PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

RAGHAVENDRA
5th November 2014, 07:17 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/1620953_506362609472246_1242001149_n.jpg?oh=eda0b7 83092111084bc34b155b750fe7&oe=54EB6D43&__gda__=1424349546_3d20893c9507aa47d5236af21322250 f

ஆர் டி பர்மன் இசையில் எஸ்.பி.பாலா பாடும் காட்சி

நிழற்படங்கள் அனைத்திற்கும் நன்றி முகநூல் இணையதளத்திலிருந்து..

RAGHAVENDRA
5th November 2014, 07:20 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/s720x720/1533971_490372121071295_1513433208_n.jpg?oh=d2224a d5bdb793bdf8a41b4143c1f273&oe=54EE7939&__gda__=1424692484_3bdb40d6afbd2222582b65d8b10bb80 6

இசையமைப்பாளர் ஏ.டி.உம்மர் எஸ்.ஜானகி .. ஒரு பாடல் பதிவின் போது...

RAGHAVENDRA
5th November 2014, 07:22 AM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/1557596_489982004443640_1388517278_n.jpg?oh=594536 75cd486d11f4277b90e07ba0bc&oe=54AA967F

சிவதாண்டவம் மலையாளப் படத்தின் பாடல் பதிவின் போது ... இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன், இயக்குநர் சங்கரன் நாயர், உஷா உதுப்

RAGHAVENDRA
5th November 2014, 07:23 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/1488188_480933528681821_1198734200_n.jpg?oh=f9f32b 948b80adcb14da6508f132bf54&oe=54AAEE14&__gda__=1423094313_f88849b70e2e1b0f80389b9d80e86ff d

வாணி ஜெயராம் இசையமைப்பாளர் எம் எஸ் பாபுராஜ்

RAGHAVENDRA
5th November 2014, 07:23 AM
https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-ash2/v/t1.0-9/579377_480773355364505_457905599_n.jpg?oh=385149e4 90290d3407b24a0ee1dc1276&oe=54D2E7DE

ஹிந்திப் படப்பாடலாசிரியர்கள் ஆனந்த் பக்ஷி மற்றும் சாஹிர் லூதியான்வி

RAGHAVENDRA
5th November 2014, 07:24 AM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/1509779_480415472066960_1128349057_n.jpg?oh=9006c6 f6e560c7773ac1616684ae6057&oe=54D7D7E2

மலையாளத் திரையுலகின் மறக்க முடியாத இசையமைப்பாளர் ஜான்சன்

RAGHAVENDRA
5th November 2014, 07:25 AM
https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-prn2/v/t1.0-9/557694_479583612150146_1718527409_n.jpg?oh=8fbec38 28895bb38b1500a5af4537a37&oe=54D9D7F3

ஜேசுதாஸுடன் பிரபல மலையாளத் திரைப்படப் பாடலாசிரியர் ஸ்ரீகுமாரன் தம்பி

RAGHAVENDRA
5th November 2014, 07:27 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1545005_479208768854297_2082334616_n.jpg?oh=422f15 dd14d02138f7130289ceaf95b2&oe=54E017F1&__gda__=1425532693_a905f7421bcb6a89e40a5ad2a580356 c

கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் முகமது ரஃபி பாட ஒத்திகை நடக்கிறது

RAGHAVENDRA
5th November 2014, 07:28 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/1509202_478738175568023_1890055298_n.jpg?oh=c68231 2ed9e9346e29297370642f65d3&oe=54F015E8&__gda__=1424280737_604b8133bb03ccad474b9115895980f f

கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் மஹேந்திரகபூர் உஷா கன்னா பாட ஒத்திகை நடக்கிறது..

RAGHAVENDRA
5th November 2014, 07:28 AM
இது போல இன்னும் ஏராளமான அபூர்வ நிழற்படங்களின் மூலம் திரையிசை உலகின் மேன்மையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் முகநூல் இணையதளத்தின் இம்ப்ரிண்ட் பக்கத்திற்கு நமது உளமார்ந்த நன்றி

RAGHAVENDRA
5th November 2014, 07:29 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/1526498_478203308954843_1179813166_n.jpg?oh=728f8c 842404ae56babd2fcfdf012af3&oe=54E6BED9&__gda__=1424231263_52c3ea0eae23cca7839278d61851dd5 7

குரு ஜி.கே.வெங்கடேஷூடன் இளையராஜா

RAGHAVENDRA
5th November 2014, 07:30 AM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1526264_478198698955304_1723127191_n.jpg?oh=9053e2 cfb88595ca27cbf4503a241fe8&oe=54EF0383

இசையமைப்பாளர் ராஜன் நாகேந்திரா - எஸ்.ஜானகி

rajeshkrv
5th November 2014, 08:20 AM
imprints முகனூல் தளத்தில் எல்லாம் பார்த்த படங்கள் தான் ராகவ் ஜி.

rajeshkrv
5th November 2014, 08:28 AM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/1920445_793394884023626_321642023_n.jpg?oh=322d9fe 3acbd685c8e6cc4bcdad892fe&oe=54E1F5EA&__gda__=1423628899_f0ecf2b15d893e6272974c63a119f01 4

rajeshkrv
5th November 2014, 08:32 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/1601084_793394897356958_1839020473_n.jpg?oh=55e6f3 6f94f960459a4b52579e6cc752&oe=54D6E699&__gda__=1423672118_f96eaf353d4f67a933a891bb3dc9d5a f

rajeshkrv
5th November 2014, 08:33 AM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/1662126_793406544022460_1346799584_n.jpg?oh=76af77 c82951dfe3920554d2d855f024&oe=54D404EA&__gda__=1425153245_2642ad52811aa4afc707687a4a04632 d

rajeshkrv
5th November 2014, 08:33 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/1898174_793416570688124_2131801273_n.jpg?oh=085328 ca4c7434b182edf1840943f332&oe=54E93560&__gda__=1424189391_06b192d745c06c6cbd2926312480c05 2

rajeshkrv
5th November 2014, 08:34 AM
https://scontent-a-iad.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/1800224_793416567354791_306197637_n.jpg?oh=e4f7935 348e92abe369f82bb4c3e615f&oe=54AA4AAC

rajeshkrv
5th November 2014, 08:35 AM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/1507822_793416560688125_313463324_n.jpg?oh=a9cc771 8eb5125d4078bc2080a07fa26&oe=54E5D9E5&__gda__=1424824236_19186099d6a094702593cbb6da6e221 7

rajeshkrv
5th November 2014, 08:36 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10178142_925347484161698_6833248889515426039_n.jpg ?oh=25f72943d54a9acb2181aff17d0c936a&oe=54F52D39&__gda__=1425350227_4b98f94cd3e3227f1a9822e03b76415 c

rajeshkrv
5th November 2014, 08:38 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1375079_661438430540500_1548519979_n.jpg?oh=3e0ab7 32a46d09e570b785f24dc174c5&oe=54D70617&__gda__=1425022707_d8114e2c5d39775aa80c1f0c38c7680 3

rajeshkrv
5th November 2014, 08:41 AM
https://scontent-a-iad.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/485854_388560644522833_415968780_n.jpg?oh=6cae73e2 23cf73d90a0b70e8d361655d&oe=54AA5882

Richardsof
5th November 2014, 08:46 AM
RAJESH SIR

1972- CALCUTTA - BHARTH AWARD-1971 FUNCTION

MAKKAL THILAGAM & ISAI ARASI

http://i60.tinypic.com/9iye5e.jpg

chinnakkannan
5th November 2014, 10:32 AM
//அதை கேட்டு அப்படியே உங்கள் இதயத்தை நீங்களே கையில் எடுத்து ,ஒரு குருடனை போல தடவி பார்த்து,அதன் இருப்பை,மேடு,பள்ளங்களை,குழிகளை,அதன் மேன்மையை,மென்மையை ஸ்பரிசிக்க முடியுமா?// கோபால் சார் வெகு அழகாகச் சொன்னீர்கள்.. என் அன்னை செய்த பாவம் மிகப்பிடித்த பாடல்..+தேவிகையும் நன்றாகப் பண்ணியிருப்பார்..

chinnakkannan
5th November 2014, 12:40 PM
புகைப்பட அணிவகுப்புகள் ஜோர் தான் என்றாலும் இஸ்பெ யங்க் கிங்க் தேவாகானம்னு இல்லாம கொஞ்சம் தொய்ந்து தான் இருக்கிறது..ம்ம் என்ன செய்யலாம்..

யாராவது ஸ்பெஷல் கஸ்ட்க்கு விருந்தாளிக்கு இன்விடேஷன் கொடுக்கலாமா..

இன்விடேஷன்னா கல்யாண இன்விடேஷன், பார்ட்டி இன்விடேஷன்..பர்த்டே பார்ட்டி இன்விடேஷன் வெட்டிங் அனிவர்சரி இன்விடேஷன்.. நியூ இயர் பார்ட்டி இன்விடேஷன் அப்படின்னு நிறைய இருக்கே..

அதுக்கெல்லாம் கொஞ்சம் மெனக்கெட்டு அழகழகாய் ப் படமெல்லாம் போடுவாங்க..இல்லியோ..

கலைகள் பலவாய் கவர்ந்திழுக்கும் அங்கே
அழைப்பிதழ் ஓவியங்கள் ஆம்..

ஹை..அழைப்பிதழ் பேரே இளம்பெண்ணோட இதழாட்டமா கவர்ந்திழுக்குது..! இங்க இளையராஜா என்ன சொல்றார்.. வித் ஜானகி அதுவும் எம்.ஜி வல்லபனோட பாட்டு

**

கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள்தான்
காண்போமே சேர்ந்தே நாமே

நான் ஆளும் மனம் பூவோ
நீ நாளும் தமிழ்ப் பாவோ
பூவாடும் விழிதானோ
நீ பாட மொழி ஏனோ

என்ன இன்று...ஆஹா
கண்ணில் என்னை வென்று...ஆஹா
கண்ணன் எண்ணுவதோ

எனக்கென ஒரு கணமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும்
மலர்களோ...மனங்களோ

தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளமேனி
ஆ...தாங்காது இனிமேலே
தூங்காது மனம் நாளை

கண்ணில் என்ன...லால
மின்னல் கண்டபின்னும்...லால
இன்னும் மின்னுவதோ

உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின்
உறக்கமோ...மயக்கமோ

**

ஹம்மிங்க் அழகு தான் இல்லை.. யார் ஹீரோன்னு தெரியலை..பட் ராதிகா இளமையா லுக்கிங் க்யூட் யா...


http://www.youtube.com/watch?v=5XaMf9Hze_Q

படப் பேரு சொல்ல விட்டுப் போச்சே..தைப் பொங்கல்

ஒரு சுவாரஸ்யமான சங்கதி நினைவுக்கு வருது..எம்.ஜி வல்லபன் கட்டுரை என்று நினைவு.. சரோஜாதேவியிடம் இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டார்களாம்.. ச.தே.. டைட்டில் ரோல்னா தான் நடிப்பேன் என்று விட்டார்களாம்..எம்.ஜி.வ.. தைப்பொங்கலா எப்படி நடிக்க வைக்க முடியும் என எழுதியிருந்தார்..

அப்ப்புறம் எழுத்தாளர் சுஜாதாவும் ஒரு சீன் வந்ததாய் நினைவு..

rajraj
5th November 2014, 10:36 PM
From Thiruvarutchelvar

Naathar Mudi Melirukkum Nalla PaambE...

http://www.youtube.com/watch?v=kpCzej-Sr04

I found this song to post 'Malarum NinaivugaL' for ChinnakkaNNan ! :)

I used to visit my ancestral villages during summers. One year I visited my mother's ancestral village during December when the rivers,canals and ponds/lakes were full of water. The pastime was wading in the canal (vaaikkaal) and flloating paper ships ( kaagidha kappal). One day few farm workers' kids were watching me and one of them challenged me saying that I did not have the courage to catch a snake. I accepted the challenge and waited in the water for a snake to swim past me. I saw one swimming towards me. I let it pass me and caught it by the tail and tossed it on the ground! The kids were stunned, to say the least ! :lol: ( The snake was harmless - not poisonous)

Little did I anticipate that I would be seeing snakes every day ,during spring and summer, in my yard or the road where I live now ! :) If you encroach on wildlife habitats you have to put up with the original residents ! :lol:

I was challenged again to climb a coconut tree. I knew I could not do it. Still, I tried. Climbed about five feet and gave up ! :)

chinnakkannan
6th November 2014, 10:19 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்

ராஜ் ராஜ் சார்.. ம்ம் நைஸ் பாம்பனுபவம்..

கூம்பாய் முகமதும் கோணாமல் இங்குதான்
பாம்பைப் பிடித்தனர் பார்..


நானும் பாம்பு ப் பாடல்கள்னு யோசிச்சதில நாதர் முடிதான் முதல்ல வந்தது.. நன்றி..

அப்புறம்

பரம்சிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ ..... ஆஆஆ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
வருந்தும் உயிருக்கு
ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே !!!

அப்புறம்..

சரசர சாரக்காத்து வீசும்போது
சாரப் பாத்து பேசும் போது
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

அப்புறமேல்ட்டு

மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டு

யாரடாமனிதன் இங்கேல வரும்

அப்புறம்..

பாம்பை அடிக்கும் ஆண்டவனே ஏஏ
பம்மை அடிக்கும ஆண்டவனே

(காசே தான்கடவுளடா)

இப்போதைக்கு இவ்ளோ தாங்க.. அப்புறம் வர்றேன்..

தென்னமரம்..அப்புறம்..:)

vasudevan31355
6th November 2014, 10:21 AM
சி.க சார்,

'கண்மலர்களின் அழைப்பிதழ்' பாடலை தேடித் பிடித்ததற்கு நன்றி! பாடல் வரிகளுக்கும் சேர்த்து நன்றி! எனக்கும் ரொம்பப் பிடித்தம்தான். ஆனால் கட்டையான உணர்ச்சியற்ற இளையராஜாவின் குரல்தான் நெருடும். (எனக்கு இளையராஜாவின் குரல் பிடிக்கவே பிடிக்காது)

இப்பாடலுக்கு நடித்திருக்கும் நடிகர் சக்கரவர்த்தி. 'ரிஷிமூலம்' படத்தில் நடிகர் திலகத்தின் மகனாக வந்து படுத்துவார் பெல்ஸ் போட்டுக் கொண்டு.

vasudevan31355
6th November 2014, 10:26 AM
சி.க.சார்,

'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் அதே ராஜாவின் குரலில் சக்கரவர்த்தி பாடும் பாடல்.

ஒனக்கெனத் தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=23HjxccyBxk

chinnakkannan
6th November 2014, 10:32 AM
//இப்பாடலுக்கு நடித்திருக்கும் நடிகர் சக்கரவர்த்தி. 'ரிஷிமூலம்' படத்தில் நடிகர் திலகத்தின் மகனாக வந்து படுத்துவார் பெல்ஸ் போட்டுக் கொண்டு.// haai vasu sir nalamaa..எனக்கு இது தெரியுமே.. கொஞ்சம் டவுட் அவர்தானான்னு இருந்துச்சு

ஒனக்கெனத் தானே இந்நேரமா வும் நல்ல பாட்டு.. நீங்கள் சொன்னாற் போல இளையராஜாவின் குரல் எனக்கும் ஓரள்விற்குத்தான் பிடிக்கும்..ஜனனி ஜனனி கூட வேறு யாருக்காவது தந்திருக்கலாம்..

rajeshkrv
6th November 2014, 10:44 AM
தேனிசைத்தென்றலின் முத்துக்கள்-17

90'களின் ஆரம்பத்தில் சத்யராஜ் பானுப்பிரியா பிரபலமான ஜோடியாக திகழ்ந்தனர். நிறைய படம்
அதில் ஒன்று தெற்கு தெரு மச்சான்

பாடல்கள் அனைத்தும் அருமை, தேவாவின் இசையில்

இதோ

https://www.youtube.com/watch?v=k21pLP5NdSA

chinnakkannan
6th November 2014, 11:10 AM
இது ஒரு அழகான பாட்டு தென்னமரத் தோப்புக்குள்ள குயிலே குயிலே..ராஜ்ராஜ் சார் தென்னமரம்னு சொன்னதும் நினைவுக்கு வந்ததாக்கும்..

தென்னமரத்துல தென்றலடிக்குது நந்தவனக்கிளியே நினைவுக்கு வருது..! பாட் நான் பார்த்ததில்லை..இனிமேல் தான் ஈவ்னிங்க் பார்க்கணும்..!

http://www.youtube.com/watch?v=NCL4jGJwsHc

chinnakkannan
6th November 2014, 11:14 AM
ராஜேஷ் சுசீலாம்மா மலேசியா வாசுதேவன்.. முடிவல்ல ஆரம்பம் பாட்டு ரொம்ப ப் பிடிக்கும்.. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி..இதுவும் பார்த்ததில்லை..கேட்க மட்டும் செய்திருக்கிறேன்..! உங்களுக்காக..

http://www.youtube.com/watch?v=9U8SwHizU58

vasudevan31355
6th November 2014, 12:17 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 12)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

1977-ல் ராஜாவின் இசையில் பரிமளித்த இன்னொரு படம் கவிக்குயில். இப்படத்திலும் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுக்கள்.

கே.என்.சுப்பு அளிக்கும் எஸ்.பி.டி.பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் ஒரு கருப்பு வெள்ளைத் திரைப்படம். சிவக்குமார், ஸ்ரீதேவி, ரஜினி, படாபட், சுப்பையா, லட்சுமிஸ்ரீ நடித்திருந்தனர். ஆர் செல்வராஜின் கதைக்கு திரைக்கதை, வசனம் பாடல்கள் அமைத்தவர் பஞ்சு அருணாச்சலம். வழக்கம் போல தேவராஜ் மோகன் இரட்டையரே இப்படத்தையும் இயக்கியிருந்தார்கள்.

பாலமுரளிகிருஷ்ணாவின் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' மிகப் பிரபலமானது. அதுவே ஜானகியில் குரலிலும் ஒலித்தது.

புல்லாங்குழல் இசையில் பின்னியிருந்தார் ராஜா இப்படத்தில்.

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா

பாலமுரளியின் குரலில் தேன் மதுரமாய் ஒலித்தது.

'குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய்' பாடலும் மெகா ஹிட். நம் எல்லோரையும் ஆட்கொண்ட ராகம்.

'மானோடும் பாதையிலே' பாடலும் சுசீலா குரலில் அருமை. (இந்தப் பாடலை 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் அலசியாகி விட்டது)

'உதயம் வருகின்றதே' ஜானகியின் குரலில் சோக கீதமாய் ஒலித்தது. தனது குருநாதர் ஜி.கே வெங்கடேஷ் அவர்களையும் ராஜா இப்பாடலில் பயன்படுத்திக் கொண்டார்.

'மானத்திலே மீனிருக்க
மருதையிலே நானிருக்க
சேலத்திலே நீ இருக்க
சேருவது எக்காலம்'

ராஜா இசையமைத்த படங்களில் கிராமத்து மண்வாசனையுடன் கூடிய நாயகி இயற்கை சூழ்ந்த பகுதிகளில், வயல் வரப்பு வெளிகளில் ஜானகியின் குரலில் ஓடி, ஆடிப் பாடுவது அன்றைய சினிமாவின் புது இலக்கணமானது. அதே வகையில் 'குயிலே கவிக்குயிலே' பாடலும் அமைந்தது நாயகி ஸ்ரீதேவி. தாவணி போட்ட குயிலாக. இப்போது நாம் பார்க்கப் போகும் பாடல் சுஜாதா பாடியது.

காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ
மனச் சோலையின் காவியமே
உன்னை நானும் நாளும் வேண்டுகிறேன்
கனவோ நினைவோ

அருமையான ஒரு பாடல். சுஜாதா மோகனின் கிறங்கும் குரல்களில். பாடலில் வரும் வயலின் இசையும், கோரஸ் குரல்களும் அமைதியான மெட்டும், தரமான வரிகளும் இப்பாடலுக்கு நம்மை அடிமையாக்குகின்றன.


http://www.youtube.com/watch?v=IZ0Nc1smXj0&feature=player_detailpage

இந்தப் பாடல் முதலில் படத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. இந்தப் பாடலைத் தரவேற்றியிருக்கும் நண்பர் ஏனோதானோவென்று மிக்ஸிங் செய்திருப்பது தெரிகிறது. பாடலுக்கும் காட்சிக்கும் ஒத்து வரவே இல்லை. நண்பர்கள் விளக்கவும். அல்லது ஒரிஜினல் பாடல் இருந்தால் பதியவும். தற்சமயம் கேட்டு மகிழ.


http://www.youtube.com/watch?v=uyDLjVtatIw&feature=player_detailpage

Gopal.s
6th November 2014, 12:24 PM
My Favourite Singer Sujatha's first Debut Song. Very Classy music with unique rendering.Thanks Vasu.

chinnakkannan
6th November 2014, 03:35 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபால் சார்..

rajeshkrv
6th November 2014, 09:42 PM
My Favourite Singer Sujatha's first Debut Song. Very Classy music with unique rendering.Thanks Vasu.

My Fav too

rajeshkrv
6th November 2014, 09:43 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபால் சார்..

Happy Birthday Gopal Ji

vasudevan31355
7th November 2014, 09:07 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 13)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

அடுத்து 'ஓடி விளையாடு தாத்தா'. இதுவும் 1977 இல் வந்த படம். காமெடிக் கூத்து. தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் ரசிகரக்ளைக் குறி வைத்து எடுத்து காசும் பண்ணின படம். பக்கா லோ கிளாஸ் மூவி. சுருளி, வி.கே.ஆர், அசோகன் இவர்கள்தான் தாத்தாக்கள். ஸ்ரீப்ரியாவைப் பார்த்து ஜொள் விடும் தாத்தாக்கள். இரட்டை அர்த்த வசனங்கள், ஸ்ரீப்ரியாவின் ஓவர் கவர்ச்சி என்று போகும்.

இதிலும்

'ஓல்டெல்லாம் கோல்டு
உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா'

என்று 3 தாத்தாக்களையும் ஸ்ரீப்ரியா கலாய்த்துப் பாடும் பாடல் சுசீலா அம்மாவின் குரலில் உண்டு. சுசீலா செம ஜாலியாகப் பாடிக் கொடுத்திருப்பார்.

இது இல்லாமல் இளையராஜா முதன் முதலாக எல்.ஆர்.ஈஸ்வரியை ஒரு காபரே நடனத்துக்காக, ஸ்ரீபிரியாவுக்காக பாட வைத்திருப்பார்.

'பார்.... காதல் மலர்த் தோட்டம் பார்'

என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல். ஆனால் சென்சார் செய்வதற்கு முன்னம் எழுதப்பட்ட வரிகள் என்ன தெரியுமா?

'பார்.... ஆடை மறைத்தாலும் பார்'

இது எப்படி இருக்கு?

இன்னொரு பாடல்.

மனோரமா, ஸ்ரீபிரியா, திருமுருகன் மூவரும் மூன்று தாத்தாக்களைக் கட்டிப் போட்டு டீஸ் செய்து பாடும் பாடல்.

'ஒரு கோடிப் பொய்யை ஒன்னாகச் சேத்து
உண்டாக்கின கட்சி எங்க கட்சி'

ஏ.எல்.ராகவன், மலேஷியா, இளையராஜா, எல்.ஆர். அஞ்சலி பாடிய பாடல் இது.

http://i.ytimg.com/vi/1gJPM-zMHh0/maxresdefault.jpg

நாம் இன்று பார்க்கப் போகும்பாடல்.

மூன்று தாத்தாக்களையும் ஏமாற்றி ஒரு குழந்தை பெற்றதாக பொய் சொல்லி விடுவார் ஸ்ரீப்ரியா. அது என் குழந்தைதான் என்று தாத்தாக்கள் மூவரும் உரிமை கொண்டாடுவார்கள். அப்போது அழும் குழந்தையைத் தாலாட்டி மூன்று கிழங்களும் பாடல் ஒன்று உண்டு. அப்போது ரொம்பவும் ஃபேமஸ் பாடல் அது.

'சின்ன நாக்கு சிமிழி மூக்கு ஆராரோ
பொன் மின்மினியாம் கண்ணு ரெண்டும் தாலேலோ
இளமையிலே நான் நினச்ச ஆச
நீ கெடச்ச போது நரைச்சி போச்சு மீச

செட்டி நாட்டு அஞ்சற பொட்டி
சிங்கப்பூரு வைரக் கட்டி
ஒத்தக் கல்லு சின்னக் கடுக்கண்
ஒனக்குத் தாரேன் முத்தம் கொடுப்பேன்'

'எத்தனையோ அப்பா இந்த உலகத்திலே
உன் பெரியப்பனும் சித்தப்பனும் பக்கத்திலே'

என்று வி.கே.ஆர் அசோகனையும், சுருளியையும் குழந்தையிடம் காட்டி பாடுவது வேடிக்கைதான்.

டி .எம்.எஸ், பாலா, மலேஷியா மூன்று பேரும் சேர்ந்து பாடிய பாடல். சுருளிக்கு பாலா குரல்.


https://www.youtube.com/watch?v=ZF6y5hInK94&feature=player_detailpage

vasudevan31355
7th November 2014, 09:11 AM
கோ,

என்னுடைய மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்தை சொல்லிக்கிறேன். ஹேப்பி பர்த் டே.

http://www.birthdayimage.net/wp-content/uploads/2014/09/Happy-Birthday-Gopal.jpg

raagadevan
7th November 2014, 09:58 AM
திரு கோபால் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

rajeshkrv
7th November 2014, 10:17 AM
வாசு ஜி, இளையராஜாவின் பாடல் அருமை.

கோபால்ஜிக்கு உங்களது வாழ்த்து அருமை

இதோ உங்களுக்கு ஒன்றல்ல இரண்டு பரிசுகள்

ப்ரியதமா என்ற திரையில் இசையரசியின் குரலில் ....

http://www.youtube.com/watch?v=ov-Rbr9a_Fc

அனாதா திரைப்படத்தில் பாபுராஜ் அவர்களின் இசையில் இசையரசியின் குரலில் அற்புத பாடல்

http://www.youtube.com/watch?v=Ci85Ty4OdYQ

raagadevan
7th November 2014, 10:56 AM
Rajesh: Here is இசையரசியின் real "ப்ரியதமா..." :)

http://www.youtube.com/watch?v=pRxGLMhF_R8

chinnakkannan
7th November 2014, 10:58 AM
ராஜேஷ் வாசு சார் ராக தேவன் PaadalkaLukku Nandri…

ஓடி விளையாடு தாத்தா – க்ளைமேக்ஸ் மட்டும் வித்யாசமாக இருக்கும்.. மதுரை நியூசினிமா மேட்னி (ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்).. சின்ன நாக்கு சிமிழி மூக்கு அப்போதே பிடிக்கும்.. குட்..ஆனால் அது இளையராஜா இசை எனத் தெரியாது..தாங்க்ஸ் வாசு சார்..

அப்புறம் சி.க வாழ்க்கையில் ஒரு சோக (?!) நிகழ்வு.. நேற்று மேற்புறத்தில் இருந்த ஒரு பல் தானாகவே எதையோ உண்ணும் போது உடைந்துவிட, டாக்டர் பணத்தையும் பல்லையும் பிடுங்கி விட்டார்.. அனஸ்தீஸியா கொடுத்ததனால் கன்னம் ஜோதிகா கன்னம் போல கொழுக் மொழுக்கென்று ஆகி, பின் யாருடனும் பேச முடியாமல் (போதாக்குறைக்கு நேற்று வீட்டில் ஒரு கெட் டுகெதர் வேறு) டூயட் காட்சிகளில் சிவகுமார் எக்ஸ்ப்ரஷன் போல உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு இருந்தேன்.. காலையில் பரவாயில்லை..உடம்பு தான் மாமியார் வீட்டுக்கு முதன் முதலில் போகும் மணப்பெண்ணின் மன நிலை போல வெல வெல என்று இருக்கிறது..ம்ம்

அப்புறம் வரட்டா..:)

rajeshkrv
7th November 2014, 11:15 AM
raagadevan, thanks . yes we've already discussed shakuntala songs . priyathama is absolute stunner by PS,Devarajan,Vayalar combination

rajeshkrv
8th November 2014, 11:20 AM
காலை வணக்கம்

தேனிசைத்தென்றலின் முத்துக்கள் -18

கே.எஸ்.ரவிக்குமாரின் ஆரம்ப காலகட்டம் அது. சரவணன், ரஞ்சிதா, இதயம் நல்லெண்ணை சித்ரா நடித்த பொண்டாட்டி ராஜ்ஜியம் படம்

ரஞ்சிதா கொஞ்சம் நன்றாக நடித்த படம் இது.

இதில் அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே என்ற பாடல் மிகவும் அழகான நல்ல பாடல்

ஜானகியும் பாலுவும் பாடிய பாடல். தேவாவின் இசையில்

http://sim04.in.com/62/1b65555a654a722034ca691d9e7e4d9c_pt_xl.jpg

http://www.4shared.com/mp3/OzrO_28Ice/Anilukku_Moonu_Kodu_Potta_-_Po.html

chinnakkannan
8th November 2014, 12:17 PM
மிட் நைட் மசாலா – 5 (அமெரிக்கால மிட் நைட்ங்க்ணா)

**

தலைவி தனியாய் இருக்கிறாள் ..மாலைமயங்குகிற நேரம்.. தலைவனையோ காணவில்லை..

வெளியில் வந்து வானத்தைப்பார்த்தால் மேகம் மறைத்திருக்கிறது..கொஞ்சம் சாம்பல் நிறமாய்ச் சிரிக்கிறது வானம்..

அவளுக்கோ கோபம் வருகிறது..

ஏன் சிரிக்கிறாய் வானமே

உனை நினைத்துத் தான்..எதற்கிந்த அலங்காரம்.. எழில்பூக்கும் சேலை, கூந்தலிலே பூத்த மலர், இதழ்களிலே வண்ணச் சாயம் கண்களிலே எதிர்பார்ப்பு..கன்னமோ கொஞ்சம் இன்னும் சிவக்க, இளமையோ கொஞ்சம் தவிப்பது போல் இருக்கிறதே.. ஏனடி யார் வரவுக்காய்க் காத்திருக்கிறாய்..உன் தலைவன் தானே..வந்துவிடுவானா என்ன..


ஏன் இப்படி அச்சானியமாய்ப் பேசுகிறாய் வானமே.. அவர் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.. நானும் அவர் வரவை எண்ணி ஏங்கியிருக்கிறேன்..வந்துவிடுவார்..

சரி பெண்ணே..உனக்காக வேண்டுமானால் ஒன்று செய்யட்டுமா..

என்ன.. மழை பொழிய வைக்கப் போகிறாயா.. என் உடற்சூட்டை மன வெப்பத்தைத் தணிக்க முடியுமா அதனால்.. சும்மா கம்முனு உன் வேலையைப் பார்..

வானம் சற்றே துணுக்குற்றது.. ச்சும்மா பாவம் ஸேடா இருக்குதே பொண்ணுன்னு பேச்சுக் கொடுத்து சமாதானப் படுத்தினால்..இவள் இப்படிச் சொல்கிறாளே..சரி சரி நம் வேலையைக் காண்பிப்போம்.. என நினைத்து..ஓ மை விண்ட் என தோஸ்த்தைக் கூப்பிட..

இந்தக் கான்வர்சேஷனைக் கேட்டிருந்த காற்றும் மெல்லியதாய் அடிக்க, மழைச் சாரலும் சிச்சிறிதாய் அவள் மேல் பட ஆரம்பிக்க…

மெல்லியளாள் தேகமோ அந்த ஊதக் காற்றினால் சாந்தமடையவில்லை.. கொதிக்க ஆரம்பிக்கிறது..ஆமாம் காற்று தெரியும்.. அது என்ன ஊதக் காற்று..

