PDA

View Full Version : சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 முதல் 17.12.2017 நிகழும்



geethaa
18th December 2014, 01:01 PM
சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 முதல் 17.12.2017

நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) மதியம் 2.16 மணிக்கு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.

சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.

ராசிகளுக்கு உண்டான பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

மேஷம் - அஷ்டமத்து சனி

ரிஷபம் - கண்டச்சனி

மிதுனம் - ரண ருண சனி

கடகம் - பஞ்சம சனி

சிம்மம் - அர்த்தாஷ்டம சனி

கன்னி - தைரிய வீர்ய சனி

துலாம் - வாக்கு சனி அல்லது பாத சனி

விருச்சிகம் - ஜென்ம சனி

தனுசு - விரைய சனி அல்லது சிரசு சனி

மகரம் - லாபச்சனி

கும்பம் - கர்ம சனி

மீனம் - பாக்கிய சனி

http://eluthu.com/view-ennam/14892

PARAMASHIVAN
19th December 2014, 04:33 PM
Thank you, nice thread !

suvai
20th December 2014, 09:33 PM
Hi geetha,
Loved reading this thread.....:-) in fact i have shared the link too...thank u!!

19thmay
22nd December 2014, 09:29 AM
என்னக்கி தான் நீங்க எங்களுக்கு (மீனம்) நல்லதா சொல்லி இருக்கீங்க??

I think it will be better than ashtamathu sani period ...

venkkiram
22nd December 2014, 10:02 AM
இடைஞ்சலுக்கு மன்னிக்கவும். இதுபோன்ற சனிப்பெயர்ச்சி விஷயங்களில் உண்மையில்லை என்பதற்கான கருத்துக்களை இங்கேயே பதிவு செய்யலாமா? இல்லை அடுத்தவர்களின் நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது என்ற நியதியில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செல்வதுதான் நாகரிமா? சொல்லுங்கள். இந்தப் பதிவையே நீக்கிவிடுகிறேன்.

PARAMASHIVAN
22nd December 2014, 03:59 PM
இடைஞ்சலுக்கு மன்னிக்கவும். இதுபோன்ற சனிப்பெயர்ச்சி விஷயங்களில் உண்மையில்லை என்பதற்கான கருத்துக்களை இங்கேயே பதிவு செய்யலாமா? இல்லை அடுத்தவர்களின் நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது என்ற நியதியில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செல்வதுதான் நாகரிமா? சொல்லுங்கள். இந்தப் பதிவையே நீக்கிவிடுகிறேன்.

Please go ahead and post your views

venkkiram
22nd December 2014, 07:28 PM
பூமியிலிருந்து கிட்டத்தட்ட 80 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கிறது சனிக்கிரகம் எந்தவிதத்தில் பூமியில் உள்ள மக்களை பாதிக்கும் என விளக்கமுடியுமா பரம்? அதிலிருந்தே நான் தொடர்கிறேன்.

https://kelltrill.files.wordpress.com/2014/05/planets-distance.png?w=1000

When the two are closest, they lie approximately 746 million miles (1.2 billion kilometers) apart, or eight times the distance between the Earth and the sun.

அதுவும் நிலையாக நில்லாமல் தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றும் பூமிப்பந்தில் பிரபஞ்ச வெளியை ஒப்பிடுகையில் ஒரு அணு அளவினாலான சுற்றளவில் அமைந்திருக்கும் திருநள்ளாறு எப்படி இதற்கு பரிகாரமான ஒரு தலமாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதையும் சொல்லுங்கள்.

venkkiram
22nd December 2014, 07:53 PM
மனிதர்களைப் போலவே கொசுக்களுக்கும் சனிப்பெயர்ச்சி பாதிப்பு உண்டாம்!

http://starsandwords.blogspot.com/2009/10/new-fascinating-facts-on-mosquitoes.html

PARAMASHIVAN
22nd December 2014, 09:08 PM
மனிதர்களைப் போலவே கொசுக்களுக்கும் சனிப்பெயர்ச்சி பாதிப்பு உண்டாம்!

http://starsandwords.blogspot.com/2009/10/new-fascinating-facts-on-mosquitoes.html

Lol, Venki on a serious note, doesn't these planetary positions have "influences " on all the living organism in the cosmos ?

venkkiram
22nd December 2014, 09:36 PM
Lol, Venki on a serious note, doesn't these planetary positions have "influences " on all the living organism in the cosmos ? பரம்... அதத்தான் நானும் உங்ககிட்ட கேட்கிறேன். நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு தூரத்தில் இருக்கும் சனிக் கிரகம் எப்படி பூமியில் உள்ள ஜீவராசிகளை பாதிக்கமுடியும்? ( ஜீவராசிகள் என்றால் கொசு முதல் திமிங்கலம் வரை எடுத்துக்கொள்ளலாம் ). கடவுள் என்பது ஒரு நம்பிக்கையம்சம். அதனுள்ளெ போகவிரும்பல. ஆனால் வானவியலோடு தொடர்புபடுத்தி நடத்தப்படும் கடைந்தெடுத்த மூடநம்பிக்கை வியாபார உத்திகளுக்கு இரையாகவேண்டாமே? ஆனால் உங்கள் பதில் வானவியலின் படி ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் நானும் உங்களைப் போலவே இதை நம்ப ஆரம்பிப்பேன். உங்கள் புரிதலை எனக்கு புரியும்படி விளக்குங்கள்.

