View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3
Pages :
1
2
3
[
4]
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
rajeshkrv
25th October 2014, 12:20 PM
ராஜேஷ்ஜி!
அருமையான வயலின் இசையுடன் தொடங்கும்
'ராகா நின்னது பாவா நன்னது
தாளா நின்னது நாட்யா நன்னது
மனவே யமுனா
மணியே கோகுலா
நானே முரளி
நீனே கோபாலா'
அம்ர்க்களமோ அமர்க்களம். பத்து முறைகளுக்கு மேல் கேட்டுவிட்டேன். நிஜமாகவே இசையரசி கொன்னுட்டாங்க ஜி. அதுவும் அந்த 'து' உச்சரிப்பு ரகளையான ரகளை. தேங்க்ஸ் ஜி.
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி
vasudevan31355
25th October 2014, 01:54 PM
அருமை நண்பர் வினோத் சாருக்கு என் இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://tamilmoviesongs.net/wp-content/uploads/2013/04/Oru-Thai-Makkal-Naam-Song.jpg
chinnakkannan
25th October 2014, 02:27 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..:)
கொஞ்சம் லேட் ஷமிக்கணும்..
எனில் ஆரம்பத்துல பக்திப்பாட்டு ஒண்ணு பார்த்தேன்..சூலமங்கலம் சகோதரிகள்..
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டி பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Xwudk1QbCAc
பாடற ரெண்டு பேர்ல ஒருத்தர் பவானியா?! அடுத்தவர் யார்..
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் பாட்டுக்கு நன்றி வாசு சார்.. சாயந்தரம் எல்லாப் பாட்டையும்கேட்டு ஹோம் வொர்க் பண்றேன்..சரியா…பல அழகான எஸ் எஸ் ஆர் பாடல்களை வழங்கிய ராகவேந்திரா சாருக்கு நன்றி.. வாசு ஜி..கைகொடுத்த தெய்வம் எப்படி விட்டேன்.. காகிதத்தைக் கிழித்துக் கிழித்துப் போடும்குழப்பமானமன நிலையை எஸ் எஸ் ஆர் நன்றாகப் பண்ணியிருப்பார்..
எஸ்.வி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
Russellisf
25th October 2014, 02:52 PM
பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.
கோவைத் தம்பியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தெலுங்குபாளையம். 1940 நவம்பர் 28-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் உடையார். தாயார் சுந்தாயி அம்மாள்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கோவைத்தம்பி, எப்படி அரசியல்வாதியாகவும், பட அதிபராகவும் ஆகமுடிந்தது?
"கிராமத்தில், கோவணம் கட்டிக்கொண்டு, எருமை மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த என்னை, கோபுரத்தின் உச்சியில் உட்கார வைத்தது திராவிட இயக்கமும், எம்.ஜி.ஆரும்தான்.
1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த "மலைக்கள்ளன்'' படம் வெளிவந்தது. அப்போது, கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் பள்ளியின் மாணவர் மன்றத்தில், "கலையும் நாமும்'' என்ற தலைப்பில் பேச எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார்.
அவரை நேரில் பார்த்த அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அவர் அழகு, நடை-உடை-பாவனை, பேச்சு அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவருடைய மேடைப் பேச்சு என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆர்வத்துடன் சென்று அந்தத் தலைவர்களின் பேச்சை கேட்டேன். அதனால்தான், பள்ளிப் பருவத்திலேயே, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளைப் பெற்றேன். கலைஞரின் பேச்சும், எழுத்தும், சினிமா வசனங்களும், எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களும் என் உள்ளத்தில் கலை உணர்வைத் தூண்டின. நானே பல நாடகங்களை உருவாக்கி, வசனம் எழுதி மேடைகளில் நடித்து வந்தேன்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டு, அவர் அ.தி.மு.க.வை தொடங்கியபோது, நானும் அவர் கட்சியில் ஐக்கியமானேன். சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.கோவை இளைஞர்கள்
நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்தபோது, 1981-ல் கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என்னை அணுகி, "எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதை நீங்கள் சினிமாப்படமாகத் தயாரித்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார்கள். அந்த இளைஞர்கள்தான் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனும், துணை இயக்குனர் சிறுமுகை ரவியும்.
"பொது வாழ்வுக்கு வந்து விட்டதால், சினிமா தயாரிக்கலாமா?'' என்று முதலில் தயங்கினேன். பிறகு சம்மதித்தேன்.
பொதுவாக, அந்தக் காலக் கட்டத்தில் என் எண்ணங்களை அண்ணன் அரங்கநாயகத்திடம் (முன்னாள் அமைச்சர்) கலந்து பேசிய பிறகுதான் முடிவு எடுப்பது வழக்கம். எனவே, சுந்தர்ராஜன் என்னிடம் கதையை கூறியதும், அதை அரங்கநாயகத்திடம் கூறும்படியும், அவர் முடிவை ஏற்பதாகவும் தெரிவித்தேன்.
அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்து கதையைக் கூறினார், சுந்தர்ராஜன். "கதை நன்றாக இருக்கிறது. தாராளமாகப் படம் தயாரிக்கலாம்'' என்று அரங்கநாயகம் தெரிவித்தார்.
இதன் பிறகு "மதர்லாண்ட் பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தை தொடங்கினேன். படத்தை ஆர்.சுந்தர்ராஜனே டைரக்ட் செய்வது என்று முடிவாயிற்று. படத்திற்கு "பயணங்கள் முடிவதில்லை'' என்று பெயர் சூட்டினோம்.
இந்தப்படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாகையால், இளையராஜா இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சுந்தர்ராஜனையும் அழைத்துக்கொண்டு, இளையராஜாவை சந்திக்கச் சென்றேன்.
பிரசாத் ஸ்டூடியோவில் அவரை சந்தித்து, "பயணங்கள் முடிவதில்லை என்ற பெயரில் படம் தயாரிக்கப்போகிறேன். அதற்கு நீங்கள் இசை அமைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன்.
"முழுக் கதையையும் எனக்கு கூறுங்கள். கதைப் பிடித்திருந்தால்தான் இசை அமைப்பேன். கதை பிடிக்காவிட்டால், நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் இசை அமைக்க மாட்டேன்'' என்றார், இளையராஜா.
மறுநாள் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் கருத்துடன் சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று இளையராஜா கேட்டார். "அரைமணி நேரம் போதும்'' என்று சொன்னார், சுந்தர்ராஜன்.
கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார்.
கதையை கேட்டு முடித்ததும், "இந்தப் படத்திற்கு நான் இசை அமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என்று இளையராஜா கூறினார்.
அவர் கூறியபடி, மறுநாள் இசை அமைக்க ஏற்பாடு செய்தோம். 12 மணி நேரத்தில் 30 டிïன்கள் போட்டார், இளையராஜா.
"இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
"நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டிïன்களை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்ததுதான் பயணங்கள் முடிவதில்லை படப்பாடல்கள்.
"பயணங்கள் முடிவதில்லை'' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்த எண்ணினோம். ஆனால் நான் அரசியல்வாதி என்பதாலும், டைரக்டர் புதியவர் என்பதாலும் யாரும் முன்வரவில்லை.
அந்த சமயத்தில், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் வெளிவந்திருந்தது. அதில் மோகனின் தோற்றமும், நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தன. அவரை கதாநாயகனாகப் போட நானும், சுந்தர்ராஜனும் தீர்மானித்தோம். அவரை அணுகியபோது, "கதையைக் கேட்டபிறகு, என் முடிவை சொல்கிறேன்'' என்றார்.
கதையைக் கேட்டதும், "கதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த சமயத்தில், "மஞ்சவிரிச்ச பூக்கள்'' என்ற மலையாளப்படம் சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடித்த பூர்ணிமாவை (பின்னாளில் பூர்ணிமா பாக்கியராஜ்) கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தோம்.
ரூ.13 லட்சம் செலவில், நான்கே மாதங்களில் "பயணங்கள் முடிவதில்லை'' தயாராகிவிட்டது. 26-2-1982-ல் படம் ரிலீஸ் ஆகியது.
திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் நூறு நாட்கள் ஓடிய இப்படம், முக்கிய நகரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
சென்னையில் லிட்டில் ஆனந்த் தியேட்டரில் 425 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது.
இந்த ஒரே படத்தின் மூலம், நான் முன்னணி படத் தயாரிப்பாளர்களின் வரிசைக்கு உயர்த்தப்பட்டேன்.''
இவ்வாறு கூறினார், கோவைத்தம்பி.
courtesy malaimalar
vasudevan31355
25th October 2014, 04:59 PM
பாடற ரெண்டு பேர்ல ஒருத்தர் பவானியா?! அடுத்தவர் யார்..
சி.க சார்,
ஒன்னு புகழ் பெற்ற கன்னட நடிகை ஆர்த்தி
இன்னொன்னு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 'குமாஸ்தாவின் மகளி'ல் பெருமைக்குரிய அறிமுகமான இளம் நடிகை ஷகீலா. குழந்தையாய் இருக்கும் போது பேபி ஷகீலா. இதே படத்தில் குமாரி உஷாவும் அறிமுகம். இவரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவரே.
ஆர்த்தி
http://i.ytimg.com/vi/Xwudk1QbCAc/maxresdefault.jpg
vasudevan31355
25th October 2014, 05:10 PM
http://i.ytimg.com/vi/7b9eaGbJ2Gc/maxresdefault.jpg
மடிசார் கட்டிக் கொண்டிருப்பவர் உஷா.
உஷாவுக்கு வலது ஓரம் நிற்பவர் ஷகீலா.
டி .வி.குமுதினிக்கு இடது ஓரம் நிற்பவர்தான் ஆர்த்தி.
vasudevan31355
25th October 2014, 05:43 PM
மாலை மதுரம்
ராஜேஷ் சார்,
உங்களுக்காக இந்த மாலை மதுரம்.
'மாமா வீட்டுக் கல்யாணத்திலே
ஊர்கோலம் விட்டது போல
ஆகாயத்துல மேகம் போகுது
அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது'
'நல்ல முடிவு' படத்திலிருந்து ஒரு அபூர்வ பாடல். சுசீலா அவர்களின் குரலில். 'வெண்ணிற ஆடை' நிர்மலா கோஷ்டியினருடன் பாடும் அழகான பாடல்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cqg36tIXwII
vasudevan31355
25th October 2014, 06:04 PM
மாலை மதுரம்
இந்தியாவையே உலுக்கிய 'செம்மீன்' மலையாளப் படத்தில் சலீல் சௌத்ரியின் இசையில் வயலாரின் மறக்க முடியாத பாடல். மதுவுக்கு மன்னாடே அவர்களின் குரல். அந்தி சாய்ந்த நேரத்தில் நிலவொளி வீச கடலோரப் படகில் அமர்ந்து மது தனை மறந்து பாட, மீனவர் குடிலில் ஷீலா அதை மெய்மறந்து கேட்க, அந்த காவியப் பாடல் இதோ. நிஜமாகவே மனதை மயக்கும் மதுரகானம் தான்.
'மானஸ மைனே வரு...
மதுரம் நுள்ளி தரு...
நின் அரும பூவாடியில் நீ தேடுவதாரே ஆரே'
https://www.youtube.com/watch?v=uVe4nEV_X2E&feature=player_detailpage
Russellisf
25th October 2014, 07:20 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1d651b89.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1d651b89.jpg.html)
chinnakkannan
25th October 2014, 09:04 PM
வாசு சார்..பேபி ஷகிலா அண்ட் ஆர்த்தி பற்றிய தகவலுக்கு நன்றி.. ஸோ நைஸ் ஆஃப் யூ..
உங்களுக்காக சில வாடைக் காற்றுகள்!
மழை வருவதற்கு முன் மேகங்கள் அலை மோதி வானத்தில் சூழ்கையில் கீழே அடிக்கின்ற மெல்லிய குளிர் காற்று தான் வாடைக் காற்று என்பர்..
(ஹை என்ன ஒரு கண்டு பிடிப்பு)
ஓடையிலிருந்து வரும் சில்ல்ல் காற்று சொர்க்கத்தைக் காட்டுதாம்.. கண்ணதாசன் சொல்றார்..
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
அதுவும் இள மனங்களை இந்த வாடைக் காற்று பண்ணும் தொந்தரவு இருக்கே.. சொல்லி மாளாது..
இந்தக் கன்னி ரத்தத் திலகத்தில் என்ன பாட்டு பாடுகிறாள்..
வாடைக்காற்றம்மா வாடைக்காற்றம்மா
வாலிப வயதை நாளுக்கு நாளாய் வாட்டுவதென்னம்மா வாட்டுவதேனம்மா..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y04TEAXFDr4
chinnakkannan
25th October 2014, 09:06 PM
//போனஸா நான் தந்த ஒத்தெல்லோ ஸ்டில் எப்படி வாசு சார்..//
பூங்காற்று பத்தி முன்னாடி பார்த்தோம்.. இங்க ஒரு டூயட்..
பூவாடைக் காற்று தனனனா
வந்து ஆடை தீண்டுமே தனனனா..
மோகன் ராதா..கோபுரங்கள் சாய்வதில்லை..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zC6jzVNb9UA
chinnakkannan
25th October 2014, 09:10 PM
வாடைக்காற்றுக்காக தேடினா இந்தப் பாட்டு சிக்கிச்சு.. நானே இதை இப்பத் தான் பார்க்கிறேன் கேட்கிறேன்.. பார்க்கையிலே லேசா வெயில் வந்துச்சு!
எஸ்.வி சேகர் ரூபிணி இன் வீட்ல எலி வெளியில புலி..
வாடைக் காற்று அம்மம்மா
ஆனாலும் நானும் பெண்ணம்மா
பார்த்து பார்த்து கண்ணம்மா
சூடாச்சு நெஞ்சும் உள்ளந்தான்..
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9PvIXTQLlwM
RAGHAVENDRA
25th October 2014, 09:12 PM
முரளி சார் புகைபடத்ததை பார்க்கமுடியவில்லை
முரளி சார் இணைத்திருந்த போட்டோ...
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/IMG_16108143685113_zps1cbeb335.jpeg
நன்றி முரளி சார்..
வாசு சார்,
மேலே படத்தில் உள்ள டாக்டர் முத்துக்குமரன் அவர்களும், அந்நாளைய ஸ்தாபன காங்கிரஸ் மாவட்ட தலைவராகவும் சிவாஜி மன்ற தலைவராகவும் இருந்த டாக்டர் முத்துக்குமரனும் ஒருவர் தானா...அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தாரல்லவா...
chinnakkannan
25th October 2014, 09:18 PM
//மாமா வீட்டுக் கல்யாணத்திலே
ஊர்கோலம் விட்டது போல// இது ஒரு துள்ளல் என்றால் அமைதியான மானஸ மதி வரு.. அது மென்மையான பாட்டு.. தாங்க்ஸ் வாசு சார்..
rajraj
26th October 2014, 01:43 AM
From Sri Purandhara Dasaru(Kannada)(1967)
JagadodharaNa ...........by Purandaradhasa in Kapi:
http://www.youtube.com/watch?v=wF3NpRnuKsg
Looks like DeepaavaLi feast was heavy for most! :lol: No crowd here! :)
Richardsof
26th October 2014, 05:29 AM
இனிய நண்பர் திரு வாசு சார் , திரு சின்ன கண்ணன் சார்
உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி .
http://i62.tinypic.com/xfpawi.png
http://youtu.be/soJrnRKr6-4
vasudevan31355
26th October 2014, 09:36 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 5)
http://www.ilayaraja.freeservers.com/r-title-1.gif
'ஆளுக்கொரு ஆசை'
என்னடா இப்படி ஒரு படமா என்கிறீர்களா? 1977-ல் முத்துராமன், ஜெயசித்ரா, அபர்ணா ஆகியோர் நடித்த வண்ணப் படம். நாயகன் முத்துராமன் எதற்கெடுத்தாலும் பட்ஜெட் போடும் கஞ்சக் கருமி. அவர் ஜோடி ஜெயசித்ரா. இளையராஜா இசை. மனுஷர் வாங்கு வாங்குவென்று வெளுத்து வாங்கியிருப்பார் பாடல்களில். பஞ்சு அருணாச்சலம் பாடல்களை இயற்றி இருந்தார்.
அபர்ணா வாணிஜெயராம் குரலில் பாடும்,
'மஞ்சள் அரைக்கும் போது
மதிலேறிப் பார்த்த மச்சான்
பாடலும்,
ஜானகி பாடும்
'வாழ்வென்னும் சொர்க்கத்தில்
உந்தன் பக்கத்தில்'
பாடலும் ஜோரான ஜோர்.
இரண்டிலும் ராஜாவின் ஆளுமை கொடி கட்டும்.
இப்போது தொடருக்காக இந்தப் படத்திலிருந்து இன்று இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போம்.
முதலாவது.
இந்தப் படத்தில் பாடகர் திலகத்தை வைத்து மிக அழகான ஒரு பாடலைத் தந்திருப்பார் ராஜா.
'கணக்குப் பார்த்து காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது'
'நடுத்தரக் குடும்பத்துக்கு
பட்ஜெட் காலி இல்லை
வரவுக்கு மேல் செலவு வந்தால்
எந்நாளும் தொல்லை'
டி.எம்.எஸ்.அனுபவித்துப் பாடியிருப்பார். மிக எளிமையான இசை. இந்தப் பாடல் ரொம்ப சுகமான சுகமாக இருக்கும். எனக்கு மிக மிக பிடித்த பாடல் இது. எல்லா செலவுகளையும் காதலி தலையிலேயே கட்டுவார் முத்துராமன். பாடல் அழகாகப் படமாக்கப் பட்டிருக்கும். ஜெயசித்ரா வழக்கத்துக்கு மாறாக இந்தப் படத்தில் கொஞ்சம் பூசினாற்போல் அழகாகவே தெரிவார். முத்துராமன் காதலிக்காக 'பொக்கே' வாங்கிக் கொண்டு பின்னால் கைகட்டி நிற்க 'பொக்கே' பூக்களை ஒரு ஆடு வந்து மேய்ந்துவிட, அது தெரியாமல் முத்துராமன் ஜெயசித்ராவிடம் பூக்கள் இல்லாத 'பொக்கே'யைத் தருவது நல்ல நகைச்சுவை.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yDXzct9gCcw
vasudevan31355
26th October 2014, 09:39 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 6)
http://www.ilayaraja.freeservers.com/r-title-1.gif
'ஆளுக்கொரு ஆசை'
இப்போது தொடரில் அடுத்த பாடலாக நாம் பார்க்க இருப்பது அதே 'ஆளுக்கொரு ஆசை' திரைப்படத்திலிருந்து ராஜாவின் அருமையான அரிதான டூயட். பாடல் முத்துராமனுக்கும், ஜெயசித்ராவுக்கும். ஜேசுதாஸும், சுசீலாவும் பின்னி எடுத்திருப்பார்கள். அதுவும் சுசீலா சுகமாகப் பாடுவார்.
பாடலின் டியூன் மிக அருமை. முதல் சரணம் தொடங்கு முன் டிரம்பெட் நடத்துமே ராஜாங்கம்.
'காதல் வரச்சொல்ல
கால்கள் தடை சொல்ல
மௌனம் பிறக்கிறது
காவலோ வேலியோ
யாரைத் தடுக்கிறது'
எனும் சுசீலா பாடும் சரண வரிகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக அழகாக மெட்டுப் போட்டுத் தந்திருப்பார் இளையராஜா. . அதே போல ஜேசுதாஸ் பாடும் போதும். தென்றலாய் உள்ளம் வருடும் இசை. இந்தப் பாடலை நன்கு கவனித்தீர்களானால் ஒன்று நன்றாகப் புலப்படும். பின்னால் ராஜா இசையமைத்த 'முதல் இரவு' (1979) படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்' பாடலின் சங்கதிகள் அனைத்தும் இந்தப் பாடலில் இருப்பதை உணரமுடியும். 'ஊ ஊ உ உ உ ஊ .... என்று 'முதல் இரவு' படப் பாடல் ஆரம்பிக்குமே அதே போல இந்தப் பாடலும் ஆரம்பத்தில் அப்படியே துவங்கும் சிறிய வித்தியாசங்களோடு. 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்' பாடல் ஜெயச்சந்திரன், சுசீலா பாடியது. என்ன இன்னும் இந்தப் பாடலை அனுபவத்தின் மூலம் மிகவும் மெருகேற்றித் தந்திருப்பார் ராஜா.
ஆனால் 'இதய மழையில் நனைந்த கிளிகள்' கொஞ்சமும் குறைவில்லாத அற்புத பாடல். அனேகமாக பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இப்போது கேட்டுப் பாருங்கள். அருமையை அட்டகாசமாக உடனே உணர்வீர்கள்.
இப்போது பெய்யும் இந்த மழையில் ராஜாவின் முத்தான 'இதய மழையில், மற்றும் 'கணக்குப் பார்த்து' இரண்டு இன்னிசை மழையையும் அனுபவித்து கேட்டு மகிழுங்கள். நாளை வேறு நல்ல பாடலோடு வருகிறேன்.
நிறைகுறைகளை கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://www.youtube.com/watch?v=6uys5GIFmO4&feature=player_detailpage
chinnakkannan
26th October 2014, 10:05 AM
ஹாய் குட்மார்னிங்க் ராஜ்ராஜ் சார் எஸ்வி சார் வாசு சார்..
ஜகதோ தாரணா காபி ராகப் பாடல் காபி குடித்துக் கொண்டே கேட்டேன் ராஜ்ராஜ் சார்.. நைஸ்.. யெஸ்.. தீபாவளி மயக்கம் இருக்குமாயிருக்கும்..!
கல்யாண வளையோசை கொண்டு – ஆஹா ஜகதோ தாரணாவிற்கு அப்புறம் கேட்ட பாடல்.. ..தாங்க்ஸ் எஸ்வி சார்..(பர்த்டே பார்ட்டி எப்படி இருந்தது)
இதய மழை நனைந்த கிளிகள் பாட்டு கேட்டிருக்கிறேன் வாசுசார்..ஸோ ஸோ ஸாங்க் தான்..ஆறு ஜெ.சி நாலு ஜெ.சி யும் கஷ்டம் தான் ஆறு முத்து ராமன் நாலுமுத்துராமன் இன்னும் படுத்த்ல்..(அந்தக்கால காமெரா விளையாட்டு) கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது.. வும் சுமார் ரகம் தான்.. டி.எம்.எஸ் பாட்டெல்லாம் மனம் பாடுவது போலப் போடப்படாது.. அவர் பாடுவதை வாயசைத்துப் பார்த்தால் தான் நன்றாக இருக்கும்..ஆ..னா..ல் முத்துராமனுக்கு டி.எம்..எஸ் வாய்ஸ் பொருந்தாது.. தாங்க்ஸ் வாசு சார்..தெரியாத பாடல் சொன்னதற்கு..பின் குறிப்பு: ஆளுக்கொரு ஆசை பார்த்ததில்லை..!
vasudevan31355
26th October 2014, 11:36 AM
வாசு சார்,
மேலே படத்தில் உள்ள டாக்டர் முத்துக்குமரன் அவர்களும், அந்நாளைய ஸ்தாபன காங்கிரஸ் மாவட்ட தலைவராகவும் சிவாஜி மன்ற தலைவராகவும் இருந்த டாக்டர் முத்துக்குமரனும் ஒருவர் தானா...அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தாரல்லவா...
முரளி சார்/ ராகவேந்திரன் சார்
கடலூர் பல் மருத்துவர் முத்துக்குமரன் வேறு. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முத்துக் குமரன் வேறு. நான் ஒரு தடவை பல் மருத்துவர் முத்துக்குமரனைச் சந்தித்திருக்கிறேன் மருத்துவ விஷயமாக. ஆனால் அவர் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் என்று தெரியாது. அவன் மகன் மருத்துவர் என்றும் சொல்லியிருந்தீர்கள். அவரும் நடிகர் திலகத்தின் தீவிர அபிமானி என்பதில் மிக்க சந்தோஷம். நான் நெய்வேலியிலேயே 22 வருடங்கள் தங்கி விட்டதால் கடலூர் அப்டேட்டில் இல்லை. நான் கடலூர் செல்லும் போது கண்டிப்பாக டாக்டரைச் சந்திக்க முயற்சி செய்கிறேன்.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி. முத்துக்குமரன் நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். அவ்வளவு குளோஸ். நடிகர் திலகம் எப்போது கடலூர் வழியாகச் சென்றாலும் தன் நண்பர் வீட்டுக்கு வராமல் இருக்க மாட்டார். முத்துக்குமரனின் மகன் மகி என்னும் மகேந்திரன் எனக்கு மிக நெருங்கிய நண்பர். 'இளையதிலகம்' பிரபுவும், மகியும் மிக நெருக்கம். என்னை பிரபுவிடம் சொல்லி அறிமுகப்படுத்தியதும் இவர்தான். தென் ஆற்காடு மாவட்டத்தின் அகில இந்திய பிரபு மன்ற செயலாளராக என்னை அப்போது பிரபு நியமித்ததே மகி என்ற இந்த மகேந்திரனால்தான்.
நடிகர் திலகம் முத்துக்குமரன் எம்.பி.அவர்களின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நடிகர் திலகத்திற்கு பாதுகாப்பு வளையம் அளிக்கும் பொறுப்பை மகி என்னிடம்தான் ஒப்படைப்பார். நானும், எனது நண்பர்களும் நடிகர் திலகத்தை பத்திரமாக எம்.பி. வீட்டுக்குள் ஒன்றாகக் கைகோர்த்தபடி சுற்றி நின்று அழைத்துச் செல்லுவோம். ஹாலில் உள்ள சோபாவில் முதலில் நடிகர் திலகம் அமருவார். எம்.பியும் நடிகர் திலகமும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் வைத்த கண் வாங்காமல் நடிகர் திலகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எப்படியோ சேதி கேள்விப்பட்டு எம்.பி. வீட்டின் முன் திரளாகக் கூடி விடுவார்கள். இதில் பெண்கள் அதிகம் வருவார்கள். இதற்கே நடிகர்திலகம் ரகசியமாகத்தான் வருவார். பெண்கள் 'அதோ பாருடி சிவாஜி' என்று ஜன்னல் வழியே ஆச்சர்யத்துடன் எட்டிப் பார்த்து பேசிக் கொள்வார்கள். நான் நடிகர் திலகத்திடம் சென்று "அண்ணா! உங்களைப் பார்க்க தாய்மார்கள் வந்தருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் அவர்களைப் பார்க்க வேண்டும்" என்று பவ்யமாகச் சொல்வேன். நடிகர் திலகமும் எழுந்து வந்து தாய்மார்களுக்கு வணக்கம் சொல்லி விட்டுப் போவார். தேர்தல் நேரங்களில் இந்திரா காங்கிரஸ் சார்பில் முத்துக்குமரன் போட்டியிடும் போதெல்லாம் அவருக்காக பிரச்சாரத்துக்காக வேண்டி நடிகர் திலகம் வந்துவிடுவார். அது மட்டுமில்லை. யார் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நின்றாலும் (பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் போன்றவர்கள்) அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நின்றாலும் நடிகர் திலகம் முதலில் வருவது முத்துக்குமரன் எம்.பி..வீட்டுக்குத்தான்.
அப்படி ஒரு தடவை கடலூர் வரும்போது தன் தந்தையார் பற்றி நடிகர் திலகம் எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
"உங்க ஊர் பக்கத்திலிருக்கும் நெல்லிக்குப்பத்தில்தான் அப்பா வெள்ளைக்காரன் காலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் டைனமைட் வைத்து ரயிலைத் தகர்க்க முயற்சி செய்து கைதானார்'
என்று அவருடைய பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
பின் ஹாலுக்கு இடப்புறம் இருக்கும் டைனிங் ஹாலில் அமர்ந்து எம்.பியுடன் சாப்பிடுவார் நடிகர் திலகம். எம்.பி.யின். மனைவி, மகன் மகி இருவரும் விதவிதமான அசைவ உணவு வகைகளை சமைத்து வைத்து நடிகர் திலகத்திற்கு பரிமாறுவார்கள். நான் நடிகர் திலகத்திற்கு அருந்த டம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொடுப்பேன். என்னுடைய நண்பன் வில்வராயநத்தம் ரவியும் என்னுடனேயே இருப்பான். எங்கள் இருவரை மட்டுமே டைனிங் ஹாலில் இருக்க சொல்லுவார் மகி. மற்ற நண்பர்கள் இதைக் கண்டு ரொம்ப பொறாமை கொள்வார்கள். நடிகர் திலகம் செம ஜாலியாக நகைச்சுவையுடன் பேசியபடி சாப்பிடும் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்போம். கையில் சாப்பாட்டைப் பிசைந்து எடுத்து, நண்பன் முத்துக்குமரனின் வாயில் ஊட்டியபடியே "சாப்பிடு எம்.பி சாப்பிடு" என்று நையாண்டி நக்கலோடு அவர் பண்ணும் சேட்டைகளைப் பார்க்க வேண்டுமே!
'சொஜ்ஜி' என்று நான் செல்லமாக அழைக்கும் என் நண்பன் கணபதிராமன் ஒருமுறை ஒரு வேலை செய்துவிட்டான். ஒருமுறை நடிகர் திலகம் இவ்வாறு கடலூர் வந்த வேளையில் வாசலில் அவர் விட்டிருந்த வெள்ளை நிற காலணியை நைஸாக சுட்டுவிட்டான். நான் அதை தற்செயலாகப் பார்த்து விட்டு, அவனை சத்தம் போட்டு விட்டு, அந்தக் காலணிகளை பத்திரமாக ஒரு துணிப் பைக்குள் போட்டுக்கொண்டு கையிலேயே வைத்துக் கொண்டேன். அவனுக்கோ செம கடுப்பு. "ராமர் பாதுகை மாதிரி நடிகர் திலகத்தின் காலணியை என் வீட்டின் பூஜை அறையில் வைத்து தினம் தினம் பூஜை செய்ய நினைத்திருந்தேனே ! கெடுத்துத் தொலைத்தாயே" என்று என் மேல் எரிந்து விழுந்தான். (இன்றுவரை அதை சொல்லி சொல்லி என்னைத் திட்டுவான். போனில் பேசினாலும் இதே புலம்பல்தான்)
பின் நடிகர் திலகம் கிளம்புவதற்கு முன்னால் அவரது காலணியை வாசலில் வைத்தேன். வெளியே அவர் வரும் போது ஒரு வெள்ளை கதர் துண்டை அவருக்கு அணிவிக்க அவரை நிறுத்தினேன். "என்ன?" என்று செல்லமாக முறைத்தவருக்கு துண்டைப் போட்டேன்.
"வழக்கமா மாலையைப் போட்டு இம்சை பண்ணுவே! இப்போ என்ன துண்டு!" என்றார் அவர்க்கே உரிய நக்கலான நகைச்சுவையோடு.
மாலையில் கண்ட தண்ணீரையும் தெளித்து வைத்து வியாபாரிகள் விற்பதால் அதை நடிகர் திலகத்திற்கு போடும் போது அவருக்கு அலர்ஜியாகி சளி, தும்மல், ஜலதோஷம் என்று அவர் அவதிப்படுவதாக நடிகர் திலகத்தின் உதவியாளர் குருமூர்த்தி ஒருமுறை எங்களிடம் 'அன்னை இல்லம்' போகும் போது சொல்லியிருந்தார். அப்போது நான் வாங்கிக் கொண்டு சென்ற மாலையை 'நடிகர் திலகத்திற்கு போட்டே தருவேன்' என்று அடம் பிடித்தேன். "யாராவது ஒருவர் மட்டும் மாலை போடுங்கள்.... மற்றவர்கள் போட வேண்டாம்... அவருக்கு அல்ர்ஜியாகும்" என்று உதவியாளர் கேட்டுக் கொண்டதின் பேரில் அனைத்து நண்பர்களின் வயிற்றெரிச்சலுடன் நான்தான் நடிகர் திலகத்திற்கு முதல் மாலை அணிவித்தேன். (ஒவ்வொரு முறையும் அன்னை இல்லம் போகும் போது முதல் மாலை என்னுடையதுதான்). அன்று முதல் நிலைமையை புரிந்து கொண்டு நடிகர் திலகத்திற்கு மாலை அணிவிப்பதை நிறுத்தி கதர் துண்டையே அனைவரும் அவருக்கு அணிவிக்க ஆரம்பித்தோம். இப்போது புரிகிறதா நடிகர் திலகம் ஏன் அந்த கேள்வியை என்னிடம் கேட்டார் என்று!
இது போன்ற நடிகர் திலகத்திற்கு சேவை செய்யும் பெரும் பாக்கியம் சில சமயங்கள் எனக்குக் கிடைத்தது நான் செய்த புண்ணியம்தான் என்று சொல்ல வேண்டும். அதில் குறிப்பிட்ட ஒன்றைத்தான் இங்கு சொல்லியிருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.
நன்றி முரளி சார். ராகவேந்திரன் சார். பழைய நினைவலைகளை கிண்டிக் கிளறி விட்டீர்கள். நடிகர் திலகத்துடன் நான் இருந்த சில மணித்துளிகள், அவருடனான என்னுடைய சில அனுபவங்கள் என் நெஞ்சில் இப்போது நிழலாடிக் கொண்டே இருக்கின்றன. என் கம்ப்யூட்டர் அறையில் எனக்கு முன்னால் பளீரென நெற்றியில் திருநீறுடன் கள்ளம் கபடமில்லாமல் குழந்தை போல சிரித்துக் கொண்டிருக்கும் என் இதய தெய்வத்தின் படத்தை பார்த்தபடியே, மனதுக்குள் பூஜித்தபடியே, கண்களில் கண்ணீருடன் இந்தப் பதிவைப் பதிந்து தற்சமயம் முடிக்கிறேன்.
வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்.
vasudevan31355
26th October 2014, 05:38 PM
மாலை மதுரம்
கணக்குப் பண்ணுறாரு
சும்மா கணக்குப் பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டைக் காட்டி
இனிப்பாய்ப் பேசியே
கணக்குப் பண்ணுறாரு
சும்மா கணக்குப் பண்ணுறாரு
அழகான ஹெலன் ஆடும் டான்ஸ். 1958-ல் வெளிவந்த 'நீலாவுக்கு நெறஞ்ச மனசு' படத்தில் 'திரை இசைத் திலகம்' இசையில் ஜமுனாராணி பாடும் அபூர்வப் பாடல். ஜமீன்தார் மாதிரி வீரப்பா ரசிப்பதைப் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=T1x-ssEVvc8&feature=player_detailpage
vasudevan31355
26th October 2014, 06:06 PM
மாலை மதுரம்.
இந்தித் திரைப்படங்களில் மறக்க முடியாத படங்களில் ஒன்றான ராஜ்கபூரின் 'சங்கம்' என்ற காவியப் படத்தின் காலத்துக்கும் அழியாத பாடல்.
ஓ மெஹ்பூபா ஓ மெஹ்பூபா
தேரே தில் கே பாஸ் ஹி
ஹே மேரி மன்ஜில் ஏ மக்ஸூட்
படப்பிடிப்பும், ஒளிப்பதிவும் பிரம்மிக்க வைக்கும். சங்கர் ஜெய்கிஷன் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் பேய் ஹிட். ராஜ்கபூருக்கு வழக்கம் போல முகேஷ் பாட, இந்தப் பாடலின் சிச்சுவேஷனும் சரி காட்சியமைப்பும் சரி நம்மை மெய் மறக்கச் செய்துவிடும். பனிச்சாரல் பொழிய மலைகள் சூழ்ந்திருக்கும் பிரம்மாண்ட ஏரியில் காதலன் ராஜேந்திர குமாருடன் ஸ்ட்ரீமரில் பயணிக்கும் அழகு வைஜந்தி... வைஜந்தியை பின்னாலேயே இன்னொரு ஸ்ட்ரீமர் படகில் 'ஓ மெஹ்பூபா' எனத் துரத்தி, விரட்டி காதலிக்கும் ராஜ்கபூர், செய்வதறியாது திகைக்கும் வைஜயந்தி, நண்பனுக்காக வீட்டுக் கொடுக்கும் ராஜேந்திரகுமார். அடடா! காவியமே! உனக்குப் பெயர்தான் சங்கமா ?
பாடல் முழுதும் படகிலேயே. ரம்மியமான இயற்கை காட்சிகளும், ராஜ்கபூரின் அட்டகாச சேட்டைகளும், (டிரஸ் சூப்பர்) முகேஷின் கட்டித் தங்கக் குரல் வளமும் நம்மை அப்படியே கட்டிப் போட்டு விடுகின்றன இப்பாடலைக் கேட்கும் போது. அனுபவித்துப் பாருங்கள். உண்மை புரியும்.
O mehbooba
O mehbooba
O mehbooba tere dil ke paas hi hai meri manzil-e-maqsood
vo kaun si mahafil hai jahaan tu nahin maujood
O mehbooba.....................
guzarun main idhar se kabhi, guzarun main udhar se
milata hai har ik raasata, jaa kar tere dar se
O mehbooba .....................
baahon ke tujhe haar main pahanaaunga ik din
sab dekhate rah jaayenge, le jaaunga ik din
O mehbooba............................
kis baat se naaraaz ho, kis baat ka hai gham
kis soch men doobi ho tum, ho jaayega sangam
O mehbooba
https://www.youtube.com/watch?v=FHOugjKQ_KU&feature=player_detailpage
RAGHAVENDRA
26th October 2014, 10:40 PM
வாசு சார்
இன்றைய மாலை மதுரம் இரு பாடல்களுமே அருமை. கேட்டு நெறஞ்சு விட்டது மனசு.
குறிப்பாக ஓ மெஹபூபா பாடல் தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஹிந்திப் பாடல். அப்போதைய இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் தாக்கத்தை உண்டு பண்ணியது. இதில் மெல்லிசை மன்னரும் தப்பவில்லை. அந்த பல்லவியின் முதல் வரியை மட்டும் எடுத்து (தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருந்திருக்கலாம்) அதற்குப் பிறகு ஒரிஜினலுக்கும் இதற்கும் சற்றும் சம்பந்தமின்றி மிகச் சிறந்த பாடலை அளித்தார். அதுவும் ஹிந்திப் பாடலை விட எனக்கு தமிழில் இந்த பாட்டு மிக மிக மிக மிக பிடித்த பாடலாகி விட்டது.
இது தான் நாடோடி படத்தில் இடம் பெற்ற கடவுள் செய்த பாவம் பாடல். (தணிக்கையில் தந்த பாடமாகி விட்டது). ஆஹா இந்த மாதிரி பாட்டையெல்லாம் இனிமேல் யார் தரப் போகிறார்கள்.
இசைத்தட்டு வடிவம் தணிக்கைக்கு முந்தையது. அதுவும் சரணங்களில் மெட்டு இன்னும் மனதை கசக்கிப் பிழியும். பாடகர் திலகத்தின் குரலும் கவியரசரின் வரிகளும் ஒன்றையொன்று போட்டி போட்டு சிறந்த படைப்பாக மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.
கேளுங்கள்..இசைத்தட்டு வடிவத்தில் இப்பாடல்
http://www.inbaminge.com/t/n/Naadodi/
இசைத்தட்டு வடிவத்திற்கும் படக்காட்சியில் ஒலிக்கும் பாடலுக்கும் வித்தியாசங்கள் ஆங்காங்கே தெரியும்.
இந்த இசைத்தட்டு வடிவப் பாட்டில் ஒரு இடத்தில் கவனித்தால் தெரியும், குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டின் மெட்டில் பின்னணி வயலின் இசை ஒலிக்கும்.
vasudevan31355
27th October 2014, 08:40 AM
நன்றி ராகவேந்திரன் சார் 'சங்க'த்தில் சங்கமம் ஆனதற்கு. 'கடவுள் செய்த பாவம்.... இங்கு காணும் துன்பம் யாவும்' பாடல் மிகவும் அருமை. ('கடவுள் தந்த பாடம்') என்று தணிக்கையில் வரிகள் மாற்றப்பட்டது.
'அறிவென்ற ஒன்றை மரியாதைன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்'
வரிகளில் கவிஞர் எங்கேயோ போய் விட்டார். எத்தனை பேருக்கு பாங்காய்ப் பொருந்துகின்றது இந்த வரிகள்!
எனக்கும் மிக மிக பிடித்த பாடல் அது. வீடியோவாகவே இப்போது பார்த்து விடலாம்.
https://www.youtube.com/watch?v=tR6TgUTWI84&feature=player_detailpage
vasudevan31355
27th October 2014, 09:00 AM
டியர் கோபு சார்
தங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி.
vasudevan31355
27th October 2014, 09:07 AM
சி.க.சார்,
'வீட்டுல எலி வெளியில புலி' பட பாட்டை இப்போதான் பார்த்தேன். ரூபினி அழகுதான். சேகர் இதற்கெல்லாம் சரிப்பட மாட்டார். அபூர்வ பாடலைப் பதித்ததற்கு நன்றி.
gkrishna
27th October 2014, 10:07 AM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
கடந்த வாரம் தீப ஒளி அனைவரின் இல்லத்திலும் சுடர் விட்டு பிரகாசித்து விட்டு இப்போது அனைவரின் இதயத்திலும் அன்பு எனும் ஒளி வீசி கொண்டிருக்கும். மிக்க மகிழ்ச்சி . ஒரு வாரம் கொஞ்சம் சொந்த அலுவல் காரணமாக திரியின் உள் வர முடியவில்லை. என் உடைய மூத்த மகள் செல்வி லக்ஷ்மி அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் (2010-2014) B .Tech information டெக்னாலஜி பிரிவில் இரண்டாவது மாணவியாக (வெள்ளி பதக்கம்) தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் .அத்துடன் டாட்டா கன்சுல்டன்சி செர்விசெஸ் (TCS ) campus interview மூலம் சென்ற ஆண்டு தேர்ச்சி செய்யப்பட்டு இந்த ஆண்டு டிசம்பர் 8 அன்று சென்னையில் வேலைக்கு சேர அனுமதி கடிதம் வந்ததால் அவர்களுக்கு சற்று உதவி செய்ய வேண்டிஇருந்தது.உங்கள் எல்லோரின் வாழ்த்துகளை பெற்று என் முத்த மகள் மென் மேலும் உயர்நிலை அடைய எல்லாம் வல்ல இறை ஆற்றல் துணை இருக்க வேண்டுகிறேன். மேலும் 2 தினங்கள் தெரிந்த ஒரு மூத்த நண்பரின் 60 வயது மணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருக்கடையூர் செல்ல வேண்டி இருந்ததால் திரியில் மும்முரமாக கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் .
வாசு சார் இன் இன்றைய ஸ்பெஷல் முடிந்து இளையராஜா ஸ்பெஷல் ஆரம்பம் . அமர்க்களம்
ராஜேஷ் சார் இன் தேவாவின் முத்துகள் தொடர் அருமையான பாடல்களுடன் மயங்க வைக்கிறது.
சி கே சார் மணிப்ரவாள தமிழ் தொடரட்டும்.
குருஜி ராகவேந்தர் அவர்களுக்கும் பாராட்டுகள்
எஸ்வி சார் சற்று தாமதமான ஆனால் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
கோபு சார் மற்றும் சிவாஜி செந்தில் சார் அவர்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
http://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU
பதிவுகள் எல்லாம் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்
என்றும் நட்புடன்
GK
JamesFague
27th October 2014, 10:27 AM
Mr Rajesh ji
Congratulation for your 2000 posts.
Mr Krishna,
Convey our best wishes to your daughter.
Regards
rajeshkrv
27th October 2014, 10:34 AM
காலை வணக்கங்கள்
கிருஷ்ணா ஜி வருக வருக. தங்கள் பாராட்டுக்கு நன்றி.
வாசு ஜி மாலை மதுரம் பாட்லகள் அருமை.
தேனிசை தென்றலின் முத்துக்கள் -12
1991’ல் வெளி வந்த புதுமனிதன் படம் மணிவண்ணன் சத்யராஜ் கூட்டணியில் இன்னொரு ப்டம்
இசை தேவா
இதில் சித்ரா பாடிய ஏலேலங்கிளியே அடி ஏலேலங்கிளியே மேடை யார் கொடுத்தார் நான் பாடல் பாடுகிறேன்
மிகவும் பிரபலமான பாடல்
இதோ இன்றைய முத்து ..
http://www.youtube.com/watch?v=iRxKdIOEyzQ
rajeshkrv
27th October 2014, 10:34 AM
Mr Rajesh ji
Congratulation for your 2000 posts.
Mr Krishna,
Convey our best wishes to your daughter.
Regards
thank you sir
gkrishna
27th October 2014, 10:35 AM
நண்பர் வாசு அவர்கள் தமிழ் ஹிந்து செய்தித்தாள் வெளியிட்டு இருந்த திரு மானா பாஸ்கர் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றை நமது திரியில் பதிவு செய்து இருந்தார். இது சம்பந்தமாக எனது நண்பர் திரு எஸ் வி வேணுகோபால் என்பவரிடம் பேசி கொண்டு இருந்தேன். இன்று காலை எனக்கு அவர் அனுப்பிய மின் அஞ்சல் இது. திரு எஸ் வி வேணுகோபால் அவர்கள் நிறைய வார,மாத இதழ்களில் பங்கு எடுத்து வருபவர். வங்கி ஊழியர்.சென்னையில் வசிக்கிறார் .சென்னையில் நடைபெறும் அனைத்து கலை இலக்கிய சம்பந்தமான நிகழ்சிகளில் பங்கு எடுத்து வருபவர் .
இனி அவர் மின் அஞ்சல்
அன்பின் மானா பாஸ்கரன் அவர்களுக்கு
உங்களது கட்டுரையை ரசித்து வாசித்தேன்...