காற்றென்றால் என்னசொல கலந்துவிட்ட வாழ்வினிலே
…கலகலப்பாய் உடலினுக்கு ஆதார மருந்தன்றோ
ஆற்றலுடன் வேகமாய் அடிக்கின்ற காற்றினையே
…ஆன்றோர்கள் சொலிவைத்தார் அளப்பறியா புயலென்று
ஆற்றாமை பெருமூச்சு அனல்காற்று என்பதெலாம்
…சூட்சுமமாய் சூரியனும் சுட்டெரித்தால் வருமன்றோ
ஊற்றாகப் பெய்யுமழை தொடங்குதற்கு முன்னாலே
…உணர்வுகளைத் தூண்டிவிடும் ஊதக்காற் றென்பார்கள்

யெஸ்.. மெலிதாய்க் குளிரெடுக்க வைக்கும் காற்று.. மன்மதனுக்குக் கணை எய்வதற்கு ஏற்ற காற்று..அவனும் தலைவியின் அவஸ்தையைப் பார்க்கிறான்..அத்துடன் தூரத்தே தலைவனையும் பார்த்து விடுகிறான்..ஆஹா பேஷ் பேஷ்..என நினைத்து தன் மலரம்புகளை தலைவி தலைவன் மீது எய்யும் தருணம் தலைவனும்
தலைவியருகில் வந்து விட…

பின்ன என்னாச்சுங்க்ணா..

ஆசையும் பொறந்துச்சு..பாட்டும் பொறந்துச்சாக்கும்..

**


காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே

கூந்தல் மீது சூடும் பூவை கொண்டுவந்த மன்னவா
ஊஞ்சல் மீது ஆடும் பூவை உந்தன் மீது தூவவா

கண்மூடும் நேரம் கூட காதல் தேவி ஞாபகம்
நீ பார்த்த பார்வையாலே மாறும் எந்தன் ஜாதகம்

மூச்சும் முனகல் பேச்சும் புதிதாய் ராகம் போடும்
பாடலாய் பாவமாய் ஜீவனோடு வாழலாம்

என் வாழ்வில் பார்த்ததில்லை உன்னைப்போல கண்ணனை
உன் கைகள் தீண்டும் போது நெஞ்சில் இன்ப வேதனை
முன் வாசல் வந்த போது
கண்கள்கோலம் போட்டது

உன் நெஞ்சில் சாய்ந்த போது
உதயகீதம் கேட்டது
தேகம் சாந்தி ஆச்சு
தேவை மீறிப் போச்சு
போதுமே தேவனே மீதமில்லை ஏதுமே..

*

என் புருஷன் தான் எனக்குமட்டும் தான் படத்தில் விஜயகாந்த் ரேகா.. பாடலைப்பாடியவர்கள் இளையராஜா லலிதாசாகரி..

கொஞ்சம் மென்மையாய் மனதை வருடி பின் வன்மையில் முடியும் பாடல்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GaE5gpsMAZQ

அப்புறம் வரட்டா.. :)

vasudevan31355
8th November 2014, 08:16 PM
நன்றி ராஜேஷ்ஜி!

தங்களின் இரண்டு பரிசுகளையும் பெற்றுக் கொண்டேன். மகிழ்ச்சி தரக்கூடிய பரிசுகள். இன்னும் பார்க்கவில்லை. பார்த்து விட்டுப் பதிகிறேன்.

'அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே' எனக்கும் மிகப் பிடித்தமே! இந்தப் படத்தில்தானே சித்ரா ரஞ்சிதாவை அடிக்கடி 'இங்கே கொஞ்சம் வாயேன்' என்று ரகசியமாய்த் தள்ளிக் கொண்டு சரவணனுக்கு எதிராக தூபம் போடுவார்?

JamesFague
8th November 2014, 08:57 PM
இளைய ராஜா இசையில் எனக்கு பிடித்த நடிகர்திலகத்தின் பாட்டு. சுகமான இசை அருமையான நடிகர்திலகத்தின் நடிப்பு அதற்கு ஈடு கொடுக்கும் விஜயாவின் நடிப்பு என்று ஒரு அற்புதமான பாடல்.



http://youtu.be/b35qMps703A

JamesFague
8th November 2014, 09:03 PM
http://youtu.be/WMSYkTPkAlE

இளைய ராஜா இசையில் எனக்கு பிடித்த அற்புத டூயட் பாட்டு. துள்ளலான நடிகர்திலகம்
ஸ்ரீப்ரியா இணைந்த ஒரு இனிய பாடல். கேட்க கேட்க இனிக்கும் பாடல்.

JamesFague
8th November 2014, 09:21 PM
சர்கம் ஹிந்தி படத்தில் இருந்து ஒரு இனிமையான பாடல். ஜெயப்ரதாவின் அழகிய
நடிப்பில் உருவான ஒரு அம்சமான பாடல்.



http://youtu.be/uucUbkOn4p8

JamesFague
8th November 2014, 09:34 PM
ராகுல் தேவ் பர்மனின் அற்புத இசையில் வெளி வந்த சூப்பர் ஹிட் மூவி தீவாரின் ஒரு மனதை மயக்கும் மதுர கானம். ரிஷி கபூரும் நீது வும்
jodiyaga கலக்கும் ஒரு இனிமையான பாடல். இந்த படத்தை ஒரு ரீருன்னில் சென்னை வெல்லிங்டன் திரைஅரங்கில் பார்த்த அனுபவம்
என் கண் முன்னே நிழலாடுகிறது.



http://youtu.be/A8Tt_LbEJ5w

chinnakkannan
8th November 2014, 10:18 PM
யாரையுமே காணோம்..எஸ்வாசுதேவன் நேரமிது நேரமிதுன்னு சொல்லி தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகின்னு பாடினாலும் கூட..

சரி சரி..சோகத்தைச் சொல்றதுக்கு பி.சுசீலாம்மாவக் கூப்பிட்டுடலாம்..

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே.. பி.சுசீலா கங்கை அமரன்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=usTebODGAuw

**

இன்னிக்கு நல்ல சரசர சாரக்காத்து ப்ளஸ் மழை இங்கே. அரைமணி பெய்து நின்று விட்டது..இப்போ ஊதக்காத்து அடிக்குது!.இங்கிருந்து இரண்டுமணித் தியாலத்தில் உள்ள ஸோஹரில் ஆலங்கட்டி மழை....:)

rajeshkrv
9th November 2014, 02:54 AM
சி.க விளக்கம் அருமை

ஆனால் பாடலை பாடியவர்கள் மனோ மற்றும் லலிதாசாகரி

rajraj
9th November 2014, 05:24 AM
From Mayamani,Tamil dubbed version of Parasman (Hindi)

Kothai un Meni OLiya......

http://www.youtube.com/watch?v=0WINiy0h4sU

From the Hindi original

Salamat Raho (Roshan Tumhi Se Duniya..)

http://www.youtube.com/watch?v=tYWLihCFsCc


The raga is considered to be Pahadi.

vasudevan31355
9th November 2014, 10:00 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 14)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

அடுத்து '16 வயதினிலே'. பாரதியும், இளையவரும் சேர்ந்து படைத்த சரித்திர காவியம். எவர் கிரீன் மூவி, எவர் கிரீன் பாடல்கள். சப்பாணியாகவும், பரட்டையாகவும், மயிலாகவும் வாழ்ந்த சூப்பர் ஸ்டார்கள். தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த 50 படங்களைத் தேர்ந்தெடுத்தால் இப்படம் முதல் பத்தில் நிற்க போட்டிப் போடும் தகுதி வாய்ந்தது.

http://www.kevkeka.com/pic_galleries/2013/10/02//16-vayathinile-movie-photos81380774783.jpg

இப்படத்தின் பாடல்களின் சிறப்பை எழுதி உணர்த்த வேண்டிய தேவையே இல்லை. ஆகவே இப்படத்தின் பாடல்களை 'ஸ்கிப்' செய்து விட்டு அடுத்த ராஜாவின் படத்திற்கு செல்வோம்.



'பெண் ஜென்மம்' (1977)

http://s.ecrater.com/stores/47612/47ce8c9c0d9c3_47612b.jpg

ஏ.சி.டி இயக்கம். முத்துராமன், ஜெயபிரபா, (துணிவே துணை புகழ்) சின்னி பிரகாஷ், ஜெயமாலினி நடித்தது. பாடல்கள் அனைத்தையும் நமது ராஜேஷ்ஜியின் தமிழ் ஆசான் 'வாலிபக் கவிஞர் வாலி' எழுதியிருந்தார் என நினைவு. அப்படித்தானே ராஜேஷ் சார்?

சுசீலா, ஜேசுதாசின் ஜென்மத்திற்கும் மறக்க இயலாத பாடல். 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' யின் சூப்பர் ஹிட் பாதிப்பைத் தொடர்ந்து, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் ராஜா கொடுத்த இன்னொரு சூப்பர் ஹிட் பாடல். (வழக்கம் போல சுசீலா அம்மாவுடன் இணைந்து இப்பாடலை ஜெயச்சந்திரன் பாடியதா இல்லை ஜேசுதாஸ் பாடியதா என்ற குழப்பம் நிறைய உண்டு)

செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
கோபத்தில் மனஸ்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BGevMUI6t0A



ஜெயபிரபா கோவிலில் கதாகாலட்சேபம் செய்து ஆடியபடியே பாடும் சுசீலா அம்மாவின் குரலில் ஒலிக்கும் பாடல். காதுகளுக்கு ரம்மியம். புண்ணியமும் கூட.

வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்
வேலனை மாலையிட்டாள்
அந்தப் புண்ணியக் காவியம் எண்ணி இசைத்திட
என்னையும் ஆணையிட்டாள்


http://www.youtube.com/watch?v=5PVExRQqMn0&feature=player_detailpage



சுசீலாவின் அருமையான மெலடி. நல்ல வீணை இசையுடன் இசைக் கருவிகளின் ஆதிக்கம் அதிகம் இல்லாமல். சுகமான ராகமாகத் தந்திருப்பார் ராஜா.

ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இருவேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இருவேறு இசை கேட்பதென்ன

(காதலி ராதை ஒரு கரையில்
கண்ணனும் நின்றான் மறுகரையில்
கரைகள் இரண்டை வகுத்தது காலம் நேரம்தான்
சுமைகள் குறைந்தால்.. சுகங்கள் வரலாம்)

என்ற வரிகள் வீடியோவில் இல்லாமல் போனது குறையே


http://www.youtube.com/watch?v=NzEDhUvja1o&feature=player_detailpage



இப்போது கிருஷ்ணா சாருக்காக இந்தப் படத்திலிருந்து ஒரு ஸ்பெஷல் பாடல். தொடருக்கும் சேர்த்துத்தான்.

இளமை ஜெயமாலினியும், 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' புகழ் நடிகரும், நடன மாஸ்டருமான சின்னி பிரகாஷும் (நினைத்துப் பார்க்கிறேன்... என் நெஞ்சம் இனிக்கின்றது...) பாடும் ஒரு ஜாலியான பாடல்.

பாடலின் ஆரம்ப வரிகளாக வரும் அந்த புரியாத பாஷை வரிகளும் அமர்க்களம்.

ஹோய் லேலே செண்டே சிரியா
ஹோய் லேலே லூகா கோரா
சொகு தின மொக காரி
கொலேலே
கொலேலே
கொலேலே

ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் மோகமா
மெதுவா சிரிச்சேனே எதுக்கு
தெரியும் உனக்கு

ஜானகியின் டிரேட் மார்க் பாடல். உடன் பாலாவும். இந்த மாதிரிப் பாடல்களுக்கு ராஜாவை விட்டால் யார்? அத்தனை இசைக்கருவிகளும் நர்த்தனம் புரியும். கிடார், டோலக், புல்லாங்குழல், தபலா, பாங்கோஸ், மிருதங்கம் உள்ளிட்ட அனைத்து இசைக்கருவிகளின் பங்கையும் மிகச் சரியாகக் கலந்து கொடுத்திருப்பார் இப்பாடலில் ராஜா. இடையிசையை அனுபவித்துக் கேளுங்கள். வரிகள் சற்று எளிமையாக இருந்தாலும் மியூசிக்கில் அதகளம்தான். பாடலினூடே வரும் கோரஸும் மனம் மயங்க வைக்கும்.


http://www.youtube.com/watch?v=X2csdZ9ZuGA&feature=player_detailpage

chinnakkannan
9th November 2014, 11:36 AM
hi good morning all

ராஜேஷ்.. யா.. மனோ தான்..குரல் இளையராஜாவைப் போல இருந்ததில் கொஞ்சம் கன்ஃப்யூஸ்..

ஹாய் வாசு சார்.. பெண் ஜன்மம் பாட்டுக் கேட்டதில்லை கேட்டுச் சொல்கிறேன் நன்றி.. ஸின்ஸ் நீங்கள் இன்றைய ஸ்பெஷலுடன் வந்ததற்காக...:)

கொஞ்சம் தையா தக்கா என்று தான் குதிப்பார் லஷ்மி.. நாதனைக் கண்டேனடி பாடலில்..:)

http://www.youtube.com/watch?v=DbOqgQ-uVXs

rajeshkrv
9th November 2014, 11:39 AM
ஆம். பெண் ஜென்மம் பாடல்கள் வாலி ஐயாவே தான்
செல்ல பிள்ளை சரவணன், ஒரு கோவிலின், வண்ணக்கருங்குழல் என எல்லாமே அமர்க்களம்.

ஆரூர்தாஸ் கதை வசனம் என்று நினைவு. பிரபாவை நாயகியாக்கியதால் தான் படம் தோல்வியாம்


சரி வாசு ஜி, இதோ உங்களுக்காக இசையரசியின் அருமையான பாடல்

https://www.youtube.com/watch?v=hyHgDHonQoM

vasudevan31355
9th November 2014, 11:49 AM
நன்றி சி.க.சார். தங்கள் பல்வலி எப்படியுள்ளது? தேவலையா? குஷ்பு மாதிரி ஆன கன்னம் கமலா காமேஷ் கன்னமாக நார்மலுக்கு வந்து விட்டதா?

கொஞ்சம் இல்லை சி.க.சார். லஷ்மி நிறையவே தைய தக்கா என்று குதிப்பார். சிலருக்கு பரதம் வராது. வந்தாலும் நன்றாயிராது. ஆனால் இதே லஷ்மி 'விஜயா' படத்தில் காபரேவில் பின்னி விடுவார் பின்னி. ரொம்ப ரொம்ப அழகாக இருப்பார்.

தலையில் சிறகுகலெல்லாம் வைத்துக் கொண்டு, படு கிளாமரான டைட் டிரெஸ் அணிந்து கொண்டு, அப்சரஸ் மாதிரி தெரிவார். இளமை பூத்துக் குலுங்கும் சோலையாக அவர் ஆடும் போது மயங்காத மனம் யாவும் மயங்கும்.

இப்போது பேலன்ஸ் சரியாகி விட்டது அல்லவா?:)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Rvy4vzsuYG0

rajeshkrv
9th November 2014, 11:50 AM
தசரதன் என்று ஒரு படம். நமது கிட்டி இயக்கினார்.

சிவகுமார், சரத்குமார், சரண்யா, ஹீரா

இசை எல்.வைத்தியனாதன்

2 பாடல்கள் மிகவும் நன்றாய் இருக்கும்

மனோ சுனந்தாவின் குரலில்

https://www.youtube.com/watch?v=lj4bgjKdIjo

பாலுவுன் ஜேசுதாஸும்
https://www.youtube.com/watch?v=QSpqKQNAyyg

vasudevan31355
9th November 2014, 11:54 AM
ராஜேஷ்ஜி

ராஜாவும் வந்திடுவார்
ரோஜாப்பூ தந்திடுவேன்
அதை ஆசையாக முடிப்பாரு சடையிலே

'கைதியின் காதலி' எல்.விஜயலஷ்மிக்கு சுசீலா அம்மா அழகாகக் குரல் தந்திருப்பார். கேஷுவலான பாடல்.

vasudevan31355
9th November 2014, 12:14 PM
Rajeshji,

p.m. anuppiyirukken. paarkkavum.

vasudevan31355
9th November 2014, 12:21 PM
வாசுதேவன் சார்!

கை கொடுங்கள். 'தீவார்' பாடல் கொடுத்து (keh dhoon thumhe) திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். என்ன உற்சாகமான பாடல்! தினம் தினம் நான் கேட்டு மகிழும் பாடல். தேங்க்ஸோ தேங்க்ஸ். அதுவும் நீத்து சிங்கின் அந்த 'ஹாங்' எக்ஸ்ப்ரெஷன் ஏ ஒன். பாடல், ஜீப் இரண்டுமே ஜெட் வேகத்தில் பறக்கும். again thanks.

vasudevan31355
9th November 2014, 12:47 PM
ராஜேஷ்ஜி!

இதோ உங்கள் மனம் மகிழ ஒரு பதிவு.

நம் இசையரசியின் புகழ் பாடும் பதிவு 'வண்ணத்திரை' 29-9-2014 இதழில். முன்னம் சுப்பையா நாயுடு பதிவளித்திருந்தேன். படித்தீர்களா?


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-55.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-55.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-54.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-54.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-38.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-38.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-18.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5-18.jpg.html)

JamesFague
9th November 2014, 12:58 PM
Enjoy the super hit song of Shashi Kapoor & Sharmila duet.


http://youtu.be/txCnbxkiknI

JamesFague
9th November 2014, 01:02 PM
Enjoy the super hit song from the movie Shaan


http://youtu.be/RbPDSKqKPCQ

JamesFague
9th November 2014, 01:07 PM
Enjoy the song of one & only Shammi Kapoor from the movie Junglee. His actions in the song which is unique and no one in hindi filmworld can match.


http://youtu.be/JBtbEE9V9qw

chinnakkannan
9th November 2014, 01:27 PM
நன்றி சி.க.சார். தங்கள் பல்வலி எப்படியுள்ளது? தேவலையா? குஷ்பு மாதிரி ஆன கன்னம் கமலா காமேஷ் கன்னமாக நார்மலுக்கு வந்து விட்டதா?

கொஞ்சம் இல்லை சி.க.சார். லஷ்மி நிறையவே தைய தக்கா என்று குதிப்பார். சிலருக்கு பரதம் வராது. வந்தாலும் நன்றாயிராது. ஆனால் இதே லஷ்மி 'விஜயா' படத்தில் காபரேவில் பின்னி விடுவார் பின்னி. ரொம்ப ரொம்ப அழகாக இருப்பார்.

தலையில் சிறகுகலெல்லாம் வைத்துக் கொண்டு, படு கிளாமரான டைட் டிரெஸ் அணிந்து கொண்டு, அப்சரஸ் மாதிரி தெரிவார். இளமை பூத்துக் குலுங்கும் சோலையாக அவர் ஆடும் போது மயங்காத மனம் யாவும் மயங்கும்.

இப்போது பேலன்ஸ் சரியாகி விட்டது அல்லவா?:)


ஹையாங்க் வாசுகுருஜி.. ஞான் இப்ப நோக்கிட்டில்லா.. சாயந்திரம் நோக்குமாக்கும்..ம்ம் ஜோதிகா கன்னம்னா சொல்லியிருந்தேன்..குஷ்பு பிடிக்குமா.. சரி அப்ப எம் என் எம் ல அடுத்த பாட் அது தான்! :)

வலி லிட்டில் பிட் இருக்கு..பட் ஆண்ட்டி பயாட்டிக்ஸ் எடுத்துக்கறதால உடம்பெல்லாம் வெல வெலன்னு இன்னும் இருக்கு.. ஆனா வேலைக்கு வந்தாச்சு..!

JamesFague
9th November 2014, 06:34 PM
Fantastic melody and everyone will enjoy it.


http://youtu.be/jDTvgX8bMuA

chinnakkannan
9th November 2014, 10:52 PM
எம்.என்.எம் – 6

***

குழந்தையை எப்படிக் கொஞ்சுவோம்..?

சில்லு, பட்டு, செல்லப்பாப்பு, ஜிஞ்சும்மா பட்டும்மா சின்னு சிரி சிரி சிரிடா செல்லம்..பாரேன் அப்பா முகம்பாத்து எப்படிச் சிரிக்குதுன்னு..இந்த பார் ஊர்ல இருந்து ஒனக்கு ஒண்ணுமே வாங்கித்தராத மாமா வந்திருக்கார் பாரு..பாரு..அட ஏண்டா அழ ஆரம்பிக்கறே அடப் போக்கிரி..! மாமா நம்ம மாமாதான்.. அடுத்த தடவை ஒனக்குச் செய்ன் வாங்கிண்டு வருவார்..!..”

ஆக, போக்கிரி என்பது விஷமம் செய்யும் பயல்.. ஆகாத மாமா என்றவுடன் அழுகிறான். பொடியன்!

வளர வளர குழந்தைத் தனம் மறைந்து அதே குழந்தையாயிருந்த பெரிய பையன் கெட்ட செயல்கள் செய்தால் அவன் பெரிய போக்கிரிப்பா அவன்கிட்ட வெச்சுக்காதே என்பார்கள்.. ஸோ போக்கிரித் தனம் என்பது கெட்ட அல்லது விஷமத் தனமான செயல்கள் எனச் சொல்லலாம்..

இதுவே பெண்களிடம் எப்படி வரும்.. வெடுக் வெடுக்கெனப் பேசும் பெண் துடுக்கானவள்.. துடுக்குத்தனம் மிக்கவள்..போக்கிரித்தனம் கலந்த பெண் என்றால் விஷமத் தனம் செய்பவள்..ஆனால் இந்தப்பெண்கள் போக்கிரித்தனம் செய்வதெல்லாம் தன் மனம் கவர்ந்தவனிடம் மட்டுமே..

இந்த ஆண்கள் இருக்கிறார்களே..அப்பாவிகள்..சாதுக்கள்..ரொம்ப ரொம்ப நல்லவர்கள்! அவர்களை வம்பிழுத்து க் கெட்டவர்கள் ஆக்குவது எல்லாம் இந்தப் பெண்கள் தான்..அதுவும் பேச்சால் செய்ய மாட்டார்கள்..ஒரு பார்வை ஒரு சிரிப்பு..பேச்சென்றால் பட்டும் படாமல் தாமரை இலை தண்ணீர் போல ஒன்றுமே தெரியாத மாதிரி அப்ப்பிராணியாட்டம் முகத்தை வைத்துக் கொண்டு பேசும் ஓரிரு வார்த்தைகள்..

போதாதா ஆண்கள் டபக்கென க் கீழே விழுவதற்கு.. மயங்கி காதலி மேலேயும் விழுவார்கள் காதலர்கள்..

அது என்ன போக்கிரிப் பார்வை..

கோர்த்திருக்கும் முத்தெனவே குறுநகையாய்ப் பல்வரிசை
…கொண்டுவந்த பொன்னுதட்டை மடித்தபடி நின்றவளும்
ஆர்ப்பரிக்கும் மனவலையை மென்மையுடன் கட்டிவைத்து
…அள்ளுகின்ற விழிமலரைக் கண்ணிமையால் கணம்மறைத்து
தேர்ந்தவொரு சிற்பியவன் வார்த்தெடுத்த சிற்பமது
…திகட்டாத அழகுடனே சட்டென்றே அசைவதுபோல்
கூர்மையதைக் கொண்டுவிட்ட வேல்விழியால் பார்த்திடவும்
..குழம்பிடுவான் வாலிபனும் தோகையவள் செய்கையினால்..

அப்புறம் என்ன ஆகும்.. கிள்ளாத திரியோட இருக்குற சரவெடி மேல டப்புன்னு ஒரு பொறி பட்டுச்சுன்னா என்ன ஆகுமோ..அதான்..

**
இந்தப் பாட்டுலயும் அப்படித் தான்.. போக்கிரிப் பார்வை பார்க்கிறது குஷ்பு.. பத்திக்கற சரவெடி கார்த்திக்.. (இருவருமே இந்தப் பாடலில் அழகு.. )

படம் இது நம்ம பூமி..பாடியவர்கள் மனோ ஸ்வர்ண லதா.. இசை இளையராஜா..

இந்தப்பாட்டு முன்னாலெல்லாம் எனக்குத் தெரியாது.. நல்ல பாட்டுக்காக(?!) தேடிக்கொண்டிருந்த போது கிடைத்தது..என்னவொரு மெலடி..

வரிகளும் கவித்துவமாய் இருக்கிறது.. வாலியாய் இருக்கும் என நினைக்கிறேன்..

சொக்கத் தங்கம் என்பது .999 தான்.. சொக்க வெள்ளியும் .999 தான்.. சொக்கத் தங்கத்தில் நகை செய்யலாம் என்று சொன்னாலும் கஷ்டம் தான்..டபக்கென ஒடிந்து விடும் அதுபோலவே சொக்க வெள்ளி.. பாத்திரங்கள் எல்லாம் செய்வது கஷ்டம்..

**

இனி பாடல் வீடியோவும்.. பாடல் வரிகளும்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ycJ3XgRoh60

ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்
எனை தாக்குது கேக்குது பூக்குது ஆசை தான்..

பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்..
மனக் காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் தேடினேன் ஆதலால் தான்


கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை
காயாகிக் கனிந்துவரும் காலமுள்ள காலம் வரை

கல்யாணப் பந்தலுக்கு காத்திருக்கும் நாளும் இது
கண்ணா உன் கையணைக்கப் பூத்திருக்கும் காடு இது

சிங்கார மேடை தான் சொக்க வெள்ளிப் பாற்குடம்
சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும்..

எப்போது ஆரம்பம் அந்தப்புர நாடகம்
ஏனிந்த தாமதம் இன்னும் சொல காரணம்

காத்திரு கண்ணே கொடி நாட்டலாம் ஹோய்
காதலே இன்பம் எனக் காட்டலாம் ஹோய்

என்னோடு நீ இருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான்
இல்லாமல் தனித்திருந்தால் நொந்துபட்ட பைங்கிளிதான்
எப்போதும் என்மனது உன்னைச் சுற்றிக்கோலமிடும்
தன்னந்தனியே இருந்தால் தத்தளித்து ஓலமிடும்

என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச்சரம்
என்னாள் என் கைவரும் உன்னுடைய மோதிரம்

என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்
பார்த்தாலும் தீருமோ உன் அழகு நூதனம்

காதலால் கூவும் ஓர் பூங்குயில் ஹோய்
பூங்குயில் மேவும் இளம் ஆண்குயில் ஹோய்

ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்
எனை தாக்குது கேக்குது பூக்குது ஆசை தான்..

பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்..
மனக் காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான்

*
எங்குமே பாடல் வரிகள் கிடைக்கவில்லை..எனில் வீடியோவை திரும்பத் திரும்பக் கேட்டு எழுதியதில் பாட்டும் மிகப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.. உங்களுக்கும் பிடிக்கும்..

(அப்புறம் வரட்டா)

RAGHAVENDRA
10th November 2014, 07:34 AM
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதுவர்கள் - டி.ஆர். பாப்பா

தவிர்க்க இயலாததால் சற்று இடைவெளி ... .. இனி தொடர்கிறேன்..

எதையும் தாங்கும் இதயம்... அண்ணா அவர்களால் மிகவும் பிரபலமான சொற்றொடர்.. இப்படத்தின் கதை வசனம் அவரே தான். டி.ஆர். பாப்பாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும். துளி விஷம் படப் பாடலான உள்ளம் தேடாதே என்ற பாடல் எதையும் தாங்கும் இதயம் படப்பாடலாக பரவலாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இதை தவிர்த்துப் பார்த்தால் மற்ற பாடல்களும் அருமையான பாடல்கள். குறிப்பாக இன்று நாம் காணப் போகும் காதல் கதை பேசிடுவோம் மெலடி என்ற வார்த்தைக்கு மற்றோர் சிறந்த உதாரணமாகும்.

கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி, முத்துராமன், எம்.ஆர்.ராதா, சந்திரகாந்தா, பி.எஸ்.சரோஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்கம் ப.நீலகண்டன். பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தஞ்சை ராமய்யா தாஸ், மருதகாசி, ஆத்மநாதன். இவர்களுடன் வாலியின் பெயரும் உள்ளது. எந்தப் பாடல் எனத் தெரியவில்லை.

பாடியவர்கள் கே.ஆர்.ஆருடன், டி.எம்.எஸ், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன், பிலீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எஸ்.ஜானகி பொன்னுசாமி.

இனி பாடலைப் பார்ப்போம் கேட்போம்..

http://www.youtube.com/watch?v=5uop9DmlJEU

Gopal.s
10th November 2014, 01:00 PM
Charunivedita Has Good taste in Music.His choices are greatly appreciated and some of his choices.


எனக்குப் பிடித்த பாடகர்கள்


https://www.youtube.com/watch?v=7sWcyONXaXc

அற்புதமான டூயட். 66 வயது ஆன Laurent Voulzy & Manu Katche.

Lys and Love 2011-இல் வெளிவந்த ஆல்பம். வயது 66 ஆனாலும் இன்னமும் Voulzy-இன் குரல் 20 வயது பெண்ணைப் போலவே உள்ளது.

https://www.youtube.com/watch?v=bJMg7yhbr0g&list=PLu8t5gdMih14QXIUYkl6DbB9BJqdf2Z-n&index=3

மனு காட்சேவின் ட்ரம் சோலோ:

https://www.youtube.com/watch?v=XP_iWAtU4A8

மனு: Song for her :

https://www.youtube.com/watch?v=w53U7QMkbgM

Harmony வேறு விதமாக இருக்கும்…

Number one : Manu

https://www.youtube.com/watch?v=L-UXOkpUSqU

Manu keep on tripping: https://www.youtube.com/watch?v=VyvQDOtfeJI

Aimer jusqu’a l’impossible by Tina Arena. இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். 47 வயது.

https://www.youtube.com/watch?v=luQMODtfhZI

டீனா அரெனாவின் ஃப்ரெஞ்ச் பாடல்கள் ஆங்கிலப் பாடல்களை விட நன்றாக உள்ளன. அவர் குரல் ஃப்ரெஞ்சுக்குத்தான் மிகவும் நன்றாகப் பொருந்துகிறது. Je m’appelle Bagdad (என் பெயர் பாக்தாத்)

https://www.youtube.com/watch?v=1q4F3g5mC1U

வாநிநா https://www.youtube.com/watch?v=kSTvxJ3obPg

எனது தேசிய கீதங்களில் ஒன்று… don’t cry for me argentina :

https://www.youtube.com/watch?v=4SrXFRWPEk4

Windmills of your mind…

https://www.youtube.com/watch?v=wdovT7t3nZY

Tal இஸ்ரேலிலிருந்து ஃப்ரான்ஸில் வாழ்பவர். இவர் முகத்தைப் பார்த்தால் நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் இருக்கிறார். Le sens de la vie

https://www.youtube.com/watch?v=b3UdMliT0ko

m.pokara and tal duet

https://www.youtube.com/watch?v=N8mugelTLH0

இன்னொரு டூயட்: Envole moi

https://www.youtube.com/watch?v=sy4J_8uelpg

Tal தனியாக மிக எளிமையாக ஆடம்பரமே இல்லாமல்:

https://www.youtube.com/watch?v=DdQLuf02sa4

M.Pokara பிரமாதமாக ஸ்டெப்ஸ் போட்டபடி பாடுகிறார். Dangerous live…

https://www.youtube.com/watch?v=NOKs24kq2XI

மைக்கேல் ஜாக்ஸன் பாடி உலகம் முழுவதற்குமான ஒரு பாடலாகக் கொண்டாடப்பட்ட We are the world என்ற பாடலை நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய அறையில் பாடுகிறார் தால்.

https://www.youtube.com/watch?v=ZcwNulyiBLg

Je Prends le Large என்ற பாடல். தால்.

https://www.youtube.com/watch?v=ta41PEpotFw

Le Sens de la Vie with L’ALGERINO

https://www.youtube.com/watch?v=3TuC2kPhDww



Je Prends Le Large

https://www.youtube.com/watch?v=12kw5w2tVjs

Russellhni
10th November 2014, 04:05 PM
இந்த மன்றத்தின் இசை ஞானம், திரைப் பட பாடல்களின் தரத்தை அலசும் திறன், பண்பு இவை என்னை மிகவும் ஈர்க்கிறது. வேடிக்கையாக உள்ளே நுழைந்தேன். ஆனால், இந்த திரை இசைக் களஞ்சியங்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. மேலும் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.:smile2::smile2:

vasudevan31355
10th November 2014, 04:18 PM
அன்பு முரளீதரன் சார்,

http://www.actc94.com/images/tamil%20welcome%20logo.jpg

இந்த மதுர கானங்கள் திரிக்கு புதிய வரவான உங்களை மன மகிழ்ச்சியுடன் வருக வருக என்று வரவேற்கிறேன்.

