PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

gkrishna
22nd November 2014, 11:36 AM
தமிழ் சினிமா உலகம் தன் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருந்தும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான கலைஞர்களில் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனும் ஒருவர். எண்பதுகளிலே எவ்வளவுக்கெவ்வளவு இசைஞானி இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீரா வெறி இருந்ததோ அதையும் கடந்து மனதில் தென்றலாக வந்து போன இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜாவுக்கு அடுத்த தட்டில் வைத்து என் மனசு எப்போதும் கெளரவிக்கும் வி.எஸ்.நரசிம்மன் இசையமைப்பாளராகக் கொடுத்த பங்களிப்பை.

ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலில் பொங்கி வரும் அருவியாகப் பாயும் இசையாகட்டும், பூமேடையோ பொன்வீணையோ பாடலில் ஒரு மினி இசை ஆலாபனையைப் பாடலின் இடையிசையில் நிரப்பிவைத்திருப்பதாகட்டும், வி.எஸ்.நரசிம்மனின் தனித்துவத்துக்குச் சின்ன உதாரணங்கள் அவை. வி.எஸ்.நரசிம்மன் இசைக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்க "சின்ன மணிக்குயிலே" என்று எடுக்கவிருந்த படத்தில் வந்த "அழகிய கல்யாணப்பூமாலை தான் விழுந்தது என் தோளில் தான்" என்ற பாடலுக்கு ஆயுட்கால அடிமை நான்.


http://2.bp.blogspot.com/-PNBgk0rDQMA/TzzPKSli6vI/AAAAAAAAKok/Ys3EZGeomag/s400/Nara.jpg

adiram
22nd November 2014, 11:57 AM
வாசு சார்,

1978-ல் பயங்கர ஹிட்டடித்த சிட்டுக்குருவி படப்பாடல்களை சிறப்பாக த்ந்துள்ளீர்கள். ஆனால் வழக்கமான விஸ்தாரமாக இல்லாமல் எல்லாப்பாடல்களையும் ஜஸ்ட் தொட்டு சென்றுள்ளீர்கள். நேரமின்மை காரணமா?. அதிலும் மறக்காமல் கட்டபொம்மன் படத்தை செருகிவிட்டீர்கள்.

விவித்பாரதியில் சக்கைபோடு போட்ட பாடல்கள் அனைத்தும்.

என் கண்மணி உன் காதலி பாடல் ரெக்கார்ட் செய்யப்பட விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரொம்ப வித்தியாசமான முயற்சி. கிருஷ்ணா சொன்னதுபோல கவுண்ட்டர் பாயிண்ட் முறையில் செய்யப்பட்டது.

இதை எப்படி ரெக்கார்ட் செய்தார் என்பதை இளையராஜாவே சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியொன்றில் விளக்கியிருந்தார். வீடியோ கேசட்டில் பார்த்தோம். சித்ராவையும் எஸ்.என்.சுரேந்தரையும் பாடவைத்து விளக்கினார்.

படத்தில் மீராதான் கொஞ்சம் நெருடியது. (மீரா இனிக்கும் இளமை படத்தில் கொஞ்சம் விவகாரமான ரோலில் நடித்திருந்தார்).

vasudevan31355
22nd November 2014, 12:33 PM
மறைந்த லட்சிய நடிகர் திரு.எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் பற்றி சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வந்த கட்டுரை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-19.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5-19.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-18.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/6-18.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-56.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-56.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-55.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-55.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-16.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/7-16.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-39.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-39.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-27.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-27.jpg.html)

vasudevan31355
22nd November 2014, 12:43 PM
நன்றி ஆதிராம் சார்.

எல்லோருக்கும் தெரிந்த ரொம்பவும் ஹிட்டடித்த மிகப் பிரபலமான பாடல்களை விஸ்தாரமாக எழுத வேண்டாம் என்று தான் சுருக்க முடித்துக் கொண்டேன். அப்படி எண்ணித்தான் இந்தத் தொடரையும் ஆரம்பித்தேன். புகழ் பெற்ற பாடல்களை 'ஸ்கிப்' செய்யலாம் என்றால் மனதும் கேட்க வில்லை. அதுதான் அவற்றை லைட்டாகத் தொடக் காரணம். இளையராஜா இசையில் அதிகம் பிரபல்யமாகாத அருமையான பாடல்களை விவரமாக அலச ஆசை. இன்னும் கேட்டால் அதற்காகத் தான் இந்தத் தொடரையேயே தொடங்கினேன். வேறொன்றுமில்லை. நீங்கள் வாசித்து பின்னூட்டம் அளிப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் கருத்துக்கள் எப்போதுமே ஆணித்தரமாயும், உண்மையாகவும் இருக்கும்.

vasudevan31355
22nd November 2014, 12:45 PM
வாசு சார்,

அதிலும் மறக்காமல் கட்டபொம்மன் படத்தை செருகிவிட்டீர்கள்.



பின்னே?:)

vasudevan31355
22nd November 2014, 12:46 PM
(மீரா இனிக்கும் இளமை படத்தில் கொஞ்சம் விவகாரமான ரோலில் நடித்திருந்தார்).

கொஞ்சம் இல்லை சார். நிறையவே.

gkrishna
22nd November 2014, 01:20 PM
வாசு சார்,

1978-ல் பயங்கர ஹிட்டடித்த சிட்டுக்குருவி படப்பாடல்களை சிறப்பாக த்ந்துள்ளீர்கள். ஆனால் வழக்கமான விஸ்தாரமாக இல்லாமல் எல்லாப்பாடல்களையும் ஜஸ்ட் தொட்டு சென்றுள்ளீர்கள். நேரமின்மை காரணமா?. அதிலும் மறக்காமல் கட்டபொம்மன் படத்தை செருகிவிட்டீர்கள்.

விவித்பாரதியில் சக்கைபோடு போட்ட பாடல்கள் அனைத்தும்.

என் கண்மணி உன் காதலி பாடல் ரெக்கார்ட் செய்யப்பட விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரொம்ப வித்தியாசமான முயற்சி. கிருஷ்ணா சொன்னதுபோல கவுண்ட்டர் பாயிண்ட் முறையில் செய்யப்பட்டது.

இதை எப்படி ரெக்கார்ட் செய்தார் என்பதை இளையராஜாவே சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியொன்றில் விளக்கியிருந்தார். வீடியோ கேசட்டில் பார்த்தோம். சித்ராவையும் எஸ்.என்.சுரேந்தரையும் பாடவைத்து விளக்கினார்.

படத்தில் மீராதான் கொஞ்சம் நெருடியது. (மீரா இனிக்கும் இளமை படத்தில் கொஞ்சம் விவகாரமான ரோலில் நடித்திருந்தார்).


நண்பர் அதிராம் சார்

சிட்டு குருவி படம் மற்றும் பாடல்கள் பற்றிய உங்கள் பின்னோட்டம் மிகவும் அருமை. அதிலும் விவித் பாரதி பற்றி நீங்கள் குறிபிட்டது நிச்சயம் நீங்கள் ஒரு மிக சிறந்த கலா ரசிகர் என்று நினைக்க தோன்றுகிறது. இனிக்கும் இளமை மீராவின் அறிமுகம் பட்டினப்ரவேசம் 77 என்று நினைக்கிறேன். 2 அல்லது 3 ஆண்டுகள் தான் திரை உலகில் இருந்தார் .சாய்ந்தடம்மா சாய்ந்தடம்மா சிவகுமார் ,மீரா கனவு பாடல் 'ஒரு காதல் தேவதை இளம் கண்கள் பூமழை இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ ' சுசீலா அம்மா,பாலா இருவரும் பாடலில் காதல் சாம்ராஜ்யத்தை நிலை நாட்டி இருப்பர்கள். நினைவிற்கு வருகிறது சிந்து பைரவி 'தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி' பாடல் காட்சியில் முகம் இரண்டும் உப்பி உண்மையில் தண்ணி தொட்டி போலேவே ஆகி விட்டார். இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை .கரக்காட்டகாரன் கௌண்டமணி,செந்தில் காமெடி தான் 'சொப்னசுந்தரியை ... ' :)
தயவு செய்து இந்த கேள்வியை ஏண்டா என்கிட்டே கேட்டே அப்படின்னு என்னை அடிக்க வராதீங்க :)

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTUWt3eDoWjBy3e-1W8egP4WHAH-3pHYiR4vLfjR3lwD7sKW6WzHQ

gkrishna
22nd November 2014, 01:39 PM
dear vaasu sir

திரு விஜி மனுவேல் சமீபத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு இளையராஜாவுடன் தன அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் உயிர் தப்பி சற்று நடக்கவே கஷ்டப்பட்டு கொண்டே வந்தார் . ஆனால் கி போர்டு வாசிக்கும் போது ஹே ராம் 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி .நமை (நம்மை ) சேர்த்த இரவுக்கு நன்றி ' மனுஷர் பின்னி விட்டார்

நண்பர் கே எஸ் சுகா அவர்கள் வலைப்பூவில் இருந்து திரு விஜி மனுவேல் அவர்களை பற்றிய தகவல்

’சதிலீலாவதி’ படத்தின் பாடல் பதிவு. பேசிக்கொண்டே நடந்து செல்லும், சாப்பிடும், வாத்தியார் பாலுமகேந்திராவின் Usual காதலர்களுக்கான Montage பாடல். முதல் முறையாக இளையராஜாவிடம் பாட வந்த உன்னிக்கிருஷ்ணன், செருப்பைக் கிழற்றிவிட்டு பயபக்தியுடன் ரிக்கார்டிங் தியேட்டருக்குள் நுழைந்தார். பாடலின் Preludeஇல் வரும் Sax bit-ஐ கீபோர்டிலேயே வாசிக்கச் சொல்கிறார் ராஜா ஸார், விஜி மேனுவலின் மேல் உள்ள நம்பிக்கையில்.
‘வாசிச்சிடறீங்களா, விஜி?’
‘எஸ் ராஜா’.
விரல்கள் விளையாடின. இரண்டாவது இடையிசையிலும் (Interlude)விளையாட்டு தொடர்ந்தது. வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பத்தே நிமிஷத்தில் ரெக்கார்டிங் முடிந்து விட்டது.
‘என்னய்யா! நீ இன்னும் கெளம்பலியா?’ காரில் ஏறும்போது கேட்டார், ராஜா ஸார்.
நான் விஜி மேனுவல் கிளம்பும்வரைக்கும் அங்கேயே இருந்து, அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு விஜய் டி.வியில் அந்த சண்டாளப் பாவி கீபோர்ட் வாசித்து, எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தபோது, பழைய நினைவில் மூழ்கினேன்.

’எங்கேயோ, எப்பவோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கோம்’ என்று தோன்றியது.

AREGU
22nd November 2014, 01:44 PM
புதியவன்

வி எஸ் நரசிம்மன்..

நானோ கண்பார்த்தேன்..

adiram
22nd November 2014, 01:46 PM
நன்றி வாசு சார், கிருஷ்ணா சார்,

மீரா, நடிகர்திலகத்தின் இமயம் படத்தில் ஜெய்கணேஷின் இன்னொரு ஜோடியாக நடித்தவர். கேரக்டர்களுக்கு நதிகள் பெயர்கொண்ட அப்படத்தில் மீராவின் பெயர் சிந்து. நேபாளத்தில் எடுக்கப்பட்ட இமயம் கண்டேன் என்ற அழகான பாடலும் இவ்விருவருக்கும்.

நடிகர்திலகத்தின் மைத்துனி. ஆனால் அவரை தங்கள் காதலுக்கு வில்லனாக நினைப்பவர்.

adiram
22nd November 2014, 01:55 PM
மீரா சிந்து பைரவி 'தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி' பாடல் காட்சியில் முகம் இரண்டும் உப்பி உண்மையில் தண்ணி தொட்டி போலேவே ஆகி விட்டார்.

நிஜமாகவே மீராவின் முகத்தைத்தானே குறிப்பிட்டீர்கள்?. அப்படியானால் எப்படி 'முகம் இரண்டும்' உப்பி?.

gkrishna
22nd November 2014, 01:58 PM
உண்மை அதிராம் சார்
இமயம் திரை படத்தில் ஜெய் கணேஷ் யோககாரர் இரண்டு இணை .ஒன்று ரீனா, மற்றொன்று மீரா .மீரா கொஞ்சம் அழகாகவே இருப்பார் படத்தில். சசிரேகா குரலில் 'இமயம் கண்டேன் பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டு பூவை தொட்டு பார்த்தேன் ' மெல்லிசை மன்னரின் நெடில் இசை .அதிலும் ஒரு இடத்தில பாலா 'பொன் தொட்டில்' என்பதை 'பொன் தொட்டிலை கட்டும் நேபாளத்தின் ' என்று கொஞ்சம் குறும்பு கொப்பளிக்க பாடிஇருப்பார்

gkrishna
22nd November 2014, 02:02 PM
நிஜமாகவே மீராவின் முகத்தைத்தானே குறிப்பிட்டீர்கள்?. அப்படியானால் எப்படி 'முகம் இரண்டும்' உப்பி?.

அன்பு நண்பர் அதிராம் சார்

நிஜமாகவே மீராவின் முகத்தை தான் குறிப்பிட்டேன்.:)
பாடலில் கூர்ந்து கவனியுங்கள் . ரகுநாத ரெட்டி இன் காமிரா லென்ஸ் மீராவின் இரண்டு முகத்தை அடிகடி போகஸ் செய்யும் .

http://www.youtube.com/watch?v=5zSLQh1Rp-g

Russellcaj
22nd November 2014, 02:33 PM
Mr. Vasudevan,

Belated BIRTHDAY WISHES for you.

MANYMORE HAPPY RETURNS OF THE DAY.

Thanks for posting the songs of Bairavi and Chittukuruvi.

I saw Bairavi only recently in a tv channel. Till that time (no shame to tell the truth) I was thinking the song Nandoorudhu Nariyoorudhu is from Shivaji sir movie. Because it was sung by TMS in the pattern how he sing for Shivaji sir.

Super songs from both the films by Ilaiyaraja sir.

Thanks & Regards
stl

rajeshkrv
23rd November 2014, 09:42 AM
காலை வணக்கம்

வாசு ஜி

இதோ இது ஒரு பொன் மாலை பொழுதின் தெலுங்கு வடிவம் இசையரசியின் குரலில்

ஜே.வி.ராகவலு ராஜாவின் டியூனை உபயோகித்து கொண்டார்.

https://www.youtube.com/watch?v=RTEHuXRrilU

rajraj
23rd November 2014, 01:55 PM
நீங்கள் அடுத்தமுறை இந்தியா வரும் போது நெய்வேலியில் என்னிடம் ஹலோ சொல்வதாகக் கூறி உள்ளீர்கள்.:) ம்ஹூம்...ஒத்துக் கொள்ள மாட்டேன்.:) ஒரு நாளாவது எங்கள் வீட்டில் தங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும். இது என் இந்திப் பாடல்கள் குருவுக்கு கோரும் நான் அன்புக் கட்டளை.


Thanks vasu for the invitation or edict ! :) I will keep that in mind. I usually meet some hubbers whenever I visit India.
So far I have met madhu,scorpio,19thmay,thirumaran,sarna,sathya_1970 in Madras and had dinner or lunch with them.
I will stop by for tiffin ! :)

Hindi songs guru? That is stretching it too far. I am sure you know more Hindi songs than I do ! :lol:

I like the popular singers of the 50s and earlier like Shamshad Begum, Noor Jahan, Sudha Malhotra, Suraiya, Kaanan Devi and a few others. I have posted some of their songs in Hindi songs thread!

JamesFague
23rd November 2014, 06:28 PM
Enjoy the superb song from the movie Silsila starring Big B and Rekha


http://youtu.be/LgaNBJ2pQOs

JamesFague
23rd November 2014, 06:31 PM
Enjoy the super song from the movie Darr starring King Khan & Juhi and it helps Mr Khan to showcase his talent by portraying negative role in this film. Overall must watch

especially for Khan.


http://youtu.be/-klQkGJEsIg

JamesFague
23rd November 2014, 06:33 PM
One more melody of Mr King Khan's movie Karan Arjun with unmatchable Kajol.


http://youtu.be/Ib68-5NQOzQ

vasudevan31355
23rd November 2014, 06:39 PM
மாலை மதுரம்.

1950 ல் வெளிவந்த இதய கீதம் படத்தில் லலிதா பத்மினியின் வித்தியாமான டான்ஸ். பத்மினிக்கு ஆஅன் வேடம். ஜுமா ஜுமா ஜும் என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் கெடக் அவ்வளவு இனிமை. ஸ்கிப்பிங் கயிறைக் கொண்டே ஒரு இடத்தில் நடனக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.டி .ஆர் .மகாலிங்கம், ராஜகுமாரி, வீரப்பா நடித்த இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஹிட். ஜீவன் தாரா என்று ஹிந்தியிலும் வெளியானது. லலிதா அவ்வளவு அழகு. உடன் ஆடும் நந்தன நடிகைகளும் அழகாக ஆடுகிறார்கள்.


https://www.youtube.com/watch?v=TRp6zsac3uI&feature=player_detailpage

vasudevan31355
23rd November 2014, 06:47 PM
மாலை மதுரம்.

'சந்திரலேகா'படத்தில் இடம் பெற்ற சர்க்கஸ் பாடல். நகைச்சுவை ததும்பும் பாடல்.

குதிரை வியாபாரம் பண்ணும் சுந்தரிபாய் குமரியாய் இருப்பார்.

'நாட்டியக் குதிரை நாட்டியக் குதிரை
நாலாயிரம் பொன் வாங்கலியோ'
சாட்டையைப் போல காலு
சவுரியை போல வாலு
நீட்டமான குதிர
வாட்ட சாட்டமான குதிர

enjoyable song.


https://www.youtube.com/watch?v=gHSjd_-mank&feature=player_detailpage

vasudevan31355
23rd November 2014, 09:54 PM
நன்றி ராஜ்ராஜ் சார்.

உங்களுக்குப் பிடித்த பாடகிகளின் வரிசை தூள். அதில் என் அபிமனப் பாடகி ஷம்ஷத் பேகத்தை முதலாவதாக குறிப்பிட்டிருப்பது இன்னும் சந்தோஷம்.

சுரய்யா அருமையான பாடகி. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகை பிளஸ் பாடகி. இப்போது என் உயிர்ப் பாடகி ஷம்ஷத் பேகும் பாடிய ஒரு பாடல்

'மேரே பியா கே ரங்கூன்'

பேகத்தின் குரலில் 'பதங்கா' படத்தின் பாடல். அப்படியே அள்ளிக் கொண்டு போகும் சார். எப்படி தமிழில் எல்.ஆர்.ஈஸ்வரியைப் பிடிக்குமோ அந்த அளவிற்கு பேகத்தைப் பிடிக்கும். சற்றே ஆண்மைத்தனம் கலந்த குரல். சும்மா கணீர் கணீர் என்று ஒலிக்கும் குரல். அப்படியே மயங்கி சொக்கிப் போவேன் சார். இந்தப் பாடலை சி.ராமச்சந்திராவும் உடன் பாடியிருப்பார். Nigar Sultana நின்றபடியே பாடுவது அழகு. பர்மா ரங்கூன் ஸ்டைலில் அப்போதே தொலை பேசியிலேயே பாடுவது போல கலக்கல் பாடல். ஹிந்தி காமெடியன் கோபி (gope )அப்படியே உருவத்தில் நம் தமிழ் காமெடி நடிகர் டி .எஸ். துரைராஜ் அவர்களை ஞாபகப்படுத்துவார்.

செம பாட்டு. படம் உங்களுக்கு பிடித்த 50 களுக்கு முன்னால் அதாவது 1949-ல் வெளி வந்தது. பாடல் தங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.


https://www.youtube.com/watch?v=pumMzP-gbP4&feature=player_detailpage

vasudevan31355
23rd November 2014, 10:00 PM
தங்களுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்திற்கு மிக நன்றி ஸ்டெல்லா மேடம். நீங்கள் நினைத்ததுபோல பலரும் நினைத்ததுதான். நண்டூருது நரியூருது நடிகர் திலகத்தின் படப் பாடல் போலவே இருக்கும். ஆனால் நடிகர் திலகத்தின் குரல் போல் அல்லது பாடகர் திலகம் குரலை மாற்றிப் பாடியிருப்பார்.

rajraj
23rd November 2014, 11:12 PM
Thanks vasu for " mere piya gaye rangoon". I posted it in some thread. The song I like most in Patanga is " Oh dilwalon dil ka lagaana achchaa hai par kabhi kabhi". The Tamil song in the same tune is "oosi pattaase vedikkaiyaa thee vachchaale vedi dabaar dabaar". It was a popular song in the 50s. It was popular with kids. I used to sing it. I posted it here before DeepavaLi :)

rajraj
23rd November 2014, 11:48 PM
மாலை மதுரம்.

'சந்திரலேகா'படத்தில் இடம் பெற்ற சர்க்கஸ் பாடல். நகைச்சுவை ததும்பும் பாடல்.

குதிரை வியாபாரம் பண்ணும் சுந்தரிபாய் குமரியாய் இருப்பார்.

'நாட்டியக் குதிரை நாட்டியக் குதிரை
நாலாயிரம் பொன் வாங்கலியோ'
சாட்டையைப் போல காலு
சவுரியை போல வாலு
நீட்டமான குதிர
வாட்ட சாட்டமான குதிர


Hindi equivalent from Chandralekha (Hindi) (1948)

naachche godaaa naachche godaa....

http://www.youtube.com/watch?v=PAkDD-jsrRQ

rajeshkrv
24th November 2014, 12:30 AM
நன்றி ராஜ்ராஜ் சார்.

உங்களுக்குப் பிடித்த பாடகிகளின் வரிசை தூள். அதில் என் அபிமனப் பாடகி ஷம்ஷத் பேகத்தை முதலாவதாக குறிப்பிட்டிருப்பது இன்னும் சந்தோஷம்.

சுரய்யா அருமையான பாடகி. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகை பிளஸ் பாடகி. இப்போது என் உயிர்ப் பாடகி ஷம்ஷத் பேகும் பாடிய ஒரு பாடல்

'மேரே பியா கே ரங்கூன்'

பேகத்தின் குரலில் 'பதங்கா' படத்தின் பாடல். அப்படியே அள்ளிக் கொண்டு போகும் சார். எப்படி தமிழில் எல்.ஆர்.ஈஸ்வரியைப் பிடிக்குமோ அந்த அளவிற்கு பேகத்தைப் பிடிக்கும். சற்றே ஆண்மைத்தனம் கலந்த குரல். சும்மா கணீர் கணீர் என்று ஒலிக்கும் குரல். அப்படியே மயங்கி சொக்கிப் போவேன் சார். இந்தப் பாடலை சி.ராமச்சந்திராவும் உடன் பாடியிருப்பார். Nigar Sultana நின்றபடியே பாடுவது அழகு. பர்மா ரங்கூன் ஸ்டைலில் அப்போதே தொலை பேசியிலேயே பாடுவது போல கலக்கல் பாடல். ஹிந்தி காமெடியன் கோபி (gope )அப்படியே உருவத்தில் நம் தமிழ் காமெடி நடிகர் டி .எஸ். துரைராஜ் அவர்களை ஞாபகப்படுத்துவார்.

செம பாட்டு. படம் உங்களுக்கு பிடித்த 50 களுக்கு முன்னால் அதாவது 1949-ல் வெளி வந்தது. பாடல் தங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.


https://www.youtube.com/watch?v=pumMzP-gbP4&feature=player_detailpage

My fav song

rajeshkrv
24th November 2014, 12:54 AM
வாசு ஜி,

உங்கள் பேவரிட் ஜெயமாலினி .. இந்த வருடம் சந்தோஷம் விருதுளுக்காக பல வருடம் கழித்து தன் முகத்தை காட்டினார்

http://moviegalleri.net/wp-content/gallery/santosham-12th-anniversary-awards-function/santosham_12th_anniversary_awards_2014_function_ph otos_4ece13f.jpg

http://moviegalleri.net/wp-content/gallery/santosham-12th-anniversary-awards-function/santosham_12th_anniversary_awards_2014_function_ph otos_11a0dea.jpg

http://www.cinejosh.com/gallereys/others/normal/santosham_film_awards_2014_3108140840/santosham_film_awards_2014_3108140840_051.jpg

vasudevan31355
24th November 2014, 10:40 AM
http://moviegore.com/wp-content/uploads/2010/04/journey-beyond-three-seas-pardesi-1957.jpg

http://www.filmkailm.com/wp-content/gallery/top-100-firsts-in-indian-cinema-part-3/pardesi_3.jpg

இது முக்கியமான பதிவு. 1957-ல் இந்தியா சோவியத் கூட்டுத் தயாரிப்பாக 'Journey Beyond Three Seas' என்ற பெயரிலும், 'பரதேசி' என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. ருஷ்ய மொழியிலும் (Khozhdenie za tri morya) (stranger) , ரோமானிய மொழியிலும் கூட வெளியானது. பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. Oleg Strizhenov, நம் நாட்டு நர்கீஸ், பால்ராஜ் சஹானி பிரதான ரோல்களில் நடித்திருந்தனர். சோவியத் ரஷ்யாவில் மிகவும் ஹிட்டான படமும் கூட.

நம்மூர் பத்மினி இப்படத்தில் நடித்திருந்தது ஒரு விசேஷம்.

நீங்கள் எத்தனையோ படங்களில் பத்மினியைப் பார்த்திருக்கலாம். அவர் நாட்டியத்தைக் கண்டு ரசித்திருக்கலாம். இப்போது நீங்கள் பார்க்கப் போவது அவை எல்லாவற்றுக்கும் உச்சம். படத்தின் ஹீரோ பத்மினியின் பாரத நாட்டியத்தைக் கண்டு வியப்பது போல ஒரு கட்சி. வண்ணப் படம் வேறு. நம் நாட்டியப் பேரொளியோ அப்போதுதான் பூமிக்கு வந்த அப்சரஸ் மாதிரி அழகில் எவரும் ஈடு இணை செய்ய முடியாதபடி ஜொலிக்கிறார். அவருடைய ஒவ்வொரு அபிநயமும் நம்மை அப்படியே சொக்கிப் போய் மயங்க வைத்து விடுகின்றன. முதலில் கேஷுவலாக ஆடும் பத்மினி திடீரென நாயகனைக் கண்டவுடன் ஒரு கணம் தடுமாறி பின் சமாளித்து பாவங்களை மெதுவாக்கி பின் மறுபடி பரதத்தில் பின்னி எடுப்பது அபாரம். நாட்டியத்தின் பின்னால் ஒலிக்கும் தாளக்கட்டு அருமை.

பத்மினி ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருப்பார். அவருடைய பரத உடையலங்காரம் அற்புதம். அனேகமாக பெரும்பாலும் எவரும் பார்த்திருக்க முடியாத வீடியோ.

நம்மூர் பரதத்தை சோவியத் ரஷ்யா வரை பரவ வைத்த நம் நாட்டுக் கலைஞர்கள். அதுவும் நாட்டியப் பேரொளி டாப்.

1958 -ல் கென்ஸ் திரைப்பட விழாவில் golden palm விருது பெற்ற படம் இது.

அது மட்டுமல்ல 'பிலிம்பேர்' அவார்டும் சிறந்த ஆர்ட்ஸ் டைரக்ஷனுக்காகக் கிடைத்தது.

http://indpaedia.com/ind/images/3/30/Pardesi9.jpg

watch on you tube ஐ கிளிக் செய்யுங்கள்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3drXukfiH4o

vasudevan31355
24th November 2014, 11:09 AM
கிருஷ்ணா சார்,

1953 லியே இந்த ஸ்டில் என்றல் நம்ப முடிகிறதா. 'ஷாஹென்ஷா' இந்திப் படத்தில் காமினி கௌஷல் கொடுத்த போஸ் இது. நம்ம ரஞ்சன் நாயகன்.

http://www.indianscreen.com/shehenshah.jpg

http://cinegems.in/wp-content/uploads/2014/02/FilmIndia-Nov1952.jpg

vasudevan31355
24th November 2014, 11:11 AM
பூக்களோடு பூக்களாக இசைப் பூ

https://i.ytimg.com/vi/Li5Ej0laK28/hqdefault.jpg

vasudevan31355
24th November 2014, 11:12 AM
இசைக் குயில் இளவயதில்.

http://i2.ytimg.com/vi/G5w-azmPMP0/0.jpghttp://www.radjesh.com/Lata%20Mangeshkar/images/img0016.jpg

vasudevan31355
24th November 2014, 11:12 AM
http://i2.ytimg.com/vi/CXrupGDF79M/0.jpg

vasudevan31355
24th November 2014, 12:12 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 21)

\http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

இது எப்படி இருக்கு?

நான் '16 வயதினிலே' பரட்டை ரஜினி இல்லைங்க. இளையராஜா தொடரில் அடுத்து வரும் பாடல் இடம் பெற்ற படத்தைத்தான் சொன்னேன். இதுவும் 1978 இல் வந்த படம். ஜெய்சங்கர் ஸ்ரீதேவியுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்த காலகட்டம் இது. படத்தை இயக்கியவர் ஆர்.பட்டாபிராமன் என்ற பட்டு.

ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ஒய்.விஜயா, சரத்பாபு, மேஜர், தேங்காய், மூர்த்தி, ஹலம், மஞ்சுஷா, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தது. அசோகன், ஒய்.ஜி.மகேந்திரன் கௌரவ நடிகர்களாக நடித்திருந்தனர்.

http://2.bp.blogspot.com/-pHugnccRpwE/UzJ1VIywqtI/AAAAAAAACSo/qIXotmaJWmQ/s1600/anitha+ilam+manaivi+%25282%2529.jpg

'அனிதா இளம் மனைவி' என்று குமுதத்தில் வெளிவந்த தொடர் 'இது எப்படி இருக்கு' என்று சினிமாவாக வந்து வழக்கம் போல நாஸ்தியானது.

ஜேசுதாஸ், கோவை முரளி, சுசீலா, ஜானகி பின்னணி பாடியிருந்தனர். ஜூடோ ரத்னம், எம்.கே தர்மலிங்கம் இருவரும் இணைந்து சண்டைக் காட்சிகளை அமைத்திருந்தனர். திரைக்கதை, வசனம், பாடல்கள் பஞ்சு அருணாச்சலம். தயாரிப்பு விஜயா- மீனா.

மொத்தம் 4 பாடல்கள். ஒரு பாடல் மட்டுமே சூப்பர் ஹிட் வகையை சார்ந்த்தது

http://img7.bdbphotos.com/images/huge/o/c/ocznmx3t61j31mtx.jpg?djet1p5k

1. 'எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ'

அற்புதமான ராஜாவின் மனம் மயக்கும் பாடல். ஜேசுதாஸ் ஜானகி குரலில் தேன் மதுரமாய் ஒலித்தது. 'லாலா லாலா லா' என்று ஜானகி பாடலை ஆரம்பிக்கும் போதே இனிமை கொஞ்ச ஆரம்பித்து விடும். ஜெய்சங்கரும், ஸ்ரீதேவியும் பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் உல்லாசம் புரிந்திருக்க, பின்னணியில் ஒலிக்கும் பாடல். பாடலின் நடுவில் வரும் இளையராஜாவின் பிராண்ட் ஆன அந்த 'குகுகுக்கூ' குயில் கூவல் பேஷ். ரொம்ப நன்னா இருக்கும். மிக அழகாக கிடாரை கையாண்டிருப்பார் இளையராஜா. 'தேனாக' என்று ஜேசுதாஸ் முடித்தவுடன் 'லலலலலலா' என்று ஜானகி எடுப்பது அழகு. அதே போல 'வா' என்று ஜேசுதாஸ் முடித்தவுடம் 'ம்ம்ம்ம்' என்று ஜானகி தொடர்வது இனிமையோ இனிமை. பாடல் வரிகளை அற்புதமாக கொடுத்திருப்பார் பஞ்சு. ஜெய், ஸ்ரீதேவி ஜோடி ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் பாடலின் இனிமை அதை நிகர் செய்து விடுகிறது. ஆனால் ஒளிப்பதிவு ஏனோதானோ. மகா மட்டம். காட்சிகள் தெளிவாக இல்லாமல் மழுங்கலாக தெரியும். ரொம்ப லோ பட்ஜெட். இந்தப் பாடல் ஜெய்சங்கருக்கா என்று வாய் பிளப்பவர்கள் இன்றும் உண்டு. அதுவும் ஸ்ரீதேவி ஜோடியா என்று வியந்து போவார்கள்.

எப்படியோ என்றுமே ரசிக்கக் கூடிய வகையில் இந்தக் குப்பைப் படத்தில் ஒரு கோமேதேகப் பாடல். பாடலால் படத்தின் பெயர் பலருக்குத் தெரிய வாய்ப்பு. ராஜா முத்திரை. ஹேட்ஸ் ஆஃப் இளையராஜா.


https://www.youtube.com/watch?v=dtv165n4KlI&feature=player_detailpage

2. ஜானகி பாடும் ஒரு காபரே நடனப் பாடல் 'ஓ..மை லவ்' சுமாருக்கும் கீழே. கோபாலுக்குப் பிடித்த ஹலம் ஆடுவார். சுத்தமாக வெளியே பிரபலமாகாத பாடல் இது.

3. இது இல்லாமல் தேங்காய் எக்ஸ்ட்ரா குள்ளக் காமெடியன்களுடன் ஆடிப் பாடும்,

'கைரேகை பார்த்து
ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க'

பாடலை கோவை கோவை முரளி பாடியிருப்பார். இதுவும் சுமாரே.

4. ஒய்.விஜயா விரக்தியாக சுசீலா அம்மாவின் குரலில் பாடும் இன்னொரு பாடல்.

'தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியா'

ஓ.கே.ரகமே.

'இது எப்படி இருக்கு'? ன்னு இனிமே நீங்கதான் சொல்ல வேணும்.:)

gkrishna
24th November 2014, 01:14 PM
http://upload.wikimedia.org/wikipedia/ta/a/a0/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0% AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A 9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF.jpg

'எங்கும் நிறைந்த இயற்கையில் ' lovely சாங்.

ஜேசுதாஸ் ,ஜானகி இணையில் வெளி வந்த மோகன பாடல் வாசு .
முதல் பாகத்தில் இந்த பாடலை லேசாக நினைவு கூர்ந்து இருப்போம்
சுஜாதாவின் 'அனிதா இளம் மனைவி' நாவலை படித்து விட்டு படம் பாருங்கள் கண்ணீர் ஆறாய் பெருகி வரும் .

ஒரு நாவலை இப்படி கூட படம் எடுக்க முடியுமா

வருவது
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQYER-Khu9XaIHvnBZsG7KhD-hzvc-KzxPCyGw-oXJKST33EB-O அல்ல

இந்த
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRHpykAycDroMV1uRdZqaN0_0VtDma95 Z8gWTu1S02bRhkK4bFP
வரும்


பணக்காரர் மேஜர்,இரண்டாவது மனைவி y விஜயா .முதல் தாரத்தின் மகள் ஸ்ரீதேவி .பணக்காரரின் காரியதரிசி சரத்பாபு. y விஜயா மீது ஆசைப்பட்டு சவுக்கடி பட்டு சாகும் கதாபாத்திரத்தில் எஸ் வீ ராமதாஸ் என்று நினைக்கிறன் . எல்லாவற்றிற்கும் மேல் வக்கீல் கணேஷ் மக்கள் கலைஞர் .

இது எப்படி இருக்கு - காயத்திரியில் கிடைத்த கொஞ்ச நஞ்ச சொற்ப லாபத்தை கணக்கு காண்பிக்க எடுத்த படம் போல் இருக்கும் :)

http://www.bookconnect.in/products/anitha-ilam-manaivee#prettyPhoto[gallery1]/0/

uvausan
24th November 2014, 09:21 PM
வாசு , இளைய ராஜாவின் மதுர கானத்தை அருமையாக அலசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சற்றே விலகி " இது கட்டு கதை அல்ல "என்ற ஒரு பதிவை இங்கு இடுவதிற்கு மன்னிக்கவும் . சமீபத்தில் , இன்றைய தலைமுறையை சேர்ந்த ஒருவர் , பலர் மனம் புண்பட தலைவர் காமராஜரை பற்றி வேறு விதமாக சொன்னது ஒரு பெரிய விவாதத்திற்கு வந்துள்ளது . எப்படிப்பட்ட ஒருவர் வாழ்ந்த காலத்தில் நாமெல்லாம் இருந்திருக்கோம் என்று நினைக்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்க்கின்றது - அந்த நினைவலைகளில் பின்னணியில் உதயமான பதிவு இது

இது கட்டுக் கதையல்ல..... உண்மை !.இப்படிப்பட்ட மனிதர்களும் நிகழ்ச்சிகளும் தற்காலத்தில் அரிதாகி விட்டதால். இந்தத்
தலைப்பை கொடுக்கவேண்டி உள்ளது.

அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையாத் தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையாத் தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையாத் தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்து காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையாத் தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ்.
" யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் " என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையாத் தேவரை பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். " நான்தான் ஐயா " என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. " உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் " என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையாத் தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வர் அறையில் உள்ள சோபாவில், கன்னத்தில் கை வைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். " நீங்கதான் மண்ணாங்கட்டியா." .என்கிறார்​. "ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா " என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.

அவரை " வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் " என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்பு பண்ணிட்டேன் தெரியாம செய்திட்டேன் மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் " என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர்.. வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.
ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....

இப்படியும் மனுசங்க இருந்திருக்காங்க
--

sivaa
24th November 2014, 09:47 PM
ஒரு ஏழையின் கண்ணீர்.. வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.
ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....

இப்படியும் மனுசங்க இருந்திருக்காங்க
--

இப்படியான நல்ல மனிதர்களைதான் தமிழ்நாடு தூக்கி எறிகின்றதே

rajeshkrv
24th November 2014, 10:19 PM
வாசு , இளைய ராஜாவின் மதுர கானத்தை அருமையாக அலசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சற்றே விலகி " இது கட்டு கதை அல்ல "என்ற ஒரு பதிவை இங்கு இடுவதிற்கு மன்னிக்கவும் . சமீபத்தில் , இன்றைய தலைமுறையை சேர்ந்த ஒருவர் , பலர் மனம் புண்பட தலைவர் காமராஜரை பற்றி வேறு விதமாக சொன்னது ஒரு பெரிய விவாதத்திற்கு வந்துள்ளது . எப்படிப்பட்ட ஒருவர் வாழ்ந்த காலத்தில் நாமெல்லாம் இருந்திருக்கோம் என்று நினைக்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்க்கின்றது - அந்த நினைவலைகளில் பின்னணியில் உதயமான பதிவு இது

இது கட்டுக் கதையல்ல..... உண்மை !.இப்படிப்பட்ட மனிதர்களும் நிகழ்ச்சிகளும் தற்காலத்தில் அரிதாகி விட்டதால். இந்தத்
தலைப்பை கொடுக்கவேண்டி உள்ளது.

அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையாத் தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையாத் தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையாத் தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்து காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையாத் தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ்.
" யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் " என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையாத் தேவரை பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். " நான்தான் ஐயா " என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. " உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் " என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையாத் தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வர் அறையில் உள்ள சோபாவில், கன்னத்தில் கை வைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். " நீங்கதான் மண்ணாங்கட்டியா." .என்கிறார்​. "ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா " என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.

அவரை " வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் " என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்பு பண்ணிட்டேன் தெரியாம செய்திட்டேன் மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் " என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர்.. வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.
ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....

இப்படியும் மனுசங்க இருந்திருக்காங்க
--

அதெல்லாம் ஒரு கனா காலாமாகிவிட்டது. இப்பொழுது மனிதாபிமானமோ இறக்கமோ உதவி செய்யும் குணமோ எதுவுமே இல்லாமல் போய்விட்டது.
எனக்கு என் குடும்பம் என்று குறுகிய வட்டமும் குறுகிய மனமும் தான் மிச்சம் ... காமராஜர் மாதிரியோ கக்கன் மாதிரியோ அதற்கு பின் மக்கள் திலகம் மாதிரியோ இனி யாரும் வரப்போவதுமில்லை வந்தாலும் அவர்களை நாம் அப்படியே இருக்க விடப்போவதுமில்லை ...

uvausan
24th November 2014, 10:39 PM
கர்ணன் என்ற ஒரு பாத்திரத்தை நாம் மறக்காத வரையில் - நட்பு என்ற ஒரு வார்த்தை நிரந்தரமாக தரணியில் இருக்கும் . செய்நன்றி என்ற ஒரு வார்த்தை ஜீவனுடன் என்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் , கர்ணனை பற்றிய நினைவளைகள் நம்மிடம் இருக்கும் வரையில் !!

எப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் - எப்படிப்பட்ட குணாதிசயங்கள் அவனிடம் !! - கொடுப்பதற்காக பிறந்தான் - பிறந்ததினால் இறந்தான் - ஆனால் இறந்தபின்னும் இன்றும் வாழ்கிறான் - அவனை பற்றிய புதைந்து கிடக்கும் சில உண்மைகளை இந்த பதிவில் பதிவிட விரும்பிகிறேன் - ஏற்கனவே NT திரியில் (பாகம் 12) இல் பதித்து இருந்தாலும் இன்னும் சில உண்மைகளுடன் சேர்த்து பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

கர்ணன் -சொல்லப்படாத சில உண்மைகள் :

கர்ணன் : ஒரு பரிதாபமான பிறவி - எல்லாம் இருந்தன அவனிடம் - அனைத்தும் பிடுங்கப்பட்டன விதியின் சதியால் - பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சியை கண்டான் - அவனையே எடுத்துகொண்டதில் மகிழ்ச்சியை அடைந்தான் இந்திரன் - அவனின் வீரத்தை பெற்ற தாயே தானம் கேட்டாள் - தனது இரண்டு வரங்கள் மூலம் - பரசுராமர் அவன் அந்தணன் இல்லை என்று அவன் பாடுபட்டு கற்று கொண்ட பிரம்மாஸ்திரத்தை மறக்க வைத்தார் - என்றுமே புதையாத அவன் தேர் பூமியில் முதலாகவும் , கடைசி முறையாகவும் புதைந்தது - கண்ணன் சிரித்தான் - கர்ணன் அங்கே வாழ்ந்தான் .

கண்ணன் : கண்ணன் இல்லையேல் ஏது மகாபாரதம் ?- ஒவ்வொரு காரியத்தையும் கண கச்சிதமாக செய்தவன் - யாரை எங்கு வைப்பது என்பதை முழுதும் தெரிந்து கொண்டவன் - கர்ணனை கண்ணனாலும் அழிக்க முடியவில்லையே !! கர்ணனிடம் உயிர் யாசகம் பெற்று கொண்டபின் தானே அவனால் கர்ணனை அழிக்க முடிந்தது - யாருக்கும் கிடைக்காத விஷ்வ ரூப தரிசனம் கர்ணனுக்கு கிடைத்தது - பிறர் அந்த தரிசனத்திற்கு ஏங்கினர் - கர்ணனுக்கு மட்டும் தான் அவன் கேட்க்காமல் கிடைத்து

அர்ஜுனன் : நம் எல்லோருக்குள்ளும் , ஒரு அர்ஜுனன் இருக்கிறான் - நம் மீதோ , நம் திறமையின் மீதோ நமக்கே சந்தேகம் வரும் பொழுது , தன்னம்பிக்கை என்னும் காண்டீபத்தை நழுவ விடுகிறோம் - உள் மனம் கண்ணனாக இருந்து , சொல்பவர்கள் சொல்லட்டும் , உன் மீது நீ நம்பிக்கை வை , உன் உத்தரவு இல்லாமல் யாரும் உன்னை அவமானம் படுத்த முடியாது என்று சொல்லி நம்மை மீண்டும் ஒரு நம்பிக்கை உள்ளவனாக மாற்றுகின்றது - இங்கே நமது மனம் தான் கண்ணன் - அது சொல்வதுதான் பகவத் கீதை !

1. கர்ணனின் பெருமையை உயர்த்தும் ஒரு நிகழ்ச்சி
ஒரு அந்தணன் யாசகம் பெற வேண்டி கர்ணனிடம் சென்றான் - கர்ணன் அப்பொழுது உணவு எடுத்துக்கொள்ளும் நேரம் - பாதியில் உண்ணும் உணவை நிறுத்திவிட்டு தனது left hand மூலம் அவனுக்கு முத்துமாலைகள் சிலவற்றை அளித்தான் - இதை பார்த்த சிலர் கர்ணனிடம் அதை பற்றி கேட்டனர் - கர்ணன் சொன்ன பதில் அவர்களை சிந்திக்க வைத்தது - " நான் செய்தது தவறு தான் - ஆனால் நான் என் கைகளை கழுவிக்கொண்டபின் தர்மம் செய்திருந்தால் அந்த சமயம் எனது மனது சற்றே மாறி இருக்கலாம் - அல்லது அந்த அந்தணருக்கு போதிய முத்து மாலைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம் -எப்பொழுது தர்மம் செய்யவேண்டும் என்று தோன்றுகின்றதோ அப்பொழுதே செய்து விடவேண்டும் மனம் மாறிவிடுவதர்க்குள் "

2. கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி :

அந்த காலத்தில் ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது - போர் முடிந்தபின் , அரசர்கள் அனைவரையும் அவர்களின் தேரோட்டிகள் தேரை விட்டு இறங்கி மூன்று முறை சுற்றி வந்து வணங்கி வழிபட வேண்டும் - அர்ஜுனனுக்கு ஒரே பெருமை - தன்னை சுற்றி வந்து வழிபடவேண்டியவர் கண்ணன் - இந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் ? - அந்த பெருமை கொஞ்ச நேரத்தில் கர்வமாக உருவானது - தன்னை மீறி ஒருவரும் இல்லை - இறைவனே தன்னை சுற்றி வந்து வழி படபோகிறான் - தானே இனி மேலானவன் என்று - ஆவலுடன் காத்திருந்த அர்ஜுனனை , கோபாலனின் உஷ்ணம் நிறைந்த வார்த்தைகள் தட்டி எழுப்பின - இதுவரை கண்டிராத கோபம் - கேட்காத வார்த்தைகள் - அவமானத்தில் குறுகினான் அர்ஜுனன் - கண்ணன் சொன்னான் " அர்ஜுனா தேரை விட்டு இறங்கு உடனே - ஏன் , எதற்கு என்று கேள்விகள் எழுப்பாதே - சொன்னதை செய் !"

அர்ஜுனன் :" கண்ணா மற்ற தேரோட்டிகளை பார்த்துமா என்னை தேரை விட்டு இறங்க சொல்கிறாய் ? "

"ஆமாம் "- கண்ணனின் வார்த்தைகளில் வெப்பம் இன்னும் அதிகமாகின

அர்ஜுனன் வேண்டா வெறுப்பாக தேரை விட்டு குதித்தவுடன் , கண்ணன் அவன் கைகளை பிடித்துகொண்டு வேகமாக அந்த தேரை விட்டு வெகு தூரத்திற்கு அழைத்து சென்றான் - சென்ற சில நொடியில் RDX வைத்ததுபோல அந்த தேர் எரிந்து சாம்பலானது

அர்ஜுனனுக்கு ஒரே ஆச்சரியம் , வியப்பு , அதிர்ச்சி ----

கண்ணன் சொன்னான் " அர்ஜுனா , உன்னை சுற்றி நான் வந்து வணங்கவேண்டும் என்று விரும்பினாய் - தேரை விட்டு நான் கீழே குதித்திருந்தால் உன் கதி என்னவாகி இருக்கும் ? அந்த தேரில் தைத்த அம்புகள் பல - எல்லாமே சக்தி வாய்ந்தவை - துரோணர் , பிதாமகர் , முக்கியமாக கர்ணன் எய்த அம்புகளின் சக்தியை நான் தடுத்து நிறுத்தினேன் - என் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவைகள் உன்னை ஒன்றும் செய்யவில்லை - நான் தேரை விட்டு இறங்கியவுடன் , பசியுடன் இருந்த அந்த அம்புகள் உன் தேரை உணவாக்கி கொண்டன - நான் யாருடைய அம்புகளுக்கும் பின் வாங்கினதில்லை - ஆனால் கர்ணனின் அம்புகள் என் சக்தியையும் மீறியவைகள் - உன்னை அவைகளிடமிருந்து காப்பாற்றுவதிலேயே என் முழு கவனமும் இருந்தது

அர்ஜுனனின் கர்வம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது

3.கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி

கர்ணனின் கொடைத்தன்மையை பற்றி சில மன்னர்கள் சபையில் விவாதித்தனர் - ஒரு சிற்றரசர் சொன்னார் " கர்ணனின் தர்மம் செய்வதில் என்ன பெருமை உள்ளது - அவனுக்கு கிடைத்த அரசாட்சி ஒரு இரவல் தானே - இரவலாக கிடைத்த ஆட்சியில் தருமம் செய்வது ஒரு பெரிய விஷயமா ?

கர்ணன் காதுகளில் இந்த விஷயம் விழுந்தது - உடனே கர்ணன் அனைவரும் அறிய கூறினான் " இதனால் தவறுதலாக எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைத்திருந்தால் அதையும் கேட்டவருக்கு கொடுத்துவிடுகிறேன் " கண்ணன் இதை மனதில் வாங்கிகொண்டான் சமயம் பார்த்து இந்த யாசகத்தை கர்ணனிடம் இருந்து பெற்றுக்கொள்ள கண்ணன் தவறவில்லை - அவனை ஏளனம் செய்தவர்கள் வாயடைத்து போயினர் - தனக்கே உரிய கவசத்தையும் , குண்டலங்களையும் இந்திரனுக்கு கர்ணன் தானமாக கொடுத்தபின் -----

4.கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி

உடன் பிறந்த கவசமும் , காதுகளில் ஜொலிக்கும் குண்டலங்களும் ஒருமுறை பேசிக்கொண்டனவாம் - நம்மால் தான் கர்ணனுக்கு பெருமை , அவன் தேஜஸாக இருப்பதிருக்கு நாம் தான் காரணம் என்று --- இந்திரன் யாசகம் பெற்றபின் கவச குண்டலங்கள் வெட்கத்தினால் தலை குனிந்தன - அடாடா என்ன பேசிவிட்டோம் , இவன் உடம்பில் இதுவரை இருந்ததால் தானே நமக்கு ஒரு பொலிவு இருந்தது , மற்றவர்களின் கவனமும் நம்மீது இருந்தது - இப்பொழுது கர்ணன் இன்னும் பொலிவுடன் இருக்கிறான் , நாம் தான் அடிப்பட்ட பாம்பாக இருக்கிறோம் "

5. கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி

அர்ஜுனன் கண்ணனிடம் கோபத்துடன் கேட்டான் - "அப்படி என்ன இருக்கின்றது கர்ணனிடம் - எல்லோரும் புகழும்படியாக ?"

கண்ணன் ஒன்றும் பேசாமல் அர்ஜுனனை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான் - அங்கே அர்ஜுனன் கண்டது ஒரு பெரிய வைரமலை - ஜொலிக்கும் வைரங்கள் எங்கும் சிதறி கிடந்தன - கண்ணன் . அர்ஜுனனிடம் " பார்த்தா - நீ இங்கிருக்கும் வைரங்கள் அனைத்தையும் யாருக்காகவாவது தானம் செய்யவேண்டும் - அதுவும் இன்றே, இப்பொழுதே செய்ய வேண்டும்" என்றான் .

அர்ஜுனன் தனக்கு எல்லோரையும் அழைத்துவந்து வேண்டும் அளவிற்கு வைரங்களை அள்ளி கொடுத்தான் - அந்த வைர மலை ஒரு இம்மி கூட குறையாமல் இருந்தது - சூரியன் மறையும் நேரம் நெருங்க , அர்ஜுனன் தனது இயலாமை உணர்ந்தான் .

கண்ணன் உடனே கர்ணனை அழைத்தான் - அதே விடுகதை ---- கர்ணன் , கண்ணை பார்த்து " பிரபோ அடியேனின் இந்த சிறிய அன்பளிப்பை தானமாக பெற்று கொள்ளவேண்டும் - இந்த வைர மலை இனி உங்களுடையது " சொன்ன வேகத்தில் சற்றும் நிற்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றான் ---

கண்ணன் " அர்ஜுனா ஒரு வினாடியில் அந்த மலை தானமாக சென்று விட்டது - இதுதான் கொடை - அந்த மலையிடம் அவனுக்கு ஒரு பிடிப்பும் இல்லை - இதுதான் உனக்கும் அவனுக்கும் உள்ள வித்தியாசம் - அர்ஜுனன் ஊமையானான்


When Karna was on his death bed, Krishna came to test him. He disguised himself as a Brahmin saint , and asked Karna for some offering in the name of Dharma.Karna cited his debilitated condition and asked Krishna, "O Lord Brahmin, what can i offer you in his capitulated condition". Krishna teased him ,"I thought you were the greatest philanthropist on earth, are you not going to offer anything to this old brahmin?"

Karna thought for a while and then grabbed a stone from his macabre surroundings. He then thwarted the stone into his mouth and although his brutally beaten frame was cursing every movement he was afflicting upon himself, he kept doing that continuously. Meanwhile Krishna was surprised as well as awed by courage of this great warrior. After many strong blows, Karna was able to break two golden teeth he had, and offered them to the disguised Krishna.Krishna being extremely impressed by the valor of this great warrior , did not show any visible emotions. Instead he cursed Karna(to test him again) on how he was offering such saliva ridden teeth to such a pious brahmin. Karna deeply engraved by this statement, tried to crawl up to his bow and arrow. His bow was in tatters and the thread supporting it was nowhere to be seen. He cursed himself upon the defeat he faced to Arjuna in the earlier part of the day, and kept crawling to find an auxiliary thread to support his bow. Luckily he found one a few feet away from him. Every inch that he crawled made his wounds even more blood stained, and he was slowly losing his consciousness

But he kept crawling as the legend of Karna will not have an apt ending if this saint would not be satiated by him. Finally having reached the supporting thread he drew the thread in his bow. Meanwhile his hand continued to bleed profusely, and his nerves were on the verge of bursting up.He finally launched the final assault on his body and caressed the final arrow of his life into the ground. Subsequently, a stream of water came bursting out of the ground. He washed those saliva and blood stained teeth in this pristine stream of water and offered them to the disguised saint. Krishna embarrassed and visibly taken aback, gave up his disguised identity and came in his original form. Bowing to the great warrior he said, "Karna, if you want i can make you alive at this moment and make the world bow at your feet, Until you are there at the face of this earth , i am assured that Adhama shall never ever reign on this planet".Karna replied. "O Lord Krishna ,you are the creator and are omnipresent everywhere.Dont insult me by bowing in front of me. I have had enough of travails and hardships in my life, so much so that even the most ebullient luxuries are not able to lure me back into this life again. Let me die in peace and assure me that the legend of Karna may inspire generations to come. I beg forgiveness for all the wrongs that i have done unintentionally. Let the world turn into a righteous place, where the reign of Dharma shall ensure prosperity to everyone irrespective of their not caste and their not so noble beginnings”. Krishna silently nodded in agreement and blessed the warrior prince

This incident took place on the seventeenth day of the war of Kurukshetra.

Arjuna had killed Karna's son Vrishasena in order to make Karna experience the pain that he himself had suffered when Abhimanyu was brutally executed. But Karna refused to grieve his son's death and continued to fight Arjuna to keep his word and fulfill Duryodhana's destiny.

Finally when Karna and Arjuna came face to face, a serpent called Naga Ashwasena secretly entered Karna's quiver. This serpent was the one whose mother was relentlessly burnt when Arjuna had set Khandava-prastha ablaze. Ashwasena was able to save himself because he was in his eggshell, near mother at that time. Destined to avenge his mother's death by killing Arjuna, he transformed himself into an arrow and waited his turn. Karna unknowingly released Naga Ashwasena at Arjuna. Realizing that this was no ordinary arrow, Lord Krishna, Arjuna's charioteer, sunk the wheel of the chariot in the ground by pressing his feet against its floor in order to save Arjuna's life. This made the Naga, who was speedily advancing like a thunderbolt, miss his target and hit Arjuna's crown instead, causing it to fall on the ground. Disheartened, Naga Ashwasena returned to Karna and asked him to fire him towards Arjuna once again, this time making a promise that he would definitely not miss his target. After hearing Ashwasena's words, this is what the mighty AngaRaj said to him:

"It is beneath my stature as a warrior to shoot the same arrow twice. Find some other way to avenge your family's death."

Saddened by Karna's words, Ashwasena tried to kill Arjuna on his own but failed miserably. Arjuna was able to finish him off in a single stroke.

Who knows what would have happened had Karna released Ashwasena for the second time. He even might have killed Arjuna or at least would have injured him. But he upheld his principles and did not use the presented opportunity. Such was the character of AngaRaj. He was the man of his words and the epitome of morality. He was the ultimate warrior.

NT கர்ணனாக வராமல் இருந்திருந்தால் - கர்ணனை பற்றிய தெரிந்த உண்மைகளும் நமக்கு தெரியாமலே போக ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் - எப்படி பட்ட ஒரு சிறந்த கதாபாத்திரம் , எப்படிப்பட்ட ஒரு அதிசிய மனிதரால் மீண்டும் உயிர் பெற்று பல தலைமுறைகளுக்கு இன்னும் பாடம் கற்பித்து கொண்டுருக்கின்றது

http://youtu.be/GxG9EzeAXi4

sivaa
25th November 2014, 06:33 AM
கர்ணன் என்ற ஒரு பாத்திரத்தை நாம் மறக்காத வரையில் - நட்பு என்ற ஒரு வார்த்தை நிரந்தரமாக தரணியில் இருக்கும் . செய்நன்றி என்ற ஒரு வார்த்தை ஜீவனுடன் என்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் , கர்ணனை பற்றிய நினைவளைகள் நம்மிடம் இருக்கும் வரையில் !!








வணக்கம் ரவி

சிறந்த பதிவு

நீங்கள் மெயின் திரிக்கு வந்து
பதிவுகள் இடவேண்டும் என்பது எனது அவா
நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்

என்னுடைய தனிமடல் பார்க்கவும்

RAGHAVENDRA
25th November 2014, 07:18 AM
பொங்கும் பூம்புனல்

சற்றே சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பொங்கி வருகிறது பூம்புனல்.

மெல்லிசை மன்னர் என்கின்ற ஈடு இணையற்ற இசைமேதையின் படைப்புக்களில் 80களில் வெளி வந்த பல இன்னும் மக்களிடம் சரியான முறையில் சென்றடையவில்லை. அப்படிப்பட்ட அற்புதமான படைப்புகளில் ஒன்றே இன்று இங்கே இடம் பெறுகிறது.

கேட்டவுடன் இந்தப் பாடலா எனத் தங்கள் அகம் மகிழப்போவது உண்மை.

பெயருக்கேற்றவாறு அத்திபூத்த மாதிரியான அபூர்வமான பாடல்.

அத்தி பூத்தது என்கின்ற தமிழ்ப்படத்தில் எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் குரல்களில்...

மூவகைப் பாலில் மூன்றாம் பால் தான் இன்பம்...

http://www.youtube.com/watch?v=z_sHduXnbBg

RAGHAVENDRA
25th November 2014, 07:22 AM
பொங்கும் பூம்புனல்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு என பல பழைய படங்களின் மறு வெளியீட்டில் கூறுவது போல்..

இளைய திலகம் பிரபு அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களையும் ரசிகையரையும் உருவாக்கித் தந்த படம். கிட்டத்தட்ட இருவர் உள்ளம் படத்தை ஒட்டிய கதையமைப்பு. நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்கள்.. இளையராஜாவின் இசை மகுடத்தில் மேலும் ஓர் மரகதம்...

ராகங்கள் மாறுவதில்லை படத்திலிருந்து விழிகள் மீனோ... எஸ்.பி.பாலாவின் உன்னத குரலில் உள்ளம் உவகை கொள்ளும்

http://www.youtube.com/watch?v=Pbcp9VAZc6U

rajeshkrv
25th November 2014, 08:21 AM
வாங்க ராகவ் ஜி வணக்கம்

rajeshkrv
25th November 2014, 09:59 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் 20

ரோஜாவை கிள்ளாதே படத்தில் இன்னொரு அருமையான பாட்டு

நீ ஒரு பட்டம் நானொரு பட்டம் பாலு, சித்ராவின் குரலில் நல்ல பாடல்


https://www.youtube.com/watch?v=_wQqNbJqoLo

Russellisf
25th November 2014, 12:26 PM
கண்ணதாசனை கடுமையாகச் சாடி இருந்தார் நண்பர் ஒருவர்...
காரசாரமான அந்த சாடலுக்குக் காரணம் ...
கமலின் பாடல் ஒன்று..!
“ராஜ பார்வை” படத்தில் வரும்..
“அழகே அழகு.. தேவதை..”
கண் பார்வையற்ற கதாநாயகன் , தன் காதலியை வர்ணித்துப் பாடுகிறான் இப்படி...!
"சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன"
"பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்"
நண்பர் தன் பதிவில் கேட்டிருந்தார்....
“பார்வையற்றவன் பாடுவது போலவா இருக்கிறது இந்த பாடல் வரிகள்..?
சிப்பியும் ,முத்தும்...பூவும் ,கொடியும்..வாழையின் வனப்பும் , அழகும்...
எப்படித் தெரியும் அந்த கண் பார்வையற்ற கதாநாயகனுக்கு..?”
- இப்படிக் கேட்ட அந்த நண்பரின் கேள்வியில் , நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது..!
# அது சரி...கடவுளையே தட்டிக் கேட்ட நாடு இது...
கண்ணதாசனைத் தட்டிக் கேட்கக் கூடாதா..?

uvausan
25th November 2014, 05:56 PM
ராஜேஷ் - எங்கிருந்து பிடிக்கிறீர்கள் , இப்படிப்பட்ட படத்தையும் , பாடலையும் ? உங்கள் மூலம் இப்படியெல்லாம் கூடஒரு படம் வந்திருக்கின்றது என்று தெரிய வருகின்றது - பாடல் அருமை - படம் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன் - நன்றி பதிவிட்டதற்கு ..

RAGHAVENDRA
25th November 2014, 08:35 PM
பொங்கும் பூம்புனல்

வி.எஸ்.நரசிம்மன் ... இசைப்புலமை, ஆளுமை, நடத்தும் மேன்மை என பல்வேறு கோணங்களில் இசையமைப்பின் அத்துணை நுணுக்கங்களையும் அறிந்தவர். ஏனோ இவருடைய திறமையை தமிழ்த்திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. இளையராஜாவின் பல பரிமாணங்களில் பல திருப்புமுனை படங்களில் இவருடைய பங்களிப்பு அபாரமானது.

இவர் இசையமைத்தவை சில படங்களேயானாலும் படைப்பு மிகச் சிறந்ததாக வருவதில் கவனமாக இருந்தவர்.

உதாரணத்திற்கு இப்போது நாம் காணப் போகும் பாடல்.

கடைக்கண் பார்வை திரைப்படத்திலிருந்து இசையின் மழையிலே என்ற இனிமையான பாடல். முதன் முறை கேட்டாலே நம்மைக் கட்டிப் போட்டு விடும்.

ஜேசுதாஸ், எஸ்.ஜானகி குரலில் இசை மழையில் நனைவோமா..

http://www.youtube.com/watch?v=3IS_JydbQ7E

இதே படத்தில் இசையரசியின் குரலில் சூப்பர் பாடல் ஒன்றும் உண்டு.

RAGHAVENDRA
25th November 2014, 08:40 PM
பொங்கும் பூம்புனல்

இதே கடைக்கண் பார்வை திரைப்படத்தில் இன்னோர் அருமையான பாடல்..

எஸ்.பி.பாலா இசையரசியின் குரலில் ...

ஏதோ ஒரு ராகம்...

எந்த ராகாமாயிருந்தால் என்ன நம்மைக் கட்டிப்போடுகின்றதல்லவா..

http://www.youtube.com/watch?v=AFO2xIj_Si8

RAGHAVENDRA
25th November 2014, 08:44 PM
பொங்கும் பூம்புனல்

http://1.bp.blogspot.com/-9I_b_NVcPBg/Ua295JcZVRI/AAAAAAAASEs/gL6z_vMv9wQ/s1600/spb.jpg

எஸ்.பி.பாலா பாடாத பாடல்கள்...

ஆம்..பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்க பல்வேறு பாடகர்கள் பாடி ஹிட்டான பாடல்களை பாடும் நிலா பாலு அவர்கள் பாடிக் கேட்க நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆசைப்பட்டிருப்போம்.. அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றுகிறது இக்காணொளி..

ஒவ்வொரு பாடலும் நம்மை மெய்மறக்க வைக்கும்.

குறிப்பாக பாவாடை தாவணியில் பாடலை எஸ்.பி.பாலா குரலில் கேட்கும் போது.. ஆஹா.. அந்தக் காலத்திலேயே இவர் வந்திருக்கக் கூடாதா என ஒரு கணம் நம் மனம் நினைக்கும் என்பது திண்ணம்.

http://www.youtube.com/watch?v=cOkFqupn6vs

பல பாடல்கள் நம் நெஞ்சின் ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது உண்மை. குறிப்பாக தனக்கே உரித்தான குரலில் அவர் தை பிறந்தால் வழி பிறக்கும் படப்பாடலான ஆசையே அலை போலே பாடலைப் பாடும் போது ... சூப்பரோ சூப்பர்..

அப்படியே தரவிறக்கி சேமித்து ஐபாடிலோ வேறேதனும் பிளேயரிலோ கேட்டுக் கேட்டு மகிழ சிறந்த தொகுப்பு...

தரவேற்றிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி

uvausan
25th November 2014, 08:55 PM
ராகவேந்திரா சார் - அருமை உங்கள் "பொங்கும் பூம்புனல்" !!!!!!!!- கொடுத்த தலைப்பிலும் ஒரு புதுமையை கையாண்டு இருக்கிறீர்கள் - பாடல்களுடன் நிறுத்தாமல் அந்த பாடல்களுக்கு இசை அமைதவர்களையும் பாராட்ட நீங்கள் என்றும் தவறியதில்லை - சில பாடல்களை முதல் முறையாக கேட்க்கும் இன்பத்தையும் உங்கள் பதிவுகள் மூலம் கிடைக்கின்றது - ஒரு சின்ன கேள்வி - நான் சில பதிவுகளை நடுவே போடுவதினால் உங்கள் தொடர் பதிவுகள் தடை படுகின்றதா ? அப்படி இருந்தால் தயவு செய்து சொல்லவும் - நிறுத்திகொள்கிறேன் . நீங்கள் கஷ்ட்டப்பட்டு தேடி போடும் பதிவுகளுக்கு என்னால் வேக தடை வரக்கூடாது .... சில நல்ல பாடல்களை பதிவிடலாம் என்றிருந்தேன் - ஆனால் உங்களின் அருமையான பதிவுகள் என் கைகளை கட்டிப் போட்டது உண்மை.

rajeshkrv
25th November 2014, 09:29 PM
பொங்கும் பூம்புனல்

இதே கடைக்கண் பார்வை திரைப்படத்தில் இன்னோர் அருமையான பாடல்..

எஸ்.பி.பாலா இசையரசியின் குரலில் ...

ஏதோ ஒரு ராகம்...

எந்த ராகாமாயிருந்தால் என்ன நம்மைக் கட்டிப்போடுகின்றதல்லவா..

http://www.youtube.com/watch?v=AFO2xIj_Si8


இதே படத்தில் மிகவும் பிரபலமான பாடல்
விழி தீபம் உனைத்தேடும்

https://www.youtube.com/watch?v=xIOEQ7XVWns

rajeshkrv
25th November 2014, 09:29 PM
ராஜேஷ் - எங்கிருந்து பிடிக்கிறீர்கள் , இப்படிப்பட்ட படத்தையும் , பாடலையும் ? உங்கள் மூலம் இப்படியெல்லாம் கூடஒரு படம் வந்திருக்கின்றது என்று தெரிய வருகின்றது - பாடல் அருமை - படம் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன் - நன்றி பதிவிட்டதற்கு ..

படம் ரொம்ப சுமார்

RAGHAVENDRA
25th November 2014, 10:19 PM
ராகவேந்திரா சார் - அருமை உங்கள் "பொங்கும் பூம்புனல்" !!!!!!!!- கொடுத்த தலைப்பிலும் ஒரு புதுமையை கையாண்டு இருக்கிறீர்கள் - பாடல்களுடன் நிறுத்தாமல் அந்த பாடல்களுக்கு இசை அமைதவர்களையும் பாராட்ட நீங்கள் என்றும் தவறியதில்லை - சில பாடல்களை முதல் முறையாக கேட்க்கும் இன்பத்தையும் உங்கள் பதிவுகள் மூலம் கிடைக்கின்றது - ஒரு சின்ன கேள்வி - நான் சில பதிவுகளை நடுவே போடுவதினால் உங்கள் தொடர் பதிவுகள் தடை படுகின்றதா ? அப்படி இருந்தால் தயவு செய்து சொல்லவும் - நிறுத்திகொள்கிறேன் . நீங்கள் கஷ்ட்டப்பட்டு தேடி போடும் பதிவுகளுக்கு என்னால் வேக தடை வரக்கூடாது .... சில நல்ல பாடல்களை பதிவிடலாம் என்றிருந்தேன் - ஆனால் உங்களின் அருமையான பதிவுகள் என் கைகளை கட்டிப் போட்டது உண்மை.

டியர் ரவி
தங்கள் உளமார்ந்த பாராட்டுக்களுக்கு முதலில் என் நன்றி.
இசை என்ற இன்ப வெள்ளத்தை தடை போட முடியாது. அது எங்கிருந்து வந்தாலும் அதனுடைய ஓட்டம் எந்தத் தடைக்கும் நிற்காது. அருமையான தொகுப்புரைகளுடன் கூடிய இன்ப வெள்ளமான இசை இங்கு ஒவ்வொருவருமையுமே கட்டிப் போடுகிறது என்பது தான் உண்மை. அதனால் தடைபடுகிறது என்கின்ற ஐயமோ எண்ணமோ தங்களுக்கு சிறிதும் வேண்டாம். தயக்கமின்றித் தொடருங்கள். தாங்கள் போடும் அனைத்துப் பாடல்களுமே நல்ல பாடல்கள் தான். தாங்கள் மட்டுமல்ல இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்துமே நல்ல பாடல்கள் தான், வாசு சார் அட்டகாசமான டைட்டிலை வைத்து அமர்க்களப் படுத்திவிட்டாரே இனி என்ன இசை என்ற இன்ப வெள்ளத்தில் நாம் அனைவருமே மூழ்குவோமே.. அதில் மூழ்கி விட்டால் அனைவருமே எழுந்திருக்கத் தயங்குவோமே..

மீண்டும் தங்கள் பாராட்டிற்கு நன்றி...

RAGHAVENDRA
25th November 2014, 10:20 PM
ராஜேஷ் சார்
கடைக்கண் பார்வை பாடலை ரசித்ததோடு மட்டுமின்றி மேலும் ஒரு பாடலையும் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்.

rajraj
25th November 2014, 10:59 PM
From Thangamalai Rahasiyam (1958)

amudhai pozhiyum nilave nee arugil.......

http://www.youtube.com/watch?v=WrhkYPseNRw


Hindi equivalent from Suhaag(1958)

Chamko Poonam Chandaa......

http://www.youtube.com/watch?v=JyNqAppubCw

Kannada version from Ratnagiri Rahasya (1957)

amara madura prema....

http://www.youtube.com/watch?v=QJec-EB7WG8

Telugu version from Ratnagiri Rahasyam (by a younger singer)

Yamuna mukhamuun........

http://www.youtube.com/watch?v=tlt6fQoWEZc


Raga: Mohanam

Added Telugu version by a younger singer! :)

rajeshkrv
26th November 2014, 04:46 AM
ankil,

telugu version kooda PS thaan (Yamuna mukhamun)

http://www.4shared.com/mp3/RTxL8Cijce/yamuna_mukam.html

rajraj
26th November 2014, 08:31 AM
ankil,

telugu version kooda PS thaan (Yamuna mukhamun)

http://www.4shared.com/mp3/RTxL8Cijce/yamuna_mukam.html

I added Youtube clip of the Telugu version by a different singer ! :)

vasudevan31355
26th November 2014, 08:54 AM
ரவி சார்,

கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி என்று 5 பாகங்களை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

//கண்ணன் " அர்ஜுனா ஒரு வினாடியில் அந்த மலை தானமாக சென்று விட்டது - இதுதான் கொடை - அந்த மலையிடம் அவனுக்கு ஒரு பிடிப்பும் இல்லை - இதுதான் உனக்கும் அவனுக்கும் உள்ள வித்தியாசம் - அர்ஜுனன் ஊமையானான்''

அருமை. கர்ணனின் பெருமை உயரும் போது திலகத்தின் பெருமையும் உங்களால் உயர்கிறது. நல்ல பதிவுக்கு நன்றி!

vasudevan31355
26th November 2014, 08:54 AM
ராகவேந்திரன் சார்,

சிறிது இடைவெளிக்குப் பின்னர் தங்கள் 'கடைக்கண் பார்வை' பட்டு 'மதுர கானங்கள்' மேலும் பொலிவுற ஆரம்பித்து விட்டது. எனக்கும் வாக்கிங் செல்லும் போது கேட்க வித்தியாசமான பாடல்களும் கிடைக்க ஆரம்பித்து விட்டன. தொடர்க. நன்றி.

எஸ்.பி.பாலா பாடாத பாடல்கள்...என்று தாங்கள் அளித்துள்ள வீடியோவும் ஜோரான ஜோர். வித்தியாசமாக இருந்தது.

vasudevan31355
26th November 2014, 08:55 AM
ராஜ்ராஜ் சார்,

இன்றைய ஜுகல் பந்தி டாப்.

vasudevan31355
26th November 2014, 08:56 AM
ராஜேஷ்ஜி

வணக்கம்.

rajeshkrv
26th November 2014, 10:15 AM
வணக்கம் வாசு ஜி
நலம் தானே

gkrishna
26th November 2014, 10:38 AM
கிரேட் வாசு/ராகவேந்தர்/ராஜேஷ்/ராஜ்ராஜ்/ரவி sirs

ராகவேந்தர் அவர்களின் மீண்டும் பொங்கும் பூம்புனல் தொடர்ந்து ஒலிக்கட்டும் .

ரவி அவர்களின் கர்ணன் கட்டுரை பல தகவல்கள் அடங்கியது .

ராஜேஷ் அவர்களின் தேவாவின் தேன் முத்துகள் ரோஜாவை கிள்ளாதே பாடல்கள் எங்கள் உள்ளதை கிள்ளியது . ரவி சார் கேட்பது போல் தான் கேட்க தோன்றுகிறது 'எங்கிருந்து பிடிக்கிறீர்கள் '

ராஜ் ராஜ் சார் அவர்களின் ஜுகல் பந்தி பல பழைய அபூர்வ பாடலகளையும் பிரபல பாடல்களையும் கலந்து கலை கட்டுகிறது .

நட்புடன்

rajeshkrv
26th November 2014, 10:43 AM
வாங்க கிருஷ்ணா ஜி
நலம் தானே

rajeshkrv
26th November 2014, 11:13 AM
தேனிசைத்தென்றலின் முத்துக்கள்-21

மூன்றாவது கண் - மணிவண்ணனின் நல்ல த்ரில்லர் படம். மோனிஷா அழகோ அழகு.. நிழல்கள் ரவி வில்லனாக செய்திருப்பார்.
இதில் தேவாவின் பின்னணி இசை அமர்க்களமாக இருக்கும்.

இதில் ஒரு பாடல்
மலேசியாவாசுதேவனின் குரலில் மலையாளம் மலையாளம்

பாடல் தொடங்குவது 2:17

https://www.youtube.com/watch?v=zeGatEiENSg

gkrishna
26th November 2014, 11:39 AM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02215/lyrics_2215298f.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/8/87/Ranjan.jpg
சோதனை மிகும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, சிறு வயதில் தங்கள் அன்னை அல்லது ஆசான் கற்பித்த ஒரு பாடல் மூலமோ, வசனம் மூலமோ திரைக் கதாநாயகர்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாகக் காட்டப்படுவது திரை மரபு. அம்மாதிரிப் பாடல்கள் திரைக்கதையில் திருப்பத்தை ஏற்படுத்துவதுடன் மற்றுமொரு நோக்கத்தையும் நிறைவு செய்கின்றன.

அவை இடம்பெற்ற படங்கள் வெளிவந்து மறக்கப்பட்ட வெகு காலத்திற்கு பிறகும் கூட அவ்வித எழுச்சிப் பாடல்களின் வரிகளைக் கேட்கும் மக்கள் புது உற்சாகம் அடைவார்கள். அவை வெளிப்படுத்தும் உணர்வே, இதன் அடிப்படைக் காரணம். இம்மாதிரியான தமிழ்-இந்திப் பாடல்களைப் பார்க்கலாம். வழக்கப்படி முதலில் இந்திப் பாட்டு.