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%A E%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article6493465.ece
நானும் சிவாஜி கட்சிதான்....
உங்களுக்கு சீனியர் மெம்பர் அந்தக் கட்சியில் என்பதைப் பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்பும் அதே நேரத்தில்.....அடடா..கட்சி என்றாலே ஒரே பேச்சு பாணிதான் தமிழ்நாட்டில்..
நினைவுக்கு எட்டாத காலமுதல் சிவாஜியைப் படத்தில் பார்க்க ஆரம்பித்தாலும், முறைப்படி சிவாஜி கட்சியில் சேர்ந்தது நான் எட்டாவது படிக்க பாட்டன் வீடு இருந்த காஞ்சிபுரம் சென்ற 1971ல் தான். என் அண்ணன்கள் படித்த பச்சையப்பன் கல்லூரியில் காங்கிரஸ், தி மு க மாணவர் அமைப்புகள் வன்முறையோடு மோதிக் கொண்டிருந்த காலம் அது. சினிமா, சினிமா இசை, ஸ்டண்ட், காதல் எல்லாம் புரியாமலே புரிய ஆரம்பித்த பருவம். வாராந்தரி ராணி வாசிக்க ஆரம்பித்த நேரம் எப்படி இருக்கும்...
ராஜா படம் ரிலீஸ் ஆன முதல் காட்சிக்குப் போக என் அண்ணன், சித்தப்பா மகனிடம் கெஞ்சிக் கேட்டிருந்தேன். இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் டபுள்ஸ் போகவும், டிக்கெட் வாங்கிப் பார்க்கவும். காட்சி நேரம் எட்டரை ஆக இருக்கக் கூடும் என்பதாலும், முதல் ஷோ கியூவில் முன்பாகவே சென்று நிற்கவேண்டும் என்றும் என் அண்ணன் ஆறரை மணிக்கே சைக்கிளை எடுத்து வாசலில் வைத்தான். அம்மா வழி பாட்டி, எதுவும் உணவு உட்கொள்ளாமல் வீட்டைத் தாண்ட விட மாட்டார்...பழைய சாதம் எடுத்து மோர் போட்டு சாப்பிடும்போது, அண்ணன் முரளி வாசலில் பேச சத்தம் கொடுத்தார்..அப்படியே அலறி அடித்துக் கொண்டு ஓடி தியேட்டரில் போயிறங்கும்வரை அவன் அடித்த அத்தனை கலாய்ப்பு வேலைகளையும் தாங்கிக் கொண்டு, அதில் ஒன்றுதான், டபுள்ஸ் பிரச்சனை...விஷ்ணு காஞ்சி போலிஸ் ஸ்டேஷன் நெருங்கும்போது சைக்கிளில் இருந்து குதித்து ஓடவேண்டும்....அரை கிலோமீட்டர் தள்ளி சைக்கிள் புறப்படுமுன் ஓடிச் சென்று கேரியரில் அமர்ந்துவிட வேண்டும், இல்லாவிட்டால் அண்ணன் போய்விடுவான்...
இப்படியாக தியேட்டர் சென்று பார்த்தால் காஞ்சிபுரம் சிவாஜி பக்தர்கள் முழுக்க திருவிழா கூட்டம் போல் செர்ந்திருந்ததைப் பார்த்ததும் உயிரே போனது.
என் அண்ணன் திடீரென்று, ஆஹா...சிவாஜியே தியேட்டருக்கு வந்திருக்காரு என்று குரல் கொடுக்க, நம்பிய கூட்டம் கலைந்துசென்று சிவாஜியைத் தேட அதற்குள் நாங்கள் முன்னேறிப் போய், டிக்கெட் எடுத்துவிட்டோம். எந்தத் திருட்டு மூதேவியோ வதந்தி கிளப்புறச்சி க்யூவில் இடம் போச்சு என்று ஒரு கும்பலே அவனைத் தேடிக் கொண்டிருக்கும்போது சத்தம் போடாமல் நாங்கள் தியேட்டருக்குள் இருந்தோம்....
எத்தனை எத்தனை படங்கள்.....பாபுவின் ஒவ்வொரு காட்சியும் எங்களுக்கும் மனப்பாடம் தான். பாலாஜி வீட்டில் மழையின் நனைந்த தனது சட்டையைப் பிழிவார் சிவாஜி. பிரித்துப் பார்த்தால் கிழிந்திருக்கும்...என்ன மேன் இது என்பார் பாலாஜி. முன்னாடி சட்டை, இப்போ ஓட்டை என்பார் சிவாஜி....பிறகு குடிசை வீட்டில் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீதேவியிடம் இது நாயோட தட்டு, நாயோட பெட்டி, இது நாயோட சங்கிலி என்று அந்தப் பெண் குழந்தையின் கைகளைத் தனது கழுத்தைச் சுற்றிக் கட்டிக் கொள்வோர்....நாய் எங்கே என்று அவள் கேட்கும்போது....அடடா..அடடா...
பிறகு நாங்கள் சிவாஜியை தேசிய நடிகர் என்றே அழைக்கத் தொடங்கினோம். சிவாஜி சொல்லிக் கொடுத்த மாதிரி சசி குமார் தேசிய நடிகர் ஆனார்...அவர் மறைந்தபோது நாங்களும் அஞ்சலி தெரிவித்தோம். தீவிர ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களானோம்.
வீட்டில் கஷ்டப்பட்டு ஸ்டூல் போட்டு ஏறி சுவரில் நடிகர் திலகம் வாழ்க என்று வாட்டர் கலரில் எழுதி தேசியக் கொடி வரைந்தேன் நான்.
கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது,
ஏனென்றால்,
என் இரண்டாவது வயதிலேயே நான் எம் ஜி ஆர் கட்சியின் அடிப்படை உறுப்பினன் ஆக இணைந்திருந்தேன். கையில் கிடைக்கும் பெட்டியை எல்லாம் எடுத்துக் கொண்டு புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது என்று பாடித் திரிந்த எனக்கு, இந்தக் கட்சி மாற்றத்தால், கடமைகளின் தன்மை மாறிவிட்டிருந்தது. இரண்டு மனம் வேண்டும், இந்த மாளிகை வசந்த மாளிகை...என்று அழுகைப் பாடல்கள், தத்துவ பாடல்கள்... எல்லாம் வரப்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் அவற்றின் செழுமையான மரபு இலக்கணம், எதுகை, மோனை இவற்றில் என் கவனம் மாறத் தொடங்கிய காலமும் இதுவே...
அனாலும் என்றைக்காவது மீண்டும் எம் ஜி ஆர், சிவாஜி சேர்ந்து நடித்த படம் ஒன்று வராமலா போய்விடும் என்று நெடுநாள் நம்பிக் கொண்டிருந்தேன்...
ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தைப் பார்க்கும்போது எனக்கு தெளிவு எட்டியிருந்தது.
இவர்களும் விரைவில் பிரிந்து போய்விடுவார்கள் என்று.
நன்றி பாஸ்கரன்....
எஸ் வி வேணுகோபாலன்
அடடா...மிக மிக முக்கியமான செய்தியொன்றை எழுத மறந்திருக்கிறேன்...
பத்தாம் வகுப்பில் பரமசிவன் கழுத்தில் இருந்து பாடலைப் பாடியும், மிகவும் பாராட்டிவிட்டு மூன்றாம் பரிசு தான் கொடுத்தனர்.. அடுத்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வு வகுப்பில், சோதனை மேல் சோதனை பாடலை எடுத்துப் பாடினேன்...முதல் பரிசு கிடைக்கச் செய்த சிவாஜிக்கு எப்படி நன்றி தெரிவிப்பது!
gkrishna
27th October 2014, 10:38 AM
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சித்தூர் வாசு சார்
rajeshkrv
27th October 2014, 10:39 AM
வாசு ஜி
இதோ அருமையான ஒரு சங்கீத மழை இசையரசியும் கண்டசாலாவின் குரலில்
http://www.youtube.com/watch?v=qz68ElqPL4Q
gkrishna
27th October 2014, 10:39 AM
2000 பதிவுகள் இலக்கை கடந்த திரு ராஜேஷ் அவர்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்
தொடரவேண்டும் உங்கள் பணி
vasudevan31355
27th October 2014, 10:57 AM
கிருஷ்ண சார்,
சற்றே ஒரு சிறு இடைவெளிக்குப் பின் வருகை புரிந்திருக்கிறீர்கள். வருக! வருக! தங்கள் மூத்த மூத்த மகள் செல்வி அவர்கள் எல்லா வளமும் பெற்று உயர் நிலையை அடைய மனமார வாழ்த்துகிறேன். அவர்களுக்கு என் நல்லாசிகள்.
vasudevan31355
27th October 2014, 11:00 AM
ராஜேஷ் சார்,
காலை வணக்கம். தங்கள் 2000 பதிவுகளுக்கு பதிவுகள் அல்ல... தகவல் களஞ்சியங்களுக்கு என் சந்தோஷமான வாழ்த்துக்கள். இது எப்போதும் தொடர வேண்டும்
http://cafeipiti.files.wordpress.com/2011/08/2000-posts.jpg
vasudevan31355
27th October 2014, 11:04 AM
ராஜேஷ் சார்,
எங்கே இரண்டு நாட்களாக ஆளையே காணோம்? வெளியூர் பயணமா அல்லது தீபாவளி ரெஸ்டா?
gkrishna
27th October 2014, 11:06 AM
சமீபத்தில் நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் இருந்து திருக்கடையூர் (கார் பயணம்) செல்லும் போது நல்ல பல பாடல்களை கேட்டு இன்புற்று கொண்டு மகிழ்ந்தோம். முதலில் கார் ஓட்டுனர் ரஹ்மான் அவர்கள் இசையில் வெளி வந்த ஜீன்ஸ்,திருடா திருடா,ரோஜா போன்ற பாடல்களையும் பின்னர் சமீபத்திய இசை அமைப்பாளர்கள் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் கொண்ட ஒரு CD இயக்கினார். சிறிது நேரத்தில் பயணம் சற்று நெருடல் ஆக தோன்ற ஆரம்பித்த வேளை .
ஏனென்றால் உடன் பயணித்தவர்கள் பல்வேறு வயது வகுப்பினர் 25 வயது முதல் 55 வயது வரை கொண்ட ஆண்கள் மட்டுமே மொத்தம் 7 அல்லது 8 பேர் இருந்த நினைவு .எல்லோருமே சற்று கோரஸ் ஆக 'போர் அடிக்கிறது வேறு பழைய பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் ' என்று கூறினார்கள். ஓட்டுனரிடம் இருந்த பாடல்கள் வரிசை எல்லாமே புதிய படங்கள்.அந்த நேரத்தில் என் உடைய கைபையை தோண்டி பார்த்ததில் ஒரு பழைய CD கிடைத்தது.அனைத்தும் பழைய பாடல்கள் .CD தரம் வேறு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.இருந்தாலும் பரவாய் இல்லை என்று ஓட்டுனரிடம் கொடுத்து ப்ளே செய்ய வைத்தோம். இறுதியில் சென்னை வந்து சேரும் வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் CD பிளேயர் நிறுதபடவே இல்லை. தொடர்ச்சியாக பாடல்கள் . அனைத்தும் 60,70,80 களில் வந்த பாடல்கள். அனைவருமே ரசித்த பாடல்கள். இறுதியில் அனைவருக்கும் ஒரு CD காபி கொடுக்க வேண்டி விண்ணப்பம் வந்து விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். இரண்டு பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒன்ஸ் மோர் கேட்கப்பட்டன
http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw
http://www.youtube.com/watch?v=dbxkdDjOBN4
gkrishna
27th October 2014, 11:07 AM
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி வாசு சார்
chinnakkannan
27th October 2014, 11:10 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
ஹாய் க்ருஷ்ணா ஜி..வெல்கம் பேக்.. உங்கள் மகள் செல்வி அவர்களுக்கு எனது என் மனைவியின் வாழ்த்துக்கள் + ஆசிகள்..
ஹாய் ராஜேஷ் ஜி.. கங்க்ராட்ஸ் ஆன் ரீச்சிங்க் 2000.. எங்கே ஒரு ஹேவர்ட்ஸ் அதே எண் எடுங்கப்பா!!
ஹாய் வாசு சார்..உங்களின் சிவாஜி நினைவுகள் மிக அழகு.. நேற்றேசொல்ல இயலவில்லை.. இன்னும் அப்பப்ப எடுத்து விடுங்கள் நிறைய விஷயங்களை..ஆவலாக இருக்கிறது..
ஆல்ஸோ..ஆமாம் ரூபிணி எஸ்வி சேகர் ஜோடி கொஞ்சம் ஸோ ஸோ தான்..
ம்ம் சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து ஆடலுடன் பாடலைக் கேட்டு இளைய தலைமுறையை க் கவர்ந்திருப்பதில் மகிழ்ச்சி ம் நல்ல பாடல்கள் தான் .. நைஸ் க்ருஷ்ணா ஜி..திருக்கடையூர் போனதில்லை போகவேண்டும்..
இன்று கொஞ்சம் வெளியில் வேலை..எனில் ஈவ்னிங்க் வருவேன்.. வரட்டா..
gkrishna
27th October 2014, 11:47 AM
சமீபத்தில் பழைய நண்பர் ஒருவர் சந்திக்க நேர்ந்தது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் (இப்போது அமெரிக்காவில் வாசம் ).
நிறைய விஷயங்கள் கருத்து பரிமாற்றங்கள் (மோடி முதல் பொன்னார் வரை) எல்லாம் முடிந்து புறப்படும் போது அவர் விடுத்த வேண்டுகோள் . கீழ் கண்ட படங்களின் dvd சென்னையில் எங்கே கிடைக்கும்
மதனமஞ்சரி
ஜெகன்மோகினி
மாயமந்திர குள்ளன்
கந்தர்வ கன்னி
பாதாள பைரவி (புதிய டப்பிங்)
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
http://s1.dmcdn.net/0IVC/1280x720-xn0.jpg
http://www.dailymotion.com/video/xvkl9t_madana-manjari-songs-sevaloni-anandam-ranganath-jayamalini-05_fun
gkrishna
27th October 2014, 12:09 PM
பாகம் இரண்டில் இவரை பற்றி பேசி இருக்கிறோம் வாசு சார்
நிறம் மாறாத பூக்கள் படத்தில் 'சுதாகரு' என்று இழுக்கும் போது ஒரு சுவை இருக்கும் என்று நீங்கள் கூட குறிப்பிட்டு இருந்தீர்கள் .
இவர் பற்றிய தகவல் நண்பர் நாகேஷ் ரவிச்சந்திரன் பகிர்ந்து கொண்டு உள்ளார் .
https://antrukandamugam.files.wordpress.com/2014/10/gemini-rajeshwari-niram-maaratha-pookkal-1979-1.jpg?w=593
ஜெமினி ராஜேஸ்வரி – பழம்பெரும் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகை.
“ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவளாச்சே” என்ற பழமொழி வார்த்தையைக் காந்திமதியை அர்ச்சித்து ’16 வயதினிலே’ படத்தில் ஒரு வசனம் வரும். அந்த ஆவேசமான, ஆனால் இனிமையாக பேசி அசத்திய குரலுக்குரியவர்தான் ஜெமினி ராஜேஸ்வரி.
இவரது பூர்வீகம் காரைக்குடி. இவரது சின்ன வயதிலேயே நாடக மேடை ஏறிவிட்டார். ஜெமினியின் வெற்றிப்படமான ‘சந்திரலேகா’-வில் குரூப் டான்ஸ் ஆடியவர். அப்போது இவரது வயது எட்டு. மாதச் சம்பளம் ரூ-75/-.ஜெமினியின் விதிகளை மீறி வெளி நாடகம் ஒன்றில் நடித்ததனால் அங்கிருந்து விலக்கப்பட்டார்.
1000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி வில்லன் கே.கண்ணனின் ‘கண்ணும் இமையும்’ நாடகத்தில் இவர் நடித்தபோது அதைப்பார்த்த இயக்குநர் ஜோசப் தளியத் ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் ஒரு வாய்ப்பை இவருக்கு அளித்தார்.
இதுவரை விளையாட்டுக் கல்யாணம், நிறம் மாறாத பூக்கள் (தமிழ்-தெலுங்கு), பிரியா, சூறாவளி, ஜோதி, நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, 16 வயதினிலே, கண்ணுக்கு இமை காவல், மண்வாசனை போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கே.பாலாஜி அவரது பல படங்களில் இவருக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளார்.இவர் எத்தனைப் படங்கள் நடித்திருந்தாலும் இவரை ரசிகர்களிடத்தில் தெரிய வைத்தவர் பாரதிராஜா.
சின்ன வீடு திரைபடத்தில் நடிகை அனுவின் உதவியாளர் ஆக வருவார்.தற்போதும் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிரார். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘எதிர் நீச்சல்’ படத்தில் இவர் நடித்துள்ளார்.
https://antrukandamugam.files.wordpress.com/2014/10/gemini-chandra-ethirneechal.jpg?w=593&h=270
“சினிமா எக்ஸ்பிரஸ்” 15.03.1983 வார இதழிலிருந்து எடுக்கப்பெற்று தொகுக்கப்பெற்றது
gkrishna
27th October 2014, 12:49 PM
படித்ததில் பிடித்தது
தீக்கதிர் இதழில் திரு டி எம் எஸ் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நண்பர் திரு எஸ் வி வேணுகோபால் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை
உணர்ச்சிகர பாடகன் விடை பெறுகிறான், பாடல்களை நம்மிடம் விட்டு....
எஸ் வி வேணுகோபாலன்
https://ci4.googleusercontent.com/proxy/_lDx73DA5ijVp3zGuYPjhbVIE7ARX0Emt71dAyZNaeQMQ4I4PW DfQHmQPptA8mBg403nSLwFIhIZ_cIlay2lIDkFROLmnUI8mp8b 2HQWODlZLc6DBX7G=s0-d-e1-ft#http://www.thehindu.com/multimedia/dynamic/01467/TMS_1467454g.jpg
ஒரு கண்ணதாசன், ஒரு சிவாஜி, ஒரு எம் ஜி ஆர், ஒரு விஸ்வநாதன், ஒரு சவுந்திரராஜன்....இதெல்லாம் ஒரு சகாப்தம்..திரும்ப வராது....
மேலே நீங்கள் படித்த வாக்கியம் சாட்சாத் டி எம் எஸ் அவர்களே சொன்னது. கவியரசு கண்ணதாசன் மறைவை அடுத்து சென்னை தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க அவர் சொன்ன செய்தி அது. உள்ளபடியே சகாப்தம் தான் அந்தக் காலம்.
பி பி ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி என மறைந்து கொண்டிருக்கும் இசை மேதைகளின் வரிசையில் இப்போது டி எம் சவுந்திரராஜன் காலமாகிவிட்டார். இசை தேவதைக்கு துயரம் மிகுந்த காலமும் கூட இது.
டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.
பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்....இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் - ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.
கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.
துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.
கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த 'பாட்டும் நானே பாவமும் நானே' (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.
சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்.... என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.
கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய 'யாரந்த நிலவு...' அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. 'இது மாலை நேரத்து மயக்கம் ' (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்....
திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்....அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி...இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.
அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, 'ன்' என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு 'ல்' சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.
தமிழ் அவரது தாய்மொழி இல்லை என்றபோதும் (அவரது சவுராஷ்டிரா மொழி), மொழியின் தூய்மை கெடாது உச்சரிக்கும் திறன் அவருக்கிருந்தது. தெருக்கூத்து, எம் கே தியாகராய பாகவதர் பாடிய ராதே உனக்கு கோபம் ஆகாதடி பாடலின் சற்றே மாற்றப்பட்ட வடிவத்தில் டி எம் எஸ் பாடிய பாடலும் பிரபலம் பெற்றது. அந்த உயர்ந்த கட்டைகளில் பாடிய காலம் பின்னர் மாறிக் கொண்டு வந்தது. அடிமைப் பெண் படத்தில் எம் ஜி ஆர்,புதிதாக அறிமுகப் படுத்திய எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆயிரம் நிலவே பாடல் வெற்றி பெற்றபோது இனி அவர் தான் தமக்குக் குரல் கொடுப்பார் என்று சொன்னது டி எம் எஸ் அவர்களின் பாடல்க குறையத் தொடங்கிய காலம். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, டி ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்திற்குப் பாட அழைத்தார். இரண்டு பாடல்கள். ஒன்றின் முதல் வரி, என் கதை முடியும் நேரம் இது...அடுத்தது: நான் ஒரு ராசியில்லா ராஜா. அதற்குப் பிறகு பெரிய அளவில் பாடல்கள் இல்லை...வயது அவரது குரலை உடைத்தது.
பெரிய அங்கீகாரம் அற்ற அண்மைக் காலத்தில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கைரளி தொலைகாட்சி அவரை அழைத்து சிறப்பித்து பரிசும் நிதியும் வழங்கியது குறிப்பிடத் தக்கது. கலைஞர்களை, எழுத்தாளர்களை, ஓவியர்களை தமிழ் சமூகம் கொண்டாடும் காலம் எப்போது வரும் என்ற கேள்வியை எழுப்பியது அந்த விழாவின் புகைப்படம். அவரது மறைவுச் செய்தி கேட்ட பிறகு, இணைய தலத்தில் அவரது கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (கவிஞர் வாலி) என்ற ஆரம்ப கால பக்திப் பாடலைக் கேட்டேன்....இளமை சொட்டும் குரலில், பிசிறற்ற இழைவும், குழைவும், ராக ஏற்ற இறக்கங்களும் மனத்தைக் கொள்ளை கொண்டது.
அவரது மறைவு, அவரது பாடல்களை - அவரது வளமிக்க குரலை மேலும் நிரந்தரமாக்கவே செய்கிறது. கிராமப்புற திருமண இல்லங்களின் ஒலி பெருக்கிகளில், நகர்ப்புற இசைக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில், ஆலய திருவிழாக்களில், மன்றங்களின் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத குரலாக டி எம் எஸ் ஒலித்துக் கொண்டு தான் இருப்பார். என்ன தான் புதிய பாடல்களை இசை நிகழ்ச்சியில் அடுத்தடுத்துப் பாடிக் கொண்டிருந்தாலும், அரை மணி நேரம் கழித்து ஒருவர் ஓசைப் படாமல் பழைய டயரியை எடுத்துத் திருப்பிக் கொண்டே வந்து, 'பாவாடை தாவணியில்...' (நிச்சய தாம்பூலம்) என்று மைக்கில் குரலெடுக்கும் போது சபை களைகட்டிவிடும். அப்புறம் 'இன்பமே உந்தன் பேர்...(இதயக்கனி)' தொடரும். சிவாஜியே பாடியது போல, எம் ஜி ஆரே வந்து இசைத்தது போல மக்கள் புளகாங்கிதம் அடைந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.....
vasudevan31355
27th October 2014, 12:54 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1954/nov1954chella111-1.jpg
vasudevan31355
27th October 2014, 12:58 PM
ஜெயலஷ்மி, ஜோதி மாலினி சே சே ஜெயமாலினி, ஜோதி லஷ்மி (ஜெயமாலினி படத்தைப் பாரதத் உடனே கையும் உடலை காலும் ஓடல கிருஷ்ணா) அமெரிக்காவை என்ன அகில உலகத்தையும் ஆட்டிப் படிக்கும் நிரந்தர சக்தியைப் பெற்றவர்கள் ஆயிற்றே. ஓம் விட்டாலாச்சார்யா நமஹ.
vasudevan31355
27th October 2014, 12:59 PM
திரு எஸ் வி வேணுகோபால் அவர்களின் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவலைகள் அருமை கிருஷ்ணா. எழுத்தில் குறும்பு கொப்பளிகிறது.
vasudevan31355
27th October 2014, 01:07 PM
Rare picture
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5b/MGR_With_T._M._Soundararajan%2C_Jayakanthan%2C_Avi chi_Meiyappa_Chettiar.jpg
gkrishna
27th October 2014, 01:43 PM
rare picture MGR ,சக்ரபாணி மற்றவர்கள் யார் வாசு ?
கொஞ்சம் details
vasudevan31355
27th October 2014, 01:52 PM
rare picture MGR ,சக்ரபாணி மற்றவர்கள் யார் வாசு ?
கொஞ்சம் details
கிருஷ்ணா சார்,
எம்.ஜி.ஆரின் வலது ஓரம் நிற்பவர் இயக்குனர் சங்கர். இடது ஓரம் கடைசியில் இருப்பவர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி. கண்ணாடி அணிந்திருப்பவர் பெயர் தெரியவில்லை. வெளிவராத எம்.ஜி.ஆர். படம் ஒன்றின் தயாரிப்பாளர் அவர் என்று வினோத் சார் கூறினார்.
vasudevan31355
27th October 2014, 01:57 PM
'நச்' பாடல். அற்புத அரிதான ஒரு பாடல்.
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.
இந்தப் பாடலை வாணி ஜெயராமின் தீவிர ரசிகரான நமது நண்பர் SSS என்னும் சுந்தரபாண்டியன் சார் அவர்களுக்காக அளிக்கிறேன்.
என்ன பாடல் என்கிறீர்களா?
http://2.bp.blogspot.com/_nFGA60KV6pc/TRie0OaTC-I/AAAAAAAABH0/InhFh535ut4/s400/Vani+Jayaram.jpg
வாணி ஜெயராம் குரலில் 'மாங்குடி மைனர்' படத்தில் ஒலிக்கும் அற்புத அரிதான ஒரு பாடல். எதிர்பாராத விதமாக சில லோ-கிளாஸ் படங்களில் இந்த மாதிரி பாடல்கள் ஷோக்காக அமைந்து விடுவது உண்டு. இத்தகைய பாடல்களாலேயே நாம் இந்த மாதிரிப் பாடங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதும் உண்டு. அந்த வகை அருமை கானம் இது.
கவர்ச்சி அழகு ஸ்ரீப்ரியா விஜயகுமாரை விரட்டி காதல் பண்ணும் அம்சமான பாட்டு. பாடல் வரிகளும் அற்புதம்.
விஜயகுமார் 'இன்று போல் என்றும் வாழ்க' எம்.ஜி.ஆர் ஸ்டைலில். ரிக்ஷவெல்லாம் ஓட்டுவார். கையில் டிரங்க் பெட்டி மற்றும் கம்பில் மூட்டை முடிச்சுக்களை மாட்டி வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகளில் வலம் வருவார். அவுட்டோரில் படப்பிடிப்பு. ஒளிப்பதிவு அம்சம்.
ரொம்ப நாளாக பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
உங்களுக்காகவே இதோ பாடல் வரிகள்.
கண்ணன் அங்கே
ராதை இங்கே
அன்பே வா
உனக்காகவே தந்த உள்ளம் எங்கே
தேடும் கண்ணில் தேவன் வராததென்ன
திருடிக் கொண்ட நெஞ்சைத் தராததென்ன
வாடும் பூவை கைகள் தொடாததென்ன
மன்னன் கிண்ணம் கன்னம் பெறாததென்ன
ரராரராராரரரரரரா
ரராரராராரரரரரரா
வாரானோ
கண்ணன் அங்கே
ராதை இங்கே
அன்பே வா
உனக்காகவே தந்த உள்ளம் எங்கே
இளமை கொஞ்சும் பதுமை உன்னோடு வந்தாள்
இணையே பிரியா நிழலாய் பின்னோடு வந்தாள்
தனிமை துயரம் சிறிதும் தாளாமல் நின்றாள்
தலைவன் நினைவே மனதில் மீளாமல் நின்றாள்
ரராரராராரரரரரரா
ரராரராராரரரரரரா
நான் வேண்டும்
கண்ணன் அங்கே
ராதை இங்கே
அன்பே வா
உனக்காகவே தந்த உள்ளம் எங்கே
வாணி 'அன்பே வா' என்று உச்சரிக்கும் அழகு அற்புதம். அதிலும் அந்த எக்கோ 'வா...வா...வா அருமையோ அருமை.
வாணியின் அம்சாமான பாடல்களுள் இதுவும் ஒன்று. சந்திரபோஸின் கலக்கல் டியூனில்.
என்ஜாய்.
https://www.youtube.com/watch?v=fzZEtZp8ohA&feature=player_detailpage
Richardsof
27th October 2014, 02:02 PM
இனிய நண்பர் திரு ராஜேஷ் அவர்களின் 2000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் .
வாசு சார் ...நாடோடி படத்தில் இடம் பெற்ற கடவுள் தந்த பாடம் ..பாடல் அருமை .
மக்கள் திலகத்தின் அபூர்வ ஸ்டில் - பதிவிட்டமைக்கு நன்றி .
கிருஷ்ணா சார் - சின்னகண்ணன் சார் பதிவுகள் இனிமை .
gkrishna
27th October 2014, 02:18 PM
மாங்குடி மைனர் கருப்பு வெள்ளையில் மிகவும் ரசித்த படம் வாசு சார்
அந்த படத்தில் ரஜினியின் ஒரு வசனம் அந்த காலத்தில் famous
கொள்ளைகூட்ட தலைவர் ரஜினி தன அல்லகையிடம் (கே கண்ணன் என்று நினைவு) ஒரு விஷயத்தை கூறி செய்து முடிக்க சொல்லுவார். எல்லா படத்திலும் சொல்வது போல் அல்லக்கை 'எஸ் done பாஸ் ' என்று சொல்வார். உடனே ரஜினியின் spontaneous வசனம் 'முட்டாள் செய்து முடித்து விட்ட பின் சொல்ல வேண்டிய வார்த்தை done அதை முதலில் சொல்றே ரைட்' உடனே வேகமாக சிகரட் பற்ற வைக்கும் ரஜினி .சி ஐ டி சகுந்தலா கூட உண்டு என்று நினைவு
'என் கையில் இருப்பது கத்தி சுத்தி' அப்படின்னு கூட ஒரு பாட்டு உண்டு
http://s.ecrater.com/stores/47612/480f4c6f17b91_47612b.jpghttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRhWWaI9TunfCriDeqvOHd43rlMIB8IV YvZK440p7_BETkSajTxHg
vasudevan31355
27th October 2014, 03:02 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 7)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
பி.ஏ.புரொடக்ஷன்ஸ் தயாரித்த 'அவர் எனக்கே சொந்தம்' பிளாக் அண்ட் ஒயிட் படத்திற்கு ராஜாதான் இசை.
ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட், ஒய்.விஜயா, விஜயகுமார் நடித்த இப்படத்திற்கு கண்ணதாசனும், பஞ்சு அருணாச்சலமும் பாடல்களை இயற்றியிருந்தனர். ஒளிப்பதிவை வினாயகம் கவனிக்க, பட்டு இப்படத்தை இயக்கியிருந்தார். கதை வசனம் பஞ்சு அருணாச்சலம்.
இந்தப் படத்திலும் ராஜா தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. மிக ஆழமாக சில பாடல்களில் அவர் தன் முத்திரையைப் பதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கிறிஸ்துவ மதத்தினருக்கு இப்படத்தின் மூலம் அவர் வழங்கிய ஒரு பாடல் மறக்கவே முடியாதது. அவ்வளவு இனிமை கொட்டிக் கிடக்கும் இப்பாட்டிலே. இந்தப் பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. 'படாபட்' ஜெயலஷ்மி குழந்தைகளுடன் இணைந்து பாடும்,
'தேவன் திருச்சபை மலர்களே
லல்லல்லாலலலலா
வேதம் ஒலிக்கின்ற மணிகளே
லல்லல்லாலலலலலலா'
பாடலின் பின்னணியில் மாதாவின் கோவில் மணியோசை ஒலிக்க, கிடார் இசை இழையோட நம்மை இன்பபுரிக்கு அழைத்துச் சென்ற பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத, சலிக்காத படல். சூப்பர் ஹிட்டையும் தாண்டிப் பயணித்தது.
இப்போது இந்தப் பாடலை விட்டு விடுவோம். பெண் (பூரணி, இந்திரா) குரலில் இப்பாடலைக் கேட்டிருப்பீர்கள். இதே பாடல் ஆண் குரலில் (ஜேசுதாஸ்) மிக மென்மையான காதல் பாடலாக இப்படத்தில் அழகாக ஒலித்திருப்பதைக் கேட்டிருக்கிறீர்களா? அந்த அரிய பாடலைத்தான் இன்றைய ராஜா தொடரில் கண்டு, கேட்டு மகிழப் போகிறோம்.
கிறித்துவப் பெண்ணான 'படாபட்' ஜெயலஷ்மி விஜயகுமாரைக் காதலிப்பார். ('படாபட்' ஜெயலஷ்மியை அச்சு அசலாக அப்படியே கிறித்துவ பெண்ணாக மாற்றியிருப்பார்கள்) அப்போது விஜயகுமார் பாடுவதாக வரும் இந்தப் பாடல் பலரும் அறியாதது. ஜேசுதாஸ் குரலில் ஒலிக்கும் இந்த அற்புதப் பாடல் இப்படித் தொடங்கும்.
தேவன் திருச்சபை மலரிது
வேதம் ஒலிக்கின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகைக் கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்
விண்மீனை உண் கண்களில் பார்க்கிறேன்
பொன்மானை உன் சாயலில் காண்கிறேன்
என்றும் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தேவியே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே
தேவன் திருச்சபை மலரிது
வேதம் ஒலிக்கின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகைக் கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்
கண்ணே மணியே பொன் எழில் ராணியே
அன்பே அமுதே அருந்தவச் செல்வியே
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
கவி பாடி வா கதை சொல்லி வா
நம் வாழ்விலே இன்பம் நிறைகவே
தேவன் திருச்சபை மலரிது
வேதம் ஒலிக்கின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகைக் கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்
பூரணி, இந்திரா பாடும் பாடலுக்கும், ஜேசுதாஸ் பாடும் பாடலுக்கும் உள்ள வரிகளின் வித்தியாசத்தை தெரிந்து கொள்ளவே இப்பாடலின் முழுவரிகளையும் தந்திருக்கிறேன்.
இளையராஜாவிடம் இருந்த கிடாரின் திறமையை இப்பாடலில் முழுவதும் நாம் உணரலாம். கிடாரின் மெல்லிய இனிமை பாடல் முழுதும் நம்முடனேயே விதவிதமான பாணியில் வெகு அழகாகப் பயணிக்கும். பல்லவி இருமுறை முடிந்ததும் மெல்லிய கிடாரின் ஓசை படிப்படியாக பேஸ் கிடாரின் ஓசையாக மாறி நம்மை மயக்கும் விந்தையை எப்படிச் சொல்வது?
அதே போல இரண்டாவது சரணத்தின் தொடக்கத்தின் முன்பாக ஒரு விசில் சப்தம் (விஜயகுமார் 'படாபட்'டுடன் பைக்கில் பயணிக்கும் போது) புல்லாங்குழல் பிளஸ் கிடார் ஓசையினூடே ஒலிப்பதைக் கேளுங்கள். ரம்மியமாக இருக்கும்.
நிஜமாகவே நாடி நரம்பெல்லாம் ஊடுருவி நம்மை புல்லரிக்கச் செய்யும் பாடல்.
https://www.youtube.com/watch?v=lx350480e_0&feature=player_detailpage&list=RDlx350480e_0
நாளையும் 'அவர் எனக்கே சொந்தம்' படத்தின் பாடல்கள் தொடரில் தொடரும்.
sss
27th October 2014, 03:09 PM
அன்புள்ள வாசு சார்,
எனக்காக ஒரு பாடல் தேடி தந்த உங்களுக்கு மிக்க நன்றி. வாணியின் புகழ் பெற்ற பாடல்கள் பல சந்திர போஸ் , விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ் போன்றவர்களிடம் இருந்து வெளி வந்துள்ளது.
நண்பர் திரு. சரவணன் அவர்கள் இந்த பாடல், படம் பற்றி கொடுத்த விளக்கம் உங்கள் பார்வைக்கு :
Aaya (!) Creations' Mangudi Minor (Release Date: June 2, 1978. Bhairavi was also released on the same day) starred Vijayakumar, Rajinikanth, Sripriya, K.Kannan, M.N.Rajam, S.V.Ramdas, A.Sakunthala and others. Screenplay, Dialogue and Direction by V.C.Guganathan. Guganathan is one of the two Sri Lankan Tamils, who made it big in Tamil Cinema, the other being Balumahendra.
I do not know much about Guganathan's early career. I remember that MGR's Pudhiya Bhoomi(1968) had story and dialogues by Guganathan. I guess he was also associated in films like Sudarum Sooravaliyum, Puguntha Veedu, Veetukku Vandha Marumagal, Petha Manam Pithu and Kanimuthu Papa. He is said to have married actress Jaya. He made a mark as a director in Madhura Geetham, which bagged the TN. Govt. Second Best Film Award, for 1977-78. He turned out to be a prolific film maker. The highpoint of his career as a director was perhaps Rajinikath's Thanikkaattu Raja(1982).
Guganathan's favorite MD was Chandrabose, whom he introduced in Madhura Geetham-1977. Some other films in this combination were Emaatrathey Emmaaraathey(1985) and Michael Raj(1986). I read that Guganathan's 250th film (!) Ethir Vaasal (Stg. Vignesh & Ranjit) is also to have music by Chandrabose.
On May 23rd this year, there was a dance ballet programme by local school children in Dubai, based on Kalidasa's Kumarasambhavam, directed by danseuse Lakshmi Venkatesh. What was special was that the music was composed by none other than Chandrabose! He had composed 85 bits of songs set across 50 Ragas for the ballet. Chandrabose was present on the occasion, and though he spoke that this experiment was a "milestone in his career". I could not help remembering with a pang the time when he was among the busiest composers in tfm.
I believe Chandrabose and Deva started their career together by giving "Light Music" performances. Later Chandrabose got a break as a singer, and the song "Yendi Muththamma"(Aaru Pushpangal-1977 Music- MSV) became immensely popular. In the same year, he composed music for his first film "Madhura Geetham". Both "Kannan engae"(SPB-PS) and "Sugamana ragam suvaiyaana thamizh paattu"(TMS-Seergazhi Govindarajan) were good songs. (However, while "Kannan engae" was a lift from "Sapna mera toot gaya"(Khel Khel Mein), I recently heard that "Sugamana ragam" was originally composed by S.M.Subbiah Naidu!). Anyway, in the following year, Chandrabose showed his class in "Maampoovae siru mainave"(Machanai Paartheengala). He would go on to give some excellent songs in the coming years. In the early 80s, his opportunities were few and far between, but he made a strong comeback with "Ponnu Pudichirukku"(1984). There was no looking back since then. He became a regular feature in many films of Muktha Srinivasan, K.Balaji and later V.Shekhar. The crowning glory came when he became the "Aasthaana Iasaiamippalar" of AVM productions. I believe he scored music for eleven AVM films in this period. However this Spring soon gave way to an Autumn, when his films became less in number, and soon he was totally forgotten. He is still busy, however, composing music for TV serials. Since many of VJ's songs post 1978 were for Chandrabose, we will be seeing more of him in detail in the coming years.
Coming to "Mangudi Minor", it was a shoddy remake of Manmohan Desai's 1972 hit film "Rampur Ka Lakshman" starring Randhir Kapoor, Shatrughan Sinha and Rekha. Vijayakumar played Randhir Kapoor's role of a country bumpkin coming to town. I think Rajini (playing Shatrughan Sinha's role) was the villainous long lost brother. Guganathan added an element of nativity by showing Vijayakumar as a big fan of MGR.
The other songs were "Eru pudicha kaigal"-TMS, "Anna neenga ninachappadi nadanthirukku"-TMS and "En kaiyil iruppathu"-PS.
Kannan angae
Radhai ingae
anbae vaa
unakkagave thandha
ullam engae
Thedum kannil devan varathathenna
thirudikkonda nenjai tharaathathenna
Vaadum poovai kaigal thodaathathenna
mannan thinnum annam peraathathenna
Vaaraano
Ilamai konjum pathumai unnodu vandhaal
inaiye piriyaa nizhalaai pinnodu vandhaal
Thanimai thuyaram siruthum thaalaamal nindraal
Thalaivan ninaive manathil meelaamal nindraal
Naan vendum
Arresting guitar notes mark the short prelude, before VJ starts off with breezy "ra raa" humming. The stress on "Angae" and "Ingae" is a sweet touch. Again the humming towards the end of the charanams is memorable, with a short laugh before "vaaraano" and the lingering last lines are soft and seductive.
Having said all this, I must also add: This song is a direct lift from R.D.Burman's "Albela re albela re rook jaana" sung by Lata Mangeshkar.
gkrishna
27th October 2014, 04:23 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 7)
[COLOR="#800080"][B][SIZE=2]பி.ஏ.புரொடக்ஷன்ஸ் தயாரித்த 'அவர் எனக்கே சொந்தம்' பிளாக் அண்ட் ஒயிட் படத்திற்கு ராஜாதான் இசை.
ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட், ஒய்.விஜயா, விஜயகுமார் நடித்த இப்படத்திற்கு கண்ணதாசனும், பஞ்சு அருணாச்சலமும் பாடல்களை இயற்றியிருந்தனர். ஒளிப்பதிவை வினாயகம் கவனிக்க, பட்டு இப்படத்தை இயக்கியிருந்தார். கதை வசனம் பஞ்சு அருணாச்சலம்.
வாசு சார்
அவர் எனக்கே சொந்தம் அபூர்வ பாடலை வெளியிட்டு உள்ளீர்கள்.
இந்த பாடல் ஜெயச்சந்திரன் பாடியதா ? அல்லது ஜேசுதாஸ் பாடியதா ?
படம் டைட்டில் கார்ட் பார்த்தால் பின்னணி பாடியவர்கள் என்று
டி எம் சௌந்தர்ராஜன்,ஜேசுதாஸ்,எஸ் பி பாலசுப்ரமணியம்,மலேசிய வாசுதேவன் என்று தான் உள்ளது.
y விஜயாவின் நடிப்பு அருமையாக இருக்கும் . மூன்று முடிச்சு,கல்யாண அகதிகள் வரிசையில் இந்த படத்தில் இளம் விதவையாக நடித்து இருப்பார்
gkrishna
27th October 2014, 05:01 PM
http://4.bp.blogspot.com/-wV6ozKFGQQw/UixO9Q-sU2I/AAAAAAAAASA/h49rb3bN8N8/s1600/Banumathi-1.jpghttp://3.bp.blogspot.com/-uzBEMjgTjN0/UixPIhNONjI/AAAAAAAAASI/7TjAifIMNK4/s1600/Banumathi-2.jpg
மேலே உள்ள பேட்டி திருமதி பானுமதி ராமகிருஷ்ணாவை - திரு இளையராஜா அவர்கள் சந்தித்த போது எடுக்கப்பட்டதாக இணையத்தில் அறிய நேர்ந்தது. இரண்டு பக்கங்கள் மட்டுமே உள்ளன. இதன் தொடர்ச்சி எங்காவது கிட்டுமா ?
vasudevan31355
27th October 2014, 06:27 PM
வாசு சார்
அவர் எனக்கே சொந்தம் அபூர்வ பாடலை வெளியிட்டு உள்ளீர்கள்.
இந்த பாடல் ஜெயச்சந்திரன் பாடியதா ? அல்லது ஜேசுதாஸ் பாடியதா ?
படம் டைட்டில் கார்ட் பார்த்தால் பின்னணி பாடியவர்கள் என்று
டி எம் சௌந்தர்ராஜன்,ஜேசுதாஸ்,எஸ் பி பாலசுப்ரமணியம்,மலேசிய வாசுதேவன் என்று தான் உள்ளது.
y விஜயாவின் நடிப்பு அருமையாக இருக்கும் . மூன்று முடிச்சு,கல்யாண அகதிகள் வரிசையில் இந்த படத்தில் இளம் விதவையாக நடித்து இருப்பார்
இந்தப் ஜேசுதாஸ் பாடியதுதான் கிருஷ்ணா சார். அச்சு அசலாக அப்படியே ஜெயச்சந்திரன் குரல் போலவே இருப்பதால் குழப்பம்.
vasudevan31355
27th October 2014, 06:31 PM
மிக நன்றி sss சார். 'கண்ணன் அங்கே' பாடல் பற்றியும், 'மாங்குடி மைனர்' படம் பற்றியும் அற்புத விவரங்கள் கொடுத்த சரவணன் சாருக்கும் நன்றி. சந்திர போஸ் பற்றிய விவங்களும் நன்று.
vasudevan31355
27th October 2014, 06:42 PM
நண்பர் SSS அவர்கள் பதிந்த சரவணன் சாரின் பதிவில் 'கண்ணன் அங்கே' பாடலின் இந்தி வடிவம். 'ராம்பூர் கா லக்ஷ்மண்' (1972) படத்திலிருந்து 'அல்பேலா ரே ருக் ஜானா ' பாடல். (கிருஷ்ணா, ரேகாவாக்கும். என்ஜாய்)
http://www.dailymotion.com/video/xmjzq5_albela-re-ruk-jana-rekha-raampur-ka-lakshman-lata-mangeshkar-r-d-burman-best-bolly-songs_music
gkrishna
27th October 2014, 07:29 PM
இந்தப் ஜேசுதாஸ் பாடியதுதான் கிருஷ்ணா சார். அச்சு அசலாக அப்படியே ஜெயச்சந்திரன் குரல் போலவே இருப்பதால் குழப்பம்.
வாசு சார்
இந்த 'அவர் எனக்கே சொந்தம்' பாடல் 1977 கால கட்டத்திலேயே எனக்கும் குழப்பம் தான். ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில் வரும் 'கண்ணனின் சன்னதியில்' பாடல் முதலில் ஜேசுதாஸ் பாடி வரும் . பின்னர் ஜெயச்சந்திரன் பாடி வேறு சில வரிகள் வரும். ஒரே குழப்பமாக இருக்கும் .அந்த கால கட்டத்தில் ரேடியோவில் மட்டுமே கேட்கப்பட்ட பாடல்களாக இருந்ததால் தெளிவு ஏற்பட சிறிது காலம் பிடித்தது .