தங்கள் வளமான வாழ்த்துதல்களுக்கு நன்றி!

இந்தத் திரி சகோதரத்துவத்துடன் கூடிய அன்பான கூட்டு முயற்சி. இந்தக் குடும்பத்தில் இணையும் தங்களை மறுபடி வாழ்த்தி தங்கள் மேலான பங்களிப்புகளைத் தருமாறு நண்பர்கள் அனைவர் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

vasudevan31355
10th November 2014, 06:01 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 15)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

இன்றைய இளையராஜா தொடரில் 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு'

http://i.ytimg.com/vi/RLj-mqVImL0/hqdefault.jpg

இந்தப் படத்திலும் ராஜாவின் அற்புத ஆற்றல்கள் பரவிக் கிடக்கின்றன பாடல்கள் வடிவிலே. படம் சொத்தையோ, மொக்கையோ அது பற்றி நமக்கேன் கவலை? ஆனால் ராஜா இருக்கையில் பாடல்களைப் பற்றியும் நமக்கேன் வீண் கவலை?

சிவக்குமார், ஸ்ரீதேவி, மீரா, ஜெயமாலினி, ஜெயதேவி, சத்யப்ரியா நடித்த இப்படத்திற்கு கதை மகரிஷி. வசனம் அலட்டல் ஆரூர்தாஸ். பாடல்கள் வாலி. ஒளிப்பதிவு விநாயகம். இசை இளையராஜா என்று டைட்டில் காண்பிக்கும் போது பொம்மை ஒன்று கைதட்டுவது போன்று ராஜாவுக்கு ராஜ மரியாதை செய்திருப்பார்கள். இதிலிருந்தே ராஜா 1977 இல் எப்படி தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவ இசை சாம்ராஜ்ய கொடி நாட்டி 'தனிக்காட்டு ராஜா'வாகக் கோலோச்சத் துவங்கினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதுவும் தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம்தான்.

இதில் தேவராஜ்- மோகனின் இயக்கம் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒரு கருப்பு வெள்ளைப் படம். மகரிஷி, சுஜாதா இப்படி யாருடைய கதையாவது ஒன்று. இருக்கவே இருக்கிறார்கள் சிவக்குமார், ஸ்ரீதேவி, மீரா போன்ற நட்சத்திரங்கள். ஆழமான முற்போக்கு சிந்தனைகள் எதுவும் கிடையாது. ரொம்ப லோ பட்ஜெட்டில் படங்கள். 'வளவள' 'சவசவ' இழுவைக் காட்சிகள்

ஆனால் நம்பியது இளையராஜாவை மட்டுமே. மற்றதெல்லாம் பின்னர் தான். தேவராஜ் மோகன் போன்ற இயக்குனர்களும், உப்பு சப்பில்லாத இது போன்ற பல படங்களும் இன்றளவும் நம்மால் பேசப்படுவது இளையராஜா என்ற அற்புத சிருஷ்டியால் மட்டுமே. இதை யாராலும் மறுக்க இயலாது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

இந்த 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' படத்தில் என்னென பாடல்கள்?

பார்த்து விடலாம்.


1. சிவக்குமார் பெண் பார்க்க வரும் போது ஸ்ரீதேவி குழந்தை போல விவரமில்லாமல் ஆடிப் பாடும் பாடல்.

அத்தை மகன் முத்தழகன்
அரும்பு மீசை கொத்தழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்

சுசீலா அம்மாவின் குத்துப் பாடல். இது நன்றாகவே இருக்கும். அப்போதெல்லாம் இசையரசிக்கு ராஜா எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று இந்த இளையராஜா தொடரை தொடர்ந்து வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.


https://www.youtube.com/watch?v=GoTRl2t-MDU&feature=player_detailpage



2. பாலா, சுசீலா குரல்களில் உற்சாகமாய் ஒலிக்கும் ராஜாவின் அற்புத கைவண்ணத்தில் உருவான பாடல். மீரா, சிவக்குமார் இருவருக்குமான காதல் டூயட்.

ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ

ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க் கவிதை பாடினான்

கலக்கல் பாடல். இந்தப் பாடலை அனைவரும் எக்காலத்திலும் விரும்பிக் கேட்பீர்கள் என்று தெரியும். 'மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக'... என்று வாலி வளமாக வரிகளை அமைத்திருப்பார். உற்சாகம் கொப்பளிக்கும் பாடல்.


https://www.youtube.com/watch?v=R_2YfVyKqSA&feature=player_detailpage



3. அடுத்து குமரியாய் இருந்தாலும் குழந்தை போலவே குணத்தில் இருக்கும் ஸ்ரீதேவியிடம் ஜெயதேவி அன்பாய், ஆறுதலாய்ப் பாடும்,

கண்ணன் என்ன சொன்னான்
சிறு பிள்ளையே
கண்ணீர் வரக் காரணம் ஏன்
கொடி முல்லையே
கட்டழகுப் பெட்டகமே
இளம் தென்றலே
கண் வளராய் என் மடியில்

பாடும் தாலாட்டுப் பாடல். சுசீலா அம்மாவின் நெகிழ்ச்சியான குரலில். அருமையான பாடல். இந்தப் பாடலின் டியூன் மிகவும் சிரமமானது. வரிகள் முடிவது போலத் தோன்றி முடியாமல் எங்கெங்கோ இனிமையாகப் பயணித்துத் தொடரும். வயலின் அருமையாக யூஸ் செய்யப்பட்டிருக்கும். குழலும் அருமையாக அமைதியாக ஒலிக்கும். மனதிற்கு ஒருவித சாந்தியும் இப்பாடலைக் கேட்டால் ஏற்படும்.


https://www.youtube.com/watch?v=0lVX_Z15NF8&feature=player_detailpage



4. அப்போதைய வியாபார தந்திரத்தில் வழக்கம் போல ஜெயமாலினியின் காபரே நடனப் பாடல் ஒன்று இதிலும் உண்டு. ராஜா சுசீலாவை தைரியமாகப் காபரேவுக்காகப் பாட வைத்திருப்பார். காபரே பாடல் என்றாலும் கண்ணியப் பாடகி இப்பாடலை கண்ணியமாகவே பாடி கவர்வார். இந்தப் பாடல் சுசீலா அம்மாவின் புகழ் பாடுவது போல வாலி அவர்களால் எழுதப்பட்டிருக்கும். இசை அம்சமோ அம்சம்.

உலகில் எனக்குத்தான் அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம்
நான் ஒருத்திதான் அவர்களின் காதலி


https://www.youtube.com/watch?v=6goaX6_ICyw&feature=player_detailpage

Russellmai
10th November 2014, 06:48 PM
மதுர கானக் கடலில் முத்தெடுக்க வருகை புரிந்துள்ள முரளீதரன் சாருக்கு
நல்வாழ்த்துக்கள்.
கோபு.

rajeshkrv
10th November 2014, 09:21 PM
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு பாடல்களை கேட்டு நாமும் சாய்தாடத்தானே செய்வோம்
வாசு ஜி தூள் கிளப்பி விட்டீர்கள்.

எல்லாமே அற்புத பாடல்கள். இசையரசியும் சரி, வாலி ஐயாவும் சரி, ராஜாவும் சரி பிண்ணியிருப்பார்கள்.

chinnakkannan
10th November 2014, 09:41 PM
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு வும் மகரிஷி எழுதி மாலைமதியில் படித்த நினைவு..( மாலைமதி நாவல் வரிசையாய்ப் படமானது கொஞ்சம் சர்ப்ரைஸ் தான்.. வணக்கத்துக்குரிய காதலியே ராஜேந்திர குமார், புவனா ஒரு கேள்விக்குறி மகரிஷி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மகரிஷி.. அப்புறம் வட்டத்துக்குள் ஒரு சதுரம் மகரிஷி விகடனோ குமுதமோ இணைப்பு என நினைக்கிறேன்.. நதியைத் தேடி வந்த கடல் இதுவும் மகரிஷி ஆனந்த விகடனின் இலவச இணைப்பு) மகரிஷி இரா.வேங்கட சாமி என்ற பெயரில் கல்கி தீபாவளி மலரில் பிறந்த நாள் என்று ஒரு மறு ஜன்மக் கதை எழுதினார்.. அதையே ஜோதி வந்து பிறந்தாள் என்று நாவலாக குமுதத்தில் தொடர்ந்தார்..(கோபுலு படங்கள்)

இனி பாடல்கள்..

ஒரு காதல் தேவதை இருகண்கள் பூமழையும்,

கண்ணன் என்ன சொன்னான்
சிறு பிள்ளையே
கண்ணீர் வரக் காரணம் ஏன்
கொடி முல்லையே
கட்டழகுப் பெட்டகமே
இளம் தென்றலே
கண் வளராய் என் மடியில்

இரண்டும் கேட்டிருக்கிறேன்..இந்தப் படம் தான் எனத் தெரியாது.. படமும் பார்த்ததில்லை..!

அத்தைமகன் முத்தழகன் இப்போது தான் பார்க்கிறேன் அண்ட் உலகில் எனக்குத் தான் அதிகம் ரசிகர்கள்..இப்போது தான் கேட்கிறேன்! தாங்க்ஸ் வாசு சார்..:)

chinnakkannan
10th November 2014, 10:04 PM
கோபால் சார்.. ஒரேயடியாகப் பாடல்களாய்ப் போட்டு அசத்திவிட்டீர்கள்.. ஆங்கிலப்பாடல்கள் பற்றி ஓரளவிற்கு (இத்தனூண்டு!) தெரிந்தாலும் ஃப்ரெஞ்ச் பாடல்கள் பற்றி சுத்தமாகத் தெரியாது..

கீழிருந்து மேல் என்று குன்ஸாக ப.வீ.பெண்ணான ட்டால் லின் மூன்று பாடல்கள் கேட்டேன்..// Tal இஸ்ரேலிலிருந்து ஃப்ரான்ஸில் வாழ்பவர். இவர் முகத்தைப் பார்த்தால் நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் இருக்கிறார். //Le sens de la vie Envole moi Je Prends le Large மூன்றுமே எனக்குப் பிடித்திருந்தன.. மீதத்தையும் கேட்பேன்..கேட்டுச் சொல்கிறேன்..வித்யாசமான குரல்வளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..

RAGHAVENDRA
10th November 2014, 10:22 PM
கோபால் சார்
டீனா வின் பாடல்கள் ஃபிரெஞ்சுப் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என கேள்விப்பட்டிருக்கிறேன். சரியான விவரம் தெரியாது. கூற முடியுமா.

RAGHAVENDRA
10th November 2014, 10:24 PM
வாசு சார்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மிகவும் அபூர்வமான பாடல்களின் தொகுப்பில் இளையராஜாவின் இசையமுதைப் பருகவைத்த தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். அதுவும் இசையரசியின் குரலில் அட்டகாசமான பாடலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

RAGHAVENDRA
10th November 2014, 10:24 PM
முரளி தரன் சார்
வருக வருக தங்கள் பங்களிப்பினைத் தருக தருக

Richardsof
11th November 2014, 05:32 AM
கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த கஸ்தூரி நிவாசா - என்ற கன்னட படம் 1971ல் வந்த .கருப்பு வெள்ளை படம் .

2.5 கோடி செலவில் முழு வண்ணப்படமாக்கபட்டு கடந்த வெள்ளிகிழமை பெங்களுர் நகரில் 13 அரங்கிலும் மற்றும்

கர்நாடக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் திரையிடப்பட்டு உள்ளது ..புதுமையான முயற்சி . படத்தின் தரமும்

நன்றாக உள்ளது .முதல் மூன்று நாளில் பெங்களூர் - மைசூர் - ஹாசான் போன்ற இடங்களில் ரசிகர்கள் ஆதரவு

அதிகமாக இருந்தது . படத்தின் வெற்றி பற்றி அடுத்த வாரம்தான் தெரிய வரும் .

கருப்பு வெள்ளையில் இருந்த பாடல் .
http://youtu.be/dZjen3-el2s



வண்ணத்தில் அதே பாடல் .
http://youtu.be/_IW35sLC6n0

Richardsof
11th November 2014, 05:37 AM
celebration - super song
http://youtu.be/Yg41RTMHP3o

Richardsof
11th November 2014, 05:46 AM
http://youtu.be/cegzCZxq3c4

vasudevan31355
11th November 2014, 11:50 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 16)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

இளையராஜா தொடரில் இன்று அருமையான பாடல்கள் நிறைந்த ஒரு அபூர்வ படம்.

எஸ்பி.வி. பிலிம்ஸ்

'துணையிருப்பாள் மீனாட்சி'.

http://www.photofast.ca/files/products/6499.jpg

சிவக்குமார், விஜயகுமார் போன்ற குமார்கள், சுஜாதா, அபர்ணா, மௌலி, மனோரமா ஆகியோர் நடித்தது. கே.என்.சுப்பையா தயாரிக்க வலம்புரி சோமநாதன் இயக்கியிருந்தார்.

இதுவும் ஒரு கருப்பு வெள்ளைப் படம்தான். சிவக்குமார் பத்தினியாக சுஜாதா சோகமான பாத்திரத்தில் வாழ்ந்திருந்தார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள். வறுமையில் வாடும் குடும்பம். சுஜாதாவின் மாமியார், நாத்தனார் கொடுமைகள், வறுமைக்கு பயந்து சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறி சாமியார் ரேஞ்சுக்கு வாழ்தல், மாமியாரால் கற்புக்கு வீண்பழி, சுஜாதாவும் பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றம், பிள்ளைகளுடன் பட்டினிப் போராட்டம், பணக்கார சொர்ணாவின் விஜயகுமார் மீதான காதல், விஜயகுமார் மாமனாரின் (தங்கவேலு) தயவால் உயர்வு, நடுவில் லண்டன் தேங்காய் ஸ்ரீனிவாசனின் குடி, காம வில்லத்தனம், அப்பா மகன் உறவு தெரியாமலேயே சிவக்குமார் அவர் மகனின் உணர்வுப் பாசம், இறுதியில் கணவன் மனைவி தனித்தனியாக பல்வேறு சிரமங்கள் பட்டு, பிள்ளையின் உதவியால், மீனாட்சியின் அருளால் ஒன்று சேர்வதுதான் கதை. அரைத்த, புளித்த, நல்ல தங்காள் மற்றும் சந்திரமதி கதைகள் சாயல் போலத்தான். முடிவு 'மீனாட்சி' டைட்டிலில் 'துணை'யாய் இருந்ததால் சுபம்... சுகம்.

http://i.ytimg.com/vi/h5xGfZkPBR8/hqdefault.jpg

ஆனால் சுஜாதா என்ற அற்புதம் நம்மை ஆட்கொண்டது விடுவதால் அனைத்தும் மறந்து விடுகிறது. சிவா வழக்கம் போல ஒரே மதிரி. அவர் தம்பியாக விஜயகுமார் கிராமத்தானாக வந்து பணக்கார நங்கை சொர்ணா வைக் (பட்டினப் பிரவேசம் புகழ்) காதலிக்கிறார். அதே போல கொடுமைக்கார மாமியாருக்கு சி.கே.சரஸ்வதி. நாத்தனாருக்கு விஜயசந்திரிகா.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

இதிலே கூட ராஜாவின் சாதனை அத்தனை விஷயங்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது வழக்கம் போல். மொத்தம் 6 பாடல்களில் லட்டு லட்டாய் 4 பாடல்கள். சுஜாதாவுக்கு படுபாந்தமாய்ப் பொருந்தும் இசையரசியின் குரல். அந்தக் குரலுக்கேற்ற பாவங்களை அழகாகத் தரும் சுஜாதா. பாடல்களைப் பார்ப்போம்.



1. வறுமை சற்றே குடும்பத்தைத் தாக்க ஆரம்பிக்க கணவன் சிவக்குமார் சோர்ந்து போக வீணை எடுத்து இசை மீட்டி மனைவி சுஜாதா கணவனுக்கு நம்பிக்கையூட்டி பாடும் பாடல்.

சுகமோ ஆயிரம்
உறவோ காவியம்

அந்தக் கலைவாணியே வீணை எடுத்து மீட்டினால் என்ன சுகம் வருமோ அந்த சுகத்தை இசையரசி பாடும் போது உணரலாம்.

வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு
அந்த வட்டத்திலே ஒரு திட்டம் உண்டு
வளர்ந்தாலும் குறைந்தாலும்
நிலவொன்று ஒளி வீசும்
அதைக் காணும் பலம் வேண்டும்
விளையாடும் மனம் வேண்டும்

மிக அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள். மென்மையான வீணையின் இசை சுகம். மந்திரக் கயிறு போட்டு கட்டுண்டது போல மனம் மயங்கும்.


https://www.youtube.com/watch?v=F_zo8YMtLHU&feature=player_detailpage



2. சுஜாதா வீட்டை விட்டு வெளியேறி தங்க இடமில்லாமல், பசியால் வாடும் குழந்தைகளுடன், கொட்டும் மழையில் வீராணம் சிமெண்ட் குழாயில் அழுதபடியே பாடும் சோக கீதம். உள்ளத்தை அழுத்தும் இமயமலை பாரம். சுசீலாவின் சோகத்தைப் பிழிந்தெடுக்கும் குரல். இதயத்தின் அடித்தளத்தில் நங்கூரமாய்ப் பதியும் ராஜாவின் இசை, மேக்-அப் இல்லாத சுஜாதா.

சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வரி தெரியவில்லை

என்று சோகமாய் இசையரசி இழுக்க, அதற்கு சுஜாதா தரும் பாவங்கள் அருமையோ அருமை! (சே!என்ன மாதிரி நடிகை இவர்!) ஆனால் இவரும் பின்னால் வந்த படங்களில் உப்பு சப்பில்லாமல் ஏனோ தானோ என்று 'தேமே' என்று நின்று ஒரே மாதிரி நடிக்க ஆரம்பித்ததுதான் வருத்தம். அதற்கு அவருடைய உடல்நிலை காரணமாயும் இருந்திருக்கலாம்.

மனதைக் குடையும் பாடல்.

நீரின்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

இசையரசி கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுவார்.


ராஜேஷ்ஜி!

7 வருடங்களுக்கு முன்பாகவே இசையரசியின் மேல் தங்களுக்கிருக்கும் இணையற்ற பற்றுதலால் இந்தப் பாடலை யூ டியூபில் அப்லோட் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.


https://www.youtube.com/watch?v=h5xGfZkPBR8&feature=player_detailpage



3. சரி சோகம் போதும். ஒரு ஜாலி டூயட்டிற்கு வந்திடுவோம். சிவக்குமாரின் விவசாயி தம்பி விஜயகுமாருக்கும், கையகலக் கருப்பு கண்ணாடி அணிந்த நாகரீக சொர்ணாவுக்கும் அருமையான காதல் பாடல்.

சேற்றில் ஒரு செங்கழநீர்
திங்கள் ஒரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூப்பறித்து
போற்றி உன்னைத் துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

பெண் குரலுக்கு ஜானகி. அழகாகவே இருக்கும். ஆனால் இந்தப் பாடலுக்கு ராஜா மிகச் சரியாக ஆண் குரலுக்கு பிடித்தார் பாருங்கள் 'பாடகர் திலக'த்தை. டி .எம்.எஸ் அற்புதமாக ஜானகியுடன் சேர்ந்து தந்து அனுபவத்தை அப்பட்டமாகக் காண்பிப்பார் ஹை-பிட்சில் பிடி பிடி என்று படிப்படியாகப் பிடித்தபடியே. கொடைக்கானலின் குளுகுளு சுகம் இந்த folk டைப் பாடலில் கிடைப்பது நிஜம்.


https://www.youtube.com/watch?v=9wt7jpwinEw&feature=player_detailpage



4. இதுவல்லாமல் சுஜாதாவின் இந்திரா உள்ளிட்ட குழந்தைகள் தெருவில் பிச்சை எடுத்து பாடும் பரிதாபப் பாடல். (சசிரேகா மற்றும் கோஷ்டிகளின் குரல்களில்)

அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்துக் கும்பிடுவோம்

5. மற்றும் ஒரு 'ஹரிச்சந்திரா' நாடகப் பாடல். நாடகம் பார்க்க வரும் சிவக்குமாரும், சுஜாதாவும் தங்களை ஹரிச்சந்திரனாகவும், சந்திரமதியாகவும் கற்பனை செய்து கொண்டு பார்க்கும் நாடகப் பாடல். 'மலேஷியா' வாசுதேவனின் கம்பீரக் குரலில்.

சத்திய சோதனை எத்தனை ஆயினும்
சகிப்பவன்தானே சத்தியவான்.



6. 'தாயவளின் திருத்தாள் பணிந்தேன்' என்ற ராஜாவின் குரலில் கோரஸ் குரல்களுடன் ஒலிக்கும் பாடல். இது சுமார் ரகம்தான்.

மீனாட்சி துணை இருக்கிறாளோ இல்லையோ
பல பேருக்கு இளையராஜா துணையிருந்தார் என்று மீண்டும் நிரூபித்த படம்.

chinnakkannan
11th November 2014, 12:28 PM
//. அரைத்த, புளித்த, நல்ல தங்காள் மற்றும் சந்திரமதி கதைகள் சாயல் போலத்தான். முடிவு 'மீனாட்சி' டைட்டிலில் 'துணை'யாய் இருந்ததால் சுபம்... சுகம். // nice write up vasu sir. I didnt see this movie. But I heard only one song sEtril oru sengaLuneer thingaL our poo malarum.. nalla paattu.. Other pattus i will hear and let you know.. Thanks vasu sir.. :)

Gopal.s
11th November 2014, 12:41 PM
கோபால் சார்
டீனா வின் பாடல்கள் ஃபிரெஞ்சுப் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என கேள்விப்பட்டிருக்கிறேன். சரியான விவரம் தெரியாது. கூற முடியுமா.

டீனா ஆஸ்திரேலியா நாட்டை சார்ந்தவராயினும் இத்தாலி நாட்டை பூர்விகமாய் கொண்டவர். பன் மொழி வித்தகி. பிரெஞ்சு படங்களில் பாடி நடித்து ,வாரம் 200000 அமெரிக்க டாலர் சம்பளமாய் பெற்றுள்ளார்.



பிரெஞ்சு அரசாங்கத்தின் உயர் விருதை பெற்ற முதல் ஆஸ்திரேலியர்.

vasudevan31355
11th November 2014, 12:47 PM
நன்றி கல்நாயக் சார் மற்றும் சின்னக் கண்ணன் சார்.

vasudevan31355
11th November 2014, 01:36 PM
கோ,

'நடிகர்திலகம்- கலை மரபின் நீட்சி -திசை மரபின் எழுச்சி' தொடருக்கு வாழ்த்துக்கள் என்றெல்லாம் எழுதப் போவதில்லை.

தங்களின் 'நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிக'னின் பிரமிப்பே இன்னும் அடங்காத நிலையில் அடுத்த பிரமிப்பை தாங்கள் அளிக்கத் தயாராகி விட்டது எங்களின் அதிர்ஷ்டத்தையே காட்டுகிறது. அனுபவிக்கக் காத்திருக்கிறேன். திசை மரபின் எழுச்சி திசை எட்டும் புகழ்க்கொடி நாட்டும் தங்கள் முந்தைய தொடரைப் போல.

vasudevan31355
11th November 2014, 01:58 PM
கோ, சின்னக் கண்ணன் சார்,

நான் புதுப்படங்கள் பார்ப்பதே இல்லை. புதுப்படப் பாடல்களையும் பார்ப்பதில்லை. எனக்கு அறவே காட்டுக் கத்தல்களும், கூச்சல்களும் பிடிப்பதே இல்லை. பாலையில் சோலையாக ஒரு புதுப் பாடலைப் பார்க்கும் சந்தர்ப்பம் வைத்தது. நிரம்பப் பிடித்திருந்தது. அழகான வார்த்தைகள், அளவான, அம்சமான இசை, ரம்யமான வெளிப்புறப் படப்பிடிப்பு, விமல், அனன்யாவின் கேஷுவலான மூவ்மெண்ட்ஸ், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ், இயல்பான டான்ஸ் ஸ்டெப்ஸ், அற்புதமான அருவி என்று இந்தப் பாடல் என் மனதை ரொம்பவே கவர்ந்தது. அனன்யாவின் சுட்டித்தனமான முகபாவங்கள் வெகு அற்புதம்.

நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே
வானம் திரண்டு வையம் கடந்து
பறப்போம் காற்றிலே

இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாமல் பாடலின் வரிகள் வெகு சுகமாக காதில் வந்து தேனைப் பாய்கின்றன. கார்த்திக் மற்றும் ஸ்ரேயா கோஷாலா அல்லது சைந்தவியா?.. மிக இனிமையாகப் பாடியுள்ளனர். இசை ஏ.ஆர்.ரகுநந்தன் என்பவராம். ஒரு நல்ல பழைய பாடலைக் கேட்கும் சுகம் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் புதுப்படப் பாடலைக் காணும் போது எனக்குக் கிடைத்தது.

நீங்களும் அனுபவியுங்களேன்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KFxRL3vhIEs

chinnakkannan
11th November 2014, 04:10 PM
I have seen puli vaal movie. I think I fast forwarded the song. I will hear and let you know. Thanks vasu sir

Also try to hear the songs of Jeeva.. Some songs are really very good melody.

vasudevan31355
11th November 2014, 06:34 PM
சி.க சார்,

இளையராஜா தொடரில் மூழ்கி விட்டதால் இப்போதுதான் தங்களுடைய மிட் நைட் மசாலா தொடரின் இது நம்ம பூமி படப் பாடலான

ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்
எனை தாக்குது கேக்குது பூக்குது ஆசை தான்

பாடலைப் பார்த்தேன்.


'பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்'

வரிகளைக் கேட்கும் போது

'கொதிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து'

ஞாபகம் வருது இல்லையா?

பாடலைப் பார்த்து pause பண்ணி பண்ணி வரிகளை டைப் அடிப்பது கடினமான காரியம். திரும்ப திரும்ப பார்க்க,கேட்க வேண்டும். சமயத்தில் கடுப்பாகி விடும்.

பாடலின் முழு வரிகளுக்கும் நன்றி. சொர்ணலதா, மனோ நன்றாகவே பாடியுள்ளார்கள்.

அபூர்வமான பாடலைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! இந்த முயற்சி எனக்கும் ரொம்பப் பிடிக்கும். வாழ்த்துக்கள்.

vasudevan31355
11th November 2014, 06:40 PM
நன்றி ராகவேந்திரன் சார் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா பாராட்டுதல்களுக்கு.


இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதுவர்கள் -

தொடரின் வரிசையில் டி.ஆர். பாப்பா இசையமைத்த பாடல்களை நீங்கள் அளிக்கும் போது சொல்லொணா மகிழ்ச்சி ஏற்படுகிறது. அபூர்வ பாடலான

காதல் கதை பேசிடுவோம்
காவியங்கள் பாடிடுவோம்
நீதி தவறியதுமில்லை
நாங்கள் நினைவை இழந்ததுமில்லை

பாடலைத் தந்து இன்னும் மனம் மகிழச் செய்து விட்டீர்கள். விஜயகுமாரியும், சந்திரகாந்தாவும்தான் சற்று எரிச்சல்.

நல்ல பாடலுக்கு நன்றி!

rajeshkrv
12th November 2014, 01:55 AM
வாசு ஜி,

ஆஹா சுகமோ ஆயிரம் .. அருமையிலும் அருமையான பாட்டு.
பஞ்சுவின் வரிகளும் சரி, இசையரசியின் குரலும் சரி

ஆஹா தேனோடு கலந்த தெள்ளமுது. அதுவே நம் பண்பாடு அதை நாளும் பண் பாடு...

வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா .. புதைந்து போன ஒரு முத்து..

பாடல்களை வெளி கொண்டுவந்ததற்கு நன்றி .

சுகமோவின் சுகமான வீணை ஈ.காயத்ரியினுடையது.

rajeshkrv
12th November 2014, 04:02 AM
வாசு ஜி,
முன்பு நான் இளையராஜா குழுவில் இளையராஜா-வாலி பாடல்கள் பற்றி எழுதினேன்

இதோ

http://www.rakkamma.com/ilaiyaraaja_vaali.phtml

vasudevan31355
12th November 2014, 10:12 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 17)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

அடுத்து 'இசைச் சக்கரத்தின் அச்சாணி' இளையராஜா இசையமைத்த இன்னொரு கருப்பு வெள்ளைப்படம் 'அச்சாணி'. 1978-ல் வெளிவந்து ராஜாவின் பாடல்களுக்காக பேசப்பட்ட படம். பேசப்படுகின்ற படம் இன்றுவரை.

http://i.ytimg.com/vi/4jDYG4Q8xgQ/0.jpg

முத்துராமன்,லஷ்மி, அசோகன், ஸ்ரீகாந்த், ஷோபா நடித்திருந்தனர். காரைக்குடி நாராயணன் இயக்கம்.

ரகளையான 3 முத்தான பாடல்கள் ராஜாவின் ராஜ முத்திரையோடு.



1. முத்துராமன், லஷ்மி இருவரின் காதலோடு கூடிய பிள்ளைத் தாலாட்டுப் பாடல்.

தாலாட்டு
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித் தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு

பாராட்டு
அன்னை என்னைப் பாராட்டு
உந்தன் பேர் சொல்லப் பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்

சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் வகையைச் சார்ந்தது. பாலாவின் குரலோடு இசையரசியின் குரல் இழைந்து கால்களில் கடலலை வந்து மோதும் சுகம் போல உள்ளத்தில் இனிய இசை அலைகளால் இன்பம் தரும் பாடல்.

தாங்கள் வளர்க்கும் மகன் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணும் இரண்டு உள்ளங்களின் எதிர்பார்ப்புகளை பாடலாசிரியர் அற்புதமாக வடித்திருப்பார்.

'வாழ்க்கையிலே வழக்குகளை என் மகன் நாளை தீர்த்து வைப்பான்'

என்று மகன் மேல் நீதிபதி கனவும்,

'வருத்தமுறும் மானிடர்க்கு மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்'

என்று அவன் மேல் டாக்டர் கனவும் காணும் தம்பதியர்.

புல்லாங்குழல் இசையுடன் சேர்ந்து அழகான வீணையின் நாதம் தேவையான இடங்களில் ஒலிக்க, வார்த்தைகள் தெளிவாக நம் இதயத்தில் இறங்க நல்லதொரு பாடலை அற்புதமாகத் தந்திருப்பார் ராஜா.


https://www.youtube.com/watch?v=qG6nE7BAtCM&list=PLiqjNDn0KHyOODuG2A77gOujwMhtsEwSn&feature=player_detailpage



2. அடுத்து ஜானகியின் குரலில் நம் அணுக்களின் அணுக்களோடு கலந்துவிடும் ராஜாவின் ராஜாங்கப் பாடல். ஒரு கிறித்துவப் பாடல். 'அவர் எனக்கே சொந்தம்'படத்தில் 'தேவன் திருச்சபை மலர்களை'த் தந்து நம் நெஞ்சமெல்லாம் குடி கொண்ட ராஜா இந்த 'அச்சாணி' படத்தில்

'மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்'

தந்து தன் ஸ்திரத்தன்மையை உறுதியாக்கினார். ஜானகி மிக உணர்ந்து நெஞ்சை உருக்கும் வண்ணம் பாடி நம் இதயங்களில் நிறைந்தார். கிறித்துவர் அல்லாத ஏனைய மதத்தினரும் இந்தப் பாடலைக் கேட்டால் மாதாவை மெழுகுவர்த்தி ஏற்றிக் கும்பிடும் அளவிற்கு சக்தி வாய்ந்த பாடல் இது. லஷ்மியும் நன்றாகப் பண்ணியிருப்பார்.

