View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
[
12]
13
14
15
16
kalnayak
4th February 2015, 11:16 AM
முரளி,
m.s.v டைம்ஸ் நிகழ்ச்சி நன்றாக எழுதி இருக்கிறீர்கள். M.s.v. யின் இசையமைப்பு பற்றியும் அவர் கண்ணதாசனிடம் கொண்டிருந்த நட்பு பற்றியும் சொன்ன விஷயங்கள் மிக உண்மை. மற்றபடி இந்திய அரசுதான் m.s.v. அவர்களின் திறமைக்கு வழக்கம் போல எந்த விருதுமே கொடுக்காமலே கவுரப் படுத்தியிருக்கிறதே. இதை விட அவருக்கு இந்திய அரசிடம் இருந்து என்ன வேண்டும்?
மற்றபடி இந்த சிறுவனின் (எப்பலேர்ந்துப்பா என்று என் மனசாட்சி கேட்பது உங்களுக்கு கேட்காது என்று நினைக்கிறேன்) அறிவில் இசையரசி, நடிகையருக்கு தகுந்தாற்போல் குரலை மாற்றி வளப்படுத்துவார் என்று தெரிந்ததில்லை. ""அததான், என்அததான்", "காத்திருந்த கண்களே", "சீட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு" போன்ற பாடல்கள் அவ்வாறு மாற்றி*பாடப்பட்டவை என்பது எனக்கு புதிய தகவல்.
இன்னும் ஒரு பதிவில் மட்டுமே இதைப்பற்றி எழுதுவேன் என்றால், கலைவேந்தனுக்கு மட்டுமல்ல எனக்கும் வருத்தமாக இருக்கிறது. அவர் சொன்னது போல் இன்னும் நான்கைந்து பதிவுகளில் எழுதவும்.
சரி. சரி. இனிப்பென்றாலும் அளவாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. இருந்தாலும் கவனியுங்கள். நன்றி.
kalnayak
4th February 2015, 11:35 AM
சி.க.,
சாமக்கோழியைப் பற்றியும் வறுத்த கோழியைப் பற்றியும் எழுதி எனக்குத் தெரியாத இன்னும் பல கோழிகள் இருக்கின்றன என்று எனக்கு தெரிய வைத்தமைக்கு நன்றி.*
kalnayak
4th February 2015, 11:39 AM
ராஜேஷ் மற்றும் ராஜ்ராஜ் வாங்க வாங்க.
மற்றபடி ஒரு பதிவ போட்டுட்டு ஒன்பது நாள் லீவ் எடுத்துக்கறீங்களே? நியாயமா.
அப்பப்ப வந்து போய்கிட்டு இருங்க. எனக்கும் சி.க.வுக்கும் பயமால்ல இருக்கு. அப்பப்ப கலைவேந்தனும், முரளியும் வர்றதினால கொஞ்சம் பயம் போயிருக்கு. நீங்க அடிக்கடி வந்தா தைரியமா இருக்கும்ல.
rajeshkrv
4th February 2015, 11:45 AM
it's been a long time
here is a beautiful PS song
https://www.youtube.com/watch?v=0_nM5lswTHo
rajeshkrv
4th February 2015, 11:45 AM
it's been a long time
here is a beautiful PS song
https://www.youtube.com/watch?v=0_nM5lswTHo
rajeshkrv
4th February 2015, 11:46 AM
https://www.youtube.com/watch?v=A7WEvWiLX9U
rajeshkrv
4th February 2015, 11:47 AM
https://www.youtube.com/watch?v=cMis1IAZrSM
rajeshkrv
4th February 2015, 11:48 AM
https://www.youtube.com/watch?v=KR9MgzJ7SHE
rajeshkrv
4th February 2015, 11:55 AM
similar situation in 90's like azhaikadhe
https://www.youtube.com/watch?v=-zXqDEeGii8
kalnayak
4th February 2015, 12:15 PM
ராஜேஷ்,
நாலு அருமையான தமிழ் பாட்டுக்களோடு சுந்தர தெலுங்குல கேக்கற பாட்டு அற்புதமாத்தான் இருக்கு. நன்றி.
மத்தபடி நான் சொன்னதுக்கு கோவிச்சுக்கலையே. தொடர்ந்து பாட் போட்டீங்களே. நன்றி.
kalnayak
4th February 2015, 12:24 PM
சி.க.
அப்புறம் ஒரு கேள்வி கேட்டீங்களே பாருங்க. நான் அசந்துட்டேன். பதில் சொல்ல மறந்துட்டேன்.
"கொக்கரக் கொக்கரக் கோ சேவலே" பாட்டு எந்த படத்திலன்னு. அது 'பதிபக்தி' படமுங்கோ!!!
Murali Srinivas
4th February 2015, 04:20 PM
கலைவேந்தன்,
என்னிடம் போய் ராகத்தைப் பற்றி கேட்கிறீர்களே? நான் சங்கீதம் கற்றவன் அல்ல சின்ன வயதில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு முடியாமல் போனது. இப்போதும் அந்த ஏக்கம் உண்டு. ஆனால் சிறு வயது முதலே வார இதழ்களிலும் நாளேடுகளிலும் வரும் கர்நாடக சங்கீத விமர்சனங்களை தவறாமல் படிப்பவன். என்ன புரிகிறதோ இல்லையோ படித்து விடுவேன். அதனால் அந்த துறையின் சில டெக்னிகல் அம்சங்கள் பற்றி சின்ன பரிச்சயம் உண்டு.
நீங்கள் குறிப்பிடுவீர்களே ஒரு சில பாடல்களின் ராகம் தெரியும், அதே சாயலில் வேறொரு பாடல் கேட்கும்போது ஒப்பிட்டு பார்ப்பேன் என்று, அதே கேஸ்தான் நானும். இரவும் நிலவும் வளரட்டுமே ஹமீர் கல்யாணி என்றால் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்-னும் ஹமீர் கல்யாணி என்று தெரியும். (இந்த ராகத்தை சாரங்கி என்றும் சொல்லுவார்களாம்).
அன்றொரு நாள் இதே நிலவில் பாடலின் சரணத்தில் அந்த ஒரு நாள் ஆனந்த திருநாள் என்ற வரி தேஷ் ராகத்தின் கிளாசிக் உதாரணம் என்று படித்ததை நினைவில் கொண்டு ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல பாடலும் தேஷ் ராகம் என்று தெரிந்துக் கொள்வேன். தங்க ரதம் வந்தது ஆபோகி எனும்போது அதே போல் ஒலிக்கும் வணக்கம் பலமுறை சொன்னேன் என்பதும் ஆபோகி என்று நினைத்துக் கொள்வேன்.
மாதவி பொன் மயிலாள் கரகரப்ப்ரியா,, மறைந்திருந்து பார்க்கும் ஷண்முகப்ரியா, தூங்காத விழிகள் இரண்டு அமிர்தவர்ஷிணி, யார் தருவார் இந்த அரியாசனம் அடானா என்று சில அளவுகோல்கள் வைத்திருக்கிறேன்.
கோபால், ராகவேந்தர், கிருஷ்ணாஜி, சுவாமி(பம்மலார்) போன்றவர்கள் சங்கீதத்தை முறையாக தெரிந்தவர்கள். சுவாமி கச்சேரியே செய்வார். வாசு, கார்த்திக், சாரதி போன்றவர்கள் இசைக் கருவிகளை பற்றி அறிந்தவர்கள். பாடல்களில் எவை எவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று சொல்லி விடுவார்கள். நான்தான் இரண்டிலும் சேர்த்தி இல்லை.
நிற்க, உங்களின் சந்தேகத்திற்கு விடை, கற்பனைக்கு மேனி தந்து பாடல் சக்ரவாகம் ராகம்தான். தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டதைதான் உங்களுக்கு சொல்கிறேன்.
அன்புடன்
Russellzlc
4th February 2015, 05:10 PM
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்....
தகவலுக்கு நன்றி முரளி. உங்களுடைய பழைய பதிவு ஒன்றை படித்ததில் ஒரு பாடலைப் பற்றியும் அதன் ராகம் பற்றியும் மிக சிறப்பாக விளக்கியிருந்தீர்கள். சங்கீதம் முறையாக கற்றுக் கொள்ளாமல் அந்த அளவு எழுதியது வியப்பே. பாராட்டுக்கள்.
சின்னக் கண்ணன், கல்நாயக் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது. ராகவேந்திரா சார் விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார். வாசு சார், ரவி சார், கிருஷ்ணா சார்களை எங்கே காணோம்?
----------------
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவோ மக்களவை தொகுதி பாரதிய ஜனதா எம்.பி. சாக்க்ஷி மகராஜ். இந்துக்கள் 5 குழந்தைகளை பெற வேண்டும். கோட்சேக்கு நாடு முழுவதும் சிலைகள் வைக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவர் இப்போது கூறியுள்ள கருத்து இவரை மேலும் பிரபலமாக்குகிறது. இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்றால் பிரதமர் மோடி படகு ஓட்டத்தான் செல்ல வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதோடு, ‘நான் சக்தி வாய்ந்தவன். நான் நினைத்தால் அரசுகளை அமைப்பேன். அரசுகளை கவிழ்ப்பேன்’ என்று அவர் கூறியிருப்பது, எப்படி?... இப்படி?... என்று அவரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை எல்லாருமே, குறிப்பாக அதிகாரத்தில் இருப்போர் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலே கூட இந்த எண்ணம் இருந்தால்.... வரலாற்றில் வாழ்க்கை எனும் ஓடம் தந்த பாடங்களை பார்த்தால் ... முடிவில் அடக்கமாகி விடுவாம் என்பதை உணர்ந்தால்... அடக்கமாக இருப்போம்.
பூம்புகார் திரைப்படத்தில் கவுந்தி அடிகளாக வரும் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பாடிய ‘வாழ்க்கை எனும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்...’ நான் ரசித்து கேட்கும் பாடல்களில் ஒன்று.
வாழ்க்கையில் அடிபட்டு ஏமாந்து கோவலனும் கண்ணகியும் படகில் செல்லும்போது இந்தப் பாடல்.
‘துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அடிக்கின்ற திசையெலாம் போகும்
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்த படகின் நிலை போலே ஆகும்..’
அற்புதமான வரிகள். இந்த வரிகளைப் போலவே தன் வாழ்க்கை ஆனதை நினைத்து கோவலனாக வரும் திரு.எஸ்.எஸ்.ஆர். தலையை கவிழ்ந்து கொண்டு தன்னையே நொந்து கொள்வதை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
பாடலை எழுதியவர் கலைஞர் திரு.மு.கருணாநிதி. அந்த வயதிலேயே இந்த வயதில் கிடைத்த அனுபவத்தைப் போல வாழ்க்கையை விளக்கியிருக்கிறார். மெல்லச் செல்லும் ஓடத்துக்கேற்ப நீந்தும் திரு. சுதர்சனத்தின் இசை. ரசிப்பது மட்டுமல்ல, உணர வேண்டிய பாடலும் கூட.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
4th February 2015, 06:04 PM
கலைவேந்தன்,
பூம்புகார் திரைப்படத்தை பற்றி சொல்லி ஒரு அருமையான பாடலையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நானும் இந்த பாடலை விரும்பி கேட்பதுண்டு. K.B.சுந்தராம்பாள் பாடல்கள் என்றால் என்னவோ தெரியவில்லை, எனக்கு அவ்வளவு பிரியம். கலைஞரும் நன்றாகவே இந்த பாடலை எழுதியிருந்தாலும் பகுத்தறிவுவாதிகள் சிலப்பதிகாரத்தைப் பற்றி சொல்வது எனக்கு சற்று முரண்பாடாக உள்ளது. அது கிடக்கட்டும். நீங்கள் சொல்வது போலவே இந்த பாடலில் தத்துவமான கருத்துக்கள் உண்டு . சிறு வயதில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். இப்போதும் பார்க்கலாம்.
சரி ஆகட்டும். பாடலை இப்போது பார்க்கலாமா?
https://www.youtube.com/watch?v=B1cVrNWWrHA
Russellzlc
4th February 2015, 06:49 PM
நன்றி கல்நாயக்,
சிறுவயதில் மரியாதைக்குரிய ம.பொ.சி. அவர்களைப் பற்றி சிலம்புச் செல்வர் என்று முதலில் கேள்விப்பட்டபோது விவரம் தெரியாமல் நன்கு சிலம்பு சுற்றுபவர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.அவரது முரட்டு மீசையும் ஒரு காரணம். தாயைக் காத்த தனயன் படம் பார்த்திருந்த பாதிப்பு வேறு. (ம.பொ.சி. அபிமானிகள் மன்னிக்கவும். இப்போது அவரது பெருமையை உணர்ந்திருக்கிறேன்.)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
4th February 2015, 07:36 PM
கல்நாயக்,
ஒரு முக்கிய விஷயம் விடுபட்டுபோய் விட்டது. தாயைக்காத்த தனயன் படத்தை அப்போது நான் பார்த்தது மறுவெளியீட்டில். முதல் வெளியீட்டில் பார்த்திருக்கிறேன் போலிருக்கிறது என்று நினைத்து வயதை கணக்கிட வேண்டாம் என்று அன்போடு கோருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் படம் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
4th February 2015, 10:54 PM
ரமேஷ், சுரேஷ் – இரு வாலிபர்கள்.. அப்புறம் நீலாவதி – யெஸ் அழகி…ரோஜா இதழோரப் பனித்துளியிலிருந்து வார்த்தாற்போல் ச்சிலீர் மென்மையான மேனி மென்மையான மனம்.. தெரிந்திருக்குமே ர, சு இருவருக்குமே போட்டி.. நீலாவதியின் காதலைப் பெறுவதில்..
ரமேஷ்.. – நீலாவதி, சந்த்ராயன் ராக்கெட் எத்தனை வேகத்தில் பயணிக்கும் தெரியுமா இத்தனை வேகம்… கங்கை நதி இப்படி இந்த இந்த மானிலங்களில் எல்லாம் பயணிக்கிறது.. வேகமான ஜெட் விமானம் மணிக்கு…இத்தனை மைல் தொலைவில் பயணிக்கும்.. அப்புறம்… நிறைய இருக்கின்றன எனக்குத் தெரிந்த விஷயங்கள்
நாளைக்கு ரிலீஸாகும் என்னை அறிந்தால் இவ்வளவு அடி நீளம் இவ்வளவு நிமிடங்கள் ஓடும் போகலாமா நீலாவதி..
நீலாவதி பதில் எதுவும் சொல்லவில்லை..ரமேஷ் செல்ல சுரேஷ் வந்தான்.
சுரேஷ்: நீல்ஸ்.. ஹாய் எப்படி இருக்க அப்படியே இந்த கரு நாவற் பழம் இருக்கு பாரு அதெல்லாம் அலம்பி அம்மா கிஷ்ணா ஒம்மாச்சிக்குக் கொடுக்கணும்னு ஒரு ப்ளேட் ல போட்டு வச்சுருப்பா. அப்படி அந்த க. நா பழம் மாதிரியே உன் கண்கள் இருக்கு…
இந்த ஸ்பான்ச்ங்கறாங்க், ஃபோம்ங்கறாங்க, இதெல்லாம் விட ஒன்னோட செம்பருத்திப் பூக்கன்னம் சாஃப்ட்னு எனக்குப் படுது..
வேற வழி தெரியலை எனக்கு நீல்ஸ்… திடீர்னு இடைத்தேர்தல் வந்து ஒரே ஊர்ல கூடி மீட்டிங்க்கா போடற அரசியல் வாதிகள் மாதிரி வானில் கன்னங்கரேல் மேகங்கள் ஒன்று சேர்ந்தாப்போல இருக்கே உன்னோட அடர் கூந்தல்.. அதுவும் நெளி நெளியா எலியட்ஸ் பீச் கடலலை மாதிரி மெளனமா அதிர்வலைல்ல்லாம் கொடுக்குதே.. எந்தப் பார்லர் போற நீல்ஸ்..
ம்ம் ஒன்னோட டிரஸ்ல எனக்கு எது பிடிச்சுருக்குன்னா. அதெப்படிச் சொல்றது நீ வானம் மாதிரிம்மா. கருக்கல் வேளைல இருக்கற மெல்லிய நிறங்கள், பகலுச்சில்ல இருக்கற பளீர் நீலம் அந்திவேளை வானம் மாதிரி உனது உதடோட போட்டி போடற அதிரடிச் சிகப்பு – சேலையோ, முக்கா ஜீன்ஸ் டிஷர்ட்டோ, பொலிரோ ஸ்பாகட்டி டாப்ஸோ எது போட்டாலும் உனக்குப் பொருத்தமாத் தான் இருக்கு..
எனக்கு வேற விஷயங்கள் அவ்வளவா தெரியாது… மன்னிச்சுக்கோ நீல்ஸ்..
நீலாவதி புன்னகையுடன், “சுரேஷ், உங்களை மாதிரி விஷயம் தெரிந்தவர் எனக்கு க் கிடைத்தால் போறாதா” என்றாள் (இது தேவன் 1955 இல் எழுதிய விஷயம் தெரிந்தவர் என்ற கதையின் ரீ மிக்ஸ் எனலாம்!)
அது போல முரளீ, கலை (ஹப்பாடா கண்ணா விஷயத்துக்கு வந்துட்டான்) எனக்கும் ராகங்கள் லாம் தெரியாது.. தெரிஞ்சதெல்லாம் ரசிப்பது மட்டும் தானாக்கும்.! ( அப்பப்ப கேள்விப் படறத மட்டும் மனசுல வச்சுக்குவேன்.. நண்பர் ராகதேவனும் அப்பப்ப சொல்வார் கேட்டுக்குவேனாக்கும்!)
*
கலை வேந்தன்.. வாழ்க்கையிலும் ஓடம் வழங்குகின்ற பாடம் நல்ல பாட்டுதான்.. ஆனால் பூம்புகார் பார்த்ததில்லை.. வழக்கம் போல நன்னாயிட்டு எழுதறேள்..
கல் நாயக். பதிபக்தின்னு சம்சயம் இருந்திச்சு..ஏனெனில் நான் பார்க்காத படம் அது.. தாங்க்ஸ்..
*
ராஜேஷ் பாட்ஸ்க்கு தாங்க்ஸ்ங்கோவ்..
மதுரைக்குச் சென்றால் மேகங்களே மங்கை மீனாட்சி கூறுங்களே. வாணி.ஸ்ரீ.. ஏதோ துள்ளித் துடிக்க கிடுகிடுன்னு கலர்ல ஓடிப் பாடற பாட்டோட படம் மட்டும் நினைவுக்கு வருது..இருளும் ஒளியும்.. பாடல் நினைவுக்கு வரலியே..
கற்பனையில் மிதந்தபடி கண்ணுறங்கும் பருவக்கொடி – முழிச்சுப்பாடுற்து சுஜி தூங்கறது யாராக்கும்?
காவியங்கள் பாடுவதும் நான் நடத்தும் சம்சாரமே.. யாராக்கும் அது
தெலுங்கு பாட் யூட்யூப் வொர்க் ஆகலை
*
நீலாவதிய அவ்வளவு வர்ணிச்சாச்சா.. சரி பரவாயில்லை இந்தப் பாட்டு போட்டுக்கலாம்..!
(சங்கர், சித்ரா)* ஜெய். மணிவிளக்கே மாந்தளிரே.. உன்னைத் தான் தம்பி ந்னு படம் போட்டிருக்கு.... சுசீலாம்மா தான் ஹம்மிங்க்கா..படம் எப்படி இருக்கும்…
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=i_cVw-FfGc0
rajraj
5th February 2015, 09:08 AM
பனிப்பொழிவெல்லாம் நின்னுடுச்சா இன்னும் இருக்கா..உங்கள் ஜூகல் பந்தி பார்க்காம என்னமோ போல இருந்துது..
It snowed on Dec 31/Jan 1. But cold weather continued. It is warming up now to 70 deg F during daytime. May be I will warm up to more jugalbandi ! :)
uhesliotusus
5th February 2015, 09:37 AM
http://www.prachidanewswing.com/GenImage.ashx?id=5314&height=250&width=300
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை எனப்படும் சென்ன பட்டணம் தான் திரு.(சங்கர்) கணேஷ் பிறந்த ஊர். கிராமத்தில் பிறந்து நகரத்தில் வந்து சாதனை புரியும் மனிதர்களுக்கு முன்னால் சென்னையிலே பிறந்து சென்னையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக இன்று வரை சாதனை படைத்து கொண்டிருப்பவர். இந்த வார “நான் பிறந்த மண்”ணுக்காக உங்களோடு அவர் பேசுகிறார்.
எனது தந்தை கே.சின்னசாமி அவருக்கு எல்லையம்மாள், சுந்தரம்மாள் என்று இரு மனைவிகள். எல்லையம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தவன் நான். எனக்கு ஜெகதாம்பாள் என்ற அக்காவும், செல்வம், கோபால் என்று இரண்டு தம்பிகள் என்னோடு பிறந்தவர்கள். பத்தாம் வகுப்பு வரை படித்த நான் ஸ்டண்ட் சோமு, அவருடைய உதவியாளர் டி.கே.பரமசிவம் போன்றவர்களுடன் வாகினி ஸ்டுடியோவுக்கு போனால் அங்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி ஒரு பக்கம் நடித்து கொண்டிருப்பார்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஒரு பக்கம் நடித்து கொண்டிருப்பார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் படப்பிடிப்பு ஒருபக்கம், மலையாளத்தின் பிரேம் நசிர் படபிடிப்பு ஒருபக்கம் என்று திரையுலகில் பிரபல நட்சத்திரங்களின் படப்பிடிப்புகளை பார்க்கும்போது சினிமாவில் நுழைய வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன். எனது விருப்பத்தை அறிந்த என்னுடைய தந்தை, திரு.ரங்கன் இசைகுழுவில் இசை கற்றுக்கொள்ள சேர்த்துவிட்டார். பின்பு தன்ராஜ் மாஸ்டரிடமும் இசையை கற்றுக்கொண்டேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் அவரது இசைக்குழுவில் பணியாற்ற வாய்ப்பு கேட்டபோது முறையாக கற்று வாருங்கள் வாய்ப்புகள் கட்டாயம் இருக்கிறது என்று கூறினார். அங்கிருந்து கொஞ்ச காலம் நானும் சங்கர் அண்ணாவும் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றினோம். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசை குழுவில் சேர்ந்து மணப்பந்தல், பாசமலர் போன்ற படங்களில் பணியாற்றினோம்.
மறைந்த கவியரசர் கண்ணதாசன் பரிந்துரையின் பேரில் பிரபல தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ஜி.ஆர்.நாதன் அவர்கள் இயக்கி ஜெய்சங்கர், குமாரி சச்சு இணைந்து நடித்த “நகரத்தில் திருடர்கள்” என்ற படத்தை இசையமைத்தோம். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அடுத்ததாக கண்ணதாசன் அவர்கள் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் பிரமுகரான சின்ன அண்ணாமலை அவர்கள் தயாரித்து ஜெய்சங்கர் நடித்த “நான் யார் தெரியுமா” என்ற படத்திற்கு இசையமைத்தோம். அதற்கடுத்தபடியாக தேவர் பிலிம்ஸ் தயாரித்து ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த “மகராசி” என்ற படத்திற்கு இசையமைத்தோம். மூன்றாவதாக இசையமைத்த இந்த “மகராசி” திரைப்படம்தான் முதன் முதலில் வெளியானது. இரண்டாவதாக இசையமைத்த “நான் யார் தெரியுமா” இரண்டாவதாக வெளியானது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த மகராசி முதன் முதலில் வெளியானதால் படத்தின் டைட்டிலில் கவிஞர் கண்ணதாசன் வழங்கிய தேவர் பிலிம்ஸின் சங்கர் கணேஷ் என்று பின்னர் வந்த படங்களுக்கெல்லாம் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக எங்கள் பெயரை டைட்டிலில் போடவைத்தோம்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த “இதய வீணை”, “நான் ஏன் பிறந்தேன்” போன்ற படங்களுக்கு இசையமைத்தோம். நாங்கள் மூன்றாவதாக திரு எம்ஜிஆர் அவர்களுக்கு “நல்லதை நாடு கேட்கும்” என்ற படத்திற்கு இசை அமைக்கும்போது தான் அவர் முதன் முதலில் தமிழ் நாட்டின் முதல்வரானார். அதனால் அந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டு, அந்த படத்தை தயாரித்த திரு.ஜேப்பியார் அவர்களே கதாநாயகனாக நடித்து பின்னர் வெளியானது. அடுத்ததாக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு அவர் சொந்தமாக தயாரித்த படங்களுக்கும், ஏவிஎம் நிறுவனம், கே.ஆர்.ஜி.பிலிம்ஸ் போன்றவர்கள் தயாரித்த படங்களுக்கும் பணியாற்றினோம். தமிழில் மட்டும் சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளோம்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், அவருடைய மகன் சிவராஜ் குமார், குமார் பங்காரப்பா, ரவிச்சந்திரன் போன்றவர்கள் நடித்த சுமார் 35க்கும் மேற்பட்ட கன்னட படங்களுக்கும், மலையாளத்தில் சுமார் 40 படங்களிலும் இசையமைத்து அங்கு பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறோம். தெலுங்கில் ஷோபன் பாபு, தாசரிநாராயண ராவ், ராஜ்பாபு போன்றவர்களின் படங்கள் என்று 40&க்கும் மேல், இந்தியில் 2 படங்கள் என்றும் பிறமொழிகளிலும் இசையமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளோம்.
நான் கதாநாயகனாக பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் தயாரித்த “ஒத்தையடிப்பாதையிலே” என்ற படத்தில் நடித்தேன். அடுத்ததாக ரகு என்ற தயாரிப்பாளர் தயாரித்த “அஸ்திவாரம்” என்ற படத்தில் நான் கதாநாயகனாகவும் எனக்கு அண்ணனாக ஜெய்சங்கரும், அண்ணியாக கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். நாகர்கோவில் சுயம்பு என்பவர் தயாரித்த “ரிக்ஷா தம்பி” என்ற படத்தில் கதாநாயகனாக நானும், கதாநாயகியாக கோழி கூவுது விஜியும், சங்கிலி முருகன் போன்றவர்கள் நடித்தார்கள். பின்னர் தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட “நெருப்பு நிலா” என்ற படத்தில் நான் கதாநாயகன், முதல் மரியாதை ரஞ்சனி கதாநாயகி.
பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த “சட்டம் ஒரு இருட்டறை” படத்தில் நான் இரண்டாவது கதாநாயகனாக ரிக்ஷாகாரன் வேடத்தில் நடித்தேன். பின்னர் இந்த படம் இந்தியில் “அந்தாகானூன்” என்ற பெயரில் தயாரான போது அந்த படத்தில் நான் நடித்த ரிக்ஷாகாரன் பாத்திரம்தான் வேண்டும் என்று அமிதாப்பச்சன் கேட்டு நடித்தாராம். மலையாளத்தில் இதே “சட்டம் ஒரு இருட்டறை” படம் தயாரான போது அந்த வேடத்தில் நடித்தவர் பத்மவிபூஷன் கமலஹாசன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக எனது மாமியார் ஜி.வி.ராஜம்மாள் தயாரித்து, எனது மைத்துனர் ஜி.வி.சரவணன் இயக்கிய “நான் உன்ன நெனச்சேன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தேன்.இந்த படத்தில் எனக்கு கதாநாயகி அப்போது கவர்ச்சி நடிகையாக பிரபலமாக இருந்த சில்க்ஸ்மிதா தான்.
எனது மனைவி ஜி.வி.ரவிச்சந்திரிகா சரவணா பிலிம்ஸ், ஜி.என்.வேலுமணியின் புதல்வி. பாகப்பிரிவினை, பாதகாணிக்கை, பாலும் பழமும், பணத்தோட்டம், குடியிருந்த கோவில், நாணல், இது சத்தியம், நம்ம வீட்டு தெய்வம், நான் ஏன் பிறந்தேன் என்ற எண்ணற்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர் எனது மாமனார் ஜி.என்.வேலுமணி. அவருடைய மகளை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எனது மகள் ஸ்ரீதேவி, அவரை “இதுதாண்டா போலீஸ்” டாக்டர் ராஜசேகர் அவருடைய தம்பி குணசேகருக்கு திருமணம் செய்துவைத்தேன். இன்று அவர்கள் தெலுங்கானா தலைநகரம் ஐதராபாத்தில் நகை கடை நடத்தி வருகிறார்கள். என்னுடைய மகன் ஸ்ரீகுமரன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் கணேஷ். சினிமா டைட்டிலில் நானும் எனது நண்பர் சங்கர் அண்ணனும் இணைந்து இரட்டையர்களாக பலவெற்றி படங்களை தந்து உலாவந்தோம். என்பெயரோடு இணைந்திருக்கின்ற திரு.சங்கர் அண்ணா அவர்கள் மறைந்து ஆண்டுகள் பலவானாலும் இந்நாள் வரை சங்கர் கணேஷ் என்ற பெயரில்தான் இதுவரை நான் இசையமைத்து வருகிறேன். நட்பின் பெருமையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும், அதற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் தான் இதுவரை நான் அவ்வாறு செய்து வருகிறேன்.
இசையால் வசமாகா இதயம் எது என்பார்கள். தனது இசையால், நட்பால், வயது கூடிக்கொண்டே போனாலும் இன்று வரை இளமையாகவே இருக்கும் திரு. (சங்கர்) கணேஷ் அவர்கள் கலையுலக மார்கண்டேயனாக இருந்து கொண்டு மேலும் பல சாதனைகள் இசைத்துறையில் படைக்கட்டும்.
- மிட்டாளம் சே.மனோகரன்
rajeshkrv
5th February 2015, 10:11 AM
கலைவேந்தன், சிகா, கல் நாயக் நன்றி.
இதோ இன்னொரு அற்புத கானம்.
விஜயபாஸ்கரின் இசையில் இசையரசியுடன் ஜாலியாக ஜாலி ஆப்ரஹாம், வாணிஜெயராம் மற்றும் பாலு
இரவில் இரண்டு பறவைகள்
https://www.youtube.com/watch?v=Zk4gVD7ZLww
kalnayak
5th February 2015, 10:52 AM
கல்நாயக்,
ஒரு முக்கிய விஷயம் விடுபட்டுபோய் விட்டது. தாயைக்காத்த தனயன் படத்தை அப்போது நான் பார்த்தது மறுவெளியீட்டில். முதல் வெளியீட்டில் பார்த்திருக்கிறேன் போலிருக்கிறது என்று நினைத்து வயதை கணக்கிட வேண்டாம் என்று அன்போடு கோருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் படம் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன்,
நீங்கள் சொல்லவே வேண்டாம். அதற்கு வெகு முன்பே நீங்கள் பிறந்திருப்பீர்கள் என்று ஏற்கனவே நான் அனுமானித்திருந்தேன். உறுதிபடுத்திவிட்டீர்கள். தாயை காத்த தனயனை வைத்து உங்கள் வயதை கணக்கிடமாட்டேன். நீங்கள் பெரியவர். பயப்படவேண்டாம்.
.
.
.
.
.
.
.
.
கோபித்துக்கொள்ளாதீர்கள். ஒரு தமாஷுக்கு.
நீங்களே எடுத்துக் கொடுத்தீர்கள் இதற்கு.
Russellzlc
5th February 2015, 03:48 PM
சின்னக் கண்ணன், தேவன் கதை ரீமிக்ஸ் சூப்பர்.
நன்றி திரு.ராஜேஷ்.
திரு. பட்டாக்கத்தி சார் (பயமாக இருக்கிறது சார். பெயரை கொஞ்சம் மாற்றிக் கொள்ளக் கூடாதா?) உங்கள் பதிவு நன்றாக இருந்தது. நன்றி. இந்த பாராட்டு பயத்தால் அல்ல. உண்மையிலேயே.
கல்நாயக்,
கே.பி. சுந்தராம்பாள் பாட்டைப் போட்டு தத்துவம் எல்லாம் வேறு சொல்லியிருந்தேனே? என்பதற்காக விளக்கம் அளிக்கலாம் என்று பார்த்தால்... உங்கள் விளக்கத்தை படித்தபிறகு, நான் சும்மாவே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. கொஞ்சம் வேலை அதிகம். பின்னர் வருகிறேன். ( ஒரு கேர்ள் பிரண்ட் ரொம்ப நாளாக நச்சரித்து வருகிறார். இன்று ‘பப்’புக்கு வேறு போக வேண்டும்.)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
5th February 2015, 04:04 PM
சி. க.
தெரியாமத்தான் கேக்குறேனுங்ணா... நீலாவதி-ன்னு ஒரு ராகம் இருக்குங்ளாங்னா? அதில இந்த மணிவிளக்கே பாட்டும் இருக்குங்ளாங்னா?
மத்தபடி கலைவேந்தனும், முரளியும் ராகம் பத்தி பேசறதை அருமையான கதையோட சொல்லிப்போட்டீங்ணா. சூப்பரா இருக்குங்ணா.
kalnayak
5th February 2015, 04:08 PM
பட்டாக்கத்தி, உங்க (சங்கர்) கணேஷ் பற்றிய பதிவு நல்லா இருந்ததுங்ணா. அப்பப்ப வந்து போயிட்டு இருங்க்ணா.
kalnayak
5th February 2015, 04:12 PM
ராஜ்ராஜ்னா,
அடுத்த ஜுகல்பந்தி எதிர்பாத்திருக்கேங்க்ணா.
kalnayak
5th February 2015, 04:50 PM
ராஜேஷ்ணா,
சின்ன வயசுல "சௌந்தரியமே வருக வருக" போஸ்டர் பாத்திருக்கேங்ணா. இப்பதான்னா பாட்டை கேக்கிறேன். நல்லா இருக்குங்ணா. நன்றிங்ணா.
kalnayak
5th February 2015, 05:04 PM
கல்நாயக்,
கே.பி. சுந்தராம்பாள் பாட்டைப் போட்டு தத்துவம் எல்லாம் வேறு சொல்லியிருந்தேனே? என்பதற்காக விளக்கம் அளிக்கலாம் என்று பார்த்தால்... உங்கள் விளக்கத்தை படித்தபிறகு, நான் சும்மாவே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. கொஞ்சம் வேலை அதிகம். பின்னர் வருகிறேன். ( ஒரு கேர்ள் பிரண்ட் ரொம்ப நாளாக நச்சரித்து வருகிறார். இன்று ‘பப்’புக்கு வேறு போக வேண்டும்.)
கலைவேந்தன்,
நாங்க நம்பிட்டோம்ங்க. ஆமா பாட்டிங்கள பப்ல உள்ள போக விடுறாங்க இல்ல. வேற பிராப்ளம் இல்லையே!!!
அய்யய்யோ கலைவேந்தன் அடிக்கறாரே!!!
சரி. சரி. நீங்க அடிக்கறதை எல்லோரும் பாக்குறாங்க. என்னை விட்டுடுங்க. நான் ஓடியே போயிடுறேன்.
chinnakkannan
5th February 2015, 05:57 PM
கலைவேந்தன் கல் நாயக் தாங்க்ஸ்..
ராஜ் ராஜ் சார் நைஸ்.. அடுத்த ஜூ.ப எப்போ
நீலாவதின்னு ராகம் கிடையாது கல் நாயக்..நீலாம்பரி தான் உண்டு பாட் பார்த்தா லாலி லாலின்னு பாப்பா பாட்டுதான் வருது..சரி அமிர்த வர்ஷினி வேணும்னா போட்டுடலாமா
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
சொர்ண புஷ்பம் வித் பிரபு.. தூங்காத விழிகள் ரெண்டு..
https://www.youtube.com/watch?v=tRPch8z7-ac
இப்போ நீலாம்பரி போடலாமோன்னோ.. லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
https://www.youtube.com/watch?v=eyKKmps9Z9Y
appuram vaarEn..
eScApe :)
Richardsof
6th February 2015, 08:40 AM
இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
1974 -சென்னை நகரில் தமிழ் படங்கள்
சில நிழற் படங்கள் - சந்திரபாபு புத்தகம் .
http://i57.tinypic.com/es4y11.jpg
Richardsof
6th February 2015, 08:41 AM
http://i61.tinypic.com/spi23a.jpg
Richardsof
6th February 2015, 08:43 AM
http://i62.tinypic.com/2dkac7t.jpg
Richardsof
6th February 2015, 08:43 AM
http://i58.tinypic.com/219q9mg.jpg
Richardsof
6th February 2015, 08:45 AM
http://i59.tinypic.com/14a9an9.jpg
Richardsof
6th February 2015, 08:46 AM
http://i62.tinypic.com/34drfw8.jpg
Richardsof
6th February 2015, 08:47 AM
http://i58.tinypic.com/2d8l1t5.jpg
Richardsof
6th February 2015, 08:48 AM
http://i60.tinypic.com/1ze9ycp.jpg
Richardsof
6th February 2015, 08:51 AM
http://i57.tinypic.com/2rma1lg.jpg
Richardsof
6th February 2015, 08:54 AM
http://i60.tinypic.com/2924dpv.jpg
chinnakkannan
6th February 2015, 09:09 AM
வாங்க எஸ்.விங்ணா.. வாவ்..வெகு அழகிய ஆவணங்கள்.. நன்றி.
chinnakkannan
6th February 2015, 11:26 AM
வார நாட்களில் காலை நேரம் என்றால் அரக்கப் பரக்க எழுந்து குளித்து சொக்கா டை பேண்ட் எல்லாம் போட்டுக் கொண்டு வீகாரம்மா அன்புடன் கொடுக்கும் மூன்று இட்லிகள் இரண்டு தோசைகள் ஒரு கப் கேப்பைக் கஞ்சி ஒரு கப் ஓட்ஸ் ஒருஸ்கூப் உப்புமா மட்டும் உண்டுவிட்டு பின் வேக வேகமாக காரில் முக்கால் மணிப் பயணத்தில் ஆஃபீஸ் போகவே நேரம் சரியாக இருக்கும்..( நிற்க இந்த மூ.இ இதோ ஒககே ஒகஓ ஒஸ்கூப் உப்மா என்பதில் நடுவில் அல்லது என்று போட்டுக் கொள்க!)
எனில் ரிலாக்ஸாக ப்ரேக்ஃபாஸ்டை எஞ்சாய் செய்வது என்பது வெள்ளி சனி மட்டும் தான்..அதுவும் வீட்டின் அருகாமையில் மெயின் ரோடிலேயே ஓமான் எக்ஸ்ப்ரஸ் இருப்பதால். வெ.கி காலை எழுந்து சமர்த்தாய்குளித்து ஒம்மாச்சி கீப் மி அண்ட் ஆல் ஹேப்பி சொல்லி குட்டி ப்ரே பண்ணிவிட்டு ஓமான் எக்ஸ்ப்ரஸ் போய் ஸ்டாண்டர்ட் ஆர்டராய் ஒரு சிங்கிள் ஸ்கூப் பொங்கல் ஒரு வடை என உண்டுவிட்டு வருவேன்..
அதுவும் யார் கண் பட்டதோ..கடந்த மூன்று மாதங்களாக மாற்றி மாற்றி உடம்பு படுத்தல்..ஜனவரி பிறந்தபின் இன்னும் மோசம். ஆஃபீஸ் ஹாஸ்பிடல் ஊசி வீடு ஆன் டிப்யாடிக் மாத்திரைகள் மறுபடி மறுநாள் டிட்டோ எனச் சென்று கொண்டிருக்க ஓ.எ போகவே இல்லை..வீ.கா கொடுக்கும் கே.க ஷெட்யூல் தான் வார இறுதியிலும்..
எனில் இன்று காலை கனகார்யமாக குளித்து ஃப்ரஷ்ஷாக ஓ.எ போனால் வெகுகாலம் காணாததினாலோ என்னவோ அங்கிருந்த நபர் வாங்க சார்.ரொம்ப நாளாகாங்கலை.. எனச் சொல்லியபடியே பக்கத்து டேபிளில் மசால்தோசை, வடை, ரவா இட்லி என்றெல்லாம் பரப்பிவிட்டு நிமிர்ந்து என்னிடம்..சூடா இருக்கு வடை தரட்டா எனச் சொல்லி பதிலெதிர்பார்க்காமல் சென்று விட்டார். கொண்டுவந்தது சிங்கிள் வடை ப்ளஸ் கால் பக்கெட் சாம்பார்..
குரு ஒரு ஆனியன் ஊத்தப்பம் சொல்லேன் எனச் சொல்லிவிட்டு வடையின் அபரிமித சூடு ப்ள்ஸ் சுவையால் ஒன்றிப்போய் இன்னொன்னு வடை கொண்டாப்பா எனச் சொல்லிவிட்டேன் தெரியாத் தனமாக.
வந்தது இரண்டாம் சாம்பார் வடை உடன்பிறப்பாய் சற்றே பூசிய இலியானா மாதிரி ஊத்தப்பம் அளவுக்குக் குண்டாக இல்லாமல் கொஞ்சம் ஒல்லியாய் ப்ளஸ் தமன்னாவின் இதழோரச் சிகப்பு முறுவலைப் போல முறுவலுமாகவும் சிற்சில சமயம் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் வைர நகையைப் போல ஆனியன்கள் சின்னச் சின்னதாய்த் தூவி அலங்கரிக்கப்பட்ட ஆ.ஊ (ஆனி யன் ஊத்தப்பம் ) வந்தது..
அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு மெய்வருத்தம் பாராமல் கண் துஞ்சாமல் கருமமே கண்ணாகி அவற்றை வயிற்றுக்கு ஈந்து – என்ன சார் காஃபியா –ஆமாம்ப்பா ஆமாம் ஸ்ட்ராங்காஃபி வித் நோ ஷூகர்- அதுவும் வந்ததும் அதையும் வயிற்றில் வார்த்து திரும்பி பில் பே பண்ணி எழுந்து தத்தி த் தத்தி வீடு வந்து சேர்ந்தால் அயர்ச்சி..இரை தின்ன பாம்பாட்டம் களைப்பு..( அது என்ன இப்படிப் பட்ட உவமை..டிஸ்கவ்ரி சேனல்ல பார்க்கணும்) எனில் என்னவாக்கும் செய்யலாம்….
என்றால் பாம்புப் பாட்டு போட்டுப் பார்க்கலாமா..பார்க்கலாகுமா..
**
பாம்பு என்றவுடன் நினைவுக்கு வருபவர் திருநாவுக்கரசர் தான் .. திருவ்ருட்செல்வர் பட ந.தி..
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்லபெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kpCzej-Sr04
rajraj
7th February 2015, 07:30 AM
From Malliga(1957)
Mangaamal vaLarum singaara natanam.....
http://www.youtube.com/watch?v=Ee3CK-dBfD8
From the Hindi remake Paayal
Piya milan ko chali radhika.....
http://www.youtube.com/watch?v=xpQRHTcUArs
ChinnakkaNNan, kalnayak: Happy? :)
Whether you listen to the song or watch the song is entirely upto you! :)
Murali Srinivas
7th February 2015, 02:54 PM
எம்எஸ்வி டைம்ஸ் விழா தொடர்ச்சி
விழா நாயகரும் விருந்தினர்களும் மேடையிலிருந்து இறங்கி விட இசைக் குழுவினர் மேடையேறினார்கள். எம்எஸ்வியின் இசைக் குழ்விலும் தொலைக்காட்சிகளிலும் பாடும் திருமதி ஜெயஸ்ரீ மைக் பிடிக்க அவர் அருகில் இசையரசி! வாவ் என்று மனம் குதுகலிக்க பின்னணி இசை முழங்க இசையரசி இறைவன் இறைவன் இறைவன் வருவான் வருவான் வருவான் என ஆரம்பித்து சாந்தி நிலையம் படத்தில் இடம் பெற்ற இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பாடலின் பல்லவியை பாடினார். பின்னணி இசை மாற தேடினேன் வந்தது பல்லவி பாடினார். தொடர்ந்து வயலின் மற்றும் ட்ரம்ஸ் அதிர ஆ ஹா அ ஹ ஹ அ என்று காலத்தால் அழியாத காவியப் பாடலாம் பார்த்த ஞாபகம் இல்லையோவின் முதல் வரி இசையரசியின் குரலிலிருந்து பிறக்க அரங்கம் அதிர்ந்தது. ஒன்றை சொல்ல வேண்டும். அகவை 80 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இசையரசியின் குரல் அந்த ஹம்மிங்கின் போது சற்று கூட பிசிறடிக்காமல் காற்றில் மிதந்து காதுகளை வந்தடைந்தபோது சிலிர்த்துப் போனது. பார்த்த ஞாபகத்தை அடுத்து சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து வந்தது. அதற்கு அடுத்து உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலேயும் அதை தொடர்ந்து காவேரி ஓரம் கவி சொன்ன காதல் பாடலை பாடினார். [கடைசியாக பாடிய இரண்டு பாடல்களும் எம்எஸ்வி இசை அமைத்தது அல்ல என்றாலும் சுசீலாம்மா பாடும்போது அதையெல்லாம் எவரும் பொருட்படுத்தவில்லை).
பாடல்கள மேடையில் தொடர இங்கே பார்வையாளர் பகுதியிலிருந்து நேயர் விருப்பங்கள் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்தன. அதிலும் ஒரு அன்பர் எழுந்து நின்றுக் கொண்டு விடாப்பிடியாக சரவண பொய்கையில் நீராடி பாடலை பாடும்படு கேட்டுக்கொண்டேயிருக்க சுசீலாம்மா தன் காதை தொட்டுக்காட்டி கேட்குது என்று சொல்ல அரங்கில் ஒரே சிரிப்பலை.
சுசீலாம்மா கீழே இறங்கிவிட இசைக் குழுவினரின் கச்சேரி தொடர்ந்தது. இசை நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய இசையமைப்பாளார் தாயன்பன் அடுத்த பாடலின் முன்னுரையை சொல்ல மேடைக்கு வந்தார் திரைப்பட பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ். அவருக்கு கொடுக்கப்பட்ட பாடல் காத்திருந்த கண்கள் படத்தில் இடம் பெற்ற ஓடம் நதியினிலே பாடல். உள்ளத்தில் ஊடுருவி உலுக்கக் கூடிய சீர்காழியின் இந்தப் பாடலை அதன் ஜீவன் கெடாமல் பாடினார் கிருஷ்ணராஜ்.
அடுத்த பாடல் பாக்கியலட்சுமி திரைப்படத்தில் என்றவுடன் நான் முன்பே சொன்னது போல் அனைவரும் மாலைப் பொழுதின் மயக்கத்திலே எதிர்பார்க்க காதலென்னும் வடிவம் கண்டேன் பாடல் பாடப்பட்டது. எம்எஸ்வி டைம்ஸ் இணையதளத்தின் விழாக்குழு உறுப்பினரான நமது ராகவேந்தர் சாரின் தேர்வு இது. இசையரசியின் அற்புதமான இந்தப் பாடலை பாடியவர் உஷாராஜ்.
