PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

vasudevan31355
10th August 2015, 06:30 PM
ரொம்ப நாளாச்சு.....


'தங்கத் தம்பி' படத்தில் சற்றே தொட்டிக்கால் நளின நடையுடன் ரவிச்சந்திரன் அழகு பாரதியுடன்,

'வெட்கமென்ன?
தென்றல் வந்து தொட்டாலும் வெட்கமென்ன?
குற்றமென்ன?
கண்கள் ஒன்று பட்டாலும் குற்றமென்ன?'

என்று கொஞ்சிப் பாடுவதைப் பார்ப்போமா?

'ஓடை நீரில் ஆடும் போது ஓரக்கண்ணால் பார்க்கலாமா?'

பாடும் போது பாரதி பார்பி டால் மாதிரியே தண்ணீரில் ஜொலிக்கிறார்.

http://www.dailymotion.com/video/x2fvrwm

vasudevan31355
10th August 2015, 06:41 PM
சின்னா! மது அண்ணா! ராகவேந்திரன் சார், சிவாஜி செந்தில் சார்,

உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி!

நிலைமை இன்னும் அப்படியேதான் நீடிக்கிறது. நிர்வாகம் அராஜகம் பண்ணுகிறது. இப்போது கட்சிகள் தலையிட்டுள்ளன. போராட்டம் தொடர்கிறது. இன்று தி.மு.க தலைவரிடம் யூனியன் பிரதிநிதிகள் மனு கொடுக்கிறார்களாம். பின் முதல்வரை சந்திக்கப் போகிறார்களாம். நேற்று பா.ம.க நிறுவனரை சந்தித்து மனு ஆதரவு தரும்படி மனு தந்தார்களாம். இதுவெல்லாம் எந்த அளவிற்கு பயன் தரும் என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். யூனியன் தன் கட்டுப்பாட்டை நான்கு வருடங்களுக்கு முன்னால் இழந்ததால் இவ்வளவு நிலைமையும். இப்போது தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறார்கள். இறுதியில் கட்சிகள் என்ற பாழும் கிணற்றை நாடி இருக்கிறார்கள்.

இன்றோடு 22 நாட்கள் ஆகி விட்டது. இன்னும் நம்பிக்கையுடன் தொழிலாளிகள் காத்திருக்கிறார்கள். விடியல் வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

madhu
10th August 2015, 06:55 PM
வாசு ஜி..

கடவுளைத்தான் நம்புகிறோம்...
பொழுதும் விடியும் பூவும் மலரும்.. பொறுத்திருங்கள்

https://www.youtube.com/watch?v=gnfiSdbuATM

eehaiupehazij
10th August 2015, 07:03 PM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!

KANCHANA VIBGYOR VIEW 4 பசுமை !


காதலிக்க நேரமில்லை (1964)

வானவில்லின் நான்காவது வண்ணக் கற்றை The Fourth band of Rainbow!GREEN!

ஸ்ரீதரின் நகைச்சுவை முத்திரைப் படமான காதலிக்க நேரமில்லையில் பசுமையான பூங்கொடியாக (in Churidhaar) அறிமுகமானார் காஞ்சனா !!
நடிப்புக்கு பெரிய வாய்ப்பு இல்லாவிடினும் ஆடல் பாடல் காட்சிகளில் பசுமரத்தாணியாகப் பதிந்தார் !

https://www.youtube.com/watch?v=DWVUcL1wC34

https://www.youtube.com/watch?v=Ka9Ghod_Sxo

https://www.youtube.com/watch?v=VnPFosSJOho

https://www.youtube.com/watch?v=Cc7ka5_SbDU

chinnakkannan
10th August 2015, 09:52 PM
மெல்லிய செந்நிற ஒளி அந்த அறையெங்கும் பரவியிருக்க, போடப்பட்டிருந்த செவ்வக மேஜையில் சுற்றி கோட் ஸ்யூட் அணிந்த நரர்கள்.. அந்த நரர்களில் அடியேனும் ஒருவன்..

மெல்ல மெல்ல ஹோட்டல் பணியாட்கள் வந்து என்ன என்ன எனக் கேட்க என்னருகே என்னுடன் வந்திருந்த என் அலுவலக சகா சப்புக் கொட்டிக்கொண்டு நான்வெஜ் ஆர்டர் செய்ய நான் மட்டும்மையமாக ஃப்ரூட்ஸ், பானத்திற்கு கோக், ஃப்ரெஞ்ச் என்று ஆர்டர் செய்ததில் அந்த விருந்தை அமைத்திருந்த விமான நிறுவன நிதி மேலாளர் கொஞ்சம் சங்கடமாய் என்னைப்பார்த்தார்.. பின்ன சீஃப் கெஸ்ட் நானும் என் நண்பரும் தானே..

ஏஏஏன் என ஒரு தி.மோ மனோரமா கேள்வி கேட்க நான் வெஜிட்டேரியன் ஐயா..

ஒய்.. யூ கேன் ஆர்டர் Crabs, Crabs are vegetarian..”

மனதுக்குள் நற நறத்து யோவ் Crabs வெஜ் என்பதற்காக அதை என்னால் சாப்பிட முடியாது என நைச்சியமாய் மறுத்தேன்..என் சகாவோ ஹீ ஈஸ் லைக் தட் டோண்ட் வொர்ரி ஐவில் ஈட் ஆன் பிஹால்ஃப் ஆப் ஹிம் என சமாதானப்படுத்த ஒரு வகையாய் விருந்து முடிந்து பில் கொடுக்கும் படலம்..

டபக்கென ஃப்ரீஃப் கேஸைத் திறந்து கற்றை நோட்டுக்கட்டுகள் டாங்க்ஸ் எனச் சொல்லப்படும் அவர்கள் நாட்டு கரென்ஸி அவர் வைக்க புறப்பட்டோம்..

ஓ.. சொல்ல மறந்துவிட்டேனே..மேற்சொன்ன சம்பவம் நடந்த இடம் ஹனாய் (வியட்னாம்) யில் உள்ள ஒருஹோட்டல்..காலம் ஒரு இரண்டு டிகேட்களுக்கும் முன்னால்..

துபாயிலிருந்து அவர்களின் ஏர்லைன்ஸில் ஒரு அலுவலக வந்திருந்தோம் நாங்கள்..

நல்லவேளை பூர்வ ஜென்ம புண்ணியமோ என்னமோ நாங்கள் தங்கியஹோட்டல் ஏஷியானிக்கோ என்னவோ நினைவில்லை..ஆனால் அந்த ரெஸ்டாரெண்ட் மேனேஜர் மட்டும் நினைவில்.. ஏனெனில் அவர் ஒரு தமிழன்.. எனில் சப்பாத்தி தால் மிக்ஸட் ரைஸ் என காரண்டியாய்ச் செய்யச் சொல்லி என் வயிற்றில் சாதம் வார்த்தவர்.
இருந்த நாட்களில் சப்பாத்தி, ஆலு,ரைஸ்,இன்னும் சில காய்கறிகள் போட்டு வெகு அன்புடன் கவனிக்கவும் செய்தார்..

அந்த டின்னர் முடித்து பின் ஹோட்டல் சென்று அவரிடம் ஃப்ளெய்ன் ரைஸ், கர்ட் வாங்கி. வீ.கா கொடுத்தனுப்பியிருந்த பருப்புப் பொடி போட்டு பிசைந்து சாதம் சாப்பிட்டது மறக்க இயலாது!

*

ஹனாய் ஒரு அழகிய நகரம்..ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டல் போகும் போது இரண்டு விஷயங்கள் பளீர்.. ஒன்று பச்சைப்
பசேல் புல்வெளிகளா வயல்களா நினைவில்லை.. இரண்டாவது கொஞ்சம் வறிய நாடு என்பது தெரிந்தது.. சொந்த நாட்டுக் கரன்சியான டாங்க் கை விட டாலரைஆர்வமாக வாங்கிக் கொண்டார்கள் (இப்போது எப்படி எனத் தெரியாது)

ஹோட்டல் பால்கனியிலிருந்து பார்த்தால் வெளியில் கார்கள் பஸ்கள் ஸ்கூட்டர்கள் சைக்கிள்கள் போவது எனத் தெரியும்.. எதிரே சாலையைக் கடந்து பிளாட்ஃபாரத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பாடுக் கடை ஒன்று இருந்தது.. ஒன்றும் ஜாஸ்தியொன்றுமில்லை..இரண்டு மூன்று அலுமினியப் பாத்திரங்கள்..கொஞ்சம் சின்ன ஸ்டவ்..(இருந்ததாக நினைவு) பின் அலுமினியப் ப்ளேட்கள்.. வியாபாரியான வியட் நாம் காரர் உண்ணவந்தவர்களிடம் நூடுல்ஸோ ஏதோ தட்டில் போட்டு இரு குச்சிகளையும் கொடுக்க சுவாரஸ்யமாக உண்டுவிட்டுச் செல்வார்கள்..

சொந்தமாகத் தயாரிக்கப்படும் பியா ஹோய் எனச் சொல்லப்படும் பியர் குடிசைகள் அல்லது வீடுகள் அந்த சாலையில் கொஞ்சம் நிறையவே இருந்த நினைவு..

சுற்றிப் பார்த்ததெல்லாம் நினைவில் மங்கலாகத் தான் இருக்கின்றன..ஒரு புத்தர் கோவிலோ என்னவோ பல ஆண்டுகாலப்பழமை என நினைவு..

வியட் நாமியப் பெண்கள் எல்லாம் கண்கள் உள்ளாழ்ந்து மூக்கு கொஞ்சம் யாரிடமோ கோபித்துக்கொண்டார்போல் உள்வாங்கி குட்டிக் கண்களுடன் சிற்சிற்சிற் இடைகளுடன் ஒல்லி ஒல்லியாய் இருந்தார்கள் …முகத்தில் கொஞ்சமே கொஞ்சம்பொலிவு..

அந்தக்காலத்தில் துபாயில் கலீஜ் டைம்ஸ் , கல்ஃப் நியூஸ் எல்லாம் தினசரி கல்கி தீபாவளி மலர் சைஸில் பூசினாற்போன்ற கே.ஆர்.விஜயாவைப் போல கொழுக் மொழுக்கென தினசரியே வருவது வழக்கம்.. அத்துடன் க்ளாஸிஃபைட்ஸ்/அப்பாயிண்ட்மெண்ட்ஸ் என்று ஒரு பேப்பரை மடித்து அதைப்போல 24 பக்கம் சேர்த்து சப்ளிமெண்ட் போலத் தருவார்கள்.. ஹனாயில் பார்த்த பேப்பர் இரண்டு பேப்பரை மடித்து மொத்தமே எட்டுப்பக்கமோ பத்துப்பக்கமோ தான் இருந்தது.. நியூஸூம் நிறையலோக்கல் தான்..ஒன்றும் சுவாரஸ்யமில்லை..டிவியில் அதிசயமாய் ஸீ டிவி வந்த நினைவு..

இருந்த இரண்டு மூன்று நாட்களில் ஒரு நாளில் மழை.. ஷாப்பிங்க் போகலாமென்று போய் ச்ச்சோ வென அடித்த மழையில் ஒரு கடையில் ஒதுங்கி ஏதோ ஒரு சொவனீர் வாங்கித் திரும்பிய நினைவு..

ஹனாயில் வேலை முடித்து துபாய் புறப்பட விமானத்தில் ஏறி அமர்ந்தால் – ஹனாய் டு ஹோசிமின் சிட்டி.. பகற்பொழுது..மதுரையில் அடிப்பது போன்ற பொளீர் வெய்யில்ல் விமானத்தில் ஏறி அமர்ந்தால் “உணவு ஏதாவது வேண்டுமா” என வியட் நாமிய மெல்லிடையாள் கேட்க டூயூ ஹேவ் வெஜிடேரியன் என்று நான் கேட்டதை ஏதோ கெட்டவார்த்தை காதில் விழுந்தாற்போல் கேட்டாள்..பின் நெற்றிச் சுருக்கி.. நோஸார் வீ டோண்ட் ஹேவ்.. எனச் சொல்ல அருகிருந்த அலுவலக நண்பர் “ கண்ணா எனக்குக் கவலையில்லையே வாட்டூயூ ஹேவ் இன் நான் வெஜ்..சிக்கன்.. ஒ.கே கிவ் இட் ஃபார் மீ” என ஆர்டர் செய்து வெற்றிப் புன்முறுவல் பூக்க, நான் மனம் தளராத மணி ரத்னம் போல் “அம்மணி கனி வகைகள் ரொட்டித்துண்டம் கிடைக்குமா” என வினவ அவள் அகமகிழ்ந்து உள் சென்று ஒரு ஆப்பிள், சில திராட்சைகள் ஒரு வறட்டு ரொட்டி அதில் தடவ கொஞ்சம் ஒரு உறையிட்ட வெண்ணெய் குட்டிப் பாக்கெட் என க் கொடுத்து, நண்பனுக்கும் நான்வெஜ் டிட்டோ.. சந்தோஷமாய் நான் உண்டு முடிக்க, நண்பனும் சாப்பிட்டு முடிக்கக் கொஞ்சம் கண்ணசந்ததில் ஹோசிமின் சிட்டியில் விமானமிறங்க..அங்கு இரண்டு மணி நேரம் காத்திருப்பு என்பதால் பொடி நடையாகச் சுற்றி வந்தால் திடீரென அலுவலக நண்பர் கூப்பிட்டார்..

கண்ணா கண்ணா ஊருக்கு வேண்டுமானால் வாங்கிக்கோ..

என்னகாட்டுகிறான் என்று பார்த்தால் அழகான ஒரு ஸ்கேலடி உயர ப்ளாஸ்டிக் சிலிண்டருக்குள் பாடம் செய்து வைக்கப்பட்டு பக்குவமாய் முறைத்தவண்ணம் பாம்புகள்..பின் சில பல குட்டிப் பிளாஸ்டிக் பைகளிலும் பாம்புகள் இன்ன பிற.. அவை எதற்கென்று கேட்டால் டு ஃப்ரை அண்ட் ஈட் எனப் பதில் வர பயந்த என் நண்பர் வா வா போய் லவுஞ்சில் உட்கார்ந்துக்கலாம்.. என்ன கொடுத்தாளோ தெரியலை..வயிறு கலங்குது “ என்றார்..

மறுபடி விமானமேறி ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகப் பயணம் செய்து (ஏழுமணி நேரமோ நினைவில்லை) துபாய் அடையும் வரையில் நண்பரின் வயிறு கலங்கிக்கொண்டுதான் இருந்து, இறங்குகையில் தள்ளாடித்தள்ளாடி விடைபெற்றார் அவர்.. ஊர் போய் ரெண்டு நாள் கழித்து தான் அலுவலகம் வந்தார் அவர்….

*
ம்ம் ஏன் விலாவாரியாக வியட் நாம்..

டுமாரோ நெவர் டைஸில், சி.செ, வியட் நாம் எனக் காட்டி ஒரு பைக் சேஸ் எடுத்திருப்பார்கள்..எனக்கும் கொஞ்சம் பார்த்த இடம் என ஆவல் மிகக்கொண்டுபார்த்தேன். படம் பார்த்த சமயம்..

பின் தான் பத்திரிகைகளில் படித்தபோது தெரிந்தது.. வியட் நாம் எனப் போட்டுவிட்டு அந்த ச் சேஸெல்லாம் எடுக்கப்பட்ட இடம் பாங்காக் என்று..

படம் ரொம்ப மோசம் எனச் சொல்ல இயலாது.. கொஞ்சம்மம்மூட்டியின் நியூ டெல்லியை நினைவு படுத்தினாலும் கூட..அந்த வில்லன் முக பானரிலிருந்து தாவுதல், ரிமோட் கண்ட்ரோல் கார் என சில சுவாரஸ்யங்களும் இருக்கத்தான் செய்தன..
பியர்ஸ் ப்ராஸ்னன் ஓ.கே என்று தான் சொல்லவேண்டும்..அந்த ஆழ்கடல் வில்லன் ரொம்ப சுமார்..

ம்ம் காணொளிகளுக்கு ரொம்ப நன்றி சி.செ

ஓஹ்..மறந்துட்டேனே.. நமக்குத் தெரிந்தவர் ஒருத்தர் இருக்காரில்லை வியட் நாமில்.. இன்றைய நிலை சொல் மாட்டாரா என்ன..
*

vasudevan31355
10th August 2015, 09:57 PM
ராகவ் ஜி... பொன்னூஞ்சலின் வருவான் மோகன ரூபன் பாட்டின் வீடியோ எங்கேயாவது கிடைக்க வாய்ப்பு உண்டா ? ( உஷா நந்தினி வெள்ளைப் புடவை காற்றில் பறக்க நடிகர் திலகத்தை மயக்க சிரித்துக் கொண்டே வருவார் )

மதுண்ணா!

எப்படியாவது தேடிக் கண்டு பிடித்து தருகிறோம். இப்போதைக்கு கேட்டு மட்டும் மகிழுங்கள்.


https://youtu.be/hYwkDf-GYiQ

chinnakkannan
10th August 2015, 10:05 PM
வாசு, உங்க ரைட் அப் நானே பாராட்டிப் போரடிச்சுடுத்து.. எனில் மற்றவங்க எப்படிப் பாராட்டுவாங்கன்னு ட்ரைபண்றேன்….முதலாவதாக..

Vasu. Your song Thirumagal Thedi vandhal is very beautiful. But it reminded me of another song Laxmi vandhaal.. I think the ragam is mohanap priya or yaelisai vallabhi. I couldn’t remember that. Here I am posting the song .:)

https://youtu.be/8O9oToqopp8

chinnakkannan
10th August 2015, 10:36 PM
முன்பு எழுதிய பதிவு தான்..ஆனால் இன்னொரு பாட்டும் கேட்டேனே..அதனால் அந்தப் பதிவு பின் புதிதாய் நான்கேட்ட பழைய பாட்டு..

*


அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே
அடித்து நொறுக்க
அப்பனும் நோக்கினான்..!

இந்தக் கவிதை எழுதியது மு. மேத்தா.. இந்தக் கருவை – அதாவது காதல்னு இருந்துச்சுன்னா அது தோல்வில தான் முடியும் என்ற படி எண்பதுகளில் பல படங்கள். வந்தன..சில வெற்றி, பல தோல்வியைத் தழுவின..

ஆனால் காதல் என்ற ஆதர்ச சக்தி என்ன செய்யும்.. பிற்காலத்தில் வந்த ஒரு பாட்டு என்னவாக்கும் அது பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தான் ஆசை..எஸ்.. ஆனால் யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது.. அதே போலத் தான் இந்தக் காதல் என்பதும்..என்று இருக்குமோ..

கல்லூரியில் தமிழ் இருந்தது இருவருடங்கள்..அப்போதா அல்லது ப்ளஸ்டூவிலா நினைவில்லை..இந்த சங்கப்பாடல் உண்டு..பாடலுக்குமுன் சிச்சுவேஷன் என்னன்னாக்க..


அந்த யூத் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் ஹிஸ் லவர்.. (மேஜர் சுந்தர் ராஜனைப் போல): எஸ்..அந்த க் கட்டிளம் காளை தன் மனம் கவர்ந்த கட்டிளம் காளிக்காக (ஓ அர்த்தமே மாறிடுதோ) இளமை ததும்பும் மங்கைக்காக அந்த மாமர நிழலில் மாலை நேரத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்..

“ஹாய்” எனத் துள்ளிக் குதிக்கும் சூரிய காந்திப்பூவாட்டாம் அவளும் வேகமாய் வந்து அவனைப் பார்க்கிறாள்..”ஸாரிப்பா (மே.சு..:மன்னிங்க அத்தான்!) கொஞ்சம் தாமதமாய்டுச்சு.. ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தீங்களோ..

”இல்லை டியர்.. வாழ்க்கைங்கறது என்ன..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் காத்திருத்தல் தானே..

வார்த்தை வருமென்று மழலையிலே காத்திருந்து
…வாகாக அன்னையினை அழைத்துவிட்டுப் பூத்திருந்து
கூர்ந்து கவனித்துக் கல்விதனைக் கற்கையிலே
..கொள்ளை கொண்டுவிடும் இளமைக்காய்க் காத்திருந்து
சேர்ந்தே வாலிபமும் வந்துவிட துணைதேடல்
..செல்லும் வாழ்க்கையிலே மகவுக்காய்க் காத்திருந்து
ஊற்றும் ஒருகாலம் வற்றிவிடல் போலத்தான்
..ஓடிவந்த முதுமையிலே காத்திருப்போம் முடிவுக்கே..

இல்லையா டியர்”

“ஹேய் வாட் ஹேப்பண்ட் ( மே.சு.: அன்பான முட்டாள் அத்தானே என்னாச்சு..கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா இந்த மாலைவேளையில் ஒரு ஒய்யாரச் சிங்காரி சிருங்காரங் கொண்டு உன்னைத் தேடி ஓடி வந்தாக்க இப்படியா சொல்றது.! இவ்ளோ நீள வாக்கியம்கறதால கொஞ்சம் மூச்சு வேற வாங்குது! )

”ஒண்ணுமில்லை பயந்துடாதே காதலி..கொஞ்சம் நினைச்சுப் பார்..ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீயார் நான் யார்னு தெரியாது உன் ஊர் இருக்கற எடம் எனக்குத் தெரியாது (மெஷின் ஆஸ்பத்திரி ஸ்டாப் தெரியும்.ஆனா நான் செய்ன்ட் மேரீஸ்ல தான்படிச்சேன்.. நீ செய்ண்ட் ஜோசப் கான்வெண்ட்னு தெரியாது ) என் ஊர் இருக்கற இடம் தெரியாது.. எங்க அப்பா பேங்க்கர்..ஒங்க அப்பா எஸ்.பின்னு நீ சொல்லித் தான் தெரியும்( முன்னாடியே தெரிஞ்சா நான் ஏன் உன்னை டாவடிக்கறேன்!) இருந்தாலும் பாரு இவளே. மழையில விழற துளி மண்ணுல கலந்துடும்..அதுவே செம்மண்ணா இருந்தா வேகமா மிக்ஸாய்டும்..(அந்தச் செம்மண் சகதி தான் நன்னா வழுக்கும்!) அந்த மாதிரி நம்ம மனசு கலந்துடுச்சு டார்லிங்க்..!”

“என்ன சாங்க்ப்பா அது (மே.சு: அன்பரே.. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.. சங்கப் பாட்டுப் பாடப் போகிறீர்கள் தானே)

“இது தான் செல்லம்..

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யாயும் நீயும் எவ்வுள மறிதும்
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தான்கலந்தனவே”
**

இந்தப் பாட்டையே முழுக்க நிமிண்டி அந்தக்காலப் படத்தில் வரவேண்டும் என்பதற்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்..இருவர் படத்தில் விஷீவலில் மோகன்லால், மதுபாலா, ஐஸ்வர்யா ராய்…(மோகன்லால் கொடுத்துவச்சவர்)
.பாடியவர்கள்..உன்னிக் கிருஷ்ணன்.பெண்குரல் மறந்து போச்.
**.

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
**
பாடல் படமாக்கப் பட்டது கறுப்பு வெள்ளையில்..இடையில் தான் கொஞ்சம் கலர் வரும்..
*
என்னமோ போங்க.. முடிக்கறச்சே கவிஞர் மீரா எழுதின கவிதை தான் நினைவுக்கு வருது!

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ (!) நல்லூர்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவின் முறை
மாமன் மச்சான்
நானும் நீயும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளை மார்..
எனில்

அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே!

*
இது முன்னெழுதியதென்றாலும் இதுவே இன்னொரு பாடலில் இருப்பது கொஞ்சம்மகிழ்ச்சி தான்..

செம்மண் பூமியின் நீர் போலே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்… என இந்தப் பாடலில் வருகிறது..
*
எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். பாடியவர்கள் எஸ்.பி.ஷைலஜா, ஜேசுதாஸ். படம் காதல் கிளிகள்

*

நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழைக் கேளுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே

ந.ஓ. நா
என் நாயகி அழகைப் பாருங்களேன் (என்ன பரந்த மனசு)
*

தரையைத் தொடாத தென்றலைப் போல்
உன் தாமரைப் பாதங்கள் நடப்பதென்ன

கல்யாணத் தேதியைக் கேட்டவுடன் என் கால்கள் தரையைத் தொடவில்லையே

கரையைத் தொடாத அலைகளைப் போல்
உன் கருங்கூந்தல் கைகளில் விழுவதென்ன (கல்யாணத்துக்கு முன்னாடி இவ்ளோடவுட் வோணாம் சொல்லிப்புட்டேன்)

காதலன்கையில் சுகம் பெறவே என் கூந்தல் சரிந்து விழுந்ததய்யா (அப்ப சரி)

*
கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
இந்தக் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்

செம்மண் பூமியின் நீர் போலே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்…

*
உதடுகளாலே கதை எழுதி உள்ளத்தை மயக்கிட நான் வரவா (இந்த லைன் ஏதோ பாவம் பண்ணிடுத்து போல எடிட் பண்ணிட்டாங்க)

மாலையும் மேளமும் வரும் வரைக்கும் உன் மனதை
அடக்க முடியாதா
(எப்பவும் இதே தான் எக்ஸ்யூஸ்..என்னபெண்ணோ)

*

சிவகுமார் ரத்தி.. நல்லாத் தான் இருக்காங்க இல்லை? (ஆரஞ்ச் கோட் எங்க கெடச்சுருக்கும்) நாணல், பூக்கள், கூந்தல் லாம் விஷூவலா காட்டி நல்ல லைன்ஸூக்கு தைய்யா தக்கான்னு ரத்தி குதிப்பது கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருக்கிறது..:)

ஆனால் பாடல் கேட்க நல்ல மெலடி..

*
https://youtu.be/p5LeLLZT3Ck

eehaiupehazij
11th August 2015, 01:08 AM
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு

BLOW HOT BLOW COLD DANCING DAMSELS OF KOLLYWOOD!

இனக்கவர்ச்சி மயக்க கானங்கள் Vs மனக்கவர்ச்சி மதுர கீதங்கள்!


வியாபார ரீதியாக வலியப் புகுத்தப் படும் குத்தாட்டங்களும் பன்முக அனர்த்தப் பாடல்களும் மலிந்து பழகிப் போய் விட்ட திரையுலகில் அத்தி பூத்தாற்போல 'இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு' என்று சொல்லுமளவில் நமது கவர்ச்சித் தாரகைகளும் எல்லை மீறாத கவர்ச்சியுடன் கௌரவமான பாடல் நடனக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள் என்பது வியப்பின் சரித்திரக் குறியீடே !

கவர்ச்சித் தாரகை 3: சிஐடி சகுந்தலா

வெகுகாலம் குரூப் டான்சர்களில் ஒருவராக ஒரு மூலையில் நின்று ஆடிக்கொண்டிருந்தவர் பாசமலரில் வாராயோ தோழி வாராயோ ...

https://www.youtube.com/watch?v=NQzGsG7Ru8w


முதல் பிரேக் பக்கத்திலே கன்னிப் பொண்ணிருக்கு என்று டி ஆர் ராமச்சந்திரனுடன் நடிகர்திலகத்தின் நெஞ்சம் நிறைத்த படிக்காத மேதையில் கிடைத்தது!
https://www.youtube.com/watch?v=yZ3Y2HCj2zs

இருந்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் சர்வர் சுந்தரம் வரை மீண்டும் குரூப் டான்சராகவே காலம் தள்ளினார்

ஜாக்பாட் அடித்தது தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெயசங்கரின் சி ஐ டி சங்கர் மூலமாக ...பிறகு சிஐடி பெயரோடு ஒட்டிக்கொண்டது!

https://www.youtube.com/watch?v=VeKfcTWtuQw

https://www.youtube.com/watch?v=qGSc_YJ8qUo

https://www.youtube.com/watch?v=olNVCDqgn4k

ரவிச்சந்திரனுடன் ஜஸ்டிஸ் விஸ்வநாத் கதாநாயகியாக ....மாடர்ன் தியேட்டர்ஸ் ஆதரவில்!

https://www.youtube.com/watch?v=NLTeIkgixhE

https://www.youtube.com/watch?v=JqJ21GQLESA

https://www.youtube.com/watch?v=ATDtWaoVTGY

இருந்தாலும் கதாநாயகி வாய்ப்புக்கள் வரவில்லை கவர்ச்சிக் குத்தாட்டங்களில் அதிரடியாக இறங்கி விஜயலலிதாவையும் ஜோதிலட்சுமியையும் எளிதாக
ஓரம் கட்டி முக்கியமான ஐட்டம் டான்சராக மறுவாழ்வு கண்டார் !

https://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk

வசந்த மாளிகை பாரத விலாஸ் சகுந்தலா கொஞ்சம் தூக்கலான வரம்பு மீறலே !

madhu
11th August 2015, 05:24 AM
Sivajisenthil ji..

போங்ணா... கிளப் டான்ஸையே போட்டா தெகட்டி போயிருமில்ல ? ஒரு தையா தக்க பரதமும் போடணுங்ணா..

அகத்த்தியருக்கு முன்னாலேயே லுக் விட்ட தேவ லோக நாரீமணியாக...

https://www.youtube.com/watch?v=xrPpUp8dzFY

rajraj
11th August 2015, 06:32 AM
ஒரு தையா தக்க பரதமும் போடணுங்ணா..


thaiyaa thakkaa bharatham ? I think I sould report this to Mrinalini Sarabhai or Mallika Sarabhai ! :lol:

RAGHAVENDRA
11th August 2015, 07:37 AM
எந்த அளவிற்கு உன்னதமாக வந்திருக்க வேண்டிய ராஜ ராஜ சோழன் திரைப்படம்..

எப்படி குட்டிச்சுவராக்கி விட்டார்கள்... இந்தப் பாடலைப் பாருங்கள்..

இதற்கு யார் யாரைத் தண்டிக்கலாம்..

நடனமாடிய சகுந்த்லா அவர்களையா, சம்பந்தமே இல்லாமல் இரவு விடுதி இசைக்கருவிகளோடு மேற்கத்திய இசை பாணியில் பாட்டை உருவாக்கிய குன்னக்குடியையா, அருட்செல்வர் என்று பெயர் வாங்கி விட்டு இப்படி ஒரு குப்பையை நம் தலையில் கட்டி நம்மைப் பாடாய்ப் படுத்திய ஏபி.என்.னையா,

இதையும் தாங்கள் அந்த பாயம்மாவிடம் சொல்லுங்கள் ராஜ்ராஜ் சார்..

https://www.youtube.com/watch?v=yxRGctq9SJc

இந்தப் பாடல் காட்சியில் ஆனந்த் திரையரங்கில் அமர்ந்து பார்த்தவர்களை எண்ணி விடலாம். கேண்டீன் விற்பனை அமோகம்...(ஒரு வேளை அவர்களோடு ரகசிய உடன்பாடோ)

இன்று வரை மனம் ஆறவில்லை.

இதில் ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம்.. எத்தனையோ காலத்தால் அழியாத இனிமையான பாடல்களின் வீடியோக்களெல்லாம் மங்கலாகவும் நொடிக்கொரு முறை ஜம்ப்பாகியும் நம்மைப் பாடாய்ப்படுத்தும் போது..

இந்தப் பாடல் HD QUALITYயாம்..

ரொம்ப முக்கியம்...

RAGHAVENDRA
11th August 2015, 08:17 AM
சி.க. சார்
அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா..
இந்த அண்ணல் இன்னொருத்தியை நோக்கியா
இவளோ இன்னொருத்தனை நோக்கியா
இப்படி ஆளாளுக்கு நோக்கியா
நம்மைப் பாடாய்ப் படுத்த வேண்டும்.
இதற்காக FACEBOOKம்
செல்ஃபியும்
இன்ஸ்டாகிராமும்
இன்னும் வரப்போற என்னவெல்லாமோ..
சேர்ந்து
கடைசியில் க்ரூப் நோக்கியாவில் கொண்டு போய் விடப் போகிறது..
யார் யாரோடு எனத் தெரியாமல்
இங்கே ஒருத்தர் விழிப்பதோடு இல்லாமல்
பாட்டை வேறு பாடுகிறாரே..

https://www.youtube.com/watch?v=kCrTd5LwLC0

vasudevan31355
11th August 2015, 08:52 AM
'சூதாட்டம்' படத்தில் சகுந்தலா ஆடும் சற்றே வித்தியாசமான போட்டிக் குத்தாட்டம் ஒன்று உண்டு. சூதாட்டத்தில் லட்டு மாதிரிக் கிடைத்த ஜெயசங்கரின் தங்கை நிர்மலாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் சந்தோஷத்தைக் கொண்டாட, குத்தாட்டம் போட ஜெய்குமாரி பார்ட்டியை முத்துராமன் வெளியூரில் இருந்து அழைத்து வர, அவருக்கு எதிராக ஊர்ப் பெண்மணியான சகுந்தலாவை 'கிர்' ஏற்றி போட்டி நடனம் ஆட ஜெய்யின் மனைவி கே.ஆர்.விஜயா உசுப்பேற்றி விட, அருமையான பாடல் 'மன்னர்' மூலம் நமக்குக் கிடைத்தது. ஆனால் இணயத்தில் கிடைக்கவில்லையே. ஒருவேளை மது அண்ணா தேடினால் கிடைக்குமா?

ஜெய்குமாரி

ஆடுகின்ற கைகளுக்கு ராசி என்ன ராசியோ
வெற்றி இன்று வீடு வந்தது
பொன் செல்வங்கள் வெள்ளமென்று ஓடி வந்தது

சகுந்தலா நல்லவங்களாம்:)

பாடுபட்டு தேடி வந்த வெற்றி இல்லையே
பந்தயத்தில் வந்த வெற்றி நீதி இல்லையே
காதலித்து ஆசை வைத்த கன்னி இல்லையே
காரணத்தை நீ அறிந்தால் ஆட்டமில்லையே

ஆடுகின்ற கைகளுக்கு ராசி என்ன ராசியோ
வெற்றி இன்று வீடு வந்தது
பொன் செல்வங்கள் வெட்கமின்றி ஓடி வந்தது

சுசீலா சகுந்தலாவிற்கும், (படத்தில் நல்ல பெண்மணி சகுந்தலா என்பதால் சுசீலா பின் குரலா? தப்புக் கணக்கு போட்டு விட்டார்கள். எடுபடவில்லை) ராட்சஸி ஜெய்குமாரிக்கும் பாடி பட்டை கிளப்பி விடுவார்கள். ஜெயகுமாரி ஒரு தனி அழகுதான். சகுந்தலா முட்டியில் வழித்துக் கட்டிய புடவையுடன், தலையில் ரவுண்டாகச் சுற்றிய பூச்சரத்துடன் பேயாட்டம் ஆடுவார். கேபரேவும் இல்லாமல், பரதமும் இல்லாமல் இது ஒரு தனி கபடி ஆட்டம்.

எது எப்படியோ! பாட்டு பக்கா. பக்கா. பக்கா.

ஆடியோ கிடைச்சாக் கூட பரவாயில்ல.

vasudevan31355
11th August 2015, 09:03 AM
கான்செப்ட் செந்தில் சார்!:)

நீங்க பாத்துகிட்டு ஏதாவது தலைப்பு வரிகளைக் கொடுத்து விட்டு, 4 பாடல்களையும் போட்டு விட்டு, ரிலே குச்சியையும் கொடுத்து விட்டு நைசாக நகர்ந்து விடுகிறீர்கள்.:) இங்கே எங்களுக்கு மண்டை காயுது. இப்போ சகுந்தலா நேரம். சகட்டு மேனிக்கு எல்லோரும் பூந்து விளையாடுறாங்க.

ஆமாம். 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படத்திலே அம்மணி ரொம்பக் குடும்பப் பாங்கா பேபி சுமதியுடன் 'அத்தாணி மண்டபத்தில் முத்து முத்துப் பாப்பா' பாடுமே. அதை ஏன் போடல?


https://youtu.be/l7hAl1v7Gog

vasudevan31355
11th August 2015, 09:20 AM
அப்படியே 'அன்புத் தங்கை'யையும் பார்த்து வையுங்க. அதிகம் பார்த்திருக்க மாட்டீங்க.

சகுந்தலா சேச்சி ஜெயா மேடத்தையே கிண்டல் அடிச்சி பாடுவாங்க. இதுவும் கேபரே இல்லை. அதனாலே பயமில்லாம பார்க்கலாம்.

'வாங்கடி வாங்க
வந்து பார்த்துட்டுப் போங்க
இங்கே தனியே ஒரு பொண்ணு நின்னு
தவிக்குது பாருங்க'

ராட்சஸிதான் பாடும்.

அதுவும் அந்த

'டாங்கரடக்கா... டூங்கரடக்கா... டேங்கரடக்கா'

செம கலக்கலுங்கோ!

ஜெயா அம்மாவுக்கு சுசீலாம்மா குரல் தந்திருப்பாங்க.


https://youtu.be/FwYFcP2ZTRY

vasudevan31355
11th August 2015, 09:33 AM
என் பங்குக்கு சகுந்தலாவின் கேபரே ஒன்னு தராம போனா எப்படி?

