View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
[
11]
12
13
14
15
16
rajraj
5th January 2015, 11:24 AM
vasu: When I visit you in Neyveli I expect all those dishes in the pictures to be served for dinner ! :lol:
vasudevan31355
5th January 2015, 11:37 AM
vasu: When I visit you in Neyveli I expect all those dishes in the pictures to be served for dinner ! :lol:
No doubt sir. Certainly. Varugave.. Varukgave.. varuvalai (Fish) saappida varukgave.:) Saappiduveergalaa?
rajraj
5th January 2015, 11:40 AM
No doubt sir. Certainly. Varugave.. Varukgave.. varuvalai (Fish) saappida varukgave.:) Saappiduveergalaa?
Yes! My dinner here is chicken or fish ! :) I don't eat beef, pork or lamb/mutton ! Doctor's orders ! :) When I visit India I go for pomfret and prawns ! :)
chinnakkannan
5th January 2015, 12:00 PM
kalakkal mullum malarum alasal vasu sir.. esp raman aandaalum ravanana aandaalum and nitham nitham nel soru..wow.. pictures are tempting (aanaa naan saappida maattEnE).. intha karuvaadu meenai vEga vachchu kaaya vaippaangaLaa..(oru chiinna doubt)..:)
gkrishna
5th January 2015, 04:10 PM
'தினம் குடிச்சா ஒடம்பு அது ரொம்பப் பெருக்குமய்யா '-
இந்த வரி கூழுக்கும் பொருந்தும் சரக்கிற்கும் பொருத்தும் எல்லாவற்றுக்கும் பொருந்தும் . :)
படாபட் ஜெயலக்ஷ்மி திறமையான நடிகை.கொச்சையாக சொல்வதானால் 'நாட்டு கட்டை' போன்ற கதாபாதிரங்களுக்கு மிகவும் பொருத்தமானவர் . தியாகம் திரை படம் மிக சிறந்த உதாரணம். வாசு அதாவது எம் ஆர் ஆர் வாசு மூக்குத்தி ஒன்று வாங்கி கொண்டு படாபட் இடம் கொடுத்து
"பூவோடு சேர்த்து கொடுக்கிறேன் மாட்டிகிறயா இல்லை மாட்டி விடட்டா"
என்று சொல்லும் போது படாபட்
"மாட்டுவையா மாட்டுவே ஏமாந்தவள் எவளாவது மாட்டுவா அவளை (மன்னிக்கவும்) அவள்ட்ட மாட்டு " பின்னி எடுத்துருவாங்க .
ஷோபாவை போல் மிக சிறந்த நடிகை . காதல் தோல்வியில் சாதல் (தற்கொலை) ஆனவங்க .
சாப்பாடு கடை புகைப்படங்கள் தேடி தேடி போட்டு உள்ளீர்கள். அருமையிலும் அருமை
http://s2.dmcdn.net/1kWa/526x297-1O5.jpg
படாபட் உடன் இருப்பது யார் சந்திர மோகனா ? :)
RAGHAVENDRA
5th January 2015, 10:03 PM
வாசு சார்...
படத்திற்கு மகேந்திரன் ஒரு க்ளைமேக்ஸ் வைத்தாரென்றால், தங்கள் இசைப் படத்திற்கு தாங்கள் வைத்த க்ளைமாக்ஸ்..
எதிர்பாராதது..
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு...
பாட்டைப் பற்றிச் சொல்லி அதன் நிழற்படங்களையும் கொடுத்த தங்கள் பாணி மிகவும் அருமை..
நிழற்படங்களை மிகவும் ரசித்தேன் (சைவங்களை மட்டும் தான் எனச் சொல்ல வேண்டுமா என்ன)
சூப்பர்...
vasudevan31355
5th January 2015, 11:01 PM
'வாசு அதாவது எம் ஆர் ஆர் வாசு மூக்குத்தி ஒன்று வாங்கி கொண்டு படாபட் இடம் கொடுத்து
குரும்பூர் குப்புசாமி ரேஞ்சுக்கு எங்ககிட்டேயேவா?:)
vasudevan31355
6th January 2015, 10:30 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 21)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
'முள்ளும் மலரும்' பாடல்கள்... தொடர்கிறது...
'அடிப்பெண்ணே! பொன்னூஞ்சல் ஆடும் இளமை'
http://i1.ytimg.com/vi/Uje_MqHKYEE/sddefault.jpg
சரத்பாபு நெஞ்சில் திருமண ஆசை விதைத்தவுடன் ஷோபாவின் மனதுக்குள் மோகனமாக மலரும் பாடல். இளம் பெண்ணின் நெஞ்சத்தில் கூத்தாட ஆரம்பிக்கும் எண்ணங்கள். தன் அழகைத் தானே ரசிக்கும் ஆரம்பம். துள்ளாட்டம் போடும் மனம். இயற்கையோடு தன்னை இனைத்துப் பார்த்து மகிழும் இளமை. நாணம், கூச்சம் கலந்த குதூகல மனநிலை.
பஞ்சுவின் அருமையான பாடல். ராஜாவின் வழக்கமான ராஜாங்கம். ஜென்ஸியின் 'கிறீச்' குரலில். சில வார்த்தைகளை புரியாதபடி உச்சரிப்பார். ஆனாலும் இனிமைதான்.
கோபால் போனில் பேசும் போது சொன்னது ஞாபகம் வருகிறது. இந்தப் பாடலுக்கு முன்னமேயே எம்.எஸ்.விஸ்வநாதன் 'அவர்கள்' படத்தில் 'காற்றுக்கென வேலி' பாடலை காட்டாற்று வெள்ளம் போல் கொடுத்துவிட்டதால் இந்த பாடல் கொஞ்சம் அமுங்கிப் போனது என்று.
http://i.ytimg.com/vi/Xqq_I_x0BjI/0.jpghttps://i.ytimg.com/vi/cmQZ9GMt71M/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/k0F8PvI9vLQ/hqdefault.jpg
இயக்குனர் மகேந்திரன் இப்பாடலை அப்படியே பாலு மகேந்திரவைப் படமாக்க சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டது போல் தெரிகிறது. பாலு மகேந்திரா 'என் ஷோபா' என்று அடிக்கடி உரிமையோடு கூறிக் கொள்வதை நிரூபணம் செய்வது போன்ற பாடலாக்கம். இஷ்டத்திற்கு ஷோபாவை வித வித போஸ்களில் நிற்க வைத்து, படுக்க வைத்து, ஓடவிட்டு, குளிக்க விட்டு, ரவிக்கையற்ற புடவையுடன் அழகு பார்த்து ஸ்டில்களாக எடுத்துத் தள்ளி ஆசையைத் தீர்த்துக் கொண்டிருப்பார்.:)
ராஜாவின் துள்ள வைக்கும் இசை. அதுவும் பாடலின் துவக்க இசையும், முடிவடையும் போது இனிக்கும் அந்த நீள் இசையும் வெகு அற்புதம். ஜென்ஸி 'பூமிக்கோ ஒரு தாஹம்' என்று 'க' எழுத்தையெல்லாம் 'ஹ' வாக மாற்றி உச்சரித்து தமிழின் மேன்மையைக் காப்பாற்றுவார். இந்த விஷயங்களில் ராஜா கவனம் செலுத்தாதும் குறையே. இனிமை மட்டும் இருந்தால் போதுமா? உச்சரிப்பில் கவனம் தேவைதானே?
எப்படி இருந்தாலும் நல்ல பாடல்.
மிக முக்கியமான ஒன்று. 'முள்ளும் மலரும்' படத்தில் 5 பாடல்கள்தாம். இந்த இடத்தில்தான் மகேந்திரனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்ட வேண்டும். டைட்டில் பாடலை விட்டு விடுவோம். மற்ற நான்கும் பார்த்தீர்களானால் நான்கும் வெவ்வேறு ரகம். மிக அழாக 4 பாடல்களையும் 4 வித கோணங்களில் தந்து நம்மை திக்கு முக்காடச் செய்திருப்பார் இயக்குனர்.
'செந்தாழம்பூவில்' மிக அருமையான இயற்கையை பெண்ணாக கற்பனை செய்து ரசனையோடு பாடும் கிளாஸ் ரகம்
'ராமன் ஆண்டாலும்' எடுத்துக் கொண்டால் ஆவேச ஆர்ப்பாட்ட லோ கிளாஸ் ரகம்
'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' சாப்பாட்டைப் பற்றியே சுற்றும் சலிக்காத ரகம்
'அடிப் பெண்ணே' காதல் கொண்டவளின் மனநிலையை விளக்கும் அழகு ரகம்
ஒன்று அமைதியுடன் மிகப் பொருத்தமாக ஜேசுதாஸிற்கு
ஒன்று களேபர கலாட்டா பண்ணும் பாலாவிற்கு
ஒன்று நாட்டுப்புற ஜனரஞ்சக மெட்டில் வாணிக்கு
ஒன்று இளமைத் துடிப்பான ஜென்ஸிக்கு
சரத்தின் ரசனை நிலைக்கும், ரஜினியின் கோப நிலைக்கும், 'படாபட்'டின் மாறாத சாப்பாட்டு ரசனைக்கும், ஷோபாவின் பூரிக்கும் இளமைத் துடிப்பான கனவுகளுக்குமான பாத்திரங்களுக்கு அழுத்தம் தரக்கூடிய, மிகத் தேவையான, வாழ்நாள் முச்சூட நம்மை ரசிக்க வைக்கும் பாடலகள். அனாவசிய திணிப்பு என்று எதுவுமே கிடையாது. இது படத்தின் வெற்றிக்கு மேலும் வழிவகுத்தது என்று கூறலாம். அது போல குறைந்த பாடல்களே என்பதால் ராஜாவும் பார்த்து பார்த்து செதுக்க முடிந்தது.
இப்போது 'முள்ளும் மலரும்' இறுதிப் பாடலை முழுதாக வரிகளுடன் ரசிக்கலாம்.
https://i.ytimg.com/vi/qAb5NDRj1t8/hqdefault.jpg
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன
பூங்காற்றில் ஒரு ராகம்
பொன்வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன
சித்தாடை கட்டாத செவ்வந்தியே
சிங்காரப் பார்வை சொல்லும் சேதி என்னவோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே
அடிப்பெண்ணே
நீரோடும் ஒரு ஓடை
மேலாடும் திருமேடை
தேடும் தேவை என்ன
பார்த்தாலும் ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே
அடிப்பெண்ணே
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cmQZ9GMt71M
rajraj
6th January 2015, 10:50 AM
vasu: I was joking about dinner. Don't plan on rushing to Cuddalore or Porto Novo to fish for pomfret! :lol: I am a light eater. It becomes even lighter when I travel. When we travel we usually carry dark chocolate and nuts( almond, cashew, pistachio,walnut and hazelnut). You can feed me pattaaNikkadalai or pottukkadalai I miss here ! :lol: I like boiled raw peanuts (mallakkottai? ) ! :)
vasudevan31355
6th January 2015, 10:50 AM
http://padamhosting.me/out.php/i133508_mmalar10.pnghttp://padamhosting.me/out.php/i133515_mmalar3.png
'முள்ளும் மலரும்' பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. 'மதுர கானங்கள்' தொடர்களிலேயே என்னை பெண்டு நிமிர்த்திய படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் மனம் முழுக்க ஒரு திருப்தி பரவிக் கிடப்பதை மறுப்பதற்கில்லை.
இந்தப் படத்தைப் பற்றி நான் இங்கு எழுதிய பதிவுகளை பற்றி இயக்குனர் மகேந்திரன் அவர்கள் வரை எடுத்துசென்று என்னையும், 'மதுர கானங்கள்' திரியையும் பெருமைப் படுத்திய அன்பு நண்பர் கோபால் அவர்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
http://2.bp.blogspot.com/-yhapA8Kw3LI/Uf01btIykuI/AAAAAAAAJKY/NSrnTIh2CzI/s400/nandri.jpg
மிகப் பொறுமையாக சகிப்புத் தன்மையோடு பெரிய மனது வைத்து என்னுடைய 'முள்ளும் மலரும்' பதிவுகளை படித்து ரசித்து என்னைப் பாராட்டிய அனைத்து அன்பு நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி!
இப்படத்தின் பதிவுகளுக்காக எனக்கு தனிமடல்கள் அனுப்பிப் பாராட்டிய உள்ளங்களுக்கும், அலைபேசியில் பாராட்டிய நெஞ்சங்களுக்கும், 'லைக்'குகளை அள்ளி வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும், 'முள்ளும் மலரும்' பதிவுகளைப் பற்றி பொறுமையுடன் கேட்ட இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி! நன்றி! நன்றி!
rajraj
6th January 2015, 11:04 AM
.. intha karuvaadu meenai vEga vachchu kaaya vaippaangaLaa..(oru chiinna doubt)..:)
It is highly salted (preservative) raw fish dried under the sun ! :)
gkrishna
6th January 2015, 12:08 PM
ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் தினம்: 6-1-1966 - வருஷம் 66 ஆ அல்லது 67 என்று சிறு குழப்பம் உள்ளது ?
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’
http://2.bp.blogspot.com/-Xp_He8hOmfQ/UL96pBJRaAI/AAAAAAAAAD4/67ygH8e0LuU/s1600/A.R.Rahman+Unseen+Rare+Photo+Collection+(17).jpg
http://www.youtube.com/watch?v=PBsU9asJTKY
பவித்ரா திரைபடத்தில் இடம் பெற்ற உன்னிக்ரிஷ்ணன் பாடிய 'உயிரும் நீயே உறவும் நீயே '
chinnakkannan
6th January 2015, 01:05 PM
//முள்ளும் மலரும்' பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. 'மதுர கானங்கள்' தொடர்களிலேயே என்னை பெண்டு நிமிர்த்திய படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் மனம் முழுக்க ஒரு திருப்தி பரவிக் கிடப்பதை மறுப்பதற்கில்லை. // படிக்கும் போதே ஒரு படைப்பாளி என்ற நிலையில் (?!) என்னால் உணர முடிகிறது வாசுசார்.. ஆனால் அந்த ஸேடிஸ் ஃபேக்*ஷன் -மனதுள்ளாழ்ந்து முகிழ்த்து இருக்கும் எண்ணம் இறக்கி விட்ட பின் ஏற்படும் பரவச நிலை -அதற்கு ஈடு எதுவும் கிடையாது.. மெய்யாலுமே நல்ல முயற்சி..நன்றாகவும் வந்திருக்கிறது..என் சார்பாக ஒரு ஃபைவ் ஸ்டார்..இருங்க இருங்க அடிக்காதீங்க..சரி ஒரு ட்ராபிகனோ ஆரஞ்ச் ஜூஸ் வாங்கிக்கோங்கோ.:)
இந்தப் படம் போடுவதுஎன்பது (புகைப்படம்) எனக்கும் பிடிபட மாட்டேனென்கிறது..எழுதிக் கொண்டிருப்பதை இந்த வாரத்தில் முடித்து விடுவேன் என நினைக்கிறேன்..கொஞ்சம் சொல்லுங்களேன்..(இந்த போட்டோ பக்கெட்டெல்லாம் எனக்குப் புரியவில்லை..)
chinnakkannan
6th January 2015, 01:07 PM
It is highly salted (preservative) raw fish dried under the sun ! :)
ஒரு நாவலில் வேகவைத்து என்று வருகிறது..ராஜ் ராஜ் சார்..
kalnayak
6th January 2015, 05:15 PM
vasu: I was joking about dinner. Don't plan on rushing to Cuddalore or Porto Novo to fish for pomfret! :lol: I am a light eater. It becomes even lighter when I travel. When we travel we usually carry dark chocolate and nuts( almond, cashew, pistachio,walnut and hazelnut). You can feed me pattaaNikkadalai or pottukkadalai I miss here ! :lol: I like boiled raw peanuts (mallakkottai? ) ! :)
ராஜ்ராஜ், நீங்களும் கடலூரா? மல்லாக்கொட்டையைப்பத்தி சொல்லியிருக்கீங்க. வேற ஊர்காரர்களுக்கு தெரியாது இல்லையா?
Russellzlc
6th January 2015, 05:34 PM
திரு. வாசு சார்,
உங்களின் முள்ளும் மலரும் விமர்சனத்தை நான் பாராட்ட விரும்பவில்லை. என்ன சொல்லி பாராட்டினாலும் அது குறைவாகத்தான் இருக்கும் என்பதால் நன்றி மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கும் பதார்த்தங்கள் சுவை மிக்கவை என்று பார்த்தாலே தெரிகிறது. இருந்தாலும், நீங்கள் கருத்துக்கு விருந்தளித்திருக்கும் எழுத்துக்களின் சுவையை அவை நெருங்க முடியாது.
நீங்கள் குறிப்பிட்டது போல....
அடடா!அருமை! கோவில் மாடு மாதிரி தீனி தின்று ஊரை ஆம்பிளை போல் சுற்றி வந்த மங்காவுக்குள் இருக்கும் நளினமான பெண்மை இப்போது நயமாக வெளிப்படுகிறது காளியே வியந்து போகும் அளவிற்கு. அதுவும் சாப்பாடு சூடாக இருக்கும்போது சுவையாக இருப்பது போல் தான் சூடாக இருப்பதாய் நாசூக்காய் உணர்த்தி தன்னையே சாப்பிட வருமாறு அவள் கோரிக்கை வைத்து அவளுக்குள் ஒளிந்திருக்கும் அந்தரங்கப் பெண்மையை அழகாக, அருவருப்பின்றி, ஆபாசமில்லாமல் வெளிப்படுத்துகிறாள்.
.......... திருக்குறளின் மூன்றாம் பாலை அழகாக, அருவருப்பின்றி, ஆபாசமில்லாமல் வெளிப்படுத்தியிருப்பது மங்கா மட்டுமல்ல, அவளது உணர்வுகளை எழுத்தாக வடித்திருக்கும் நீங்களும்தான். அறுசுவை விருந்தளித்த உங்களுக்கு நன்றிகள் சார். அதான் விருந்தளித்தாகி விட்டதே என்று திருப்திப்படக் கூடாது. தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
திரு.சின்னக் கண்ணன் சார்,
.......‘‘என் சார்பாக ஒரு ஃபைவ் ஸ்டார்..இருங்க இருங்க அடிக்காதீங்க..சரி ஒரு ட்ராபிகனோ ஆரஞ்ச் ஜூஸ் வாங்கிக்கோங்கோ.’’.......
........... உங்கள் பெயர் நீங்கள் பிறந்தவுடனே பெற்றோர் வைத்த பெயரா? அல்லது கொஞ்சம் வளர்ந்த பின், குறும்புகளைப் பார்த்து வைக்கப்பட்ட பெயரா?. அவ்வப்போது நான் மானிட்டரை பார்த்து சிரிக்க காரணமாக இருக்கிறீர்கள். நன்றி.
திரு.கிரு(சிரி)ஷ்ணா சார்,
படாபட் ஜெயலட்சுமி பற்றிய ஆராய்ச்சி கலந்த ‘அரிய’ தகவல்களுக்கு பாராட்டுக்கள்.
திரு.காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் எதிர் நீச்சல் படத்தில் நாகேஷின் கல்லூரித் தோழராக நடித்திருக்கிறார் என்ற தகவலை பதிவிட்ட திரு.பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
vasudevan31355
6th January 2015, 06:18 PM
நன்றி ராஜ்ராஜ் சார்.
தங்களுக்குப் பிடித்த எந்த வகை உணவாயினும் சரி1 நெய்வேலி வந்து சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும். எப்போது வருவீர்கள் என்று முன்னமேயே சொல்லி விடுங்கள்.
அன்பு நண்பர் கல்நாயக் கூறியது போல மணிலா கொட்டை என்று அழைக்கப்படும் வேர்க்கடலை பேச்சுவழக்கில் மல்லாக் கொட்டை இன்னும் கொச்சை வழக்கில் மல்லாட்டை என்று எங்கள் கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டாரங்களில் அழைக்கப்படும். நீங்களும் தஞ்சாவூரை சேர்ந்தவர். அதனால் பேச்சு வழக்கிலும் கூட மிகவும் நெருங்கி விட்டீர்கள். 'மல்லாக் கொட்டை' என்று ரொம்ப நாள் கழித்துக் கேட்க எவ்வளவு சந்தோஷம்!
நீங்கள், நான், கல்நாயக் மூவரும் சேர்ந்து கடலையை அவித்து மாங்காய்த் துண்டுகள், காய்ந்த மிளகாய், சீரகம், சிறிது மிளகுத் தூள், கொஞ்சம் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சுண்டலாக்கி ஒரு வெட்டு வெட்டி 'மங்கா'த்தா விளையாடலாம்.:)
vasudevan31355
6th January 2015, 06:26 PM
// படிக்கும் போதே ஒரு படைப்பாளி என்ற நிலையில் (?!) என்னால் உணர முடிகிறது வாசுசார்.. ஆனால் அந்த ஸேடிஸ் ஃபேக்*ஷன் -மனதுள்ளாழ்ந்து முகிழ்த்து இருக்கும் எண்ணம் இறக்கி விட்ட பின் ஏற்படும் பரவச நிலை -அதற்கு ஈடு எதுவும் கிடையாது.. மெய்யாலுமே நல்ல முயற்சி..நன்றாகவும் வந்திருக்கிறது..என் சார்பாக ஒரு ஃபைவ் ஸ்டார்..இருங்க இருங்க அடிக்காதீங்க..சரி ஒரு ட்ராபிகனோ ஆரஞ்ச் ஜூஸ் வாங்கிக்கோங்கோ.:)
இந்தப் படம் போடுவதுஎன்பது (புகைப்படம்) எனக்கும் பிடிபட மாட்டேனென்கிறது..எழுதிக் கொண்டிருப்பதை இந்த வாரத்தில் முடித்து விடுவேன் என நினைக்கிறேன்..கொஞ்சம் சொல்லுங்களேன்..(இந்த போட்டோ பக்கெட்டெல்லாம் எனக்குப் புரியவில்லை..)
மிக்க நன்றி சி.க தங்கள் வளமான பாராட்டிற்கு.
அது என்ன? ஒரு சந்தேகம்? 'படைப்பாளி என்ற நிலையில்' பக்கத்தில் ஒரு ஆச்சரியமும், கேள்விக்குறியும். அதில் என்ன திடீர் சந்தேகம் உங்களுக்கு? உங்களைப் போல தமிழை இலகுவாய் அழகாய் உணர்த்த இங்கு ஒரு சில பேர்கள் தான் இருக்கிறார்கள். வளமான தமிழோடு நகைச்சுவை இழையோட பதிவுகள் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே. தங்கள் தமிழறிவை நினைத்து பலமுறை வியந்து போய் இருக்கிறேன். கிருஷ்ணாவும், நானும் பலமுறை போனில் கூட தங்கள் பதிவுகளை ரசித்து பேசி மகிழ்ந்திருக்கிறோம். ஒரு அருமையான படைப்பாளிக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வரப்படாது. தங்களைப் போல செய்யுளோ, விருத்தமா, இல்லை புதுக் கவிதையோ எழுத தலை கீழாய் நின்றாலும் என்னால் முடியாது. கலைவேந்தன் சார் சொன்னது போல மிக அருமையான படைப்பாளி நீங்கள். உங்கள் தமிழுக்கு இங்கே பலர் அடிமை.
vasudevan31355
6th January 2015, 06:41 PM
கலைவேந்தன் சார்,
மிக்க நன்றிகளும், சந்தோஷமும்.
இன்று மதியம் ராஜ் தொலைக்காட்சியில் 'தேடி வந்த மாப்பிள்ளை' போட்டார்கள். சாப்பிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். நன் சாப்பிட அமர்ந்ததும் 'சொர்க்கத்தைத் தேடுவோம்' பாடல் ஆரம்பமானது. எனக்கு மிக மிக பிடித்த பாடலது. ஜாலியாகப் பார்த்தபடி சாப்பிட்டேன். அப்போது வினோத் சாரையும், தங்களையும் நினைத்துக் கொண்டே சாப்பிட்டேன். 'தபலா மாமா... டோலக்கு தாத்தா' செம ரகளை. ஆனால் நிறைய கட். மோசமான பிரிண்ட் போல. இந்தப் படமும் எனக்கு பிடித்த படம் கூட. எம்ஜிஆர் அவர்களின் பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு நகைச்சுவையுடன் நன்றாகப் பொழுது போகும். பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. அத்தனைப் பாடல்களும் சிறப்பாக அமைந்த ஒரு படம்.
முக்கியமாக ஜோதிலஷ்மி பிரமாதமாக நடித்த படம் இது. படுசுட்டித்தனமாக பாக்கெட் அடித்து (அதுவும் கொள்கையுடன் கூடிய நேர்மையான பிக் பாக்கெட்டி:))சுற்றிவரும் கேரக்டர். செம ஜாலியாகப் பண்ணியிருப்ப்பர். சாமுத்ரிகா லட்சணம் முழுதும் பொருந்திய நடிகையாம் இவர். 'இடமோ சுகமானது' பாடலில் எம்ஜிஆர் அவர்கள், ஜெயலலிதா, ஜோதிலஷ்மி மூவரும் பின்னுவார்கள். ஜோதிலஷ்மியின் கிண்டலான ஆட்டம் அமர்க்களம். இந்தப் பாடல் எனது மிக மிக விருப்பமான பாடலாகும்.
அது போல மதுர கானத்தில் பங்கு கொண்டு பதிவுகள் இடும் அன்பர்கள் எவரையும் விட்டுவிடாமல் தங்கள் பொன்னான நேரங்களுக்கிடையில் அவர்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் விடாமல் படித்து நீங்கள் அவரக்ளைப் பாராட்டி உற்சாகப்படுத்துவது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இதற்கு மிகப் பெரிய விசாலமான மனது வேண்டும். அது உங்களிடம் அதிகமாகவே இருக்கிறது. நன்றி கலை சார்.
Russellzlc
6th January 2015, 08:46 PM
நன்றி திரு.வாசு சார்.
தேடிவந்த மாப்பிள்ளை படம் பார்த்துக் கொண்டே சாப்பிட்டபோது என்னை நினைத்துக் கொண்டதாக நீங்கள் கூறியிருப்பதன் மூலம், சாமானியனான எனக்கு உங்கள் மனதில் இடம் கொடுத்திருப்பது .....நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் 125வது படத்தின் பெயர் உங்களுக்கு பொருந்தும்.
திரு.சின்னக்கண்ணன் சாரின் தமிழுக்கு இங்கே பலர் அடிமை என்று கூறியுள்ளீர்கள். அந்தப் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
vasudevan31355
6th January 2015, 09:33 PM
ராஜ்ராஜ் சார்
உங்கள் பந்தியில் இன்று நான் உட்கார்ந்து விட்டேன் உங்களைக் கேட்காமலேயே. :) Sorry.
இதோ 'Teesri Manzil' படத்தில் 'O haseena zulfon wali jaan e jahan' ஹெலனும், ஷம்மியும் பங்கு கொள்ளும் பாடல். வழக்கம் போல ஷம்மி சேட்டைகள், (நாங்கள் 'தலையாட்டி' என்று செல்லமாக ஷம்மியைக் கூப்பிடுவோம்) ஹெலன் ஆட்டம், அமர்க்களமான இசை, ரஃபி, ஆஷா குரல், கலர்ஃபுல் செட்ஸ் என்று தூள். ஆஷா பரேக்கை அம்போ என்று விட்டு விட்டார்கள். 'காரவன்' படத்திலிருந்து இந்த மாதிரிப் பாடல்கள் இல்லாமல் அப்போதைய இந்திப் படங்கள் இல்லை. ஆஷா கொடி கட்டிப் பறந்த நேரங்கள்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WmVDHKFis_k
அதே பாடல் 'காதலித்தால் போதுமா' படத்தில் வழக்கம் போல வேதாவால் காப்பி அடிக்கப்பட்டு ஜெயசங்கர், வாணிஸ்ரீ பங்கு கொள்ள, பாடகர் திலகமும், ஈஸ்வரியும் இங்கே அமர்க்களம் செய்ய, இந்தியைத் தழுவினாலும் பாடல் இனிமையாகவே இருந்தது. பாவம். ஜெயசங்கர் தான் அப்போது ஆட கொஞ்சம் திணறுவார். ஷம்மியைப் பார்த்துவிட்டு ஜெய்யிடம் அதை எதிர்பார்க்க முடியாதுதான்.
'காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மணம்' என்று செண்பகப் பாண்டியன் ரேஞ்சுக்கு பாடலாசிரியர் பாடல் வரிகளைப் புனைந்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BoJZVlfwW78
chinnakkannan
7th January 2015, 12:14 AM
நீங்கள், நான், கல்நாயக் மூவரும் சேர்ந்து கடலையை அவித்து மாங்காய்த் துண்டுகள், காய்ந்த மிளகாய், சீரகம், சிறிது மிளகுத் தூள், கொஞ்சம் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சுண்டலாக்கி ஒரு வெட்டு வெட்டி 'மங்கா'த்தா விளையாடலாம். // வாசு சார்..எனக்கு..:)
வாசு சார் கலை வேந்தன் சார்.மிக்க நன்றி… கொஞ்சம் பயம்மாக இருக்கிறது..இப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நண்பேன் டா ந்னு சொல்லுங்க.. இன்னும் நல்லா எழுதணும் .எழுத முயற்சி பண்ணுவேன்னு நினைக்கறச்சேயே டபக்குன்னு நினைவுக்கு வர்றது சூப்பர் சிங்கர் ஜூனியர் குயில் அல்கா அஜீத் தான்..
எந்தப் பாடலாய் இருந்தாலும் டெடிகேஷன் டெடிகேஷன் டெடிகேஷ்ன் ப்ளஸ் அடக்கம் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் பாடும் தேவதை..சூப்பர் சிங்கர் ஜுனியர் 2 வின் வெற்றியாளினி (தமிழ் கரெக்டா)
அவர் பாடிய சிங்கார வேலனே தேவா (ஃபைனலில்) எத்துணை முறை கேட்டிருப்பேன்..
அது இதோ
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UoF8bUxshaE
அதையே தூக்கிச் சாப்பிடும் வண்ணம் ஜூனியர் 4 இல் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடகர் திலகத்தையும் ஜானகியம்மாவையும் ஒருவராகவே பாடி அசத்தியது..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iEamOqsIK3E
சில பேர்லாம் சிலதுக்காகத் தான் பிறந்தவங்கன்னு சொல்வாங்க..இசை இசை இசைக்காகப் பிறந்தவர் தான் இந்த அல்கா..இன்று இந்தக் குயில் சற்றே இளைத்திருந்தாலும் குரல் இளைக்கவில்லை..என்னாளும் அவர் வாழ்வில்வசந்தம் வீசவேண்டும் என இறையை வேண்டுகிறேன்..
//காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மணம்' என்று செண்பகப் பாண்டியன் ரேஞ்சுக்கு பாடலாசிரியர் பாடல் வரிகளைப் புனைந்திருக்கிறார். // :) ஹி ஹி வாசு சார்.. ஆயிரம் சொல்லுங்கள் ஷம்மி ஷம்மி தான்..நைஸ் அண்ட் தாங்க்ஸ்ங்க்ணா ( மல்லாக் கொட்டை தருவீங்க தானே!)
rajraj
7th January 2015, 01:21 AM
vasu,kalnayak : I started school in South Arcot district (Senji/Gingee). I have fond memories of that town near hills and the fort. It was fun walking to the fort (Krishnagiri/Rajagiri) and climbing the hills! :) By the time I finished high school I had attended eight different schools in five different districts (old districts -12 I think) ! :) I picked up local colloquial Tamil and accent getting into trouble in Tanjore district. I still remember something scary in Gingee. One day a 'siruthai' wandered into the town from the hills/forests. They had announced by 'tandora' asking people to stay inside their homes and lock the doors. Next morning we saw the animal paraded in a cage ! That was the first time I saw a siruthai live ! :) ( My father was with the government.) Frequent moving was part of my life in India ! :lol: My mother used to complain that 'appaa' should have stuck with Pachchaiyappaa's (Madras) teaching Mathematics ! :lol: Government job that carried a lot of prestige came with a price! :lol:
rajraj
7th January 2015, 07:20 AM
From MaNaaLane Mangaiyin Baagyam
azhaikkaadha ninaikkaadhe......
http://www.youtube.com/watch?v=oP1Yw0qFo9U
From Suvarna Sundari (Hindi)(1957)
mujhe na bula......
http://www.youtube.com/watch?v=azPNDnPcmGI
From Suvarna Sundari (Telugu)
pilvakura alugakura......
http://www.youtube.com/watch?v=ahLd6iiYabE
If you like a classical rendition of Hindolam, here is Madurai MaNi Iyer
samaja vara gamana.....
http://www.youtube.com/watch?v=k--qeXJ-aE8
I like his rendition. I attended his concert for the first time ((and only time) in Mayavaram (Mayiladuthurai) in 1954 when I was in the final year of high school ! :) Memorable days! :)
RAGHAVENDRA
7th January 2015, 08:05 AM
http://www.pkp.in/images/b/Saroja%20Devi%20(1).jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இதோ அந்த கன்னடத்துப் பைங்கிளியின் புன்னகையைப் பாருங்கள். தலைவரோடு சேரும் போது அவருடைய நடிப்பில் தென்படும் தனித்திறமையே அலாதி.
https://www.youtube.com/watch?v=BK6zanXsUmQ
RAGHAVENDRA
7th January 2015, 08:14 AM
https://www.youtube.com/watch?v=CZQwiqKUhX4
ஒரு லட்சம் முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. என் கடமை படத்தில் எல்லாப் பாடல்களுமே அட்டகாசம் என்றாலும் இந்தப் பாடலே என் மனதில் முதலிடம் பிடிக்கிறது. மெலடி என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் தரும் பாடல்.
இரவினிலே என்ன நினைப்பு..
சரோஜாதேவியின் புன்னகையில் மயங்காதவர்களும் உண்டோ
RAGHAVENDRA
7th January 2015, 08:16 AM
https://www.youtube.com/watch?v=wIfV3DtahmE
சரோஜாதேவியின் பாடல்களில் எப்போதுமே நிரந்தரமாக நம்.1 ஸ்தானத்தில் இருக்கும் பாடல்.
தலைவரின் ஸ்டைல், மந்தகாசப் புன்னகை, அவர்களின் அழகான ஆடையலங்காரம், மெல்லிசை மன்னர்களின் இசை சாம்ராஜ்ஜியம், கவியரசரின் பொன்னான வரிகள், இசையரசியின் இனிமையான குரல்..
வேறென்ன வேண்டும்...
chinnakkannan
7th January 2015, 11:39 AM
ஹை..சர்ரூவோட பர்த்டே..:) ராகவேந்திரா சார்.நீங்கள் தந்த எல்லாப் பாடல்களுமே அழகு தான்..ஏனோ சர்ரூ என்ற வுடன் சர்வர் சுந்தரம் ரங்காராவ் நாகேஷ், மனோரமா - சினிமாப்படக்காட்சி நினைவுக்கு வருவதைத தவிர்க்க முடியவில்லை! போங்க சார் இப்படிப் பேசினால் தான் என் ரசிகர்களுக்குப் ப்பிடிக்க்கும் என மனோரமா சொல்லும் அழகே அழகு (சர்ரூவை இமிடேட்ட் செய்து)..
ஜிம்பக ஜிப்பா ஜில்பக ஜிப்பா ஜிப்பா ஹொ ஹோ ஹோய்.. சர்ருவோட க்ரூப் டான்ஸ் பாட்டு.. (ஆனந்த விகடன் நாடோடி மன்னன் விமர்சனத்தில் - சரோஜாதேவி என்றபெண்மணி அரை குறை ஆடையுடன் வந்து ஆடுகிறார் என ப் பொக்கிஷத்தில் படித்த நினைவு..(எங்கே ஆவணச் செம்மல் எஸ்வி சார்! ))
http://www.youtube.com/watch?v=ipl299IevjY
Richardsof
7th January 2015, 01:41 PM
Thanks chinna kannan sir
konjam busy. Full meals by vasu sir .[m.m]
vasudevan31355
8th January 2015, 10:09 AM
From MaNaaLane Mangaiyin Baagyam
azhaikkaadha ninaikkaadhe......
Thanks for Hindolam/Malkauns special songs.
vasudevan31355
8th January 2015, 06:37 PM
சண்டைப் பாடல்கள்.
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 11
எதிரிகளுக்கு 'டிஷ்யூம்... டிஷ்யூம்' கொடுத்துக் கொண்டே கதாநாயகர்கள் பாடவும் செய்தால் ரசிகர்களுக்கு, அது தரை டிக்கட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... ஏனைய ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான். அந்த மாதிரி டைப் பாடல்கள் இரண்டுதான் இன்றைய தொடரில் வலம் வரப் போகின்றன.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vb-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/vb-1.jpg.html)
'எங்க பாப்பா' படத்தில் அடியாட்களுக்கு 'கும் கும்' குத்துக்கள் கொடுத்துக் கொண்டே, அப்படியே தமிழின் வலிமையையும், பெருமையையும் பாடலின் வழியே உணர்த்தி, ரவிச்சந்திரன் எனர்ஜி கலந்து தரும் கார சூப் பாடல். தமிழின் பெருமையை சண்டைக் காட்சியின் வழியாகவும் பறை சாற்றலாம் என்பதை வில்லன்களை சாத்து சாத்து என்று சாத்துவதன் மூலம் பாடலாசிரியர் காட்டியிருப்பார். அருமையான வரவேற்கத் தகுந்த கற்பனையே. நடன அசைவுகளில் எதிரிகளுக்கு ரவி பஞ்ச் பண்ணும்போது தியேட்டர் உற்சாகமாகும். பாரதியின் 'கடுகடு'முகம், (அதைவிட அவர் அணிந்திருக்கும் அந்த குட்டை கவுன்):) ஓ.ஏ.கே தேவரின் கோணங்கித்தனம் எல்லாம் ரசிக்கக் கூடியதே.
'நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப் பாட்டால் அடிப்பேன் ஓடு'
சாட்டையால் அடிப்பது போல் தமிழ்ப் பாட்டாலே எதிரிகளை அடிப்பாராம் ரவி. ரவி அவர் ஸ்டைலில் வளைந்து நெளிந்து ஆடி அடிக்கும் 'டிஷ்யூம் 'அடிகள் இடி மாதிரி கேட்கும். 'மெல்லிசை மன்னர்' இடியிசை டிஷ்யூம் மன்னராகியிருப்பார்.
'வல்லினம் மெல்லினம் நல்ல இடையினம்
என்னும் கம்பை எடுத்து
வெண்பா விருத்தம் என்னும் விதவிதமாகிய
சாட்டை தொடுத்து'
ஆஹா! தமிழ் எதற்கெல்லாம் அழகாகப் பொருந்துகிறது! சொல்லால் விளாசவும் பயன்படுகிறது. கம்பால் விளாசவும் பயன்படுகிறது.
'பட்டணத்துத் தமிழில் நைனா என்றால்
அர்த்தமென்ன கூறட்டுமா?
பயில்வான் மொழியில் 'வஸ்தாத்' என்றால்
பலமென்ன காட்டட்டுமா?'
ரவியின் சுறுசுறுப்பு டாப். சும்மா கீழே விழுந்து உருண்டு, புரண்டு, டைவ் அடித்து கால்களால் கிடுக்கிப் பிடி போட்டு ரகளை ஆக்ஷன் செய்வார்.
பாடல் முடிந்த பிறகு கூட நம் காதுகளில் 'டிஷ்யூம்' சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற பிரமை இருக்கும். யாரையாவது வம்புக்கு இழுத்து நாலு சாத்து சாத்தலாம் போல கைகளும், மனதும் துருதுருவென்று இருக்கும்.:) எனர்ஜி டானிக் பாடல்.
12.17 to 15.30 வரை இந்தப் பாடலைக் கண்டு 'அடிக்கலாம்'.:)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GmMxsMBy-Nw
அதே மாதிரி இன்னொரு பாடல்.
'எங்கள் தங்கம்' படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஸ்டன்ட் செய்து கொண்டே வில்லன் குரூப் ஆட்களை புரட்டி எடுத்து, ஆடிப் பாடி, தன்னுடைய ஸ்டைலில் கொள்கைகளையும் பாடலுடன் சேர்த்து, அத்துடன் பகிரங்கமான அரசியலையும் கலந்து தந்து, அவரது ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க விட்ட பாடல். அப்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து எழுதப்பட்ட பாடல் பின்னால் படம் எடுத்தவருக்கே வினையானது.:) எல்லாம் 'மாறி'ப் போனது. என்னைப் பொருத்தவரை மிகத் துணிச்சலான ஒரு கொள்கை முழக்க பாடல் இது.
http://i.ytimg.com/vi/aM1adZVzcFQ/hqdefault.jpg
எம்.ஜி.ஆர் அவர்கள் 1967-ல் (January 12) எம்.ஆர்.ராதாவால் கழுத்தில் சுடப்பட்டு, குண்டடிப்பட்டு, மீண்டும் உயிர் பிழைத்து வந்ததை இப்பாடலில் அமர்க்களமாக காட்சிக்குத் தக்கபடி பயன்படுத்தி இருப்பார்கள். எம்.ஜி.ஆர் இறந்து விட்டாரென்று நினைத்து குண்டுமணி, என்.எஸ்.நடராஜன் குரூப் அவரை சவப் பெட்டியில் அடைத்து அடக்கம் பண்ண வர, அங்கு திடீரென எம்.ஜி.ஆர் உயிருடன் எழுந்து அடியாட்களை திக்குமுக்காடச் செய்து அவைகளை தர்ம சாத்து சாத்தி பாட ஆரம்பிப்பார்.
'நான் செத்துப் மொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா
வாழை போல வெட்ட வெட்ட முளைத்து
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா வந்தால் தெரியும் சேதியடா'
'சிலுவையில் ஏசு மறைஞ்சாரு'
http://lh3.ggpht.com/-k2WwyXGexEU/T_2dEnrP1KI/AAAAAAAADso/LcJbz2_QE1Y/s1600/mgr_2%25255B3%25255D.jpg
என்ற சரண வரிகளில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு மரத்தில் சாய்ந்தபடி கழுத்துக்குப் பின்னால் தோள்களில் ஒரு கம்பை இரு கைகளாலும் சுமந்தபடி நிற்கும் போஸ் அருமையாக இருக்கும். ஒளிப்பதிவாளர் இந்தக் காட்சியில் பின்னியிருப்பார். காமெரா சாய்ந்தபடி எம்ஜிஆரை குளோஸ்-அப் ஷாட்டிலிருந்து லேசாக லாங் ஷாட்டிற்கு காட்டியபடி நகரும். மாருதிராவும், அமிர்தமும் இணைந்து கலக்கியிருப்பார்கள். இந்த இடத்தில் நம்மையும் மீறி நம்முள் ஒரு பரிதாப உணர்வு பெருகுவதை இக்காட்சியில் நம்மால் உணரமுடியும்.
சவப்பெட்டி காட்சியாதலால் மிக புத்திசாலித்தனமாக அறிஞர் அண்ணாதுரை அவர்கள் இறந்ததும் அவரது உடலை சந்தனப் பெட்டியில் வைத்து மரியாதையுடன் அடக்கம் செய்ததை அழகாக இந்தக் காட்சியுடன் இணைத்து சம்பந்தப்படுத்தி காட்டி இருப்பார்கள். அண்ணாவை காட்டி அவரை நினைவுபடுத்தியது போலவும் ஆயிற்று... எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கை முழக்கத்தையும், அண்ணாவை அவர் மறவாமல் நினைவு கூர்வதையும் காட்டியது போலவும் ஆயிற்று. கட்சிப் பிரச்சாரப் பாடல் போலவும் ஆயிற்று... தனக்கு நேர்ந்த சோதனையான சொந்த அனுபவங்களை மக்களுக்கு ஞாபகப்படுத்தியது போலவும் ஆயிற்று. ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிப்பார் எம்.ஜி.ஆர்.
'சந்தனப் பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகுத் தமிழில் சொல்லி சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா'
பாடலில் வருவது போலவே எம்.ஜி.ஆர் அவர்கள் சாதித்துக் காட்டியதை சொல்லவும் வேண்டுமோ!
ஆனால் 'ஓடும் ரயிலை இடைமறித்து, அதன் பாதையில் தனது தலை வைத்த' தலைவருக்கே எம்.ஜி.ஆர் பின்னால் த(க)லைவலி ஆனது எதிர்பாராத அரசியல் நிகழ்வு.
'கொடுப்பதைக் கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா'
'எதிர்த்தால் வாலை நறுக்குமடா' என்று வாலி வாக்கின்படி சொன்னபடியே வாலை நறுக்கியும் காட்டிவிட்டார் எம்.ஜி.ஆர். இந்தப் பாடலில் அவர் துடிப்பும், ஆட்டமும் நன்றாக இருக்கும். பாடகர் திலகம் மிக அருமையாக கம்பீரம் மிளிர இப்பாடலைப் பாடி அசத்தியிருப்பார். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மெய்மறந்து போவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ! கொள்கைப் பாடல் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்திற்கு எடுத்துக் காட்டான துணிச்சல் மிகுந்த பாடல்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dFEom-DYsuU
Russellzlc
8th January 2015, 07:31 PM
திரு. வாசு சார்,
ரொம்ப நன்றி சார், பிரமாதம். அருமை சார். நன்றி. எங்கள் தங்கம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவும் இதையடுத்து, ‘ஒருநாள் கூத்துக்கு மீசைய வெச்சான்...’ பாடலும். வாலை நறுக்குமடா... வரிகளில் பின்னால் வாலை நறுக்குவது போல தலைவரின் ஆக்க்ஷன் சூப்பர்.
ஓடும் ரயிலை இடைமறித்து... வரிகளை திரு.கருணாநிதியை நினைவுபடுத்தும்படி எழுதச் சொன்னதே மக்கள் திலகம்தான். ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ பாடலுக்கு அடுத்த வரி வராமல் வாலி திணறிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திரு.கருணாநிதி ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்..’ என்று அந்த வரியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
பாட்டை பார்த்த மக்கள் திலகம் இந்த வரிக்காக வாலிக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். இதை சொல்லியது திரு. கருணாநிதி என்று வாலி பதில் சொன்னதும் மக்கள் திலகம் சிந்தனையில் ஆழ்ந்தாராம். பின்னர்தான், திரு.கருணாநிதியை நினைவுபடுத்தும் வகையில், கொள்கைப் பாடலில் வரிகளை சேர்க்கச் சொல்லியிருக்கிறார். அதன் விளைவே ‘ஓடும் ரயிலை இடைமறித்து...’