RAGHAVENDRA
27th October 2014, 07:34 PM
Congratulations Rajesh Sir for 2000 posts. Expecting more and more from you.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/Rajesh2000grtgs_zps3d74e357.jpg
RAGHAVENDRA
27th October 2014, 07:37 PM
வாசு சார்
கடலூர் முத்துக்குமரன் அவர்களுடனான தங்களின் பரிச்சயமும் நடிகர் திலகத்துடன் தாங்கள் செலவழித்த நாட்களும் மிகவும் மகிழ்வுடனும் பெருமையுடனும் தங்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. நாங்களும் அதை உணர்கிறோம்.
மிகவும் அதிர்ஷ்டசாலி சார் நீங்கள்.
gkrishna
27th October 2014, 07:37 PM
ராம்பூர் கா லக்ஷ்மன் சத்ருகன் சின்ஹா நடிப்பு அபராமாக இருக்கும் .
ரேகா கேட்கவே வேண்டாம் . சென்ற வாரம் என் மேல் அதிகாரி ஒருவரிடம் ரேகாவுக்கு சமீபத்தில் 60 வயது பூர்த்தி ஆகி விட்டது என்று ஹிந்து நாள் இதழில் வந்த தகவலை தெரிவித்தேன் . நாமும் நமது திரியில் அதை கொண்டாடினோம் . அப்போது அவர் 'நிச்சயமாக இருக்காது ' என்று வாதம் செய்தார். சரி பார்ட்டி ரேகா ரசிகர் என்று நினைத்து கொண்டு 'என்ன சார் நீங்கள் ரேகா உடற்கட்டை :) பார்த்து 50 அல்லது 55 தான் மதிப்பிடுகிறீர்கள். ரேகாவின் அந்த உடற்கட்டை அவர் யோகா மற்றும் லக்ஸ் சினிமா நட்சத்ரங்களின் அழகு சோப்பு :) போட்டு குளிப்பதாலும் உங்களுக்கு அப்படி தெரிகிறது ' என்று கூறினேன் . உடனே அவர் 'நீ வேறே நான் சொல்ல வந்ததே வேற ரேகா பாட்டிக்கு மன்னிக்கவும் பார்ட்டிக்கு :) 65க்கு மேல் இருக்கும் நடிக்க வந்தே 50 வருஷம் ஆச்சு ' என்றாரே பார்க்கலாம் :mrgreen:
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR7X6pkC4k4kjjWpJD-Q8CcjsoL0thv3Ey5FQbHrcUcxYc8m8wl என்ன cute face சார்
RAGHAVENDRA
27th October 2014, 07:39 PM
கிருஷ்ணா ஜீ
வருக வருக வருக...
தங்கள் புதல்வியின் சாதனைக்கு பாராட்டுக்களும் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
RAGHAVENDRA
27th October 2014, 07:41 PM
கிருஷ்ணா ஜீ...
ராம்பூர் கா லக்ஷ்மண்.. சென்னை ஸ்டார் தியேட்டரில் சத்ருகன் சிகரெட் ஸ்டைலுக்காகவே இளைஞர்கள் பலர் படையெடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.
நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைலைப் பார்த்து ரசித்த எனக்கு அதில் அதிகம் நாட்டமில்லை என்ற போதிலும் பாடல்கள் மிகவும் ஈர்த்து படத்தைப் பார்த்த நாட்கள் மறக்க முடியாது.
gkrishna
27th October 2014, 07:52 PM
தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ராகவேந்தர் சார் . உங்களை போன்ற,மற்ற நம் திரி நண்பர் பெருமக்கள் போன்ற நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதம் இருந்தால் எல்லா நன்மைகளும் எல்லோரும் பெறுவார்கள் என்பதில் ஐயம் இல்லை
gkrishna
27th October 2014, 07:53 PM
கிருஷ்ணா ஜீ...
ராம்பூர் கா லக்ஷ்மண்.. சென்னை ஸ்டார் தியேட்டரில் சத்ருகன் சிகரெட் ஸ்டைலுக்காகவே இளைஞர்கள் பலர் படையெடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.
நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைலைப் பார்த்து ரசித்த எனக்கு அதில் அதிகம் நாட்டமில்லை என்ற போதிலும் பாடல்கள் மிகவும் ஈர்த்து படத்தைப் பார்த்த நாட்கள் மறக்க முடியாது.
dear raagavender sir
சத்ருகன் சின்ஹாவே ஒரு பேட்டியில் 'நடிகர் திலகத்திடம் தான் இருந்து நிறைய ஸ்டைல் கற்று கொண்டதாக ' கூறியிருக்கிறார் .நம் நடிகர் திலகத்திடம் மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்
chinnakkannan
27th October 2014, 10:53 PM
//தேவன் திருச்சபை மலரிது
வேதம் ஒலிக்கின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகைக் கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்// வெகு ஜோரான பாட்டு வாசு சார்.. நான் இந்தப் பாடல் இதுவரை கேட்டதிலலை.. தேவன் திருச்சபைமலர்களே மட்டும் கேட்டிருக்கிறேன்..உருகியிருக்கிறேன்.. வெரி நைஸ் அண்ட் தாங்க்ஸ் டு யு..
தேவன் திருச்சபை மலரிது, அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்..- இப்படி ப் பெண்ணை இதுவெனச் சொல்வது தவறு யுவர் ஆனர் என்றுசொல்ல வருகையிலே..அதீத மரியாதை காரணமாக மதுரைக்காரர்கள் உயர்திணையை அஃறிணையாகக் குறிப்பிடுவார்கள் என்பது நினைவுக்கு வருகிறது..(இரண்டு பாட்டும் கண்ணதாசன் தானா)
//பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே // ஹூம் ஃபடாபட்.. விஜயகுமார் முழுமனசுடன் ஆசி கூறவில்லை போலும்..!
வழக்கம் போல் சுவாரஸ்யமான பதிவுகள் தர ஆரம்பித்துவிட்டீர்கள் நன்றி கிருஷ்ணா ஜி..
*
ஒரே வேலை வேலை வேலைம்ம் என்ன செய்ய.. வேலைன்னு என்னல்லாம் பாடலிருக்குன்னு யோசிச்சேன்..
உடுமலை நாராயண கவி தான் எங்க வீட்டு மகாலஷ்மிக்காக நினைவில் வந்தார்..
ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது....ம்ம்( கண்டசாலா சுசீலாம்மா)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iajWHacIvcg
அதே போல் இவர் எழுதிய காதல் பாடல் ஒன்று எனக்குப் பிடிக்குமாக்கும்..
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
தாலி கட்டிக்கொள்ள தட்டிக் கழித்தால் கவலைப்படுகிறது.. டிஎம் எஸ் பிஎஸ்.. பிஜிஎம் அண்ட் ஒஹோஹோய் ரொம்பப் பிடிக்கும்..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2tTXDyZKHBw
(ஆமா ஏதோ வேலை பத்தி எழுதலாம்னு சொன்ன…
ஆமால்ல நெக்ஸ்ட் போஸ்ட் ஓகேயா... .)
RAGHAVENDRA
27th October 2014, 10:53 PM
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதர்கள்
http://www.oneheadlightink.com/sindication/wp-content/uploads/2013/08/New-Mexico-Open-Call-for-Real-Musicians.jpg
கலை மனிதனை இறைவனிடம் தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு பாலம்.
இசையென்பது, மனிதனை இறைவனிடம் கொண்டு செல்லும் தூது. மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பது இசை. இந்தப் பணியை செய்யும் இசைக்கலைஞர்கள் இறைவனின் தூதர்கள்.
இந்தக் கருத்தினை அடிப்படையாக வைத்து இந்தப் பகுதியில் இசைக்கலைஞர்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள், தகவல்கள், மறக்கவொண்ணா பாடல்கள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம்.
மனதை மயக்கும் மதுர கானம் எனத் தொடங்கி இன்று மய்யம் திரியில் நாளுக்கு நாள் பார்வையாளர்கள் பங்கேற்பாளர்கள் என அனைவரிடமும் அதிகரிக்கும் எண்ணிக்கையைக் கொண்டு முன்னணியில் கொண்டு வந்துள்ள வாசு சாரின் மனதில் இடம் பெற்ற டி.ஆர். பாப்பா அவர்களுடன் இப்பகுதி துவங்குகிறது.
டி.ஆர்.பாப்பா
http://www.lakshmansruthi.com/profilesmusic/images/pappa.jpg
தமிழ்த்திரையுலகின் இசை வரலாற்றில் மறக்க முடியாத பெயர் டி.ஆர்.பாப்பா. இயற்பெயர் சிவசங்கரன். பிறந்த ஊர் திருத்துறைப்பூண்டி. அந்நாளில் அகில இந்திய ரேடியோவின் ஏ கிரேடு இசைக்கலைஞராக விளங்கியவர். வயலினில் மிகச் சிறந்த நிபுணர். அந்நாளில் இசைக்கலைஞர்களில் வயலின் இசைக்கென மிக அதிகமான ஊதியம் பெற்ற இருவரில் ஒருவர் டி.ஆர்.பாப்பா, மற்றவர் மெல்லிசை மன்னர் டி.கே.ராம மூர்த்தி.
ஏராளமான பாடல்கள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டு, அவருடைய பெயரைப் பறை சாற்றிக்கொண்டுள்ளன. தன்னுடைய இறுதி மூச்சு வரை இசைக்காகவே வாழ்ந்தவர். சீர்காழி கோவிந்தராஜன் மறைவதற்கு முன்பு டி.ஆர்.பாப்பாவின் இசையில் திவ்யப்பிரபந்தம் பாடிக் கொண்டிருந்தாராம். அவர் திடீரென காலமாகி விட, பின்னர் சீர்காழி சிவ சிதம்பரம் அவர்கள் அதனை முடித்துக் கொடுத்தாராம். அதே போல் டி.ஆர்.பாப்பா மறைவதற்கு முன் சீர்காழி சிவ சிதம்பரம் பாட, திருப்புகழை இசையமைத்துக்கொண்டிருந்தாராம்.
ஜோசப் தளியத்தின் சிட்டாடல் நிறுவனம் தயாரித்த ஆத்மசாந்தி என்கின்ற மலையாளப் படம் மூலம் திரையுலகில் இவர் அறிமுகமானதாக விக்கிபீடியா கூறுகிறது. இப்படம் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிட்டாடல் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகத் திகழ்ந்தார்.
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் வகுப்புத் தோழர் . இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் அமர்ரானவதற்கு முன் இசையமைத்துக் கொண்டிருந்த அருணகிரிநாதர் திரைப்படத்தை முடித்துக் கொடுத்தார் டி.ஆர்.பாப்பா.
தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் பெற்றவர் டி.ஆர்.பாப்பா. இவையன்றி பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றவர்.
இசைக்காகவே வாழ்ந்த இவரைப் போன்ற இசை மேதைகளைப் பற்றி இத்தொடரில் கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். டி.ஆர்.பாப்பாவைப் பொறுத்த வரையில் அறிமுகம் அதிகம் தேவையில்லை என எண்ணுகிறேன்.
இவருடைய பாடல்களுக்கென்றே ரசிகர்கள் பலர் இன்றும் இருக்கிறார்கள். இதுவே இவருடைய இசையின் வெற்றிக்கு அடையாளம்.
ஏராளமான பாடல்கள் இவருடைய இசையில் அமரத்துவம் பெற்று விளங்குகின்றன. எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு அவருடைய இசையமுதைப் பருகலாம்.
மேற்காணும் தகவல்கள் விக்கிபீடியா இணையதளத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணைப்பு - http://en.wikipedia.org/wiki/T._R._Papa#Filmography
தொடக்கமாக கந்த சஷ்டி விழா தமிழகமெங்கும் விமரிசையாக நடைபெறும் இந்நேரத்தில் அவருடைய புகழ் பெற்ற முத்தைத்தரு பத்தித்திருநகை என்கின்ற திருப்புகழ் பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்..அருணகிரிநாதர் திரைப்படத்திலிருந்து
http://www.youtube.com/watch?v=N1NFW4GkPpc
குறிப்பு...
1960களின் இறுதி வரையிலான கால வரையறையை வைத்துக் கொண்டு அதற்கு முந்தைய கால கட்டத்தில் தமிழ்த்திரையுலக இசைக்குப் பங்களித்த கலைஞர்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள உத்தேசம்.
chinnakkannan
27th October 2014, 10:55 PM
வேலை கிடைத்துடுச்சு என ஒரு சத்யராஜ் படம்.. நினைச்சது நடந்தாச்சு கேட்டது கிடைச்சாச்சு எனப் பாடல் நினைவில் சத்யராஜ் கெளதமி....இளையராஜாவா தெரியவில்லை..பாடல் வீடியோகிடைக்கவில்லை..
*
வேற வேலைன்னு போட்டா வேளைன்னு பாட்டு வந்துடுத்து..
ஏகாந்த வேளைஇனிக்கும் இன்பத்தின் வாசல் திறக்கும்
ஆனந்தப் பாடம் நடத்தும் ஆனந்தகங்கை…
கார்த்திக்க் பானுப்ரியா நடித்த பாடும்பறவைகள்படம் வெகு எதேச்சையாகத் தான் வீடியோ கிடைத்துப் பார்த்தேன்..பலவருடம் முன்பு.. எதிர்பார்க்காத த்ரில்லர்.. நன்றாக இருந்தது..மேற்கண்ட பாட்டும் கீரவாணி இரவிலே பகலிலே பாட வா நீ பாட்டும் வெகு இனிமை..விஷூவலிலும்..! இசை இளைய ராஜா..!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5PsGfmLzZxM
//பரவால்லடா கண்ணா.. நைஸா எம் என் எம் பாட்டு ஒண்ணு போட்டுட்ட.. கில்லாடி டா நீ..
ஷ்ஷ்..மன்ச்சு..கம்னுஇரு:)/
RAGHAVENDRA
27th October 2014, 11:22 PM
ஆசை - ஜெமினி கணேசன், பத்மினி, பி.எஸ்.வீரப்பா, ராஜ சுலோச்சனா உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்த படம். டி.ஆர்.பாப்பா அவர்களின் இசை வரலாற்றில் குறிப்பிடத்தக்க படம். பாடல்கள் மிகவும் பிரபலமாகின. குறிப்பாக ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய ஆசை பொங்கும் அழகு ரூபம் என்னாளும் இனிக்கும் அமர கீதம்.
http://www.youtube.com/watch?v=wbNRK_DchYE
rajeshkrv
28th October 2014, 03:37 AM
2000 பதிவுகளுக்கான வாழ்த்துக்களை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
http://2.bp.blogspot.com/_V5FGJxuN-mo/TLzTYL5g0_I/AAAAAAAAAK8/XXakQqeALAg/s1600/nanri2.jpg
rajeshkrv
28th October 2014, 03:40 AM
வாசு ஜி,
வீட்டு வேலை, வெளி வேலை என கொஞ்சம் வேலையாக இருந்துவிட்டேன். அதனால் தான் 2 நாட்கள் இங்கே வர இயலவில்லை.
rajeshkrv
28th October 2014, 03:42 AM
வாசு ஜி,
வீட்டு வேலை, வெளி வேலை என கொஞ்சம் வேலையாக இருந்துவிட்டேன். அதனால் தான் 2 நாட்கள் இங்கே வர இயலவில்லை.
rajraj
28th October 2014, 04:51 AM
குறிப்பாக ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய ஆசை பொங்கும் அழகு ரூபம் என்னாளும் இனிக்கும் அமர கீதம்.
Tune from "Nain so Nain ...." ( Jhanak Jhanak Payal Baje (1955) )
:
http://www.youtube.com/watch?v=YAuqnaI9ZH0
Raga: Malgunji
rajraj
28th October 2014, 06:30 AM
என் உடைய மூத்த மகள் செல்வி லக்ஷ்மி அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் (2010-2014) B .Tech information டெக்னாலஜி பிரிவில் இரண்டாவது மாணவியாக (வெள்ளி பதக்கம்) தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் .அத்துடன் டாட்டா கன்சுல்டன்சி செர்விசெஸ் (TCS ) campus interview மூலம் சென்ற ஆண்டு தேர்ச்சி செய்யப்பட்டு இந்த ஆண்டு டிசம்பர் 8 அன்று சென்னையில் வேலைக்கு சேர அனுமதி கடிதம் வந்ததால் அவர்களுக்கு சற்று உதவி செய்ய வேண்டிஇருந்தது.உங்கள் எல்லோரின் வாழ்த்துகளை பெற்று என் முத்த மகள் மென் மேலும் உயர்நிலை அடைய எல்லாம் வல்ல இறை ஆற்றல் துணை இருக்க வேண்டுகிறேன்.
GK
Krishna: Please convey this America Thaaththaa's congratulations to your daughter Lakshmi. I am sure someday she will be the CEO of TCS. I remember Ramadorai was the last CEO.
My preference would be to go for higher education, earn a Ph.D and do whatever she likes.
In fact I gave a talk to a group of students in Anna University (Guindy Engineering College) in 2010 encouraging them to go for a Ph.D. The response was not that encouraging! :( About five students raised their hands and said the same thing - " At the end of the third year we get job offers. Why should we go for a Ph.D? ".
I encouraged another hubber to let her daughter go for a Ph.D. I am happy she is doing it. Her daughter will start next year. :)
This is just my opinion. I have been saying this for a long time, mainly because I am concerned about China outpacing India! :(
RAGHAVENDRA
28th October 2014, 06:49 AM
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர். பாப்பா
சமரசம் உலாவும் இடமே ... என்றால் உடனே சொல்லி விடுவீர்கள் ரம்பையின் காதல் என்று.. மறக்க முடியாத தத்துவப் பாடல்.. இடுகாட்டில் ஒரு மனிதனின் மனதில் என்னவெல்லாம் எண்ணங்கள் தோன்றுமோ அதை அப்படியே பிரதிபலிக்கும் யதார்த்தமான பாடல்..
ரம்பையின் காதல் படம் இன்றளவும் பாடல்களால் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அனைத்துப் பாடல்களுமே தெவிட்டாத இனிய கானங்கள்.
இன்று இத்தொடரில் இங்கு இடம் பெறுவது ஏ.ஜி.ரத்னமாலாவும் கே.ஹெச்.ரெட்டியும் பாடிய கட்டி வெல்லம் என்கின்ற பாடல். பல்லவியைப் போலவே பாடலும் கட்டி வெல்லமாய் இனிக்கும்.
கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/r/Rambaiyin%20Kaadhal/
RAGHAVENDRA
28th October 2014, 07:06 AM
பொங்கும் பூம்புனல்
http://2.bp.blogspot.com/-XUWdYVtRH0s/VCMcNSkuIeI/AAAAAAAAAXY/vwhIYIYANUc/s1600/Screen%2BShot%2B2014-09-24%2Bat%2B3.31.31%2BPM.png
யானை வளர்த்த வானம்பாடி, யானை வளர்த்த வானம்பாடி மகன் என மிகவும் பிரபலமான படங்களை எடுத்த நீலா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மெரிலாண்ட் சுப்ரமணியம் அவர்களின் மறக்க முடியாத படம் யார் மணமகன்.
பிரதர் லக்ஷ்மண் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை. குறிப்பாக கொஞ்சம் சிரிங்க என்ற எஸ்.சி.கிருஷ்ணன் மரகதம் பாடிய பாடலும் ஆணழகே வா அருகே என்ற ஏ.எம்.ராஜா ஜமுனா ராணி பாடிய பாடலும் எப்போது கேட்டாலும் இனிக்கும் பாடல். மற்ற பாடல்களும் அதே போல். குறிப்பாக ஏ.எம்.ராஜா பி.லீலா பாடிய காதலெனும் அமர ஜோதி நெஞ்சை வருடிச் செல்லும் சோகமான பாடல்.
கேளுங்கள்
http://www.inbaminge.com/t/y/Yaar%20Manamagan/
rajeshkrv
28th October 2014, 07:52 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் -13
90'களில் பாக்யராஜ் கொஞம் வித்தியாசமாக சில படங்கள் முயற்சி செய்தார்.
அப்படி ஒன்று “ அம்மா வந்தாச்சு” . பாக்யராஜ், குஷ்பு, பேபி ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்த படம்.
http://www.filmlinks4u.net/wp-content/uploads/2011/04/Amma-Vanthachu-1992-Tamil-Movie-Watch-Online.jpg
இதில் ஒரு பாடல் மிகவும் பிரபலம் . இளையராஜாவோ என்று நினைக்கும் அளவிற்கு பாடல் இருக்கும்.
மனோ ஸ்வர்ணலதா பாடிய எனக்கு மிகவும் பிடித்த நந்தினி நந்தினி ஓ நந்தினி..
குறிப்பாக வாலி ஐயாவின் வரிகள்
நம்மை இலக்கியமாய் கவிஞர் குலம் எழுதட்டுமே
அன்பின் இலக்கணத்தை உலகமெல்லாம் அறியட்டுமே
எந்த பிறவியிலும் பிரிவறியா உறவு இது.
உன்னை பகலிறவாய் தொடந்து வரும் நிலவு இது.
நம்மை போல் ஒரு ஜோடி இல்லையே உயிர்த்தோழி
வையமே வாழ்த்து கூறும் அம்மம்மா கண்ணு போடும்
வானம் உள்ள காலம்வரை வளரட்டும் காதல் கதை
அடுத்து வாலி ஐயாவிற்கே உரிய குறும்பு
சின்ன கதவு எனும் உதடுகளை திறந்துவிடு
என்னை பழரசமும் நவரசமும் பருகவிடு.
http://www.youtube.com/watch?v=g2_OsD1wygo
rajeshkrv
28th October 2014, 08:11 AM
கொஞ்சம் அரிதான பாடல்கள் . இருந்தாலும் மனதை கவரவும் மயக்கவும் செய்யும்.
சிற்பியின் இசையில் கேப்டன் என்ற படத்தில் பாலுவும் ஸ்வர்ணலதாவும் பாடிய பாடல்.இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல்
பாடல் படமாக்கப்பட்டவிதம் கொஞ்சம் சுமார் தான், ஆனால் ஸ்வர்ணலதாவின் குரலுக்காக அடிக்கடி கேட்பேன்
இந்த படத்தின் கன்னத்துல வை பாடல் பிரபலமானாதால் இது அமுங்கி போய்விட்டது.
http://www.youtube.com/watch?v=cqu-I1WAcRY
ஏ.எம்.ராஜாவின் புதல்வர் திரு சந்திரசேகரை இளையராஜா இந்த பாடலில் பயன்படுத்திக்கொண்டார். இதில் ஒலிக்கும் பெண் குரல் லேகா.
90’களில் சில பாடல்கள் பாடினார்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். வாலி ஐயாவின் வரிகள் ...
காலம் காலமாய் காதின் ஓரமாய் காதல் வேதம் படிப்பேன்.
http://www.youtube.com/watch?v=VmIEIbxMKxs
அதே லேகாவுடன் மனோ பாடிய அருமையான பாடல்.
கோலங்கள் திரையில் ஒலிக்கும் ஒரு கூட்டில் சின்ன் கோகிலம் இரண்டு
http://www.youtube.com/watch?v=i7pioe9LZLk
அதே போல் 90’களின் ஆரம்பத்தில் வந்த இன்னிசை மழையில் ஷோபாவும் பாலும் பாடும்
தூரி தூரி மனதில் ஒரு தூரி (வரிகள் வாலி)
http://www.youtube.com/watch?v=0lf0yS3nfTE
அதே போல் கண்மனி என்ற படம்
அதில் உடல் தழுவ தழுவ நழுவி போனதே, ஆசை இதயம் விரியும் பாடல்களும் அருமை.
வாசு ஜி, உங்கள் ராஜா தொடருக்குள் நான் இதை பதிவு செய்துவிட்டேன் மன்னிக்கவும்.
Richardsof
28th October 2014, 08:27 AM
இளையராஜா இசையில் முத்துலிங்கத்தின் பாடலில் இடம் பெற்ற முதல் வசந்தம் படம் .
இளையரஜா குரலில் ..
ஆறும் அது ஆழமில்லே , அதில் சேரும் கடலும் ஆழமில்லே பாடல் மனதை கவர்ந்த பாடல் .
http://youtu.be/7oEyzJmlE9k
vasudevan31355
28th October 2014, 09:45 AM
நன்றி சின்னக் கண்ணன் சார்.
'வேலை வந்து ஒருவன் இங்கே மேலே வந்துட்டா அவன் ஆடும் ஆட்டம் தாங்க முடியல' அப்படின்னு சத்யராஜ் நடிகன் படத்துல ஒரு பாட்டுப் பாடுவாரு . ஞாபகம் இருக்கா கண்ணா!
'வேலை' பாட்டுக்கள் கொடுங்க. என்ஜாய் பண்றோம்.
vasudevan31355
28th October 2014, 09:46 AM
நன்றி ராகவேந்திரன் சார்.
ஆனந்தம் விளையாடும் வீடு
பல அன்றில்கள் ஒன்றான கூடு
அல்லவோ நமது திரி. அத்தனை பேரின் வியர்வையில் வளர்ந்த திரி.
தங்களின் 'இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதர்கள்' தொடருக்கான முன்னுரை அருமை. அதை விட அருமை எனதருமை டி.ஆர் .பாப்பா புகழ் பாடி இந்தப் பகுதி தொடங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. 'டீச்சரம்மா' என்ற ஒரு படம் போதும் இவர் பெயரை காலம் முழுதும் சொல்ல. தொடருங்கள் சார். படிக்க மகிழ்வுடன் காத்திருக்கிறேன்.
vasudevan31355
28th October 2014, 09:59 AM
ராஜேஷ்ஜி!
தேனிசை தென்றலின் முத்துக்கள் தொடரில் 'நந்தினி' நல்ல பாட்டு.
நல்ல வேளையாய் வாலி சின்னக் கதவுகளை மட்டும் திறக்கச் சொன்னாரே.
கேப்டன் என்ற படத்தில் பாலுவும் ஸ்வர்ணலதாவும் பாடிய 'கன்னில் ஆடும் ரோஜா'வும் நல்ல சாங்.
கேப்டன் ஒரு தெலுங்கு மொழி மாற்றுப் படம். சரத்குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும் அப்போது நல்ல மார்கெட் இருந்ததால் அதை அப்படியே நேரடி தமிழ்த் திரைப்படம் போல பாவ்லா காட்டி வெளியிட்டார்கள். நாம் என்ன அவ்வளவு விவரம் அறியாதவர்களா? ஆனால் சாமர்த்தியமாக பாடல்களை மட்டும் நேரிடையாக தமிழில் ஷூட் பான்னிவிட்டது போல் தெரிகிறது. அப்படித்தானே ராஜேஷ்ஜி?
//ஏ.எம்.ராஜாவின் புதல்வர் திரு சந்திரசேகரை இளையராஜா இந்த பாடலில் பயன்படுத்திக்கொண்டார். இதில் ஒலிக்கும் பெண் குரல் லேகா.//
இதுவரை எனக்குத் தெரியாத தகவல். நன்றி ஜி.
vasudevan31355
28th October 2014, 10:00 AM
//வாசு ஜி, உங்கள் ராஜா தொடருக்குள் நான் இதை பதிவு செய்துவிட்டேன்//
அதனால் என்ன ஜி? நல்ல பாடல்தானே! நம்மில் யார் போட்டால் என்ன? நமக்குள் வேறுபாடு என்பதே கிடையாது.
vasudevan31355
28th October 2014, 10:20 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 8)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
நேற்று விட்டிருந்த 'அவர் எனக்கே சொந்தம்' படத்தின் பாடல்கள் தொடர்கின்றன.
இந்தப் படத்தில் பாப்புலரான ஈழப் பாடலான 'சுராங்கனி' பாடலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. பட்டி தொட்டிகள் எல்லாம் பட்டை கிளப்பிய பாடல். இது ஒரு ஸ்டேஜ் புரோகிராம் பாடல்.
வெகு ஈசியான வரிகள் என்பதால் அனைவர் மனதிலும் சுளுவாக நுழைந்து வாய் வழியே ஜோராக வெளிவந்தது. எங்கே பார்த்தாலும் அப்போது 'சுராங்கனி'தான்.
மலேஷியா வாசுதேவன், ரேணுகா குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஒருவித கிறக்கமான பாடல்தான். என்ன ஒரு குறை. இவ்வளவு ஜாலியான ஒரு பாடலை நன்கு அறிமுகமான நடிக நடிகையருக்கு நடிக்கக் கொடுத்திருந்தால் இன்னும் எங்கோ போய் இருக்கும். பாடலுக்கு ஆடும் நடன நடிகை தேவலை. ஆனால் பாடலுக்கு நடிக்கும் நடிகர் கவரவே இல்லை.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=R7munaAYmro
gkrishna
28th October 2014, 10:47 AM
சுராங்கனி பாட்டு நிறைய நினைவலைகள் வாசு சார்
அந்த அந்த ஊருக்கு தகுந்த மாதிரி பாடல் வரிகள் மாறும்.
நான் படித்த தூய சவேரியார் கல்லூரி (St .xaiver 's college ) நெல்லை பாளையம்கோட்டை அருகில் உள்ள ஒன்று .அதற்கு பஸ் நம்பர் 11 JRT highground போர்டு போட்டு வரும் அந்நாட்களில் . அதே சமயம் சராஹ் டக்கர் காலேஜ் (காலேஜ் பெயர் தான் டக்கர் பெண்கள் எல்லாம் மக்கர் :)) என்று ஒரே ஒரு பெண்கள் கல்லூரி பாளையம்கோட்டை பெருமாள் புறம் அருகில் இருக்கும். அந்த கல்லூரிக்கு செல்லும் பஸ் நம்பர் 5. இரண்டு பேருந்துகளும் ஒன்றை ஒன்றை போட்டி போட்டு கொண்டு நெல்லை சந்திப்பு (ஜங்ஷன்) பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் . அப்போது நெல்லையில் ஒரு பஸ் நிலையம் தான்.இப்போது தான் இரண்டு பஸ் நிலையங்கள். நெல்லையில் இருந்து பாளை பஸ் ஸ்டாண்ட் வரை இரண்டு பேருந்துகளும் சேர்ந்து தான் வரும் பிறகு திசை மாறி செல்லும் . அப்போது நாங்கள் பாடும் சுராங்கனி பாட்டு இப்படி இருக்கும்
'5 ம் நம்பர் பஸ் இல் போறா stc (sarah tucker college சுருக்கம்) குட்டி
அவளை விட நல்லா இருப்ப எங்க எதிர்த்த வீட்டு பாட்டி
ஆசை பட்ட எல்லாத்தயும் கேட்க முடியலை
கேட்டு புட்ட கிடுக்குமே வெற்றிலை புகையிலை (அரை அணா)'
சுராங்கனி சுராங்கனிக்க மாலு கண்ணா வா மாலு மாலு சுரங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலு கண்ணா வா'
சமீபத்தில் இப்படி ஒரு பாட்டு கேட்டேன் அனிருத் இசை என்று நினைக்கிறன் . இந்த மாதிரி பாடல் வரிகள் எங்கிருந்து கிடைகின்றன என்று தெரியவில்லை
ஓ.... ரிங்கா ரிங்கா ஜம் மழைக்கால கேங்கா..
ஓ....பிங்கா பிங்கா ஹிட் பாப்புலர் சாங்கா...
-----------------------
-------------------------
ஊவென்ன ஊவென்ன ஒன்னானா
கூட்டமும் ஆட்டமும் இனிதானா
அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
எனை ரம்மு பீரு போடு
இனி காமினி காமினி காமினி
செம்மாங்கனி மாங்கனி மாங்கனி..
gkrishna
28th October 2014, 10:55 AM
dear rajraj sir
thanks for your wishes
sent one private message
rgds
Gk
vasudevan31355
28th October 2014, 11:04 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 9)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
இனி 'அவர் எனக்கே சொந்தம்' படத்தின் அதியற்புதமான சுசீலா அம்மாவின் ஒரு பாடல். இந்தப் பாடலைப் பற்றி என்ன சொல்ல?! எப்படி எழுத? 1
http://www.tamilmp3.us/Music3/A-Z%20Songs/A/Avar%20Enakke%20Sontham/Avar%20Enakke%20Sontham.jpg
இசையரசியின் மிகச் சிறந்த இருபது பாடல்களைத் தேர்ந்தெடுத்தால் அதில் நிச்சயம் இந்தப் பாடல் உச்சத்தில் இடம் பிடிக்கும். ஜானகியை வளர்த்துக் கொண்டிருந்த ராஜா சுசீலாவை மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. இயலாது. இந்த மாதிரிப் பாடல்களுக்கு இவரை விட்டால் ஆளே கிடையாது.
சுசீலா அப்படியே உண்மையிலேயே தேனைக் குழைத்துத்தான் இப்பாடலைத் தந்திருப்பார். அதுவும் பாடலை 'லலலலலலலலலலலலா...லலலலலலலலலலலலா' என்று ஆரம்பிக்கும் அழகு. அப்பப்பா! திகட்டாத இனிமை. எத்தனை வருடங்களானாலும் மெருகு கலையாத அதே குரல்வளம். இன்னும் கேட்டால் முன்னைவிடவும் பிரமாதமாக.
'கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாக தரச் செய்த மாலை'
என்று முடித்துவிட்டு 'லலல்லலா' என்று வெகு அற்புதமாக உச்சரிப்பாரே! அடடா! கொடுத்த காசெல்லாம் அதற்கே சரியாய்ப் போய்விடுமே!
(அதற்கு முந்தைய சரணத்தில் வரும்
'இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு'
முடித்துவிட்டு 'லாலா' என்று மட்டும் குழைவார்)
பாடலின் இசையும், டியூனும் அமர்க்களம். பாடலின் இடையில் வரும் புல்லாங்குழல் இசையும், வயலின் இசையும் பிரமாதம். இந்தப் பாடல் அப்படியே நம்மை மெய் மறக்கச் செய்யும் வலிமை படைத்தது.
http://2.bp.blogspot.com/_BbJAArGDIEA/R8T3QP3HRXI/AAAAAAAAC88/igVPLrFiNm0/s320/Y+VIJAYA.jpg
அப்சரஸ் மாதிரி ஒய்.விஜயா வெள்ளைப் புடவையில் விதவையாக. குழந்தையைக் கொஞ்சியபடி கொஞ்சும் வாயசைப்பு அவ்வளவு பொருத்தம். வெண்தாமரை போல அழகும் கூட. எப்படிப்பட்ட அழகும், திறமையும் வாய்ந்த நடிகை! எப்படியோ வீணாய்ப் போனாரே! எல்லாம் 'ராங் நம்பரா'ல் வந்த வினை. எல்லாமே ராங்காகப் போய் விட்டது இவருக்கு. இவரைப் போன்ற அழகான வித்தியாசமான முகம் கொண்ட நடிகை கிடைப்பது அரிது.
பாடலின் முழு வரிகளைத் தந்து விடுகிறேன். (இணையத்தில் இந்தப் பாடலின் வரிகளை பிழையாகத் தந்திருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது). இந்த இன்ப கானத்தில் மூழ்கி கவலைகளை தூரத் தள்ளுங்கள். ராஜாவின் அற்புத ராஜாங்கத்தை அனுபவியுங்கள். கண்களை மூடிக் கொண்டு ஒருமுறை சுசீலா அம்மவின் குரலையும், அதற்கு தோதாக இழையும் ராஜாவின் இசையையும் கேட்டு இன்புறுங்கள். வேறு சொர்க்கம் என்று ஒன்று நமக்குத் தேவையே இல்லை.
லலலலலலலலலலலலா
லலலலலலலலலலலலா
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனையாளும் மணிவண்ணா!
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேரு லாலா
கனவோடும்....
கனவோடும் நினைவோடும்
கவிதைகள் நீ பாடு
உன்னால் காவியம் உருவாகும்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாக தரச் செய்த மாலை
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாக தரச் செய்த மாலை
கனித் தோட்டம்
கனித் தோட்டம் விளையாடும் கன்னங்கள் பூஞ்சோலை
கண்ணே என்னுயிர் பூமாலை
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனையாளும் மணிவண்ணா!
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
http://www.youtube.com/watch?v=qvBq8AsnNaI&feature=player_detailpage
gkrishna
28th October 2014, 11:31 AM
அவர் எனக்கே சொந்தம் படத்துல ஒய்.விஜயாவுக்குப் பாட்டு உண்டு . விஜயகுமாருக்குப் பாட்டு உண்டு. ஜெய்சங்கருக்குப் பாட்டு உண்டு. வி.கே.ராமசாமிக்குப் பாட்டு உண்டு. ஆனா கதாநாயகி ஸ்ரீவித்யாவுக்குப் படத்துல பாட்டே கிடையாது.
மிகவும் அருமையான உணவு ஊட்டும் பாடல் ஆனால் தாலாட்டு போல் ரீங்காரமிடும் சுசீலா அம்மா அவர்களின் மிருதுவான தேன் (குழல்) குரல் .
இளையராஜா ஆரம்ப காலத்தில் ஜானகிக்கு தான் நிறைய வாய்ப்புகள் கொடுத்தார் அப்படின்னு எல்லோரும் சொல்வாங்க . ஆனால் நல்ல பல பாடல்கள் இசை அரசி அவர்களுக்கும் கொடுத்து இருக்கிறார்
முதல் படம் அன்னக்கிளி -சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
பாலூட்டி வளர்த்த கிளி - வாடியம்மா பொன் மகளே வந்த இடம் நல்ல இடம்
பத்ரகாளி - வாங்கோண்ண மற்றும் கண்ணன் ஒரு கை குழந்தை
பெண்ஜென்மம் - செல்ல பிள்ளை சரவணன்
16 வயதினிலே - செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்க
ஆளுக்கொரு ஆசை -இதய மழையில் நனைந்த கிளிகள்
அவர் எனக்கே சொந்தம் - தேனில் ஆடும் ரோஜா
ஓடி விளையாடு தாத்தா - ஓல்ட் எல்லாம் கோல்ட் உன் மண்டை பால்ட்
இப்படி நிறைய இருக்கு சொல்லிக்கிட்டே போகலாம்
gkrishna
28th October 2014, 04:05 PM
http://cache.epapr.in/358688/91c7c325-a839-42cc-8109-0e527957b450/400x624-400x624/1x1.jpghttp://cache.epapr.in/358688/28d1eddb-7f5d-40bf-974d-6a3561708db6/400x624-400x624/1x1.jpghttp://cache.epapr.in/358688/1438d2da-8e59-4647-bd1f-6fae92df79fd/400x624-400x624/1x1.jpg
ஜி கே வெங்கடேஷ் குரலில் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் திரு எம் ஆர் ராதா அவர்கள் நடித்த பாடல் காட்சி
http://www.youtube.com/watch?v=gZ4fhEFghd8
gkrishna
28th October 2014, 05:09 PM
நேற்று இரவு நீண்ட நாள் கழித்து பார்த்த (முழு படமும்) ரசித்த பலே பாண்டியா திரை படத்தில்
நடிகர் திலகம் 3 வேடங்கள் பாண்டியன்,மருது,விஞ்ஞானி சங்கர்
எம் ஆர் ராதா 2 வேடங்கள் ka பாலி ,அமிர்தலிங்கம்
கே பாலாஜி - ரவி
தேவிகா - கீதா
வசந்தி - வசந்தி
சந்தியா (ஜெயலலிதாவின் அம்மா) - விஞ்ஞானி சங்கர் மனைவி.
இவ்வளவு தான் முக்கிய கதாபாத்திரங்கள் . இயக்குனர் பந்துலுவின் இயக்கத்தில் தொய்வில்லாத திரைகதை,மெல்லிசை மன்னர்களின் மனதை வருடும் இதமான இன்னிசை ,கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மற்றும் யதார்த்த பாடல் வரிகள் இத்துடன் இந்நாளைய crazy மோகன் ஸ்டைல் காமெடி யினால் படம் சூப்பர் பாஸ்ட்.
தேவதை தான் இந்த படத்தில் .யாரை எல்லாமோ காதல் தேவதை என்று சொல்கிறார்கள்,சொல்லியிருக்கிறார்கள் .ஆனால் இந்த படத்தை பொறுத்த வரை உண்மையான காதல் தேவதை தேவிகா தான்.தேவிகா துள்ளலில் இந்நாளைய பல கதாநாய்கி நடிகைகள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள் .கருப்பு வெள்ளையில் இவ்வளவு அழகா என்று மிரள வைக்கிறது
நகைச்சுவையான திரைக்கதை; மூன்று வேடங்களில் சிவாஜியின் அசர வைக்கும் பொருத்தம்; பத்தொன்பது வயது தேவதையாக தேவிகா; நவீன விவேக்காக எம்.ஆர். ராதாவின் நையாண்டி; படம் முடியும் வரை அசர வைத்து ரசிக்க வைக்கிறது.
லுங்கி கட்டி அதை காலில் இடுக்கி கொண்டு பீடியை வாயில் இடமிருந்து வலமாக நகர்த்தும் ரௌடி மருதுவின் ஸ்டைல் 1962 கால கட்டத்தில் சாத்தியமா ? சாத்தியம் என்று நிருபிக்கிறார் நடிகர் திலகம் (2)
பாண்டியனின் அண்ணனாக மூக்குக் கண்ணாடி, நரைத்த முடி, இயல்பான ஆங்கிலம் ஷங்கர் (சிவாஜி-3).
நிஜமான வெள்ளித்திரை விருந்து
மூன்று வேடங்களிலும் டிரேட்மார்க் மேனரிசங்களுடன் சிவாஜி அசத்தியிருக்கிறார். உருவ அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், கடைசி நிமிடங்களில் ஒரே ஆடையில் வந்தாலும், பாவனைகளிலேயே 'மருதுவா', 'பாண்டியனா', 'ஷங்கரா' என்று தெரிவிக்கிறார்.
அசின் போன்ற துள்ளலுடன் தேவிகா. அழுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும், அறுபதுகளின் துடுக்கான இளம்பெண்ணாக வளைய வந்திருக்கிறார்.
பலே பாண்டியாவின் 'மாமா அவர்களே' குறிப்பிடத்தக்க சொற்றொடர். கண்ணாடி முன் டூப்ளிகேட்டுடன் ஒத்திசைவோடு வரும் காட்சிகள் பின்னாட்களில் பல படங்களில் வந்துவிட்டாலும், எம். ஆர். ராதாவின் அங்க சேஷ்டைகளுடனும் வசனங்களுடனும் பார்க்கும்போது தனி சிறப்பைப் பெறுகிறது.
மூன்று கெட்டப்களில் வந்து - நாயகனை மிஞ்சும் விதத்தில் குணச்சித்திர நடிகர் எம். ஆர். ராதா பின்னியிருக்கிறார்.
படத்தில் இடம் பெற்ற என்னை கவர்ந்த நினைவில் வந்த சில வசனங்கள்
'தேர்தல்ல போனாத்தான் ஜெயிக்க முடியலியே... எனக்கும் அரசியலுக்கும் ராசியில்ல. நான் இனிமே அரசியல் பக்கமே எட்டிப் பார்க்கப் போவதில்லை!'
'நான்கு நாள்களாக எதுவுமே சாப்பிடவில்லை; கொலைப்பட்டினி' (பாண்டியன் 'சிவாஜி')
பாண்டியனின் உருவத்தை கண்ணால் மதிப்பிட்டுக் கொண்டே 'பட்டினி கிடக்கிற உடம்பாத் தெரியலியே?' (கபாலி 'எம்.ஆர். ராதா')
'எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்தான் கணவன்' (தேவிகா)
'நாளைக்கே என்னன்னு தெரியாது... ஜென்மக் கணக்கில் ப்ளான் போடுறியா?' (அமிர்தலிங்கம் 'எம் ஆர் ராதா')
'தங்கள் இதயமென்ன கல்லா...
வாயிலிருந்து உதிர்வதென்ன சொல்லா...
இந்த மருமகனோடு மல்லா...'
'குறிக்கோளில்லாமல் கோட்டுவாய் கூட விடமாட்டேன்'
'நாம் நினைப்பதெல்லாம் நடக்காவிட்டால், நினைக்காததெல்லாம் கூட நடக்கலாம் அல்லவா?'
கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்
1. வாழ நினைத்தால் வாழலாம் – கண்ணதாசன் – t.m.s., p.s.
2. நான் என்ன சொல்லி விட்டேன் கண்ணதாசன் – t.m.s.
3. யாரை எங்கே வைப்பது என்று - கண்ணதாசன் – t.m.s.
4. நீயே உனக்கு என்றும் நிகரானவன் – கண்ணதாசன் – t.m.s., m.ராஜு
5. ஆதி மனிதன் காதலுக்குப் பின் – கண்ணதாசன் – p.b.s., k.ஜமுனா ராணி
6. அத்திக்காய் காய் – கண்ணதாசன் - t.m.s., p.s. P.b.s., k.ஜமுனா ராணி
7. வாழ நினைத்தால் வாழலாம் – பி. சுசீலா
8. அத்திக்காய் காய் – கண்ணதாசன் - t.m.s., p.s. P.b.s., k.ஜமுனா ராணி, எம்.ராஜு
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சலிக்காத திரைப்படம்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02034/bale___2__2034409g.jpg
gkrishna
28th October 2014, 05:39 PM
http://media.dinamani.com/2014/10/27/5.jpg/article2495732.ece/alternates/w460/5.jpg
இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ், ராஜாஜியின் "திக்கற்ற பார்வதி' கதையைப் படமாக்க விரும்பினார். படம், ஆர்ட் பிலிம் போலவும் இருக்க வேண்டும்; அதே சமயம் மக்கள் விரும்பிப் பார்க்கக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, ராஜாஜியின் கதைக்கு, திரைக்கதை - வசனம் எழுத நல்ல எழுத்தாளரைத் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது காரைக்குடி நாராயணன் எழுதிய "அச்சாணி' என்ற நாடகத்தை சிங்கீதம் சீனிவாசராவ் பார்த்தார். அதன் கதை அமைப்பும், வசனமும் அவருக்குப் பிடித்திருந்தன. எனவே, "திக்கற்ற பார்வதி'க்கு திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பை காரைக்குடி நாராயணனிடம் ஒப்படைத்தார். அப்போது நாராயணனுக்கு வயது இருபது.
