View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3
Pages :
1
2
3
4
5
[
6]
7
8
9
10
11
12
13
14
15
16
uvausan
16th November 2014, 09:23 PM
அன்புள்ள வாசு
எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை - ஒரே வியப்பாக இருக்கின்றது - இவள்ளவு அழகாக ஒரு திரியை ஆரம்பித்து அதற்க்கு "மயங்கவைக்கும் மதுர கானங்கள் " என்ற அருமையான தலைப்பையும் கொடுத்து , வெகு சிறந்த பதிவாளர்களையும் இந்த திரியின் அடிமைகளாக்கி , வெகு விரைவில் பாகம் மூன்றையும் கடக்க இருக்கும் நிலையில் நின்று , வெற்றி வாகை சூடி , இதற்கும் மேலாக நக்கீரர் வளர்த்த தமிழ் சங்கத்தை மறைய விடாமல், அதை நெய்வேலியில் மீண்டும் ஸ்தாபித்து சகோதர பாசத்துடன் , இந்த திரியில் ஒரு ஒற்றுமையை கடைப்பிடித்து யார் மனதையும் புண் பட வைக்காமல் திரியை எடுத்து செல்லும் அழகை ஒரு பார்வையாளராக மட்டுமே இது வரை ஆராதித்து வந்தேன் –
எனக்குள் ஒரு விதமான பயம் இருந்து வந்தது - இங்கு பதிவிடும் ஒவ்வருவரும் மிகுந்த திறமை சாலிகள் , சங்கீதத்திலும் , இசையிலும் கை தேர்ந்தவர்கள் - தமிழில் நல்ல பயிற்சி உள்ளவர்கள் - அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் இந்த திரிக்கு ஓடோடி வந்திருக்கும் அவர்களை என் பதிவுகள் மூலம் ஏமாற்றம் அடைய செய்வதா - அந்த சங்கீத அறிவிப்பு ஒன்றாக இருக்குமா ?? இந்த பயம் இருந்தும் கூடவே ஒரு சின்ன ஆசை - முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பததுதான் ----
இந்த திரியின் விதி முறைகளை படிக்கவில்லை - இருப்பினும் ஒரு சின்ன வேண்டுகோள் - என் பதிவுகள் -தெளிந்த நீரோடையைபோல செல்லும் பதிவுகளை தடுப்பது போல இருந்தாலோ , போடும் பதிவுகளுக்கு முழுவதும் மாறுபட்டது போல இருந்தாலோ , repeat telecast ஆக இருந்தாலோ , பிழைகள் நிறைந்த அல்லது உண்மைக்கு மாறுபட்ட கருத்துக்களாக இருந்தாலோ , தயவு செய்து எனக்கு ஒரு PM அனுப்பவும் - கண்டிப்பாக திருத்தி கொள்கிறேன் . உங்களுக்கு என் நன்றியும் , வாழ்த்துக்களை யும் சொல்வதுடன் , இந்த திரியின் " founding fathers " அனைவருக்கும் என் அன்பான வந்தனங்கள் -- உங்கள் எல்லோருடனும் சேர்ந்து மதுர கானங்களை சுவைப்பதில் , எல்லை இல்லாத இன்பம் அடைகிறேன்
அன்புடன் ரவி:smokesmile::)
uvausan
16th November 2014, 09:31 PM
We salute the Supreme Lord Ganesha of the curved trunk ( Vakratunda ), whose radiance is like a million suns, may He bless all our endeavours and remove obstacles from our path.
வேதம் போற்றும் அந்த கணேசன் நடிப்பில் V.C கணேசனாக உருவெடுத்து நம்மை கட்டிபோட்டு முதல் மரியாதைக்கு என்றுமே உவந்தவராக இன்றும் விளங்கி கொண்டிருக்கும் அந்த நடிப்பு மேதையை வணங்கி விட்டு , என் இந்த முதல் பதிவை இங்கு உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
விவசாயத்தையும் , உழவர்களின் பெருமைகளையும் இந்த பாடல் வருணித்த மாதிரி , தாக்கம் ஏற்படுத்தின மாதிரி இனி எந்த பாடலும் இருக்க முடியாது - பல கத்திகள் வந்தாலும் , அன்றே மிகவும் அழகாக விவசாயத்தின் பெருமையும் , உழவு இல்லை என்றால் எதுவுமே இல்லை என்று ஆணித்தரமாக எடுத்து சொன்ன பாடல் - NT யின் நடிப்பில் பாடல் இன்றும் சிரஞ்சீவியாக நம் காதுகளில் ஒலித்து கொண்டுதான் இருக்கின்றது . நடிகர் திலகத்தின் படங்களில் சிறப்பு அவர் மட்டும் படம் முழுவதும் வராமல் எல்லா மற்ற நடிகர்களுக்கும் பாட்டுக்களையும் மற்றும் சிறந்த காட்சிகளையும் கொடுத்தவர்- இப்படி பட்ட தெய்வத்தன்மை , பெருந்தன்மை கொண்ட ஒரு மா மேதையின் ரசிகன் என்று சொல்லிகொள்வதில் பெருமை அடைகிறேன் -----
தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது ?
Where ever there is a river, there is abundant water... Farmer's Chariot (plough) will keep plowing the field .. There is no reason to fight with the other, there is no difference among US.... Lets all Feast together... ... In land there is gold, precious stones and diamonds(Crops)... There is eyes to see, there is hands to use and there is work to do...
While Serving with your hands folded.. when your eyes and mind are spoilt... When you speak lies for survival and When you beg for food from others... Mother earth will be making fun of you.. Where is the king with the Chariot? Where is the Poet who's fame is spread across the countries ? Without a farmer and plough , there is no warrior at the battle ground.. There is no reason to fight with the other, there is no difference among US.... Lets all Feast together...
In heart there is kindness, wetness and its Green all around.. There is strength to rule the world without any poverty and disease.. The denied richness is also within our reach, And that richness will be flowing like honey across Country...(wow, wow hearty admiration)
ஆரோடும் மண்ணில் ------
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
http://youtu.be/i7wZg2jW2ag
uvausan
16th November 2014, 09:39 PM
ஏழை மீனவர்களுக்காக வாலி எழுதிய பாடல்; இந்த பாடல் இன்று ஏமார்ந்து இருக்கும் அனைவருக்குமே நன்றாக பொருந்தும் - MSV யின் இசையில் உலகத்தில் உண்மை நிலைமையை இன்றும் அழகாக எடுத்து சொல்லும் பாடல் . வாலியின் வார்த்தைகளில் உள்ள அழகை அப்படியே MT படத்தில் கொடுத்திருப்பார் . இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் I feel , a great wisdom is delivered
மண் குடுசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலை நிலா ஏழை என்றால் . வெள்ளிச்சம் தர மறுத்திடுமா ?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை - கிடைத்தவர்கள் பிரித்துகொண்டால் , உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட , சிலர் வாழ வாழ ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
இல்லை என்போர் இருக்கையிலே , இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும் - மனம் நிறைய இருள் இருக்கும் - எது வந்த போதும் , பொது வென்று வைத்து , வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
http://youtu.be/oWUnsXdHYuo
uvausan
16th November 2014, 09:40 PM
MSV இசையில் அதிகமாக ரசித்த பாடல் - படம் கொடுக்காத வசூலை இந்த படத்தின் பாடல்கள் கொடுத்துவிட்டன - ஒரு காவியத்தை அந்த காலகட்டத்தில் ரசிக்க மறந்த படம் - இந்த வீடியோ வில் , பெண் பாடிய வரிகள் வராது - என் என்று தெரியவில்லை - பாலமுரளியும் , சுசீலா அம்மாவும் மீண்டும் நினைத்தாலும் இப்படி அழகாக பாட முடியாது - காதலின் மென்மையை இல்லக்கிய அழகுடன் , சிறிது கூட விரசம் இல்லாமல் இலை மறை காயாக எடுத்து சொன்ன பாடல் - இன்று வரும் பாடல்களில் இலை , மறை காயை தவிர எல்லாமும் இருக்கும் - வருத்த படவேண்டிய சூழ்நிலை !!
தங்க ரதம் வந்தது
தங்க ரதம் வந்தது வீதியிலே - ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே , மரகத தோரணம் அசைந்தாட , நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட ( தங்க ரதம் ----)
பெண் : மரகத தோரணம் அசைந்தாட , நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட ( தங்க ரதம் ----)
பெண் : செவ்வில நீரின் கண் திறந்து , செம்மாதுலையின் மணி வாய் பிளந்து , முலை விடும் தென்னல் கோலமிட்டு , மூவர் உள்ள வந்த காலங்கள் போலே ( தங்க ரதம் ----)
ஆண் : தங்க ரதம் வந்தது வீதியிலே ---------
ஆண் : மாங்கனி கன்னத்தில் தேனூர , சிறு மை விழி கிண்ணத்தில் மீனாட , தேன் தரும் வாழைகள் போராட , தேவியின் பொன் மேனி தள்ளாட - ஆட
தங்க ரதம் வந்தது வீதியிலே ---------
http://youtu.be/7bJgAbV91mA
uvausan
16th November 2014, 09:43 PM
படம் : பூவும் பொட்டும்
பாடல் : நாதஸ்வர ஓசையிலே -----------
இந்த பாடல் மிகவும் மனதை வருடிய பாடல் - அழகான நாதஸ்வர ஓசையின் பின்னணியில் , மேளத்தின் தாளத்துடன் , காதல் நயம் அரும்ப , தமிழின் இன்பத்தை சுவைக்க இந்த பாடலை எவ்வளவு தரம் வேண்டுமானாலும் கேட்கலாம் - சுவை சற்றும் மங்காது ...
ஆண் : நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் , சேர்ந்து வரும் மேளத்திலே , தேவி நடமாடுகின்றாள் (நாதஸ்வர ஓசையிலே )
பெண் : கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில் , மாலை கட்டும் பூங்கழுத்தில் தாலி கட்டும் வேலையிலும் - ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும் பொழுதும் , தேவன் வந்து பாடுகிறான் , தேவி நட மாடுகின்றாள் (நாதஸ்வர ஓசையிலே )
ஆண் : மை வடித்த கண்ணிரண்டும் , மண் பார்க்கும் பாவனையில் - கை பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர , மெய் சிலிர்த்து , முகம் சிவக்கும் மெல்லியிடையாள் கூந்தலிலே தேவி நடமாடுகிறாள் தேவன் வந்து பாடுகின்றான் (நாதஸ்வர ஓசையிலே -----------)
பெண் : கற்ப்பில் ஒரு கண்ணகியாய் , காதலுக்கு ஜானகியாய்
சிற்ப மகள் வாழ்கவென்று தேவன் வந்து பாடுகின்றான்
ஆண் : பத்தினியை காவல் கொண்டு பார் புகழ வாழ்கவென்று , சத்தியத்தின் மேடையிலே தேவி நடமாடுகின்றாள் (நாதஸ்வர ஓசையிலே -----------)
http://youtu.be/EbATCXKrN94
vasudevan31355
16th November 2014, 09:52 PM
ஹைய்யோ! ரவி சார். என்னாலேயே நம்ப முடியவில்லை. என்ன ஒரு ஆச்சரியம். இவ்வளவு நாட்கள் மையத்தில் காணப்படாத நீங்கள் இப்போது மதுர கானங்கள் திரிக்கு வருகை புரிந்துள்ளது எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அழகான சின்ன சின்ன நெறிக் கதைகளோடும், நல்ல கருத்துக்களோடும், வளமான எழுத்துக்களோடும் எங்களை மகிழ்வித்த நீங்கள் இப்போது உங்கள் பாணியில் அருமையான பதிவோடு வந்திருப்பதை நினைக்கும் போது நிஜமாகவே சந்தோஷம் சார். என்னவோ லாட்டரியில் லட்ச ரூபாய் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி இப்போது எனக்கு. இங்கு தனிமனித உழைப்பு என்று எதுவுமே இல்லை.
இங்கு பங்கு பெறும் அனைவரும் தங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்து தங்கள் சொந்த உழைப்பால் ஒற்றுமையோடு இந்தத் திரியில் தங்களுக்கு தெரிந்தவற்றை சுவாரஸ்யமாகப் பதிவிட்டு வருகிறோம். அந்த வரிசையில் நீங்களும் இங்கு சேர்ந்திருப்பது இன்னும் இந்தத் திரிக்கும், எங்களுக்கும் பெருமை. தங்களால் இந்தத் திரி மேலும் புதுப் பொலிவடையும் என்பதும் திண்ணம்.
இந்தத் திரிக்கு உங்களை அனைவரது சார்பிலும் வருக வருக என்று மனதார வரவேற்கிறேன்.
http://images5.fanpop.com/image/photos/30900000/Welcome-back-Frances-teddybear64-30997286-433-274.gif
vasudevan31355
16th November 2014, 10:02 PM
ரவி சார்,
நடிப்பு மேதையை வணங்கிவிட்டு தாங்கள் மதுர கானத்திற்கு அளித்துள்ள மகத்தான பாடல் யாவராலும் மறக்க முடியாத உழவன் பேர் சொல்லும் உன்னதப் பாடல்.
தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது ?
அத்தோடு இதையும் சேர்த்துக் கொள்ளலாம்
நடிகர் திலகம் பாணியின்றி நடிக்கும் நடிகன் ஏது?
பாடல் வரிகளோடு பாடலுக்கான 'சுருக்' விளக்கமும். தங்கள் நடிகர் திலக பக்தியும் அருமை.
அதே போல மீனவரின் வாழ்க்கை சோகத்தை பேசி நம்மை கலங்கடிக்கும் எம்ஜிஆர் அவர்களின் 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' படகோட்டி படப் பாடலுக்கும், எனக்கு மிக மிகப் பிடித்த 'நாதஸ்வர ஓசையிலே' பாடலுக்கும், அதைவிட அதிகம் பிடித்த 'தங்க ரதம் வந்தது' பாடலுக்கு நன்றியோ நன்றி.
ம்...வந்தவுடன் சாட்சாத் ரவி ரவிதான் என்று ஆணித்தரமாக நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் இசைப் பயணத்தை.
vasudevan31355
16th November 2014, 10:10 PM
Ravi Sir,
Your's avatar picture is excellent. Poraamayaak kooda irukku.:)
chinnakkannan
16th November 2014, 10:31 PM
எனக்கும் வேதனையாகத் தான் இருக்கிறது ராகவேந்தர் சார், வாசு சார் எப்பொழுது வேதனை ஏற்படுகிறதோ அந்தசமயத்தில் கேட்பதற்கென சில “எல்லாக்கால”ப் பாடல்கள் உண்டு..அதில் ஒன்று இது (கண்ணா உஷார் பார்ட்டி டா நீ.!)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=H7xlhIaJFSQ
chinnakkannan
16th November 2014, 10:36 PM
அஹோ வாரும் ஹைதராபாத் ரவி செளக்கியமா ஓய்.. எப்படிங்காணும் இருக்கீர்..
வந்தவுடனே நாலு பாட்டா.. கலக்குறீர்.
ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்.. நல்ல பாட்டுடன் ஆரம்பம்..
//கூடவே ஒரு சின்ன ஆசை - முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பததுதான்// ஆஹா என்னா அடக்கம்
இரண்டாவது பாட்டு ..செளந்தர்ய லஹரியிலிருந்து வாலி நிமிண்டியது..மீன்ஸ் எடுத்தாண்ட வரிகள்.. நினைவிருக்கும் என நினைக்கிறேன்.. அதுவும் ஜோர் பாட்டுதான்
மூன்றாவது..பாடல் வெகு அழகான பாடல் வீணை இசை, குரல்,
.அழகு வரிகள்..
*
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே
செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே
தங்கரதம் வந்தது வீதியிலே
மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் போதைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட
தங்கரதம் வந்தது வீதியிலே
*
நான்காவது பாடலும் வெகு அழகு..விஷூவல் தான் கொஞ்சம் கஷ்டம்.. இட்லிக்குத் தொட்டுக்க ஆலுபாலக் போல் பாரதிக்கு ஏ.வி.எம் ராஜன்
கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில்
மாலை கட்டும் பூங்கழுத்தில்
தாலிகட்டும் வேளையிலும்
ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும் பொழுதும்
தேவன் வந்து பாடுகிறான்
கற்பில் ஒரு கண்ணகியாய்.
காதலுக்கு ஜானகியாய்
சிற்பமகள் வாழ்கவென்று
தேவன் வந்து பாடுகிறான்..
ம்ம் நல்ல பாடல். தாங்க்ஸ் ரவிஜி..ஏன் இன்னும் தம்மடிக்கறத விடலை?! :)
JamesFague
16th November 2014, 11:09 PM
Welcome Mr Ravi
You have come back with a bang with superb NT song and request you to please contribute as usual in our
mother thread also. I have also hurt by a person who do not come under the category of humanbeing but
inspite of that whatever I know about our acting god I am posting it. I am expecting you also to come and
post regularly.
Regards
chinnakkannan
17th November 2014, 12:40 AM
ஃபார் எ சேஞ்ச். ராஜ்ராஜ் சாருக்குப்பதிலாக அடியேனின் ஜுகல் பந்தி
தேரி ப்யாரி ப்யாரி சூரத் கோ.. ராஜேந்திர குமார் சர்ரு.
தமிழ் (படுத்தல்) மொழிபெயர்ப்பு…சின்னக் கண்ணன்.. (ஆங்கிலம் யாரோ)
உன் அழகிய விழிமலர்ப் பார்வையினை
வேறெவரும் கண்வைப்பரே
இறையுன் கண்ணைக் காக்கட்டும்.
உன் முகத்தைக் கைகளில் மறைத்துக் கொள்
என் கண்கூடப் படுமல்லவா
இறையுன் கண்ணைக் காக்கட்டும்
தனியாய் இப்படிப் போகாதம்மா
தீயக் கண்களும் படுமேயம்மா
பூவிலும் மெல்லிய கொடியல்லவா நீ
வளைகளும் உண்டிங்கு பார்த்துச் செல்லு
உன்முகம் பார்க்கையில் அந்த நிலா
வெட்கியே ஓடியே விலகிச் செல்லும்
செல்பவன் உன்முகம் கண்டுவிட்டால்
கள்வனாய் மாறியிங்கு நின்றிடுவான்
கண்ணாடி முன்னாலே நிற்காதே
கண்ணடி படுமே சுட்டிப் பெண்ணே.
teri pyaari pyaari surat ko kissi nazar na lage chashme-baddur
MAY ALL GLANCES BE AWAY FROM YOUR LOVELY VISAGE,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,(2)
mukhde ko chhupa lo aanchal mein kahin meri nazar na lage chashme-baddur
JUST HIDE YOUR FACE IN YOUR MANTLE, EVEN TO AVOID MY GLANCE
AT YOU,MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
yoon na akele phira karo sab ki nazar se daraa karo
DON'T WANDER ALONE LIKE THIS, BE AFRAID OF THE EVIL EYES OF OTHERS,(2)
phool se jyada nazuk ho tum jaal sambhal kar chala karo
YOU'RE EVEN MORE DELICATE THAN A FLOWER, JUST BEWARE OF THE TRAPS,
zulfon ko gira lo gaalo par mausam ki nazar na lage chashme-baddur
SPREAD THE LOCKS OF YOUR HAIRS ON YOUR CHEEKS,
SO THAT YOU'LL BE SAVED FROM THE MALICIOUS GLANCE OF SURROUNDINGS,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
teri pyaari pyaari surat ko kissi nazar na lage chashme-baddur
MAY ALL MALICIOUS GLANCES BE AWAY FROM YOUR LOVELY VISAGE,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
ek jhalak jo paata hai raahi wahin ruk jaata hai
ONCE ANY TRAVELLER OR PASSERBY GETS A GLIMPSE OF YOU,
HE USUALLY JUST STUCKS UP OVER THERE,(2)
dekh ke tera roop salona chaand bhi sir ko chhupaata hai
AFTER SEEING YOUR BEAUTIFUL AND COMELY FACE,
EVEN THE MOON SHIES AWAY,
dekha na karo tum aaina kahin uss ki nazar na lage chashme-baddur
DON'T LOOK INTO THE MIRRORS , OR ITS VITIATED GLANCE MAY GET YOU,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
teri pyaari pyaari surat ko kissi nazar na lage chashme-baddur
MAY ALL MALICIOUS GLANCES BE AWAY FROM YOUR LOVELY VISAGE,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
mukhde ko chhupa lo aanchal mein kahin meri nazar na lage chashme-baddur
JUST HIDE YOUR FACE IN YOUR MANTLE, EVEN TO AVOID MY GLANCE AT YOU,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
http://www.youtube.com/watch?v=CZnKuXO0oAk&feature=player_detailpage
இதே அர்த்தத்தில் தூய தமிழ்ப்பாடல்
ஜெமினி, சாவித்ரீ..
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா..
பி.பி.ஸ்ரீனிவாஸ்..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vVqsd5pbIic
யோசித்துப் பார்த்தால் முதல் பாட்டையே வேறு மெட்டில் பாடியிருப்பது போல இல்லை?
chinnakkannan
17th November 2014, 12:53 AM
ராஜேஷை எங்கே காணோம்
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ.???
இந்தாரும்..! ஒரு கோபிகை (சர்ரூ) பாடறாங்க உமக்காக!
**
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்...
நேற்றுப் பார்த்த முகம்
நேற்று பார்த்த விழி
நேற்றுக் கேட்ட மொழி யாவும்
காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென
மாற்றி மாற்றி அலை மோதும்
அம்மம்மா அம்மா
இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால்
என்ன சுகமோ ???
மாறியது நெஞ்சம் ....
ஆடை தந்து தமிழ்வாடை தந்து
மணமேடை வந்தவனைக் கண்டு
ஆசை முந்திவர நாணம் பிந்திவர
பேசி பார்க்கும் நினைவுண்டு !
அம்மம்மா அம்மா
இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ ???
மாறியது நெஞ்சம் ....
காவியத்தை மன ஓவியத்தில்
அவன் தூவி வைத்த விதமென்ன !
கண்ணில் பார்த்த படம்
நெஞ்சில் நிற்கும் விதம்
கடவுள் தந்த கலை என்ன !
அம்மம்மா அம்மா
வண்ணக் கலையை கன்னி அடைய என்ன விலையோ ?
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dBQRr5GT75Q
rajeshkrv
17th November 2014, 03:38 AM
ராஜேஷ் இங்கே தான் உண்டு....
தேனிசை தென்றலின் அடுத்த முத்துடன் இன்று இரவு வருகிறேன்
Richardsof
17th November 2014, 05:30 AM
இனிய நண்பர் திரு ரவி
மனதை கவரும் மதுர கானம் திரியில் நீங்கள் வந்துள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சி .ஆரம்பமே களை கட்டியுள்ளது .
பழனியும் படகோட்டியும் பூவும் பொட்டும் பாடல்கள் பிரமாதம் . எனக்கு பிடித்த சில நடிகர்களில் ஒருவர் கோபாலகிருஷ்ணன் . இந்த கோபியின் பாடலை உங்களுக்கு அன்பளிப்பாக தருகிறேன் .
http://youtu.be/4ps_iwVoWMc
Richardsof
17th November 2014, 05:44 AM
இனிய நண்பர் திரு சித்தூர் வாசுதேவன் சார்
1000 பதிவுகள் கடந்த உங்களுக்கு இனிய நல வாழ்த்துக்கள் .அருமையான பல வீடியோ பதிவுகள் மற்றும் அபூர்வ பாடல்கள் பதிவிட்டு இருந்தீர்கள் .உங்களுக்காக ஓர் இனிய பாடல் .
http://youtu.be/1wt_xZ9rKOQ
uvausan
17th November 2014, 06:52 AM
மிகவும் நன்றி - வாசு & வாசு , ck ( எப்படி சார் , புகை பிடிப்பதை உடனே நிறுத்தமுடியும்? - lkg யில் ஆரம்பித்தேன் - இப்பொழுது குடிக்கும் போதுமட்டுமே , புகை பிடிப்பதில்லை , பொய் சொல்லும் அவசியம் வரும் போதுதான் குடிக்கின்றேன் - என் வேலை அப்படி , தினமும் பொய் சொல்ல வேண்டியுள்ளது - மத்தபடி என்னிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை - கொஞ்சம் பொய் அதிகமாக சொல்லுவேன் - அவ்வளவுதான் ) , வினோத் சார் - உங்கள் எல்லோருடைய வரவேற்ப்பும் மனதை மிகவும் இன்பமாக வருடுகின்றது - கூடவே நல்ல , படிக்கும் படியான பதிவுகளை போடவேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் அதிகமாகின்றது . என் வழி தனி வழி என்று இல்லாமல் ரசிக்கும் படியான பதிவுகள் போட முயற்சிக்கின்றேன் .
uvausan
17th November 2014, 07:03 AM
1. பந்தல் இருந்தால் கொடி படரும் – கவி. ராஜகோபால் – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி
படம் : பந்த பாசம்
"கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும் "
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..
நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..
நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
காலம் வந்தால் காய் பழுக்கும்...
காத்திருந்தால் கனி கிடைக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கடல் நடுவே நீர் மீன் பிடிக்கும்..
இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்...
கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்...
அவள் கண்ணம் இரண்டும் ஏன் சிவக்கும்...
காதல் நெருப்பில் குளித்திருக்கும்...
அன்பு கண்ணிரெண்டும் அதில் படிந்திருக்கும்...
கோமள மாம்பழ கண்ணத்திலே இதழ்
குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...
குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
இடைத் தழுவும் கைகள் மாலைகளோ...
உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ...
மடைத் திறக்கும் அன்பு வார்த்தைகளோ...
சிந்தும் வார்த்தையெல்லாம் அங்கு காவல்களோ...
கண்ணிரண்டும் ஒளி விளக்குகளோ...
இரு கனியிதழ் ரத்தின கதவுகளோ...
கண்ணங்களும் தங்க பாலங்களோ...
என் காதலுக்கே தந்த பரிசுகளோ...
காதலுக்கே தந்த பரிசுகளோ...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ...
அருமையான பாடல் - ஆழ்ந்த கருத்துக்கள் - பல முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க்க தோன்றும் .தீர்ந்தது அரசனின் சந்தேகம்
http://youtu.be/7tav6K_egEI
rajraj
17th November 2014, 07:06 AM
From PeN (1953)
eLiyOr manam padum paattile varum Osaiyin thaalaattile......
http://www.youtube.com/watch?v=OsbciCCel24
From the Hindi version Ladki(1953)
insaan jo rota hai....
http://www.youtube.com/watch?v=GtafUYmIzj0
We were in San Diego,CA for five days in a hotel by the bay.
We were walking to a restaurant and saw a homeless person lying on the side walk with all his belongings in a bag. It reminded me of this song. Even in a supposedly rich country you see homeless ! :(
ஃபார் எ சேஞ்ச். ராஜ்ராஜ் சாருக்குப்பதிலாக அடியேனின் ஜுகல் பந்தி
Good student! Gets an A ! :lol:
Now I can relax and let him take over ! :lol:
rajeshkrv
17th November 2014, 07:32 AM
ரவி அவர்களே வருக வருக. உங்கள் வரவால் மேலும் அழகடைகறிது நம் திரி.
RAGHAVENDRA
17th November 2014, 07:45 AM
ரவி அவர்களே வருக வருக..
மதுர கானங்கள் மயக்கும் கானங்களாக தங்களை இழுத்து இங்கே கொண்டு வந்து விட்டன. தங்களுடைய அருமையான மொழி நடையை இவ்வளவு நாட்கள் காணவில்லையே... அருமை... தொடருங்கள்..
vasudevan31355
17th November 2014, 08:23 AM
இன்றைய இளையராஜா தொடருக்கு போவதற்கு முன்னால் ரமணி மித்ரன் அவர்கள் 'தடம் மாறிய தமிழ்ப் படங்கள்' என்ற தலைப்பில் 'அவள் அப்படித்தான்' படத்தின் கதையைப் பற்றி எழுதியுள்ளதைப் படியுங்கள். இதைப் படித்துவிட்டு இன்றைய ராஜா தொடரை வாசித்தால் இன்றைய தொடரில் அலசியிருக்கும் பாடலின் தாக்கம், வீச்சு ஆகியவற்றை முழுவதும் உணர முடியும்.
vasudevan31355
17th November 2014, 08:24 AM
நன்றி ரமணி மித்திரன்.
தடம் மாறிய தமிழ்ப்படங்கள்
அவள் அப்படித்தான்.
(சற்றே சரி செய்து சுவை கெடாமல்)
கணவனுக்குத்தெரியாது தாய் இன்னொருவனுடன் கூடிக் குலாவுவதைப் பார்க்கும் சிறுமி அது பற்றி தகப்பனிடம் சொல்லத்தெரியாது தவிக்கிறாள். தாயின் கள்ளக்காதலனின் பார்வை தன் மீது விழுவதை வெளியே சொல்ல முடியாது தவிக்கிறாள்.வளர்ந்தபின் ஒருவனைக் காதலிக்கிறாள். சகோதரிக்காக அவளைக் கை விடுகிறான் அவன். தன்னை நேசித்த ஒருவனிடம் தன்னை இழக்கிறாள். அவனோ சகோதரி என்கிறான். ஆண்களின் வக்கிரபுத்தியால் விரக்தி அடைந்த அவளை ஒருவன் காதலிக்கிறான். இந்தச்சிக்கலான கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்ற படம்தான் "அவள் அப்படித்தான்."
பெண்களைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கும் கமலுக்கு உதவியாக தனது அலுவலகத்தில் வேலைசெய்யும் ஸ்ரீப்ரியாவை அனுப்புகிறார் ரஜினிகாந்த். சிறு வயதுமுதலே ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட ஸ்ரீப்ரியாவுக்கு ஆண்களைக்கண்டாலே வெறுப்பு.பெண்களைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கும் கமலையும் எள்ளி நகையாடுகிறார். ஸ்ரீப்ரியாவின் அலட்சியப்போக்கை அமைதியாக ரசித்தபடி தனது கடமையை முன்னெடுக்கிறார் கமல். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட, ஆண்களால்ஏமாற்றப்பட்ட பெண்களைப் பராமரிக்கும் இல்லத்தை நடத்தும் பெண்மணியை கமல் பேட்டி கண்ட பாணி ஸ்ரீப்ரியாவை வெகுவாகக் கவர்ந்தது. 'ஆண்களால் ஏமாற்றப்பட்டு உங்கள் உங்கள் இல்லத்தில் தங்கி இருக்கும் இளம் பெண் ஒருவருக்கு உங்கள் மகனைத்திருமனம் செய்து வைப்பீர்களா?' என்று கமல் கேட்டதால் அதிர்ச்சியடைந்த சமூகசேவகி எரிச்சலடைந்து வெளியேறுகிறார். அந்த ஒரே ஒரு கேள்வியின் மூலம் கமலை மதிக்கத்தொடங்குகிறார் ஸ்ரீப்ரியா. நெஞ்சில் ஈரம் இருக்கும் ஆண்களும் உலகிலிருப்பதை முதன் முதலாகக் காண்கிறார் ஸ்ரீப்ரியா. நெற்றியில் விபூதி, கையில் மதுக்கிண்ணம் ஆகியவற்றுடன் பெண்களுக்கு வலை வீசும் ரஜினியையும், பெண்களூக்கு மதிப்புக்கொடுத்து அவர்களை உயர வைக்க விரும்பும் கமலையும் கண்டு வியப்படைகிறார் ஸ்ரீப்ரியா. எல்லோருடனும் 'வெடுக்'கென எடுத்தெறிந்து பேசும் ஸ்ரீப்ரியாவுக்கு கமல் புரியாத புதிராக இருந்தார். ஸ்ரீப்ரியாவைப்பற்றி ரஜினியுடன் கமல் உரையாடியபோது 'ஸ்ரீப்ரியாவுக்குத் தேவை ஒரு ஆம்பளை' என்கிறார் ரஜினி. அதை ஏற்க மறுக்கிறார் கமல். ஸ்ரீப்ரியாவின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது. அதனால் தான் இப்படி இருக்கிறார் என கமல் கூறுகிறார். கமலைப்பற்றி ஓரளவுக்குத் தெரிந்த பின்னர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களைக்கூறுகிறார் ஸ்ரீப்ரியா.சிறுவயதில் வீட்டிலேதகப்பனில்லாத போது இன்னொரு ஆணுடன் தாய் படுக்கையில் இருப்பதைப்பார்க்கிறார். இந்த விசயம் மெல்ல மெல்ல கசிந்து அயலவர்களுக்கும் தெரிய வருகிறது. ஸ்ரீப்ரியாவுடன் படிப்பவர்கள் கேலி செய்கிறார்கள். தாயுடன் திருட்டுத்தனமாக உறவு கொள்பவனின் பார்வை ஸ்ரீப்ரியாவின் மீது விழுகிறது. இதைப்பற்றி தகப்பனிடன் சொல்ல முடியாது தவிக்கிறார் ஸ்ரீப்ரியா. தகப்பனுக்குத் தெரிந்த போதும் அவரால் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. வாழ்ககையில் வெறுப்படைந்த ஸ்ரீப்ரியாவை ஒருவன் காதலிக்கிறான்.தன் வாழ்க்கையில் புதியதொரு ஒளி வந்ததென நினைத்து அவன் மீது உயிரை வைக்கிறார் ஸ்ரீப்ரியா. சகோதரிகளின் எதிர்காலத்துக்காக பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து ஸ்ரீப்ரியாவை கைவிடுகிறார் காதலன்.
மனமுடைந்த ஸ்ரீப்ரியா சர்ச்சுக்குச் செல்கிறார். பாதிரியார் ஸ்ரீப்ரியாவை கண்டு நலம் விசாரிக்கிறார். அப்போது பாதிரியாரின் மகன் சிவச்சந்திரன் அங்கே வருகிறார். மூவரும் பாதிரியாரின் வீட்டுக்குச்செல்கின்றனர். சிவச்சந்திரனின் பியானோ இசை ஸ்ரீப்ரியாவுக்கு புதிய தெம்பைக்கொடுக்கிறது. அன்பு நெருக்கமாகி சிவச்சந்திரனிடம் தன்னை இழக்கிறார் ஸ்ரீப்ரியா. நடந்த சம்பவத்துக்கு வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்கிறார் சிவச்சந்திரன்.'உன்னைத்தானே திருமணம் செய்யப்போகிறேன்... ஏன் வருத்தப்படுகிறாய்? என்கிறார் ஸ்ரீப்ரியா. ஒருநாள் இரவு வீட்டிலே நடைபெற்ற கலவரத்தினால் வீட்டைவிட்டு வெளியேறிய ஸ்ரீப்ரியா சிவச்சந்திரனைத் தேடிச் செல்கிறார்.வீட்டிலே நடைபெற்ற சம்பவத்தைக் கூறி தான் இனிமேல் வீட்டுக்குப் போகப் போவதில்லை எனவும் சிவச்சந்திரனின் வீட்டில் தங்கப்போவதாகவும் கூறுகிறார் ஸ்ரீப்ரியா. இரவு சாப்பாடு எடுத்துக்கொண்டு நண்பனைப் பார்த்துவருவதாகக் கூறிச் சென்ற சிவச்சந்திரன், ஸ்ரீப்ரியாவின் தகப்பனை அழைத்து வருகிறார். வீட்டைவிட்டு வெளியேறிய தன் மகளை பாதுகாப்பாக ஒப்படைத்ததற்கு நன்றி கூறுகிறார் ஸ்ரீப்ரியாவின் தகப்பன். அப்போது ஸ்ரீப்ரியாவைச் சகோதரி என்கிறார் சிவச்சந்திரன். தன்னை சகோதரி என சிவச்சந்திரன் அழைத்ததால் அதிர்ச்சியடைகிறார் ஸ்ரீப்ரியா.
இரண்டு ஆண்கள் தன்னை ஏமாற்றியதால் ஆண்கள் மீது ஸ்ரீப்ரியாவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அலுவலகத்தில்வேலைசெய்பவர்கள் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதால் அவர்களுடன் பிரச்சினைப் படுகிறார் ஸ்ரீப்ரியா. பிரச்சினைகளுக்கு 'நீதான் காரணம்' என ரஜினி கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்ரீப்ரியா வேலையை இராஜினாமா செய்கிறார். ஸ்ரீப்ரியா இராஜினாமாச செய்ததைஅறிந்த கமல் அவரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் வேலையில் சேரும்படியும் ரஜினியுடன் தான் கதைப்பதாகவும் கூறுகிறார். ரஜினியைச் சந்தித்த கமல்,ஸ்ரீப்ரியாவை மீண்டும் வேலையில் சேர்க்கும்படி கேட்கிறார். ஸ்ரீப்ரியா வேலையில் சேர்ந்து எட்டு மணி நேரமாச்சு என ரஜினி கூரியதும் அதிர்ச்சியடைகிறார் கமல். ஸ்ரீப்ரியாவிடம் இது பற்றி கமல் கேட்டபோது 'போகணும்னு தோணிச்சு போனேன்.வரணும்னு தோணிச்சு வந்தேன்' என அலட்சியமாகக் கூறினார்.
ஸ்ரீப்ரியாவை திருமணம் செய்ய கமல் விரும்புகிறார். இதே வேளை கமலுக்குத் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. திருமணத்துக்காக ஊருக்கு வரும்படி கமலுக்கு கடிதம் வருகிறது. ஸ்ரீப்ரியாவை மணம் முடிக்கும் தனதுவிருப்பத்தை ஸ்ரீப்ரியாவின் தோழியிடம் கூறிய கமல் ஸ்ரீப்ரியாவுக்காகக் காத்திருப்பதாகவும். ஸ்ரீப்ரியா வரவில்லை என்றால்ஊருக்குப் போகப் போவதாகவும் கூறுகிறார். கமலை வெறுப்பேற்றுவதற்காக ரஜினியுடன் விருந்துக்குப் போகிறார் ஸ்ரீப்ரியா.விருந்திலே தனிமையில் இருக்கும் ஸ்ரீப்ரியாவை நெருங்குகிறார் ரஜினி. முதலாளி என்று பார்க்காது கன்னத்தில் அடிக்கிறார் ஸ்ரீப்ரியா. கமலின் உண்மையான அன்பை காலதாமதமாக உணர்கிறார் ஸ்ரீப்ரியா. திருமணம் முடித்து மனைவி சரிதாவுடன் சென்னைக்குச் செல்கிறார் கமல். புதுமணப்பெண் சரிதாவிடம் 'பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக்கேட்கிறார் ஸ்ரீப்ரியா. பெண்களிடம் கமல் கேட்கும் அக்கேள்விக்கு 'எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது' என அப்பாவியாகப் பதிலளிக்கிறார் சரிதா.
கமல்,ரஜினி, ஸ்ரீப்ரியா ஆகியமூவரும் போட்டி போட்டு நடித்தனர். ஸ்ரீப்ரியாவின் நடிப்பு பெண் ரசிகைகளைக் கவர்ந்தது. 'மாப்ளே' என்று கமலை அடிக்கடி கலாய்த்து தன் முத்திரையைப் பதித்தார் ரஜினி.
கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன், இந்திர, பேபி சித்ரா, குட்டி பத்மினி, சரிதா ஆகியோர் நடித்தனர். கண்ணதாசன் எழுதிய 'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை' எனும் பாடலை எஸ்.ஜானகி பாடினார்.கங்கை அமரன் எழுதிய 'உறவுகள் தொடர் கதை... உணர்வுகள் சிறுகதை' எனும் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார். கங்கை அமரனின் 'பன்னீர் புஸ்பங்களே' எனும் பாடலை கமல் பாடினார். இலையராஜாவின் இசை படத்துக்கு மெருகூட்டியது. கதை,திரைக்கதை உரையாடல் வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா. இயக்கம், தயாரிப்பு ருத்ரய்யா.
vasudevan31355
17th November 2014, 08:38 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 19)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
கிருஷ்ணா சார் மிக விரும்பிக் கேட்டதால் இன்றைய 'அவள் அப்படித்தான்' தொடரில் 'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை' பாடல் அலசல்.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSOcUC1_AiU7SlJzhaX68uEtLHM7lFLD R5npgI-eE9m7xK0wPfl
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல
ஊரில் தேரும் இல்லை
எங்கோ.. ஏதோ.. யாரோ
http://2.bp.blogspot.com/-w5Fa5Onbtv0/UpuHk9cC7sI/AAAAAAAAJ-E/DL3lS8Jjemg/s1600/BBHajZUCEAERfpS.jpg+large.jpg
பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' கவிதா போல ('கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்') வெறுமை கொண்ட மனதுடன் தோல்வியே வாழ்க்கையாய் அமைந்த நாயகியின் உள்ளுணர்வு இது. ஒரு பெண்ணுக்கு நேரும் துன்பங்களை இதைவிட வேறு வார்த்தைகளால் பாடலில் எவரும் வடித்து விட முடியுமா? அல்லது அந்தப் பாடல் வரிகளுக்கு சோக இசை மீட்டி இந்தப் பாடலை நம் வாழ்நாள் முழுதும் நம்முடன் மன சஞ்சலங்களுடன் இப்படி பயணிக்க வைக்கத்தான் வைத்துவிட முடியுமா?
'எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை
எரியாத தீபங்கள் பெண்ணா?'
உண்மையான வரிகள். போகப் பொருளாகவே பார்க்கப்பட்டு வந்த பெண்கள். ஆனால் இன்றுதான் சமூகம் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது. சுயமாக தைரியமாக பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ளத் துவங்கியிருப்பது வரவேற்கத் தக்கதல்லவா? இந்தப் பாடலின் வரிகள் பொய்யாகிப் போனால்தான் பெண்மை உண்மையான முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று கொள்ளலாமா?
கண்ணதாசனின் வரிகளைக் கவனியுங்கள்.
'உதவாத புஷ்பங்கள் பெண்கள்'
'புஷ்பங்கள்' என்று வெறுமனே எழுதவில்லை அவர். 'உதவாத புஷ்பங்கள் பெண்கள்' என்று பெண்ணினம் படும் கேவலத்தினை 'உதவாத' என்ற சாதாரண ஒரு வார்த்தையைச் சேர்த்து உணர்த்தியிருப்பார்.
இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலின் தரத்தை மேலும் பல மடங்கு உயர்த்தி விடுகிறது. பாடல் வரிகள் இதயத்தை கனமாக்கி, இசை அதை இன்னும் நெஞ்சில் ஆழமாகப் புதைக்கும் வண்ணம் ரணமாக்கி, காட்சியமைப்புகள் இன்னும் ஆழமாய் நம் மனத்தைக் குத்திக் கிழிக்கின்றன வன்முறைக் காட்சிகள் இல்லாமல் வெறுமைக் காட்சிகளைக் கொண்டு மட்டுமே. இத்தனைக்கும் சாதாரண பெண்ணின் வரம்புக்குட்படாத, இலக்கணங்களை உடைத்தெறிந்த, துணிச்சல் இருந்தும் கோழையாகி நிற்கும் வெறுமையான கதாநாயகியை மட்டுமே காட்டி. பெண்ணிய சமூக அவலங்கள் இந்தக் கதையின் நாயகி மூலம் இப்பாடலில் மிகச் சிறப்பான ஒளிப்பதிவில் நமக்கு அற்புதமாக உணர்த்தப்படுகின்றன.
அவள் மனதைப் போலவே அவள் தன்னந்தனிமையில் உள் மனதில் போராடும் உணர்ச்சிகளோடு, உணர்ச்சிகளற்ற சலனம் தோய்ந்த முகத்துடன் நிற்கும் இடங்களும் இருட்டுதான். ஒரு பாதி இருட்டும், ஒரு பாதி வெளிச்சமுமான காட்சிகள். (கடலலை தவழ்ந்து வரும் போது அதற்கு மட்டும் ராஜா தரும் அந்த புல்லாங்குழல் இசை அப்படியே கதை பேசுகிறது) நிழல் உருவங்களாய்த் தெரியும் பட்ட மரங்களோடு பட்ட மரமாக ஸ்ரீபிரியா நிற்பதும்,(இப்போது அருமையான காட்சி பின்னணிக்கு ஏற்ப வயலின் இசை) எதுவுமே இல்லாத வீட்டு சுவரின் மூலையோடு மூலையாக ஸ்ரீபிரியா சாய்ந்தபடி முடங்கிக் கிடப்பதும் அந்தப் பெண்ணின் மனநிலைக்கு நம்மை அப்படியே தள்ளிவிடுவது நிஜம்தானே.
எஸ்.ஜானகி அவர்களின் மிகச் சிறந்த சோலோ பாடல் இது. அவருடைய மிகச் சிறந்த பாடல் வரிசையில் வரும் பாடலும் கூட.
என்னவோ இந்தப் பாடலைக் கேட்டால் தொண்டைக் குழிக்குள் தண்ணீர் கூட இறங்க மறுப்பது போன்ற உணர்வு உண்டாவதை எப்போதும் தடுக்க முடியவில்லை. அது ராஜா, ருத்ரய்யா, ஸ்ரீபிரியா, கண்ணதாசன், ஒளிப்பதிவாளர் நல்லுசாமி, ஞானசேகரன் எல்லோரும் போட்டி போட்டு நமக்குக் கொடுத்த விஷாமிர்தம்.
தாரை தப்பட்டைகளின் ராஜா என்று வர்ணிக்கப்பட்டவர் ஆர்ட் பிலிம்களிலும் தன்னுடைய அற்புத ஆளுமையைத் தொடங்கி அந்தப் பெயரைத் தவிடு பொடியாக்க ஆரம்பித்து வைத்த காவியம். காவியம் மட்டுமல்ல. கலையும் இசையும் சேர்ந்த ஓவியமும் கூட.
http://1.bp.blogspot.com/-hAAd8msu3Fk/UpuJbpzf_9I/AAAAAAAAJ-Y/0I5JCQGZteA/s1600/avalappadiththanback.jpg
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல
ஊரில் தேரும் இல்லை
எங்கோ.. ஏதோ.. யாரோ
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
அழகான மேடை சுகமான ராகம்
இடையினில் வேலிகள் உண்டு
ஆறாத புண்ணும் நூறான முள்ளும்
ஆடிடும் கால்களில் உண்டு
எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை
எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை
எரியாத தீபங்கள் பெண்ணா
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
ஊரெங்கும் மேடை ராஜாக்கள் வேஷம்
உண்மையில் ராஜாக்கள் இல்லை
ஊரெங்கும் சோலை ரோஜாக்கள் வாசம்
உண்மையில் ரோஜாக்கள் இல்லை
உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை
உதவாத புஷ்பங்கள் பெண்கள்
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல
ஊரில் தேரும் இல்லை
எங்கோ.. ஏதோ.. யாரோ
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JbeVLQdQmx8
rajeshkrv
17th November 2014, 08:50 AM
வாசு ஜி, அவள் அப்படித்தான் பாட்லகளை எல்லாவற்றையும் அழகாக அலசிவிட்டீர்.
அருமை அருமை...
தொடருங்கள் வாழ்த்துக்கள்
vasudevan31355
17th November 2014, 09:32 AM
Thanks
|கீதப்ப்ரியன்|Geethappriyan|
இயக்குனர் ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' படம் வெளியாகி 35 வருடம் ஆகிறது , இன்று பார்க்கையிலும் அப்படி ஒரு புதுமையான படைப்பாக மிளிர்கிறது இதன் கதை, திரைக்கதை வசனத்தை புதுமையாக வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா ஆகிய மூவர் எழுத இயக்கம், தயாரிப்பு ருத்ரய்யா செய்திருந்தார். ஒளிப்பதிவு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு முடித்து வெளிவந்த நல்லுசாமி மற்றும் ஞான ராஜசேகரன். இவர்கள் யாரிடமும் பணி புரியாமல்,நேரடியாக களமிறங்கிய படைப்பு என்பது கூடுதல் சிறப்பு. கருப்பு வெள்ளையில் ஒரு ப்ரில்லியண்டான ஆக்கம் இது. கூடுமான வரை நிழல்களின் அழகை,இயற்கை ஒளி அமைப்பை, நிறைய ஜம்ப் கட்களை ,க்ளோஸ் அப் ஷாட்களை உபயோகித்து எடுக்கப்பட்ட தமிழின் முதல் படம்,இந்த யுத்திகள் சத்யஜித் ரேவினால் 1970 களிலேயே 'சீமாபத்தா' என்னும் படத்தில் கையாளப்பட்டிருந்தாலும், தமிழில் இதை பரிட்சிக்க யாரும் துணியாத சூழல் நிலவியது. அதைதகர்த்தவர் ஆறுமுகம் என்கிற ருத்ரையா. இவர் 1980ஆம் ஆண்டு 'கிராமத்து அத்தியாயம்' என்னும் படமும் இயக்கியுள்ளார்.
கண்ட கருமத்தையும் ரீமேக் செய்கிறார்கள். இந்தப் படத்தை மூல ஆக்கம் சிதையாமல் ரீமேக் செய்யலாம். அது கதையே இல்லாமல் படம் எடுக்கும் இன்றைய சூழலுக்கு நல்ல மாற்றாக அமையும். அல்லது இதை ரீ மாஸ்டர் செய்து செப்பனிட்டு வெள்ளித்திரையில் வெளியிடலாம். மிக அற்புதமான படம். இதன் அருமையை உலக சினிமா ரசிகர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். சில படங்களை அனுபவிக்க வேண்டும்....ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது. இது அது போன்ற ஒரு படம். படம் கொண்டிருக்கும் நறுக்கு தெரித்தாற்போன்ற வசனங்கள். அதில் சரி பாதி நுனிநாக்கு ஆங்கில அதுவும் பச்சையான வசனங்கள். கொஞ்சமும் பாக்ஸ் ஆஃபீஸ் சமரசங்கள் இல்லாத தமிழின் முதல் சர்ரியாலிஸ்டிக் படம்.
ஆனால் ரீமேக் என்று வருகையில் ஒரு ஆபத்து உண்டு. 'தில்லு முல்லுவை' கொத்து போட்டது போல அசிங்கம் செய்து விடுவார்கள். இயக்குனர் ருத்ரையாவைப் போல இங்கே கொம்பன் யாருமில்லை, ரீமேக் செய்தால் ஒரிஜினாலிட்டி போய் பல் இளித்துவிடும். க்ரைடீரியான் நிறுவனத்தார் போல யாராவது இதை ரீமாஸ்டர் செய்து மறுவெளியீடும் செய்ய வேண்டும். அதுவே நல்ல கைங்கர்யம் ஆகும். இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு படம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும்,
பெண்களின் சுதந்திரம் என்று இயக்குனர் அருண் [கமல்] ஆவணப்படம் எடுக்க, பாடகி எஸ்.ஜானகியை சந்திக்க போவதாக சொல்லிவிட்டு, நடிகை குட்டி பத்மினியை போய் மஞ்சுவுடன் சந்திக்கின்றனர், அது என்ன முரணான காட்சி? காட்சியை கட் செய்து விட்டார்களா?!!! படத்தில் கடைசி வரை ஜானகியின் பேட்டி வரவேயில்லை, ஆனால் அந்த காரில் பேட்டி எடுக்க பயணிக்கையில், ஜானகியம்மா பாடும் “வாழ்க்கை ஓடம் செல்ல” என்னும் அருமையான பாடல் பேக்ட்ராப்பில் ஒலிக்கிறது,பாடல் முடிகையில் கமலும் மஞ்சுவும் உடையும் மாற்றியிருப்பார்கள், இதைப் பற்றி எதாவது மேல் விபரம் தெரியுமா?!!! மஞ்சுவாக ஸ்ரீப்ரியா தோன்றி அந்த கதாபாத்திரத்துக்கே நீதி செய்திருந்தார் என்றால் மிகையில்லை.அத்தனை தினவு, அத்தனை திமிர், யாரிடமும் இயக்குனர் வாங்கியிருக்க முடியாது, இளம் வயது மஞ்சுவாக தோன்றியது நல்லெண்ணெய் சித்ரா. என்னால் முதலில் கிரகிக்க முடியவில்லை. யூட்யூபில் முழுப்படமும் கிடைக்கிறது. இது பத்தோடு பதினொன்று வகைப் படம் அல்ல. ஆகவே படத்தை அவசியம் நேரம் ஒதுக்கி அனுபவித்துப் பாருங்கள்,
இதில் ரஜினி ஆர்ட் டைரக்டர். நெற்றி நிறைய வீபுதியும்,கழுத்தில் ருத்திராட்சமும், கண்களில் காமாந்தக வக்கிரப் பார்வையுமான கதாபாத்திரம். ஸ்ரீப்ரியா அவர் விளம்பர நிறுவனத்தின் டிசைனர், படத்தில் ஒரிஜினாலிட்டி அப்படி காப்பாற்றப்பட்டுள்ளது, அதில் சம்பிரதாயமாக தொழில் முறை சார்ந்த காட்சிகளை படம் பிடிக்காமல் சத்யஜித் ரேவைப் போன்றே துறை சார்ந்த தீஸிஸ் செய்து ஸ்ரீப்ரியா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பேன். அத்தனை நேர்த்தி. அதில் ஆபீஸ் அசிஸ்டண்ட் ஒருவன் ஸ்ரீப்ரியாவிடம் 'உங்கள் டிசைனுக்கான ஐடியாக்கள் எங்கே கிடைக்கின்றன?'!!! என வியந்து கேட்க, 'இரண்டு ஃபாரின் டிசைன் மேகசினை புரட்டினால் ஐடியாக்கள் கிடைக்கிறது' இது என்ன பிரமாதம்? என டிசைனிங் செய்து கொண்டே சொல்வார். ,அது எத்தகைய யதார்த்தமான ஒன்று என பார்வையாளருக்கு புரியும், சர்காசிசம் ததும்பும் இயல்பான காட்சியது.
படத்தின் இன்னொரு முக்கியமான காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது, ஆவணப்பட இயக்குனர் கமலின் உண்மையான அன்பை காலதாமதமாகவே உணர்கிறார் ஸ்ரீப்ரியா. வேளை கிடைக்கும் போதெல்லாம் தன் காதல் தோல்விகளை,தன்னை தண்டித்தவர்களுக்கு தரும் தண்டனையை கடும் வார்த்தைகளால் தேளின் கொடுக்கு போல கொட்டி கமலை காயப்படுத்தியே வந்திருக்கிறார் மஞ்சு. அதையும் மீறி கமல் ஒரு பொது உடைமைவாதி , பெண்ணடிமைத் தளையை வெறுப்பவர் போன்ற சிறப்புகள் அவரின் பால் மையல் கொள்ள வைக்கிறது, ஆனால் எல்லாமே ஒருநாள் கைமீறிப் போய்விடுகிறது,
மஞ்சுவை புரிந்து கொள்ள முயன்று தோற்றதால்,தன் தந்தை இவரிடம் கேட்ட முதலும் கடைசியுமான விருப்பத்தை நிறைவேற்ற தந்தை பார்த்த அடக்கம் ஒடுக்கமான பெண்ணையே திருமணம் முடித்து கூட்டி வருகிறார். [நடிகை சரிதா கௌரவ தோற்றத்தில் கமலுக்கு மனைவியாக வருகிறார்].அன்று கமலை நான் பார்த்தே ஆக வேண்டும் என ரஜினியிடம் அலுவலகத்தில் சென்று கேட்கும் ஸ்ரீ ப்ரியாவை, குசும்பாக, 'இதோ கூட்டிப் போகிறேன்' என எழும்பூர் ரயிலடிக்கு அழைத்துப் போகிறார் ரஜினி,
அங்கே போர்டிக்கோவில் கமல் மனைவியின் கையைப் பற்றியபடி வெளியே வருகிறார். படத்தில் அவர் காம்ரேட் ஆனதால் எளிமையாக லுங்கியையே அணிந்து வருகிறார், ஆனால் மனைவி பூவும் ஜார்ஜெட் புடவையும், கழுத்து நிறைய நகைகளுமாக காட்சியளிப்பார். மஞ்சு கமலிடம் அடைந்த ஏமாற்றத்தை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. அருணும் மஞ்சு பக்கம் தலையை திருப்பவேயில்லை. மனதுள் போராட்டம்.காருக்குள் அமைதி குடிகொண்டிருக்க, அருணை நோக்கி 'பெண்களிடம் நீங்கள் கேட்கும் வழக்கமான கேள்வியை உங்கள் மனைவியிடம் கேட்ட்டாயிற்றா?' என்றவர், பதிலுக்கு காத்திராமல், 'நானே கேட்கிறேன்...What do you think about Women's Liberation?!!!
சரிதா விழிக்க 'பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என தமிழில் கேட்க, அவர் விழிக்க, கமல் விளக்க, அவர் 'எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என்கிறார். மஞ்சு 'ரொம்ப சேஃப் ஆன்ஸர்' என்று நிறுத்துவார். எத்தனை அற்புதமான இடம் அது ,அந்த காட்சியை இங்கே பாருங்கள்.
What do you think about Women's Liberation?!!! முக்கியமான காட்சி
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=6Y8iGMiYjzE
படத்தின் டைட்டில் துவங்கி முடிவு வரை புதுமை தான். டைட்டில் கமலின் குரலில் கதை விவாதத்தின் வாயஸ் ஓவர் பின்னணியில் துவங்குகிறது. படத்தின் முடிவும் மெரினாவில் ஐஸ் ஹவுஸின் எதிரே காரை நிறுத்தி மஞ்சு இறங்கிக் கொண்டதும் கார் வேகமெடுக்க, மஞ்சு புள்ளியாய் தேய, கமலின் வாய்ஸ் ஓவரில் மஞ்சுவைப் பற்றிய அழகிய ஹைக்கூ கவிதையுடன் முடிகிறது. அந்த கவிதையை நான் இங்கே தருகிறேன்.
எரிந்து போன வீடு,
முறிந்து போன உறவுகள்,
கலைந்து போன கனவுகள்,
சுமக்க முடியாத சோகங்கள்,
மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்து போனாள்,
இந்தச்சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால் தான் முடியவில்லை,
ஹ்ம்,,,
அவள் பிறப்பாள்,
இறப்பாள்,
இறப்பாள்,
பிறப்பாள்,!!!
” அவள் அப்படித்தான்”
gkrishna
17th November 2014, 09:54 AM
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ரவி சார்
வாருங்கள் வாருங்கள் என்று உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
இந்த திரியின் மாண்பையும்,வாசு அவர்களின் பண்பையும் மற்ற அனைத்து சகோதரர்களும் ஒருவருக்கொருவர் அணைத்து செல்லும் பாங்கையும் மிக அழகாக விளக்கி உள்ளீர்கள்.
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
gkrishna
17th November 2014, 10:05 AM
வாசு
'உறவுகள் தொடர்கதை', 'பன்னீர் புஷ்பங்களே' மற்றும் 'வாழ்க்கை ஓடம் செல்ல '
மூன்று பாடல்களுமே அவள் அப்படித்தான் திரைபடத்தின் தங்கம்,முத்து பவழம்,வைடூரியம்,மாணிக்கம் என்று சொன்னால் மிகை ஆகாது .
'பன்னீர் புஷ்பங்களே' பாடல் உற்று கேட்டால் கமல் குரலில் சற்று மலையாள ஸ்லாங் இருக்கும் . இதற்கு திரு இளையராஜா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது நினைவிற்கு வருகிறது. 'அன்று காலை மலையாள பாடல் ஒன்றை பாடி விட்டு மதியம் 'பன்னீர் புஷ்பங்களே' பாடலை ரெகார்டிங் செய்தோம் . அதனால் கமல் அதே பாணியில் பாடிய பாடல் என்று கூறியுள்ளார் .
நான் படித்த ஒரு சிறு குறிப்பு பகிர்ந்து கொள்கிறேன்
கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் முன்னணி நடிகர்களாக நிலைபெறத் துவங்கியிருந்தபோது, வண்ணப்படங்கள் மிகுந்த அளவில் தயாரிக்கப்பட்டு வருகையில், கருப்பு வெள்ளைப் படமாக இது 1978ஆம் வருடம் தீபாவளி அன்று வெளியானது. இதன் நெகிழ்வற்ற திரைக்கதை அமைப்பினாலும், உத்திகளும், குறியீடுகளும் நிறைந்த இயக்க முறைமையினாலும் வர்த்தக ரீதியாக (நடித்திருந்த மூவருமே முன்னணி நட்சத்திரங்களாக இருந்தபோதிலும்) தோல்வியுற்றது. மேலும், அச்சமயம் வெளிவந்த கமலஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் மற்றும் ரஜினிகாந்தின் தப்புத் தாளங்கள் ஆகிய பெரும் படங்களுடன் போட்டியிட முடியாமையும் ஒரு காரணமானது.
வெகுஜன ரசிகர்கள் முதல் பார்வையில் நிராகரித்து விட்டபோதிலும், திரையுலகைச் சேர்ந்த பலரும் இதனை வெகுவாகப் பாராட்டினார். சிகப்பு ரோஜாக்களின் இயக்குனரான பாரதிராஜா, வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதனாலேயே இது போன்ற படத்தைத் தம்மால் இயக்க இயலவில்லை என மனம் திறந்து குமுதம் பத்திரிகையில் பாரட்டியிருந்தார்.
ஆயினும், இதற்கென ஒரு ரசிகர் குழாம் உருவாகியது. அடுத்த சில ஆண்டுகளில் பெரு நகரங்களில் பல திரையரங்குகளில் இது மீண்டும் மீண்டும் காலைக் காட்சிகளாக வெளியானது.
gkrishna
17th November 2014, 10:12 AM
இளையராஜாவின் இசையில் கமல் பாடிய முதல் பாடல் பன்னீர் புஷ்பங்களே… என்ற பாடல்.
ரெக்கார்டிங் சமயத்தில் ஸ்டுடியோவிற்கு வந்த கமலிடம் இந்த பாடலைப் பாடிக்காட்டி கமலைப் பாடச்சொல்லியிருக்கிறார் இளையராஜா. பாடல் நன்றாக வர அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்தார் இளையராஜா. ஆனால் படம் வெளியான பிறகுதான் தான் ஒரு விஷயத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே என்று கமலிடம் சொல்லியிருக்கிறார் இளையராஜா. பன்னீர் புஷ்பங்களே என்ற வரியை கமல் பன்னீர் புஷ்பங்ஙளே என்று பாடியிருப்பார்.
இந்தப்பாடல் உதயமானது ஏதோ ஒரு ஹோட்டலிலோ அல்லது ரெக்கார்டிங் ஸ்டுடியோவிலோ அல்ல. கோவையில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது உதயமான பாடல் இது. விழா மேடையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பஞ்சு சாரும், எஸ்.பி.முத்துராமன் அவர்களும் மேடைக்கு வந்து ஒரு பாடலுக்கான சிச்சுவேஷன் சொல்ல மேடையிலேயோ கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடினார் இளையராஜா. அந்த பாடலுக்கு வேறு வார்த்தைகளைப் போட்டு கங்கை அமரன் எழுதிய பாடல்தான் இந்த பன்னீர் புஷ்பங்(ங)ளே பாடல்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமி கூறுகிறார்…
கமல்தான் இளையராஜாவை இப்படத்துக்கு புக் செய்தார். இது மட்டுமல்ல படத்துக்காக பல விஷயங்களை கமல்தான் செய்தார்.
இப்படத்துக்கு கமலுடன் ரஜினியையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று அனந்து சொன்னார். அனந்து, கமல் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கேயே பேசி ரஜினியும் சம்மதித்தார். யாருக்கும் நாங்கள் அட்வான்ஸ் கொடுக்கவில்லை. பூஜை போட்டோம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் பட ஆபீசுக்கே வருவார்கள். ஆழ்வார்ப் பேட்டையில் அலுவலகம் போட்டிருந்தோம். எங்கள் அலுவலகத்தில் பேன் கிடையாது. மறுநாள் இளையராஜா வரப்போகிறார் என்பதால் முதல் நாள் மாலையே பேன் வாங்கி மாட்டினோம். ஆனால் இளையராஜா வந்தபோது மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.
மூன்று பாடல்கள் கம்போசிங். கண்ணதாசனை வைத்து பாடல்கள் எழுதலாம் என்று தீர்மானித்தோம். எங்கள் அலுவலகத்துக்குப் பக்கமே கண்ணதாசன் நடத்திய கவிதா ஹோட்டல். அங்குதான் கவிஞர் இருப்பார். இசையமைப்பாளர்கள் அங்கே செல்வார்கள். அங்கே இளையராஜா வேறு ஒரு பாடல் கம்போசிங்கிற்காக வருகிறேன். அங்கேயே வந்து விடுங்கள் என்றார். நடந்தே சென்றோம்.
பிரம்பு நாற்காலியில் பனியன் போட்டுக் கொண்டு கவிஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் வசந்தகாலக் கோலங்கள்.. வானில் விழுந்த கோடுகள் பாட்டு போல எங்களுக்கு வேண்டும் என்றோம். அவர் ஒரு 20 பல்லவிகளை எங்களுக்குச் சொன்னார். எதுவுமே பிடிக்கவில்லை. எங்களுக்கு முழு திருப்தி இல்லையென்றாலும் ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம். பாட்டெழுதிக் கொடுத்தார். படம் வெளியாகி ஃப்ளாப் ஆனதும் இப்படி ஒரு அபசகுனமான பாட்டை முதலில் எழுதினால் இப்படித் தான் ஆகும் என்று கூடச் சொன்னார்கள்.
–அந்திமழை
http://img198.imageshack.us/img198/9523/avalappadiththanback.jpg
chinnakkannan
17th November 2014, 10:29 AM
hi good morning all
ஹாய் வாசு சார்..க்ருஷ்ணா ஜி..இப்ப என்ன அவள் அப்படித்தான் பார்க்கணும்கறீங்களா..
கடைசிப் பாட்டுக் கேட்டதில்லை..கேட்டுப்பார்க்கிறேன்..
vasudevan31355
17th November 2014, 10:29 AM
வணக்கம் கிருஷ்ணா சார்.
//'பன்னீர் புஷ்பங்களே' பாடல் உற்று கேட்டால் கமல் குரலில் சற்று மலையாள ஸ்லாங் இருக்கும்//
தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன் கிருஷ்ணா சார்.
chinnakkannan
17th November 2014, 10:30 AM
//தடம் மாறிய தமிழ்ப்படங்கள்// வாசு சார்..கதையே கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது..
vasudevan31355
17th November 2014, 10:30 AM
வணக்கம் சி.க சார்.
vasudevan31355
17th November 2014, 10:32 AM
//தடம் மாறிய தமிழ்ப்படங்கள்// வாசு சார்..கதையே கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது..
சராசரி தமிழ் இம்சைகளிலிருந்து தனியே தடம் மாறிப் பயணித்த தங்கப் படங்களுள் மணிமகுடம் சார் அது. அதுதான் அர்த்தம்.
vasudevan31355
17th November 2014, 10:33 AM
சி.க, கிருஷ்ணா,
நம்ம ரவி வந்து கலக்க ஆரம்பிச்சுட்டாரே.
vasudevan31355
17th November 2014, 10:34 AM
மன்மத லீலைக்குப் பிறகு அதிகம் அலசப்பட்டது அவள் அப்படித்தான். அப்படித்தானே கிருஷ்ணா?
vasudevan31355
17th November 2014, 10:36 AM
இந்தப் படத்தைப் பத்தி முரளி சார், கோபால் சார், மது சார் இன்னும் எழுதினா ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்னு நினைக்கிறேன்.
Gopal.s
17th November 2014, 10:37 AM
Welcome Mr Ravi
You have come back with a bang with superb NT song and request you to please contribute as usual in our
mother thread also. I have also hurt by a person who do not come under the category of humanbeing but
inspite of that whatever I know about our acting god I am posting it. I am expecting you also to come and
post regularly.
Regards
Category of Humanbeing means functioning without any brain or functioning like parasite? Mind your words and you are not qualified to comment anything as all are disgusted with your videos,Recaps(of others) and your LKG writings. Humanbeings don't mean tolerating nonsense. Thank God ,others escaped as you were not wished for 1000 th Postings!!!!!! Be careful. This is only sample. Do not dare to wag your tail with me.
Gopal.s
17th November 2014, 10:39 AM
Dear Ravi,
Happy to see you with your flair and enthusiasm. Welcome back and Thanks for enjoyable songs .keep contributing .:-D
Gopal.s
17th November 2014, 10:41 AM
aval appadiththan patri ingu alasalama? ithan script uruvagum podhu nan rudhraiyavin nanban. sila alosanaigal koduthum ullen. I will do it vasu.
raagadevan
17th November 2014, 10:46 AM
"maanava sEva drOkamaa..."
Ilaiyaraja's original composition for K. Balachander's Telugu movie RUDRAVEENA, featuring Gemini Ganesh and Chiranjeevi...
http://www.youtube.com/watch?v=i68656_fNzE
Gopal.s
17th November 2014, 10:46 AM
Saluting for your patience in carrying the team. I don't want to interrupt as per my promise to you. S.Vasudevan crossed his limit but I reacted with measure. Otherwise,entire "Good"dictionary words would have found its space here.I am leaving him just for you and this thread to fuction smoothly.
rajeshkrv
17th November 2014, 10:46 AM
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் - 18
1991 பிரபு குஷ்பு ஒரு பிரபலமான ஜோடியாக உருவாகிக்கொண்டிருந்த காலம் அது.
அப்படி பி.வாசுவின் இயக்கத்தில் இருவரும் நடித்த கிழக்கு கரை படம் வெளியானது.
படம் அவ்வளவாக போகவில்லை ஆனாலும் தேவாவின் இசையில் பாட்லகள் எல்லாம் மிகவும் பிரபலம்
அப்படி ஒரு பாடல் இதோ
எனக்கென பிறந்தவ றெக்க கட்டி பறந்தவ இவதான்
https://www.youtube.com/watch?v=8xrGM7hLylY
vasudevan31355
17th November 2014, 10:47 AM
'ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே'
தலைவர் படத்தின் தரமான கருத்துள்ள பாடல். எப்பேர்பட்ட வேற்றுமையையும் களையும் சக்தி படைத்த பாடல்.
கதையான போதிலும் கருத்துள்ள பாடலே.
http://www.youtube.com/watch?v=5PYAmWkBwc4&feature=player_detailpage
chinnakkannan
17th November 2014, 10:48 AM
//நம்ம ரவி வந்து கலக்க ஆரம்பிச்சுட்டாரே.//ஆமாங்க்ணா.. :)
vasudevan31355
17th November 2014, 10:56 AM
வாவ் கோபால். இன்ப ஆச்சர்யம். பகிர்ந்து கொள்ளுங்கள். நம் ஹப்பரில் ஒருவர் 'அவள் அப்படித்தானி'ல் மறைமுக பங்காற்றியுள்ளார் என்பது எவ்வளவு பெரிய பெருமைக்குரிய விஷயம்! ஹேட்ஸ் ஆப் டு யூ! உங்கள் பார்வையில் மஞ்சுவை வித்தியாச கோணத்தில் சந்திக்க ஆசை.
(உரிமையுடன் கூடிய சிறு வேண்டுகோள். 'அவன் அப்படித்தான்' என்று இருக்க வேண்டாம். யாரையும் தாக்குவதில்லை என்ற வாக்கு சொன்ன நாக்கு. மஞ்சு போல தனி மரமாக ஆசை வேண்டாமே.)
vasudevan31355
17th November 2014, 11:00 AM
'எனக்கெனப் பிறந்தவ' பாடலின் போது தியேட்டர் ரெண்டுபட்டு பார்த்திருக்கேன் ராஜேஷ்ஜி.
தேங்க்ஸ் ஃபார் தி சூப்பர் சாங்.
vasudevan31355
17th November 2014, 11:11 AM
சி.க.சார்,
பி.எம்.அனுப்பியிருக்கேன்.:)பார்க்கவும்
vasudevan31355
17th November 2014, 11:17 AM
ராகதேவன் சார்,
'ருத்ர வீணா'வின் அருமையான பாடலுக்கு நன்றி.
'வீதியில் நின்று தவிக்கும் பராரியை பார்ப்பதும் பாவமா
மானிட சேவை துரோகமா.
இதோ! 'உன்னால் முடியும் தம்பி' படத்தின் அதே பாடல். கம்பேர் பண்ணால் கமல் எங்கோ போய் விடுவார். ஆனால் ஜெமனி தனித்தன்மையில் கொடி நாட்டுவார். ராஜா ராஜாதான்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Xbh9LXRZwdI
vasudevan31355
17th November 2014, 11:22 AM
I am leaving him just for you and this thread to fuction smoothly.
நீங்களாகவே ஒரு முடிவெடுத்துக் கொள்ள வேண்டாம். நாங்கள் அனைவரும் உங்கள் எழுத்துக்களுக்கு ரசிகர்கள். உங்கள் எழுத்திற்காகக் காத்திருக்கிறோம்.
uvausan
17th November 2014, 11:25 AM
Quote : " இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலின் தரத்தை மேலும் பல மடங்கு உயர்த்தி விடுகிறது. பாடல் வரிகள் இதயத்தை கனமாக்கி, இசை அதை இன்னும் நெஞ்சில் ஆழமாகப் புதைக்கும் வண்ணம் ரணமாக்கி, காட்சியமைப்புகள் இன்னும் ஆழமாய் நம் மனத்தைக் குத்திக் கிழிக்கின்றன வன்முறைக் காட்சிகள் இல்லாமல் வெறுமைக் காட்சிகளைக் கொண்டு மட்டுமே. இத்தனைக்கும் சாதாரண பெண்ணின் வரம்புக்குட்படாத, இலக்கணங்களை உடைத்தெறிந்த, துணிச்சல் இருந்தும் கோழையாகி நிற்கும் வெறுமையான கதாநாயகியை மட்டுமே காட்டி. பெண்ணிய சமூக அவலங்கள் இந்தக் கதையின் நாயகி மூலம் இப்பாடலில் மிகச் சிறப்பான ஒளிப்பதிவில் நமக்கு அற்புதமாக உணர்த்தப்படுகின்றன. "
Unquote : Vasu உங்கள் எழுத்துக்களில் இருக்கும் power , இந்த சமுதாயத்திற்கு மட்டும் இருந்திருந்தால் " அவள் அப்படிதான் " என்று யாரையுமே சொல்லி இருக்க மாட்டோம் - மிகவும் "bold " ஆக எடுத்த படம் - தினமும் இப்படி பட்ட சம்பவங்கள் எவ்வளவோ நடந்து கொண்டுதான் இருக்கின்றது - பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு இது - ஒரு புறம் துர்கையை வணங்கி விஜயதசமி யை கொண்டாடுகிறோம் - மறு பக்கம் "அவள் அப்படித்தான் " என்று பலரை ஒதுக்குகின்றோம் - பாலச்சந்தரின் இன்னமொரு படத்தில் ( பெயர் மறந்துவிட்டது ) சரிதா மிகவும் casual ஆக சொல்வார் - "இங்கே மேடையில் பெண்களை புகழ்ந்து பேசிகொண்டுருக்கின்றானே , பேசி தீர்த்தவுடன் இங்குதான் நேராக வருவான் " - அந்த வார்த்தைகளில் வெறுமை,கோபம் , விரக்தி , வெறுப்பு எல்லாமும் ஒரு வினாடியில் தோன்றி மறையும் - இந்த படம் ஸ்ரீப்ரியாவின் நடிப்பில் ஒரு திருப்புமுனை - ஒரு இடத்தில் தன் காதலன் தன்னை வெறும் சகோதரியாக நினைப்பதாக சொல்லும் போது - பொறுக்கி - வேறு எந்த உறவை சொல்லி தன்னை அழைத்திருந்தாலும் பொருத்துகொண்டிருப்பேன் - ஆனால் - பேடி !! என்னை சகோதரி என்று சொல்லி விட்டாயே !" என்று சொல்லும் போது , கண்களை கசக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது
இந்த படத்தை உங்கள் நடையில் அலசி தமிழுக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை - பெண் இனத்திற்கு ஒரு பெரிய மரியாதை செலுத்தி விட்டீர்கள் - இரு பெரும் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தும் ஸ்ரீப்ரியாவின் நடிப்பும் , அவரது கதா பாத்திரமும் தான் இந்த படத்தை தூக்கி நிறுத்தியது
vasudevan31355
17th November 2014, 11:46 AM
//சைக்கிள் ஸ்டாண்ட்டிலிருந்து சைக்கிளைக் கஷ்டப் பட்டு எடுத்து//
சி.க சார், வயிறு புண்.:)
uvausan
17th November 2014, 11:47 AM
மிகவும் நன்றி - ராகவேந்திரா சார் , கோபால் , கிருஷ்ணாஜி , ராஜேஷ் என்னை இந்த திரியில் பங்கு ஏற்க எனக்கு வாழ்த்து அளித்ததற்கு ! ஒற்றுமையாய் செல்லும் இந்த திரிக்கு ஒரு உறுதுணையாய் இருக்க கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன் -
"Likes " போட்ட கோபு , KCS , சிவாஜி செந்தில் ,Poem இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ..
gkrishna
17th November 2014, 12:00 PM
டியர் சி கே சார்
அவள் அப்படிதான் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். உங்கள் ரசனை என்னவாக இருந்தாலும் சரி , நிச்சயம் இதை ரசிப்பீர்கள் . பாலசந்தர் தொடாத சில படிகளை ருத்ரையா முதல் படத்திலேயே தொட்டு இருப்பார் . சில காட்சிகளில் வெளிச்சம் இல்லாமல் மெழுகு திரி வெளிச்சத்தில் படம் பிடித்தது போல் இருக்கும் .ரசிக்க வேண்டிய காட்சி அமைப்புகள். என்ன ஒன்று படம் முடிந்த பிறகு நம்மை ஒரு வெறுமை ஆட்கொள்ளும் .
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
chinnakkannan
17th November 2014, 12:12 PM
//உங்கள் ரசனை என்னவாக இருந்தாலும் சரி //அடப்பாவி மனுஷா..இவ்ளோ பழகியும் தெரியலையாக்கும் :)//பாலசந்தர் தொடாத சில படிகளை ருத்ரையா முதல் படத்திலேயே தொட்டு இருப்பார் // ருத்ரயயா கொஞ்சம் ஹைட்டா இருப்பாரா இருக்கும் :)
//என்ன ஒன்று படம் முடிந்த பிறகு நம்மை ஒரு வெறுமை ஆட்கொள்ளும் . //ஹையாங்க்.. ஏற்கெனவே ரியல் லைஃப்ல அப்படித்தாங்காணும் இருக்கேன்..ம்ம்விக் விக்விக்..ஒரே சோகம்.. படத்துலயாவது ஜாலியா இருக்கவேண்டாமா..ஜோக்ஸ் அபார்ட்..வீக் எண்ட்ல பார்க்கறேன் க்ருஷ்ணாஜி..
