View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
[
15]
16
uvausan
5th May 2015, 02:35 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 4.
கிழக்கு வெளுத்ததடி - கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமலமுகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று ஏறெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம்
திறந்ததடி -----
------------------------------------------------------
------------------------------------------------------
" நான் என்று சொல்வதை , நாம் என்று சொல்வதால்
நாடெல்லாம் வாழும் அம்மா !"
அருமையான வரிகள் - " நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடக்கும் என்பது நீதியடி " - அவன் பித்தானா - இது படம் - TMS குரலும் , P சுசீலா வின் குரலும் இணைந்து ஒரு மதுரகானத்தை நமக்கு தரும் , காலத்தால் அழியாத பாடல் இது . உங்களுக்காக !!!
https://youtu.be/vsd_pwkPL50
uvausan
5th May 2015, 03:00 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 5.
Aakasaana suryudu
"சுந்தரகாண்டா " Telugu Movie - இந்த பாடல் மிகவும் இனியதான ஒன்று - வாழ்க்கையின் எதார்த்தங்களை அழகாக சொல்லும் பாடல்
chala manchi song
https://youtu.be/3361rlABZqA
chinnakkannan
5th May 2015, 03:00 PM
வெகு அழகிய பாட்டு ரவி.. தாங்க்ஸ்.. அவன் பித்தனா படம் பார்த்ததில்லை.. பாடல்கள் கேட்டிருக்கிறேன்.. இறைவன் இருக்கின்றானா ஆ மனிதன் கேட்கின்றான்.. டிஎம் எஸ் குரலும் சுசீலா குரலும் உருக்கும்..
chinnakkannan
5th May 2015, 03:05 PM
நெறைய எழுதி இருக்கீங்க. இன்னும் ரெண்டு வாட்டி படிச்சுட்டு டாபிக்ல என்னோட கமெண்ட் சொல்றேன்.// தாங்க்ஸ் கல் நாயக் பொறுமையா ப் படிச்சுட்டுவாங்க..:)
uvausan
5th May 2015, 03:08 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 6.
கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே... காதல் பெண்ணின் கனவில் கலந்து மிளுமிளுப்பானே... இனிக்கும் நெஞ்சில் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்... அணைக்கும் கண்ணின் கனவினை விதைக்க வந்தவன் தோழன்...
ஸ்ரேயா கோஷால் இன் குரலில் ஒரு அருமையான பாடல் - படம் அன்வார்
-----------------------------
----------------------------
காதல் எனும் சிறகு கொண்டு கவிதைக் கொண்டு பேசுவான்....
https://youtu.be/XtogPAPBQPE
uvausan
5th May 2015, 08:55 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 7
விண் கதிரவனுடன் , நடிப்பு கதிரவன் இணைந்து பாடும் பாடல் - நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது ?? இந்த பாடலையும் , அவரின் அழகையும் வர்ணிக்க ஒரு தனி திரியே தேவைப்படும் - பாடலிலே கதிரவன் தோன்றாவிடினும் , காட்சியிலே அழகாகத் தோன்றும் அந்த ஆதவன் , அள்ளித் தெள்ளித்த அழகினை , துள்ளிக்குதித்து தன் உடைமையாக்கிகொள்ளும் சிம்மக்குரலோன் !
https://youtu.be/LiK_4pdcvv4
uvausan
5th May 2015, 09:15 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 8
உதய சூரியனின் பார்வையிலே - உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே -------
தன்னம்பிக்கையும் , தரமான வார்த்தைகளும் சேர்ந்து விளையாடும் பாடல் இது - அன்பை வரவழைத்த மக்கள் திலகம் , புதிய வானத்தையும் , புதிய பூமியையும் ஒருங்கிணைத்து அருமையாக பாடிய பாடல் - காலம் கடந்து இன்றும் இனிமையாக , பசுமையாக ஒலித்து
கொண்டிருக்கின்றது
"There is no question of which country, cast we're. We worship the nature in search of a way to love. We're proving through our life that, Our heart got higher than the height gotten by the mountain."
https://youtu.be/ax39OLi4tw0
chinnakkannan
5th May 2015, 09:37 PM
தொழில் பாட்டுக்கள் – 12
முதலில் ஒரு மு.க.சு ( முன் கதைச் சுருக்கம்)
ராகுல் இளைஞன்..நல்ல எக்ஸர்ஸைஸ் உடம்பு.. (பின்ன வழக்கமா அழகன்னு ஆரம்பிச்சா அதானே என்பீர்கள்).என்ன வேலை..அது பற்றி அப்புறம்..
ஷ்ஷ்யாமா.. கொஞ்சம் சுமாரான ஆனால் ரஸ்ட்ரஸ்ட் துறுதுறு அழகி.. வளர்வது அக்கா மாமா அரவணைப்பில்.. ஷ்ஷ்யாமா என்று சொன்னதற்குக் காரணம் அவளுக்கு அவ்வப்போது திக்கும்..ஆனால் அழகாயிருக்கும்..வேலை பார்ப்பது ஒரு ப்ரைவேட் கம்பெனியில்
இருவரும் எங்கிட்டு மீட் பண்ணிக்கொண்டார்கள் என்பது முக்கியமில்லை..இருவருக்கும் கல்யாணம் பேச முடிவெடுத்தார் ஷ்யாமாவின் மாமா ரங்கசாமி.. ராகுலிடமிருந்து ஜாதகம் வாங்கி பொருத்தம் பார்க்க்க்க… பொருத்தமெல்லாம் ஓக்க்க்கே.. ஆனால்…..
ஆனால் ஒரே கோத்திரம்.. சாஸ்திரப் படி செய்துகொள்ளக் கூடாது நோ என்று விடுகிறார்.. ராகுலின் அப்பா ராகுலுக்கு, ராகுலின் காதலுக்கு உதவுவதற்காக ராகுலை வீரராகவன் என்பவருக்கு தத்துக் கொடுத்துவிட – அப்ப வேற கோத்திரம் ஆகிவிடுமே – வந்து ரங்கசாமியிடம் கேட்டால் வந்த ரிப்ளை.. நோ.,..
அக்கா அத்திம்பேருடன் அடக்கவொடுக்கமாக இருந்த, அவர்களை அம்மா அப்பாவாக நினைத்திருந்த ஷ்யாமாவிற்குக் கோபம் வருகிறது.. ராகுலையே கல்யாணம் செய்து கொள்கிறேன் எனச் சொல்ல ரங்கசாமிக்கும் கோபம்.. அப்படிப் பண்ணினா நாசமாப் போய்டுவே.. ஓஹ்.. கல்யாணம் பண்ணினாத் தானே நாசமாப் போவேன்..கல்யாணம் கட்டாமயே வாழறேன் ராகுல் கூட…
ராகுலிடம் வந்து சொன்னால் முதலில் மறுக்கிறான்..பின்னர் ஒரு வீடு எடுத்துக் கொண்டு குடித்தனம் வைக்கிறான்..முதலில் தனித்தனியாகத் தூங்கும் இருவரும் சில நாளில் சேர்ந்து ‘தாச்சி’த் தூங்கியும் விடுகிறார்கள்..
ராகுலின் தத்துத் தகப்பனார் வந்து தாலியைக் கொண்டு வருகிறார்..என்ன தான் ரிஜிஸ்டர் மேரேஜா இருந்தாலும் தாலி வேண்டும்ப்பா.. அங்க்கிள்.. நாங்க தாலி கட்டாமயே வாழலாம்னு இருக்கோம்….
கொஞ்சம் யோசித்து.’சரி’ எனப் போய்விடுகிறார்..
சூழ் நிலையில் ஷ்யாமாவிற்கு நாள் தள்ளிப் போகிறது..ஒரு நாள் ராகுலின் ஆஃப் தினம்.. அப்போது ராகுல் இப்பவாவது கல்யாணம் கட்டிக்கலாம்..குழந்தைக்கு அப்பா பேர் கேப்பாங்கள்ள..
நீங்க தான் என் குழந்தைக்கு அப்பா..இல்லையா.. ஸோ அதை எதுக்கு வெட்டியா கன்ஃபர்ம் பண்ணனும்.. ஏன் ஏன் இப்படிப் படுத்தறீங்க..நான் அலுத்துப் போய்ட்டேனா என்ன..
ராகுலுக்கும் கோபம் வருகிறது.. உனக்குத் தான்..உனக்குத் தான் என்னப்பார்த்தாலே கோபம் வருது.. நான் ஆஃபீஸ் போறேன்..
சொன்னாற்போல அவனுக்கு ஆஃபீஸிலிருந்து ஒரு அர்ஜண்ட் கால் வர…அவன் கிளம்புகிறான்..
இனி ஒருகாட்சி..
//ஸாரி முன்கதைச் சுருக்கம்னு சொல்லி நீளமாய்டுச்சு//
*
ராகுல் ஆஃபீஸ் கிளம்புகிறேன் என்று சொன்ன ஆஃபீஸ் தீயணைப்பு நிலையம்.. யெஸ்.. ராகுல் ஒரு தீயணைப்புப் படை வீரன்..
*
ஒரு காக்கை, ஒரு குடிகாரன், ஒரு ரிட்டயர்ட் ஆர்மி மேஜரின் மனைவி…
இவர்கள் மூவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. ஆனால் ஒரு நிகழ்வில் சம்பந்தப் பட்டவர்கள்..
அந்தக் காக்கை ஒரு அவலட்சணமான காக்கை..அன்று முழுதும் பறந்து திரிந்து எதுவும் பூச்சி புழுவும் கிடைக்காமல் பசி வயிற்றில் கவாங்க் கவாங்க் என இருட்டும் நேரம் அந்த ஹோட்டலுக்கு முன்னால் இருந்த எலக்ட்ரிக் கேபிளில் உட்கார்ந்து கொண்டு தன் கண்ணை அங்கிட்டும் இங்கிட்டும் சுழற்றி சுழற்றிப் பார்த்தது..
நேர் கீழே ஒரு ஹோட்டல்..அதில் ஒரு பால்கனி…என்னவோ நேரமா அல்லது ஏதாவது கோளாறா திடீரென கரெண்ட் கட்..ஜெனரேட்டரும் ஆன் ஆகவில்லை.. எனில் அந்த ஆர்மி மேஜரின் வயதான மனைவி- தன் பேரன் ரூமில் உறங்கிக் கொண்டிருக்க – சரி பால்கனியிலாவது கொஞ்சம் வெளிச்சம் வரட்டும் என மெழுகுவர்த்தியைப் பற்ற்ற்
டபக்கென்று ஞானிகளின் மனத்தில் தெரியும் ஒளியைப் போல கீழே ஒரு வெளிச்சம்..காக்கை குறுகிப் பார்த்ததில் கிழவி..கையில் வெளிச்சம்..ஹை..ஏதோ சாப்பிடுறதைக் கையில் வச்சுருக்கா பாட்டி என நினைத்த வண்ணம் தொபீரெனப் பாய்ந்து மெழுகுவர்த்தியின் உடம்பு பாகத்தை அலகால் கவ்விக்கொண்டு பறக்க காற்றும் அவ்வளவாக இல்லாததனால் நெருப்பும் அணையாமல் இருக்க ஒரு ஆங்கிளில் மெழுகு உருகி அதன் அலகைச் சுட …தொபக்….
விழுந்த எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தி எங்கோ தட்டுமுட்டுச் சாமான்கள் வைத்திருக்கும் அறையா எதுவோ.. எதிலோ பட்டு படபட என நெருப்பு பிடிக்க சில மணி நேரங்களிலந்த ஹோட்டல் முழுக்க ராவணனின் இலங்கை அரண்மனைபோல் பற்றி எரிய.. அதில் பால்கனியில் இருந்த ஆர்மி மேஜரின் பேரன் அறையும் தப்பவில்லை. மேஜரின் மனைவி மட்டும் எதற்கோ வெளியேவந்தவள் மறுபடி உள்புக முடியவில்லை..
ராகுலுக்கு வந்த கால் அவனது நண்பன் சாம்சனுடையது.. ராகுல் ஒரு ஹெல்ப் பண்ணறியா ப்ளீஸ்.. எனக்கு காலைலருந்து வயத்தால.. ரொம்ப டயர்ட்டா இருக்கு.. நீ போறியா.. இன்ன ஹோட்டல்…
ஷ்யாமாவிடம் டூ விட்டுவிட்டு ராகுல் ஹோட்டலை அடைய ஏற்கெனெவே சிகப்புக்கலர் பூதமாய் தீயணைப்பு வண்டி நின்று கொண்டிருக்க சுறுசுறுப்பாய் வண்டியிலிருந்த் பைப்பை எடுத்து நீர்பாய்ச்சி நெருப்பை அணைக்க ராகுல் மெல்ல மெல்லமாய் முன்னேற..
தொடரும்..
chinnakkannan
5th May 2015, 09:39 PM
தொழில் பாட்டுக்கள் - 12 தொடர்ச்சி..
மனிதனுக்கு வேடிக்கை பார்ப்பது என்பது தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கம் (இந்தக்காலத்தில் அது இன்னும் மோசம்) அதுவும் விபத்தா நெருப்பா ..கண்களை அகலவிழித்து வேடிக்கை பார்ப்பார்கள்..அதுவும் கூட்டமாக..
அங்கும் அப்படித்தான் ஒரே கூட்டம் ஹோட்டலைச் சூழ்ந்திருக்க..
ராகுல் பைப்பை எடுத்து ஹோட்டல் முதல்மாடி பால்கனிக்குத் தொற்றி நெருப்பை அணைத்து பேரனைக் காப்பாற்றி மற்றவரிடம் பால்கனிமூலமாக விட்டுவிட்டு உள் நுழைந்து படிகளில் இருக்கும் நெருப்பை அணைத்து புகையுடன் தாவித்தாவி முன்சுவற்றுக்குப் பக்கமிருக்கும் வாசல் பக்கம் வர முயற்சிக்க…….
அவன் பேர் கண்ணுசாமி..செம குடிகாரன்..அதுவோ டாஸ்மார்க் இல்லாத காலம்.. எனில் கிடைத்த நாட்டுச்சரக்கை போட்டு வந்துவிட்டு என்னவோ எரியுதே..இங்க என்ன மக்கள் பூத்தானமா வேலை பாக்கறாங்க.. ஒரு பயலுக்கும் நெருப்பணைக்கத் தெரியலை..
ஹோட்டல் வாசப்பக்கச் சுவர்ப்பக்கம் ராகுல் வரும் வேளையி.ல்…
வெளியில் கண்ணுசாமி ஏற்கெனவே பைப்பில் நீர் பாய்ச்சி அணைத்துக் கொண்டிருந்த ஒரு தீயணைப்பு வீரனிடமிருந்து பைப்பைப் பிடுங்கி ராகுல் வரும் சுவர்ப்பக்கம் விட..
அந்த வீரன் பதறினான்.. பக்கத்தில் போனால் குப் வா்டை.. டேய் அங்க தண்ணீர் விடாதே ஏற்கெனவே சுட்ட சுவர்.. தாங்காது..
எல்லாம் எங்களுக்குத் தெரியும்ல…. எகத்தாளம் பேசி தண்ணீர்விட..சுவர் நெருப்புடன் கணகணத்துக்கொண்டிருந்த சுவர் – பொத்தென நெகிழ்ந்து விழுந்தது..உட்புறமாக…ராகுல் வந்துகொண்டிருந்த இடத்தில் அவன் மீது….
இங்கே ஷ்யாமாவிற்கு வலி.. பதறி ஹாஸ்பிடலில் உடன் குடித்தனக்காரர்கள் சேர்க்க…
அங்கே நெருப்போ பிரிந்த காதலி போல அவனை அணைத்துக் கொண்டது..
**
ஸோ.. இது என்னவாக்கும்ங்கறீங்களா. கதைங்க்ணா… நாவல் … ரா.கி.ரங்கராஜன் எழுதிய ராசி என்ற நாவல்..
க்ளைமாக்ஸ் அப்புறம் சொல்றேன்.. ஏன் இந்த்க் கதை சொன்னேன்..(ஆரம்பிச்சுட்டான்யா)
*
விருப்பு வெறுப்பின்றி வேகமாய்ப் பாயும்
நெருப்பும் வதந்தியும் நேர்..
உண்மை தானே..
ஆனால் நாம் பார்க்கப் போவது நெருப்பு.. (யோவ் தொழில் பாட்டுன்னுல்ல டைட்டில் போட்டிருக்க.. ப்ளீஸ் வெய்ட் மன்ச்சு..)
thodarum..
chinnakkannan
5th May 2015, 09:40 PM
தொழில்பாட்டுக்கள் - 12 - பகுதி மூன்று
தீயணைப்புப் படை வீரன் என்பதும் ஒரு தொழில் தான்.. அதுவும் எப்பேர்ப்பட்டது..உயிர்களைக் காப்பது – கிட்டத் தட்ட போர்வீரனைப் போல..போர்வீரன் நாட்டுக்காக போர்புரிந்து உயிரை விடுகிறான்..இந்த தீயணைப்புப் படை வீரர்கள் மக்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு காத்தாலும் அவர்கள் இறந்தால் போதிய ரிகாக்னிஷன் என்பது இல்லை என்பதே உண்மை..
தீ விபத்துக்களை க் கொஞ்சம் தொலைதூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.. ரொம்பவெல்லாம் இல்லை..பார்த்ததெல்லாம் படங்களில் தான். ஒரு சில சமயங்களில் தீக்காயம் பட்டிருக்கிறது.. தீபாவளிசமயங்களில்..அவையெல்லாம் புகையாய்.. பட் தீயணைப்புப் படையின் வேலை தீயணைப்பு மட்டும் இல்லாமல் எல்லாவிதமாகவும் தகவல்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று..உடம்பு ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக வைத்துக் கொள்ளவேண்டு..ம் .. இக்கட்டான சூழ் நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்து ஆபத்தைச்சமாளிக்க வேண்டும் எனப் பல திறமைகள் வேண்டும்..
சமீபத்தில் பார்த்த மலையாளப் படம் ஃபயர் மேன்.. மம்முட்டியுடையது.. ஒரு பெரிய்ய்ய எல்பிஜி கேஸ் கண்ட்டெய்னர் லாரியிலிருந்து கழன்று டபக் டபக் டபக்கென தரையில் உருண்டு ஓரிடத்தில் மோதி நின்று விட அதனிடமிருந்து லீக் ஆகி வாயு விரைவாகப் பரவுகிறது.. ஒரு சிறு பொறி பட்டால் போதும் மூன்று கிலோமீட்டர்களுக்கு நெருப்புப் பரவிக் கருக்கிவிடும்..
எல்லாரையும் வெகேட் செய்ய வேண்டும் என மம்முட்டி சொல்ல போலீஸிற்கு ஒரு ப்ரச்னை.. என்னவெனில்.. ஒரு கிலோமீட்டரில் இருப்பது ஒரு ஜெயில் அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட கைதிகள்..
ஒரு சூழ் நிலையில் நடந்தது விபத்தல்ல என மம்முட்டி கண்டுபிடிக்க சமையல் வாயுவோ பக் பக் பக் கென திகிலெல்லாம் கொள்ளாமல் அதுபாட்டுக்குக் காற்றில் பரவ தீயணைப்பு வீரர் தலைவர் மம்முட்டி என்ன செய்தார்.. நின்றதா. ஜெயில் என்ன ஆனது.. என்றெல்லாம் சுவாரஸ்யமாகப் போகும் கதை.. பட ஆரம்பத்தில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கேட்பார் மம்முட்டி.. நீங்கள் என்னவாக ஆவீர்கள்.. ஒவ்வொருவரும் டாக்டர் இஞ்சினியர் ஐடி எனச் சொல்ல ஏன் யாருமே ஃபயர் மேன் எனச் சொல்ல மாட்டீர்கள் எனக் கேட்பார்.. மெளனம் தான் அவருக்குப் பதிலாகக் கிடைக்கும்..
நல்ல படம்..
தமிழில் ஃபயர் இஞ்சினை வைத்து மைக்கேல் மதன காமராஜனில் கமல் நடனம் ஆடியிருப்பார்.. ரம்பம் பம் ஆரம்பம் .. ( குஷ்பூவையும் காப்பாற்றுவார் ஆரம்பக்காட்சிகளில்) பட் நாட் ஸோ ஸீரியஸ்..
இன்னொரு படத்தைப் பார்க்குமுன் ராசி கதையை முடித்துக் கொள்ளலாம்..
*
ஷ்யாமாவிற்குவலி ஏற்பட்ட போது ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப் படுவதை அவளால் உணர முடிந்தது..
மெல்ல மயங்கி சில நேரம் கடந்து விழித்த போது ஹாஸ்பிடல் பெட்..இன்னும் மயக்கம் கலையவில்லை.. கலங்கிய விழிகளுக்கு தட்டுப் பட்டது அக்கா மாமா.. பக்கத்தில் புதிதாய்ப் பிறந்த பிஞ்சு..
அக்கா அவர் எங்கே.. – எதிர்பார்ப்புடன் எழும் கேள்வி
அக்கா பொங்கும் விம்மலை அடக்கி “ இப்ப வந்துடுவார்…”
“ஹச்சோ அக்கா..ஏதோ உத்வேகத்துல திட்டிட்டேன் .. நீங்க என்ன பண்றேள்னாக்க அவர் வர்றச்சே ஒரு தாலி வாங்கிட்டு வரச்சொல்லுங்க” மறுபடி ஷ்யாமா மயங்கிக் கண்மூட ரங்கசாமியும் ஷ்யாமாவின் அக்காவும் வெளியில் வர..ஷ்யாமாவின் அக்காவுக்கு கோபம்.. வந்தது..” எல்லாம் உஙக்ளால் தான்..ஒழுங்கா கல்யாணம் பண்ணிவச்சுருக்கலாம் இவங்களுக்கு… மாட்டேன் முடியாதுன்னு சொல்லி இவனும் ஏதோவேகத்துல சண்டை போட்டு ட்யூட்டி இல்லாத நேரத்துல ட்யூட்டிக்குப் போய்” ஷ்யாமாவின் அக்காவின் குரல் கம்ம…” இப்ப முழிச்சுக்கேட்டா நான் என்னபதில் சொல்ல”
ரங்கசாமியின் இளகிய மனது இறுகி” ம்ம் பெரியவாள்ளாம்சும்மா வைக்கலை சில விஷயங்களை..” என நினைத்து மைத்துனியின் நிலைமையில் மனம் இறங்கி…
ராம
ராம
ராம…
எனச் சொல்லிக்கொண்டேயிருந்தார் திரும்பத் திரும்ப..
*
வெகு அழகான நாவல்..சந்தர்ப்பம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்..
*
தீயணைப்புப் படையின் சிரமங்களைப் பற்றிசற்றே விரிவாக ச் சொல்லும் படம் விரும்புகிறேன்..
ஒரு கிராமத்தில் இரண்டு கோஷ்டி..இரண்டுக்கும் எப்போதும் சண்டை..இதற்கிடையில் வயல்வரப்புகளில் அவ்வப்போது ஏற்படும் தீவிபத்து..
கிராம மக்கள் பேசி ஒரு தீயணைப்பு இஞ்சினையும் சில வீரர்களையும் கிராமத்திலேயே நிறுத்தி வைத்துவிடுகிறார்கள்..ஹீரோவாய்ப் ப்ரஷாந்த் ஹீரோயினாய் சினேகா (முதல் படம் பட் இரண்டாவதாய் வந்தது)
அவ்வப்போது ஏற்படும் தீவிபத்துகளை அணைக்க முற்படும் போது ஹீரோவிற்கு சந்தர்ப்பவசத்தில் ஹீரோயினையும் அணைக்க முடிகிறது.. காதலால்..காதலுக்கு ஊர் எதிர்ப்பு..
கடைசியில் க்ளைமேக்ஸ் தான் உச்சமே.. நெருப்பை நீரால் தான் அணைக்க முடியும் எனத் தான் தெரியும்.. நெருப்பை நெருப்பாலேயே அணைப்பார் ஹீரோ..
கொஞ்சம் இயல்புக்கு மாறுபட்டு வந்த நல்ல படம்..பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டதால் லேட்டாக வந்து அவ்வளவாக ஓடவில்லை என நினைக்கிறேன்..
*
அதில் ஒரு பாடல்..
https://youtu.be/AiY1NryWwbo
ம்ம் ரொம்ப நீளமாய்டுச்சா.. பின்ன வாரேன்..(ஹோப் போரடிக்கவில்லை என நினைக்கிறேன்) :)
chinnakkannan
5th May 2015, 10:02 PM
ரவி..கலக்கறீங்க..அழகான பாடல்கள்..கலக்கும் கதிரவன் கலெக்*ஷன்ஸ்.. கோட் பண்ணும் வாசகங்களும் அழகு..தாங்க்ஸ்.. நடத்துங்க..
அதுவும்...
//கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே... காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே// பாடலை நினைவூட்டியதற்கு நன்றி... நல்ல பாடல்..மம்தா, நித்யா ப்ரித்வி ராஜ் என.. அடுத்த காட்சி தான் சோஹம்..ம்ம்
rajraj
5th May 2015, 10:14 PM
chinnakkaNNan,
Please empty your inbox for pm.
rajeshkrv
5th May 2015, 10:16 PM
thanks for the wishes cika
vasudevan31355
5th May 2015, 10:58 PM
Enatharumai Rajeshji!
En manapporvamaana piranthanaal vaazhthukkal. Google tamil translation is not working. Sorryji. Ippathaan velai mudinthu vanthen. Thamizhil viraivil vaazhththukiren.
http://i.ytimg.com/vi/ys5zKsqCxeg/hqdefault.jpg
chinnakkannan
5th May 2015, 11:08 PM
ராஜ் ராஜ் சார் பண்ணியாச்சு...:)
**
இந்தாங்க தமிழ் ஜூகல் பந்தி (?!) உங்களுக்காக..
*
ஒருகவிஞர் என்னடான்னா
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே
மயக்கத்தைத் தந்தவள் நீயே வழியில் வந்தவள் நீயே
இப்படி ச் சொல்றார்…கல்யாண்குமார்..ஜோடி யாருங்க்ணா பாசம்..
https://youtu.be/dT1GM18diKg?list=PL71B12F29E6DCE78C
இன்னொரு கவிஞர்
இர்வும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத்திருப்பித் தந்துவிடு எனக் காதலன் கேட்பது போல எழுதியிருக்கார்..
..
https://youtu.be/pY8WyzuCXr0
ஹூம்.. மாலைன்னாலே மயக்கம் தான்..
chinnakkannan
5th May 2015, 11:12 PM
பாவம் வாசுசார்..இப்பத் தான் டியூட்டி முடிச்சுட்டு வந்தாராம்..அவரை ஃப்ரெஷ்ஷாக்கிடலாமா..
**
இந்தக் காட்டு ராணி ஏன் இப்படித் துள்ளித் துள்ளி ஆடறா தெரியலையே..:)
*
எனக்குமிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது.. இப்பத் தான் விஷூவல் பார்க்கிறேன்..படம் பார்த்ததில்லை..லிரிக்ஸ் வெகு அழகு..(கண்ணதாசன் தானே)
*
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரைத் தாங்கும் கதிரோனே..
எனக்கொரு சிறகில்லையே ஏங்கும்
இளமைக்குத் துணையில்லையே..
குளிருக்கு நெருப்பில்லையே
பெண்ணின் குணத்துக்கு மணமில்லையே..
அன்றொரு நாள் வந்தான்
அவனை இன்றுவரை காணேன்
பறவை எனும் தோழி அவனைப் பார்த்தால்
வரச்சொல்லடி..
https://youtu.be/ujtBl7RKFEA
rajraj
6th May 2015, 12:06 AM
Happy Birthday Rajesh ! :)
rajraj
6th May 2015, 12:28 AM
From Apoorva SagotharargaL(1949)
maanum mayilum aadum solai.......
http://www.youtube.com/watch?v=2FG5rrmrdoo
From the Hindi version Nishan (1949)
Teri Meri Ye Kahani.......
http://www.youtube.com/watch?v=xJUbCnJ2ZhY
Apoorva Sagotharargal was a hit ! :)
RAGHAVENDRA
6th May 2015, 06:17 AM
Just noticed. Please accept my Belated Birth Day Greetings Rajesh
Raghavendran
RAGHAVENDRA
6th May 2015, 06:20 AM
ராகவேந்திரா அவர்களே,
வாருங்கள். வாருங்கள். நீங்கள் என்ன வாசு வந்தால்தான் திரும்ப மதுர கானம் திரிக்கு வருவேன் என்று சபதம் எடுத்திருந்தீர்களா? எப்படியோ. பரவாயில்லை. அடிக்கடி வாருங்கள். உங்கள் தேர்வு பாடல்களையும் தாருங்கள். அப்போதுதான் மணக்கும் மதுர கானமாய் இருக்கும்.
நடுவில் மூன்று நான்கு வாரங்களுக்கு கணினி பழுதேற்பட்டது மட்டுமின்றி, பல்வேறு இடைவிடாத அலுவல்கள் காரணமாக திரியில் பங்கேற்க முடியவில்லை. மற்றபடி சபதம் ஏதுமில்லை.
சபதம் என்ற உடனேயே கோபால் ஞாபகம் தான் வருகிறது. அவருடைய அபிமான நடிகரும் அபிமான (மற்ற?) நடிகையும் நடித்த படமாயிற்றே..
https://www.youtube.com/watch?v=2QUXkVvJOlg
uvausan
6th May 2015, 08:29 AM
திரு ராஜேஷ் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - நல்ல மனமும் , ஆரோக்கியமான குணமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தினமுமே பிறந்த நாள் தான் - தனியாக ஒரு நாளை நினைவில் வைத்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை .
அன்புடன்
vasudevan31355
6th May 2015, 09:09 AM
http://3.bp.blogspot.com/_6Vr9b9OoZno/TN-fLpQ0FpI/AAAAAAAAD3I/ge5AUwUH9ZM/s1600/vaali_1000_book_launch_stills_photos_06.jpg
ராஜநடை போடும் ராஜேஷ்ஜி!
பன்மொழிப் பாடல்களில் புலமை
தென்னக மொழிகளில் திறமை
தெய்வப் பாடகியின் அடிமை
தெவிட்டாத பாடல்கள் அளிக்கும் வளமை
வாலி அய்யாவின் தமிழ் வளர்ப்பு
வான் புகழ் கொண்ட சிறப்பு
நடிகர் திலகத்தின் மீது மதிப்பு
அது என்றும் நீர் கொண்ட சிறப்பு
கன்னட கானங்களின் கர்ணன்
மலையாள கானங்களில் மன்னன்
இந்திப் பாடல்களின் இந்திரன்
சமத்துவமே நாடும் சந்திரன்
ராட்சஸியை ரசிக்கும் ரசிகன்
ராப்பகலாய் உழைக்கும் ராஜன்
முகநூல் நடத்தும் முதல்வன்
முத்தாய் விவரம்தரும் முனைவன்
அந்நிய நாட்டில் வாழும் தமிழன்
அருமைப் பாடல்கள் தருவதில் தலைவன்
மதுரை தந்த மாணிக்கம்
மறக்கவே முடியாத அன்பு ஆதிக்கம்
பிறந்தநாள் காணும் சுசீலாவின் பித்தனே
அன்புப் பித்து பிடிக்க வைத்த எத்தனே
இந்த நெய்வேலி வாசுதேவன் வாழ்த்துகிறேன்
பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்று.
ராஜேஷ்ஜி!
என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Richardsof
6th May 2015, 09:38 AM
இனிய நண்பர் திரு ராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
மதுர கான திரியின் நிறுவனர் திரு வாசுதேவன் அவர்களின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது நண்பர்கள் அனைவரின் பதிவுகளும் மிக சிறப்பாக இருக்கிறது .
https://youtu.be/gFTGHCIc9lk
kalnayak
6th May 2015, 09:39 AM
பிறந்த நாள் நேற்று பிறந்த நாள் நேற்றே
திரிக்கு வந்த வேளை தெரிய வில்லை விவரம்
இருப்பினும் இல்லையென்பதற்கு தாமதம்
சிறந்தது என்பதால் தெரிந்த இப்போதாவது
வாழ்த்துவோம் பன்மொழி பாடல்கள் அறிந்த
இசையரசியின் பெருமை உணர்த்தும் இனியவர்
மதுர கானத் திரியின் மாமன்னர்களில் ஒருவர்
எனது நிலாப் பாடல்களின் பாடலாசிரியர் விவரம்
தரும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கே இனிய
பிறந்த நாள் வாழ்த்துகளை அத்துடன் அவர் இதுபோல்
பல்லாண்டு பல்லாண்டு பல்வளமும் பெற்று
சிறப்பாய் வாழ வாழ்த்துவோமே!!!
vasudevan31355
6th May 2015, 10:31 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
1
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
தமிழில் கம்பீரக் குரல்களுக்கு நடுவே மிக மென்மையாய் குழைவாய் ஒரு வித்தியாசமான குரல். இரும்பை இளக வைக்கும் இனிய குரல். பலாச்சுளை குரல் பாலா.
பாலாவின் பழைய பாடல்கள் கேட்பதில் ஒரு அலாதியான சுகம் கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. இளையராஜா வருவதற்கு முன் அவர் நடிகர் திலகம், மக்கள் திலகம், ஜெமினி, ஜெய், ரவி, முத்துராமன், சிவக்குமார், விஜயகுமார் என்று தமிழில் உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் பாடிய பாடல்கள் மீண்டும் உங்கள் நினைவுக்கு வரவேண்டும் என்பதே தொடரின் நோக்கம்.
என்னால் இயன்றவரை பாலாவின் பழைய பாடல்களை வீடியோ வடிவில் கிடைக்காத பட்சத்தில் ஆடியோ வடிவில் வழங்க உள்ளேன்.
வழக்கம் போல தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
பாலா நிறைய பழைய பாடல்கள் தமிழில் பாடியிருப்பதால் ஒவ்வொன்றையும் சுருக்கமாகத் தருகிறேன். விவரமாகத் தர ஆசைதான். (ஆனால் நேரமின்மை ராட்சஷன் இருக்கிறானே) ஆனால் முடிந்த மட்டும் எவ்வளவு பாடல்கள் இருக்கிறதோ அதில் பாதியாவது தர முயற்சிக்கிறேன்.
நிச்சயம் பாலாவின் ஒவ்வொரு பாடலும் உங்கள் அனைவரையும் குஷிப்படுத்தும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி!
முதல் பாடல் மட்டும் சற்றே விவரமாக.
http://cdn.raaga.com/r_img/250/t/t0002274-no-cd.jpg
முதலில் 'பால்குடம்' (1969) என்ற படத்திலிருந்து பாலா பாடிய ஒரு அற்புதமான பாடல். உடன் சுசீலா அம்மா. ஏ.வி.எம்.ராஜன்தான் ஹீரோ. (சி.க, முறைக்காதீர்கள். ஹீரோயின் பேரெல்லாம் சொல்ல முடியாது. வெவ்வேவேவ்வே)
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினைவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன்
பெண் முகத்தின் நினைவாக
உனக்காக....அன்பே! நான் உனக்காக.
கொஞ்சம் ஏ.எல்.ராகவன், கொஞ்சம் கண்டசாலா, கொஞ்சம் ஜேசுதாஸ், கொஞ்சம் சாய்பாபா இந்தக் குரல்களை எல்லாம் ஒரு குடுவையில் போட்டு கலந்தால் என்ன கிடைக்குமோ அது போன்ற ஒரு குரல் இந்தப் பாடலில் ஒலிக்கும் பாலாவின் குரல். ஆனால் குரல் தேன் அமுதம் இல்லாமல் வேறென்ன?
நிறைய பேர் கேட்க மறந்த பாடல். இதுதான் பாலா முதன் முதல் பாடிய பாடல் என்பவர்கள் உண்டு. 'ஹோட்டல் ரம்பா' தான் பாலாவின் முதல் படம் என்று வம்புக்கு வருபவர்கள் உண்டு. 'அதெல்லாம் இல்லை... முதல் பாடல் 'இயற்கை என்னும் இளையகன்னி' என்று 'சாந்தி நிலையம்' இல்லாமல் சாதிப்பவர் உண்டு. 'அதெல்லாம் கிடையாது... 'ஆயிரம் நிலவே வா... தான் பாலா முதன் முதல் பாடியது' என்ற அன்பு 'அடிமைப் பெண்'கள், ஆண்கள் ஒருபுறம். அதெல்லாம் நமக்கு ஏன்? பாலாவின் அமுதக் குரல் எந்தப் படத்தில் ஒலித்தால் என்ன?
