View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
Pages :
[
1]
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
gkrishna
14th August 2014, 04:49 PM
மனதை மயக்கும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம்
இரண்டாவது பாகத்தை ஆரம்பிக்கும் மிக பெரிய பொறுப்பை (குருவி தலையில் பனங்காய் போல்,கொக்கு தலையில் வெண்ணை போல் ,காக்கா தலையில் கருப்பட்டி, வாரிய கட்டைக்கு பட்டு குஞ்சலம் போல் இப்படி சொல்லிகிட்டே போகலாம் ) இந்த எல்லோருக்கும் தாசனு தாசன் கிருஷ்ணாவின் பெயரை முன் மொழிந்த .'நன்றி என்ற இந்த ஒரு சொல் எப்படி எப்போது எங்கே உபயோகிக்கப்படவேண்டும் என்பதை உணர்த்திய வாசு சார் அவர்களுக்கும் மற்றும் வழி மொழிந்த அத்துணை இனிய நெஞ்சங்களுக்கும் மேலும் போடப்படும் பதிவுகளுக்கு எல்லாம் நன்றி மற்றும் விருப்பம் தெரிவிக்கும் நெல்லை சீமையை சேர்ந்த கோபு சார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இந்த நேரத்தில் ஆருயிர் நண்பர் முரளி அவர்களை நினைவு கூர்கிறேன் .'ஹப் என்று ஒன்று உள்ளது அதில் கலந்து எழுத வாருங்கள் ' என்று 2010 வாக்கில் இந்த அமைப்பை எனக்கு அறிமுகபடுத்தியவர திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள்.
கிட்ட தட்ட 4 ஆண்டுகள் ஏனோ தானோ என்று நடிகர் திலகம்,ஸ்ரீகாந்த்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் என்று பல்வேறு திரிகளில் பதிவு போட்டு கொண்டு இருந்த எனக்கு இந்த 'மனதை கவரும் மதுர கானங்கள் ' திரியையும் சொன்னவர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் தான்.
முதல் பாகத்தின் 3 அல்லது 4வது பக்கத்தில் வாசு அவர்கள் சூரிய காந்தி திரை படத்தை பற்றி எழுதும் போது தான் அவர்கள் கூறினார்கள்
ஆகா லேசா எட்டி பாப்போம் என்று நுழைந்த எனக்கு அர்ஜுனனை அணைத்து கொண்ட அந்த கிருஷ்ணரை (வாசுதேவன்) போல் இந்த வாசுதேவன் கிருஷ்ணா என்ற அர்ஜுனரை அணைக்க 'ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு' :) அவ்வளுவு தான்
'அர்ஜுனனுக்கு வில் ஹரிச்சந்திரனுக்கு சொல் இந்த கிருஷ்ணாவுக்கு கல் (விழ கூடாது!) :mrgreen:
முதல் பாகம் தொடங்கி கிட்டத்தட்ட 66 நாள்கள் ஆகிறது .சடார்னு முடிந்து விட்டது . அதிலும் 4வது 100 சான்சே இல்லை .வாயு (ரொம்ப (குசு)ம்பு) வேகம் மனோவேகம் என்பார்களே அது போல் . அனைத்திலும் எவ்வளவு தகவல்கள்,பாடல்கள்,நிகழ்சிகள்,படங்கள் என்று கலந்து கட்டி கிட்டத்தட்ட 62000 பார்வைகள் பெற்று உள்ள திரி என்ற தகவல் மலைக்க வைக்கிறது .
திரு நெய்வேலி வாசுதேவன் அவர்கள் மறு பிறவி திரை படத்தில் ஆரம்பித்த முதல் பாகத்தை போல் இரண்டாவது பாகத்தை
சொர்க்கத்தில் கொலு வீற்று இருக்கும்
'சிவா (ஜி) கணேச பெம்மானையும் ராமச்சந்திர மஹா பிரபுவையும் '
'முரளி ஸ்ரீனிவாசா கோபாலா பார்த்த சாரதி வாசுதேவா ' என்று எவ்வாறு அழைத்தாலும் அந்த 'என் வாசுதேவன்' என்ற பரம் பொருள் ஒன்றே என்ற பிரணவத்திற்கு பொருள் கூறிய மருகன் 'கார்த்திகேயனை ' வணங்கி குருஜி 'ராகவேந்தர்' இன் அருளாசியுடன்
உலகிற்கு எல்லாம் ஒளி தரும் அந்த 'ரவி' என்ற சூரிய பகவானையும் வணங்கி 'ராஜேஷ்'வரி என்ற சக்தி துணை கொண்டு 'வினோத'மான இந்த இழையின் 'மது ' என்ற அமிர்தத்தை பருகிட (sss அப்பா தாங்கலையே') உங்கள் அனைவரையும் 'உத்தரவின்றி உள்ளே வாருங்கள்'
என்று 'ராதா அழைக்கிறாள் காதல் கீதம் இசைகிறாள் ' போல 'கிருஷ்ணா அழைகிறேன். ராக தாள ஸ்வர ஜதி நடைகளுடன்
'எந்தரோ மகானுபாவலு அந்தரிக்கு மனு வந்தனமுலு '
உத்தரவின்றி உள்ளே வா 1970
சித்ராலயா production
இயக்கம் NC சக்கரவர்த்தி மேற்பார்வை ஸ்ரீதர்
இசை மெல்லிசை மன்னர்
குட்டி சிவாஜி (கோபால் கோபப்படமாட்டார்) ரவிசந்தர்,காஞ்சனா,நாகேஷ்,வெண்ணிற ஆடை மூர்த்தி,மாலி,தேங்காய் ஸ்ரீனிவாசன்,ரமாப்ரபா,குமரி சச்சு ,சுந்தரி பாய்,வீரராகவன் போன்றோர் நடித்து வெளிவந்த நகைச்சுவை சித்ரம்
படத்தில் வரும் வில்லன் மகாலிங்கம் (முட்டை கண்ணன்) யாரு ?
தேங்காய் நாகேஷ் ரமாப்ரபா நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது .
அதிலும் 'அந்த டாக்டர் பாண்டியன் ரூட் போட்டு கண்டு பிடிக்கிறான் ' ,கண்ணே பூர்வஜென்மம் ஆண்டாள் ராமப்ரபாவிடம் டிரைவ் இன் ஹோட்டல் இல் நாகேஷ் சொல்லும் 'ஒரு தட்டில் தேனும் மறு தட்டில் திணை மாவும் கொணர்க ', 'நாதா எனக்கு அது வேண்டும் .சீ சீ அது எச்சில் வேறு வாங்கி தருகிறேன் ', 'நான் நாதன் என்றால் நீ என் நாதியா ' போன்ற வசனங்கள் மிகவும் ரசித்து பேசப்பட்டது .
ரவி, மாலி,நாகேஷ்,மூர்த்தி நால்வரும் பிரம்மச்சாரி நண்பர்கள் .அனைவரும் ரவியின் சொந்த வீட்டில் ஜாலியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஜானகி (காஞ்சனா ) என்ற பெண் அடைகலம் கேட்டு வருகிறாள் . இரவு நேரத்தில் ஒவ்வொருவாராக அவளிடம் காதல் கொண்டு கனவு காணும் காட்சியை மிக அழகாக நகைச்சுவையுடன் அமைத்து இருப்பார்கள்
முதலில் ஈஸ்வரி ஆரம்பிக்க பின்னால் அவருடன் பாடகர் திலகம் சேர்ந்து கொள்ள (நாகேஷ் பாகவதர் மேக் up அபாரமாக இருக்கும்) இறுதியில் கள்ள குரல் பாலா முடிக்க அகதளம் புரியும் பாடல். போததற்கு மெல்லிசை மன்னர் 70 களில் ஆரம்பித்த பேஸ் கிடார்,டபுள் பேந்கோஸ் ,saxophone , triumpht ,ட்ரும்ஸ்,ஷெனாய் என்று கலந்து கட்டி ஜுகல் பந்தி போல் அமைத்த பாடல் என்றால் அது மிகை ஆகாது.
பாட்டிற்கு நடுவில் மாலி கனவு காண நினைக்க காஞ்சனா அவரை சின்ன வயசில் பார்த்த சித்தப்பா என்று அழைப்பது நினைவிற்கு வர கனவு பணால் 'மாலி காலி'.காஞ்சனாவின் சிகப்பு கலர் லுங்கி மற்றும் மஞ்சள் கலர் ஜிப்பா டிரஸ் மூர்த்தி உடன் ஆரம்பிக்கும் ஜனரஞ்சக பாடல் பின்னர் பரத நாட்டிய பாடலாக மாறி நாகேஷ் பாகவதர் முன்னிலையில் அரங்கேறி இறுதியில் ரவி சல்வார் சும்மீஸ் காஞ்சனா உடன் இணையும் நவீன யுக பாடல் . இந்த பாட்டில் இருந்தே காஞ்சனா ரவியை தான் காதலிக்க போறாங்க அப்படினு ஈஸி ஆக புரிந்து விடும். மூர்த்தியுடன் பாடும் போது ஈஸ்வரி தனியாக தான் பாடுவார் ,நாகேஷுடன் பாடும் போது பாடகர் திலகம் தனியாக பாடுவார். ஆனால் இறுதியில் பாலா ஈஸ்வரி இருவரும் இணைந்து பாடுவார்கள். இயக்குனரின் திறமைக்கு ஒரு சான்று
http://s1.dmcdn.net/Coy6K.jpg
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSqZVpdOI-hmyj_OQGthCQ2xpCD6NRU238i9SW5iKq8wfWxbBDIcg
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரம் இருக்க
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கபடாமல்
காதலி (சாக்ஸ் பின்னும் )
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கபடாமல்
நீ காதலி
அந்த புரத்தில் நண்பர் இருக்க
இந்த புரத்தில் வா வ வா
நீ வா
(இந்த இடத்தில ஈஸ்வரியின் குரலை கவனிசீங்கான 2 large பெக் அடிச்சா ஒரு ஏப்பம் வரும் பாருங்க அது மாதிரி ஒரு இழுப்பு )
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
ஆஹ் ஆஹ் அஹ
(இங்கே பாருங்க காஞ்சனா கை நாகேஷ் காது கிட்டே இருக்கும் . ஒரு வேளை நாகேஷ் காதை கிள்ளி அதனாலே இந்த ஆலாபனையா )
ஆஹ் ஆஹ் அஹ
பூமியில் மானிட ஜன்மம் எடுத்தது
காதலி உன்னை காண
ஆஹ் ஆஹ் அஹ
பூமியில் மானிட ஜன்மம் எடுத்தது
காதலி உன்னை காண
புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
ஏழையை கண் பாரம்மா
அந்தரி சுந்தரி
என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே
(நாகேஷ் உட்கார்ந்து சுத்தி சுத்தி ஆடுவார் பாருங்க ஆடற் கலை அரசு என்ற பட்டம் வழங்கலாம் )
அந்தரி சுந்தரி
என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே
சுபஷனி மதாங்கனி
சுபஷனி மதாங்கனி
தோழர்கள் பார்வையில்
கேலிகள் ஆகுமுன்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உறவினில் ஆடவர் ஆயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
(பாடகர் திலகம் என்ன சளைச்சவரா அந்த வா என்பதை உச்சரிக்கும் போது இளமை கொப்பளிக்குமே நாகேஷ் என்ன இளைதவரா இந்த சரணம் முடிந்துடன் பின்புறத்தை ஆட்டி கொண்டு போவது)
(வந்தார் பாருங்க
கள்ள குரல் பாலா அப்படியே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா)
கள்ளம் இல்லாத பிள்ளை நிலவை
கன்னம் தொடாமல் போவேனோ
கள்ளம் இல்லாத பிள்ளை நிலவை
கன்னம் தொடாமல் போவேனோ
கட்டி பிடித்து நெஞ்சில் அணைத்து
தன்னை மறந்து வாழ்வேனோ
கட்டி பிடித்து நெஞ்சில் அணைத்து
தன்னை மறந்து வாழ்வேனோ
மஞ்சள் முகத்தை மெல்ல பிடித்து
என்னை ரசிக்க கூடாதோ
வண்ணம் மலர்ந்து
எண்ணம் கலந்து
மின்னல் மயக்கம் கொள்ளதோ
மின்னல் மயக்கம் கொள்ளதோ
(ஒரு பேஸ் கிடார் ட்ரும்ஸ் பீட் வாராதோ இந்த இசை மீண்டும்.கேட்கமாட்டோமோ மீண்டும் ஒரு முறை )
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரம் இருக்க
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
இந்த திரை படத்தின் ஒவ்வொரு பாடலுமே தேன் தான்
நண்பர்கள் அனைவரும் இத்திரை படத்தின் மற்றைய பாடல்களையும் அலச வேண்டும் என தாழ்மையுடன் தோழமையுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் யாமொன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவரின் வரிகளுக்கேற்ப எல்லோரும் எல்லா இன்பமும் பெற்று வாழ்க வளமுடன் என்று வந்தவர்களை வாழ்த்தும் மற்றவர்களை வரவேற்கும்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
http://www.dailymotion.com/video/x15yoyr_utharavindri-ulle-va-utharavindri-ulle-vaa-1971_shortfilms
ravi200101
14th August 2014, 05:01 PM
http://www.inbaminge.com/t/e/Enga%20Oor%20Raja/Parameswari%20Rajeswari%20Jegatheswari.vid.html
A song which will take all to jolly mood. Enga oor raja - parameshwari, rajeshwari, jegatheswari.....
gkrishna
14th August 2014, 05:06 PM
வருக வருக ரவி சார்
உங்கள் வரவு நல்வரவு ஆகுக
அருமையான நடிகர் திலகத்தின் ஜாலி பாடலை இணைத்து உள்ளீர்கள்
மிக்க நன்றி
http://www.youtube.com/watch?v=YN_bt0WuODE
vasudevan31355
14th August 2014, 05:07 PM
http://3.bp.blogspot.com/_zXgUm_QyYTk/R1ZY6kSIFhI/AAAAAAAAAB4/3PLwghW5m-Q/s320/01.jpg
வாழ்த்துக்கள் கிருஷ்ணா. அருமையாக இரண்டாம் பாகம் துவக்கி விட்டீர்கள். பீடுநடை போட வாழ்த்துக்கள்.
Russellmai
14th August 2014, 05:08 PM
கிருஷ்ணாஜி சார்,
மனதை (கவரும்) மயக்கும் மதுர கானங்கள்
இரண்டாவது பகுதியைத் துவங்கியிருக்கும் நெல்லை
மைந்தருக்கு எனது வாழ்ததுக்கள்.