அடுத்த பாடலுக்கு போவதற்கு முன் எம்எஸ்வியின் இசை மேதமையைப் பற்றி பேசுவதற்கு அவரின் பிரபலப் பாடல் ஒன்றை தாயன்பன் எடுத்துக் கொண்டார். அது?
(தொடரும்)
அன்புடன்
chinnakkannan
7th February 2015, 05:08 PM
ராஜ்ராஜ் சார்… //மங்காமல் வளரும் சிங்கார நடனம் எங்களுக்கேதடி பெருமை//பியா மிலன் கோ சலி ராதிகா// ரெண்டு பாட்டும் கேட்டதில்லை..இப்போது தான் பார்க்கிறேன்.. மே அவ்ர் கல்நாயக்.. இருவரும் ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி!
முரளிங்ணா… //அகவை 80 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இசையரசியின் குரல் அந்த ஹம்மிங்கின் போது சற்று கூட பிசிறடிக்காமல் காற்றில் மிதந்து காதுகளை வந்தடைந்தபோது சிலிர்த்துப் போனது// வாவ்..கொ.வை நீங்கள்.. அந்த ஆஆ எவ்ளோடஃப் பான ஹம்மிங்க்..ம்ம்
//அதன் ஜீவன் கெடாமல் பாடினார் கிருஷ்ணராஜ்// இவருடைய சில பாடல்களை டிவியில் கேட்டிருப்பதாக நினைவு..// காதலென்னும் வடிவம் கண்டேன் பாடல்// இதுவும் அழகான பாடல் தான்.. //நமது ராகவேந்தர் சாரின் தேர்வு இது// அதான்..
//அவரின் பிரபலப் பாடல் ஒன்றை தாயன்பன் எடுத்துக் கொண்டார். அது?// ஆணா பெண்ணா சொல்லீங்களே…சரி ஆணென்றால் – வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா… பெண் என்றால் – பல்லவி ஒன்றை மன்னவன் கேட்க பாடுவேனடி அல்லது கேள்வியின் நாயகனே.. கரெக்டா…
பல்லவி ஒன்றை மன்னவன் கேட்க –மீரா ஆ ஆ ஆ. மீரா பாடிய பாடல் கேட்க கண்ணன் வரவில்லையா என்ற வரி பாடிக்கொண்டு ஸ்ரீவித்யா சுபாவிடம் சேரும் போது… அப்படியே மனதை உலுக்கும் அப்புறம் – யாருக்கென்று யாரை என்று தெய்வம் சேர்க்குமோ என்ற வரிகளில் வரும் எல்லோரின் முகங்கள்..வெகு அழகு
எனக்கு மிகப்பிடித்த பாடல் இது..
https://www.youtube.com/watch?v=rxGLqsqdvR8&feature=player_detailpage
நன்றி முரளி.. அடுத்த எபிசோடுக்குக் காத்திருக்கிறோம்.
Murali Srinivas
8th February 2015, 12:48 PM
கண்ணா,
நீங்கள் சொன்ன இரண்டு பாடல்களும் இல்லை இது கருப்பு வெள்ளை படம் அல்ல. 50 வருடங்களுக்கும் முன்பு வெளியான கலர் படம். அதில் இடம் பெற்ற சுசீலாவின் பாடல். காதல் பாடல்
அன்புடன்
chinnakkannan
8th February 2015, 02:23 PM
இதயக் கமலம் - என்ன தான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே (எம் எஸ் வி தானே இசை)
அன்பே வா - லவ் பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ் தக தின்னத் தா (லஞ்ச்டைம் ஹிஹி)
வீட் போய் ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கறேன்..:)
Murali Srinivas
8th February 2015, 03:33 PM
கண்ணா,
இதயக்கமலம் - மாமா இசை
அன்பே வா இல்லை.
நடிகர் திலகம் படம்.
அன்புடன்
Russellzlc
8th February 2015, 08:09 PM
கல்நாயக்,
‘பாட்டிங்கள பப்ல உள்ளே போக விடுறாங்க இல்ல..’ ரசித்து சிரித்தேன். கேர்ள் பிரண்ட் பாட்டி என்றால் நான்...? கூறாமல் கூறும் சொல்விளையாட்டு எனக்கு பிடிக்கும். பாராட்டுக்கள். ஆனால், நீங்கள் சொன்னதை நான் ரசித்ததாலேயே அது உண்மை என்று அர்த்தமல்ல. வி ஆர் யூத் யா.
சின்னக்கண்ணன்,
நீங்கள் பஞ்ச் வைப்பீர்கள் என்று தெரியும். ஆனால், அது எங்கு என்பது தெரியாமல் இருப்பதுதான் சுவாரசியம்.
....மூன்று இட்லிகள் இரண்டு தோசைகள் ஒரு கப் கேப்பைக் கஞ்சி ஒரு கப் ஓட்ஸ் ஒருஸ்கூப் உப்புமா மட்டும் உண்டுவிட்டு....
காலையில் டிபன் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே அடுத்த வரிகளைப் படித்தால்..
..( நிற்க இந்த மூ.இ இதோ ஒககே ஒகஓ ஒஸ்கூப் உப்மா என்பதில் நடுவில் அல்லது என்று போட்டுக் கொள்க!).............. குபீர்.
முரளி,
எம்எஸ்வி டைம்ஸ் விழா நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்தளிப்பது அருமையாக இருக்கிறது. ராகவேந்திரா சாரின் விருப்பமான ‘காதலெனும் வடிவம் கண்டேன்..’ எனக்கும் மிகவும் பிடிக்கும். இதேபோல, கடந்த மாதம் சரோஜாதேவி அவர்களின் பிறந்தநாளின்போது, என் கடமையில் எனக்கு விருப்பமான ‘இரவினிலே என்ன நினைப்பு..’ பாடலை போட்டு அசத்தினார். தொடரும் ... என்று போட்டு மேலும் பதிவுகளை உறுதிப்படுத்தியதற்கு நன்றி.
தாயன்பன் எடுத்துக் கொண்ட பாடல்...
கண்கள் எங்கே.....?
கண்ணுக்கு குலமேது...?
--------
சின்னக் கண்ணன்,
தமிழ் கற்றறிந்த உங்கள் நாவில் கலைவாணி குடிகொண்டிருக்கிறாள். கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு ‘நீங்கள் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...’ என்று எனக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்பு வந்திருக்கிறது. மகிழ்ச்சிதான் என்றாலும் வேலையும் கடமைகளும் மேலும் அதிகம். அதனால், நான் அடிக்கடி வரமுடியாவிட்டால் தவறாக நினைக்காதீர்கள். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் மக்கள் திலகம் திரிக்கும் பங்களிக்க வேண்டியுள்ளது. நேரமில்லை என்றால், அன்பு சகோதரரர்கள் விடமாட்டார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கே வருவேன். கல்நாயக்குடனும் உங்களுடனும் எந்தவித மரியாதை முறைமை (protocol) இல்லாமல் உரிமையுடன் சுதந்திரமாக உரையாடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தரும் ஒன்று.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
8th February 2015, 09:51 PM
கலைவேந்தன் - மப்ரூக், கங்க்ராட்ஸ்.கையைக் கொடுங்க்ணா..எல்லாம் உம்ம உழைப்பு தான்.இன்னும் உயர்வீர்கள்.. எப்போ முடியுமோ அப்ப வந்து போய்க் கொண்டிருங்கள். ரசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி. (ரொம்ப லீவ் போட்டுடாதீங்க)
முரளி.. வர்றேன் வர்றேன். கொஞ்சம் தேடணும்.. ஐம்பது வருடங்களுக்குமுந்திய கலர் எம் எஸ் வி ந.திபடம்னா...புதிய பறவை பார்த்த ஞாபகம் இல்லையோவா அதில் தான் இரண்டு பாட்டுக்கும் வித்தியாசம் காட்டி இருப்பார். ஆனால் அதை சுசீலாம்மா ஏற்கெனவே பாடி விட்டதாகச் சொல்லிவிட்டீர்கள்..உன்னை ஒன்று கேட்பேனா.
சரி கொஞ்சம் ரெஃப்ரஷ் பண்ணிக்கிட்டு வந்துடறேன் :)
chinnakkannan
8th February 2015, 10:44 PM
முரளி... கலைவேந்தன் சொன்னது போல - கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே யா கண்ணுக்குக் குலமேது -ஆ..திருவிளையாடல் என்றால் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் முத்து.தேவிக்கா..வா.ஆனா பிபிஎஸ் செண்பகப் பாண்டியனா வந்துடுவாரே..
கர்ணன்ல என்னுயிர்த் தோழியா.. அரண்மனை அறிவான் அரியணை அறிவான் அந்தப் புரமொன்று இருப்பதை அறியான் என அசோக் துரியனுக்காக நடிகையர்திலகம் கொழுக் மொழுக்கென்று மனமுருகி வாயசைக்கும் பாடலா.. ஊ.வ உறவு தேடினேன் வந்தது என்றால் அது 67ம் வருடம்(அப்போ கண்ணா ஒருகைக்குழந்தை!) ம்ம் நீங்களே சொல்லி விடுங்கள்.
rajraj
9th February 2015, 07:16 AM
ChinnakkaNNan: Here is another "Naathar Mudi...." song from the 65 year old movie, Thigambara Saamiyaar
http://www.youtube.com/watch?v=7hU1-6zr9wo
rajeshkrv
9th February 2015, 11:06 AM
cika where is Vasu ji?
chinnakkannan
9th February 2015, 12:46 PM
தெரியலை ராஜேஷ்.. ரொம்ப நாளா வரலை..பி.எம் பண்ணினேன் பதிலும் காணோம்..:sad:
Murali Srinivas
9th February 2015, 02:44 PM
எம்எஸ்வி டைம்ஸ் விழா தொடர்ச்சி
தாயன்பன் எடுத்துக் கொண்ட பாடல் புதிய பறவையில் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே பாடல். தன் மனதில் இருக்கும் காதலை காதலனிடம் வெளிப்படுத்த நினைக்கிறாள் அந்தப் பெண். நேரிடையாக சொல்ல முடியாமல் அதற்கு ஒரு உருவம் கொடுக்க முயற்சிக்கிறாள். அதாவது ஆங்கிலத்தில் metaphor என சொல்லபடும் வகையை சார்ந்து தன்னை ஒரு சிட்டுக் குருவியாக கற்பனை செய்துக் கொள்கிறாள்.
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே
என்பது பல்லவி.
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து தன் இணையோடு சேர்வதும் செவ்வானம் மாலையில் கடலில் கலப்பதும் மலரினில் வண்டு மூழ்குவதும் மோந்கிளில் காற்று சேர்வதும் எவ்வளவு இயற்கையோ அதே போன்றதுதான் என் மனதில் உன் மேல் உள்ள காதல் என்கிறாள் காதலி. இந்த பல்லவியில் கவிஞர் ஸ்கோர் செய்கிறார் என்றால் சரணத்தில் மெல்லிசை மன்னர் கொடி நாட்டுகிறார் என்றார் தாயன்பன்,
எப்படி என்றால் இடம் பொருள் ஏவல் எதையும் பாராமல் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தன் ஆசையை விருப்பத்தை வெளிப்படுத்துகிறது நிறைவேற்றிக் கொள்கிறது சிட்டுக் குருவி. அதே போன்று சுதந்திரமாக தன் மன வானில் பறக்க நினைக்கிறாள் அந்த பெண். அதை குறிக்கும் விதமாக சரணம் தொடங்கும் முன்பு ஒரு ஹம்மிங்கை புகுத்துகிறார் எம்எஸ்வி. அஹா அஹா அஹா ஆஹா என்ற அந்த ஹம்மிங் அந்த பறவையின் மனநிலையில் அந்த பெண் இருக்கிறாள் என்பதை உணர்த்துகிறது.
ஆனால் என்னதான் தன்னை பறவையாக கற்பனை செய்துக் கொண்டாலும் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே. பறவையைப் போல் சுதந்திர வானில் பார்க்க முடியாதே. அந்த விருப்பம் ஏக்கமாக முடிவதை எம்எஸ்வி எப்படி கொண்டு வந்திருக்கிறார்?
பறந்து செல்ல நினைத்திருந்தேன் என்ற தன் ஆசை எப்படி முடியாமல் போகிறது என்பதை
பறந்து செல்ல நினைத்திருந்தேன் எனக்கும் சிறகில்லையே என்கிறாள். இங்கே பறந்து செல்ல என்ற வார்த்தைகள் மேலே போய்விட்டு எனக்கோர் சிறகில்லையே எனும்போது அந்த குரலே கீழே இறங்குகிறது. சரணத்தில் வரும் வரிகளையே இரண்டாக பிரித்து ஒவ்வொரு வரியிலும் முதல் பகுதியில் இடம் பெறும் ஆசை விருப்பம் இவற்றை மேல்ஸ்தாயில் வருவது போன்றும் அதே நேரத்தில் அந்த ஆசை அல்லது விருப்பம் நடக்காது என்ற யதார்த்தம் மனசில் உறைக்க அந்த வரியின் இரண்டாம் பகுதியை கீழ்ஸ்தாயிலும் அமைத்திருப்பார் எம்எஸ்வி என்று சொல்லி அந்த சரணத்தின் வரிகளை அதே போல் பிரித்து பாடிக் காட்டினார் தாயன்பன்.
பறந்து செல்ல நினைத்து விட்டேன் - எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் - பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் - நாணம் விடவில்லையே
மொத்த அரங்கமும் கைதட்டியது. கவியரசர் மெல்லிசை மன்னர் இசையரசி கூட்டணியின் மேதமைக்கு மட்டுமின்றி அதை அழகாய் திறானய்வு செய்த தாயன்பனுக்கும் சேர்த்துதான்.
இந்த விளக்கத்தை முடித்து விட்டு அடுத்த பாடல் இடம் பெறும் படம் என்று குழந்தையும் தெய்வமும் படத்தை சொல்ல உஷாராஜ் மேடைக்கு வந்து பாட ஆரம்பிக்க நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு பாடல் பிறந்தது அற்புதமான இந்த பாடலில் வரும் ஆண் குரல் ஹம்மிங்கை எம்எஸ்வி அவர்களே பாடியிருப்பார். ஒரு உற்சாக பந்தாக பாடல் முழுவதும் ஜெய் துள்ள மைசூர் பிருந்தாவனில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் வாலி எம்எஸ்வி மற்றும் இசையரசியும் கிளப்பியிருப்பார்கள். குறிப்பாக ஒரு சரணம் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவழம்
அதன் புன்னைகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்; சுகம்
பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்
ஒவ்வொரு முறை இந்த பாடல் காட்சியை பார்க்கும்போதும் இந்த மூன்றாவது சரணத்திற்கு காத்திருப்பேன். அந்த சரணத்தை சுசீலா பாடி முடிக்கும்போது உண்மையிலே நமக்கு கண் மயங்கும். ஆனால் அன்றைய தினம் என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை. இந்த மூன்றாவது சரணத்திற்கு போகாமல் இரண்டு சரணங்களோடு முடித்து விட்டார்கள். ஏமாற்றமாய் போய்விட்டது.
அடுத்த பாடல் என்றவுடன் உஷாராஜ், ஜெயஸ்ரீ மற்றும் கிருஷ்ணராஜ் வந்து நிற்க என்ன பாடலாக இருக்கும் என்று யோசிக்கும் நேரத்தில் கட்டோடு குழலாடியது. என்ன சொல்வது இந்த பெரிய இடத்துப் பெண்ணைப் பற்றி? இந்தப் பாடலை கேட்கும்போது ஆட தோன்றும் என்றார் தாயன்பன் எல்லா வரியின் முடிவிலும் ஆட என்று வருவதானால் அப்படி குறிப்பிட்டார். என்னை பொறுத்தவரை எளிமையான கிராமிய பின்னணி ட்யுனில் அமைந்த இந்த பாடலை half open voice-ல் டிஎம்எஸ், சுசீலா மற்றும் ஈஸ்வரி பாடும்போது மிதமான வேகத்தில் ஊஞ்சலாடுவது போலவே தோன்றும்..
அடுத்து 1968-ல் வெளியான தாமரை நெஞ்சம் படத்திலிருந்து எம்எஸ்வி இசைக்குழுவில் இடம் பெற்றவரும் தாயன்பனுடன் சேர்ந்து ஒரு சில படங்களுக்கு இசையமைத்தவருமான செல்வின் சேகர் என்பவர் மேடையேறினார். எம்எஸ்வியுடனான தன் அனுபவங்களை எம்எஸ்வியின் இசை மேதமை பற்றி விவரிக்க தொடங்கினார்.
(தொடரும்)
அன்புடன்
kalnayak
9th February 2015, 05:11 PM
ராஜ்ராஜ்,
சி.க வும் சொல்லிட்டாரு உங்க கடைசி ஜுகழ்பந்திக்கு. நானும் ஹாப்பி. பாட்டு ரொம்ப நன்னா இருக்கு. ஒரே நடிகை பத்மினி இரண்டு மொழிப் படங்களுக்கும் ஆடியிருப்பதால் டப்பிங் பண்ணியது போல் இருக்கிறது. நீங்கள் ரீமேக் என்றிருக்கிறீர்கள்.
பழைய பாடல்களின் நடனங்களை காணும் சுகம் நாதர் முடி மேல் பாடலில் தெரிகிறது.
தொடருங்கள்.
kalnayak
9th February 2015, 05:21 PM
கலைவேந்தன்,
கன்கிராட்ஸ், புதிய பொறுப்பேற்றதற்கு - அதுவும் பதவி உயர்வுதானே. வேலையும், கடமைகளும் அதிகமாயிருப்பது போலவே திரியில் பங்கு கொள்ளும் நேரமும் அதிகமாயிருக்க வேண்டுமே?
உங்கள் பாணியில் நாட்டு நடப்பை கூறி பொருத்தமான பாடலை பகிர்வதை தொடரவேண்டும். இப்போது பாருங்கள் நீங்கள் கேட்டதற்காக முரளி அவர்களும் மூன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் msv டைம்ஸ் நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். இப்பொழுது நீங்கள் நான் இங்கே அதிகமாக வர இயலாது என்று சொல்வது நன்றாகவே இருக்கிறது?
இங்கே வராவிட்டால் நான் அங்கே வந்து கலாய்ப்பேன் என்று எதிர்பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்க கடமைப்பட்டுளேன் எனினும் ஏமாற்றிவிடாதீர்கள்(%$^#@!!!!)
kalnayak
9th February 2015, 06:01 PM
முரளி,
உங்களின் MSV Times வழக்கம் போல எல்லாருடய கருத்தையும் கவர்வதாகவே இருக்கிறது. சி.க. அல்ல. அல்ல சீட்டு குருவி பாட்டு நன்றாக தாயன்பனால் அலசப்பட்டு உங்களால் அருமையாக தரவேற்றப் பட்டுள்ளது. நான் நன்றி சொல்வேன் பாட்டு கேட்டிருந்தாலும், இந்த வரிகள் இப்போதுதான் கேட்பதுபோல் எனக்கு புதிதாக உள்ளது. நன்றி. அந்த மூன்றாவது சரணத்திற்காக நீங்கள் ஏமாந்ததை சொன்னதும் எனக்கு இந்த பாட்டின் மேல் ஆர்வம் அதிகமாகி விட்டது. சற்று நேரத்தில் கேட்டு விடுகிறேன்!!!
https://www.youtube.com/watch?v=5oENOUx8olM
செல்வின் சேகர் அனுபவங்களை நீங்கள் விவரிக்க வழக்கம் போல் காத்திருக்கிறேன்.
kalnayak
9th February 2015, 06:09 PM
சி.க., மற்றும் ராஜேஷ்,
வாசு என்ன கார் பார்கிங்க் இடத்தை வாஸ்து பார்த்து கட்டி முடித்துவிட்டாரா இல்லையா? இவ்வளவு நாட்களாக வரவில்லை. ஆச்சரியமூட்டும் அதிசய பரவசத்தில் ஆழ்த்தும் புதிய பதிவொன்றை தயார் செய்து கொண்டு இருக்கிறாரோ? வரட்டும் அப்படி ஒரு புத்தம் புதுமை பதிவுடன். நீங்கள் உங்கள் வழக்கமான பாணியில் பாடல்களை தொடருங்களேன்.
chinnakkannan
9th February 2015, 10:49 PM
தொழில் பாட்டுக்கள் – 10
ஆரம்பத்துல பார்த்தேள்னாக்கா.. ஒரு அந்தக்கால யுவன் பெயர் சிவசங்கரன் ஒரு அ.கா.யுவதி பெயர் உமை.. இருவரும் காதல் என்னும் படகில் உல்லாசமாகச் சென்றுகொண்டிருந்த பருவ காலம்..
இருந்தாலும் இனிய ஒன்றுமில்லாதவைகளான பேச்சுக்கள், தீண்டல்கள்,சீண்டல்கள், காத்திருத்தல்கள் ஒன்றாய் யாருமறியாவண்ணம்கோவில் அல்லது ஊர்க்கோடி ஆலமரத்தின் பின்னால் என பொழுதுகள் போய்க் கொண்டிருந்தாலும் ஒரு நாள் திடுதிப்பென சந்தேகம் சிவப் பிள்ளையாண்டானுக்கு….உமையிடம் கேட்டும் விட்டான்..
இமைப்பொழுதும் உன்னை இசைந்துநான் காப்பேன்
உமையே உனக்கொரு கேள்வி –சமையலும்
நன்றாய் வருமா நங்கையே கூறிடுவாய்
தின்னப் பிடித்தவன் நான்..
உமைக்கோ கொஞ்சம் கோபம்..சரியான சாப்பாட்டு சிவனாய் இருக்கிறானே..போயும் வந்தும் இவனிடமா மையல் கண்டு கொண்டு விட்டோம்.. ம்ஹூம்.
வெங்காய சாம்பாரை வேகமாய் நான்செய்தால்
பங்கிட பாதிவூர் பார்
தண்டை கொலுசொலியும் தாளமிட்டு ஓடிவரும்
வெண்டைக் கறியமுதிற் கே..
எண்ணம் போலவே ஏதுநீர் கேட்டாலும்
வண்ணமாய் செய்வாளிவ் வஞ்சியே – திண்ணமாய்
சொல்லிடுவேன் உம்வயிறு சொர்க்கம் பலகாணும்
வள்ளியென் கைபிடிக்க வா (ரும்)
என்று கோபித்துக் கொள்ள அப்புறம் அந்த சிவன் சமாதானப் படுத்தியது வேறு கதை!
எனில் என்ன சொல்லிக்கொண்டிருந்தார்கள் இந்தக் காதலர்கள்..சமையல்.. ம்ம் நாள்தோறும் வளர்ந்து படித்து கடினவேலை பார்ப்பதெல்லாம் இந்த சாண் வயிற்றுக்குத் தானே.. அதுவும் சமையல் சுவையாய் இருந்தால் அது போல வேறேது
வீட்டில் அக்கா, அம்மா மனைவி எல்லாம் செய்வது நமக்காக மட்டும் தான்.. ஹோட்டல் என்பது வியாபார ஸ்தலம் (அதற்கு இந்த டாபிக்கில் இடமில்லை!) அதேசமயம் சமையலில் பெரிய சமையல். கல்யாண சமையல்..
இந்தக் காலத்தில் காண்ட்ராக்டர்களிடம் விட்டு நடக்கும் கல்யாணங்களின் சமையல் என்னவோ வெகு ஜோராகத் தான் இருந்தாலும் கூட மனம் கொஞ்சம் புள்ளிவைத்து வட்டமிட்டுப் பார்க்கிறது….
அந்தக் கால கல்யாணங்களில் சமையல்காரர் ராஜாவாய் வருவார் கூட சில சேவக எடுபிடிகளுடன். நாம் தான் அவர் சொல்லும் லிஸ்ட் போட்டுவாங்கித் தரவேண்டும். மஞ்சளில் துவங்கி கறிகாய் பலசரக்கு என. (இதில் திருமணம் செய்துவைக்கும் சாஸ்திரிகளின் லிஸ்ட் தனியாக இருக்கும்) .
வெகு சின்ன வயதில் நான் நினைவு தெரிந்து அல்லது என் நினைவில் இருக்கும் கல்யாணம் என் மூத்த சகோதரியின் திருமணம். நாற்பது வருடங்களுக்கு முன். மதுரையில் அப்பா ஃபிக்ஸ் பண்ணியிருந்த மண்டபம் குஜராத்தி சமாஜ் இந்த மதுரை நியூசினிமாவிற்கு எதிரில் ஒய்.எம்சி.ஏ..அதற்கு முன்னால் குதிரைவண்டிக்காரர்கள் பார்க்கிங்க்.மேங்காட்டுப்பொட்டல் என்பார்கள்.. ஒய் எம் சிஏ வை ஒட்டினாற்போல கான்சாமேட்டுத்தெருவுக்கு பெர்பெண்டிகுலராக ஒரு சந்து அந்தச் சந்தில் போய் கொஞ்சம் பின்னால் என நினைக்கிறேன் அந்தக் கல்யாண மண்டபம்.. சற்றே பெரியது
மேக்கப் போட்ட மணப்பெண்ணாட்டம் தரையெல்லாம் மொசைக் (அப்போ அது கொஞ்சம் காஸ்ட்லி அஃபேர் மதுரையில் என நினைக்கிறேன்) கொஞ்சம் பெரிய மண்டபம் தான்..
மாப்பிள்ளை குவைத் அண்ட் சொந்த ஊர் நெய்வேலி என்பதால் உறவு காரர்கள் வர களை கட்டி முதல் நாளே ஆகிவிட்டது.. மறு நாள் கல்யாணம் நிகழ்ந்ததெல்லாம் ஒரு புகையாய்த் தான் நினைவில்..ஆனால் கல்யாணச் சமையல் காரர் கோவிந்தய்யங்கார் என நினைவு.. அவர் செய்த அக்கார வடிசல் இருக்கிறதே அடடா..இன்னும் நினைவில்..
அப்போதே குட்டிக் கண்ணாக்கு பாராட்டத் தோன்றி கல்யாண மண்டபம் பின்பக்கம் போய் (சாப்பிட்டு முடித்துத் தான்) செவேல் உடம்புடனும் முன்வழுக்கையில் நீளமாய் ஒற்றைத் திருமண்ணும் பூணுல் மார்பிலும் அணிந்த வண்ணம் நெற்றியில் துளிர்த்த வியர்வையுடனும் இளம் தொப்பையுடனும் கொஞ்சம் ஆஜானுபாகுவாய் இருந்த கோவிந்தரின் கை குலுக்கினேன் ஈரம் காயாமலே… மாமா.. திருக்கண்ணமுது ஜோர்.. யார்டா நீ அம்பி. ம் கல்யாணப் பெண்ணோட தம்பி என டிஆர் டயலாக் அந்தக்காலத்திலேயே அடித்து ஓஓடி வந்துவிட்டேன்..
கல்யாணம் முடிந்த மறு நாள் அப்பா தான் சொன்னார்.. டேய் கோவிந்துவைப் பாராட்டினாயாமே.பேஷ்..சொல்லிச் சொல்லி மாஞ்சு போய்ட்டான் நாங்க சொன்னதுல்லாம் அவன் காதுல ஏறவே இல்லையே என.. கோவிந்தருக்கு பை சொல்லலாம் எனப்பார்த்தால் அவர் புறப்பட்டுப் போய்விட்டிருந்தார்..
மற்ற சகோதரிகளில் ஒருவரின் கல்யாணம் வெங்கலக்கடைத் தெரு ஆதீனம் (அரசியல்லாம் இல்லீங்க்ணா) அங்கு ஒருகல்யாண மண்டபம் (இப்போது இருக்கிறதா தெரியவில்லை) இன்னொருவரின் திருமணம் தானப்ப முதலிதெருவில் பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டிலிருது ஸ்ட்ரெய்ட்டாக
சென் ட்ரல் சினிமா போகும் ரோட்டில் வலதுபக்கம் இருந்தது (பிற்காலத்தில் அதுவே மாடர்ன் ரெஸ்டாரெண்டின் மெஸ்ஸாக மாறிய நினைவு) சமையல் காரர்களின் பெயரும் நினைவில்லை..ஆனால் மூன்றாவது சகோதரிகல்யாணத்தில் மட்டும் கொஞ்சம் மளிகைசாமான்கள் பால் எல்லாம் வாங்கிப் போடும் வேலை எனக்கு வாய்த்திருந்தது..! (ஹையாங்க்..அதுவும் இந்த ஆவின் பாலுக்காக எங்க்ள் தெருமுனை பூத் காரரிடமும் பின் பொன்னகரம் பால் பூத் காரரிடமும் முன்னமேயே அட்வான்ஸ் (எவ்ளோ பாக்கெட் நினைவில்லை ) கொடுத்து எடுத்து ரிக்ஷாவா காரா நினைவில்லை காலையிலும் மாலையிலும் எடுத்துக் கொண்டு போய் கொடுத்து(அதில் ஒரு பூத்திடம் கேட்ட பால்பாக்கெட் வரவில்லை) டென்ஷன் பட்டது புகையாய்..)
இங்கிட்டு கடல் கடந்து வந்ததன் பிறகு கலந்து கொண்ட கல்யாணங்க்ள் குறைவு தான்.என் கல்யாணத்தில் நான் ஒழுங்காகவே சாப்பிடவில்லை.. (கொஞ்சம் டென்ஷன் தான் (இருக்காதா பின்ன))
ஐந்து வருடங்களுக்குமுன் ஒரு திருமணத்திற்குப் போயிருந்த போது(கோயம்புத்தூர்) கட்டுச்சாதம் அன்று காலை டிஃபன் பொங்கலுடன் கூட ஒருஸ்வீட்..
பெயர் கேட்டால் பரிமாறியவர் சொல்ல அவரை ஒருமாதிரிப் பார்த்தேன்..
என்னங்க பாக்கறீங்க..
பின்ன ஸ்வீட் பெயர் கேட்டா கட்டிப் புடிக்கச் சொல்றீங்க அதுவும் செந்தமிழ்ல..நீங்க சட்டையும் போடலே.!.
ஹெஹ்ஹே என சிரித்தார். பல் ஒன்றிரண்டு பிசகியிருந்தது.. “இல்ல சார்..ஸ்வீட் பெயர் தான் அது…அரவணை..ஸ்ரீரங்கம் ஸ்பெஷல்..அதுக்குத் தொட்டுக்கத் தான் இது..இன்னும் நான் தொடாமலிருந்த செக்கச்செவேல் கறியைக் காட்டினார்..சேப்பங்கிழங்கு ஃப்ரை.. தொட்டுண்டு சாப்பிடும் ஓய்.. உள்ள வழுக்கிண்டு போகும்…”.
நிஜமாகவே ஜோராக இருந்தது..( நீங்க சாப்பிட்டிருக்கீங்களா…)
**
ஆகக் கூடி கல்யாண சமையலுக்கான பாடல்கள் எனப்பார்த்தால் கல்யாண சமையல் சாதம் போடவில்லைஎனில் எஸ்வி ரங்காராவ் கதையாலேயே அடிப்பார் கனவில்....இருப்பினும் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே ஒரு சுகம் சுகம் இல்லியோ..
https://www.youtube.com/watch?v=RRCUUWzkdPg&feature=player_detailpage
படம் சலங்கை ஒலி ஆடல் கமல் மஞ்சு பார்க்கவி.. பாடல். எழுதியவர் தியாக ராஜர். பால கனக மய சேவ சுஜன பரிபால..
**
//வரிந்து வரிந்து அழகாய் முரளி எழுத..நான் எழுதவில்லையே என்றிருந்த மனக்குறை..கொஞ்சம் போச்!)// :)
uvausan
9th February 2015, 11:35 PM
மீண்டும் இங்கு நுழைவதற்காக யாரும் தவறாக நினைக்க வேண்டாம் - இந்த பதிவு எனக்கு ஒரு இனிய அனுபவத்தை கொடுத்தது அதனால் இதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன் - மீண்டும் தொந்தரவு கொடுப்பதற்காக வருந்துகிறேன் .....
அனுபவம் 1
சமீபத்தில் Cairo செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து - ஒரு இனம் புரியாத இன்பம் - வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத உணர்ச்சிகள் - சிகரத்தை தொட்டவர்களில் நானும் ஒருவன் என்பதுபோல ஒரு கர்வம் .. ஒரு சிறந்த நடிப்பை மற்றவர்கள் எப்படி பாராட்டவேண்டும் என்று மற்ற நாடுகளுக்கு ( தமிழ் நாட்டை யும் சேர்த்துதான் ) Cairo அல்லவா வழிகாட்டியாக எடுத்து காட்டினது ! - சிறந்த திறமையை 1000 ஆதவன்கள் மறைத்து நின்றாலும் , அவைகளை தகர்த்து எறிந்து இந்த மாணிக்கத்தை நீங்கள் உணரவில்லை - இதன் விலை உங்கள் எண்ணங்களுக்கும் அப்பால் என்று அறிவித்து சிறந்த நடிப்பு கடல் இவன் ஒருவனே என்று - இவனுக்கு முன்பும் யாரும் பிறக்கவில்லை , பின்பும் யாரும் பிறக்க போவதில்லை என்று முத்திரை பதித்த நாடு அல்லவா CAIRO - இப்பொழுது சொல்லுங்கள் யாருக்கு பெருமை , கர்வம் , இறுமார்ப்பு இருக்காது cario நாட்டின் மண்ணைத்தொட , அதை வணங்க ....
அனுபவம் 2
சமீபத்தில் வாரணாசி செல்லும் வாய்ப்பு கிடைத்து - சில புரோகிதர்களை ( veda pandits ) அவர்கள் வீட்டில் சந்தித்தேன் - அப்படி சந்தித்த ஒருவரின் வீட்டில் இந்த படம் இருப்பதை கண்டு வியப்புற்றேன் - விசாரித்ததில் அவர் தான் NT அவருடைய குடும்பத்துடன் காசிக்கு வந்திருக்கும் வேளையில் , கங்கையின் மடியில் பூஜையை செய்து வைத்தவர் . அவர் திரை படங்கள் பார்ப்பதில்லை - வேத பாடசாலை நடுத்துகின்றார் - பல சிறுவர்கள் , பல இடங்களில் இருந்து வந்தவர்கள் இவரிடம் வேதம் கற்று கொள்கிண்டார்கள் - இவர் NT படங்களில் 3 படங்கள் தான் டிவி மூலமாக பார்த்திருக்கின்றார் - 1. திரு விளையாடல் 2. திருமால் பெருமை 3. திருவருட் செல்வர் . NT யையும் , அவரின் குடும்பத்தார்களையும் மிகவும் உயர்வாக பேசினார் - NT க்கு பூஜை செய்வதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தை இன்றும் பெருமையுடன் நினைவுகொள்கிறார் - உயர்ந்தவர்களை உயர்ந்தவர்களால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த சந்திப்பு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்பதில் கடுகு அளவும் சந்தேகமில்லை .
நன்றி & வணக்கம்
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG_4427_zpsmt84jzjb.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG_4427_zpsmt84jzjb.jpg.html)
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG_4428_zpscgs98xnw.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG_4428_zpscgs98xnw.jpg.html)
chinnakkannan
10th February 2015, 12:00 AM
ராஜ்ராஜ் சார்..நாதர் முடி மேலிருக்கும் குமாரி கமலா கானத்திற்கு நன்றி (என்ன ஒல்லியா இருக்காங்க..)
முரளீங்ணா.. சிட்டுக் குருவி சொல்ல நெனச்சுட்டு விட்டுட்டேன்..(எப்படி விட்டேன்) அவர் அதையே சொல்லியிருக்கிறார்.
ஒரு பொழுது மலராக கொடியில் மலர்ந்தேனா
ஒரு தடவை தேன் குடித்து மடியில் விழுந்தேனா (மெலிதாய் க் கிஸ்ஸடித்து சந்தோஷமாய் உதடு துடைக்கும் ந.தி)
இரவினிலே நிலவினிலே என்னைமறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..ஹோய்.. குரலில் குறும்பு, கேள்வி, வெட்க நெகிழ்வு நாணம் கலந்து சுசீலா பாடியதற்கு சர்ரூவும் அவையனைத்தையும் முகத்தில் கொண்டுவந்திருப்பார்…
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்குஎனக்கும்பிடிக்கும்..
கட்டோடு குழலாட ஆட பாடலில் ஒரு சின்ன காண்ட்ரவர்ஸி வந்ததாக சோ எழுதியதாக நினைவு.. கவிஞரிடமேயே சிலர் கேட்டு அவரும் தவறுதான் என்று சொன்னாராம் எதை.. பச்சரிசிப் பல்லாட என்ற வரி வரும்..ஓய்.. பாடறது இளம்பெண்களைப் பத்தி..அதெப்படி ப ப என்று வரும் என்று கேட்டார்களாம். உண்மையா எனத் தெரியாது (கண்ணா உஷார் பார்ட்டிடா நீ)
தாமரை நெஞ்சம்.. கண்ணின் அருகே இமையிருந்தும் கண்கள் இமையைப் பார்த்ததிலலையா? பட் நாகேஷ் அதில் பிடிக்கும்.. காக்காய் வலிப்பு தனக்கு எனத் தெரிந்தபின் சர்ரூவுடனான காதலை மறைப்பது.. ஜெமினி மேஜர் சண்டையில் குளிர் காய்வது, வானுவின் தகப்பனாருடன் வத்தி வைப்பது..என..
//ஆச்சரியமூட்டும் அதிசய பரவசத்தில் ஆழ்த்தும் புதிய பதிவொன்றை தயார் செய்து கொண்டு இருக்கிறாரோ?// அப்படித் தான் இருக்கும் கல் நாயக்.. காத்திருப்போம்..
chinnakkannan
10th February 2015, 12:04 AM
வாங்க ரவி. :) செளக்கியமா.. ரொம்ப நாளுக்கப்புறமுங்களைப் பார்ப்பதில் வெகு மகிழ்ச்சி.அபூர்வ புகைப்படத்துக்கு நன்றி. தகவல்களுக்கும்.. கெய்ரோ பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள் அது போல் வாரணாசியையும் தான்.. நன்றி..அகெய்ன் வரணும்.ஓகே..
rajeshkrv
10th February 2015, 07:29 AM
chandrabose magic..
beautiful song by Mano, Lalithasagari & T.L.thiyagarajan
https://www.youtube.com/watch?v=SNc3emgfSZg
kalnayak
10th February 2015, 11:28 AM
ராஜேஷ்,
"எதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே..." பாடல் கேட்க மிக அருமை. முன்பு கேட்டிருக்கிறேன்.
சந்திரபோஸ் நல்ல இசையமைப்பாளர். ராஜாவின் சூறாவழியிலும் சில-பல காலம் நிமிர்ந்து நின்று பல படங்களுக்கு நன்றாக இசையமைத்திருக்கிறார்.
kalnayak
10th February 2015, 11:39 AM
ரவி,
வாருங்கள், வாருங்கள். நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். தொடர்ந்து வாருங்கள். மீண்டும் நீங்கள் இங்கே வராவிட்டால்தான் நாங்கள் தவறாக நினைப்போம்.
உங்களுடைய இரு அனுபவங்களும் நிச்சயம் உங்கள் நெஞ்சில் நிழலாடிக்கொண்டே இருக்கும். எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மீண்டும் மீண்டும் வருக.
kalnayak
10th February 2015, 11:50 AM
சி.க.,
தொழில் பாட்டுகளில் சமையலா? அற்புதம். உங்கள் சுய அனுபவங்களை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் திருமண கூடங்களில் சமையல் தொழில் செய்வோரை, மற்றும் திருமண நிகழ்ச்சிகளை சொல்லி அது சம்பந்தமான ஒரு பாட்டை குறிப்பித்துவிட்டு அதை விட்டு சற்றே விலகிப்போன ஆனால் விழா சம்பந்தப்பட்ட பாட்டையும் போட்டது... எங்கிருந்துதான் பிடிக்கிறீங்களோ தெரியலையே. சரி சரி. நீங்க குறிப்பிட்ட பாட்டை நான் போட்டு ஒரு ஷொட்டு வாங்கிக்கறேன்.
https://www.youtube.com/watch?v=tDBEDNyhbSc
chinnakkannan
10th February 2015, 12:02 PM
கல் நாயக் நன்றி.. இங்கே எப்போதும் டேக் அண்ட் கிவ் பாலிஸி தான்.ஓ மாத்தி சொல்லிட்டேனா .இப்ப உங்க முறை.. நன்னாயிட்டு ஒண்ணு கொண்டு வாங்க..:)
kalnayak
10th February 2015, 02:09 PM
சி.க. வோய்,
நடைய மாத்துறதா சொல்லியிருந்தேங்காணும். யாரும் கேட்கலையோ. நான் ப்ரிபேர் பண்ணதும் தொலைஞ்சு போச்சி. நானும் விட்டுட்டேங்காணும். இப்பகேட்டேளா எழுதுங்காணும்னு. யோசிச்சேன். சரின்னு முடிவெடுத்தேங்காணும. எழுதிபுடறேன் இப்பவேங்காணும்.
தலைப்பு: நிலாப்  பாடல்கள்.
திரைப்படத்த்துக்கு பாட்டு எழுதுன அம்மாம்பேரும் எம்மா வார்த்தைங்களை உபயோகப் படுத்தியிருக்கா. சில பேர் வார்த்தைகளை மத்த யாருமே உபயோகப் படுத்தியிருக்க மாட்டா. நான் ஒரு பெரிய டிக்ஷனரி போடலாமுண்னே நெனைச்சேங்காணும்- என்னென்ன வார்த்தைங்கள பயன்படுத்தியிருக்கான்னு. அத அப்பப்ப சொல்றேன். இப்பஇந்த தலைப்புக்கு வருவோம். எனக்கு தெரிஞ்சு எல்லா கவிஞர்களும் பயன்படுத்தற அல்லது பாடாப்படுத்தற வார்த்தை இந்த நிலாதாங்க. இது இல்லைன்னா தமிழ்ல நெறய பாட்டுங்க இல்லைங்காணும். இத வெச்சு நான் இந்த மாசத்த ஓட்டிடறேன்காணும். எனக்குத் தெரிஞ்ச பாட்டெல்லாம் நான் எழுத பாக்குறேனுங்காணும்.
மொத நெலாப்பாட்டு கணேசரை வெச்சுதானுங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுதானுங்கோ. இருந்தாலும் நல்லபடியா துவங்கணுமில்லையா? அதான்.
நிலாப்பாடல் 1. "விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே".
நடிகர் திலகம் திரிக்குப் போனால் இந்த பாட்ட பலவிதங்களில் அலசி இருப்பாங்க. அவங்க முன்னாடி நானெல்லாம் சும்மா. இருந்தாலும்முயற்சிக்கிறேன். பாட்டை பாருங்களேன். இங்க வானத்தோடயும், மேகத்தோடயும் வெள்ளை நிலா விளயாடுதுங்கலாம். கண்ணோடும் கொஞ்சுதாமுங்க அந்த நெலாங்கற இசையமுது.
கணேசரும், பத்மினியும் ரொம்ப இளமையா அழகான காதல் ஜோடியா எவ்வளவு அற்புதமா கடற்கரையில துள்ளி குதிச்சு பாடறா பாருங்க. இத பாக்கறபோது நமக்கும் அந்த உற்சாகம் வந்துடறதுங்க. சிதம்பரம் ஜெயராமனும், இசையரசியும் என்னாமா கலக்கி இருக்காங்க பாருங்க. இசையமச்சது யாருன்னு சொல்லவா வேணும் - நம்ப மெல்லிசை மன்னர்களுங்க. பாட்டை எழுதுனது யாருன்னு பெரியவா யாராச்சும் சொல்லுங்கோ.
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....
(விண்ணோடும்)
அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி.... இசைபாடி...
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
(விண்ணோடும்)
தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
காணத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
(விண்ணோடும்)
சங்கீதத் தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
மங்காத தங்கம் இது
மாறாத வைரம் இது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
(விண்ணோடும்)
இப்பிடி ஒரு பாட்டை வச்சிருக்கற படத்தை 'புதையல்'-னு சொல்லாம, வேற எப்பிடி சொல்றதாம்?
https://www.youtube.com/watch?v=_IeGUw7uSfs
chinnakkannan
10th February 2015, 02:57 PM
கல் நாயக் வாங்காணும்..ச்சும்மா கூச்சப்படாம எழுதும் ஓய்.. ( அந்த ந. மா பாட்டு கேக்கவே பிடிக்காது..அதைப் பார்க்கவும் இல்லை..ச்சும்மா சொல்றேள்னு நினைச்சேங்காணும்..) :)
//தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
விளையாடி.. இசை பாடி..// பாடல் வரிகள் ஆத்ம நாதன் நு போட்டிருக்குங்க்ணா..அவரும் போன வருடம் தான் மறைந்தாராம்..பாசவலை நல்லவன் வாழ்வான் இன்னும் பல படங்களுக்கு எழுதியிருக்கிறாராம்.. விக்ரமாதித்தனில் வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு பாடலும் இவருடையது தான்..
இன்று போய் நாளை வாராய்
இன்று போய் நாளை வாராய்
என எனையொரு மனிதனும் புகலுவதோ
எண்டிசை வென்றேனே
எண்டிசை வென்றேனே
அன்று இன்னிசை பொழிந்துனை கண்டேனே
மண்மகள் முகங் கண்டேன்
மனம் கலங்கிடும் நிலையின்று
ஏன் கொடுத்தாய்….
டிகே பகவதி ராவணனாக மனமுருகிப் பாடிய இந்தப் பாடலும் இவருடையது தான்..
அழகிய நல்ல பாடல் தந்தமைக்கு நன்றிங்க்ணா.. அப்புறம் புதையல் வெகுகாலத்துக்கு முன் பார்த்தது.. மறுபடி பாக்கணும்..தூண்டி விட்டுட்டீங்க..கொறஞ்சபச்சம் ஒரு நூறு நிலாவாவது வரணுமாக்கும் ..எழுதுங்க நிலாப் பாட்ட..
வில்லாய் வளையாமல் வேக மழையென
நில்லாமல் பெய்யும் நிலா.. அப்படின்னு நாங்க சொல்லுவோமே..:)
kalnayak
10th February 2015, 03:11 PM
அடுத்த பாட்டு இன்னொரு கணேஷரிடமிருந்து:
நிலாப்பாடல் 2. "என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"
நிலாவைப் பார்த்து இப்படி எக்கச்சக்கமான கேள்விகளை நாயகன் கேட்கும்படி பாடலாசிரியர் எழுதி இருக்கிறார். கற்பனை வளம் நன்றாகவே வெளிப்படுகிறது. ஆனால் எதை கெஞ்சாமல் காதலியிடம் கேட்காமல் பறிக்க சொல்கிறார் என்று தெரியவில்லை. காதல் பாட்டை எழுதச்சொன்னால் இப்பிடி பலர் நிலாவைத்தான் வம்பிழுத்திருக்கின்றனர்.