நீரினில் தோன்றிய நிழலல்ல காதல்
நினைவுகள் தீட்டிய காவியப் பாடல்
உன்னை எதிர்பார்க்கும் மனமெனும் ஊஞ்சல்
இன்றே நீ வருக
இதயம் நலம் பெறவே
இதழால் தேன் தருக
உனக்காக
அன்பே!
நான் உனக்காக
முதல் பாடல் தமிழில் என்பதை நம்ப முடியாத அளவிற்கு பாலாவின் அசத்தல்.
பாடலின் நடுவில் ஒரு வில்லத்தனமான சிரிப்பொலி வருவதை மறக்காமல் கேட்டு என்ஜாய் செய்யுங்கள்.
சுசீலா அமர்க்களம். ஜாடிக்கேத்த மூடி.
காதலன் எழுதிய கடிதத்தை கவிதை நயத்துடன் காதலி பாடலாக வாசிப்பதை சுசீலா எவ்வளவு அற்புதமாக பிரதிபலிக்கிறார்!
அன்புநிறைக் காதலியே
அழகுமலர் பூங்கொடியே
திருமுகத்தில் நிலவெழுதி
இருவிழியில் மையெழுதி
உலவுகின்ற பேரழகே
உனக்கொன்று எழுதுகிறேன்
அருமையான வரிகள்தானே!
இன்னும் கவனியுங்கள். இதற்கு பின்னால் வரும் இசையமைப்பாளரின் (மெல்லிசை மன்னர் !?) அற்புதங்களை அனுபவிக்க மறந்து விடாதீர்கள் நண்பர்களே!
(ராகவேந்திரன் சார்! சில இணையதளங்களில் இசை 'சூலமங்கலம் சகோதரிகள்' என்று போட்டிருக்கிறார்கள். 'மெல்லிசை மன்னர்' என்று சில இணையதளப் பக்கங்கள் கூறுகின்றன. எது உண்மை ராகவேந்திரன் சார்? 'மெல்லிசை மன்னர்'தானே?)
இந்த இடத்தில் இசைக்கப்படும் இசைக்கருவிகளின் ஆதிக்கத்தை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
வார்த்தைகளில் கவிதை வசித்தவர் (சுசீலா)
மலர் போல என் மனதை
பறித்ததுதான் பறித்தாயே
குழலோடு சூடாமல்
சுடுநெருப்பில் ஏன் எறிந்தாய்?
என்று திடுமென்று 'ராகத்தேன்' எடுத்து தெவிட்டாத இனிமை விருந்து படைப்பாரே!
பஞ்சமில்லா இனிமை.
கேட்டால்தான் தெரியும் மகிமை.
முதல் பாதியை பாலா ஆக்கிரமிப்பார் என்றால் இரண்டாம் பாதியில் சுசீலா சுகம் வீசுகின்றார்.
'மெல்லிசை மன்னரி'ன் மாபெரும் இசை ஜாலம். இசை பாடலுடன் பின்னி இணையும்.
ஒரே வரி! அற்புதம். ஆனால் உரிய அங்கீகாரம் கிடைத்ததா?
அப்புறம் பாடலைக் கேட்டு பாடலைப் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் பாடலை நீங்கள் கேட்டீர்களா இல்லையா என்று நான் புரிந்து கொள்ள முடியும். நடுநடுவில் நான் டெஸ்ட் வைப்பேன்.:) பாஸாக வேண்டும்.:) என்ன புரிந்ததா?:)
இந்தப் படத்தின் வீடியோ கிடையாது. ஆனால் பாடல் பாலா புகைப்படங்களோடு வீடியோவாகக் கிடைக்கின்றது. மறக்காமல் பாலாவின் விதவிதமான போட்டோக்களையும் கண்டு களியுங்கள்.
https://youtu.be/oEyWNivZz_I
chinnakkannan
6th May 2015, 01:17 PM
அஹோ வாரும் வாசு தேவரே.. புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்..அழகாய்ப் பாலா பற்றி ஆரம்பித்திருக்கிறீர்கள்..
//ஹீரோயின் பேரெல்லாம் சொல்ல முடியாது. வெவ்வேவேவ்வே) // ஹையாங்க்..இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன் :)
மல்லிகைப்பூ வாங்கிவந்தேன்ல உனக்காக அ அ அன்பே ஏஏஏ நான் உனக்காக என இழுப்பது மிக அழகாக இருக்கும்..வழக்கம்போல் வீட் போய்கேட்கிறேன்..
படக் படக்க்னுமனசுல லிஸ்ட் விரியுதுங்க்ணா..வி வில் வெய்ட் ஃபார் யுவர் தொடர் அண்ட் நெக்ஸ்ட் சாங்க்க்..
நிலாதான் காணோம் எங்க போச்சு
வீடியோக்கு மதுண்ணா இருக்காக..
uvausan
6th May 2015, 01:31 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 9
மலர்கள் நனைந்தன பனியாலே -
--------------------------------
--------------------------------
பொழுதும் விடிந்தது கதிராலே
இதயகமலம்
என்ன அருமையான பாடல் - ராகம் மோகனம் என்று நினைக்கிறேன் .
இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
---------------------------------------------
----------------------------------------------
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
காதலின் மென்மையையும் , தாம்பத்தியத்தின் நுணுக்கங்களையும் மிகவும் அழகாக , முகத்தை சுளிக்க வைக்காமல் , பி .சுசீலாவின் குரலில் மதுர கானமாக நம்மை இன்னும் ஆக்கரமித்து கொண்டிருக்கின்றது.
மலர்கள் நனைந்தன பனியாலே - என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே - என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே - என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
.
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் - இரு
கன்னம் குழிவிழ நகை செய்தான்
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் - இரு
கன்னம் குழிவிழ நகை செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான் - அதில்
எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை
சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை
சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
மலர்கள் நனைந்தன பனியாலே -என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
இறைவன் முருகன் திருவீட்டில் என்
இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
இறைவன் முருகன் திருவீட்டில் என்
இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி
மலர்கள் நனைந்தன பனியாலே என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
https://youtu.be/51MO3MIWGiY
uvausan
6th May 2015, 01:58 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 10
சுதந்திர பூமியில் பல வகை ஜனங்கலும் -
----தர்மம் எங்கே ? -------------
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
தேசம் அவனிடம் ஓடும்,
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
உயரும் வரலாறில்லை,
சூரியன் போகும் திசையினில் எல்லாம்
வளையும் சூரியகாந்தி,
நேரிய வழியில் நிதமும் நடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி
எவ்வளவு அருமையான , எதார்த்தமான வரிகள் - இவ்வளவு அழகாக இன்னும் தமிழில் வார்த்தைகள் கிடைக்குமா என்பது சந்தேகமே ... சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து நேப்பாள் பூகம்பத்தை ஏற்படுத்திய படம் - எல்லா பூக்களும் நடிகர் திலகத்தின் அழகையும் , நடிப்பையும் ரசிப்பதை பாருங்களேன் - தாங்கள் அவ்வளவு அழகில்லை அவரை வைத்து பார்க்கும் போது என்று தோல்வியை தழுவி பரிதாபமாக தவிப்பதையும் இந்த பாடலில் பார்க்கலாம்
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
.
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
மங்கள மங்கை என்போம்,
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
மங்கள மங்கை என்போம்,
மனிதனின் வாழ்கையில் நாணயம் இருந்தால்
மனிதருள் மாணிக்கம் என்போம்,
பண்ணிரண்டாண்டில் ஒரு முறை மலரும்
குருஞ்சி மலர்களைப்போலே,
தன்னலம் இல்ல தலைவர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே,
.
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
.
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்,
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்,
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
தேசம் அவனிடம் ஓடும்,
எல்லா மலரும் இறைவன் படைப்பும்
அவனது தோட்டம்,
தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்
என்பது சுயநலக்கூட்டம்,
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
.
இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
பெருமை உடையது முல்லை,
இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
பெருமை உடையது முல்லை,
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
உயரும் வரலாறில்லை,
சூரியன் போகும் திசையினில் எல்லாம்
வளையும் சூரியகாந்தி,
நேரிய வழியில் நிதமும் நடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி,
.
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
==================================
https://youtu.be/2gFduyZImR0
Russellzlc
6th May 2015, 02:58 PM
நண்பர் திரு.ராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
6th May 2015, 03:05 PM
கல்நாயக்,
பூக்கள் விடும் தூது திரைப்படம் 1983-ம் ஆண்டில் வெளிவந்தது (என்று சொல்லக் கேள்வி) 32 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, முதல் வெளியீட்டில் பார்த்திருக்கிறீர்கள் என்றால்....
எந்தவித மரியாதை விகுதியின்றி உங்களை வெறும் பெயர் மட்டுமே சொல்லி அழைக்க எனக்கு அனுமதி கொடுத்த உங்கள் பெருந்தன்மையை நினைத்தால்........ ரொம்ப நன்றிங்கய்யா.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
6th May 2015, 03:20 PM
வாசு சார்,
-----------
கொஞ்சம் ஏ.எல்.ராகவன், கொஞ்சம் கண்டசாலா, கொஞ்சம் ஜேசுதாஸ், கொஞ்சம் சாய்பாபா இந்தக் குரல்களை எல்லாம் ஒரு குடுவையில் போட்டு கலந்தால் என்ன கிடைக்குமோ அது போன்ற ஒரு குரல் இந்தப் பாடலில் ஒலிக்கும் பாலாவின் குரல். ஆனால் குரல் தேன் அமுதம் இல்லாமல் வேறென்ன?
-------------
இதுபோன்ற அமுதத்தை விட சுவையான வர்ணனைகளை கொடுக்காமல் 3 மாதம் காயவைத்து விட்டீர்களே? நியாயமா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
6th May 2015, 03:25 PM
ரவி சார்,
சிறந்த ரசிப்புத்தன்மை இருந்தால்தான் இதுபோன்ற பாடல்கள் தோன்றும். பாராட்டுக்கள். நன்றிகள்.
சின்னக்கண்ணன்,
தொழில்பாட்டும் உங்கள் உழைப்பும் பாராட்டத்தக்கது. நீங்கள் சொல்வது சரிதான். மறுக்க முடியவில்லை. ஞாயிறு என்பது... பாடலில் ‘சேர்ந்தே வந்தாள் அழகாக....’ என்று இருந்திருக்கலாம். ஏனென்று தெரியவில்லை. ஏதாவது காரணம் இருந்தால் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
6th May 2015, 04:30 PM
//பாடலில் ‘சேர்ந்தே வந்தாள் அழகாக....’ என்று இருந்திருக்கலாம். ஏனென்று தெரியவில்லை. ஏதாவது காரணம் இருந்தால் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுகிறேன்.// வாங்க கலை.. நன்றி.. வேறென்ன இந்த ஆணாதிக்க மனப்பான்மை தான் :)
இன்னொரு பாட்டில்..
அந்த மலைத்தேன் இது என மலைத்தேன்.. என்பார் டி.எம்,எஸ் நடிப்புச்சுடர் வாயசைக்க.. அதுவே காஞ்ச் மலைத்தேன் இவரென மலைத்தேன் என்பார்.. ம்ம் என்னபண்ண..இந்தக்கால்த்தில் மாறிவிட்டது என்று சொல்ல மட்டும் செய்கிறார்கள்.. பட்.. நதிங்க் இஸ் சேஞ்ச்ட் இஸிண்ட் இட்? (ஹை இதை வச்சே நீங்க ஒரு ஆர்ட்டிகிளும் பாட்டும் போடலாம் கலை..(விடறதாயில்லை :) )
rajeshkrv
6th May 2015, 06:13 PM
http://3.bp.blogspot.com/_6Vr9b9OoZno/TN-fLpQ0FpI/AAAAAAAAD3I/ge5AUwUH9ZM/s1600/vaali_1000_book_launch_stills_photos_06.jpg
ராஜநடை போடும் ராஜேஷ்ஜி!
பன்மொழிப் பாடல்களில் புலமை
தென்னக மொழிகளில் திறமை
தெய்வப் பாடகியின் அடிமை
தெவிட்டாத பாடல்கள் அளிக்கும் வளமை
வாலி அய்யாவின் தமிழ் வளர்ப்பு
வான் புகழ் கொண்ட சிறப்பு
நடிகர் திலகத்தின் மீது மதிப்பு
அது என்றும் நீர் கொண்ட சிறப்பு
கன்னட கானங்களின் கர்ணன்
மலையாள கானங்களில் மன்னன்
இந்திப் பாடல்களின் இந்திரன்
சமத்துவமே நாடும் சந்திரன்
ராட்சஸியை ரசிக்கும் ரசிகன்
ராப்பகலாய் உழைக்கும் ராஜன்
முகநூல் நடத்தும் முதல்வன்
முத்தாய் விவரம்தரும் முனைவன்
அந்நிய நாட்டில் வாழும் தமிழன்
அருமைப் பாடல்கள் தருவதில் தலைவன்
மதுரை தந்த மாணிக்கம்
மறக்கவே முடியாத அன்பு ஆதிக்கம்
பிறந்தநாள் காணும் சுசீலாவின் பித்தனே
அன்புப் பித்து பிடிக்க வைத்த எத்தனே
இந்த நெய்வேலி வாசுதேவன் வாழ்த்துகிறேன்
பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்று.
ராஜேஷ்ஜி!
என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாசு ஜி. அருமை .. இதைவிட சிறந்த பிறந்த நாள் பரிசு ஒன்று கிடைக்குமா .. நன்றி நன்றி நன்றி
rajeshkrv
6th May 2015, 06:17 PM
வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
Russellzlc
6th May 2015, 08:09 PM
‘சேவல் வந்து முட்டையுமிட்டது
தேசம் நல்லால்லே...’
சின்னக்கண்ணன், திடீரென்று ஐடியா கொடுத்து விட்டீர்கள். ஆமால்ல, என்ன அநியாயம்? (நானும் விடறதா இல்ல)
பெண்களை சமமாக மதிக்கும் போக்கு சமுதாயத்தில் இன்னும் வரவில்லை (நான் பாடலை சொல்லவில்லை). யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு லேகியத்தை தயாரித்து ‘இதை சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும்’ என்று கூறி மருந்தை விற்கிறார். இது பாலியல் சமத்துவத்துக்கு எதிரானது என்று நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பியுள்ளன எதிர்க்கட்சிகள். பஞ்சாபிலே மோகா என்ற இடத்தில் ஓடும் பேருந்தில் இரக்கமற்ற அரக்கர்களால் பாலியல் தொல்லை காரணமாக பேருந்தில் இருந்து தாயும் மகளும் குதித்துள்ளனர். இதில் மகள் 13 வயது சிறுமி பலியாகியிருக்கிறாள். நமது நாட்டில் இன்னும் இப்படித்தான் இருக்கிறது பெண்களின் நிலை.
இந்தக் கொடுமைகளுக்கு நடுவே சமீபத்தில் ஆறுதல் அளிக்கும் செய்தி ஒன்று. மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு, சமூக அரவணைப்பு, உரிமைகளை பாதுகாக்க தனி நீதிமன்றங்கள், நல ஆணையம் போன்றவற்றை அமைக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கிறது. இருந்தாலும் பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறது. இன்னும் மக்களவையில் மசோதா நிறைவேற வேண்டும்.
மனித உயிர்களாகவே அவர்களை மதிக்காமல் ஓட்டுரிமை கூட இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்தான் அதுவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. அவர்களின் உரிமைகளுக்காக தனிநபர் மசோதா கொண்டு வந்து, நிறைவேற்ற காரணமாக இருந்த திமுக எம்.பி. திருச்சி சிவா பாராட்டுக்குரியவர்.
திருநங்கைகள் கலந்து கொள்ளும் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது.
-----
இந்த நேரத்திலே, விஜயபுரி வீரன் படத்தின் பாடல் நினைவுக்கு வருகிறது. என்னைக் கவர்ந்த பாடலும் கூட. திரு.ஆனந்தன் அவர்கள் பெண் வேடமிட்டு பாடி நடித்துள்ள பாடல்.
‘வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது பின்னாலே.. ’ திரு.ஆனந்தன் அவர்கள் வாள் வீசும் திறன் கொண்டவர் மட்டுமல்ல, நல்ல டான்ஸர். இந்தப் பாடலில் அவர் போடும் ஸ்டெப்ஸ்களே அதை நிரூபிக்கும்.
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் பார்த்தால், அவர்கள் சம உரிமை பெற்று மதிக்கப்படுவது எப்போது? இந்தப் பாடலில் வரும் கீழே உள்ள வரிகளில் காணப்படும் அசாத்திய சம்பவங்கள் நடந்தால்தான் அதுவும் நடக்குமா? என்று தோன்றுகிறது.
‘சேவல் வந்து முட்டையுமிட்டது
தேசம் நல்லால்லே
சினை காளை மாடு கன்று போட்டது
காலம் நல்லால்லே.....’
பெண்களை இழிவாகப் பேசுகிறவர்களை பார்த்தால்,
‘சிலர் வாக்கு நல்லால்லே
அதைக் கேட்க நல்லால்லே
போற போக்கு நல்லால்லே..’
என்று தோன்றுகிறது.
திருநங்கைகள் மசோதா கூட பல்வேறு தடைகளை தாண்டித்தான் நிறைவேறியிருக்கிறது. பல எம்.பி.க்கள் மட்டுமல்ல, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் (Social Justice and Empowerment) துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூட மசோதாவை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு திரு. சிவாவை கேட்டுள்ளார். பல்வேறு தடைகளை தாண்டித்தான் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டியிருக்கிறது.
ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே சட்டசபையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த டி.என்.அனந்தநாயகி அம்மையாரும் நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டார்.
டி.என். அனந்தநாயகி அம்மையார் கூட்டங்களிலே மிகக்கடுமையாக பேசுவார். 1971ம் ஆண்டு தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக திரு.ம.பொ.சி. அய்யா அவர்களும் (அவர் தமிழரசு கழகத் தலைவராக இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்) ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் டி.என்.அனந்தநாயகி அம்மையாரும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அனந்தநாயகி அம்மையாரின் பேச்சுக்களும் அதையடுத்து ஏற்பட்ட கலாட்டாவும் ஜகப்பிரசித்தம்.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் (1971-76) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவை காங்கிரஸ் எதிர்த்தது. சட்டப் பேரவையில் மசோதா மீது பேசிய அனந்த நாயகி அம்மையார் ‘‘இந்த மசோதா தேவையற்றது. எங்கள் ஊரில் பிடாரி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்தான் பூசாரியாக இருக்கிறார். பிறகு எதற்கு இந்த மசோதா?’’ என்றார்.
(ஆனால் சட்ட மசோதாவின் நோக்கம் வேறு. இடதுபதம் தூக்கி நடராஜப் பெருமான் ஆடும் (உங்கள் ஊரில் மட்டும் மீனாட்சிக்கு மரியாதை கொடுத்து அம்மன் இருக்கும் திசையில் காலை தூக்காமல் வலது பதம் தூக்கி ஆடும் நடராஜரை பாராட்ட வேண்டும் சின்னக்கண்ணன்) தில்லையம்பலத்திலும்,
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே.
.... என்று தொண்டரடிப்பொடியாழ்வார் வியந்து போற்றிய அழகன், அரங்கமாநகருளான் கோயிலிலும் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகராக வேண்டும் என்பதே மசோதாவின் நோக்கம்)
அதுபற்றி சர்ச்சை தேவையில்லை. மசோதா பற்றிய விளக்கத்தைத்தான் சொன்னேன். விஷயத்துக்கு வருவோம். அனந்த நாயகி அம்மையாரின் எதிர்ப்புக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் சொன்ன பதில்...
‘‘தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகர் ஆவதை பிடாரிகள் கூட ஏற்கிறார்கள். சில அடங்காப் பிடாரிகள் ஏற்க மறுக்கிறார்கள்’’
அவையே சிரிப்பால் குலுங்க அதில் தானும் கலந்து கொண்ட அனந்த நாயகி அம்மையார் அமர்ந்து விட்டார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
uvausan
6th May 2015, 10:16 PM
திரு கலை வேந்தன் - உங்கள் பதிவு ,மிகவும் அருமை - ஞாபக சக்தி எல்லோருக்கும் வந்துவிடாது - அதற்க்கு ஒரு குடுப்பினை இருக்க வேண்டும் - அந்த இறைவனின் கருணையும் இருக்க வேண்டும் - உங்களுக்கும் , திரு முரளிக்கும் , திரு ராகவேந்திரா வுக்கும், திரு வாசுவிர்க்கும், திரு கல்நாயக் அவர்களுக்கும் , பெரிய கண்ணனாக பதிவுகள் போடும் திரு சின்ன கண்ணனுக்கும் இந்த அபூர்வ சக்தி இயற்கையாகவே அமைந்துள்ளது - நேற்று நடந்தது என்னவென்று என்று என்னை யாராவது கேட்டால் கூகுள் உதவி இல்லாமல் எனக்கு சொல்ல வராது . நீங்கள் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் யை விவாதிக்க தனி திரியே வேண்டும் . அவ்வளவு விஷயங்கள் உள்ளன --- discrimination என்றால் என்ன ? differentiation என்றால் என்ன ? என்று பலருக்கு புரிவதில்லை - differentiation is tolerable but not discrimination ---
ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரருக்குள் வரவழைத்த உங்களால் எதைத்தான் இனிமையாக எழுத முடியாது !!
அன்புடன்
ரவி
Murali Srinivas
7th May 2015, 12:04 AM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜேஷ்!
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
rajraj
7th May 2015, 04:17 AM
We have heard song in Tamil,Telugu,Kannada, Malayalam and Hindi.
I take the liberty to post a Western Classsical piece conducted by Zubin Mehta, former conductor of New York Philharmonic.
Bolero
http://www.youtube.com/watch?v=8zh70izqAfo
If you never attended a western classical concert you might consider attending his concert in Madras in Oct 2015.
Getting used to western classical takes some time. Just sample it in person! :)
RAGHAVENDRA
7th May 2015, 06:30 AM
ஜூபின் மேத்தா..
உலக அளவில் இந்தியனின் பெருமையை அந்தக் காலத்திலேயே நிலை நாட்டிய இசை மேதை..
அவருடைய வருகையைப் பற்றிய தகவலுக்கு நன்றி ராஜ்ராஜ் சார்
vasudevan31355
7th May 2015, 08:06 AM
கலை சார்,
நன்றி!
பாலியல் பிரச்னை, திருநங்கைகள் விஷயம், டி.என்.அனந்தநாயகி விஷயம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்ட மசோதா விஷயம், கருணாநிதியின் நகைச்சுவை நையாண்டி விஷயம், நடராஜர் எந்தெந்த ஊரில் எப்படி காலைத் தூக்கி ஆடுகிறார் என்ற விஷயம், 1971ம் ஆண்டு தேர்தல் இத்தனை விஷயங்களுடன் சேர்ந்து ஆனந்தன் திருநங்கையாக மாறி வேஷம் கட்டி பாட்டு பாடும் விஷயம் என்று ஒரே பந்தில் ஒன்பது ரன் (பார்த்தீர்களா கலை! என்னையுமறியாமல் எண்ணிக்கை எப்படி வந்தது என்று. பிளான் பண்ணாமலேயே வருகிறது. நான் என்ன செய்ய!?:-P) அடிக்க உங்களால் மட்டுமே முடியும். (ஆமாம்! அடங்காப்பிடாரி பெண் பாலா? ஆண்பாலா? ஆண்பாலாக இருந்தால் அடங்காப்பிடாரனா? பிடாரன் என்று தனியே சொன்னால் பாம்பு பிடிக்கும் பாம்பாட்டிதானே? அப்போ அடங்காமல் ஆடும் 'திருநங்கை' ஆனந்தனை என்ன சொல்வது? (அப்படியே 'டிஸ்கோ' சாந்தி மாதிரியே இருக்கும். ம்.. விதை ஒன்னு போட்டா துரை ஒன்னா முளைக்கும்?):-P முடியலை கலை சார்.
http://sim05.in.com/71b12d68516fdf63db82a1fdfd63f59c_ls_lt.jpg
அதற்கு முன்னால் ஒன்று. வாள் வீச்சில் சிறந்தவரான ஆனந்தன் எம்.ஜி.ஆர் அவர்களிடம் 'நீரும் நெருப்பும்' படத்தில் காட்டில், வாழைத் தோப்பில் நடக்கும் கத்திச் சண்டையில் 'தோரஹா' ரேஞ்சிற்கு பேன்ட் சட்டையெல்லாம் கிழிந்து, உள்ளாடைகள் தெரியுமளவிற்கு சிதைந்து சின்னாபின்னமானதை என்னவென்று சொல்ல!
'ஜாம் ஜாம் ஜாம் என்று சந்தோஷமா' தளிர் நடை போட்ட 'யானை வளர்த்த வானம்பாடி' மகன் ராஜ பீமனுக்கா இந்த நிலைமை?
கருணாநிதி ஜோக் ஒன்று நான் சொல்லட்டுமா? உங்களுக்குத் தெரியாததா?:-P
காவல்துறை அசிஸ்டன்ட் கமிஷனர் (A.C) ஒருவருக்கு பாராட்டு விழா ஒருமுறை இவர் தலைமையில் நடந்ததாம். விழாவில் பரிசு வாங்கப் போகும் கமிஷனர் முதல்வர் கருணாநிதி (அப்போது:-P ) முன்னால் சில வார்த்தைகளை மேடையில் பேச வேண்டுமாம். அதற்கு அவர் தன்னை முன்னமேயே தயார்படுத்திக் கொண்டிருந்தாராம். அவரது நண்பர்கள் "முதல்வர் முன்னால் தைரியமா பேசிடுவே இல்லே" என்று கேட்டனராம். "அது என்ன பிரமாதம்? முதல்வரே ஆச்சர்யப்படும் அளவிற்கு வெளுத்து வாங்கிட மாட்டேன்?" என்று அலட்சியமாக பதில் தந்தாராம் அந்த காவல் துறை உதவி ஆணையர்.
இப்போது மேடைக்கு வந்தாகி விட்டது. கருணாநிதி அந்த அதிகாரிக்கு பதக்கம் அணிவித்து விட்டார். இப்போது அந்த அசிஸ்டன்ட் கமிஷனர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து பேச வேண்டிய நேரம். அதுவரை தைரியமாய் இருந்த கமிஷனர் கருணாநிதி முன்னால் பேச எழுந்தவுடன் நெர்வஸ் ஆகிவிட்டார். வாய் குழறுகிறது. வார்த்தைகள் மட்டுமல்ல... கையும் காலும் உதற ஆரம்பித்து விட்டது. அந்த மேடை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட (Air Condition) மேடை வேறு. அப்படியும் அந்த கமிஷனருக்கு பயத்தில் வேர்க்க ஆரம்பித்துவிட்டது. பரிசு தந்தவர் பேச்சில் பேய் ஆயிற்றே!:-P ஒருவழியாக கமிஷனர் கருணாநிதிக்கு நன்றி கூறி முகத்தில் உள்ள வேர்வையை கர்ச்சிப்பால் துடைத்தபடி தன் இருக்கையில் அமர்ந்தார்.
இப்போது கருணாநிதி பேச வேண்டும். கருணாநிதி பேச எழுந்தவுடன் என்ன சொன்னார் தெரியுமா?
"AC யிலும் A.C க்கு இப்படி ஏன் வேர்க்கிறது?"
அப்போது அந்த கமிஷனரின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
எப்படி கலை? ஆளை விடுங்க சாமி.
இந்தாங்க.
‘வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது முன்னாலே'
(கலை சார்,
ஒரு சிறு திருத்தம். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் 'விஜயபுரி வீரன்' அல்ல. ஏ.வி.எம்.தயாரித்த 'வீரத் திருமகன்' படம்.)
http://i.ytimg.com/vi/VDe4s49DqMs/maxresdefault.jpg
பாடலின் நடுவில் 'தானனனன்னா' 'லாலலலல்லா' என்றும், 'அஞ்சுது கொஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது பார் கண்ணாலே' என்றும் 'டாண் டாண் டாண் டாண் ' என்றும் 'கிறீச்' குரலில் ஒலிக்கும் குரல் 'பலகுரல் மன்னன்' சதன் அவர்களுடையது.'சொர்க்கம்' படத்தில் 'சொல்லாதே யாரும் கேட்டால்' என்று பாடியபடி 'நடிகர் திலகம்' காரின் முன்னால் ஸ்டைலாக நடந்து வருவாரே... அப்போது அவருடைய கார் டிரைவராக வருபவர்தான் சதன் என்று நான் சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரியுமே. "நான் ஏங்க சொல்லப் போறேன்' என்ற பாவனையில் சதன் வாயை மூடிப் பொத்தி வருவது சூப்பராக இருக்கும் கலை சார்.)
https://youtu.be/3VAX91N3uJc
chinnakkannan
7th May 2015, 11:16 AM
கலை வேந்தன் .. நன்றி.. ஃபார் யுவர் ரைட் அப்.. நைஸ் ரைட் அப்..:) அடுத்தது எப்போங்க்ணா..
வாசு ..ங்க்ணா.. கொஞ்சம் குத்திவிட்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நு காற்று விரைவாக வெளியேறும் பலூனைப் போல..ஆஹா ஒரு பாட்டுக்கு எவ்வளோ வர்ணனைகள், அரசியல் நிகழ்வுகள்.. நைஸ்.. அண்ட் தாங்க்ஸ்..
uvausan
7th May 2015, 12:29 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 11
SRI SURYANARAYANA MELUKO
இந்த பாடல் எந்த படத்திலும் இருந்து எடுக்கப்பட்டதல்ல - மனதை உருக வைக்கும் பாடல் - கிடைத்த அந்த வினாடியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை படுகிறேன் - இந்த பாடலை எந்த மதத்தினரும் கேட்கலாம் . Beautiful songs with lyrics. Beautiful picturization of the exact flowers mentioned in the song , describing Lord Surya narayana,who is the Life Giver to entire living beings on earth. The song also describes various stages of Sun God's movements in a day.
5 நிமிடங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள் - நீங்கள் வேறு புதிய உலகத்தில் இருப்பதைப்போல உணர்வீர்கள் - அந்த உலகத்தில் பகைமை இல்லை , விரோதம் இல்லை , கர்வம் இல்லை , அகந்தை இல்லை - எல்லோரும் சமம் - எங்கு திரும்பினாலும் சந்தோஷம் ஒன்றையே உணர்வீர்கள்.
https://youtu.be/4hWpHpwHU3U
uvausan
7th May 2015, 12:50 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 12
இரவுக்கு 1000 கண்கள் - பகலுக்கு ஒன்றே ஒன்று - குலமகள் ராதை
இங்கே இரவுக்கு 1000 கண்கள் என்பது நட்சத்திர கூட்டத்தை குறிப்பதாகும் - ஆனால் பகலுக்கோ சூரியன் என்ற ஒரே கண் தான் உள்ளது
"பெண்மையின் பார்வை ஒருகோடி.....அவை பேசிடும் வார்த்தை பல கோடி. " எப்படிப்பட்ட வார்த்தைகள் - அழகிய குரல் - படத்தில் பாடுபவரும் ஒரு அழகி - படத்தின் கதாநாயகனோ , மன்மதனை அழகில் தோற்க அடித்தவன் - பாடல் மட்டும் அழகாக இல்லாமலா இருக்க முடியும் ?
" அங்கும் இங்கும் அலை போலே , தினம் ஆடிடும் மானிடர் வாழ்விலே - எங்கே நடக்கும் , எது நடக்கும் , அது எங்கே முடியும் யாரறிவார் ???"
இந்த வரிகள் - உயிரோட்டோம் உள்ள வரிகள் - அதனால் தான் இப்படிப்பட்ட பாடல்கள் , காலங்கள் பல கடந்தும் கேட்க்கும் இனிமையை இழப்பதில்லை.
https://youtu.be/yQHDlc2zvvY
chinnakkannan
7th May 2015, 01:57 PM
//" அங்கும் இங்கும் அலை போலே , தினம் ஆடிடும் மானிடர் வாழ்விலே - எங்கே நடக்கும் , எது நடக்கும் , அது எங்கே முடியும் யாரறிவார் ???" // வெகு அழகான பாடல் .. தாங்க்ஸ் ரவி..இதை வைத்தே ஒரு சிறுகதை “ச்ச்ச் ச்யாமளி” கதைகள் இழையில் போஸ்ட் செய்திருந்தேன்...
Russellzlc
7th May 2015, 03:06 PM
வாசு சார், ரவி சார், சின்னக் கண்ணன் பாராட்டுக்கு நன்றி.
வாசு சார்,
எனது பதிவுக்கு பதிலாக விஷுவல் ட்ரீட்டுடன் பெரிய விருந்தையே படைத்து வீட்டீர்கள்.
‘விதை ஒன்னு போட்டா துரை ஒன்னா முளைக்கும்’...... வயிறு வலிக்க சிரித்தேன்.
திரு.கருணாநிதி அவர்களின் நகைச்சுவை டாப்.
இதேபோல, அவர் தலைமையேற்ற ஒரு விழாவில், ஒரு நாதஸ்வர வித்வான் பிரமாதமாக வாசித்தார். நாதஸ்வரத்தை சபையில் கம்பீரமாக அந்த வித்வான் வாசிப்பாரே தவிர, பேச வராது. எனவே, எழுதி வைத்துக் கொண்டு நன்றியுரை வாசித்தார். என்றாலும், சபைக் கூச்சம் காரணமாக நடுக்கத்துடனேயே, சபையினரின் சிரிப்புக்கிடையே உரையை வாசித்தார்.
அது முடிந்ததும் திரு. கருணாநிதி கூறினார்...
‘நாதஸ்வரம் வாசிக்கும்போது மட்டுமல்ல, நன்றியுரை வாசிக்கும்போதும் நம்மை ரசிக்க வைக்கிறார்.’
கால் மாற்றி ஆடிய நடராஜரைப் போல, அவசரத்தில் வீரத்திருமகனை, விஜயபுரி வீரனாக மாற்றி விட்டேன். தவறை சுட்டிக் காட்டி திருத்தியதற்கு நன்றி.
ஒரே பந்தில் 9 ரன் என்று கூறியிருக்கிறீர்ளே? எண்ணிப் பார்த்தால் 8 தான் வருகிறது. இருந்தாலும் நீங்கள் தெரியாமல் ஒன்று குறைக்கவில்லை. நடிகர் திலகத்தின் முன் வாய் பொத்தி நிற்கும் சதன் படத்தை போட்டிருக்கிறீர்களே... அதுதான் அந்த 9வது ரன். நன்றி சார்.
ரவி சார்,
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்களும் வர்ணணைகளும் அருமை.
‘‘5 நிமிடங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள் - நீங்கள் வேறு புதிய உலகத்தில் இருப்பதைப்போல உணர்வீர்கள் - அந்த உலகத்தில் பகைமை இல்லை , விரோதம் இல்லை , கர்வம் இல்லை , அகந்தை இல்லை - எல்லோரும் சமம் - எங்கு திரும்பினாலும் சந்தோஷம் ஒன்றையே உணர்வீர்கள்’’
...........இங்கு வரும்போது அந்த சந்தோஷத்தை உணர்கிறேன். நன்றி சார்.
சின்னக்கண்னண்,
நன்றி. நேற்று கூட பிளான் எல்லாம் செய்யவில்லை. நீங்கள் கொடுத்த ஹிண்ட்டை பார்த்ததும் தோன்றியது. அப்பப்போ இப்பிடி எதுனா இஸ்து வுடுங்க.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
7th May 2015, 03:08 PM
சி.க., 3ஆம் தேதி வரையிலான உங்கள் பதிவுகள்:
பெண்களின் பருவங்களைப் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை. அதுவும் மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எல்லா விவரங்களும் தெரிந்து கொண்டேன். மரத்தைப் பற்றிய பதிவும் நன்றாக இருந்தது. என்ன மரம் வரும் பாடல் உடனடியாக உங்களுக்கு எதுவும் தோணவில்லையா? உங்களுக்கே இப்படி என்றால், எனக்கு?. வெகு சிரமப் பட்டு போராடி இதோ நடிகர் திலகத்தின் படத்திலிருந்து ஒரு புளிய மரப் பாடல் (ஆடியோ மட்டுமே):
https://www.youtube.com/watch?v=LUgTEKtLB_8
இன்னொரு புளிய மரப் பாடல் இதோ: (என்னத்த சொல்றதுஇதைப் பத்தி, எனக்கு ஒண்ணும் தெரியலையே?)
https://www.youtube.com/watch?v=Rqeq0SLQy4c
பொங்கும் பருவத்திற்காக கொடி மலரில் காஞ்சனாவின் 'கண்ணாடி மேனியடி, தண்ணீரில் ஆடுதடி' பாடலும் அதே படத்தில் ஏ.வி.எம். ராஜனைப் பார்த்து துள்ளிக் குதிக்க பதிலுக்கு ஏ.வி.எம். ராஜன் பாடும் பாடல் "சிட்டாக துள்ளித் துள்ளி.." என்று பாடும் பாடலும் வெகு பொருத்தம்.
"ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்" என்று தேவிகா பாடலைப் படித்ததும் அது என்ன படம் என்று போடக்கூடாதா என்று மனதில் உங்கள் மேல் கோபம் கொண்டேன். பின்னால் வந்தது பாருங்கள் தாயே உனக்காக என்று அவ்வளவு அற்புதமான பதிவுகள். உங்களுடன் வாசுதேவனும் பங்கெடுத்துக் கொண்டாரா. எல்லோரையும் எங்கேயோ அழைத்துக் கொண்டு போய் விட்டீர்கள். நன்றி. நீண்ட நாட்களுக்கு முன் 'தாயே உனக்காக' படம் ஒரு முறை டி.வியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அப்போதே பிடித்திருந்தது. பாடல்கள் நினைவில் இல்லாமல் இருந்தது. சேர்த்து விட்டீர்கள். அத்துடன் உங்கள் கார்கில் பயணித்த பதிவு நல்ல முத்தாய்ப்பாக இருந்தது.
மற்றபடி நான் இல்லாததினால் நீங்கள் நல்ல பௌர்ணமி பாடல்களாக போட்டு அதகளப் படுத்தி விட்டீர்கள். என் வேலையையும் குறைத்து விட்டீர்கள்.
உங்களுடைய மற்ற பதிவுகளுக்காக பதில்கள் பின்னொரு பதிவில். மீண்டும் நன்றி.
chinnakkannan
7th May 2015, 03:34 PM
வாங்க கல் நாயக் :) அண்ட் நன்றி விலாவாரியாக ரசித்தமைக்கு..
அதுஏன் கேக்கறீங்க பனைமரம் தென்னை மரம் வாழை மரம் மக்கள் பழகும் பழக்கத்திற்கு - குலவிளக்கு பாட்டில் வரும் தேடு தேடு எனத் தேடினேன் கிடைக்கலை.. புளியமரத்திற்குத்தாங்க்ஸ்.. உலுக்கு..அது அப்புறமா பாக்கறேன் :)
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில் கூடுகட்டும் ஒருமாடப்புறா..
அடட மாமரக் கிளியே உனை இன்னும் நான் மறக்கலியே
தென்னை மரத்துல தென்றலடிக்குது நந்தவனக்க்கிளியே
மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்
இப்போதைக்கு இவ்ளோ மரம் தான் நினைவுக்கு வருது..
பெள்ர்ணமி தானே ஓய் போட்டேன்.. நிலா போடும்..
இங்க வெய்யில்ல கதிரவன் வேறு ஒருபக்கம் ஜாலியாச் சுடுது..(ரொம்ப சந்தோஷமா இருக்கு ரவியோட வெரைட்டி சாங்க்ஸ்ல)
கண்ணாடி மேனியடியும் சிட்டாக த்துள்ளித்துள்ளி ஆடும் திடீரென தேடலில் கிடைத்த பாடல்கள்..பின்னதைக் கேட்டிருக்கிறேன்..இரண்டையுமே பார்த்ததில்லை.. நைஸ் தானே..
வாசுண்ணாவைப் பாருங்க.. ஒரே பந்துல ஒன்பது ரன்லாம் அடிக்கறார்..ரசனைக்காரர்..
கலை..வேற என்ன உங்களை இழுக்கலாம்..யாரோ ஒரு மன்னர் வீட்டு இளவரசர் அஞ்ஞாத வாசம் இருந்துவிட்டு வந்தாராமே..இந்தக்காலத்திலும்.. ஹை.. கலைக்கு நாட் கெடச்சுடுச்சு :)
chinnakkannan
7th May 2015, 03:47 PM
சிவாஜி செந்திலிடமிருந்து ஒரு வார்த்தையைச் சுட்டு...
நிலா கதிரவன் மறுபடி வருவதற்குள் ஒரு Gapfiller!
மதுரை குரு தியேட்டரில் கல்லூரி இறுதியாண்டில் பார்த்த நினைவு.. படத்தில் இந்தப் பாட் மட்டுமே நினைவிருக்கிறதே தவிர கதை நடிக நடிகையர் எதுவுமே நினைவில்லை..ரவிக்கு எழுதிய ஒரு கமெண்ட்டில் இந்தப் பாடலை நினைவு கூர்ந்தேன் (ச்ட்டுனு மனசுல வந்ததுங்க்ணா..) நல்லாவே இருக்கும்.. நான் கேக்க முடியாது இப்போ..லேட்டர் ஒன்லி..
அந்தப் பாட் உங்களுக்காக.. படம் பிரம்மச்சாரிகள்..
சந்திரனைப் பார்த்தால் சூரியனாய்த் தெரிகிற்து
செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது
பச்சைக்கொடி அச்சம் தரும் பாம்பாய் அசைகிறது..
(குட்டி சுரேஷ் அண்ட் சுலோச்சு :) )
https://youtu.be/L-K9qqsP7jI
kalnayak
7th May 2015, 04:06 PM
ரவி,
உங்களை எப்படி பாராட்டுவது என்று உடனடியாக எனக்கு தோன்றவில்லை. என்னை நிலவிற்கு போய் விட்டதாக எழுதினார்கள். அது என்ன கிரகம்? அது ஆப்டர் ஆல் ஒரு துணைக் கோள் தானே. அங்கு உயிர்கள் இல்லை. உயிர்களுக்கான எந்த ஆற்றலும் இல்லை. நீங்கள் எழுதுவதோ ஒரு நட்சத்திரத்தைப் பற்றி. அதைச் சுற்றி எத்தனை கோள்கள், எத்தனை துணைக் கோள்கள். சூரியனால் இந்த பூமியில் எத்தனை எத்தனை உயிர்கள் பிறந்து வாழ்கின்றன. அப்பாடி!!! நீங்கள் சுட்டெரிக்கும் இந்த கோடைக் காலத்தில் சூரியனுக்கு பயணம் செய்திருக்கிறீர்கள். இதற்கு அபாரத் திறமை வேண்டும்தானே?
நான் இரவு நேரத்தில் வந்து நிலவுப் பாடல்களை தரலாம் என்றால் முடியவில்லை. பகலில் கோடை வெயிலில் கதிரவன் காய்க்க, நீங்கள் (அட நீங்களும் ரவி என்ற சூரியன் தானே!!!) மதுர கானப் பாடல்களில் அருமைக் கதிரவன் பாடல்கள் போட்டு தூள் கிளப்ப, நான் எங்கே நிலவுப் பாடல்களை தருவது? தந்தாலும் கதிரவன் ஒளியில் தெரியுமா? அதனால் நிறுத்தி வைத்தேன். (எழுதாம இருக்கிறதுக்கு எப்படியெல்லாம் யோசிச்சு சாக்கு சொல்ல வேண்டி இருக்கிறது!!!). துவக்கமே அருமை. நடிகர் திலகத்தின் கர்ணன் படப் பாடலான "ஆயிரம் கரங்கள் நீட்டி ..." விட்டு வேறெந்தப் பாடலைக் கூறித் துவக்குவது? இதுதான் இங்கே பொருத்தமோ பொருத்தம்.
அட உடனே மக்கள் திலகத்தின் "ஆடிவா பாடலா"? கலைவேந்தனையும் குளிர (குளிர் காய) வைத்துவிட்டீர்கள்!!! தொடருங்கள் அய்யா. தொடருங்கள். நானும் நிலவை தொடர்வதற்கு பார்க்கிறேன்.
kalnayak
7th May 2015, 04:51 PM
திரு கலை வேந்தன் - உங்கள் பதிவு ,மிகவும் அருமை - ஞாபக சக்தி எல்லோருக்கும் வந்துவிடாது - அதற்க்கு ஒரு குடுப்பினை இருக்க வேண்டும் - அந்த இறைவனின் கருணையும் இருக்க வேண்டும் - உங்களுக்கும் , திரு முரளிக்கும் , திரு ராகவேந்திரா வுக்கும், திரு வாசுவிர்க்கும், திரு கல்நாயக் அவர்களுக்கும் , பெரிய கண்ணனாக பதிவுகள் போடும் திரு சின்ன கண்ணனுக்கும் இந்த அபூர்வ சக்தி இயற்கையாகவே அமைந்துள்ளது - நேற்று நடந்தது என்னவென்று என்று என்னை யாராவது கேட்டால் கூகுள் உதவி இல்லாமல் எனக்கு சொல்ல வராது . நீங்கள் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் யை விவாதிக்க தனி திரியே வேண்டும் . அவ்வளவு விஷயங்கள் உள்ளன --- discrimination என்றால் என்ன ? differentiation என்றால் என்ன ? என்று பலருக்கு புரிவதில்லை - differentiation is tolerable but not discrimination ---
ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரருக்குள் வரவழைத்த உங்களால் எதைத்தான் இனிமையாக எழுத முடியாது !!
அன்புடன்
ரவி
ரவி,
இதில் என் பெயரை எடுத்து விடுங்கள். நான் ஒரு கூகுல் தேடல் ஆள். என்னைப் போய் பெரிய பெரிய ஆட்களுடன் ஒப்பிடுகிறீர்களே!!!
kalnayak
7th May 2015, 04:57 PM
கல்நாயக்,
பூக்கள் விடும் தூது திரைப்படம் 1983-ம் ஆண்டில் வெளிவந்தது (என்று சொல்லக் கேள்வி) 32 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, முதல் வெளியீட்டில் பார்த்திருக்கிறீர்கள் என்றால்....
எந்தவித மரியாதை விகுதியின்றி உங்களை வெறும் பெயர் மட்டுமே சொல்லி அழைக்க எனக்கு அனுமதி கொடுத்த உங்கள் பெருந்தன்மையை நினைத்தால்........ ரொம்ப நன்றிங்கய்யா.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் அய்யா அவர்களே,
இதைத்தான் இவ்வளவு நாட்களாக நான் சொல்லிக்கொண்டு இருந்தேன். தாயைக் காத்த தனயன், குலேபகாவலி போன்ற படங்கள் மட்டுமில்லாது அதற்கும் முன்னரே எம்.கே. தி அவர்களின் படங்களையும், பி.யூ.சின்னப்பா அவர்களின் படங்களையும் திரையிட்ட நாட்களில் பார்த்து மகிழ்ந்தவர் நீங்கள். உங்களோடு உங்கள் கொள்ளுப் பேரனும் இங்கே வந்து பதிவுகள் இடுகிறார் என்பதே எவ்வளவு பெருமையான விஷயம்.
நீங்கள் தாரளமாக என்னை ஒருமையில் மட்டுமல்ல, 'வாடா, போடா' போட்டும் அழைக்கலாம். அவ்வளவு சிறியவன். அதாவது உங்கள் பேரன் வயதில் உள்ளவன். இப்போதாவது புரிந்து கொண்டீர்களே. சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயத்தில் உங்கள் பேரன் வயதில் உள்ள என்னை அய்யா என்றெல்லாம் அழைத்து எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்காதீர்கள்.
‘சேவல் வந்து முட்டையுமிட்டது தேசம் நல்லால்லே...’ என்று நீங்கள் போட்ட நாட்டு நிலவரப் பதிவு ... ?
வாசுதேவனை விட நான் பெரிதாக ஒன்றும் சொல்லத் தோணவில்லை. அரசியலில் உங்கள் அறிவு உங்கள் வயதினால் பெற்றது என்பதை பறை சாற்றுகிறது
kalnayak
7th May 2015, 05:24 PM
வாசுதேவன் அவர்களே,
நீங்கள் முன்பு போல் எழுத ஆரம்பித்த பின்புதான் திரி பௌர்ணமி நிலவு போல முழுமை அடைந்து இருக்கிறது. (எப்பூடி நிலவை இங்கயும் கொண்டு வந்துட்டோமுல்ல!!!) நடிகர் திலகத்தின் மேல் உங்களுக்குள்ள பக்தி இங்கு அனைவரும் அறிந்ததுதான். அதை மீண்டும் உறுதி படுத்தி 'என் தம்பி'-யின் அட்டகாசமான பாடலை ( தட்டட்டும்....கை தழுவட்டும்) அற்புதமாக வடித்து விட்டீர்கள். அத்துடன் நீங்கள் கொடுத்த புகைப் படங்கள் அருமை. அருமை. என்ன ஸ்டைலிஷாக இருக்கிறார் நடிகர் திலகம். எத்தனை வரிகள். அத்தனையும் அற்புதம். இன்னும் நான் படித்துப் பார்க்க வேண்டும்.
அப்புறம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் பாடலை கொடுத்தீர்களே. என்னவென்று சொல்வது? பாடியவர் யாரென்று கண்டுபிடியுங்கள் என்று சொல்லி ஆடியோ மட்டும் கொடுத்திருந்தீர்கள் என்றால் நிச்சயம் என்னால் கண்டு பிடித்திருக்க முடியாது. ஆனால் அந்த இனிமை, அந்த நெளிவு எல்லாமே இருக்கிறது. பாடல் அருமையோ அருமை. தொடருங்கள். படித்து மகிழ்கிறோம். கலை வேந்தன் அய்யா சொன்னது போல் இவ்வளவு நாட்கள் நாங்கள் இதையெல்லாம் இழந்திருந்தோம். நல்ல வேளை நீங்கள் வந்தீர்கள். அருமை பாடல்கள் தந்தீர்கள், தருவீர்கள்.
திலக சங்கமத்தை மதுர கானத் திரிக்கு கொண்டு வரச்செய்த பெருமையும் உங்களுக்கே. நன்றி. நன்றி. நன்றி.
chinnakkannan
7th May 2015, 05:41 PM
//திலக சங்கமத்தை மதுர கானத் திரிக்கு கொண்டு வரச்செய்த பெருமையும் உங்களுக்கே.// அப்ஜெக்*ஷன்யுவர் ஹான்ர். என்னை வாசு கேட்கவில்லை..கேட்டிருந்தால் நானும் இட்டாந்திருப்பேன்.. :)
சரி சிரி..டைப்போ சரி சரி..இந்தாங்க நீங்க கேட்ட திலக சங்கமம..
https://youtu.be/uLmsuXcID7U
எஸ்ஸ்ஸ்கேப் :)
kalnayak
7th May 2015, 05:48 PM
வாங்க கல் நாயக் :) அண்ட் நன்றி விலாவாரியாக ரசித்தமைக்கு..
அதுஏன் கேக்கறீங்க பனைமரம் தென்னை மரம் வாழை மரம் மக்கள் பழகும் பழக்கத்திற்கு - குலவிளக்கு பாட்டில் வரும் தேடு தேடு எனத் தேடினேன் கிடைக்கலை.. புளியமரத்திற்குத்தாங்க்ஸ்.. உலுக்கு..அது அப்புறமா பாக்கறேன் :)
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில் கூடுகட்டும் ஒருமாடப்புறா..
அடட மாமரக் கிளியே உனை இன்னும் நான் மறக்கலியே
தென்னை மரத்துல தென்றலடிக்குது நந்தவனக்க்கிளியே
மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்
இப்போதைக்கு இவ்ளோ மரம் தான் நினைவுக்கு வருது..
பெள்ர்ணமி தானே ஓய் போட்டேன்.. நிலா போடும்..
இங்க வெய்யில்ல கதிரவன் வேறு ஒருபக்கம் ஜாலியாச் சுடுது..(ரொம்ப சந்தோஷமா இருக்கு ரவியோட வெரைட்டி சாங்க்ஸ்ல)
கண்ணாடி மேனியடியும் சிட்டாக த்துள்ளித்துள்ளி ஆடும் திடீரென தேடலில் கிடைத்த பாடல்கள்..பின்னதைக் கேட்டிருக்கிறேன்..இரண்டையுமே பார்த்ததில்லை.. நைஸ் தானே..
வாசுண்ணாவைப் பாருங்க.. ஒரே பந்துல ஒன்பது ரன்லாம் அடிக்கறார்..ரசனைக்காரர்..
கலை..வேற என்ன உங்களை இழுக்கலாம்..யாரோ ஒரு மன்னர் வீட்டு இளவரசர் அஞ்ஞாத வாசம் இருந்துவிட்டு வந்தாராமே..இந்தக்காலத்திலும்.. ஹை.. கலைக்கு நாட் கெடச்சுடுச்சு :)
சி.க.,
முன்பு யோசித்தேன். கிடைக்கவில்லை. கூகுளினேன். நெறைய மரங்கள் இருக்கின்றன தமிழ்ப் பாடல்களில். உங்களால் முடியும் ஒரு சிறிய (மன்னிக்கவும்) மிகப் பெரியத் தொடரே எழுத. சில
பச்சை மரம் ஒன்று
ஏரியிலே எலந்த மரம், தங்கச்சி வச்ச மரம்
நீ காற்று நான் மரம்
மரங்கொத்தியே
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு...
அத்தி மரம் பூத்ததே
அத்தி மரப் பூவிது
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
கலைவேந்தன் அய்யா அவர்களும் வாசுதேவன் அவர்களும் தனி லெவல் உங்களைப் போல. நீங்களெல்லாம் ஒரே பந்தில் ஒன்பது என்ன அதற்கு மேலேயும் அடிப்பீர்கள்.
Russellzlc
7th May 2015, 05:50 PM
கல்நாயக்,
எனது தாத்தா வரும்போது சொல்கிறேன். அவரை மட்டும் நீங்கள் ‘அய்யா’ போட்டால் போதும். எனக்கெதற்கு ‘அய்யா’ போட்டு மரியாதை? சாதாரணமாக கூப்பிடுங்கள். கூச்சமாக இருக்கிறது. அரசியல் அறிவு என் தாத்தா சொல்லித் தெரிந்து கொண்டதுதான். எனக்கு தெரியாது. இதற்குத்தான் நிறைய விஷயம் சொல்ல (தாத்தாவிடம் கேட்டுத்தான்) பயமாயிருக்கிறது, என் வயதை தவறாக அதிகமாக கணக்கிடுவீர்களோ? என்று.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
7th May 2015, 05:56 PM
//திலக சங்கமத்தை மதுர கானத் திரிக்கு கொண்டு வரச்செய்த பெருமையும் உங்களுக்கே.// அப்ஜெக்*ஷன்யுவர் ஹான்ர். என்னை வாசு கேட்கவில்லை..கேட்டிருந்தால் நானும் இட்டாந்திருப்பேன்.. :)
சரி சிரி..டைப்போ சரி சரி..இந்தாங்க நீங்க கேட்ட திலக சங்கமம..
https://youtu.be/uLmsuXcID7U
எஸ்ஸ்ஸ்கேப் :)
உங்களை வாசுதேவன் கேட்டு, இப்படி நீங்கள் முன்பே இந்த திலக சங்கமத்தை கொண்டு வந்திருந்தாலும் அந்த பெருமை வாசுவிற்கே போகும் (எல்லாப் புகழும் கண்ணனுக்கே!!!) ரெண்டு பேரும் பெருமாள் பேரை வைத்துக்கொண்டு இப்படி விளையாடுகிறீர்களே, நாராயணா, நாராயணா!!!
kalnayak
7th May 2015, 06:05 PM
கல்நாயக்,
எனது தாத்தா வரும்போது சொல்கிறேன். அவரை மட்டும் நீங்கள் ‘அய்யா’ போட்டால் போதும். எனக்கெதற்கு ‘அய்யா’ போட்டு மரியாதை? சாதாரணமாக கூப்பிடுங்கள். கூச்சமாக இருக்கிறது. அரசியல் அறிவு என் தாத்தா சொல்லித் தெரிந்து கொண்டதுதான். எனக்கு தெரியாது. இதற்குத்தான் நிறைய விஷயம் சொல்ல (தாத்தாவிடம் கேட்டுத்தான்) பயமாயிருக்கிறது, என் வயதை தவறாக அதிகமாக கணக்கிடுவீர்களோ? என்று.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் (அய்யா - இப்போது இல்லை),
நான் அய்யா போட்டது ஒரு முன் ஜாக்கிரதைக்கே. வயது தெரிந்தும் நான் மரியாதை வார்த்தை சேர்க்காமல் அழைத்து நீங்கள் பாட்டுக்கு கோவித்துக்கொண்டால் என்ன செய்வது? அந்த பயத்தினால்தான் அய்யா சேர்த்தேன். இனிமேல் நான் அய்யா போடாவிட்டால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
adiram
7th May 2015, 07:02 PM
இன்னொரு பாட்டில்..
அந்த மலைத்தேன் இது என மலைத்தேன்.. என்பார் டி.எம்,எஸ் நடிப்புச்சுடர் வாயசைக்க.. அதுவே காஞ்ச் மலைத்தேன் இவரென மலைத்தேன் என்பார்..
TMS..?????.
Till this minute I am thinking it was sung by PBS.
What a talented man TMS was. He can change his voice like PBS also. Isnt it?.
vasudevan31355
7th May 2015, 07:36 PM
சி.க, நாயக்,
இந்தாங்க சில மரப் பாடல்கள்.
அத்திமரப் பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
https://youtu.be/2xV2vaqhpvI
அடடட! மாமரக் குயிலே... உன்னை இன்னும் நான் மறக்கலியே.
https://youtu.be/4fq3BNfKkcE
'வேப்ப மர உச்சியில் நின்னு... பேய் ஒன்னு ஆடுதுன்னு (பாடல் நடுவில வந்தாலும் மரம் மரம்தானே!)
https://youtu.be/LTCihMCfSCU
'மூங்கில் மரக் காட்டினிலே கேட்கும் ஒரு நாதம்'
https://youtu.be/VAGtycL-Pq0
vasudevan31355
7th May 2015, 07:45 PM
ஆத்தங்கரை அரசமரம்
https://youtu.be/ipvQwVycldE
புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு
https://youtu.be/WORG11ufX_4
vasudevan31355
7th May 2015, 07:47 PM
அழகான வாழை மரத் தோட்டம்
https://youtu.be/xy6KECo1byg
ஆத்தங்கர மரமே அரச மர இலையே
https://youtu.be/agNTe4pCvGc
தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்
https://youtu.be/r5BnwfgrLno
தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
https://youtu.be/Y7CboI5MxgY
RAGHAVENDRA
7th May 2015, 07:53 PM
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.. அரசு மொழி..
பதிவிற்கு ஒரு மரம் சொல்வோம் ... மய்ய மொழி...
புளிய மரத்தை விடமுடியுமா
https://www.youtube.com/watch?v=GWUKNa11VfM
vasudevan31355
7th May 2015, 07:54 PM
ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம்
https://youtu.be/goTE1xWs0uE
vasudevan31355
7th May 2015, 07:59 PM
தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
https://youtu.be/NCL4jGJwsHc
RAGHAVENDRA
7th May 2015, 08:16 PM
திலக சங்கமம்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/vvkappu01_zps19669c42.jpg
வடிவுக்கு வளைகாப்பு
ஏபி.நாகராஜன் இயக்குநராக நடிகர் திலகத்தின் படத்தில் பணிபுரிந்த முதல் படம். நடிகர் திலகத்தின் வித்தியாசமான சிகை அலங்காரம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
திரை இசைத் திலகத்தின் இசையமைப்பில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் விவரங்கள்
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் வடிவுக்கு வளைகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களைப் பற்றிய விவரங்கள்
1. திலகமே தமிழ்நாட்டுக் கலை உலகின் திலகமே – அ. மருதகாசி – டி.எம்.எஸ்
2. உன் மனம் இறங்கிட வேணும் – அ. மருதகாசி – எல்.ஆர்.ஈஸ்வரி கோஷ்டியினர்
3. சாலையிலே புளியமரம் – அ.ச. நாராயணன் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி கோஷ்டியினர்
4. தாமதம் செய்யாதே தோழி – அ.மருதகாசி – எஸ்.வரலக்ஷ்மி
5. சீருலாவும் இன்ப நாதம் – அ. மருதகாசி – டி.எம்.எஸ்.பி,சுசீலா
6. நில்லடியோ நில்லடியோ – கண்ணதாசன் – பி.சுசீலா
7. பிள்ளை மனம் கலங்குதென்றால் – கண்ணதாசன் – டி.எம்.எஸ்.
8. சூடு வெச்ச வெள்ளக் காலை – அ.ச.நாராயணன் – ஆதம்ஷா
9. சில்லெனப் பூத்து – கண்ணதாசன் – பி.சுசீலா
நடிகர் திலகம், திரை இசைத் திலகம் இவர்களின் பங்களிப்பால் இன்றளவும் மக்கள் மனதில் இப்படத்தின் பெயர் நிலைத்திருக்கிறது.
குறிப்பாக சீருலாவும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் படத்தில் பாடல் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்து விட்டதால் மக்களிடம் பெரும் அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் பாடல் என்றால் திலகமே பாடல் தான். மருதகாசியின் வரிகள் நடிகர் திலகத்தை மிகவும் அருமையாக வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும். சிலேடையாக அமைந்த பாடல்.
முன்னரே குறிப்பிட்டது போல், குலதெய்வம் ராஜகோபால் அந்த அரவத்தை கொல்ல முற்படும் போது ஜாடையால் அதைத் தடுத்து காக்கும் காட்சியில் நடிகர் திலகத்தின் அந்த வசீகரப் புன்னகை நம்மைக் கட்டிப் போட்டு விடும்.
திரை இசைத் திலகத்தின் இசையில் பாடகர் திலகத்தின் குரலில் என்றென்றும் மனதை மயக்கும் மதுர கானமாக விளங்குகிறது இப்பாடல்.
செந்ததமிழ்நாட்டுக் கலையுலகின் திலகத்தைக் கண்டு ரசிப்போமா..
https://www.youtube.com/watch?v=3YmUC53J7OY
chinnakkannan
7th May 2015, 09:06 PM
///TMS..?????.
Till this minute I am thinking it was sung by PBS.
What a talented man TMS was. He can change his voice like PBS also. Isnt it?.///ஆதிராம் :) குத்துங்க எசமான் குத்துங்க..:) நான் தான் தப்பா எழுதிட்டேன் ஷமிக்கணும்..
வாசுங்ணா வாவ்.. இவ்வளவு மரத் தோப்புகளை வச்சுக்கிட்டு எவ்ளோ ஸிம்ப்பிளா அடியேனோட பழகறீங்க..தாங்க்ஸ்..ஒவ்வொண்ணா பார்க்கணும்..இதுல நான் நேத்திக்கோ முந்தா நாளோ போடணும்னு நினச்ச பாட்ட நீங்க போட்டுட்டீங்க.. பட் அந்தப் படத்துல வேற கமல் பாட்டு இருக்கே (மரமில்லை)..படம் ப்ளாக் அண்ட் ஒய்ட்..
கல் நாயக்..மரப்ப்பாடல்கள் லிஸ்ட்டுக்கு நன்றி..இருந்தும் வேற ஏதாவது மரம் மிஸ்ஸாயிருக்கா என்ன..
ராகவேந்தர்..வாங்க.. வடிவுக்கு வளைகாப்பு நான் பார்த்ததில்லை..பாடல்களும் கேட்ட நினைவில் இல்லை.. கேட்டுப்பார்க்கிறேன்.. நன்றிங்க்ணா.
rajraj
8th May 2015, 12:54 AM
ChinnakkaNNan,
Here is a 'maram' song for you fromm 'moondru peNgaL' (1956)
saalaiyile reNdu maram jamindaru vachcha maram......
http://www.youtube.com/watch?v=j5JYutuLfHk
chinnakkannan
8th May 2015, 03:13 AM
ராஜ்ராஜ் சார். தாங்க்ஸ் நல்லா இருக்கு.. ஆமா மூன்று பெண்கள்ல ஒண்ணு எம்.என். ராஜம் மிச்சம் ரெண்டு பேர்யார்..ஹீரோ பேரா..இட்ஸால்ரைட்..வேண்டாம் :)
chinnakkannan
8th May 2015, 03:14 AM
திரையில் மலர்ந்த நாவல்கள் – 6
ஒரு எழுத்தாளரின் இரண்டு நாவல்கள் முதலில் பார்க்கலாமா..முதலில் என்னான்னாக்க..அவர் ஒரு எழுத்தாளர் இல்லை..!
அவரைப் பற்றி அப்புறம்..
மூன்று கேரக்டர்கள் பேசும் முதல் நாவல்.. கொஞ்சம் ரத்தினச் சுருக்கமாய் இங்கே..
ஜானகி
***
ஜானகி: என் பேர் தான் ஏற்கெனவே டைப்படிச்சாச்சே.. நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் ஏழ்மைக் குடும்பம் தான் எனக்கு சகோத்ரிகளே ஐந்து பேர் ஐவரும் என் தங்கைகள்.. அப்பாவிற்குச் சுமாரான வருமானம்.. ஆனால் அப்படி இப்படி எனக் கஷ்டப் பட்டு என்னை ராகவனுக்குக் கட்டி வைத்துவிட்டார்கள்..
ஸாரிங்கோவ்.. பர்த்தா பேர் சொல்லிட்டேன்..என்ன சொன்னேன்.. எனக்குக் கல்யாணம் ஆகிடுத்து..டைப்போ எனக்கும் கல்யாணம் ஆகிடுத்து (ஆகுமா என நான் பரிதவித்தங்கறத முன்னால போட்டுக்கலாம்..)..இவர் இருக்காரே அழகுன்னா அவ்ளோ அழகு..ஆணை அழகுன்னு சொல்லக்கூடாதா..ஓ ஹேண்ட்ஸம்.. ( நா டென் த் படிச்சுருக்கேன்..) அப்பு/றம்.. ஏங்க்கோ ஒரு கல்யாணமான பொண்ணுகிட்ட அப்புறம்னு கேக்கலாமா..
ம்ம் எல்லாம் நடந்தது.. நல்லபடியாவே..சந்த்த்த்த்தோஷம் (இன்னும் நிறைய த் போட்டுக்கலாம்) எல்லையை விட அதுக்கும் மேல சந்தோஷமா இருந்தோமா.. சொல்லவிட்டுட்டேனே ராகவனுக்கு ஒரு அம்மா.. கல்யாணம் ஆகி ஆறுமாசம் ஆச்சேன்னு கொஞ்சம் கவலை வழக்கமான கவலை..
பின் கொஞ்சம் சீரியசாகி டாக்டர்ஸ், கோவில்ஸ் மறுபடி டாக்டர்ஸ்னு போனாக்க….டாக்டர்கள் சொன்னது தான் வேடிக்கை பட் அதுவே கொஞ்சம் வினைன்னும் சொல்லலாம்.. நான் ஆற்றிய வினை..
என்னா சஸ்பென்ஸா.. ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரிப்படி கெமிஸ்ட்ரி ஆகாதாம்..ஸம்திங்க் மிஸ்ஸிங்க்கா.ம்… நான் வேறொரு கல்யாணமும் அவர் வேறொரு கல்யாணமும் பண்ணிக்கிட்டா குழந்தை பிறக்குமாம்..
ம்ஹீம் நானா இன்னொருகல்யாணமா இவரை விட்டா..ஓஹ்..நினைக்கவே கசக்குது..பட் ராக்ஸ் டிஸர்வ்ஸ் இட்.. ஹி கேன் மேரி.. எனக்கென்ன எங்கப்பாவோட பர்டன்ல ஒண்ணு குறையும்..
அவர்கிட்ட கேக்கப்போறேன்.. சொல்வார் லூஸாடி நீ
ராகவ்:
*******
லூஸாடி நீன்னு தான் கேட்டேன்.. எனக்கு ஜானியை ரொம்ப்ப்பப்பிடிக்கும்..எனக்குப் பிடித்த சமையல், எனக்குத் தேவையான சைவ அசைவ விஷயங்கள் ( நான் உணவில் வெஜிட்டேரியன்) எல்லாவற்றிலும் கில்லாடி..சந்தோஷம்கொடுத்து சந்தோஷமாக இருப்பதற்காகவே பிரம்மனால் படைக்கப் பட்டவள் எனக்காகன்னு இருக்கறச்சே இப்படியா..
ஹேய் அவங்கவங்களுக்கு ஆறுவருஷம் கழிச்சுக்கூட குட்டிப்பாப்பா பொறந்துருக்கு தெரியுமில்லை..
நோயார்.. உங்க அம்மா என்னை அப்படியே கடலமாவுல முக்கி பஜ்ஜியாப் பொரிச்சுடுவாங்க..
ஓஹ் அப்படியெல்லாம் இல்லை உன்னுடைய அதீத கற்பனை
கண்ணாளா..என் ராசா நா சொல்றதக் கேளுங்க பேசாம என் தங்கை வைதேகியைக் கல்யாணம் பண்ணிக்குங்க..
வைதேகி :
*********
இரண்டாம் தாரமா வாக்கப் பட்டேன்.சரி ..அதுக்காக என் கதையையும் சுருக்கமா சொல்லுங்கறாரு இந்த டைப்படிக்கற பெரிய மனுஷர்!
அடியே என்னவெல்லாமோ சொல்லி அவரக் கட்டி வச்சுருக்கேன் உனக்கு..ஒழுங்கா என்னா..
என்னாக்கா
அசடே.. என்னை இழுத்து அக்கா என் காதுமடலில் இதழ்கள் உரச கூச்சம் போகும் விஷயத்தை உணர்வும்செவியும் கூச்சமுறச் சொன்னாள்..
சரி என்று சொல்லி இல்லறம் ஆரம்பித்து அவருடன் சந்தோஷமாக இருந்து- அக்கா ஒரேவீட்டில் இருந்தாலும் அவள் விலகியே இருப்பதைப் பார்த்து ஆரம்பத்தில் வருத்தம் இருந்தாலும் – அத்தானுடன் இருப்பது சந்தோஷமாய் இருந்து கருவுற்று அழகாய் ஒரு பெண்மகவு பெற்று கோவில் போய்விட்டு வீடுவந்தால் அதற்கு சுரம்.. பின் டாக்டர்களின் பின்னால் போய் மருந்து மாத்திரை கொடுத்தாலும் ம்ம் அதிர்ஷ்டமில்லை.. கொடுத்தவன் பறித்துக் கொண்டான்..
என்னவருக்கு தர்ம சங்கடம்..என் அக்காவிற்கோ அழுகை.. நானும் போய் இறைவனிடம் கேட்கப் போகிறேன் என்று ஒரு கோவில் போயிருக்கிறாள்..இன்னிக்கு ஒரு எக்ஸ்ப்ரஸ் ஏறி வருவாள்..கோவில்போய் என்ன.. சாமி என்று ஏதும் இருக்கா என்ன.. குழந்தை போன துக்கத்தில் நானே அக்காவிடம் சொன்னேன் இன்னொரு தங்கையைப்பார்க்கலாமா எனக் குழறிச் சொல்ல அக்காவிற்கும் அத்தானுக்கும் வந்ததே கோபம்.. இருக்கட்டுமே …அவர்கள் என்ன சுமந்தவர்களா..சுமந்தவளுக்குத் தானே தெரியும் வயிற்றின் வெற்றிடம்..ம்ம்
தொடரும்
chinnakkannan
8th May 2015, 03:15 AM
திரையில்மலர்ந்த நாவல்கள் - 6 தொடர்ச்சி..
ஜானகி
********
என்னபேச்சு பேசிகிறது இந்த வைதேகி..இன்னொரு தங்கை இருக்கிறாளாம்..அடியேய்..
ம் நான் தான் தப்பா..அம்மன் கோவிலில் முறையிட்டு ரயிலில் ஏறியாயிற்று.. உடன் கம்பார்ட்மெண்டில் யாரும் இல்லை..இல்லை இல்லை ஒரு வயதான மாது.அவரது மூக்கில் என்ன..ப்ப்பளீரென சிகப்பு மின்னலைப் போல செந்நிற ஒளியை வீசும் மூக்குத்தி..
என் பரிதாபமான தோற்றத்தைப் பார்த்தும் அவர் ஏதும் பேசவில்லை...