கோபு
vasudevan31355
14th August 2014, 05:12 PM
அடடா!
'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட'
பாகம் 1 இல் பாடல் வீடியோவைப் போட்டு ஒரு வழி பண்ணிட்டார் மதுண்ணா.
இந்தப் பாடலில் நடிகை சொர்ணா பிளாட்பாரத்தில் ரயிலின் கூடவே ஓடி வர வேண்டும். 'ஷாட்'டைப் பார்த்த நடிகர் திலகம் சொர்ணாவைக் கூப்பிட்டு 'இப்படி ஓடக்கூடாதும்மா... இந்த மாதிரி ஓடணும்... பெண் ஓடுவது போல் நளினமாக இருக்க வேண்டும்' என்று ஒய்யாரமாக ஓடிக் காண்பித்தாராம். யூனிட்டே அசந்து போனதாம்.
வாணியின் அருமையான பாடல்களில் ஒன்று. ஆனால் வழக்கம் போல எதிர்பார்த்த ஹிட் அடிக்கவில்லை. 'நாலு பக்கம் வேடர் இருந்தால்' குங்குமக் கோலங்கள் அஞ்சாதோ! அம்மம்மா.... என்னாம்மா...சொல்லம்மா
chinnakkannan
14th August 2014, 05:13 PM
வாழ்த்துக்கள் க்ருஷ்ணாஜி.. அட்டகாசமாய் உ.இ.உவாவில் ஆரம்பித்திருக்க்றீர்கள்.. நன்றி..
உன்னைத் தொடுவது இனியது நான் சொல்லித் தருவது புதியது
இது மின்னல் போலொரு துடிப்பு முன்பின் இலாத நினைப்பு
அப்புறம்
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ நடுவில் ஸ்ரீகாந்த்தோ யாரோஹம்மிங்க் (சொல்ல மாட்டாங்களா என்ன)
அந்த் கட்டக் கடோசிப் பாட்டு வொய்ட் ஸாரியில் இனிய பேயாக ரமாப்ப்ரபா
தேனாற்றங்கரையினிலே மோகினி போல் வந்தேன் நாதா...
நாதா... இப்படி ப் புலம்ப வச்சுட்டீங்களே..சிடி மறுபடி பார்க்கணும் :)
gkrishna
14th August 2014, 05:15 PM
வாழ்த்திய நண்பர் வாசு சார் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி
தொடருங்கள் உங்கள் வெற்றி பயணத்தை ரத கஜ துரக பதாதிகளுடன்
gkrishna
14th August 2014, 05:19 PM
வாருங்கள் சின்ன கண்னாரே எங்கள் செல்ல கண்னாரே
காத்து கொண்டு இருக்கிறோம் உங்கள் கவிதை மழையில் தொபுகடீர் என்று குதிக்க dive அடிக்க
ஒவ்வொரு பாடலும் அருமை உ உ வா வில்
அந்த காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ அருமையான
மதுவந்தி தர்மவதி ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்
பாட்டிற்கு மெருகு கூட்டிய ஸ்ரீகாந்த் (ML ) ஹம்மிங்
கண்ணிய பாடகி சுசீலாவின் வாசு சார் சொல்வது போல் குருத்து குரல்
gkrishna
14th August 2014, 05:21 PM
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹாஹ ஹா ஆஹாஹா ஆ...
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?
கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
ம்ம்ம் ஆஹாஹா ஆஆஆ
கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியும் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ?
ஆ..ஆ.. ஆஆஆ ஆஆஆ
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?
ஆஹாஹா ஆஹாஹா ஹா ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆஆஆ
காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக
ஆஆ.ஆஆ. ஆஆஆ ஆஆஆ
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?
பூமாலை நீ தந்து சீராட்டினாய் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்
ஆஆஆ ஆ... ஆஆஆ ஆஆஆ
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
http://www.youtube.com/watch?v=lBPdHNZZMqQ
http://sim02.in.com/62/a3f24009543a98d08051657d15d854c3_pt_xl.jpg
gkrishna
14th August 2014, 05:23 PM
அடடா!
'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட'
பாகம் 1 இல் பாடல் வீடியோவைப் போட்டு ஒரு வழி பண்ணிட்டார் மதுண்ணா.
இந்தப் பாடலில் நடிகை சொர்ணா பிளாட்பாரத்தில் ரயிலின் கூடவே ஓடி வர வேண்டும். 'ஷாட்'டைப் பார்த்த நடிகர் திலகம் சொர்ணாவைக் கூப்பிட்டு 'இப்படி ஓடக்கூடாதும்மா... இந்த மாதிரி ஓடணும்... பெண் ஓடுவது போல் நளினமாக இருக்க வேண்டும்' என்று ஒய்யாரமாக ஓடிக் காண்பித்தாராம். யூனிட்டே அசந்து போனதாம்.
வாணியின் அருமையான பாடல்களில் ஒன்று. ஆனால் வழக்கம் போல எதிர்பார்த்த ஹிட் அடிக்கவில்லை. 'நாலு பக்கம் வேடர் இருந்தால்' குங்குமக் கோலங்கள் அஞ்சாதோ! அம்மம்மா.... என்னாம்மா...சொல்லம்மா
அருமையான ஆனால் அறியாத தகவல் வாசு சார்
தகவல் பெட்டகம் சார் நீங்கள்
சொர்ணா கொஞ்சம் பூசின உடம்பு (உடும்பு).ஓடறது கொஞ்சம் கஷ்டம் கவரிமான் படத்தில் விஜயகுமார் உடன் டென்னிஸ் ஆடுவது போல் ஒரு காட்சி நினைவில் உண்டு சார் வைட் ஸ்கிர்ட் போட்டு கொண்டு . முட்டிக்கு கீழே கால் பார்த்தீங்க னா கெண்டை muscle என்று சொல்வார்களே கமலுக்கும் விக்ரமுக்கும் கை புஜங்கள் போல் இருக்கும்
http://i1.ytimg.com/vi/bV8V2oowwwI/hqdefault.jpg
முதல் பாகத்தின் இறுதியில் நீங்கள் போட்ட தொகையறா பாடல்
இன்னும் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது
vasudevan31355
14th August 2014, 05:33 PM
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
செம ஜாலி மூட் பாடல். ஜஸ்ட் ரிலாக்ஸ் தொடருக்கு ஏற்றது. மிக அருமையாக என்ஜாய் செய்து எழுதியிருக்கிறீர்கள் கிருஷ்ணா.
இந்தப் பாட்டைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
RAGHAVENDRA
14th August 2014, 05:36 PM
http://www.sadmuffin.net/cherrybam/graphics/comments-congratulations/congratulations013.gif
"தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்வாயோ
ஊருலகம் போற்ற வரும் என் உத்தமரைக் காண்பாயோ
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விடமாட்டாயோ"
தமிழ்த் திரையிசையுலகம் என்னும் கன்னி உயிருடன் இருந்தால் தங்களைத் தான் மணநதிருப்பாள் கிருஷ்ணரே.. எங்கிருந்தாலும் இந்தத் தொகையறாவைத் தான் பாடியிருப்பாள்...
என்ன அசுரத்தனமான ஞானம் என்று தங்களை சொந்தம் கொண்டாடி யாருக்கும் தராமல் தானே வைத்துக் கொண்டிருப்பாள்...
ஆஹா... உத்தரவின்றி உள்ளே வந்ததுமில்லாமல் எங்கள் தாம்பத்யத்திற்குள் நுழைந்து விமர்சனம் வேறு செய்கிறாயோ என்று அந்த தமிழ் நங்கை கூறும் முன்...
Escapeடா சாமி.
அதற்கு முன்
கிருஷ்ணா சூப்பர் .... உத்தரவின்றி உள்ளே வா பாடலுடன் இத்திரியைத் தொடங்கி இத்திரியில் நுழைவதற்கு யாருடைய உத்தரவும் தேவையில்லை எனக் கூறி விட்டீர்கள்.
தூள் கிளப்புங்க....
gkrishna
14th August 2014, 05:38 PM
உண்மை வாசு சார்
அந்த தேனாறின் கரையில் பாடலில் ராட்சசி ஒரு சிரிப்பு ஒன்று பாருங்கள்
நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் சார் midnight ஷோ திரை அரங்கு பின்னாடி வயக்காடு படம் பார்த்து கொண்டு இருக்கும் போது சிலர் அலறின அலறல் இருக்கே
gkrishna
14th August 2014, 05:40 PM
வாருங்கள் எங்கள் குருஜி ராகவேந்தர்
பொங்கும் பூம்புனலாய் வந்து எங்கள் செவி குளிர வழங்குக உங்கள் ஆசியை
தொடருக உங்கள் பூபாளத்தை
பொங்கி பிரவாகம் எடுக்கட்டும் உங்கள் இனிய பழைய கானங்கள்
தப்பி ஓடாதே தங்கமே
chinnakkannan
14th August 2014, 05:41 PM
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..
வழக்கம் போல சான்றோர்கள்.. என்ன சொல்லியிருக்காங்களாம்..அவங்களும் பெண்ணைப் பற்றித் தான்..
கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்ற்றியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.. இது வெகு அந்தக்கால வள்ளுவர் வாக்கோன்னோ..
இந்தக் கால சான்றோர்கள் என்ன சொல்லியிருக்காங்க
பூடகமாய்ப் பெண்ணின் பொருள்பொதிந்த கோபம்தான்
ஊடலென நெஞ்சில் உணர்..
ஆமாம்..லேடீஸ் இருக்காளோன்னோ என்ன ஜென்ம்மோ..எதுக்குக் கோச்சுக்கும்னு தெரியாது.. நம்ம ஆண்வர்க்கம் இருக்கே ரொம்ப கஷ்டம்.. திடீர்னு கோபம் கண்ல அடிக்கும்
மின்னலெனச் சுட்டுவிட்டு மேவி உயிர்கொள்ளும்
கண்வழி கோபமும் காண்..
டபக்குன்னு கோச்சுண்டுட்டாளா.சரி போயேன்னு விட்டுட முடியுமா என்ன.. அப்படி விட்டுடலாம்னு பார்த்தா இன்னும் கஷ்டம்னா ஓய்..அந்தக் கண்ணோரம் ஒரு ஒற்றைத்துளியாய் தெறிக்கும் பாருங்கோ.. பசங்க பாடு கஷ்டம் தான்..
ஓரந் துளிர்க்கும் ஒருதுளியில் நெஞ்சமும்
ஈரம்தான் கொண்டே விடும்..
ஸோ என்ன பண்றது..சின்னக் கண்ணம்மா.. என்னடா கோபம்னு கொஞ்சம் கொஞ்சனும்..அதுக்கு முன்னால என்ன மேட்டர்னு கண்டும் பிடிக்கணும்.. ரொம்ப கஷ்டமான சமாச்சாரம் தான்.. கண்டுபிடிச்சு சமாதானப் படுத்தறதுக்கு சில சமயம்சுலபமாகவும் முடிச்சுடலாம்..ஜஸ்ட் ஒரு இறுக்கப் புடிச்சு ஒரு முத்தா.. சில சமயம் பர்ஸூம் வீக் ஆகச் சான்ஸ்ஸ் இருக்கு..
அப்படித் தான் ஓய் இந்தப் பாட்டுல ஆத்துக்காரி கோச்சுக்கறா.. ஆம்படையான் என்ன பண்ணுவான்..சரித்திரகாலப் படமோன்னோ..செந்தமிழ்லயே பாடாறன் ஓய்..
*
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்
வேறெதிலே உந்தன் கவனம்
இன்சொல் பேசி ஏசிட எண்ணும்
இதயமிலாதார் கவனம்
இழந்ததனால் இந்த மௌனம்
//யோவ் சும்மா சும்மா வெளிய போய்ட்டு வர்றியே..என்னை கவனிக்கிறியாய்யா நீ)
வண்ணச் சிலையே...
வண்ணச் சிலையே வளர் பிறையே
வந்ததறியேன் மனம் குறையேன்
எண்ணம் வீம்பு
எண்ணம் வீம்பு மொழி கரும்பு
என்னை பிரிந்த உம்மனம் இருட்டு
/என்னை விட்டுட்டு விட்டுட்டு ப் போறீரே..ஒம்ம ஹார்ட் டார்க் தான்/
கண்ணே போதும் சொல்லம்பு ஆ...
கண்ணே போதும் சொல்லம்பு
உன்னை கணமும் பிரியேன் எனை நம்பு
/சமர்த்து..இந்தக் கால அரசியல் வாதி மாதிரி டபக்குன்னு வாக்குறுதி கொடுத்துடணும்..கொடுத்துடறான் பாருங்கோ/
உண்மையில் என் மேல் உமக்கன்பு ஆ...
உண்மையில் என் மேல் உமக்கன்பு
உண்டென்றால் இல்லை இனி வம்பு
/ஹப்பாடி சமாதானம் ஆயாச்சு//
கண்ணில் தழுவுதே குறும்பு
கனிமொழியே நீ என்னை விரும்பு
பின்ன என்ன சேர்ந்து பாட வேண்டியதுதானே//
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்தே
கனிவுறும் காதல் ஜோதி
காண்போமே பாதி பாதி காண்போமே பாதி பாதி
*
நன்னா இருக்கா பாட்டு..படம் நம்ம ந.தி படம்னா ந.தியும் ல்லிதாவும்பாடினது.(அப்படித்தானே).என்னது இங்க ஏற்கெனவே பேசிட்டாங்களா..அதனாலே என்ன மறுபடியும் கேட்டுக்குங்களேன்..
அப்புறம் வரட்டா
உருவாய் அருவாய் உளதா இலதா..
.. அருள்வாய் குகனே..
அன்புடன்
சி.க..
gkrishna
14th August 2014, 05:57 PM
எதனை தடைவை கேட்டாலும் சலிக்காத தூக்கு தூக்கி பாடல்
அல்லவா சின்னா
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி (இது தான் லலிதா )
உயிர் காப்பான் தோழன்
என்ற கருத்தின் அடிப்படையில் வந்த ப(பா)டம்
http://win.tamilnool.net/ebook10/10300/image/10278.jpg
chinnakkannan
14th August 2014, 06:00 PM
ஆமாம் க்ருஷ்ணாசார்.. இந்த பாடலென்றில்லை படமும் தான்.. என்னுடைய ஃபேவரிட்ஸ்ல் ஒன்று..
mr_karthik
14th August 2014, 06:04 PM
டியர் வாசு சார்,
உணமையிலேயே மலைக்க வைக்கும் சாதனைதான் என்பதில் எள்ளளவும் ஐயமேயில்லை. இத்தகைய சாதனையை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய தங்களையும், இச்சாதனைக்கு மிக மிக உறுதுணையாக நின்ற கிருஷ்ணாஜி, ராஜேஷ் சார், ராகவேந்தர் சார், மதுசார், சின்னக்கண்ணன் சார், வினோத் சார், தூக்கத்திலும் என்னை மறக்காத கோபால் சார், முரளி சார் மற்றும் இந்த திரியில் பங்களிப்பு செய்த அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும், அந்த அளவுக்கு அனைவரும் தங்கள் உழைப்பக் கொட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றிகள்.