தன் கதைக்கு வசனம் எழுதும் நாராயணனைப் பார்க்க வேண்டும் என்று ராஜாஜி விரும்பினார். பார்த்தசாரதி சபாவின் செயலாளராக இருந்த சேஷாத்திரி, நாராயணனை ராஜாஜியிடம் அழைத்துச்சென்றார்.
நாராயணனைப் பார்த்த ராஜாஜி, "இவ்வளவு சின்னப்பையன், திரைக்கதை - வசனத்தை ஒழுங்காக எழுதுவானா?' என்று மனதுக்குள் சந்தேகப்பட்டார்.
"குடியினால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பதை விளக்க, இந்தக் கதையை எழுதினேன். குடிப்பதால் சில நன்மைகளும் உண்டு என்று நீங்கள் மாற்றி எழுதிவிட மாட்டீர்களே?' என்று சிரித்துக்கொண்டே நாராயணனிடம் ராஜாஜி தமாஷாகக் கூறினார்.
அதற்கு நாராயணன், "இல்லை ஐயா... கதையில் நீங்கள் வலியுறுத்தியுள்ள கருத்து அணுவளவும் மாறாதபடி வசனத்தை எழுதுகிறேன்' என்று பதிலளித்தார்.
"திக்கற்ற பார்வதி'யில் லட்சுமி, ஸ்ரீகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு ராஜாஜியின் சொந்த ஊரான ஓசூரிலேயே நடந்தது. 18 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி முடித்தார், சிங்கீதம் சீனிவாசராவ்.
லட்சுமி அற்புதமாக நடித்திருந்தார். அவருக்கு ஜனாதிபதி பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நூலிழையில் பரிசு வேறொருவருக்குச் சென்றது.
"திக்கற்ற பார்வதி' வெளியாகும் முன்னரே, ராஜாஜி காலமாகிவிட்டார். ராஜாஜி கூறியபடி அவர் கருத்துக்களை நன்கு வலியுறுத்தும் வகையில், படம் அமைந்திருந்தது.
"திக்கற்ற பார்வதி'யில் பங்கு கொண்ட அனைவரும் புகழ் பெற்றனர்.
-ரவிவர்மா
RAGHAVENDRA
28th October 2014, 11:07 PM
வாசு சார்
அபூர்வமான அவர் எனக்கே சொந்தம் படப்பாடல்களைப் பற்றி எழுதி இளையராஜாவின் இசை ராஜ்ஜியத்தை நடத்திச் செல்கிறீர்கள். பாராட்டுக்கள்.
கிருஷ்ணாஜீ
சுராங்கனி பாடலைப் பற்றிய தங்களுடைய மலரும் நினைவுகள் சுவையோ சுவை. சுவாரஸ்யமாக இருக்கிறது.. பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
28th October 2014, 11:16 PM
இசைக்கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர்.பாப்பா
இத்தொடருக்கு வரவேற்பைத் தந்து ஊக்கமான வார்த்தைகளைக் கூறிய வாசு சாருக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
அடுத்து
அந்நாளைய பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரன் தயாரிப்பாளராக பல படங்களை எடுத்து இயக்கினார். அவருடைய ஒளிப்பதிவில் ஒரு கவித்துவம் இருக்கும். பின்னாளில் கேமிரா கவிஞர் என அறியப்பட்ட பாலு மகேந்திரா அவர்களின் பாணிக்கு இவருடைய படங்கள் ஒரு வகையில் முன்னோடி எனச் சொன்னால் மிகையன்று. இவர் இயக்கத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஜமுனா நடிக்க வெளிவந்த படம் தான் தாய் மகளுக்குக் கட்டிய தாலி.
இத்திரைப்படத்திலும் டி.ஆர்.பாப்பா அவர்களின் இசை ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. பாடல்கள் இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக ஆடி வரும் ஆடகப் பொற்பாவை பாடல் இலக்கிய ரசம் மிகுந்த பாடல். ஒவ்வொரு வரியும் இலக்கிய நயத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சும் என்றால் பாடல் காட்சி அமைப்பும் மிகவும் கவித்துவமாக இருக்கும். எம்.ஜி.ஆர். ஜமுனா அபூர்வ ஜோடி.
இந்த இனிமையான பாடல் சற்றும் அலுக்காது, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது..
http://www.youtube.com/watch?v=gA3wESDQZps
நாயகிக்கு தான் பொருளாதார வசதியில் தாழ்ந்தவள் என்கின்ற தாழ்வு மனப்பான்மை உண்டு. அதைப் போக்கும் வண்ணம் ஒரு சரணத்தில் பல்வேறு சிறப்புகளை அவளிடத்தில் நாயகன் கண்டறிந்து அவள் ஏழையில்லை எனக்கூறி அவளுடைய தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதாக அமைக்கப் பட்டுள்ள வரிகள் மொழியின் சிறப்பை எடுத்தியம்பும் சான்றுகள்.
RAGHAVENDRA
28th October 2014, 11:29 PM
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர். பாப்பா
டி.ஆர்.பாப்பாவிற்கு மட்டுமின்றி நடிகர் ஆனந்தனையும் புகழின் உச்சியில் கொண்டு சென்ற படம் விஜயபுரி வீரன். இதற்குப் பிறகு, இன்று வரை இவர் விஜயபுரி வீரன் என்று தான் அழைக்கப்படுகிறார். உள்ளத்திலே உரம் வேண்டுமடா பாடல் அந்நாட்களில் ஒவ்வொரு இதழும் முணுமுணுத்த பாடலாய் பிரபலமானது. அந்த அளவிற்கு விஜயபுரி வீரன் பாடல்கல் பிரபலமாயின.
இப்படத்தின் இசையைப் பற்றி நான் சொல்ல வேண்டுமா...
http://www.youtube.com/watch?v=7t8a-sxu1Q0
rajeshkrv
29th October 2014, 06:35 AM
ராகவ் ஜி,
அருமையான தொடர். வாழ்த்துக்கள்
வாசு ஜி, தேனில் ஆடும் ரோஜா .... தேனை ஊற்றிய ராஜா .. தேனே குரலால் பொழியும் இசையரசி என எல்லாமே தூள்
அதே படத்தில் வி.கே.ஆர் அவர்களின் கபி கபி மேரே பாடல் அருமையோ அருமை. டி.எம்.எஸ் குரலில் ஹிந்தி பாடலை கேட்க சூப்பர்
rajeshkrv
29th October 2014, 07:16 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள்-14
சில பாடல்கள் அந்த காலத்தில் வானொலிகளில் மட்டுமே ஒலித்தது உண்டு. அப்படி ஒரு பாடல்
90’களில் சில படங்களில் வருண்ராஜ் என்ற நடிகர் நடித்தார். பாவம் அப்புறம் என்னா ஆனாரோ.. இதோ வருண்ராஜ் மற்றும் ரூபஸ்ரீ பாடும் பாடல்
தேவாவின் அழகான இசையும், பாலுவும் சித்ராவும் இசைக்கும் காதல் கீதம்.
http://tamilbites.net/wp-content/uploads/2012/11/Gangai-Karai-Pattu.jpg
https://www.youtube.com/watch?v=ZzzY6IsN5XA
rajraj
29th October 2014, 07:33 AM
From Gnaanasoundhari(1948)
AruL Thaarum Dheva Maathaave Adhiye Inba Jothiye........
http://www.youtube.com/watch?v=KRM0zm_aptg
One of my favourite childhood days songs. It was very popular. One of my distant uncles in my mother's village used to sing. He used to frequent a touring talkies about three miles away and come back with songs ! :) That was his pastime during summers.
rajeshkrv
29th October 2014, 08:38 AM
Ankil my fav too.
வாசு ஜி
இதோ இசையரசியின் இன்னொரு கன்னட முத்து.
விஜயபாஸ்கர் அவர்களின் இசை..
கல்பனா, கல்யாண்குமார் திரையில்
மெல்லகே மெல்லகே என இசையரசி பாடும்விதமே ஹ்ம்ம்
https://www.youtube.com/watch?v=ZSnmJtQkHVM
raagadevan
29th October 2014, 09:11 AM
http://www.youtube.com/watch?v=p2MWlgXYAzU
Song: tujhe pyar karte hain karte rahenge...
Movie: APRIL FOOL (1964)
Lyrics: Hasrat Jaipuri
Music: Shankar Jaikishan
Singers: Mohmmed Rafi & Suman Kalyanpur
Actors: Biswajit & Saira Banu
http://www.youtube.com/watch?v=56lqJUAoAp8
Song: naan malarodu thaniyaaga...
Movie: IRU VALLAVARGAL (1966)
Lyrics: Kaviyarasu Kannadasan
Music: Vedha
Singers: TMS & P. Susheela
Actors: Jaishankar and Vijayalakshmi
gkrishna
29th October 2014, 10:55 AM
===========================================நன்றி:த ிருமதி ஆனந்திராம்குமார்
வாலிப கவிஞர் வாலிக்கு இன்று பிறந்த நாள்!-29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013
********************************************
திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.
-
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
-
`பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.
-
`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
-
அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார். சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!
-
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
-
வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள்.
-
வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய்பொடி ரொம்ப்ப் பிரபலம். `இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா’ என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
-
வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும் எழுதிக் கொண்டே இருப்பதால், கணக்கு இன்னும் மேலே போதும்!
-
1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட் இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக் கொள்ளத் துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
-
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
-
ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை அணிந்திருக்கிறார்!
-
17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலி, அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
-
1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. `அவதார புருஷ்ன்’ விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு கலைஞருடையது!
-
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
-
பத்மஸ்ரீ, பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!
-
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன்ம் பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
-
வாலி தனிமை விரும்பி அல்ல, எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!
-
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
-
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள் `முருகா’ என்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!
-
வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார், போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
-
எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான், இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
-
2005 –ல் raaj டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக `என்றென்றும் வாலி’ என விழா எடுத்து 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள், வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!
-
வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
-
ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!
-
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT_702y36FGFVfcfQrGhY-GJNB0ou6nH0NEtgnn_TT1xn4rkmez
gkrishna
29th October 2014, 11:07 AM
மிகவும் ரசித்த வாலியின் வரிகள்
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்தினிலுமே இருப்பது தான் தெய்வம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
vasudevan31355
29th October 2014, 11:17 AM
நேற்று இரவு நீண்ட நாள் கழித்து பார்த்த (முழு படமும்) ரசித்த பலே பாண்டியா திரை படத்தில்
மூன்று கெட்டப்களில் வந்து - நாயகனை மிஞ்சும் விதத்தில் குணச்சித்திர நடிகர் எம். ஆர். ராதா பின்னியிருக்கிறார்.
ஆட்சேபிக்கிறேன் கிருஷ்ணா சார்.
'மிஞ்சும் விதத்தில்'.?! முடியவே முடியாது. இனி 'நடிகர் திலக' நாயகனை மிஞ்ச ஒருவன் பிறக்கவும் முடியாது... பிறக்கப் போறவனும் கிடையாது.
எம்.ஆர். ராதா மிகச் சிறந்த நடிகர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவருடைய விசிறி நான். ஒரு கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் அந்த கேரக்டரில் நடிப்பவர் அந்தப் படத்தில் அவரைவிட பிரமாதமாக நடிப்பவர்களை விட நடிப்பில் விஞ்சி விட்டார் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வதுண்டு. அதனால் அவர் நடிப்பில் எல்லோரையும் விஞ்சியதாக ஆகி விட மாட்டார். அது அந்த சமயத்தில் அதாவது படம் பார்க்கும் அந்த மூன்று மணி நேரங்களில் அந்த கேரக்டருடன் ஒன்றி அதுவும் நகைச்சுவை பாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம் அது ஏற்படுத்தும் தற்காலிக பாதிப்பை வைத்து அந்த கேரக்டரில் நடித்த நடிகர் இன்னொரு நடிகரை மிஞ்சி விட்டார் என்று சொல்வார்கள்.
உதாரணத்திற்கு 'திருவிளையாடல்' நாகேஷ் பண்ணிய தருமி கேரக்டர். சிவாஜியை விஞ்சி விட்டார் என்று சொல்லுவார்கள்.
'கீழ்வானம் சிவக்கும்' சரிதா சிவாஜிக்கு சரியான போட்டி. நடிப்பில் சிவாஜியைத் தூக்கி ஏப்பம் விட்டுவிட்டார் என்று சொல்லுவார்கள்.
'நீலவானம்' படத்தில் தேவிகா சிவாஜியைத் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்பார்கள்
'சபாஷ் மீனா' படத்தில் சந்திரபாபு சிவாஜியை காணாமல் செய்து விட்டார் என்பார்கள்
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும் படத்தில் ஜெமினி சிவாஜியை விட ஒரு படி மேலே நடித்து விட்டார் என்பார்கள்
'கலியுகக் கண்ணன்' படத்தில் தேங்காய் 'கௌரவம்' பாரிஸ்டர் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்று ஒரு காமெடிக் கூட்டமே கத்தியது. (கருமம்டா சாமி)
'நான் வாழ வைப்பேன்' படத்தில் ரஜினிதான் டாப்... சிவாஜி அப்புறம் தான் என்பார்கள்.
அதனால் மேலே கூறிய நாகேஷ், ஜெமினி, ரஜினி, சந்திரபாபுவெல்லாம் நடிகர் திலகத்தை விஞ்சிய நடிகர்கள் என்று கூறிவிட முடியுமா?
அந்தப் படத்தில் அவர்களுடய கேரக்டர்ஸ் அப்படி. அப்படியே இருந்தாலும் அவர்களையும் மீறி நடிகர் திலகம் அந்தப் படங்களில் ஜொலித்தாரே! அதுதான்யா நடிகர் திலகம்.
'பலே பாண்டியா'வுக்கு வருவோம். ராதாவிற்கு சுவாரஸ்யமான நீங்கள் சொன்னது போல 3 கெட்டப்புகள். ஆனால் மூன்றுமே நகைச்சுவை பாத்திரங்கள்தாம். நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரம் ராதாவுக்கு அல்வா சாபிடுவது போல. ஆனால் அவர் 'பலே பாண்டியா'வாக சிவாஜியை நெருங்கக் கூட முடியாது. கைலியை வழித்து கால் இடுக்குக்குள் செருகி பீடியை வாயில் சுழலவிட்டு வளிக்கும் மருதுவை ராதாவால் தொடக்கூட முடியாது. அம்மாஞ்சி விஞ்ஞானி சங்கராக அவரை நினைத்தால் அவர் பண்ணும் காமெடியைவிட இன்னும் சிரிப்பாகப் போய்விடும். :mrgreen:
முகத்தை அஷ்டகோணலாக்கி 'அய்யய்ய... வவ்வவ்வ' என்று ராதா பாடும்போது சிரிக்காதவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது. ஆனால் அந்த கோணல் சேஷ்டடைகளை எல்லாம் மீறி 'துதி பாடும்' என்று நடிகர் திலகம் நிறுத்தியவுடன் ராதா கன்னாபினாவென்று பாடி 'ஆ..தரிகிடத... தரிகிடத ஜம் ஜம்' என்று நிறுத்தியவுடன் நடிகர் திலகத்தின் முகபாவத்தைக் கவனியுங்கள்.
"என்னடா இது கஷ்டகாலம்... இப்படி வந்து மாட்டிகிட்டோமே... வேற ஏதும் வழியே இல்லையா?... தலையெழுத்து!" என்பது போல முகத்தில் ஒரு நொந்து போன வேதனையை காட்டி, (ஒரு மாதிரி உதடுகளை ஒரு செகண்ட் ஒன்று சேர்ப்பார் 'ப்ச்' என்பது போல) திரும்பப் பாடலை 'பபபபபபபாபா' என்று தொடங்கும் நடிகர் திலகத்திற்கு ராதாவுக்கு விழும் கைத்தட்டல்களைவிட, நூறு மடங்கு கைத்தட்டல்கள் தியேட்டரில் விழுந்து கூரை நொறுங்குமே! அந்த வினாடி முகபாவத்தை ராதா என்ன... அவர் தாத்தா என்ன... எந்த நடிகனாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா?
நடிப்பில் விஞ்சுவது என்றால் காட்சியமைப்பை வைத்தோ, பாத்திரப் படைப்பை வைத்தோ, கதையை வைத்தோ அல்ல. அது தற்காலிகமானது. ராதாவின் ரோல்களை செய்துவிட முடியும் அவர் போல முடியாவிட்டாலும் கூட. நடிகர் திலகத்தின் பாத்திரங்களை அவர் பாவங்களை எந்த நடிகனும் பாடமாக எடுத்துப் படிக்கலாமே தவிர, பார்த்து ரசித்துக் களிக்கலாமே ஒழிய, கர்ப்பகிரஹத்துக்குள் புகவே முடியாது. அப்புறம்தானே சாமியைப் பார்ப்பதற்கு?
ஒரு கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, ஒரு ரங்கனை, ஒரு விக்கிரமனை தன் நடிப்பால் எம்.ஆர்.ராதா மிஞ்சியிருந்தால் நடிகர் திலகத்தை விட ராதா நல்ல நடிகர் என்று நானே ஒத்துக் கொள்வேன். ராதாவுடயது ஒரே பாணி. எல்லோரையும் எளிதாய்க் கவரக்கூடிய நகைச்சுவையுடன் கூடிய நையாண்டி பிளஸ் நக்கல் வில்லத்தனம். அதில் மட்டுமே அவர் சோபிக்க முடியும்.
ஆனால் நடிகர் திலகம் அப்படியல்ல. அது நடிப்பின் அட்சயப் பாத்திரம். எது வேண்டுமானாலும் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கும். அள்ளுபவர்களுக்குத்தான் கை வலிக்குமே அன்றி அட்சயப் பாத்திரத்துக்கு அல்ல.
அதனால் எவரும் திலகத்தை மிஞ்சுவது என்ற பேச்சுக்கே அர்த்தமில்லை. மிஞ்சுவது என்றால் ஒரு படத்தில் கேரக்டரை வைத்து அல்ல. அந்த நடிகன் ஏற்ற அத்தனை கதாபாத்திரங்களையும் விஞ்சிய நடிப்பென்றால்தான் அந்த நடிகனை மிஞ்சிய நடிப்பு என்று நம் கூறலாம்.
இந்தப் பதிவை உங்கள் ஆருயிர் நண்பனின் கருத்தாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். கண்டிப்பாக நடிகர் திலகத்தின் கண்மூடித்தனமான அபிமானியாக இதை நான் பதிவிடவில்லை. அவர் ரசிகனாக நான் இல்லாமல் இருந்தால்கூட ஒரு சாதாரண ரசிகனாக இதே கருத்தைத்தான் வெளியிட்டிருப்பேன்.
ஒரு ஆர்வத்தில் எல்லோரும் சொல்வதுதான் நான் உட்பட. அதைத்தான் தாங்களும் இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த எனக்கு வாய்பளித்தமைக்கு நன்றி. (ஒருவேளை நாரதர் கலகமோ!) இது ஒரு ஆரோக்கிய வாதமே அன்றி விவாதம் அல்ல.
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான நீங்கள் இதை தவறாக நினைக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.
நன்றி கிருஷ்ணா சார்.
(ராதாவின் இன்னொரு பஞ்ச். 'லூஸ்' வசந்தியுடன் காரில் செல்லும் நடிகர் திலகத்தை அடியாட்களுடன் காரில் துரத்திச் செல்வார் ராதா. கார் வழியில் நின்று விடும். அப்போது,
ராதா: ஏன் வண்டி நிக்குது?
அடியாள்: கார் பஞ்சர் பாஸ்.
ராதா: கார் பஞ்சரா?! டயர் பஞ்சர்னு சொல்லு.
எப்படி? சூப்பரா இல்ல?)
gkrishna
29th October 2014, 12:10 PM
வாசு சார்
நடிகர் திலகத்தை பற்றிய நல்லதொரு அருமையான தொகுப்பு . உங்கள் கருத்துக்கு ஆட்சேபம் ஏதும் இருக்க முடியாது. நடிகர் திலகத்தின் படங்களில் உள்ள நல்ல அம்சமே அவர், தன படங்களில் உடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் நல்ல நடிப்பை தடுக்க மாட்டார்.
மூன்று கெட்டப்களில் வந்து - நாயகனை மிஞ்சும் விதத்தில் குணச்சித்திர நடிகர் எம். ஆர். ராதா பின்னியிருக்கிறார்
இந்த கருத்து கொஞ்சம் உள் வாங்கி பாருங்கள்.நாயகனை மிஞ்சும் நடிப்பு என்றால், அது சிவாஜியை மிஞ்சிய நடிப்பு என்று அர்த்தம் செய்து கொண்டோமானால் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை .
பலே பாண்டியா படத்தை எடுத்து கொண்டோமானால் யார் கதாநாயகன் ? கொஞ்சம் யோசியுங்கள்
பாடல்களை எடுத்து கொண்டோமானால் கண்ணதாசன் கதாநாயகன்
இசையை எடுத்து கொண்டோமானால் மெல்லிசை மன்னர்கள் கதாநாயகன்
கதை என்று ஒன்று பெரிதாக இல்லாமல் திரைகதை இயக்கம் செய்த பந்துலு கதாநாயகன்
மிக சிறந்த நகைச்சுவை படத்தின் இன்னொரு கதாநாயகன்
ஆக பல அம்சங்களில் சிறந்து விளங்கிய ஒரு படம்
நீங்களே சொல்லிவிட்டீர்கள்
ஒரு கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் அந்த கேரக்டரில் நடிப்பவர் அந்தப் படத்தில் அவரைவிட பிரமாதமாக நடிப்பவர்களை விட நடிப்பில் விஞ்சி விட்டார் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வதுண்டு. அதனால் அவர் நடிப்பில் எல்லோரையும் விஞ்சியதாக ஆகி விட மாட்டார். அது அந்த சமயத்தில் அதாவது படம் பார்க்கும் அந்த மூன்று மணி நேரங்களில் அந்த கேரக்டருடன் ஒன்றி அதுவும் நகைச்சுவை பாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம் அது ஏற்படுத்தும் தற்காலிக பாதிப்பை வைத்து அந்த கேரக்டரில் நடித்த நடிகர் இன்னொரு நடிகரை மிஞ்சி விட்டார் என்று சொல்வார்கள்.
படம் முடியும் போது நமக்கு கிடைக்கும் சில அனுபவங்களின் அடிப்படையில் சொல்லப்படும் தற்காலிக பாதிப்பு என்ற வார்த்தையின் வெளிபாடு தான் அது.
திரு சிவகுமார் (நடிகர்) அவர்களின் 1946-லிருந்து 75 வரை 'நடிகர் சிவகுமார் எழுதிய டைரி என்ற நூலைப் படித்தேன். (அல்லயன்ஸ் வெளியீடு).இந்த புத்தகத்தை நீங்களும் படித்து இருப்பீர்கள். நடிகர் திலகத்தை பற்றி மிக அழகாக விளக்கி உள்ளார் .
இந்த நேரத்தில் எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது வாசு
விடுதலை படம் முடிந்து வெளி வரும் போது கமல் ரசிகர்கள் சொன்ன வார்த்தைகள் 'கணேசன் தான் டாப் '
தேவர் மகன் படம் முடிந்து வெளி வரும் போது ரஜினி ரசிகர்கள் சொன்ன வார்த்தைகள் 'கணேசன் கலகிட்டான் இல்ல '
இதையும் நீங்கள் நடிகர் திலகம் அவர்களின் மிக சிறந்த ரசிகர் என்ற முறையில் நேர்மறை பொருளிலேயே எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
'மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் mischevious மன்மதன்' :)
வாத விவாதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் நடிகர் திலகம்
vasudevan31355
29th October 2014, 12:15 PM
வாசு சார்
'மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் mischevious மன்மதன்'
வாத விவாதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் நடிகர் திலகம்:)
இது... இது... கிருஷ்ணா சிங்கம்... என் தங்கம். :)
vasudevan31355
29th October 2014, 12:22 PM
கிருஷ்ணா சார்!
வாதங்களும், அதற்கான விளக்கங்களும் ஒருவர் மனது ஒருவர் புண்படாமல் பண்பாடு காத்து நாகரிகமாக இதுமாதிரி புரிதல் உணர்வுடன் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம். முக்கியமாக நல்ல நட்பு பாதிக்கப்பட்டு விடவே கூடாது. நம் வாதப் பிரதிவாதங்கள் இவற்றுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும். நல்ல புரிதலுக்கு நன்றி கிருஷ்ணா. தூள் கிளப்புங்கள். நான் செகண்ட் ஷிப்ட். ஆபீஸ் போய்விட்டு போன் பண்ணுகிறேன்.
கிருஷ்ணா சார்! நேற்று இரவு நடிகர் திலகம் என் கனவில் வந்து என்னிடம் சில நிமிடங்கள் அதம் புரிந்தார் தெரியுமோ. பிறகு சொல்கிறேன்.
gkrishna
29th October 2014, 12:35 PM
கிருஷ்ணா சார்!
வாதங்களும், அதற்கான விளக்கங்களும் ஒருவர் மனது ஒருவர் புண்படாமல் பண்பாடு காத்து நாகரிகமாக இதுமாதிரி புரிதல் உணர்வுடன் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் கிருஷ்ணா சார் நம்முடைய விருப்பம். முக்கியமாக நல்ல நட்பு பாதிக்கப்பட்டு விடவே கூடாது. நம் வாதப் பிரதிவாதங்கள் இவற்றுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும். நல்ல புரிதலுக்கு நன்றி கிருஷ்ணா. தூள் கிளப்புங்கள். நான் செகண்ட் ஷிப்ட். ஆபீஸ் போய்விட்டு போன் பண்ணுகிறேன்.
கிருஷ்ணா சார்! நேற்று இரவு நடிகர் திலகம் என் கனவில் வந்து என்னிடம் சில நிமிடங்கள் அதம் புரிந்தார் தெரியுமோ. பிறகு சொல்கிறேன்.
நிச்சயம் வாசு
காத்து இருக்கிறேன் படித்து ரசிக்க
gkrishna
29th October 2014, 01:58 PM
வாலி பிறந்த நாள் -
ரகசிய போலீஸ் 115 படத்தில் வாலி எழுதிய கண்ணே கனியே என்ற பாடலில் நாயகியின் அழகு பற்றி வரும் வரிகள்
ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ
செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன
gkrishna
29th October 2014, 02:37 PM
வாலி பிறந்த நாள்- நன்றி பாடல் தொகுக்க உதவிய நண்பர் ராம் அவர்களுக்கு
பல்வேறு நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பாடிய தேச ஒற்றுமையை உணர்த்தும் பாரத விலாஸ் பாடல் : இந்திய நாடு என் வீடு .
எம்மதமும் சம்மதம்
தாய் மூகாம்பிகை : ஜனனி ஜனனி
முகம்மதுப்பின் துக்ளக் : அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை
வெள்ளை ரோஜா : தேவனின் கோயிலிலே
உறவில் மிக சிறந்த உறவு தாய் - கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
தேடி வந்த மாப்பிள்ளை : வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
மன்னன் : அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
நியூ : காலையில் தினமும் கண் விழித்தால்
பிரபலங்களே பாடி நடித்த பாடல்கள்
நடிகர் திலகம் - போற்றிபாடடி பெண்ணே - தேவர் மகன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடி நடித்த அம்மா என்றால் அன்பு-அடிமைப்பெண்,
ரஜினி காந்த் பாடி நடித்த அடிக்குது குளிரு- மன்னன்,
கமல் பாடி நடித்த இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்
சாகா வரம் பெற்ற தத்துவ பாடல் - கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்
நாயகி தன் தோழியரோடு பாடல் :
அன்று : பருவம் எனது பாடல் : ஆயிரத்தில் ஒருவன்
இன்று : அக்கடான்னு நாங்க உடை போட்டா : இந்தியன்
கடிதப்பாடல் :
அன்று : அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும்
இன்று : கண்மணி அன்புடன் நான் எழுதும் - குணா
கேலிப்பாடல் :
அன்று: என்ன வேகம் நில்லு - குழந்தையும் தெய்வமும்
இன்று - ஏ மாமா மாமா - மின்னலே
காதலியிடம்
அன்று : இந்த புன்னகை என்ன விலை -தெய்வத்தாய்
இன்று : என்ன விலை அழகே - காதலர் தினம்
பெண் வர்ணனைப் பாடல் :
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
(இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் தன காதலி விமலா எப்படி இருக்கிறாள் என்பதை பாடல் நாயகன் முருகன் வர்ணனை (பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் நடிகை மஞ்சுளாவிற்கு அப்படியே பொருந்தும் )
(மற்றும் உறவு முறை நடிகர்களின் வரிசையில்)
ஆழியிலே பிறவாத - பேசும் தெய்வம் (நடிகர் திலகம் )
பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன் (இளைய திலகம்)
அன்று : அவளுக்கும் தமிழ் - பஞ்சவர்ணக்கிளி (முத்துராமன்)
இன்று : ராஜா ராஜாதி -அக்னி நட்சத்திரம் (கார்த்திக்)
அன்று: உறவு என்றொரு சொல்லிருந்தால் - இதயத்தில் நீ (தேவிகா)
இன்று : அன்பே வா அருகிலே -கிளிப்பேச்சு கேட்கவா (கனகா )
அன்று- என்கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் (சிவகுமார்)
இன்று- முன்பே வா -ஜில்லுனு ஒரு காதல் (சூர்யா) அலெக்ஸ் பாண்டியன்,பிரியாணி படத்திற்காக-கார்த்தி அவர்களுக்கு.
அன்று- ஜெயுச்சுட்டே கண்ணா நீ -கலியுகக்கண்ணன் (தேங்காய் ஸ்ரீனிவாசன்)
இன்று - குக்காத்து மனுஷா -நளதமயந்தி ,மற்றும் செல்லமே செல்லம் நீ தானடி (ஆல்பம்) (அவர் பேத்தி ஸ்ருதிகா ),
அன்று ஷோபா சந்திரசேகர் பாடிய பாடல் ஓடிப்பிடிச்சு விளையாட :இரு மலர்கள் படத்தின் மகராஜா ஒரு மகராணி
இன்று அவர் மகன் விஜய் பாடிய ஒ ப்யாரி- பூவே உனக்காக
கலைஞர் கருணாதி மகன் முக முத்துவிற்கு 'மூன்று தமிழ் ' - பிள்ளையோ பிள்ளை
பேரன் அருள்நிதி - 'மன்னாதி மன்னரு' வம்சம்
gkrishna
29th October 2014, 04:32 PM
படித்ததில் பிடித்தது
குறளை ஒட்டி தமிழிசை மழையில் நனைய வான் மழையை புகழ்ந்து வரவேற்ற கவிஞர் வாலியின் தனி கவிதை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
மழை - ஒருமகத்தான சொல்;மற்றவர்க்கும் - அதன்மகத்துவம் சொல் !
உலகோர் -உண்ணும்...
ஆகாரத்திற்கு அதுவேஆதார மாகும்; அங்ஙனம்ஆதார மான அதுவேஆகார மாகும் !
நீருணவு;சோறுணவு; என -ஈருணவாய் இருப்பது மழை !
அதை -ஏத்திப் பிழை;ஏத்தாதிருப்பது பிழை !
gkrishna
29th October 2014, 04:37 PM
https://i.ytimg.com/vi/rywaeTV7ffE/hqdefault.jpg
நமக்கெல்லாம் எதிர்காலம் எப்படி இருக்குமோ!?!? என்று திரு நாகேஷ் அவர்கள் இளமை காலங்களில் போட் கிளப்பில் ஒன்றாக இருந்த போது புலம்பிய வேதனைக்கு ஆறுதலாய் தந்த கவிதை ...
"கால மகன் கட்டிவைத்த ஆலமர ஊஞ்சலிலே ஏழை மக்கள் ஆடுகின்றார் ஆராரோ ஆராரோ இதில் எதிர்கால மன்னவர்கள் யார் யாரோ? யார் யாரோ?"
gkrishna
29th October 2014, 05:35 PM
http://4.bp.blogspot.com/-jBYlpfNQCRM/U6kj8wCfuiI/AAAAAAAACJo/Mf8OMz49UfM/s1600/With-MSV-and-Sridher-Sumaithangi-film-composing.jpg
அன்பு வாசு
கோவை செழியன்,ஸ்ரீதர்,மெல்லிசை மன்னர்,கவிஞர் தவிர மற்றவர்கள் பற்றி சொல்ல முடியுமா ? ஒருவர் கோபு போல் தெரிகிறது. எந்த தருணத்தில் எடுக்கப்பட்ட படம் .இணையத்தில் கிடைத்த படம் இது
நட்புடன்
கிருஷ்ணா
chinnakkannan
29th October 2014, 09:09 PM
ஹாய் குட் ஈவ்னிங்க் ஆல்..(இது நேற்றுச் சொன்ன குட் ஈவ்னிங் யா.. எழுதி வைத்து விட்டு போஸ்டே செய்யவில்லை..எனில் எழுதியதை முதலில் போஸ்ட்ட்டு..)
ம்ம் இன்னிக்கும் கொஞ்சம் வேலைப் பளு..ஹோம் ஒர்க் இனிமேல்ட்டு தான் பண்ணனும்..
வேற வேலை ப் பாடல்கள் என்ன இருக்கு..
விழியே விழியே உனக்கென்னெ வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன் தான் வீரமான வேலைக்காரன்
இரவுக்கும்பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை..
இதில் விழியே, இரவுக்கும் பகலுக்கும் பாடல் பற்றி ஏற்கெனவே எழுதி விட்டதால்.. வேலைக்காரன் பாட்டு… பாடல் மு.மேத்தா என நினைக்கிறேன்..
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=D48tthj0RLY
RAGHAVENDRA
29th October 2014, 09:49 PM
இசைக்கலைஞர்கள் - இறைவனின் தூதர்கள் - டி.ஆர்.பாப்பா
http://www.thehindu.com/multimedia/dynamic/00941/04cp_Kumara_Raja_jp_941349e.jpg
குமார ராஜா...
ஒண்ணுமே புரியலே என்ற காலத்தால் அழியாத பாடலால் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்ட திரைப்படம்...
சந்திரபாபு வின் அற்புத நடிப்பிற்கு மிகச் சிறந்த உதாரணம்..
துவக்கம் முதல் வணக்கம் வரை சந்திரபாபுவின் ஆளுமை ...
பாடல்களில் டி.ஆர்.பாப்பாவும் சந்திரபாபுவும் இணைந்து அளித்துள்ள வித்தியாசமான அணுகுமுறை பின்னாளில் வந்த பல படங்களின் பாடல்களுக்கு முன்னுதாரணம்.. குறிப்பாக மூடினாலும் திறந்தாலும் பாடலைச் சொல்ல வேண்டும்..What a variety ... landing notes fantastic... finishing every note with perfection... Fusion என்பதற்கு சிறந்த உதாரணமான பாடல்களில் ஒன்று..
கேளுங்கள் உணருங்கள்..
http://www.inbaminge.com/t/k/Kumara%20Raja/
chinnakkannan
29th October 2014, 10:12 PM
**
கொஞ்சம் நிறைய வேலை வந்துடுத்து..அதனால வரமுடியலை.. உங்களை நிம்மதியா இருக்க விட்டதுக்கு என்னை மன்னிக்கவும்! :)
**
மிஞ்சுதல் என்றால் என்ன..
கொய்ங்க் கொய்ங்க்னு கோச்சுண்டு மூஞ்சியை த் தூக்கி வச்சுண்டிருக்கா காதலி..காதலனுக்குப் புரியலை..ரீஸன் சொன்னா ப் புரியும்..லேட்டா வந்ததுனாலா, அல்லது நேத்திக்கு வாங்கிக் கொடுத்த சரவண பவன் குலோப் ஜாமூன் பார்சல் நல்லா இல்லையா… தீபாவளிக்கு ஆசையா நாம பாலம் சில்க்ல வாங்கிக் கொடுத்த லேட்டஸ்ட் ஃபாஷன் சுரிதார் மெட்டீரியல டெய்லர் சொதப்பிட்டாளா.. வாஸ்ஸப்ல புகழ்ந்துக்கிட்டு தானே இருக்கோம் அவ அழகை..ம்ஹூம் எதுக்குன்னு சொன்னாத் தானே தெரியும்..
ஏய் என்னா விஷயம்
போடான்னு மொதல்ல செல்லத் திட்டு..அப்புறம் விஷயத்தையே சொல்லாம நீ இப்படிஉன்னோட தங்கச்சி இப்படி.. அப்புறம் உன்னோட அம்மா என்னமோ உம்னு ஒட்டகம் மாதிரி மூஞ்சியத் தூக்கி வச்சுக்கிட்டிருந்தாங்க நீ என்னை இன் ட் ரோ பண்றச்சே.. அப்படி இப்படின்னு கிளி பருந்தா மாறி வார்த்தை அலகால கொத்த ஆரம்பிச்சா காதலன் என்னாவான்.. அவனுக்கும்கோபம் தான் வரும். யாரும் இல்லைன்னா குட்டியா அடிக்கவே செஞ்சுடுவான்.. எதனால…
கொஞ்சும் கிளியென கோதையுனை மன்னித்தால்
மிஞ்சல் நியாயமோ டீ..
யெஸ்.. பாவமேன்னு கொஞ்சி க் கொஞ்சி ப் பேசினா இவ என்னடானா வார்த்தைகள்ள எல்லை மீறிப் பேசறா அப்படின்னு..யெஸ்..இங்க மிஞ்சுதல் என்பது மீறுதல் என்று வருகிறது. எல்லை மீறுதல்..
ஆமா தீபாவளி பட்சணம் மிஞ்சியிருந்ததே.. வேலைக்காரி அபீதாக்குக் கொடுத்தியா என்ன சொன்னா..
ம்க்கும்.. வேணாமாம்…. நிறைய தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிட்டு அலுத்துடுத்தாம்..அதுக்குப் பதிலா அரச்சு விட்ட வெங்காய சாம்பார் பண்ணிக் கொடும்மா எடுத்துட்டுப் போறேன்னா..”
இங்கே மிஞ்சுதல் என்றால் மீதி இருப்பவை என அர்த்தமாகிறது..
அந்த எக்ஸ் நடிகை ஒய் நடிகையை விட கவர்ச்சியில் மிஞ்சுகிறார் என்றால் ஒய் நடிகை சுடிதார் அணிந்தால் எக்ஸ் நடிகை கை யில்லாத சுடிதார் அணிந்திருக்கிறார் என்று அர்த்தம் ( ஹி ஹி ரவிக் சுடிதார் மோர் க்ளாமரஸ் என ஆன்றோர்கள் சொல்வார்கள்!)
இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆ ஆ – இதில் மிஞ்சும் என்பது மிச்சமிருப்பது என்ற அர்த்தம்..
ஸ்மாயியாயி ஸ்மாயியாயிமாக்னெட் விழியால் மனதை கவர்ந்து விட்டாய் ஒரு செண்டிமீட்டர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய் இல்
புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே
என வைரமுத்து க.கொ க.கொ படத்திற்காக தபுவைப் பற்றி அஜீத் பாடுவது போல எழுதியிருப்பார்.. இங்கும் மிச்சம் தான் வருகிறது அர்த்தமாய்
இளவயசு எல்.விஜயலட்சுமி அழகாய் நாட்டியமாடும் எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதைக் கவர்ந்தவராம் - பொம்மைப் படப் பாடலில் என்னவாக்கும் சொல்கிறார்..
மலரை மிஞ்சும் அழகியென்று மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்
மலரும் கோபம் கொண்டதம்மா தூது இல்லையே..
இங்கே மலரை விட மேலான அழகு வைஜூவாம்..என்ற அர்த்தத்தில் வருகிறதாக்கும்..
ரெட் ஸேண்ட்ல என்னவாக்கும் வருது.. ந.தி காஞ்சனா பாட்டு..
ஒரு நாளிலே என்னவாம் உறவானதே தெரியுமே
கனவாயிரம் நினைவானதே எனத் தொடரும் பாடலில் வரும் வரிகள்…
மஞ்சம் இது மஞ்சம் என
மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என்
நெஞ்சில் ஒரு கோடு
தஞ்சம் இது தஞ்சம் என
தழுவும் சுவையோடு
மிஞ்சும் சுகம் யாவும் வர
வேண்டும் துணையோடு
இந்தப் பாட்டுல அர்த்தம் சொல்லலாம்னா வார்த்தைகள் கொஞ்சம் வெட்கப் படுது சரி… மேலான சுகங்கள் என்ற அர்த்தம் இங்கே வருகிறது..
சிறு பொன் மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்
இதமும் பதமும் தொடரும் கனவும் இனி தாளாது
ராக பாவ தாளம் போல நானும் நீயும் சேர வேண்டும்..
என்ற வெகு அழகான கல்லுக்குள் ஈரம் பாட்டில் இளையராஜா ஜானகி.. வரும் வரியும்..
வழி தேடுது விழிவாடுது கிளி பாடுது உன் நினைவில்.. அப்புறம்..என்னவாம்..
நதியும் முழுமதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்
விதையூன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
கதைபேசுது கவிபாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன்வசம் உடல் என் வசம் பயிரானது உன் நினைவுகள் நு வருதோன்னோ..
இங்க மிஞ்சும் மிச்சம்கற அர்த்தத்துல வருதாக்கும்.. ஆடியோ தாம்ப்பா கிடைச்சது (படம்பார்த்ததில்லை பாட்டு மட்டும் உசிரு)..
http://www.youtube.com/watch?v=2RyYLOzh-VQ&feature=player_detailpage
ஹை கிடைச்சுடுச்சு..ஆனா விஷூவல் பார்த்தா கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சுது..!
http://www.youtube.com/watch?v=3mSwGlz05DM&feature=player_detailpage
88
ஆக க் கூடி நெறைய மிஞ்சும் பாட்டு இருக்கத் தான் இருக்கு.. இன்னும் மிஞ்சியிருக்கற பாட்டு உங்களுக்குத் தெரியும் தானே! :)
Gopal.s
30th October 2014, 07:14 AM
நான் மிக மிக மதிக்கும் திரை பாடல் கவிஞர்களில் மூவேந்தர்களில்(வாலி,கண்ணதாசன்,வைரமுத்து ) ,மிக முக்கியமான வாலி ஐயாவின் பிறந்த நாளில் ,உங்கள் அனைவருடனும் அன்னாரின் நினைவை பகிர்கிறேன்.
Gopal.s
30th October 2014, 07:18 AM
கிருஷ்ணா,
நடிகர்திலகம் விஷயத்தில் ,நான் வலிக்க கூறியதை ,வாசு வலிக்காமல் கூறி விட்டார். அவரின் ரசிகன் என சொல்லி கொள்ளும்,உங்களால் இந்த தவறு,இனி திரும்பாதென ,மகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி வாசு.
rajeshkrv
30th October 2014, 08:02 AM
வாலி பிறந்த நாள்- நன்றி பாடல் தொகுக்க உதவிய நண்பர் ராம் அவர்களுக்கு
பல்வேறு நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பாடிய தேச ஒற்றுமையை உணர்த்தும் பாரத விலாஸ் பாடல் : இந்திய நாடு என் வீடு .
எம்மதமும் சம்மதம்
தாய் மூகாம்பிகை : ஜனனி ஜனனி
முகம்மதுப்பின் துக்ளக் : அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை
வெள்ளை ரோஜா : தேவனின் கோயிலிலே
உறவில் மிக சிறந்த உறவு தாய் - கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
தேடி வந்த மாப்பிள்ளை : வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
மன்னன் : அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
நியூ : காலையில் தினமும் கண் விழித்தால்
பிரபலங்களே பாடி நடித்த பாடல்கள்
நடிகர் திலகம் - போற்றிபாடடி பெண்ணே - தேவர் மகன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடி நடித்த அம்மா என்றால் அன்பு-அடிமைப்பெண்,
ரஜினி காந்த் பாடி நடித்த அடிக்குது குளிரு- மன்னன்,
கமல் பாடி நடித்த இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்
சாகா வரம் பெற்ற தத்துவ பாடல் - கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்
நாயகி தன் தோழியரோடு பாடல் :
அன்று : பருவம் எனது பாடல் : ஆயிரத்தில் ஒருவன்
இன்று : அக்கடான்னு நாங்க உடை போட்டா : இந்தியன்
கடிதப்பாடல் :
அன்று : அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும்
இன்று : கண்மணி அன்புடன் நான் எழுதும் - குணா
கேலிப்பாடல் :
அன்று: என்ன வேகம் நில்லு - குழந்தையும் தெய்வமும்
இன்று - ஏ மாமா மாமா - மின்னலே
காதலியிடம்
அன்று : இந்த புன்னகை என்ன விலை -தெய்வத்தாய்
இன்று : என்ன விலை அழகே - காதலர் தினம்
பெண் வர்ணனைப் பாடல் :
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
(இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் தன காதலி விமலா எப்படி இருக்கிறாள் என்பதை பாடல் நாயகன் முருகன் வர்ணனை (பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் நடிகை மஞ்சுளாவிற்கு அப்படியே பொருந்தும் )
(மற்றும் உறவு முறை நடிகர்களின் வரிசையில்)
ஆழியிலே பிறவாத - பேசும் தெய்வம் (நடிகர் திலகம் )
பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன் (இளைய திலகம்)
அன்று : அவளுக்கும் தமிழ் - பஞ்சவர்ணக்கிளி (முத்துராமன்)
இன்று : ராஜா ராஜாதி -அக்னி நட்சத்திரம் (கார்த்திக்)
அன்று: உறவு என்றொரு சொல்லிருந்தால் - இதயத்தில் நீ (தேவிகா)
இன்று : அன்பே வா அருகிலே -கிளிப்பேச்சு கேட்கவா (கனகா )
அன்று- என்கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் (சிவகுமார்)
இன்று- முன்பே வா -ஜில்லுனு ஒரு காதல் (சூர்யா) அலெக்ஸ் பாண்டியன்,பிரியாணி படத்திற்காக-கார்த்தி அவர்களுக்கு.