சிறந்த கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றுவதுடன் அவற்றுக்கு மனம் கவரும் இசையமைக்கும் திறனும் உடையவர் ரவீந்தர் ஜெயின். அவர் இயற்றி இசையமைத்த இப்பாடல் இடம்பெற்ற படம் ஃபக்கீரா. சசிகபூர், சப்னா ஆஸ்மி, மற்றும் டேனி ஆகியோர் நடித்திருந்தனர்.

அன்னை பாடுவதாகவும், சிறு வயதில் ஒன்றாக இருந்த சகோதரர்கள் பாடுவதாகவும், பின்பு ஒருவரை ஒருவர் அறியாத வண்ணம் பிரிந்துவிட்ட அவர்களில் ஒருவர் பாடுவதாகவும் ஆகமொத்தம் படத்தின் கதைப்போக்கில் மூன்று தருணங்களில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

பாடியவர்கள் லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், மஹேந்திர கபூர் .

பாட்டு:

ஓ, சுன்கே தேரி புக்கார்,
சங்க் சல்னே கோ கோயி ஹோ, நாஹோ தய்யார்
ஹிம்மத் நா ஹார், சல் சலாச்சல்,
அகேலா சல் சலாச்சல்

ஃபக்கிரா சல் சலாசல் அகேலா சல்

நன்னே நன்னே பாவ் ஹை தேரி

சோட்டி சோட்டி பாஹே ஹை

ஊச்சி ஊச்சி மஞ்சில் தேரி

லம்பி லம்பி ராஹே ஹை

பஹ்லே கிஸ்மத் கி மார்

ஜித்னா தப்தா ஹை சோனா

உத்னா ஆத்தா ஹை நிக்கர்

ஓ, சுன்கே தேரி புக்கார்...

இதன் பொருள்:

உன் அழைப்பை ஏற்று உன்னுடன் செல்ல

எவரும் முன்வந்தாலும் வராவிட்டாலும்

தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்

சென்றுகொண்டே இரு ஃபக்கீரா, செல்

உன் கால்கள் (அடிகள்) மெலிதானவை

உன் துணை (உதவி) சிறிது

(ஆனால்) உன் இலக்கு மிக உயரமானது

உன் பாதை நீண்ட நெடியது

முதலில் விதியின் விளையாட்டு

எனினும் கலங்காதே

தங்கம் எந்த அளவு அடித்து நீட்டப்படுமோ

அந்த அளவு அது பொலிவடையும்

தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்

சூரியன், சந்திரன், நட்சத்திரம், எரிமலை

அனைத்திற்கும் அதன் அதன் சிரிப்பு உண்டு

எதிலிருந்து எவ்வளவு நீர் மேகமாக ஆகின்றதோ

அத்தனை நேரம் மழை பெய்கிறது

மனிதா, உன் சக்தி ஈடு இணையற்றது

நீ கங்கையை பூமியில்

இறக்கிக் கொண்டுவந்தவன்

தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்

உன் அழைப்பை ஏற்று உன்னுடன் செல்ல

எவரும் முன்வந்தாலும் வராவிட்டாலும்

சென்றுகொண்டே இரு ஃபக்கீரா, செல்.

1976-ல் வெளியான இப்படப் பாடலின் அதே உணர்வு, 1957-ல் வெளிவந்த நீலமலைத் திருடன் என்ற தமிழ்ப் படப் பாடலில், (நிஜமாகவே நன்றாகக் குதிரை ஓட்டத் தெரிந்த கதாநாயகன் ரஞ்சன் பாடுவதாக) மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. ரஞ்சன்-அஞ்சலிதேவி நடித்து கே.வி. மகாதேவன் இசையில் அமைந்த இப்பாடலின் ஆசிரியர் மருதகாசி.

சுவையான விஷயம் என்னவென்றால் இந்தியில் மத்வாலா என்ற பெயரில் இது மொழியாக்கம் செய்யப்பட்டது. அதிலும் ரஞ்சன்-அஞ்சலிதேவியே நடித்ததுடன், மருதகாசியின் இப்பாடலும் ஹர்கோவிந்த் என்பவரால் வரிக்கு வரி மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆனால் நாம் கண்ட ஃபக்கிரா படப் பாடல் ஏற்படுத்திய பாட்டின் உணர்வை அது அளிக்கவில்லை.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகே அந்தத் தமிழ்க் கவி வெளிப்படுத்திய எழுச்சி உணர்வை ஒரு இந்திக் கவி அளிக்க முடிந்தது.

இனி தமிழ்ப் பாடல்:

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே உன்னை

இடற வைக்கும் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வெய்யடா நீ
அஞ்சாமல் கடமையில் கண் வெய்யடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா

குள்ள நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் –நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
அவற்றை
எமனுலகுக்கு அனுப்பிவைக்கத் தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா!

மேலே உள்ள கட்டுரை தமிழ் ஹிந்து நாள் இதழில் வெளி வந்த ஒன்று. ஆனால் ரஞ்சன் படத்திற்கு பதிலாக திரு எம் கே ராதா படத்தை பிரிண்ட் செய்து விட்டார்கள் .

http://www.youtube.com/watch?v=5f8Gq9NHkfE

vasudevan31355
26th November 2014, 12:28 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 22)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

http://www.padangal.com/uploads/movies/7c962e4cecb9996b81569968c4424088.jpg

இன்றைய தொடரில் 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' படத்தின் பாடல்கள் பார்க்கலாம்.

http://i.ytimg.com/vi/M-Ze8lwmsTU/hqdefault.jpg

'பத்ரகாளி' திரைப்படத்தின் மெகா ஹிட் பாடலான 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' பாடலின் வரியை டைட்டிலாக வைத்தால் படம் மெகா ஹிட்டாகும் என்று நினைத்து டைட்டில் வைத்து விட்டார்கள் போல.:)

http://2.bp.blogspot.com/-KVQmzyV-Vtk/TV6Z-OpBnwI/AAAAAAAABcs/SZjnM-N1R7E/s400/raaja.PNG

படம் ஹிட்டோ இல்லையோ ராஜா தயவால் சில பாடல்கள் ஹிட். மாதம்பட்டி எம்.சிவக்குமார் வழங்க விவேகானந்தா பிக்சர்ஸ் தயாரித்த படம் இது.

சிவக்குமார், ஜெயகணேஷ், (ஜெயகணேஷ், ஹெரான் ராமசாமி, சத்யராஜ் வில்லன்கள் குரூப்) சுருளி, சுமித்ரா, சௌகார் ஜானகி, சுப்பையா, மேஜர், சுருளி, சத்யராஜ், கோவை சரளா, திருப்பூர் மணி, மனோரமா, சத்யப்ரியா, ஜெயமாலினி நடித்த இப்படத்திற்கு கண்ணதாசன், புலமைப் பித்தன் பாடல்கள் இயற்றி இருந்தனர். பாரதிதாசன் பாடலும் உண்டு. வெங்கட் ஒளிப்பதிவு செய்த இப்படத்தை தயாரித்தவர் திருப்பூர் மணி. கதை வசனம் டைரக்ஷன் என்.வெங்கடேஷ்.


1.சுமித்ரா சுசீலா அம்மாவின் குரலில் பாடும் நல்ல பாடல். அமைதியாகப் போகும். சுமித்ராவுக்கு இசையரசியின் குரல் ரொம்பப் பொருத்தம். சிவக்குமார் வழக்கம் போல ஒரே பாணியில். கண்ணதாசன் இயற்றிய பாடல்.

'மோக சங்கீதம்
நிலவே நிலவே
அதைக் கேட்க வந்தாயோ'



https://www.youtube.com/watch?v=8iqBpprGY_Q&feature=player_detailpage&list=UU34hulDMfTyi69Ix4ZpFmHA

2. இரண்டாவது செம ஹிட்டடித்த பாடல்.

பாலாவும் சுசீலாவும் பின்னி எடுத்து நம் உள்ளங்கள் அனைத்தையும் கொள்ளை அடித்த பாடல். ராஜாவின் இன்னொரு விஸ்வரூபம். வானொலிகளில் போடு போடுவென்று போட்ட பாடல்.

http://i.ytimg.com/vi/RqHueAMlB-s/hqdefault.jpg

'மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தானையை'

கண்ணதாசனின் அற்புதமான வரிகள். சிவக்குமார், சுமித்ரா ஜோடிப் பொருத்தம் அம்சம்.



https://www.youtube.com/watch?v=tQAJLVLEaWM&feature=player_detailpage

3. 'கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்'

வாணி ஜெயராம் பாடிய அற்புத பாடல். எனக்கென்னவோ இந்தப் பாடல்தான் மிகவும் பிடிக்கும். இளையராஜா இசையமைத்த

'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் வாணி பாடும்,

'ஒரே நாள்... உன்னை நான்'

பாடல் போலவும்,

'மாங்குடி மைனர்' படத்தில் சந்திர போஸ் இசையில் இதே வாணி பாடிய,

'கண்ணன் எங்கே ராதை அங்கே'

பாடலையும் ஒத்திருக்கும்.

வாணி மிக அழகாகப் பாடியிருப்பார். இளையராஜாவின் டியூன் அற்புதமாக இருக்கும். புலமைப் பித்தன் இயற்றிய பாடல் இது.


நான்கு வரி கானங்கள்.

'வயற்றில் சுமந்த மகன் வாழ்க்கையிலும் சுமையானான் என்று இளையராஜா 'சிதம்பரம்' ஜெயராமன் போல சோகப் பின்னணியில் பாடும் 4 வரிப் பாடலும் உண்டு.

'காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்... கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்' என்ற பாரதிதாசனின் சில வரிகளை பாலா பாடியிருப்பார்.

http://play.raaga.com/tamil/song/album/Kannan-Oru-Kai-Kuzhandhai-t0001638/Vayittil-Sumantha-267191

vasudevan31355
26th November 2014, 12:48 PM
கிருஷ்ணா!

சூப்பர்.

குடும்பப் பாட்டு இல்லை குருநாதர் பாட்டு இல்லை ஆசான் பாட்டு.

'ஃபகீரா' படம் 1976 ஆம் ஆண்டு வந்தது. இப்போது நீங்கள் பார்க்கப் போகும் பாடல் மூன்று குழந்தைகளுடன் தாய் பாடும் பாடல். ஹேமலதா பாடியது.


https://www.youtube.com/watch?v=_L9QtJcrkNI&feature=player_detailpage

இதே பாடலை மகேந்திர கபூர் குரலில் டேனி சில வரிகள் பாடுவார்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MT0iuBeOSnE

vasudevan31355
26th November 2014, 01:12 PM
'Disco dancer' படத்தில் ராஜேஷ் கண்ணா மிதுன் சிறுவனோடு ஆடிப் பாடும் பாட்டு. பிரிந்த பின்னால் தகப்பன் மகன் மீண்டும் ஒன்று சேர.

'Goron Ki Na Kalon Ki Duniya Hai Dilwalon Ki'

சுரேஷ் வாட்கர் பாடியது. ராஜேஷின் சூப்பர் ஸ்டைல் பிளஸ் பப்பிலஹரி அமர்க்களம்.

அருமையான பாடல்.

தமிழில் 'பாடும் வானம்பாடி' யில் தகப்பன் நாகேஷ் மைந்தன் ஆனந்த்பாபுவுக்கு கற்றுக் கொடுக்க, அப்படியே 'வாழும் வரை போராடு' இந்தி டியூன் காப்பியிலேயே.


https://www.youtube.com/watch?v=aXE5kVqBZn8&feature=player_detailpage

vasudevan31355
26th November 2014, 01:29 PM
குதிரை நாயகர்கள்

//சோதனை மிகும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, சிறு வயதில் தங்கள் அன்னை அல்லது ஆசான் கற்பித்த ஒரு பாடல் மூலமோ, வசனம் மூலமோ திரைக் கதாநாயகர்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாகக் காட்டப்படுவது திரை மரபு. அம்மாதிரிப் பாடல்கள் திரைக்கதையில் திருப்பத்தை ஏற்படுத்துவதுடன் மற்றுமொரு நோக்கத்தையும் நிறைவு செய்கின்றன''//

எங்காவது ஊட்டி, ஏற்காடு மாதிரி தேயிலைத் தோட்டங்கள் இருக்கும் பகுதியில் கதாநாயகனை குதிரையில் உட்கார வைத்து விட வேண்டியது. அப்படியே வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதையில் நாயகன் கௌபாய் வேட்டைக்காரன் டைப்பில் தொப்பி அணிந்து, இடுப்பில் கன் பெல்ட் கட்டி, தத்துவம் பொழிந்து, வீணர்களை ஒடுக்க வீராவேசமாக பாடியபடி குதிரை ஓட்டுவான். பெரும்பாலும் பின்னால் திரையில் மலைக் காட்சிகள் ஓடும். தேவர் பெரும்பாலும் தயாரிப்பாளாராய் இருப்பார். படம் பார்ப்பவன் அப்படியே டென்ஷன் ஆகி விடுவான். அவனும் மனக் குதிரையில் பறப்பான்.

அப்படி ஒரு பாட்டு. 'நேர் வழி' திரைப்படத்தில் மக்கள் கலைஞர் பேக் புரஜெக்ஷன் திரிக்கு முன் அமர்ந்து வெறும் குதிரையை ஓட்டுவார். பாடகர் திலகம் உச்சஸ்தாயியில் பாடலை வீறு கொண்டு முடிப்பார். கைத்தட்டல், விசில் கிழியும். அதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். இப்போது குதிரை திரையில் காட்டினாலே புளூ கிராஸ் காரர்கள் வந்துடுவாங்க.:) அப்புறம் எங்க குதிரையில் அமர்ந்து பாடல் பாடுவது?


https://www.youtube.com/watch?v=KjDeQY0Oduc&feature=player_detailpage

இதோ ரஜினி கூட குதிரையில் வந்து 'நான் போட்ட சவால்' என்று சவால் விட்டபடி 'நெஞ்சே உன் ஆசை என்ன?.. நீ நினைத்தால் ஆகாததென்ன?' வீரப் பாட்டை டி.எல்.மகராஜன் குரலில் பாடி மலை உலா வருகிறாரே.
இதெல்லாம் powerfull பாடல்கள், ரசிகர் வங்கிப் பாடல்கள் ஓட்டு வங்கி மாதிரி.:)


https://www.youtube.com/watch?v=liomCdomyD0&feature=player_detailpage

vasudevan31355
26th November 2014, 01:37 PM
குதிரை நாயகர்கள்

'காதல் மன்னன்' ஜெமினி குதிரையில் சென்று வீரப் பாட்டெல்லாம் பாட மாட்டார். அதிலும் லவ்ஸ் பாடல்தான் பாடுவார். :)

'பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா' என்று.

http://img.youtube.com/vi/XehD-bXUFk0/0.jpg

vasudevan31355
26th November 2014, 01:45 PM
குதிரை நாயகர்கள்

'பதிலுக்கு பதில்' தரும் நடிப்புச் சுடரைப் பாருங்கள். கௌபாய் ஸ்டைலில் 'உலக அழகி' விஜயகுமாரியை:banghead: கண்டு (அதுவும் கலரில்) மயங்கி 'அவள் ஜாதிப் பூவென சிரித்தாள்' என்று குதிரையில் அமர்ந்து மெய்மறந்து பாடிக் கொண்டு வருவதை கவனியுங்கள்.

கிருஷ்ணா 'கிண்டி' விட்டாயே மகனே! இன்னைக்கு ஷிப்ட்டுக்கு லேட் பஞ்ச்தான். பிடியுங்கள் சாபம்.


https://www.youtube.com/watch?v=0vMm2PbcurA&feature=player_detailpage

vasudevan31355
26th November 2014, 01:49 PM
குதிரை நாயகர்கள்

"நமக்குள் எதற்கு சண்டை வீண் சச்சரவு? சமாதானமே தேவை"என்று நம் நடிகர் திலகம் குதிரை ஏற்றம் செய்து பாடும் பாடலைப் பாருங்கள். இவனன்றோ 'மருத நாட்டு வீரன்'


https://www.youtube.com/watch?v=8yUfVwsRmUs&feature=player_detailpage

vasudevan31355
26th November 2014, 01:59 PM
குதிரை நாயகர்கள்

இவரைப் பாருங்கள். சாவித்திரியிடம் 'உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்று குதிரையுடன் கிடாரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். இரண்டு குதிரைகளையும் நடக்க விட்டு விட்டு (சாவித்திரி ரசிகர்கள் கோபித்து கொள்ள வேண்டாம். சும்மா தமாசு... ஹி... ஹி ) இவரும் குதிரையிலிருந்து இறங்கி, ஜாலியாக நடந்து பாட ஆரம்பித்து விட்டார்.


https://www.youtube.com/watch?v=49U8Fz_d0ro&feature=player_detailpage

vasudevan31355
26th November 2014, 02:08 PM
குதிரை நாயகர்கள்

சமீபத்தில் மறைந்த இலட்சிய நடிகர் இந்த வஞ்சிச் சிட்டுவிடம் குதிரையில் வந்து செமத்தியாக மாட்டிக் கொண்டார். 'பார் இந்தப் பக்கம்... பார்க்க முடியுமானால் பார்த்து வேறு பக்கம் போக முடியுமா" என்று மேடம் கேட்க இவர் 'மணிமகுடம்' என்ன ஆகுமோ?


https://www.youtube.com/watch?v=HKL5eEFzQd4&feature=player_detailpage

gkrishna
26th November 2014, 02:19 PM
குதிரை நாயகர்கள்
'கிண்டி' விட்டாயே மகனே! இன்னைக்கு ஷிப்ட்டுக்கு லேட் பஞ்ச்தான். பிடியுங்கள் சாபம்.


குதிரை கிண்டி அருமையான timing :)

எந்த பக்கம் சென்றாலும் என் பேரு என் பேரு புயல் போன்றது குட் லக் மை குட் லக் மை குட் லக்
சுசீலா ஹம்மிங் "ஹா ஹா ல ல லா '

இதே ஹம்மிங் அவன் தான் மனிதன் திரை படத்திலும் நடிகர் திலகம் ,மஞ்சுளா இருவரும் தனிமையில் இருக்கும் போது வரும் . நடிகர் திலகம் இரவு உடை அணிந்து கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு புத்தகம் ஒன்றை படித்து கொண்டு இருப்பது போலவும் மஞ்சுளா அவரிடம் சரசமாடுவது போலவும், பிறகு காட்சி கலர் மீன்கள் நீந்தி கொண்டு ஒன்றை ஒன்று விரட்டி கொண்டு கொஞ்சி கொண்டு இருக்கும் நீர் தொட்டி ஒன்றில் முடியும் . இரண்டுமே இயக்கம் திருலோக் ,இசை மெல்லிசை மன்னர்,நடித்தவர்கள் நடிகர் திலகம்,மஞ்சுளா

நினைவு இருக்கிறதா வாசு ?
பாட்டு இணையத்தில் இருக்கிறதா ?

'காமதேனுவும் சோமபானமும் பூமியில் ' இருக்கிறது

http://www.youtube.com/watch?v=TnEJIoNhdNQ

gkrishna
26th November 2014, 02:36 PM
'உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்'

கண்ணதாசனின் ஒற்றை வார்த்தை ஓராயிரம் பொருளடக்கம் தரும்

ஜீவநதியாய் வரும் சரணங்கள் நம் ஜீவனை நோக்கி

'பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா ?
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரி கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா ? '

ஒரு மேடையில் நடிகர் சத்யராஜ் சொன்னது 'இந்த பாடலை பற்றி '

இந்த பாடல் ஏழைகளின் கீதை,
வேதம்
பைபிள்
குரான்

uvausan
26th November 2014, 05:25 PM
ஒரு மேடையில் நடிகர் சத்யராஜ் சொன்னது 'இந்த பாடலை பற்றி '

இந்த பாடல் ஏழைகளின் கீதை,
வேதம்
பைபிள்
குரான்

கிருஷ்ணாஜி - " குரு க்ரந் சாஹிப் " யை சத்திய ராஜ் விட்டு விட்டார் !

gkrishna
26th November 2014, 05:50 PM
கிருஷ்ணாஜி - " குரு க்ரந் சாஹிப் " யை சத்திய ராஜ் விட்டு விட்டார் !

ரசிக்கிறேன் ரவி சார் உங்கள் கமெண்டை . :)

உங்கள் பெயரை போட்டு சேர்த்து விடுகிறேனே (கொஞ்சம் ஜாலியாக எடுத்து கொள்ளவும் )

gkrishna
26th November 2014, 05:55 PM
அந்நாளைய பிரபல துணுக்கு எழுத்தாளர் கடுகு என்ற அகஸ்தியன் அவர்கள் பதிவில் இருந்து

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7WadGe-qY7n7ZcEmL61G3Plg16hUSEwpyB5URd8yFEVKOR41B

”ஹலோ பாரதிராஜா.. எப்படி இருக்கீங்க?’
“அடேடே.. நீங்களா? உங்களுக்கு நான் போன் பண்ணேனே நேற்று கூட..”
--- இப்படித்தான் கட்டுரையை ஆரம்பிக்க ஆசை. ஆனால் பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பது என் கொள்கையாதலால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பாரதிராஜாவை ஒரே ஒரு தரம்தான் சந்தித்து இருக்கிறேன். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறேன். (“அப்படியா, இதை வைத்துக் கொண்டு பத்து பதிவு எழுதிவிட மாட்டீர்களா” என்று பலர் சொல்லக்கூடும். இல்லை, ஒரு பதிவு தான் எழுதப் போகிறேன்.)
* * *
ஒரு சமயம் டில்லியிலிருந்து சென்னை வந்திருந்தபோது வழக்கம்போல் ஆசிரியர் சாவி அவர்களை\ச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் ‘சாவி பதில்கள்” எழுதி கொண்டிருந்தார்.
“இந்தாங்க ஏழு, எட்டு கேள்வி கார்டுகள். பதில் என்ன எழுதலாம் என்று பாருங்கள்” என்றார்.
கேள்விகளில் ஒன்று, அப்போது பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்த ‘வேதம் புதிது’ படத்தைப் பற்றி இருந்தது. இதுதான் கேள்வி: ”பாரதிராஜா, தன் வேதம் புதிது படத்தில் நமது வேதங்களைத் தாக்கி சில வசனங்களை சேர்த்திருக்கிறாராமே?
சாவியிடம் கேள்வியை படித்துவிட்டு, நான் சொன்னேன், “படம் தயாரிப்பில் இருக்கிறது.. இந்த சமயத்தில் எப்படி கருத்துக் கூறமுடியும்? பாரதிராஜா நமது வேதங்களைத் தாக்ககூடியவர் அல்ல. அப்படியே அவர் தாக்கி இருந்தாலும் கவலை வேண்டாம். நமது வேதங்களைச் சுலபமாக யாராலும் அழித்துவிட முடியாது.” என்கிற ரீதியில் சொன்னேன். நீங்கள் சொல்வது சரிதான். அப்படியே எழுதிவிடுகிறேன்.” என்று சொல்லியபடியே அதை எழுதிவிட்டார். இரண்டு தினங்களுக்குப் பிறகு சாவி இதழ் வெளியானவுடன், பாரதிராஜா இதைப் பார்த்திருக்கிறார். உடனே சாவி அவர்களுக்குப் போன் பண்ணி ”என்ன சார்,.கேள்வி பதில் பகுதியில் இப்படி எழுதி இருக்கிறீர்களே... வேதம் புதிது படத்தில் நான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லையே,,” என்பது மாதிரி சற்று வருத்தத்துடன் கேட்டிருக்கிறார்..

அதற்குச் சாவி “ஒன்று செய்கிறேன்.. உங்களைப் பேட்டிகாண ஒருத்தரை அனுப்புகிறேன். விரிவாக எல்லாவற்றையும் சொல்லுங்கள். அப்படியே போட்டுவிடுகிறேன்” என்றார்.. அன்று மாலை சாவி அவர்களைப் பார்க்கப் போனபோது, விவரங்களைச் சொல்லி விட்டு “ நீங்கள் போய் வந்தால் எனக்கு மட்டுமல்ல. பாரதிராஜாவுக்கும் திருப்தியாக இருக்கும்” என்றார்.. நான் “சரி” என்றேன். பாரதிராஜாவுக்குப் போன் செய்து, “எப்போது பேட்டி வைத்துக் கொள்ளலாம்?” என்று கேட்டார்.. மறு நாள் காலை பத்து மணிக்கு அலுவகத்தில் சந்திக்கலாம் என்று பாரதிராஜா சொன்னார்.
அவரிடம் சாவி, ”பத்துமணிக்குச் சரியாக ஒருவர் வருவார். அவரைக் காத்திருக்க வைக்கக்கூடாது. உடனே அவரை நீங்கள் சந்திக்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் வரை பேட்டி நீடிக்கலாம் ” என்றார்.. பாரதிராஜா ”சரி, சார்” என்றார்.

மறுநாள் காலை 9.55க்கு பார்சன் காம்ப்ளெக்ஸிலிருந்த பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு நான் சென்றேன். அலுவலகத்தில் இருந்தவர்களிடம் பெயரைச் சொன்னதும் “உட்காருங்கள்... இதோ சார் வந்து விடுவார்:”என்றார்கள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு “வாங்க சார்...மேலே போகலாம்.”: என்று சொல்லி அழைத்துப் போனார்கள்.
பாரதிராஜாவின் அறைக்குள் நான் நுழைந்ததும் முகமலர்ச்சியுடன் வணக்கம் சொன்னார்.. “வாங்க சார்... இன்று ஆயுத பூஜை. பூஜையை முடித்துவிட்டு பேட்டியைத் துவங்கலாமா.. நீங்களும் பூஜையில் கலந்துகொள்ளுங்களேன்” என்றார். பூஜை முடிந்ததும் பேட்டியைத் துவக்கினேன்
தங்கு தடை இல்லாமல் ஒரு கம்பீரத்துடன் தெளிவான கருத்துகளை மளமளவென்று சொன்னார், நான் கேட்ட கேள்விகள் அவருக்குப் பிடித்திருந்தன,
பேட்டி சாவியில் வெளியானதும், அவர் சாவிக்குப் போன் பண்ணி தனது மகிழ்ச்சியையும் கட்டுரைக்குப் பாராட்டையும் தெரிவித்தார்,

இதற்கு சில வருஷங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்கிறேன்.

டில்லியிலிருந்து சென்னை வந்திருந்த சமயம் பாரதிராஜாவின் ‘புதுமைப் பெண்’ படத்தைப் பார்க்கப் போனேன்.
படத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு லேசான வியப்பு ஏற்பட்டது. (படம் எல்லா விதத்திலும் பிரமாதமாக இருந்தது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.) வியப்பிற்குக் காரணம், நான் எழுதிய ‘அலை பாயுதே கண்ணா” என்ற நாவலில் வரும் பல அம்சங்கள் அதில் இருந்தன. நிறைய ஒற்றுமைகள் இருந்தன. நம்முடைய நாவலைப் படித்து, அதன் பாதிப்பால் உருவான கதையாக இருக்குமோ என்று நான் எண்ணும் அளவுக்கு பல ஒற்றுமைகள் இருந்தன.
டில்லிக்குத் திரும்பியதும் பாரதிராஜாவிற்குக் கடிதம் எழுதினேன், ஒற்றுமைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு எழுதினேன்,. முடிவுரையாக ”என்னுடைய நாவலைப் பார்த்துக் காபி அடித்து இருக்கிறீர்கள் என்று நான் கூறவில்லை., வழக்குத் தொடரப் போகிறேன் என்றும் நினைத்துவிடாதீர்கள் .... சிற்சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் சில அம்சங்களில் ஒற்றுமைகள் ஏற்படக்கூடும். ஒருக்கால் உங்கள் உதவியாளர்கள் யாராவது என் நாவலைப் படித்து அதிலிருந்து சில சம்பவங்களை சொல்லியிருக்கலாம்” என்று எழுதினேன். இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு பாரதிராஜாவிடமிருந்து கடிதம் வந்தது. ”உங்கள் நாவலை நான் படிக்கவில்லை. அதை வாங்கிப் படித்துவிட்டு எழுதுகிறேன். ”சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் ஒரே மாதிரியான அம்சங்கள் வரக்கூடும் என்று தாங்கள் பெருந்தன்மையுடன் எழுதி இருந்தீர்கள். அதைப் பாராட்டுகிறேன்” என்கிற ரீதியில் சற்று நீளமான கடிதம் எழுதி இருந்தார்,
அதன் பிறகு அவருக்கு நானும் கடிதம் எழுதவில்லை. அவரும் எனக்கு எழுதவில்லை. . இதனால் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.

http://2.bp.blogspot.com/_mPQizC4i3sA/TF8R3GnwUpI/AAAAAAAACnM/RcNLRsy-m4c/s320/revathi.jpg

uvausan
26th November 2014, 06:07 PM
" சாது மிரண்டால்-----" - இந்த பாடல் நெஞ்சை வருடும் பல பாடல்களில் ஒன்று - பால முரளியின் குரலில் மிகவும் அழகாக வெளி வந்த பாடல் - இசையும் மிகவும் இனிமையாக இருக்கும் - , , தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்றிருக்கும் ஒரு சாதுவான நடுத்தர மனிதனை சீண்டி விடுகின்றது இந்த சமுதாயம் - அதன் விளைவுகளை எப்படி கையாளுகிறான் என்பதுதான் கதையின் சாரம் - TRR தன் பின் பாதியில் கதாநாயகனாக நடித்து வெற்றி கண்ட படம் - நாகேஷ் இருந்தும் அவாரால் TRR இன் இடத்தை பிடிக்க முடியவில்லை .T.R. ராமச்சந்திரன் இப்படியொரு நடிப்பிலா?! என வியப்படையும் வண்ணம் அற்புதமான பாத்திரம் அவருக்கு, இப்படத்தில்!

இனி இந்த பாடலை ரசிப்போம்

அருள்வாயே நீ அருள்வாயே - திருவாய் மலர்ந்து
அருள்வாயே ------

உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா - உன் பக்கம் என்னை
அழைத்தாயே தேவா - உண்மையின் உருவே , நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே -----

தூய நினைவுகள் தாலாட்டு பாடவும் , - தீய பழக்கங்கள் தானாக
ஓடவும் - பாயும் புலியையும் பரிவோடு பார்க்கவும் -பாரில் உள்ளவர் பாராட்ட வாழவும் - அருள்வாயே --------

அம்பலத்து அரசே , அருமருந்தே , ஆனந்த தேனே , அருள் விருந்தே

நீதி பாதையில் நேராக போகவும் , நேற்று பாவங்கள் நீராகி போகவும்
ஜோதி கடலில் எந்நாளும் நீந்தவும் , சோதனை மடியில் வீழாமல் காக்கவும் - அருள்வாயே ------

எப்படிபட்ட வரிகள் - என்ன அருமையான வேண்டுதல் - "பாயும் புலியையும் பரிவுடன் பார்க்கும் தன்மை நமக்கு இருந்தால்" , இந்த புவியில் எந்த தெய்வத்திற்கும் வேலை இல்லை - சோதனையின் மடியில் யாருமே விழ மாட்டார்கள்


http://youtu.be/TctdqGh4Taw

RAGHAVENDRA
26th November 2014, 07:13 PM
வாசு சார்
இளையராஜா பாடல்களை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் தங்களுடைய விளக்கவுரை பொழிப்புரை போன்ற விரிவான தகவல்களடங்கிய சிறப்புரையைப் படித்த பின் கேட்டால் அது வித்தியாசமாக இருக்கிறது. அது தங்கள் எழுத்துக்குள்ள மகிமை. தொடருங்கள். பாராட்டுக்கள்.

இதே போல் குதிரை நாயகர்கள் பதிவும் சூப்பர்...

கண்ணன் எங்கே... மதுரகீதம் இல்லையோ..

uvausan
26th November 2014, 09:22 PM
இன்னமொரு இனிமையான பாடல் - பாலமுரளியின் மற்றும் ஒரு சிகரத்தை தொட்ட பாடல் - கண்ணதாசன் , மனச்சாட்சி உள்ளர்வர்களுக்கு மட்டுமே எழுதிய பாடல் - படம் "நூல் வேலி " கண்ணதாசன் அவருடைய பாடல்களை அதிகமாக போட்டு கேட்பதில்லை - ஆனால் இந்த பாடலை அவர் கஷ்ட்டங்கள் வரும்போது போட்டு கேட்ப்பாராம் - MSV யின் இசையில் , ஆழமான , சத்தியமான , சிந்திக்க தூண்டும் வரிகள் - கேட்பவர்களை சுண்டி இழுக்கும் என்பது உண்மை ----

மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே -------- காரியம் தவறானால் கண்களில் நீராகி -------- ரகசிய சுரங்கம் நீ ; நாடக அரங்கம் நீ ; சோதனை களம் அல்லவா , நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா ---

ஒரு கணம் தவறாகி , மறைமுகம் துடிப்பாயே - ---------

உண்மைக்கு ஒரு சாட்சி ; பொய் சொல்ல பல சாட்சி - யாருக்கும் நீயல்லவா - நெஞ்சே ! மனிதரின் நிழல் அல்லவா ! ஆசையில் கல்லாகி ; அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ !

http://youtu.be/1YxUO0KXRlE

RAGHAVENDRA
26th November 2014, 09:49 PM
பொங்கும் பூம்புனல்

சில பாடல்கள் காதில் ஹெட்ஃபோன் வைத்துக் கேட்கும் போதுதான் முழுமையாக அதன் இனிமையை அனுபவிக்க முடியும். அப்படி ஒரு பாடல் தான் இப்போது தாங்கள் கேட்க இருக்கும் பாடல். நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற படத்தில் சந்திரபோஸின் இசையில் அன்று முதல் என்று தொடங்கும் இனிமையான பாடல். பாடும் நிலா மற்றும் வாணி ஜெயராம் குரல்களில் நெஞ்சை அள்ளும் பாடல். பின்னணி இசை சூப்பர்.. அதுவும் ஒரு இடத்தில் தனியாக ட்ரம்பெட் ஒலிக்கும் போது கேட்கக் கேட்க திகட்டாத இனிமையான பின்னணி இசை..

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1981/popular/Nenchu-Porukkuthillaye-T0003629

RAGHAVENDRA
26th November 2014, 09:58 PM
பொங்கும் பூம்புனல்

மானாமதுரை மல்லி... பழைய இசைத்தட்டுக் கடைகளில் தவறாமல் இடம் பெற்றிருக்கும்... புத்தம் புதியதாக கிடைக்கும்.. அப்படிப்பட்ட இசைத்தட்டுக்களில் ஒன்று மானாமதுரை மல்லி... கே.சி.ஸ்வாமிநாதன் என்ற இசையமைப்பாளர்... யாரென்று தெரியவில்லை.. இப்பாட்டைக் கேட்கும் போது நல்ல இசைப்புலமை வாய்ந்தவர் போலத் தோன்றுகிறது.. குறிப்பாக எஸ்.பி.பி. எஸ்.ஜானகி இருவருமே பாடல்களில் தந்துள்ள சங்கதிகளைப் பார்க்கும் போதும் பயன்படுத்தப் பட்டுள்ள இசைக்கருவிகளைக் கேட்கும் போது இவரைப் பற்றி அறிய மனம் ஆவல் கொள்கிறது.. இப்படி அதிகம் அறிந்திராத படங்களில் இது போன்ற அட்டகாசமான பாடல்கள் இடம் பெறுவது தமிழ்த்திரையுலகில் புதியதல்ல என்றாலும் இது போன்ற இனிமையான பாடல்கள் ஹிட்டாகாதது மனதுக்கு வருத்தமளிக்கிறது.

நாம் ஹிட் பண்ணுவோமே..

காதல் சொன்ன கண்ணன் அவன் நீயல்லவா..

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1981/popular/Manamadurai-Malli-T0003623

uvausan
26th November 2014, 10:02 PM
பணம் படைத்தவன் - " பவழ கொடியிலே "

வாலி ஒரு சிரஞ்சீவி என்பதை நிரூபித்த பாடல் - அந்த வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணி விடலாம் - சுலபம் - நான் எத்தனை முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் , கேட்டு கொண்டு இருக்கிறேன் என்று என்னால் எண்ணி சொல்ல முடியவில்லை .. அந்த ஷாஜகானும் , மும்தாஜும் இந்த ஜோடிகளை போல இவ்வளவு அழகா இருந்திருப்பார்களா என்றால் அது சந்தேகமே - என்ன இசை ! எப்படியெல்லாம் தன் காதலியை உயர்த்தி வர்ணிக்கும் பாடல் - அந்த காலத்தில் இந்த பாடலை பாடுவதர்க்க்காகவே , பல ஆண்கள் காதலியை தேடுவார்களாம் ---- LRE 'யின் ஹம்மிங் கேட்க்கும் அனைவரையும் வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடும் - MT மிகவும் அருமையாக பாட்டுடன் ஒன்றி நடித்திருப்பார் - இந்த பாடலில் அவர் TMS க்கு பின்னணி பாடினது போல இருக்கும் - அழகை அள்ளி தெளித்திருப்பார் - முதல் தடவை - MT கனவு கண்டு பாடும் பாடல் என்று நினைக்கிறேன்

இந்த பாடலில் ஒரு சில வரிகள் போதும் - கற்பனையின் திறனை காட்ட

"காலடி தாமரை நாலடி நடந்தால் இந்த காதலன் உள்ளம் புண்ணாகும் "

பவழ கொடியிலே முத்துக்கள் - புன்னகைக்கு ஒரு உதாரணம்
உயிருடன் வரும் ஒரு கன்னி ஓவியம் - அழகான பெண் மயிலுக்கு உதாரணம் ------

இந்த பாடலை கேட்க்கும் பொழுது - "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா " என்ற பாடலும் , காவியமா ? நெஞ்சில் ஓவியமா ? என்ற காலத்தால் அழியாத பாடலும் நினைவிற்கு வருவதை தடுக்க முடியாது - தாஜ் மகாலின் அழகை இந்த இரு பாடல்களும் சொன்னது போல வேறு எந்த பாடல்களும் எடுத்து சொல்லியிருக்க இயலாது என்பது என் கருத்து

http://youtu.be/oFLYvDYxGls

RAGHAVENDRA
26th November 2014, 10:08 PM
பொங்கும் பூம்புனல்

முன்னரே குறிப்பிட்டிருந்தது போல், சங்கர் கணேஷ் - வாணி ஜெயராம் இணைந்த பாடல்கள் காலத்தால் அழியாத சாகா வரம் பெற்றவை. அதில் ஒன்று தான் பெண் மனம் பேசுகிறது படத்தில் இடம் பெற்ற சின்னஞ்சிறு தேராக என்ற இந்தப் பாடல்..