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா

'மாதா' எனும் போது ஜானகி மெழுகு போல் உருகுவார்.

அருள்தாரும் தேவ மாதா...

எனையாளும் மேரி மாதா...

அன்னை மேரி உன்னையன்றி ஆறுதலை யார் தருவார்...

வரிசையில் போற்றிப் புகழ வேண்டிய பாடல்.


https://www.youtube.com/watch?v=Xf5v70TijeA&list=PLiqjNDn0KHyOODuG2A77gOujwMhtsEwSn&feature=player_detailpage



3. அடுத்து நான் உங்களை அழைப்பது சுசீலா அம்மாவின் இசைத் தேன் குளத்தில் நீந்த.

முந்தின இரண்டும் தென்றல் என்றால் இந்தப் பாடல் புயல். அவையிரண்டும் அமைதி. இது ஆர்ப்பாட்டம்.

ஆஹாஹா! இசையசியின் மேற்கத்திய பாணி குரல். அழகான ஆங்கிலம் கலந்து. ஆங்கில் உச்சரிப்பும் அமர்க்களம். பாடலின் துவக்கத்தில் இருந்தே ராஜா ரகளை படுத்துவார். துவக்க இசையாக வரும் அந்த பாங்கோஸ் உருட்டல்கள், கிடார் மிரட்டல்கள், கிளாரிநட், ஷெனாய் மற்றும் டிரம்பெட்டின் அட்டகாசங்கள். என்னத்தை சொல்ல?

அப்படியே வெல்லப் பாகுவாய் வழிந்து உருகும் அந்த தெய்வீகக் குரல் துவங்குமே!

நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளை

எத்தனயோ சந்நியாசிகள்
எத்தனயோ சம்சாரிகள்
விழிகளில் நானாட
மழை மேகம் எதிர்பார்க்கும்
மயில் தோகை

அல்வா பாடல். பாடல் முழுதும் பாடல் முழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த கிடார் ஓசையை மறக்கவே முடியாது. இனி ராகவேந்திரன் சார் தான் சொல்ல வேண்டும்.


https://www.youtube.com/watch?v=Of5kKRA9tTU&list=PLiqjNDn0KHyOODuG2A77gOujwMhtsEwSn&feature=player_detailpage

rajeshkrv
12th November 2014, 10:45 AM
அச்சானியில் அனைத்து பாடல்களும் வாலி ஐயா

எனக்கு மிகவும் பிடித்த பாடல் தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு ஆஹா ஆஹா

vasudevan31355
12th November 2014, 11:32 AM
ராஜேஷ்ஜி!

வணக்கம். 'வண்ணத்திரை' சுசீலா அம்மா ஆவணம் வாசித்தீர்களா?

vasudevan31355
12th November 2014, 11:38 AM
வாசு ஜி,
முன்பு நான் இளையராஜா குழுவில் இளையராஜா-வாலி பாடல்கள் பற்றி எழுதினேன்

இதோ

http://www.rakkamma.com/ilaiyaraaja_vaali.phtml

Excellent Rajesh Sir.

rajeshkrv
12th November 2014, 11:45 AM
ராஜேஷ்ஜி!

வணக்கம். 'வண்ணத்திரை' சுசீலா அம்மா ஆவணம் வாசித்தீர்களா?

வாசித்தேன். மிக்க நன்றி வாசு ஜி.

குங்குமம் தோழியில் தீபாவளி சிறப்பிதழிலும் அம்மாவின் பேட்டி உண்டு. படிக்கவும்

rajeshkrv
12th November 2014, 11:46 AM
Excellent Rajesh Sir.

நன்றி

vasudevan31355
12th November 2014, 11:51 AM
வாசித்தேன். மிக்க நன்றி வாசு ஜி.

குங்குமம் தோழியில் தீபாவளி சிறப்பிதழிலும் அம்மாவின் பேட்டி உண்டு. படிக்கவும்

கண்டிப்பாக ஜி.

vasudevan31355
12th November 2014, 12:14 PM
நன்றி திரு. எஸ் கே ராஜா.

http://imageshack.us/a/img703/8514/sq1r.jpg

A .M. ராஜா :(1-7 -1929 To 7-4- 1989)

(ஏமத மன்மதராஜு ராஜா ) A . M. ராஜா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்!
1950, 60, மற்றும் 70 களில் தென்னக மொழிகள் ஆன தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடப் படங்களில் பாடல்களைப் பாடியவர் !
இவர் நிறைய படங்களுக்கு இசையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இளமைப் பருவம் :

1-07- 1929 ஆம் ஆண்டு , மன்மதராஜு - லக்*ஷ்ணம்மா தம்பதிகளுக்கு ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏ எம் ராஜா பிறந்தார்.
ஏ எம் ராஜா விக்கு மூன்று வயது இருக்கும் போதே இவருடைய தந்தையார் காலமாகிவிட, பின்பு இவரது குடும்பம் சென்னைக்கு ( ‘மெட்ராஸ்’ ) குடி பெயர்ந்தது.
ஏ எம் ராஜா, பச்சையப்பன் கல்லூரியில் B.A. படம் பெற்றார்.
இந்த காலகட்டத்தில் ராஜா, மேலை நாட்டு இசையிலும், கர்நாடக இசையிலும் , மற்றும் பியோனோ வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றார்.

திரைப் பட உலகத்தில் நுழைவு:

முதன் முதலில் பிரபல இசையமைப்பாளர் கே வி மகா தேவன் அவர்களின் இசைக் குழுவினரோடு, HMV இசைத் தட்டுக்கம்பனிக்காக தானே இசையமைத்து பாடவும் செய்தார்.
இவரது பட்டு போன்ற மென்மையான குரலைக் கேட்ட ‘ஜெமினி ஸ்டுடியோ’ அதிபர் எஸ் எஸ் வாசன் , தனது அடுத்த படமான “ சம்சாரம்” ( 1951 ) படத்திற்கு ராஜாவை பாடவைத்தார். அதன் பின்பு இந்தி மொழி முதற்கொண்டு ஏனைய தென்னிந்திய மொழிகளில் பாடி 50 களின் ஆரம்பத்திலும் இடையிலும் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார் ராஜா . இசையமைக்கும ஆர்வத்தையும் அவர் வளர்த்துக்கொண்டார். இன்னும் சொல்லப் போனால் , ராஜா இசையமைப்பாளர் ஆக 1952 ஆம் ஆண்டு. M.G.R . நடித்த “ ஜெனோவா” படத்திற்காக இன்னொரு இசையமைப்பாளர்கள் : T . A. கல்யாணம் மற்றும் M.S. ஞானமணி யுடன் அறிமுகம் ஆகவேண்டியவர் , M.S. விஸ்வநாதனின் முதல் பட சான்ஸ் க்கு ஆக, தனது வாய்ப்பை, படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புக்களை தேடின மெல்லிசை மன்னருக்கு அளித்துவிட்டு அந்த படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களையும் பாடினார்.

இசையமைப்பாளர்கள:
ஏ எம் ராஜா, பிரபல இசையமைப்பு ஜாம்பவான்களிடம் பாடி அவர்களின் பாராட்டையும் பெற்றார். அந்த ஜாம்பவான்கள் : எஸ் வி வெங்கட்ராமன், சங்கரா சாஸ்திரி,எஸ்.ராஜேஸ்வர ராவ், ஆர் சுதர்சனம் , ஜி ராமநாதன், சி ஆர் சுப்பாராமன், சி என் பாண்டுரங்கன், தட்ஷிணா மூர்த்தி, மாஸ்டர் வேணு, கே வி மகாதேவன், பெண்டியாலா நாகேஸ்வரராவ், ஆதி நாராயணராவ், திவாகர், தேவராஜன், டி ஆர் பாப்பா, சி எஸ் ஜெயராமன், கண்டசாலா, வேதா, ராமாராவ், அஸ்வதாமா, விஸ்வநாதன் - ராமமூர்த்தி, விஜயபாஸ்கர் !
பிரபல இந்தி இசையமைப்பாளர் ஷங்கர் - ஜெய்கிஷன் இசையிலும் ராஜா பாடி பாராட்டைப் பெற்றார்.

ராஜாவின் திறமை:

இவருடன் பாடும் மற்ற பாடகர்கள், ராஜாவின் மென்மையான, எளிமையான குரல்- அது “Low Pitch" ஆகட்டும் , இல்லை “High Pitch” ஆகட்டும் - இந்த குரலுக்கு ஈடாக தாங்கள் பாடுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளனர் !
ஒரு குறிப்பட்ட கால கட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உலகப் புகழ் பெற்ற ஒரே பாடகர் , ஏ எம் ராஜா. உண்மை! - இந்த சாதனைக்கு இணை இன்று வரை யாருமே இல்லை.
ஒப்பீடு:
இந்தியில் நடிகர் ராஜ்கபூரின் குரலுக்கு முகேஷின் குரல் எப்படிபொருந்தியதோ , அதே போல் ராஜாவின் குரல் நடிகர் ஜெமினி கணேசனுக்கு மிகப் பொருந்தியது! அதுபோல சிவாஜி கணேசனுக்கும் எம்ஜிஆருக்கும் பொருந்தி வந்தது.

ஏற்றமும் கண்டிப்பும் :

50 களின் ஆண்டுகளின் முடிசூடா மன்னன் ஆக அனைத்துத் திரை உலக நட்சத்திரங்களிடம் மிகுந்த புகழுடன் இருந்த ராஜா, பின்னர் கண்டிப்பாக இருந்து,பாடுவதைக் குறைத்துக்கொண்டார்.
ராஜா, பிறர் தன் மீது பொறாமையுடனும், பின்னால் பேசுபவர்களையும் புரிந்து கொண்டுவிட்டார். ஆனால், இதற்கெல்லாம் பிரதான தவறுக்கு தானே என்பதை உணர்ந்தார். இதனை ஏனைய் இசையமைப்பாளர்களிடம் உணர்ந்து கொண்டார். ஆனாலும் இவர் தன் நேர்மையிலும் ஒழுக்கம் தவறாமையும் கடை பிடித்து வந்தார்.
ஒரு “ டேக்” க்கு மேல் இவர் பாடி அந்த பாடல் பதிவானது என்பது வெகு அபூர்வமே. ஆனால் பண விஷயத்தில் அவர் கறார் ஆக இருந்தது உண்மையே.
ஆனால் ஆரம்பக் கால கட்டங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைத் திறனை வியந்து அவரின் நட்பு கொண்டது கூட அல்லாமல், பட்டுக்கோட்டையார் அகால மரணமடைந்த போது அன்னாரின் இறுதி ஊர்வல செலவுகள் அனைத்தும் ஏ எம் ராஜா ஏற்றுக்கொண்டது இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

பிடிவாத குணம்:

ராஜாவின் முதல் வழிகாட்டி கே வி மகாதேவன், “ மனமுள்ள மறுதாரம் “ படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜாவை விட்டு தூர விலகிக் கொண்டார். பின்னர் எம் எஸ் விஸ்வநாதன் , இவரை தொலைவில் வைத்துக்கொண்டது , ராஜாவுக்கு ஒரு பெரிய இழப்பாகும்.
பிற இசையமைப்பாளர்களுடன் அதிலும் 50 களில், மற்றும் 60 களின் இசையமைப்பாளர்களுடன் இவர் மாறுபட்டு நடந்துகொண்டது விரும்பதக்கது அல்ல.
இதே மாதிரிதான் , ராஜா இயக்குனர் ஸ்ரீதரை பகைத்துக் கொண்டது - தனது இரண்டு படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தவர் ஸ்ரீதர் !

மேடைக் கச்சேரி:

எனினும் ஏ எம் ராஜா இசைக் கச்சேரிகளை அவர் நடத்தி வந்தார்.
வாடகை கார்கள் தொழில்களையும் அவர் இறுதிவரை நடத்தி வந்தார்.

ஓர் இசையமைப்பாளர் ஆக:

தமிழில் : “ கல்யாண பரிசு, “ தேன் நிலவு ‘ விடிவெள்ளி’” ஆடிப் பெருக்கு” etc
தெலுங்கு :“ ஷோபா”
மலையாளம் :“ அம்மா என்ன ஸ்ரீ”
தமிழில் வந்த ‘தேன் நிலவு ‘ மிகப் பிரபலம் !

விருதுகள்:

Madras Flim Fans Association - சிறந்த இசையமைப்பாளர் ஆக 1959 ஆம் ஆண்டு இவரை கெளரவித்தது.
இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் :ம்யில் வாகனன், ராஜ குரு சேனாதிபதி கனக ரத்தினம், பி எச் அப்துல் ஹமீத் போன்றவர்கள் , ராஜா பாடுவதை நிற்பாட்டினாலும் அவரைப் புகழுவதை நிற்பாட்டவே இல்லை!

பிரபல பாடகி ஜிக்கி ( பி ஜி கிருஷ்ணவேணி ) யை இவர் திருமணம் செய்துகொண்டார். “ சம்சாரம்” ( 1951 ) பட பாடல் பதிவிலே இவர் ஜிக்கியைப் பார்த்து விட்டார். பின்னர் “ மஹேஸ்வரி “ ( 1955 ) படத்தின் “ அழகு நிலா வின் பவனியிலே” பாடலில் தன் ஆசையை வெளியிட்டார். இவருக்கு 4 மகள்கள் , 2 மகன்கள். உலகம் பூரா சுற்றி வந்து இசை நிகழ்ச்சியை நடத்தி வந்தார், ஏ எம் ராஜா.
நடிகர்:

இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த :“ அடுத்த வீட்டுப் பெண்” படத்தில் தமிழில் கே ஏ தன்கவேலு செய்த வேடத்தை தெலுங்கில் ஏற்று நடித்தாராம் !
படம் : “ பக்கிண்டி அம்மாயி “ இயக்கம் : சி புல்லய்யா

மறுபடியும் ஏ எம் ராஜா:

70 களில் ராஜா வந்தார். இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், வி குமார் அவருக்கு வாய்ப்பு அளித்தனர். ஆனால் அப்போதும் பிரபலமாக இருந்த மெல்லிசை மன்னரும் கே வி எம் உம் அவரை கண்டு கொள்ளவில்லை.
அப்போது : “ வீட்டு மாப்பிள்ளை “ ( 1973 ) ” எனக்கொரு மகன் பிறப்பான்” ( 1975 )மலையாளத்தில் ” அம்மா என்ன ஸ்ரீ “ ( 1970 ) படங்களுக்கு இசையமைத்தார்.

முடிவு: கன்யாகுமாரி மாவட்டம் , கூடாலு மூடு என்கிறஊரில் இருக்கும் கோவிலுக்கு பாட வந்த ஏ எம் ராஜா , ஓடுகின்ற தொடர் வண்டியில் தவறி விழுந்து 7- 4- 1989 அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 60.

ஆனால் அவரது இசையும் குரலும் இன்றும் அகில உலகை ஆளுகின்றது!இளய தலை முறையும் இவரது குரலை விரும்பிக் கேட்கிறது .

நன்றி: 2003 மற்றும் 2004 வெளி வந்த இதழ்களில் இருந்து திரட்டியவை.

gkrishna
12th November 2014, 12:25 PM
காரைக்குடி நாராயணன் இந்த ஆண்டில் ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். இவர் கதை வசனம் எழுதிய நிறைய படங்கள் 1976-க்கு முன்பு நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்டில் இவர் தயாரிக்க நினைத்த படத்திற்கு அச்சாணி என பெயர் சூட்டி படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார்.

அச்சாணி படத்தின் பெயரைக் கேட்டாலே எனக்கு சட்டென ஞாபகத்திற்கு வருவது இந்த விஷயம்தான். அது…

படத்தின் பூஜையன்று பாடல் பதிவு என்றும் முடிவு செய்யப்பட்டது. படத்தின் கதையை கேட்ட ராஜா இயக்குனர் கேட்டது போல இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து வாலி அவர்களை வைத்து பாடல்களும் எழுதி தயார் நிலையில் இருந்தனர்.

சவுண்டு என்ஜினியர் இந்த படத்தின் பூஜை தினத்தன்றே வேறு ஒரு படத்திற்கும் (இசையமைப்பாளர் உபேந்திரகுமார்) ரெக்கார்டிங் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் யாராவது பாடல் பதிவு முடித்துவிட்டால் மதியம் 1 மணிக்குள் அடுத்த பாடல் பதிவை வைத்துக்கொள்ளலாம் என நினைத்தாரோ என்னமோ. பூஜை தினத்தன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவிற்குள் வர அங்கே வேறு இசைக்குழு இருந்தது. என்ன நிலவரம் என்பதை தெரிந்து கொண்ட இளையராஜா சவுண்டு என்ஜினியர் எஸ்.பி.ராமனாதனிடம் சென்று யார் ரெக்கார்டிங்கை வைத்துக்கொள்வது என கேட்க பதில் சொல்ல முடியாமல் சமாளித்துப்பார்த்திருக்கிறார். ஆனால் உபேந்திரகுமாரோ எது பற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கிவிட்டார்.

சரி இனி இங்கே வேலைக்காகாது என தெரிந்து கொண்ட இளையராஜா வேறு ஸ்டுடியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது. இதற்குள் மதியம் 1 மணியை நெருங்கிவிட்டதால் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோவிற்கே சென்றனர். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் எதுவும் இல்லாததால் அங்கேயே பாடல் பதிவை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து பாடல் ரிகர்சல் ஆனது.

ஜானகி வந்ததும் பாடல் ஒத்திகை பார்க்கப்பட்டு சரியாக வராததால் இரண்டு மூன்று டேக்குகள் போய்கொண்டிருந்தது. இளையராஜாவிற்கோ நிறைய சங்கதிகள் கற்பனையில் வந்துகொண்டிருக்க அவ்வப்போது ஜானகியிடம் சென்று மாற்றிக்கொண்டே இருந்தார். ஒரு டேக் நன்றாக வந்துகொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்க வேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம் கண்டக்ட் செய்த கோவர்த்தன் சார் கை காட்ட மறந்துவிட்டார்.

இளையராஜாவிற்கோ கோபம். “என்னண்ணே டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது பேக்ரவுண்ட் மியுஸிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?” என்று கேட்க அவரோ கூலாக, “பாட்டில் மெய் மறந்துட்டேன்யா” என்றிருக்கிறார். (இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருந்தியிருக்கிறார் இளையராஜா)

சரி டேக் போகலாம் என்று சொல்லி அடுத்த டேக்… ஜானகி பாடும் போது மூன்றாவது சரணத்தில்,

“பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது”

என்ற வரிகளை அழகாகப் பாடியவர் அதற்கு அப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டுவிட்டார். ஆர்க்கெஸ்டிராவிலோ எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். பொதுவாக டேக் கட் ஆனாலே “பேன் போடு” என்று சத்தம் போடுபவர்கள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் இருக்கிறார்களே என்று இளையராஜா கோவர்த்தன் சாரை பார்க்க, அவரோ வாய்ஸ் ரூமை கைகாட்டியிருக்கிறார். ஜானகி கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்க இளையராஜா என்னவென்று கேட்க, “டியூனும் வார்த்தையும் கலந்து ‘பாவத்தில்’ ஏதோ ஒன்றை உணர்த்திவிட அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்” என்றாராம். ஜானகி இப்படி சொன்னதைக் கேட்ட எல்லோரும் உருகிப்போனார்களாம்.

வாசு சார் நல்லதொரு பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி

பின்னாட்களில் இதே பாடல் பாலா இயக்கத்தில் வெளி வந்த நான் கடவுள் படத்திலும் இடம் பெற்றது .மதுமிதா அல்லது சாதனா சர்கம் குரல் என்று நினைக்கிறன்

vasudevan31355
12th November 2014, 12:31 PM
திருச்சி விநியோகதஸ்தர்கள் 1980 ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகத்தின் ஒரு பக்கத்தின் சிறு பகுதி

https://www.mediafire.com/convkey/f0c7/420neh1xuj6h9726g.jpg

Thanks Rainbow.

gkrishna
12th November 2014, 12:31 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Oct/749a23e1-b016-440d-9b86-97a93f38417b_S_secvpf.gif

காரைக்குடி நாராயணன் தயாரித்து இயக்கிய "அச்சாணி'' படம், தமிழக அரசின் பரிசைப் பெற்றது. எனினும் பரிசை வழங்குவதில், எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு அகன்றது.

நாராயணனின் புகழ் பெற்ற மேடை நாடகம் "அச்சாணி.'' சிவகுமார், மேஜர் சுந்தரராஜன் நடித்த இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதன் உரிமையை பிரபல ஒளிப்பதிவாளர் வின்சென்ட் வாங்கி அதே பெயரில் மலையாளத்தில் சினிமாவாகத் தயாரித்தார். பிரேம் நசீர், சுஜாதா நடித்தனர்.

இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடியது.

காரைக்குடி நாராயணன் சொந்தமாகப் படம் தயாரிக்க முடிவு செய்தபோது, "அச்சாணி'' கதையைத்தான் தேர்வு செய்தார். இந்தக் கதையை ஏற்கனவே மலையாளத்தில் தயாரிக்க வின்சென்ட்டிடம் விற்று விட்டதால், அதன் உரிமை அவரிடம்தான் இருந்தது. எனவே, காரைக்குடி நாராயணன் ரூ.25 ஆயிரம் கொடுத்து, தன் கதையின் உரிமையை தானே வாங்கி, தமிழில் எடுத்தார்!

இந்தப்படத்தில் முத்துராமன், லட்சுமி இணைந்து நடித்தனர். ஷோபா அறிமுகமானார். இளையராஜா இசை அமைத்தார்.

படம் 1978 பிப்ரவரி 4ந்தேதி ரிலீஸ் ஆயிற்று. படம் வெற்றி பெற்றது.

இந்தப் படத்திற்கு தமிழக அரசின் 1978ம் ஆண்டுக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர். முதல்அமைச்சராக இருந்தார்.

பரிசு அறிவிக்கப்பட்ட மறுநாளே, "இந்தப் பரிசை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று கேட்டு, நாராயணனுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

"அச்சாணி கதை, மலையாள படத்தின் கதை. அதை காப்பி அடித்து நாராயணன் தமிழில் தயாரித்திருக்கிறார். எனவே, பரிசு தரக்கூடாது'' என்று, அரைகுறை ஆசாமி ஒருவர் அரசுக்கு புகார் மனு அனுப்பியதே இதற்குக் காரணம்.

இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த நாராயணன், அரசு தலைமைச் செயலாளரைச் சந்தித்து, நடந்ததை விளக்கினார். "அச்சாணி கதை, நீங்கள் எழுதியதுதான் என்பதை, ஆதாரத்துடன் 24 மணி நேரத்தில் நிரூபியுங்கள். அப்படி நிரூபித்தால், நீங்கள் பரிசு பெறலாம்'' என்று அரசு தலைமைச் செயலாளர் கூறினார்.

"24 மணி நேர கெடு''வை, ஒரு சவாலாகவும், தன்மானப் பிரச்சினையாகவும் எடுத்துக்கொண்டார், நாராயணன். "எனக்கு லட்சம் பெரிதல்ல; லட்சியம்தான் பெரிது. எப்படியும் தங்களிடம் விருது பெறுவேன். இது நிச்சயம்'' என்று எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி கொடுத்தார்.

"அச்சாணி'' நாடகமாக நடந்தபோது, அதை பார்த்து சிறந்த நாடகமாகத் தேர்வு செய்த நீதிபதி வழங்கிய சான்றிதழ், நல்லவேளையாக நாராயணனிடம் இருந்தது. அதை அரசு தலைமைச் செயலாளரிடம் கொடுத்தார்.

அத்துடன் அப்போது அமைச்சர்களாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து ஆகியோரும், "அச்சாணி, காரைக்குடி நாராயணன் எழுதிய நாடகம்தான்'' என்பதை எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தனர்.

மறுநாள் அரசிடம் இருந்து, நாராயணனுக்கு அழைப்பு வந்தது. முதல்அமைச்சரிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொள்ளும்படி அதில் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி மறுநாள், எம்.ஜி.ஆரிடம் இருந்து விருதை பெற்றார்.

எம்.ஜி.ஆர். புன்சிரிப்புடன் விருதை நாராயணனிடம் கொடுத்து, அவரை அன்புடன் தட்டிக் கொடுத்தார்.

விருது வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை, மகிழ்ச்சிகரமாக முடிந்தது.

gkrishna
12th November 2014, 12:32 PM
வாசு சார்

அச்சாணி திரைபடத்தில் ஷோபா எந்த ரோல் ? கொஞ்சம் நினைவு படுத்துங்கள்

vasudevan31355
12th November 2014, 12:33 PM
Welcome Krishna Sir.

gkrishna
12th November 2014, 12:37 PM
வாசு சார்
கொஞ்சம் வேலை பளுவினால் திரியின் உள்ளே நுழைய முடியவில்லை .
நேரம் வாய்க்கும் போது நிச்சயம் கலந்து கொள்கிறேன்

வாழ்த்திற்கு நன்றி

Gk

vasudevan31355
12th November 2014, 12:39 PM
http://imageshack.us/a/img7/70/tkrmsv.jpg

vasudevan31355
12th November 2014, 12:41 PM
கிருஷ்ணா சார்,

'அச்சாணி' பற்றிய மேலதிக விவரங்கள் 'அச்சா'

gkrishna
12th November 2014, 12:43 PM
dear vaasu sir

ரௌத்திரம் இதழில் திரு தமிழருவி மணியன் அவர்கள் கலையுலகின் பொற்காலம் என்று ஒரு தொடர் எழுதி வருகிறார் . மிகவும் அருமையாக இருக்கிறது .

Rgds

Gk

gkrishna
12th November 2014, 12:46 PM
'அச்சாணி' பற்றிய மேலதிக விவரங்கள் 'அச்சா'

வாழ்த்தும் உங்கள் நற்பண்பிற்கு நன்றி வாசு .

உங்கள் timing sense அருமை

gkrishna
12th November 2014, 12:51 PM
சுசீலா அம்மாவின் மிக அரிதான அச்சாணி பாடலை நினைவு கூர்ந்து உள்ளீர்கள் . அந்த பாடலின் மிச்ச வரிகள்

மனம்
உன்னைத்தேடி ஊஞ்சல் ஆடிட

நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
Don’t make me shy!
Oh my butterfly, butterfly!

ஆசைக்கொரு தேவியென்று
அர்ச்சிக்கின்ற பக்தன் உண்டு
அது மட்டும் ஆகாது
ஒரு கண்ணன் பல ராதை
சிலர் பாதை இந்த பேதை
நெஞ்சம் என்ன கண்டது

நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
Don’t make me shy!
Oh my butterfly, butterfly!

chinnakkannan
12th November 2014, 12:54 PM
hi all..

Still busy with meetings. Just browsed.. nice. welcome back krishnaji. you didnt read my AMRaja post vasu sir?

I will try to come in lunch

Happy birthday wishes to Susheelaamma.. Let her live another 100 years..

vasudevan31355
12th November 2014, 12:55 PM
dear vaasu sir

ரௌத்திரம் இதழில் திரு தமிழருவி மணியன் அவர்கள் கலையுலகின் பொற்காலம் என்று ஒரு தொடர் எழுதி வருகிறார் . மிகவும் அருமையாக இருக்கிறது .

Rgds

Gk

இன்னும் இல்லை. நிச்சயம் படிக்கிறேன் கிருஷ்ணா சார்.

gkrishna
12th November 2014, 01:07 PM
வாசு சார்

நேற்று இரவு ஓடி விளையாடு தாத்தா 'சின்ன நாக்கு ' பாடலை கேட்டேன். நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல். டி எம் எஸ் தான் என்னமா பாடி இருக்கிறார் . அதுவும் vkr நடிப்பில் 'அவன் கூட ஒருவகைக்கு அப்பன் தானம்மா உன் அப்பாவுக்கு தாலி கட்டிய அப்புறம் தானம்மா ' என்று பாடும் போது சம்திங் சுபெர்ப்

அது 'சிமிலி மூக்கா' அல்லது 'சிம்னி மூக்கா'

vasudevan31355
12th November 2014, 01:50 PM
சிமிழி மூக்கு கிருஷ்ணா சார் அது

vasudevan31355
12th November 2014, 01:52 PM
அதை விட வேடிக்கை அசோகனையும் சுருளியையும் காட்டி உன் சித்தப்பனும், பெரியப்பனும் பக்கத்திலே என்று வி.கே.ஆர் போடுவாரே ஒரு போடு. தொடரில் விவரமாக எழுதியிருக்கேன் கிருஷ்ணா சார்.

vasudevan31355
12th November 2014, 01:59 PM
வாசு சார்

நேற்று இரவு ஓடி விளையாடு தாத்தா 'சின்ன நாக்கு ' பாடலை கேட்டேன். நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல். டி எம் எஸ் தான் என்னமா பாடி இருக்கிறார் . அதுவும் vkr நடிப்பில் 'அவன் கூட ஒருவகைக்கு அப்பன் தானம்மா உன் அப்பாவுக்கு தாலி கட்டிய அப்புறம் தானம்மா ' என்று பாடும் போது சம்திங் சுபெர்ப்


'உன் அம்மாவுக்கு தாலி கட்டினகப்புறம்தானம்மா'

chinnakkannan
12th November 2014, 02:07 PM
//அபூர்வமான பாடலைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! இந்த முயற்சி எனக்கும் ரொம்பப் பிடிக்கும். வாழ்த்துக்கள்.// நன்றி வாசு சார்.. யெஸ்
அந்த..குளிக்குது ரோஜா நாத்து - தான் ரிஸெம்பிள் பண்ணுகிறது..

//தாலாட்டு
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித் தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்'

நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே நீ குளிக்கலாம் வா // அச்சாணி பாடல்கள் மூன்றுமே கேட்டிருக்கிறேன்..அஸ் பெர் ராஜேஷ்.. எனக்கும் தாலாட்டுப் பிடிக்கும்

வாசு சார்..நல்ல எழுத்து.. மேலே வையுங்கள் ( குட் ரைட் அப் கீப் இட் அப் இன் தமிழ்!!) :)

vasudevan31355
12th November 2014, 02:12 PM
வாசு சார்..நல்ல எழுத்து.. மேலே வையுங்கள் ( குட் ரைட் அப் கீப் இட் அப் இன் தமிழ்!!) :)

யப்பா! முடியல சாமி.:)

vasudevan31355
12th November 2014, 02:13 PM
சி.க சார்,

லஞ்ச் ஆச்சா? என்ன ஸ்பெஷல்? ஆச்சா? என்ன ஸ்பெஷல்?

chinnakkannan
12th November 2014, 02:28 PM
இனிமேல் தான் வாசு சார் :) அடை + மிளகாய்ப்பொடி+ கீரை மோர்க்கூட்டு +வெள்ளரிக்காய் சாலட்.. :) அவிடத்துல..

gkrishna
12th November 2014, 02:35 PM
அதை விட வேடிக்கை அசோகனையும் சுருளியையும் காட்டி உன் சித்தப்பனும், பெரியப்பனும் பக்கத்திலே என்று வி.கே.ஆர் போடுவாரே ஒரு போடு. தொடரில் விவரமாக எழுதியிருக்கேன் கிருஷ்ணா சார்.

'உன் அம்மாவுக்கு தாலி கட்டினகப்புறம்தானம்மா'

திருத்தத்திற்கு நன்றி வாசு சார்

உங்க பதிவை படித்து பார்த்து விட்டு தான் பாடலை கேட்டேன்.

எஸ் எ அசோகனின் 'வாழ்கையிலே பாதி போச்சு பட்டாளத்திலே மீதியும் போச்சு ஏமாததிலே ' ஒரு அழுகை அமர்க்களம்.