என்றென்றும் நட்புடன்
சி.கண்ணா..:)
uvausan
17th November 2014, 12:38 PM
மதுரையில் பறந்த மீன்கொடியை -----
மிகவும் ரசித்த பாடல் - தமிழை தேனில் தோய்த்து எழுதிய வரிகள் - Tabla வும் , Sitar உம் பாடலின் கடைசி வரிகள் வரை நம்முடன் கூட வரும் - மூவேந்தர்களின் அரசாட்சியையும் , தமிழகம் முழுவதையும் ஒரு பெண்ணின் அழகுக்கு உபமானமாக வாலி எழுதிய பாடல் - என்றுமே சிரஞ்சிவியாக இருக்கும் - GG யின் ஒத்து வராத அங்க அசைவுகளும் , பாடலுக்கு வாயசைக்கும் விதமும் சற்றே முகத்தை சுருங்க வைத்தாலும் , பாடலின் இனிமையில் ஒரு பெரிய குறையாக இவைகள் விஸ்வரூபம் எடுக்காது ---- MSV யின் புகழ் மகுடத்தில் இந்த பாடல் ஒரு முத்தாரம்
http://youtu.be/v7PePTO-xYI
vasudevan31355
17th November 2014, 12:51 PM
//பாலசந்தர் தொடாத சில படிகளை ருத்ரையா முதல் படத்திலேயே தொட்டு இருப்பார்//
அருமை கிருஷ்ணா. உண்மையும் கூட. பாலச்சந்தர் படங்களில் பாலச்சந்தரே தெரிவார். ஆனால் ருத்ரையா படத்தில் ருத்ரையா தெரிய மாட்டார். காட்சிகளும் பாத்திரங்களும் இயல்பாக இலகுவாக நமக்குள் புகுந்து கொள்ளும்.
vasudevan31355
17th November 2014, 12:55 PM
//gg யின் ஒத்து வராத அங்க அசைவுகளும்//
வேற வழி? ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். தேவையில்லாமல் இடுப்பில் கைகளை வைத்து விரல்களை விரித்து வைத்துக் கொள்வார். அடிக்கடி வேறே செய்வார். எரிச்சல் வரும்.
vasudevan31355
17th November 2014, 01:00 PM
//ஏற்கெனவே ரியல் லைஃப்ல அப்படித்தாங்காணும் இருக்கேன்///
என்ன சோகமோ?
சி.க சார்,
நீங்கள் பல் பாட்டு கேட்டு இருந்தீர்களே! இந்தாங்கோ இந்திப் 'பல்'.:)
பல் பல் பல் தில் கே பாஸ்.
தும் ரெஹதீ ஹோ
மன்னிச்சிக்கோங்க தலைவா.:) நீங்க தானே ஜாலியா இருக்கணும் அப்படின்னு சொன்னீங்க.:) நான் மஞ்சுவ விட்டாச்சு.
ராக்கியைப் பார்த்து தரமுக்கு வாயெல்லாம் பல்.:)
http://www.youtube.com/watch?v=AMuRRXCuy-4&feature=player_detailpage
gkrishna
17th November 2014, 02:31 PM
//உங்கள் ரசனை என்னவாக இருந்தாலும் சரி //அடப்பாவி மனுஷா..இவ்ளோ பழகியும் தெரியலையாக்கும் :)//பாலசந்தர் தொடாத சில படிகளை ருத்ரையா முதல் படத்திலேயே தொட்டு இருப்பார் // ருத்ரயயா கொஞ்சம் ஹைட்டா இருப்பாரா இருக்கும் :)
//என்ன ஒன்று படம் முடிந்த பிறகு நம்மை ஒரு வெறுமை ஆட்கொள்ளும் . //ஹையாங்க்.. ஏற்கெனவே ரியல் லைஃப்ல அப்படித்தாங்காணும் இருக்கேன்..ம்ம்விக் விக்விக்..ஒரே சோகம்.. படத்துலயாவது ஜாலியா இருக்கவேண்டாமா..ஜோக்ஸ் அபார்ட்..வீக் எண்ட்ல பார்க்கறேன் க்ருஷ்ணாஜி..
என்றென்றும் நட்புடன்
சி.கண்ணா..:)
சி கே
செம ஜாலி மூட்ல இருக்காப்ல இருக்கு
மிகவும் ரசிக்கிறேன் உங்கள் எழுத்துகளை
ரூம் போடாமலேயே இவ்வளவு ரசனை :)
ரூம் போட்டு யோசிச்சா பயங்கரமா இல்ல இருக்கும் போல இருக்கு :)
குட்டியானை பட்டம் என்ன ஆயிற்று
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS2osxawB_2TRpdhhMwXmQdpSndqRYjc 478jmtKppaWFw5jDc-z
இந்த பாட்டு நினைவு இருக்கா ? இந்த விஜயலட்சுமி என்ன ஆனாங்க
ராதிகா தம்பி மோகன் ராதாவை லவ்வோ லவுனு 'லவ்வி', விஷம்னு தமிழ்லும் poision என்று ஆங்கிலத்திலும் எழுதி இருக்குமே ஒரு சின்ன பாட்டில் (urine டெஸ்ட் எடுக்க ஒரு பாட்டில் கொடுப்பாங்க government ஆஸ்பத்திரிஇலே இது மாதிரி பழைய தமிழ் திரைபடங்களில் கூட இது போன்ற காட்சிக்கு பிறகுதான் படமும் முடிவுக்கு வரும்.நாமும் வீட்டுக்கு கிளம்ப முடியும்) .அதை குடிச்சு சீரியஸ் ஆக இருந்தாங்கனு அதாங்க நம்ம குமுதம் வார இதழில் படித்த நினைவு :) . பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நயன்தாரா அக்கா ரோல் . இப்ப எங்கே கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க
கிருஷ்ணா
Richardsof
17th November 2014, 03:01 PM
கனவு பாடல் - 1
தமிழ் படங்களில் பல கனவு பாடல்கள் வந்துள்ளது .குறிப்பாக நாயகிகள் கனவு காணும் பாடல் மிகவும் அதிகம் .
காஞ்சனா - முத்தமோ மோகமோ ....பறக்கும் பாவை .
மஞ்சுளா - அழகிய தமிழ் மகள் ...... ரிக்ஷாக்காரன் .
லதா - கனவுகளே ஆயிரம் கனவுகளே ----- நீதிக்கு தலை வணங்கு
மேத்தா - பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன் .
ராதா சலுஜா - என் யோக ஜாதகம் - இன்று போல் என்றும் வாழ்க
ஜெயலலிதா - மாணிக்க தேரில் மரகத கலசம் - தேடி வந்த மாப்பிள்ளை
லக்ஷ்மி - இரண்டு கண்கள் பேசும் மொழியில் - சங்கே முழங்கு
விஜயா - வளர்வது கண்ணுக்கு ... தொழிலாளி
Russellcaj
17th November 2014, 07:21 PM
Mr. Vasudevan,
Due to some unexpected workload, not able to come in net for some days.
Your new series about the songs of Ilaiyaraja is very very wonderful with your wonderful summary of each song.
I am being a diehard fan of Ilaiyaraja, your way of analysing each song are very close to my heart and enjoying more.
Your latest Aval Appadithaan descriptions are very very top in level, for all the three songs.
Additional informations about that movie from you and Mr. Krishna are bonus points for your series.
Aval Appadithaan I saw just only one time some six or seven years before and enjoyed much for its different handling of story and for the music.
Ilaiyaraja is a good selection for that film.
But in the end Manju got disappointed with her love with Kamal because of her arrogance with him, without accepting his love in proper time.
After reading your detailed posts, I want to watch it again.
regards
stl.
RAGHAVENDRA
17th November 2014, 07:57 PM
டியர் சித்தூர் வாசுதேவன்
தங்களுடைய எத்தனையோ சொந்தக் கவலைகளின் நடுவே தாங்கள் நம் நடிகர் திலகத்தின் பால் கொண்ட அளவற்ற பாசத்தின் வெளிப்பாடாக அன்றாடம் இங்கு பங்கு கொண்டு தங்களால் முடிந்த பங்களிப்பில் அவர் புகழ் பாடி வருகிறீர்கள். ஒரு சிவாஜி ரசிகனாக இதனைப் பாராட்டநான் கடமைப் பட்டுள்ளேன். தங்களுடைய ஆயிரம் பதிவுகளுக்கு என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள். நாளடைவில் தங்களுடைய பதிவுகளில் மேலும் மேலும் புதிய கருத்துக்கள், தங்களுடைய அனுபவங்கள் அவருடைய நடிப்பில் தங்களுக்கு உள்ள ரசிப்புத்தன்மை இவற்றை விரிவாக எழுத வேண்டும். தங்களுடைய தொடர் வீடியோ பதிவுகளால் பக்கங்களின் தரவிறக்கம் தாமதமாகிறதே தவிர தங்களுடைய பங்களிப்பில் உள்ள நூற்றுக்கு நூறு நடிகர் திலகத்தின் ஆளுமையின் பிரதிபலிப்பினை மறுக்க முடியாது. இனி வரும் காலங்களில் தங்களுடைய பதிவில் புதிய அணுகுமுறைகளை எதிர்பார்த்து தங்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்களைத் தொடர்கிறேன்.
மதுர கானம் திரியிலும் தங்கள் பங்களிப்பினைத் தொடர வேண்டும். பல அபூர்வமான பாடல்களை, முடிந்த வரையில் வேற்று மொழிகளைத் தவிர்த்து தமிழ்ப்படப் பாடல்களை, இங்கே பங்கு கொள்ளுங்கள். அதைப் பற்றிய தங்கள் விரிவுரையும் இடம் பெற வேண்டும் என விரும்புகிறேன்.
RAGHAVENDRA
17th November 2014, 08:00 PM
டியர் கிருஷ்ணா
வாசு சாரின் அவள் அப்படித்தான் படம் மற்றும் பாடல்கள் பதிவுகளுக்கு மேலதிக விவரங்களுடன் பங்களிப்பு செய்து இத்திரைப்படத்திற்கு உரிய கௌரவத்தை முழுமையாக வழங்கி விட்டீர்கள், தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
17th November 2014, 08:02 PM
'ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே'
தலைவர் படத்தின் தரமான கருத்துள்ள பாடல். எப்பேர்பட்ட வேற்றுமையையும் களையும் சக்தி படைத்த பாடல்.
கதையான போதிலும் கருத்துள்ள பாடலே.
வாசு சார்
ஒவ்வொரு பங்களிப்பாளரையும் ஒவ்வொருவரும் உரிய முறையில் கௌரவித்து அரவணைத்து ஒன்றாக செல்ல வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.. தங்கள் சமயோசிதமே தனி.. சூப்பர்..
RAGHAVENDRA
17th November 2014, 08:04 PM
கோபால்
அவள் அப்படித்தான் படத்தில் தங்களுடைய பங்கினை அறிய ஆவலுடன் காத்திருக்கும் அன்பர்களில் நானும் ஒருவன். விரிவாக எழுதுங்கள்.
Russellcaj
17th November 2014, 08:10 PM
கோபால்
அவள் அப்படித்தான் படத்தில் தங்களுடைய பங்கினை அறிய ஆவலுடன் காத்திருக்கும் அன்பர்களில் நானும் ஒருவன். விரிவாக எழுதுங்கள்.
me too
chinnakkannan
18th November 2014, 01:42 AM
டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச் என மகளிர் மட்டுமில் ஒரு டயலாக் வரும்..அதே போல டெக்னாலஜி இல்லையென்றால் என்னாகும்..
ஒரே ரகளை தான்.பிஸினஸ் ஈமெய்ல் அனுப்ப முடியவில்லை..ஃபோன் லைனும் இல்லைசரீ ஈ என மொபைல் மூலமாகப் பேசலாம் எனில் நெட்வொர்க் நாட் அவெய்லபிள்
இவ்வளவும் இன்று பதினொன்று மணியிலிருந்து இங்கு. இரவு ஒன்பதரை மணிக்குத் தான் ரெகவர் ஆச்சு.(ஓமான் டெல்லில் ஏதோ ப்ராப்ளமாம்)..இதற்கிடையில் நான் சமர்த்தாய் ஏர்ப்போர்ட் சென்று வீ.காவை ஃப்ளைட் ஏற்றி அனுப்பி விட்டேன்.. (ஒரு கல்யாணம்.எனில் செல்லல்)
வந்தால் க்ருஷ்ணா ஜி..கோ.கூ விஜி பற்றிக் கேட்காமல் ஃப்ரண்ட்ஸ் விஜி பற்றிக் கேட்கிறார்.ஜி..விஜி விஜயலட்சுமி கடைசியாய்ப் பார்த்த படம் ஏதோ பைலட்டின் மனைவியாய் வருவார்.. சரி கொஞ்சம் தேடி ப்பார்க்கிறேன் கூகுளில்
பல்பல் தில்கே பாஸூக்கு நன்றி வாசு சார்..
rajeshkrv
18th November 2014, 02:42 AM
டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச் என மகளிர் மட்டுமில் ஒரு டயலாக் வரும்..அதே போல டெக்னாலஜி இல்லையென்றால் என்னாகும்..
ஒரே ரகளை தான்.பிஸினஸ் ஈமெய்ல் அனுப்ப முடியவில்லை..ஃபோன் லைனும் இல்லைசரீ ஈ என மொபைல் மூலமாகப் பேசலாம் எனில் நெட்வொர்க் நாட் அவெய்லபிள்
இவ்வளவும் இன்று பதினொன்று மணியிலிருந்து இங்கு. இரவு ஒன்பதரை மணிக்குத் தான் ரெகவர் ஆச்சு.(ஓமான் டெல்லில் ஏதோ ப்ராப்ளமாம்)..இதற்கிடையில் நான் சமர்த்தாய் ஏர்ப்போர்ட் சென்று வீ.காவை ஃப்ளைட் ஏற்றி அனுப்பி விட்டேன்.. (ஒரு கல்யாணம்.எனில் செல்லல்)
வந்தால் க்ருஷ்ணா ஜி..கோ.கூ விஜி பற்றிக் கேட்காமல் ஃப்ரண்ட்ஸ் விஜி பற்றிக் கேட்கிறார்.ஜி..விஜி விஜயலட்சுமி கடைசியாய்ப் பார்த்த படம் ஏதோ பைலட்டின் மனைவியாய் வருவார்.. சரி கொஞ்சம் தேடி ப்பார்க்கிறேன் கூகுளில்
பல்பல் தில்கே பாஸூக்கு நன்றி வாசு சார்..
she acted in TV serials and in kannada movies as well. Recently she was in news for wrong reasons .. some complaint against a director/producer
Gopal.s
18th November 2014, 07:50 AM
Thanks vasu ,ragavendhar and stella. I am trying my best to do it coming Saturday as far as possible in 100% Tamil.
Chinna Kannan- I strongly detest your views on Evolved literature,evolved Movie movements, and serious writings. You have to reform yourself.Much as I like humour (Bagyam Ramaswamy,Devan,Gopu, Crazy Mohan Etc) ,if you consider it alone as the only thing in life, you are missing your search for betterment. There are many unexplored areas which never ceases to excite me. With low level of intellect (like Quoting popular Poems or movie songs),you may play effectively to Galleries. But you seemed to be showing keenness in writing. It wont do any good for you to improve. Pl.Grow up. Atleast stop having dig at Good works like Aval Appadithan.
Richardsof
18th November 2014, 08:41 AM
http://i62.tinypic.com/1es3si.jpg:roll:
vasudevan31355
18th November 2014, 09:09 AM
ஸ்டெல்லா மேடம்,
உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு மிக்க நன்றி! சக பதிவாளர்களை மனம் நிறைந்து மறக்காமல் பாராட்டுவதற்கும் என் மனமார்ந்த நன்றி!
மதுர கானங்கள் திரியை தாங்கள் தொடர்ந்து வாசித்து ஆதரவு தருவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. 'அவள் அப்படித்தான்' திரைப்படம் ஒரு பெண் என்ற வகையில் எங்களை விட தங்களை அதிகம் கவர்ந்திருக்கக் கூடும். அதனால் தாங்களும் இந்தப் படத்தைப் பற்றிய தங்களது கருத்துக்களைத் தெரிவித்தால் திரி மேலும் மெருகேறும். இன்னும் சுவையான விஷயங்கள் கிட்டும். கண்டிப்பாக எழுதுங்கள். காத்திருக்கிறோம்.
நன்றி!
vasudevan31355
18th November 2014, 09:11 AM
கோ,
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.
உங்களோடு போட்டி போட இயலாது. அதனால் ஒரு தடவைக்கு 3 தடவை படத்தைப் பார்த்து வைத்துக் கொள்கிறேன்.
vasudevan31355
18th November 2014, 09:57 AM
வினோத் சார்
ஒரு விக்கெட் யாரென்று தெரிகிறது.:) மற்ற இரண்டு?
vasudevan31355
18th November 2014, 10:03 AM
கோ,
சின்னக் கண்ணன் நல்ல ரசிகர் கோ. உங்களுக்குத் தெரியாததா? 'அவள் அப்படித்தான்' பற்றி அவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார். சும்மா ஜாலியாய்க் கலாய்ப்பார். இதை போய் சீரியஸாக பேசிக்கொண்டு.. அய்யே!
gkrishna
18th November 2014, 10:10 AM
வினோத் சார்
ஒரு விக்கெட் யாரென்று தெரிகிறது.:) மற்ற இரண்டு?
அன்பு எஸ்வி /வாசு சார்
கிளீன் bowled என்பது இது தானா ? மிடில் stump பறந்தது,பைல்ஸ் பறந்தது அப்படின்னு பார்த்து இருக்கேன். அருமையான timing . ஆமா பார்ட்டி யாரு ?:)
vasudevan31355
18th November 2014, 10:27 AM
வணக்கம் கிருஷ்ணா சார்
சிரிச்சுகிட்டே பார்ட்டி யாருன்னு கேக்குறீங்களே! படா ஆத்மி சார் நீங்க.:)
rajeshkrv
18th November 2014, 10:40 AM
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் -19
அதே கிழக்கு கரையில் வாலி ஐயாவின் அனைத்து பாடல்களுமே அருமை
இதோ இன்னொரு பிரபலமான பாடல்
https://www.youtube.com/watch?v=MDsSTAY0ws4
gkrishna
18th November 2014, 10:40 AM
http://2.bp.blogspot.com/_83DlmBD7pog/S8yj5c3GaJI/AAAAAAAAFH4/9RXlUGjAo7Y/s320/0.jpg
வணக்கம் வாசு
friends 1999 என்று நினைக்கிறன் இளம் சூர்யா ,விஜயலட்சுமி இருவரும் பாடும் ஒரு பாட்டு இளையராஜா கொஞ்சம் மெலடி கலந்து நல்லா இருக்கும் . 'மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் .
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை மாலை ஒன்றைக் கேட்டேன்' .
பழனி பாரதி பாட்டு .
கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
இந்த விஜி இடுப்புலெ கையை வைச்சு கொஞ்சம் ஸ்டெப்ஸ் போடும் சூர்யா முகத்தில் பால் வடியும் . விஜி காதலை ஏற்க ஒருவித தயக்கம் சூர்யாவிடம் இருக்கும் நண்பனின் தங்கை காதலை . அதை இந்த பாடல் வரிகளில் பழனி பாரதி கொண்டு வந்து இருப்பார்
விஜியின் ஒரிஜினல் குரல் கொஞ்சம் வட பெண்ணை ,தென் பெண்ணை,பாலாறு தண்ணீர் (ஜலம் னு சொல்லுவா ) கலந்து குடிச்ச மாதிரி கரகரனு இருக்கும். தங்க வேட்டை அப்படின்னு ஒரு ப்ரோக்ராம் சன் டிவி ரியாலிட்டி ஷோ தமிழில் சங்கவியும் கன்னடத்தில் இந்த விஜி அம்மாவும் செஞ்சாங்க . நினைவில் இருக்கிறது
http://www.youtube.com/watch?v=9qBEJokaRTw
rajeshkrv
18th November 2014, 10:41 AM
வணக்கம் வாசு ஜி, கிருஷ்ணா ஜி, ராகவ் ஜி
gkrishna
18th November 2014, 10:42 AM
மன்னிக்கணும் ராஜேஷ் சார் . நீங்கள் தேவாவின் முத்துகள் போடும் போது என் பதிவு தடங்கல் ஆயிடுச்சு
gkrishna
18th November 2014, 10:44 AM
ராஜேஷ் சார்
தேவாவின் முத்துகள் நல்லா இருக்கு . தொடருங்கள்.
கிழக்கு கரை சின்ன தம்பிக்கு அடுத்து வந்த படம்னு நினைக்கிறன். அதே பிரபு,குஷ்பூ,இயக்குனர் வாசு combination இசை மட்டும் மாற்றம் இளையராஜாவிற்கு பதில் தேவா
rajeshkrv
18th November 2014, 11:02 AM
செளந்தர்யன் என்று ஒரு இசையமைப்பாளர்
சேரன் பாண்டியன் மூலம் அறிமுகம் .. பின் பல அற்புத பாடல்களை தந்தார்.
அவரின் சில பாடல்கள் இதோ
சேரன் பாண்டியனில் எல்லா பாடல்களுமே சூப்பர்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ராஜ்குமார் ஸ்வர்ணலதா பாடிய காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
https://www.youtube.com/watch?v=_WXDL1c4ywE
ஈரமான ரோஜாவே சிவாவும் ஆம்னியும் நடித்த முதல் சீதனம் திரையில் அழகான பாடல்
https://www.youtube.com/watch?v=7k6Bz8PHmhY
எனக்கு மிகவும் பிடித்த அடுத்த பாடல் சிந்துநதிப்பூ என்ற திரைப்படத்தில் பாலுவும் ஸ்வர்ணலதாவும் பாடிய அழகான பாடல்
இது தான் ரஞ்சித் அறிமுகமான படம்
http://shakthi.fm/ta/player/play/sd89ecf8e
அதே படத்தில் அடியே அடி சின்னப்புள்ள மனோவும் ஜானகியும். அருமையான பாடல்
rajeshkrv
18th November 2014, 11:03 AM
மன்னிக்கணும் ராஜேஷ் சார் . நீங்கள் தேவாவின் முத்துகள் போடும் போது என் பதிவு தடங்கல் ஆயிடுச்சு
தடங்கலா .. என்ன அப்படி சொல்லிப்புட்டீக ... அப்படியெல்லாம் இல்ல. உங்கள் பதிவும் நல்லாத்தேன் இருந்துச்சு
gkrishna
18th November 2014, 11:11 AM
ராஜேஷ் சார்
நன்றி . சேரன் பாண்டியன் படமுமே நல்லா இருக்கும். சரத்குமார்,ஆனந்த பாபு,ஸ்ரீஜா (முன்னால் அமைச்சர் அரங்கநாயகம் மகனை கல்யாணம் கட்டிகிட்டார் ) விஜயகுமார்,மஞ்சுளா,நாகேஷ்,கௌண்டமணி,செந்தில்,அனுஜா, ஷர்மிலி,கே எஸ் ரவிகுமார்,நல்லெண்ணெய் சித்ரா அப்படின்னு ஒரு பெருங்கூட்டம் கொட்டம் . கொஞ்சம் அக்னி நட்சத்ரம் ஜாடையில் முத்த சம்சாரம்,இளைய சம்சாரம் குழந்தைகள் கதை . களம் வேறு . இப்ப அடிக்கடி ஆதித்யா ,சிரிப்பொலி தொலைகாட்சிகளில் நகைச்சுவை காட்சிகளை ஒலி பரப்புகிறார்கள்
rajeshkrv
18th November 2014, 11:19 AM
ஆம் கிருஷ்ணா ஜி.. நல்ல படல். அப்படி இருந்த ரவிக்குமார் அப்புறம் சொங்கி மாதிரி படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாரே
சரி இதயம் நல்லெண்ணை சித்ரா என்ன ஆனாங்க அப்டின்னு கேட்கும் மக்களுக்கு இதோ
https://www.youtube.com/watch?v=Gidqkke2Ts4
uvausan
18th November 2014, 11:27 AM
அன்புள்ள வினோத் சார் - என்னுடைய இந்த பதிவு ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு மட்டுமே - எந்த பதிவையும் குறை சொல்வதற்காக அல்ல ...... ஒரு கால கட்டத்தில் ஆண்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் , அவர்களுக்கு எந்த ஆசா பாசமும் இருக்காது - தாயை தெய்வம் என போற்றும் மகனாகவும் , சமுதாயத்தை தனியாக நின்று எதிர்த்து போராடும் ஒரு வாலிபனாகவும் , தங்கையை காப்பாத்தும் நல்ல அண்ணனாகவும் , பல பேர்களை ஒருவனாகவே நின்று வீழ்த்தும் வீரனாகவும் என்று நினைக்கும் நிலைமை இருந்து வந்தது . பார்க்கும் பெண்கள் எல்லாம் தனக்கு இப்படி ஒரு உத்தம புருஷன் கிடைக்க மாட்டானா என்று கனவுகள் காண்பார்கள் - இப்படிப்பட்ட ஒரு கருவை மயமாக வைத்து பல படங்கள் கதாநாயகனை புகழின் உச்சிக்கே தூக்கி சென்றன - படம் பார்ப்பவர்கள் இதுதான் உண்மை, நிரந்தரம் என்று எண்ணும் அளவிற்கும் ஒரு மாயை உருவானது - அந்த கால கட்டத்தில் பெண்ணை மயமாக வைத்து , கதா நாயகனை ஒரு படி கிழே இறக்கி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கினர் - கால போக்கில் இதுவே ஒரு எழுதாத சட்டம் என்று ஆகி விட்டது - பெண்கள் என்றால் பல வீனம் உள்ளவர்கள் , அவர்களுக்கு வெறும் கனவு காணும் உரிமை மட்டுமே உள்ளது - அவர்கள் எந்த நிலைமையிலும் , எந்த வகையிலும் ஆண்களுக்கு சமமாக ஆகா மாட்டார்கள் - இப்படி பட்ட ஒரு எண்ணம் மெதுவாக ஆனால் முடிவாக எல்லோர் மனதிலும் குடி கொண்டு விட்டது . இதற்க்கு மீறியும் சில படங்கள் பெண்களுக்கு சம அந்தஸ்த்து கொடுத்து , கதாநாயகன் தான் எல்லாமே என்ற ஒரு மாயை உடைத்து எறிந்தன - சில உதாரணங்கள் :
1. பெண்ணின் பெருமை
2. இதய கமலம்
3. தேனும் பாலும்
4. இரு மலர்கள்
5. சூரியகாந்தி
6. அவள் ஒரு தொடர் கதை
இந்த வகையில் சேர்க்க வேண்டிய படம் " அவள் அப்படித்தான் ". படங்களில் காதலிகள் மட்டுமே கனவு காணும் போக்கை சில படங்கள் மாற்றி அமைத்தன - சில உதாரணங்கள் :
1. நெஞ்சிருக்கும் வரை
2. ராமன் எத்தனை ராமனடி
3. தீபம்
ஆசாபாசங்கள் இருவருக்கும் பொது தானே - அதில் ஏன் ஒரு genderக்கு அதிகம் என்று சுட்டி காட்ட வேண்டும் - சக்தி இல்லையேல் சிவம் இல்லை - இன்று எந்த துறையில் பெண்கள் முன்னுக்கு வரவில்லை - நம்முடைய daughters எதிலும் முதலாக வரவேண்டும் என்று தானே ஆசை படுகின்றோம் - ஆனால் இதுவே ஒரு பொது விவாதம் என்று வரும் பொழுது "அவள் அப்படிதான் " என்று கூசாமல் சொல்லிவிடுகின்றோம் - பாரதி கண்ட கனவுகள் பல - இன்னும் அவர் இருந்த வீட்டை விட்டே அந்த கனவுகள் வெளி வரவில்லை - பெண்களை எப்பொழுது சமாக எண்ணி அவர்களை மதிக்க கற்று கொள்கிறோமோ அன்று தான் இந்த நாடு உருப்படும் - "நான் அவனில்லை : என்று சொல்லிகொண்டிருக்கும் வரையில் - "அவள் அப்படித்தான் " என்று ஒரு கூட்டம் சொல்லிகொண்டே இருக்கும் .
நீங்கள் எதையுமே தவறாக சொல்லவில்லை - ஒரு விவாதத்திற்காக இந்த பதிவை அளித்தேன் - அதிகமாக எழுதி இருந்தால் மன்னிக்கவும் - வாசுவின் அலசலின் தாக்கம் குறைய பல நாட்கள் ஆகும்.:
smokesmile::smile2:
uvausan
18th November 2014, 11:44 AM
மலரும் கொடியும் பெண் என்பார் ----
என்ன அருமையான பாடல் - பெண் ஒரு ஊனம் உற்றவள் - தன் ஊனம் ஒரு பெரிய குறை என்று எண்ணி வாடுகின்றாள் - ஆண் - இது ஒரு ஊனமே அல்ல என்று அவளை தேற்றி பாடும் பாடல்
தன்னால் நடக்க இயலாது என்பதைத் தலைவி கூற, தலைவன் அதற்கேற்றவாறு பதிலுரைத்துப் பாடுகிறான். மலரும் கொடியும் நடப்பதில்லை! அவை மணம்தர என்றும் மறப்பதில்லை! கோவிற்சிலைகள் நடப்பதில்லை! அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை! தாமரை மலரும் நடப்பதில்லை! அதைத் தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை! முத்திரை பதிப்பதுபோல அமையும் இறுதி வரிகளைக் கவனியுங்கள்! நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்; நினைவினில் குறைகள் வருவதில்லை! கண்களில் ஒன்றாய்க் கலந்துவிட்டோம்; இனி காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை. அருமையான பாடல்!!!
"அவள் அப்படித்தான்" என்று சொல்லி விட்டு கதாநாயகன் சென்று இருக்கலாம் - ஆனால் அவன் அவளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறான் -அவள் யாருக்கும் மட்டம் அல்ல என்று கூறி அவளுடைய உணர்ச்சிகளுக்கு ஒரு பாதுக்காப்பாக இருகின்றான் . இப்படி பட்ட ஆண்களும் இருப்பதினால்தான் உலகம் இன்னும் நிக்காமல் ஓடிகொண்டிருகின்றது
http://youtu.be/IaxGu--YQpQ
:):smokesmile:
uvausan
18th November 2014, 12:09 PM
முத்துக்களோ கண்கள் ---
கதாநாயகன் கனவு காணும் காட்சி - தான் விரும்பிய காதலி , தன்னை விரும்புகிறாள் என்ற ஒரு தப்பு கணக்கில் , உள்ளத்தில் உள்ள ஆசைகளை , பாடலாக வெளி படுத்துகின்றான் - ஆனால் அவளோ அவனுக்கு கனவில் மட்டுமே தான் சொந்தம் என்று சொல்லிவிட்டு , வேறு ஒருவனை விரும்ப தொடங்குகின்றாள் - " அவள் அப்படித்தான் " என்று கதாநாயகன் நினைக்காமல் அவளை அவள் விரும்பியவனிடமே , தன் உயிரை திருமண பரிசாக கொடுத்து அவர்களை ஒன்று சேர்க்கின்றான் - முத்துக்களான இந்த பாடல் , நம் கண்களாக இன்றும் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லையே
http://youtu.be/ED0bwUuSQMg
:smile2::smokesmile:
Russellcaj
18th November 2014, 12:16 PM
Mr. Rajesh,
Thanks for rendering suprb songs of Deva sir.
I think you are coming year-by-year from his beginning.
Deva sir composed very beautiful songs with melody, but everyone branded him as 'Gana Deva' which is a wrong phrase.
Your rendition breaks that talk and bringing his wonderful melodies.
I am waiting when you will come for 1996 songs particularly the one and only Kaadhal Kottai, in which all songs are superb and variety.
The composing of the title song of kaadhal kottai 'Kaalamellaam kaadhal vaazhga' will take me out of the world whenever I here the song.
thanks again
regards
stl
Richardsof
18th November 2014, 12:17 PM
இனிய நண்பர் ரவி சார்
கதாநாயகன் கனவு காணும் பாடல் - பதிவுகள் அருமை .பணம் படைத்தவன் படத்தில் நம் மக்கள் திலகம் கனவு காணும் பாடல் மிகவும் இனிமையாக இருந்தது . உங்களுக்காக இந்த கனவு பாடல் .
http://youtu.be/oFLYvDYxGls
gkrishna
18th November 2014, 12:26 PM
அவள் அப்படிதான் தாக்கம் வெளியில் வர கொஞ்சம் நாள் ஆகும்
ருத்ரைய்யா, 2004 கால கட்டத்தில் ஆனந்தவிகடன் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியின் முழு வடிவம் எனக்கு கிடைக்கவில்லை .நினைவிலிருந்து எழுதுகிறேன்.
'சரியான கதை கிடைக்கவில்லை' என்று இப்போதைய தமிழ் இயக்குநர்கள் கூறுகிறார்களே?
'சிவகாசியில் இருந்து கொண்டு, தீப்பெட்டியை தேடுபவர்கள் இவர்கள்'
gkrishna
18th November 2014, 12:35 PM
ரஜினி ஸ்ரிப்ரியாவிடம் ஒரு நாள் இரவு தவறாக நடக்க முயல ஸ்ரீப்ரியா ரஜினியின் கன்னத்தில் அறைய
(இப்ப இந்த மாதிரி காட்சி எடுக்க முடியுமா , எடுத்துட்டு திரையில் தான் காண்பிக்க முடியுமா)
மறு நாள் இருவரும் சந்திக்கும் போது ரஜினியின் வசனம்
"ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்."
gkrishna
18th November 2014, 12:38 PM
வாசு
அவள் அப்படிதான் சின்ன வயசு ஸ்ரீப்ரியா நல்லெண்ணெய் சித்ரா தானே.ராஜ பார்வையிலும் கமலின் தங்கையாக வருவார் என்று நினைக்கிறன் .
uvausan
18th November 2014, 12:46 PM
சித்திரை மாதம் -------
ஒரு பெண் இங்கே , ஒரு சாப்பாட்டு ராமனை மனிதனாக்குகிறாள் - அவனிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளி கொண்டு வர , ஒரு முக்கிய கருவியாக இருக்கின்றாள் - தனக்காகவே பிறந்தவள் என்று அவளை நினைக்கின்றான் அவன் - ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவளை வேறு ஒருவனுக்கு மாலையிட வைக்கின்றது - தன்னை மனிதனாக மாற்றியதற்காக வாழ்நாள் முழுவதம் அவளுடைய மகளுக்காக தன்னை அர்பணித்து கொள்கிறான் - அவன் தனக்காக சேர்த்து வைத்தது தன் செல் அரித்த அவளை பற்றிய கனவுகள் மட்டுமே!! - இவனும் "அவள் அப்படித்தான் " என்று என்றுமே நினைத்ததில்லை ..
http://youtu.be/VxEeSZsVprI
:smile2::smokesmile:
uvausan
18th November 2014, 12:54 PM
வினோத் சார்
ஒரு உதாரனத்திற்க்கு மட்டுமே nt பட பாடல்களை போடும் படி ஆகி விட்டது - இன்னும் பல கதாநாயகர்கள் கனவு கண்டிருக்கலாம் - உடனே தேடி கண்டு பிடிக்க முடியவில்லை - நீங்கள் போட்ட பதிவு மிகவும் அருமை- இந்த பாடல் என் மனம் கவர்ந்த பாடல் - mt மிகவும் அழகாக இருப்பார் - பாடல் வரிகளும் மிகவும் பிரமாதம் - lre யின் ஹம்மிங் - கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா என்ற பாடலை நினைவு படுத்தும் - இந்த பாட்டை பற்றி விரிவாக எழுத உள்ளேன் - நன்றி பல
:smile2::smokesmile:
Richardsof
18th November 2014, 01:02 PM
RAVI SIR
ராமன் தேடிய சீதை படத்தில் இடம் பெற்ற ஜெயாவின் கனவு பாடல் .அட்டகாசமான கண்ணதாசனின் பாடல் . பாடகர் திலகம் - இசை அரக்கியின் குரல்கள் .மெல்லிசை மன்னரின்
மயக்கும் இசை - படமாக்கப்பட்ட காஷ்மீர் வெளிப்புற காட்சிகள் - மக்கள் திலகம் - ஜெயா ஜோடி
http://youtu.be/V17xP-VOJSo
என்றென்றும் மனதை மயக்கும் பாடல் .
vasudevan31355
18th November 2014, 01:06 PM
வாசு
அவள் அப்படிதான் சின்ன வயசு ஸ்ரீப்ரியா நல்லெண்ணெய் சித்ரா தானே.ராஜ பார்வையிலும் கமலின் தங்கையாக வருவார் என்று நினைக்கிறன் .
அதுவே கிருஷ்ணா சார். இதோ நல்லெண்ணெய்:) 'அவள் அப்படித்தான்' படத்தில்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vcb.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/vcb.jpg.html)
chinnakkannan
18th November 2014, 01:48 PM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ஹாய் கோபால் சார்.. உங்களுடைய non-linear writing, hats off, சுவையான பதிவு போன்ற பாராட்டுகளில் எப்படி மகிழ்ந்தேனோ அதே போல் உங்களுடைய இந்தப் பதிவிற்கும் பதிலளிக்க்க் கடமைப் பட்டுள்ளேன்..
//Chinna Kannan- I strongly detest your views on Evolved literature,evolved Movie movements, and serious writings. // எந்த வகை..எதைப்பற்றி எழுதினேன் – அவள் அப்படித்தான் பட த்தைப் பற்றித் தானே.... நல்லவேளை நான் பார்க்கவில்லை என எழுதியிருந்தேன்..யெஸ்.. மதுரை மினிப்ரியா என்ற நினைவு.. டிக்கட் கிடைக்கவில்லை..பின் அதுவே சாந்தியிலும் வந்து ஓடிச்சென்று விட பார்க்க முடியவில்லை.. பிற்காலத்தில் நண்பர்களின் சந்திப்பில் கேள்விப் பட்ட்து- அதுவா ஒரு போர் கதை..என..
//You have to reform yourself.// கண்டிப்பாகச் செய்கிறேன் சார்..
//Much as I like humour (Bagyam Ramaswamy,Devan,Gopu, Crazy Mohan Etc) ,if you consider it alone as the only thing in life, you are missing your search for betterment.//
ஸாரிங்க..எனக்கு சீரியஸாகவும் எழுதத் தெரியும்... நகைச்சுவையாகவும் எழுத கொஞ்சம் வரும் ( நீங்கள் தான் நகைச்சுவை குறைந்துவருகிறதுஎனக் குறிப்பிட்டிருந்த நினைவு) ஆனால் மாற்றங்கள் என்று வரும்போது மாறிக் கொண்டே இருப்பதும் எனக்கு ப் பிடிக்கும் எனினும் சொல்லவந்த விஷயங்களில் என்னுடைய ஸ்டைல் ஆஃப் ரைட்டிங்க் என்று ஒன்று இருந்தால் அதிலிருந்து விலகாமல் தான் நான் சொல்லமுடியும்..எனக்குச் சொல்லத் தெரியும்..
//There are many unexplored areas which never ceases to excite me. // எனக்கும் தான்..புதிய புதிய் நாவல்கள் படிப்பதில் மிக ஆர்வம் உண்டு..மாயா என்ற பெண்மணி எழுதிய கடாரம் என்ற நாவல், இணைய நண்பர் சுதாகர் கஸ்தூரி எழுதிய 6174 போன்றவை என் சமீபத்திய வாசிப்புகள்.. இது நாவல்கள் மட்டும்.. மற்ற விஷயங்களும் அப்படியே.. சந்தக் கவிதைஎழுத முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்..ஏனோ முரண்டு பிடிக்கிறது..எழுதிவிடுவேன்..
//With low level of intellect (like Quoting popular Poems or movie songs),you may play effectively to Galleries.// சுத்தமாப் புரியலைங்க..எனக்கு இண்டலக்டே இல்லியோ என்னவோ..ஆனால் எழுதுகிற இடுகை சுவாரஸ்யமாக இருக்கவேண்டும், யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும், எப்போது படித்தாலும் சுவாரஸ்யமாக இருக்கவேண்டும்(இது பேராசை தான்) என்று தான் எழுதுகிறேன்.. நான் எழுதும் – இந்த்த்திரியில் – எனது சொந்த க் கவிதைகளாக எழுத முயற்சித்தவையைத் தான் இடுகிறேன்..அது சுவாரஸ்யம் குறைவின் அப்போதே நீங்கள் சொல்லியிருக்கலாமே..திரைப்பாடல்கள் த்ரெட்டில் திரைப்பாட்டைப் பற்றிச் சொல்லாமல் எப்படி எழுதுவது.. அறிவில்லாமல் எழுதுகிறேன் என்றால் சரி. .இனி அறிவு கூட்டி எழுதப் பார்க்கிறேன்..