“கவலைப் படாதே” இது மட்டும் தான் அவர் பேசியது.. எனக்கோ என்ன பேசத் தெரியவில்லை.. “இந்தா இதை வைத்துக்கொள்” அனிச்சையாய்க் கை நீட்டினால் நீட்டிய கையில் சிவப்புக் கல் மூக்குத்தி.. நாளை க்காலை இதை அணிந்துகொள்.. எல்லாம் நல்லதே நடக்கும்.. இப்போ தூங்கு..
தூங்கி எழுந்தால் ரயில் நின்றிருந்தது..என் ஊர்..ஆனால் எதிரில் அந்த அம்மா இல்லை.. ஹேண்ட்பேகில் திறந்தால் சிவப்புக் கல் மூக்குத்தி.. இதை அணிந்து கொள்ளவேண்டுமாம்.. இதை அணிந்தால் என்னாகும்..எனக்குக் குழந்தை பிறக்குமா..சிரிப்பு தான் வந்தது எனக்கு..
ராகவன்:
******
ஆச்சர்யம் தான்..ஆனால் உண்மை..சிவப்புக்கல் மூக்குத்தியில் பளீரென ஜானகியின் முகம் இருந்ததா… அதில் நான் மதி மயங்கினேனா.. பத்து மாதத்தில் பெண்குழந்தை பிறந்ததா..அதற்கும் இப்பொழுது மூன்று வயது ஆகிறதா..அடடா.. நம்ப முடியாமல் தான் இருக்கிறது..
இருப்பினும் ஒரே ஒரு கவலை..வைதேகி..பித்துப் பிடித்தவள் போல இருக்கிறாள் .. நெருங்க விடுவதில்லை..ஜானகியையும் கூட..
வைதேகி..
**********
எனக்கு என்னவோ ஆகிவிட்டதாம்.. நினைக்கிறார்கள் சொல்கிறார்கள்..ம்ஹூ ஹீம்.. நான் யார் ஒரு அதிர்ஷ்டமும் இல்லாமல் பாரமாய் இருப்பவள்..இறப்பதே வழி என நினைத்தாலும் அதை நிறைவேற்றும் தைரியமில்லை..
ஜானகியின் பெண் நிம்மி எவ்ளோ சுட்டி..மூணுவயதுக்கு எவ்ளோ பேசுகிறது..இதுவே என் பெண்ணாக இருந்திருக்கக் கூடாதா..ஏன் இருக்கக் கூடாது..ஜானகியிடமே கேட்டுவிடட்டுமா..
கேட்டேன்.. ஜானகி எதுவும் பேசவில்லை..எங்கு கொடுப்பாள்.. நான் பைத்தியம் என்று தானே நினைக்கிறாள்..சமர்த்தாய் இருப்பேனே நிம்மி என்கூட இருந்தால்..
மறு நாள் காலை பார்த்தால் நிம்மி என் அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறது.. ஜானகியைக் காணோம் இவரும் தேடி த் தேடிப் பார்த்தார்.. நிம்மிக்குப் பக்கத்தில் ஜானகியின் சிவப்புக் கல் மூக்குத்தி.. இதை வைத்துக் கொண்டு நன்றாக இரு.. நான் குறுக்கிட மாட்டேன்..அக்க்கா..இப்படியா செய்வது..
உன்னைப் போகவா சொன்னேன்…
கதறினேன்.. அவரிடமும் சொன்னேன். பல மாதங்கள் தேடினோம்..எனக்கு முழுக்கவும் குணமாகிவிட நிம்மியும் என்னிடம் ஒட்டிக் கொண்டு விட்டது..ஆனால் மறுபடியும் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.. நிம்மியும் ஒரு காய்ச்சலில் கண்மூடி விட்டாள்..
காலங்கள் எல்லா துக்கத்தையும் மாற்றத்தான் செய்கின்றன என்பார்கள்..உண்மை தான் இரண்டு வருடங்கள் கழிந்து ஒரு நாள் அதைப் பார்த்தேன்.. டிரஸ்ஸிங் டேபிளில் இடுக்கில் இருந்தது அந்த சிவப்புக்கல் மூக்குத்தி.. அணிந்தால் என்ன..
அணிந்தேன்..அணிந்ததால் என் உடலுக்கும் அணிகலன் வந்தது சில மாதங்களில் .. ஆம் நான் சூல் கொண்டேன்..
அக்கா கடைசியாய்ப் பார்த்த கோவில் செல்ல வேண்டும் என ராகவ்விடம் கேட்டேன்.. எட்டரை மாதம்..இப்போதா வைதூ என்றார்.. இல்லை வாருங்கள் போகலாம் எனச் சொல்லி க் காரில் கிளம்ப இரவேறிய நேரத்தில் ஒரு கிராமத்தைத் தாண்டும் போது எனக்கு வலியெடுக்க அவர் செய்வதறியாது வண்டிக்குள் என்னை விட்டு விட்டு கிராமத்துக்குள் சென்று நர்ஸைக் கூட்டி வந்தார்..
பிரசவமும் ஆனது..பெண் குழந்தை.. என்று சொன்ன குரல்.. ஜானகி.. அக்க்கா என நான்கத்தியது அவருக்கும் கேட்க அவரும் என்ன என்று கேட்க காரினுள் இருந்தே தொலைவில் சொல்லும் உருவத்தைச் சுட்டினேன்..அக்கா..
ராகவ்…
*******
என்னது நர்ஸாக ஜானகியா.. துரத்தினேன்..அந்த உருவமும் சளைக்காமல் சென்று ஒரு குடிசையில் புகுந்து கொண்டது..
கதவைத் தட்டினேன்.. திறக்கவில்லை..மோதித் திறக்கலாம் என்று பார்த்தால் ஒரு வயதான அம்மா வந்தார்.. ஜானகி முன்பு சொன்ன வர்ணனை..
ஜானகி..
இனி வரமாட்டாள்.. உன் ஜானகி வைதேகியுடன் இருக்கிறாள்.. போ.. குடிசைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார்..
நான் மெல்ல காரை நோக்கி நடந்தேன்..
****
இது கவியரசர் கண்ணதாசன் எழுதிய “சிவப்புக் கல் மூக்குத்தி” நாவலின் சுருக்கம்.. கவியரசர் வெகு பிரமாதமாக எழுதியிருப்பதை நான் என் பாணியில் கொஞ்சம் சற்றே மாற்றி எழுதியிருப்பதால் கொஞ்சம் சுவாரஸ்யக் குறைவாக இருக்கலாம்…அது என் பிழையே..
பின்னர் படமாகவும் வந்தது..மதுரை கல்பனா தியேட்டரில் ரிலீஸ் என நினைவு..ஆனால் பார்க்கவில்லை..
யூட்யூபில் படம் கிடைக்கவில்லை பாடல்கள் மட்டும் கிடைத்தன..ஒன்று விஜயகுமார் ஸ்ரீதேவி..ஆத்தங்கரை அரசமரம்.. அப்புறம் கமல் பாடும் இரண்டு பாடல்கள்.. ஒரு பாடல் ஸ்ரீதேவியை அம்மனாக – காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி எனக் காண்பிக்க இன்னொரு பாடலும் அம்மன் பாடல் தான்..
படம் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது.. படம் பார்த்தவர்கள் சொல்லவும்..
கமல் பாடும் பாடல்
https://youtu.be/MXvmqKTKK8Y
https://youtu.be/8YhSZS1py_c
அப்புறமா வாரேன்..:)
vasudevan31355
8th May 2015, 08:05 AM
ரவி சார்,
அருமை. 'sri suryanarayana meluko' பாடலை மிகவும் என்ஜாய் செய்தேன்.
தங்களது 'ஆயிரம் கரங்கள் நீட்டி' தொடரை தொடர்ந்து ரசித்து படித்து வருகிறேன். அதில் நீங்கள் பதிந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' பாடல் என் வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாகும். அருமையான பாடல்களை தேடித் பிடித்து தொடரை சிறப்பாக கொண்டு செல்கிறீர்கள். மிக்க நன்றி.
vasudevan31355
8th May 2015, 08:20 AM
கல்நாயக்,
தங்கள் பாராட்டிற்கு மிக நன்றி! தங்களின் நிலாப் பாடல்களின் தொடரை மீண்டும் ஒரு நோட்டம் விட ஆரம்பித்து இருக்கிறேன். அப்பா! எவ்வளவு உழைப்பு! ஒவ்வொன்றும் அருமை. பாராட்டும் போது கூட நிலவுடனேயே குளிர்ச்சியாக வந்து பாராட்டும் அளவிற்கு நிலாவுடன் நிரந்தரமாக ஒன்றிப் போய் விட்டீர்கள். ரவி சாரும் கதிரவன் போல சூடாக பதிவுகள் இடுகிறார்.
கடலூர் கிருஷ்ணாலயாவில் பூக்கள் விடும் தூது வெளியானதை மிகச் சரியாக ஞாபகம் வைத்து இருக்கிறீர்களே! சூப்பர்ப். நானும் பட வெளியீட்டு தினத்தன்றே காலைக் காட்சி பார்த்து விட்டேன். பாடல்கள் மட்டுமே பிடித்தது.
அதே போல உங்கள் 'கூகுளினேன்' விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன். எப்படி அய்யா இப்படியெல்லாம்?
உங்களுக்கும், கலைக்கும் நடுவில் நடக்கும் வயது செல்லச் சண்டையை 'குழந்தையாய்' தவழ்ந்து கவனிக்கிறேன். ஒன்றுமே புரியவில்லை. 'குழந்தைப் பருவ'மல்லவா? பெரியவர்கள் என்ன பேசிக் கொ(ல்)ள்கிறீகள் என்று பாலகனுக்கு விளங்கவில்லை. இன்னும் பத்து வயது போனால்தான் விளங்கும் போல.
ம்...இதற்கு என்னென்னன விளைவுகளை சந்திக்கப் போகிறேனோ? தயாரா இருடா வாசு செல்லம்.
vasudevan31355
8th May 2015, 08:23 AM
சி.க,
//வாசுண்ணாவைப் பாருங்க.. ஒரே பந்துல ஒன்பது ரன்லாம் அடிக்கறார்..ரசனைக்காரர்//.
ஒரு பந்தில் ஒரு ரன் தான் சி,க.:)
//கலைவேந்தன் அய்யா அவர்களும் வாசுதேவன் அவர்களும் தனி லெவல் உங்களைப் போல. நீங்களெல்லாம் ஒரே பந்தில் ஒன்பது என்ன அதற்கு மேலேயும் அடிப்பீர்கள்//
இதற்கு என் சார்பாக கலை உங்களுக்கு தலைவலி கொடுப்பார். கலை! ப்ளீஸ்.
திலக சங்கமம் என்று ராகவேந்தர் சார் போட்டால் நீர் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் என்று திலக சங்கமம் போடுகிறீரே! உம்ம குறும்புக்கு லிமிட்டே இல்லையா?
vasudevan31355
8th May 2015, 08:31 AM
சி.க,
கவியரசர் எழுதிய “சிவப்புக் கல் மூக்குத்தி” நாவலின் சுருக்கம் நன்றாக இருந்தது. சி.க, எப்படித்தான் டைப் பண்றீங்களோ! கை வலிக்கல?
'சிவப்புக் கல் மூக்குத்தி செம போர்'. அதுவும் கமல் பூசாரி. போதும்டா சாமி.
vasudevan31355
8th May 2015, 08:36 AM
ராகவேந்திரன் சார்!
திலக சங்கமம் திகட்டாத ஒன்று. நடிகர் திலகத்தின் பிறந்தநாள் அன்று தமிழகம் முழுதும் இப்பாடல் இப்போதும் ஒலிக்குமே!
'செந்தமிழ்நாட்டுக் கலையுலகின் திலகமே' அருமையான வரிகள் என்றாலும், 'உலகத் திரையுலகின் திலகமே' என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
'வடிவுக்கு வளைகாப்பு' பாடல்கள் விவரத்திற்கு நன்றி சார்.
vasudevan31355
8th May 2015, 08:41 AM
சி.க,
'மானா மதுரையிலே... குட்டி மரிக்கொழுந்து வித்தவளே' டியூன்தான் 'சாலையிலே ரெண்டு மரம் ஜமீன்தாரு வச்ச மரத்'தின் டியூன்.
vasudevan31355
8th May 2015, 08:49 AM
சி.க,
எம்.என்.ராஜத்தைத் தவிர மற்ற இரு பெண்கள் யார் தெரியுமா?
ஒன்று கிரிஜா. 'மனோகரா' படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடி.
இன்னொன்று பி.கே சரஸ்வதி. 'துளிவிஷம்' படத்தில் வில்லன் நடிகர் திலகத்திற்கேற்ற வில்லி. என்னுடைய 'துளிவிஷம்' பட ஆய்வில் இதுபற்றி விவரமாக நடிகர் திலகம் திரியில் எழுதி உள்ளேன்.
இதே படத்தில் டி ஏ.மோத்தி பாடிய இன்னொரு அருமையான பாடல். 'வான் முகில் கண்ட வண்ணத் தோகை மயில் போல' உடன் டி.வி.ரத்தினம் பாடி இருப்பார். ('மாட்டு வண்டி பூட்டிகிட்டு' பாடுவாரே)
https://youtu.be/YWSWXEhH2DA
rajeshkrv
8th May 2015, 08:58 AM
மதுர கானத்தேரை சி.க முன்னிலை வகித்து வடம் பிடிக்க பின் ஆங்காங்கே பக்தர்களாகிய கல் நாயக், நான் மற்றும் அங்கிள் வடம்பிடிக்க முயல
பின்னாலிருந்து இரு தூண்களாக ராகவ்ஜியும் வாசு ஜியும் மீண்டும் தேரை நகர்த்த வந்த பயில்வான்களாக ஆம் எழுத்துத்திறமையில் கனவான்களாகவும் விளங்கும் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ..... அன்புடன் ராஜேஷ்
vasudevan31355
8th May 2015, 09:45 AM
கனவான்
பயில்வான்
ம்..
ராஜேஷ்ஜி! கமான்.
rajeshkrv
8th May 2015, 09:52 AM
கனவான்
பயில்வான்
ம்..
ராஜேஷ்ஜி! கமான்.
கமான் .. இதை சொல்லும் நீர் ஒரு மகான் .... ஆஹா நமக்கும் எழுத வருதே
chinnakkannan
8th May 2015, 10:39 AM
ஹாய் குட்மார்னிங்க் வாசுங்க்ணா, ராஜேஷ்.. வ.போ.கல் நாயக் கலை ராகவேந்தர்சார் ரவி
பயில்வான் கனவான் கமான் மகான்..ம்ம்
அதாவது தமிழ் இலக்கியத்துல பார்த்தீங்கண்ணா வ வுக்கு ம எதுகையா வரும் அதே சமாத்துல கவ்க்கு ம எதுகையா வராது..ஓ புரியலையா;; சரி சரி..இருவருக்கும் நன்றி என்றுசொல்லி இதோ ஒரு இளையராஜா பாடல் நவ்வுலோ புட்டானு ..( முகநூலில் நண்பர் சொல்லிக் கேட்டுப் பார்த்தேன்..ஓ.கே..சாங்க்.. அண்ட் ரவளி)
https://youtu.be/CvOKhfZyG_c
ஹை தமிழ்லயும் கொஞ்சம் பொம்மைப் பாட்டு இருக்கே ..இருமனம் கொண்ட திருமண வாழ்வில்..ம்ம் அது வேண்டாம்..
இதே சின்னப்பாயி தெலுங்குப் படத்தில் இன்னொரு பாட்டு..தெலுசுகோ தெலுசுகோ ஓ வன மாலி.. மெலோடியாக ஆரம்பித்து ரம்யாவின் அதிரடி..ஆட்டம்..
https://youtu.be/STxVmawQDtI
நைட் ஷோ உ.வி பார்த்துட்டு வந்து அரைத்தூக்கத்துலஏற்கெனவே ஆரம்பித்து பாதியில் நிறுத்தியிருந்த சி.க.மூக்குத்தி டைப்படிச்சேனா.போஸ்ட் பண்ணினேனா ( கதை மட்டும் கண்ணதாசன்..வரிகள் என்னுடையவை! எனில் பயம்) இப்பவும் ஒரு ஹாஆஆவ்..
மூன்று பெண்கள் பற்றிய டீடெய்லுக்கு நன்றி வாசுசார்.. கொஞ்சூண்டு பாராட்டு அல்லது திட்டு கெடிச்சா போதும்..கைவலியாவது ஒண்ணாவது..சி.க மூக்குத்தி படம் போராக இருக்கும் எனத் தெரியும் ம்ம் நன்றி
ராஜேஷ்.. நன்றிப்பா. பர்த்டேக்கு என்னவாக்கும் செய்தீர்கள்..
சரி சரி..கொஞ்சம் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட்டு தூங்கி யூ.வி பத்தி எழுதறேன்..
chinnakkannan
8th May 2015, 11:10 AM
அத்திமரப் பூவிது - பாட்டில் ஆரம்பத்தில் ஆடும் நடிகையே நளினியை விட அழகாய் இருக்கிறார்..
மூங்கில் மரக்காட்டினிலேயில் கல்யாண் குமாரோடு இருப்பது பத்மினியா
புளியமரம், வாழை மரத்தோட்டம், புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு - இது எல்லாம் முன்பே ரொம்ப காலத்துக்கு முன்னால் கேட்டிருந்தாலும் இப்போது தான் பார்த்தேன்..
ஆத்தங்கர மரமே அரசமர இலையேயும் ஸ்வீட் சாங்க்..
மரங்கள் பாடல்கள் வழங்கிய வாசு, ராகவேந்திரர்,கல் நாயக்கிற்கு நன்றி..
vasudevan31355
8th May 2015, 12:10 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
2
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg
தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த பாடல்களுள் ஒன்று. பாலா மக்கள் திலகம் அவர்களுக்காக பாடிய 'அடிமைப் பெண்' (1969) படப் பாடல்.
http://i.ytimg.com/vi/yHfBRUdJ0Ts/hqdefault.jpg
'ஆயிரம் நிலவே வா'
உடன் சுசீலா அம்மா.
தினை மாவும், வெல்லமும் சேர்ந்தால் என்ன ருசியோ அதை விட இந்தப் பாடல் தெவிட்டாத திகட்டாத ருசி தரும்.
பாலாவின் பால் குரலும், சுசீலாவின் சுகக் குரலும் நம்மை அப்படியே சுவீகாரம் எடுத்துக் கொள்ளும்.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பொருத்தமாயும் பாலாவின் குரல் அமைந்து விட்டது.
நடிகர் திலகம் காரில் பயணிக்கும் போது கார் ஓட்டுனரை இந்தப் பாடலை அடிக்கடி போடச் சொல்லிக் கேட்டு மனம் மகிழ்வாரம். 'அண்ணனின் இசை ரசனையே தனி' என்று எம்.ஜி.ஆர் அவர்களை மனதாரப் புகழ்வாராம்.
பாலாவின் பச்சைப் பசுங்குரல் பாரையே கட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல. 'திரை இசைத் திலக'த்தின் பிரம்மாண்ட காட்சிக்கேற்ற இசையமைப்பு. அதுவும் அந்த ஆரம்ப உற்சாக வேக இசை வேனிற் காலத்தில் வீசும் வேக இளம்தென்றல்.
வித்தியாசமான ரோமானிய காஸ்ட்யூமில் எம்.ஜி.ஆர் அவரது ஸ்டைலில் இப்பாடலைப் பாட ஆரம்பிக்க, உடன் ஜெயலலிதா கீழுதட்டை விரால் இழுத்துக் கடிக்க, இந்த இனிமையான பாடலில் அப்படியே இணைய ஆரம்பித்து விடலாம்.
அவர் ரசிகர், இவர் ரசிகர் என்ற பேதமின்றி அனைவரும் பாலாவை ஒருமித்து ரசிக்க வைத்த ஒருதலைப் பட்சம் காட்ட வைக்காத பாடல்.
ராமமூர்த்தியின் காமெரா நம் வாயைப் பிளக்க வைக்க, அதற்கு மேல் ஜெய்ப்பூர் அரண்மனையின் பிரம்மாண்டம் இன்னும் நம்மைத் திகைக்க வைக்கிறது.
http://thamizhnadhi.com/wp-content/uploads/2014/02/mgr-pulamai1.jpg
பாடல் வரிகள் அமிழ்தினும் இனியவை. புலமைப்பித்தன் தமிழ்ப் பித்தனாகி இலக்கியத் தரத்துடன் அமுத விருந்து படைத்து விட்டார்.
குரலில்
குழைவு... குழைவு...குழைவு..
பாலாவுக்கு கடவுள் தந்த வரம்.
அதனால் எல்லோர்க்கும் பெரு
மகிழ்வு... மகிழ்வு... மகிழ்வு
இது பாலா நமக்கு தந்த வரம்
பாடகர் திலகத்தின் கம்பீரக் குரலுக்கும், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்ற மென்குரல்களுக்கும் வசப்பட்ட தமிழ்நாடு வித்தியாசமான பாலாவின் குரலில் கிறங்கிப் போய் சுருண்டு அடிமை ஆனது. தெலுங்கில் காமெடி டிராக் பாடிக் கொண்டிருந்தவர் தென்னகம் புகழும் 'பால சுப்ரமணிய மன்னவன்' ஆனார். வித்யாசக் குரல் கேட்டு இளைஞர்கள் இனம் கானா இன்பம் அடையத் துவங்கினர். தெலுங்கில் கண்டசாலாவை விட்டு நீண்ட காலம் கழலாத மக்கள் அவருக்குப் பிறகு பாலாவின் குரலில் கொஞ்சம் கொஞ்சமாக சுழல ஆரம்பித்தார்கள்.
அவரவர் வாயிலும் 'ஆயிரம் நிலவே வா' தான். மேடைக் கச்சேரிகளில், திருமண வைபவங்களில், சுப நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் 'ஆயிரம் நிலவை 'வா' என்று கூப்பிட்டு மகிழ்ந்தனர். அந்த ஆர்ப்பரிப்பு உற்சாகம் இன்றும் எள்ளளவும் குறையவில்லை என்பதுதான் எல்லாவற்றையும்விட அதிசயம். இதற்காக திரை இசைத் திலகத்திற்கும், மக்கள் திலகத்திற்கும் நன்றி கூற கடமைப் பட்டவர்கள் ஆகிறோம்.
http://www.kaathal.com/songs/lyrics/1000_nilavae_vaa.gif
https://youtu.be/yHfBRUdJ0Ts
பாலா மேடையில் 'ஆயிரம் நிலவே வா' என்று அப்போது போலவே அச்சு பிசகாமல் அப்படியே அள்ளி நமக்கு வழங்குவதை ஒரு சாம்பிளாகக் காணுங்கள்
https://youtu.be/KA9IjMctzLY
vasudevan31355
8th May 2015, 01:46 PM
மூங்கில் மரக்காட்டினிலேயில் கல்யாண் குமாரோடு இருப்பது பத்மினியா
இல்லை சி.க. அது மாலினி. நடிகர் திலகத்துடன் 'சபாஷ் மீனா' படத்தில் ஜோடியாகவும், (காணா இன்பம் கனிந்ததேனோ, சித்திரம் பேசுதடி) மக்கள் திலகத்துடன் 'சபாஷ் மாப்பிள்ளை' படத்தில் ஜோடியாகவும் நடித்தவர்.
இவர் ஒரு ஆணழகி.:)
http://i.ytimg.com/vi/f6Q8ILxM_RM/maxresdefault.jpg
http://upload.wikimedia.org/wikipedia/en/1/17/Sabash_mappillai.jpg
vasudevan31355
8th May 2015, 01:52 PM
'சபாஷ் மீனா' படத்தில் 'காணா இன்பம் கனிந்ததேனோ' மாலினி நடிகர் திலகத்துடன்.
https://youtu.be/MewOsMqwg3Y
'சபாஷ் மாப்பிள்ளை' படத்தில் சூலமங்கலம் குரலில் மாலினி பாடும் 'முத்து போலே மஞ்சள் கொத்து போலே'
https://youtu.be/H8ODbfz5kMo
vasudevan31355
8th May 2015, 01:57 PM
'இன்பத்தின் வேகமா' என்று 'கள்ளபார்ட்டை'க் கவிழ்க்கும் மாலினி 'சபாஷ் மீனா' திரைப்படத்தில்.
https://youtu.be/RAayED4S300
vasudevan31355
8th May 2015, 02:01 PM
சி.க,
உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் பாடல். நீங்கள் கேட்ட மாலினி நடித்ததுதான். குளிர்ச்சியான பாடல் என்பதால் உங்களுக்கு மட்டுமே. (கல், கலை கண்டுக்க வேண்டாம். விட்டுடுங்க.):)
https://youtu.be/43Uhk4qAHqY
JamesFague
8th May 2015, 04:37 PM
Courtesy: Tamil Hindu
‘ஈர விழிக் காவியங்கள்’ படப்பிடிப்பில்...
துயருறும் தருணங்களில் இசை தரும் ஆறுதல் ஆத்மார்த்தமானது. தனது துயரத்தை, ஆறுதல் தேடி அலையும் மனதின் ஊடாட்டத்தை ஒருவரால் இசையாக மாற்ற முடிந்தால், அந்தத் துயரமே அவருக்குப் போதையாகிவிடும். இசைக் கருவியின் வழியே துயரத்தின் குறிப்புகளைக் காற்றில் எழுதிக் கரையவிடுவது சுகமான அனுபவமாகிவிடும்.
காதலின் இழப்பை, சிக்கலான குடும்பப் பின்னணியின் வலியை இசையால் பிரதியெடுக்கும் கலைஞனைப் பற்றிய படம் ‘ஈரவிழிக் காவியங்கள்’. இசைக் கலைஞராகும் ஆசையுடன் நகரத்துக்கு வருகிறான் நாயகன். தனக்கு உதவும் பெண் மீது அவனுக்கு மையல். அந்தப் பெண்ணோ வேறொருவரின் காதலி என்று நீளும் கதை இது.
1982-ல் வெளியான இந்தப் படத்தை பி.ஆர். பந்துலுவின் மகனான பி.ஆர். ரவிஷங்கர் இயக்கியிருந்தார். கையில் கிட்டாருடன் அப்பாவித்தனத்தைச் சுமந்து திரியும் பாத்திரம் பிரதாப் போத்தனுக்கு. ஏக்கம் ததும்பும் இசையை மென் சாரலைப் போலப் படம் முழுவதும் தூவியிருப்பார் இளையராஜா.
மிதக்கவைக்கும் இசை
கனவில் விரியும் பாடலுடன்தான் படம் தொடங்குகிறது. நாயகன் கிட்டார் இசைக் கலைஞன் என்பதால் இப்படத்தின் ஒவ்வொரு பாடலும் கிட்டார் இசையுடன் தொடங்க, வயலின்(கள்), புல்லாங்குழல் என்று இளையராஜாவின் பிரியத்துக்குரிய இசைக் கருவிகள் இணைந்து இசைக்கின்றன. ‘கனவில் மிதக்கும் இதயம் முழுதும்’ என்று தொடங்கும் இந்தப் பாடலும் அப்படித்தான். சென்னையின் காலைநேரக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே பயணப்படும் நாயகனின் மனதில் இசையின் லட்சியக் கனவுகள் ஒவ்வொன்றாக விரிந்துகொண்டே வருவதுபோன்ற காட்சியமைப்பு அது.
ஆனால், பாடல் அதையும் தாண்டி வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நிலப் பரப்புகளைக் கற்பனையில் காட்சிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இளையராஜாவின் இசை, இந்தப் பாடலில் கற்பனை உலகின் நிலங்களைக் கண்முன் நிறுத்துகிறது. அடங்கிய மென் குரலில் எளிமையாக, பாந்தமாகப் பாடியிருப்பார் ஜேசுதாஸ்.
ஏழையின் கீதம்
ரசிகர்கள் கூடியிருக்கும் அரங்கில் தனது இசையை அரங்கேற்ற வேண்டும் எனும் கனவைத் தன் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறான் நாயகன். ‘என் கானம் இன்று அரங்கேறும்’ எனும் அந்தப் பாடலை, வலியில் துடிக்கும் மனதைப் பிரதியெடுக்கும் குரலுடன் பாடியிருப்பார் இளையராஜா. ஒரு கலைஞர் தனது கற்பனைக்குத் தானே உயிர்கொடுக்கும்போது படைப்புகள் உள்ளார்ந்த உயிர்ப்புடன் ஒளிரும். அந்தப் பட்டியலில் இடம்பெறும் ‘ராஜா பாட்டு’ இது.
நிகழ்காலத்தின் வெறுமையையும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளையும் கிட்டாரின் தந்திக் கம்பிகள் வழியாகவே வரைந்துகாட்டியிருப்பார் மனிதர். ‘பாலைவனத்தின் பனிமழையே வா’ எனும் வைரமுத்துவின் வரிகள் பாடலின் தன்மையை மேன்மைப் படுத்தியிருக்கும். இரண்டாவது சரணத்தில் இணைந்துகொள்ளும் ஜென்சியின் குரல், நிலைகொள்ளாமல் தவிக்கும் நாயகனுக்கு ஆறுதல் தரும் மாயக் குரலாகப் பரவும்.
ஏகாந்தத்தின் இசை
அடிவானத்தைத் தொடும் முயற்சியில் விரிந்துகொண்டே செல்லும் சமுத்திரத்தை, யாருமற்ற தீவின் கரையில் நின்றுகொண்டு ரசிப்பது எத்தனை சுகமானது. அந்தச் சுகத்தை இசை வடிவத்தில் கேட்க வேண்டும் என்றால், இந்தப் பாடலைக் கேளுங்கள். ‘பழைய சோகங்கள்… அழுத காயங்கள்’ என்று தொடங்கும் இந்தப் பாடலையும் இளையராஜாதான் பாடியிருக்கிறார். இரவில் வானத்தைப் பார்த்தபடி படுத்திருப்பவர்களின் கனவில் ஏதாவது ஒரு நட்சத்திரம் தோன்றும்; கண்சிமிட்டிப் புன்னகைத்த பின்னர் கண்முன்னே பூமியில் விழும். அந்த உணர்வை இந்தப் பாடல் தரும்.
வெற்றிப் பாடல்
‘காதல் பண்பாடு… யோகம் கொண்டாடு’ என்று இசைக்கும் இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருப்பார். வாய்ப்பு நிறைவேறி, தனது தாய், நண்பர்கள் முன்னிலையில் நாயகன் கொண்டாட்டத்துடன் பாடும் பாடல் இது. இருளான மேடையில் மஞ்சள் விளக்கில் ஒளிரும் சிகையுடன் தோன்றிப் பாடுவார் பிரதாப் போத்தன் (இந்தப் பாடலின் ஒளிப்பதிவு, அசோக்குமாரின் தனி முத்திரைகளில் ஒன்று!). தனக்கு நம்பிக்கையளித்த காதலி (ராதிகா) வராத சோகம் பாடலின் வரிகளிலும் ஜேசுதாஸின் மென்சோகக் குரலிலும் விரவிக் கிடக்கும். வலி, உற்சாகம் என்று இருவேறு உணர்வுகளை ஒன்றாக இணைத்து இழைத்து வார்த்திருப்பார் இளையராஜா.
அவரது இசையமைப்பில் அந்தக் கால கட்டத்தில் வெளியான மற்ற படங்களின் பாடல்களை ஒப்பிட, இப்படத்தின் பாடல்கள் அதிகம் புகழ்பெற்றவை அல்ல.
uvausan
8th May 2015, 09:23 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 13
angkor wat , cambodia - unusual celestial is happening - the sun enters the temple which happens once in 2000 years.
" சீலமாய் வாழும் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் , ஞாயிறே போற்றி !
சூரியா போற்றி ! சுதந்திரா போற்றி !!
வீரியா போற்றி , வினைகள் களைவாய் போற்றி போற்றி !!!
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/unnamed_zpsn8jazvnl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/unnamed_zpsn8jazvnl.jpg.html)
uvausan
8th May 2015, 09:25 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 14
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/sun_zpspfwo2qgo.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/sun_zpspfwo2qgo.jpg.html)
uvausan
8th May 2015, 09:26 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 15
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/unnamed%202_zpsuhwkne3g.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/unnamed%202_zpsuhwkne3g.jpg.html)
uvausan
8th May 2015, 09:27 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 16
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150422-WA0003_zpsmms7za8q.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150422-WA0003_zpsmms7za8q.jpg.html)
uvausan
8th May 2015, 09:39 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 17
Ghantasala's composition and rendition of this surya shloka, written by Samudrala Raghavacharya.
This is one of the most melodious and a great devotional prayer for the Sun god.
சின்ன பாடல் - அருமையான குரலில் - மனதை சொக்க வைக்கும் வரிகளில் - நமக்காக திரு கண்டசாலா பாடிய பாடல் - என்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் .
https://youtu.be/Ux49blEXTds
uvausan
8th May 2015, 09:49 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 18
தோளி சஞ்ச வேலலோ - படம் :Seetha Ramulu
ஒரு முறை இந்த பாட்டை கேளுங்கள் - உங்கள் மனம் உங்களையும் அறியாமல் உருகுவதை பார்க்கலாம் - இசைக்கு மொழி தேவையில்லை - பாரதி சொன்ன அந்த சுந்தர தெலுங்கில் என்றும் தனித்து நிற்கும் ஒரு பாடல் இது .
https://youtu.be/3xyRYFnSKLU
uvausan
8th May 2015, 10:03 PM
ரவி,
இதில் என் பெயரை எடுத்து விடுங்கள். நான் ஒரு கூகுல் தேடல் ஆள். என்னைப் போய் பெரிய பெரிய ஆட்களுடன் ஒப்பிடுகிறீர்களே!!!
திரு கல்நாயக் - உங்கள் பெயரை எடுத்து விட முயற்சி செய்தேன் - நானும் கூகுள் யை பார்த்துதான் வீட்டு விஷயத்தையும் , உலக விஷயத்தை , நேற்று என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்வேன் - ஞாபக சக்தி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கும் இனத்தை சேர்ந்தவன் . நீங்கள் என்னுடைய தரத்திற்கு இறங்கி வருவது , மனதை துன்புறுத்துக்கின்றது - உங்கள் பெயரை அந்த பெரிய படைப்பாளர்கள் வரிசையில் இருந்து இந்த ஒரு காரணத்தால் எடுத்துவிட விரும்பவில்லை . மன்னிக்கவும்
uvausan
8th May 2015, 10:10 PM
வாசு - உங்களுக்கு பதில் பதிவு இடும் தருணத்தில் - டி ராஜேந்தர் பாணியில் ஒரு சின்ன கவிதையாக அளித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் . CK வை மனதில் ப்ராத்தனை செய்து கொண்டு இந்த வரிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் .
" You are the Truth.
If you are truthful , you are trusted.
If you are trusted , you are entrusted.