இதை வாலி பலமுறை கூறியிருந்தாலும் எழுத்துபூர்வமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் துக்ளக்கில் எனக்குள் எம்.ஜி.ஆர். என்ற தொடரில் தெரிவித்துள்ளார். அது பின்னர் குமரன் பதிப்பம் சார்பில் புத்தகமாகவும் வந்துள்ளது. (என்னிடம் இருக்கிறது) அதில் இந்த தகவல் உள்ளது.
நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். வேலை அதிகம். மக்கள் திலகம் திரியிலேயே கூட எல்லாருக்கும் சூப்பர், நன்றி என்று பதிவுகள் போட்டு ஓட்டுகிறேன். டீ குடிக்க கிளம்புவதற்கு முன் எதேச்சையாக நோட்டம் விட்டால்............... என்னை இழுத்து வந்து விட்டீர்கள். ரொம்ப நன்றி சார். கையை கொடுங்கள்............. ம்... ஓ.கே. ஒன்றுமில்லை, கண்களில் ஒற்றிக் கொண்டேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Richardsof
8th January 2015, 08:23 PM
VASU SIR
http://i58.tinypic.com/28a3ol.jpg
vasudevan31355
9th January 2015, 08:29 AM
என்ன ஆயிற்று? கிருஷ்ணா, சின்னக் கண்ணன், ராஜேஷ்ஜி, ரவி சார், கல்நாயக், மதுஅண்ணா யாரையும் காணோம்? நானே எழுதிக் கொண்டிருக்க எனக்கே ரொம்ப போராக இருக்கிறது. ராகவேந்திரன் சாரும் பங்கு கொள்ளவும். அனைவரும் கொஞ்சம் வந்து விட்டு சென்றால் தேவலை. என்னப்பா இந்த 'மதுர' த்துக்கு வந்த சோதனை...ம்?....
Richardsof
9th January 2015, 08:51 AM
VASU SIR ...
JUST FOR A CHANGE ... OLD PAPER CUTTINGS ...
http://i61.tinypic.com/2ahi52h.jpg
Richardsof
9th January 2015, 08:52 AM
http://i61.tinypic.com/2la4o45.jpg
Richardsof
9th January 2015, 08:53 AM
http://i61.tinypic.com/312u7oh.jpg
Richardsof
9th January 2015, 08:54 AM
http://i57.tinypic.com/33vommh.jpg
RAGHAVENDRA
9th January 2015, 08:54 AM
http://photos.filmibeat.com/ph-big/2011/09/1317285046662974.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களுக்கு நமது மதுர கானம் திரியின் சார்பில் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இறைவன் அருளால் அவர் எல்லா வளமும் நலனும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதோ தனிக்குடித்தனம் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பாடல்..
புஷ்பராகம் ... ஈஸ்வரி எஸ்.பி.பாலா வின் குரலில் துள்ளலாட்டம் போட வைக்கும் பாடல் ஒய்.ஜி.மஹேந்திராவுக்காக
https://www.youtube.com/watch?v=OMwdvIzMuT8
Richardsof
9th January 2015, 08:55 AM
http://i60.tinypic.com/35c3ij9.jpg
Richardsof
9th January 2015, 08:56 AM
http://i60.tinypic.com/2qs6ovn.jpg
Richardsof
9th January 2015, 08:57 AM
http://i59.tinypic.com/xqdr2a.jpg
Richardsof
9th January 2015, 08:58 AM
http://i60.tinypic.com/12219nc.jpg
Richardsof
9th January 2015, 08:59 AM
http://i60.tinypic.com/2ivns3s.jpg
Richardsof
9th January 2015, 09:06 AM
HAPPY BIRTHDAY TO THIRU MAHENDRAN SIR
http://i57.tinypic.com/2vb55l0.jpg
chinnakkannan
9th January 2015, 10:26 AM
ஸாரி வாசு சார்.. கொஞ்சம் நிறைய வேலை, உடல் முடியாமை, திருப்பாவை கமிட்மெண்ட் – முன்பு எழுதிய உரை சாஃப்ட் காப்பி இல்லை என்பதால் டைப்படித்து தினமும் இடுவதால் கொஞ்சம் நேரம் குறைவாகிவிட்டது..இன்னிக்கு வருவேன்..கொஞ்சம் நிறைய..
ஆரம்பத்துக்கு..
கவிதையும் பாட்டும்..4
நேற்று முக நூலில் எழுதியது இது..
பூத்தூவிப் போன வழி
..பொலபொலன்னு மணங்கூட்ட
நாத்துபோல நெஞ்சத்தில்
.. நல்லநல்ல நற்கவிதை
ஊத்தாகப் பெருக்கெடுத்து
..உணர்வெல்லாம் நெகிழவைக்க
பாத்துக்கோ கலைவாணி
..பதம்பணிவேன் உன்னிடமே..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uaZqO6KC8VA
chinnakkannan
9th January 2015, 10:40 AM
கவிதையும் பாட்டும்..3
மென்மைச் சிரிப்பழகாய் மேனியெங்கும் பூப்பூக்கும்
தன்மையுடன் காற்றும் தயங்காமல் தான்வருடத்
தூறெனத் தூற்றிடும் தூறலில் வரும்சுகமும்
வேறெங்கும் உண்டோ விளம்பு
வான் மேகம் பூப்பூவாய்த் தூறும்..இளம் ரேவதி டபக் டபக்கென துள்ளியாடும் பாடல். இது அந்தக் கால இளைஞர்களுக்கு..
http://www.youtube.com/watch?v=hS3gp13duUM&feature=player_detailpage
அதே சாரலில் துள்ளும் நயன்ஸ்.. இந்தக் கால இளைஞர்களுக்கு ஹி ஹி..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6C_1sBH75vI
chinnakkannan
9th January 2015, 10:48 AM
கவிதையும் பாட்டும்..5
காலங் கார்த்தாலே
…கவிச்சாரல் சிதறிவிழ
வாலக் குமரிதமிழ்
..வக்கணையாய்ப் பாட்டுயிட
சேல படபடத்தால்
…சின்னநெஞ்சு பொங்குதற்போல்
வாள மீன்போல
….வருகுதுவே கற்பனையே..
எத்தரமாய் பாட்டுவரும் ஏக்கமுடன் மேல்நோக்கி
…எட்டியெட்டிக் கற்பனைநூல் தக்கபடி வண்ணமிட்டு
பத்திரமாய் நெஞ்சுள்ளே பலவாறாய் ஆறவிட்டு
…பக்குவத்தைப் பார்த்துவிட்டு பாங்காகத் தறிபூட்டி
உத்தேசம் இதுவென்று உணர்வினிலே வரும்விருத்தம்
…ஓங்கித்தான் தாளினிலே அழகாகத் தானெழுதி
சித்தத்தில் உள்ளவற்றை இறக்கிவிட அஜந்தாவின்
…சித்திரமாய் நின்றிடுமே சிர்மல்கும் பாட்டதுவும்..!
(இன்று காலை முக நூலில் நண்பருக்குஎசப்பாட்டாய் எழுதிப் பார்த்தது!)
எப்படிச் சிந்திச்சாலும் பாட்டே வரமாட்டேங்குதுங்க்ணா..! :) என்ன செய்யலாம்.. எம்.ஜி.ஆரைக் கேட்போம்..!
http://www.youtube.com/watch?v=MgJPv59KO94&feature=player_detailpage
chinnakkannan
9th January 2015, 11:18 AM
கவிதையும் பாட்டும்..6
சோகமோ சந்தோஷமோ ராத்திரி நேரத்தில தனிமையில இருக்கறச்சே இந்த மூன் இருக்கே அதப் பாத்தோம்னாக்க நமக்குன்னு வந்த மாதிரி இருக்குமாக்கும்..
பாவை அழகினைத்தான் பக்குவமாய் வர்ணிக்க
தேவையுள வார்த்தைகள் தீர்ந்துவிட அங்கே
கதியேது மில்லாமல் கற்றவர்கள் சொல்வர்
மதியை மயக்கும் மதி
“வானில் நடமிட்டு வட்டமுகம் கோணாமல்
நாணி நகைபுரியும் நங்கையினைப் போலே
வரையற்ற வண்ணவொளி வையத்தில் நன்றாய்
நிறைத்தே அருளும் நிலவு
*
ஏக்கம் மிகக்கொண்டு ஏங்கிவரும் காதலரை
தேக்கி நிறுத்தாமல் தென்றலுடன் கூடக்
குளிர்வித்துக் காட்டின் மரநிழலில் அழகாய்
ஒளியும் நிலவின் ஒளி
*
மன்னனா மற்றோரா மாயங்கள் செய்கின்ற
கண்ணனா கள்வனா என்றெல்லாம் வெண்மதியும்
எண்ணாமல் ஈவாள் ஒளியை அதுவுமவள்
கொண்டிருக்கப் பெற்ற குணம்
இங்க பாருங்க மூணு பேர் மூணுமூட் ஒண்ணு அடக்கமான காதல் ரெண்டு துள்ளல் காதல் பின் சோகம…இந்த நிலவை நான் பார்த்தால்…..
ம்ம் வீட்டில பாட் போட்டுக்கிட்டுக் கேட்டா வந்த கமெண்ட்.. ஏங்க..வெள்ளிக்கிழமையும் அதுவுமா விஜயகுமாரி பாட்டா கேக்கணும்!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S1UyEzxDNPY
vasudevan31355
9th January 2015, 11:31 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 22)
http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg
http://thiruttudvd.net/wp-content/uploads/2014/02/SattamEnKaiyil000001.jpg
இளையராஜா தொடரில் அடுத்து 'சட்டம் என் கையில்' படத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாம். ஒரு ரஜினி படம் முடித்து விட்டாயிற்று. ஒரு கமல் படம் எடுப்போம். ஆனால் விஸ்தாரமாக இல்லை. பாடல்கள் மட்டுமே ஆய்வு.
நிழல் நிஜமாகிறது, மதனோல்சவம், மரோசரித்ரா, இளமை ஊஞ்சலாடுகிறது என்று 1978 களில் கமல் தென்னகத் திரையுலகில் ஆழமாகக் கால் பதித்து வெற்றி பவனி வந்து கொண்டிருந்த நேரம். அப்போது அவரை இன்னும் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்திய படம் என்று இதைச் சொல்லலாம். ஆக்ஷனோடு கலந்த காமெடி படங்களை கமல் செய்வதற்கு ஸ்ட்ராங்காக அடித்தளமிட்ட படம். வசூலிலும் 'வார்ரே வா' தான்.
இப்படம் பிரமாத வெற்றியடைய பல காரணங்கள் உண்டு. கமலின் இருவேட உழைப்பு, இயல்பான நகைச்சுவைக் காட்சிகள், நட்சத்திரப் பெரும் பட்டாளம், இளையராஜாவின் இசைப் பிரம்மாண்டம், நல்ல தெளிவான குழந்தைக்கும் புரியும்படியான திரைக்கதை மற்றும் இயக்கம், அருமையான வண்ணம், சூப்பர் நடனக் காட்சிகள், ஸ்ரீபிரியாவின் இளமை, சுருளியின் கலாட்டா, அசோகன், தேங்காயின் அமர்க்களம்.
பாலு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேற்குறிப்பிட்ட நடிகர்களுடன் ஸ்ரீகாந்த், வி.கோபாலகிருஷ்ணன், புஷ்பலதா, காந்திமதி, அபர்ணா என்று ஏகத்துக்கும் நட்சத்திரங்கள். பாடல்களை கண்ணதாசனும், கவிஞர் திருப்பத்தூரானும் எழுத, ஒளிப்பதிவு செய்தவர் என்.கே விஸ்வநாதன். படத்தைத் தயாரித்து கதை, வசனம் எழுதி இயக்கித் தரமாகத் தந்தவர் நம் 'அஞ்சல் பெட்டி 520' இயக்குனர் டி.என்.பாலு அவர்கள்.
சும்மா கலகலவென்று காட்சிகள் நகரும். இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவிற்கு கலகலப்பான ஒரு படம். இன்றும் கூட ரசித்து அனுபவித்துப் பார்க்கலாம். காமெடியில் கமல் கலக்குவார். அதுவும் இரட்டை வேடங்கள். ஒன்று நவநாகரீக இளைஞன். ஒருவன் மெட்ராஸ் பாஷை பேசிக் கலக்கும் லோகல் திருடன். இரு ரோல்களுமே டக்கர்.
http://shakthi.fm/album-covers/ta/9dc6cb91/cover_m.jpg
படத்தின் மாபெரும் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் இரு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று கமல். இரண்டாவது இசை. ராஜாவின் உழைப்பை இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.
இப்படத்தின் பாடல்களைப் பற்றி தொடரில் எழுத இப்படத்தை மீண்டும் பெரிய இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். டைட்டில் இசை கேட்டதும் கடலூர் நியூசினிமாவில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் இப்படத்தை ரசித்துப் பார்த்தது அப்படியே நினைவுக்கு வந்துவிட்டது.
மிக மிக அருமையான டைட்டில் இசை. இன்றும் அன்று ரசித்தது போலவே ஏன் இன்னும் ஒரு மடங்கு அதிகமாகவே ரசித்து பிரம்மித்தேன். பிய்த்து உதறி விடுவார் ராஜா. டைட்டிலில் இசை இளையராஜா என்று போடும் போது முதல் நிலை நட்சத்திரங்களின் பெயர்கள் போடும் போது கிடைக்கும் கைத்தட்டல்கள் விழும். இந்த சாதனையை நிகழ்த்திய பெருமை ராஜாவையே சாரும். டிரம்பெட், ஷெனாய் இவைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருப்பார் ராஜா. எத்தனை முறை கேட்டாலும் டைட்டில் இசை திகட்டவே திகட்டாது.
இப்போது படத்தின் முதல் பாடலைப் பார்க்கலாம். .
எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தழைக்கட்டும் அள்ளியே கொடு
http://i.ytimg.com/vi/pg8jseUuv2Y/0.jpg
மெட்ராஸ் கமல் தன் குப்பத்து ஜனங்களுடன் தன் பிறந்த நாளில் ஆடிப்பாடும் சூப்பர் பாடல். லோ கிளாஸ் பாடல் போல இருக்கும். ஆனால் இசைப் பின்னல் பிரமாதம். கமல் வேட்டி சட்டையில் ஆடுவார். மிக எடுப்பான மலேஷியா வாசுதேவனின் கணீர்க் குரல். சீர்காழிக்குப் பிறகு சரியான கணீர்க் குரல் கொண்டவர் இவர். ஆண்மைத்தனம் அப்பட்டமாக குரலில் எதிரொலிக்கும். வார்த்தைகள் தெள்ளத் தெளிவாக காதில் விழும். பாடலில் பல நல்ல கருத்துக்கள் எளிமையாக எதிரொலிக்கும். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் பாணிப் பாடல்.
ஆடிக்குப் பின்னால்தானே ஆவணி சிட்டு
இந்தா தாவணி கட்டு
யாருக்கும் சொந்தம் தானே ஆண்டவன் சொத்து
பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு
இது புத்திக்கு வித்து
நீ பாரதம் காக்க வேணும் பட்டத்தைப் பெத்து
மிக எளிமையான வரிகளில் ஆழமான கருத்துக்கள். படிப்பின் அருமை பெருமையை ஜோராக உணர்த்தும் வரிகள்.
பஞ்சமென்று வந்தவர்க்கு சோறு போடு
பாரில் உள்ள செல்வங்களை கூறு போடு
நெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு
நல்ல நல்ல தலைவர்கள் நாட்டில் பிறந்தார்
ஏழை வீட்டில் பிறந்தார்
நாட்டினைக் காக்க சிறைக் கூட்டிலிருந்தார்
கல்லுக்குள் நாருரிக்கும் ஆளுமிருந்தார்
அவர் வாழ்வும் அடைந்தார்
காலத்தின் வெள்ளத்திலே ஓடி மறைந்தார்
ஒத்துமைக்கு என்றும் உண்டு வரலாறு
அது ஊர் கெடுக்கும் பேர்வழிக்குக் கிடைக்காது
தத்துவத்தில் என்றும் இல்லை தகராறு
கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் எவ்வளவு அற்புதமான கருத்துக்கள் அதுவும் ஜனரஞ்சகமாக!
பெரும் கூட்டத்துக்கிடையே எடுக்கப்பட்ட பாடல் காட்சி. பாடலின் இறுதியில் அவ்ளோவ் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு அசோகன் கமலை கழுத்தில் அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும் ஆச்சரியம். கமல் ரொம்ப ஈஸியாக ஆடி விடுவார்.
மெட்ராஸ் கமல் குப்பத்தில் ஆடத் துவங்கும் போது ராஜாவின் குப்பத்துகேற்ற குதூகல இசை. அதே சமயம் லண்டன் கமல் பிறந்த நாள் கொண்டாடும் போது மேற்கத்திய இசை அற்புதமாக துள்ளல் போடும். (உத்தமபுத்திரன் படத்தில் வருவது போல)
ரசகுல்லா பாடல்தான்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1VkyP9xQKWA
chinnakkannan
9th January 2015, 12:34 PM
கவிதையும் பாட்டும்..7
உலகம் சுற்ற ஒருபிள்ளை
..ஊர்மேல் போகா ஒருபிள்ளை
கலகம் நடக்கக் கனலுடனே
..ககன வெளியில் பறந்தேதான்
பழனி மலையில் நின்றந்தப்
..பாலன் கோபம் கொண்டதனால்
இளமை என்றும் அடைந்தததுவே
..எல்லாக் குன்றும் அவன் இடமாய்..
முருகனை நினைத்தால் கொஞ்சம்மனம் உருகத் தான் செய்கிறது.. ஆனால் இந்த ஆண்ட்டி எவ்வளவு உற்சாகமாகப் பாடுகிறார்..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ihnxliKdHYc
வாசு சாரின் வழிப்பிள்ளையார் க்குப் பின்னால் இந்தப் பாட்டு ஒரு எதேச்சையாய் அமைந்த நிகழ்வு..ம்ம் அண்ணனுக்குப் பின்னாலே தானே தம்பி…:) (இது எனக்கும் பொருந்திடுச்சே.. வா பி நான்..)
vasudevan31355
9th January 2015, 12:59 PM
கலைவாணி பதம் பணிந்து, ஜேகேபி பாடல் தந்து, தூரலில் வரும் சுகம் வேறெங்கும் இல்லை நடிகர் திலகத்தைத் தவிர என்று பதிலுரைத்து, 'தேகம் என்னவாகும்?' என்ற ரேவதியை கண்டு களித்து, இந்தக் கால இளைஞனாய் அதற்கு நன்றியும் சொல்லி, சித்தத்தில் உள்ளதை சத்தமில்லாமல் இறக்கி இங்கு வைத்து, 'பாட்டுவரும் சின்னக் கண்ணன் கவிதைகளைப் படித்தால்' என்று பரிபூர்ணமாக உணர்ந்து, ஏக்கம் மிகக் கொண்ட காதலர்கள் கண்ட 'இந்த நிலவை நான் பார்த்தால்' அது எனக்கென பிறந்தது போல் அல்லவா இருக்கும்?
'கவிதையும் கானமும்' என்ற தலைப்பு இன்னும் நன்றாக இருக்குமே சி.க. எனிவே தங்களால் மட்டுமே முடிந்த ஒன்று. மெச்சினேன். பாராட்டினேன். நன்றி கொண்டேன். அதை உரைக்கவும் செய்கிறேன். தமிழ்ப் புலவரே! நீர் வாழி!
vasudevan31355
9th January 2015, 01:03 PM
வினோத் சார்,
நன்றி! அரிய பேப்பர் கட்டிங்குகள் தந்து ஆச்சர்யப்பட வைத்ததற்கு. ஆசை மனைவியை அறிந்தவர் இல்லை. நானொரு கை பார்க்கிறேன் என்று களத்தில் குதித்து விட்டீர்களே எஸ்வி சார். புன்னகையின் புயல் படத்தின் பெயரா அல்லது கட்டுரைத் தலைப்பா?
vasudevan31355
9th January 2015, 01:07 PM
கலை சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! அப்பா! என்ன ஒரு பக்தி எம்.ஜி.ஆர் அவர்கள் மேல்! இந்த விஷயத்தில் நடிகர் திலகம், மக்கள் திலகம் இருவருமே கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் இருவருக்கும் இருந்த, இருக்கின்ற ஆத்மார்த்தமான ரசிகர்கள் போல வேறு எவருக்குமே இல்லை....இருக்கப் போவதுமில்லை என்பதே நிஜம்.
vasudevan31355
9th January 2015, 01:07 PM
சி.க
இன்று மதிய ஷிப்ட். நாளை சந்திப்போம்.
chinnakkannan
9th January 2015, 01:17 PM
ஹையாங்க்.. இன்னிக்கு முழுக்க விளையாடலாம்னு நினைச்சேன் இப்படியாங்க்ணா ஆஃபீஸ் போறது வாசுசார்.. தாங்க்ஸ்.. பட் ட்யூரிங்க் த கோர்ஸ் ஆஃப் த டெ இன்னும் எழுதுவேன்னு நினைக்கிறேன்.. நன்றி அகெய்ன்..
chinnakkannan
9th January 2015, 06:52 PM
கவிதையும் கானமும்..8
உலகம் அறியாப் பெண்ணாய் இருந்தேன்
..உணர்வில் மாற்றம் பருவம் தரவும்
பழகும் பழக்கம் பலவாய் மாற
..பார்வை பேச்சில் பண்பைக் கற்றேன்
அழகாய் நடிப்பு ஆடல் பாடல்
..எல்லாம் வரவும் சினிமா ஆர்வம்
வழக்கம் போல நெஞ்சுள் வரவும்
..வாகாய்ப் படத்தில் நடித்தேன் வென்றேன்..
புதிய நடிகை சிரித்தே சொல்ல
..புருவம் நெறித்தே கெள்வி ஒன்று
பதில்தான் முடிந்தால் சொலவும் ஆனால்..
..பாவை உமக்குப் படிப்பும் பாட்டும்
புதிது என்றே இயக்கம் சொன்னார்..
..பூவை சிலிர்த்தே எழுந்தாள் சொன்னாள்
விதிதான் இதுதான் போதும் பேட்டி..
..வணக்கம் சொல்லிச் சென்றாள் வெளியே.
ம்ம் புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்கவந்தாள்..புதுமுக மாது அனுபவம் ஏது வயதோ பதினெட்டு. ந.தி துள்ளல்+ கிண்டல் ப்ளஸ் டான் ஸ்..அண்ட் கே ஆர்வி... (கேஆர்வி ப்ரெக்னெண்ட்டாமே இந்தப் படத்தின் போது?)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9onlEEX8Qyg
RAGHAVENDRA
10th January 2015, 05:11 PM
மிட்டாய் மம்மி @ தெய்வம் தந்த வீடு
https://www.youtube.com/watch?v=fBfCNpRS4Ho
RAGHAVENDRA
10th January 2015, 05:12 PM
புதிய வாழ்க்கை
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
https://www.youtube.com/watch?v=acr2WJ03_5Y
Russellzlc
10th January 2015, 09:41 PM
கறுப்பு பணம்
திரு. வாசு சார், நீங்களே எழுதுவதால் உங்களுக்கு போரடிப்பதாக கூறியுள்ளீர்கள். உங்களுக்கு போரடிக்கக் கூடாது சார். அப்புறம் எங்களுக்கு போரடிக்கும்.
திரு.சின்னக் கண்ணன் சார், கவிதையும் கானமும் பாடல்கள் சூப்பர். உங்கள் தமிழுக்கு மட்டுமல்ல, எவ்வளவுதான் தமிழ் கற்றிருந்தாலும் வாசு சார் கூறிய ஆலோசனையை கேட்டு, ஈகோ இல்லாமல் ‘கவிதையும் பாட்டும்’ என்று இருந்ததை ‘கவிதையும் கானமும்’ என்று மாற்றிக் கொண்ட உங்கள் பண்புக்கும் நான் அடிமை.
திரு.ராகவேந்திரா சார். ‘என் கடமை’யில் இரவினிலே என்ன நினைப்பு எனக்கும் மிகவும் பிடித்த மெலடி. அதைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். பாடலையே போட்டு விட்டீர்கள். நன்றி.
-----------------
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் 2 லட்சம் கோடி பதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்போம் என்று மார் தட்டியவர்களுக்கும் பெப்பே காட்டி கறுப்பு பணம் என்ற மாயமானின் மர்ம ஓட்டம் தொடரத்தான் செய்கிறது. கறுப்புப் பணம் வைத்திருப்போர் பற்றிய விவரங்களை பெறுவதற்காக சுவிட்சர்லாந்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் அறிவித்தார். இங்கிருந்து ஒரு குழுவும் சுவிட்சர்லாந்து சென்று வந்தது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் கறுப்பு பண மீட்பு தொடர்பாக விசாரணையை கண்காணிக்க நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு முஸ்தீபு காட்டினாலும் கறுப்புபணத்தை மீட்க முடியாது என்று தெரிந்து விட்டது. ‘ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள். சும்மா விவரம் கேட்டால் தர முடியாது. மீன்பிடிப்பது போல இந்திய அதிகாரிகள் வந்துபோவதில் அர்த்தமில்லை’ என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டார் மும்பையில் பேட்டியளித்த இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் லினஸ் காஸ்டல்மல். அப்படியானால், அந்நாட்டுடன் எப்படி ஒப்பந்தம் ஏற்பட்டதாக நிதியமைச்சர் அறிவித்தார்? அந்த ஒப்பந்தம் செல்லாதா? இதுவும் கறுப்புப் பணம் போலவே மர்மம்தான். இந்தியாவிலேயே நிறைய கறுப்புப் பணம் உள்ளதாக காஸ்டல்மல் கூறியிருப்பது ஹைலைட்.
50 ஆண்டுகளுக்கு முன் கவியரசர் கண்ணதாசன் கறுப்புப் பணம் என்ற படத்தை எடுத்தார். அதில் பெரிய மனிதர் தணிகாசலம் என்ற பாத்திரத்தில், அந்த பாத்திரத்துக்கேற்ற கண்ணியம் + மிடுக்குடன் நடித்திருந்தார். பெரிய மனிதராக வெளியுலகுக்கு காட்சியளித்தாலும் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவராக இருப்பார். கிளைமாக்சில் கோர்ட்டில், ‘வறுமையின் கொடுமையால் இந்த நிலைக்கு வந்ததாகவும், நான் கொள்ளையடித்தது இரண்டரை கோடி. ஆனால், இந்த நாட்டிலே உள்ள கறுப்புப் பணம் இரண்டாயிரம் கோடி’ என்று கவியரசர் கூறுவார். 50 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி என்றால் இப்போது எவ்வளவு கோடி கறுப்பு பணம் நாட்டில் இருக்கும்? தலையை சுற்றுகிறது.
திமுகவில் இருந்து விலகி ஈ.வி.கே.சம்பத்துடன் சேர்ந்து தமிழ் தேசிய கட்சியை தொடங்கிய கவிஞர், படத்திலும் சம்பத் கெட்அப்பிலேயே நடித்திருப்பார். அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், நடிகர் திலகம், மக்கள் திலகம், திரு.கருணாநிதி என்று எல்லாரோடும் கவியரசர் முரண்பட்டார். ஆனாலும், அவர் கவியரசர் என்பதில் யார்தான் முரண்பட்டார்? அதனால்தான், தன்னை கடுமையாக தாக்கியவர் என்றபோதும், புரட்சித் தலைவர் முதல்வரானபின் அவரை அரசவைக் கவிஞராக்கி அழகுபார்த்தார்.
கறுப்புப் பணம் படத்தில் அப்போதைய அரசியல் சூழலுக்கேற்ப கவியரசர் வடித்த பாடல் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் இப்போதும் அரசியல், சமூக சூழலுக்கேற்ப என்னமாய் பொருந்துகிறது? கதைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடும் இந்தப் பாடலுக்கும் பொருந்தாமல் இருக்குமே என்பதற்காக, ஷுட்டிங்கில் ஒரு நடிகை பாடி, நடிப்பதாக புத்திசாலித்தனமான காட்சி. அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் வரிகளுக்கு ஈஸ்வரியின் எகத்தாளக் குரல் மேலும் மெருகு. பாடலுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய தேவையே இல்லை. கவியரசரே தெளிவாக பிட்டு பிட்டு வைத்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த அந்தப் பாடல்:
கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி
கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி
பொய்யிலே நீந்தி வந்தால் புளுகனெல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி (கையிலே பணமிருந்தால்)
போராடச் செல்பவனே வீராதி வீரனடி
போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி
மார் தட்டிப் பேசி விட்டால் மன்னாதி மன்னனடி
மன்னிப்புக் கேட்டு வந்தால் மக்களுக்கே தொண்டனடி (கையிலே பணமிருந்தால்)
அடைந்தால் பதவிகளை அடைபவனே தியாகியடி
அல்லாமல் கொள்கைகளை சொல்பவனே துரோகியடி
முடிந்ததை சுருட்டுவதே முக்காலி கூட்டமடி
முட்டாள்கள் பிடித்த முயல் மூன்று கால் பறவையடி
கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி
கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி
பொய்யிலே நீந்தி வந்தால் புளுகனெல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
vasudevan31355
10th January 2015, 09:59 PM
கர்ப்பிணி மனைவியரிடம் கணவர்கள் பாடும் பாடல்.
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 12
தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலை முழுகாமல் இருக்கின்றாள்
கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை கண்டு கணவன் சந்தோஷப்படுவதைக் கவனியுங்கள்.
காலம் வரும்வரை தாயின் வயிற்றிலே
கால்கள் உரைத்திடும் நாதம்
ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்
உதைக்கும் என்பதே வேதம்
ஆண்பிள்ளை இடது புறமும் பெண் பிள்ளை வலது புறமும் உதிக்கும் என்பது ஆன்றோர் மொழி.
பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது
சிறிய பங்குதான் கண்ணே
பத்தியத்திலும், சத்தியத்திலும்
தாய்மை காப்பவள் பெண்ணே
மிக அருமையான ஜேசுதாசின் குரலில் பெண்களைக் கவர்ந்த பாடல். ரொம்ப நாள் எதிர்பார்த்து 'யூ டியூபி'ல் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது. அப்லோட் செய்தவருக்கு மிக்க நன்றி. முத்துராமன் சுஜாதா இணைவில்
மிக அரிதான அருமையான ஒரு பாடல். 'பேரும் புகழும்' படத்தில்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9aj3rOAUbwo
இதோ இந்தக் கணவனும் மனைவியும் தங்களுக்கு நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து இப்போது அந்தப் பாக்கியத்தைப் பெறப் போகிறார்கள். இந்தக் கணவனுக்கும் மனம் முழுக்க சந்தோஷம்.
அந்தப் பாடலில் அந்த நாயகன் பாடியது போலவே இந்தப் பாடலில் இந்த நாயகனும்
வலது புறம் தாய் படுத்தால்
ஆம்பிளப் பிள்ளை
மாங்காய் தின்னா சாம்பல் தின்னா
பொம்பளைப் பிள்ளை
இதில் சந்தேகம் இல்லை
என்று பாடுகிறார்.
'தொட்டில் கட்டும் யோகம்
ஒன்றை தெய்வம் தந்தாச்சு
இந்த யோகம் நல்ல யோகம்'
'தியாகி' படத்தில் நடிகர் திலகம் சுஜாதாவிடம் பாடும் பாடல். இதிலும் நாயகி சுஜாதாவே.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Jl4O6bpklj0
vasudevan31355
10th January 2015, 10:12 PM
கலை சார்,
நீங்கள் பதிவு செய்து ஆய்வு செய்திருந்த 'கறுப்புப் பண'ப் படப் பாடல் அபூர்வமான ஒரு பாடலே. இப்போது பாடலைப் பதிவிடுகிறேன். நாளை தங்களுக்கு பதில் எழுதுகிறேன். முதலில் அற்புதமான அதுவும் என் பிரிய ராட்சஸி பாடிய அதிகம் எவரும் கேட்டிராத பாடலைப் பற்றி ஞாபகப்படுத்தி பெருமைப் படுத்தியதற்கு மிக்க நன்றி! தங்கள் ரசனைக்கும் என்னுடைய செல்ல ஷொட்டு. திரியின் மேல் தாங்கள் கொண்டிருக்கும் அதீத அக்கறைக்கும் என் தலைவணங்கிய நன்றிகள்.
http://www.dailymotion.com/video/x15ibzh_kalyile-panamirunthaal-karuppu-panam-1964_shortfilms
Russellbpw
10th January 2015, 10:33 PM
VASUDEVAN SIR !
PLEASE WRITE THE SONGS OF CHINNATHAMBI ! WOULD LOVE TO READ YOUR VIEWS...!
CHINNATHAMBI IS RE-RELEASING SOON !!
REGARDS
RKS
COMING SOON...........
TRICHY RAMAKRISHNA......
TIRUNELVELI CENTRAL......
MADURAI CENTRAL.......... ALL DAILY 4 SHOWS !
COIMBATORE ROYAL........
CHENNAI ANNA...............
ILAYA THILAGAM PRABHU's BLOCKBUSTER
" CHINNA THAMBI "
DESIGN COURTESY & CONTRIBUTION - OUR HUBBER & THALAIVARIN PILLAI SUNDERRAJAN !
Any Photos of this film / Release Advertisements of this films / Any Flashback of this Film release may please be shared here..! Thanks !
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps6bc32a2b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps6bc32a2b.jpg.html)
vasudevan31355
11th January 2015, 04:32 PM
கலை சார்!
நன்றி!
நேற்று அவசரமாக 'கறுப்புப் பணம்' பாடல் மட்டும் பதிவிட்டு சென்று விட்டேன். மன்னிக்கவும்.
மிக அருமையானதொரு பாடலை எடுத்து அலசியுள்ளீர்கள். சுவிஸ் வங்கி இந்தியர்கள் கறுப்புப் பணம் பற்றி தாங்கள் அளித்திருந்த பதிவு திகிலூட்டுகிறது. நீங்கள் கூறியுள்ளபடி எந்த அரசாங்கமாய் இருந்தால்தான் என்ன?... கறுப்புப் பண அரக்கனுக்கு முடிவே கிடையாதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
//அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், நடிகர் திலகம், மக்கள் திலகம், திரு.கருணாநிதி என்று எல்லாரோடும் கவியரசர் முரண்பட்டார். ஆனாலும், அவர் கவியரசர் என்பதில் யார்தான் முரண்பட்டார்?//
சத்தியமான வார்த்தை. மிக மிக அழகாக சொல்லி விட்டீர்கள். அவர் கவியரசர் என்பதில் முரணுக்கே இடமில்லை.
நீங்கள் சொல்லியது போல மிக சாமர்த்தியமான காட்சி செருகல்.
அருமையான பதிவிற்கு நன்றிகள் பல கலை சார்.
ஈ.வி.கே.சம்பத்தும், அதே கெட் -அப்பில் 'கறுப்புப் பணம்' படத்தில் கவிஞர் கண்ணதாசனும்
http://dbsjeyaraj.com/filmalaya/EVKS0910.jpghttp://vt.showyou.com/y:VMmNLG7IvEE.480x360.jpg
Russellzlc
11th January 2015, 05:11 PM
‘கையிலே பணமிருந்தால்...’பாடலை தரவேற்றியதற்கு நன்றி திரு.வாசு சார்.
மதுர கானம் திரி மீது எனக்கு அக்கறை உண்டு என்றாலும் சுயநலமும் உண்டு. மக்கள் திலகம் திரியில் அவர் சம்பந்தப்பட்ட படங்கள், பாடல்கள், செய்திகள் போட்டால்தான் பொருத்தமாக இருக்கும். மற்ற பாடல்களை அங்கு போடுவதோ, அதைப் பற்றி எழுதுவதோ பொருத்தமாக இருக்காது. எல்லா நடிகர்களின் திரிகளுக்கும் இது பொருந்தும்.
எல்லாருக்குமே, அவரவர் அபிமான நடிகர் நடித்த படங்களின் பாடல்கள் இல்லாத (அதையும் எழுதவும் இங்கே இடம் உண்டு)மற்ற பாடல்களையும் ரசித்து எழுத உதவும் இந்த திரி சிறப்பாக இயங்க வேண்டும். அப்போதுதான் நானும் மற்ற பாடல்களை பற்றியும் எழுத முடியும் என்ற சுயநலமும் என் அக்கறைக்கு காரணம். அதற்கு வாய்ப்பு உருவாக்கி கொடுத்து, இசை என்ற மையப் புள்ளியில் எல்லாரையும் இணைத்த உங்களுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.
தங்களின் பாராட்டுக்கும் எனக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர்களில் ஒருவரான சொல்லின் செல்வர் திரு.சம்பத் மற்றும் அவரைப் போன்ற கெட் அப்பில் கறுப்புப் பணம் படத்தில் தோற்றமளிக்கும் கவியரசரின் படங்களை பதிவிட்ட உங்களுக்கு சிறப்பு நன்றி வாசு சார்.
திரு.ஆர்.கே.எஸ்., எங்கே உங்களை அடிக்கடி பார்க்க முடியவில்லை? நீங்கள் இல்லாமல் விறுவிறுப்பாக இல்லை. எப்போது முழு வீச்சில் திரும்புவீர்கள்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
13th January 2015, 11:26 AM
ஏன் 'பக்'குன்னு நிறுத்திட்டேள்? அம்புட்டு பேரும் எங்கே போனாங்க? யாரும் பதியலைன்னா நான் பதிஞ்சிடுவேன். அதுக்குப் பின்னாடி என் மேல கோபப்படக்கூடாது. ஆமாம் முன்னாடியே சொல்லிட்டேன்.
chinnakkannan
13th January 2015, 11:47 AM
கல் நாயக் சார் :) பண்ணுங்கோ.. கொஞ்சம் வொர்க் ப்ரஷ்ஷர் அண்ட் ஹெல்த் காம்ப்ளிகேஷன்ஸ்.. டு நைட் ஐ வில் ட்ரை டு கம்ங்க்னா..மீட் யூ டு நைட் இன் தி மூன்லைட்.:)
http://www.youtube.com/watch?v=HgDThNeN5Ak
vasudevan31355
13th January 2015, 01:03 PM
கொஞ்சம் வேலை கல்நாயக் சார். நாளை வந்து விடுவேன். நீங்கள் தாராளாமாகப் பதியுங்கள். உங்கள் பதிவுகளுக்கு முதல் ரசிகன் இந்த கடலூர்க்காரன். சிலர் கொஞ்ச நாட்களாக வரவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. புத்தாண்டு, பொங்கல் வேலை நிமித்தமாக இருக்கலாம். பொங்கல் கழித்து நிலைமை சீராகும் என்று நம்புவோம். அதுவரை இப்பாடலைக் கண்டு களித்திருங்கள்.
'தெய்வீக ராகங்கள்' படத்தில் ஜெயச்சந்திரனும், வாணியும் படிய 'பாவை நீ மல்லிகை' என்ற அருமையான பாடல். ஸ்ரீகாந்த் நாயகன். நாயகி பிரியவதனா. மனதை மயக்கும் பாடல்தான்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Of3tnxtXmEs
kalnayak
13th January 2015, 03:43 PM
நானும் ராஜண்ணாவும் பாண்டியனில் விரைந்து கொணடிருந்தோம்.
ஆமாம். ராஜண்ணாவுடன் ரயில் வண்டி அனுபவங்கள்தான். போடுவோமா முதலில் ஒரு பாட்டு.
https://www.youtube.com/watch?v=rIwuDzToLcg
கிளம்பிய சற்று நேரம் கழித்து அண்ணன் சற்றே காலார நடந்து வரச்சென்றார். நான் அருகில் அமர்ந்திருந்த மற்றொருவருடன் பேச ஆரம்பித்தேன்.
திண்டுக்கல்லில் தனது உறவினர் வீட்டுக்கு போவதாக சொன்னார். நானும், ராஜண்ணாவும் கூட திண்டுக்கல்லில் இறங்குவதாக சொன்னேன். அவர் தனது படுக்கையை தயார் படுத்திக்கொண்டார்.
ஏறி படுத்தவர் அதற்கு முன்னதாக 'திண்டுக்கல் அடைவதற்கு சற்று முன்னதாக நீங்கள் என்னை எழுப்புகிறீர்களா?' என்று மெல்ல என்னிடம் கேட்டுக் கொண்டார்.
https://www.youtube.com/watch?v=IleaQQpPUQ8
அப்போது பார்த்து திரும்பிவந்தார் நமது நாயகர். சற்று நேரம் கழித்து மேலே இருந்தவர் உறங்கிவிட்டாரா என்று உறுதி செய்து கொண்டு என்னிடம் "என்ன கேட்டார் இவர்?" என கேட்டார்.
"திண்டுக்கல்லில் எழுப்பிவிடச் சொன்னார்" என்றேன்.
"நீ சம்மதித்து விட்டாயா?" என கேட்டார்.
"ஆமாம். சரி என்று சொல்லிவிட்டேன்."
"இல்லை. உனக்கு விவரம் தெரியாது. பிரச்னைதான்" என்றார்.
"இதில் என்ன பிரச்னை? நாமும் அங்கேதானே இறங்குகிறோம். நாம்தான் முன்னதாக எழுந்துவிடுவோமே? " என்றேன்.
https://www.youtube.com/watch?v=smlQQAZHKpk
(தொடரும்)
kalnayak
13th January 2015, 05:23 PM
https://www.youtube.com/watch?v=eeGZ_gVTsbo
"முன்பு ஒரு முறை நான் சென்னையிலிருந்து பாண்டிக்கு (புதுச்சேரி) இரவு பத்து மணிக்கு மேல் வந்து கொண்டிருந்தேன். எனது இருக்கை முன் வரிசையில் இருந்தது."
"பேருந்தில்தானே?" என்று கேட்டேன்.
"ஆமாம். எனக்கு இடது பக்கம் ஒருவர் உட்கார்ந்திருந்தார். வண்டி தாம்பரத்தில் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தது."
"அருகிலிருந்தவர் எங்கேயாவது எழுப்பிவிடச் சொன்னாரா?" என்றேன்.
"சற்று அமைதியாக கேளேன். சொல்கிறேன்." என்றவர்
"ஆமாம் பேருந்து நகர எல்லையை, புறநகர் பகுதிகளை தாண்டி ஓடிக் கொண்டிருந்த போது,
அருகிலிருந்தவர் என்னைப்பார்த்து
'களைப்பாக இருக்கிறது. நான் தூங்கிவிட்டால் எழுப்புகிறீர்களா? சூடாக ஒரு டீ சாப்பிட வேண்டும்' என்றார்.
நானும் 'அதற்கென்ன தாராளமாக எழுப்புகிறேன். டீ கடை கண்ணில் தெனபடட்டும்' என்றேன்." என்றார்.
https://www.youtube.com/watch?v=0tiijlUCWeM
நான் அமைதியாக அவர் சொன்னபடியே கேட்டுக்கொண்டிருந்தேன்,
முகத்தில் 'இதனாலென்ன பிரச்னை உண்டாயிற்று?' முகத்தினால் கேட்டேன்.
"நானும் உன்னைப்போல், இதனாலென்ன பிரச்னை வந்துவிடபபோகிறது என்றுதான் சம்மதித்திருந்தேன்.
இடதுபக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என்னைப்பார்த்து முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கோபத்தில் கத்தினார் -
'யோவ் அறிவிருக்கா உனக்கு. அவர் தூங்குவாராம். இவரு டீக்கடையில் எழுப்புவாராம்.'
'இதில் என்ன தப்பு?' என்று நான் பதிலுக்கு கத்த. ஒரே சண்டை.
அப்புறம் அவர் சொன்னதைக் கேட்டுத்தான் என் தப்பை புரிந்து கொண்டேன்' என்றார்"
https://www.youtube.com/watch?v=y-m8AAJGduc
"அவர் அப்பிடி என்ன சொன்னார்?" - சஸ்பென்ஸ் தாங்காமல் நான் கேட்டேன்.
ராஜண்ணா தொடர்ந்தார் - "என்னுடன் சண்டை போட்ட பக்கத்து இருக்கைக்காரர் என்னைப்பார்த்து கேட்டார்.
'பஸ்ஸை ஓட்டுறவரே தூங்கிட்டாருன்னா, நாம ஊரு போய்ச் சேர மாட்டோம். பரலோகம்தான் போய்ச் சேருவோம்'.
'இப்பவே வண்டியை நிறுத்தி இறங்கிக்கலாம்'-னார். அப்பதான் என் தப்பை புரிந்து கொண்டேன்" என்றார்.
https://www.youtube.com/watch?v=3x79T3gesAk
(தொடரும்)
chinnakkannan
14th January 2015, 12:10 AM
கவிதையும் கானமும் – 8
கனிகொண்டு வந்திருக்கும் கண்ணா உந்தன்
….கருத்தினையே நானறிவேன் மயக்கி டாதே
களிகொண்டு சிரிக்கின்ற கன்றின் கண்கள்
…காட்டுகிற சேதியது அறிவேன் நானே
பனிபோலப் பூஞ்சிரிப்பு பேதை நெஞ்சை
..பாகாக உருகிவிடச் செய்யும் போதும்
கனிவெல்லாம் கொளமாட்டேன் போபோ கள்ளா..
…கன்னமிடும் உளம்தெரியும் போபோ கண்ணா..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GQ_3boKlnjI
//கையில் சில கனிகளுடன் கிருஷ்ணன் குறும்பாய் நிற்க அதைகோபிகைகொஞ்சம் கோபமாய்ப் பார்க்க அவள் பின்னால் ஒரு கன்று - இந்தப் புகைப்படத்துக்கு எழுதிய பாட்டு இது//
கலைவேந்தன் சார் வாசு சார். ஹோம் வொர்க்லாம் நாளைக்குத்தான் இடுகைகளுக்கு நன்றி+ஓ
கல் நாயக்..சார் ம்ம் இன்னும் எழுதுங்கள்..பாட்டுக்கள் ஜோர்.. ஐ கேம் டு மீட்யூஇன் த மூன் லைட் . பட் நீங்க இல்லையே..!
chinnakkannan
14th January 2015, 12:21 AM
வாசு சார்.. பாவை நீமல்லிகை ரேடியோ சிலோனில் கேட்ட நினைவு.. இப்பதான் பார்க்கிறேன் தாங்க்ஸ். ஆமாம் யாராக்கும்ப்ரிய வதனா..(ஹை கிருஷ்ணாஜியை வரவழைக்க ஒரு உபா..உபா..உபாயம் கண்டுபிடிச்சாச்சே) :)
kalnayak
14th January 2015, 02:36 PM
கல் நாயக்..சார் ம்ம் இன்னும் எழுதுங்கள்..பாட்டுக்கள் ஜோர்.. ஐ கேம் டு மீட்யூஇன் த மூன் லைட் . பட் நீங்க இல்லையே..!
