View Full Version : ஸ்வப்னம் - நாட்டிய இசைப்பாமாலை
venkkiram
9th January 2015, 09:13 PM
http://www.onlykollywood.com/wp-content/uploads/2014/12/Swappnam-CD-Label.jpg
http://www.onlykollywood.com/wp-content/uploads/2014/12/Swappnam-CD-Cover.jpg
http://www.onlykollywood.com/wp-content/uploads/2014/08/ilaiyaraja.jpg
venkkiram
9th January 2015, 09:14 PM
தி இந்து:
எல்லைகள் இல்லா இசை உலகம் (http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6764736.ece)
venkkiram
9th January 2015, 09:17 PM
Times Of India
Ilaiyaraaja composes for a dance production (http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Ilaiyaraaja-composes-for-a-dance-production/articleshow/45504475.cms)
venkkiram
9th January 2015, 10:30 PM
ஸ்வப்னம் நாட்டியப் பாடல்களுக்கு பதிவர் சுரேஷ் எழுதிய விமர்சனம்.
http://sureshs65music.blogspot.com/2015/01/swappnam-music-for-your-dreams.html
:clap:
SVN
10th January 2015, 02:32 AM
Songs uploaded by the record label Purple Note on Youtube:
http://www.youtube.com/watch?v=gY1j2k1nPLs
http://www.youtube.com/watch?v=gY1j2k1nPLs
http://www.youtube.com/watch?v=P-NejapaaKM
http://www.youtube.com/watch?v=Bw9hwWDWqRoh
http://www.youtube.com/watch?v=MBoi9PeF_uw
http://www.youtube.com/watch?v=fPz0DUqRvCQ
venkkiram
10th January 2015, 06:43 AM
ஸ்வப்னம் - ஏழிசையாய்..
ஆரம்ப இசை. ஒரு பறக்கும் தட்டில் உட்காரவைத்து நம்மையெல்லாம் வனங்கள், பசுமை வயல்கள், அருவிகள், நீரோடைகள், கார் மேகங்கள் வழி அழைத்துச் சென்று மார்கழித் திங்களின் ஒரு காலைப் பொழுதில் தேவார இசை பாடும் திருவாரூர் திருக்கோயிலின் உள்வளாகத்தில் இறக்கிவிடுகிறார் இசை ஞானி.
ஏழாம் திருமுறை: பாடல் எண்:10 தலம் : திரு ஆரூர். பண் : பழம் பஞ்சுரம்
-------------------------------------------------------------------------
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்
என்னுடைய தோழனுமாய்
யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத் தந்தாண்டானை
மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.
பொழிப்புரை :
ஏழிசைகளைப் போன்றும், அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும், இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து, அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி, யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு, மாவடுவின் வகிர்போலும், ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை, அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
"ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்" என்ற மூன்று சொற்களைத் தாண்டிபோவதற்குள்ளாகவே ஒரு அழகான இசையோவியத்தை கண்முண்ணே வரைந்துவிடுகிறார் ராஜா. வீணையும், புல்லாங்குழலும் போட்டிப் போட்டுக்கொண்டு இந்த வரிகளோடு உரையாடுவது சிறப்பு. அதுபோலவே அடுத்த "யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி" சொற்களின் வரிசைகளுக்கு மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங், கடம்-களுக்கு இடையே ஒரு தனிஆவர்த்தனம் வைத்து தலைவாழை விருந்து படைந்திருக்கிறார் ராஜா. "மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்" என அபிஷேக் ரகுராம் உயரே சென்று "என்ஆரூர் இறைவனையே" என இறைவனின் முன்பு சரணாகதி அடையும்வரை கூடவே மிருதங்கம் பலதடங்களில் குரலுக்கு இணையான வேகத்தில் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே வருகிறது.
ஒரு தேவாரப் பாடலுக்கு மேற்கத்திய செவ்விசையையும், நமது பாரம்பர்ய இசையையும் இணைத்து விஸ்வரூப இசைவடிவம் கொடுத்திக்கிறார் ராஜா. அதையும் மேற்கத்திய செவ்விசை அமைப்பில் அமைந்த ஆரம்ப இசையிலேயே "ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்" என்ற ஒலிக்கப் போகும் பாடலின் ராக அமைப்பை அதன் சாரம்சத்தை விவரித்துக் காட்டுவது ராஜாவுக்கே உரிய வியத்தகு யுத்தி. உருகிப் பாடியிருக்கும் அபிஷேக் ரகுராமிற்கு பாராட்டுக்கள்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்..
ஏழிசையாய் இசைப்பயனாய்
என்னுள் நிலைத்து நிற்கும் இளையராஜா !
venkkiram
15th January 2015, 08:38 PM
தினமும் மூன்று தடவையாவது கேட்டுவிடுகிறேன். ஸ்வப்னம் முழுதாய் என்னை ஆக்ரமித்திருக்கிறது. சில இடங்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.
இளையராஜா குரலில் பாடல் ஏதும் இல்லாமல் இருப்பது கொஞ்சம் வருத்தம்.