If you are entrusted , people will be
Interested in You"
kalnayak
9th May 2015, 09:55 AM
குட் மார்னிங் எவெரிபடி,
யாரும் கீறிங்களா?
kalnayak
9th May 2015, 09:56 AM
திரு கல்நாயக் - உங்கள் பெயரை எடுத்து விட முயற்சி செய்தேன் - நானும் கூகுள் யை பார்த்துதான் வீட்டு விஷயத்தையும் , உலக விஷயத்தை , நேற்று என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்வேன் - ஞாபக சக்தி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கும் இனத்தை சேர்ந்தவன் . நீங்கள் என்னுடைய தரத்திற்கு இறங்கி வருவது , மனதை துன்புறுத்துக்கின்றது - உங்கள் பெயரை அந்த பெரிய படைப்பாளர்கள் வரிசையில் இருந்து இந்த ஒரு காரணத்தால் எடுத்துவிட விரும்பவில்லை . மன்னிக்கவும்
ரவி,
பார்த்தீர்களா. உங்கள் தரத்திற்கு ஏறி வரலாம் என்று பார்த்தேன். என் மனது நோகாமல் நைச்சியமாக என்னை கழட்டி விடப் பார்க்கிறீர்களே. இது நியாயமா? ஆனால் இதுவே என் மனதை துன்புறுத்துகின்றது. அவரவர்களுக்கு உரிய இடம் அவரவர்களுக்குத்தான். யாரைச் சொல்லி என்ன பயன்?
kalnayak
9th May 2015, 10:06 AM
"ஆயிரம் கரங்கள் நீட்டி..." தொடரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ரவி அவர்களே,
வித்தியாசமாக சுந்தரத் தெலுங்கு பாடல் மட்டும்தான் என்றிருந்தேன். மட்டுமல்லாது கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலில் இருந்தும் அதியற்புதமான ஞாயிறு காட்சிகளை கொடுத்து பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறீர்கள். என்ன இருந்தாலும் தமிழர்கள் கட்டிய கோவில் அல்லவா? எவ்வளவு அறிவியல் தொழில் நுட்பம் அந்தக் காலத்திலேயே இருந்திருந்தால் இவ்வளவு நேர்த்தியுடன் இப்படி வருங்கால சந்ததிகளுக்கு கொடுத்துச் சென்றிருப்பார்கள்!!! என்னைப் போன்ற நேரில் சென்று பார்க்க முடியாத பாமரனுக்கு உங்களைப் போன்றவர்கள்தான் காட்சிப் படுத்த வேண்டும். படுத்தி இருக்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
kalnayak
9th May 2015, 10:11 AM
சி.க,
உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் பாடல். நீங்கள் கேட்ட மாலினி நடித்ததுதான். குளிர்ச்சியான பாடல் என்பதால் உங்களுக்கு மட்டுமே. (கல், கலை கண்டுக்க வேண்டாம். விட்டுடுங்க.):)
https://youtu.be/43Uhk4qAHqY
வாசு,
சி.க. விற்காக நீங்கள் கொடுத்த குளிர்ச்சியான பாடலை நன்றாக பார்த்தேன். நீங்கள் சொன்னதால் கண்டுகொள்ளவில்லை. விட்டுவிட்டேன்.
uvausan
9th May 2015, 10:24 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 19
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/unnamed%201_zpsjev0tuk3.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/unnamed%201_zpsjev0tuk3.jpg.html)
காலை வணக்கம் - உங்களில் பலர் தினமும் சூரிய நமஸ்காரம் செய்பவர்களாக இருக்கலாம் . இதன் பலனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது - அவ்வளவு தேஜஸ் உடைய உடற் பயிற்ச்சி - சிலர் கண் கெட்ட பின்தான் சூரிய நமஸ்காரம் பண்ணுவார்கள் - அப்படி செய்யாமல் நாம் நமது அடுத்த தலைமுறைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் .
DIAL ( delhi international airport limited ) - இதை கட்டியதுடன் இல்லாமல் , இந்த சூரிய நமஸ்கார உருவங்களை அமைத்துக்கொடுத்ததும் என்னுடைய company தான் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன் - இந்த ஏர்போர்ட் பல international , domestic விருதுகளை பெற்ற வண்ணம் உள்ளது .
uvausan
9th May 2015, 10:27 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 20
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150509-WA0003_zps2neyv7ns.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150509-WA0003_zps2neyv7ns.jpg.html)
மெர்குரி - சூரியனின் அருகாமையில் இருக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கின்றது பாருங்கள்
uvausan
9th May 2015, 10:40 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 21
Movie Mangammagari Manavadu Starring Nandamuri Balakrishna, Bhanumathi Ramakrishna, Suhasini. Directed by Kodi Ramakrishna. Produced by S. Gopala Reddy. Music by: K. V. Mahadevan.
அருமையான குரல் - தமிழ் திரைப்பட உலகை கட்டிப்போட்ட குரல் - கதிரவனின் ஒளி நம்மை சேர்ந்து அடைவதைப்போல நம்மிடம் இந்த பாடல் தென்றல் போல தவழ்ந்து வருவதை பாருங்கள் .
https://youtu.be/3jlhjLFpTY4
rajeshkrv
9th May 2015, 10:42 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 21
Movie Mangammagari Manavadu Starring Nandamuri Balakrishna, Bhanumathi Ramakrishna, Suhasini. Directed by Kodi Ramakrishna. Produced by S. Gopala Reddy. Music by: K. V. Mahadevan.
அருமையான குரல் - தமிழ் திரைப்பட உலகை கட்டிப்போட்ட குரல் - கதிரவனின் ஒளி நம்மை சேர்ந்து அடைவதைப்போல நம்மிடம் இந்த பாடல் தென்றல் போல தவழ்ந்து வருவதை பாருங்கள் .
https://youtu.be/3jlhjLFpTY4
namma man vasanai thaan indha padam
gandhi mathi role for bhanumathi
uvausan
9th May 2015, 10:49 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 22
kaluvaku chandrudu entho dooram Movie - " Chillara Devullu"
https://youtu.be/sDPmCJB-bc4
பாடல் உங்கள் இதயத்தை சற்றே தொட வேண்டுமா ? - மனம் இலேசாகி காற்றில் மிதக்க வேண்டுமா ? உங்கள் கவலைகளுக்கும் , மன சஞ்சலத்திற்கும் விடை கொடுக்க வேண்டுமா - இந்த பாடலை கேளுங்கள் - விடை கிடைக்கும் - உங்களுக்கும் சந்தோஷத்திற்கும் அதிக தூரமே இல்லை ----
uvausan
9th May 2015, 11:18 AM
திரு கலை வேந்தன் - உங்களை கலை என்று அழைக்கலாம் என்று நினைத்தேன் - மனம் ஒப்புக்கொள்ளவில்லை - எதையுமே சீராக எடுத்துசெல்பவரை " கலை " என்று எப்படி அழைக்க முடியும் - எதையுமே "கலைக்காதவரை " கலை என்று அழைக்க விரும்பவில்லை - சரி வேந்தன் என்று அழைக்கலாம் என்றால் - அரச சபையில் நிற்பதைப்போல எண்ணம் தோன்றுகின்றது - சுருக்கமாக k .v என்று உங்களை அழைக்க உங்கள் அனுமதி கிடைக்குமா ?
எங்கள் தலைவர் பாட்டில் ஒரு வரி இப்படி வரும் -
" கலை எல்லாம் கண்கள் சொல்லும் கலை ஆகுமா ?" - உங்கள் பதிவுகளை பார்க்கும் பொழுது - அந்த இனிய வரிகளை சுவை குறையாமல் இப்படி சொல்லலாம் என்று தோன்றுகின்றது
பதிவெல்லாம் கலை போடும் பதிவாகுமா ?
அன்புடன்
ரவி
uvausan
9th May 2015, 03:59 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 23
Dabbuku Lokam Dasoham - Nuvvu Nenu -
N T R - Jamuna - Telugu Song
Sri Ghantasala and Smt Susheela - இவர்களின் குரல்களில் இன்னமொரு இனிய பாடல் - காதலின் தத்துவத்தை கதிரவனுடன் இணைத்து பாடும் பாடல் - காலங்கள் பல கடந்தும் அந்த ஆதவனனைப்போல இன்னும் ஒளி வற்றாமல் இனிமையை தந்துகொண்டிருக்கும் பாடல் - உங்களுக்காக -!!
https://youtu.be/0vVp3iZw8xc
uvausan
9th May 2015, 04:20 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 24
படம் Karisakkaattu poove ( tamil)
ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே - இளையராஜா 's classic - அருமையான இளமை ததும்பும் காதல் பாடல்
https://youtu.be/JTQysZ1lzP8
uvausan
9th May 2015, 04:33 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 25
Song Surya Chandra Akashake from the movie Nee Bareda Kadambari.( கன்னடம் ) - அருமையான கன்னட பாடல் - காதல் என்பது வாழ்வில் சூரியன் சந்திரன் மாதிரி - வெப்பமும் , குளிமையும் மாறி மாறி வருவதுதான் காதல் , வாழ்க்கை - சரியான விகிதத்தில் கலந்திருக்கும்மாயின் , வாழ்க்கை என்றும் இனிமையாகவே இருக்கும் ..
https://youtu.be/iE0uvoFYkfU
uvausan
9th May 2015, 04:38 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 26
படம் : கள்வனின் காதலி
கவிமணியின் ------
"வெயிலுக்கேற்ற நிழல் உண்டு ...வீசும் தென்றல் காற்றுண்டு" ( solo song)
கருப்பு வெள்ளை"யிலும்
இசையின் தேன் கருவூலம் இது.
இதைக்கேட்டு
உருகி உள்ளம் வழிந்தோடியதில்
காலமே "காலமாகி"ப்போனது."
https://youtu.be/MuDqy07gy9Y
uvausan
9th May 2015, 04:42 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 27
படம் : கள்வனின் காதலி
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி
வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ?
ஸ்வர்க்கம் வேறுண்டோ?
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
https://youtu.be/SnOCfi783Aw
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
என்று அன்றே அழகான ஜோடிகளை வைத்து பாடி விட்ட பாடல்
uvausan
9th May 2015, 06:49 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 28
Chanda Hai Tu - Aradhana - Rajesh Khanna & Sharmila Tagore-
https://youtu.be/YMcg7TMj1RM?list=PLJNghLLuKrhhn5fJMSBXbxaNJVcKG9xp X
A child gives birth to a mother .
கீழ்கண்ட பதிவு இந்த பாட்டின் அர்த்தம் இல்லை - பல முதியோர் இல்லங்களில் வாழப்படும் தாய்மார்களின் ஏகோப்பித்த குரல் - அது உங்கள் காதுகளிலும் விழுந்தால் அது என் இந்த பதிவின் மகத்தான வெற்றி .
ஒரு தாயின் - தவறு தவறு
ஒரு தெய்வத்தின் குரல்
மகனே !
இன்று என்னை சம்பந்தமே இல்லாத நாலு பேர்கள் எங்கோ சுமந்து சென்றுகொண்டிருக்கிண்டார்கள் . உன்னை சுமந்து , வளர்த்த போது கிடைக்காத மலர் மாலைகள் இன்று காயிந்து போன என் உடலில் விழுகின்றது . கட்டிய ஒரே சேலையுடன் உன்னை வளர்த்தேன் - இன்று என் உடம்பில் புதிய சேலை ஒன்றை கட்டி இருக்கின்றாய் ( விலை அதிகமா மகனே ?) . முதியோர் இல்லத்தில் பலர் என்னை கேட்டனர் - உங்கள் மகன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று - நீ பிறந்தவுடன் பிறருக்கும் , இந்த நாட்டிற்கும் என்னவெல்லாம் செய்வாய் என்று நான் கண்ட கனவை பற்றித்தான் அவர்களிடம் என்னால் சொல்ல முடிந்தது - உங்கள் மகன் எங்கே இருக்கிறான் ? ஏன் உங்களை பார்க்க வருவதில்லை என்றும் கேட்டனர் . என் மகன் என்றும் என் இதயத்தில் இருக்கிறான் - அவன் எங்குமே என்னைவிட்டு போவதில்லை என்றேன் .
இருள் சூழ்ந்த இந்த உலகத்தில் உன்னை ஒரு ஒளியாக பார்த்தேன் - அனால் அந்த ஒளி என் மனதை உளியாக ஏன் வதைத்து என்றே புரியவில்லை - நீ என்றும் நன்றாக , நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை நாடினேன் - இறைவன் என்னைப் பார்த்து சிரித்தான் - அவன் வாழவேண்டும் என்று நான் உனக்கு கொடுத்த ஆயுளை ஏன் உன் மகனுக்கு கொடுத்தாய் என்றான் ?
வாழவேண்டும் என் மகன் என்று நினைத்தேன் - அவனோ நான் வாழ்ந்தது போதும் என்றே நினைக்கிறான் . அவன் ஆசைகளை என்றுமே நான் நிறைவேற்ற தவறியதில்லை இறைவா என்றேன் !!
எனக்கு ஒரே ஒரு உதவி செய்வாயா மகனே ? நான் தங்கி இருந்த அறையில் கதிரவன் வர அச்சப்படுகிறான் - இந்த கோடையில் மனம் சுடுவதுபோல உடம்பும் சுடுகின்றது - சில மாற்றங்கள் தேவை - என்னை போல பல தாய் மார்கள் அங்கே போதிய வசதிகள் இல்லாமல் இறந்தே வாழ்கிறார்கள் - என் பென்ஷன் பணத்திலிருந்து அந்த முதியோர் இல்லத்தை சீரமைப்பாயா ? அங்கே இன்னும் என்னை போல பலர் வரக்கூடும் - அவர்களுக்கு எனக்கு இன்று கிடத்தைபோல நாலு பேர்களின் உதவி கிடைக்கும் வரை உன் உதவி அவர்களின் உடல் வலியை சற்றே குறைக்கட்டுமே !!
அன்புடன்
ஒரு காலத்தில் உனக்கு தேவைப்பட்டவள்
மகன் உணர்கிறான் - கதறுகிறான் - இறைவனை திட்டுகிறான்
" நீ இருக்கின்றாயா - இருந்தால் உலகத்தில் எங்கே வாழ்கிறாய் - ஏன் என் தாயை என்னிடம் இருந்து பிரித்தாய் பித்தனே ! -பதில் சொல் !!! "
இறைவன் அவன் காதில் மட்டும் மெதுவாக சொல்கிறான் .
" இதுவரை தாய் என்று சொன்னாயே - அவளிடம் தான் நீ பிறந்தது முதல் இருக்கின்றேன் - நீ அவளை என்று வேண்டாம் என்று நினைத்து முதியோர் இல்லத்தில் சேர்த்தாயோ அன்றே என்னையும் மரணம் தழுவிக்கொண்டது "
uvausan
9th May 2015, 06:59 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 29
Seethakoka Chiluka | Minneti Suridu song
அழகான வாணிஜெயராம், SPB குரலில் - தெலுங்கில் வரும் கதிரவன் தமிழில் ( 1000 தாமரைகள் மொட்டுக்களே ) காமனாக வருகிறான்
https://youtu.be/vqUprbV_fm4
uvausan
9th May 2015, 10:21 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 30
Surya Kireedam Devasuram
https://youtu.be/IAMQytJVDOY
அழகான சுந்தர மலையாளத்தில் ஆதவனை உச்சரிக்கும் பாடல் - மோகன்லால் அவர்களின் அமைதியான நடிப்பு - அதற்க்கு வலிமை சேர்க்கும் ரேவதியின் நடிப்பு - கேரள சூழலில் நம்மை மறக்க வைக்கும் பாடல் இது
rajraj
10th May 2015, 02:22 AM
From Bale Raman
Engume Anandam......
http://www.youtube.com/watch?v=Ig_Yf-rRagc
From Brathuku theruvu
Andame anandam......
http://www.youtube.com/watch?v=m-6yfM3q6s4
Andaame Anandam (male version)
http://www.youtube.com/watch?v=211rvVKPFi4
Looks like we have a very happy crew in this thread. I thought it would be appropriate to post these songs ! :)
rajeshkrv
10th May 2015, 02:41 AM
மறந்து போன பாடல்கள்
ஊரடங்கும் சாமத்துல
https://www.youtube.com/watch?v=4Ju356jy2tw
chinnakkannan
10th May 2015, 11:13 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
வீட்டில் மோடெம் ஒர்க் செய்யவில்லை எனில் எதுவும் போஸ்ட்ம் செய்ய இயலவில்லை..(நெட்டே வரலையே)
எனில் இன்று அல்லது நாளை சரிசெய்துவிடுவேன் என நினைக்கிறேன்..
வாசு சார் மாலினி பாடலுக்கு நன்றி..இனிமேல் தான் கேட்கவேண்டும்.. ஆ.கை. நீ ரவி இனிமேல் தான் பார்க்க வேண்டும்..
விரைவில் வாரேன்..
uvausan
10th May 2015, 11:59 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 31
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?
வட்டக் கரியவிழி -கண்ணம்மா !
வானக்கருமை கொல்லோ ?
பட்டுக் கருநீலப் -புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நட்ச்ச்திரங்களடீ !
சோலை மலரொளியோ -உனது
சுந்தரப்புன்னகை தான்
நீலக்கடலலையே - உனது
நெஞ்சிலலைகளடீ !
கோலக் குயிலோசை -உனது
குரலினிமையடீ !
வாலைக்குமரியடி -கண்ணம்மா !
மருவக் காதல் கொண்டேன் .
சாத்திரம் பேசுகிறாய் -கண்ணம்மா !
சாத்திர மேதுக்கடீ ?
ஆத்திரிங் கொண்டவர்க்கே - கண்ணாம்மா !
சாத்திர முண்டோடீ ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ ! - இதுபார்
கன்னத்து முத்தமொன்று !!
https://youtu.be/VL7fxaGflU4
https://youtu.be/155epbZ7Bws ( movie -thiyaagu)
பாரதி உன்னை இன்று யார் என்று கேட்க்கும் இந்த உலகத்திலே நீயும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றாய் -உன் அழகிய கவிதைகள் மூலமாக - நாங்களும் காதலித்தோம் கண்ணமாவை - உன் கவிதைகளை அவள் மீது அள்ளித்தெளித்தோம் - அவள் உன் கண்ணம்மா இல்லை - கவிதைகள் வேண்டாமாம் - கை நிறைய தங்க வளையல்கள் வேண்டுமாம் - " வாழிய நீ எம்மான் !" என்றாய் - அந்த எம்மானைத்தாங்கிய வெள்ளை காகிதங்கள் மட்டுமே தேவையாம் ! - இன்றைய காதலிலே வேகம் இருக்கின்றது - விவேகம் இல்லை - ஆசை இருக்கின்றது - அதற்க்கு அடிப்படையான அன்பு இல்லை - உறவை ஆரம்பிபதற்க்கு முன் பிரிவைத்தானே கற்று கொள்கிறார்கள் !! - பாரதி நீ விடுதலைக்கு அன்று போராடினாய் - இன்றைய தலைமுறையும் அந்த விடுதலைப்பத்திரத்திர்க்குத்தான் போராடிக்கொண்டிருக்கின்றது - உண்மையான கண்ணமாவை உன்னை தொலைத்தது போலவே தொலைத்துவிட்டோம் பாரதி -- நீ இன்னும் வாழ்வாய் - நாங்கள் வாழ்ந்துவிட்டோம் !!!!!
uvausan
10th May 2015, 06:10 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 32
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான்
தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
வானில் தோன்றும் கோலம் அது யார்
போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார்
சேர்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
https://youtu.be/mRWj5knSvC0
uvausan
10th May 2015, 06:20 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 33
வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசைக் கேட்டால்
நீதானென்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி ............
https://youtu.be/FpHgR7izIvI
அருமையான பாடல் - சங்கர் மகாதேவன் அவர்களின் இனிய குரலில்
Russellzlc
10th May 2015, 07:28 PM
ரவி சார்,
மன்னிக்க வேண்டும். இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னையும் நினைவில் வைத்திருந்து அழைப்பதையே பெருமையாக நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு பெருமைதான், மகிழ்ச்சிதான். உங்கள் விருப்பம் போல அழையுங்கள்.
தாயோடு தெய்வத்தை ஒப்பிட்டு நீங்கள் விளக்கியிருக்கும் கதை அற்புதம். அன்னையர் தினத்தையொட்டிய நல்ல கருத்து.
வாசு சார்,
உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் அசாத்திய உழைப்புதான் உங்கள் ஸ்பெஷாலிட்டி. தகவல்கள், அதற்கேற்ற விஷுவல்கள் அருமை. மாலினி அவர்களுக்கு நீங்கள் வழங்கியுள்ள பட்டம்... ரசித்தேன். அதைப்படித்து விட்டு மீண்டும் அவர் முகத்தை பார்த்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
uvausan
11th May 2015, 11:40 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 34
பாரதியின் கவிதைகளில் பகலவன்- 1
சூரிய தரிசனம் - ராகம் பூபாளம்
"சுருதியின் கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன் ;
பரிதியே ! பொருள் யாவிற்கும் முதலே !
பானுவே ! பொன் செய் பேரொளித் திரளே !
கருதி நின்னை வணங்கிட வந்தேன் ;
கதிர்கொள் வாண் முகம் காட்டுதி சற்றே !
வேதம் பாடிய ஜோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்
நாத வார்க் கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன் ;
காத மாயிரம் ஓர் கணத் துள்ளே
கடுகியோடும் கதிரனம் பாடி
ஆத வா ! நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
uvausan
11th May 2015, 11:42 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 35
பாரதியின் கவிதைகளில் பகலவன் -2
ஞாயிறு வணக்கம் :
கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா !
படரும் வானொலி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடுலுந் தன்னுள்ளே
ஒவ்வொரு நுண்டுளி யும் வழி யாகச்
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே .
என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்த்திட செய்குவை யையா !
ஞாயிற் றின் கண் ஒளி தருந் தேவா !
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா !!
காதல் கொண்டனை போலும் மண் மீதே
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே !
மாதர் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் , இதில் ஐய மொன்றில்லை ;
ஜோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புது நகை யென்னே !
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன் !.
uvausan
11th May 2015, 11:45 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 36
பாரதியின் கவிதைகளில் பகலவன் -3
ஞான பாநு .
திருவளர் வாழ்க்கை . கீர்த்தி , தீரம் , நல் லறிவு , வீரம்
மருவுபல் கலையின் ஜோதி வல்லமை யென்ப வெல்லாம்
வருவது ஞானத் தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பானு .
கவலைகள் சிறுமை , நோவு , கைதவம் , வறுமைத் துன்பம்
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம் ,
நல முறு ஞான பாநு நண்ணுக ; தொலைக பேய்கள்
அனைத்தையும் தேவர்க்காக்கி அறந்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம் ,
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்த்தால் வானோர்
இனத்திலே , கூடி வாழ்வர் மனித ரென்றிசைக்கும் வேதம்
பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும் , ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞான பாநு அதனை நாம் நன்கு போற்றின் .
uvausan
11th May 2015, 12:21 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 37
தன்னால் நடக்க இயலாது என்பதைத் தலைவி கூற, தலைவன் அதற்கேற்றவாறு பதிலுரைத்துப் பாடுகிறான்.
மலரும் கொடியும் நடப்பதில்லை! அவை மணம்தர என்றும் மறப்பதில்லை! கோவிற்சிலைகள் நடப்பதில்லை! அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை! தாமரை மலரும் நடப்பதில்லை! அதைத் தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை! முத்திரை பதிப்பதுபோல அமையும் இறுதி வரிகளைக் கவனியுங்கள்!
நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்;
நினைவினில் குறைகள் வருவதில்லை!
கண்களில் ஒன்றாய்க் கலந்துவிட்டோம்; இனி
காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை.
அருமையான பாடல்!!!
https://youtu.be/IaxGu--YQpQ
uvausan
11th May 2015, 12:35 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 38
Sung by Shankar Mahadevan and Mahalakshmi Iyer, Actor Arun Vijay, Actress Meena and Ramba.
படம் : அன்புடன்
சூரியனே ஒரு மூக்குத்தியாய் நான் செய்து தரேன் - நீ குத்திக்கடி ---
காதலிக்கு , காதல் இருக்கும் வேகத்தில் என்னதான் செய்து போடுவது என்று விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது - ம் ம் ------ என்ன செய்வது ?? இருந்தாலும் பாடல் ஒரு அருமை தான் .
https://youtu.be/peMJBuHPJaQ
uvausan
11th May 2015, 12:43 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 39
மின்னல் சூரியனா - அருமையான வரிகள் - அற்புதமான பாடல் ; படம் -அரண் காவல்
https://youtu.be/VEaSAQ_MzWg
uvausan
11th May 2015, 01:01 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 40 :-D
மெய்மறக்கும் பாடல் இசைஞானியின் படைப்பில். அலைகள் ஓய்வதில்லை --- புத்தம் புது காலை, பொன்னிற வேளை -------
https://youtu.be/rzbTW2FMvhg
chinnakkannan
11th May 2015, 01:12 PM
ரவி, கலக்குங்கள்.. பாரதியார் பாடல்களுக்கும் லிங்க் கொடுத்திருக்கலாமே.. ம்ம் நட்த்துக்குங்கள்.. நானும் விரைவில் வரப் பார்க்கிறேன்..
uvausan
11th May 2015, 02:15 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 41
பாரதியின் கவிதைகளில் பகலவன் -4
அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் ;
திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
தெளிந்த நல்லறிவு வேண்டும் ;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போலே ,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய் !!
uvausan
11th May 2015, 02:25 PM
வாசு , ck , திரு கல்நாயக் , திரு k v
எங்கே ஒருவரையும் காணோம் ? கோடையின் கொடுமை அதிகமாக உள்ளதா ( என் பதிவுகளைத்தான் சொல்கிறேன் !) ? - மெயின் படத்திற்கு முன் வரும் விளம்பரங்களை போலத்தான் என் பதிவுகள் - இங்கே வாசகர்கள் டிக்கெட் வாங்கியுள்ளது உங்கள் பதிவுகளை படிக்கத்தான் - மறந்து விடாதீர்கள் .... தனியாக சுடும் வெயிலில் எவ்வளவு நாட்கள் தான் சுத்துவது ? நிலாவின் நிழல் முத்தத்தில் சிறிதே ஓய்வெடுக்க விரும்புகிறேன் - அந்த வெயிலுக்கேத்த நிழல் கிடைக்குமா ? வீசும் தென்றல் காற்றும் வருமா ?
அன்புடன்
ரவி
uvausan
11th May 2015, 09:33 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 42
சூரியன் சுத்துதே - படம் கல்கி
Khajuraho வின் பின்னணி என்று நினைக்கிறேன் . ஒரு அருமையான பாடல்
https://youtu.be/T1sN9Ram49E
rajeshkrv
12th May 2015, 08:43 AM
https://www.youtube.com/watch?v=w48pAB4eC1k
rajraj
12th May 2015, 09:22 AM
People are absconding from this thread. Here is a peppy tune for them ! :)
From anbu enge
mele parakkum 'rocket'u......
http://www.youtube.com/watch?v=mHJfDtPa8Pw
The original from Howrah Bridge
mera naam chin chin chu......
http://www.youtube.com/watch?v=yLmnyLELYWo
Friendly warning: If people don't show up often I will start writing about songs I like. I don't think you want that ! :lol:
kalnayak
12th May 2015, 10:07 AM
ரவி,
உங்கள் 'ஆயிரம் கரங்கள் நீட்டி' தொடரில் மெய் மறந்து நிற்கிறேன். சற்றே நினைவு திரும்பினாலும் எதையாவது எழுதி எங்கே உங்கள் தொடருக்கு தொந்தரவு தந்தவனாகி விடுவேனோ என்றும் அச்சம். அது மட்டுமில்லாமல் சிறிது அயற்சியாகவும் இருக்கிறது, திரியின் தரம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது, நான் எழுதி குறைத்து விடக் கூடாதே என்று.
இப்போது ராஜ்ராஜ் அவர்களும் நானெல்லாம் எழுதாவிட்டால் தொடர்ந்து எழுதுவேன் என்று கொண்டாடுகிறார் (நட்பு முறையில்தான்). அவர் தொடர்ந்து எழுதவெண்டுமென்றாலாவது அடியேன் சற்று நிறுத்தி திரியை வாசித்து பழகி அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? செய்கிறேன்.
uvausan
12th May 2015, 10:48 AM
திரு கல்நாயக் - வெறும் விளம்பரங்களுக்கு ஒப்பான என் பதிவுகள் எப்படி மெயின் படமாக ஆக முடியும் ? புரியவில்லை . இருப்பினும் உங்கள் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
அன்புடன்
ரவி
uvausan
12th May 2015, 11:12 AM
The melodious song,"Vandaar Kuzharkanni" sung by Radha Jayalakshmi .
மனதை மிகவும் வருடும் வரிகள் இவை -கண்ணதாசனின் வார்த்தைகள் - கே .வி மகா தேவன் அவர்களின் இசை - ஆதிபராசக்தி -- கண்டிப்பாக நம் எல்லோருடைய வேண்டுதலும் இதுவாக்கத்தான் இருக்க முடியும் !
நடப்பதெல்லாம் எது ?
" நல்லவர்கள் ஆட்சித்தனில் நன்மை நடக்கும்
நல்ல நண்பர்களின் கூட்டுருவில் அன்பு நடக்கும்
புல்லர் எல்லாம் ஒன்றுபட்டால் சூது நடக்கும்
என் பொன்மகளே நீ நினைத்தால் எதுவும் நடக்கும் !!
ரொம்ப சரி - வேண்டுவதெல்லாம் எது ?
ஆண்டாண்டு காலமாய் அழுகின்ற ஏழைக்கு -அறுசுவை
உணவு வேண்டும் !
ஆனவர்காரர்கள் நெஞ்சிலே "தான் " என்ற அறியாமை
நீங்க வேண்டும் !!
வேண்டாத குணங்களை விட்டு விட்டு என்றும் -உன்னை
வேண்டிடும் உள்ளம் வேண்டும் !!
வேறென்ன வேண்டும் என்று நீ நினைத்து -அதை விரைந்தோடி தர வேண்டும்
uvausan
12th May 2015, 12:09 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 43
song from Telugu movie Abhimanyudu starring Shoban Babu, Vijaya Shanthi & Radhika, directed by Dasari Narayana Rao Garu, produced by K.Murari & music composed by K.V.Mahadevan.
மிகவும் அழகான பாடல்
https://youtu.be/kK2CYud2sLE
uvausan
12th May 2015, 03:22 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 44
గోరువెచ్చని సూరీడమ్మా...
Director :- K.V.Nandana Rao Year :- 1980.
Singer:P.Susheela
Movie:Jayasudha
Producer: Sri Dasari Narayan Rao.
மிகவும் அருமையான சுசீலா அவர்களின் குரலில் , உதிக்கும் சூரியனை தன் காதலனுடன் ஒப்பிட்டு பாடும் பாடல் - மயங்க வைக்கும் ஒரு மதுர கானம் உங்களுக்காக .
https://youtu.be/WkxBWD9ylb4
chinnakkannan
12th May 2015, 03:46 PM
ஹாய் ஆல்..வந்துட்டேன் :)
**
பாயுங் கதிர்களினால் பக்குவத்தைக் கொள்ளாமல்
காயுமொளி கொண்ட கதிரவனே - மேவிநீ
சுட்டெரிக்க மேனியும் சூடேறச் சந்தனத்தைப்
பட்டாய்த் தடவுவேன் பார்..
என்னங்க பண்ண்றது ஒரே வெய்யில்.. வீட்டிலயும் நெட்டில்ல
வெளியிலையும் வெய்யில் உள்ளேயும் தான் ..ஆமா என்ன செய்யலாம்
மனசு குளிரணுமே.. சந்தனம் பத்தி எழுதிப் பார்த்தா..
தளதள்க்கும் கன்னி தனியாய் இருந்தால்
களவைக் கிணற்றிலே காண்..
அவன்; அவள்; இளமை; தனிமை என்றால் இல்லை..அம்மா வீட்டில்..
நைஸாகக் கடத்தி வீட்டின் பின்புறம் கிணறு.. பின்னென்ன பாடலாம் தானே..
https://youtu.be/5Rn162eVxBM
சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்மதம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது
மனமோ இது என்ன குணமோ இது
ந.தி பாரதி.. + இளமை
chinnakkannan
12th May 2015, 03:47 PM
**
சந்தனம் நறுமணப் பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது. இது மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு வாசனைப்பொருளாகும்.
(ஹை என்ன கண்டு பிடிப்பு)
தோல் சுருக்கங்கள், கறுப்பு தோல்கள் போன்றவற்றை மாற்றுகிறது.
உலர்ந்த சருமத்திற்கு லேசான ஈர உணர்ச்சியைக் கொடுத்து அதை மிருதுவாகவும்,
பளபளப்பாகவும் செய்கிறது. சிறுநீர்க்குழாய்களில் உண்டாகும் சில வியாதிகள் இந்த வாசனை எண்ணெயினால் குணமாக்கப்படுகின்றன.
//ஹை நிறைய உபயோகம் இருக்கே//
எனக்குத்தெரிந்த சந்தனம் ..ஒரு குட்டி வட்டமாய் ஒரு பலகை வீட்டில் மதுரையில் இருந்தது.. ஏதாவது ஆத்திர அவசரத்திற்கு
ஃபார் எக்ஸாம்பிள் ட்யூரிங் டிவாலி டைம் ஏதாச்சும் பட்டாசு சுட்டா அம்மா டபக்கென சிலசமயம்
தண்ணீர் கொஞ்சம் அந்த வட்டக் கட்டையில் விட்டு அதை த் தேய்க்கும் சின்னக் கட்டையில் தேய்த்துத்
தடவியிருக்கிறார்..மதுரை அக்னி நட்சத்திர நாட்களில் சில சமயம் கரெண்ட் வராத காலத்தில்
கொஞ்சம் உடலில் பூசிக் கொண்டு தூங்கியதாக நினைவு (வெகு சின்ன வயதில்)
வந்தனம் சொல்லியே வாகாக வெக்கையை
சந்தனம் போக்குமே தான்..
இங்க என்ன சந்தனக்காற்றே செந்தமிழூற்றே சந்தோஷப் பாட்டே வா..வா.. ரஜினி ஸ்ரீதேவி..+ இளமை..
தனிக்காட்டு ராஜா..
https://youtu.be/JSlpkQLdJj8
*
chinnakkannan
12th May 2015, 03:48 PM
*
சந்தனம் தெய்வத்திற்கு பூஜை செய்யப் பயன் படும் பொருள்.. மணமிகு ச்ந்தனம் அழகிய குங்குமம் என்கிறார் மருதமலை
மாமணியே முருகையா பாடலில் மதுரை சோமு.
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் என்கிறார் வைர முத்து..
அப்பொழுது தான் மலர்ந்த பெண்ணைப் பற்றி - அரச்சசந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே என்கிறார் கங்கை அமரன்..
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து ...ந.தி. சாவித்திரி + கண்ணதாசன்..
தந்தச் சிலையழகாய் தங்கக் கரமழகாய்
..சந்தக் கவியழகாய் சிந்தும் நகைகொண்டே
வந்தாள் வனத்தினிலே வாகாய் வஞ்சியவள்
..சொந்த மென்வெனக்கு சொர்க்கம் தனைக்காட்ட
செந்தேன் குரலினிலே சேலாம் விழியகல
..சொக்கத் தான்வைத்தாள் சுந்தர பாவையெனை
மின்னல் சுடுமென்பார் மங்கை யிவளழகோ
..மேனி குளிர்விக்கும் சந்தனம் ஆச்சுதையா..
என்கிறார் அந்தக்கால சின்னக் கண்ணனார்..
இங்க பாருங்கள்..கவிஞர் வாலி என்ன கேக்கறார்.. சந்தனமேடையுமிங்கே சாகச நாடகமெங்கே..
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... ம.தி.. ராதாசலூஜா + இளமை ..படம்.இதயக்கனி..
https://youtu.be/_DHxEHm1blM
இன்னும் நிறைய சந்தனம் இருக்குங்க்ணா.. சொல்லுங்க பார்க்கலாம்..
**
ராஜ்ராஜ் சார்.. எழுதுங்கள்..படிக்கக் காத்துக்கிட்டிருக்கோம்..
uvausan
12th May 2015, 03:59 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 45
Thazhunna Sooryane..
When the sea of surging waves raises its arms
To receive the descending Sun
You came rushing, oh! The damsel called golden clouds!
To hide him inside your locks of hair
"Won't let him leave me, I won't"
Thus groans your futile craving!
Equally agitated is the sea too
That is holding this self-dissolving Golden Idol!
There resonates in its oscillating waves
The rhythm of the great drum of the Time!
Cries at a distance an unknown sea-bird
All that we loved are just momentary!
All those fascinating colours of the rainbow
Are they not just a single sunlight!
The twinkling star of the distant sky
Was it not once a little flower on the earth!
Travellers are we who are assembled here
To part and leave with pain one day!
This is a beautiful song from the 2005 Malayalam Movie "Made in USA" (മേഡ് ഇന് യു.എസ്.എ). The famous South Indian film music composer Shri.Vidyasagar has set music for the wonderful lyrics of the great Malayalam Poet - Padma Vibhushan ONV Kurup. The song is set in the morning Raag Bhoopalam (Hindustani -- Bhupal Todi) though the theme of the lyrics is about the setting sun. The back ground score for this song by the great Vidyasagar is astoundingly phenomenal
The transiency of love and the pain of the ultimate separation that everyone has to face are so beautifully brought out by the poet in an allegory of both the sky and the sea grieving at the vanishing of their lover- the Sun in the evening.
( all comments as above are borrowed from a posting in Youtube )
https://youtu.be/MAWkbT02Mf0
chinnakkannan
12th May 2015, 04:04 PM
ஹை..இன்னொரு பாட் நினைவுக்குவந்துச்சே..