// But you seemed to be showing keenness in writing.// நன்றிங்க்ணா.. எனக்கு எழுதுவதில் எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதிப் பார்ப்பதில் மிக ஆர்வம் அதிகம்..முயற்சித்துக் கொண்டும் இருக்கின்றேன்.. நீங்கள் எழுதிய இந்த வரியிலேயே எவ்வளவு நாசூக்காக என்னைக் குத்துகிறீர்கள் என்று புரிகிறது..
// It wont do any good for you to improve. // உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது சார்..
//Pl.Grow up.// கண்டிப்பாக..உடல் மட்டும் தான் வளர்ந்துவிட்ட்து கோபால் ஜி.. அதுவும் எக்ஸர்ஸைஸ் செய்ய வேண்டுமாம் சர்க்கரையைக் குறைப்பதற்கு. தவிர எல்லாரையும் விட அடியவன் என்பதனால் தான் சின்னக் கண்ணன் என்று வைத்திருக்கிறேன்..இதை முன்பும் சொல்லியிருக்கிறேன்...அறிவு தான் வளர்வது கொஞ்சம் ஸ்லோ..
// Atleast stop having dig at Good works like Aval Appadithan.// அவள் அப்படித்தான் வாசுசார், க்ருஷ்ணாஜி ஸ்மோக் ரவி ஜி போன்றோரின் எதைக் குற்றம் கண்டேன்.. அவர்கள் கொஞ்ச்ம டூமச்சாகப் புகழ்வது போல் பட்ட்து.. தவிர பார்க்காத ஒன்றை ப் பற்றி நான் எங்ஙனம் சொல்ல இயலும்.. பாடல்கள் கேட்டிருக்கிறேன்..உறவுகள் தொடர்கதை எனக்குப் பிடிக்கும்.. மே பி ருத்ரய்யா ஹைட்டோ என்னவோ என்பது போல் எழுதியது உங்களைப் புண்படுத்தி விட்ட்தா.. நகைச்சுவையை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது நீங்கள் அறியாததல்ல.. அவர்களிடமே தான் ஓபனாக க் கேட்டு பதிலும் வாங்கியிருந்தேனே..
ஒரு அவள் அப்படித்தான் பட்த்திற்க்காக ரத்தமும் சதையும் கொண்டு இருக்கும் மனித மனத்தைப் / நண்பரை ( நண்பனா நான் –அதற்குத்தகுதி உண்டா என்பதையும் சொல்லிவிடுங்கள்)புண்படுத்துவது என்பது உம்மைப் பொறுத்தவரை நியாயமாக வைத்திருக்கிறீர் போலும்
இனிமேல் வாசு சார் எதிர்காலத்தில் எழுதப் போகும் “ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன” பட ரைட்டப்பும் அதற்கான மற்றவர்கள், என் எதிர்வினையும் கீழே கொடுக்கிறேன்.. அதன்படி செய்யமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்..
இ.ஸ்பெ ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.. மிக அருமையான படம் கதானாயகி ஆடு மேய்ப்பவள்..அவளை பக்கத்து வயலில் மாடு மேய்ப்பவன் ஒரு உணர்ச்சி மிக்க் கொண்ட மழை இடி மின்னல் தருணத்தில் ஆட்கொண்டு விடுகிறான்..அதே சமயத்தில் அவனும் மின்னல் தாக்கி இறந்து விடுகிறான்..ஒரே சமயத்தில் இன்பம் துன்பம்.;.அந்தப் பெண் தவிக்கத் தவிக்க திரையில் எழுகிறது இந்தப் பாடல்
ஆடாமல் ஆட்டி வைத்த விதியின் செயல் தான் அம்மா..
பாடாமல் படும்பாடு அவன்செயல் தான் அம்மா..
அந்த வரிகள் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொண்டு உணர்வினை மயக்கு மயக்கு என்று செய்து விடுகிறது..
//வீடியோ//
**
க்ருஷ்ணாஜி:
சூப்பர் வாசு சார்.. அதுவும் மிக அழகான படம்.. அழகான வரிகள்.. அதிலேயே க்ளைமாக்ஸில் அந்த ஆடு மேய்ப்பவள் நம்பிய மாட்டுப் பண்ணையாரையும் விபத்தில் பறி கொடுக்க இன்னொரு வயலினிசையுடன் கூடிய பாட்டைப் பற்றியும் எழுதுங்கள்..
மாவென்று கத்துகின்ற ஜென்மங்களெல்லாம்
பாவென்று கத்தவைத்த கந்தையா
எனை வாவென்று சொல்லிவிட்டு
போனகதை என்னையா..
ஆஹா நல்ல்வரிகள் (சுதேசமித்திரனில் இது பற்றி எழுதியிருப்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்..)
*
ஸ்மோக் ரவிஜி
//அந்த வரிகள் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொண்டு உணர்வினை மயக்கு மயக்கு என்று செய்து விடுகிறது..// சூப்பர் வாசு சார்.. எப்பொழுதுமே மனதிற்குள் ஒரு தாக்கம் ஏற்படுத்திய படம் இது..ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.. அதுவும் நீங்கள் எழுதியிருப்பது என் உணர்வலையின் மேல் மிதந்து சென்று உள்ளத்திற்குள் நுழைந்து உருக வைத்து விட்ட்து.. அந்தப் பாடலை மறுபடியும் கேட்டேன்..
*
சின்னக் கண்ணன்..: வாசு ஜி.. நான் படம் பார்த்த்தில்லை.. நீங்கள் போட்ட பாடலில் கொழுகொழு ஆடே என்ற வரி வருகிறது..அப்போது காண்பிக்கப் படும் ஆடு ஒல்லியாக இருப்பதைப் பார்த்தீர்களா..
*
// க்ருஷ்ணாஜி, வாசுசார், ரவிசார் மீதுள்ள நம்பிக்கையில் மேற்கண்ட ரைட் அப்..என்னைக் குறை சொல்ல மாட்டார்கள்.. //
*
நீங்கள் எழுதுவதாகச் சொன்ன தொடர், இப்போது எழுதப் போகும் அ.அ.தா அனுபவத்தை முடிந்த போதில் எழுதி இடுங்கள் கோபால் சார்.. ஆனால் எழுதட்டா எழுதட்டா என ஒவ்வொருமுறையும் கேட்பது கொஞ்சம் செயற்கைத் தனமாக எனக்குப் படுகிறது என்று நான் சொல்ல மாட்டேன்..அதைப் படித்தும் நான் கற்றுக் கொள்கிறேன்..
*
கடைசியாக மிக்க நன்றி கோபால் சார்.. நான் எதையுமே மனதிலோ உடலிலோ வைத்துக் கொள்வது இல்லை.. எனில் இந்தப் பதிவு..இதில் உம்மைப் புண்படுத்தியிருந்தால் என்னை உங்கள் யூஸ்வல் ஸ்டைலில் திட்டலாம்..தப்பில்லை.. நீங்கள் எல்லா வித்த்திலும் பெரியவர்..
gkrishna
18th November 2014, 02:39 PM
கிரேட் சி கே .
தல அஜித் ஒரு படத்தில் (விக்ரமன் படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கார்த்திக்,ரமேஷ் கண்ணா,ரோஜா நடித்த படம் ) அடிக்'கடி' 'I லைக் இட் ' அப்படின்னு சொல்வார். ஆனால் நான் 'கடி'க்கவில்லை . உண்மையில் ரசிக்க வைக்கும் எதிர் வினை .
http://www.umsystem.edu/newscentral/infocus/files/2010/08/Hats-Off-Warm-Fuzzy.jpg
chinnakkannan
18th November 2014, 03:04 PM
நன்றி க்ருஷ்ணா ஜி என்னை த் தவறாக எடுத்துக் கொள்ளாததற்கு..
gkrishna
18th November 2014, 03:07 PM
நன்றி க்ருஷ்ணா ஜி என்னை த் தவறாக எடுத்துக் கொள்ளாததற்கு..
சி கே
ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் சொல்லபடாது :)
friends பழனி பாரதியின்
'மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் '
பாடல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே சி கே .
Russellzlc
18th November 2014, 03:08 PM
நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த திரிக்கு இப்போதுதான் வருகிறேன். மக்கள் திலகம் திரியை பார்த்தும் பங்களித்தும் இருக்கும் நண்பர்கள் சிலருக்கு என் பெயர் பரிச்சயமாகியிருக்கலாம்.
பண்பாளர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு,
நேற்று நீங்கள் மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட திருமதி. ரெங்கம்மாள் அவர்களின் பேட்டி படித்தேன். ரசித்தேன். மிக்க நன்றி. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் என்று அன்போடு கோருகிறேன். மக்கள் திலகம் திரியை நீங்கள் ரெகுலராக பார்க்கிறீர்களா? என்று எனக்கு தெரியாது. ஒருவேளை அப்படி பார்க்காவிட்டால் எனது சந்தேகங்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் போய்விடுமோ என்பதற்காக இந்த திரிக்கே வந்து என் இரண்டு சந்தேகங்களை கேட்கிறேன்.
ஒன்று... அந்த கட்டுரை தொடர்பானது. அதில் திருமதி. ரெங்கம்மாள் அவர்கள், ராஜராஜசோழன் படத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுடன் டான்ஸ் ஆடியது மறக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தில் அது போன்ற காட்சி இல்லை என்று கருதுகிறேன். முதுமை காரணமாக அவர் மறதியில் சொல்லியிருக்கலாமோ? திரு.சிவாஜி கணேசன் அவர்களுடன் அவர் வேறு எந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்ல முடியுமா?
இரண்டு... சமீபத்தில் மக்கள் திலகம் நடித்த ‘ராஜாதேசிங்கு’ திரைக் காவியத்தில் இடம் பெற்ற ‘சரச ராணி கல்யாணி சங்கீத ஞான வாணி மதிவதனி....’’ என்ற பாடலை தொலைக்காட்சி ஒன்றில் ரசித்தேன். இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களும் பானுமதி அவர்களும் பாடிய கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த அருமையான பாடல். பாடலுடன் கூடவே தவழ்ந்து வரும் மோர்சிங் ஒலி சுகம். ஏற்கனவே உங்களிடம் நான் கூறியிருக்கிறேன். கர்நாடக சங்கீதத்தில் நான் நிபுணன் அல்ல. ஏதோ கேள்வி ஞானம் மட்டுமே. பதில் ஞானம் கிடையாது. அந்த பாடல் என்ன ராகம் என்று சொல்ல முடியுமா? நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Gopal.s
18th November 2014, 04:26 PM
சின்ன கண்ணன்,
நீஈஈஈஈஈஈஈண்ட விளக்கத்திற்கு நன்றி. நான் உடலில் நகைகளோ,மோதிரமோ, கை கடிகாரமோ,(ஏன் அரணா கயிறு கூட) அணிவதில்லை என்ற உண்மையை புரிந்து சொன்னதற்கு நன்றி.
எனக்கு நிஜமாகவே,நீண்ட தொடர் பதிவுகளுக்கு நேரம் போதுவதில்லை.அதனாலேயே சின்ன சின்ன பதிவுகள் தொடர்பு வேண்டி. மற்ற படி இயற்கை ,செயற்கை எல்லாம் இல்லை. சனி என்று குறித்து விட்டால் ,எப்பாடு பட்டாவது எழுத ஒரு உத்வேகம் பிறக்கும்,சொல்லி விட்டோமே என்று. அவ்வளவுதான். நான் சாதாரணமாக செய்யும் விஷயங்கள் கூட மற்றவர்களால் சிக்கலாகி விடுகிறது.
அவள் அப்படித்தான் நிச்சயம் உண்டு. வேறு பட்ட பார்வையில்.
Gopal.s
18th November 2014, 04:26 PM
Welcome Kalai. Nice to have you here.
chinnakkannan
18th November 2014, 04:52 PM
//நீஈஈஈஈஈஈஈண்ட விளக்கத்திற்கு நன்றி. நான் உடலில் நகைகளோ,மோதிரமோ, கை கடிகாரமோ,(ஏன் அரணா கயிறு கூட) அணிவதில்லை என்ற உண்மையை புரிந்து சொன்னதற்கு நன்றி.// கோபால் சார் சொன்ன இரண்டு நன்றிகளுக்கும் நன்றி.. இரண்டாவது வாக்கியம் எனக்கு வழக்கம் போலப் புரியவில்லை.வழக்கம்போல அங்கதமா..(சாட்ட்யர் தமிழ் சரிதானே)
/.நான் எதையுமே மனதிலோ உடலிலோ வைத்துக் கொள்வது இல்லை.. // இந்த என் வாக்கியத்துக்கு எதிர் பதிலா..( நான் வாட்ச் கட்டுவேன்ங்க்ணா)
//அவள் அப்படித்தான் நிச்சயம் உண்டு. வேறு பட்ட பார்வையில்.// எழுதுங்கள்ண்ணா.. நான் கற்றுக் கொள்கிறேன்..
நானும் முடிந்தால் படத்தைப் பார்த்துவிட்டு அதைப்பற்றிச் சொல்லப் பார்க்கிறேன் (கண்ணா திருந்தவே மாட்டடா நீ)
//நான் சாதாரணமாக செய்யும் விஷயங்கள் கூட மற்றவர்களால் சிக்கலாகி விடுகிறது.// இது எப்படி மற்றவர்களால் சிக்கலாகும்..உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை..கிடைத்திருந்தால் எழுதியிருப்பீர்கள்..அவ்வளவே..
அகெய்ன் நன்றி கோபால்சார்..
Russellzlc
18th November 2014, 05:55 PM
தங்களுடைய அன்பான பதிலுக்கு மிக்க நன்றி திரு.கிருஷ்ணா சார். திரு. கோபால் தங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
gkrishna
18th November 2014, 05:58 PM
அன்பு கலை வேந்தர் சார்
இன்ப அதிர்ச்சி .
இப்போது தான் உங்கள் பதிவு பார்த்தேன்.
வாசு மிகவும் சந்தோசம் அடைவார் .
நடிகை திருமதி ரங்கம்மாள் தற்போதைய வடிவேல்,கஞ்சா கருப்பு,சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் நடித்த திரை படங்களில் தென் படுகிறார்.அடையாளம் காண முடிகிறது. அவர் பேட்டியை படித்தால் பழைய திரை படங்களில் நடன குழுவில் இடம் பெற்று இருப்பாரோ என்று கொள்ள வைக்கிறது. ராஜ ராஜ சோழன் நினைவில் இல்லை . மீண்டும் ஒருமுறை பார்த்தால் உறுதியாக சொல்ல முடியும் .நிச்சயம் ஒரு முறை பார்த்து விட்டு பதில் தெரிவிக்கிறேன்
ராஜா தேசிங்கு திரை படத்தில் நீங்கள் குறிப்பிட்டு உள்ள பாடல் சுருட்டி ராகத்தில் அமைந்த பாடல். மிக அபூர்வமாக தமிழ் திரை பாடல்களில் உபயோகபடுதபட்டுள்ள ராகம் . சற்று சந்தேகத்துடன் சரச ராணி கல்யாணி பாடலை குறிப்பிட்டு எனக்கு கர்னாடக இசை ஆசான் ஒருவர் சென்னையில் வசிக்கிறார். அவரிடம் அவ்வபோது உரையாடுவேன். அவரிடம் கேட்டு உறுதியும் செய்து கொள்வேன். அவரும் இதை உறுதி செய்தார் .
http://www.youtube.com/embed/BlXxSZaISGc?
முழு பாடல் வரிகள் நமது நண்பர்களுக்காக
சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதி வதனி
சரச ராணி……….
புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
புனித ராஜ குல திலகா………
கனியில் மேவும் ரச இனிமைப்போலே
இந்த வனிதை வாழ்வில் நீ தர வா
கனியில் மேவும்…
நான் எனது வாழ்வில் பெரும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
நான் எனது………….
எனை புகழ்ந்து பேசுவது தகுமா ராஜா
எனை புகழ்ந்து………
மனம் மகிழ்ந்து கூறும் மொழி
நிஜமாய் ராணி
மனம்……….
நிலை மறந்தேன் கண்ணா
உளம் தெரிந்தேன் கண்ணே
இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே
இணையான இருவரால் மலரும் நேசம்
அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
இருவரால் மலரும் நேசம்..
சிவபெருமான் கிருபை வேண்டும் என்று பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் ஒன்று நீங்கள் கேள்வி பாட்டு இருக்கலாம் . அது இந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்
மிக்க நன்றி .நேரம் கிடைக்கும் போது எல்லாம் நிச்சயம் மக்கள் திலகம் திரிக்கும் வருவேன் . உங்கள் பண்பான அழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் கலை வேந்தர் சார்
நட்புடன்
கிருஷ்ணா
RAGHAVENDRA
18th November 2014, 06:27 PM
மதுரகானம் திரியின் புதுவரவான கலைவேந்தன் அவர்களுக்கு அன்பான வரவேற்பு. வருக வருக.
Russellzlc
18th November 2014, 06:57 PM
பெருமதிப்புக்குரிய பண்பாளர் ராகவேந்திரா அவர்களின் அன்பார்ந்த வரவேற்புக்கு நன்றிகள் பல.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Richardsof
18th November 2014, 07:21 PM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
மதுர கானம் திரிக்கு வருகை தந்த உங்களுக்கு நன்றி . உங்களுக்கு பிடித்தமான பாடல்களை உங்களுக்கே உரிய நடையில் பதிவிடவும் .
http://youtu.be/n02BYmK9gHM
Russellzlc
18th November 2014, 07:48 PM
நன்றி திரு. எஸ்.வி. சார்,
இங்கே பலருக்கும் பிடித்த இசையரசி சுசிலாவின் குரலில் எனக்கும் மயக்கம் உண்டு. மக்கள் திலகம் நடித்த நீதிக்குப் பின் பாசம் திரைக் காவியத்தில் இசையரசி பி.சுசிலாவின் தேவகானக் குரலில் கவியரசரின் எழிலார்ந்த வார்த்தைகளில் ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையமைப்பில் இடம் பெற்ற ‘வாங்க வாங்க கோபாலய்யா... வழக்கு என்ன கேளுங்கய்யா’ பாடல் என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல். பல்லாண்டு வாழ்க படத்தில் ‘மாசி மாசக் கடையிலே மச்சான் வந்தாரு..’ பாடலும் சற்று இதே சாயலில் இருக்கும். அதற்கும் ‘மாமா’தான் இசை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/color]
Russellzlc
18th November 2014, 09:14 PM
நண்பர்களுக்கு,
இங்கே இப்போது பலரும் விவாதித்துக் கொண்டிருக்கும் அவள் அப்படித்தான் படத்தின் இயக்குநர் சி.ருத்ரைய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
rajeshkrv
18th November 2014, 09:39 PM
Mr. Rajesh,
Thanks for rendering suprb songs of Deva sir.
I think you are coming year-by-year from his beginning.
Deva sir composed very beautiful songs with melody, but everyone branded him as 'Gana Deva' which is a wrong phrase.
Your rendition breaks that talk and bringing his wonderful melodies.
I am waiting when you will come for 1996 songs particularly the one and only Kaadhal Kottai, in which all songs are superb and variety.
The composing of the title song of kaadhal kottai 'Kaalamellaam kaadhal vaazhga' will take me out of the world whenever I here the song.
thanks again
regards
stl
ஸ்டெல்லா உங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஆம் ஆண்டின் வரிசையில் தான் அவரது பாடல்களை தொகுத்துக்கொண்டிருக்கிறேன்
vasudevan31355
19th November 2014, 08:42 AM
கலைவேந்தன் சார்!
நிஜமாகவே இன்ப அதிர்ச்சி. கிருஷ்ணா சார் சொன்னது போல் மிக்க சந்தோஷமாய் இருக்கிறது. நிஜமாகவே மதுர கானங்களில் தங்களை எதிர்பார்க்கவே இல்லை.
உங்களை மதுர கானங்கள் திரிக்கு அன்போடு வருக வருக என வரவேற்கிறேன்.
தங்கள் எழுத்து வளம் எல்லோரும் அறிந்தது. அதனால் மதுர கானங்கள் திரியில் தங்கள் பொன்னான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சுசீலா அம்மா அவர்கள் பாடிய 'வாங்க வாங்க கோபாலய்யா... வழக்கு என்ன கேளுங்கய்யா... தங்களைப் போல எனக்கும் பிடித்த பாடல். நிச்சயமாக இது ஒரு சம்பிரதாய வரவேற்பல்ல. மனமகிழ்ச்சி கொண்ட வரவேற்பு.
அருமையான தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும்
அன்பன்
வாசுதேவன்.
vasudevan31355
19th November 2014, 08:53 AM
கலைவேந்தன் சார்,
சுசீலா அம்மா பாடல்கள் எவ்வளவோ இருக்கும் போது தாங்கள் இந்தப் பாடலைத் தேர்ந்து எடுத்திருப்பது தங்கள் சமயோசித புத்தியையும், இயற்கையான நகைச்சுவை உணர்வையும், உங்களிடம் இருக்கும் லேசான ரசிக்கக் கூடிய கிண்டல் என்ற ஜாலியான டைப்பையும் காட்டுகிறது. எல்லாம் அந்த கோபாலனுக்கே வெளிச்சம்.:) வழக்கு என்ன என்று கேக்கணுமா? அது உலகம் அறிந்த கேஸ் ஆயிற்றே.:) (கேஸ் என்றால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்:)) செம குசும்பு. நன்றாக ரசித்தேன். நன்றி சார்.
அது சரி! இந்தப் பாடலில் வரும் சரோஜாதேவியின் கோபாலர் பாடல் முழுதும் ஒருவித சோகத்துடனே டிஸ்டர்ப் ஆகவே இருக்கிறாரே இன்னொரு கோபாலரைப் போலவே.:)
https://www.youtube.com/watch?v=5x0dUwoR03E&feature=player_detailpage
vasudevan31355
19th November 2014, 09:03 AM
கலைவேந்தன் சார்,
நீங்கள் இங்கு வந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்குள் திரியின் சமீபத்திய 'டாக்'கான 'அவள் அப்படித்தான்' இயக்குனர் ருத்ரய்யா காலமானார் என்ற செய்தி நெஞ்சி இடியாய் இறங்கியது.
அபூர்வ குறிஞ்சி மலரான அந்த இயக்குனர் இயக்கியது இரண்டு படங்கள்தான். ஆனால் பல்லாயிரக் கணக்கான தமிழ் திரைப்பட கலா ரசிகர்கள் நெஞ்சில் 'அவள் அப்படித்தான்' இயக்கம் மூலம் அந்த உன்னத மகா கலைஞன் என்றென்றும் வாழ்வான் என்பது மட்டும் உறுதி.
அந்த மகா கலைஞனின் மறைவுக்கு என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
gkrishna
19th November 2014, 09:17 AM
கலைவேந்தன் சார்,
நீங்கள் இங்கு வந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்குள் திரியின் சமீபத்திய 'டாக்'கான 'அவள் அப்படித்தான்' இயக்குனர் ருத்ரய்யா காலமானார் என்ற செய்தி நெஞ்சி இடியாய் இறங்கியது.
அபூர்வ குறிஞ்சி மலரான அந்த இயக்குனர் இயக்கியது இரண்டு படங்கள்தான். ஆனால் பல்லாயிரக் கணக்கான தமிழ் திரைப்பட கலா ரசிகர்கள் நெஞ்சில் 'அவள் அப்படித்தான்' இயக்கம் மூலம் அந்த உன்னத மகா கலைஞன் என்றென்றும் வாழ்வான் என்பது மட்டும் உறுதி.
அந்த மகா கலைஞனின் மறைவுக்கு என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
அன்பு கலை சார்/வாசு சார்
கடந்த இரண்டு மூன்று தினங்களாக 'அவள் அப்படிதான்' திரை படம் பற்றி ஏதாவது ஒரு பதிவு நமது திரியில் இடம் பெற்று வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அதன் இயக்குனர் திரு. ருத்ரையா நேற்று இரவு காலமானார் என்ற செய்தி மிகவும் வருததற்குரியது. Rip
இன்று காலை பேப்பர் இல் இந்த செய்தி படித்து விட்டு திரு வாசு அவர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள அழைத்த போது திரு கலை அவர்களால் நேற்று இரவே நமது திரியில் பதிவிட பட்டு உள்ளது என்று கேட்டு ஒரு புறம் ருத்ரையா மரணம் துயர கடலில் ஆழ்த்தினாலும் அதை நம்மோடு பகிர்ந்து கொண்ட திரு கலை அவர்களின் கண்ணியத்தை நினைத்து மகிழ்ச்சியும் அடைகிறோம்.
திரு. ருத்ரையா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறை ஆற்றலை வேண்டுகிறேன்
கிருஷ்ணா
gkrishna
19th November 2014, 09:21 AM
திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த "அவள் அப்படித்தான்' படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கென முதன்முதலாக தனித்துவத்தை ஏற்படுத்தித் தந்த ருத்ரையா 1980-ஆம் ஆண்டு சந்திரஹாசன் நடிப்பில் வெளிவந்த "கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தின் மூலமும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
ருத்ரையாவுக்கு ஒரு மகள் உள்ளார். ருத்ரையாவின் இறுதிச்சடங்குகள் புதன்கிழமை (நவ.19) சென்னையில் நடைபெறுகிறது.
gkrishna
19th November 2014, 09:26 AM
http://www.screen4screen.com/wp-content/uploads/2014/11/Rudraiah-With-Kamalhaasan-300x286.jpg
தமிழ்த் திரையுலகம் மறந்து போன மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ருத்ரையா சற்று முன்னர் சென்னை, தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் மரணடைந்தார்.
நல்ல சினிமாவை நேசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு ருத்ரையா என்ற இயக்குனரை என்றுமே மறக்க முடியாது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்த ‘அவள் அப்படித்தான் (1978),’ சந்திரஹாசன், நந்தகுமார், கிருஷ்ணகுமாரி நடித்த ‘கிராமத்து அத்தியாயம் (1980)’ ஆகிய படங்களை இயக்கியவர்.
அதன் பின் ஏனோ அவர் மேற்கொண்டு தமிழ்ப் படங்களை இயக்கவில்லை. தமிழ்த் திரையுலகம் அவரை ஒதுக்கியதா அல்லது அவராகவே ஒதுங்கினாரா என்பது தெரியவில்லை. ருத்ரையாவின் இரண்டாவது படமான ‘கிராமத்து அத்தியாயம்’ மாபெரும் தோல்விப் படமாக அமைந்ததால் அவரால் தொடர்ந்து படங்களை இயக்க முடியாமல் போனது என்றும் சொல்கிறார்கள்.
சமீபத்தில் கூட இயக்குனர் பார்த்திபன் அவருடைய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் இசை வெளியீட்டுக்கு அவரை அழைத்ததாகவும், ஆனால் அவர் விரும்பவில்லை என்றும் கூறியதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
பத்து வருடங்கள் முன் வரை கூட ருத்ரையா மீண்டும் படங்களை இயக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. 1978-லேயே முற்போக்கான ‘அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கியவர் அவர். பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த ருத்ரையா அப்போது வளர்ந்து வந்த முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை இயக்கினார்.
1978 தீபாவளி அன்று “அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா” ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் இன்றும் நினைவில் நிற்கக் கூடிய ஒரு படைப்பாக ‘அவள் அப்படித்தான்’ படம் இருந்து வருகிறது. படம் வெளிவந்த போது படத்திற்கு வரவேற்பே இல்லாமல் இருந்தது.
அந்த சமயத்தில் இந்தியத் திரையுலகின் திரைப்பட மேதையான மிருணாள் சென் சென்னைக்கு வந்திருந்தார். யதேச்சையாக ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்த்தவர் ஒரு அருமையான திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற வருத்தத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார். அதன் பின்தான் பத்திரிகைகள் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா ஆகியோரின் பேட்டிகளை வெளியிட்டு படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பிறகுதான் படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியது.
சிஎன்என் – ஐபிஎன் டெலிவிஷன் இந்தியாவின் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தேர்வு செய்து பெருமைப்படுத்தியுள்ளது.
தமிழில் எத்தனை ஆயிரம் படங்கள் வெளிவந்தாலும் ‘அவள் அப்படித்தான்’ படமும், அப்படத்தை இயக்கிய ருத்ரய்யாவும் என்றுமே போற்றுதலுக்குரியவர்கள்தான்.
ஒரு சினிமா ரசிகனாக அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்…
uvausan
19th November 2014, 10:07 AM
உண்மை கிருஷ்ணாஜி - ருத்ரய்யா மறைந்தது ஒரு மா பெரும் இழப்பு - "அவள் அப்படித்தான் " எழுப்பிய தாக்கம் போல நம்மை வெகு நாட்கள் பாதிக்கும் . அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்…
uvausan
19th November 2014, 10:09 AM
திரு கலைவேந்தன் - உங்கள் தமிழ் நடையில் மயங்கியவர்களில் நானும் ஒருவன் - உங்களை இந்த திரியில் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் -
அன்புடன்
ரவி
gkrishna
19th November 2014, 10:47 AM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTUIjzyfVOyR84ZKrd4UuiKXtpgg2hnA z5nZv6-0tfNj1sm6SqtbA
இன்று எம் என் நம்பியார் அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் நிறைவு நவம்பர் 19, 2008 - thanks to Maalaimalar
மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மே 21, 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். கேரள மாநிலம் மலபார் மாவட்டம் (தற்போதய கண்ணூர் மாவட்டம்) சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் பிறந்தார். . நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே, அண்ணன் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடிபெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்தார்.
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால்தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது. நவாப் கம்பெனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935-ம் ஆண்டு 'பக்த ராம்தாசு' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும்.
அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது. பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக்குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தன.
1939-ல் பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கி பெரிய நடிகராகி விட்டார். 1944-ல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி.கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ்.வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர். இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார்.
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்.ஜி.ஆர்.-ன் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆர்.-உடன் சேர்ந்து நடித்தார். சிவாஜியுடன் இவர் நடித்த சிவந்தமண்,தில்லானா மோகனாம்பாள்,குலமா குணமா,தெய்வமகன்,தர்மம் எங்கே,சவாலே சமாளி,திரிசூலம் போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை. 1980-களில் வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு, இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி. தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பலமுறை அரங்கேற்றியுள்ளார். திகம்பர சாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 1946-ம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார்.
பா.ஜ.கவின் முக்கிய தலைவராகத் திகந்த சுகுமாரன் நம்பியார் இவரது மகன். இவர் கடந்த வருடம் காலமானார். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.
உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பிற்பகல் 12:30 மணியளவில் மறைந்தார்.
நடிகர் சரத்பாபு இவரது மகளை மணந்து பின் சமீபத்தில் விவாகரத்து பெற்று விட்டார்
http://www.youtube.com/watch?v=EgFTJDYI42w
uvausan
19th November 2014, 10:54 AM
வ. உ .சி யின் நினைவு நாளை அசைபோடும் இந்த நாட்களில் , சற்றே பாரதியை பற்றியும் நினைத்து பார்த்தேன் - இருவரும் ஒன்றாக பழகியவர்கள் - ஒரே நோக்கத்துடன் உழைத்தவர்கள் - இருவருமே வரும் கால இந்தியா வை பற்றி பல கனவுகள் கண்டவர்கள் - ஆனால் என்றும் தணியாத சுதந்திர தாகத்துடன் இந்த மண்ணுலுகை விட்டு பிரிந்தவர்கள் - இருந்தாலும் என்றும் நம் உள்ளத்தில் நிரந்தரமாக வாழ்பவர்கள் . அடுத்த தலைமுறையில் இவர்கள் வாழ்வார்களா என்று கேட்டால் , பதில் சொல்வது மிகவும் கடினம் - பாரதி -யார் ? என்று கேட்க்கும் பலர் நம்முடையே இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் - பாரதியின் கவிதை ஒன்றை இங்கு பதிவிட விரும்பிகிறேன்
பாரதி ஒரு பெரிய உபாசகர் - அவர் ஓர் அழகான நெருப்பைப் பார்த்தேன் என்று பாடுவார் . சிறிய நெருப்புப்பொறி ; பெரிய நெருப்பல்ல . அந்தத் துளி நெருப்புப் பொறியை பார்த்தவர் , இங்கே மினுக் மினுக் என்கிறதே , எங்கேனும் கொண்டுபோய் அதை ஒளித்து வைத்தால் என்ன என்று எடுத்துப் போனார் . எங்கே ஒளித்து வைப்பது ? .....
ஒரு பெரிய காடு இருந்தது . அந்த காட்டில் ஒரு மரம் ; அந்த மரத்தில் ஒரு பொந்து . அந்த பொந்துக்குள்ளே கொண்டு போய் தீப்பொறியை வைத்து விட்டார் .
" அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் "
ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு அர்த்தம் பாருங்கள் ! அக்னிக்குஞ்சு - வெறும் அக்னி அன்று . அதைக் காட்டில் வைத்தேன் என்று சொல்லாமல் " ஆங்கோர் " காடு என்கிறார் . காடு பக்கத்தில் இல்லை ; எங்கேயோ தூரத்தில் இருக்கிறது . அக்னிக்குஞ்சு பக்கத்தில் இருக்க வேண்டாம் என்று எங்கேயோ ஒரு காட்டில் கொண்டு வைத்துவிட்டு அதை மறந்துவிட்டார் .
" வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ !
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் "
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் - எனும்போது அந்த நெருப்பு எப்படிப்பட்ட நெருப்பு என்பதை உணரமுடியும் .
பாரதி ஆனந்தத்தின் எல்லைக்குப் போனார் - அதனால் தான் தத்தரிகிட தித்தோம்!
ஏன் தத்தரிகிட தித்தோம் வந்தது ? " சின்ன பொறிதானே " என்று நினைத்து நெருப்பைக் கொண்டு போய் இதயமாகிற பொந்தில் வைத்தேன் . என்னைச் சுற்றி என் மனத்துக்குள் வேண்டாத காடும் , குப்பையும் இருந்தன . நெருப்புப் பொறியை உள்ளே வைத்து விட்டு அதை நான் மறந்து போய் விட்டேன் - ஆனால் வெந்து தணிந்தது காடு ; சுற்றியிருந்த குப்பையெல்லாம் பொசுங்கிப் போய் விட்டது - இனி எனக்கு மிஞ்சியது ஆனந்தமே -தத்தரிகிட தித்தோம் "
ஆழத்தில் புதைந்து கிடக்கும் முத்துக்கள் அவர் பாடல்கள் - நம் மனதில் இருக்கும் வேண்டாத எண்ணங்களையும் , கோபங்களையும் ,ஆசைகளையும் எரித்து விட்டால் , நம்மை பிரிக்க எந்த சக்தியும் இல்லை - ,நாமும் பாரதி போல தத்தரிகிட தித்தோம் என்று ஆடலாம் !!
பாரதியின் நினைவில் -" நல்லதோர் வீணை" இங்கே உங்களுக்காக !
http://youtu.be/Nrh1i6TXBK8
:):smokesmile:
chinnakkannan
19th November 2014, 10:58 AM
குட் மார்னிங்க் ஆல்..
க்ருஷ்ணா ஜி.. எம்.என் நம்பியாரை நினைவுகளுக்கு நன்றி.. ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது நம்பியார் ராஜ சுலோச்சனா எல் ஆர் ஈஸ்வரி ஹம்மிங்.. என்ன பாட் சொல்லுங்க பார்க்கலாம் :)
Gopal.s
19th November 2014, 11:18 AM
எஸ்வி,கலைவேந்தன்,
ஒரு வேண்டுகோள். கரு பொருள்,பார்வை இரண்டையும் விசாலமாக்கி பங்கு தந்தால் ரசிக்க காத்திருக்கிறோம். செக்கு மாடு போல ,அங்கு போட்டதையே இங்கு வந்து செய்யாமல், எங்களை போன்ற பொது ரசிகர்களை பரவச படுத்த வேண்டுகிறேன்.
Gopal.s
19th November 2014, 11:25 AM
கல்லூரி காலத்தில் நான் பழகிய நண்பனும்(35 வருடங்களாக தொடர்பிலில்லை), one movie wonder என்ற வகையில் தமிழின் மிக சிறந்த படங்களில் ஒன்றை தந்தவனும் ஆனா ருத்ரையா மறைவுக்கு எனது ஆத்மார்த்தமான கண்ணீர் அஞ்சலி.
நான் எழுத நினைத்த "அவள் அப்படித்தான்" எனது நண்பனின் ஆத்மாவுக்கு சமர்ப்பணமாவது,குரூர கவிதையாகி விட்டதே?
rajraj
19th November 2014, 11:27 AM
" Bharathi Yaar? " Interesting. It reminds me of what happened about 20 years back.
I began our annual music party with the song " veLLai thaamarai poovil iruppaaL...". At the end of the party one youngster in his early 30s came up to me and asked me how I knew Bharathiyar songs. I was stunned. In my elementary school days (1940s) we used to start the day with " senthamizh naadenumpodhinile"" or " veLLai thaamarai poovil". Monday morning was for flag hoisting and " thaayin maNikkodi paareer...". Obviously, Bharathiyar is out of the school curriculum. Sad! May be, Bharathiyar devotees should bring this up with the government.
I still sing 'veLLai thaamarai poovil', 'nenjil uramum indri', 'manadhil urudhi veNdum', 'mohathai kondru vidu', 'chinanchiru kiLiye' and other songs.
I would not be surprised if Bharathiyar is forgotten.
gkrishna
19th November 2014, 11:29 AM
குட் மார்னிங்க் ஆல்..
க்ருஷ்ணா ஜி.. எம்.என் நம்பியாரை நினைவுகளுக்கு நன்றி.. ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது நம்பியார் ராஜ சுலோச்சனா எல் ஆர் ஈஸ்வரி ஹம்மிங்.. என்ன பாட் சொல்லுங்க பார்க்கலாம் :)
டியர் சி கே
முயன்று பார்த்தேன் .நினைவில் கொண்டு வர முடியவில்லை .
பாடல் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவல் கொள்கிறேன்
Rgds
GK
vasudevan31355
19th November 2014, 11:37 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 19)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
இளையராஜா தொடர் வரிசையிலே இன்று ஒரு அபூர்வப் படம்.
http://www.tamilmp3.us/Music3/A-Z%20Songs/A/Aval%20Oru%20Pachai%20Kuzhanthai/Aval%20Oru%20Pachai%20Kuzhanthai.jpg
1978-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் அன்னை வேளாங்கண்ணி கிரியேஷன்ஸ் 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' என்ற படம் ஒன்று வந்தது. அதிகம் யாருக்கும் தெரியாத படம். வந்த சுவடும் தெரியாது. போன சுவடும் தெரியாது. அம்ஜத் குமாரின் 'தோரஹா' காட்சிகள் ஓவர் என்று அப்போதைய சிறுசுகள், இப்போதைய பெருசுகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். (சி.க 'ரொம்ப முக்கியம்' என்பது காதுல கேட்குது)
விஜயகுமார், பவானி (யெஸ்... புண்ணியபூமி, உழைக்கும் கரங்கள் பவானிதான்) பிரதான நடிகர்கள். அம்ஜத் குமார், எஸ்.ஆர் விஜயா, விஜயமாலினி, ஆனந்து, பால பாஸ்கர், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நடித்திருந்தனர். தயாரிப்பு எம்.ஷோபிதா குமார் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படம் இது. இப்படத்தைப் பற்றி அதிகமாக எந்தத் தகவலும் இல்லை.