வேலைப்பளுவினாலும், உடல்நலக் குறைவினாலும் கடந்த சில நாட்களாக பங்கேற்று பதிவுகள் இட முடியவில்லைஎன்றாலும், அனைத்துப்பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். மலைத்துப்போனேன் என்பதே உண்மை. எவ்வளவு விவரமான, விஷயமுள்ள பதிவுகள்..!!!. அவற்றையெல்லாம் நீங்கள் அழகாக பட்டியலிட்டு விட்டீர்கள். தமிழ்ப்பாடல்கள் சம்மந்தமான (ஏன்..., கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி சம்மந்தமாகக்கூட) தேவைப்படும் விவரங்களும் இந்த திரிக்குச்சென்றால் கிடைக்கும் என்ற அளவில் பாடல்கள் அலசப்பட்டிருக்கின்றன.
தங்களின் 'இன்றைய ஸ்பெஷல்' மற்றும் 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் வரிசைகளும், கோபால் அவர்களின் 'ராக ஆலாபனை' பதிவுகளும், ராகவேந்தர் அவர்களின் 'பொங்கும் பூம்புனல்' மற்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' பதிவுகளும், கிருஷ்ணாஜி, ராஜேஷ், மது, சின்னக்கண்ணன் ஆகியோரின் அருமையான தமிழ் மற்றும் பன்மொழிப் பாடல் ஆய்வுகளும், வினோத் அவர்களின் பொம்மை இதழ் ஸ்டில்களுடன் கூடிய வீடியோக்களும் (சினி டைரி ஆவணப் பதிவுகளுக்கு ஸ்பெஷல் நன்றி வினோத் சார்) திரியை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.
கிட்டத்தட்ட முக்கால்வாசிவரை ஆக்டிவ்வாக இருந்த நான், மேற்கூறிய காரணங்களால் பாகத்தின் இறுதியில் சுறுசுறுப்பாக பங்கேற்க முடியாமல் போனதற்காக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். மேலும் நான் துவங்கிய 'நாயகியரின் போதைப்பாடல்கள்' வரிசையையும் தொடர்ந்து தர முடியவில்லை. மன்மதலீலைப் பதிவுகளையும் முழுமையாக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. இரண்டாம் பாகத்தில் நிச்சயம் சுறுசுறுப்பாக பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன்.
எந்த வித சலசலப்பும், சண்டைகளும் இன்றி திரி கலகலப்பாக சென்றதற்குக் காரணம், நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற கர்வம் இல்லாமை. பி.சுசீலா - எஸ். ஜானகி சர்ச்சை கூட அருமையாக தவிர்க்கப்பட்டது.
துவக்கத்தில் ராட்சசி புகழை அதிகம் பாடுவதாக அமைந்த திரி இறுதியில் இசையரசியின் புகழ்க்கொடியை உயர்த்திப்பிடித்ததில் முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக முரளி சார் எழுதிய 'மனம் படித்தேன்' பாடலுக்கான மேலதிக ஆய்வு. (முரளி சார்.., நானெல்லாம் மாங்கு மாங்கென்று நூறு பதிவுகள் எழுதுவதும் சரி, நீங்கள் ஒரு பதிவு எழுதுவதும் சரி. அத்தனை முழுமை உங்கள் பதிவில். 'மனம் படைத்தேன்' என்ற இடத்தில் வரும் ஆலாபனை போலவே 'அம்மம்மா ஆ.ஆ.ஆ. அம்மம்மா காற்றுவந்து ஆடைதொட்டுப்பாடும்' என்ற இடத்திலும் இசையரசி அசத்தியிருப்பார்).
வாசு சார், ஒவ்வொன்றையும் எப்படிச்செய்ய வேண்டும் என்பதை தங்களிடம் கற்றுக்கொள்வது போலவே 'நன்றிப்பதிவு' எப்படிப்பதிவிட வேண்டும் என்பதையும் தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஒரு முழுமையான நன்றிப்பதிவு. எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு, இறுதியில் ஒரு தனிப்பதிவிட்டு நடிகர்திலகத்துக்கு நன்றி தெரிவித்தீர்கள் அல்லவா?. அங்கு நிற்கிறீர்கள் வாசு சார்.
அடுத்த பாகத்தை அருமையான 'உத்தரவின்றி உள்ளே வா' பாடலுடன் துவக்கி வைத்திருக்கும் அன்பு கிருஷ்ணாஜி அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...
gkrishna
14th August 2014, 06:13 PM
அடுத்த பாகத்தை அருமையான 'உத்தரவின்றி உள்ளே வா' பாடலுடன் துவக்கி வைத்திருக்கும் அன்பு கிருஷ்ணாஜி அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...
வருக வருக கார்த்திக் சார்
உங்கள் வரவு நல்வரவு ஆகுக
உங்கள் ஆதரவை நல்குக
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1T5g5YXD5iOb47ptGtzUjv73gk0AWc LbWFvPDjw8BWLwgwe5NOA
Gopal.s
14th August 2014, 06:18 PM
வாழ்த்துக்கள் கிருஷ்ணா. திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.
சிவாஜியாய் இருந்தால் என்ன குட்டி சிவாஜியாய் இருந்தால் என்ன. இரண்டுமே சந்தோசம்.அதுதான் உத்தரவின்றி உள்ளே வந்து விட்டேன்.
கார்த்திக் கலந்ததில் மிக மகிழ்ச்சி.
gkrishna
14th August 2014, 06:25 PM
அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".
இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும்
http://3.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/Rx7fQeU5gVI/AAAAAAAABaI/uER476LEslY/s1600/salil_conducting.jpg
இந்த 3 பாடல்களின் விடியோ கிடைக்குமா
rajesh sir,madhu anna,vasu sir,vindoh sir please
rajeshkrv
14th August 2014, 06:25 PM
Kudos krishnaji,
My fav from uvuvaa is unnai thoduvadhu iniyadhu
Andha padal patri ezhudhugiren
gkrishna
14th August 2014, 06:28 PM
வாழ்த்துக்கள் கிருஷ்ணா. திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.
சிவாஜியாய் இருந்தால் என்ன குட்டி சிவாஜியாய் இருந்தால் என்ன. இரண்டுமே சந்தோசம்.அதுதான் உத்தரவின்றி உள்ளே வந்து விட்டேன்.
கார்த்திக் கலந்ததில் மிக மகிழ்ச்சி.
மிக்க மகிழ்ச்சி கோபால் சார்
உங்கள் வாழ்த்து என்றும் வேண்டும்
உங்கள் வருகைக்காக காத்து கொண்டு இருக்கும்
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT923z94RXK8mRuNAS8GiuFmTtIObDbY FB-OvEyueeYb5FhjJ0r
நிச்சயமாக நடிகர் திலகம் ஜோதியில் என்றும் ஐக்கியம் ஆவேன்
gkrishna
14th August 2014, 06:33 PM
Kudos krishnaji,
My fav from uvuvaa is unnai thoduvadhu iniyadhu
Andha padal patri ezhudhugiren
ராஜேஷ் சார்
வாருங்கள்
தொடரட்டும் உங்கள் திருப்பணி
செம்மை ஆகட்டும் நமது திரி இழை
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTBKWNmCpkpAIxJFK8feBJtM_7dbc2y5 rc7nZPmeRdiJi06Jt4J
mr_karthik
14th August 2014, 06:46 PM
இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.
'அங்கே' நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இடம் தெரியாமல் இடறியவர்களை நீங்களும், முரளி சாரும், ரவிகிரண்சூர்யா சாரும் முகமூடிகளைக் கிழித்து, சகட்டுமேனிக்கு புரட்டியெடுத்துக் கொண்டு இருக்கிறீர்களே..
gkrishna
14th August 2014, 07:19 PM
http://antrukandamugam.files.wordpress.com/2014/08/suryakala-ninaithale-inikkum-1979-1.jpg?w=593http://antrukandamugam.files.wordpress.com/2014/08/suryakala-rajani-ninaithale-inikkum-1979.jpg?w=593
நடிகை சூர்யகலா பற்றி நாம் சென்ற பாகத்தில் எழுதி இருந்தோம் .நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் அவர் ரஜினியை கலாய்க்கும் காட்சி .வழங்கிய நண்பர் வலைபதிவர் திரு சகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி
Richardsof
14th August 2014, 07:20 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா அவர்களுக்கு இனிய அன்பு வாழ்த்துக்கள் .
பல புதுமையான பாடல்களுடன் இனிதே இன்று துவக்கம் . மதுர கானம் திரியில் என்னுடய பதிவுகளுக்கு
வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு வாசு, திரு கிருஷ்ணா மற்றும் திரு கார்த்திக் அவர்களுக்கு அன்பு கலந்த
நன்றி .
http://youtu.be/B2yxjkvDHYs
gkrishna
14th August 2014, 07:26 PM
வாருங்கள் எஸ்வி சார்
அள்ளி தாருங்கள் உங்கள் (என்றும் ஆணவமில்லாத) ஆவணத்தை
http://sivacbe.wen.ru/new/nal.gif
mr_karthik
14th August 2014, 08:02 PM
ஏணிப்படிகள்
இப்படத்தில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஒரு அருமையான பாடல்.
கிராமத்து தியேட்டர் ஒன்றில் குப்பைகளை கூட்டி சுத்தப்படுத்தும் பணியில் இருப்பவர்கள் சிவகுமார் மற்றும் ஷோபா. சந்தர்ப்ப சூழ்நிலையில் சென்னை செல்லும் இவர்களில் சிவகுமார் முயற்சியால் ஷோபாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது நட்சத்திரமாகிவிடுகிறார். ஆனால் உடனிருக்கும் சிவகுமார், ஷோபாவால் சிறுகச்சிறுக புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் கிராமத்து தியேட்டருக்கே குப்பை அள்ள வந்துவிடுகிறார். அப்போது கிராமத்தில் நடக்கும் பள்ளி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நட்சத்திரம் ஷோபா வர, அந்த விழாவில் கண்பார்வையற்ற சிறுவன் பாடுவதாக இந்தப்பாடல்....
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
ஏற்றிவிட்ட ஏணி ஒன்று நின்றபடி நிற்கிறது
ஏறிவிட்ட ஒருமனமோ வேறுவழி நடக்கிறது
ஏற்றியது குற்றமில்லை ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது கடவுள் என்னும் மாயக்காரன் லீலையம்மா
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
தேவனவன் கோயிலிலே கோடைவெயில் சுடுகிறது
தேவியவள் வாசலிலோ செல்வமழை பொழிகிறது
நல்லவர்க்கு பொருள் எதற்கு நாடிவரும் புகழ் எதற்கு
அன்புகொண்ட மனங்களிலே அசைந்து அசைந்து நடப்பதற்கு
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்.
JamesFague
14th August 2014, 08:56 PM
Congratulation Mr Krishnaji for starting the Part II
Thanks for Mr Vasudevan Ji for remembering me also.
Mr Karthik, the song in video , especially for you.
http://youtu.be/5wLp6HeqOLQ
vasudevan31355
14th August 2014, 10:09 PM
டியர் கார்த்திக் சார்,
மிக்க நன்றி! நேற்று மிக்க நம்பிக்கையுடன் எங்கள் கார்த்திக் சார் வருவார் என்ற அசையா நம்பிக்கையுடன் இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நேற்று இரவு வினோத் சாரிடம் பேசும் போதுகூட கார்த்திக் சார் இன்று நிச்சயம் வருவார் என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டேன். நீங்கள் ஒரு நாள் சென்று வந்து விட்டீர்கள். நிஜமாகவே சொல்கிறேன் சார். நீங்கள் இல்லாமல் திரி சற்று பொலிவிழந்து நின்றது உண்மை.
நிச்சயமாக நான் ஒன்றுமே செய்யவில்லை. திரியைத் துவக்கினேன். அவ்வளவுதான். அத்தனை பேரும் அற்புதமாக அதை பரிமளிக்கச் செய்தீர்கள். ஆனால் எல்லோரும் என்னை கூச்சப்படும் அளவிற்கு பாராட்டித் தள்ளி விட்டீர்கள். இந்த சகோதர பாசத்திற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை.
தங்களின் விட்ட பதிவுகள் இரண்டாம் பாகத்தில் தொடர வேண்டும்..மீண்டும் தங்களுக்கே உரித்தான முத்திரைப் பதிவுகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிருஷ்ணா என்ற நல்ல உள்ளம் இரண்டாம் பாகத்தை துவங்கி இருக்கிறது. அந்த உள்ளத்தின் பின்னே நாம் அணிவகுத்துச் சென்று திரியை வளப்படுத்துவோம்.
அதற்கு அச்சாரமாக அமைந்துள்ளது தங்கள் 'ஏணிப்படிகள்' பதிவு. 'கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்' அருமை. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே அமர்க்களம். நம்ம மாமா தானே இசை.
சுசீலா அருமையாகப் பாடியிருப்பார். பாடும் பையனை இன்னொரு படத்தில் பார்த்திருக்கிறேன்.
'ஆடு புலி ஆட்டம்' படத்தில் 'வானுக்குத் தந்தை எவனோ' என்று கமல் ஒரு கண்ணில்லா பையனிடம் ஆதரவாகப் பாடுவாரே! அந்தப் பையன் தான் இந்தப் பாடலுக்கும் நடிப்பான். அவன் பெயர் 'மாஸ்டர்' அனில் குமார்.
அதிலும் குருடு. இதிலும் குருடு. ஏன். அவனைப் பார்த்தே விடுவோமே.
'ஆடு புலி ஆட்டம்' படத்தில்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sdvfb.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sdvfb.jpg.html)
'ஏணிப்படிகள்' படத்தில்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Untitled-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Untitled-1.jpg.html)
vasudevan31355
14th August 2014, 10:24 PM
இரண்டாம் பாகத்தில் கலக்க வரும் ராஜேஷ்ஜி!
வருக! வருக!