கேட்கும் போதே வாணி ஜெயராமின் குரல் நெஞ்சில் புகுந்து நாடி நரம்பெல்லாம் புத்துணர்ச்சி ஊட்டுகிற பாடல்.

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1981/popular/Pen-Manam-Pesukirathu-T0002304

vasudevan31355
26th November 2014, 10:32 PM
நன்றி ராகவேந்திரன் சார்.

'கண்ணன் அங்கே... ராதை இங்கே... அன்பே வா வா வா' என்று நான் குறிப்பிட்டுள்ளது 'மாங்குடி மைனர்' படத்தில் வாணி ஸ்ரீப்ரியாவுக்காகப் பாடின பாடல்.(நான் இங்கே என்று குறிப்பிட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்).'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் கூட இந்தப் பாடலை நம் அன்பு சுந்தர பாண்டியன் சாருக்கு டெடிகேட் செய்தேன் என்று நினைவு.


https://www.youtube.com/watch?v=fzZEtZp8ohA&feature=player_detailpage

தாங்கள் குறிப்பிட்டுள்ளது 'மதுர கீதம்' படத்தில் சந்திர போஸ் இசையில் சுசீலா அவர்கள் பாடிய 'கண்ணன் எங்கே கண்ணன் எங்கே... ராதை மனம் ஏங்குதம்மா' பாடல் (copy of 'SAPNA MERA TOOT GAYA TU NA RAHA'song from 'khel khel mein'). பாலாவும் பாடியிருப்பார்.


https://www.youtube.com/watch?v=_hfb8TgyLb4&feature=player_detailpage

vasudevan31355
26th November 2014, 10:50 PM
மக்கள் திலகம் திரி பாகம் 12 ஐ அற்புதமான கட்டுரையோடு தொடங்கி வைத்த இனிய அருமை நண்பர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

தங்களுக்காக நாளை ஒரு ஸ்பெஷல் பதிவு அதுவும் மதுர கானத்தோடு தொடர்புடைய பதிவை தங்களுக்கு வாழ்த்துப் பதிவாக அளிக்கவுள்ளேன். இந்த நடிகர் திலகத்தின் பக்தனின் வாழ்த்தை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தங்களுக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்.

vasudevan31355
26th November 2014, 10:56 PM
ரவி சார்,

அடி தூள். பாலமுரளியின் இரண்டு பாடல்களும் அட்டகாசம்.

அருள்வாயே நீ அருள்வாயே....
திருவாய் மலர்ந்து அருள்வாயே

அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல். பாடலுக்கான தங்கள் விளக்கமும் அருமை. மிகவும் ரசித்து உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்.

'மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே' பாடலும் அருமை.

நல்ல ரசனை.

சாது மிரண்டால்..... காடு கொள்ளாது
ரவி சார் மிரண்டால்? கானங்கள் போட இடம் கொள்ளதோ?

rajeshkrv
26th November 2014, 10:59 PM
வாசு ஜி
அன்பு ரோஜா திரையில் அழகான பாடல்

https://www.youtube.com/watch?v=X2k6v26rJcE

RAGHAVENDRA
26th November 2014, 11:00 PM
வாசு சார்
தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி.

மதுர கீதம் பாடல் தாங்கள் சொன்னது போல் ஸப்னா மேரா பாட்டின் மெட்டு அப்படியே.

vasudevan31355
26th November 2014, 11:05 PM
ராஜேஷ்ஜி!

வணக்கம். நான் 'லாக் இன்' ஆகும் போது நீங்கள் போய் விடுகிறீர்கள். நீங்கள் வருகையில் நான் 'லாக் அவுட்' ஆகி விடுகிறேன். என்னே நேரத்தின் விளையாட்டு?

சரி! அட்ஜஸ்ட் செய்வோம். வேற வழி?

தேனிசைத் தென்றலின் முத்துக்கள் வரிசையில் தாங்கள் அளித்துள்ள மூன்றாவது கண் படப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன். நன்றி.

rajeshkrv
26th November 2014, 11:07 PM
ராஜேஷ்ஜி!

வணக்கம். நான் 'லாக் இன்' ஆகும் போது நீங்கள் போய் விடுகிறீர்கள். நீங்கள் வருகையில் நான் 'லாக் அவுட்' ஆகி விடுகிறேன். என்னே நேரத்தின் விளையாட்டு?

சரி! அட்ஜஸ்ட் செய்வோம். வேற வழி?

தேனிசைத் தென்றலின் முத்துக்கள் வரிசையில் தாங்கள் அளித்துள்ள மூன்றாவது கண் படப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன். நன்றி.

இங்கே தான் உள்ளேன் ஐயா

vasudevan31355
26th November 2014, 11:11 PM
ராஜேஷ் சார்,

கலக்கிட்டீங்க. 'அன்பு ரோஜா' பாடல் ஜோர். அப்பாடா! எவ்வளவு நாளாயிற்று கேட்டு.? முதலில் சற்று தடுமாறினேன். இரண்டு வரி கேட்டவுடன் ஞாபகம் வந்து விட்டது. ராஜேஷ்ஜியா கொக்கா? சூப்பர். யாரங்கே? நேற்று முன்தினம் ராஜேஷ் சார் கொடுத்த ஆயிரம் பொற்காசுகளை அவருக்கே திருப்பிக் கொடு இந்த அபூர்வ பாடலுக்காக. ஆஹா! லதா என்ன ஒரு பியூட்டி! இந்த நேரத்தில் கிருஷ்ணாவும், சி.கவும் இல்லாம போயிட்டாங்களே.

vasudevan31355
26th November 2014, 11:13 PM
இங்கே தான் உள்ளேன் ஐயா

ஜி! என்ன இது! பிள்ளைகள் அட்டெண்டென்ஸ் கொடுக்கிற மாதிரி.:)

vasudevan31355
26th November 2014, 11:16 PM
ராகவேந்திரன் சார்,

பொங்கும் பூம்புனல் பூரிக்க வைக்கிறது. ஒவ்வொன்றும் அருமை. அபூர்வம். அரியவை.

தேர்ந்தெடுத்து தந்து என் உடல் ஆரோக்கியம் காப்பதற்கு நன்றி!:)

RAGHAVENDRA
26th November 2014, 11:16 PM
பொங்கும் பூம்புனல்

அபூர்வமான பாடல், சங்கர் கணேஷ் இசையில் இசையரசியின் குரலில் காடு படத்திலிருந்து..

அருவியிலே குருவி ஒண்ணு குளிக்குதாம்..

அதுக்கப்புறம்...

நீங்களே பாட்டைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1979/popular/Kaadu-T0003610

rajeshkrv
26th November 2014, 11:19 PM
ஜி! என்ன இது! பிள்ளைகள் அட்டெண்டென்ஸ் கொடுக்கிற மாதிரி.:)

பின்னே நீங்கள் கூப்பிடும் குரல் என் காதில் விழுந்தது என்று எப்படி தெரிவிப்பது.

vasudevan31355
26th November 2014, 11:21 PM
ஜி!

75 களில் இந்த முத்துராமனுக்கு வந்த யோகத்தைப் பார்த்தீங்களா? வித விதமான ஜோடிகள் அதுவும் இளஞ்ஜோடிகள். வித வித பாலா பாடல்கள். ம்... கொடுத்து வைத்த மனிதர். ஆனால் முகத்தில் எக்ஸ்ப்ரெஷன் வருவேனா என்கிறது. ஒரு சில ரோல்களை நன்றாகப் பண்ணுவார். முக்கியமாக பொறாமை படுவது போன்ற ரோல்கள். ஆனால் காதல் காட்சிகளில் சரியான அசமந்தம். கடுப்பாய் வரும்.

RAGHAVENDRA
26th November 2014, 11:21 PM
பொங்கும் பூம்புனல்

ரசிகனே அருகில் வா என இளையராஜா அழைக்கிறார்.. யாராவது போகாமல் இருப்பார்களா..

நாமும் போவோமே.. இந்தப் பாட்டைக் கேட்போமே..

திரைக்கு வராத மணிப்பூர் மாமியார் படம் பாடல்களாலே மிக மிக பிரபலமானது. குறிப்பாக ஆனந்தத் தேன் காற்று பாடல் மலேசியா வாசுதேவன் , சி.எஸ்.ஜெயராமன் குரலில் பாடி சூப்பர் ஹிட்.. ஆனால் இந்தப் பாடல் இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.. குறிப்பாக இந்தப் பாட்டில் வரும் பிஜிஎம் களை, இப்படம் வராத காரணத்தால், பன்னீர் புஷ்பங்கள் படத்தில் பயன் படுத்தியிருப்பார் எனத் தெரிகிறது.

எஸ்.பி.ஷைலஜா வின் இனிய குரல் வளம் இப்பாட்டிற்கு பெரிய பலம்..

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1979/popular/Manippoor-Maamiyaar-T0001119

rajeshkrv
26th November 2014, 11:22 PM
வாசு ஜி,

தமிழ் பாசம் படம் தெலுங்கில் மஞ்சி சேடு (எம்.ஜி.ஆருக்கு பதில் என்.டி.ஆர்)
இதில் பால் வண்ணம் ரேப்பண்டி ரூபம் ஆயிற்று.
இந்த படத்தில் நமது சரவண பொய்கையில் பாடல் இப்படி மாறியது . இதோ

https://www.youtube.com/watch?v=PRy17MIf5uU

RAGHAVENDRA
26th November 2014, 11:22 PM
பொறாமை.. சரியாக சொன்னீர்கள் வாசு சார்..

இது அவர் முகத்தில் நன்றாக பிரதிபலிக்கும்...

vasudevan31355
26th November 2014, 11:23 PM
பின்னே நீங்கள் கூப்பிடும் குரல் என் காதில் விழுந்தது என்று எப்படி தெரிவிப்பது.

நியாயம். சமர்த்தா படிக்கணும் இல்ல இல்ல சமர்த்தா பாட்டு போடணும். புரியறதோன்னோ?:)

rajeshkrv
26th November 2014, 11:24 PM
ஜி!

75 களில் இந்த முத்துராமனுக்கு வந்த யோகத்தைப் பார்த்தீங்களா? வித விதமான ஜோடிகள் அதுவும் இளஞ்ஜோடிகள். வித வித பாலா பாடல்கள். ம்... கொடுத்து வைத்த மனிதர். ஆனால் முகத்தில் எக்ஸ்ப்ரெஷன் வருவேனா என்கிறது. ஒரு சில ரோல்களை நன்றாகப் பண்ணுவார். முக்கியமாக பொறாமை படுவது போன்ற ரோல்கள். ஆனால் காதல் காட்சிகளில் சரியான அசமந்தம். கடுப்பாய் வரும்.

முத்துராமன் மிகச்சிறந்த நடிகர். காதல் , கொஞ்சம் நெருக்கம் என்றால் அவருக்கு அலர்ஜி. அது அவரது பெர்சனாலிட்டி என்பதால் அப்படி ..
மற்ற படி நல்ல நடிகர். எல்லோருக்கும் பிடித்த நடிகர். முத்துராமன் பற்றி பேச இன்று ஏ.வி.எம் நிறுவனம் முதல் பல நடிகைகள் வரை நிறைய பேசுவார்கள். அப்படிப்பட்ட மனிதர் நடிகர்

vasudevan31355
26th November 2014, 11:24 PM
வாசு ஜி,

தமிழ் பாசம் படம் தெலுங்கில் மஞ்சி சேடு (எம்.ஜி.ஆருக்கு பதில் என்.டி.ஆர்)
இதில் பால் வண்ணம் ரேப்பண்டி ரூபம் ஆயிற்று.
இந்த படத்தில் நமது சரவண பொய்கையில் பாடல் இப்படி மாறியது . இதோ



அட! ஆச்சர்யம்.

கேட்கிறேன் ஜி.

rajeshkrv
26th November 2014, 11:24 PM
நியாயம். சமர்த்தா படிக்கணும் இல்ல இல்ல சமர்த்தா பாட்டு போடணும். புரியறதோன்னோ?:)

நன்னா புரியர்து... ஆஹா உங்களிடம் உரையாடி எவ்ளோ நாளாயிற்று. ஹ்ம்ம்ம்ம்ம்

rajeshkrv
26th November 2014, 11:25 PM
உங்களுக்காக பால் வண்ணம் தெலுங்கில்

https://www.youtube.com/watch?v=kl35acCMeSM

vasudevan31355
26th November 2014, 11:26 PM
முத்துராமன நடிப்பு எனக்கு ரெண்டு படங்களில் ரொம்ப பிடிக்கும் ஜி.

ஒன்னு காசேதான் கடவுளடா.

இன்னொன்னு துலாபாரம். மனுஷன் அசத்தி விடுவார்.

RAGHAVENDRA
26th November 2014, 11:26 PM
பொங்கும் பூம்புனல்

ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியலே..

அலுத்துக் கொள்கிறார் இந்த நாயகி.. அது எப்படி தெரியும்...

மேகத்தைக் கண்டால் மயில் தான் ஆடும்..
மோகத்தில் வண்டு மலர்களை நாடும்..

அதுவும் இந்த மாதிரி தத்துவத்தைக் கேட்டால் ஏன் அலுப்பு வராது..

அது சரி பாட்டு நல்லா யிருந்தால் நமக்கு போதுமே..

நீரோட்டம் படத்தில் ஏவி ரமணன் இசையில் ஏவி ரமணன் உமா ரமணன் குரல்களில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1979/popular/Neerottam-T0003627

vasudevan31355
26th November 2014, 11:28 PM
நன்னா புரியர்து... ஆஹா உங்களிடம் உரையாடி எவ்ளோ நாளாயிற்று. ஹ்ம்ம்ம்ம்ம்

எனக்கும்தான் ஜி இன்று இரண்டாவது ஷிப்ட் முடிந்து வரவும் தாங்கள் இங்கே இருக்கவும் வாட்டமாகப் போய்விட்டது. தேங்க்ஸ் காட்.

rajeshkrv
26th November 2014, 11:29 PM
பாபு டைரக்ட் செய்த சாக்*ஷி மிகச்சிறந்த படம்
கிருஷ்ணா விஜய நிர்மலா நடித்த படம்

அதில் இசையரசியின் அருமையான பாடல் இதோ (வாசு ஜி கட்டாயம் கேளுங்கோ)

https://www.youtube.com/watch?v=wDnBW38YRr8

vasudevan31355
26th November 2014, 11:29 PM
ராகவேந்திரன் சார்,

புயலெனப் புகுந்து புறப்பட்டு விளையாடுகிறீர்கள். எனக்குத்தான் கொண்டாட்டம். உமா ரமணன் என்றால் அப்படி பிடிக்கும்.

rajeshkrv
26th November 2014, 11:30 PM
முத்துராமன நடிப்பு எனக்கு ரெண்டு படங்களில் ரொம்ப பிடிக்கும் ஜி.

ஒன்னு காசேதான் கடவுளடா.

இன்னொன்னு துலாபாரம். மனுஷன் அசத்தி விடுவார்.

ஆம் இரண்டும் டாப்பு. அதுவும் காசேதான் கடவுளடாவின் டைமிங் காமெடி தூள்

சில படங்களில் நடிகர் திலகத்திற்கு ஈடாக இருக்கும் இவர் நடிப்பு.

vasudevan31355
26th November 2014, 11:30 PM
பாபு டைரக்ட் செய்த சாக்*ஷி மிகச்சிறந்த படம்
கிருஷ்ணா விஜய நிர்மலா நடித்த படம்

அதில் இசையரசியின் அருமையான பாடல் இதோ (வாசு ஜி கட்டாயம் கேளுங்கோ)



நிச்சயம். நிதானமாக கேட்டு எழுதறேன் ஜி.

RAGHAVENDRA
26th November 2014, 11:31 PM
பொங்கும் பூம்புனல்

இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பாடும் பாடல்கள் என்னாளுமே கேட்க ரம்மியமாகவும் மனதைத் கொள்ளை கொள்ளுமளவிற்கும் இருக்கும். இது போன்ற சூழல்களில் எல்லா இசையமைப்பாளர்களுமே நன்றாக பயன்படுத்திக்கொண்டு அற்புதமான பாடல்களைத் தந்துள்ளனர்.

அப்படி ஒரு பாடல் நீதியா நியாயமா என்ற படத்தில் விஜய பாஸ்கர் இசையில் கே.ஜே.ஜேசுதாஸின் குரலில்...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1979/popular/Neethiyaa-Nyayama-T0003628

ஜேசுதாஸின் தமிழ் உச்சரிப்பைப் பொருட்படுத்த வேண்டாம். பாடலின் இனிமையை மட்டும் பாருங்கள்.

vasudevan31355
26th November 2014, 11:32 PM
அதுவும் காசேதான் கடவுளடாவின் டைமிங் காமெடி தூள்



'என்னடா இது கர்சிப் ஹோல் சேல் கடை வச்சிருக்காளா' என்று லஷ்மி கர்சிப்பை வீசி விட்டுப் போனவுடன் கேட்பாரே. ரகளை.

vasudevan31355
26th November 2014, 11:33 PM
'சூர்ய காந்தி' படத்திலேயும் கலக்குவார்.

rajeshkrv
26th November 2014, 11:33 PM
பொங்கும் பூம்புனல்

இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பாடும் பாடல்கள் என்னாளுமே கேட்க ரம்மியமாகவும் மனதைத் கொள்ளை கொள்ளுமளவிற்கும் இருக்கும். இது போன்ற சூழல்களில் எல்லா இசையமைப்பாளர்களுமே நன்றாக பயன்படுத்திக்கொண்டு அற்புதமான பாடல்களைத் தந்துள்ளனர்.

அப்படி ஒரு பாடல் நீதியா நியாயமா என்ற படத்தில் விஜய பாஸ்கர் இசையில் கே.ஜே.ஜேசுதாஸின் குரலில்...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1979/popular/Neethiyaa-Nyayama-T0003628

ஜேசுதாஸின் தமிழ் உச்சரிப்பைப் பொருட்படுத்த வேண்டாம். பாடலின் இனிமையை மட்டும் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=h5AQ1bivw0g

rajeshkrv
26th November 2014, 11:34 PM
'என்னடா இது கர்சிப் ஹோல் சேல் கடை வச்சிருக்காளா' என்று லஷ்மி கர்சிப்பை வீசி விட்டுப் போனவுடன் கேட்பாரே. ரகளை.

ஆமாம் .. ஒவ்வொரு சீனும் இன்று பார்த்தாலும் சலிப்பே வராது.. அருமை அருமை.

vasudevan31355
26th November 2014, 11:34 PM
ராகவேந்திரன் சார்,

இது நீதியா? நியாமா?:)

RAGHAVENDRA
26th November 2014, 11:34 PM
பொங்கும் பூம்புனல்

சங்கர் கணேஷ் இசையில் அபூர்வமான பாடல்.. புதியவர்கள் படத்தில் மலேசியா வாசுதேவன் வாணி ஜெயராம் குரல்களில் செந்தமிழோ தேனமுதோ என கேட்கும் பாடல்..

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1979/popular/Puthiyavargal-T0003640

RAGHAVENDRA
26th November 2014, 11:35 PM
வாசு சார்

நீதிக்கு முன் நீயா நானா .. இல்லை இல்லை.. ரெண்டு பேருமே தான்.. தலைவர் சூப்பராச்சே...

vasudevan31355
26th November 2014, 11:35 PM
ஆமாம் .. ஒவ்வொரு சீனும் இன்று பார்த்தாலும் சலிப்பே வராது.. அருமை அருமை.

பணத்தை அபேஸ் செய்துடுவோம் என்பது போல் கைகளை சைகை செய்து காண்பிப்பார். வயிறு வலிக்கும்.

vasudevan31355
26th November 2014, 11:37 PM
வாசு சார்

நீதிக்கு முன் நீயா நானா .. இல்லை இல்லை.. ரெண்டு பேருமே தான்.. தலைவர் சூப்பராச்சே...

ராகவேந்திரன் சார்,

நாம ரெண்டு பேர் மட்டுமே சிலாகிச்சுக்குவோம். சரிதானே?:) :)

uvausan
26th November 2014, 11:37 PM
முத்துராமன நடிப்பு எனக்கு ரெண்டு படங்களில் ரொம்ப பிடிக்கும் ஜி.

ஒன்னு காசேதான் கடவுளடா.

இன்னொன்னு துலாபாரம். மனுஷன் அசத்தி விடுவார்.

வாசு " எங்கிருந்தோ வந்தாள் " யை விட்டு விட்டீர்களே

vasudevan31355
26th November 2014, 11:39 PM
நீயா? நானா" பார்க்கலாம்.

எந்தக் காட்டிலும் பெரியது வேங்கை
அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்.

இப்போதைய சிச்சுவேஷனுக்கு தகுந்த பாட்டு இல்லே ராகவேந்திரன் சார்? நாம் 'அன்று சிந்திய ரத்தம்' வீண் போகுமா ராகவேந்திரன் சார்?:)

vasudevan31355
26th November 2014, 11:41 PM
வாசு " எங்கிருந்தோ வந்தாள் " யை விட்டு விட்டீர்களே

அடப் பாவி மக்கா!:) இன்னும் முழிச்சுக்கிட்டுதான் இருக்கீங்களா?:) நான் தூங்கறதா வேணாமா?:)ஹைதராபாத்தில் இப்போ என்ன பகலா?:)

uvausan
26th November 2014, 11:41 PM
"பொங்கும் பூம்புனலின் "வேகத்தை தடுக்க முடியவில்லை - அதன் அருமையை போலவே வேகமும் இருக்கின்றது - செல்லும் ஜெட் வேகத்தில் , சைக்கிளில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் ராகவேந்திரா சார் கவனிப்பார் என்று நினைக்கிறேன்

rajeshkrv
26th November 2014, 11:41 PM
நீயா? நானா" பார்க்கலாம்.

எந்தக் காட்டிலும் பெரியது வேங்கை
அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்.

இப்போதைய சிச்சுவேஷனுக்கு தகுந்த பாட்டு இல்லே ராகவேந்திரன் சார். நாம் 'அன்று சிந்திய ரத்தம்' வீண் போகுமா ராகவேந்திரன் சார்?

அட ஆருர்தாஸ், ஏ.எல். நாராயணன் மாதிரி வசனம் எழுத தொடங்கிட்டீங்களே

uvausan
26th November 2014, 11:42 PM
மதியம் 3 மணி

vasudevan31355
26th November 2014, 11:42 PM
வாசு " எங்கிருந்தோ வந்தாள் " யை விட்டு விட்டீர்களே

தலைவரைத் தவிர வேற யாரையுமே கண்ணுக்குத் தெரியலையே ரவி சார். என்ன பண்றது? அப்படியே வளர்ந்துட்டேன்.

vasudevan31355
26th November 2014, 11:44 PM
அட ஆருர்தாஸ், ஏ.எல். நாராயணன் மாதிரி வசனம் எழுத தொடங்கிட்டீங்களே

ஏன்? வாலி அய்யா மாதிரின்னு சொன்னா என்ன?:)

சரி! சரி! நானே போட்டுக்கிறேன் வாய்ப்பூட்டு.:) (பொய்க்கால் குதிரை)

vasudevan31355
26th November 2014, 11:45 PM
மதியம் 3 மணி

நம்பிட்டேன் ராஜா.:)

rajeshkrv
26th November 2014, 11:45 PM
ஏன்? வாலி அய்யா மாதிரின்னு சொன்னா என்ன?:)

சரி! சரி! நானே போட்டுக்கிறேன் வாய்ப்பூட்டு. (பொய்க்கால் குதிரை)

சரி சரி என் தமிழாசான் வாலி ஐயா மாதிரி எழுத ஆரம்பித்துவிட்டீரே ... குசும்பும் நகைச்சுவையும் இனி மேலும் இரட்டிப்பாகும்

rajeshkrv
26th November 2014, 11:46 PM
நம்பிட்டேன் ராஜா.:)

ஹைதராபாத்ல மதியம் 3 மணியா .. நம்பமுடியவில்லை ல்லை லை ........................

RAGHAVENDRA
26th November 2014, 11:48 PM
'அன்று சிந்திய ரத்தம்'அதனால் தான் 'சிவந்த மண்'ணாகி விட்டது.

uvausan
26th November 2014, 11:48 PM
கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -

கண்ணதாசனின் வரிகளில் கண்ணன் நின்று வாசம் செய்வது தெரியும் - இந்த பாடல் உங்களுக்காக

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா


பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் - கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ ?

(பிருந்தாவனத்திற்கு)

கீதையில் உன் குரல் கேட்டேனே - என் கிருஷ்ணனின் திருமுகம்
பார்த்தேனே - பாதையில் உன் துணை வரவில்லையே -பகவான்
திருவருள் தரவில்லையே !

(பிருந்தாவனத்திற்கு)

குங்குமம் அணிந்தால் உன் தேவி - தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
சங்கமம் என்பது எனக்கு இல்லையோ - அந்த மங்கள
மரபுகள் உனக்கிலையோ

(பிருந்தாவனத்திற்கு)



கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர் விடும்
கண்ணீரோ - கண்ணனின் மனமும் கல்மனமோ -எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ

(பிருந்தாவனத்திற்கு)

http://youtu.be/T6JLCKmwhbk

vasudevan31355
26th November 2014, 11:48 PM
ரவி சார்,

சைக்கிள்ல யாரு
நடந்து யாரு

சைக்கிள் கேப்ல ஒரு பதிவ போட்டுட்டு எஸ்கேப் ஆயிடலாம்னு முடிவா? ஆவ்வ்..கொட்டாவி வருதே? மக்கா! அரட்டை அடிக்க அர்த்த ஜாமம்தான் கிடைச்சுதா? பகல்ல வரப்படாதோ?

RAGHAVENDRA
26th November 2014, 11:49 PM
"பொங்கும் பூம்புனலின் "வேகத்தை தடுக்க முடியவில்லை - அதன் அருமையை போலவே வேகமும் இருக்கின்றது - செல்லும் ஜெட் வேகத்தில் , சைக்கிளில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் ராகவேந்திரா சார் கவனிப்பார் என்று நினைக்கிறேன்

காலாலே நிலமளந்து
கையாலே முகமளந்து
நூலாலே இடையளந்து ..
நூறுமுறை..

பாட்டுப் போடுவோமே...

vasudevan31355
26th November 2014, 11:50 PM
ஆந்திராவிலிருந்து கர்னாடகாவிற்கா? போற பயணம் போதாதா. பிருந்தாவனத்திற்கு வேற போகனுமா? எனிவே அருமையான பாடல். கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். நன்றி ரவி சார். மூடை அவுட் செய்யாதீர்கள்.

rajeshkrv
26th November 2014, 11:51 PM
ரவி சார்,

சைக்கிள்ல யாரு
நடந்து யாரு

சைக்கிள் கேப்ல ஒரு பதிவ போட்டுட்டு எஸ்கேப் ஆயிடலாம்னு முடிவா? ஆவ்வ்..கொட்டாவி வருதே? மக்கா! அரட்டை அடிக்க அர்த்த ஜாமம்தான் கிடைச்சுதா? பகல்ல வரப்படாதோ?

நாங்க எல்லாம் இரவில் உலா வருபவர்கள். எங்களை காண நீரும் இரவில் தான் வரவேண்டும் .........................

RAGHAVENDRA
26th November 2014, 11:51 PM
அது வரை...

https://www.youtube.com/watch?v=D-_VfDf2NTk

நல்லிரவு... வணக்கம்..

rajeshkrv
26th November 2014, 11:52 PM
ஆந்திராவிலிருந்து கர்னாடகாவிற்கா? போற பயணம் போதாதா. பிருந்தாவனத்திற்கு வேற போகனுமா? எனிவே அருமையான பாடல். கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். நன்றி ரவி சார். மூடை அவுட் செய்யாதீர்கள்.

அதானே . இந்த பாடலையும் ஒரு நாள் இரவு பாடலும் என்னவோ செய்யும்.

rajeshkrv
26th November 2014, 11:52 PM
அது வரை...

நல்லிரவு... வணக்கம்..

ராகவ் ஜி. நள்ளிரவு வணக்கம்

vasudevan31355
26th November 2014, 11:54 PM
ராஜேஷ்ஜி!

பதிலுக்கு உங்களுக்கு ஒரு பாட்டு. இசையரசி பாடியது. அருமையோ அருமை. 'காட்டு ராணி' படத்திலிருந்து.

'கல்லாகி சிலையாகி நின்றேனடி'

புன்னகை அரசி நீராடிக் கொண்டே பாடுவார்.


https://www.youtube.com/watch?v=mhy09tGlU8k&feature=player_detailpage

RAGHAVENDRA
26th November 2014, 11:54 PM
கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -

ஐயா.. மேலேயே சஞ்சரித்தது போதும்.. கொஞ்சம் இன்றைய பூலோகத்திற்கு வருகிறீர்களா..

RAGHAVENDRA
26th November 2014, 11:55 PM
ஹைதராபாத் ரவி பூலோகத்திற்கு வரும் வரை,
ராஜேஷ், வாசு, ரவி அனைவருக்கும் குட்நைட்...

சுமதி என் சுந்தரி குட்நைட் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வாசு சார்..

vasudevan31355
26th November 2014, 11:56 PM
நாங்க எல்லாம் இரவில் உலா வருபவர்கள். எங்களை காண நீரும் இரவில் தான் வரவேண்டும் .........................

12 மணிக்கு பேய்ப் பாட்டு போடும் போதே தெரியுதேஜி.

uvausan
26th November 2014, 11:56 PM
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்

எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு

( நெஞ்சிருக்கும் )

இருந்தால் தானே செலவு செய்ய
எடுத்தால் தானே மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கிசெல்ல
தடுத்தால் தானே விழித்துக்கொள்ள

எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு

( நெஞ்சிருக்கும் )

துணிந்தால்தானே எதுவும் முடிய
தொடர் தால் தானே பாதை தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய

எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு

( நெஞ்சிருக்கும் )

எவ்வளவு தன் நம்பிக்கையை ஊட்டும் பாடல் இது - சிரித்தால் தானே கவலை மறைய - உண்மையான வார்த்தைகள் - நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் சிரிப்பை தொலைத்து விடுகிறோம் - வாழ்கையில் எப்பொழுதும் கடுகடுப்பாக நடந்துகொண்டு கொஞ்சம் சிரிக்க முயலும்போது வாழ்க்கை முடிந்து விடுகின்றது

துணிந்தால் தானே எதுவும் முடிய - முயன்றால் தான் வெற்றி என்பதை எவ்வளவு அழகாக இந்த வரிகள் சொல்கின்றன

சில நாள் தானே சுமைகள் குறைய - நம்பிக்கையுடன் , துணிவுடன் செயல் படுங்கள் - வெற்றி நிச்சயம் - உங்கள் சுமைகள் குறைய வெகு நாட்கள் ஆகாது

காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு - நம்பிக்கை தான் வாழ்க்கை - பொறுமை தேவை , கோபமோ , ஈகோ வோ உன்னை அண்டாமல் பார்த்துகொள் - வெற்றி உன்னை தேடிவரும் ---

http://youtu.be/NaItT2DZVXU

vasudevan31355
26th November 2014, 11:57 PM
நாங்க எல்லாம் இரவில் உலா வருபவர்கள். எங்களை காண நீரும் இரவில் தான் வரவேண்டும் .........................

12 மணிக்கு பேய்ப் பாட்டு போடும் போதே தெரியுதேஜி.

vasudevan31355
27th November 2014, 12:00 AM
அதே 'காட்டு ராணி'யில் பாலாஜியும், விஜயாவும் அடிக்கும் கூத்து. பாலாஜி வேட்டைக்காரன் எம்ஜிஆர் மாதிரி இருக்கார்.

'ஒத்தயடிப் பாதையிலே'

பாடகர் திலகமும், சுசீலா அம்மாவும் பாடும் பாடல்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7QijFQYc5u8

vasudevan31355
27th November 2014, 12:02 AM
ரவி சார்,

வேணாம். அப்புறம் அழுதுடுவேன் தலைவரை நினைச்சி. நெஞ்சிருக்கும் வரை கண்ணீர் இருக்கும். குட் நைட்.

vasudevan31355
27th November 2014, 12:02 AM
குட் நைட் ராஜேஷ்ஜி. நாளை சந்திப்போம்.

rajeshkrv
27th November 2014, 12:27 AM
குட் நைட் ராஜேஷ்ஜி. நாளை சந்திப்போம்.

Gud nite

uvausan
27th November 2014, 07:19 AM
எல்லோருக்கும் காலை வணக்கங்கள் , பூம்புனல் புயலாக கிள்ளம்பும்முன் - இந்த பதிவை போட்டு விடுகிறேன் - மீண்டும் நடிநிசியில் ராஜேஷ் உடன் ஒரு உலா வர ஆசை ( நேற்று போல் )

சமீபத்தில் வேறு மொழி படம் ஒன்றை பார்க்கும் ஒரு துர்பாக்கியம் கிடைத்து - நடிப்பு minus degree யில் உள்ளது , பாடல்கள் பூகம்பம் - பூம்புனல்கள் அல்ல ------

ஒரு பாடலும் கேட்க்க தகுதியானவை அல்ல - உடனே ENT specialist செல்ல உதவும் பாடல்கள் - பிறகு தான் தெரிந்தது இந்த படம் தமிழிலும் வந்துள்ளது என்று ---- இன்று முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர் நடித்துள்ள படம் என்று - அதிலாவது கதை , நடிப்பு , பூம்புனலாக பாடல்கள் இருக்குமா என்ற ஒரு பேராசையுடன் அங்கும் சற்றே எட்டிப்பார்த்தேன் - என்ன ஒரு ஏமாற்றம்!! - தமிழ் படம் , ஒரிஜினல் யை விட படு மட்டம் - அந்த காலத்தில் எந்த படத்திலும் இவ்வளவு ammunition , எந்த ஹீரோ வும் பார்த்து கூட இருக்க மாட்டார்கள் - இந்த படத்தில் இருந்து பல உண்மைகள் எனக்கு தெரிய வந்தன :

1. அந்த காலம் என்பது ஒரு மாயை
2. நடிப்பு 2001 இல் இறந்துபோனது - அதற்க்கு பிறகு இன்னும் மறு பிறவி எடுக்கவே இல்லை
3. இந்த கால பாடல்கள்களை கேட்க்கும் பொழுதே நம் உயிர் பிரிய வாய்ப்பு உள்ளது - அந்த அளவிற்கு கொலை வெறி உள்ளவை
4, நகைச்சுவைகள் கண்ணீரை வரவழிக்கும் சக்தி வாய்ந்தவைகள்

"யாரடா மனிதன் இங்கே " என்ற பாடலை இந்த கால படங்களுக்கு ஒத்து வரும் பாடலாக மாற்றி எழுதிள்ளேன் - உங்கள் ரசனைக்கு

Original :

ஒரு அருமையான எந்த காலத்திற்கும் பொருந்த கூடிய பாடல்

ஒரிஜினல்

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

மனிதரில் நாய்கள் உண்டு , மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு , பழக்கத்தில் பாம்பும் உண்டு

நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் வாழும் பூமியிலே
மானம் , பண்பு ,ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே


சிரிப்பினில் மனிதன் இல்லை , அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை - உறக்கத்துள் மனிதன் உண்டு

வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் , நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

இந்த பாடலை சற்றே மாற்றி எழுதியுள்ளேன் - எப்படி பொருந்துகின்றது என்று பாருங்களேன் !


யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே

யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே

நடிப்பினில் மேதை ஒன்று , மனதினில் நிலைத்தது உண்டு
தமிழகம் மறந்த ஒன்று , தமிழினை கொன்றதும் உண்டு .

நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் நடிக்கும் திரையினிலே
நடிப்பு , பண்பு ,ஞானம் கொண்டநடிகனை காணவில்லை

யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே

சிரிப்பினில் நடிகன் இல்லை , அழுகையில் நடிகன் இல்லை
உள்ளத்தில் தமிழும் இல்லை - உறக்கத்துள் நடிப்பு உண்டு

வாழும் திரைஉலகம் தூங்கும் நடிப்பு , நடுவே நடிகனடா
எங்கோ திலகம் ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குதடா

யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே

ravi

RAGHAVENDRA
27th November 2014, 07:44 AM
சமீபத்தில் வேறு மொழி படம் ஒன்றை பார்க்கும் ஒரு துர்பாக்கியம் கிடைத்து - நடிப்பு minus degree யில் உள்ளது , பாடல்கள் பூகம்பம் - பூம்புனல்கள் அல்ல ------

ஒரு பாடலும் கேட்க்க தகுதியானவை அல்ல - உடனே ENT specialist செல்ல உதவும் பாடல்கள் -
...

3. இந்த கால பாடல்கள்களை கேட்க்கும் பொழுதே நம் உயிர் பிரிய வாய்ப்பு உள்ளது - அந்த அளவிற்கு கொலை வெறி உள்ளவை
4, நகைச்சுவைகள் கண்ணீரை வரவழிக்கும் சக்தி வாய்ந்தவைகள்


ரவி சார்...

தங்களுடைய பதிவில் மேலே மேற்கோள் காட்டப் பட்டிருக்கும் வாசகங்கள், மேலோட்டமாகப் பார்க்கும் போது நகைச்சுவையாகத் தெரிந்தாலும் அதனுள் பொதிந்திருக்கும் சமூக அக்கறை, மன வேதனை எல்லாம் தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன.

vasudevan31355
27th November 2014, 09:01 AM
ரவி சார்,

கலக்குகிறீர்கள். வித்தியாச சிந்தனை. நன் புதுப் பாடல்களை கேட்பதே இல்லை.

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

பாடல் உங்கள் பார்வையில் மிக அருமையாக மாறி உண்மையை பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது. தங்கள் சிந்தனையே தனி. வாழ்த்துக்கள்.

chinnakkannan
27th November 2014, 09:22 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

ஹோப் எவ்ரிபடி இஸ் ஃபைன் இன் மை ஆப்சென்ஸ்..! (அதான் வந்துட்டியே என முணுமுணு கேக்குது..)

பல பக்கங்கள் போனதால் வேகமாக ஒரு புரட் புரட்டியதில்…

அன்பு ரோஜா… லத்து முத்து… பாத்து..பாட்டு.. நைஸ்.. தாங்க்ஸ் ராஜேஷ் ஜி..