இங்கே சினிமா ஷூட்டிங் ஒன்னுல சலீம் மாஸ்டர் சகுந்தலாவுக்கு டான்ஸ் சொல்லித் தராரு. இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் இயக்குவாரு. கூட விமலா ஆடுவாங்க. 'சினிமாப் பைத்தியம்' ஜெயசித்ரா வி.கே.ஆருடன் ஷூட்டிங் பார்ப்பார்.

'I will tell my beauty
My service is night duty'

வேற யாரு இப்படியெல்லாம் பாடுவா? ராட்சஸியேதான்.

சலீம் மாஸ்டர் என்னமாய் ஆடிக் காட்டுகிறார்! அதுவும் விமலாவைத் தூக்கி சுழற்றியபடியே வேறு ஆடுவார்.

ஷூட்டிங் முடிந்ததும் ஏன் இப்படியெல்லாம் ஆடுறீங்க என்று ஜெயசித்ரா கேட்க அதற்கு சகுந்தலா தரும் விளக்கத்தையும் கேளுங்க.


https://youtu.be/0yzHeG_lpAA

vasudevan31355
11th August 2015, 09:54 AM
செந்தில் சார்!

ரொம்ப தேங்க்ஸ். கொஞ்சம் எனக்கு மாற்றம் கொடுத்ததற்கு. தொடர் தொடர் என்று எழுதி கொஞ்சம் டயர்ட் டயர்ட் என ஆகி விட்டேன். இன்று உங்களால் ரிலாக்ஸாக கொஞ்சம் சகுந்தலா பாடல்கள். ஒரு சேஞ்சுக்கு.

madhu
11th August 2015, 09:54 AM
thaiyaa thakkaa bharatham ? I think I sould report this to Mrinalini Sarabhai or Mallika Sarabhai ! :lol:

வாத்தியாரையா ! அந்த பாடல் காட்சியை நல்லா பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க.. அது அக் மார்க் பரதம் இல்லாட்டியும் அட்லீஸ்ட் திரு நீலகண்டர் படத்தில் ஜோதிலக்ஷ்மி ஆடிய அங்கமாலை போலவாவது இருந்திருக்கலாம்.... மல்லிகா ஷெராவத் கிட்டே சொன்னா ஒருவேளை ரசிப்பாங்க..

vasudevan31355
11th August 2015, 09:57 AM
செந்தில் சார்!

உங்கள் வானவில் தேவதைக்கு முதல் படம் கா.நே.இல்லையா? அல்லது இல்லையா?:)

நேரிடையாக தமிழில் கதாநாயகியாக ஸ்ரீதர் மூலம் அறிமுகமானவரா?

அல்லது பிற மொழிப் படங்கள் ஏதாவது நடித்துவிட்டு பின் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆனாரா?

கூற முடியுமா?

vasudevan31355
11th August 2015, 09:58 AM
//மல்லிகா ஷெராவத் கிட்டே சொன்னா ஒருவேளை ரசிப்பாங்க//

:):):):):)

chinnakkannan
11th August 2015, 10:01 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

காலங்கார்த்தால சி.ஐ.டி சகுந்தலா பாட்ஸா ம்ம் என்னமோ போங்க :) வேலை நிறைய இருக்கே :)

எனக்கென்னமோ

மேனி ஒரு பா..லா..டை மின்னுவது நூ...லா..டை... தான் நினைவுக்கு வருது :)

https://youtu.be/f-j80qdfVE4

நீராட நேரம் நல்ல நேரம்...
போராட பூவை நல்ல பூவை...

vasudevan31355
11th August 2015, 10:04 AM
விட்டலாச்சாரா படத்துக்குன்னு ஒரு தனி பரதம் ஒன்னு இருக்கும்.

ஜோதி, விஜி, ராஜஸ்ரீ, ஜெயமாலினி இப்படி ஒரு கும்பல் தையா தக்கா பரதம் ஆடும். அதில் நம்ம ஊர் லதாவையும் சேர்த்துக் கொள்ளலாம். லதா பரதமாடினால் பூமி அதிர்ச்சி ஏற்படும்.:)

madhu
11th August 2015, 10:04 AM
'

ஆடியோ கிடைச்சாக் கூட பரவாயில்ல.

youtube-la வீடியோவே இருந்துச்சு.. டைட்டில் எல்லாம் தப்பு தப்பா போட்டு விடுவதால் கண்டு பிடிப்பது வரிக்குதிரைக் கொம்புதான்.. தேடுவோம்... சிக்கா..சிக்கா.,,சிக்காமல் போய்விடுமா ..என்ன ?

vasudevan31355
11th August 2015, 10:05 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

காலங்கார்த்தால சி.ஐ.டி சகுந்தலா பாட்ஸா ம்ம் என்னமோ போங்க :) வேலை நிறைய இருக்கே :)

எனக்கென்னமோ

மேனி ஒரு பா..லா..டை மின்னுவது நூ...லா..டை... தான் நினைவுக்கு வருது :)

நீராட நேரம் நல்ல நேரம்...
போராட பூவை நல்ல பூவை...

சின்னாகாரு!

நீரே ஆயிரம் தடவை போட்டு விட்டீர். வேற டிரை பண்ணுமேன்.:)

vasudevan31355
11th August 2015, 10:11 AM
youtube-la வீடியோவே இருந்துச்சு.. டைட்டில் எல்லாம் தப்பு தப்பா போட்டு விடுவதால் கண்டு பிடிப்பது வரிக்குதிரைக் கொம்புதான்.. தேடுவோம்... சிக்கா..சிக்கா.,,சிக்காமல் போய்விடுமா ..என்ன ?

மது அண்ணா!

வேணும்னா சொல்லுங்க. வீடியோ அப்லோட் செய்றேன். ஆனா ஜெயா டிவிக்காரன் ரைட்ஸ் பிரச்சனையை கொண்டாந்துடுவான்.:) அப்புறம் யூ டியூப் வார்னிங் கொடுக்கும். ஏற்கன்வே ரெண்டு வார்னிங் வாங்கியாச்சு.:) மூன்றாவதையும் வாங்கிடலாமா?:) சுத்தமாயிடும். :)

chinnakkannan
11th August 2015, 10:13 AM
//இந்தப் பாடல் hd qualityயாம்..

ரொம்ப முக்கியம்...// கரெக்ட் ராகவேந்தர் சார் :) ராஜ ராஜ சோழனை நினைத்திருந்தால் மிக அருமையாகவே எடுத்திருக்க முடியும்..ஏன் அரு. ராமனாதனின் கதையை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை..இப்போது படிக்கும் நாவ்லகளைப் படிக்கும் போது ஏன் அது போலெல்லாம் அந்தக் காலத்தில் யோசிக்கவில்லை என வருத்தம் மேலிடுகிறது..

ஏ.பி.என் ஆ ரா.ரா.சோ எடுத்தார் ..ஜி.உமாபதி இல்லியோ..

ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும் பாட்டிற்கு நன்றி.. ரொம்ப் நாளாச்சு கேட்டு,பார்த்து..

vasudevan31355
11th August 2015, 10:15 AM
மது அண்ணா!

ஒரு உதவி. அப்போது கௌசல்யா என்று பாடகி இருந்ததாக ஞாபகம். ஏதாவது பாடல் சொல்ல முடியுமா? எதுவும் நினைவுக்கு வரலே! ஆனா பெயர் நல்லா ஞாபகம் இருக்கு.

madhu
11th August 2015, 10:15 AM
வாசு ஜி..

இப்போதைக்கு இந்த ஆடியோவைக் கேட்டு மகிழுங்கள்

http://www.mediafire.com/listen/1cp249ldh6y9372/aaduginra_kaigalukku.mp3

madhu
11th August 2015, 10:17 AM
விட்டலாச்சாரா படத்துக்குன்னு ஒரு தனி பரதம் ஒன்னு இருக்கும்.

ஜோதி, விஜி, ராஜஸ்ரீ, ஜெயமாலினி இப்படி ஒரு கும்பல் தையா தக்கா பரதம் ஆடும். அதில் நம்ம ஊர் லதாவையும் சேர்த்துக் கொள்ளலாம். லதா பரதமாடினால் பூமி அதிர்ச்சி ஏற்படும்.:)

இதுக்கு ஒரு அதிர்ச்சித் தொடர் ஆரம்பிச்சா என்ன வாசுஜி ?

vasudevan31355
11th August 2015, 10:19 AM
//அருட்செல்வர் என்று பெயர் வாங்கி விட்டு இப்படி ஒரு குப்பையை நம் தலையில் கட்டி நம்மைப் பாடாய்ப் படுத்திய ஏபி.என்.னையா//

சின்னா!

ஏ .பி.என் எடுத்ததாக ராகவேந்திரன் சார் சொல்லவில்லையே? அவர் இயக்கத்தைத்தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறார். ரசிக வேந்தருக்கே சந்தேகம் சொல்லித் தருகிறீரா? உம்மை.....:)

vasudevan31355
11th August 2015, 10:21 AM
இதுக்கு ஒரு அதிர்ச்சித் தொடர் ஆரம்பிச்சா என்ன வாசுஜி ?

ஆகா! அருமையான ரோசனை. இருக்கவே இருக்காஹ நம்ம செந்தில் சாரும், சின்னா அண்ணாச்சியும். பேஷா தொடக்கி வைக்கட்டும். நாம ரெண்டு பேரும் உள்ளால பூந்துடுவோம்.:)

vasudevan31355
11th August 2015, 10:23 AM
வாசு ஜி..

இப்போதைக்கு இந்த ஆடியோவைக் கேட்டு மகிழுங்கள்



தேங்க்ஸ் அண்ணா! ரொம்பப் பிடிக்கும்.

chinnakkannan
11th August 2015, 10:24 AM
சின்னாகாரு!

நீரே ஆயிரம் தடவை போட்டு விட்டீர். வேற டிரை பண்ணுமேன்.:)

டைம் இல்லிங்க்னா.. ஈவ்னிங்க் தான் செய்யணும்.. ஸாரி.(இருந்தாலும் முழுக்கப் பார்த்திருப்பீஙக்ன்னு நினைக்கேன்...)

எம்.ஜி.ஆர்.. “யோவ்.. நான் ஏழைகளுக்கு ஹெல் ப் பண்ணுவது மாதிரி தான் மக்கள்ஸுக்குப் பிடிக்கும்.. கொஞ்சம் நல்ல ஃபைட் சீன்ஸ்..லாம் இருந்தால் நன்னாயிட்டு இருக்கும் நீரென்னடான்னா ஆரம்பத்திலேயே என்னைப் பணக்காரன், படித்தவன், டைம் இல்லாத இளைஞன் கறீங்க..ரொமான்ஸ் முழுக்க முழுக்கங்கறீங்க..இப்ப என்னடான்னா ட்விஸ்ட் டான்ஸ் அது இதுன்னு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.. ஏன்யா இப்படிப் படுத்த்றே”

ஏ.சி.தி “அண்ணா..அதெல்லாம் நல்லாவே இருக்கும்..இந்த டான்ஸ்க்கு வேணும்னா டூப் லாங்க் ஷாட்ல வச்சுக்கலாம்”

எம்.ஜி.ஆர்..”போய்யா போ..முதல்ல டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எப்படி இருக்குன்னு பாக்கறேன்” எனச் சொல்லி ப்ராக்டீஸ் செய்து அளப்பரையாக (மதுரை பாஷை) நடனமாடி (இப்போ பாத்தாலும் கால்கள் ஆடத் தோன்றும்)ய பாட்டு இது.. இதில் என்ன விசேஷம் எனில் ஒரு மூலையில் கும்பலோடு கும்பலாக சி.ஐ.டியும் ஆடும்!

https://youtu.be/deqTvMWqWe4

மேற்சொன்ன விஷயம் ஏ.சி.தி எழுதிய புத்தகத்தில் படித்தது..கொஞ்சம் என்னெழுத்தும் கலந்திருக்கிறது..

madhu
11th August 2015, 10:26 AM
மது அண்ணா!

ஒரு உதவி. அப்போது கௌசல்யா என்று பாடகி இருந்ததாக ஞாபகம். ஏதாவது பாடல் சொல்ல முடியுமா? எதுவும் நினைவுக்கு வரலே! ஆனா பெயர் நல்லா ஞாபகம் இருக்கு.

சரி.. எனக்கும் நீங்க சொன்னதும் நினைவுக்கு வருது. ஆனால் அவர் தனியாகப் பாடியிருப்பதாக நினைவில்லை.

இந்த கள் வடியும் பூக்களில் :வானம் பன்னீரைத் தூவும்னு பாடியவர் அவரோ ?

madhu
11th August 2015, 10:30 AM
வாசு ஜி..

இது எஸ்.பி.பி, கௌசல்யா பாடியது

https://www.youtube.com/watch?v=rWYzGG6rC10

vasudevan31355
11th August 2015, 10:30 AM
சின்னா!

' tik'என்று டைப் செய்தால் 'டிக்' கென்று வார்த்தை கிடைக்கும். அதில் 'க்' கை எடுத்து விடுங்கள். இப்போது 'டி' மட்டும் கிடைக்கும். இப்போது ஏ.சி. டி என்று சரியாக அடிக்கலாம். ஓகேயா? இல்லைன்னா எனக்குக் 'திக்' கென்று இருக்கும்.:)

chinnakkannan
11th August 2015, 10:37 AM
சின்னா!

' tik'என்று டைப் செய்தால் 'டிக்' கென்று வார்த்தை கிடைக்கும். அதில் 'க்' கை எடுத்து விடுங்கள். இப்போது 'டி' மட்டும் கிடைக்கும். இப்போது ஏ.சி. டி என்று சரியாக அடிக்கலாம். ஓகேயா? இல்லைன்னா எனக்குக் 'திக்' கென்று இருக்கும்.:)

ஏ.சி.திருலோக் சந்தர்..ஏ.சி.தி ந்னு போட்டேன் ஓய்.. நான் மறத் தமிழனாக்கும்! :)

chinnakkannan
11th August 2015, 10:39 AM
//இதில் நம்ம ஊர் லதாவையும் சேர்த்துக் கொள்ளலாம். லதா பரதமாடினால் பூமி அதிர்ச்சி ஏற்படும்.// ம்ம் நான் சின்ன வயசுலயே அந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிட்டேன்..மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல கயல்விழியா ஆடி... பாவம் அகிலன் அதுலயே அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கும்! :)

RAGHAVENDRA
11th August 2015, 11:17 AM
வாசு சார்
நீங்கள் குறிப்பிட்ட கௌசல்யா பாடிய பாடல்.. கண்ணன் என் காதலன் படத்தில் இப்பாட்டின் கடைசியில் பாடுவார். அதற்கப்புறம் வேறு என்ன பாட்டு தமிழில் பாடினார் எனத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட கௌசல்யா இவர் தான்.

https://www.youtube.com/watch?v=l3yzRf3KMvY

பின்குறிப்பு

இப்பாடல் ..... சாருக்கு சமர்ப்பணம்..

வாசு சார் ... இந்த கேப்பை நீங்களே ஃபில் பண்ணிடுங்க...

RAGHAVENDRA
11th August 2015, 12:48 PM
வாசு, மது,
அந்த 'அதிர்ச்சி'த் தொடரில் இந்தப் பாடல் இடம் பெறுமா..

https://www.youtube.com/watch?v=fugfYpWyaWI

eehaiupehazij
11th August 2015, 01:28 PM
செந்தில் சார்!

உங்கள் வானவில் தேவதைக்கு முதல் படம் கா.நே.இல்லையா? அல்லது இல்லையா?:)

நேரிடையாக தமிழில் கதாநாயகியாக ஸ்ரீதர் மூலம் அறிமுகமானவரா?

அல்லது பிற மொழிப் படங்கள் ஏதாவது நடித்துவிட்டு பின் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆனாரா?

கூற முடியுமா?
Vaasu Sir It is learnt that Director Shridhar first met Kanchana in a flight as an Air Hostess. He liked her cinematic features and convinced her to act in her maiden movie KN in tamil only. I dont know about her other language debut.
senthil

eehaiupehazij
11th August 2015, 01:42 PM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!

வானத்தில் விமான நங்கையாக பறந்து கொண்டிருந்த காஞ்சனாவை கனவுத் தொழிற்சாலை அதிபர் ஸ்ரீதர் பூமியில் இறங்கிவந்து கால் பதித்த நட்சத்திரமாக்கினார்!
சிவந்த மெலிந்த அழகிய உடலமைப்புடன் வசீகரமான முகத் தோற்றத்துடன் காதலிக்க நேரமில்லைக்குப் பிறகு அதிக அளவு வண்ணப் படங்கள் அமைந்து கலர் கதாநாயகி பட்டம் வென்று அனைத்து கதாநாயகர்களாலும் விரும்பப்பட்ட கனவுக் கன்னியாக ரசிக நெஞ்சங்களில் கொடிகட்டிப் பறந்தார்!

KANCHANA VIBGYOR VIEW 5

உத்தரவின்றி உள்ளே வா(1971)

வானவில்லின் ஐந்தாவது வண்ண அடுக்கின் உச்சியில் நீலவண்ணம்(BLUE)!



[COLOR="#000080"][QUOTE]நம்மைச் சுற்றிலும் ஆகாயம் கடல் எல்லாமே நீலவண்ணமே கிருஷ்ண பரமாத்மா போல
அதேபோல உத்தரவின்றி உள்ளே வா திரைப்படமும் ரவி இருந்தாலும் காஞ்சனாவை சுற்றியே கதை நகர்வு எல்லாப் பாடல்களும் நீலவானம் சிந்திய தேனே ! எழில் குன்றாத காஞ்சனாவின் ஈர்ப்பே தனி!!
எம் உத்தரவின்றி மனதினுள்ளே நுழைந்த கதாநாயகி கலர் காஞ்சனாவே!!


ஸ்ரீதரின் தயாரிப்பு மேற்பார்வை இயக்கத்தில் சக்கரவர்த்தியின் இயக்கத்தில் மெல்லிசை மன்னரின் தேனிசை கீதக் காணொளிகள் !

https://www.youtube.com/watch?v=kdu45A-2a1w

https://www.youtube.com/watch?v=CLDrhWpj8bw

https://www.youtube.com/watch?v=qWj1JSmI2gw

madhu
11th August 2015, 02:02 PM
Sivajisenthil sir..

கதம்பத்தில் தொடுக்கப்பட்டு இருந்தாலும் இந்த நீலமலரும் உங்கள் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டியதே..

எஸ்.பி.பி, பி.சுசீலா, சாய்பாபா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் நாகேஷ், ரமாபிரபா, ரவிச்சந்திரனுடன் காஞ்சனா ...... உத்தரவின்றி உள்ளே வா

https://www.youtube.com/watch?v=pZQwOBTGJWs

vasudevan31355
11th August 2015, 02:35 PM
மது அண்ணா!

அருமையான 'கள் வடியும் பூக்கள்' பாடலுக்கு நன்றி!

ஒரு டவுட்.

'பெண்ணை வாழ விடுங்கள்' படத்தில் ஜெய் குடித்துவிட்டு விடுதியில் சைலஸ்ரீயுடன் ஆடுவார் இல்லையா?

'மது இறங்க இறங்க இறங்க
மனம் மயங்க மயங்க மயங்க'

என்று பாடல் வருமே! அந்தப் பாடலில் சைலஸ்ரீக்கு ஹம்மிங் மட்டுமே வரும். பாடல் கிடையாது. அந்த ஹம்மிங் வாய்ஸ் கௌசல்யாவுடயதா?

ஏனென்றால் பெ.வா.வி படத்தின் டைட்டிலில் பின்னணி பாடியவர்கள் பெயரில் கௌசல்யா பெயர் இடம் பெற்றுள்ளது.

http://i57.tinypic.com/2cxjog4.jpg

மற்ற பாடல்களான சமையலுக்கும், அழகிலே கனி ரசம், நெஞ்சே உனக்கொரு விருந்து, காலங்கள் உனக்காக காத்திருக்காது பாடல்களில் கௌசல்யா பாடியதாகத் தெரியவில்லை.


https://youtu.be/G36zamptd4A

eehaiupehazij
11th August 2015, 02:40 PM
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு

BLOW HOT BLOW COLD DANCING DAMSELS OF KOLLYWOOD!

இனக்கவர்ச்சி மயக்க கானங்கள் Vs மனக்கவர்ச்சி மதுர கீதங்கள்!


வியாபார ரீதியாக வலியப் புகுத்தப் படும் குத்தாட்டங்களும் பன்முக அனர்த்தப் பாடல்களும் மலிந்து பழகிப் போய் விட்ட திரையுலகில் அத்தி பூத்தாற்போல 'இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு' என்று சொல்லுமளவில் நமது கவர்ச்சித் தாரகைகளும் எல்லை மீறாத கவர்ச்சியுடன் கௌரவமான பாடல் நடனக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள் என்பது வியப்பின் சரித்திரக் குறியீடே !

கவர்ச்சித் தாரகை 4: ஜெய்குமாரி



எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் ஸ்லிம்மான பொம்மையாக வந்த ஜெய்குமாரி இனி நடிகர்திலகத்துக்கு ஒரு நல்ல அடக்க ஒடுக்கமான புதுமலரான கதாநாயகி கிடைத்து விட்டார் .... என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தார்
நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே குட்டிப்பொண்ணால் ஜொலிக்க முடியவில்லையே...

https://www.youtube.com/watch?v=xDtX1AgMsoU


https://www.youtube.com/watch?v=bMBYmo6tw2o

சிறு நரியின் குகையில் புள்ளிமானாட்டத்தைக் காணச் சென்ற சிங்கம் !

https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk

ஒளிப்பதிவு மேதை கர்ணனின் கைங்கரியத்தில்

https://www.youtube.com/watch?v=l_GPNvxftdk

vasudevan31355
11th August 2015, 03:13 PM
செந்தில் சார்,

ஜெயகுமாரி பாடல்களுக்கு ஜே! முந்தின பாகங்களில் கார்த்திக் சாரும், நானும் இவர் பற்றி அலசோ அலசு என்று அலசி விட்டோம். இருவருமே குமாரியின் ரசிகர்கள்.

ஆமாம்! 'கடவுளின் படைப்பே' (Jakkamma) பாடலுக்கு ஆடுபவர் ஹலம் அல்லவா? ஜெயகுமாரி இல்லையே.

இதில் ஒரு வரி கவனித்தீர்களா?!

'மனதுக்கு வெறுத்தால் மது விலக்கு:)
இதில் மாதத்தில் சிலநாள் விதி விலக்கு'

vasudevan31355
11th August 2015, 06:36 PM
காஞ்சனாவின் மிக அபூர்வ நிழற்படம்.

ராகவேந்திரன் சார், செந்தில் சார்,

காஞ்சனா பற்றி காலையில் சொல்லியிருந்தேன். நானும் இயக்குனர் ஸ்ரீதரால் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நேரிடையாக அறிமுகப்படுத்தப்பட்ட புதுமுகம் என்றுதான் கொஞ்ச நாள் முன்பு வரை நினைத்திருந்தேன். ஆனால் அது உண்மையல்ல என்பது போல் தோன்றுகிறது.

'காதலிக்க நேரமில்லை' படம் 1964 ல் வெளிவந்தது. ஆனால் தெலுங்கில் 1960 இல் வெளிவந்த 'பட்டி விக்ரமார்கா' தெலுங்குப்படத்திலேயே காஞ்சனா ஒரு சிறு ரோல் செய்துள்ளார். இந்தப் படம் தமிழில் கூட 'டப்' செய்யப்பட்டு 'பட்டி விக்கிரமாதித்யன்' என்ற பெயரில் வெளிவந்தது. என்.டி.ஆர், காந்தாராவ், அஞ்சலிதேவி, ரேலங்கி, கிரிஜா பிரதான ரோல்களில் நடித்திருப்பார்கள். 65,70 களிலெல்லாம் இப்படம் காலைக்காட்சியாக பல ஊர்களில் நடைபெற்று இருக்கிறது.

இந்தப் படத்தில் காளிதேவியாக காஞ்சனா ஒரு சில நிமிடங்களே வருவார். காந்தாராவுடனான காட்சி அது.

சமீபத்தில் இந்தத் தெலுங்குப் படத்தைப் பார்க்க நேரிட்டது . அதனால் நிச்சயமாக காஞ்சனா 'காதலிக்க நேரமில்லை' படத்தில் புதுமுகமாக அறிமுகமாகியிருக்க முடியாது. நிச்சயம் அவரும் சிறுசிறு ரோல்களில் நடித்து போராடியே 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நாயகியாக உயர்ந்திருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான தனிப்பட்ட கருத்து. கா.நே படத்தில் நாயகியாக இருக்கலாம். ஆனால் அதுதான் கேமரா முன்னால் அவர் நின்ற முதல் படம் என்பதை கீழுள்ள இந்த இமேஜ் உடைத்துக் காட்டுகிறது. தமிழில் அறிமுகமாகிய 1964 க்கு 4 ஆண்டுகளுக்கு முன்னமேயே அவர் 1960- தெலுங்கில் தலை காட்டி விட்டார். மேலும் என்னென்ன படங்களில் சிறு ரோல்களில் வந்து போனார் என்றும் தெரியவில்லை. நிச்சயம் 4 வருட தீவிர முயற்சிகளுக்குப் பின் தமிழில் நாயகி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. வானவில் நாயகி கருப்பு வெள்ளைப் போராட்டம் நடத்தியே வண்ணம் பெற்றுள்ளார் என்பது மட்டும் புரிகிறது.

இதோ 'பட்டி விக்ரமார்கா' தெலுங்குப் படத்தில் காளிதேவியாக காஞ்சனாவின் மிக அபூர்வ நிழற்படம்.

http://i62.tinypic.com/jhauk9.jpg

eehaiupehazij
11th August 2015, 06:53 PM
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு

BLOW HOT BLOW COLD DANCING DAMSELS OF KOLLYWOOD!

இனக்கவர்ச்சி மயக்க கானங்கள் Vs மனக்கவர்ச்சி மதுர கீதங்கள்!

கவர்ச்சித் தாரகை 5 : ஆலம்


ஆலம் விழுது போன்ற ஒடிசலான உடலமைப்பில் ஒரு காலத்தில் ரசிகர்களை கிறங்கடித்தவர் ஆலம் என்ற ஹலம்... ! வாசு சார்...அது ஹலம்தான்!!
மன்மதலீலை திரைப்படத்தில் தன்னுள் பொதிந்து கிடந்த அருமையான நடிப்புத்திறமையை பாலசந்தர் அவர்களின் பட்டை தீட்டலில் வைர ஒளியாய்
வெளிப்படுத்தினார். என்ன செய்ய....ரசிகர்கள் அவரது ஆலஹால கவர்ச்சியம்சங்களில் நிலைகுத்திக் கிறக்கத்திலிருந்தபோது நடிப்பெல்லாம் எடுபடுமா!!

https://www.youtube.com/watch?v=HB0NPDLJLv0


https://www.youtube.com/watch?v=FzF3lIJR35Ihttps://www.youtube.com/watch?v=835LZgE9u0I


https://www.youtube.com/watch?v=tRrgeh802Pkhttps://www.youtube.com/watch?v=HKmHCXrEzlQ


https://www.youtube.com/watch?v=su0lZwoaUfE




https://www.youtube.com/watch?v=rF92unhZa7o

madhu
11th August 2015, 07:09 PM
ஹலம் என்றால் கலப்பை என்று அர்த்தமாம்.. அந்தக் காலத்தில் குமுதம் பேட்டியில் சொல்லப்பட்டது.

அது சரி... புடவை கட்டிய ஹலம் பாட்டைப் போஸ்டக் கூடாதா ?

சுகம்தானா சொல்லு கண்ணே.... ( ஆண்மைக்கென்ன கற்பில்லையா? என்று கேக்கிறாருங்கோ )

https://www.youtube.com/watch?v=HB0NPDLJLv0

madhu
11th August 2015, 07:12 PM
வாசு ஜி..

நீங்கள் சொல்லும் கௌசல்யா குரல் சரியாக இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல வேறு எந்தப் பாடலிலும் தெரியாத குரல் எதுவுமே இல்லை.

eehaiupehazij
11th August 2015, 07:19 PM
மது சார்
அடுத்து ஜெயமாலினி பற்றிப் போட எண்ணினேன்
டாக்டர் சிவாவில் ஊமைப் பெண்ணாக அறிமுகம்
பாதை மாறி கவர்ச்சியில் சிகரம் தொட்டு ஜெகன்மோகினியானார்
அடக்க ஒடுக்கம் பாடல் ஆடல் கிடைக்கவில்லையே

madhu
11th August 2015, 07:23 PM
வாசு ஜி..

மலையைத் தோண்டி கிளியைப் பிடித்து விட்டேன்..

ஆடுகின்ற கைகளுக்கு ராசி என்ன ராசியோ.

https://www.youtube.com/watch?v=xQaFVKaM-J4

eehaiupehazij
11th August 2015, 07:26 PM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!

KANCHANA VIBGYOR VIEW 6
Indigo


அவளுக்கென்று ஒரு மனம்(1971)


ஸ்ரீதரின் அவளுக்கென்று ஒரு மனம் இன்று வரை பாடல் காட்சிகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன !
காஞ்சனா சற்றே முதிர்கன்னியாகி விட பாரதியின் கொடி பறந்தது. ஜெமினியும் வயது முதிர்ச்சியை மறைக்க இயலவில்லை !
கல்யாணபரிசு மலரும் நினைவுகளில் எடுத்த படம் டெக்னிகல் அம்சங்கள் அட்டகாசமாக கையாளப் பட்டிருந்தாலும் பாடல்கள் இசை மிக அற்புதமாக இருப்பினும் படம் சற்றுத் தொய்வே !
ஜெமினி காஞ்சனா பாடல்கள் இதம்

https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U

madhu
11th August 2015, 07:28 PM
மது சார்
அடுத்து ஜெயமாலினி பற்றிப் போட எண்ணினேன்
டாக்டர் சிவாவில் ஊமைப் பெண்ணாக அறிமுகம்
பாதை மாறி கவர்ச்சியில் சிகரம் தொட்டு ஜெகன்மோகினியானார்
அடக்க ஒடுக்கம் பாடல் ஆடல் கிடைக்கவில்லையே

பாடல் காட்சி இல்லாவிட்டாலும் தாலியா சலங்கையா படத்தில் முத்துராமனின் தங்கையாக மடிசார் கட்டிய பிராமணப் பெண்ணாக ஜெயமாலினி நடித்திருக்கிறார். ( Vasu ji, Raghav ji, Chikka ji.. Confirm plz )

chinnakkannan
11th August 2015, 07:44 PM
ஹாய் குட் ஈவ்னிங்க் ஆல்..

காஞ்சனா தெலுங்குப் படத்தில் தான் அறிமுகம் என காளி வேடப் புகைப்படத்தைத்தேடிக் கண்டுபிடித்து இட்ட வாசுவுக்கு ஒரு ஓ..:) ரொம்பக் கஷ்டப் பட்டாரா என்ன கண்டுபிடித்துச் சொன்னால் இன்னுமொருஓ..

அதுச்ரி ஆலம் ஜெயமாலினின்னு போய்க்கினே இருக்கு..இந்த வயசுல நன்னாத்தான் இருக்கு..அழகு தான் போங்க..( நான் என்னைச் சொன்னேன்!)

ஹை..அழகு..இதையொட்டி சில பாட் கண்ணா எடுத்து வச்சிருந்தேனே..தேடிப் பார்த்தா...

இந்தக் கவர்ச்சி நடிகையர்கள் ஆடற் ஆட்டத்தை விட தையா தக்கானு ஜெய்ஷங்க்கரும் ஆடியிருக்காரே...

என்ன மஹாராணி அழகு அழகு அழகு.. ( வாசு விரிவாச் சொல்வார்!)

https://youtu.be/QAMbEyIIq08

eehaiupehazij
11th August 2015, 07:48 PM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!

KANCHANA VIBGYOR VIEW 7
violet

நடிகர்திலகத்துடன் கலரில் தோன்றிய அவன் ஒரு சரித்திரம் மற்றும் விளையாட்டுப்பிள்ளை திரைப்படங்கள் காஞ்சனாவின் மார்க்கட் சற்றே சரியத் தொடங்கியபோது வெளிவந்தன
அவர் நடிப்பு முதிர்வாக இருந்தாலும் கலர் காஞ்சனா என்ற இமேஜ் கொஞ்சம் கலகலத்து விட்டது

https://www.youtube.com/watch?v=ZYNefw7g1wI

https://www.youtube.com/watch?v=hW3ttn2hqfU




THE END OF THE SERIES ON KALAR KAANCHANAA

madhu
11th August 2015, 07:54 PM
இந்த பண்பட்ட நடிகை பலவிதமான பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். ஏற்கனவே இது போல ஆட்டமும் ஆடியிருக்கிறார்.

ஆனாலும் இங்கே ஈஸ்வரியின் குரலில் அந்த ரதிக்கு நான் தங்கை என்று ஒரு கிக் ஏற்றப் பார்க்கிறார். ( நண்பர்கள் வந்து திட்டும் முன் நான் ஜூட் )

https://www.youtube.com/watch?v=eVVNTKWoXwY

chinnakkannan
11th August 2015, 08:06 PM
மதுண்ணா :) :) திஸ் இஸ் டூமச் :) மனோரமா ரதியோட தங்கையா.. பாட்டு எழுதினவருக்கு அப்புறம் விரல்ல நகச்சுத்தி வந்ததாமா..?

*

என்ன தான் அழகுன்னு இருந்தாலும் அன்புங்கறது வேணுமோல்லியோ வாழ்க்கைல..

அன்பப்பத்தி வள்ஸ் என்ன சொல்லியிருக்கார்னாக்க

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

ஆஹ அன்பில்லாதவர்கள் லாம் செல்ஃபிஷ் ஃபெல்லோஸ்... மோஸ்ஸமானவய்ங்க.. அவங்களுக்கு தான்,தன்னோட சுகம், தன்னோட தமன்னான்னு கனவு கண்டுகிட்டு இருப்பாங்க!

அதே இது அன்புள்ளவர்கள்னு பார்த்தீங்கன்னா சின்னவயசு இந்த ஃபோட்டோ வேணும்னு நினச்சாலே பக்கெட் பக்கெட்டா தருவாங்க.. அன்புள்ளவ்ர்கள் எல்லோருக்கும் உரியவர்கள்..

ஸோ எல்லாரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே இந்தப் பாடலின் நோக்கம் என்று சொல்லவும் வேண்டுமோ..

**

அன்பு என்பதே தெய்வமானது.. அன்பு என்பதே இன்பமானது...

மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது

இதயம் இங்கு வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது..

அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது

பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது

பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்..

அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்??
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்

ஆசை அலைகள் – விஜயகுமாரி எஸ் எஸ் ஆர் செளகார், பாலாஜி குட்டி பத்மினி – பி.சுசீலா, கே.ஜே.ராஜேஷ்வரி, சீர்காழி.

*

https://youtu.be/KVVgPGTbSYc?list=RDvjS-pcV3bQc

chinnakkannan
11th August 2015, 08:09 PM
சி.செ.. காஞ்ச்சோட சொல்லாமல் தெரிய வேண்டுமே ரொம்பப் பிடிக்கும்..ஏன்னாக்க படத்துல அந்த சீன்க்கு முன்னால சமர்த்தா குளிச்சுட்டு தான் பார்ட்டிக்கு வருவாங்க :) கரெக்ட் தானா (ரொம்ப நாளாச்சா நினைவில்லை)

என்னதான் விப்ஜியார்ல வைட் இல்லைன்னாலும் ப்ளாக் இல்லைன்னாலும் ப்ளாக் அண்ட் வைட் தேன் பாட் எனக்குப் பிடிக்குமாக்கும்...

chinnakkannan
11th August 2015, 08:15 PM
அன்பு செலுத்தத் தெரிந்தான் மனிதன்

அழகை ரசிக்கத் தெரிந்தான்மனிதன்- இன்னொவேட்டிவ் வழிகளில் சி.செ போல..

பின் பற்பல விதமாய் இன்வென்ஷன்ஸ் கட்டிடங்கள் இன்னும்பல பலவற்றை ப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் தெரிந்துகொண்டான்..பட் ஒண்ணே ஒண்ணுமட்டும் அவனுக்குத் தெரிலயாம் ( ஈ பாட் போட்டாச்சுனு நினைவு.. வாசு தான் நான் கேட்டு முதல்பாகத்தில் போட்டார் என நினைவு..ஆர்..மதுண்ணா..) பட் இப்பத் தான் படத்தில் பார்ப்பதாகவும் ஒரு நினைவு..