ஜெமினியும் எல்லா கேள்விகளையும் அழகாகவே கம்பீரமாய் கேட்டிருக்கிறார். இல்லை. இல்லை. பாடகர் திலகம் கேட்டிருக்கிறார்.
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா முத்தவளா
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
ennarumaik kaadhalikku veNNilaavE - nee
iLaiyavaLaa muththavaLaa veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE - nee
iLaiyavaLaa muththavaLaa
iLaiyavaLaa muththavaLaa veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE
kaN vizhikkum thaarakaikaL veNNilaavE - unnaik
kaaval kaakkum thOzhiyarO veNNilaavE?
kaN vizhikkum thaarakaikaL veNNilaavE - unnaik
kaaval kaakkum thOzhiyarO veNNilaavE?
kannaththil kaayamenna veNNilaavE - un
kaadhalan thaan kiLLiyadhO veNNilaavE?
ennarumaik kaadhalikku veNNilaavE
kaLLamillaa en idhayam veNNilaavE - oru
kaLLiyitam irukkudhati veNNilaavE - andha
valli thanai neeyaRivaai veNNilaavE - adhai
vaangi vandhu thandhu vitu veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE
kenjinaal thara maattaaL veNNilaavE
kenjinaal thara maattaaL veNNilaavE - nee
kEtkaamal paRiththu vitu veNNilaavE
anjitath thEvaiyillai veNNilaavE - idhu
avaL thandha paatamati veNNilaavE - idhu
avaL thandha paatamati veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE nee
iLaiyavaLaa muththavaLaa
iLaiyavaLaa muththavaLaa veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE
இப்பிடி எக்கச்சக்கமான கேள்விகளை கேட்டால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான்.
https://www.youtube.com/watch?v=u8xPu9XgbRc
kalnayak
10th February 2015, 03:24 PM
அடுத்த பாட்டு வாத்தியாரிடமிருந்துங்க.
நிலாப்பாடல் 3. "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ"
இங்க நம்ம கவியரசர் நிலா வந்து பெண்ணா மாறி உலாவுற அழகுதான் தான் காதலியோன்னு நாயகன் கேட்குற மாதிரி எழுதியிருக்காருங்க. நீரலைகள் இடம் மாறி நீந்துர குழலோ-ன்னு சொல்றப்ப எனக்கு கொஞ்சம் புரியலைங்களே. நீங்க ஒரு தடவை கேட்டுட்டு சொல்லுங்களேன்.
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ
பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீழ்ககழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்
இந்த வரிகளை உலகம் சுற்றும் வாலிபனில் தான் வாத்தியாரு கேட்கிறாருங்க. நிலா நிலானு மெட்டு போட்டு மெல்லிசை மன்னருக்கு போராடிக்கவே அடிக்காதோ. நமக்கு கேட்க அலுக்கவே இல்லைங்க.
https://www.youtube.com/watch?v=14EYbpI2ra8
kalnayak
10th February 2015, 03:45 PM
நிலாப்பாடல் 4. "நிலாவே வா செல்லாதே வா."
எங்கே ராஜா மட்டும் நிலவுக்கு பாட்டு போடாம விட்டுடுவாரா என்ன. வாலியை கூட்டிட்டு வந்து நிலாவே நிலாவே செல்லாதே செல்லாதே-ன்னு நாயகன் சொல்றமாதிரி பண்ணிட்டாருங்க. நடிகர் மோகன் கூட தன் மனைவி மீது உள்ள காதலினால் இப்பிடி பாடறாருங்க. பாடினது SPB ங்க. யாருங்க இந்த பாட்டையெல்லாம் மறக்க முடியும்க. கொஞ்சம் சோகம் தான். ஆனால் பல இடங்களில் சோகம்தான் சொகமானதுன்னு சொல்வாங்க இல்லையா. இதுவும் அந்த ரகம்தானுங்க.
நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா.. செல்லாதே வா..
காவேரியா கானல் நீரா
பெண்மை என்ன உண்மை?
முள்வேலியா... முல்லைப்பூவா...
சொல்லு... கொஞ்சம் நில்லு...
அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..
நிலாவே வா.. செல்லாதே வா..
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே
நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன் வானம் நான்
இந்த பாட்டோட ராகம் மௌனராகம்-னு யாரும் மறந்து போய் சொல்லிட மாட்டாங்களே.
https://www.youtube.com/watch?v=fM8x9F8yRIc
kalnayak
10th February 2015, 03:59 PM
நிலாப்பாடல் 5. "நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே."
மோகன் பாடின அதே சூழ்நிலைதாங்க கிட்டத்தட்ட நம்ம நடிகர்திலகத்துக்கு. அதுக்கு மெல்லிசை மன்னர் என்னாமா இசையமைச்சிருக்காரு பாருங்க. கோழி கொக்கரிச்சு தவளை கொற-கொறன்னு கத்துறதுல இருந்து பாருங்களேன். சூப்பரா இருக்கும். பாடகர் திலகம்குரல் நடிகர் திலகத்துக்கு எப்பிடி பொருத்தமா இருக்குதுன்னு இதுலயும் பார்த்துக்கலாம். இதுல கவியரசர் நிலாவ சும்மா ஒரு தடவை சொல்லியிருக்காருங்க. முன்னே சொன்ன பாடல்கள் மாதிரி நெலாவே கேட்கறது, நெலாவே நீ சின்னவளா, பெரியவளா, இங்க வா, போகாதே, பெண்ணா மாறினியா இப்பிடியெல்லாம் கேட்கலைங்கோ. அதனால இது முழு நிலாப் பாடல் கெடயாது இல்லைங்களா. இருந்தாலும் நிலா-ல ஆரம்பிக்கிறதுனால இதுவும் நிலாப் பாடல்தாங்கோ.
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
புதியதல்லவே தீண்டாமையென்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தயும் இரவல்தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னது
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தை தன்னையே தாய் தொடவிடில்
நானுமில்லையே நீயுமில்லையே
நானுமில்லையே நீயுமில்லையே
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
சரி. சரி. வள வளன்னு பேசவேணாம். பாட்டை போடு-ன்னு பலபேர் சொல்றது கேட்குதுங்க. நமக்குதான் சவாலே சமாளி-ன்னா ரொம்ப பிடிக்கும்-ங்களா. கொஞ்சம் உணர்ச்சி வயப்பட்டுட்டேன். பரவாயில்லை இந்தாங்க பாட்டு.
https://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
chinnakkannan
10th February 2015, 05:21 PM
//என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"// அழகிய பாட்டு..எழுதினது யார் தெரியுமா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
//3. "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ"
இங்க நம்ம கவியரசர் // கவியரசர்னு நீங்க கண்ணதாசனைச் சொல்றீங்கன்னு நினைக்கேன்.. யூ ஆர் ராங்க் யுவர் ஆனர்.. பாடல் எழுதியவர் வாலி ஐயா.. (ராஜேஷ் வந்தா அடிப்பார்..)
//நீரலைகள் இடம் மாறி நீந்துர குழலோ-ன்னு சொல்றப்ப எனக்கு கொஞ்சம் புரியலைங்களே. நீங்க ஒரு தடவை கேட்டுட்டு சொல்லுங்களேன்.// அதாகப் பட்டது தலைவன் தலைவியை நினைந்து ஏக்கத்துடன் தண்ணீரைப்பார்க்கிறான் (இங்கே கடலோ பேங்க்காக் பேக் வாட்டர் என்று நினைக்கறேன்) அவள் முகம் அங்கே நிழலாடுகிறது.. கூடவே மெல்லிய காற்று நீரில் அடிக்க அவள் கூந்தல் கலைந்தாடுவது போல் பிரமை.. நிமிர்ந்தால் தலைவியே நேரில்..ஓஓடி வருகிறாள்..அவள் கூந்தலும்படபடக்கிறது..அலையலையா.ய் நீரலைகள் நீரில் தானே இருக்கும் இந்த என் கண்ணாட்டியின் கூந்தலில் இருக்கிறதே என்று ஆச்சர்யப் பட்டுப் பாடுவதாக அமைந்திருக்கிறது எனலாம்..
ஹூம்..இந்தப் பாட்டுல ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு..அதாவது புரிஞ்சுதா.. :) ம்ம் நடத்துங்க நடத்துங்க..
chinnakkannan
10th February 2015, 05:34 PM
//மோகன் பாடின அதே சூழ்நிலைதாங்க கிட்டத்தட்ட நம்ம நடிகர்திலகத்துக்கு.//ஓய்..இந்தக் கிட்டத் தட்டன்னு போட்டாச்சுன்னா ரெண்டும் ஒரேசூழல்னுஆகிடுமா என்ன.. மெள்.ராவில (மதுரை மினிப்ரியா மேட்னிஷோ) மோஹனன் கல்யாணம் கட்டிக்கிட்ட பொண்ணாக்கும் - இதுலயும் ந.தி கல்யாணம் கட்டிக்கிட்ட பொண் தான் ஜெ. பட்சூழல் என்ன ரேவதிக்கும் கட்டாயக் கல்யாணம் ஜெக்கும் கட்டாயக் கல்யாணம்..என்னது..சூழல் கரீட்டுங்கறமாதிரி ஆகிடுச்சே (கண்ணா என்னடா மதுரைக்குவந்த சோதனை) ஆனாக்க ரேவ்ஸ்க்கு ஏற்கெனவே காதல்ன் இருந்து பூட்டாச்சு..பட் அவனை மறக்க முடியலை..இங்க ஜெக்கு ந.தி கிட்ட ஜாதி பேதம்..அதாவது பணக்கார ஏழை பேதம்.. (அதான் மெய்ன் ரீஸனே.. )
இந்தப் பாட்டை கோபால் வாசுதேவன் எல்லாம் அலசு அலசு என்று அலசியிருக்கிறார்கள்..இருப்பினும் என் பங்குக்கு..இதற்கடுத்த காட்சியில் நாயகிக்கு ஜூரம் வர தொடமுடியாமல் அடக்கிக் கொள்வாரே ந.தி.. வெகு அழகாக இருக்கும்..(பார்த்தது ரிலீஸின் போது ஸ்ரீதேவி மறுபடியும் ஒருமுறை அதே ஸ்ரீதேவியில் போட்டார்கள் என நினைக்கிறேன் சில வருடங்கள் கழித்து..(கரீட்டா) அப்போது கொஞ்சம் விவரம் புரிந்து பார்த்தேன்..:)
kalnayak
10th February 2015, 06:00 PM
//என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"// அழகிய பாட்டு..எழுதினது யார் தெரியுமா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
.
நன்றிங்கோ. நோட் பண்ணிக்கறேங்கோ!!!
//3. "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ"
இங்க நம்ம கவியரசர் // கவியரசர்னு நீங்க கண்ணதாசனைச் சொல்றீங்கன்னு நினைக்கேன்.. யூ ஆர் ராங்க் யுவர் ஆனர்.. பாடல் எழுதியவர் வாலி ஐயா.. (ராஜேஷ் வந்தா அடிப்பார்..)
//நீரலைகள் இடம் மாறி நீந்துர குழலோ-ன்னு சொல்றப்ப எனக்கு கொஞ்சம் புரியலைங்களே. நீங்க ஒரு தடவை கேட்டுட்டு சொல்லுங்களேன்.// அதாகப் பட்டது தலைவன் தலைவியை நினைந்து ஏக்கத்துடன் தண்ணீரைப்பார்க்கிறான் (இங்கே கடலோ பேங்க்காக் பேக் வாட்டர் என்று நினைக்கறேன்) அவள் முகம் அங்கே நிழலாடுகிறது.. கூடவே மெல்லிய காற்று நீரில் அடிக்க அவள் கூந்தல் கலைந்தாடுவது போல் பிரமை.. நிமிர்ந்தால் தலைவியே நேரில்..ஓஓடி வருகிறாள்..அவள் கூந்தலும்படபடக்கிறது..அலையலையா.ய் நீரலைகள் நீரில் தானே இருக்கும் இந்த என் கண்ணாட்டியின் கூந்தலில் இருக்கிறதே என்று ஆச்சர்யப் பட்டுப் பாடுவதாக அமைந்திருக்கிறது எனலாம்..
ஹூம்..இந்தப் பாட்டுல ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு..அதாவது புரிஞ்சுதா.. :) ம்ம் நடத்துங்க நடத்துங்க..
இல்லை நான் எங்கேயோ படிச்சேனே. வாலி எழுதின பாடல் கட் பண்ணிட்டாங்களாம். அப்ப வாலி சொன்னாராம் "என் பாட்டை தான் கட் பண்ண முடியும். படத்திலேர்ந்து என்னோட பேர கட் பண்ண முடியாது"-ன்னு. வாத்தியாரு கேட்டாராம்- "எப்பிடி?". வாலி சொன்னாராம் -"படத்தோட பேரு -உலகம் சுற்றும் 'வாலி'பன் தானே" அப்படின்னு. அப்ப படத்துல இருக்கற இந்த பாட்டை கவியரசர் தானே எழுதியிருக்கணும்?. உறுதியா சொல்லுங்களேன்.
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ - நன்னா சந்தேகம் தீர்த்தீங்க.
மத்தபடி, இந்த பாட்டோட மத்த வரிகள்ல வேற சந்தேகம் எதுவும் இல்லை. அதுதான் தெளிவாக இருக்கிறதே!!!
kalnayak
10th February 2015, 06:18 PM
//மோகன் பாடின அதே சூழ்நிலைதாங்க கிட்டத்தட்ட நம்ம நடிகர்திலகத்துக்கு.//ஓய்..இந்தக் கிட்டத் தட்டன்னு போட்டாச்சுன்னா ரெண்டும் ஒரேசூழல்னுஆகிடுமா என்ன.. மெள்.ராவில (மதுரை மினிப்ரியா மேட்னிஷோ) மோஹனன் கல்யாணம் கட்டிக்கிட்ட பொண்ணாக்கும் - இதுலயும் ந.தி கல்யாணம் கட்டிக்கிட்ட பொண் தான் ஜெ. பட்சூழல் என்ன ரேவதிக்கும் கட்டாயக் கல்யாணம் ஜெக்கும் கட்டாயக் கல்யாணம்..என்னது..சூழல் கரீட்டுங்கறமாதிரி ஆகிடுச்சே (கண்ணா என்னடா மதுரைக்குவந்த சோதனை) ஆனாக்க ரேவ்ஸ்க்கு ஏற்கெனவே காதல்ன் இருந்து பூட்டாச்சு..பட் அவனை மறக்க முடியலை..இங்க ஜெக்கு ந.தி கிட்ட ஜாதி பேதம்..அதாவது பணக்கார ஏழை பேதம்.. (அதான் மெய்ன் ரீஸனே.. )
இந்தப் பாட்டை கோபால் வாசுதேவன் எல்லாம் அலசு அலசு என்று அலசியிருக்கிறார்கள்..இருப்பினும் என் பங்குக்கு..இதற்கடுத்த காட்சியில் நாயகிக்கு ஜூரம் வர தொடமுடியாமல் அடக்கிக் கொள்வாரே ந.தி.. வெகு அழகாக இருக்கும்..(பார்த்தது ரிலீஸின் போது ஸ்ரீதேவி மறுபடியும் ஒருமுறை அதே ஸ்ரீதேவியில் போட்டார்கள் என நினைக்கிறேன் சில வருடங்கள் கழித்து..(கரீட்டா) அப்போது கொஞ்சம் விவரம் புரிந்து பார்த்தேன்..:)
சி.க.,
மனைவிமார்கள் இருவரும் தங்கள் கணவன்மார்களை கல்யாணத்துக்கு பின் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அடிப்படையில்தான் அப்படி எழுதினேன். காரணம் வித்தியாசமானதுதான். அதனால்தான் கிட்டத்தட்ட என்று குறிப்பிட்டேன். நூறு சதவீதம் பொருந்தியிருந்தால்தான் கிட்டத்தட்ட அதே காரணம் என்று சொல்ல முடியுமா?
இப்பிடி நோண்டி நோண்டி துருவினா நான் எப்புடி முந்தின பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்கும் லிங்க் கொடுக்கிறது. ஏதோ கொஞ்சம் குறையிருந்தா மதுரைக்காரவுக விட்டுக் கொடுத்திட மாட்டீங்களா. இன்னும் நக்கீரர் மாதிரியே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-ன்னு காண்பீங்கன்னா சொல்லிப்பூடுங்க. நானும் அப்பிடியே மாத்திக்கறேன். ஏன்னா நான் பிறந்தது மதுரைக்கு பக்கத்து ஊர்ல (பழைய மதுரை மாவட்டம்).
chinnakkannan
10th February 2015, 06:34 PM
//ஏதோ கொஞ்சம் குறையிருந்தா மதுரைக்காரவுக விட்டுக் கொடுத்திட மாட்டீங்களா// குற்றம் எல்லாம் சொல்லவிலலை கல் நாயக்.. ஜஸ்ட் சொன்னேன் தமாஷாக அவ்வளவே.. நான் எழுத எழுத நீங்கள் சொன்னது சரி என்று எனக்கே புரிந்ததே..! நீங்க கண்டின்யூ பண்ணுங்க.. :)
அந்த நிலவு ஒரு பெண்ணாகி பாட்டு யார் எழுதினதுன்னு ராஜேஷும் கலைவேந்தரும் சொல்வார்கள்.. இந்த லஷ்மன் ச்ருதிலயும் வாலின்னு தான்போட்டிருக்கு..சின்னவயசுலயும் அதான் படித்த மாதிரி நினைவு..
பழைய மதுரை மாவட்டம்னா எங்க எங்க.. நான் ஜாக்ரஃபில கொஞ்சம் வீக்ங்க்ணா.
kalnayak
10th February 2015, 06:39 PM
பழைய மதுரை மாவட்டம்னா எங்க எங்க.. நான் ஜாக்ரஃபில கொஞ்சம் வீக்ங்க்ணா.
இப்போதைக்கு திண்டுக்கல் மாவட்டம்ங்ணா.
chinnakkannan
10th February 2015, 06:44 PM
ஓ..குட்.. இன்னும் சில நிலாக்கள் எழுதுங்க..நான் வூட் போய் எழுதறேன்..
Russellzlc
10th February 2015, 06:51 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி, சின்னக்கண்ணன், கல்நாயக்.
ரவி சார், நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்ப்பது மகிழ்ச்சி.
கல்நாயக், நான் வரவே மாட்டேன்னு சொல்லலை. நேரம் கிடைக்கும்போது வரேன்னுதான் சொன்னேன்.
அப்புறம்.... நிலவு ஒரு பெண்ணாகி வாலிதான்.
நிலவு சம்பந்தமா அருணகிரி நாதர் படத்திலே 2 பாடல்கள்
நிலவோ அவள் மலரோ..
நிலவே நீ இன்ப சேதி சொல்லாயோ..
அருமையான பாடல்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
10th February 2015, 06:56 PM
ஹாய் கலைவேந்தன்.. பாருங்க ஒரு பாட் செலக்ட் பண்ணி போடலாம்னு வந்தா நீங்க வந்திருக்கீங்க..
இந்தப் பாடல் சிலோனில் கேட்டுக் கேட்டு மனபாடம் ஆனது..படம் பார்த்தது கிடையாது..இருந்தாலும் செமை ஹிட்..
//அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே ஏஏ//
https://www.youtube.com/watch?v=JGAwagBQzsQ
Murali Srinivas
10th February 2015, 07:08 PM
கண்ணா,
உங்கள் சகோதரிகளின் திருமணம் நடைபெற்ற மண்டபங்கள் பற்றிய நினைவலைகள் மற்றும் சமையல்காரர்கல் பற்றிய தகவல்களும் சுவை. ஒரு சின்ன டவுட். குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபம் பற்றி சொல்லும்போது தளவாய் அக்ரகாரம் ரோடிற்கு parallel ரோட்டில் வரும் என்று எழுதியிருந்தீர்கள். தளவாய் அக்ரகாரம் என்பது வடக்கு சித்திரை வீதியிலிருந்து [அதாவது மொட்டை கோபுரம் இருக்கும் தெருவிலிருந்து சிம்மக்கல் சொக்கநாதர் கோவிலுக்கு போவதற்கு இடது பக்கம் திரும்புவோமே, அதுதானே தளவாய் அக்ரகாரம்? பழைய இம்பீரியல் தியேட்டர் கூட இருக்கும் அந்த தெருவல்லவா அது?
நீங்கள் குறிப்பிடும் குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபம் YMCA -விற்கு அருகில் ஜான்சி ராணி பார்க்கிற்கு எதிரில் அரசியல் கட்சி கூட்டங்கள் எல்லாம் நடைபெறும் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில அல்லவா இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் YMCA பக்கத்தில் சின்ன தெருவுக்குள் சென்று மாடிக்கு செல்ல வேண்டும். மண்டபத்திற்கு வலது பக்கம் கான்சா மேட்டு தெரு, நேரே செல்லும் தெரு தெற்காவணி மூல வீதி. அது நேரே சென்று வெங்கலகடை தெருவில் இணையும்.
அதில் இடது பக்கம் திரும்பினால் அம்மன் சன்னதி. திரும்பாமல் சற்றே தாண்டி சென்று இடது பக்கம் திரும்பினால் RRC நகைக்கடை. அதில் நேராக சென்றாலும் இந்த தளவாய் அக்ரகாரத்தை அடையலாம். Perpendicular என்பதற்கு பதில் parallel என்று சொல்லி விட்டீர்களோ?
கல்நாயக், நிலவு ஒரு பெண்ணாகி பாடல் வாலிதான். அந்தப் படத்தில் நிலவு ஒரு பெண்ணாகி, பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் பன்சாயீ ஆகிய மூன்று பாடல்களும் வாலி எழுதியவை.
கலைவேந்தன், பதவி உயர்விற்கு பாராட்டுகள்!
அன்புடன்
Russellzlc
10th February 2015, 07:10 PM
நன்றி சின்னக்கண்ணன்,
என்னுடைய போன பதிவில் ஒரு சின்ன தவறு.
நிலவோ அவள் ஒளியோ.... பாடல்தான் அருணகிரிநாதர்.
நிலவே நீ இந்த.... பட்டினத்தார்.
இரண்டும் ஒரே கேசட்டில் வந்தது. அதனாலும், கொஞ்சம் வேலையினாலும் சின்னக் குழப்பம். நன்றி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
10th February 2015, 07:11 PM
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி முரளி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
10th February 2015, 09:13 PM
//நீங்கள் குறிப்பிடும் குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபம் ymca -விற்கு அருகில் ஜான்சி ராணி பார்க்கிற்கு எதிரில் அரசியல் கட்சி கூட்டங்கள் எல்லாம் நடைபெறும் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில அல்லவா இருக்கிறது//
கரெக்ட் முரளி..மேங்காட்டுப் பொட்டல் அண்ட் கான்சா மேட்டுத் தெரு.தான் ( தளவாய் அக்ரகாரம் எனத் தவறுதலாகச் சொல்லிவிட்டேன்..—நீங்கள் சொல்லும் இம்பீரியல் தியேட்டர் இடம் தான் தளவாய் அக்ரகாரம்..) அது என்னபழைய இம்பீரிய்ல் தியேட்டர்..இப்போது இல்லையா.. ( சென் ட்ர்ல் மார்க்கட்டும் அந்தப் பக்கம் தானே..) கொஞ்சம் இருங்கள் நினைவிலிருந்து ஒரு ரூட் போட்டுப் பார்க்கட்டா… தானப்ப முதலி தெரு பாண்டியன் சூப்பர் மார்க்கெட் கொஞ்ச்ம் நடந்தால் வலது புறம் மிட்லண்ட் ஹோட்டல்(இப்போதும் அதேவா) இடதுபுறம் திரும்பும் ரோட்டில் திரும்பி நேரே நேரே போனால் பூமார்க்கெட் அப்புறம் அப்படியே நேரே போய் வளைந்தால் த.அக்ரஹாரம் சரியா..
//நேரே செல்லும் தெரு தெற்காவணி மூல வீதி. அது நேரே சென்று வெங்கலகடை தெருவில் இணையும்.// இந்தத் தெற்காவணி மூலவீதி பாண்டிய வினாயகர் கோவில் (சரிதானே) தாண்டி வலது புறம் உள்ள சந்தில் எனது தந்தையின் கடை இருந்தது- ஒரு காலத்தில்.. //ஒய் எம்சிஏ பக்கத்தில் சின்ன சந்தில்..தான். // பெரிய அக்கா கல்யாணத்திற்கப்புறம் அந்தப்புறம் போக சந்தர்ப்பம் வந்ததே இல்லை..
கான்சாமேட்டுத் தெருவில் போனால் தெற்குமாசிவீதி..இடதுபுறம் திரும்பி நேரே போனால் விளக்குத்தூண் வளைந்தால் கீழமாசிவீதி சரியா..( ரொம்ப நாளாச்ச்சுங்க்ணா.. மறந்து போச்) வலது புறம் திரும்பி நேரே போனால் பெருமாள் கோவில்.. அப்படிப் போகாமல் மறுபடியும் வளைந்து நேர் போனால் முருகன் இட்லிக்கடை, நன்மை தருவார் கோவில் ஆரிய பவன் தென் ஸ்ட்ரெய்ட் சாந்திதியேட்டர் நேரு பிள்ளையார் அகெய்ன் ஸ்ட்ரெய்ட் டிவிஎஸ் சிக்னல் அண்ட் ஸ்ட்ரெய்ட் பிஃபோர் போலீஸ் ஸ்டேஷன் (அதுக்குமுன்னால் ஆஞ்சனேயர் கோவிலா) இடது புறத் தெருவிலிருந்து பார்த்தால் தேவி தியேட்டர் வலது புறம் போனால் ஞா.கி சந்தை கொஞ்சம் நடந்தால் கண்ணா வீடு! இந்த பாலம் கட்டினார்களாமே அதன் பிறகு நான் மதுரை சென்றதேயில்லை..இப்போ வீட்டுக்குப் போகணும்னா பாலமடியில் நடக்கவேண்டுமென சகோதரி சொல்லியிருந்தார் ரொம்ப நாள் முன்னால்..
ஸாரிங்க.. கொஞ்சம் தப்பா தளவாய் அக்ரஹாரம்னு எழுதிட்டேன்..
chinnakkannan
10th February 2015, 09:17 PM
//ஜான்சி ராணி பார்க்கிற்கு // பூங்காவின் பெயர் சொன்னதுக்கு நன்றி முரளி.. இந்த தேவி தியேட்டரிலிருந்து வலதுபுற்ம் ஆரப்பாளையம் ரோடுபோகும் பாதையில் (முக்கில் மங்கையர்க்கரசி ஸ்கூல் அதைத் தாண்டி) ஒரு குட்டி பார்க் பெயர் மறந்து விட்டது.. இந்த கர்டர் பாலம் எனச் சொல்லப் படும் தண்டவாளத்திற்கடியில் செல்லும் பாதை இன்னும் இருக்கிறதா..மழை வந்தால் நீச்சல் தான் இல்லை.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே..
Murali Srinivas
10th February 2015, 11:34 PM
கண்ணா,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற இடங்களும் சரி அவற்றுக்கு போகும் வழியும் சரி மிக சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். தெற்காவணி மூலவீதி வெங்கலகடை தெருவில் இணையும் இடத்தில இடது புறம் திரும்பினால் அம்மன் சன்னதி, வலது புறம் திரும்பினால் ஜடாமுனி கோவில் தெரு. அங்கே ஒரு மாடியில் பாம்பே மீல்ஸ் கடை ஒன்று உண்டு. unlimited சப்பாத்தி பிளஸ் சாதம். அங்கே போயிருப்பீர்கள் என நினைக்கிறேன். அதே போன்று ஒரு கடை சென்ட்ரல் சினிமாவின் எதிர்புற குட்டி தெருவிலும் (கோபால கொத்தன் தெரு) உண்டு.
ஒர்க் ஷாப் ரோட்டில் கர்டர் பாலம் அருகே இருக்கும் குட்டி பூங்காவிற்கு பெயர் பத்மாசனி பூங்கா. மழை பெய்தால் இப்பவும் அப்படிதான் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
chinnakkannan
11th February 2015, 12:13 AM
அதே போன்று ஒரு கடை சென்ட்ரல் சினிமாவின் எதிர்புற குட்டி தெருவிலும் (கோபால கொத்தன் தெரு) உண்டு.// பத்மாசனி பூங்கா நினைவூட்டலுக்கு தாங்க்ஸ் முரளி. இந்த கோ.கொ தெரு வாவ்..சூடு சூடாய் சப்பாத்தி..இளம் புது நடிகை நாசூக்காய்ப் போட்டுக்கொள்ளும் உதட்டுச் சாயம் போல மெலிதான செந்நிறத்தில் தக்காளி பிய்த்துப் போட்டு வேகவைக்கப்பட்டிருக்க நடுவில் கொஞ்சம் மொச்சைகொட்டை மொச்சைக்கொட்டையாய் முழி முழித்துக்கொண்டு சிரிக்கும் உருளைக்கிழங்கு.. எத்தனை சப்பாத்தி சாப்பிட்டிருப்பேன்.. ப்ளஸ் தால் அண்ட் ரைஸ்... இப்படி நினைவு படுத்திவிட்டீர்களே..டின்னர் முடித்திருந்தாலும் இப்போது பசிக்கிறது..:) ஜ.மு கோவில் தெரு பா.மீ கடைக்குப் போனதாய் நினைவில்லை..போயிருப்பேன்..கோபி அய்யங்கார் ஹோட்டல் சாம்பார்,மாடர்ன் ரெஸ்டாரெண்ட் பொங்கல் வடை..கிருஷ்ணன் கோவில் அருகில் பொன்னுக்கோனார் சூடான பசும்பால்..கிருஷ்ணன் கோவில் சந்துக்குள் போனால் ஒரு ஜிம் கூட இருக்கும்.ம்ம் நன்றி முரளி அகெய்ன்.
ஆமாம் ஒரு நல்ல டைட்டிலா கொடுங்களேன். டெல்லில மாற்றம் இங்கயும் ந.தி த்ரெட் 15 எதாச்சும் ந.தி கட்டுரை சுமாரா எழுத ட்ரை பண்ணட்டா.:)
chinnakkannan
11th February 2015, 12:15 AM
இரண்டும் ஒரே கேசட்டில் வந்தது.// இன்னும் காசட் தானா கலை.வேந்தன்...யூட்யூப்லயே கிடைக்குமே
rajeshkrv
11th February 2015, 02:25 AM
//நீங்கள் குறிப்பிடும் குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபம் ymca -விற்கு அருகில் ஜான்சி ராணி பார்க்கிற்கு எதிரில் அரசியல் கட்சி கூட்டங்கள் எல்லாம் நடைபெறும் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில அல்லவா இருக்கிறது//
கரெக்ட் முரளி..மேங்காட்டுப் பொட்டல் அண்ட் கான்சா மேட்டுத் தெரு.தான் ( தளவாய் அக்ரகாரம் எனத் தவறுதலாகச் சொல்லிவிட்டேன்..—நீங்கள் சொல்லும் இம்பீரியல் தியேட்டர் இடம் தான் தளவாய் அக்ரகாரம்..) அது என்னபழைய இம்பீரிய்ல் தியேட்டர்..இப்போது இல்லையா.. ( சென் ட்ர்ல் மார்க்கட்டும் அந்தப் பக்கம் தானே..) கொஞ்சம் இருங்கள் நினைவிலிருந்து ஒரு ரூட் போட்டுப் பார்க்கட்டா… தானப்ப முதலி தெரு பாண்டியன் சூப்பர் மார்க்கெட் கொஞ்ச்ம் நடந்தால் வலது புறம் மிட்லண்ட் ஹோட்டல்(இப்போதும் அதேவா) இடதுபுறம் திரும்பும் ரோட்டில் திரும்பி நேரே நேரே போனால் பூமார்க்கெட் அப்புறம் அப்படியே நேரே போய் வளைந்தால் த.அக்ரஹாரம் சரியா..
//நேரே செல்லும் தெரு தெற்காவணி மூல வீதி. அது நேரே சென்று வெங்கலகடை தெருவில் இணையும்.// இந்தத் தெற்காவணி மூலவீதி பாண்டிய வினாயகர் கோவில் (சரிதானே) தாண்டி வலது புறம் உள்ள சந்தில் எனது தந்தையின் கடை இருந்தது- ஒரு காலத்தில்.. //ஒய் எம்சிஏ பக்கத்தில் சின்ன சந்தில்..தான். // பெரிய அக்கா கல்யாணத்திற்கப்புறம் அந்தப்புறம் போக சந்தர்ப்பம் வந்ததே இல்லை..
கான்சாமேட்டுத் தெருவில் போனால் தெற்குமாசிவீதி..இடதுபுறம் திரும்பி நேரே போனால் விளக்குத்தூண் வளைந்தால் கீழமாசிவீதி சரியா..( ரொம்ப நாளாச்ச்சுங்க்ணா.. மறந்து போச்) வலது புறம் திரும்பி நேரே போனால் பெருமாள் கோவில்.. அப்படிப் போகாமல் மறுபடியும் வளைந்து நேர் போனால் முருகன் இட்லிக்கடை, நன்மை தருவார் கோவில் ஆரிய பவன் தென் ஸ்ட்ரெய்ட் சாந்திதியேட்டர் நேரு பிள்ளையார் அகெய்ன் ஸ்ட்ரெய்ட் டிவிஎஸ் சிக்னல் அண்ட் ஸ்ட்ரெய்ட் பிஃபோர் போலீஸ் ஸ்டேஷன் (அதுக்குமுன்னால் ஆஞ்சனேயர் கோவிலா) இடது புறத் தெருவிலிருந்து பார்த்தால் தேவி தியேட்டர் வலது புறம் போனால் ஞா.கி சந்தை கொஞ்சம் நடந்தால் கண்ணா வீடு! இந்த பாலம் கட்டினார்களாமே அதன் பிறகு நான் மதுரை சென்றதேயில்லை..இப்போ வீட்டுக்குப் போகணும்னா பாலமடியில் நடக்கவேண்டுமென சகோதரி சொல்லியிருந்தார் ரொம்ப நாள் முன்னால்..
ஸாரிங்க.. கொஞ்சம் தப்பா தளவாய் அக்ரஹாரம்னு எழுதிட்டேன்..
madurai description .. nostalgic..
rajeshkrv
11th February 2015, 04:24 AM
கன்னடத்தில் புட்டண்ணாவின் கெஜ்ஜே பூஜே மிகப்பெரிய வெற்றிப்படம். கல்பனா கலக்கியிருப்பார்
இது தமிழில் தாலிய சலங்கையா ஆனது, தெலுங்கில் கல்யாண மண்டபம்..
தமிழில் வாணிஸ்ரீ, தெலுங்கில் காஞ்சனா
இதோ இசையரசியின் குரலில்
அலமேலு மங்கை அருகே திருமாலே
https://www.youtube.com/watch?v=mkfdtJCrrPU
தெலுங்கிலும் இசைய்ரசியின் குரலில்
https://www.youtube.com/watch?v=J_a7wUd8sFM
rajeshkrv
11th February 2015, 04:31 AM
ஒரே சூழல் ஒரே படம் ஒரே பாடல் 3 மொழிகளில்
கண்ணன் பிறந்த வேளையிலே
https://www.youtube.com/watch?v=g1tekKbNODw
கூதல்லி தாய் ஹக்கி (பூபதி ரங்கா கன்னடம்)
https://www.youtube.com/watch?v=m0aYdfSFZAQ
தெலுங்கில்
https://www.youtube.com/watch?v=m9_C39bQCtg
kalnayak
11th February 2015, 10:34 AM
சி.க., கலைவேந்தன் மற்றும் முரளி மூவருக்கும் நன்றி - நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடல் வாலியால் எழுதப் பட்டது என்று என்னை திருத்தியமைக்கு.
அப்புறம் இன்னாத்துக்கு மக்கள் திலகம் திரியில் அப்படி வாலி சொன்னதா சொல்லியிருந்தார்கள்.சரி நான்தான் தப்பா படிச்சதா எடுத்துக்கறேன்.
அப்புறம் சி.க.,
நீங்க மதுரையை பத்தி முரளி கிட்ட பேசறதை பாக்கறச்சே நீங்க மதுரைக்காரர் தானான்னு சந்தேகமே வருது. அவர் சொல்றதுக்கு ஒன்னு அப்படியாங்றீங்க. மத்தபடி நீங்க சொல்றதெல்லாம் ஒரு கூகுள் மேப் வச்சு சொல்லிடலாமே. இப்ப இந்தியாவே வர்றதில்லையா? மதுரைக்கு வராம எங்க போறீங்க. சம்திங் ராங் வித் யூ(?) உடம்பை பாத்துக்கோங்க.
கலைவேந்தன்,
நீங்கள் சொன்ன நிலாப் பாடல்களையும் பின்னால் சேர்த்துகொள்கிறேன். நன்றி. மற்றபடி உங்களை நான் அடிக்கடி வரச் சொன்னேன். அவ்வளவுதான்.*
kalnayak
11th February 2015, 10:54 AM
நிலாப் பாடல் 6. "வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா..."
முந்தைய பாடலில் நடிகர் திலகத்திற்காக கவியரசர் வானம் நிலாவை தொடாதேன்னு சொன்னதா சொல்லியிருந்தார் அல்லவா. இந்த பாடலில் பார்த்திபனுக்காக (மோஸ்ட் ப்ரபப்லி வாலியாத்தான் இருக்கணும்) கவிஞர் வெண்ணிலாவுக்கு இந்த வானத்தை பிடிக்கலயா-ன்னு கேட்டிருக்கிறார் பாருங்க. இங்கே வானம் நிலா கிட்ட கேட்கிற மாதிரிதான் இருக்கு.
ராஜா இசையமைச்சு தானும் காதல் பாட்டுக்களை நெலாவோடு நெறய இணைச்சி இருக்கிறேன் அப்படின்னு இன்னும் வரப்போற பாடல்களில் நிருபிச்சு இருப்பார் பாருங்களேன். அதுல இதுவும் ஒண்ணு. கேட்க கேட்க இதுவும் சுகமாத்தான் இருக்கு. கேட்டுட்டு உங்க அபிப்ராயாத்த்தை சொல்லுங்களேன்.
ஆ: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...
ஆ: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...
பெ: உன்னை விட சொந்தம் எது.. அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது
ஆ: கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா
பெ: உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது.. ஏது
ஆ: ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது.. ஏது
பெ: இது வானம் என வாழும்.. இனி மாறாது
ஆ: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...
ஆ: சிந்தும் மழைச் சாரல் விழ.. அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர.. சொர்க்கம் அது நேரில் வர
பெ: கன்னம் மது தேனைத் தர.. கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர.. இன்பம் சுகம் இங்கே வர
ஆ: எந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட.. ஏக்கம் கூட
பெ: என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட.. தூக்கம் ஓட
ஆ: அலை போல மனம் ஓட.. புதுப் பண் பாட
பெ: வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
இந்த பாட்டை கேட்கறச்சே தாலாட்டு பாடவா-ன்னு ராஜா கேட்டுட்டு பாட்டை போட்ட மாதிரியே இருக்கும்.
https://www.youtube.com/watch?v=bib9g82x93U
rajeshkrv
11th February 2015, 11:02 AM
Kalnayak Arunmozhiya Raja thookivitta kalam.. my fav is Varadhu vandha nayagan.
Lyrics Vaali ayya
rajeshkrv
11th February 2015, 11:14 AM
https://www.youtube.com/watch?v=ufdC38lwPfo
rajeshkrv
11th February 2015, 11:15 AM
my fav
https://www.youtube.com/watch?v=h_s7zaUodC0
rajeshkrv
11th February 2015, 11:17 AM
https://www.youtube.com/watch?v=BqA_jPc8iCQ
kalnayak
11th February 2015, 11:28 AM
நிலாப் பாடல் 7. "நிலா அது வானத்து மேலே..."
இங்க சென்சார் பண்ற அளவுக்கு இந்த பாட்டில அதிகமா இல்லை-ன்னு நெனைக்கிறேன்.*
இங்கயும் நிலாவும், வானமும்தான். நல்லவேளை கேள்வி எதுவும் இல்லை. ஏன் ரெண்டுமே பேசிக்கவே இல்லை.* ஆனா என்ன வழக்கமான காதல் பாடல் கிடையாது. மதுரைக்காரங்க வெளக்கம் கேக்க மாட்டீங்களே? ராஜாவின் அதிரடி இசையில் ஸூபர்-ஹிட் பாட்டுத்தான். இளையராஜாவே எழுதி பாடியதென்று நினைக்கிறேன். சரி பாட்டுக்கு வருவோம்.
ஒய்யா ஒய் ஒய் ஒய்யா ஒய்
ஒய்யா ஒய் ஒய் ஒய்யா ஒய்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்திலே
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்
துடிக்கிற ஆட்டத்த திரையிலே பாத்திருக்கேன்
அஜும் அஜும் அஜும்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
அஜும் அஜும் அஜும்
துடிக்கிற ஆட்டத்த திரையிலே பாத்திருக்கேன்
அஜும் அஜும் அஜும்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
அஜும் அஜும் அஜும்
காட்டுல மேட்டுல உழைச்சவன் நான் ஆடிடப் பாடிட வேண்டாமா
வறுமையின் கொடுமையப் பார்த்தவன் தான்
உன் உடையில வறுமையும் வேண்டாமா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்
நாயகனுக்கு இல்லாம இப்பிடி ஒரு நல்ல பாட்டை போட்டுட்டாங்களே-ன்னு யாரும் வருத்தப் படவேண்டியதில்லை. நாயகன்தான் பாட்டுல கூடவே இருக்காரே.*
https://www.youtube.com/watch?v=aGDY3SheBpw
kalnayak
11th February 2015, 12:26 PM
Kalnayak Arunmozhiya Raja thookivitta kalam.. my fav is Varadhu vandha nayagan.
Lyrics Vaali ayya
ராஜேஷ்,
நீங்க சொன்ன வராது வந்த நாயகன் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும். அப்புறம் அருண்மொழி எங்க போனாரு? இப்பயும் பாடறரா?
chinnakkannan
11th February 2015, 01:11 PM
//நீங்க மதுரையை பத்தி முரளி கிட்ட பேசறதை பாக்கறச்சே நீங்க மதுரைக்காரர் தானான்னு சந்தேகமே வருது. // சந்தேகமே படாதீங்காணும்.. நா மதுரைக்காரன் தான் - அந்தக்கால.. மறந்து போச்சுங்கோ ரொம்ப் நாளாச்சு.. இந்த வருடமாவது ஒரு ட்ரிப் அடிக்கணும்..:)
kalnayak
11th February 2015, 01:15 PM
நிலாப்பாடல் 8. "நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு..."
இது என்ன இங்க நிலாப் பாட்டு குரூப் சாங்கா மாறி இருக்கு. அது சரி இப்ப வர்ற பாட்டெல்லாம் இப்பிடிதானே இருக்கு. பாடலாசிரியர்: பழனி பாரதி; பாடியவர் : ஹரிஹரன்.
விஜய் நிலவுப்பாட்டை ஒருநாள் கேட்டுட்டு மூங்கில் காட்டில் தினமும் படிச்சாராமே. அந்த பாட்டை நான் போட்டுட்டேனா இல்லையா தெரியலையே. யாராவது கேட்டு சொன்னா நல்லா இருக்கும்.
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு…ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப்
பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
—
கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்
—
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
—
நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்
—
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப்
பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
ராஜா இசையில இதுவும் நல்லா கேட்கிறமாதிரிதானே இருக்கு.
இவர் சொல்ற நிலவு கண்ணுக்குள் நிலவு அப்பிடின்னு எல்லாரும் சொல்றாங்களே. உண்மையா?
https://www.youtube.com/watch?v=H1GXvR33oKA
chinnakkannan
11th February 2015, 04:29 PM
ராஜேஷ் கண்ணன் பிறந்த வேளையிலே எனக்குப் பிடிக்கும்.. மற்ற பாடல்களும் கேட்டு ச் சொல்கிறேன் ..தாங்க்ஸ்..
கல் நாயக் நிலாப்பாட்டு ஜரூரா வந்துக்கிட்டு இருக்கு.. தாங்க்ஸ்..போட்டு முடிங்க பின் விட்டதைச் சொல்கிறேன் :)
**
முக நூலில் படித்த பதிவு:
நன்றி : சுப்ரமணியம் கிச்சா கிச்சா என்பவர் எழுதியது..
//கொஞ்சம் நிதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு புரியும்..
பல்லாங்குழிங்குறது வெளையாட்டா சொல்லிக் குடுத்த குடும்ப நிர்வாகம்.
மொதல்ல எப்படி வெளையாடணும்னு பாப்போம்.
ஒரு பக்கத்துக்கு ஏழு குழி. குழிக்கு அஞ்சு முத்து (பண்ணெண்டு முத்து போட்டும் வெளையாடுவாக)ஒரு குழில இருந்து எடுத்து அடுத்து வார குழிக்கு ஒன்னொன்னா போடுவாக. முத்து முடிஞ்சதும் அடுத்த குழில இருந்து முத்துகள எடுத்து அதே மாதிரி போடணும். ஒரு வேள, அடுத்த குழி காலியா. இருந்தா, அதுக்கு அடுத்த குழில எம்புட்டு முத்து இருக்கோ அம்புட்டும் முத்தும் போட்டு வந்தவுகளுக்குச் சொந்தம். (செல சமயம் அது நெறையாவும் இருக்கும் செல சமயம் ஒன்னுமில்லாமையும் கூட போகலாம்.)
காலியான குழியில, அடுத்து சேந்து வார முத்துகள் மொத்தமா நாலு சேந்துருச்சுனா, அதுக்குப் பேரு “பசு” அது ஆரு பக்கம் இருக்கோ அவுகளுக்குச் சொந்தம்.
வெளையாட்டுல ஒரு பக்கம் செயிக்கச் செயிக்க இன்னொரு பக்கம் தெக்கம்(தொக்கம், தக்கம், பற்று) விழும். கடைசில தோத்தவுகட்ட அஞ்சு முத்துக்கும் கொறவா இருந்தா, அஞ்சு முத்துக்குப் பதிலா, ஒரு ஒரு முத்தா போட்டு கஞ்சி காச்சி வெளயாடுவாக.
சரி இத எதுக்கு வெளையாண்டாக?
தன்கிட்ட இருக்குற பொருள எப்படி பெருக்கணுங்குறதுதேன் இந்த வெளையாட்டோட சூச்சுமம்.
எந்தக் குழில ஆரம்பிச்சா எந்தக் குழில எம்புட்டு சேருங்குறது, வெளையாட வெளையாட நெனவுல சேத்துக்கிட்டே போகணும்.
“பசு” சேர்க்கணும் (அதுக்கேத்தாப்ல வெளையாடணும்) பசுங்குறது நாலு முத்துதேன்னு சாதாரணமா நெனைக்கக் கூடாது. “பசு”னா செல்வம்னு அர்த்தம். அதச் சிறுகச் சிறுக சேர்த்துப் பழக்குறதுதேன் நோக்கம்.