Rajaramsgi, Poem, Sivasub, Krishnan, Dochu, Rajsekar, IRIR, Motte_dhaasan, SVN, Thumburu, RR, Raagadevan
ஸ்வப்னம் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பம் கிட்டியதா? பகிருங்கள் உங்களின் இசைகேட்பு அனுபவத்தை.
svaisn
16th January 2015, 12:11 AM
Can I buy this online? US delivery.. links please...
venkkiram
16th January 2015, 02:47 AM
Can I buy this online? US delivery.. links please...
Amazon Digital:
http://www.amazon.com/s/ref=sr_nr_seeall_1?rh=k%3ASwappnam%2Ci%3Adigital-music&keywords=Swappnam&ie=UTF8&qid=1421356143
I heard that its available in iTunes also.
dochu
18th January 2015, 05:33 PM
தினமும் மூன்று தடவையாவது கேட்டுவிடுகிறேன். ஸ்வப்னம் முழுதாய் என்னை ஆக்ரமித்திருக்கிறது. சில இடங்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.
இளையராஜா குரலில் பாடல் ஏதும் இல்லாமல் இருப்பது கொஞ்சம் வருத்தம்.
Rajaramsgi, Poem, Sivasub, Krishnan, Dochu, Rajsekar, IRIR, Motte_dhaasan, SVN, Thumburu, RR, Raagadevan
ஸ்வப்னம் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பம் கிட்டியதா? பகிருங்கள் உங்களின் இசைகேட்பு அனுபவத்தை.
Venkkiram,
One has to invent a new language/words to describe this musical giant. I am totally lost for words after listening to Swapnam and Shamitabh. Both are extremes and unbelievably handled by IR. There is nothing, this man cannot do even after 1000 movies. Take that world!!!
sivasub
18th January 2015, 11:04 PM
Completely agree. Had spent good time to listen to Swappnam and it transported me to a completely different world. Who in this world can display two extreme mood reactions between Swappnam and Shamitabh. It's like having multi-personality orderliness to the greatest level.
Coming to Swappnam, the first song sweeps you out of your seats. How on earth did he manage to get to the carnatic scale from a pure western classical is something that I am still trying to understand. Very good mix of hindustani and carnatic classical interspersed with beautiful western classical. I am too low a person even to comment on this album. My respect for IR has grown leaps and bounds after listening to these albums over the weekend.
K
19th January 2015, 10:43 AM
https://soundcloud.com/palakkadsreeram/singing-sloka-music-by-raja-sir-for-swapnam-for-krithika-ji
A Special Track From Swappnam which is not in the Audio CD.
krish244
19th January 2015, 12:15 PM
Listened to it only in bits and pieces venkkiram. Could not devote dedicated time to listen to all songs. But, whatever I have listened, I already know that this album is a treasure. Need to experience more to write more about the album.
Look at SWAPPNAM and SHAMITABH albums. Diverse. I still remember the first time I heard the song "Hodadhavane" from a kannada movie. Could not believe it was from him. Later I heard the two songs from "OM SHANTI OM" telugu movie. I think it is the title song and Ottesi Chebutha (though not completely club / disco type). He still had some stamp of his. I remember the song "Rekka Katti parakkudhu" (Valmiki??). Look at the way he seamlessly interplays/integrates two forms of music, a band kind of music (with trumpets) and nadaswaram (or shehnai kind) based in the interludes along with amazing rhythm. One cannot stop admiring his openness to various forms of music and his dedication to innovate/experiment.
thanks,
Krishnan
dochu
9th February 2015, 09:54 AM
https://soundcloud.com/palakkadsreeram/singing-sloka-music-by-raja-sir-for-swapnam-for-krithika-ji
A Special Track From Swappnam which is not in the Audio CD.
Thanks K, what a song!!!. Palakad Sreeram rendered very well!.
rajaramsgi
9th February 2015, 07:51 PM
ஸ்வப்னம் ஒரு வழியாய் ஐடியூன்சில் டவுன்லோட் செய்து கேட்டேன். சாஸ்த்ரீய சங்கீத அறிவு சற்றும் இல்லாத என்னை போன்றவர்கள் மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் கிளாசிக் ஆல்பம். ராஜா சார் என்றைக்குமே ராஜா தான், ஆயிரம் சொல்லுங்க.
ஒரு வித தயக்கத்துடனே ஒரு மாத காலத்துக்கும் மேலாய் காத்திருந்து கேட்டதன் பலன், சென்ற வார இறுதி நாட்கள் வேகமாய் நகர்ந்து விட்டது.
kr
26th February 2015, 09:50 PM
I am hooked on to the Swapnam songs. Addicted. IR is a genius and one of the greatest talents from India.
venkkiram
2nd April 2015, 11:16 PM
https://www.youtube.com/watch?v=WqJwoEy9gaQ&feature=player_embedded
காணொளியை பார்க்கும்போதே பரவசத்தில் மெய்யுருகி கண் வழியே நீர் எட்டிப்பார்க்கிறது. அப்படியொரு சுகானுபவம். இந்த நிகழ்ச்சியை நேரடியாக அரங்கத்தில் பார்த்து கண்டு கழித்தவர்கள் நிலை எப்படி இருந்திருந்தும் என்பதை உணர முடிகிறது. காணொளியின் கடைசியில் ராஜா பேசும் அத்தனை வார்த்தைகளும் சிறப்பு.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.