சுருளியின் அந்த கௌன் உடை :)

அஞ்சல் பெட்டி 520 எடுத்த டி என் பாலுவின் படம் ஓடி விளையாடு தாத்தா இதை தொடர்ந்து சட்டம் என் கையில்,நல்லதுக்கு காலமில்லை,சங்கர்லால் போன்ற படங்களை எடுத்தார். கமல்,ஸ்ரீப்ரிய நடித்து 'மரியா மை டார்லிங்' என்று படம் வந்தது . ஸ்ரீகாந்த் கூட பிரெஞ்சு கட் குறுந்தாடி வைத்து ஒரு ஸ்டில் உண்டு . இந்த படம் யார் டைரக்டர் ?
சங்கர் கணேஷ் இசை 'மரியா மை டார்லிங் ' நல்ல பாட்டு

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/Maria-My-Darling.jpg

vasudevan31355
12th November 2014, 02:53 PM
கிருஷ்ணா சார் ,

மரியா மை டார்லிங் படத்திற்கு இயக்கம் நம் 'பசி' துரை சார்.

vasudevan31355
12th November 2014, 02:56 PM
இனிமேல் தான் வாசு சார் :) அடை + மிளகாய்ப்பொடி+ கீரை மோர்க்கூட்டு +வெள்ளரிக்காய் சாலட்.. :) அவிடத்துல..

கத்தரிக்காய் முருங்கைக்காய் காரக் குழம்பு, பீன்ஸ் பொரியல், முட்டை ஆம்லெட், அஸ் யூஷுவல் ரசம், தயிர். அவ்வளவே சி.க.சார்.

gkrishna
12th November 2014, 03:12 PM
http://tamilspeak.com/wp-content/uploads/2014/11/kamal_hasan1_2190612g.jpg?w=600

கடந்த 7/11/2014 அன்று கமல் 60 வயதை எட்டியிருக்கிறார் .நேற்று இரவு 'கலக்க போவது கமல் ' என்ற நிகழ்ச்சி ஒன்று ஜெயா தொலை காட்சி ஒளி பரப்பியது. என் அலுவலக நண்பர் ஒருவர் உடன் பேசி கொண்டே அந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்தேன் . அவர் கூறிய ஒரு கருத்து.

கமல் 1960 களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகம் ஆனாலும் 76-77 களில் தான் கதாநாயகன் நிலைக்கு உயர்கிறார். கதாநாயகன் ஆனாலும் உடன் ரஜினி 79 வரை நிறைய படங்களில் கமல் படங்களில் உடன் தொடர்கிறார். 80 களில் இருந்து தனி ஹீரோ ஆகவே வலம் வருகிறார்.76-77 கால கட்டத்தில் தான் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, இளையராஜா,ருத்ரையா (காணாமல் போனவர்) போன்றவர்களும் தங்கள் கணக்கைத் தொடங்கினார்கள் .எல்லோரும் சொல்லும் தமிழ் வெகுஜன சினிமாவில் புதுமையின் பொற்காலம் ஆரம்பித்தது 76-77 களில். மேற்கண்ட பெயர்களில் மகேந்திரன் தவிர, அனைத்துக் கலைஞர்களின் ஆரம்ப கால முயற்சிகளில் கமலும் இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில், நல்ல திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற தாகத்துடன் வருபவர்கள் இயல்பாகவே கமலை நாடுவார்கள்.இதில் ஆச்சர்யம் என்ன என்றால் இயக்குனர் மகேந்திரன் எடுத்த ஒரு திரை படத்தில் கூட கமல் நடித்தது இல்லை .இருவருமே அறிவு ஜீவி என்று பெயர் எடுத்தவர்கள். மகேந்திரனின் இயக்கத்தில் கமல் நடிக்காததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ?

நல்ல கருத்தாகத்தான் தெரிகிறது

chinnakkannan
12th November 2014, 03:16 PM
வாவ்.. காரக்குழம்பு..ம்ம் கொஞ்சம் காரம் எனக்கு ஒத்துக்கொள்ளாது.. இங்கு சரவண பவனில் தருவார்கள்..கொஞ்சம் புளிப்பு தூக்கலாக இருக்கும்..நைஸ்..:)

**

பி.சுசீலாவின் பாடல் உங்களுக்கு வாசுசார்..

கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று சேய் நந்த பாலன் வந்தான்
நாளொரு ஆனந்த ராகம் தந்தான்..

கோபியர் தம்மை தொட்டு கொஞ்சிய கைகள் எந்தன்
கூந்தலை தொட வேண்டாம்
நான் கோடியில் ஒன்று அல்ல

கோவியன் பெண்மை என்னை கொஞ்சிட வர வேண்டாம்
கோவியன் பெண்மை என்னை கொஞ்சிட வர வேண்டாம்
இனி என் கோலமும் கெட வேண்டாம்

ராதையில் ஊடலுக்கும் கீதை படித்த கண்ணன்
கோதையை வசியம் செய்தான்

கோதையை வசியம் செய்தான்
அங்கு சோலை யமுனை வெள்ளம்
துள்ளி எழுந்து அவள் மேனியை தொடவும் செய்தான்

கண்ணன் மீண்டொரு கலகம் செய்தான்

**

கண்ணதாசன் பாட்டு எம்.எஸ்.வி. இசை..அழகிய பாடல்..

ம்ம் என்னதான் சொல்லுங்கள் ஊடலுக்கு அப்புறம் ஏற்படும் இன்பம் இருக்கிறதே அது நைஸ் தானே..(உங்க கிட்ட அமிர்தாஞ்சன் இருக்கா..கொஞ்சம் தலை வீக்கம் வலிக்குது.. நேத்தி வீட்ல சின்ன ஊடல் :) )



http://www.youtube.com/watch?v=9axt4KvdVTA

vasudevan31355
12th November 2014, 03:21 PM
கிருஷ்ணா சார்,

'மரியா மை டார்லிங்' படத்தில் ஒரு பாட்டு ஞாபகப்படுத்துறேன். கமல் பாடுவார். கேட்டவுடன் உங்களுக்கு ஞாபகம் வரலாம்.

ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி
அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னாடி


'ஒப்பங்கே எரடு கண்ணு கொட்டா யாக்கம்மா ' என்று இதே பாட்டை அப்படியே கன்னடத்தில் இதே 'மரியா மை டார்லிங்' படத்தில் கமல் அருமையாகப் பாடியிருப்பார். கிருஷ்ணா! பாடலின் ஆரம்ப இசையைக் கேளுங்கள். செம அசத்தலாக இருக்கும்.

இந்தப் படம் கன்னடம், தமிழ் இரண்டிலும் நேரிடையாகவே தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. மற்ற மொழிகளில் வந்ததா என்று தெரியவில்லை. கன்னடத்தில் உதய குமார், வஜ்ரமுனி கமல், ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து நடித்திருந்தனர்.

ஒரு மாதிரி சொதப்பல் படம்தான். துரைக்கும் ஆக்ஷன் படத்திற்கும் தூர தூரம். கொட்டாவிதான் வரும். சங்கர் கணேஷ் கொஞ்சம் காப்பாற்றுவார். அப்புறம் நம் கன்னக்குழி ஸ்ரீப்ரியா படத்தைத் தூக்கி நிறுத்துவார்தானே!


https://www.youtube.com/watch?v=2lgsidY0k3Y&feature=player_detailpage

'மரியா மை டார்லிங்' கன்னடத்தில் பாலா கலக்கல்.


https://www.youtube.com/watch?v=a9j_SeKjddo&feature=player_detailpage

அதே பாடல் தமிழில்


https://www.youtube.com/watch?v=5tAqk6Pb7E0&feature=player_detailpage

gkrishna
12th November 2014, 03:39 PM
'மரியா மை டார்லிங்' படத்தில் ஒரு பாட்டு ஞாபகப்படுத்துறேன். கமல் பாடுவார்

அருமை வாசு சார்

மரியா மை டார்லிங் நெல்லை பார்வதி திரை அரங்கில் முதல் நாள் பார்த்த அனுபவம். படம் பார்க்கும் போதே பயங்கர கொட்டாவி . பிறகு தான் தெரிந்தது . படம் கன்னடத்திலும் தமிழிலும் சேர்ந்து எடுத்து குப்பை ஆக்கிய படம் (பாடம்). நீண்ட நாள் தயாரிப்பு . ஸ்ரீப்ரியா கன்னக்குழி மட்டும் அல்ல . கொஞ்சம் குண்டு .. :) ஆகவும் இருந்த நேரம் . சி கே கவிதை வரிகள் சொல்வார் . சமீபத்தில் ஜெமினி பாலம் அருகில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பார்த்தேன். கன்ன குழி காணவில்லை .

gkrishna
12th November 2014, 03:55 PM
ஒரு சிறு பகிர்வு

http://3.bp.blogspot.com/-r9pwPNZsaWk/UfaRvpZnC_I/AAAAAAAAApI/kJQtEI2h108/s400/thangavelu.jpg

1971-ல் ஆனந்த விகடனில் வந்த பேட்டி- டணால் தங்கவேலு

கேள்வி- " நீங்கள் இருவரும் இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை ? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது திரையுலகம் உங்களை ஒதுக்கி விட்டதா?"

பதில் - " ரொம்பச் சங்கடமான கேள்வியைக் கேட்டுட்டீங்களே.." என்று தனக்கே உரித்தான ஒரு குரலுடன் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தார் தங்கவேலு .
" நானாகவும் ஒதுங்கலை;அவங்களாவும் ஒதுக்கிடலை.என்னமோ தெரியலே ,ஒரு 'பிரேக்' வந்துடுச்சி . இந்த 'பிரேக்' வந்து பத்து வருசம் ஆகப்போவுது . நான் நடிச்சுக்கிட்டிருந்த போது ஒரு கணிசமான தொகையை வாங்கிக்கிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு சில பேர் வந்து குறைந்த தொகையை வாங்கிக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. 'குறைந்த தொகை'யை மனசிலே வச்சுக்கிட்டு எல்லோரும் அந்தப் பக்கம் போயிட்டங்க .நானும் சரோஜாவும் மட்டும் இந்தப் பக்கம் தனியா நின்னுட்டோம். அவ்வளவுதாங்க விசயம்..."

கேள்வி - "இப்போ உங்க வாழ்க்கை வசதி எல்லாம் எப்படி?"

பதில் - " கலைவாணர் ஆசியாலே நான் அப்போ இருந்த மாதிரியே இப்போதும் ஸ்டெடியா,செளக்கியமா இருந்துக்கிட்டு வர்றேன். அதுலே பாருங்க, ஒரு விசேஷம்... நாங்க வெளியூருக்கு நாடகம் நடத்தப் போனா, அங்கே பார்க்கிறவங்க எல்லாம் நான் கல்யாண பரிசிலே சொன்ன டயலாகையே திருப்பி என்னைப் பார்த்துச் சொல்றாங்க. ' தங்கவேலு அண்ணாச்சி, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சி ! ' அப்படீன்னு கேட்கிறாங்க . இதுக்கு என்னங்க சொல்றது...!"

" ஆரம்ப காலத்துலே சினிமாவிலே நடிக்க சான்ஸ் கேட்டு கம்பெனி கம்பெனியா படியேறி இறங்கினவன் நான் . ' பாடத் தெரியுமா ?'னு கேட்பாங்க ;'நீஞ்சத் தெரியுமா ?'னு கேட்பாங்க . சிமென்ட் தரையிலே நெஞ்சு தேய நீஞ்சிக் காட்டியிருக்கேன் . எனக்குப் பொன்னாடை போர்த்த யாரையும் நான் அனுமதிக்கறதில்லே. வேணுமானா துப்பட்டியைக் கையிலே கொடுத்துடுங்கன்னு சொல்லி வாங்கிக்கிடுவேன் . ஏன்னா , ஒருத்தருக்குப் பொன்னாடை போர்த்தறாங்கன்னு சொன்னா , அந்த ஆள் அவுட்னு அர்த்தம் ! பாலையா அண்ணே கடைசி வரைக்கும் பொன்னாடை போர்த்திக்கலையே...!"

என்று சிரிக்கிறார் தங்கவேலு .

vasudevan31355
12th November 2014, 06:49 PM
மாலை மதுரம்.

வெற்றி வீரன் (1956)

http://i.ytimg.com/vi/8OFUXat7mvo/hqdefault.jpg

என்.டி.ஆர் நடித்த தெலுங்கு படம் 'ஜெயம் மனதே' (1956)

11 தியேட்டர்களில் ஆந்திராவில் நூறு நாட்கள் வெற்றி கண்ட படம் இது. தெலுங்கில் அஞ்சலிதேவி, சௌகார் ஜானகி, ரேலங்கி, மீனாகுமாரி நடித்திருந்தனர். தெலுங்கில் கண்டசாலா இப்படத்திற்கு இசை என்று நினைவு. இயக்கம் டி.பிரகாஷ்ராவ்.

தமிழில் 'வெற்றிவீரனா'க டப்பிங் கண்டது. வித்தியாசமான தாடி, மீசையில் என்.டி.ஆர் தோன்றும் பாடல். பாடகர் திலகம் தன் அமுதான குரலில் பாட, இதே பாடலை தெலுங்கில் 'ஒ சந்தமாமா... அந்தாள பாமா' என்று கண்டசாலா பாடியிருந்தார். உடன் லீலா பாடியிருந்தார். இந்தியிலிருந்து பாடலின் டியூனை சுட்டு இருந்தாலும் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பாடலைக் கேட்க மனம் மயங்குகிறது.

மாலை நேரத்தில் மனதை சொக்க வைக்கும் பாடல்.

ஓ எந்தன் பிரேமா
என் ஆசை பிரேமா
என்றுள்ளதோ பாக்கியமே


தமிழ் வடிவம்


https://www.youtube.com/watch?v=8OFUXat7mvo&feature=player_detailpage

'ஒ சந்தமாமா... அந்தாள பாமா'

தெலுங்கு வடிவம்


https://www.youtube.com/watch?v=AE2B8qM2rEM&feature=player_detailpage

ஹிந்தி வடிவம் ராஜ் ராஜ் சார் தருவார் என நம்பலாம்.

RAGHAVENDRA
12th November 2014, 09:47 PM
http://psusheela.org/photos/images/alb_legends41.jpg

நண்பர்களே...13.11.2014 ... அன்று 79 வயது நிறைவடைந்து 80வது வயதில் அடியெடுத்து வைக்கும் இசையரசி அவர்களுக்கு வாழ்த்துக் கூறும் வகையில் நாளை 13.11.2014 முழுவதும் அவர் பாடல்களாய் பகிர்ந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக் கூறலாமே... 80 பாடல்களை நாளை ஒரே நாளில் பகிர்ந்து கொண்டு புதிய சாதனையைப் படைக்கலாமே... வீடியோ தான் வேண்டும் என்பதில்லை. ஆடியோவை பகிர்ந்து கொண்டால் கூட போதும்..

RAGHAVENDRA
12th November 2014, 10:25 PM
இரவின் மடியில்

நம் தமிழ்த் திரையுலகைப் பொறுத்த வரையில் ஒரு விஷயம் மற்றும் சாஸ்வதமாக நடந்து வருகிறது. அதாவது, பாடல்களைப் பொறுத்த மட்டில் பல சமயங்களில் மிக மிக மிக அற்புதமான பாடல்கள் எல்லாம் அதிகம் பிரபலமாகாத படங்களில் இடம் பெற்று மனதைக் கொள்ளை கொண்டு ஆனால் கவனத்தை உரிய அளவில் பெறாமல் போய் விடுகின்றன.

அதற்கு உதாரணம் நாங்கள் படத்தில் ஸ்வர்ணலதா பாடிய, இளையராஜா இசையமைத்த பாடல்.

நெஞ்சமெல்லாம் நிறைந்த மதுரகானம்.

http://www.youtube.com/watch?v=YyOG5kEQKc4

நடிகர் திலகம், ஸ்ரீவித்யா, இளைய திலகம் மற்றும் பலர் நடித்தது.

rajeshkrv
13th November 2014, 12:51 AM
http://www.4shared.com/video/riC7065Fba/PSBday-360p.html

இசையரசிக்கு நான் உருவாக்கிய பிறந்த நாள் காணொளி

முகனூலில் நான் பதித்த வாழ்த்துப்படம்

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10395814_949122251784221_6100486497497456728_n.jpg ?oh=4cb29cb010f243c3d7d47950c15b2fab&oe=54E88F64&__gda__=1423015182_4aab483c06ab394f57b50598d102312 e

Richardsof
13th November 2014, 05:37 AM
இன்று இசை அரசியின் பிறந்த நாளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .இசை அரசியின் குரலை கேட்காதே நாளே இல்லை .தினமும் அவரது குரல் நம்முடன் இருந்து கொண்டே வருகிறது .
http://i57.tinypic.com/6jq878.jpg

என்னுடைய விருப்பமான பாடல் .



வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ..

கண்ணே பாப்பா என் கனி முத்து பாப்பா

உன்னை நான் சந்தித்தேன் ..நீ ஆயிரத்தில் ஒருவன் ..

மீனே மீனே மீனம்மா ... மீனை தொட்டது ..

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் ...

கண்கள் இரண்டும் உன்னை கண்டு ......

உன்னை வாழ்த்தி பாடுகிறேன் .....நீ வரவேண்டும் ...

உன்னை ஒன்று கேட்பேன் ..உண்மை சொல்ல வேண்டும்

என் கண்ணனுக்கு எத்தனை கோயிலோ .............

RAGHAVENDRA
13th November 2014, 06:52 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 01

இசையரசியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு இன்றைக்கு முழுதும் அவரது பாடல்களைப் பகிர்ந்து கொள்ள விருப்பம். தொடக்கமாக

காலத்தைக் கடந்து இவர் புகழ் பாடும் அட்டகாசமான பாடல்

http://www.youtube.com/watch?v=yRjfIhEpzSA

RAGHAVENDRA
13th November 2014, 06:56 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 02

ஆடவந்த தெய்வம் ... சொன்னாலும் கேட்காத உலகமுங்க..

http://www.inbaminge.com/t/a/Aada%20Vantha%20Deivam/

நண்பர்கள் தாங்கள் பங்களிக்கும் பாடலின் எண்ணிக்கையை தொடரலாம்.

RAGHAVENDRA
13th November 2014, 06:57 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 03

ஆடிப்பெருக்கு - காவேரி ஓரம் கரை சொன்ன காதல்

http://www.inbaminge.com/t/a/Aadi%20Perukku/

RAGHAVENDRA
13th November 2014, 07:00 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 04

ஆனந்த ஜோதி ... காலமகள் கண்திறப்பாள் சின்னையா..

http://www.inbaminge.com/t/a/Aanandha%20Jothi/

RAGHAVENDRA
13th November 2014, 07:01 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 05

அழகே வா அருகே வா - ஆண்டவன் கட்டளை

http://www.inbaminge.com/t/a/Aandavan%20Kattalai/

RAGHAVENDRA
13th November 2014, 07:04 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 06

ஆத்திலே தண்ணி வர - ஆட்டுக்கார அலமேலு

http://www.inbaminge.com/t/a/Aattukkaara%20Alamelu/

RAGHAVENDRA
13th November 2014, 07:07 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 07

ஆடாமல் ஆடுகிறேன் - ஆயிரத்தில் ஒருவன்

http://www.inbaminge.com/t/a/Aayirathil%20Oruvan/

RAGHAVENDRA
13th November 2014, 07:08 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 08

மலர்கொடி நானே - அடுத்தவீட்டுப் பெண்

http://www.inbaminge.com/t/a/Adutha%20Veettu%20Pen/

RAGHAVENDRA
13th November 2014, 07:12 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 09

பொதிகை மலை சந்தனமே - அக்கரைப் பச்சை

http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/

RAGHAVENDRA
13th November 2014, 07:13 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 10

உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன் - அல்லி

http://www.inbaminge.com/t/a/Alli/

rajeshkrv
13th November 2014, 07:25 AM
ராகவ் ஜி
ரொம்ப நாள் கழிந்து பார்க்கிறேன். வணக்கம்.

இசையரசியின் பாடல்களில் முதல் பாடலாக சிட்டுக்குருவி.. பாடல் அழகா .. பாடியவர் அழ்கா இல்லை அதை அபி நயம் செய்த சரோஜாதேவி அழகா
மொத்தத்தில் அழகோ அழகு.

rajeshkrv
13th November 2014, 07:26 AM
எண்பதிலும் இளையவர் இசையரசி - 06

ஆத்திலே தண்ணி வர - ஆட்டுக்கார அலமேலு

http://www.inbaminge.com/t/a/Aattukkaara%20Alamelu/

ஆத்திலே மீன் பிடிக்க என்று ஆரம்பமாகும்

rajeshkrv
13th November 2014, 08:20 AM
பிறந்த நாள் பரிசாக இதோ
இரண்டு வித்தியாசமான பாடல்கள்

ஒன்று .. ஹிந்தியில் அனூப் ஜலோட்டாவுடன் இசையரசி பாடிய அற்புத பாடல்
மொஹபத் கி பைகாம் திரையில் பப்பி லஹரியின் இசையில்
(தரவேற்றியவர் ஜானகி என்று தவறாக குறிப்பிட்டுள்ளார்)

https://www.youtube.com/watch?v=-wX--3G-9AM


அதே போல் சூலமங்கலம் என்று தவறாக குறிப்பிடப்பட்ட இசையரசி பாடல்
https://www.youtube.com/watch?v=eGemQwQtPis

vasudevan31355
13th November 2014, 08:25 AM
இசையரசிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

http://www.iluvcinema.in/telugu/wp-content/uploads/2013/11/p-sushella3.jpg

http://actoractressimageswallpapers.files.wordpress.com/2012/02/p_susheela_celebrity_21.jpg

vasudevan31355
13th November 2014, 09:04 AM
இசையரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை

http://4.bp.blogspot.com/-DHagPuSHiHQ/UKRyw3RQU1I/AAAAAAAAMjw/kHxRX0ve-Kk/s1600/p.suseela.jpg

எண்பது அகவை காணும் எங்கள்
எழுச்சிப் பாடகியே

எவரும் எட்ட முடியாத
எவரெஸ்ட் பாடகியே

மனதுக்கு சுகம் தருவதால்
சுசீலா என்று பெயர் வைத்தனரோ

நவரசங்களைப் பிழிந்து நடிப்பில்
காட்டினான் எங்கள் நடிக வேந்தன்

நீ அதே ரசங்களை உன் குரலில் காட்டினாய்

வசியம் கலந்த வசீகரக் குரலாலே
வையம் கவர்ந்த இனிய குரலாளே

உன் நாவசைந்தால் நாதம் தானே ஒலிக்கும்

தேனடையிலிருந்து எடுத்து
பிரம்மா உன் நாவைப் படைத்தானோ

உன் குரல் ஒலித்தால்
பாறையிலும் பாசம் சுரக்குமே

கடவுளுக்கும் களங்கங்கள் உண்டே
உன் குரலில் என்றும் அது உண்டா

உலகில் முழுமை பெற்றதாய்
நான் கருதுவது இரண்டு

ஒன்று என் மன்னவனின் நடிப்பு
அடுத்து உன் கல்கண்டு குரல்

உன் பெயரை உச்சரித்தாலே
உடலில் ஒரு மரியாதை பிறக்குமே

என் பாட்டன் முதல் என் புதல்வன் வரை
ரசித்து மகிழும் ரசகுல்லா குரல் அமுதமே

உன் குரல் கேட்டால் ரத்த அழுத்தம் சரியாகுமே

உன் குரல் கேட்டால் இதயத் துடிப்பு சீராகுமே

உன் குரல் கேட்டால் நிதமாய் சுகமாய் நித்திரை வருமே

உன் குரல் கேட்டால் உடல் சிலிர்ப்பு ஏற்படுமே

நாவின் நரம்புகளெல்லாம் நாத வித்தை கற்றவளே

பயணங்கள் முழுவதும் எங்களுடன் குரலால் பயணிப்பவளே

மன்னனவன் வந்தானடி என்று
என் மன்னவனுக்கு நடையழகு கொடுத்தவளே

நீராடும் கண்கள் இங்கே என்று
நீங்காமல் என்றும் கலங்க வைப்பவளே

என்ன என்ன வார்த்தைகள் சொல்லி
உன்னை நான் பாராட்ட

தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தவளே

இந்தப் இசைபூமிக்கு அவன் இட்ட
ப(பா)ட்டுச் சட்டை நீதானோ

அப்பழுக்கில்லாத பிறவியே

எங்கள் பிறவியே உன் குரல்
கேட்டுத்தானே உயிர் வாழ்கிறது

பண்பது கொண்டாடும் எண்பது
இசைக்கு எண்பதாவது வயது

உலகழிந்தாலும் அழியாதது
மன்னவன் நடிப்பு
உயிரிழந்தாலும் உணரக் கூடியது
உன் குரலின் இனிப்பு

வாழ்த்தத்தான் வயதில்லை எனக்கு
என் கலை மகளின் கால்கள்
தொட்டு பூஜிக்கிறேன்

இன்னும் 800 கண்டு எக்காலமும்
உன் அமுதக் குரலால்
இன்பம் தருக.

இறைவனை இறைஞ்சி வேண்டுவது
இது மட்டுமே

rajeshkrv
13th November 2014, 09:10 AM
வாசு ஜி

தமிழ் உமது விரலில் விளையாடுகிறது. இசையரசிக்கு அற்புத பாட்டுமாலை தொடுத்துவிட்டீர்

vasudevan31355
13th November 2014, 09:20 AM
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 1

இந்த ஒரு பாடல் போதும் என் வாழ்நாள் முழுதும் இனம் புரியா இன்ப, துன்பக் கலவரத்துடன் வாழ.

நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே

காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த பின்னே நிம்மதி ஏது நிம்மதி ஏது

'நீராடும் கண்கள் இங்கே' முடிவில்...ஏ....... ஏ... இந்த அம்மா கொடுக்கும் அந்த வைப்ரேஷன்ஸ், அந்த அதிர்வு
அப்படியே நெஞ்சுக்குள் நுழைந்து நொறுக்குமே சுக்கு நூறாக நம் இதயத்தை. கண்களில் கண்ணீர் நயாக்ராவாகப் பெருகுமே.


http://www.youtube.com/watch?v=4PQUdSVZigA&feature=player_detailpage

vasudevan31355
13th November 2014, 09:40 AM
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 2

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்

அடடா! இப்படியெல்லாம் பாடத்தான் முடியுமா? உலகில் உள்ள அத்தனை இனிப்புக்களும் ஒன்று சேர்ந்தாலும் இந்தப் பாடலுக்கு, இந்த இசைக்குயிலின் குரலுக்கு அவை ஈடு செய்யத்தான் முடியுமா?

இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கனத்து கண்களில் என்னையுமறியாமல் தாரைதாரையாய் கண்களில் கண்ணீர் பெருகுகிறதே. ஏன் அப்படி? யாராவது விளக்க இயலுமா?


http://www.youtube.com/watch?v=ygjqxrk-Hsc&feature=player_detailpage

vasudevan31355
13th November 2014, 09:48 AM
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 3

பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

கங்கையின் வெள்ளம் தண்ணீரோ
இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கண்ணனின் மனமும் கல்மனமோ
எங்கள் மன்னனுக்கிதுதான் சம்மதமோ

கல்யாணம் ஆகாமல் தவிக்கும் கன்னியர்களின் மன நிலையை அப்படியே தன் குரல் பாவங்களால் பிரதிபலித்த குயிலின் சோக கீதம். ஆண்களுக்கே அழுகை அடக்க முடியாத போது பெண்களுக்கு?


http://www.youtube.com/watch?v=T6JLCKmwhbk&feature=player_detailpage

rajeshkrv
13th November 2014, 09:53 AM
வாசு ஜி
வணக்கம்
நலம் தானே..

vasudevan31355
13th November 2014, 10:01 AM
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 4

சோகம் மட்டுமா? என்ன வேண்டும் கேட்டுக்கோ. கேட்டதை உடனே வாங்கிக்கோ.

இதோ. இந்த அமைதிப் புறா ஆக்ரோஷப் புறாவாக அலம்பல் பண்ணுவதைப் பாருங்கள். சாது மிரண்டால்? பாடல் இப்படித்தான் வரும்.

பாவை பாவைதான்
ஆசை ஆசைதான்
பார்த்துப் பேசினால்
ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ

எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
யார் யாரிடம் கண்டதோ தந்ததோ

கசப்பும் இனிப்பும் மனத்தின் நினைப்பு
ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது

ஜொலிக்கும் விளக்கில் இருக்கும் நெருப்பு
பாதையும் காட்டலாம் தீயையும் மூட்டலாம்

அருமையான வரிகளுக்கு அளவிட்டுவிட முடியாத குரல்வளம்.


https://www.youtube.com/watch?v=tejy0MKbyPw&feature=player_detailpage

vasudevan31355
13th November 2014, 10:04 AM
நலமே ராஜேஷ்ஜி! தாங்களும் சுகம்தானே! இசையரசியின் பிறந்த நாளுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள் தங்களுக்கு. அம்மாவுக்கு வாழ்த்துக் கூறினீர்களா? என்னுடைய வாழ்த்துக்களையும் கூறவும். நம் திரி நண்பர்களின் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தவும்.

rajeshkrv
13th November 2014, 10:13 AM
நலமே ராஜேஷ்ஜி! தாங்களும் சுகம்தானே! இசையரசியின் பிறந்த நாளுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள் தங்களுக்கு. அம்மாவுக்கு வாழ்த்துக் கூறினீர்களா? என்னுடைய வாழ்த்துக்களையும் கூறவும். நம் திரி நண்பர்களின் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தவும்.

அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் கூறி ஆசியும் பெற்று விட்டேன்.. எல்லோரது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டேன்

rajeshkrv
13th November 2014, 10:14 AM
பாவை பாவை தான் ஒரு அசுரப்பாடல் ... மிகவும் பிரமாதம்

vasudevan31355
13th November 2014, 10:20 AM
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 5

இதோ! இன்னொரு கானம். அசைத்துப் பார்க்க முடியாத ஆணித்தரமான குரல்வளத்தில். பெண்மையின் பெருமை பேசும் தேசிய கீதம். காதலின் மகத்துவத்தை உணர்த்தும் காயகல்பக் குரலில்.

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....

மன்னவனே ஆனாலும் பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும்
வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளமுன்னைச் சேராது

தவறு செய்யாதே
அருகில் வராதே நில்.. நில்.. நில்...

கட்டளை என்றால் அப்படி ஒரு கட்டளை. மன்னவனுக்கே. இடுவது இசையரசி.

என்ன ஒரு வாதம்?! என்ன ஒரு அசையா தன்னம்பிக்கை?!

குரலில் தெரியும் அந்த அவசிய ஆணவ கர்வம். என்னை அதிகாரத்தால் அடி பணிய வைத்துவிட முடியாது என்ற எகத்தாளம் பாடலின் கருத்துக்கு ஏற்ப. குரலுக்குக் கூடத்தான் இந்த சவால்.

ஆயிரம் பாடகி பாடட்டுமே
ஆயிரம் குரல்கள் கேட்கட்டுமே
எங்கள் அனைவரின் நெஞ்சம்
உன் குரலுக்கென்றே சொல் சொல் சொல்

சரிதானே!


https://www.youtube.com/watch?v=2fnEp2K9gUs&feature=player_detailpage

gkrishna
13th November 2014, 10:20 AM
http://tamil.filmibeat.com/img/2013/11/13-1384332539-p-susheela4-4600.jpg

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு ரசிகர்களை தனது தேன் குரலில் மயங்கச் செய்த பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆந்திராவில் இருந்து வந்து தமிழகத்தை தனது இசை மழையால் நனைத்த அவரின் பிறந்தநாள்

1950ம் ஆண்டு சுசீலா சென்னை வானொலியில் நிலைய பாடகியாக சேர்ந்தார். பாப்பாமலர் என்ற நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த அவருக்கு பெற்றதாய் என்ற படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தவர் director கே.எஸ்.பிரகாஷ்ராவ். இசை அமைப்பாளர் நாகேஸ்வரரவ் 1953ம் ஆண்டு பெற்றதாய் படத்தில் எதற்கு அழைத்தாய் என்ற பாடலை அவர் ஏ.எம். ராஜாவுடன் சேர்ந்து பாடினார்.