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்

இருந்த போது மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லைஹோய்…

https://youtu.be/vjS-pcV3bQc

eehaiupehazij
11th August 2015, 09:43 PM
Gap fillers / Monotony breakers

கறுப்பு வெள்ளையிலும் கலர்புல் காஞ்சனா !
வீர அபிமன்யு படத்தில் குட்டி ஜெமினி ராஜனுடன் பங்கேற்ற மிகவும் ரசிக்கப்பட பாடல் மதுரம் !
https://www.youtube.com/watch?v=aXtdRLIq99U
பாமா விஜயத்தில் மீண்டும் முத்துராமனுடன் ..
https://www.youtube.com/watch?v=vSnnSKLMVnw
https://www.youtube.com/watch?v=BZKIzgVxAkI
பொண்ணு மாப்பிளேயில் ஜெய்யுடன்
https://www.youtube.com/watch?v=tHhLlQWGS0g

eehaiupehazij
11th August 2015, 09:54 PM
Exclusive : Kanchana with MGR!

மக்கள்திலகம் எம்ஜியாருடன் கலர் காஞ்சனா பங்கேற்ற ரம்மியமான பாடல் காட்சிகள்
https://www.youtube.com/watch?v=RtgXOOOxw5Q

https://www.youtube.com/watch?v=ft44mIGumqY

https://www.youtube.com/watch?v=M2yrTIfnxUU

eehaiupehazij
11th August 2015, 10:26 PM
அங்கும் இங்கும் / Here and There 3

தியாகம் 1976 / நடிகர்திலகம் / லட்சுமி

நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ..ஒன்று மனசாட்சி!
https://www.youtube.com/watch?v=7pDdsxMfcmo

https://www.youtube.com/watch?v=PuV8Hemr_l8

அமானுஷ் 1975 உத்தம் குமார் / ஷர்மிளா தாகூர்
https://www.youtube.com/watch?v=643S5y_E6Zo

https://www.youtube.com/watch?v=kaMzitEFoYs

vasudevan31355
11th August 2015, 10:50 PM
//கறுப்பு வெள்ளையிலும் கலர்புல் காஞ்சனா !//

செந்தில் சார்,

இதையும் சேர்த்துக்கோங்க. 'காதல் ஜோதி அணையாதது' என்று காதலுடன் காஞ்சனா பொண்ணு மாப்பிளை ஜெய்யிடம் பாடுகிறார் காதல் ஜோதி திரைப்படத்தில்

http://www.dailymotion.com/video/xik5dx_kadhal-jothi-anaiyaadhadhu_travel

உங்கள் ஜெமினி ராஜனுடன் சிட்டாகத் துள்ளி துள்ளி ஆடுவதும் பட்டத்து ராணியே.


https://youtu.be/8siouV_sIaw

eehaiupehazij
11th August 2015, 10:53 PM
அங்கும் இங்கும் అక్కడ ఇక్కడ इधर उधर(அக்கட இக்கட/ இதர் உதர்) 4
வசந்த மாளிகை /பிரேம் நகர்

நடிகர்திலகம்

https://www.youtube.com/watch?v=su0lZwoaUfE

https://www.youtube.com/watch?v=MCF5HlJ_LE0

ANR

https://www.youtube.com/watch?v=sazz8qOcPWI

https://www.youtube.com/watch?v=UNMHPV9ThAs

ராஜேஷ் கன்னா

https://www.youtube.com/watch?v=tn0NlmiLiLQ

https://www.youtube.com/watch?v=cqUFPzXelEQ

eehaiupehazij
11th August 2015, 11:47 PM
பேய் பிசாசுகளின் அசரீரி கானங்களும் மதுரமே !

பேய் பிசாசு என்றாலே அதற்குத் தமிழன் கொடுத்திருக்கும் உருவகம் வெள்ளை உடை விரித்த கூந்தல் மேகம் வரை ஏறி மிதக்கும் திறமை...காலே இல்லையாம்....ஆனால் சலங்கை ஒலி ஜல் ஜல்னு கேட்குமாம்.....சூப்பரா பாட்டெல்லாம் பாடி ஹீரோவையும் நம்மையும் குஷிப் படுத்தும்....
பொதுவாக மிஷ்கினின் பிசாசு போல எல்லாமே நல்லவையே !! நமக்குத்தான் படம் பார்த்துவிட்டு வந்தவுடன் குளிர்ஜுரமேறி ஒரு வாரத்துக்குமண்டையில் மாவாட்டும் !!
ராதாரவி பாணியில் தவழ்ந்தே சென்றால் தப்பிக்கலாம் !

தமிழ்த் திரை நல்கிய காலத்தால் அழியாத ஆவிகளின் தீம் சாங் !
நானே வருவேன்......அங்கும் இங்கும்.... யாரென்று யாரறிவார்
https://www.youtube.com/watch?v=sF0bRsHrRJU&index=1&list=PLTQmfXBZrVJdRtY3WRattHFMiGc3Xv97P


இறந்து போய் ஆவியாக திரும்பி வந்த முதல் மனைவியின் பேய்வாக்குப்படிதான் இன்னொரு கல்யாணமும் செய்து கொள்வாராம் காதல் கல்யாண மன்னர் !!

https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsI

துணிவே துணை .தமிழ்வாணன் தந்த தாரக மந்திரம்....பேயே ஓடிப்போ!
ஜேம்ஸ் பாண்டையே பயமுறுத்தும் பேய் !!

https://www.youtube.com/watch?v=HBswfjIM_cU


புதிய பறவை என்றுமே டார்லிங்தான்....பழைய பறவை டார்லிங் பேய்தானே!!

[url]https://www.youtube.com/watch?v=___CnUWEADk

Kalyanaraman pisasu!

[url]https://www.youtube.com/watch?v=Ik9a3fJ3hug

ஜெகன் மோகினி விட்டலாச்சார்யா பேய்

https://www.youtube.com/watch?v=EJviztkrK3g[/url

RAGHAVENDRA
12th August 2015, 12:50 AM
நண்பர்களே,
வரும் ஆகஸ்ட் 15ம் நாளன்று சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில், என்றென்றும் எம்.எஸ்.வி. என்ற தலைப்பில் மெல்லிசை மன்னரைப் பற்றி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் பார்வையாளராக அடியேனும் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். இரவு 8 முதல் 10 வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மெல்லிசை மன்னருடன் பணி புரிந்த திரு மதுரை ஜி.எஸ்.மணி, ஒலிப்பதிவு நிபுணர் திரு சம்பத், திருமதி வாணி ஜெயராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளனர். திருவாளர் முகேஷ் மற்றும் திருமதி மாலதி ஆகியோர் சில பாடல்களைப் பாடியுள்ளனர்.

தவறாமல் காணுங்கள்.

நன்றி.

vasudevan31355
12th August 2015, 06:10 AM
செந்தில் சார்,

பேய் பிசாசுகளின் அசரீரி கானங்களை ரசித்தேன். மிரண்டேன்.

அதை விட உங்கள் வீடியோக்களின் எண்ணிக்கை கண்டு இன்னும் மிரண்டு போனேன். அடேயப்பா! 257-ம் பக்கத்தில் உங்களுடையது மட்டும் மொத்தம் 24. அப்புறம் என்னுடையது ஒன்று. சின்னாவுடயது ஒன்று. சுத்தமாக பேஜ் லோட் ஆகவே இல்லை. ஒரு பக்கத்துக்கு 26 வீடியோக்கள் தாங்குமா?

தவறாக நினைக்க வேண்டாம். அதனால் தயவு செய்து பக்கத்திற்கு ஒன்றிரண்டாக வீடியோக்களை தாங்கள் அளித்தால் மிக மிக வசதியாக இருக்கும். பிராட்பேண்ட் வைத்துள்ள எனக்கே இந்த நிலைமை. ஒரு தலைப்பு எடுத்தால் ஒன்றிரண்டு பாடல்கள் என்று இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடரலாமே. எதுவும் அவசரமில்லையே. சுத்தமாக பேஜ் நகர மறுக்கிறது. ஸ்குரோல் கூட செய்ய முடியவில்லை. ரெண்டாவது பேஜ் வீடியோவாக நிரம்பி வழிய வேண்டாமே! மதுர கானங்களை மகிழ்ச்சியான விஷயங்களுடன் வீடியோ கொடுத்து பகிர்ந்து கொள்வோமே! யூ டியூப் கணக்காய் ஆகி விட்டால் போரடித்து விடும். பார்வையாளர்களும் யூ டியூபுக்கே போய் விடும் வாய்ப்பும் உண்டு. ஆகையால் பக்கத்திற்கு ஒன்றிரண்டு வீடியோக்கள் வழங்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ப்ளீஸ்! தவறிருந்தால் மன்னிக்க.

rajraj
12th August 2015, 07:12 AM
வாத்தியாரையா ! அந்த பாடல் காட்சியை நல்லா பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க.. அது அக் மார்க் பரதம் இல்லாட்டியும் அட்லீஸ்ட் திரு நீலகண்டர் படத்தில் ஜோதிலக்ஷ்மி ஆடிய அங்கமாலை போலவாவது இருந்திருக்கலாம்.... மல்லிகா ஷெராவத் கிட்டே சொன்னா ஒருவேளை ரசிப்பாங்க..

madhu: We met Sarabhais(mother and daughter) when they were here to give a performance at the university. She gave me a book she authored with her autograph and also a book on Bharatha Natyam. That book has nothing about 'thaiya thakkaa bharatham. ! :) Besides, I never heard of Mallika Sherawat being associated with bharatha natyam. Must be a 'thaiya thakkaa' dancer. :lol: May be , she is keeping up with the trend ! :)

eehaiupehazij
12th August 2015, 08:08 AM
Dear Vasu Sir
I follow your suggestions. I too feel for it since out of some interest of making our readers to enjoy and feel the contents I did so. For practicality I restrict or just indicate the url. thank you sir. senthil

vasudevan31355
12th August 2015, 08:17 AM
Thanks Senthil sir.

madhu
12th August 2015, 08:17 AM
madhu: We met Sarabhais(mother and daughter) when they were here to give a performance at the university. She gave me a book she authored with her autograph and also a book on Bharatha Natyam. That book has nothing about 'thaiya thakkaa bharatham. ! :) Besides, I never heard of Mallika Sherawat being associated with bharatha natyam. Must be a 'thaiya thakkaa' dancer. :lol: May be , she is keeping up with the trend ! :)

vathiyarayya..

yes.. I hv seen kuchipudi of Mallika sarabhai. avanga ellam nijamave classical dance aaduravaga.. Mallika sherawat kooda ellam compare senja saami kaNNai kuthidum...

BTW... whats in that book ? Dance pathi niraiya vishayangal irukka ?

Russellrqe
12th August 2015, 08:49 AM
RARE ADVTS
http://i62.tinypic.com/ivxw1l.jpg

Russellrqe
12th August 2015, 08:50 AM
http://i58.tinypic.com/2i92u86.jpg

Russellrqe
12th August 2015, 08:51 AM
http://i58.tinypic.com/2cna6f6.jpg

Russellrqe
12th August 2015, 08:52 AM
http://i60.tinypic.com/11j3lox.jpg

Russellrqe
12th August 2015, 08:53 AM
http://i59.tinypic.com/2w3ouqd.jpg

Russellrqe
12th August 2015, 08:55 AM
http://i60.tinypic.com/55q8fn.jpg

rajraj
12th August 2015, 08:59 AM
BTW... whats in that book ? Dance pathi niraiya vishayangal irukka ?

Yes! The title is "Understanding Bharatha Natyam". It has the history of Bharatha Natyam and dance movements (adavu). It is a good book worth reading, if you can get it in local stores. Carnatic music stores should have it. She also gave me the book "This alone is the truth", ssomewhat autobiographical.
I also have the book Bharata's Natya Sastra. Surprisingly it does not have much about Bharatha Natyam except mentioning that dance forms south of the Vindhyas have very intricate movements ! :)

vasudevan31355
12th August 2015, 09:54 AM
மது அண்ணா!

'ஆடுகின்ற கைகளை' தேடிக் கொணர்ந்த தங்களுக்கு நன்றிகள் ஆயிரம்.

chinnakkannan
12th August 2015, 10:12 AM
ஹாய் குட் மார்னிங் ஆல்


//Mallika sherawat kooda ellam compare senja saami kaNNai kuthidum...// மதுண்ணா.. :) காலங்கார்த்தால சிரிக்க வச்சுட்டீஙக்..ஹப்புறம் இந்த ஆயிரம் கைகளுக்கும் நன்றி..

சி.செ, வாசு, காஞ்ச் பாடல்களுக்கு நன்றி.. ரவி(யா) ஜெய்(யா) தெரியவில்லை ஒருவருடன் ஜோடி சேர்ந்து அவர் பாடும் பாட் கேட்டால் நான் தருவேன் என்பது போல வரும்.. நானே போஸ்ட் பண்ணியதாய் நினைவு.. மறுபடி தேடிப் பார்க்கவேண்டும்

பழைய குறள் தான்

தீஞ்சுவை கொண்டிருக்கும் தேனைப்போல் தித்திக்கும்
காஞ்சனையைக் கண்டுவந்தார் கண்..

வரட்டா:)

RAGHAVENDRA
12th August 2015, 11:45 AM
முகநூலில் ஒரு பதிவு...இதைப் பார்த்ததும் படித்ததும் சி.க. சாரின் நினைவு தான் உடனே வந்தது.



https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11863364_812731225509028_3851371214832339866_n.jpg ?oh=c6c4f916a61c840819849fb8a4acfab7&oe=564D7A21

இப்படி இருந்தால்.....எப்படி இருக்கும்....?

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..
(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)



மேற்காணும் பதிவிற்கான இணைப்பு-

https://www.facebook.com/sindinga.news/photos/a.597664997015653.1073741827.597653737016779/812731225509028/?type=1

இதில் உள்ள ஜீவன் நிச்சயம் பார்ப்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்த பாடல்...

https://www.youtube.com/watch?v=4YCm11DX3wg

chinnakkannan
12th August 2015, 12:02 PM
ராகவேந்திரா சார்.. மிக அழகான பதிவு..பொருத்தமான பாடல்.. எனை நினைவு கொண்டமைக்கு நன்றி..


பொற்கொடியே பூம்பாவாய் பொன்வண்டே பூங்கொடியே
அற்புதமாய்ச் சொன்னாயே ஆரணங்கே - சொற்பதத்தில்
சொக்கியே சொல்லிடுவேன் சுந்தரியே நீயில்லா
சொர்க்கம் நரக மெனக்கு..

வேந்தரென உமைச்சொன்னார் விந்தையிலை
ஏந்தி ரசித்தேதான் இட்டீரே -பூந்தமிழில்
நண்ப ருமைப்பெறவே நானென் தவம்செய்தேன்
என்றே அறிந்திலே னே..

vasudevan31355
12th August 2015, 12:09 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

25

பாலாவின் தொடரில் 25 ஆவது சிறப்புப் பாடல்

http://i59.tinypic.com/awmfo.jpg

''அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன்''

'கண்காட்சி'

தமிழ் கொஞ்சும் தன்னிகிரில்லாப் பாடல்.

தரணி மீதிலே தமிழ் பரப்பும் பாடல்.

ரதி மன்மதன் பாடும் ரகசியங்களின் பாடல்.

குரல் மன்மதனின் குளிர்க் குரலால் குற்றால சுகம் தரும் பாடல்.

ரதியும் நாணும் ராட்சஸியின் ரகளைத் தமிழ் கொஞ்சும் பாடல்.

http://s.saregama.com/image/c/m/a/a0/a1/3610156159209-kankatchi-tamil_1421675807.jpg

1971-ல் வெளிவந்த 'ஸ்ரீ விஜயராணி பிக்சர்ஸ்' 'கண்காட்சி' திரைப்படத்தில் கண் கொள்ளாக் காட்சியுடன் நம் கருத்தில் நிறைந்த பாடல்.

ஒரு கண்காட்சியில் (வட சென்னையில் நடந்த ஒரு கண்காட்சியிலும் எடுத்திருப்பார்கள்) நடக்கும் பல்வேறு சம்பவங்களின் கோர்வைகளும், தொகுப்புக்களும்தான் இப்படத்தின் கதை. கலை, இசை, நாட்டியம், நகைச்சுவை, கொள்ளைக் கூட்டம், வில்லத்தனம், போலீஸ் என்று பல்சுவைகளையும் சுவைபடச் சொல்லும் இந்தக் 'கண்காட்சி'யில் சிவக்குமார், 'குமாரி' பத்மினி, 'கள்ளபார்ட்' நடராஜன், ஏ.சகுந்தலா, சுருளி, மனோரமா, கோபாலகிருஷ்ணன் என்று பலரும் வண்ணக் கலவையாகக் கவருகின்றனர். தமிழுக்கும், தமிழிசைக்கும், தமிழ் நாட்டியத்திற்கும் பெருமை சேர்ப்பது ஒன்றே இயக்குனரின் நோக்கம் போலும். அதை அலுக்காமல் ஜனரஞ்சகத்தோடு தந்ததிலும் வெற்றியே.

தமிழ்ப் பாரம்பரியக் கலையை பறைசாற்றும் ஜோடியாக ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான ஜோடி (திருமலை தென்குமரி, ராஜராஜ சோழன், கண்காட்சி) சிவக்குமார், 'குமாரி' பத்மினி, மேலை நாட்டுக் கலைகளின் பெருமையை பீற்றும் விதமாக வில்லத்தனம் கலந்த 'கள்ளபார்ட்' நடராஜன், A.சகுந்தலா ஜோடி என்று இரு ஜோடிகளுக்கும் 'நீயா நானா' போட்டிகள். இடையில் சுருளி, மனோரமாவின் பல்வேறு கெட் -அப்கள். இறுதியில் இருவரும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிப் பூச்சுற்றலும் உண்டு 'புதிய பறவை' கிளைமாக்ஸ் போல.

'குன்னக்குடி'யின் இசையில் தமிழ்ப் பாரம்பரியம் பேசும் பாடல்கள்.

'குறவர் குலம் காக்கும் குமரா நீ வாழ்க!'

'அனங்கன் அங்கஜன்'...

'காடை பிடிப்போம்... கௌதாரி பிடிப்போம்'....

'துள்ளும் மங்கை முகம்' (தொடரில் அடுத்தது)

http://s2.dmcdn.net/Ci6Xe/x240-S-w.jpg

'சின்ன சின்னக் கண்ணா வா'.... (புல்லாங்குழலின் ஓசை கேட்டு)

'காணும் கலையெல்லாம் கண்காட்சி' (வித வித டியூன்களில் கலக்குவார் எம்.ஆர்.விஜயா.)

என்று அற்புதமான பாடல்கள்.

சீர்காழி, பாலா, ஈஸ்வரி, சரளா, பி.ராதா, பி.பி.ஸ்ரீனிவாஸ், எம்.ஆர்.விஜயா, பொன்னுச்சாமி, மனோரமா என்று ஏகப்பட்டபேர் பாடியிருப்பார்கள்.

வண்ண ஒளிப்பதிவு டபள்யூ.ஆர்.சுப்பாராவ். ஒரே வார்த்தை. அமர்க்களம். கதை, வசனம், இயக்கம் 'அருட்செல்வர்' ஏ.பி.நாகராஜன்.

கலர்ஃபுல்லான செட்டிங்குகள் கண்களைக் கவருவது உண்மை.

இப்போது தொடரின் பாடலுக்கு வருவோம்.

கண்காட்சியில் ரதி மன்மதன் ஆட்டம். சிவக்குமார் மன்மதனாகவும், குமாரி பத்மினி ரதியாகவும் மிகப் பொருத்தம். இவர்களுக்குக் குரல் பாலா, ஈஸ்வரி.

பாடலின் முன்னால் போட்டி நடனம். 'கள்ளபார்ட்',சகுந்தலா உடம்பில் எலக்ட்ரிக் சீரியல் செட் பல்புகளைக் கட்டிக் கொண்டு 'தகதக' வென உடல் ஜொலிக்க, கிடாரின் 'கிடுகிடு' ஓசைக்கு 'கடகட'வென ஆடுவார்கள். அப்போது அது ரொம்பப் புதுமை.

மோர்சிங் இதமாய் ஒலிக்க, அத்துடன் மேள ஒலி சேர்த்துக் கொட்டி முழங்க, 'அருட்செல்வர்' ஏ.பி.நாகராஜன் அவர்களின் மென்மையான குரலில், தெளிவாக, அழகான, தூய தமிழ் முன்னுரையுடன் பாடல் தொடங்குவது அம்சம். தமிழ் நம் காதில் அமுதமாய்ப் பாய்கிறது.

'வெண்ணிலவைக் குடை பிடித்து
வீசு தென்றல் தேர் ஏறி
மென்குயில்தான் இசை முழங்க
மீன் வரைந்த கொடி அசைய
கண்கவரும் பேரழகி
கனகமணிப் பொற்பாவை
அன்னநடை ரதியுடனே
அழகுமகன் வில்லேந்தி
தண்முல்லை தாமரை மா
தனிநீலம் அசோகமெனும்
வண்ணமலர்க் கணை தொடுத்தான்
வையமெல்லாம் வாழ்கவென்றே!'

இயக்குனரின் உரை முடிந்து இப்போது பாடல் துவங்கும்.

ஈஸ்வரியின் 'கணீர்'க் குரலில் 'படபட' வென பொரிந்து தள்ளியது போல் வார்த்தைகள் விடாமல் வந்து விழும். மிக மிக அருமையான வரிகள். ராட்சஸிக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? சும்மா பொறி பறக்கிறது.

பாலா ஃபாலோ பண்ணுவார் மிக அருமையாக. தெளிவான தமிழ் உச்சரிப்பில். ஜோடி அருமையாக இருக்கும். மன்மதன் புகழை ரதி எப்படியெல்லாம் புகழ்கிறார்! மதனும் அப்படியே!

மன்மதன் இல்லையென்றால் வாடிடும் இவ்வையகம் என்ற பொருள்படும் வரிகள் மிகவும் சுவை

'வா'... எனும் போது பாலா பேஸ் குரலில் அதிர்வலைகள் கொடுப்பது ஜோர். பாலாவுக்கு சவால் பாடல்தான். ஆனால் வழக்கம் போல பூ... என்று ஊதி விடுவார்.

http://i59.tinypic.com/avsfq0.jpg

'குமாரி' பத்மினி பூக்கள் கொண்ட உடை தரித்து ரதியாக வெகு அழகு. இவரிடம் இன்னொரு சிறப்பு. உடலை மிகவும் ஸ்லிம்மாக வைத்திருப்பார். அதனாலேயே ரதி வேடமும் டாப். சிவக்குமாரும் கொள்ளை அழகு.

இந்தப் பாடலைக் கேட்கும் போது நம்மிடம் உற்சாகம் 'ஜம்'மென்று தொற்றிக் கொள்வதை கண்கூடாய் உணரலாம்.

http://i59.tinypic.com/2m429lx.jpg

அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா!
அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா!
மண்ணுயிர்க்கின்பம் வழங்கும் உன் புகழ் சொல்லவா?

கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின்பொங்கும்
கனிந்தோங்கும் கயற்கன்னியே!
கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின்பொங்கும்
கனிந்தோங்கும் கயற்கன்னியே!
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே!

ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும்
இன்பம் தேடலும் உன் செயலல்லவா!
ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும்
இன்பம் தேடலும் உன் செயலல்லவா!
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா!

அழகுதமிழே! பழகும் இசையே! அமுத நிலையே!
உனது செயலால் அந்தரங்கச் சிந்து பாடுவார்
அழகுதமிழே! பழகும் இசையே! அமுத நிலையே!
உனது செயலால் அந்தரங்கச் சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

மணம் கொஞ்சும் மலர் மஞ்சம் அடைந்துள்ளம்
குளிர்ந்தங்கம் கலந்தன்பின் நலம் காணுவோம்

குணம்கொள் பெண் அணங்கே! உன் மனம் கொண்டென் மனம்தந்தேன்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

கலந்தன்பின் நலம் காணுவோம்

இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

மன்னா வா..

கண்ணே வா...

நீ வா!

வா......

அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா!

பாடலைக் கேட்டு வரிகளை எழுதுவதற்குள் மண்டை காய்ந்தே விட்டது.

பாடலின் கிளியரான வீடியோவுக்கு கீழே சொடுக்குங்கள்.

http://www.dailymotion.com/video/x15ic5s_annangan-angajan-kankaatchi-1971_shortfilms

chinnakkannan
12th August 2015, 01:36 PM
//குமாரி' பத்மினி பூக்கள் கொண்ட உடை தரித்து ரதியாக வெகு அழகு. .//. :)

மன்னவா கண்ணே வா வா வா ஆ ஆ... // இழையல் நன்றாக இருக்கும்..

இனி மற்றவர்களின் பாராட்டு வரிகளில் இரண்டாவதாக....:)

ஜி. நலமா..இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.

eehaiupehazij
12th August 2015, 02:02 PM
தமிழ்த் திரையுலகின் பொன்னான தருணங்கள் : தங்கத் தடவல் மிடாஸ்கள் (மைதாஸ்கள்)!! / Midas Touch (with Goldfingers)!!

தங்கவிரல் 1 / Goldfinger 1 : T.R. Mahalingam / டி ஆர் மகாலிங்கம்


தமிழ்த் திரையுலகின் ஆரம்பகட்ட சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதரும் பி யு சின்னப்பாவும் தங்க முட்டையிடும் மந்திரவித்தை மங்கத் தொடங்கும் போது அவர்களைப் போலவே பாடல் திறமையும் அவர்களை விடவே கூடுதல் நடிப்புத் திறமையும் கொண்ட ஒரு சாயலில் ஜெமினிக்கே முன்னோடியாக அதிரடி நுழைவினைத் தந்தவர் டி ஆர் மகாலிங்கம் அவர்கள் ! சாகாவரம் பெற்ற பல பாடல்களை தனது பிரத்தியேகக் குரல்குழைவில் தந்ததோடு சமூகப் படங்களிலும் நிறைவான நடிப்பை அந்தக் காலகட்ட வரை முறைகளுக்குள் குறைவின்றி நல்கி ரசிகர்களைப் பெற்றவர்! தொட்டதெல்லாம் பொன்னாக்கிய மைதாஸாக ஒரு குறிப்பிட்ட கால வட்டத்துக்குள் தங்கவிரலாளராக வாழ்வாங்கு வாழ்ந்தவரின் நினைவலை மதுர கான வரிசை !!

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்னும் கூற்றை மெய்யாக்கிய பாடக நடிக சிரோமணி கந்தர்வ கான எழிலரசர் மகாலிங்கம் அவர்கள் !!
பெயரைக் கேட்கும்போதே அதிரும் வண்ணம் நமது மனதுக்குள் சிம்மாசனமிடும் பாடல் காட்சி மாலையிட்ட மங்கை (1958) யில்'செந்தமிழ்த் தேன்மொழியாள்...நிலாவென சிரிக்கும்...' பாடல் காட்சியமைப்பில் அவரது குழைவுக் குரலும் பண்டரிபாய் அவர்களின் சகோதரி மைனாவதியின் நடன அசைவுகளுமே!

https://www.youtube.com/watch?v=eO3gRFz11yY


இந்த சாகாவரம் பெற்ற பாடலைப் போலவே சிரஞ்சீவித்துவம் கொண்ட ஏராளமான பாடல்களை அவர் வாரி வழங்கியிருந்தாலும் ......
இரண்டாவதாக நமது நினைவில் நிலைத்து நின்று நமது மனதை அள்ளிக் கொண்டு செல்லும் மதுர கானம் திருவிளையாடலில் நடிகர்திலகத்தின் இணைவில் சிவபெருமானை
நினைந்து உளம்கசிந்து பாடிய தேன்மதுர கானமான 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' பாடலே !

https://www.youtube.com/watch?v=HdhAu6fbeIA

ஏனைய புகழ்பெற்ற பாடல் காணொளிகளின் யூ டியூப் லிங்க்ஸ் :

மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே .....ஆட வந்த தெய்வம் சமூகப்படத்தில்!

https://i.ytimg.com/vi/7unLk8rkpuk/mqdefault.jpg

ராஜராஜ சோழருடன் தென்றலோடு உடன்பிறந்த செந்தமிழ் பெண் பற்றி..!

https://i.ytimg.com/vi/RZmazN1bPgQ/mqdefault.jpg

chinnakkannan
12th August 2015, 03:12 PM
டி.ஆர். எம்மின் நினைவுக்கு வந்த பாடல்கள்

நமசிவாயமெனச் சொல்வோமே அகத்தியர்
ஆடைகட்டி வந்த நிலவோ - அமுத்வல்லி

அந்தக் குரலே ஒரு வித்யாசமான கணீர்க் குரல்..ம்ம்

chinnakkannan
12th August 2015, 04:40 PM
யாருமே வரலையே.

என்ன பண்ணலாம்..

அபிராமியை வேண்டிக்கலாம்! (யார்ப்பா எந்த அபிராமின்னுகேக்கறது!) :)

*

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ*ளமையும்
கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


*

ம்ம் இந்தப் பாட்டை வீட்டுக்குப் போய்த் தான் கேக்கணும்..!

*

https://youtu.be/A2Zr9gVpYX4


எழுதியவர் அபிராமி பட்டர்
பாடியவர் சீர்காழி கோவிந்த ராஜன்
படம் திருமலை தென் குமரி..
பாடலை கட் அண்ட் பேஸ்டியவர்.. சி.க :)

Russellzlc
12th August 2015, 06:00 PM
சின்னக்கண்ணன்,
ஒரு நியாய, தர்மம் வேண்டாமா? இப்படியெல்லாமா பதிவுகள் போடுவது? ‘திருமகள் தேடி வந்தாள்...’ பதிவைத்தான் சொல்கிறேன். அந்த பாடலுக்குள் இப்படிப்பட்ட அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.
அதிலும் திருமலை திருப்பதி பால் பழங்கள்.. வரிகளுக்கு உங்களின் விளக்கம். தாங்க முடியல சாமி. கண்ணில் நீர்முட்ட சிரித்து வயிற்றுவலி வந்தால் அதற்கு என்ன மருத்துவம் என்பதையும் இதைப் போன்ற பதிவுகளில் குறிப்பிட்டு விடவும். நன்றி.

திரு.சிவாஜி செந்தில்,
தங்களின் கலர் கலரான கற்பனையும் அதை நீங்கள் விவரிக்கும் பாங்கும் அருமை. பாராட்டுக்கள். நன்றி.

திரு. ரவி சார்,
திருக்குறளும் திரை இசையும்... நல்ல கான்செப்ட். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? அன்பும், நகைச்சுவையும் குழைத்த உருவமான (அவதாரை பார்த்து சொல்கிறேன்) சின்னக் கண்ணன், நீங்கள் பயப்படுவது போல உங்களை திட்டமாட்டார்.
ஒவ்வொரு குறளையும் ஒன்றே முக்கால் அடி எழுதிய வள்ளுவப் பெருந்தகையால் இன்னும் காலடி எழுதியிருக்க முடியாதா என்ன? மனித சமுதாயம் மேம்பட உதவும் அறிவுப் பெட்டகமாம் திருக்குறளை நோக்கி நாம் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர் காலடியை விட்டு வைத்துள்ளார். வாசு சார் கூறியிருப்பது போல உங்கள் பதிவுகளை படிக்க பெரிய கூட்டமே உண்டு. அதில் (லேட்டாக படித்தாலும்) நானும் ஒருவன்.

அருமையான பூ பாடல்களை போட்ட நண்பர் எங்கே? என்னை சந்திரமண்டலத்துக்கு அனுப்புவதாக சொல்லி, அவர் போயிருக்கிறாரா? விரைவில் திரும்புவார் என்று நினைக்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th August 2015, 06:01 PM
‘ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா...’


வாசு சார்,

உங்கள் எத்தனையோ பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குள் தீவிர பாதிப்பை ஏற்படுத்திய உங்கள் பதிவு.. ‘பூ முடிப்பாள் பூங்குழலி’ கலங்க வைத்து விட்டது. தங்களின் தாயார் நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் ஆண்டு பல நீண்டு வாழ இறைஞ்சுகிறேன்.

தங்கள் நிறுவனத்தில் பிரச்சினை தீவிரமடைந்து வருவது வருத்தமளிக்கிறது. திமுகவின் தொழிற்சங்க அமைப்பின் தலைவர் நீக்கப்பட்டதை கண்டித்து நேற்று இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்களாம். காலையில் நாளிதழ்களில் பார்த்தேன். தீவிரமடைந்தால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும். விரைவில் சுமூக தீர்வு ஏற்பட்டு ஊருக்கு ஒளி கொடுக்கும் தொழிலாளர் வாழ்வு ஒளி பெற வாழ்த்துக்கள்.
------------
ஏற்றத் தாழ்வும் எளியோரை வலியோர் ஏமாற்றி சுரண்டும் சமூக அமைப்பும்தான் இந்தக் கொடுமைகளுக்கு காரணம். இப்படி சொன்னால் பணக்காரர்களுக்கு எதிராக பேசுவதாக கூறுவார்கள். நாடோடி மன்னன் படத்தில் மக்கள் திலகம் கூறுவது போல ‘பணக்காரர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கையல்ல, ஏழைகள் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை’. இதை ஊருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்த இனிமையான பாடல்.... வண்ணக்கிளி படத்தில் மதுரக் கவிஞர் மருதகாசியின் வரிகளில்....

‘ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
இதை எல்லார்க்கும் நீ எடுத்து சொல்லம்மா..’

திரை இசைத் திலகத்தின் கிராமிய இசையில், இசைப் பேரறிஞரின் வெண்கலக் குரலில் திரு.பிரேம் நசீர் அவர்களின் நடிப்பில் சிறந்த பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் மிகச் சரியாக வாயசைப்பார் திரு.நசீர்.

‘நன்னானே நானே நானே நானேனன்னானே....’ கோரஸ் பாடலை மட்டுமல்ல, நம்மையும் தூக்கிச் செல்லும்.

ஊருக்கு சோறுபோடும் விவசாயி பட்டினி.
எல்லாருக்கும் ஒளி கொடுக்கும் தொழிலாளி வாழ்வில் இருள்.
மக்களின் மானம் காக்கும் நெசவாளி கட்டிக் கொள்ள நல்ல துணி இல்லை.

இதை விளக்கும் ஆழ்ந்து சிந்திக்க தூண்டும் வரிகள்..

‘பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா
இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா..’

அற்புதமான பாடல்.

இதில் இன்னொன்று, இப்போதைய சூழலை விளக்குவது போல...

மது விலக்கு கொள்கையை பாமக தலைவர் திரு. ராமதாஸ் அவர்கள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறார். ஆனால், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீரென மதுவிலக்குக்கு ஆதரவு தெரிவித்ததும் நிலைமையே மாறி விட்டது. மதுவிலக்குக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் குரல்கள். (எல்லாருமே மதுவிலக்கை ஆதரிக்கும்போது இத்தனை நாட்களாக குடித்தது யாரென்று தெரியவில்லை.) சமீபத்தில் இறந்த திரு.சசி பெருமாள் அவர்கள் கூட கலைஞர் கருணாநிதியின் வீடு தேடிச் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், திரு. ராமதாசுக்கு அவர் நன்றி தெரிவித்ததில்லை. தனக்கே உரிய ராஜதந்திரத்தால் பெயரை தட்டிக் கொண்டு சென்று விட்டார் திரு.கருணாநிதி. அதனால் இந்த விவகாரத்தில் திரு. கருணாநிதி அவர்களை கடுமையாக சாடுகிறார் திரு.ராமதாஸ்.

இதைத்தான்......

ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன்பிடிக்க
காத்திருந்த கொக்கு அதை கவ்விக் கொண்டு
போவதும் ஏன் கண்ணம்மா?
அதைப் பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா?...

.........என்பதோ?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
12th August 2015, 06:20 PM
கலைவேந்தன் சார்,

நன்றி! அருமை! இதோ நீங்கள் தகுந்த விளக்கத்துடன் எமக்களித்த வளமான பாடல். பார்த்துக் கொண்டிருங்கள். பின்னால் வருகிறேன்.


https://youtu.be/uECIcf22zXk

eehaiupehazij
12th August 2015, 09:46 PM
நீந்தி மகிழ நீர் நிறைந்த நீச்சல் குளமிருக்கு ! மங்கையர் மனம் மகிழ தேன் நிறைந்த மதுர கான கடலிருக்கு!!
ஆனால் ஸ்ரீதர் ஏன் ஒரு காலத்தில் நீச்சல் குளத்தில் மீனாட்டம் போட்ட காதல் மன்னரை களமிறக்காமல் கரையிலேயே களைப்பாற விட்டுவிட்டார் ?!

இளமை கொலுவிருந்த போது தண்ணீருக்குள் என்ன ஆட்டம் ?!
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM

இளமை ஊஞ்சலாடி ஓய்ந்தவுடன் தண்ணீரில் இறங்க பயமா !

https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ

தண்ணீர் சுடுவதென்ன ....விஞ்ஞான ஆய்வில் ஓய்வெடுக்கும் காதல் மன்னரை உசுப்பேத்தும் பேரொளி....

https://i.ytimg.com/vi/EPWTU1WuC10/mqdefault.jpg

rajraj
13th August 2015, 01:27 AM
I found the song when searching for another song. 'madhi' was missing in the title quoted.

