத்துவுக்கு அதிகம் ஜோடியாக நடித்த வெண்ணிற ஆடை நிர்மலாதான் இப்பாடலின் நாயகி. நடேஷ் ஒன்று இரண்டு படம்தான் பண்ணியிருப்பார் போல. ஆனால் நல்ல திறமை. பாடலின் ஆரம்பத்தில் 'மெல்லிசை மன்ன'ரை நினைவுபடுத்துகிறார். நடுவில் சங்கர் கணேஷை. முத்து சொந்தக் குரலில் வழக்கம் போல நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். ஜானகி வழக்கம் போல.


https://youtu.be/4QLvOIYH9S0

eehaiupehazij
28th August 2015, 07:48 PM
கட்சிக்கு கொடி எம்ப்ளமெல்லாம் வேணுமே வாசு சார்..
கொ ப செ எல்லாம் ஆண்கள் சரிப்பட்டு வராதே ...!

eehaiupehazij
28th August 2015, 08:21 PM
எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் மதுர கானங்களில் படு(த்து)ம் பாடு !!
எண் நான்கு


நான்கு திசைகள் நாலடியார்...நான்குதலை பிரம்மா....பெண்டிரின் நான்கு குணங்களாம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு....நான்கு கால் விலங்கினங்கள்...நான்கு மறைகள் தரும் தீர்ப்பை நம்பினார் கெடுவதில்லை ....நாலுபேர் நாலுவிதமாப் பேசுவாங்களே என்னும் அச்சப் பக்கத்தின் மிச்சங்கள்......நாலும் தெரிந்தவரே மேதை....நாலு தட்டுத் தட்டுனா சரியாப் போயிடும் ....நாலு காசு சம்பாதிக்கிறவழியைப் பார்க்கணும்.....காருக்கு நாலு சக்கரங்கள்.....ஒரு படம் அந்தக் காலத்தில் குறைந்தது நான்கு வாரம் ஓடினால்தான் ஹிட்!.... இப்படி நாலாபக்கமும் நாலாதிக்கம் நீளுகிறது!


நாலு பக்கம் சுவரு நடுவுலே பார் இவரு .....ஜாலியாகத் தேடி ஓடி பாடி ஆடி வருகிறார் மாப்பிள்ளை!!
https://www.youtube.com/watch?v=vUU290sVlpg

நாலு காலு சார் ....நடுவுலே ஒரு வாலு சார்.....சொர்க்கம்..

https://www.youtube.com/watch?v=dE2ED9yYiV4

நாலு பேருக்கு நன்றி ......

[url]https://www.youtube.com/watch?v=tg-V4PcCJK4

நான்கு குணங்கள் கொண்டவளாம் ராமன் தேடிய சீதை !

[url]https://www.youtube.com/watch?v=qN_k-f49bw8


நம்பினார் கெடுவதில்லை...நான்கு மறை தீர்ப்பு....ராமு!

https://www.youtube.com/watch?v=oEp5BkFI630

.

vasudevan31355
28th August 2015, 08:26 PM
படு(த்து)ம் பாடு !!

:):):):)

vasudevan31355
28th August 2015, 08:29 PM
செந்தில் சார்,

நாலு வகை பூவில்
மலர்க் கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
நாலு புறம் வீசும்
மலர் வாசம் அதில் நீயே ஆள்கிறாய்


https://youtu.be/mCzOsaXZ6po

vasudevan31355
28th August 2015, 08:31 PM
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே


https://youtu.be/WG8P0apTsVk

vasudevan31355
28th August 2015, 08:34 PM
நடு இரவில் 4 கொலைக்கு அப்புறம்

4 பக்கம் ஏரி
ஏரியிலே தீவு
தீவுக்கொரு ராணி
ராநிக்கொரு ராஜா


https://youtu.be/gs1s0rRYZ-A

vasudevan31355
28th August 2015, 08:37 PM
நாலு பக்கம் வேடருண்டு

நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ

eehaiupehazij
28th August 2015, 08:40 PM
வாசு சார் ..
நாலாபுறம் கோடு கட்டி .....பந்தயம்..

https://www.youtube.com/watch?v=W7F-lMjg-GY

Both the films Sakkaram and Pandhayam had GG and Rajan in the lead. Though GG was top billed, Rajan could outshine GG in many scenes..or GG was magnanimous in helping Rajan to come up!!

rajeshkrv
28th August 2015, 08:57 PM
வாசு ஜி, மதுண்ணா, ராகவ் ஜி, சிக என களை கட்ட ஆரம்பித்துவிட்டது திரி மீண்டும்
பகவானே இப்படியே போகட்டும் திரி..

Richardsof
28th August 2015, 09:12 PM
நாலு பக்கம் வேடருண்டு ..நடுவினலே ..
அண்ணன் ஒரு கோயில் .

vasudevan31355
28th August 2015, 09:16 PM
வாசு ஜி, மதுண்ணா, ராகவ் ஜி, சிக என களை கட்ட ஆரம்பித்துவிட்டது திரி மீண்டும்
பகவானே இப்படியே போகட்டும் திரி..

ஜி!

வணக்கம்! உங்களையும், ரவி சாரையும், சிவாஜி செந்தில் சாரையும், ராஜ் ராஜ் சாரையும் சேர்த்துக்கோங்க. ஆமாம்! என்னைக்கு நம்ம திரி களை இல்லாம இருந்துச்சு? எப்பவுமே அருமையான பாடல்களோடு ஜாலிதானே?

vasudevan31355
28th August 2015, 09:18 PM
//வாசு சார் ..
நாலாபுறம் கோடு கட்டி .....பந்தயம்..//

செந்தில் சார்!

எனக்கு ரொம்பப் பிடித்தமான பாடல். பைத்தியம் என்று கூட சொல்லலாம். நன்றிகள் 1000.:)

vasudevan31355
28th August 2015, 09:21 PM
வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்

vasudevan31355
28th August 2015, 09:31 PM
ஜி!

'சப்த சாகர புத்ரிகளே'

ஷீலா போலவே பாடலும் அழகு. ஷீலா அணிந்திருக்கும் நெக்லெஸ் சூப்பர்ஜி!:)

chinnakkannan
28th August 2015, 09:49 PM
//சின்னா பதவி விரும்ப மாட்டார். அதனால் அவருக்கு பதவி கிடையாது. தொண்டர் பதவி வேண்டுமானால் போனாப் போகுதுன்னு தந்துடலாம்.// :) வாஸ்ஸூ.. இது ஹனி யாயம் அக்கிரமம்..

அன்புள்ளம் கொண்ட ஆன்றோரின் முன்னாலே
தொண்டனாய்ப் போனேனே தான்!

ம்ம் லொம்ப லொம்ப தாங்க்ஸ் :) நாலு பேருக்கு (ஒசந்த போஸ்ட்ல இருப்பவஙக்ளுக்கு) நல்லது செய்யணும்னா தொண்டனா இருந்தா தப்புல்லை..:)

அவனவன் கீர்த்தி சுரேஷோட ஸ்டில்ஸ் பார்த்துக்கிட்டு நன்னா இருக்கே பொண்ணுன்னு நினைச்சுண்டு இருக்கான்.. இங்க என்னடான்னா அவங்க அம்மாவை நினைச்சாறது..

**
நான் தேடியதில் கிடைத்த நான்கு..

வெள்ளி நிலா முற்ற்த்திலே..

நான்கு பேர்கள் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுய மரியாதை நல்ல
மனமுடையோர் காண்பது தான் தனி மரியாதை

*

ஆறு மனசுலயும் நான்குகட்டளை அறிந்தவர் மனதில்னு ஒரு வரி இருக்கோ.. சரி போனாப்போறது ஆறுக்காக விட்டுடலாம்

*

சலாம் பாபு சலாம் பாபு
என்னைப் பாருங்க
தங்கக் கையில் நாலு காசை
அள்ளி வீசுங்க..

*
ஆஹா பெண்கள் நாலு வகை ( எனக்குத்தெரியாதே!)
இன்பம் நூறுவகை வா.. (ஒ ஈ பாட் நூறுல வருமோ)

*

ஹிஹி.. தேடியதில் கிடைத்த இன்னொரு பொக்கிஷம்..

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
உன்னை மாலையிட தேடிவரும் நாலும் எந்த நாலு ( நற நற)

*
ம்ம் பாட் போடணுமோன்னோ..:)

https://youtu.be/ej-3DVyqwu0

rajeshkrv
28th August 2015, 09:51 PM
முரடன் முத்துவின் மூலம் சின்னத கொம்பே

ஜெவின் முதல் படம்

https://www.youtube.com/watch?v=hNfVHHK_xuI

rajeshkrv
28th August 2015, 09:51 PM
ஜி!

'சப்த சாகர புத்ரிகளே'

ஷீலா போலவே பாடலும் அழகு. ஷீலா அணிந்திருக்கும் நெக்லெஸ் சூப்பர்ஜி!:)
ஹ்ம்ம் என்ன இது பெண்கள் போல் உம் கண்ணும் நெக்லெஸ் மேல் செல்கிறதே ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்

rajraj
28th August 2015, 10:10 PM
chinnakkaNNan: vaathiyaar has to do his job ! :)

It is 'thangak kaiyinaale kaasai aLLi veesunga' and 'maalai ida thedi varum naaLum endha naaLu ' ! :)

chinnakkannan
28th August 2015, 10:20 PM
வாத்தியாரையா :) ஒத்துக்கறேன் ஃபார் தெ ஃபர்ஸ்ட் கரெக்*ஷன்..தங்கக் கையில்..சரி ஈ. இந்த நாலும் என்ன நாலுன்னு லிரிக்ஸ் போட்ட இடத்துல தப்பா எழுதியிருந்தாங்க..அதான் நற நற பண்ணினேன் :)

eehaiupehazij
28th August 2015, 10:30 PM
(கல)கலப்புத் தமிழ் தேனிசை மதுரங்கள் ! Honey spilling HYBRID TAMIL harmonies!!


உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு அதன் கலப்படமும் இனிமையாக ரசிக்கப் படுவதுதான்! தொலைக்காட்சிகளில் சில பெண் அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சியாளர்களும் பேசும் லகர ளகர ழகர பேதமற்ற தமிழைக் கேட்கக் கொடுமையாக இருந்தாலும் அதையும் நாம் குழந்தைகளின் மழலைக்கு அப்புறம் கைதட்டி ரசிக்கிறோமே! உல்லம் கொல்லை கொல்லுது போங்க சி க! இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மரத்(துப் போன)தமிளர்கலாகவே இருக்கிறோமே வாசு ஐயா !!

சுக்வீந்தர் சிங்கு, உதித் நாராயணர்.... தமிழ்சேவையில் நொந்து நெஸ்லே நூடுல்ஸாகி நிற்கிறோமே! பத்தாதற்கு லூஸ் மோகனாரின் காப்புரிமையானஷோக்கான சிங்காரச் சென்னைத் திமிழ் , தெலுங்கு டப்பிங் டோங்கரே தமிழ், ஆங்கிலோ இந்தியர்களின் அலுவலக டமில், சௌகார்பேட்டை ஹிந்தமில், ...தமிங்கிலம்...தங்கிலீஷ்.........நம்ஸின் மச்சான்ஸ் தமிழ், திருக்கோயில் தெருக்கோயிலாகும் மலைத்தமிழு ஈசன் ஈஷனாகும் பாகவதத் தமிழ், வெற்றிலைக் குதப்பும் அம்பாலே பேஷிய தமிழ்..!

எப்படிக்.கேட்டாலும் தமிழ் இனிமையே! கலப்புத் திருமணங்களை வரவேற்கும் நாம் கலப்புத் தமிளுக்கும் ஆலவட்டம் குலுக்குவோமே!!

நம்பர் 1 : நம்பள்கி நிம்பள் மேலே மஜா......சௌகார்பேட்டை செந்(தேள்/ன்) தமிழில் ஒரு தூக்கு தூக்கி கலகலக்கும் பாலையா.....

https://www.youtube.com/watch?v=JQC9do1vrDc

நம்பர் 2 : இன்னா மேன் பொம்பிளே நான்....யாரிந்த லெக்கிங்க்ஸ் போட்ட சட்டைக்காரி!? சாட்டைக்கார சேட்டைக்கார வேட்டைக்காரரேதான்!!

https://www.youtube.com/watch?v=DvvMUixAu20

RAGHAVENDRA
28th August 2015, 10:43 PM
https://www.youtube.com/watch?v=dE2ED9yYiV4

வாசு சார்
5 எம் ஆர் ஆர் வாசுவும் 3 சச்சுவும் ஒரு நாகேஷூம்... (ஹை.... ஒரு படத்துக்கு டைட்டில் கிடைச்சிடுச்சே) தூள் கிளப்பும்
நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார்...

சூப்பர் சாங்...

chinnakkannan
28th August 2015, 10:44 PM
டபக்குன்னு நினைவுக்கு வருவது இச்சுத்தா இச்சுத்தா.. உன்னிகிட்ட உன்னிகிட்ட சொல்லப்போறேன் பார் பாடகர்.. அப்புறம் காதல் பிசாசே (எனக்கு ரொம்பப் பிடித்தபாடல்+பிக்சரைசேஷன்) ஆனா ஏதோ செளக்கியம் பருவா இல்லைம்பார் பாடகர்..ம்ம்

உங்களோட

கருவிழி செவ்வல்லிப் பூவாக மாறும்
கனியிதழ் வெண்முல்லை வண்ணத்தைக் கூடும் பாட் கேட்டுக்கிட்டு இருக்கேன்..ம்ம் தாங்க்ஸ்.. :) ஏவிஎம் ராஜன் தான் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ண எக்காலத்திலும் கஷ்டம்..:)

eehaiupehazij
28th August 2015, 10:49 PM
HYBRID TAMIZH! (கல)கலப்புத் தமிழ் தேனிசை மதுரங்கள் !