அன்று- ஜெயுச்சுட்டே கண்ணா நீ -கலியுகக்கண்ணன் (தேங்காய் ஸ்ரீனிவாசன்)
இன்று - குக்காத்து மனுஷா -நளதமயந்தி ,மற்றும் செல்லமே செல்லம் நீ தானடி (ஆல்பம்) (அவர் பேத்தி ஸ்ருதிகா ),
அன்று ஷோபா சந்திரசேகர் பாடிய பாடல் ஓடிப்பிடிச்சு விளையாட :இரு மலர்கள் படத்தின் மகராஜா ஒரு மகராணி
இன்று அவர் மகன் விஜய் பாடிய ஒ ப்யாரி- பூவே உனக்காக
கலைஞர் கருணாதி மகன் முக முத்துவிற்கு 'மூன்று தமிழ் ' - பிள்ளையோ பிள்ளை
பேரன் அருள்நிதி - 'மன்னாதி மன்னரு' வம்சம்
கிருஷ்ணா ஜி, அருமை அருமை. என் தமிழாசானுக்கு இதை விட ஒரு நல்ல பதிவு இட்டுவிட முடியாது. அன்றும் இன்றும்.. நானும் இது போல் ஒன்று எழுதினேன் சில வருடங்க முன்பு..
எனினும் அழகாக என் தமிழாசானுக்கு பிறந்த நாள் பா பாடிய உமக்கு ஆயிரம் பொற்காசுகள் ....
rajeshkrv
30th October 2014, 08:23 AM
கிருஷ்ணா ஜி .. மழையை பற்றி கவிதை ஒன்று பதித்திருந்தீர்கள்
இதோ வாலி ஐயாவின் மழைப்பாடல்
சின்னச் சின்ன, தூரல் என்ன
என்னைக் கொஞ்சும், சாரல் என்ன
சிந்தச் சிந்த, ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும், பாடல் என்ன
சின்னச் சின்ன..
உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா..
அது தீண்டும் 'மேகம்' இல்ல, 'தேகம்' சிலிர்க்குதம்மா!
உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா..!
நனைந்த பொழுதினில், குளிர்ந்த மனதினில், ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..!
மனித ஜாதியின், பசியும் தாகமும், உன்னால் என்றும் தீருமம்மா..!
வாரித்தந்த வள்ளல் என்று, பாரில் உன்னை சொல்வதுண்டு!
இனமும் குலமும் இருக்கும் உலகில்,
அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே
சின்னச் சின்ன
சின்னச் சின்ன, தூரல் என்ன
பிழைக்கு யாவரும், தவிக்கும் நாட்களில், நீயோ இங்கே வருவதில்லை..
படிச்சவன் பாட்டக் கெடுத்தான் கதையா இல்ல இருக்கு,
பிழைக்கு-னு எழுதலயே, மழைக்கு-னு தான எழுதியிருக்கேன்!
மழைக்கு யாவரும், தவிக்கும் நாட்களில், நீயோ இங்கே வருவதில்லை..!
வெடித்த பூமியும், வானம் பார்க்கையில், நீயோ கண்ணில் தெரிவதில்லை..!
உனது சேதியை, பொழியும் தேதியை, முன்னால் இங்கே யாரரிவார்..?
நஞ்சை மண்ணும், புஞ்சை மண்ணும், நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்!
உனது பெருமை உலகம் அறியும்,
இடியெனும் இசை முழங்கிட வரும், மழையெனும் மகளே
சின்னச் சின்ன..
https://www.youtube.com/watch?v=rVhE0VKQLsY
rajeshkrv
30th October 2014, 08:38 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் -15
1992 தேவாவிற்கு லக்கி பிரைஸ் ஆம் நிறைய படங்கள். நிறைய பிரபலமான பாடல்கள்
அப்படி ஒரு பாடல் தான் இது. படம் அவ்வளவாக போகவில்லை. இருந்தாலும் கொள்ளை அழகு சுகன்யாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் தானே
இதே சரத்குமார் சுகன்யா நடித்த இளவரசன் திரையில் பாலாவும் சித்ராவும் பாடிய பாடல்
https://www.youtube.com/watch?v=vXAjET1OpUk
rajeshkrv
30th October 2014, 08:50 AM
இதற்கு முன்னாலும் டூயட் உண்டு, இதற்கு பின்னாலும் டூயட் உண்டு ஆனால் ஒரு டூயட் என்பது என்ன இருவரும் எப்படி பாட வேண்டும் என்ற விதம் என்றால்
அது பாடகர் திலகமும் இசையரசியும் தான்
இதோ அதற்கு ஒரு உதாரணம்
இனிக்க இனிக்க நெனச்சு என இசையரசி பாடும் விதம் கேளுங்கள் .. மயங்காத மனமும் மயங்கும்
https://www.youtube.com/watch?v=oj9ke-pDfLw
Russellisf
30th October 2014, 09:41 AM
சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா'' பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்'' பாடலும் தருவார்.
காதலை நெஞ்சில் பதிக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்'' படப்பாடலான "அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா''வும் தருவார்.
நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் "மலைக்கள்ளன்'' படப்பாடலான "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' பாடலும் தருவார்.
புரியாத மொழியில் `ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா'' பாடலை எழுதியதும் இவரே.
கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே'' பாடலை போடுவார்கள். "பானை பிடித்தவள் பாக்கியசாலி'' படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.
இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.
1939-ல் வெளிவந்த "மாரியம்மன்'' படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.
தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து "புலவர்'' பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.
பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?
கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-
அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.
அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
சுதந்திரம் கிடைத்த பிறகு "சுதந்திர போராட்ட தியாகி'' என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு `வாத்தியார்' என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் `வாத்தியார்' ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜ×னா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.
ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி'', ''ஓர் இரவு'' போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.
அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.
இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'' படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக "வெச்சேன்னா வெச்சதுதான்'' என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.
அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் "மச்சரேகை'' நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.
இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த "பாதாள பைரவி'', "மிஸ்ஸியம்மா'', "மாயாபஜார்'' போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.
அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.
ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் "அமரதீபம்'' படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, "நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க'' என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், "வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே'' என்று கலக்கமாய் கூறியவர், "வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க'' என்று கேட்டிருக்கிறார்.
அப்பாவும் உடனே தமாஷாக, "ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா'' என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.
"இதுக்கு என்ன அர்த்தம்?'' என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, "கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு "டப்பாங்குத்து பாடலாசிரியர்'' என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.
கலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த "குறவஞ்சி'' படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி "எந்நாளும் `தண்ணி'யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா.... ரா...'' என்று எழுதினார்.
சினிமாவில் `கேட்டது கிடைக்கும்' என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது "தங்கரத்தினம்'' படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் "உதயசூரியன்'' என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் "எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு'' என்று எழுதிக் கொடுத்தார்.
அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது "மாலையிட்ட மங்கை'' என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த `பிஸி'யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.
அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே' என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்' வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.
பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்' என்றும் அழைத்துக் கொண்டார்''
இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.
rajeshkrv
30th October 2014, 09:49 AM
பாபு
விஜ்யா பிலிம்ஸ்க்கு ஆஸ்தானம் தஞ்சை ராமய்யா தாஸ் தான். அதே போல் தேசுலாவுதே தேன் மலராலே போன்ற பாட்லகள் எல்லாம் அவரே தான்.
gkrishna
30th October 2014, 10:25 AM
கிருஷ்ணா,
நடிகர்திலகம் விஷயத்தில் ,நான் வலிக்க கூறியதை ,வாசு வலிக்காமல் கூறி விட்டார். அவரின் ரசிகன் என சொல்லி கொள்ளும்,உங்களால் இந்த தவறு,இனி திரும்பாதென ,மகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி வாசு.
கோபால்
என்னை பொறுத்த வரை நான் எந்த தவறும் செய்யவில்லை. வாசு அவருடைய கருத்தை விளக்கினார் . நான் என்னுடைய கருத்தை விளக்கி விட்டேன் . நான் ரசித்ததை தான் நான் சொல்ல முடியும். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது.கருத்துகள் வேறுபடலாம். இரண்டாவது நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் ,நடிகர் திலகம் நடித்த சில திரைப்படங்களில் அவரை விட வேறு சில நடிகர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்கள் என்று சொல்வதனால் அந்த ரசிகர் சிவாஜியின் ரசிகர் ஆக இருக்க முடியாது என்பது உங்கள் கருத்து ஆக வேண்டுமானால் இருக்கலாம். என் கருத்து அது அல்ல.உங்கள் கருத்தை என் மீது திணிக்க வேண்டாம் .
gkrishna
30th October 2014, 10:27 AM
கிருஷ்ணா ஜி, அருமை அருமை. என் தமிழாசானுக்கு இதை விட ஒரு நல்ல பதிவு இட்டுவிட முடியாது. அன்றும் இன்றும்.. நானும் இது போல் ஒன்று எழுதினேன் சில வருடங்க முன்பு..
எனினும் அழகாக என் தமிழாசானுக்கு பிறந்த நாள் பா பாடிய உமக்கு ஆயிரம் பொற்காசுகள் ....
நன்றி ராஜேஷ் சார்
chinnakkannan
30th October 2014, 10:28 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ஹாய் க்ருஷ்ணா ஜி. நேற்று வாலி..இன்னிக்கு யாரை எடுத்துக்கலாம் சொல்லுங்கோ..
gkrishna
30th October 2014, 10:40 AM
மார்னிங் சி கே
உங்களோடு கலந்து உரையாடி நீண்ட நாட்கள் ஆக விட்டது.
இன்று நீங்களே ஒரு நல்ல subject ஆரம்பிங்க . கலந்து கட்டுவோம்
காலையில் வாசுஜி எங்கே காணோம்
rajraj
30th October 2014, 10:55 AM
chinnakkaNNan: Did you finish all the homework ? :)
Gopal.s
30th October 2014, 11:11 AM
Krishna,
Good performance is something to be assessed from the different bench marks set by the same actor. It is an illusion to compare an actor travelling in his own domain with his usual style and cheap scene stealing gestures(Pava mannippu,Bale pandiya) with another one transforms himself in every movie. Sometimes Character constructions and intentions(pennin perumai,unakkaga nan) can give an illusion. According to me whoever may the Co-Star, Nadigarthilagam emerges the winner in the End. Hope it clarifies your doubts and prevent you from using adjectives.
JamesFague
30th October 2014, 11:20 AM
M r ராதா டூயட் பாடினால் பார்க்க முடியுமா ஆனால் நடிகர்திலகம் அப்படியல்ல. எந்த வேடம் நடித்தாலும் நம்மால் ரசிக்க முடியும். எதுவே
அனைத்து நடிகருக்கும் நடிகர் திலகத்திற்கும் உள்ள வேறுபாடு. எனவே
கலைகட்வுள் என்றால் அது நடிகர் திலகம் தான்
gkrishna
30th October 2014, 11:46 AM
ஒரு ஆர்வத்தில் எல்லோரும் சொல்வதுதான் நான் உட்பட. அதைத்தான் தாங்களும் இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த எனக்கு வாய்பளித்தமைக்கு நன்றி. (ஒருவேளை நாரதர் கலகமோ!) இது ஒரு ஆரோக்கிய வாதமே அன்றி விவாதம் அல்ல.
நெய்வேலியார் தொடங்கினார் :)
வியட்நாமார் தொடர்ந்தார்
சிதூரார் முடிக்கிறாரா ? :)
எப்படியோ
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி தான் :)
நாராயண நாராயண
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ95Q4gI6UCLQc45dRpiBFryz4xfYOdZ 4OcagESqEf_373ksiRr
gkrishna
30th October 2014, 12:14 PM
தேனிசை தென்றலின் முத்துக்கள்-14
90’களில் சில படங்களில் வருண்ராஜ் என்ற நடிகர் நடித்தார். பாவம் அப்புறம் என்னா ஆனாரோ.. இதோ வருண்ராஜ் மற்றும் ரூபஸ்ரீ பாடும் பாடல்
தேவாவின் அழகான இசையும், பாலுவும் சித்ராவும் இசைக்கும் காதல் கீதம்.
http://tamilbites.net/wp-content/uploads/2012/11/Gangai-Karai-Pattu.jpg
டியர் ராஜேஷ் சார்
இந்த வருன்ராஜ் தான் சபீக் என்று மலையாளத்திலும்,சஞ்சய் என்ற பெயரில் தமிழ்லும் ரவுண்டு அடித்து பார்த்தார்.
ஓடங்கள் என்ற தமிழ் படத்தில் சஞ்சய் என்ற பெயரில் நடித்தார்
நினைவு கூர்ந்ததற்கு நன்றி
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTG6L-AMWZpDztcqQW7UFlmWQ3TS80n57hjC827oLmk8XBs9Pgq7Q
GK
adiram
30th October 2014, 12:30 PM
வாலி பிறந்த நாள் -
ரகசிய போலீஸ் 115 படத்தில் வாலி எழுதிய கண்ணே கனியே என்ற பாடலில் நாயகியின் அழகு பற்றி வரும் வரிகள்
ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ
செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன
This song 'kanne kaniye' was written by KANNADHAASAN.
gkrishna
30th October 2014, 12:49 PM
நன்றி ஆதிராம் சார்
இது போன்று நிறைய பாடல்கள் கண்ணதாசன் எழுதியதா வாலி எழுதியதா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் .
ஒரு சிறு விண்ணப்பம்
ரகசிய போலீஸ் 115 டைட்டில் கார்ட்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்,கவிஞர் வாலி என்று உள்ளது.
எந்த பாடல் வாலி எழுதியது என்று சொல்ல முடியுமா ?
gkrishna
30th October 2014, 01:07 PM
படித்ததில் பிடித்தது
ஆனந்தவிகடன் 10.8.1969கேள்வி: திரைப்படங்களில் நீங்கள் நடிக்க வராமல் இருந்திருந்தால் வேறு என்ன செய்திருப்பீர்கள்?
ஜெயலலிதா: எனக்கு ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் வாங்க வேண்டுமென்று ஆசை. ஒருவேளை படித்து பட்டம் வாங்கி ஆங்கில இலக்கியத்தை கரைத்துக் குடித்துக் கொண்டிருப்பேன். ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படம் போட கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசை. ஒருவேளை அப்படியிருந்தால் இன்று பல நல்ல ஓவியங்களை தீட்டித் தள்ளிக் கொண்டிருப்பேன். பிரபல சரஸ்வதி-யாமினி கிருஷ்ணமூர்த்தி இவர்களைப் போல கிளாசிகல் நடனத்தில் உலகப் புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அரசியலில் தீவிரமாக இறங்கி பெரிய அரிசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை நான் சினிமாவுக்கு வராமலிருந்திருந்தால், இன்று தேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பேன். ஆனால் ஒன்று இப்படி சினிமாவிற்கு வந்து நடிப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. தலைவிதிதான். ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டமான தலைவிதி.
chinnakkannan
30th October 2014, 02:21 PM
காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது - என்ற இந்த வாக்கியம் மற்ற நாட்டு வானங்களுக்கெல்லாம்(?!) சகஜமாக இருக்கலாம்.. மஸ்கட்டை ப் பொறுத்தவரை அபூர்வம்.. நடுவில் - எதையோ ஆசைப்பட்டுக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தை யே என்று அழுது கிடைத்ததும் டபக்கென நிறுத்தி விடுவதைப் போல - ஒரு ச்சின்ன க் குட்டி மழை பெய்து சாலைகளை நனைத்தது..
சாயந்திரம் அலுவல் முடித்துச் சென்றால் ரோடெல்லாம் காய்ந்து மழை சுவடே இல்லாமலிருக்கும்..அதற்குள் இன்னொரு மழை வந்தால் நன்றாக இருக்கும்..
என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்..மழை..யெஸ் ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்ததால் வானமே ஏதோ கல்யாணப் பந்தலில் நின்று கொண்டு இங்கு ஹாய் விஷ் யூ ஆல் ஹேப்பினஸ் எனச் சொல்லி பன்னீர் தூவுவதைப் போன்ற சில பல தூற்றல்கள்..ஹப்பாடி பாட்டுக்கு வந்தாச்சு..
தூக்கு மர நிழலில் என்ற நாவல் எழுதிய சி.ஏ.பாலன் எழுதிய இன்று நீ நாளை நான் நாவல் படமாக்கப் பட்டு சிவகுமார் லஷ்மி ஜெய்சங்கர் சுலோச்சு (அதானே!) நடிக்க வெளியானது..அதில் லஷ்மி பாடும் பாடல் நினைவுக்கு வந்தது தவறில்லை தானே..
லஷ்மியின் கணவர் ஜெய்சங்கர் மரித்து விடுகிறார்..லஷ்மி விதவை ஜெய்சங்கரின் தம்பி (தான் என நினைக்கிறேன்) சிவகுமாரிடம் மனம் பேதலிக்கிறார்..அண்ட் ஸாங்க் இஸ் கமிங் யா..
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா...
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
**
வரிகள் வைரமுத்து.. வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா..ம்ம்
http://www.youtube.com/watch?v=R38e3Y_D9zk
**
இன்று நீ நாளை நான் படத்தைப்பொறுத்த வரை கொஞ்சம் வித்தியாசமான படம் என மட்டும் நினைவில் இருக்கிறது..
vasudevan31355
30th October 2014, 06:04 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 10)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
http://i.ytimg.com/vi/Riz9Y13Nxpw/hqdefault.jpg
http://drop.ndtv.com/albums/ENTERTAINMENT/rajinikanth/16.jpg
அடுத்து 'புவனா ஒரு கேள்விக்குறி'. அனைவருக்குமே பிடித்த பாத்திரப் படைப்புக்கேற்ற ரஜினியின் நடிப்பு. வித்தியாச கள்ளத்தனம் கொண்ட பாத்திரத்தில் சற்றே வழக்கத்துக்கு மாறான சிவக்குமார். குணச்சித்திர நடிப்புக்கு ரஜினிக்கு இருக்கும் ஒருசில படங்களில் இதுவும் ஒன்று. பொதுவாகவே ரஜினி இந்தப் படத்திலும், 'ஆறிலிருந்து அறுபது வரை' படத்திலும் நன்கு நடிப்பில் சோபித்திருப்பார் என்ற பெயர் உண்டு. இன்றளவிலும் நடிப்பைப் பொறுத்தவரையில் ரஜினியின் பெயர் சொல்லும் படம். 1977-ல் வெளிவந்தது. இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
இந்தப் படத்தில் ரஜினி அவர் காதலியாக வரும் மீராவுடன் பாடும் ஒரு மனதை வருடும் மெல்லிசை மோகப் பாடல். வேட்டி, சட்டையில் ரொம்ப சிம்பிளாக ரஜினி. பாடல் வரிகள் அனுவித்து எழுதப்பட்டவை. ஆனால் பாடல் வரிகளின் புகழ்ச்சிக்கேற்றவாறு நடிகை மீராவின் உருவ அமைப்பு இல்லாதது ஒரு பெரிய குறை.
'விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது'
ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குழையும் குரலில் நம் நெஞ்சத்தை மயக்கும் கானம். எளிமையான பஞ்சு அருணாச்சலத்தின் வரிகள். மெல்லிய கிடார் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல் அப்படியே வைகைக் கரையின் புதுத் தென்றல் போல நெஞ்சுக்குள் நுழைந்து சுகம் தரும். ராஜாவின் மிகச் சிறந்த மெலடிக்கு எடுத்துக்காட்டு இந்தப் பாடல்.
'பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை'
என்ற எவரும் நினைக்க முடியாத கற்பனை வரிகள் அற்புதம்.
பாடலின் முழு வரிகள்.
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன்விளக்கே தீபமே
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
கையளவு பழுத்த மாதுளை
பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை
பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோகமழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
http://www.youtube.com/watch?v=ckmeSTmc7P0&feature=player_detailpage
vasudevan31355
30th October 2014, 06:16 PM
'புவனா ஒரு கேள்விக்குறி' ரஜனி.
http://1.bp.blogspot.com/-xv022sDnhqs/UqiwLekE6_I/AAAAAAAAInA/_F2zr8q94MQ/s640/15.jpg
RAGHAVENDRA
30th October 2014, 07:09 PM
சி.க.சார்
இன்று நீ நாளை நான் ... பொன் வானம் பாடல் தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் மறக்க முடியாத பாடலாகும். இசையமைத்த இளையராஜாவிற்கும் பாடிய எஸ்.ஜானகி அவர்களுக்கும் வரிகளின் சொந்தக்காரருக்கும் என்றென்றும் நிலைத்த புகழை அளித்த பாடல்
நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி
RAGHAVENDRA
30th October 2014, 07:10 PM
கிருஷ்ணாஜி...
தங்களுடைய வழக்கமான வேகம் வந்தால் தான் திரியில் சுவாரஸ்யம் கூடுவதைப் போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது. தொடருங்கள்.
RAGHAVENDRA
30th October 2014, 07:11 PM
வாசு சார்
புவனா ஒரு கேள்விக்குறி ... மறக்க முடியாத படம் பாடல். தங்களுடைய பதிவின் மூலம் அப்பாடலை புதியதாகக் கேட்பவர்களுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே கேட்டவர்களும் இனிமையாய் உணர்வார்கள்.
RAGHAVENDRA
30th October 2014, 07:15 PM
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதுவர்கள் - டி.ஆர்.பாப்பா
இதழிசைக் கருவியாய் விளங்கும் மௌத் ஆர்கன் டி.ஆர்.பாப்பா அவர்களின் படங்களில் நிச்சயம் இடம் பெற்று விடும். பாடல்களில் பயன் படுத்தப்படாவிட்டாலும் பின்னணி இசையில் இடம் பெற்று விடும். இவருடைய மௌத் ஆர்கனஅ பிரயோகத்திற்கு மிகச்சிறந்த உதாரணம், குமார ராஜா படத்தில் இடம் பெற்ற ஒண்ணுமே புரியலே உலகத்திலே பாடல்.
இதே வரிசையில் முழுமையாக இல்லாவிட்டாலும் அங்கங்கே இப்பாடலில் மௌத் ஆர்கன் அற்புதமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இசையரசியின் குரலோடு இதையும் சேர்ந்து கேட்கும் போது உடலெங்கும் இனம் புரியா உணர்வேற்படுவது திண்ணம்.
காதல் படுத்தும் பாடு படத்திலிருந்து வெள்ளி நிலா வானத்திலே பாடல் நமக்காக..
http://www.youtube.com/watch?v=8JucraMdUlY
vasudevan31355
30th October 2014, 08:46 PM
[b][color=green][size=3] இசையரசியின் குரலோடு இதையும் சேர்ந்து கேட்கும் போது உடலெங்கும் இனம் புரியா உணர்வேற்படுவது திண்ணம்.
காதல் படுத்தும் பாடு படத்திலிருந்து வெள்ளி நிலா வானத்திலே பாடல் நமக்காக..
முக்காலும் உண்மை ராகவேந்திரன் சார். பல அருமையான சங்கதிகள் இப்பாடலில் இருப்பதை பரிபூரணமாய் உணரமுடியும். அருமையான பாடலுக்கு நன்றி.
rajeshkrv
30th October 2014, 09:21 PM
டியர் ராஜேஷ் சார்
இந்த வருன்ராஜ் தான் சபீக் என்று மலையாளத்திலும்,சஞ்சய் என்ற பெயரில் தமிழ்லும் ரவுண்டு அடித்து பார்த்தார்.
ஓடங்கள் என்ற தமிழ் படத்தில் சஞ்சய் என்ற பெயரில் நடித்தார்
நினைவு கூர்ந்ததற்கு நன்றி
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTG6L-AMWZpDztcqQW7UFlmWQ3TS80n57hjC827oLmk8XBs9Pgq7Q
GK
sanjay was Gayatri's brother. he acted in ennulle song with priya raman
vasudevan31355
30th October 2014, 09:38 PM
சி.க.சார்,
'பொன்வானத்'துக்கு நன்றி. உங்கள் பதிவுக்கு பன்னீர் தூவுகிறேன். கிரேட் சாங். இதே போல லஷ்மி இன்னொருமுறை தான் வாழ்கையைப் போலவே மனம் பேதலித்து இளைய திலகத்திடம் தானைப் ப[அறி கொடுக்கும் பாடல் 'என்னுயிர்க் கண்ணம்மா' திரைப்படத்தில் வரும். 'பொன் வானம்' போலவே அற்புதான பாடல் இது. அந்த அளவிற்கு ஹிட் ஆக வில்லை என்பது பெரும் குறை.
இந்தப் பாடலை அப்லோட் பண்ணியவர் ஆடியோவை மறந்து விட்டது போல் தெரிகிறது. இல்லை எனக்குத்தான் ஆடியோ வரவில்லையா? உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். இது என்ன பாடல் என்று கண்டு பிடியுயுங்கள் பார்ப்போம். அதே மழை. அதே விரக தாப லஷ்மி. சிவக்குமாருக்கு பதில் பிரபு. பிரபுவுக்கு லஷ்மி தன காதலி ராதா மாதிரி தெரிய முடிந்தது கதை.
http://www.youtube.com/watch?v=wau-V_xroWU&feature=player_detailpage
rajeshkrv
30th October 2014, 09:43 PM
This song 'kanne kaniye' was written by KANNADHAASAN.
i think except for Kanne kaniye all other songs were by Kannadasan
Kanne kaniye is by Vaali only
vasudevan31355
30th October 2014, 09:47 PM
//வாசு ஜி
இதோ இசையரசியின் இன்னொரு கன்னட முத்து.
விஜயபாஸ்கர் அவர்களின் இசை..
கல்பனா, கல்யாண்குமார் திரையில்
மெல்லகே மெல்லகே என இசையரசி பாடும்விதமே ஹ்ம்ம்//
ராஜேஷ்ஜி!
'முகுலு நகியா மல்லிகே'
பாடலை இப்போதுதான் பார்த்தேன். கல்பனா கண்படும் அழகு. இசையரசி வழக்கம் போல தூள். நல்ல மெலடிக்கு நன்றி.
rajeshkrv
30th October 2014, 09:54 PM
//வாசு ஜி
இதோ இசையரசியின் இன்னொரு கன்னட முத்து.
விஜயபாஸ்கர் அவர்களின் இசை..
கல்பனா, கல்யாண்குமார் திரையில்
மெல்லகே மெல்லகே என இசையரசி பாடும்விதமே ஹ்ம்ம்//
ராஜேஷ்ஜி!
'முகுலு நகியா மல்லிகே'
பாடலை இப்போதுதான் பார்த்தேன். கல்பனா கண்படும் அழகு. இசையரசி வழக்கம் போல தூள். நல்ல மெலடிக்கு நன்றி.
உஙகளுக்கு பாடல் பிடித்திருந்ததில் மகிழ்ச்சியே
vasudevan31355
30th October 2014, 09:57 PM
http://i.ytimg.com/vi/zOrnqghYq2U/hqdefault.jpg
'காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்'
ராஜேஷ்ஜி!
என்ன ஒரு பாடல்!
'உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன்'
அற்புதமான டியூன்.
அழகு நிர்மலா.
ஹனி வாய்ஸ் சுசீலாம்மா.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3hLCRm7_GQc
vasudevan31355
30th October 2014, 10:20 PM
இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு 'வண்ணத்திரை' .27/10/2014 வார இதழில்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-54.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-54.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-53.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-53.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-37.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-37.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-26.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-26.jpg.html)
vasudevan31355
30th October 2014, 10:33 PM
ராஜேஷ்ஜி!
நாளைக்கு இசையரசியைப் பற்றிய சிறிய பரிசு உங்களுக்குக் காத்திருக்கிறது.
chinnakkannan
30th October 2014, 10:33 PM
ராகவேந்தர் சார் நன்றி.. வெகு அழகான பாடல் பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்.. அவ்வளவு தான்.. சொன்னாற்போல ரோடெல்லாம் காய்ந்து விட்டது.. நிலோஃபர் புயல் வேற எங்கிட்டோ போய்டுத்து.. உங்கள் டி.ஆர்.பாப்பா தொடரும் படித்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேனாக்கும்..
வாசுசார்..புவனா ஒரு கேள்விக்குறி ஒரு முறை தான் பார்த்த நினைவு அதுவும் முழுமையாக இல்லை என நினைக்கிறேன்.. நாவலைப் பொறுத்தவரை சம்பத் குமார ரஜினிக்கு ஜோடி இருந்ததாக நினைவிலில்லை.. அதுவும் இந்த விழியிலே மலர்ந்தது அவருடன் மீராவைப்பார்த்ததும் கொஞ்சம் சர்ப்ரைஸ் தான் (இந்தப் படத்தில் மீடியமாக இருப்பார்..பட்டினப் ப்ரவேசத்தில் சிவச்சந்திரன் சொந்தம் இருளிலாஒரு பூவையின் அருளிலா என லா போட்டு நிலாவை அழைத்த பாடலில் ஸ்மால்.. அப்புறம் சிந்து பைரவியில் எக்ஸ்ட்ரா லார்ஜாக இருப்பார்.. ( சிவகுமாருக்கும் சுமிக்கும் கூட ஒரு டூயட் உண்டே..thanks for the song
ராஜேஷ் ஜி.. பாருங்க வாசு சாரே எனக்கு தெரிந்த இளையராஜா பாட்டா எழுத் ஆரம்பிச்சுட்டார்.. தேவா வோட எனக்குத்தெரிஞ்ச பாட்டு ஒண்ணு அடுத்தது போடுங்க பார்க்கலாம்..
chinnakkannan
30th October 2014, 10:39 PM
வாசு சார் தாங்க்ஸ்.. இந்த இரண்டாவது பொன்வானம் அனியாயத்துக்கு ஊமையா இருக்கே..!
rajraj
31st October 2014, 01:59 AM
From Avan, Tamil dubbed version of Aah(Hindi)(1953)
un pEraik kEttEn......
http://www.youtube.com/watch?v=UmO_WyHGwK4
From the original
sunte thi naam ham ..........
http://www.youtube.com/watch?v=5Osioi6qvjg
Aah/avan happens to be my most favourite movie for songs. There was a time when I could sing all the songs in the movie.
Now, I remember a few lines from the song! ::lol:
chinnakkannan
31st October 2014, 03:17 AM
Nalla paattukkaL rajraj sirthanks.. innum home work paNNalai! :)
Russellmai
31st October 2014, 08:17 AM
டியர் கிருஷ்ணா சார்,
தங்களது புதல்வி வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.இணையத் தொடர்பு நான்கு நாட்களாகத் தடை பட்டு இருந்ததால்
வாழ்த்துக்களைத் தாமதமாக தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்புடன் கோபு.
Gopal.s
31st October 2014, 08:35 AM
கிருஷ்ணாஜி...
தங்களுடைய வழக்கமான வேகம் வந்தால் தான் திரியில் சுவாரஸ்யம் கூடுவதைப் போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது. தொடருங்கள்.
ராகவேந்தர்,
இது என்ன விபரீத ஆசை?
Richardsof
31st October 2014, 08:58 AM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
நீங்கள் கேட்ட ரகசிய போலீஸ் 115 பாடல் புத்தகம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .நம் இருவரின் ரசனையும் ஒரே மாதிரியாக உள்ளது மகிழ்ச்சி .இன்று காலை இந்த பாடலை பார்த்தவுடன்
உங்கள் நினைவுதான் வந்தது . என்ன ஒரு இனிய பாடல் . அருமையான இசை . பாடகர் திலகம் - இசை அரசி இருவரின் குரலில் மக்கள் திலகம் - ஜெயா நடிப்பில் மனதை மயக்கும் பாடல் .
http://youtu.be/fItE_p8Edwc
rajeshkrv
31st October 2014, 09:36 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் -15
1992’ம் ஆண்டு தேவாவிற்கு நன்றாக அமைந்த ஆண்டு
சுகன்யா, ரவிராகுல் நடித்து வெளிவந்த கஸ்தூரி ராஜாவின் சோலையம்மா தேவாவின் 50’வது படம். அருமையான பாடல்களை வழங்கியிருப்பார்
இதில் தான் வில்லனாக கரிகாலன் அறிமுகமானார்.
இதில் எனக்கு பிடித்த பாடல்கள்
மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில
தாமிர பரணி ஆறு
இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல் அமைந்த பாடல்
கூவுர குயிலு சேவல பாத்து படிக்குது பாட்டு (வரிகள் கஸ்தூரி ராஜா)
சுகன்யாவிற்கும், தேவாவிற்கும் மா நில அரசு விருதகளை வாங்கி தந்த படம்
சுகன்யா அருமையாக நடித்திருப்பார்.
இதோ அந்த பாடல்
http://www.youtube.com/watch?v=V2Cchwk6dTg
Russellisf
31st October 2014, 11:05 AM
எழுத்துகளை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• பிறந்தது ஸ்ரீரங்கம். இயற்பெயர் டி.எஸ்.ரெங்கராஜன். சிறு வயதிலேயே நாடகம் எழுதுவார். ‘நேதாஜி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். அப்போதே இவரது நாடகங்கள் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகின.
• சிறந்த ஓவியர். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓர் ஆண்டு படித்தார். ஓவியர் மாலி போல ஆகவேண்டும் என்பது ஆசை. ரெங்கராஜன், ‘வாலி’யான ரகசியம் இதுதான்.
• சினிமாவுக்கு அழைத்துவந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்குமே வாலியைப் பிடிக்கும். எம்.ஜி.ஆர். இவரை ‘ஆண்டவனே’ என்பார். சிவாஜிக்கோ இவர் ‘வாத்தியார்’. வாலி வீட்டு தோசை - மிளகாய்ப் பொடிக்கு தமிழ்த் திரையுலகில் ரசிகர் பட்டாளமே இருந்தது.
• விருப்ப விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். ஒரு வீரரின் பலம், பலவீனம் பற்றி விரிவாக, நுணுக்கமாக அலசுவார்.
• காதல், காமம், தாய்மை, தாலாட்டு, பக்தி, சோகம், குத்துப்பாட்டு என வாலியின் வரிகள் பயணிக்காத உணர்வுகளே இல்லை. சூழலைச் சொல்லி முடிப்பதற்குள் பல்லவி முடித்து சரணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர். தொடங்கி தனுஷ் வரைக்கும் பாடல் எழுதிய நான்கு தலைமுறை பாடலாசிரியர்.
• வாலியின் தத்துவப் பாடல்களில் கண்ணதாசன் சாயல் இருக்கும். அதுகுறித்து கேட்டால், ‘தங்கத்துடன்தானே ஒப்பிடுகிறார்கள்.. தகரத்துடன் இல்லையே’ என்பார் பெருமையாக.
• தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். பத்ம, பாரதி விருது, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.
• கோபம் அதிகம். ‘பாரதவிலாஸ்’ படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ பாடல் எழுதினார். அந்தப் பாடலுக்கு தேசிய விருது கொடுக்க வாலியிடம் அதிகாரிகள் பயோடேட்டா கேட்டார்கள். ‘‘பாட்டுக்கு தகுதி இருந்தா யாரு.. என்னன்னு விசாரிக்காம தரணும். என்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதா இருந்தா, விருதே வேண்டாம்’’ என்றார் சூடாக!
• 15 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள், 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். ‘வடைமாலை’ என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதுக்கவிதை வடிவில் படைத்தார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
• பொய் பிடிக்காது. தமிழ்த் திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர், கடந்த ஆண்டு காலமானார்.
Russellisf
31st October 2014, 12:27 PM
உலகம் உள்ள வரை வாலியின் பாடல்கள் ஒலிக்கும் : இளையராஜா பெருமிதம்
சென்னை : ''கவிஞர் வாலி மறைந்தாலும், இந்த உலகம் உள்ள வரை, அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்,'' என, இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
வாலி பதிப்பகம் சார்பில், கவிஞர் வாலியின், 83வது பிறந்த தினம், சென்னையில் கொண்டாடப்பட்டது. பிறந்த தினத்தை முன்னிட்டு, சினிமா பாடலாசிரியர் காமராசன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோருக்கு, வாலி விருதுகள் வழங்கப்பட்டன.
மக்கள் மனதில் விருது வழங்கிய, இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: தமிழ் சினிமா எண்ணற்ற பாடலாசிரியர்களை பார்த்துள்ளது. இதில், நிலைத்து நிற்பவர்கள் சிலர் தான். அதுவும், மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்கள் மிக சொற்பம். அந்த வரிசையில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்றவர்கள் உள்ளனர். என்றும் இளமை துள்ளலுடன், திரை பாடல்களை தந்தவர் வாலி. அவர் மறைந்து விட்டாலும், இந்த உலகம் உள்ளவரை, வாலியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினி, கமல் என, தமிழ் மக்கள் மத்தியில் என்றும் கதாநாயகர்களாக இருப்பவர்களுக்கு எல்லாம், வாலி பாடல் எழுதியுள்ளார். அவர்களுக்கு, எழுதிய பாடல்களைத் தொகுத்து, நுால்களாக வாலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சிக்கு உரியது.
இவ்வாறு அவர் பேசினார். விழாவுக்கு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை வகித்தார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், நடிகர் விவேக், பாடலாசிரியர் பழனி பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றன
vasudevan31355
31st October 2014, 06:24 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 11)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் சிவக்குமாருக்கும், சுமித்ராவுக்குமான காதல் டூயட். அப்போது இப்பாடலை வித்தியாசமான ஒரு பாடலாக உணர முடிந்தது.
ஜெயச்சந்திரனும், வாணிஜெயராமும் மிக அருமையாகப் பாடியிருப்பார்கள்.
'நானனானனானனானனா' என்று வாணி அருமையாக ஹம்மிங்குடன் ஆரம்பிக்க, 'சிம் சிம்ஜும்' கூடவே ஆண்குரல் ஒலிக்க, கடற்கரையில் காதலர்கள் பாடும் கானம்.
பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில்.
'பூந்தென்றலே!
நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடி வா பாடி வா'
சிவக்குமாரும் குள்ளம். சுமித்ராவும் குள்ளம். ஜோடியும் ஜோர்.
'பாலில் நெய்த இளமேனி
பருவம் விளையாடும்
பொன் மேடை மேனியெங்கும்
நாதம் உருவாகும்'
அமர்க்களமான சிந்தனை.
வாணியின் குரல் மயக்கம் தரும்.
பாடலின் முடிவில் ஆண்குரல் 'பூந்தென்றலே' என்று ஒலிக்க கூடவே 'லல்லல்லலாலலால... லல்லல்லலாலலால' என்று வாணிஜெயராம் பல தடவை ஹம்மிங் கொடுத்துக் கொண்டே வருவது இப்பாடலுக்கு சிகரம் வைத்தாற்போன்ற அழகு.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SWtJc4DX3uY
vasudevan31355
31st October 2014, 08:41 PM
மாலை மதுரம்
பாடகர் திலகம் நடித்து பாடும் அற்புத பாடல்.
'கல்லும் கனியாகும்' படத்தில். மீசையும், தாடியுமாக வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கும் டி.எம்.எஸ். ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அங்கிருக்கும் குழந்தை அவரை பாடச் சொல்லி வற்புறுத்த, பாடகர் திலகம் சோகமே உருவாக பாட மறுத்து பின் இணங்க, அங்கிருக்கும் அகந்தை குமபல் அவரை நையாண்டி செய்து கை கொட்டி சிரிக்க, பாடகர் திலகம் கொட்டாங்கச்சி வயலின் இசைத்து பஞ்சடைந்த கண்களுடன் அழுதபடியே பாடும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.
நாடி நரம்புகளெல்லாம் புகுந்து நம் மனதை கலங்கடிக்கும் பாடல். சரண வரிகளைக் கேட்டு கலங்காத மனம் இருக்கவே முடியாது.
டி.எம்.எஸ் அவர்களுக்காகவே எழுதப்பட்ட பாடல்.
கல்லில் செதுக்கிய எழுத்தைப் போல் நெஞ்சில் நிலையாக நிற்கும் பாடல்.
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் என்னுயிரே
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wLcddb8O4M4
chinnakkannan
31st October 2014, 09:02 PM
ஹாய் வாசகாஸ்..! எப்படி இருக்கேள்… ரெடியா இருக்கேளா.. கம் ஸிட் ஆன் மை டைம் மெஷின்..
எங்கிட்டுப் போ’றோமா எண்பத்தொம்பதாம் வருஷம் போகணும்.. யெஸ் யெஸ்..வெய்ட் வெய்ட்.. இந்த ரெயில்வே ஸ்டேஷன் தான்..பேரென்ன.. ஓ.கே..அவ்வளவா சரியாத் தெரியலை..லொகேஷன் பெட்வீன் நெல்லை அண்ட் நாகர் கோவில்..ஓ.கே..
ஸ்டேஷன்ல இருக்கற ஒரு ட்ரெயின்ல ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க பெண்மணி இருக்காங்க..பார்த்தீங்களா..யா.. வெளில யாரையோ பார்த்துக்கிட்டிருக்காங்க.. அவங்க புருஷன் தான்..
பார்த்துட்டாஙக.. ஜன்னல் வழியா வெளியில இருக்கற புருஷன் கிட்டக்க “ என்னங்க தேடியது போதும்.. உள்ள வாங்க”
“கொஞ்சம் இரும்மா..அந்தப் பையனோ ஒண்ணும் தெரியாத பையன்..பஸ்ஸ வேற மிஸ் பண்ணிட்டான்..கொஞ்சம் இரு தேடிப்பார்க்கறேன்..”
அந்த வயதான புருஷன் தேடித்தேடி அலைபாய்ந்தவண்ணம் இருக்க ட்ரெயினுக்கும் விதிக்கும் பொறுக்கவில்லை.. பாங்க்க் என்றுகத்தி மெல்ல மெல்ல நகர ஆரம்பிக்க இங்கே ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண்மணி என்னங்க வாங்க ஏறுங்க என க் கத்த அந்தப் புருஷனும் வேக வேகமாக ஓடி வேகம் பிடித்திருந்த வண்டியில் ஏ…றி…த் தொ..ற்..றி…
இல்லை…
தொற்றமுடியவில்லை.. வழுக்கி தொபீலென தண்டவாளத்திலேயே விழுந்து வழுக்கி ரயில் சக்கரத்தால் உள்ளிழுக்கப் பட்டு ……… ஒரு ஆ ஆ ஆ..அலறல் மட்டும்…
பார்த்த கேட்ட பெண்மணியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன..யாரோ செய்ன் அழுத்த ட்ரெய்ன் மெல்ல மெல்ல நின்றது..
(ஏங்க்க இப்படி பேஸ்த் அடிச்சுக்கினு டைம்மெஷின்ல உக்காந்த்திருக்கீங்க…ஆரம்பத்திலேயே முடிவுன்னா.. சரி சரி.. வாங்க கொஞ்சம் இன்னும் பின்னால போலாம்..)
யெஸ்..
வருடம் 1955..
நமஸ்கார மண்டி
நமஸ்காரா…
சொன்ன ஆண்மகனுக்குள் சிலிர்த்தது.. மூன்று வருடங்களாய் மனதிற்குள் பாடி வரும் குரல்..குரலுக்குச் சொந்தக் காரியும்.. அவளுடனேயே பாட வேண்டிய வாய்ப்பு..
சொல்லி விடலாமா..
இசையமைப்பாளர் வந்து விட…”ரிகர்சல் பண்ணிப் பாத்துக்குங்கப்பா”
இருவரும் பாடிப் பார்த்துக் கொள்ள…ரெடி..டேக்..
ஒரு நிமிஷம் ..என்றான் பாடகன் பாடகியிடம்.. உங்களோட பாடற பேப்பர்ல சில வரிகள் இல்லை போலிருக்கே…
பதினெட்டு வயது இளம் பாடகிக்குத் திகைப்பு.. குற்றமா என் பேப்பரிலா யார் சொன்னது..பதின்மூன்று வயதில் பாட வந்தவள்யா நான்.. பாடிய இரு பாடல்க்ளும் ஹிட்டாக்கும்.. அதன்பிறகு ஏகப்பட்ட பாடல்கள்..ம்ம் சரி இருக்கட்டும்…பாட வேண்டிய பாடல் தான் மனதிற்குள் மனனம் ஆகி விட்டதே..மைக் பிடித்தால் மழையென வெளியிலிருப்பவர்களின் செவிகளில் விழுந்து விடுமே..இவன் யாரு.. தெலுகு தான் .. இவனும் மியூசிக் டைரக்டர் தான்..அதற்காக..