சி.க.,
எங்க ஏரியாவில் மேகமூட்டமாய் இருந்ததால், நான் தெரிஞ்சிருக்கமாட்டேன். பரவாயில்லை. விடுங்க. இப்ப வந்துட்டேனே!!! நீங்க உங்க கவிதை மழையை தொடருவீங்களா?
அப்புறம், என்னை சார் போட்டு கூப்பிட்டால், நான் திருப்பி சார் போட்டு கூப்பிடலையேன்னு வருத்தமா இருக்கு. யார் யாருக்கு சார் போடறது, யார் யாருக்கு சார் போடக்கூடாதுன்னு குழப்பம் வந்துடறது. அதனால, சார் யாருக்குமே வேணாமே.
யாருக்காவது சார் வேணுமென்றால், கேட்டு வாங்கிக் கொள்ளட்டும். இல்லை, கிடைக்கிற சாரை வேணாமென்று சொல்லாதிருக்கட்டும்.
எனக்கு வேணாமென்றுதான் நான் சொல்கிறேனே.
நாமெல்லாம்யங்ஸ்டருங்கோ!!!
kalnayak
14th January 2015, 02:45 PM
வாசு,
'பாவை நீ மல்லிகை' - நல்ல பாடல். எனக்கும் எங்கேயோ கேட்டது போல இருந்தது. படம்...? சான்ஸே இல்லை. இப்படி ஒரு படம் வந்ததை இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.
Russellzlc
14th January 2015, 05:42 PM
திரு.வாசு சார், திரு.ராகவேந்திரா சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ரவி சார், திரு.சின்னக் கண்ணன் சார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கருப்புப் பணம் பதிவுக்கு பாராட்டிய திரு.சின்னக் கண்ணன் சார், லைக் போட்ட திரு. கோபு சார், திரு.கல்நாயக் சார் (சார் போட்டதற்கு சாரி சார்) ஆகியோருக்கு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
14th January 2015, 06:06 PM
தை மாத ரிசல்யூஷன்.. நோ சார் ஃபார் ஆல் சார்ஸ்..:)
ஹாப்பி பொங்கல் டு வாசு, க்லைவேந்தன், கோபால், கிருஷ்ணாஜி, ராகவேந்தர், ராஜேஷ், ராஜ்ராஜ், ராகதேவன், ரவி,எஸ்.வாசு தேவன், கோபு 1954 (தாங்க்ஸ்ங்க்ணா ஃபர் விருப்பங்கள்) , கல் நாயக்,எஸ்.வி, யுகேஷ் பாபு, பார்த்த சாரதி, முரளி, சுவை,முரளிதரன், ஸ்டெல்லா (இப்போல்லாம் காணோமே),கார்த்திக் மற்றும் விடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும்..
தையென்றேன் முடியா தென்றாள் மாதம்
..தையென்றேன் சிரித்தாள் என்னை இங்கே
வையேன்றேன் முடியா தென்றே சொல்ல
..வையேன்றேன் நெஞ்சில் என்க நங்கை
நகைத்தனள் நகைத்தனளே..
ஹிஹி..புதுக்கவிதை தான்ங்க்ணா..
http://www.youtube.com/watch?v=vsd_pwkPL50
kalnayak
14th January 2015, 06:07 PM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
Russellisf
14th January 2015, 06:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps31c2d6aa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps31c2d6aa.jpg.html)
vasudevan31355
14th January 2015, 06:49 PM
http://www.webpagecollection.com/images/pongalgreetings/pongal_8.gifhttp://3.bp.blogspot.com/-IiJ0Y5mauc8/Us_hc3UhLsI/AAAAAAAADkE/8GGVEo1URNE/s1600/Happy+Pongal+2014+Special+Greetings+Wishes+Message s+in+Tamil.jpg
மனதை மயக்கும் மதுர கானம் திரியின் அன்பு நெஞ்சங்களுக்கும், திரியின் வாசகர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
http://viprasys.org/xfs/image/direct/PnjFz0PI71/pongal.gif
http://icdn.indiaglitz.com/common/wallpaper/Specials/pongal/Pongal_090108_1024_1.jpg
எங்க ஊரு பொங்கலுக்கு வந்திருந்து
நீங்க கொஞ்சம் தங்கி விட்டு செல்ல வேணும்
நீங்க தங்கி விட்டு போகுறப்போ
உங்களோட வாழ்த்துக்களை எங்களுக்கு சொல்ல வேணும்
மிக அரிய இளையராஜாவின் பொங்கல் வாழ்த்துப் பாடல். 'சின்னத்தாயி' படத்திலிருந்து.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=T88-YeqHm-U
chinnakkannan
14th January 2015, 09:07 PM
பொங்கல் திருநாளும் அதுவுமாக -மஸ்கட் மூன்றாவது வட்டம் சார்பாக இந்த மலர் மாலையை அண்ணன் வாசு தேவனுக்குப் போட்டு சின்னத் தாயியின் பொங்க்ல் பாடல் மட்டுமல்ல ஏரிக்கரை, கோட்டைப்புறத்து.. போன்ற பாடல்களை நல்ல மல்லிகை மணம் கொண்ட ஏரியல் சலவைத்தூளினால் அலச வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.:) இல்லைன்னா -நான் கவிதையும் கானமுமாய்ப் போட்டுப்படுத்துவேன் என்பதை... (அப்பப்ப இந்த மாதிரி பயமுறுத்தி வைக்கணும் ம்! :) )
chinnakkannan
14th January 2015, 09:38 PM
//நீங்க உங்க கவிதை மழையை தொடருவீங்களா?//
உடனே தொடர முடியாததற்கு ஸாரி கல் நாயக் (உண்மைப்பெயர் ஹரிஹர வேங்கட சுப்ரமண்யன் தானே :) இதோ இன்றைய்ய ஸ்பெஷல் சுடச் சுட நெய்விட்டு இன்று முக நூலில் எழுதிய பாடல்கள்
கவிதையும் கானமும் -9
எமி ஜாக்ஸன் என்ற லண்டன் பெண்- சிச்சிறிது படங்களே நடித்திருக்கிறார்..அவரது- உலகமே எதிர்பார்த்த படமான ஐ- இன்று ரிலீஸ்.. என்ன ஆச்சுன்னா..
காலையில் முக நூலில் சின்னதாய் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேனா..
நண்பர் உடல் நிலை சரியில்லாத என்னைப் பார்க்க வந்திருந்தார். ’உடம்பு சரியானதுக்கப்புறம் எல்லாம் பார்க்கலாம்..சும்மா ஐ ஐ ந்னு குதிக்காதீர்!” என்றார்.. எப்படி இருக்க முடியும்.
எதுகையில் சிக்கா எமியாம் அழகுப்
பதுமையைப் பார்க்கலாம் பார்..
என்று தான் மனதில் தோன்றியது அவர் சென்ற பின்பு..(எதுகைன்னா ஒவ்வொரு வரியிலும் இரண்டாம் எழுத்தே வரவேண்டும்… எமி உமி சுமி என – கொஞ்சம் அப்ப எழுத வரலை)
எமி என ஆரம்பித்து வெண்பா எழுத மற்ற நண்பர்களை அழைக்கிறேன்! னு போட்டா ஃப்ரண்ட்ஸ் அழகாப் பாட்டும் எழுதிட்டாங்க. சரின்னு நானும் என் பங்குக்கோர் பாட்டு எழுதிட்டேன்..
தமிழுக் கழகூட்டும் சந்த விருத்தம்
எமிக்கோ எழிலென ஏது? - குமியும்
உதடென்றா இல்லை உதறும் நிலாவால்
புதனின்று பொன்னாச்சு போ..
இத்தோட நின்னுச்சான்னு பார்த்தா இன்னொரு நண்பர் – அவ்வளவு ஒண்ணும் சுவாரஸ்ய அழகு இல்லை ஓய்ன்னார்.. அப்படியே ஒரு பாட்டு – இறுதி அடி – எலி போல் இருக்கும் எமின்னு எழுதிட்டாருங்க! எனக்கோ சின்னக் கோபம்.
கலிகாலம் வந்ததைக் கண்டாயா தோழா
எலிபோல் இருக்காம் எமி ( நற நற..)
ந்னு எழுதிட்டேன்!
அப்புறம் அதே நண்பர் அந்த எமியின் ஸ்டில் பாத்துட்டு ஸாரி கேட்டு ஒரு பாட்டுப் போட்டார்..அதன் கடைசியிலே- என்று வரும் கோவில் எமிக்குன்னு கேட்டிருந்தாரா நான் என்ன சொன்னேன்..
கோவிலெல்லாம் ஏதுக்கு கொஞ்சும் குமரிக்காய்
பாவில் இசைப்போமே பண்ணை – தூவிடும்
சாரலாய் நெஞ்சைச் சரம்போல் நனைத்துதான்
தூறும் அழகோ சுகம்.
சரி தானுங்களே!
**
இனி நேயர் விருப்பமாக / விருப்பமாக இல்லாவிட்டாலும் கூட :) மதராஸப் பட்டணத்திலிருந்து பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இலையே.. பாடல்..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0e7sTaHxeQw
kalnayak
16th January 2015, 11:22 AM
சி.க.,
ஆக கடைசியா ஐ பார்த்தேளா, இல்லையா?
உங்க கவிதைகள் ரொம்ப நன்னாருக்கு பேஷ். பேஷ்.
எமிக்காக குமிறிக் குமிறி கவிதை வடிச்சிருக்கேள். (குமுறிக் குமுறி - எதுகைக்கா மாறிப்போயிட்டுது)
சமிக்ஞையாய் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
உமியாய் திரையில் இல்லாமலிருந்தால் சரி.
நமிதா போல் பருக்காமல் மெல்லியளாயிருக்கவும்
ஷமிதா போல் நிலைக்காமல் இல்லாமல், நிலைத்திருக்கவும்
அமிதாப் போல் புகழினை யாத்து பல்லாண்டு நடிக்கவும்
தமிழர் திரையில் பலநாள் வாழ வாழ்த்துவோம்.
https://www.youtube.com/watch?v=FP3crdpwnKk
அப்புறம் என்னோட பேரை எப்படி கண்டு பிடிச்சேள்? சின்ன கரக்ஷ்ன் பண்ணா போறும். வெளியே சொல்லிடாதீரும். ஷேமமா இருப்பேள்.
chinnakkannan
16th January 2015, 12:00 PM
//ஷமிதா போல் நிலைக்காமல் // சேரன் பாண்டவர் பூமி ஹீரோயின் தானே.. கரகர சந்திரபோஸ் அவரவர் வாழ்க்கையில் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது..பட் அவங்க டிவி சீரியல்ல இருக்காங்களே :) ஐ பாட்டுக்கு தாங்க்ஸ் ஆனா படத்தோட தான் பார்ப்பேன் இன்னும் பார்க்கலை..:) அப்புறம் கொஞ்சம் செதுக்கினா நீங்க எழுதியிருக்கிறதும் மரபுக் கவிதையாய்டும் ஓய்! (ம்ம் உம் பேர் சொல்ல ஆசைதான்.(ஆனா தெரியாதே!)) :)
kalnayak
16th January 2015, 01:05 PM
ஆஹா, மரபுக்கவிதை என்பது இம்புட்டுத்தானா? நானும் 'என்னை மாதிரி ஆட்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது' என்று நினைத்திருந்தேன்.
விட்டால் என்னைக்கூட வைரமுத்து(!) போல ஆக்கி விடுவீங்க.
அப்புறம் என் பெயர் தெரியலை-ன்னு சொல்லியிருந்தீங்க. ஏற்கனவே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி பலர் இருக்க, இல்லை, இல்லை, அவாள்ளாம் ஒருத்தரே-ன்னு சிலர் உண்மை தெரிந்தும் வேண்டுமென்றே சொல்ல, நான் யாரோவோட பினாமின்னு அவாள்ள சிலர் சொல்ல, அந்த எண்டர்டைன்மெண்ட் போயிடுமோல்லியோ!!! இந்தியா வாரப்போ சொல்லும் ஓய். ரகசியமாய் பப்ளிக்ல சந்திக்க முடியுமா பார்க்கலாம்.
kalnayak
16th January 2015, 03:38 PM
ராஜண்ணாவுடன் ரயில் பயணம் தொடர்கிறது...
One of my favorite songs (train only at the start):
https://www.youtube.com/watch?v=x5RAGaWonDM
"அண்ணே, இப்ப நாம பஸ்ல போகைல. அதுவுமில்லாம நாம ரயில் என்ஜின்-ல பிரயாணம் பண்ணல, டிரைவர், தான் தூங்கினா எழுப்பச் சொல்றதுக்கு' என்றேன்.
"ஐயோ, இப்ப அதவிட ஆபத்தாச்சே, பக்கத்திலிருந்து நாம எழுப்ப முடியாதே' என்றார்.
அவர் முகத்தில் கலவரம் கூடியது.
"அதுக்கெல்லாம் பயப்படாதீங்க. அதிகமான ஆளுங்க இருப்பாங்க. ரயில் தண்டவாளத்தில் போவதால் நீங்க சொல்ற பிரச்சினை வராது" என்றேன்.
மேலே தூங்கியவரைப் பார்த்து "இவர் என்ன வேலை செய்யறாரு கேட்டியா?" என்றார்.
"கேட்கலை. ஆனால் இப்ப இவர் இந்த ரயிலை ஓட்டலியே, ஏன் பயப்படணும்?" கேட்டேன்.
"உனக்கு விவரம் பத்தாது" என்று மறுபடி சொன்னார். படுக்கையில் விழுந்தார்.
https://www.youtube.com/watch?v=w02bYPyi2rs
ரயில் விழுப்புரம் தாண்டி போய்க் கொண்டிருந்தது. மேல் படுக்கையிலிருந்தவர் கீழிறங்கி பாத்ரூம் போய்விட்டு வந்தார்.
நான் அவரைப் பார்த்து கேட்டேன்: "நீங்க என்ன வேலை செய்யறீங்க?"
"ரயில்வே டிபார்ட்மெண்ட்தான். என்ஜின் டிரைவரா" என்றார். படுத்துக் கொண்டார்
அண்ணனை திரும்பிப் பார்த்தேன்.
அவர் முகத்தில் கலவரம் திகிலாய் மாறிப் போயிருந்தது.
அவ்வளவுதான் இனி அண்ணன் உறங்கமாட்டார் என்பது தெளிவாக தெரிந்தது.
https://www.youtube.com/watch?v=QaPGaM_pysA
(தொடரும்)
chinnakkannan
16th January 2015, 04:00 PM
//இந்தியா வாரப்போ சொல்லும் ஓய். ரகசியமாய் பப்ளிக்ல சந்திக்க முடியுமா பார்க்கலாம். // :)_ சும்மாத்தாங்க்ணா பெயர் கேட்டேன் :) பெயர் முக்கியமில்லை மனசு+ஒருமித்த சிந்தனை+ நகைச்சுவை உணர்வு அதுபோதும் கல் நாயக். என்னமோ சிக்னேச்சர்ல பாட் போட்டிருக்கேளே என்னவாக்கும் லாங்க்வேஜ் :)
chinnakkannan
16th January 2015, 04:05 PM
கல்நாயக் இப்படியா பயமுறுத்தறது..விஜயன் சுஜாதாவா.பாட் முன்னாடி கேட்டிருக்கேன்..இனிமே பாட் மட்டும் கேப்பேன் !சித்திரை மாதம் பெளர்ணமி நேரம் எனிடைம் ஃபேவரிட்.. குட்ஸ் வண்டியிலே இளவரசி. நல்ல பாட்டு..ஆமா கனிஹா வோட ரயில் பாட் ஒண்ணுஇருக்கே.
ரயிலே ரயிலே ஒரு நிமிடம்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YK74lYzzOEQ
kalnayak
16th January 2015, 04:14 PM
ஹையோ ஹையோ, தமிழ்ழ எழுதியிருந்ததால தமிழ் இல்லைன்னு நெனச்சிட்டீங்களா? எதோ புறநானூறாமாங்களாம்.
நீங்க வேற மரபுக்கவிதை-ன்னு சொல்லிட்டீங்களா. அப்பப்ப பார்த்தா, எதாச்சும் என் மண்டையில ஏறுதான்னு பார்க்கிறேனுங்க.
kalnayak
16th January 2015, 04:19 PM
கல்நாயக் இப்படியா பயமுறுத்தறது..விஜயன் சுஜாதாவா.பாட் முன்னாடி கேட்டிருக்கேன்..இனிமே பாட் மட்டும் கேப்பேன் !சித்திரை மாதம் பெளர்ணமி நேரம் எனிடைம் ஃபேவரிட்.. குட்ஸ் வண்டியிலே இளவரசி. நல்ல பாட்டு..ஆமா கனிஹா வோட ரயில் பாட் ஒண்ணுஇருக்கே.
ரயிலே ரயிலே ஒரு நிமிடம்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YK74lYzzOEQ
பயப்படாமல் இப்படிதான் சில பாட் கேட்கணும்.
அடடா, அடுத்த பதிவிலே போட வைச்சிருந்த பாட்டை போட்டுட்டேளே!!!பரவாயில்லை. கைவசம் இன்னுங் கொஞ்சமிருக்கு. பயமில்லை.
chinnakkannan
16th January 2015, 04:19 PM
//ஆக கடைசியா ஐ பார்த்தேளா, இல்லையா?// இன்னிக்கு ராத்திரி 11.30 தான்கிடைச்சது (இந்திய நேரம் 0200 ஹவர்ஸ்! ) :) பார்த்து சொல்றேன்
kalnayak
16th January 2015, 04:34 PM
//ஆக கடைசியா ஐ பார்த்தேளா, இல்லையா?// இன்னிக்கு ராத்திரி 11.30 தான்கிடைச்சது (இந்திய நேரம் 0200 ஹவர்ஸ்! ) :) பார்த்து சொல்றேன்
சொல்லுங்கோ. சொல்லுங்கோ...
ஐ'ம் வெயிட்டிங் ஃபார் ஐ. இல்லை. இல்லை. யூ
chinnakkannan
17th January 2015, 10:41 AM
ஐ
அதிஅதிகாலை மூன்று மணிக்கு மஸ்கட் ரூவியில் –டைட்டில்களுடன் படமும் திரையில் ஓட,, கூட்டம் தூங்கிவழியாமல், வெளியேறாமல் நின்றவண்ணம் பார்த்து கட்டக் கடைசி செகண்ட் வரைகாத்திருந்து பார்த்தபின் சற்றே மனதில் குஷியுடன் வெளியேறியதே படத்தின் தாக்கத்திற்கு சாட்சி (பார்த்தது இரவு 11.30 மணிக் காட்சி)
இருபது நிமிடங்கள் குறைத்திருக்கலாம் என்று தோன்றினாலும் பின்னால் பரவாயில்லை என்று தோன்றவைத்தது ஷங்கர் என்ற மாமனிதரின் டைரக்ஷன்.+ சிந்தனையின் பிரம்மாண்டம். விக்ரத்தின் அசுர உழைப்பான நடிப்பு, எமியின் நடிப்புடன் கூடிய அழகு பின் பின் காட்சிகளின் கண்முன் விரிந்து கண்ணுக்குள் தங்கியிருக்கும் அழகு,
சில காட்சிகளில் அருவருப்பாய் இருந்தாலும் இட்ஸ் ஓ.கே யார் எனச் சொல்லும் படி இருக்கிறது..என்ன திரைப்படமே பார்ப்பதை நிறுத்தி வைத்திருக்கும் என் நண்பரை குழந்தைகளைக் கூட்டிச் செல்லுங்கள் எனச் சொல்ல முடியாது – குழந்தைகள் கொஞ்சம் பயப்படும் சில தோற்றங்களால் என்ற காரணத்தால்.
கதை விமர்சனம் எனப் படிக்காமல் – படம்பார்க்க விரும்புபவர்கள் நேரிடையாகச் சென்று பார்க்கலாம் இந்தத் தமிழ் சினிமாவின் வெகு உயரப்படத்தை.கண்டிப்பாக ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்..
மலேசிய நண்பருக்காக நேற்றெழுதிய வெண்பாவை சற்றே மாற்றி வைத்து முடித்துக் கொள்ளட்டா
மேலாய் எமிபடத்தை மென்மையுடன் பார்க்கவைத்த
வேலா உமக்கொரு ஓ!
**
kalnayak
17th January 2015, 01:39 PM
சி.க.,
உங்க ஐ - ப்ரீவ் ரிவ்யூ பார்த்து மெரிசலாயிட்டேன். இன்னும் கொஞ்சம் அதிகமா எழுதியிருக்கலாம். எனிவே ஷார்ட் இஸ் ஸ்வீட்-னு எடுத்துக்கறேன்.
//இந்தியா வாரப்போ சொல்லும் ஓய். ரகசியமாய் பப்ளிக்ல சந்திக்க முடியுமா பார்க்கலாம். // :)_ சும்மாத்தாங்க்ணா பெயர் கேட்டேன் :) பெயர் முக்கியமில்லை மனசு+ஒருமித்த சிந்தனை+ நகைச்சுவை உணர்வு அதுபோதும் கல் நாயக். என்னமோ சிக்னேச்சர்ல பாட் போட்டிருக்கேளே என்னவாக்கும் லாங்க்வேஜ் :)
என்னை சந்திக்கலாமான்னு கேக்கறவங்களைத்தான் இவ்வளவு நாள் சமாளிச்சுகிட்டிருந்தேன். நான் சந்திக்கலாமான்னு கேட்டு சமாளிச்சவர் இப்போதைக்கு நீங்கமட்டுந்தான். பாராட்டுக்கள்.
ஐ-லிங்கேஸ்வரன் பாடி பில்டர் மாதிரியோ, மாடல் மாதிரியோ ஆன ஆள் நானில்லைதான். அதே சமயம், ஐ வைரஸ் புகுந்த லிங்கேஸ்வரன் மாதிரி, பார்த்தவர் பயப்படும் மாதிரியான ஆளும் நானில்லை. எப்படியோ பரவாயில்லை. கலக்குங்க!!! வாழ்த்துகள்.
chinnakkannan
18th January 2015, 09:22 PM
திடீர்னு யாரையும் காணவில்லை..எங்கபோனாங்க.. எப்போதும் இங்கு வருவாங்களே.. கோபமா தாபமா ஏதோ நினைவா நிறைய வேலையா மறந்து போச்சா ஆசை முகம
ஆனபடி காத்திருந்தேன் அண்ணமாரைக் காணலியே
பானகமாப் பாட்டிசைச்சு பக்குவமா வாக்கியத்தில்
வானமழை கானமென வாகாகத் தந்தவுக
போனவழி சொல்வாய் புறா
ம்ம் இந்தப் புறாவ மொதல்ல நெய்வேலிக்குத்தேன் அனுப்பனும்..
ஆசு கவிபோல அக்கறையாய் ஏட்டிலிடும் (பேசுகவி)
வாசுநீர் இங்கேதான் வா(ரும்)
இப்படியா வாடிக்கை மறந்து போறது..ம்ம்
]
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XUFiNhC8CcA
விறுவிறுப்பா வலையுள்ளே வேகமாகப் புகுந்திங்கே
..விவரணையா தரும்நண்பர் வெகுகாலம் காணலையே
கிறுகிறுக்க வைக்கின்ற காட்டுவெயில் போலதலை
…கிருஷ்ணாஜி சுத்துதிங்கே சீக்கிரமா வாருங்க்ணா..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f9tPXpACS08
chinnakkannan
18th January 2015, 09:23 PM
அப்புறம் பொங்கும் பூம்புனல் எல்லாம் வழங்கிய ராகவேந்திரருக்கு என்ன ஆச்சு.. ஏதாவது குத்தம் குறையிருந்தா ஷமிக்கலாமில்லையா..
http://www.youtube.com/watch?v=dQgsXuCR9CI&feature=player_detailpage
அலைபாயும் அரசியலை ஆழத் தொடுக்கும்
கலையெங்கே போனாராம் காண்..
கலைவேந்தன் வாங்கோ.வாங்கோ..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pCMH0xhKnEk
chinnakkannan
18th January 2015, 09:23 PM
ஐயென்றீர் தந்தேன் ஐயன்மீர் கல்நாயக்
பைய வருவாரா சொல்(லும்)
நாயகன் அவன் ஒரு புறம் அவன்விழியில் மனைவி அழகு போடலாம்னு நினச்சேன்.. போட்டாச்சு போட்டாச்சுன்னு குரல் கேட்டுச்சா..நிறுத்திட்டேன்.. சரி சரி சீக்கிரமா வாங்க.. எக்ஸர்சைஸ் பண்ணலாம்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=a513fQZqTXA
chinnakkannan
18th January 2015, 09:24 PM
*
அப்புறம் எங்கே போனார் ராஜேஷ்.. ஹிஹி..ராஜேஷ்னு வரி வர பாட்டு இல்லையா..எனில் ராஜேஷ் கண்ணா பாட்டு போட்டுட்டேன்.. இதே பாட்டை வச்சு எஸ்.வாசுதேவனையும் கூப்பிடறேன்
ஓமேரே தில்கே செ.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=heXQRxM2Gro
எஸ்வி யையும் காணோமே.. எங்கே அவர் என்றே மனம் தேடுதே ஆவலாய் வாரும்..
http://www.youtube.com/watch?v=-Dp_9dafsLE&feature=player_detailpage
chinnakkannan
18th January 2015, 09:25 PM
ஒரு வேளை யாராவது முனிவர் சாபம் கொடுக்க மறந்துட்டாங்களா என்ன.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=aEdtvDLbRMc
. காளிதாச மகாகவி காவியம்.ம்ம் கண்ணதாச வரிகள்
chinnakkannan
18th January 2015, 09:37 PM
ஹச்சோ ராஜ்ராஜரை விட்டுட்டேனே
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gH_ATGp5As0
ராகதேவர் கிட்ட இந்தப் பாட்டுக்கு என்ன ராகம் நு கேக்கலாம்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GGekCjufNWY
raagadevan
18th January 2015, 11:03 PM
ஹச்சோ ராஜ்ராஜரை விட்டுட்டேனே
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gH_ATGp5As0
ராகதேவர் கிட்ட இந்தப் பாட்டுக்கு என்ன ராகம் நு கேக்கலாம்
Are you serious kaNNaa? :) If you are, it is of course கீரவாணி , one of Ilaiyaraja's favourites.
For your listening/viewing pleasure, here are some more "old" compositions in கீரவாணி .
Do they sound similar to each other? :)
“pukaarta chala hoon mein…” - Mohammad Rafi-MERA SANAM (1965) – O.P. Nayyar
https://www.youtube.com/watch?v=24d0fCfnJhw
“kaaNNaalE pesi pEsi kollaathE…” - P.B. Sreenivas - ADAUTHTHA VEETTU PENN (1960)- Adhi Narayana Rao:
https://www.youtube.com/watch?v=eTwUuYPdcFI
raagadevan
19th January 2015, 01:29 AM
Your second song ("oru raagam paadalOdu...") is in மோஹனம்.
Richardsof
19th January 2015, 08:22 AM
சின்ன கண்ணன் சார்
என்னை நினைவு படுத்தியதற்கு நன்றி .மனதிற்கு புத்துணர்ச்சி தரும் சில பாடல்களை தருகிறேன் .
உங்களுக்கும் பிடிக்கும் என்று எண்ணுகிறேன் .
http://youtu.be/rhCF3trLAQE
http://youtu.be/S2RLsp1D58Q
http://youtu.be/Xpg-g5wxrS8
Richardsof
19th January 2015, 08:43 AM
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்:
"ஜாதகம்'
பி.லீலா பாடிய முதல்பாடல் "ஜெகம் புகழும் புண்ணிய கதை'. படம் :
"லவகுசா'.
"பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: "சோலைக் குயிலே' படத்தின் இசை யமைப்பாளர்: இளையராஜா.
Richardsof
19th January 2015, 08:51 AM
TO DAY - SEERGAZHI GOVINDARAJAN'S BIRTH DAY .
http://youtu.be/5CBeiwSD-jI
Richardsof
19th January 2015, 08:52 AM
http://youtu.be/HWZDdRJxvkY
RAGHAVENDRA
19th January 2015, 09:08 AM
சி.க. சார்
என்னை நினைவூட்டிக் கொண்டதற்கு மிக்க நன்றி. பல்வேறு அலுவல்கள் காரணமாக இத்திரியில் சில நாட்களாக பங்கு கொள்ள முடியவில்லை. நடிகர் திலகம் திரியில் மட்டும் சில பதிவுகளைப் போட்டு விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய் விட்டேன். விரைவில் தொடர்ந்து பங்கு கொள்வேன் என நம்புகிறேன்.
RAGHAVENDRA
19th January 2015, 09:09 AM
வினோத் சார்
பி.லீலா 1948ம் ஆண்டிலேயே பின்னணி பாட வந்து விட்டார். கங்கணம் படம் தான் அவர் பாடி வெளிவந்த முதல் படமாகும்.
மற்றபடி முதல் பாடல் பட்டியலுக்குப் பாராட்டுக்கள். இதையும் நாம் இங்கே ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம்.
kalnayak
20th January 2015, 10:12 AM
சி.க.,
இப்படியெல்லாம் கவிதையெழுதி கூப்பிட்டால் எவரும் அடிக்கடி காணாமல் போகலாம் - நிறைய கவிதைகள் வருமென்று.
நான் முன்பே சொன்னேன் 'என்னை எழுத சொல்லாதீர்கள்' என்று. இப்போது பாருங்கள் என்ன நடந்ததென்று. கல்நாயக் சொன்னால் கேட்டால்தானே!!!
நான் எழுதியதால் நான் கூட காணாமல் போய்விட்டேன் - அதை நினைத்தால்...வேறு வழியேயில்லை....
kalnayak
20th January 2015, 03:51 PM
கவிதையெழுதும் கண்ணனார்
காரியத்தில் கண்ணாயினாரோ? நாம்
அழைத்த எவரும் தொடரவில்லை; நம்மை
அழைப்பவரெவரென அறிய மறைந்து பார்க்கிறாரோ?
கல்நாயக் கவிதை வரைய
அல்லல் அதிகரித்து
நில்லென்று சொல்லவேணும்
வில்லெடுத்த ராமனாய் நல்ல
சொல்லெடுத்து வருவாரோ சின்னக் கண்ணனார்!!!
kalnayak
20th January 2015, 04:46 PM
நடக்கும் கூத்துகளை கண்டிருந்தும்
அடக்கும் வழியறியாமல் அசந்தாரோ - பட
படக்கும் இதயத்துடன் நெய்வேலி உறைவோர்; ஏனையோர்
கிடக்கும் வேலைதனை முடக்காமல் முடித்திடுவீர் - பின்னர்
இடக்கும் மடக்குமின்றி மதுர கானம் படைப்போம்
Russellzlc
20th January 2015, 05:06 PM
‘பூவா? தலையா?....’
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மன்னிக்க வேண்டும் திரு.சின்னக் கண்ணன் சார். இன்றுதான் நமது திரியை பார்த்தேன். வேலை அதிகம். அதனால், சில நாட்கள் பார்க்க முடியவில்லை. கிடைக்கும் நேரத்திலும் மக்கள் திலகம் திரிக்கு பங்களிக்க வேண்டியுள்ளது. ஆனால், நான்தான் இங்கே வரவில்லை போலிருக்கிறது என்று பார்த்தால், திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ரவி சார் யாரையுமே பார்க்க முடியவில்லையே. இன்றும் வேலை ஜாஸ்திதான் என்றாலும் நீங்கள் அழைத்துள்ளீர்கள். மறுக்க முடியுமா? மேலும், இன்னொரு கடமையும் உள்ளது. திரு.கல்நாயக் அய்யாவுக்கு (சார் போடவில்லை திருப்தியா?) கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே? அதனால் உடனடியாக களத்தில் குதித்து விட்டேன்.
-----------------------
டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட காங்கிரஸ் ஆதரவோடும் மக்களின் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். மனிதர் என்ன நினைத்தாரோ? லோக் பால் மசோதாவை தாக்கல் செய்தால் எப்படியும் கட்சிகள் ஆதரவு கிடைக்காது. அதனால், பழியை எதிர்க்கட்சிகள் மீது போட்டு ராஜினாமா செய்தால் தியாகி பட்டத்தோடு அனுதாபமும் கிடைக்கும். மீண்டும் தேர்தல் நடந்தால் மெஜாரிட்டி பலத்தோடு ஜெயித்து விடலாம் என்று கணக்கிட்டாரோ என்னவோ? 49 நாட்களில் ராஜினாமா....
மக்களிடம் அனுதாபத்துக்கு பதிலாக அவர் மீது ஏமாற்றமும் கோபமும் ஏற்பட, ராஜினாமா செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இப்போது பிப்ரவரி 7ம் தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்கும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கொடுங்கள் என்று கேட்கிறார். இன்று 7 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றுள்ளார். நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
நிலைமை ஏற்கனவே அவருக்கு சரியில்லாத நேரத்தில், கட்சியில் சேர்ந்து 15 நாள் கூட ஆகாத முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியை அதிரடியாக தனது முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது பாரதிய ஜனதா. கிரண் பேடிக்கு ஏற்கனவே நல்ல இமேஜ். திஹார் சிறையில் சீர்திருத்தங்கள் செய்தவர். நேர்மையான அதிகாரி. அன்னா ஹசாரே இயக்கத்தில் கெஜ்ரிவாலுடன் பணியாற்றியவர். இது பா.ஜ.வின் மோடி + அமித் ஷா கூட்டணியின் ராஜதந்திரமான மூவ் ஆக பார்க்கப்படுகிறது டெல்லி அரசியலில். ஆப் (aap)ப்புக்கு ஆப்பு.
இதை எதிர்பாராத கெஜ்ரிவால், பொது விவாதத்துக்கு தயாரா? என்று கிரண் பேடியை சவாலுக்கு அழைக்கிறார். தயார் என்று பேடியும் பதில் முழக்கமிட, பந்து இப்போது கெஜ்ரிவால் பக்கம். இருவரும், ‘பூவா தலையா?’ படத்தில் வரும் ‘பூவா? தலையா? போட்டால் தெரியும், நீயா? நானா? பார்த்துவிடு.....’’ என்று மல்லுக்கட்டி நிற்கின்றனர் டெல்லி தேர்தல் களத்தில்.
எனக்கு பிடித்த அருமையான பாடல் சார் இது. மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ்.& சீர்காழியின் ஜாலக் குரல்களில் உற்சாகம் வழிந்தோடும். நாகேஷூக்கு இணையாக ஜெய்யும் நன்றாக ஆடியிருப்பார். தனது ஏற்பாட்டில், பாதி பாட்டில் ஜெய்யை அடக்க வரும் முரட்டு வில்லனைப் பார்த்ததும் திருப்தியும் அவருக்கு பார்வையிலேயே உத்தரவிடும் வில்லி வரலட்சுமியின் நடிப்பு டாப்.
பூவா தலையா? படம் என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல். திரு. பாலச்சந்தர் அவர்களோடு (இயக்கம் இவரே) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். திமுகவில் முக்கியஸ்தராக இருந்தவர். படத்தின் 100 வது நாள் விழா திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில். விழாவில் கவியரசர் கண்ணதாசனும் கலந்து கொண்டுள்ளார். அப்போது கவியரசர் , திரு.கருணாநிதிக்கு எதிர் முகாமில். இருந்தாலும் அரசியல் நாகரிகம் இருந்த காலங்கள் அது.
அந்த காலகட்டத்தில் திரு.கருணாநிதிக்கு முன்னால் முடி இருக்கும். நடு வகிடு எடுத்திருப்பார். பின் தலையில் வட்டமாக லேசான வழுக்கை இருக்கும். விழாவில் கவியரசர் பேசும்போது, ‘‘கருணாநிதியின் பின்னால் அவரது தலையைப் பார்த்தேன். வட்டமாக பூ போல இளவழுக்கை இருக்கிறது. இது பூவா? இல்லை தலையா? என்று வியந்தேன். பூவா, தலையா? பட விழாவுக்கு அவரை கூப்பிட்டது பொருத்தமே’’ என்று பலத்த சிரிப்பொலிகளுக்கிடையே பேசினார்.
திரு.கருணாநிதி அவர்களின் அரசியலை நான் ஏற்பவனல்ல. என்றாலும், அரசியல் தவிர்த்து நடுநிலையோடு பார்த்தால் பன்முக ஆற்றலும் கூர்த்த மதியும் நகைச்சுவை திறனும் கொண்டவர். கவியரசருக்கு திரு.கருணாநிதி அளித்த பதில்.........‘‘பூவாக இருந்தாலும் சரி, தலையாக இருந்தாலும் சரி, பறிக்காமல் இருந்தால் சரி.’’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
21st January 2015, 10:42 AM
திரு. கலைவேந்தன் அய்யா (நீங்களா கேட்டு வாங்கிக் கொண்டது - இது சார்-க்கு பரவாயில்லை, இருந்தாலும் இதுவும் எனக்கு வேண்டாம் - நான் சிறியவன்), பூவா தலையா தலைப்பில் நீங்கள் எழுதிய புதுதில்லி அரசியல் நன்று.
அந்த பூவா தலையா பாடல் இதோ:
https://www.youtube.com/watch?v=AioxtiLTB3Y
chinnakkannan
21st January 2015, 02:14 PM
ராகதேவன், எஸ்வி, ராகவேந்தர், கலைவேந்தன், கல் நாயக் - அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி
கலைவேந்தன்- அரசியல்பூவா தலையா கட்டுரை நன்றுங்க்ணா.. தாங்க்ஸ்
கல் நாயக் மறைந்திருந்து பார்க்கவில்லை.. முந்தா நாள் வேலை நேற்று வேறு ஊர் (சலாலா என்று ஒரு இடம் போய் நேற்று லேட் நைட் தான்வீடே வந்தேன்).. மிக்க நன்றி வந்தமைக்கு..இடுங்கள்.. நானும் வருகிறேன்..
chinnakkannan
21st January 2015, 02:16 PM
கல்நாயக் நன்னாத் தான் கவிதை எழுதறேள்..எனக்கு ப் போட்டி என்றவுடன் கை கால் லாம் நடுங்குதுங்க்ணா..
படபடத்துத் தந்தீரே கல்நாயக் பாட்டாய்
தடதடக்கும் என்னுடைய தாள்..
த
kalnayak
21st January 2015, 02:38 PM
நீங்க வந்துட்டேளில்லையா? இனிமேல் எனக்கு கவிதை வராது.
உங்க கவிதைக்கு முன்னாடி என்னோடது நிக்குமோ? - நிக்கவே நிக்காதுங்கறேன். இதுல என் கவிதைக்கு நீங்க நடுங்கறேளா? யாரும் நம்பமாட்டாள் போங்கோ!!!
Russellzlc
21st January 2015, 02:41 PM
பூவா தலையா? பதிவுக்கு பாராட்டு தெரிவித்த திரு. சின்னக் கண்ணன் அவர்களுக்கும், பாராட்டு தெரிவித்ததுடன் பாடலை தரவேற்றிய திரு.கல்நாயக் அவர்களுக்கும் நன்றி. எனக்கும் அய்யா வேண்டாம். நாங்களும் யங்ஸ்டருங்கோ! (எத்தனை வருஷம் முன்னாலன்னு கேட்கப்படாது)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
21st January 2015, 05:49 PM
கலைவேந்தன்.. எனக்கும் சார் திருவெல்லாம் போட வேண்டாம்.. மறுபடி உடனே உங்களைப் பார்த்த மகிழ்ச்சியில்..ஒரு பாட்..இது கல் நாயக்கிற்கும் சேர்த்து.. கல்லிலே கலை வண்ணம் கண்டான்.. ஒரே பாட் வரில்ல ரெண்டு பேரு..(பாதி பாதி!) :)
http://www.youtube.com/watch?v=EdysGi1bmJk
kalnayak
21st January 2015, 06:21 PM
மறுபடி உடனே உங்களைப் பார்த்த மகிழ்ச்சியில்..ஒரு பாட்..இது கல் நாயக்கிற்கும் சேர்த்து.. கல்லிலே கலை வண்ணம் கண்டான்.. ஒரே பாட் வரில்ல ரெண்டு பேரு..(பாதி பாதி!) :)
ஆஹா. அருமை. எங்கிருந்தய்யா இப்பிடியெல்லாம் புடிக்கிரீங்க?
chinnakkannan
21st January 2015, 10:40 PM
//ஆஹா. அருமை. எங்கிருந்தய்யா இப்பிடியெல்லாம் புடிக்கிரீங்க?//
ஹை..ஓட்டாதீங்க குரு நான் ஏதோ ஒண்ணும் எழுதாம இருக்கேனேனு மெய்யாலுமே வருத் வருத் வருத்தப் பட்டுக்கிட்டே இருக்கேன் தெரியுமா..
ஆமா என்ன சொன்னேன்.. மெய்..மெய்னா உடம்பு, உண்மை..ஹை..இத வச்சே எழுதிப் பார்க்கலாமா
.
பொய்யுரைக்கும் பின்னாலே போகப் பழிவாங்கும்
ஒய்யாரங் காலத்தில் ஓடிவிடும் – தொய்விலா
எண்ணங்கள் பல்கொண்டு ஏதேதோ செய்கின்ற
மென்மைப்பெண் மெய்யாகு மே
அதுல பாருங்கோ இளம்பொண்ணு – அப்பப்ப பொய் சொல்லுவா..பின்னால் போனா முறைச்சு அண்ணன்மார்கிட்ட சொல்லி அடிவாஙக் வைப்பா ஒய்யாரமா இருப்பா காலத்தில் வயசாய்டும் அவளுக்கு.. அதுவும் அவளப்பத்தி நினைப்பு இருக்கே தோரணமா மனச அலங்கரிக்கும் அப்படி மென்மையான அந்த இளவஞ்சி இருக்காளே – உடம்பு மாதிரின்னா..(அவ உடம்பைச் சொல்லலை!)
உடம்பு என்ன அவ்வப்போ பொய் சொல்லும், வயசானா தள்ளாமை வரும்.. ஒய்யாரமா ம்ஹூம் தள்ளாத வயது வந்துரும்.. ஆனா எவ்ளோவயசானா என்ன இந்த மனசுல ஓடற எண்ணங்க்ள் இருக்கே.. ஓ காட்.. அத மட்டும் தடுக்கவே முடியாதாங்காட்டியும்.. ஸோ இளவஞ்சி = மெய் (சரியா வந்திருக்கா..)
சரி மெய்ன்னு என்னல்லாம் பாட்டிருக்கு சாமி..
போவதும் வருவதும் பொய் பொய் பொய் இருக்கற நிமிஷமே மெய் மெய் மெய்னு லேட்டஸ்ட் வைரமுத்து பாட் தான் யாத்ல (ஹிந்தில்ல யாத் நா நெனப்பு) வருது..! ம்ம் கூகுளா வாப்பா வா
பல்லேலக்கால மெய்மெய்மெய்னு மறுபடி வைரமுத்து சொல்றார். இந்தப் பக்கம் உயிரைத்தொடர்ந்து வரும் நீதானே மெய்யெழுத்து நான் போடும் கையெழுத்து அன்பேன்னு மானுட நிலா பாடற பாட் கேக்குது..விஷூவல்ல ஹீரோ பாக்க கஷ்டம்..
மின்சாரப் பூவே பெண்பூவே மெய் தீண்ட வேண்டும்னு சூப்பர் ஸ்டார் மறுப்டியும் பாடறார்.
//கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
பொய் போலவே வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்// ஹைய்யா சுசீலாம்மா பாடற் ஆயிரம் நிலவே வா பாட்டு சிக்கிடுத்து..
உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும்.. (விழியிலே மலர்ந்ததுல்ல வருதே)
ஹையாங்க்க் நெறய மெய் இல்லை போல இருக்கே..சே.என்ன பொய்யான உலகம்ப்பா இது.:) சரி சரி.சுசீலாம்மா பாட்டு போட்றலாம்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RNK9akd_Xu8&x-yt-ts=1421782837&x-yt-cl=84359240
kalnayak
22nd January 2015, 10:33 AM
ஓட்டலைங்ணா. மெய்யாலுமேதான் சொல்றேன். 'மெய்'யை வச்சுகினே எம்மாம் பாட்டு சுகுரா போட்டுகீறீங்ணா!!!
உங்களை மாதிரி மத்த பெருந்தலைகள் எப்பங்க்ணா வருவாங்க? நாம ரெண்டு பேரும் மட்டுமே டீ ஆத்திக்கிட்டு இருக்கோம்!!!
chinnakkannan
22nd January 2015, 11:22 AM
thanksngnaa.. ithu innikku ezhuthina paattu suda suda...
பாரினில் வந்துவிட்டோம் பாழும் மனத்தினிலே
வேரிட்ட ஆசைகள் வீழ்வதெப்போ - தேர்போல்
அசைந்தாடி அங்குமிங்கும் அல்லலுறும் வாழ்வில்
இசைந்தாடி நிற்றல் எழில்
http://www.youtube.com/watch?v=1LoJDdeO3lQ
chinnakkannan
22nd January 2015, 11:32 AM
//உங்களை மாதிரி// சின்ன கரெக் ஷன்.. நம்மள மாதிரி(!).. வருவாங்க.. நம்பிக்கைதான் வாழ்க்கையே
கம்பிமேல் நின்றே காசுக்காய் ஆடுகின்ற
தம்பிபோல் வாழ்க்கை தடம்மாறும் - நம்பிக்கை
நெஞ்சி லிருக்க நேரினிலே சான்றோர்கள்
விஞ்சியிங்கு வந்திடுவார் பார்..