இரண்டாமிடம் ஆச்சிக்கே ! சென்னை செந்தமிழ்ப் பெருமை......

வா வாத்திர்யாரே ஊட்டாண்டே .....ஜாம்பஜார் ஜக்குவுடன்!!

https://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s

தில்லாலங்கடி டப்பாங்குத்து ஆட்டம்....

[url]https://www.youtube.com/watch?v=YDUzDwY2Bs0

முத்துக்குளிக்க வாரீயளா ?!

[url]https://www.youtube.com/watch?v=gidiDoDCddg

rajraj
29th August 2015, 12:15 AM
இந்த நாலும் என்ன நாலுன்னு லிரிக்ஸ் போட்ட இடத்துல தப்பா எழுதியிருந்தாங்க..அதான் நற நற பண்ணினேன் :)

I have to be a mind reader? :lol: Those days are gone ! :)

eehaiupehazij
29th August 2015, 12:36 AM
காதல் மன்னர் ரசித்து மகிழ்ந்த மொட்டை மாடி மதுர கீதங்கள் !!


காற்றோட்டமான மொட்டை மாடிகள் இரவு நேரங்களிலும் மாலைப் பொழுதுகளிலும் மேகங்கள் நட்சத்திரங்கள் குளிர் நிலவு தென்றல் காற்று பின்னணியில் ரம்மியமான சூழலை உருவாக்கி மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது!!

இப்பின்னணியில் காதல்நாயகியரின் மனதை வருடும் மயிலிறகான பாடல்களை ரசித்து மகிழ்ந்திடும் காதல் மன்னர் மச்சக்காரரே !!

மொட்டை மாடி 1 : மாலைப் பொழுதின் மயக்கத்தில்....

https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE

மொட்டைமாடி 2 : கண்களை அயர வைக்கும் கான இரவு!!

https://www.youtube.com/watch?v=XupZjuPB_fU

தனிமையிலே இனிமை காண முடியுமா தங்கச்சிலை அருகிலிருக்கையில் மொட்டைமாடியும் ஒன்பதாம் மேக அடுக்கே !

[url]https://www.youtube.com/watch?v=T5MraWlvo84

rajraj
29th August 2015, 01:23 AM
From Pudhaiyal(1957)

Hello my dear rani (rami?) engammaa unakku maami....

http://www.youtube.com/watch?v=idf8w48auRE

madhu
29th August 2015, 04:13 AM
நான்கு குணங்கள் கொண்டவளாம் ராமன் தேடிய சீதை !

[url]https://www.youtube.com/watch?v=qN_k-f49bw8

.

செந்தில் சார்....

ஆடி முடிஞ்சு போச்சு... இனிமேல் தள்ளுபடி கிடையாது.. அதனால்... நாலு குணம் என்று நார்மலாக சொல்லப்பட்டாலும் ராமன் தேடிய சீதையின் குணங்கள் ஆறுதான்... நாலு இல்லே :)

"ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை - அது
யாரோ எவரோ ராமன் தேடிய சீதை"

"பொறுமையிலே பூமகளாய்
பேரழகில் திருமகளாய்
பசியில் அமுதளிக்கும் அன்னையுமாய்
காதல் அரவணைப்பில் கணிகையுமாய்
ஊழியத்தில் பணிப் பெண்ணாய்
அறிவை உரைப்பதிலே அமைச்சனுமாய்
வாழுகின்ற பெண் எவளோ
அவளே வளமார்ந்த குலமகளாம்"

இவைதான் அந்த ஆறு குணங்கள்.

லிங்கில் கிடைப்பது "நல்லது கண்ணே" பாடல்... ஆனால் எண் இடம் பெறுவது "திருவளர்செல்வியோ" பாடலில்... அதனால் அந்த லிங்க் இங்கே.

இதை ஆறு மனமே ஆறு என்று அங்கே சேர்த்து விடுங்கோ...

https://www.youtube.com/watch?v=HM8yBZ-Ya3M

madhu
29th August 2015, 04:23 AM
வாத்தியாரையா..

எனக்கும் "ராமி" என்றுதான் கேட்குது.. ( அப்போதான் மாமிக்கு பொருந்தும் )

madhu
29th August 2015, 04:55 AM
கலைச்செல்வியின் நடனத்தை ரசிக்கும் நடிகர் திலகம்
தர்மம் எங்கே என்று கேட்கும் ஜானகியும், ஈஸ்வரியும்

நான்கு காலமும் உனதாக

https://www.youtube.com/watch?v=OF1use05M2Q

eehaiupehazij
29th August 2015, 08:50 AM
Madhu sir
error regretted on 4 and corrected towards 6!
thank u for being vigilant while I slipped to sleep!
senthil

eehaiupehazij
29th August 2015, 09:03 AM
Number 5
அதிகம் பயன்படுத்தாத எண் ஐந்தே !
பரிசு என்ற படத்தில் வரும் இப்பாடலில் ஐந்து ரூபாய் என்ற வரி விதி(தை)க்கப் படுகிறது!
https://www.youtube.com/watch?v=iIk2f_tOHuA

மற்ற படங்கள் நினைவுக்கு எட்டவில்லை !!

eehaiupehazij
29th August 2015, 09:12 AM
எண்ணங்களை வண்ணங்களாக்கும் எண்களின் அணிவகுப்பில் மதுர கானங்கள் !!
எண் 6

சுவைகள் ஆறு ! முருகக் கடவுளுக்குத் தலைகள் ஆறு! கண்டங்கள் ஆறு!

ஆறு என்ற எண்ணை எண்ணியதும் எள் என்பதற்கு முன்னே எண்ணையாக மனதில் நிறைந்து வழியும் கீதம் ஆண்டவனின் கட்டளைகளை நடிகர்திலகம் உருவகப்படுத்தி அற்புதமாக வரிசைப்படுத்திய ஆறு மனமே ஆறு அமுத கீதம்தான் !!

https://www.youtube.com/watch?v=LTwHc4UBbM0

rajraj
29th August 2015, 10:25 AM
From Andhaman Kaidhi (1952)

anju roobaa nottai konjam minne maathi michamille kaasu michamille........ by T.V.Rathinam

http://www.youtube.com/watch?v=vQj7yKnmGFY


...

madhu
29th August 2015, 11:08 AM
ராசா மகனில் எஸ்.பி.பி., ஜானகி பாடும் "அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு"

https://www.youtube.com/watch?v=eS2sWQR81Kk

chinnakkannan
29th August 2015, 11:21 AM
சி.செ.. என்ன இப்படிச் சொல்லிப்புட்டீஹ..
*
அஞ்சு வச்சு ஆஞ்ச் சோட பாட் ரொம்ப ஃபேமஸாச்சே.. திரைப்பாடல்ல வராட்டியும்..
*
(வலையில் எடுத்த விளக்கம்)
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்

- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.

அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)

கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
*
ஸோ இத்தகைய சிறப்புப் பெற்ற அஞ்சுக்கு பாட்டேஇல்லையா..கொஞ்சம் மது மது செய்து பார்த்ததில்…

*
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்
*
மரபுப் பாடல் சார்லி சாப்ளினில்
*
சும்மா… பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா (முற்றிலும் மாச்சீர்களால் ஆன எழுசீர் விருத்த வரியாக்கும்!)
பையன் ஒருத்தன் சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவனும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா…
*
வெள்ளி மலை மன்னவா ஆ

அஞ்செழுத்தும் எந்தன் நெஞ்செழுத்தல்லவா?
ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா?
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா?
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?

*
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
*
அஞ்சு விரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தை தொட்டால் என்ன
*
பஞ்சவர்ணகிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பாடல் கேட்டேன்..
*
அஞ்சு வருஷங்கள் முந்திப் பொறந்தாலும்
அண்ணனும் என்னாட்டம்- அந்தப்
பஞ்சு மனசுல பத்தும் நெருப்பாக
அண்ணி இங்கே வரட்டும்..
*

சரி என்ன பாட் போடலாம்..என்னைப் பத்தியே போடலாம்..

மனசுருக்கணும் மனசிருக்கணும்
பச்சப்புள்ளையாட்டம்..

https://youtu.be/5E7uLrswsMc

madhu
29th August 2015, 11:24 AM
தொட்டி ஜெயாவில் அச்சு வெல்ல கரும்பே அஞ்சு மணி அரும்பே

https://www.youtube.com/watch?v=IKSeOKGx1EU

chinnakkannan
29th August 2015, 11:36 AM
காலையில் முக நூலில் எழுதியது

**
சுற்றி மலைகளுடன் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையாய்
முற்றும் அழகுத்தீ மூட்டிடும் – நித்தமும்
கண்கள் விரிக்கின்ற காட்சி எழிலது
என்றுமே கூடுமா மே..

செல்லாதே என்றால் சிரித்தே வழுக்கியே
நில்லாது தொண்டைக்குள் நேராகத் - துள்ளியே
பல்சுவையாய்ச் சென்றங்கே பாங்காய் மயக்கிடும்
அல்வாதான் ஓமானில் ஆம்..

(ஓமானி அல்வா.. வாவ் நன்னாயிட்டு இருக்கும்..ம்ம் நான் இப்போ சாப்பிடறதில்லை!)

*

சரி இதுக்கு என்ன பாட் போடலாம்னு யோசிச்சா உன் சமையலறையில் பாட் தான்..இந்தப் பொற்ப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது..

ஆனா அதுல கடைகள்லாம் வருது..படப் பாட் இல்லை..

https://youtu.be/ZOrM8S0AeBI

எந்தந்த இடத்துல என்னெல்லாம் சாப்பிட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க நண்பர்களே..

madhu
29th August 2015, 11:42 AM
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் ( அவள் ஒரு தொடர்கதை )

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும் ( கை தட்டி தட்டி சிரித்தாளே - ஜோடி )

ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் ( பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா - அன்னமிட்ட கை )

ஐந்து நாள் வரை, அவள் பொழிந்தது ஆசையின் மழை ( வெண்மதி வெண்மதியே நில்லு - மின்னலே )

இது ஐந்து புலன்களின் ஏக்கம் ( விழிகளின் அருகினில் வானம் - அழகிய தீயே )

ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் ( அமர்க்களம் )

ஐந்து என் கிறாய் என் ஐந்து புலன் அவள் ( பத்துக்குள்ளே நம்பர் - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் )

இனி

ஐந்தோடு ஆறும் சேர்ந்து வரும் "அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்குப் பொருத்தமடி" ( என்னடி ராக்கம்ம - பட்டிக்காடா பட்டணமா )

"ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா" ( மலர்களே மலர்களே - லவ் பர்ட்ஸ் )

"கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை" ( கண்கள் நீயே காற்றும் நீயே - முப்பொழுதும் உன் கற்பனைகள் )

"ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டி சென்றாலும்
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்" ( அவள் யாரவள் அழகானவள் - அன்பு )

இன்னும் நிறைய இருக்கலாம்னு தோணுது

chinnakkannan
29th August 2015, 11:47 AM
ஹை..ஒரே சூறாவளிதான் போங்க மதுண்ணா :) கலக்கிப் புட்டீய..

ஆமா இந்த க் குஞ்சான் இனிப்புக்கடை மன்னார்குடி எப்படி இருக்கும்..

uvausan
29th August 2015, 01:08 PM
திரையில் பக்தி

பகுதி 1

திரு ராஜ் அவர்களின் வேண்டுகோள் படி தெய்வத்தைப்பற்றியும் சிறிய அளவில் அலசி விடலாம் என்று நினைக்கிறேன் - அவர் அளவுக்கு ரசித்து போட முடியாமல் போனாலும் , முயற்ச்சியை கை விட மனம் வரவில்லை . இத்துடன் என் நீண்டபயணமும்மான ஆன - மாதா - பிதா - மனைவி , நண்பர்கள் , குரு , தெய்வம் இனிதாக நிறைவேறும் .

இறைவன் உண்மையில் இருக்கின்றானா ? அவன் இருந்தால் ஏன் தென் படுவதில்லை ? பார்க்க முடியாத ஒன்றை எப்படி நம்புவது - அப்படி நம்புவது அடிமுட்டாள் தனமல்லவா ?? இப்படிப்பட்ட கேள்விகள் , உலகம் தோன்றிய முதல் எழுந்த வண்ணம் தான் உள்ளது - இப்படி கேட்ட பலர் பிறகு ஞானிகளாக மாறி வணங்கப்படுபவர்களானார்கள் .

என்னைப்பொறுத்த வரையில் - "Creativities" என்பதை நாம் ஒத்துக்கொள்ளும் போது , அதற்கு ஒரு "Creator " என்பதையும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் -- . எப்படி நமக்கெல்லாம் பெற்றோர்கள் இருக்கிறார்களோ அப்படி !! . நம்மில் பலருக்கு அதிர்ஷ்ட்டம் இருக்கலாம் " கொள்ளு தாத்தா , பாட்டி " நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு . இப்படி வாழை அடி வாழையாக செல்லும் உறவில் , நாம் பலரை பார்க்காமலேயே , அவர்கள் இருந்திருப்பார்கள் என்று நம்புகிறோம் . அதை நாம் என்றுமே சந்தேகப்படுவதில்லை . நம்முள்ளேயும் இறைவனை பார்த்திருக்காத , அதே சமயத்தில் நன்றாக அவனை உணர்ந்து இருக்கின்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் - ஆனால் அவர்கள் சொல்வது மட்டும் ஏன் விவாத மேடைக்கு வர வேண்டும் ??