From Jathakam (1953)

madhi kulavum yazhisaiye..

http://www.youtube.com/watch?v=xG0mbYOUqao

Original tune from Awara(1953) (already posted)

Dam bhar jo udhar munh phere.....

http://www.youtube.com/watch?v=H1ivT6fDFME

RAGHAVENDRA
13th August 2015, 06:18 AM
ராஜ் ராஜ் சார்
அருமையான இனிமையான தமிழ் வடிவ ஜாதகம் பாடலுக்கு நன்றி.
கோவர்த்தன் இசையமைத்த முதல் படமல்லவா...

RAGHAVENDRA
13th August 2015, 07:41 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/INVITERbfw_zpsg8cuhcbc.jpg

eehaiupehazij
13th August 2015, 01:28 PM
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!


உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லோருமே இறைவனால் இயக்கப்படுகிற நடிகர்களே ! நடிப்புக்குள் நடிப்பாக எத்தனை முக மூடிகளை நாம் போட வேண்டியிருக்கிறது !

இயல்பாகவே இயல்பாகவே மாறுவேடம் தரிக்கும் ஆசை நமது மனதின் ஒரு மூலையில் படுத்து உறங்கிக் கொண்டுதானிருக்கிறது! சந்தர்ப்பங்கள் சரிவர அமைவதில்லை ..அவ்வளவே! சந்தர்ப்பம் கிடைத்தால் யோக்கியனும் ஒரு நூலிழையில் அயோக்கியனாக மாறும் சாத்தியக்கூறுகள் அதிகமே!

ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது அக்கதாபாத்திரமே ஒரு மாறு வேடமிட்டு பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற
வேண்டிய சூழலில் திரைக்கதை வடிவமைக்கப் படும்போது திறமை வாய்ந்த கலைஞனால் மட்டுமே மாறுவேட குணாதிசயத்தையும் உயிர்ப்பித்து
ரசிகர்களைக் கட்டிப் போட இயலும்!

கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 1: ஆணும் பெண்ணும் அழகு செய்வது .....ஆடை / தூக்குதூக்கி

தூக்கு தூக்கியில் கொலையும் செய்வாள் பத்தினி கான்செப்டில் துரோகமிழைக்கும் மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்திட நடிகர் திலகம் போடும் ஆடை ஏல விற்பனையாளர் மீசை தாடி ஒட்டப்பும் ஆடல் பாடலுக்கான உடையலங்கார கெட்டப்பும் காட்சியமைப்பின் விறுவிறு செட்டப்பும் சூப்பரோ சூப்பர் !

கருத்துப் பொதிந்த பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து நடிகர் திலகத்தின் குரலாகவே TMS மாறியது வரலாறே!

https://www.youtube.com/watch?v=1S3JZU2tW7E

eehaiupehazij
13th August 2015, 02:02 PM
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

கான்செப்ட் நோக்கம் : ஜெகதலபிரதாபனாக கஜகர்ணம் அடித்தாவது காதலியின் உள்ளம் கவர்வதே!

கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 2 : வா க(சல்)லாப மயிலே ...ஆரியமாலா ஆரியமாலா / / காத்தவராயன்

இளமைக் குறும்பு மிளிரும் ஒரு துடிப்பான வாலிபனால் வயோதிக வேடம் தரித்து தள்ளாமையுடன் கூடிய சல்லாப வேட்கையை வெளிப்படுத்த முடியுமா ?

எப்படிப்பட்ட உருவ மாற்றம் ?! என்னவொரு வெண்தாடி வேந்தர் ஒட்டப்! இசைத்தள்ளாட்ட கெட்டப்! நாயகியை கவிழ்க்கும் செட்டப்!

https://www.youtube.com/watch?v=_83NmCpMuEc

இதே கான்செப்டை என் டி ராமாரவ்காரும் பலே தம்முடு படத்தில் தெலுங்கில் மாட்லாடி இதே (ஆனால் கறுப்பு மீசைதாடி) ஒட்டப் செட்டப் கெட்டப்பை விஜயாவைக் கவிழ்க்க ரயில் பயணத்தில் சுவை சேர்க்கிறார் !

https://www.youtube.com/watch?v=Hygj0EOwhsc

vasudevan31355
13th August 2015, 03:03 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

26

'துள்ளும் மங்கை முகம்'

'கண்காட்சி'

நேற்று நாம் பார்த்த அதே 'கண்காட்சி' படத்திலிருந்து பாலாவின் இன்னொரு பாடல். அதே இனிமை. அதே அற்புதம். இதுவும் ஈஸ்வரியுடன் சேர்ந்து.

'கள்ளபார்ட்' நடராஜனும், சகுந்தலாவும் ஆடிப் பாடும் வண்ணமயமான நடனம்.

http://i57.tinypic.com/2u4opol.jpg

பாடல் துவங்குமுன் வரும் அந்த 'ஹோ ஹோ ஹோ' ஹம்மிங் கோரஸும், காட்சியில் ஸ்டேஜின் பின்னணியில் தெரியும் நிழலுருவ ஜோடி பிடித்திருக்கும் ஒலிம்பிக் ஜோதி போன்ற ஜோதியும், வானில் தெரியும் நிலா ஜோதியும், ரயில் பெட்டி போல வளைய வரும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, கட்டட நிழற்படமும் இன்றும் பார்க்க புதுமையாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது.

இந்த புதுமையான செட்டிங்கிற்கு முன் 'குன்னக்குடி'யின் அருமையான ஃபாஸ்ட் பீட்டுக்குத் தக்கபடி 'கள்ளபார்ட்' நடராஜனும், சகுந்தலாவும் ராஜ உடையில் ஆடிப் பாடுவது சூப்பர்.

http://i57.tinypic.com/nnrtad.jpg

'கள்ளபார்ட்'டும் பழைய படங்களில் கோஷ்டி நடனங்களில் ஆடி, பின் தனி நடனங்களும் ஆடியவர். அவருக்கு எல்லா நடனங்களும் அத்துப்படி. அதே போல 'சி.ஐ.டி'சகுந்தலா அப்போதைய காலத்திலிருந்தே ஆடி கொண்டு வருபவர்.

அதனால் சினிமா நாட்டியங்களில் பெருத்த அனுபவம் பெற்ற இந்த கலைஞர்களை ஜோடியாய் போட்டு, அட்டகாசமான இந்தப் பாட்டிற்கு பொருத்தமாக ஆட வைத்திருப்பார் அருட்செல்வர். 'குன்னக்குடி'யும் ரோமானிய பின்னணி இசை கொடுத்து அமர்க்களப்படுத்துவார். தபேலா இப்பாடலின் பின்னணியில் விளையாடும்.

பாலாவும், ஈஸ்வரியும் மிக அருமையாக பாடியிருப்பார்கள். பாலா மறுபடியும் பழைய இளங்குரலைக் கொண்டு வந்திருப்பார். 'உல்லாச சொர்க்க மேடையில்' என்பதை மிக அழுத்தமாக பேஸ் குரலில் எடுத்து இழுப்பார் பாலா அவருக்கே உரித்தான அந்த தனி நடையில்.

http://i57.tinypic.com/oa9cf6.jpg

பாடல் பாதிக்குப் பின்பு அப்படியே மேற்கத்திய பாணி இசைக்குத் தாவும். அதற்குத் தக்கபடி நாட்டியமும். சீமான் போல கோட் சூட்டில் நடராஜனும், டைட்டான சுடிதாரில் சகுந்தலாவும் ஆடுவார்கள். ஸ்டேஜின் பின்னணி ஸ்க்ரீனும் மாறி இருக்கும். கிடாரின் பங்கு அதிகம்.

இந்தப் படத்தின் வண்ணத்தைப் பார்க்கும் போது மனம் நம்மையறியாமல் உற்சாகம் கொள்கிறது.

அழகான இரு வேறுபட்ட வித்தியாச டியூன்களில், பாலா ஈஸ்வரியின் கலக்கல் குரல்களில் அழகான வண்ணக் குழைவில், இரு திறமையான நடன கலைஞர்களின் நல்ல நடன அசைவில் இப்பாடல் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது.

அபூர்வமான, அடிக்கடி பார்க்க முடியாத, கேட்க முடியாத பாடலும் கூட.

http://i62.tinypic.com/28a3y9.jpg

துள்ளும் மங்கை முகம்
அள்ளித் தந்த சுகம்
சொல்லச் சொல்ல தினம்
மெல்ல மெல்ல மனம்
நினைத்தாலே இன்பம் பொங்குமே!
நிலையான காதல் வெல்லுமே!
என்றும் நிலையான காதல் வெல்லுமே!

வண்ணப் பெண்ணின் உடை
அன்னம் போலே நடை
மின்னல் மின்னும் இடை
இன்னும் என்ன தடை?
பொன்னான நேரம் அல்லவா!
புதுப்பாடம் நான் சொல்லவா!
இன்று புதுப்பாடம் நான் சொல்லவா!

கன்னங்கள் தங்கக் கிண்ணமே!
என் மன்னவா! எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே!
கன்னங்கள் தங்கக் கிண்ணமே!
என் மன்னவா! எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே!

சித்திரக் கிண்ணமே!
தித்திக்கும் சொந்தமே!
சித்திரக் கிண்ணமே!
தித்திக்கும் சொந்தமே!

தேனூறும் மலராக உறவாடுவோம்
தேனூறும் மலராக உறவாடுவோம்

துள்ளும் மங்கை முகம்
அள்ளித் தந்த சுகம்
சொல்லச் சொல்ல தினம்
மெல்ல மெல்ல மனம்

நினைத்தாலே இன்பம் பொங்குமே!
நிலையான காதல் வெல்லுமே!
என்றும் நிலையான காதல் வெல்லுமே!

http://www.dailymotion.com/video/x15ic4q_thullum-magai-mugam-kankaatchi-1971_shortfilms


http://www.dailymotion.com/video/x15ic4q_thullum-magai-mugam-kankaatchi-1971_shortfilms

http://i59.tinypic.com/212hglk.jpg

ஒய்யாரத் தென்றல் வீசுதே!

கண்ணோடு கண்கள் பேசுதே!

உல்லாச சொர்க்க மேடையில்

சல்லாபமாக ஆடுவோம்

சொல்லாத கதைகள் சொல்லவா?

இல்லாத கவிதை பாடவா?

சொல்லாத கதைகள் சொல்லவா?

இல்லாத கவிதை பாடவா?

இன்பமான வேலை

எவரும் இங்கு இல்லை

ஏகபோகமாக நாமும் யோகமோடு
நாளும் வாழுவோம்

ஒய்யாரத் தென்றல் வீசுதே!

கண்ணோடு கண்கள் பேசுதே!

உல்லாச சொர்க்க மேடையில்

சல்லாபமாக ஆடுவோம்

http://www.dailymotion.com/video/x15ic6d_oyayara-thendral-kankaatchi-1971_shortfilms


http://www.dailymotion.com/video/x15ic6d_oyayara-thendral-kankaatchi-1971_shortfilms

eehaiupehazij
13th August 2015, 05:51 PM
மாற்றார் தோட்ட மதுர கானங்கள் 32 / பிரான்க் சினாட்ரா
Hollywood Musicals : Frank Sinatra Songs and Dances


பிரான்க் சினாட்ரா ஹால்லிவுட் திரையிசை வரலாற்றில் மைல்கல்லான பன்முகக் கலைஞர்.
ஆடல் பாடல் நடிப்பு சகலகலாவல்லவர். மகள் நான்சி சினாடராவும் புகழ் பெற்ற பாடகி. நடனப் பிதாமகர் ஜீன் கெல்லியுடன் இணைந்து பல ஆடல் பாடல் படங்களிலும் நடித்திருக்கிறார்!
தனிக் கதாநாயகராக அவர் நடித்த வான் ரயான் எக்ஸ்ப்ரஸ் ப்ரம் ஹியர் டு எடெர்னிடி மறக்க முடியாத காவியங்கள்.


Sizzling dance and song with Gene Kelly in Anchors Aweigh!

https://www.youtube.com/watch?v=R5TR38Pg6qA

Best of Frank Sinatra songs! You Tube link :

https://i.ytimg.com/vi_webp/LvpGj1vc9d0/mqdefault.webp

sss
13th August 2015, 06:03 PM
அன்புள்ள திரு வாசு சார்

அருமையான பாடல் ....கவிதை இசை...என ...அதகளம் புரியும் நீண்ட பாடல்... நன்றி

அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் பாடல் ஒலிப்பதிவின் முதல் நாள் திரு spb அவர்களை அழைத்து குன்னகுடியாரும் அருட்செல்வரும் பாடல் வரிகளை வீட்டுக்கு கொண்டு சென்று நன்றாக உச்சரித்து பார்த்து விடவும் என சொன்னதாகவும் ...

அதற்க்கு spb ,அது ஒன்றும் பிரச்னை இல்லை நான் தமிழில் பாடிவிடுவேன் என்று சொன்னதாகவும்

மீண்டும் அவர்கள் இல்லை ...இல்லை நீங்கள் வரிகளைப் பார்த்து படித்து சொல்லவும் என சொன்னதாகவும்

spb அவர்கள் வரிகளை முதலில் படித்து மிரண்டு .. வீட்டுக்கு போய் பயிற்சி செய்து பின்னர் வந்ததாகவும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் spb சொல்லக் கேட்டுள்ளேன்...

eehaiupehazij
13th August 2015, 06:30 PM
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

கெட்டப் கெட்டிக்காரர் 2 : மக்கள் திலகம் MGR

மாறுவேட மதுரம் 3: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

https://www.youtube.com/watch?v=67dezFe9hZE

eehaiupehazij
13th August 2015, 06:56 PM
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

கான்செப்ட் நோக்கம் : உறங்கிக் கிடக்கும் மனசாட்சியை உசுப்பி உண்மையை வெளிககொணரல்

கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 4 : அத்தனை பேரும் உத்தமர்தானா / சோன் பப்டி... / என் மகன்



என்மகன் திரைப்படம் ஒன்றுக்கொன்று ரத்த சம்பந்தமற்ற இரு வேறு குணாதிசயங்களை அனாயாசமாக நடிகர் திலகம் கையாண்ட திரைப்பாடம்!!

துடிப்பான இளைஞன் பாத்திரத்துக்கும் முதிர்ச்சியான ஏட்டு ராமையா பாத்திரத்திற்கும் மாறுவேடத்தில் கூட மாறுபட்ட நடிப்பை மறக்கவொன்னாவண்ணம்
தூள் பரத்தியிருப்பார் !

மாறுவேட மாயாஜாலம் ....சோன்பப்டி ஆடல் பாடல் அமர்க்களத்தினூடும்!

https://www.youtube.com/watch?v=KAY5ASnIgZg

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ...எக்காலத்திற்கும் ஏற்ற மனசாட்சியின் குரல் பதிவு!!

https://www.youtube.com/watch?v=22Fx6ekkdVY

eehaiupehazij
13th August 2015, 09:17 PM
இன்று ஆகஸ்ட் 13 ஆல்பிரட் ஹிட்ச்காக் என்னும் உலகத்திரை மேதை தனது தனிப்பட்ட அடையாளமான திக்திக் சஸ்பென்ஸ் திரில்லர்கள் மூலம் ரசிக நெஞ்சங்களின் லப்டப்பை ஏற்றி மெய்சிலிர்க்க வைத்தவரின் பிறந்த நாள்!
ஹிட்ச்காக்கின் தாக்கத்தில் தமிழில் முயற்சி செய்யப்பட்ட திரைப்படங்களில் முதன்மையானது நடிகர்திலகத்தின் புதிய பறவை...அடுத்த இடத்தில் ரவியின் அதே கண்கள் ...பிறகு மீண்டும் நடிகர்திலகத்தின் வெள்ளை ரோஜா.... காதல் மன்னரின் சாந்தி நிலையம் (பாப்பம்மா பகுதி இடைவேளைக்குப் பிறகே)!
ஹிட்ச்காக்கின் மறக்க முடியாத திகில் படங்களில் முதன்மையானது சைக்கோ !

பிரசித்தி பெற்ற காவியங்கள் கேரி கிராண்டின் நடிப்பில் நார்த் பை நார்த் வெஸ்ட் , ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடிப்பில் வெளியான வெர்டிகோ, ரியர் விண்டோ, தி மேன் ஹூ நியூ டூமச் , மற்றும் டயல் எம் பார் மர்டர்......எண்ணற்றவை!
அவரது படங்களில் கதாநாயகியரின் ஒப்பனை அற்புதமாக இருக்கும் !!

உலகையே மகிழ்வித்துப் பரவசப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்த மேதைக்கு நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுர கானங்கள் திரி சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்தல் சமர்ப்பிக்கிறேன்!

https://www.youtube.com/watch?v=fVoVdKOLP04

rajeshkrv
13th August 2015, 09:54 PM
இன்று ஆகஸ்ட் 13 ஆல்பிரட் ஹிட்ச்காக் என்னும் உலகத்திரை மேதை தனது தனிப்பட்ட அடையாளமான திக்திக் சஸ்பென்ஸ் திரில்லர்கள் மூலம் ரசிக நெஞ்சங்களின் லப்டப்பை ஏற்றி மெய்சிலிர்க்க வைத்தவரின் பிறந்த நாள்!
ஹிட்ச்காக்கின் தாக்கத்தில் தமிழில் முயற்சி செய்யப்பட்ட திரைப்படங்களில் முதன்மையானது நடிகர்திலகத்தின் புதிய பறவை...அடுத்த இடத்தில் ரவியின் அதே கண்கள் ...பிறகு மீண்டும் நடிகர்திலகத்தின் வெள்ளை ரோஜா.... காதல் மன்னரின் சாந்தி நிலையம் (பாப்பம்மா பகுதி இடைவேளைக்குப் பிறகே)!
ஹிட்ச்காக்கின் மறக்க முடியாத திகில் படங்களில் முதன்மையானது சைக்கோ !

பிரசித்தி பெற்ற காவியங்கள் கேரி கிராண்டின் நடிப்பில் நார்த் பை நார்த் வெஸ்ட் , ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடிப்பில் வெளியான வெர்டிகோ, ரியர் விண்டோ, தி மேன் ஹூ நியூ டூமச் , மற்றும் டயல் எம் பார் மர்டர்......எண்ணற்றவை!
அவரது படங்களில் கதாநாயகியரின் ஒப்பனை அற்புதமாக இருக்கும் !!


https://www.youtube.com/watch?v=fVoVdKOLP04

hitchkok was a genius. i like all his movies

vasudevan31355
14th August 2015, 06:58 AM
இதுவரை பாலாவின் பாடல்கள்.

1.'மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்' (பால் குடம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1223953#post1223953

2. 'ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா' (அடிமைப் பெண்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1224467#post1224467

3. 'இயற்கை என்னும் இளைய கன்னி' (சாந்தி நிலையம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1226259#post1226259

4. 'ஆரம்பம் யாரிடம்' (மிஸ்டர் சம்பத்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page35

5. 'கற்பனையோ கைவந்ததோ' (மாலதி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page62

6. 'சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்' (மாலதி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page69

7. 'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' (நவக்கிரகம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1230352#post1230352

8. 'நீராழி மண்டபத்தில்' (தலைவன்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page112

9.' நிலவே நீ சாட்சி' (நிலவே நீ சாட்சி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page112

10.'பொன்னென்றும் பூவென்றும்' (நிலவே நீ சாட்சி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1233121#post1233121

11.'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' (தேடி வந்த மாப்பிள்ளை)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1233667&posted=1#post1233667

12.'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்' (வீட்டுக்கு வீடு)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1234280#post1234280

13.'இறைவன் என்றொரு கவிஞன்' (ஏன்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1235169&posted=1#post1235169

14.'வருவாயா வேல்முருகா' (ஏன்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page160

15.'எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா?' (அருணோதயம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1236278#post1236278

16.'மங்கையரில் மகராணி' (அவளுக்கென்று ஓர் மனம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1236961#post1236961

17.'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு' (அவளுக்கென்று ஓர் மனம்)

http://www.mayyam.com/talk/showthread.php?7734-Gemini-Ganesan-Romance-King-of-Tamil-Films&p=1237573#post1237573

18.'என்ன சொல்ல! என்ன சொல்ல! (பாபு)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1238172#post1238172

19.'பௌர்ணமி நிலவில்' (கன்னிப் பெண்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page206

20.'முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு' (குழந்தை உள்ளம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page214

21.'ஆரம்பம் இன்றே ஆகட்டும்' (காவியத் தலைவி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1240513#post1240513

22.'கல்யாண ராமனுக்கும், கண்ணான ஜானகிக்கும்' (மாணவன்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1241755#post1241755

23.'அன்பைக் குறிப்பது 'அ'னா' (என்ன முதலாளி சௌக்கியமா?)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1242121#post1242121

24.'திருமகள் தேடி வந்தாள்' (இருளும் ஒளியும்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1243044#post1243044

25.'அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன்' (கண்காட்சி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page259

26.'துள்ளும் மங்கை முகம்' (கண்காட்சி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page260&

eehaiupehazij
14th August 2015, 08:05 AM
Dear Vasu Sir
It is really painful that your organization is still on the stalemate situations keeping you all in a quandary. We pray every moment for the environs resuming normality and to keep you all with a hassle free mind
senthil

madhu
14th August 2015, 09:27 AM
வாசு ஜி..

சுதந்திர தினத்துக்கு பிறகாவது சிறகை விரித்து பறந்து வருவீங்க என்று நம்பி உங்க எல்லோருக்காகவும் வேண்டுகிறேன்

vasudevan31355
14th August 2015, 09:51 AM
சிவாஜி செந்தில் சார்,

http://www.itdunya.com/attachments/377513d1357192751-terrynw.jpg

நாள் முழுதும் இடைவிடாது உழைத்து, வித்தியாசமான சிந்தனைகளுடன் 2000 பதிவுகளை அளித்து, சாதனை புரிந்ததற்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள். மேலும் மேலும் இது வளரட்டும்.


https://youtu.be/44Z2W8OpTa4

Russellrqe
14th August 2015, 09:53 AM
RARE ADVTS
http://i59.tinypic.com/o7lwsw.jpg

Russellrqe
14th August 2015, 09:54 AM
http://i58.tinypic.com/ea33gy.jpg

Russellrqe
14th August 2015, 09:57 AM
http://i59.tinypic.com/os66ae.jpg

Russellrqe
14th August 2015, 09:58 AM
http://i60.tinypic.com/2e393me.jpg

Russellrqe
14th August 2015, 10:02 AM
http://i59.tinypic.com/200shf5.jpg

Russellrqe
14th August 2015, 10:03 AM
http://i62.tinypic.com/nvw61j.jpg

Russellrqe
14th August 2015, 10:08 AM
http://i62.tinypic.com/2u63ak9.jpg

Russellrqe
14th August 2015, 10:09 AM
http://i57.tinypic.com/30sk578.jpg

vasudevan31355
14th August 2015, 10:21 AM
மது அண்ணா! செந்தில் சார், ராஜேஷ்ஜி, சின்னா! ராகவேந்திரன் சார், வினோத் சார்,

நன்றி! எங்களுக்காக இறைவனிடம் வழிபடும் உங்கள் அனைவரின் நல்ல மனம் வாழ்க!

இன்னும் நிர்வாகம் பிடி கொடுக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாக ஒப்பந்தத் தொழிலார்களும் களத்தில் இறங்கி இரண்டு திணைகளாக வேலைக்கு செல்லவில்லை.

நெய்வேலியில் எப்போதுமே சுதந்திர தினம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்தமுறை அதை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறோம். பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள் ஒத்திகையோடு 'கலகல' வென்றிருக்கும் இந்திரா காந்தி ஸ்டேடியம் வெறிச்சோடிக் கிடக்கிறது. இது நிர்வாகத்துக்கு மிகப் பெரிய கௌரவக் குறைச்சல்.

நேற்று பேச்சுவார்த்தைக்கு யூனியன் தலைவர்கள் சென்றார்கள். பிரச்னையைப் பற்றிப் பேசாமல் அதிபர் அவர்கள் சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்று தனக்குக் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்று மாத்திரம் கேட்டுள்ளார்.கிட்டத்தட்ட 13000 தொழிலாளிகளின் வயற்றில் அடிக்கும் நிர்வாகத்துக்கு சுதந்திர தினம் கொண்டாட என்ன அருகதை இருக்கிறது?

அடிமை விலங்கை உடைத்தெறிந்ததைக் கொண்டாடத்தானே சுதந்திரதினம்? எங்களை அடிமைப்படுத்த நினைக்கும் சிறுமைப் புத்திக் கொண்ட கொடுங்கோல் நிர்வாகத்துக்கு இப்போது என்ன சுதந்திரதினக் கொண்டாட்டம் வாழ்கிறது?

இன்று நெய்வேலி பகுதியில் எங்களுக்கு ஆதரவாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதே போல ஜவஹர் ஸ்கூல், செயின்ட் பால் பள்ளிகளும் ஆதரவளித்து தங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளன.

அனைத்து யூனியன்களும் இன்று முதல் 'சாகும் வரை உண்ணாவிரத'ப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கியாச்சு. ஷுகர், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர அனைவரும் உன்னாவிரத்தத்தில் கலந்து கொள்ள இருக்கிறோம். நெய்வேலி மெயின் பஜாரில் டி.என்.டி.யூ.சி திடலில் (நடிகர் திலகம் திறந்து வைத்த திடல்) பெரிய உண்ணாவிரதப் பந்தல் போடப்பட்டுள்ளது.

இதைவிட முத்தாய்ப்பாய் நாளை சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் பந்தலின் முன்னாலேயே சுதந்திர தினக் கொடியேற்றி கொண்டாட இருக்கிறோம்.இதைவிடவா நிர்வாகத்திற்கு வேறு அவமானம் வேண்டும்? இதைத் தடுப்பதில் குறியாய் இருக்கிறது நிர்வாகம்.

மானம் கெட்ட அதிகாரிகள் வெட்கமின்றி வேலைக்கு செல்கிறார்கள். தங்களுடன் எப்போதும் துணை நின்று பணி புரியும் தொழிலாளிகளுக்காக இந்த பிரகஸ்பதிகள் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் நிர்வாகத்திற்கு ஜால்ரா அடித்து நிர்வாகம் தரும் பிரடிற்காகவும், ரொட்டித் துண்டுகளுக்காகவும் வீட்டிற்குக் கூடச் செல்லாமல் அங்கே கிடந்து கொத்தடிமை வேலை செய்கின்றனர்.

ஆதரவு தரும் ஒப்பந்தத் தொழிலார்களின் சலுகைகளை பறிக்கப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறது நிர்வாகம். இதற்கு பயந்து யூனியன் சொல்லையும் மீறி நெஞ்சில் திடமில்லாத சிலர் பணிக்குச் செல்கிறார்கள்.

https://upload.wikimedia.org/wikipedia/en/5/50/Irumbu_thirai.JPG

இன்றோடு 26-ஆவது நாள் வேலைநிறுத்தம். இதுவரை தொழிலார்களால் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு ஒழுக்கத்தோடு வேலை நிறுத்தத்தைத் தொடர்கிறோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இன்னும் ஒரு சில மாதங்களில் சேர்மன் ஒய்வு பெறப் போகிறார். அவர் ஓய்வு பெறப் போகுமுன் தொழிலாளத் தோழர்களின் பாவத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகாமல் நல்ல படியாக ஊதிய மாற்று ஒப்பந்தத்தை முடித்து தர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. கண்டிப்பாக தங்கள் அனைவரது நல் ஆசியாலும் போராடி வெற்றி பெறுவோம்.

vasudevan31355
14th August 2015, 10:43 AM
மறியல் போராட்டத்தின் போது திரண்ட தொழிலார்கள். (திரிக்கு சம்பந்தமில்லாவிடினும் மன்னிக்கவும்)

http://i57.tinypic.com/2j2810n.jpg

http://i58.tinypic.com/2zj9r2c.jpg

http://i58.tinypic.com/2wr3ev9.jpg

http://i59.tinypic.com/2mflnyb.jpg

ஊர்வலத்தில் தோழர்களும், அடியேனும்

http://i61.tinypic.com/dd2als.jpg

கைதாகி மண்டபத்தில்

http://i61.tinypic.com/2agvv5y.jpg

திரள் திரளாக மரியல் பேரணிக்கு வந்த தொழிலாளிகள்

http://i59.tinypic.com/30c3zac.jpg

chinnakkannan
14th August 2015, 11:45 AM
வாசுசார்.. போராட்ட அப்டேட்களுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.. கண்டிப்பாக உஙக்ளுக்கு நலல்தே நடக்கும்.. எங்கள் ப்ரார்த்தனைகள் எப்போதும் உங்களுடன்..

vasudevan31355
14th August 2015, 11:48 AM
இன்று கடையடைப்பால் வெறிச்சோடிக் கிடக்கும் நெய்வேலி மெயின் பஜார் சாலை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/IMG_20150814_110640.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/IMG_20150814_110640.jpg.html)

TNTUC திடலில் உண்ணாவிரதம் இருக்க போலீஸ் தடை விதித்து விட்டது. இதுவும் நிர்வாகத்தின் தந்திரமே. எனவே INTUC திடலில் கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அதைவிட தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப விடாமல் கேபிள்காரர்களை நிர்வாகம் மிரட்டி இன்று செய்திகள் எதுவுமே தெரிந்து கொள்ள முடியாதபடி செய்திருக்கிறது.

கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/IMG_20150814_111352.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/IMG_20150814_111352.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/IMG_20150814_111401.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/IMG_20150814_111401.jpg.html)

chinnakkannan
14th August 2015, 11:48 AM
//அதிலும் திருமலை திருப்பதி பால் பழங்கள்.. வரிகளுக்கு உங்களின் விளக்கம். தாங்க முடியல சாமி. கண்ணில் நீர்முட்ட சிரித்து வயிற்றுவலி வந்தால் அதற்கு என்ன மருத்துவம் என்பதையும் இதைப் போன்ற பதிவுகளில் குறிப்பிட்டு விடவும். நன்றி.// அன்பின் கனலைவேந்தன் சார்.. தங்கள் பின்னூட்டத்திற்கும் ரசிகத்தன்மைக்கும் மிக்க நன்றி.. மன்னிக்க உடன் பதிலிடாததற்கு..கொஞ்சம் வேலைப்பளு..வீட்டிலுமே..( இப்போது அக நானூறு படித்துக் கொண்டிருக்கிறேன்!)

கொஞ்சம் அடிக்கடி வாருமேன்..வந்து எங்களை வாருமேன்! :)

chinnakkannan
14th August 2015, 11:55 AM
சிவாஜி செந்தில் - 2000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்..இன்னும் இன்னும் கட்டம்கட்டி எங்கள் மனதைக் கொள்ளையடியுங்கள்.. :)

குமார் சார்..ம்ம் வழக்கம் போல பழைய பட ஆவணங்கள்.. ஆமாம் இந்த பி.எஸ்புளி எனக்கு வேணுமே..புளி ஆராய்ச்சிப் பண்ணை இப்போது தான் கேள்விப் படுகிறேன்! தாங்க்ஸ்ங்கோவ்.. :)

vasudevan31355
14th August 2015, 11:56 AM
கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355040/IMG_20150814_111404.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355040/IMG_20150814_111404.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355040/IMG_20150814_111357.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355040/IMG_20150814_111357.jpg.html)

madhu
14th August 2015, 11:56 AM
வாசு ஜி..

நான் பணி புரியவில்லை என்றாலும் என் உறவினர்கள் பணி செய்த இடம்... அரை நிஜார் போட்ட காலத்தில் ஸ்மால் ஹாஸ்டல் எனப்படும் அறையில் தங்கி இருந்த தாய் மாமா அழைத்துச் செல்ல அவர் நண்பர்களின் குடும்பத்தினரால் அழைத்து ( இழுத்துச் ) செல்லப்பட்டு ஜாலியாக சைக்கிளில் மந்தாரக்குப்பம், தெர்மல், காளியம்மன் கோவில், மெயின் பஜார், அப்பப்போ உருவாகும் சந்தைகள், அமராவதி தியேட்டர், வேலுடையான்பட்டு கோவில், ஆலமரம் என்று சுற்றிய காலம் ஒன்று..

பின் விழுப்புரத்தில் வங்கிப் பணி புரிந்தபோது தினமும் சிதம்பரம்-சென்னை 166 எண் பஸ்ஸில் பண்ருட்டி வழியாகப் போய் வந்த காலம். ( எல்லா பிரச்சினைகளும் தீரட்டும். அப்புறம் ஜாலியாக இதைப் பற்றி சொல்றேன் )

எனக்குள் என்றுமே செண்பகப்பூவின் வாசனை போல தங்கி இருக்கும் ஊர்... அதில் வாழும் எல்லோருமே என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். கண்டிப்பாக இறைவன் அருள் விரைவில் கிட்டும்.

JamesFague
14th August 2015, 01:44 PM
Courtesy: Tamil Hindu


காற்றில் கலந்த இசை 17 - பேரழகின் மர்மப் புன்னகை



டிக் டிக் டிக்

கொலை, வைரக் கடத்தல், போலீஸ் துரத்தல் என்று ‘க்ரைம் நாவல்கள்’ பாணியில் அமைந்த கதையை வைத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ (1981). ஃபேஷன் புகைப்படக் கலைஞராகக் கமல் ஹாஸனும், மாடலாக மாதவியும் நடித்திருந்த இப்படத்தில் ராதா, ஸ்வப்னா, நிஷா போன்ற 80-களின் தேவதைகளும் நடித்திருந்தார்கள்.

சரிகாவுக்குக் கவுரவ வேடம். டைட்டிலுக்கு முன்பே கொல்லப்பட்டுவிடுவார். மாடலிங் உலகத்தின் மறுபக்கம், தொழிலதிபர்களின் வித்தியாசமான ஆர்வம், காதல், காமம் என்று பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தைத் தந்தன. மேற்கத்திய இசை மற்றும் பியூஷன் பாணி இசையில் அமைந்த பாடல்களை இப்படத்துக்குத் தந்திருந்தார் பாரதிராஜாவின் இசைத் தோழன் இளையராஜா.

தொடரும் நிழல் உலகத்தின் ஆபத்து அறியாமல் அதில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்களின் நிலையை உணர்த்தும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உண்டு. ‘வல்லவன் ஒருவன்’ திரைப்படத்தின் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலுக்கு முன்பிருந்தே இவ்வகைப் பாடல்கள் தனி அந்தஸ்தைப் பெற்றவை. அந்த வகையில் மேலடுக்கில் இனிமையும், உள்ளார்ந்த ரகசியத்தின் மர்மமும் புதைந்திருக்கும் பாடல்களைக் கொண்ட படம் இது. படத்தின் தொடக்கத்தில் மாடல் அழகியின் மர்ம மரணம்; அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலகம் என்ற பீடிகைக்குப் பின்னர் ஒலிக்கத் தொடங்கும் பாடல் ‘இது ஒரு நிலாக் காலம்’.

ஓபரா கோரஸ் பாணியில் ஒலிக்கும் ஆண் பெண் குரல்களின் சங்கமத்தின் தொடர்ச்சியாக மெல்ல அதிரும் ட்ரம்ஸ், மென்மையாகக் கசியும் கிளாரிநெட், துள்ளலான கிட்டார் என்று இசைக் கருவிகளின் கலவைக்குப் பின்னர் பல்லவியைத் தொடங்குவார் ஜானகி.

மாதவி, ராதா, ஸ்வப்னா ஆகிய மூன்று மாடலிங் அழகிகள் தோன்றும் இப்பாடலில் பெண்கள் தங்கள் தனித்துவம் மற்றும் வசீகரம் குறித்து பெருமிதம் கொள்வது போன்ற பாடல் வரிகளை எழுதியிருப்பார் வைரமுத்து (‘அழகி பார்த்தாலே அருவி நிமிராதோ’). மெலிதான துள்ளலுடன் நகரும் தாளக்கட்டின் மீது நளினமாகப் பரவும் பாடல் இது. ஈர்க்கும் ரகசியக் குரலில் பாடியிருப்பார் ஜானகி.

வாகனங்கள் விரையும் சாலைகளின் விளிம்பில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்குப் பின்னே இருக்கும் மர்மம், ஐரோப்பிய மணம் வீசும் அழகு சாதனப் பொருட்கள் என்று பல்வேறு படிமங்களின் இசை வடிவமாக உருவாக்கப்பட்ட இந்தப் பாடலின் இடையே டி.வி. கோபாலகிருஷ்ணனின் குரலில் ஒரு ஜதி கோவையைச் சேர்த்திருப்பார் இளையராஜா.

துள்ளும் ட்ரம்ஸுடன் போட்டிபோடும் ‘நாஹ்ருதன.. தீரனன.. தீரனன..’ எனும் அவரது இந்த ஜதி, இப்பாடலுக்குப் புது நிறத்தைக் கொடுக்கும். பின்னர் இதே பாணியில் ‘சின்ன வீடு’ திரைப்படத்தின் ‘அட மச்சம் உள்ள மச்சான்’ பாடலிலும் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஜதியைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

பாடல் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் டிரம்ஸ், இரண்டாவது சரணம் முடிந்து பல்லவி தொடங்குவதற்கு முன்னதான இடைவெளியில் சற்றே ஸ்தம்பித்து நின்று மீண்டும் ஒலிக்கும். இப்பாடலின் தனிச்சிறப்பு இது. இரண்டாவது நிரவல் இசையில் ஆண் குரலின் சாயலில் ஜானகியின் ஹம்மிங் ஒலிக்கும்.