இன்றைய இசையரசியின் பாடல் எது தரலாம்? ம்ம்... சி.க உறுமுவது தெரிகிறது.
'நீ இன்றி நான் இல்லை வாடா ரங்கய்யா
நெஞ்சம் இன்றி எண்ணம் இல்லை வாடா ரங்கய்யா'
அழகான, மிடுக்கான காளையை கொஞ்சியபடியே ஜெயந்தி ஆடிப்பாட, வழக்கம் போல ஜெமினி காளை ஜெயந்தி பசுவை தன் வழக்கமான இடுப்பில் கை வைத்த ஸ்டைலில் வீழ்த்தப் பார்க்க 'எப்படியோ போங்கள்... பாடலை நான் தூள் கிளப்பி விடுவேன்' என்று இசையரசி அம்சமாகப் பாடுகிறாரோ! 'நல்ல முடிவு'.
அமைதியான அழகான பாடல்.
பார்த்து இன்புறுவோமே!
https://www.youtube.com/watch?v=weKuAJ-oxc4&feature=player_detailpage
vasudevan31355
14th August 2014, 10:38 PM
ராஜேஷ் சார்,
இசையரசியின் அமர்க்களத்தோடு சேர்த்து என் ராட்சஸி பாடலும் இந்த புதிய பாகத்தில் தினம் ஒன்று அல்லது இரண்டு இரவில் தங்களோடு சேர்ந்து தரவுள்ளேன்.
சம்மதமா.... நான் உங்கள் கூட வர சம்மதமா...
இதோ ஆரம்பிக்கிறேன்.
'நீ' படத்தில் எங்கள் ராட்சஸி பாடும்
அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு'
அட்டகாசமான பாடல். அப்படியே ஈஸ்வரி முத்திரை.
'அனல் மேல் வைத்த மெழுகு
அது போல் நீயும் உருகு'
நன்றாக கவனியுங்கள்.
'அனல் மேல் வைத்த மெழுகு' என்று இந்த ராட்சஸி பாடுகையில் அப்படியே மெழுகை அனல் மேல் வைத்தது போலவே இருக்கும். 'அ'வுக்கும் 'ன'வுக்கும் இடையில் ஒரு மிகச் சிறிய மாத்திரை ஒலிக் குறைவில் ஒரு கேப்.
அலட்சிய போக்கு.
அசுரத்தனமான உச்சரிப்பு.
அராத்தல் பாடல்களில் நானே சாம்ராஜ்ய மகாராணி என்று கொக்கரிப்பு.
இதோ கேளுங்கள். ஜெயலலிதா மேடத்தின் அருமையான டேப் டான்ஸையும் உடன் சேர்ந்து அனுபவியுங்கள். விஸ்வநாதரின் பின்னிப் பெடலெடுக்கும் இசை ராஜ்யத்தை அனுபவியுங்கள்.
ஈஸ்வரி + ஜெயலலிதா = பெர்பெக்ட் மேட்ச்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PfnrZBm1wjk
rajeshkrv
14th August 2014, 10:59 PM
இந்த இரண்டாம் பாகத்தை பாங்காகவும் அழகாகவும் துவக்கிய கிருஷ்ணா ஜிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
உத்தரவின்றி உள்ளே வா .. ராட்சசியும் பாடகர் திலகமும் பட்டைய கிளப்பும் பாடல் ...
எல்லாமே சிறந்த பாடல்கள்
எனக்கு மிகவும் பிடித்தது
பாலா, இசையரசி, சாய்பாபா, அரக்கி பாடிய “உன்னை தொடுவது இனியது நான் சொல்லித்தருவது புதியது”
ஆஹா தூள் கிளப்பும் பாடல் ... ரவி-காஞ்சனா ரொமான்ஸ் என்றால் நாகேஷ் ரமாபிரபா உடான்ஸ் ... எனிவே நைஸ் டான்ஸ் ...
இதோ
http://www.youtube.com/watch?v=pdneVJCkBPI
உத்தரவின்றி உள்ளே வா தெலுங்கில் பி.சங்கர் என்ற இசையமைப்பாளர் விந்த இல்லு சந்த கோலா என்ற படத்தில் உபயோகித்தார்
பாலு, இசையரசி, ஜி.ஆனந்த் பாடிய பாடல் இதோ ..
vintha illu santha gola- neepai moju vunnadhiraa-spb,ps,g.anand-kosaraju-b.sankar.mp3 (http://www.4shared.com/mp3/nhdtskyU/vintha_illu_santha_gola-_neepa.html)
rajeshkrv
14th August 2014, 11:02 PM
வாசு ஜி,
கேட்கனுமா தாராளமாக வழங்குங்கள் .. இசையரசிக்கு அடுத்து இரு குரல்கள் என்னை கவர்ந்தவை.. ராட்சசி மற்றும் ஜிக்கி..
அப்புறம் புதியவர்களில் சுஜாதா, ஸ்வர்ணலதா பிடிக்கும்
வாணிஜெயராம் பாடுவார் ஆனால் அவருக்கு பக்திபாடல்களுக்கான வாய்ஸ் என்பதால் சில ரொமாண்டிக் பாடல்களில் கூட பக்தி ரசம் சொட்டும்..இது என் கருத்து .. தவறாக இருந்தால் மன்னிக்கவும்
உதாரணத்திற்கு “கங்கை யமுணை பாடல் இசையரசியின் அக்மார்க் பாடல் .. வாணி அதை பஜனாக மாற்றியிருப்பார்”
vasudevan31355
14th August 2014, 11:05 PM
அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".
இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும்
http://3.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/Rx7fQeU5gVI/AAAAAAAABaI/uER476LEslY/s1600/salil_conducting.jpg
இந்த 3 பாடல்களின் விடியோ கிடைக்குமா
rajesh sir,madhu anna,vasu sir,vindoh sir please
கிருஷ்ணா சார்!
வார்ரே வா! அப்படி வாங்க கண்ணா!
சலீல் இசையமைத்த 'ஆனந்த்' திரைப்படத்தில் ஸ்மிதா சன்யால் நடிக்க லதா பாடிய அற்புத பாடல் 'நா ஜியா லாகே நா'.
சலீல் சௌத்திரி என்ற அற்புத உன்னத இசையமைப்பாளரின் உயிரை உருகச் செய்யும் இசைக்கு நான் முதல் பரம அடிமை. பல தடவை ராகவேந்திரன் சாரும், நானும் இப்பாடலைப் பற்றிப் பேசி மகிழ்ந்திருக்கிறோம். நீங்களும் அப்படியே இருக்கிறீர்கள்.
ஆனால் ஒன்று. லதா பிரமாதமாகப் பாடியிருந்தாலும் நம்ம பாலா அதைவிட ஒரு படி மேலே போய் அசத்தி விட்டார். 'நான் எண்ணும் பொழுது' தமிழ்ப் பாடல்களில் ஒரு அழியாக் காவியம்.
இப்போது உங்களுக்காக லதா பாடிய பாடல்.
https://www.youtube.com/watch?v=IO3D-JfItCU&feature=player_detailpage
படத்தின் முடிவில் வரும் பாலாவின் சின்ன பிட்.
https://www.youtube.com/watch?v=kNrG20nZGNk&feature=player_detailpage
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1DrCTJ-DZYU
vasudevan31355
14th August 2014, 11:13 PM
இனிமை ராஜேஷ் சார்.
பாலாவின் அந்த பேஸ் வாய்ஸ். லலலலலலலலலால்லா லல்லல்லலல்லலல்லலாலா
அய்யோ! அப்படியே அள்ளிக்கிட்டுப் போக்குமே!
நடுவில் எங்க ஆள்
'நீ பாண்டியனின் பிள்ளையோ' அந்த 'யோ' மறக்க முடியுமா?
vasudevan31355
14th August 2014, 11:20 PM
ராஜேஷ் சார்,
தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். கடந்த 10 ஆம் தேதி தாங்கள் 2000 பதிவுகள் அளித்திருந்தீர்கள். நான் சென்னைப் பயணத்தில் இருந்ததால் போனில் சொல்லி வினோத் சார் மூலமாக தங்களுக்கு என் சார்பில் வாழ்த்துத் தெரிவித்தேன். பின் இரவு வந்து நானும் ஒரு வாழ்த்துத் தெரிவித்தேன்.
இப்போது உங்கள் போஸ்ட்டின் எண்ணிக்கையைப் பாருங்கள். 2000 தாண்டிய தங்கள் பதிவுகள் இப்போது திடீரென்று எப்படி 1609 ஆயின? ஒன்றுமே புரியவில்லையே. நீங்கள் கவனித்தீர்களா? எனக்கும் இது போல் இரண்டு தடவை நிகழ்ந்துள்ளது. நம் ராகவேந்திரன் சாருக்கும் இது போல நடந்துள்ளது. நான் கிட்டத்தட்ட 6000 பதிவுகளைக் கடந்திருக்க வேண்டும். ஆனால் 5000 த்தில் நிற்கிறேன். என்ன கொடுமை சரவணன் சார் இது?
என்ன மாயம் இது? யாராவது விளக்குவார்களா? இல்லை எனக்குத்தான் கண் சரியாகத் தெரியவில்லையா?
vasudevan31355
14th August 2014, 11:23 PM
ஸ்மிதா சன்யால் எவ்வளவு சிம்பிள் அழகு!
http://lh3.ggpht.com/-2H2LV0lQNsg/SYFX8rbTVsI/AAAAAAAAj-g/aVPWJR5Z4fg/s640/Sumita%252520Sanyal.jpg
http://3.bp.blogspot.com/-2zPAdmvyoDc/UwCalOuobWI/AAAAAAAAakw/T1NpuA7n4R0/s1600/3.png
vasudevan31355
14th August 2014, 11:25 PM
http://i1.ytimg.com/vi/6kjGXPhv894/0.jpg
vasudevan31355
14th August 2014, 11:29 PM
Sanjeev Kumar and Sumita Sanyal in Aashirwad - 1968
http://4.bp.blogspot.com/-9WV3CWFFrIg/UcHW3JoJZ8I/AAAAAAAAXxc/6fvgXKLPs08/s1600/Sanjeev+Kumar+and+Sumita+Sanyal+in+Aashirwad+-+1968.jpg
parthasarathy
14th August 2014, 11:33 PM
Hearty congratulations Krishna Ji.
Regards,
R. Parthasarathy
sss
15th August 2014, 12:07 AM
அன்புள்ள திரு கிருஷ்ணா அவர்களே
உங்கள் விருப்பம் MP3 வடிவில் :
அழியாத கோலங்கள் - தமிழ்
http://www.mediafire.com/listen/ydgw1mzzy3j/Naan_Ennum_SPB_Azhiyatha_Kolangal.mp3
ஆனந்த் - ஹிந்தி
http://downloadming.nu/anand-1971
http://www.mediafire.com/listen/xn5ec2vnaq01ecc/04_Na_Jiya_Lage_Na__LM_Anand.mp3
லதா மங்கேஸ்கர் பாடிய இந்த பாடலில் நீங்கள் குறிப்பிடும் பாடல் எது ?
http://www.salilda.com/nonfilmsongs/lata.asp
நன்றி
சுந்தர பாண்டியன்
sss
15th August 2014, 12:17 AM
நண்பர்களே
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு
வாணி ஜெயராம் பாடிய ஒரு தனிப் பாடல் :
பொதிகை தொலைகாட்சியில் பதிவு செய்தது :
பாரதமே பாரில் என தொடங்கும் ...பாடல்
http://www.mediafire.com/listen/tbt3e5rfgdt2ze9/Ezhilisai-PodighaiTV-04-Bharathame_Paril_VJ.mp3
நன்றி
சுந்தர பாண்டியன்
chinnakkannan
15th August 2014, 12:28 AM
இப்போது உங்கள் போஸ்ட்டின் எண்ணிக்கையைப் பாருங்கள். 2000 தாண்டிய தங்கள் பதிவுகள் இப்போது திடீரென்று எப்படி 1609 ஆயின? ஒன்றுமே புரியவில்லையே. நீங்கள் கவனித்தீர்களா? // இதைத் தான் உங்கள் 5000 பதிவுகளுக்கான வாழ்த்தும் போது சொன்னேன்.. நாங்கள் பாட்டுக்குப் பாட்டு இழையில் விளையாடுவோமல்லவா வாசு சார்..அதில் குறைத்து விடுவார்கள் சாதாரண போஸ்ட் என..:)
Murali Srinivas
15th August 2014, 12:49 AM
மதுர கானங்கள் பாகம் 2-ற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் கிருஷ்ணாஜி! வெற்றி பயணம் தொடரட்டும்.
வாசு, கார்த்திக், கோபால், ராகவேந்தர் சார், ராஜேஷ்,சின்ன கண்ணன், மது மற்றும் sss அனைவருக்கும் வாழ்த்துகள். இரண்டு இருபது ஆகட்டும். இதயமெல்லாம் இசை வெள்ளம் நிறையட்டும்.
அன்புடன்
chinnakkannan
15th August 2014, 12:59 AM
முரளி ஜி.. இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ..குழலூதிடும் பொழுதில் ஆடிடும் மனம் போலவே மனமிக அலைபாயுதே.. நல்லதா ஒரு பாட்டு பத்தி விளக்கம் சுதந்திர தினத்துக்குத் தரப்படாதா..வாழ்த்துக்கு நன்றி ந்னு சொல்ல மறந்துட்டேன்.. தாங்க்ஸ்..:)
rajeshkrv
15th August 2014, 02:16 AM
ராஜேஷ் சார்,
தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். கடந்த 10 ஆம் தேதி தாங்கள் 2000 பதிவுகள் அளித்திருந்தீர்கள். நான் சென்னைப் பயணத்தில் இருந்ததால் போனில் சொல்லி வினோத் சார் மூலமாக தங்களுக்கு என் சார்பில் வாழ்த்துத் தெரிவித்தேன். பின் இரவு வந்து நானும் ஒரு வாழ்த்துத் தெரிவித்தேன்.
இப்போது உங்கள் போஸ்ட்டின் எண்ணிக்கையைப் பாருங்கள். 2000 தாண்டிய தங்கள் பதிவுகள் இப்போது திடீரென்று எப்படி 1609 ஆயின? ஒன்றுமே புரியவில்லையே. நீங்கள் கவனித்தீர்களா? எனக்கும் இது போல் இரண்டு தடவை நிகழ்ந்துள்ளது. நம் ராகவேந்திரன் சாருக்கும் இது போல நடந்துள்ளது. நான் கிட்டத்தட்ட 6000 பதிவுகளைக் கடந்திருக்க வேண்டும். ஆனால் 5000 த்தில் நிற்கிறேன். என்ன கொடுமை சரவணன் சார் இது?