//யானையின் பலம் எதிலே பாட் போடலாம்னு நினைச்சேன் வீடியோ இஸ் நாட் அவெய்லபிள் :) //
kalnayak
22nd January 2015, 12:14 PM
இந்தாங்ணா நீங்க கேட்ட பாட்:
https://www.youtube.com/watch?v=f_f-tzZYOac
kalnayak
22nd January 2015, 12:19 PM
இன்னாமா கவிதை எழுதுறீங்க்ண்ணா. அல்லாத்தையும் போட்டு புஸ்தகம் போட்டுராலாங்க்ண்ணா!!!
kalnayak
22nd January 2015, 12:27 PM
போங்கண்ணா என்னை நானே பெருந்தலைன்னு எப்பிடீங்ண்ணா சொல்லிக்கிறது? ரொம்ப வெட்கமா இருக்குங்ண்ணா!!! இருந்தாலும் நான் பெருந்தலை இல்லைங்கண்ணா!!!
JamesFague
22nd January 2015, 02:46 PM
Mr C K,
Thanks for your rememberence and this melody from Hero Song for you. Enjoy
http://youtu.be/ml6exC77cVs
chinnakkannan
22nd January 2015, 03:42 PM
Thanks s.vasudevan sir.. keep coming :)
kalnayak
22nd January 2015, 03:51 PM
சி.க. மெய்வைத்து இன்னொரு பாடல்:
https://www.youtube.com/watch?v=FqMG-zjTFpk
kalnayak
22nd January 2015, 03:52 PM
சி.க. மெய்வைத்து இன்னொரு பாடல்:
https://www.youtube.com/watch?v=P3wR4C9RuBk
chinnakkannan
22nd January 2015, 08:59 PM
கலக்கறீங்க கல் நாயக்..ம்ம் வீட் போய் பாட் கேக்றேன். சரியா..
அது சரி மெய்க்கு ஆப்போசிட் பொய்..
பொய்க்கு ஒரு லிஸ்ட் போட்டா பெரிஸ்ஸா வரும்..இல்லியோ
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
கவிதைக்குப் பொய் அழகு
பொய் சொல்லக் கூடாது காதலீ பொய் சொன்னாலும் நீயே என் காதலி..
என் கண்ணுல பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் ...
பொய் ஒன்றே ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய் ..
நிறையப் பொய் இருக்கும் போல் இருக்கே..:)
chinnakkannan
23rd January 2015, 09:39 AM
கவிதையும் (கானாவும்) கானமும் – 10
(முன்பு இங்கு நடந்த நாடக்த்தில் எழுதிப்பார்த்த கானா (?) பாட்டு) –இரண்டு பாரா முன்பு எழுதியிருந்தேன்.இப்ப நீட்டியிருக்கிறேன்! (நாடகத்தில் என்பெயர் கீபோர்ட் கிச்சா என் மேலதிகாரிபெயர் மெளஸ் மாதவன்! –)
அந்தப் பக்கம் போகலாண்ணு எலீண்ணா
.. நான் சந்தப் பக்கம் போய்ப் பாத்தேன் எலீண்ணா
பந்தா காட்டின பொண்ணு பேரு எலீண்ணா..
..பக்காவாச் சொன்னா பாரு நளீனா..
கந்தலாகிப் பூட்சு மனம் எலீண்ணா..
..கடவாயில் தெத்துப் பல்லு எலீண்ணா
நொந்து போன நெஞ்சு எல்லாம் எலீண்ணா
..நொடிப்போதில் மாறிப் போச்சு எலீண்ணா..
சொந்தமெனக் கைபுடிச்சேன் எலீண்ணா
..சுடச்சுடன்னு மொறச்சுப் பாத்தா எலீண்ணா
கொந்தளிப்பா எனநெனச்சேன் எலீண்ணா..
..குறும்பாகச் சிரிச்சுப்புட்டா எலீண்ணா..
எந்தக்கடை சீலையின்னு எலீண்ணா
..எசவாகக் கேட்டதுக்கு எலீண்ணா
தந்த்க்கையை நீட்டிஅவ எலீண்ணா
..தணிவாகச் சொல்லிப்புட்டா எலீண்ணா
பந்தலில ஒக்கார எலீண்ணா
..பரிசம்போட வரும்போது எலீண்ணா
செந்தழலாய் முகம்சிவக்க எலீண்ணா
..சீக்கிரமா வாசொன்னா எலீண்ணா..
**
ஹை..சிவாஜி செந்தில் புண்ணியத்தில் ஜெ.சர்ரூ வாழ வைத்த தெய்வம்.அந்த்க் கால கானா!
http://www.youtube.com/watch?feature=player_embedded&x-yt-ts=1421914688&v=FUJ0cj9pJqM&x-yt-cl=84503534
**
kalnayak
23rd January 2015, 10:33 AM
சி.க.,
இதை*எலீண்ணா கண்ணி என்று அழைக்கலாமேயென்று பார்த்தேன் ஆனால் ஒரு வரியில்*நளீனா என்று முடிவடைந்து கெடுத்துவிட்டதே. மாற்றமுடியுமா பாருங்களேன்*எலீண்ணா கண்ணி*என்று அழைத்துவிடலாம். மற்றபடி வழக்கம் போல் உங்கள் கவிதை உங்கள் கவிதைதான். சுகமானது.
chinnakkannan
23rd January 2015, 10:44 AM
நன்றி கல் நாயக்.இது கண்ணில்லாம் இல்லீங்க்ணா.ச்சும்மா எழுதின கானா.. இதுலயும் மரபு மாதிரி எழுதணும்னு என்னோட கானா குருஆசாத் பாய் சொல்லியிருக்கார். அப்புறம் அந்தப்பொண்ணு பேரு வரணுமோன்னோ.! ஆனா என்ன நடுல்ல இங்க்லீஷ் கலந்து எழுதறது எனக்குப் பிடிக்காது..வரவும் வராது (பாட்டுல சொன்னேன்) ராஜண்ணா எங்கே..
kalnayak
23rd January 2015, 03:07 PM
மரபு நடையில் கானா. இருந்தாலென்ன...எலீண்ணா-ல ஒரு பாட்டு முடிஞ்சா அது எலீண்ணா கண்ணிதானே - பராபரக்கண்ணி போல!!! சும்மா அசத்துங்க.
ராஜண்ணா பயத்துல கொஞ்சம் தூங்கிட்டார். எழுந்ததும் என்ன பண்றாருன்னு பார்ப்போமே. ரயில் இன்னும் போய்க்கொண்டுதான் இருக்கிறது(!?*!)
kalnayak
23rd January 2015, 03:12 PM
பொய்யும் மெய்யும், ஏன் நெய்யும் கலந்த ஒரு பாடல் இந்தாங்ணா:
https://www.youtube.com/watch?v=90XGK7U_Iho
chinnakkannan
23rd January 2015, 03:51 PM
பொய்யின்றி மெய்கொண்டு நெய்கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்.. நல்ல பாட்டுங்க்ணா தாங்க்ஸ் கல் நாயக்..
ஆனால் இதுவரைக்கும் முறைப்படி இருமுடி அணிந்து நான் சபரிமலை போனதில்லை..போனது இருமுறை தான்..88 அண்ட் 98. 88ல் ஜனவரி மாதத்தில் பொங்கல் கழிந்த சில நாளில் என் நண்பன் கோவிலுக்குப் போகிறேன் என்றான்.. மாலைலலம் போடணுமேடா.. ம்ஹூம்.. பின் வழியா போகலாம் வர்றியா சரி என்று கிளம்பிச் சென்று வந்தேன்..பின் 98ம் திடீரென கிடைத்தது வாய்ப்பு லீவில் இருந்த போது.. கேட்டது என் மூத்த மைத்துனர்..ம்ம் என்று போய் தரிசனம் செய்தது நினைவில் பசுமையாய்.அதுக்கப்புறம் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை..ம் அவன்கூப்புடணும்.
Russellzlc
23rd January 2015, 04:02 PM
சின்னக்கண்ணன், கல்நாயக் என்ன இது? வெண்ணிற ஆடை மூர்த்தியின் மீண்டும் மீண்டும் சிரிப்பு மாதிரி நாமே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறோம்? வாசு சார், கிருஷ்ணா சார், ரவி சார், ராகவேந்திரா சார் எல்லாரும் எங்கே? திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்து பணம் படத்தில் இடம் பெற்ற பாடலான ‘எங்கே தேடுவேன்?’ பாடல் நினைவுக்கு வருகிறது. ஆனால், அந்தப் பாடல் ஆட்களைப் பற்றியதல்ல. பணத்தைப் பற்றியது.
தெற்காசியாவில் சமத்துவமின்மையை போக்குதல் என்ற பெயரில் உலக வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே எல்லலையில்லாத இடைவெளி பற்றி விளக்கப்பட்டுள்ளது. சமூக நலத் திட்டங்கள் சரியான முறையில் மக்களுக்கு சென்று சேரவில்லை என்று கூறியிருப்பதுடன், மோசமான வறுமை சமூக மோதல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளது.
http://in.reuters.com/article/2015/01/20/worldbank-inequality-report-idINKBN0KT1KU20150120
அதே நேரத்தில் நாளிதழ்களில் இன்னொரு செய்தி 2014-15ம் ஆண்டில் திருப்பதி கோயிலில் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.900 கோடி. வங்கியில் வட்டியாக ரூ.655 கோடி, பக்தர்கள் மொட்டை அடிப்பது மூலம் அந்த முடிகளை ஏலம் விடுவதன் மூலம் வருவாய் ரூ.190 கோடி. கட்டிடங்கள் மூலம் வாடகை ரூ.108 கோடி.
ஒரு பக்கம் பற்றாக்குறை, வறுமை. கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியமான திட்டங்களுக்கு கூட நிதி குறைக்கப்படுகிறது. மறுபக்கம் கோயில்களில் கோடிக்கணக்கில் நிதி. முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சரி. இப்போதுள்ள பா.ஜ.க. அரசும் சரி. பற்றாக்குறையை சரிகட்ட, அரசுக்கு லாபம் ஈட்ட, நலத்திட்டங்களுக்கு செலவிட என்று கூறி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களைக் கூட தனியாருக்கு விற்கின்றன. லாபம் பார்க்க வேண்டும் என்றுதான் தனியார் வியாபாரத்திலேயே இறங்குகின்றனர். அதன் விளைவுகள்தான் மக்கள் சுரண்டப்படுவதை பார்க்கிறோமே.
அதற்கு பதிலாக, கோயில்களில் இருக்கும் நிதியை நாட்டின் தேவைகளுக்கும் வளர்ச்சிக்கும் நலத் திட்டங்களுக்கும் பெற்றுக் கொண்டால் என்ன? கோயிலில் இருக்கும் நிதியும் மக்கள் கொடுத்ததுதான். மக்கள் சேவையே மகேசன் சேவை அல்லவா? ஆஸ்திக அன்பர்கள் கோபம் கொள்ளக் கூடாது. தனது கோயில் பணத்தை ஏழைகளுக்காக பயன்படுத்தினால் கருணையே வடிவான தெய்வம் கோபிக்குமா?
இன்று கூட கும்பகோணம் அருகே அண்டக்குளம் என்ற இடத்தில் கரும்பு விவசாயி வறுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை தெய்வம் பொறுக்குமா? இந்த லட்சணத்தில் தஞ்சையை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் வேறு. (இதுபற்றி தனியே நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்)
மனிதன் கண்டுபிடித்த பணமே மனிதனை என்ன பாடுபடுத்துகிறது? இந்த நாட்டின் ஏழை மக்களின் குமுறலை வேதனையான நகைச்சுவையோடு பணம் படத்தில் இந்தப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். இதோ பாடல்:
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகிறாயோ?
கஞ்சன் கையில் சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்தி கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டு செய்யும் பணத்தை (எங்கே தேடுவேன்?)
பூமிக்குள் புதைந்து புதையலானாயோ?
பொன்னகையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அடிதன்னில் சரண் புகுந்தாயோ?
சன்னியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ? (எங்கே தேடுவேன்?)
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இரும்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கம் உள்ளவரிடம் இருக்காத பணமே (எங்கே தேடுவேன்?)
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவருக்குள் தங்கமாய் பதுங்கி விட்டாயோ?
சூடம் சாம்பிராணியாய் புகைந்து போனாயோ?
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணமே... பணமே.... பணமே...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
23rd January 2015, 04:06 PM
மூக்குத்திப் பத்தி முன்பே எழுதியிருப்பதாக நினைவு..திடீரென பாட்டுக்குப் பாட்டு விளையாடிய போது கீழ்க்கண்ட பாட்டு நினைவில் வர பாட் வீடியோவில் பார்த்த போது சர்ப்ரைஸ்.. முத்துராமன் பாவாடை சட்டை தாவணி மஞ்சுளா லிரிக்ஸ் + மென் குத்துப்பாட்டு டான்ஸ் நல்லாத் தான் இருக்குல்ல.குட்டிக் குறள் போட்டுடலாமா
நாசியில் குத்திய நற்கவிதை மூக்குத்தி
ஆசியால் மின்னும் அழகு..
//சிவப்புக்கல்லு மூக்குத்தி சிரிச்சு வந்த மான்குட்டி
அடி தங்கமுகத்துல குங்குமப் பொட்டுவச்சுக்கிடடு
நீ எங்கடி போற சுங்குடிச் சேலக் கட்டிக்கிட்டு..//
அரச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதையை நான்பேச.. அப்புறம் வந்த லிரிக்ஸ் மறந்து போச் :)
http://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&x-yt-cl=84503534&v=__01Nap94LM&feature=player_detailpage
chinnakkannan
23rd January 2015, 04:12 PM
பாவம் இந்தப் பாட்டில் ஜெய்சங்கருக்கும் லஷ்மிக்கும் வேறு பிரச்னை..(எப்படில்லாம் காதலர்களுக்கு ப்ராப்ள்ம் வருதுங்க்ணா.) அதுவும் அதே மூக்குத்தியால..
பித்தம் தெளிவதக்குப் பாங்காய் இதழின்மேல்
முத்தமிட ஆவல் முகிழ்த்துவிட – குத்துதே
உட்கார்ந்து கொண்டே ஒளிவீசும் மூக்குத்தி
சட்டமாய் செய்யுதே தான்..
//ஒத்தக் கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் போது
வந்து தடுக்குதடி…//
இதுவும் ஒரு மென்மையான குத்துப்பாட்டு போல ..கு.பா ஸ்டெப்ஸூம் வருதுங்க்ணா.
http://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&x-yt-cl=84503534&v=t5-Ew96izaQ&feature=player_detailpage
chinnakkannan
23rd January 2015, 04:43 PM
ஆர்தர் ஹெய்லியின் ஹோட்டல் என்றொரு நாவல். அதன் பரபர க்ளைமேக்ஸில் திடுதிடுப்பென வரும் ஒரு ஸ்க்ரூ. அந்த ஸ்க்ரூவிற்காக ஒரு பாரா செலவழித்து வர்ணனை செய்திருப்பார்..கடைசியில் அந்த ஸ்க்ரூவானது நெகிழ்ந்து விழும் வண்ணம் இருந்தது அந்த லிஃப்டில் என முடித்திருப்பார்..அப்புறம் அது விழுந்து லிஃப்டும் கீழ் நோக்கி விழுந்துமிகப்பெரியஆக்ஸிடெண்ட் ஆகும்
ஸோ இந்த லிஃப்டுக்குள்ள நடக்கறா மாதிரிபாட்டு தான் இப்ப பார்க்கப்போறது..
ஒண்ணு ஜெய்ஷங்கர் கே.ஆர்வி நிலவே நீ சாட்சி..(என்ன லிரிக்ஸ்ங்க்ணா) பயந்து பயந்து இருவர் மனமும் பாடுவது..என்ன கேஆர்வி சற்றுப் பூசின மாதிர் இருக்கிறார்..
நீ நினைத்தால் இன்னேரத்திலே ஏதேதோ நடக்கும்
http://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&x-yt-cl=84503534&v=S4MOnllw4B4&feature=player_detailpage
அடுத்து இளமைப்புயலாய் கமல்ஹாசன்.. மென்னிளமைத் தென்றலாய் ரத்தி.. இங்கும் லிஃப்ட் தான்..காதலர்களின் இளமைக் குறும்புடன் பாடி ஆடும் பாட்டு.முழுக்க திரைப்படத் தலைப்புகள் ஹிந்தியில்.. ஏக்துஜே கேலியே
மேரே ஜீவன் சாத்தி ப்யார் கியே ஜா
ஜவானி தீவானி
http://www.youtube.com/watch?v=dBVs6be-8Oo&feature=player_detailpage&x-yt-ts=1421914688&x-yt-cl=84503534
chinnakkannan
23rd January 2015, 05:09 PM
கலைவேந்தன் ஸாரி. நான் இந்தப் பாடல்களுக்கு பாட்டு எழுதுவதில் மூழ்கி இருந்ததால் தங்கள் பதிவைப் பார்க்கவில்லை..மன்னிக்க.ஆமாங்க.. தெரியலை..கண்டிப்பா மறுபடி வந்துடுவாங்க என நினைக்கிறேன்.. (இருந்தாலும் வெஆமூ வோட மீமீ சிரிப்புன்னு பொருத்தமா சொன்னீங்க பாருங்க ஒருஓ உங்களுக்கு)
//ஆஸ்திக அன்பர்கள் கோபம் கொள்ளக் கூடாது. தனது கோயில் பணத்தை ஏழைகளுக்காக பயன்படுத்தினால் கருணையே வடிவான தெய்வம் கோபிக்குமா// தெய்வம் கோபிக்காதுங்க..பட் நீங்கள் பேசுவது கொஞ்சம் நடக்குமா என்பது கேள்விக்குறியே அப்புறம் இந்த விவாதம் பல கதவுகளைத்திறது வைக்கும்..இங்கு வேண்டாமே.ஆனால் உங்களது மென்மனசு எனக்குப் புரிகிறது..
என்.எஸ்.கே பாட்டு பிடிக்கும் எனக்கு..நினைவு படுத்தியமைக்கு நன்றி..
kalnayak
23rd January 2015, 05:21 PM
கலைவேந்தன்,*
கோயில் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை பற்றி திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியதை இன்றைய செய்தித் தாள்களில் கண்டேன். அது என்னவோ தெரியவில்லை, ஒரு ஆன்மீகர் சொல்லியிருந்தாலாவது என் மனம் ஏற்றுக் கொண்டிருக்குமோ என்னவோ அவர் சொல்லும்போது எனக்கு ஏற்க முடியவில்லை. நீங்களும்*ஆஸ்திக அன்பர்கள் கோபம் கொள்ளக் கூடாது எனச் சொல்லியிருந்தீர்கள். உங்களைப் பற்றி தெரியவில்லை. இதைப் பற்றி சொல்வதற்கு எனக்கு முழு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால்அதே சமயம், இதை நல்ல ஆஸ்திகர்கள் ஏற்றுக்கொண்டு சம்மதிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்கள் சம்மதமே முக்கியம் என்று எனக்குப் படுகிறது.*
கலைவாணரின் 'எங்கே தேடுவேன்' பாடல் இதோ:
https://www.youtube.com/watch?v=9cBpl6Adb-w
மற்றபடி எனக்கும் சற்று சிரமமாகத்த்தான் தெரிகிறது வாசுதேவன், ராஜேஷ், கிரிஷ்ணா, ராகவேந்தர், ராஜ்ராஜ், வினோத் போன்ற பெருந்தலைகள் வராமலிருப்பது. பார்க்கலாம் எப்பொழுதான் வருகிறார்கள் என்று.
chinnakkannan
23rd January 2015, 05:23 PM
அன்பின் வாசுசார்
உங்களுக்கு ஒரு பி.எம் பண்ணியிருந்தேன் நேற்று.பார்க்கவும்.
chinnakkannan
23rd January 2015, 05:25 PM
//மற்றபடி எனக்கும் சற்று சிரமமாகத்த்தான் தெரிகிறது // எனக்கும் தான்..சிரமம் என்பதை விட வருத்தம் என்பது பொருத்தமாய் இருக்கும்..ஆமாம் கல் நாயக்ங்க்ணா.. நா ரொம்ப போரடிக்கிறேனா.:)
Russellzlc
23rd January 2015, 05:34 PM
நன்றி சின்னக் கண்ணன், கல்நாயக்.
கல்நாயக், ‘‘இதை நல்ல ஆஸ்திகர்கள் ஏற்றுக் கொண்டு சம்மதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது’ என்று நல்ல மனதோடு கூறுகிறீர்களே. இந்த தகுதியே உங்களுக்குப் போதும். இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்? ஆன்மீகர் கூறினால் உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும். அப்படித்தானே?உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதோ ஒருவர் கூறுகிறார். ..... ‘நான் ஆஸ்திகன்’.
‘நான் வெஜிடேரியன்’ மாதிரி ‘நான் ஆஸ்திகன்’ போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நிஜமாகவே நான் ஆஸ்திகன். நன்றி.
சின்னக் கண்ணன், நீங்க போய் போராடிக்கிறேள்னா நாங்கள்ளாம் என்னாத்த சொல்ல..? அசத்துங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
23rd January 2015, 05:35 PM
சி. க.,
கலைவேந்தன் அவர்களுக்கு உங்கள் பதிலை பின்னர்தான் பார்த்தேன். அவர் தம் பாணியில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கருத்தை சொல்கிறார். **தன் முந்தைய பதிவில் கூட தில்லி அரசியலை பூவா-தலையா பாட்டுக்கு கொடுத்திருந்தார் அல்லவா? அதுவும் விவாதமாகி இருந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி நடக்க வில்லையே.
அவர் தன் கருத்துககளை சொல்லட்டும். அதை வேண்டாமென்றால் உங்களைப் போலவே யார் வேண்டுமானாலும் சொல்லட்டும். விவாதிக்காமல் விட்டு விடலாம். இது என்னுடைய அபிப்ராயம். தவறிருந்தால் சொல்வீர்.*
kalnayak
23rd January 2015, 05:41 PM
அய்யோ சி.க. திடீர்னு இப்பிடி கேட்டுபோட்டீங்க. நீங்களாவது போரடிக்கிறதாவது. நீங்களும் இல்லாதப்பததான் போரடித்தது.
kalnayak
23rd January 2015, 05:57 PM
சி.க.
மூக்குத்தியீல் பிரபலமான ஒரு பாடல் (கங்கை அமரன் இசையில்):
https://www.youtube.com/watch?v=IJEDMDSXjGI
Russellzlc
23rd January 2015, 06:02 PM
சி. க.,
கலைவேந்தன் அவர்களுக்கு உங்கள் பதிலை பின்னர்தான் பார்த்தேன். அவர் தம் பாணியில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கருத்தை சொல்கிறார். **தன் முந்தைய பதிவில் கூட தில்லி அரசியலை பூவா-தலையா பாட்டுக்கு கொடுத்திருந்தார் அல்லவா? அதுவும் விவாதமாகி இருந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி நடக்க வில்லையே.
அவர் தன் கருத்துககளை சொல்லட்டும். அதை வேண்டாமென்றால் உங்களைப் போலவே யார் வேண்டுமானாலும் சொல்லட்டும். விவாதிக்காமல் விட்டு விடலாம். இது என்னுடைய அபிப்ராயம். தவறிருந்தால் சொல்வீர்.*
கரெக்ட் கல்நாயக். என்னுடைய கருத்தை மட்டுமே சொன்னேன். யாராவது மாற்றுக் கருத்து தெரிவித்தால் கூட நான் விவாதிக்க மாட்டேன். மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிப்பேன். என் கருத்து எனக்கு. அவர்கள் கருத்து அவர்களுக்கு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
23rd January 2015, 06:03 PM
இன்னொரு மூக்குத்தி பாட்:
https://www.youtube.com/watch?v=FQ6-clQ806Q
அடிக்காதீங்க, அடிக்காதீங்க. வலிக்குது.*
kalnayak
23rd January 2015, 06:09 PM
அப்புறம். மூன்று நாட்களுக்கு திரி பக்கம் நான் வரமாட்டேன், வெளியூர் போவதால். கலை வேந்தரும் சிகவும் தொடர்ந்து கொண்டு இருங்கள். மற்றவர்களும் கலந்து கொள்ளட்டும்.செவ்வாய் கிழமை கலந்து கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துககள்.*
இப்போதைக்கு உங்களிருவரிடமும் விடை பெற்றுக் கொள்கிறேன். வணக்கம்.
chinnakkannan
23rd January 2015, 06:18 PM
//அவர் தன் கருத்துககளை சொல்லட்டும். // கல் நாயக் கலைவேந்தன் நன்றி..ஹையாங்க் நான் சொல்ல வேணாம்னுல்லாம் சொல்லலை.அப்படி தொனி அந்தவரிக்குவந்துடுச்சா.. ஸாரி..கலைவேந்தன் நீங்கள் உங்கள் கருத்தை எழுதுங்கள்.வித்யாசமாகவும் அழகாகவும் எழுதுகிறீர்கள்
பாட்டுகளுக்கு தாங்க்ஸ் கல் நாயக்..இன்னும் வேலையே ஆரம்பிக்கலை அதுக்குள்ள சுட்டியா ..லீவா..சரி சரி சமர்த்தாய் ஊர் போய்ட்டு வாங்கோ..எஞ்ச்சாய் யுவர் ஹாலிடே.(எங்களுக்கும் இங்கு திடீரென விடுமுறை..ஆக்சுவலா இன்றும் நாளையும் வீக் எண்ட் லீவ்.. நாளன்னிக்கும் லீவு..சவுதி மன்னர் மறைந்ததால்..பட் நான் ஆஃபீஸ் போகணும் வேலை இருக்கு)
Russellzlc
23rd January 2015, 06:40 PM
//அவர் தன் கருத்துககளை சொல்லட்டும். // கல் நாயக் கலைவேந்தன் நன்றி..ஹையாங்க் நான் சொல்ல வேணாம்னுல்லாம் சொல்லலை.அப்படி தொனி அந்தவரிக்குவந்துடுச்சா.. ஸாரி..கலைவேந்தன்
நன்றி சின்னக்கண்ணன். ஸாரி கேட்க வேண்டிய தேவையே இல்லை. நீங்கள் எதுவும் தவறாக சொல்லவும் இல்லையே. புரிதல் ஏற்பட்டு விட்டால் தவறாக சொல்லியிருக்கிறாரோ என்ற எண்ணமும் வராது. ஸாரி சொல்லவும் மாட்டோம். நான் உங்களை புரிந்து கொண்டிருக்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
23rd January 2015, 09:59 PM
நன்றி கலைவேந்தன். என்னைப் புரிந்து கொண்டமைக்காக..ஒரு சின்ன அன்புப் பரிசு!
*
ம.தி, முத்துராமன், ஜெயலலிதா.. ஒரு தாய் மக்கள்.. வெகு அழகிய பாடல்..
பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதைக்கேட்டு தேடினேன் வலை போட்டு
http://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&x-yt-cl=84503534&v=B3SPPn9BIGw&feature=player_detailpage
chinnakkannan
24th January 2015, 12:08 PM
ஜெய்ஷங்கர் ஜெயசித்ரா ஜோடியில் கலாமாஸ்டரின் வார்த்தைப் ப்ரயோகமான கெமிஸ்ட்ரி கொஞ்சம் நன்றாகவே இருக்கும். ஜெயசித்ரா உணர்ச்சி வசப்படுவது போல் நடித்தால் கொஞ்சம் வாயைக் கோணிக் கொள்வார்!
இருந்தாலும் சில படங்கள் ஓகே தான்.. இந்தப் பாட்டில் இரண்டு ஜெயசித்ரா – கொஞ்சம் கூட டிஃபரன்ஷியேட் பண்ணிக் காண்பிக்கவேண்டும் என்று நினைக்காமல் நடித்திருப்பார் – டைரக்டர் சொன்னதாலோ என்னவோ..மாடர்ன் ட்ரஸ், பாவாடை சட்டை தாவணி இரண்டுமே இரண்டு காரக்டர்ஸூக்கும் உள்ள வித்யாசம்.. சக்கப்போடுபோடு ராஜா படம் என்று நினைக்கிறேன்..
கவிதை நான் கவிஞன் நீ..
ஜெய்சித்ரக் கவிதை ஜெய்ஷங்கரக் கவிஞன்..ம்ம்
பச்சைத்தோட்டம் பாவையுன்மேனி
பாடிப்பறப்பேன் நானொரு தேனி!// காய்கறித் தோட்டத்துல தேனி எப்படிப் பறக்கும்?!
http://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&x-yt-cl=84503534&v=8KV7mUex118&feature=player_detailpage
chinnakkannan
24th January 2015, 12:16 PM
கலைவேந்தன் உங்கள் சிந்தனையை ஒட்டியே சில நாட்களுக்கு முன் நானே எழுதியிருக்கிறேன்..
அவலங்கள் எல்லாமே அடியோடுதான்
..அவனியிலே எப்போதும் ஒழிந்திட வேண்டும்
புவனமிது பூலோகம் சொர்க்க மென்றே
…புவியதுவும் சீக்கிரமாய் மாறவேண்டும்
அவதிமிகும் கொடியநோய்ப் பேய்களெல்லாம்
…ஆர்ப்பட்ட மிட்டலறி ஓட வேண்டும்
நவதான்யம் மற்றுபல செல்வமெல்லாம்
..நரருக்கு அருள்புரிவாய் சக்தி யம்மா
சரி தானுங்களே :)
http://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&v=zfg570GS_ds&feature=player_detailpage&x-yt-cl=84503534
chinnakkannan
25th January 2015, 04:47 PM
நனவில் சிரித்திடும் நங்கையை நோக்க
கனவதில் வந்தவள்போல் காண – மனத்துளே
தங்கி இருந்தவள் தானாய் வரக்கண்டு
பொங்குதே நெஞ்சமும் போம்.
கனவில் நின்ற திருமுகம் கன்னியிவள் பொன்முகம்
http://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&x-yt-cl=84503534&v=1BlDnNKdnQ4&feature=player_detailpage
chinnakkannan
26th January 2015, 10:24 PM
தொழில் பாட்டுக்கள் 9
******************
அது ஒரு கனாக்காலம் என்று ஆரம்பிக்கலாமா.. அல்லது
அது ஒரு கற்பனைகள் பூத்துக் குலுங்கித் திரிந்த காலம் எனலாமா
அல்லது அது ஒரு அழகிய எழிலெலாம் கோர்த்த வெள்ளந்தி மனம் கொண்டிருந்த, இகவாழ்வு பற்றி அறியாத இளமைப் பருவம் எனலாமா..
(யோவ் என்ன தான்யா சொல்ல வர்றே நீ..
வெய்ட் வெய்ட்)
யெஸ். இளமைப் பருவம்.. என்னுடையது.. 1990. தலைகீழ்ப் ப மீசை, கண்களில் மின்னல், காதுகளுக்குத் துணையாக விருதாவுடன் மின்னிய கிருதாக்கள், விட்டேத்தியாய் அலைபாயும் தலைமுடியை அடக்கி வாசித்திருந்த சமயம்..பின்ன ஆஃபீஸுக்குள்ள போய் வந்துக்கிட்டிருந்தேன்.
ஒரு நாள் டெலிஃபோன் தபுவாய் ச் சிணுங்கிக் கூப்பிட்டது..
எடுத்தால் “ நாளைக்குக் காலை கிளம்பறியாடா கண்ணா..கூட ஹரி வர்றானா”
கேட்டது டாக்டர் கல்யாணி ஆண்ட்டி.. என் சகோதரியின் கணவரின் ரிலேஷன். இருந்தது அபுதாபி தாண்டி டெல்மா ஐலேண்ட் எனப்படும் இடத்தில்.. வேலை ஹாஸ்பிட்டல் இன்சார்ஜ்.. கைனி. (இப்போது அவர் உயிருடன் இல்லை)
யெஸ் ஆண்ட்டி.. ஹரியும் வர்றான்..காலைல பஸ்ல அபுதாபி வந்துடுவோம்..பின் அங்கருந்து ஜபல்தானாக்கு இன்னொரு பஸ்..அப்புறம் கடல்கரை தானே..போட் தானே..
ஆமாம்” என்றார் டாக்டர்.. “ நீ வர்றச்சே ஃபெர்ரி போயிருக்கும். ஸோ கரைல்ல ஒரு மோட்டார் போட் சின்னது சொல்லியிருக்கேன்.. ரெண்டு லோக்கல் ஆள் இருப்பாங்க..என் பேரைச் சொல்லு. நானும் அவங்களோட பேசிடறேன்..
சரி என்று ஃபோனை வைத்து ஹரியைக் காலை வரச் சொல்லிவிட்டு உறங்கினேன்..
மறு நாள் காலை கத்தரிக்காய்க்கு கைகால் முளைத்துக் கண்ணாடியும் போட்டாற்போல் இருந்த ஹரி துள்ளிக் குதித்து வர அவனை அள்ளி பஸ்ஸிலேற்றி துபாய் டு அபுதாபி இரண்டரை மணி கழித்து அபுதாபி ட்டு ஜபல்தானா இரண்டுமணி நேரம் ட்ராவல் செய்து அந்தப்பக்கம் உள்ள கடற்கரையை அடைய மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. (நடு நடுவில் பஸ் மாற காத்திருக்க வேண்டியிருந்தது)
போனால் ஒரு சின்ன இயந்திரப் படகு..முழு வெள்ளை ஆடை அணிந்து தலையிலும் முக்காடும் அணிந்த இரண்டு அரபு நபர்கள்..
ஹாய்..
ஹாய்.. நீங்கள் டாக்டர் சொன்ன..
அவர்களே தான்.. போகலாமா..
இரண்டு அரபு நபர்களில் ஒருவன் ஒல்லி கருப்பு இன்னொருவன் செவேலென இருந்தான் சற்றே குண்டு.. டபக்கென எங்களை ஏறச் சொல்ல, மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த அலைகளினால் சற்றே மெலிதாக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்த படகில் கால் வைக்க அது வெட்கப் பட்டு மறுபடியும் ஆட ஹரி பொத்தென உள் விழுந்தான். பின் நான் ஏறி அமர..ட்ர்ருர்… எனக் கிளம்பி கடலில் படகு தாவினால்..
ஆஹா.. மேலே வெளிர் நீல வானம்.. சிலச் சில வெண்ணிற மேகங்கள் பலப் பல வடிவில்.. கீழே யாரோ கோபித்துக் கொண்டு வெள்ளிக்காசுகளை நீலப் படுக்கை விரிப்பில் எறிந்தாற்போல் மின்னுகின்ற கடல்..
கிடுக் கிடுக்கென இருபது நிமிடத்தில் படாரெனக் கடல் நடுவில் வந்துவிட சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நீல ம் நீலம் நீலம்…
எவ்ளோ நல்லா இருக்கு – என்றான் ஹரி..
ம்ம் என்றேன் நான்..என் மனக்கடலில் சாண்டில்யனின் ராஜதிலகக் கதா நாயகி மைவிழிச் செல்வி (எப்படிச் சுருக்கிக்கூப்பிடலாம் மையூ..ம்ஹூம் செல்லூ!) வாளை மீன் குட்டியாய்க் கடலில் நீந்திக் கொண்டிருக்க அருகில் ராஜசிம்மனாய் மாறிய நான் அவளுக்கு இணையாய் நீந்த இடையில் அவள் இடையில் கை பட அவளோ மென் குரலில் கடலுக்குள்ளேயே சிவந்த உதடுகளை அசைத்து “ம்க்கும் இப்படி எல்லாம் செய்தால் எப்படி நீந்துவது ட்ர் ரி க் க்ர்ர்ர்” என ஏன் இவள் குரல் இப்படி இருக்கிறது என திடுக்கென முழித்தால்.. படகு நின்றிருந்தது. நடுக்கடலில்..
“என்ன ஆச்சு”
ஒல்லி அரபி நோப்ராப்ளம் என மென்சிரிக்க குண்டு அரபி மோட்டாரைக் கொஞ்சம் செக் செய்து கொண்டிருக்க ஹரி கவலையுடன் “ கண்ணா என்னடா இது”
“அவன் தான் நோ ப்ராப்ளம்னு சொல்றானே”
“எனக்கென்னவோ பயம்மா இருக்குடா..அதோ பார்” நடுக்கடலைக் காட்டினான்.”அங்கிட்டிருந்து என்னோட தாத்தா கூப்புடறமாதிரி இருக்கு”
“ஷ் ஷ்..கவலைப் படாதே” எனச் சொன்னாலும் என்னையும் கவலை பற்றத் தான் செய்தது..சற்றே ஆடிய படகில் ஒல்லியும் ஹெல்ப்புக்கு ச்சென்று மோட்டாரின் கவரைக் கழற்றி உடம்பு தெரிந்து செக்ஸியாக நின்றிருந்த இயந்திர பாகங்களை என்னவோ ஆராய்ந்துகொண்டிருந்தான்..
ஹரி விடாமல், “கண்ணா.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா கல்யாணம் பண்றதா இருந்தோமே” எனப் புலம்ப “அப்படில்லாம் ஐடியா வச்சிருந்தீனா நானே இப்படிக் குதிச்சுடுவேன்” என நான் சொல்ல “இல்லடா நீ தனியா நான் தனியாடா “ என எக்ஸ்ப்ளனேஷன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ட்ர்ரு ட்ரு.. மோட்டார் கிளம்பி விட்டது..
துள்ளிக் குதித்து டுவேர்ட்ஸ் டெல்மா ஐலாண்ட்..ஆனால் எனக்கோ மனதில் தினம் தோறும் கடலாடுபவர்கள் நினைவில் வந்தார்கள்..மீனவர்கள்..
பின் அரைமணி நேரத்தில் டெல்மா ஐலண்ட் போய் அங்கிரு நாட்கள் கல்யாணி ஆண்ட்டியுடன் தங்கி அந்தக் குட்டி த் தீவைச் சுற்றிப்பார்த்து பின் துபாய் வந்தது எல்லாம் கனவாய்த் தான் இருக்கிறது..
இருந்தாலும் இந்தக் கடல் – இன்று வரைத்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்னை..
கடல் எப்போதும் ஆச்சரியம் தான்..
**
ஆழம் பலகொண்டு ஆட்டுவிக்கும் நெஞ்சத்தில்
கோலமிட்டு நன்றாய் கொலுவிருக்கும் - வேழத்தைப்
போல வலுவும் பொலிவுகளும் கொண்டமங்கை
நீலக் கடலுக்கு நேர்
சுமையெதுவும் எண்ணாமல் சூதானமாய் நின்றே
அமைதியாய் உள்ளிருக்கும் ஆற்றல் – இமைப்பொழுதில்
சூறையென ஆடியே தூற்றியே நீர்தூவும்
பிறைநெற்றிப் பெண்ணாம் கடல்
முத்த மிடுதற்போல் மீன்களது நீந்தியங்கு
சித்தமது சொன்னாற்போல் செல்வதுவும் – நித்தமும்
எண்ணிலா ஜீவன்கள் ஏற்றமாய் வாழுமிடம்
கண்படுங் காதற் கடல்
அலைபோல எண்ணங்கள் ஆர்ப்பரிக்கும் என்பார்
கலையாக ஆடுங் கடலால் – வலைவீசும்
ஆடவர் மீன்பிடிக்கும் அல்லலெலாம் கண்டாலோ
வாடி மனமிளகு வார்..
**
கடலைப் பற்றிய பலபடங்கள் வந்திருக்கின்றன..இருந்தாலும் மனதுள் பதிந்த ஒரு படம் அது.. அதைப் பற்றி..அடுத்த போஸ்டில் :)
**
chinnakkannan
26th January 2015, 10:26 PM
தொழில் பாட்டுக்கள் - 9 (தொடர்ச்சி) பகுதி இரண்டு..
**
நீளமாய், நீலமாய் வானில் காய்ந்துகொண்டிருந்தான் கதிரவன்..
கீழே அவனைப் பிரதிபலித்தவண்ணம் சிற்சில எண்ணச் சலனங்களைக் கொண்டவாறு அலைபாய்ந்திருந்தது..கடல்..
சற்றுத் தள்ளிக் கரையோரம் போடப்பட்டிருந்தது ஒரு தோணி..கொஞ்சம் நீளவாக்காக இருந்தாலும் சற்றே உயரமாக இருந்தபடியால் தோணியின் அந்தப்புறத்தில் கொஞ்சம் நிழல்..அந்த நிழலில் சாய்ந்து கொண்டு பரீக்குட்டி..அவனைப் பார்த்தபடி நின்றிருக்கும் கறுத்தம்மா..
கறுத்தம்மா தன் வெண்பற்கள் காட்டிச் சிரித்தாள்..”என்ன சின்ன மொதலாளி..என் அப்பாக்கு தோணிவாங்கக் காசு வேண்டுமென்றால் எனக்காக வேண்டுமென்றால் தாரேங்கறீங்க.. எம்மேல அம்புட்டு நம்பிக்கையா”
சிரித்த கறுத்தம்மாவையே பார்த்தான் பரீக்குட்டி..இவள் .கறுத்தம்மா..மரக்காத்தி..சிறுவயது முதற்கொண்டே இந்தக் கடற்கரையோரம் எனக்குக் கிடைத்த சினேகிதி.. நாங்கள் பேசாச பேச்சா..விளையாடாத விளையாட்டா..ஆனால் இப்போது..
மீண்டும் பார்க்க கறுத்தம்மாவின் உடை.. பெயர் தான் கறுத்தம்மா..ஆள் நல்ல சிவப்பு.. அவள் கழுத்திலிருந்து இடைவரை சரேலென இறங்கி அடங்கியவண்ணம் இருந்த செவேல் ரவிக்கை. பின் மாலை மங்கி இரவு கூடிவரும் பொழுதில் மெல்லிய இருள் படரும் மலர்களைப் போல சற்றே மங்கிய நிறத்தில் சின்னப் பூக்கள் போட்ட சாயம்போன பாவாடை.. நன்றாகத் தான் வளர்ந்திருக்கிறாள்..உடலெங்கும் ததும்பி நிற்கும் அழகு..அழகுடன் துள்ளும் இளமை..அட இவள் சிரிப்பு என்னை எங்கோ தூக்கிச்செல்கிறதே..
சிரித்துக்கொண்டிருந்த கருத்தம்மா நிறுத்தினாள்.கொஞ்சம் வெட்கம், பயம் வந்தது சின்ன முதலாளி பார்த்த பார்வையினால்..உடலில் ஒருவித கூச்சம்..கூடவே ஒரு சிலிர்ப்பு.. என்னாயிற்று இவனுக்கு என நினைத்துப் பார்வையைத் திருப்ப பயம்..ஏனெனில் தொலைவில் இருந்த மரமொன்றின் பின்னால் பார்த்திருந்த பஞ்சமி.. அவள் தங்கை..
கறுத்தம்மா..
பரிக்குட்டி கூப்பிட்டான்.. ‘உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா”
கறுத்தம்மாவினால் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.. நான் யார் கறுத்தம்மா.. ஒரு மரக்காத்தி..சின்னமொதலாளி வேறு இனம்.. ஆனாலென்ன.. ஏனிப்படி ஒரு கேள்வி.. பதில் சொல்ல நேரமில்லை..பஞ்சமி பார்த்து விட்டாள்..இப்போது கிளம்பியாக வேண்டும்..
வர்றேன் மொதலாளி..
சட்டெனக் கிளம்பிச் சிட்டென ஓடினாள் தொலைவில் இருந்த தனது குடிசை நோக்கி..
அதற்குள் வெடி பத்தவைக்கப் பட்டு விட்டது பஞ்சமியால்..
வீட்டு வாசலிலேயே சக்கி. அவளுடைய அம்மா...”என்ன இவளே..எங்க போன”
அழகின் பொக்கிஷமாய் குறுகுறு கண்களில் கனவுடன் ஓடி வரும் மகள்..அவள் எண்ணம் சக்கிக்குச் சட்டெனவும் புரிந்தது..
“இங்க தான் கொஞ்சம் காலாற நடந்தேம்மா.. நீ ஏன் இப்படிக் கலவரப் படறே”
“கொஞ்சம் உள்ளவா” குடிசையுள் அழைத்துச் சென்று சொன்னாள் சக்கி. “சின்ன மொதலாளி கூடவா இருந்தே”
“ஆமாம்..ச்சும்மா பேசிக்கிட்டிருந்தேம்மா”
“சிரிச்சுப் பேசினயாம்”
“யார் சொன்னதும்மா” பஞ்சமியாய்த் தான் இருக்கும்..மனசுள் நற நற.
‘இந்த பார். நீ வளந்துட்ட . பெரிய பெண்ணாய்ட்ட..ஒனக்குக் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்கணும்னு எனக்கு க் கவலை அடிச்சுக்குது..ஏன் தெரியுமா கறுத்தம்மா.. நீ ஒரு மரக்காத்தி..மரக்காத்திங்கறவ நெருப்பாட்டம் இருக்கணும்.. அப்படி இல்லாம கொஞ்சம் மனச அலைபாய விட்டுட்டு இருந்தேன்னாக்க உன்னைக் கட்டிக்கிட்டவன கடல் காவு வாங்கிடும்.. நியாபவம் வெச்சுக்கோ..”
“அம்மா..ஏம்மா இப்படில்லாம் நெனக்கறே”
“எனக்கு ஒன்னோட நெனப்பு தெரியும்டி..அதான் கண்ணு ஒடம்புல்லாம் மலந்து மலர்ந்து பேசுதே.. அந்த சின்ன மொதலாளி நினைப்புல்லாம் வேண்டாம்..
‘அம்மா”
“சும்மா பேசாத..இன்னிக்கு அந்த ஆளு வரட்டும் அவன்கிட்ட ஒன்னோட கல்யாணத்துக்கு என்ன பண்ணப் போறேன்னு கேக்கப்போறேன்”
சக்கி அந்த ஆள் என்று சொன்னது செம்பன் குஞ்சுவை..அவள் கணவன்..மரக்காத்தன்..இப்போதைக்கு கும்பலோடு கும்பலாய் தோணியிலேறி மீன்பிடிப்பது தான் தொழில்..ஆனால் அவனுக்கும் ஒரு நெடுங்காலக் கனவு..இந்தத் துறையில் சொந்தமாய்த்தோணி வாங்க வேண்டும் என்பது..