தெய்வம் உணரப்படவேண்டிய ஒன்று ! அனுபவிக்க வேண்டிய ஒன்று - மற்றவர்களின் பண்புகளில் நாம் காண வேண்டிய ஒன்று . நிலாவில் Neil Alden Armstrong - " இறைவனே உனக்கு நன்றி " என்று சொல்லித்தான் கால்களை ஊன்றினார் . மறுபடியும் சொல்கிறேன் - creativities are many but creator is only one - இந்த நம்பிக்கை நமக்கு வந்துவிட்டால் , ஜாதி , மத வேறு பாடுகள் - அந்த கடவுள் தான் உயர்ந்தவர் - இந்த கடவுள் மட்டம் என்று பிதற்றிக்கொண்டிருக்க மாட்டோம் - ஏசுவாக , ஈசனாக , , கண்ணனாக அல்லாவாக , குருநாயக் ஆக இருப்பதும் அந்த ஒரு creator தான் . ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள் இந்த உண்மையை - நமக்குள் சகோதர பாசம் பூத்து குலுங்க ஆரம்பித்துவிடும் , நாட்டில் மத , இன சண்டைகளுக்கே இடம் இல்லாமல் போய்விடும் . பிறகு எங்குமே அன்புதான் , அமைதிதான் !!!.

மாதா , பிதா , மனைவி , நண்பன் , குரு ---- இத்தனை பேர்களுக்கும் பிறகுதான் தெய்வம் - எல்லா படைப்புக்களுக்கும் காரணமான தெய்வத்தை ஏன் கடைசி வரிசையில் தள்ளி விட்டோம் ? அவர் அவ்வளவு முக்கியம் இல்லாதவரா ??? - அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது . தெய்வம் என்றுமே தானாக இயங்குவதில்லை . அவர் செய்யும் கருணைகள் , காரியங்கள் , தன்னுடைய representatives மூலமே நிறைவேற்றுகிறார் . பெற்றோர்கள் அவருடைய முதல் representatives , பிறகு நல்ல மனைவியை நமக்கு கொடுப்பதின் மூலம் அன்பையையும் , சிறந்த பண்புகளையும் கற்றுக்கொடுக்கிறார் ; பிறகு நல்ல நண்பன் கிடைத்தால் , அதன் மூலம் பிறருக்கு உதவி செய்வது எப்படி என்பதை நமக்கு சொல்லித்தருகிறார் . பிறருக்கு மனமார நன்றி சொல்வது எப்படி என்பதும் ஒரு சிறந்த நண்பன் மூலம் தான் நமக்குத் தெரிய வருகின்றது .பிறகு குருவின் மூலம் நம் அறிவை அதிகரிக்கிறார் . இத்தனையும் அவர் செய்து விடுவதால் அவர் இருக்கும் இடம் காலியாகத்தானே இருக்கும் - அதில் தான் அவர் உணவு அருந்துவதும் , உறங்குவதும் எல்லாமே !!

மஹா பாரதம் முடிவடைந்தது - கண்ணன் , அர்ஜுனனிடம் கேட்கிறான் " அர்ஜுனா உனக்கு நான் தந்தையாக இருந்து உனக்கு சில கடமைகளை சொல்லிக்கொடுத்தேன் , குருவாக இருந்து யாருக்குமே கிடைக்காத கீதையின் மூலமாக பல உண்மைகளை சொன்னேன் . உனது வேலைக்காரனாக இருந்து உனக்கு ரதம் ஓட்டினேன் . உன் நண்பனாக இருந்து , உன்னை என்றும் பிரியாமல் உனக்கு உதவியாக இருந்தேன் , என் தங்கையை உனக்கும் மணம் முடித்து உனக்கு நெருங்கிய உறவினரானேன் ..... நான் போட்ட இத்தனை வேடங்களில் உனக்கும் பிடித்த வேடம் எது ? "

அர்ஜுனன் கண்களில் கண்ணீர் மல்க " கண்ணா உன்னை நண்பானாக அடைய எவ்வளவு ஜென்மங்கள் தவம் செய்திருப்பேன் என்று எனக்குத்தெரியாது - எனக்கு எல்லாமே நீ தான் ! - நீ தான் என் தன் நம்பிக்கை , முயற்சி , வெற்றி ... நீயே சரணம் !!" - ஒரு நண்பனின் உயர்வை இதற்கு மேலும் சொல்ல முடியுமா ? யார் யார் எப்படி உறவு கொண்டாடுகிறார்களோ அப்படியெல்லாம் இறைவன் தன்னை அதற்கு ஏதுவாக தன்னை தயார் படுத்திக்கொள்கிறான் ..

நம்பிக்கை வேண்டும் - எல்லா மதங்களும் சொல்வது இதைத்தான் !! அவனிடம் செல்லும் வரையில் நமக்கு சந்தேகம் இருக்கலாம் - அது தவறு இல்லை - அவனை அடைந்த பின் அவன் இருக்கிறானா என்ற சந்தேகம் வரக்கூடாது ..

(தொடரும் )

uvausan
29th August 2015, 01:19 PM
திரையில் பக்தி


பகுதி 2

ஒரு பெரியவர் ஸ்ரீமத் பாகவதம் சொற்ப்பொழிவு நடத்திக்கொண்டிருந்தார் - இரவு 10 மணியாகிவிட்டது - அவர் சொற்ப்பொழிவு தொடர்ந்தது - மக்கள் அவருடைய பேச்சில் தங்களை மறந்து லயித்திருந்தார்கள் . ஒரு திருடனும் , திருடுவதற்காக அங்கே வந்தான் - கூட்டம் எழுந்திருக்காததால் அவனும் தன்னை ஒரு புதற்குள் மறைத்துக்கொண்டு அவர் சொல்லும் குட்டி ( CK இது மலையாள குட்டி அல்ல !!:)) கதைகளில் தன்னை மறந்திருந்தான் - அதிகமாக படிக்காதவன் . ஒரு இடத்தில் அவர் கண்ணனைப்பற்றி வர்ணித்தார் - அவன் போட்டுக்கொண்டிருக்கும் ஆடை அணிகலன்களைப்பற்றி விளாவாரியாக சொன்னார் . ஒளிந்திருந்த அந்த திருடனுக்கு ஒரு பிரகாசமான யோசனை வந்தது " சொற்ப்பொழிவு முடிந்தது . எல்லோரும் கலைந்தனர் . திருடன் அந்த சொற்ப்பொழிவு சொன்னவரை அணுகினான் - அருகில் எவரும் இல்லை " சுவாமி - உங்கள் கதைகளைக்கேட்டேன் ! நான் ஒரு திருடன் - ஐந்தோ , பத்தோ தான் கிடைக்கிறது - எனக்கே இது பத்தவில்லை - நீங்கள் சொன்னீர்களே கண்ணன் ... அவன் எங்கிருக்கிறான் ?? அவனிடம் ஏது இவ்வளவு நகைகள் - அவனிடம் திருடலாம் என்று இருக்கேன் -- அவனுடைய விலாசத்தை சொல்ல முடியுமா ?"

திருடன் என்று சொன்னதில் வந்த பயம் , அவன் அறியாமை நீக்கி விட்டது . அந்த பெரியவர் அவனிடம் தப்பிக்க வேண்டி இப்படி சொன்னார் " தம்பி அவன் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவைகள் - அவன் இருக்கும் இடம் துவாரகா - இங்கிருந்து 100 km தொலைவில் உள்ளது - அங்கே இருக்கும் நதியின் கரையோரும் மாலைப்பொழுதில் அவன் தன் அண்ணனுடன் அங்கு வரலாம் - நீ அங்கு செல் " --

திருடன் விடவில்லை " சுவாமி கண்ணனை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?" - பெரியவர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் , அவர் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு முட்டாளை அவர் பார்த்ததே இல்லை !"

" வருபவன் கண்ணன் தான் என்று அவனின் கருமையான உருவத்திலும் , அவன் கையில் இருக்கும் புல்லாங்குழல் மூலமாகவும் , அவன் தலையில் மயிலின் ஒரு சிறகின் மூலமும் தெரிந்து கொள்ளலாம் " என்றார் .

அவசர அவசரமாக எப்படியோ , எதையோ சொல்லிவிட்டோம் என்ற திருப்தியில் அந்த பெரியவர் ஓட்டம் எடுத்தார் .

திருடன் மனதில் உறுதி பிறக்க ஆரம்பித்தது - இந்த சின்ன சின்ன திருடுகளை விட்டுவிட்டு கண்ணனிடம் உள்ள நகைகளை திருடி விட்டால் , இந்த தொழிலுக்கு ஒரு முழுக்கு போட்டு விடலாம் ... கால்கள் துவாரகையை நோக்கி பயணித்தன . எப்படியோ துவாரகை வந்து சேர்ந்தான் - ஆதவன் விடை பெரும் நேரம் - நதிக்கரையோரம் - பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தன --- ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொண்டு கண்ணன் வருகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தான் அந்த திருடன் ... தொலைவில் இரு சிறுவர்கள் வருவதைப்பார்த்து அவனுக்கு அளவில்லாத சந்தோஷம் - வருபவன் கண்ணாக இருக்க வேண்டும் என்று அவன் உள்மனது வேண்டியது - ஆம் வந்தவன் எவரையும் மயக்கும் மாதவன் தான் - கருமை நிறம் - உடல் முழுவதும் விலைமதிக்க முடியாத நகைகள் , வைரங்கள் .... கையிலே புல்லாங்குழல் - இதழ்களில் வாடாத புன்னகை !!

மரத்தில் இருந்து ஒரே தாவாக தாவி கண்ணனை மடக்கினான் . கண்ணனும் அவனிடம் மிரள்வதுபோல நடித்தான் -- " உன் பெயர் கண்ணனா ? உனக்கு ஏது இவ்வளவு நகைகள் ?? நான் ஒரு திருடன் - நீயோ ஒரு சிறுவன் - உன்னை அடிக்க மனம் வரவில்லை - உடனே எல்லாவற்றையும் கழட்டு ""

கண்ணன் சிரித்துக்கொண்டே எல்லாவற்றையும் கழற்றி அவனிடம் கொடுத்தான் . மிரளாமல் , பயப்படாமல் கண்ணன் எல்லாவற்றையும் அவனுக்கு தரும்போது , திருடன் கேட்டான் " உன்னை உன் அம்மா அடிக்க மாட்டாளா ??" - கண்ணன் சொன்னான் " அதை நான் சமாளித்துக்கொள்கிறேன் - நீ இத்தனை நகைகளையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு உன் ஊருக்கு செல் - நீ போகும் பாதை சரியல்ல --- திருடர்கள் நிறைந்த பாதை -- கீதையின் தத்துவம் திருடனுக்கு எங்கே புரியப்போகிறது ??? .. கண்ணன் மறைந்தான் ...

ஊருக்கு திரும்பிய திருடன் அந்த பெரியவரைப்பார்த்து அவர் கால்களின் சாஷ்ட்டாங்கமாக விழுந்தான் -- பெரியவரே " கேட்டதும் கொடுப்பவனை , உங்கள் புண்ணியத்தால் பார்த்தேன் - அவனின் நகைகள் முழுவதும் இதோ இந்த பையில் இருக்கிறது - எனக்கு நீங்கள் வாழ்வு கொடுத்தற்காக , நீங்கள் இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் " என்றான் - அந்த பெரியவருக்கு ஒன்றுமே புரியவில்லை - கண்ணனை பார்த்தாயா ? இவைகள் அவன் அணிந்த நகைகளா ?? - அந்த நகைகளைப் பார்வை இட்டார் - அவரால் நம்ப முடியவில்லை - அவர் சொற்ப்பொழிவில் வர்ணித்த அதே நகைகள் - ஒன்றுமே விட்டு விடாமல் அனைத்தும் அந்த பையில் இருந்தன . கண்களில் கண்ணீர் கங்கையாக பிரளயம் எடுத்தது . அவனிடம் கெஞ்சினார் தன்னையும் அதே இடத்திற்கு கூட்டிச்சென்று கண்ணனை தனக்கும் காண்பிக்க வேண்டினார் . அந்த திருடன் அவரை அதே இடத்திற்கு அழைத்துச் சென்றான் - அதே மாலை பொழுது - இருவரும் ஒரு மரத்தடியில் , கண்ணன் வரவிற்காக !! சிறிது நேரம் சென்றது - திருடன் துள்ளிக் குதித்தான் - அதோ என் கண்ணன் --- அவனுடன் வருவது அவன் அண்ணன் பல ராமன் ........ பெரியவருக்கு யாருமே தெரியவில்லை - கண்ணை கசக்கிக்கொண்டுப்பார்த்தார் - கண்கள் சிவந்துதான் மிச்சம் - கண்ணன் தெரியவில்லை -- அவனுடைய மதுர கானமும் கேட்கவில்லை ----- அவருடைய அமைதி அவரிடம் இருந்து விடைப்பெற்றது -- புலம்பினார் --- " கண்ணா - நீ ஓர வஞ்சனைக்காரன் - உன் பாகவதத்தை ஒரு நாளும் நான் விடாமல் எல்லோருக்கும் சொல்கிறேன் - நீயோ ஒரு திருடனுக்கு காட்சி கொடுக்கிறாய் ! என்ன நியாயம் கிருஷ்ணா ?? "

கண்ணன் கனவிலே வருகிறான் --- " நான் என்றுமே ஓர வஞ்சனை செய்பவன் அல்ல -- நீ பாகவதத்தை வெறும் கதையாகவே நம்பினாய் - அதை கதையாகவே சொன்னாய் - அதனால் உனக்கு நான் என்றுமே ஒரு கதையாகவே இருப்பேன் ... மாறாக அந்த திருடன் உன் கதைகளை கதைகளாக நம்பாமல் உண்மைகள் என்றே நம்பினான் - அவன் நம்பிக்கையை நான் எப்படி மோசம் செய்ய முடியும் ??"