என்ன மாயம் இது? யாராவது விளக்குவார்களா? இல்லை எனக்குத்தான் கண் சரியாகத் தெரியவில்லையா?
அதானே தெரியல சார். யாராவது மாடரேட்டர்ஸ் எதையாவது செய்திருப்பாங்களோ .. எல்லாம் மாயமாகீது பா
Gopal.s
15th August 2014, 03:36 AM
எனக்கு பெரும் பாலும் ஹிந்தி நடிகர்களை அறவே பிடிக்காது. ஓரளவு கவர்ந்தவர்கள் குருதத் ,தேவ் ஆனந்த், ராஜேஷ் கன்னா .சஞ்சீவ் குமார்.
ஆனால் ஆஸ்கார் அவார்ட் தந்திருக்க வேண்டும் நான் நினைக்கும் இந்திய படங்கள். பியாசா (குருதத் ), முகலே ஆஸம் (பிரித்திவி ராஜ் கபூர்),கைட் (தேவ் ஆனந்த்),அமர் பிரேம்(ராஜேஷ்கன்னா ).தமிழில் ,தில்லானா மோகனாம்பாள்.
என்னை மிக மிக கவர்ந்த ஹிந்தி பாடல்களின் சாம்பிள் சில.
தான் மீட்டு வந்து ,ஊரை பகைத்து தன்னால் வாழ்வளிக்க பட்ட பெண்ணின் உதாசீன போக்கை எண்ணி நாயகன் பாடும் பாடல்.எனக்கு ரபியின் குரல் பிடிக்கும்.(கிஷோர் பாடும் முறை ஓகே என்றாலும்,குரல் கொஞ்சம் சி.எஸ்.ஜெயராமன் போல் வெற்றிலை பாக்கு போடும்)
கைட் பட அற்புத பாடல்.
https://www.youtube.com/watch?v=NUhf6IDVrjA
ஒரு நடன மங்கையோடு நட்பு கொள்ளும் ,மனைவியால் உதாசீன படுத்த படும் கனவான்.கதவை திறக்க மறுக்கும் மங்கை.அப்பப்பா ...என்ன அழகான பாடல்.என் பிரிய அமர் பிரேம்.
https://www.youtube.com/watch?v=saApSghVCOU
இந்த பாடல் எனக்கு அறிமுகம் செய்தவர் கே.பாலச்சந்தர். அவரது அவள் ஒரு தொடர்கதையில் விதவை ஸ்ரீப்ரியாவிற்கு பிடித்தமான பாடலாக வரும்.கட்டி பதங் படத்தில் இது உபயோக படுத்த பட்ட விதம் ஏமாற்றமே. லதாவின் கரும்பு குரலின் உருக்கம்.
https://www.youtube.com/watch?v=JB_4xapDKlk
மீசை வைத்த ஹிந்தி ஹீரோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.ராகேஷ் ரோஷன்,அனில் கபூர் இப்படி. அமிதாப் விட்ட இடத்தை ஒரு மூன்று வருடம் ஆக்ரமித்தவர் அனில் .அவரது வெற்றி படங்களில் ஒன்று தேஸாப் .அதில் சாங்கி பாண்டே பாடும் இந்த முகேஷின் மகனின் பாடல் என் all time favourite .இதைத்தான் இளையராஜா கேளடி கண்மணி பாடகன் சங்கதியாக உருவினார்.
https://www.youtube.com/watch?v=zvZjAK3b9v4
Gopal.s
15th August 2014, 03:55 AM
இந்திய படங்களில் இசை என்றாலே ,ஹிந்தியும் ,தமிழும்தான்.
1960 களில் ஹிந்தியில் எஸ்.டீ பர்மன்,ரோஷன்,சங்கர்-ஜெய்கிஷன்,மதன் மோகன்,சலில் சௌதரி,நவுஷாத்,ஓ .பி .நய்யார்,லக்ஷ்மி காந்த்-பியாரிலால்,கல்யாண்ஜி-ஆனந்த்ஜி,ஆர்.டீ .பர்மன்,என்று பெரும் கூட்டம்.
கிட்டத்தட்ட அதே அளவு படங்கள் தந்த தமிழிலோ, எம்.எஸ்.விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன் என்ற இரண்டு மட்டுமே.
ஆனாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை(கவனிக்க இணையில் மட்டுமே) ,10 ஹிந்தி இசையமைப்பாளர்களுக்கு சவால் விட்டு தரம்,composition novelty ,variety எல்லாவற்றிலும் அவர்களை முந்தி நின்றனர் 1961 முதல் 1965 வரை.
madhu
15th August 2014, 05:00 AM
வணக்கம்.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு..
வணக்கம்.. வணக்கம்.. வணக்கம்..
http://youtu.be/hW3ttn2hqfU
madhu
15th August 2014, 05:23 AM
மீண்டும் மீண்டும் எல்.ஆர்.ஈஸ்வரியைப் பற்றிய உரையாடல் வரும்போது இரண்டு பாடல்கள் மனதுக்குள் வந்து போகும்.
அதிகமாக கிள்ப் டான்ஸ் பாடல்கள் பாடி இருக்கும் அவர் அதற்கு உள்ளேயே கண்ணோரம் ஈரம் வரவழைக்கும் வரிகளை எப்படி
மென்மையாக உலவ விட்டு இருக்கிறார் என்று நினைக்கும்போது அவருடைய versatility புரியும்.
ஒன்று பெண்ணை வாழ விடுங்கள் படத்தில் ஷீலா ஆடும் " அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்" ..
திருமணம் செய்து கொண்டு குலமகளாய் வாழ விரும்பும் பெண் வேறு வழியில்லாமல் இப்படி ஆடிப் பிழைக்க வேண்டி இருக்கையில் அவள் உள் மனது என்ன சொல்லும் ?
"மன்னர்களே.. பெண்ணிடத்தில் தேவியின் கோலம் காணும் தேவன் இல்லையா ?" என்று நிறுத்தி நிதானமாய்க் கேட்கும்போது பெண்மையை மதிக்கும் உண்மையான மனிதனின் மனது கொஞ்சம் ஆடித்தான் போகும்.
http://youtu.be/j_OLdvar-do
இன்னொன்று படம் மூன்றெழுத்து என்று நினைவு. சரளாவுடன் இணைந்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது.
"தெய்வத்தின் கோவில்.. தெய்வம்தான் இல்லையே
இது மனிதனின் பூமி .. மனிதன் தான் இல்லையே
அவை இரண்டும் இல்லா வேளையிலே
ஏழைப் பெண்கள் வீதியிலே"
என்று உலக நடப்பைச் சுட்டிக் காட்டி
"வாழ்வது எங்கள் ஆசை ஒரு மாளிகை ராணியைப் போல
ஆண்டவன் காட்டிய பாதை ஒரு ஆண்டியின் பிள்ளையைப் போல"
என்று நிலைமையை எண்ணி வருந்தி
"கடமை என்று ஒருவர் வந்தால் காலில் விழுவேன் நானம்மா"
என்று தங்கள் எதிர்பார்ப்பை குரலிலேயே காட்டி அசத்துவார் ஈஸ்வரி.
ஆடியோ, வீடியோ என்று எதையுமே காணோம். யாருக்காவது கிடைத்தால் இங்கே கொண்டு வாருங்கள் ப்ளீஸ்
Richardsof
15th August 2014, 06:21 AM
நேரமில்லை ... நீங்கள் குறிப்பிட்ட பாடல் .. பார்க்கவும் ..
http://youtu.be/K1I3zHuR7mo
rajeshkrv
15th August 2014, 06:35 AM
மது அண்ணா இதோ நீங்கள் கேட்ட தெய்வத்தின் கோவில் தெய்வந்தான் இல்லையே
Moondrezhuthu-Deivathin kovil.mp3 (http://www.4shared.com/mp3/_k7K8lO0ba/Moondrezhuthu-Deivathin_kovil.html)
JamesFague
15th August 2014, 06:54 AM
Enjoy the super song from Anand
http://youtu.be/3vgDb4TQneA
JamesFague
15th August 2014, 06:56 AM
Enjoy the another melody from Souten
http://youtu.be/xtrEjGdlfYc
JamesFague
15th August 2014, 07:00 AM
One more melody from Souten
http://youtu.be/M9YGUkKphsg
JamesFague
15th August 2014, 07:03 AM
Enjoy the super song from The First Super Star of Hindi Cineme Rajesh Khanna's movie Kati Patang
http://youtu.be/lslZptXok8o
JamesFague
15th August 2014, 07:07 AM
Enjoy the melody from Jeeva Nadhi Kannada Movie
http://youtu.be/y_uiV0PWj3Y
JamesFague
15th August 2014, 07:12 AM
Beautiful Melody from Namoora Mandhara Hoove Kannada Movie song
http://youtu.be/aSFr6zKhNtI
JamesFague
15th August 2014, 07:16 AM
Melody from Amrutavarshini Movie song
http://youtu.be/LAdF45TzsmE
JamesFague
15th August 2014, 07:19 AM
Song from the super hit movie of Janumada Jodi. Only for the Songs the movie ran to packed houses even after 100 days.
http://youtu.be/nMoruE4WNLs
JamesFague
15th August 2014, 07:23 AM
Enjoy the song of Dr Yesudoss from His Highness Abdullah movie
http://youtu.be/VVL-6wiQu94
vasudevan31355
15th August 2014, 07:26 AM
வாசுதேவன் சார்
வருக! இரண்டாம் பாகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
நல்ல முத்து முத்தான பாடல்கள். நன்றி!
ஒரு சிறு வேண்டுகோள். பாடல்களை பதிப்பிக்கும் போது கண்டிப்பாக அப்பாடலைப் பற்றிய தங்களுக்குத் தெரிந்த விவரங்களை தர வேண்டுகிறேன். இல்லாவிட்டால் யூ டியூப் தளம் போல ஆகிவிடக் கூடும். வெறுமையாகவும் தோன்றும். பாடல்களைப் பற்றிய தகவல்களை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து தெரிந்து கொள்ளுமளவிற்கு மதுரகானங்கள் திரி வெற்றிநடை போடத் துவங்கி விட்டது. அவர்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவிற்காவது நாம் பூர்த்தி செய்வோம். தவறாக நினைக்க வேண்டாம்
தொடர்ந்து தங்கள் அருமையான பங்களிப்புகளை நல்குங்கள். நன்றி!
JamesFague
15th August 2014, 07:27 AM
Another Melody of Dr Yesudoss from the same movie. Nice composition of song and the voice with honey soaked.
http://youtu.be/T6a8-pz6WbU
vasudevan31355
15th August 2014, 07:31 AM
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
http://www.mapsofindia.com/wallpapers/independence-day/independence-day-wallpaper.jpg
vasudevan31355
15th August 2014, 07:34 AM
இன்னொன்று படம் மூன்றெழுத்து என்று நினைவு. சரளாவுடன் இணைந்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது.
"தெய்வத்தின் கோவில்.. தெய்வம்தான் இல்லையே
இது மனிதனின் பூமி .. மனிதன் தான் இல்லையே
அவை இரண்டும் இல்லா வேளையிலே
ஏழைப் பெண்கள் வீதியிலே"
என்று உலக நடப்பைச் சுட்டிக் காட்டி
"வாழ்வது எங்கள் ஆசை ஒரு மாளிகை ராணியைப் போல
ஆண்டவன் காட்டிய பாதை ஒரு ஆண்டியின் பிள்ளையைப் போல"
என்று நிலைமையை எண்ணி வருந்தி
"கடமை என்று ஒருவர் வந்தால் காலில் விழுவேன் நானம்மா"
என்று தங்கள் எதிர்பார்ப்பை குரலிலேயே காட்டி அசத்துவார் ஈஸ்வரி.
ஆடியோ, வீடியோ என்று எதையுமே காணோம். யாருக்காவது கிடைத்தால் இங்கே கொண்டு வாருங்கள் ப்ளீஸ்
மது அண்ணா
நீங்கள் கேட்ட பாடலின் வீடியோ வடிவத்தை விரைவில் தரவேற்றி அளிக்க முயற்சி செய்கிறேன்.
RAGHAVENDRA
15th August 2014, 07:41 AM
பொங்கும் பூம்புனல்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/IND2014_zpsd6845d1a.jpg
இந்திய விடுதலை நாளை முன்னிட்டு சிறப்புப் பாடல்...
கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என அன்று கப்பலோட்டிய தமிழனில் பாடிய வரிகள் இன்றும் பாடும் படியான சூழ்நிலை, மறைய வேண்டும்.
எண்ணற்ற தியாகியரின் வேர்வையாலும் ரத்தத்தாலும் பெற்ற விடுதலையை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளோமா...சரியான முறையில் அதை காப்பாற்றியிருக்கிறோமா..
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனசாட்சிக்கு விரோதமில்லாத பதில் கிடைக்கும் போது,, அந்த விடையினால் உள்ளம் மகிழ்ச்சியடையும் போது நாம் பெறக் கூடிய ஆனந்தமே இந்த விடுதலைக் கொண்டாட்டங்களுக்கு சரியான பொருள் தரும்.
1977ல் நடிகர் திலகம் நாம் பிறந்த மண் திரைக்காவியத்தில் கேட்ட கேள்வி இன்றும் உயிருடன் உலவுகிறது.
இந்த சூழ்நிலையெல்லாம் மாறி பெருந்தலைவர் காமராஜரின் கனவு நிறைவேறும் நாளை ஆவலுடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்து இன்று விடுதலை நாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
http://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA
RAGHAVENDRA
15th August 2014, 07:46 AM
உள்ள(த்)தை அள்ளித்தா
இன்றைய பகிர்வில் முதலாவதாக மாம்பழத்து வண்டு திரைப்படத்தில் இடம் பெற்ற ஐ லவ் யூ பனித் தேன் மலையே என்ற பாடல்... சங்கர் கணேஷ் இசையில் வாணி ஜெயராமின் மயக்கும் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். நல்ல தரத்தில் ..