மாலையில் மல்லிகை.. அந்தியில் பஞ்சனை.. ஊரெல்லாம் பார்க்குதே... உன்னிடம் கேட்கிறேன்... என்று சரணத்தில் ஆரம்பிக்கும் சுசீலா ஒரு மந்திரம் போட்டது போல பாட்டிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். எஸ்.பி.பி யை பற்றியும் சொல்லவேண்டிய தேவை இல்லை. ஒரு காதல் பாடலுக்கு எங்கு குழைய வேண்டுமோ அங்கு குழைந்து சிணுங்கி எல்லாம் செய்வார் எஸ்.பி.பி. இப்பாடலிலும்...

http://www.youtube.com/watch?v=s5_JDftkVic

gkrishna
13th November 2014, 10:25 AM
இது தான் என் நிறைய நண்பர்கள் மொபைலோட காலர் டுயூன். இந்த பாட்டை கேட்பதற்காகவே நிறைய போன் வரும் அப்படின்னு சொல்வாங்க ஏன் கேட்டா பாட்டு நல்லா இருக்காம். பாட்டோட ஆரம்பித்தில பேசக்கூடாதுன்னு எஸ்.பி.பி ஆரம்பிச்சதும் படத்தில் சிலுக்கு ரஜினியை விட்டு சினுங்கிகிட்டே மான் போல துள்ளி ஓடுவாங்க. அப்பப்பா... இதிலும் எஸ்.பி.பி யின் ரகளை அதிகம். அந்த ரகளையை ஓரம் கட்டும் அருமையான பி. சுசீலாவின் காதல் ததும்பும் குரல்

http://www.youtube.com/watch?v=8lFb3vES6h0

gkrishna
13th November 2014, 10:26 AM
காத்தோடு பூ உரச... பூவ வண்டுரச...அன்புக்கு நான் அடிமை

இது ராஜாவின் மணிமகுட பாட்டு. பல்லவி ஆரம்பிக்கும் முன் ஒரு காற்றில் இலை பறந்து கீழே எப்படி விழுமோ அதுபோல ஒரு வேணுகானம் கிளம்பும் பாருங்கள். கொஞ்சம் கேளுங்களேன். அதற்க்கப்புறம் சுசீலாம்மா ஆரம்பிப்பாங்க. தூள். "உன்னோடு நான்.. என்னோடு நீ.. பூவா காத்தா உரச..." டாப்.

http://www.youtube.com/watch?v=h-TUe0gQsck

rajeshkrv
13th November 2014, 10:29 AM
கிருஷ்ணா ஜி வருக

கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்குனர். பெற்றதாய்க்கு இசை பெண்டியாலா நாகேஸ்வரரவ்

gkrishna
13th November 2014, 10:29 AM
வாசு ஜி ,ராஜேஷ் ஜி

காலை வணக்கம் . சுசீலா அம்மாவின் 80வது பிறந்த நாள் இனிய வாழ்த்துகள் .

rajeshkrv
13th November 2014, 10:30 AM
இது தான் என் நிறைய நண்பர்கள் மொபைலோட காலர் டுயூன். இந்த பாட்டை கேட்பதற்காகவே நிறைய போன் வரும் அப்படின்னு சொல்வாங்க ஏன் கேட்டா பாட்டு நல்லா இருக்காம். பாட்டோட ஆரம்பித்தில பேசக்கூடாதுன்னு எஸ்.பி.பி ஆரம்பிச்சதும் படத்தில் சிலுக்கு ரஜினியை விட்டு சினுங்கிகிட்டே மான் போல துள்ளி ஓடுவாங்க. அப்பப்பா... இதிலும் எஸ்.பி.பி யின் ரகளை அதிகம். அந்த ரகளையை ஓரம் கட்டும் அருமையான பி. சுசீலாவின் காதல் ததும்பும் குரல்

http://www.youtube.com/watch?v=8lFb3vES6h0

இன்று காரில் இந்த பாடலை கேட்ட என் மனைவி ஓ இது பி.எஸ்ஸா .. என்று கேட்க நாம் ஆமாம் என்று கூற
அதான் ஹை பிட்ச்சில் கூட தெளிவா கேட்குது கீச்சுன்னு இல்லை என்று சொன்னாள் .. அப்படி ஒரு குரல்.

gkrishna
13th November 2014, 10:30 AM
thanks raajesh sir

corrected

Rgds

Gk

vasudevan31355
13th November 2014, 10:32 AM
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 6

என் நெஞ்சு உன்னை அகலாது
அன்பை அசைக்க முடியாது

'இந்தி டப்பிங் என்றால் என்ன? அப்படியே தமிழ்ப் பாடலாய் என்றைக்கும் ரசிக்கும்படி மாற்றித் தருவேன்' என்று 'அகலாது' என்ற வார்த்தையின் 'து' எழுத்து உச்சரிப்பை தூ என்று அதாவது அகலாதூ..... என்று இந்தி வெர்ஷனுக்கு ஏற்பப் பாடி தன் இளங்கிளிக் குரலால் ரசிக்க வைத்த சுசீலா அம்மாவின் விந்தை.

'அன்பை' என்ற சொல்லைக் கூட

'அன்' என்று உச்சரித்து பின் 'பை' என்று தனியாக உச்சரிக்கும் அழகு.

விசித்திரமான குரல்வளத்தில் சித்திரக் குரலாளின் பாடல்.


https://www.youtube.com/watch?v=k1blYVJeVKI&feature=player_detailpage

gkrishna
13th November 2014, 10:33 AM
ராஜேஷ் சார்

இளையராஜா சில பாடல்களை தேடி தேடி சுசீலா அம்மாவிடம் கொடுப்பார் .அதில் இதுவும் ஒன்று .
அதே போல் தான் 'நதியோரம் நாணல் ஒன்று நாட்டியம் ஆட ' மற்றும் 'நிலவு நேரம் இரவு காயும் வானிலே ' விரசம் இல்லாத பாடல் - அன்னை ஒரு ஆலயம்

http://www.youtube.com/watch?v=tzKF1KLnpoE

rajeshkrv
13th November 2014, 10:36 AM
இசையரசியின் சில அரிதான பாடல்கள் இதோ

வாசு ஜி..கிருஷ்ணா ஜி கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்

வாசு ஜி, ஹிந்தி பாட்டு கேட்டீங்களா.. சங்கதிகளும் ஒவ்வொன்றும் வழுக்கி செல்லும் குரலில்..


சென்று வா நிலா என்ற படத்தில் பூங்காற்றே என்ற பாடல் பாடகர் திலகத்துடன்

http://www.4shared.com/mp3/6iBK2iwaba/Poonkatre-Chendru_vaaa_nila_TM.html

ஓட்ட பானையில நண்ட வுட்டா .. அருமையான கிராமிய பாடல் முன் ஒரு காலத்தில் திரைப்படத்தில்

http://www.4shared.com/mp3/SNkBb6etba/Otta_panayle_nanda_vitta-PS.html

131 நிமிடங்கள் திரையில் ஒலித்த கும்பகோணம் மாமா

http://www.4shared.com/mp3/SG7Eq21wce/Kumbakonam_Mama-PS.html

கண்ணதாசன் இறந்த போது எம்.எஸ்.வி இசையில் வாலி ஐயாவின் வரிகளில் கண்ணதாசன் புகழ் பாடும் பாடல்

http://www.4shared.com/mp3/X9QfhIVuba/Kaaviya_Nilave__tribute_to_kan.html

gkrishna
13th November 2014, 10:38 AM
மேலும் இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் சுசீலா அம்மா பாடி இருந்தால் இன்னமும் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு மனதில் தோன்றிய இரண்டு பாடல்கள்

1.அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு
2.அந்த புரத்தில் ஒரு மகாராஜன் - தீபம்

rajeshkrv
13th November 2014, 10:42 AM
மேலும் இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் சுசீலா அம்மா பாடி இருந்தால் இன்னமும் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு மனதில் தோன்றிய இரண்டு பாடல்கள்

1.அந்தி மழை வரும் நேரம் - முந்தானை முடிச்சு
2.அந்த புரத்தில் ஒரு மகாராஜன் - தீபம்

தீபம் திரையில் சுசீலாம்மா பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இது மாதிரி பல பாடல்கள் உண்டு . அல்வா மாதிரி சுசீலாம்மாவிற்கு போயிருக்க வேண்டிய பல பாடல்கள் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் காலத்தின் கோலம்

gkrishna
13th November 2014, 10:42 AM
thanks raajesh sir

அபூர்வ பாடல்களாக சொல்லி வருகிறீர்கள்
நிச்சயம் இரவு நேரம் தனியாக ஒதுக்கி கேட்க வேண்டிய பாடல்கள்

சுசிலா அம்மாவின் உச்சரிப்பு பிசகாத பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..

தேனாக இனிக்கும் ’ஆலய மணியின் ஓசையை'

http://www.youtube.com/watch?v=GN2a7WO3wkI

gkrishna
13th November 2014, 10:48 AM
raajesh sir /vaasu sir

வடலூர் திருஅருட்பா இசை விழா நிகழ்ச்சி ஒன்றில் சுசீலா அம்மா பாடிய வள்ளலார் அடிகளாரின் திரு அருட்பா பாடல் அடங்கிய காசெட் வெளியிடப்பட்டது நினைவிற்கு வருகிறது. மிக அருமையாக இருக்கும் . youtube இல் இருக்கிறதா என்று தெரியவில்லை

gkrishna
13th November 2014, 10:51 AM
சுசீலா அம்மாவின் எளிமையான பேச்சு ஒன்று தூத்துகுடி பாராட்டு விழா ஒன்றில்

கடலின் ஆழத்தை தெரிந்து விடலாம். ஆனால் இசையின் ஆழம் தெரியாது. அலைகள் ஓய்வது இல்லை. அதே போன்று பாடல்களும் ஓய்வது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடல்களாக இருந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

தூத்துக்குடி மக்கள் டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தீர்கள். கடவுளின் அனுகிரகத்தால் நான் இங்கு வந்து உள்ளேன். நான் முதன் முதலில் ‘எதுக்கு அழைத்தாய், ஊதல் ஊதி ஜாடை காட்டி..’ என்ற பாடல் மூலம் பாடகியானேன். அதன்பிறகு என்னை மிகவும் பிரபலம் அடைய செய்த பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் உள்ள செல்வமன்றோ.., உன்னை கண்தேடுதே... அன்பில் மலர்ந்த நல் ரோஜா என்னும் தாலாட்டு பாடல்கள் என்னை பிரபலப்படுத்தின.

மேலும் மயங்குகிறாள் ஒரு மாது... கங்கைக்கரை தோட்டம், அன்புள்ள அத்தான், அவள் என்னைத்தான், உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன், 16 வயதினிலே, கண்ணுக்கு மையழகு போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் என்னை மிகவும் பிரபலப்படுத்தியது. எல்லோரும் இசைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நாங்கள் ஒரு கருவிதான்

gkrishna
13th November 2014, 10:55 AM
இன்று வெளியிட்டு உள்ள சுசீலா அம்மா பிறந்த நாள் முன்னிட்டு

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02200/j_2200816h.jpg

தென்னிந்திய திரை உலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலாவின் பிறந்த நாள் இன்று. அவரை பற்றிய அரிய முத்துகள் பத்து...

 ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசை யில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரா வின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.

 பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாட வைத்தார். 1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னைக் கண் தேடுதே…’ பாடல்களால் பிரபலமடைந்தார்.

 பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜிக்கி போன்ற பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பின்னணி உலகில் இந்த இளம் பாடகியின் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. தனித்தன்மை வாய்ந்த தன் குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் ஹிட் பாடல்களை அளித்த இந்த இசையரசியின் ஆட்சி, அரை நூற்றாண்டுகள் தொடர்ந்தது.

 1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம். சவுந்திரராஜன், கன்னடத்தில் பி.பி. நிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. குறிப்பாக, டி.எம். சவுந்திரராஜனுடன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.

 தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

 5 முறை தேசிய விருதுகள், பத்ம பூஷன் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில அரசினர் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என பல மொழிப் படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

 இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து வந்தார். தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

 பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

 ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்த நாளான நவம்பர் 13 அன்று இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வரும் வருவாயில், வறுமையில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர பென்ஷன் தொகையை அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.

gkrishna
13th November 2014, 11:01 AM
http://www.youtube.com/watch?v=P5p8joVY5nU

மக்கள் திலகத்தின் ரிக்க்ஷகாரன் திரை படத்தில் 'பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன' - நடிகை மஞ்சுளாவின் நாட்டிய திறைமையும் அவருக்கு எளிதாக பொருந்தும் சுசீலா அம்மா அவர்களின் குரல் இனிமை யும்இணைந்து கட்டி போடும் பாடல்

gkrishna
13th November 2014, 11:08 AM
பவானி திரை படத்தில் டி எம் எஸ் ,சுசீலா ,பி பீ எஸ்,ஈஸ்வரி இணைத்து கலக்கும் மெல்லிசை மன்னர்

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...உந்தன் நெஞ்சினில் கொடுத்துவிடும்..

இரவே வருக... உறவே வருக.

http://www.youtube.com/embed/S1UyEzxDNPY

vasudevan31355
13th November 2014, 11:19 AM
வணக்கம் கிருஷ்ணாஜி!

parthasarathy
13th November 2014, 11:27 AM
ஏகப்பட்ட வேலைகள் மீட்டிங்குகள்... இருந்தாலும், ஒரு ஐந்து நிமிடம் என்னை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்ட பாடகி பி.சுசீலாவுக்காக...

என் மனதில் என்றுமே நிலைத்துவிட்ட பாடல்கள்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து - புதிய பறவை (நம்மவரின் அற்புத மூவ்மேண்டுகள் மற்றும் சரோஜா தேவியின் எனர்ஜிக்காகவும் தான்!)

பார்த்த ஞாபகம் இல்லையோ - புதிய பறவை (நடிகர் திலகத்துக்காகவும் தான் என்பதை சொல்லத்தான் வேண்டுமோ!)

கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ - மன்னாதி மன்னன் - வெடிக்கும் சோகம் என்பார்களே - அப்பப்பா - இப்படியும் ஒருவரால் பாட முடியுமா!

உன்னை நான் சந்திதேன் - ஆயிரத்தில் ஒருவன் - இதுவும் சோகம் - ஆனால் என்ன ஒரு வித்தியாசம் முந்தைய பாடலுக்கும் இதற்கும்!

வா என்றது உருவம் - காத்திருந்த கண்கள்

சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது - தங்கை

மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி - அவளுக்கு என்று ஓர் மனம் - நடிப்பவருக்கு இருக்க வேண்டிய சுய பெருமிதத்தை விட இவரது குரலில் பெருமிதம் தொனிக்கும்!

மண மேடை மலர்களுடன் கீதம் - ஞான ஒளி (என் நெஞ்சிலும் நீங்க இடம் பெற்ற அந்தோணி!)

காண வந்த காட்சி என்ன - பாக்கிய லக்ஷ்மி

அத்தானின் முத்தங்கள் - உயர்ந்த மனிதன்

அமுதைப் பொழியும் நிலவே - தங்க மலை ரகசியம்

நூறாண்டு காலம் வாழ வேண்டும் இசையரசியே!

இன்னும் வரும்...

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

rajeshkrv
13th November 2014, 11:36 AM
parthasarathy sir. super.

rajeshkrv
13th November 2014, 11:36 AM
Melody got a second life on 13-Nov-1935. Yes Music was redefined on this day by Maa saraswathi by sending her incarnation to this Bhoomi (earth) to please our ears with her honey soaked voice. Anyone can sing but what she sings no one can and that's the difference. For Me there is no best male voice or female voice... just the BEST VOICE and it's Amma's voice in this whole UNIVERSE. Her vocal chords embrace me with kindness, devotion, melody, divinity, happiness every emotion of human life.. She is a dictionary for singing, encyclopedia for singing and bible for singing .. No other female singer can near her for all these qualities and above all humble human being. I'm so blessed to know her, talk with her, share songs with her and what not. The only woman whom i adore more than my mother, sister or wife is Gaana Saraswathi.. Words are not enough in any language to praise this Melody queen. I'm ready to sacrifice my life to add more years to her LIFE and i pray to god to bless her with good health and happiness .. so that the million dollar smile stays the same .. Amma Sathakoti Pranams at your FEET . (musical slave - Rajeshkumar Venkatasubramanian)

chinnakkannan
13th November 2014, 11:49 AM
அபாரம் ராகவேந்தர்சார், வாசு சார், க்ருஷ்ணா ஜி ராஜேஷ் ஜி..பார்த்த சாரதி சார்..சுசீலாம்மாவின் பாமாலை கோர்த்த விதம்

தாமாக நெஞ்சுருகும் தன்னிறைவைக் கொண்டுவிடும்
பாமாலைப் பாடலால் பார்

**
இனி
குயில்நினைவைக் கொண்டுவிட்ட குட்டியானை எந்தன்
பையில் ஒலித்திடும் பாட்டு(கள்)

*பை – உடம்பு!!

அடுத்த போஸ்டில்

chinnakkannan
13th November 2014, 11:55 AM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 1

அழைப்பது வெண்ணிலவை ஆற்றாமை சொல்லும்
கலைப்பா களிக்கலாம் காண்..

*
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல் போனதேன்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QoVumrtuJds

chinnakkannan
13th November 2014, 11:59 AM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 2

உருகித் தலைவியும் ஊக்கமாய்க் சொல்லி
மருகிடும் நற்பாடல் ஆம்..
*

மலரும் வான் நிலவும் மின்னும் அழகெல்லாம் உன்
எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க - என்
தலைவா உனக்கிது வேடிக்கையோ?

gkrishna
13th November 2014, 12:01 PM
நண்பர்கள் தொகுக்கும் சுசீலா அம்மாவின் எல்லா பாடல்களுமே அருமை .

chinnakkannan
13th November 2014, 12:04 PM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 3

மிஞ்ச வொருபாட்டு மேதினியில் தானுண்டா
நெஞ்சினில் நின்றிருக்கும் ஆம்
*
பூப்பூவாய்ப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
பூவிலே சிறந்த பூ என்னபூ அன்பு

மலர்களிலே கேட்டதற்கு மரங்கள் வந்து பதிலைச் சொன்னால்
மனதிற்குள்ளே தோன்றும் பூ என்ன பூ
மதிப்பு
ம்ம் மனதிற்குள்ளே தோன்றுவது கசப்பு

http://www.youtube.com/watch?v=1VgykXmqfhc&feature=player_detailpage

chinnakkannan
13th November 2014, 12:07 PM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 4

ஆதலால் நானிங்கே ஆர்வமாய்க் கேட்டிடுவேன்
காதலன் நெஞ்சுவக்கும் கண்

*

குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்கவே வரவேண்டும்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nAraoNbwb9g

gkrishna
13th November 2014, 12:10 PM
தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் வெளி வந்த மேக சந்தேசம் சுசீலா அம்மாவின் திறமைக்கு ஒரு மணி மகுடம் போல் அமைந்தது என்றால் அது மிகை ஆகாது. 6 அல்லது 7 பாடல்கள் என்று நினைக்கிறன் .பெண் குரல் சுசீலா அம்மா மட்டுமே . ரமேஷ் நாய்டு இசை .அம்மாவுக்கு தேசிய விருது பெற்று தந்த பாடல் 'பிரிய சருஷீலெ'

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/bd/Megha_Sandesham.jpg/220px-Megha_Sandesham.jpg

http://www.youtube.com/watch?v=4NWs_rKxL6g

chinnakkannan
13th November 2014, 12:11 PM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 5

கண்ணுக்குள் வந்தே கலகத்தைச் செய்தவனை
திண்ணமாய்க் கேட்கின்ற தோழியே – அன்னமே
நன்றாகச் சொல்லிடுவேன் நாவலர் தாமென்றே
எண்ணி மகிழும் இதழ்.!

*

சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ
இந்தக் கட்டிக் கரும்பினைத் தொட்டுக்குழைத்திடத் தான் வந்தவரோ

http://www.youtube.com/watch?v=2Qh8b76lJVU&feature=player_detailpage

chinnakkannan
13th November 2014, 12:15 PM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 6
*
கார்காலக் கூந்தல் களிப்புடன் தானலைய
வேர்வையின் முத்தும் விகசிக்க – பார்த்திடுவாய்
கண்கள் கவிசொல்லும் காரிகையின் பேரழகை
எண்ணியே ஏங்குவாய் நீ..

*


நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று கேட்கவில்லை எந்தப் பாட்டிலும் இல்லை
என்னாட்டிலும் இல்லை பார் பார்கண்களில்லையோ ஓ ஓ.
.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x5RWZj01Ia8

chinnakkannan
13th November 2014, 12:21 PM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்..7

சுசீலாம்மாவின் பாடல்கள் என லிஸ்ட் எங்கும் பார்க்காமல் டபக்கென மனதிலுதித்து லிஸ்ட் போட்டேன் பின் வீடியோ தேடல்..அண்ட் இப்போ போஸ்ட் பண்ணப் போகையில் தான் வெண்பா சுடச்சுட எழுதி இடுகிறேன்.. ஹோப் இட் வோண்ட் பி போரிங்க்!
*
கள்ளம் பலகொண்டார் காரிகையைத் தானடிக்கும்
பள்ளமென உள்ளத்தைப் பாங்காகக் கொண்டவரும்
எள்ளியே நாயகி இழுத்துதான் ஆடசொல
துள்ளியே பாடல் வரும்

*

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

http://www.youtube.com/watch?v=cuoz-M-bhHg&feature=player_detailpage

chinnakkannan
13th November 2014, 12:24 PM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள். 8

உன்னுள்ளம் என்னுள்ளம் ஒன்றாகி விட்டதென
பெண்ணுள்ளம் எண்ணியே பேருவகை கொண்டதனால்
வண்ணமயில் வானில் வயணமழை ஆடுதற்போல்
திண்ணமாய்த் தானுதித்த பாட்டு...


குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்.
.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Rc6TEnbfkbs

gkrishna
13th November 2014, 12:29 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSeta-A3GwkI5IUQX5sw8SMW4bPEeQocRreJ57pNjp8vQp1X42M

நினைவிற்கு வந்த சுசீலா அம்மாவின் சில தாலாட்டு பாடல்கள்

1989 ஆம் ஆண்டு வெளிவந்த வரம் - தமிழ்நாடு மாநில அரசு விருது பாடல் 'மகனே மகனே கண்ணுறங்கு'

1980 ஆம் ஆண்டு வெளிவந்த தண்ணீர் தண்ணீர் பாடல்
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

அதிலும் இந்த வரி பாடும் போது சுசீலா அம்மா பின்னி இருப்பாங்க கூட சேர்ந்து சரிதாவும் ஜொலிப்பாங்க

வீட்டு விளக்கெரிவதற்கு கண்ணீர்…….
எண்ணை இல்லயடா

எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்காத, உள்ளத்தில் சோக உணர்ச்சியை தூண்டிவிடும் பாடல்

சித்தி - காலம் இது காலம் இது கண் உறங்கு மகளே
காலம் இதை தவற விட்டால் தூக்கம் இல்லை மகளே

பெற்ற மனம் பித்து - 'காலம் நமக்கு தோழன் காற்றும் மழையும் நண்பன் '

துலாபாரம் - 'பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே'

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT0tfkv3tUAnRK_4X912fX2k-UfDcRmSGaj5A4YC04x-nNWWPGI

chinnakkannan
13th November 2014, 12:32 PM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள். 9

ஓவியப் பாவையென ஓராள்தான் இங்கதுவும்
தேவிகை என்றே தெளிவென்பர் – காவியப்
பாடலாய் இப்பாடல் பட்டாக உள்சென்றே
ஆடலைக் கொண்டுவிடும் ஆம்..

கண்களில் எங்கே நிம்மதி ஏது..ம்ம்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kFeUT5ZJWHA

vasudevan31355
13th November 2014, 12:41 PM
கிருஷ்ணா!

இதோ லட்டு மாதிரி இன்னும் 2 தாலாட்டுப் பாடல்கள்

'மணாளனே மங்கையின் பாக்கியம்' திரைப்படத்தில்

அன்பில் மலர்ந்த நல்ரோஜா
கண் வளராய் என் ராஜா
வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3qC3ytEfBXQ


'பதிபக்தி' படத்தில்

சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவழ வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத் தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ


http://www.youtube.com/watch?v=XZeMXeT9e1w&feature=player_detailpage

chinnakkannan
13th November 2014, 12:42 PM
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள். 10

அள்ளி இதயம் அழகாகக் கேட்டுவிட்டு
துள்ளியே பாடல் தொடுத்தவர் – தெள்ளிய
நீரோட்டங் கொண்டுள்ளம் நின்றிருக்கும் என்றென்றும்
தேரோட்டம் தோற்றமாய்த் தான்..

இசையரசிக் கெண்பதாம் யார்சொன்னார் இங்கே
இசைவுடன் சொல்லிடுவர் மக்கள் – திசையெங்கும்
கூவும் குயிற்குரலும் கொண்டுவிட்ட மென்னிளமை
மேவியே நிற்குமென் றே..

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா
நீரோட்ட்ம் போலே இங்கு வா வா வா

http://www.youtube.com/watch?v=3jzBY944yXw&feature=player_detailpage

முற்றும்.. (இருந்தாலும் வாசு சார் மாதிரி தமிழ் வரலை எனக்கு விக் விக் விக்!) :)

vasudevan31355
13th November 2014, 12:45 PM
சி.க

நீங்கள் குறிப்பிடுவது இதுவா?:)

http://www.mkpplasticsandessence.com/images/tace01.jpg http://preethe.sylera.com/images/kutti_yaanai.jpg

gkrishna
13th November 2014, 12:47 PM
சுசீலா அம்மாவின் தாலாட்டின் அருமையை மேலும் மெருகு கூட்டுகிறீர்கள்

நன்றி வாசு சார்

vasudevan31355
13th November 2014, 12:49 PM
முற்றும்.. (இருந்தாலும் வாசு சார் மாதிரி தமிழ் வரலை எனக்கு விக் விக் விக்!) :)

கம்பர் எப்போது வம்பர் ஆனார்? குறும்பு கொப்பளிக்கிறதே அய்யா!

பாடல்கள் ஒவ்வொன்றும் ரகளை சி.க. சார். குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த 'நான் யார் யாரென்று சொல்ல வில்லை' அருமையோ அருமை. Thanks.

sss
13th November 2014, 12:51 PM
இந்த குட்டி பாப்பாவுக்கு இன்று பிறந்த நாளாம்,,, வாழ்த்துகள்.

அம்மம்மா! காற்று வந்து ஆடை

தொட்டுப் பாடும் !

பூவாடை கொண்ட மேனி தன்னை ஆசை

கொண்டே மூடும் !”

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=q9Sxn9aZwCA

vasudevan31355
13th November 2014, 12:51 PM
நன்றி கிருஷ்ணா சார்,

சுசீலாவின் பின்னாளைய பாடல்களுக்கு நன்றி கிருஷ்ணா சார். நிறைய இருக்கிறது. நேரம் போதவில்லை. நைட் ஷிப்ட். தூக்கம் தூக்கமாய் வருது. ராகவேந்திரன் சார் ஜெயுச்சுட்டார்.:)

gkrishna
13th November 2014, 01:00 PM
ரெஸ்ட் எடுங்கள் வாசு சார்

சுசீலா அம்மாவின் பெருமையையும் பாடலையும் பேசி கொண்டு இருக்க இன்று 'ஒரு நாள் போதுமா '

vasudevan31355
13th November 2014, 02:00 PM
நடிகர் திலகத்தின் 'நிவ்விரு கப்பின நிப்பு' படத்தைப் பிடித்த கதை.

டியர் SSS சார்!

வணக்கம். உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

நான் தங்களுக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும். சில நாட்களுக்கு முன் நடிகர் திலகம் திரியில் (15th October 2014) நீங்கள் நான் கொஞ்சமும் எதிர்பாராவிதமாக ஒரு பதிவை அளித்து என்னை வாழ்நாள் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்திருந்தால்கூட நான் அப்படி சந்தோஷப் பட்டிருக்க மாட்டேன். இதய தெய்வத்தின் 'மிஸ்டர்.மகேந்திரா' முழுப் படத்தை கண்டுபிடித்து பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் சார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/mr.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/mr.jpg.html)

இந்தப் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன் பல நாட்களாய். உங்கள் புண்ணியத்தால் டவுன்லோட் செய்து 'லபக்'கிக் கொண்டேன். இந்தப் படம் கிடைக்குமென்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. அப்லோட் பண்ணிய புண்ணியவானுக்கும் ஓராயிரம் நன்றி.

இன்னொரு விஷயம். இந்தப் படத்தைப் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தீர்கள்.

இந்தப் படம் தெலுங்குப் படம்தான். 'நிவ்ரு கப்பின நிப்பு' என்ற பெயரில் (18-04-1982) அன்று வெளிவந்தது. நடிகர் திலகம், கிருஷ்ணா, ஜெயபிரதா, காந்தாராவ், கிரிபாபு, சௌகார் ஜானகி நடித்த இப்படம் நடிகர் திலகம் நடித்திருந்ததால் தமிழில் 'மிஸ்டர் மகேந்திரா' என்று 24.06.1982 அன்று வெளியானது என்று நினைவு. நடிகர் திலகத்திற்கு அற்புதமான ரோல். ஆடிப்பாட, சண்டை போட ஹீரோ கிருஷ்ணா இருந்தாலும் நிஜ ஹீரோ நடிகர் திலகம்தான். படம் முழுக்க வியாபித்து ஆர்ப்பாட்டமாக நடித்திருப்பார். கே.பாப்பையா இயக்க, சக்கரவர்த்தி இசை அமைத்திருந்தார்.

இது ஒரு மொழி மாற்றுப் படம்தான். ஆனால் ஒரு சிறப்பு. நடிகர் திலகம் தன் சொந்தக் குரலில் பேசியிருப்பார். பொதுவாக ஜக்கையா, முக்கமாலா போன்ற நடிக பிரபலங்கள் நடிகர் திலகத்திற்கு டப்பிங் கொடுப்பார்கள். ஆனால் இந்தப் படத்தின் கதையே வேறு. நடிகர் திலகம் சொந்தக் குரலில் பேசியது மட்டுமல்ல நடிகர் திலகம் நடித்த காட்சிகள் அனைத்தும் நேரிடையாக தமிழிலேயே எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. ஆனால் நடிகர் திலகத்தின் காட்சிகள் மட்டுமே.

நீங்கள் படத்தைப் பார்த்தால் புரியும். நடிகர் திலகம் நடிக்கும் போது அவர் நடிக்கும் காட்சிகள் அப்படியே தமிழ்ப்படமாகவே இருக்கும். ஆனால் உடன் நடிப்பவர்களுக்கு தமிழில் மொழி மாற்ற வாய்ஸ் தரப்பட்டிருப்பதை உணரலாம். உதாரணமாக நடிகர் திலகமும் காந்தாராவும் சந்திக்கும் காட்சிகளில் நடிகர் திலகம் காந்தாராவிடம் நேரிடியாக தமிழிலேயே உரையாடுவார். ஆனால் பதிலுரைக்கும் காந்தாராவ் தெலுங்கில் பேசியிருப்பதை தமிழில் டப் செய்யப்பட்டிருப்பது நன்றாகத் தெரியும். நடிகர் திலகம் தமிழில் உரையாடுவதால் அவர் போர்ஷன் டப்பிங்காகத் தெரியாது. வாயசைப்பு தமிழில் துல்லியமாகத் தெரியும்.

ஒரே சமயத்தில் தெலுங்கிலும், தமிழுலும் நேரிடியாகத் தயாரிக்கப்பட்ட படமும் அல்ல இது. தெலுங்கில் மட்டுமே.