ட்வீட்டரில் ஒரு அன்பர் இப்படி எழுதியிருந்தார்.

As long as Sun rises on the east, every day is same. If it doesn't our planet will collide somewhere or attacked by any asteroid. If someone gives scientific gyan that gravity of the planets affect us... We should consider the entire gravity factor of universe Billions and billions of stars and the milky way and the other galaxies and the universe as the whole. Please understand our SPACE. The closest gravity we encounter is Moon. Then Sun. We are bounded by earth's gravity. And it's other magnetic forces. Balance of the system. Nothing sits in the space and affects your life. As you're nothing to Saturn or Uranus or Pluto. They don't run a chariot. If so be happy. Riding the chariot it'll take billions of years for any planet to reach us. Astronomy is science. Astrology is business.

venkkiram
22nd December 2014, 09:50 PM
The Inner Solar System

Astronomers usually divide our solar system into two parts: the inner and outer solar system. The inner solar system contains the planets Mercury, Venus, Earth, and Mars (Figure 1). Of this group of planets, Mercury is the closest to the Sun (Figure 2). The distance of Mercury from the Sun varies between 46 and 70 million km or between 28.6 and 43.5 million mi (average about 57.9 million km or 36.0 million mi). Surface temperatures on Mercury vary from -200°C (-328°F) to 430°C (806°F). This is in part due to its closeness to the Sun and the fact that its rotation is relatively slow (about 59 days to complete one cycle). When turned away from the Sun, Mercury’s surface experiences a big drop in temperature because it does not receive sunlight for an extended period of time. No other planet in our solar system has as great a diurnal temperature variation and only Venus is hotter. Mercury has a very thin atmosphere composed mainly of sodium, potassium, and helium. Mercury’s surface is heavily cratered from meteorites. It is also very old and has no tectonic system to renew the surface crust.

http://static.trunity.net/files/153201_153300/153217/figure_1.jpg

The Outer Solar System

The outer solar system contains the dwarf planet Pluto and planets Jupiter, Saturn, Uranus, and Neptune . Jupiter, Saturn, Uranus, and Neptune are quite different from the planets that we have already discussed. All of these planets are quite large and their total mass accounts for more than 99% of the matter found in our solar system (excluding the Sun). Also, these four planets do not have solid surfaces. Instead, their masses are mainly composed of hydrogen and helium gas that becomes increasing dense as you travel from the edge of their atmosphere towards the planet’s interior.

http://a.static.trunity.net/files/155501_155600/155569/outer.jpg

சூரியக் குடும்பத்தின் உள் மற்றும் வெளி அடுக்குகளின் இடைப்பட்ட தூரத்தில் எண்ணற்ற விண்கற்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் மீறி வெளி அடுக்கில் அமைந்திருக்கும் சனி உங்களுக்கு நேரிடையாக பூமிப் பந்தின் ஜீவ ராசிகளை பாதிக்கப் போகிறார்? அதுவும் இடைப்பட்ட ஜூபிடர், மார்ஸ், வீனஸ் போன்ற கோள்களையும் தாண்டிய தூரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பூமிப் பந்திற்கு பார்வை செலுத்துகிறாரா?

venkkiram
29th December 2014, 08:12 AM
திருநள்ளாரில் கூட்டம் வழியுதாம். சென்றவார இறுதியில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, நிறைய மக்களுக்கு அறை விடுதிகள் இல்லையாம், உணவக சாப்பாடு காலியாகிவிட்டதாம், கடைகளில் ஒரு பிஸ்கட்பாக்கட் கூட இருப்பு இல்லாமல் விற்று தீர்ந்துவிட்டதாம். மக்கள் மற்றும் குழந்தைகள் பாடு அவதிதான். பட்டினியோடு, சாலையிலேயே படுத்து தூங்கினார்களாம். இவர்களுக்கு ஏழரை இந்த ரூபத்தில்தான் வேலை செய்கிறது போல. மூடநம்பிக்கையின் உச்சம் இந்த சனிப்பெயர்ச்சியும் அதன் பரிகாரங்களும். அறை விடுதிகள் என்றால் முழுக்க முழுக்க இதற்காகவே கட்டப்பட்டுள்ள அறைவிடுதிகள் மட்டுமல்ல. அங்கே பலர் தங்கள் வீடுகளையே வார இறுதியில் வரும் மக்களுக்காக விடுதிபோல பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து பணம் பார்ப்பார்கள். அந்தப் பகுதிகளில் தற்போது அடைமழை. நல்லவேளை போன வார இறுதியில் மழையில்லாமல் போனது. இருந்தால் பக்தர்கள் பாடு இன்னும் திண்டாட்டமாக இருந்திருக்கும் என இத்தகவலைச் சொன்ன மனிதர் கரிசனத்தோடு குறிப்பிட்டார்.

pavalamani pragasam
29th December 2014, 08:44 AM
போதைகள் பல விதம். இதுவும் ஒன்று. பல விதங்களிலும் பகுத்தறிவை துடைத்தெறிந்து விட்டு மக்கள் மாக்களாய் அலைவது கண்கூடு. வேதனை. வெட்கம்.