இசைக் கருவிகளில் நிகழ்த்திய பரிசோதனைகளுக்கு நிகராக ஜானகியின் குரலில் வெவ்வேறு ஒலிகளைக் கொண்டுவந்தவர் இளையராஜா. இளையராஜாவின் கற்பனை வடிவங்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் ஜானகியிடமும், ஜானகியின் பன்முகத் தன்மையை உணர்ந்துகொள்ளும் திறன் இளையராஜாவிடமும் இருந்தது. இருவரின் இந்தப் பரஸ்பரப் புரிதல் தமிழர்களின் ரசனைக்கு ராஜ விருந்து படைத்தது.

கிட்டத்தட்ட இதேபோன்ற மர்மங்கள் நிறைந்த ‘பார்ட்டி சாங்’காக ஒலிக்கும் ‘நேற்று இந்த நேரம் ஆற்றங்கரையோரம்’ பாடலை லதா ரஜினிகாந்த் பாடியிருப்பார். இப்படத்தின் ஒரே டூயட் பாடல் ‘பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே’. ஜேசுதாஸும் ஜென்ஸியும் பாடிய இப்பாடல், பரதநாட்டியத்துக்கான ஜதியுடன் தொடங்கும். பாடலின் தொடக்கத்தில் கர்நாடக இசைப் பாணியில் மிருதங்கத்தின் தாள நடைக்கேற்ப `ஐ லவ் யூ’ என்று பாடுவார் ஜேசுதாஸ்.

இப்பாடல் காட்சியில் பரதநாட்டியமாடும் மாதவியின் அகன்ற கண்கள் காட்டும் பாவங்களில் மயங்கும் கமல் ஹாஸன் செயலற்று அமர்ந்திருப்பார். கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கலந்து உருவாக்கிய இப்பாடலில் குழையும் வயலின் இசையை ஆங்காங்கே இழைய விட்டிருப்பார் இளையராஜா.

இப்படம் ‘கரிஷ்மா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. புகழ்பெற்ற இசைமேதை ஆர்.டி. பர்மன் இசையமைத்திருந்தார். எனினும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் பாடல்களுக்கு இணையாக ஒரு பாடலைக்கூட அவரால் தர முடியவில்லை. கதைக் கருவுக்கு இணையான இசையை உருவாக்குவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஈடுபாடுதான் இப்படத்தின் பாடல்களைத் தனித்துவத்துடன் மிளிரச் செய்கிறது.

Russellxor
14th August 2015, 05:08 PM
1.ஆட்டுவித்தால் யாரொருவர்ஆடாதாரே
2.இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
3.கீதை சொல்ல கண்ணன் வந்தான்
4.பேபி பேபி ஓ மை பேபி
மேற்கண்ட பாடல்களின் வரிசையில்நடிகர்திலகத்தின் கீழ்வரும் பாடலையும் சேர்க்கலாம்.எல்லாமே சூப்பர்ஹிட்.

உச்சியிலே பறக்கும் கொடியை காண்பித்து மெல்ல இறங்கி படிகளில் நடந்து வரும் நடிகர்திலகத்தின் நடையழகில் பவனி வரும் காமிரா ரம்மியம். படியில்அமர்ந்திருக்கும் சிறுவனின்
தலை முடியை கோதிவிட்டு படிகளில் இறங்கி சென்று அருகில் உள்ள சிலையில் சாய்ந்துகொண்டு சிறுவனின் கன்னம் தடவி கண்ணிலே குடியிருந்து என்று பாடத் தொடங்குவதில் இருந்துஅந்தப் பாடலை கேட்கும் சுகம் நமக்கு கிடைக்க ஆரம்பிக்கிறது.

பல்லவி
ஆண்:கண்ணிலே குடியிருந்து*

கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று
னானா னானா தனக்கு தன்தன்
கங்கை நதி பெருகி வந்து*

இந்த இடத்திலகாமிரா டாப் ஆங்கிளில் கீழிலிருந்து மேலாகச் செல்லும்.
கங்கை நதி என்ற வார்த்தையின் போது நடிகர்திலகம் கையை உயர்த்துவது பார்க்க அழகாக இருக்கும்.கங்கை நதி மேலானது என்பதற்காகவா இல்லை மேலே எங்கோ உற்பத்தியாகிறதுஎன்பதை குறிப்பதற்காகவாஅந்த கை உயர்த்தல்? அவர் செய்யும் சின்ன அசைவுகளுக்கு கூட காரணம் இருநதிருக்கிறது.பொதுவாக எடுத்துககொண்டால் கங்கை உயர்வானது என்பதை அந்தக் கை அசைவு வெளிப்படுத்துகின்றது.வார்த்தைகளுக்கு தகுந்தமுக பாவனைகள் , கை அசைவு,அங்கத்தின் மூலம் வெளிப்படுத்துவதோ ஒரு நடிகனுக்கு அவசியம்.அங்கே அந்த வார்த்தை அர்த்தப்படுத்தப்பட்டு விடுகிறது.



கவிதை தரும் வார்த்தை ஒன்று மழலை என்று


னானா னானா தனக்கு தன்தன்



கண்ணிலே குடியிருந்து*




கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று

னானா னானா தனக்கு தன்தன்

கங்கை நதி பெருகி வந்து*
கவிதை தரும் வார்த்தை ஒன்று மழலை என்று

னானா னானா தனக்கு தன்தன்

பிண்ணனி இசை இப்போது...
குழந்தைகளுடள் பழகும் போது நாமும் குழந்தைகளாக மாறிவிட வேண்டும் என்ற கூற்றுக்கேட்ப நடிகர்திலகம் இந்த இடத்தில் நடித்திருப்பார்.சிறுவனை உற்சாகப்படுத்தமெல்ல குதித்து குதித்து ஆடியபடி வருவது நல்ல அழகான காட்சி.நாமும் அந்த மனநிலைக்கு தள்ளப்படுவோம்.

நேபாளத்தின் இயற்கை அழகுநேரில், பார்ப்பதற்கு ஏங்க வைக்கும்.படம் வந்த காலகட்டத்தில் இது போன்றுகாட்சிகள் திரைப்படங்களில் இடம் பெற்றால் மட்டுமேஅதைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்.
அந்த வகையில் இந்தப்படம் நமக்கு கிடைத்த பாக்கியம்.

சரணம் - 1

ஆண்நீலக் கடல் மாணிக்கங்கள்*

வைர வலை பவளமடா

நெஞ்சைத் தொடும் காற்று வந்து

எடுத்துக் கொடுத்த தங்கத் தட்டு ( இசை )

இந்த இடத்தில் சற்று குனிந்தவாறு இடது கையை மேலே தூக்கி வலது கைகட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து காண்பித்து பாடும்
பாவனை பிரமாதம்.

நீலக் கடல் மாணிக்கங்கள்*

வைர வலை பவளமடா

நெஞ்சைத் தொடும் காற்று வந்து

எடுத்துக் கொடுத்த தங்கத் தட்டு*

பேச வரும் பச்சைக் கிளி*

பிரித்து வைத்தால் பாவமடா

பிள்ளை உன்னை குற்றம் சொன்னால்*

பிறப்பு முழுதும் துன்பம் கண்ணா



கண்ணிலே குடியிருந்து*

கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று

னானா னானா தனக்கு தன்தன்

கங்கை நதி பெருகி வந்து*

கவிதை தரும் வார்த்தை ஒன்று மழலை என்று

னானா னானா தனக்கு தன்தன்

இரண்டு கையையும் சேர்த்தாற்போல் பாடிக்கொண்டே திரும்பி செல்லும் போது அவர் சென்றதும் சூரியன் ஒளிர்வதை காணலாம்.இதை அவரே ஒருநடிப்புச் சூரியன். அந்தச் சூரியனை விட சூரியனனான நான் என்ன அற்புதத்தைகாட்டிவிடமுடியும்? அவர் இருக்கும்போது நான் ஒன்றும் செய்துவிட முடியாது.எனவே அவர் அகன்றதும் நான் என்னை வெளிப்படுத்துகிறேன் என்பதைக் காட்டுவது போல் அந்தக்காட்சி அமைந்திருக்கும்.




இசைசரணம் - 2



ஆண்:சத்தியத்தின் கோபுரத்தில்*

தவழுவதே குழந்தையடா

தத்தித் தத்தி ஓடும் பிள்ளை*

மறைத்துக் கெடுப்பதில்லையடா ( இசை )

இந்த இடத்தில்குழந்தை போல் இயல்பாய் ஆடுவார்.

சத்தியத்தின் கோபுரத்தில்*

தவழுவதே குழந்தையடா

தத்தித் தத்தி ஓடும் பிள்ளை*

மறைத்துக் கெடுப்பதில்லையடா*

ஊர் முழுதும் ஏசட்டுமே*

உனது வார்த்தை வேதமடா

படத்தில் சிறுவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த இரண்டு வரியில்சொல்லப்பட்டுவிட்டது.குளோசப் ஷாட் அசத்தல்.


உண்மை நம்பும் உள்ளம் இங்கே*
உனக்கும் எனக்கும் *சொந்தம் கண்ணா
கண்ணிலே குடியிருந்து*
கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று

பெண்:னானா னானா தனக்கு தன்தன்
னானா னானா தனக்கு தன்தன்
னானா னானா தனக்கு தன்தன்
னானா னானா தனக்கு தன்தன்


ஆண்:கண்ணிலே குடியிருந்து*
கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று
இருவர்: னானா னானா தனக்கு தன்தன்
ஆண்:கங்கை நதி பெருகி வந்து*
கவிதை தரும் வார்த்தை ஒன்று மழலை என்று

இருவர்:னானா னானா தனக்கு தன்தன்
னானா னானா தனக்கு தன்தன்

RAGHAVENDRA
14th August 2015, 11:02 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/INDAYGRTGS2015MSVFW_zpsxozsnhkb.jpg

eehaiupehazij
15th August 2015, 12:10 AM
மனம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !

eehaiupehazij
15th August 2015, 12:41 AM
மனதை 'மைக்'கிய 'மோகன' கானங்கள் !

தமிழ்த் திரையுலகில் பெரும்பாலும் அனைத்து நடிகர்களுமே ஏதாவது ஒரு படத்தில் மைக் பிடித்துப் பாடும் ஆசையைத் தீர்த்துக் கொண்டிருப்பார்கள்......
நடிகர்திலகம் மக்கள் திலகம் தொடங்கி ராதாரவி வரை!! ஆனாலும் மனதை மயக்கிய மறக்க முடியாத தத்ரூபமான 'மைக்' மதுரங்களுக்கு குத்தகைதாரராக சாதனை படைத்தவர் இன்று நாம் மறந்துவிட்ட மோகன் அவர்களே!!

பகுதி 1 'மைக்' மோகன் அபிநயித்தவை! வாசு சாரின் பாடும் நிலா பாலுவின் குரல் குழைவில் !!

https://www.youtube.com/watch?v=q1QgqiqXfdY

https://www.youtube.com/watch?v=K1sucEvICJo

[url]https://www.youtube.com/watch?v=jRCh-b-a334

rajraj
15th August 2015, 01:23 AM
Happy Independence Day ! :)

raagadevan
15th August 2015, 03:12 AM
Happy Independence Day! :)

திரைப்படம்: பாரத விலாஸ் (1973)
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஏ.எல். ராகவன்

https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு

திசைதொழும் துருக்கர் என் தோழர்
திசைதொழும் துருக்கர் என் தோழர்
தேவன் யேசுவும் என் கடவுள்

எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்

கங்கை பாயும் வங்கம்
செந்நெல் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்

ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்

இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ

ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு சுவாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு

படைச்சோன் படைச்சோன்
எங்களை படைச்சோன்
அல்லாஹ் எங்கள் அல்லாஹ்
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா

தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க

தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க

படைச்சோன் படைச்சோன்
எங்களை படைச்சோன்
அல்லா எங்கள் அல்லா
அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா

சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
ம்ம் ஆஹா தேக்கோ தேக்கோ

ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ம் ஹா ஆவோ ஆவோ
ஆவோ ம்ம் ஹா ஹா ஆவோ
ஆவோ ஆவோ

பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ யாஹூ ம்ம் ஆஹா யாஹூ யாஹூ
யாஹூ யாஹோ

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் பிள்ளைகள்
பேசி பழகும் பிள்ளைகள்
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தேமாதரம் என்போம்
வந்தேமாதரம் வந்தேமாதரம்
வந்தேமாதரம் வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்...

eehaiupehazij
15th August 2015, 04:16 AM
மனதை 'மைக்'கிய 'மோகன' ஆடல் பாடல் மதுரங்கள் !


தமிழ்த் திரையுலகில் பெரும்பாலும் அனைத்து நடிகர்களுமே ஏதாவது ஒரு படத்தில் மைக் பிடித்துப் பாடும் ஆசையைத் தீர்த்துக் கொண்டிருப்பார்கள்......
நடிகர்திலகம் மக்கள் திலகம் தொடங்கி ராதாரவி வரை!! ஆனாலும் மனதை மயக்கிய மறக்க முடியாத தத்ரூபமான 'மைக்' மதுரங்களுக்கு குத்தகைதாரராக சாதனை படைத்தவர் இன்று நாம் மறந்துவிட்ட மோகன் அவர்களே!!
பகுதி 2 நடிகர்திலகத்தின் 'மைக்'காட்டம் மோகனுக்கு முன்னோடியே!

https://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk

https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito

பூப்போலே உன் புன்னகையில் கண்டேனம்மா உலகினைக் கவரிமானாக!
[url]www.youtube.com/watch?v=FscpyQ57YY8

madhu
15th August 2015, 05:11 AM
கங்கை பாயும் வங்கம்
தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்



அருமையான பாட்டு ஜி...
இதை மட்டும் " செந்நெல் கதிர்கள் சாயும்" என்று மாத்திடுங்க

raagadevan
15th August 2015, 05:51 AM
அருமையான பாட்டு ஜி...
இதை மட்டும் " செந்நெல் கதிர்கள் சாயும்" என்று மாத்திடுங்க

நன்றி மது... மாத்திட்டேன்! :)

I listened to the song several times and went through the lyrics line by line and changed a few word before posting it; but didn't detect the தென்னில்/செந்நெல் part! Have a long long way to go to improve my proficiency in Tamil! :)

madhu
15th August 2015, 06:57 AM
തമിഴില് പ്രൊഫിശിഎന്സി പണ്ദേ വന്നല്ലോ !! ஹி ஹி... இதுக்காக எதையாச்சும் மலையாளத்தில் எழுதிடாதீங்க.. எனக்கு கண்டிப்பாக புரியாது

vasudevan31355
15th August 2015, 09:21 AM
ராகதேவன் சார்,

அருமை! இன்றைக்குக் கேட்டாலும் அப்படியே புத்தம் புதிது போன்ற தேசியப் பெருமை பேசும் பாடல். ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு ராகம். சுகம். அருமையாகப் பாடலின் வரிகளைத் தந்து சிறப்பித்ததற்கு நன்றிகள் ஆயிரம்.

இன்னும் ஒரு சில திருத்தங்கள்.

திசைதொழும் துலுக்கர் என் தோழர்
திசைதொழும் துருக்கர் என் தோழர்

கல் மோகன ரங்கா பாடுங்கோ
சல் (chal) மோகன ரங்கா பாடுங்கோ

ஸ்ரீசைலம் திருப்பதி கேந்திரம் உண்டு
ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு

படைச்சோன் படைச்சோன்
எங்களை படைச்சோன்
அல்லாஹ் எங்கள் அல்லாஹ்

(அல்லாஹூ அல்லா)..... விடுபட்டு விட்டது

ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா

மற்றபடி அருமையோ அருமை.

eehaiupehazij
15th August 2015, 09:26 AM
Gap filler / Monotony breaker

சுதந்திரமாய் என்னவொரு அசத்தலான நடன வளைவு நெளிவு நளினங்களுடன் சுவற்றிலேறி சீலிங்கில் தலை கீழாக தொங்கலாட்டம் மந்திர தந்திர மாயா ஜால
வித்தை காண்பிக்கிறார் நடன மேதை ப்ரெட் ஆஸ்டையர்

https://www.youtube.com/watch?v=RU_hFQg700s

ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடனப் பிதாமகர் ப்ரெட் ஆஸ்டயரின் பிரமிக்க வைக்கும் சுதந்திர சுழலாட்டம் ரீடா ஹேவோர்த்துடன் !

(youtube.com/watch?v=ILbvtB_0pKk)

chinnakkannan
15th August 2015, 10:07 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்

அனைவருக்கும் எனது இனியசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்..

*

ராகதேவன் சார்,

அருமை! இன்றைக்குக் கேட்டாலும் அப்படியே புத்தும் புதிது போன்ற தேசியப் பெருமை பேசும் பாடல். ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு ராகம். சுகம். அருமையாகப் பாடலின் வரிகளைத் தந்து சிறப்பித்ததற்கு நன்றிகள் ஆயிரம்.// ராகதேவன்.. நான் வாசுவை வழி மொழிகிறேன்..


அந்தக் காலத்தில் வெகு சின்ன வயதில் படம்பார்த்து விட்டுஇந்தப் பாடலை வீடுவந்தவுடன் இரண்டு ஸ்டான்ஸா வரி பிசகாமல் சொல்லி அக்கா அண்ணன்களிடம் பாராட்டு வாங்கியது நினைவில்..

**


சுதந்திர தினத்தன்று பெண்களுக்கான சுதந்திரம் இன்று இருக்கிறதா என என் ரூமிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்ததில் அந்தக்காலத்திலேயே இருந்திருக்கிறது என்றுதான்சொல்லவேண்டும்... :)

ஒரு காலத்தில் முழங்கை தாண்டி கைகளின் அழகை மறைத்திருந்த ரவிக்கை,டப்க்கென்று யாரிடமோ கோபித்துக் கொண்டாற்போல் மேலே ஏறி ஏறி ரவிக் ஆகி, பின் பிற்காலங்களில் முதுகுப்பக்கம் ஜன்னல், முடிச்சுகள் என்று கற்பனையாய்ப் பரந்து விரிந்து அழகூட்டி (யாருக்கு, யாருக்கோ) எல்லாரையும் கவர்ந்தது என்னவோ வாஸ்தவம் தான்..

அதுவும் இந்த ரவிக் இருக்கிறதே..ம்ம் எவ்ளோ தான் அரை குறை ஆடைகளில் இருக்கின்ற கவர்ச்சியில் ஒரு அழகாகக் கட்டப்பட்ட சேலை, ரவிக்கில் பெண் மிக க் கவர்ச்சியான எழிலொடு மின்னுவாள் என ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள் :)


எனில் ஒரு அழகிய ரவிக் பாடல் :)

https://youtu.be/Bxq1SW9R1OA

ராசாக்குட்டி, நான் எப்படி :)

uvausan
15th August 2015, 10:33 AM
வாசு - இங்கு வராவிட்டாலும் , உங்கள் பாலா பதிவுகளை மிகவும் ரசித்து படிக்கின்றேன் - உங்கள் பதிவுகளில் இருக்கும் பரிவு , அலசும் திறமை , பார்க்கும் கண்ணோட்டம் எதிலுமே நீங்கள் முன்னோடியாக இருக்கின்றீர்கள் . உங்கள் பிரச்சனைகள் இன்னும் தீராமல் இருப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது . சீக்கிரமே ஒரு விடிவெள்ளி தோன்றி பட்ட துன்பங்கள் எல்லாம் பனி போல மறைந்து விட அந்த எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்யட்டும் .

எல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ...

uvausan
15th August 2015, 10:38 AM
இந்த இனிய சுதந்திர நல் நாளில் ,பல சுதந்திர புருஷர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டிய அந்த உன்னத ஆத்மாவிற்கு அஞ்சலியாக இந்த தொகுப்பை வழங்குகிறேன் .

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே
முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

https://youtu.be/zlAV8Gy8rsc

vasudevan31355
15th August 2015, 10:50 AM
http://i1316.photobucket.com/albums/t617/bvvm1985/flag_zpse6f8be83.gif (http://s1316.photobucket.com/user/bvvm1985/media/flag_zpse6f8be83.gif.html)

மகன் கமலிடம் தந்தை நடிகர் திலகம் சொல்லும் சுதந்திரப் போராட்டக் கதை. 'நாம் பிறந்த மண்' படத்தில். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சித்ரவதை அனுபவித்த கதை சொல்லி, சுதந்திரம் பெற்ற கதையும் சொல்லி, செல்லாக் காசான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நிலைமையை தன்னை முன்னிறுத்தி சொல்லிக் கலங்கி, 'சுதந்திரம் ஒன்றே தேவை... வேறு எதுவுமே தேவையில்லை' என்று சுதந்திரம் தவிர தனக்கென வந்த அனைத்தையும் உதறித் தள்ளிய சம்பவங்களையும் நினைவு கூர்ந்து, நிர்க்கதியாய் நிற்கும் தந்தை. கர்ம வீரனையும் இந்த 'கடமை வீரன்' என்றும் மறந்ததில்லை.

அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டு, சிறைபட்டு வாங்கித் தந்த சுதந்திரம். இப்போது??

நடிகர் திலகத்தின் உன்னதமான உணர்ச்சிக் குவியல்களின் நடிப்பில் இன்றைக்கு ஏற்ற பாடல்.

இதயத் தலைவா! நீ சொல்லு

இரும்பு மனிதா! நீ சொல்லு

கண்ணிய நெறியே! நீ சொல்லு

கர்ம வீரா! நீ சொல்லு

நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?

வானில் உயரும் மணிக்கொடியோடு அடிபட்டவன்
உயிர் வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்பதாலே உதைபட்டவன்
ஆண்டுகள் தோறும் அந்நியர் காலில் மிதிபட்டவன்
இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைபட்டவன்

நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?

விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்

தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்

ஏதும் தேவையில்லையென உதறியவன்

நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?


https://youtu.be/X6botHN7sKM

uvausan
15th August 2015, 11:17 AM
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்....... மஹாகவி பாரதி

எப்படிப்பட்ட தியாகிகளின் ரத்தத்தால் பெற்ற சுதந்திரம் இன்று எப்படிப்பட்டவர்களின் கைகளில்.....

https://youtu.be/hJnX2BQC9To

eehaiupehazij
15th August 2015, 11:20 AM
சுதந்திர தினத்தன்று பெண்களுக்கான சுதந்திரம் இன்று இருக்கிறதா என என் ரூமிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்ததில் அந்தக்காலத்திலேயே இருந்திருக்கிறது என்றுதான்சொல்லவேண்டும்... :)

ஒரு காலத்தில் முழங்கை தாண்டி கைகளின் அழகை மறைத்திருந்த ரவிக்கை,டப்க்கென்று யாரிடமோ கோபித்துக் கொண்டாற்போல் மேலே ஏறி ஏறி ரவிக் ஆகி, பின் பிற்காலங்களில் முதுகுப்பக்கம் ஜன்னல், முடிச்சுகள் என்று கற்பனையாய்ப் பரந்து விரிந்து அழகூட்டி (யாருக்கு, யாருக்கோ) எல்லாரையும் கவர்ந்தது என்னவோ வாஸ்தவம் தான்..

அதுவும் இந்த ரவிக் இருக்கிறதே..ம்ம் எவ்ளோ தான் அரை குறை ஆடைகளில் இருக்கின்ற கவர்ச்சியில் ஒரு அழகாகக் கட்டப்பட்ட சேலை, ரவிக்கில் பெண் மிக க் கவர்ச்சியான எழிலொடு மின்னுவாள் என ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள் :)


எனில் ஒரு அழகிய ரவிக் பாடல் :)

ராசாக்குட்டி, நான் எப்படி :)

ரவிக் பாடல்கள் சீரிஸ் பத்துப் பகுதிகள் குவிக்காக போடலாமே சி க !

uvausan
15th August 2015, 11:36 AM
"நம் நாடு திருந்துமா - மக்கள் நலம் பெறுவார்களா ? "

அதிகம் பேசக்கூடாது - மருத்துவர் சொல்லி இருக்கார்

"நான் பேசித்தான் தீர வேண்டும் ......"

நான் சாவதை குறித்து அஞ்சவில்லை ---உங்களை எல்லாம் ஏழைகளாக விட்டு போகிறேனே - அதற்காகவும் வருந்த வில்லை .

நான் பாடுப்பட்டு வாங்கிய கப்பல் கம்பெனி யை வித்துவிட்டார்களே - அதற்காகவும் வருந்த வில்லை . ஆனால் ஒரே ஒரு துயரம் .....
நீங்காத வேதனை ....நாட்டின் சுதந்திரத்தை , இந்தியாவின் விடுதலையை பார்க்காமல் உயிர் பிரியப்போகிறதே , அதற்காத்தான் வருந்துகிறேன் !!! ---

எத்தனை கனவுகள் - எத்தனை ஆசைகள் - எப்படிப்பட்ட மகான்கள் பிறந்து , நமக்காக இந்த நாட்டில் இரத்தம் சிந்தி நம்மை சுதந்திரமாக வாழ வைத்தார்கள் - அவர்களின் கனவுகள் அவர்களுடன் சேர்ந்தே புதைக்கப்பட்டன ... எரிக்கப்பட்டன ..

நாம் இன்று கூகிளில் உலகை சுத்துகிறோம் - அவர்கள் அன்று செக்கில் இந்த இந்தியாவை சுத்தினார்கள் ---

உழைக்கும் வர்க்கத்தை இன்று நாம் சூரையாடுகிறோம் - அன்று அவர்கள் அவர்களில் ஒருவராக நின்று இந்த சுதந்திர இந்தியாவை எழுப்பினார்கள் .

இரவில் சுதந்திரம் நமக்கு கிடைத்தது - இன்னும் விடியாத மனங்களின் உறக்கங்கள் இந்தியாவை கீழ்நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன ---- என்று தணியும் இந்த வெறியர்களின் பதவி மோகம் ????????

https://youtu.be/-Pa1M7NnQDw

uvausan
15th August 2015, 12:12 PM
Inqulab Zindabad

பாரதத்தின் பெருமையை , அதன் அருமையை , அதன் இளமையை , அதன் வலிமையை இந்த பாடல் எடுத்து சொன்ன மாதிரியோ , அதில் நடித்த திலகத்தின் நடிப்பைப்போன்றோ இனி உலகத்தில் மற்றுமொரு உதாரணம் காட்ட ஒன்றுமே இல்லை ....இறந்த பிணமும் ' வந்தே மாதரம் " என்று சொல்ல வைக்கக்கூடிய நடிப்பு , பாடல் ----

https://www.youtube.com/watch?v=GkxRC8ikSc4

uvausan
15th August 2015, 12:25 PM
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்ம தாயின் மடியினிலே போர்

சுதந்திரம் சுலபமாக கிடைத்து விட்டது - ஆமாம் கொள்ளை அடிக்க , குழி பறிக்க ,பணம் பறிக்க , பதவி மோகம் தொடர , தலைமுறைகளுக்கும் சொத்து குவிக்க , வழக்குக்களை தள்ளிப்போட , பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்த , மற்றவர்களை திட்டியே , குற்றம் சொல்லியே வாழ்க்கையை இன்னும் மேன்படுத்திக்கொள்ள ------
https://www.youtube.com/watch?v=5aigM0TMAOA

uvausan
15th August 2015, 12:27 PM
வீரம் உண்டு ...தோள்கள் உண்டு, வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு..சாரம் மிக்க தர்மம் உண்டு ...

https://www.youtube.com/watch?v=t3bNaYJKIkg

Richardsof
15th August 2015, 12:27 PM
https://youtu.be/g27XI77NAO4

vasudevan31355
15th August 2015, 02:48 PM
ஜெயா மேடத்தின் டீஸிங் சாங்க்ஸ் நான்கு.

அல்லாமே ஈஸ்வரி ராட்சஸி கோஷ்டியுடன் மேடத்துக்காகப் பாடியது. கிட்டத்தட்ட ஒரே மாதிரி :)

1. ஜெயா மேடம் எம்.ஜி.ஆர் அவர்களை ஒருவழி பண்ணுவதைப் பாருங்கள். விதியே என்று படித்துக் கொண்டிருப்பவரை வம்புக்கு இழுத்து,

'பரபோஸ்...அரபோஸ்....மரபோஸ்...ஹோ! லிவியோ'.....

என்று வாய்க்கு வந்தபடி பாடி,

'அடி மத்தளம் கொட்டி மேளத்தை தட்டி
வித்தையைக் காட்டடி கண்ணு
அடிக் கண்ணு அடிக்கண்ணு
இந்தப் புத்தகப் பூச்சி படிச்சி முடிச்சி ஆவதென்னடி கண்ணு
அடிக் கண்ணு அடிக்கண்ணு'

என்று 'குமரிக் கோட்ட'த்தில் குமரிகளின் கொட்டம்.


http://www.dailymotion.com/video/xrs6ge_kumari-kottam_shortfilms


2. நடிகர் திலகத்தை விட்டாரா! சிவில் எஞ்சினியர் அவர் வேலையைப் பார்க்கும் போது தலையில் 'டொ'மேல் என்று வந்து விழும் கைப்பந்து. கையில் வாலிபாலோ... புட்பாலோ பிடித்து அரை டிராயர் அணிந்து மாமிகளையும், வாலிபர்களையும் விட்டு தாக்கு தாக்கென்று தாக்குகிறாரே!

'அத்தைக்கு மீசை வச்சி பாருங்கடி
முற்றத்தில் மாலை கட்டிப் போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று ஆடாமல் ஆடுங்கடி

பம்பினா பம்பினா பம்பினா பம்
பம்பினா பம்பினா பம்பினா பம்

உலகைப் படைப்பது பெண்கள் பெண்கள்
உயிரை எடுப்பது கண்கள் கண்கள்
மயக்கம் கொடுப்பது நாங்கள் நாங்கள்
மயங்கி விழுவது ஆண்கள் ஆண்கள்'

நிலம் அளக்கும் 'எங்க ஊர் ராஜா'வுக்கு புத்திமதி வேறு.

'நிலத்தை அளந்தது போதும் போதும்
மனதை அளந்திட வாரும் வாரும்'

செமையாக வாருவார்.


https://youtu.be/OniTFT7y6f4


3. ஜெயா மேடம் அரை டிராயர் அணிந்து கொண்டு, டென்னிஸ் ரேக்கேட் பிடித்து, தோழியருடன் பெண் பார்க்க வந்த நம்ம 'விஸ்வம்' மனோகரை டீஸ் செய்து பாடுவதைப் பாருங்கள். ராட்சஸி குழுவினர் செய்யும் அமர்க்களம் அட்டகாசம். 'ஓ...ஹச்சு ஹச்சு' என்று தும்மல் போட்டு செம கலாய்ப்பு.

'என்ன பொருத்தமடி மாமா
எனக்கிவர் மாலையிடலாமா
உள்ளதைச் சொல்லுங்கடி பாமா
அம்மம்மா அம்மாமா அம்மம்மா

பட்டமும் சட்டமும் கண்டது லண்டன் படிப்போ
பெண்ணையும் கண்ணையும் கண்டதும் ரத்தக் கொதிப்போ'

நடுவில் வரும் அந்த ஹா 'ஹஹ்ஹஹ ஹஹ்ஹஹ ஹஹ்ஹஹ ஹா' செம டக்கருங்கோ.


https://youtu.be/cCeZ9IGjJsM


4. இதோ ரயிலில் மாட்டி சிக்கித் தவிக்கும் குடுமி கிராமத்தான் ரவி. கிண்டலடிக்கும் நகரக் குமரிப் பெண் ஜெயா.

'வருஷத்தைப் பாரு 66
உருவத்தைப் பாரு 26

'ஜிஞ்ஜின்னாக்கடி... ஜிஞ்ஜின்னாக்கடி... ஜிஞ்ஜின்னாக்கடி... ஜிஞ்ஜின்னா'


https://youtu.be/vNHDfYAd8Nw

chinnakkannan
15th August 2015, 04:14 PM
சி.செ.. என்னை விட பாடல்கள் மிகத் தெரிந்த பெரியவங்கள்ளாம் இருக்காங்க(மதுண்ணா, வாசு, ராகவேந்தர்) ..அவங்களைவிட்டுட்டு நான் ரவிக் ஷாங்க்ஸ் எப்படி எழுதறது ( தெரியாதுங்கறது வேறுவிஷயம்).. இயற்கைக்கு விரோதமாய்டும்..அட..இயற்கை..

இந்த இயற்கை இருக்கிறதே எவ்வளவு அழகு..கொஞ்சம் லெஷரா இருந்தா வியாசமே எழுதலாம்.. இப்போதைக்கு முன்பெழுதிய வெண்பா..

பாரில் இருப்பதென்ன பார்ப்பதெலாம் வண்ணமயத்
தேரில் பவனிவரும் தெள்ளமுதம் - வாரியே
வள்ளலெனத் தான்வழங்கி வாகாய்ச் சிரித்தபடி
அள்ளும் இயற்கையே ஆம்

*

இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு.. வாணிஸ்ரீ ஜெய்ஷங்கர்.. போட்டாச் இல்லைன்னு நினைகக்றேன்.. அழகியபாடல்

https://youtu.be/KCdFi_bKgxk

chinnakkannan
15th August 2015, 04:22 PM
இங்கே சமர்த்தா இயற்கை எழிலைப் பாடுவது ஜெயசித்ரா

இயற்கை எழில் கொஞ்சுகின்ற ..எழில் மடந்தை..


https://youtu.be/WjlHMOtknDA


அப்புறம் வானிலே மண்ணிலே வழியிலே ஒளியிலே எல்லாம் நீ தானம்மா ..வாணிஸ்ரீ இன் இருளும் ஒளியும்..

இயற்கை எனும் இளைய கன்னி ஏங்குகிறாள்

அப்புறம் இன்னும் நிறைய இருக்கே..

madhu
15th August 2015, 07:34 PM
ஆமாம்.... இருக்கே சி.க..

சுசீலா குரலில் அங்கே தேன் சிந்தப் பாடிய ஜெயசித்ரா ஜானகி குரலில் கல்யாணமாம் கல்யாணத்துக்கு பாடுவது இயற்கை எனும் இளமை நாட்டிய சாலையைப் பற்றி

https://www.youtube.com/watch?v=it7TvbFahic

chinnakkannan
15th August 2015, 08:11 PM
ஆமாம்..தாங்க்ஸ் மதுண்ணா.. ஆனா இந்த இளமை நாட்டியச் சாலைல எனக்கொருகுறை உண்டு.. முதல்ல இ. நா.சா பாடிமுடிச்சவொடனே ஆத்தங்கரையில் காத்திருந்தா பாமா ..ன்னு வேகமா ஆரம்பிக்கறது.. வைகை நதி பெருகி வர... ந்னு ஜெய்சங்கர் பாடறது என்னவோ ஒட்டாதது போல ஃபிலிங்க்..

காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
காட்டு ராணி க் கோட்டையிலே கதவுகளில்லை

மூங்கில் இலை மேலே தூங்கும் பனி போலே...(ஹை.. எனக்குப் பிடிச்ச பாட்டாச்சே)

இன்னும் சட்னு நினைவுக்கு வல்லியே..

uvausan
15th August 2015, 09:14 PM
செய்நன்றிக்கடன் ( Gratitude ) :

பதிவு 1

நம் பிறந்தது முதல் இந்த உலகத்தை விட்டு செல்லும் வரை பலருக்கு நன்றி சொல்ல கடன் பட்டுள்ளோம் - நம்மை பெற்றவர்களுக்கு , மனைவிக்கு , நம் குழந்தைகளுக்கு ,நம்முடன் வளரும் உடன் பிறப்புக்களுக்கு , நம் ஆசிரியை , ஆசிரியர்களுக்கு , உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு , அடுத்த வீட்டில் இருப்பவர்களுக்கு , இன்னும் கண்களுக்கு தென் படாமல் நம் வாழ்க்கையில் நாட்டம் கொள்பவர்களுக்கு - சொல்லிக்கொண்டே போகலாம் - முடிவில்லாத ஆனால் இனிப்பான செயல் - மறந்துவிடக்கூடிய பல சமாச்சாரங்களில் இதுவும் முக்கியமான ஒன்று - நன்றி என்று உச்சரிக்கும் பொழுது உடனே நினைவில் வருவது நாய் தான் - எந்த மனிதனும் நினைவில் வருவதில்லை . சிலர் வருகிறார்கள் - அவர்களை பற்றிய ஒரு சின்ன தொகுப்பு இது - ஒரு புதிய கண்ணோட்டத்தில் -----

ஒரு சிறுவன் ஒரு ஓடையில் தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தான் - பல மீன்கள் அவனின் திறமை மூலம் அவனிடம் வந்து சரணடைந்தன . ஒரு வழிப்போக்கன் அந்த சிறுவனின் திறமையை மிகவும் ரசித்தான் - இந்த சிறு வயதில் என்ன திறமை !! - பலருக்கும் கிடைக்காத மீன்கள் இவனிடம் மிகவும் எளிதாக தஞ்சம் அடைகின்றதே என்று வியந்த வண்ணம் அந்த சிறுவனிடம் சென்றான் - அவனிடம் பேச்சுகொடுத்தான் " தம்பி - உன் திறமை என்னை வெகுவாக வியக்க வைத்தது - ஒருவரின் உதவியும் இல்லாமல் தனியாக மீன் பிடிக்கிறாயே - எப்படி இந்த திறமையை வளர்த்துக்கொண்டாய் ? " என்றான்

" ஐயா ! மிக்க நன்றி என்னை புகழ்வதற்கு - ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம் தேவை - "ஒருவரின் உதவி இல்லாமல் என்று சொன்னீர்கள் - அது தவறு - ஒருவரின் உதவியுடன் தான் மீன் பிடித்துக்கொண்டுருக்கிறேன் ... "

" சுற்றும் முற்றும் பார்த்த அந்த வழிப்போக்கன் அங்கே யாருமே இல்லாததைப்பார்த்து " தம்பி , ஏன் பொய் சொல்கிறாய் - இங்கு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாருமே இல்லையே என்னைத்தவிர " என்றான் .