ராகவேந்தர் சார் நீரோட்டம் விஜயகாந்த்தின் முதல்படம்.. மதுரை ஸ்ரீதேவியில் மூன்று நாட்கள் ஓடிய நினைவு..இரண்டாம் நாள் நான் பார்த்தேன்(காலக் கொடுமை).. ஒல்லி ஒல்லி விஜயகாந்த் ப்ரவீணா..நீங்கள் போட்டவுடன் அந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது..

சிட் குருவி, பாடல்கள் பிடிக்கும் படம் இன்னும் பார்த்ததில்லை வாசு சார்.. பைரவி – அகெய்ன் ஸ்ரீ தேவி .தியேட்டர்… நண்டூறுது நரியூறுது பாடலை விட ஏற்றமிட்டு இறைக்கும் பாடல் பிடிக்க்கும்.. நன்றி வாசு சார்..ஆஆனா..ல்ல்ல் நீங்களும் சரி ரவி சாரும் சரி.. அதில் தங்கையாக அறிமுகமான கீத்து வைப் பற்றிச் சொல்லாதது வருத்தமே.. ( ரொம்ப அழகாய் + யங்க் ஆக வந்து பின் நம்ம ஊரு சிங்காரியில் வந்தவர்)

ரவி யார்டா நடிகன் அங்கே எனப் புலம்பி என்ன பிரயோஜன.ம்.. ஆமாம் அப்படி என்ன படம் பார்த்தீர்கள்..ஜெனரலாக உங்கள் எழுத்துக்களில் ஒரு உற்சாகம் உத்வேகம் தெரிகிறது..அதை உயர வைக்கவும்..(புரியவில்லைஎனில் வாசு சாரைக் கேட்கவும்) (சரி குழம்ப வேண்டாம் கீப் இட் அப் ற்கு தமிழ்)
ராஜ்ராஜ் சாரின் ஜூகல் பந்தி வழக்கம் போல அருமை..கொஞ்சம் அவ்வப்போது ஒரு டீஸ்பூன் நாஸ்டால்ஜியாவை அவர் கொடுக்கும் அழகே அழகு..

கிருஷ்ணா ஜியின் பதிவுகள் வழக்கம் போல சுவாரஸ்யம்..

குதிரை நாயகர்களில் ஓஹோ ஹோஹோ மனிதர்களே, அச்சம் என்பது மடமையடா எனக்கு நினைவுக்கு வந்தது..

எனில் அப்புறம் உருப்படியாய் எழுதிக் கொண்டு வரட்டா..

Richardsof
27th November 2014, 09:26 AM
http://i61.tinypic.com/or6jhh.jpg

Richardsof
27th November 2014, 09:33 AM
http://i57.tinypic.com/1zdw66o.jpg

Richardsof
27th November 2014, 09:34 AM
http://i61.tinypic.com/9kavy9.jpg

uvausan
27th November 2014, 09:53 AM
Ck - "நான் அப்படித்தான் " மேலும் உயர வைப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை --- நீங்கள் வனவாசம் அடிக்கடி போவது , நாங்கள் காட்டுக்குள் வந்து உங்களை தேடும் படி ஆகி விடுகின்றது ---:smokesmile:

Richardsof
27th November 2014, 10:30 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

வித்தியசமான சிந்தனையில் பாடலை வழங்கிய உங்களுக்கு ஒரு அன்பு பரிசு . ஏற்று கொள்ளவும் .

http://i62.tinypic.com/xefxck.jpg

rajraj
27th November 2014, 10:35 AM
இதோ உங்களுக்கு என் guru thatchanai.:) 'பாபுல்' படத்திலிருந்து என் மனம் கவர்ந்த பாடல். முனாவர் சுல்தானாவின் 'கம்ரா' வைப் பாருங்கள்.:) எவ்வளவு பிரம்மாண்டமான அறை!


http://www.youtube.com/watch?v=K8RDpfkOCKc&feature=player_detailpage

vasu: Here is the Tamil equivalent from Ulagam

un kaadhalaal........

http://www.youtube.com/watch?v=WhzrnxKwOUI

chinnakkannan
27th November 2014, 10:36 AM
ஹை.. ரவி…நான் அப்படித் தான்.. நல்ல டைட்டில் பாட்டு எழுதி ப் பார்க்கட்டா..

அப்படித்தான் இருப்பேன் என்றே
..அன்னையிடம் அன்று சொல்லி
குப்பெனவே முகத்தில் கோபம்
…கொண்டதுவோ அந்தக் காலம்
தப்பெனவே பிள்ளை இன்று
…தயங்காமல் செய்தல் கண்டு
இப்படியாய்க் கூடா தென்றே
.இறைஞ்சுதலோ இந்தக் காலம்..

பிடிவாதம் பலசெய்து இருந்த போதில்
…பேதமையைப் பார்த்துமனம் பித்துக் கொண்டே
அடிக்காமல் அழகாக அன்னை சொன்ன
…அறிவுரைகள் காதினிலே மோது தய்யா
நடிப்புதான் என்றாலும் நன்றாய்க் கையை
…நயமாக ஓங்கியேதான் சொன்னாள் அன்று
படிப்பினைகள் வாழ்க்கையில்நாம் கற்ற பாடம்
…பார்த்தாலித் தலைமுறைகள் கற்ப தில்லை

பட்டுத் தெரிந்துகொண்ட பாங்குடனே கூறியவை
தொட்டுத் தொடர்ந்திடும் தான்..

vasudevan31355
27th November 2014, 10:49 AM
மக்கள் திலகம் பாகம் 12 ஐத் துவக்கி வைத்த அன்பு நண்பர், திறமையாளர், திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களோடு கூடிய அரிதான அன்புப் பரிசு.

மிக அரிதான 1966 'பேசும் படம்' பிப்ரவரி மாத இதழிலிருந்து 'நான் ஆணையிட்டால்' படத்தில் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பாடும் 'தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை' பாடல் உருவாக்கப்பட்ட விதம் குறித்த சிறப்புக் கட்டுரை.

அனைத்து எம்.ஜி.ஆர் திரி நண்பர்களுக்கும், நம் 'மதுர கானம்' அன்பர்களுக்கும் சேர்த்துத்தான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0002-9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0002-9.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-17.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-17.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0003-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0003-6.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0004-5.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0004-5.jpg.html)

rajeshkrv
27th November 2014, 10:53 AM
காலை வணக்கம்

vasudevan31355
27th November 2014, 11:04 AM
வணக்கம் ராஜேஷ்ஜி !

நேத்து நைட் செம ஜாலியா இருந்துச்சு. ஆனா தூக்கம் வந்து கெடுத்துடுச்சே. ஒத்தயடிப் பாதையிலே பார்த்தீர்களா?

uvausan
27th November 2014, 11:04 AM
நேற்று ,"அந்த காலம் " என்ற மாயையில் நம்மை போல வாழ்ந்து வரும் ஒருவரை சந்திக்க நேரிட்டது - அவர் கூறிய வார்த்தைகளின் ஆழம் என்னை மிகவும் கவர்ந்தது ..

நான் அவரிடம் கேட்ட கேள்வி இதுதான் :

ஏன் இந்த காலத்தில் , வளரும் நடிகர்கள் அதிக வசனங்கள் பேசும்போது ஒரே மாதிரியான முக பாவத்துடன் நடிக்கிண்டார்கள் - "சும்மா நடிங்க பாஸ் " என்று அவர்களை யாருமே சொல்வதில்லையா ? - சில சமயம் அவர்கள் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் , நாம் தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறதே -----

அவர் இந்த கேள்விக்கு CK வழியில்:) சொல்லாமல் மிகவும் தெளிவாக பதில் சொன்னார் --

உண்மையில் சிறந்த நடிகருக்கு விருதுகள் கொடுக்க வேண்டுமென்றால் - அவர்கள் படங்களில் அதிகமாக உபயோகிக்கும் கத்திகளுக்கும் , துப்பாக்கிகளுக்கும் , கிராபிக்ஸ் க்கும் தான் பரிசுகளும் , விருதுகளும் அளிக்க பட வேண்டும் - அவர்களுக்கு அல்ல -- அவர்கள் பேசும் வசனங்களில் , சிறந்த தமிழ் இல்லாததை விட்டு விடுங்கள் , வார்த்தைகளில் உயிரே இல்லை - செய்தி வாசிப்பவர்கள் போல் தான் வசனங்கள் வெளி வருகின்றன --- ஒரு செய்தி வாசிப்பாளர் , டிவி யில் செய்தி வாசித்துகொண்டிருந்தார் - அவருக்கு கொடுக்கப்பட்ட ட்ரைனிங் - முக மலர்ச்சியுடன் செய்தி சொல்ல வேண்டும் என்பது - ஒரு இடத்தில் தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை , முக மலர்ச்சியுடன் ( சற்று அதிகமாகவே) வாசித்தார் . சிபிஐ- கொலைக்கும் அவருக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இருக்கும் என்று suspect பண்ணி அவரை arrest செய்தது - பேசும் போது இடத்திற்கு தகுந்த மாதிரி , subject க்கு ஏற்ற மாதிரி வசனங்கள் , சிறந்த தமிழில் இப்பொழுது யார் சார் பேசுகிறார்கள்? - அப்படியே பேச நேர்ந்தாலும் , கேட்க்கும் பொறுமை யாருக்கு இப்பொழுது இருக்கின்றது ??

உண்மை - உறங்கி கொண்டிருக்கும் உண்மை .....:smokesmile:

vasudevan31355
27th November 2014, 11:08 AM
ராஜேஷ்ஜி

பி.எம்.அனுப்ச்சியிருக்கேன்.

Richardsof
27th November 2014, 11:08 AM
THANKS VASU DEVAN SIR

SUPER POSTING ABOUT MAKKAL THILAGAM MGR IN NAAN ANAYITTAL MOVIE .


http://i60.tinypic.com/akx5dc.jpg

rajeshkrv
27th November 2014, 11:08 AM
வணக்கம் ராஜேஷ்ஜி !

நேத்து நைட் செம ஜாலியா இருந்துச்சு. ஆனா தூக்கம் வந்து கெடுத்துடுச்சே. ஒத்தயடிப் பாதையிலே பார்த்தீர்களா?

ஆம் நல்ல ஜாலியான அரட்டை..... பார்த்தேன் பார்த்தேன்

chinnakkannan
27th November 2014, 12:56 PM
எஸ்.பி.வி.வி -1

(சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்..)

// இசையும் கதையும் என இலங்கை வானொலியில் வரும் ஒரு நிகழ்ச்சி..அதே போல இங்கு தரலாம் என்றிருக்கிறேன்..ஒரு படக்கதை..அல்லது என்கதை/ கட்டுரை ..பின் படத்தின்பாடல்கள்..அல்லது கதை/கட்டுரைக்குச் சம்பந்தமான பாடல்கள்..பழைய படங்கள் என்றில்லை..கொஞ்சம் புதிய படங்களும் கூட வரலாம் வேற்று மொழி.. தமிழும் வரலாம்.. வாரத்திற்கு ஒன்று என...(இப்ப மட்டும் என்னவாக்கும் செய்றே நீ… ஷ்ஷ் மனசாட்சி..)

கொஞ்சம் சீரியஸாகவே எழுதப் பார்க்கிறேன்..முகத்தை உம் மென்று வைத்துப் படிக்கவும்...//

-
ஒன்று – ஏழு படிகள்..

*

அவன் இளைஞன்.அழகன். வேத பாடங்களில் வல்லுனன். சிறு வயது முதலே கோவிலில் அம்பாளை பூஜிப்பவன்.. அவனது தாத்தா அந்த கிராமத்தில் மிகப் பெரிய வேத வித்து. அவரது மகனும்(இவன் அப்பாவும்) அப்படியே..

அந்த இளைஞனுக்கு அன்று மிகச் சிலிர்ப்பாக இருந்தது. காரணம் அவனுக்கு அன்று முதலிரவு..

.என்ன தான் சின்ன வயதிலிருந்து அம்பாள் உபாசனை என்று இருந்தாலும் அவனும் மானிட ஜென்மம் தானே...எனில் பலப் பலக் கனவுகள், எண்ணங்கள் சுமந்து அறையினுள் நுழைந்து ஆவலாய் காலையில் தான் தொட்டுத் தாலி கட்டிய அத்தை மகளை, அவளின் அள்ளக் குறையாத அழகை, அவளது அகலக் கண்களின் எழிலைப் பருகுவதற்காக ஏறெடுத்துப் பார்த்தால் அதிர்ச்சி அவனைத் தாக்குகிறது…

காரணம் முதலிரவு மணவறையில் அமர்ந்திருப்பது… அத்தை மகளின் வடிவில் அமர்ந்திருப்பது சாட்சாத் அம்பாள் தான்..

என்ன இது..என முதலில் தோன்றினாலும் பரவசமாய்ப் பாட ஆரம்பித்துவிடுகிறான்..

அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிதர திவ்ய சிரோஸி நிவாஸினி விஷ்ணு விலாசினி ஜிஷ்ணு நுதே

பாடல் முடிவில் அவளை அப்படியே விழுந்து நமஸ்கரித்துவிட்டுப் போய்விடுகிறான்..மறு நாளும் இரவு வருகிறது..அவளும் அறையில். அவனும் நுழைகிறான்..மறுபடியும் அம்பாள் தோற்றம்..

அப்போது தான் அவனுக்கு உறைக்கிறது. அம்பாள் உபாசகனல்லவா அவன்..பரஸ்த்ரி அம்பாளின் சொரூபம்.. எனில் அறையில் அமர்ந்திருக்கும் தொட்டுத் தாலி கட்டிய மனைவி பரஸ்த்ரி என அம்பாள் தன் ரூபத்தில் காட்டுகிறாளா.. குழப்பம் மனதில் உந்த வெளியில் அவன் சென்று விட…

அறையில் சர்வாபரண பூஷிதையாய் அமர்ந்திருக்கும் சபிதாவிற்கும் குழப்பம்.. அழகிய நீலக்கடல்போல பரந்து விரிந்த கண்களின் ஓரம் நீர் குளம் கட்டுகிறது..கட்டிலில் அவள் சாய கண்களில் நீர் பொங்கி கன்னங்களில் முன்னோக்கி ஓட அவளது எண்ணங்கள் பின்னோடுகின்றன..

*

chinnakkannan
27th November 2014, 12:57 PM
*

ஆர்வத்துடன் நாட்டியம் காண்பதற்கு வந்திருக்கும் கூட்டம்.. அமைதியாய் இல்லாமல் .கொஞ்சம் சில சிறு சலனங்களாய் சலசலப்புகள் இருக்க திடீரென சலங்கை ஒலி ஒலிக்க மேடையில் ஒரு மயில் வந்து கம்பீரச் சிரிப்பு சிரிக்க அரங்கமெங்கும் அமைதி..

வந்தது மயிலில்லை.. மயில் போன்ற அலங்காரத்தில் வனிதை.. சபிதா..கம்பீரமாக வந்து கூட்டத்தினரைப் பார்க்கையில் பின் பாட்டுப் பாடுபவர் பாட ஆரம்பிக்க அவளது மயிலாட்டமும் ஆரம்பிக்கிறது..

நெமிலிக நர்த்தன நடதளிரே..முரளிகி அந்தன படுகுளிரே…

உற்சாகமாய் தாவித் தாவி மயிலாக மாறி அவள் ஆடுகையில் குறுக்கே குழப்பமில்லாமல் தாளத்துடன் கலந்த ஒரு இசை ஒலி.. புல்லாங்குழல்..அமர்ந்திருப்பவர்களிடம் இருந்து..

மயில் நின்று கர்வத்துடன், அலட்சியக் கண்களுடன் அரங்கத்தினுள் பார்க்க மூலையில் அந்த வாலிபன்.. முகத்தில் இளமை கண்களில் சிரிப்பு.. வாயில் புல்லாங்குழல்..

அவனிசை முடிந்தபின் மயிலாட்டம் ஆரம்பிக்க பின் குழலிசையும் ஆட்டத்துடன் கலந்து கொண்டு போட்டி போட பாடல் முடிகிறது..

ஆனால் அந்தப் புல்லாங்குழலிசை நாட்டியத் தாரகை அவளை மயக்கித் தான் விட்டது எனச் சொல்ல வேண்டும்..

அந்தப் புல்லாங்குழலிசைக்குச் சொந்தக் காரன் முரளி..அவனுடைய அறிமுகமும் அவளுக்குக் கிடைக்கிறது… நட்டுவனார் ஆன சபிதாவின் தந்தை அவனையும் தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார்..

வெவ்வேறு ஊர்கள்..வெவ்வேறு அரங்கங்கள்.. சபிதாவின் நாட்டியமும் புகழும் வளர்கிறது..அவளுடைய காதலும்..

அவள் அப்பா நட்டுவனார் ஒரு நாள் சொல்கிறார்.. அவளுடைய தாத்தா ஊரில் நாட்டியம் ஊர்ஜிதம் ஆகியிருப்பதாக..

“தாத்தா ஊரா..”

“ஆமாம் அம்மா..உன் தாத்தா அந்தக் கிராமத்தில் மிகப் பெரிய வேதவித்து..அவருடைய மகளை..அதாவது உன் அன்னையை நான் காதலித்து மணம் புரிந்து விட்டேன்..வேற்று ஜாதி எனில் அவருக்குப் பிடிக்கவில்லை…நாங்கள் ஊர் விட்டு வந்தகதை தான் உனக்குத் தெரியுமே..உன் அன்னையும் நமை விட்டுச் சென்று விட்டாள் ஒரேயடியாக..இத்தனை வருடம், கழித்து நமக்கு அவர் ஊருக்கு உனது நாட்டியம் பார்க்க அழைப்பு வந்திருக்கிறது.. நம் குடும்பம் இணைய ஒரு வாய்ப்பு..”

அவள் எதுவும் சொல்லவில்லை..

*

chinnakkannan
27th November 2014, 12:58 PM
*
ஆயிற்று படகில் ஆற்றைக் கடந்து தாத்தாவின் கிராமத்தின் கரையை அடைந்தாயிற்று..

இறங்குகையில் அவளது கொலுசு கழன்று விழ, முரளிகட்டி விடுகின்றான்..அவளது கலைக் கால்களை அவனது பார்வை வீச்சுகள் அன்புடன் வருடுகின்றன..

“என்னை மறந்து விடுவாயா..உன் புதிய உறவுகளைக் கண்டவுடன்..”

“ம்ஹூ ஹும்.. என்ன பேச்சு இது முரளி” அவள் பேசவில்லை..அவளது விழி பேசியது..

ஊருக்குள் நுழைந்தால் கோவிலில் நாட்டிய அரங்கேற்றம்..

தாத்தாவின் பையன் வெங்கடேசன் தன் சகோதரியின் மகளையும் சகோதரியின் கணவனையும் வரவேற்றுத் தங்க வைக்கிறான்..தாத்தாவை நாட்டியம் பார்க்க அழைக்க தாத்தாவின் கண்களில் கோபம்.

” நமை மதிக்காமல் ஓடிப் போனவள் உன் சகோதரி..எனக்குத் தெரியாமல் என் நண்பன் கோவில் தர்மகர்த்தா எனக்கு நல்லதுசெய்வதாக நினைத்து உன் சகோதரியின் மகளின் நாட்டியத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறான்..அது அவன் இஷ்டம்..என்னால் வர இயலாது”

“அப்பா மன்னித்தல் தெய்வ சுபாவம்”

:”நீயே சொல்லிவிட்டாய்.. நான் சாதாரண மனுஷன்..வேண்டுமென்றால் நீ குடும்பத்துடன் போய்வா..”

ம்ம் எனச் சொல்லி கோவிலுக்கு வெங்கடேசன் தன் மனைவி மகனுடன் செல்ல நாட்டியம் ஆரம்பமாகிறது..

சபிதாவிற்கு மேடை மட்டும் தான் கண்ணில் பாடல் மட்டும் நெஞ்சில்.. எல்லாம் பதித்து அவள் கால்கள் ஆட ஆரம்பிக்கின்றன அந்த மேடையில்

அகிலாண்டேஸ்வரி சாமுண்டீஸ்வரி பாலயமாம் கெளரி..

வெகு அழகாக அவள் ஆட ஆட அங்கே காண்போர் மனம் ஆடுகிறது..

பாடல் முடிவில் அவையினரை வணங்கி நிமிர்ந்து ஓரக்கண்ணால் பார்க்கையில் இது என்ன அதிசயம்..

அவளது தாத்தா…கம்பீரம் குலையாத, முகத்தில் தண்ணொளி பொங்கும் கண்களுடன் இதழ்களில் சற்றே தேங்கிய சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.. இவர் எப்போது வந்தார்.. இடையில் வந்திருப்பாராயிருக்கும்..

கண்களாலேயே தாத்தா தன் மகன் வேங்கடேசனைக் கூப்பிட அவனும் தாவிப் போய் “அப்பா”

“அவளையும் அவள் தகப்பனையும் நாளைகோவிலுக்கு வரச்சொல்லு” சிங்கம் சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறது..
*

chinnakkannan
27th November 2014, 12:58 PM
*
மறுநாள்..

ஆலயம்..

வேதம் கற்பிக்கும் சிறார்கள் குழுமியிருக்க, தாத்தா, பையன் வேங்கடேசன், பேரன் மூவரும் கனகம்பீரமாய் நின்றிருக்க பேத்தி சபிதா அங்கு வரவும் துர்கா அஷ்டகத்தை வேதகோஷ்டிகள் தாளம் பிசகாமல் முழங்குகின்றனர்..

ஓம் ஜாதவே புனஸீ…

அந்த வேத சப்தத்திற்குப் பிசகாமல் வெகு அழகாய் நேர்த்தியாய் ஆடுகிறாள் சபிதா..

பாடல் முடிய, தாத்தா பேத்தியை அழைத்து உச்சி முகர்ந்து தன் முடிவைத் தெரிவிக்க, சபீதாவின் கண்களில் கடல்..

“இவளை என் பேரனுக்கு மணமுடிக்கத் தீர்மானித்திருக்கிறேன்..உமக்குச் சம்மதமா”

சபிதாவின் தந்தைக்கோ சந்தோஷம்..இதை இதைத் தானே எதிர்பார்த்து ஏங்கியிருந்தேன்.. நம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வதற்கென

கோவில் வெளியில் ஸ்தோத்திரப் பாடலுக்கு அழகாய் ஆடும் சபீதாவின் கால்களை க் கவனித்துக் கொண்டிருந்த முரளிக்கும் அது கேட்கிறது..அவனிடமும் சோகம் குடியேற மெளனமாகத் திரும்பி நடக்கிறான்..

*

பின் பின்..பின்..

எல்லாம் ஒருகனவு போல.. வேக வேகமாகத் திருமணம் நடக்கிறது பேரனுக்கும் சபிதாவிற்கும்..

முதலிரவு..

அதற்கு மறு நாள் இரவு

அதற்கு மறு நாள்…

பேரன் அறையுள் நுழைவதும் துணுக்குற்று விலகி கோவிலே கதியென்று கிடப்பதுமாக…

சபீதாவிற்கும் புரியவில்லை.. தன் மனதுள் முரளி யிருப்பதை வெளியிட வாய்ப்புமின்றி மனதினுள்ளேயே மருகி மருகி மருகி பின் ஒரு தீர்மானத்துடன் அந்த இரவின் அமைதியில் கோவில் பிரகாரத்திற்குச் செல்கிறாள்..

அங்கு எடுக்கிறாள் விஸ்வரூபம்..

அகமழுத கண்ணீரால் ஆர்ப்பரித்த மேகங்கள்
இகத்தில் பொழிந்ததே இன்று..

அவளது உள்ளம் அழுகிறது வானுக்குப் புரிகிறது..அவள் மெல்லிய சருகாய், மிளிரும் கண்கள் தேக்கியிருக்கும் சோகத்தைக் கால்கள் வெளிப்படுத்த மென்மையாய் வீணை இசையுடன் ஆரம்பிக்கும் நடனம் சூறைக்காற்றாய் சுழ்ன்று சுழன்று மாற, வானம் இடி இடிக்க மின்னல் வெட்ட..

காற்று நிற்கவில்லை....இடி நிற்கவில்லை..ஆடும் அவளது கால்களும் நிற்கவில்லை.. அசுர ஆட்டம்…...

வேறிடத்தில் படுத்திருக்கும் முரளி புரிந்துகொண்டதாலோ என்னவோ புல்லாங்குழலில் இசைக்க அவளது சீற்றம் சற்றே அடங்கி மெல்ல மெல்ல நிலைக்கு வருகிறாள்..

எதேச்சையாக க் கோவில் வரும் தாத்தா அவளது ஆடலைக் கண்டு அதிர்ச்சியுறுகிறார்..

”என்ன தான் நடக்கிறது இங்கே”

*

chinnakkannan
27th November 2014, 12:59 PM
*

சிலதினங்கள் முன் கல்யாணம் செய்து கொண்ட பெண் சுழன்றாடுகிறது கோவிலில். புதுக் கல்யாண மாப்பிள்ளையோ முன்னிலும் கொஞ்சம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அம்பாளைத் தியானித்துக் கொண்டிருக்கிறான்..என்ன விஷயம்..

தாத்தா துருவித் துருவி விசாரிக்கிறார்.. அவருக்குத் தெரியவருகிறது…அவரது பேத்தி சபிதா, முரளியின் காதல்.. பேரனும் தன் மனைவியின் காதலைத் தெரிந்துகொள்கிறான்..

தாத்தாவும் பேரனும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள்.. சபிதாவை முரளியிடம் சந்தோஷமாகச் சேர்ப்பிக்கிறார் தாத்தா.. அதுவும் கல்யாண காலத்தில் சொல்லப்படும் சப்தபதி மந்திரத்தின் அர்த்தம் சொல்லி..

*

இது கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த “சப்த பதி” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்..கே.வி. மகாதேவன் இசை..

தாத்தாவாக சோமயாஜுலு, சபிதாவாக சபிதா பொம்மிடிப்பட்டி என்ற அழகிய நாட்டியம் தெரிந்த நடிகை ( இவர் நடித்த முதலும் கடைசியுமான படம் இதுவே).. பின் பலர்..

பாடல்கள் வெகு அழகு.. நாட்டியமும் மிக அழகு.. படம் தான் வெளியான போதில் தோல்வியைக் கண்டது..

*
இனி பாடல்கள்..

chinnakkannan
27th November 2014, 12:59 PM
அயிகிரி நந்தினி நந்தித மேதினி

பேரன் முதலிரவு அறையுள் நுழைய அங்கே அம்பாளின் தோற்றத்தில் சபிதா காட்சியளிக்க உணர்ச்சிமிகுந்த அர்ச்சனை....

http://www.youtube.com/watch?v=ZGd-7ZX80k4&feature=player_detailpage

gkrishna
27th November 2014, 01:00 PM
ஆம் நல்ல ஜாலியான அரட்டை..... பார்த்தேன் பார்த்தேன்

நேற்று இரவு மற்றும் இன்று காலை நல்லதொரு நிகழ்வுகளாக பல பதிவுகள் போடப்பட்டு உள்ளன நமது மதுர கானம் திரியில் .வாயு வேகம் மனோ வேகம் என்பார்கள் அது போல் பக்கங்கள் மிகவும் வேகமாக பறந்து உள்ளன

அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்

chinnakkannan
27th November 2014, 01:00 PM
மயிலாட்டமும் புல்லாங்க் குழலாட்டமும் கண்களுக்குள் புகுந்து மயக்கம் தரும்..புல்லாங்குழல் குறுக்கிட்ட சபிதாவின் கண்களில் தெரியும் அலட்சியம்..

நெமிலிகி நெர்பின நடதளிரே…

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hb0j7N7a6fA

chinnakkannan
27th November 2014, 01:00 PM
அகிலாண்டேஸ்வரி சாமுண்டேஸ்வரி பாலயமாம் கெளரி பரி பாலயமாம் கெளரி..

சபிதா தன் அன்னையின் கிராமத்தில் ஆட குடும்பமே பார்க்கின்றது அந்த ஆடலுடன் கூடிய அழகிய கானத்தை..


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RBIG7W5UI3k

chinnakkannan
27th November 2014, 01:01 PM
கோவில்.. வேதகோஷம்.. ஆடல் சபிதா..அம்பாள்.. தாத்தாவின் முடிவு…

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BYUfQ3BNDiE

மனக்குழப்பத்தில் மயில் ஆடினால் அந்த ஆட்டத்தில் மின்னல் மட்டுமா வரும்..மனமும் ஆடிவிடுமே.. கோவிலில் சுழன்றாடும் சபிதா.. அவளை டோலாயாம் ..இசைத்து ஒடுக்கும் புல்லாங்குழல் இசை…

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OQjBVMqyRYI

chinnakkannan
27th November 2014, 01:02 PM
ஒரு சந்தர்ப்பத்தில் தான் வேறு குலம் என முரளிகுழம்புகிறான்..இந்த சபிதாப் பெண் இருக்கிறதே அவனை சமாதானப் படுத்திப் பாடும் பாடல்..”..மரு கேலரா ஓராகவா…

ஓ ராமா

நீ ஏன் உன்னைமறைத்துக் கொள்கிறாய்
பிரபஞ்சமே உன்னுடைய வடிவம்
சூரிய சந்திரர்கள் உனது விழிகள்
வெகு ஆழ்ந்த அலசலுக்குப் பின்
நான் உன்னையே எல்லாம் என ஆக்கிவிட்டேன்..
எல்லாமும் உன்னிடத்திலேயே அடக்கம்..
உன்னைத் தவிர வேறுஎந்தக் கடவுளும்
என் சிந்தையினுள் இல்லை..
நீயே என்னைப் பாதுகாப்பாயாக..


http://www.youtube.com/watch?v=CX4kT967Fbo&feature=player_detailpage

chinnakkannan
27th November 2014, 01:02 PM
இன்னொரு காதற்பாடல்

ரேபள்ளிய எத ஜள்ளுன பொங்கின ரரளி
நவரச முரளி..ஆனந்தன முரளி.. இதேனா ஆ முரளி
மோஹனமுரளி..

வேணுகான லோஹினி முனி பிஞ்சின ரவளி
நடனல சரளி ஆனந்தன முரளி…இதேனா ஆ முரளி..

பாடியவாறே அவளது – அவன் ஆராதிக்கும் பொற்கால்களுக்கு முரளியின் நீரபிஷேகம்.. வெகு அழகு…

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UXN8-m_4X98

chinnakkannan
27th November 2014, 01:03 PM
எங்கிருந்தாலும் என்றைக்கும் இந்த ஊர்வம்பு இருக்கிறதே இருந்து கொண்டு தானிருக்கும்.. இங்கும் அப்படித் தான்.. அந்த கோவில் பெரிய மனிதர் வீட்டு மாட்டுப்பொண் இருக்காளோன்னோ.. என்னா கர்வம்.. என்னா கர்வம்..பெரிய நாட்டியக் காரியோல்லியோ .. பாரேன் அவ நடையே ஒரு நாட்டியம் போல இருக்கே…

சோர்ந்து தண்ணீரெடுக்கச் செல்லும் சபிதாவும் அந்தக் கிராமத்துப் பெண்களின் கண்களில் நாட்டியமாடிச் செல்வது போலத் தெரிகிறாள்..

பாமனே சத்ய பாமனே..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2uO0KhuSlzQ

இன்னுமொரு பாடல் இருக்கிறது..அது இங்கே தரவில்லை..

அவ்வளவு தான்.. அப்புறம் வரட்டா..

gkrishna
27th November 2014, 01:09 PM
நண்பர் சி கே

வணக்கம்

சப்தபதி பாக்யராஜ் இன் 'அந்த 7 நாட்கள் ' போன்ற கதை . இதை பற்றி விகடன் இதழில் பாக்யராஜ் எழுதியது உண்டு. தமிழ் பெற்ற வெற்றியை சப்தபதி தெலுங்கு திரைப்படம் பெற தவறியது. அதற்கு காரணம் கிளைமாக்ஸ் தான்

chinnakkannan
27th November 2014, 01:20 PM
க்ருஷ்ணா ஜி.. இது சங்கராபரணத்திற்கு அடுத்த படம் என நினைவு.. நிறைய தடவைபார்த்து ரசித்த படம்.. அ.ஏ நாட்கள் வேறு விதம்..
அதற்கு அந்த க்ளைமேக்ஸ் சரி..

gkrishna
27th November 2014, 01:55 PM
உண்மை சி கே

1981 இல் வெளிவந்த படம் சப்தபதி . அருமையான பாடல்கள் நிறைந்த படம். படம் வெளிவருவதற்கு முன் இன்னொரு சிரி சிரி முவ்வா,சங்கராபரணம் என்று தெலுங்கு திரை உலகம் கொண்டாடிய திரை படம். ஆனால் படம் தோல்வியை தழுவியது .அதற்கு கே விஸ்வநாத் சொன்ன விளக்கம் இது .'நமது கலாசாரம் ஏற்று கொள்ளாத முடிவு. அந்த 7 நாட்கள் திரைபடத்தின் வெற்றிக்கு காரணமே அதன் கிளைமாக்ஸ் தான் . நான் கிளைமாக்ஸ் இல் ரவிகாந்தையும் ,சபிதாவையும் பிரித்து முரளியுடன் சேர்த்தேன் . அந்த முடிவு ரசிகர்களால் ஏற்றுகொள்ள படவில்லை. ஆனால் திரு கே பாக்யராஜ் அவர்கள் வசந்தியை மாதவன் நாயர் உடன் சேர்க்காமல் டாக்டர் ஆனந்த உடனே சேர்ந்து வாழ வைத்து விட்டார் . நமது பண்பாடு என்பது அதுதான். ஏற்கனவே திருமணம் முடிந்த சபிதாவை அவளது கணவனே சபிதாவின் காதலினிடம் சேர்பிபது இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல ' என்பதை இந்த திரைப்படம் வெற்றி பெறாததின் போது புரிந்து கொண்டேன். சாவி இதழில் இது சம்பந்தமாக ஒரு கட்டுரை ராணி மைந்தன் அல்லது பாரி வள்ளல் எழுதுதியதாக ஞாபகம் சி கே.

இரண்டுமே 1981 ரிலீஸ்.ஆனால் சப்தபதி தேசிய விருது வாங்கியதாக நினைவு

gkrishna
27th November 2014, 02:13 PM
இன்று காலை மின் அஞ்சலில் இந்தியன் வங்கி ஊழியர திரு எஸ் வீ வேணுகோபால் அவர்கள் அனுப்பிய கட்டுரை.

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்

எஸ் வி வேணுகோபாலன்

சில நாட்களுக்குமுன் மவுண்ட் ரயில் நிலையத்தில் கடற்கரை போகும் ரயிலுக்காகக் காத்திருக்கையில், திரை இசை தவழ்ந்தபடி வந்து என்னைத் தொட திரும்பிப் பார்த்தால் அன்பர் ஒருவரது அலைபேசியிலிருந்து ததும்பி வழிந்து கொண்டிருந்த சங்கீதம் அது. அவர் எந்தப் பெட்டியில் ஏறினாரோ அவரைத் தொடர்ந்து பின்சென்றால், காலையிலேயே அண்ணன் முழு 'ஜே'யில் இருந்தார். நிற்க மாட்டாமல் தள்ளாடியபடி இருந்தாலும் பாடலில் 'ஸ்டெடி'யாக இருந்தார். அவரது பாக்கெட்டில் இருந்து, "அமைதியான நதியினிலே ஓடும், ஓடம், அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்..." என்று இசைத்த கீதத்தில் நானும் முழுக்க 'ஜே'யாகிக் கரைந்து போனேன். அதுதான் இசையின் வல்லமை.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், 'இனிமை நிறைந்த உலகம் இருக்கு....' என்ற எல் ஆர் ஈஸ்வரி (நினைத்தாலே இனிக்கும்) பாடலை ஒரு சிறுமி பாடியதும், பாடகர் மனோ சொன்னார்: "யாராவது பணத்தை பிக் பாக்கெட் கிட்ட ஏமாந்து உட்கார்ந்திருக்கும்போது அவர் இந்தப் பாடலைக் கேட்டாருன்னா, சரி, பணம் போனால் போகட்டும்னு அப்படியே கவலை மறந்து போய்க் கொண்டிருப்பார்' என்றார்.

இறைவனைக் கிறங்கச் செய்ய ஆழ்வார்களும், நாயன்மார்களும் இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்றுதான் பாடிக் கொண்டிருந்தனர். தேவாலயங்களில், உபதேசங்களின் சீரான இடைவெளியில் சங்கீதம் மிதந்து கொண்டே இருக்கிறது. நான்கு வேதங்களில் ஒன்றான சாம வேதம் முழுக்க இசைப் பாடல்களால் ஆனது என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமியர் வழிபாடுகளின்போது ஓதப்படும் சொற்களின் இசைக்கட்டு, தாளகதி கவனத்தை இழுப்பது.

காட்டு மூங்கிலில் வண்டு துளை செய்துவைத்து காற்றை அழைத்து வந்து நுழைய வைத்தபோது பிறந்திருக்கலாம் உலகின் ஆதி புல்லாங்குழல். சில்வண்டுகளின் ரீங்காரத்தில் அதற்குமுன் அரங்கேறியிருக்கக் கூடும் ஒரு நட்சத்திர இசை இரவு. உயிர் தோன்றியபோது இசை அதற்குமுன்னே பிறந்து காத்திருந்திருக்க இந்த பிரபஞ்ச வெளியில் சான்றாதாரங்கள் இருக்கவே செய்யும். இயற்கையின் செல்லக் குழந்தை இசை. ஓவியத்தின் மூத்த சகோதரன் அல்லது பேச்சு மொழியின் முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு.... வேண்டாம்....இசைக்கு வயது கிடையாது. அது கேட்பவரின் வயதையே குறைத்து விடும்போது அதற்கு ஒரு முதுமையான அடையாளம் எதற்கு?

வேளாண்மை இசையின் தாலாட்டில் விளையும் பயிர். எந்திரங்களோடு சமர் புரியும் பாட்டாளியின் உடல் அசைவுகளுக்கிடையே அவனை உயிர்ப்போடு வைத்திருப்பது இசை. இசை மனிதர்களுக்கு வாய்த்த வரம். மனிதர்கள் இசையை வளர்ப்பதில்லை. இசையைப் போற்றித் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.