இப்பகிர்வின் சிறப்பம்சம்.. பாடலுக்கு முந்தைய பின்னணி இசையுடன் வழங்கப் படுகிறது.
http://www.mediafire.com/listen/2fi39qear8h95i2/ILoveYouMambazhathuVannduVJ.mp3
RAGHAVENDRA
15th August 2014, 07:49 AM
உள்ள(த்)தை அள்ளித்தா
தொடர்வது... மாம்பழத்து வண்டு திரைப் படத்திலிருந்து இசையரசியும் குரலரசியும் இணைந்து பாடும் அற்புதமான பாடல். தாஜ்மஹாலும் ஏது இந்த மும்தாஜ் இல்லாது...
http://www.mediafire.com/listen/bgig1a48sx213ak/TajmahalumedhuMambazhathuVannduPSVJ.mp3
rajeshkrv
15th August 2014, 08:00 AM
வாசு ஜி காலை வணக்கம்
ஹிந்தி மற்றும் கன்னட பாடல்களை தந்த வாசு - 2 ‘விற்கும் நன்றி ...
எல்லோருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ..
===========================================
வாசு ஜி சுந்ததிர தினத்தை ஒட்டி அது சம்பந்தப்பட இசையரசி பாடல்களை தரலாம் என நினைக்கிறேன்..
அர்த்தராத்திரி ஸ்வதந்தரா என்ற திரையில் பாலுவும் இசையரசியும் இன்றைய பாரத மாதாவின் நிலையை குறித்து பாடுவதாக அமைந்த பாடல்
http://www.youtube.com/watch?v=1yOHKTRWc-M
பாடவோயி பாரதியூடா (தெலுங்கில் கண்டசாலாவுடன்)
http://www.youtube.com/watch?v=PgZ98DjuxBA
தொங்க ராமுடு (தமிழில் திருட்டு ராமன்) திரையில் பலே தாதா மன பாபுஜி
இந்த படத்தில் இசையரசியின் குரலை கேட்ட விஜய வாஹினி நிறுவனர்களான நாகிரெட்டி - சக்ரபாணி கேட்டார்கள்
லதா மங்கேஷ்கர் இங்கே வந்து பாடியுள்ளாரா என்று .. உடனே இவர்கள் சொன்னார்களாம் 13-14’வயது உள்ள நம்ம ஊரு பெண் பாடியுள்ளார் என்று
உடனே மகிழ்ந்து தங்களது அடுத்த படத்திலேயே பாட வாய்ப்பு தந்தார்களாம்
http://www.youtube.com/watch?v=XrXmAfat9JU
Gopal.s
15th August 2014, 08:11 AM
Ragavendhar,
Mambazhathu vandu by R.C.Sakthi music by Sankar-Ganesh was a different Genre but half-baked. The songs were Good .Tanks. Video King Vasu-2 -welcome.
rajeshkrv
15th August 2014, 08:15 AM
காந்தி புட்டின தேசம் (இசையரசியுடன் கெளசல்யா மற்றும் ரமணா)
கிருஷ்ணா ஜிக்கு பிடித்த லத்து மற்றும் பிரமீளா கூடவே ஜெயந்தி
http://www.youtube.com/watch?v=Z-DPXmPalf8
பெண்ணின் தெலுங்கு வடிவம் (சங்கம்)
http://www.youtube.com/watch?v=_ysPA6iBhp0
vasudevan31355
15th August 2014, 08:46 AM
அடேயப்பா! ராஜேஷ் சார். பிரமிப்பு அணிவகுப்பு. எப்போ பார்த்து எப்போ முடிப்பது?. ஒவ்வொன்றாகப் பருகுகிறேன்.
madhu
15th August 2014, 08:48 AM
நிறைய நேரம் தேவைப்படுகிறது. ஒவ்வொன்றாக பார்த்து, கேட்டு ரசிக்க...
vasudevan31355
15th August 2014, 08:54 AM
சூப்பர் பாடல்கள் ராகவேந்திரன் சார்.
நீங்கள் அளித்த 'மாம்பழத்து வண்டு' படப் பாடல் 'ஐ லவ் யூ பனித் தேன் மலையே' சுகம். அப்படியே கொஞ்சம் பின்னாடி வாருங்கள். அதே சுகத்தை உணரலாம்.
'I LOVE YOU
I LOVE YOU
L..O..V..E தான்... L போர்ட் அல்ல நான் தான்
எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்
லவ் என்னென்று அறிந்தவன்'
'விதி' படத்தில் கலக்கல் பாடல்.
https://www.youtube.com/watch?v=QZDA2E23jkc&feature=player_detailpage
vasudevan31355
15th August 2014, 09:14 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/si.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/si.jpg.html)
சுதந்திர தினமான இன்று தன் வசந்தபுரி சமஸ்தானத்திற்கு கொடுங்கோல் திவானிடமிருந்து விடுதலை வாங்கித் தந்த
நம் 'புரட்சி வீரன்'
'பாரத்'
நாயகனை மறக்க முடியுமா? இன்று மதியம் 'பாலிமர்' தொலைக் காட்சியில் 'சிவந்த மண்'.
அழகு நாயகனின் ஆர்ப்பாட்ட போராட்டம்.
பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் பிரம்மாண்ட நடிப்பைக் கண்டு களியுங்கள்.
Richardsof
15th August 2014, 09:19 AM
விதி படத்தில் இடம் பெற்ற பாடல் சூப்பர் வாசு சார்
http://i57.tinypic.com/1zce6np.jpg
மோகன் - பூர்ணிமா ஜோடியில் இந்த பாடலும் மிகவும் இனிமையாக இருக்கும் .இசையும் மயக்கும் .
http://youtu.be/F75_LCOzjeA
vasudevan31355
15th August 2014, 09:23 AM
சுதந்திரப் போராட்ட வீரன் சந்தனத் தேவனாக நடிகர் திலகம் 'நாம் பிறந்த மண்' திரைப்படத்தில்
http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-frc1/1000823_608798655817642_2023855915_n.jpg
vasudevan31355
15th August 2014, 09:31 AM
'சிவந்த மண்' சில காட்சிகள்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-57604.png?t=1320729141
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivanthaMann-Uyirvanicomavi3694623045558672945part_000889923.jp g?t=1321145657
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000236282.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000633537.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000785722.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_084548997.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000309701.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_001853614.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_5VOB_000849962.jpg
Richardsof
15th August 2014, 09:34 AM
SUTHANTHIRA VETGAI PAADAL
http://youtu.be/Lqmtl7TqUR0?list=PLFFF2969937D8ED1C
Richardsof
15th August 2014, 09:39 AM
ANOTHER SONG ABOUT FREEDOM
http://youtu.be/g27XI77NAO4
Gopal.s
15th August 2014, 10:03 AM
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.
சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)
எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)
ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.
rajeshkrv
15th August 2014, 10:14 AM
சிவந்த மண் தகல்வகள் அருமை கோபால் ஜி, வாசு ஜி .. நடிகர் திலகத்தின் படங்கள் அருமை அருமை ..
Richardsof
15th August 2014, 10:15 AM
மெல்லிசை மன்ன்ர் எம்.எஸ்.வி. பட்டிதொட்டியெங்கும் ஒலிபெருக்கிகளில் "நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்..." என்று முழங்கிக்கொண்டிருந்த காலம் அது.
பெரும்பாலும் அதன் வரிகளுக்காக அறியப்படும் இந்தப் பாடல் தமிழ்த் திரையிசை உலகில் ஜாஸ் பயன்பாட்டில் ஒரு மைல்கல். பெருங்குழு ஜாஸ் (Big Band Jazz)வடிவத்தை முழுமையாக அடியொற்றி அமைந்த பாடல் இது. துவக்கத்திலேயே ஜாஸின் அற்புத சாத்தியங்களை எம்.எஸ்.வி தெளிவாக எட்டியிருப்பார். முன்னீடு முடிந்து சௌந்தர்ராஜன் துவங்குமுன் ஒரு நொடிக்கு ஒரு சிறிய கிடார் ஒலி வந்துவிட்டுப் போகும். கிட்டத்தட்ட நானும் இருக்கிறேன் என்று ஆரம்பத்திலேயே அறிவித்துவிடுவதைப்போல. இதற்காகவே நான் பல தடவைகள் முன்னீட்டை மாத்திரம் பல தடவைகள் கேட்டிருப்பேன். நினைத்ததை... நடத்தியே... முடிப்பவன் - என்று ஒருவகையில் நீட்டி முழக்கிப்பாடுவது பெரும்பாலான செவ்வியல் இசைவடிவங்களில் வராது. அவை ஒற்றைத்தாளகதியில் சீரான ஒட்டத்தில்தான் வரும். ஜாஸில் இந்தக் கட்டுப்படற்ற தன்மை அதன் தனித்துவத்திற்கு முக்கிய காரணம். 'என்னிடம் மயக்கம்" என்று சொன்னவுடன் அதைத் தொடர்ந்துவரும் ட்ரம்பெட்டின் இசை ஸ்விங் வடிவத்தின் அமைப்பு.
கொஞ்சம் நீளமான பாடல் இது. கிட்டத்தட்ட ஏழு நிமிடங்களுக்கு வரும். இதில் டி.எம்.எஸ் குரலுக்குப் பதிலாக ஒரு ட்ரம்பெட்டையும், ஈஸ்வரி குரலுக்குப் பதிலாக ஒரு சாக்ஸஃபோனையும் மாற்றிப்போட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று பலநாட்கள் நான் கற்பனை செய்துபார்த்திருக்கிறேன். முதல் இடையீட்டில் வரும் கிட்டாரின் இசைவும் அதனுடன் இணைந்துவரும் பெண்களின் சேர்குரலிசையும் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கும். இந்தவகை பெண்களின் சேர்குரலிசை ஒருவகையில் எம்.எஸ்.வியின் முத்திரையாக மாறிப்போனது. உலகம் சுற்றும் வாலிபன் (பச்சைக்கிளி), ரிக்ஷாக்காரன் (அழகிய தமிழ் மகள்), போன்ற பல படங்களில் இந்தவகை பெண்களின் சேர்குரலிசையை எம்.எஸ்.வி அற்புதமாகக் கையாண்டிருப்பார். முதலாவது இடையீடு அற்புதமான இசைக்கலவைகளால் ஆனது.
பெரும்பாலான பெருங்குழு ஜாஸ்களில் வரும் வடிவத்தைப்போல பாடல் முழுவதும் சௌந்தர்ராஜன் அல்லது எல்.ஆர். ஈஸ்வரி பாடும் இடங்களில் ஒரே வகையான தாளத்தை (மிகவும் எளிமையானது)க் கையாண்டு முழுக்கவனமும் பாடுபவரின் குரலின்மீது படியும்படி இசை ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இதன் இறுதியில் தாளகதி மாறி, பிற வாத்தியங்கள் சேரும்பொழுது ஒருவித துள்ளலுடன் ட்ரம்ஸ் அந்த மாற்றத்தை வழிநடத்தும். இதுபோன்ற வடிவத்தை பல ஜாஸ் இசைகளில் கேட்கமுடியும். இந்த முறைதான் தனித்தனியாக ஒவ்வொரு வாத்தியக் கலைஞர்களும் தங்களின் விசேடத்திறனைக் காட்டினாலும் இசை ஒருவித சீரற்ற (ஆனால் நியதியான) ஒட்டத்தில் இருக்க உதவுகிறது.
பாடலின் இன்னொரு முக்கியமான இடம் இரண்டாவது இடையீட்டிற்கு முன் வருவது. வழக்கமாக பல்லவி ஒருமுறைதான் நம் திரைப்படங்களில் இடையில் வந்துபோகும். ஆனால் இதில் சற்றும் எதிர்பாராத விதமாக "நினைத்ததை நடத்தியே..." என்று மூன்று முறை மாறிமாறி வந்துவிட்டுப் போகும். இது ஜாஸின் சுயகற்பனை வடிவம். (ஆனால் டி.எம்.எஸ். இதிலெல்லாம் விசேடமாக எதையும் செய்யாமல் ஒரே மாதிரி திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருப்பது கொஞ்சம் அபத்தமாக இருக்கும். வேறு சுய கற்பனையுள்ள பாடகர் இந்த இடத்தில் வைரமாக ஜொலித்திருக்க முடியும். டி.எம்.எஸ்ஸிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது).
முதல் இடையிட்டில் கிட்டார், ட்ரம்பெட், சேர்குரலிசை என்று கலவையாக வரும். ஆனால் இரண்டாவது இடையீட்டில் இதற்குச் சற்றும் மாறாக பெரும்பாலும் ட்ரம்ஸ் மாத்திரமேயாக, பின்னர் தனியாக சேர்குரலிசை என்று வேறு வடிவத்தில் வரும். திரும்பவும் மூன்றாவது இடையீட்டில் பழைய வடிவம் திரும்ப வரும். அந்தக் காலங்களில் பாடல் முழுவதும் ஒரே சீரான ஒட்டத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். (உதாரணமாக கே.வி.மகாதேவனின் பல பாடல்களில் ஒரே வகையான இடையீட்டு இசைதான் இருக்கும் அதேதான் திரும்பத்திரும்ப வந்து போகும்). இப்படிப்பழக்கப்படிருந்த காதுகளுக்கு இந்தப் பாடல் ஒரு வித்தியாசமான, புரியாத புதிராகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
எல்.ஆர். ஈஸ்வரி குரலைப்பற்றி இந்தத் தொடரில் நிறையவே சொல்ல வேண்டியிருப்பதால் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. விசேடம் என்ன என்று புரியவேண்டுமென்றால் "முதல் நாள்..." என்று வரும் இரண்டாவது சரணத்தில் அவரது குரலின் சிக்கலான வடிவத்தை உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள்.
http://youtu.be/8anoiBOiyjU
மொத்தத்தில் எம்.எஸ்.வி தமிழ்த் திரையிசையின் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு அற்புதமான பெருங்குழு ஜாஸ் பாடலைத் தந்திருக்கிறார். அந்தக் காலத்தின் தமிழ்த் திரையிசைப் பாடல்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க இது ஒரு அசுர சாதனைதான். இதில் வரும் கிடார், ட்ரம்ஸ், ட்ரம்பெட் இசைகளைத் தனித்த்னியாக நிறுத்தி நிதானித்துக் கேட்டுப்பார்ப்பவர்களுக்கு எம்.எஸ்.வியின் அற்புதக் கற்பனை பிரமிப்பூட்டும் என்பது நிச்சயம்.
COURTESY - NET
vasudevan31355
15th August 2014, 10:26 AM
சரி! சரி! இரு திலகங்களும் அவரவர்கள் பங்கை அவரவர்கள் சிறப்பாகவே செய்தார்கள். போட்டி பொறாமைகளுக்கு இன்று முதல் விடுதலை அளிப்போம்.
chinnakkannan
15th August 2014, 10:31 AM
குட்மார்னிங்க் நண்பர்காள்.. ஹாப்பி இண்டிபெண்டன்ஸ் டே..