நல்ல வரிகள்..
நிலாவே அழகு..அதுவும் கொஞ்சம் வெளிர் மஞ்சள்ள இருக்கறா மாதிரி இருக்கும் தூரத்தே இருந்துபாக்கறச்சே..
ஆமா நிலா எப்பவரும்..இது என்ன அபத்தக் கேள்வியா..இந்த இரவு நேரத்தை என்ன சொல்றார் கவிஞர்
சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
ஓகே அது குட் ஈவ்னிங்க் சொல்லிச்சு சரி..அப்புறம் என்ன
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்
தூக்கம் வராதோ :)
நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கைகள் என்னை கொய்தன… (ஹை.. நல்லா இருக்கே லைன்ஸ்..)
*
கொஞ்சுதற்குத் தோதாய் குளிர்நிலவாய் வஞ்சியவள்
மிஞ்சுகின்ற வெட்கத்தில் மேனியிலே அச்சமுடன்
கெஞ்சுகின்றாள் கண்களினால் கேட்கின்றாள் ஓசையின்றி
விஞ்சுவதும் ஆசையது ஆம்..
(சரியா வந்திருக்கா..)
ரஜினி ராதா..+ இளமை..
https://youtu.be/bUYMBZIFDcM
uvausan
12th May 2015, 04:14 PM
ஹாய் CK ! welcome back ! மோடம் சரியாகிவிட்டதா ? என் பதிவுகள் முக்கால் வாசி காலையில் உதயமாகும் கதிரவனைப்பற்றியது - காலை வெய்யில் உடம்புக்கு மிகவும் நல்லது - உங்களுக்கு வைட்டமின் 'D" இலவசமாக கிடைக்கும்படியும் செய்துள்ளேன் .
சந்தனம் தடவிக்கொண்டுதான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை - இருந்தாலும் எடுத்துக்கொண்டுள்ள பாடல்கள் அனைத்தும் இந்த திரியில் உள்ளவர்களைப்போல ( அருமை என்பதை இப்படியும் வர்ணிக்கலாம் ) . கிரேட் reliever வந்துவிட்டதால் நான் கொஞ்சம் விடுமுறை எடுத்துக்கொள்ளலாமா ( நீங்கள் விட்டு சென்ற பொருள்கள் எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்க்கவும் - பிறகு -அதை காண வில்லை , இதை காண வில்லை என்று என்னை குறை சொல்லக்கூடாது )
chinnakkannan
12th May 2015, 05:04 PM
ரவி..அப்படிச் சொல்லாதீங்க.. இன்னும் முழுக்க குணமாகவில்லை..இது அவ்வப்ப்போது லஞ்ச்ல பண்ணினது அம்புட்டுதேன்.. முழுக்க சரியானதும் வீட்டில் உங்களது பாடல்களைக் கேட்டுச் சொல்ல உத்தேசம்..டோண்ட் டேக் லீவ்..ஸேம் திங்க் கோஸ் டு கல்ஸ் ஆல்ஸோ..
chinnakkannan
12th May 2015, 05:06 PM
நான் சொன்ன வெய்யில் ரியல் வெய்யில்ங்க..உங்களோடசூரியப் பாடல்களில்லை.. வெளில கொஞ்சம் ஜாஸ்தி ஹ்யுமிடிட்டி.. அம்புட்டு தேன்..
adiram
12th May 2015, 06:42 PM
CK sir,
why are you wandering here and there for 'sandhanam', when our own song is here..?
Sendhamizh paadum 'sandhana' kaatru
therinil vandhadhu kanne
(vaira nenjam)
kalnayak
12th May 2015, 07:07 PM
Adiram mentioned song is a good choice from NT's film. There are some more from others: "Santhana thenralai" from Kandukondaen Squared. "Santhana Marbile Kungumam sernthathe" from Nadodi Thendral.
https://www.youtube.com/watch?v=Jd8SLXBnq8M
https://www.youtube.com/watch?v=WbgtMPG5tqA
https://www.youtube.com/watch?v=iVxHjyWQYew
rajraj
12th May 2015, 07:53 PM
kalnayak, chinnakkaNNan : I have absolutely no intention to hog space here. I was just joking. I did my part some years back (2006-2007) with five or six articles in 'thiraiyil ilakkiyam' series in TFMpage magazine. May be I can cut and paste tham here ! :) The magazine is still available in the hub. Relax and continue writing ! :)
chinnakkannan
12th May 2015, 08:27 PM
ஹை.. மாடெம் சரியாய்டுச்சே.. :)
ஆதிராம்.. கரீட்டுங்க.. நினைவு வந்தது.. போஸ்ட் பண்ண நேரமில்லை.. ஈவ்னிங்க் சரியானா போடலாம்னு இருந்தேன்னா.. நீங்க சொல்லிட்டீங்க.. கல் நாயக் போடவும் செய்துவிட்டார்.. செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே.. அழகான பாடல்..
கல் நாயக்..சந்தனத் தென்றலை நல்ல பாடல்.. அதுவும் நினைவில்..சந்தன மார்பிலே கேட்டதில்லை என நினைக்கிறேன்... நன்றி ஃபார் த பாடல்கள் :) நிலா எங்கே..
ராஜ்ராஜ்..சார் செய்யுங்களேன்.. முடிந்தால் அதை நீங்கள் தொடரவும் செய்யலாம்..தமிழ்லயா எழுதியிருக்கீங்க..
rajraj
12th May 2015, 08:58 PM
ராஜ்ராஜ்..சார் செய்யுங்களேன்.. முடிந்தால் அதை நீங்கள் தொடரவும் செய்யலாம்..தமிழ்லயா எழுதியிருக்கீங்க..
Yes! They are in Tamil.
uvausan
12th May 2015, 09:12 PM
CK, திரு ஆதிராம் , திரு கல்நாயக் - இந்த பாட்டை எப்படி விட்டு விட்டீர்கள் - இந்த பாடல் , சந்தனத்தை விட அதிகமாக நறுமணம் உடையது - எல்லா சந்தன பாடல்களுக்கும் ,(இனி வரப்போகும் பாடல்களையும் சேர்த்துத்தான் ) சிகரம் வைத்த பாடல் இது , TMS ம் , சுசீலாவும் - சிவாஜி , சாவித்திரியாக இணைந்து வாழும் பாடல்.
கண்ணன் - ந .தி - TMS :
ம்ம்ம் ம்ஹ¤ம்
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
தென்னங் காத்து
தென்னங் காற்று
கண்ணன் - ந .தி - TMS :
ம்ஹ¤ம் காற்று இல்லே காத்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
கண்ணன் - ந .தி - TMS :
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
கண்ணன் - ந .தி - TMS :
செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
இருவரும்:
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
கண்ணன் - ந .தி - TMS :
ஓஹோஹோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ராதா - சாவித்திரி - P .சுசீலா : ஓஓஓஓஓஓஓ
கண்ணன் - ந .தி - TMS :
பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக
இருவரும்:
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
கண்ணன் - ந .தி - TMS :
நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
லாலா லலலலா
https://youtu.be/dbxkdDjOBN4
uvausan
12th May 2015, 09:24 PM
CK / திரு கல்நாயக் - உங்கள் இருவருடனும் கொஞ்சம் உரையாடியவுடன் நெஞ்சில் எழுந்த ஒரு தமிழ் /ஆங்கில கவிதை - கொஞ்சமா பழகினதற்க்கே இவ்வளவு சக்தி என்றால் ------------
அம்மா
"மழையில் நனைந்த என்னை - எல்லோரும்
திட்டிய போது , தலையை துவட்டி விட்டு
மழையை திட்டியவள் அம்மா ---------"
Once Upon a Time !
When Window was just a
Square hole in a room and
Application was something written on a paper.
When Keyboard was a Piano and Mouse just an animal.
When File was an important office material and Hard Drive
just an uncomfortable road trip.
When Cut was done with knife and Paste with glue.
When Web was a Spider's home and Virus was flu.
When Apple and Blackberry were just fruits ------
That's when we had A lot of time for family and friends!
chinnakkannan
12th May 2015, 09:46 PM
//"மழையில் நனைந்த என்னை - எல்லோரும்
திட்டிய போது , தலையை துவட்டி விட்டு
மழையை திட்டியவள் அம்மா ---------" // வாவ் ரவி..வெரி நைஸ்..
ஆங்கிலக் கவிதை ஏற்கெனவே கேட்டதைப் போல உள்ளது..வேறுவகையில்.. ஆனால் நைஸ்.. :)
டாங்க்ஸ்ங்கோ.. நானும் இப்பத் தான் ஒரு இந்திப் பாட் கஷ்டப்பட்டு ட்ரான்ஸ்லேட் பண்ணினேனாக்கும் தமிழ்ல்ல..இன்மை நெக்ஸ்ட் போஸ்ட்..
chinnakkannan
12th May 2015, 09:47 PM
என்னவள் இங்கே வந்துவிட்டாள்
…ஏக்கம் தீர்க்க வந்துவிட்டாள்
மின்னலைப் போலே வசந்தம்நீ
…மழையாய்ப் பூக்கள் பொழிந்திடுவாய்
விண்ணதில் இருந்தே வருகின்ற
..வேகக் காற்றே நீயுந்தான்
சின்னதாய் நடனம் ஆடிடுவாய்
…சீராய் என்னவள் வந்துவிட்டாள்
சிவந்த பூவே உன்நிறந்தான்
..சின்னவள் அவள்கர மருதாணி
மென்மை கொண்டே கீழிறங்கி
..மேகமே மையினைப் பூசிடுவாய்
விண்ணில் சிமிட்டும் விண்மீனே
…வேகமாய் வாஅவள் வகிடாக
எண்ணிப் பார்க்கா அழகுடனே
…என்னவள் சின்னவள் வந்துவிட்டாள்!
அவ்ளோ தாங்க ட்ரான்ஸ்லேட் பண்ண முடிஞ்சது..ம்ம் பாட் என்னான்னா..
Bahaaron phool barsaao, mera mehboob aaya hai
https://youtu.be/dGuRNfJ1ys0
*
Ravi..இந்தப் படத்தின் பெயர் உங்கள் பெயர் தான் ..சூரஜ்..
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து..ஏற்கெனவே சொல்லியிருந்தேனே!@
**
ராஜ் ராஜ் சார் ..உங்கள் மலரும் நினைவுகள் இந்தப் பாட்டைக் குறித்து ஒரு பாராவிற்குக் குறையாமல் எழுதுக!
*
கல் நாயக்..பூஜாகுமாருக்கு வயசு 40க்கு மேல ஆச்சாமே!
*
uvausan
12th May 2015, 10:02 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 46
" Vaanil Yengum" மூன்றாம் பிறையில் ஒரு சூரியன்
https://youtu.be/1gJri4pNnNw
rajeshkrv
13th May 2015, 01:40 AM
more sandhanam songs
sandhanam kungumam konda thamarai poo then unda bothayail thalladuthu
sandhanamittu sadhiradum mottu
sandhanamum javvadhum panneerum nee eduthu
sandhana kumba udambile
aracha sandhanam manakkum kungumam
thaana vandha sandhaname
podhikai malai sandhaname
rajraj
13th May 2015, 05:51 AM
another santhanam song
sandhana podhigaiyin thendral enum peNNaaL vandhu vandhu mayakkiye vindhaigaL seiguraaL
vasudevan31355
13th May 2015, 07:42 AM
சி.க, ரவி, நாயக்
உங்கள் அனைவரது பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக திரிக்கு அழகு சேர்க்கின்றன. ரவி சூரிய கதிர்களால் கலக்குகிறார் என்றால் உடனே சி.க சந்தனம் தடவுகிறார். (சி.க பலே ஆள் அய்யா நீங்கள்!:-D) கல்நாயக் அமாவாசை முடிந்து விட்டதா? மீண்டும் குளிர்ச்சி எப்போது?
ராஜ் ராஜ் சார்!
எக்ஸலண்ட். ஜுகல் பந்தியில் மிக அபூர்வமான 'mera naam chin chin chu ...... போட்டு கலக்கி விட்டீர்கள். எதிர்பார்க்கவே இல்லை. என் உள்ளம் கொள்ளை கொண்ட அருமையான பாடல். ஒரு காலத்தில் இப்பாடலை கேட்காத நாளே கிடையாது. நீண்ட நாள் சென்று பார்க்கும் போது பரவசம் அடைந்தேன். ஜுகல் பந்தியில் இது டாப். 'மேலே பறக்கும் ராக்கெட்டு' போல.:)
ராஜேஷ்ஜி!
என்ன சுசீலாவுடயது ஒன்றையும் காணோம்?:(
ஆதிராம் சார்,
நீங்கள் 'செந்தமிழ் பாடும் சந்தனக் காற்றை' ஞாபகப்படுத்தியவுடன் நம் நடிகர் திலகம் திரியில் குதூகலமாக 'வைர நெஞ்சம்' கொண்டாடியது நினைவுக்கு வந்து விட்டது. என்ன இனிமையான நாட்கள்!
இன்னும் அதிகமான பங்களிப்பைத் தந்து ஜமாயுங்கள். நன்றி!
vasudevan31355
13th May 2015, 07:49 AM
சி.க, ரவி, நாயக்
இதோ நான் தடவும் சந்தனம் என் பங்கிற்கு.
வழக்கம் போல இறைவணக்கம் பாடி என் தெய்வத்திடம் இருந்து ஆரம்பிக்கிறேன்.
நடிக மாமன்னர் பொய் மூக்கு வைத்து அபிநய சரஸ்வதியை கலாய்க்கும் அரிதான பாடல் 'அஞ்சல் பெட்டி 520' லிருந்து.
'சந்தனச் சிலையே கோபமா
சாகசமா இல்லை நாணமா'
பார்ப்பது நடிகர் திலகத்தையா அல்லது ஸ்கூல் பாயையா?
https://youtu.be/jGMZOJH8LPQ
vasudevan31355
13th May 2015, 07:54 AM
அடுத்து அருமையான் சந்தன மணம் வீசும் ஒரு பாடல். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாலாவின் பாடல். இசை சங்கர் கணேஷ் என்பது அமர்க்களமான விஷேசம்
'சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே!'
ராஜீவ் நடித்த 'நாடோடி ராஜா' படத்திலிருந்து எப்போதுமே மறக்க முடியாத பாடல். உடன் 'ஓநாய்க் கண்' அருணா
https://youtu.be/X2CFrJExt8M
vasudevan31355
13th May 2015, 08:01 AM
அடுத்து என் ராட்சஸி சீர்காழியுடன் கொடி நாட்டும் சந்தனப் பாடல். 'வாழ்க்கைப் படகு' படத்திலிருந்து
'பழனி சந்தன வாடை அடிக்குது... பூசியது யாரோ?
அரிதான அபூர்வ பாடல்.
https://youtu.be/Q_H7Jo9YIWw
vasudevan31355
13th May 2015, 08:03 AM
அடுத்து ஏற்கனவே போட்டிருந்தாலும்
'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்'
https://youtu.be/PsHJIb--hG8
vasudevan31355
13th May 2015, 08:08 AM
'ராஜகாளியம்மன்' படத்தில் 'வைகைப் புயல்' தென்றலாய் பாடும் பாடல். அது மட்டுமல்ல. ரம்யா கிருஷ்ணன் புயலும் பவ்யம்.
சந்தன மல்லிகையில் தூளி கட்டிப் போட்டேன்.
https://youtu.be/VXyvKQ2QSpo
vasudevan31355
13th May 2015, 08:11 AM
'எல்லாமே என் ராசாதான்' படத்தில் ராஜாவின் ரகளை. 'புலி' ராஜ்கிரண்கிட்டே 'ஆட்டுக்குட்டி' சங்கீதா பாடுது
'ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே'
https://youtu.be/44z5s_GOykM
vasudevan31355
13th May 2015, 08:13 AM
'சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?'
தல பாலைவனத்துல தலை காய பாடும் அருமையான பாடல்.
https://youtu.be/5vIoG7VQjms
vasudevan31355
13th May 2015, 08:17 AM
இதோ இன்னுமொரு சந்தன சாகச சாங். ராஜாவின் அம்சம்.
'சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே'
சி.க,
ஏன் சேராது? ரஞ்சிதா சாமியார் மார்பில் சாய்ந்தால் சந்தன மார்பில் குங்குமம் சேரத்தானே செய்யும்?:)
https://youtu.be/lAbpBIwOB-U
vasudevan31355
13th May 2015, 08:20 AM
இதோ 'தேவரின்' மகன் சிலம்பாட்டம் ஆடி 'சாந்து பொட்டும்' ,
அப்புறம் 'சந்தனப் பொட்டும்' வைத்து தூள் கிளப்புகிறாரே!
https://youtu.be/kglYjWVHiEQ
vasudevan31355
13th May 2015, 08:24 AM
இதோ நடிகர் திலகம் அமர்க்களமாக பாலாவின் குரலில் சுஜாதாவிடம் கேலி செய்கிறாரே!
'கருடா சௌக்கியமா' படத்தில் ராகவேந்திரன் சாருக்கும், எனக்கும் மிகப் பிடித்தமான ஒரு பாடல். இனி உங்களையும் அடிமையாக்கும்.
'சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்' பின்னணியில் வரும் ஹம்மிங் அமர்க்களம்.
https://youtu.be/-FWGP3ubDus
Gopal.s
13th May 2015, 08:29 AM
வாசு,
என் தம்பியான நீ, என் மகனின் வர போகும் திருமணத்திற்கு(மூத்தவன்) முகாந்திரமாக, இப்போதே ஏக்க சக்க சந்தனம் கொடுத்து விட்டாய்.என்ன ஒரு தேர்வு. சந்தன சிலையே, பழனி சந்தன என்று. பிளந்து கட்டி விட்டாய்.
என் தம்பி படத்தை திருப்பி பார்க்கும் முடிவில்,நேரமின்மையால் தட்டட்டும் பாடலை பார்த்தேன். உன் எழுத்தை படித்த பின் ,இதை பார்த்ததால், நம்ப மாட்டாய் ,5 முறை திரும்ப திரும்ப ,நீ எழுதிய நுண்மைகளை ரசித்தேன். உன்னையும் ,பார்த்தசாரதியையும் விட்டால் இப்படி எழுத எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? மனதை மயக்க ஆரம்பித்து விட்டாய்.
RAGHAVENDRA
13th May 2015, 08:37 AM
திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 20
இருவர் உள்ளம்
நடிகர் திலகம் திரை இசைத் திலகம் இணையில் வசந்த மாளிகைக்குப் பிறகு மிக அதிகமாக மக்களிடம் சென்றடைந்த காதல் பாடல்கள் இடம் பெற்றது இருவர் உள்ளம் திரைப்படம் என்றால் அது மிகையில்லை. வசந்த மாளிகை வரும் வரையில் இந்தப் படமே மிகவும் அதிகமாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதுவரை இருந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் வேறோர் பரிமாணத்தைக் கொண்டு வந்தவர் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள். இயக்குநர்களுக்கான நடிகராக விளங்கிய நடிகர் திலகத்தின் நடிப்பில் பல்வேறு புதிய பரிமாணங்களைக் கொண்டு வரவேண்டியது அவர்கள் பொறுப்பு என்கின்ற வகையில் நடிப்பை அள்ளி அள்ளி வழங்கியவர் நடிகர் திலகம். இதில் Subtle Acting என்றால் என்ன வென்றும் அதில் எவ்வாறு வித்தியாசங்களைக் கொண்டு வர முடியும் என்றும் நிரூபித்தவர்.
இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பிரசாத் அவர்கள் பூர்த்தி செய்யத் தவறவில்லை. இதற்கென்றே அழகு சிரிக்கின்றது பாடலை வைத்தார். குறிப்பாக பறவைகள் பலவிதம் ஒரு காதல் மன்னனாக அந்தப் பாத்திரத்தை சித்தரிக்க உதவியது என்றால் இந்தப் பாடல் ரசிகர்களின் ஆவலைத் தீர்ப்பதற்காகவே படமாக்கப்பட்டது எனலாம்.
திரை இசைத்திலகத்தின் மிகச் சிறந்த புலமைக்கு எடுத்துக் காட்டு இப்பாடல். அருமையான அக்கார்டினுடன் துவங்கும் பாடலில் இசைக் கருவிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கோபால் சொன்னது போல் இந்த தீம் மியூஸிக் எனப்படும் இசையை இந்தப் பாடலில் சரணத்தில் சற்றே வித்தியாசமாக பயன்படுத்தி யிருப்பார். டி.எம்.எஸ். பி.சுசீலா இணையில் அவர்களின் மகுடத்தில் மற்றுமோர் வைரக்கல் இப்பாடல்.
கவியரசரின் வரிகள் காலத்தை வென்று நிற்பவை. இலக்கிய ரசம் சொட்டுபவை. ஆனாலும் என்ன அந்தக் கால தணிக்கை அதிகாரிகள் இலக்கியத்தை ரசிக்கும் மனநிலையில் இல்லையே.. என்ன தப்பு கண்டு பிடிக்கலாம் என காதிலும் விளக்கெண்ணெய் வைத்து துருவி துருவிப் பார்த்தார்கள்.
அவர்களுக்கு ஆண்மை விழிக்கக் கூடாதாம். அள்ளி அணைக்கக் கூடாதாம். அந்தக் காலத் தணிக்கை அதிகாரிகளை இந்தக் காலப் பாடல்களைத் தணிக்கை செய்யச் சொன்னால்.. ஹ்ம்... ஒரு பாடலாவது மிஞ்சுமா... தெரியவில்லை.
தணிக்கைக்கு முன் அழகு சிரிக்கின்றது பாடல்...
http://gaana.com/album/iruvar-ullam
தணிக்கையில் மாற்றப் பட்டு படத்தில் இடம் பெற்ற பாடல்..
https://www.youtube.com/watch?v=N_sLSYiELrU
மக்கள் தலைவரின் ஸ்டைலைக் காணக் காணப் பரவசம்...
இதில் ஒரு விசேஷம் குறிப்பிட வேண்டும்...
நாயகி அமர்ந்திருக்க நாயகன் கை தூக்கி எழுப்பும் காட்சி... நடிகர் திலகம் எத்தனை படங்களில் இந்த மாதிரி காட்சிகளில் நடித்துள்ளார் என ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். ஏனென்றால் அதிலும் ஏராளமான வித்தியாசங்களை சித்தரித்துள்ளார்.
இந்தப் பாடலில் மிகவும் சற்றே குனிந்து எழுப்புகிறார். புதிய பறவையில் சிட்டுக்குருவி பாடல், எங்கள் தங்க ராஜாவில் இரவுக்கும் பகலும் பாடல், பார்த்தால் பசி தீரும் படத்தில் கொடியசைந்ததும் என ஏராளமான பாடல் காட்சிகள். ஒவ்வொன்றிலும் ஒரு விதம்.
அதே போல் வண்டு வருகின்றது என்ற வரியின் போது மெதுவாக நாயகியிடம் செல்லும் உத்தி..
ஆசை துடிக்கின்றது என அருவியின் பின்னணியில் நின்று கொண்டு தோளைச் சிலுப்பி புன்னகைக்கும் வசீகரம்...
குளித்து வருகின்றது என்று நாயகி சொல்லும் போது அந்தக் கூந்தலை எடுத்து முகர்ந்து பார்க்கும் குசும்பு..
அவள் பின்னால் செல்லும் நடையழகு..
மஞ்சத்தில் அமரும் முன் ஒர் நடை... அமரும் போது பக்கவாட்டில் பார்க்கும் குறும்புப் பார்வை..
இப்போது தான் அந்த வரிகள் ஆண்மை விழிக்கின்றது என நாயகன் கூற அள்ளி அணைக்கின்றது என நாயகி உரைக்கிறாள்.. இதை மாற்றி ஆர்வம் பிறக்கின்றது, அன்பே அழைக்கின்றது என படத்தில் மாற்றி விட்டனர்...
ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை ரசிக்க வேண்டிய பாடல் காட்சி...
Gopal.s
13th May 2015, 08:41 AM
கலை வேந்தன்,
உங்களின் ஊக்கம், சமூக நிகழ்வுகளுடன் நீங்கள் கொடுக்கும் பதிவுகள் அருமை. உங்களுக்கு நன்றி.
ரவி,
பிளந்து கட்டி கொண்டிருக்கிறாய். உன்னுடைய பதிவுகளை தொடர்ந்து ரசித்து வருகிறேன். நடிகர்திலகம் திரியில் நிறைய எழுது. உன் தலை ரசிகனாக நானிருக்கிறேன்.
சின்ன கண்ணன்./கல்நாயக்,
உங்களை பிரித்து பார்க்க முடியாத அளவு சேதுராமன்-பொன்னுசாமி போல இரட்டை நயனம். மதுர கானத்தை சுவாரஸ்யம் ஆக்கி விட்டீர்கள். ரவி சொன்னது போல நைசாக நாமும் நுழையலாம் என்று பார்த்தால் ,பயமாக உள்ளது. அந்தளவு பிரமாத படுத்துகிறீர்கள். தமிழின் தரம் நமது திரிகளால் உயர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியே. நான் பார்வையாளனாக தொடர்வதில் சுவையே . (ரவி நீயும் என்னுடன் உட்காராமல் ஆட்டத்தில் தொடரு. என்னுடன் கொஞ்சூண்டு பட்சணம், அரை கப் காப்பிதான் உள்ளது. வெளியில் உட்கார்ந்தால் பங்கு தர ஏதுமில்லை.)
vasudevan31355
13th May 2015, 09:01 AM
ராதா சுரேஷிடம்
'சந்தனக் காடு... நானும் செந்தமிழ் ஏடு' என்று கொஞ்சும் அதியற்புத பாடல்.
'வெள்ளை ரோஜா'வின் 'சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும்நேரம்'
https://youtu.be/khUohdHlgAM
vasudevan31355
13th May 2015, 09:19 AM
சிவகங்கை சீமையில் அற்புத நடனத்துடன் ஒலிக்கும் அதியற்புத கானம்
'சாந்து பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க'
https://youtu.be/MCj7XVMkkbA
uvausan
13th May 2015, 10:35 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 47
வாசு - welcome back . சந்தன பாடல்கள் அதிகமாக வர வேண்டி , மீண்டும் கதிரவனை நாடுகிறேன் . பெயரோ சந்திரன் - ஆனால் காதலி அவனை வர்ணிப்பதோ " இளம் சூரியன் என்று " - சந்திரன் அழகுதான் - ஆனாலும் அவனால் இளம் சூரியனின் அழகின் முன் எடுபடுவதில்லை .
Posted by others in Youtube :
இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்க்கிறார் மெல்லிசை மன்னர் என்று தோன்றுகிறது - பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக்கருவிகள் தடங்கலாக இருக்கக்கூடாது என்பதாலோ என்னவோ!
மிக எளிமையான் துவக்க இசை. கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது.) ஒரு பிரம்மாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல, மென்மையாக ஆர்ப்பாட்டமில்லாமல் இசைத்துவிட்டுப் போகிறது துவக்க இசை.
இது சற்றே நீளமான ஆனால் சிறிதும் அலுப்புத் தட்டாத பாடல். பாடலின் மையப் பகுதியில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 'இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? '
எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்!
ஆஹாஹாஹா.......
என்ன ஒரு ஹம்மிங் (இதற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)
இந்த ஹம்மிங்கைக் கேட்கும்போது காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கிறாள்.
பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், 'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய...' என்ற சரம ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்!
பாடல் ஒரு ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான் துவக்கம், முழுமையான ஆனந்ததில் முடிவதை ஹம்மிங் மாறுபாடு உணர்த்துகிறது.
பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான் பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும் மெல்லிசை மன்னர், இந்தப் பாடலில், நாயகன் நாயகி இருவருக்கும் ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்டபோதிலும்), இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணஙளை அமைத்திருப்பது புதுமை!
இந்தப் பாடலைக் கேட்கும்போது, இது காற்றினிலே வருக் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!
பாடலைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால்
மெல்லிசை மன்னரின் மாணிக்கக் கற்கள் பதித்த வாலியின் வைர வரிகள்!
என் கருத்துக்கள் :
எளிமையான வரிகள் - நெஞ்சை துவட்டிவிடும் வார்த்தைகள்
" இளம் சூரியன் உன் வடிவானதோ , செவ்வானமே உன் நிறமானதோ !!"
ஒரு பெண் ஒரு ஆணை வர்ணிக்கும் போது , சற்று புதுமையாகவும் , வியப்பாகவும் , இன்பமாகவும் இருக்கின்றது அல்லவா ?!
திரு K .V அவர்களை சுண்டி இழுத்து இங்கு வந்து பதிவுகள் போட வைக்கும் பாடல் இது ....
https://youtu.be/9X2eO2yWTtk
chinnakkannan
13th May 2015, 10:44 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
கோபால்..வாங்க வாங்க..எப்போ கல்யாணம் ..உங்க குடும்பத்துல..ம்ம் உங்களுக்கெல்லாம் ந.தி பத்தி வாசு எழுதினது மட்டும் தான் தெரியுமா.. அவர்ர் ஆனந்தனை பத்தி எப்படி ஜோரா எழுதியிருந்தார் தெரியுமா.. நன்றி..எம்பி.என் பொன்னுசாமியோ சேது ராமனோ..அவரது மகன் என் கூடப் படித்தவர்..என்னுடன் படிப்பை முடித்து நான் படித்த கல்லூரியிலேயே வேலைக்கும் சேர்ந்து விட்டார்.. அவரது கல்யாணம் மதுரை மிட்லண்ட் ஹோட்டல் (இப்போதும் அந்தப் பெயரா தெரியவில்லை.. தானப்ப முதலிதெரு பாண்டியன் சூப்பர் மார்க்கெட் கடந்து வலதுகைப்புறம் இருக்கும் என நினைக்கிறேன்..முரளி சரியா) அங்கு நடந்தது எண்பத்து மூன்றில். கல்யாணத்துக்கு வாசித்தவர்...செவேலென்ற ஓங்கு தாங்கான உடம்பு கழுத்தில் மின்னும் கெட்டி கெட்டியனா தங்க செயின் ப்ரேஸ்லெட் என்ன இவையெல்லாம் விட ரசித்து வாசித்த விதமென்ன..யார் தெரியுமா.. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்..
ராகவேந்தர் ..அழகு சிரிக்கின்றது ஒரிஜினலை ஈவ்னிங்க் தான்கேட்க வேண்டும்..வெகு அழகான எனக்குப் பிடித்த்த பாடல்.. நதி எங்கே போகிறதுவும் தான்..(ஆனால் இவை எல்லாம் ப்ளாக் அண்ட் ஒய்ட்ல் எடுக்கப்பட்ட்து ஏமாற்றமே ம்ம் அந்தக் காலம்)
வாசு .. அதானே பார்த்தேன்..சரம் சரமா சந்தனம் தடவி (ஹி ஹி நான் சந்தனம்னு எழுதினவுடனே புரிஞ்சுக்கிட்டீஙக்ளே) அசத்திட்டீங்க.. ரஞ்சிதா பாட்டு பார்க்கணும் ஓய்..இதுவரை பார்த்ததில்லைன்னு நினைக்கிறேன்..
ஆனாக்க ஒண்ணு என்னன்னாக்க....
அது ஒரு நிலாக் காலம் இல்லை இல்லை..சூரியன் உச்சமாய் க் காய்கின்ற மார்ச்சோ ஏப்ரலோ என நினைவு..கல்லூரி முடித்த சமயம்.. டூர் என்று பெங்களூர் ஊட்டி மைசூர் என குடும்பத்துடன் .. நான், அம்மா அப்பா அண்ணன் அம்புட்டுதான்.. ஒரு கார்..எல்டிசி.. என..
டீடெய்லாக எழுத ஆசை..அது பின்னால்..
ஊட்டி.. பொடானிகல் கார்டன்.. அம்மா அப்பா சுற்றாமல் ஓரிடத்தில் அமர்ந்து விட..அண்ணா எதோ பெர்மிஷன் ஃபார் எண்ட்ரி என டிராவல்ஸ் ட்ரைவருடன் சென்று விட..சின்னக் கண்ணன் என்ன செய்தான்..சுற்றினான்..
ஓரிடத்தில் கும்பல்.. பார்த்தால் ஷீட்டிங்க்..
வாசு..சொன்னால் நம்ப மாட்டீர்கள்..சந்தனக் கலர் குர்த்தா (பள பளா) பின் அனியாயத்துக்கு செந்நிறப் பவுடராய் முகத்தில் அப்பி கொஞ்சம் அழகு கம்மியாய் ராதா.. பச்சை பேண்ட் பச்சை கோட் போட்டு சின்னப் பையனாய் சுரேஷ்.. வெ.ரோ ஷீட்டிங்..எடுத்த பாட்டு நீங்கள் சொன்னது தான்..எடுத்த வரி..அதுவும் நீங்கள் சொன்னது..
சந்தனக் காடு செந்தமிழ் த் தூது..
கிட்டத்தட்ட ஆறோ ஏழோ தடவை..எடுத்தார்கள்.. ஒரே மாதிரி கஷ்டப்பட்டு ராதா சிரிக்க அடுத்தலைன்ன்..
மான் விழி மாது.. சொல்லிக்கொண்டே கண்ணாடியைக் கழற்ற வேண்டும் என ஒருவர் சொல்லிக் கொடுக்க (!) அதன் பிரகாரம் சுரேஷ் பெர்ஃபக்டாய் நடிக்க அதற்கும் ஒரு ஆறு தடவை டேக்.. ஹாஆஆவ் என்று எனக்கு கொட்டாவி அப்போதும் வந்தது இப்போது நினைத்தாலும் வருகிறது..
அப்புறம் மொத்தமாய் மூன்று மணி நேரம் ஷீட்டிங்.. நான் அப்படியே பொடி நடையாய் பொடானிகல் கார்டனைச் சுற்றி வந்து பின் அப்பா அம்மாவை ப் போய்ப்பார்த்து போலாமா கேட்கும் போது அண்ணாவும் வந்து விட்டார்..பின் கிளமபும் போது பார்க்கையில் இரு நடனக் கலைஞர்கள் படிக்கட்டுகளில் எப்படி ஓடி வரவேண்டும் என ராதாவுக்கும் சுரேஷீக்கும் சொல்லிக் கொடுக்க அதன் படி அவர்கள் ஓடிவந்ததைத் தொலைவாய் ப் பார்த்து பை.. சொன்னேன்..
காலங்கார்த்தால கிளறி விட்டதற்குத் தாங்க்ஸ் அண்ட் பாடல்களுக்கும் தாங்க்ஸ்..:)
chinnakkannan
13th May 2015, 11:46 AM
//" இளம் சூரியன் உன் வடிவானதோ , செவ்வானமே உன் நிறமானதோ !!" // ரவி.. :) நல்ல வரிதேன்... ஆனாலும் இது போங்கு.. ஆயிரம் கைகள் நீட்டின்னு சூரியன் பாட்ல போடறது..இது சந்திரன் பாட்டுதானாக்கும்.. ரைட்டப்பும் நன்று...நன்றிங்க்ணா :)
kalnayak
13th May 2015, 11:55 AM
யாராவது சொல்லுவீங்கன்னு ரொம்பவே எதிர்பார்த்தேனுங்க. யாரும் சொல்லலீங்களா, பார்த்தேன், சரி நாம்பளே சொல்லிப் போடலாமுன்னு. இந்தாங்க இன்னொரு சந்தனப் பாட்டு. ராசாவோட இசையில ஒரு அருமையான பாட்டுங்க:
https://www.youtube.com/watch?v=V7UFxqnDyNc
uvausan
13th May 2015, 01:31 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 48
Payum oli nee yenakku Bombay Jayashri Kannamma
பாரதியின் கவிதைகளில் பகலவன் -4
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!
வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!
தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!
https://youtu.be/0iyqMTNqvzg
சந்தனமே துளிக்கூடத்தேவையில்லை - பாம்பே ஜெயஸ்ரீ யின் குரல் - பாரதியின் வரிகள் , குளிமையான எண்ண ஓட்டங்கள் -- காதலின் உச்சக்கட்டம் - வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு; இப்படி இருவரும் ஒன்றாக இருந்தால் காதலில் பிரிவு ஏது ? நிலாவைக்கண்டு ஏன் காயவேண்டும் ?