கடைசில கஞ்சி காச்சுறதுனு ஒரு வாய்ப்பிருக்கு. தான் செயிச்சா எதிராளிக்கு கஞ்சி காச்சுற வாய்ப்பு குடுக்கணும். எல்லாம் தோத்துப்புட்டானு மிதப்பா வெளையாண்டா, அடி மட்டத்துல இருந்து கூட எதிராளி செயிச்சு வந்துரலாம். ஒரு வேள நம்ம கஞ்சி காச்சுற நெலைக்கு வந்துட்டாலும் சோர்ந்து போயிறக் கூடாது. அங்கன இருந்து கூட (வறுமையில இருந்து கூட) மேடேறிடலாம். மேடேறிடணும். அதேன் ஒரு குடும்பத்தக் காக்கப் போறவளுக்கு அழகு.
இது வாழ்க்கைக்கான வெளையாட்டு. அதுனாலதேன். சடங்குக்குச் சீரா, தன் வீட்டுக்கு வரப் போற பொண்ணுக்கு பல்லாங்குழி வாங்கிக் குடுக்குறது தாய்மாமன் வழமையா வச்சிருந்தாக. கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்குப் போறப்ப கட்டாயம் பல்லாங்குழிய சீர் வரிசைல சேத்துக் குடுத்தாக.
ஒன்னொன்னா தொலைச்சுக்கிட்டு வாரோம்//
அழகாச் சொல்லியிருக்கி்றார் இல்லியா.. ம்ம்
அந்த்க் கால ப் பாட்டுல பல்லாங்குழி இருக்கா என்ன.. எனக்குத் தெரிஞ்சு பல்லாங்குழி வந்தது இந்த ஒரு பாட்டுல தான்..சினேகாவின் இரண்டாவது படம்..
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
https://www.youtube.com/watch?v=RDe5Tha4IqI
kalnayak
11th February 2015, 05:29 PM
சி.க.,
சிறுவயதில் நான் கூட பல்லாங்குழி விளையாடி இருக்கேன். எங்க அம்மா பொறந்த வீட்டுல எஞ்ஜோட்டு பசங்க கூடத்தான். எப்பிடின்னு தான் தெரியலை. நீங்க இங்க குடுத்து இருக்கறது எல்லாம் புதுசா இருக்கு. இல்லை ஒண்னும் தெரியாமலேதான் விளயாண்டிருக்கேன் போல.
சரி பாட்டுக்கு வருவோம். பல்லாங்குழி-ன்னு ஆரம்பிக்கற பாட்டு இது ஒண்ணா மட்டும் இருக்கலாம். மத்த பாட்டுல நடுவில வந்திருக்கான்னு தெரியலையே. சரி இந்த பாட்டு இந்த வட்டத்தை வச்சே எழுதி இருப்பாங்க. கேட்டால் நல்லா இருக்கிற மாதிரிதான் இருக்கு.ஆனால் ஏதாவது அருத்தம் பொருத்தம் இருக்கான்னு உங்களை மாதிரி விவரம் தெரிஞ்சவங்கதான் சொல்லணும்.
என்ன நீங்க நிலாப் பாட்டை அதுக்குள்ள முடிக்க சொல்றீங்க. இன்னும் எனக்கு தெரிஞ்ச 25 பாட்டாவது இருக்கு. அதுக்குள்ள அவசரப் பாடலாமோ. நான் இந்த ஒரு மாசத்துக்கு இந்த டைடில் புக் பண்ணி வெச்சி இருக்கேன். கொஞ்சம் பொறுத்திருங்க.
kalnayak
11th February 2015, 05:48 PM
நிலாப்பாடல் 9. "ஈர நிலா விழிகளை மூடி ..."
இதுவரைக்கும் வெறும் நிலாவையும், வெண்ணிலாவையும் மட்டுமே கேட்ட நமக்கு வித்தியாசமா ஒரு ஈர நிலாவை நம்ம ராஜாவோட புத்திரர் யுவன் ஷங்கர் ராஜா கொடுத்திருக்கிறார் பாருங்க. இந்த ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் தூங்குதுங்களாம். சரத்குமாருக்கும் ஊர்வசிக்கும் பின்னணி பாட்டா வருதுங்க. SPB குரல் சொக்க வைக்குதுங்க. கூட யாரோ ஷோபனா பாடி இருக்காங்களாம், யாருன்னு தெரியலையே.
முதல் படத்திலேயே நல்லா மெலடி கொடுத்திருக்கிறார் பாருங்க YSR. இளையராஜா வீட்டு இட்லிப் பானையும் இசையமைக்கும்-னு சும்மாவா சொன்னாங்க. பாட்டை படிங்க. நல்லா கேளுங்க.
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது
என் நெஞ்சில் பாலூரும் அன்புத் தவிப்பு
தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு
சேரும் நதி ரெண்டுதான் பாதை இனி ஒன்று தான்
வெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
https://www.youtube.com/watch?v=JwjFrXixGfA
என்ன படம்னு கேட்டா அரவிந்தன்-னு தெரியாதான்னு சொல்லுங்க. பாட்டை எழுதுனது யாருன்னு தெரிஞ்சா இங்கேயே சொல்லுங்க.
Murali Srinivas
11th February 2015, 06:22 PM
எம்எஸ்வி டைம்ஸ் விழா தொடர்ச்சி
செல்வின் சேகர் பின்னணி இசைக் குழுவில் பணியாற்றியவர் என்பதனால் அவர் பேச்சு பெரும்பாலும் ரிரெகார்டிங்கிலும் பாடலுக்கு முன்பு வரும் prelude, பாடலுக்கு இடையே வரும் interlude போன்றவற்றில் எம்எஸ்வி எப்படிப்பட்ட அற்புதங்களை செய்திருக்கின்றார் என்ற pattern-ல் அமைந்திருந்தது. அவர் உதாரணமாக குறிப்பிட்ட அந்த இசைக் கோர்வைகளை வாயினாலே வாசித்துக் காட்டி விட்டார்
அடுத்ததாக தாயன்பன் எடுத்துக் கொண்டது போல் சேகர் ஒரு பாடலை எடுத்துக் கொண்டார்.. அது காத்திருந்த கண்கள் படத்தில் வரும் காற்று வந்தால் தலை சாயும் நாணல் பாடல். அந்தப் பாடலின் அடுத்த வரி காதல் வந்தால் தலை சாயும் நாணம் பாடலை அமைத்திருக்கும் முறையை விளக்கிய சேகர் தலை சாயும் நாணல் என்ற வார்த்தைகளின்போது இசையும் வரிகளுமே சாய்வது என்ற உணர்வை பாடல் கேட்பவனுக்கு எப்படி கொண்டு வந்து விடுகிறது என்பதை எடுத்து சொன்னார். இதை அவர் சொல்லும் நேரத்தில் வந்திருந்த பார்வையாளர் ஒருவர் இந்தப் பாடலை MP 3 வடிவத்தில் play செய்ய பாடலின் இடையிசை சிறப்பு பற்றியெல்லாம் சேகர் விளக்கினார். எனக்கு அந்த அளவிற்கு இசைக் கருவிகளைப் பற்றிய ஞானம் இல்லை என்பதால் என்னால் அதை இங்கே விவரிக்க முடியவில்லை
அந்த நேரத்தில் விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உள்ளே நுழைந்தார். எர்ணாகுளம் நகரில் ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு விமானம் ஏறிய அவர் விமானம் தாமதமானதால் விழாவிற்கு தாமதமாக வந்தார். அவர் வரும்போது மற்ற சிரபூ விருந்தினர்கள் அனைவரும் (எம்எஸ்வி உள்பட) விடை பெற்று சென்று விட்டனர். மேடையேறிய ஜெயச்சந்திரன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தன்னைப் பொறுத்தவரை எம்எஸ்வியை விட ஒரு சிறந்த இசையமைப்பாளரை பார்த்ததில்லை என்றார். தன் சொந்த கிராமத்தில் [கேரளத்தில் பாலக்காட்டிற்கு அருகில் என்று அவர் குறிப்பிட்ட நினைவு.) டூரிங் டாக்கிஸ் கொட்டகையிலிருந்து பதி பக்தி படத்தின் சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர் பாடலை கேட்டேனோ அன்று முதல் எம்எஸ்வி ரசிகன் ஆகி விட்டேன் என்றார். இப்போதும் தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் எம்எஸ்வி இசையில் சுசீலா பாடல்களை கேட்டுவிட்டுதான் தூங்க போவதாக சொன்னார்
அதன் பிறகு அவரும் ஜெயஸ்ரீ அவர்களும் அந்த 7 நாட்கள் படத்திலிருந்து கவிதை அரேங்கேறும் நேரம் பாடலை பாடினார்கள். அதை பாடி முடித்தவுடன் மேடையை விட்டு இறங்க முற்பட்ட ஜெயச்சந்திரனிடம் மற்றுமொரு பாடலைக் கொட்ட பாட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்க மூன்று முடிச்சு படத்தில் அந்தாதி பாணியில் கண்ணதாசன் எம்எஸ்வி அமைத்திருந்த ஆடி வெள்ளி தேடி உன்னை பாடலையும் பாடினார். இரண்டு பாடல்களுக்கும் அமோக வரவேற்பு.
விழாவிற்கு வருகை தந்த ஜெயச்சந்திரனை கௌரவிக்கும் விதமாக முத்தான முத்தல்லவோ படத்தில் எம்எஸ்வி இசையில் அவர் பாடிய பாலபிஷேகம் செய்யவோ பாடலை ஈரோட்டை சேர்ந்த பேராசிரியர் ஞானசேகர் பாடினார்.
(தொடரும்)
அன்புடன்
chinnakkannan
11th February 2015, 08:59 PM
என்ன நீங்க நிலாப் பாட்டை அதுக்குள்ள முடிக்க சொல்றீங்க. //நான் எங்க ஓய் சொன்னேன்..நீங்க எப்ப முடிச்சாலும் ஒண்ணு ரெண்டு நிலா விட்டுப்ப்போயிருக்கும்லா.. அதச் சொல்லாம்னு தான் :)
chinnakkannan
11th February 2015, 09:11 PM
//சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்// -நைஸ் முரளிங்க்ணா..ம்ம் இந்தப்பாட்டு வெகு அழகான பாட்டு.
ஆடி வெள்ளி தேடிவருமும், வசந்தகால நதிகளிலேயும் அருமையான பாடல்கள்..மூ.மு..சிந்தாமணியில் தான்பார்த்தேன்..(கல் நாயக்.. சிந்தாமணி தியேட்டர் இருக்கும் இடத்தின்பெயர் வெத்தலைப் பேட்டைஅதற்கு முந்தின ஸ்டாப் நெல் பேட்டை.கூகுள்ளலாம் பார்க்கலை! ) – அம்சவல்லி ஹோட்டல் என்று ஒன்று உண்டு நான்வெஜ்.. நான் சாப்பிட்டதில்லை.. பிரியாணி நன்றாக இருக்கும் எனச் சொல்வார்கள்.இன்னும் இருக்கிறதா தெரியவில்லை
பாலாபிஷேகம் செய்யவோ உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ வும் நல்ல பாட்டு.. வீடியோகிடைக்கலை..
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய் மலர் சிந்திடும் மலரே வாராயோ…இதுவும் இங்கு வரவில்லை என நினைக்கிறேன்
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FsRfUMhZPOI
நைஸ்ங்க்ணா. தொடருங்கள்
chinnakkannan
11th February 2015, 09:46 PM
//சரி பாட்டுக்கு வருவோம். பல்லாங்குழி-ன்னு ஆரம்பிக்கற பாட்டு இது ஒண்ணா மட்டும் இருக்கலாம். மத்த பாட்டுல நடுவில வந்திருக்கான்னு தெரியலையே. சரி இந்த பாட்டு இந்த வட்டத்தை வச்சே எழுதி இருப்பாங்க. கேட்டால் நல்லா இருக்கிற மாதிரிதான் இருக்கு.ஆனால் ஏதாவது அருத்தம் பொருத்தம் இருக்கான்னு உங்களை மாதிரி விவரம் தெரிஞ்சவங்கதான் சொல்லணும்//
இப்படியா கிளறி விடறது..
**
அதுல பாருங்கோ கல் நாயக்… காதலன் அப்புறமா வர்றேன் டியர்னு சொல்லிட்டுப் போய்டறான்…போறதுக்கு முன்னாடி அவன் நினைவா என்ன வேணும்னு கேக்கறான். இன்னொஸண்ட் ஃபெல்லோ..பின்ன பிரியற சோகத்துல அப்படியே இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்க வேண்டாமோ
செய்யலை..சரி..இந்த இளவட்டப் பொண்ணுக்காவது தெரியப்படாதோ.. முழியும் முழியுமா பாவாடை சொக்கா தாவணில்ல நல்லாத் தான் இருக்கா..காலேஜ் போற பொண்ணு தான்.. ஹேய் ஒரு தெளஸண்ட் ருபீஸ் கொடுத்துட்டுப் போயேண்டா ஆர் எம் கேவிலெ லேட்டஸ்ட் சுடிதார் வந்துருக்கு நீ வர்றச்சே ஜோரா அதப் போட்டுண்டு வருவேனே..ஒனக்குப் பிடிக்குமே’ன்னு ஐஸாவது வைக்கலாம்.
இந்தப் பொண்ணு என்னடான்னா அந்தக்கால நங்கைகள் மாதிரி கிவ் மீ ஒன்லி ஒன் ருபீ…உன் நினைவா வச்சுக்குவேன்..னு கேக்க அவனும் அல்பமேன்னு பாத்து பேண்ட்பாக்கெட்ல தேடி ஒரு ரூபா கொடுத்துட்டுப் போய்டறான்
இந்த ஆம்பளைங்களுக்கு ஏகப் பட்ட டைவர்ஷன்ஸ் இருக்கு. படம், நண்பர்கள் அலுவலக வேலை என. அப்படி இப்படின்னுகாதல் நினைவை க் கொஞ்சம் அமுக்கிக்கலாம் தான் இல்லியோ..ஆனா இந்தப் பொம்மனாட்டிகள் மனசுல வளர்ற காதல் இருக்கு பாருங்க
நாட்பட மேலுமே நன்றாய்ப் பெருகிடும்
ஆட்கொல்லி ஈதேதான் ஆம்
அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க.. பொண்ணாகப் பட்டவளுக்கு கண்,மனம் செவி, உடல் எல்லாம் இந்தக் காதல் புகுந்து புறப்பட்டு காதலன் மேல நினைவு மேவிமேவி எழுந்து கொண்டே இருக்கும்.
பாதகத்தைச் செய்துவிட்டே போய்விட்டான் கண்ணனவன்
…பருவங்கள் எனையொன்றும் செய்வதில்லை கேள்தோழி
ஆதவனும் நன்றாக அருங்கொடுமை செய்கின்ற
…அழகான கோடையிலே குளிர்ந்துடுதே மேனியடி
சாதகமாய் வீசுகின்ற வாடையெனுங் குளிர்காற்று
…தக்கபடி உடல்நோக உளம்நோக வைக்குதடி
பாதகத்தி! போனவுயிர் எப்பொழுது வருமென்று
.பரிதவிக்கும் மனவோசை அவருக்குக் கேட்டிடுமோ.
அப்படின்னு தோழியை எல்லாம் திட்டிக்கிட்டு இருப்பாங்கண்ணா இந்தப் பொண்ணுங்க!
ஸோ இந்தப் பாட்டுல கைல காசு அதான் ஒத்த ரூபா தட்டுல வச்ச தோசை காசும் வட்ட்ம தோசையும் வட்டம்.. சாப்பிடலாம்னு பார்த்தா கள்ளக் கண்ணன் கண்சிமிட்டறாம்ப்பா.. தோசைக்கு மிளகாப்பொடித் தொட்டுக்கலாம்னு பார்த்தா ஓ காதலனுக்குக் காரமேறுமேன்னு தொட்டுக்காமயே சாப்புடறா… ..ம்ம்
அந்த மாதிரி வட்டமா எதைப் பார்த்தாலும் (டிவில வட்டச் செயலாளர் வண்டு முருகன்னு ஜோக் படம் பார்த்தாலும்) அவன் கொடுத்த ஒரு ரூபாய் நாணயம் கூடவே இலவச இணைப்பாய் அவன் முகம்..என்னபண்ணுவா பாவம்!
அவனும் என்னபண்ணுவான்
வட்டவட்டத் தட்டினிலே வாகாகக் கனிவகைகள்
…வாய்த்திருக்கச் சும்மாதான் வாலிபனும் இருப்பானா
கிட்டகிட்டப் பார்த்திருக்கும் கன்னியவள் இருவிழிகள்
…கொட்டகொட்ட ஏக்கத்தைக் கொட்டுவதும் புரியாதா
தொட்டுதொட்டுப் பேசவந்தால் வெக்கபட்டு ஓடுகிறாள்
..தோரணமாய் நாணத்தைப் பின்னலிலே ஆடவிட்டு
சுட்டாலும் பொன் தானே நம்முடைய பெண்ணென்று
..தொடப்பார்க்க முடியாமல் எசப்பாட்டு பாடுகிறான்
எனில் அவனும் பாட ஆரம்பிச்சுடறான்.ஃபைனலா காண்றது கண்டது கனவுன்னு காரிகைக்குக் கண்ல கண்ணீர் மல்குது (எத்தனை க!)..
**
ஆமாங்க்ணா இந்தப்பாட்டுல அவனும் பாடிடறான்.கனாலயே..
அப்படின்னு யுகபாரதி எழுதியிருக்கார்.
//அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்க்கிறேன்
அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரே உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி //
நல்லாத் தானே இருக்குங்க.. :) ( இனிமே விளக்கம் கேப்பேன்..என நீங்கள் முட்டிக்கொள்வது என் மனக்கண்ணில் தெரிகிறது :) )
chinnakkannan
11th February 2015, 09:52 PM
//சிறுவயதில் நான் கூட பல்லாங்குழி விளையாடி இருக்கேன். எங்க அம்மா பொறந்த வீட்டுல எஞ்ஜோட்டு பசங்க கூடத்தான். எப்பிடின்னு தான் தெரியலை. நீங்க இங்க குடுத்து இருக்கறது எல்லாம் புதுசா இருக்கு. இல்லை ஒண்னும் தெரியாமலேதான் விளயாண்டிருக்கேன் போல.// நானும் விளையாடி இருக்கேன்..அனேகமா புளியங்கொட்டை, அப்புறம் இந்த சிகப்பு முத்து குட்டிக்குட்டியா இருக்குமே.. ஆனா எனக்கும் இது கொஞ்சம் புதுசாதான் இருக்கு..மறந்து போச்சு என நினைக்கிறேன்..பசு நினைவிருக்கு.. ஒரு குழி விட்டு மத்த முத்துக்கள்ளாம் எடுத்துக்கறது.அப்புறம் ஒவ்வொரு முத்தா எல்லா ப் பக்கமும் போட்டு வர்றது .என.அதெல்லாம் நினைவிருக்கும்ம்..
rajraj
12th February 2015, 07:34 AM
இன்னும் காசட் தானா
Reminds me of what Shashank (flute player) said to me when I asked him to autograph a cassette ---" innum cassette-aa?" This was more than 30 years back when carnatic music on CDs were not that common ! :lol:
kalnayak
12th February 2015, 10:30 AM
( இனிமே விளக்கம் கேப்பேன்..என நீங்கள் முட்டிக்கொள்வது என் மனக்கண்ணில் தெரிகிறது :) )
சேச்சே. அருமையான விளக்கம். இப்பத்தாங்ணா நல்லா புரியுது. நன்றி. இனிமேல் இந்த பாட்டும் எனக்கு நல்லா பிடிக்கும். அது மட்டுமில்ல, எந்த பாட்டு மேல சந்தேகம் வந்தாலும் உங்களைத்தான் கேட்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேனுங்ணா.
kalnayak
12th February 2015, 10:34 AM
என்ன நீங்க நிலாப் பாட்டை அதுக்குள்ள முடிக்க சொல்றீங்க. //நான் எங்க ஓய் சொன்னேன்..நீங்க எப்ப முடிச்சாலும் ஒண்ணு ரெண்டு நிலா விட்டுப்ப்போயிருக்கும்லா.. அதச் சொல்லாம்னு தான் :)
உண்மைங்ணா. ஒண்னு ரெண்டு இல்லை ஒரு ஐம்பது நூறாவது விட்டுடுமுங்ணா. முடிச்ச பின்னே நீங்க பாத்து போட்டுடுங்க. ஆமாம்.
kalnayak
12th February 2015, 10:39 AM
(கல் நாயக்.. சிந்தாமணி தியேட்டர் இருக்கும் இடத்தின்பெயர் வெத்தலைப் பேட்டைஅதற்கு முந்தின ஸ்டாப் நெல் பேட்டை.கூகுள்ளலாம் பார்க்கலை! ) – அம்சவல்லி ஹோட்டல் என்று ஒன்று உண்டு நான்வெஜ்.. நான் சாப்பிட்டதில்லை.. பிரியாணி நன்றாக இருக்கும் எனச் சொல்வார்கள்.இன்னும் இருக்கிறதா தெரியவில்லை
சி.க.
மதுரை சிந்தாமணி தியேட்டர்ல நானும் சிறு வயசுல படம் பாத்திருக்கேனுங்ணா. ஏரியா பேரெல்லாம் தெரியாதுங்ணா. மத்தபடி நீங்க கூகுள் பார்க்கலைன்னு நம்பிக்கறேனுங்ணா. வேற வழி?
அது சரி. என்ன ஆச்சர்யம் பதிபக்தி படம் வண்ணத்தில்!!!
rajeshkrv
12th February 2015, 10:52 AM
kalnayak,
arunmozhi sang till 2000's i guess . he sang for S.A.rajkumar, sirpi etc and then disappeared.
Murali Srinivas
12th February 2015, 01:02 PM
எம்எஸ்வி டைம்ஸ் விழா தொடர்ச்சி
அதன் பிறகு தாயன்பன் அடுத்த பாடலைப் பற்றிய ஒரு முன்னுரையை சொன்னார். விருப்பத்தோடு மனம் புரியாமல் விதி வசத்தால் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியர். அவர்களுக்கு சந்தர்ப்ப சூழலால் இணைய முடியவில்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருந்து இரு மனமும் ஒன்றுபட்டு முதல் இரவிற்கு தயாராகும் அந்த தம்பதியினரின் குரலாக ஒலிக்கும் இந்தப் பாடல் என்று தாயன்பன் முடிக்க என்ன பாடலாக இருக்கும் என்று சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. உஷாராஜ் குத்து விளக்கெரிய என்று ஆரம்பிக்க பச்சை விளக்கு தெரிந்தது. கூடவே ஒரு சில நினைவலைகளும்
பச்சை விளக்கு மிக சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ஒளிமயமான எதிர்காலமும், கேள்வி பிறந்தது அன்று பாடலும் அதன் காட்சிகளும் மங்கலாக நினைவில் இருந்தது. ஆனால் இந்த வாராதிருப்பாளோ வண்ண மலர் பாடல் காட்சி மட்டும் நினைவிற்கே வரவில்லை. அன்றைய நாட்களில் டிவி இல்லாததனால் ரேடியோவே கதி. நடிகர் திலகத்தின் படம் டிஎம்எஸ் சுசீலா, எனவே ஒரு டூயட் பாடலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சௌகார் ஜோடி என்று தெரியும். ஒரு சந்தேகம் இருந்தது.
கல்லூர்ரியில் படித்துக் கொண்டிருக்கும்போது பச்சை விளக்கு மறு வெளியீடாக வெளியானது. மதுரையில் போத்திராஜா என்று ஒரு தியேட்டர் இருந்தது. செல்லூர் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்திருந்த அந்த தியேட்டருக்கு செல்ல வேண்டுமென்றால் வைகை ஆற்றை கடந்து போக வேண்டும். அப்படி ஒரு மதியக் காட்சிக்கு ஒரு சில நண்பர்கள் போகிறோம். படம் பார்க்கிறோம். இடைவேளைக்கு பிறகு இந்த பாடல். குத்து விளக்கெரிய என்று விஜயகுமாரி ஆரம்பிக்க மனதில் ஒரு சின்ன பகீர். இருந்தாலும் இந்தப் பக்கம் விஜயகுமாரி பாடுவாராக இருக்கும். டிஎம்எஸ் பாடும்போது தலைவர் காட்சிக்குள் வந்துவிடுவார் என்று எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம். அப்படி நினைக்க காரணம் குலமா குணமா படத்தில் உலகில் இரண்டு கிளிகள் பாடல் காட்சியில் முதலில் ஜெய் வாணிஸ்ரீ ஜோடியை காண்பித்தாலும் அடுத்த சரணத்தில் நடிகர் திலகம் பத்மினி ஜோடி பாடுவது போல் வரும். இங்கும் அது போன்று இருக்கும் என்று நினைக்கிறோம்.
சுசீலா பல்லவி பாடி முடித்து இடை இசை முடிந்து சரணம் துவங்கும் நேரம். தென்னை மரத்தில் சாய்ந்து நிற்கும் எஸ்எஸ்ஆர் "கண்ணழகு பார்த்திருந்து" என்று ஆரம்பிக்க அப்படியே வெறுத்துப் போனோம்.[எஸ்எஸ்ஆர் பிரியர்கள் குறிப்பாக கலைவேந்தன் போன்றவர்கள் மன்னிக்க] எங்களோடு வந்திருந்த இரண்டு நண்பர்கள் எழுந்து வெளியே போய்விட்டார்கள் [இதற்கும் தம்மடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்].அன்று முதல் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பின்னாட்களில் டிவியில் பார்த்தாலும் அந்த ஏமாற்றம்தான் நினைவிற்கு வரும்.
இந்தப் பாடல் முடியும்போதே இரவு மணி 9.50 ஆகிவிட்டது. ஆனால் இசைக்குழுவினர் இனியும் பாடல்கள் இருக்கின்றன என்கிறார்கள். அடுத்த பாடல் என்னவென்று கேட்டுவிட்டு கிளம்பலாம் என்றால் அப்போது வருகிறது அறிவிப்பு அடுத்த பாடல் பிராப்தம் திரைப்படத்தில் இடம் பெற்ற சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்று. எழுந்தவன் உட்கார்ந்து விட்டேன். கிருஷ்ணராஜும் உஷாராஜும் அருமையாக பாடினார்கள். மணி 10. அடுத்த பாடல் பற்றி சொல்ல வந்த தாயன்பன் எப்போதும் எஸ்பிபிக்கும் சிந்து பைரவி ராகத்திற்கும் ஒரு chemistry உண்டு என்றும் அந்த ராகத்தில் எஸ்பிபி பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்று சொல்லிவிட்டு அவர் அறிவித்த பாடல் சிம்லா ஸ்பெஷல் படத்தில் இடம் பெற்ற உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா. ஞானசேகர் பாட ஆரம்பிக்க கிளம்ப மனமில்லையென்ற போதும் அதற்கு மேல் இருந்தால் ரொம்ப லேட்டாகி விடும் என்பதனால் ஹாலிலிருந்து வெளியேறினேன். அதன் பிறகும் கச்சேரி தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது.
(முற்றும்) .
.
அன்புடன்
kalnayak
12th February 2015, 01:40 PM
நிலாப் பாடல் 10. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
-----------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாட்டை எழுதறப்போ எனக்கு என்னவோ ஒரு சிட்டுக்குருவி இமயமலையைப் பார்த்து வியந்து அதைச் சொல்ற உணர்ச்சிதான் எனக்கு வருது. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் தமிழ் தெரியுது-ன்ற தைரியத்துல எழுதுறேன். பாட்டை என்ன சொல்றது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இவ்வுலகில்?
முதலில் கவியரசர். இன்னும் தமிழ்நாட்டுலய பலபேருக்கு இந்த பாட்டோட பொருள் தெரியலை. அவங்க இந்த பாட்டை சும்மா எங்கயாவது கேட்டிருப்பாங்க. ஏதோ காய் கறிகளை பத்தி சொல்லியிருக்கார்னு நெனைப்பாங்க. படத்தை பார்த்தவங்களுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கும். கவியரசர் தன்னோட திறமையை காட்டணும்னு எழுதினாரோ இல்லை அதுக்காக நெறய மெனக்கெட்டாரோ தெரியலை. மன்னிக்கணும், கவியரசர் மெனக் கெட்டுதான் தன்னோட கவித்திறமையை காட்டணும்ங்கிற நெலமையில் இருந்ததில்லை-ன்னு நெறய பேர் சொல்லியிருக்காங்க. ஜஸ்ட் லைக் தட் இது அமைஞ்சிருக்கும். இல்லை சிலவரிகளை சொன்ன பின்னாடி பாடல் முழுவதும் இப்படியே சொன்னால் என்னன்னு சொல்லியிருக்கணும். ஆக மொத்தத்துல இந்த பாட்டுல அவரோட தமிழ் ஆளுமை அழகாப் புலப்படுது. இந்தப் பாட்டை வைத்து ஒரு பெரிய பாடமே நடத்த்தலாம் அவ்வளவு மேட்டர் இருக்கு. எத்தனை காய்கள் வருதுன்னு எங்கயோ படிச்சேன். நினைவில் இல்லை இப்ப. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
ரெண்டாவது மெல்லிசை மன்னர்கள். பாட்டை எழுதின பின்பு மெட்டு போட்டாங்களோ, மெட்டு சொல்லி பாட்டு எழுதினாங்களோ.எனக்குத் தெரியலை. அளவான இசையை இனிமையாகூட்டியிருக்காங்க இந்த பாடலுக்கும். கேட்க கேட்க சலிக்கலை. பாட்டு வரிகளைப் பத்திதான் மனசு யோசிக்குது - இந்த காய் வச்சு என்ன சொல்றாங்க. எத்தனைப் பாடல்களில் நாம் வரிகளைப் பற்றி இப்படி யோசனை செய்து கேட்க முடியும்? அங்கயெல்லாம் இசை, வார்த்தைகளை மூழ்கடித்த்து இருக்கும். இங்க அப்படியா?
அப்புறம் நடிகர் திலகம், தேவிகாம்மா. பாட்டுக்கு ரெண்டு ஜோடி. ரெண்டாவது ஜோடி பாலாஜி மற்றும் வசந்தி. காதல் கல்யாணத்தில் முடிந்து முதல் இரவில் (இல்லை இல்லை தேன்-நிலவில்-னு சொன்னா ரொம்ப பொருத்தமாய் இருக்கும்இல்லையா நிலாவை பார்த்து பாடுவதினால்? ) பாடுவதாக அமைந்த பாடல். நடிகர் திலகம் அந்த குறும்பு கொப்பளிக்க கொஞ்சி கொஞ்சி பாடுவதை (சாளரக் கதவை மூடி பாடிக்கொண்டே கண்ணை மூடி தலையை தலையை ஆட்டிக்கொண்டு அறையின் உள்ளே போவார் பாருங்கள். அடுத்து அந்த தோள் இரண்டையும் கீழிறக்கிகண்ணை மூடி தேவிகாவை தொடருவார். பார்க்க பார்க்க சுகமாய் இருக்கும். இதனால்தான் என்னவோ பெரும்பாலான நடிகர் திலகம் ரசிகர்களுக்கு தேவிகான்னா மிகவும் பிடித்த்திருக்கிறது. பாலாஜியும் தன் குறும்புத்தனத்தை வசந்தியிடம்நன்றாக வெளிப்படுத்துவார். நகைச்சுவை படம் வேறு ஆச்சா. படம் பார்ப்பவர்களுக்கு பெரிய விருந்துதான் இந்த பாடல்.
பாடலை பாடியவர்களைசொல்ல மறந்தால் எழுத கணினி கிடைக்காதே. பாடகர் திலகம், இசையரசி, PBS மற்றும் ஜமுனாராணி. இவர்களைப் பற்றி சொல்வதற்கு எனக்கு என்ன தெரியும்?
இப்படி கூட்டணி கெடச்சு அருமையாய் கொடுத்த B.R. பந்துலுவின் அருமையான டீம் வொர்க் இந்த முழு படமுமே. சரி. பாட்டு வரிகளைப் பாப்போமே.
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)
கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
(கன்னிக்காய்..)
மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
(இரவுக்காய்..)
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)
ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
(ஏழக்காய்..)
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ
(உள்ளதெல்லாம்..)
கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
பாட்டை இப்போது பார்ப்போம்.
https://www.youtube.com/watch?v=muWBARd3oAk
இப்படிப்பட்ட ஒரு பாட்டை பாண்டியன் பாடினால் யாருமே "பலே பாண்டியா"ன்னு தான் சொல்வாங்க இல்லையா?
(எழுத்துப் பிழையிருப்பின் பொறுத்தருள்வீர்)
chinnakkannan
12th February 2015, 02:25 PM
முரளிங்ணா.. வெகு அழகிய பதிவு.. நாங்களும் இன்னிசைக் கச்சேரி கேட்ட உணர்வு.. நன்றி..போத்திராஜாவில் தான் ஆண்டவன் கட்டளை பார்த்தகதை முன்பு எழுதியிருந்தேன்.. பச்சை விளக்கு எனக்கும் அந்த எஸ் எஸ் ஆர் பாட்டு கொஞ்சம் ஏமாற்றமே..படமும் இப்போது நினைவில்லை..ஒரே ஒரு ஜோக் மட்டும் நாகேஷின் நினைவுக்கு வருகிறது.. இவளா இவ பதினெட்டு மாசம் என்பது போல் வரும்..
இன்னும் எழுதுங்கள்..
கல் நாயக்.. சமர்த்தாய் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்..அத்திக்காய் பிடிக்காதவர் உண்டோ..ம்ம் ஈவ்னிங் வீட்டுக்குப் போய் ஃபர்தர் அலசப்பார்க்கிறேன்.. இப்போதைக்கு - உள்ளமெலாம் மிளகாயோ ஓவ்வொருபேச் சுரைக்காயோ என வரும்.. நார்மலா தூதுவிளங்காய் என எழுத்தில் சொல்லப்படும் காய் கடையில் கேட்கும்போது தூதுவளங்காய் என்றுதான் கேட்கப்படும்..அதை சாமர்த்தியமாக தூது வழங்காய் வெண்ணிலா என எழுதியிருப்பார்..
ஞாயிற்றுக் கிழ்மை சந்தை மதுரையில் என் அண்ணா இந்த தூதுவளைக் கீரை தான் வாங்கி அதன் இலைகளை ஆய்ந்து (ரொம்பக் கஷ்டங்க.. முழுக்க முள்ளா இருக்கும்..பார்த்து ப் பிய்க்கணும்..அம்மா பின் மன்னி செய்து தருவார்கள்)அதை நெய்யில் வறுத்து தினசரி உண்பார்..( நெஞ்சுக்கபம், அப்பறம் ஜெனரலா நலல்து என்பதற்காக)..தூதுவளங்காய் எதற்கு உபயோகம் எனத் தெரியவில்லை..ஆனால் அந்த இலைகளினூடே கொஞ்சம் குட்டி க் குட்டியாய் இருக்கும்..வெகு குட்டி நெல்லிக்காய் இந்த அரை நெல்லிக்காயின் விதைசைஸில் பச்சை உருண்டையாய் இருக்கும்..
கொத்தவரங்காய் என்பது லோகல் தமிழ்..கொற்றவரைக்காய் என்பது செந்தமிழ்..எவ்ளோ அழகு..
ஆலங்காய் ஆலமரத்துக்காய்.. ஆனால் ரொம்பக் கசக்குமாம்..அதுவும் இந்த ஆலம் இருக்கிறதே (அட நடிகையை இல்லீங்ணா) அந்த வார்த்தைக்கு இன்னொரு பொருள் உண்டு.. விஷமாம்.. கசக்கின்ற வெண்ணிலவேன்னு பொண்ணும் பையனும் சொல்றதா வச்சுக்கலாம்..ஆனா அது இடிக்குதே..சரி..ஆலங்காய் வெண்ணிலவு என்றால் ஆலமரத்தின் மேல் காய்கின்ற வெண்ணிலவு.. என்றும் கொள்ளலாம் இல்லியோ..
என்ன ஜாலி மூட்ல இருக்கற திருமணத் தம்பதிகளுக்கு நிலவோட கிரணங்களே சூடா இருக்குதாம்..பொண்ணு வந்து.. ஹே நிலாக்குட்டி சமர்த்தோல்லியோ என்னவர் திக்குல காய்.. என்று சொல்கிறாள் என்று ஆரம்பித்துப் போகிறது பாட்டு..
மங்கை எந்தன் கோவைக்காய்க்கு ரொம்ப மண்டை காய்ந்தேன் முன்னாலே.. கடைசில தான் அவ தன்னோட கோவை - தன் மன அரசனைச் சொல்றான்னு புரிஞ்சுது..
ம்ம் நல்ல பாட்டுக்கும் நினைவூட்டலுக்கும் நல்ல ரைட் அப்புக்கும் தாங்க்ஸ் :) யாரங்கே இவருக்கு ஒரு கொத்தவரங்காய்ப் பருப்பு உசிலி செய்து கொடுங்கள் (எனக்குப் பிடிக்குமே) :)
kalnayak
12th February 2015, 02:46 PM
சி.க.
உண்மையாவே அதுல சொன்ன எத்தனைக் காய் (ஹா இப்பிடின்னு ஒரு 'எத்தனைக்' காயா?) இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஒரொரு காயா சொல்லி இந்த காய்தான் இதுன்னு உங்களை மாதிரி யாராவது சொன்னாதான் எனக்கு தெரியும். அந்த ஆலங்காய்க்கு வெள்ளையாய் இருக்கிற காய் என்று பொருள் வருமா? இந்த பாட்டோட ஸப்-டைடில் ஆங்கிலத்தில பாருங்களேன்.
ரொம்ப நன்றிங்ணா.
Russellzlc
12th February 2015, 09:19 PM
முரளி,
எம்எஸ்வி டைம்ஸ் விழாவை 4 பகுதிகளாக விவரித்து எழுதியமைக்கு மிக்க நன்றி. நேரில் பார்க்காத குறையை போக்கியது. குத்து விளக்கெரிய பாடலில் ஏற்பட்ட அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்கும் இதைப் போன்ற அனுபவம் உண்டு. தங்கப்பதுமை படத்தில் ஜிலுஜிலுப்பான பாடலான ‘முகத்தில் முகம் பார்க்கலாம்..’ பாடல் திரு.சிவாஜி கணேசனுக்கும் பத்மினி அவர்களுக்கும் போலிருக்கிறது என்று படத்தை பார்க்கும் முன் நினைத்திருந்தேன். படத்தில் அந்த பாடலுக்கு டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் நடித்திருப்பார். ஆனாலும், கணிப்பு தவறியது என்று சொல்லலாமே தவிர, (ஏற்கனவே சொக்கட்டான் ஆடி மன்னர்களை அடிமைப்படுத்தும் லக் பேஷ்வாவை பிடித்துப் போனதாலோ என்னவோ)ஏமாற்றமில்லை.
கல்நாயக்,
அத்திக்காய் காய் காய்... பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அருமையாக அலசியுள்ளீர்கள்.
‘கரிக்காய் பொறித்தாள், கன்னிக்காய் தீர்த்தாள்...’ என்ற காளமேகப் புலவரின் பாடல் தந்த தாக்கத்தால் கவியரசர் எழுதியது இந்தப் பாடல். இதே போல, ராமச்சந்திர கவிராயர் எழுதிய,
‘கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா?’
என்ற பாடலின் தாக்கத்தால் பாவமன்னிப்பு படத்தில் கவியரசர், எழுதிய பாடல், ‘அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்.....’
நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்திக்காய் பாடலில் ஒரு சிறு திருத்தம். 5வது பாராவில் ‘இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏலக்காய்’ என்று உள்ளது. அதில் ‘ஏலக்காய்’ என்பதற்கு பதிலாக ‘ஏழைக்காய்’ என்று இருக்க வேண்டும். உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். இருந்தாலும் டைப் செய்யும்போது ஏற்பட்ட எழுத்துப் பிழையாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நிலவு ஒரு பெண்ணாகி பாடலில் ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு என்று நீங்களும் சின்னக் கண்ணனும் பேசிக் கொண்டீர்களே. பொன்னூஞ்சல் படத்தில் ‘முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு.... ’ பாடலைக் கேளுங்கள். ரசிக்க வேண்டிய இடம் இன்னும் அதிகம்.
சின்னக்கண்ணன்,
‘ஆலம் இருக்கிறதே (அட நடிகையை இல்லீங்ணா)’ ........... வேலை டென்ஷன் மறந்து சிரித்தேன். கோவைக்காய்க்கு நீங்கள் கொடுத்த விளக்கம்.... கொன்னுட்டீங்கப்பு. அப்புறம்... எனக்கு வாழைப்பூ பருப்பு உசிலி பிடிக்கும்.
நிறைய எழுத வேண்டும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று ஆசை. நேரம் கைகளை கட்டிப் போடுகிறது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Gopal.s
13th February 2015, 04:50 AM
முரளி,
தங்கள் எம்.எஸ்.வீ டைம்ஸ் எழுத்துக்கு நன்றி.
இளையராஜா திரியில் நான் எழுதிய ஒன்று.
அப்படியெல்லாம் ,மற்ற இசையமைப்பாளர்களை புறம் தள்ளி ,இளையராஜாவிடம் மட்டும் எல்லாம் அடைந்து விட முடியாது. நான் ,இளையராஜா விஸ்வநாதனை மாடல் ஆக கொண்டு செய்த முயற்சிகளை,அதில் அடைந்த தோல்விகளை விளக்க போகிறேன். நான் யாருடனும் ஒப்பிடாமல்,செய்ய நினைத்திருந்ததை நீங்கள் ஒப்பீடு செய்ய என்னை தூண்டியதற்கு நன்றி. இது ,இக்கட்டுரைக்கு கூடுதல் பலமே.
அவர்(எம்.எஸ்.வீ -டி.கே.ஆர்,எம்.எஸ்.வீ) இசையில் யாராலும் கிட்டே நெருங்க முடியாத பாடல்களை மெலடி,குத்திசை,துள்ளிசை,சோதனை, வெளிபாணி எல்லாமே சேர்ந்தவை. ஒரு 100 ஆவது பட்டியல் இடுகிறேன்.
இளைய ராஜா இசையில் என்னை மறந்ததுண்டு. விகசித்ததுண்டு. பழைய நினைவுகளில் அகப் பட்டு இன்ப சித்திரவதை அடைந்ததுண்டு. ஆனால் எஸ்.எஸ்.வீ இசையில் mysterious divinity with psychedelic unpredictability ,இளையராஜாவின் எந்த பாடலிலும் காணக் கிடைப்பதில்லை. அதுதான் எம்.எஸ்.வீ . நான் தரும் நூறு பாடல்களை சுகமாக கேட்டு விட்டு ,வாதம் புரியுங்கள்.
இளையராஜா ,முயற்சியால்,பயிலும் ஆர்வத்தால் தன்னை உருவாக்கி செதுக்கி கொண்டவர். எம்.எஸ்.வீ எந்த இலக்கணத்திலும் வராத சுயம்பு.அவரின் மூளை ,கிட்டத்தட்ட தாமஸ் ஆல்வா எடிசன் போல.
அதே மாதிரி திட்டமிட்டு கச்சிதமாக நோட்ஸ் கொடுத்து இசை கலைஞர்களை ஆட்டுவிப்பது ஒரு வகை.,
அவர்களை தட்டி கொடுத்து மனோதர்மம் என்று சங்கீதத்தில் சொல்ல படும் வகையில் planned &Spot improvisations க்கு இடம் கொடுப்பது இன்னொரு வகை.
நான் இரண்டாவது வகையில் தான் பல உன்னத பாடல்களை கண்டிருக்கிறேன்.
எம்.எஸ்.வீயுடையது முக்கால்வாசி இரண்டாம் வகையே.
கலை வேந்தன்,
தங்கள் பங்களிப்பு நன்கு உள்ளது. வாழைக்காய் பருப்புஸிலி தங்களை இனம் காட்டினாலும் , திரை பட ரசனையில் ,குழி பறித்து ,எச்சில் துப்பி மண் போட்டு மூடும் திரை அனுபவத்தோடு தாங்கள் ஒன்றி தேய்ந்து நிற்பது ஆச்சர்யமே. இத்தனைக்கும் பத்திரிகையாளரின் பக்குவம் அவ்வப்போது வெளிப்பட்டாலும் இன்னும் சில தேவையில்லா வன்மங்கள்,எதிர்ப்புணர்வு இவற்றை தவிர்த்தல் ,உங்கள் பணிக்கு மேலும் மெருகு சேர்க்கும். தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
சி.க,
பிள்ளையில்லா வீட்டில் துள்ளி விளையாடி கொண்டிருக்கிறீர்கள். ஜாலியாய் ரசித்து மகிழ்கிறேன்.
chinnakkannan
13th February 2015, 10:03 AM
எனக்கு வாழைப்பூ பருப்பு உசிலி பிடிக்கும்.// கலைவேந்தன் நன்றி. வா.பூ பருப்புசிலில்லாம் ஒரு கனா மாதிரிதான் கண்ணுல நிழலா ஆடுது.. மதுரையில் அன்னை மற்றும் சகோதரிகள் செய்தது தான்.. நான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் அந்தக்காலத்தில் (துபாய்) வா.பூ கிடைக்காது.. எனில் கொ.ப. உ தான்.
இங்கிட்டு மஸ்கட்ல கிடைச்சாலும் பண்றதில்லை.. இப்போ லேட்டஸ்ட் அடிஷன் இப்போ வா..தண்டு பருப்புசிலி ( கொஞ்சம் இளசாக புது நடிகை அமைரா மாதிரியான வாழைத் தண்டு இங்கிட்டு ஒரு ஆயிரம் கி.மி தொலைவில் இருக்கிற ஸலாலா என்ற ஊரிலிருந்து சம் டைம்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும்).. நன்னா இருக்கு …ஒடம்புக்கும் நல்லதாம்..
இந்த வாழைப்பூ இருக்கே அதை க் கட்பண்றதே தனிக் கலை.. நான் அதைப் பார்க்க மட்டு செய்திருக்கேன்.. மெல்ல மெல்ல புறாச்சிறகு மாதிரி இருக்கற பூவிதழைப் பிச்ச்சு உள்ள மேலே தொங்கிக்கிட்டிருக்கிற ஒல்லி ஒல்லி (அதன் பேரென்ன) பிச்சு பின் அதற்குள் தேடி ஒரு போலி ட்வெய்ன் நூலாட்டமா இருக்கற ஒரே ஒரு இழையை மட்டும் பிச்சுப் போட்டு பின் க்ரூப்பாப் படுக்க வச்சு சர்ரக் சர்ரக்னு வெய்ட்டான ஆளு ஹவாய்ச் செருப்பு போட்டுக்கிட்டு மணல்ல நடக்கறா மாதிரியான ஓசையில கத்தியால க் கட்பண்ணி அதைப் பக்கத்துல தண்ணி இருக்கற் பாத்திரத்துல போட்டுடுவாங்க..அப்புறம் தான் ப.உ பண்ணுவாங்க இல்லியோ.. ஆனா வாழப்பூ கட்பண்ணி முடிச்சு க் கட்டக் கடோசில குட்டியா ஒரு கூம்புப் பகுதி கோனிகல் ஷேப் அதைக் கோபுரம்னு சொல்வாங்க..கொடுப்பாங்க..கொஞ்சம் துவர்ப்பு என வித்தியாச டேஸ்ட்டா இருக்கும்.