என்ன சொல்றீங்க… சற்றே கோபமாய்க் கேட்டது வீணை..
இந்தாங்க இந்தப் பேப்பர்ல் அது இருக்கு…
கொஞ்சம் தயங்கி பின் வாங்கிப் பார்த்த விழிகளில் சற்றே வியப்பு பின் அகன்று வெட்கம்…
“உங்களைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேன்.. உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா..” என்ற வரிகள் பேப்பரில் அதுவும் தெலுங்கில்..
சற்றே மயில் அஞ்சனக் கண்களை எதிரிலிருந்தவனிடம் வீசியது.. அழகாய்த் தான் இருக்கிறான்.. ஒரே துறை.. நன்றாகவும் சம்பாதிக்கிறான் என இசை அமைப்பாளர் சொல்லியிருக்கிறார்.. நானும் பாடகி தான்.. பொருத்தம் தான்..சமர்த்து அழகாய்க் கேட்டிருக்கிறதே காதலை காகிதத்தில்..
நீளமான மெளனத்தை, மெளனத்தில் தெறித்த பார்வையின் வீச்சை தாங்க முடியவில்லை பாடகனால்..
என்னங்க வரிகள் நினைவுக்கு வந்துடுச்சா..
களுங்க்… கண்ணாடிக் கிண்ணத்தில் ஐஸ்கட்டியின் மோதல்…அவளின் சிரிப்பு..
உங்களோட அப்பா பெயர் என்ன…
அவனிடம் மறுபடி திகைப்பு.. எதற்கு அப்பாவைப் பற்றி விசாரணை..
:அப்பா பேரு மன்மத ராஜூ அம்மா பேரு லட்சம்மா..”
ஓஹோ மன்மத ராஜகுமாரனா நீங்க” மறுபடியும் களுங்க்.. பார்த்த விழிகளில் வெட்கம்… ஸர்ப்ரைஸாகக் கேள்வி கேட்காமல் குடியேறிய காதல்..மயக்கம்..
அவனுக்கும் சிரிப்பு..ராஜகுமாரன் தான்..ஆனால் நானும் ராஜா தான்.. ஏமல மன்மத ராஜூலு ராஜா.. ஏ.எம்.ராஜா க்ருஷ்ணா..
ம்ஹூம்.. உதடு சுழித்தது தேவதை.. “கால் மி அஸ் ஜிக்கி.. உங்கள் ஜிக்கி..”
அப்புறம் என்ன சில பல சந்திப்புகள்
ஒரு சந்திப்பில்…
“ராஜா”
”செப்பு”
சொப்புவாய் செப்பியது…” உங்களைப் பற்றிச் சொல்லுங்க்ளேன்..”
“அடிப்பாவி.. இவ்ளோ லேட்டாவா.. அடியேன் பிறந்தது ரேணுகாபுரம் படித்தது பச்சையப்பா..இசைப்போட்டியில் பரிசுகள் ஹெச்.எம்.வி இரண்டுபாடல்கள் இசைக்கக்கேட்டு வாங்கி வானொலியில் போட்டு அவை பிரபலம்....பின் சினிமாவில் எஸ் எஸ் வாசனுடன் அறிமுகம்.. சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்னு பாட்டு ஃபேமஸ்.. பெற்ற தாய்படத்தில் ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு என்று பி.சுசீலாவுடன் பாடிய பாடல் ஹிட்.. பி.சுசீலாவிற்கு அது தான் முதல் பாடல்.. பின்….
பேசும் யாழே பெண்மானே என உனைக் கண்டேன் …அப்பொழுதே நான் நீ என இருந்தது நாம் என்றானது.. ஆக்கியது ..விதி தான்.. பின்.. பல பாடல்கள் மு.க சு ஓகேயா..”
“ஓகே தான் என்றது கிளி.. பின் 1958 இல் திருமணம்…
கல்யாணப் பரிசு ஏ.எம். ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கியது.. எவ்வளவு பாடல்கள்.. அத்தனையும் இனிமை…
(யோவ் டைம் மெஷின்.. அம்பத்தஞ்சுலயே நின்னுட்டுக் கதை சொல்ற..அட்லீஸ்ட் எங்கிட்டாவது கூட்டுக்கிட்டுப் போப்பா….58ல் கல்யாணச் சாப்பாட்டுல என்னெல்லாம் ஐட்டம் இருக்கும்..அதுவும் தெலுங்கு கல்யாணத்துல..
மக்கள்ஸ் ஸாரி.. பசிச்சதுன்னா குட் டே காஜூ பிஸ்கட்ஸ் சீட் அடில இருக்கு எடுத்துக்கோங்க..வித்யாசமா வேணும்னா குச்சி ரொட்டி குருவி மிட்டாய் அடுத்த ப்ரேக்ல வாங்கித் தர்றேன்! இப்ப கல்யாணமில்லை.. ரெகார்டிங்க் ஸ்”டூடியோ…)
“ராஜா.. ராஜா..சொல்றதைக் கேளுங்க.. இதோ எல்லாப் பாடல்களூம் அற்புதமா வந்திருக்கு இந்தப் படத்துல.. ஒரே ஒரு பாட்டுல வரில கவிஞர் கொஞ்சம் நீளமா ஒரு வார்த்தை கொடுத்திருக்கார்.. கொஞ்சம் அதுக்கு ஒரே ஒரு தடவை மாறுதல் செஞ்சுடுங்களேன்”
“ஸ்ரீதர் அண்ணா.. என்னோட முதல் படம் கல்யாணப் பரிசு மியூசிக் டைரக்டரா..உங்களுக்கும் அது தான் முதல்..அதுலருந்து நாம நிறைய படத்துல ஒர்க் பண்ணியிருக்கோம்..உங்களுக்கே தெரியும்..ஐ. நெவர் காம்ப்ரமைஸ் ஆன் மை ஒர்க்.. ட்யூனே நல்லா இல்லைன்னா சொல்லுங்க முழுக்க மாத்தறேன்..பட்..ம்ஹூம் நோ..”
“ராஜா.. நீ ஒண்ணும் இசைக்கு ராஜா இல்லை.. மியூசிக்ங்கறது தெய்வம்.. அது உனக்கு வசப்பட்டிருக்கு ஆனா அதோட கூட கர்வம் அதுவும் உன் வசம்.. ரெண்டுல ஒண்ணு தான் ஒருத்தர் கிட்ட நிரந்தரமா இருக்கும் புரிஞ்சுக்கோ..”
“அண்ணா ஒங்க மேல மரியாதை நிறைய இருக்கு..அதுக்காக நீங்க இப்படி எல்லாம் திட்டப்படாது.. “
“அப்படித்தான் சொல்வேன்..இப்ப மாத்தறியா இல்லையா..”
“ம்ஹூம்..குரு..ஐம் சாரி டு ஸே திஸ்.. இனி உங்க படங்களுக்கு இசை அமைக்க மாட்டேன் இந்தப்படத்துக்கும் தான்..” ராஜா வேகமாக வெளியேறினார்..
//அச்சோ..இப்படிக் கோச்சுண்டுட்டாரே.. ஆமா என்ன படம் இது..டைம் மெஷின்..
தேன் நிலவு..
அப்புறம் படம் எப்படி முடிஞ்சுது வேற மியூசிக் டைரக்டரா..இருக்காதே டைட்டில்ல ஏ.எம்.ராஜா தான் வருதே..”
“இல்லை அப்புறம் எம்.ஜி.ஆர் தான் சமாதானப் படுத்தி முழுப்படத்துக்கும் இசையமைக்க வைத்தாராம் ஏ.எம்.ராஜாவை..” /
அப்புறம்..
அப்புறம் என்ன..காலம் மாறிண்டே இருந்துச்சா ராஜாவுக்கு வாய்ப்புகள் குறைந்தது..மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தேன் பால் பலா தடவி பாட்டுகள் தர.. அவை ஃபேமஸ் ஆகி சக்கைப் போடு போட ஏ.எம்.ராஜா விற்கு மலையாள உலகம் அழைத்தது.. அங்கும் பல பாடல்கள்.. அதற்கப்புறம் மெல்லிசைக் குழு என ஆக இருந்தார்..
இந்த வி.குமார் தான் அவரை மறுபடியும் அழைத்து முத்தாரமே என் ஊடல் என்னவோ என ரங்கராட்டினம் படத்தில் பாடவைக்க சங்கர் கணேஷ் செந்தாமரையே செந்தேன்மழையே பொன்னோவியமே கண்ணே வருக என ப் பாடவும் இசையமைக்கவும் புகுந்த வீட்டில் வைத்தார்…
“எதுக்கு சங்கர் கணேஷ் அவரோட மாமியார் வீட்டில ஏ.எம் ராஜாவை வைக்கணும்”
“ஓ..புகுந்த வீடுங்கறதுபடத்தோட பேருங்க.. அதுக்கப்புறம் சில படங்கள் இசையும் அமைத்தார்..சில பாடல்களும் பாடினார்.. அப்புறம் தான்..
அப்புறம் தான் 89ன் விபத்து ஒரு சிறந்த இசையமைப்பாளரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது..
ஜிக்கி..
வாங்க.. 2004க்குப் போவோம்..ஆனா டைம் மெஷின்ல இருந்து இறங்க வேண்டாம்..)
2004 ஜூலை..
பிள்ள வாளு கஜபதி கிருஷ்ண வேணி என்ற முழுப்பெயர் கொண்ட ஜிக்கியம்மாவா இது..அறுபத்தேழு வயது தான்..ஆனால் ஹாஸ்பிடலில்..
(என்ன டைம் மெஷின் இது..
ஆமாம்..ஒரு வலைப்பக்கம் ஜிக்கி புற்று நோயால் கொஞ்சம் சிரமப்பட்டு நம்மை விட்டு மறைந்தார் எனச் சொல்கிறது.ம்ம் அவரும் நல்ல பாடகி..இருவருக்கும் ஆறு குழந்தைகள்..எவ்வளவு பையன் எவ்வளவு பெண் என்ற விபரம் தெரியவில்லை..
சரி சரி வாங்க..2014க்கு ப் போலாம்)
ஆக ஏ.எம் ராஜா ஜிக்கி மறைந்தாலும அவரது/அவர்களது பாடல்கள் மனதை விட்டு நீங்காதவை.. எனக்குப் பிடித்த சில பாடல்கள்..
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு ஏ.எம்.ராஜா பி.சுசீலா
காவேரி ஓரம் கவிசொன்ன காதல் – ஏ.எம். ராஜா இசை பி.சுசீலாம்மா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
தென்றல் உறங்கிய போதும்..
கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய் – வாகீச்வரி ராகம்
காலையும் நீயே மாலையும் நீயே ஹம்ஸத் வனி
கண்ணும் கண்ணும் கலந்து – வ.கோ.வா.. ஜிக்கி சுசீலா..
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் – ஜிக்கி
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே…
இன்னும் நிறைய மனதை முட்டுகின்றன.. எனில் ஒரு நல்ல இசையமைப்பாளர் + நல்ல பாடகி யை நினைவு கூர்ந்த திருப்தியில் இதை முடிக்கட்டா…
ஓ நோ வீடியோஸ் ரெண்டே ரெண்டு பாட்டு.. ஓகே..
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்..
http://www.youtube.com/watch?v=WAT-7mJa8Sw&feature=player_detailpage
(ஒன்னைய அடிக்கணும்டா..
ஏன் மன்ச்சு..ஓரளவு சுமாரா எழுத ட்ரை பண்ணியிருக்கேன் தானே..
சும்மா இப்படிக் கதை அடிக்காதே.. நான் சொல்லவந்தது என்னன்னாக்க ஏ.எம். ராஜா இசையமைச்சதத் தான் முதல்ல போடணுமா..என்ன..அவர் பாட்டுப் போடலாம்ல..எல்லாம் ஸெல்ஃபிஷ் தனம்..
செல்பி தெரியும் அது என்ன ஸெல்ஃபிஷ்தனம் ஓ சுய நலமா இதுல என்ன அப்படி இருக்கு..
தேவிகா பாட்டைப் போட்டுட்டியே..
சர்ரோ தானே பாடுது. தேவிகா ஆடறாங்க தானே...எப்பவும் குத்தம் சொல்லிண்டே இருக்காத.. இப்ப அடுத்த பாட்டு)
தேன் உண்டும் வண்டு..
http://www.youtube.com/watch?v=7svF84dnMpI&feature=player_detailpage
அப்புறம் வரட்டா..
(எழுத உதவியவை..விக்கிப் பீடியா, வண்ணத்திரை பாட்டுச்சாலை .3.11.14 இன்னும் சில வலைப்பக்கங்கள் + சி.க வின் மசாலா! :) )
vasudevan31355
31st October 2014, 09:07 PM
மாலை மதுரம்
'பாபுஜி தீரே சல்னா'
கியா சாங்! கீதா தத்தின் காந்தமாய் இழுக்கும் குரலில் 'Aar Paar' (1954) படத்தில் ஷகீலா ஆடும் மேற்கத்திய பாணி கிளப் நடனம். ஓ.பி.நய்யாரின் மனம் மயக்கும் இசையில்.
கீதா தத்துக்கே முழு கிரடிட்டும் போய் சேரும்.
சலிப்பு என்பதே ஏற்படச் செய்ய முடியாத சாகாவரம் பெற்ற பாடல்.
Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
Babuji Dheere Chalna....
Kyon Ho Khoye Hue, Sar Jhukaaye, Jaise Jaate Ho Sab Kuchh Lutaaye
Yeh Toh Babuji Pehla Qadam Hai, Nazar Aate Hain Apne Paraaye
Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
Babuji Dheere Chalna....
Yeh Mohabbat Hai O Bhole Bhale, Kar Na Dil Ko Ghamon Ke Hawaale
Kaam Ulfat Ka Naazuk Bahut Hai, Aake Hothon Pe Tootenge Pyaale
Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
Babuji Dheere Chalna....
Ho Gayi Hai Kisi Se Jo An-Ban, Thaam Le Doosra Koi Daaman
Zindgaani Ki Raahein Ajab Hain, Ho Akela Toh Laakhon Hain Dushman
Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
Babuji Dheere Chalna!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rIX_UGulNK8
chinnakkannan
31st October 2014, 09:14 PM
வாசு சார்..அதான் நேத்திக்கே சொன்னேனே.. பூந்தென்றலே பாட் மட்டும் நினைவுக்கு வரலை..வீடியோவிற்கும் ரைட் அப்பிற்கும் ஒரு ஓ… பாடகர் திலகம் பாட்டுக்கும் நன்றி..:)
chinnakkannan
31st October 2014, 09:19 PM
ஹையாங்க்.. பாபுஜி தீரே சல்னா எனக்கும் பிடிக்குமே இப்போ தான் பார்க்கிறேன் பாடலை.... தாங்க்ஸ் அகெய்ன்.. கீதா தத் இப்பத் தான் கேள்விப் படறேன்.. வேறென்ன பாடல்கள்..
vasudevan31355
31st October 2014, 09:38 PM
ஹையாங்க்.. பாபுஜி தீரே சல்னா எனக்கும் பிடிக்குமே இப்போ தான் பார்க்கிறேன் பாடலை.... தாங்க்ஸ் அகெய்ன்.. கீதா தத் இப்பத் தான் கேள்விப் படறேன்.. வேறென்ன பாடல்கள்..
http://sim06.in.com/2/0cbea1b64917004405b150d802ef2800_ls_t.jpg
அற்புதங்கள் கொட்டிக் கிடக்கு சி.க.சார். ஒவ்வொன்னாத் தாரேன். தேங்க்ஸ்ங்கோ. உங்க பதிவை இன்னும் படிக்கல்ல. படிச்சுட்டு சொல்லுதேன்.
vasudevan31355
31st October 2014, 09:41 PM
கீதா தத் கொஞ்சம் ஈ.வி.சரோஜா சாயலில் இருப்பார். சி.க சார்.
http://www.geetadutt.com/images/gauri1.jpg
vasudevan31355
31st October 2014, 09:41 PM
http://www.naachgaana.com/wp-content/uploads/2009/11/gd33.jpg
vasudevan31355
31st October 2014, 09:45 PM
கணவர் குரு தத்துடன் கீதா தத்
http://24.media.tumblr.com/d67bf57e3834debaef44be99f1f6d0ac/tumblr_mf2z4nSkJQ1qmkdd3o1_500.jpg
vasudevan31355
31st October 2014, 09:48 PM
Geeta Dutt, Guru Dutt and Geeta Dutt’s sister on the wedding day
http://www.hindilyrics.net/legends/wp-content/uploads/2013/09/tumblr_m48pesMC2A1rtsvqoo1_500.jpg
vasudevan31355
31st October 2014, 09:49 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00871/23FR_GEETA_2_871373g.jpg
vasudevan31355
31st October 2014, 09:49 PM
http://www.bollywoodhelpline.com/upload/files/Editor_s_Pick/Bollywood/2013editorpickbollywood/Love_story_Gurur_Dutt_Waheeda/23FR_GEETA_3_871374g.jpg
vasudevan31355
31st October 2014, 09:50 PM
http://learningandcreativity.com/wp-content/uploads/2014/07/Geeta-Dutt-Guru-Dutt.jpg
vasudevan31355
31st October 2014, 09:51 PM
http://www.whopopular.com/content/personimages/o8023.jpg
vasudevan31355
31st October 2014, 09:52 PM
http://www.geetadutt.com/blog/wp-content/uploads/2013/07/gd45.jpg
rajraj
31st October 2014, 10:26 PM
chinnakkaNNan : If you need lyrics for A.M.Raja songs visit A.M.Raja thread in Memories of Yesteryears section ! :)
chinnakkannan
31st October 2014, 11:28 PM
கேட்டதும் கொடுப்பவரே வாசு சார்.. தாங்க்ஸ் ஃபார்த ஃபோட்டோஸ்..குருதத் புகையாக நினைவில் .. அந்த ஷைலு யாரு..
தாங்க்ஸ் ராஜ் ராஜ் சார்..பார்க்கிறேன்..எனக்கேமோஸ்ட் ஆஃப் தெம் தெரியுமே.. நீங்க பாடின பாட் சொல்லட்டா..ஓஹோ எந்தன் பேபி பாட்டுப்பாடவா…சரியா
raagadevan
1st November 2014, 05:55 AM
Hi Rajesh: Here is another one of தேனிசை தென்றலின் முத்துக்கள்! :)
From the 1991 movie புது மனிதன்...
http://www.youtube.com/watch?v=kxqfUvHFV-A
வலைக்கு தப்பிய மீனு மாமு
ஓலைக்கு வந்தது பாரு ஹோய்
வலைக்கு தப்பிய மீனு மாமு
ஓலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்னல்லவோ
அந்த ஞானம் சேர்ந்ததின்ரல்லவோ...
rajraj
1st November 2014, 06:24 AM
From Neengaadha Ninaivu (1963)
Chinnan chiru malarai marandhuvidaadhe.........
http://www.youtube.com/watch?v=dBoYo88D3yA
The original tune from Deedar(1951)(Hindi)
O Bachpan ke Din Bhula Na Dena......
http://www.youtube.com/watch?v=EAS2ggTjHjM
bachpan ke din bhula na dena -> Don't forget childhood days
Who will forget childhood days? That is why I posted this song.
My childhood summers in my ancestral village included horseback riding. The ride was from one end of the street to the other end a few times. It was fun. Surprisingly where we live now some families own horses and go for a ride in the weekends. A few miles from us there is a barn where they let you ride horses. I am yet to try ! :lol:
The Hindi version has a line about people like me: " door des Ek mahal banaye" -> build a house (palace) in a distant country. I thought of going to America when I was in 9th grade! :) I suppose that was also childhood! :lol:
In the Tamil version it is " pudhu vidhamaana ulagathil naame pon mayamaana veedamaippome" :)
I have a house. Not sure it can be called a palace ! :lol:
.............
RAGHAVENDRA
1st November 2014, 06:57 AM
இசைக்கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர்.பாப்பா
இன்று நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களி்ல் ஒன்றான ரங்கோன் ராதா திரைப்படம் வெளியாகி 58 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கேஸ் லைட் என்ற ஆங்கிலப்படத்தின் கதைக்கருவை வைத்து பேறிஞர் அண்ணா எழுதிய புதினம் கலைஞர் கதை வசனத்தில் வெளியாகியது. அனைத்துக் கலைஞர்களின் அற்புதப் பங்களிப்பில் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் திகழும் ரங்கோன் ராதா, டி.ஆர்.பாப்பா அவர்களின் இசை வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.
அனைத்துப் பாடல்களும் நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளுபவை. பானுமதி அவர்களின் குரலில் இனிமையான பாடல்கள் இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் அம்சமாகும். பாரதியாரின் ஒளிபடைத்த கண்ணினாய் பாடல் பானுமதியின் குரலில் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/RRADHACOLLAGE01fw_zps88bfe58c.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4853-1.jpg
பம்மலாரின் ஆவணப் பொக்கிஷத்திலிருந்து...
பானுமதியின் குரலில் வான் மலர் சோலையில் உலாவி வருவோமா
http://www.youtube.com/watch?v=kTYi8iuB1kc
vasudevan31355
1st November 2014, 08:02 AM
ராகவேந்திரன் சார்,
'ரங்கோன் ராதா' 59 ஆவது ஆண்டு தொடக்கத்தை நினைவு படுத்தியதோடு நில்லாமல் எனதருமை டி.ஆர். பாப்பா தொடருக்கும் சிறப்பு சேர்த்து விட்டீர்கள். நன்றி!
vasudevan31355
1st November 2014, 10:49 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 12)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
http://www.swaroopyogiclife.org/phpwp/wp-content/uploads/2014/05/special.jpg
ஸ்பெஷல் பதிவு
இன்று மிக மிக ஸ்பெஷலான, இளையராஜா இசையமைத்து 'ஸ்டைல் ராஜா' நடித்த 'தீபம்' திரைப்படத்தின் பாடல். கே.பாலாஜி அவர்களின் 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்' தயாரிப்பில் வந்த மாபெரும் வெற்றிப்படம். நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்தது என்று கொக்கரித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசிய படம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Rajayuvarajanaalthorumoruroja-YouTubemp4_000053343.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Rajayuvarajanaalthorumoruroja-YouTubemp4_000053343.jpg.html)
நடிகர் திலகம் படத்திற்கு முதன் முதலாக இளையராஜாவின் இசை. விடுவாரா ராஜா? நடிப்பின் ஏகபோக சக்கரவர்த்திக்கு இசை ராஜா அருமையான பாடல்களைக் கொடுத்து இன்றளவும் ஆச்சரியப்பட வைக்கிறார். டைட்டிலிலேயே ராஜாவின் கை ஓங்க ஆரம்பித்துவிடும். படத்தின் டைட்டில் முடிந்ததுதான் தாமதம். கடற்கரை ரிசார்ட்ஸ் நீச்சல் குளத்தின் நடப்பு விளிம்புகளில் செடி மறைவிலிருந்து சட்டென்று வாயில் புகையும் பைப்புடன் எழுந்திருக்கும் நடிகர் திலகம். அந்த எழுச்சிக்கும், அடுத்து வரும் ராஜ நடைக்கும் இளையராஜா தன் இசை வாத்தியங்கள் மூலம் அந்த உலக நடிகனுக்கு அளிக்கும் ராஜ உபச்சார கம்பீர இசை மரியாதை. கால்முட்டி வரை பரிமளிக்கும் அந்த பூக்கள் வேலைப்பாடுள்ள பிரவுன் கலர் நைட் கவுன். கால்களில் அணிந்திருக்கும் அந்த பெரிய பிரவுன் கலர் ஷூ. ராஜாவின் அருமையான பின்னணி இசைக்குத் தக்கவாறு அலட்டாமல் ராஜ நடை போட்டு வரும் நடிகர் திலகம். நீச்சல் குளத்தின் அருகில் பிகினியுடன் ஒரு நங்கை சிகரெட் பிடிக்க, இன்னொரு மங்கை குளத்தில் குளித்து எழுந்திருக்க, இவர்களை சைடில் லுக் விட்டபடியே நடக்கும் 'பிளேபாய்' நடிகர் திலகம் பிச்சு உதறும் ஸ்டைலில்.
ஒரு ஃபிகர் எதிரே வந்து வழி மறிக்க, அப்படியே நின்று செம லுக் ஒன்று விட்டு, இடது ஷோல்டரால் லேசாக ஒரு இடித்து செல்வாரே அழகு நடிகர் திலகம். அப்படியே இளமை அள்ளுமே! அந்த ஹேர் ஸ்டைல், அந்த கூலிங் கிளாஸ், கோட்டின் உள்ளே அணிந்திருக்கும் எல்லோ கலர் ஷர்ட், கைவிரல்களில் ஜொலிக்கும் மோதிரம் எல்லாமே பெர்ஃபெக்ட்.
அப்படியே அந்த ஸ்டைலிஷ் பாடல் தொடங்கும். நடிகர் திலகத்திற்கென்றே பிறந்த 'பாடகர் திலகம்' பட்டை கிளப்பிய பாடல்
ராஜா யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா
சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா
ராஜா யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
பல்லவி முடிந்து சரணத்தில் வரும் ஷெனாய் ஒலி இழையும். நடிகர் திலகம் வேறு உடைக்கு மாறியிருப்பார். வயலட் கலரில் வெள்ளை கட்டம் போட்ட கோட்டும் உள்ளே ரவுண்ட் நெக் ஒயிட் பனியனும், செம மேட்சாக அதற்கு ஒயிட் பேண்ட்டும் அணிந்திருப்பார். உலகின் மொத்த அழகும் அந்த ஐந்தரை அடி உருவத்துக்குள் வந்து குடிகொண்டிருக்கும். ஒரு ஃபிகர் சைட் குளோசப்பில் தெரிய, தூர லாங் ஷாட்டில் நடிகர் திலகம் சற்றே கால்களைத் தாங்கியவாறு அழகாக நடந்து வருவார்.
நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும்
பழக்கம் எனதல்லவா
(கால்களை அகட்டி ஒரு சிறு துள்ளல் போடுவார்)
நேரம் ஒரு ராகம் சுக பாவம் அதில் நாளும்
மிதக்கும் மனதல்லவா
தினம் ஒரு திருமணம் நடக்கலாம்
சுகம் அதில் உலகினை மறக்கலாம்
என் தேவை பெண்பாவை கண்ஜாடை
சும்மா ஸ்டைல் அதம் பறக்கும்.
அடுத்த சரணத்தின் முன் இடையிசைக்கு சத்யப்ரியாவிடம் வருவார். (அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும் இயற்கை சூழல் பூங்காவில் காட்சி படமாக்கப் பட்டிருக்கும்) இப்போது எல்லோ கலர் புளூ ஸ்ட்ரைப்ட் கோட்டும், வயலட் கலர் பேண்ட்டும்.
தங்கம் அது தங்கம்
உடல் எங்கும் அதைக் கண்டால்
கடத்தும் நினைவு வரும்
தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால்
எதிரில் சொர்க்கம் வரும்
இப்போது ஒரு அமர்க்களம் நடக்கும் பாருங்கள். பாருங்கள் சொல்கிறேன். எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ ஆடலாம். பார்த்திருப்பீர்கள். இப்போது வரும் வரிகளுக்கு நடிகர் திலகம் பின்னாலேயே சில ஸ்டெப்ஸ் வைத்துச் செல்லும் அழகை வைத்த கண் வாங்காமல் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Rajayuvarajanaalthorumoruroja-YouTubemp4_000174051.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Rajayuvarajanaalthorumoruroja-YouTubemp4_000174051.jpg.html)
அடிக்கடி வலது கண் துடிக்குது
புதுப் புது வரவுகள் இருக்குது
எந்நாளும் என் மோகம் உன் யோகம்
கைகளையும் கால்களையும் மாற்றி மாற்றி பின் புறம் தலையை ஆட்டியபடியே போடும் அந்த ஸ்டெப்ஸ். சான்ஸே இல்லை. அற்புதமோ அற்புதம். (சத்யப்பிரியா நடிகர் திலகத்தைப் பார்த்தபடியே திணறுவார்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Rajayuvarajanaalthorumoruroja-YouTubemp4_000208564.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Rajayuvarajanaalthorumoruroja-YouTubemp4_000208564.jpg.html)
அடுத்து மூன்றாவது சரணத்திற்கு ப்ளூ அண்ட் ப்ளூ சஃபாரி. ஐயோ! இந்த மனிதருக்கு என்னமாய்ப் பொருந்துகிறது! சஃபாரிக்கேன்றே பிறந்த புருஷரய்யா! இப்போது பீச்சில். டிரைபல் டிரெஸ்சில் சந்திரலேகா கடற்கரை மணலில் செக்ஸியாக நடந்து வர, நடிகர் திலகம் படு அமர்க்களமாக பார்த்துக் கொண்டே வருவார். அப்படியே லுக் விட்டபடி சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடுவார் பாருங்கள். செத்தான் அவனவனும். பார்வையைப் பார்க்க வேண்டுமே. காதலும், காமமும் பார்வையில் விளையாடும். குறும்பு கொப்பளிக்கும்.
ஒன்றா அது ரெண்டா
அது சொன்னால் ஒரு கோடி
ரசித்துச் சுவைப்பவன் நான்
உன்போல் ஒரு பெண்பால்
விழி முன்னால் வரக் கண்டால்
மயக்கிப் பிடிப்பவன் நான்.
இப்ப பாருங்கள். இதுதான் உச்சக்கட்ட ஸ்டைல். அந்த கூலிங் கிளாஸ். வழுவழுவென்று ஷேவ் செய்யப்பட்ட முகம். சபாரியின் உள்ளே சாண்டல் கலர் ரவுண்ட் நெக் பனியன்.
அப்படியே கைகளை உயர்த்தி விரல்களால் சிட்டிகை போட்டுக் கொண்டே,
'நடிப்பிலே எவரையும் மயக்குவேன்'
என்று முகத்தில் பெருமிதம் தெரிய, அப்படியே நம்மை மந்திரித்து விட்ட கோழி போல, தன் ஈடு இணையில்லா ஸ்டைலால் மயங்கச் செய்து விடுவார்.
'அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
என் ராசி பெண்ண ராசி நீ வா வா'
(என்ன அழகாக அந்த அம்மணியைப் பிடித்துக் கொண்டு ஓடி வருவார்!)
அப்படியே சந்திரலேகாவுடன் சிறிய ஓட்டமும் நடையுமாக 'ராஜா யுவராஜா' பாடி நடந்து வந்து பாடலை முடிப்பார்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Rajayuvarajanaalthorumoruroja-YouTubemp4_000211535.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Rajayuvarajanaalthorumoruroja-YouTubemp4_000211535.jpg.html)
ஸ்டைல்... ஸ்டைல்... ஸ்டைல்... ஸ்டைல் பாடல் முழுக்க ஸ்டைல்.
அழகு... அழகு... அழகு... அழகு பாடல் முழுக்க அழகு. கொள்ளையோ கொள்ளை அழகு
'பிளேபாய்' பாடல்களில் எக்காலத்திலும் முன்னணியில் நிற்கும் பாடல். இளையராஜாவுக்கு ஒரு பெரிய சபாஷ்.
நடிப்பின் ராஜாவும், இசையின் ராஜாவும் ஒருவரை ஒருவர் புரிந்து தந்த உலகின் ஒன்பாதவ்து அதிசயப் பாடல்.
ஒன்று ஒத்துக் கொள்கிறேன். என் தோல்வியை மனதார ஒத்துக் கொள்கிறேன். ராஜாவின் இசையைப் பற்றிச் சொல்ல போய் நடிகர் திலகத்தின் நடிப்பில், ஸ்டைலில் மயங்கி விழுந்து தொடரில் தோற்றேன். அடுத்தவர்களை கெளரவமாகத் தோற்கச் செய்வது நடிகர் திலகத்துக்குப் புதிதா என்ன?
எதைப் பற்றியும் கவலை இல்லை. சர்வமும் நடிகர் திலகமே.
https://www.youtube.com/watch?v=OyW_SPAbzRo&feature=player_detailpage
chinnakkannan
1st November 2014, 12:29 PM
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தேடல் இருக்கிறது… பிறப்பு முதல் மூச்சு நிற்கும் வரை இந்த த் தேடல் மட்டும் முடிவதே இல்லை..
ராமாயணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.. அரண்மனையில் ஐஸ்வர்யத்தில் திளைத்தவள் , வனவாசம் முடிந்து திளைக்கப் போகிறவள் தான் சீதை.. அவள் பார்க்காத செல்வமா..
தகதகத்து வெயிலில் மின்ன பொன்மேனியுடன் துள்ளித் துள்ளி த் தாவித்தாவி மயக்கி மயக்கி குறுகுறு விழிகளுடன் பார்த்த மான்விழியில் இந்த மான்விழிப் பாவை விழுந்து விட்டாள்.. ஆசையும் கொண்டு ராமனையும், அதன் பின் லஷ்மணப் பெருமாளையும் அனுப்பி விட்டாள்..
அம்மானை ஆடும் அழகுவிழிப் பாவையும்
பொன்மானைத் தேடிப் போவென்க – பெம்மானும்
கோடு கிழித்துவிட்டுக் கொண்டுவரச் செல்லவங்கே
ஊடிச் சிரித்த விதி..
ஆக இந்தப் பொன்மான் என்பது மாயம்..மாயாவியான மாரீசனின் தோற்றம்.. இது போன்ற மாயையைத் தான் நாமெல்லாரும் தேடிக் கொண்டிருக்கிறோம்..சிலபேருக்குச் சிக்குகிறது..சிலபேருக்குக் கிடைக்காமலேயே போய் விடுகிறது..
ஆக என்ன சொல்ல வருகிறேனென்றால்
(வாசு, கிருஷ்ணா, ராஜேஷ்,ராஜ்ராஜ் ராகவேந்தர் கோரஸாய் – பொன் மான் பத்திப் பாட்டுப் போடப் போறியா போட்டுத் தொலை! :) )
ஹை.. கண்டு பிடிச்சுட்டீங்களே!
முதலில் வரும் பொன்மான் நம்ம சொர்ண புஷ்பம் அமலா..டி.ராஜேந்தர் தான் கவிஞர்..இசையும் அவரே..பாடகர் எ?ஸ்.பி.பி..
டி. ராஜேந்தர் நல்ல ரசனை மிக்க ஒரு கவிஞர்..(அடுக்கு மொழிப்பாடல்கள் ஒரு விதி விலக்கு) இந்தப் பாடலின் வர்ணனைகளில் அது தெரியும்..
முதலில் எழுதிய சீதைப் பாட்டில் அம்மானை ஆடும் விழிகள் என எழுதியிருந்தேன்..இங்கு அம்மானை நான் பாட த் தகதிமி தோம்.. என்கிறார் டி.ஆர். அது என்ன அம்மானை..
அம்மானை என்பது மூன்று பெண்கள் கூடி விளையாடும் விளையாட்டு.. விளையாடும் போது பந்துகளோ காய்களோ போட்டு விளையாடுவார்க்ள்..அத்துடன்பாட்டும் உண்டு..முதலில் பொதுவான பொருள் பின் கேள்வி பின் விடை என வரும்..
எளிமையாகச் சொல்வதானால் கல்பனா கவிதா காயத்ரி அம்மானை விளையாடுகிறார்கள்..
கல்பனா இரண்டு வரிகளில் ஒன்றைச் சொல்லிக் காய் வீசுகிறாள்
கண்களிலே ஒளிகொண்டு கருத்தினிலே மின்னி
எண்ணுகையில் இன்பத்தை தருவானாம் அம்மானை?
கவிதா.. இவளும் இருவரிகள் சொல்லிக் காய் வீசுகிறாள்
எண்ணுகையில் இன்பத்தைத் தருவானா கள்ளனவன்
புண்ணாக்கி மறைந்தவனும் போய்விடுவான் அம்மானை?
காயத்ரி: ஒரே வரி சொல்லி விடையும் கூறி காயைப் பிடிக்கிறாள்..
மண்தின்னும் சிறுகண்ணன் மாயமிதே அம்மானை…!
(முதன்முதல் எழுதிப் பார்க்கும் அம்மானைப் பாட்டு சரியாய் வந்திருக்கிறதா தெரியவில்லை!)
*
இனி டி.ராஜேந்தரின் பொன்மான் பாடல் வரிகள்..
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைகண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்த வனத்துகிளி
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர் விட்டு
பூபோல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது
—
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
—
சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட
புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்
கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
***
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x2MtVeDHJgw
**
ஒரு பொன் மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லை
அந்த மான் போன மாயமென்ன
சுதாகர் ராதிகாவைக் கேட்கும் பாடல்.. உன்னை மறக்க முடியுமா உயிரை வெறுக்க முடியுமா என ராதிகாவின் பதில்…
http://www.youtube.com/watch?v=6ZTUeStqKPI&feature=player_detailpage
இன்னும் ஒரு பொன்மான்..
பொன்ன் மானே கோபம் ஏனோ கமல் ரேவதி இன் கைதியின் டைரி..அழகிய பாட்டு தான்..
வேறென்ன பொன் மான் இருக்கு..எனக்குச் சிக்க மாட்டேங்குதே..:)
Russellisf
1st November 2014, 01:13 PM
பேரறிஞர்
அண்ணா கதை வசனம்
எழுதி புரட்சி நடிகர் m.g.r.நடித்து
அந்நாளில் வெளிவந்த
வரலாற்று
சிறப்பு மிக்க படம்தான்
"நல்லவன்
வாழ்வான் " எனும்
அதியற்புதமான
திரைக்காவியம். அந்தப்
படத்தில்தான்
வாலிக்கு முதன்
முதலாக பாடல் எழுதுகின்ற
வாய்ப்பு கிடைத்தது. படத்தின்
இயக்குனர்
காலஞ்சென்ற
ப.நீலகண்டன் வாலியைப்
பார்த்து,
என்னப்பா,
உம்..,நல்லா பாட்டு
எழுதுவியா? உன்னையை
நம்பித்தான் இந்த
வாய்ப்பை
உனக்கு தருகிறோம்.
என்ன..சரியா...
என்று சொல்லிவிட்டு
பாடலுக்கு
உரிய காட்சியைப் பற்றியும்
எந்த
சூழ்நிலையில் அந்த பாடல்
வருகிறது என்பது பற்றியும்
எந்த
கருத்துக்களை அந்த பாடலில்
பதியம் செய்திடல்
வேண்டும்
என்பது பற்றியும் வாலிக்கு
விளக்கம் தரப்பட்டது.
அத்தனையையும் மிகப்
பொறுமை
நிறைந்த அவருக்கே உரிய
இயல்பான குணத்தோடு
கேட்டுக்கொண்ட
வாலி ஒரு பத்து
நிமிடத்தில் பாடல்
தருகிறேன்என்று
சொல்லி தனது
ஜோல்னா பையில்
வைத்திருந்த வெள்ளைப்
பேப்பரை
எடுத்து மளமள என பாட்டினை
எழுதி சமர்பித்தார்.அந்த
வரலாற்று
சிறப்புமிக்க பாடல்
இதோ உங்கள்
அனைவரின் கவனத்திற்கு:-
(mgr.வாயசைக்க
tms.பாடுகிறார்):-
சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்
றாள்!!
சிந்திய கண்ணீர்
மாறியதாலே !!
சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்
றாள்!!
(ராஜசுலோச்சனாவாயசைக்
கஇசை--
-க்குயில்
p.சுசீலா பாடுகிறார்):-
அன்புத் திருமுகம்
காணாமல்
நான்துன்பக்கடலில்
நீந்திவந்தேன்!!
Tms.:-காலப் புயலில்
அணையாமல்
நெஞ்சில் காதல்
விளக்கை
ஏந்தி வந்தேன் !!
சுசீலா:- உதயசூரியன் எதிரில்
இருக்கையில்உள்ளத்தாமரை
மலராதோ ?
Tms.:- எதையும் தாங்கும்
இதயம்
இருக்கையில் இருண்ட
பொழுதும்புலராதோ!
இருண்ட
பொழுதும்
புலராதோ !!
(சிரிக்கின்றாள்)
சுசீலா:-
தென்மலராடும் மீன்
விளை--
- யாடும் அருவியின்
அழகைக் காணீரோ !!
Tms. :- நான் வரவில்லை
என்பதனால் உன்
மீன்விழி
சிந்திய கண்ணீரோ ?
சுசீலா :- மலர்மழைபோலே
மேனியின் மேலே குளிர்நீர்
அலைகள்
கொஞ்சிடுதோ ?
Tms.&சுசீலா இருவரும்
சேர்ந்து:-
சிரிக்கின்றோம் !! இன்று
சிரிக்கின்றோம் !!சிந்திய
கண்ணீர்
மாறியதாலே
சிரிக்கின்றோம் இன்று
சிரிக்கின்றோம் !!
(இத்துடன் பாடல் நிறைவு
பெறுகிறது)
மறைந்த வாலிபக் கவிஞர்
வாலி
பாடலை ஒரு 1௦ நிமிடத்திற்குள்
எழுதி முடித்து இயக்குனர் வசம்
ஒப்படைக்கிறார். அவர் இந்தப்
பாடலை பேரறிஞர்
அண்ணா வசம்
ஒப்புதலுக்கு அனுப்புகிறார்.
வாலி
நெஞ்சில் பயம். முதல்
முதலாக
எழுதிய பாட்டு. அண்ணா
ஒருவேளை ஏற்க மறுப்பாரோ ?
என
அண்ணா பார்வை இட்ட
பிறகு
மீண்டும்
அந்தக்கவிதை காகிதம்
இயக்குனர் கைக்கு வருகிறது,பல
இடங்களில்
சிவப்பு மையினால்
அண்ணா வட்டமிட்டும்
கீழே கோடு
இட்டும்
குறியீடு செய்து இருப்பதை
வாலி கண்டு மன வேதனை
அடைகிறார்.
பாட்டு மறுக்கப்பட்டு
விட்டதோ என அவரே ஒரு
முடிவெடுத்து முகத்தை
சோகமாக
வைத்திருக்க இயக்குனர் வாலி
அருகினில் வந்து அவரை முதுகில்
ஒரு சபாஷ்போட்டு
தட்டிக்கொடுத்து
முதல் பாடலை அண்ணா
மனதாரப்
பாராட்டி இருக்கிறார்.
சிவப்பு
மையினால் வட்டமிட்டதும் கோடு
இட்டதும் பாட்டுக்கு மிக
முக்கியமான வார்த்தைகள்.
எனவே
எக்காரணமும்
கொண்டு இந்த
வார்த்தைகள் விடுபடக்கூடாது
என்பதற்காகவே அண்ணா
குறியீடு
செய்துள்ளார் என
இயக்குனர்
சொல்லியதற்குப்
பிறகுதான் வாலி
நிம்மதிப் பெருமூச்சு
வெளியிட்டார்.
அந்த வார்த்தைகள்
இவைதான் :-
1)உதயசூரியன் எதிரில்
இருக்கையில்
2)எதையும் தாங்கும் இதயம்
இருக்கையில
Russellisf
1st November 2014, 04:11 PM
கையிலே வளவியெல்லாம் கலகலன்னு ஆடையிலே ஒன்
காலுலே கொலுசு ரெண்டும் ஜதி தாளம் போடையிலே
கஞ்சிப் பான தூக்கிகிட்டு கண்டும் காணாமே
சுண்டு நடை போட்டுக்கிட்டு போறவளே ..........
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னெ
புரிஞ்சுக்காமே போறியே என் சின்ன ரங்கம் ரங்கம்.......
காடு வயலப் படைச்சு கலப்பையே ஏன் படைச்சான்?
இந்தக் கன்னிப் பொண்ணையும் படைச்சு ஒன்
கண்ணு ரெண்டை ஏன் படைச்சான்?
நேச மச்சான் சொல்லு மச்சான்
என்ன மச்சான் அப்புடிப் பாக்குறீங்க?
ஏறு ஓட்டி சோறு காட்டும் ஆசே மச்சான் மச்சான்
யாரு ஒன்னே தாறுமாறாப் பேச வச்சான் மச்சான்
தாறுமாறாப் பேசவல்லே பொன்னுரங்கம் ரங்கம்
பொன்னுரங்கம் கஞ்சி
ஆறிப் போனாப் புளிக்குமாயென் சின்ன ரங்கம் ரங்கம்
ஆறிப் போனாப் போகட்டும் என் ஆசே மச்சான் மச்சான்
ஆசே மச்சான் கஞ்சி
அப்பனுக்குக் கொண்டு போறேன் அருமே மச்சான் ...
தன்னந்தனியாப் போறியே என் பொன்னுரங்கம் போனா
தைரியமா திரும்பி வருவா சின்ன ரங்கம் ரங்கம்
மண்ணே நம்பி மரமிருக்கேன் பொன்னுரங்கம் அந்த
மரத்து நெழலில் குடியிருப்பா சின்ன ரங்கம் ......
- கவிஞர் மருதகாசி .