பாரதி - உன் காதல் உயர்வானது - whatsapp இல் வளருவதில்லை - email லில் வாழ்வதில்லை - sms இல் பிழைப்பதில்லை - இங்கு நாங்கள் வாழும் வாழ்க்கை ஒரு போலியானது - அதில் உண்மை காதல் இல்லை - உயர்ந்த கொள்கைகள் இல்லை - சிம் கார்டில் எங்கள் காதல் முடிவடைந்து விடுகின்றது - காதலியை ஸ்க்ரீன் சேவர் ஆக வைத்துள்ளோம் - பிறர் பார்க்க - facebook இல் எங்கள் குடும்பம் ஓடுகின்றது . Twitter இல் காதல் பயணித்துக்கொண்டு இருக்கின்றது - எங்களுடைய கண்ணமாக்கள் கனவில் தான் வருகிறார்கள் . இன்று நீ எங்களுடன் இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாய்
" கிரெடிட் கார்ட்டடி நான் உனக்கு - தலை வேதனை நீ எனக்கு "
" காசோலை நான் உனக்கு - பேங்க் பேலன்ஸ் அடி நீ எனக்கு "
காதல் ஒரு கண்ணாமூச்சியடி - கண்ணம்மா - அதில் கண்ணை இழந்தவனடி நான் உனக்கு
போகும் வேகத்திலே கண்ணம்மா - சேரும் இடம் புரியவில்லையடி !!
kalnayak
13th May 2015, 01:34 PM
இந்தப் பாட்டை யாரும் போட்ட மாதிரி தெரியலையே கண்ணு. சந்தனக் குடத்தை விடலாமோ? என்னாமா மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்கிறார். மகாகவி பாரதியின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி பாடிய பாடலாம். என்ன அற்புதமாக கௌளை ராகத்தில் அமைந்து மயக்குகிறது. நடிகர்களை விடுங்கள். கண்ணை மூடி பாடலைக் கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=VhkpMY-jycE
uvausan
13th May 2015, 01:45 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 49
பாரதியின் கவிதைகளில் பகலவன் -5
ஒளியும் இருளும்
வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே!
நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!
uvausan
13th May 2015, 01:49 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 50:)
பாரதியின் கவிதைகளில் பகலவன் -6
காலைப்பொழுது
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.
தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.
தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.
தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.
வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.
கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.
சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்
வீற்றிருந்தே“கிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:”
என்றவுட னே காக்கை-“என் தோழா! நீ கேளாய்,
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.”
என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.
“நட்புக் குருவியே ஞாயிற்’றிளவெயிலில்
கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?”
என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-
“நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.
மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;
கற்றறிந்த காக்காய்,கழறுக நீ!” என்றதுவே.
அப்போது காக்கை,“அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.
நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;
ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;
போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?”
என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்று
தென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.
அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து,-“வாழ்க,துணைவரே!
காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?
சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,
ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்?” என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.
அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-“ஆங் காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.
ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?”
என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;
மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.
kalnayak
13th May 2015, 01:52 PM
ரவி,
பாரதியின் வரிகளிலும் படித்துத் தேடி அவரின் வரிகளை எழுதி ... அப்பாடி என்னமாக இந்த மழையிலும் கதிரவனாய் கொளுத்துகிறீர்கள்!!!
kalnayak
13th May 2015, 01:53 PM
வாசு,
சி.க. சந்தனம் என்று சொன்னாலும் சொன்னார். கொண்டு வந்துவிட்டீர்கள் சரம் சரமாக சந்தனத்தை (!!!) நன்றி.
kalnayak
13th May 2015, 01:55 PM
ராஜ்ராஜ் அவர்களே,
உங்களின் ஜுகல் பந்தி பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
kalnayak
13th May 2015, 02:01 PM
சி.க. ,
உங்களின் ஊட்டியில் வெள்ளை ரோஜா பாடல் சூட்டிங் பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது. அவ்வப்போது இப்படி நீங்கள் சொல்லும் அனுபவங்கள் தனிச் சுவையாய் இருக்கிறது. நன்றி.
நிலாப் பாடல்கள் விரைவில் வரும்.
uvausan
13th May 2015, 05:49 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 51
இரட்டை கதிரே - படம் " மாற்றான் "
மாற்றான் என்கிற திரைப்படத்தின் துவக்கப்பாடல் . அருமையான பாடல் - நவீன முறையில் எடுக்கப்பட்டுள்ளது .conjoined twins ஆக இருக்கும் இரு சூர்யாக்களும் நேர் எதிரான குணாதிசயங்களில் அமைந்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் இரண்டு சூரியாக்களும் திரையரங்கிற்குச் சென்று ஒரு திரைப்படம் பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில் வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன். . இரண்டு பேருமே சிலாகித்து வெகுவாக ரசித்து கைதட்டுகிறார்கள்..
ரசிக்க வேண்டிய பாடல்
https://youtu.be/H3Hg42HVEKo
uvausan
13th May 2015, 05:56 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 52
Views in Youtube :
பாடல் : சோலைக்குயிலே காலைக்கதிரே
படம் : பொண்ணு ஊருக்குப் புதுசு
பாடியவர்: எஸ்.பி ஷைலஜா
பாடலைப் புனைந்தவர் : திரு. எம் . ஜி . வல்லபன்
இசை : இசை ஞாயிறு இசைஞானி இளையராஜா
கதை,வசனம் எழுதி இயக்கியவர் ஆர்.செல்வராஜ்
வருடம் : 1979
இராகம்: மத்யமாவதி
ஆரோகணம் : ஸ ரி2 ம1 ப நி2 ஸ
அவரோகணம் : ஸ நி2 ப ம1 ரி2 ஸ
மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது. 22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. மோகனம், ஹிந்தோளம் இராகங்களைப் போலவே இது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். ஹிந்தோளத்தைப் போலவே இதுவும் ஆரோகண அவரோகணங்களிடையே சமச்சீர் தன்மை கொண்ட இராகம்.
ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் இந்த இராகம் மதுமத் சாரங் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இதை பின்மதிய வேளைக்கு ஏற்ற இராகமாகக் கருதுகிறார்கள். கர்நாடக இசையின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழிசை மரபில் இது செந்துருத்திப் பண் என்று அழைக்கப்பட்டது. கர்நாடக இசையில், இது மங்களகரமானது எனவே கச்சேரியின் இறுதியில் இறைவணக்கமாகப் பாடுவதற்கு ஏற்றது எனப் பாவிக்கிறார்கள். மேலும், கச்சேரியின் இடையில் இந்த இராகத்தைப் பாடினாலும் கச்சேரியின் குறைகள் கடவுளாலும் இரசிகர்களாலும் மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. இளையராஜா மத்யமாவதி இராகத்தைப் பல உணர்ச்சிகளைக் காட்டப் பயன்படுத்தியிருக்கிறார்:
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல், நிலாக்காயுது நேரம் நல்ல, ஈரமான ரோஜாவே என்னை, ஆரிரோ ஆராரோ, பொன்மேனி உருகுதே, செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, தங்க நிலவுக்குள் நிலவொன்று வந்ததே, தாழம்பூவே வாசம் வீசு, துள்ளித் துள்ளி, தாலாட்டு, பிள்ளை உண்டு தாலாட்டு.
என்னுடைய கருத்துக்கள்
அருமையான இளைய ராஜாவின் கைவண்ணத்தில் உதித்த பாடல் - ராஜா ராஜாதான்
https://youtu.be/cgG6Bf6naSc
chinnakkannan
13th May 2015, 06:01 PM
வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வயிரம் நானுனக்கு;// வெகு அழகான பாடல்.. போய் கேக்கணும் ..அதுசரி திரைப் பாட் போடலாமா..
https://youtu.be/0W0x5S6R3PA
uvausan
13th May 2015, 06:13 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 53
SP Balasubramaniam & Asha Bhosle -Athikalai Neram Kanavil Unnai Tamil duet
படம் : "நான் சொன்னதே சட்டம் ".
ஆண் .. அதி காலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்கையில் என்னை சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னை சேர்ந்திடமால் வாடும் இந்த அன்றிலே .ஹோய்
பெண் - ல லா ல ...
ஆண் .-முல்லை பூவை மூடும்
வெண்சங்கு போல ஊதும்
பெண்
காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு
ஆண்
வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை
பெண்
நூறு ராகம் கேட்கும் நோயை கூட தீர்க்கும்
ஆண்
பாதி பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றி தந்தாள் எனை ஏற்று கொண்ட மாது
பெண்
தேவியை மேவிய ஜீவனே நீதான்
நீ தரும் காதலில் வாழ்பவள் நான் தான்
ஆண்
நீ இல்லாமல் நானும் இல்லையே ..
பெண்
அதிகாலை..
பெண்
மாலை ஒன்று சூடு
பொன் மேனி ஆறும் சூடு
ஆண்
மாதம் தேதி பார்த்து மனது சொல்லி கேட்டு
பெண்
வேளை வந்து சேரும் நம் விரகம் அன்று தீரும்
ஆண்
நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும்
பெண்
காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே தினம் அனலில் வெந்து வாடும்
ஆண்
வாடலும் கூடலும் மன்மதன் வேலை
வாழ்வது காதல் தான் பார்க்கலாம் நாளை
பெண்
பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ
ஆண்
அதி காலை ------
https://youtu.be/lndWj5Jkv7Y
uvausan
13th May 2015, 07:57 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 54
சுடும் நிலவு , சுடாத சூரியன் - படம் "தம்பி "
CK - காதில் விழுகின்றதா ? நிலவு தான் சுடுமாம் - சூரியன் அல்ல ... ( வேர்க்க விருவறுக்க , இந்த பாடலை தேடி உங்களுக்காக கண்டு பிடித்தேன் )
Amazing lyrics Vairamutu ; A gem from Vidyasagar.. Amazing lyrics.. and
Unni and Harini to top it all! what a song!
https://youtu.be/mguYP9xv1_w
Russellzlc
13th May 2015, 08:09 PM
‘கலை’யில் வளரும் தமிழ்ச் சொத்து
வாசு சார் , ரவி சார், கோபால், சின்னக்கண்ணன், கல்நாயக், ராகவேந்திரா சார் எல்லாரின் பதிவுகளும் அருமை.
வாசு சார், ‘சாந்துப் பொட்டு தளதளங்க’ பாடலைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். பாட்டையே போட்டு விட்டீர்கள்.
சின்னக்கண்ணன், வெயிலுக்கு இதமாய் சந்தனத்தை பூசுகிறீர்கள்.
ரவி சார், சூரிய மண்டலத்துக்கே போய் அலசுகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.
கல்நாயக், வீரத்திருமகன் பாடலைப் பற்றி குறிப்பிட்டபோது அன்றே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டேன். இசையரசியின் குரலில் ‘அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு அசைந்திடும் பூச்செண்டு....’ பாடலை நிலாப் பாடல் லிஸ்டில் சேர்க்கலாமே. அடுத்த வரிகளில் வருவதைப் போல பாடலும் கற்கண்டு. ஆமா..... என்ன சிக்நேச்சர் இது ? புரியவில்லையே.
கோபால், நன்றி.
ராகவேந்திரா சார் எழுதியிருக்கும் அழகு சிரிக்கின்றது பாடலுக்கான விளக்கம் அருமை. அதில் வரும் வரிகளும் ராகவேந்திரா சார் கொடுத்துள்ள விளக்கங்களும் (வண்டு, மலர், மஞ்சம் மற்றும் சென்சார்)தான் என்னை இந்தப் பதிவு போடத்தூண்டியது. நன்றி சார்.
-----------
பிள்ளையோ பிள்ளை படத்தில் இடம் பெற்ற ‘வெள்ளை மலரில் ஒரு வண்டு...’ மிக இனிமையான பாடல். இங்கே நமது திரியில் இடம் பெற்றுள்ளதா தெரியவில்லை. விட்டு வைத்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கவியரசரின் வரிகளில் மெல்லிசை மன்னரின் மயக்கும் இசையில் நம்மை புது உலகிற்கு அழைத்துச் செல்லும் பாடல்.
பாடல் படமாக்கப்பட்ட விதமும் கண்ணுக்கு குளிர்ச்சி. கதாநாயகியின் (லட்சுமி) வீட்டில் பணிப்பெண்ணாக விஜயகுமாரி. இவர்தான் கதாநாயகன் முத்துவின் தாய்..... படத்தில். நாயகனை நினைத்து நாயகி பாடுவதாக பாடல். விஜயகுமாரி அருகே நிற்க, லட்சுமி பாடிக் கொண்டிருக்கும்போதே முத்துவுடன் பாடுவதாக அவருக்கு கற்பனை. விஜயகுமாரியை கழற்றி விட்டு முத்துவுடன் அவர் ஆடுவதை காட்டுவார்கள். (கிருஷ்ணன் பஞ்சுவா கொக்கா?) அற்புதமான பாடல்.
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு
இணக்கமாக இருப்பது இன்பம் என்றாலும் கூடலும் ஊடலும் மாறி மாறி வந்து ஏற்படும் இணக்கம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்குமல்லவா? அப்படி ஏற்படும் இன்பம் சாதாரண இன்பமல்ல, கொள்ளை இன்பமாம்.
-----
கத்தும் கடலில் மணி முத்து
கலையில் வளரும் தமிழ்ச் சொத்து
பருவம் இதுதான் இரு பத்து
படிப்பேன் இளமை மனம் தொட்டு
பிள்ளையோ பிள்ளை படம் வரும்போது ‘இல்லையொரு பிள்ளையென்று ஏங்கி வந்த திரையுலகில் பிள்ளையோ பிள்ளை என்று வருகிறார்’ என்று முத்துவை வாழ்த்தி தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதற்கேற்ற வகையில் கவிஞர் திரையுலகை கடலாகவும் மு.க.முத்துவை மணி முத்தாகவும் வர்ணித்து ‘கத்தும் கடலில் மணி முத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கலையில் வளரும் தமிழ்ச் சொத்து.... கலைஞர் கருணாநிதி அவர்களின் தந்தை பெயர் முத்துவேல். அவரது நினைவாகத்தான் தனது மகனுக்கு முத்து என்று பெயர் வைத்தார். இதை மனதில் கொண்டு கவிஞர் எழுதியிருக்கிறார். தாத்தாவான முத்து மறைந்து போனாலும் கலை(ஞர்) மூலம் முத்து பிறந்து வளர்கிறது. கூடவே அவரது சொத்தான தமிழும். இந்த இடத்தில் கவிஞர் ‘கலை’ என்று கூறியிருப்பதை என்னோடு பொருத்திப் பார்த்து மகிழ்வேன். (ஹி... ஹி...இருக்கட்டுமேங்க)
-----
கண்கள் அவனைப் பிரியாது
கைகள் என்றும் விலகாது
நெஞ்சம் அவனை மறவாது
மஞ்சம் என்றும் உறங்காது
கண்கள் அவனை பிரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கும். அணைத்தபடி இருக்கும் கைகள் என்றும் விலகப் போவதில்லை.
நெஞ்சம் அவனை மறவாது..... இப்படிப்பட்ட சூழலில் எப்படி மறக்கும்?
மஞ்சம் என்றும் உறங்காது..... உறங்குவதற்குத்தான் மஞ்சம். அந்த மஞ்சத்துக்கே உறக்கமில்லை, அதாவது ஓய்வு இல்லை என்றால்.............. கவியரசர் ‘ஃபுல்’லாக இருந்திருக்கிறார். mood-ஐச் சொல்றேன். அழகு சிரிக்கின்றது போன்ற பாடல்கள் மூலம் கிடைத்த அனுபவமோ என்னமோ? சென்சாரில் சிக்காமல் நாசூக்காக அதே நேரம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார்.
----
எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக்கோலம்
அன்பால் வளரும் புது உலகம்
அகமும் புறமும் இனி மலரும்
ஆஹா... எவ்வளவு அனுபவத்தோடு கூடிய தத்துவத்தை விளக்கியிருக்கிறார். திருமணக் கோலம் என்றாலே மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சியோடு கூடிய வருங்காலம் எதிரில் தெரிகிறது. அன்பால் புது உலகம் வளர்கிறது. அப்படி வளர்ந்தால் அகமும் புறமும் மலரும்.
பொதுவாகவே, எல்லாரிடமும் நாம் மனம் மலர்கிறதோ இல்லையோ? புறம் மலரத்தான் இருப்போம், சூழ்நிலையையும் நாகரிகமும் கருதி. ஆனால், உண்மையான அன்பு வளர்ந்து விட்டால் அகமும் மலர்வது நிச்சயம்.
இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது, அப்படி அன்பு வளர்ந்தால் உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்து, நிலத்தை ஐவகையாகப் பிரித்து காதல், மானம், வீரத்தோடு வாழ்ந்த அந்த சங்ககாலத் தமிழனின் வரலாற்றை விளக்கும் சமூகமாக அகமும் (அகநானூறு) புறமும் (புறநானூறு) இனி மலரும் என்றும் கொள்ளலாம். (ரொம்ப தத்துவம் வந்து விட்டதோ? இன்று தத்துவ ஆசிரியர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதால் இருக்கலாம்)
எந்த வகையில் பார்த்தாலும் கவிஞர் கூறிய அந்த புது உலகம் வளர, அன்பை வளர்ப்போம்.
ராகவேந்திரா சார், சென்சாரைப் பற்றி கூறியதும் நினைவுக்கு வருகிறது. 1996ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராக முனைவர் தமிழ்க்குடிமகன் இருந்தார். 89-ம் ஆண்டு திமுக ஆட்சியமைத்தபோது சபாநாயகராக இருந்தவர். (சின்னக்கண்ணன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் உங்கள் ஊரில் யாதவா கல்லூரியில் முதல்வராக பணியாற்றியது உங்களுக்கு தெரிந்திருக்கும்)
1996-ம் ஆண்டு தமிழ் செல்வன் என்று ஒரு படம். திரு.விஜயகாந்த் அவர்கள் நடித்து வெளியானது. நடிகர் திரு.சத்யராஜ் அவர்களின் மேனேஜராக இருந்த திரு.ராமநாதன் என்பவர் தயாரித்தது. படம் வெளியான சமயத்தில் திரு.கருணாநிதி அவர்களை சந்திக்க திரு.விஜயகாந்த் சென்றிருக்கிறார். அங்கு அமைச்சர் தமிழ்க்குடிமகனும் இருந்திருக்கிறார். அப்போது, திரு. விஜயகாந்த்தைப் பார்த்து திரு.தமிழ்க்குடிமகன் , ‘‘உங்கள் படத்தின் தலைப்பு ‘தமிழ்ச் செல்வன்’ என்று இருக்க வேண்டும். ஆனால், போஸ்டரைப் பார்த்தால் ‘தமிழ் செல்வன்’ என்று இருக்கிறது. ‘ச் ’ இல்லாதது பிழை’’ என்று கூறியிருக்கிறார்.
குறுக்கிட்ட திரு.கருணாநிதி அவர்கள் கூறியது இது..
‘ச் ’ இருந்தா சென்சார்ல கட் பண்ணிடுவாங்கய்யா....
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
13th May 2015, 08:58 PM
///பொதுவாகவே, எல்லாரிடமும் நாம் மனம் மலர்கிறதோ இல்லையோ? புறம் மலரத்தான் இருப்போம், சூழ்நிலையையும் நாகரிகமும் கருதி. ஆனால், உண்மையான அன்பு வளர்ந்து விட்டால் அகமும் மலர்வது நிச்சயம். /// ஹை ஐ ஐ...கலை :) உங்களது இடுகையில் என் அகம் மலர்ந்துவிட்டது.. நன்றிங்க்ணா..
‘ச் ’ இருந்தா சென்சார்ல கட் பண்ணிடுவாங்கய்யா....// :) ஆனா அது அந்தக்காலம் இந்தக்காலத்துல ச் லாம் கட்பண்ண மாட்டாங்க.. அப்புறம் ச் சுக்குப்புதிய பெயர் உண்டு.. லிப் லாக் காம்..!
இந்தப் பாட் இதுவரை நான் கேட்டதில்லை..இங்கும் வந்ததில்லை.. நன்றிங்க்கோவ்.
https://youtu.be/XReXgyS6hLs
இன்னும் இன்னும் எழுதுங்கள்..
chinnakkannan
13th May 2015, 09:35 PM
சாலையைக் கடக்க நின்றாள்
அவளைக் கடந்தன
பல கண்கள்
*
கண்களும் கீழே விழுந்தன
அவள் தவற விட்ட
புத்தகத்துடன்
*
புத்தகத்துள்
உயிரிழந்த இரு பூச்சிகள்
நிறையப் படித்திருக்குமோ
*
படித்தது எல்லாம் மறக்க
நீல மசியில்
தெரிகிறது வெறுமை
*
வெறுமையாகிவிட்டது
அவள் சென்ற
வீதியும் மனசும்..
*
மனசில் மயிலிறகு
பல நாளின் பின் கேட்ட
அவள் குரல்
*
குரல் கேட்கக்கேட்க
உருவம் வளர்ந்தது
நெஞ்சில்
*
நெஞ்சில் வலி வந்தாலும்
முகத்தில் கட்டாயச் சிரிப்பு
இருக்குமிடம் அ;லுவலகம்
*
அலுவலக நேரம் முடிந்தும்
படபடப்பு
அவளிடம் பேசவேண்டும்..
*
வேண்டும் எனச் சொல்லிவிட்டாள்
தொலைபேசியில்
பூத்தூவித் தெரிகிறது சாலை..
*
ஒரு ஹைக்கூ (?!) விற்கும் அடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ச்சும்மா அந்தாதி ட்ரை பண்ணினேன்..
பொருத்தமாய் பாட்டா.. பொருத்தமில்லை ஆனா பாட் நன்னா இருக்கே
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.. (இனிய உறவு பூத்தது படமாம் சுரேஷ் நதியா (படம் எப்படி இருக்கும்) பாட் இப்பத் தான் கேக்கிறேன் பார்க்கிறேன்..எனக்குப் பிடிச்சிருக்கே…(கொஞ்சம் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை மெட்டின் சாயல் என நினைக்கிறேன்)
https://youtu.be/0hOIiJNht04
uvausan
13th May 2015, 09:55 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 55
கதிரவன் உதயம் கண்டேன் - கமலங்கள் முகம் மலரும் - படம் ஹரிதாஸ் 1944
அருமையான பாடல் - " ச் " இல்லாத நடிப்பும் , வரிகளும் - நம்மை எங்கோ கொண்டு செல்லும் பாடல் இது - உங்களுக்காக
https://youtu.be/B32nVEdMNhg
uvausan
13th May 2015, 10:18 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 56
கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க
காலங்களாலே புதியவன் வாழ்க
பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும்
போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே !!
படம் : கங்கா கௌரி
rajeshkrv
13th May 2015, 10:26 PM
சி.க, ரவி, நாயக்
உங்கள் அனைவரது பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக திரிக்கு அழகு சேர்க்கின்றன. ரவி சூரிய கதிர்களால் கலக்குகிறார் என்றால் உடனே சி.க சந்தனம் தடவுகிறார். (சி.க பலே ஆள் அய்யா நீங்கள்!:-D) கல்நாயக் அமாவாசை முடிந்து விட்டதா? மீண்டும் குளிர்ச்சி எப்போது?
ராஜ் ராஜ் சார்!
எக்ஸலண்ட். ஜுகல் பந்தியில் மிக அபூர்வமான 'mera naam chin chin chu ...... போட்டு கலக்கி விட்டீர்கள். எதிர்பார்க்கவே இல்லை. என் உள்ளம் கொள்ளை கொண்ட அருமையான பாடல். ஒரு காலத்தில் இப்பாடலை கேட்காத நாளே கிடையாது. நீண்ட நாள் சென்று பார்க்கும் போது பரவசம் அடைந்தேன். ஜுகல் பந்தியில் இது டாப். 'மேலே பறக்கும் ராக்கெட்டு' போல.:)
ராஜேஷ்ஜி!
என்ன சுசீலாவுடயது ஒன்றையும் காணோம்?:(
ஆதிராம் சார்,
நீங்கள் 'செந்தமிழ் பாடும் சந்தனக் காற்றை' ஞாபகப்படுத்தியவுடன் நம் நடிகர் திலகம் திரியில் குதூகலமாக 'வைர நெஞ்சம்' கொண்டாடியது நினைவுக்கு வந்து விட்டது. என்ன இனிமையான நாட்கள்!
இன்னும் அதிகமான பங்களிப்பைத் தந்து ஜமாயுங்கள். நன்றி!
sandhanamittu sadhiradum irukke .. neer parkalayo :)
rajeshkrv
13th May 2015, 10:27 PM
வாசு ஜி
இதோ மண்ணுக்கு மரம் பாரமாவின் கன்னட வடிவம்
இசையரசியின் குரலில்
https://www.youtube.com/watch?v=bK0uFUH0_7s
uvausan
13th May 2015, 10:42 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 57
ஆதித்யஹ்ருதயம் - படம் : சிந்து பைரவி
https://youtu.be/Wj9-Y00wN6M?list=PLA5DA77CF13B6999E
This supreme prayer is the best amongst auspicious verses, it will destroy all sins, dispel all doubts, alleviate worry and sorrow, anxiety and anguish, and increase the longevity of life. It is a guarantee of complete prosperity.
Worship the sun-god, the ruler of the worlds and lord of the universe, who is crowned with effulgent rays, who appears at the horizon and brings light, who is revered by the denizens of heaven (devas) and asuras alike.
Indeed, He is the very embodiment of all Gods. He is self-luminous and sustains all with his rays. He nourishes and energizes the inhabitants of all the worlds as well as the host of Gods and demons by his Rays.
He is Brahma (the creator), Visnu (the Sustainer), Shiva (the destroyer), Skanda (the son of Siva), Prajapati (progenitor of human race), the mighty Indra (king of heaven), Kubera (the god of wealth and lord of riches), Kala (eternal time), Yama (the Lord of death), Soma (the moon god that nourishes), and Varuna (the lord of sea and ocean).
Indeed, he is Pitris (ancestors, manes), the eight Vasus, the Sadhyas, the twin Aswins (physicians of Gods), the Maruts, the Manu, Vayu (the wind God), Agni (the fire God), Prana (the Life breath of all beings), the maker of six seasons and the giver of light.
He is the Son of Aditi (the mother of creation), the Sun God who transverser the heavens, he is of brilliant golden color, the possessor of a myriad rays, by illuminating all directions he is the maker of daylight. He is the all pervading, shining principle, the dispeller of darkness, exhibiting beautiful sight with golden hue.
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/7186798100_f983f93e95_z_zpsahlty8yv.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/7186798100_f983f93e95_z_zpsahlty8yv.jpg.html)
uvausan
13th May 2015, 10:43 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 58
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/1485411052_dfd608151b_z_zpsjpknuxss.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/1485411052_dfd608151b_z_zpsjpknuxss.jpg.html)
uvausan
13th May 2015, 10:44 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 59
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/322879170_a78e64b063_z_zpsbdzegmaj.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/322879170_a78e64b063_z_zpsbdzegmaj.jpg.html)
uvausan
13th May 2015, 10:45 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 60
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/45336904_1aef569b30_z_zpsouhqkdfv.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/45336904_1aef569b30_z_zpsouhqkdfv.jpg.html)
uvausan
13th May 2015, 10:46 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 61
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/4656180256_ec4a69ac70_z_zpse9isvdgl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/4656180256_ec4a69ac70_z_zpse9isvdgl.jpg.html)
uvausan
13th May 2015, 10:46 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 62
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/3463944285_3aa9de0ecd_z_zps1sh9e4ev.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/3463944285_3aa9de0ecd_z_zps1sh9e4ev.jpg.html)
uvausan
13th May 2015, 10:47 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 63
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/5033310456_381a9a4b56_z_zpsgxtkeghv.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/5033310456_381a9a4b56_z_zpsgxtkeghv.jpg.html)
rajraj
14th May 2015, 06:17 AM
another santhanam song
sandhana podhigaiyin thendral enum peNNaaL vandhu vandhu mayakkiye vindhaigaL seiguraaL
If you want complete lyrics please visit 'C.S.Jayaraman' thread in Memories of Yester years section-post 32.
You will also find lyrics for old songs by MLV, Trichy Lokanathan, N.C.Vasanthakokilam, MKT and others.
Lot of malarum ninaivugaL :)
Gopal.s
14th May 2015, 07:48 AM
Ravi,
Amazhing Photo exhibits suiting the theme. Kudos.
rajraj
14th May 2015, 08:09 AM
ராஜ் ராஜ் சார்!
எக்ஸலண்ட். ஜுகல் பந்தியில் மிக அபூர்வமான 'mera naam chin chin chu ...... போட்டு கலக்கி விட்டீர்கள். எதிர்பார்க்கவே இல்லை. என் உள்ளம் கொள்ளை கொண்ட அருமையான பாடல். ஒரு காலத்தில் இப்பாடலை கேட்காத நாளே கிடையாது. நீண்ட நாள் சென்று பார்க்கும் போது பரவசம் அடைந்தேன். ஜுகல் பந்தியில் இது டாப். 'மேலே பறக்கும் ராக்கெட்டு' போல.:)
!
Vasu: I am glad I brought back your old memories. I posted it because I was reminded of what my son and his classmate did when they were in high school about 25 years back. They listened to the song and put it in staff notation for
violin tuned to western classical music. They are both violinists. We lack staff notation for Indian music. It will be nice if some music director does it for foreign born children.
rajeshkrv
14th May 2015, 08:48 AM
மரகதமணி சில நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். பெரும்பாலும் அர்ஜுன் படங்களுக்கும் இரண்டு பாலச்சந்தரின் படத்திற்கும் அவர் கொடுத்த பாடல்கள் நமக்கு தெரியும்
கல் நாயக் படம் தமிழில்/தெலுங்கில் ஹீரோ என்று உருவானது. ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில்
சுகன்யா(மாதுரி வேடம்)
ரகுமான்(ஜாக்கி ஷ்ராப்)
வினோத்குமார்(சஞ்சய் தத்)
வேடங்களில் நடித்தனர்.
அதில் இந்த பாடல் பாலு சித்ரா குரல்களில் மிகவும் அழகான பாடல்
https://www.youtube.com/watch?v=qJLG9RBgpAs
RAGHAVENDRA
14th May 2015, 08:48 AM
We lack staff notation for Indian music. It will be nice if some music director does it for foreign born children.
Maybe. Accepted. But I feel our Indian creativity and music sense is proportionately very much higher than other countries. I have come across many people who are capable of playing a note by just hearing one without the necessity for a staff notation.
rajeshkrv
14th May 2015, 09:15 AM
இன்னொரு பாடலும் பிரபலமாகாவிட்டாலும் நல்ல பாடல்
வித்யாசாகரின் இசையில் சித்ரா,சுஜாதா மற்றும் ஜெயசந்திரன் அவர்களின் குரலில்
https://www.youtube.com/watch?v=MO5ju8bgHNo
uvausan
14th May 2015, 11:09 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 64
நன்றி திரு .கோபால் - உங்களுக்கும் , உங்கள் பிள்ளைகளுக்கும் , இந்த திரியில் பதிவிடும் , படிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் , அவர்கள் குடும்பத்தார்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் நன்கே அமையட்டும் அந்த ஒளிக்கடவுளின் அருளினால் . என் கண்களில் தெரியும் அந்த ஒளிமயமான எதிர்காலத்தை இந்த பாடல் பிரதிபலிக்கட்டும் .
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
(ஒளிமயமான)
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
(ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
---------
https://youtu.be/3x79T3gesAk
chinnakkannan
14th May 2015, 11:47 AM
ரவி.. நீங்க ஒளிக்கடவுளைப்பத்தி எழுதிக்கிட்டே இருங்க..
நானும் எனக்குத் தெரிஞ்ச ஒரு கடவுளைப் பற்றி எழுதிப் பார்க்கட்டா..
அது...அடுத்த போஸ்ட்டில்..வெய்ட் அண்ட் ஸீ..( இப்ப எதுக்குடா சஸ்பென்ஸ்..இதுலயே போடலாமில்லை.. ஷ்ஷ் மன்ச்சு..கொஞ்சம் ஒரு இது இருக்கவேண்டாமா. - எது.. சரி சரி நீஎதுவும் கேட்காத மன்ச்சு..இங்கயே போடறேன் )
*
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
கண்ணனை நாடி கோபியர் பாடும் பாடல் பல உண்டு..அதுவே முருகனை நாடிப் பாடும் பாட்ல்
என்று பார்த்தால் குறைவு தான் இல்லியோ..
*
திருப்புகழில் அருணகிரி நாதர் என்ன சொல்கிறார்..
ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
..ஈசருடன் ஞான மொழி பேசுமுக மொன்றே
கூறுமடியார்கள் வினை தீர்த்த முகமொன்றே
..குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகமொன்றே
மாறுபடி சூரரை வதைத்த முகம் ஒன்றே
..வள்ளியை மணம்புரிய வந்தமுகமொன்றே
ஆறுமுக மான பொருள் நீ அருள வேண்டும்
..ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே..
*
ஞான் மதுரைக்காரனல்லோ..எனில் திருப்பரங்குன்றம் பலமுறை அங்கு இருந்த காலகட்டத்தில் போயிருக்கிறேன்..
வெகு சின்ன வயதில் என் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளியிருந்த சோமு என்ற நண்பனுடன் ஒரு தடவை போனது விசேஷம்..
என்னவாம்..
அவர்கள் வீட்டில் சோமாவாரம் அன்று அன்னதானம்வ்ழங்குவார்களாம் எங்கே..கோவிலில் திருப்பரங்குன்றத்தில்..
எனில் நாலைந்து சமையல் காரர்களை ப் போட்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் (கொஞ்சம் சற்றே பெரிய வெட்டவெளி கொல்லைப் புறம்..பிற்காலத்தில்
சோமுவின் வீடு கை மாற அங்குவந்தவர் அந்தக் கொல்லைப்புறத்தில் ஷெட் மாதிரி பண்ணி ஒர்க்*ஷாப் ஒன்று வைத்துவிட்டார்
என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்)
எதுவுமறியாமல் போனால்..கண்ணா.. சாயந்தரம் நீயும் வா கோவிலுக்கு
அம்மாகிட்ட கேக்கணும் ( நான் சொல்வது எழுபதுகளின் இறுதி என நினைக்கிறேன்)
அதெல்லாம் நாங்க ஏற்கெனவே சொல்லிட்டோம்ல - என்றார் செட்டியாரம்மா.. சோமுவின் அன்னை..
சரி என்று வேடிக்கை பார்த்தால்..
வீட்டின் கூடத்தில் சடக் சடக்கென நான்கைந்து பெரிய ஓலைப் பாய் விரித்தார்கள்.
பின் சுடச் சுட வடித்திருந்த சாதத்தை ( அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் விளைந்ததாம்) கொட்டி
ஆற வைத்து பின் இன்னொரு அண்டாவிலிருந்த புளிக்காய்ச்சலை ப் பிரம்புக் கரண்டியால்
நாசுக்காய் அள்ளி வைத்து ( வாவ்..அந்தப் புளிக்காய்ச்சலின் மணமிருக்கிறதே..அனுபவித்தால் தான் தெரியும்)
இன்னொரு மரச் சிப்பலால் கிளறிக் கலந்து மறுபடிஅண்டாக்களில் நிரப்பி
கிட்டத்தட்ட எட்டு அண்டாக்கள்..வேனில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.. நாங்கள்
அப்படியே பொடி நடை நடந்து டி.வி.எஸ். பஸ்ஸ்டாப்பிலிருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட்
பின் அஞ்சாம் நம்பர் பஸ் சென் ட்ரல திருப்பரங்குன்றம்.. கொய்ங்க் என்று போய்ச் சேர்ந்து
பின் அர்ச்சனை முடிந்த பின்னர் டிஸ்ட்ட்ரிப்யூஷன்..
கோயிலின்வாசலிலேயே என நினைக்கிறேன்..பட் நாட் மச் ரஷ்..எல்லாரும் வந்து
பயபக்தியுடன் தொன்னையில் வாங்கிச் சென்றார்கள்.. நானும் நிரப்பி நிரப்பி வழ்ங்கியதாய் நினைவு..
உள்ளே முருகனை ச் சேவிக்கச் சென்றால் அவர் சிரித்து ஹாய் கண்ணா என்று கூப்பிட்டது போலப்
பிரமையாக இருந்தது..
அப்புறம்..