**
கோபால் வாங்க செளக்கியமா நன்றி.
//பிள்ளையில்லா வீட்டில்// என்னது வாசு திருநெல்வேலி சைவப் பிள்ளையா எனக்குத் தெரியாதே ( நெய்வேலின்னா!).. :) ஆனா நான் ஜாதி பார்த்தெல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கறதில்ல (ஹாய் கரோலின் லிட்டில் பிஸியார்.. .செண்ட்டிங் எஸ் எம் எஸ் டுமை ஃப்ரெண்ட். ஸீ யு!) அப்புறம் இன்னொன்று. நான் ஓல்ட் இல்லியாக்கும் லொக் லொக்..:)
மர்மமான தெய்வீகம் அண்ட் எதிர்பாராமல் மனதுக்குள் புகுந்து அசைக்கும் தன்மை கொண்ட பாடல்கள் – ரைட்டா (மிஸ்டீரியஸ் டிவைனிட்டி அண்ட் சைகடெலிக் அன்ப்ரெடிக்டபிளிட்டிக்கு தமிழ்ப் படுத்திப் பார்த்தேன்!) கொடுங்க லிஸ்ட்.ருசிக்கக் காத்திருக்கிறோம்
கோச்சுக்காம இருந்தா ஒண்ணு கேக்கலாமா.. ப்ளாக் ஆரம்பிச்சுட்டேளா.. எழுதிண்டு இருக்கேளோன்னோ..அதை விட்டுடாதீங்க. :)
kalnayak
13th February 2015, 10:48 AM
சி.க.
நானும் எப்போதாவது அரிதாய் வாழைப்பூ மற்றும் வாழைத்தண்டிலான உணவுகளை உண்பதுண்டு. எனக்குத் தெரியவில்லை நீங்கள் சொல்லும் வாழைப்பூ பருப்பு உசிலி எதுவென்று. எங்காவது உணவு விடுதியில் சாப்பிட்டால்தான் ஆயிற்று.
நான் எழுதிய பாடல் உணவு வகைகளை பேசுவதற்கு உபயோகமாயிற்றே என்று சந்தோஷம். அதுமட்டுமில்லை. இன்னும் கொஞ்ச நாள் இப்படி உங்களிடம் பேசிக்கொண்டிருந்தால் யாரும் நளபாகம் சமைக்க வல்லவராகக் கூடும் இல்லை சாப்பாட்டு ராமராகக் கூடும்.
கோபாலின் பிள்ளையில்லா வீட்டு கமெண்ட்டுக்கு நீங்கள் கொடுத்த பதில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரும் உங்கள் பதிலால் சிரித்திருப்பார்.
rajeshkrv
13th February 2015, 10:56 AM
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப்போலே
https://www.youtube.com/watch?v=plznRYowKdA
chinnakkannan
13th February 2015, 11:17 AM
//சாப்பாட்டு ராமராகக் கூடும்.// கல் நாயக் இதுவேணுமானா நடக்கலாம்.ஏனெனில் நான் சாப்பாட்டுக் கண்ணன்.! :)
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே.. நல்ல அழகியபாடல் ராஜேஷ். நினைவூட்டலுக்கு நன்றி
kalnayak
13th February 2015, 11:22 AM
கல்நாயக்,
அத்திக்காய் காய் காய்... பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அருமையாக அலசியுள்ளீர்கள்.
‘கரிக்காய் பொறித்தாள், கன்னிக்காய் தீர்த்தாள்...’ என்ற காளமேகப் புலவரின் பாடல் தந்த தாக்கத்தால் கவியரசர் எழுதியது இந்தப் பாடல். இதே போல, ராமச்சந்திர கவிராயர் எழுதிய,
‘கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா?’
என்ற பாடலின் தாக்கத்தால் பாவமன்னிப்பு படத்தில் கவியரசர், எழுதிய பாடல், ‘அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்.....’
நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்திக்காய் பாடலில் ஒரு சிறு திருத்தம். 5வது பாராவில் ‘இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏலக்காய்’ என்று உள்ளது. அதில் ‘ஏலக்காய்’ என்பதற்கு பதிலாக ‘ஏழைக்காய்’ என்று இருக்க வேண்டும். உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். இருந்தாலும் டைப் செய்யும்போது ஏற்பட்ட எழுத்துப் பிழையாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நிலவு ஒரு பெண்ணாகி பாடலில் ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு என்று நீங்களும் சின்னக் கண்ணனும் பேசிக் கொண்டீர்களே. பொன்னூஞ்சல் படத்தில் ‘முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு.... ’ பாடலைக் கேளுங்கள். ரசிக்க வேண்டிய இடம் இன்னும் அதிகம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி கலைவேந்தன்,
அவ்வப்போது இப்படியாவது வந்து பார்த்துப் போகிறீர்களே. புதிய தகவல்களையும் பரிமாறி இருக்கிறீர்கள்.
காளமேகப்புலவரின் பாடல் எனக்கு புதிது. அலசுகிறேன். இலக்கியத்தில் உள்ள அருமையான பாடல்களை திரைக்கு தகுந்தவாறு மாற்றுவதில் கவியரசருக்குப்பின் யார் எப்படி இருந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொன்ன "கல்லைத்தான், மண்ணைத்தான்..." என்ற பாடலைத்தான் கவியரசர் "அத்தான் என்னத்தான்" பாடலுக்கு தாக்கமாக எடுத்துக் கொண்டார் என்று நான் கேட்டிருக்கிறேன். எனக்கு அவர் கீதையை ஒரு திரைப் பாடலாக கர்ணன் படத்தில் சொன்னது மிகவும் பிடிக்கும் - "மரணத்தை எண்ணி கலங்கும் விஜய" என்றவுடனே என் உடம்பில் ஒரு அதிர்ச்சி உண்மையாகவே ஏற்படுகிறது.
அத்திக்காய் பாடலில் நீங்கள் சொன்ன திருத்தத்தை கொண்டு வந்துவிட்டேன். முத்துச் சரம் சூடிவரும் பாடலையும் கேட்டாயிற்று. இதிலும் அந்த மச்சத்தைததானே சொல்கிறீர்கள். விடுங்க.இதெல்லாம் விட இன்னும் அதிகமாகவே கவியரசரும், வாலியும் எழுதியிருக்காங்க. தேடணும். இங்க சென்சார் இல்லைன்னா யாராவது ஒருத்தர் எழுதிவிடுவார்கள்.
சரி. உங்களுடைய நாட்டு நடப்போடு கூடிய அடுத்த திரைப்பாடல் பதிவு எப்போ? காத்திருக்கிறோம்.
kalnayak
13th February 2015, 11:28 AM
ராஜேஷ்,
"ஏதோ ஒரு நதியில்" அருமையான மெலடி. முன்பு கேட்டது. மறந்தே போய்விட்டது. *பாட்டை இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்கிறேன். நன்றி.*
kalnayak
13th February 2015, 11:53 AM
முரளி,
MSV times பற்றி நாங்கள் கேட்டுக்கொண்டதை ஏற்று அதிகமான பதிவுகளில் பகிர்ந்து கொண்டதற்கு முதல் நன்றி.
"குத்துவிளக்கேறிய..." உங்கள் நினைவலைகளில் நீங்கள் சொன்ன விஷயம் பலரிடமும் இருந்திருக்கும். காரணமும் நீங்கள் சொன்னதுதான். எனக்கும் பல பாடல்களில் இப்படி அதிர்ச்சி உண்டானது உண்டு. உதாரணத்திற்கு "பூவிழி வாசலில் யாரடி வந்தது..".
நிகழ்ச்சி முழுவதையும் கேட்காமல் நீங்கள் வந்தது இங்கு அனைவருக்கும் சற்று ஏமாற்றமாகத்த்தான் இருக்கும். அந்த பாடல்களையும் மேலும் சில பதிவுகளில் எங்களோடு பகிர்ந்திருப்பீர்களே. இருந்தாலும் இந்த அற்புதமான சில பதிவுகளில் நீங்கள் கேட்ட பாடல்களை சிறப்பாக கூறியமைக்கு மீண்டும் நன்றி.
kalnayak
13th February 2015, 01:02 PM
நிலாப் பாடல் 11. "கண்ணுக்குள் நூறு நிலவா..."
------------------------------------------------------------------------
" கண்ணுக்குள் நிலவு" என்று ஏற்கனவே பார்த்துவிட்டோம். அந்தப் படத்திலும் நிலவுப்பாட்டு, நிலவுப்பாட்டு என்று இருந்தது. இதோ இங்கே காதல் கொண்ட நாயகனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் பாருங்களேன். பாரதிராஜாவினால் நன்றாக படமாக்கப்பட்ட பாடல். நாயகியின் கண்களை பார்த்து நாயகன் நூறு நிலவைப்பார்த்தது போன்ற கனவா என்கிறான். தேவேந்திரன் இசையில், SPB மற்றும் சித்ரா பாடிய வைரமுத்துவின் மிக அருமையான பாடல். இன்னும் எல்லோர் நினைவிலும் நின்றிருக்கும் பாடல். இவ்வளவு அருமையாக பாடல் அமைத்த்த தேவேந்திரன் பின்பு எங்கே போனார் தெரியவில்லை. பாடல் வரிகளை பாருங்கள்.
பெ.குழு: பாபப பாபப..
ஆ: தாதத தாதத..
பெ.குழு: நீநிநி நீநிநி..
ஆ: ஸாஸஸ ஸாஸஸ..
பெ.குழு: நிரிகரி நிதபம கமபம கரிஸநி
ஆ: தப நித ஸாநி ரிஸ ரிகமப
பெ.குழு: தப நித ஸாநி ரிஸ நிதபம பா..
...
ஆ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...
பெ.குழு: அம்பா சாம்பவி சந்த்ரமௌலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஷிவாத்ரிநயனா காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயௌவனா சுபஹரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
...
ஆ: தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றஞ்சொல்லுமா
பெ: கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ்சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
ஆ: வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
பெ: சாஸ்திரம் தாண்டித் தப்பிச் செல்வதேது
ஆ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...
பெ.குழு: பூவே.. பெண் பூவே
இதிலென்ன அதிசயம்
இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம்
இவன் மனம் புரியலையா
...
பெ: ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்
ஆ: உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பமெல்லாமே இருவருக்கும்
பெ: என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
ஆ: ரெண்டா.. ஏது.. ஒன்றுபட்டபோது
பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஆ: ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
ஆ: கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
பாடலைப் பார்த்துக்கொண்டே கேளுங்கள்:
https://www.youtube.com/watch?v=aR0AlapQD3E
கண்ணுக்குள் நூறு நிலாவைக் கண்டவர்கள் வேதம் புதிது கற்றார்களா தெரியவில்லை.
chinnakkannan
13th February 2015, 02:42 PM
இது வெகு அழகிய பாடல் தான் கல் நாயக்.ஆனால் ஏனோ எனக்கு பிக்சரைஷேசன் பிடிக்காது..விஷீவலில் சொதப்பும் பாடல்களில் இதுவுமொன்று..சொன்னாற்போல தேவேந்திரன் என்ன ஆனார்.கிருஷ்ணா ஜி எங்கே போனார்..இருந்தால் டபக்கென்று தகவல்கள் கொடுத்திருப்பார்..வருவார்..ம்ம்
kalnayak
13th February 2015, 03:29 PM
நிலாப் பாடல் 12: "ஆயிரம் நிலவே வா... ஓராயிரம் நிலவே வா."
-----------------------------------------------------------------------
மக்கள் திலகத்தின் மற்றும் ஒரு நிலவுப் பாடல். என்ன இங்கே நாயகியை ஆயிரம் நிலவாய் அழைக்கிறார் அவ்வளவுதான். SPB-யின் ஆரம்ப காலப் பாடல். பின்னாட்களில் இருந்த குரலுக்கும் இதுக்கும் அவ்வளவு வித்தியாசம் தெரிகிறது. இசை K.V. மஹாதேவன். பாடலை எழுதியவர் புலமைப் பித்தன். இதுவும் இன்றும் ஸூபர் டூபெர் ஹிட் பாடலே
பாடலின் வரிகள் இதோ:
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்கவேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
பாடலை கேளுங்கள் இதோ:
https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts
ஆயிரம் நிலவே வா என்று அடிமைப்பெண்ணையே அழைத்தால், சுதந்திரப்பெண்ணைஎத்தனை நிலவாய் அழைப்பது?
chinnakkannan
13th February 2015, 04:35 PM
//ஆயிரம் நிலவே வா என்று அடிமைபெண்ணையே அழைத்தால், சுதந்திரப்பெண்ணைஎத்தனை நிலவாய் அழைப்பது?// பஞ்ச் லைன்ஸ் எல்லாம் நைஸ் கல் நாயக்..
**
மாலை நேரத்தில் பசிக்கிறது..வரும் வழியில் ஒரு ஹோட்டலைப்பார்க்கிறோம்..உள் நுழைகிறோம். ஒரு தயிர்வடை ஆர்டர்செய்கிறோம்..வருகிறது ..எப்படி.
வழக்கம்போலச் செய்யப் பட்ட வடை தான். அதைப் பொரித்த பிறகு டப்பக்கென வென்னீரில்போட்டு பின் தயிரில் போட்டு எடுத்துத் தரும்போது அழகான கிண்ணத்தில் ஒரு வடை கொஞ்சம் நிறைய தயிர் விட்டு உள்ளே ஏற்கெனவே வெட்டி வைத்திருக்கும் கொத்துமல்லித்தழை பின் குட்டிக்குட்டியாய் இன்னொரு பாத்திர்த்தில் இருக்கும் காராபூந்திகளை அந்த வெண்பனித்தயிர் பரப்பினில் மெலிதாகத் தூவி பின் தான் கொண்டு வந்து வைக்கிறார்கள். பார்த்தாலே நாவில் உமிழ் நீர் ஊறி சாப்பிட ஆரம்பிப்போம்.. ம்ம் அழகாய் டெகரேஷன் செய்து வைக்கப்பட்டு வைக்கப் படும் வடை – ரசம்…
அதேபோல சம்சாரத்திடம் இல்லறத்துக்கு முன் பேசிக்கொள்ளும் வேடிக்கைப் பேச்சுக்கள் விளையாட்டுக்கள் ச…ரசம்.. (கண்ணா நீ எங்கயோ போய்க்கிட்டிருக்கடா)
அதுல பாருங்கோ பொண்களுக்கு புகழ்றது ரொம்பப் பிடிக்கும்..இன்ஃபேக்ட் காதல்னோ கணவனோ தங்கள் அழகைப் புகழணும்னு எதிர்பார்ப்பாங்க என ஆன்றோரகள் சொல்லியிருக்கிறார்கள்..அதுக்கேத்த மாதிரி பெண்ணழகைப் புகழாத ஆண் வெகு குறைவு.. ஆணைப் பெண் புகழ்வது என்பது எப்போதோ தான் நிகழும்..
தலைவி தோழி பேசிக்கொண்டால் வேறு பேச்சே இருக்காது போல அந்தக் காலத்தில்..
தோழி சொல்கிறாள் தலைவியிடம்
வெண்ணிலவுப் பெண்ணேவுன் ஏக்கமதை நானறிவேன்
…வேழநடை வீரவிழி வித்தைபல கற்றவனும்
எண்ணமதைக் கண்ணாலே ஏட்டைப்போல் படித்துவிட்டு
…எழிலாக உனக்காக எதையும்தான் செய்பவனும்
கண்ணனவன் போலகுணம் ராமனவன் போலதிறம்
…காரிகையே உன்னெழிலை காலமெல்லாம் கவிதையிலே
மென்மையிலே சொல்பவனும் ஆனவொரு நாயகனே
.மேவியுனைச் சேர்ந்திடுவான் நேரிழையே கலங்காதே…
இதே தாங்க இந்தப் பாட்டுல வருது… ஆனா என்ன ஒருபடி மேலே போய்ச் சொல்கிறாள் தோழி.
சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ
அவன் சாகசக்கலை கூடத்திலே பாடம் கற்றவனோ
இளைய கன்னி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ
இல்லை இன்னும்வேறு யாரைக் காதலிப்பவனோ.
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற
கோவலன் யாரோ அழகுக் கோட்டைக்கேற்ற காவலன் யாரோ..
அழகான பாடல் அழகான தேவிகா.ம்ம் ஆனால் அவர் தோழியாக்கும்!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lsY6sJPpAF0
**
chinnakkannan
13th February 2015, 04:38 PM
**
போன போஸ்ட்ல என்ன பார்த்துக்கிட்டிருந்தோம்.இந்த சரசு.. ஸாரி டைப்போ சரசம்
இதெல்லாம் எப்போ செய்யணும் ஓய் இளமை இருக்கறச்சே தான் இங்க பாருங்க் ஒரு கிழவருக்கு லவ்பண்ண டைம் இல்லையாம் யங் கேர்ள் கிட்டப் போய் ஆடறாரு பாடறாரு..
அவளுக்கு என்ன ஆகுது
இழிவெனப் பார்வை கொண்டாள்
…இயல்பினை மாற்றி நின்றே
விழிகளில் சுடர்தான் காட்டி
..வீச்சுகள் பலவாய்ச் செய்தே
மலிந்தவன் என்றே அந்த
..மனிதனை நோக்கக் கன்னி
களிப்புறும் வண்ணம் அங்கோர்
..காரியம் நிகழ்ந்த தய்யா..
ஆமாம்.. வள்ளுன்னு எரிஞ்சு விடலாம்னு பார்த்தா பாடிக்கிட்டே போறான் இந்தப் புள்ளையாண்ட்டான்.இல்லை இல்லை புள்ளை என நினைச்சுக்கிட்டு இருக்கற கிழவன் என்று வேண்டா வெறுப்பாக நங்கை இருக்க கிழவனாரும் சற்று வினாடிகள் மறைய..
வினாடிகள் கழிந்தபின் என்னாகிறது.. வந்தது கிழவனில்லை தன் மனம் கவர்ந்த வாலிபன்..
அந்தப் பொல்லாக் கிழ்வ வாலிபன் என்னவாக்கும் சொல்றான்
அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்துவந்தேன்
பொன்னுலகம் போவதற்கு புதுவுடல் வாங்கி வந்தேன்
இந்திரனைக்கண்டுவந்தேன் இது பற்றிக் கேட்டுவந்தேன்
சந்திரனைக் கண்டு வந்தேன் சரசம் நடத்த வந்தேன்
(அடப்பாவி.. இதுக்காடா இவ்ளோ பில்டப்பு.
ஷ்ஷ். கம்னு இரு மனசாட்சி)
அப்படிங்கறான்..
வாங்க நாம போய் பாட் பாக்கலாம் :)
https://www.youtube.com/watch?v=rYXr0rvZ2Vk&feature=player_detailpage
**
kalnayak
13th February 2015, 04:52 PM
சி.க.,
என்னவோய், உங்களை என்ன சொல்றதுன்னே தெரியலை. சுயமா உங்களையே சாப்பாட்டு கண்ணன்-னு டிக்ளேர் பண்ணிக்கறேள். சேஃபா தப்பிச்சுக்கறேள். பதிவை படிச்சாலும் ஒரே சாப்பாட்டு விஷயமா இருக்கு வோய். நீங்க சொன்ன தயிர் வடையில இங்க நாக்குல எச்சிலே வழிய ஆரம்பிச்சுருச்சு வோய்.
வாழ்க்கையை நல்ல அலசிட்டேள் வோய். எப்ப நம்ப பொம்மனாட்டிங்க ஆத்துக்காரரை பெருமையா சொல்லியிருக்கா? சொன்னா நம்பளை அடிக்காத குறையா வசவுதான் விழும் வோய். என்ன பண்றது. இந்த ஜென்மத்துல ஆம்படையானா பிறந்து தொலச்சிட்டோம் வோய்.
"ராதைக்கேற்ற கண்ணனோ..." நல்ல பாட்டுங்க. இன்னாத்துக்கு இந்த பாட்டை "கண்ணனுக்கேற்ற ராதையோ"-ன்னு பாடலை-ன்னு சந்தேகம் வருது.
அடுத்த சரசப் பாட்டும் சூப்பருங்க வோய்.
chinnakkannan
13th February 2015, 05:19 PM
நன்றி கல் நாயக்.. :) இதோ அடுத்தது.
**
சரசம் -3!
அவன் அழகான கோட் சூட்டெல்லாம் அணிந்த ஸ்லிம் அண்ட் ட்ரிம் வாலிபன். ஏதோ வேலையாய் அந்த மாலை நேரத்தில் ஹோட்டலுக்குப் போனால் அங்கே போட்டிருக்கும் விளக்குகளை விட மிகப் பிரகாசமாக இருக்கிறாள் அந்த வனிதை..அவள்.அவன் மனம் கவர்ந்தவள்..ஏற்கெனவே அவனது இதயத்தில் தரதரவென சோஃபா வை இழுத்துப் போட்டு பச்சக் கென அமர்ந்திருந்தவள்.
செந்நிறச் சேலை..செந்தூரப் பொட்டு.. சின்னதாய்க் காதில் போடப்பட்ட தோடு..அளவுச்சிகப்பாய்த் தீற்றப்பட்ட உதட்டுச் சாயம்..கண்களிலோ மின்னற் சிரிப்பு.. கொஞ்சம் ஊசிமுனை வளைவாட்டமாய் ஒய்யாரமாய் வளைந்திருந்த புருவங்கள். சின்னச் செண்பகப் பூவாய் நாசி..வெடித்த பருத்திப்பூவின் மென்மையைக் கொண்ட கன்னம்.
இப்படிப் பார்த்தால் என்ன ஆகும்
வேலை மறந்துவிடும் வேல்விழியாள் கட்டிநின்ற
சேலைச் சுடரொளியால் தான்..
அந்த வாலிபனுக்கும் அப்படித் தான் ஆகிறது.பின் மென்மையாய் ஹோட்டலின் இசைக்கருவிகள் இசைக்க ஆரம்பிக்க அவனுக்குப் பாட்டு வருகிறது..
தொட்டுத் தொட்டுப் பாடவா
தொடர்ந்து வந்து பாடவா
கட்டிக் கொண்டு பாடவா
கன்னம் பார்த்துப் பாடவா என்கிறான்..
அவளுக்கும் தான் அவன் மேல் க்ரஷ் உண்டே
தேக்குமர உடலழகன் தித்திக்கும் பேச்சழகன்
…சேர்த்துவைத்துப் பாடுகிறான்… சேர்ந்திடுவோம் நாமுமென.
அவளும் பாடுகிறாள்..
தத்தித் தத்தி ஆடவா தாவித்தாவி ஆடவா
கொட்டி வைத்த தேனிலே குளித்து வந்து ஆடவா எனப்பாடியே ஆட..
போக்குதனைக் காட்டுகிறாள் புன்னகையில் தன்மனத்தின்
..பொல்லாத பேரழகி கண்ணிவைத்த கண்ணழகி
என அவன் மனதில் நினைத்தவாறே பாடலைத் தொடர்கிறான்
அடியெடுத்த கால்களின் அதிசயத்தைப் பாடவா
நடனமாடும் பெண்மையின் ரகசியத்தைப் பாடவா..
எனக் கேட்க அக்கள்ளிக்கோ வெட்கம்.
நோக்கிவிடும் விழிகளிலே நேரிடையாய்க் காட்சிதரும்
…நோக்கமது அறிந்தபடி தொடர்ந்ததந்தப் பருவக்கொடி.
ஸோ பாடல் அவள் பாடுகிறாள் ஆடியவண்ணம்..
இரவு நேரக்காற்றிலே இணைந்து வந்து ஆடவா
உறவு தந்த தேரிலே உள்ளிருந்து ஆடவா
ஆடவனுக்கு என்ன ஆகிறது..என்ன ஆகவேண்டும் .. விழிகளில் அழைப்பு…வார்த்தையில் அழைப்பு குட்டியாய் த் தெரிகிற பச்சை சிக்னல்..எப்படி தொடரும் அவளின் கேள்விகளினால்
காக்கவந்த காதலரே காரிகையின் மென்னுள்ளம்
..காணாமல் இருப்பதுவும் நியாயமா தெரியலையே.
அவள் பாடுகின்ற வரி
பாடல் மட்டும் போதுமா பருவராகம் வேண்டுமா
ஆடைவைத்த கன்னியின் அன்பு நெஞ்சம் வேண்டுமா
சொல்லும்போதே வெட்கத்தில் கண்கள் தாழ்ந்தாலும் ஆட்டம் தொடர அவ்ளோ தான் நம்ம யங்மேன் க்ளீன் போல்ட்.
விழிஜாடை செய்கின்ற விந்தையிலே வாலிபனும்
சிலையாக ஆனானோ சொல்.
.**
கொஞ்ச நேரம் ஸ்டன்னாகிட்டு பின் பாடறான்..
ஆடை கட்டும் போதிலே ஆளைக்கட்டும் பெண்மையே
ஜாடை கண்டு பாடவா சரசம் கண்டு பாடவா…
( பாடலில் நடித்திருப்பவர்கள் ஜெய்சங்கர்.. எல்விஜயலஷ்மி.. ஹோப் போரடிக்கலை என நினைக்கிறேன்..)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=M5kXafc5_q4
படம் வல்லவன் ஒருவன்…வெகு அழகிய பாடல்.
(இத்தோட நிறுத்திக்கலாம்.சரசத்தை!) :)
**
chinnakkannan
13th February 2015, 05:27 PM
//சுயமா உங்களையே சாப்பாட்டு கண்ணன்-னு டிக்ளேர் பண்ணிக்கறேள். சேஃபா தப்பிச்சுக்கறேள்.// இப்பத்தான் நிறையச் சாப்பிட முடியாதே..இனிய மனங்கொண்ட எனக்கு ஷூகர் இருக்கே :) வீக்டேஸ் 5 நாள் வீட் ரைஸ் மற்றும் ஏனோ தானோ ப்ரேக்ஃபாஸ்ட் டின்னர் தான்.. வீக் எண்ட் கொஞ்சூண்டு ரிலாக்சேஷன் இன் தி ரூல்ஸ் - வீட்டில.. :)
rajeshkrv
13th February 2015, 09:26 PM
Aayiram Nilave Vaa Padal Varigal Pulamai pithan ...
rajraj
14th February 2015, 01:52 AM
Fun with kaNNan
From Akbar(1961)
aatrin karaithanile kaNNan ennai geli seidhaane.... (video from Hindi original)
http://www.youtube.com/watch?v=ZHnIcteIv84
From the Hindi original Mughal E Azam
Mohe panghat pe nandlal ched gayo re.....
http://www.youtube.com/watch?v=H4y8tXUlJjA
Happy Valentine's Day ! Have fun with chocolate ! :)
chinnakkannan
14th February 2015, 01:54 AM
hi folks! இந்த இழையைத் துவக்கி வைத்த வாசுதேவன் அண்ட் இந்தப் பார்ட் சொந்தக்காரர் ராஜேஷ் அவர்களின் சார்பாக அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே...
இங்கே என்னப்பா ஆகுது ஒரு அந்தக்கால காதலன் காதலி..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Rfr-DLCzmhc
இப்போ ஒரு இந்தக்காலலவ்..படத்தைப் பத்தி அப்புறம் விரிவாக ஆராயலாம் ஆனா இது கொஞ்ச வருஷத்துக்கு முன்னால வந்தபடம்.. க்ளைமாக்ஸ் சீன்..
https://www.youtube.com/watch?v=4Rr7QnV2bww&feature=player_detailpage
kalnayak
14th February 2015, 10:29 AM
தாங்க்ஸ் ராஜேஷ்,
நான் தவறான ஒரு வெப்-ஸைட்டில் பார்த்து வாலி என்று எழுதிவிட்டேன். இதோ திருத்திவிடுகிறேன்.
சி. க.,
என்ன வாசு-விற்காகவும் ராஜேஷ்-ற்காகவும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் நீங்கள் உங்கள் சார்பாக காதலர் தின வாழ்த்துக்களை சொல்லக்கூடாதா?
இருக்கட்டும். அந்தக்கால, இந்தக்கால, வருங்கால எல்லா காதலர்களுக்கும் என்னுடைய காதலர் தின வாழ்த்துகள்.
பழைய காலத்துக் காதல் படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. கண்டநாள் முதல் ஒரு பெண் இயக்குனரின் படம் அல்லவா? நன்றாகவே இருந்தது. நானும் பார்த்திருக்கிறேன். இன்றைய தினத்திற்க்கு பொருத்தமான காட்சியே.
JamesFague
14th February 2015, 11:47 AM
அந்த நாள் ஞாபகம்: காதலைக் கொண்டாடிய அம்பிகாபதி
தமிழ் சினிமா பேசத் தொடங்கிய 1931-க்குப் பின்னர் அதன் ஒரே கருப்பொருளாக இருந்தது புராணம்… புராணம்… புராணம் மட்டுமே. 1934-ல் நிவாஸ் சினிடோன் படக் கம்பெனி ‘ நிவாச கல்யாணம்’ என்ற புராணப் படத்தைத் தயாரித்தது. இதுதான் மதராஸில் தயாரான முதல் பேசும்படம். இதன்பிறகு தமிழ் சினிமா மதராஸில் மட்டுமல்ல சேலத்திலும் கோவையிலும் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியது. புராணம் மெல்ல மெல்ல அதற்குப் புளிக்க ஆரம்பித்தது. அதற்கு அறிகுறியாக 1935-ல் வெளியான ‘ மேனகா’ திரைப்படம் வெளியானது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் சமூகப் படம்.
முதல் முழுநீளக் காதல்
மேனகா வெளியான பிறகு சமூகப் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் ராஜா சாண்டோ போன்ற முன்னோடிகளைத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் புது ரத்தம் பாய்ச்ச ஒரு அந்நியர் வந்தார். அவர் நாம் கொண்டாட வேண்டிய புண்ணியர் எல்லீஸ் ஆர். டங்கன் என்றால் அது மிகையல்ல. அவரது வருகைக்குப்பிறகு புராண, வரலாற்று படங்களில் ஒலித்து வந்த உரையாடல் தன் மொழியின் சட்டையை உரித்துப்போட்டது. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டின. அவரது இயக்கத்தில் 1937-ம் ஆண்டு வெளியான ‘அம்பிகாபதி’ தமிழ் சினிமாவின் முதல் முழுநீளக் காதல் திரைப்படமாக மிளிர்ந்தது. துயரக் காவியமாக அது அமைந்தபோதும் அதில் காதல் கொண்டாடப்பட்டது. பல சாதனைகள் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டன. அவற்றைக் காணும் முன் அதன் கதையைக் கேளுங்கள்.
கவிஞனும் இளவரசியும்
அது பத்தாம் நூற்றாண்டின் சோழப் பேரரசு. கலிங்கம்வரை கட்டியாண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம். அவனது அரசவையில் ரத்தினமாக மின்னியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவரது வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்போது அவரது மகன் அம்பிகாபதி
(எம்.கே. தியாகராஜ பாகவதர்) பாட மாட்டானா!? தந்தையைப்போல் கவிதைத் தமிழில் சிறந்து விளங்கிய அந்த இளங்காளை போர்க்களத்தில் வாள் சுழற்றுவதிலும் சுத்த வீரன். கலிங்கப்போரில் தன் உயிரைக் காத்த காரணத்துக்காக அவனுக்கு வைர வாளைப் பரிசளிக்கிறார் மாமன்னன் குலோத்துங்கன். அதைக் கொண்டு தனது சகா ருத்ரசேனனோடு (பாலைய்யா) விளையாட்டுக்காக வாளைச் சுழற்றுகிறான் அம்பிகாபதி. அப்போது அவனது வீரத்தையும் அழகையும் ஒருங்கே காணும் இளவரசி அமராவதி(எம்.ஆர். சந்தான லட்சுமி) அந்தக் கணமே அவன் மீது காதல் கொள்கிறாள். வாள் வீச்சின் முடிவில் சிதறிய முத்துமாலைபோலச் சிரித்த இளவரசியைக் கண்டு அம்பிகாபதியும் காதலில் விழுகிறான். அவளைக் காண ஏங்கும்போது இளவரசியின் தோழி செய்தியுடன் வருகிறாள். அமராவதியைக் காண அந்தப்புரத்துக்கு வரும்படி அழைக்கிறாள். அம்பிகாபதியை சந்தித்துத் திரும்பிய தோழிக்கு உடம்பைப் பிடித்துவிட்டு ஒரு இளவரசி பணிவிடை செய்யும் காட்சி அதற்கு முன் இல்லை. காவலை மீறி அந்தப்புரத்துக்குள் நுழைந்ததும் முல்லைக்கொடி காற்றில் சிலுசிலுக்கும் உப்பரிகையில் இளவரசியைக் காண்கிறான் அம்பிகாபதி. அவன் தன்னைக் காண வந்துவிட்ட இன்ப அவஸ்தையோடு..
“ நீங்கள் காவலாளிகள் கண்களில் பட்டால் அபாயம் நேருமே?” என்று படபடக்கிறாள் அமராவதி.
“அவர்கள் கண்களைவிட உன் கண்களில்தான் அதிக அபாயம் இருக்கிறது!” இது அம்பிகாபதி. ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் – ஜுலியட்டும் சந்தித்துக் கொண்ட காட்சியை அப்படியே இங்கே பொருத்திவிட்டார் இயக்குநர் டங்கன். காதல் கனிரசம் சிந்திய அந்தக் காட்சியை ரசிகசிகாமணிகள் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்ததில் ஓராண்டு காலம் திரையரங்குகளில் ஓடிய சாதனை படைத்த முதல் தமிழ்த் திரைப்படமாக அம்பிகாபதி சாதனை வெற்றியைச் சந்தித்தது.
புதிய காட்சி மொழி
அம்பிகாபதியின் கனவில் அமராவதி தோன்றுகிறாள். “அமராவதி... அமராவதி...” என்று உருகிக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுகிறான் அம்பிகாபதி, இதைக் கண்டு பதறும் கம்பர், “ கனவுக்கும் நினைவுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதா? உன் கனவு கனவாகவே இருக்கட்டும். நினைவில் இருந்தால் அதை இப்போதே கொன்றுவிடு”
என்று எச்சரிக்கை செய்கிறார்.. “ அதற்கு என்னை நானே கொன்று கொள்வதே சரி” என்கிறான் அம்பிகாபதி.
“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதில் ஏதாவது அர்த்தம் உண்டோ? சக்கரவர்த்தி குலோத்துங்கனின் மகள்
எங்கே!? கவி பாடிப் பிச்சையெடுக்கும் கம்பனின் மகன் எங்கே!? அடேங்கப்பா! மகாமேருவுக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமல்லவா இருக்கிறது?” பெரிய இடத்தில் நமக்கு ஏனடா பொல்லாப்பு? அவளை மறந்துவிடடா கண்ணே!” எனக் கம்பர் மகனிடம் கெஞ்ச..” மறந்துவிடுவதா? காதலில் அவள் மாதவி, கற்பிலோ கண்ணகி. சூரியச் சந்திரர் அறிய அவளைக் காந்தர்வ திருமணம் செய்தாகிவிட்டது அப்பா” என்று அம்பிகாபதி சொல்ல, அந்தக் காட்சியில் தந்தையும் மகனும் மாறி மாறிப் பாடும் “ என்ன செய்தாய் என்னருமை மைந்த?”
என்ற புலம்பல் பாடல் அத்தனை வலியைக் கொண்டது. பின்னால் நிகழப்போகும் துன்பியல் முடிவுக்கு அதுவே முரணாக அச்சுறுத்த
அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் நம்மை அழுத்தும் விதமாகக் காட்சிகளைப் படத்தொகுப்பு செய்திருப்பார் டங்கன்.
சாதனைகள் பல
காதலனும் காதலியும் சந்தித்துப் பேசும் காட்சிகளில் அதற்கு முன் தமிழ் சினிமா பார்த்திராத குளோஸ்- அப் காட்சிகளை முதல் முறையாகப் பயன்படுத்தினார் இயக்குநர். வானில் நிலவு ரம்மியமாக எரிந்துகொண்டிருக்க முதல் முறையாக அம்பிகாபதியும் அமராவதியும் ஏரிக்கரையில் சந்தித்துக் காதலைக் கொண்டாடும் பாடல் முழுவதையும் க்ளோஸ் அப்பில் கொண்டாடியிருப்பார். அவர்கள் கன்னத்துடன் கன்னம் வைத்துக் காதலில் மருகும் காட்சியும் அதுவே முதல் முறை. இத்துடன் நின்றுவிடவில்லை எல்லீஸ் ஆர் . டங்கன். படத்துக்கு டிரைலர் என்ற ஒன்றை எடிட் செய்து, ’ விரைவில் உங்கள் அபிமான டாக்கீஸ்களில் வருகிறது’ என்று முதன் முதலில் விளம்பரம் செய்தார். அதேபோல் சமஸ்கிருத வார்த்தைகளே
இல்லாமல் படத்துக்கு வசனம் எழுதிய கதை வசனக்கர்த்தா இளங்கோவனுக்கும், இசையமைப்பாளர், பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கும் முதல் முறையாகப் படத்தின் டைட்டிலில் பெயர் போடச் செய்தார். அதுவரை இல்லாத நடைமுறை அது.
இந்தப் படத்தின் மெகா வெற்றி பாகவதரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக்கியது. காதல் கதைகளை மையப்படுத்திய கருப்பு வெள்ளை திரைப்படங்கள் படையெடுக்க பாதை அமைத்துக் கொடுத்தது அம்பிகாபதி. இதன்பிறகு தேவதாஸ், நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு, தேன் நிலவு என்று சினிமா வண்ணம்பூசிக் கொள்ளும் வரை காதலை கவுரவம் செய்த படங்களைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் கொண்டாடுவோம்.
Courtesy: The Hindu - Tamil
chinnakkannan
14th February 2015, 11:59 AM
எஸ்.வாசுதேவன் .. வாங்க.. கா..திக்குப் பொருத்தமான பதிவு.நன்றி.
*
காதலர் தினம் சார்பாக அனைவருக்கு (அ.கா இ.கா.எ.கா) ம் என் வாழ்த்துக்கள்.
**
**
மாடல் தான் அம்மா..
அதிர்ந்து பேச்மாட்டாள்
படித்திருக்கிறாள்
பேசுவாள் மென்மையாக
நன்றாகச் சமைப்பாள்
கற்றும் கொடுப்பாள் தங்கைக்கு
உடையெல்லாம் சுரிதார்
அல்லது லெக்கின்ஸ் டாப்ஸ்..
ஆஃபீஸிற்குப் போட்டு வருவாள்..
இன்னும் எதுவும் லோன் எல்லாம் வாங்கவில்லை..
ம்ஹீம் வீட்டிற்குத் தான் தருவேன்
என்றெல்லாம் சொல்லவில்லை
சின்னப் புன்சிரிப்பு
சின்னச் சின்ன வாக்கியம்
குட்டி குட்டி மின்னஞ்சல்
ரொம்பக் குட்டியாய் எஸ் எம் எஸ்
இதான் அவளிடம் பிடிக்கும்..
அவளுக்கு ஒரே தம்பி
அவனும் படிப்பில் விளையாட்டில் சுட்டியாம்
பார்த்ததிலலை
பாசம் உண்டு..ஆனால் திட்டவெல்லாம்
செய்யமாட்டாள்
எப்படி த் தெரியுமா
சிலசமயங்களில் போனில் பேசுவாள்..
அதில் தெரியும்..
அனாவசியச் செலவெல்லாம்
நானும் செய்ததில்லை அவளும்..
சாதாரண ஹோட்டல் தான் காஃபி
சரவண பவன் கூட கிடையாது
உனக்குப் பிடிக்கும்..
மாடல்ங்கறயேடா
மாடல் என்றால் முன்னோடி
என்ற அர்த்தம் அம்மா..
**
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=IBUG2Am8mPo
(முன்னால் எழுதிய பாட்டு தான் கல் நாயக்.இப்ப ஓ.கேயா)
chinnakkannan
14th February 2015, 12:26 PM
கவிதையும் கானமும்
//போன வருடம் – தொப்பி அணிந்த ஒரு நடிகையின் மென்சிரிப்புப் புன்னகையுடன் கூடிய புகைப்படம்..பின்னணியில் காஷ்மீரோ ஏதோ ஒரு குளிர்ப் பிரதேசம்..கொடுத்து பாட்டெழுதச் சொன்னார்கள் முக நூலில்..(அனுஷ்கா என நினைவு) கட்டளைக் கலித்துறையில் எழுதிப் பார்த்தேன்..
க.க.து என்பது ஒரு வரிக்கு பதினாறு வார்த்தைகள் ஒற்று நீக்கி வரவேண்டும் வெண்டளை பயில வேண்டும் கல் நாயக்.(வெண்டளைடீடெய்ல்லாம் அப்புறம்..)
கள்ளச் சிரிப்பதும் கண்பார்வை காட்டியே நின்றிருக்க
உள்ள உவகை உதட்டில் விரிந்தே மலர்ந்திருக்க
செல்கின்ற தென்றல சிலிர்ப்புடன் மங்கையுனைத் தீண்டவும்
துள்ளியே பார்த்தவென் தூயநெஞ்சின் சூடும் அறியாயோ
*
கண்ணன் நினைப்பில் கனிவுடன் பார்த்திடும் பார்வையதோ
கன்னச் சிவப்பின் காரணம் களிப்பெனக் காட்டுகையில்
தென்றலும் மென்மையாய் தேவதை தோளில் வருடுகையில்
எண்ணம் மயங்கியே எள்ளிச் சிரித்தவள் நின்றனளே
*
வாடி பயிரால் உருகிய வள்ளலார்தான் வந்தாலென்
தோடியில் தேன்போல் தீந்தமிழில் பாடுபவர் வந்தாலென்
மோடியோ மேல்யாரோ மானிலத்தில் ஜெயித்தே நின்றாலென்
ஊடி இளமை உணர்வில் சிரிக்கின்றேன் ஏகம்பனே.
*
ஓடி ஒளிய ஓரிடம் தடுக்க விழுந்ததுவும்
வாடி முகவலியில் வண்ணம் மாற வசைந்ததுவும்
பாடிப் பறந்தே பலவிடம் சென்ற பரவசமும்
ஊடி வருகுமே இத்தென்றல் தீண்டிடும் வேளையிலே
*
https://www.youtube.com/watch?v=O6SsZ4T_b1U&feature=player_detailpage
chinnakkannan
14th February 2015, 12:27 PM
கவிதையும் கானமும்..
**
பாட்டியின் டிரங்குப் பெட்டியினுள்
..பொன்னின் நிறத்தில் ஒருபுடவை
காட்டன் துணிதான் என்றாலும்
..காண்பாள் திறந்தே எப்பொழுதும்
நாட்டம் ஏனென நேற்றவளை
..நயமாய்க் கேட்க வெட்கித்தான்
’வேட்கை யுடனே உன் தாத்தா
..முதலில் தந்தார்” என்றாளே..
காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரிப் பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்தத் திருமகளும் உன்னழகைப் பெறவேண்டும்..
வீடியோகிடைக்கவில்லை.. ரோஜாரமணி என நினைக்கிறேன் வயசுப்பொண்ணு..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fd2DwOSTn3U
chinnakkannan
14th February 2015, 12:27 PM
கவிதையும் கானமும்..
நினைந்து நடக்கையிலே நேசமுடன் வந்தே
இணையாய் நடக்கும் நிலவாய் – இணையேவுன்
பொன்னைப் பழித்திடும் பூமுகம் நெஞ்சினில்
பின்னி வருகுது பார்
நெஞ்சினிலே உன் நிலவு முகம்…நினைவிலும் தொடர்வது அழகு முகம்
ஆசை முகம்
https://www.youtube.com/watch?v=b66g5A47PWw&feature=player_detailpage
kalnayak
14th February 2015, 01:34 PM
சி.க.,
காதல் பதிவுகள் எல்லாம் அருமை. நம்பியார் பாடுவதுபோல் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் அந்த வில்லாத்த்தனமான கடுகடு முகம்தான் தெரிகிறது.
அப்புறம் அந்த காஞ்சி பட்டுடுத்தி வீடியோ நீங்கள் கொடுத்த லிங்கிலேயே கிடைக்கிறதே. பார்க்கவில்லையா? எனீவே இந்தாருங்கள் அந்த லிங்க். என்னால் இன்றும் நாளையும் அவ்வளவாக பதிய முடியாது என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=ocGReZi_9Y8
JamesFague
14th February 2015, 01:42 PM
Courtesy: The Hindu - Tamil
உன்னை முதன்முதலில் பார்த்தபோது
உன் பெயர்கூடத் தெரியாதெனக்கு
இப்போது இனிஷியல் முதற்கொண்டு தெரியும்.
அழகான பாதங்களில்
செருப்பின்றி நடக்கிறாய்
டைல்ஸ் தரையே ஆனாலும்
வீணாகிறதுன் பாத ஸ்பரிசம்.
கைரேகை சோதிடம் பார்க்க
எனக்குன் மலர்க்கரத்தைத் தருகிறாய்
அதை ஆண்டு அனுபவித்துவிட்டுத்
திருப்பித் தந்த பின்பு சிரிக்கிறேன்
எனக்குச் சோதிடம் தெரியாதென
மோதிர விரலை பூமத்திய ரேகை
எனச் சொன்னபோதே தெரியும்
என்று நீயுஞ்சிரிக்கிறாய்.
ரோஜாவைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது
உன் பெயர் ரோஜா
என்பதாலோ என்னவோ.
ஆனால் ரோஜாக்களைப்
பார்க்கும்போது வருவதில்லை
உன் பெயர் ரோஜாக்கள் அல்ல
என்பதாலோ என்னவோ.
குடையோ ஒதுங்கிடமோ
இல்லாத பெருமழையில்
தொப்பலாக நனைந்தபோதுதான்
பர்ஸில் உன் புகைப்படம்
நினைவுக்கு வந்தது
அட, உன் புகைப்படமும்
தொப்பலாக நனைந்திருக்கிறதே!
சத்தமில்லாமல் முத்தமே
கொடுக்க வராதா என்று
கிசுகிசுப்பாய்க் கடிந்துகொள்கிறாய்
நாங்களெல்லாம் அப்படித்தான்.