Murali Srinivas
1st November 2014, 05:01 PM
வாசு,
இளையராஜா தொடர் என்றதும் நான் இதை பற்றி யோசித்தேன், எதைப் பற்றி என்றால் நடிகர் திலகம் - ராஜா combination பாடல்கள் பற்றி. அதுவும் அன்னக்கிளி, பாலூட்டி வளர்த்த கிளி, உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி என்று படங்கள் வெளியான அதே வரிசையில் அந்தப் படங்களிலிருந்து பாடல்களை நீங்கள் வழங்கியபோது அதே வரிசையில் தீபம் படமும் இடம் பெறும் என நினைத்தேன். ஆனால் அதை bypass செய்து அதற்கு அடுத்த படமான அவர் எனக்கே சொந்தம் [1977 பிப்ரவரி], பின் 1977 டிசம்பரில் வெளியான ஆளுக்கொரு ஆசை பின் 1977 செப்டம்பரில் வந்த புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களிலிருந்து பாடல்கள் வரவே நீங்கள் எதற்கோ காத்திருக்கிறீர்கள் என தோன்றியது. தீபம் படத்திலிருந்து ஒன்று இந்தப் பாடல் அல்லது பூவிழி வாசலில் யாரடி வந்தது இடம் பெறும் என நினைத்தேன். நீங்கள் நடிகர் திலகத்தின் பாடலையே கொடுத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். உங்களுக்கே உரித்தான நடையில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் பற்றி எழுதியதைப் படிக்க படிக்க ஒன்று உறுதியானது. அவரவர்கள் தங்கள் மனதிருப்திக்கு எதாவது சொல்லிக் கொள்ளலாமே தவிர ஸ்டைல் சக்ரவர்த்தி என்றென்றும் நமது நடிகர் திலகம்தானே! அதனால்தானே ஒரு நடிகனுக்கு நடிப்புக்கு கைதட்டல் விழுந்து பார்த்திருப்பீர்கள் ஆனால் நடைக்கு கைதட்டல் வாங்கிய ஒரே நடிகன் உலகத்திலேயே நமது நடிகர் திலகம் மட்டும்தானே என்ற வாக்கியமே புழக்கத்தில் வந்தது!
பாடலுக்கும் வர்ணனைக்கும் ஓராயிரம் நன்றிகள்!
அன்புடன் .
gkrishna
1st November 2014, 05:41 PM
வாசு
தீபம் படத்தின் சூப்பர் ஹிட் பாடலை இளையராஜாவின் முதல் சிவாஜி பாடல் இன்றைய ஸ்பெஷல் ஆக மலர்ந்து இருக்கிறது. நம்மவருக்கு 1977 மறக்க முடியாத ஆண்டு. 75 மற்றும் 76 அவ்வளவாக வெற்றி ஆண்டுகளாக இல்லாத போது 77 ஆம் ஆண்டில் வெடித்த மிக பெரிய 10000 வாலா சர வெடி தீபம்.
டைட்டில் முடிந்த உடன் இசைஞானி கொஞ்சம் triumphat ,பங்கோ,violin,drum எல்லாம் கலந்து ஒரு ஆரம்ப prelude இசை உடனே நம்மவர் மினி நீச்சல் உடை கோட் உடன் கீழ் இருந்து எழுந்து இருக்கும் போஸ் . நெல்லை பார்வதி திரை அரங்கமே அதிர்ந்தது. குடி அரசு தினம் விடுமுறை முதல் காட்சியில் பார்த்து வெளியில் வரும் போதே படத்தின் வெற்றியை பறை சாற்றிய படம். இந்த படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை அமர்களமாக இருக்கும் . படம் முழுவதும் அந்த சாக்ஸ் ,triumphat கலந்து ஒரு பின்னணி இசை அடிகடி வரும். கேட்டு கொண்டே இருக்கலாம். நம்மவரின் பைப் ஸ்டைல் கேட்கவே வேண்டாம் .
ஒரு சிறு நினைவலையை பகிர்ந்து கொள்கிறேன்
என் கூட இந்த படம் பார்க்க என் கல்லூரி நண்பர்கள் இருவர் உடன் வந்தார்கள்.ஒருவர் பெயர் ஸ்ரீதர் இன்னொருவர் ராமச்சந்திரன் இருவரும் சகோதரர்கள் . 1976-1977 PUC அப்பத்தான் அவங்க தனி ஆக முதல் முதலாக திரைப்படம் பார்க்க வருகிறார்கள். அதுவும் முதல் நாள் முதல் காட்சி. அது வரை அவர்கள் அவர்களுடைய பெற்றோர் உடனேயே சினிமா பார்த்து உள்ளார்கள். அதுவம் அவர்களின் தந்தை அப்போதைய ttes (திருநெல்வேலி தூத்துக்குடி எலெக்ட்ரிசிட்டி சிஸ்டம் பின்னாளில் தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு) அலுவலகத்தில் பொறியாளர்.அதனால் நிறைய படங்களுக்கு பாஸ் டிக்கெட் இல் தான் படம் பார்த்து இருக்கிறார்கள். அதுவும் ஒரு திரை படம் நிறைய நாள் ஓடி கல்கி அல்லது விகடன் 'நல்ல படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்' என்ற விமர்சனம் இருந்தால் மட்டுமே பார்த்த அனுபவம். அதனால் அவர்கள் இருவருக்கும் முதல் நாள் முதல் காட்சி ரசிக்கிற அனுபவம் அன்று தான் கிடைத்தது. அவர்கள் தயவால் அது வரை தரை டிக்கெட் (45 பைசே ) படம் பார்த்து கொண்டு இருந்த நான் முதன் முதலில் 1.15 குஷன் சேர் டிக்கெட் பார்த்த படம் . காட்சிக்கு காட்சி விசில் கைத்தட்டு என்ற அனுபவத்தை பார்த்து இருவருமே அதிசயத்து போனார்கள்.மஞ்சள் முகமே வருக சத்யப்ரியா (ஆஷா) வில்லியாக வருவார் . ஒரு காட்சியில் கண்ணன் (விஜயகுமார்) ஆஷாவிடம் தனது மனைவி ராதா (சுஜாதா),ராஜா (நடிகர் திலகம்) உறவை தவறாக புரிந்து கொண்டு மனவருத்த படும் போது சத்யப்ரியா 'ராதா நல்ல நடிகை ' என்று சொல்வார் . உடனே கண்ணன் 'எங்க முதலாளி ராஜா சார் ' என்ற உடன் ஆஷா 'அவரும் சிறந்த நடிகர் ' என்று சொல்லும் போது திரை அரங்கம் அதிர்ந்த காட்சி என் நண்பர்களுக்கு அப்போது 8வது உலக அதிசயம் .
நமக்கு இந்த முதல் நாள் தனியாக பார்த்த அனுபவம் சிவந்தமண்,நம்நாடு 1969 இரண்டிலும் ஆரம்பம் .அவங்களை விட 7 ஆண்டு சீனியர் .அதனால் தனி மரியாதை கொடுத்தார்கள் :) .ஆனால் தீபத்திற்கு பிறகு நிறைய படங்கள் அவங்களாகவே வந்து முதல் காட்சிக்கு ரசிகர் மன்ற டிக்கெட் வாங்க நம்மை தேட ஆரம்பித்து விட்டார்கள் என்றால் எந்த அளவிற்கு அவர்களை முதல் நாள் காட்சி பாதித்து இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். மேலும் தியாகம் (அதுவும் நெல்லை பார்வதி) நடிகர் திலகம் கோயில் திரு விழா டான்ஸ்க்கு அவங்க இருவரும் ஆடிய நடனம் இன்னும் கண்ணில் இருக்கிறது
பின்னாட்களில் திரு ராமச்சந்திரன் B .Sc physics , MIT production முடித்து டெல்லியில் செட்டில் ஆனார் .திரு ஸ்ரீதர் திருச்சி REC B E முடித்து US சென்றார் .
நம்ம வழக்கம் போல் நெல்லையில் :happydance:
நம்மவரின் அந்த மினி கோட் போஸ் இருந்தால் எடுத்து போடவும் .
http://www.filmibeat.com/img/popcorn/movie_posters/deepam-6764.jpghttp://upload.wikimedia.org/wikipedia/en/5/5e/Amaradeepam_1977_film.jpg
இதே தீபம் க்ரிஷ்னமராஜு நடித்து தெலுங்கில் அமரதீபம் என்று வந்தது
இரண்டு பைப் ஸ்டைல் வித்தியாசம்
thanks vaasu
chinnakkannan
1st November 2014, 05:57 PM
தீபம் பார்த்தது சிந்தாமணியில்.. ஒரு மாலைக் காட்சி என நினைக்கிறேன்.. வழக்கம்போல க்யூ அண்ட் ஃபுல் தான்.. நீங்கள் சொன்ன ராஜா யுவ ராஜா பாடலை விட எனக்கு ந.தியின் இருவர் உள்ளம் (பறவைகள் பலவிதம்) தெய்வமகன் (வக்கீலாத்து வசந்தா உன் மனதை எந்தன் வசம்தா) மிகப் பிடிக்கும்.. தீபம் படத்தில் பிடித்தபாடல்களின் வரிசை என்றால் அந்தப்புரத்தில் ஒரு மகராசன், பேசாதே வாயுள்ள ஊமை நீ, ராஜா யுவராஜா, பூவிழி வாசலில் யாரடி வந்தது தான்..
சுருளி மனோரமா – பாம்பு தவளைக் காமெடி என நினைவு.. ஆனால் சிவாஜி கேரக்டர் அனாவசியமாக ச் சாகவைத்திருப்பார்கள்..(அந்தக் காலத்தில் அப்படி ஒரு தேவையில்லாத விஷயம் வேறு..) அதில் எனக்குக் கொஞ்சம் கோபம் தான்..
தாங்க்ஸ் ஃபார் த ஸாங்க்.. ம்ம் நடத்துங்க நடத்துங்க..:)
RAGHAVENDRA
1st November 2014, 10:00 PM
வாசு சார்
இளையராஜா ஸ்பெஷலிலும் ஸ்பெஷலாக தீபம் பாட்டைப் போட்டு அசத்தி விட்டீர்கள்.. ஆஹா... என்ன அருமையான வர்ணனை.. சி.க. சார்... உங்களுக்குப் போட்டியை எங்கும் தேடாதீர்கள்...
சூப்பரோ சூப்பர்..
இதே போல பேசாதே பாட்டுக்கும் சென்னை சாந்தி தியேட்டர் அதகளப்படும். அதுவும் குறிப்பாக வீட்டுக்குள் நடக்கும் போது ராஜாவின் பின்னணி இசை... ஆஹா.. ரிதம் என்றால் அதுவல்லவோ ரிதம்... சிவாஜியின் நடைக்காக ரிதமா.. ரிதத்திற்காக சிவாஜியின் நடையா என்று பட்டிமன்றமே நடத்துவார்கள்... அந்த அளவிற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கும்.. இருவருமே முதல் படத்திலேயே உச்சத்தைத் தொட்டவர்களாயிற்றே...
பாடலின் துவக்கத்தில் வரும் பாறைகள்... எங்கோ பார்த்த ஞாபகம் வரவில்லை... நினைவூட்டிப் பாருங்கள் ... உங்களுக்குத் தெரியும்...
http://www.youtube.com/watch?v=AEMyErQBQT0
நண்பர்களே.. தீபம் படத்தில் இன்னொரு பாட்டையும் பகிர்ந்து கொள்ளக் காரணம் இளையராஜாவின் பின்னணி இசையே...
Gopal.s
2nd November 2014, 05:58 AM
வாசு,
தீபம் பல விஷயங்களில் விசேஷமானது.
1)ஸ்ரீதர்,வேலுமணி,பந்துலு,வீரப்பன்,இவர்கள் படங்களின் தரத்தில் பாலாஜி படத்திற்கு விஸ்வநாதன் இசையமைப்பதில்லை என்ற மனக்குறை (தங்கை நீங்கலாக)இருந்ததுண்டு.அந்த குறை நீக்க புதியவர் இளையராஜா தேர்ந்தெடுப்பு நமக்கு அத்யாவசிய தேவையானது.இளையராஜா தன்னை நிரூபித்தார்.தொடர்ந்து தியாகம்.
2)அவள் ஒரு தொடர்கதை பார்த்து, ஏற்கெனெவே சாரதா,ஜெயந்தி ,ஸ்ரீவித்யா போன்றோர் சிவாஜி படங்களில் போதிய வாய்ப்பு பெறாததால்,இவராவது (சுஜாதா)ஜோடியானால் நல்லது என்று நான் நினைத்தது ,நல்ல விதத்தில் பலித்தது.(பின்னாட்களில் இன்னொரு கே.ஆர்.விஜயாவாக ஆகி உறுத்தியது வேறு விஷயம்)
3)தீக் கனல் என்ற நல்ல மலையாள படம் ,பாலாஜி உனக்காக நான் சறுக்கலுக்கு பின் ,combination மாற்ற ,அப்போது புதுமை படங்கள் தந்து வெற்றி மேல் வெற்றி குவித்து வந்த மாதவன் உதவியாளர்கள் தேவராஜ்-மோகனை அணுக ,அவர்கள் ஏனோ நிராகரிக்க ,ஆஸ்தான இயக்குனர் சி.வீ.ஆரிடம் போக ,அவரும் ரீ மேக் முத்திரை துறக்க எண்ணி நிராகரிக்க, காவல் தெய்வம்,ரோஜாவின் ராஜா என்று நமக்கு ஓரளவு பரிச்சயம் ஆகி இருந்த (சிவந்த மண்-நடிகராக)கே.விஜயனுக்கு யோகம்.நமக்கும் திருப்பு முனையானது.மாறும் ரசனைக்கு பொருந்தும் ஒரு மாற்று இயக்குனர்.(ஆனாலும் நமக்கு யோகானந்த்,திரிலோக் சந்தர்,சி.வீ.ஆர் போன்ற பழைய சிந்தனை இயக்குனர்களிடமிருந்து முழு விடுதலை கிடைத்து ,மகேந்திரன்,பாலு மகேந்திரா,பாரதி ராஜா,பாலசந்தர் என்று அமையும் முழு யோகம் வாய்க்கவில்லை)
4)நெஞ்சிருக்கும் வரை ,ஒரு அருமையான outline .என்ன பாடல்கள்?(Hats off the great M .S .V ),என்ன ஒரு நடிப்பு?ஆனாலும் திரைக் கதையில் சொதப்பி ,சுமாரான படமாக்கினார் ஸ்ரீதர்.அந்த கோட்டிலேயே பயணித்த தீபம் ,அந்த குறை நீக்கி ,சிவாஜியின் பிரம்மாண்ட வெற்றி பட அணிவகுப்புகளின் முன்னோடியானது. 76 இன் வறட்சியை நேர் செய்தது.
5)சிவாஜி, தன் நடிப்பிலே ரியலிச பாணியை திருப்பி (தன் முத்திரைகளையும் இழக்காமல்),அதை தியாகம் படத்திலும் தொடர்ந்து ,இளைய தலைமுறைக்கேற்ப ,தன்னை புதுப்பித்த ஆரம்ப புள்ளி இந்த படம்.பிறகு இந்த பாணியே அவருக்கு துணையாகி,முதல் மரியாதை தந்து,தேவர் மகன் யார் என்று இனம் காட்டியது.
6)சுஜாதாவை வசீகரிக்க இவர் கடலை போடும் காட்சி, யாருடனோ காதல் செய்வதை பார்த்து வெடிப்பது,வில்ல-வில்லிகளை
எச்சரிப்பது ,பின் காட்சிகளில் சுஜாதா-விஜயகுமார்-சங்கீதா ஊசலாட்டம் என்று என்ன ஒரு ஆழம் ?
7)இந்த படம் பலதர பட்ட ரசிகர்களையும் கவர்ந்திழுத்து,பாலாஜியை மீண்டும் நிமிர்த்தியது.
வாசு என்ன ஒரு nerration ? என்னை மீண்டும் குதித்து வர செய்து விட்டாய். இதை நல்ல முறையில் சாதிக்க உனக்கு மட்டுமே வலிமை உண்டு.
Gopal.s
2nd November 2014, 06:08 AM
ஓரளவு எனக்கு சமநிலை மீண்டு,எழுதும் ஆவல் வரும் போது ,எம்.எஸ்.வீ தொடர் முடித்து,இளையராஜா தொடர்ந்து, கீற்று கொட்டகையில் ஓரிரு பங்களிப்பு. நடிகர்திலகம் திரியில் ஓரிரு விட்ட படங்களின் தொடர்ச்சி என்று december வரை திட்டம். பார்ப்போம்.
யாரையும் குத்துவதில்லை என்று சங்கல்பம்.பார்க்கலாம்.
rajeshkrv
2nd November 2014, 09:51 AM
for me deepam songs could have been better
vasudevan31355
2nd November 2014, 12:30 PM
சி.க.சார்,
தீபம் பற்றிய தங்களது கருத்துக்களுக்கு நன்றி! என்னது உங்களுக்குக் கோபம் கூட வருமா? இறுதியில் அணை ந்தால்தான் அது தீபம்.
உங்கள் அம்மானை சுவைதான்.
மண்தின்னும் சிறுகண்ணன் மாயமிதே அம்மானை! எல்லாம் கண்ணன் செயல். நம் கையில் ஒன்றுமில்லை. பொன் மான் பட்டுக்க்க்ளைத் தேடி தேடித் பிடித்துத் தந்தற்கு நன்றி?
மோகனுக்கு கமல் பாடும்
பொன்மானைத் தேடுதே
என் வீணை பாடுதே
பாடல் கேட்டதுண்டா?
vasudevan31355
2nd November 2014, 12:36 PM
'தீபம்' பாடலை ரசித்து தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட முரளி சார், (நடை ரசிப்பு அழகு) கிருஷ்ணா சார், (சுவையான திரையரங்கு அனுபவங்கள்) கோபால் சார், (குறு ஆய்வு, மீண்டும் வருவேன் அருமை கோ) சின்னக் கண்ணன் சார், (நடிகர் திலகம் ஸ்டைலைத் தொட்டிருக்கலாம்) லைக்குகளை கிளிக் செய்த அன்பு நண்பர்கள் கல்நாயக் சார், கோபு சார் மற்ற அனைவருக்கும் நன்றி! பாடல்களை இன்னும் எதிர்பார்த்த ராஜேஷ்ஜிக்கும் நன்றி!
RAGHAVENDRA
2nd November 2014, 04:35 PM
பொங்கும் பூம்புனல்
நீலக்கடலின் ஓரத்திலே ...
http://www.inbaminge.com/t/n/Neelakkadalin%20Orathile/folder.jpg
வாணி ஜெயராம் குரலில் புலமைப்பித்தன் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல்..
அழகுக்கு முகவரி கேட்டேன்..
http://www.inbaminge.com/t/n/Neelakkadalin%20Orathile/
RAGHAVENDRA
2nd November 2014, 04:55 PM
பொங்கும் பூம்புனல்
சந்திரபோஸ் இசையில் இனிமையான பாடல்...
வைரமுத்துவின் வரிகளை, வாணி ஜெயராமுடன் பாடியுள்ளவர், தியாகராஜன் ... இவர் திருச்சி லோகநாதன் அவர்களின் புதல்வர் என எண்ணுகிறேன்.
பாடலில் சந்திரபோஸின் பின்னணி இசை நம்மை சொக்க வைக்கின்றது.
படம் அவள் போட்ட கோலம்
http://www.inbaminge.com/t/a/Aval%20Potta%20Kolam/
RAGHAVENDRA
2nd November 2014, 05:01 PM
பொங்கும் பூம்புனல்
ஷ்யாம் இசையில் சந்தோஷக் கனவுகள் படத்திலிருந்து அருமையான டூயட்
முத்து முத்து புன்னகையோ..
பின்னணி இசை நாடி நரம்பை வருடிச் செல்லும் ...
http://www.inbaminge.com/t/s/Santhosha%20Kanavugal/
RAGHAVENDRA
2nd November 2014, 05:08 PM
பொங்கும் பூம்புனல்
ராமராஜன் இயக்கத்தில் கங்கை அமரன் இசையில் எஸ்.பி.ஷைலஜா குரலில் கே.எஸ்.செல்வராஜின் ஆர்வோ கலர் பரவசமூட்டும் ஒளிப்பதிவில் முதன்முறை பார்க்கும் போதே ஈர்த்த பாடல் அல்லிப்பூக்களே..
மண்ணுக்கேத்த பொண்ணு ஒளிப்பதிவிற்காக மிகவும் பிரபலமானது..
பாடல் கேட்க மட்டும் அல்ல பார்ப்பதற்கும் பரவசமாக இருக்கும்..
http://www.youtube.com/watch?v=swA-dcVJBYI
parthasarathy
2nd November 2014, 05:18 PM
Vasu Sir,
Your "Raja Yuva Raja" song analysis was terrific. For every die-hard fan of NT, Deepam is a very very special film (everyone knows about it!). Saw it in Chingleput - Tirumalai or Angamuthu (not sure which one).
Great going indeed!
Regards,
R. Parthasarathy
rajeshkrv
3rd November 2014, 09:35 AM
'தீபம்' பாடலை ரசித்து தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட முரளி சார், (நடை ரசிப்பு அழகு) கிருஷ்ணா சார், (சுவையான திரையரங்கு அனுபவங்கள்) கோபால் சார், (குறு ஆய்வு, மீண்டும் வருவேன் அருமை கோ) சின்னக் கண்ணன் சார், (நடிகர் திலகம் ஸ்டைலைத் தொட்டிருக்கலாம்) லைக்குகளை கிளிக் செய்த அன்பு நண்பர்கள் கல்நாயக் சார், கோபு சார் மற்ற அனைவருக்கும் நன்றி! பாடல்களை இன்னும் எதிர்பார்த்த ராஜேஷ்ஜிக்கும் நன்றி!
ஆம் எனக்கு இந்த பாடல்கள் சுமார் ரகம் தான். சிவாஜி படங்களில் இளையராஜாவின் இசை சுமார் தான். முதல் மரியாதை மட்டும் விதி விலக்கு
Richardsof
3rd November 2014, 10:35 AM
DANCER E.V. SAROJA NINAIVU NAL INDRU
http://youtu.be/LpHUKnMESv0
adiram
3rd November 2014, 10:44 AM
Vasu Sir,
Your "Raja Yuva Raja" song analysis was terrific. For every die-hard fan of NT, Deepam is a very very special film (everyone knows about it!).
What special film?.
It came just 12 days after Avan oru Sarithiram and spoiled the run of AOS. Otherwise definitely AOS would run more than 100 days and would be 1st 100 day movie of that year.
Fortunately Deepam got 135 days gap, till Ilaiya Thalaimurai come. Otherwise this would also been affected.
Songs of AOS ae not less in level comparing to deepam.
Surprise to see Ragavendar also changing his color.
vasudevan31355
3rd November 2014, 10:46 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 13)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
'காயத்ரி'
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-2011-03-31-19h36m33s76.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vlcsnap-2011-03-31-19h36m33s76.png.html)
இளையராஜாவின் தொடரில் அடுத்து நாம் பார்க்கப் போவது 'காயத்ரி'. 1977-ல் வெளிவந்த கருப்பு வெள்ளைப் படம். S.பாஸ்கர் அளிக்கும் விஜயா மீனா கம்பைன்ஸ் தயாரிப்பு. 'மூன்று முடிச்சு' வில்லன் இமேஜ் ரஜனிக்குத் தொடர்ந்தது. ஜெய்சங்கர் பெயருக்குத்தான் ஹீரோ. ரஜினி,ஸ்ரீதேவியே படத்தை முழுக்க ஆக்கிரமிப்பு செய்தனர். எரிச்சலைக் கிளப்பும் கோணங்கி சேட்டைகளுடன் அசோகன் மற்றும் ராஜசுலோச்சனா. குமாரி ராஜியின் ('நான் வாழ வைப்பேன்' நடிகர் திலகத்தின் தங்கை) அளவு மீறிய கவர்ச்சி. இடைவேளைக்குப் பிறகு பொருந்தாத கணேஷ் பாத்திரத்தில் ஜெய் கதாநாயகன் என்ற பெயரில் சும்மா ஒப்புக்கு.
கதை சுஜாதா. தினமணி கதிரில் வெளியானது. கல்யாணம் செய்து கொண்டு சொந்த மனைவியையே படுக்கை அறையில் அவளுக்குத் தெரியாமல் படம் பிடித்து அதை வியாபாரமாக்கும் அயோக்கியக் கணவனும் அது தெரியாமல் அப்பாவியாய் அவனிடம் மாட்டித் தவிக்கும் இளம் மனைவியும் என்று படு திகிலாக இந்தக் கதையை சுவாரஸ்யத்துடன் எழுதியிருந்தார் சுஜாதா. சுஜாதாவின் அருமையான தொடர் படமாக வந்து நம்மை கொஞ்சம் இல்லை நிறையவே ஏமாற்றியது. ஆனால் இளையராஜா என்ற அசுரன் அத்தனையையும் மறக்கச் செய்து மறக்க முடியாத இரு பாடல்களைத் தந்தார்.
சுசீலாம்மா, ஜானகி, சசிரேகா, சுஜாதா, ராகவன் பின்னணிப் பாடல்கள் பாடியிருப்பார்கள். சண்டைப் பயிற்சி 'ருத்ரநாகம்' ஜூடோ கே.கே.ரத்தினம் என்று போடுவார்கள். திரைக்கதை வசனம் பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுத, ஒளிப்பதிவை விநாயகம் கவனிக்க ஆர். பட்டாபிராமன் இயக்கியிருந்தார்.
தமிழகமெங்கும் அதிகாலையில் வானொலிகளில் ஒலித்த,
காலைப் பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
சுஜாதாவின் குரலில் சூப்பர் ஹிட் பாடல். மூக்கு பெரிதான பழைய சிறிய ஸ்ரீதேவி. ராஜா தன் தனித்தன்மையுடன் இப்பாடலை அசத்தியிருந்தார்.
தன்னைச் சுற்றி இருக்கும் நயவஞ்சகர்களைப் புரிந்துகொண்டு, தெரிந்து கொண்டு, நடுநடுங்கி, அவர்கள் பின்னிய சதிவலையில் இருந்து மீள முடியாமல் தவியாய்த் தவித்து, அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீதேவி பி.எஸ். சசிரேகா குரலில் பாடிய பட்டி,தொட்டியெங்கும் கிலி ஏற்படுத்திய பாடல்.
http://i.ytimg.com/vi/K4YdM0KsgQ8/0.jpg
வாழ்வே மாயமா?
பெருங்கதையா ?
கடும் புயலா?
வெறுங் கனவா நிஜமா?
இந்தப் பாடலும் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். யாராவது சோகத்தில் ஆழ்ந்திருந்தால் அவர்களைக் கிண்டல் செய்ய இப்பாடல் மிகவும் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு ஹிட் பாடல்களும் இரண்டு பின்னணிப் பாடகிகளின் தனித்தனி சோலோ பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவையிரண்டும் சூப்பர் ஹிட் ராகம் என்பதால் இவற்றை விட்டு விடுவோம்.
இதுவல்லாமல் இன்னும் இரண்டு பாடல்கள்.
ஒன்று.
கணவன் ரஜினி, ராஜசுலோச்சனா, அசோகன், ராஜி ஆளாளுக்குப் போட்டி போட்டுக் குடிக்க, அதைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஸ்ரீதேவியைக் கிண்டல் பண்ணி ராஜி போடும் குத்துப் பாடல். சுசீலா அம்மா பாடியது.
'பத்ரகாளி' யில் 'வாங்கோன்னா' பாடலுக்குப் பிறகு பாஸ்ட் பீட்டில் சுசீலாவை ராஜா பாட வைத்திருப்பார். ராஜியின் லோ-கிளாஸ் ஆட்டம். ஸ்ரீதேவியின் எரிச்சல்,மிரளல், ரஜினியின் கிண்டல், அசோகனின் அநியாயம் என்று பாடல் போகும். சுசீலா அம்மா நன்றாகப் பாடியிருந்தாலும், இப்பாடலைப் பாடியிருக்க வேண்டாமோ என்று தோன்றும்.
'ஹேய் ஹேய்! ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே'
சுமாரான ஒரு பாடலே.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Al0KU8at0GE
அடுத்து காபரே பாடல் ஒன்று. ஜானகி, A.L ராகவன் இருவர் குரல்களில். இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் அம்மாவாக அழுது வடியும் ராஜேஸ்வரி என்ற நீள்முகம் கொண்ட நடன நடிகை ரஜினியிடம் ஆடிப் பாடும் பாடல். ஜெய்சங்கர் நீக்ரோ வேடத்தில் கிடாருடன். செல்லப்பாவாக ஆக பெண்வேடத்தில் மூர்த்தி.
உன்னைத்தான் அழைக்கிறேன்
அருகில் வா
ஆனந்த ரகசியம் சொல்லவோ
காதல் கொண்டேன் i love you
ok என்றால் you love me
இடையிசை மிரட்டுமே தவிர பாடலில் ரசிக்க ஒன்றுமில்லை. ஆனால் டைட்டில் இசையில் ராஜா விளாசி விடுவார்.
https://www.youtube.com/watch?v=MhHxgjjVmXI&feature=player_detailpage
மொத்தத்தில் 'காயத்ரி' மந்திரத்தைவிட இளையராஜா பெயரை அதிகம் உச்சரிக்க வைத்த படம்.
gkrishna
3rd November 2014, 11:19 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 13)
'காயத்ரி'
இடையிசை மிரட்டுமே தவிர பாடலில் ரசிக்க ஒன்றுமில்லை. ஆனால் டைட்டில் இசையில் ராஜா விளாசி விடுவார்.[/COLOR][/SIZE][/B]
மொத்தத்தில் எல்லோரையும் விட இளையராஜா பெயரை அதிகம் உச்சரிக்க வைத்த படம்.
வாசு
காயத்ரி இதே மாதிரி 1977 கால கட்டத்தில் மழை நாட்களில் பார்த்த படம் .சுஜாதாவின் கணேஷ் ஜெய்சங்கர் வசந்த் மூர்த்தி . ஒரிஜினல் கதையில் காயத்ரி செத்து போற செண்டிமெண்ட் கிடையாது. திரை படத்தில் செத்து போற செண்டிமெண்ட். ராஜசுலோச்சனா முண்டு ஒன்று கட்டி கொண்டு குளிக்கற ஸ்டில் ஒன்று அந்நாளைய குமுதம் வார இதழில் famous .'மீண்டும் ராஜ சுலோச்சனா மார்கெட் பிடிக்க முயர்த்சிக்கிறாரா ?' என்ற கமெண்ட் உடன். நடிகர் திலகம் பாராட்டிய ஒரு பண் பட்ட நடிகை 70,80 களில் கவர்ச்சி கலந்த வில்லி கதாபாத்திரத்தில் ஏகப்பட்ட படங்கள் . 'வாழ்வே மாயமா' பாடல் கூட பழைய பாடல் ஒன்றை கூறி (யார் நீ என்று நினைவு) அந்த பாடலின் தழுவலா என்று நிருபர் ஒருவர் இளையராஜாவிடம் கேட்டதற்கு நீங்கள் சொன்ன அந்த பாடலை நான் கேட்டதே கிடையாது என்று இளையராஜா அவர்கள் பதில் அளித்த ஞாபகம் .இந்த படத்திற்கு பிறகு ரஜினி ஹீரோ ஆக ஹீரோ ஜெய் வில்லன் ஆக கோடம்பாக்க கால தேவனின் விளையாட்டு
சுஜாதாவின் கதைகள் எத்தனை படங்களில் வீணடிக்க பட்டன
அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு),ப்ரியா (வணிக ரீதியில் வெற்றி மேலும் இளையராஜா ஆரம்பித்து வைத்த முதல் ஸ்டீரியோ போனிக் இசை கோர்வை ),கரை எல்லாம் செண்பக பூ(அருமையான நாட்டுபுற பாடல்கள் ),நினைத்தாலே இனிக்கும் (மெல்லிசை மன்னரால் தப்பித்த படம்), விக்ரம்,பிரிவோம் சிந்திப்போம் (ஆனந்த தாண்டவம்),நாடோடி தென்றல் (ரத்தம் ஒரே நிறம் தழுவல்) கனவு தொழிற் சாலை படமாக எடுத்த நினைவு இல்லை .
பின்னாட்களில் மணிரத்னம் உடன் இணைந்து ரோஜா,திருடா திருடா,கன்னத்தில் முத்தமிட்டால் சங்கர் இந்தியன் முதல் இந்திரன் வரை பல படங்கள்.
thanks vaasu
vasudevan31355
3rd November 2014, 11:21 AM
அவன் ஒரு சரித்திரம் 14.1.1977
தீபம் 26.1.1977
இளைய தலைமுறை 28.5.1977
chinnakkannan
3rd November 2014, 11:44 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்ல்
தீபம் பற்றி நிறையச் சொல்லலாம் வாசு சார்..அப்புறமா ச் சொல்றேன்..இப்போ காயு..
காயு எனப் பிற்காலங்களில் அழைக்கப் பட்ட காயத்ரி படம்.. கொஞ்சம் வித்தியாசமான கதை.க்ருஷ்ணாஜி சொல்லியிருப்பது போல் க்ளைமாக்ஸில் காய்த்ரியைச் சாகடித்திருப்பார்கள் அனாவசியமாக..
ரஜினி அந்த வில்லக் கணவன் பார்வை, அராஜகம் அனைத்தையும் கண்களிலேயே கொண்டு வந்திருப்பார்..அசோகன் ரா.சு, அம்முக்குட்டி எல்லாம் பொருத்தமாய்த் தானிருந்தது..பட் அந்தக் காலத்தில் கொஞ்சம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய படம்..
அப்புறம் நீங்கள் இட்ட இருபாடல்கள் சுத்தமாய் நினைவிலில்லை.. கேட்டுப் பார்க்கிறேன்.. தாங்க்ஸ் டு தட்..
பொன் மானே பாட்டும் தேடணும்.. நேற்று முடியவில்லை..இப்ப என்ன..யாரோ அடுத்த போஸ்ட்ல பாட வந்து பாடமுடியாம இருக்காங்க போலிருக்கே..!
chinnakkannan
3rd November 2014, 11:57 AM
பாரதி ராஜாவின் உதவியாளராய் இருந்து டைரக்டராய் மாறிய மணிவண்ணன் முதல் படம்..வித்யாசமாய் எடுக்கத் தெரிந்தவர் தான்..(அப்படி அவர் எடுத்த ஒரு படத்தைப் பற்றி க்ருஷ்ணாஜி எழுதுவார்..கடைசியில் கேட்பேன்!) கமர்ஷியல் சினிமாவில் காம்ப்ரமைஸ் செய்து பின் நடிக்க வந்து சம்பாதித்து 59ல் இறந்தவர்..
இளமைக்காலங்களில் பாடல் எல்லாம் நல்லவை.. ராகவனே ரமணா ரகு நாதா, இசை மேடையில் இந்த வேளையில், ஈரமான ரோஜாவே (அழகான பாடல் வொர்ஸ்ட் விஷூவல்)..
இருந்தாலும் எப்போது கேட்டாலும் மயக்கி விரைவாயும் முடியும் பாடல் இது
கதானாயகிகள் டூபீஸில் வரவேண்டும் என்ற எழுதப் படாத சட்டத்தின் கீழ் புதுஹீரோயின் சசிகலா..
பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
பூவே...பூவைக்கு ஏனிந்த வாசம்
பண் பாடி கண் மூடி உனது மடியில் உறங்கும் ஓரு கிளி
மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு (வைரமுத்து?)
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே...கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்
**
ஜேசுதாஸீம் பி.சுசிலாவும்வெகு அழகாக ப் பாடி யிருப்பார்கள்
*
http://www.youtube.com/watch?v=GAm89WGKQ-0
*
மணிவண்ணன் படங்களில் ஓசைப்படாமல் வந்து போன படம் மூன்றாவது கண்.. மோனிஷா ராஜா அண்ட் சரத் குமார் நல்ல த்ரில்லர் அண்ட் வித்யாசமான சரத் குமார்.. க்ருஷ்ணா ஜி இதைப் பற்றித் தெரியுமா..:)
chinnakkannan
3rd November 2014, 12:00 PM
பேசாதே வாயுள்ள ஊமை நீ பாடலுக்கு தாங்க்ஸ் ராகவேந்தர் சார்..
சிவாஜியின் ஸோலோ ரொம்ப நாளுக்கப்புறம் வந்த படம்..விஜயகாந்த கோபாலரைப் போல் புள்ளிவிவரம் சொல்லி என்னால் நினைக்க முடியாவிட்டாலும் படம் பார்க்கையில் வித்யாசத்தை உணர முடிந்தது..சுஜாதா விஜியின் ஜோடி எனும்போதுகொஞ்சம் அதிர்ச்சி.. அப்புறம் ஓ.கே..
gkrishna
3rd November 2014, 12:24 PM
உண்மை சி கே
மூன்றாவது கண் மணிவண்ணன் இயக்கம் . கிட்டத்தட்ட 24 மணி நேரம்,நூறாவது நாள் போன்று எடுக்கப்பட்ட படம். ஆனால் 1993 கால கட்டத்தில் சத்தம் இல்லாமல் வெளி வந்து காணாமல் போன படம் . நல்ல திர்ல்லர். நிழல்கள் ரவி வில்லன் ஆக வருவார். பூக்கள் விடும் தூது மோனிஷா கீச்சு குரலில் (டப்பிங்) பேசுவார். மோனிஷா வாயில் விரல் வைத்து கொண்டு கத்தும் ஒரு அதிர்ச்சி ஸ்டில் நினைவில் உண்டு. பாரதி ராஜாவின் ராஜா ஜோடி . சரத் அப்ப தான் ஹீரோ ஆக முயற்சிக்கும் நேரம். இந்த படத்தில் இன்ஸ்பெக்டர் ஆக வருவார். தேவா இசை என்று நினைவு . பாடல்கள் எல்லாம் சுமார் ரகம்.
இந்த படத்தில் யுவஸ்ரீ என்று ஒரு நடிகை வருவார்.சின்ன தம்பி படத்தில் குஷ்புவின் அண்ணன் உதயகுமர்க்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டி விடுவார் பின்னாட்களில் கொஞ்சம் சீரியல்களில் பார்த்ததுண்டு .டூயட் படத்தில் கூட கூலிங் கிளாஸ் (குருடி வேடம்) ஒன்று போட்டு கொண்டு உட்கார்ந்து இருப்பார். டூயட் படத்தில் இவர் ரோல் என்ன என்றே தெரியாது. முன்னாட்களில் தினசரி கோடம்பாக்கம் அண்ணா பார்க்கில் வாக்கிங் போகும் போது பார்த்த ஞாபகம்
அவரைத்தான் நிழல்கள் ரவி கொல்வார்.நிறைய கொலைகள் நடக்கும் படத்தில்.சதக் சதக் .நமக்கு படம் எப்ப முடியும் என்று பதக் பதக்.
அதே மாதிரி யுவஸ்ரீன் சகோதரர் ஆக ஒருவர வருவார். அவர் பெயர் நினைவில் இல்லை.
மணிவண்ணின் ஆஸ்தான சத்யராஜ் அதே போன்று இளையராஜா பின்னணி இசை எல்லாமே படத்தில் மிஸ்ஸிங்.
நன்றி சி கே
Monisha
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQGlm4RBQJ5C88t0Xl7GFiBEYD6zjfTZ 8NJ7sAKtKY3W-TH-f-5yA
yuvashree
http://www.thehindu.com/multimedia/dynamic/01466/mp22yuvasri-tv__mp_1466788e.jpg
gkrishna
3rd November 2014, 12:55 PM
சி கே
'இளமைக்காலங்கள்' பாடல்கள் எல்லாம் போட்டு முடித்து முதலில் ஆர் சுந்தர்ராஜன் இயக்கம் என்று விளம்பரம் வந்து பின் மணிவண்ணன் இயக்கத்தில் வந்த படம். பாட்டு பூராவும் ஹிட். மைக் மோகன் வெற்றி தொடர்ந்த படம் இந்த படத்தில் வந்த சசிகலா ஊமை விழிகள் (கார்த்திக் அல்லது அருண்பாண்டியன் ஜோடியாக கொஞ்சம் ஞாபகம் இல்லை) வருவார். பின்னர் காணமல் போய் வெற்றி விழாவில் மறு பிரவேசம். .நடிகை ரோகினி (ரகுவரன்) அறிமுகம் என்று நினைவு.
மதுரையில் 200 நாள் தினத்தந்தி விளம்பரம் பார்த்த நினைவு
சைலஜா குரலில் ஒரு பாட்டு கொஞ்சம் வித்யாசமாக இருக்கும் .
'நடிப்பிலே ஹீரோ படிப்பிலே ஜீரோ ரோடிலே ரோமியோ
பட்டிகாட்டு மாமா படிப்பை மறக்கலாமா
வெட்டி பேச்சு பேசி பொழுதை கழிக்கலாமா
அடிடா சைட் அது தான் ரைட் என்று இருக்கலாமா
அலையோ அலைஞ்சு வெயிலில் கலைஞ்சு '
இந்த இடத்தில இளையராஜா ஒரு சூப்பர் பீட் இருக்கும்
http://www.youtube.com/watch?v=cd2pncXaGhY
அதே மாதிரி மலேசிய வாசுதேவன்,சைலஜா குரல்களில்
'யோகம் உள்ள மாமா ' நெல்லை பார்வதி திரை அரங்கே அதிர்ந்த பாடல் .விடலைகள் விசில் பிளந்த பாடல்
சோனி tape ரெகார்டர்இல் ttk கேசட்இல் போட்டு தேய்த்த பாடல்கள்.
http://blog.isabelleman.com/wp-content/uploads/2012/06/Sony-Radio-Casette.jpghttp://rlv.zcache.com/retro_vintage_tape_cassette_recorder_70s_80s_ipad_ mini_case-ref831eb0b6004352903d9517da018d2e_w9wmu_8byvr_324. jpg
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRO23wgIBNHuPmo0WrdkqEBiFdkKZNYq GSdbmvlCXCxodda4tj8
நன்றி சி கே
chinnakkannan
3rd November 2014, 01:35 PM
Wow..இதான் அடிக்கடி நான் குண்டூசியை எடுத்துக்கிட்டு வரணும்கறது :) ஸ்லைட்டா டச் பண்ணாலே எவ்வளவு விஷயம் கிளம்புது..தாங்க்ஸ் க்ருஷ்ணாஜி..
1.மூன்றாவது கண்.. மோனிஷா பத்தி ஒண்ணுமே சொல்லலையே..பாவம் சின்ன வயதுலேயே கண்மூடிடுச்சு பொண்ணு..ஒரு விபத்துன்னு நினைவு..அண்ட் மங்கா, சுதாங்கன் கொலைகள் வித்யாசமா இருக்கும்..யுவஸ்ரீ பிரபுவின் சித்தி தானே டூயட்டில்..
ஆனால் சரத்குமார் அந்த இன்ஸ்பெக்டர் ரோலில் சப்பக் என ப் பொருந்தி இருப்பார்..
//சரத் குமார் ம்லேஷியா போலீஸாக நடித்த நீ நான் நிழல் பார்த்தீர்களா.. கொஞ்சம் இந்தக்கால சைபர் க்ரைம் பற்றிய படம்..கொஞ்சம் பகீர் எனத் தான் இருக்கும்//
2 இளமைக் காலங்களில் அந்தபடிப்பிலே சீரோவும் நினைவில் இருக்கிறது.. சசிகலா ரோகிணி மணிவண்ணன் நினைவில்..கதை (என்று ஒன்று இருக்கிறதா) தான் நினைவில் இல்லை..!
gkrishna
3rd November 2014, 01:48 PM
Wow..இதான் அடிக்கடி நான் குண்டூசியை எடுத்துக்கிட்டு வரணும்கறது :) ஸ்லைட்டா டச் பண்ணாலே எவ்வளவு விஷயம் கிளம்புது..
1.மூன்றாவது கண்.. மோனிஷா பத்தி ஒண்ணுமே சொல்லலையே..பாவம் சின்ன வயதுலேயே கண்மூடிடுச்சு பொண்ணு..ஒரு விபத்துன்னு நினைவு..அண்ட் மங்கா, சுதாங்கன் கொலைகள் வித்யாசமா இருக்கும்..யுவஸ்ரீ பிரபுவின் சித்தி தானே டூயட்டில்..
ஆனால் சரத்குமார் அந்த இன்ஸ்பெக்டர் ரோலில் சப்பக் என ப் பொருந்தி இருப்பார்..
2 இளமைக் காலங்களில் அந்தபடிப்பிலே சீரோவும் நினைவில் இருக்கிறது.. சசிகலா ரோகிணி மணிவண்ணன் நினைவில்..கதை (என்று ஒன்று இருக்கிறதா) தான் நினைவில் இல்லை..!
மோனிஷா கார்த்திக் நடித்து ஒரு படம் 'உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்' நினைவில் உண்டு சி கே . நேஷனல் அவார்ட் வாங்கிய நடிகை . கார் விபத்து என்று நினைக்கிறேன். அவங்க அம்மா கூட (அவங்களும் மலையாள நடிகை) பயணிக்கும் போது சேர்த்தல என்று ஒரு ஊர் எர்னாகுளம் ஆலப்புழ ரூட் இல் வரும். அங்கே கூட நம்ம விஜய் மல்லையாவிற்கு சொந்தமான ஒரு சாராய பாக்டரி அல்லது கோடான் ஒன்று உண்டு. 85 களில் பார்த்த நினைவு. அங்கு தான் விபத்து நடந்ததாக ஞாபகம்.
இளமை காலங்கள் கதையே இல்லாமல் வெறும் பாடல்களை வைத்து பின் பாடலுகளுக்க்காகவே கதை எழுதி வெளி வந்த படம் .
gkrishna
3rd November 2014, 01:52 PM
சி கே
திருநெல்வேலி பூர்ணகலா திரை அரங்கு வளாகத்தின் உள்ளே 'ராக மாலிகா ரெகார்டிங் சென்டர்' என்று ஒன்று உண்டு. இப்ப இருக்கா தெரியவில்லை.நண்பர் கோபு சார் அவர்கள் தான் உறுதி செய்யணும். 80 90 களில் cd வருவதற்கு முன் மொட்டையின் யானை படம் போட்ட echo கம்பெனி கேசட் ரிலீஸ் ஆகும். இந்த சென்டர் இல் காத்து கிடந்து வாங்க ஒரு கூட்டமே அலையும். இளமை காலங்கள்,வைதேகி காத்து இருந்தாள் ,காக்கி சட்டை,தம்பிக்கு எந்த ஊரு, விக்ரம்,நானும் ஒரு தொழிலாளி, பின்னாட்களில் கரகாட்டக்காரன்,சின்ன தம்பி நிறைய ராமராஜன் படம் என்று நிறைய படங்களுக்கு கேசட் collection சேர்த்த கூட்டம் திருநெல்வேலியில் ரொம்ப famous.