ஆனால் இதில் மட்டும் இளையராஜா விட்டு வைத்தாரா என்ன?
http://4.bp.blogspot.com/-yGgeUMbPuzw/TY1seKzM_HI/AAAAAAAABhQ/v22Jb_UXjZU/s1600/2010072452210701.jpg
சகோதர உறவுகள் எஸ்.என்.சுரேந்தர், ஷோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து பாடிய ஓர் அருமையான பாடல். (எஸ்.என் சுரேந்தர், இவர் அண்ணன் எஸ்.என் சுந்தர், ஷோபா இவர்கள் இணைந்து 1970- ல் 'லலிதாஞ்சலி' என்று அவர்களின் தாயாரின் நினைவாக ஒரு லைட் மியூசிக் ட்ரூப் ஒன்று தொடங்கி நடத்தினார்கள்)
மாலை இள மனதில்
ஆசை தனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம்
கவிதைகள் பாடியது மாலை
மலர் போல பெண் ஒன்று
மடி மீது பொன் வண்டு
மனம் கேட்பது உன்னிடம் மது
தா என்று
ரதி மன்மதன்
காவியம் இதுதான் இன்று
மாலை இள மனதில்
ஆசை தனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம்
கவிதைகள் பாடியது மாலை
விழி மூடித் தூங்கும் போதும்
உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பம் அதுதான் வேண்டும்
இனி என்னவோ
வாழ்வெல்லாம் சுகம் ஆரம்பமாகும்
மாலை இள மனதில்
ஆசை தனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம்
கவிதைகள் பாடியது மாலை
சொக்கித் துவள வைக்கும் பாடல்தான். மாதுரி, சொர்ணா, வசந்தா இவர்கள் மூவரின் குரல் கலந்தால் எப்படி ஒலிக்குமோ அப்படி ஷோபாவின் குரல் மூவரின் ஒன்று சேர்ந்த கலைவையாக போதையூட்டுகிறது. அதுவும் 'விளையாட்டிலே இன்பம் அதுதான் வேண்டும்' என்று சொக்க வைப்பார்.( கிருஷ்ணா! அடிக்க வர வேண்டாம்) பாடல் முழுவதும் மென்மையான இசை அமர்க்களமாய் பவனி வருகிறது. திரும்பக் கேட்காமல் இருக்க முடியாத பாடல் வகையைச் சார்ந்தது.
கேட்டு மகிழுங்கள். கேட்டால் நிறுத்தவே மனம் வராது.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3s0IEi0y4NE
இது மட்டுமல்லாமல்
பொண்ணு பார்க்க வந்தாரு மாப்பிளை
நல்ல பாட்டை மாத்த சொல்வதென்ன நினைப்பில
இவர் புத்தி மாற அடிக்க வேணும் வேப்பிலை
மாப்பிள்ளைன்னா மாப்பிள்ளை மண்ணாங்கட்டி தோப்பிலே
இளையராசாவை நினைச்சு
இளையராசாவை நினைச்சு
இளைச்சு போனேங்க தவிச்சு
வரவா தரவா மெதுவா பெறவா
என்று ஷோபா குரலில் ராஜா புகழ் பாடும் பாடல் ஒன்றும் உண்டு. இதையும் ஷோபா டீஸிங் ஸ்டைலில் ஜோராகப் பாடியிருப்பார். எஸ்.பி.ஷைலஜா குரல் போல் இருக்கும்
http://www.inbaminge.com/t/a/Aval%20Oru%20Pachai%20Kulandhai/
chinnakkannan
19th November 2014, 11:50 AM
கிருஷ்ணா ஜி..கவிதா படம்.. பறக்கும் பறவையும் நீயே..
இந்தப் பாட்டு ரொம்ப நாளாத்தேடி பின் ராகவேந்தர் சார் தான் எனக்கு இன்னொரு இழையில் கொடுத்தார்..
http://www.youtube.com/watch?v=IBUG2Am8mPo
//
சகோதர உறவுகள் எஸ்.என்.சுரேந்தர், ஷோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து பாடிய ஓர் அருமையான பாடல். (எஸ்.என் சுரேந்தர், இவர் அண்ணன் எஸ்.என் சுந்தர், ஷோபா இவர்கள் இணைந்து 1970- ல் 'லலிதாஞ்சலி' என்று அவர்களின் தாயாரின் நினைவாக ஒரு லைட் மியூசிக் ட்ரூப் ஒன்று தொடங்கி நடத்தினார்கள்) // எனக்குத்தெரியாத விஷயம் இது வாசு சார் நன்றி.. எஸ்.என் சுரேந்தர் தானே மோகனின் பின்குரல் தந்தவர்.. பாடல் ஈவ்னிங்க் கேட்கிறேன். நன்றி
vasudevan31355
19th November 2014, 11:59 AM
கிருஷ்ணா
நம்பியார் நினைவு நாளில் அவரை நினைவாஞ்சலி செய்தது பாராட்டுக்குரியது. எனது நன்றியும் கூட.
gkrishna
19th November 2014, 12:12 PM
வாசு
வழக்கம் போல் 1977-78 சிலோன் ரேடியோ ஹிட் பாடல் . சுரேந்தர்க்கு அந்நாட்களில் எஸ் எ சந்திர சேகர் படத்தில் ஒரு பாடல் நிச்சயம் உண்டு .
எஸ் எ சந்திரசேகர் இன் இயக்கத்தில் வெளி வந்த முதல் படம். (நிறைய பேர் சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்வார்கள்). நடிகர் திலகத்தின் எங்கள் தங்க ராஜா படத்திற்கு உதவி இயக்குனர். இந்த படத்தின் போஸ்டரில் அவர் பெயர் எஸ் எ சி சேகர் என்று தான் போட்ட நினைவு உண்டு.பிறகு தான் எஸ் எ சந்திர சேகர்.
இளையராஜாவின் ஆரம்ப கால மெலடி
மாலை இள மனதில்
ஆசை தனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம்
கவிதைகள் பாடியது மாலை
சுந்தர், சுரேந்தர், ஷோபா மூன்று பேரை குறிபிட்டீர்கள். ஷீலாவை விட்டு விட்டீர்களே :) (நடிகர் vikraanth(கற்க கசடற) அம்மா).நால்வரும் இணைந்து லலிதாஞ்சலி இன்னிசை குழு நடத்தினார்கள். படம் முதல் நாள் முதல் ஷோ நெல்லை பாபுலர் (பிறகு ராம் பாபுலர்- இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை . திரு கோபு சார் அவர்களிடம் கேட்க வேண்டும் ) .நாம் முதல் பாகத்தில் இவர்களை பற்றி டிஸ்கஸ் செய்து இருக்கிறோம் . ஷோபாவின் அப்பா திரு நீலகண்டன் வீ வீ creation (vijay and vidya) என்ற பெயரில் நிறைய திரைப்படங்கள் எஸ் எ சி இயக்கத்தில் தயாரித்து இருக்கிறார்
vasudevan31355
19th November 2014, 12:17 PM
//ஷீலாவை விட்டு விட்டீர்களே//
நன்றாகவே தெரியும் கிருஷ்ணா. நம் நண்பர்களுக்கு அதிக பரிச்சயம் இல்லையென்றுதான் விட்டு விட்டேன். இப்போது நீங்கள் சொல்லி விட்டீர்கள்.
vasudevan31355
19th November 2014, 12:19 PM
கிருஷ்ணா!
சுரேந்தர், ஷோபா சிறு வயதில் பாடிய திரைப்படப் பாடல்களை அவிழ்த்து விடுங்களேன். அப்புறம் பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே.
gkrishna
19th November 2014, 12:31 PM
உங்களுக்கு தெரியாததா சுவா :)
"கொஞ்சும்'' காமெடி நல்லா கவனிங்க காமெடி தான் காம நெடி அல்ல :)
வாசு சார்
சுரேந்தர் ஷோபா உடன் இணைந்து பாடிய வேறு பாடல் நினைவில் இல்லை .சுரேந்தர் தனியாக,ஜானகியுடன் பாடிய பாடல்கள் நினைவில் உண்டு . 'தனிமையிலே ஒரு ராகம்' ,'தேவன் கோயில் கீதம் ஒன்று','பாரிஜாத பூவே','கண்மணி நில்லு காரணம் சொல்லு
vasudevan31355
19th November 2014, 12:31 PM
கிருஷ்ணா கண்ணு!
சந்திரசேகரின் 'நீதிக்கு தண்டனை' படமே லலிதாஞ்சலி பின் ஆர்ட்ஸ் வழங்கியதுதான். தயாரிப்பும் நீங்க சொன்ன மாதிரி தயாரிப்பு எஸ்.எஸ்.நீலகண்டன், ஷோபா சந்திரசேகரன் என்று போடுவார்கள்.
கருணாநிதி கைவண்ணத்தில். ஆரம்பமே அந்த டிரேட் மார்க் வந்துவிடும்.
கொடி மங்கலம் என்ற ஊரின் பெயர் உள்ள போர்டில் கொடிக்குப் பக்கத்தில் 'ய' எழுத்தை சேர்த்து கொடி(ய)மங்கலம் என்று திருத்துவார்கள். என்னே தமிழ்! என்னே சிந்தனை! 'திரும்பிப் பார்' படத்தில் 'கருடன் பதிப்பகம்' என்ற வாசகத்தைத் திருத்தி 'திருடன் பதிப்பகம்' என்று மாற்றுவது போல. மாறாத டிரேட் மார்க்.:)
vasudevan31355
19th November 2014, 12:34 PM
கிருஷ்ணா!
நாஞ் ஜொன்னது சின்ன வயசுல 'பாசப் பறவைங்க' பாடினது:) ..அதாவது கொயந்தையில.:) ஓ.கே? நன்றி கமல் சம்பந்தம்.:)
gkrishna
19th November 2014, 12:36 PM
கிருஷ்ணா கண்ணு!
வாசு பன்னு :) https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcR8PQ20oKag4yroq17jTJmQo-xwgI--WCrx245cNmDPvrq0Q7Ve3Q
நீங்களே சூப்பர் ஆக எழுதிட்டேன்களே :)
அதுவும் 'விளையாட்டிலே இன்பம் அதுதான் வேண்டும்' என்று சொக்க வைப்பார்.( கிருஷ்ணா! அடிக்க வர வேண்டாம்) பாடல் முழுவதும் மென்மையான இசை அமர்க்களமாய் பவனி வருகிறது. திரும்பக் கேட்காமல் இருக்க முடியாத பாடல் வகையைச் சார்ந்தது'
gkrishna
19th November 2014, 12:37 PM
ஷோபா குரல் தானே 'இரு மலர்கள்' படத்தில் அந்த 'யாரடி இங்கே மந்திரி குட்டி ராணி வந்தா நீ எந்திரி ஓடி பிடித்து விளையாட ' vaasu
chinnakkannan
19th November 2014, 12:39 PM
//நன்றாகவே தெரியும் கிருஷ்ணா. நம் நண்பர்களுக்கு அதிக பரிச்சயம் இல்லையென்றுதான் விட்டு விட்டேன். இப்போது நீங்கள் சொல்லி விட்டீர்கள்.// ஷீலா தெரியுமே..செம்மீன் தானே :)
JamesFague
19th November 2014, 12:51 PM
Courtesy: Dinamalar
தமிழின் அற்புதமான இயக்குனர் ருத்ரய்யா மறைந்தார்
புதன், 19 நவம்பர் 2014 (10:35 IST)
தமிழின் ஆகச்சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து இடங்களில் வரக்கூடிய திரைப்படம் அவள் அப்படிதான். அதனை இயக்கிய மதிப்புக்குரிய இயக்குனர் ருத்ரய்யா. அவர் சென்னையில் காலமானார்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் போக்கை எழுபதுகளிலும், எண்பதுகளிலும் மாற்றியமைத்த இயக்குனர்களில் ருத்ரய்யா முக்கியமானவர். கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா நடிப்பில் அவர் இயக்கிய அவள் அப்படிதான் முக்கியமான படைப்பு. ஆனால் படம் வெளியான நேரம், வழக்கமான கமல், ரஜினியை எதிர்பார்த்தவர்களுக்கு படம் ஏமாற்றமளித்ததால் தோல்வி அடைந்தது. ஆனால் இன்றளவும் அப்படத்தின் புகழ் மங்காமலுள்ளது.
அவர் புதுமுகங்களை வைத்து இயக்கிய கிராமத்து அத்தியாயம் மிகச்சிறந்த படம். புதுமுகங்கள் நடித்ததால் அவள் அப்படிதான் அளவுக்குக்கூட கிராமத்து அத்தியாயம் பேசப்படவில்லை. ஆனால் அதன் பாதிப்பும் இன்றளவும் தொடர்கிறது.
ஒரு நல்ல படைப்பாளியை தமிழகம் கொண்டாட தவறியதால் அவரால் அதிக படங்கள் இயக்க முடியவில்லை. தமிழ் சினிமாவுக்கும், தமிழகத்துக்கும் அது பேரிழப்பு.
சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ருத்ரய்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை பலனில்லாமல் அவர் மரணமடைந்தார். நாளை அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.
vasudevan31355
19th November 2014, 01:09 PM
ஷோபா குரல் தானே 'இரு மலர்கள்' படத்தில் அந்த 'யாரடி இங்கே மந்திரி குட்டி ராணி வந்தா நீ எந்திரி ஓடி பிடித்து விளையாட ' vaasu
அதே அதே.
vasudevan31355
19th November 2014, 01:10 PM
//நன்றாகவே தெரியும் கிருஷ்ணா. நம் நண்பர்களுக்கு அதிக பரிச்சயம் இல்லையென்றுதான் விட்டு விட்டேன். இப்போது நீங்கள் சொல்லி விட்டீர்கள்.// ஷீலா தெரியுமே..செம்மீன் தானே :)
ம்ஹூம்...ஷீலா தீட்சித் :)
vasudevan31355
19th November 2014, 01:14 PM
சி.க,
'கவிதா' படத்தின் பாடலுக்கு நன்றி. விரைவில் என் சொந்தப் படமான 'ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன' படத்தின் பாடல்களைத் தருகிறேன். கேட்டுட்டு ஓடிடணும்.:) சரியா... பேரா வைக்கறீரு பேரு.:) பேராண்டி.:)
chinnakkannan
19th November 2014, 01:27 PM
சி.க,
'கவிதா' படத்தின் பாடலுக்கு நன்றி. விரைவில் என் சொந்தப் படமான 'ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன' படத்தின் பாடல்களைத் தருகிறேன். கேட்டுட்டு ஓடிடணும்.:) சரியா... பேரா வைக்கறீரு பேரு.:) பேராண்டி.:)
ஹி ஹி வாசுசார் :) வேணும்னா நானும் இன்னும்சில பாட்டு எழுதட்டுமா..:)
vasudevan31355
19th November 2014, 01:27 PM
ஷோபா குரல் தானே 'இரு மலர்கள்' படத்தில் அந்த 'யாரடி இங்கே மந்திரி குட்டி ராணி வந்தா நீ எந்திரி ஓடி பிடித்து விளையாட ' vaasu
அது மட்டுமல்ல. 'நம் நாடு' படத்தின் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' பாடலையும் கூட பாடியிருப்பார்.
சாது மிரண்டால் படத்தில் 'ஏ பார் ஆப்பிள்' பாடலை எஸ்.என்.சுரேந்தர் தன் அண்ணன் சுந்தருடன் இணைந்து சிறுவயதில் பாடியிருப்பார்.
'வரவு எட்டணா செலவு பத்தணா' பாமாவிஜயம் குழந்தைகள் பாடலையும்
'ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்' தாமரை நெஞ்சம் படப் பாடலையும் கூடப் பாடியிருப்பார்.
vasudevan31355
19th November 2014, 01:30 PM
ஹி ஹி வாசுசார் :) வேணும்னா நானும் இன்னும்சில பாட்டு எழுதட்டுமா..:)
அய்யா சாமி! ஜாவோஜி சாமி! ஆளை விடுப்பா.:) (சும்மா ஜாலிக்கு)
uvausan
19th November 2014, 01:37 PM
கிருஷ்ணாஜி - "காரணம் கேட்டு வாடி " - சுதா ரகுநாதன் சமீபத்தில் ஒரு மேடையில் பாடியது - பாடல் பாகவதர் நடித்த "சிவகவியில் " வந்ததாக ஒரு நினைவு - நீங்கள் கேட்டதுண்டா? - ராகம் பூர்வ கல்யாணி என்று நினைக்கிறன் - இந்த பாடலை பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா ? - நன்றி பல
vasudevan31355
19th November 2014, 01:37 PM
கிருஷ்ணா!
அபூர்வ ஸ்டில். இது உங்களுக்காக மட்டும். நீங்க ரொம்ப சந்தோஷப் படுவீங்க.
'சாது மிரண்டால்' படத்துல நம்ம சின்னப் பையன் எஸ்.என் .சுரேந்தர் பேரும், அவுங்க அண்ணன் சுந்தர் பேரும் இருக்கிறத ஆனந்தமாப் பாருங்க.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/rftgyhj.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/rftgyhj.jpg.html)
vasudevan31355
19th November 2014, 01:39 PM
கிருஷ்ணாஜி - "காரணம் கேட்டு வாடி " - சுதா ரகுநாதன் சமீபத்தில் ஒரு மேடையில் பாடியது - பாடல் பாகவதர் நடித்த "சிவகவியில் " வந்ததாக ஒரு நினைவு - நீங்கள் கேட்டதுண்டா? - ராகம் பூர்வ கல்யாணி என்று நினைக்கிறன் - இந்த பாடலை பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா ? - நன்றி பல
வச்சாருப்பா எங்க ரவி வேலை. கிருஷ்ணா குட்டி. மாட்டிகினியா கண்ணு. நான் எஸ்கேப்.
vasudevan31355
19th November 2014, 01:41 PM
ரவி சார்.
இந்தாங்கோ.
https://www.youtube.com/watch?v=9JHBQ5aFxYk&feature=player_detailpage
vasudevan31355
19th November 2014, 01:44 PM
ரவி சார்!
கனவுப் பாடல்கள் பற்றிய தங்கள் கருத்து நச். நன்றாக எழுதுகிறீர்கள். எனக்குப் பிடித்த கனவுப் பாடல் பாதுகாப்பு படத்தில்
'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்'.
தலைவர் வித விதமான உடைகளில் பின்னுவார்.
uvausan
19th November 2014, 01:44 PM
வாசு - இந்த பாடலை பதிவிட முடியுமா - "ராஜாத்தி பெற்று எடுப்பாள் ஒரு ராஜா குமாரன் "-----
நெஞ்சை சற்றே நெருடும் பாடல் - P .சுஷீலா அம்மாவின் குரலில் இழைந்தோடும் பாடல் - தனக்கு ராஜகுமாரன் போன்று ஒரு மகன் பிறப்பான் என்று ஒரு அன்னை தொடர்ந்து பல பெண் பிள்ளைகளை பெற்று எடுத்தபின் தனது மன ஏக்கத்தை பாடலாக வெளிபடுத்துவார் - KR Vijaya , GG நடித்த படம் - பாடல்களை போல படம் அதிகமாக பேச படவில்லை .
நன்றி பல
vasudevan31355
19th November 2014, 01:52 PM
'மாணிக்கத் தொட்டில்' படத்திலிருந்து பி.சுசீலா பாடிய பாடல்.
விரும்பிக் கேட்ட நேயர்கள் ஹைதராபாத் ரவி, வாசுதேவன், கிருஷ்ணா, சின்னக் கண்ணன் மற்றும் பலர்.
இந்தியா, இலங்கை, வியட்நாம் முதலிய நாடுகளில் புகழ் பெற்றது 'கோபால்' பல்பொடி
முத்துப் போல் பற்களை பிரகாசிக்க வைப்பது 'கோபால்' பல்பொடி
கேட்டு வாங்குங்கள் 'கோபால்' பல்பொடி
டிங் டாங் டாங்
செம பாட்டு. நல்ல டேஸ்ட்டு.
https://www.youtube.com/watch?v=XV9OzWrGrj8&feature=player_detailpage
uvausan
19th November 2014, 02:22 PM
கேட்டதும் கொடுப்பவனே வாசு வாசு - கீதா வின் ( சாரி கீதை யின் ) நாயகனே வாசு வாசு -------
சாற்றிய பதிவுகளிலே , வாசு வாசு - நல்ல பதிவுகளை தேடுகின்றோம்::):smokesmile:
gkrishna
19th November 2014, 02:24 PM
[வாசு
இது நியாமா ? இது தர்மமா ? சாப்பிட்டு வருவதற்குள் இந்த அகதளமா :)
ஒரு புறம் பார்த்தால் 'ரவி சார் இன் பூர்வி கல்யாணி (காரணம் கேட்டுவாடி)'
மறுபுறம் பார்த்தால் 'சி க வின் செம்மீன் :) ஷீலா டி '
முகம் மட்டும் பார்த்தால் 'பயரியா 420 பல்பொடி'
முழுவதும் பார்த்தால் 'வாசுவின் அக்கபோர் அடி "
அய்யயோ கவிதை பொங்கி
பிரவாகம் எடுக்கிறதே :)
ஒருத்தருக்கு கோபம்
பொத்துகிட்டு வருதே :)
(சி கே மாதிரி இருக்கு.ஆளை பார்த்தா கொஞ்சம் குட்டி'ய' யானை ,கன்னம் ஒருபுறம் ஜோதிகா,மறுபுறம் யாரு நயன்தாரா வா ? ) பல்வலி எப்படி சி கே ஓகே தானே
Gk
gkrishna
19th November 2014, 02:28 PM
கிருஷ்ணா!
அபூர்வ ஸ்டில். இது உங்களுக்காக மட்டும். நீங்க ரொம்ப சந்தோஷப் படுவீங்க.
'சாது மிரண்டால்' படத்துல நம்ம சின்னப் பையன் எஸ்.என் .சுரேந்தர் பேரும், அவுங்க அண்ணன் சுந்தர் பேரும் இருக்கிறத ஆனந்தமாப் பாருங்க.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/rftgyhj.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/rftgyhj.jpg.html)
still இல் இருக்கும் அந்த லலிதா சுந்தர் மற்றும் சுரேந்தர் களின் அம்மா தானே வாசு :)
uvausan
19th November 2014, 02:30 PM
வாசு - இந்த பாடலில் வரும் இரண்டு வரிகள் , இந்த பாடலை மிகவும் புகழடைய வைத்தது
" எல்லோருக்கும் கல்வி தந்தான் சிவகாமியின் செல்வனடி - என்னவனும் அவன் போலே வளர்ந்து வரும் தலைவனடி "
Russellzlc
19th November 2014, 02:34 PM
தங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி திரு. வாசு சார்.
இந்த திரியில் எல்லாருமே எழுத்தாற்றல் மிக்கவர்கள். கடலூர் எம்.பி. வீட்டில் மரியாதைக்குரிய திரு.சிவாஜி கணேசன் அவர்கள் எம்.பி.யை கலாட்டா செய்து கொண்டே சாப்பிட்டாரே. அவர் வெளியில் வந்தபோது நீங்கள் கூட மாலைக்கு பதிலாக துண்டு அணிவித்தீர்களே. அன்று நானும் ஒரு மூலையில் நின்று கொண்டு அந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அதிர்ச்சி அடையாதீர்கள். அந்த காட்சிகளை நான் பார்த்தது உங்கள் எழுத்துக்கள் மூலமாக. அந்த அளவுக்கு நிகழ்ச்சிகளை விஷுவலைஸ் செய்யும் ஆற்றல் உங்கள் எழுத்துக்கு உள்ளது.
தலைவரின்.... ம்...ம் நானும் தலைவர் என்று கூறி, நீங்களும் தலைவர் என்றால் குழப்பம் வருமே. சரி. தெளிவாக சொல்கிறேன். புரட்சித் தலைவரின் தேடிவந்த மாப்பிள்ளை படத்தில் தொட்டுக் காட்டவா பாடலுக்கு தங்கள் விமர்சனம் அருமை.
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே,
அறிந்ததுதான் என்றாலும் எத்துணை அழகம்மா?
என அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப அந்தப் பாடலும் காட்சியும் எல்லாரும் அறிந்ததுதான் என்றாலும் நீங்கள் விவரித்த விதம், கவித... கவித... அதை மக்கள் திலகம் திரியில் பதிவிட்டிருந்தால் எங்கள் சகோதரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். தங்கள் அன்பான அழைப்புக்கு மீண்டும் நன்றி.
மதிப்புக்குரிய பண்பாளர் திரு. ராகவேந்திரா சார் அவர்களின் எழுத்தில் அனுபவ தெளிவும் ஆழ்ந்த பொருளும் இருக்கும். சமீபத்தில் அவர் எழுதிய ‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு’ கட்டுரையை படித்து, ரசித்து, பொருள் உணர்ந்து சிரித்துக் கொண்டேன்.
கண்ணியத்தின் காவலர் அன்புமிக்க திரு. ஜி.கிருஷ்ணா சார் அவர்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. அவள் அப்படித்தான் படத்தை பார்த்து விட்டு ‘பேஸ்து அடித்து வந்தேன்’ என்று அவர் கூறியிருப்பது.... மூன்றே வார்த்தைகளில் வந்த ஒரு படத்தின் விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
திரு.ஜி.கிருஷ்ணா சாரிடம் சந்தேகம் கேட்க இங்கு வந்தேன். திரு. ரவி அவர்கள் உட்பட தங்கள் அனைவரின் அன்பான ஆதரவுக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி. இதுபோன்ற ஆற்றலாளர்கள் உள்ள களத்தில் நானும் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியே. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக இங்கு வந்து அந்த மகிழ்ச்சியைப் பெறுவேன். மீண்டும் நன்றி.
ஆங்... முக்கியமான விஷயம். நண்பர் கோபாலை பற்றியும் அவரது எழுத்தாற்றல் பற்றியும் நான் ஒன்றும் சொல்லவில்லையே என்று யாரும் கருத வேண்டாம். அவரது எழுத்தாற்றல் அனைவரும் அறிந்ததே. ‘‘இவர்தான் கலைஞர் திரு.மு.கருணாநிதி’’ என்று நீதிபதி சர்க்காரியாவிடம் அறிமுகம் செய்து வைப்பது போன்ற அசட்டுத்தனத்தை செய்ய நான் தயாரில்லை. அவரது எழுத்தாற்றலையும் தாண்டி அவரிடம் என்னைக் கவர்ந்த அம்சம்.... செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத அவரது குழந்தை உள்ளம்.
சரி கோபால்... இனிமேல் ஜெய்சங்கர் பாட்டு போடுகிறேன். பட்டணத்தில் பூதம் படத்தில் ‘எதிர்பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தாள் என்று நினைத்தாயோ?’ இசையரசியின் குரலில் அருமையான மெலடி. ஜெய்சங்கருக்கு மயக்க மருந்து கொடுத்து கே.ஆர்.விஜயா தூங்க வைப்பது போன்று காட்சியமைப்பு. அதற்கேற்ப பாடலும் தாலாட்டாக இருக்கும். நண்பர்கள் தரவேற்றினால் நன்று. திருப்தியா கோபால்? போயிட்டு...... வருவேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
19th November 2014, 02:44 PM
கிருஷ்ணாஜி.. பல்வலி இப்ப தேவலை..இப்ப பல் வலி வந்துடுத்து.. (ஹை சிலேடை) :)
வாசு சார்.. ரேடியோ விளம்பரங்கள் சட்டுனு நினைவுக்கு வரமாட்டேங்குது.. திரையரங்குகளில் காட்டும் விளம்பரங்கள் மட்டும் நினைவில்
இளமை பூரிக்கும் மாலா அவள் சிரிப்பிலோர் அலாதி அழகு
காரணம் பற்கள்
வஜ்ரதந்தி வஜ்ரதந்தி வீக்கோ வஜ்ரதந்தி டூத் பவுடர் டூத்பேஸ்ட்
ஆயுர்வேத மூலிகையாலே தயாரித்த்து பூர்ண சுதேசி
டூத்பவ்டர் டூத்பேஸ்ட் வீக்கோ வஜ்ர தந்தி :)
பக்திப் பாடல் கேட்ட நேயர்கள் நெய்வேலி வாசுதேவன், ஹைதராபாத் ரவி, நெல்லை கிருஷ்ணா., சின்னக் கண்ணன்..
காவடி எடுத்துக் கொண்டு இந்த அடியவர் கூட்டம் பாடிக்கொண்டே செல்கிறது..அவர்கள் பாடும் பாட்டு பின்.. பட் அவர்கள் கூட
ஒரு இளம் பாலகன் நடக்கிறானே..யாராக்கும் அவன்..
கலகலன்னு பாட்டெடுத்து காவடியத் தூக்கிவச்சு
..கந்தனையே சிந்தனையில் கொண்டபடி போறவரே
சலசலக்கும் அருவிமழை சந்தத்தில் அவன்மயங்கி
..சந்தடியைச் செய்யாமல் கூடவர்றான் தெரியலையா
வளவளன்னு பேசாமல் வக்கணையா நெஞ்சத்திலே
..வடிவேலன் தோற்றமட்டும் வாகாக நெனச்சுப்புட்டு
கடகடன்னு தான்நடந்து காவடியச் சுமப்பவரே
..கதிர்வேலன் கூடவர்றான் கவலையெலாம் கொள்ளாதீர்..
ம்ம் இப்போ இரண்டு இளம் கன்னிகள் முருகனை நினைந்து உருகுகிறார்கள்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்..
பாடலைக் கேளுங்கள் நேயர்களே :)
**
http://www.youtube.com/watch?v=U8-Cxm3T6-Q
gkrishna
19th November 2014, 02:53 PM
நன்றி கலை சார்
கவிஞர் கண்ணதாசனின் அருமையான பாடல் .இசையரசியின் மயக்கும் குரலில் அபூர்வா சில்க் போன்ற அபூர்வ பாடலை குறிப்பிட்டு உள்ளீர்கள் .
அதுவும் இந்த வரிகளை பாடும்போது ஒரு எதிரொலி கேட்பது போல் சுசீலா அம்மாவின் கந்தர்வ குரல் .
அதுதானே இந்த பெண்மனது..
பெண்மனது..பெண்மனது...
கோவர்த்தனம் அவர்களின் இசை எல்லாம் சேர்ந்து கட்டி போடும் பாடல்
http://www.youtube.com/watch?v=zKF5hKZyzZI
பாடல் வரிகள்
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு
அதுதானே இந்த பெண்மனது..
பெண்மனது..பெண்மனது...
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு
அதுதானே இந்த பெண்மனது..
போனவை எல்லாம் போகட்டுமே - இனி
புது உலகம் இங்கு மலரட்டுமே..
போனவை எல்லாம் போகட்டுமே - இனி
புது உலகம் இங்கு மலரட்டுமே..
பவுர்ணமி நிலவை இரசிக்கட்டுமே - மலர்ப்
பள்ளியில் பாடம் படிக்கட்டுமே..
பவுர்ணமி நிலவை இரசிக்கட்டுமே - மலர்ப்
பள்ளியில் பாடம் படிக்கட்டுமே..
மலர்ப் பள்ளியில் பாடம் படிக்கட்டுமே..
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு
அதுதானே இந்த பெண்மனது..
எண்ணங்களாலே வேலியிட்டேன் - என்
இதயத்தை உனக்கே காவல் வைத்தேன்..
எண்ணங்களாலே வேலியிட்டேன் - என்
இதயத்தை உனக்கே காவல் வைத்தேன்..
சொல்லும் வகைதான் புரியவில்லை - அதை
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை..
சொல்லும் வகைதான் புரியவில்லை - அதை
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை..
அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை..
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு
அதுதானே இந்த பெண்மனது..
இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் - நான்
என் மடியினில் உன்னைத் தூங்க வைப்பேன்..
இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் - நான்
என் மடியினில் உன்னைத் தூங்க வைப்பேன்..
உலகத்தை ஒருநாள் மறக்கச் செய்வேன் - அந்த
உறக்கத்தின் முடிவைப் பிறகு சொல்வேன்..
உலகத்தை ஒருநாள் மறக்கச் செய்வேன் - அந்த
உறக்கத்தின் முடிவைப் பிறகு சொல்வேன்..
அந்த உறக்கத்தின் முடிவைப் பிறகு சொல்வேன்.
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு
அதுதானே இந்த பெண்மனது..
பெண்மனது..பெண்மனது...
gkrishna
19th November 2014, 03:03 PM
வஜ்ரதந்தி வஜ்ரதந்தி வீக்கோ வஜ்ரதந்தி டூத் பவுடர் டூத்பேஸ்ட்
ஆயுர்வேத மூலிகையாலே தயாரித்த்து பூர்ண சுதேசி
டூத்பவ்டர் டூத்பேஸ்ட் வீக்கோ வஜ்ர தந்தி
சி கே இது நினைவிற்கு வருகிறது
வஜ்ர தந்தி வஜ்ர தந்தி விக்கோ வஜ்ரதந்தி என்ற விளம்பரம் திரையரங்கங்களில் ஒன்ஸ்மோர் கேட்காமலேயே இரண்டு முறை காண்பிப்பார்கள். ஒரு கிழவர் வால் நட்டை கடிப்பதையும், வேறு ஒருவர் ஆதாம் மாதிரி ஆப்பிளை கடிப்பதையும் பார்க்க வைப்பர்கள்.
once more
"விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்.. விக்கோ டர்மரிக் ஆயுர்வேதிக் கீரிம்" என்ற விளம்பரத்தையும் சினிமா ஆரம்பிக்கும் முன் இரண்டு முறை போட்டு வெறுப்பேற்றுவார்கள். ஷனாய் இசை ஒலிக்க, தோழிகள் 'கிளுக் கிளுக்' என்று சிரிக்க, இளைமையான சங்கீதா பிஜ்லானி கை கால்களில் தோழிகள் மஞ்சளோ சந்தனமோ பூசுவார்கள், பிறகு கல்யாணம் நடந்து, ஹனிமூன் சென்று அவர் கணவர் அவளை விதவிதமாக ஃபோட்டோ எல்லாம் எடுப்பார். கடைசியில் இதற்குக் காரணம் விக்கோ டர்மரிக் என்பது போல காண்பிப்பார்கள். இன்னொரு விளம்பரம், வீட்டில் இருக்கும் அம்மா, இரண்டு பெண்கள் எல்லாம் ஒரே மாதிரி இந்த மஞ்சள் விக்கோ டர்மரிக்கை பூசிக்கொண்டு நடந்து வருவார்கள். இது மாதிரியும் குடும்பம் இருக்குமா என்று பார்க்க தமாஷாக இருக்கும்.
'வண்ண பெண்ணாக உன்னை அலங்கரிப்பேன் ' (ஒரு ஷெனாய் ஊதல் )
விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்
சந்தனம் மற்றும் மஞ்சளை ஆயுர் வேதம் மூலிகை வடிவில் ஏற்று கொண்டு உள்ளது .
விக்கோ டர்மரிக் மஞ்சள் மற்றும் சந்தனம் கலந்த ஆயுர்வேத மூலிகை
விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSCZsLAb7MkaPSswfoSNkHRAhcCY1ZQT KSkt0wFmjWxaqvY-SfA
vasudevan31355
19th November 2014, 03:10 PM
கிருஷ்ணா அதேதான். லலிதாதான்.
ஆமா! இந்த சி.க வுக்கு பல்வலி வந்தாலும் வந்துச்சு. இப்ப திரி கோபால் பல்பொடியிலிருந்து வஜ்ரதந்தி வரைக்கும் வந்துடுச்சி. :)
gkrishna
19th November 2014, 03:13 PM
நிச்சயம் தலைவலி வராம இருந்தா சரி வாசு
உங்களுக்கு தலைவலியா ?
மூக்கடைப்பா ?
இருமலா ?
ஆமாம்பா ஆமாம். என்ற விக்ஸ் ஆக்ஷன் 500
http://www.thehindubusinessline.com/catalyst/2002/08/29/images/2002082900140407.jpg
gkrishna
19th November 2014, 03:16 PM
இன்னொரு விக்ஸ் விளம்பரம் தன் மகளுக்கு கதை சொல்லும் அப்பாவிற்கு தொண்டையில் 'கிச் கிச்' ஆகும். விக்ஸ் மாத்திரை சாப்பிடுவார். உடனே மகளும் ஒரு மாத்திரை கேட்டு போட்டுக்கொண்டு அழகாகக் கண்ணடிக்கும்.
"தொண்டையிலே கிச் கிச்
தொண்டையிலே கிச் கிச்
என்ன செய்ய?
விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க
கிச் கிச்சை விரட்டுங்க"
என்ற பாடலில் போது, தொண்டையில் சின்ன ஆக்டோபஸ் மாதிரி ஒரு ஜீவன் அட்டகாசம் செய்யும். விக்ஸ் மாத்திரை சாப்பிட்ட உடன் அது காணாமல் போகும்.
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTVuqZCfyhNbrkZBpQoxYgR2sGHYX0A2 d81_-tZ7ByorweKIaHl
chinnakkannan
19th November 2014, 03:16 PM
//'வண்ண பெண்ணாக உன்னை அலங்கரிப்பேன் ' (ஒரு ஷெனாய் ஊதல் )//ம்ம் அந்தக் கிழவனார், வ.பெ உ அ கண்ணே..ன்னு வரும்..நினைவு படுத்தியமைக்கு நன்றி க்ருஷ்ணாஜி..வெகு சின்ன வயதில் செளகார் ஜானகி ஒரு முழு விக்ஸ் பாட்டிலைக் காலி செய்து ஒரு சிறுவனுக்கு முதுகு கை மூக்கு எல்லாம் தடவ இப்போது ராமு சுகமாகத் தூங்குகிறான் என ஒரு விளம்பரம் நினைவிருக்கா..
அப்புறம் க்ளோஸப்புக்கு ஒரு அழகிய பாட்டும் வரும்..
*
sss
19th November 2014, 03:19 PM
அவர் அப்படித்தான்... ருத்ரய்யாவைப் பற்றி அவரது நண்பர் சுரா!
மறைந்த ருத்ரய்யாவுடன் மிக நெருக்கமாக இருந்த சினிமாக்காரர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பத்திரிகைத் தொடர்பாளர் சுரா, ருத்ரய்யா படம் பண்ணாத இந்த 34 ஆண்டுகளில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
சில ஆண்டுகளுக்கு முன் ருத்ரய்யா மீண்டும் படம் பண்ண முயற்சித்த போது அதுகுறித்து என்னிடம் சொல்லி சில தயாரிப்பார்களிடம் பேசச் சொன்னார். அப்போது மோசர் பேயரில் இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் விஷயத்தைச் சொல்லிப் பேசச் சொன்னேன். ஆனால் அதன் பிறகு அந்த முயற்சி என்ன ஆனது என்று தெரியவில்லை.
இப்போது ருத்ரய்யா இல்லை. இந்த 34 ஆண்டுகளில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.. ஏன் சினிமாவே எடுக்கவில்லை என்ற கேள்விகளுக்கு நண்பர் சுராவின் இந்த கட்டுரை ஓரளவு பதில் தரக்கூடும். சுரா ஒரு பத்திரிகைத் தொடர்பாளர். எழுத்தாளர். நூறுக்கும் அதிகமான கதைகளை மொழிபெயர்த்திருப்பவர். இதோ அவரது கட்டுரை:
ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா மூவரும் நடித்திருந்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகி விட்டிருந்தது. அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் 'அவள் அப்படித்தான்' படத்தைப் பற்றி பரவலாக சிறப்பாக எழுதியிருந்தார்கள். ருத்ரையா என்ற இளம் இயக்குநரைப் பற்றி பாராட்டி எழுதியிருந்தார்கள். நான் ஆர்வத்துடன் படம் பார்க்கச் சென்றதற்கு இவையெல்லாம்தான் காரணங்கள். அவர் அப்படித்தான்...
ருத்ரய்யாவைப் பற்றி அவரது நண்பர் சுரா!
திரையரங்கில் பெரிய அளவில் கூட்டமில்லை. மிகவும் குறைவாகவே ஆட்கள் வந்திருந்தார்கள். எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. தமிழில் உருவான மிகச் சிறந்த படங்களில் அது ஒன்று என்ற எண்ணம் அப்போதே என் மனதில் உண்டாகி விட்டது.படத்தின் மைய கதாபாத்திரமான பெண் பாத்திரம் மிகவும் மாறுபட்ட தன்மை கொண்டதாகவும், நவீன சிந்தனை கொண்டதாகவும்,துணிச்சல் நிறைந்ததாகவும், எதற்கும் கலங்காததாகவும் அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் படங்களில் நான் அதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரமாக அது இருந்தது. கமல் ஏற்று நடித்த கதாபாத்திரம் முரண்பாடுகள் நிறைந்த இன்றைய இளைஞனை அப்படியே நம் கண்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது. ரஜினி ஏற்று நடித்த எந்தவித பாசாங்கும் இல்லாத,வெளிப்படையான கதாபாத்திரம் கூட புதுமையானதே. படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் வரும் சரிதா யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரம். படத்தில் ஒரு சிறு குறை கூட எனக்கு தெரியவில்லை.'யார் இந்த ருத்ரையா?இவ்வளவு அருமையாக படத்தை இயக்கியிருக்கிறாரே! என்று நான் ஆச்சரியத்துடன் நினைத்தேன்.