லீவ்ங்கறதால லேட்டாத் தூங்கி லேட்டா எழுந்திருச்சா நிறையபக்கங்கள்..வாசு சாரோட ரங்கா ரங்கையா பத்தி நேத்தே சொல்லியிருக்கணும்.இன்னிக்கு நன்றி.
ஒவ்வொண்ணா பார்க்கணும்..டபக்குன்னு கண்ணில் பட்டது சிவந்த மண்..அதிகம் பேச ப படாத பாடல் ஒண்ணு இருக்கே
பார்வை யுவ ராணி கண்ணோவியம்.. ரொம்ப நல்ல பாட்டு.. ந.தி.காஞ்ச். அழகு..
ஏகப்பட்ட ஹிந்திப் பாடல்களில் மனதுள் எழும்பி டிஸ்டர்ப் செய்தது.. நா கோயி உமங்க் ஹை..
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் - சமீபத்தில் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லியிருந்த பேட்டியில் அதில் நடித்த துணை நடிகர்களில் 95 % உயிருடன் இல்லை என எழுதியிருந்தார்..காலத்தின் இயற்கை..கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது..ஆனால் பாட்டு நல்லபாட்டு..
ம்ம் நிறைய எழுத வேண்டும்..
அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள் :).
vasudevan31355
15th August 2014, 10:41 AM
ராஜேஷ் சார்,
'கானக் குயிலி'ன் சோகத்தில் ஒலிக்கும் ஒரு அபூர்வ பாடல். 'செல்லப் பிள்ளை' படத்தில். அதிகம் பிரபலமாகாத பாடலென்றாலும் சோகம் அருமை.
http://www.inbaminge.com/t/c/Chella%20Penn/folder.jpg
http://www.inbaminge.com/t/c/Chella%20Penn/
chinnakkannan
15th August 2014, 10:41 AM
பூர்ணிமா ஜெயராம் விதி பாடல் தாங்க்ஸ்.. இருப்பினும் மலையாள்ப் பாடல் இரண்டு மஞ்ஞில் விரிந்த பூக்களில் விழியோரம் நிலா வருண்ணு அண்ட் ஓளங்கள் ஒரு பாட்டு (தமிழிலும் அந்தப் பாட்டு வந்திருக்கிறது நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது)
பொஙுகும் பூம்புனல் ராகவேந்தர் சார், ராஜேஷின் கானங்கள், எல்.ஆர்.இ இன் பாட்டு பை மதுண்ணா, வாசுதேவன் சாரின் காணொளிகள்.. அருமை..ஒரு சில பார்த்தேன்..எல்லாவற்றையும் நிதானமாகப் பார்க்க வேண்டும்..கோபால் அஸ் யூஸ்வல் சிவந்த மண் ரைட் அப் நைஸ்..
க்ருஷ்ணா ஜி காணோமே..
vasudevan31355
15th August 2014, 10:46 AM
அதிகம் பேச ப படாத பாடல் ஒண்ணு இருக்கே
பார்வை யுவ ராணி கண்ணோவியம்.. ரொம்ப நல்ல பாட்டு.. ந.தி.காஞ்ச். அழகு..
சி.க.ஜி! என்ன இப்படி ஒரு குண்ட டபக்குன்னு தூக்கிப் போட்டுட்டீங்க.:shock:
இது சூப்பர் டூப்பர் ஹிட் பாட்டு சார். கொஞ்ச நாழியிலே தூக்கிப் வாரி போட்டுடுச்சே!:shock:
vasudevan31355
15th August 2014, 10:56 AM
க்ருஷ்ணா ஜி காணோமே..
திரி நாயகர் நேற்றைய பாகம் துவக்கியதால் கொஞ்சம் டயர்ட். தோ வந்துடுவார்.
Gopal.s
15th August 2014, 10:57 AM
சரி! சரி! போட்டி பொறாமைகளுக்கு இன்று முதல் விடுதலை அளிப்போம்.
வாசு,
சமீப நாட்களில் ,மதுர கானத்திலும் நுழைந்து ,சிலர் இந்த அசிங்க வேலையை செய்ய நீங்கள் அனுமதிப்பதால், மதுர கானங்களில் இருந்து நான்தான் விடுதலை பெற வேண்டியிருக்கும்.
இன்று சிவந்த மண்,விடுதலை போராட்ட வரலாறு,பாலிமர் டிவியில் காட்ட படுவதால் பதித்தால், சம்மந்தா சம்மந்தமில்லாமல் போட்டிக்கு வந்தால்?நீங்கள் நாசுக்காக சொல்வது புரியுமா?
vasudevan31355
15th August 2014, 10:59 AM
வாசு சாரோட ரங்கா ரங்கையா பத்தி நேத்தே சொல்லியிருக்கணும்.இன்னிக்கு நன்றி.
.
அது நான் இல்லீங்கோ
JamesFague
15th August 2014, 11:09 AM
Mr Vasu JI
I Certainly agree with Mr Gopal that certain songs are not relevent for this thread. Hereafter you must take strict view
and inform them to post in the respective thread rather than spoiling this one. Whereas NT movies/songs suits for every occasaion.
Regards
vasudevan31355
15th August 2014, 11:10 AM
இன்றைய ஸ்பெஷல் (54)
சுதந்திர தின ஸ்பெஷல்.
http://www.inbaminge.com/t/n/Naam%20Iruvar%201947/Naam%20Iruvar%201947.jpg
ஏ.வி.எம் தயாரித்த 'நாம் இருவர்' படத்தில் அருமையான தேச பக்திப் பாடல். நாடெங்கும் புகழ்க் கொடி நாட்டிய பாடல். நம் மகாத்மாவைப் பற்றி நினைவு கூர்ந்து புகழ்ந்து பாடும் பாடல். குமாரி கமலா சிறிய பெண்ணாக பாடி ஆடுவார். மதுரை சடகோபன் ராஜேஸ்வரி (ஐயோ!அடிக்க வராதீர்கள்) நம்ம எம்.எஸ்.ராஜேஸ்வரி அம்மாதான் பாடியிருப்பார்கள். இப்பாடலைப் பாடும் போது இவர்களுக்கு 14 வயதுதானாம். அவர்களுக்கு 71 வயதானாலும் குழந்தை போலவே பாடும் திறன் உண்டு. நடனம் ஆடிய குமாரி கமலாவுக்கு வயது 13. பொருத்தமான குரல் இல்லை!
https://i.ytimg.com/vi/Uf6qX2482K4/hqdefault.jpg
இதே படத்தில் 'கருணாமூர்த்தி காந்தி மகாத்மா' என்ற பாடல் இதே காம்பினேஷனில் வரும் என்று நினைவு.
http://thumbs2.ebaystatic.com/d/l225/m/mMBGrfSDHelaUz2ngKGiS6g.jpg
டைட்டிலில் தயாரிப்பு ஏ.வி.எம் ஸ்டுடியோ காரைக்குடி என்று போடுவார்கள். டி..ஆர். மகாலிங்கம் நடிக்கும் 'we two' என்றும் போட்டு மாகாலிங்கம் அப்போது 'சூப்பர் ஸ்டார்' என்று காட்டுவார்கள்.
சமயம் பார்த்து பயன்படுத்திக் கொள்வதில் ஏ.வி.எம்முக்கு இணை ஏது? மெய்யப்ப செட்டியார் இயக்கிய படம். நீலகண்டன் அஸோசியேட் டைரக்டராக பணி புரிந்திருப்பார். கதை வசனமும் அவரே. கே.பி.காமாட்சி, பாரதியார் பாடல்கள். இசை ஆர். சுதர்சனம்.
http://img.youtube.com/vi/2pk26FgdvZ0/0.jpg
ஆ............................ஆ.
மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்
வாழ்ந்த தியாகியாம் நீ
பூலோகம் மீதிலே
மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்
தேசிய சேவா குரு
தெய்வீக பூஜா குரு
தேசிய சேவா குரு
தெய்வீக பூஜா குரு
ஜெக சேவையே புரிந்தார்
இக ஜோதியாய் நிறைந்தார்
சுக வாழ்வையே மறந்தார்
சுக வாழ்வையே மறந்தார்
சுயராஜய வாழ்வைத் தந்தார்
சுக வாழ்வையே மறந்தார்
சுயராஜய வாழ்வைத் தந்தார்.
ஆ.........மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்
https://lh6.googleusercontent.com/proxy/7fZv4xppCx0W9YLfH9PbBC6o4wm_M8cqydpWU9sV-z_fSKcTkqNgm0CCJwiWExwwSITAvO-WeZ0Vh4_3wG1kjw=w426-h320-n
கை ராட்டையே ஆயுதம்
கதராடையே ஸ்வாகிதம்
கை ராட்டையே ஆயுதம்
கதராடையே ஸ்வாகிதம்
ஜெய வந்தே மாதரம் ம்ம்ம்ம்
ஜெய பாரத மணிக்கொடி
ஜெய வந்தே மாதரம்
ஜெய பாரத மணிக்கொடி
சீரோங்கி வாழ்கவே
ஜெய வந்தே மாதரம்
ஆ..................................ஆ..
மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Z5V30b1n2eE
JamesFague
15th August 2014, 11:16 AM
Watch the Kranti song of Manoj Kumar. With the music of Laxmikant & Pyarelal the song still remembers for strong portrayal by Mr Manoj and he loves to
make movies with freedom struggle that reflects in all his movies. Great Song and relevent for today.
http://youtu.be/u_sbC7Z0Lcg
Richardsof
15th August 2014, 11:16 AM
வாசு சார்
திரிக்கு திருஷ்டி சுற்றி போடவும் .
JamesFague
15th August 2014, 11:21 AM
One more song from Kranti
http://youtu.be/ynfgZ5uhCv0
RAGHAVENDRA
15th August 2014, 11:21 AM
பொங்கும் பூம்புனல்
இந்த வீட்டுக்கு நானே மகராணி
இங்கே நடப்பதெல்லாமே என்னாட்சி
எல்லாம் இங்கே இன்ப மயம்
இதற்கு நானொரு அத்தாட்சி..
80களின் மத்தியில் முதன் முதலாக நான் ஆடியோ கேசட் பதிவு செய்த போது அதில் இடம் பெற்ற பாடல் இது.
ஆடி வரும் தேனிலவைப் போல நானும் இங்கே ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா..
இசையரசியின் ஈடு இணையில்லாத குரலில்
அம்மா நல்லாசி கூறம்மா
என்று கேட்கும் போது அந்த அப்பாவிப் பெண்ணின் நல்ல மனம் புலப்படும்.
மறக்க முடியாத பாடல் சிதம்பரநாதன் இயற்றி இசையமைத்த செல்லப் பெண் படத்தில் கண்ணே கொஞ்சம் பாரு பாடலுக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
http://psusheela.org/audio/ra/tamil/all/aadivarum_thenilavai.ra
மேலே காணும் பாடலுக்கு நன்றி இசையரசிக்கான இணைய தளம். இப்பாடலை ரியல் மீடியாவில் தான் கேட்க முடியும்.
gkrishna
15th August 2014, 11:32 AM
கிருஷ்ணா
ப்ரெசென்ட் சார்
மக்கள்ஸ்
ஸ்கூல் க்கு லேட்
கொடி ஏத்தியாச்சு னு கேள்விபட்டேன்
அருமையான காலை பொழுது முடிந்து மதியம் ஆரம்பம்
சுதந்திர தின நல வாழ்த்துகள்
பட்டம் பறக்குதே பதட்டம் ஏறுதே
JamesFague
15th August 2014, 11:35 AM
One of the fine movie made in the Hindi Film World and the best of Manoj Kumar. Super Hit in the 80's. Fine performance by Dilip and Hema add value to the
movie.
http://youtu.be/AtmqBROfRV8
gkrishna
15th August 2014, 11:38 AM
சிவந்த மண் நம்நாடு அல்லது நம்நாடு சிவந்த மண் இரண்டும் அருமை
நவம்பர் 1969 7 மற்றும் 9 சரியா ?
எது 7 எது 9
சிவந்த மண் படத்தில் முத்துராமன் நடிகர் திலகம் இணைந்து இருக்கும் கண்ணாடி போட்டோ உடைந்து அதில் நடிகர் திலகம் பாகம் மட்டும் உடையாமல் இருக்குமே ! அப்ப சுபெர்ப் வசனம்
குமுதிநியிடம் நான் மட்டும் தான் ம்மா ஒடைஞ்சிருக்கேன்
பாரத் நீ இப்ப தேவை இந்த நாட்டுக்கு தேவை
gkrishna
15th August 2014, 11:42 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/08/Nam_Naadu_%281969_film%29.jpg/220px-Nam_Naadu_%281969_film%29.jpghttp://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b7/Sivandha_Mann.jpg/220px-Sivandha_Mann.jpg
JamesFague
15th August 2014, 11:42 AM
The relevent song for the Independence Day Celebration from the Patriot Manoj Kumar movie.
http://youtu.be/4I_n5Urvj2o?list=PL892004C74800913C
RAGHAVENDRA
15th August 2014, 11:48 AM
பொங்கும் பூம்புனல்
விடுதலையின் நோக்கம் சுதேசியம்... வெள்ளையனே வெளியேறு என்று இயக்கம் கண்டது சுதேசிய கோரிக்கை.. இந்திய விடுதலைப் போரைப் பற்றிக் குறிப்பிடும் போது பாடல்கள் மூலமாக அதை சொன்னால் மக்களிடம் விரைவில் சென்று சேரும் என்பதற்காக கொடுமுடி சுந்தராம்பாள் விடுதலைப் போராட்டப் பாடல்களைப் பாடியும் மேடைகளில் உரையாற்றியும் பெரும் பங்கு வகித்தார். அவர்கள் கலையைத் தங்கள் சொந்த நோக்கத்திற்காக பயன் படுத்தியிருந்தால் நமக்கு விடுதலையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போயிருக்கும். பல கலைஞர்கள் விடுதலைப் போராட்டங்களைப் பற்றியும் அதற்குப் பின் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற கனவைப் பற்றியும் பாடல்கள், பத்திரிகைகள், கலை நிகழ்ச்சிகள் என தங்கள் பங்காற்றினார்கள்.
அவ்வாறு விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றிய பாடல் ஒன்று தான் கீழே தரப்படுகிறது. தமிழகத்தில் விடுதலைப் போருக்கு வித்திட்ட வீரர்களைப் பற்றிய குறிப்புகளுடன் இக்காணொளி தொகுக்கப் பட்டுள்ளது. அவருக்கு நமது பாராட்டுக்கள்.