அந்த மீன்பிடிக்கும் திருக்குன்றங் கரையில் பலகாலம் கடலாடுபவன் தான் அவன்.. மரக்காத்தன் கையில் துட்டு சேராது என்பது காலம் காலமாகப் பேசப்படும் வழக்கு.. அதை முறியடிக்க வேண்டும். சொந்தத்தோணி எக்கச் சக்க துட்டு..
அன்றிரவு செம்பன் குஞ்சு வர, ஒருபுறம் சக்கி கறுத்தம்மா பற்றி பேச்செடுக்க நினைக்கையிலேயே அவன்சொன்னான்..” ஒரு பழைய தோணி விலைக்கு வருது வாங்கலாமுன்னு இருக்கேன்”
சக்கிக்குக் கறுத்தம்மா பற்றிய கவலை பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட “அவ்ளோ பணம் எப்படி சம்பாரிக்கப் போறீங்க”
“சக்கி. எனக்கு வாரதெல்லாம் உன்கிட்ட தான் கொடுக்கறேன்..”
“அது சரி..ரெண்டு பொட்டப் புள்ள..காலாகாலத்துல கட்டிக் கொடுக்க வேண்டாமா. அப்படி ஒண்ணும் நா நிறையசேத்துடலை. நீங்களும் நிறைய தந்துடலை”
“கவலைப் படாதே சின்ன முதலாளி தர்றேன்னுசொல்லியிருக்காங்க”
“யாரு கிட்டங்கி பரீக்குட்டி மொதலாளியா” சக்கியின் நெஞ்சுக்குள் பகீர்.. “எப்ப்டித்தருவாகளாம்..”
“பிடிக்கிற மீன்லாம் தர்றேன்னு சொல்லியிருக்கேன்.. நாளைக்கே பக்கத்து கிராமத்துல ஒருதோணி விலைக்கு வருது வாங்கப் போறேன்”
உரையாடலைக் குடிசையில் இன்னொரு தட்டியறையில் கேட்டுக் கொண்டிருந்த கறுத்தம்மாவிற்குப் புரிந்தது. பரீக்குட்டியிடமும் அவ்வ்ளவு துட்டு இல்லை..இருக்கிற – தன் கிட்டங்கி வியாபாரத்தின் முதலுக்காக வைத்திருக்கும் பணத்தை – தன்னை நம்பித் தருகிறான் என்பது..ஆனால் அப்பா திருப்பித் தருவாரா என்பது சந்தேகம் தான்.
தொடரும்..
chinnakkannan
26th January 2015, 10:29 PM
தொழில் பாட்டுக்கள் - 9 பகுதி மூன்று..
செம்பன் குஞ்சு வெளியில் போனதும் கேட்டும் விட்டாள். “அம்மா..மொதலாளிக்கு தந்துடுவாரா அப்பா”
சக்கியின் மனதிலும் சந்தேகம் தான்..இருப்பினும்.” நல்லாத்தருவாக சும்மா கவலைப் படாதே”
இரவில் பாயில் படுத்திருக்கும் போது கரையோரம் பரீக்குட்டி பாடும் பாட்டு அவளுக்குக் கேட்டது..விச்ராந்தியாய் வெள்ளந்தியாய் பாடுகின்ற அந்தப் பாட்டு அந்தக் குரல் அவள் மேனியை சிலிர்க்க வைத்தது..
சொன்னாற்போல மறு நாள் தோணி பார்க்கப் போய்விட்டு கொஞ்சம் கவலையுடன் வந்தான் செம்பன் குஞ்சு..
“ஏன் கவலை”
‘சக்கி நீ சேர்த்துருக்கற துட்டும் பரீக்குட்டி கொடுத்திருக்கற முன்னூறு ரூபாயும் பத்தாது.. இதர சாமானுக்கு முப்பதாவது வேணும்”
“என்னபண்ணப் போறீங்க..”
“பரீக்குட்டியையே கேக்கப் போறேன்” போய் கேட்டு வந்தவன்சந்தோஷமாய் இருந்தான்.. முதலாளி தந்துட்டாரு.. நாளைக்கே தோணி வாங்கி மறு நாள் கடல்ல இறக்கறேன்.
அதே போல் தோணியைக் கடலாடி – செம்பன் குஞ்சு சில ஆட்களையையும் வைத்துக் கொண்டு – திரும்பும்போது பார்த்தால் தோணி முழுக்க மீன்கள்..முகம் முழுக்க சந்தோஷம்..
கரையில் வரும்போதே சில்லறைவணிகத்துக்காக மீன்கள் வேண்டி பெண்கள் சூழ்ந்து கொள்ள, கூடவே பரிக்குட்டியும்… ஆனால் செம்பன் குஞ்சு அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை.. வந்த மீன்களையெல்லாம் நல்ல விலைக்கு மற்றவர்களிடம் விற்று கிடைத்த காசை சக்கியிடம் கொடுக்க சக்கி, “மொதலாளிக்கு மீன் கொடுக்கலையா”
“என்ன அவசரம்” அலட்சியமான பதில்.. கொஞ்சம் சேர்த்துக்கிட்டு கொடுக்கலாம்.. இப்ப கொடுத்தா காசு வாராது.. கடன்ல குறைச்சுக்கிடுவார்…
கறுத்தம்மாவுக்கு அப்போதே புரிந்தது.. தன் தகப்பன் பரீக்குட்டிக்குத்தரப் போவதில்லை..
அதே போல் சில மாதமும் போக நல்ல வியாபாரம் செம்பன் குஞ்சுவும் செய்ய பரீக்குட்டி முதல்போடக் காசில்லாமல் அவனது கிட்டங்கி வேலை நின்று போனது..ஆனாலும் செம்பன் குஞ்சுவிடம் கொடுத்த காசை க் கேட்கவில்லை அவன்.
கறுத்தம்மா உசுப்பேற்ற சக்கியும் கவலையாய் சிலசமயம் செம்பன்குஞ்சுவிடம் கேட்டாள்..கிடைத்த பதில் “சும்மா யிரு பொண்ணுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கலாம்”
கறுத்தம்மாவிற்குத்தான் பரீக்குட்டியின் நினைப்பு பொங்கும்..கூடவே சக்கி விடுகிற முறைப்பும் புரியும்..அவனுடன் பேசுவதும் இல்லை.பார்த்தாலும் விலகி விலகிச் சென்றாள்
ஒரு நாள் செம்பன் குஞ்சு சந்தோஷமாய் “ கறுத்தம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்..இதுபழனி.. என்கிட்ட புதுசா சேர்ந்தவன் மத்த குன்றத்து ஆள்..”
“உறவுகள்ளாம்” சக்கி கேட்க “அதெல்லாம் இவனுக்குக் கிடையாது.. நல்ல மரக்காத்தன்..சும்மா சொய்ங்க் சொய்ங்க்னு மீனு அள்ளுறான்.. நல்லா துடுப்பும் போட்றான். கறுத்தம்மாவை கவனிச்சுக்குவான்”
பழனி நல்ல கறுகறுவென்று இருந்தான்..சின்னவயதிலேயே தாய் தந்தை இல்லாமல் தானாக்வே தோணியில் சேர்ந்து தொழில் காரன் ஆனவன் எது பற்றியும் கவலை இல்லாதவன்..
ஆனால் சக்கிக்குக் கொஞ்சம் குழப்பம்..உறவுசனம் இல்லாதவனுக்குப் பொண் கொடுப்பதா.. கறுத்தம்மா ஒன்றும் சொல்லவில்லை. பரவாயில்லை அம்மா..சின்னமொதலாளி கடன் மட்டும் கொடுத்துவிடச் சொல்லு அப்பாவை..
நல்ல நாளில் மீனவர்தலைவரான துறை அரையரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்கையில் தான் அது நடந்தது..
மீனவக் குடும்பங்களில் வேறு துறை க்காரர்கள் மணம் செய்யவேண்டுமென்றால் துரை அரையருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்..செலுத்தாமலும் இருக்கலாம்..ஆனால் துரை அரையர் இஷ்டம் அது..
கல்யாணத்திற்கு பழனி தன் நீர்க்குன்றத்துறையிலிருந்து பத்து ஆண்பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான் அதுவே கறுத்தம்மாவின் துறையில் இருந்தவர்களுக்கு அதிசயம்…என்ன ஒரு பெண்பிள்ளை கூட இல்லை..
துறை அரையர் மாப்பிள்ளை 75 ரூபாய்கொடுக்கணும் கட்டணமாய் என்றதும் வெடித்தது பூகம்பம்.. “அதெப்படிக் கேக்கலாம் “ என பழனியுடன் வந்த ஒருவன் கேட்க “அது அப்படித் தான்” எனத் துறை அரையர் சொல்ல வந்தவன் “ எங்களுக்கு விஷயமேதும் தெரியாதுன்னா சொல்றீங்க..ஒங்க துறைக்காரப் பொண்ணு ஒண்ணும் அவ்ளோ சுத்தமிலலின்னு எல்லாரும் பேசிக்கறாங்க.மத்த சாதிக்காரனோட அது சிரிச்ச சிரிப்பு ஊரெல்லாம் சிரிக்குதே..இல்லைன்னா ஏன் சாதிசனம் இல்லாத எங்க ஊர் ஆளை மாப்பிள்ளையாக் கூட்டிருக்கீங்க”
(தொடரும்)
chinnakkannan
26th January 2015, 10:30 PM
தொழில் பாட்டுக்கள் 9 - பகுதி நான்கு..
கேட்ட பழிச்சொல்.. சக்கி எதிர்பார்த்துப் பயந்த சொல்.. கறுத்தம்மாவை பார்த்து நடந்துக்கோடி எனச் சொல்லிச் சொல்லி வளர்த்தும் எங்கிருந்தோ வந்தவன் ஏகடியமாகச் சொன்ன சொல். சக்கி அப்படியே மயங்கி விழ வைத்தியரைக் கூப்பிட ஆள் போகிறது.
செம்பன் குஞ்சுவோ பழனியைத்தனியாகக் கூப்பிட்டு தன் பணம் 75 ரூபாயைக் கொடுத்து துறை அரையனிடம் கட்டச் சொல்ல கல்யாணம் நடக்க பின் தான் குழப்பமே.
“மாப்பிள்ளை..கொஞ்சம் இங்க தங்கிட்டு அப்புறம் உங்க குன்றத்துக்குப் போங்களே.ன் என் பொண்டாட்டிக்கு உடல் சரியில்லை..கறுத்தம்மா கொஞ்ச நாள் தங்கினா பார்த்துக்குவா”
உள்ளே சக்கிக்கோ மகள் பற்றிய கவலை..மகளிடம் “கறுத்தம்மா என்னைப் பத்திக் கவலைப் படாதே.. இங்க இருந்தால் இன்னும் ஊர் பேசும்.. உனக்கும் மனசு மாறினாலும் ஆகும்..நீ புருஷனோட போய்டு”
“அம்மா”
“இப்ப நீ கல்யாணங்கட்டின மரக்காத்தி. ஒனக்கு நெனப்பு கொஞ்சம் அங்கிட்டு இங்கிட்டு போனாலும் ஒன் புருஷன் உனக்கு இல்லை
” நா அப்படில்லாம் இல்லைம்மா”
“எனக்குத் தெரியும் ஆனா..போய்டேன்..”
பழனி செம்பன் குஞ்சுவிடம்.. “ நான் கூட்டிக்கிட்டே போய்டறேன்.என்னோட ஆட்கள நீங்க என்னபேச்சு பேசினீங்க”
செம்பன் குஞ்சு கெஞ்ச, துறை அரையர் அந்தப் பொண்ணிடமே கேட்கலாம் எனச் சொல்ல கறுத்தம்மாவிடம் கேட்டால் க்றுத்தம்மா “ நான் அவர் கூடவே போறேம்பா”
செம்பன் குஞ்சுவிற்குக் கோபம்மிக அதிகமாகி “என் முகத்துலயே முழிக்காதே போ”
கறுத்தம்மா பிறந்து வளர்ந்து பழகிய கடற்கரையைப் பார்த்தாள் அம்மாவை மறுப்டியும் ஒருமுறை பார்த்தாள்..பின் புறப்பட்டுவிட்டாள் பழனியின் நீர்க்குன்றத்திற்கு..
**
பழனி நல்ல கணவன் தான். சமர்த்தாய் வெள்ளென தோணியோட்டி மீன்பிடித்து மாலை நேரம் வந்துசம்பாதித்ததை கறுத்தம்மாவிடம் கொடுத்து இணக்கமாகத்தான் இருந்தான்.. கறுத்தம்மாவிற்குப் பிடித்த் வண்ணம் எல்லா விதங்களிலும் இருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் அவன் மனதில் வெகு ஆழமாய். கறுத்தம்மா அவள் வீட்டிற்குப் போகக் கூடாது.
கறுத்தம்மாவும் நல்ல மரக்காத்தியாகத் தான் இருந்தாள்..விருப்பத்துடன் தன்னைக் கொடுத்தாள் அவனுக்கு.
அவள் நினைவில் பரீக்குட்டி மங்கிவிட்டான் என்றே சொல்லவேண்டும்..ஆனால் ஊரார் நினைவில். அப்படி இல்லை.
ஒரு நாள்
சூழ்நிலையில் சக்கி மரிக்க செம்பன் குஞ்சுவுக்கு கறுத்தமமாவிடம் சொல்லியனுப்ப மனமில்லை..ஆனால் பரிக்குட்டிக்குத் தான் பொறுக்கவில்லை.
சொல்லலாம் என நீர்க்குன்றம் வர, அங்கு பார்த்தது பழனியுடன் தோணி தள்ளுபவன்..
என்ன திருக்குன்றங்காரவுகளே இந்தப் பக்கம்
கறுத்தம்மா…பழனி வீடு எங்க இருக்கு
எதுக்காம்.
இல்ல கறுத்தம்மா வோட அம்மா இறந்து போய்ட்டாங்க சொல்லலாம்னு தான்
அதுக்கு நீங்க எதுக்கு வந்தீங்க அதுவும் இவ்வளவு கருக்கல்ல இம்புட்டு தூரம் – ம்ம் ஊர்வாய்..அப்படித்தான் கேட்கும்
பரிக்குட்டி எதுவும் சொல்லாமல் விவரம் வாங்கி கறுத்தம்மா இருக்கும் குடிசைக்குச் சென்று தட்ட அவள் கதவைத் திறக்க மறுக்கிறாள்..ம்ஹூம்.. ம்ஹூம் கூடாது.. நான்மரக்காத்தி..என் காதலை, கனவை குழிதோண்டிப் புதைத்தவள். அவனைப் பார்க்கமாட்டேன்..
தூளியில் இருக்கும் இருமாதப் பெண்குழந்தையை ஆட்டியும் விடுகிறாள்…
கறுத்தம்மா
பரீக்குட்டியின் குரல்
கறுத்தம்மாவிற்கோ கையறு நிலை உள்ளே படுக்க விரித்திருந்த பாயில் அப்படியே கூனிக்குறுகி உட்காருகிறாள்
கறுத்தம்மா உன்னுடைய அம்மா சக்கி இறந்து போய்ட்டாங்க. சொல்லத்தான் வந்தேன் – பரீக்குட்டி தள்ளாடி த் திரும்பிச் செல்ல…
இவளுக்கோ காதை சுறா கவ்வியது போலப் பிரமை..ஓஹ்.. எண்ட அம்மே எனக் குரலெடுத்து அழலாம் என்றால் மறுபடி தட் தட்
(தொடரும்)
chinnakkannan
26th January 2015, 10:32 PM
தொழில் பாட்டுக்கள் 9
பகுதி ஐந்து.
யாரு
நாந்தான் – பழனியின் குரல்
கதவைத்திறந்து உதடு கண் கன்னம் தலைமுடி எல்லாம் துடிக்க ஏங்க…
கண்சிவந்திருந்த பழனியோ “என்ன ஒஞ் சின்ன முதலாளி வந்தானா இங்கே”
அதெல்லாம் காதில் விழவில்லை..”ஏங்க எங்கம்மா இறந்து போய்ட்டாங்க நான் போகணும்..
ம்ம் முடியாது ஏன் சொல்லிவிட வேற ஆள் கிடைக்கலையா.. ஏன் இந்த ஆள் வரணும் இன்னும் அவனை நெனச்சுக்கிட்டிருக்கியா
சுருக்..
கறுத்தம்மா பார்த்தாள்..”ஹச்சோ நாந்தான் எல்லாத்தையும் ஒங்ககிட்ட வந்த மொத நாள்ளே சொல்லிட்டேனே. நா எதும் தப்புத் தண்டா செய்யலீன்னு..பேசினதுமட்டும் தான் குத்தம்.. அம்மாவப் பாக்கணுங்க”
‘ஒன்னப் பத்தித் தெரியும்..ஊர்ப்பேச்சு ஒண்ணு இருக்குல்ல..ஆனா ஒங்கம்மா சாவுக்கு நீ போக முடியாது போ” இறுதியான முடிவு பழனியிடமிருந்து.
*
ஊர் பேச்சு எனச் சொன்னது வாஸ்தவம் தான்.. ஒரு நாள் பழனி தோணியில் மீன்பிடிக்கச் செல்லும் போது சுக்கான் பிடித்த படி ஏதோ சிந்தனையில் ஆழ்கடலுக்குள் சென்று விட உடனிருந்த்வர்களுக்கு பயம்.பழனி பழனி என உலுக்கியபிறகு தான் அவனுக்கு நினைவே வந்தது.
கரை திரும்பியதும் சக தோணிஓட்டுபவர்கள் கலந்தாலோசித்து “அவஞ்சம்சாரம் தான் மாறிப்போனது ஊரே சிரிக்கே.. மரக்காத்தி மாறிப்போனா கடல் காவுகொள்ளும்லா..அவம் போறது பத்தாதுன்னு நாமும் சாகணுமா என்ன” எனப் பேசி மறு நாள் அதற்கு மறு நாள் என பழனிகடற்கரைக்கு வரும்முன்னமேயே தோணி எடுத்துச் சென்றுவிட பழனிக்குக் கோபம் வருகிறது.. நான் நல்லவன் என் பொஞ்சாதியும் தான்..
பின் முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் இருட்டிலேயே இருக்கும் ஊரார் தோணியில் மீன் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் உலை பொங்கக் கொடுக்க ஆரம்பித்தான்.
கறுத்தம்மாவிற்கோ வாழ்க்கையே சோகம்..அதில் பழனியின் வார்த்தைகள் வேறு.. இன்னும் நினைச்சுக்கிட்டிருக்கியா.பரீக்குட்டியை.. தன்னைத் தானே கேட்டுக் கேட்டு க் கேட்டு..கடைசியில் ஆம்.. நேசம் இருப்பது பரீக்குட்டியிடம் தான்..அவன் தான் தனக்காக எல்லாம் தியாகம் செய்தான்.. அவனை உதறிவிட்டு விட்டேன்..அவன் மேல ஆசையா..இல்லை இல்லை ஆமாம்..அவனுக்கும் தான்..ஆனா தப்பா ஒரு பார்வை பார்த்ததில்லயே.. நான் செஞ்சது தப்பு தான் …என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கையில்….
…
அங்கே நீர்க்குன்றத்தில் செம்பன்குஞ்சு இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டும் நிம்மதியற்ற நிலையில் இருக்க கருத்தம்மாவின் தங்கை பஞ்சமி அக்கா ஊருக்கு வருகிறாள்.
குழந்த செவேல்னு ஒன்ன மாதிரி இருக்குக்கா
கறுத்தம்மாவிற்கோ ஏக சந்தோஷம் அவ்வளவுதுக்கத்திலும்.. பஞ்ச்சமீயின் கையைப் பிடித்து கட்டிப்பிடிக்க பஞ்சமி எல்லாவற்றையும் சொல்கிறாள்
“அப்பா தோணிய வித்துடுச்சு. அவர் கல்யாணங்கட்டிக்கிட்ட பொம்பளை அவ பையனுக்கு அப்பா பணத்த எடுத்துக் கொடுத்திச்சா அப்பா அவளை வெரட்டி விட்டுட்டார்.. திரும்பவும் கூட்டிக்கிட்டார்.. ஆனா பித்துப்பிடிச்சுடுச்சு அப்பாக்கு
அப்புறம் சின்ன மொதலாளி பரிக்குட்டிய ப் பார்த்தேன் வரவழில்ல.. ரொம்ப மாறிட்டாக..எதையோ பறிகொடுத்தாப்புல.. அவரோட கிட்டங்கியும் போச்சு தெரியும்லா”
எல்லாப் பேச்சும் கறுத்தம்மாவின் காதில் விழவில்லை.கடைசியில் பரீக்குட்டி என்று சொன்னது மட்டும் காதில் விழ.”சின்ன முதலாளியப் பார்த்தியா.எப்படி இருக்காக”
அவள் கேட்டது இன்னொருவன் காதிலும் விழுகிறது..பழனி. உள்ளே வந்து பஞ்சமியை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்து பின் “ நா அன்னிக்கு கேட்டது சரி தான் நீ இன்னும் மறக்கல அவனை”
கறுத்தம்மா விழி சுருங்கி ஏதும் பேசாமல் மெளனிக்க அதுவே அவனுக்கு எதையோ உணர்த்த கோபமாய் வெளியில் கடற்கரைக்குச் சென்று இருந்த தோணியைக் கடலில் தள்ளி வேக வேகமாக கடலுக்குள் செல்கிறான்..
பஞ்சமி குழந்தையைப்பார்த்துக்கோ
கறுத்தம்மா கொஞ்சம் நடக்க சற்றுத்தொலைவில் அந்த மாலை வெளையில் வருவது யார்… தளர்வாய்..பரீக்குட்டி
கறுத்தம்மாவின் கண்கள் அவன் கண்களுடன் பேசுகின்றன
நிறைய ஆசை
நிறைய பாசம்
நிறையக் காதல்
நிறைய ஏக்கம்
நிறைய துக்கம்
துக்கம் விழிகளில் முட்ட சின்ன மொதலாளி இப்படி மாறிட்டீங்களே என்ற வார்த்தைகள் காற்றுடன் சிக்கி ஒலியிழக்க
பரீக்குட்டி – கறுத்தம்மா இன்னும் என்னை விரும்பறயா…
என்ன கேள்வி இது சின்ன மொதலாளி நா எங்க ஒங்களை வெறுத்திருக்கேன்..
விம்மல் அழுகை துடிப்பு ஏக்கம் தடுமாற்றம் – தூண்டிவிடும் காற்று..வெகுதொலைவில் கேட்கும் அலையோசை
கறுத்தம்மா
மறுபடி பரீக்குட்டி விளிக்க அவள் அப்படியே சாய்கிறாள் அவன் மார்பில்.. பரிக்குட்டியும் அணைக்க காற்றுகொஞ்சம் வேகமாய் சுழன்றடிக்கிறது..
*
கடலுள் தோணியைச் செலுத்திய பழனிக்கும் அப்படித்தான். எண்ணங்கள். இப்படி ஒருத்தி இருப்பாளா.. முதலிலேயே சொல்லியிருக்கலாமே. ஏன் காற்று இப்படி அடிக்கிறது அலைகளும் வேகமாகக் கூவுகின்றன.. இதோ இது என்ன…
கன்னங்கரேலெனச் சுறா ஒன்று மேலெழும்புகிறது.. பழனியின் தூண்டிலில் வாய் மாட்ட்டிக்கொண்டிருக்க வேண்டும்..உயிர் போகக்கூடாது எனக்கு.. என்னையா எடுக்கப் பார்க்கிறே என உயிராசையால் மறுபடியும் மோதி அலைபாய..
பழனி வேகமாக இழுக்கிறான்..எங்கிருந்தோ மேகங்கள் சுழற்காற்று..தோணியும் சுழல்கிறது.. இது என்ன எங்கிருந்து வந்தது இந்தக் காற்று.. இத்தனை நாள் கடலாடினேனே எனக்கு நிகழ்ந்ததில்லையே. இது போல்…ஒரு வேளை ஒருவேளை என்வீட்டு மரக்காத்தி தவறிழைக்கிறாளா..இருக்காது.அவள் என்னிடம் தவறேதும் செய்யவில்லை எனச் சொன்னவளாயிற்றே….இருந்தும் அவளைக் குத்திக் காட்டியது தவறோ..என்ன இது இந்தத் தோணி சுற்றுகிறது..இந்தச் சுறாவேறு ஆட்டங்கண்டு இருக்கிறது.. கடலம்மா என்னைக் காவு வாங்கப்போகிறாளா..என்னைக்காப்பது கறுத்தம்மாவின் கையிலல்லவா இருக்கிறது…
கறுத்தம்மா. அடிவயிற்றிலிருந்து உயிரின் ஓசையாய் பழனியின் குரல் இடி மின்னல் காற்றலைகளில் கலந்து அமுங்கிப்போக அவன் தோணி கவிழ்ந்து சுழலில் சிக்கிக் கொள்ள அவனும் சுழன்று சுழன்று சுழன்று அதலபாதாளத்தில்…..
**
மறு நாள் விடிகாலை பஞ்சமி கடற்கரையில் கொஞ்சம் குழந்தையுடன் வெகு தூரம் நடந்த போது தெரிந்தது…வெகு தொலைவில் கடலலைகளுடன் அணைத்தபடி உயிர் விட்டிருந்த கறுத்தம்மாவும் பரீக்குட்டியு.ம்
சில மைல் தொலைவில் உள்ள இன்னொரு கடற்கரையில் தூண்டிலை முழுங்கிய சுறா ஒன்று ஒதுங்கியது..
பழனியின் உடல் மட்டும் கிடைக்கவேயில்லை..
**
இது தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய செம்மீன் மலையாள நாவலின் மிகச் சுருங்கிய சுருக்கம்.. (தமிழில் மொழிபெயர்த்தவர் சுந்தர ராமசாமி)
**
(தொடரும்)
chinnakkannan
26th January 2015, 10:34 PM
தொழில்பாட்டுக்கள் - 9
பகுதி ஆறு..
*****
**
கடல் பாட்டுக்காக கடல் மேல் பிறக்கவைத்தான் எழுதலாம் என இருந்தேன்.பின் இந்தப் படம் செம்மீன் (ஆம் முதலில் நாவலாய் வந்து பின் மலையாளத்தில் திரைப்படமாய் வந்தது) பத்தி எழுதலாம் என்று இருந்தால் படம் பார்த்ததில்லை.. நாவலும் படித்ததில்லை.
பின் வாங்கி வைத்திருந்த நாவல் முழுவதும் படித்த பின் உடனே படம் பார்க்க முடியவில்லை..காரணம் நாவல் அப்படி.அப்படியே கண்முன்னே விரிகின்ற கடற்கரைகள், மீனவ வாழ்க்கை, அவர்களின் சோகம் சந்தோஷம் துக்கம் வருத்தம்..சோர்வு உழைப்பு சுறுசுறுப்பு.. “மரக்காத்தன் கிட்ட துட்டு எப்படி ச் சேரும் தெனம் துள்ளத் துடிக்க ஆயிரம் ஜீவன்க தோணியில அவன முறச்சு பாத்துத் தானே செத்துப் போகுதுங்க.எங்கோ கடலடில நீஞ்சிக்கிட்டிருந்தோமேடா.எங்களக் கொல்றீகளேன்னு எவ்ளோ கதறியிருக்கும்” வசனங்கள்
பின் சில நாட்சென்று தான் படம் பார்த்தேன் போன மாதம் தான்..வாசுசார் முள்ளும் மலரும் ஆரம்பித்திருந்த நேரம்
..சே இவ்ளோ நாள்மிஸ் பண்ணிவிட்டேனே என நொந்து கொண்டது அப்போது தான்....(பாடல்க்ள் கேட்டிருந்தாலும் படமாய்ப் பார்த்ததில்லை)
செம்பன்குஞ்சு – கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் கறுத்தம்மா – ஷீலா சத்யன் பழனி ஆடூர் பவானி – சக்கி.. பரீக்குட்டி மது. என நடிக நடிகையர்கள் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள்.
அதுவும் கறுத்தம்மாவாக ஷீலா கனப்பொருத்தம்.. ரவிக்கை பாவாடையில் இருந்தாலும் விரசமாக இல்லை.. காதலும் நயமாகத் தான் வெளிப்படுத்தியிருந்தார்..புருஷனிடம் கொண்டாடும் அழகென்ன.. பிற மரக்காத்திகள் ஏகடியம் பேசும் போது நடிப்பு வெகு நன்று ( மலையாளத்தில் அரயாத்தி அரயன்..என்பார்கள்)
செம்பன்குஞ்சுவாக நடித்தவர் நாவலில் நான் பார்த்த அதே ஆள்..பரீக்குட்டி மது பழனி எனப் பொருந்திய பாத்திரங்கள்..ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றதில் வியப்பேதுமில்லை.. ரிலீஸான நாள் 19.08.1966. தகழியின் நாவலும் கேந்திர சாகித்ய அகாதமி அவார்ட் 1957ல் பெற்ற ஒன்று..
அதுவும் வண்ணப் படத்தின் ஒளிப்பதிவு. மார்கஸ்பார்ட்லி அண்ட் யு ராஜகோபால்.. காட்சிகள்கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன. கடல் கிராமம் அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய பெருமை இவர்களைச் சாரும்
பாடல்கள் கடலினக்கர போனோரே, மானஸ் மைன வரூ..பெண்ணாளே பெண்ணாளே சலீல் செளத்ரியின் இனிய இசை..மன்னாடேயின் மானஸ் மைன வரூபாட்டு..வசனம் புரம் சந்தனா.இயக்கம் ராமுகரியத்
முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம்.. ஒரு நாவலை அப்படியே வார்த்துத்திரையிலிட்டிருப்பது வெகு அழகு.. ரொம்ப நாள் மனதில் நிலைத்து இருக்கும்..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Qv5p8OwwbYE
வாசு சார் முள்ளும் மலரும் முடிக்கட்டும் என்று காத்திருந்து பின்னும் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி எழுதி..இதோ ஒருவழியாய் முடித்துவிட்டேன்.. சுவாரஸ்யக் குறைவின் அது நான் தான் காரணம்..படம் பாடல்கள் நன்றாகவே இருக்கும்
**
(முற்றும்)
raagadevan
27th January 2015, 03:39 AM
CK: Good writeup! :) You are right; காட்சிகள் கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன! The movie was/is indeed a visual treat, thanks to cinematography by Marcus Bartley (assisted by U. Rajagopal) as well as editing by Hrishikesh Mukherjee (assisted by K.D. George). By the way, வசனம் was by S.L. Puram Sadanandan.
If anyone is interested, here is the full movie: youtube.com/watch?v=bGJrCK0y7Bw
chinnakkannan
27th January 2015, 10:08 AM
ராகதேவன்.. நன்றி. :) நாவலைப் படித்துப் பாருங்கள் ..(ஏற்கெனவே படித்திருக்கிறீர்களா) அப்படியே சிதைக்காமல் கொண்டுவருவது என்பது வெகு கஷ்டம்..இவர்களுக்கு வெகு சுலபமாய் வந்திருக்கிறது..
kalnayak
27th January 2015, 01:23 PM
வந்துட்டேங்ணா, வந்துட்டேன்.
சி. க., உங்க தொழில் பாட்டுக்கள் தொடரை படித்துவிட்டுசொல்கிறேன்.
மற்றவர்கள் இன்னும் வரவில்லையா? கலந்துகொண்ட ராகதேவனுக்கு நன்றி.
chinnakkannan
27th January 2015, 02:38 PM
வாங்கோ வாங்கோ..கல் நாயக்..ஹாலிடே எப்படிப் போச்சு..மற்றவர்கள் கண்டிப்பாக வருவார்கள்.. நம்பிக்கை தான்வாழ்க்கையே..
Russellzlc
27th January 2015, 04:24 PM
[QUOTE=chinnakkannan;1203104]கலைவேந்தன் உங்கள் சிந்தனையை ஒட்டியே சில நாட்களுக்கு முன் நானே எழுதியிருக்கிறேன்..
அவலங்கள் எல்லாமே அடியோடுதான்
..அவனியிலே எப்போதும் ஒழிந்திட வேண்டும்
புவனமிது பூலோகம் சொர்க்க மென்றே
…புவியதுவும் சீக்கிரமாய் மாறவேண்டும்
அவதிமிகும் கொடியநோய்ப் பேய்களெல்லாம்
…ஆர்ப்பட்ட மிட்டலறி ஓட வேண்டும்
நவதான்யம் மற்றுபல செல்வமெல்லாம்
..நரருக்கு அருள்புரிவாய் சக்தி யம்மா
சரி தானுங்களே :)
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சின்னக் கண்ணன். சரிதானுங்களே என்று கேட்கிறீர்களே. உங்கள் தமிழை எடைபோடும் தகுதி எனக்கில்லை. புரட்சித் தலைவர் சொல்வார், ‘‘நான் படித்தவன் அல்ல, பொருளாதார புள்ளி விவரங்கள் தெரியாது. ஆனால், ஏழையின் பசி தெரியும்’’ என்பார். அதுபோல எனக்கு கவிதை இலக்கணம் தெரியாது. ஆனால், கருத்து புரியும். உயரிய கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
உங்கள் தொழில் பாட்டுக்கள் அற்புதம். அடேயப்பா! எவ்வளவு நேரம் சிந்தனையும் உழைப்பும் தேவைப்பட்டிருக்கும் என்று நினைத்தால் மலைப்பு ஏற்படுகிறது. பழனியின் முடிவு கலங்கச் செய்தது. என்றாலும், இடையிடையே, உங்களுக்கே உரிய பாணியில்,
(யோவ் என்ன தான்யா சொல்ல வர்றே நீ..
வெய்ட் வெய்ட்)
(எப்படிச் சுருக்கிக்கூப்பிடலாம் மையூ..ம்ஹூம் செல்லூ!)
அழகாக உங்கள் எழுத்தோடு பயணிக்க வைக்கிறீர்கள். நன்றி
கல்நாயக், லீவு முடிஞ்சதா? 3 நாட்கள் கழித்து எட்டிப் பார்த்தால் இன்னும் ஏமாற்றமே.
சரி, எல்லாரும் பணிகள் முடிந்து வரட்டும்.
-----------------
புகழ் பெற்ற கார்டூனிஸ்ட் திரு.ஆர்.கே.லஷ்மண் அவர்கள் அமரராகி விட்டார். சாதாரண மனிதனை (common man) மையமாக வைத்து அவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் உலகப் புகழ் பெற்றவை.
கவியரசர் கண்ணதாசன் தயாரித்த சிவகெங்கைச் சீமை படத்தில் மருது பாண்டிய மன்னர்களின் தளபதி முத்தழகுத் தேவராக லட்சிய நடிகர் திரு.எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் வாழ்ந்திருப்பார். என்னை பாதித்த சமீபத்திய மரணங்களில் அவரது மரணமும் ஒன்று. ஆங்கிலேயரால் மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட அதே தேதியில் (அக்டோபர் 24) அவர்களது தளபதியாக திரைப்படத்தில் நடித்த திரு.எஸ்.எஸ்.ஆரும் அமரரானது வியப்புக்குரியதே.
அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே தேனாறு. எனக்கு மிகவும் பிடித்த பாடல்,
‘கனவு கண்டேன், நான் கனவு கண்டேன்.....’ கவியரசரின் வரிகளும் மெல்லிசை மன்னர்களின் இசையும் நம்மைத் தாலாட்டும். அமரர் எஸ்.எஸ்.ஆர். அவர்களோடு குமாரி கமலா நடித்திருப்பார்.
ஆர்.கே.லஷ்மண் மரணம் குறித்து அறிந்ததும் குமாரி கமலா அவர்கள் நடித்த இந்த அருமையான பாடல் நினைவுக்கு வந்தது. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன். ஆர்.கே.லஷ்மண் அவர்களின் முதல் மனைவி குமாரி கமலா.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
27th January 2015, 04:40 PM
கல் நாயக் பொறுமையாய்ப் படித்து லைக் இட்டமைக்கு நன்றி
கலைவேந்தன் விரிவான பாராட்டுதலுக்கு நன்றி..செம்மீன் பார்க்க வில்லை எனில் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.. நல்ல படம்.(வேறு விரிவாக எந்தக் கட்டுரையையும் எழுத விடவில்லை இந்தப் படம்..இடையில் இடையில் சில இடைகளைப் பற்றி எழுதியிருந்தாலும் கூட :) நேற்று எழுதி முடித்தபின் ஒரு ரிலீஃப் பள்ஸ் சற்றே பயம் ஒழுங்காக வந்திருக்கிறதா என) பின்னூட்டங்கள் பார்த்த பின் கொஞ்சம் மன நிம்மதி..இன்னும் நன்றாய் எழுதவேண்டும்
ஓ குமாரி கமலா ஆர்.கே லஷ்மணின் மனைவியா.. நினைவிலில்லை.. நினைவூட்டியதற்கு நன்றி..ஆர்கே லஷ்மன் நல்ல கார்ட்டூனிஸ்ட்.
எனக்கும் எஸ்.எஸ்.ஆரின் மரணம் வருத்தம் தான்..நல்ல நடிகர். சிவகங்கை ச் சீமை ஏனோ பார்க்க விட்டுப் போய்விட்டது..ஆனால் கவிஞரின் கதை வசன நூல் என்னிடம்..படித்து மகிழ்ந்திருக்கிறேன்..
இந்தாருங்கள் உங்கள் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்..பாடல்..எனக்கும் பிடிக்கும்..
http://www.youtube.com/watch?v=CRjgpyJSZmw
kalnayak
27th January 2015, 06:28 PM
சி.க.,
செம்மீன் படத்தை நான் முழுமையாக பார்த்ததில்லை. அதன் கதையும் எனக்குத் தெரியாது. ஆனால் நல்ல படம் என்றும் , பாடல்கள் அருமை என்றும் விருது பெற்றது என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
நீங்கள் எழுதியததை கண்டதும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. நீங்களும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். வாசுதேவன் முள்ளும் மலரும் எழுதிக் கொண்டிருந்தபோது நீங்கள் சற்று காத்திருந்தது நல்லதே. ஆனால் ஒரு சின்ன சந்தேகம். தொழிற்முறை பாட்டு என்று கதையை முழுதும் கொடுத்து, பாட்டையும் கொடுத்து *இருக்கிறீர்கள். இதில் ஏதோ ஒன்று குறைந்தது போல் எனக்கு தோன்றுகிறது. சட்டென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இல்லை இன்னும் ஒரு அல்லது இருமுறை படித்தால்தான்எனக்கு தெரியுமா அல்லது எனது பார்வையில்தான் குறையா என்று தெரியவில்லை.
கலைவேந்தன்,
சிவகங்கை சீமை படம் பார்க்க ஒரு முறை முயன்றும் முடியவில்லை. இதற்கும் இப்போது ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. முயற்ச்சிக்கிறேன். குமரி கமலா R.K. லக்ஷ்மன் அவர்களின் முதல் மனைவி என்று படித்து இருக்கிறேன். அமெரிக்காவில் settle ஆகி விட்டார் என்று நினைக்கிறேன்.R.K. லக்ஷ்மன் மறைந்த பின்பு* நினைவு படுத்தியதற்கு நன்றி. தொடருங்கள்.
chinnakkannan
27th January 2015, 08:28 PM
நன்றி கல் நாயக் தங்கள் பாராட்டுதலுக்கு..
//சின்ன சந்தேகம். தொழிற்முறை பாட்டு என்று கதையை முழுதும் கொடுத்து, பாட்டையும் கொடுத்து *இருக்கிறீர்கள். இதில் ஏதோ ஒன்று குறைந்தது போல் எனக்கு தோன்றுகிறது. சட்டென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை// என்ன குறை என்று தயங்காமல் சொல்லுங்கள்.. அடுத்த தடவை எழுதும் போது சரி செய்து கொள்கிறேன்..
மீனவர்களின் வாழ்க்கை - கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல் - பற்றி ச் சொல்ல இது அகப்பட்டது..முழுக்கதையையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. நான் ரசித்ததை உங்களுக்குப் பகிர்ந்து கொண்டேன். அந்தப்பாடல்கள் இன் டிவிஜுவலாக (என்ன இங்க்லீஷ் வேண்டிக்கிடக்கு - சரி சரி மனசாட்சி :) ) தனித்தனியாகப் போட்டு சொல்ல ஆசை தான்..மொழிபெயர்ப்பு அகப்படவில்லை.. மலையாள லிரிக்ஸ் இன் இங்க்லீஷ் தான் கிடைத்தது..
ஒரு வேளை இது தான் உங்கள் குறையாக இருக்கும் என நினைக்கிறேன்..
சரி ஈ ஈ எனக்கு படம் இங்கே போடத் தெரியாது..சமர்த்தா நெட்ல சர்ச் பண்ணி செம்மீன் ஸ்டில்ஸ் போடுமேன் இங்கு.. :)
kalnayak
28th January 2015, 11:33 AM
சி.க.
மலையாளத்தில் 'செம்மீன்' என்றால் இறால் மீனாமே! இறால்-க்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? தெரிஞ்சவா சொல்லுங்கோ.* அது சரி, நீங்க மீன் சாப்பிடறவரா இருந்தால், அது என்ன மீன் என்று தெரிஞ்சிக்க ஆசைப்பட்டிருப்பீங்க. இப்ப 'தங்கமீன்கள்' மாதிரி ஏதோ ஒரு மீன்னு கண்டுக்காம விட்டுபுட்டீங்க. பரவாயில்லை.
மலையாளத்திலும் பாரதிராஜா அம்மா பேர்ல இவ்வளவு பாசமா இருப்பாங்கன்னு நான் நெனைக்கவேயில்லை. நீங்க எழுதினதில் சில இடங்களில் 'கருத்தம்மா' -என்று சரியாகவும், பல இடங்களில் 'கறுத்தம்மா' என்றும் வந்துள்ளது. மலையாளத்தில் 'கறுத்தம்மா'-தான் சரியோ என்னவோ.
சரி கீழே பாருங்க செம்மீன் இரண்டு வண்ணங்களில்: (நெட்டில் காப்பியடித்தது, இமேஜ் வேண்டுமென்றால் ஏதாவது ஸர்வரில் ஏற்றவேண்டுமே நான் ஸர்வரில்*ஏற்றவில்லை. அதனால் லிங்க் மட்டுமே வரும்.)
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/17/Chemmeen_Prawns.JPG
http://www.icookipost.com/wp-content/uploads/2009/09/prawnporichathu_thumb.jpg
நீங்க அடிக்க வருவீங்க. அதனால்
http://pyaretoons.pyaretoonsforum.com//ComicPages/3186/Desktop/Chemmeen-Chaturang-Katha-[English]_PyareToons_Page_000.jpg
http://3.bp.blogspot.com/_7CHLQyiufUg/TT8aa7JRUNI/AAAAAAAAC0Y/rrMFQ6DHCY0/s1600/Chemmeen_300.jpg
http://yentha.s3.amazonaws.com/contentuploads/7e418f55_chemmeen.jpg
chinnakkannan
28th January 2015, 12:18 PM
//மலையாளத்தில் 'செம்மீன்' என்றால் இறால் மீனாமே! // கல் நாயக்.. ஆமாங்க..சொல்ல விட்டுப்போட்டேன்..எடுத்த நோட்ஸ்ல குறிச்சு வச்சுருந்தேன்..ஆமா.. எனக்கு மீனா பத்தித் தெரியும் இது அந்த மீனா என மீன்வகையக் கேட்டா தெரியாது..
அப்புறம் சொல்ல மறந்தது கிட்டங்கி..- இந்தப் பரீக்குட்டியோட கிட்டங்கி என்பது கருவாடு செய்து விற்கும் கடை.. மீன் வாங்கி உப்புப்போட்டு வேகவைத்து காயவைத்து விற்பார்கள் என்பது போல வரும்..சரி தானா
ஆரம்பத்தில் பரீக்குட்டி பைசாவிற்குப் பதிலாக கருவாட்டுக் கூடைகள் தான் செம்பன் குஞ்சுவிற்குக் கொடுப்பான் (தன்னுடைய ஸ்டாக்கிலிருந்து!)
chinnakkannan
28th January 2015, 12:23 PM
//இப்ப 'தங்கமீன்கள்' மாதிரி ஏதோ ஒரு மீன்னு கண்டுக்காம விட்டுபுட்டீங்க. // :)
//மலையாளத்திலும் பாரதிராஜா அம்மா பேர்ல இவ்வளவு பாசமா இருப்பாங்கன்னு நான் நெனைக்கவேயில்லை. // :)
//நீங்க எழுதினதில் சில இடங்களில் 'கருத்தம்மா' -என்று சரியாகவும், பல இடங்களில் 'கறுத்தம்மா' என்றும் வந்துள்ளது. மலையாளத்தில் 'கறுத்தம்மா'-தான் சரியோ என்னவோ.// பிரச்னை என்னவென்றால் கல் நாயக் கருத்தம்மா தான் சரியாய் த் தமிழில் வரும்.. செம்மீன் நாவலில் முழுக்க முழுக்க கறுத்தம்மா தான் வருது.. அதான் கன்ஃப்யூஷன் :)
ஏம்ப்பா செம்மீன் பட ஸ்டில்ஸ் போடுங்கன்னா மீன் பட்ம் போட்டிருக்கீங்க.. மத்த லிங்க் ஏனோ ஒர்க் ஆகலை..வீட் போய்ப் பார்க்கறேன்..
பட் படம் பேரு செம்மீனே தவிர கடல்ல எல்லா டைப் மீன் தானே கிடைக்கும்..ஆமா எறால் மீன் கடல்ல நிறைய இருக்குமா என்ன.. கோவில் குளத்துல இருக்கற மீன்லாம் எறாலா..குட்டியா கருப்பா இருக்குமே..
kalnayak
28th January 2015, 12:42 PM
அப்புறம் சொல்ல மறந்தது கிட்டங்கி..- இந்தப் பரீக்குட்டியோட கிட்டங்கி என்பது கருவாடு செய்து விற்கும் கடை.. மீன் வாங்கி உப்புப்போட்டு வேகவைத்து காயவைத்து விற்பார்கள் என்பது போல வரும்..சரி தானா
கிட்டங்கி என்பது தமிழ்ச் சொல்தான். தமிழர்கள் பயன்படுத்தாமல் மறந்துபோன சொற்களில் இதுவும் ஒன்று.