அப்போதே எனக்கு அவர் மீது உயர்ந்த மரியாதை உண்டாகி விட்டது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் வரும் 'ஒரு கதை இன்று முடியலாம்.முடிவிலும் ஒன்று தொடரலாம்...இனி எல்லாம் சுகமே!' என்ற வரிகள் இப்போது கூட என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கமல் தன் சொந்தக் குரலில் பாடிய 'பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல் எப்போதும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும். என்னதான் பத்திரிகைகள் பாராட்டி எழுதியிருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் 'அவள் அப்படித்தான்' படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பின் மீது எனக்கு மன நிறைவு உண்டாகவில்லை. இன்னும் பெரிய அளவில் மக்கள் அந்தப் படத்தைத் தலையில் வைத்து கொண்டாடியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
அவர் அப்படித்தான்...
ருத்ரய்யாவைப் பற்றி அவரது நண்பர் சுரா! அதற்குப் பிறகு சில மாதங்களில் நான் சென்னை வந்து விட்டேன்.இங்கு வந்து சாவி,பிலிமாலயா ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராக நான் பணியாற்றினேன். 1980 ஆம் வருடத்தில் 'கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தை ருத்ரையா இயக்கி, தயாரித்து வெளியிட்டார். 'அவள் அப்படித்தான்' படத்திற்கு இசையமைத்த இளையராஜாதான் 'கிராமத்து அத்தியாயம்' படத்திற்கும் இசையமைப்பாளர். 'ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது' என்ற ஒரு இனிமையான பாடலை அந்தப் படத்தில் இடம் பெறச் செய்திருந்தார் இளையராஜா. கிருஷ்ணவேணி திரையரங்கில் நான் படத்தைப் பார்த்தேன்.படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கூச்சலும், கேலியும், கிண்டலும் காதைக் கிழித்தன. மிகவும் மெதுவாக நகர்ந்த அப்படம் மக்களுக்கு பிடிக்கவில்லை. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது இந்தப் படம் ஓடாது என்று. அதே போல படம் ஓடவில்லை.
இந்தச் சூழ்நிலையில் 'வசந்தம் வருகிறது' என்ற பத்திரிகைக்காக நாங்கள் ருத்ரையாவை பேட்டி காணச் செல்கிறோம். நாங்கள் என்றால் நான், ஜவகர், சிகாமணி, ராஜய்யா, முத்தையா ஆகியோர். படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருந்த வேளையில் அந்தப் பேட்டி.எல்லா கேள்விகளுக்கும் எந்தவித பதட்டமோ, கவலையோ இல்லாமல் பதில் கூறினார் ருத்ரையா. பேட்டி நடைபெற்ற இடம் அவரின் அலுவலகம் இருந்த ஆழ்வார்பேட்டை.
பேட்டி முடிந்ததும் ருத்ரையாவின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட மனிதன் என்ற முறையில்,அருகில் அமர்ந்து 'சார். நீங்கள் இயக்கிய முதல் படமான 'அவள் அப்படித்தான்' மிகச் சிறந்த ஒரு படமாக இருந்தது. அந்தப் படத்தில் உங்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தாலும், இன்னும் உயர்வான வரவேற்பு அதற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. 'கிராமத்து அத்தியாயம்' படத்தை நானும் பார்த்தேன். படம் ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்ததால், மக்கள் படத்தை ரசிக்கவில்லை. தமிழக மக்கள் பொதுவாகவே வேகமாக இருந்தால்தான் படத்தை ரசிப்பார்கள். அதனால்.இனி படத்தை இயக்கும்போது சற்று வேகம் இருப்பது மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் நலம் விரும்பி என்ற முறையில் நான் இதை கூறுகிறேன்' என்றேன் நான். அதற்கு ருத்ரையா 'இது என் பணம்.அதை எப்படி வேண்டுமானாலும் வீணாக்குவேன்' என்றார். அதற்கு நான் பதிலெதுவும் கூறவில்லை.
சுஜாதாவின் ஒரு நாவலை கமலை வைத்துப் படமாக்கும் முயற்சியில் இறங்கினார் ருத்ரய்யா. எல்லாம் ஓகேயாகிவிட்டது. படப்பிடிப்புக்குப் போக வேண்டியதுதான் பாக்கி என்ற நிலையில், திடீரென அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் ருத்ரய்யா. காரணம், கமல் அந்தப் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் அப்போது அவரது மனைவியாக இருந்த வாணியிடம் கூறச் சொன்னதுதான். கமல் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. காரணம் வாணிதான் அந்தப் படத்துக்கு காஸ்ட்யூமர். ஆடைகள் வடிவமைக்கு அது தேவை என நினைத்தார். ஆனால் ருத்ரய்யா அதை அசவுகரியமாகக் கருதினார். கமலிடம் கதை சொல்வது ஓகே. அவர் காட்சிகளைத் திருத்துவார், மேம்படுத்துவார்.. விவாதிப்போம். ஆனால் வாணியிடம் அப்படி கதையை விவாதிக்க முடியாது என்றார். அதுதான் ருத்ரய்யா. அவர் தரப்பிலும் ஒரு நியாமிருக்கவே செய்தது.
வருடங்கள் கடந்தோடின.1987ஆம் ஆண்டு. அப்போது நான் ரகுவரனுக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்தேன். ரகுவரனை வைத்து ஒரு படத்தை இயக்கும் எண்ணத்துடன் ருத்ரையா வந்தார். ஒரு இசைக் கலைஞனை மையமாக வைத்து பண்ணப்பட்ட கதை. ருத்ரையா ரகுவரனிடமும், என்னிடமும் கதையைக் கூறினார். கதை ஏ-ஒன்! எங்கள் இருவரையும் ருத்ரையா லாயிட்ஸ் காலனியிலிருந்த தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு ஆங்கில புதினத்தின் மேலட்டையைக் காட்டி, அதில் வரையப்பட்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தைக் காட்டி, அதுதான் ரகுவரனின் கெட்-அப் என்று கூறினார். அதற்குப் பிறகு ருத்ரையாவும் நானும் அடிக்கடி சந்திப்போம். பல மணி நேரங்கள்,பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம்.
இன்னும் சொல்லப் போனால்... நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டோம். ஒருநாள் பழைய சம்பவத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். 'நான் அப்படியெல்லாமா கூறினேன்? என்றார் ருத்ரையா சிரித்துக் கொண்டே. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. எனினும், எனக்கும், ருத்ரையாவுக்குமிடையே இருந்த நட்பு தொடர்ந்தது. சில வருடங்களுக்குப் பிறகு கார்த்திக்கை வைத்து ஒரு படத்தை இயக்க ருத்ரையா முயற்சித்தார். ஆனால், அதுவும் செயல் வடிவத்திற்கு வரவில்லை. வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
நானும்,ருத்ரையாவும் சந்தித்து, நீண்ட காலமாகி விட்டன. சிறிதும் எதிர்பாராமல் ஒரு நாள் அவரை மந்தைவெளி சிருங்கேரி மடம் இருக்கும் தெருவில் பார்த்தேன். தன் வீடு அங்குதான் இருக்கிறது என்று கூறி, என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். எனக்கு காபி கொண்டு வந்து கொடுக்க, நான் பருகினேன். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மேலும் சில வருடங்கள் வேகமாக பாய்ந்தோடின.ஒருநாள் நான் அப்போது ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த இயக்குநர் மகேந்திரனைப் பார்ப்பதற்காக போய்க் கொண்டிருந்தேன்.
வழியில் ருத்ரையாவைப் பார்த்தேன். சற்று மெலிந்து போய் காணப்பட்டார். 'சார்...எவ்வளவோ வருடங்கள் ஓடி விட்டன. இப்போது கூட ஒன்றுமில்லை. நீங்கள் ஏதாவது முயற்சி செய்து பாருங்கள்'என்றேன் நான். 'ஏதாவது பண்ண வேண்டும்' என்றார் அவர். ஒரு வருடத்திற்கு முன்பு ஒருநாள் ருத்ரையா எனக்கு ஃபோன் பண்ணினார். 'நாளை காலையில் நாம் அவசியம் சந்திக்க வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டும்'என்றார். மறுநாளே நானும், அவரும் மயிலாப்பூர் சங்கீதா ஹோட்டலில் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசினோம்.
வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தும் வகையிலும், இன்றைய ரசிகர்கள் ரசிக்கிற மாதிரியும் ஒரு திரைக்கதையை முழுமையாக எழுதி வைத்திருப்பதாக கூறிய அவர் அருமையாக தட்டெழுத்து செய்யப்பட்டு ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்டிருந்த திரைக்கதையை என் கையில் தந்தார். 'நீங்கள் முழு கதையையும் இப்போதே கேட்டால் நன்றாக இருக்கும். கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?'என்று கேட்டார். 'இப்போதே கேட்கிறேன் சார்' என்றேன் நான். இருவரும் அவருடைய லாய்ட்ஸ் காலனி வீட்டிற்குச் சென்றோம்.
இப்போது அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய மனைவி அவரிடமிருந்து பிரிந்து சென்று விட்டதாக கூறினார். தன் மனைவியைப் பற்றி மிகவும் உயர்வாக புகழ்ந்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் மிகவும் விளக்கமாக கதையைக் கூறினார். உண்மையிலேயே இன்றைய தலைமுறை ரசிக்கக் கூடிய அளவிற்கு மிகவும் அருமையாக திரைக்கதையை எழுதியிருந்தார் ருத்ரையா. நான் மனம் திறந்து அதை பாராட்டினேன். 'இதை எப்படியாவது நடிகர் விக்ரமிடம் கூற வேண்டும்' என்றார். நான் விக்ரமின் மேனேஜர் கிரியிடம் இது சம்பந்தமாக பேசினேன். இது நடந்தது சில மாதங்களுக்கு முன்பு. 'வெளிநாட்டில் நடைபெறும் 'அய்' படத்தின் ஷூட்டிங்கில் விக்ரம் சார் இருக்கிறார். அவர் இங்கு வந்த பிறகு,நிச்சயம் உங்களையும்,விக்ரம் சாரையும் சந்திக்க வைக்கிறேன். அதற்குப் பிறகு அவர் தீர்மானிக்கட்டும் 'என்றார் கிரி நேரடியாக ருத்ரையாவிடமே. காலம் அப்படியொரு சந்திப்பிற்கே வழி உண்டாக்கித் தரவில்லை என்பதுதான் விந்தையே. இதற்கிடையில் ஒருநாள் எனக்கு ருத்ரையா எஸ்.எம்.எஸ்.பண்ணியிருந்தார். நான் மொழி பெயர்த்திருந்த வின்சென்ட் வான்கா தன் தம்பி தியோவிற்கு எழுதிய கடிதங்களைக் கொண்ட நூலை இரண்டாவது முறையாக வாசித்ததாகவும்,
இப்போதும் தன் கண்களில் அரும்பிய கண்ணீரை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். தமிழ் திரையுலகம் ஒரு மிகச் சிறந்த இயக்குநரை இழந்து விட்டது. நான் என் மீது அன்பு வைத்திருந்த. என்னுடன் உண்மையான நட்புடன் பழகிய ஒரு மதிப்பிற்குரிய நண்பரை இழந்து விட்டேன். இப்போதும் எனக்கு புரியாத புதிர்...
கடந்த 34 வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் ருத்ரையாவால் எப்படி இருக்க முடிந்தது? இன்னும் எவ்வளவோ வருடங்கள் உயிருடன் இருப்பார் என்று நினைத்து, இத்தனை வருடங்களில் அவருடன் ஒரு புகைப்படம் கூட நான் எடுத்துக் கொள்ளவில்லையே! எது எப்படியோ...ருத்ரையாவின் புன்னகை தவழும் முகம் என் மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்கும்.அவரின் குரல் என் இறுதி மூச்சு நிற்கும் வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
http://tamil.filmibeat.com/specials/sura-remembers-his-long-time-friend-director-rudrayya-031882.html
gkrishna
19th November 2014, 03:24 PM
thanks sss sir .அருமையான கட்டுரை
rgds
Gk
chinnakkannan
19th November 2014, 03:27 PM
//ஆமா! இந்த சி.க வுக்கு பல்வலி வந்தாலும் வந்துச்சு. இப்ப திரி கோபால் பல்பொடியிலிருந்து வஜ்ரதந்தி வரைக்கும் வந்துடுச்சி. //ஆமாங்க.. ஆனா அந்தக் கால அட்ஸ்ல தியேட்டர் போனாலே போரடிக்கற விளம்பரப் பாட்டு என்ன தெரியுமா
ஆரோக்கிய வாழ்வை க் காப்பது லைஃப்பாய் லைஃப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம் நு மூணுவாட்டி போடுவாங்க..:)
**
ரவி சார் ஃபார் யூ ஒன் பாட்..
சென்று வா நீ ராதே..இந்த போதே
ராகமாலிகை.. அண்ட் இயற்றியவர் ஊத்துக் வேங்கட சுப்பையர்..
ஒரு காலத்தில் தினசரி இந்தப்பாடல் கேட்டிருக்கிறேன்..
http://www.youtube.com/watch?v=ASEBhSUWIz4
சென்று வா நீ ராதே இந்தப் போதே - இனி
சிந்தனை செய்திட நேரமில்லை
கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே - அவரை
காண வரும் ஆயர் கூட்டத்திலே
சற்று நின்று பேசிட நேரமில்லை - அவருக்கு
நேரில் வரஒரு தோதுமில்லையடி
vasudevan31355
19th November 2014, 03:28 PM
ரொம்ப நன்றி கலைவேந்தன் சார் பதிவுகளை வாசித்து தங்கள் இனிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு.
அதே போல தங்கள் எழுத்து நடையை ரசித்து வினோத், கோபால், கிருஷ்ணா போன்றவர்களிடம் அலைபேசியில் பேசி மகிழ்ந்ததுண்டு. சரளமான நடையில் தனித்தன்மையான பாணி தங்களுடையது. இது உண்மை. வெறும் புகழ்ச்சிக்காக அல்ல.
'எதிர்பாராமல் விருந்தாளி' பாடலைத் தாங்கள் கேட்டவுடனே முடிவு செய்து விட்டேன் கலைவேந்தன் சார் நம்மைப் போல ரசனை உள்ள ரசிகர் என்று. அதிகமாக யாரும் கேட்காத பாடல். நீங்கள் அருமையாக எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். எல்லோரும் 'அந்த சிவகாமி மகனை'க் கூப்பிட, நம் போன்றவர்கள் 'எதிர்பாராமல் விருந்தாளி'யை அழைத்து வித்தியாசப் படுத்துவோம். இப்படி ஒரு ரசனை எல்லோருக்கும் எளிதில் வாய்த்து விடாது. ஆனால் 'மதுர கானங்கள்' திரி இத்தகைய ரசிகர்களை பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிறது.
http://vi.raaga.com/movieimages/31b6071d-9a1a-4480-83e4-ccb308fa8107.jpg
நான் அந்தப் பாடலை தினம் தினம் கேட்பேன் கலை சார். அத்துடன் சேர்த்து அதே 'பட்டணத்தில் பூதம்' படத்தில் என் ராட்சஸி பாடிய, ஜோதி லஷ்மி சீனப் பெண் மாதிரி வேடம் பூண்டு ஆடிய 'இதழை விரித்தது ரோஜா'வும் தினம் தினம் என் இசைத் தோட்டத்தில் மலரும். இந்தப் பாடலைக் கேட்கும் போது சடாரென திரு எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'நீரும் நெருப்பும்' படத்தில் அதே ஜோதிலஷ்மி அசோகனிடம் ஆடிப் பாடும் பாடலான 'கட்டு மெல்லக் கட்டு' பாடல் ஞாபகம் வராமல் இருக்காது.
என்ன சரிதானே கலை சார்?
ரிலாக்ஸுக்காக அடிகடி இங்கே வாருங்கள். இது போன்ற அபூர்வ முத்துக்களைக் கொடுங்கள். நாங்கள் அதைக் கோ(சே)ர்த்து வைத்துக் கொள்கிறோம்.
நன்றி!
gkrishna
19th November 2014, 03:46 PM
நிறைய நினைவலைகளை மீட்டி விட்டீர்கள் . நன்றி sss சார்
சுஜாதாவின் கதை 'யாரோ அழைகிறார்கள்' என்று நினைக்கிறன் sss சார்
ஆனால் இதே தலைப்பில் ராஜன் சர்மா என்று ஒரு இயக்குனர் வெளியிட்ட படம் வந்தது .
இதே போன்று நடிகர் கமல் இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எழுதிய பொம்மை மாத இதழில் ஒரு கடிதம் ஒன்று நினைவில் உண்டு. அதில் ருத்ரய்யாவிற்காக அனந்து அவர்களை பாலச்சந்தர் முகாமில் இருந்து வெளி கொண்டு வந்ததை பற்றி விரிவாக எழுதி இருப்பார். தர்மேந்திரா நடித்த jugnu ஹிந்தி திரைப்படம் முதலில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி என்று ஆரம்பித்து பின்னர் தயாரிப்பாளர் கமல் நடிக்க வேண்டும் என்ற உடன் மகேந்திரன் விலகி கொண்டதாகவும் பின்னர் அது i v சசி இயக்கத்தில் வெளி வந்தது . அந்த கடிதம் 1980 களில் மிகவும் பிரசித்தம். இப்போது அதன் copy யாரிடமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை . இதனால் கமல் பாலச்சந்தர் உறவில் விரிசல் ஏற்பட்டதாக சொல்லப்பட்ட கேள்வி .பின்னர் புன்னகை மன்னனில் சரி செய்யப்பட்டது .வறுமையின் நிறம் சிகப்பு திரை படத்திற்கு பிறகு கமல் 5 ஆண்டுகள் இடைவெளியில் புன்னகை மன்னனில் தான் இணைவார்
Richardsof
19th November 2014, 03:47 PM
VASU SIR
http://youtu.be/31PghS_OwMQ
Richardsof
19th November 2014, 03:59 PM
சரி கோபால்... இனிமேல் ஜெய்சங்கர் பாட்டு போடுகிறேன். பட்டணத்தில் பூதம் படத்தில் ‘எதிர்பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தாள் என்று நினைத்தாயோ?’ இசையரசியின் குரலில் அருமையான மெலடி. ஜெய்சங்கருக்கு மயக்க மருந்து கொடுத்து கே.ஆர்.விஜயா தூங்க வைப்பது போன்று காட்சியமைப்பு. அதற்கேற்ப பாடலும் தாலாட்டாக இருக்கும். நண்பர்கள் தரவேற்றினால் நன்று. திருப்தியா கோபால்? போயிட்டு...... வருவேன்.
Super kalaiventhan
vasudevan31355
19th November 2014, 05:31 PM
வினோத் சார்,
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு 'ஈ' என்றொரு படம் வந்து வசூலில் சக்கை போடு போட்டது. படத்தின் வில்லனை பழி வாங்க அவனால் பலி வாங்கப்பட்ட நாயகன் ஈ வடிவில் வில்லன் எங்கு சென்றாலும் துரத்தி துரத்தி அந்த சின்ன உருவத்தை வைத்துக் கொண்டு இம்சை கொடுக்கும். வில்லன் யாரென்றும் ஈ யாரென்றும் புரிந்திருக்கணுமே இந்நேரம்! உங்களுக்கா புரியாது? 3 ஸ்டம்ப்களை மட்டுமே போட்டு ஹப்பையே கிளீன் போல்ட் ஆக்கியவராயிற்றே நீங்கள்.
vasudevan31355
19th November 2014, 06:11 PM
பொதுவாக இந்தந்த நடிக நடிகையருக்கு இந்தந்த பின்னணிக் குரல்கள் பொருத்தமாய் இருக்கும் என்று நாம் சொல்வோம்.
இரு திலகங்களுக்கும் பாடகர் திலகத்தின் குரல்
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜேசுதாஸ்.
ஜெய்சங்கருக்கு பாடகர் திலகத்தின் குரல்
ரவிக்கு பாடகர் திலகம், பாலா, சீர்காழி
முத்துராமனுக்கு பி.பி ஸ்ரீனிவாஸ், கோவை சௌந்தர ராஜன்
சிவக்குமாருக்கு - பாலா
ஏ .வி.எம் ராஜனுக்கு பாடகர் திலகத்தின் குரல், தாராபுரம் சுந்தரராஜன்
நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன், சீர்காழி, சாய்பாபா
பாலையாவுக்கு பாலமுரளி
கமலுக்கு பாலா
ரஜினிக்கு மலேஷியா
பிரபுவுக்கு பாலா, மனோ
ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா, பி.பி ஸ்ரீனிவாஸ்
ரங்காராவிற்கு கண்டசாலா
எஸ்.ஏ நடராஜனுக்கு திருச்சி லோகநாதன்
நாகையாவிற்கு சீர்காழி
குலதெய்வம் ராஜ கோபாலுக்கு சீர்காழி
தங்கவேலுவுக்கு சீர்காழி, எஸ்.சி கிருஷ்ணன்.
நம்பியாருக்கு???????
மாஸ்டர் சேகருக்கு ராட்சசி
தேங்காய் - பொன்னுசாமி, கோவை சௌந்தரராஜன்
ஸ்ரீகாந்திற்கு - ??????
மோகன் - எஸ்.என்.சுரேந்தர்
நடிகைகளில்
ஜெயலலிதா - ராட்சசி
கே.ஆர் விஜயா- சுசீலா, வாணி ஜெயராம்
பத்மினி - லீலா
காபரே நடன நடிகைகள் - ஈஸ்வரி
ஜெயமாலினி - சுசீலா
லஷ்மிக்கு - ஈஸ்வரி
வைஜயந்திமாலா- சுசீலா
சச்சு - ஈஸ்வரி
சௌகார் ஜானகி - எம்.எஸ்.ராஜேஸ்வரி
தேவிகா - சுசீலா
அஞ்சலி தேவி - சுசீலா
நிர்மலா - சுசீலா, ஈஸ்வரி
விஜய குமாரி - ஜானகி
புஷ்பலதா - ராட்சசி
சுஜாதா - வாணி ஜெயராம்
லதா - வாணி ஜெயராம்
மஞ்சுளா - சுசீலா , வாணி ஜெயராம்
வாணிஸ்ரீ - சுசீலா, ஈஸ்வரி
ஜெயந்தி - சுசீலா
காஞ்சனா - சுசீலா, ஈஸ்வரி
ராஜஸ்ரீ - ராட்சசி
பத்ம்மப்ரியா - சுசீலா
மனோரமா - ஈஸ்வரி
சாவித்திரி - லீலா, ராணி, சுசீலா
உஷா நந்தினி - ஜானகி
சுமித்ரா - சுசீலா
ஜெயசித்ரா - ஈஸ்வரி
படாபட் - ஈஸ்வரி
பாரதி - சொர்ணா, ஈஸ்வரி
சைலஸ்ரீ - ஈஸ்வரி
ஸ்ரீபிரியா - வாணி ஜெயராம்
எம்.என்.ராஜம் - எம்.எஸ்.ராஜேஸ்வரி
ஹெலன் - ஜிக்கி
ஸ்ரீவித்யா - சுசீலா, வாணி ஜெயராம்
ஸ்ரீதேவி - ஜானகி
சில்க் - வாணி ஜெயராம்
ஜி.வரலஷ்மி - ஜிக்கி
படாபட் ஜெயலஷ்மி - ஈஸ்வரி
அஞ்சலி தேவி - சுசீலா
பிரமிளா - ஈஸ்வரி, ஜானகி
நண்பர்கள் தொடருங்கள்.
Gopal.s
19th November 2014, 06:39 PM
ஆங்... முக்கியமான விஷயம். நண்பர் கோபாலை பற்றியும் அவரது எழுத்தாற்றல் பற்றியும் நான் ஒன்றும் சொல்லவில்லையே என்று யாரும் கருத வேண்டாம். அவரது எழுத்தாற்றல் அனைவரும் அறிந்ததே. ‘‘இவர்தான் கலைஞர் திரு.மு.கருணாநிதி’’ என்று நீதிபதி சர்க்காரியாவிடம் அறிமுகம் செய்து வைப்பது போன்ற அசட்டுத்தனத்தை செய்ய நான் தயாரில்லை. அவரது எழுத்தாற்றலையும் தாண்டி அவரிடம் என்னைக் கவர்ந்த அம்சம்.... செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத அவரது குழந்தை உள்ளம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இந்த வித்யாசம்,இவற்றை கண்டால் காலை தூக்கும் கலைக்கு உதவலாம்.
நமக்கு அள்ள வேண்டியது,புறம் தள்ள வேண்டியது, உயர் கலை,தாழ் கலை வித்யாசம் புரியும். போதும் நண்பரே.
Richardsof
19th November 2014, 07:18 PM
வாசு சார்
நடிகர்கள் - நடிகைகள் - பொருத்தமான பாடகர்கள் பட்டியல் மிகவும் அருமை .
நான் பவுலரும் இல்லை . நல்ல பாட்ஸ் மேனும் இல்லை.
சனிக்கிழமை- அன்று ஈக்கு கொண்டாட்டம் .
பார்க்கத்தானே போகிறீர்கள் ... நம் சுதீப் படப்போகும் பாட்டை .
Gopal.s
19th November 2014, 08:25 PM
சிறு வயதில் சால் பெல்லொவ் எழுதிய ஹெர்சாக் என்னை கவர்ந்த படைப்புக்களில் ஒன்று.(நோபெல் பரிசு பெற்றது). தமிழில் psycho -analytic நாவல்களில் தடம் பதித்தவர்கள் , புதுமை பித்தன்,கரிச்சான் குஞ்சு,ஜெய காந்தன்,இந்திரா பார்த்தசாரதி,ஆதவன் முதலியோர். இதில் குறிப்பிட வேண்டியவை காஞ்சனை, பசித்த மானுடம்,ரிஷிமூலம், போர்வை போர்த்திய உடல்கள்,திரைகளுக்கு அப்பால்,காகித மலர்கள் ,என் பெயர் ராமசேஷன் என்ற கதைகள் .இதில் எனக்கு பிடித்தம் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் போர்வை போர்த்திய உடல்களும் (இந்த நாடகத்தில் பங்கு பெற்றுள்ளேன்),திரைகளுக்கு அப்பாலும்.ஒரு இளைஞரின் அறிமுகம் தெரிந்தவர் மூலம். அப்போது நான் சிறுவன். அந்த இளைஞர் நிறைய இலக்கியம் பற்றி ஆர்வம் காட்டும் போது ,சரளமாக நான் நிறைய உலக இலக்கியம்,தமிழ் இலக்கியம் பற்றி பேசும் போது ,இந்த வயசிலே இவ்வளவு ஆர்வமா என்று பாராட்டினார்.(சுமார் 8 வயது வித்யாசமல்லவா).பிறகு நான் அவரிடம் சில வகை முயற்சிகள் தமிழில் செய்ய படவே இல்லை ,என்று என்னுடைய பிடித்தங்களை குறிப்பிட்டு, ஒரு மனதளவில் பாதிக்க பட்டு, வாழ்க்கையை பற்றிய பார்வையில் ஒரு அலட்சியம் கலந்த சுய பரிதாபம் கொண்ட பெண்ணை மையமாக கொண்டு முழு படம் எடுக்கலாமே என்ற போது ,ஒன்றும் சொல்லாமல் கேட்டு கொண்டார்.
விளைவு? இந்திரா பார்த்தசாரதியின் பெயரை கூட போடாமல் வண்ணநிலவன், சோமசுந்தரேச்வர் ,ருத்ரையா இணைந்து தந்த ,தமிழின் மைல் கல் படைப்பு அவள் அப்படித்தான்.
இந்த மாதிரி ஒரு பிரத்யேக ரசனை பாற்பட்ட படங்களில்(ஐரோப்பிய இயக்குனர்களின் தாக்கம்) கீழ் கண்ட அம்சங்கள் இருக்கும்.
1) படங்களுக்கு கிடைக்கும் வேகம் ,அந்த பாத்திரங்களின் மனநிலை பாற்பட்டே அமையும்.
2)எல்லா பாத்திரங்களுக்கும் உரிய பங்கு இருந்தாலும்,மைய பாத்திரத்தின் தூண்டுதல் பாற்பட்டு இயங்கு தன்மை இருக்கும்.
3)கதையில் ஒரு எதிர்பார்த்த தன்மை,திசை இல்லாவிட்டாலும்,பாத்திரங்களின் தன்மையில் ஒரு அன்னியம்,ஆச்சரிய முரண்கள்,சார்பு-சார்பின்மை இவை படத்திற்கு வேண்டிய திசையை,விசையை முடிவு செய்து செலுத்தும்.
4)அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்.
5)பெரும்பாலும் gloomy mood கொண்ட low key lighting , expressive seperation lighting கொண்டு panning,point of discussion கொண்ட subjective suggestion கொண்டு ,திரை படமாக்கம் அமையும்.
6)வசனங்களில் உயிர்ப்பு,அமானுஷ்யம்,shock value ,எள்ளல் ,வெட்டி பேசுதல்,எதிர்ப் பாரா கருத்து கோணங்கள்,கோணல்கள் இருக்கும்.
7)முடிவை நோக்கிய செலுத்தல் இன்றி ,கதையின் பாத்திரங்களே முடிவை முடிவு செய்யும். திட்டமிடல் என்ற தன்மை தவிர்க்க படும்.
8)ஒரு எதிர்பாரா, சஞ்சல நிறைவற்ற மனநிலையில் பார்வையாளர்கள் ,அரங்கத்தை விட்டு வெளிவருவார்கள்.
9)நமது படங்களில் மட்டுமே புரிதல் அற்ற பாடல்களின் இடைஞ்சல்.இது இந்திய படங்களின் தலைவிதி.
10)எதிர்-கலாச்சார ,சமுதாய எதிர்வினை, சுய-புற கேள்விகள், சிறிதே முரண்டும் எதிர்ப்பு குரல்கள் இருக்கும்.இதற்கு moderation ,confirmist வகை பாத்திரங்களின் வினையினால் புற தூண்டுதல்கள் அமையும்.
இவை அனைத்தும் கொண்ட ,ஒரு நல்ல படங்களுக்குரிய அம்சங்களுடன், சுவாரஸ்யமாகவும் அமைந்த படம் அவள் அப்படித்தான்.
இதில் மஞ்சுதான் கேள்வி பொருள். அருண் என்ற புரிந்து கொள்ள முயலும் முக்கிய பாத்திரம் ஒரு சுயம் காட்ட முயன்று தோற்கும் கண்ணாடி. தியாகு என்ற தன்னிலை புரிந்த சுயநலவாதி பொது பார்வையின் பிரதிநிதி.படத்தின் வேர்களை மண்ணிற்கு இழுப்பவன்.
மற்றவர்களுடன் நம் உறவுகள் எப்போதும் நச்சு படுத்த பட்டிருக்கின்றன ,தகாத உறவுகளின் இடையீற்றினால்.
உறவுகள் சிக்கலாகி,முறுக்கி கொண்டு,கெட்டு விடும் போது , அது என்ன வித மனநிலையை உருவாக்கும்? அது சிறு வயது வாழ்வின் விதியை எழுதும் அன்னை-தந்தை, ஆதரவு நாடி போகும் மற்றவர்களின் நடத்தையினால் சிக்கலாகி ,உறவுகளின் மேல் நம்பிக்கையிழப்பை விதைத்து ,ஒரு மேற்பூச்சான அகந்தை,சுயம் இவற்றை கீறும் போது தெரியும் மனகாயங்கள்,மனநிலை பாதிப்புகள் ,சுய பச்சாதாபங்கள் ஏற்படுத்தும் ஒரு பரிதாப பாத்திரம்.என்ன சொன்னாலும் ,நமக்கு நம்மை நாமே புரிந்து கொள்ள இருப்பதிலேயே முக்கியமானது மற்றவர்கள்.அவர்கள் மதிப்பீடுகள்.நியாய முரண்கள்.சுயநல பார்வை மீது போர்வைகள். அதையும் மீறி நம்மை பற்றி நமக்கிருக்கும் சில மாயைகளை தகர்க்க மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக ,வசதியாக நம்முடைய கருத்து-குண -இயல்பு- முரண்பாடுகள்.ஆகவே மற்றவர்கள் பார்வையில் முக்கியத்துவம் தேடி ,நமது மனசாட்சியிடம் நாமே பெற முயலும் அங்கீகாரம். அவள் அமைதி கலைய ,பாதுகாப்பு கவசமாக தன்னை பற்றி அவள் கொண்டிருக்கும் போலி கருத்துக்கள் கலைக்க படுகின்றன.அவளை ஆக்ரமிக்கவோ,அரவணைக்கவோ இயலாமல் அவளின் பழைய நினைவுகளின் ,அனுபவங்களின் எச்ச சுவடுகள் ,நெருப்பு சுவர் எழுப்பி நிற்கின்றன.
மஞ்சுவின் குணங்கள்,குறைகள் ,எண்ணங்கள்,முரண்கள்,மூர்க்கங்கள்,நெகிழ்வுகள்,வெளிப ்பாடுகள் எல்லாமே ஒரு இள மனதை மீண்டும் மீண்டும் காயப் படுத்தி ,துவள வைத்து ,உறவுகளில் சந்தேகத்தை,நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி,மனதை ஊன படுத்திய ரணங்களின் குருதி கசிவுகளே.ஒரு நம்பிக்கைவாதி பெண்ணியம் பேசும் அருண்,யதார்த்த சுய காரியவாதி தியாகு எல்லாமே மஞ்சுவின் அந்தந்த மனநிலைக்கு வினை புரிந்து ஆசுவாசம் தரும் துணை பாத்திரங்களே. மஞ்சுவை மீட்க இருவருக்குமே திராணியோ ,திடமோ இல்லை.மஞ்சு சிசிபஸ் புராணம் போல கல்லை உருட்டி மலையுச்சிக்கு சென்று ,அது உருண்டதும் ,மீண்டும் உச்சி தேடும் போராட்ட மனநிலையிலேயே ,வழியில் இறங்கி விடுகிறாள்.
ருத்ரைய்யா ,சிறிதும் நீர்க்காமல் இந்த படத்தை இயக்கியுள்ளதற்கு பாரதிராஜாவின் விமர்சனமே சான்று.(பாரதிராஜா தங்களை கோழைகள் என்று விமரிசித்து கொண்டார்). பாலச்சந்தர்,பீம்சிங் அடைய விரும்பி தவறிய முழுமை, புரிதல் இந்த படத்தில் உண்டு.
ஹிஸ்டீரியா காட்சி , candid காட்சிகள் (டாகுமெண்டரி படப் பிடிப்பு) ,தியாகு பாத்திர வெளிப்பாடுகள் என்று படத்தை உயிர்க்க வைக்கும் பல காட்சிகள் படத்தில் ரசிகர்களை ஒன்ற ,ஈடுபட வைக்கும். (மேம்போக்கான ரசிகர்களை கூட ஈர்த்தது தியாகு பாத்திர வசனங்கள்)
எனக்கும் ,மகேந்திரனுக்கும் நடக்கும் உரையாடலில் வெளியாகும் ஒரு கருத்து intrinsic histrionic potential &content என்று பார்த்தால் கமலை விட ரஜினியே மேலோங்குவார். ஆனால் கமலின் பன்-முக புத்திசாலித்தனம்,லட்சியத்தை நோக்கிய தியாகங்கள் ,மற்றும் தேடுதல் இவையே இந்த உண்மையை புறம் தள்ளி அவரை வெல்ல வைத்துள்ளது. இந்த படத்தில் ,இயல்புத்தன்மையை கொண்டு வர அவர் காமிராவை கண்டு விறைக்கும் விறைப்பு ,pretentious குழியில் தள்ளி, ரஜினியின் அற்புதமான சரளமான வெளிப்பாட்டை ரசிக்க வைத்து விடுகிறது.(Gloomy பாத்திரத்தை கமல் மேலும் இருள வைத்து விடுவார்).ஸ்ரீப்ரியாவின் பாத்திர புரிதல் ,இயக்குனருக்கு பாதி வெற்றி கொடுத்து விடும் .
இளையராஜா பாடல்கள் படத்திற்கு தேவையற்ற இடையூறு. அவ்வப்போது பின்னணி இசை கதைக்கு,மௌனத்திற்கு வழக்கம் போல துணை நிற்கும். நல்லுசாமி ,ருத்ரையாவின் scheme படியே படமாக்கி துணை நின்றார்.
இது வெளியான நாளில் வெளியான பிற கமல் படங்கள் மனிதரில் இத்தனை நிறங்களா,சிவப்பு ரோஜாக்கள். ஜெயிக்க வேண்டிய அவள் அப்படித்தான் தோற்று, என் நண்பனின் மேல் பட வேண்டிய வெளிச்சத்தை பட வைத்தாலும்,பிற்கால வாழ்வை முழுமையற்ற இருளில் தள்ளியது. நான் சந்திக்க விரும்பி, சந்திக்காமலே (35 ஆண்டுகள்) அவன் வாழ்வும் முடிந்தது. இந்த விமர்சனம் ,அவன் ஆத்மாவுக்காக.
RAGHAVENDRA
19th November 2014, 08:53 PM
80களில் ஒரு முறை ஒரு ஃபிலிம் சொஸைட்டி ஸ்க்ரீனிங்கில் ருத்ரையாவிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது, மிகவும் அபூர்வமாக. பன்னீ்ர் புஷ்பங்களே பாடலை மிகவும் வலுக்கட்டாயப்படுத்தி கமலைப் பாட வைத்ததாக சொன்னார். அந்தப் பாடலை முதலில் இளையராஜா அவர்களே பாடுவதாக இருந்ததாகவும் ருத்ரையா அவர்கள் தான் கமல் பாடவேண்டும் என விரும்பியதாகவும் ஒலிப்பதிவு முடிந்த பிறகு இளையராஜா ருத்ரையாவையும் கமலையும் வெகுவாக பாராட்டியதாகவும் சொன்னார்.
இன்னும் சொல்லப்போனால் மகேந்திரனை விட இன்னும் அதிகமாக உலக அளவில் பேசப்பட்டிருக்க வேண்டிய இயக்குநர்.
Roman Polanski அவர்களின் ஒரு படம், பெயர் நினைவில் இல்லை, அதிலிருந்து ஒரு காட்சியமைப்பை அவள் அப்படிததான் படத்தில் தமிழுக்கேற்றவாறு பயன் படுத்தியிருப்பார். மிக அற்புதமாக இருக்கும். கோபால் சார் அந்தப் படம் நினைவிருக்குமோ என்னவோ..
மறக்கமுடியாத இயக்குநர் ருத்ரையா அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.
rajeshkrv
20th November 2014, 07:44 AM
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் -20
சுரேஷ் கிருஷ்ணா ஒரு நல்ல இயக்குனர். பல நல்ல படங்கள் இயக்கினார். அப்படித்தான் தேசாப் படத்தை தமிழில் ரோஜாவை கிள்ளாதே என்ற பெயரில் எடுத்தார்.