கம்பரைப் பற்றி கால காலமாகச் சொல்லப்பட்டு வரும் செவி வழி கதை ஒன்று உண்டு. வயல்வெளியில் ஓய்வாக அவர் உட்கார்ந்திருக்கும்போது, ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த விவசாயி மூங்கில் இலை மேலே.....மூங்கில் இலை மேலே....தூங்கும்...தூங்கும்..." என்று பாடியபடி வேலையில் இருந்தானாம். கம்பருக்கோ, அடுத்த வரியை அறிந்துகொள்ள ஆவல்...மூங்கில் இலைமீது யார் தூங்குவார் என்று ஒரே குழப்பம். சிறிது நேரம் பொறுத்து, அந்த உழைப்பாளி, மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே என்று ராகம் இழைத்தானாம். அடடா...தெரியாமல் போயிற்றே என்று நினைத்தாராம் கம்பர். அதோடு போயிற்றா...விவசாயி அடுத்த அடியை எடுத்தார், 'தூங்கும் பனி நீரை....வாங்கும்...வாங்கும்...' என்று! விவசாயி சாப்பாட்டுக்கு இறங்கிவிட்டார்....கம்பர் செருக்கழிந்து காத்திருந்தாராம், அந்த நீரை யார் வாங்குவார்...என்று! பின்னர் உணவு, ஓய்வு எல்லாம் முடிந்து ஏற்றம் இறைப்பு தொடர்கையில், வாங்கும் கதிரோனே என்று அடுத்த அடிமுடிந்ததாம்.

மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே

இசையை, தேர்ந்த சொற்கள் சென்று தழுவிக் கொள்ளும்போது இசையின் இன்பம் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது அல்லவா...அது செவ்வியல் இசை எனப்படும் மேல் தட்டு இசையாகத் தான் இருக்கவேண்டும் என்றில்லை. திரை இசை, மெல்லிசை, கானாப் பாடல்..என எந்த இசை வடிவமாகவும் இருக்கலாம். இசைக்கு இலக்கணம் கேட்பவரின் உளவியலைப் பொறுத்தது. அதன்மீது தீர்ப்பளிக்க மற்றவர்களுக்கு இடம் ஏது ?

இன்றும் கால்கள் வேகமாக நடந்தாலும் காதுகளின் வழியே கம்பிகளின் பாதையில் இசை நதி வேகமாக இறங்கிக் கொண்டிருப்பதை நகர வாழ்க்கையின் அசுர ஓட்டத்தில்கூடக் காண முடிகிறது. எதைக் கேட்டாலும் காதில் விழாத கொடுமையும் நடக்கிறது. விபத்துகளிலும் போய்முடிகிறது. அது தனியே கவலையோடு பேச வேண்டிய விஷயம். இசை மனிதரைக் கட்டி ஆள்கிறது. சம காலத்தில் எந்த விதத்தில் பட்ட புண்களின்மீதும் இதமான களிம்பு பூசுகிறது இசை.

சிந்து பைரவி திரைப்படத்தில் உச்ச கட்ட காட்சிக்குமுன் இடம்பெறும் 'கலைவாணியே' என்ற அருமையான (ஜேசுதாஸ்) பாடலின் இடையே வயலின் கருவி பிழிந்து கொடுக்கும் இசையில் தாயும், மகளுமாக பரிமாறிக் கொள்ளும் பார்வையில் நழுவும் உளவியல் செய்தி பரிமாற்றம் இசையின் அருளன்றி வேறென்ன?

ரோஜா திரைப்படத்தின் காதல் ரோஜாவே (எஸ் பி பாலசுப்பிரமணியன்) என்ற உருக்கமான பாடலின் இசைத்துண்டுகளுக்கிடையே இளம் தம்பதியினரின் ஏக்கமும், பிரிவின் துயரமும், நெருக்கடியும் எத்தனை காத்திரமாக பரிமாறப்படும்?

கொண்டாட்டமும், திண்டாட்டமும், அதிர்ச்சியும், மலர்ச்சியும் இசையின்வழி செய்யும் பயணம் மனிதர்களுக்கு அவர் அறிந்த மொழிகளோடு கூடுதலாக வாய்க்கிற இன்னொரு மொழி!

எத்தனையோ காதல் பாடல்கள் கேட்டிருந்தாலும், ஒவ்வொரு புதிய பாடலும் உள்ளத்தைக் கிளர்த்தத் தானே செய்கிறது. ஷாஜஹான் எழுதியிருக்கும் 'அமுத மழையில் என் கவிதை நனைகிறது, நிலவே கொஞ்சம் குடை பிடி...' என்ற பாடலை நமது முற்போக்குப் பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி குழைத்து உருக்கி வார்க்கும்போது கலை இரவு மேடை அசந்து போக வைப்பதில்லையா...வைகறை கோவிந்தனின் சாரட்டு...சாரட்டு குரலிசை கேட்பவரையும் அந்த வண்டியில் ஏற்றிக் கொண்டு பரப்பதில்லையா...

'கருத்தம்மா'வின் போறாளே பொன்னுத்தாயி...(வைரமுத்து) சொர்ணலதாவின் குரலில் சாகாவரம் பெற்றது போலவே, வையம்பட்டி முத்துசாமி எழுதிய, 'பொண்ணு பொறக்குமா...இல்ல ஆணு பொறக்குமா' பாடலை முற்போக்கு ரசிக உள்ளங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கை மாற்றிக் கொடுத்துச் செல்லும் அல்லவா...

இசைப்பாடல் சோர்வுற்ற உள்ளத்தை மடியில் சாய்த்து ஆற்றுப் படுத்துகிறது. ஆர்வமிக்க இதயத்தை வானூர்தியில் ஏற்றிப் பறக்கவிடுகிறது. தவிப்பில் துடிக்கும் பருவத்தை இலேசாக்கி மிதக்க வைக்கிறது. பெற்றோர் வசவுகளால் காயப்பட்ட பேரக்குழந்தையை ரகசியமாக அழைத்து, கருப்பட்டி கொடுத்துக் கட்டி அணைக்கும் பாட்டியைப் போல் நொந்த மனங்கள் நொறுங்காது பார்த்துக் கொள்கிறது இசை.

இசைக் கருவி எது என்பது முக்கியமில்லை, இசையே கருவியாகிறபோது! 'மின்சாரக் கண்ணா' என்று நித்யஸ்ரீ (படையப்பா) இழைக்கையில் அதிரும் மிருதங்கம் போலவே, 'சிங்கார வேலனே தேவா...' என்று ஜானகி (கொஞ்சும் சலங்கை) குழைக்கையில் கலக்கும் நாதசுரம்-தவில் போலவே, வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என எஸ் பி பி நெகிழ்த்துகையில் (பட்டின பிரவேசம்) இழையும் வயலின் போலவே, உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு என்று ஹரிஹரன் உருக்குகையில் (பம்பாய்) பரவுகிற குழலோசை போலவே.......எதைச் சொல்ல! எதை விட!

மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு என்றான் மகாகவி. (மகாராஜபுரம் சந்தானம் பாடி அதைக் கேட்கவேண்டும்!). இசையின் மோகவலைக்குள் விழாதவர் யாராயிருக்க முடியும்!

இசையின் ஜனநாயகத் தன்மை அசாத்தியமானது. அதை யாரையும் எப்போதும் எங்கும் சென்று தொட்டுத் தழுவிக் கலந்து விடைபெறுகிறது. பகைமை, துரோகம், குற்றம், ஆதிக்கம் போன்ற அராஜகங்கள் அகன்ற அற்புத உலகம் சமைக்கப் புறப்படும் யாரும், போராடும் ஒவ்வொருவரும் இசையைத் தங்களது வலுவான துணையாகக் காண முடியும். இசை மனிதர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் வேறுபாடுகளை உடைக்கத் தக்க பண்பாட்டுக் கருவி. அதன் செயல்பாடு மிகவும் நயமானது. ஆனால் உத்தரவாதமானது.

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=d53820920c&view=att&th=149ec467d94cf2ca&attid=0.1&disp=safe&realattid=f_i2ybywel0&zwhttps://mail.google.com/mail/u/0/?ui=2&ik=d53820920c&view=att&th=149ec467d94cf2ca&attid=0.2&disp=safe&realattid=f_i2ybywjj1&zw

gkrishna
27th November 2014, 02:27 PM
dear ck

சப்தபதி திரைபடத்தின் கதாநாயகி சபிதா பாமிடிபடி
http://4.bp.blogspot.com/-ciVcCJT0MaA/Txzic4U3gBI/AAAAAAAABYc/CEny2NhOyFE/s200/vlcsnap-2012-01-07-18h08m05s88.jpg
http://3.bp.blogspot.com/-j_v7pX1hPIk/TxzgfP0CkhI/AAAAAAAABX8/sPIIrD6LF3E/s1600/SabithaBhamidipathiasHema_Saptapadi1981Telugu.jpg

சப்தபதி திரைபடத்தின் கதாநாயகன் கிரீஷ்- (நாம் முரளி என்று சொல்லிவிட்டோம் திரை படத்தில் இவர் பெயர் ஹரி ) தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஆக வருவார் .

http://4.bp.blogspot.com/-wmNLbV1e4pY/TxzgpQ6AGKI/AAAAAAAABYE/RFruLoUw1Kc/s1600/GirishasHari_Saptapadi_1981Telugu.jpg

சப்தபதி திரைபடத்தின் யாஜுலுவின் பேரன் ரவிகாந்த் (கௌரிநாத் என்ற கதாபாத்திரம் )

http://4.bp.blogspot.com/-xMYMj8UA-5s/TxzhCGn4q9I/AAAAAAAABYM/wkq-LcM0pCk/s1600/RavikanthasGowrinath_SaptapadiTelugu1981.jpg


1981 ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடு விருதை தட்டி சென்ற படம் சப்தபதி .சென்னை சுபம் திரை அரங்கில் பார்த்த படம் . மிக சிறந்த படத்தை நினைவு ஊட்டியதற்கு நன்றி CK

chinnakkannan
27th November 2014, 02:29 PM
க்ருஷ்ணா ஜி. நன்றி. தேசிய விருது பெற்ற படமா சப்தபதி..இசைக்காகவா.. இருப்பினும் முன்பு 88ல் பார்த்த போதும் சரி இப்போது பார்க்கும் போதும் சரி முடிவு சரியெனவே படுகிறது எனக்கு..

சில படங்கள் இப்படித் தான்..எதற்காகத் தோல்வியடைகிறது என்று யோசித்தால் கஷ்டமாகத் தான் இருக்கும்..

//இசை மனிதர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் வேறுபாடுகளை உடைக்கத் தக்க பண்பாட்டுக் கருவி. அதன் செயல்பாடு மிகவும் நயமானது. ஆனால் உத்தரவாதமானது.// unmai.. Thanks krishnaji..

chinnakkannan
27th November 2014, 02:30 PM
அது கதையோட்டத்திற்காக நான் கற்பனையில் வைத்த பெயர் முரளி.. படம் கூட வெகு முன்னால் பார்த்தது தான்..ரவிகாந்த் அண்ட் கிரீஷ்.. ம்ம் நீங்கள் சொன்ன் பிறகு தான் பெயர் தெரியும்..தாங்க்ஸ் ஜி..

gkrishna
27th November 2014, 02:47 PM
dear ck

அந்த 7 நாட்கள் நகைச்சுவை மேலோங்கி நின்ற படம். ஆனால் சப்தபதி என்ன சொல்ல . இன்னமும் சாவி விமர்சன வரிகள் நினைவில் தங்கி இருக்கிறது.

"ஜோதிலட்சுமி ,விஜயலலிதா,ஜெயமாலினி இடை ,துடை,உடை,எடையை காண்பித்து கொண்டு இருந்த கவ்பாய் படங்களும்,ராமர்,கிருஷ்ணர் தெய்வ படங்களும் எடுத்து கொண்டு இருந்த தெலுங்கு சினிமா சிரி சிரி முவ்வா,சங்கராபரணம்,சிவரஞ்சனி,சப்தபதி போன்ற திரை படங்களால் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமா எப்போது இந்த நிலைக்கு உயரும் ?"

இன்றைய கால கட்டத்தில் இந்த திரை படம் வெளியிட்டு இருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்து இருக்கலாம்

chinnakkannan
27th November 2014, 02:48 PM
க்ருஷ்ணாஜி.. ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் ரேடியோவில் அடிக்கடி கேட்ட நகைச்சுவைக் காட்சி..
மியூசிக் டைரக்டரிடம்… அதுல பாருங்க தசரதர் செத்துப் போய்ட்டார்.. அந்த சிச்சுவேஷனுக்குஒரு சாங்க்..

மி.டை.. இது ஓகேயா..தசரதா..ஆ ஆ ஆ…

கேட்டவர்.. ஓகேங்க்..ஆனா ரொம்ப அழுகை அழுகையா வருது… வேற மாதிரி..

மியூசிக்: இது ஓகேயா பாருங்க.. ஹே ஹே தசரதா ஓ ஓ தசரதா..

கேட்டவர்.. இது ஓ.கே தான்..ஆனா என்னவோ தசரதர் செத்துப்போனவுடன் ஜனங்கள்ளாம் சந்தோஷமான மாதிரி இருக்குங்களே..!

(இது என்னபடம் யார் குரல் என்பதும் நினைவிலில்லை..கொஞ்சம் தெரிந்தால் சொல்ல இயலுமா.. )

Russellisf
27th November 2014, 06:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7a8e6d42.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7a8e6d42.jpg.html)

RAGHAVENDRA
27th November 2014, 06:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7a8e6d42.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7a8e6d42.jpg.html)

அபூர்வமான நிழற்படம். பாராட்டுக்கள் யுகேஷ் பாபு.

எங்கம்மா சபதம் படத்திற்காக அன்பு மேகமே பாடலை, டி.எம்.எஸ். பி.சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.பி.பாலா பாட இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் ஒத்திகை பார்க்கும் காட்சி.

Russellisf
27th November 2014, 06:41 PM
thanks for information

Russellzlc
27th November 2014, 06:55 PM
http://i59.tinypic.com/smq6fr.png

நண்பர்களுக்கு வணக்கம்.

மக்கள் திலகம் திரியின் 12ம் பாகம் துவங்கியதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ‘தாய் மேல் ஆணை’பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்த கட்டுரையை அன்பு பரிசாக அளித்துள்ள, அன்பு நண்பர், பன்முக ஆற்றல் கொண்ட பண்பாளர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும்,

நெல்லை தந்த முல்லை, பண்புக்கு எல்லையே இல்லை என்பதற்கு இலக்கணமாக திகழும் நகைச்சுவை நாயகர், பண்பாளர் ‘சிவ’ ‘ராம’ (ஜி) கிருஷ்ணா சார் அவர்களுக்கும்,

பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பண்பாளர் ரசிக வேந்தர் திரு.ராகவேந்தர் அவர்களுக்கும்,

அரிய கருத்துக்களை வழங்கி வாழ்த்தியுள்ள அன்பின் உறைவிடம் திரு.ஐதராபாத் ரவி அவர்களுக்கும்

நன்றிகள் கோடானு கோடி.

திரு.வாசு சார். ரிலாக்சுக்காக இங்கு அடிக்கடி வாருங்கள் என்று அழைப்பு விடுத்தீர்கள். உண்மையிலேயே இங்கு வருவது ரிலாக்சாகத்தான் இருக்கிறது. மாறுபட்ட கருத்து கொண்டவர்களையும் இசை என்னும் மையப் புள்ளியால் இணைக்கும் இந்த அற்புத தளத்தை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

உங்கள் அனைவரோடும் ஒரு அருமையான பாடலை ரசிக்கலாம் என்று விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் கதையில் உருவான, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் நடித்த ‘எதையும் தாங்கும் இதயம்’ படத்தில் இடம் பெற்ற பாடல். அமைதியான சோலை வனத்தில் சலசலக்கும் நீரோடையாய் எஸ்.ஜானகி அவர்களின் குரலும், தமிழ் திரையுலகுக்கு திராவிட இயக்கம் கொடையாக அளித்த கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவரான நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அவர்களின் இனிய குரல் வளமும், தாலாட்டும் இசையும் கொண்ட அற்புத பாடல்.

‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே,
என்ன சொன்னாலும் கண் தேடுதே,
என்னை அறியாமலே, ஒன்னும் புரியாமலே,
நெஞ்சம் ஆடுதே... வாடுதே’

எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை தரவேற்றி உதவினால் அனைவரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த அளவுக்கு கேட்போரை ஈர்க்கும் பாடல்.

இன்னொரு விஷயம் திரு.வாசு சார். இப்போதே சொல்லி விடுகிறேன். கடந்த முறை நான், ‘வாங்க, வாங்க கோபாலய்யா...’ பாடலை விரும்பிக் கேட்டபோது, நான் மறைமுகமாக நண்பர் கோபாலை குறிப்பிடுவதாக கூறி சிரித்தீர்கள். அதேபோல, சில நாட்களாக திரியில் காணமுடியாத நண்பர் கோபாலை மனதில் கொண்டு இந்த பாடலை நான் தேர்வு செய்து கேட்டிருப்பதாக நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
27th November 2014, 07:22 PM
KALAIVENTHAN SIR

YOUR FAVOURITE SONG- ONLY AUDIO IS AVAILABALE

http://youtu.be/VBI1Ijd_DF8

uvausan
27th November 2014, 09:14 PM
ஜெய்ஷங்கர் அதிகமாக தத்துவ பாடல்கள் பாடினதில்லை - அதனால் இந்த பாடல் ஒரு அறிய பதிவாக இருக்கலாம் - மிகவும் தன்னம்பிக்கையை ஊட்டக்ககூடிய பாடல் இது . படம் : இதயம் பார்க்கிறது - இந்த பாடலில் இவரும் ஒரு குருடனாகவே வருவார் . கண் பார்வை இல்லாதவர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பணம் தந்தது போல இருக்கும் . யானையின் பலம் தும்பிக்கை என்றால் மனிதனோட பலம் நம்பிக்கையில் ----

என்ன அருமையான வரிகள் பாருங்கள் - TMS இன் குரலில் மனதை கசக்கி எடுக்கும் சில உறங்கும் உண்மைகள் ----

" ஆதி மனிதன் கடலை கண்டு பயந்ததும் உண்டு - அடுத்து வந்த மனிதன் கொஞ்சம் துணிந்ததும் உண்டு -பயந்து போன மனிதன் அந்த கரையினில் நின்றான் - துணிந்தவனோ படகு கட்டி கடலையும் வென்றான் ----

கண்கள் பார்க்க வில்லையென்றால் இதயம் பார்க்கட்டும் -நம்மை கடவுள் பார்க்க வில்லையென்றால் காலம் பார்க்கட்டும் -மூன்று கண்கள் கடவுளுக்கு வந்ததிலையோ - அந்த மூன்றாவது கண் நம் மனதில் இல்லையோ ----

பாவத்திற்கு தண்டனையா - பார்வை போனது ? - கண் பார்வை உள்ள மனிதர் தானே பாவம் செய்வது - ஏற்ற தாழ்வை மறப்பதர்க்கோ குருடர் ஆனது - நம் எல்லோர்க்கும் எங்கிருந்து உறவு வந்தது ---"

அடுத்தவனை கெடுப்பவர்கள் அறிவு குருடர்கள் ; அந்த அன்னையையும் மறப்பவர்கள் அன்பு குருடர்கள் - அணைத்தவனை வெறுப்பவர்கள் நன்றி குருடர்கள் - நாம் ஆண்டவனால் படைக்கப்பட்ட பிறவி குருடர்கள் -----

http://youtu.be/f_f-tzZYOac

uvausan
27th November 2014, 09:17 PM
Kalaiventhan sir

your favourite song- only audio is availabale

வினோத் சார் - இதைத்தான் " எள் என்றால் எண்ணை " என்பார்களோ ? என்ன வேகம் சொல்லு பாமா என்று உங்களை பார்த்து பாட வேண்டும் போல் உள்ளது

uvausan
27th November 2014, 09:25 PM
வாழ்ந்து பார்க்க வேண்டும் - படம் சாந்தி

வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும் - பாசம் தேடும் உலகம்
உன்னை வாழ்த்து பாட வேண்டும்

நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்யவேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்


தமிழும் வாழவேண்டும் தமிழன் தரமும் வாழவேண்டும்
அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும்

(வாழ்ந்து ----)

காற்று வீச வேண்டும் , பெண்கள் காதல் பேச வேண்டும் - காதல்
பேசும் பெண்கள் வாழ்வில் கவிதையாக வேண்டும்

மானம் காக்க வேண்டும் - பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்

(வாழ்ந்து ----)

அறிவில் மனிதனாக வேண்டும் - உண்மையான வரிகள் - சில சமயம் நாட்டில் நடக்கும் போக்கை பார்த்தால் இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே என்ற எண்ணம் வருகின்றது

கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்

கேடு செய்யும் மனங்களை நாம் மன்னித்து மறக்கின்றோம் - கிள்ளி வீசுவதில்லை


அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும் - என்ன அழகான வரிகள் - அந்த அருமையான அமைதியை வாழ்க்கையில் தொலைத்துவிட்டு "எங்கே நிம்மதி" என்று கூறிக்கொண்டு மற்றவர்களின் அமைதியையும் அவர்கள் தொலைக்க உதவி செய்து கொண்டு இருக்கிறோம்

ஆசை அளவு கண்டு விட்டால் ஏது பொறாமை ? எங்கே சண்டை ?
இல்லாதவர்கள் இல்லாமல் போய்விடுவார்களே !!


பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்

பெண்ணை மதித்து வாழ வேண்டும் - ஒரு பக்கம் துர்காவாக வணங்கி பெருமை படுகிறோம் - மறு பக்கத்தில் டெல்லியில் நடந்த மன கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதே

உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும் -

உண்மையான நட்பு வேண்டும் - அதில் ஈகோ விற்கு சிறிதும் இடம் கொடுக்க கூடாது - நல்ல நட்பை தவிர உயர்ந்தது இந்த உலகில் வெறும் எதுவுமே இல்லை - அப்படி இருந்தால் இருவர் ஒருவராகலாம்

http://youtu.be/YU-b1hNh0g0

chinnakkannan
27th November 2014, 10:25 PM
//வெறும் மோதலிலே நம்ம கதை ஆரம்பமாச்சு
அன்புபாதையிலே மனசு ரெண்டும் பயணப்பட்டாச்சு…// பாட்டை நினைவூட்டிய கலைவேந்தன் அவர்களுக்கும் பாடல் கொடுத்த எஸ்.வி சாருக்கும் நன்றி..

யானையின் பலமெதிலே தும்பிக்கையினிலே – நல்ல பாட்டு ரவி.. இதே போல் திக்கற்ற பார்வையிலும் ஒரு பாட்டு உண்டோல்லியோ..
வாழ்ந்து பார்க்க வேண்டும் எவர்க்ரீன் பாடல் தான்..அலசல் நன்று தாங்க்ஸ்.. முன்னாலேயே அலசியிருப்பதாக நினைவு (வாசு சார் போட்டாச் போட்டாச் எனச் சொல்வார்..)
*
ராமனைத் தூங்கச் செய்யும் தாலாட்டு கேட்டிருக்கிறீர்களா ரவி.. இதோ..(கிருஷ்ணா ஜி..இந்த ரீதி கெளளை ராகத்தில் அமைந்த பாடல் திரையில் உண்டா;;;)

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8cB6k7SzGLQ


1. தாலேலோ, தசரதன் மைந்தா, இராமா
தாலேலோ, புவி மகள் காதலனே, இராமா!

2. தாலேலோ, இரகு குலத் திலகமே, இராமா!
தாலேலோ, சுருள் முடியோனே, இராமா!

3. தாலேலோ, குணங்களற்ற உருவத்தோனே, இராமா!
தாலேலோ, நற்குணக் குவியலே, இராமா!

4. தாலேலோ, பரிதி மதி கண்களோனே, இராமா!
தாலேலோ, உயர் அரவணையோனே, இராமா!

5. தாலேலோ, இன்சொல்லோனே, இராமா!
தாலேலோ, இனிய வேடத்தோனே, இராமா!

6. தாலேலோ, தியாகராசனால் வழிபடப்பட்டோனே, இராமா!
தாலேலோ, தொண்டர் சமூகத்துறைவோனே, இராமா!


jO jO raama
raagam: reeti gowLa
22 kharaharapriya janya
Aa: S G2 R2 G2 M1 N2 D2 M1 N2 N2 S
Av: S N2 D2 M1 G2 M1 P M1 G2 R2 S
taaLam: aadi
Composer: Tyaagaraaja
Language: Sanskrit
pallavi
jO jO rAma Ananda ghana
anupallavi
jO jO dasharatha bAla rAma jO jO bhUja lOla rAma
caraNam 1
jO jO raghukula tilaka rAma jO jO kuTila tarAlaka rAma
caraNam 2
jO jO nirguNa rUpa rAma jO jO suguna kalpa rAma
caraNam 3
jO jO ravi shashi nayana rAma jO jO phaNivara shayana rAma
caraNam 4
jO jO mrdudhara bhASa rAma jO jO manjuLa vESa rAma
caraNam 5
jO jO tyAgarAjArcita rAma jO jO bhakta samAja rAma

uvausan
28th November 2014, 06:28 AM
Ck - அருமையான தாலாட்டு பாடல் - உண்மையில் ராமன் இதைக்கேட்டு தூங்கினானோ இல்லையோ , நான் நன்றாக உறங்கினேன் - மிகவும் நன்றி - எங்கேயோ போய் விட்டீர்கள் ( எங்கு என்றுதான் தெரியவில்லை !!)

rajraj
28th November 2014, 08:19 AM
vasu: I posted a Shamshad Begum song (in Darbari Kanada) in Hindi songs thread ! :)

Richardsof
28th November 2014, 08:39 AM
OLD IS GOLD

http://i59.tinypic.com/2elwm5k.jpg

Richardsof
28th November 2014, 08:40 AM
http://i61.tinypic.com/okzk0g.jpg

Richardsof
28th November 2014, 08:41 AM
http://i59.tinypic.com/21mengi.jpg

Richardsof
28th November 2014, 08:42 AM
http://i58.tinypic.com/2ephjzb.jpg

Richardsof
28th November 2014, 08:43 AM
http://i58.tinypic.com/maxaav.jpg

Richardsof
28th November 2014, 08:49 AM
http://i59.tinypic.com/291fin7.jpghttp://i61.tinypic.com/34zhnv9.jpghttp://i60.tinypic.com/2i09agp.jpg

vasudevan31355
28th November 2014, 10:08 AM
vasu: I posted a Shamshad Begum song (in Darbari Kanada) in Hindi songs thread ! :)

oh! Begum song?! Thank u very much sir. Dhanyanaanen:) Avasiyam parkkiren. Now my time:). The same wonderful Begam (song) only for u.:) Oh God! What a sweet voice! chance nahee.

'Duniya Ka Maza Le Lo
Duniya tumarhi hai'

'பஹார்' படத்தில் சின்ன சிட்டாக வைஜயந்திமாலா ஜிப்ஸி ஸ்டைலில் பின்னி எடுக்கும் பாடல். அதுவும் பேகம் 'ஹய்' என்று பாடலை படு உற்சாகத்துடன் எடுக்க வைஜயந்தியின் முகபாவங்கள் ஏ.ஒன்.

பின்னாலேயே 'வாழ்க்கை' வரப் போகுதா?:)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UBhql8UdWwc&list=PLGtBfDClCJ9AApzvGEQqkrBDX8cpj8eGt

vasudevan31355
28th November 2014, 10:17 AM
சி.க. சார்,

அடேங்கப்பா! பிரம்மாண்டம்.

//இது கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த “சப்த பதி” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்//

தப்பு. கதை விரி..........வாக்கம்.

நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் நீளம். தப்பே இல்லை. நீலமாய் இருந்தாத்தான் தப்பு.

நான் பார்த்ததில்ல சி.க.சார். (போட்டாச் போட்டாச்...என்று கத்த முடியாமல் பண்ணின உம்மை பழைய நீராகார சாதத்தில் வெல்லம் போட்டு சாப்பிட வைக்க வேண்டும்.:)

கிருஷ்ணா அருமையாக சப்போர்ட் பண்ணி இருந்தார். நேற்று போனில் கூட இப்படத்தை சிலாகித்து:) எப்படி? சிலாகித்து:)... எப்படி எப்படி எப்படி?... சிலாகித்து:) நாங்க ரெண்டு பேர் மட்டுமே பேசி விஸ்வநாத்தின் புகழைப் பரப்பினோம்.

பார்த்துட்டு வாரேன் (நன்றி சி.க)

rajeshkrv
28th November 2014, 10:27 AM
வணக்கம் வாசு ஜி

gkrishna
28th November 2014, 10:35 AM
வைஜயந்தி மாலாவின் சூப்பர் பாடல் காலையில் பூபாளமாக ஒலிக்க இணைத்த நமது திரியின் பாலம் வாசு அவர்களுக்கு காலை வணக்கம்

ராமனைத் தூங்கச் செய்யும் தாலாட்டு கேட்டிருக்கிறீர்களா ரவி.. இதோ..(கிருஷ்ணா ஜி..இந்த ரீதி கெளளை ராகத்தில் அமைந்த பாடல் திரையில் உண்டா;;
அன்பு சி கே
காலை வணக்கம்
ரீதி கௌளை ராகத்தில் அமைந்த தமிழ் திரை பாடல்களை கேட்கிறீர்களா ?
உங்கள் பெயரில் இருக்கும் பாடலே ரீதி கௌளை ராகம் தான் 'சின்ன கண்ணன் அழைக்கிறான் ','தலையை குனியும் தாமரையே ','கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்) '

காலை வணக்கம் ராஜேஷ் சார்

vasudevan31355
28th November 2014, 10:49 AM
வினோத் சார்,

பழைய ஆவணங்கள் அருமையோ அருமை. கலக்கி விட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மதுர கானத்தின் ஆவணத் தூண் நீங்கள்.

vasudevan31355
28th November 2014, 10:51 AM
வணக்கம் ராஜேஷ்ஜி

வணக்கம் கிருஷ்ணா! கண்ணா! முகுந்தா! கோ.... வேண்டாம்.

gkrishna
28th November 2014, 10:58 AM
வணக்கம் ராஜேஷ்ஜி

வணக்கம் கிருஷ்ணா! கண்ணா! முகுந்தா! கோ.... வேண்டாம்.

ஏதோ பொடி வைத்தது போல் இருக்கிறது வாசு ஜி

'புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்கறான் ' - உத்தமபுத்திரன் தங்கவேலு ,ராகினி சூப்பர் பாடல் .

'கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம் ,திண்டாட்டம் மாட்டிக்கிட்ட திண்டாட்டம்'

தங்கவேலு பாடல்கள் நிறைய இருக்குமே வாசு ஜி

gkrishna
28th November 2014, 11:00 AM
எஸ்வி சார்

முக்கனிகள் மா, பலா,வாழை (மக்கள் திலகம்,நடிகர் திலகம்,காதல் மன்னன்) ஆவண புகைப்படம் அருமை

gkrishna
28th November 2014, 11:14 AM
யாரவது நடிகர் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் இருந்தால் மன்னிக்கவும். இந்த பதிவு யாரையும் காயபடுதுவதர்க்காக போடப்படும் பதிவு அல்ல.அன்றைய ,இன்றைய நடிகர்களின் நிலைபாட்டை தெரிவிக்கவே

தன்னை நாயகனாக அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட நடிகர் விக்ரம் வரவில்லை என்று கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைஞானம். இன்று முன்னணி நடிகராக உள்ள விக்ரம் நாயகனாக அறிமுகமானது தந்துவிட்டேன் என்னை என்ற படத்தில்தான். ரோகிணிதான் இதில் அவருக்கு ஜோடி. இயக்குநர் ஸ்ரீதர் உடல் நலம் குன்றி, மரணத்தின் விளிம்பில் இருந்த போது விக்ரம் முதல் நிலை நடிகராகிவிட்டிருந்தார் (இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடுகள் சாதாரணமானதல்ல!).

இதுகுறித்து கலைஞானம் நக்கீரன் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:

சில வருடங்களுக்குப் பிறகு தி.நகர் வீட்டை விற்றுவிட்டு அடை யாறு பக்கம் குடியேறினார் ஸ்ரீதர். அதன்பின் கை, கால் செயல்படாமல் இருந்து... இறந்தும் விட்டார். திரையுலகமே சென்று ஸ்ரீதருக்கு அஞ்சலி செலுத்தியது. நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன். அப்போது சோகமயமாக நின்றிருந்த ஸ்ரீதரின் ஒன்றுவிட்ட தம்பியும், பிரபல டைரக்டருமான சி.வி.ராஜேந்திரன் என்னிடம் வந்தார். "விக்ரமை ஹீரோவா அறிமுகப்படுத்தி 'தந்துவிட்டேன் என்னை' படம் எடுத்தார். அதில் பெரும் நஷ்டம். வட்டிக்கு மேல் வட்டி ஏறி... பெரும் மன உளைச்சலில்தான் அவரை நோய் தாக்கியது. கை, கால் விழுந்து விட்டது. பாருங்க... அவர் இறப்புக்கு எல்லாரும் அஞ்சலி செலுத்தினாங்க. ஆனா.. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட விக்ரம் வரலை. இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' என வேதனைப்பட்டார்.

"ராஜேந்திரன் சார்... ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கிற பலரை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கேன். அதேபோல ஏத்திவிட்ட ஏணி மரத்தை தெய்வமாக கொண்டாடுனவங்க... அண்ணன்மார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள்தான். இதுவும் என் அனுபவம்தான்''

என அவரை ஆசுவாசப்படுத்தினேன். -இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

gkrishna
28th November 2014, 12:02 PM
இன்றைய தமிழ் ஹிந்து நாள் இதழில் திரு கிரேசி மோகன் அவர்கள் நகைச்சுவை நாராயணன் என்ற தலைப்பில் நாகேஷ் அவர்கள் பற்றி

சி.பத்மாவதி, நாகப்பட்டினம்.

நாகேஷைப் பற்றி நச்சென்று நாலு வரிகள் சொல்ல முடியுமா?

நகைச்சுவையாக நாம் பேசும் எல்லா வரிகளுமே நாகேஷ் பேசிய வரிகள்தான். நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட் என்று பல பேர்கள் இருந்தாலும் எங்க வீட்டுல வெச்ச பேர் ‘நாகேஷ்’.

‘‘சார்... சீஸர்னு பேர் வெச்சு ஒரு நாய் வளர்த்தேன், செத்துடுச்சு சார்’ என்று ஒருவர் ஏதோ ஒரு படத்தில் இன்னொருவரிடம் சொல்லுபோது, புயலாக உள்ளே நுழையும் நாகேஷ் ‘‘ஏன்யா... நாய்க்கு பேரு வெச்சியே, சோறு வெச்சியோ?’’ என்று கேட்டுவிட்டு, பதில் எதிர்பாராமல் வீட்டுக்குள் நுழைவார். இவரது டயலாக் டெலிவரி எப்போதுமே சுகப்பிரவசம்தான்.

ஆயகலைகள் அறுபத்து நாலுக்குச் சொந்தக்காரியான சரஸ்வதிதேவியின் ‘மோனோலிஸா’சிரிப்புக்கே காரணம்… நாகேஷ் அடித்த ஜோக்காகத்தான் இருக்கும். நான் வேடிக்கை பார்த்து வியந்த நாகேஷுக்கு வசனம் எழுதும் பாக்கியம் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் தொடங்கி, ‘மைக்கேல் மதன காமராஜன்’ வழியாக ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ வரை தொடர்ந்தது.

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டம்மி புலி இல்லாமல் நிஜ புலியை ஜிம்மி போலவே பாவித்து, அதனுடன் சேர்ந்து நடித்தார். நாங்கள் எல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் அமரர் விக்ரம் தர்மா தடுத்தபோது ‘‘பேச்சாளன் மேடையில சாகணும். ஃபுட் பால் பிளேயர் கோல் போஸ்ட்ல சாகணும். நடிகன் ஷூட்டிங் ஸ்பாட்ல சாகணும். அதான் வீர மரணம்’’ என்றார்.

‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடிக்கும் போது, என்னிடம் தொடர்ந்து ‘கிரேசி எனக்கு ஒரு வசனம் கூட கிடையாதா?’ என்று தொண தொணவென்று கேட்டுக்கொண்டே இருந்தார். கடைசியில் அவருடைய நகைச்சுவை ‘குறும்பு’ புரிந்து படக்குழுவே வாய்விட்டுச் சிரித்தது.

அதே படத்தில் விறைத்த பிணம் படால் என்று கீழே விழும் காட்சிக்காக, விக்ரம் தர்மா ஒரு பிணத்தைப் போன்ற டம்மி செய்து வைத்தார். ஆனால், அந்த டம்மியை டம்மியாக்கி ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு, தானே சரளைக் கல் நிரம்பிய தரையில் சாஷ்டாங்கமாக… அதுவும் பின் பக்கமாக விழுந்து தத்ரூபமாக நடித்தார் நாகேஷ். இப்போது நினைத்தால் கண்ணில் நீர் முட்ட வைக்கிறது. இவரைப் போல் டைமிங் டெலிவரி வரவேண்டும் என்ற நப்பாசையில்தான் எனது நாடக ஹீரோ பாலாஜிக்கு, ‘எதிர் நீச்சல்’ திரைப்பட கதாநாயகன் பெயரான ‘மாது’ பெயரை வைத்தேன்.

எனது நாடகத்துக்கு வந்து சைடிங்கில் நின்ற படி ‘டயலாக் எப்படி’ சொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் அந்த மேதை. நாலு வரி என்ன… நாலாயிரம் வரிகள் சொல்ல வேண்டிய ‘திவ்யப் பிரபந்த நகைச்சுவை நாராயணன்’ நாகேஷ்!

நாகேஷ் மறைந்த அன்று கிரேசி எழுதிய அஞ்சலி வெண்பா:

‘காமெடியை இங்கினி காத்திட யாரென்றால்
நோபடி என்றாச்சே நாகேஷின் டேமுடிஞ்சு
போச்சே நகைச்சுவை பூலோகம் விட்டுவான்
போச்சு அதுசொர்க்கம் ஆச்சு.’

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02225/nagesh_2225278f.jpg
அபூர்வ சகோதரர்கள்’ படப்பிடிப்பில் நாகேஷுடன் கிரேசி மோகன்

vasudevan31355
28th November 2014, 01:57 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 23)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

இன்று ராஜா தொடரில் 'காற்றினிலே வரும் கீதம்' (1978) ஒலிக்கப் போகிறது.

http://media-images.mio.to/various_artists/K/Kaatrinile%20Varum%20Geetham%20(1978)/Art-350.jpg

முதலில் இப்படத்தைப் பற்றி சில விஷயங்களைச் சொல்லி விடுகிறேனே.

விஜயபாஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப் படம் இது.