கொஞ்சம் இரு மணி நேரம் கழிந்த பின்னர் எனக்கும் சோமு அவன் தம்பி தங்கைகளுக்குத் தர..அந்தப்
புளியோதரையின் டேஸ்ட்..அடடா அடடா அடடா..எனை ஏதோ செய்தது!
*
திருப்பரங்குன்றத்தில் என்ன விசேஷமாம்..
(வலையில் தேடிக் கிடைத்தவை)
//திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயில். குகைக்குள் தான் கருவறை என்பதால் சுற்றி வர முடியாது.
முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்து இருக்க, கீழே ஒரு புறம் மணப்பெண் தேவயானை அமர்ந்து இருக்கிறாள்.
மறுபுறம் நாரதர்! (இந்திரன் என்று சொல்வாரும் உண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு,
பின்னாள் "ஒட்டு வேலைகளும்" உண்டு)
மேலே பறப்பது போல் பிரபையில் சூரிய சந்திரர்கள்.
விளக்கொளியில் இன்னும் நுட்பமாகக் கருவறையை நோக்கினால் விநாயகர், அசுவினி குமாரர்கள், அமரர்கள்
என்று பலரும் உண்டு! மிக முக்கியமாக துர்க்கை அன்னையும், சிவபிரானும், பெருமாளும் கருவறையில் உள்ளார்கள்.
இப்படிச் சுற்றம் சூழ திருமணக் கோலமாகக் கருவறை உள்ளது!
இங்கு முருகனுக்கு அபிஷேகம் (திருமுழுக்கு) கிடையாது! அனைத்து அபிஷேகங்களும் திருக்கை வேலுக்கே!
கொடிமரத்தின் முன்பு மூன்று வாகனங்களையும் ஒரு சேரக் காணலாம்! எலி, நந்தி, மயில் என்று மூன்றும் முன்னிற்கும்!
அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் சன்னிதிகளைக் காணலாம்!
எல்லாமே குட்டிக் குட்டிக் குறுகலான குடைவரைகள் தான்!
சிவபெருமான் பரங்கிரி நாதராய் எழுந்தருளியுள்ளார். அம்மை ஆவுடை நாயகி.
திருப்பரங்குன்றத்து ஈசனைச் சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தேவாரத்தில் பாடியுள்ளனர்!//
இதைப் இன்று படிக்கும் வரை எனக்கு திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவில் எனத் தெரியாது..இப்பொழுது தான்
புரிகிறது ஏன் அப்படி வித்தியாசமாக சன்னிதிகள் இருந்தன என்று..
முருகனைப் பற்றி ஒரு அழகிய பாடலில் ஒரு பெண் பாடுவாள்
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
சரியானது தான்..
அப்படியே இந்த இளம் குமரி என்னவாக்கும் சொல்கிறாள் என்று பார்க்கலாமா..
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம்
அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழுப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை
அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம்
https://youtu.be/dJ81UHa2EIo
குடும்பத் தலைவன் நிஜமாகப் பாடுவதுபோல் இருக்கும் சர்ரூ.. நிழலாய் வெகு அழகான்
சுசீலாம்மாவின் குரல்..
**
uvausan
14th May 2015, 12:47 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 65
காலை இளம் கதிரில் இரு காதலர்களின் காதல் ஓட்டம் - உடம்பிற்கும் , மனதிற்கும் தேவையான energy யை இந்த பாடல் மட்டும் அல்ல - கரங்கள் நீட்டும் அந்த கதிர்களும் அளவிற்கு அதிகமாகவே தருகின்றது .
https://youtu.be/yeBs2V0C4f0
மிகவும் அழகாக படமாக்கப்பட்ட அருமையான பாடல். இந்த ஒளிப்பதிவிற்கு தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் அசோக்குமார் .
uvausan
14th May 2015, 01:36 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 66
ஜானகியின் குரலில் மனதை கவரும் பாடல்
காலை பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப்போல - படம் ராஜராஜேஸ்வரி -1979
https://youtu.be/mO2LJUPswU8
uvausan
14th May 2015, 01:41 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 67
Sakthi Leelai is a tamil devotional movie released in the year 1972 starring Gemini Ganesan, B.Saroja Devi,Jayalalithaa and Chittor V. Nagaiah in lead roles.The movie is directed by T. R. Ramanna. The music of the film is composed by M.S Viswanathan.
காலை பொழுதே வருக வருக
கண்ணிக்கதிரே வருக வருக --------------
https://youtu.be/MfzOncU6UnY
uvausan
14th May 2015, 02:38 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 68
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் - நான் அவள் பூ உடலில் ஒரு அழகினை படைக்க வந்தேன்
படம் : அந்தரங்கம்
அருமையான பாடல் - திரு கமலஹாசன் அவர்களின் கவர்ச்சியான குரலில்
https://youtu.be/ROaQotQM1FM
uvausan
14th May 2015, 03:00 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 69
படம் : இரவும் பகலும்
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் !
உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்
கண்ணதாசனின் வரிகள் - வாழ்க்கையின் அர்த்தத்தை அழகாக படம் பிடித்து கொடுக்கும் பாடல் - மக்கள் கலைஞ்சரின் நடிப்பில் இன்னும் மெருகு ஏறும் பாடல்
https://youtu.be/S5j2Pq82HbE
uvausan
14th May 2015, 03:14 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 70 :)
https://youtu.be/1L6vb7z0V1s
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இங்கே ந.தி.யின் உதடுகள் பேசுகின்றன ; கன்னங்கள் பேசுகின்றன ; நெற்றி பேசுகின்றது - உடுத்திய உடை பேசுகின்றது ; தலை முடி பேசுகின்றது ; அவர் கீழே உருட்டி விட்ட மது பாட்டில் பேசுகின்றது; ஊதும் சிகரெட் பேசுகின்றது - நாம் மட்டும் ஊமையாக , சிலைபோல பார்த்துக்கொண்டே இருக்கிறோம் - இப்படிப்பட்ட ஒரு மேதை மீண்டும் பிறந்து வர மாட்டாரா என்று .
chinnakkannan
14th May 2015, 03:29 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி ரொம்பச் சுடுதே முருகா முருகா..:) :) (ரவி ஒரு தமாஷிற்காகச் சொன்னேன்)
*
கதிர்களிலே கண்களையும் வைத்து வைத்து
..கண்போன போக்கினிலே காய வைத்தாய்
கதிர்காமக் கதிர்வேலா முருகா உந்தன்
..கட்டழகைக் காணுகின்றச் சிறுவன் நானே
விதிவசமா வெய்யிலிலே ம்தியு மிங்கு
..வேகமாக மயங்குதய்யா அருள்செய் யப்பா
கதியில்லை உந்த்னது கழலில் நானும்
..கட்டுண்டு கிடந்திடுவேன் அருள்வாய் நீயே!
*
பழமுதிர்ச் சோலை - அழகர் கோவிலெல்லாம் பிக்னிக் ஸ்பாட் போல மதுரைக் காரர்களுக்கு..
மிகப் பல வருடங்களுக்கு முன்னால் அக்கா அத்திம்பேர், அண்ணா, அம்மா சகிதம் சென்றது புகையாய்
நினைவில்
அழகர் கோவிலில் பெருமாளைச் சேவித்துவிட்டு கட்டிவைத்திருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு
மரங்களினூடே நிழல்கள் இருக்க லொங்க் லொங்க் என்று நடந்து சென்று முருகனை சேவித்துப் பின்
அங்கிருந்து நூபுர கங்கை என்ற இடத்திற்குச் சென்று - அதற்குள் ஸ்டமக் கவாங்க் கவாங்க்கென
குரலெழுப்ப கொண்டுவந்திருந்த இட்லி மொளகாப்பொடி, புளியோதரை, தயிர்சாதம் பிரித்து
சாப்பிட்டலாம் என நினைத்தால் சூழும் பலவய்துகளினாலான குரங்குகள்..
கொஞ்சம் அதற்கும் போட்டுவிட்டு உண்டு நூபுரகங்கையில் ஒல்லியாக வரும் தண்ணீரில் கை கழுவி
அந்தத் தண்ணீரைக் குடித்தால் (ரொம்ப ஸ்வீட்டா இருக்கும் அந்தக் காலத்தில்) அதுவல்லவோ சுகம்..
*
இன்னொரு கன்னி..முருகனைக் கூப்பிடுகிறாள்..என்னவாம்..
கன்னி விழி வேலைக் கண்ட வடி வேலன்
தன்னை மறந்தானடி - நானும்
தஞ்சம் புகுந்தேனடி!
வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி - நானும்
சொல்லப் புகுந்தேனடி!
ஆறு முகவேலன், ஆசை மனதோடு
ஏறு மயிலாக, மாறி வருவேனோ?
வண்ண மலரும், கன்னி இதழும்,
தந்த உறவு, என்ன பெறுமோ?
நிலவிலே...அழகிலே...உறவிலே...
நெருங்கி நெருங்கி மயங்குமோ?
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி - அவன்
அழகுத் திரு முகத்தில் இளைய நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
https://youtu.be/3-BNm0SM-jY
குழந்தையும் தெய்வமும்.. வழக்கம்போல ஆடுபவரைப் பற்றி வாசு சொல்லியிருப்பினும் மறந்து போச்!
chinnakkannan
14th May 2015, 03:53 PM
அதுல பாருங்கோ..இந்த பாலகன் முருகனை நினைச்சா உருகுது எப்பவாவது நினைக்கிற நம்ம மனமே
அப்படி இருக்கச் சொல்ல இந்தப் பெரியவர் முருக பக்தர் அவருக்கு உருகாதா என்ன..
யாராக்கும் அவர்
விஸ்வநாதர்னு வெச்சுக்குவோமா..படத்துல அவர்பெயர் மறந்து போச்சு..தீவிர முருக பக்தர்..ஆனாக்க
அவருக்கும் ஒரு ஃப்ரண்ட் ஃபாதர் ஜேம்ஸ்.. அவர் விஸ்வனாதன்கிட்ட ஒருவரை அனுப்பறார்..அந்தாள் பேரு தாமஸ் தியாகராஜன்.
தாமஸ் தியாகராஜன் ரொம்ப நல்லவன்.. டாக்ஸி டிரைவர்..ஒரு நா ஒரு பொண்ண ஒரு வீட்ல விட்டுட்டு
வெளில நின்னுக்கிட்டிருந்தானா..வீல்னுசத்தம்
என்னடான்னு உள்ள பொய்ப் பாத்தா அவனோட டாக்ஸில வந்த பொண்ணை ஒரு பையன் மானபங்கப் படுத்த முயற்சித்துக்கிட்டு
இருக்கான்..டிரைவர் தடுக்கப் பார்த்து சண்டை போடறச்சே தவறி கத்தியோ கத்திரியோ பட்டு அந்த்ப் பையன் இறந்து போய்டறான்..
அந்த டாக்ஸில வந்த பொண்ணு கீதாவும் ஓடி ப் போய்டுது..
இந்த தாமஸ் இருக்கானே நேர சர்ச்ல வந்து ஃபாதர் ஜேம்ஸ்கிட்டக்க சொல்றான்..எப்படியும் பிடிச்சுட்டுப் போய்டுவாங்க என்னை
ஸோ நான் கடைசி முறையா கர்த்தரைப் பார்க்க வந்தேன் ஃபாதர்..
ஃபாதர் சொல்றார்..ஓ மை பாய் எப்பவும் உண்மை ஜெயிக்கும்
ஓ நோ ஃபாதர்..கடகடன்னு சிரிக்கறான் தாமஸ்.. நான்கொன்ன பையன் ஒரு மிகப்பெரிய பணக்காரத் தொழிலதிபர் ஜார்ஜோட பையன்..
அவர் எனக்குத்தூக்கு வாங்கித் தராம விடமாட்டார்..
ஜேம்ஸ் அவனை விஸ்வ நாதன் கிட்ட அனுப்பறார்..இந்தப் பையனைப் பார்த்துக்குங்கோ..ன்னு..
விஸ்வனாதன் தாமஸ்கிட்ட “ஒன் பேர் என்னப்பா”
“தாமஸ் தியாக ராஜன் (அவ்ன் ஒரு கன்வர்டட் கிறிஸ்டியன்)
“ஓ.. தாமல் தியாகராஜனா..அடடா..நானுமே தாம்ல போய் பார்க்கணும்னு இருக்கேன்ன்” என அவனை ஹிந்துவாக நினைத்துவிடுகிறார்.
அடைக்கலமும் கொடுக்கிறார்..
கடைசியில் எவ்வளவோ விதமாக ஜார்ஜ் தாமஸைப் பிடிக்க முயன்றாலும் முடியவில்லை.. உண்மை வெல்கிறது..தாமஸ் விடுதலையாகிறான்..
ஆனால் உண்மைக்குப் பரிசாக ஃபாதர் ஜேம்ஸின் உயிர் போகிறது..
இது சோவின் உண்மையே உன்விலை என்ன என்ற திரைப்படக் கதையின் சுருக்க்கம்..
ஃபாதர் ஜேம்ஸ் முத்துராமன் தாமஸ் விஜயகுமார் விஸ்வ நாதனாக - வி.கே ஆர், வக்கீலாக சோ என .. நல்ல படம்
இதில் இந்த விஸ்வனாதனாகிய வி.கே ஆர் கோவில்களில் சுற்றிப் பாடும் பாடல் தான் இப்போது பார்க்க, கேட்கப் போகிறோம்..
*
முருகா முருகா..முருகா...
இத்தனை மாந்தருக்கு
ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா
சத்தியத் திருநாயகா
எத்தனை மனமுண்டோ
அத்தனை குணமுண்டு
ஏனென்று சொல் வேலவா ?
முருகா ஏனென்று சொல் வேலவா
படைத்தாலும் உயிர்களுக்கு குருபீடமே
பெரும் பணத்தாசையே சிலரின் பலிபீடமே
படுத்தாலும் எழுந்தாலும் கண் முன்னமே
சிலர்க்கு பதவி பதவி என்னும் ஒரு எண்ணமே
பாவிகள் பலருண்டு உன் இனத்திலே
அப்பாவிகள் சிலருண்டு உன் படைப்பிலே
கோவில் எவர்க்கு வைத்தாய் கோல முருகா
வெறும் கோஷத்தில் என்ன பயன் ?
கூறு முருகா
தான் என்ற அகங்காரம் அழித்திடுவாய்
செல்வம் தமக்கென்று நினைப்போரை ஒழித்திடுவாய்
நீதி நியாயங்கள் நிலைக்கட்டுமே
நல்ல நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே
நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே
*
கொஞ்சம் சீரியஸாகப் போகும் படத்தில் இந்தப் பாடல் மிகப் பெரியரிலீஃபாக இருக்கும்.. அதுவும் எம்.எஸ்.வி யின் கணீர்க் குரல்.
வி.கே.ஆர் மிகச் சிறப்பாக நடித்திருந்த படங்களில் இதுவும் ஒன்று..
ஜார்ஜான அசோகன் தாமஸை விடச்சொல்லி பேரம் பேசுவார் வி.கே.ஆரிடம்..
அப்போது வி.கே.ஆர் பேசும் வசனங்களெல்லாம் வெகு நன்றாக இருக்கும் கடைசியில்
தாமல் தியாகராஜன் என்று - தாமஸ் தியாகராஜனை ஹிந்து வென ஃபாதர் பொய் சொல்லிவிட்டார்
எனத்தவறுதலாக நினைத்து விஜயகுமாரை அசோகனிடம்கொடுத்துவிடுவார்..
*
வாங்க பாட் பாக்கலாம்..
https://youtu.be/sPP3s7DjccA
**
uvausan
14th May 2015, 04:04 PM
Ck - எனக்கே தெரிகின்றது - அதிகமாக எழுதுகிறேன் என்று - 1000 கரங்கள் நீட்ட முடியாவிட்டாலும் , குறைந்தது 100 வது நீட்டலாம் என்று நினைக்கிறேன் - தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது - கண்டிப்பாக 100 பதிவுகளுடன் நிறுத்திக்கொண்டு , நிலா வருவதற்கு வழி விடுகிறேன் . கவலை வேண்டாம் . முருகன் இருக்க பயம் ஏன் ??
chinnakkannan
14th May 2015, 04:17 PM
அதிகமாக எழுதுகிறேன் என்று - // கம்மியா எழுதினீர்னா அடிப்பேன் :) எழுதும் எழுதும்.. நிறைய.//முருகன் இருக்க பயம் ஏன் ??//:)
chinnakkannan
14th May 2015, 04:36 PM
ரவி கோச்சுண்டுட்டார்.. கூல்பண்ண குமரன் பாட்டு போட்டுடலாம்! :)
எழுபது வயதுக் குமரனுக்கும் என்னை ஒருதரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
ஆனால்
இருபது வயதுக் கிழவனுக்கே இங்கே என்றும் என்மனம் இடம் கொடுக்கும்..(ஓஹோ)
வெல் ஃபோல்க்ஸ் டைம்ஸ் ஆர் சேஞ்சிங்
அண்ட் ஸோ ஆர் ஃபாஷன்
ஸ்லீவ் லெஸ் பிளௌஸஸ் வாட்ஸ் நெக்ஸ்ட்
பிளௌஸ் லெஸ் ஸ்லீவ்ஸ்... (ஹிஹி..)
நான் ஒரு காதல் சந்யாசி.. (நித்தியோட சிஷ்யையோ..வாசுவைக் கேக்கணும்!)
https://youtu.be/ORqLDJZ6WJk
uvausan
14th May 2015, 05:38 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 71
CK - கதிருக்கும் , கந்தனுக்கும் அதிகமான பொருத்தம் உள்ளது . இந்த பாடல் ஒன்றே இதற்க்கு சாட்சி
https://youtu.be/C3DCrL_WHZs
rajeshkrv
14th May 2015, 05:56 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 67
Sakthi Leelai is a tamil devotional movie released in the year 1972 starring Gemini Ganesan, B.Saroja Devi,Jayalalithaa and Chittor V. Nagaiah in lead roles.The movie is directed by T. R. Ramanna. The music of the film is composed by M.S Viswanathan.
காலை பொழுதே வருக வருக
கண்ணிக்கதிரே வருக வருக --------------
https://youtu.be/MfzOncU6UnY
music by T.K.Ramamoorthy
uvausan
14th May 2015, 09:00 PM
நன்றி ராஜேஷ் - அதிகமாக duediligence பண்ணவில்லை - youtube இல் MSV என்றுதான் உள்ளது . பிழைக்கு மன்னிக்கவும்
uvausan
14th May 2015, 09:10 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 72
நிழல்களாக நம்மை என்றும் தொடர்ந்து குளிமை படுத்தும் பாடல் - எவ்வளவு தடவை கேட்டாலும் இன்னும் கேட்கத்தூண்டும் பாடல்
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள்
வீசாதோ ..
[இது ஒரு பொன்மாலைப் பொழுது]
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால்
வேள்விகளை
நான் செய்வேன்..
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
https://youtu.be/UmfXm2T8OQs
uvausan
14th May 2015, 09:14 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 73
ஆ….ஆ……ஆ….
காலையும் நீயே மாலையும் நீயே
ஆ….ஆ……ஆ….
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே….
ஆ……ஆ…..ஆ…….ஆ…..
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீயெ
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீய்யே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
ஆ….ஆ……ஆ…..ஆ……ஆ…
ஆ…..ஆ……
ஆ….ஆ……ஆ…..ஆ……ஆ…
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
https://youtu.be/5V-LxWfz-tE
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும்மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்
uvausan
14th May 2015, 09:20 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 74
வெள்ளிக்கிழமை விடியும்வேளை -- நீ
வள்ளி கணவன் பேரைச்சொல்லி - கூந்தலில் பூ முடித்தேன்
https://youtu.be/2tDB6NWrXdg
uvausan
14th May 2015, 09:25 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 75
மாலை பொழுதின் மயக்கத்திலே ----------------------
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?
ஆ..ஆ..ஆ..ஆஆ..
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி?
ஆ..ஆ..ஆ..ஆஆ..
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
.
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி
பறந்து விட்டார் தோழி
ஆ..ஆ..ஆ..ஆஆ..
.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
.
கனவில் வந்தவர் யாரென? கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி?
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம்
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?
ஆ..ஆ..ஆ..ஆஆ..
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி!!!
https://youtu.be/fcSLkVjupCQ
uvausan
14th May 2015, 09:35 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 76
உறங்கும் மானிடமே வெளியே வா - போர்வை சிறையை உடைத்து வெளியே வா - உன்னை பார்த்து வணக்கம் சொல்லும் காலைப்பொழுதை கண்டு களிக்க வா - வாழ்ந்தபின் உறங்கத்தான் போகிறாய் - வாழும்போது முழித்துக்கொள் - இயற்க்கைத்தரும் பரிசுகள் ஏராளம் .......
"காலைத் தென்றல் பாடிவரும்...."
.
படம் – உயர்ந்த உள்ளம்
இசை – இசைஞானி இளையராஜா
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
https://youtu.be/J8fFuyqEx0E
uvausan
14th May 2015, 09:47 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 77
ஒரு ஆலயம் ஆகும் மங்கை மனது -அதை அன்றாடும் கொண்டாடும் காலை பொழுது -சுமதி என் சுந்தரி
காலைப்பொழுது அழகா - இந்த படத்தின் கதாநாயகனின் முகம் அழகா என்று போட்டி வைத்தால் தோற்பது காலைப் பொழுதாகத்தான் இருக்க முடியும்
https://youtu.be/UZtITycERbo
uvausan
14th May 2015, 09:49 PM
Ck - காலையில் சந்திப்போம் - வெற்றி வேல் முருகனுக்கு -----
chinnakkannan
14th May 2015, 11:31 PM
ஹச்சோ.. மோடெம் சரியில்லாதகாலத்தில விட்டுப்போன ஹோம்வொர்க் நிறைய இருக்கே..
*
ரவி
*சுடும் நிலவு , சுடாத சூரியன் - படம் "தம்பி "
CK - காதில் விழுகின்றதா ? நிலவு தான் சுடுமாம் - சூரியன் அல்ல ... ( வேர்க்க விருவறுக்க , இந்த பாடலை தேடி உங்களுக்காக கண்டு பிடித்தேன் ) ரவி தாங்க்ஸ் ..இப்ப தான் பார்த்தேன்..
தாழுன்ன சூரியனே . கதிரின்..முருகன் பாட்டுக்கும் தாங்க்ஸ்
*
கல் நாயக்
சந்தனக் குடமொன்று சதிராடுது (சசிகலா ஓகேயாத் தானே இருக்காங்க ஓய்),சந்தனமும் ஜவ்வாதும் பன்னீரும் நீயெடுத்துச் சேத்துக்கோ பாடல்களுக்கு நன்றி
வாசுங்க்ணா
// 'சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே!'உடன் 'ஓநாய்க் கண்' அருணா
பழனி சந்தன வாடை அடிக்குது... பூசியது யாரோ?
'எல்லாமே என் ராசாதான்' படத்தில் ராஜாவின் ரகளை. 'புலி' ராஜ்கிரண்கிட்டே 'ஆட்டுக்குட்டி' சங்கீதா பாடுது
ராஜகாளியம்மன்' படத்தில் 'வைகைப் புயல்' தென்றலாய் பாடும் பாடல். அது மட்டுமல்ல. ரம்யா கிருஷ்ணன் புயலும் பவ்யம்// கமெண்ட்ஸ்லாம் வெரி நைஸ்… லைக் போட்டாலும் தனியா சொல்லாம இருக்கமுடியலை...
சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே'- ஓ மதி ஓ மதின்னு சந்தடி சாக்குல கல் நாயக்கோட நிலாப் பாட்டு போட்டுட்டீங்களே.. அவரும் மறக்காம வைர நெஞ்சப் பாட்டோட போட்டிருந்தார்..
*
அப்புறம் வாசு சார்.. நீங்கள் கொடுத்த மாலினி ஸ்பெஷல் இப்பத் தான் கேட்டேன்..பார்த்தேன்..அடித்தேன் (டைப்)
யாராக்கும் வரிகள்..மருதகாசி..(அமெரிக்கால்லருந்து ஆள் வரும்!)
*
அருவிக் கரை ஓரத்திலே அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது பலகதைகள் பேசுது (உத்தம வில்லன் கதையா?)
உருவமில்லா ஒருவன் உலகில் ஒண்ணைப்படைச்சானாம்
அந்த ஒண்ணுக்குள்ளே பலபொருளை உணரவச்சானாம்
கண்ணுக்குள்ளே துள்ளும் மீனைக் காண வச்சானாம்
கன்னத்திலே ரோஜாப்பூவை மின்ன வச்சானாம்..ம்ம்
அன்னத்தையும் நடையினிலே அமர வச்சானாம் (அப்புறம் கால் தூக்க முடியாதே)
காற்றில் ஆடுகின்ற பூங்கொடிபோல் இடையமச்சானாம் (கள்ளப்பயபுள்ள )
வண்ண நிலா தன்மை போல முகம் அமைச்சானாம் (ப்ளாக் அண்ட் ஒய்ட்ல கலர்ஃபுல்லா இருக்காங்களாம் அம்மணி..ரொம்ப கர்வம்.ம்ம்)
வானவில்லைப் புருவமாக மாத்திவச்சானாம் (புருவம் கலர்கலரா இருந்தா நல்லாவா இருக்கும்)
கோவைக் கனி தன்னை உதட்டில் குலவ விட்டானாம்
பின்புகொஞ்சும் கிளி மொழியை நாவில் உலவ விட்டானாம் (கீச்சுக் குரல் நல்லாருக்குமா என்ன)
மேகத்தையும் கூந்தலாக நேர விட்டானாம்
அந்ததேகத்துக்குப் பெண் என்னும் பேரை இட்டானாம் (ஓ ஐ ஸீ)
(குளிர்ச்சின்னீங்களே அருவி வேற இருக்கே அம்மணி வில்டேக் பாத்னு நினச்சேன்..ம்ம் பாட்டும் வரிகளும் குளிர்ச்சி..கடைசில அந்த ஆள் யாருன்னே சொல்லலையே ( நற நற ) அவரால தான் நாமெல்லாம் கஷ்ட்ட்டப் பட்டுக்கிட்டு இருக்கோம்!
** மிக்க்க நன்றி அகெய்ன் வாசு..
தாங்க்ஸ்ங்கோவ்..
*
ராஜேஷ் தெலுகு சுகன்யா பாட்டும் அடுத்த பாட்டும் தாங்க்ஸ்
*
ராஜ் ராஜ் சார் ஜுகல் பந்தி இப்பத்தான்கேட்டேன்..
மைனர் தம்பி மனசைப் பறிக்கும் மந்திரப் பதுமை நான்.
மந்திர தந்திர வேலைக்கெல்லாம் மசியாதே நைனா..
மாத்திரை எந்தன் கண்ணிலிருக்கு பார்த்துக்கோ நைனா..!
*
மேரா நாம் சின்சின் சுன் தான் எனக்கு ரொம்ப்ப்ப ப் பிடிச்சுது தாங்க்ஸ் ராஜ்ராஜ்சார்..
**
சரி சரி உங்கள் அல்லாருக்கும் இங்க்லீஷ் சாங்க் ஒண்ணு..:)
https://youtu.be/0rF9lbUCqDE
vasudevan31355
15th May 2015, 07:26 AM
ரவி சார்,
யப்பா! எங்கிட்டிருந்து இவ்வளவு கதிர்களை பிடிக்கிறீர்கள். அல்ட்ரா வயலட் இல்லாமல். பிரம்மாண்டமான அணிவகுப்பாக இருக்கிறதே.
அதிலும் தலைவரின் அழகுக்கு ஆலயமாகும் மங்கை மனது. சூப்பர். அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்பிகா அக்கா பாடலுக்கும் நன்றி! இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா?
rajeshkrv
15th May 2015, 07:31 AM
நன்றி ராஜேஷ் - அதிகமாக duediligence பண்ணவில்லை - youtube இல் MSV என்றுதான் உள்ளது . பிழைக்கு மன்னிக்கவும்
no problem
vasudevan31355
15th May 2015, 07:41 AM
சி.க,
அனைத்துப் பதிவுகளையும் விடாமல் படித்து அதற்கு பதில் போட உம்மை விட்டால் யாரும் இல்லைங்காணும். அதுக்கெல்லாம் பெரிய மனசு, நேரம் இதெல்லாம் வேணும். Thanks.
//அப்புறம் வாசு சார்.. நீங்கள் கொடுத்த மாலினி ஸ்பெஷல் இப்பத் தான் கேட்டேன்..பார்த்தேன்..அடித்தேன் (டைப்)//
சி.க,
வயிறு வலித்து கம்ப்யூட்டர் ரூமிலிருந்து வெளியே ஓடியாந்து விட்டேன்.:) நல்லவேளை மனுஷர் 'டைப்'ன்னு 'அடைப்புக் குறி':)'க்குள்ளே போட்டீங்களே சுவாமி! தப்பிச்சோண்டா முருகா!:)
//(அமெரிக்கால்லருந்து ஆள் வரும்!)//
இதைத்தான் ரோட்ல போற ஆசாரியைக் கூப்ட்டு ஆப்பு வச்சுக்கறதுன்னு தமிழ்ல சொல்வாங்க.:)
vasudevan31355
15th May 2015, 07:43 AM
ji!
vaanga. good morning. illae good nightaa?:)
vasudevan31355
15th May 2015, 07:46 AM
ஜி
நான் சந்தனமிட்டு பாட்டை சொல்லல. வழக்கமான அதிரடிகளை சொன்னேன். என்னாஜி! என்னப் பத்தி இவ்வளவுதானா.............?:) :) :) :)
rajeshkrv
15th May 2015, 08:46 AM
ஜி
நான் சந்தனமிட்டு பாட்டை சொல்லல. வழக்கமான அதிரடிகளை சொன்னேன். என்னாஜி! என்னப் பத்தி இவ்வளவுதானா.............?:) :) :) :)
புரிஞ்சுது உடனே மண்ணுக்கு மரம் பாரமாவின் கன்னட வடிவம் கொடுத்தேனே கேட்டீரா??? :)
rajeshkrv
15th May 2015, 08:49 AM
சி.க
எல்லா பதிவுகளையும் படித்து போடுவது பற்றி வாசு ஜி சொன்னது 100 % உண்மை..
rajeshkrv
15th May 2015, 09:02 AM
மறந்து போன சில பாடல்கள்
எங்கிட்ட மோதாதே படத்தில் இந்த பாடலின் டியூன் எனக்கு மிகவும் ப்டிக்கும். மலையாள பாடல் தமிழானது
https://www.youtube.com/watch?v=HxzX8FTjO8k
அதே போல் வாலி ஐயாவின் வரிகளில் ஆஷா போன்ஸ்லே பாலுவின் குரலில் அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்...
ஆஷா வாயில் தமிழ் ........
https://www.youtube.com/watch?v=mFzjW9fImGM
மனோ மின்மினி பாடிய அருமையான பாட்ல
நல்ல தலைவனும் தலைவியும்
https://www.youtube.com/watch?v=8Rek-V-No94
rajeshkrv
15th May 2015, 09:05 AM
ஏதோ ஒரு நதியில் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அதே படத்தில் இந்த பாடலும் நல்ல சூழ்நிலை பாடல்
https://www.youtube.com/watch?v=TIRKXDNC10s
kalnayak
15th May 2015, 10:57 AM
நிலாப் பாடல் 74: வெள்ளி நிலா முற்றத்திலே...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவும் காதல் பாடாத வித்தியாசப் பாடல். மக்கள் திலகத்தின் குழந்தைகளுக்கான அறிவுரையுடன் கூடிய வாழும் முறை கூறும் மற்றொரு பாடல். என்ன பாடல் சற்றே சோகமாக ஆரம்பிக்கிறது. குழந்தை தாயைப் பிரிந்து தகப்பனிடம் வளர்கிறது. தன் மகனின் வளர்ப்பில் அக்கறை கொண்ட தந்தை தாயின் பிரிவால் மகன் கவலையுறாமல் தேற்றிப் பாடும் பாடலாக வருகிறது. சற்று நேரம்தான் இந்த சோகம். குழந்தை வளர வளர உற்சாகம் பாடலிலும் காட்சியிலும் தெறிக்கிறது. இசைத்திலகம் கே. வி. மகாதேவன் இசையமைக்க, பாடகர் திலகம் பாட, ஆஹா, ஆஹா அவ்ளோ அழகு. தகப்பனும், மகனும் ஒரே மாதிரியான உடை அணிந்து, அதுவும் அந்தக் குழந்தை கால்களை விரித்து நின்று, கைகளையும் மேலே தூக்கி விரித்து மக்கள் திலகம் போலவே பொறுமையாக ஆடுவது கொள்ளை அழகு. அதற்கேற்ப பாடல் வரிகளும் 'நான்கு பேர்கள் போற்றவும் ..' என்று சுயமரியாதைப் பற்றி நல்ல விளக்கமும் வரும்.
சரி. பாடல் வரிகளை பார்க்கலாமா இப்போது. கவியரசரின் பாடல் வரிகள் இங்கே:
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
காணொளிக் காட்சி இங்கே:
https://www.youtube.com/watch?v=sKqF5MzQPFY
உடையைப் பார்த்தாலே தெரிகிறதே.
chinnakkannan
15th May 2015, 11:34 AM
ஹாய்குட்மார்னிங்க் ஆல்..
வாசுராஜேஷ்...தாங்க்ஸ் :)
ஹை.. நிலா வந்துடுச்சே வாங்க கல் நாயக் :) நிலா வந்ததால தென்றலை வரவழைச்சுடலாமா..
எண்ணங் குளிர எழில்நிலா நேர்வரவும்
தென்றல் சிரித்தது தேன்..
https://youtu.be/AWFXTVzx0vE
தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்னமங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ பொங்கி வந்த கங்கை நீ
படம் தந்து விட்டேன் என்னை.. விக்ரம்+ரோகிணி+இளமை..
uvausan
15th May 2015, 11:55 AM
வாசு சார் , கல்நாயக் அவர்கள் நிலாவை ஆரம்பிக்கும் வரை கதிரின் வெப்பத்தை தந்துகொண்டே இருக்கலாம் என்று நினைத்தேன் - இன்றே அருமையான நிலா பதிவுகளை அவர் போட ஆரம்பித்துவிட்டார் - தென்றலின் பின்னணியில் - இந்த என் கொள்கை இனி செல்லாது - நீங்கள் பாலாவின் பதிவுகள் போடும் வரை சற்றே தொடரலாம் என்று நினைக்கிறேன் . நீங்களும் இன்றே ஆரம்பித்து விட்டால் கதிரவனுடன் நானும் அம்பேல் !! :)
chinnakkannan
15th May 2015, 11:56 AM
ஹை.. இங்க என்ன ஆச்சு.. இந்த காட் இருக்காரே சமயத்துல கொஞ்சம் ஸன் க்ளாஸஸ் போட்டுக்குவார் போல..
அழகான பொண்ணு தான் ஆனா அதற்கேற்ற கண் இல்லையே..இருந்தாலென்ன வந்துட்டானே ஒருத்தன்.. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு எதிர்வினை இருப்பது போல, இன்பம் என்றால் துன்பம், காதல் என்றால் சோகம், இரவு என்றால் பகல்,..ம்ம் அவளுக்குத் துன்பம் தரும் இருட்டினில் வழிசொல்ல இவன் என்ன செய்யப் போகிறான்..?
மென் தென்றல் மங்கையிவள் மேனியினை மெல்ல
..மேவித்தான் புன்சிரித்துத் தழுவதையா மெல்ல
தென்னைமரக் கீற்றுகளும் தலைகுனிந்து நங்கை
..சிலிர்ப்பதையும் பார்த்துமனம் மகிழுதையா அங்கே
விண்ணினிலே நினைப்பிருந்தும் கன்னியவள் கண்கள்
…விந்தையென பூமியிலே காண்பதுவும் இருளே
கண்ணனெனக் காளையிவன் வண்ணங்களைச் சொல்லிக்
..கவிதைவழி பாடுகின்றான் காட்டுகின்றான் காட்சி..
**
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன எண்ணமோ நினைப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
வண்ணங்க்ளுக்கேற்றபடி எண்ணமெல்லாம் மாறுமம்மா..
எவரும் சொல்லாமலே பூக்களெல்லாம் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது
// நாசர்+ கன்னுக்குட்டிப் பல் ரேவதி..அவதாரம்..இளையராஜா ஜானகி..//
https://youtu.be/K8qs_TpAWpc
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.