நம்பிக்கை வேண்டும் என்பதை உறுதி செய்யும் சம்பவம் இது . "தெய்வம் என்றால் அது தெய்வம் ! வெறும் சிலை என்றால் அது சிலை தான் !!" உண்டு என்றால் அது உண்டு ! இல்லை என்றால் அது இல்லை !! - கண்ணதாசனின் அருமையான வரிகள் ----

( தொடரும் )

uvausan
29th August 2015, 01:22 PM
திரையில் பக்தி

பகுதி 3.

இறைவன் இருக்கின்றானா ? - கேள்வியும் பதிலும்


இறைவன் இருக்கின்றானா, மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ?

https://www.youtube.com/watch?v=GwS6EoJOBek

ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒரு சுவாரஷ்யமான நிகழ்ச்சி. இப்பாடலை பாடவந்த T.M.S, கண்ணதாசனின் ஒரு சொல்லைக்கண்டு அதிர்ந்தார். அவன் (கடவுள்) காதலித்து வேதனையில் சாகவேண்டும் என்பது கவிஞர் வரி. பாட மறுத்தார் T.M.S. உடனடியாக கவிஞர் அழைக்கப்பட்டார். எவ்வளவு எடுத்துக் கூறியும் T.M.S, கடவுளை சாகவேண்டும் என பாடமாட்டேன் என்றார். அதன்பிறகு "வாடவேண்டும்" என மாற்றிக் கொடுத்தார் கவிஞர். ஒரு இடையூறும் இல்லாமல் ஒரே தடவையில் டி.எம்.எஸ் பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. பணம் என்றால் பிசாசுபோல் அலைவர் இக்கால கலைஞர்கள். ( இணைய தளத்திலிருந்து -----)

https://www.youtube.com/watch?v=FlkDNOi21i8

உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை


உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி

https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg

இந்த கேள்விகளுக்கு பதிலாக அமைந்த சில திரைப்பட பாடல்களை நாளை பார்ப்போம் !!

( தொடரும் )

eehaiupehazij
29th August 2015, 02:26 PM
மதுஜி ! சி க !!
இதற்குப் பேர்தான் 'கோடு போட்டால் ரோடு' என்பதா !?
கருத்துப் பரிமாறல்களால் திரியின் மாட்சிமையும் பதிவர்களின் மாண்பும் அதிரி புதிரி மேன்மை அடைகிறது !!
தங்குதடையற்ற கருத்துக் கோர்ப்புக்கு நன்றிகள் !
செந்தில்

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை ....அஞ்சுக்கு பின்னாலே வந்த பிள்ளை.....

https://www.youtube.com/watch?v=YYto4UqG46g

eehaiupehazij
29th August 2015, 03:01 PM
எண்ணற்ற தமிழ்த் திரை மதுர கானங்களில் எண்களின் ஆதிக்கம் !!
எண் 7


வானவில்லின் வண்ணக் கற்றைகள் ஏழு VIBGYOR ! ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் !உலக அதிசயங்கள் ஏழு !ஸ்வரங்கள் ஏழு ச ரி க ம ப த நி! உலகில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்களாமே!

மந்திரவாதியின் உயிர் ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒரு குகைக்குள் தொங்கிக் கொண்டிருக்கும் வவ்வாலின் தலையில் இருக்குமாமே!

ஏழு எல்லோராலும் விரும்பப் படும் ஒற்றர்திலகம் ஜேம்ஸ் பாண்டின் தொழில்ரீதியான அடையாளக் குறியீட்டு எண் OO7!

இரண்டு கண்களோடு மூன்றாவதான ஞானக்கண் போல மனிதரின் ஆறாவது அறிவையும் தாண்டி ESP புலனறிவான ஏழாவது அறிவே அவரை புகழுச்சிக்கு
இட்டுச்செல்கிறது!!


ஏழுகடல் சீமை..... அதை ஆளுகின்ற நேர்மை.... எங்க ஊரு ராஜா ....தங்கமான ராஜா

https://www.youtube.com/watch?v=p36pPEucSyo

ஏழு ஸ்வரங்களுக்குள் ....

https://www.youtube.com/watch?v=csnyfoXugdE

uvausan
29th August 2015, 04:18 PM
செந்தில் சார் - ஒரு ஆச்சரியத்தை கவனித்தீர்களா - " SENTHIL " - இந்த பெயரும் 7 letters யை உடையது . இதனால் 7 என்ற எண்ணிற்குத்தான் எத்தனை பெருமை , கர்வம் - இந்த ஒரே விஷயத்தில் மற்ற எல்லா எண்களையும் தன் மேல் பொறாமை பட வைத்து விட்டதே !!!

uvausan
29th August 2015, 04:22 PM
ஏழு மலையிருக்க நமக்கென்ன மனக்கவலை ??

https://www.youtube.com/watch?v=TNfbqL2R6bk

uvausan
29th August 2015, 04:25 PM
ஏழு மலை வாசா , எம்மை ஆளும் ஸ்ரீனிவாசா - எந்நாளும் துணை நீயே ஸ்ரீ வெங்கடேசா !!!

https://www.youtube.com/watch?v=Eiy0iJouEuk

chinnakkannan
29th August 2015, 04:31 PM
ஏழு ஸ்வரஙகள் ஒரு ராகம் ...ஒருமுறை தான் வரும்...ம்ம்ம்ம் அந்த ...காதல்வரும்..என்பது போல் ஒரு பாட் இருக்கு தேடினா கிடைக்கலை :)

chinnakkannan
29th August 2015, 04:36 PM
ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போனபின்னும் சோறு தண்ணி வேண்டிடத்தான் தோணல்ல

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ..

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு..ஓ..இது திருப்பாவைப் பாட்டு.. :)

uvausan
29th August 2015, 04:37 PM
ஏழி சை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே ----

அருமையான பாடல் , இசை , ஜேசுதாஸின் குரல் - இந்த பாடல் நம்மை , நெய்வேலி , கோவை , muscat , USA இவைகளைத்தாண்டி எங்கோ அழைத்துச்செல்லக்கூடியது

https://www.youtube.com/watch?v=XB8KfKmPTB4

raagadevan
29th August 2015, 05:06 PM
Here's the Mallu version of "ஏழிசை கீதமே ...", awfully presented in a comedy movie (சிரியோ சிரி - 1982)!

https://www.youtube.com/watch?v=yDpWf7t8gVU

eehaiupehazij
29th August 2015, 05:18 PM
ரவி சார்
காலம்தவறாமை எப்படி நடிகர் கர்ணனின் கவசகுண்டலமோ அதுபோல ஈடுபாடு பகுப்புடன் கூடிய தொகுப்பு உங்களின் உடன்பிறந்த குணாதிசயமே ! திருக்குறள் சார்ந்த பதிவுகள் ...நான் கிரகித்துக் கொள்ளவே பிர்மிப்பானவை!
சீரான பதிவுகளில் வேரான கருத்துக்களை நேராக அலசும் தங்கள் பாணி முன்பு நான் நிராயுதபாணியே !!
செந்தில்

eehaiupehazij
29th August 2015, 05:27 PM
சி க
எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த மாதிரி சிரி தடவிய பொரி பாணியை?
இமிடேட் பண்ண இயலவில்லையே!
3000 முடிக்கும்போது ஓரளவு உங்களையும் வாசுவையும் ரவியையும் மதுஜியையும் ராஜ்ராஜையும் அனேகமாக பதிவுத் தரத்தில் நெருங்கி துரோணர்களின் ஏகலைவனாகி விடுவேன், கட்டைவிரலைக் காப்பாற்றிக்கொண்டுதான்!!
செந்தில்

eehaiupehazij
29th August 2015, 05:45 PM
எட்டுக்கால் சிலந்தியின் வலைப்பின்னலாய் எட்டுக்கை ஆக்டோபஸின் அலைமின்னலாய் நம்மை அணைக்கும் எண் எட்டு!

வாகன ஓட்டிகளுக்கு எண் எட்டு ராசியில்லாததாகக் கருதப் படும் நான்சென்சு ... ..ஆனால் அதைப் போட்டால்தான் கிடைக்குமாம் டிரைவிங் லைசென்சு!
திரைப்படங்களுக்கு டைட்டில் வைப்பதிலும் எட்டு ராசி பார்க்கப் படுகிறது !
கல்யாண பரிசு....வாழ்க்கை படகு ....ராமன் தேடிய சீதை....தங்க சுரங்கம்.....
வாழ்க்கையை எட்டு எட்டாய் பிரித்து பிரித்து கொட்டு வைத்தவர்களுக்கு ஷொட்டு ! கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே டக்குமுக்கு!!

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த காதல் தலைவர் ஏன் விட்டுவிட்டு சென்றாரோ ?
https://www.youtube.com/watch?v=YpS9AkgHCo0
எட்டு எட்டா எட்டாத வாழ்க்கை ..
https://www.youtube.com/watch?v=dO7iFsiFbAM

vasudevan31355
29th August 2015, 06:23 PM
ஏழு ஸ்வரஙகள் ஒரு ராகம் ...ஒருமுறை தான் வரும்...ம்ம்ம்ம் அந்த ...காதல்வரும்..என்பது போல் ஒரு பாட் இருக்கு தேடினா கிடைக்கலை :)

சின்னா!

அது

7 தினங்கள் ஒரு வாரம்
7 சுரங்கள் ஒரு ராகம்
7 முறைதான் பிறவி வரும் அந்த
7 லும் நமக்குக் காதல் வரும்.

'மனசாட்சி' படத்தின் தூள் பாட்டு. 'சந்தன மேடையில்' என்று ஆரம்பித்து தன் காந்தக் குரலால் கலக்கி எடுத்து விடுவார் 'பாடகர் திலகம்'.


https://youtu.be/5cqCLTqvXxw

vasudevan31355
29th August 2015, 06:28 PM
என் பாட்டை விட்டுட்டீங்களே! அதுக்குள்ளே மறந்தாச்சா?:)

http://cdn.spicyonion.com/cache/images/profile/movie/1981/kalthoon-225x300.jpg

'ஏழு தலைமுறையில் முன்பிருந்ததொரு
எங்கள் வம்ச மகன் நட்ட வேல்'

'கல்தூண்' படத்தின் கல்தூண் பாடல்.

RAGHAVENDRA
29th August 2015, 06:33 PM
இன்னும் பத்தே தாண்டலையே.. எப்போது 50 வந்து, நூறு வந்து... ஐநூறு வந்து...

ஹ்ம்.. எண்ணூறாம் நம்பர் பாட்... டு போடலானு பாத்தா ... இப்போதைக்கு முடியாது போலிருக்கே...

RAGHAVENDRA
29th August 2015, 06:34 PM
யாரோ ஒருத்தர் ஏழு வயசிலே எளநி வித்தாங்களாமே... யாருக்காச்சும் தெரியுமா... அப்படி ஒரு பாட்டிருந்தா போடலாமே...

RAGHAVENDRA
29th August 2015, 06:35 PM
ம்.ம்... ஐம்பதாம் நம்பருக்கும் பாட்டிருக்கு.. எப்போ வருமோ..

RAGHAVENDRA
29th August 2015, 06:38 PM
மனுஷன் வீடு கட்டறதுக்கு ஆபீஸ் கட்டறதுக்கு வாஸ்து பாப்பாங்க.. இங்கோ ஒருத்தர் கோவிலில் சாமி இருக்கிறதுக்கே வாஸ்து பார்க்கிறார்..

எட்டடி கோயிலிலே நீ வசிக்க இடமொண்ணு இருக்குதய்யா..

ராணி லலிதாங்கி படத்தில் தலைவரின் சூப்பர் பாட்டு..

https://www.youtube.com/watch?v=GeqtqTaCTeM

vasudevan31355
29th August 2015, 06:48 PM
எட்டு ஏழு ஆறு
ஓர் எட்டு ஏழு ஆறு

மூணு நம்பர்களையும் ஒண்ணா சொல்லி டி.ஏ.மதுரம் மதுரக் குரல்ல பாடுறாரே!


https://youtu.be/THpHQM26F60?list=PLUSRfoOcUe4YJm_MxrhH61gNGFP-reZCg

madhu
29th August 2015, 06:48 PM
ரவி ஜி...