உனக்கொரு கட்டவுட் வைத்து
அதை என் முத்தங்களால்
அபிஷேகம் செய்யும் வரை
ஆறாது இந்த மனது!
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்
அதுவும் எனக்காகத்தான் கேட்கிறேன்
அதையும் உன்னிடம் மட்டும்தான் கேட்கிறேன்
அதற்கே இந்த கலாட்டா
இணையத்தில் பிரபலமான பெயர் பேயோன். நக்கல், நையாண்டி, எகத்தாளத்திற்கு பெயர் பெற்ற அனானி எழுத்தாளர் இவர். காதலர் தினத்தையொட்டி அவர் எழுதிய பத்து கவிதைகளிலிருந்து சில கவிதைகள் இங்கே பிரசுரிக்கப்படுகின்றன...
இது காமெடி மட்டுமே காயப்படுத்த அல்ல.
JamesFague
14th February 2015, 01:45 PM
Courtesy: The Hindu - Tamil
ஒரு காதல் கதை
Love: Its elementary my dear Watson! என்று அவன் தன் ‘வாட்ஸ் ஆப்' ஸ்டேட்டஸை அப்டேட் செய்த அதே தினத்தில்தான், ‘அந்த நெற்றியில் ஒரு பொட்டு வைத்திருந்தால் ஒரு ஓவியம் முழுமையடைந்திருக்கும்' என்று அவள் புகைப்படத்தைப் பார்த்துச் சொன்ன அந்த நாளில்தான், அவன் காதல் நிராகரிக்கப்பட்டது!
அவனும் அவளும் நட்புடன் பழகிய காலத்தை நினைத்து, அவை தந்த கதகதப்பால் துணிவு கொண்டு, அவனது காதல் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அவளுக்கு ஒரு கடிதத்தை எழுதினான். அதில் ஒரு காதல் கதையைச் சொல்லத் தொடங்கியிருந்தான்.
அந்தக் கல்லூரி நூலகத்தின் ஒரு மூலையில் இலக்கியப் பிரிவு இருந்தது. நூற்றுக்கணக்கான புத்தகங்களுக்கிடையில் ஷேக்ஸ்பியரின் புத்தகமும், வைக்கம் முகமது பஷீரின் புத்தகமும் அருகருகே ஒட்டிக்கொண்டிருந்தன. அந்தப் புத்தகங்களில் இருந்து ஜூலியட்டும், மஜீத்தும் ஒரு நாள் காணாமல் போனார்கள்.
அது மழைக்காலத்தின் முன்னிரவு. மழையின் முத்தங்களை வெறுத்த ஜனக்கூட்டம் தத்தமது வீடுகளில் அடைந்து கிடந்தது. இந்தக் காதல் பறவைகள் கைகளைக் கோத்துக்கொண்டு சாலையில் உலா வந்தன. அவ்வப்போது நிகழ்ந்த மின்னலில் புகைப்படம் எடுத்துக்கொண்டன.
ஜுலியட்டைத் தன் நட்சத்திர வீட்டுக்கு அழைத்துச் சென்றான் மஜீத். அகிரா குரோசவா, சத்யஜித் ரே, பாலுமகேந்திரா, குரு தத் என்று அவன் சேகரித்து வைத்திருந்த திரைப்படத் தொகுப்புகள் மேஜையில் சிதறிக் கிடந்தன. அந்தக் குவியலில் இருந்து ராஜ் கபூரின் 'பாபி' படத்தைத் தேர்வு செய்தாள் ஜூலியட். திரையில் இவர்கள் காதலித்துக்கொண்டிருந்தார்கள்.
ஏதோ ஒரு கணத்தில் அவன் கட்டிலில் கிடந்த கிதார் ஜூலியட்டுக்கு வியப்பைத் தந்தது. ‘ஹேய் நீ கிதார் எல்லாம் வாசிப்பாயா?' என்று கேட்டுக்கொண் டே அதை மீட்டத் தொடங்கினாள். கிதாரின் தந்திகளை ஸ்பரிசித்துக்கொண்டே அவள் தேவாலயப் பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தாள்....
‘Heaven is the wonderful place; filled with glory and grace; I want to see my saviours face...' என்று இறுதி வார்த்தையை முடிக்கும்போது அவள் கைகள் மஜீத்தின் கன்னங்களைத் தடவியது யதேச்சையானது என்று சொல்லிவிட முடியாது.
மஜீத்தோ பதிலுக்கு அவள் முகத்தை ஏந்தியவாறு, ‘உன் மீதான என் காதல் என்பது, எரியும் மெழுகின் ஒளியில் மத்தேயுவின் சுவிஷேசம் 22-ம் அதிகாரம் 37-ம் வசனத்தைப் படிப்பது போன்று புனிதமானது' என்றான்.
அவள் சிரித்தாள். அவன் சிரித்தான். அவர்கள் சிரித்தார்கள். இவ்வாறு சிரித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் மனதில் ஏந்திக்கொண்டும் நள்ளிரவைக் கடந்தார்கள்.
முன்னிரவு வந்தது. தூக்கக் கலக்கம் கண்களில் தெரியும் ஜூலியட்டைக் கையில் ஏந்தியவாறு அவளது வீடான ஆர்கிட் மலரில் விட்டுவிட்டுச் சென்றான் மஜீத்.
அடுத்த நாள் ஜூலியட்டும், மஜீத்தும் புத்தகங்களில் இருந்து காணாமல் போயிருந்தது கல்லூரியில் பெரும் பிரச்சினையை உண்டு பண்ணியது. ஜூலியட்டின் வீடு, மஜீத்தின் அறை என எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தாயிற்று. அவர்களைக் காணவில்லை.
அவர்களின் இரு வீட்டாரும் சண்டை பிடித்துக்கொண்டார்கள். பிறகு அந்தச் சண்டை இரு சமூகங்களின் கலவரமாக மாறியது. அந்தக் கலவரத்தின் இறுதிச் சொட்டு ரத்தம் காய்ந்த பிறகும், அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பரிதி கண்ட பனிபோல அவர்கள் மறைந்து போயிருந்தார்கள்.
இது மற்றவர்களுக்கு வேண்டுமானால் கதையாக இருக்கலாம். அவர்கள் மறைந்து போனதற்கு மத வேற்றுமைதான் காரணம் என்பதை அனைவரும் அறிந்திருக்கலாம்.
ஆனால் என்னை நீ நிராகரித்ததற்கு, சமூகத்தின் உயர்ந்த இடத்தில் நீ இருக்கிறாய் என்பதும், நான் தாழ்ந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைத் தவிர வேறு என்ன காரணம்? இது மற்ற யாரையும் விட உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும். இல்லையா... ஜனனி!
chinnakkannan
14th February 2015, 01:58 PM
கல் நாயக் நன்றி.. நோப்ராப்ளம்.. கா.ப உடுத்தி பாட் பார்க்கலை..லிங்க் மட்டும் கொடுத்த போது ஜேசுதாஸின் முகம் மட்டும் வந்தது.மறுபடி நன்றி..எப்போது முடியுமோ வாருங்கள்..
Russellzlc
15th February 2015, 02:28 PM
‘துட்டு படைச்ச சீமான்
அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே...’
கோபால்,
தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... பதிவில் நான் விடுத்த அன்பான அழைப்பை ஏற்று மீண்டும் திரிக்கு வந்ததற்கும் நன்றி. பணிச்சுமையால் பதிலளிக்க ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிக்கவும். இன்று கொஞ்சம் ஃப்ரீ. என் ரசனை பற்றி,.. குழிபறித்து... எச்சில் துப்பி.. என்று கூறியுள்ளீர்கள். பரவாயில்லை... லால்குடி உருக வைப்பார் என்றால் குன்னக்குடி குதூகலிக்க வைப்பார். என் தேர்வு குன்னக்குடி.
ஆனந்தவிகடன் எம்.டி. மரியாதைக்குரிய திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சமீபத்தில் அமரரானபோது, நீங்கள் அவருடைய நெருங்கிய உறவினர் என்று நண்பர்கள் பதிவிட்டதை பார்த்தபோதுதான் நானும் உங்களை இனம் கண்டு கொண்டேன்... பாரம்பரியமான குடும்பப் பின்னணி உள்ளவர் என்று. எதிர்ப்புணர்வு, வன்மம் இவற்றுக்கெல்லாம் எனக்கு அர்த்தமே தெரியாது. மாற்றுக்கருத்து உடையவர்களை எதிரிகளாக பார்ப்பவனல்ல நான். இங்குள்ள மாற்றுக் கருத்துள்ள நண்பர்களுடன் நான் பழகுவதை விடுங்கள். உங்களுக்கே அன்பழைப்பு விடவில்லையா? சில சமயம் நான் கடுமையாக பேச வேண்டி இருந்தாலும் அது எதிர்வினையாகத்தான் இருக்கும்.
சரி விடுங்கள்...... என்னதான் விஷமம் செய்து படுத்தினாலும் புத்திசாலியான சுட்டிக் குழந்தை எல்லாரையும் கவர்வது போல, நீங்கள் என்னதான் கடுமையாக வார்த்தைகளை அள்ளிக் கொட்டினாலும் கூட, விரும்பப்படுவதற்கு காரணம் உமது திறமையும் எழுத்தும்.
எம்எஸ்வி பற்றி நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் எனக்கும் உடன்பாடே. இங்குள்ள பலருக்கும் நினைவிருக்கும் என்று கருதுகிறேன். திரு. இளையராஜா அவர்கள் பெரிய இசைமேதையாக இருக்கலாம். ஆனால், 25 ஆண்டுக்கு முன் குமுதம் இதழுக்கு அளித்த அவர் அளித்த பேட்டியில், ‘டிஎம்எஸ்.க்கு bhaவமாக பாடத் தெரியாது’ என்று கூறியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. எம்.எஸ்.வி.யின் 100 பாடல்களை பட்டியலிடுகிறேன் என்று சொல்லியுள்ளீர்கள். சுவைக்க காத்திருக்கிறோம்.
கல்நாயக்,
மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா... வைக் கேட்டு நானும் உருகியிருக்கிறேன். ராமாயணத்தை ஒரே சுலோகத்தில் விளக்கும் ஏக சுலோக ராமாயணம் என்று ஒரு சுலோகம் இருக்கிறது. சீதா ஜனனம்... லங்கா தகனம்... என்று வரும். சற்று யோசித்தால் கொண்டு வந்து விடுவேன். அது இருக்கட்டும். அது போல, இரண்டே வரிகளில்,
‘கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே.’
என்று ராமாயணத்தை இரண்டே வரிகளில் முடித்த மேதைக்கு இது பெரிதா என்ன?
சின்னக் கண்ணன்,
கோபால் கூறியதைப் போல துள்ளி விளையாடுகிறீர்கள். பாராட்டுக்கள்.
------------------
பீகாரில் நிதிஷ் குமாரால் முதல்வராக்கப்பட்ட மாஞ்சி இப்போது நிதிஷூக்கே தலைவலியாக உருவெடுத்திருக்கிறார். நிதிஷூக்கு 130 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் மீண்டும் அவர் பதவிக்கு வர வாய்ப்பு உள்ளது என்றாலும் கூட, மாஞ்சியின் கொடுக்கும் தலைவலி நிதிஷே உருவாக்கிக் கொண்டது. மாஞ்சிக்கு உரிய மரியாதையை அவர் தரவில்லை.
மாஞ்சி கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. ‘‘ நான் முதல்வர் என்றாலும் கூட எனக்கு கீழே உள்ள அமைச்சர்களே என்னை மதிப்பதில்லை. அவர்கள் என்னை தரக்குறைவாக பேசினர். இதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா? என்று நிதிஷிடம் நேரடியாகக் கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். நான் ஏழைதான். ஆனால் தன்மானம் மிக்கவன்’ என்று கூறியுள்ளார். கடுமையான வார்த்தைகள் எவ்வளவு தீவிரமான விளைவுகளுக்கு காரணமாகி விடுகிறது?
‘ஆட வந்த தெய்வம்’ திரைப்படத்தில் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களும் இசையரசியும் பாடிய ‘சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே...’ எனக்கு பிடித்த இனிமையான பாடல். மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டையும் லுங்கியுமாக வித்தியாசமான ‘சிக்’ மகாலிங்கம். ‘மாமா’வின் இசையில் மழையை மையமாக வைத்து மதுரக் கவிஞர் திரு.மருதகாசி எழுதிய வரிகள் பொருள் பொதிந்தவை.
‘‘கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே- அவன்
கஞ்சிக்காக கலங்கி விடும் கண்ணீர்த் துளியைப் போலே (சொட்டு சொட்டுன்னு)
‘‘முட்டாப் பயலே, மூளையிருக்கா (இந்த இடத்தில் மகாலிங்கத்தின் எக்ஸ்பிரஷன் ரசிக்கத்தக்கது.)
என்று ஏழை மேலே, துட்டு படைச்ச சீமான்
அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே
மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே’’
.... வாழ்வியலை விளக்கும் அருமையான பாடல்.
1977-ம் ஆண்டு. புரட்சித் தலைவர் முதல்வராகி இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திரு.கருணாநிதி அவர்கள். ஒரு விவாதத்தின் போது திரு. கருணாநிதி நிதானம் தவறி, ‘‘ஆட்சி, அதிகாரம் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது.’’ என்றார். (பதவி போன ஆத்திரம்)
புரட்சித் தலைவர் கோபப்படவில்லை. நிதானமாக எழுந்து சொன்னார்...
‘நீங்கள் எவ்வளவு ‘சாப்பிட்டீர்கள்’ என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்.’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
15th February 2015, 03:11 PM
கலை வேந்தன் .. வாங்க.. வழக்கம் போல அரசியல் +பஞ்ச் ஆக ஒரு நகைச்சுவை.. நைஸ் இன்னும் எழுதுங்கள்..
//துள்ளி விளையாடுகிறீர்கள். பாராட்டுக்கள். // விராட் கோஹ்லி மாதிரியா ... நன்றி கப் எங்கேங்க :)
இனி உங்கள் சொட்டு சொட்டுனு சொட்டுது பாரு இங்கே பாடல் காணொளி..
https://www.youtube.com/watch?v=7unLk8rkpuk
இன்னும் எழுதுங்கள்..
kalnayak
16th February 2015, 10:38 AM
கலைவேந்தன்,
ஆடவந்த தெய்வம் படத்து பாடல் அருமை. பாட்டை கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. உங்கள் மற்றும் சி.க. புண்ணியத்தில் இன்று நிறைவேறியது.
கவியரசரின் இரண்டு வரி ராமாயணம் அற்புதம். அடிக்கடி வாருங்கள். உங்களிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
chinnakkannan
16th February 2015, 10:50 AM
யாருமே இல்லை..என்ன ஆகும் முதலில் சிலபல சிந்தனை கள் தோன்றும்
பாட்டு எழுதிப் பார்க்கலாமென மனம் நினைக்கும்
எதைப்பற்றி எழுதலாம் என்று நெஞ்சம்
..ஏதேதோ கற்பனையை நெய்து பார்க்கும்
கதையாக விருத்தத்தில் வடிக்க லாமா
..காவியத்தை அப்படியே எழுதலாமா
வதைபட்டே வரலாற்றில் வீழ்ந்த வீரர்
..வாழ்ந்தகால்ம் பற்றியிங்கு எழுதிடலாமா
உதைகிடைக்கும் என்றாலும் தைரிய மாக
..ஊர்க்கதையை அரசியலைப் பாடலாமா
இப்படியெல்லாம் நெனச்சுப் பார்க்கும் மனதுக்கு எதுவுமே அகப்படாம ப் போயிடுது..
ஸோ என்ன ஆகும் இயற்கையாக போரடிக்கும்..ஹை..இயற்கை வந்துடுச்சே..இத வச்சு ஓட்டிடலாமே (கண்ணா பெரிய ஆள் டா நீ)
இயற்கையைப் பற்றி எக்கச் சக்க பாடல்கள் போட்டுக் கொண்டே போகலாம்..இப்போ டைம் இலலை..எனில்
முதல் பாடலில் இயற்கையும் இருக்கிறது.. அதுவே கொஞ்சம் பிரிதல் உணர்ச்சி கொண்ட பாடலாகவும் டூ இன் ஒன் ஆக இருக்கிறது..
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
கனவில் தோன்றி சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
மகா கவி காளிதாஸ் ந.தி கண்ண தாசன்.. வெகு அழகிய பாடல்..
https://www.youtube.com/watch?v=FHk-SqY8gbk
chinnakkannan
16th February 2015, 10:51 AM
அப்புறம் இந்தப் பொண்ணு என்ன பண்றது..காலங்கார்த்தால வெள்ளென எழுந்திடுச்சு.. சமத்தா குளிச்சுடுத்து..
அப்புறம் தப்பக்குன்னு வெட்ட வெளில்ல தாவிக் குதிச்சுப் பாடிக்கிட்டிருக்கு..ஆர்மபத்திலருந்து கேட்டா ஒண்ணும் புரியாத மாதிரி
பாவம் தாயில்லாப் பொண்ணு போல அம்மாவ நினச்சுப் பாடுதுன்னு நினைக்கத் தோணும்..ஆனால் அப்படி இல்லை..
பாடறது இயற்கை அன்னையைப் பற்றி..
https://www.youtube.com/watch?v=22TU__YgGic
படம் இருளும் ஒளியும் பி.சுசீலா அண்ட் வாணிஸ்ரீ..
கொஞ்சம் அப்புறம் வாரேன்..
kalnayak
16th February 2015, 11:02 AM
நிலவுப் பாடல் 13: வெள்ளி நிலவே, வெள்ளி நிலவே
-----------------------------------------------------------------------------
இளையராஜா இசையில் SPB மற்றும் உமா ரமணன் பாடிய நல்ல ஹிட் பாடல். கேட்கவும் சுகமான பாடல். பாட்டை இயக்குனர் R.V. உதயகுமார் அவர்களே எழுதி இருக்கிறார். கவலையிலிருக்கும் கன்னியை துயரம் தீர்க்க களிப்பில் ஆழ்த்த கார்த்திக் தோழர்களுடன் தோள் சேர்த்து ஆடும் பாடல்தான் இது.*
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோருட்ட
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே
உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே
நிலா சோறு நிலா சோறு தரவா நீயும் பசியாற
குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக
வானவில்லும் தானிறங்கி பாய் போடும் நீயும் தூங்க
ஆடும் மயில் தொகை எல்லாம் தாலாட்டியே காத்து வீச
தேவ கன்னியே தெய்வதென்ன நீ தன்னாலே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு
நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு
உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு
வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே
வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே,,, தெய்வதென்ன நீ தன்னாலே
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திட தானே தேடுது
மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடி சோறூட்ட
தள்ளி நடந்தால் வேறாரு வருவார் என்னை காப்பாற்ற
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா
https://www.youtube.com/watch?v=FOAAPtCK3Do
பாட்டை கேட்டால் நந்தவனத்து தேருல போனது போல இருக்குது இல்ல?
kalnayak
16th February 2015, 11:14 AM
சி.க.,
குட் மார்னிங். காலையில பயங்கர மூடா? இயற்கைப் பாட்ட ரெண்டு போட்டு கலக்கிட்டேளே!!!
kalnayak
16th February 2015, 11:45 AM
நிலவுப் பாடல் 14: "தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளி..."
----------------------------------------------------------------------------------------------
வெள்ளி நிலவுக்கு அப்புறம் தங்க நிலவுதானே!!! ஜெமினி கணேசன் அவர்கள் பாடுவதான இந்த அருமையான பாடலைத்தான் கேளுங்களேன். A.M. ராஜாவும், ஜிக்கி அவர்களும் பாடிய இனிமையான பாடல். இதையும் பட்டுக்கோட்டையார்தான் எழுதியுள்ளார்.
பாடல் வரிகள்:
காதலன் :
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவிதுண்டோ...!?
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவிதுண்டோ...!?
துள்ளித் திரிவிதுண்டோ
தேன் பொங்கி ததும்பும் கோவைப் பழங்கள்
புன்னகை செய்வதுண்டோ ...!?
புன்னகை செய்வதுண்டோ ...!?
காதலி :
கன்னி அழகு எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும்
கற்பனை வீடாகும்
கனி புன்னகை செய்யும் வண்ண நிலவில்
கெண்டை விளையாடும்
கெண்டை விளையாடும்
ஆஅ ஆஅ ....ஆஅ. ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ....ஆஅ. ஆஅ ஆஅ
காதலன் :
காவிய ஜீவன் சிற்ப வடிவில்
கலந்து காணும் அழகே
கலந்து காணும் அழகே
காதலி :
என் சிந்தை இனிக்க செவிகள் குளிர
செந்தமிழ் பாடும் அன்பே
செந்தமிழ் பாடும் அன்பே.....
இருவரும் :
தங்க நிலவில் இன்பக் கதைகள்
சொல்லித் தெரிவதுண்டோ
சொல்லித் தெரிவதுண்டோ
காதலன் :
வானவெளியில் ஞான ரதங்கள்
வாவென்று அழைக்குது பாராய்
வாவென்று அழைக்குது பாராய்
காதலி :
கலை ஞானஉலகில் பூமியில் இங்கே
கண்டிடலாம் நீ வாராய்
கண்டிடலாம் நீ வாராய்
இருவரும் :
தங்க நிலவில் இன்பக் கதைகள்
சொல்லித் தெரிவதுண்டோ
சொல்லித் தெரிவதுண்டோ
https://www.youtube.com/watch?v=WdDl3HCWKKg
அருமையான இந்த பாடலை திருமணத்தில் தேடுங்கள் என்று யாராவது சொன்னால் மலைத்துப் போகாதீர்கள்.
chinnakkannan
16th February 2015, 11:51 AM
Good morning kalnayak
ச்சும்மா.. திடீர்னு தோணித்து அவ்ளோ தான்..
இதுல பார்த்தீங்கன்னா சர்ரூ காட்டோட இயற்கைப் பத்திப் பாடறாங்க..
https://www.youtube.com/watch?v=4xMiBTBNDU4
chinnakkannan
16th February 2015, 11:51 AM
வெள்ளி நிலவு தங்க நிலவு. ரெண்டு பாட்டையும் பின்ன தான் கேக்கணும்..ம்ம்
chinnakkannan
16th February 2015, 12:58 PM
பாரில் இருப்பதென்ன பார்ப்பதெலாம் வண்ணமயத்
தேரில் பவனிவரும் தெள்ளமுதம் - வாரியே
வள்ளலெனத் தான்வழங்கி வாகாய்ச் சிரித்தபடி
அள்ளும் இயற்கையே ஆம்
*
பாவம் இந்தப் பொண்ணு அகெய்ன் காட்டு வாசி போல இருக்கு.. காட்டுக்குள்ளே திருவிழான்னு பாடுது
https://www.youtube.com/watch?v=ihlXrxd7nGk
kalnayak
16th February 2015, 01:07 PM
பாவம் இந்தப் பொண்ணு அகெய்ன் காட்டு வாசி போல இருக்கு.. காட்டுக்குள்ளே திருவிழான்னு பாடுது
உங்க கமெண்ட பார்த்து உளுந்து உளுந்து சிரிக்கிறேன்.
kalnayak
16th February 2015, 02:23 PM
நிலாப் பாடல் 15: "மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்..."
--------------------------------------------------------------------------------------
தங்க நிலவுக்கு அப்புறம் மஞ்சள் நிலா. சிவக்குமாரும், சுமித்ராவும் பாடறதா இளையராசா போட்டிருக்காரே பாட்டு. அப்பப்பா என்னாமா கீது பாட்டு. ரயிலிசை மெய் மறக்க செய்யுதுங்க. ஜெயச்சந்திரனும், இசையரசியும் பாடிஇருக்காங்க பாருங்க சூப்பரா. கவியரசர் எழுதினததான் ஒரு இடத்தில் போட்டிருந்துச்சு. தப்பா இருந்தால் திருத்துங்க.
பாட்டு வரிகள் இதோ:
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்(2)
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்
ஓ .. ஒ .. ஒ ஒ ஒ ……
……..மஞ்சள் நிலாவுக்கு ………..
வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் நாதம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஓ … ஓ .. ஓ ஓ ஓ
………..மஞ்சள் நிலாவுக்கு……………
பாட்டை பாருங்க.
https://www.youtube.com/watch?v=kxIUtl-zMic
முதல் இரவு படத்தில் இந்த பாடல்.
chinnakkannan
16th February 2015, 03:10 PM
கவிதையும் கானமும்..
உடலில் எப்படி இவ்வளவு நிறங்கள் கொண்டது இந்தப் பட்டுப் பூச்சி.. வித விதமான டிசைன்கள்..இப்படி வெகுஅழகானபட்டுப் பூச்சியின் வாழ்க்கையே எட்டு நாள் தான் (இப்படி ஒரு பாட்டு கூட வரும்) - உண்மையா என்ன..
வெளிர் நீல வானம்.. நடுவில் சில பல வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள்.. குறுக்கே வெட்டினாற் போல ஒரு வானவில் சிரிக்க சில பல பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன..இப்படி ஒரு படம் முக நூலில் பார்க்க நேர்ந்தது.. அதற்கு எழுதிப் பார்த்த பாடல் இது..
வானவில்லே வானவில்லே எங்கே வந்தீங்க
..கானமிட்டு பறக்குமெம்மை பார்க்க வந்தீரா
ஆனபடி உங்களோட நிறங்க ளெல்லாமும்
..எங்களிடம் இருக்குதான்னு பாக்க வந்தோமே
போனபடி இருக்கின்ற மேகம் அண்ணாச்சி
..பொசுக்கென்றே நின்னுப்பிட்டீர் விஷயம் என்னண்ணா
மோனமுடன் கலையுமெங்கள் வாழ்க்கை போலத்தான்
..மேதினியில் உமைக்கண்டே நின்றோம் பூச்சியே..
சரி தானே..
*
https://www.youtube.com/watch?v=KJnEnPPcuwM
kalnayak
16th February 2015, 03:40 PM
நிலாப் பாடல் 16: "கல்யாணத் தேன் நிலா..."
-------------------------------------------------
மஞ்சள் நிலாவுக்கு அப்புறம் என்ன நிலா இருக்குன்னு தேடினேங்க. கல்யாணத் தேன் நிலா இருக்குன்னு இப்படி பாடிக்கிட்டு இருக்காங்க. இதுவும் ராஜாங்க இசை தாங்க. மம்முட்டிக்கும் அமலாவுக்கும் முறையா கே. ஜே. ஜேசுதாஸ், சித்ரா பாடியிருக்காங்க. புலமைப் பித்தன் பாட்டை இயற்றி இருக்காருங்க.
பாட்டை படியுங்க:
----------------------------------------------------------------------------------------
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா?
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா?
என் அன்புக் காதலா எந்நாளும் கூடலா?
பேரின்பம் நீரிலா நீ தீண்டும் கையிலா?
பாற்போமே ஆவலா? வா வா நிலா
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா தேன் உன்தன் வாக்கிலா?
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா?
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா?
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா?
தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
---------------------------------------------------------------------------------------------
பாட்டை கேளுங்க.
https://www.youtube.com/watch?v=ymYz5DeCFls
மௌனம் சம்மதம்-னு எல்லா விஷயத்துக்கும் எடுத்துக்கலாமுங்களா?
chinnakkannan
16th February 2015, 04:26 PM
//மௌனம் சம்மதம்-னு எல்லா விஷயத்துக்கும் எடுத்துக்கலாமுங்களா?// எடுத்துக்கலாம் தான்..அப்புறம் அடி வாங்கினா எங்கிட்ட வரப்படாது :)
chinnakkannan
16th February 2015, 04:33 PM
வரிஞ்சு கட்டிக்கிட்டு நிலாக்காக உழைக்கிறீங்க..இந்தாங்க ஒரு பாட் வச்சுக்கோங்க..
கண்ணிலா கண்ட பின்பு
..காட்சிகள் மாற லாச்சே
பெண்ணிலா சிரிக்க நெஞ்சம்
..பித்தமும் கொள்ள லாச்சே
வெண்ணிலா ஒளியுங் கூட
..வேகமாய் மங்க லாச்சே
எண்ணிலா ஏக்கம் வந்து
...இதயமும் தவிக்க லாச்சே..
..
rajeshkrv
17th February 2015, 12:10 AM
PS in vijay tv super singer today
http://www.dailymotion.com/video/k5SOGnjFkMBs5da9wrg?start=9
rajeshkrv
17th February 2015, 06:56 AM
https://www.youtube.com/watch?v=fXgNCexjAVg
rajraj
17th February 2015, 07:38 AM
Special with no Hindi song for Rajesh.
From Thiruttu Raman (55/56)
Bale Saadhu enga Bapuji....
http://www.youtube.com/watch?v=keqKtPKfQ4E
From Donga Ramudu,, Telugu version of Thiruttu Raman
Bale tata mana Bapuji.....
http://www.youtube.com/watch?v=YTwgs309jxg
These are considered to be two of Susila's earliest songs to launch her career ! :)
kalnayak
17th February 2015, 03:20 PM
நிலாப் பாடல் 17: "வானிலே தேனிலா ஆடுதே..."
இங்க கமலஹாசனும், அம்பிகாவும் வானிலே தேனிலா ஆடுதுன்னு சொல்லிப்போட்டு ரெண்டு பெரும் எம்மாம் ஆட்டம் போடுறாங்க பாருங்க. ராஜாங்க இசையிலே பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S. ஜானகி, வரிகள்: வைரமுத்து.
பாட்டு வந்த காலத்திலே எப்பிடி வெற்றி கோடி நாடியிருக்கும்-னு நெனச்சு பார்க்கறேன். தெருவெல்லாம் இந்த பாட்டுதான். அதனாலதான் எனக்கு இப்ப ஞாபகத்துல டக்குன்னு வந்திருச்சு.
பாட்டு வரிகள் இதோ:
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
(வானிலே..)
வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்
(வானிலே..)
பூவை போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே
மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
(வானிலே..)
பாட்டை பாருங்களேன்:
https://www.youtube.com/watch?v=YEnK8zbS8xQ
காக்கிச்சட்டை போட்டவங்க இப்பிடி ஆடலாமான்னு கேட்டா காக்கிச்சட்டை போட்டவங்க இப்பிடி ஆடாக்கூடாதான்னு கேட்கறாங்க.
chinnakkannan
17th February 2015, 04:40 PM
அனைவருக்கும் என து சிவராத்திரி நல் வாழ்த்துக்கள்..
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே சுந்தர மூர்த்தி நாயன ந.தி..
https://www.youtube.com/watch?v=sesdbv0pXHA
chinnakkannan
17th February 2015, 10:37 PM
தாயில்லாக் குழந்தையை நினைவு படுத்திவிட்டார் முரளி.. நானும் ஸ்ரீ தேவியில் தான் பார்த்த நினைவு..
ஜெயச்சித்ரா தனியாக சோகமாக ஆரம்பித்து ஜோராகப் பாடும் டூயட்டைப்பார்த்துக் குழம்பியது நினைவிருக்கிறது.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wT9wHXt-m4M
ஆமாம் முரளிங்ணா சித்ரா பெளர்ணமி சினிப்ரியா என போஸ்டர் பார்த்த நினைவு..தவிர லோக்கல் மீனாட்சி என்றால் குதிரைவண்டியில் குடும்பத்துடன் போயிருப்போம்..எப்படி மிஸ் பண்ணினோம் என நினைவில்லை.. வளர்ந்து டிவிடியில் தான் பார்த்த நினைவு..
rajeshkrv
17th February 2015, 11:12 PM
நிலாப் பாடல் 15: "மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்..."
--------------------------------------------------------------------------------------
தங்க நிலவுக்கு அப்புறம் மஞ்சள் நிலா. சிவக்குமாரும், சுமித்ராவும் பாடறதா இளையராசா போட்டிருக்காரே பாட்டு. அப்பப்பா என்னாமா கீது பாட்டு. ரயிலிசை மெய் மறக்க செய்யுதுங்க. ஜெயச்சந்திரனும், இசையரசியும் பாடிஇருக்காங்க பாருங்க சூப்பரா. கவியரசர் எழுதினததான் ஒரு இடத்தில் போட்டிருந்துச்சு. தப்பா இருந்தால் திருத்துங்க.
பாட்டு வரிகள் இதோ:
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்(2)
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்
ஓ .. ஒ .. ஒ ஒ ஒ ……
……..மஞ்சள் நிலாவுக்கு ………..
வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் நாதம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஓ … ஓ .. ஓ ஓ ஓ
………..மஞ்சள் நிலாவுக்கு……………
பாட்டை பாருங்க.
https://www.youtube.com/watch?v=kxIUtl-zMic
முதல் இரவு படத்தில் இந்த பாடல்.
varigal Vaali ayya
kalnayak
18th February 2015, 12:00 PM
varigal Vaali ayya
Thanks Rajesh,
vara vara intha website contents-kala nambave mudiyala. pala idangalil thedi, intha URL-la kannadaasan ezhuthinatha pottirunthathu. Santhekathin perilaya solliyirunthen. Neenga Vaali-nnutteenga.
http://www.palanikumar.com/videoonesongs_tamil.phtml?vid=1083&fd=0&sd=2162
kalnayak
18th February 2015, 12:18 PM
நிலாப் பாடல் 18: "நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்..."
---------------------------------------------------------------------------------
கமலஹாசனின் இந்த பாட்ட போடமாட்டீங்களான்னு யாரும் கேக்கறதுக்கு முன்னாடி இதோ போட்டுட்டேன். அதே அம்பிகாவோடததான் இந்த ஏரோட்டிக் பாடல். இதுவும் ராஜாவோட இசையில பயங்கர ஹிட். சீ-ன்னு யாரும் சொல்லமாட்டீங்களே!!!
மலேஶியா வாசுதேவன்-உம் S. ஜானகியும் பாடியிருக்காங்க. எழுதினவர் வாலிதான்னு எனக்கு உறுதியா தெரியாததினால், தெரிஞ்சவங்க உறுதிபடுத்துங்க.
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
—
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும்
அம்மாடி அதுக்கென்ன அவசரமோ
—
நிலாக்காயுது…..
ஆ…..
நேரம் நல்ல நேரம்……
ஆ…ஹா….
நெஞ்ச்ஜில் பாயுது…..
ஆ……
காமன் விடும் பாஅம்…..
—
தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா
கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ…. அதிசய சுரங்கமடி…..
—
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
------------------------------------------------------------------------------------
பாட்டை பாக்கணும்னா:
https://www.youtube.com/watch?v=8lDvlV1DsAg
சகலகலா வல்லவர்தான்.
kalnayak
18th February 2015, 12:31 PM
நிலாப் பாடல் 19: "நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!"
--------------------------------------------------------------------------------
வைரமுத்துவின் வரிகளை ஹரிணி பாட A.R. ரஹ்மான் இசையமைத்துள்ளார். குழந்தை மோனிகா நடிச்சுருக்காங்க.
ஆ... ஆ... ஆ.... ஆ...
நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே!
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை!
என்றென்றும் வானில்!!
நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
அதோ போகின்றது! ஆசை மேகம்!
மழையை கேட்டுக் கொள்ளுங்கள்!
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்!
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்!
இந்த பூமியே பூவனம்!
உங்கள் பூக்களை தேடுங்கள்!
இந்த வாழ்கையே சீதனம்!
உங்கள் தேவையை தேடுங்கள்!
நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
--------------------------------
பாட்டை பாருங்க:
https://www.youtube.com/watch?v=oqN5HriMAxg
படத்து பேரு 'இந்திரா'வாம்.
kalnayak
18th February 2015, 12:43 PM
நிலாப் பாடல் 20: "நிலவே என்னிடம் நெருங்காதே"
-------------------------------------------------------------
ஜெமினி கணேசன் நடித்து P.B. ஸ்ரீநிவாஸ் பாடிய சோகமான அதே சமயம் மிகப் பிரபலமான பாடல். இப்படியா ஒரேயடியா சோகத்தை பிழிஞ்சு கொடுக்கறது.*இசை மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் மட்டும்தான் போல. பாட்டை எழுதியிருப்பவர் கண்ணதாசன்.
பாடல் வரிகள் இதோ:
--------------------------------
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...
------------------------------------------------------------------------------------
பாடலை பாருங்கள் இங்கே:
https://www.youtube.com/watch?v=kj32Cf3aus0
ராமரைப் போலவே இந்த ராமுவுக்கும் சோகம் முடிந்து சுகம் பிறந்ததா?
chinnakkannan
18th February 2015, 12:51 PM
படருங் கொடியாய்ப் பரவசமாய் இங்கே
தொடரும் நிலவுகள் தான்..
vaanga kal nayak good morningna..
நடத்துங்க நடத்துங்க..
chinnakkannan
18th February 2015, 12:54 PM
இந்த நிலாக் காயுதுஅந்தக் காலத்துல பயங்கர ஹிட்.. அதுவும் காஸெட் மார்க்கெட்டுக்கு வந்த புதுசு. .மதுரையில ஒவ்வொரு டீக்கடைக்கும் குறைந்தபட்ச இடைவெளில்ல இந்தப் பாட்டு தான் கேட்டுக்கிட்டிருக்கும்..(என நினைவு)
நிலாக்காய்கிறது பாடல் என் நண்பர் ஒருவரின் மனைவியாருக்கு ஃபேவரிட்; எந்த கெட்டுகதெரிலும் இந்தப் பாட்டைப் பாடாமல் இருக்க மாட்டார்..ஆனால் அந்தப் பாட்டை இதுவரை நான்பார்த்ததில்லையாக்கும்..ஈவ்னிங்க் லெட் மி ஸீ..
kalnayak
18th February 2015, 12:55 PM
தாங்சுங்க சி.க.,
Good Morning. இன்னும் நெறைய நெலா இருக்கு எம்புட்டு நாள் வரும்னே தெரியல. முடிஞ்ச அளவுக்கு வாசு வர்றதுக்குள்ளே போட்டுர்றேன். வாசு வந்த பின்னாடி பார்ப்போம் - நான் ஏதாவது பண்ண முடியுமான்னு.
நீங்க சொன்னாமாதிரி எல்லா இடத்துலயும் கேட்டாலும் பேசுறப்ப எல்லாரும் இந்த நிலா காயுது பாட்டை சீ'ன்னு சொல்லித்தான் நான் கேள்விப் பட்டிருக்கேன். இது என்ன விபரீதம்?
பாருங்க நீங்களே ஆஹா இப்படி ஒரு சீ'யான்னு சொல்லுவீங்க.
chinnakkannan
18th February 2015, 12:58 PM
ஒரு சின்ன சஜெஷன்.. முழுப்பாட்டப் போடறத விட அந்த ப்பாட்டுல உங்கள் மனம் கவர்ந்த வரி + உங்களோட நேச்சுரல் ஹ்யூமரோட கூடிய சின்ன அல்லது பெரிய ரைட் அப் பளஸ் காணொளின்னு தாங்களேன்.. டைம் இருந்தா..(கோச்சுக்காதேள்) இப்ப இருக்கறதும் ஓகேதான்..
chinnakkannan
18th February 2015, 01:07 PM
பெண்களை அந்தக் காலத் திரைப்படஙக்ளிலும் சரி இந்தக்காலத் திரைப்படங்களிலும் சரி வர்ணிப்பதென்றால் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வண்ணம் ஓரிருபாடல்கள் வைத்திருப்பார்கள்..
இந்தப் பாடலில் ஜூஹி சாவ்லா - ஜூலி என்று தமிழில் பருவ ராகத்தில் அறிமுகமாகிவிட்டு ஹிந்திக்குப் போய் ஜூஹியாய் செட்டில் ஆகிவிட்டார்..
படத்தில் வெகு அழகாய் இருப்பார் அவர்..இந்தப் பாடல் பார்த்து பலவருடம் ஆகியும் இன்னும் நினைவில்..
https://www.youtube.com/watch?v=x361UZY5GgM
kalnayak
18th February 2015, 01:09 PM
நீர் மேகம் ஆனால் என்ன - நல்ல பாட்டு கேட்டிருக்கிறேன். நினைக்க வச்சிட்டீங்க.
kalnayak
18th February 2015, 01:12 PM
பருவ ராகம் படம் ரெண்டு வாட்டி பாத்திருக்கேன். கன்னடத்துல "பிரேம லோகா"-ன்னு வந்து வருஷ கணக்கில ஓடிச்சுன்னு சொல்வாங்க. ராஜேஷ்தான் உறுதி பண்ணனும்.
rajeshkrv
18th February 2015, 09:51 PM
நிலாப் பாடல் 18: "நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்..."
---------------------------------------------------------------------------------
கமலஹாசனின் இந்த பாட்ட போடமாட்டீங்களான்னு யாரும் கேக்கறதுக்கு முன்னாடி இதோ போட்டுட்டேன். அதே அம்பிகாவோடததான் இந்த ஏரோட்டிக் பாடல். இதுவும் ராஜாவோட இசையில பயங்கர ஹிட். சீ-ன்னு யாரும் சொல்லமாட்டீங்களே!!!
மலேஶியா வாசுதேவன்-உம் S. ஜானகியும் பாடியிருக்காங்க. எழுதினவர் வாலிதான்னு எனக்கு உறுதியா தெரியாததினால், தெரிஞ்சவங்க உறுதிபடுத்துங்க.
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
—
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும்
அம்மாடி அதுக்கென்ன அவசரமோ
—
நிலாக்காயுது…..
ஆ…..
நேரம் நல்ல நேரம்……
ஆ…ஹா….
நெஞ்ச்ஜில் பாயுது…..
ஆ……
காமன் விடும் பாஅம்…..
—
தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா
கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ…. அதிசய சுரங்கமடி…..
—
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
------------------------------------------------------------------------------------
பாட்டை பாக்கணும்னா:
https://www.youtube.com/watch?v=8lDvlV1DsAg
சகலகலா வல்லவர்தான்.
Vaaliye thaan
rajeshkrv
18th February 2015, 09:52 PM
பருவ ராகம் படம் ரெண்டு வாட்டி பாத்திருக்கேன். கன்னடத்துல "பிரேம லோகா"-ன்னு வந்து வருஷ கணக்கில ஓடிச்சுன்னு சொல்வாங்க. ராஜேஷ்தான் உறுதி பண்ணனும்.
Paruva ragam original Prema loka Starring kannada ravichandran & Juhi. Juhi's first film
rajeshkrv
19th February 2015, 07:16 AM
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் தொடரும் விரைவில்...
இதோ கண்ணா வருவாயாவின் தெலுங்கு வடிவம்
இசையரசியுடன் பாலு
https://www.youtube.com/watch?v=TwgpeUc29Cw
kalnayak
19th February 2015, 03:50 PM
ராஜேஷ்,
தமிழில் 'மனதில் உறுதி வேண்டும்' படத்திற்கு இளையராஜா அல்லவா இசை. இது தெலுங்கு டப்பிங் செய்த படமா இல்லை ரீமேக் செய்ததா? தேவா எப்படி இசையமைத்தார் - ரீமேக்கிற்க்கா?
kalnayak
19th February 2015, 04:02 PM
நிலாப் பாடல் 21: "நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்"
---------------------------------------------------------------------------------------
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
------------------------------------------------------------------------------------------------------
நல்ல மெலோடி பாடல்தான். இன்னும் பலவிதங்களில் இளையராஜாவின் இனிய கீதம் என்று கேட்டு ரசிக்கப்படுகிறது. சரி அது என்ன "பூவுக்கு வாய்ப்பூட்டு. என் சோகம் நீ மாற்று". சி.க. இதுக்கு நீங்கதான் விளக்கம் தரணும். (உங்க சஜ்ஜஸன்ஸ் டிரை பண்ணறேன் நெறய டயம் வேணுமாயிருக்கு தமிழில் பதிய)
பாட்டை பாருங்க:
https://www.youtube.com/watch?v=AXo8i3tVPWI
ஜன்னலில் நிலவு பாக்கிறது பெரிய விஷயமில்லைங்க. இந்த பாட்டு ஜோடியா பாடிகிட்டு காஷ்மீர் பனியில் சுத்துரது கைராசிக்காரனால் மட்டும்தான் முடியும்!!!
chinnakkannan
19th February 2015, 04:34 PM
பாட்டுக் கேட்டுட்டு சொல்றேன் கல் நாயக்.. கேட்டு ரொம்ப நாளாச்சு..// (உங்க சஜ்ஜஸன்ஸ் டிரை பண்ணறேன் நெறய டயம் வேணுமாயிருக்கு தமிழில் பதிய)// நோ ப்ராப்ளம் குரு..
கையில்லாத பொம்மை என்ற நாவல் - குமுதம் ரா.கி ரங்கராஜனுடையது..- மிக உருக்க மான நாவல்.. படத்தை அப்படியே எடுத்திருந்தால் இன்னும் ஹிட்டாயிருக்கும்.. கொஞ்சம்கதையைக் குழப்பி மாற்றி சொதப்பிவிட்டதாக நினைவு.. காஷ்மீர் பனியில சுத்துறது அட்லீஸ்ட் கோட்லாம் போட்டிருக்காங்களே..சிலபடங்கள்ல நடிகைகளுக்கு மட்டும் குறைவாய் ஆடை கொடுத்துகுளிரக் குளிர நடுங்க விட்டிருப்பார்கள் பாவம்..
rajeshkrv
19th February 2015, 10:07 PM
ராஜேஷ்,
தமிழில் 'மனதில் உறுதி வேண்டும்' படத்திற்கு இளையராஜா அல்லவா இசை. இது தெலுங்கு டப்பிங் செய்த படமா இல்லை ரீமேக் செய்ததா? தேவா எப்படி இசையமைத்தார் - ரீமேக்கிற்க்கா?
ayyo,
irandu varigalayum serthu padithu vittergal
manadhil urudhi vendum dubbing in telugu as sister nandhini..
naan sonnadhu viraivil devavin thodar thodarum..
appuram i shared the telugu song...
rajeshkrv
20th February 2015, 10:21 AM
Beautiful duet by Malaysia Vasudevan sir & Isaiyarasi
https://www.youtube.com/watch?v=xgmURKkz_zE
kalnayak
20th February 2015, 12:03 PM
ayyo,
irandu varigalayum serthu padithu vittergal
manadhil urudhi vendum dubbing in telugu as sister nandhini..
naan sonnadhu viraivil devavin thodar thodarum..
appuram i shared the telugu song...