" ஐயா ! இதோ பாருங்கள் - இந்த ஹூக் யை பாருங்கள் , அதில் கட்டப்பட்டுள்ள பைட் ( சிறு புழு ) யைப்பாருங்கள் - இதன் உதவியுடன் தான் மீன் பிடிக்கிறேன் - யாருமே பிறர் உதவி இல்லாமல் இந்த உலகத்தில் வாழவே முடியாது - நம்மில் பலர் இதை ஒப்புக்கொள்வதில்லை " என்றான் அந்த சிறுவன் - வாயடைத்துப்போனான் அந்த வழிப்போக்கன் .

பதிவு 2.

பாரதப்போர் முடிவடைந்தது - பாசறையில் தூக்கம் வராமல் உலாத்திக்கொண்டிருந்தான் அர்ஜுனன் - சொல்ல முடியாத துக்கம் - நிம்மதி இல்லாத வெற்றி !! தூக்கம் வர மறுத்தது . கண்ணன் அவனின் வேதனையை புரிந்துக்கொண்டு அவனிடம் வந்தான் .

" அர்ஜுனா வெற்றியின் உச்சியில் இருக்கிறாய் - சந்தோஷமாக இல்லாமல் உன் முகம் ஏன் இத்தனை வேதனை பிடுங்குகிறது ? " எல்லாம் உணர்ந்தவன் எதுவுமே தெரியாதவன் போல வினாவினான் .

" கண்ணா - நாம் ஜெயித்தது உண்மை ! ஆனால் இந்த வெற்றி கர்ணனுக்குத்தான் செல்லவேண்டும் - என்னை தம்பி என்று தெரிந்தும் என்னுடன் போர் புரிந்தான் - அவன் நிலைமையில் நான் இருந்திருந்தால் என்னால் இவ்வளவு அழகாக அற்புதமாக போர் செய்திருக்க முடியுமா ? உன் கபடம் மூலம் தானே நான் அவனை வென்றேன் ! - அவன் செய்த தர்மம் அவனை காத்தும் உன் தந்திரத்தால் அவனை வீழ்த்தினேன் - இது வெற்றியா கண்ணா ? இதனை நான் கொண்டாட வேண்டுமா ?? "

உலகை வென்றவன் சிரித்தான் .. " அர்ஜுனா நான் உனக்கு சொன்ன கீதை முழுவதும் கர்ணனுக்கு சொல்லியிருக்க வேண்டும் - நான் சொல்லி நீ இன்னும் புரிந்துக்கொள்ள வில்லை - நான் சொல்லாமல் கர்ணன் புரிந்துகொண்டான் .. அவன் செய்த தர்மத்தை விட அவனின் செய்நன்றி குணம் அவனை உன்னை விட புகழ் உள்ளவனாக ஆக்கியது - உலகத்தில் கங்கையை விட புனிதமானது இந்த செய்நன்றி குணம் தான் - இது இல்லாதவன் வாழ்ந்தும் ஒரு உபயோகமும் இல்லை - இதை மறந்தவன் என்னை மறந்தவன் - நான் சொன்ன கீதையை புரிந்துக்கொள்ளாதவன் .

பதிவு 3.

நம் வாழும் நாட்கள் மிகவும் குறைவு - நன்றி எல்லோருக்கும் சொல்ல வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது - இருந்தாலும் பிறகு சொல்லிக்கொள்ளலாம் , நேரம் இருக்கிறது என்று இருந்து விடாதீர்கள் - எப்ப எப்ப முடியுமோ அப்ப அப்ப உங்களுக்கு சிறிய உதவி செய்தவர்களையும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள் - மனைவியோ , நம் குழந்தைகளோ , நம்மை பெற்றவர்களோ , நண்பர்களோ , நம் வாழ்வில் அக்கறை காட்டிய , காட்டிக்கொண்டிருக்கும் அந்த உன்னத ஆத்மாக்களுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள் . உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்குவதில்லை நன்றிக்கடன் செய்து முடிக்கும் வரை ....

பதிவு 4


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது..

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா.

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/karnan_zpsadym8zmr.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/karnan_zpsadym8zmr.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/karnan2_zpsclvenaic.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/karnan2_zpsclvenaic.jpg.html)

https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/download_zpsvidxzftl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/download_zpsvidxzftl.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/download%201_zpsbi7pjyf7.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/download%201_zpsbi7pjyf7.jpg.html)

https://www.youtube.com/watch?v=kzqpT0JK6-g

இந்த பதிவை படித்த உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
ரவி

uvausan
15th August 2015, 11:21 PM
திரு செந்தில் சார் - 2000 பதிவுகள் என்பது உங்களுக்கு ஒரு ஜுஜிபி - ஒரு கொசுவிர்க்காக கைத்தட்டினால் போல ---- மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் நாங்கள் கொடுக்கும் குளுக்கோஸ் தான் இந்த பாராட்டுக்கள் - இதை வாங்கிக்கொள்ளாமலும் உங்களால் இன்னும் வேகமாக ஓட முடியும் என்பது எல்லோரும் இங்கு அறிந்ததே . எந்த சலசலப்பிர்க்கும் அலட்டிக்கொள்ளாமல் வித விதமாக யோசித்து , ஆராய்ச்சிகள் பல செய்து இங்கு நீங்கள் போடும் பதிவுகள் காலத்தால் அழிக்க முடியாதவைகள் . உங்கள் வலுவான மறு பக்கமான எழுத்து வலிமையையும் எங்களுக்கு காண்பிக்கலாமே வீடியோ பதிவுகளுக்கு சற்றே ஒய்வு கொடுத்து ---- ( எந்த கடையிலும் எந்த வீடியோ வுமே இப்பொழுதெல்லாம் கிடைப்பதில்லை - உங்கள் பெயர்த்தான் எல்லா கடையிலும் , youtube லிம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் - செந்தில் என்ற ஒருவரே ஆராய்ச்சிகளுக்காக வந்த படங்கள் , இன்னும் வர வேண்டிய படங்கள் , இன்னும் ஆரம்பிக்காத , பூஜை போடாத படங்கள் எல்லா வீடியோ உரிமைகளையும் வாங்கிவிட்டார் என்று - கேட்பதற்கே பெருமையாக இருக்கின்றது ) - மனமார்ந்த பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் - உங்கள் அருமைகள் நிற்காமல் தொடர .

chinnakkannan
15th August 2015, 11:39 PM
வாருங்கள் ரவி .. நன்றி தொடர் நன்றாக இருக்கிறது நன்றி....

madhu
16th August 2015, 03:43 AM
ரவி சார்...

உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி சொல்லாமல் போனால் ரொம்ப தப்பு... மனமார்ந்த நன்றி..

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

rajeshkrv
16th August 2015, 08:02 AM
Vanakkam

eehaiupehazij
16th August 2015, 08:33 AM
ரவியின் ஈடுபாடு மிக்க மீள்வருகை மகிழ்வு தருகிறது

வாசு என்னும் எழுத்தோவியரின் பலம் அவரது இதயத் தூரிகை குழைத்திடும் வண்ணமயமான எண்ணங்களிலே ..
சின்னக்கண்ணன் என்னும் எழுத்தா(ணி)(னை)யின் பலம் அ(வர்)தன் நகைச்சுவைத் தும்பிக்கையிலே .....
ரவிகிரண் வெளிச்சம் அவரது எண்திசை எழுத்துக் கிரணங்களின் பாய்ச்சலிலே ..
முரளி என்னும் கடலின் அலைகள் அதன் அளப்பற்ற ஆழத்தினாலே .
ராகவேந்தரின் இடியோசையும் மின்னல் கீற்றுக்களான எழுத்தாற்றலே ..
ரவியின் எழுத்துமர நிழலோ நான் இளைப்பாறிடும் புத்தனின் போதி மரத்தடி ..
கலை அவ்வப்போது ஒரு பாலையில் நான் மாலையில் கண்டிடும் சோலை ..
எஸ் வீயோ எண்ணிக்கையிலடங்காத மழைத்துளிகளை ஒட்டுமொத்தமாகக் கொட்டித் தீர்த்திடும் மழை மேகம் ..

சிவாஜி செந்திலாகிய.... நானோ...நீரை விட்டு வெளியே வந்தால் நீந்த முடியாத ஒரு சிறிய மீன்குஞ்சே! வீடியோக்கள்தான் இந்த மீன்குஞ்சின் பிராணவாயு செவுள்கள் அன்புள்ள நண்பரே!

ஷொட்டுக்கள் குட்டுக்களாக மாறி தட்டுவதற்குள் ...
கொஞ்சம் மாறிவிட்டேன் ..அன்புள்ளங்களின் வேண்டுகோளுக்காக...இனிமேல் ஒரு பதிவில் ஒரு காணொளி மட்டுமே!!!!!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக .....செந்தில்

rajraj
16th August 2015, 08:39 AM
For a change a song from old days:

From Mangayarkkarasi

kaadhal kani rasame.....

http://www.youtube.com/watch?v=dXCR4Yje514


If it sound like "Naadha Thanumanisam Sankaram" you are not wrong. Here is naadha thanumanisam from Thyagayya (Telugu)

http://www.youtube.com/watch?v=hLUBp29lPqc


I posted this to bring back old memories ! :)

vasudevan31355
16th August 2015, 10:35 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

27

'உலகில் இரண்டு கிளிகள்'

https://i.ytimg.com/vi/IFObHOJ0I18/maxresdefault.jpg

'குலமா குணமா?'

1971-ல் வெளியான நடிகர் திலகத்தின் வெற்றிப்படமான 'ஆஸம் ஆர்ட்ஸ்' 'குலமா குணமா' படத்தில் பாலா பாடிய பாடல் இன்றைய அவரது தொடரில் இடம் பெறுகிறது.

நடிகர் திலகத்தின் படங்களில் பாலாவின் முதல் பங்கு 'அருணோதயம்' படம்தான் என்று நினைக்கிறேன். நடிகர் திலகத்திற்கு பின்னணி தராவிட்டாலும் நடிகர் திலகத்தின் படங்களில் பாலாவின் பங்கு ('எங்கள் வீட்டு தங்கத் தேரில்') தொடங்கிய முதல் படம் இது.

அடுத்ததாகப் பார்த்தால் அது நடிகர் திலகத்தின் அடுத்த படமான 'குலமா குணமா?'

இதிலும் நடிகர் திலகத்திற்கு பாலாவின் பின்னணிக் குரல் இல்லாமல் தம்பியாக நடிக்கும் ஜெய்க்கு அந்த வாய்ப்பு.

அண்ணன் நடிகர் திலகம்,அண்ணி பத்மினி. நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத தமபதியர். தம்பி ஜெய்க்கு வாணிஸ்ரீயுடன் திருமணம் நடக்கிறது. 'தேனிலவுக்கு கொடைக்கானல், ஊட்டி என்று ஜாலியாகப் போய் வா' என்று அண்ணன் திலகம் ஜெய்யிடம் கூறுகிறார். சந்தோஷத்துடன் ஜெய் வாணிஸ்ரீயிடம் இதைச் சொல்ல அவரோ 'அக்காள் பத்மினியும், அக்காள் கணவர் நடிகர் திலகமும் உடன் உல்லாசப்பயணம் வரவேண்டும்' என்று முரண்டு பிடிக்க, 'அவர்கள் ஏன் நம்முடன் வர வேண்டும்? என்று ஜெய் புரியாமல் குழம்பிக் கேள்வி எழுப்ப,

ஊர்நலம், வீடு இவையே கதியென்று கிராமத்தில் அடைபட்டுக் கிடக்கும் நடிகர் திலகம், பத்மினி தம்பதியர் தங்களுடன் கொடைக்கானல் வந்தால் 'அங்கேயாவது அவர்களுக்குத் தனிமை கிடைத்து இருவருக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட சந்தர்ப்பம் வாய்க்கலாம் அல்லவா?' என்று வாணிஸ்ரீ ஜெய்க்கு புரியவைக்க, இப்போது இளம் தம்பதிகளின் பிடிவாதத்தால் அந்த நடுத்தர வயது தம்பதிகளும் அவர்களுடன் உல்லாசப் பிரயாணம் கிளம்புகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் ஒரு நல்ல பாடல்.

கொடைக்கானலில் ஒரு தனி அறையில் நடிகர் திலகமும், பத்மினியும் தங்கியிருக்க, உல்லாசப் பறவைகளாய் இளஞ்சிட்டுக்கள் ஜெய், வாணிஸ்ரீ ஊர் சுற்றி படகு சவாரி, குதிரையேற்றம் என்று ஜாலி பண்ண, நால்வரும் பாடும் பாடல்.

http://i60.tinypic.com/2hg943n.jpg

இங்கே அவுட்டோரில் ஜெய் வாணிஸ்ரீ பாலா, ஜானகி குரலில் குதூகலமாகப் பாட,

அங்கே தனி அறையில் நடிகர் திலகமும், பத்மினியும் பாடகர் திலகம், இசையரசியின் குரல்களில் பாடி குழந்தை பிறக்க அஸ்திவாரம் போட,

ஒரு அருமையான பாடல் உருவாகும்.

ஜெய், வாணிஸ்ரீ குதிரையில் பூங்காக்களைச் சுற்றி வந்து பாடலைத் தொடங்குவார்கள். ஜெய்க்கு பாலாவின் குரல் அப்போது ஓகே. வாணிஸ்ரீக்கு ஜானகி குரல்.

'திரை இசைத் திலகம்' நடிகர் திலகம், பத்மினி காட்சிகளின் போது அமைதியாகவும், ஜெய், வாணிஸ்ரீ காட்சிகளின் போது விறுவிறுப்பாகவும் மியூஸிக் போட்டு நடுத்தர வயது தம்பதியர், இளம் தம்பதியர் உற்சாகங்களை வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பார். சபாஷ்.

http://i.ytimg.com/vi/wkqLdxfHaPE/maxresdefault.jpg

வேட்டி, சட்டை, தோளில் புரளும் சால்வை சகிதம் நடிகர் திலகம் ரொம்பப் பாந்தம் அந்த பெரிய மனிதர் பாத்திரத்துக்குத் தக்க்கபடி. பத்மினியும் கண்ணியம். ஜோடிப் பொருத்தம் கச்சிதம்.

'கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்'

என்று கொடைக்கானலின் பெயரை பாடலின் இடையே நடிகர் திலகம் பாடுவது போல் பொருத்தமாகப் புகுத்தியிருப்பது அருமை.

'ஆடிக் கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்'

என்ற டேஞ்சரான வரிகளும் உண்டு.:) புரியாதவரை பிரச்னை இல்லை.

திரைக்கதை, வசனம், இயக்கம் 'இயக்குனர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். பாடல்கள் கவிஞர்.

'மாத்தூரு ராமக்கா... மாப்பிள்ளை யாரக்கா? (பி.வரலஷ்மி, நளினா டான்ஸ். சுசீலா அமர்க்களம். முன்பே எழுதி இருக்கிறேன்.)

http://i.ytimg.com/vi/jsQUnrwlGmg/hqdefault.jpg

'பிள்ளைக்கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்' (சுசீலாவுடன் 'சூலமங்கலம்'. அமர்க்களமான கவிஞரின் வரிகள். தொகையறா அருமையோ அருமை. முத்தே...மரகதமே...முக்கனியே... சர்க்கரையே!)

'சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்' (டூயட். 'பாடகர் திலகம்' ஜெய்க்கு. சுசீலா வாணிக்கு)

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் இன்றுவரை நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியது. புரியவிடாமல் குழப்புவது போல் குழப்பி தெளிவாகப் புரிய வைக்கும் கிளைமாக்ஸ். கே.எஸ்.ஜியும், நடிகர் திலகமும் அசத்தி விடுவார்கள்.

https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-sivaji-kulama-gunama-1971-1.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-sivaji-kulama-gunama-1971.jpg?w=593

நடிகர் திலகத்தின் நடிப்பின் ஆளுமையைப் பற்றி எழுத பக்ககங்கள் போதாது. (குறிப்பாக நடிகர் திலகமும், வாணிஸ்ரீயும் தனியாக சந்திக்கும் அந்த மரத்தடிக் காட்சி) என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இப்பாடலின் ஆய்வை எழுதுகிறேன். வாணியும் பிரமாதப்படுத்தி விடுவார்.

என்னைப் பொருத்தவரை இப்படத்தை மிக உயரிய குடும்பப் படம் என்பேன்.

பாலா நிரம்ப அழகாக இளமை ததும்பப் பாடியிருப்பார்.

'கன்னம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று'

என்ற ஒருவரியே போதும். தூள் பரத்தியிருப்பார். மற்ற எல்லோரும் வழக்கம் போலப் பாடியிருப்பார்கள். பாலா ஒருபடி தூக்கலாக உற்சாகமாகப் பாடி இருப்பது போலத் தோன்றும்.

http://i58.tinypic.com/11c5ueo.jpg

பாலா

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

ஜானகி

இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

பாலா

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

ஜானகி

இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

டி.எம்.எஸ்.

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

சுசீலா

இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

டி.எம்.எஸ்.

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

பாலா

இயற்கைப் பெண்ணின் இளமை
அவள் இதழில் ஊறும் பசுமை
இயற்கைப் பெண்ணின் இளமை
அவள் இதழில் ஊறும் பசுமை

ஜானகி

விளக்கம் கூறத் தனிமை
இடம் வேறு கண்டால் இனிமை
விளக்கம் கூறத் தனிமை
இடம் வேறு கண்டால் இனிமை

டி.எம்.எஸ்.

கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்
கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்

சுசீலா

ஆடிக் கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
ஆடிக் கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்

டி.எம்.எஸ்.

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

பாலா

கன்னம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று
கன்னம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று

ஜானகி

மன்னன் மார்பில் நின்று
அது மலர்ந்து போனதின்று
மன்னன் மார்பில் நின்று
அது மலர்ந்து போனதின்று

டி.எம்.எஸ்.

பள்ளியறையில் பதுமை
அவள் பணிவில் தெய்வப் புதுமை
பள்ளியறையில் பதுமை
அவள் பணிவில் தெய்வப் புதுமை

சுசீலா

இல்லம் காக்கும் மகிமை
அதில் என்றும் இல்லை முதுமை
இல்லம் காக்கும் மகிமை
அதில் என்றும் இல்லை முதுமை
அதில் என்றும் இல்லை முதுமை

பாலா

உலகில் இரண்டு கிளிகள்

ஜானகி

அவை உரிமை பேசும் விழிகள்

சுசீலா

இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

டி.எம்.எஸ்.

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்


https://youtu.be/wkqLdxfHaPE

chinnakkannan
16th August 2015, 11:17 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

சி.செ... நன்றி சொல்லும் போது குமாரை விட்டு விட்டீர்களே..அவர் எனக்கு பி.எஸ்.புளி வாங்கித் தருவதாகக் கூறியிருந்தார்..:) நீர் சொன்னாலென்ன நான் சொன்னாலென்ன.. குமாரின் ஆவணங்களுக்கு - குமார் சார் மிக்க நன்றி..:)

*

வாசு.. காலங்காலைல நல்ல பாட்டு போட்டதற்கு நன்றி..

குலமா குணமா மதுரை ஸ்ரீதேவியில் ரிலீஸ்..ரிலீஸின் போது பார்த்த போது படம் புரியவில்லை..(வெகு சின்னஞ்சிறுவன் நான்) பட் லேட்டர் பல வருடங்களுக்குப் பிறகு பார்த்திருந்தேன்.. ந.தி, ஜெ, வாணிஸ்ரீ, அப்புறம் தான் பத்மினி.. பத்மினி அவரதுகுழந்தையை வாணியிடம் கொடுத்து வளர்க்கும் தியாகம் என்னவோஎன் மனதில் பதியவில்லை.. ந.தி வழக்கம்போல ஊதித் தள்ளியிருப்பார்.. நீங்கள் சொன்ன க்ளைமாக்ஸ் சிறப்பானது என்றாலும் இந்த இரண்டு தம்பதிகளுக்கு நடுவில் இருந்த கெமிஸ்ட்ரி ஏனோ ஆழமாக இல்லாதது போன்ற பிரமை ( படம் பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டன)..ப்ள்ஸ் நடு நடுவில் காட்சிகளில் தொய்வு..என் இருந்ததாக நினைவு..( அவர் என்ன சொத்துன்னு சொல்றார்னு தெரியலையா.. என வாணிஸ்ரீ தவிப்பது அதற்கு ஜெய்யின் கொஞ்சம் ஏனோ தானோ ரியாக்*ஷன்..)

வாணியின் ஆக்டிங்க் கூட கொஞ்சம் ஓவர் எனச் சொல்லவேண்டும்..பட் படத்தை தாங்கிப் பிடித்தது ந.தி + பாடல்கள் மட்டுமே..

(மன்னிக்க இது எனது அபிப்ராயம் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்க)

vasudevan31355
16th August 2015, 11:35 AM
//வாணியின் ஆக்டிங்க் கூட கொஞ்சம் ஓவர் எனச் சொல்லவேண்டும்//


நன்றி சின்னா!

அது வாணியின் தவறில்லை சின்னா! இயக்குனர் திலகத்தின் படங்கள் அனைத்திலுமே வழக்கத்தை விட நடிக நடிகையர்கள் உணர்ச்சிபூர்வமாக டயலாக் பேசுவார்கள். அது கே.எஸ்.ஜி யின் பாணி. அதனால் அவரே பொறுப்பு.

அப்புறம் சொந்தக் கருத்துக்களை வரம்பு மீறாமல் சுதந்திரமாகக் கூற எல்லோருக்கும் உரிமை உண்டு சின்னா! எனக்குப் பிடித்தது உங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்றோ உங்களுக்குப் பிடித்தது எனக்கும் விருப்பமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயம் எதுவுமே இல்லை. அப்புறம் எதற்கு நமக்குள்ளே ஸாரி எல்லாம். ம்.

uvausan
16th August 2015, 12:01 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images_zpsupbo8vmw.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images_zpsupbo8vmw.jpg.html)

வாசு - குலமா குணமா இன்னும் அலசப்பட வேண்டிய படம் - சண்டை காட்சிகள் , மனதை கவரும் காபரே நடனங்கள் , காதல் நளினங்கள் நிறைந்த குடும்ப படம் ! ஷகீலாவிற்கு ஒரு சவாலாக அமைந்த படம் !தாய்மார்களின் ஏகோப்பித்த ஆதரவுகளை பெற்றப்படம் என்றெல்லாம் பிதற்றி வெளிவந்து நம்மை ஏமாற்றும் படங்களின் நடுவே , இப்படி ஒரு படம் வெளிவந்து உறவுகளின் பெருமையை , குடும்பம் செலுத்தும் அழகை , தாம்பத்தியத்தின் அருமையை வெகு அழகாக எடுத்துச்சொன்ன படம் - தன் ஆசா பாசங்களை தள்ளி வைத்து விட்டு , மனைவியின் உண்மையான , நியாமான ஏக்கங்களை புரிந்துக்கொள்ளாத கணவனாக நடிப்பில் ஒரு புதிய சகாப்த்தத்தை ஏற்படுத்திருப்பார் நடிகர் திலகம் - அமைதியான நடிப்பு , இலக்கிய காதல் இழைந்தோடும் குடும்பம் , உணர்ந்து கொள்ள முடியாத உணர்ச்சிகள் , உணர்ந்து கொள்ளக்கூடிய உறவுகள் - சொல்லிக்கொண்டே போகலாம் . இவ்வளவு பெரிய honey comb இல் ஒரே ஒரு சொட்டு தேனைத்தான் எங்களுக்கு தந்து உள்ளீர்கள் - ஆனாலும் உங்கள் எழுத்து வண்ணத்தில் அந்த ஒரே சொட்டு தேனும் ஒரு குடம் தேனை அருந்தியது போல அருமையாக இருந்தது .

வாசுவா ? பாலாவா ?? என்று ஒரு படம் எடுத்தால் எங்கள் எல்லோருடைய ஆதரவும் பாலாவை ஆராதனை செய்யும் வாசுவிற்கு மட்டுமே !!

chinnakkannan
16th August 2015, 03:37 PM
//. அப்புறம் எதற்கு நமக்குள்ளே ஸாரி எல்லாம். ம்.// மிக்க நன்றி வாசு உங்கள் புரிதலுக்கு..

*

முக நூலில் படித்தது:

//அந்த பிரபல பாடகரை கௌரவிக்க மேடைக்கு அழைக்கிறார்கள்.அவரும் முதுமை காரணமாக (85) இருவர் கைத்தாங்கலாக மேடைக்கு வருகிறார்.

நிகழ்ச்சி இணைப்பாளர் அவரை சில வார்த்தைகள் பேசுமாறு வேண்ட,அவரும் மைக்கை வாங்கி நடுங்கும் குரலில் தெலுகு கலந்த தமிழில் ஓரிரு வாக்கியங்களை சொல்லி நன்றி கூறுகிறார்.

அடுத்து இணைப்பாளர்,"அய்யா நீங்க மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் பாடிய பாடல்களில் ஒன்றை எங்களுக்கு பாடிகாட்ட முடியுமா?: என்று கேட்க,நமக்கே கோபம் வருகிறது "என்னடா இவர் பேசுவதற்கே சிரமப்படுகிறார் இவரை பாடுங்கள் என்று சொல்கிறார்களே!" என்று! ஆனால் அவரோ தயக்கமின்றி மைக்கை வாங்கி ஆபோகி ராக பாடலை ஆரம்பிக்கிறார்.

எங்கேய்யா போச்சு அந்த தள்ளாமை? நடுங்கும் குரல்? சுருதி சுத்தமாக கணீர் என்று பாட நமக்கு புரிகிறது.பாடிய வாய் மூப்பின் காரணமாக பேச சிரமப்படலாம்! ஆனால் பாட அல்ல ! !// நன்றி:ரங்க நாதன் கணேஷ்

*

அந்தப் பாடகர் பால முரளிகிருஷ்ணா..பாடிய பாடல் தங்க ரதம் வந்தது வீதியிலே..

இருந்தாலும் அவர் பாடிய இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும்..வீட் போய் கேக்க வேண்டும் ரொம்ப நாளாச்சு..

https://youtu.be/zjxTU2Wcrf8

மதுண்ணா வாசு திரை வீடியோ ப்ளீஸ் :)

raagadevan
16th August 2015, 08:37 PM
(சின்னக்)கண்ணா; here is பால முரளிகிருஷ்ணா singing தங்க ரதம் வந்தது வீதியிலே (live on stage), with MSV watching...


https://www.youtube.com/watch?v=8boZ15p_B2w

chinnakkannan
16th August 2015, 09:29 PM
Wow..ராக தேவரே..மிக்க நன்றி..பால முரளி கிருஷ்ணா பாடிய பாடல்களில் வரிசைகட்டி வருவதில் முதல் இந்தத் தங்கரதம் வந்தது வீதியிலே.(கேட்டது இசைக்களஞ்சியம் சிலோன் ரேடியோ).ஆனால் முதலாவதாக நான் கேட்டு புளகித்தது. ஒரு நாள் போதுமா.. அப்புறம் சின்னக் கண்ணன் அழைக்கிறான்...நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மனி ராதா என இழையும் இழைதல்..ம்ம்..அகெய்ன் தாங்க்ஸ் குரு..

chinnakkannan
16th August 2015, 09:51 PM
புன்னகை முகத்தைப் பார்க்கத்தான்..
….புவியினில் நானும் கிடந்திருந்தேன்
விண்ணிலே இருந்தே வருவதற்கு
….வேகமாய்ப் பட்சி உடனிலையா
சின்னதாய் எண்ணம் கொண்டபடி
…சேவகர் பேசுவர் பலவிதமாய்..
கண்ணிலே ராமனே வந்துவிடு
…காரிய மாற்றித் தந்துவிடு..

திரைகட லோடத் தெரியுமென்று
…தீர்க்கமாய்க் கருடன் சொல்லியதா
விரைவினில் செல்ல இவனொன்றும்
..வித்தக னிலையெனச் சொல்லியதா.
கரையினை ஏதும் காணாமல்
..கண்ணதில் நீரும் பொங்கியதே
முறையிட எனக்கோ யாருண்டு
…முக்தியை அளிக்க வந்திடுவாய்

பேதங்கள் கொள்ளாமல் பேதை எனக்காக
வேகமாய் வாராமா வா….



https://youtu.be/ZY0GQfLXkfE


ராகம்: ஆபேரி

நகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி
நன்னுப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர நீ

நகராஜ தரநீது பரிவாருலெல்ல
ஒகிபோதன ஜேஸேவார லுகாரே அடுலுண்டுதுரே நீ

ககராஜூ நீயானதி விநிவேக சனலேடோ
ககநாநி கிலகு பஹூ தூரம் பனி நாடோ

ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது
வகஜூபகு தாளனு நந்நேலுகோரா த்யாகராஜனுத நீ

raagadevan
16th August 2015, 10:12 PM
Let's continue with a few more live songs by my favourite singer...

Here is ஒரு நாள் போதுமா... (A little bit of comedy from BMK - couldn't remember all the lines! :)



https://www.youtube.com/watch?v=tzlMnFPBfcI

...and of course சின்னக் கண்ணன் அழைக்கிறான்...

https://www.youtube.com/watch?v=EcUI2YTv5CM

uvausan
16th August 2015, 10:39 PM
தெய்வ நம்பிக்கை

பகுதி 1

கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா?

அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார்.

வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை.

அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப்பட்டிருந்தது.

எனவே தாம் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க பகவான் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்கிறாள் அந்த பெண். திறந்து பார்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளின் கட்டளைப்படி அதை தூக்கி சுமந்து அவர் செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறாள்.

நேரம் செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையை தூக்க முடியவில்லை.

“கிருஷ்ணா உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாயே… கருணை கடலுக்கு இது அடுக்குமா??” என்று கோபித்துகொள்கிறாள்.

“உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா” என்கிறார் கிருஷ்ணர்.

மேலும் சில காலம் சென்றது.

சில இடங்களில் அவளால் தூக்க முடியாத போது கிருஷ்ணரும் தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர்கள் போய் சேரவேண்டிய இடம் வந்தது.

“போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!!” என்று கிருஷ்ணர் கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன் கீழே வைக்கிறாள் அந்த பெண்.

“மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?” என்று பகவான் புன்முறுவல் செய்தபடி கேட்க, அந்த பெண் அதற்காகவே காத்திருந்த அந்த பெண் “சீக்கிரம் கிருஷ்ணா” என்கிறாள் உரக்க.

கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை அசைக்க முடிச்சுக்கள் தானே அவிழ்ந்து மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அது!!

“இத்தனை காலம் பொறுமையுடன் நீ காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!”

அந்த பெண்ணுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

“கிருஷ்ணா……. என்னை மன்னித்துவிடு” என்று அவர் காலில் விழுகிறாள்.

“அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்று அவள் உருக கிருஷ்ணர் தனக்கே உரிய சிரிப்பை உதிர்க்கிறார்.

ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். எனவே அவனை நம்புங்கள். முழுமையாக.

பகுதி 2

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.

பகுதி 3

https://www.youtube.com/watch?v=9mzZVgQRzwg


https://www.youtube.com/watch?v=r5F0CfsMgBY


https://www.youtube.com/watch?v=u0v9Ux2Lup8

rajeshkrv
17th August 2015, 12:11 AM
MSV tribute by Subashree thanigachalam

https://www.youtube.com/watch?v=e21u6VDhyAw

madhu
17th August 2015, 05:07 AM
சிக்கா....

உங்களுக்காக இதோ இன்னொரு பாலமுரளி பாடல்.. ந்சுசீலாவுட

படம் : சுபதினம்..

https://www.youtube.com/watch?v=fWelPVcwD9o

படம் : உயர்ந்தவர்கள்

ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே

https://www.youtube.com/watch?v=e0Zh0q3us18

chinnakkannan
17th August 2015, 10:22 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

மதுண்ணா.. பாலமுரளி பாடல்களுக்கு நன்றி..வீட்டுக்குப் போய்க் கேட்கிறேன்..( நான் கேக்காத பாட்டா இருக்கே.. ஓ தமிழ்ல் மிஸ்டேக்.. நான் கேட்காத பாட்டுக்களா இருக்கே)

ரவி..

//நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். எனவே அவனை நம்புங்கள்// வழக்கம் போல நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..இப்போதெல்லாம் தெய்வ சன்னிதானத்தில் எதுவும் கேட்கத் தோன்றுவதில்லை..ச்சும்மா ஒரு பார்வை.. என்ன ஓய் எப்படி இருக்கீர் பார்த்து நாளாச்சு என்று தான் கை கூப்பிப் பார்த்துக் கொண்டிருப்பேன்..அவரும் அல்லது அம்பாளும் தான்..(விடுமுறையின் கடைசி தினத்தன்று பார்த்த சாரதியைப் பார்க்கவில்லையே என மனதில் ஏங்கிக் கொண்டிருந்தால் (டேய் பார்த்தா நான் உன்னை எப்போ பாக்கறது..)-டபக்கென நண்பன் தொலைபேசித்து வாடா போகலாம் என்று அழைத்துச் சென்று முழு தரிசனம் காட்டி விட்டான்.. ஒரு ஆச்சர்யமான அனுபவமது..

நேற்று படித்துக் கொண்டிருந்த (முடித்தும் விட்டேன்) நாவல் வெற்றித் திரு நகர் (அகிலன்). யூ டோண்ட் பிலீவ்.. அதில் விசுவ நாத நாயக்கரிடம் ஒருவர் சொல்வார்...எதை..

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

இந்தக் குறளயும் இன்னொரு குறள்..

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

சொல்ல.. குழம்பியிருந்த விசுவனாதன் இறையை ஜெபித்து மனதைரியம் அடைந்தான் என எழுதியிருப்பார் அகிலன்..

அதைப் படிக்கும் போது உங்களை நினைத்தேன்..இதை எப்போது எழுதுவீர்கள் என்று..வந்து பார்த்தால் அ ந்தக் குறளையே போட்டிருக்கிறீர்கள்.. நன்றி.. தொடருங்கள்..

raagadevan
17th August 2015, 11:17 AM
This is one of my all-time favourite songs (in any language and/or genre)...
but I promise you that I wouldn't bore you with this one any more (after this one time!) :)

Here is மாளவிகா at Super Singer T20...

https://www.youtube.com/watch?v=1EWbWMjrU1g

...and the original (classic) version - கவிஞ்சர் கண்ணதாசன், கே.வி. மஹாதேவன், பாலமுரளிக்ருஷ்ணா,
and the one and only டி.எஸ். பாலைய்யா:

https://www.youtube.com/watch?v=D0wLIArAayY

vasudevan31355
17th August 2015, 12:05 PM
சின்னா! இந்தாங்க!

ஜனரஞ்சகமா பாலமுரளி பாடியது. இதுவும் ஒரு ஜாலி.

குருவிக்காரன் பொஞ்சாதி
நான் கொறவன்தான்டி உன் ஜாதி


https://youtu.be/HNZ3FlV8NlE

எனக்குப் பிடித்த இன்னொரு பாடல். உங்களுக்கும், நம் எல்லோருக்குமே பிடித்த பாடல்.


https://youtu.be/J_5kf_9O9Ik

raagadevan
17th August 2015, 12:13 PM
Wow..ராக தேவரே..மிக்க நன்றி..பால முரளி கிருஷ்ணா பாடிய பாடல்களில் வரிசைகட்டி வருவதில் முதல் இந்தத் தங்கரதம் வந்தது வீதியிலே.(கேட்டது இசைக்களஞ்சியம் சிலோன் ரேடியோ).ஆனால் முதலாவதாக நான் கேட்டு புளகித்தது. ஒரு நாள் போதுமா.. அப்புறம் சின்னக் கண்ணன் அழைக்கிறான்...நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மனி ராதா என இழையும் இழைதல்..ம்ம்..அகெய்ன் தாங்க்ஸ் குரு..