'ஓ.. மஞ்சு' படத்தில் ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய கவிதா சும்மா மப்பும் மந்தாரமுமாக, கொத்தும் குலையுமாக இளமை விருந்து படைத்து இளைஞர்கள் தூக்கத்தைக் கெடுத்த படம் அளவான கவர்ச்சியோடு.

http://i1.ytimg.com/vi/MDllksuSlps/sddefault.jpg

முத்துராமனுக்கு கவிதா ஜோடி. முதன் முறையாக என்று நினைக்கிறேன்.

ஸ்ரீகாந்த், தேங்காய், அசோகன், எம்.என்.ராஜம், கோபாலகிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர்.

எடிட்டிங் ஆர். விட்டல். ஒளிப்பதிவு கண்ணான பாபு. கதை, வசனம் பாடல்கள் பஞ்சு அருணாச்சலம்.

இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.

நிஜமாகவே நல்ல படம். கொஞ்சம் வித்தியாசம் கூட. கதை சற்றே வித்தியாசத்துடன் அளவான மசாலா தூவப்பட்டு, நல்ல நடிகர்களால் மெருகேற்றப்பட்டு, எல்லாவற்றுக்கும் மேல் காலம் அழிக்க முடியாத மிகச் சிறந்த பாடல்களையும், பின்னணி இசைக் கோர்ப்புகளையும் தொடரின் நாயகர் மூலம் வழங்கப்பட்டு இன்றும் பார்ப்பதற்கு இன்ட்ரெஸ்ட் ஆக இருக்கும்படி எடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

இப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை நேற்று முழுதுமாகப் பார்த்தேன். எனக்கென்னவோ ரொம்ப நன்றாகவே இருந்தது. போரடிக்கவில்லை.

நல்ல பாடல்கள், நல்ல கதை, நல்ல நடிக நடிகையர்கள், ஒளிப்பதிவு அம்சம், அருமையான வெளிப்புறக் காட்சிகள், பிரம்மாண்டம் தெரியும் ஃபிரேம்கள், கண்ணுக்குக் களிப்பூட்டும் வண்ணம், ஜோரான சண்டைக் காட்சிகள், கர்ணன் பட ரேஞ்சுக்கு குதிரைத் துரத்தல்கள் (கதைக்கேற்றவாறு) விறுவிறு டைரெக்ஷன் என்று ஜோர் படம்தான்.

முத்துராமனுக்கு பிரேக் தந்த படம்.

சரி கதைதான் என்ன? 'மறந்து போச்சே! கொஞ்சம் நீதான் சொல்லேன்' என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது.

கதை (Full Meals)


மிகப் பெரிய பணக்கார எஸ்டேட்டுக்கு சொந்தக்காரர் மோகன் (முத்துராமன்). அம்மா எம்.என்.ராஜம். பட ஆரம்பத்தில் மோகன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண் ரோடில் நிலைகுலைந்து பரிதாபமாக ஓடிவர, அதே சமயம் காற்றிலே ஒரு கானம் மிதந்து வந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மோகனை தூக்கத்தில் மெய்மறந்து எழுந்து நடக்கச் செய்ய, அந்தப் பெண் மீது கத்திக்குத்து விழுந்து அவள் சாகவும், மோகன் அதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து அந்தக் கத்தியை எடுக்கவும் சரியாய் இருக்க, போலீஸ் முத்துவை சந்தேகப்படுகிறது.

விசாரணை செய்ய கீதா (கவிதா) என்ற சாமர்த்திய துப்பறியும் நிபுணி அனுப்பப்படுகிறாள். அவள் மோகனையும், நண்பன் சந்திரனையும் (தேங்காய் ஸ்ரீனிவாசன்) கண்காணிக்க, அவளை எதிர்பாராமல் பார்க்கும் மோகன் அதிர்ச்சியடைகிறார். ஏனென்றால் அந்த கீதா ஏற்கனவே மோகன் காதலித்த பெண் போலவே உருவத்தில் அப்படியே அச்சு அசலாக இருப்பதால்.

சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும் மோகன்தான் கொலையாளியாக இருக்குமோ என்று சந்தகம் கொள்ள வைக்க, போலீஸ் மோகனை அரெஸ்ட் செய்து விசாரிக்கிறது.

அப்போது மோகன் போலீசிடம் தன்னுடைய பிளாஷ்-பேக் கதையை சொல்கிறார். அதாவது இரண்டு பிளாஷ்-பேக் கதைகள்.


முதலாவது பிளாஷ்-பேக்

மோகன் ஓய்வுக்காக ஹில் ஸ்டேஷனில் உள்ள தன் எஸ்டேட்டுக்கு செல்லும் போது அங்கு அடிக்கடி காற்றில் ஒரு இனிய கீதம்... அதுவும் பெண் குரல்... அதுவும் ஜானகி குரல்:)... மலைகளின் நடுவே ஒலிப்பதைக் கேட்கிறார். அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டு பிடிக்கறார். மலை ஜாதிப் பெண்ணான காமினி (கவிதா) என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணை மனதார விரும்புகிறார். காமினி வேற யாருமில்லை. மோகன் எஸ்டேட்டில் வேலை செய்யும் வீரண்ணா (அசோகன்) மகள்தான் காமினி. அவளும் மோகனைக் காதலிக்க, இந்தக் காதலுக்கு வீரண்ணா பலத்த எதிர்ப்பு. வீரண்ணா வேறு ஒருவனுக்கு காமினியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய, மோகனும், காமினியும் எதிர்ப்புகளை எதிர்த்து ஜீப்பில் தப்பித்து ஓட, பின்னால் குதிரைகளில் துரத்துகிறார்கள் வீரண்ணாவும், அவன் ஆட்களும். அசோகன் மகள் காமினியை ஆத்திரத்தில் கத்தியை வீசிக் கொன்று விடுகிறார். தானும் இறந்து விடுகிறார்.

அதிர்ச்சியடையும் மோகன் காமினி பாடிய பாடலை அடிக்கடி கேட்பது போல் நினைத்துக் கொண்டே அவள் நினைவாகவே வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் நடைபிணமாக.


இரண்டாவது பிளாஷ்-பேக்

பின் தாயின் தொந்தரவால் ஒரு மாற்றத்துக்காக வேண்டி வெளியிடங்களுக்கு சென்று வர முடிவு செய்து புறப்பட்டு கேரளா செல்கிறார் மோகன். அங்கு அவனுக்கு இன்னொரு பேரதிர்ச்சி. அங்கு வெயிட்டராக பணிபுரியும் ரோஸி என்ற பெண்ணை (இதுவும் கவிதா... கிறிஸ்டியன் கவிதா) பார்க்கும் மோகன் அப்படியே அவள் இறந்து போன தன் காதலி காமினி போலவே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவளையே ஃபாலோ செய்கிறான். ரோஸி ஜேம்ஸ் (ஸ்ரீகாந்த்) என்ற நண்பனோடு அடிக்கடி சுற்றுகிறாள். தன்னை மோகன் பின் தொடர்வதை பிடிக்காத ரோஸி மோகனை ஒருநாள் சந்தித்து நன்றாகத் திட்டி விடுகிறாள். ஆனால் மோகன் அவளிடம் தான் கெட்ட எண்ணத்தில் அவளை பின் தொடரவில்லை என்று அவன் காமினியைக் காதலித்த கதையைக் கூறி காமினி போலவே ரோஸி இருப்பதால்தான் மன ஆறுதலுக்காக அவளைப் பின் தொடர்ந்து வந்ததாகக் கூறுகிறான். தன் வீட்டுக்கு ரோஸியை அழைத்துச் சென்று இறந்து போன காமினியின் புகைப்படத்தையும் காண்பிக்கிறான். தன்னைப் போலவே காமினி இருந்ததைக் கண்டு ரோஸி திகைக்கிறாள். மோகன் காமினியின் நினைவாக இருப்பதையும், அவள் இறந்த பின்னும் அவள் மீது தீராக் காதல் கொண்டு அவளையே நினைத்து மனம் உருகுவதையும் உணர்ந்து கொண்ட ரோஸி கோபத்தை மறந்து மோகனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ரோஸியின் பெற்றோர் (மேஜர், சுகுமாரி) ரோஸியை சுதந்திரமாக வளர்த்ததால் அவள் இஷ்டப்படியே அவள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். முதலில் ரோஸியின் காதலை நிராகரிக்கும் மோகன் முடிவில் ரோஸியை மணக்க சம்மதிக்கிறான்.

ரோஸியைக் காதலிக்கும் ஜேம்ஸ் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான். ஆனால் ரோஸி 'ஜேம்ஸை காதலிக்க வில்லை... மோகனைத்தான் காதலிக்கிறேன்' என்று சொல்லி விடுகிறாள். முத்துவும் ரோஸிக்காக மனம் மாறி, மதம் மாறி அவளைக் கரம் பற்றுகிறான் கல்யாணக் கோலத்தில். ஆனால் விதி ஜேம்ஸ் வடிவத்தில் இங்கேயும் மோகனிடம் விளையாடுகிறது. ஆம். ஜேம்ஸ் ரோஸி தனக்குக் கிடைக்காததனால் ஆத்திரமுற்று ரோஸியை திருமணக் கோலத்திலேயே சர்ச்சுக்கு வெளியே சுட்டுக் கொன்று விடுகிறான்.

முன்னால் காதலித்த காமினியையும் பறி கொடுத்து, இப்போது தன் வாழ்வில் ஒளிவிளக்கேற்ற வந்த ரோஸியையும் பறி கொடுத்த மோகன் பைத்தியம் போல் ஆகிறான். தன்னுடய ராசி இரண்டு பெண்களை சாகடித்து விட்டது என்று தன்னை ராசியில்லாதவன் என்று முத்திரை குத்திக் கொள்கிறான். நடை பிணமாக வாழ்கிறான்.

இந்த இரண்டு கதைகளையும் முத்து போலீசிடம் சொல்வது மட்டுமல்லாமல் இரண்டு பெண்களின் போட்டோ ஆல்பத்தையும் காட்டி தான் கொலையாளி அல்ல என்று மோகன் நிரூபிக்கிறான். மோகன் வீட்டில் வேலை செய்த பெண்ணை கொலை செய்தது ஜஸ்டின் என்றும் போலிஸ் கண்டுபிடிக்கிறது. ஜஸ்டின் விபாச்சார விடுதியில் கொண்டு போய்த் தள்ளிவிட நினைத்து அந்த வேலைக்காரப் பெண்ணைத் துரத்த, அவள் தப்பி ஓட ஜஸ்டின் அவளைக் கத்தியால் குத்திவிட்டு ஓடி விடுகிறான். அந்தப் பழிதான் மோகன் மேல் விழுகிறது. மோகன் இப்போது நிரபராதி.


இப்போது மூன்றாவது பிளாஷ்-பேக் இல்லாத நேரடிக் கதை.

துப்பறியும் மங்கை கீதா மோகனின் இரண்டு கதைகளையும் கேட்டு மோகன் மேல் இரக்கம் கொண்டு அவரை காதலித்து மணந்து கொள்ள நினைக்கிறாள். ஆனால் மோகன் தன்னை யார் மணந்தாலும் அவர்கள் மரணத்தை சந்திக்க நேரிடுகிறது... அப்படிப்பட்ட ராசி உள்ள நான் உன்னை திருமணம் செய்ய முடியாது... நீயாவது நன்றாக வாழ வேண்டும் என்று கூறி மறுத்து விடுகிறார். ஆனால் கீதா பிடிவாதமாக முத்துவைக் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறாள். இதனால் மனம் நொந்த மோகன் வெளிநாடு செல்ல முடிவெடுத்து கீதாவுக்குத் தெரியாமல் புறப்பட்டு விமானத்தில் உட்கார்ந்தால் கீதா விடாமல் துரத்தி வந்து விடுகிறாள். மோகன் அதிர்ச்சியுற்று இருக்க கீதா விடுவதாக இல்லை. மோகன் அவள் உயிருக்கு தன் ராசியால் ஏதாவது சோதனை வந்து விடுமே என்று கவலைப் படுகிறான். அவன் கவலைப் பட்டது போலவே அவருடைய மூன்றாவது காதலிக்கு மட்டுமல்ல... விமானத்தில் இருக்கும் அனைவரது உயிருக்கும் ஆபத்து எற்படுகிறது. ஆம். விமானம் பழுதடைந்து விட்டதாக விமானி கூற விமானம் நிலை தடுமாறுகிறது.

நினைத்தபடியே சோதனை எற்பட்டு விட்டதே என்று மோகன் கீதாவைக் கடிந்து கொள்கிறான். கீதாவோ 'உங்கள் ஒருவர் ராசியினால் எல்லோரும் உயிர் இழக்க நேர்ந்தால் இங்கிருக்கும் ஒருவருக்குக் கூடவா நல்ல ராசி இல்லாமல் போய்விடும்?' என்று பதில் கூறுகிறாள் நம்பிக்கையோடு.

அவள் நம்பிக்கை ஜெயித்ததா? விமானம் விழுந்து நொறுங்கியதா? வழக்கம் போல் மோகன் ராசியால் இந்த கீதாவும் உயிர் இழந்தாளா? விமானத்தில் இருந்தவர்களின் கதி என்ன?


இதுதான் 'காற்றினிலே வரும் கீதம்' படத்தின் கதை. இக்கதையை பலர் மறந்திருக்கலாம். அதை நினைவு படுத்தவே இந்த சிரத்தையான பதிவு.

கவிதா... கவிதா... கவிதா... படம் முழுக்க கவிதாதான். அழகு மெழுகு சிலையாக வாளிப்பான வனப்பாக அழகிலும் , நடிப்பிலும் ஜொலிக்கிறார். அருமையான கராத்தே பைட் ஒன்றை ஜஸ்டினுடன் போடுகிறார். கவிதாவுக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது இந்தப் படத்தின் மூலம்.

காமினி, ரோஸி, கீதா என்று மூன்று வித்தியாசமான ரோல்களில் நம் மனதைக் கவர்ந்து விடுகிறார்.

மலை ஜாதிப் பெண்ணாக 'காற்றினிலே வரும் கீதம்' பாடி மகிழ்விக்கிறார்.

ரோஸி என்ற கிறிஸ்டின் பெண்ணாக சுதந்திரப் பறவையாக சிறகடிக்கிறார். நம் இதயத்திலும்தான்.

கீதா என்ற துப்பறியும் புயலாக வந்து பின் முத்துவின் காதலியாக தென்றலாக மாறி மணம் வீசுகிறார்.

முத்துராமன் படுபாந்தம். அற்புதமாக இந்த மோகன் ரோல் பொருந்துகிறது. பணக்காரத் தன்மை ஜோர். தன் ராசியை நினைத்து உருகுவது அருமை. 'ஒரு வானவில் போலே' டூயட் கலக்கல். முத்துராமன் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

தேங்காய், அசோகன், மேஜர், சுகுமாரி, ஸ்ரீகாந்த், கோபாலகிருஷ்ணன் எல்லோருமே கனகச்சிதம்.

'வானொலி' ஜெயம்கொண்டான் ஜஸ்டினின் அல்லக்கையாம் கிருஷ்ணா. சிரிப்பாக வரவில்லை? ஒய்.ஜி.மகேந்திரனும் சாஸ்திரத்திற்கு உண்டு.


இப்படத்தின் அற்புதப் பாடல்களைப் பற்றி நாளை தொடருகிறேன்.

'சித்திரச் செவ்வானம்' நாளை சிரிக்கும். அவசரம் வேண்டாம். அதுவரை பொறுமை.

kalnayak
28th November 2014, 02:39 PM
வாசு,
இப்படியா ஆர்வத்தைக் கிளப்பி தொங்கலில் விடுவது?

gkrishna
28th November 2014, 02:58 PM
https://10hot.files.wordpress.com/2009/04/kaatriniley-varum-geetham-movie-reviews-vikadan-films.jpg?w=604&h=1031

காற்றினிலே வரும் கீதம் தமிழ் திரை படம் விகடன் விமர்சனம்

முழு கதையும் படித்து விட்டேன் அன்பரே .... நண்பரே
அது என்ன என் மனதில் பொல்லாத பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டீர்
நாட்டி பாய் நாட்டி பாய் (man என்று சொல்லலாமா ?:))

திரை படம் கண் முன்னாலே ஓடி கொண்டு இருந்தது . உங்கள் முழு பதிவை படிக்கும் போது . மலை வாழ் பெண் கவிதா (நாடோடி ஜிப்சி உடையில் ),ரோஸ் கலர் பெல் பாட்டம் வைட் கலர் ஷர்ட் மேலே ரோஸ் கலர் கோட் மேல் நாட்டு பெண் கவிதா, துப்பறியும் அதிகாரி கவிதா
அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள். ஸ்டில் இணையத்தில் தேடி கொண்டு இருக்கிறேன்

'கண்டேன் இங்கு பூ மகள் ' கவுன்ட்டர் பாயிண்ட் அடிப்படையில் ரெகார்டிங் செய்யப்பட்ட பாடல் ஜானகி மற்றும் வாணி குரலில் இரண்டு முறை ஒலிக்கும் .

ஒரு வானவில் போலே ஜெயச்சந்திரன் ஜானகி கலக்கல் குரல்

சித்திர செவ்வானம் ஜெயச்சந்திரன் - காத்து கொண்டு இருக்கிறேன் நாளை ரசிக்க (கம்பர் ஜெயராமன் அந்த படகு ஓட்டுபவர் )

http://photos.filmibeat.com/ph-big/2011/09/1316421823225365.jpg

கவிதாவே அசந்து போயிட்டார் உங்கள் .. உங்கள் வர்ணனை கண்டு

gkrishna
28th November 2014, 03:10 PM
vaasu

இளையராஜா!! இசையில் உருவான சில படங்களில் அனைத்து பாடல்களும் கேட்க சலிக்காது. உதாரணத்துக்கு.
முள்ளும் மலரும், பதினாறு வயதினிலே, நிறம் மாறாத பூக்கள், பகலில் ஒர் இரவு, காற்றினிலே வரும் கீதம், பொண்ணு ஊருக்கு புதுசு, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கன்னிப்பருவத்திலே, அன்னக்கிளி,கவிக்குயில், தர்மயுத்தம், இளமை ஊஞ்சலாடுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !!!

மேற் கூறிய படங்கள் எல்லாம் அனைத்து பாடல்களும் ஹிட் வரிசை

chinnakkannan
28th November 2014, 04:01 PM
ஹாய் ஆல் குட் ஆஃப்டர் நூன்

சில விஷயங்க்ள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்ததால் காலையில் வர முடியவில்லை

வாசு சார், ரவி சார், கிருஷ்ணாஜி, ராஜேஷ், கல் நாயக் சார், ராஜ் ராஜ் சார் அனைவருக்கும் நன்றி..

எஸ்.வி சார். அழகிய பழைய புகைப்படங்கள்..டி.கே ஷண்முகம்.. ஒளவை டி.கே ஷண்முகம் தானே.. டி.கே பகவதியின் சகோதரர்.. நாடகக் காவலர் இல்லையா.

வாசு சார்.. ஆஹா காற்றினிலே வரும்கீதம்.. வாவ் அழகு அழகு தொடருங்கள்.. மதுரை தங்கம் தியேட்டரில் குவைத்திலிருந்து வந்த ஒரு உறவினரைக் கூட்டிக் கொண்டு சென்று மாடியில் பார்த்த படம்.. வந்த உறவினர் – இரவுக் காட்சி என்பதால் – கொய்ங்க் என்று தூங்கிவிழ நான் கொட்டக் கொட்ட கண்கொட்டாமல்கவிதையின் அழகையும் முத்தின் பயமுறுத்தும் ஹேர்ஸ்டைலையும் இளையராஜாவின் பாடல்களையும் வியந்து முழித்துப் பார்த்த படம் நைஸ்..

இனி சரவெடி போல ச் சில எழுதிப் பார்த்தேன். காலையிலிருந்து இப்போது வரை அவை உங்கள் பார்வைக்கு..

அன்புடன்
சி.க..

chinnakkannan
28th November 2014, 04:03 PM
தொழில் பாட்டுக்கள் - 1

மாதா பிதா குரு தெய்வம்.. என்பதில் முதலில் மாதா..

தன்னுள்ளே தானடக்கி தன்னுயிர்போல் பேணிவந்த
அன்னையவள் போலுண்டா ஆம்..

பிதா…
நீண்டிருக்கும் வாழ்க்கை நிலைத்தே இருப்பதற்கு
ஈன்றவர் செய்தாரே ஆம்..

எனில் அடுத்து வருவது குரு.. அதற்குப் பின் தான் தெய்வமெல்லாம்.. குரு.. வழி நடத்துபவர்..கற்பிப்பவர்.. மொழியாகட்டும் தொழிலாகட்டும்.. கற்காமல் ஒரு மனிதன் மேல் வந்த்தில்லை..

ஆரம்ப காலப் பள்ளியாசிரியர்கள் மேல் நிலைக் கல்வி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் என நீள் வரிசை உண்டு எல்லாருக்கும்.. என்னைப் பொருத்தவரை இன்று வரை எல்லாரிடமும் கற்றுக்கொண்டு தான் வருகிறேன்.. தொலைபேசியிலோ நேரிலோ பேசும் போதுகூட குரு என்று தான் பேசுவேன்..பேசிக் கொண்டிருக்கிறேன்..

வாழ்க்கை நெடும்பயணம்.. தொடர்ந்துகொண்டிருக்கும் வாழ் நாட்களில் தினமும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்..

பதினைந்து வருடங்களுக்கு முன் இதே மன்ற மையத்தில் வந்த போது.. தமிழ் கற்கக் கசக்கவா செய்கிறது கண்ணா வா எனப் பிடித்து எனக்குத் தமிழ்ப்பால் புகட்டிய மேலான ஆசிரியர்கள் பேரா. பசுபதி, சொல்லின் செல்வர் ஹரியண்ணா, பேரா. அனந்த், கலைமாமணி இலந்தை, நண்பர் அபுல் கலாம் ஆசாத். இன்னும் எண்ணிலா ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன்..

தங்கள் பதவி என்னவாகிலும் இருந்தாலும் அதை விட்டு எனக்குச் சொல்லிக் கொடுத்து திருத்திய அவர்களின் மனப்பாங்கு தான் என்னே.. (இன்னும் திருந்தவில்லை என்பது வேறு விஷயம்..) அவர்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நமஸ்காரங்கள்..

இந்தப் பாடல் நூற்றுக்கு நூறு படத்தில் வருவது.. ஆசிரியர் என்பவரும் மாணவராக இருந்து வந்தவர் தான்.. மாணவர்களைப் பார்க்கும் போது ஆசிரியர்களுக்கு பெருக்கெடுக்கும் உற்சாகம் ஊற்றாய் ப் பெருகி வரும் பாடல் இது..

கன்னை எடுத்தோமா
கண்ணால் குறிபார்த்தோமா
கன்னெனச் சுட்டோமா
கண்ணழகு நாயகியருடன் பாடினோமா என்றிருந்த ஜெய்சங்கர்
கண்கலங்க வைத்துவிடுவார்
பார்ப்போரைத் தன் நடிப்பால்.. வித்தியாசமான படம்.. அழகிய பாடல்..


உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்

http://www.youtube.com/watch?v=TO3FouoVvGM&feature=player_detailpage

chinnakkannan
28th November 2014, 04:04 PM
தொழில் பாட்டுக்கள் – 2

கடலாய் விரிகின்ற கானகமாம் வாழ்க்கையிலே
உடலுக்குத் தேவை உணவு..
*
அது ஒரு கனவைப் போலச் சென்ற காலம்..

திருமணம் முடிந்து சிலவருடங்கள் ஆனபின்னர் கிடைத்த விடுமுறையில் இரண்டாவது தேனிலவெனச் சில நாட்கள் கொடைக்கானல் சென்றிருந்தேன்..(முதலும் அங்கே தான்).. ரெஃப்ரஷிங்க் த மெமரீஸ்..

அழகாய்த் தான் சிரித்திருந்தது இயற்கை..மனம் உடல் உள்ளம் எல்லாம் பூரித்து கொஞ்சம் இனிமையான ஓய்வு தான்..

தங்கியிருந்த ஹோட்டலில் கொடைக்கானலில் பார்க்காத இடம் எது என்று கேட்டுப் பார்த்ததில் “ இங்கிருந்து சிலபல கிலோ மீட்டர்கள் மேலே மலைப்பாதையில் சென்றால் பூம்பாறை என்றொரு கிராமம் வரும்.. அதன் மேலே இன்னும் ஏறினீர்களெனில் மன்னவனூர் என இன்னொரு கிராமம் உண்டு.. என்ன அங்கு இன்னும் கரெண்ட் வசதி வரவில்லை ( அப்போது..அந்தக்காலத்தில்..இப்போது வந்திருக்குமா தெரியாது) அங்கு போய்விட்டு வேண்டுமானால் வாருங்கள்..தங்குவதானாலும் தங்குங்கள்” என்றனர்.. தங்குவதற்கு எங்கள் நிகழ்ச்சிகள் இடம் கொடுக்காததால் மினி வேன் ஒன்றை வைத்துக் கொண்டு ச்சலோ பூம்பாறை..

அதைத் தாண்டி மன்னவனூர் செல்லும் போது வரும் வழியெல்லாம் இயற்கை மகளின் நாட்டியங்க்ள்.. சுற்றிலும் பச்சைப் பசேல். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஸ்விட்சர் லாந்து மற்றும் சில பல வெளி நாடுகளில் எடுக்கப்பட்ட பாடல்காட்சிகளில் வரும் இடங்களுக்குச் சற்றும் குறைவில்லாத இடம்.. என் சிந்தனையைத் தெரிந்துகொண்டதாலோ என்னவோ டிரைவர்..”இந்த இடத்திலும் சில சினிமா ஷூட்டிங்குகள் நடந்திருக்கிறது என்றான்..(சொன்ன படங்கள் நினைவிலில்லை)

மன்னவனூர் அடைந்தால் மறுபடியும் பச்சை.. சில பல பெண்கள் தலையில் துணி கட்டி ஏதோ ஒரு விவசாயம் பண்ணிக்கொண்டிருந்தனர்.. உற்றுப்பார்த்தால் பீன்ஸ், மற்றும் சில காய்கள்.. வேன் டிரைவர் அங்கே ஒரு பெண்ணிடம்..”கொஞ்சம் காய் கொடும்மா “ எனக் கேட்க அந்தப் பெண் சுறு சுறுவென பறித்துக் கொடுத்தாள் ஒரு ஒருகிலோ இருக்கும் பீன்ஸ் மற்றும் சில காய்கள்.. இந்தாம்மா என்று பத்து ரூபாய் எடுத்து என் மனைவி கொடுக்க ம்ஹூ ஹீம் வேண்டாங்க.. நீங்க எங்க விருந்தாளி..எனப்பிடிவாதமாய் மறுத்தாள்..

என் மனைவி அவள் கரம்பிடித்து பணத்தை வைத்தவுடன் மனமில்லாமல் வாங்கிக் கொண்டவள் “கொஞ்சம் இருங்க” எனப் புள்ளி மானாய் த் தாவி மேட்டுப் பக்கம் ஓடி ஒரு வீட்டினுள் புகுந்தாள்.. நாங்கள் புரியாமல் பார்த்த படி நின்றிருக்க பத்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்த அவள் மலர்க்கரங்களில் பல மலர்கள்.. இல்லையில்லை..கொஞ்சம் உற்றுப்பார்த்தால் புற்கள் தான்.. வண்ணமேற்றப் பட்டு வெகு அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தன..

“இந்தாங்கக்கா..வீட்டில வச்சுக்குங்க.. அழகாயிருக்கும்” எனக் கொடுத்து வெள்ளந்தியாய்ச் சிரித்தாள்.. நாங்கள் திகைத்து நெகிழ்ந்து நின்றோம்.. அவள் அன்பை நினைந்து..

*

ம்ம் விவசாயம் இல்லையெனில் உணவில்லை..விவசாயியின் வெள்ளந்தி மனம் மற்றவர்களுக்கு விரைவில் வருவதில்லை..

விவசாயியின் புகழ்பரப்பும் ம.தி பாடலாகட்டும்., விவசாயம் செய்யச் சொல்லும் ந.தி பாடலாகட்டும் எவர்க்ரீன் பாடல்கள்..என்று நினைத்தாலும் பசுமை தான்..

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.. விவசாயி..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PgQky1Z8tKQ

மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட
உழுது போடு செல்லக்கண்ணு..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQQwUqxBaFg

*

chinnakkannan
28th November 2014, 04:05 PM
*

தொழில் பாட்டுக்கள் – 3

மெல்லக் கரம்நீட்டி மேதினியில் கூடிவரும்
அள்ளக் குறையா அழுக்கு..

யெஸ்.. இந்த அழுக்கு என்பதை ஆராய்ந்தால் என்னவெல்லாம் தோன்றுகிறது.. உடல் அழுக்கு மன அழுக்கு, உடை அழுக்கு..

உடல் அழுக்குக்கு தினமும் காலை மாலை இருவேளைகளிலும் அழகாய்ச் சமர்த்தாய் நீராடி (அஃப் கோர்ஸ் நம் உடலுக்கு ஒத்துக்கொள்கிற சோப்பினால் தேய்த்து) குளித்தால் உடல் அழுக்கு போய்விடும்..அட்லீஸ்ட் ஒருவேளையாவது குளிக்கத் தான் செய்கிறோம்..

மன அழுக்கு… அதுபோக்கத் தான் ஆண்டவன் இருக்கிறானே..அப்படி நீராடி முடித்ததும் ஆண்டவா எலலாரையும் ரட்சி எனக் கண்மூடி வணங்கினால் தானாகவே மன அழுக்கு மறையும்..

உடை அழுக்கு… கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது பழ மொழி.. (எனக்குத்தெரிந்த ஒரு பருவப் பெண் கந்தனென்றால் இறுக்கிக் கட்டு என்றாள்.. ஏய் தப்பான பழமொழி என்றால் இல்லை சார் கந்தன் என் லவ்வர் என்றாள்..ஷ்ஷ்.. சீரியஸா எழுதுகண்ணா..) இந்தக் காலத்தில் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன.. வாஷிங்மெஷின் என.. அந்தக்காலத்தில் கொல்லைப்புறத்தில் தோய்க்கும் கல்.. பின் குழாயடியில் பக்கெட்.. மின்னலடிக்கும் வெண்மைக்கென நீல நிற சர்ஃப் அதில் ஊறவைத்த துணிகள் பேண்ட் ஷர்ட்.. பின் இன்னொரு வாளியில் நீர் பிடித்து அந்தத்துணிகளை இவற்றில் அலச்சி கொஞ்சம்பிழிந்து காயவைத்து பின் அயர்ன் பண்ணக் கொடுத்திருக்கிறேன்..

அந்தக் காலத்தில் வேஷ்டிகள் எல்லாம் துவைப்பதற்கு வண்ணானிடம் தான் தருவார்கள்..ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்கள் விருப்பம் போல் துவைக்கும் வண்ணான்கள்..இப்போதுஅவர்கள் இருக்கிறார்களா தெரியாது..ட்ரை க்ளீனர்ஸ் என உண்டு..

என் தந்தைக்கும் ஒரு ஆஸ்தான வண்ணான் உண்டு..பெயர் அழகு.. வெகு வயதானவர்..என் தந்தையை விட குறைந்தபட்சம் ஐந்து ஆறு வருடம் பெரியவர் என நினைக்கிறேன்.. கண்களில் மூக்குக் கண்ணாடி குள்ள உருவம்.. கொஞ்சம் கறுப்பு நிறத் தோல்.. சின்ன வயதில் (கல்லூரி) என்னுடைய கால்கள், பாதங்கள் (மட்டும்) கொஞ்சம் நீளம்.. எனில் செருப்புகள் எல்லாம் பெரிய சைஸ் தான் போட்டிருப்பேன்..(பதினொன்று)

ஒரு நாள் அழகு வர அழுக்குக் கூடையிலிருந்து துணிகள் எடுத்து நான் போட்டுக்கொண்டிருக்கும் போது அவர் கண்கள் திண்ணை மூலையை நோக்கின.. நானும் பார்த்தேன்.. மூலையில் எனது பிய்ந்து போயிருந்தலெதர் செருப்பு பக்கத்தில் எனது புதிய இரண்டுமாதமே ஆன இன்னொரு செருப்பு..

“சின்னச் சாமி” அப்படித் தான் அவர் என்னைக் கூப்பிடுவார்..”என்ன” இந்தப் பிஞ்ச செருப்பு தர்றீங்களா” “எதுக்கு அழகு” “எனக்குத்தான்.. என் செருப்பு கொஞ்சம் பிஞ்சுடுச்சு” பலமுறை தைக்கப் பட்டு நொந்து நூடுல்ஸாகியிருந்த டயர் செருப்பு அவர் கால்களில்..

“அழகு..” என்றேன்..” இந்தா இந்தப் புதுசையே போட்டுக்குங்க. உங்க்ளுக்குப் பத்துமா பெரிசா இருக்காது” “வேண்டாம்” என்றார்.. பழசே கொடுங்க சின்னச்சாமி.. “ம்ஹூம் எனச் சொல்லி புதிய செருப்பைக் கொடுத்தே..கொஞ்சம்பெரிய சைஸ் தான் ஆனால் அவர் கால்களை விட்டு நழுவவில்லை.. கண்களில்கொஞ்சம் சிரிப்பு.. உங்களுக்கு… எனக்கு ஹவாய்ச்செருப்பு இருக்குங்க.. வேணும்னா பைசா தர்றேன்..புதுசே வாங்கிக்குங்களேன்.. “ம்ஹூம் வேணாம்” இதுவே போதும் எனச் சொல்லி தளர்ந்து சென்று விட்டார்..

சூழ்நிலையில் ஒரு நாள் என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் இருந்த போது சுய நினைவு திரும்புவாரா மாட்டாரா என விரல் நகம் கடித்து நானிருந்த போழ்தில் ஒரே ஒரு நிமிடம் சுய நினைவுக்கு வந்தார் தந்தை.. “கண்ணா கடையை” “ நான் பார்த்துக்கறேம்ப்பா” (இப்போது கடை இல்லை) “ம்ம்.. “ என்றவரின் அடுத்த வார்த்தை தான் கடைசி வார்த்தை..” வண்ணான் அழகுவோட பணம்டா..லாக்கர்ல…. அவன் ட்ட கொடுத்துடு…” எனக் குழறலாகச் சொல்லி உறக்கத்துக்குச் சென்று சில மணி நேரங்களில் மீளா உறக்கத்திற்குச் சென்று விட்டார்..

தந்தை பிரிந்த சில நாட்களில் அழகு வந்தார்.. விஷயம் தெரிந்து தான் வந்தார் என நினைக்கிறேன். கண்கள் முழுக்க கண்ணீர்.. சாமி இப்படி சுருக்க போவார்னு நினைக்கலியே… எனறு அழுகை நீண்டு விட்டு சாமி ஒங்க கிட்ட ஒண்ணு.. என ஆரம்பிக்க.. ஒரு நிமிஷம் என்று நான் உள்சென்றேன்..

திரும்பி வந்து அழகுவிடம் கவரை நீட்டினேன்..”அழகு.. அப்பா லாக்கர்ல உங்கபேர் போட்டு இந்தக் கவர்ல வச்சிருந்தார்ப்பா..மேல ரெண்டாயிரமோ என்னவோ எழுதியிருந்தார்.. நான் எண்ணலை.கடைசியா அவர் என்கிட்ட சொன்னது இது தான்.. .சரியா இருக்கான்னுபாத்துக்குங்க..”.. அழகுவின் கண்களில் கண்ணீர்..”சாமி..பொண்ணு கல்யாணத்துக்காக நான் கொடுத்துவச்ச்ருந்தேன்.. வீட்ல இருந்தா புள்ள எடுத்துக்கிட்டுப் போய்டுவான்னு..இப்படி நல்ல மனசு கொண்ட சாமி போய்டுச்சே..” கொஞ்ச நேரம் அழுதுவிட்டுத் தான் புறப்பட்டான்.. அதன் பிறகு என்ன காரணமோ அல்லது தொழில் மந்தமோ அவர் வரவேயில்லை..சிலவருடங்களுக்குப் பிறகு தான் பக்கத்து வீட்டு வண்ணான் மூலமாக அவர் அப்பா இறந்து சில மாதத்திலேயே இறந்த்து தெரிய வந்தது..

*

ம்ம் அழுக்கைச் சுத்தம் செய்யும் வண்ணான் தொழில் திரையில்… ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணி நிறஞ்சுருக்கு.. திருவருட்செல்வர் படம்.. திருக்குறிப்புத் தொண்டராய் ந.தி.. மறக்க முடியாத பாடல்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mYZSNEn4EJg

**

chinnakkannan
28th November 2014, 04:06 PM
**

தொழில் பாட்டுக்கள் – 4

முன்பொரு நாள் எழுதிப் பார்த்த கவிதை..

கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்கக்
கையசைத்தது வீடு….

*
குடியிருக்கும் இடம் என்பது எவ்வளவு முக்கியம் மனித வாழ்க்கையில்.. இறைவன் ஏதோ நமது உயிர் குடியிருக்க உடலென்ற வீடைக் கொடுத்து விட்டான்.. அந்த வீட்டிற்கும் தேவை இன்னொரு வீடு.. மனைவி மக்கள் குழந்தைகளுடன் இருப்பதெற்கென..

நிலம் வாங்கியவர் ஒருவர்.. அந்த நிலத்தில் வீடு கட்டித்தர ஒப்புக்கொள்பவர் கண்ட்ராக்டர்.. அதைப் பார்த்துப் பார்த்துக் கட்டித் தருபவர் மேஸ்திரி.. இந்தக் கலவை இப்படிப் போடு, இப்படி ச் செங்கலை வை..இப்படிச் சாரம் கட்டு இந்தக் கம்பிகள் இப்படி இருக்க வேண்டும் டேய் மச மசச்ன்னு இருக்காதே..என அவ்வளவாகப் படித்திராத ஆனால் திறம்பட வேலைவாங்கும் மேஸ்திரிகள் நிறையப் பேர் இருக்கின்றனர்.. இன்ஃபேக்ட் அவர்களது மேற்பார்வை அண்ட் அனுபவம் கட்டடமோ வீடோ எழும்புவதற்கு உறுதியாக இருக்கிறது..