Russellzlc
28th January 2015, 04:59 PM
மூவரும் போவோம்
நன்றி, கல்நாயக். சிவகங்கை சீமை படம் அவசியம் பாருங்கள். தயவு செய்து ஒரு வேண்டுகோள். வீரபாண்டிய கட்டபொம்மனை நினைத்துக் கொண்டு பார்க்காதீர்கள். அது வேறு; இது வேறு. படம் வந்தபோதே கட்ட பொம்மனுக்கு போட்டி என்று விளம்பரப்படுத்தப்பட்டதால் எதிர்பார்ப்பு கூடிப் போய், அதே கண்ணோட்டத்தில் மக்கள் பார்த்து கடைசியில் படம் போதுமான வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
வாசு சார், சின்னக்கண்ணன், கோபால், ரவி சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரா சார், போன்று நன்றாக எழுதும் எல்லாரது எழுத்துக்களுமே எனக்கு பிடிக்கும். நீங்கள் ராஜண்ணாவுடன் பஸ்சில் சென்றதை விளக்கியதையும் ரசித்து சிரித்தேன்.
கார்த்திக் சார் இருக்கிறாரே. அருமையாக எழுதக் கூடியவர். சிவலிங்கம் செட்டியாரின் காரில் இருந்து ஒரு நடிகை இறங்கி ஓடியதை தன் நண்பருடன் பார்த்ததை அவர் விளக்கியிருந்த விதம் காட்சியை நேரில் பார்ப்பது போலிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் நிச்சயம் திருப்தி இருக்கும்.
நீங்கள் முதலில் போட்ட செம்மீன் படத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தேன். நன்றி.
சரி, என்ன நீங்கள், நான், சின்னக்கண்ணன் என நாம் மூவர் மட்டுமே இருக்கிறோம். இதைப் பார்த்து இந்தப் பாடல் மனதில் தோன்றியது.
மறக்க முடியுமா? படத்தில் இசையரசியின் குரலில் இடம் பெற்ற அருமையான பாடல். ‘காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்....’ இந்தப் பாடலைக் கேட்டாலே வேதனை இதயத்தை கசக்கிப் பிழியும். படமும் சோகம். வாழ்க்கையில் எந்த மனிதனுக்கும் வரக்கூடாத நிலைமை.
துயரம், ஏமாற்றம், அதீத மகிழ்ச்சி, வேலை நிமித்தம் என்று பல காரணங்களால் நான் தூங்காத இரவுகள் பல உண்டு. மறக்க முடியுமா? படம் பார்த்த இரவும் அதில் ஒன்று. கிளைமாக்ஸ் காட்சியும் திரு. எஸ்.எஸ்.ஆர். மற்றும் தேவிகா அவர்களின் நடிப்பும் உறைய வைக்கும்.
இந்தப் பாடலின் ஆரம்பத்தில் சுசிலாவின் விசும்பல் .... என்ன ஒரு அர்ப்பணிப்பு. அழுகை உணர்வு இல்லாமல் விசும்புவது, அதிலும் ஒலிப்பதிவு கருவியில் நன்கு பதிவாக எவ்வளவு அழுத்தமாக விசும்ப வேண்டும்?
பூவா தலையா? பதிவில் திரு.கருணாநிதியின் அரசியலை நான் ஏற்பவனல்ல என்றும் ஆனாலும் அவர் திறமையாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்றும் கூறியிருந்தேன்.
அவரது திறமைக்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். பாடல் எழுதுவதில் திறமை என்பதை விட அதை 30 நிமிடத்தில் எழுதியிருக்கிறார் அதுவும் காட்சிக்கு பொருத்தமாகவும் மெட்டுக்கு வார்த்தை உட்காரும்படியும் என்பது இன்னும் திறமை.
கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன் அற்புதமான கவிஞர். படத்தின் இசையமைப்பாளரான டி.கே.ராமமூர்த்தி. (எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் இருந்து பிரிந்த பிறகு அவர் இசையமைத்த படம்)இந்த மெட்டை மா....ய...வ...நா....த...ன் என்று அவர் பெயரிலேயே ராகத்தோடு பாடிக்காட்டியிருக்கிறார். இதனால், கோபம் கொண்டு மாயவநாதன் போய் விட்டார். பாடல் ஒலிப்பதிவாக வேண்டும். விஷயம் திரு.கருணாநிதிக்கு சென்றது. போனிலேயே மெட்டைக் கேட்டு விட்டு 30 நிமிடத்தில் அவர் எழுதிய பாடல் இது.
படம் வேறு சோகம். பாடலும் சோகம். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண திரு.கருணாநிதியின் நகைச்சுவையையும் பார்ப்போமே. அதுவும் இந்த பாடலோடு தொடர்புடையதே. புதிய பறவையில் எங்கே நிம்மதி? பாடலுக்கு 64 வயலின் பயன்படுத்தியுள்ளனர். அதேபோன்று எஃபெக்ட் கிடைக்க இந்த பாடலிலும் 64 வயலின் பயன்படுத்தலாம் என்று திரு.கருணாநிதியிடம் திரு.ராமமூர்த்தி சொல்லியிருக்கிறார்.
அதற்கு திரு.கருணாநிதி கூறிய பதில், ‘‘அந்தப் படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. அதனால், 64 வயலின். இதில் ராமமூர்த்தி மட்டும் தானேய்யா... 32 போதுமே’’. அதான் கருணாநிதி. முரசொலி மாறன் தயாரிப்பில் சொந்தப் படம் வேறு, விடுவாரா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
28th January 2015, 06:04 PM
கலைவேந்தன் .. நல்ல பாடலை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.. காகித ஓடம் கேட்கும் போதே நெஞ்சத்தைக் கவ்வும்..சோகம் சூழ்ந்து கொண்டு ஸ்தம்பிக்க வைக்கும்.. நன்றி..
ஆனால் ஏனோ இதுவரை மறக்கமுடியுமா பார்த்ததில்லை..பாடல் கூட வீடியோவில் ஒருதடவை பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்..காரணம் எதுவுமில்லை..ஒரு தடவை மதுரை ஸ்ரீ தேவியில் போட்டு எனக்கு நேரம் கிடைத்துப் பார்க்கலாம் என்றிருந்த போது மூன்றே நாளிலோ என்னவோ படம் மாற்றிவிட்டார்கள்..அதற்குப்பிறகு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை..டிவிடி சோகப்படங்கள் எல்லாம் வாங்க மாட்டேன்
ம்ம் //இதில் ராமமூர்த்தி மட்டும் தானேய்யா.. /நல்ல நகைச்சுவை.. ஏங்காணும்.. நாம் மூவர் இருந்தே நல்லவிதமாகச் செல்லலாமே.. நல்ல ஓடத்திலேயே.. மற்றவர்களையும் வரவழைக்கலாம் நம் எழுத்தின் மூலமாக.. :)
நீங்கள் கேட்ட பாடல் இதோ..இது முதல் பாடல் என நினைக்கிறேன்.. வீட் போய் பார்த் சொல்க் :)
https://www.youtube.com/watch?v=2Jm-pNgWWFA
chinnakkannan
28th January 2015, 06:06 PM
இது இரண்டாவது பாடல் என நினைக்கிறேன்
https://www.youtube.com/watch?v=0hthi_FvEKk
chinnakkannan
28th January 2015, 06:10 PM
//கார்த்திக் சார் இருக்கிறாரே. அருமையாக எழுதக் கூடியவர். சிவலிங்கம் செட்டியாரின் காரில் இருந்து ஒரு நடிகை இறங்கி ஓடியதை தன் நண்பருடன் பார்த்ததை அவர் விளக்கியிருந்த விதம் காட்சியை நேரில் பார்ப்பது போலிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் நிச்சயம் திருப்தி இருக்கும்.// எங்கிட்டோ போய்ட்டீங்க.. மாதங்களைச் சொன்னேன் ஸ்வாமி..ம் ம் வீ வில் வெய்ட்.. வருவார்..
Russellisf
28th January 2015, 06:17 PM
எம்.ஜி.ஆர் நடித்த கலங்கரை விளக்கம் படப்பிடிப்பு முடிந்ததும் படம் நீளமாக இருப்பதைக் கண்டு எந்த இடத்தில் கத்திரி போடலாம் என இயக்குநர் கே.சங்கர் யோசித்திருக்கிறார்.
பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டு ரொம்ப பெருசா இருக்கு அதையே தூக்கிருவோம் என முடிவும் எடுத்துவிட்டார்.
உடனே அந்தப் படத்தின் வசனகர்த்தாவான மா.லட்சுமணன் இடைப்பட்டு " பஞ்சு நல்லா எழுதியிருக்கான்.. அந்தப் பாட்டு இருக்கட்டுமே , வேற எதாவது காட்சிகளை வேண்டுமானால் நீக்குங்கள் " என தயாரிப்பாளர் ஜி. என்.வேலுமணியிடமும், இயக்குநர் கே.சங்கரிடமும் கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.
இயக்குநர் கே.சங்கர் இரங்கி பாடலைக் கத்தெரிக்காமல் விட்டு விட்டார்.
எம்.எஸ்.வி இசையில் சுசிலாவும் டி.எம்.எஸ்ஸும் இணைந்து பாடிய பொன்னெழில் பூத்தது புதுவானில்
https://www.youtube.com/watch?v=APCXuHamJoo
0
பழைய படங்களில் பாடல்கள் கண்ணதாசன் என்று போட்டுவிட்டு கீழே உதவி பஞ்சு அருணாச்சலம் என்று போடுவார்கள்.
தனது சித்தப்பாவான கண்ணதாசன் பாடல் வரிகளைக் கூறக் கூற அதைப் பேப்பரில் எழுதிக் கொண்டே வருவதுதான் அந்த உதவி ! இதற்காக ஒரு பாடலுக்கு 50 ரூபாய் சம்பளம் பெற்றிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.
இயக்குநர்களும் கதாசிரியர்களும் பாடலின் சூழலை கண்ணதாசனிடம் விளக்குவதை பக்கத்தில் இருந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்ததால் பின்னாளில் சிறந்த கதை ஆசிரியராகவும் பாடலாசிரியராகவும் ஜொலித்தார் பஞ்சு அருணாச்சலம்.
Murali Srinivas
28th January 2015, 06:29 PM
கண்ணா,
தொழில்முறைப் பாடல்களில் செம்மீன் படம் மற்றும் பாடல்கள் பற்றி அழகாக ஆழமாக எழுதி என் நினைவுகளை கிளறி விட்டீர்கள். அன்றைய நாட்களில் தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடிய படம் செம்மீன். படம் கேரளத்தில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது. நமது ஊரில் மீனாட்சி டாக்கிஸில் வந்தது என்று என் நினைவு. அப்போது நான் மிகச் சிறுவன் என்பதனால் படம் பார்க்கவில்லை. ஆனால் கடலினக்கர போனோரே பாடலும் மானஸ மைனே வரு பாடலும் மதுரையிலும் வெகு பிரபலம். மானஸ மைனே வரு பாடல் மூலமாகத்தான் மன்னாடே என்னும் நல்ல பாடகரை நான் அறிந்துக் கொண்டேன். அதே போன்று சலில் சௌத்ரி பற்றியும்.
பிற்காலத்தில் கேரளத்தில் வேலை செய்தபோது இந்தப் படத்தை பார்த்தேன். தமிழகத்தை ஒப்பிட்டு பார்த்தால் கேரளத்தில் தியேட்டர்கள் வெகு குறைவு. மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை திரையிடுவதற்கே இருக்கின்ற தியேட்டர்கள் போதாது. அப்படியிருக்க பழைய படங்களை எங்கே திரையிடுவது? தமிழகத்தை தாண்டி ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் பயணம் செய்யும்போது அந்த மாநிலங்களிலும் பழைய தெலுங்கு மற்றும் கன்னடப் படங்கள் ஓடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் கேரளத்தில் வெகு அபூர்வமாகவே பழைய மலையாளப் படங்கள் திரையிடப்படும். அப்படி ஒரு வாய்ப்பு 90-களின் துவக்கத்தில் கிடைத்தது.
அதற்கு முன்னரே என் சக ஊழியர்கள் செம்மீன் படத்தை பற்றியும் சத்யன் அவர்களின் நடிப்பைப் பற்றியும் மிக பிரமாதமாக சிலாகித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். செம்மீன் படத்தில் மட்டுமல்ல பல படங்களில் [நீலக்குயில், கர காண கடல், வாழ்வே மாயம், அனுபவங்கள் பாளிச்சகள், கடல் பாலம், ஒடயில் நின்னு, நிங்கள் என்னே கம்யூனிஸ்ட்டாகி என்று லிஸ்ட் போடுவார்கள்] சத்யன் அவர்களின் நடிப்பைப் பற்றி விமர்சையாக் பேசுவார்கள். 1912-ல் நாகர்கோவிலில் பிறந்து இளம் வயதிலே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி பின் ஓய்வு பெற்று [வயது 58 ஆக வேண்டிய அவசியமில்லை. இளம் வயதிலே ஓய்வு பெறலாம்] பின் சினிமாவில் சேர்ந்து அங்கே கொடி கட்டி பறந்த சத்யன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1971-ம் ஆண்டு (ஜூன் மாதம் என்று நினைவு) காலமானார். என்ன ஆச்சரியம் என்றால் 71-ல் காலமான அவரை அவரின் நடிப்பை பற்றி 80-களிலும் 90-களிலும் பெருமையாக பேசுவார்கள். அதிலும் இளைஞர்கள். பேசுவார்கள் பேசும் தெய்வம் படத்திலும் நமது நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்திருப்பார் சத்யன். இனி விஷயத்திற்கு வருகிறேன்.
நான் வசித்த கோட்டயம் நகரில் ஆனந்த் என்ற தியேட்டரில் ஒரு வார காலத்திற்கு செம்மீன் வெளியானது. ஒரு நாள் நூன் ஷோ போயிருந்தேன். ஹவுஸ் புல். அரங்கில் நிறைய இளைஞர்கள். படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு பின் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் படகுகளில் திரும்பிவர அவர்களுடன் துடுப்பு போட்டுக் கொண்டே சத்யன் அறிமுகமாகும் காட்சி. பலத்த கைதட்டல். ஆச்சரியமாக இருந்தது. படம் முழுக்க பார்த்தேன். பிடித்திருந்தது.
மறுநாள் ஒரு சக ஊழியரிடம் இதைப் பற்றி சொன்னேன். முதல் கேள்வியே சத்யன் அறிமுக காட்சியில் கைதட்டல் இருந்ததா? என்று கேட்டார். சொன்னேன். படத்தை பற்றி சொன்னேன். பிறகு ஒரு விஷயம் சொன்னேன், பாருங்கள் அவர் டென்ஷன் ஆகி விட்டார்.
வேறொன்றுமில்லை, அந்த காலகட்டத்தில் மம்மூட்டி நடித்து பரதன் இயக்கத்தில் அமரம் (Amaram) என்றொரு அற்புதமான படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதுவும் கடலோரத்து மீனவர்களின் வாழ்வை, அவர்கள் சுகங்களை துக்கங்களை, காதலை நட்பை சொன்ன படம். மிக பிரபல திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் [கிரீடம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா போன்ற பல்வேறு படங்களின் திரைக்கதை எழுதியவர்] அவர்களின் அருமையான திரைக்கதையில் மம்மூட்டி அந்த அச்சுட்டி என்ற பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
நான் என்ன சொன்னேன் என்றால் செம்மீன் பழனியை விட அமரம் அச்சுட்டிதான் டாப். என்றேன். அதற்கு என்னுடன் சண்டைக்கே வந்துவிட்டார். அது மட்டுமல்ல நான் சொன்னது அவரிடமிருந்து வேறு பலருக்கும் பரவி பலரும் என்னுடன் விவாதத்திற்கு வந்துவிட்டனர். நான் முதலில் குறிப்பிட்ட சத்யனின் பல படங்களை சொல்லி அது பார்த்திருக்கிறீர்களா இது பார்த்திருக்கிறீர்களா என்று தொடர்ந்து சில நாட்கள் என்னிடம் வாதம் செய்துக் கொண்டேயிருந்தனர்.
அன்றைய நாட்களில் Satellite television ஒளிப்பரப்புகள் தொடங்கப்பட்டிருக்கவில்லை. பின்னாட்களில் அந்த நண்பர்கள் சொன்ன அனைத்துப் படங்களையும் பார்க்க முடியாவிட்டாலும் கணிசமானவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சத்யன் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நமது நடிகர் திலகம் அளவிற்கு அந்த range ல் வருவாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் அவர்களின் மாநில மொழி நடிகர் எனும்போது ஒரே குரலில் அவர் பெருமையை பறைசாற்றுகின்றனர். ஆனால் நமது தமிழகத்திலோ நமது மக்களே அற்ப காரணங்களுக்காக நடிகர் திலகத்தை தரம் தாழ்த்துவார்கள். என்ன செய்வது நடிகர் திலகத்தின் ராசி அப்படி!
ஸாரி கண்ணா, மிக நீண்ட பதிவாக போய்விட்டது. உங்களின் செம்மீன் பற்றிய பதிவு(கள்) பல நினைவுகளை தூண்டி விட்டது. பொறுமையாக படித்ததற்கு நன்றி.
அன்புடன்
Russellzlc
28th January 2015, 07:25 PM
//கார்த்திக் சார் இருக்கிறாரே. அருமையாக எழுதக் கூடியவர். சிவலிங்கம் செட்டியாரின் காரில் இருந்து ஒரு நடிகை இறங்கி ஓடியதை தன் நண்பருடன் பார்த்ததை அவர் விளக்கியிருந்த விதம் காட்சியை நேரில் பார்ப்பது போலிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் நிச்சயம் திருப்தி இருக்கும்.// எங்கிட்டோ போய்ட்டீங்க.. மாதங்களைச் சொன்னேன் ஸ்வாமி..ம் ம் வீ வில் வெய்ட்.. வருவார்..
பாடல்களை தரவேற்றியதற்கு நன்றி சின்னக் கண்ணன். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு என்று எழுத்தைக் கூறியிருந்தேன். அதற்கு விளக்கம் அளித்திருக்கிறீர்களே. இதுதான் உங்கள் ஸ்டைல். நன்றி. அப்புறம்... என் ஸ்டைல்.... சே, சே நானே சொல்லிக்க மாட்டேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
28th January 2015, 09:40 PM
முரளி, மிக்க நன்றி..
உங்கள் நினைவலைகள் வெகு அழகு.. நீங்கள் சொன்ன மலையாளப் படங்கள் நான் பார்த்ததில்லை.. பார்க்க வேண்டும்..
சத்யன் தான் ஷீலாவை அறிமுகம் செய்வித்தார் என்று ஷீலா எழுதியிருந்ததைப் படித்தாக நினைவு. நல்ல நடிகர்.. பரீக்குட்டி பாத்திரத்தை மதுவுக்குக் கொடுத்து பழனி பாத்திரத்தை எடுத்துக் கொண்டதிலேயே தெரிகிறது.. நம்ம ந.தி ரேஞ்சுக்கா.. ம்ஹூம் அதெல்லாம் முடியவே முடியாது..
//பேசும் தெய்வம் படத்திலும் நமது நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்திருப்பார் சத்யன்// படம் பார்த்து நாளாகிவிட்டது மறுபடி பார்க்கவேண்டும்..
என்னது மீனாட்சி தியேட்டரிலா போட்டார்கள்.. ரொம்ப ச்சின்னஞ்சிறுவனாய் இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.. தவிர மலையாளப் படங்கள் தான் தெரியுமே மதுரையில் அவ்வளவு தெரியாது..
நினைவு தெரிந்து பார்த்த போஸ்டர் பெரிய ஏ போடப்பட்டிருக்க அதற்குள் சோகமாய் ஒரு பெண் கால் காயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாள் ..இரட்டைத்தெரு தாண்டி வலதுபக்கம் தேவிதியேட்டர் போகும் பாதையில் திரும்பும் சுவற்றில் ஒட்டியிருப்பதைப் பார்த்த நினைவு.. அவளுடே ராவுகள்..சென் ட்ரல் என நினைக்கிறேன் (சரிதானே!)..
இன்னொரு தமிழ்ப்படப் போஸ்டரும் நினைவில். இது தேவி தியேட்ட்ர் எதிரில் இருந்த மளிகைக் கடை தாண்டி இந்தப் புறச் சுவரில் போட்ட நினைவு.. அதே பெரிய ஏ. சற்றுத்தள்ளி பாவம் ரவிக்கை பாவாடையுடன் கலங்கிய வண்ணம் சுமி இருந்ததாய் நினைவு கலங்கலாய் இருக்கிறது! படம்..அவளும் பெண் தானே!
கொஞ்சம் கல்லூரி வந்தவுடன் பார்த்த ஒருபடம் சலனம் என நினைக்கிறேன். ப்ளாக் அண்ட் ஒய்ட் லஷ்மி பாவம் கிராமப் பெண் மோகன் ஃபாதிரியார் எனப் போகும் கதை எனப் புகையாக நினைவு..தங்கம் தியேட்டரா பரமேஸ்வ்ரியா நினைவிலில்லை..
அதே போல் கல்லூரியில் கட்டடித்துப் போன படம் என்னவெனில் என்பதற்கு முன் படித்த கல்லூரி விமான நிலையத்துக்கருகில்.. பிஆர்சி (பாண்டியன் போக்குவரத்துக் கழகம்) காலையில் காலேஜ் டயத்துக்கு காலேஜருகில் கொண்டு விடும் பின் சாயந்திரம் தான் பிக்கப் செய்ய வரும்.. நடுவில் ஊர் போகவேண்டுமென்றால் ஒன்றரைகிலோ மீட்டர் நடந்து பெருங்குடி கிராமத்தில் தான் மெய்ன் ரோட். அங்கே நின்றால் மொஃபஸலோ பிஆர்சியோ வரும். மதியம் கிளம்ப நினைத்தால் 12.45க்கு ஒரு பஸ் அல்லது 1.50க்கு தான்பஸ்..(அந்தக் காலத்தில்)
ஒரு சுபயோக சுபதினத்தில் மூன்றாம் பீரியட் கட் செய்து (மொத்தம் ஏழோ எட்டோ பேர்) லொங்கிடி லொங்கிடி என பன்னிரண்டு மணிக்கே கிளம்பி(மதுரை வெய்யில்!) வந்து வெய்ட் செய்து வந்த 37ம் நம்பர் சென் ட்ரல் ஓ ஆலங்குளமோ என்னவோ அந்த பஸ்ஸில் ஏறி பெரியார் பஸ்ஸ்டாண்ட் இறங்கி மறுபடி பத்தொன்பதாம் நம்பர் பிடித்து கலெக்டர் ஆஃபீஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது மணி ரெண்டே முக்கால்.
கிடுகிடுகென அருகாமையில் இருந்த சினிப்ப்ரியா தியேட்டருக்குள் ஓடி ( என்னபடம்டா கிச்சாமி – கிச்சாமியாகப்பட்டவன் சொன்ன மலையாளப் பெயர் நினைவிலில்லை தமிழ்ப்படுத்திய பெயர் மட்டும் நினைவில்.ஒரு வினாடி சுகம்! ஹேய் பெயர் தான் அப்படி பிரதாப்ப் போத்தன் படமாம்டா) ஹெஹ் ஹெஹ் ஹே என ஓடி கவுண்ட்டரில் டிக்கட் வாங்கி உள்ளே போனால் வஜ்ரதந்தித் தாத்தா கரும்பைக்கடித்துக் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்தார்.
சீட் பார்த்து அனைவரும் உட்கார்ந்து அட் முடிந்து படம் போட ஆரம்பிக்கலாம் என்றால் என்ன இது..
ஆங்கிலத்தில் டைட்டில்கள் வர ஆரம்பிக்க.. கிச்சாமி. ட்ரெய்லராய் இருக்கும்டா வெளில போஸ்டர்ல ப்ரதாப் போத்தன் இருந்தானே. ஓ அப்படியா என அப்பாவியாய் நம்பி விழியகலத் திரைபார்த்தால் டைட்டில் முடிந்தபிறகும் திரையில் மக்கள் செவிக்கினிய ஆங்கிலத்தில் பேசியவாறே இருந்த போது தான் தெரிந்தது படம் மறு நாளிலிருந்தோ என்னவோ வரப்போகிறது என்று (கிச்சா தர்ம அடி வாங்கி எங்களுக்கெல்லாம் இன் டர்வெல்லில் எக் போண்டா வாங்கிக் கொடுத்தான்!) (அந்த ஆங்கிலப்படம் தி மேக்னிஃபிஷியண்ட் செவன்!)
ஒரு படம் சலனம்மலையாளம் எனச் சொன்னேன்.. நினைவலைகள் கொஞ்சம் முன்பின்னாய் அடிப்பதால் வந்த வினை..இன்னும் இரு படங்கள் பார்த்திருக்கிறேன் மதுரையில். என்னாவாக்கும் அது..
அப்பாவின் நண்பரொருவரின் ரெகமண்டேஷனின் பேரில் பார்த்தது அது..படம் நியூடெல்லி.. சிந்தாமணியில் ஓடியது..(ரைட்டா)
மம்முட்டி ஊர்வசி சுமி..(இது வேறுசுமி..சுமலதா!)
பின் அபிராமிதியேட்டர் திறந்தபுதிது (அலங்காரைத் தாண்டி நேரேசென்றால் வருமே) என நினைக்கிறேன்.. மஞ்ஞில் விரிந்த பூக்கள் விழியோரம் நிலா வருண்ணு என்று பாடி பூர்ணி சப்பக்கென்று மனதுக்குள் உட்கார்ந்தார்..!(மோகன் லால் வில்லன் -அறிமுகம்?)
துபாயில் வேலை சேர்ந்ததற்குப் பின்னர் பார்த்த மலையாளப் படம் யக்*ஷ கானம் அப்புறம் சப்தபதி தெலுகுபடம் டப்டு இன் மலையாளம் (பாடல்கள் தெலுங்கில்!) வீடியோ காசட் வடிவத்தில்! பின் மம்முட்டியின் ஆகஸ்ட் 15, சிபிஐ டைரிக் குறிப்பு
நீங்கள் சொன்ன மலையாளப்படங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்க்கவேண்டும்..இப்போது புது மலையாளப் படங்கள் மீன்ஸ் போனவருடம் வந்தவை சில நன்றாகவே இருக்கின்றன..பெங்களூர் டேஸ், ஆங்க்ரி பேபீஸ், விக்ரமாதித்யன் (மம்முட்டியிண்ட புத்ரன் துல்கர் சல்மான்..பெ.டேயிலும் வருவார்) ஃபஹத் பாசிலின் 22ஃபீமேல் கோட்டயம் என..
//[நீலக்குயில், கர காண கடல், வாழ்வே மாயம், அனுபவங்கள் பாளிச்சகள், கடல் பாலம், ஒடயில் நின்னு,// amaram// ஒன்றுமில்லை நீங்கள் எழுதிய படங்களை ப் பார்க்கவேண்டுமென மறுபடி லிஸ்ட் போட்டுப் பார்த்தேன். நீலக்குயில் இட் ரிங்க்ஸ்மி எ பெல்..பாத்திருக்கேனா..
என்னது உங்கள் பதிவு நீள் பதிவா..சுவாரஸ்யமாக இருந்ததுங்க.. நல்லா இருந்தது. என்னையும் கிளறி விட்டு விட்டீர்கள் முரளி.. மீண்டும் நன்றி..
(உடன் பதிலிட முடியவில்லை வீட்டுக்கு வந்து உடன் பதிலிடுகிறேன் இதை..)
chinnakkannan
28th January 2015, 09:45 PM
//அப்புறம்... என் ஸ்டைல்.... சே, சே நானே சொல்லிக்க மாட்டேன்.// கலைவேந்தன் :) ஒங்க ஸ்டைலும் இருங்குங்க்ணா. அரசியல் கோட்ஸ்.ஒருசம்பவம் அப்புறம் ஒரு பாட் என.. (எனக்கு அரசியல் எழுத வராதே)
chinnakkannan
28th January 2015, 11:56 PM
நடனம் ஒன்று நடிகையர் இரண்டு...! (ம்ம் வாசு அவர்களோட சாயல் வரக்கூடாதுன்னு எப்படில்லாம் யோசிக்க வேண்டியதா இருக்கு! :) )
**
நல்ல கொதிகொதிக்கும் மதுரை வெய்யிலில் மேட்னி ஷோ பார்த்தால் உள்ளங்கையில் ஐஸ்கட்டி வைத்தாற்போல் ச்சிலீர் ஸ்ரீதேவி.. என்னா ஸ்டெப்ஸ்.
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
தங்கமாங்கனி என் தர்ம தேவதை..(ஹெளமச் காரட்யா?) குரு கமல் ஸ்ரீதேவி
https://www.youtube.com/watch?x-yt-ts=1422411861&v=I5K-BmV2MGA&feature=player_detailpage&x-yt-cl=84924572
ஸ்ரீதேவியின் அடிச்சுவட்டை கடற்கரை மணலில் செய்யப் பார்த்திருப்பார் பூர்ணி(ம்)மா..
கொஞ்சம் அந்த ஸ்டெப்ஸ் அவருக்கும் வந்தது என்றுதான் சொல்லவேண்டும்..ஆனால் பாட்டு..எழுதியது கங்கை அமரன் என்று நினைக்கிறேன்..எனக்குப் பிடிக்க்குமே
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை ப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து..
https://www.youtube.com/watch?v=927zRcSk4pk&feature=player_detailpage&x-yt-cl=84924572&x-yt-ts=1422411861
chinnakkannan
29th January 2015, 12:17 AM
மழை ஒன்று பாடல் (இப்போதைக்கு) இரண்டு
மனித வாழ்க்கைப் பருவங்கள்லயே மோசமான பருவம் எது தெரியுமா..இந்த இளமைப் பருவம் தாங்க..அதுவும்மழைல நனஞ்சுட்டா என்ன ஆறது..
இந்த அழகு மழைல நனையறதாம்..டிராஜேந்தர் வரில்ல மோஹனர் (கொ.வை.ஆ) பாடறார்..
விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை
மொழியோ அமுதம் குரலாகி ப் பொழிகின்ற போதை..ம்ம்
https://www.youtube.com/watch?v=i32NRRHmgdE&feature=player_detailpage&x-yt-cl=84924572&x-yt-ts=1422411861
ம்ம்.. இந்தப் பாட்டுல இந்த ஜோடியப் பாருங்க ..இங்கயும் மழை தான் வீட்டுக்குள்ள அப்புறம் மனசுக்குள்ள.. ஆனா ஒண்ணு இவங்க காதலர்கள் அல்லது கல்யாணமாகாதவர்களா இருக்கணும் எப்படிங்கறீங்களா பாட் கேட்டுட்டு வாங்க சொல்றேன்..
தேன் சிந்து தே வானம் உனை எனைத் தாலாட்டுதே.. இதுக்கும் வரி சொல்லணுமா.
பன்னீரில் ஆடும் செவ்வாழை க் கால்கள்
பனிமேடை போலும் பால்வண்ண மேனி (ஜூரம் வராதோ)
ஷிவ்குமார் ஜெய்சித்ரா.. பொண்ணுக்குத் தங்க மனசு..டான்ஸாடறப்பவே தெரியுதே..!
https://www.youtube.com/watch?v=iN0ix2luTtA&x-yt-ts=1422411861&x-yt-cl=84924572&feature=player_detailpage
கல்யாணமானவங்களா இருந்தா . “இவளே இந்த மழைக்கு சூடா பஜ்ஜி போட்டுக் கொடேன்”னு ஹஸ்பெண்ட் சம்சாரத்துக்கிட்ட கேட்டிருப்பான்! :)
rajeshkrv
29th January 2015, 09:38 AM
Pala naatkal ingu varamal irundhaal pakkangal odi vidugindrana
medhuvaga padikka aarambikkren
Nanbargal anaivarukkum Vanakkangal
chinnakkannan
29th January 2015, 10:01 AM
வாங்க ராஜேஷ் வாங்க.
rajeshkrv
29th January 2015, 10:22 AM
வாங்க ராஜேஷ் வாங்க.
Vandhen Vandhen meendum naane Vandhen
kalnayak
29th January 2015, 10:43 AM
காகித ஓடம் பாட்டு போட்ட பின்னால்தான் பலரும் வந்திருக்காங்க. பரவாயில்லை. எல்லோரையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.
https://www.youtube.com/watch?v=IWPruFQXV4A
https://www.youtube.com/watch?v=hW3ttn2hqfU
kalnayak
29th January 2015, 12:27 PM
ராஜண்ணா ரயிலில் தொடர்கிறார்...
https://www.youtube.com/watch?v=fKM8AWuXzUQ
"கல்நாயக், கல்நாயக் ..." என்று எழுப்புகிறார் ராஜண்ணா.
"என்னண்ணே?"
"காபி சாப்பிடுறயா?"
"சரி வாங்குங்க அண்ணே" என்றேன்.
நான் எழுந்து உட்கார்ந்தேன். ரயில் திருச்சியை அடைந்திருந்தது.
அண்ணன் ஜன்னல் வழியாக காபி விற்றவரை அழைத்தார்.
"காபி எவ்வளவு?" காபி விற்றவர் விலையை சொன்னார்.
"கொஞ்சம் குரைச்சு சொல்லக்கூடாதா?" என்றார் அண்ணன்.
"என்ன கேட்டீங்க?"
"இல்லை விலையை கொஞ்சம் குரைச்சு சொல்லக்கூடாதா?-ன்னு கேட்டேன்" என்றார் அண்ணன்.
"நல்லாயோசனை பண்ணிதானே கேட்கிறீங்க?" - இது விற்பவர்.
"ஆமாம். இதிலென்ன யோசனை பண்றதுக்கு இருக்கு? கொஞ்சம் குரைச்சு விலையை சொன்னால் எனக்கு சந்தோஷமா இருக்கும்" - இது அண்ணன்.
"சரி சொல்றேன்" என்ற காபி விற்பவர், "வள், வள்" என்று நாய் போல இரண்டு முறை குரைத்து விட்டு அதே விலையை சொன்னார்.
அண்ணன் முகம் என்னவோ போலாயிற்று. பிறகு என்ன நினைத்தாரோ கேட்ட விலைக்கு காபியை வாங்கி எனக்கும் கொடுத்து, அவரும் வாங்கிக் குடித்தார்.
https://www.youtube.com/watch?v=RrXhRlM0SpY
ரயில் திருச்சியிலிருந்து கிளம்பியது. அண்ணன் திரும்ப படுக்கையில் விழவில்லை. நன்றாக வசதி பார்த்து உட்கார்ந்து கொண்டார்.
ரயில் வேகமாகவே சென்றது. ஆனால் சிறிது நேரம்தான். சிக்னலுக்காக அங்கங்கே நின்று நின்று போய்க் கொண்டிருந்தது. ரொம்பவே இது அண்ணனை படுத்தியிருக்க வேண்டும்.
"ஏன் இப்பிடி நின்னு நின்னு போகுது?" என்றார்.
"அண்ணே சிக்னல் கிடைச்சி இருக்காது. அதனால் வெய்ட்பண்ணி போகுது" என்றேன்.
"இல்லை இல்லை வேற ஏதோ காரணம் இருக்கணும். அதனால்தான் இப்பிடி போகுது" என்றார்.
நான் அமைதியானேன்.
சிறிது நேரம் போனபின்பு என்னிடம் சொன்னார் - "இந்த ட்ரைவர் புதுசு போல இருக்கு".
நான் "அதுக்கும் இப்பிடி நின்னு நின்னு போறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.
"பாவம் இந்த ரூட்ல புதுசா வந்திருப்பார். வழியில நின்னு நின்னு விசாரிச்சி ஓட்டுவார்." என்றார்.
அதுக்குப் பிறகு நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=CkE6t8c9ibI
ஒருவழியாக ரயில் திண்டுக்கல் சென்றடைந்தது. பக்கத்தில் இருந்தவரையும் எழுப்பி இறங்கினோம். இப்பயணம் முற்றிற்று.
chinnakkannan
29th January 2015, 02:25 PM
ஹி ஹி கல் நாயக் :) பாட்டெல்லாம் வீட் போய்ப் பார்க்கேன்.. ஆமா இணைந்த கைகள்னா எனக்கு தண்ணிலாரிப் பாட் தான் நினைவுக்கு வருது!
kalnayak
29th January 2015, 03:02 PM
சி.க.,
"ராஜண்ணா தண்ணி லாரியில போறப்போ வரைக்கும் வெய்ட் பண்ணனுமா என்ன. உங்களுக்காக அந்த பாட்டு இதோ" அப்படின்னு தரலாமுன்னு தேடிப் பார்த்தேன். யாரும் அப்லோட் பண்ணலை போலிருக்கு. கிடைச்சதும் போட்டுடலாம்.
Murali Srinivas
29th January 2015, 03:14 PM
கண்ணா,
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி. இனி நீங்கள் சொன்ன சொல்லாத படங்களும் அவை மதுரையில் வெளியான தியேட்டர்களும்
அவளுட ராவுகள் - சென்ட்ரல்
ரதி நிர்வேதம் - சென்ட்ரல்
இத இவிடே வரே - மீனாட்சி
ஈட்டா - மினிப்ரியா [கமல், சீமா - IV சசி]
நெல்லு - நியூசினிமா [ கமல்- லட்சுமி]
மதனோத்ஸவம் - சென்ட்ரல்
மஞ்சில் விரிஞ்ச பூக்கள் [பணியில் பூத்த மலர்கள்] 1980-ன் இறுதியில் கேரளத்தில் வெளியானது. மதுரையில் ஒன்று அல்லது இரண்டு வருடம் கழித்து வெளியானது என்று கேள்விப்பட்டேன். அந்தப் படம் கேரளத்தில் வெளியாகும்போது நான் மதுரையில் இருந்தேன். அது மதுரைக்கு வரும்போது நான் மதுரையில் இல்லை. வெகு நாட்களுக்கு பிறகு டிவியில் பார்த்தேன். நீங்கள் சொல்வது சரிதான். மோகன்லாலின் அறிமுகப் படம் அதுதான். ஏன், இயக்குனர் ஃபாஸில் அவர்களுக்கும் அதுதான் முதல் படம்.
அதே போன்று கேரளத்தில் வெகு பிரபலமாக ஓடிய ஈநாடு [IV சசி] சுந்தரம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியதாக நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன் திரைக்கதை வசனமும் தமிழாக்கம் செய்யப்பட்டு குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது.
நியூடெல்லி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அருமையான படம். ஜோஷி இயக்கம். அன்றைய நாட்களில் ஜோஷியின் ஆஸ்தான ஸ்கிரிப்ட் ரைட்டர் டென்னிஸ் ஜோசப் என்பவர் திரைக்கதை வசனம். பிரபல ஆங்கில நாவலாசிரியர் இர்விங் வாலஸ் எழுதிய The Almighty என்ற நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருக்கும். அதில் மம்மூட்டியின் GK [G.கிருஷ்ணமூர்த்தி] என்ற கேரக்டர்-ஐ மறக்கவே முடியாது.
சத்யனின் பழைய படங்களை தேடிப் பிடித்துப் பாருங்கள், தவறில்லை. ஆனால் அவற்றை விட மம்மூட்டி, லால் படங்களோடு உங்களால் எளிதில் ஒன்ற முடியும்.
நான் பரிந்துரைக்கும் சில மம்மூட்டி படங்கள் [action, serious எல்லாம் உண்டு]. சிலவற்றை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம்.
ஆவநாழி
நியூ டெல்லி
சிபிஐ series - [இதில் நான்கு படங்கள்]
அடிக்குறிப்பு
ஒரு வடக்கன் வீர காத
நாயர் சாப்
மிருகயா
மதிலுகள்
களிக்களம்
அமரம்
இன்ஸ்பெக்டர் பல்ராம்
கவுரவர்
பப்பயுடே சொந்தம் அப்புஸ்
துருவம் [ஒரு action படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். மம்மூட்டி சுரேஷ் கோபி ஜெயராம் விக்ரம் கன்னட பிரபாகர் கௌதமி, அஸ்வினி என்ற ருத்ரா ஆகியோர் நடிக்க இயக்கம் ஜோஷி உங்களுக்கு சூர்யா action சானல் வருமென்றால் அதில் அடிக்கடி பார்க்கலாம்]..
வாத்சலயம்
சைன்யம்
The King
The truth
இப்படி பல படங்கள்.
லால் படங்கள்
தாளவட்டம் [மனசுக்குள் மத்தாப்பூ]
நாடோடிக் காற்று [கதாநாயகன்]
சன்மனசுள்ளவருக்கு சமாதானம் [இல்லம்]
ராஜாவிண்டே மகன் [மக்கள் என் பக்கம்]
இருபதாம் நூற்றாண்டு
காந்தி நகர் 2 ண்ட் ஸ்ட்ரீட் [அண்ணா நகர் முதல் தெரு]
சித்ரம் [எங்கிருந்தோ வந்தான்]
கிரீடம் [கிரீடம்]
வந்தனம்
ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா
பரதம்
கமலதளம்
மணிசித்ரதாழ் [சந்திரமுகி]
தேவாசுரம்
இப்படி நிறைய வரும்.
இருவரும் சேர்ந்து நடித்ததில்
No 20 மெட்ராஸ் மெயில்
ஹரிகிருஷ்ணன்ஸ்
ட்வென்டி ட்வென்டி
துல்கர் வளர்ந்து வரும் நடிகன். நன்றாகவும் நடிக்கிறார். அவர் நடித்த உஸ்தாத் ஹோட்டல், செகண்ட் ஷோ, ABCD போன்றவற்றையும் பாருங்கள். நான் பெங்களூர் டேஸ் பார்த்தேன். விக்ரமாதித்தன் [மற்றொரு ஹீரோ உன்னி முகுந்தன் என்று நினைக்கிறேன்] பார்க்கவில்லை. தமிழில் கூட வாய் மூடி பேசுவோம் படத்தில் நன்றாக செய்திருந்தார் என்று கேள்விப்பட்டேன். புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் பார்ப்பதில்லை என்பதனால் அதை பார்க்கவில்லை. இப்போது மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் நாயகனாக நடிக்கிறார். பார்க்கலாம்.
இது மதுர கானங்கள் திரியா இல்லை மலையாளப் படங்களுக்கான திரியா என்று மாடரேட்டர் வந்து கேள்வி கேட்கும் முன் நான் எஸ்கேப் ஆகி விடுகிறேன்.
அன்புடன்
ஆமாம், த்ரிஷ்யம் பார்த்தீர்களா?
kalnayak
29th January 2015, 03:49 PM
சேச்சே, இங்க யாரும் மலையாளப் படத்தை பேசக்கூடாதுன்னு சொல்லமாட்டாங்க. அந்த படத்திலிருந்து பாட்ட போடுங்க. இல்லையா, அந்த படத்து ஸ்டில்ஸ் போடுங்கன்னு கேப்பாங்க. அம்புட்டுதான்.*
Russellzlc
29th January 2015, 04:33 PM
ரகுபதி ராகவ ராஜாராம்
சின்னக் கண்ணன்,
பன்னீரில் ஆடும் செவ்வாழை க் கால்கள்
பனிமேடை போலும் பால்வண்ண மேனி (ஜூரம் வராதோ)
கல்நாயக்,
"இந்த ட்ரைவர் புதுசு போல இருக்கு".
நான் "அதுக்கும் இப்பிடி நின்னு நின்னு போறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.
"பாவம் இந்த ரூட்ல புதுசா வந்திருப்பார். வழியில நின்னு நின்னு விசாரிச்சி ஓட்டுவார்." என்றார்.
....................... உங்கள் இருவருக்கும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகிறது? ரூம் போட்டு யோசிப்பீங்களா? வேலை கடுமைக்கு நடுவே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைக்கும் உங்களுக்கு நன்றி.
----------------------------------------
நாளை உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாள். அவரது நினைவுநாள் ஜனவரி 30ம் தேதி வருவதற்கு காரணமாக இருந்த கோட்சேவுக்கு சிலை வைப்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நாளை பூமி பூஜை போடப்போகிறார்களாம். கோட்சே தேசபக்தராம். இதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ‘இது எங்கள் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் வராது’ என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து விட்டது. பூமி பூஜை நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து மகாசபாவின் நடவடிக்கையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வேதனை.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது மிகுந்த துயருற்றேன். இந்தியாவின் இளம் தலைவர் இப்படி அநியாயமாகப் கொல்லப்பட்டாரே என்று. ராஜிவ் காந்தியை கொன்றவன் தேச விரோதி என்றால் மகாத்மா காந்தியை கொன்றவன் மட்டும் தேசாபிமானியா? அவனுக்கு சிலை வைக்கலாமா?
இதைக் கேட்டால் கேட்பவர்கள் மீது பிரிவினைவாதி, தேசவிரோதி என்று பழி விழும்.கோட்சேக்கு சிலை வைப்பவர்கள் தேச விராதியா? சிலை வேண்டாம் என்று கூறுபவர்கள் தேச விரோதியா?
‘மத ரீதியாக பிளவு படாத வரைதான் இந்தியா வெற்றி பெறும்’ என்று அமெரிக்க அதிபர் இங்கு வந்து அறிவுரை சொல்லும் அளவுக்கு நம் நிலைமை ஆகிவிட்டது. என்ன கொடுமை சார் இது.
பாரத விலாஸ் படத்தில் ‘இந்திய நாடு என் வீடு.. ’ பாடல் எனக்கு பிடித்த பாடல்.(இதிலும் மலையாள வரிகள் வரும் கல்நாயக். மது வேறு வருவார் ) ரகுபதி ராகவ ராஜராம்.... என்று பாடிய தேசப்பிதாவை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் இந்தப் பாடலை தரவேற்றுங்களேன். (அப்பாடா! நான் தேசியவாதி)
இப்படித்தான், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பேரறிஞர் அண்ணாவைப் பார்த்து அன்றைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தமிழ்த்தாய், தமிழன்னை என்று தேசியத்துக்கு எதிராக பிராந்திய வாதத்தை தூண்டுகிறீர்களே? எங்கே இருக்கிறாள் உங்கள் தமிழ்த்தாய்? அடையாளம் காட்ட முடியுமா? முகவரி உண்டா?’’ என்று கேள்வி எழுப்பினார். அண்ணாவை மடக்கி விட்டதாக அவர்கள் தரப்பில் ஒரே ஆரவாரம்.
அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் போல, அறிவுப் பெருங்கடலை குறு உருவுக்குள் அடக்கிய அறிஞர் அண்ணா சொன்னார் அமைதியாக.....‘பாரதமாதாவுக்கு பக்கத்து வீடு’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
29th January 2015, 05:54 PM
கலைவேந்தன் உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
இதோ நீங்கள் கேட்காத ரகுபதி ராகவ ராஜாராம் பாடல்:
https://www.youtube.com/watch?v=JvRJeN4rIx4
நீங்கள் கேட்ட இந்திய நாடு என் வீடு பாடல்:
https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4
Russellzlc
29th January 2015, 06:10 PM
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கிருஷ்ணா...
கேட்காமலும் கொடுப்பவரே கல்நாயக், கல்நாயக்.... வாழ்க. நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
29th January 2015, 09:33 PM
முரளி குரு...ஹை அழகா லிஸ்ட் போட்டிருக்கீங்க தாங்க்ஸ்..
அதுல பார்த்தீங்கன்னா கட்டக் கடைசியா போட்டீங்களே ஒருகொக்கி. அதுக்கு வர்றேன் த்ரிஷ்யம். முதல்ல.
இல்லீங்க்ணா.. முத தபா டிவிடி வாங்கி ஒழுங்கான ப்ரிண்ட் இல்லைப்ளஸ் தூய மலையாளம்.. பத்து நிமிடத்திற்குப் பின் எடுத்து விட்டேன்..பின் ஒரு மாதம் கழித்து நல்ல ப்ரிண்ட் வாங்கி வைத்து..பின் பார்க்கலாம் என்று தேட அகப்படவில்லை..ஒருமுறையல்ல இருமுறை.. நாளையாவது மறுபடி தேடவேண்டும் இல்லையெனில் இன்னொரு காப்பி வாங்கணும்..(இங்கே கிட்டத் தட்ட மூன்று மாதங்கள் ஒரு தியேட்டரில் ஓடியதுங்க.. ஒருமாதம் பெரிய தியேட்டர் இருகாட்சிகள் சின்னதியேட்டர் ஒருகாட்சின்ன்னு அப்புறம் மத்த இரண்டுமாதம் த்ரீ ஷோஸ் சின்ன தியேட்டர்ல.ஒரு ரெகார்ட் தான் த்ரிஷ்யம்..இங்க.. ச் போயிருக்கலாம் )
//ஈட்டா - மினிப்ரியா [கமல், சீமா - IV சசி]// போஸ்டர் மட்டும் நினைவிருக்கிறது.தமிழ்ப் படுத்தியது நினைவில்..என்ன “இன்ப தாகம்” என நினைக்கிறேன்.. இந்த ஐவி சசி இன்னொரு படம் எடுத்தார் அந்தப் படத்தை துபாயில் நண்பன் வீட்டில் பார்த்தேன்.. ப்ளூலாகூனோட தழுவல்..கொஞ்சம் லோ பட்ஜட் படம்.கதானாயகிக்கு மேலாடை வாங்கக் கூட ப்ரொட்யூசரிடம் பட்ஜெட் இடித்தது போலும்! படப்பெயர் மறந்து விட்டது.
ஈ நாடு சுந்தரம் தான்.. ஆனால் பார்க்கவில்லை..கதானாயகியின் பெயர் மட்டும் சுரேகா என ஏனோ நினைவில் தங்கியிருக்கிறது! (சரிதானே)
சிபிஐ சீரீஸ் (4வது இங்கு பார்த்தேன்..கோபிகை தானே) தவிர இதர மம்முட்டி படங்கள் பார்த்ததில்லை (கிராதகா எனப் பார்க்காதீர்கள்.- துபாயில் சிலவருடம் க.மு. அக்காவீட்டிலேயே ஜாகை.. எனது சகோதரி பயங்கரத் தமிழார்வம்..எனில் தமிழ் ஒன்லி அலோவ்ட் இன் த ஹவுஸ்.. பின் க.பி தனிவீட்டில் நார்த் இண்டியா தான்.. ஸீ டிவி புதிதாக வந்து ஒளிபரப்பாக அதுவே எண்டர் டெய்ன்மெண்ட் இன் டிவி.. தமிழ்ப்படம் என்றால் புதுப்பட காஸெட்- புதுமனைவி என்பதால் கொஞ்சம் பயம் (ஏண்டா பொய் சொல்ற இப்பவும் தானே… ஷ்ஷ் மனசாட்சி) )எனில் மலையாளப் படம் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு தான்.. (ஆனால் மலையாள நண்பர்கள் நண்பிகள் அலுவலகத்தில் கிடைத்தார்கள்.)
ஹை.. நீங்கள் சொல்ல விட்டுப் போன மம்முட்டி படம் நான் மதுரையில் பார்க்கவில்லை. பின்னர் பார்த்தேன் என்னவாக்கும் அது..மதுரை சக்தியில் ஓடியது.. யாத்ரா.. மம்முட்டி ஷோபனா (சரிதானே)
லால்ல க்ரீடம் மணிசித்ர தாழ், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, மூணாம் முறா அம்புட்டு தான்.. புதுசு கொஞ்சம் நிறைய பார்த்திருக்கிறேன்.. அக்கர யக்கர யாக்காரே என்று ஒரு பழைய படம்..ஒரு க்ரீடம் கடத்தப் பட்டு அமெரிக்கா போய் லாலும் (லால் தானா) இன்னொருவரும் போய் கண்டுபிடிப்பதாக வரும்காமடி..
இன்னொரு காமடி மலையாள ப் படம்… எனக்கு ரொம்பப் பிடித்த படம்…கஜ கேசரி யோகம்.. ஒரு மாவுத்தனுக்கு தான் வளர்த்த யானை இறந்துவிட பேங்க் லோன் வாங்கி ஒரு யானை வாங்குகிறான்..- நாப்பதாயிரமா அதுக்கெல்லாம் இதான் கிடைக்கும் என ஒரு சர்க்கஸ் யானையைத் தலையில் கட்டி விடுகிறார்கள். அதை வைத்து சம்பாதிக்கலாம் என மர ஆலைக்குச் சென்று மரத்தை எடு என ஹிந்தியில் (அதுக்கு ஹிந்தில பேசினா தான் புரியும்) சொல்ல அது சமர்த்தாய் வெட்டப் பட்டிருந்த மரத்தின் அடித்தளத்தில் ஒற்றைக்காலில் நின்று பிளிறும்!
பின் இதான் சர்க்கஸ் யானையாச்சே என அதை சைக்கிள் ஓட்ட விட்டு காசு பண்ணலாம் எனச் செய்கையில் டொபுக்கென்று சுகுமாரி ஆஜர்.. ப்ளூ க்ராஸ்..பிராணிகளை எல்லாம் கொடுமைப் படுத்தக் கூடாது என..
பின்னர் பாங்க் ஏன் இன்ஸ் டால் மென் ட் கட்டவில்லை என யானையைக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் விட்டுவிடும்.. எனச் செல்லும் கதை.. இன்னஸண்ட் அவர் மகளாய் கோடை மழை வித்யா..
உஸ்தாத் ஹோட்டல் நண்பர் வீட்டிற்குச் சென்ற போது போட்டிருந்தார்கள் பட் நான் தூங்கிவிட்டேன்..ம்ம் பார்க்கணும்..மற்ற படங்களையும்..
நியூ டெல்லி பற்றி விரிவாக எழுதாததன் காரணம் இந்த ஆல்மைட்டி நாவல் நினைவில் எவ்வளவு முயற்சித்தும் வரவில்லை..மம்முட்டியின் கதாபாத்திரம் மறக்க இயலா ஒன்று..( கரகர குரல் தியாகராஜனும் உண்டு)
.. இந்த வாயை மூடிப் பேசுவோம் டிவிடி வாங்கியும் பார்க்கவில்லை பின் ஒரு விடுமுறை நாளில் ஸீ தமிழில் சானல் மாற்றிய போது பாதியிலிருந்து பார்த்தேன் நன்றாக இருந்தது.. நஸ்ரியாவை விட மதுபாலா ஒரு இனிய ஆச்சர்யம்.. முன்பு பார்த்ததை விட வயதானால் எப்படி அழகு கூடும் …!
அப்பாவுடன் நடித்தவர் பையனுடனும் நடித்த போது அதே அழகு..ஆமாம் அவர் என்ன நினைத்திருப்பார்.
அழகன் படப்பாடல் தத்தித் தோம் ம, ம (மதுபாலா மம்முட்டி) புலமைப்பித்தன் வரிகள் மரகத மணி இசை?
https://www.youtube.com/watch?v=bPTTfCAt-q4&feature=player_detailpage&x-yt-ts=1422503916&x-yt-cl=85027636
ஹையா த்ரெட்ட ஜஸ்டிஃபை பண்ணியாச்சு..(கண்ணா உஷார்பார்ட்டி டா நீ) :)
chinnakkannan
29th January 2015, 09:48 PM
கலைவேந்தன். உங்கள் ரசிப்புத் தன்மைக்கு நன்றி.. தலைவர்கள் சொல்லும் நகைச்சுவையும் அழகு.. கோட்சேக்குச் சிலையா..ம்ம் கலிகாலம்.
கல் நாயக் நீங்களிட்ட ரகுபதி ராகவ ராஜாராம் லிங்க் போனால் யூட்யூப் என்கிட்டயே வா என்கிறது.. ஆனால் பாரத விலாஸ் ஒர்க் ஆனது. எனில் பி.சுசீலா பாடிய பாடல்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SB0Z2vZZeTc&x-yt-ts=1422503916&x-yt-cl=85027636
Russellisf
29th January 2015, 10:31 PM
இன்றும் புதிய பறவை என்ற படத்திலிருந்து "உன்னை ஒன்று கேட்பேன்" என்ற பாடல். பாடியவர் - பி சுசீலா, பாடல் - கவியரசர், இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கப்பலில் நடக்கும் விருந்தின்போது சிவாஜி சரோஜாதேவியை ஒரு பாட்டுப் பாட சொல்ல, அவர் தயங்கும்போது, கைதட்டி அவரை பாடுமாறு ஊக்குவிக்கிறார்.
முதலில் இரு முறை கை தட்டல், பின் ஒரு முறை, இவ்வாறு சிவாஜி இருமுறை செய்தவுடன், நடனக்குழுவினரும் தொடர்ந்து கைகளைத் தட்டி நடனமாடுகின்றனர். கூடவே பியானோ, மரக்கோஸ், பாங்கோஸ் சேர்ந்த இசையுடன் பின்னர் ட்ரம்ஸும் ஒலிக்க, ட்ரம்ஸின் வாசிப்பு முடிந்தவுடன், ஒரு சிறு அமைதி - சிவாஜி "ப்ளீஸ்" என்று சொல்ல, சரோஜாதேவி பாட ஆரம்பிக்கிறார்.
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
பெண்ணைப் பாட சொன்னால்
என்னப் பாடத் தோன்றும்
என்னப் பாடத் தோன்றும்
இதில் முதலில் வரும் என்னப் பாடத் தோன்றும் என்பதில் தோன்றும் என்ற இடத்தில், தோ ஓ ஓ ன்றும் என்றும், இரண்டாவது முறை என்ன்.. னப் பாடத் தோன்றும் என்று சுசீலா இழுத்துப் பாடும் இடத்திலும் மெல்லிசை மன்னர்களின் கற்பனை பளிச்சிடுகிறது.
பின் காதல் பாட்டுப் பாட என்று அனுபல்லவி துவங்குகிறது. அனுபல்லவிக்கு முன் இடையிசைஆக, பியானோவின் ஒரு நீண்ட இசையுடன், வயலின் சிறு இசை முடிந்ததும், கிடாரின் ஒரு தீர்மானமான மீட்டல். கூடவே, கை சொடுக்கும் ஒலி. சிவாஜி இந்த இடத்தில் இடது கையால் கை சொடுக்குவது அவருக்கே உரித்தான ஸ்டைல்.
காதல் பாட்டுப் பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டுப் பாட தாயாகவில்லை
அனுபல்லவியிலும் காலம் இன்னும் இல்லை என்ற வரியில் இல்ல்ல்...லை என்று இழுத்தும், தாலாட்டுப் பாட என்ற இடத்தில் தா..லா..ட்டுப் பாட என்று பிரித்தும் சுசீலா பாடும் அழகே தனி சுகம்.
உன்னை ஒன்று கேட்பேன்.....
முதல் சரணத்திற்கு முன் இடையிசையாக, ட்ரம்பெட் ஒலிக்க அதைத் தொடர்ந்து, பியானோவுடன் வயலின் இசை. சிவாஜி உண்மையிலே ட்ரம்பெட் வாசிப்பது போலவே இருக்கும், ட்ரம்பெட் வாசித்ததும் அதை வைத்து விட்டு அவர் பியானோவுக்கு சென்று அதை வாசிப்பது, அவரது நடிப்பின் நேர்த்தியைக் காண்பிக்கிறது. மிக இயல்பான நடிப்பு.
நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணைப் பாட சொன்னால் என்னப் பாடத் தோன்றும்
இதில் தோன்றும் என்று வரும் இடங்களில்லேல்லாம்
தோ ஓ ஓ ன்றும் என்று சுசீலா பாடுவது மிக இனிமை.
உன்னை ஒன்று கேட்பேன்.....
இரண்டாவது சரணத்திற்கு முன் சாக்ஸபோன், புல்லாங்குழல், வயலின் ஆகியவற்றின் மயக்கும் இசை. இதிலும் சிவாஜியின் சாக்ஸ் வாசிப்பு தத்ரூபமாக இருக்கும். இந்தப் பாடலுக்கு அழகுப் பதுமையாக சரோஜாதேவியை நடிக்க வைத்திருப்பது ஒரு நல்ல தேர்வு.
தனிமையில் கானம் சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னைப் பாட சொன்னால் என்னப் பாடத் தோன்றும்
சரணத்தின் வரிகள் அனைத்தும் punctuate செய்தாற்போல் பாடியிருப்பது, சுசீலாவின் சிறப்பு. பாடல் வரிகளை மிக எளிமையாகவும் இனிமையாகவும், இசைக்கு ஏற்ப தந்திருக்கும் கவியரசரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
பெண்ணை பாட சொன்னால்
என்னப் பாடத் தோன்றும்
என்னப் பாடத் தோன்றும்
மீண்டும் பல்லவி முடிந்தவுடன், ட்ரம்சின் தீர்மானத்துடன், அனைவரும் கைத்தட்ட பாடல் முடிவுகிறது. ஒரு இனிமையான மாலை நேரத்து விருந்தினை கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் பாடல். மனதுக்கு நிறைவான இசையுடன் கூடிய பாடல். காலங்கள் கடந்தும் மனதில் அழியாத கோலமாய் இருக்கும் ஒரு பாடல் என்றால் அது மிகையாகாது.
courtesy facebook
chinnakkannan
30th January 2015, 11:30 AM
கவிதையும் கானமும் - 12
&&&&&&&&&&&&&
திங்கள்
*************
நாலே முக்காலுக்கு மேலா ளருக்கு
ஏதோ நினைவில் ஞானம் வந்திட
இந்தா வேலை செய்எனச் சொல்ல
கணினியை உயிர்த்துக் கண்களைப் பதித்து
மனதினுள் திட்டி மெளனமாய் முடித்து
நிமிர்ந்து பார்த்தால் ஆறரை ஆக
வெளியில் வந்து சாதுவாய் நின்ற
முரட்டு இயந்திரக் குதிரையை உசுப்பி
வேகம் பிடித்தே சிகப்பை மீற
தாகங் கொண்டே காவலன் தடுக்க
ஹிஹி எனவே ஆங்கில மொழிந்து
சின்னதாய் ஐம்பது பொற்பணங் கொடுத்து
மறுபடி வேகமாய் வெள்ளத்தில் நீந்த
மனது மட்டும் முன்னால் சென்று
என்ன சொல்வாள் இன்றவள் என்றே
எண்ணப் புற்களை மெல்லசை போட
பத்துச் சுண்டல் விற்கும் பையன்
இருபது தம்பதி முப்பது குடும்பம்
ஐந்து ஆறு பொறுக்கிப் பேய்கள்
வர்றயா அம்மா எனக்கேட் டார்கள்..
மேலும் பஜ்ஜி கடலை வெள்ளரி
என்று பலரும் வாங்கச் சொல்லினர்
வழக்கம் போலவே மெல்ல வருவது
நியாயமா என்றே எரிமலை வெடிக்குமோ..
எண்ண ஓட்டத்தில் இடமும் வந்திட
மாலை மயங்கி மெல்லிருள் சேர
வண்டியை நிறுத்தி அட்டையைப் பெற்று
தாமதத் திற்கான தண்டனை பெறஅவள்
வழக்கமாய்த் தனியாய் இருக்கும் இடத்தை
அடைந்தால் காணோம்; என்ன செய்யலாம்..
தவித்துக் குழம்பித் திகைத்த போது
தொலைவில் மொட்டாய் வரவர மலர்ந்து
"கொஞ்சம் வேலை, மன்னி" என்றே
என்னைப் பார்த்துச் சிரித்தது திங்கள்..
**
https://www.youtube.com/watch?x-yt-ts=1422503916&x-yt-cl=85027636&v=XdooX-uKfKM&feature=player_detailpage
kalnayak
30th January 2015, 12:16 PM
சி.க.,
கவிதையாகவே கருத்தினை வரைந்து
பவித்திரமாகவே பாடலை தரும் முறை சிறப்பு.
தவித்திருப்பர் தனியாக, விரைந்திடுவோம் விரைவாக
ரவியவனும் மறைந்திடுவான் கண்டிடுவோம் காதலனை
போற்றிடுவோம் காதலரின் சிந்தனையை நீர் கொடுத்த பாடல்வாய்.
chinnakkannan
30th January 2015, 12:35 PM
//ரவியவனும் மறைந்திடுவான் கண்டிடுவோம் காதலனை
போற்றிடுவோம் காதலரின் சிந்தனையை நீர் கொடுத்த பாடல்வாய். // நன்றி கல் நாயக்
**
தண்ணிலாரிப் பாட்டு சிக்கிடுச்சுங்க்ணா
இணைந்த கைகள் நினைவிருக்கிறதா உங்களுக்கு.. (ராஜண்ணா பாட்டில் வேறு போட்டிருந்தீர்கள்) ஆபாவாணனின் இரண்டாவது படம் என நினைக்கிறேன்..ராம்கி, அருண்பாண்டியன் நிரோஷா அண்ட் அறிமுகம் சிந்து..
திடுதிப்பென இந்தப் பாட்டு எதிர்பாராத சூழ் நிலையில் ஆரம்பிக்கும் (தண்ணிலாரிப்பாட்டு) இவ்வளவு வருடம் கடந்த பின்னும் நினைவிலிருப்பதற்கு பாடல் இசை வரி சூழல் ப்ளஸ் இளஞ் ஜோடிகள் ராம்கி சிந்து...
https://www.youtube.com/watch?v=lJ-_spxWaik&x-yt-ts=1422503916&x-yt-cl=85027636&feature=player_detailpage
Russellzlc
30th January 2015, 04:43 PM
‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்....’
சின்னக் கண்ணன்,
கல்நாயக் சொல்வது போல கவிதையாகவே கருத்தை வரைந்து பாடலை தரும்முறை நன்றாகத்தான் இருக்கிறது. வழக்கம் போல கடைசியில் உங்கள் ‘பஞ்ச்.’ஆனால், எனக்குத்தான் கொஞ்சம் மிரட்சியாக இருக்கிறது. கவிதை எழுத வாருங்கள் திரியில் இதுபோல எழுதி விட்டு இங்கே இந்த பாமரனுக்காக சாதாரணமாக எழுதக் கூடாதா?
---------------------------------------
‘அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை மற்றும் அவருடன் தான் கொண்டுள்ள நெருக்கம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையைத் தந்துள்ளது’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைய சூழலில் உலகை ஆட்டிப்படைப்பது அமெரிக்காதான் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்நிலையில், அந்நாட்டுடனான உறவை நமது முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும்.இந்தியாவுக்கு உதவியாகவும் கடனாகவும் 400 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவோம் என்றும் ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் ஒபாமா கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
அணுசக்தி உடன்பாடு பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும்- அணுமின் நிலையங்களில் எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பாளி? இழப்பீடு யார் தருவது? போன்றவற்றில் வழாவழா கொழகொழா.
சரி... இருதரப்பு உறவுகளைப் பற்றி ரொம்ப எழுதினாலும் போரடிக்கும். சுருக்கமாக,....
‘இந்தியாவும் அமெரிக்காவும் பல மொழிகள், இனங்கள், மதங்கள், கலாசாரங்களைக் கொண்ட ஜனநாயக நாடுகளாக இருப்பதாலும் மனித உரிமைகளைப் போற்றி மதிப்பதாலும் இருநாடுகளிடையே ஏற்பட்டுள்ள உறவு நிலைத்து வளரும் என்று நம்புகிறேன்’ என்கிறார் ஒபாமா. பரஸ்பர நன்மை பயக்கும் உறவு கொண்டால் அந்த சொந்தம் தொடரட்டுமே...
பிராப்தம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல்..
‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது...’
நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் அருமையான நடிப்பில் தெய்வப் பாடகர், இசையரசியின் குரலில் நம்மை மயக்கும் பாடல்...
‘விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண..’
விளக்கு என்றாலே இரவில்தான் இருக்கும். இந்த இடத்தில் விளக்கு என்பது சுடர் விளக்கு. இரவில் தனிமையில் விளக்கின் ஒளியில் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் முகத்தை சட்டென நேருக்கு நேர் பார்க்காமல் லேசாக ஜாடையில் (ஓரக்கண்ணால்)காண...
‘வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண...‘
வெள்ளியைப் போன்ற முகத்தில் (நிலவு) முத்தாக வியர்வை (பன்னீர்) தெளிக்கும் கோலம் நான் காண..
கவியரசரின் சுகமான வரிகள்... இதற்கு மேல் வேணாங்க.
இந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரேடியோவில் மக்கள் திலகத்தின் சிறப்புத் தேன் கிண்ணம். தனது படங்களின் சிறப்பான பாடல்களை போட்டு பொளந்து கட்டப் போகிறார் என்று பார்த்தால் தன் படத்தில் இருந்து ஒரு பாடல் கூட போடவில்லை அந்த பெருந்தன்மையின் பேரரசர். அவருக்குப் பிடித்த பாடல் என்று அப்போது மிகவும் பிரபலமாகியிருந்த இந்த பாடலை போட்டார். மிகவும் அருமையான பாடல்.
திரு.கோபால்,
நேற்று இரவு எதேச்சையாகப் பார்த்தேன். நீங்கள் லாக் இன் ஆகியிருந்தீர்கள். பார்க்கிறீர்களே? பதிவு போடக் கூடாதா? உங்களுக்காக என் வேண்டுகோளைக்கூட தளர்த்திக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு என்று கூறியிருந்தேன். நீங்கள் உங்கள் ஸ்டைலில் எல்லாரையும் (என்னையும் சேர்த்து) திட்டுங்கள்(!). பதிலுக்கு நாங்களும் திட்டி (!) சரிப்படுத்திக் கொள்ளலாம்.
நன்றாக எழுதக் கூடியவர் நீங்கள். சரக்கும் உள்ளவர். மக்கள் திலகம் திரிக்கு உங்களை கூப்பிடவில்லை. கூப்பிட்டாலும் வரமாட்டீர்கள். நாங்கள் தீண்டத்தகாதவர்கள். இங்கே வரலாமே. உண்மையைச் சொன்னால் நீங்கள் இல்லாமல் என் எழுத்துக்கள் ‘சப்’பென்று இருப்பதாக எனக்கே ஒரு உணர்வு. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நமது..
‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
30th January 2015, 08:43 PM
//சாதாரணமாக எழுதக் கூடாதா?// கலைவேந்தன்...ஸாரிங்ணா.. அண்ட் ஸரிங்க்ணா..:)
வழக்கம்போல உங்கள் ஸ்டைலில் அரசியல் கலந்த எழுத்து... ம்ம் நடத்துங்கள்.. நைஸ்..
சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் இனிமையான பாடல்
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uLmsuXcID7U&x-yt-ts=1422579428&x-yt-cl=85114404
RAGHAVENDRA
31st January 2015, 08:12 AM
நண்பர்களே,
பல்வேறு இடைவிடாத வேலைகளின் காரணத்தால் தொடர்ந்து மய்யத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. இன்னும் சில நாட்களுக்குப் பின் வழக்கம் போல் தொடர உள்ளேன்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பங்களிப்புகளைப் படித்தும் வருகிறேன்.
அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
chinnakkannan
31st January 2015, 09:30 AM
ராகவேந்திரரே.ஃபங்க்*ஷன் எல்லாம் நல்லபடியாய் முடிந்ததா ( நான் சுவாசிக்கும் சிவாஜி ஃபங்க்*ஷன் என எழுதியிருந்த நினைவு..சரிதானே) மிக்க நன்றி தங்களுடைய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்..
சிலதினங்கள் முன்பு இந்தப்பாடல் பார்த்தேன்..இங்கு இதுவரை வந்ததில்லை தானே..உங்கள் நினைவும் வாசு வின் நினைவும் மறுபடியும் வந்தது..தேடி வந்த திருமகள் என்ன விதமான படம்
கேட்டால் ஒன்று தரவேண்டும். கொடுத்தால் அதைப் பெற வேண்டும்
ஒன்றாய் அதைத் தரமாட்டேன் இரண்டாய் அதைப் பெற மாட்டேன் (இப்ப என்ன தாம்மா சொல்ல வர்ற நீ!)
. ரவி காஞ்ச் நல்ல டூயட்..
http://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&x-yt-cl=84503534&v=Isc6FZuWEvA&feature=player_detailpage
chinnakkannan
31st January 2015, 09:58 AM
முரளி ஸ்ரீனிவாஸ்… குரு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.எப்பொழுதும் வாழ்வில் மகிழ்ச்சி பெருகட்டும்.
வரமாக எல்லாமே வாழ்க்கையில் கிட்டும்
முரளியுமை எய்தாது மூப்பு
அப்புற மேல்ட்டுக்கு, ஒரு நல்ல மலையாளப்படம் பற்றி ச் சொல்ல விட்டுப் போய் விட்டது. யே அடுத்த காலத்து என்று ஒருபடம்..பாருங்கள்.. (படம் முடியும் போது பார்ப்பவருக்கே ஒரு விதமான நிம்மதி ப்ளஸ் மகிழ்ச்சி வரும்..கொஞ்சம் இயல்பான படம்)
உங்கள் பிறந்த நாளுக்குஎன்ன பாட் போடலாம்….
ஒரு பழசு ஒரு புதுசு ஓகேயா.
மயில்வண்ணத் தாவணிதான்; மஞசள் ரவிக்கை;
துயில்வரும் ராத்திரியில் தோய்ந்திருக்கும் வண்ணமதைக்
கொண்டிருந்த கூந்தலிலே கூட்டுகிறேன் அழகென்றே
நின்றிருந்த ரோஜாவும் நன்று.
.
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
ஓவியப் பாவையென ஓராள்தான் உண்டதுவும்
தேவிநீ என்று தெளிவு..
கள்ளத் தனமாய் கவர்ந்தெடுத்துச் சென்றவந்த
உள்ளம் உனதென்றே உணர்..
(கலை திட்டப் போகுது புரியலைன்னு!)
சம்திங் சம்திங் படத்துலருந்து தாவணி த்ரிஷா..பூப்பறிக்க நீயும் போகாதே உன்னைக் கண்டாலே பூக்களுக்குள் கத்திச் சண்டையடி..
https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&v=xAWGS5tB9Lw&x-yt-ts=1422579428&feature=player_detailpage
அப்புறம், ந.தி தான்.. மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண்பார்க்க வந்தேனடி…. எப்ப வேணா கேட்கலாம்
ரோஜா போட்ட பொண் பாட் வேற எதுவும் இருக்கா..
https://www.youtube.com/watch?v=gaN278K2mKs&feature=player_detailpage&x-yt-ts=1422579428&x-yt-cl=85114404
umaramesh
31st January 2015, 03:37 PM
பிராப்தம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல்..
‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது...’
நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் அருமையான நடிப்பில் தெய்வப் பாடகர், இசையரசியின் குரலில் நம்மை மயக்கும் பாடல்...
‘விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண..’
விளக்கு என்றாலே இரவில்தான் இருக்கும். இந்த இடத்தில் விளக்கு என்பது சுடர் விளக்கு. இரவில் தனிமையில் விளக்கின் ஒளியில் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் முகத்தை சட்டென நேருக்கு நேர் பார்க்காமல் லேசாக ஜாடையில் (ஓரக்கண்ணால்)காண...
‘வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண...‘
வெள்ளியைப் போன்ற முகத்தில் (நிலவு) முத்தாக வியர்வை (பன்னீர்) தெளிக்கும் கோலம் நான் காண..
கவியரசரின் சுகமான வரிகள்... இதற்கு மேல் வேணாங்க.
Thanks for remembering this song.Ever green one with entirely different orchestra scored by MSV. You have mentioned about everyone in the song except MSV.
So sad.
Thanks
Ramesh
Murali Srinivas
1st February 2015, 01:22 AM
பிறந்த நாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்ணா!
பிறந்த நாள் பரிசாக கொடுத்த இரண்டு பாடல்களுக்கும் குறிப்பாக மேள தாளம் கேட்கும் காலம் படத்திற்கு மனமார்ந்த நன்றி! எங்கள் குழு நண்பர்களுக்கே வாணிஸ்ரீ மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த பாடலில் கிளப்பியிருப்பார். அந்த காலத்து நாயகியர் எல்லோரும் புடவை கட்டும்போது தலைப்பை Floating - ல் தான் விட்டிருப்பார்கள். அனால் இந்தப் பாடலில் வாணிஸ்ரீ தலைப்பை இடுப்பில் சொருகி கொண்டு ஆடுவது attractive - ஆக இருக்கும். நடிகர் திலகம் கேட்கவே வேண்டாம்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை மறக்கவே முடியாத விஷயம் நமது ஸ்ரீதேவியில் 1974 ஜனவரி 26 அன்று ஓபனிங் ஷோ காலை 7 மணிக்கு பார்த்தது. பயங்கரமான கூட்டம். படம் முடிந்து வரும்போது பின்பக்கம் கருப்பையா பிள்ளை ஸ்டோர் வழியாக வெளியே வந்தோம்.
அது போல் சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் பாடலுக்கும் நன்றி. [நன்றி நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கும்] இன்று மாலை MSV times இணையதளத்தின் ஆண்டு விழாவில் கலந்துக் கொண்டேன். அருமையான பாடல்கள் பாடினார்கள். பாராட்டு பெற்ற இசையரசி தன் சொந்தக்குரலில் 4, 5 பாடல்களின் பல்லவி பாட அதில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்கை இந்த வயதிலும் அப்படியே பாடினார் பாருங்கள், My Day was Made!
அன்புடன்
chinnakkannan
1st February 2015, 10:16 AM
//கருப்பையா பிள்ளை ஸ்டோர் //சி.செ ஸ்ரீ தேவியில் தான் பார்த்தேன் விவரம் தெரியாத வயதில் .. அப்புறம் வளர்ந்த பிறகு வே.கி பிறகுதான் பார்க்க முடிந்தது! இந்த க.பி ஸ்டோர்ஸ் இன்னும் இருக்கிறதா.. அந்தச் சாக்கடை.. அந்தத் தெரு தான் வில் லீட் டு பேச்சியம்மன் கோவில் அண்ட் பேச்சியம்மன் படித்துறை.. அங்கு ஒரு கடலைக் கடை (உப்புக்கடலை ஃபேமஸ்) அதே போல் மேலமாசி வீதி நேரு பிள்ளையாருக்கு டயகனாலா பார்த்தா அங்கும் ஒரு கடலைக் கடை-சூடாக வறுத்துத் தருவார்கள்..ம்ம்//இன்று மாலை MSV times இணையதளத்தின் ஆண்டு விழாவில் கலந்துக் கொண்டேன்// கொடுத்துவைத்தவர் முரளி நீங்கள்..
க.பி ஸ்டோர்ஸ் வழியாக மக்கள் தப்பிப்பதாக ஹவுஸ்ஃபுல்லில் பார்த்திபன் எடுத்திருப்பார் இல்லியோ..
Russellzlc
1st February 2015, 04:52 PM
Thanks for remembering this song.Ever green one with entirely different orchestra scored by MSV. You have mentioned about everyone in the song except MSV.
So sad.
Thanks
Ramesh
திரு.ரமேஷ் அவர்களுக்கு,
பணிகளுக்கு இடையே கிடைத்த கொஞ்ச நேரத்தில் டீயை உறிஞ்சிக் கொண்டே போட்ட பதிவு அது. நானும் மெல்லிசை மன்னர்களின் ரசிகன்தான். 2 ஆண்டுகளுக்கு முன் ஜெயா டி.வி.சார்பில் மெல்லிசை மன்னர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஃபோர்ட் பியஸ்டா காரும் பொற்காசுகளும் வழங்கி அப்போது முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் கவுரவித்தார்.
மெல்லிசை மன்னர்கள் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய விருது இதுதான் என்பது எனக்கு வேதனை. அந்த விழாவில் செல்வி. ஜெயலலிதா பேசும்போது, ‘பத்ம விருதுகளுக்காக இவர்களது பெயரை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், நிராகரிக்கப்பட்டு விட்டது’ என்று கூறினார். பத்ம விருதுகள் கூட அவர்களுக்கு கிடைக்காதது மிகப் பெரிய வருத்தம்.
வேண்டுமென்றே இல்லாவிட்டாலும் கூட, எனது பதிவில் மெல்லிசை மன்னரின் பெயரை குறிப்பிட மறந்தது தவறுதான். மன்னிக்கவும். தவறை சுட்டிக்காட்டியமைக்கும் தங்களின் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
1st February 2015, 04:54 PM
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் பாடலை தரவேற்றியதற்கு நன்றி சின்னக் கண்ணன்.கொஞ்சம் வேலை. விரைவில் பாட்டோடு வருகிறேன்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி திரு.ராகவேந்திரா சார். ‘சில நாட்களுக்குப் பின் வழக்கம்போல தொடர உள்ளேன் ’ என்று நீங்கள் கூறியிருப்பது தெம்பளிக்கிறது. நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
1st February 2015, 04:57 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
தாங்கள் ‘எமனுக்கு எமனாய்’ இருந்து ‘சிரஞ்சீவி’யாய் வாழ்ந்து ‘சாதனை ’படைக்க மக்கள் திலகம் திரி சகோதரர்களின் சார்பில் எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுதான் திரியை பார்த்தேன். தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
2nd February 2015, 10:40 AM
எல்லாருக்கும் வணக்கம். வருகின்றவர்கள் தொடர்ந்து வாருங்கள். நின்றவர்கள் நிற்பதை நிறுத்தி வாருங்கள். பார்ப்பவர்கள் பதிக்கவும் வாருங்கள். புதிதாகவும் வாருங்கள். இன்றைய பொழுதை இந்த பாடலுடன் ஆரம்பிப்போம்.
https://www.youtube.com/watch?v=DHju8eAeYs8
இந்த பாட்டின் முதல் வரி இப்போதுதான் எனக்காக எழுதப்பட்டதாக நினைக்கிறேன். அதனால்...
விரைவில் எதிர் பாருங்கள்.
Murali Srinivas
2nd February 2015, 01:10 PM
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கலைவேந்தன். அன்றைய தினம் (அதாவது 31-ந் தேதி சனிக்கிழமை) நான் முன்னரே குறிப்பிட்டது போல் MSV Times இணையதளத்தின் ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கே இந்த சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் பாடலை மேடையில் பாடினார்கள். அதற்கு முந்தைய நாள்தான் நீங்கள் அந்தப் பாடலை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். ஆகவே அந்த நாளில் அன்றைய நேரம் என் நினைவில் நீங்கள் வந்து போனீர்கள். அதனால் பிறந்த நாளன்றே நீங்கள் வாழ்த்தி விட்டதாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் நன்றி.
அன்புடன்
Murali Srinivas
2nd February 2015, 01:26 PM
கண்ணா,
நான் கொடுத்து வைத்தவன் என்று சொல்லியிருக்கிறீர்கள். சென்னையில் வசிப்பதால் இது சாத்தியமாகிறது. நாளையே வேறு ஊர் போகவேண்டி வந்தால் இந்த வாய்ப்பு கிடைக்காது. ஆகவே இருக்கும்வரை இவற்றையெல்லாம் ரசிப்போம்.
இந்த இணையதளத்தைப் பற்றி [ MSV Times ] சொல்ல வேண்டும். இதன் பின்னில் இருப்பவர்கள் அனைவரும் மெல்லிசை மன்னரின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல அவரின் இசையைப் பற்றி அணு அணுவாக விவரிப்பார்கள். ஒவ்வொரு பாடலிலும் அவர் எப்படியெல்லாம் புதுமைகள் செய்திருக்கிறார் பாடல் இடம்பெறும் அந்த காட்சி சூழலை தன இசையால் எப்படி மெருகேற்றியிருக்கிறார் என்பதையெல்லாம் மேடையில் விளக்குவார்கள். அது ஒரு காரணம் என்றால் அவர்கள் விழா தினத்தன்று மேடையில் பாடும் இசைக் குழுவினரிடம் எந்தெந்த பாடல்களைப் பாட வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு கொடுத்து விடுவார்கள். அது எப்படி இருக்கும் என்றால் அருமையான பாடல்கள் ஆனால் சந்தர்ப்ப சூழலால் அவற்றின் தரத்திற்கேற்ப சிலாகிப்படாதவையாக இருக்கும்.
ஞான ஒளி என்றால் எல்லோரும் தேவனே பாடலை நினைக்கும்போது இவர்கள் மணமேடை மலர்களுடன் தீபம் பாடலை தேர்வு செய்திருப்பார்கள். கலைக்கோவில் என்றால் தங்கரதம் வந்தது வீதியிலே என்று நாம் எதிர்பார்க்க தேவியர் இருவர் முருகனுக்கு பாடல் பாடப்படும். அது மட்டுமல்ல மேடையில் கேட்கவே முடியாத அற்புதமான பாடல்களை அளித்து அசத்துவார்கள். வாழ்வு என் பக்கம் படத்தில் வீணை பேசும் அது மீட்டும் விரல்களை கண்டு, ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில் கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னைகையில், சங்கர் சலீம் சைமன் படத்தில் இது உந்தன் வீட்டு கிளிதான் போன்ற பல பாடல்கள் இவர்கள் மேடையில்தான் கேட்டிருக்கிறேன்.
பலருக்கும் தெரியாத நுணுக்கங்களை இவர்கள் சொல்லும் அழகே தனி. சில வருடங்களுக்கு முன் இது போன்ற விழா மேடையில் இவர்கள் சொன்ன தகவல். கர்நாடக இசைக் கச்சேரிகளில் அநேகமாக ஒரு சின்ன விருத்தமாவது மத்யமாவதி ராகத்தில் பாடுவார்கள் அதன் காரணம் என்னவென்று சொன்னார்கள். ஒரு சில ராகங்களை குறிப்பிட்ட நேரத்தில்தான் பாட முடியும். [காலை மாலை, இரவு நேரங்கள்]. குறிப்பிட்ட நேரத்தில் இல்லாமல் வேறு சமயத்தில் பாடினால் ராக தோஷம் பாடகரை பாதிக்குமாம். இது உண்மையா இல்லை மூட நம்பிக்கையா என்று தெரியவில்லை. ஆனால் கச்சேரி என்று வந்துவிட்டால் இதை பாடலாம் இதை பாடக் கூடாது என்று ஒதுக்கி வைக்க முடியாது. பாடித்தான் ஆக வேண்டும். அதற்கு பரிகாரம்தான் மத்யமாவதி. காரணம் அது தோஷ நிவாரணியாம். இதை சொல்லிவிட்டு மத்யமாவதி ராகத்தில் அமைந்த வேலாலே விழிகள் பாடினார்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு மெல்லிசை மன்னரின் மேதமைக்கு ஒரு உதாரணம் சொன்னார்கள். அன்பே வா படத்தில் வரும் வெட்கமில்லை நாணமில்லை பாடலை எடுத்துக் கொண்டார்கள். பொதுவாக திரைப்பாடல்களில் பல்லவி slowவாக இருக்கும். சரணத்தில் வேகம் கூடி மீண்டும் slow பல்லவிக்கு திரும்பி வருவார்கள். ஆனால் இந்தப் பாடலில் நேரெதிர். பலலவி செம ஸ்பீட். சரணம் slow. Fast பீட்ஸிலிருந்து slow பீட்ஸிற்கு வருவது எளிது. ஆனால் ரிவர்சில் எப்படி இதை செய்வது?
சரணம் இப்படி இருக்கும்
பருவ நிலா அருகில் வர
பழம் நழுவி பாலில் விழ
உறக்கம் வந்தே விலகிச் செல்ல
தலைவன் வந்தான் உறவைச் சொல்ல
இந்த slow பீட்ஸிலிருந்து பல்லவியின் ஸ்பீட் tempoவிற்கு போக MSV என்ன செய்தார்? பாடலே நாயகியும் தோழியரும் பாடுவதாக சூழல் என்பதனால் உடனே அங்கு ஒரு கோரஸ் ஹம்மிங் வைத்தார்.
ஆ...ஹா...ஆ...ஹா...ஆ...ஹா...ஆ...ஹா...ஆ ஆ ஆ ஆ ஆ...
அது land ஆகும் இடத்தில பல்லவியின் ஸ்பீட் பீட்ஸ் துவங்குவது போல் வைத்தார்.
இந்த நுணுக்கமான விஷயத்தை அவர்கள் மேடையில் சொல்ல பிரமித்து போய் கேட்டுக் கொண்டிருந்தேன். அன்று மட்டுமல்ல அதன் பிறகு எப்போது இந்தப் பாடல் கேட்டாலும் மெல்லிசை மன்னரின் அந்த நுணுக்கம்தான் மனதில் ஓடிவரும்.
மேற்சொன்னவையெல்லாம் முந்தைய வருடங்களில் கேட்டது. இந்த வருட விழா பற்றி அடுத்த பதிவில்.
அன்புடன்
Russellzlc
2nd February 2015, 06:03 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
எம்எஸ்வி டைம்ஸ் நிகழ்ச்சியின்போது என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி முரளி. உங்களுக்கு 31ம் தேதி பிறந்த நாள் என்று எனக்கு தெரியாது. தாமதமாக வாழ்த்து சொல்கிறேனே என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் கூறியபிறகுதான் எனக்கே தோன்றியது. 30ம் தேதியே ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்..’ பாடல் பற்றி குறிப்பிட்டதன் மூலம் முதல் நாளே, எல்லாருக்கும் முன்னதாகவே வாழ்த்து சொல்லிவிட்ட மகிழ்ச்சி எனக்கு.
எம்எஸ்வி டைம்ஸ் நிகழ்ச்சியில், அன்பே வா படத்தின் பாடலுக்கு அவர்கள் கூறியிருக்கும் விளக்கம் அருமை. மெல்லிசை மன்னர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதோடு, அவர்களது இசைப் புலமையை நம் மக்கள் அணுஅணுவாய் நுணுக்கமாய் ரசிக்கவில்லை என்பதே என் கருத்து.
சித்ரா பவுர்ணமி படத்தில் ‘வந்தாலும் வந்தாண்டி ராஜா... ’ பாடலுக்கு (இதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்)கதாநாயகனின் எண்ண ஓட்டத்துக்கேற்ப உற்சாகமாகவும் பழிவாங்கும் உணர்வோடும் கம்பீரமாக திரு. டிஎம்எஸ் அவர்கள் பாடும்போது அதற்கேற்ப ஆர்ப்பாட்டமாக ஒலிக்கும் பின்னணி இசை, பழிவாங்கலை தடுக்க நினைக்கும் நாயகிக்காக இசையரசி பாடும்போது அமைதியும் கருணையுமாய் தவழும்.
நான் படத்தில் (இசை டி.கே.ராமமூர்த்தி) ‘போதுமோ... இந்த இடம்...’ பாடல் வெளியே மழை பெய்யும் நிலையில், நாயகனும் நாயகியும் காருக்குள் பாடுவதாக படமாக்கப்பட்டிருக்கும். காருக்கு வெளியே காட்சி காட்டப்படும்போது பாடல் சற்று ஒலி குறைவாக கேட்பதாக (கார் ஜன்னல் கண்ணாடிகள் உயர்த்தப்பட்டிருப்பதால்) காட்டப்படும். இதற்காக ஒலியைக் குறைத்து வாசித்திருக்க மாட்டார்கள். ரீ ரெக்கார்டிங்கின் போது ஒலி அளவை குறைத்திருப்பார்கள். என்றாலும், இந்த நுணுக்கம் புரியாமல் அந்தக் காட்சியின் போது தியேட்டரில் ஆபரேட்டர் ரூமை பார்த்து, ‘ஏய்..... சவுண்டு...’ என்று கத்தியவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறேன்.
எம்எஸ்வி டைம்ஸின் இந்த ஆண்டு விழா பற்றி எழுதுங்கள். இசையால் இணைவோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
2nd February 2015, 09:52 PM
//ஞான ஒளி என்றால் எல்லோரும் தேவனே பாடலை நினைக்கும்போது இவர்கள் மணமேடை மலர்களுடன் தீபம் பாடலை தேர்வு செய்திருப்பார்கள். கலைக்கோவில் என்றால் தங்கரதம் வந்தது வீதியிலே என்று நாம் எதிர்பார்க்க தேவியர் இருவர் முருகனுக்கு பாடல் பாடப்படும். அது மட்டுமல்ல மேடையில் கேட்கவே முடியாத அற்புதமான பாடல்களை அளித்து அசத்துவார்கள்// முரளீ ஈ ஈங்க்ணா… வெகு அழகிய பதிவு. எம்.எஸ்.வி டைம்ஸ் பார்த்ததில்லை..இப்போது தான் பார்த்தேன் நிதானமாகப் படிக்கவேண்டும்
//மத்யமாவதி ராகத்தில் அமைந்த வேலாலே விழிகள்// ஆக்சுவலா இதத் தான் கிஃப்டா கொடுக்கறதா நினைச்சுருந்தேன்.. கார்த்திக் வந்தார்னா வெல்கம் பேக்னு கொடுக்கலாம்னு விட்டுட்டேன்.. பட் உங்க மேளதாளம் பாட்டுக்காக த் தேடிய போது இந்தப்பாட்டையும் முழுக்கப் பார்த்தேனே
//இந்த slow பீட்ஸிலிருந்து பல்லவியின் ஸ்பீட் tempoவிற்கு போக MSV என்ன செய்தார்? பாடலே நாயகியும் தோழியரும் பாடுவதாக சூழல் என்பதனால் உடனே அங்கு ஒரு கோரஸ் ஹம்மிங் வைத்தார்.