கண்ணா... பாலமுரளிக்ருஷ்ணா has my second or third most favourite singing voice among singers in India. I am happy to note that you like his songs too. His renditions of some of the Thyagaraja krithis are out of this world good! :) He has not sung too many movie songs in Tamil, but the ones that he has sung are real gems!

madhu
17th August 2015, 12:27 PM
சிக்கா...

கவிக்குயிலின் சின்னக் கண்ணனின் அழைப்பில் அமுங்கிப் போன ஆயிரம் கோடி காலங்கள் இங்கே

பாலமுரளிகிருஷ்ணா

https://www.youtube.com/watch?v=azKJXqaDppE

chinnakkannan
17th August 2015, 12:47 PM
ராகதேவன் நன்றி.. நேற்று மாளவிகா ஒரு நாள் போதுமா கேட்டேனாக்கும்.. கொஞ்சம் பை.பிடித்தாற்போல் பாலமுரளி கானங்களை(கர்னாடிக்) கேட்டுவிட்டுத் தான் தூங்கினேன்).. மாளவிகா அழகிய பெண்மணி..இனிய குரல்..கொஞ்சம் ஏகப்பட்ட அல்ட்டல்கள் இருப்பினும் பாடும் போது அதை அனுபவித்துப் பாடுவது வெகு அழகாக இருக்கும்..

வாசு.. குருவிக்காரன் நேற்றுக் கேட்கவில்லை.. மெளனத்தின் விளையாடும் சாங்கும் நினைவுக்கு வந்தது..(என்னா பாட். நூல்வேலி தானே..ப்ளஸ்டூ சமயத்தில் ஒரு தீபாவளியில் மினிப்ரியாவில் பார்த்த நினைவு.. அதன் மலையாள வெர்ஷன் நன்றாக இருக்கும் எனப் படித்த நினைவு(பூர்ணிமா ஜெயராம்?ஆவ நாழி? முரளி வாசு ஹெல்ப் ப்ளீஸ்!)

*

அது சரி.. இப்போ ம்றுபடியும் பாலமுரளிக்காக க் கொஞ்சம் தேடினால்..விதைடு விருட்சம் ப்ளாக் ஸ்பாட்டில் கிடைத்த தகவல்..

மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.[ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] (#நாரதர் கையிலிருக்கும்வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்தான்.

அதுவும் அவர் இதனை உருவாக்கிய தோ டு இந்த ராகத்தை முதன் முதலி ல் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராக த்தினை அறிமுகம் செய்தார். இந் தக்கச்சேரியில் இவர் பாடிய “மஹதி” ராகப்பாடலான” மஹனீய மது ர மூர்த்தே ” என்ற பாடல் இவரின் கர்னாடக கச்சேரியில் மிகப் பிரப லமானது.

அபூர்வமான இந்த ராகத்தில் அமைந்த ஒரே ஒரு திரைப் பாடல் ‘அபூர்வ ராகங்கள்’ தமிழ்த் திரை ப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன் னர் எம். எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின் றார். விஸ்வநாதன் தற்செயலாக பால முரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கி ன்றாராம். அப்போதுதான் பாலமுரளி தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

அதில் உருவா னதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான “அதிசய ராகம்; ஆனந்த ராக ம்; அழகிய ராகம்” என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவ ங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறி விடுகின்றது (ராக மாலிகை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் ஒரு பாடலில் பல ராகங்களும் தொ டர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலி கை ) இந்த அதிசய ராகத்தினைக் இப்போது இங்கே கேளுங்கள்

கொசுறுச் செய்தி:

மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணை யின் பெயராகும்.

ஆனால், ‘எப்படத்திலும் நாரதர் வீணையின வைத் துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவை தானே வைத்துக்கொண்டு வருவார்’, என்று நீங்கள் வியப்பது எனக்கு புரிகின்றது.

முதன்முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணை யை வைத்துக்கொண்டு வருவதாகத்தான் காட்சிக ள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரதர் இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொ ண்டு படும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்ட ர், வீணைக்குப் பதி லாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்ப துபோலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்கு ப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நார தர் ஏன் என்று கேள் வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூ க்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, “நாராயண; நாரா யண” என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.


**

இப்போ மஹதி பாட்டு..

https://youtu.be/4NJZF0sCN7M

ஓஹ்.. ஏதோ தப்பா போஸ்ட் பண்ணின மாதிரி இருக்கே :)

madhu
17th August 2015, 01:11 PM
நாராயண.... நாராயண... இங்கே சிக்கான்னு ஒருத்தர் என்னைப் பத்தி சிக்கலைக் கிளப்பி விட்டதா கேள்விப்பட்டேனே ?

https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c0/Narad_-_Vintage_Print.jpg

எம்.எஸ் from சாவித்திரி

https://www.youtube.com/watch?v=ukYL6lKsaAI

madhu
17th August 2015, 01:16 PM
ஆஹா... எம்.எஸ்., டி.ஆர்.மகாலிங்கம், சிவாஜி, ஜெமினி, நாகேஷ் என்று பலரும் நடித்த நாரதர் பாடல்களை வைத்து ஒரு தொடர் ஆரம்பிக்கலாமே....

chinnakkannan
17th August 2015, 02:42 PM
நாராயண.... நாராயண... இங்கே சிக்கான்னு ஒருத்தர் என்னைப் பத்தி சிக்கலைக் கிளப்பி விட்டதா கேள்விப்பட்டேனே ?// நாராயணா..யாருங்ணா அப்படிச் சொன்னது :)

நாரத் சாங்க்ஸ்னு பார்த்தா

அகத்தியர் - நமச்சிவாயமெனச் சொல்வோமே டி.ஆர்.எம்
சரஸ்வதி சபதம் - கல்வியா செல்வமா வீரமா ந.தி
கங்கா கெளரி - பாட்டு நினைவில்லை முதல் பாட்டு - நாரதராக சோ..

நாகேஷ், எம்.எஸ், ஜெமினி நினைவுக்கு வர மறுக்கிறதே

vasudevan31355
17th August 2015, 03:28 PM
சின்னா!

https://i.ytimg.com/vi/jN-DZU8HqBU/hqdefault.jpg

'சோ' நாரதராக சீர்காழி குரலில் 'கங்கா கௌரி' படத்தில் பாடும் பாடல்.

'ஆதி பகவன் திருவடி வாழ்க
அன்னை சக்தி மலரடி வாழ்க
வேதம் வாழ்க வேதியர் வாழ்க
விளங்கும் புவனம் யாவையும் வாழ்க'

vasudevan31355
17th August 2015, 03:37 PM
'திருமலைத் தெய்வம்' படத்தில் ஏ.வி.எம்.ராஜன் நாரதர். பாடல் உண்டா இல்லையா என்று மது அண்ணாதான் சொல்ல வேண்டும்.

http://padamhosting.me/out.php/i137381_vlcsnap2012010909h20m53s150.png

chinnakkannan
17th August 2015, 04:04 PM
வாசு.. சோ பாடலுக்கு நன்றி :) இந்த பக்கெட் நல்லா இருக்கே..ஆனா எனக்குப் போடத்தெரியாதே..தெரிஞ்ச பாட்னா பாட் பேர் போட்டுட்டு பக்கெட்டுக்கு உங்க கிட்ட விட்டுடப் போறேன் ஹியர் ஆஃப்டர்..:)

ஆனா சோவின் நாரதர் குறும்பு க. கெள வில் ஜாஸ்தி.. ந.தி முழிக்கும் முழியும் (ச.ச வில்) நினைவுக்கு வருகிறது..

madhu
17th August 2015, 05:12 PM
சக்தி லீலையில் சிவகுமார், தசாவதாரத்தில் சீர்காழி கோவிந்தராஜன், ஷண்முகப்ரியாவில் மீண்டும் சோ, பக்த பிரகலாதாவில் பாலமுரளி கிருஷ்ணா ( இன்னும் லேட்டஸ்டாக இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் நாசர் மற்றும் நவீன சரஸ்வதி சபதத்தில் மனோபாலா... அய்யகோ.. அடிக்க வராங்களே என் செய்வேன்.. !! )...

நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு டிராமாவில் நாகேஷ் நாரதராக வருவார் என்று நினைக்கிறேன். ஜெமினி நடித்த படம்தான் மறந்து போச்சு.. யோசிப்போம்.

vasudevan31355
17th August 2015, 05:23 PM
சின்னா!

அதிர்ஷ்டக்கார பிள்ளை அய்யா நீர். நீர் எது கேட்டாலும் மது அண்ணா, நான், ராஜ்ராஜ் சார், ராக தேவன் சார் என்று ஓடி வந்து அத்தனையையும் ஒன்று விடாமல் தந்து விடுகிறோமே! சும்மா ஜாம் ஜாம் என்று ஜம்மென்று
அமர்ந்து என்ஜாய் செய்கிறீரே! பொறாமையாய் கூட இருக்கிறது. இனிமேல் நானும் உங்களைப் போல நிறையக் கேட்டு வாங்கப் போகிறேனாக்கும்.:)

இந்தாரும். நம்ம சிவக்குமார் அண்ணாச்சி கிருஷ்ணனாக, திருமாலாக நிறைய நாரதர்களைப் பார்த்து விட்டார். ஆனால் பழனிச்சாமியையே நாரதராகப் பார்த்திருக்கிறீரா?

இதோ சக்தி லீலை படத்தில் சிவக்குமார் நாரத முனியாக.


https://youtu.be/2KPWE446Hac

vasudevan31355
17th August 2015, 05:27 PM
மது அண்ணா!

இதோ நாகேஷ் 'நூற்றுக்கு நூறு' படத்தில் ஒரு நாடகக் காட்சியில் நாரதராகவும், மாணவனாகவும்.

'பூலோகமா இது பொல்லாத லோகமா?
நாரதரை உள்ளே போகச் சொல்லலாகுமா?'

எமனாக ஒய்.ஜி.எம்.:)


https://youtu.be/bYRLy2UxZSU

vasudevan31355
17th August 2015, 05:30 PM
எத்தனை நாரதர் வந்தாலும் 'ஆம் தாயே" என்று நரித் தந்திரமாக அசடு வழிந்து காரியத்தில் கண் வைத்த நடிகர் திலகத்திற்கு இணையாகுமா?

http://im.rediff.com/movies/2014/may/22popular-mythological-films6.jpghttp://i.ytimg.com/vi/wDYIjKZwYO4/hqdefault.jpg

vasudevan31355
17th August 2015, 05:40 PM
இந்தாங்கோ 'பக்த பிரகலாதா'வில் பாலமுரளி.

http://1.bp.blogspot.com/_tt-BkyBxmVk/S0HmMzUqq_I/AAAAAAAANf4/a2_Y_IV6V0g/s1600/bp4.png

vasudevan31355
17th August 2015, 05:43 PM
'தசாவதார'த்தில் 'சீர்காழி' கோவிந்தராஜன்.

http://i.ytimg.com/vi/WmnJhkgYkto/hqdefault.jpg

vasudevan31355
17th August 2015, 05:56 PM
'ஆதிபராசக்தி' படத்தில் நாரதர் வேஷம் கட்டியது 'கம்பர்' ஜெயராமன்

http://i62.tinypic.com/xayvk6.jpg

chinnakkannan
17th August 2015, 05:58 PM
//இனிமேல் நானும் உங்களைப் போல நிறையக் கேட்டு வாங்கப் போகிறேனாக்கும். //வாசுங்ணா..எழுதணும்ணா..பட் கொஞ்சம் டயம் கொஞ்சம் மனஸ் கான்செண்ட்ரேஷன் வர மாட்டேங்குது..அதான் ..இப்படி ஓ.பி அடிச்சுக்கிட்டிருக்கேன்..:) ஷமிக்கணும்..வெள்ளிக்கிழமை உருப்படியா எதாவது எழுத வருதா எனப் பார்க்கிறேன்..

தசாவதாரத்தில் ஒரு இதிகாச இமாலய மிஸ்டேக் செய்திருப்பார்கள்..ஜெமினி அர்ஜுனன் என நினைவு.. அவர் கேரக்டருக்கு வெய்ட் கொடுக்க வேண்டி அர்ஜூனனையே துரியோதனைனைக் கொல்ல சபதம் போட விட்டிருப்பார்கள் :) எம். ஆர். ராதா ஹிரண்ய கசிபு அண்ட் செளகார் மிஸஸ் ஹி.க என நினைவு.. நன்றாகவும் நடித்திருப்பார்கள் என நினைவு..(ரிலீஸ் மதுரை ஸ்ரீதேவி தான்).. நாரத சீர்காழி கிருஷ்ணனுக்கு ராமர் கதை சொல்வது போல வரும்..குட்டிக் கிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு “லஷ்மணா..எடு வில்லை” என டயலாக்கும் வரும்!

chinnakkannan
17th August 2015, 06:09 PM
நாரதர் பத்திப் பேசும்போது இந்த இந்திரப் பயபுள்ளையும் பேசலாமில்லை.. வெகுகாலம் முன்னால் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது..இந்த இந்திரன் பய மாதிரி டம்மி பீஸ் பார்த்ததே கிடையாதுஎன்றார்.. தேவலோக ராஜான்னு பேரு பெத்த பேருதான்..ஆ..ஊ ந்னா சிவன், விஷ்ணு, பிரம்மான்னு அலறித் தொழுவதே வேலை.. பயங்கர ஜொள் பார்ட்டி...என்றெல்லாம் சொன்னார்..ம்ம்

vasudevan31355
17th August 2015, 06:11 PM
நாகேஸ்வரராவ் 'நாரத' ஸ்வரராவ்:)

http://i.ytimg.com/vi/GqDoFYA1xXw/maxresdefault.jpg

vasudevan31355
17th August 2015, 06:14 PM
காந்தாராவும் நாரதரே

http://i.ytimg.com/vi/zn8wi8zzTGg/0.jpg

madhu
17th August 2015, 06:20 PM
வாசுஜி.... திருவிளையாடலில் நாரதர் யார் ?

vasudevan31355
17th August 2015, 06:21 PM
'மாஸ்டர்' ஸ்ரீதர் நாரதராக

http://www.thehindu.com/multimedia/dynamic/01682/13FR_Master_Sridha_1682631g.jpg

madhu
17th August 2015, 06:24 PM
நாரதர் யாரோ அறியேன்... பைரவி ராகம் மனதை மயக்கும்போது தாஸேட்டனி குரல் மட்டுமே கேட்குது. படம் தெர்லீங்க..

https://www.youtube.com/watch?v=zHtDbLPjMOg

Russellxor
17th August 2015, 07:41 PM
படம் .பைலட்பிரேம்நாத்
பாடல். இலங்கையின் இளம்குயில்.

இலங்கையின் இளம்குயில் என்று நடிகர்திலகம் பாடிவரும்போது, இலங்கையின் பாரம்பர்ய ஆடை அணிந்து நடனமாடிவரும் மாலினிபொன்சேகா
அடுத்த வரியான
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட என்று அவர் பாடி வரும்போது தமிழ்நாட்டின் பாரம்பர்ய உடையான சேலை அணிந்து ஆடி வருவார்.
நாட்டையும்,மொழியையும் தாண்டியது காதல் என்ற ஒரு கருத்தை பாடல் வரிகள் விளக்கும் அதே சமயம் அந்தத் திரைப்படம் இந்தியா இலங்கை நல்லிணக்கத்திற்காகஇரு நாடுகளும் இணைந்து தயாரித்த கூட்டு தயாரிப்பு என்பதை யும் அது நினைவு படுத்துவதாக உள்ளது.

××××××××××××××××××××××××××××××××××××××××××

ஒஹ்...பெம்வதி... ஒஹ்..பெம்வதா ..

இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட

நாடுகளையும் மொழிகளையும் தாண்டி
உன் நடிப்பு எல்லா உள்ளங்களாலும்
ரசிக்கப்படும்.அதற்கு சாட்சி நாடுகள் வழங்கிய கௌரவங்கள்.

ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பறிமாற
உன் எண்ணங்கள் வழங்கிய நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் ஏடுகள்.

இலங்கையின் இளங்குயில் உன்னோடு இசை பாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ


என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்

எத்தனை பிறப்பு எடுத்தாலும் உனக்காகவே நாங்கள்

நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்

எத்தனை ஜென்மங்களாயினும்
எங்களின் தலைவன் நீதான்.

விலகாத சொந்தமிது பலகால பந்தமிது விலகாத சொந்தமிது பலகால பந்தமிது

நம் சொந்தம் எப்போதும் தொடரும்.
முடிவே இல்லாதது.

இணை சேரும் நூலிழை போல் இணைந்தேன் உன் நூலிடை மேல்

பிரிக்கமுடியாது
உன் நினைவுகளை
எங்களிடம் இருந்து ...

இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ ஆஆஆஆ...ஓஓஓஓஒ...ஓஓஓஒ..

அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்

நீதானே எங்கள் வழிகாட்டும் கோயில்


வளரும் நம் உறவுகளை வாழ்த்துகின்ற வேளையிது
கடல் வானம் உள்ளவரை கணம்தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம் திகட்டாத மோஹன ராகம்

கலையாது உன் புகழ்
வானும் கடலும் உள்ளவரை.
காலம் காலமாய்
தமிழ் மொழி போல்
திகட்டாது என்றும்
உன் நடிப்பு ரசம்.

இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

uvausan
17th August 2015, 09:35 PM
வினோத் சார் , பாராட்ட வார்த்தைகள் இல்லை . உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது , " கருத்து வேற்றுமைகள் வரலாம் , சில தேவைகளுக்காக பல உண்மைகள் மறைக்கப்படலாம் ,ஆனால் அவைகள் ஒரு நல்ல நட்பை பாதிக்காது , அது வேறு , இது வேறு " . மற்றவர்களை பாராட்டுவதில் நீங்கள் வகிக்கும் முதன்மைத்தன்மையை யாராலும் எட்டி பிடிக்கமுடியாது . நல்ல தேக ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன் .

===========

நன்றி திரு.ரவி சார்,

கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள் காரணமாக மக்கள் திலகத்தின் சாதனைகளை, சாதாரண நடிகனாக இருந்து மாநிலத்தின் முதல்வராக உயர்ந்த உலகின் முதல் நடிகரின் பெருமைகளை மறைக்க சிலர் முயற்சி செய்யலாம். அதற்கு நாங்கள் கண்ணியம் கெடாதபடி, நாகரிகமாக ஆதாரங்களுடன் பதில் அளிக்கலாம். அது வேறு.

அவை எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், நமது நட்புக்கு பழுது ஏற்படாதபடி, எங்கள் திரிக்கு வந்து திரு.வினோத் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தங்களின் பரந்த மனப்பான்மைக்கும் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன். நன்றி. பணிகள் காரணமாக மதுரகானத்துக்கு வரமுடியவில்லை. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபடி, தங்களின் அற்புதமான ‘திருக்குறளும் திரை இசையும்’ தொடரை மீண்டும் தொடங்கி விட்டீர்களா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
======================


திரு கலை சார் - நீங்கள் கேட்டுக்கொண்டதை மீறினால் நான் ஒரு நல்ல நண்பனாக இருக்க தகுதி அற்றவன் . உங்களுக்கு முடிந்தபோது அங்கும் வாருங்கள் - பொதுவாக பேச , யார் மனமும் புண் படாமல் பேச மதுர காணத் திரியைப்போல அருமையான திரி ஒன்று எங்குமே இருக்க முடியாது - இந்த மகத்தான சேவையை செய்த திரு வாசுவை புகழ வார்த்தைகள் இனி தமிழில் கிடைத்தால் தான் உண்டு .

நாம் எல்லோரும் இணைந்து இருவரில் ஒருவரை மட்டும் புகழ்ந்து , உண்மைகளை மட்டுமே பதிவிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரோக்கியம் குறைந்துகொண்டே வருகிறதே என்றுதான் நான் மிகவும் வருந்துகிறேன் . "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ? " என்று கேட்டோம் ஒரு நாள் - பல வருடங்களுக்கு பிறகு அந்த கேள்விக்கு நல்ல பதில் கிடைத்தது . ஆனால் அப்படி கேள்விகேட்டவ்ர்கள் நம்மிடையே இன்று இல்லை . இன்று வேறு விதமான கேள்வி , அதே தாக்கத்துடன் , அதே வேதனையுடன் !! என்று தணியும் இந்த மனகசப்புகள் நம் இருவரிடையே ?? நல்ல பதில் நாம் மறைந்த பிறகு கிடைத்தால் , நாம் படும் வேதனைகள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பிரயோசனம் ? தூக்கி எரிய வேண்டிய இந்த மனகசப்புக்களை ஏன் நாம் இருவரும் உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம் ?? இருவருமே ஒத்துக்கொள்ள முடியாத சில உண்மைகள் - அவைகள் அப்படியே இருந்து விட்டு போகட்டும் - அவைகளை தர்பாரில் இழுத்து கொண்டுவந்து ஏன் தலை குனிய வைக்க வேண்டும் ?

போதும் கலை சார் - நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளும் ( காஷ்மீர் உட்பட ) தீர்ந்து விடும் ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை போல தெரிகின்றது . எவ்வளவு நாட்கள் இன்னும் நாம் மனத்தால் ஒன்று படாமல் இருக்கப்போகிறோம் ?

உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - அதற்கு எனக்கு திறமையோ , தகுதியோ இல்லை - எல்லாம் தெரிந்த நீங்கள் ஒரு பாலமாக இந்த இரண்டு திரிகளுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் ஆசை . நட்பு என்பது கட்டப்பட வேண்டிய ஒன்று , கலைக்க பட வேண்டிய ஒன்று அல்ல .

அன்புடன்
ரவி
===============

நன்றி திரு.ரவி சார்,

தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. சர்ச்சைகள் எனக்கும் பிடிக்கவில்லை சார். நேற்று முன் தினம் மீனவ நண்பன் படம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். சர்ச்சைகளால் முடியவில்லை.

நான் எல்லாம் தெரிந்தவன் அல்ல சார். உங்களைப் போன்ற நல்லவர்கள் தெரிவிக்கும் உயர்ந்த கருத்துக்களை நான் மனதில் பதிய வைத்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போது எடுத்து விடுகிறேன், அவ்வளவுதான். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பணிகள் காரணமாக மதுரகானத்துக்கு வரமுடியவில்லை. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபடி, தங்களின் அற்புதமான ‘திருக்குறளும் திரை இசையும்’ தொடரை மீண்டும் தொடங்கி விட்டீர்களா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
======================

uvausan
17th August 2015, 10:07 PM
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

ஊக்கமே குரு

பகுதி 1

வயதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! ‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்.??

பகுதி 2

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.


பகுதி 3



https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito



https://www.youtube.com/watch?v=up1LosySq8E



https://www.youtube.com/watch?v=fj59rURInr0

vasudevan31355
17th August 2015, 10:20 PM
நாரதர் யாரோ அறியேன்... பைரவி ராகம் மனதை மயக்கும்போது தாஸேட்டனி குரல் மட்டுமே கேட்குது. படம் தெர்லீங்க..





மது அண்ணா! என்னால் நம்பவே முடியவில்லை. நிஜமாகவே உங்களுக்குப் படம் தெரியவில்லையா? இல்லை உங்கள் கேள்வி எனக்குத்தான் புரியவில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறது.

தமிழிலும், மலையாளத்திலும் நேரிடையாக எடுக்கப்பட்ட மெரிலேண்டின் 'சுவாமி ஐயப்பன்' படத்தில் தான் அந்தப் பாடல்.

1975 ஆம் ஆண்டு வந்த படம். இரு மொழிகளிலும் சக்கை போடு போட்டது.

தமிழ் நடிகர்களும், மலையாள நடிகர்களும் கலந்து ஒருசேர நடித்திருப்பார்கள்.

நம் ஜெமினி, ஏ.வி.எம்.ராஜன், லஷ்மி, பாலாஜி, வி.கே.ஆர், மனோகர், மாஸ்டர் சேகர் எல்லோரும் உண்டு அப்படியே மலையாள கும்பல் திக்குரிச்சி, ஆப்ரஹாம்,பகதூர், ராணிச்சந்திரா, உன்னி மேரி, ஸ்ரீவித்யா
என்று உண்டு.

நீங்கள் பதிந்துள்ள பாடலில் நாரதராக நடித்திருப்பவர் ஹரி என்று மலையாளத் திரைப்பட உலகில் அழைக்கப்படும் ஹரிகேஷன் தம்பி என்ற மலையாள நடிகர். இவர் டப்பிங் குரலுக்கு மிகவும் புகழ் பெற்றவர். தெலுங்கில் சிரஞ்சீவி உட்பட பல நடிகர்களுக்கு டப்பிங் தந்தவர். கிட்டத்தட்ட 1000 படங்கள். நிறைய மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். நாகார்ஜுனா, மோகன்பாபு, அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், கேப்டன் ராஜு, தேவன் என்று பிரபல நடிகர்களுக்கெல்லாம் டப்பிங் கொடுத்தவர்.

இதோ உங்களுக்காக 'சுவாமி ஐயப்பன்' மலையாளப் படத்தில் தேவராஜ் மாஸ்டரின் இசையில் அதே பாடல் வேறு டியூனில். ஆனால் தமிழ் போல இனிமை இல்லை. பாடியவரும் அதே தாஸேட்டன் தான். நடித்திருப்பவரும் அதே ஹரிதான்.

'ஹரிநாராயண கோவிந்தா
ஜெயநாராயண கோவிந்தா'


https://youtu.be/mqBkL3enESw

vasudevan31355
17th August 2015, 10:27 PM
ரவி சார்!

தங்கள் மீள்வருகைக்கு நன்றி! மிக சந்தோஷமாக இருக்கிறது. தங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி! வேலைநிறுத்த டென்ஷன் காரணமாக உங்கள் பதிவுகளை இன்னும் நான் படிக்கவில்லை. நிதானமாக படித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி!

madhu
18th August 2015, 05:23 AM
மது அண்ணா! என்னால் நம்பவே முடியவில்லை. நிஜமாகவே உங்களுக்குப் படம் தெரியவில்லையா? இல்லை உங்கள் கேள்வி எனக்குத்தான் புரியவில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறது.

தமிழிலும், மலையாளத்திலும் நேரிடையாக எடுக்கப்பட்ட மெரிலேண்டின் 'சுவாமி ஐயப்பன்' படத்தில் தான் அந்தப் பாடல்.



அய்யகோ ! வெட்கம்.. வெட்கம்... மன்னிச்சுக்குங்க வாசுஜி... அது ஸ்வாமி ஐயப்பன் படம் என்று தெரியும்.

வாசுஜி... நேரில் உரையாடும் சமயத்தில் பேசுவது போல எழுதினால் அது சில சமயங்களில் முழுக் காரணத்தையும் காட்டாமல் கவுத்துப் போட்டுவிடும் என்று அறியாமல் போனேன்..

நான் சொல்ல வந்தது என்னவென்றால் இனிமையான பாடலைக் கேட்கும்போது காட்சியைக் காணத் தோன்றவில்லை என்னபதைத்தான்.. ( திரையில் தோன்றும் படம் என்று சொல்லியிருக்கணும்..)

மாஸ்டர் சேகர் நடித்த இந்தப் படத்தைப் பார்த்து "அரிவராசனம்","சபரிமலையில் வண்ண", "ஸ்வாமியே சரணம் சரணம் என்னையப்பா", "அன்பு வடிவாக நின்றாய்" எனும் பாடல்களுடன் லட்சுமி ஆடும் மாதுரியின் "தங்கப்பதுமை" பாடல் வரை எல்லாமும் ரசித்தது நினைவில் இருக்கிறது.

ஆனால் நாரதராக நடித்தவர் பெயர் தெரியவில்லை. அதை உருப்படியாக எழுதத் தெரியாமல் போச்சு ! :(

தாங்க்ஸ்-ஓ- தாங்க்ஸ்

vasudevan31355
18th August 2015, 06:35 AM
மது அண்ணா!


அதே 'அய்யகோ! வெட்கம்! வெட்கம்' எனக்கும்.:) எனக்கு எப்படி இது புரியாமல் போயிற்று? அப்போதே ஒரு சந்தேகம் வந்தது. என்ன அண்ணா 'தாஸேட்டனி குரல் மட்டுமே கேட்குது' என்று சொல்லியுள்ளாரே என்று பல தடவை படித்துப் பார்த்தேன்தான். மரமண்டைக்கு ஏறல.:) இன்னொரு காமெடி வேற. 'குரல் மட்டுமே கேட்குது' அப்படின்னு வேற எழுதுனீங்களா? படம் சரியா தெரியுதான்னு வேற உத்துப் பார்க்கிறேன்.:) நல்லாவே தெரியுது. 'நாரதர் நல்லாத்தானே ரவுண்ட்ஸ் உடுறாரு' அப்படின்னு வேற நினச்சு 'மது அண்ணா சிஸ்டம் எதாவது ப்ராபளம் போல...ஆடியோ மட்டும் கேக்குது போல' அப்படின்னு வேற யோசிக்கிறேன். நாராயணா!நாராயணா!:)

கொஞ்சம் பொறி தட்டாம போச்சு. தோல்வி எனக்குத்தான்.:) மன்னிச்சுக்கோங்க!

vasudevan31355
18th August 2015, 06:41 AM
மது அண்ணா!

ஒரு 15 மார்க் கேள்வி ஒன்றை ரொம்பக் கஷ்டமா கேட்டுட்டீங்க. தேறுவனான்னு தெரியல.:) திருவிளையாடல் நாரதர் யாருன்னு சொல்ல கொஞ்சம் டைம் வேணும். நெஜமாவே ரொம்பக் கஷ்டம்.

vasudevan31355
18th August 2015, 08:51 AM
இதோ 'நவக்கிரக நாயகி' படத்தில் 'சோ' அவர்கள் மீண்டும் நாரத முனி வேடத்தில்.

http://i61.tinypic.com/30j6u4y.jpg

vasudevan31355
18th August 2015, 09:03 AM
ரவி சார்!

தங்கள் புதிய தொடருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

'தெய்வ நம்பிக்கை' தலைப்பில் தாங்கள் அளித்துள்ள கிருஷ்ணர், அவர் பக்தை கதை ரசனைக்குரியது. பலனை எதிர்பாராமல் கடவுளை, அவர் சொன்னதை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் எல்லா செல்வங்களும் தானே கேட்காமல் ஓடிவருமல்லவா ?

அந்த மேஸ்திரி கதை (ஊக்கமே குரு) மிகவும் அருமை! ஏமாற்ற நினைப்பவன் ஏமாந்து போவான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தர முடியாது.

மூன்று மதங்களுக்கான முத்தான பாடல்களுக்கு நன்றி! குரல்களுக்கும் நன்றி!

இந்த மாதிரி நீதி நெறிக் கதைகளை அளிப்பதற்கென்றே பிறந்தவர் தாங்கள்.

ஆமாம்! சென்ற பதிவில் ஏன் குசலகுமாரியையும், சரளாவையும் மறந்து விட்டுவிட்டீர்கள்?:) இது நியாயமில்லை.

vasudevan31355
18th August 2015, 09:49 AM
'குமார சம்பவம்' படத்தில் நாரதராக டி .கே.பாலச்சந்திரன். ('நீதி' படத்தில் ஜெயகௌசல்யாவின் கணவராக வருபவர்)

http://i.ytimg.com/vi/9jma5YCHx40/hqdefault.jpg

ஜேசுதாஸ் குரலில் நாரதர் 'சத்யம் சிவம் சுந்தரம்' பாடுகிறார்.


https://youtu.be/9jma5YCHx40

vasudevan31355
18th August 2015, 10:04 AM
’பாரிஜாதம்’ [1950] படத்தில் பி.எஸ்.சரோஜாவுடன் நாரதராக நாகர்கோவில் மஹாதேவன். இவர் 'என் மனைவி' படத்தின் ஹீரோ.

’பாரிஜாதம்’ பட டைட்டில் டைட்டிலில் நாகர்கோவில் மஹாதேவன் பெயர். டைட்டிலில் இன்னொன்று கவனித்தீர்களா? 'புளிமூட்டை' ராமசாமி போலி நரதராம்.

http://i62.tinypic.com/21cfa0l.jpg

https://antrukandamugam.files.wordpress.com/2014/12/nagetcoil-mahadevan-parijatham-2.jpg

vasudevan31355
18th August 2015, 10:21 AM
'பாரிஜாதம்' படத்தில் போலி நாரதராக 'புளிமூட்டை' ராமசாமி என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன்.

http://i60.tinypic.com/2wgt6i8.jpg

vasudevan31355
18th August 2015, 10:41 AM
மது அண்ணா!

'ரம்பையின்' காதல் படத்தில் நம்ப நம்பியார் நாரதர் வேஷம் கட்டியிருக்கார்.

http://i58.tinypic.com/2us8v0x.jpg

eehaiupehazij
18th August 2015, 11:41 AM
சூப்பர் பாட்டீஸ் டூப்பர் பாட்டூஸ்
அழகிய பாட்டிகளின் அமுதப் பாட்டுக்கள்!! / Graceful Grannies'Grand Gala Gems!
பகுதி 1 : பத்மினி
தமிழ்த் திரையுலகம் கண்ட பாட்டியம்மாக்களில் மிகமிக அழகான பாட்டி நாட்டியப் பேரொளியே!!
பூவே பூச்சுட வாவில் கதாநாயகி நதியாவை விட அழகில் பட்டொளி வீசிப் பறந்தார் பப்பிப்பாட்டி!

https://www.youtube.com/watch?v=x-_svyl0V0I

மாடர்ன் டிரெஸ் இந்த வயதிலும் பப்பிம்மாவுக்கு எத்தனை பாந்தம் !!
பேத்திக்கு உடல்நிலை பாதிப்பறிந்து காணோளியின் துவக்கத்தில் அவர் அதிரும் குளோசப் முகபாவங்கள் வியட்நாம் வீட்டில் நடிகர்திலகத்துடன் நடித்ததன்
பெண்மைப் பிரதிபலிப்பே !

https://www.youtube.com/watch?v=wDOUp9H_mTA

madhu
18th August 2015, 11:46 AM
குமார சம்பவம் என்றதும் ராஜஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆடும் நடனம் ஒன்று நினைவுக்கு வந்தது.. பி.லீலாவும் ராதா ஜெயலக்ஷ்மியும் பாடிய இந்த மலையாளப் பாட்டை அனேகமாக எல்லா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் பாடாமல் இருப்பதில்லை.

கிளாசிகல் இசையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு அருமையான பாடல். மலையாள வார்த்தைகள் சுலபமாக அர்த்தம் புரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் கஷ்டம் என்றாலும் ரசிக்கும்போது அதெல்லாம் மறைந்து போகும்.

https://www.youtube.com/watch?v=-v_gM-V1TmM

vasudevan31355
18th August 2015, 11:48 AM
செந்தில் சார்!

ஆச்சிக் கெழவிக்கு முதல் இரவாம். கேட்டாலே கிறுகிறுக்குமாம். அம்மாடி! எத்தனை பாட்டிகள்!

உங்களுக்கு சின்னக் கண்ணன் மேல் என்ன கோபம்? இன்னும் ஒரு வாரத்துக்கு இந்தப் பக்கம் தலை வைக்க மாட்டார். பிடியுங்கள் சின்னா சாபம்.


https://youtu.be/LobMilpZz5s

vasudevan31355
18th August 2015, 11:55 AM
அதே 'குமார சம்பவ'த்தில் நம்ம பத்மினியும், ஜெமினியும் ஆடும் சிவ, பார்வதி நடனம். நன்றாகத்தான் இருக்கிறது.


https://youtu.be/AkOEA8576vs

eehaiupehazij
18th August 2015, 12:08 PM
வாசு சார்
சின்னாவை சாந்தப்படுத்த வரிசையாக வரப்போகும் பாட்டியம்மாக்கள் பண்டரிபாய் சுஜாதா பானுமதி மனோரமா , ராஜம்மா......
சின்னாபின்னமாகாமல் சீரும் சிறப்புமாக ..!
செந்தில்

chinnakkannan
18th August 2015, 12:21 PM
சி.செ.... நற நற நற நற நற நற :)

ருக்குமணி ருக்குமணி அக்கம்பக்கம் என்ன சத்தம் ..பாட்டிகள் டான்ஸ் தான் நினைவுக்கு வருது!

vasudevan31355
18th August 2015, 01:13 PM
வாசு சார்
சின்னாவை சாந்தப்படுத்த வரிசையாக வரப்போகும் பாட்டியம்மாக்கள் பண்டரிபாய் சுஜாதா பானுமதி மனோரமா , ராஜம்மா......
சின்னாபின்னமாகாமல் சீரும் சிறப்புமாக ..!
செந்தில்

செந்தில் சார்!

நீங்க கொடுத்திருக்கிற லிஸ்ட் பார்த்ததும் எனக்கே தாங்க முடியலியே! பாவம்! கொழந்தே எப்படித் தாங்கும்?

சுஜாதா பாட்டி - வா கண்ணா வாவுல

மனோரமா பாட்டி- பாட்டி சொல்லைத் தடாதேவுல

பானுமதி பாட்டி - செம்பருத்தியிலே

ராஜம்மா பாட்டி - எங்க பாப்பாவுல

பண்டரிபாய் பாட்டி - எதுல?