மண் உறுதியாய் இருக்கிறதா என்று பார்ப்பதற்குப் பெயர் மனைப் பொருத்தம் என நினைக்கிறேன்..அதில் ஆரம்பித்து வீடு வளரவைத்து பின் அதற்கான மரவேலைகள் எல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்கின்ற மேஸ்திரி வீடுகட்டி முடித்ததும் பார்க்க முடியுமோ.. ம்ஹும்.. கட்டி முடிக்கிறவரை தான் அவன் வேலை.. கட்டியபின் அது அதன் சொந்தக்காரரிடம் போய்விடுகிறது.. கட்டியதற்கு அவனுக்குக் கிடைத்த சம்பளம் தான் அவனுக்கானது..ஒரு வேளை இதனைத் தான் வீட்டைக் கட்டிப் பார் கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்கிறார்களோ.. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு முடிந்தபின் அவனால் சொந்தம் கொண்டாட முடியாது.. பார்த்துப் பார்த்து ஓவ்வொருபருவத்திலும் சிரித்து சிலிர்த்து வளர்த்த மகள் பருவத்தில் இன்னொருவனுக்கு மணமுடித்து வைத்தால் அவ்வளவு தான்..அவள் புகுந்த வீட்டிற்குச் சொந்தம்..தந்தையின் கண்களில் கண்ணீர் மட்டும் நினைவுகள் மட்டுமே மிச்சம்..

ம்ம் எனில் என்ன சொல்ல வந்தேன் வீடு..இந்தப் பாடல் மேஸ்திரிக்கும் ஒருபெண்ணிற்கும் உண்டான காதலை கட்டடம் கட்டும்போது அழகாகச் சொல்கிறது.. ந.தி. பத்மினி தெய்வப் பிறவி.. வெகு அழகிய பாடல்..

கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்
காதலுக்கு மனப்பொருத்தம் அவசியம்..
மட்ட சுத்தம் பார்த்து வீடு கட்ட வேணும்
மாமியாரப்பார்த்து –பொண்ணக் கட்ட வேண்டும்

குடையப் பிடிச்சு நடக்கிறாரு மேஸ்திரியாரு
அவர் குறுகுறுத்த கண்களுக்கு அகப்பட்டதாரு..
நடை பழகி சதிரு பண்ணும் தங்கத்தப் பாரு
அதுக்கு நட்டு வாங்கம் போடுறாரு கண்ணால பாரு (குறும்பு வரிக்ள்)

கடைக்காலைத் தோண்டுறப்போ கொத்தனாரு
கடைக்கண்ணால் பார்ப்பதென்ன கொத்தனாரு
அடையாளம் புரிஞ்சு போகும் தங்கபாப்பா
அது ஆசை படுத்தும் பாடு தங்கப்பாப்பா (மீண்டும் குறும்பு)

சாரத்துல நடக்குறப்போ கொத்தனாரு
தங்கம் சதுரு பண்ணி நடப்பதென்ன கொத்தனாரு
ஓரத்திலே அவ நடந்தா தங்கப் பாப்பா
அவரு ஒடம்பெல்லாம் நடுங்குதுபார் தங்கப்பாப்பா
மேஸ்திரி ஒடம்பெல்லாம் நடுங்குது பார் தங்கப்பாப்பா

கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்..காதலுக்கு
மனப்பொருத்தம் அவசியம்..ம்ம் அவசியமாய் மனதில் தங்கிவிட்ட பாடல்..

http://www.youtube.com/watch?list=PLYoUEUAT_KGwizQTG3gQoj7cSNKs4FvEw&v=wxt4iEdakxA&feature=player_detailpage

chinnakkannan
28th November 2014, 04:07 PM
தொழில் பாட்டுக்கள் – 5

பிறந்து வளர்ந்து படித்த இடம் மதுரை என ஓராயிரம்முறை கூறியிருப்பேன்.. எனில் அந்த மதுரையில் நானிருந்த வீட்டிற்கு அருகிலொரு செட்டியார் வீடு உண்டு..

பொங்கல் நாளில் சந்தையிலிருந்து வந்து இறங்கிய கரும்புகள் எதிர் வேதபாட சாலைச் சுவற்றில் இன்னுமொரு சுவராக இருந்திருக்கும் அவையெல்லாம்பொங்கலன்றே விற்றுத் தீர்ந்துவிடும்.. அப்படி வருகிற இரண்டு மூன்று கட்டுக் கரும்புகள் எதிரில் என் வீட்டிற்கு அடுத்த செட்டியார்வீட்டில் செல்லும்..காரணம் என்னவெனில்..

மறு நாள் மாட்டுப் பொங்கல்.. செட்டியாருக்கு எந்த ஊரில் எங்கு நிலம் இருந்தது எனத் தெரியாது.. ஆனால் ஒவ்வொரு வருடமும் மாட்டுப் பொங்கல் முடிந்த மாலை வேளையில் நான்கைந்து காளை மாடுகள் பளபளப்பாக ஏஷியன் பெய்ண்ட்ஸெல்லாம் இல்லாமல் வேறு ஏதோ சாதா பெய்ண்ட் அடித்தாலும் பளபளப்புடன்.. இருக்கும் பச்சை சிகப்புமஞ்சள் நீலக் கொம்புகளுடன் மூக்கணாங்கயிறு மூக்கை இழுத்துப் பிடித்திருக்க கொஞ்சம் வாயோரம் நீர் வழிய கண்ணோரம் அதன் தங்கைகளென சிறு துளி நீருடன் கால்களில் ஜலக் ஜல்க்கென சதங்கைகள் கட்டி, லைஃப்பாய் சோப்போ இன்ன பிற சோப்போ போட்டு ஜாம் ஜாம் என்று அன்று காலை ஆற்றங்கரையிலோ கிணற்றங்கரையிலோ தேய்த்துக் குளிப்பாட்டி விட்டதனால் பளபளப்பாக இருக்கும் மேனியுடன் வந்து நிற்கும்..

செட்டியார், (அவர் காலம் முடிந்தபின்) அவர் பையன்கள் வெளியில் வந்துஅவர்களின் நிலத்தைக் குத்தகை விட்டிருப்பவரின் மாடுகளோ என்னவோ..அல்லது அவர்களின் கிராம வயற் மாடுகளோ என்னவோ தெரியாது.. மாடுகளை அழைத்து வந்திருப்பவருக்குப் பணம், மாடுகளுக்கு கரும்பு அல்லது கீரை பொங்கல் எனக் கொடுப்பார்.கள்..பார்க்க அழகாக இருக்கும் காட்சி அது..

குடுகுடுப்பைக் காரர்கள் நார்மலாகத் தனியாகத் தான் வருவார்கள்..அதைப்பரம்பரையாக தொழிலாகச் செய்பவர்க்ளும் உண்டு..இப்போது இருக்கிறார்களா தெரியாது..இந்தப் பாடலில் கொழு க் மொழுக் கதானாயகன் அதே கொழுக்மொழுக் கதானாயகியிடம் சேதி சொல்லும் பாடல் இது..

காடு மலை மேடுகண்ட மாட்டுப் பொண்ணே…
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே

பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பக்குவமா பதிலே இங்கே கூறடி பொண்ணே பொண்ணே
மாடப்புறாப் போலே ஒரு கன்னி வந்தாளாம்
மாப்பிள்ளைய மனசுக்குள்ளே எண்ணி வந்தாளாம்

ஆடி மாச வெள்ளம் போலே ஆடி வந்தாளம் - வந்து
ஆசையெல்லாம் கண்ணுக்குள்ளே மூடி வச்சாளாம்

எட்டாத தூரம் என்று ஏங்கி விட்டாளா?
ஏழையென்று வீட்டுக்குள்ளே தங்கி விட்டாளா?
தொட்டது போல் ராத்திரி வேளே கனவு கண்டாளா?
தூக்கத்திலே யாரிடமும் உளறி விட்டாளா?

ஏன் பாத்தோம் ஏன் நெனச்சோமுன்னு கவலைப் படுறாங்களா?
எப்போ பாப்போம் கப்புனு சேருவோமுன்னு நெனக்கிறீங்கிளா?
அப்போதைக்கப்போ ஆசையிலேயும் பாசத்திலேயும்
நேசத்திலேயும் விழுந்து துடிக்கிறாங்களா?

அம்மா மனசு சும்மா இருன்னு ஜமாஜமான்னு
கல்யாணம் நடக்கும்னு சொல்றியா?

கல்யாண மாப்பிள்ள பொண்ணு போகுது பாரு
காதல் தந்த கவலை எல்லாம் தீருது பாரு
பொ்ல்லாத மாமன் மனசு மாறுது பாரு
பூப்போல பெண்ணுக்கு வாழ்வு வருது பாரு

***
வீடியோ கிடைக்கலீங்க்ணா..:)

*

chinnakkannan
28th November 2014, 04:10 PM
*
தொழில் பாட்டுக்கள் * 6

புராதனமான தொழில்கள் என்று பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது யெஸ்..அது தான்..

எப்பொழுதும் எக்காலத்திலும் கொஞ்சம் இறக்கமாய் இரக்கமில்லாமல் கொஞ்சம் கள்ளச் சிரிப்பு சிரிக்க வைக்கும் தொழில்..உடல் வியாபாரம்..குறிப்பாகப் பெண்கள் தாம் இதைச் செய்பவர்கள்.. அக்காலத்தில் இறைவனுக்கே தன்னுடலை தன் கலையை அர்ப்பணித்த்த கணிகைகள் ஏராளம்..காலத்தின் கட்டாயத்தால் மாற்றப்பட்டவர்களும் ஏராளம். பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் தான்..

மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்ற வரிகள் இவர்கள் வாழ்வைப் பொறுத்த வரை மிகச் சரியான ஒன்று.. வாழ்க்கையில் ஒருமுறை தான் வரும் இளமையில் மட்டுமே இவர்கள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் இன்பம், துன்பம், அனுபவம் + உயிர் வாழத் தேவையான பணம்.. கொஞ்சம் சரிந்தால் பிற்கால வாழ்க்கை துயரம் தான்.. ஆனால் என்ன வாழ்க்கை நதியில் இப்படி ஒவ்வொரு காலமும் சில ப் பல பெண்மலர்கள் சிக்குண்டு கருகி விடுவது விதியா அல்லது இயல்பான ஒன்றா ..பதிலே இல்லாத கேள்வி..

இந்தப் பாடலில் ஒரு பெண்.. அவளே வியாபாரப்ப்ராடக்ட் என்ன சொல்கிறாள்..

ம.தி, ஸ்ரீப்ரியா நவரத்னம்..படப் பாடல்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xOFyYy4sdP0

இன்னொரு சிச்சுவேஷன்.. ந.தி.. நவராத்திரியில் பயம் கொண்ட சீமான் பொருள் வாங்கச் செல்லும் இடம்..

இரவினில் ஆட்டம் பகலினில் கூட்டம் இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம்..

பாவமென்றால் ஆணையும் பெண்ணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் திசையில் திராட்சைக் கொடியை வளர்ப்பானா

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wGmxDapfl6M

chinnakkannan
28th November 2014, 04:12 PM
தொழில் பாட்டுக்கள் * 7

ஒரு அழகிய பாடல் ஒன்று உண்டு..

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்..

வெகு அழகிய பாட்டு.. இதெலென்ன இருக்கிறது..மேலாடை.. இந்த மேலாடை பொறுத்தவரை ஆண்கள் கொஞ்சம் ரசனை குறைந்தவர்கள் தாம்.. என்ன் எப்பப்பார்த்தாலும் கொஞ்சம் ஒரே டைப் கோடுகோடு போட்ட சட்டை அலுவலென்றால் ப்ளெயன் .. அப்புறம் டார்க் லைட் காம்பினேஷனில் பாண்ட் இல்லை வெள்ளை வேட்டி.. இல்லை எனில் கொசகொச வென கட்டம்கட்டமாய்ப் போட்ட கைலி..ம்ம்

ஆனால் பெண்கள்.. ம்ம் எவ்வளவு வெரைட்டி சுடிதார், டாப்ஸ், டிஷர்ட்..புடவை தாவணி..

ஆனால் இந்தப் புடவை தாவணி இவற்றிற்கான அழகு வேறு எவற்றிலாவது இருக்கிறதா என்ன

உடலிலே சுற்றினாலும் உள்ளத்தை ஈர்க்கும்
புடவை அழகே தனி..

சரி தானே..


அய்யம்பேட்டையில் தங்கியிருந்த போது பார்த்திருக்கிறேன்..மோஸ்ட்லி செளராஷ்டிரப் பெண்கள் நூலை எடுத்து சாயத்தில் தோய்த்து பின் தெருவில் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமுமாக நூற்களைக் கட்டி க் காயவைத்து அவற்றைத் தரையில் வைத்து பொறுமையாய் இழையிழையாய்ப் பின்னி நெய்வதற்கான உழைப்பு இருக்கிறதே அப்பப்பா..

அதன்பிறகு தான் ஸேல்ஸ்.. அவற்றை விற்பதையும் பார்த்திருக்கிறேன்.. கும்பகோணத்திலிருந்து சில ஷாப்கடை ஆட்கள்(அப்படித் தான் அங்கே சொல்வார்கள்) வந்து அடிமாட்டு விலைக்குக் கேட்க இவர்கள் இரண்டுமடங்காய்ச் சொல்லி பின் ஒன்றரை மடங்கிற்கு வேறுவழியில்லாமல் ஒத்துக் கொண்டு விற்பார்கள்..என்ன..வீட்டில் கஞ்சி காய்ச்ச வேண்டுமே..

கொஞ்சம் கஷ்டமான வாழ்க்கை தான்.அது..

இதோ இந்தப் பெண் விதவிதமாய் புடவை நெய்கிறாள் விதவிதமான வண்ணங்களில்.. பச்சை மஞ்சள் சிகப்பு என..

பொற்காலம் படம்..பாடுபவர் மீனா..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4HBetlHssOY

இன்னும் விட்டுப் போன தொழில்கள் நீங்கள் சொல்லத் தானே போகிறீர்கள்..

பொறுமையாய்ப் படித்ததற்கு நன்றி.. வாசக தோஷ சந்தவ்யஹ..

appuram varattaa :)

gkrishna
28th November 2014, 04:36 PM
http://4.bp.blogspot.com/-guv8r37LyKk/Uy_9piQbMOI/AAAAAAAAFUo/NhWptLwcIDQ/s1600/IMG_1618.JPG

டியர் சி கே

கமல் ஹாசன் எழுதிய இந்த தொடர்கதை நினைவில் உண்டா ?
பின்னாட்களில் ஆளவந்தான் திரை படத்திற்கு மூலம் இந்த கதை என்று குமுதம் விமர்சனத்தில் எழுதி இருந்தார்கள்

chinnakkannan
28th November 2014, 04:54 PM
க்ருஷ்ணா ஜி.. தாயம் அட் நினைவில் இருக்கிறது படித்ததில்லை.. பிற்காலத்தில் அது தான் ஆளவந்தான் என மாற்றம் பெற்றது எனப் படித்த நினைவு உண்டு..ஆளவந்தான் முழுக்கப் பார்த்ததில்லை..பாடல் மட்டும் பார்த்திருக்கிறேன்..

vasudevan31355
28th November 2014, 05:56 PM
சின்னக் கண்ணன் சார்,

தொழில் பாட்டுக்கள். அருமையப்பா அருமை! வித்தியாச போக்கு. பார்த்தீர்களா? 'மதுர கானம்' என்னென்ன தலைப்புகளில் எல்லாம் தொழில் போட்டி நடத்துகிறது ஸாரி 'தொழில் பாட்டுக்கள்' போன்ற தலைப்புகளில் எல்லாம்.

அடித்தீரய்யா ஒரு பாட்டை. அமர்க்க்களமான பாட்டை.

'உங்களில் ஒருவன் நான்' உமது கற்பனை சக்திக்கு நூற்றுக்கு நூறு மார்க்.

கலர் புல் கொடுத்த கலர்ஃபுல் கிராமத்துக் கலா (ரசிகை).

இரு திலகங்களும் நம் நெஞ்சில் விதைத்த விவசாயப் பாடல்கள்.

சலவைத் தொழிலாளி நம்பிக்கை, தங்கள் தந்தை உயிர் போகும் நேரத்திலும் அதைக் காப்பாற்றிய விதம்.

'ஆற்று வெள்ளம்' போல பாயும் கருத்துக்கள்.

மேஸ்திரி கதை. கண்களால் சித்தாளை சிதைத்த காதல் கதை. முதலாளி தொழிலாளி உறவு முதல் இரவில் 'அன்பாலே தேடிய' கணவன் மனைவியாய் முடிந்த கவிதை.

'கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்
காதலுக்கு மனப்பொருத்தம் அவசியம்'

இந்த மேஸ்திரியின் (நடிகர் திலகம்) மேம்போக்கான ஆழ்பார்வை எவரும் கண்டறிய முடியாதபடி. ஆரியத்திலும் கண்...காரியத்திலும் கண்...காதலிலும் கண்.

குடையைப் பிடித்து நடந்தபடியே குயிலைப் பிடிக்கும் அழகு

சாரத்திலே ஓரத்திலே தங்கம் நடந்தால்(ள்) இங்கே இவரது ஹிருதயம் 'லப் டப்' எகிறுவதென்ன (தே... தே.. பார்த்து அட! பார்த்துங்குறேன்..விழுந்துடப் போற!)

(கிருஷ்ணா!

இப்பாடலில் 'மட்ட சுத்தம் பார்த்து வீடு கட்ட வேணும்' வரிகள் இரண்டாவது முறை வரும் போது குடத்தில் தண்ணீர் வாங்கும் நடிகையை நீங்கள் சொல்ல வேணும்.

'மேஸ்திரி ஒடம்பெல்லாம் நடுங்குது பார் தங்கப் பாப்பா' வரிகள் முடியும் போது கருங்கல் உடைக்கும் அம்மணி யாரென்று அதையும் சொல்ல வேணும்.)

இவ்வளவு அழகாக கட்டடம் கட்டுவதை கவிதையாய் படம் பிடிக்க முடியுமா?!
கட்டட மேஸ்திரியாய் வேறு கலைஞன் இப்படி வாழத்தான் முடியுமா?!

5,6,7 அப்புறம்.

சி.க,

ஒரேயடியாய் ஏன் இம்புட்டு? தினம் ஒன்னு ஒன்னாத் தந்தாக்கா சுவை பட ரசிக்கலாமே. அப்புறம் பேஜ் தேடணும்.

அருமை. அருமை.

vasudevan31355
28th November 2014, 06:03 PM
கிருஷ்ணாஜி!

விகடன் 'காற்றினிலே வரும் கீதம்' விமர்சனம் கதைக்கு ரொம்ப சப்போர்ட். மிக்க நன்றி! நான் என்ன மனதில் நினைத்தேனோ அது விமர்சனத்தில் இருக்கிறது. ஆனால் ராஜாவுக்கு மார்க் கம்மிதான். அதுவே இப்போதை இருந்தால் 75 கொடுத்திருப்பார்கள். நன்கு தெரிந்தால்தான் கொடுப்பார்கள்.

கவிதா கண்மணி இந்த வயதிலும் அழகு குன்றாமல் இருப்பது ஆச்சர்யம். படம் வந்து 36 வருடங்கள். அப்போது ஒரு இருபது இருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது 56. நம்ப முடிய வில்லை.

சி.க,

எப்படி கணக்கு பண்ணேன் பார்த்தீயளா? கணக்கு வாத்தியார் தொழிலை நன்றாகக் கத்துக் கொடுத்தார்னு இப்பவாச்சும் நம்புதா சாமி?

vasudevan31355
28th November 2014, 06:18 PM
கிருஷ்ணா!

பாராட்டிற்கு நன்றி

நாகேஷ் பற்றிய இந்து பதிவுக்கும் நன்றி.

நாகேஷ் பற்றி நிறைய சொல்லலாம். நேரம்தான் உதைக்கிறது.

vasudevan31355
28th November 2014, 06:21 PM
கல்நாயக் சார்,

தங்கள் ஆதரவிற்கு, 'லைக்'குகளுக்கு மிக்க நன்றி! நல்ல நகைச்சுவை இழையோட தாங்கள் தரும் பதிவுகளுக்கு நாங்கள் அன்று முதலே ரசிகர்கள். தாங்கள் மதுர கானத்தில் நிறைய எழுத வேண்டும் என்பது என் ஆசை. நிறைவேற்ற வேண்டும். ப்ளீஸ்.

kalnayak
28th November 2014, 07:01 PM
வாசு,
எனக்கு படிக்கத்தான் புடிக்கும். எழுதத் தெரியாது. நீங்க, ராகவேந்திரா, கிருஷ்ணா, சின்னகண்ணன், கோபால், ராஜேஷ் மற்றும் பங்கெடுக்கிற எல்லாமே பெரியவாள். நெறய எழுதறேள். நீங்க சார் போடறதாலே நான் பெரியவா ஆயிட முடியாது. (தயவு செய்து சார் போடாதீங்கோ!!!). உங்க எழுத்த படிக்கவே நேரம் சரியாப்போயிடறது. உங்களாண்ட நெறய கத்துண்டு காண்ட்ரிபூட் செய்ய பாக்கறேன்.

Murali Srinivas
28th November 2014, 07:27 PM
அன்புள்ள வாசு,

காற்றினிலே வரும் கீதம் படத்தைப் பற்றி எழுதி அந்த நாட்களுக்கே என்னை அழைத்து சென்று விட்டீர்கள். 1976 மேயில் புயலாக அறிமுகமாகி பின் சற்றே தளர்ந்து 1977-ல் மீண்டும் வலுக் கொண்டு இளையாராஜா முன்னேறிக் கொண்டிருந்த நேரம். எங்கம்மா சபதம் போன்ற படங்களை எடுத்த விஜயபாஸ்கர் பிலிம்ஸ் இந்தப் படத்தை எடுத்தார்கள். அன்றைய நாளில் பிரபலமாக இருந்த எஸ்பி.முத்துராமன் -பஞ்சு அருணாசலம் -இளையராஜா கூட்டணியில் படம் உருவானது

படம் வருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகி பிரபலம் ஆகி விட்டன. இசைத்தட்டில் ஒரு பக்கம் சித்திர செவ்வானம் பாடல் அடுத்த பக்கம் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய். இரண்டுமே மிகப் பிரமாதம் என்ற நிலையில் ரசிக்கப்பட்டாலும் எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் ஒரு வானவில் போலே ரொம்ப ரொம்ப பிடித்துப் போனது. பஞ்சு அருணாசலம் பாடல் எழுதியிருந்தார். எனக்கு பஞ்சுவின் பாடல் இயற்றும் திறனில் மிகுந்த அவநம்பிக்கை உண்டு. கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்ததாலும் அவரே பல படங்களுக்கு கதை வசனம் எழுதியதாலும் இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் என்பதனால் அதீத சலுகை எடுத்துக் கொண்டு தானே பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் என்பது என் எண்ணம். பாடல்களின் வரிகளை கேட்டால் நான் சொல்வது புரியும். [ஒரே ஒரு விதிவிலக்கு பொன்னெழில் பூத்தது புதுவானில் பாடல்].

ஆனால் இந்த படப் பாடல்களை கேட்கும்போது நன்றாகவே எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. குறிப்பாக ஒரு வானவில் போலே பாடலில் வரும் சரணம்

உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை

உனக்காகவே மலர்ந்தது கலைக் கோவில் மல்லிகை

இனிக்கின்ற காலம் தொடராதோ

இனி எந்தன் உள்ளம் உனது

அணைக்கின்ற சொந்தம் வளராதோ; இனி

எந்தன் வாழ்வும் உனது

தொடர்கவே வளர்கவே

இது ஒரு காவியம்!

இந்த வரிகளும் சரி பாடலின் மெட்டும் சரி நம்மை எங்கோ கொண்டு செல்லும். 1977- 78 கல்வியாண்டில் மதுரை கல்லூரிகளில் பலமுறை பல காரணங்களுக்காக ஸ்ட்ரைக் நடந்தது. அதன் காரணமாக நிறைய லீவ் முதல் செமெஸ்டர் தேர்வுகளே ஜனவரியில்தான் எழுதினோம். வெளியாகும் படங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 1977 டிசம்பரில் இதே முத்துராமன்-எஸ்பி முத்துராமன் combination-ல் ஆளுக்கொரு ஆசை வெளிவந்தது.[நீங்கள் கூட அந்த படத்தின் பாடலை இந்த தொடரில் உள்படுத்தியிருந்தீர்கள். அந்தே நேரத்திலெல்லாம் இந்த பாடல்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன.

1978 ஜனவரி 26 ரிலீஸ் என்று விளம்பரம் வந்து விட்டது. உங்களுக்கு நினைவிருக்கும் அதே தேதியில் நம் அந்தமான் காதலியும் வெளியானது.
நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை நான் இரண்டு செட்டுகளோடு ஓபனிங் ஷோ பார்ப்பது வழக்கம். ஒன்று பள்ளி பின் கல்லூரி என்று ஒன்றாக படித்த நண்பர்கள். இரண்டாவது செட் வீட்டருகே இருக்கும் நண்பர்கள் [அவர்களும் அதே டிகிரி முதல் வருடம் ஆனால் வேறு கல்லூரி]. ஒன்று முதல் செட்டோடு போவது இல்லையென்றால் இரண்டாவது செட்டோடு போவேன். அந்தமான் காதலியைப் பொறுத்தவரை இருவரிடமும் சொல்லி வைத்திருந்தேன். இரண்டு செட்டிலும் சொல்லி வைத்திருப்பது இரண்டு செட்டிற்கும் தெரியும். ஆனால் சொல்லி வைத்தது போல் இரண்டு செட்டுமே முதல் நாள் இரவு எனக்கு டிக்கெட் வாங்க முடியவில்லை என்று கையை விரித்து விட்டனர். டிக்கெட் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா நீதான் அவங்களிட்ட சொல்லியிருந்தியே அவங்க வாங்கியிருப்பாங்கனு நினைச்சோம். இப்படி இரண்டு செட்டும் சொல்லிவிட செம கடுப்பாகி விட்டது. ஆனால் என்ன செய்வது? தியேட்டருக்கு போய் முயற்சி பண்ணலாம்னு பார்த்தா அந்தமான் காதலி சினிப்ரியா தியேட்டரில். அங்கே பிளாக் டிக்கெட்லாம் கிடைக்காது. ஆகவே ஓபனிங் ஷோ ஆசையை துறந்து விட்டு மற்றொரு நண்பனையும் அழைத்துக் கொண்டு தங்கம் தியேட்டரில் வெளியாகியிருந்த காற்றினிலே வரும் கீதம் படம் பார்க்க போனோம். படத்தின் கதையமைப்பு பொது மக்களுக்கு ஏற்புடையதாயில்லை. ஆனாலும் எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால் நான் ஆசை ஆசையாய் பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு வானவில் போல் பாடல்காட்சி வந்தபோது பாதி தியேட்டர் எழுந்து தம்மடிக்க, டீ குடிக்க என்று போய் விட்டது. இவ்வளவு நல்ல பாடலை ஏன் யாருமே ரசிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தம் வந்தது. சித்திர செவ்வானம் பெரிதும் ரசிக்கப்பட்டது.

டெயில் பீஸ்: படம் முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டு சற்று நேரம் கழித்து வெளியே போகவேண்டிய வேலை. போய்விட்டு வந்தால் [மாலை 5.30 மணி இருக்கும்]. அம்மா சொல்கிறார்கள் " ராஜா [பக்கத்துக்கு தெரு நண்பன்] 4. 30 மணி வாக்கில் வந்திருந்தான். அந்தமான் காதலிக்கு ஈவினிங் ஷோ டிக்கெட் கிடைச்சிருக்காம். உன்னை வர சொன்னான்" என்றதும் உடனே ஓடினேன். அனால் அவன் வீட்டில் இல்லை. "யாரோ இரண்டு பேரோட வெளியே போறேன்னு சொல்லிட்டு போனான்பா" என்று அவன் அம்மா சொன்னார்கள். பக்கத்தில் பஸ் ஸ்டாப் எல்லாம் சென்று பார்த்தேன். ஆள் இல்லை. வெறுப்போ வெறுப்பு.

வீட்டிற்கு வந்தால் அங்கே வந்திருந்த மாமா [இவர் அம்மாவின் கசின் இளம் வயதுக்காரர்] சரி வா உன்னை ஒரு சினிமாவிற்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லி பொங்கலுக்கு வெளியாகி சென்ட்ரலில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்திற்கு போனோம். மறுநாள் நண்பனை மாலை பார்த்தபோது[மறுநாள் கல்லூரி இருந்ததால்] நீ 5.30 மணி வரைக்கும் வரலே.நாங்க பஸ் பிடிச்சு போகணுமில்லே, அதன் கிளம்பிட்டோம் என்றான். என்னிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டான். அதன் பிறகு எப்போது அந்தமான் காதலி பார்த்தேன் என்று கேட்கிறீர்களா? ஜனவரி 26 வியாழன், 27 வெள்ளி அன்று கல்லூரி, 28 சனியன்றும் கல்லூரி மதியம் வரை. நேரே அங்கிருந்து சினிப்ரியா போய் படம் பார்த்தேன்.

இன்றைக்கு உங்கள் பதிவை படித்தவுடன் இந்த விஷயங்கள் அனைத்தும் மனதில் ஓடி வந்தன. நன்றி வாசு நன்றி!

அன்புடன் . . . .

Russellzlc
28th November 2014, 07:38 PM
திரு. வாசு சார் அவர்களுக்கு,

நீங்கள் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களை பற்றி எழுதுவதிலோ அவருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கிடைத்த அனுபவங்களை எழுதுவதிலோ ஆச்சர்யம் எதுவும் இல்லை. அதிலே ஊறித் தோய்ந்தவர் நீங்கள். ஆனால், காற்றினிலே வரும் கீதம் படத்தின் கதையை கூறியது வியப்பளிக்கிறது. நானும் ஒருமுறை அந்தப் படத்தை பார்த்துள்ளேன். என்றாலும் கதை நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவு வருகிறது. தங்களின் அபரிமித நினைவாற்றலுக்கு பாராட்டுக்கள்.

திரு. ரவி சார், மக்கள் திலகம் திரியில் இன்று உங்கள் பதிவை பார்த்தேன். தங்களின் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே..’ பாடலை தரவேற்றிய திரு.எஸ்.வி.சாருக்கு நன்றி.

பாடலைக் கேட்டு ரசித்து அதற்காக நன்றி தெரிவித்த, ‘சின்னக் கண்ணன்’ என்று பெயர் இருந்தாலும் தனக்கென தனிப் பாணியுடன் கூடிய நகைச்சுவை மிளிரும் எழுத்தாற்றலில் ‘பெரிய கண்ணனாக’ திகழும் நண்பருக்கு அன்பு கலந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
28th November 2014, 09:22 PM
//கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்
காதலுக்கு மனப்பொருத்தம் அவசியம்..

இந்த மேஸ்திரியின் (நடிகர் திலகம்) மேம்போக்கான ஆழ்பார்வை எவரும் கண்டறிய முடியாதபடி. ஆரியத்திலும் கண்...காரியத்திலும் கண்...காதலிலும் கண்.

குடையைப் பிடித்து நடந்தபடியே குயிலைப் பிடிக்கும் அழகு

சாரத்திலே ஓரத்திலே தங்கம் நடந்தால்(ள்) இங்கே இவரது ஹிருதயம் 'லப் டப்' எகிறுவதென்ன (தே... தே.. பார்த்து அட! பார்த்துங்குறேன்..விழுந்துடப் போற!)// ஒரேயடியாய் ஏன் இம்புட்டு? தினம் ஒன்னு ஒன்னாத் தந்தாக்கா சுவை பட ரசிக்கலாமே. அப்புறம் பேஜ் தேடணும்…// ஆஹா வாசு சார்..அபார அலசல் நன்றி.. மறுபடியும் பாடல் பார்த்த போது அந்தப் படமாக்கல் நடிப்பு வெகுஅழகாய் உள்சென்று பொங்க வைத்து விட்டது.. கு.பி ந. குயிலைப் பி. அழகு.. ஓய் வெரி நைஸ்.. அகெய்ன் தாங்க்ஸ்.. வேலை நாட்களில் உட்கார முடியுமா எனத் தெரியவில்லை..எனில் எல்லாவற்றையும் இட்டு விட்டேன்..தவிர ஒட்டுக்க ப் பொங்கிவருவது கொஞ்சம் அபூர்வம் எனக்கு..(உடம்பெல்லாம் டயர்டாச்சுங்க்ணா எழுதி முடிச்சு எடிட் பண்ணப் படிச்சு ப் பார்த்து கொஞ்சம் வார்த்தைகள் கூட்டிக் குறைத்து பிழை திருத்தம் செய்ய) மீண்டும் நன்றி..

//எப்படி கணக்கு பண்ணேன் பார்த்தீயளா? கணக்கு வாத்தியார் தொழிலை நன்றாகக் கத்துக் கொடுத்தார்னு இப்பவாச்சும் நம்புதா சாமி?// இல்லியே அப்ப அவங்களுக்கு 16 17 இருக்கலாம்னு நினைக்கறேன்.. பொங்கும் இளமை புசுபுசு கன்னம்.. தர்பூசணியை நீள் கீற்றாக வெகு ஒல்லியாக வெட்டி வாயில் ஒட்டவைத்தாற்போன்ற இளஞ்சிவப்பு இதழ்கள், (கண்ணா இப்படில்லாம் எழுதக் கூடாதுன்னு இருந்தயே..பி சீரியஸ்.. ஓகே சரி மனசாட்சி..கய்ஸ்.. மேற்சொன்னதை ரப்பர் போட்டு அழித்து விடவும்!) அதுவும் அந்த மெர்க்காராவில் நாடோடி டிரஸ்ஸில் கொஞ்சம் ஜாஸ்தி அழகு தான்.. முரளி சாரைக் கேக்கணும்

முரளி சார்.. நானும் தங்கம்.. நீங்களும் தங்கம்.. நீங்கள் 24 நான் 18 நான் காரட் மற்றும் தியேட்டரைச் சொன்னேன்..! அந்த ஒரு வான வில் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்..படம் சுவாரஸ்யமான படம் தான்..எக்ஸெப்ட் அந்த தீப்பெட்டிப் ப்ளேன் க்ளைமாக்ஸ்.. அந்தமான் காதலி மூன்று தடவை பார்த்தீர்களா.. மதுரைக் கல்லூரியா. நான் எஸ்.என். காலேஜ் காலெடுத்து வைத்தது இரண்டு வருடங்கள் கழித்து. ஜூலை மாதத்தில்.

//எனக்கு படிக்கத்தான் புடிக்கும். எழுதத் தெரியாது.// கல் நாயக்ணா.. இதானே வேணாங்கறது..எழுதுங்காணும்.. அல்லது பிடிச் பாட் இதுன்னு சொல்லிகினு இந்தாபான்னு கோடு கொடுத்தீங்க்ணா நாங்க சின்னதா ஜல்லி அடிச்சு ரோடு போடுவோமில்ல..

//பாடலைக் கேட்டு ரசித்து அதற்காக நன்றி தெரிவித்த,// கலைவேந்தன் சார்..தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.. நீங்கள் வேறு பாடல் எதுவும் கொண்டு வரவில்லையே..ஏ ஏஏன்..

rajeshkrv
28th November 2014, 09:36 PM
முரளி ஜி,

சரியாக சொன்னீர்கள். பஞ்சு ஒரு பாடலாசிரியர் அல்ல. ஏதோ தானும் எழுத முடியும் , கவிஞரிடம் இருந்ததால் தனக்கும் கவிதை நயம் உண்டு என்ற எண்ணத்தில் எழுத நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். எல்லாம் ஒரு மழலை கவிஞர் நடையில் தான் இருக்கும். பொன்னெழிலுடன் நாம் ஒன்றியதற்கு இசையும், குரலும், நாயக நாயகியும் 80% பாடல் வரிகள் 20% . இதுவே கவியரசரோ வாலி ஐயாவோவாக இருந்தால் பாடல் வேறு ஒரு லெவலுக்கு சென்றிருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. ஆம் இளையராஜாவிடம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு நிறைய எழுதி நம் உயிரை வாங்கினார்.

rajeshkrv
28th November 2014, 09:37 PM
சி.க வணக்கம் நலம் தானே ..

chinnakkannan
28th November 2014, 10:20 PM
நலமே ராஜேஷ்..முழுக்க குணமடைய அடுத்த வாரம் ஆகும்..!

aanaa
29th November 2014, 12:15 AM
முழுவதுமாக விரைவில் குணமடைய வேண்டுகின்றேன்

uvausan
29th November 2014, 08:24 AM
Ck - புதிய அணுகுமுறை , புதிய பாடல்கள் , புது புது கருத்துக்கள் , உங்களுக்கென்றே பிறந்த நகைச்சுவை கலந்த நடை , கிண்டல்கள் - அசத்துங்கள் - கீழ் கண்ட வரிகளை எப்படி ஒவ்வொரு தமிழனும் ரசிப்பானோ அப்படித்தான் , தமிழை புரிந்துகொள்ளும் ஒவ்வருவரும் உங்கள் பாடல் கலந்த பதிவுகளை ரசிப்பார்கள் - உத்தர்கண்ட் வெள்ளம் போல பொங்கும் பூம்புனலாக வரும் உங்கள் பதிவுகளை யாரால் அணை போட்டு தடுக்க முடியும் ???

தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடருணைக்கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த
தமிழ்மாலை தனைச் சூடுவான்------------

uvausan
29th November 2014, 08:35 AM
வாசு இப்படியே எழுதிக்கொண்டு போனால் , நாங்கள் எல்லாம் இந்த திரியில் பதிவிடுவதா , வேண்டாமா ? என்று தான் எங்கள் ( என்னுடைய ) standard க்கு வந்து பதிவுகள் போடுவீர்கள் என்று தெரியவில்லை - எழுத வேண்டிய எழுத்துக்கள் எல்லாம் உங்களிடம் வசப்பட்டு வெளி வராமல் துவண்டு போகின்றன ; CK என்னும் சுனாமியினால் அடித்து செல்ல படுகின்றன - பொங்கி வரும் பூம்புனல் மூலம் ஊதி தள்ள படுகின்றன - கல்நாயக் மூலம் dislike ஆகின்றது - ராஜேஷ் மூலம் இரவில் வந்து , பகலில் மறைந்து விடுகின்றது - கிருஷ்ணாஜி மூலம் காற்றில் கரைந்து விடுகின்றது - வினோத் சார் மூலம் பல பல ஆவணங்களினால் - ஆடி போய் விடுக்கின்றது ---

வருத்தத்துடன்
ரவி

Richardsof
29th November 2014, 09:07 AM
ரவி சார்

வருத்த படாதீர்கள் . உங்கள் ரசனைகளை நாங்களும் விரும்புகிறோம் .உங்களை மகிழ்விக்க சில நிழற்படங்கள் . அந்த படங்களை வைத்து உங்களின் கற்பனை வளத்தில் பதிவுகளை போடவும் .