ஆ...ஹா...ஆ...ஹா...ஆ...ஹா...ஆ...ஹா...ஆ ஆ ஆ ஆ ஆ...// நிஜம்மாகவே எனக்குத் தெரியாத அபூர்வமான விஷயம் முரளி.. நன்றி..
//மேற்சொன்னவையெல்லாம் முந்தைய வருடங்களில் கேட்டது. இந்த வருட விழா பற்றி அடுத்த பதிவில்// சொல்லுங்க சொல்லுங்க..
கலைவேந்தன்,
//நான் படத்தில் (இசை டி.கே.ராமமூர்த்தி) ‘போதுமோ... இந்த இடம்...’ பாடல் வெளியே மழை பெய்யும் நிலையில், நாயகனும் நாயகியும் காருக்குள் பாடுவதாக படமாக்கப்பட்டிருக்கும். காருக்கு வெளியே காட்சி காட்டப்படும்போது பாடல் சற்று ஒலி குறைவாக கேட்பதாக// இது எனக்குப் படம் பார்க்கும் போது புரிந்து வியந்திருக்கிறேன்.. நல்ல பாட்டு.. இது மாதிரி இன்னொரு பாட் நினைவுக்கு வருது.. அது கட்டக் கடசீல சொல்றேன்..
//சித்ரா பவுர்ணமி படத்தில் ‘வந்தாலும் வந்தாண்டி ராஜா... ’ பாடலுக்கு (இதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்)// ஹையா..ஜாலி..
ஏதோ எழுதணும்னு நினைச்சு மறந்துபோனதுனால கட்டக் கடசி இப்பவே வந்துடுத்து! :)
அந்தப் பாட்டு பெட்டியிலே பூட்டிவைத்த கட்டுச் சேவல் கட்டுச் சேவல் பக்கத்திலே பெட்டைக்கோழி..( ஹையா நானும் கல் நாயக்கும் கோழிப்பாட்டா பாடப் போறோமே
இந்தாங்க கலை உங்களுக்குப் “போதுமோ இந்த இடம்..!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lAHJ-mmz--c&x-yt-cl=85114404&x-yt-ts=1422579428
**
chinnakkannan
2nd February 2015, 09:54 PM
**
கோழிப் பாடல்கள் -1
மதுரையில் என் வீடிருக்கும் தெருவிற்கு இடப்பக்க முனையில் –முக்கில் சாலை..சாலையைக் கடந்து சென்றால் நெட்டுவாக்கில் கொஞ்சம் செம்மண்பாதையிட்ட (அல்லது ரோட் போட்டிருந்ததா என நினைவில்லை) வி.பி சதுக்கம் என்று ஒரு தெரு வரும்..அங்கு இருந்த ஒருவீட்டில் என் சிறுவயது சினேகிதனை (அப்போ நான் நாலாம் கிளாஸ் ஆர் அஞ்சாம் கிளாஸ் நினைவில்லை) பார்க்கப் போவேன் அவர்கள் வீட்டில் கோழி வளர்த்துக் கொண்டிருந்தார்கள் நான்கைந்து கோழிகள் கொக் கொக் கொக்கென குட்டிக்கண்ணை உருட்டி உருட்டி கிராதகா நீயா என்னைச் சாப்பிடுவே என்பது போல் பார்த்துக் கொஞ்சம் ஒயிலாட்டம் ஆடி இடையை அசைத்துச் செல்லும்.. ஒன்றிரண்டு கொண்டை வைத்த சேவல்களும் நடை பயிலும்..அப்புறம் தான் குஞ்சுகள் கீச் கீச் எனக் கத்தியபடி குட்டிக் கண்களை உருட்டிய படி நடக்கிறதே உருள்வது போல இருக்கும்படி சென்று கொண்டிருக்கும்.. ஆனால் முதல் முதல் பார்த்த போது கொஞ்சம் ஆச்சர்யம்.. காரணம் ஒரு சில கோழிக்குஞ்சுகள் பச்சை ஒருசில மஞ்சள் ஒரு சில பிங்க் என ஹோலி நிறத்தில் இருந்தன.. என்னடா இது எனக் கேட்டதற்கு ஏதோ தூக்கிட்டுப் போகாம (கழுகா பூனையா நினைவில்லை) இந்த ஏற்பாடு என அந்த ஃப்ரண்ட் சொன்னது நினைவிருக்கிறது..
ஆக நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் கோழியைச் சாப்பிடாவிட்டாலும் கோழியைப் பார்த்திருக்கிறேன் என்றுதான்..வளர்ந்த பிறகு பார்த்த கோ….க்கள் வேறு! ஆக..
பெட்டிக்குள் பூட்டப் பட்ட கதானாயகி கூட மாட்டிக் கொண்ட கதானாயகன்..இதோ பாட்டு.. என்னா விசில் ஹம்மிங்க்ணா…
https://www.youtube.com/watch?v=VVqZ9AwfNf8&feature=player_detailpage&x-yt-ts=1422579428&x-yt-cl=85114404
chinnakkannan
2nd February 2015, 10:13 PM
கோழிப் பாடல்கள் – 2
கரைசெல்ல வாழ்வினில் கண்களை மூடி
இறையைத் தொழுதல் இனிது..
ஆமாங்க சில பேர் - பொறந்ததுலருந்து வளர்ந்து பெரியவனாகி வேலை கிடைச்சு காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்க உருகி பின் அப்பா அம்மா பார்த்த பொண்ணை சமர்த்தா சொத்தோட கல்யாணங்கட்டி ஹனிமூனுக்கு நிறைய செலவெல்லாம் மாமனார்க்குவெக்காம சிக்கனமா ஸ்விட்சர்லாந்துல்லாம் போய்ட்டு வந்து பின் சமர்த்தா வாரிசுகளை ப் பெத்து வளாத்து ஆளாக்கி அவர்களைக் கல்யாணங்கட்டி மூப்பெய்தி பின் கண்மூடற நிலை வர வரைக்கும் என்னெல்லாம் பொய்கள் சொல்லியிருப்பாங்க… அவ்வப்ப இறைவனைக் கும்பிட்டிருப்பாங்களா. ஹாய் காட் நான் நல்லா இருக்கேன் உன்னாலே ந்னு என்னிக்காவது தாங்க்ஸ் சொல்லியிருப்பாங்களா ம்ம் இதுக்கு நடுல்ல இந்த இறைவன்ங்கறவன் யாருன்னு கொஞ்சம் ஆன்மிக அலசல்லாம் பண்ணிகினு வேற இருப்பாங்க இல்லியோ.. கவிஞர் என்னவாக்கும் சொல்றார் இந்தப் பாட்டுல…
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்
இதோ பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டவன்.
Song நு தேடினா இல்லீங்க்னா.. ஸாரி..
(ஹப்பா அடுத்து போடப் போற பாட்டுக்கு ஜஸ்டிஃபை பண்ணியாச்சு..:) )
chinnakkannan
2nd February 2015, 10:37 PM
கோழிப் பாடல்கள் – 3
அநியாயங்க அக்கிரமம்.. கோழிப் பாட்டுன்னு தேடினா எல்லா வெவகாரமாத் தான் வருது. கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப் போங்கறா ஒருத்தி.. கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா அப்படின்னு எக்ப்ளனேஷ்ன் வேற தயிர்வடை கணக்கா ( நிறத்துக்குச் சொன்னேங்க்ணா) இருக்கற இன்னொரு பொண் சொல்றா.. ராக்கோழி கூவும் நேரம் நம்ம ராஜாங்கம்னு வேற ரெண்டு காதலர்கள் கூவுறாங்க..சாரி பாடறாங்க என்னமோ போங்க இங்க ரெண்டு கோழி முழிச்சுண்டுருக்கு..எப்படி ஆடறது பாடறதுன்னு பார்ப்போம்.
இருளுடன் மழையும் கூடி
…இளமையும் சேர அங்கே
விறுவிறு வென்றே நங்கை
…வேகமாய் நடன மாட
கருநிற வானில் மின்னல்
..கண்களில் மோகங் கூட்ட
வருத்திடும் வாடைக் காற்றும்
.வாழ்த்துரை எழுத லாச்சே!
***
கோழி ரெண்டு முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க (ஸ்வெட்டர் போட்டுக்கலாமில்லை)
கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=jsLRKMKHz70&x-yt-cl=85114404&feature=player_detailpage
kalnayak
3rd February 2015, 10:59 AM
இன்னாமா எழுதுறாங்கபா? நாம நடைய மாத்தினாலும் இவங்களுக்கு அளவுல, இல்லை இல்லை ஒரு பத்து சதவீதமாவது எழுத முடியுமா? முயற்சிக்கலாம். நான் பட பாடல் "போதுமோ இந்த இடம் ..." அபாரம்பா!!!
kalnayak
3rd February 2015, 11:08 AM
இன்னாங்ணா டமால்னு நானும் கோழிப்பாட்டை போடுவேன்-னு சொல்லிப்போட்டீங்க. எனக்குத் தெரிஞ்ச பாட்டையெல்லாம் நீங்களே சொல்லியும் போட்டீங்க.எல்லாம் விவஹாரமான பாட்டால்ல இருக்கு. கோழி-ன்னா இப்பிடித்தானா? இங்கே எதுவும் சென்சார் இல்லையா?
kalnayak
3rd February 2015, 11:11 AM
இந்தாங்ணா ஒரு கோழிப் பாடல். வழக்கமான கோழிப் பாடல்தான்.
https://www.youtube.com/watch?v=xXXUzmo_Az8
kalnayak
3rd February 2015, 11:15 AM
ஆஹா. ஆப்டுகிட்டதுங்ணா வித்தியாசமான ஒரு கோழிப்பாட்டு. கொஞ்சம் சோகம்தான். பரவாயில்லை.
https://www.youtube.com/watch?v=Iv8YcPW8zGw
kalnayak
3rd February 2015, 11:24 AM
ஆஹா அழகான அறிவான அருமையான அற்புதமான அட்டஹாசமான பாட்டுங்ணா (நெஜமாவே)
https://www.youtube.com/watch?v=E18POUkDaIE
kalnayak
3rd February 2015, 11:27 AM
எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஏத்தமான பாட்டுங்ணா:
https://www.youtube.com/watch?v=rXorBw_EP88
kalnayak
3rd February 2015, 11:29 AM
அண்ணன்மாருங்க காலத்து பாட்டுங்ணா:
https://www.youtube.com/watch?v=zRnVddqEdpc
chinnakkannan
3rd February 2015, 11:54 AM
யாரங்கே கொண்டுவா ஒரு ப்ளேட் சிக்கன் 65 கல் நாயக்கிற்கு :)
kalnayak
3rd February 2015, 12:08 PM
சி. க.
இந்தாங்க இப்ப விவாதிச்சிகிட்டிருக்கற ஒரு பாட்டு.
https://www.youtube.com/watch?v=j8b2d7MGsK8
சிக்கன் 65 க்கு ஒரு தாங்க்ஸ்னா.*
kalnayak
3rd February 2015, 12:11 PM
நிறுத்திட்டேன்னு பார்க்காதீங்க. இதோ இன்னொன்னு:
https://www.youtube.com/watch?v=hhk09GCtZfA
kalnayak
3rd February 2015, 12:17 PM
இன்னொண்ணுங்ணா:
https://www.youtube.com/watch?v=3YNmhwl6Y08
kalnayak
3rd February 2015, 12:19 PM
இத விட்டுடுவோமா?
https://www.youtube.com/watch?v=N8_48sI4WH0
Murali Srinivas
3rd February 2015, 12:21 PM
கலைவேந்தன், சித்ரா பௌர்ணமி பாடல் பற்றி சொல்லியிருந்தீர்கள். மறுபடியும் டெலிபதி என நினைக்கிறேன். இந்த படத்தின் காட்சிகளை அண்மையில்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு காரணம் அருமை நண்பர் ஆர்கேஎஸ். அவர் சித்ரா பௌர்ணமி படத்தைப் பற்றி சில விவரங்களை கேட்டார். எனக்கு தெரிந்ததை கூறினேன். 1976 தீபாவளிக்கு வெளியானது இந்தப் படம். அந்த 1976 அக்டோபர் மாதத்திற்கு பிறகு அந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போதும் தொலைக்காட்சியில் நடிகர் திலகமும் ஜெயலலிதாவும் பல்வேறு costumes அணிந்து பாடும் செந்தூர நெற்றி பொட்டின் என்ற பாடல் காட்சி மட்டுமே பெரும்பாலும் ஒளிப்பரப்படுகிறது. ஆகவே ஆர்கேஎஸ் கேட்டவுடன் YouTube -ல் தேடிப் பார்த்தேன். இருந்தது என்பது மட்டுமல்ல கணிசமான ஆட்களும் பார்த்திருந்தார்கள். முதல் அரை மணி நேரம் மட்டுமே பார்க்கக் முடிந்தது. வந்தாலும் வந்தான்டி பாடல் காட்சி அதன் பிறகே வரும் என்பதனால் பார்க்க முடியவில்லை. இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
நீங்கள் அந்தப் பாடலின் சிறப்பம்சம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மை. பழி வாங்கும் உணர்வில் நாயகன் அந்த வெறி உணர்வோடு பாட, நாயகியோ நேரெதிர் நிலையில். காரணம் நாயகன் யாரை பழி வாங்க வேண்டும் என்று நினைக்கின்றானோ அந்த நபர் நாயகியின் தந்தை. அது மட்டுமல்ல தன் சபதத்தில் நாயகன் வெற்றி பெறும் பட்சத்தில் தந்தையையும் இழந்து கணவனையும் இழக்க வேண்டி வருமோ (கைது செய்யப்படுவான்) என்ற தவிப்பு. நீங்கள் இந்தப் பாடலை பற்றி விளக்கமாக எழுதுகிறேன் என்று சொல்லியிருப்பதால் நான் தொடரவில்லை.
இங்கே நான் சொல்ல வந்தது இசையரசியின் குரல் ஜாலம். Adaptability என்று சொல்லுவார்களே அதாவது யாருக்கு பாடுகிறாரோ அவர் போன்ற குரலுக்கே தன் குரலை மாற்றிக் கொள்வதில் அவருக்கு இணை அவரே. குறிப்பாக ஜெயலலிதாவிற்காக பாடும்போது அப்படியே கலைச்செல்வியின் குரலைப் போலவே இருக்கும். வெண்ணிற ஆடை ஆயிரத்தில் ஒருவன் படங்களிலேயே இதை நாம் உணரலாம். நான் இரண்டு பாடல்களை கேட்கும்போது குரல் ஒற்றுமையை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போவேன். ஒன்று மோட்டார் சுந்தரம் பிள்ளையில் வரும் காத்திருந்த கண்களே பாடல். அதிலும் ஒரு சரணத்தின் இறுதியில்
செவ்விதழரோம் தேன் எடுக்க இந்த நாடகம் நடிப்பது என்ன
என்ற வரியை கவனியுங்கள்.
மற்றொரு பாடல் கந்தன் கருணை படத்தில் வரும்
குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே
இந்த பாடலைக் கேட்கும்போதும் குரல் ஒற்றுமை பளீரென்று தெரியும். பாட்டும் பரதமும் படத்தில்
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
பாடல் ஆரம்பிக்கும்போது பின்னணி இசை இல்லாமல் சுசீலாம்மா மட்டும் பாடுவார். படத்தில் ஜெயலலிதா பாட சிவாஜி அதே வரியை திருப்பி பாடுவார். உடனே ஜெயலலிதா " ஆச்சரியமாயிருக்கே! உங்களுக்கு பாடக் கூட தெரியுமா?" என்று கேட்பார். அப்போது ஜெயலலிதாவின் சொந்தக் குரல். அதற்கு நடிகர் திலகம் " நான் எங்க பாடினேன்? நீ பாடினதை அப்படியே திருப்பி சொன்னேன்" என்றவுடன் சட்டென்று சுசீலாம்மா மாப்பிளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம் என்று பாடுவார். முதல் வரி சுசீலா, இரண்டாம் வரி ஜெயலலிதா மூன்றாம் வரி சுசீலா. ஆனால் பாடலைக் கேட்கும்போது இவை மூன்றுமே ஒரே குரலாக ஒலிக்கும்.
இதே போன்ற சிறப்புதான் வந்தாலும் வந்தான்டி பாடலிலும்.
மோகத்தில் வந்தது சொந்தம் கண்ணா
சொந்தத்தில் ஏன் இந்த கோபம் கண்ணா
நூற்றுக்கு தொண்ணூறு அம்மா உள்ளம்
இந்த வரியெல்லாம் அப்படியே கலைச்செல்வியின் குரலாகவே ஒலிக்கும். மிக மிக அருமையான பாடல்.
மன்னிக்கவும், இந்தப் பாடல் பற்றிய உங்கள் பதிவிற்கு தடையாக் இருக்க விரும்பவில்லை. நன்றி கலைவேந்தன் மற்றும் நண்பர் ஆர்கேஎஸ்.
அன்புடன் .
kalnayak
3rd February 2015, 12:24 PM
கண்டுபிடிச்சிட்டோம்னு நெனைக்கிறேன். தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் நெறைய எந்த வார்த்தைகளை வைத்து பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் என்று.
கோழியும் ஒண்ணு. இந்தாங்க அடுத்த பாட்டு. இது வழக்கமான பாட்.
https://www.youtube.com/watch?v=JTgeTgs6sxk
kalnayak
3rd February 2015, 02:02 PM
சி.க.
நீங்க தனியா எழுத நெனைச்ச பாட்டையெல்லாம் நான் போட்டுட்டேனோ அப்படின்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு.
அருமையா நீங்க கவிதையாவே எழுதி இருப்பீங்க. கெடுத்திட்டேனோ? மன்னிக்கணும்.
Russellzlc
3rd February 2015, 03:58 PM
கொஞ்சம் பிரிவு வந்தால்... பின்பு உறவு வரும்
சின்னக்கண்ணன்,
‘வளர்ந்த பிறகு பார்த்த கோ...க்கள் வேறு’
ம்..ம்... குறும்பு உங்கள் கூடப் பிறந்தது.
போதுமோ இந்த இடம் பாடலை தரவேற்றியதற்கு நன்றி.
கல்நாயக்,
தமிழ் சினிமாவில் கோழிப்பாட்டு எதையும் நீங்கள் பாக்கி வைக்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன ஒரு ஆராய்ச்சி.(!)
முரளி,
வந்தாலும் வந்தாண்டி ராஜா... பாடல் பற்றி எழுத ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால், நீங்கள் எழுதினால் என்னைவிட சிறப்பாக எழுதுவீர்கள் என்று எனக்குத் தெரியும். திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர் நீங்கள் என்பது கூடுதல் தகுதி. அதனால், நான் பார்க்காத, பார்க்கத் தவறிய சில அம்சங்களையும் நீங்கள் எழுத வாய்ப்பு உண்டு.
ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். அந்த செங்கோடன் கேரக்டர் காட்டுவாசி கேரக்டர் என்பதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பாடலின் ஆரம்பத்தில் டார்ஜான் போல,
ஹா...ஹா... ஹாஹா.. ஹா...ஹா என்று ஆரம்பித்து அதையே இனிமையாக ஆ..ஹா.. அஹ அஹா என்று குரலை மாற்றும் மாயாஜாலம் தெய்வப்பாடகருக்கே சொந்தம். ( திருவிளையாடலில் ஆ.. ஞ்ஞா... என்று ஆரம்பித்து இனிமையாக்குவது போல) பாடலின் முடிவிலும் இது வரும். நீங்கள் எழுதுவதை ரசிக்க காத்திருக்கிறேன். நன்றி.
------------------------------------------
ஆசிய ஜோதி நேரு பண்டிதர், காஷ்மீரின் பெரிய பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர் . லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவரது சிறுவயதில் ஆனந்த பவனம் மாளிகையின் வாயில்களில் ஒவ்வொரு வாயிலுக்கும் ஒரு கார் நிற்கும். எந்தக் காரில் நேரு பள்ளிக்கு செல்வார் என்று தெரியாது. அந்த அளவு செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். சுதந்திரப் போரட்டத்தில் சிறையில் இருந்தபோது, தன் அருமை மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் மூலம் உலக வரலாற்றையே விளக்கியவர்.
அப்பேற்பட்ட நேரு பெருமான், பிரதமராக இருந்தபோது ஒரு புத்தகத்தை படிக்க விரும்பினார். பிரதமர், அதுவும் நேரு பிரான் ஒரு புத்தகத்தை கேட்கிறார். ஆள், அம்பு நாலாபுறமும் பறந்தது. அந்த புத்தகம் எங்கேயும் கிடைக்கவில்லை. புத்தகக் கடைகளில் இல்லை. டெல்லி நூலகத்தில் இல்லை.
சொல்லப் போனால் நேரு தெரிவித்த அந்த நூலின் பெயரையே யாரும் கேள்விப் பட்டதில்லை. இருந்தாலும் கிடைக்காமல் விடுவதா?கேட்டவர் நேரு அல்லவா? விடாமல் சல்லடை போட்டுத் தேடியதில் கடைசியில் சென்னை கன்னிமாரா நூல் நிலையத்தில் அந்த நூல் இருப்பது தெரிந்தது. தேடியவர்களுக்கு திருப்தி. நிம்மதிப் பெருமூச்சு. ஆனால், அங்குதான் முளைத்தது சிக்கல்.
கன்னிமாரா நூல் நிலையத்தில் அந்த நூல் உள்ளது. ஆனால், இப்போது இல்லை. அதைப் படிப்பதற்காக ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார் என்று தெரிவித்தார் நூலகர். நூலைத் தேடிச் சென்றவர்களுக்கு வியப்பு. நேரு பண்டிதர் படிக்க இருந்த நூலை..... இதுவரை அவர் படிக்காமல் இருந்த நூலை... ஒருவர் எடுத்துச் சென்றிருக்கிறாரா? பரபரப்பும் ஆத்திரமுமாய் அவர்கள் மண்டையில் உதித்த கேள்வி..... யார் அது?
எப்படியும் அவரிடம் இருந்து உடனடியாக வாங்கி (பிடுங்கி) நேரு பெருமானிடம் சேர்க்க வேண்டுமே. அவசர அவசரமாக பதிவேட்டை கொண்டு வரச் செய்து நூலை எடுத்துச் சென்றவர் யார் என்று பார்க்கும் ஆவல். அதிகாரம் தூள் பறக்க, பதிவேட்டை பவ்யமாய் எடுத்து வந்தார் பணியாளர். பக்கங்களை புரட்டி நேரு பிரான் தெரிவித்த அந்த நூலை எடுத்துச் சென்றவரின் பெயரைப் பார்த்தால், சென்றவர்களுக்கு தலைசுற்றியது. எடுத்துச் சென்றவர் என்ற இடத்தில் நிரப்பப்பட்டிருந்த பெயர்...
சி.என். அண்ணாதுரை.
பேராசிரியர் கல்கி அவர்களால் தென்னாட்டின் பெர்னார்ட் ஷா என்று புகழப்பட்ட இந்நாட்டு இங்கர்சால் அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அந்த அறிவுலக மேதைக்கு அஞ்சலி.
எல்லாரையும் தனது உடன் பிறப்பாக தம்பிகளாக கருதியவர் பேரறிஞர் அண்ணா. அவரது தம்பி பொன்மனச் செம்மல் நடித்த உரிமைக்குரல் படத்தில் அண்ணன் தம்பி பாசத்தை விளக்கும் அற்புதமான எனக்குப் பிடித்த பாடல்.சிவப்பு நிற ஷர்ட், ஆந்திரா பாணி வேட்டியில் மக்கள் திலகம் கொள்ளை அழகு.
‘ஒருதாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால், பின்பு உறவு வரும்..’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalnayak
3rd February 2015, 04:36 PM
கலைவேந்தன்,
அண்ணா நினைவு நாளில் எழுதிய பதிவு அருமை. நேரு படிக்க விரும்பிய, அண்ணா படித்த அந்த புத்தகம் என்னவென்று கடைசி வரை தெரியவில்லயே. சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பரவாயில்லை.
இந்தாருங்கள் உரிமைக்குரல் பாட்டு.
https://www.youtube.com/watch?v=YIStKeUCWiM
kalnayak
3rd February 2015, 04:44 PM
கலைவேந்தன்,
என்ன சொன்னீங்க? இன்னும் நெறைய கோழி பாட்டு இருக்கணும். எனக்கு கெடச்சத எடுத்து போட்டேன். எனக்கு தெரிஞ்ச இன்னொரு பழைய கோழிப்பாட்டு இருக்கு. நேத்து முரசு டிவியில் ஒளி பரப்பினார்கள். O.a.k. தேவர் நடித்திருந்தார். கள்ளபார்ட்டும் நடனம் ஆடியிருந்தார். ஒரு தாய்கோழியும், மூன்று குஞ்சுகளும் தங்களை கொல்ல வேண்டாமென்று கெஞ்சி பாடுவதாக ஒரு நடன நிகழ்ச்சி. என்ன படம், பாடல் முதல் வரி இரண்டும் ஞாபகத்தில் வர மாட்டேன் என்கிறது. உங்களுக்கு தெரிஞ்சால் சொல்லுங்களேன்.
Russellzlc
3rd February 2015, 05:19 PM
உரிமைக்குரல் பாடலை தரவேற்றியதற்கு நன்றி கல்நாயக். நீங்கள் குறிப்பிட்ட பாடலை நானும் பார்த்திருக்கிறேன். (நேற்று பார்க்கவில்லை). நல்ல பாடல், ஆனால் நினைவு வரவில்லை.
நேரு படிக்க விரும்பி அண்ணா படித்த அந்த புத்தகம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் சென்னை வானொலியில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் மறைந்த திரு. தென்கச்சி சுவாமிநாதன் கூறினார். புத்தகத்தின் பெயரை அவர் சொன்னார். கேட்டபோது, நோட் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பின்னர், அதை மறந்ததால் புத்தகத்தின் பெயரையும் மறந்து விட்டேன். அவரைப் போன்றவர்களின் மறைவால் எவ்வளவு தகவல்களை நாம் இழக்கிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Murali Srinivas
3rd February 2015, 06:59 PM
எம்எஸ்வி டைம்ஸ் விழா.
மாலை 6 மணிக்கு விழா துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எல்லா வருடமும் முதலில் 5,6 பாடல்கள் பாடி விட்டு பிறகு ஒரு பிரேக் விட்டு விழா நாயகன் மற்றும் சிறப்பு விருந்தினர்களை மேடையேற்றி அவர்களை கௌரவித்து பின் அவர்களெல்லாம் பேசி முடித்த பிறகு மீண்டும் பாடல்கள் பாடப்படும். எப்படி இருந்தாலும் விழா முடிவதற்கு இரவு 10.30 அல்லது 11 மணி ஆகிவிடும். 4,5 வருடங்களாகவே இதை பார்த்து வருகிறேன்.
சனிக்கிழமையன்று அலுவலகம் எல்லாம் முடிந்து வேறு சில வேலைகளையும் முடித்து விட்டு விழா நடைபெற்ற தி.நகர் ராமகிருஷ்ணா ஸ்கூல் போவதற்கு 7-7.15 ஆகிவிட்டது. .பாடல்களின் முதல் தவணை முடிந்து விட்டது. விண்ணோடும் முகிலோடும், வளர்ந்த கலை மறந்து விட்டாள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீரோடும் வைகையிலே மற்றும் இரண்டு பாடல்களும் பாடப்பட்டதாக அறிந்தேன்.
நான் செல்லும்போது பிரபல கர்நாடக இசைக் கலைஞர் திரு G S மணி அவர்கள் பேசி முடிக்கிறார். அடுத்து பேசியது இசையரசி. சாதாரணமாக பேசுவதை விட அதிக நேரம் பேசினார். உட்கார இடம் தேடி அலைந்ததனால் முதலில் அவ்வளவாக கவனிக்க முடியவில்லை. எம்எஸ்வியுடனான அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். எந்தளவிற்கு அவர் perfectionist என்பதை அவருடன் பணியாற்றியிருந்தால்தான் புரிந்துக் கொள்ள முடியும் என்றார். தனக்கு வேண்டியது கிடைக்கும் வரை பாடகர்களை விட மாட்டார் என்றார். ஒரு முறை ரெகார்டிங் ரூமில் எலி ஒன்று வந்துவிட அதற்கு பயந்து அலறி ஓடி வந்தது, எலிதானே திரும்ப போய் பாடு என்று எம்எஸ்வி சொன்னது, ஒரு பாடலுக்கு ரிகர்சல் மற்றும் ரெகார்டிங் 2 நாட்கள் ஆனது, அப்போது கூட எம்எஸ்வி காட்டிய சுறுசுறுப்பு என்று பல விஷயங்களை சொன்னார்.
குரல் சரியில்லாமல் ரெகார்டிங் வந்தது, இந்த வாய்ஸ்தான் வேண்டும் என்று அத்தான் என்னத்தான் பாடலை பாட வைத்தது, நாளை இந்த வேலை பாடல் ரெகார்டிங் முடிந்த பிறகு போகிற போக்கில் இந்த பாட்டுக்கு உனக்கு அவார்ட் கிடைச்சாலும் கிடைக்கலாம் என்ற வார்த்தைகள் எப்படி உண்மையானது அதே போன்று இரண்டாவது தேசிய விருதும் சவாலே சமாளி படத்திற்கு கிடைத்தது அதுவும் எம்எஸ்வி இசையிலே கிடைத்தது என்று பல்வேறு நெகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூர்ந்தார். தேடினேன் வந்தது பாடல் இரவு இரண்டு மணிக்கு பதிவு செய்யப்பட்தையும் நகைச்சுவையாக சொன்னார்.
அடுத்து பேசியவர் சிவிஆர். மொத்தம் 40 படங்களை இயக்கியிருப்பதாகவும் அவற்றில் 32 படங்கள் எம்எஸ்வி இசையமைத்தது என்றார். எம்எஸ்வி போல எத்தனை ட்யூன் கேட்டாலும் சலிக்காமல் போட்டுத் தருபவர்கள் யாருமே இல்லை என்றார். கொஞ்சம் கூட சலிப்படையாமல் இயக்குனருக்கு திருப்தி வரும்வரை ட்யூன் போடுவார் எம்எஸ்வி என்றார். வெறும் பணத்திற்காக வேலை செய்யாமல் செய்யும் தொழிலை தவமாக செய்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்ற சிவிஆர் கண்ணதாசன் எம்எஸ்வி கூட்டணியை மெச்சினார். அதே போன்று இசையரசியையும் பெரிதும் பாராட்டினார்.
இறுதியில் பேச வந்தவர் காந்தி கண்ணதாசன். கையில் சில குறிப்புகளை வைத்துக் கொண்டு பேசினார். எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் தன் தந்தைக்கும் எம்எஸ்விக்கும் உள்ள நட்பை சிலாகித்தார். எம்எஸ்வியின் வாரிசுகளோடு தனக்கு இருக்கும் நல்லுறவை வெளிப்படுத்தினார். முதலில் பேசியவர்கள் எல்லோரும் அவரது பாடல்களைப் பற்றி பேச இவர் எம்எஸ்வியின் ரிரெகார்டிங்கை எடுத்துக் கொண்டார். எம்எஸ்வி போல் ரீரெகார்டிங் செய்ய ஆளே இல்லை என்றார். ரீரெகார்டிங் நடக்கும் நேரத்தில் யார் வருகிறார் யார் போகிறார் என்பது கூட தெரியாமல் மூழ்கி இருப்பார் என்றார். ஒரு நேரம் கல்லூரி நண்பர்களை அழைத்துக் கொண்டு ரீரெகார்டிங் போய் விட்டு எப்படி எம்எஸ்வி தன்னை கண்டுக் கொள்ளவேயில்லை என்பதை சொன்ன காந்தி அதனால் தன் நண்பர்கள் உண்மையிலே அவருக்கு உன்னை தெரியுமா என்று சந்தேகப்பட்டதையும் பிறகு அன்றைய நாள் வேலை முடிந்தவுடன் இவரை பார்த்து நீ எப்போயா வந்தே? என்று கேட்டதையும் பலத்த சிரிப்புக்கிடையில் பகிர்ந்துக் கொண்டார்.
பேச்சுக்கிடையே காந்தி பகிர்ந்துக் கொண்ட ஒரு விஷயம் சுவையாக இருந்தது. இரவில் அவர்கள் வீட்டின் முன்னறையில் கண்ணதாசன் படுத்திருப்பாராம். அதற்கு அடுத்த அறையில் இவர்கள் (காந்தி மற்றும் அவரது சகோதர்கள்) படுத்திருப்பார்களாம். கண்ணதாசன் அறையில்தான் தொலைபேசி இருக்குமாம். இரவில் அவருக்கு போன்கால் வருமாம்.
"என்னய்யா? இந்த நேரத்திலே" என்று கண்ணதாசன் பேசினால் எதிர் முனையில் கருணாநிதி.
" என்ன சாமி? இந்த நேரத்திலே" என்றால் எதிர் முனையில் எம்ஜிஆர்.
" என்னண்ணே? நான் முத்து பேசறேன்" என்றால் எதிர் முனையில் ஏஎல்எஸ்.
" என்னடா? இந்த நேரத்திலே" என்றால் எம்எஸ்வி.
பேச்சை நிறைவு செய்யும் முன் எம்எஸ்வி டைம்ஸ் இணையதளத்திற்கு ஒரு வேண்டுகோளை வைத்தார் காந்தி. இணையதளத்தின் விளம்பர பதாகையில் அவர்களின் ஸ்லோகனாக
[B]Mortal Man Immortal Music .
என்று எழுதியிருப்பதை சுட்டிக் காட்டிய காந்தி Only Immortal Man Make Immortal Music என்றார். எனவே தான் சொன்னது சரி என்று தோன்றினால் ஸ்லோகனை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இத்துடன் மேடை பேச்சு முடிவடைந்து மீண்டும் பாடல்கள் ஆரம்பித்தன.
இனியும் ஒரு பதிவு தேவைப்படும் என நினைக்கிறேன்.
அன்புடன்
Russellzlc
3rd February 2015, 08:31 PM
திரு. முரளி,
எம்எஸ்வி டைம்ஸ் விழா நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை உங்கள் பதிவு போக்கியது. நன்றி. தெரிந்தவர் வந்திருக்கிறார் என்பது கூட தெரியாமல் மனிதர் (எம்எஸ்வி) என்ன ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியுள்ளார்.
கவியரசருக்கும் அவரோடு பேசியவர்களுக்கும் உறவுமுறையும் நெருக்கமும் மரியாதையும் எப்படி இருந்தது? என்பது போனில் அவர் பேசியதிலிருந்து தெரிகிறது.
மதியம் விவரமாக எழுத முடியவில்லை. திரு.டி.எம்.எஸ். அவர்கள் திரு.எம்.ஜிஆர். திரு.சிவாஜி ஆகியோருக்கேற்ப குரலை மாற்றிப் பாடுவது எல்லாருக்கும் தெரியும்.
நீங்கள் குறிப்பிட்டபடி,
--------------------
இங்கே நான் சொல்ல வந்தது இசையரசியின் குரல் ஜாலம். Adaptability என்று சொல்லுவார்களே அதாவது யாருக்கு பாடுகிறாரோ அவர் போன்ற குரலுக்கே தன் குரலை மாற்றிக் கொள்வதில் அவருக்கு இணை அவரே. குறிப்பாக ஜெயலலிதாவிற்காக பாடும்போது அப்படியே கலைச்செல்வியின் குரலைப் போலவே இருக்கும். வெண்ணிற ஆடை ஆயிரத்தில் ஒருவன் படங்களிலேயே இதை நாம் உணரலாம். நான் இரண்டு பாடல்களை கேட்கும்போது குரல் ஒற்றுமையை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போவேன். ஒன்று மோட்டார் சுந்தரம் பிள்ளையில் வரும் காத்திருந்த கண்களே பாடல். அதிலும் ஒரு சரணத்தின் இறுதியில்
செவ்விதழரோம் தேன் எடுக்க இந்த நாடகம் நடிப்பது என்ன
என்ற வரியை கவனியுங்கள்.
மற்றொரு பாடல் கந்தன் கருணை படத்தில் வரும்
குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே
இந்த பாடலைக் கேட்கும்போதும் குரல் ஒற்றுமை பளீரென்று தெரியும். பாட்டும் பரதமும் படத்தில்
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
பாடல் ஆரம்பிக்கும்போது பின்னணி இசை இல்லாமல் சுசீலாம்மா மட்டும் பாடுவார். படத்தில் ஜெயலலிதா பாட சிவாஜி அதே வரியை திருப்பி பாடுவார். உடனே ஜெயலலிதா " ஆச்சரியமாயிருக்கே! உங்களுக்கு பாடக் கூட தெரியுமா?" என்று கேட்பார். அப்போது ஜெயலலிதாவின் சொந்தக் குரல். அதற்கு நடிகர் திலகம் " நான் எங்க பாடினேன்? நீ பாடினதை அப்படியே திருப்பி சொன்னேன்" என்றவுடன் சட்டென்று சுசீலாம்மா மாப்பிளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம் என்று பாடுவார். முதல் வரி சுசீலா, இரண்டாம் வரி ஜெயலலிதா மூன்றாம் வரி சுசீலா. ஆனால் பாடலைக் கேட்கும்போது இவை மூன்றுமே ஒரே குரலாக ஒலிக்கும்.
--------------------
இசையரசியும் நடிகைகளுக்கேற்ப தன் குரலை மாற்றிப் பாடுவார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதில் ‘அவருக்கு இணை அவரே’ என்று நீங்கள் சொல்வது எனக்கும் உடன்பாடே. பாட்டும் பரதமும் பாடலையும் செல்வி. ஜெயலலிதா அவர்களின் குரலையும் ஒப்பிட்டு நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி. மிகவும் அருமையான பாடல். படத்தில் எல்லா பாடல்களுமே அற்புதமாக இருக்கும். ‘கற்பனைக்கு மேனி தந்து....’ பாடலுக்கும் ‘மாந்தோரண வீதியில்..’ பாடலுக்கும் டிஎம்எஸ் குரலில்தான் என்ன ஒரு வேறுபாடு?
நான் மதியம் குறிப்பிட்டபடி எனக்கு (நமக்கு) பிடித்த ‘வந்தாலும் வந்தாண்டி ராஜா...’ பாடலை உங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் ரசிக்க விரும்புகிறேன்.
எம்.எஸ்.வி. டைம்ஸ் விழா பற்றி ‘இனியும் ஒரு பதிவு தேவைப்படும் என நினைக்கிறேன் ’என்று கூறியுள்ளீர்கள். அதை மூன்று, நான்கு பதிவுகளாக விரித்தால் மகிழ்ச்சி. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Russellzlc
3rd February 2015, 08:57 PM
முரளி,
கற்பனைக்கு மேனி தந்து.... சக்கரவாகமா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
chinnakkannan
3rd February 2015, 09:39 PM
கல் நாயக்.. எல்லாக் கோழிப் பாடல்களுக்கும் நன்றி..மிக்க நன்றி. நான் தேடும்போது இவ்ளோ கிடைக்கலீங்க்ணா.. அப்புறம் சற்று சமயமெடுத்து இப்ப எல்லா வீடியோவையும் சில கொஞ்சம் சில முழுக்கன்னு பார்த்தேனா..( நீங்க ஒரு கோழி விட்டுப்புட்டீங்களே..ஆனா அது செத்துப் போன கோழி.. அது கடசீல சொல்றேன்..)
கொண்ட சேவல் கூவும் நேரம்.. குக்குக்கூ அதெப்படி அது கொக்கரக்கோன்னு தான் கூவுமே.. பாக்யராஜ் ராதா.. ஓகே சாங்க் தானில்லையா..
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே.. ஹை இது எனக்குத் தெரியுமே.. பாப்பா பாட்டுங்கறதால ரிஜக்ட் பண்ணிட்டேன்!!
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே
வந்திருக்கும் அன்பிலே அக்கறை காட்டினா தேவலை ( நல்ல பாட்டுங்க்ணா.. ரொம்ப அழகா இருக்கு… யூத் ந .தி அண்ட் எம்.என் ராஜம்.. கேக்க மட்டும் செய்திருக்கிறேன்.. இப்ப தான் பார்க்கிறேன்… (கொஞ்சம் காதைக் கிட்டக்க கொண்டுவாங்க.. என்னபடம்னு கேட்டா அடிப்பீங்களா))
கில்லி பாட்டும் அழகு
கொக்கரக் கொக்கரக்கோ கூவுற சேவலுக்கு – லக்கி மோகன் அப்புறம் ஏனோ தானோ நதியா. – பாடு நிலாவே பார்த்தேனா என்ன… நினைவுக்கே வரலை..
.
போதோட கோழி கூவுற வேளை – எப்படிமறந்தேன் ஒரு தலை ராகத்திலேயே எனக்கு மிகப்பிடித்த பாடல் இது..
கொக்கரக்கோ கோழி கலைஞன் – கமல் சிவரஞ்சனி..ம்ம்
கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டுப் பாக்க நான் வாரேன் – ப்ரஷாந்த் மெளனிகா.. முதல் தடவையாய் கேட்கிறேன் என நினைக்கிறேன்..படம் பார்த்த சமயத்திலெல்லாம் பாடல் எஃப் எ ஃப் தான் – அந்தக் காலத்தில்..…. அது போலவே இதையும் செய்திருப்பேன் என நினைக்கிறேன். நல்லபாட்டு
வெடக்கோழி வெடக்கோழி – இது தெரியுமே.
உரக்கக் கத்துது கோழி தண்ணி இறைச்சுக் கொட்டுது வாளி –அடடா என்னா தத்துவம்.. இதுவும் மறந்து போயிருந்ததுங்க..
அகெய்ன் தாங்க்ஸ் கல் நாயக்.. ஒரு கலகல உணர்வைக் கொணர்ந்து விட்டீர்கள் ஐயா.. (ரொம்பத் தமிழோ).
அப்படியெல்லாம் எந்தப் பாடலைப் பற்றி எழுதவும் எதுவும் குறித்து வைக்கவில்லை நான்.. எனில் கவலைப் படாதீர்கள்
இன்னும் சாமக்கோழி ஹஸ்கி வாய்ஸில் கூவும் பாட்டு நினைவுக்கு வந்தாலும் இன்னொரு பாட்டு கொஞ்சம் டேஸ்டா இருக்கறா மாதிரி இருக்கு என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்.
ஏனெனில்,
ஹி ஹீ. இது மீன் வறுத்த கோழி..:)
சரக்கு வச்சிருக்கேன் சரக்குவச்சிருக்கேன் வறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் – ஃபாஸ்ட் சாங்க்..இல்லியோ..
https://www.youtube.com/watch?v=Kek_Ti5NyDs&feature=player_detailpage
chinnakkannan
3rd February 2015, 09:43 PM
முரளி அந்தக் காத்திருந்த கண்களே.. செவ்விதழோரம் தேனெடுத்து ரொம்ப அழகா இருக்கும் குரல்..எப்போது கேட்டாலும் இனிக்கும்
கலைவேந்தன்.. இப்படி கடைசி வரை அவர் படித்த புத்தகம் தெரியாமல் போய்விட்டதே.. தென்கச்சி சொல்லியிருக்கிறாரா. அவர் எழுதிய இன்று ஒருதகவல் எல்லா பாகமும் படித்திருக்கிறேன் (என்னிடம் இப்போதும் இருக்கின்றன) எழுதியிருக்கிறாரா என்பது நினைவிலில்லை…. Thanks for the good post.
//ஒரு முறை ரெகார்டிங் ரூமில் எலி ஒன்று வந்துவிட அதற்கு பயந்து அலறி ஓடி வந்தது, எலிதானே திரும்ப போய் பாடு என்று எம்எஸ்வி சொன்னது, ஒரு பாடலுக்கு ரிகர்சல் மற்றும் ரெகார்டிங் 2 நாட்கள் ஆனது, அப்போது கூட எம்எஸ்வி காட்டிய சுறுசுறுப்பு என்று பல விஷயங்களை சொன்னார்.// "என்னய்யா? இந்த நேரத்திலே" என்று கண்ணதாசன் பேசினால் எதிர் முனையில் கருணாநிதி.
" என்ன சாமி? இந்த நேரத்திலே" என்றால் எதிர் முனையில் எம்ஜிஆர்.
" என்னண்ணே? நான் முத்து பேசறேன்" என்றால் எதிர் முனையில் ஏஎல்எஸ்.
" என்னடா? இந்த நேரத்திலே" என்றால் எம்எஸ்வி.//
முரளீங்ணா.. வெகு நன்னா எழுதியிருக்கேள்… தாங்க்ஸ்.. க.வே (இப்படியா நீளமா பேர்வெச்சுப்பா!) சொன்னது போல நேரில் பார்த்தது போலவே இருந்தது. இன்னும் என்னென்ன பாடல்கள் பாடினார்கள் இன்னும் தகவல்களை எழுதினால் நாங்கள் இன்னும் தன்யா (ச்சீ அது கீழ்ஃப்ளாட் பொண் பேருன்னா) தன்யனாவோம்.. இன்னும் மகிழ்வோம்..அகெய்ன் தாங்க்ஸ்.. :)
rajeshkrv
4th February 2015, 03:09 AM
Ci Ka kozhi padalgal super
rajraj
4th February 2015, 06:49 AM
From Avan (1953)
Anbe vaa azhaikkindradhendhan moochche........
http://www.youtube.com/watch?v=fLiTZKt-G9Y
From the Hindi original Aah
Aa Ja Re ab mera dil pukara......
http://www.youtube.com/watch?v=sver9O8K3t8
chinnakkannan
4th February 2015, 10:08 AM
வாங்கோ ராஜேஷ் ராஜ்ராஜ்சார்..
ராஜ் ராஜ் சார்..பனிப்பொழிவெல்லாம் நின்னுடுச்சா இன்னும் இருக்கா..உங்கள் ஜூகல் பந்தி பார்க்காம என்னமோ போல இருந்துது..
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.