அப்புறம் சச்சு பாட்டி என்னாச்சு?

காந்திமதி பாட்டி என்னாச்சு?

vasudevan31355
18th August 2015, 01:15 PM
சின்னா!

நற நற நறன்னு அழணும். சிரிக்கிறீக. அப்பா ஓகேவா?:)

chinnakkannan
18th August 2015, 03:56 PM
சி.க:பாட்டி வரும் பாட்டி வரும்..

வாசு: ஓஹோ

சி.க..இழை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டி வரும்..
அதை சி.செயும் கட்டம் போட்டுக் கூட்டி வரும்..! :) (வருவார் எனக் கொள்க..)

எனக்கு இந்த ப் பாட்டி பிடிக்கும்..


//காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான் ம்ம்//

படம் பார்த்த போது அது யாரு இன்னொரு ஹீரோயின் இவ்ளோ லேட்டா என நினைத்த்துண்டு..ம்ம்..

eehaiupehazij
18th August 2015, 08:00 PM
போட்டு வாங்கலாம்னு பீலா விட்டா கழுவற தண்ணிலே நழுவற மீனா இருக்கிறீங்களே வாசு/சின்னா சார்ஸ்!!

eehaiupehazij
18th August 2015, 08:24 PM
ஆஹா சி க !
ஏகப்பட்ட பாட்டிப் போட்டி வரும்போல இருக்கே !
வின்னரில் வரும் ராஜம் பாட்டியும் வாழ்க்கைப்படகு ராஜம்மா பாட்டியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் !

குடியிருந்த கோயிலில் வரும் நாகேஷிப் பாட்டியும் வளர இஷ்டமானு !

RAGHAVENDRA
18th August 2015, 08:28 PM
வாசு , சி.க. சார்ஸ்
உஷார்... சி.செ. ஏதோ தீர்மானம் பண்ணிட்டார் போல. கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியான்னு எல்லாரையும் அழைக்கப் போகிறார்...

eehaiupehazij
18th August 2015, 08:36 PM
வாங்க வாங்க குருஜி !
ஒருகாலத்துக் கனவுக்கன்னிகள் இன்னொரு காலத்தில் அக்காக்களாக அம்மாக்களாக உருமாறி பிற்காலத்தில் பாட்டிகளாக முடிந்தாலும் நமது கதாநாயகர்கள் அவர்களுக்கே பேரன்களாக நடிக்காமல் விட்டது நாம் செய்த புண்ணியமே!ஜோதிப் பாட்டி எப்படி உங்களை ஈர்த்திருக்கிறார்?!

eehaiupehazij
18th August 2015, 08:44 PM
நீங்கள் அனைவரும் யூகிப்பது சரியே !
அடுத்த கான்செப்ட் இதுதான் !! பாட்டி மஞ்சக் குளிச்ச கதை பேராண்டிகளே!!
அப்போதுதான் பறித்துப் போட்ட பன்னீர் புஷ்பங்களாக அறிமுகமான நமது இதய நாயகியரின் இளமை டு இலையுதிர் காலமான முதுமை பரிணாம மாற்றங்கள் ! அத்தோடு இணைந்த மதுர கானங்கள்.....

பாட்டி சொன்ன கதை எக்காலத்திலும் நமக்குப் பிரியமானதே!

ஆட்சேபணைகள் வரவே(ற்/ர்)க்கப் படுகின்றன !!

chinnakkannan
18th August 2015, 08:48 PM
//கழுவற தண்ணிலே நழுவற மீனா இருக்கிறீங்களே வாசு/சின்னா// ஓய்.. நான் ஆரம்பத்தில இருந்தே பாண்டிய நாட்டான்.. வாசு அவரோட முன்னோர்கள் எங்கேயோ மதுரைக்குப் பக்கத்துல பெண் எடுத்ததாகக் கேள்வி..ஸோ அவரும் பாண்டியரே!

*

ராகவேந்திரா சார் கவலையே படாதீங்க.. எங்க பாட்டி ஏற்கெனவே ஊட்டி வளர்த்திருக்காங்க..

பாட்டி பலவிதமாய்ப் பாட்டினிலே சொல்லித்தான்
ஊட்டி விடுவார் உணர்வினில் – தீட்டிய
கத்தியாய்க் கூர்மையாய் காண்பவர் போற்றவும்
புத்தி மிளிர்ந்ததே பார் (ரும்)

இருந்தாலும் கொஞ்சம் அன்றும் இன்றுமா வெச்சுக்கலாம்..ஓகேங்களா!

*

*

சரி சி.செ. அன்றைய பார்ட்டி லஷ்மியின் பாடல்

https://youtu.be/pp7ZvB0Uy1A

Bhool Gaya Sab Kuch கொஞ்சூண்டு தமிழ்ப் படுத் படுத்தினேன் :)

*

எல்லாம் எனக்கு மறந்துவிட்டது.. இப்போது எதுவும் நினைவிலில்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் என்றும் மறக்கமாட்டேன்..அது..ஜூலீ…ஐ..லவ் யூ..

சரிதாண்டா..ம்ம்ம்.. எல்லாம் எனக்கும் மறந்துவிட்டது.. இப்போது எதுவும் நினைவிலில்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் என்றும் மறக்கமாட்டேன்..அது..ஜூலீ…ஜூலி லவ்ஸ் யூ..

இவ்வளவு தூரம் செல்லாதே நெருங்குவதற்கு எனக்குக் கஷ்டம்

இவ்வளவு தூரம்குறைவதும் கஷ்டம் தான்..விலகுவதற்கு

நான் சொல்வதைக் கேட்கிறாயா..

ஷ்.. நான் ஒரு மின்சாரப் பொறியைத் தொட்டுக்கொண்டிருக்கிறேன்

எவ்வளவு ஷோகமாகும் தெரியுமா.. என் தாகம் அடங்காமல் என் காதல் இறந்தால்..

ம்ம் போய்யா.. இந்த மாலை நேரம் நம்மிருவருக்கும் அவமரியாதையைத் தந்தால் அது எவ்வளவு சோகம் தெரியுமா..

இப்போ நானும் சரின்னு உன்னை வற்புறுத்தாமல் இருந்தால்….

ம்ம் நானும் பேச்சு மாற்றுவேன் தெரியுமில்லையா..ஒண்ணு தெரியுமா உனக்கு..

என்னாது..

இதெல்லாம் விஷயமே இல்லை.. ஒன்றே ஒன்று தான் விஷயம்..நிஜமும் கூட…அது….ஜூலி… ஜூலி லவ்ஸ் யூ..புரிஞ்சுதாடா செல்லக் கடங்காரா!


இன்றைய பாட்டி லஷ்மியின் பாட்டு.. பாட்டிலேயே பாட்டி வருமே..

*

வாராயோ தோழி வளமான தோழி வாய்விட்டுலூட்டி அடி – ஜீன்ஸ் பாடல்..யூ ட்யூபில் பார்த்துக்கொள்க…!


*
..

chinnakkannan
18th August 2015, 08:50 PM
ஹச்சோ.. நான் முந்திக்கிட்டேனா.. நீங்க ஆரம்பிங்க சி.செ..யார் ஆட்சேபிக்கறாங்கன்னு நான், ராகவேந்தர், வாசு, மதுண்ணா பார்க்கறோம்..:)

eehaiupehazij
18th August 2015, 09:14 PM
சி க
பாட்டிகளின் ப்யூட்டிகளை கலைவாணக் கவித்துவமாக சிலை வடித்து விட்டீர்கள் !
வாசு சாரும் மது சாரும் ராகவேந்தர் சாரும் ரவி சாரும் என்ன சாறு பிழியப் போகிறார்களோ ?
பாட்டிகளின் பாட்டுப் போட்டி பட்டி தொட்டியெங்கும் வெற்றிக்கொடி நாட்டி விடும்போல இருக்கிறதே !

eehaiupehazij
18th August 2015, 09:21 PM
Gap filler / Monotony breaker!

Naagesh Granny Get up in Kudiyirundha Koil! No song...but enjoyable!! for a change before we resume our business...!

Must watch from 5:43 for Nakesh's versatility! You Tube link

https://www.youtube.com/watch?v=cbqMfEVIfp4

uvausan
18th August 2015, 09:48 PM
வாசு /CK / செந்தில் - என்ன நடக்குது இங்கே ? ஒரே குழப்பமாக இருக்கிறது - கொஞ்சம் நேரம் நாரதரை அழைத்து வந்தீர்கள் , பிறகு பாட்டிகள் - இவர்கள் சராளாவையும் , குசல குமாரியையும் வெளிநடப்பு செய்ய வைத்தார்கள் ... நான் மட்டும் வேறு தேசத்தில் வசிப்பதைப்போன்ற ஒரு பிரமை - என் வழி தனி வழியாக இருந்தாலும் இங்கு சமீபத்தில் போடும் பதிவுகள் அதுவும் தடம் பதித்தவர்களிடம் வரும் பொழுது சற்றே என்னை சிந்திக்க வைக்கின்றது நானும் தடம் புரண்டால் என்னவென்று !! :):smokesmile:

RAGHAVENDRA
18th August 2015, 09:52 PM
http://www.noolulagam.com/book_images/17233.jpg

...

இவர்களுக்கு என்ன பாட்(டி)டு போடுவது...

eehaiupehazij
18th August 2015, 10:03 PM
ரவி சார்
ஒரு பார்முலாவிலேயே போய்க்கொண்டிருந்தால் மன சோர்வு ஏற்பட்டு விடும் !
இது ஒரு சின்ன சேஞ்சுக்காக !
மதுர கானங்கள் பியூட்டிகளுக்காக மட்டுமல்லவே !! ஒருகாலத்துப் பியூட்டிகள் பாட்டிகளானாலும் மதுர கானங்களைத் தருவதில் சளைக்கவில்லை என்பதை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு நாலைந்து பகுதிகள் மட்டுமே ! பிறகு நமது பாதைக்கு புத்துணர்ச்சியுடன் வந்து விடுவோம்!!
வாங்க ரவி...ரிலாக்ஸ்...பாட்டிகளின் மலரும் நினைவுகளில் கொஞ்சம் நீந்துவோமே!

eehaiupehazij
18th August 2015, 10:08 PM
குருஜி !
ஏதோவொரு படத்தில் பாக்கியம் ராமசாமியின் அமரத்துவம் வாய்ந்த அப்புசாமி சீதாப்பாட்டி கிளிப்பிங் வந்த ஞாபகம் !
வாசு வாசு பண்ணிப் பார்த்தால் கிடைத்து விடுமே!

eehaiupehazij
18th August 2015, 10:31 PM
சூப்பர் பாட்டீஸ் டூப்பர் பாட்டூஸ்
அழகிய பாட்டிகளின் அமுதப் பாட்டுக்கள்!! / Graceful Grannies'Grand Gala Gems!
பகுதி 2 : பானுமதி


நடிப்புக்கு இலக்கணம் வடித்த நடிகை என்று அறிஞர் அண்ணாவால் சிலாகிக்கப் பட்டாலும் நடிகர்திலகத்துடன் அவர் ஜோடியாக நடித்த படங்களில்'மருந்தைக் குடிக்கும் போது குரங்கு ஞாபகம்' வருவது போல மனக்குரங்கு பானுமதியம்மாவை இளமையான சிவாஜியுடன் ஏற்க மறுக்கிறது! அறிவாளி, ரங்கோன் ராதா அம்பிகாபதி படங்களில் நடிப்பால் சிறப்பித்தாலும் .....

ஆனால் பானுமதியம்மா மிக இளமையாக என் கண்களுக்கு தோன்றியது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்திலேயே...அட்டகாசமான ஆரம்ப அறிமுகப் பாடலில் ஆடலரசி மார்சியானாவாக!
https://www.youtube.com/watch?v=nrdxKy2J0Zw

மதிப்பான வளர்ப்பு அம்மாவாக அன்னையில் மனதைப் பிழிந்தார் ஒரு மறக்க முடியாத சோக மதுர கானத்துடன்!!

https://www.youtube.com/watch?v=xA7wR5z2OEo

தலைமுறைகள் தாண்டி செம்பருத்தியில் பிரசாந்தின் பாட்டியாக முதிர்ந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார் !!!
([url]https://www.youtube.com/watch?v=MkmOkJOG9lI)

Russellxor
18th August 2015, 10:43 PM
நடிகர்திலகம் இளையதிலகம்
இருவரின் "பூ"பாடல்கள்.

நடிகர்திலகம்
1.பூ மாலையில் ஓர் மல்லிகை
2.பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
3.பூங்காற்று திரும்புமா?
4.பூப்போலே உன் புன்னகையில்

இளையதிலகம்
1.பூவே இனிய பூவே
2.பூ பூத்த செடியக் காணோம்
3.பூத்து பூத்து குலுங்குதடி பூவு
4.பூம்பாறையில் பொட்டு வச்ச
5.பூவில் ஒரு வண்டு

படங்கள்:
பூ பூவா பூத்திருக்கு.இளையதிலகம்

பூப்பறிக்க வருகிறோம்.நடிகர்திலகம்

chinnakkannan
18th August 2015, 10:49 PM
செந்தில்வேல்.. பூ வை விட மலர் ந.தி பாட் இருக்கே

மலரே குறிஞ்சி மலரே
மலர்களிலே பல நிறம் கண்டேன்

இளைய திலகத்தின்..பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோஜாப்பூ..

போன பாக்த்தில் ஒரு அழகிய நண்பர் என்னோடு சேர்ந்து பாட் பாடிக்கொண்டிருந்தார் (கல் நாயக் என்பது அவர் பெயர்..கல் நெஞ்சக்காரர்..இப்போல்லாம் வரலை..என்னகாரணமோ..) அவர் அழகாக நிறைய பூப் பாடல்களாக ப் போட்டு த் தொடுத்திருந்தார்... :sad:

அப்புறம் தமிழக ஷர்மிளா தாகூர் வாணிஸ்ரீ யோட என்ன்ன் ராஜாவின் ரோஜா முகம்..(ஹச்சோ சி.செ பாட்டி சீரீஸ்ல குறுக்கிட்டு விட்டேனோ..! (சி.செ..ஒய் நோ கட்டம் நெளவ டேஸ்.,..? எ.மே. கோபமா?)

chinnakkannan
18th August 2015, 10:55 PM
//பானுமதியம்மாவை இளமையான சிவாஜியுடன் ஏற்க மறுக்கிறது! அறிவாளி, ரங்கோன் ராதா அம்பிகாபதி படங்களில் நடிப்பால் சிறப்பித்தாலும் .....// என் கருத்தும் அதுவே..அட்லீஸ்ட் சாரங்கதாராவில் கொஞ்சம் ஒல்லியாக இருந்தார் என நினைவு (இஸிட் ஸோ வாசு?) ஆனால் ஜோடியில்லையே..

கொஞ்சம் சகலகலா வல்லி தான்..கணீர்க் குரலில் பாடும்பாடல்கள் ராமனுக்கு மன்னன் முடி சரிதானே இன்னும் சில பாடல்கள் பிடிக்கும்..

rajraj
18th August 2015, 11:03 PM
ராமனுக்கு மன்னன் முடி சரிதானே இன்னும் சில பாடல்கள் பிடிக்கும்..

It is " raamanukku mannan mudi thariththaale..." ! :)

rajraj
19th August 2015, 04:12 AM
You listened to paatti songs. Here are two paappaa songs:

From Samsaaram

ammaa pasikkudhe thaaye pasikkudhe.....

http://www.youtube.com/watch?v=EbYEdoN9PNo

From the Hindi version Sansaar

ammaa roti de baabaa roti de.....

http://www.youtube.com/watch?v=cijAc1zW3w8

eehaiupehazij
19th August 2015, 07:56 AM
You listened to paatti songs. Here are two paappaa songs:

From Samsaaram

ammaa pasikkudhe thaaye pasikkudhe.....

[url]http://www.youtube.com/watch?v=EbYEdoN9PNo

From the Hindi version Sansaar

ammaa roti de baabaa roti de.....

[url]http://www.youtube.com/watch?v=cijAc1zW3w8

Excellent recollection rajraj sir
Children are deemed as Pattoos (silkys)! After Paattees Paattoos it is enjoyable to have Pattoos Paattoos! Thanks for the churning!!
senthil

eehaiupehazij
19th August 2015, 08:04 AM
Rajraj sir
we can add Kuzhandhaiyum dheivamum song with the excellent twin performance by Kutti Padmini !! For your jugal bandhi collection...!


https://www.youtube.com/watch?v=S_k8vho6wAg

In Do Kalyan...Neethu Singh's entry as child artiste?..

https://www.youtube.com/watch?v=XniLkfq533Y

rajraj
19th August 2015, 08:48 AM
Thanks Senthil. Some songs you never forget. Samsaram was a popular movie in the 50s. The songs were popular too.
'ammaa pasikkudhe' was used by children to tease their mothers if their food was late ! :) Thanks for the kuzhandhaiyum dheivamum song. I like children. Now I have two grandchildren in California. We are visiting them in September. It is fun to be with them ! :)



Excellent recollection rajraj sir
Children are deemed as Pattoos (silkys)! After Paattees Paattoos it is enjoyable to have Pattoos Paattoos! Thanks for the churning!!
senthil

raagadevan
19th August 2015, 09:29 AM
As the proud father of two daughters, I would like to post this song... :)
This song refers to both my daughters!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐயா
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்த ஒரே ஒரு பொண்ணு
அவள் பொண்ணு இல்லை பொண்ணு இல்லை
கடவுளோட கண்ணு...

https://www.youtube.com/watch?v=AlwB7poNlok

uvausan
19th August 2015, 11:20 AM
வாசு - நடிகர் திலகம் திரை உலக "ராஜா " என்றால் நீங்களும் எங்களுக்கு முடிசூடா மன்னர்தான் - அருமையாக பதிவுகள் போடுவதிலும் , ஆழமாக போடும் கருத்துக்களில் ஒரு இனிமையை கொண்டுவருவதிலும் . பல பிரச்சனைகள் உங்களை வேதனைப்படுத்தும் இந்த நேரத்திலும் , அதை சற்றும் பொருட்படுத்தாமல் , அந்த சோகம் பதிவிகளில் வரவிடாமல் மிகவும் தெளிவாக அலசி உள்ளீர்கள் . பதிவுகள் போட்டு அதில் அடையும் சுகத்தை விட , தூர நின்று உங்கள் பதிவுகளைபிடிக்கும் போது வரும் சுகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை . உங்கள் பிரச்சைனகள் எல்லாவற்றிற்கும் சீக்கிரமே ஒரு நல்ல , எதிர்ப்பார்க்கும் தீர்வு கிடைக்க எங்களுடைய வேண்டுதல்களை பலப்படுதிக்கொள்கிறோம் .
:clap::clap::clap:

vasudevan31355
19th August 2015, 12:10 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

28

'வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்'

'மீண்டும் வாழ்வேன்'

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/Meendum-Vazhven-300x240.png

இன்று தொடரில் எழுதப் போகும் பாலா பாடலை நினைத்தாலே கடல் அலைகளில் மிதப்பது போல உள்ளம் குளிருகிறது. 'மீண்டும் மீண்டும்' பாலா பாடல்களுக்காவே 'வாழ்வேன்' என்று கூட கத்தத் தோணுகிறது.

http://padamhosting.me/out.php/i105456_vlcsnap131217.png

'ராணி புரடக்ஷன்ஸ்' அளிக்கும் 'மீண்டும் வாழ்வேன்' என்ற படத்தில் வரும் இந்த பாலாவின் பாடல் என் நெஞ்சில் நிலையாக நின்றுவிட்ட பாடல்.

'மீண்டும் வாழ்வேன்' படத்தின் நாயகன் ரவிச்சந்திரன். இதிலும் கலர்ப்பட நாயகன். வழக்கமான காதல், அடிதடி, மோதல், மாறுவேஷம், ('பலே பாண்டியா" நடிகர் திலகத்தின் விஞ்ஞானி பாத்திரத்தை இதில் ரவி டாக்டராக செய்ய முயன்றிருப்பார்) சென்டிமெண்ட் என்று எல்லாமே இதிலும் உண்டு.

http://padamhosting.me/out.php/i105453_vlcsnap127562.pnghttp://padamhosting.me/out.php/i105463_vlcsnap136428.png

பாரதி நாயகி. எல்லோருக்கும் பிடித்தமானவர்.

மனோகர் , நாகேஷ், மேஜர், தேங்காய், 'அஞ்சல் பெட்டி' முத்தையா, ஜெயகுமாரி, விஜயலலிதா, எஸ்.வரலஷ்மி என்று நிறைய நடிக நடிகையர்.

பாடல்கள் கண்ணதாசன். ஒளிப்பதிவு எம்.ஏ.தாரா. ஒளிப்பதிவு டைரெக்டர் கே.எஸ்.பிரசாத். இசை 'மெல்லிசை மன்னர்'. ஆனால் ஆர்ப்பாட்டம். உதவி கோவர்தனம், ஜோசப் கிருஷ்ணா. தயாரிப்பு வி.சி. ஜெயின், ஜி.சி.லால்வாணி. கதை, வசனம், இயக்கம் டி.என்.பாலு. ராமண்ணா பட்டறையிலிருந்து வந்ததால் ஃபிரேம் டு ஃபிரேம் ராமண்ணாவின் படம் பார்ப்பது போன்றே இருக்கும். ஆனாலும் இன்ட்ரெஸ்டிங்.

நாயகி பாரதியை மயக்கமாக்கித் தன் இடத்திற்குக் கொண்டு வர பிளான் போடுகிறார் மனோகர். கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் பாரதியை எப்படியாவது மயக்கிக் கொண்டு வருமாறு மனோகர் தன்னுடைய பெண் அடியாட்களிடம் ஆணையிட, ஹலம் உள்ளிட்ட பெண் ரவுடிகள் பாரதியை கடற்கரயில் டிஸ்டர்ப் செய்கிறார்கள். விஷயம் தெரியாமல் அடியாட்களை அங்கே கொண்டு வரும் டாக்ஸி டிரைவர் நாயகன் ரவி இந்த சதித் திட்டத்தைக் கேட்டு விடுகிறார். அப்புறமென்ன? கடற்கரையில் பாடி, ஆடிக் கொண்டிருக்கும் பாரதியை நாயகன் ரவி அந்த பெண் ரவுடிகளுடனேயே சேர்ந்து ஆடிப் பாடி, அவர்களை விரட்டி காப்பாற்றி விடுகிறார்.

இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.

அழகான குளுமையான படப்பிடிப்பு. எலியட்ஸ் பீச்சில் படம் பிடித்திருப்பார்கள். படம் வண்ணம் வேறா! அள்ளுகிறது. நமக்கும் கடற்கரையில் இருப்பது போன்றே 'சில்'அனுபவமும் கிடைக்கிறது.

http://i58.tinypic.com/2ugkuxl.jpg

துள்ளித் துள்ளி வரும் அலைகளுக்கு மத்தியில் பந்து விளையாடும் கருப்பு சிவப்புக் கலரில் (டி.என்.பாலு 'அறிஞர்' அண்ணாவின் தீவிரத் தொண்டர். திமுக அபிமானி. அதனால்தான் இந்த கலரில் உடையோ? கலர் கலராய் ரிப்பன்களை இணைத்து ஒரு குட்டை கவுன் தயாரித்திருப்பார்கள் போல) குட்டை கவுன் அணிந்த குதூகல புள்ளிமானாய் பாரதி. எழில் கொஞ்சுகிறது. ஸ்லிம்மான உடல் ஆதலால் அந்த கவுன் 'நச்'சென்று பொருந்துகிறது. பல இளைஞர்களின் தூக்கம் கலைந்திருக்கலாம் அந்த நாட்களில். இளமை பூத்துக் குலுங்குகிறது. 'ம்....கொடுத்து வைத்த விஷ்ணுவர்த்தன்' என்று மஸ்கட்டில் ஒருவர் புலம்புவதும் காதில் விழுகிறது. பாரதி கடலில் குளிக்க குளிக்க பார்ப்பவருக்கு உஷ்ணம் ஏறாமல் என்ன பண்ணுமாம்?

4 ரவுடிப் பெண்களும் (இவர்களுக்கும் அரைகுறை நீச்சல் உடை ஆடைகள்) பாரதியை எப்படியாவது மயக்கிவிட பார்க்க, இது புரியாமல் பாரதி திண்டாட, தூர இருந்து கவனிக்கும் ரவி நடுவில் புகுந்து 4 வில்லிகளையும் வலைப் போட்டு மாட்டி, பாரதியிடமும் உண்மையை சொல்லி அவரைக் காப்பாற்றுவார். இதில் ஒரு ஆள் நமக்குத் தெரிந்த முகம். ஹலம். ஒல்லியாக இருப்பார். பிளாக் கலர் உடை அணிந்திருப்பார்.

பாரதி வேறு பாடலில்,

'நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள் நீரோடு ஓடட்டுமே!'

என்று இன்னும் நம் ஹார்ட்டைத் துடிக்க வைப்பார்.:) இந்த வரிகளில் மிக அழகான மூவ்மெண்ட்ஸ் கொடுப்பார் பாரதி. இடையோ அது இல்லையோ என்னும் அளவிற்கு கொடி இடை அழகியாய் அப்போதைய அபூர்வ ஒரே ஒரு அழகி இவர். மத்ததெல்லாம் பேரல்தான். ஜோதியை வேணுமினா சேர்த்துக்கலாம்.

முதல் சரணம் பாரதி ஈஸ்வரி குரலில் பாடி முடித்ததும் 4 வில்லிகளும் பாரதியை ஒன்றாக இழுத்து தண்ணீரில் மூழ்க வைக்க முயற்சி செய்ய, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரவி ஷர்ட்டைக் கழற்றிப் போட்டுவிட்டு நெக் பனியன், பேண்டோடு ஓடிவந்து (ஹோம் கார்ட் தொப்பி வேறு)

'லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா'

என்று பாலாவின் குரலில் பாடியபடி ஓடிவந்து, பாரதியை அவர்களிடமிருந்து காப்பாற்றி, பின் அவர்களை இம்சை செய்து, பாடலைத் தொடருவார். ரவி நன்றாக சதை போட்டிருப்பார். ஆனால் சுறுசுறுப்பு அப்படியேதான். ஆட்டமும் ரகளைதான். அப்புறம் மீன் வலை போட்டு வில்லிகளைப் பிடித்து ஒருவழி பண்ணுவார். ரவிக்கே உரித்தான கலாய்ப்புகள் வழக்கமாக உண்டு. ஆனால் மூச்சைப் பிடித்து தண்ணீரில் மூழ்கி கரையிலேயே, கால் அளவு தண்ணியிலேயே, தரையிலேயே எழுந்திருப்பது செம காமெடி.

காட்சிக்குத் தகுந்த அருமையான பாடல். 'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார்.

பாலா பிஞ்சுக் குரலில் நெஞ்சை அள்ளுவார். வாழைத்தண்டு போல குரல் 'வழுவழு'வென்று அவ்வளவு அழகாக இருக்கும். அதுவும்,

'லா... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா'

எடுத்து அவர் போர்ஷனைத் தொடங்கும் போது நம்மையே ஒரு கணம் மறக்கச் செய்து விடுவார்.

ஈஸ்வரி ராட்சஸி ஜாடிக்குத் தகுந்த மூடியாக பாலாவுக்கு செம பொருத்தம். ரெண்டுமே ரகளை பண்ணி ரெண்டு படுத்தக்கூடிய ஜென்மங்கள். கேட்கவா வேண்டும்?

பாடலின் நடுவில்,

'ஆஷாஷாஷாஷா' 'ஹாஹஹாங்', 'ஹே ஹே ஹே' ' என்றெல்லாம் ரகளை சப்தங்கள் கொடுக்க ராட்சஸி தவிர வேறு யார்? இந்தியில் ஓரளவிற்கு ஆஷா.

பாடலின் துவக்க இசை 'அவளுக்கென்று ஒர் மனம்' படத்தின் 'மலர் எது' பாடலின் துவக்க இசையை ஞாபகப்படுத்தும். உச்சி வெயிலில் நிழல் மிகக் குறுகித் தெரிய, பாரதி ஜாலியாகக் குளிப்பார். பல்லவி முடிந்ததும் வரும் அந்த உற்சாக

'டன் டன் டான் டன் டட ...
டன் டன் டான் டன் டட ...
டன் டன் டான் டன் டட'...

ஃபாஸ்ட் பீட்டை மறக்கவே முடியாது. ஆர்கனும், புல்லாங்குழலும், கிளாரினெட்டும், தபேலாவும் சும்மா இணைந்து அமர்க்களம். அது முடிந்து அப்படியே சற்று வேகம் குறைந்து வயலின் ஓசை இனிமையாக பேசும். ஈஸ்வரி பாடப் பாட தொடரும் கோரஸ் குரல்களில் ஒலிக்கும் அந்த 'ஹாஹா' செமையாக மேட்ச் ஆகும்.

இந்தப் பாடலை முழுமையாகக் கூர்ந்து கவனித்து நோக்கினால் மதியம் தொடங்கி ஈவ்னிங்கிற்குள் ஷூட்டிங் முடித்திருப்பார்கள் என்று தெரிகிறது. பாடல் முடியும்போது பாரதி, ரவி இவர்களின் நிழல் நீண்டிருக்கும். பாடலின் துவக்கத்திலிருந்து இறுதிவரை நடிகர்களின் நிழல்கள் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக நீளும்.

ஸ்டுடியோ வாசனையே இல்லாமல் இப்பாடல் முழுதுமே எலியட்ஸ் பீச்சில் வெளிப்புறப் படப்பிடிப்பாக கடலில் படமாக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பான விசேஷம். அதனாலேயே பாடல் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

'பாடட்டுமே... ஆடட்டுமே... மோதட்டுமே... நீந்தட்டுமே...பேசட்டுமே... ஆகட்டுமே... கூடட்டுமே... காணட்டுமே'...

என்று பாடலில் நிறைய 'மே'க்கள். ஒவ்வொரு முறையும் பாலாவும், ஈஸ்வரியும் இந்த 'மே' விற்குக் கொடுக்கும் அதிர்வலைகளை எளிதில் மறந்து விட முடியாது நம்மால்.

நடிகர்கள், அம்சமான இசை, ஒளிப்பதிவு, சிறப்பான பாடகர்கள், ஜாலியான நடனம், அளவான கிளாமர், கடல் குளுமை, ஸ்லிம் கதாநாயகி, கவர்ச்சிக் கன்னியர், கவரும் வண்ணம் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்து என்றும் நம் மனதில் இளமையாய் வாழும் பாடல். பாலா என்ற கடலில் கிடைத்த இன்னொரு கோமேதகம் என் ராட்சஸியின் துணையோடு.

என் வரையில் மிக மிக கவர்ந்த பாலாவின் பாடல். உற்சாக டானிக் பாடல்.

http://i.ytimg.com/vi/YvigJkZCdIk/hqdefault.jpg

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று

ம்ம்ம்ம்......ம்

தாலாட்ட

ம்ம்ம்ம்......ம்

பொன்மேனி

ம்ம்ம்ம்......ம்

நீராட

ம்ம்ம்ம்......ம்

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்

இளம் காற்று

ஆஷாஷாஷாஷா

தாலாட்ட

ஹா ஹா ஹா

பொன்மேனி

ஹாங் ஹாங்

நீராட

செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே

ஹாஹா

செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே
சிந்தாத தேன்கிண்ணம் சிங்கார பூ வண்ணம்
பந்தாட்டம் ஆடட்டுமே

ஹா ஹா

நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள்
நீரோடு ஓடட்டுமே.... ஹேஹேஹேஹே

('ஹேஹேஹேஹே' முடிந்தவுடன் ஒரு கிடார் பிட் 'டங்டங் டங் டங்டங்' என்று கொஞ்சம் கொஞ்சமாக ரெயிஸ் ஆகும் பாருங்கள். அடடா! நிச்சயம் இதை அனுபவித்துக் கேட்டுப் பாருங்கள். அவ்வளவு இனிமை)

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று

ம்ம்ம்ம்......ம்

தாலாட்ட

ம்ம்ம்ம்......ம்

பொன்மேனி

ம்ம்ம்ம்......ம்

நீராட

ம்ம்ம்ம்

லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா

ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்.

லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா

எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் மோதட்டுமே
எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் மோதட்டுமே
எட்டாத கொம்பல்ல ஒட்டாத உறவல்ல
எண்ணங்கள் நீந்தட்டுமே

ஹா ஹா

கோபாலன் நானுண்டு
கோபியர்கள் தானுண்டு
லீலைகள் ஆகட்டுமே.... ஹேஹே

(கிடார் பிட்)

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்

ஹா ஹா ஹாங்

இளம் காற்று

ஆஷாஷாஷாஷா

தாலாட்ட

ஹா.. ம்

பொன்மேனி

ஹா ஹா ஹா

நீராட

பெண் பார்க்கப் பெண் வந்தால்
கண் பார்க்கக் கண் உண்டு
பேசாமல் பேசட்டுமே

ஆஹா

தூதொன்றும் இல்லாமல்
ஏதொன்றும் சொல்லாமல்
உள்ளங்கள் கூடட்டுமே

ஆஹா

நேராக நீ உண்டு
நெஞ்சத்தில் நானுண்டு
லாபங்கள் காணட்டுமே... ஹேஹேஹேஹே

(கிடார் பிட்)


https://youtu.be/YvigJkZCdIk

eehaiupehazij
19th August 2015, 12:11 PM
Dear Rajraj Sir and Ragadevan Sir.
Thank you for the interactions keeping daughters and grand daughters/children as the center of gravity of our situation songs! It is quite natural that they are our binding forces and they remain the catalysts for our continued life activities !When we are with them, listening to their incessant speeches...observing their immaculate innocence ....we forget everything around us!! In line with you two , I too feel proud of my daughter and grand daughter who make the rest of my existence meaningful!!
Children always have flexible moods with false anger!
That is best exemplified by this Shammi Kapoor song in his ace movie Andaaz!

https://www.youtube.com/watch?v=3bliYy8ZfBk

https://www.youtube.com/watch?v=F9yEftUD90Q

uvausan
19th August 2015, 12:21 PM
வாசு -

"இன்று தொடரில் எழுதப் போகும் பாலா பாடலை நினைத்தாலே கடல் அலைகளில் மிதப்பது போல உள்ளம் குளிருகிறது. 'மீண்டும் மீண்டும்' பாலா பாடல்களுக்காவே 'வாழ்வேன்' என்று கூட கத்தத் தோணுகிறது."

எங்களுக்கும் தான் இன்னும் அதிகமாக கத்தத் தோணுகிறது - இப்படியெல்லாம் எழுதி வெளுத்து வாங்கக்கூடிய ஒருவரின் பதிவுகளை மீண்டும் மீண்டும் படிக்க , சுவைக்க நாங்கள் இன்னும் "வாழ்வோம் " என்று !!- என் வரும் பதிவை உங்களுக்கு ஒரு பரிசாக வழங்குகிறேன்.

uvausan
19th August 2015, 12:49 PM
இந்த மதுர கானத்தில் , தேனை சம்பந்தப்படுத்தி ஒரு பதிவும் வரவில்லையே என்று எனக்குள் ஓரி சின்ன ஏக்கம் - அனைவர்களுடைய பதிவுகளும் தேனாக இனித்தாலும் , தேனுக்காக , தேனை சம்பந்தப்படுத்தி ஒரு சிறிய தொகுப்பை வழங்கினால் என்ன என்று மனதில் ஒரு ஆசை எழுந்தது - அதன் விளைவுதான் இந்த பதிவு . நாரதர் , பாட்டிகள் இந்த வரிசையில் இந்த தொக்குப்பையும் சேர்த்துக்கொள்ளலாம் .

தேன் இசையை கேட்பதற்கு முன் , தேனைப்பற்றிய தெரிந்த உண்மைகளை சற்றே அசை போடுவோம் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/11-1386745896-6-honey-jpg-600_zpsvvfjp6tq.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/11-1386745896-6-honey-jpg-600_zpsvvfjp6tq.jpg.html)

பகுதி 1

தேனும் மருந்தும் :


தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/11-1386745804-3-honeyd-600_zpsus6cbjvx.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/11-1386745804-3-honeyd-600_zpsus6cbjvx.jpg.html)

பகுதி 2

https://www.youtube.com/watch?v=7EHgb4e_L_w

https://www.youtube.com/watch?v=Cxni3Nk9fUc

https://www.youtube.com/watch?v=tCpQUgKU4YI

தேன் நிலா வரும் சொல்லித்தான் தரும் சுகம்

https://www.youtube.com/watch?v=Y5m0m5zSbEo

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா...
...
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
அதை சொல்வாய் வெண்ணிலா..

வாசுவின் , சாரி பாலாவின் அருமையான குரலில் காலத்தை வென்று நிற்கும் இந்த பாடல், நம் மொழிவின் பறைசாற்றும் மற்றொரு தலைசிறந்த சான்று.

https://www.youtube.com/watch?v=7V6UEueZdLA