ஆனால் நடிகர் திலகம் நடித்த காட்சிகள் மட்டும் நான் முன்பு சொன்னது போல முதலில் நேரிடி தெலுங்கிலும், பின் தமிழிலும் இரண்டு முறை படமாக்கப்பட்டன.

இந்த உண்மை பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எனவே இதை டப்பிங் படம் என்பதா அல்லது இல்லை என்பதா? இது எதில் சேர்த்தி என்று தெரியவில்லை.

சரி! இந்த 'நிவ்விரு கப்பின நிப்பு' படத்தையும் நான் எப்படியோ ஒரு வழியாகப் பிடித்தேன். ஆந்திராவில் என் நண்பர்களிடம் சொல்லியும் இந்தப் படம் எந்தக் கடைகளிலும் கிடைக்கவில்லை. இணையத்தில் அப்போது இந்தப் படத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒரு சில போஸ்டர்கள், பாடல்கள் ஆடியோ மட்டும் இருந்தன. நானும் தேடாத நாளில்லை. (இப்போது இருக்கிறதா என்று தேடித் பார்க்க வேண்டும்)

ஒரு முறை எதேச்சையாக என் மகன் தொலைக் காட்சி சானல்களை மாற்றிக் கொண்டிருக்கும் போது 'ஜெமினி மூவீஸ்' தொலைக்காட்சியில் நடிகர் திலகம் தெலுங்கு பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வெளியில் இருந்த எனக்கு போன் செய்தான். நான் 'எதுவாயிருந்தாலும் ரெகார்ட் செய்து வை' என்று சொல்லி விட்டேன். பின் விட்டுக்கு வந்தால் இந்தப் படம். ஆடிப் போய்விட்டேன். என் கெட்ட நேரம் பாதிப் பாடம் கூட இல்லை ஒரு மணி நேரப் படம்தான் ரெகார்ட் ஆகி இருந்தது. ஏதோ இதாவது கிடைத்ததே என்று DVD யில் சேமித்து வைத்துக் கொண்டு அதிலிருந்து தினமும் நெட்டில் (what's on tv) விடாமல் ஜெமினி மூவீஸ் தினம் தினம் என்ன படம் போடுவார்கள் என்று நிகழ்ச்சி நிரலை விடாமல் பார்த்து தொடர்ந்து கண்காணித்து வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் இதே போல் கண்காணித்து வந்தேன். ஒரு நாள் வசமாக மாட்டியது. அன்று லீவ் போட்டுவிட்டு கரண்ட் கட் ஆகக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டு ரெகார்ட் செய்ய உட்கார்ந்தேன். நடிகர் திலகத்தின் அருளால் படம் முழுவதையும் பார்த்தபடியே ரெகார்ட் செய்து முடித்து பெரு மூச்சு விட்டேன்.

நடிகர் திலகத்தின் அத்தனை படங்களையும் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற அடங்காத வெறி எனக்கு. அதனால் கணக்கில் மேலும் ஒரு அரிய படம் சேர்ந்ததில் பெருமகிழ்வு எனக்கு.

இப்போது என்னிடம் தெலுங்கு, உங்கள் புண்ணியத்தால் தமிழ் என இரண்டு வெர்ஷன்களும் என நடிகர் திலகத்தின் சேமிப்புக் கிடங்கில் ராஜாங்கமாய்க் கொலு வீற்றிருக்கின்றன.

தெலுங்கில் 'ஜீவன தீராலு' (12.08.1977) என்ற நடிகர் திலகம் நடித்த படம் ஒன்று உண்டு. 'வாழ்க்கை அலைகள்' என்ற பெயரில் தமிழில் டப்பாகி வெளி வந்தது. தெலுங்கு டிவிடி என்னிடம் உள்ளது. தமிழ் வெர்ஷன் 'வாழ்க்கை அலைகள்' இல்லை.

இதையும் உங்களையறியாமலேயே நீங்கள் தேடிப் பிடித்து கொடுத்து விடுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. :)

அதே போல நடிகர் திலகம் நடித்த படங்கள் தெலுங்கில் வெளியான லிஸ்ட்டையும் சில நாட்களுக்கு முன்னம் அளித்திருந்தீர்கள். அதற்கும் என் மனமார்ந்த நன்றி.

வாழ்நாளில் என் இதய தெய்வத்தின் அத்துணை படங்களையும் ஒன்று விடாமல் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதில் 90% நிறைவேறிவிட்டது நடிகர் திலகத்தின் ஆசீர்வாதமே.

Gopal.s
13th November 2014, 07:34 PM
vasu,

Amazing. I am caught in a remote corner of Vietnam on a trip . internet connections are weak. I took my time off to see your posting on Mr.Mahendra. What can I say ,How can I react? I look up on you with awestruck exclamation and my jaw dropping to ground. Kudos.

I think with valarpirai,senthamarai,aval yar ,cycle will be complete ,I suppose.

Gopal.s
13th November 2014, 07:41 PM
Susila,

sivaji to acting, ashoka mitran to writing, adoor Gopalakrishnan to direction,Viswanathan-ramamoorthy to music, barathi to poetry, periyar to social cause, sher shah suri to leadership, bathal circar to theatre , our susila to singing.

I keep susila in the highest pedestal (more than latha) as a singer , and the only request that I made for my children was to not keep me unnecessarily on life supports when my body giving way, and to play selected 10 Songs of Susila solos during my last hours.. (I mentioned them in my earlier postings)

Richardsof
13th November 2014, 07:45 PM
http://i62.tinypic.com/29l0ivl.jpg

http://youtu.be/219sKF63hMo

RAGHAVENDRA
13th November 2014, 10:33 PM
நண்பர்களே..
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள். இசையரசியின் பிறந்த நாளை நம் மய்யம் திரியில் மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளீர்கள். ... ளோம்... ராஜேஷ் சார்... இசையரசியிடம் இதைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. வாசு சார், கிருஷ்ணா சார், வாராது வந்த மாமணி போல் வந்த சாரதி சார், சூப்பர் சி.க. சார், கோபால் சார், எஸ்.எஸ்.எஸ். சார், எஸ்வீ சார் என ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.
இசையரசி இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கவேண்டும் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் இறைவன் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
13th November 2014, 10:35 PM
வாசு சார்
சுந்தரபாண்டியன் சார் வாணி ஜெயராம் ரசிகர் மட்டுமின்றி பழைய தமிழ்த்திரைப்படங்களைப் பற்றிய மிகுந்த ஆழமான விஷயஞானம் உள்ளவர். அவர் மட்டுமின்றி நம் மருத்துவர் சாரும் இன்னும் அதிக பங்களிப்பினைத் தரக்கூடியவர். இந்தப் பதிவின் மூலம் நம்முடைய மருத்துவர் அய்யா அவர்களுக்கு என் உளமார்ந்த வரவேற்பை நல்கி அவர் இம்மய்யம் திரியில் இணைந்து பங்களிப்பினைத் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

RAGHAVENDRA
14th November 2014, 07:29 AM
பொங்கும் பூம்புனல்

மலர்கள் சூட்டி திலகம் தீட்டி... கர்ணன் திரைக்காவிய வளைகாப்பு பாடல்...

இசைத்தட்டு வடிவம்

படத்தில் இடம் பெறாத சங்கினால் பால் கொடுத்தால் வரிகளை பி.பி.எஸ். குரலில் கேளுங்கள்..


http://www.mixcloud.com/mpselsan/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-p%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B2-pbs-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9/

gkrishna
14th November 2014, 09:57 AM
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி திரு ராகவேந்தர் சார்

gkrishna
14th November 2014, 10:06 AM
நண்பர் வாசு

இளையராஜா இசை அமைத்த 'துணை இருப்பாள் மீனாக்ஷி ' திரைபடத்தை நினைவு கூர்ந்து அதன் இயக்கனுர் திரு வலம்புரி சோமநாதன் அவர்களை பற்றியும் சொல்லி இருந்தீர்கள். அவர்களை பற்றி சில தகவல்கள் படித்தேன். பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்


http://3.bp.blogspot.com/-pTtDyeE9dho/UU5uzRsRWUI/AAAAAAAAAqE/XKkWHl4VyDA/s1600/images.jpeg

"வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதை-வசன கர்த்தாக்களுள் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தவர் வலம்புரி சோமநாதன். நல்லறம் நோக்கி அகத்துறை வாழ்வியலை நகர்த்தும் குடும்பக் கதைகளுக்கான இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் வலம்புரியில் 1928-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் மரபிலக்கியங்களைப் பயின்றதுடன், ஆங்கில மொழியும் நன்கு அறிந்தார். அந்தக் காலத்தில் மன்னர் ஆட்சியின் கீழிருந்த புதுக்கோட்டையில் காகிதம் எளிதாகவும், மலிவாகவும் கிடைத்ததால், அவ்வூரில் தொடங்கப்பட்டப் பத்திரிகைகளில் ஒன்று "திருமகள்'. அப்பத்திரிகையில் முதன் முதலாக விளம்பரம் சேகரிக்கும் பணியில் கவிஞர் கண்ணதாசன் நியமனம் பெற்று, பிறகு ஆசிரியராக உயர்த்தப்பட்டபோது நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தவர் வலம்புரி சோமநாதன்.

ஆசிரியரான கண்ணதாசனுக்குப் பத்திரிகையின் அத்தனைப் பக்கங்களுக்கும் செய்திகள் அளிக்க அவகாசம் இல்லை. எனவே, சோமநாதனையும் சில பக்கங்களை நிறைவு செய்யும்படி உற்சாகப்படுத்தினார். கருத்துச் சாரமிக்க சோமநாதனின் கதை, கட்டுரைகள் பத்திரிகைக்குப் பலம் சேர்க்க, கண்ணதாசன் மேலும் ஊக்கப்படுத்த, வலம்புரி சோமநாதன் எழுத்தாளராக அரும்பினார்.

தமிழின் முக்கிய இலக்கியப் பத்திரிகையான "சக்தி' மாத இதழின் ஆசிரியரான வை.கோவிந்தன் தலைமையில் பணிபுரிந்த சோமநாதன், "எழுத்து முதிர்ச்சி' பெற்றார். சண்டமாருதம், முல்லை, பேசும் குரல், டாக்-எ-டோன் போன்ற மாத இதழ்களும் சோமநாதனுக்கு இடமளிக்க, அவரது படைப்பாற்றல் மீது மக்களின் கவனம் திரும்பியது. ஏவி.எம்.செட்டியார் தனது பட நிறுவனத்தில் கதை இலாகாவுக்கு அழைத்தார். ஏவி.எம்.மின் கதைக் குழுவில் முக்கியமானவர்களுள் ஒருவராகி, சோமநாதன் சினிமா உலகில் அறிமுகமானார்.

இந்தி மேதை மோஹன்லாலிடம் சோமநாதன் ஒரு படத்தின் கதையையும் அதன் வசனத்தையும் நுட்பமான ஆங்கிலத்தில் சொல்ல, அதை இந்தியில் எழுதி மோஹன்லால் தயாரிப்பாளருக்கு அனுப்பிவைத்தார். அவர் தொலைபேசியில் மோஹன்லாலைப் பாராட்ட, அதற்கு, "நீங்கள் அனுப்பிய கதாசிரியர் சோமநாதன்தான் உங்கள் பாராட்டுக்குரியவர். நான் இந்தியில் மொழிபெயர்த்து அனுப்பினேன்; அவ்வளவுதான் என் பங்கு'' என்று கூற, தயாரிப்பாளர் வலம்புரியாரின் ஆற்றலில் பிரமிப்பு அடைந்தாராம்.

ஏவி.எம்.மின் பழைய படமான "என் மனைவி' படத்தை சிங்களத்தில் மறு ஆக்கம் செய்ய ஒரு படக்குழு செட்டியாரை அணுகியபோது, "என்னிடம் இருக்கும் சோமநாதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படம் வெற்றியடைவது நிச்சயம்'' என்று கூறினாராம். எல்.வி.பிரசாத் தனது "மங்கையர் திலகம்' படத்துக்கு சோமநாதனையே எழுத வைத்தார். படம் மகத்தான வெற்றிபெற்றது.

வலம்புரியாரின் வசனங்கள், வெகுஜன ரீதியாகப் படங்கள் வெற்றிபெற பெரிதும் துணைபுரிந்தன. பி.பானுமதியின் "மணமகள் தேவை' படத்துக்கு வசனத்தை சோமநாதன் எழுத, படம் நகைச்சுவை சித்திரமாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஜனரஞ்சக ரசனையை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல புத்திப் பூர்வமான படங்களைப் படைக்க வேண்டும் என்று தீவிர ஆர்வம் சோமநாதனுக்கு ஏற்பட, பானுமதி தயாரிக்க சரத்சந்திரர் நாவலை மூலக் கதையாக வைத்து, "கானல் நீர்' படத்தை எழுதினார். படம் வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்தபோதிலும், படத்தைப் பார்த்த டி.கே.சண்முகம், எழுத்தாளர் அகிலன், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் சோமநாதனுக்கு மனம் நெகிழ்ந்து பாராட்டுகளை வழங்கினார்கள்.

சோமநாதன் சொந்தப் பட நிறுவனம் ஆரம்பித்து, "திருமணம்' என்னும் படத்தை பீம்சிங் இயக்கத்தில் எடுத்தார். படம் வெற்றியடைந்தது. தொடர்ந்து பீம்சிங்கும், சோமநாதனும் இணைந்து பல வெற்றிப் படங்களை வழங்கினார்கள். வெற்றிப் படத்துக்கான கதையை கட்டமைப்பதில் சோமநாதனுக்குச் சிறப்பான திறமை இருந்ததால், இந்தி நடிகர் திலீப்குமார் சோமநாதனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். அவர் நடிக்கும் படங்களின் கதைகளை சோமநாதனிடம் சொல்லி, ஆலோசனைகள் பெற்றபின்பே நடிக்கத் தொடங்குவாராம்.

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலை சோமநாதன் படமாகத் தயாரித்தார். அந்தப் படம் இந்தியன் பனோரமாவுக்கு அனுப்பப்பட்டு தமிழுக்கு மாநிலப் பரிசைப் பெற்றுத்தந்தது.

கதை, வசனம் தவிர்த்து, இயக்கத்திலும் ஈடுபட்ட சோமநாதன், கண்ணதாசனின் "சிவப்புக்கல் மூக்குத்தி' மற்றும் "லலிதா', "துணையிருப்பாள் மீனாட்சி', ஆகிய படங்களையும் இயக்கினார். "துணைவி' படத்தின் வசனத்துக்காக அந்த ஆண்டின் சிறந்த வசன கர்த்தாவுக்கான விருதைப் பெற்றார். ஆஸ்கார் விருது பெற்ற "காந்தி', என்.எஃப்.டி.சி. தயாரித்து மம்முட்டி நடித்த "டாக்டர் அம்பேத்கர்' போன்ற படங்களின் தமிழாக்க வசனங்களை எழுதினார். 1984-இல் தமிழக அரசின் "கலைமாமணி' விருது பெற்றார்.

தமிழ்ப் படங்களில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் குழுவில் அவர் பல ஆண்டுகள் இடம்பெற்றார். திரைப்படம் தொடர்பான சங்கங்களில் தலைவராகவும், நிர்வாகக்குழு அங்கத்தினராகவும் நேர்மையுடன் செயல்பட்டார். ரஷிய திரைப்பட விழாவுக்கு அந்த அரசு சோமநாதனை இருமுறை அழைத்து கெளரவப்படுத்தியது தமிழ்க் கலைஞனுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

திரையுலகில், பல கதாசிரியர்கள் உருவாகவும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த சோமநாதன், 2010-ஆம் ஆண்டு தன் 82-வது வயதில் காலமானார்.

நன்றி - தமிழ்மணி

rajeshkrv
14th November 2014, 10:37 AM
இசையரசியின் பிறந்த நாள் தெலுங்கு படவுலக பாடகர்கள் அனைவரும் வாழ்த்த ஒரு அழகான மாலையானது.
நேற்று மாலை இசையரசியின் மருமகளும் பாடகியுமான சந்தியாவும் மற்ற பாடகர்களும் அழகான விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

இதோ
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10530864_797730030284839_234033128237835062_n.jpg? oh=5712cbee766e57e7b26c90647703cb64&oe=54E1B66C&__gda__=1427954935_e246c68f5c23a35c7e618caf2221856 8

chinnakkannan
14th November 2014, 11:15 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

வாசு சார், ராகவேந்தர் சார், ராஜேஷ் ஜி க்ருஷ்ணா ஜி கல் நாயக் சார், கோபு சார் நன்றி.

இந்த விழா எங்கு நடந்தது ராஜேஷ்..அங்கேயா...

*

இன்று என்னுடைய தினம் (ம்க்க்கும்!)

வீட்டில் இருந்து வெளியில் செலநினைக்க
கூட்டும் குரல்கொண்டே கூப்பிட்டு – பாட்டாய்
இசைத்தே அடம்பிடிக்கும் எங்கும் வருமே
தசையினில் ஆடிய தான்..

*
குழந்தைகள் பாட்டு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XyNOEzYgpUU

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..

*
பின் அழகனில் பசங்களை வைத்து ஒரு பாடல்.. துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி.. மரகதமணி புலமைப் பித்தன்..

http://www.youtube.com/watch?v=ENm5PwYMae0&feature=player_detailpage

*
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..

இது எனக்காக..!

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Nymih9WGhYY

rajeshkrv
14th November 2014, 11:37 AM
சி.க
ஹைதராபாத்தில் நடந்தது.

gkrishna
14th November 2014, 12:04 PM
இன்று என்னுடைய தினம் (ம்க்க்கும்!)

வீட்டில் இருந்து வெளியில் செலநினைக்க
கூட்டும் குரல்கொண்டே கூப்பிட்டு – பாட்டாய்
இசைத்தே அடம்பிடிக்கும் எங்கும் வருமே
தசையினில் ஆடிய தான்..

*
குழந்தைகள் பாட்டு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது



நண்பர் சி கே

இன்று உங்க தினம் என்பதை மறந்து விட்டேன். நினைவு 'படுத்தியது' க்கு நன்றி .:)


http://www.youtube.com/watch?v=S251R3Yqg2U

vasudevan31355
14th November 2014, 12:08 PM
கிருஷ்ணா

வணக்கம். இன்று என்ன ஏப்ரல் 1 ஆ?:) சி.க அவர் தினம்னு போட்டிருக்காரே

சி.க சார் சும்மா. வெள்ளாட்டுக்கு. சீண்டனும்னு தோணிச்சு.

vasudevan31355
14th November 2014, 12:10 PM
http://www.imagesbuddy.com/images/187/happy-childrens-day-celebrations.jpg

vasudevan31355
14th November 2014, 12:11 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 17)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

http://2.bp.blogspot.com/-lbSElGs-EdE/UbzP6N9sgXI/AAAAAAAAAz8/lFKXTLwptRc/s1600/Screenshot+(14).png

http://1.bp.blogspot.com/_jo1xsRVxX7o/SmvMawRQdNI/AAAAAAAAB2g/eXV4iNafyzI/s1600/aval%2Bappadithaan.jpg

ராகமஞ்சரியின் 'அவள் அப்படித்தான்'

http://tcrcindia.files.wordpress.com/2013/04/cropped-cropped-ph000098.jpg

டைட்டிலில் கமல், ஸ்ரீப்ரியா, ரஜினி கார்டு மட்டும் போடுவார்கள்.

பாடல்கள் கண்ணதாசன், கங்கை அமரன்

பின்னணி ஜேசுதாஸ், ஜானகி, கமல்.

தயாரிப்பு, இயக்கம் ருத்ரய்யா.

தரத் தமிழ் சினிமா வரிசையில் இப்படத்திற்கு நிச்சயம் முதலிடம் உண்டு.

ராஜாவின் கதை, பாத்திரம் உணர்ந்த உணர்வுகள் சங்கமிக்கும் இசை வடிவப் பாடல்கள் மற்றும் பின்னணிகள். (பாடல்கள் மட்டும் ராஜா பின்னணி இசை வேறொருவர் என்றும் சொல்வார்கள்)

தியேட்டர்களில் ஒரே நாளில் சுருண்டு பின் நம் இதயங்களில் விரிந்த படம். கலெக்ஷன் காணாத படம். செலெக்ஷன் ஆன படம். அதி புதுமையான முயற்சி. டாகுமெண்டரி பாணியில். புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டவர் பலர். புரிந்து புளகாங்கிதம் அடைந்தவர் சிலர். இப்படத்தைப் பார்த்து உணர்ந்தால் நான் தரமான ரசிகன் என்று இறுமாப்பு கொள்ளலாம்.

அது அப்படித்தான்.

மிகவும் புகழ் பெற்ற பாடல்கள்.

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

மழைக் காலங்களில் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் எழுந்து, பின் சோம்பலுடன் 'இன்னும் கொஞ்ச நாழி' என்று கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் போல அப்படி ஒரு சுகம் தரும் பாடல்.

ஜேசுதாசின் மென்மையான குரலில். ராஜாவின் பியானோ விளையாட்டுக்களில், தேசிய கீதம் போல் அனைவர் நெஞ்சிலும் பதிந்த பாடல். சிவச்சந்திரன் பியானோ இசைத்து ஸ்ரீப்ரியாவின் சோகம் தீர்க்க பாட, மெய் மறந்து கேட்டு ஆறுதலடையும் ப்ரியா.

கார் பயணங்களில், பேருந்து பயணங்களில் இந்த பாடல் இல்லாமல் வேறெந்தப் பாடல்களும் இல்லை.

ஹைகிளாஸ், லோ கிளாஸ் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் எல்லோர் இதயத்திலும் ப(ற)ரந்து விரிந்த பாடல்.

கோட்டையும் ரசிக்கும். கூவமும் ரசிக்கும். அதுதான் இளையராஜா.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7ua__BwWGfc

'அவள் அப்படித்தான்' தொடருவாள்.

gkrishna
14th November 2014, 12:15 PM
கிருஷ்ணா

வணக்கம். இன்று என்ன ஏப்ரல் 1 ஆ?:) சி.க அவர் தினம்னு போட்டிருக்காரே

சி.க சார் சும்மா. வெள்ளாட்டுக்கு. சீண்டனும்னு தோணிச்சு.

வணக்கம் வாசு

சின்ன கண்ணன் நேற்று தன்னை குட்டி யானை என்று அறிமுகம் செய்து கொண்டார்.:) இன்று சின்ன குழந்தை என்று சொல்லி இருக்கிறார் :) .நாளைக்கு நீங்கள் சொன்னது போல் சொல்வாரோ என்னவோ :)

சி கே நானும் கொஞ்சம் சீண்டலாம்னு தான் :)

இந்த குட்டி யானை கொழுக் மொழுக் குஷ்பு கன்னம்,ஜோதிகா கன்னம் இப்ப எப்படி வலி குறைந்து விட்டதா ?

vasudevan31355
14th November 2014, 12:21 PM
'இரு வல்லவர்கள்' படத்தில் வேதாவின் இசையில்

குவா குவா பாப்பா
இவ குளிக்க காசு கேப்பா

எல்லோரும் விரும்பும் குழந்தை பாட்டு. மாடர்ன் தியேட்டர்ஸாரின் செல்ல பேபி மனோகருடன் பேபி ஷகீலா.

இதே ஷகீலாதான் 'குமாஸ்தாவின் மகள்' படத்தில் புதுமுக நடிகையாக அறிமுகமானார். ('எழுதி எழுதிப் பழகி வந்தேன்' கன்னட ஆர்த்தியுடன்)


http://www.youtube.com/watch?v=7-qLcmsboVw&feature=player_detailpage

gkrishna
14th November 2014, 12:22 PM
http://2.bp.blogspot.com/-Yj0iORuVy8Q/UpuIvndrEmI/AAAAAAAAJ-Q/CCmBhYig9Zc/s1600/avalappadiththanfront.jpg

அவள் அப்படித்தான் . வாசுவின் எழுத்தும் இப்படித்தான் வழ வழ கொழ கொழ என்று இல்லாமல் நச் என்று இருக்கும். படம் வெளியாகி 35 வருடங்கள் இருக்கும் . இன்றும் பார்க்கும் போது ஒரு புது அனுபவம் தோன்றுமே வாசு . தமிழ் சினிமாவின் மறக்க முடியாத மறுக்க முடியாத அனுபவ படம்.
கதை திரை கதை மூவர் எழுதி இருப்பார்கள் .இதுவே புதுமை
வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா.

gkrishna
14th November 2014, 12:25 PM
முழு பாடல் வாசு
ஒவ்வொரு வரியும் முத்து .கருப்பு வெள்ளையில் வந்த வண்ண பெண் அவள் அப்படிதான்

உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்… வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…

வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

vasudevan31355
14th November 2014, 12:27 PM
'சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்'

அதே மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. படம் 'கைதி கண்ணாயிரம்'. இதில் டெய்சி ராணி.


http://www.youtube.com/watch?v=v3ambcdUdvI&feature=player_detailpage

gkrishna
14th November 2014, 12:29 PM
டியர் வாசு

படம் பற்றி எழுத்தாளர் வண்ணநிலவன் சொல்வதை படியுங்கள்.

கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.

தலைசிறந்த உலகத் திரைப்படங்களைப் பற்றிய ருத்ரய்யாவின் அறிவு அபாரமானது. உலகப்பட இயக்குநர்களைப் பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்குச் சொந்தமான அபிப்பிராயங்கள் உண்டு. கமலுடனும் அனந்து சாருடனும் அவர் பல திரைப் படங்களைப் பற்றி விவாதிப்பார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தைச் செதுக்கினார்.

இளையராஜாவும் கங்கை அமரனும் குமார் ஆர்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுவார்கள். அடுக்கடுக்காக மெட்டுகளை அந்தக் காலத்திலேயே இளையராஜா ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவார். தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது. சென்னையில் காமதேனுவிலும் சபையர் வளாகத்தில் அமைந்துள்ள எமரால்டிலோ ப்ளூடைமண்டிலோ ஓடியது. காமதேனுவைவிட சபையர் வளாகத் தியேட்டரில் சற்றுக் கூடுதல் நாட்கள் ஓடியதாக ஞாபகம். பெரும்பாலும் பத்திரிகைகளில் பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது.

http://discoverybookpalace.com/product_images/u/590/aval_appadiththan__16957_std.jpg

vasudevan31355
14th November 2014, 12:32 PM
நன்றி கிருஷ்ணா! பாடல் வரிகளுக்கும் சேர்த்து. உண்மையிலே வித்தியாசமான வைடூர்யம்தான். கமல், ரஜினி, பிரியா கலக்கல். படம் முழுதும் ஒரு இனம் புரியா சோகம் நம்முடன் பயணிக்கும்.

ருத்ரய்யா போன்ற ரிஸ்க் எடுத்த இயக்குனர்கள் தொடராமல் போனது நம் துரதிருஷ்டமே.

gkrishna
14th November 2014, 12:33 PM
படத்தின் இறுதியில் வரும் ஹைகூ கவிதை - கமலின் குரலில்

http://2.bp.blogspot.com/-1QgLNlGOROY/UbMSAFQkUSI/AAAAAAAAAnA/Ffr3mycxyw4/s400/aval.jpg

எரிந்து போன வீடு,
முறிந்து போன உறவுகள்,
கலைந்து போன கனவுகள்,
சுமக்க முடியாத சோகங்கள்,
மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்து போனாள்,
இந்தச்சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால் தான் முடியவில்லை,
ஹ்ம்,,,
அவள் பிறப்பாள்,
இறப்பாள்,
இறப்பாள்,
பிறப்பாள்,!!!

” அவள் அப்படித்தான்”

gkrishna
14th November 2014, 12:36 PM
வாசு

சமீபத்தில் குமுதம் இதழ் என்று நினைக்கிறன். திரு ருத்ரையா கடைகளுக்கு அப்பளம் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார் என்று படித்தேன் .

gkrishna
14th November 2014, 12:45 PM
அவள் அப்படித்தான்

நெல்லை ரத்னா திரை அரங்கு என்று நினைக்கிறன் வாசு. மொத்தம் 3 நாட்கள் தான்..தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. வாங்க விநியோகஸ்தர் இல்லாமல்10 அல்லது 15 நாட்கள் கழித்து டைரக்ட் ரிலீஸ்.
படம் பார்த்துட்டு பேஸ்து அடிச்சு வந்தேன்

ரஜினி ருத்ராட்ச பூனை மாதிரி நெற்றியில் பட்டை,நெஞ்சிலே கொட்டை ஆனால் பார்வையோ காமந்த பார்வை . பெஸ்ட் வில்லன் .

gkrishna
14th November 2014, 01:04 PM
வாசு

இன்னும் ஒரு வருத்தம் உண்டு .இதே கால கட்டத்தில் வெளி வந்த கமல் ரஜினி ஸ்ரீப்ரியா கூட்டணியில் வெளி வந்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது சூப்பர் duper ஹிட் .அவள் அப்படிதான் ஓடவே இல்லை.

இப்ப எனக்கு வேலையும் ஓடலை.

1990 கால கட்டம் என்று நினைக்கிறன். அலுவலக வேலையாக சென்னை வந்த போது காலை காட்சி திரை அரங்கு நினைவு இல்லை. (அண்ணா சாலையில் உள்ள திரை அரங்கு தான். ராகவேந்தர் சார் அவர்களிடம் கேட்க வேண்டும்). தேடி போய் பார்த்தேன் . ஆபீஸ் இல் அவ்வளவு பேரும் கேலி கிண்டல் தான் படம் வெளி வந்த போது 1978 கால கட்டத்தில் விகடன் விமர்சனம் மார்க் நிறைய போட்டார்கள் .என்ன பிரயோசனம் ?

http://2.bp.blogspot.com/-K97pjCtKVfs/TYiAxwCU8uI/AAAAAAAAALE/gIJGjW6A_C4/s320/2009050850110401.jpg

gkrishna
14th November 2014, 01:38 PM
http://2.bp.blogspot.com/-o8ztRfFNfgE/T89NgKOzh0I/AAAAAAAACrM/WSCMicV-DEA/s1600/VANNANILAVAN-7%5B3%5D.jpg

அவள் அப்படித்தான் வண்ணநிலவன் தானே துக்ளக் வார இதழில் துர்வாசர் என்று சினிமா விமர்சனம் எழுதுவார்

rgds

gk

chinnakkannan
14th November 2014, 05:00 PM
வாசு ஜி.. ஏப்ரல் ஒண்ணுல்லாம் இல்லைங்காணும்.. அதெல்லாம் வளர்ந்தவங்களுக்குத் தான்..! நான் வளரவில்லையே மம்மி!

///சி கே நானும் கொஞ்சம் சீண்டலாம்னு தான்

இந்த குட்டி யானை கொழுக் மொழுக் குஷ்பு கன்னம்,ஜோதிகா கன்னம் இப்ப எப்படி வலி குறைந்து விட்டதா ?’//

கிருஷ்ணாஜி.. அதை ஏன் கேட்கிறீர்கள். நேற்று போய் டாக்டர்கதவை தட் தட் என மெலிதாகத் தட்டினால் அவர் வேறு யாரோ ஒரு பெண்ணுக்கு வைத்தியம் பார்த்திருந்தார்..எனக்குக் கொடுத்த அதேடைம்..ஆறரை.. நான்கதவை மெலிதாகத் திறக்க கிராதகா என ஒரு பார்வை மூக்குக் கண்ணாடி வழியாகப்பார்க்க நான் கதவை மூடிவிட்டேன்.. (போனது ஒரு ஹாஸ்பிடல்.. லாமா பாலிக்ளினிக் – தலாய் லாமாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை)

.பின் அரைமணி நேரம் திவீக் என்று நம்ம ஊர் மாம்பலம் டைம்ஸ் போல வரும்ஃப்ரீ பத்திரிகையை புரட் புரட் எனப் புரட்டிக் கொண்டிருக்க ஏழுமணிக்கு சொர்க்கவாசலாய் அவர் கதவு திறக்க பாய்ந்து உள் சென்றால்..அவர் முகத்தில் களைப்பையும் மீறிய புன்னகை.. சிம்பாலிக்காக முன்னால் இருந்த பேஷண்டுக்கு யூஸ் செய்ததோ என்னவோ ஒரு கத்தியை எடுத்து அந்தப்புறம் உள்ள டேபிளில் வைத்தார்..