மன்னிக்கவும் ராஜேஷ்,
நான்தான் அவசரத்தில் தவறாகப் புரிந்துகொண்டேன். நன்றி.
kalnayak
20th February 2015, 12:25 PM
நிலாப் பாடல் 22: "நிலவு வந்து பாடுமோ"
--------------------------------------------------------------
சோகப் பாடலில் நிலவே வர வேணாமுன்னு ஜெமினி பாடி கேட்டோம். அந்த பாட்டை கேட்ட K.R. விஜயாவை சோகமாக பாடற மாதிரி நடிக்க வைச்சு இசையரசி பாடிய நல்ல பாட்டு இது. கண்ணதாசன் எழுதிய இந்த பாட்டு சோகத்த்திற்கு சோகமும் ஆச்சு. அந்த பாட்டுக்கு ஆடற மாதிரியும் இருக்கணும்னு இயக்குனர் கண்டிப்பா சொல்லிட்டாரு. பாருங்க இசையரசி ரெண்டுத்துக்கும் சேந்து எப்பூடி பாடியிருக்காங்கன்னு. விரக்தியா பாடற போது, ஆடறது நல்லாவே இருக்குங்க. சத்தியமா இதுக்கு மெல்லிசை மன்னர்தானுங்க இசை.
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்
மாறட்டும்
மனது போல போகட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போன பின்
நீதி எங்கு வாழுமோ
நீதி எங்கு வாழுமோ
வாழட்டும்
வழி மறந்து வாழட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
அனுபவிக்கும் அவசரம்
ஆடை மாற்றும் அதிசயம்
முடிவில்லாத போதையில்
முகம் மறந்து போகுமோ
முகம் மறந்து போகுமோ
போகட்டும்
புதிய சுகம் காணட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
கருவிலுள்ள மழலையும்
உருவம் காட்ட முடியுமோ
உருவம் காட்ட முடியுமோ
முடியட்டும்
முடியும் போது முடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
--------------------------------------------------------------------------------------
சரி பாட்டை பார்ப்போமா:
https://www.youtube.com/watch?v=3kJm5268QTk
இப்படி இவங்களே வியந்து போய் ராமன் எத்தனை ராமனடி-ன்னு சொன்னால் யாரு வந்து இதுக்கு பதில் சொல்வாங்க!!!
chinnakkannan
20th February 2015, 04:00 PM
ராமன் எத்தனை ராமனடி வெகுசின்ன வயதில் நியூசினிமாவில் பார்த்தது..கதை மறந்துவிட்டது.. ந.தி ஸ்டார் ஆகி வரும்போது கேஆர்வி ரிஜெக்ட் செய்வார்..முத்துராமனுடன் ஒரு குழந்தை இருக்கும்..சேரசோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ் நாடு என ஒரு பாட்டு அப்புறம் இது. இப்படி புகையாய்த்தான் நினைவில்..கடைசியில் ந.தி முத்துராமனின் கொலைக்குற்றத்தை த் தான் ஏற்றுகொண்டு விடுவாரில்லையா
chinnakkannan
20th February 2015, 04:01 PM
மாறட்டும் வாழட்டும் போகட்டும் என வரும்போது ஒரு ஹை பிட்ச் கொடுத்திருப்பாங்க சுசீலாம்மா.கொஞ்சம் உலுக்கும்..
kalnayak
20th February 2015, 05:51 PM
நிலாப் பாடல் 23: "நிலவு தூங்கும் நேரம்"
இதுவும் சோகமானப் பாடல்தான். என்ன சுகமாக இருக்கிறது பாருங்கள். எளிமையான வரிகள்தான். ராஜா என்னை ரொம்பவே ரசிக்க வைத்தார். S.P. பாலசுப்ரமணியம், S.ஜானகி இவர்கள் சேர்ந்தும், S.P. பாலசுப்ரமணியம் தனியாக பாடிய இரண்டு பாடல்கள் உண்டு. நடிகர் மோகனுக்கு எங்கயோ மச்சம் இருந்திருக்குன்னு சொல்வாங்க. பின்னாடி அழிஞ்சுபோச்சோ என்னவோ?
சரி பாடலைப் படிப்போமா?
-------------------------------------------------------------------------------------------
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு)
---------------------------------------------------------------------------------------------
சரி பாடலைப் பார்ப்போமா?
https://www.youtube.com/watch?v=qjnorxdJ2J8
https://www.youtube.com/watch?v=7rs_qe5o4Tw
குங்குமச்சிமிழ் போல அழகா பாட்டு இருக்கா என்ன? இது வேற. அது வேற.
uhesliotusus
20th February 2015, 09:26 PM
ராமன் எத்தனை ராமனடி வெகுசின்ன வயதில் நியூசினிமாவில் பார்த்தது..கதை மறந்துவிட்டது.. ந.தி ஸ்டார் ஆகி வரும்போது கேஆர்வி ரிஜெக்ட் செய்வார்..முத்துராமனுடன் ஒரு குழந்தை இருக்கும்..சேரசோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ் நாடு என ஒரு பாட்டு அப்புறம் இது. இப்படி புகையாய்த்தான் நினைவில்..கடைசியில் ந.தி முத்துராமனின் கொலைக்குற்றத்தை த் தான் ஏற்றுகொண்டு விடுவாரில்லையா
அய்யா சாமி! ஆளை விடு. சாப்பாட்டு ராமன் கதை. அதுவே மறந்து போச்சா?!!!!!!!!! கலிகாலம்டா சாமி. பிடி சிவாஜி ரசிகர்களின் சாபம்.
uhesliotusus
20th February 2015, 09:41 PM
Beautiful duet by Malaysia Vasudevan sir & Isaiyarasi
Rajesh,
Is it duet? Oh! Brother sister duet?
One doubt. What is meant by 'DUET'? I can't......
rajeshkrv
20th February 2015, 11:57 PM
Rajesh,
Is it duet? Oh! Brother sister duet?
One doubt. What is meant by 'DUET'? I can't......
enakku avlava theiryadhu but dictionary says "musical composition with 2 voices "
rajeshkrv
21st February 2015, 12:02 AM
நிலாப் பாடல் 23: "நிலவு தூங்கும் நேரம்"
இதுவும் சோகமானப் பாடல்தான். என்ன சுகமாக இருக்கிறது பாருங்கள். எளிமையான வரிகள்தான். ராஜா என்னை ரொம்பவே ரசிக்க வைத்தார். S.P. பாலசுப்ரமணியம், S.ஜானகி இவர்கள் சேர்ந்தும், S.P. பாலசுப்ரமணியம் தனியாக பாடிய இரண்டு பாடல்கள் உண்டு. நடிகர் மோகனுக்கு எங்கயோ மச்சம் இருந்திருக்குன்னு சொல்வாங்க. பின்னாடி அழிஞ்சுபோச்சோ என்னவோ?
சரி பாடலைப் படிப்போமா?
-------------------------------------------------------------------------------------------
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு)
---------------------------------------------------------------------------------------------
சரி பாடலைப் பார்ப்போமா?
https://www.youtube.com/watch?v=qjnorxdJ2J8
https://www.youtube.com/watch?v=7rs_qe5o4Tw
குங்குமச்சிமிழ் போல அழகா பாட்டு இருக்கா என்ன? இது வேற. அது வேற.
varigal Vaali ayya
uhesliotusus
21st February 2015, 09:36 AM
enakku avlava theiryadhu but dictionary says "musical composition with 2 voices "
If it so 'kannile neer etharku.... kaalamellam azhuvatharku' song is seergazhi, janaki pair duet song. Isn't? as per dictionary......:)
chinnakkannan
21st February 2015, 12:23 PM
திடீரென்று இந்தப் பாட்டு நினைவுக்கு வந்து ரொம்பவே படுத்தியது…வெகு அழகான பாடல். (எதற்காக என கடைசியில் சொல்கிறேன்)
தேடு தேடு தேடு எனத் தேடியதில் லிரிக்ஸ் இன்பமிங்கேயில் கிடைக்க, ஆடியோ என்னவோ வொர்க் செய்யவில்லை..பின் கொஞ்சம் தாஜா செய்து பாட வைத்தால். வாவ் என்ன ஒரு அழகானபாடல்
டி.எம் எஸ் பி சுசீலா கோரஸ் பாட்டு எம்.எஸ்.வி ராமமூர்த்தி இசை..தென்றல் வீசும் என படம் போட்டிருக்கிறது. நடிக நடிகையர்கள் தெரியவில்லை..
http://72.191.56.102/t/t/Thendral%20Veesum/Padikkatha%20Kavingar%20Padinar.eng.html
இனி வரிகள் (கொஞ்சம் போட்டுக்கறேன் கல் நாயக் நல்லா இருக்கு!)
ஆ..ஆஆ..ஹா... ஹா..ஆ...ஆ..ம்ம்ம்ம்
ஓஹொ ! லஹொஹ் லாஒஹொ...ஹொஹொ..
ஒஹோ ! பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
மான் என்றால் புள்ளி இல்லை
மயில் என்றால் தோகை இல்லை
தேன் என்றார் மீன் என்றார்
தெரிந்து சொன்னாரா ?
தேன் என்றார் மீன் என்றார்
தெரிந்து சொன்னாரா ?
பாடினார் கவிஞர் பாடினார்
கன்னியரை பஞ்சவர்ண கிளிகள் என்றாரே
ஆனால் கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே
கன்னியரை பஞ்சவர்ண கிளிகள் என்றாரே
ஆனால் கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே
ஆடவரை புலிகள் என்று பாடி வைத்தாரே
புலி ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே
ஆடவரை புலிகள் என்று பாடி வைத்தாரே
புலி ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே
அன்ன நடை நடக்கவில்லை
கண்ணிருந்தும் காணவில்லை
கன்னியர்க்கு மென்மையில்லை
சொன்னவர்க்கு மூளையில்லை
அன்ன நடை நடக்கவில்லை
கண்ணிருந்தும் காணவில்லை
கன்னியர்க்கு மென்மையில்லை
சொன்னவர்க்கு மூளையில்லை
காளையென்றால் கொம்புமில்லை
யானை என்றார் தந்தம் இல்லை
சிங்கம் என்றார் வீரம் என்றார்
தெரிந்து சொன்னாரா ?
அச்சமில்லை நாணமில்லை அடக்கமில்லையே
இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதமில்லையே
பெண் குலைத்தை கேலி செய்தல் வீரமில்லையே
இதில் பெண்களுக்கும் உங்களுக்கும் பேதமில்லையே
வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ
பெற்றெடுக்கும் பெண்மையன்றோ
ஆண்மையின்றி பெண்மையில்லை
பெண்மையின்றி ஆண்மையில்லை
வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ
பெற்றெடுக்கும் பெண்மையன்றோ
ஆண்மையின்றி பெண்மையில்லை
பெண்மையின்றி ஆண்மையில்லை
மான் என்றார் பார்வை சொன்னார்
மயில் என்றார் சாயல் சொன்னார்
தேன் என்றார் இனிமை சொன்னார்
தெரிந்து கொள்வோமே !
**
எதற்காக நினைவுக்கு வந்தது என்றால்…
பாடினார் கவிஞர் பாடினார் – என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதலாம் என நினைத்திருக்கிறேன் -உஷார் ( தொழில் பாட்டுக்கள் என்னப்பா ஆச்சு…-- அதுவும் எழுதுவேன்..!)
வீடியோ போடுபவர்களுக்கு ஒரு வெண்பா பரிசு!
Murali Srinivas
21st February 2015, 01:10 PM
கண்ணா,
பாடினார் கவிஞர் பாடினார் பாடல் நிச்சய தாம்பூலம் படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது, ஆனால் அந்தப் படத்தில் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட முடியவில்லை எனவே நிச்சய தாம்பூலம் படத்தின் தயாரிப்பாளரான B.S. ரங்கா [விக்ரம் ஸ்டுடியோ விக்ரம் புரொடக்ஷன்ஸ் அதிபர்] தந்து அடுத்த படமான தென்றல் வீசும் படத்திற்கு இந்தப் பாடலை பயன்படுத்திக் கொண்டார். கல்யாண்குமார் ஹீரோ. நாயகி மாலினி?
இதுதான் YouTube லிங்க் என்று நினைக்கிறேன்.
www.youtube.com/watch?v=6JdqGWDyHNw
அன்புடன்
chinnakkannan
21st February 2015, 02:17 PM
**
முரளி..சூப்பர்.. தகவலுக்கு நன்றி.. நிச்சயதாம்பூலத்தில் வந்திருந்தால் மற்ற அழகிய பாடல்களுடன் இதுவ்ம் சேர்ந்து கொண்டிருக்கும். வித்யாசமான குரல் டிஎம் எஸ்ஸீக்கும் சுசீலாவுக்கும்..அண்ட் அழகிய அலசல் மெல்லிய கிண்டல் எனப் போகின்ற பாடல்
பறந்துதான் வந்திங்கு பாடலைச் சொன்ன
முரளி உமக்கொரு ஓ.
rajraj
23rd February 2015, 07:10 AM
ChinnakkaNNan,
Here is nilaa song for you from Kuravanji:
Yaar solluvaar nilave.....
http://www.youtube.com/watch?v=qDSHQQ3-SPM
kalnayak
23rd February 2015, 12:17 PM
நிலாப் பாடல் 24: "நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு"
-------------------------------------------------------------------------------------------------
வாலியின் பாடல். குழந்தை பாக்கியத்த்தை இழந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக தேற்றிக்கொள்வது போலான பாடல். ஸ்.P. B. , S. Janaki பாடிய பாடல். ராஜாவின் மற்றொரு சோகப் பாடல். ஆனா போன பாடல் கூட ஒப்பிட வேண்டாம். ரஜினி மற்றும் மீனாவின் நல்ல நடிப்பு. இந்த பாட்டு தலைப்பில் (பழைய) கார்த்திக் நடிச்சு ஒரு படமே வந்துவிட்டது.
பரவாயில்லயே தமிழ் நாட்டு காரங்க. காதல் வந்தாலும் நிலாதான். காதல் தோல்வின்னாலும் நிலாதான். பிள்ளை வரம் கிடைக்கலைன்னாலும் நிலாதான். மாறவே மாட்டாங்க.
பாடல்வரிகள்:
------------------------
நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு
அலை போல் சுருதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய்மடியே
பனிபோல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றன் உன்னையே ஒரு குறை சொல்லலாமா
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளைதானம்மா
நானும் கண்ட கனவு நூறைய்யா எனது தாயும் நீங்கள் தானைய்யா
இனி உன் துணை நானைய்யா
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போல துணையும் இல்லையே
இனி நீயென் தோளில் பிள்ளையே
நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு
அலை போல் சுருதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய்மடியே
சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே
இமை மீறும் கண்ணின் நீரென்றால் தினம் கொதிப்பவன் நானே
மாலையோடு நடக்கும் தேரையா
நடக்கும் பொது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீயென் வாழ்வின் எல்லையே
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்த குறையும் இல்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு
அலை போல் சுருதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய்மடியே
நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு
----------------------------------------------------------------------------------------
பாட்டின் ஒளி-ஒலி:
https://www.youtube.com/watch?v=WucVPeLaWbY
எஜமானுக்கே இப்படியான்னு யாரும் தப்பா முடிவு எடுக்கலையே!!!
chinnakkannan
23rd February 2015, 02:46 PM
வாங்க கல் நாயக்.. வீக் எண்ட் எப்படி.. நிலவே முகம் காட்டு ரொம்ப ரேர் சாங்க் இல்லியோ.. ரொம்ப நாளாச்சு கேட்டு தாங்க்ஸ்..
கொஞ்சம் வேலை அதானெழுதல்ல..ஈவ்னிங்க் வாரேன்..
kalnayak
23rd February 2015, 02:56 PM
வாங்க வாங்க சி.க. நல்ல பாட்டை கொண்டு வாங்க.
வீக்-எண்ட் மறுபடி வெளியூர் பயணம். பயணக் களைப்புதான் வேறொன்றுமில்லை.
பாடினார் கவிஞர் பாடினார் - பாட்டு அருமையாக இருக்கிறது. உங்கள் தொடரும் அதைப் போலவே சூப்பராக இருக்கும். அது சரி. கவிஞர் பாடினார் என்றிருக்கிறீர்கள். நீங்கள் பாடினால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லையே.எப்படி ஆடியோ லிங்க் கொடுத்து உங்கள் குரல் வளம் பார்க்கச் சொல்லப் போகிறீர்களா? ஹை ஜாலி!!!
kalnayak
23rd February 2015, 05:48 PM
நிலாப் பாடல் 25: "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே"
----------------------------------------------------------------------------------------
ஜெமினியும், பத்மினியும் முழு நிலாவைப் பார்த்து எப்பிடி பாடுறாங்கன்னு பாருங்க. காதலியோடு நிலாவை ஒப்பிட்டு பல பாடல்களை பார்த்திட்டோம். இங்க நிலா வீசுது-ன்ராங்க. இப்பிடி அழகான பூங்காவில், முழு நிலவு ஒளியை இன்பமா கொடுத்தா காதலன் காதலி இல்லாதவங்களே பின்ணிதுவாங்க. ஒண்ணா இருக்குற காதலர்களுக்கு சொல்லவா வேணும். அதுக்காக இப்படியா பாம்பு வருவதும் தெரியாம பாட்டை பாடிக்கிட்டு. P.B. ஸ்ரீநிவாசும், P. சுசீலா அவர்களும் கு.மா. பாலசுப்பிரமணியம் எழுதிய பாடலை இப்படி அழகா பாடியிருக்காங்க. இசை: ஜி. ராமநாதன். இப்பிடி பாடினா, கேட்கிறவங்க யாரா இருந்தாலும் மெய் மறந்துதானே போவாங்க.
சி.க. இந்த கு.மா. பாலசுப்பிரமணியம் பற்றி தெரிஞ்சால் சொல்லுங்களேன்.
பாட்டு வரிகள்:
--------------------------
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
கண்கள் நாடும் கண்ணாளா என்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
அ..அ..ஆ..
கண்கள் நாடும் கண்ணாளா என்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
அ..அ..ஆ..
துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
கண்டும் உன்தன் வண்டு விழி நாணுமோ?
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
----------------------------------------------------------------------
ஒளியும் ஒலியும்:
------------------------
https://www.youtube.com/watch?v=DxG5X_vRVnc
ஏதோ வீரபாண்டிய கட்டபொம்மன் பாம்பை பாத்தாருங்களா, வந்து காப்பாத்திட்டாருங்க. இல்லைன்னா என்ன ஆவறது?
chinnakkannan
23rd February 2015, 10:46 PM
பாடினார் கவிஞர் பாடினார்..
**
அத்தியாயம் ஒன்று
**
கோவிலில் சென்றால் தெய்வத்தைக் கும்பிடவேண்டும் என்பது நியதி..அந்த வாலிபனுக்கும் அவ்வண்ணமே நினைப்பு தான்..இருப்பினும் அவனோர் கவிஞன்..கவிஞன் கண்களில் கட்டெறும்பு தட்டுப்பட்டால் என்னாகும்
விட்டுவிட்டுச் செல்லாமல் வேகத்தைக் கூட்டியே
எட்டிநீ செல்வதெங்கு ஏஎறும்பே – வட்டிலிட
பெண்ணொன்று காத்திருக்க பேதைநீ செல்வதைக்
கண்ணிலே கண்டுவிட்டேன் காண்..
இப்படி எறும்பைக்கூட கவியாக்கும் சின்னக் கவிஞர்கள்(ம்க்கும்.. நான் தான்) இருக்கையில் அந்த இளைஞனோ மகாகவி.. கண்ணில் தட்டுப் படுகிறாள் ஒரு நங்கை.. உடன் ஒரு மங்கை..உடன் ஒரு ஆள்.. முறையே மான் மயில் நரியெனச் சென்றாலுங் கூட முதல் நங்கையின் எழில் முகம் மனதில் பல அலைகளை எழுப்பிப் பொங்க வைத்துக் கவியாக வெளிப்படுகிறது..
தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!
மரபுக்கவிஞன் தான் மகாகவி காளிதாஸன்.. பெண்ணுக்காக கொஞ்சம் மரபை மீறி மரபுக்குள்ளேயே கவிதை பாடிவிட்டான்..அதுவும் என்ன மரபு.கட்டளைக் கலித்துறை..கொஞ்சம் சிரமமான விஷயம் தான்..
வெண்டளை பயில வேண்டும் நேரசையில் ஆரம்பித்தால் ஒவ்வொரு வரியிலும் 16 எழுத்துக்கள் (புள்ளி வைத்த எழுத்துக்களை கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடாது) முடியும் போது ஏகாரத்தில் முடியவேண்டும்.. இதை எல்லாம் எழுதிப்பார்க்க பேனா பேப்பர் (அந்தக்காலம்) ஒரு கம்ப்யூட்டர் எம் எஸ் வேர்ட் அண்ட் தமிழ் ஃபாண்ட் ப்ளஸ் விரல் (இந்தக்காலம்) வேண்டும்..
என இருக்கையில் ,மனதுள் உதித்துப் பாடினால் எப்படி இருக்கும்..அதுவும் இரண்டு விதமாய்த் தென்படும் வண்ணம்..
ஒரு விளக்கம்: ”அடி பெண்ணே.. இந்த உலோகம் தங்கம் இருக்கிறதே அதுவே தாமரை மொட்டுக்கள் போல ஆனது போன்ற நிறத்தில் உனது நகில்கள் நிமிர்ந்து நிற்க, குங்குமச் சாறு ஊறியதாற்போன்ற சிவந்த நிறங்கொண்ட உன் முகத்தில் குறு குறுவென இருக்கும் கருவண்டுகள் என உன் கண்கள் காட்சியளிக்க தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் பங்கய னான பிரம்மனின் வியப்புக்குரியதான படைப்பாகி பசுங்கொடி போல் துவண்டிருக்கும் நீ – உன் மேல் பகுதியில் அப்படியே பொங்கியே பூரித்து புறப்படு வரும் முழு நிலவென உன் முகம் இருக்குதடி.. நீயும் புறப்பட்டு விட்டாய்..”
இன்னொரு விளக்கம்” “ஓ நிலவே..தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுத்து நிற்க குங்கும நிறம் போன்ற மின்னும் தாமரை மலர் முகப்பினில் கருவண்டுகள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, தந்தைத் தாமரையின் மகளாகிய பெண் தாமரை எழுகிறது..அதன் மேல் நீயும் பொங்கி எழுந்து புறப்படுகிறாய்..”
கேட்ட வனிதை அதிர்ச்சியில் ஆனந்தக் களிப்பில் நிற்க அவளைத் தவிர அந்தப் பாடலைக் கேட்டது இன்னொருவர்..அரசன்..அவனும் கவிஞன்..
இந்தக் கவிஞர்களுடைய சுபாவமே கவிதை நன்றாக இருந்தால் ரசித்துவிட்டு மெளனமாக இருப்பார்கள்.. கொஞ்சம் ஏதாவது தென்பட்டால் உண்டு இல்லை தான் ஆக்கிவிடுவார்கள்..
அது போல அந்த அரசனான கவிஞனுக்கும்.. “ ஓய்..பாடல் நன்னாத் தான் இருக்கு”
காளிதாஸன் வணங்கி “ நன்றி “
“ஆனாக்க ஒம் பாட்டில ஒரு பிழை இருக்கு ஓய்..”
“என்ன அது”
“ கவி முரண் இல்லியோ.. பாடறது நிலாபத்தி அப்படியே தாமரையையும் கோத்து விட்டிருக்கீங்களே.. தாமரை பகல்லன்னா மலரும்..
“ இல்லீங்க்ணா.. தாமரைன்னு சொல்லலியே தாமரை மொட்டுன்னா சொன்னேன்..”
மன்னனுக்கு உடன் தன் பிழை புரிந்தாலும் உடனிருந்தவர்கள் ஒப்பாமல் டெஸ்ட் வைக்க அதில் காளிதாஸன் பாஸானது வேறு கதை..
இந்த கட்டளைக் கலித்துறைப்பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்ரமணியம்..
மகாகவி காளிதாஸில் வரும் பல மரபு க் கவிதைகளை எழுதியவர் அவர். பிறந்தது 1920 அண்ட் காலமானது 2004.. திரைப்பாடலில் மரபுக்கவிதையைப் புகுத்தியவர்களுள் ஒருவர் எனலாம்.. வெகு அழகான பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகத்தில் இருந்தவர்.. பாரதிதாசன் மீது மிகப் பற்று வைத்திருந்தவர்..
வீரபாண்டிய கட்டபொம்மனில் அனைத்துப் பாடல்களும் எழுதியவர் இவர் தான்.
.
மற்ற சில பாடல்கள்
யாரடி நீ மோகினீ
சித்திரம் பேசுதடி
அமுதைப் பொழியும் நிலவே
நெஞ்சினிலே நினைவு முகம்
இன்பம் பொங்கும் வெண்ணிலா
இன்னும் பல..
**
நாதஸ்வரத்தில் வாசிக்கப் பட்டிருந்த அந்த தேவாரப் பாடலைப் பாடப் பலரையும் அணுகினார் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு.வருடம் 1962..அந்த தேவாரப் பாடல் மந்திராமவது நீறு
அந்தப் பாடலை நாதஸ்வரத்தில் வாசித்திருந்தவர் திருநெல்வேலியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுறிச்சி என்ற கிராமம் உலகப் புகழ் பெறுவதற்குக் காரணமாயிருந்த நாதஸ்வர மேதை அருணாசலம்.
இப்படித் தேடுகையிலேயே ஒன்று தோன்றியது எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு..இதற்கு – இந்த நாதஸ்வர இசைக்கு ப் பொருத்தமாக வேறு பாடல் எழுதினால் என்ன..
அப்படியே கவிஞரைக் கூப்பிட கவிஞரும் எழுதிக் கொடுக்க பல பேரைப் பாடவைத்தால்..என்னமோ.. அந்த மரபிசைப் பாடலுக்கும் நாதஸ்வர இசைக்கும் அந்தப் பாடகிகளின் குரலுக்கும் ஏதோ ஏதோ.. நல்லாத் தான் இருக்கு ஆனால்..
கடைசியில் அப்போது அவ்வளவு பிரபலமாயிராத எஸ்.ஜானகியைப் பாட வைத்தார் .
கொஞ்சும் சலங்கை படத்தில் வந்த இன்றும் அழியாப் புகழுடன் விளங்கும் 'சிங்கார வேலனே தேவா ' என்ற பாடல் அது.
ஆபேரி' ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடல் அந்த ராகத்தில் அமைந்துள்ள எல்லாப் பாடல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது.இப்பாடலை எழுதிய கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
**
கு.மா.பாலசுப்பிரமணியத்தின் க.க து பாடல்காட்சி – மகாகவி காளிதாஸ்..
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=gr7jj-RtXLE
இனி என்ன ..இன்னொரு காதல் பாட்டு தான்..
ஆமாம் காதல்னா என்னங்க.. காதலே மாயை..ஒரு சின்னக் கனாலோகம் தானே..
கனவின் மாயா லோகத்திலே நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே
தீங்கனியே உன்னாசை போலே நாம்
இணைந்தாடுவோம் இந்நாளே
ரொம்ப எளிமையாக கு.மா.பாலசுப்பிரமணிய ம் எழுத பாடியவர்கள் டி.எம்.எஸ் பி.சுசீலா..இளமை ந.தி, நடிகையர் திலகம் சாவித்ரி ( ஒல்லியாய் இருக்கிறார்) படம் அன்னையின் ஆணை..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wzkXoR41lOE
**
அடுத்து வரும் கவிஞர் தாவணி போன்ற ஒன்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார்..கொஞ்சம் யூனிக்கான கவிஞர்.. தனக்குப் பிடித்தவருக்காக தன் பெயரையே மாற்றிக் கொண்டவர்..
அவர் யாரென்றால்….
(ஹி ஹி..இன் நெக்ஸ்ட் அத்யாயம்) :)
தொடரும்..
// கல் நாயக் ஹேப்பி அண்ணாச்சி?//
rajraj
24th February 2015, 07:05 AM
From Nalla PiLLai, Tamil dubbed version of Albela ((1951)
Ekaantha raja nee aanandhame......
http://www.youtube.com/watch?v=_8QjiW6HLGo
From the Hindi original Albela
Dheere se aajaa re ankhiyan mein........
http://www.youtube.com/watch?v=8h94Qg1g-JI
May be, ChinnakkaNNan can sleep well with this lullaby ! :lol:
kalnayak
24th February 2015, 12:26 PM
சி.க.,
உங்க 'பாடினார் கவிஞர் பாடினார்' முதல்அத்தியாயத்திற்கு நானே கவிஞரை எடுத்து கொடுத்தேனோ!!! பெருமையாக இருக்கிறது. வழக்கம் போல கலக்கி விட்டீர்கள்.
அப்புறம் என்னமோ கட்டளை கலித்துரை அப்பிடினெல்லாம் ஏதோ சொல்லி இருக்கீக. அப்படின்னா என்னன்னு சொல்லி என்னை மாதிரி ஒண்ணும் தெரியாதவங்களுக்கு உறைக்கிற மாதிரி சொல்லலாமே.
ஆபேரி ராகத்தில் அமைந்த மற்ற பாடல்களையும் சொன்னால் என்னை மாதிரி ஆட்கள் 'ஆஹா இதுதான் ஆபேரி ராகமா?' என்று தெரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். சரி பரவாயில்லை. அடுத்த கவிஞர் பத்தி சொல்றப்போ இதெல்லாம் ஞாபகத்தில் வச்சிக்கோங்க.
chinnakkannan
24th February 2015, 01:28 PM
கல் நாயக்.. நன்றி..முதல் அத்தியாயத்துக்கு நினைத்திருந்தவர் வேறு..கு.மா.பா பின்னால் வைத்திருந்தேன்..கேட்டவுடன் முதலில் எழுதிவிட்டேன் :) (ஆம் நீர் தானெடுத்துக் கொடுத்தீர்..இல்லையென்றால் உட்கார்ந்து எழுதியிருக்க மாட்டேன்..லேஸினஸ் தான் காரணம்!)
பின்ன வாரேன் :)
chinnakkannan
24th February 2015, 01:33 PM
Rajraj sir thanks. I will see that in the evening.
chinnakkannan
24th February 2015, 01:34 PM
kal nayak..kavithaikku kavithai comments threadla evening pOdarEn..about venpa and ka ka thu..
kalnayak
24th February 2015, 06:45 PM
நிலாப் பாடல் 26: "அள்ளி அள்ளி வீசுதம்மா"
--------------------------------------------------
S.ஜானகியம்மா குரலில் கங்கை அமரன் இசையில் ஒரு பெண் பாடுவதாக அமைந்த ஒரு பெண் பாடுவதாக அமைந்த அரிதான ஒரு காதல் பாடல். நிலா இங்கு அன்பை அள்ளி அள்ளி வீசுவதாக வருவது நல்ல இனிமையாகவே இருக்கிறது. செல்வா (Dr. ராஜசேகரின் தம்பி) மற்றும் ரஞ்சிதா நடித்திருக்கிறார்கள். பாட்டை எழுதியவர் தகவல் கிடைத்தால் கொடுங்கள்.
பாடல் வரிகள்:
----------------------
அள்ளி அள்ளி வீசுதம்மா
அன்பைமட்டும்
அந்த நிலா நிலா
மாளிகை மாடம் மட்டும் வீசாம
ஓலைக்குடிசை என்னும் பாக்கம
அள்ளி அள்ளி வீசுதம்மா
அன்பை மட்டும்
அந்த நிலா நிலா
என் கோயிலில் தீபம் ஏற்றி
நான் வாழ்கிறேன் உன்னாலே உன்னாலே
என் நெஞ்சிலோர் ராகம் உண்டு
நாளும் பாடுவேன் அன்பாலே அன்பாலே
என் நேசமும் என் ஆசையும் உன்னோடு உன்னோடு
பூமாலையும் நீ சூடவா
பூமாலையும் நீ சூடவா
பாராட்டவா சீராட்டவா
(அள்ளி அள்ளி)
பூந்தென்றலாய் உன்னை நானும்
நான் வாழ்த்துவேன் பூப்போலே பூப்போலே
தாய்போலவே உன்னை நானும்
சீராட்டுவேன் தேன்போலே தேன்போலே
என் சொந்தமும் உன் பந்தமும்
என்னாளும் நீங்காது
என் ஜீவனே என்னாளுமே
என் ஜீவனே என்னாளுமே
உன் பேரையே கொண்டாடுமே
-----------------------------------------------------
ஒளியும் ஒலியும்:
https://www.youtube.com/watch?v=jVp8Z3jMx0Q
அத்தை மக ரத்தினமேன்னு சொன்னால் இப்படி பாடிடுவாங்களா? உதைதான் விழும் மாமன் கிட்ட இருந்து.
kalnayak
25th February 2015, 06:49 PM
நிலாப் பாடல் 27: "நிலவுக்கு என் மேல் என்னடி*"
----------------------------------------------------------
கிடைத்தது பாருங்க ஒரு ஸூபர் ஹிட் பாட்டு. மெல்லிசை மன்னர்கள் இசையில் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய அற்புதமான பாடல். இதுவும் காதல் பாடல்தான். காதலி கோபத்தை நிலாவின் கோபமாக பாடுவது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. பாலாஜி, புஷ்பலதா நடித்திருக்கிறார்கள்.*பாடல் வரிகள் கண்ணதாசன் என்று சொல்லவும் வேண்டுமோ!!!
சரி பாடல் வரிகளை பாருங்கள்: *
--------------------------------------
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்*
நெருப்பாய் எரிகிறது...இந்த மலருக்கு *என் மேல்*
என்னடி கோபம் முள்ளாய் மாறியது (2)
கனி மொழிக்கென் *மேல் என்னடி கோபம்*
கனலாய் காய்கிறது...உந்தன் கண்களுக்கென் மேல் என்னடி கோபம்*
கணையாய் பாய்கிறது*
.........நிலவுக்கு........
குலுங்கும் முந்தானை சிரிக்கும்*
அத்தானை விரட்டுவதேனடியோ (2)
உந்தன் கொடியிடை இன்று படை*
கொண்டு வந்து கொல்லுவதேனடியோ
திருமண நாளில் மணவரை மீது *
இருபவன் நான் தானே*
என்னை ஒரு முறை பார்த்து*
ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே*
.......நிலவுக்கு.........
சித்திரை நிலவே அத்தையின் மகளே*
சென்றதை மறந்து விடு (2)
உந்தன் பக்தியில் திளைக்கும் *அத்தான்*
எனக்கு பாதையை திறந்துவிடு (2)
.......நிலவுக்கு.........
__________________________________________________ _____________________
ஒளியும் ஒலியும்:
https://www.youtube.com/watch?v=PUxLkYndr-g
__________________________________________________ _____________________
போலீஸ்காரன் மகள் கிட்டயே இப்பிடி துணிஞ்சுட்டாரே. என்ன ஆயிரிந்திருக்கும்?
chinnakkannan
25th February 2015, 11:07 PM
கரஹரப்ப்ரியா ராகத்திலிருந்து பிறந்த ஜன்ய ராகம் தான் ஆபேரியாம்.. நகுமோமு…. கார்த்திக்கின் குரலில்..
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Xw9ECuN4z98
கவலைகள் நிறைந்து அமைதியை இழந்து தவிக்கும் மனதிற்கு அமைதியும் ஆறுதலும் தந்து குணமாக்கும் ராகம் இது. அடிநாதத்தில் இலேசான சோகம் இழையோடுமாம்
இன்னும் சில பாடல்கள்…
ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
சிந்து நதிக்கரை ஓரம்,
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை,
சின்னஞ்சிறு வயதில்..
கங்கைக் கரைத் தோட்டமும் ஆபேரியாம் (சரிதானா..)
எனில்..
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=t09r97wbLMg
chinnakkannan
25th February 2015, 11:12 PM
ராத்திரி தூங்கறதுக்காக சுத்த தன்யாசில ஒரு பாட்டுப் போட்டுடலாமா...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு
அந்தக் காலத்தில் கேஸட்டில் கேட்டுக் கேட்டு ரசித்தது நினைவுக்கு வருகிறது...
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=NE2iEEQdSkw
rajraj
26th February 2015, 07:01 AM
ChinnakkaNNan: Here is another song in Abheri for you! :)
veLLai thaamarai poovil iruppaaL.......... by Bharathiyar
http://www.youtube.com/watch?v=9GjBEzkzMY4
I remember singing this in school ! :)
chinnakkannan
27th February 2015, 10:15 AM
நன்றி ராஜ் ராஜ் சார் ..இதோ உங்களுக்காக :)
ஒரே பாட்டு …ஒரே பத்மினி.. இரண்டு திரைப்படம்..
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழீ ! நான்
தூக்குத் தூக்கி
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ymaEFeoBY3U
செந்தாமரை..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=t-BlQubHy_4
kalnayak
27th February 2015, 05:57 PM
நிலாப் பாடல் 28: "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்"
------------------------------------------------------------------------------
இந்தாங்க புரட்சித் தலைவரின் அட்டகாசமான காதல் பாட்டு. மெல்லிசை மன்னரின் இசையில் T.M.S. அவர்களின் குரலில் இன்னாமா இருக்குது. ரெண்டு இடத்துல பாத்துட்டேன். எழுதியவர் கண்ணதாசன்னுதான் போட்டிருக்குது.
இந்தாங்க பாட்டை படிங்க:
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை(2)
ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
தீயொடு பஞ்சை சேர்த்தாள்(2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
………..ஒரு பெண்ணைப் ………….
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்…
தன்னோடு என்னை சேர்த்தாள் (2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
----------------------------------------------------------------------------------------------
சி.க. நீங்க இந்த மாதிரி எழுதின ஒரு கவிதை இருந்தா போடுங்களேன். வீட்டுல யாரும் போட்டுடமாட்டாங்கன்னு தைரியமா போடுங்க.
இந்தாங்க பாட்டை மக்கள் திலகத்தோட நடனத்தோட பாத்துகிட்டே கேளுங்க.
https://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E
தெய்வத் தாயின் மகனின் காதல் எப்பூடி?
kalnayak
27th February 2015, 06:03 PM
சி.க.
ஒரே பத்மினி, இரண்டு திரைப்படம், ஒரே திருப்பாவை இரண்டு நடனங்கள். நன்று. நன்று. இரண்டும் இரண்டு விதமாக இருந்தது. ஜூகல்பந்திக்கெ ஜூகல்பந்தியாக இருக்கிறது. சூப்பர்.
chinnakkannan
27th February 2015, 09:08 PM
நன்றி கல் நாயக்..
ஒரு பெண்ணைப் பார்த்து நில்வைப் பார்த்தேன் எனக்குப் பிடித்த பாடல்..தாங்க்ஸ்..
எனக்கு என்னவோ இப்படி ஒரு வரி கேட்டதா நினைவு..இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடி போல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் மெல்ல விரியும்
விழியும் பார்த்தால் ஆசை மலரும்..
ம்ம் இந்த மாதிரிப் பாட்டா முன்பு எழுதியிருக்கேனான்னு தெரியலையே..பார்த்தால் பார்ப்பேன் சிரித்தால் சிரிப்பேன் இரவும் பகலும்னு ஒரு பாட் சமபந்தமிலலமல் நினைவுக்கு வருது..பழசு எழுதியிருந்தா போடறேன் புதுசா எழுதவும் ட்ரை பண்றேன்.. வெ.க்ளாஸ்க்கு ரெடியா.
கன்னங்கரிய கூந்தலிலே ஒரு மல்லிகை மாலை சூடவா
உன் கன்னம் இரண்டை பிறர்காணாமல் கைகளினாலே மூடவா ( நோ டோண்ட் அக்செப்ட் அப்படித் தான் ஆரம்பிப்பாங்க!)
பாசமும் நேசமும் ஏ.எம் ராஜா பி.சுசீலா ஜெமினி சர்ரூ..
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SwJ5XYTrZK4
rajraj
27th February 2015, 10:01 PM
ஜூகல்பந்திக்கெ*ஜூகல்பந்தியாக இருக்கிறது. சூப்பர்.*
Good idea! :) Now I can retire and let ChinnakkaNNan take over ! :lol:
rajeshkrv
28th February 2015, 07:43 AM
நிலாப் பாடல் 28: "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்"
------------------------------------------------------------------------------
இந்தாங்க புரட்சித் தலைவரின் அட்டகாசமான காதல் பாட்டு. மெல்லிசை மன்னரின் இசையில் T.M.S. அவர்களின் குரலில் இன்னாமா இருக்குது. ரெண்டு இடத்துல பாத்துட்டேன். எழுதியவர் கண்ணதாசன்னுதான் போட்டிருக்குது.
இந்தாங்க பாட்டை படிங்க:
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை(2)
ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
தீயொடு பஞ்சை சேர்த்தாள்(2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
………..ஒரு பெண்ணைப் ………….
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்…
தன்னோடு என்னை சேர்த்தாள் (2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
----------------------------------------------------------------------------------------------
சி.க. நீங்க இந்த மாதிரி எழுதின ஒரு கவிதை இருந்தா போடுங்களேன். வீட்டுல யாரும் போட்டுடமாட்டாங்கன்னு தைரியமா போடுங்க.
இந்தாங்க பாட்டை மக்கள் திலகத்தோட நடனத்தோட பாத்துகிட்டே கேளுங்க.
https://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E
தெய்வத் தாயின் மகனின் காதல் எப்பூடி?
Vaali ayya
alli alli veesudhamma lyrics Gangai
chinnakkannan
28th February 2015, 12:29 PM
ஹை..அப்படி எல்லாம் ரிட்டயர் ஆக விடமாட்டோமே ராஜ் ராஜ் சார்! :)
*
திடுதிப்பென்று மாறும் நிலை கொண்ட இளம்பருவப்பெண்ணின் மனம் போலவே இருக்கிறது மஸ்கட் வானம்..
போனவாரத்திற்கு முந்திய வாரம் வரை கொஞ்சம் நல்லாவே வெய்யில் ப்ளஸ் உஷ்ணம் என்று இருந்தது திடுதிப்பென்று போன வாரம் காற்றில் குளிரைக் கொணர்ந்தது.. அதன் தொடர்பாக நேற்று முன்னறிவிப்பில்லாமல் மேகங்கள் பொதுகூட்டம் போட்டு கெஜ்ரிவாலின் வெற்றி அப்புறம் பட்ஜெட் எனப் பேசி டபக்கென மழை வேறு பொழிந்தது (சற்றே ஒரு அரை மணி நேரம்..) பின் குளிர் காற்று வேறு..
இன்று காலை கரு கரு மேகங்கள் கரு நாவற்பழக் கண்கள் கொண்ட இளம்பெண்ணைப் போல வானில் சூழ்ந்திருக்க தென்றலாய் இல்லாமல் சற்று சீற்றமாய்க் காற்று கலைக்க கொஞ்சம் கொஞ்சமாய்க்கரைந்தாலும் ஆங்காங்கே அதிகாலை வாசலில் தண்ணீர் தெளிக்கும்போது சிதறும் நீர்ச்சிதறலாய் அங்கங்கே மேகக்கள் வானில்.. கூடவே அடிஷனல் போனஸாய் இனிய உறைக்காதவெயில்..
என்ன எழுதுவதுஎன்று என் மோவாய்க்கட்டையில் இருந்த விரல் மேலும் மேலும் சிந்திக்க சிந்திக்க மனதுக்குள்ளிருந்து வேதாந்தம் பொங்கி எழுந்தது..
மனித வாழ்க்கையில் துயரங்கள் மனதைச் சூழ்வதும் பின் காலம் நேரம் சூழல் போன்ற காற்றுக்களால் கலைவதும் சகஜம் தானே…என நினைக்கையிலேயே. என் சித்தப்பாவின் கனவில் வரும் அந்தக்கால ஹீரோயின்கள் என் நினைவுக்கு வந்தனர்..
அந்தக்கால ஹீரோயின்களின் பாடே ரொம்பக் கஷ்டம் தான்.அதுவும் அந்தக்காலத் திரைப்படக் கதாசிரியர்களுக்கு என்ன ஒரு ஆர்வமோ பாசமோ நானறியேன். எஸ்பெஷலி ஹீரோயின்களுக்கு பெண் பார்க்க வரும் போது ஒரு சோஒ ஓ கப் பாடல் போட்டு விடுவார்கள்.. ஹீரோயினைப் பெண்பார்ப்பவர்கள் அதை முழுக்க ரசித்தும் செல்வர்..ம்ம்.
இதோ.இந்தக் கவலை இல்லாத மனிதனில் கவலையுடன் எம்.என்.ராஜம் பார்ப்பவர் சந்திரபாபு ( நான்படம் பார்த்ததில்லை)
சிரிக்கச் சொன்னார் சிரித்தேன் பார்க்கச் சொன்னார் பார்த்தேன்
எனக்கெனவோ உணர்ச்சியில்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீடூழி..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Frq2z2uGV4Q
*
chinnakkannan
28th February 2015, 12:30 PM
*
வீட்டில் திருடர்கள் சூழ்ந்துவிட கதானாயகியின் பெ.பா.படலம்.இருப்பினும் என்னாகிறது. என்ன தான் பாடுவதோ நான் எப்படித்தான் ஆடுவதோஎன்று ஹீரோயின் கண்கலங்கிப் பாட ஹீரோ – இன்ஸ்பெக்டர் கன்ஃபூஸ்டு எக்ஸ்ப்ரஷனே போதுமென்று டைரக்டர் சொல்லிவிட்டதாலோ என்னவோ – முத்துராமன் குழம்பி இருக்க – இங்கு கூட்டம் போட்டு சிலர் பார்க்கும் பார்வை அம்மம்மா..என்று பாடுகையிலேயே நிறுத்தியிருக்க வேண்டாமோ..ம்ம்ஹூம்.
நாணலில் கேஆர்.விஜயா முத்து ராமன்
என்ன தான் பாடுவது நான் எப்படித்தான் ஆடுவது
https://www.youtube.com/watch?v=wokIWpdqIe8&feature=player_detailpage
chinnakkannan
28th February 2015, 12:53 PM
**
ப்ஹா ப்ஹா..ப்ஹா..
மரக்கலரில் ஜீன்ஸ்
வெள்ளையாய் மேலுடை
அதே நிறத்தில் காலணிகள்
பஃபென்று கூந்தல் அலைபாய
ஓடிவந்து நின்றவளைப் பார்க்கையில்
சிரிப்பு வர.,..
‘ஏய்.. உனக்காக
காலங்காத்தாலே பாக்க ஓடி வந்தா
என்ன சிரிப்பு’
‘கிட்டத் தட்ட குதிரை மாதிரி இருக்கே..
பிடரில அழகாய் முடி அலை மோதுது..
நெற்றிநுனியில் சின்னதாய்
ஒற்றை வரியாய் இறங்கும் வியர்வை..
என்னை இலக்கு வைத்து ஓடி வரும்
உன் எண்ணம்..’
‘யோவ் குதிரை முட்டினால்
எப்படி இருக்கும் தெரியுமா..’
சற்றே பின்சென்று
முட்டுதற்போல் வந்தவளை
இடைபற்றி அணைத்து...
‘அடியே நீ என் காதல்குதிரை’ என்றால்
முறைத்துப் பின் சிரித்தாள்.
மேலும்
‘குதிரைகளை அடக்குவது சுலபம்..
உன்னை..மிகக் கஷ்டம் ஆ ஆ..’
குதிரை கிள்ளினால் இப்படித் தான் இருக்கும்..