தேஸாப் சாயல் தான். இதில் தேவாவின் பாடல்கள் அனைத்தும் அருமை.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் , சித்ராவின் குரலில் “யமுனா நதிக்கரையில் “
https://www.youtube.com/watch?v=QA7-J94paKo
rajeshkrv
20th November 2014, 07:47 AM
ருத்ரய்யா பற்றிய அலசல் அருமை. வாசு ஜி, கோபால் ஜி, ராகவ் ஜி அருமை அருமை
Gopal.s
20th November 2014, 07:54 AM
Roman Polanski அவர்களின் ஒரு படம், பெயர் நினைவில் இல்லை, அதிலிருந்து ஒரு காட்சியமைப்பை அவள் அப்படிததான் படத்தில் தமிழுக்கேற்றவாறு பயன் படுத்தியிருப்பார். மிக அற்புதமாக இருக்கும். கோபால் சார் அந்தப் படம் நினைவிருக்குமோ என்னவோ..
மறக்கமுடியாத இயக்குநர் ருத்ரையா அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.
I think it is from the Film "Knife in the Water". I have full collections of Roman Polanski,Michael angelo, Fellini,Godardt,Bergmen,Kurasowa,Kim Ki Duc,and many more. Actually ,I sacrificed my regular Film viewing sessions for the sake of participation in the thread. I have to catch up with my reading and viewing. You are well verse with movies Sir.
Gopal.s
20th November 2014, 08:15 AM
வாசு,
இளையராஜாவை பற்றி நிறைய பேசியுள்ளோம். தொடர் தொடங்கியதற்கு நன்றி. என்னுடைய கல்லூரி நாட்களை வளமாக்கிய ஒரு அற்புத இசை மேதை. எனக்கு பிடித்த பாடல்களை பட்டியலிட்டு ,உங்கள் கை வண்ணத்தில் அவை வரும் போது ,என் இசை குறிப்புகளுடன் தொடர்வேன். கார்த்திக் திரும்பியவுடன்,என் எம்.எஸ்.வீ தொடரை தொடர்ந்து,அது முடிவுற்றதும், இளையராஜா பற்றி ஒன்று எழுதும் உத்தேசம்,உத்வேகம் உள்ளது. பார்ப்போம்.
RAGHAVENDRA
20th November 2014, 08:16 AM
Knife in the Water ... Thank you Gopal.
இந்தப்படம் கிட்டத்தட்ட முழுமையாகவே ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆதாரமாக இருந்தது. குறிப்பாக வசந்த கால நதிகளிலே பாடல் காட்சி அப்படியே Knife in the Water படத்தை நினைவூட்டும்.
Gopal.s
20th November 2014, 08:44 AM
Knife in the Water ... Thank you Gopal.
இந்தப்படம் கிட்டத்தட்ட முழுமையாகவே ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆதாரமாக இருந்தது. குறிப்பாக வசந்த கால நதிகளிலே பாடல் காட்சி அப்படியே Knife in the Water படத்தை நினைவூட்டும்.
உண்மை ராகவேந்தர். இந்த படம் 1963 இன் சிறந்த அயல் நாட்டு படைப்புக்கான ஆஸ்கார் வென்றது. ரோமன் போலன்ஸ்கி எனது பிரிய இயக்குநர் , knife in the water , ஒரு தாம்பத்ய முரண் வாழ்க்கை கொண்ட தம்பதியர் ,ஒரு ஓய்வுக்கு செல்லும் போது எதிர்பட்ட இளைஞனை அழைத்து சென்று, படகிலும் ஏற்றி செல்லும் வழியில், பெண்ணிற்காக இருவருக்கும் வரும் வாக்குவாதம் முற்றி கத்தி குத்தில் முடியும். கணவன் குதித்து தப்பி விட, அந்நியனோ கத்தி குத்தில் பிழைத்து, தனித்திருக்கும் மனைவியிடம் இசைவுடன் இணைய, தனித்து கரை கண்ட நாயகனுடன் நாயகியின் உரையாடல் என்று, ஆண் -பெண் உளவியல் முரண்கள், அது சார்ந்த ஒழுக்க விதிகள்,மீறல், தீர்வின்மை என்று பல கேள்விகளை எழுப்பும்.
பாலச்சநதரின் மூன்று முடிச்சு ,இன்த படத்தை நினைவூட்டும் . குதற பட்டு,குற்றுயிராக்க பட்ட படம். மகா மோசம்.
vasudevan31355
20th November 2014, 08:46 AM
//அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்//
'போலி தன்மை வராமலிருக்க' என்பது சரியா pretentious என்றாலும் கூட. இயல்பு தானே முழு நோக்கமும் அல்லது இயல்பு கெடாமல். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாமே. சுவாரஸ்யம் இருந்தால் கூட அல்லது தேவையில்லையே. ஒருவேளை அதுவும் இயல்பாக இருந்தால் அதுபற்றி குற்றமில்லை. பார்வையாளனை ஈர்க்க வைக்கும் அல்லது இருக்கையில் இருக்க வைக்கும் உத்தி இப்படிப்பட்ட படங்களுக்குத் தேவைதானா என்று கூறுங்கள். விதண்டாவாதம் புரிவதற்கு அல்ல. நிஜமாகவே தெரியாமல் கேட்கிறேன். அங்கு கேரகடர் போய் ரஜனி மேனரிசங்கள் தலை தூக்க வில்லையா. ரஜினி என்ற நடிகன் தானே அங்கு முன்னிலைப் படுகிறான். புகழவும் படுகிறான். நீங்களே கூட கூறியுள்ளீர்கள். பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறதே. அது நடிகனின் சாமர்த்தியமா அல்லது பாத்திரப் படைப்பின் பின்வாங்கலா?
rajeshkrv
20th November 2014, 08:50 AM
//அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்//
'போலி தன்மை வராமலிருக்க' என்பது சரியா pretentious என்றாலும் கூட. இயல்பு தானே முழு நோக்கமும் அல்லது இயல்பு கெடாமல். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாமே. சுவாரஸ்யம் இருந்தால் கூட அல்லது தேவையில்லையே. ஒருவேளை அதுவும் இயல்பாக இருந்தால் அதுபற்றி குற்றமில்லை. பார்வையாளனை ஈர்க்க வைக்கும் அல்லது இருக்கையில் இருக்க வைக்கும் உத்தி இப்படிப்பட்ட படங்களுக்குத் தேவைதானா என்று கூறுங்கள். விதண்டாவாதம் புரிவதற்கு அல்ல. நிஜமாகவே தெரியாமல் கேட்கிறேன். அங்கு கேரகடர் போய் ரஜனி மேனரிசங்கள் தலை தூக்க வில்லையா. ரஜினி என்ற நடிகன் தானே அங்கு முன்னிலைப் படுகிறான். புகழவும் படுகிறான். நீங்களே கூட கூறியுள்ளீர்கள். பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறதே. அது நடிகனின் சாமர்த்தியமா அல்லது பாத்திரப் படைப்பின் பின் பின்வாங்கலா?
மக்கள் என்னும் ஆட்டு மந்தை உயிரை கொடுத்து நடிக்கும் நடிகனின் நடிப்பை பார்க்காமல் ஓ இது ரஜினி இது கமல் என்று பார்க்கத்தான் செய்கிறது ,அது தான் பல நல்ல பாத்திர படைப்புக்கள் பேசப்படாமலே போனதற்கு காரணம்
Gopal.s
20th November 2014, 09:19 AM
//அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்//
'போலி தன்மை வராமலிருக்க' என்பது சரியா pretentious என்றாலும் கூட. இயல்பு தானே முழு நோக்கமும் அல்லது இயல்பு கெடாமல். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாமே. சுவாரஸ்யம் இருந்தால் கூட அல்லது தேவையில்லையே. ஒருவேளை அதுவும் இயல்பாக இருந்தால் அதுபற்றி குற்றமில்லை. பார்வையாளனை ஈர்க்க வைக்கும் அல்லது இருக்கையில் இருக்க வைக்கும் உத்தி இப்படிப்பட்ட படங்களுக்குத் தேவைதானா என்று கூறுங்கள். விதண்டாவாதம் புரிவதற்கு அல்ல. நிஜமாகவே தெரியாமல் கேட்கிறேன். அங்கு கேரகடர் போய் ரஜனி மேனரிசங்கள் தலை தூக்க வில்லையா. ரஜினி என்ற நடிகன் தானே அங்கு முன்னிலைப் படுகிறான். புகழவும் படுகிறான். நீங்களே கூட கூறியுள்ளீர்கள். பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறதே. அது நடிகனின் சாமர்த்தியமா அல்லது பாத்திரப் படைப்பின் பின்வாங்கலா?
அது அப்படியில்லை வாசு. பொதுவாக இம்மாதிரி படங்களுக்கு தேர்ந்தெடுக்க படும் களங்கள் பூடகமாக, பல வித suggestive யூகங்களுக்கு ,தேர்ந்த பார்வையாளனை இழுத்து செல்லும்.
பெரும்பாலும், நமக்கு பரிச்சயமான பின்னணியில் அசாதாரண சூழலில் அமைக்க பட்டு (பஞ்சம்,போர் , சுரண்டல் ,அதீத மனோதத்துவ பின்னணி கொண்ட விசித்திர பாத்திரங்கள்) , தீர்வை வழங்காமல், கேள்விகள் எழுப்பி சிந்தனையை தூண்டும்.
casting பெரும்பாலும், பொருந்த கூடிய ஒரு நடிகனையே வேண்டும். சுற்றி அசாதாரமான பாத்திரங்கள் சூழ ,ஒரு சராசரி ரசிகன் அன்னியப்பட்டு விடுவான். அதில் ஒரு உண்மை தன்மை கொண்ட ஒரு பார்வையாளன் மனநிலையுடன் ஒருங்கிணைக்கும் ஒரு பாத்திரம் நுழைக்க பட்டே ஆக வேண்டும். அதுதான் இப்பட தியாகு. ஆனால் படத்தின் உயிர்நாடியை குலைக்காமல் ,ஓரளவு அருமையாக கையாள பட்டது.
vasudevan31355
20th November 2014, 09:37 AM
ஆனால் படத்தின் உயிர்நாடியை குலைக்காமல் ,ஓரளவு அருமையாக கையாள பட்டது.
அது உண்மைதான். ஒத்துக் கொள்கிறேன். விளக்கம் புரிகிறது.
adiram
20th November 2014, 11:44 AM
பார்வையாளனை ஈர்க்க வைக்கும் அல்லது இருக்கையில் இருக்க வைக்கும் உத்தி இப்படிப்பட்ட படங்களுக்குத் தேவைதானா என்று கூறுங்கள். விதண்டாவாதம் புரிவதற்கு அல்ல. நிஜமாகவே தெரியாமல் கேட்கிறேன். அங்கு கேரகடர் போய் ரஜனி மேனரிசங்கள் தலை தூக்க வில்லையா. ரஜினி என்ற நடிகன் தானே அங்கு முன்னிலைப் படுகிறான். புகழவும் படுகிறான். நீங்களே கூட கூறியுள்ளீர்கள். பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறதே. அது நடிகனின் சாமர்த்தியமா அல்லது பாத்திரப் படைப்பின் பின்வாங்கலா?
இயக்குனரின் லேசான சறுக்கல் என்றும் கொள்ளலாம். ஆனால் இது போன்ற வித்தியாச காவியப்படைப்புகளில் இப்படிப்பட்ட காம்ப்ரமைஸ்கள் தேவையா என்ற கேள்வியையும் எழுப்புகின்றது. நடிகரின் தனிப்பட்ட மேனரிசங்களைக் காட்டத்தான் வழக்கமான வியாபாரப் படங்கள் உள்ளனவே.
vasudevan31355
20th November 2014, 01:48 PM
அன்பு ஆதிராம் சார்!
மதுர கானங்கள் திரிக்கு தங்களின் வருகை மிகுந்த உவகையை அளிக்கிறது. நிறைய அரிய விஷயங்களை அழகாகத் தருவதில் (அதில் மிக முக்கியம் அத்துணை விஷயங்களும் இம்மி பிசகாமல் கரெக்ட்டாக இருக்கும் என்பது இன்னும் விஷேசம்) தங்களுக்கு நிகர் தாங்கள்தான். மதுர கானங்கள் மகுடத்தில் மேலும் ஒரு மரகதக் கல்.
நெஞ்சு நிறைய தங்களை வரவேற்கிறேன். தங்கள் மேலான பதிவுகளைத் தந்து இந்த திரியை மென்மேலும் சிறப்பித்துத் தர வேண்டுகிறேன்.
வருக! வருக!
http://3.bp.blogspot.com/_2KvpC8hIBE0/S_-JOIfhVUI/AAAAAAAAA6o/pfHQ0-3O-lY/s1600/Valentines-Day-Flower-Bouquets.jpg
vasudevan31355
20th November 2014, 01:49 PM
இயக்குனரின் லேசான சறுக்கல் என்றும் கொள்ளலாம். ஆனால் இது போன்ற வித்தியாச காவியப்படைப்புகளில் இப்படிப்பட்ட காம்ப்ரமைஸ்கள் தேவையா என்ற கேள்வியையும் எழுப்புகின்றது. நடிகரின் தனிப்பட்ட மேனரிசங்களைக் காட்டத்தான் வழக்கமான வியாபாரப் படங்கள் உள்ளனவே.
ஆதிராம் சார்!
அழகாகச் சொன்னீர்கள். தங்களுடைய கருத்துதான் என் கருத்தும்.
vasudevan31355
20th November 2014, 03:16 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 20)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
http://i.ytimg.com/vi/bjJNKq1UfL4/0.jpg
அடுத்து இசைஞானி அவர்கள் இசையமைத்த 'பைரவி'. வள்ளி வேலன் மூவீஸ் வழங்கிய இப்படத்திற்குக் கதை எழுதி தயாரித்தவர் கலைஞானம். இயக்கியவர் எம்.பாஸ்கர். இப்படத்தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். ரஜினிக்கு கதாநாயக அந்தஸ்தைக் கொடுத்து அதை அவரைத் தக்க வைத்துக் கொள்ள செய்த படம். ரஜினி திரையுலக சரித்திரத்தில் இடம் பெற்ற படமாயிற்று. தங்கை பாசத்தில் வில்லனை பழி வாங்கும் ஆக்ஷன் கதை இது. கமர்ஷியலாகவும் நல்ல வெற்றி பெற்ற படம் இது.
http://i.ytimg.com/vi/bjJNKq1UfL4/movieposter.jpg
ஸ்ரீகாந்த், சுருளி, சுதிர், வி.கே.ராமசாமி, ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் கீதா ரஜனியின் தங்கையாக அறிமுகமானார். திரைக்கதை வசனத்தை மதுரை திருமாறன் எழுத, பனசை மணியன் துணை வசனம் எழுதியிருந்தார். பாடல்களை கவிஞரும், சிதம்பரநாதனும் எழுதியிருந்தனர். பின்னணி இரண்டே பேர்தான். பாடகர் திலகம், ஜானகி மட்டுமே. இதற்கு முன்னாலே பாலாவை சில பாடல்களுக்கு யூஸ் செய்த ராஜா ரஜினிக்கு பாலாவின் குரல் சூட் ஆகாது என்று நினைத்தாரோ என்னவோ எல்லாப் பாடல்களையும் டி.எம்.சௌந்தரராஜனுக்கே தந்து விட்டார்.
இந்தப் படத்தில் பாடல்களை நன்கு கவனித்தீர்களானால் ஒன்று நன்கு புலப்படும். இதுவரை தனித்தன்மையுடன் பாடல்களுக்கு இசையமைத்திருந்த ராஜா இந்தப் படத்தில் பாடல்களை சங்கர் கணேஷ் பாணியில் இசையமைத்திருந்தார். என்னுடைய தனிப்பட்ட கருத்து இது. இது எந்த அளவிற்கு உண்மை என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
இனி பாடல்கள்.
http://archives.deccanchronicle.com/sites/default/files/mediaimages/gallery/2012/Dec/22-Bairavi.jpg
1. கட்டபுள்ள குட்ட புள்ளே ...
கருகுமணி போட்ட புள்ளே
கன்னங் குழி விழுந்த செல்லம்மா
நல்ல காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
பாடல் கண்ணதாசன்.
ரஜினி, ஸ்ரீப்ரியா போடும் குத்தாட்ட ஜோடிப் பாடல். ரஜனி கருப்பு கலரில் புள்ளி போட்ட மைனர் ஜிப்பாவெல்லாம் போட்டு இருப்பார். நடனம் வராது. கை, கால்களை விறைப்பாக அப்படி இப்படி ஆட்டியே ஒரு வழியாகச் சமாளித்து விடுவார். ரவிக்கை இல்லாத ஸ்ரீப்ரியா. தூக்கம் இல்லாத ரசிகர்கள்.:) ரஜினி பிரியாவுக்கு 'வாடிப்பட்டி சந்தையிலே வாங்கி வந்த ரவிக்கை'யை மாட்டி விடுவது கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர். சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல் போலவே இருக்கும்.
https://www.youtube.com/watch?v=CegbLPI_TrI&feature=player_detailpage
2. ஸ்ரீப்ரியா, ஒய்.விஜயா ஏற்றம் இறைத்துக் கொண்டே பாடும் பாடல். ஜானகி குரலில். ஏற்றம் ஏறி இறங்கும்போது உண்டாகும் 'கர்ர்ர்'... என்ற ஏற்றத்தின் உராய்வு சப்தத்தைக் கூட சூப்பராய் கவனித்துத் தந்திருப்பார் ராஜா. அழகான ஒய்.விஜயா ஒருபுறமும், ஸ்ரீப்ரியா ஒரு புறமும் நின்று ஏற்றம் இறைப்பார்கள்.
பாடல் கண்ணதாசன்.
ஏத்தம் எறச்சி காத்துக் கிடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்ல
சந்தனம் வந்தாச்சு குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வராதோ என்னத் தேடி
இந்தப் பாடலின் தொகையறா டாப்.
ஒரு பொடியாய் ஒன்னு
ஓடி வாடா ராமா
காத்தடிக்கும் நேரம்
தூத்துனது லாபம்
லாபமடா சாமி
ஸ்ரீபிரியா ரஜினியை நினைத்துப் பாட, ரஜினி போலீஸிடமிருந்து தப்பித்து ஓடிவர, ரஜினியை இறுதியில் பார்த்து விடும் பிரியா 'என் சாமியும் வந்தாச்சு என்னத் தேடி' என்று ரஜினியைச் சேர ஓடியபடியே பாடலை முடிப்பார். ரஜினி வயல் வரப்பில் ஓடி வரும் போது விசில் பறக்கும். இந்தப் பாடலில் ஒய்.விஜயாவிற்கு ஒரு பின்னணிக் குரல் ஒலிக்கும். ('பையன் பொறந்தா பொங்கலும் உண்டு... மங்களம் உண்டு') ஆனால் அந்தப் பாடகியின் பெயர் டைட்டிலில் வராது. யாரென்று தெரிந்தவர்கள் சொல்லலாம். காத்துக் கிடக்கேன்:)
இந்தப் படத்திலேயே எனக்கு பிடித்த முதல் பாடல். அழகான நாட்டுப்புற மெட்டில் கோஷ்டியினரின் 'தந்தனத்தானா தந்தனத்தானா தந்தனத்தானா' கோரஸில் ஜானகி அனுபவித்துப் பாட, ஸ்ரீப்ரியா அளவான பாவங்கள் தர, ரஜினி தப்பித்து, பரபரப்பாக ஓடி வந்து ப்ரியாவுடன் சேர அருமையான பாடல். காட்சியமைப்பும் நன்றாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=HEt78wgK-1E&feature=player_detailpage
மீதி பாடல்கள் நாளை.
adiram
20th November 2014, 03:33 PM
பூச்செண்டுடன் வரவேற்றதற்கு மிக்க நன்றி வாசு சார்.. (ஆனால் என் வீட்டுக்கு வருவதற்கு ஏனிந்த வரவேற்பு?)
அவள் அப்படித்தான் மஞ்சு முரண்பாடுகளும் மூர்க்க குணமும் கொண்ட பாத்திரம் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு அவள் வைத்துக்கொள்ளும் பெயர் பெண்ணிய விடுதலை. உலகம் என்பது நிறைகளும் குறைகளும் கொண்டது என்பதையும், அதற்குள்தான் நம்முடைய சிறிய, மிகச்சிறிய வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற யதார்த்த உண்மையை உணர மறுப்பவள். குப்பையும் கூளமும் நிறைந்த உலகத்தை சுத்தப்படுத்தி விட்டுத்தான் வாழ்க்கையைத் தொடங்குவேன் என்று வீண் முரண்டு பிடிப்பவள். இறுதியில் சரிதா சொல்லும் 'பெண் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது 'நாமும் இப்படி இருந்திருக்கலாமோ' என்ற எண்ணம் மஞ்சு (ஸ்ரீப்ரியா) முகத்தில் தோன்றுவது தெரியும்.
அந்த ஏமாற்றத்தை மறைக்கத்தான் 'இங்கேயே இறங்கிக்கிறேன்' என்ற அவளது கடைசி வார்த்தை.
காரிலிருந்து இறங்கி நம் மனதில் பாரமாக அமர்ந்து கொள்வாள். அதிலிருந்து என்றைக்கும் இறங்க மாட்டாள்.
vasudevan31355
20th November 2014, 03:48 PM
காரிலிருந்து இறங்கி நம் மனதில் பாரமாக அமர்ந்து கொள்வாள். அதிலிருந்து என்றைக்கும் இறங்க மாட்டாள்.
அவளும் நிம்மதியில்லாமல் நம்மையும் நிம்மதி இல்லாமல் செய்கிறாளே ஒரு திரியைப் போல. :sad:
parthasarathy
20th November 2014, 04:22 PM
வாசு
வழக்கம் போல் 1977-78 சிலோன் ரேடியோ ஹிட் பாடல் . சுரேந்தர்க்கு அந்நாட்களில் எஸ் எ சந்திர சேகர் படத்தில் ஒரு பாடல் நிச்சயம் உண்டு .
எஸ் எ சந்திரசேகர் இன் இயக்கத்தில் வெளி வந்த முதல் படம். (நிறைய பேர் சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்வார்கள்). நடிகர் திலகத்தின் எங்கள் தங்க ராஜா படத்திற்கு உதவி இயக்குனர். இந்த படத்தின் போஸ்டரில் அவர் பெயர் எஸ் எ சி சேகர் என்று தான் போட்ட நினைவு உண்டு.பிறகு தான் எஸ் எ சந்திர சேகர்.
If my memory is right, SAC's wedding was held in the presence of Nadigar Thilagam.
Regards,
R. Parthasarathy
JamesFague
20th November 2014, 06:59 PM
To,
Mr Neyveli Vasudevan
நடிகர்திலகத்தின் பித்தனே
மதுர கானத்தின் மன்னனே
உண்மை நண்பனே
உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
ஸ்ரீ வாசுதேவன்
சென்னை
Richardsof
20th November 2014, 07:17 PM
மனதை மயக்கும் மதுர கானங்கள் திரியின் நிறுவன தலைவரும் , இனிய நண்பரும் ,இசைத்துறையின் ஆராய்ச்சியாளரும் ,ஞான ஒளி யின் ஆசீர்வாதங்கள் பெற்றவரும் ,ஒளிவிளக்கின் நண்பர்களின் அன்பை பெற்றவரும்
ம.ம. ம கா . முதல்வர் மாண்பு மிகு வாசுதேவன் அவர்களின் பிறந்த நாளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .
இசையால் பல நண்பர்களை இணைத்து வைத்த வழிகாட்டி
இசை துறையில் நீந்த முடியாதவர்களை கரையேற்றிய படகோட்டி
மதுர கானங்களின் தேரோட்டி
நாள் தோறும் நம் வாசுதேவனை பாராட்டி
புகழ் மாலை சூட்டுவோம் - இந்த இனிய பிறந்த நாளில் .
gkrishna
20th November 2014, 07:22 PM
happy birthday vasu sir
long live vaasu
rgds
Gk
RAGHAVENDRA
20th November 2014, 07:35 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/vasubd2014grtgs_zpsc84bb331.jpg
RAGHAVENDRA
20th November 2014, 07:35 PM
Welcome Adiram Sir
Russellzlc
20th November 2014, 07:47 PM
அன்பிற்கினிய பண்பாளர் , குணத்தில் கோலார், கொள்கையில் கோஹினூர் நெய்வேலி திரு.வாசுதேவன் சார் அவர்கள் இன்றுபோல் என்றும் வாழ்க! பல்லாண்டு வாழ்க!!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
adiram
20th November 2014, 08:00 PM
நடிகர்திலகத்தின் தீவிர பக்தரும், மதுரகானங்கள் திரியின் பிதாமகரும், எல்லோருக்கும் பிடித்த இனிய பண்பாளரும், அனைத்துக்கும் மேலாக என் பாசத்துக்குரிய இனிய நண்பருமான நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவர் இன்னும் பல்லாண்டுகள் பூரண ஆரோக்கியத்துடனும் என்றும் இளமை மாறா உடல் நலத்துடனும் வாழ்ந்து உலக நட்புக்கு இலக்கணமாக திகழ பிரார்த்திக்கிறேன்.
Russellmai
20th November 2014, 08:17 PM
வாசு சார் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.
rajeshkrv
20th November 2014, 08:18 PM
வாசு ஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
chinnakkannan
20th November 2014, 09:16 PM
அன்புள்ள வாசு தேவன் சார்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
வானத்தைப் பார்த்து வரும்மழை என்றெண்ணி
கானமயில் செய்யும் களிநடனம் – மோனமாய்
மேகங் கலைந்துவிட மண்ணும் நனையாது
வேகமாய் ஆடும் ஒயிலாட்டாம் நிற்காமல்
கூடி யுடனே குயில்கள் பாடுதற்கே
நாடியே தந்தீர் நலம்
பேதமெலாம் பார்க்காத வாசுதேவர் இங்கு
…பெற்றவித்தை கற்றவித்தை அனைத்தையும் தான் கூட்டி
சேதமெதும் செய்யாமல் நற்பாடல் பலவை
..சித்திரமாய் சொற்றொடரில் வரைந்திருப்பார் அன்றோ
நேசநெஞ்சம் நல்லறிவு நகைச்சுவையும் கூட்டி
.. நெடுந்தொடராய் குறுந்தொடராய் பாட்டுவண்ணம் தந்தார்
கேசவனா மாதவனா வாசுதேவர் அன்றோ
..கொண்டிடுவார் நூறாண்டு சிறப்புடனே புவியில்..
நூறாண்டுகாலம் வாழ்க..வாசு சார்.. உங்கள் இனிய நேச நெஞ்சத்திற்கு எல்லா வித நல்லவையும் உங்களை வந்து சேரும்..
sss
20th November 2014, 11:04 PM
தமிழ் நெஞ்சங்கள் எல்லோருக்கும் பிடித்த நடிகர் திலகம் போல் நம் எல்லோருக்கும் பிடித்த வாசு சார்... உங்கள் பிறந்த நாளில் மனமார வாழ்த்துகிறேன்...
uvausan
20th November 2014, 11:07 PM
அன்புள்ள வாசு
உங்களுக்கு ஒரு வயது குறைந்தது என்று அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - நெய்வேலியில் வாழ்ந்துகொண்டு , ஒரு பெரிய பிரபஞ்ச்சத்தை ஆண்டு கொண்டு இருக்கிண்டீர்கள் - பதினாறும் பெற்று ( குழந்தைகளை சொல்லவில்லை ) அதாவது
1. கலையாத கல்வி
2. என்றும் குறையாத வயதும்
3. ஒரு கபடு வாராத நட்பும்
4. கன்றாத வளமையும்
5. குன்றாத இளமையும்
6 கழு பிணி இல்லாத உடலும்
7. சலியாத மனமும்
8. அன்பு அகலாத மனைவியும்
9. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும் ( கர்ணன் போல் )
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு குற்றம் இல்லாத வாழ்வும்
16. துய்ய nt பாதத்தில் அன்பும்
பெரும் வாழ்வு வாழ வாழ்த்துவதுடன் , வேண்டுகிறோம்
Gopal.s
21st November 2014, 04:39 AM
இன்று பிறந்த நாள் காணும் வாசுவிற்கு பல்லாண்டு மேலும் காண வாழ்த்துக்கள். சரக்குடன் உன்னை சந்தித்து இரு வருடங்கள் ஓடி விட்டதை நம்ப கூட முடியவில்லை. இன்று உன் ஞாபகார்த்தமாக வேறொரு நண்பருடன் சரக்கடித்து கொண்டாட இருக்கிறேன்.
நெய்வேலி திரும்ப வரும் எண்ணம் உள்ளது. முயல்கிறேன்.
நட்புடன்
கோபால்.
sivaa
21st November 2014, 06:46 AM
அன்புள்ள வாசு தேவன் சார்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
uvausan
21st November 2014, 08:06 AM
வாசு - பைரவியின் பாடல் அலசல் மிகவும் அருமை - அந்த படத்தில் வரும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் - TMS , ரஜினிக்கு பாடிய முதல் பாடல் என்று நினைக்கிறேன் - ஒருவர் மறைந்த்தால்தான் அவருடைய அருமை தெரியும் என்று மிகவும் அழகாக உணர்த்தும் பாடல் . T.M.S has infused life into the song which no other contemporary singer of Kollywood could have done. ரஜினியின் முத்தான படங்களில் இதுவும் ஒன்று . ஸ்ரீகாந்த் வில்லனாக வரும் படம் - ஆனால் நாளைடவில் அவரால் ரஜினியின் வீச்சை தாங்க முடியவில்லை - சற்றே ஒதுங்க வேண்டியதாகி விட்டது
பைரவியை அசை போட வைத்ததற்கு மிகவும் நன்றி
http://youtu.be/U2XtrFowBSQ
gkrishna
21st November 2014, 09:52 AM
வாசு - பைரவியின் பாடல் அலசல் மிகவும் அருமை - அந்த படத்தில் வரும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் - TMS , ரஜினிக்கு பாடிய முதல் பாடல் என்று நினைக்கிறேன் - ஒருவர் மறைந்த்தால்தான் அவருடைய அருமை தெரியும் என்று மிகவும் அழகாக உணர்த்தும் பாடல் . T.M.S has infused life into the song which no other contemporary singer of Kollywood could have done. ரஜினியின் முத்தான படங்களில் இதுவும் ஒன்று . ஸ்ரீகாந்த் வில்லனாக வரும் படம் - ஆனால் நாளைடவில் அவரால் ரஜினியின் வீச்சை தாங்க முடியவில்லை - சற்றே ஒதுங்க வேண்டியதாகி விட்டது
பைரவியை அசை போட வைத்ததற்கு மிகவும் நன்றி
வாசு
காலை வணக்கம்
பைரவி படத்தின் பாடல்களை நினைவு கூர்ந்து பகிர்ந்ததற்கு நன்றி .இந்த படத்தை ஆரம்பிக்க கலைஞானம் (அவர்களின் முதல் தயாரிப்பு) தன அனுபவங்களை நக்கீரன் வார இதழ் வெளியிடும் சினிமா secret தொடரின் கூறி இருந்தார். நாமும் இரண்டாவது பாகத்தில் குறிப்பிட்டு இருந்தோம். இந்த படத்தில் தான் ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் விளம்பரபடுதபடுகிறார். (உபயம் கலைபுலி தாணு )
இதே கால கட்டம் துரையின் சதுரங்கம் படம் ரஜினி, ஸ்ரீகாந்த் இருவரின் நடிப்பில் வெளி வந்த நேரம் . இது சம்பந்தமாக (பைரவி,சதுரங்கம் படபிடிப்பு தளத்தில் ) ஸ்ரீகாந்த்,ரஜினி காந்த் இருவரும் கலந்து உரையாடிய ஒரு கட்டுரை மற்றும் சில புகைப்படங்கள் பிலிமாலயா இதழில் வெளிவந்த நினைவு இருக்கிறது .ரஜினி ஸ்ரீகாந்த்க்கு சிகரட் பற்ற வைப்பது போலவும் ,ஸ்ரீகாந்த் ரஜினியின் கழுத்தை கட்டி கொண்டு இருப்பது போலவும் சில புகைப்படங்கள் .
நண்பர் ரவி சார் ஸ்ரீகாந்த் பற்றி குறிப்பிட்ட உடன் இது நினைவிற்கு வந்தது. நன்றி ரவி சார் .'நண்டூருது நரியூருது ' பாடல் டி எம் எஸ் அவர்களின் பின்னாளைய பாடல்களில் பிரபலமான பாடல் .இதே போல் அன்னை ஒரு ஆலயம் திரை படத்தில் 'அம்மா நீ சுமந்த பிள்ளை ' பாடலும் உள்ளம் கவர்ந்த பாடல் .
Rgds
Gk
gkrishna
21st November 2014, 11:14 AM
ரவி சார்
1982 அல்லது 1983 கால கட்டம் என்று நினைவு. எம் என் நம்பியார் அவர்கள் தலைமையில் நடிகர்கள் பலர் மாலை அணிந்து சபரி மலைக்கு விஜயம் செய்து இருந்தார்கள். சபரி மலையில் இருந்து திரும்பும் வழியில் புனலூர் செங்கோட்டை வழியாக நெல்லைக்கு எல்லோரும் விஜயம் செய்தார்கள். ரஜினி மிகவும் பிரசித்தம் ஆகி விட்ட நேரம். ஆனால் ஒரு சாதாரண ஐயப்ப பக்தர் போல் பேருந்து ஒன்றில் பயணம் செய்து நெல்லை வந்தார். அப்போது நான் நெல்லையில் ஐயப்ப சேவா சங்கம் என்ற அமைப்பில் கௌரவ ஊழியர் ஆக இயங்கி கொண்டு இருந்தேன். இப்போது போல் அந்நாட்களில் சாலை இணைப்பு வசதிகள் கிடையாது.கம்பம் குமிளி பாதை அடிகடி மலைச்சரிவால் பாதிக்கப்பட்டு வந்ததால் வடக்கில் இருந்து வருபவர்கள் (மிக அதிக தூரத்தில் இருந்து வரும் (சென்னை,ஆந்த்ரா மற்றும் கர்நாடகா,குஜராத் பக்தர்கள்) பெரும்பாலும் மதுரை,திருநெல்வேலி,செங்கோட்டை,புனலூர் மார்கமாகவே பயணிப்பார்கள் .அது போல் அம்முறை எம் என் நம்பியார் குழு நெல்லை வந்தது . அவர்களை எல்லாம் உபசரிக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டு இருந்தது . ஏற்கனவே நான் சிவாஜி ரசிகன் அதனால் ஸ்ரீகாந்த் மீது சற்று அபிமானம் கொண்டவன் என்ற முறையில் அது போக ஸ்ரீகாந்த் அப்போது எம் என் நம்பியார் அவர்கள் குழுவில் மூத்த ஐயப்ப பக்தர் என்பதால் அவருக்கு மரியாதை ஜாஸ்தி கொடுத்து உபசரித்தேன்.பொதுவாக ஐயப்ப பக்தர் குழுவில் ஒரு ஐயப்ப பக்தர் அவரை விட மூத்த பகதர்களுக்கு கொஞ்சம் மரியாதை ஜாஸ்தி கொடுப்பார்கள். ஆகையால் அவரை நான் கொஞ்சம் அதிகமாக உபசரித்தேன். என் நண்பர்கள் எல்லோரும் ரஜினி அவர்களையே சுற்றி சுற்றி வந்தார்கள் அப்போது இதை கவனித்த திரு ரஜினி அவர்கள் எல்லோரிடமும் என்னை காண்பித்து 'இந்த சாமி பாருங்க என்னை விட ஸ்ரீகாந்த் (சத்குருசாமி என்ற அடைமொழியுடன்) அவர்களை நன்றாக கவனித்து கொள்கிறார் .அது போல நீங்களும் நடந்து கொள்ளுங்கள் ' என்று கூறினார். அப்போது ஸ்ரீகாந்த் சொன்ன பதில் எனக்கு நல்ல நினைவு ரவி சார் "இந்த கவனிப்பு இருக்கட்டும் ரஜினி.நீங்க இப்ப உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்க படங்களில் எங்களை போன்ற மூத்த நடிகர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் ." என்று சொன்னார். ரஜினி உடனே தன உதவியாளர் இடம் (அவர் பெயர் ஜெயராமன் என்று நினைவு) இப்ப நாம் கமிட் ஆகி இருக்கும் படத்தில் சத்குருசாமிக்கு படம் முழுதும் வருகிற மாதிரி நல்ல ரோல் கொடுக்கிறோம் .டைரக்டர் கிட்ட சொல்லுங்க ' என்றார். பிறகு எல்லோரும் இதை மறந்து விட்டோம். 6 அல்லது 7 மாதம் கழித்து வந்த 'தம்பிக்கு எந்த ஊரு ' திரைபடத்தில் ஸ்ரீகாந்த்க்கு நல்ல ரோல் கொடுத்து இருந்தார்கள்.அதே போன்று ஸ்ரீ ராகவேந்தர்,வேலைக்காரன் திரைப்படத்திலும் ஸ்ரீகாந்த் உண்டு . ஏனோ தெரியவில்லை .பின்னாளைய ரஜினி படங்களில் ஸ்ரீகாந்தை காணவில்லை .
நினைவலைகளில் நீந்த வைத்த திரு ரவி அவர்களுக்கு மீண்டும் நன்றி
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQckopp6FqEReApOC1G-pZZYHbpI-q7wZ2g5Ugw2mp8AFiwuV7Hsw
gkrishna
21st November 2014, 11:34 AM
இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தில் நடித்ததோடு, அப்படம் உருவாக உறுதுணையாக இருந்த நடிகர் கமல்ஹாசன், 'அவள் அப்படித்தான்' குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
"சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம்.
சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.
நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே.
எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும்.
நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'.
கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.
அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது ஆனால் அப்படி ஆகவில்லை.
பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது.
கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார்.
படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை.
வணிகரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திந்ருதாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை.
ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.
தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்துவைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த 'அவள் அப்படித்தான்' சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார்.
தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02213/rudhraiya_kamal_2213296f.jpg
gkrishna
21st November 2014, 11:41 AM
http://tamil.thehindu.com/multimedia/archive/02213/ruthraiya3_2213024a.jpg
ருத்ரய்யா | கோப்புப் படம்: அருண் மோ
கடலில் கலந்த புதுப்புனல் - நன்றி தமிழ் ஹிந்து நாளிதழ்
ருத்ரய்யாவின் சொந்த ஊர் சேலம் அருகில் உள்ள ஆத்தூர். அவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்.
1976-ல் அவரை நான் முதலில் சந்தித்தேன். ராயப்பேட்டையில் உள்ள கௌடியா மடம் தெருவில் உள்ள ப்ரிவ்யூ திரையரங்கில் கன்னடத் திரைப்பட இயக்குநர் பி.வி. காரந்தின் ‘சோமனதுடி’படத்தைத் திரையிட்டார்கள். அதைப் பார்க்க அவரும் வந்திருந்தார். நானும் இயக்குநர் ஜெயபாரதியும் அப்படத்தைப் பார்க்க அங்கே போயிருந்தோம். ஜெயபாரதிதான் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அந்த நாள் முதல் நாங்கள் நெருங்கிய நண்பர்களாக ஆனோம். 1977-ல் அவர் திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளியே வந்தார். சினிமா எடுக்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். லாயிட்ஸ் ரோடு காலனியில் இருந்த அவரது அறையில் சகாவாகத் தங்கத் தொடங்கினேன். வேலை தேடுவதற்கு எளிதாக இருக்கும் என்று அவர்தான் தன்னுடன் என்னைத் தங்கச் சொன்னார். ருத்ரய்யா அருமையான படிப்பாளி. பிரான்ஸில் 1960-களில் எடுக்கப்பட்ட புதிய அலை திரைப்படங்களால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார்.
தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் ருத்ரய்யா தனது முதல் படமாக எடுக்க எண்ணியிருந்தார். அதற்கு நாயகனாக கமல்ஹாசனை மனதில் வைத்திருந்தார். அதற்கான திரைக்கதையை நான்தான் முழுவதும் எழுதினேன். திரைக்கதைக்கு தி. ஜானகிராமனிடம் ஒப்புதல் வாங்குவதற்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னை டெல்லி அனுப்பிவைத்தார். ஜானகி ராமனுக்கு முன்பணமாகக் கொடுக்க 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் கொடுத் திருந்தார். 10 நாட்கள் டெல்லியிலேயே இருந்தேன்.