சில சமயம் திருநெல்வேலியில் பாடல் கேசட் ரிலீஸ் ஆக ஓரிரண்டு நாட்கள் கால தாமதம் ஆகும் . ஒரு கூட்டம் மதுரைக்கு பாண்டியன் (உங்களுக்கு வேண்டியவன்) பஸ் பிடித்து போய் பெரியார் பஸ் நிலையம் முகப்பில் கிஷ்டு கானம் என்று ஒரு கடை இருக்கும். அங்கே போய் ராத்திரியோட ராத்திரியாக வாங்கி கொண்டு வந்து காலையில் சுப்ரபாதம் போல் பாட வைத்த காலங்கள் உண்டு .68 முதல் 80 வரை திரை அரங்குகளில் கூடி படங்களை சிலாகித்ததை போல் 80 களுக்கு பின் சந்திக்கும் பொது இடங்களில் எல்லாம் இளையராஜாவின் பாடல்களை எல்லாம் பற்றி அரட்டை அடித்த காலம்.
தேங்க்ஸ் சி கே
chinnakkannan
3rd November 2014, 01:53 PM
//இந்த படத்தில் வந்த சசிகலா ஊமை விழிகள் ..// yeah..கார்த்திக்கின் ஜோடியாய் திடீரென வந்து ரவிச்சந்திரனால் கடத்தப் படுவார்..கார்த்திக்குக்கும் கைவிலங்கெல்லாம் போட்டு வைத்திருப்பார்கள்..
திடுமென அவர்கள் பாட்டுடன் படத்தில் நுழைவார்கள்!! மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா..(நல்லாவா இருக்கும்!)
http://www.youtube.com/watch?v=jIdqIXOkFXs
gkrishna
3rd November 2014, 02:01 PM
.யுவஸ்ரீ பிரபுவின் சித்தி தானே டூயட்டில்..
http://static.telugumoviepedia.com/image.php?image=/images/poster/1/artist_461.jpg
டூயட் இல் பிரபுவின் சித்தியாக வருவது நடிகை சுதா சி கே நிறைய தெலுகு படங்களில் வருவார்
வருவான் வடிவேலன் திரை படத்தில் சின்ன முருகர் என்று ஞாபகம்
http://4.bp.blogspot.com/-FxiigJwxofI/TkCcZVPoNpI/AAAAAAAALqg/R3HW2j9OKNI/s320/varuvaan_vadivelan.JPG
டூயட் இல் யுவஸ்ரீ சார்லி ஜோடி என்று நினைக்கிறேன்
gkrishna
3rd November 2014, 02:12 PM
http://img580.imageshack.us/img580/6756/oruiravuoruparavai1.jpg
80 களில் விஜயகுமார், லத்து நடித்து ;'ஒரு இரவு ஒரு பறவை ' அப்படின்னு ஒரு படம் பூஜை போட்டாங்க. படம் வந்ததா ? என்று நினைவு இல்லை
உங்களுக்கு நினைவு உண்டா சி கே .
வாசு சார்,ராகவேந்தர் சார் ஹெல்ப் ப்ளீஸ்
Richardsof
3rd November 2014, 02:20 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த நான் ஏன் பிறந்தேன் மற்றும் இதயவீணை இரண்டு படங்களுக்கு இசை அமைத்த இரட்டையர்கள் சங்கர்- கணேஷ் நமக்கு தந்த பாடல்கள்
நான் ஏன் பிறந்தேன் ..நாட்டுக்கு
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு - மகிழ்ச்சி
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு- சோகம்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
உனது விழியில் எனது பார்வை ..
என்னம்மா சின்ன பொண்ணு ....
சித்திர சோலைகளே .....
தலை வாழை இலை போட்டு .....
.................................................. .........
வணக்கம் வந்தனம் ..காஷ்மீர் ....
பொன்னந்தி மாலை பொழுது ...
திரு நிறைசெல்வி ...
நீராடும் அழகெல்லாம்
ஆனந்தம் இன்று ஆனந்தம் ... மெல்ல சிரித்தால் என்ன
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே
.................................................. ......................................
chinnakkannan
3rd November 2014, 02:26 PM
நினைவலைகளுக்கு நன்றி க்ருஷ்ணா ஜி.. கேஸட்ஸ் - அக்னி நட்சத்திரம் ரெகார்ட் செய்தது நினைவுக்கு இருக்கிறது - வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலுக்கு எதிரில் ஒரு சாலையில் ஒரு குட்டிக் கடையில் செய்தது..பின் அக்கரை ச்சீமைக்குச் சென்றுவிட்டதால் அங்கே தான் கேஸ்ட்ஸ்.. ஏற்கெனவே உறவினர் வீட்டில் எக்கச்சக்கமாக குவிந்து இருக்கும்.. எனில் அப்பப்ப தான் வாங்குவேன்..
ம்ம் அண்ணா ஒரு முறை குவைத்திலிருந்து வரும் போது ரேடியோ கேஸட் என க் குட்டியாய் டிஃபன் பாக்ஸ் செவ்வக சைஸில் கொண்டு வந்தார்..அதில் சிலோன் பாட்டும் ரெகார்ட் செய்து கேட்ட நினைவு.. ரொம்ப் ஆசையாய்க் கேட்ட இளையராஜா பாடல் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை ப் பூந்தென்றல் தேடியதோ..
chinnakkannan
3rd November 2014, 02:28 PM
உனது விழியில் எனது பார்வை ..ஆனந்தம் இன்று ஆனந்தம் ... மெல்ல சிரித்தால் என்ன இவையிரண்டும் எனக்கு ரொம்ப்பப் பிடிக்குமே! எஸ்விசார்..
ஒரு இரவு ஒரு பறவை.. ஐயாம் ஆல்ஸோ வெய்ட்டிங்க் ஃபார் டீடெய்ல்ஸ் :)
gkrishna
3rd November 2014, 02:39 PM
ரொம்ப் ஆசையாய்க் கேட்ட இளையராஜா பாடல்
மாந்தளிரே மயக்கமென்ன
சி கே
இது தேவதை பட பாடல் ஜெயந்தி நடனம் ஷ்யாம் இசை ..ஜானகி குரல்
படம் வெறும் மொக்கை. நாம் முதல் பாகத்தில் இதை துவைத்து எடுத்து உள்ளோம் :)
chinnakkannan
3rd November 2014, 02:47 PM
யா ஐ நோ தட்.. க்ருஷ்ணாஜி.. விஷூவலில் ஏமாற்றிய படம் என எழுதிய நினைவு..
*
நேற்று டிவியில் மாற்றிக்கொண்டிருந்த போது மனங்கவர்ந்த பாடல்.. எம்ஜிஆர்..உடன் ஆடும் ஹீரோயின் யார் எனத் தெரியவில்லை(பைக் சத்தம் கேக்குது) எல்.விஜயலஷ்மி?
ஜமுனாராணி சீர்காழி கோவிந்த ராஜன் - படம் கொடுத்து வைத்தவள்..(லிரிக்ஸ் ரொம்பப் புடிச்சதுங்கோவ்)
*
பாலாற்றில் சேலாடுது இரண்டு
வேலாடுது இடையில் நூலாடுது - மேனி
பாலாற்றில் சேலாடுது இரண்டு
வேலாடுது இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது - அழகு
தேரோடுது மனது போராடுது - காதல்
தேனாற்றில் நீராடுது - அழகு
தேரோடுது மனது போராடுது
ஆறேழு வயதினிலே அம்புலியாய்ப் பார்த்த நிலா
ஈரேழு வயதில் மாறுது அது ஏதேதோ கதைகள் கூறுது
எண்ணிரண்டு வயதினிலே கண்ணிரண்டும் மாறுபட்டு
பெண் மனது ஊஞ்சலாடுது அதன்
பேச்சும் மூச்சும் வேகமாகுது
கோடைக் கால மாலையிலே குளிர்ந்த மலர்ச் சோலையிலே
வாடை தென்றல் இரண்டும் வந்தது - உன்
ஆடை தொட்டு ஆடுகின்றது
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
காளையுள்ளம் வாடுகின்றது எண்ணம்
கரைகடந்து ஓடுகின்றது
*
http://www.youtube.com/watch?v=mw36JVGSGH4
gkrishna
3rd November 2014, 02:48 PM
சங்கர் கணேஷ் இசையில் வெளி வந்த மக்கள் திலகத்தின் இரண்டு பட பாடல்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி எஸ்வி சார்
நான் என் பிறந்தேன் -
'உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது' - டி எம் எஸ் அவர்களின் மாஸ்டர் பீஸ் .அதிலும் 'உயிர் கொண்டு ஓவியம் ஒன்று ' பாடும் போது சூப்பர்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் - வாலியின் வளமான வரிகள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் .அதிலும் காஞ்சனா சக்ர நாற்காலியில் இருந்து எழுந்து நடக்க முயற்சி செய்வதும்,பிறகு தடுமாறி உட்காருவதும் , முகத்தில் ஏமாற்றம் காண்பிப்பதும் பின்னாடி டாக்டர் வீரராகவன் மக்கள் திலகத்தை பாடலை தொடர சொல்வதும் ,மேஜர் கண்ணாடியை கழட்டி கண்ணை தொடைத்து கொள்வதும், தேங்காய் ஸ்ரீநிவாசன் வில்ல பார்வை (கொஞ்சம் கள்ள பார்வை :)) பார்ப்பதும் அருமையான expressions நிறைந்த பாடல் .இப்போது அடிகடி ஜெயா மக்ஸ்,சன் லைப் ,முரசு தொலைகாட்சிகளில் காண முடிகிறது .
இதய வீணை - பொன் அந்தி மாலை பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு அன்னத்தின் தொகை என்ற மேனியோ அள்ளி கொள் என்று சொல்லும் பார்வையோ கொஞ்சி சிரித்தாள் - கார்த்திக் சார் அவர்களின் வர்ணனை தான் நினைவிற்கு வருகிறது
vasudevan31355
3rd November 2014, 05:08 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-15.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/7-15.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-11.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/8-11.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9-9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/9-9.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/10-9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/10-9.jpg.html)
chinnakkannan
3rd November 2014, 05:28 PM
பெண் பார்க்கப் போவது என்பது எந்தக்காலத்திலும் ஆண்மகனுக்குக் கொஞ்சம் படபடப்பான சமாச்சாரம் தான்.. அதே போல் அந்தப் பெண்ணின் நிலை..இன்னும் கொஞ்சம் கஷ்டம் தான்..
இந்தப் பொண்ணுக்கோ காதலன் இருக்கிறான்.. ஆனாலோ கண்டுக்க மாட்டேங்கறாம்ப்பா.. புலம்புது பொண்ணு..
**
என்னை மானமுள்ளே பொண்ணுன்னு மதுரையிலே கேட்டாக
மன்னார்குடியில் கேட்டாக மாயவரத்தில கேட்டாக
சீர் செனத்தி ஓட வந்து சீமையிலே கேட்டாக
அந்த சிங்கபூரிலும் கேட்டாக நம்ம சின்னமனூரிலும் கேட்டாக
அதை எல்லாம் உன்னாலே வேணாமுன்னு சொன்னேன் தன்னால
என் மச்சான் உன் மேல ஆச பட்டு வந்தேன் முன்னால
கொண்ட முடி அழக பார்த்து கொயம்புதூரிலே கேட்டாக
நெத்தியிலே பொட்டை பார்த்து நெல்லூரிலெ கேட்டாக
ரெண்டு புருவ அழகை பார்த்தாக புது கோட்டையில் இவள கேட்டாக
கன்னழக பார்த்து பார்த்து கண்டமநூரில கேட்டாக
மூக்க்ழகை பார்த்து என்னை மூக்கையாகொட்டையிலே கேட்டாக
கோபமுள்ள பொண்ணுன்னு கொம்பையிலே கேட்டாக
பாசமுள்ள பொண்ணுன்னு பண்ணபுரத்துல கேட்டாக
இத்தன பேரு சுத்தி வளைச்சும்
உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளம் அய்யா
வேண்ட ஒரு சாமி இல்ல விரும்பி வந்தேன் உங்கள
உன்னை விட யாரும் இங்கே உருப்படியா தோணல
நல்ல வாட்டம் உள்ள ஆம்பள உன்னை மறக்க இவளுக்கு ஆகல
வாரி கட்ட தோலில் அணைச்சு வச்சிக்கோங்க வேற கேட்கல
மாறி நீங்க போனீங்கன்ன மனசு இப்போ ஆறல
ஒத்துழைக்க கூடாதா என்னை சூடி கொண்டா ஆகாதா
பட்டு துணி மேலாக்கு அத தொட்டு இழுக்க கூடாதா
உள்ளதெல்லாம் சொல்லி முடிச்சேன்
நல்ல முடிவா சொல்லுங்க மச்சான்
இன்னமும் சொல்லணுமா
*
சின்னப் பசங்க நாங்க படம்..பாடுபவர் ரேவதி..
http://www.youtube.com/watch?v=bLYKpwYfSjQ
எந்த ஊர் என்றவனே யில் வரும் ஊர்கள் அதற்கப்புறம் இந்தப் பாட்டில் தான் இப்படி நிறைய ஊர்கள் வருதில்லை (ஹப்பாடா இன்றைய வெடி போட்டாச்சு!) இசை ..சொல்லவேயில்லையே தேவா..
vasudevan31355
3rd November 2014, 08:55 PM
சி.க, சார்,
'என்னை மானமுள்ளே பொண்ணுன்னு மதுரையிலே கேட்டாக' ரசித்த பாடல்தான். ஆனால் நாளாகி விட்டது. பாடல் வரிகளுடன் பகிர்ந்து கொண்ட விதம் அழகு. தேங்க்ஸ். ஆமா பாட்டுக்கு முன்னாடி பெரிய ரொமான்ஸ் கதை வருமே என்னாச்சு? அப்புறம் மிட் நைட் மசாலா என்னாச்சு? என்னாச்சு? என்னாச்சு?
chinnakkannan
3rd November 2014, 09:13 PM
வாசு சார். கொஞ்சம் உட்காரணும்..சோம்பல்.. மறுபடி ஆரம்பிக்கப்பார்க்கறேன்..!. இன்னிக்கு காயத்ரி பாட்டு முடிச்சுட்டீங்க நாளைக்கு சாவித்திரி பாட்டா?
chinnakkannan
3rd November 2014, 09:36 PM
அழகான பாடலுக்காக த் தேடிக் கொண்டிருந்த போது டபக்கென மலர்ந்து கண்களில் பட்டது இந்தப் பாடல்
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி விஷயம் சொல்லடி..ஸ்வர்ணலதா வின் அள்ளும் குரல்..வாயசைப்பு மோனிஷா.. பின் கார்த்திக்கிற்கு எஸ்.பி.பி. இசை இளையராஜா படம் உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்..முதன் முதலாய் கேட்கிறேன் பார்க்கிறேன்.. நிஜம்மா.. அழகா இருக்குங்க வரிகளும் கூட
*
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா...அன்பால் கூடவா ...
ஓ...பைங்கிளி ...நிதமும்
சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...
அன்பே ஓடி வா ...
அன்பால் கூடவா ...
அன்பே ஓடி வா ...அன்பால் கூடவா
ஓ...பைங்கிளி...நிதமும்
என்னைத் தொட்டு ...
நெஞ்சைத் தொட்டு ...
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...
கட்டுக்குள்ளே நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...
என்னில் நீயடி ...
உன்னில் நானடி ...
என்னில் நீயடி . ..உன்னில் நானடி ...
ஓ பைங்கிளி... நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..
*
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xKrhKZcOlLE
rajraj
3rd November 2014, 09:59 PM
From Malliga(1957)
Music Director: T.R.Pappa
Varuven Naan Unadhu MaaLigaiyin Vaasalukke......
http://www.youtube.com/watch?v=PN3OJSSWiNk
The song in the same tune in the Hindi remake Payal
Aye Meri Maut Tehar......
http://www.youtube.com/watch?v=8_g7-8QoRME
Theme is the saame for both versions.
RAGHAVENDRA
3rd November 2014, 10:24 PM
சி.க. சார்
உ.நெ.பா.ப..... என்ன அருமையான பாடலை வழங்கியிருக்கிறீர்கள்...
மனதைப் பிழியும் பாடல்.. காரணம்.. அந்தக் கதையில் அந்த நாயகிக்கு ஏற்படக் கூடிய எதிர்பாராத சோக முடிவினை அந்தப் பாடலில் இளையராஜா கொண்டு வந்திருப்பார்.. டூயட் தான் என்றாலும் பின்னால் நாயகன் நினைத்து நினைத்து வாடும் வண்ணம் நெஞ்சில் ஆழப் பதிந்து விடும்.. குறிப்பாக ஸ்வர்ணலதாவின் அந்த ஆரம்ப ஹம்மிங்கிலேயே நாடி நரம்பிலெல்லாம் உணர்வு ஊடுருவிச் செல்லும்...
இந்தப் பாடல் முடிந்த வுடன் என நினைக்கிறேன்... ஒரு பெட்டியில் அந்த நாயகி ஒளிந்து கொள்கிறாள். எதிர்பாராதவிதமாக பெட்டி பூட்டப்பட்டு விடுகிறது. மூச்சுத் திணறி அந்தப் பெட்டியிலேயே அவள் உயிர் பிரிவதாகக் கதை என நினைக்கிறேன்..
வாசு சார்.. சரியா..
இந்தப் படம் பார்ப்பவர்கள் மனதில் நிச்சயமாக ஒரு சோகத்தை உண்டாக்கும்... இளையராஜாவின் சிறந்த இசையில் இப்பாடல் என்றும் நிலையாய் நிலைத்திருக்கும்...
இந்தக் காட்சியையும் இதற்குப் பின்னால் வரக்கூடிய நிகழ்வையும் லேசாக கோடிட்டுக் காட்டும் பின்னணி இசை..
http://www.youtube.com/watch?v=lL3amisRPzg
இந்தப் பாட்டைப் படமாக்கியிருக்கும் விதம் மிகவும் பிரமாதம்... பாட்டில் உள்ள பொருளைத் தாண்டி சிறிதும் விலகாது படம் பிடித்திருக்கும் பாங்கு இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் மிக பலத்த Standing Ovation தரவேண்டிய படைப்பு... அவ்வளவு அருமையான வெளிப்புறமாக இருந்தாலும் சுற்றிச் சுற்றி நாயக நாயகியை மட்டுமே focus செய்து படமாக்கியிருக்கும் விதத்திற்கு Hats off.
rajeshkrv
3rd November 2014, 10:40 PM
http://static.telugumoviepedia.com/image.php?image=/images/poster/1/artist_461.jpg
டூயட் இல் பிரபுவின் சித்தியாக வருவது நடிகை சுதா சி கே நிறைய தெலுகு படங்களில் வருவார்
வருவான் வடிவேலன் திரை படத்தில் சின்ன முருகர் என்று ஞாபகம்
http://4.bp.blogspot.com/-FxiigJwxofI/TkCcZVPoNpI/AAAAAAAALqg/R3HW2j9OKNI/s320/varuvaan_vadivelan.JPG
டூயட் இல் யுவஸ்ரீ சார்லி ஜோடி என்று நினைக்கிறேன்
varuvan vaidvelan sudha is different. This sudha is pukka tamilian but very well utilized as akka/anni in Telugu.
http://www.youtube.com/watch?v=XIRXSxWpanw
chinnakkannan
3rd November 2014, 10:57 PM
ராகவேந்தர் சார் பாடலை ரசித்தமைக்கு நன்றி.. கதைக்கும் நன்றி.. நான் இந்தப் படம் பார்த்ததில்லை.. இந்தப் பாடல் இது வரை மூன்று முறை பார்த்துக் கேட்டும் விட்டேன்.. ரொம்ப நல்ல பாட்டுங்க..
ஐ திங்க் மோனிஷா இந்தப் படத்திற்குப் பிறகுதான் விபத்தில் காலமானார்கள் என நினைக்கிறேன்..பாவம் .. இன்னும் நன்றாக ப் பலவருடங்கள் வாழ்ந்து வாசு சார் இன்றைய போட்டோ எனப் போடும் அளவிற்கு இருந்திருக்கலாம்..ம்ம்..
இதுலயே இன்னொரு பாட்டும் அழகா இருக்கு ராகவேந்தர் சார்.. அதுவும் இப்பத் தான் கேட்டேன்..
*
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராஜா தொடுத்த் மாலை தான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=SkVXuZtN3Js
chinnakkannan
3rd November 2014, 11:04 PM
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ஜுகல் பந்திக்கு நன்றி ராஜ் ராஜ் சார்..அப்புறம் இன்னும் கொஞ்சம் மலரும் நினைவுகள்..ஹார்ஸீக்கு அப்புறம்..
rajeshkrv
3rd November 2014, 11:45 PM
சி.க. சார்
உ.நெ.பா.ப..... என்ன அருமையான பாடலை வழங்கியிருக்கிறீர்கள்...
மனதைப் பிழியும் பாடல்.. காரணம்.. அந்தக் கதையில் அந்த நாயகிக்கு ஏற்படக் கூடிய எதிர்பாராத சோக முடிவினை அந்தப் பாடலில் இளையராஜா கொண்டு வந்திருப்பார்.. டூயட் தான் என்றாலும் பின்னால் நாயகன் நினைத்து நினைத்து வாடும் வண்ணம் நெஞ்சில் ஆழப் பதிந்து விடும்.. குறிப்பாக ஸ்வர்ணலதாவின் அந்த ஆரம்ப ஹம்மிங்கிலேயே நாடி நரம்பிலெல்லாம் உணர்வு ஊடுருவிச் செல்லும்...
இந்தப் பாடல் முடிந்த வுடன் என நினைக்கிறேன்... ஒரு பெட்டியில் அந்த நாயகி ஒளிந்து கொள்கிறாள். எதிர்பாராதவிதமாக பெட்டி பூட்டப்பட்டு விடுகிறது. மூச்சுத் திணறி அந்தப் பெட்டியிலேயே அவள் உயிர் பிரிவதாகக் கதை என நினைக்கிறேன்..
வாசு சார்.. சரியா..
இந்தப் படம் பார்ப்பவர்கள் மனதில் நிச்சயமாக ஒரு சோகத்தை உண்டாக்கும்... இளையராஜாவின் சிறந்த இசையில் இப்பாடல் என்றும் நிலையாய் நிலைத்திருக்கும்...
இந்தக் காட்சியையும் இதற்குப் பின்னால் வரக்கூடிய நிகழ்வையும் லேசாக கோடிட்டுக் காட்டும் பின்னணி இசை..
http://www.youtube.com/watch?v=lL3amisRPzg
இந்தப் பாட்டைப் படமாக்கியிருக்கும் விதம் மிகவும் பிரமாதம்... பாட்டில் உள்ள பொருளைத் தாண்டி சிறிதும் விலகாது படம் பிடித்திருக்கும் பாங்கு இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் மிக பலத்த Standing Ovation தரவேண்டிய படைப்பு... அவ்வளவு அருமையான வெளிப்புறமாக இருந்தாலும் சுற்றிச் சுற்றி நாயக நாயகியை மட்டுமே focus செய்து படமாக்கியிருக்கும் விதத்திற்கு Hats off.
mikavum sari Raghav ji. padathin kadhai adhe thaan .
rajraj
4th November 2014, 07:14 AM
அப்புறம் இன்னும் கொஞ்சம் மலரும் நினைவுகள்..ஹார்ஸீக்கு அப்புறம்..
chinnakkaNNan: More 'malarum ninaivugaL'? :) I promised Rajesh that I would not be hogging space here! :lol:
If you had any encounter with a snake, I have a 'malarum ninaivugaL' for you. First I have to find a song with a snake ! :)
rajeshkrv
4th November 2014, 09:20 AM
chinnakkaNNan: More 'malarum ninaivugaL'? :) I promised Rajesh that I would not be hogging space here! :lol:
If you had any encounter with a snake, I have a 'malarum ninaivugaL' for you. First I have to find a song with a snake ! :)
Ankil
you can hog how much ever space you want. ungalukku illadhatha?
rajeshkrv
4th November 2014, 09:29 AM
சில நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை. மன்னிக்கவும்
ராகதேவன் ஜி, உங்களது தேனிசையின் முத்தும் நன்றாக இருந்தது.
வாசு ஜி, இளையராஜாவின் தொடர் அமர்க்களம். காயத்ரியில் அந்த பாடலை ஏன் இசையரசிக்கு தரவேண்டும், அவரும் அதை ஏன் பாடவேண்டும்....
படத்தில் ரொம்பவே சுமாரான பாடல் ..
தேனிசைத்தென்றலின் முத்துக்கள்-16
ரமேஷ் அர்விந்த ஷாலி நடித்து பவித்ரனின் இயக்கத்தில் வெளிவந்த படம் வசந்த கால பறவை
நல்ல இளஞ்சோடிகள் , முரட்டு அண்ணன் (அலைகள் ஓய்வதில்லையை ஞாபகப்படுத்துமே) ..இனிமையான பாடல்கள் என படம் மாபெரும் வெற்றி.
தேனிசைத்தென்றலின் இசையில் வாலி ஐயாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை .
செம்பருத்தி செம்பருத்தி பாடல் மிகவும் பிரபலம்.
தைமாசம் பங்குனி போயி சித்திர மாசம்
இனி தட்டி கேட்க ஒரு கட்டுகாவல் இல்லை
என எல்லாமே நல்ல பாடல்கள்
இதில் இன்னொரு அருமையான சோக கீதம் யேசுதாஸின் குரலில்
பொன்வானில் மீன் உறங்க பாடல் மிகவும் இனிமை அருமை.
http://www.starmusiq.com/movieimages/Vasanthakala-Paravai_B.jpg
http://www.youtube.com/watch?v=T51o2F2zRPc
gkrishna
4th November 2014, 11:18 AM
இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் இதழில் ஒரு செய்தி வந்து உள்ளது .தியாகராஜா பாகவதர் நடித்த இறுதி படமான சிவகாமி படத்தின் இயக்குனர் திரு அந்தோணி மித்ரதாஸ் அவர்களுக்கு 101 வயது ஆகிறது .இன்னமும் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளில் ஆர்வம் காட்டுகிறார். நேற்று தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அவர் பிறந்த நாளை திரு பாரதிராஜா,திரு சி வி ராஜேந்திரன் ,திரு விக்ரமன் போன்றோர் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள் .
http://media.newindianexpress.com/Anthony-Mithradas.jpg/2014/11/03/article2506216.ece/binary/original/Anthony-Mithradas.jpg
CHENNAI : What do you think is on the mind of a man who just turned 101 If you were to ask Anthony Mithradas, he’d answer confidently in his calm, rasping voice, “Kaththi”. Mithradas, whose birthday was celebrated as an occasion by the Tamil Film Directors Union on Monday, is the man who made MKT Bhagavathar’s last movie Sivakami and also directed Malayalam Prem Nazir’s biggest hits Avakashi, all in the 1950s. With a wit as sharp as the movie he was thirsting to watch, Mithradas refused to be carried on stage and vehemently stood his ground, before walking up slowly on to the stage at RKV Studios.
There’s very little else that you can expect from a man who has worked quietly in the film industry for a longer time than India has been Independent. “He’s so updated about films that even now he reads the reviews about latest films and decides whether or not he’d want to watch them. His daughter told me that he has read so much about Kaththi’s social message that he is extremely interested in watching the film now,” said director Vikraman, president of the Tamil Nadu Thirai Iyakunarkal Sangam (TANTIS). It was a show of strength from Mithradas’ family as he had come with his 103-year-old wife Elizabeth, daughter and her family. His daughter spoke about how he had switched to production after seven films. “He gave up directing very early and began running a studio near Vadapalani. Then when the technology changes starting increasing, he started retiring slowly,” she said.
After cutting a cake and greetings from directors like Bharathiraaja, C V Rajendran and many others, he said, haltingly, “My father was a part of World War I and I was a part of World War II and when Gandhi called us to work, I went to lots of places and learnt so many things. I have had a lot of experiences in my life, but very little to show for it,” he said and added, “After so many years, my greatest blessing is to have received the wishes of such stellar stars. No one has honoured me to this extent in my life.”
This was followed by a lot of self deprecatory humour from directors about how it was an “astonishing feat” to have been in cinema and have lived for this many years. Radha Ravi, whose father M R Radha was a contemporary of Mithradas, said, “I am surprised that a director has lived this long, because that means the industry was probably good at that time. It’s not even in the scope of my imagination. If he knows what the cinema industry is like now, he won’t survive for too much longer.”
gkrishna
4th November 2014, 03:47 PM
மும்பை நண்பர் கதிர் அவர்களிடம் இருந்து இன்று வந்த மின் அஞ்சல்
இப்போது மழை காலம். உடல் நலம் பேணி பாதுகாக்க வேண்டும், கூடுமானவரை சுடு நீர் அருந்த வேண்டும் என்று நிறைய மழை கால பாதுகாப்பு வழிமுறைகளை கூறி விட்டு தமிழ் சினிமாவில் மழை காட்சி எத்தனையோ இயக்குனர்களால் படம் பிடிக்கப்பட்டு இருந்தாலும் அவர் ரசித்த மழை காட்சி என்று கீழே தருகிறார் .
மழையையும் நீரையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்திய படமாக எனக்கு நினைவிற்கு வரும் ஒரே திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் (1976) புயல் அடிக்கும் ஒரு மாலை வேளை, பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டு இருக்கும் கங்கா என்ற ஒரு இளம் கல்லூரி மாணவியை தனது காரில் ஏற்றிக் கொள்கிறான் ஒரு இளைஞன். காருக்குள் இருவருக்கும் உடலுறவு ஏற்படுகிறது. முதலில் இணங்கும் கங்கா, பிறகு தான் கற்பழிக்கப்பட்டதாக அதை புரிந்து கொள்கிறாள். நேரம் கடந்து வீட்டிற்கு வரும் கங்கா நடந்ததை தனது விதவை அம்மாவிடம் கூறுகிறாள். அதிர்ந்து போகும் தாய் அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்று கிணற்றடியில் அமரச் செய்து, குடம்குடமாகத் தண்ணீரை அவள் தலையில் கொட்டி, ‘‘நீ சுத்தமாயிட்டேடீ, சுத்தமாயிட்டே’’ என்று கதறுகிறாள். திரைப்படம் தொடங்கி பத்து நிமிடத்திற்குள் நீருக்கு இரண்டு பயன்பாடுகள். ஒன்று கங்காவை அசுத்தப்படுத்த மற்றொன்று, அவளை சுத்தப்படுத்த. ஜெயகாந்தனின் படைப்பில், பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் முப்பத்தைந்து வருடங்கள் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு இந்தக் கற்பனாசக்தியே காரணம்.
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SilaNerangalilSilaManithargal0003.jpg
அச்சமில்லை அச்சமில்லை திரைபடத்தில் பாலசந்தர் கூட குற்றால அருவியை நடிகர் பட்டியலில் 'இவர்களுடன் அருவி ' என்று டைட்டில் கார்ட் போட்டு இருப்பார்
gkrishna
4th November 2014, 05:19 PM
டபுள் மீனிங் பேசுறதில் சந்தோஷம்:வெண்ணிற ஆடை மூர்த்தி சிங்கிள் மீனிங் talk - Thanks to Cine guide
http://cine.tamilsguide.com/upload/Kollywood-news-10076.jpg
Tuesday 4th of November 2014 12:23:28 PM
தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் என்பதற்கு ஒரே மீனிங்தான்... ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி. ‘‘எப்போ இருந்து டபுள்மீனிங்ல டயலாக் பேச ஆரம்பிச்சீங்க? ஜோதிடத்துல எப்படி ஆர்வம் வந்தது? இந்த மாதிரி கேள்விகள்தானே எங்கிட்டே கேட்கப் போறீங்க? இதுக்கெல்லாம் பதில் சொல்லிச் சொல்லி எனக்கே போரடிச்சிடுச்சு தம்ப்ப்ரீரீ...’’ - தயங்கித் துவங்குகிறார், சினிமாவில் பொன்விழா காணும் மனிதர். காமெடி ஜாம்பவான்கள் நாகேஷ், சந்திரபாபு கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே நடிக்க வந்து, சந்தானம் வரை ஸ்டாண்டிங் பார்ட்னர்ஷிப் கொடுப்பவர்.
‘‘அந்தக் காலத்துல சினிமாவில் நுழையறது ரொம்ப கஷ்டம். என்ட்ரி ஆகிட்டா தாக்குப் பிடிக்கிறது ஈஸி. நான் பி.ஏ., பி.எல் படிச்சவன். அப்பவே எம். என்.சி கம்பெனியில வேலை. அதை விட்டுட்டு நடிக்க வந்தேன். ‘வெண்ணிற ஆடை’க்குப் பிறகு ரெண்டாவது படமே ‘டணால்’ தங்கவேலு சார் கூட நடிச்சேன். அதுக்கப்புறம் நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக்னு எல்லார் கூடவும் நடிச்சிட்டேன். சிவாஜி சாரோட நிறைய நடிச்சிட்டேன்.
ஆனா, எம்.ஜி. ஆரோட சேர்ந்து நடிக்கிற சந்தர்ப்பம் வரலை. சினிமாவைத் தவிர எனக்கு ஆர்வம்னா அது ஜோசியம்தான். அதுல எனக்கு ஈடுபாடு வந்ததுக்குக் காரணமே சைதாப்பேட்டை ஜோசியர் ஒருத்தர்தான். ‘நீ காமெடி நடிகனா வருவே. கடைசி வரைக்கும் சினிமாவுல இருப்பே’னு அவர் அப்பவே சொன்னார். கூடவே இன்னொண் ணும் சொன் னார்... ‘நீ நம்பர் ஒன்னா என்னைக்கும் வர மாட்டே. அதுக்காக வருத்தப்படக் கூடாது!’ அதான், இப்ப வரைக்கும் எதுக்கும் நான் வருத்தப்படுறதில்ல.
‘இவரா? டபுள் மீனிங்கா பேசுவாரே’ன்னு எல்லாரும் என்னைச் சொல்றதை பெருமையா நினைக்கிறேன். ஐம்பது வருஷம் நான் ஃபீல்டுல தாக்குப் பிடிச்சு நின்னதுக்கு இதுவும் ஒரு காரணம். காமெடியனுக்கு தனித்தன்மை ரொம்ப முக்கியம். இல்லாட்டி சீக்கிரம் போரடிச்சிடும். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் இருந்துதான் ‘தம்ப்ப்ரீரீ’னு இப்ப பேசுற இந்த ஸ்டைலைப் பிடிச்சேன். டபுள் மீனிங் எந்தப் படத்தில் ஆரம்பிச்சுதுன்னு நினைவே இல்லை. அவ்வளவு பேசியாச்சு. ஆரம்பத்தில் இருந்தே நான் தமிழ்ப்படங் களை விட இங்கிலீஷ் படங்களைத்தான் அதிகம் பார்ப்பேன். ப்ளூ காமெடி... ரொமான்டிக் காமெடி... இதெல்லாம் உலகம் முழுக்க சகஜம்தானேப்பா!
‘உங்க நகைச்சுவையில சமூக அக்கறை இல்லையே?’ன்னு கேட்கிறவங்களை நான் கண்டுக்கறதில்லை. இந்த சொசைட்டியை மகாத்மா காந்தியாலேயே திருத்த முடியலை. இந்த வெண்ணிற ஆடை மூர்த்தியா திருத்திட முடியும்? மக்களுக்கே அந்த விழிப்புணர்வு வரணும். சினிமாங்கறது நீதி சொல்ற இடமில்ல... நம்ம இடத்தைத் தக்க வச்சுக்கவே போராட வேண்டி யிருக்கும். கொஞ்சம் குனிஞ்சாலும், பின்னாடி நிக்குறவன் பச்சக்குதிர தாண்டிருவான்.
இப்போ சன் டி.வி ‘சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியில, ‘உலகம் இவ்ளோதான்’னு பத்து நிமிஷ கான்செப்ட் ஒண்ணு பண்றேன். எழுத்தும் எனக்கு ஓரளவு வரும். ‘மாலை சூட வா’ன்னு ஒரு கதை எழுதினேன். அது படமாச்சு. கதை, திரைக்கதை மட்டும் எழுதினேன்.வசனம் சித்ராலயா கோபு சார் எழுதினார். கமல் அதுல இருந்துதான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். அப்புறம், ‘ருசி’ன்னு ஒரு படத்துக்கு ஸ்டோரி, ஸ்க்ரீன் ப்ளே, டயலாக் எழுதினேன். மோகன் ஹீரோ. டைரக்ஷன்ங்கறது ஃபுல் டைம் ஜாப். அதனால தொடர முடியல. 200க்கு மேல டி.வி ஸ்கிரிப்ட் எழுதியிருப்பேன். 42 படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதியிருக்கேன். தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 813 படங்கள்ல காமெடியனாவே நடிச்சாச்சு. இப்பவும் சின்னப்படங்கள்ல நடிக்கிறேன். டி.வி சீரியல் பண்றேன். இதனாலெல்லாம் என் கௌரவம் கெட்டுப் போயிடலை.
வருஷத்துக்கு ஒரு தடவை அமெரிக்கா போயிடுறேன். அங்க பையன் இருக்கான். மூணு, நாலு மாசம் அங்க போயிடுது. மீதி நாட்கள்ல கிடைச்ச படங்களைப் பண்றேன். ஆல்மோஸ்ட் எனக்கு இது ரிட்டயர்மென்ட் காலம்.
இதுக்கு மேல வர்ற வருமானம் எல்லாமே போனஸ்தான். காடு, மலை, கடல், கப்பல், விமானம்னு அங்கே இங்கே சுத்தியாச்சு. இப்போ திடீர்னு வீட்ல சும்மா உட்கார முடியல. அதான் புக்ஸ் எழுத ஆரம்பிச்சிட்டேன். இதுவரை 6 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இப்போ ஏழாவது பிரின்ட்ல இருக்கு. எல்லாம் நகைச்சுவைதான்.
நம்பர் ஒன் காமெடி நடிகரா நான் வராம போயிருக்கலாம். நகைச்சுவை தவிர, சீரியஸ் ரோல்கள் ஒரு சில படங்கள்ல பண்ணினேன். ஆனா, அதையும் தொடந்து பண்ற அளவுக்கு எனக்கு தகுதி இருக்கறதா நான் நினைக்கலை. அதனால பண்ணலை. இருக்கறத வச்சு திருப்தியா வாழக் கத்துக்கிட்டேன். இவருக்கு இவ்வளவு பேங்க் பேலன்ஸ்னு கடவுள் ஆல்ரெடி எழுதிட்டார். அதுக்கு மேலே என்ன முட்டிக்கிட்டாலும் அல்சர்தான் வருமே தவிர, அமவுன்ட் ஏறாது.
எத்தனை கார் வச்சிருந்தா என்ன, ஒரு கார்லதானே உட்கார முடியும்? எத்தனை வீடு இருந்தாலும் ஒரு வீட்லதானே தங்க முடியும்? என்னுடைய தகுதிக்கு என் பையனை ஃபாரீன்ல படிக்க வச்சதே பெரிய விஷயம்.
கடைசியா ஒரு விஷயம் சொல்லிக்கறேன்... எந்தத் தொழில்லயுமே ஒருத்தரால அதிகபட்சம் 25 வருஷம்தான் இருக்க முடியும். நான் ஜனங்களோட பொறுமையை சோதிச்சு 50 வருஷம் இருந்ததே, என்னைப் பொறுத்தவரை பெரிய சாதனைதான். இதுக்கு மேலயும் நான் எதிர்பார்த்தால் அது மடத்தனம்!’’
வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய புத்தகங்களிலிருந்து சில நொறுக்ஸ்
உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை, ஷாம்பூ போதும். வழுக்கைத் தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை, சோப்பு போதும்.
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு.
ஏழையாக இருப்பது நல்லது. நோய் வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்தி விடுவார்.
சமையலறையில் நிகழும் விபத்தைத்தான் என் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்.
ஈ.சி.ஜி. என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டுக் காட்டும் வரைபடம்.
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி.
வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை, இரண்டு மாமியார்கள்.
ஒரு பெண்ணுக்கு அழகுதான் சொத்து என்றால், நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
‘வந்தது போகட்டும்’ என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேஷன். ‘வராமலே போகட்டும்’ என்பதற்காக செய்யப்படுவது குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்.
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள், திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டான், திருமணம் ஆகும்வரை. -
Gopal.s
5th November 2014, 06:21 AM
ஒரு பாடகியின் குரல், வாழ்க்கையையே புரட்டி போட்டு விளையாடி கொண்டிருக்கும் குரூரத்தை ,அதில் மிதக்கும் அவலத்தை ,தன்னுடைய சுய பச்சாதாபத்தை,இயலாமையை, அப்படியே குரலுடன் இயைந்த,உணர்வுகளில்,ஒரு சிறு புள்ளியில் இருந்து கோலமிடும் அழகுடன் பாட முடியுமா? அதை கேட்டு அப்படியே உங்கள் இதயத்தை நீங்களே கையில் எடுத்து ,ஒரு குருடனை போல தடவி பார்த்து,அதன் இருப்பை,மேடு,பள்ளங்களை,குழிகளை,அதன் மேன்மையை,மென்மையை ஸ்பரிசிக்க முடியுமா?
ஒரு இசையமைப்பாளர்(கள் ),பாடலாசிரியர்,பாடகி,இயக்குனர்,நடிக-நடிகையர் சாதிக்க நினைக்கும் உச்சம் இந்த சுமைதாங்கி பாடலில் நான் உணர்வேன். சுமைதாங்கியில், ஸ்ரீநிவாஸ்-ஜானகி மட்டுமே அத்தனை பாடல்களின் சுமையையும் தாங்கி ,அத்தனை பாடல்களையும் உச்சத்திற்கு கொண்டு சென்றனர்.
இதே ஹமீர் கல்யாணியில் ,என்னுயிர் தோழி (கர்ணன்) தொடங்கி மலர்களே மலர்களே (லவ் பேர்ட்ஸ் )வரை பல நல்ல பாடல்கள் இருந்தாலும்,இதை போல உன்னதம் தொடவில்லை.
என் உணர்வுகளின் சோக நாதத்தை கூட்டி என்னை எங்கோ கொண்டு செல்லும் தெய்வீக கீதம்....
ஜானகியம்மா உங்களுக்கு என் தலை வணக்கம்.
https://www.youtube.com/watch?v=JO0mMM065X8
RAGHAVENDRA
5th November 2014, 07:05 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/s720x720/10487491_561190740656099_4093413480245111778_n.jpg ?oh=d7589b90832ba877666a316642c7216a&oe=54ED2CE1&__gda__=1423141894_ec84c44db0be444feeb45916b4d30ac 9
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/10423971_561190757322764_7031170354333660401_n.jpg ?oh=8f3d819a2a414632d77449590af5dd03&oe=54F3CB05
செம்மீன் படப் பாடல் பதிவின் போது இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி (இரு விரல்களால் குழுவினருக்கு இசை ஆலோசனை வழங்குபவர்) அருகில் இசையமைப்பாளர் ஆர்.கே.சேகர் - திலீப் என்கின்ற ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை
நன்றி முகநூல் இணையதளம்
RAGHAVENDRA
5th November 2014, 07:09 AM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/1966939_549493165159190_1440686430141950389_n.jpg? oh=a5f8e1864289f4a06afc459e05115d5b&oe=54EC4987
பாடகி சித்ரா இளம் வயதில்..
நன்றி முகநூல் இணைய தளம்...https://www.facebook.com/pages/Imprints-and-Images-of-Indian-Film-Music/391149464326895
RAGHAVENDRA
5th November 2014, 07:11 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10404881_544250445683462_4961177702246187141_n.jpg ?oh=dcea801ca1523f7cada37775e8c765a3&oe=54ECD315&__gda__=1423990428_abde93736d1bab836a27037cdec0e6a 5
பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் மதன் மோகன்
RAGHAVENDRA
5th November 2014, 07:12 AM
https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10354151_544250072350166_2269771970925450632_n.jpg ?oh=57cc7ed297f831438dbb8b786286feeb&oe=54E37714
பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் ஜெய்தேவ் லதா மங்கேஷ்கர் .. ஒரு பாடல் பதிவிற்கான ஒத்திகையின் போது..
RAGHAVENDRA
5th November 2014, 07:13 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10151272_531600050281835_4371968944649950506_n.png ?oh=e2435c33c4e8e6b50da2d5192b5d7668&oe=54DCCF88&__gda__=1424963774_f28ad5609a038e3bb978544552beaba 2
இசையமைப்பாளர் [லக்ஷ்மிகாந்த்] பியாரேலால் ...
RAGHAVENDRA
5th November 2014, 07:14 AM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10169255_527403774034796_810771683581775115_n.jpg? oh=17973c0462d74ed9d582b24b98f9c2b7&oe=54EF0151
இசையமைப்பாளர் ஜெர்ரி அமல்தேவ்
RAGHAVENDRA
5th November 2014, 07:15 AM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10172656_523248294450344_1823602115_n.jpg?oh=07f92 97a8fd64e772c0f1e5f880ed6ab&oe=54ED34AD
பிரபல ஹிந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர் மஹேந்திர கபூர்
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.