திரும்பி அவள் ஓட ஆரம்பிக்க
நானும் ஆண்குதிரையாய் மாறித் தொடர்ந்தேன்.
**
வைஜூ+ ஜெமினி+ ஜொள்+ குதிரை + பாட்டு.
பாட்டுப்பாடவா பார்த்துப் பேசவா
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9Gl2EqJlp6E
chinnakkannan
28th February 2015, 12:54 PM
மேலமாசி வீதியில் ஒரு மிதி மிதித்து
ஆரியபவன வ்ந்த்தும் இடம்திரும்பி
நேரே சென்றால்
மேங்காட்டுப் பொட்டல்..
ஜான்சி ராணிபூங்கா எதிரில் ஒய் எம் சி ஏ..
நடுவில் குதிரைவண்டிகளின் வரிசை..
சில வண்டிகளில் குதிரைகள்
பூட்டப் பட்டு
சாதுவாய்
புதிதாய் வீட்டிற்கு வந்திருக்கும்
நாட்டுப் பெண்போல தலை குனிந்து
கொஞ்சம் ஆடிய படி நின்றிருக்கும்
சில வண்டியிலிருந்து
அவிழ்த்து விடப்பட்டு
குனிந்து இரும்பு வாளியில்
வைக்கப்பட்டிருக்கும்
புல், கொள் எதையாவது
உண்டு கொண்டிருக்கும்
அருகில் சென்று தொட்டாலோ
முனிவர் போல அருட்பார்வை பார்த்து
மறுபடி குனியும்..
சிகப்பு.
மங்கிய வெள்ளை,
கறுப்பு வெள்ளை என
கலந்து கட்டிய நிறங்களில்
அழுக்காகவும்
அதைவிட அழுக்காக
வண்டிக்காரன்..
உலகத்தில் மற்ற விஷயங்களை விட
குதிரைவண்டிக்காரனிடம் தான்
மக்கள் பேரம்செய்வர்..
எட்டணா அவனிடம் குறைத்தால்
ஏதோ இமயத்தைத் தொட்டாற்போல்
பெருமிதம் கொள்வோரும் உண்டு..
காலப் போக்கில்
கொஞ்ச்ம் கொஞ்சமாய்
அந்த குதிரை வண்டி நிலையம் மாறி
குதிரைகளும்
காணாமற் போயின..
இப்போது
அந்த இடம் கடந்தால்
கண்டிப்பாய் வரும்
குதிரை வாசனை..!
**
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்
இனிய பாடல் இளமை துள்ளும் ஸ்ரீ தேவி.. இளைஞ விஜயகுமார் கண்ணதாசனின் அழகிய வரிகள். சூப்பர் லொகேஷன் அண்ட் பிக்சரைஷேஷன்.. அப்புறம் என்னன்னாக்க..
கடோசில்ல இந்தப்பாட்டுல குதிரை வருதுங்க்ணா..!
https://www.youtube.com/watch?v=yF58pBzAsLI&feature=player_detailpage
இந்தப் படத்தையும் பாடல்களையும் வாசு அலசினார்னா நல்லா இருக்கும் ம்ம்
இத ஒரு பொண் பாடறதாவும் வச்சுக்கலாம்
தேருத் திருவிழாக்கு திரும்பத்தான் வாரேன்னு
…தெக்குத் திசைபக்கம் போகத்தான் போனீக
கார்கா லம்முடிஞ்சு வெயிலடிக்க ஆச்சுதுங்க
…கனவ நனவாக்க எப்பவந்து சேர்வீங்க
நீரும் இல்லாம நிலம்வெடிச்சு போகுதுபோல்
..நீரும் இல்லாம நாந்துடிச்சுத் தானிருக்கேன்
வேராய் இருந்தவரே வெரசாகத் தான்வாரும்
..வெறிக்கும் பார்வையதில் பன்னீரைத் தூவுமய்யா..
கடைசி ரெண்டுவரிய மாத்தினா வாசு சாருக்காகவும் வச்சுக்கலாம்
தேருத் திருவிழாவுக்கு திரும்பத்தான் வாரேன்னு
…தெக்குத் திசைபக்கம் போகத்தான் போனீக
கார்கா லம்முடிஞ்சு வெயிலடிக்க ஆச்சுதுங்க
…கனவ நனவாக்க எப்பவந்து சேர்வீங்க
நீரும் இல்லாம நிலம்வெடிச்சு போகுதுபோல்
..நீரும் இல்லாம நாந்துடிச்சுத் தானிருக்கேன்
கார்ஷெட் டெல்லாமே கட்டித்தான் ஆச்சாங்க
..கனக ஜோராக கலந்துகொள்ளத் தான்வாங்க..
வருவாக வருவாக.வெய்ட் கண்ணா..
**
chinnakkannan
28th February 2015, 01:16 PM
***
நழுவல்கள்
**
விரும்பி எழவும் முடியவில்லை
…விழித்து நோக்கவும் தெரியவில்லை
குருட்டாம் போக்காய் குறுகித்தான்
...ஒடுங்கி நன்றாய் இருந்தாச்சு
புருவஞ் சுருக்கிக் கண்மூடிப்
...பொய்யா யுறங்கி இருந்ததுவும்
இருட்டில் நழுவி ஓர்நாளில்
...உலகம் பார்க்க வந்தாச்சு.
விழிகள் வெற்றாய்ப் நோக்குங்கால்
...வெளிச்சம் கண்ணில் அடித்திடவே
கிலியால் உதடுகள் தான்கோணி
...கோவென் றழுதால் அன்னையவள்
வலியச் சேர்த்தே அணைத்த்படி
...அமுதம் தன்னை புகட்டுங்கால்
துளீயாய்ச் சிரித்துத் துஞ்சியதில்
...சென்ற நேரம் கொஞ்சமல்ல.
கிட்ட இருந்தும் வாராமல்
...கூவி அழைத்தும் கேளாமல்
எட்டி எடுக்க் முடியாமல்
...ஏயென் றழவும் அன்னையும்தான்
தட்டித் தழுவிப் புறம்போடத்
...தவழ்ந்து பொம்மை தானெடுத்துக்
கட்டிப் பிடித்தே தூங்கியதில்
....கழிந்த காலம் எத்தனையோ
தளர்நடை பழ்கும் போது
....தயக்கமும் கொண்டி டாமல்
உளறலாய்ச் சொற்க ளோடு
...உயரமாய் உள்ள வற்றை
மலர்ச்சியாய் எடுக்கப் பார்த்து
...மறுபடி முய்ற்சி செய்து
கலவரம் அடைந்து கத்தும்
...காலமும் போன தங்கே.
பள்ளியில் படித்த பாடம்
...பருவமும் அடைந்த பின்பு
துல்லிய மாக மேலே
...தொடர்ந்த்து வேறு திக்கில்..
கல்வியும் முடித்த பின்பு
...கனிவுடன் வேலை தேடி
நல்லிடம் தனிலே சேர
..நழுவிய காலம் பலவே
பழுதுகள் ஏதும் இல்லா
...பக்குவ மாக வேலை
பார்த்ததில் மனைவி சேய்கள்
...பாய்ந்துதான் சேர இன்றோ
வழுக்கிடும் தரையைப் போலே
...வாழ்வதன் சுவைகள் எல்லாம்
நழுவுது மெல்லக் கொஞ்சம்
....நாரணன் பேரைச் சொல்லி
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா.
https://www.youtube.com/watch?v=e4ok6V76mYQ&feature=player_detailpage
chinnakkannan
28th February 2015, 01:38 PM
//அந்தக்கால ஹீரோயின்களின் பாடே ரொம்பக் கஷ்டம் தான்.அதுவும் அந்தக்காலத் திரைப்படக் கதாசிரியர்களுக்கு என்ன ஒரு ஆர்வமோ பாசமோ நானறியேன்.// இதோ இன்னொரு சிச்சுவேஷன்..
ஹீரோயின் அப்படியே மனமுருக சோகப்பாட்டுப் பாடினால் என்ன ஆகும்.1.காதல் தோல்வி 2 அண்ணன் செத் போய்டுவார்.. அல்லது அடுத்த போஸ்ட்ல சொல்றேனே
ம்ம்
காவேரி ஓரம் கவி சொன்ன காதல். சர்ருவோட அண்ணா போறாரா..
https://www.youtube.com/watch?v=bdR5DLsF0xc&feature=player_detailpage
அடுத்த போஸ்ட்ல ரெண்டாவது சிச்சுவேஷன்.
chinnakkannan
28th February 2015, 01:41 PM
//அந்தக்கால ஹீரோயின்களின் பாடே ரொம்பக் கஷ்டம் தான்.அதுவும் அந்தக்காலத் திரைப்படக் கதாசிரியர்களுக்கு என்ன ஒரு ஆர்வமோ பாசமோ நானறியேன்.//
இப்போ ரெண்டாவது சிச்சுவேஷன்.. ஹீரோயின் அப்படியே மனமுருக சோகப்பாட்டுப் பாடினால் என்ன ஆகும்
1. கற்பு போய்டும் 2. அண்ணா மன்னி செத் போய்டுவாங்க..
இப்போ சிச்சுக்குப் பொருத்தமா ஒரு போயம்..
நானாகத் தானிருந்த கால மெப்போ
...நலமாகத் தானிருந்த பொழுது மெப்போ.
தானாடி என்னுடனே ஓடி யாடி
..தயங்காமல் என்மழலைப் பேச்சி லாடி
ஆணாக எனைவளர்த்த அன்னை கூட
..அழகாக இருந்திருந்த நாட்கள் தானா..
தேனாகப் பலவாறாய்ப் பேசி வானில்
..திசைக்கெல்லாம் பறந்திருந்த இளமைப் போதா
ஊனாசை உயிராசை எல்லாம் கொண்டே
..உறங்காமல் பலவாறாய்ச் செல்வம் சேர்த்து
காணாமல் போய்விட்ட வெள்ளை உள்ளம்
..கண்களிலே மறுபடியும் தெரியுங் காலம்
வீணாசை என்றேதான் அறிந்த போதும்
...வேடிக்கை தனைக்கூட்டும் விந்தை நெஞ்சால்
தானாகத் தோன்றிடுமோ என்றே உள்ளே.
..தவித்தபடி கேட்கின்றேன் விடைதான் எங்கே...
ஆண்னுசொன்னதினால் நான் தான்பாடணும்..ஸாரி..லத்து பாடட்டும்..
நெள ஓவர் டு லத்து
போயத்துக்குப் பொருத்தமிருக்குதோ இல்லியோ நைஸ் ஸாங்கோன்னோ…
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா..
https://www.youtube.com/watch?v=SD5fhs1JwbQ&feature=player_detailpage
chinnakkannan
28th February 2015, 09:51 PM
அந்தக் காலத்தில் அரசிளங்குமரிகள் என்றாலே கஷ்டம் தான்.. நாட்டுக்கு ஏதாவது நல்லதா இந்தா இந்த இளவரசியை அந்த நாட்டரசனுக்கு மணம் செய்து முடித்து விடலாம் என தந்தை தன்னிச்சையாய் முடிவெடுக்க பாவம் கண்களில் கண்ணீருடன் தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல்..
அதுவும் சரித்திர நாவல்களில் வரும் இளவரசிகள் என்றால் கேட்கவே வேண்டாம்.. கண்டிப்பாக அழகாய் இருக்கவேண்டும்..இளமையாக இருக்கவேண்டும்.. குதிரையேற்றம் வாள்பயிற்சி, போரில் ராஜ தந்திரம் கதானாயகனுடன் மோதல் பின் நெகிழ நெகிழ காதல் என..
இவை தமிழ்த் திரைப்படங்களுக்கும் பொருத்தமான விதி தான்..இதோ ஒரு இளவரசி துள்ளித் துள்ளிக் குதித்து ப் பாடுகிறாள். அதுவும் தன்னிடம் அடிமையாக இருக்கும் ஒருவீரனை நினைந்து கண்களில் வண்ணக் கனவுகள் மின்ன பாடுகிறாள்..அட பாட்டும் வண்ணமாயிருக்கிறதே!
**
ராஜாமகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜாமலர் என் ஆசை நிறைவேறுமா
கலர் வைஜயந்தி கலகல ஜெமினி..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KRvTO_-Uvq4
rajraj
1st March 2015, 08:54 AM
Bhajare re maanasa..........., a composition by Mysore Vasudevachar rendered by Maharajapuram Santhanam :
http://www.youtube.com/watch?v=84hYhbDR7vY
I hope you don't mind a Sanskrit composition. I like this one and sing in our annual music party once in a few years.
To keep those who do not know Tamil happy ! :)
Gopal.s
1st March 2015, 01:26 PM
'திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் - பிஜிஎஸ் மணியன் .
"கணக்கற்ற பிறவிகளைக் கடந்தபிறகு கிடக்கும் ஸ்வர்கானுபவமானது ஸ்வரங்களையும், ராகங்களையும் கலந்து பக்தி உணர்வோடு இனிய இசை அமுதத்தைப் பருகும் வாய்ப்பு மட்டும் கிடைத்து விட்டால்... ஓ.. மனமே! இப்பிறப்பிலேயே வாழும்போதே அந்த ஜீவன் முக்தி நிலையை நீ அடைவாய். - ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்.
"சங்கராபரணம்" - மொழி எல்லைகளைக் கடந்து மாநிலங்களைக் கடந்து இந்தியா முழுவதும் அனைவராலும் பெரிதும் ரசிக்கப் பட்ட தெலுங்குத் திரைப்படம்.
ஆந்திர தேசத்தில் வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்த படம்.
1979ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் அந்த வருடத்திய தேசிய விருதுகளை ஒட்டுமொத்தமாக வாரிக் குவித்த படம்.
சிறந்த படத்துக்கான தங்கத் தாமரை விருது, சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது, சிறந்த பின்னணிப் பாடகர், பாடகி, இயக்குனருக்கான விருது ஆகிய விருதுகளை அப்படியே அள்ளிய படம்.
"இந்த ஒரு படம் நூறு திரைப்படங்களுக்கு சமம்" என்று தமிழ்த் திரை உலக வசனகர்த்தா கலைவித்தகர் ஆரூர்தாஸ் பற்றிய தனது மதிப்பீட்டை சொல்கிறார். அவரது கருத்து நூற்றுக்கு நூறு சரியான ஒன்றுதான்.
கர்நாடக சங்கீதத்தின் பெருமையை பாமரரும் உணரும் வண்ணம் செய்த படம். இளைய தலைமுறைக்கு இந்தப் படத்தின் மூலம் நமது தொல்லிசையில் ஒரு பிடிப்பையும் ஈடுபாட்டையும் உண்டாகச் செய்த பெருமை கே.வி.மகாதேவனையே சாரும்.
தியாகராஜ ஸ்வாமிகள், மைசூர் வாசுதேவாச்சார், பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் கீர்த்தனைகளை பாடல்களாக வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்றால்.. அதுவும் அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெரும் வண்ணம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு தனி தைரியம் வேண்டும்.
அந்த தைரியம் படத்தின் இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இருந்தது. அதே துணிச்சல் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனுக்கும் இருந்தது.
அதுவும் எப்படி? கர்நாடக சங்கீத வாசனையே இல்லாத எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை ஒரு கர்நாடக இசை வல்லுநர் கதாபாத்திரத்துக்கு பின்னணி பாடவைக்கும் அளவுக்கு துணிச்சல் இருந்தது.
சங்கராபரணம் சங்கர சாஸ்திரி என்ற கர்நாடக இசை மேதைக்கும், தேவதாசி குலத்தில் பிறந்த துளசி என்ற நடன மங்கைக்கும் இடையில் ஏற்பட்ட குரு சிஷ்யை பந்தத்தையும் மீறி துளசி அவர் மீது வைத்திருக்கும் புனிதமான பக்தியையும் மூலக் கருவாகக் கொண்டு பின்னப்பட்ட கதை.
சங்கர சாஸ்திரியாக கே.வி. சோமயாஜுலு நடிக்கவில்லை..வாழ்ந்தே காட்டி இருந்தார். அதுவரை சினிமாக்களில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடும் க்ரூப் டான்ஸ் ஆர்டிஸ்டாக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த மஞ்சு பார்கவி (ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த "பில்லா" படத்தில் இடம்பெற்ற "மை நேம் இஸ் பில்லா" பாடல் காட்சியில் ரஜினியோடு சேர்ந்து ஆடிவிட்டுப் போவாரே அவரேதான்) கதாநாயகி துளசியாக நடித்தார். மொத்தப் படத்துக்கும் சேர்த்து இவர் பேசிய வசனம் கால் பக்கம் இருந்தாலே அதிகம். கண்களாலேயே பேசி நடித்து அனைவர் கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்தார்.
இந்தப் படம் நமது பாடகர் எஸ்.பி.பி. அவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். ஆரம்பத்தில் எஸ்.பி.பி. யின் பெயரை பின்னணி பாடகருக்காக பரிந்துரைத்தபோது அனைவரும் அதிர்ந்துதான் போனார்கள்.
"வேண்டாம் இந்த விஷப் பரீட்சை. கர்நாடக சங்கீதம் மேலோங்கிய கதை. பேசாம பாலமுரளி கிருஷ்ணாவைப் பாடவைத்து விடலாம்." என்ற கருத்தும் மேலோங்கியது. ஆனால் கே.வி.மகாதேவனிடம் கேட்டபோது "மணியை (எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை "மணி" என்றுதான் மகாதேவன் அழைப்பார்.) நான் பாட வச்சுடறேன். அவன் சம்மதிச்சான்னா போறும்." என்றார்.
இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களின் சிற்றப்பா மகன் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆரம்பத்தில் பாலுவிடம் அவர் கேட்டபோது "ஆளை விடுங்க சாமி. நம்மால முடியாது" என்று அவர் மறுத்துவிட்டார்.
தினமும் காலையில் வாக்கிங் போகும் போது பாலுவின் வீட்டுக்கும் விஸ்வநாத் போவது வழக்கம். ஒருநாள் அப்படிச் சென்றபோது "சங்கராபரணம்" படத்தின் கதையை தனது சிற்றப்பாவிடம் விஸ்வநாத் சொன்னபோது அதைக் கேட்டு பெரியவர் நெகிழ்ந்து போனார். பின்னணி" பாடுவதற்கு யாரை போடலாம் என்று இருக்கே?" என்று அவர் கேட்க, "நம்ம பாலுவைத்தான் நான் செலெக்ட் பண்ணி இருக்கேன். ஆனால் அவன் தயங்கறான் சித்தப்பா" என்றார் கே.விஸ்வநாத்.
"இப்படி ஒரு வாய்ப்பை அவன் இழந்துட்டான்னா இனிமே ஜென்மத்துக்கும் அவனுக்கு அது கிடைக்கவே கிடைக்காது. கவலையை விடு. பாலு பாடுவான்" என்று அவர் வாக்கு கொடுக்க பயத்துடனே சம்மதித்தார் எஸ்.பி.பி. அசுர சாதகம் என்பார்களே அதற்கு அர்த்தம் அப்போதுதான் அவருக்கு புரிந்தது.
"இருபத்தைந்தே நாட்களுக்குள் அவரைத் தயார் பண்ணவேண்டும்" என்பதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டு மகாதேவனும் புகழேந்தியும் இயங்கினார்கள்.
ஒலிப்பதிவில் அவருடன் பாடிய வாணி ஜெயராமும், எஸ். ஜானகியும் கர்நாடக இசையில் நன்கு தேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து அவர் பாடிய சங்கராபரணம் பாடல்கள் காலங்களைக் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் "மாமாவும், புகழேந்தியும் தான்" என்பார் எஸ்.பி.பி.
"ஓம்கார நாதானு சந்தான சௌபாக்யமே சங்கராபரணமு" - சங்கராபரண ராகத்தில் அமைந்த வேட்டூரி சுந்தரமூர்த்தியின் பாடல் தான் படத்தின் "தீம் சாங்". கச்சேரி மேடையில் இந்தப் பாடலை சங்கர சாஸ்த்ரி பாட, அதனை முதல் வரிசையில் அமர்ந்து கேட்கும் துளசி அபிநயத்தாலேயே அவருக்கு வணக்கம் சொல்வதும் தன மனக்கண் முன்னால் அந்தப் பாடலுக்கு அவள் நடனமாடிப் பார்ப்பதும் என்று காட்சி விரிகிறது. பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் அழகு - சொன்னால் புரியாது - கேட்டுத்தான் உணரவேண்டும்.
ஆற்றங்கரையில் தன் சிறுவயது மகளுக்கு பாட்டுச் சொல்லிக்கொடுக்கிறார் சங்கரசாஸ்திரி. புலரும் பொழுதுக்கே உரிய பூபாளத்தில் அவர் ஸ்வரங்களைச் சொல்லிக்கொடுப்பதும் கழுத்தளவு தண்ணீரில் நடுங்கிக் கொண்டே சிறுமி அதைக் கற்பதும், அங்கு வந்த துளசி அந்த ஸ்வரங்களுக்கு ஆற்று மணலில் நடனமாடிப் பார்ப்பதும், அவள் ஆடுவதைக் கண்டு அவர் பாடுவதை நிறுத்த அவள் தயங்கிச் செல்ல, அவர் அவளை தனது சிஷ்யையாக ஏற்றுக்கொண்டதை குறிப்பால் உணர்த்தும் விதமாக ஸ்வரங்களைத் தொடர அவளும் ஆட இறுதியில் பூபாள ராகத்தின் மைய ஸ்வரங்களோடு அவர் முடிக்க அவள் அவரிடம் வந்து காலைத் தொட்டு வணங்கிச் செல்வதும் அருமையான காட்சிகள். (முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேனே. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு சமீபத்தில் காலம் சென்ற இயக்குனர் பாலுமகேந்திரா). வெறும் ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு பாடல். பாலசுப்ரமணியமும், எஸ். ஜானகியும் பாவங்களை நுணுக்கமாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள். மகாதேவன் இந்தப் பாடலை அமைத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.
"ராகம் தானம் பல்லவி" என்ற ஒரு ராகமாலிகைப் பாடல். ராகமாளிகையே கட்டியிருக்கிறார் கே.வி.மகாதேவன்.
ஊர்ப் பெரிய மனிதரால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகிறாள் துளசி. இந்தக் கட்டத்திலும் பின்னணி இசையாக சங்கராபரண ராகத்தில் ஸ்வரக் கோர்வைகளையே கே.வி.மகாதேவன் பயன்படுத்தி இருந்தார். எஸ்.பி.பி.யின் இந்திர ஜாலக் குரலை இப்படி எல்லாம் கூடப் பயன்படுத்திக் கொள்ளமுடியுமா? என்று வியக்கவைத்தார் அவர்.
"சங்கரா நாதசரீராபரா" - மத்யமாவதி ராகத்தில் பாவம் மிளிரப் பாடினார் எஸ்.பி.பி.
பத்ராசல ராமதாசரின் கீர்த்தனைகளும், மைசூர் வாசுதேவாச்சாரியாரின் "ப்ரோசெவாரெவருரா" என்ற கமாஸ் ராகக் கீர்த்தனையும் இடைவேளைக்குப் பிறகு நம் செவிகளை எஸ்.பி.பி. - வாணி ஜெயராமின் குரல்களில் நிறைத்தன.
"மானச சஞ்சரரே" - சதாசிவ பிரம்மேந்திரரின் இந்தக் கீர்த்தனை "சாமா" ராகத்தில் வாணி ஜெயராமின் மயக்கும் குரலில் துவங்க, எஸ்.பி.பி இடையில் இணைய இறுதியில் வாணியின் தேன்குரலிலேயே பாடல் முடிகிறது. இந்தப் பாடலுக்காகத்தான் சிறந்த பாடகிக்கான 1980 வருடத்துக்கான தேசிய விருது வாணிஜெயராம் அவர்களுக்குக் கிடைத்தது.
சங்கர சாஸ்திரியின் மகளைப் பெண் பார்க்க வரும் படலம்.
"சாமஜ வரகமனா" என்ற தியாகராஜா கீர்த்தனையின் பல்லவியை மட்டும் எடுத்துக்கொண்டு சரணங்களை காதல் வயப்பட்ட அந்தப் பெண்ணின் கற்பனைக் கனவுகளாக வேட்டூரி சுந்தரமூர்த்தி பாடல்லாக வடிக்க மகாதேவன் கையாண்ட ஹிந்தோளம் கேட்பவரை உற்சாகச் சிறகடித்துப் பறக்க வைத்தது.
"மாணிக்ய வீணாம்" என்ற மகாகவி காளிதாசரின் ச்யாமளா தண்டக சுலோகம் கல்யாணி ராகத்தில்.. இதனை விருத்தமாக அமைத்து எஸ்.பி. பி.யை சிறப்பாக பாடவைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.
உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் பாடலில் "தொரகுணா இட்டுவண்டி சேவா" என்ற பல்லவியின் ஆரம்ப வரிகள் மட்டுமே தியாகராஜருடையதாகவும் மற்றவை வேட்டுரி சுந்தர மூர்த்தி அவர்கள் எழுதியவையாகவும் இருந்ததால் "தொரகுணா" கீர்த்தனையின் ஒரிஜினல் ராகமான பிலஹரியில் அல்லாமல் கல்யாணி ராகத்தில் இசை அமைத்து இருந்தார் கே. வி. மகாதேவன் .
இசையை மையமாகக் கொண்ட படத்தில் பாடல்கள் மட்டும் இசை மயமாக இருந்தால் போதாது. பின்னணி இசையிலும் நாதம் சுநாதமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பட்ட சிரமங்களுக்கு பலனே இருக்காது. இந்தப் படத்தில் பின்னணி இசையில் மகாதேவன் எடுத்துக்கொண்ட கவனமும் ஈடுபாடும் வளரும் இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது என்றால் அது மிகையே அல்ல.
தனது தாயும் மாமனும் தங்கள் குலத்தொழிலில் தன்னையும் ஈடுபடுத்த முயலும்போது வீட்டிலிருந்து வெளியேறி ரயில் வண்டியில் முதல் வகுப்பில் ஏறிவிடுகிறாள் துளசி. அந்த வகுப்பில் சங்கர சாஸ்திரி பயணம் செய்கிறார். மறுநாள் கர்நாடகாவில் கச்சேரி. அவரை வரவேற்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் ரயில் நிலையத்துக்கு வருகிறார்கள். ரயில் வண்டியிலிருந்து சங்கர சாஸ்திரி இறங்குகிறார். இறங்கியவர் அடுத்து கை காட்ட துளசியும் கையில் பெட்டியுடன் இறங்குகிறாள். பக்க வாத்தியக் காரர்கள் உட்பட அனைவருக்கு அதிர்ச்சி. இந்தச் சூழலில் அனைவரும் என்ன நினைப்பார்கள். எவ்வளவு பெரிய வித்வானாக இருந்தால் என்ன? எத்தனைதான் பேரும் புகழும் பெற்றவராக இருந்தால்தால் என்ன? இப்படி ஒரு தாசிகுலப் பெண்ணின் மீது மோகம் கொண்டுவிட்டாரே. என்றுதானே நினைப்பார்கள்? அந்த நினைப்பை படம் பார்ப்பவர்களும் உணரவேண்டும். அதுவும் வசனமே இல்லாமல் பின்னணி இசையால் மட்டுமே உணரவேண்டும். உணர்த்தமுடியுமா? செய்துகாட்டி இருக்கிறார் கே.வி.மகாதேவன். அந்த அர்த்தத்தில் துவங்கும் தியாகராஜரின் "எந்த நேர்ச்சினா" என்ற நளின காந்தி ராகத்தின் பல்லவியை பின்னணியில் வீணையில் இசைக்கவைத்து காட்சியின் தன்மையை அனைவருக்கும் உணர்த்திவிட்டிருக்கிறார்.
தன்னைக் கெடுத்தவனை துளசி கொலைசெய்துவிட அவளை தவறான வாழ்க்கையில் ஈடுபடுத்த அவளது தாயும் மாமனும் முயன்ற குற்றத்தை நிரூபித்து அவளை விடுதலை செய்ய முயற்சி எடுத்துக் கொள்கிறார் சங்கர சாஸ்திரி.
கோர்ட்டிலிருந்து அவளை சாரட் வண்டியிலயே ஏற்றிக்கொண்டு தனது வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்து அடைக்கலம் கொடுக்கிறார் சங்கர சாஸ்திரி. ஆச்சாரமான அவரது வீட்டில் மறுநாள் காலை பூஜைக்காக அவரது சிறு பெண் குளித்து ஈரத்துணியுடன் பெரிய குடத்து நீரைச் சுமந்து வந்து விழுந்துவிட, செய்வதறியாமல் நிற்கும் துளசியைப் பார்த்து "நீயே கொண்டுவருவதற்கென்ன? மனசு சுத்தமாக இருந்தால் போதும். ஆசாரம் எல்லாம் மனசுலே தான் இருக்கு" என்று அவர் தன் வீட்டில் அவள் தாராளமாகப் புழங்க அனுமதி அளிக்க பெருமிதத்துடன் அவள் கிணற்றடியில் குளித்துவிட்டு ஈர உடையோடு சுத்தமாக ஆச்சாரமாக சமையலறைக்குள் நுழையும் காட்சிக்கான பின்னணியில் "பண்டுரீதி கொலு" என்ற தியாகராஜரின் நளினகாந்தி ராகக் கீர்த்தனை வீணையில் ஒலிக்கிறது. உனது அரசாங்கத்தில் ஒரு சேவகனாக சேவை செய்யும் பாக்கியத்தை எனக்குக் கொடு" என்ற பொருளில் அமைந்த இந்த கீர்த்தனை காட்சிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.
பிற்பகுதியில் துளசியின் எட்டு வயது மகன் சங்கர சாஸ்திரியிடம் சங்கீதம் பயில அந்த வீட்டுக்குள் நுழைகிறான். நிலைப்படியை வருடும் போது தம்பூராவின் ஸ்ருதியை அவன் உணர்கிறான். "அந்த இல்லமே சங்கீத தேவதை வாசம் செய்யும் வீடு " என்று அவனிடம் துளசி சொல்லி அனுப்புகிறாள். அதனை உணரும் வண்ணம் அந்த வீட்டுக்குள் அவன் நுழைந்து அவன் திரும்பும் பக்கம் எல்லாம் தியாகராஜரின் "ஸ்வரராக சுதா" என்ற சங்கராபரண ராகக் கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது.
இப்படி பார்த்து பார்த்து நுணுக்கமாக காட்சியோடு ஒன்றும் வண்ணம் பின்னணி இசையை செதுக்கி ஒரு முழுமையான இசை நயம் மிகுந்த ஒரு படத்தை நாம் உணரும் வண்ணம் செய்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.
பட்ட பாட்டுக்கு கை மேல் பலன். படம் வெளிவந்ததும் ஆந்திரப் பிரதேசத்தில் தேநீர்க் கடைகள் தோறும் "சங்கராபரணம்" படப் பாடல்களே ஒலித்துக்கொண்டிருந்தன.
இதே படம் ஹிந்தியிலும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை மையமாக வைத்துக்கொண்டு "சுர்சர்கம்" என்ற பெயரில் கிரீஷ் கர்னார்ட், ஜெயப்ரதா நடிக்க வெளிவந்தது. ஆனால் படுதோல்வியைத் தழுவியது.
அந்த அளவிற்கு முன்னரே வடநாட்டிலும் சங்கராபரணம் படத்தின் பாடல்கள் கொடிகட்டிப் பறந்தன.
எது எப்படியோ கே.வி. மகாதேவனின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு கோஹினூர் வைரமாக "சங்கராபரணம்" படத்துக்கு அவர் அமைத்த இசை பிரகாசித்தது என்பது நிஜம்.
chinnakkannan
1st March 2015, 03:06 PM
வெகு அழகிய இன்ஃபர்மேடிவ் பதிவு கோபால்.. நன்றி..
சங்கராபரணம் மதுரை மீனாட்சியில் ரிலீஸ் என்று நினைவு..அதற்கு முன்னா அதன் பிறகா தெரியவில்லை..விகடனில் ஒரு முழுப் புத்தகத்திலும் (அட்டைப் படத்திலிருந்து) அந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்த நினைவு..
படம் வந்து ஓரிரு வாரங்கள் கழித்துத் தான் நான் அம்மா சகோதரிகள் எனப் போனதாக ஞாபகம்..ஒரே கூட்டம்..பாடல்கள் பிடித்தது என்றாலும் படம் புரியவில்லை..மொழி தெரியாத்தால்.. நாங்கள் போவதற்கு முன் என் தந்தை ஒரு இரவுக் காட்சி (சனி இரவு தான் ஏனெனில் மற்ற நாட்களில் அவரது வியாபாரக் கடை உண்டு-) போய்ப் பார்த்து விட்டு வந்து என் அம்மாவிடம் சொன்னார் என நினைக்கிறேன்..
அதன் பிறகு ஒரு தடவை தான் பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்..அதுவும் முழுமையாக இல்லை..(துபாயில் என் சகோதரி சகோதரி கணவருக்கு சப்தபதி கவர்ந்த அளவு சங்கராபரணம் கவரவில்லை மீன்ஸ் ப்ரியாரிட்டி சப்தபதி..எனில் சப்தபதி வீடியோகாஸட் மட்டும் வைத்திருந்தார்கள்)
இந்த ப் பதிவு படித்தவுடன் மறுபடியும் பார்த்த மகிழ்வு.. நன்றி கோபால் அகெய்ன்..
chinnakkannan
1st March 2015, 03:14 PM
ப்ரோசே வா ரெவருரா.. அதுவும் அழகிய பாடல் தான்..
சோ எழுதிய சங்கராபரணம் விமர்சனம் படித்திருக்கிறீர்களா.. நான் படித்திருக்கிறேன் பிற்காலத்தில் ஒரு புத்தகத்தில் வந்திருந்தது..
அந்த துளசியின் பையன் (ரியல் லைஃபில் துளசி) தனியாக ஒரு பாட்டுப் பாடுவதாக நினைவு.. நினைவுக்கு வர மறுக்கிறது..
ஒல்லி ஒல்லி ராஜலஷ்மி அகல விழிகள் சாம ஜவர கமனா பாடல் அழகு..அந்தக் கோவில் படிக்கட்டுகள் நினைவிருக்கிறது..ஸ்ரீ சைலமா என்ன..
பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு..வெகு நன்றாக இருக்கும்..
RAGHAVENDRA
1st March 2015, 05:32 PM
From today's dinathanthi :
http://www.dinathanthiepaper.in/132015/MDSB151914-M.jpg
RAGHAVENDRA
1st March 2015, 05:48 PM
திரை இசைத் திலகத்தின் இசையில் மிகவும் அருமையான பாடல்கள் நிறைந்த படம், ஜெய்சங்கர் கே.ஆர்.விஜயா நடித்த தங்க வளையல். அதிகம் அறியப்படாத படம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு நண்பர் இப்படப்பாடல்களை இணையத்தில் தரவேற்றி புண்ணியம் கட்டிக் கொண்டுள்ளார். அவருக்கு உளமார்ந்த நன்றியுடன் பாடல்கள் இங்கே..
வார்த்தை விளையாட்டில் சொல்லத் தெரியவில்லை..
https://www.youtube.com/watch?v=6M8czmGe-xo
எது வந்தாலும் வரட்டும் சந்தித்து விடு என்று கூறும் பாடல்
https://www.youtube.com/watch?v=irEIS8JcCdA
அருமையான பாடல் பூவா காயா சொல்லுமய்யா.. ஈஸ்வரியின் குரலில்..
https://www.youtube.com/watch?v=p4s-Mt8S2ug
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல், தங்க வளையல் படம் என்றால் உடனே நினைவுக்கு வரும் பாடல் சூலமங்கலம் குரலில் சொன்னாலே வாய் மணக்கும், நெஞ்சினிலே பக்தி மணக்கும் பாடல்
https://www.youtube.com/watch?v=zQfH-E4Fhrw
RAGHAVENDRA
1st March 2015, 05:50 PM
சில நண்பர்கள் கேட்பது காதில் விழுகிறது.. எல்லாம் ஓ.கே.. அந்தப் பாடல்... எங்கே என்று.. நிச்சயம் வாசு சார் கேட்பார் இந்தக் கேள்வியை..
வாசு சார் இதோ உங்களுக்காக ...
தாழை மடல் சிரிப்பு..
https://www.youtube.com/watch?v=p8su1CTXRTQ
rajraj
2nd March 2015, 09:24 AM
ஹை..அப்படி எல்லாம் ரிட்டயர் ஆக விடமாட்டோமே ராஜ் ராஜ் சார்! :)
*
OK ! :) Here is one your style ! :)
From Yezhai padum paadu (1950)
kaNNan mana nilaiyai thangame thangam.......
http://www.youtube.com/watch?v=QLR9Xxlekow
From Deivathin deivam
http://www.youtube.com/watch?v=5TtJG4fbA_A
chinnakkannan
2nd March 2015, 09:54 PM
ராகவேந்திரரே..வாங்க வாங்க. நன்றி தங்க வளையல் பாட்டுக்களுக்கு. நான் கேட்டதில்லை இதுவரை..
கேட்கும்போதே லிரிக்ஸை டைப்படிக்கத் தோன்றியதா அடித்துவிட்டேன்..
**
சொல்லத் தெரியவில்லை உள்ளத்தில் உள்ளதை தெள்ள்த்தெளிவாய் சொல்லத் தெரியவில்லை
சொல்லித்தெரிவதில்லை
மெட்டியிலே சத்தம் வந்தால் – மெல்ல மெல்ல பாடமெல்லாம் சொல்லச் சொல்லும்
தங்கவளை கைகளில் என்னசொல்லும்
தங்கிவிட கைக்குள் வளை என்று சொல்லும்
இரவும் விடிந்துவிட்டால் என்ன செய்வாய்
வரவுக்கும் செலவுக்கும் வாழ்த்துச் சொல்வேன்
யாராக்கும்லிரிக்ஸ்.
*
கொஞ்சம் ரொமாண்டிக் மூட்ல தான் இருந்திருப்பார் போல இருக்கு பாடலாசிரியர்..
பூவா காயா சொல்லுமய்யா வில் எல் ஆர் ஈஸ்வரிகொடுக்கும் அழுத்தம் ம்ம்
*
சொன்னாலே வாய் மணக்கும் வேல் முருகா பக்திப்பாட்ட அடுத்த பாட்டப் பார்த்துட்டுப் பார்த்துக்கறேனே.
*
தாழை மடல் சிரிப்பு
வாழை உடல் விரிப்பு
நடையினில் நடனத் தேர்வருது
இடையினில் பருவ ஊர் வருது
தடையில்லை இன்னும் தயக்கமா
விடையில்லை நெஞ்சில் மயக்கமா
தொடல் பள்ளிக் கூடம் தொட்டதும் துவங்கும் பாடம்
பற்றிட வெட்கமும் மோதும்பின் பெற்றிட பெண்மை நாணும்
இதழும் விழியும் கொஞ்சும்
இன்னொரு முறை எனக் கெஞ்சும்
அலையென வளரும் நெஞ்சம்
கலையினில் உருகும் மஞ்சம்
கண்களும் உன்னைத் தேடும்
ஒரு கவிதையில் உன்னைப் பாடும்
அன்பினில் ஆவல் கூடும்
உன் அழகினில் ஆசை ஆடும்
வாலை தந்த சிகப்பு
சோலை தந்த வனப்பு
காளைகொண்ட கோலமல்லவா நீ
காளைகொண்ட கோலமல்லவா.
**
ஹையாங்க்.. அந்தக் கால்த்திலேயே இப்படியா.. பாடல் கண்ணதாசனா..இல்லை என நினைக்கிறேன்.. நல்ல பாட்டு
நடுவில் வருவது வரட்டும்மும் நல்ல பாட்டு.. மிக்க நன்றிங்க ராகவேந்திராசார்..
*
ராஜ் ராஜ் சார் இரண்டு பாடல்களுக்கும் தாங்க்ஸ் நன்னி.. முத்ல பாட் நான் பார்த்ததில்லை.. யெளவனப் பருவத்தில் குமிழ் சிரிப்போடு பத்மினி.. நைஸ்.
சரி சரி நான் என்ஸ்டைலை மாத்திக்கிட்டு அடுத்த போஸ்ட்ல வர்றேன்..
**
இந்தப்பாடல்கள் பார்த்து ரசிச்சுக்கிட்டிருக்கறச்சே சந்தடி சாக்கில இந்தப்பாட்டும் பார்த்தேனாக்கும். ரவிச்சந்திரன் ராஜஸ்ரீ.படம்?
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=N6A2e2oYqvg
யாரடி வந்தார் என் எண்ணத்தைக் கொள்ள ஏனடி வந்தார் என் கன்னத்தைக் கிள்ள ஹைலல்லோ
chinnakkannan
2nd March 2015, 09:59 PM
காதல் வயப்பட்டாலே போதும் ஆணுக்கு ஒரு கவலை என்றால் பெண்ணுக்குப் பலகவலை…
ஆணாகப் பட்டவன் மேலும் மேலும் தன் மனம் கவர்ந்தவளைக் கவரப் பார்ப்பான்..அவளுக்கோ கல்யாணம் குடித்தனம் பின் வாரிசுகள் என முன்னோக்கி வரப்போவதை நினைந்து மனதுக்குள் யோசித்துக் கொண்டிருப்பாள்..
எனில் மெல்ல ஆடவன் வனிதையை அணுக அவளுக்குள் விருப்பம் பட் இந்த நாணம் அச்சம் மடம் எல்லாம் படைக்கறச்சயே ஒரு பேக்கேஜாட்டம் வைச்சுட்டானே பிரம்ம தேவன்.
எனில் அவன் மெல்ல மெல்ல சொல்ல வர இவளோ விலகி விலகி விளக்கம் சொல்வதாய்ப் பாடல் போகிறது.எப்படி.கலரிலும் கறுப்பு வெள்ளையிலும் !
அன்பு மனம் கனிந்த பின்னே கலரில் அச்சம் தேவையா..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fOUnGcHGdt4
கறுப்பு வெள்ளையில் கனிந்த அன்பு மனம்..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lsJq6PI_7R0
chinnakkannan
2nd March 2015, 10:36 PM
பளபளத்து வெய்யிலிலே பட்டாக தகதகக்கும்
..பொன்னில்லை என்றீக பெண்நான்னு சொன்னீக
தழதழத்து நெஞ்செல்லாம் இளகித்தான் நெக்குருகி
..தவித்துநான் வந்தப்போ தயங்காம பாத்தீக
கலகலப்பா மேகமுன்னும் மயிலுன்னும் தானிந்தக்
..கன்னியத்தான் சொன்னீக கண்ணால கொன்னீக
சலசலக்கும் ஓடையிலே சின்னப்பூ செல்லுதற்போல்
..தத்தித்தான் சாயுதய்யா எம்மனசு ஒம்மேல..
சிவகுமாருக்காக எஸ்பிபி விகுமார் இசையில் சாய்கின்ற சின்னப் பூ லத்தூ!
பொன்னை நான் பார்த்த்தில்லை பெண்ணைத் தான் பார்த்ததுண்டு..
https://www.youtube.com/watch?v=iOB8HH2vvLo&feature=player_detailpage&list=PLjdAFpMAYqJvG2oq3u7KKWGcPJD7UI_fp
chinnakkannan
2nd March 2015, 10:56 PM
சிச்சுவேஷன் ஒன்று பாடல் இரண்டு..
ஸ்ரீதேவி மதுரையில் ஓடிய படம் இது.. மாணவன் நினைத்தால் பாடல் மட்டும் தெருமுக்கில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கொஞ்சம் போடுவார்கள்..படம் என்ன காரணமோ கூட்டிச் செல்லவில்லை.. நானும்பார்க்கவில்லை.பார்த்ததுமில்லை..இதுவரை.. இப்போது தான் பாடலைப் பார்த்தேன்..அவ்வப்போது ஒலிச்சித்திரம் கேட்டிருப்பதாக புகையாய் நினைவு (வந்திருந்ததா என்ன)
பாவம் ஸ்ரீகாந்த் சுபா கடும் வெயிலில் ஓடி ஓடிப் பாடினால் வேர்க்கத் தான் வேர்க்கும்.ரொமான்ஸா வரும்.. ஸ்ரீகாந்த் சமாளித்திருக்கிறார்.
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் இந்தப்பாடலிலும்…..
https://www.youtube.com/watch?v=8np1QwEnpoQ&feature=player_detailpage
இந்தப் பாடலிலும் சங்கமம்
கொஞ்சம் லேட்டா வந்த படம் தான்.. வாலிபமே வாவா என ஒரு சொதப்பல் படத்தை எடுத்த பாரதிராஜா எ.இ.த மக்களுக்காக எடுத்து ஓடோ ஓடென்று ஓடிய படம். மிக்ஸியில் கருங்கற்களை அரைத்தாற்போன்ற குரலில் தியாக ராஜன், உள்ள கொதிக்குதுங்க என குணச்சித்திர நடிப்பிற்கு முயன்றிருக்கும் சில்க் ஸ்மிதா மற்றும் புதுமுகங்களாக கார்த்திக் ராதா இருந்தும் வைரமுத்துவும் இளையராஜாவும் தான் தாங்கிப்பிடித்திருப்பார்கள் படத்தை..என ஆன்றோர்கள் சொல்வார்கள் ( கண்ணா நைஸா நழுவிட்டடா நீ!)
காதல் ஓவியம் காணும் காவியம்… கொஞ்சம் பார்க்கலாமா
https://www.youtube.com/watch?v=jEUwBSBRFWY&feature=player_detailpage
chinnakkannan
3rd March 2015, 11:53 PM
உன் கண்ணுக்கு நான் பட்ட கடன் தீர்க்கவோ..
ஏதோ லோன் விஷயம் போல இருக்கு. ஜெமினி விஜயகுமாரி விமன் என்றால் விமன் படத்திலிருந்து...
https://www.youtube.com/watch?v=edijDYz-wpo&feature=player_detailpage
**
chinnakkannan
3rd March 2015, 11:54 PM
பறந்து வா வா வா பாடலொன்று பாடு
கருந்தேள் கண்ணாயிரத்தில்(கண்) கொட்டாத லஷ்மி ஜெய்ஷங்க்கர்..
https://www.youtube.com/watch?v=RsI_SsMvROw&feature=player_detailpage
chinnakkannan
3rd March 2015, 11:57 PM
**
ஹச்சோ தலைப்பே கொடுக்கலையே..ரேர் சாங்க்ஸா..இந்தப் பாட்டு வாசு சார் போட்டாரா
**
இந்த நெஞ்சம் யாரை க் கண்டு ஓடுமோ
எப்போது ஒன்றை ஒன்று தேடுமோ
ஜெய் வாணி காதலித்தால் போதுமா ஜின்க்கிலாலா ஜிங்கிலாலா லா… டிஎம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி…
https://www.youtube.com/watch?v=Uj_YWa90Qvk&feature=player_detailpage
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.