பின் என்னை தாச்சுக்கச் சொல்லி தமிழாசானாய் ஆ காட்டுங்க.. நான் ஆ காட்ட உள்ளே பார்த்தவருக்கு ஒரு சின்ன ஏமாற்றம்..80 பெர்சண்ட் தான் ஹீல் ஆகியிருக்கிறது பல் எடுத்த இடத்தில் .. நீர் இன்று போய் அடுத்தவாரம் வரூ….

வெய்ட் வெய்ட் டாக்டர்..என்னுடைய கீழ்ப்பல்வரிசையில் ஒன்றில் கொஞ்சம் சின்ன பெய்ன்…

டாக்டரின் முகத்திலிருந்த பெய்ன் மறைந்து மறுபடி ஆ காட்டுங்க.. பார்த்து எஸ் எஸ்..இங்கே ஒரு கேவிடி இருக்கு ஃபில் செய்கிறேன் சரியா.. எனச் சொல்லி வெல்டிங் ட்ரில்லிங்க் ஃபில்லிங்க் எல்லாம் ஒரு இருபது நிமிஷத்துக்குச் செய்தும் விட்டார்..வலியெல்லாம் இல்லை..என்ன வாயை கிட்டத் தட்ட க் குட்டி முதலை போலத் திறந்து வைத்திருந்ததில் இருபக்கமும் சின்னஎரிச்சல்..இரண்டு மணி நேரத்திற்கு எதுவும் ச்யூ செய்து சாப்பிடாதீர்கள் என அட்வைஸ் வேறு..ம்ம் எனக்கு அப்போதே பசிக்க ஆரம்பித்து விட்டது..

என்ன மேல் பல் ஒன்றுஇல்லாமல் இருந்தாலும் அவஸ்தை தான் என்பது ப்ரஷ் செய்யும்போதும் ஏதாவதுகரகரஎனச் சாப்பிடும் போதும் தெரிகிறது..ஒருபக்கமாய்த்தான் ஃபில்லிங்க் செய்த வலதுபக்கம் உண்ண முடிகிறது! அடுத்த வாரம் வியாழன் வரை பொறுக்க வேண்டும்.. எல்லாரிடமும் ஒரு ரெண்டு வார்த்தை மூன்று வார்த்தை தான் வாய் திறக்காமல் பேசுகிறேன்.(பாவம் பயந்து விடுவார்கள்..).ஃபோன் நோ ப்ராப்ளம்..!

வாசு சார் க்ருஷ்ணா ஜி.. அவள் அப்படித்தான் அந்த உறவுகள் தொடர்கதை பாட்டு கேட்டிருக்கிறேன்..படம் நல்லவேளை பார்த்ததில்லை..தாங்க்ஸ்..:)

gkrishna
14th November 2014, 05:07 PM
வாசு ஜி.. ஏப்ரல் ஒண்ணுல்லாம் இல்லைங்காணும்.. அதெல்லாம் வளர்ந்தவங்களுக்குத் தான்..! நான் வளரவில்லையே மம்மி!

///சி கே நானும் கொஞ்சம் சீண்டலாம்னு தான்

இந்த குட்டி யானை கொழுக் மொழுக் குஷ்பு கன்னம்,ஜோதிகா கன்னம் இப்ப எப்படி வலி குறைந்து விட்டதா ?’//

கிருஷ்ணாஜி.. அதை ஏன் கேட்கிறீர்கள். நேற்று போய் டாக்டர்கதவை தட் தட் என மெலிதாகத் தட்டினால் அவர் வேறு யாரோ ஒரு பெண்ணுக்கு வைத்தியம் பார்த்திருந்தார்..எனக்குக் கொடுத்த அதேடைம்..ஆறரை.. நான்கதவை மெலிதாகத் திறக்க கிராதகா என ஒரு பார்வை மூக்குக் கண்ணாடி வழியாகப்பார்க்க நான் கதவை மூடிவிட்டேன்.. (போனது ஒரு ஹாஸ்பிடல்.. லாமா பாலிக்ளினிக் – தலாய் லாமாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை)

.பின் அரைமணி நேரம் திவீக் என்று நம்ம ஊர் மாம்பலம் டைம்ஸ் போல வரும்ஃப்ரீ பத்திரிகையை புரட் புரட் எனப் புரட்டிக் கொண்டிருக்க ஏழுமணிக்கு சொர்க்கவாசலாய் அவர் கதவு திறக்க பாய்ந்து உள் சென்றால்..அவர் முகத்தில் களைப்பையும் மீறிய புன்னகை.. சிம்பாலிக்காக முன்னால் இருந்த பேஷண்டுக்கு யூஸ் செய்ததோ என்னவோ ஒரு கத்தியை எடுத்து அந்தப்புறம் உள்ள டேபிளில் வைத்தார்..

பின் என்னை தாச்சுக்கச் சொல்லி தமிழாசானாய் ஆ காட்டுங்க.. நான் ஆ காட்ட உள்ளே பார்த்தவருக்கு ஒரு சின்ன ஏமாற்றம்..80 பெர்சண்ட் தான் ஹீல் ஆகியிருக்கிறது பல் எடுத்த இடத்தில் .. நீர் இன்று போய் அடுத்தவாரம் வரூ….

வெய்ட் வெய்ட் டாக்டர்..என்னுடைய கீழ்ப்பல்வரிசையில் ஒன்றில் கொஞ்சம் சின்ன பெய்ன்…

டாக்டரின் முகத்திலிருந்த பெய்ன் மறைந்து மறுபடி ஆ காட்டுங்க.. பார்த்து எஸ் எஸ்..இங்கே ஒரு கேவிடி இருக்கு ஃபில் செய்கிறேன் சரியா.. எனச் சொல்லி வெல்டிங் ட்ரில்லிங்க் ஃபில்லிங்க் எல்லாம் ஒரு இருபது நிமிஷத்துக்குச் செய்தும் விட்டார்..வலியெல்லாம் இல்லை..என்ன வாயை கிட்டத் தட்ட க் குட்டி முதலை போலத் திறந்து வைத்திருந்ததில் இருபக்கமும் சின்னஎரிச்சல்..இரண்டு மணி நேரத்திற்கு எதுவும் ச்யூ செய்து சாப்பிடாதீர்கள் என அட்வைஸ் வேறு..ம்ம் எனக்கு அப்போதே பசிக்க ஆரம்பித்து விட்டது..

என்ன மேல் பல் ஒன்றுஇல்லாமல் இருந்தாலும் அவஸ்தை தான் என்பது ப்ரஷ் செய்யும்போதும் ஏதாவதுகரகரஎனச் சாப்பிடும் போதும் தெரிகிறது..ஒருபக்கமாய்த்தான் ஃபில்லிங்க் செய்த வலதுபக்கம் உண்ண முடிகிறது! அடுத்த வாரம் வியாழன் வரை பொறுக்க வேண்டும்.. எல்லாரிடமும் ஒரு ரெண்டு வார்த்தை மூன்று வார்த்தை தான் வாய் திறக்காமல் பேசுகிறேன்.(பாவம் பயந்து விடுவார்கள்..).ஃபோன் நோ ப்ராப்ளம்..!

வாசு சார் க்ருஷ்ணா ஜி.. அவள் அப்படித்தான் அந்த உறவுகள் தொடர்கதை பாட்டு கேட்டிருக்கிறேன்..படம் நல்லவேளை பார்த்ததில்லை..தாங்க்ஸ்..:)

பல் டாக்டர் உடன் சி கே - ஒரு சுகமான அனுபவம் அப்படின்னு கட்டுரைக்கு தலைப்பு கொடுக்கிறேன் :)


ஊட்டி வரை உறவு திரை படத்தில் நாகேஷ் பாலையா விடம்

'உம்ம பையன் ஒரு நடை ஒன்னு வைச்சுருக்கான் பாரு '

'நடந்தானா அப்படினா என் பையனே தான் '

அது போன்று உங்களது எழுத்து நடை சூப்பர் நடை :) சி கே

chinnakkannan
14th November 2014, 07:34 PM
க்ருஷ்ணாஜி.. நன்றி..:)

ம்ம் இது உங்களுக்காக

முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ ஹூம்..(பெருமூச்சு!)

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5gnBp_dVZrg

வேற பல் பாட்டுஇருக்கா..

gkrishna
15th November 2014, 12:23 PM
http://lh4.ggpht.com/-GAIW25VJgQA/VGUpHg_cSjI/AAAAAAAAQeU/FORIS-CMWbs/w1280/080000.jpg

gkrishna
15th November 2014, 12:24 PM
http://lh4.ggpht.com/-x0JTeiwAIss/VGUpIok4dTI/AAAAAAAAQeg/19YoDmasiF8/w1280/080001.jpg

gkrishna
15th November 2014, 12:24 PM
http://lh4.ggpht.com/-Xmn-CVJqs28/VGUpJNuyoxI/AAAAAAAAQek/U26YOKagDSI/w1280/080002.jpg

sss
15th November 2014, 01:10 PM
அன்புள்ள வாசு சார் அவர்களுக்கு

மிஸ்டர் மகேந்திரா திரைப் படம் எனது தேடலில் கிடைத்தது ஒரு அதிர்ஷ்டமே... உங்களுக்கு அது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது என்றால் எனக்கு மூன்று வகையான அதிர்ச்சியை கொடுத்தது...

1) நடிகர் திலகம் நடித்த பட வரிசை பட்டியலில் இந்த படம் பற்றி யாரும் சொல்லாதது , குறிப்பிடாதது
2) மொழி மாற்று படமாக இருந்தாலும் நடிகர் திலகமே குரல் கொடுத்திருந்தது ,இது மிக ஆச்சரியமாக இருந்தது
3) இப்படி ஒரு அபூர்வ படத்தை நாம் கொடுத்த பதிவுக்கு ஒரு பதில் கூட வரவில்லையே... ஒரு வேலை எல்லோருக்கும் இது முன்பே தெரிந்தது தானோ என நான் நினைத்தது...

என்ன இருந்தாலும் நீங்கள் இந்த படத்தின் பல சிறப்பை சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது... நன்றி உங்களுக்கு.
இந்த படம் தமிழில் சுமார் ஒண்ணரை மணி துளிகள்தான் இருந்தது... நடிகர் திலகத்தின் எல்லா காட்சிகளும் இதில் உள்ளன என நம்புகிறேன்..

நடிகர் திலகத்தின் 90 % படங்கள் உங்களிடம் இருப்பது மிக அருமை , நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் ஒரு 50 % என சொல்லலாம்...

இதற்கு பதில் உரைத்த திரு. வீயார் அவர்களுக்கும் நன்றி.

gkrishna
15th November 2014, 01:53 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02008/v2_2008922g.jpg

திரு ராஜேஷ் அவர்களுக்கு இந்த புகைப்படத்தை சமர்பிக்கிறேன்

RAGHAVENDRA
15th November 2014, 06:23 PM
இசைக்கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர்.பாப்பா

இத்தொடரில் அடுத்து வேறோர் கலைஞர் இடம் பெறும் நேரம் .... டி.ஆர்.பாப்பா அவர்களைப் பொறுத்த மட்டில் அவருக்கு உரிய புகழும் மரியாதையும் நிச்சயம் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும். அதை அவருடைய பாடல்கள் சொல்லிக் கொண்டே இருக்கும்..

முத்தாய்ப்பாக

டீச்சரம்மா படத்திலிருந்து...

முதல் இரண்டு வரிகளிலேயே கவிஞர் கதையை சொல்லி விட்டார்.. படத்தின் சாராம்சம் இந்த இரண்டு வரிகளிலேயே அடங்கியுள்ளது.

அதனுடைய உணர்வை இசையமைப்பாளரின் புலமையும் திறமையும் இசையரசியின் குரலில் வெளிப்படுகிறது..

சூடிக்கொடுத்தவள் நான் தோழி.. சூட்டிக் கொண்டவளே நீ வாழி..

இதற்கு மேல் என்ன வேண்டும்.. இயக்குநரின் திறமையும் இப்பாடல் காட்சியில் பளிச்சிடுகிறது. சூடிக் கொடுத்தவள் சூட்டிக் கொண்டவளின் புகைப்படத்தைப் பார்த்து வாழ்த்தும் காட்சியாய் அமைத்து இந்த பாடல் வரிகளுக்கு உயிரூட்டியுள்ளார்.

இசையமைப்பாளரின் பாட்டுக்கு காட்சியமைப்பு நன்கு அமைந்து விட்டால் அது சிரஞ்சீவியாய் நிலைத்து விடும். அந்த வகையில் காலம்காலமாய் நிலைத்து நிற்கும் பாடல்.

கேட்க மட்டுமல்ல பார்க்கவும் வேண்டிய பாடல்..

https://www.youtube.com/watch?v=WGpToNeUBPM

vasudevan31355
15th November 2014, 06:24 PM
நன்றி சுந்தர பாண்டியன் சார்.

1) //நடிகர் திலகம் நடித்த பட வரிசை பட்டியலில் இந்த படம் பற்றி யாரும் சொல்லாதது , குறிப்பிடாதது//

இந்தப் படம் நடிகர் திலகத்தின் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் ஒரிஜினல் தெலுங்கு 'நிவுரு கப்பின நிப்பு' நடிகர் திலகத்தின் 226 ஆவது படமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் திலகத்தின் 225 ஆவது சூப்பர் ஹிட் படமான 'தீர்ப்பு' படத்திற்கு அடுத்த படமாக.

//நடிகர் திலகத்தின் எல்லா காட்சிகளும் இதில் உள்ளன என நம்புகிறேன்.//

ஆமாம் சார். தெலுங்கில் உள்ள நடிகர் திலகத்தின் காட்சிகள் ஒன்று கூடக் குறையாமல் தமிழில் அப்படியே உள்ளன என்பது மகிழ்வான விஷயம். தெலுங்கில் உள்ள இதர சில காட்சிகள் தமிழில் இல்லை. நடிகர் திலகமே மையம்.

//நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் ஒரு 50 % என சொல்லலாம்//...

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார். அத்தனை படங்களும் கிடைக்கப் பெறுவோம்.

vasudevan31355
15th November 2014, 06:53 PM
டியர் ராகவேந்திரன் சார்,

பாடிக் கொடுத்தவள் நான் தோழி
பாட்டை முடித்தவள் நீ வாழி

என்ன வரிகள்!

'எனக்கென்று நினைத்திருந்தவனை நீ இறுதில் முடி(ந்)த்துக் கொண்டாயே தோழி '

'நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன்
அதன் நிறத்தைப் பார்த்தா உயிர் வைத்தேன்'

நாயகனைக் காணாமல் அவன் பெயரில் காதல் கொண்ட இந்த ஏமாளி நாயகியின் மனநிலை இது.

'மாலை தொடுத்து மலர் கொண்டு
நல்ல மஞ்சள் குங்குமச் சிமிழ் கொண்டு
ஏழை எழுந்தேன் எனக்கென்று
ஏழை எழுந்தேன் எனக்கென்று
அந்த இறைவன் முடித்தான் உனக்கென்று'

'அநாதை ஏழையான நான் யாருமில்லாமல் எனக்கு நானே ஆதரவாய் இருந்து, எல்லாம் தயாராக, என் காதலனைக் கரம் பற்ற நம்பிக்கையோடு காத்திருந்தேனே!'

ஆனால் நடந்தது என்ன?...

என்ன பரிதாபம்! தோழி ஏமாற்றி காதலனை தட்டிப் பறித்தாலும் 'இறைவன் முடித்தான் உனக்கென்று' என்று அவளுக்கு அவன் உரிமையானதை பெருந்தன்மையாய் எடுத்துக் கொள்ளும் இவளை எப்படி பாராட்டுவது?

கடலும் வானும் உள்ளவரை
தென்றல் காற்று நடந்து செல்லும் வரை
வளர்க உந்தன் பள்ளியறை

நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை
நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை
நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை

தன் காதலன் நல்லவன்... காதலனை அவளுக்கு விட்டுக் கொடுத்ததோடல்லாமல் 'அவன் நல்லவன்... அவனை நீ வாழ வைப்பாய்' என்று மூன்று முறை அழுத்தமாகக் கூறி தோழி மீது நம்பிக்கை வைக்கிறாளே! இவளுடைய தியாகத்திற்கு ஈடு உண்டா?

தோழி வஞ்சித்தாலும், கிஞ்சித்தும் அவள் மேல் கோபம் கொள்ளாமல், அவள் புகைப்படத்தைப் பார்த்து அவள் நல்வாழ்வு வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறாளே இந்த அருமைத் தோழி!

அமைதியான சுசீலா அம்மாவின் பாடலின் இடையே வரும் எனதருமை பாப்பாவின் அந்த புல்லாங்குழல் இசையின் மகத்துவத்தை மறக்கவே முடியாது. அந்தத் தோழியின் உண்மையான உள்ளக் குமுறலை அந்த புல்லாங்குழல் பிட் இரண்டு செகண்டுகளில் நமக்கு உணர்த்தி விடுமே!

பாடல் அல்ல. இசைப் பாடம்.

தங்கத்தை எடுத்து தாம்பூலத்தில் வைத்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்!

vasudevan31355
16th November 2014, 07:51 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 18)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

இன்றைய தொடரில்

'அவள் அப்படித்தான்' தொடர்கிறது

http://i.ytimg.com/vi/jJR5Fl377vM/hqdefault.jpg

The movie, praised by many for being far ahead of its times in terms of both treatment and technique, had numerous English dialogues and frequently employed jump cuts (two or more shots taken from only slightly different angles being placed sequentially, so as to communicate the passing of time in an abrupt manner). Shot in black and white, “Aval Appadithan” had only three songs, all of which were composed by Ilaiyaraaja. (thanks TCRC)

பெண்ணினம் ஆண் வர்க்கத்தின் பிடியில் சிக்கி பரிதாபமாகத் தவிக்கும் நிலைமையை இப்பாடல் கமலின் குரலில் நமக்கு அருமையாய் உணர்த்துகிறது. மனதில் சஞ்சலம் ஏற்படுத்துகிறது. இப்படத்தின் நாயகியின் பரிதாப நிலைகளை மனதில் நினைத்தபடியே கமல் சோகமுற்றிருக்க பின்னணியில் அவருடைய குரலிலேயே ஒலிக்கும் அற்புத பாடல். ராஜாவின் கைவண்ணத்தில் மிக மென்மையாய் நம் இதயத்தைப் பிசைகிறது.

http://tcrcindia.files.wordpress.com/2013/04/kamal-hassan-wm.jpg

One of the songs, titled “Paneer Pushpangale,” was written by Gangai Amaren and was sung by Kamal Hassan himself. Now, we’re used to Kamal singing his own songs. But it’s quite refreshing to hear Kamal croon a ‘Raaja Sir’ (as Ilaiyaraaja is known in the Tamil film industry) number from that era. In fact, when we heard the song for first time, we couldn’t even identify Kamal’s voice. Check it for yourself. Here is “Paneer Pushpangale” from “Aval Appadithan”:

'பன்னீர் புஷ்பங்களே' என்று கமல் உச்சரிக்கும் போது தமிழைவிட மலையாள வாடை அதிகம் தெரிவதை உணரலாம். (புஷ்பன்ங்களே!:)) கமலுக்கு மலையாளத்தின் மேல் இருந்த கிரேஸையும் உணரலாம்.

'பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே
பல பேரைச் சேரும் பரந்தாமன் தன்னைப்
புகழ் பாடக் கேட்டதுண்டு இந்த பூமியிலே'

அச(சா)த்திய கற்பனை. கண்ணகி, மாதவி, நளாயினி என்ற கற்புக்கரசிகளின் கண்ணீரை உணர்ந்த இந்த உலகம் ஐவரின் ஆசைநாயகியாய் அவதிப்பட்ட பாஞ்சாலியின் துன்பங்களைப் பற்றி கவலைப்பட்டதோ கண்ணீர் விட்டதோ இல்லையே என்று கமல் கவலைப்படுவது வித்தியாச கோணம்.

பாஞ்சாலியிடம் பரிதாபம்
பரந்தாமனிடம் அநியாயம்

ஒருதலைப்பட்சம் காணும் உலகத்தை சாடும் கவிஞனின் கொதிப்பு.

கங்கை அமரன் பாடல் வரிகள் என்று நினைக்கிறேன்.

'நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது'

அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும் வரிகள்.

கமல் குரலில் பெண்மைத்தன்மை சற்று அதிகம் குடி கொண்டிருக்கும் பாடல்.

http://i982.photobucket.com/albums/ae310/raajaarasigan/AvalApadithan-Panneer.jpg


http://www.youtube.com/watch?v=cyxd57er1L0&feature=player_detailpage

Russellisf
16th November 2014, 09:57 AM
அழும்போது பொங்கி வரும் கண்ணீரின் முதல் துளி ,
வலது கண்ணில் இருந்து வந்தால் அது ஆனந்தக் கண்ணீராம்...!
இடது கண்ணில் இருந்து வந்தால் , அது வலியினால் வடியும் கண்ணீராம்..!
இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் கண்ணீர் பொங்கி வந்தால் ,விரக்தியினால் வெளிவரும் கண்ணீராம்..!
[சற்று முன் கண்ணில் பட்ட நண்பரின் பதிவு ]
இதைப் படிக்கும்போது ஒரு கண்ணீர்ப் பாடல் என் காதுகளில் வந்து விழுந்தது ..
“இப்படி ஓர் தாலாட்டு பாடவா..அதில் அப்படியே என் கதையை கூறவா ..?”
எஸ்.ஜானகியின் குரல்.....
என்னைப் பொறுத்தவரை எஸ்.ஜானகியின் இடத்தில் யார் இருந்தாலும் , விரக்தியின் விளிம்புக்கே போய் இருப்பார்கள்...
“சிங்கார வேலனே தேவா” என்று கொஞ்சும் குரலில் , எஸ்.ஜானகி பாடிய “கொஞ்சும் சலங்கை” வெளிவந்த ஆண்டு 1962...
ஆனானப்பட்ட பி.சுசீலாவே பாட முடியாமல் திணறிப் போன பாடலாம் “சிங்கார வேலனே தேவா..”
அப்புறம் பி.லீலாவைக் கூப்பிட்டு அதைப் பாடச் சொல்ல , அவராலும் முடியாமல் போக..
அதன் பின் அழைக்கப்பட்டவர்தான் எஸ்.ஜானகி...!
“தேனோடு கலந்த தெள்ளமுதாக ...கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றலாக” அந்தப் பாடலைப் பாடியும் அடுத்த சில ஆண்டுகள் ,பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை எஸ். ஜானகிக்கு...
அப்புறம் இளையராஜா வந்து ..வாய்ப்பு தந்து...“மச்சானை பாத்தீங்களா” என எஸ்.ஜானகி நம்மையெல்லாம் கேட்ட ..அன்னக்கிளி வெளிவந்த ஆண்டு 1976…
இரண்டுக்கும் இடையில் 14 ஆண்டுகள் இடைவெளி....இருளில் மறைந்த நிலவாகவே இருந்து வந்தார் ஜானகி..!
இந்தக் கால கட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்பு..!
எந்த இசையமைப்பாளரும் அழைத்து பெரிய வாய்ப்புகள் எதுவும் தராத அளவுக்கு ..குரலில் என்ன குறை இருந்தது எஸ்.ஜானகிக்கு..?
இத்தனை திறமை இருந்தும் ஏன் இந்த இடைவெளி..?
வாழ்வின் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று...
கால நேரமா..?பூர்வ ஜென்ம ஜாதகமா...?
இந்தக் கேள்விக்கு பதில் ஏது..?
“நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
இடையினிலே இந்நிலவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டிலே தங்கி வந்தது
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா”

Russellisf
16th November 2014, 10:03 AM
அழும்போது பொங்கி வரும் கண்ணீரின் முதல் துளி ,
வலது கண்ணில் இருந்து வந்தால் அது ஆனந்தக் கண்ணீராம்...!
இடது கண்ணில் இருந்து வந்தால் , அது வலியினால் வடியும் கண்ணீராம்..!
இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் கண்ணீர் பொங்கி வந்தால் ,விரக்தியினால் வெளிவரும் கண்ணீராம்..!
[சற்று முன் கண்ணில் பட்ட நண்பரின் பதிவு ]
இதைப் படிக்கும்போது ஒரு கண்ணீர்ப் பாடல் என் காதுகளில் வந்து விழுந்தது ..
“இப்படி ஓர் தாலாட்டு பாடவா..அதில் அப்படியே என் கதையை கூறவா ..?”
எஸ்.ஜானகியின் குரல்.....
என்னைப் பொறுத்தவரை எஸ்.ஜானகியின் இடத்தில் யார் இருந்தாலும் , விரக்தியின் விளிம்புக்கே போய் இருப்பார்கள்...
“சிங்கார வேலனே தேவா” என்று கொஞ்சும் குரலில் , எஸ்.ஜானகி பாடிய “கொஞ்சும் சலங்கை” வெளிவந்த ஆண்டு 1962...
ஆனானப்பட்ட பி.சுசீலாவே பாட முடியாமல் திணறிப் போன பாடலாம் “சிங்கார வேலனே தேவா..”
அப்புறம் பி.லீலாவைக் கூப்பிட்டு அதைப் பாடச் சொல்ல , அவராலும் முடியாமல் போக..
அதன் பின் அழைக்கப்பட்டவர்தான் எஸ்.ஜானகி...!
“தேனோடு கலந்த தெள்ளமுதாக ...கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றலாக” அந்தப் பாடலைப் பாடியும் அடுத்த சில ஆண்டுகள் ,பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை எஸ். ஜானகிக்கு...
அப்புறம் இளையராஜா வந்து ..வாய்ப்பு தந்து...“மச்சானை பாத்தீங்களா” என எஸ்.ஜானகி நம்மையெல்லாம் கேட்ட ..அன்னக்கிளி வெளிவந்த ஆண்டு 1976…
இரண்டுக்கும் இடையில் 14 ஆண்டுகள் இடைவெளி....இருளில் மறைந்த நிலவாகவே இருந்து வந்தார் ஜானகி..!
இந்தக் கால கட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்பு..!
எந்த இசையமைப்பாளரும் அழைத்து பெரிய வாய்ப்புகள் எதுவும் தராத அளவுக்கு ..குரலில் என்ன குறை இருந்தது எஸ்.ஜானகிக்கு..?
இத்தனை திறமை இருந்தும் ஏன் இந்த இடைவெளி..?
வாழ்வின் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று...
கால நேரமா..?பூர்வ ஜென்ம ஜாதகமா...?
இந்தக் கேள்விக்கு பதில் ஏது..?
“நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
இடையினிலே இந்நிலவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டிலே தங்கி வந்தது
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா”

RAGHAVENDRA
16th November 2014, 10:04 AM
வாசு சார்
மிகச் சிறந்த பாடலை இளையராஜாவின் இசை வரிசையில் தந்துள்ளீர்கள்...ருத்ரையா என்ற சிறந்த கலைஞனுக்கு நல்ல புகழாரம் தந்துள்ளீர்கள். சினிமாவில் தான் பதிக்கும் எந்தத் துறையிலும் தன் முத்திரையைப் பதிக்காமல் விடாத கமலஹாசன் என்ற அற்புதக் கலைஞனின் திறமையில் ஒன்றான பாடும் திறனை நன்கு பயன் படுத்திக் கொண்டவர் இளையராஜா. முதன் முதலில் அவருடைய பாடும் ஆற்றலை வெளிக் கொண்டு வந்த ஜி.தேவராஜன் அவர்களை நாம் பாராட்ட வேண்டும். 1978ம் ஆண்டு தீபாவளி வெடிச்சத்தத்தில் இதன் ஓசை எடுபடாமல் போயிற்று. என்றாலும் காலப் போக்கில் இதன் புகழ் பரவி இன்றைக்கு க்ளாஸிக் அந்தஸ்து பெற்று விட்டது. வெறும் அழகு பொம்மையாக வலம் வந்த ஸ்ரீப்ரியா அவர்களின் நடிப்பிற்கு சரியான தீனி தந்த படம் அவள் அப்படித்தான்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாக உள்ளது. கமல் ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் நடிகர் திலகத்தை தரம் தாழ்த்தி விமர்சிக்கும் போது அல்லது அவரால் தான் நடிகர் திலகத்தைப் பற்றி மக்கள் அறியப் போகின்றனர் என்றெல்லாம் கூறி வரும் போது இதை நடிகர் திலகம் திரியிலேயே கூறும் அளவிற்கு அவர்களுக்கு தைரியம் கிடைக்கும் போதும் நடிகர் திலகத்தை தெய்வமாய் வழிபடும் நம் மனம் படும் பாடு அந்த இறைவனுக்குத் தான் தெரியும். இதற்கெல்லாம் விடிவு அந்த நடிகர் திலகம் தான் தரவேண்டும்.

தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
16th November 2014, 06:44 PM
டியர் ராகவேந்திரன் சார்

நன்றி.

நீங்கள் வருத்தப்பட்டுள்ள விஷயங்கள் நியாயமானதே. தங்களுடைய தற்போதைய signature தங்களின் மனநிலையை நன்கு உணர்த்துகிறது. தாங்கள் குறிப்பிட்டது போல அங்கு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எல்லை மீறல் அதிகமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மிகவும் வருத்தமாகவும் இருந்தது. நீங்கள் நினைக்கும் வண்ணத்தில் எழுதப்படவில்லை என்ற மேல்பூச்சுகளும் பூசப்படுகின்றன. நடிகர் திலகத்தின் புகழ் பற்றி சேற்றை வாரி இறைக்கும் பதிவுகள் நிச்சயம் கண்டிக்கத் தக்கவையே. ஆனால் புரிந்து கொள்ளப் படவில்லை என்று நம் மேலேயே திரும்பும் அபாயம் வேறு சூழ்ந்துள்ளது. வேறு யாராவது எழுதி இருந்தாலும் கூட ஆச்ச்ரயமில்லை. இதில் நம் நண்பர்கள் நிலையும் என்னவென்று புரியவில்லை. ஒருவேளை நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ என்னமோ.

ஆனால் நடிகர் திலகம் திரியில் உள்ள நண்பர்களே நடிகர் திலகத்தை சிலாகித்துக் கொள்வது போன்ற கேலியும், கிண்டலும் தரும் இழுக்கான வரிகளை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்ற மனதை புண்படுத்தும் வார்த்தைகள் பழுத்த அனுபவசாலிகளின் கருத்தாக வருவதுதான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நடிகர் திலகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு புறந்தள்ளப்படுகிறாரோ என்கிற சந்தேகமும் வலுக்கிறது. அளவுக்கு மீறிய சுதந்திரம் என்ற பெயரில் பலரும் எழுத ஆரம்பித்திருப்பது சரியான போக்காக தெரியவில்லை. சுதந்திரத்தை நாம் குறை சொல்லவில்லை. அது வேண்டப்பட்டதே. அதுதான் முறையும் கூட. அது மற்ற திரிகளில் இல்லாமல் அங்கு மட்டும் தாறுமாறாக செயல்படத் துவங்கியுள்ளது நிச்சயம் ஒவ்வொரு நடிகர் திலகம் ரசிகன் நெஞ்சிலே சொல்லொணா வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இந்த நிகழ்வுகளெல்லாம் நல்லதுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. வசந்த மாளிகையில் தலைவர் சொல்லுவது போல 'இதையெல்லாம் சட்டை பண்ணாம போறதுதான் நமக்கு மரியாதை' என்ற வெறுப்புதான் இப்போதெல்லாம் மேலோங்குகிறது.

கடவுள் சொன்னது போல

காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்

என்ற நம்பிக்கையை இன்னும் நெஞ்சில் விதைத்துக் காத்திருப்போம்.