தி. ஜானகிராமன் தனக்குத் திரைக்கதைபற்றிப் பெரிதாகத் தெரியாது என்று சொல்லி, அவரது நண்பரும் இந்திப் பட இயக்குநருமான ரிஷிகேஷ் முகர்ஜியிடம் கொடுத்துக் கருத்துக் கேட்க வேண்டும் என்றார். திரைக்கதைப் பிரதியைக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவந்தேன். அந்தப் படம் வெளி வரவே இல்லை. தி. ஜானகிராமன் டெல்லியிலிருந்து ஓய்வுபெற்று சென்னை திரும்பிவந்த பிறகு, அந்தப் பணத்தைத் திரும்பத் தந்துவிட்டார். அதற்குள் பத்துப் பதினைந்து ஆண்டுகள் போயிருக்கும்.
தன்னுடைய பட வேலைகளில் ருத்ரய்யா தனது சக மாணவர்களையே ஈடுபடுத்தினார். ஒளிப்பதிவாளராக சக மாணவர் நல்லுசாமியை வைத்துக் கொண்டார். அவருக்கு உதவியாக அருண்மொழி, ஞானசேகரன் ஆகியோர் இருந்தனர். திரைக்கதைக்கு உதவியாக பாபு ராமசாமியையும் உடன் அழைத்துக் கொண்டார். அந்தப் படத்தின் ‘ஒன்லைனை’ முழுமையாக எழுதிக்கொடுத்தவர் சோமசுந்தரேஸ்வரர். அவர்தான் பின்பு இயக்குநர் ராஜேஸ்வர் ஆனார். அனந்து, திரைக்கதையிலும் வசனங்களிலும் பங்குபெற்றார். நான் அதில் ஒரு 20 சீன்களை எழுதியிருப்பேன். இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள் அந்தப் படத்தில் இருந்தன. முதல் வெளியீட்டில் படத்துக்கு அவ்வளவு பெயர் கிடைக்கவில்லை. இரண்டாவது முறை வெளியிடப்பட்டது. அப்போதுதான் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ருத்ரய்யா எடுத்த அடுத்த படம் ‘கிராமத்து அத்தியாயம்’. ‘அவள் அப்படித்தான்’ போன அளவுக்குக்கூடப் போகவில்லை. ருத்ரய்யாவின் மனதில் கதைகள் ஓடிக்கொண்டே இருக்கும். முயற்சிகளையும் தொடர்ந்துகொண்டே இருந்தார். ஆனால், எந்த முயற்சியும் கைகூடவில்லை. சமீபத்தில் கூட, கமல்ஹாசனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டபடி இருந்தார்.
ருத்ரய்யா நண்பர்கள் சூழ இருந்தவர். ஒரு கம்யூன் லிவிங் சூழ்நிலையில்தான் ‘அவள் அப்படித்தான்’ படப்பிடிப்பு நாட்கள் இருந்தன. எல்லா நண்பர்களும் சேர்ந்து கூடிக் களிக்கும் இடமாக அவரது வீடு திகழ்ந்தது. படம் எடுத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் பெரிய ஈடுபாடு அவருக்கு இருந்த தில்லை. சம்பளம் என்று யாருக்கும் பேசவில்லை. தேவையான பணத்தை வாங்கிக்கொள்வார்கள். அந்த மாதிரியாகத்தான் தனது படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தார்.
ஆனால், அவர் நினைத்த சினிமாக்களைச் செய்ய கடைசிவரை முடியவில்லை. அவரது கனவு பொய்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
- வண்ணநிலவன், ‘கடல்புரத்தில்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர், ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவர்.
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02212/aval_appadithan_2212891f.jpg
gkrishna
21st November 2014, 11:50 AM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02212/ruthraiya1_2212964f.jpg
கே. ராஜேஸ்வர்
சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி யில் எனக்கு சீனியராக இருந்தவர் ருத்ரய்யா. 1974-75-ல் அவரை நான் சந்தித்தேன். இடதுசாரி சிந்தனைகளும், சர்வதேச சினிமாக்கள் மீதான பிரியமும் எங்களை இணைத்தன. அந்தக் காலகட்டத்து சினிமா மாணவர்கள் எல்லோரையும் பிரெஞ்சு புதிய அலை சினிமா ஈர்த்திருந்தது. திரைப்படக் கல்லூரி என்பது வெறுமனே வணிகப் படங்களை உருவாக்குபவர்களுக்கான இடம் அல்ல. அது மாற்று சினிமாவுக்கான உத்வேகத்தைக் கொடுக்கும் தளம் என்ற அபிப்ராயம் எங்கள் இரண்டு பேருக்கும் இருந்தது.
ருத்ரய்யாவுக்கு அதற்கான வாய்ப்புகளும் அமைந்தன. இயக்குநர் அனந்து அவருக்குப் பக்கபலமாக இருந்தார். வணிக சினிமாவில் பணியாற்றினாலும், அனந்து சினிமா களஞ்சியமாக இருந்தார். திரைப்பட விழாக்களுக்குச் சென்று ஆர்வத்தோடு படங்களைப் பார்த்துவந்தவர் அவர். வெறுமனே ஒரு திரைக்கதையை விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கும் மேலான நிறைய உதவிகளைச் செய்பவராக இருந்தார். அதனால்தான், ‘அவள் அப்படித்தான்’ படத்தையே ருத்ரய்யா அனந்துவுக்குச் சமர்ப்பணம் செய்தார்.
ருத்ரய்யாவுக்கு முதலில் கதைகள் அமையவில்லை. நான் ஆவணப்பட, விளம்பரப்பட உலகில் இருந்தேன். அதன் பின்னணியிலிருந்து ‘அவள் அப்படித்தான்’கதைச் சுருக்கத்தை இரண்டு பக்கத்தில் எழுதிக்கொடுத்தேன். அனந்துவுக்கு எனது கதைச்சுருக்கம் பிடித்திருந்தது. ரஜினி என்ற நட்சத்திர பலத்துக்காகச் சில மாற்றங்களைச் செய்தார் அனந்து. கதாநாயகியின் ஃப்ளாஷ்பேக்கை வண்ணநிலவன் எழுதினார். ‘அவள் அப்படித்தான்’ டைட்டிலையும் அனந்துதான் வைத்தார்.
தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத் தான் ருத்ரய்யா முதலில் படமாக எடுக்கத் தீர்மானித்திருந்தார். கமல்ஹாசனும் அந்தக் கதையில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். முதலில் ஒரு கமர்ஷியல் படத்தை எடுத்துவிட்டு, இரண்டாவதாக ‘அம்மா வந்தாள்’ படம் என்று முடிவுசெய்தோம். ‘அவள் அப்படித்தான்’அறிவிப்புடன் சேர்ந்தே ‘அம்மா வந்தாள்’ படத்துக்கும் அறிவிப்பு கொடுத்தோம்.
கலைஞர்களின் ஒத்துழைப்பு
‘அவள் அப்படித்தான்’ படத்தில் நடிகராக மட்டும் அல்ல, தொழில்நுட்பக் கலைஞராகவும் கமல் எல்லாவிதமாகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். காஸ்டியூம் வரை கவனித்துக்கொண்டார். ரஜினியும் மிகவும் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு நடித் தார். வித்தியாசமான ஒரு அணி படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒத்துழைத்தார்கள். நல்லுசாமி-ஞானசேகரன் ஒளிப்பதிவும் மிகவும் துணிச்சலானது. நிழலுருவக் காட்சிகளை (சில்ஹவுட்) குறைவான வெளிச்சத்தில் நிறையப் பரிட்சார்த்தம் செய்து எடுத்திருப்பார்கள். அந்த வருடத்தில் வெளியான படங்களில் பெரும்பாலானவை வண்ணப் படங்களே. பொருளாதாரச் சிக்கனத்துக்காகவே கருப்பு-வெள்ளையில் படம்பிடித்தோம். ஆனால், அதுவே அப்படத்தின் சிறப்பம்சமாக இப்போது உணரப்படுகிறது.
படத்தின் வசனங்களையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யதார்த்தத்துக்கும் நாடகத் தன்மைக்கும் இடையில் தர்க்கவாதம்போல வசனங்கள் கூர்மையாக இருக்கும். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பட வெளியீட்டின்போது மிகப் பெரிய சோதனையை ‘அவள் அப்படித்தான்’ சந்தித்தது. வெளியான ஒரு வாரத்தில் அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் படப் பிரதி திரும்பி வந்துவிட்டது. ஆறு மாதம் கழித்து அந்தப் படத்தை சென்னை சஃபையரில் காலைக் காட்சியாக மட்டும் நான் வெளியிட்டேன். மிருணாள் சென் அந்தப் படத்தைப் பாராட்டியிருந்தார். தமிழில் இப்படியான படம் வந்தது ஆச்சரியம் என்று சொல்லியிருந்தார். பாரதிராஜாவும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். “எந்த மாதிரியான வேட்கைகளுடன் தேடலுடன் நான் சினிமாவுக்கு வந்தேனோ அதைத் திரும்பிப் பார்க்க வைத்தது ‘அவள் அப்படித்தான்’ ” என்றார் அவர். பாரதிராஜா, மிருணாள் சென் இருவரது பேச்சையும் விளம்பரப்படுத்திப் படத்தை வெளியிட்டோம். நிறையப் பேர் வரத் தொடங்கினார்கள்.
உடலைச் சுட்ட படைப்பு
இந்தப் படத்தை எடுத்ததில் ருத்ரய்யா பொருளாதார விஷயத்தில் நிறையப் பாதிக்கப்பட்டார். ஒரு பத்திரிகை நேர்காணலில் அவரிடம் ‘‘ ‘அவள் அப்படித்தான்’ படத்தின் மூலம் கையைச் சுட்டுக் கொண்டீர்களா?” என்ற கேள்விக்கு, “உடலையே சுட்டுக்கொண்டேன்” என்று பதில் சொல்லியிருப்பார். ஆனாலும், ‘அவள் அப்படித்தான்’ படம் மூலம் அவருக்குத் திரையுலகில் ஆதரவுகளும் குவிந்தன. ஒரு படைப்பு உடனடியாக மக்களைக் கவரா விட்டாலும், பொருளாதாரரீதியாகப் படைப்பாளிக்கு லாபத்தைத் தராவிட்டாலும், அது நல்ல படைப்பாக இருந்தால், காலம் கடந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு உதாரணம் ‘அவள் அப்படித்தான்’.
http://tamil.thehindu.com/multimedia/archive/02212/aval_2212991a.jpg
சுஜாதாவின் ‘24 ரூபாய் தீவு’ கதையில் நடிக்க கமல்ஹாசன் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஒரு பாட்டுடன் நின்றுபோனது. அடுத்து ‘ராஜா என்னை மன்னித்துவிடு’. அதற்கும் நாயகன் கமல்ஹாசன்தான். அறிவிப்போடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகுதான் ‘கிராமத்து அத்தியாயம்’. இளையராஜா, பஞ்சு அருணாச்சலம் போன்றோரின் முழு ஒத்துழைப்பு இருந்தாலும், ருத்ரய்யாவிடம் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் அந்தப் படம் வரவில்லை.
அதற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து 1983-84-ல் திரும்பவும் படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, ரஜினியைக் கதாநாயகனாக மனதில் கொண்டு, கடலோரக் கிராமத்தை மையமாக வைத்து ஒரு கதையை எழுதினேன். ருத்ரய்யா நினைத்ததுபோல நட்சத்திரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் கதைதான் பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் ‘கடலோரக் கவிதைகள்’ படமாக வந்தது.
சிவாஜி கணேசனை பீஷ்மர் கதாபாத்திரமாக்கி 3-டி தொழில்நுட்பத்தில் மகாபாரதக் கதையை எடுக்க விரும்பினார். அதுவும் சாத்தியமாகவில்லை. ரகுவரனை வைத்து ‘டிஎஸ்பி 7’, சுஜாதா கதை - திரைக்கதை. அதுவும் பூஜையோடு நின்றுவிட்டது.
தோல்வி அடைந்த முயற்சிகள்
நீண்ட இடைவெளிக்குப்பின், ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் கதையைத் தற்காலச் சூழலில் மியூஸிக்கலான ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஏ.ஆர். ரஹ்மான்தான் இசை என்று முடிவுசெய்தோம். வைரமுத்துவிடமும் பேசினோம். ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராமை முடிவுசெய்து, அவரைத் தொடர்புகொண்டோம். அவர் 6 மாதம் கழித்துச் செய்யலாம் என்றார். நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால், வணிகரீதியில் சிலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதை ருத்ரய்யா விரும்பவில்லை. அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சினிமாவின் வணிகரீதியான நடைமுறைகளில் அவர் தொடர்ந்து முரண்பாடுடையவராக இருந்தார். அதனாலேயே நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டார். ஒரு இடதுசாரி சினிமாக்காரராக சினிமாவை ஆயுதம் என்று நம்பியவர் அவர். அபூர்வமான மனிதர். தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய, நிறைய நல்ல படைப்புகளைத் தந்திருக்க வேண்டிய இயக்குநர் ருத்ரய்யா. அந்த வாய்ப்பைத் தமிழ் சினிமாவும் இழந்துவிட்டது; அவரும் இழந்துவிட்டார்.
- கே. ராஜேஸ்வர், ‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர்புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற படங்களின் கதாசிரியர்; ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.
தொகுப்பு: ஷங்கர் | படம் உதவி: ஞானம் | ஓவியம்: சீனிவாசன் நடராஜன்
parthasarathy
21st November 2014, 01:46 PM
Dear Mr. Vasudevan (Neyveli),
Wish you many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
gkrishna
21st November 2014, 03:05 PM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRxECjuLilmMjTReaFK9gfbjDHq0N9Qn aH4CWQDNX8enco-UZRfKQ
வாசு சார்
இந்த ஸ்டில் எந்த திரைப்படம் -
vasudevan31355
21st November 2014, 03:20 PM
கிருஷ்ணா சார்,
அது 'ஆயிரத்தில் ஒருத்தி' பட ஸ்டில். கமலும், ஜெயசுதாவும்.
ஏன்... பாட்டாக வீடியோவையே பார்த்து விடுங்களேன். பால்லாவும் இசையரசியும் பின்னிய இன்னொரு பாடல்.
நினைத்ததை முடிப்பது
கிடைத்ததை ரசிப்பது
என்றும் ஆனந்தம்
நெருக்கத்தில் மயக்கத்தில்
அணைப்பது சுவைப்பது
இன்பம் பேரின்பம்
வாழ்க்கை வாழ்வே
வாழ்நாள் வளர்கவே
நினைத்ததை முடித்து கிடைத்ததை ரசித்து விட்டீர்கள் கிருஷ்ணா.:)
http://www.youtube.com/watch?v=KU8oD0JgzXE&feature=player_detailpage
vasudevan31355
21st November 2014, 03:23 PM
ரஜினி வாயால் குட்டுப் பட்டவரா கிருஷ்ணா நீங்கள். சொல்லவே இல்ல. அருமை.
gkrishna
21st November 2014, 04:39 PM
ரஜினி வாயால் குட்டுப் பட்டவரா கிருஷ்ணா நீங்கள். சொல்லவே இல்ல. அருமை.
வாழ்க்கை வாழ்வே
வாழ்நாள் வளர்கவே
வாஸ்
எங்கே இருந்து அய்யா உங்களுக்கு வரிகள் எல்லாம் கிடைக்குது .
நெருக்கத்தில் மயக்கத்தில்
அணைப்பது சுவைப்பது
இன்பம் பேரின்பம்
ஆயிரத்தில் ஒருத்தி - கே ஆர் விஜயா தானே நம்ம கே பாலாஜி,ஸ்ரீகாந்த் கூட உண்டே :)
ஏகப்பட்டது இருக்கு வாசு எனக்குள்ளே .:)
கொஞ்சம் கொஞ்சமா அவுத்து விடறேன்
இதே மாதிரி 1983-84 கால கட்டத்தில் சபரி மலையில் ஐயப்பனையும் அதோடு நம்ம தலை நடிகர் திலகத்தையும் தரிசனம் பண்ணிட்டு பின்னாடி திருநெல்வேலி வந்து தனி matador van வைத்து கொண்டு செங்கோட்டையில் (NT ஓய்வு எடுத்து கொண்டு இருந்த போது ) போய் பார்த்து அவர்ட்ட விபூதி வாங்கி குட்டி குட்டு வாங்கிய அனுபவம் இருக்கு :)
பாடல் இணைப்பிற்கு நன்றி வாசு
gkrishna
21st November 2014, 05:57 PM
http://image.issuu.com/141121042332-1ffc377cedfd1495c1fa70df67cb316a/jpg/page_14.jpg
gkrishna
21st November 2014, 05:58 PM
http://image.issuu.com/141121042332-1ffc377cedfd1495c1fa70df67cb316a/jpg/page_15.jpg
kalnayak
21st November 2014, 09:48 PM
Dear Neyveli Vasudevan,
I wish you many more happy returns of the day!!! A Happy Birthday To You!!!
rajraj
22nd November 2014, 08:20 AM
Our grand children are here for the music party and Thanksgiving. Our three year old grand daughter likes to listen to a song about Toofan Mail from Jawab(1942). She calls it 'choo choo train' song. Here it is:
Duniya Yeh Duniya Toofan Mail.......
http://www.youtube.com/watch?v=UQl82p4JZh0
She has her own iPad with the songs she likes and knows how to replay and make the display larger ! :) That is digital world! :) I remember what I had when I was her age. Some toys! My uncle (periyappa) had a gramaphone and a stack of 78 rpm plates in brown or blue sleeves. He never allowed us to touch it. We had to beg him to play a plate (plate podunga). He was interested in T.N. Rajarathinam PiLLai's Nadaswaram. We used to listen and say "yaaro pee pee oodhuraan". :)
Happy Birthday Vasu ! :) Next time I visit India I will stop by Neyveli on our way to Tanjore from Madras and say hello to you. One of my classmates was Vice President, Neycer. We used to meet him whenever we visited India. My classmates who worked in Neyveli have retired ! :) In fact, my first job offer was from NLC ! :)
vasudevan31355
22nd November 2014, 08:44 AM
http://3.bp.blogspot.com/-R6-09ftOCPU/UsbfPP5fU2I/AAAAAAAAC1M/Zzdzd7OfYw8/s1600/nandri.png
எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வாழ்த்திய என் உயிர் சகோதரர்கள்
சித்தூர் வாசுதேவன் சார்
வினோத் சார் (அலை பேசியிலும்)
கிருஷ்ணாஜி (அலை பேசியிலும்)
ராகவேந்திரன் சார் (அலை பேசியிலும்)
அருமை நண்பர் கலைவேந்தன் சார்
அருமை சகோதரர் ஆதிராம் சார்
கோபு சார்
எனதருமை ராஜேஷ்ஜி
சின்னக் கண்ணன் சார்
சுந்தர பாண்டியன் சார்
ஹைதராபாத் ரவி சார்
சரக்கு கோபால் சார்
அன்பு சிவா சார்,
பார்த்தசாரதி சார்
கல்நாயக் சார்
அன்பு ராஜ்ராஜ் சார்
நடிகர் திலகம் திரியில் வாழ்த்துக்கள் அளித்த
சந்திர சேகரன் சார்,
அன்பு சகோதரர் சிவாஜி செந்தில் சார்,
அலை பேசியில் வாழ்த்து தெரிவித்த என் அன்பு முரளி சார்,
அலை பேசியில் வாழ்த்து அளித்த சகோதரர் பம்மலார்
தனி மடல் மூலம் வாழ்த்து தெரிவித்த என்.வி ராகவன் சார்
மற்றும் அனைவருக்கும் எனது இதயம் நெகிழ்ந்த ஆனந்தக் கண்ணீருடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனை பேரும் உங்கள் அனைவரின் தூய்மையான அன்பால் என்னை திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள்.
தங்கள் அனைவரது நட்பையும், சகோதர பாசத்தையும்
'யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.
உங்கள் அனைவரது நட்பையும் அளித்த அந்த ஆண்டவனுக்கு என் நன்றி.
vasudevan31355
22nd November 2014, 09:32 AM
ராஜ் ராஜ் சார்,
மிக்க நன்றி. எதிர்பாராத பாடல். 'ஜவாபி'ன் 'டூபான் மெயில்' பாடலைத்தான் சொல்கிறேன். எவ்வளவு நாட்களாகி விட்டது. அப்போது விழுந்து விழுந்து ரசித்த பாடல். தங்கள் ரசனைக்குத் தலை வணங்குகிறேன். இறுதில் ரயில் மெதுவாக சப்தத்துடன் நிற்கும் அழகே அழகு. நல்ல பாடலுக்கு நன்றி.
இன்னொன்று தெரியுமா. இந்த பாடலுக்கு நடித்து பாடிய கனன் தேவி அவர்களின் குரல் என் அபிமானப் பாடகி ஷம்ஷத் பேகம் குரலை ஒத்து இருக்கும். அதற்காகவே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தியில் என் மனம் கவர்ந்த பாடகி ஷம்ஷத் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் அப்புறம் தான்.
தங்களுக்கு நெய்வேலியுடன் இவ்வளவு தொடர்பா? சந்தோஷமாய் இருக்கிறது அதே சமயம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. நீங்கள் அடுத்தமுறை இந்தியா வரும் போது நெய்வேலியில் என்னிடம் ஹலோ சொல்வதாகக் கூறி உள்ளீர்கள்.:) ம்ஹூம்...ஒத்துக் கொள்ள மாட்டேன்.:) ஒரு நாளாவது எங்கள் வீட்டில் தங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும். இது என் இந்திப் பாடல்கள் குருவுக்கு கோரும் நான் அன்புக் கட்டளை.
இதோ உங்களுக்கு என் guru thatchanai.:) 'பாபுல்' படத்திலிருந்து என் மனம் கவர்ந்த பாடல். முனாவர் சுல்தானாவின் 'கம்ரா' வைப் பாருங்கள்.:) எவ்வளவு பிரம்மாண்டமான அறை!
http://www.youtube.com/watch?v=K8RDpfkOCKc&feature=player_detailpage
rajeshkrv
22nd November 2014, 09:42 AM
வணக்கம் வாசு ஜி
vasudevan31355
22nd November 2014, 09:51 AM
வணக்கம் கிருஷ்ணாஜி! நலம்தானே! ஆபிஸ் பிஸி தொடருதா இல்லை இன்னும் அப்படியே தானா?
vasudevan31355
22nd November 2014, 09:52 AM
இளையராஜாவின் வலது கை பேஸ் கிடார் மற்றும் கீ போர்ட் கிங் விஜி மேனுவல் அவர்களின் பேட்டி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-16.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-16.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-11.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-11.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0002-8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0002-8.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0003-5.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0003-5.jpg.html)
gkrishna
22nd November 2014, 10:28 AM
இளையராஜாவின் வலது கை பேஸ் கிடார் மற்றும் கீ போர்ட் கிங் விஜி மேனுவல் அவர்களின் பேட்டி.
https://soundcloud.com/ks-suka/g2doepl7n0cs
நண்பர் வாசு
இசை ஞானி இளையராஜாவிடம் விஜி மனுவல் பங்கு பெற்ற பல பாடல்களின் தொகுப்பை இசையாகவே வழங்கி இருக்கிறார்கள் .
rajeshkrv
22nd November 2014, 10:45 AM
வாசு ஜி
ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது உங்களுக்கு இசையரசியின் வேறு மொழிப்பாடல் கொடுத்து
இதோ இசையரசியின் இசை ராஜாங்கம். ஸ்வயம்ப்ரபே சந்த்யே என்று அவர் சொல்லும் போதே அழகு
புனர் ஜென்மம் - தேவராஜன் வயலார் இசையரசி கூட்டணி
https://www.youtube.com/watch?v=bpR5IxVLJIw
gkrishna
22nd November 2014, 10:49 AM
வாசு சார்
என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி இருந்த பழைய மின் அஞ்சல் அதில் இருந்து
பொதுவாக இளையராஜாவிடம் இசைக்கருவிகள் வாசிப்பவர்கள் தத்தம் வாத்தியத்தில் மேதைகளாக இருந்தால் மட்டுமே அவரிடம் வாசிக்க சாத்தியம் என்பர். கிடாரிஸ்ட் சதானந்தன் (பழம்பெரும் இசையமைப்பாளர் சுதர்ஸனம் மாஸ்டரின் மகன் இவர்), வயலினிஸ்ட் வி.எஸ்.நரசிம்மன் மற்றும் ராமசுப்பு, புல்லாங்குழல் கலைஞர் நெப்போலியன் (அருண்மொழி), மிருதங்கக் கலைஞர் மதுரை டி.ஸ்ரீனிவாசன், பாஸ் கிடாரிஸ்ட் சசிதரன், கீபோர்டு கலைஞர் விஜி மேனுவல் மற்றும் பரணி, பழம்பெரும் தபலா கலைஞர் ‘தபலா’ பிரசாத் என எல்லோருமே அசாத்திய திறமை வாய்ந்த ஒப்பற்ற கலைஞர்கள். இந்த கலைஞர்களில் ஒருவர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மாணவர் பண்டிட் பாலேஷ். பல முறையான ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு, ஷெனாய் கச்சேரிகள் செய்வதோடு மட்டுமில்லாமல், சென்னையில் ஹிந்துஸ்தானியைக் கற்றுத்தரும் குருவாகவும் இருக்கிறார்
ராஜ பார்வையில் உருக்கமாக இழையோடும் வயலின், ஹௌ டு நேம் இட் (How to name it?) இசைத் தொகுப்பில் வரும் அற்புதமான தந்தியிசை, சஹானா எனும் தொலைக்காட்சித் தொடரில் அமைந்த அழகிய பாடல் எனப் பல அற்புதமான கணங்களை நமக்காகத் தந்த வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களிடம் முதன்மை வயலின் கலைஞராகப் பணியாற்றியவர். லண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுக்காக இளையராஜா இசையமைத்தபோது அவருக்கு உறுதுணையாக வி.எஸ்.நரசிம்மன் இருந்துள்ளார். கண் சிமிட்டும் நேரம், பாசமலர்கள் போன்ற பல திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ள வி.எஸ்.நரசிம்மன், கர்நாடக இசையையும் மேலையிசையையும் இணைக்கும் முயற்சியில் பல இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த இசைத் தொகுப்புகள் அவரது வாழ்நாள் சாதகத்தின் கனிகள். அவரது பெரும் கனவு.
gkrishna
22nd November 2014, 10:57 AM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01732/dilruba_1732942h.jpg
இசையின் மொழி தில்ரூபா சரோஜா
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தில்ரூபா என்னும் வாத்தியத்தில் தன்னுடைய ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருப்பவர் சரோஜா. இந்த வாத்தியத்தில் பெயரும் புகழும் பெற்ற தில்ரூபா சண்முகத்தின் மகள் இவர். தன்னுடைய தந்தையிடமிருந்து தில்ரூபா, தர்ஷெனாய் போன்ற வாத்தியங்களை வாசிப்பதற்குக் கற்றுக்கொண்டு, பின் உள்ளூர் மேடைகளிலும் உலக மேடைகளிலும் இந்த இசையின் புகழைப் பரப்பியவர் சரோஜா.
மிகவும் அரிதான ஹிந்துஸ்தானி வாத்தியமான தில்ரூபாவின் இசையை அலிபாபாவும் 40 திருடர்களும், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பழைய படங்களின் பாடல்களில் கேட்டிருக்கலாம். இந்தப் படங்களில் எல்லாம் தில்ரூபாவை வாசித்த கலைஞர் சரோஜாவின் தந்தை சண்முகம். அவரைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளிவந்த படங்களில் எல்லாம் தில்ரூபா இசை வழங்கி இருக்கிறார் சரோஜா.
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, அனு மாலிக், அம்சலேகா, கீரவாணி, தினா, ஜிப்ரான் போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார் சரோஜா. ஏறக்குறைய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிப் பாடல்களில் இவரின் தில்ரூபா இசை ஒலித்திருக்கிறது.
தொடரும் இசைப்பயணம்
அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகளிலும் நடந்த ஐக்கிய நாடுகளின் பொன்விழாக் கொண்டாட்டத்தில், உலக அளவில் புகழ்பெற்ற பெல்ஜியம் நாட்டின் இசையமைப்பாளர் ஹான்ஸ் வெர்மிக், ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கினார். இவரின் குழுவில் இடம்பிடித்து தில்ரூபா வாசித்த பெருமையும் சரோஜாவுக்கு உண்டு.
சீனாவில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் பால்ஜேக்கப்பின் குழுவில் இணைந்து வாசித்திருக்கிறார். கடல் கடந்தும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது சரோஜாவின் தில்ரூபா.
vasudevan31355
22nd November 2014, 10:59 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 20)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
http://media-images.mio.to/various_artists/C/Chittukuruvi%20(1978)/Art-350.jpg
http://i.ytimg.com/vi/1WLDZuBhmQw/0.jpg
அடுத்து ராஜாவின் இசையில் நம் எல்லோரையும் தன் பாடல்களால் மயக்கிய 'சிட்டுக் குருவி'. தேவராஜ்-மோகன் இயக்கிய வண்ணப் படம் இது. 1978-ல் வந்த படம் இது. 'ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்' தயாரிப்பு இது. சிவக்குமார், சுமித்ரா, ஸ்ரீகாந்த், மனோரமா, மீரா, புஷ்பலதா, சுருளி நடித்தார்கள். ஆர்.செல்வராஜ் கதை எழுத, திரைக்கதை வசனம் பாடல்கள் மூன்று பொறுப்பையும் ஏற்றிருந்தார் கவிஞர் வாலி. ஒளிப்பதிவு ஆர்.என்.கே.பிரசாத். தயாரிப்பு கந்தசாமி மற்றும் தேவராஜ்-மோகன். இளையராஜா தேவராஜ்-மோகன் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது.
இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்று முழங்கின. இப்பாடல்களைப் பற்றி நான் சொல்லவே தேவை இல்லை.
1.'அடடட மாமரக் கிளியே! உன்ன இன்னும் நான் மறக்கலியே!
ரெண்டு நாளா ஒன்ன எண்ணி பச்ச தண்ணி குடிக்கலியே'
சுமித்ராவுக்காக ஜானகி பாடிய இந்த அற்புத பாடலை இளையராஜா கிராம நறுமண மெட்டோடு அமர்க்களமாக இசை அமைத்து தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கினார். 'மச்சானப் பார்த்தீங்களா', 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' டைப்பில். மெகா ஹிட்டான பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6zcx7AxU-4Y
2. சிவக்குமாரும், சுமித்ராவும் 'பொய்க்காலு குருதையிலே ஊர்கோலம்' போக ஆசைப்பட்டு பாடுவார்கள். பாலா அட்டகாசம் பண்ணுவார்.
'பொன்னுல பொன்னுல பண்ணின மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக் கல்லு மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்'
குழுவினர் குரல்கள் குளோப் ஜாமூன் கணக்காக இருக்கும். (நீரஜா) ஜோராக எழுந்து ஆட வைக்கும் பாடல்.
'காவேரிக் கரை ஓரத்திலே
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர ஏலா'
அருமையோ அருமை.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZTmVm6Od_Q0
3. சுமித்ராவின் சோகம் சுசீலா அம்மாவின் குரலில் நம் நெஞ்சில் ஆழ இறங்கும் பாடல். என்று கேட்டாலும் அற்புதம். கிராமத்து கிளாஸிக். ஜானகிக்குப் போகாமல் மிகப் பொருத்தமாக இசையரசிக்குப் போனது. இன்றுவரை பாடல்களின் அரசியாக திகழ்கிறது. அபார வரிகள். அபாரப் பாடல். அபாரக் குரல். அபார இசை. ஜனங்களின் அபார ரசனை. அபார வெற்றி. படத்தின் டாப் பாடல்.
'வீரத்துல கட்ட பொம்மன்
ரோஷத்துல ஊமைத்துர'
http://i.ytimg.com/vi/KVJ_ZtXuXwA/hqdefault.jpg
ஒரு நிமிடம் நடிகர் திலகம் நம் பிரேமில் வந்து மிரட்டி விட்டுப் போவார்.
http://www.youtube.com/watch?v=OOZXuXZYXCs&feature=player_detailpage
4. பஸ்ஸில் பயணிக்கும் காதல். மௌனக் காதல். பயணம் செய்யும் காதலர்களின் மனசாட்சி உருவங்கள் அவரவர்கள் காதலைக் கூறும் கற்பனை. பஸ்சில் இடையிடையே ஒலிக்கும் கண்டக்டரின் குரல். ஒரு பிரயாணியின் கமெண்ட் என்று மிகப் பொருத்தமாக பாயசத்தில் கலந்த முந்திரிப் பருப்பாய் இனிக்கிறது இப்பாடல். நகரத்து மாந்தர்களை வசியப் படுத்தினப் பாடல். சிவக்குமார், மீரா இணை. ராஜாவின் அபரிமிதமான கற்பனை நயம் இப்பாடலில் வெளிப்படும்.
'என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி எனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதே...சிரிக்கின்றதே'
இள மா'மயில்' அருகா 'மையில்'. வாலி அவர்களின் மை(ய)ல் வரிகள்.
'இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ'
'தேனாம் பேட்டை சூப்பர் மார்க்கட் எறங்கு'
'நன்னா சொன்னேள் போங்கோ'
இந்த வசனங்களெல்லாம் நமக்கு தேசிய கேதம் போலத்தானே! பாடலைக் கேட்கும் போது இடையே தன்னையுமறியாமல் தமிழக ரசிகன் அத்தனை பேரும் உச்சரிப்பானே!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f6zHarXztIg
rajeshkrv
22nd November 2014, 11:02 AM
அதே போல் சங்கர் கணேஷின் இசையில்
அனுக்ரஹம் என்ற திரையில் இசையரசியின் குரலி
ஸ்வர்ணமயூர ரதத்தில் இரிக்கும் என்ற அருமையான பாடல்
ராதா சலூஜா
https://www.youtube.com/watch?v=Ws_s2uHUbTQ
adiram
22nd November 2014, 11:06 AM
ராஜ பார்வையில் உருக்கமாக இழையோடும் வயலின், ஹௌ டு நேம் இட் (How to name it?) இசைத் தொகுப்பில் வரும் அற்புதமான தந்தியிசை, சஹானா எனும் தொலைக்காட்சித் தொடரில் அமைந்த அழகிய பாடல் எனப் பல அற்புதமான கணங்களை நமக்காகத் தந்த வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களிடம் முதன்மை வயலின் கலைஞராகப் பணியாற்றியவர். லண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுக்காக இளையராஜா இசையமைத்தபோது அவருக்கு உறுதுணையாக வி.எஸ்.நரசிம்மன் இருந்துள்ளார். கண் சிமிட்டும் நேரம், பாசமலர்கள் போன்ற பல திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ள வி.எஸ்.நரசிம்மன், கர்நாடக இசையையும் மேலையிசையையும் இணைக்கும் முயற்சியில் பல இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த இசைத் தொகுப்புகள் அவரது வாழ்நாள் சாதகத்தின் கனிகள். அவரது பெரும் கனவு.
கே. பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன்தான்.
அதன்பின் கங்கை அமரனின் ஒரு மேடையிசை நிகழ்ச்சியில் ஒரு சாதாரண வயலினிஸ்ட்டாக வந்திருந்தார். ரொம்ப பரிதாபமாக இருந்தது.
vasudevan31355
22nd November 2014, 11:11 AM
அருமை ராஜேஷ் சார். 'மறுபிறவி' யின் 'அலைகளிலே தென்றல் வந்து' பாடல்தான் மலையாளத்தில் இது. இரண்டுமே இன்பமான இன்பம். 'மதுர கானங்கள்' தொடங்கும் போது இப்பாடல் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது. மலையாளத்தைவிட தமிழில் இன்னும் கூடுதல் இனிமை.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=m3yLFULEA1Y
gkrishna
22nd November 2014, 11:12 AM
வாசு சார்
மேல் நாட்டு இசை அமைப்பில் கவுன்ட்டர் பாயிண்ட் என்ற முறை ஒன்று உண்டு.அந்த கவுன்ட்டர் பாயிண்ட் முறையில் ரெகார்டிங் செய்யப்பட்ட பாடல் 'என் கண்மணி உன் காதலி '. 1970 களின் இறுதியில் இது மிகவும் புதுமை
vasudevan31355
22nd November 2014, 11:14 AM
அதன்பின் கங்கை அமரனின் ஒரு மேடையிசை நிகழ்ச்சியில் ஒரு சாதாரண வயலினிஸ்ட்டாக வந்திருந்தார். ரொம்ப பரிதாபமாக இருந்தது.
இதைத்தான் தலைவிதி என்பதோ ஆதி ராம் சார்.
gkrishna
22nd November 2014, 11:14 AM
கே. பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன்தான்.
அதன்பின் கங்கை அமரனின் ஒரு மேடையிசை நிகழ்ச்சியில் ஒரு சாதாரண வயலினிஸ்ட்டாக வந்திருந்தார். ரொம்ப பரிதாபமாக இருந்தது.
நன்றி அதிராம் சார்
பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் தானே இவரது முதல் படம்
gkrishna
22nd November 2014, 11:16 AM
சுசீலா அம்மாவின் மனசுக்குள் இறங்கும் 'மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் ' பாடல்
vasudevan31355
22nd November 2014, 11:16 AM
வணக்கம் கிருஷ்ணா சார், ஆதிராம் சார்.
vasudevan31355
22nd November 2014, 11:18 AM
இளையராஜா குழுவில் நரசிம்மன்
http://yokibu.com/communityspeak/wp-content/uploads/2012/09/00125.jpghttp://yokibu.com/communityspeak/wp-content/uploads/2012/09/00225.jpg
vasudevan31355
22nd November 2014, 11:20 AM
Indian Music Meets Western Classical - By: V.S. Narasimhan
http://www.youtube.com/watch?v=LGCIbn5ZT0g&feature=player_detailpage
rajeshkrv
22nd November 2014, 11:24 AM
வாசு ஜி
ஆஹா எனக்கு பிடித்த சிட்டுக்குருவியை பிடித்து கொண்டுவந்துவிட்டீர். யாரங்கே ஆயிரம் பொற்காசுகளை கொண்டுவாருங்கள்
என் கண்மனி பாட்டெல்லாம் சூப்பரோ சூப்பர். வாலி ஐயாவின் கைவண்ணம் ..”அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே அடையாள சின்னம் ஒன்று பெறவேண்டுமே”
rajeshkrv
22nd November 2014, 11:24 AM
ஆம் புனர்ஜென்மத்தின் தமிழ்வடிவம் தான் மறுபிறவி. ஆம் இரு பாடல்களுமே இனிமையோ இனிமை.
rajeshkrv
22nd November 2014, 11:27 AM
சுசீலா அம்மாவின் மனசுக்குள் இறங்கும் 'மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் ' பாடல்
ஆயிரம் பூக்கள் மலரட்டும் அதுவும் நரசிம்மன் தான்
கன்னடத்தில் தாமரை நெஞ்சத்தின் இசையமைப்பாளரும் இவரே
அப்புறம் சின்ன கிளியே ஏ செல்லக்கிளியே என்ற உன்னை ஒன்று கேட்பேன் என்ற படத்திற்கு இசையமைத்து இந்த பாடலை இசையரசியுடன் பாடினார்
இசையரசியின் இணையதளத்தின் திறப்புவிழாவிற்கு இவரது வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்தோம். டி.கே.ஆரின் வீட்டிற்கு கீழே இருந்தது இவர் வீடு
gkrishna
22nd November 2014, 11:30 AM
லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால் இசையில் வெளிவந்த கோவை தம்பி யின் 'உயிரே உனக்காக ' திரை படத்தின் இசை கோர்வை நரசிம்ஹன் என்று படித்து நினைவு உண்டு ராஜேஷ் /வாசு/அதிராம் சார்
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.