தெய்வம் என்றால் அது தெய்வம் என்ற குட்டிக்கண்ணனின் சின்னக் கதை ( சின்னக் கண்ணனின் குட்டிக் கதை அல்ல ) மனதை மயக்கி விட்டது. நான் ஒரு கண்ணதாசன் :)

இறைவன் இருக்கின்றானா என்ற கேள்விக்கு இவர் ஒரு பதில் தருகிறார் கேளுங்க

https://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

vasudevan31355
29th August 2015, 06:52 PM
எட்டு மடிப்பு சேல
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல
பட்டம் கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு

நல்ல பாடல்.


https://youtu.be/aGxJeJssNE8

vasudevan31355
29th August 2015, 06:55 PM
எட்டுத் திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே என் கூடக் கொஞ்சம் வா வா வா வா ----பொழுது விடிஞ்சாச்சு

vasudevan31355
29th August 2015, 06:57 PM
ஒரு எட்டு முழ வெட்டி கட்டி
அடி ஏன் புருஷன் நடக்கையிலே
பாதி பல்லு போனக் கிழவிகளும்
நெஞ்சு படபடத்து துடிப்பாங்க ---- பட்டணந்தான் போகலாமடி

vasudevan31355
29th August 2015, 07:01 PM
இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரொம்போது பதினெட்டு

இவருக்கு வயசு மூவெட்டு
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு

madhu
29th August 2015, 07:03 PM
ஏழு கடல் நாயகியே ( பைரவி )

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே ( ரம்பம்பம் ஆரம்பம் - மை.ம.கா.ரா )

வானவில்லின் வர்ணங்கள் ஏழு ( என் வாலிபமென்னும் - பால்குடம் )

மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜன்மம்தான் ( ஆடியிலே சேதி - என் ஆசை மச்சான் )

ஏழு கடல் தாண்டிதான் ஏழு மலை தாண்டிதான் ( உருகுதே மருகுதே -வெயில் )

என்னை ஏழு கலர் லுங்கியா மடிச்சுபுட்டாளே ( மெரசலாயிட்டேன் - ஐ )

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் ( முத்தான முத்தல்லவோ )

ஏழு என்கிறாய் என் ஏழு சுரம் அவன் ( பத்துக்குள்ளே - வசூல் ராஜா )

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் ( கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்ரகாளி )

ம்ம்ம்.. இன்னும் கண்டிப்பாக இருக்கும்

vasudevan31355
29th August 2015, 07:03 PM
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே

uvausan
29th August 2015, 07:04 PM
செந்தில் சார் - இந்த ஒரு பாடல் உங்கள் எண்ணிக்கை முழுவதையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்று - எதிர்காலத்தில் செந்தில் என்பவர் மதுரகான திரியில் வருவார் - திறமையில் ஒன்று , இரண்டு என்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் அவரும் ஒருவர் என்று எண்ணியோ, என்னவோ அன்றே நடிகர் திலகம் இந்த பாடலை உங்களுக்காக பாடி உள்ளார் .

https://youtu.be/YofxxvjzSLM

uvausan
29th August 2015, 07:05 PM
வாசு - நான்கு சுவர்கள் - பாலாவின் பாடல் - அன்றே நான்கு சுவர்களுக்குள் அடங்காமல் பட்டி தொட்டியெல்லாம் அலறிய பாடல் - நடையா ? இது நடையா என்ற பாடலைப்போல மிகவும் பிரபலமான பாடல் ... இந்த பாடல் உங்கள் வரிசையில் வரக்கூடம் என்று யூகித்தேன் - கண்ணை திறந்து பார்க்கும் முன் பதிவு செய்து விட்டீர்கள் - மிகவும் நன்றி .

madhu
29th August 2015, 07:05 PM
எட்டு வகைத் திருமகளும் ஒட்டு மொத்தமாக அரண்மனையில் குடிபுகுந்தாஆஆஆஅர்....

மனோரமாவுக்காக பி.சுசீலா குரல் கொடுக்க ஒய்.ஜி.எம்முக்கு எஸ்.பி.பி... பாலூட்டி வளர்த்த கிளி

https://www.youtube.com/watch?v=wKBFpO1mL1A

uvausan
29th August 2015, 07:06 PM
மீண்டும் மீண்டும் விவசாயிகள் தற்கொலை என்ற ஒரே ஆயுதத்தையே உபயோகித்து வருகின்றனர் . தெலுங்கானாவில் நேற்று பல இடங்களில் தற்கொலையின் மொத்த எண்ணிக்கை பத்து - மனம் உருகியதில் உதித்த கவிதை இது ( படித்ததில் பிடித்த ஒன்று )

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.

https://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag

vasudevan31355
29th August 2015, 07:07 PM
ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
ஈரெட்டு வயதினில் நிற்கும்
மான் வண்ணமென தேன் கிண்ணமென
வேறே ஏது சொர்க்கம்----பதிலுக்கு பதில்


https://youtu.be/K6BG05uMXHk

vasudevan31355
29th August 2015, 07:10 PM
மதுண்ணா! ரவி சார்!

மாலை வணக்கம். இன்று மார்னிங் ஷிப்ட். அதான் வரமுடியல.

uvausan
29th August 2015, 07:14 PM
ரவி ஜி...

தெய்வம் என்றால் அது தெய்வம் என்ற குட்டிக்கண்ணனின் சின்னக் கதை ( சின்னக் கண்ணனின் குட்டிக் கதை அல்ல ) மனதை மயக்கி விட்டது. நான் ஒரு கண்ணதாசன் :)

இறைவன் இருக்கின்றானா என்ற கேள்விக்கு இவர் ஒரு பதில் தருகிறார் கேளுங்க



மது சார் , முன்பு கருக்குள் கரு பதிவுகள் போடும் போது பல பாடல்கள் சேர்த்து வைத்தேன் - அதில் பல என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் நெய்வேலி பக்கம் சென்று விட்டன - இன்றும் இந்த நிலைமை தொடர்கிறது - பாருங்கள் பெட்டியில் பூட்டிவைத்து , நாளை போடலாம் என்று நினைத்த பாடல் என்னிடம் " போய் வருகிறேன் " என்று ஒரு வார்த்தை கூட சொல்லிக்கொள்ளாமல் உங்களிடம் தஞ்சம் புகுந்து விட்டதே !!! நன்றி சார் - இந்த பாடலின் விளக்கம் நாளை தருகிறேன் , என் பாணியில் .....

rajraj
29th August 2015, 07:18 PM
From KalyaaNam PaNNip Paar

Yezhumalai AaNdavane VenkataramaNaa.....

http://www.youtube.com/watch?v=jnKdguYYMug

madhu
29th August 2015, 07:18 PM
ரவி ஜி..

ஆஹா... மன்னித்து விடவும். மு.கொ. தனமாக பதிந்து விட்டேனா ? இனிமேல் கொஞ்சம் வெயிட் செய்யுறேன்... இப்போது வெயிட் செய்வது உங்கள் அழகான விளக்கத்துக்காகவும் தான்..!

vasudevan31355
29th August 2015, 07:18 PM
மதுண்ணா!

ராட்சஸியின் அதிகம் பிரபலமாகாத வித்தியாச ரேர் சாங்.

நானொரு பட்டுப் பூச்சி
ஈரெட்டு வயசாச்சு (அப்பாடி! இதிலும் எட்டு வந்துடுச்சி)
நாளொரு கேலிப் பேச்சு
இளவட்ட மனசாச்சு

'படாபட்' செம கிளாமர். ஒருத்தர் உடனே லைக் போடுவார் பாருங்கள்.:)

அவர் 'உறவுகள் என்றும் வாழ்க':)


https://youtu.be/FO6hM1LKHV8

madhu
29th August 2015, 07:27 PM
வாசு ஜி..

ஈரெட்டு வயதினில் வேர் விட்டு மனதினில் கர்வத்தைத் தூண்டுமம்மா என்ற சொல்லத்தான் நினைக்கிறேன் பாட்டும் இருக்குதே !
( பல்லவியைச் சொன்னால் பதினாறாம் நம்பர் இன்னும் வரலேன்னு சிக்கா கோவிப்பார் )

Richardsof
29th August 2015, 07:30 PM
8X2=16
https://youtu.be/KtoChKlYSk8

vasudevan31355
29th August 2015, 07:34 PM
வாசு ஜி..

ஈரெட்டு வயதினில் வேர் விட்டு மனதினில் கர்வத்தைத் தூண்டுமம்மா என்ற சொல்லத்தான் நினைக்கிறேன் பாட்டும் இருக்குதே !
( பல்லவியைச் சொன்னால் பதினாறாம் நம்பர் இன்னும் வரலேன்னு சிக்கா கோவிப்பார் )

'கொஞ்சம் கவனிக்க வேண்டுமம்மா':) தூண்டில் போட்டு விட்டீர்கள். மீன் மாட்டுமா?:) sweet 16

vasudevan31355
29th August 2015, 07:35 PM
//8X2=16//

shame shame pappi shame:) thothuttoam.:)

vasudevan31355
29th August 2015, 08:13 PM
ஸ்ரீகாந்த் அலெக்சாண்டர் ரேஞ்சுக்கு உட்கார்ந்து பாடி பயமுறுத்த, ஒய்.விஜயா பரதம் ஆடி அதைவிட பயமுறுத்த
சிவசிதம்பரம் அப்பா மாதிரி பாட முயற்சிக்க வித்தியாசமாய் இருக்கிறது இந்தப் பாடல்.

மன்மதன் கைக்கரும்பின் மலர்க்கணையே
இந்த மன்னவன் துயில் கொள்ளும் மலரணையே


ஆமாம்! என்ன படம்?


https://youtu.be/eCu8v2La2J8

uvausan
29th August 2015, 08:25 PM
செந்தில் - உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று தோன்றியது - ரொம்ப யோசித்ததில் உங்கள் சார்பில் இரண்டு பாடல்கள் பதிவிடலாம் என்று நினைக்கிறேன் - இந்த எண்களுக்குள் இடையே வரும் எண்களை நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்று எனக்குத்தெரியும் ... ம்ம்ம் --- இதற்குப்போய் நன்றி எல்லாம் வேண்டாம் சார் - இது என் கடமை .

எண் 100

https://www.youtube.com/watch?v=gZLrOhpwbnA

எண் 1000

https://www.youtube.com/watch?v=Wt6A8uxdZD0

eehaiupehazij
29th August 2015, 08:31 PM
ரவிஜி
பத்துவரை மட்டுமே நான் பதிவிடுவேன்
பின்பு எல்லாம் திரியின் ஜாம்பவான்கள் இந்திரஜித்துக்கள் சித்தர்கள் கையில்தான்!!

vasudevan31355
29th August 2015, 08:34 PM
மதுண்ணா!

'ஒன்னு ரெண்டு மூணு....நாலு அஞ்சு ஆறு... எல்லா ஆடும் இருக்குதான்னு எண்ணிப் பார்ப்போம் வாடா' என்று ஒரு பாடல் 'கண்ணில் தெரியும் கதைகள்' படத்தில் உண்டு. ஆடு மேய்த்துக் கொண்டே பிள்ளைகள் பாடுவதாக வரும் என்று நினைவு. இப்பாடலுக்கு இசை யார்?

இளையராஜா, சங்கர் கணேஷ், ஜி.கே.வெங்கடேஷ், கே.வி.மகாதேவன், அகத்தியர் என்று இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் மொத்தம் 5 பேர். பாடகர் ஏ.எல்.ராகவன் தயாரித்த படம் இது.

சடுகுடு வலையிலே ரெண்டானை
தவறி விழுந்தது கிழட்டானை
தூக்கி விட்டது இளவட்டம் இளவட்டம் இளவட்டம்

மணி போட்ட கறுப்பாடு குதிச்சாடுது
அந்த மறையாடு கெடாயோட வெளயாடுது

அருமை மதுண்ணா! ஷைலஜாவும், சசிரேகாவும் பாடியிருப்பது போல தெரியுது. ரொம்ப நாளா இப்பாட்டின் மீது ஒரு ஆசை. வீடியோ ப்ளீஸ். ஆமாம்! அகத்தியர் வேறு என்ன படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்?


பாடலின் முக்கியத்துவத்திற்காக கலர் கொடுத்திருக்கேன். வேற ஒண்ணுமில்ல. ஹி..ஹி..ஹி..

eehaiupehazij
29th August 2015, 08:43 PM
ஒன்பது என்னும் எண் பன்முகம் கொண்டது

நவக்கிரகங்கள் நவரசங்கள் நவராத்திரி ........
சிலசமயம் ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மைக்கும் ஒரு குறியீடாக ...சுருளி தயவில்!
முதன்மை இடம் நவராத்திரி பாடலுக்கே !

https://www.youtube.com/watch?v=hFozV-8o0Fo

ஒருவன் மனது ஒன்பதடா .....அதில் ஒளிந்து கிடப்பது....?

https://www.youtube.com/watch?v=V3atPjx5_VI

இது ஓட்டை வீடு ஒன்பது வாசல் ....மாலை நேரத்து மயக்கம்...

[url]https://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE

chinnakkannan
29th August 2015, 08:49 PM
//'படாபட்' செம கிளாமர். ஒருத்தர் உடனே லைக் போடுவார் பாருங்கள்// சொன்னவுடன் பார்த்தும் லைக்கும் போட்டுட்டோம்ல.. வாசுஜி.. பாவம் படமோ லோ பட்ஜெட் படம் அதான் இப்படி..அதைப் போய் க்ளாமர்னு மிஸ்டேக் பண்ணலாமோ..(சென்சார் ஏன் தூங்கிடுச்சு)

ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்.. லவ் லவ்னு கமல் இள வில்லனாகப் பாடும் பாட் தானே..ஜெய்சுதா..மட்ட்டும் நினைவில் இருக்கிற்து

ஏழு தினங்கள் ஒரு வாரம்.. வெகு அழகான பாட் தாங்க்ஸ் வாசு..

ஹச்சோ நிறைய பாட் வந்துடுச்சே பாக்கணுமே.. வர்றேன் வர்றேன்..

eehaiupehazij
29th August 2015, 08:53 PM
தசாவதாரத்தின் எண் குறியீடே 10!

பத்தாம்பசலி ....ஒருவரே பத்துப் பேரை அடிப்பது....பத்தரை மாற்றுத் தங்கம்...பத்துமாத பந்தம்.....

பத்துமாதம் சுமந்து பெற்ற அன்னையின் ஆணையே நமக்கு இதய வீணை ! அன்னையைப் போலொரு தெய்வமுண்டோ...

https://www.youtube.com/watch?v=AfSypDvFiuc

பத்துமாதம் சுமக்கவில்லை செல்லையா .....நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லையா .....
https://www.youtube.com/watch?v=G_HwShd-vso

chinnakkannan
29th August 2015, 08:53 PM
மன்மதன் கைக்கரும்பின் மலர்க்கணையே
இந்த மன்னவன் துயில் கொள்ளும் மலரணையே // எங்கிட்டுருந்து ஓய் இந்தமாதிரி பாட்டெல்லாம் பிடிக்கிறீர்.. நல்லா தமாஷா இருக்கு.. பிங்க் யெல்லோ ப்ளூ கலர்ல எல்லாம் ஒய்.வி மேல கலர் வேற வருது! துயில் கொள்ளும் மலரணை...கரெக்டு கிட்டத் தட்ட தலையணை ரேஞ்ச்சுக்குத் தான் குண்டா இருக்காங்க. :)

chinnakkannan
29th August 2015, 08:55 PM
அதுக்குள்ளயும் ஒன்பது பத்துன்னு ஓடலாகுமோ செந்தில்


ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா...

பத்து மாதம் சுமந்து பெற்றாள்...சூப்பர் பாட்டு
பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா
பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு உன் நெஞ்சுக்குள்ளே யாரென்று சொல்வேன்..

chinnakkannan
29th August 2015, 09:20 PM
ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
ஈரெட்டு வயதினில் நிற்கும்
மான் வண்ணமென தேன் கிண்ணமென
வேறே ஏது சொர்க்கம்----பதிலுக்கு பதில்

சந்திக்க ஏங்குகின்ற காதல் என்ன சொன்னது..ம்ம் நல்ல கேள்வி
நீராடும் சுவை நானல்லவா என்னைத் தேடி வா.. ம்ம் நல்ல பதில்?
ம்ம் தாங்க்ஸ் வாசு,, இந்தப் பாட் இப்பத் தான் கேட்கிறேன்..பார்க்கறேன்..உங்க புண்ணியத்தில்!

*

எட்டடி கோவிலிலே – ராணி லலிதாங்கி பாட்க்கு தாங்க்ஸ்.. ராகவேந்தர் சார்..

*
ஏழி சை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே ----// தாங்க்ஸ் ரவி.. பாட்டுக் கேட்டு ரொம்ப நாளாச்சு.. இப்போ தான்பார்க்கறேன்..
*
மல்லு வெர்ஷனுக்கும் தாங்க்ஸ் ராகதேவன்..சொப்னா சேச்சி நன்னாயிட்டு இருக்கு..

நடுல்ல எட்டாம் வாய்ப்பாடு சொல்வது யார்.. எஸ்வி சார்..நன்னாயிட்டுஇருக்கீங்களா சாரே (சாரி முந்தைய பாட் எஃபெக்ட்)..

*

இருந்தாலும் அந்த எண்ணூறு பாட் என்னவா இருக்கும்?!

vasudevan31355
29th August 2015, 09:23 PM
மன்மதன் கைக்கரும்பின் மலர்க்கணையே
இந்த மன்னவன் துயில் கொள்ளும் மலரணையே // எங்கிட்டுருந்து ஓய் இந்தமாதிரி பாட்டெல்லாம் பிடிக்கிறீர்.. நல்லா தமாஷா இருக்கு.. பிங்க் யெல்லோ ப்ளூ கலர்ல எல்லாம் ஒய்.வி மேல கலர் வேற வருது! துயில் கொள்ளும் மலரணை...கரெக்டு கிட்டத் தட்ட தலையணை ரேஞ்ச்சுக்குத் தான் குண்டா இருக்காங்க. :)

'நல்லா தமாஷா இருக்கு அப்படின்னு சொல்லியே' கண் கொட்டாம விஜயாவைப் பார்த்துட்டீரே ஓய் ! ஒய்?:)

vasudevan31355
29th August 2015, 09:27 PM
ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
ஈரெட்டு வயதினில் நிற்கும்
மான் வண்ணமென தேன் கிண்ணமென
வேறே ஏது சொர்க்கம்----பதிலுக்கு பதில்

சந்திக்க ஏங்குகின்ற காதல் என்ன சொன்னது..ம்ம் நல்ல கேள்வி
நீராடும் சுவை நானல்லவா என்னைத் தேடி வா.. ம்ம் நல்ல பதில்?
ம்ம் தாங்க்ஸ் வாசு,, இந்தப் பாட் இப்பத் தான் கேட்கிறேன்..பார்க்கறேன்..உங்க புண்ணியத்தில்!



முன்னாடியே ஒரு தபா போடுட்டுட்டேன். கேட்டா வயசாயிடுத்து மறந்துட்டேன்னு விஜயாக்களைப் பார்த்துகிட்டு இருப்பீர்.:) பாட்டைப் பத்தி நானும், கிருஷ்ணாவும் சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டோம் ஒரு காலத்துல. கோபால் லைக் பண்ண பாட்டு.

chinnakkannan
29th August 2015, 09:28 PM
வாஸ்ஸூ..ஆரம்ப கால ஒய் விஜயா ஆஞ்சனேயர் வடை மாதிரி தட்டையா ஒல்லியா இருந்ததாக நினைவு.. அப்புறம் தான் வென்னீர் போடாம ஸ்ட்ரெய்ட்டா தயிரில் ஊறியவடை போல் ஆகி வில்லியாகிப் படுத்தவேறு செய்தார்... பெண்ணைச் சொல்லிக்குற்றமில்லையோ என்னவோ ஒரு படம் மதுரை சென் ட்ரல்..ப்ளாக் அண்ட் ஒய்ட்ல பார்த்தது..ஸ்ரீகாந்த் ஒய்.வி, அண்ட் சிவகுமார்னு நினைக்கேன்.. பாட் ஒண்ணு உள்ள இருந்து வரமாட்டேங்குது :)

vasudevan31355
29th August 2015, 09:30 PM
ரவி சார் போஸ்டிங் எல்லாம் பொறுமையா பார்க்கணும். மனுஷர் கிளப்புறாரே!

vasudevan31355
29th August 2015, 09:34 PM
சின்னா!

மதுண்ணா ஸ்டைலில் கேட்கிறேன்:)...இதுவா?


https://youtu.be/LHf2fkHD_TI

இப்போ உங்க ஸ்டைலில். நல் பாட் தானே?:)

chinnakkannan
29th August 2015, 09:35 PM
பக்திப் பாட் பத்தித்தானே.. நானும் தான் ஏன்னா இன்னிக்கு நான் விரதம் :)

பட் அது ச்சும்மா ஜோக்குக்கு..இன்னிக்கு ஆவணி அவிட்டம்.. ஆண்களுக்கான தினம்!

chinnakkannan
29th August 2015, 09:38 PM
வெண்ணிலவில் கண்கவரும் ஷாஜகானின் தாஜ்மஹல்
என்னருகில் இருப்பது போல் தெரியுதடி உன்னழகு..

யெஸ் யெஸ்.யெஸ்.. பட் ஒய்.வின்னு நினைச்சுருந்தேன்..ரொம்ப நாளாச்சோன்னோ.. வயசு குறைஞ்சுடுச்சா..யாத் நஹி ஹை.. தாங்க்ஸ் வாசு சார் :) ஹச்சோ மறந்துட்டேன்..யெஸ்.. நல் பாட் தான் :)

இன்னொரு பாட்.. கமல் ஃபடாபட்..என்ன படம்னு நீங்களே கண்ட் பிடிச் நீங்களே போடுங்க :)

vasudevan31355
29th August 2015, 09:41 PM
ஒய்.விஜயாவைப் பார்க்கணும்னா அதுவும் கலரில் பார்க்கணும்னா தலைவரோட 'வாணி ராணி' பாருங்க சின்னா! செம சூப்பரா இருப்பார். அதுக்காக இப்போ பக்கெட் எல்லாம் கேக்காதீங்க. காலையில வேலைக்குப் போவணும்.:)

chinnakkannan
29th August 2015, 09:44 PM
பார்த்துட்டா போச்..பட் ந.தி..சட்டைக் கிழிசலை மறைச்சு வெட்கப் படுறது தான் நினைவுக்கு வருது..அழகான வெட்கம்..பார்த்துப் போன்னு பாட்டும் நினைவுக்கு வருது..

eehaiupehazij
29th August 2015, 09:47 PM
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......

திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!


வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில் 37 வருடங்கள் கல்விப் பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!

திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணை ந்து மகிழ்ந்த நினைவுகளுடன்....விடை பெறுகிறேன்!!

மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!

என்றும் உங்கள் நண்பன் செந்தில்

uvausan
29th August 2015, 09:48 PM
செந்தில் சார் - நீங்கள் இனி ஹிந்தி எண்களை தொடர்வதற்காக இதோ எந்தன் முதல் பாடல் உங்களுக்காக ----

https://www.youtube.com/watch?v=MS5BLS2sIDM

rajraj
29th August 2015, 09:50 PM
Sorry out of sequence! 12 and a half hours time difference ! :lol:

From Kandhan KaruNai(1967)

aaRu padai veedu koNda.....

http://www.youtube.com/watch?v=BES1e2xUEoE

uvausan
29th August 2015, 09:52 PM
செந்தில் சார் - உங்களுக்கு எல்லா வளமும் , மன அமைதியும் , நல்ல தேக ஆரோக்கியத்தையும் இறைவன் தந்திட நாங்கள் என்றும் ப்ராத்தனை செய்வோம் - உங்கள் மீள் வருகைக்காக நாங்கள் காத்திருப்போம் - விரைவில் வருக .

vasudevan31355
29th August 2015, 09:59 PM
http://www.webmallindia.com/img/film/malayalam/mal_madalasa.jpg

சின்னா!

ஒய்.விஜயா அப்போ நடிச்ச ஒரு மலையாளப்படம் ஒன்னு இருக்கு. சின்ன வயசு. ரொம்ப அழகா இருப்பார். படம் பேரு மதலஸா. நீங்க வேற மாதிரி நினைக்காதீங்க. நல்ல படம்தான். இதுல நாயகன் யாரு தெரியுமா? நம்ம மைக் மோகன். மோகன் வீட்டுல வெள்ளக்காரி கணக்கா வேலைக்காரி ஒய்.விஜயா 'ஜம்'முன்னு. மோகன் ஒளிஞ்சி ஒளிஞ்சி விஜயாவை வாட்ச் பண்ணுவார். இன்பேக்ட் குளிக்கறச்ச கூட. (ஜொள் வழியறது தெரியுது ... துடைத்துக் கொள்ளும்) இன்னிக்கு என்ன கண் முழிப்பா?:)

rajraj
29th August 2015, 09:59 PM
Congratulations Senthil. Hope they give you a fitting send off ! :)

If you taught in Coimbatore, it brings back old memories. I taught in GCT for about 7 months before leaving for IISc.
We used to send one of our attendars for coffee from the agricultural college. It was just a college those days! :)

chinnakkannan
29th August 2015, 10:01 PM
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......

திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!



திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணை ந்து மகிழ்ந்த நினைவுகளுடன்....விடை பெறுகிறேன்!!

மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!

என்றும் உங்கள் நண்பன் செந்தில்


செந்தில் சார்.. உங்களுக்கு அறுபது வயதா.. நம்ப முடியவில்லை..ஒருதடவை பேசியிருக்கிறோம்..குரல் வெகு இளமையாக இருந்ததே..

வாழ்வில் எல்லாவித வளமும் உங்களுக்குக் கிடைக்கும்..எங்கள் ப்ரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்கு உண்டு..

எங்களுடன் சேர்ந்து வெகு அழகாக கான்செப்ட் போட்டு இழையை நடத்தியமைக்கு நன்றி..கொஞ்சம் சோகமாக இருக்கிறது..ஜெமினியும் தான் சொர்க்கத்தில் சோகமாக இருப்பார்..

உங்கள் மீள்வருகைக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்..

vasudevan31355
29th August 2015, 10:10 PM
செந்தில் சார்!

இப்போதே எதையோ இழந்தது போல ஒரு நினைப்பு. தற்காலிகமாய் இருந்தால் கூட. தங்கள் பணி ஒய்வு சிறக்க வாழ்த்தி இறைவன் அருளாலும், நடிகர் திலகத்தின் ஆசியாலும் தாங்களும், தங்கள் குடும்பமும், தங்கள் மாணவர்களும் எல்லா வளமும் பெற்று, கௌரவ பேராசிரியர் பணியும் சிறக்க வாழ்த்தி தாங்கள் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன். அடுத்த மதுரகானங்களின் பாகம் இன்னும் சில தினங்களில் தொடங்கலாம். அதற்குள் தாங்கள் மீண்டும் இங்கு வந்து திரியில் உங்களுக்கே உரித்தான ஸ்டைல் கான்செப்ட்களை தந்து எங்களுக்கெல்லாம் வேலை அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

vasudevan31355
29th August 2015, 10:16 PM
இன்னொரு பாட்.. கமல் ஃபடாபட்..என்ன படம்னு நீங்களே கண்ட் பிடிச் நீங்களே போடுங்க :)


மதுண்ணா!

யாரோ உங்களைக் கூப்பிடறாங்க.:)

vasudevan31355
29th August 2015, 10:19 PM
சின்னா!

இன்னைக்கு 9 பக்கம் அமர்க்களமா ஓடிடிச்சே! அல்லாருக்கும் தேங்க்ஸ்.

chinnakkannan
29th August 2015, 10:20 PM
ஆமாம் வாஸ்ஸூ,.... சக்கப் போடு போடு ராஜாக்களான்னு சொல்லலாமில்லை...:)

RAGHAVENDRA
29th August 2015, 10:30 PM
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/63/T._R._Pappa.jpg/220px-T._R._Pappa.jpg

வாசு சார்
தாங்கள் குறிப்பிட்ட அகத்தியர் இவர் தான்.

டி.ஆர்.பாப்பா தான் அகத்தியர் என்ற பெயரில் சில பாடல்களை இசையமைத்திருக்கிறார். பெரும்பாலும் ரேடியோ பாடல்களுக்கு இசையமைக்கும் போது அகத்தியர் எனத் தான் குறிப்பிடுவார்கள்.

கோவை சௌந்தர்ராஜன், இசையரசி பாட எண்ணூறு ஆண்டுகளில் எழுகின்ற எண்ணங்கள் பாடலை இதயம் பார்க்கிறது படத்திற்காக இசையமைத்தவர் திரு டி.ஆர்.பாப்பா.

vasudevan31355
29th August 2015, 10:40 PM
ராகவேந்திரன் சார்,

இது கனவல்லவே!

நன்றி! நன்றி!

rajraj
30th August 2015, 02:01 AM
From Naam Iruvar(1947)

vetri ettu dhikkum etta kottu murase........

http://www.youtube.com/watch?v=3vdtLib4bEc

madhu
30th August 2015, 04:19 AM
செந்தில் சார்...

ஒரு நாடகத்து மேடையிலே ஒன்றாக ஆடித்திரிந்தோம்..
பாடித்திரிந்தோம்..
இடை வேளை வருவது போல் ... இ ந் நாளில் பிரிகின்றோம்..

ஆனால்..

மீண்டும் சந்திப்போம்.. நாம் மீண்டும் சந்திப்போம்

எல்லா வளங்களும் பெற வேண்டும் என வாழ்த்த சிக்கா போல வயதில்லை. எனவே வணங்குகிறேன்.

madhu
30th August 2015, 04:21 AM
சரி.. காணொளியை விட்டு வைப்பானேன்..

இதயம் பார்க்கவில்லை என்றால் கண்களாவது பார்க்கட்டும்

எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரேஏஏஏஏஏ நாளில்..

https://www.youtube.com/watch?v=1jsEQmpDQe4

madhu
30th August 2015, 04:23 AM
சிக்கா...

பெண்ணைச் சொல்லி குற்றமில்லை ஓய்.விஜயா இப்படி இருப்பார்....

https://www.youtube.com/watch?v=BLXPGwHiUAY

madhu
30th August 2015, 04:26 AM
வாசு ஜி...

இது டி.ஆர்.பாப்பா இசையில் கண்ணில் தெரியும் கதைகள் படப்பாடல்...

https://www.youtube.com/watch?v=bJGyyNHgI8A

madhu
30th August 2015, 04:30 AM
மதுண்ணா!

யாரோ உங்களைக் கூப்பிடறாங்க.:)

எனக் யார்ன் கண்டுபிடிக் முடிலே ! நீங் சொல்ங்க் !

uvausan
30th August 2015, 09:33 AM
காலை வணக்கம்


திரையில் பக்தி -
கேள்வி- பதில் தொடர்கிறது

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/sun2_zpsmpfulyec.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/sun2_zpsmpfulyec.jpg.html)

uvausan
30th August 2015, 09:37 AM
திரையில் பக்தி

கேள்வி -பதில்

பதிவு 1

கேள்விகள்

ஒருவர் கேட்கிறார் இறைவன் உண்மையில் இருக்கின்றானா ? இருந்தால் அவன் உலகத்தில் எங்கே வாழ்கிறான் ??

இன்னொருவர் கேட்கிறார் - கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் -----------

அடுத்தவரோ காதலித்தவன் மீதும் குற்றம் இல்லை , காதலி மீதும் குற்றம் இல்லை - அந்த கடவுள் செய்த குற்றம் என்கிறார் .....

பதில்கள் :

பிறரின் மீது குற்றம் சுமத்துவது மிகவும் சுலபமான வேலை - அதிலும் கண்ணுக்குத்தெரியாத கடவுளைத் திட்டினால் அவர் என்ன நம்மை கேட்கவா போகிறார் ?

அதிகமாக சோதனைகள் வரும் போதுதான் ஏசு நம்மை நெருங்குகிறார் என்கிறது பைபிள் ..... இதையேத்தான் குந்தியும் கண்ணனிடம் வேண்டுகிறாள் , " கண்ணா உன்னை என்றும் நான் மறக்காமல் இருக்க வேண்டும் - அதனால் எனக்கு துன்பங்களையே கொடு - இன்பமும் , மகிழ்ச்சியும் வந்தால் உன்னை நினைக்க நேரம் கிடைக்காது ..... குரான் சொல்லும் தத்துவமும் இதுதான் .

The Quran stresses the importance of man’s discovery of truth at the level of realization. True faith in god is what one achieves at such a level. Where there is no realization , there is no faith.

கண்ணதாசன் சொல்வதும் இதைத்தான் " உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் - இதை உணர்ந்துகொண்டால் துன்பம் எல்லாம் விலகும் !"
நம்பிக்கை வைக்காத பக்தி என்பது பாலில் உப்பை சேர்த்து குடிப்பதைப்போல --- தெய்வம் தனியாக கோயில்களில் இருப்பதில்லை , இதோ இங்கு சொல்லப்படும் எல்லாவற்றிலும் இருக்கிறது - இவைகளில் தெய்வம் இருப்பதை உணர்ந்து கொண்டால் அவன் சிரிப்பதும் நம் செவிகளில் விழும் .நாமும் படைத்தவனை குற்றம் சொல்லத்தேவையில்லை .....

uvausan
30th August 2015, 09:39 AM
பகுதி 2

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்......
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கோடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கோடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.
ஆ...ஆ.....ஆ......ஆ......ஒ......ஒ......ஒ,..... .

https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0&list=PLP4kNNZaIcmz6Zi466q_ZE_TQqyF5U1bK

uvausan
30th August 2015, 09:43 AM
பகுதி 3

தெய்வம் இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே

தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெய்வம் இருப்பது எங்கே

பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
தெய்வம் இருப்பது எங்கே

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே?

https://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

தெய்வத்தை கோயில்களில் மட்டும் தேடுவது தவறு - அவன் நாம் செய்யும் தொழில்களில் இருக்கிறான் , நாம் செய்யும் கொடையில் , காட்டும் பரிவில் , இனிமை கலந்து நாம் பேசும் வார்த்தைகளில் , மற்றவர்களின் முன்னேற்றத்தில் நாம் காட்டும் அக்கரையில் - அவனுக்கு உருவம் இல்லை - நாம் தான் அவன் உலகம் - அவனை நம்மிடம் வரவழைக்க நம்மிடம் இருக்கும் ஒரே கருவி , கர்வம் அற்ற அன்புதான் - நம்மிடம் ஒளிந்திருக்கும் குற்றங்களை அவன் மீது சுமத்தி அவனை திட்டுவதும் , நீ உண்மையில் இருக்கிறாயா என்று கேட்பதும் குழந்தைத்தனமானது - இந்த கேள்விகளுக்கு இந்த இரு பாடல்கள் அழகான விளக்கம் அளிக்கின்றன ......

uvausan
30th August 2015, 10:03 AM
திரையில் பக்தி

கேள்வி பதில்

பகுதி 4


அன்று முதல் இன்று வரை பல கேள்விகள் - பதில்கள் முக்கியமாகத் தெரிவதில்லை . ஏன் இறைவன் என்னை படைத்தான் ? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு தோல்விகள் , ஏமாற்றங்கள் ? துன்பங்கள் ? என்னை விட அடுத்தவன் எந்த வகையில் உயர்ந்தவன் ? அவன் மட்டும் எப்பவுமே மகிழ்ச்சியாக இருக்கிறானே ??? கடவுள் ஒரு கல் தானே ??? தன்னைப்பற்றியே புரிந்துக்கொள்ளாதவன் இறைவனை எப்படித்தெரிந்துக்கொள்ள போகிறான் ? தனக்கு கிடைத்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்னொருவர் நிழலில் இருக்கவே விரும்புகிறோம் ...வெறும் xerox காப்பியாகவே வாழ்க்கை செல்கிறது - ஏன் என்ற கேள்விகள் பிறந்த வண்ணம் இருக்கின்றன - பதில்கள் மடிந்த வண்ணம் இருக்கின்றன - இதைத்தான் சிலர் முற்போக்கு சிந்தனை என்று அழைக்கின்றனர் . இத்தனை கேள்விகளுக்கும் நமக்குத் தேவையான நல்ல பதில் கிடைக்குமா ?? பார்ப்போம் !!

https://www.youtube.com/watch?v=8an-tVU3Uxk

பதில் :

எல்லா கேள்விகளுக்குமே நல்ல பதில்கள் கிடைக்கும் - நாம் தான் சற்று பொறுத்திருக்க வேண்டும் . மேலே இருப்பவர் கேள்விகளை கேட்கிறார் . இதோ பதில் கிடைத்த மகிழ்ச்சியில் இன்முகத்துடன் இவர் நடந்து செல்கிறார் .. வாழ்க்கை பொறுமையை நமக்கு கற்று தருகின்றது - இறைபக்தி நம்மை நல்ல வழியில் நடந்து செல்ல உதவுகின்றது ....


https://www.youtube.com/watch?v=JiqTqJILB1k

நாளை இன்னும் சில கேள்வி பதில்களுடன்

RAGHAVENDRA
30th August 2015, 11:33 AM
சி.செ. சார்
தாங்கள் ஓய்வு பெறும் பிராயத்தில் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் யூகிக்க முடியாத ஒன்றாக இருந்து விட்டதே. வியட்நாம் வீடு பத்மநாபன் போல கிட்டத்தில் வரும் போது தான் இதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம். எல்லாம் அந்த நடிகர் திலகத்தால் வந்தது. மனுஷன் நமக்கு வயசு உடம்பு இதையெல்லாம் கவனிக்கவே முடியாத படி அவரே கதியென்று இருக்கும் படி செய்து விடுகிறார்.

தங்களின் ஓய்வு காலம் சிறப்பாகவும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்துடனும் அமைய இறைவனிடம் தங்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தரும்படி வேண்டிக்கொள்கிறோம். தங்களுடைய ஆராய்ச்சி மாணவர்கள் மேலும் சிறப்பெய்தி தங்களுக்கு சிறப்பு சேர்ப்பார்கள்.

தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
30th August 2015, 11:35 AM
ஆரம்ப கால விஜயா ஒய். விஜயா.
பின்னாட்களில் ஒய் விஜயா? என்னும் படி ஆகி விட்டதே...

பி.கு. {இது கே.ஆர்.இனிஷியல் போட்டாலும் பொருந்துமோ...}

chinnakkannan
30th August 2015, 02:49 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..


ரவி..குட்..வழக்கம்போல கலக்குங்க..

என்ன பண்றது கல்யாணம் ஆனா டயட் கண்ட் ரோல்லாம் போய்டும் போல இருக்கு..ஹிஹி.. நான் டயட்ல இருக்கேனாக்கும் ராகவேந்தர் சார் :)

நடிகை ஜமுனாவின் பர்த்டேயாமே இன்னிக்கு..

http://isaikuyil.blogspot.com/2014/05/blog-post.html


https://youtu.be/H_JYewEEdt8

இன்பமான இரவிது- மனிதன் மாற்வில்லை நான் கேட்டதில்லையே..


ஆக்சுவலா ரவியோட பக்தி கேள்வி பதில் பாணியிலே அமைஞ்ச காதல் பாடல்..

காதல் யாத்திரைக்கு ப்ருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏனோ?
வேல்விழி மாது என் அருகிலிருந்தால் வேறே சொர்க்கமும் ஏனோ?


ம்ம் வீடியோ தேடினா சிக்கலை :துன்பம்: :)

chinnakkannan
30th August 2015, 02:58 PM
சி.செ இல்லாமல் கொஞ்சம் சோகம்+ நிறைய போர் அடிக்கிறது.. என்ன செய்யலாம்..

அவர் பாணியிலேயே எழுதிப் பார்க்கலாம்..

*

பியானோ பாட்ஸ் : குறு(ம்புத்) தொடர்..

கலர் நீலம் : கட்டை எனப்படும் மானிட உடலின் விரல்களால் மீட்டப்படும் இந்த இசைக்கருவியில் தான் எத்தனை கட்டைகள்..

சொல்லத் தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை ச் சொன்னாலும்
கேட்பவர்க்குப் பொறுமையில்லை.. அஞ்சலி அண்ட் நாகேஸ்வர ராவ் (தப்பா இருந்தா கரெக்ட் பண்ணுவாங்க மனசாட்சி)

*

https://youtu.be/kVOEo5uAIrA

மக்கள் தொடர்வார்கள் தானே :)

uvausan
30th August 2015, 03:04 PM
Ck - காயத்ரி 108 ஆ ? 1008 ஆ எவ்வளவு பண்ணினீர்கள் - (சொல்வது மந்திரம் நினைவிருக்கட்டும் !!)

uvausan
30th August 2015, 03:22 PM
வாசு / CK ஏன் இந்த பாட்டைக்கொடுத்து செந்தில் சாருக்கு உதவி செய்யவில்லை ? இந்த பாட்டை சரியான சமயத்தில் அவருக்கு கொடுத்திருந்தால் , sabbatical அவருக்கு தேவைப்பட்டிருக்காது . இந்த பாட்டில் பல எண்கள் வரக்கூடும் .

முத்தங்களுக்கு கணக்கு வைக்கக்கூடாது , கணக்கு பார்க்கக்கூடாது என்று CK வின் ஒரு கவிதையில் படித்த ஞாபகம் . இருந்தாலும் இந்த பாட்டில் எவ்வளவு எண்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை ஆராய்வோம் ( செந்தில் சாருக்கு ஆராய்வது மிகவும் பிடிக்கும் )

"பத்து பதினாறு முத்தம் முத்தம் தொட்டு தரும் பாவை பட்டுக்கன்னம்.."

10 , 16 முத்தம் முத்தம் ---- முதலில் ஒளிந்திருக்கும் எண் 1016 , பிறகு ஒளிந்திருக்காமல் தெரியும் எண் 10 & 16 . X X என்பது (X ) * (X ) - அதனால் 10* 16 = 160 ; 10 முத்தங்கள் முடிந்த பின்னே பிறகு முதலிலிருந்து மீண்டும் 16 முத்தங்கள் தேவைப்படலாம் - அப்படி நடந்தால் வரும் எண் 10+ 16 = 26 . இந்த ஒரு பாட்டில் மறைந்திருக்கும் முத்தங்களின் எண்கள் பின் வருமாறு :

1. 10

2. 16

3. 26

4. 160

5. 1016

அப்பாடா கோவை insititute இல் இருந்து phD கிடைத்துவிடும் . http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/download_zps2dmxbs6b.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/download_zps2dmxbs6b.jpg.html)

https://www.youtube.com/watch?v=8K5G9cPjf8c

chinnakkannan
30th August 2015, 05:36 PM
Ck - காயத்ரி 108 ஆ ? 1008 ஆ எவ்வளவு பண்ணினீர்கள் - (சொல்வது மந்திரம் நினைவிருக்கட்டும் !!)

:) :) 108

uvausan
30th August 2015, 08:05 PM
காயத்ரி மந்திரம் :

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG_20150812_174057_zpsrcxsqr7l.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG_20150812_174057_zpsrcxsqr7l.jpg.html)

வாழ்க்கையில் பிரச்சனைகளை எதுவுமே சாதிக்காமல் தடம் பதித்தவர்கள் எவருமே இருக்க முடியாது . இந்த உடலுக்கு போஷாக்குகள் எப்படித்தேவையோ அப்படித்தான் இந்த ஆத்மாவிற்கும் , உள்ளத்திற்கும் தேவை . NASA , அவர்களுடைய சமீப ஆராய்ச்சியில் கண்டு பிடித்த உண்மை காயத்திரி மந்திரத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சக்தி , வீரியம் , பலன் , 1000 கோடி சூரியனின் சக்தியை விட மிகப்பெரியது . நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் நம் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் , அடுத்த தலை முறை நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த மந்திரத்தை நாம் நாள் தோறும் சொல்வது அவசியம் . இன்று அந்த இறைவிக்கு நன்றி சொல்லும் தினம் . இந்த மந்திரத்தை எந்த பிரிவினரும் சொல்லலாம் - ஆண் , பெண் என்ற பாகுபாடும் தேவை இல்லை - தினமும் சொல்லிப்பாருங்கள் - உங்கள் வாழ்வில் எல்லாமே நல்லதாகவே முடியும் , நல்லதே நடக்கும் - இது சத்தியம் - உண்மை ...


Full Version of Gayatri Mantra
For those of you who want a little more, chant the long version. The introduction invokes the power of Gayatri in all seven lokahs, or dimensions, purifying and empowering all areas of your life. Reciting all seven lokas before chanting Gayatri energizes all of your chakras, adding efficacy, clarity and power.

Om bhahu

Om bhuvaha

Om suvaha

Om mahaha

Om gahaha

Om tapaha

Om satyam

Tat Savithur Varenyam
Bhargo Devasya Dheemahi
Dhiyo Yonaha Prachodayath



Meaning of the Full Version of Gayatri Mantra:

Bhuhu is the physical plane or Earth

Bhuvaha is the astral –the energy underlying the physical

Suvaha is the mental world of thought

Mahaha is emotions

Janaha is creative generation

Tapaha is intuition

Satyam is the absolute from which the true teachings come

By chanting the introduction, you’re telling the energy created by Gayatri to progressively work through from the grossest physical level of your being to the highest, most refined aspect of you, purifying all.

You become purer, more refined and more translucent –Divine in all aspects. Swiftly becoming Divine radiant light is the greatest benefit and is the goal of chanting Gayatri morning, noon and night.

Gayatri Mantra Benefits
Becoming radiant Divine light is the greatest benefit, but if that’s not enough for you, or you think it’s too far away, along the path to Divinity there are many other benefits that you can enjoy sooner.

Gayatri:

Removes obstacles from your life
Protects you from danger
Brightens you mind
Dispels ignorance
Improves communication abilities
Opens your psychic vision
Brings direct knowledge of the eternal truths

https://www.youtube.com/watch?v=t8dydP_M89o

vasudevan31355
30th August 2015, 09:16 PM
ரவி சார்!

திரையில் பக்தி பொறுமையாக படித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. கேள்விகள்,பதில்கள் என்று புகுந்து விளையாடுகிறீர்கள். நமக்கு இதிலெல்லாம் சாமர்த்தியம் பத்தாது. டோட்டல் அவுட். இது உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று. 'திரையில் பக்தி' என்று சாமர்த்தியமாக தலைப்பிட்டு சாதுர்யமாக 'மானுடர் வாழ்வில் மனிதமே பக்தி' என்று பாடல்களின் மூலம் நிரூபித்து அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறீர்கள். உங்கள் பதிவைக் காண ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. மது அண்ணா எல்லாம் உங்கள் பதிவுகளை எப்படி ரசித்துச் சுவைக்கிறார்கள் என்று உணர முடிகிறது. 'காயத்ரி' சினிமா பற்றிதான் எனக்குத் தெரியும். மந்திரமெல்லாம் ம்ஹூம்... மருந்துக்குக் கூடத் தெரியாது.

நீங்கள் சொன்ன டைப்பில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். 'மக்கள் கலைஞர்' ஜெய் படம்தான். இந்த மனிதரின் படங்களில்தான் பாட்டுக்கள் எப்படியெல்லாம் அமைந்து விட்டன! தங்கப் புதையல் மாதிரி தோண்ட தோண்ட இவர் படங்களில் பாடல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். படங்களையோ அதன் தரத்தையோ விட்டுத் தள்ளுங்கள். ஆனால் பாடல்கள் இவர் படங்களில் தனி சிறப்பு.

'கண்ணன் வருவான்' (1970) என்ற படத்தில் இந்தப் படத்தின் போஸ்டரே கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். புல்லாங்குழல் வாசித்தபடி கண்ணன் இமேஜ் மட்டும் மேலே இருக்க கீழே 'வருவான்' என்ற வார்த்தை மட்டும் இருக்கும். போஸ்டர் பார்ப்பவர்கள் 'வருவான்'... இப்படி ஒரு படமா என்று அப்போது கேட்டதுண்டு நான் உட்பட. பிறகுதான் புரிந்தது கண்ணன் படத்தை வைத்து சேர்த்து 'கண்ணன் வருவான்' என்று படிக்க வேண்டும் என்று. அப்போது இது ஒரு புதுமைதான். இல்லையா ராகவேந்திரன் சார்?

இந்தப் படத்தில்

'பூவினும் மெல்லிய பூங்கொடி'

'நிலவுக்குப் போவோம் இடமொன்று பார்ப்போம்'

என்ற காலத்தால் அழிக்க முடியாத சூப்பர் ஹிட் பாடல்கள் உண்டு. அதோடு சேர்ந்து இன்னொரு பாடல். பாடகர் திலகம் பாடியிருப்பார். உங்கள் கான்செப்டில் அதாவது கேள்வி பதிலாக வரும். எனக்கு நிரம்ப பிடித்த பாடல். கிட்டத்தட்ட நாத்திகக் கருத்துக்கள் அதிகம் இருக்கும். ஆனால் அருமையாக இருக்கும். பட்டை கிளப்புவார் சௌந்தரராஜன்.

'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்'

என்ற பாரதியின் தொகையறாவோடு அவர் சிலை முன் பாடல் துவங்கும். பட்டினிப் பட்டாளம் காட்டப்பட்டு, வள்ளுவர் சிலையும் காட்டப்பட்டு 'உங்கள்' குறளும் தொடர்ந்து வரும்.

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்'

உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக. அதாவது பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக என்பது இக்குறளின் விளக்கம்.

டி.எம்.எஸ்ஸின் கேலி, வேதனை, வெடிச்சிரிப்பில் ஆரம்பித்து பல்லவி ஒலிக்கும்

பூமியைப் படைத்தது சாமியா
இல்லை சாமியைப் படைத்தது பூமியா
தினம் பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில்
ஆயிரம் கேள்விகள் தேவையா?
பூமாலையும் மேடையும் தேவையா?

பிறப்பும் இறப்பும் அவன் பொறுப்பு
சிரிப்பும் அழுகையும் யார் பொறுப்பு
பிறப்பும் இறப்பும் அவன் பொறுப்பு
சிரிப்பும் அழுகையும் யார் பொறுப்பு
இரவு இங்கே வெளிச்சம் அங்கே
என்ன வேலை இறைவனுக்கு?

(பூமியைப் படைத்தது சாமியா)

இவன் வேர்வையின் துளிகள்
அவன் சூடிடும் மணிகள்
இந்த ஏழையின் உழைப்பு
அந்த மாளிகை மதிப்பு
பருந்து அங்கே கிளிகள் இங்கே
இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

(பூமியைப் படைத்தது சாமியா)

அது ஆலய மணியா?
என் ஆசையின் ஒலியா?
அவன் பூஜையின் குரலா?
என் கேள்விக்கு பதிலா?
வயிறு இங்கே உணவு அங்கே
இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

(பூமியைப் படைத்தது சாமியா)

ஒரு பாதையில் போனால்
மறு பாதையில் வரலாம்
இது சாலைக்கு நியாயம்
எது ஏழைக்கு நியாயம்
பாதை அங்கே பயணம் இங்கே
இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

(பூமியைப் படைத்தது சாமியா)

ஏழைகள் படும் கஷ்டங்களைக் காட்டி மனம் புண்ணாகி 'மக்கள் கலைஞர்' பாடுவதாக அமைந்த இந்தப் பாடல் எம்.ஜி.ஆர் படத்தில் வரும் பாடல் போல இருக்கும்.

'பாடகர் திலக'த்தின் பாவங்கள் குரலில் அருவியாய் வந்து விழும்.

மீண்டும் சொல்கிறேன். நான் ரொம்ப விரும்பும் பாடல். நீங்களும் அப்படித்தானே?


https://youtu.be/_vXOY-u5Ens

uvausan
30th August 2015, 09:53 PM
வாசு - உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . உங்கள் உப பதிவுகள் , நான் இதுவரை போட்டவைகளை விட அற்புதமாக இருக்கின்றன . நான் திரு ராஜேஷ் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் - அவர் மனமுவந்து " திரையில் பக்தி " என்ற தலைப்பை எனக்கு விட்டுக்கொடுத்தற்காக - எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமே - தனியாக "தெய்வம் " என்பதைப்பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தேன் - உள்ளே இறங்கினால் , இது ஒரு ஸாகரம் என்பதை உணர்ந்தேன் - வெறும் பாடல்களாக பதிவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை - சொல்வதில் ஒரு கருத்து இருக்க வேண்டும் - அந்த கருத்து படிப்பவருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ( உங்கள் எல்லோரிடம் இருந்து கற்றுக்கொண்டதுதான் )

ஒருவனை பிடிக்க வில்லை அது இறைவனே ஆகட்டும் - திட்ட வேண்டுமென்றால் நமக்கு ஆயிரம் காரணங்கள் கிடைக்கும் -- அதுவே ஒருவனை போற்றவேண்டுமானால் , காரணங்களை தேடிப்பிடிக்க வேண்டும் - இறைவனும் இதற்கு விதி விலக்கல்ல ..... கேள்வி என்று ஒன்று இருந்தால் , பதில் என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும் --- சந்தேகம் என்று ஒன்று எழுந்தால் , அதைப்போக்க ஒரு மருந்து இருந்துதான் ஆக வேண்டும் - இது உலக நியதி - இதைத்தான் கேள்வி-பதிலாக சொல்கிறேன் - ஒரு சிறிய முயற்சிதான் --- என் வேகம் , முயற்சி எல்லாமே உண்மையாகவே தூங்குபவர்களை எழுப்பவதர்க்காகத்தான் - துங்குபவர்கள் போல் நடிப்பவர்களை அல்ல - அவர்களை அந்த இறைவன் கூட எழுப்ப முடியாது . மீண்டும் என் நன்றி வாசு உங்கள் பதிவுக்கு ...

chinnakkannan
31st August 2015, 12:34 AM
வாஸ்ஸீ.. இதில வேற ஏதோ ஜெய் சொல்றாரே :)

https://youtu.be/RiZB836dpQo

rajraj
31st August 2015, 01:00 AM
From Navagraha Nayaki (1985)

navagraha nayakiye.....

http://www.youtube.com/watch?v=WJulvDkCEKY


If you insist on nine in Tamil instead of Sanskrit here is a song from Dheivapiravi

ivar kaanaa avar paanaa.......

onbathu near the endin the line 'ivanga ellaam onbathu roopaa nottu'

http://www.youtube.com/watch?v=0jyyKlmQX8g