இதே திருநாட்டில் தான் கலையை முழுதும் சுயநலத்திற்காகவும் சுய விளம்பரத்திற்காகவும் பயன் படுத்திக் கொண்டு அதனால் பெரும் அளவில் பலன் பெற்றவர்களும் இருந்துள்ளார்கள் என்பதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
மக்களின் அறியாமை என்கிற இருள் அகலும் போது விடுதலையின் ஒளி பிரகாசமாக வீசும் என்பது உறுதி.
https://www.youtube.com/watch?v=QWJGcg0Y1rk
JamesFague
15th August 2014, 11:54 AM
Independence Day Special from Manoj Kumar Movie UPKAAR
http://youtu.be/WiYscnj_L7A
NT song from Thanga Surangam and enjoy the Independence.
http://youtu.be/LiK_4pdcvv4
gkrishna
15th August 2014, 11:57 AM
எங்கள் குருஜி ராக வேந்தர் சார்
உங்கள் பொங்கும் பூம்புனல் பிரவாகமாகி பொங்கி வழிகிறது
மிக்க நன்றி
சுதந்திர தின பாடல்கள் மற்றும் இசையரசி பாடல் எல்லாமே அருமை
தொடர வேண்டும் உங்கள் பணி
gkrishna
15th August 2014, 12:02 PM
thiru vasu devan sir
மிக்க நன்றி
தொடர வேண்டும் உங்கள் பணி
உங்கள் பாடல்கள் எல்லாமே அருமை
நெய்வேலி வாசு சார் சொன்னது போல் சில கருத்துகளுடன் உங்கள் பதிவு இடம் பெற்றால் இன்னும் மெருகு ஏறும் என்பது எனக்கும் உடன்பாடு இல்லை என்றால் உங்கள் நல்ல பல பாடல்கள் கவனத்திற்கு வாராமல் போய் விட கூடாது என்பது தான் எனது மனதிற்கு சற்று சஞ்சலத்தை தரும்
vasudevan31355
15th August 2014, 12:03 PM
சுருளியின் குடும்பம்
http://2.bp.blogspot.com/-2nrvK-AGwCI/Tqw9d3g701I/AAAAAAAABPM/IoZxeDlu3Y0/s1600/surulirajan+2.jpg
gkrishna
15th August 2014, 12:08 PM
dear s.vasudevan sir
excellant all your rajesh kanna collections are superb
I have to listen one by one
thanks
gkrishna
gkrishna
15th August 2014, 12:17 PM
திரு வாசு சார்
எங்கே பிடித்தீர்கள் இந்த சுருளி குடும்ப போட்டோ
1980 கால கட்டத்தின் மறக்க முடியாத இழப்பு சுருளி
புகழின் உச்சியில் மறைந்த ஒரு நல்ல நடிகர்
மது அண்ணா சொன்னது போல் மனதை ஒரு சோகம் கவ்வத்தான் செய்கிறது . அந்த சோகத்தை மறக்க
ஒரு மரத்து பறவைகளாக நாம் வாழ
'கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ '
Gopal.s
15th August 2014, 12:46 PM
போட்டி பொச்சறிப்புகளில் ,சொந்தமாக நாலு வரி எழுத தெரியவில்லை(நெட் சுட்டதுதான்.சொந்தமான ஒரே ஒரு வரி courtesy -net ).இந்த மாதிரி போடுவதென்றால் லட்சம் போஸ்ட் கூட போடலாம்.என்னத்தை சொல்ல????
படம் போட்ட புஸ்தகம் போட கூட நம்ம ஆளை வளைத்து போட்டால்தான் உண்டு.
gkrishna
15th August 2014, 01:10 PM
'தொழிலுக்கு துரோகம் செய்ததில்லை'- பாரதிராஜாவை கதறவைத்த 'முதல் மரியாதை' அனுபவத்தைப் பகிர்ந்த இளையராஜா
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02056/ilayaraja_2056147h.jpg
அஸ்வின், சிருஷ்டி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக இருக்கும் 'மேகா' படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சென்னையில் நடைபெற்றது. அக்காட்சி தொடங்கும் முன் இளையராஜா கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அச்சந்திப்பில் இளையராஜா பேசும்போது, "முதல்ல என்கிட்ட வரப்போ, எப்படி இருந்தாங்களோ.. இன்றைக்கு எப்படி இருக்காங்களோ.. அப்படிங்கிற ஆட்கள் நிறைய இருக்காங்க. அதுபற்றி ஒரு வருத்தமும் இல்லை, குறையும் இல்லை. அவன் பிரம்மாவாவே இருக்கட்டும். நமக்கு என்ன நஷ்டம்" என்றார்.
பேச்சை சற்று நிறுத்தியவர், இயக்குநர் கார்த்திக் ரிஷியை அழைத்து, " 'மேகா' முதல் ரீல் ரீ-ரிக்காடிங் முடிஞ்ச உடனே உங்களுக்கு எப்படியிருந்தது?" என்று கேட்டார். அதற்கு, "படம் நல்லா எடுத்திருக்கோம் அப்படினு நினைச்சுட்டு இருந்தேன். முதல் ரீல் ரீ- ரிக்காடிங் உடன் பார்த்த உடனே இது நான் எடுத்த படமா அப்படினு இருந்தது" என்று கூறினார் கார்த்திக்.
பின்னர் உடனே பேச்சைத் தொடர்ந்த இளையராஜா, "இப்படித்தான் எல்லா இயக்குநர்களுக்கும் கூறுவார்கள். நான் எடுத்த படமா என்று இயக்குநர் கூறினார் அல்லவா. அப்படித்தான் இருந்தது படமும். எவ்வளவோ படங்களுக்கு பின்னணி இசை பண்ணியிருக்கேன். நீங்கள் ஒரு தடவை பார்த்து 'த்தூ' என்று துப்பிய படத்தை எல்லாம் நான் 4 தடவை பார்த்து பின்னணி இசை பண்ணியிருக்கேன். ஏன்னா, ஒரு நாள் பின்னணி இசை இல்லாமல், ரீ-ரிக்காடிங் பண்ணும் போது இப்படி 4 தடவை பார்ப்பேன். அப்படி என்றால் என்னைப் போல பொறுமைசாலி இந்த உலகத்தில் எவனாவது இருக்கானா.
பாரதிராஜா 'முதல் மரியாதை' படம் எடுத்துட்டு, போட்டு காட்டுருப்போ அன்றைக்கு இருந்த மனநிலையில் எனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. பிடிக்கல போயிட்டேன். என்ன நீ படம் பாத்துட்டு போயிட்ட என்று பாரதிராஜா கேட்ட போது.. படம் இருக்கு என்று கூறி சமாளித்து விட்டேன்.
பின்னணி இசை வேலைகள் எல்லாம் நடந்துட்டு இருக்கு. எனக்கு படம் பிடிக்கவில்லை என்று அமைதியாக இருந்தார் பாரதிராஜா. கடைசி ரீலுக்கு முன்னாடி ஜெயில் காட்சிக்கு பின்னணி இசை முடித்து விட்டு, இங்கே வா.. வந்து பார் என்று கூறினேன். கடகடவென பாரதிராஜாவிற்கு கண்ணீர் கொட்டுகிறது. தமிழ் திரையுலகில் இருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். கண்ணீரோடு என் கையைப் பிடித்துக் கொண்டு "உனக்கு படம் பிடிக்காமலேயே இப்படி பண்ணியிருக்கியே.." என்று கேட்டார்.
பிடிச்சி இருந்தாலும் இப்படி தான் பண்ணியிருப்பேன். படம் எனக்கு பிடிக்குது, பிடிக்கல என்பது என்னோட பெர்சனல். ஆனால், இசை என் சரஸ்வதி. நான் என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன். நான் கூப்பிட்டதும் ஓடி வருதே ஏழு ஸ்வரங்கள் அதுக்கு துரோகம் பண்ண மாட்டேன்" என்று பேசினார்.
vasudevan31355
15th August 2014, 01:14 PM
கோபால் சார், வினோத் சார்
ப்ளீஸ். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம்.
இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம்.
chinnakkannan
15th August 2014, 01:16 PM
'நீ இன்றி நான் இல்லை வாடா ரங்கய்யா
நெஞ்சம் இன்றி எண்ணம் இல்லை வாடா ரங்கய்யா'// vasu sir.. inthap paattu neenga thaan pOttennga..ithukkuth thaan thanks :)
chinnakkannan
15th August 2014, 01:17 PM
//இங்கு வேண்டாம். x infinity// - naanum vazhi mozhigirEn ( tamil font not working suddenly)
Gopal.s
15th August 2014, 01:25 PM
'தொழிலுக்கு துரோகம் செய்ததில்லை'- பாரதிராஜாவை கதறவைத்த 'முதல் மரியாதை' அனுபவத்தைப் பகிர்ந்த இளையராஜா
என்ன ஒரு அகந்தை இவனுக்கு. இவன் வரதுக்கு முன்னாடி எவனுமே நல்ல படம் எடுக்கலியா? இல்லை உலக அளவில் எல்லா படமும் இவன் re recording க்கு காத்திருக்குதா?பாலசந்தரும்,மணிரத்னமும்,பாரதிராஜாவு ம் சேர்ந்து ஆப்பு வச்சு, தேவாவுக்கு கீழே தள்ளி விட்டும்(92 இலிருந்து)அடங்கலை.
ச்சே.... என்னதான் சொல்லுங்கள் ,மேதைகள் ராமநாதன்,கே.வீ.மகாதேவன்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி,ரகு மான் இவர்களிடமிருந்து இந்த மாதிரி அகந்தை பேச்சை கேட்டதே கிடையாது. டீம் வொர்க் என்பதன் மேலேயே சேறு அடிக்கும் இழி செயல். ஜால்ரா போட கும்பல் இருக்கும் போது ,எதை உளறினால் என்ன?
Gopal.s
15th August 2014, 01:28 PM
கோபால் சார், வினோத் சார்
ப்ளீஸ். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம்.
இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம்.
Vasu,
I know that well and I don't intend to do that. Today,I posted on your lead.Immediately,I found someone coming behind us with foul intentions. We do it as per our mood and occasion. But this kind of unhealthy competitive enmity should not be tolerated or encouraged.
gkrishna
15th August 2014, 01:49 PM
திரு கோபால் அவர்களுக்கு
இளையராஜாவின் பதிவு உங்களையோ அல்லது நமது நடிகர் திலக ரசிகர்களை புண்படுத்த போடப்பட்டது அல்ல படித்த ஒரு தகவல்
நமது முதல் மரியாதை படம் நல்ல படம் அல்ல என்ற இளையராஜாவின் கூற்றில் எனக்கும் உடன்பாடு இல்லை
ஆனால் அவர் சொல்ல வந்தது
'அன்றைக்கு இருந்த மனநிலையில் எனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. பிடிக்கல போயிட்டேன்'.. 'படம் பிடிக்குதோ இல்லையோ மியூசிக் போட்டேன் '
அவர் அவருடைய தொழிலுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார் .மேலும் சில படங்கள் இசையோடு சேர்ந்து பார்க்கும் போது தான் அதன் மீது ஒரு பிடிப்பு ஏற்படும் என்பது அவர் வாதம் .
இந்த பாரதி ராஜா வைரமுத்து இளையராஜா கூட்டணி பிரிவதற்கு இது கூட காரணமாக இருந்து இருக்கலாம்
தெரியவில்லை
chinnakkannan
15th August 2014, 01:55 PM
காதல் என்ற அந்த வார்த்தை இருக்கிறதே.. ம்ம் எவ்ளோ தடவை எடுத்தாலும்பேசினாலும் எவ்வித வயதினர்க்கும் ம்க்கும் என்னை மாதிரி சின்னப் பையன்/பெண்கள் தவிர எல்லாருக்கும் ஒரு முறுவல்., ஒரு ஸ்வீட் நினைவு அல்லது ஒரு சோக நினைவு எனக் கொண்டு வந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை அல்லவா (ஹப்பா எவ்ளோ நீள வாக்கியம்)
அதுவே ஒரு இளம் பெண்ணின் மனது காதலில் விழுந்து விடுகிறது என்றால் என்ன ஆகும்
கண்களில் கனவு மின்னும்
…கன்னமும் சிவந்து நிற்கும்
மண்ணிலே கால்கள் தாவா
..மாதுளம் இறக்கை கட்டி
விண்ணிலே பறக்கப் பார்த்து
..வேட்கையில் நாணம் கொள்ளும்
எண்ணமும் உணர்வும் அந்த
..எத்தனுள் சென்ற தாலே..
ஆமா.. எல்லாம் இவ கனவு காணுவா…கடைசில பாருங்க..காதலனை எத்தன், படவாங்கறா..இது என்னவாக்கும் நியாயம்..
ஆனால் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் சரி பூவின் கால் பூ அறியும்கறாப்புல (ஹை..இது நல்லா இருக்கே) ஒரு தலைவி என்று இருந்தால் ஒரு தலைவன் உண்டு (இது என்ன பெரிய விஷயம்) அதைத் தவிர தோழி என்பது கண்டிப்பாய் உண்டு..அதுவும் அந்தத் தோழி.தலைவியின் மாற்றத்தை டபக்கென்று கண்டு பிடித்துவிடுவாள்..
பனியா ஐயோ குளிரும் என்பாள்
…பாட்டுப் பாட வாடி என்றால்
கனிந்த இதழைக் குவித்துக் கொஞ்சம்
..கவிதைத் தனமாய் வேண்டாம் என்பாள்
வனிதை இவளோ இன்றோ மழையில்
..வாகாய் நனைந்தாள் உணர்ந்தா ளில்லை
தனியாய்ச் சென்றாள் சிரித்தாள் நெஞ்சத்
..தவிப்பும் ஏது கேட்க வேண்டும்..
கேக்கறா..பதில் வருது..பின் என்ன.. தொடர்ந்த காதல் சந்திப்புக்களில் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகுது..அப்போ என்னவாம் கல்யாணத்தைப் பத்திக் கனவு.. ஸோ தோழிக்கும் என்ன அவளைச் சீண்டி விடறதுல ஜாலி தான் இல்லை..
அந்தக்காலத்துல ஒரு பாட்டு ஒரு படத்துல வருது..
என்னவாக்கும் அது..
**
என்னடி சின்னப் பெண்ணே எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா துள்ளிவிழும் வேகமா..
*
படம் தேன்மழை பாடியவர் எம்.எஸ். ராஜேஷ்வரின்னு நினைக்கிறேன்.. படத்தில் பாடுபவர் சச்சு.. உடன் கனவு கண்டு அனிச்சப் பூவாய் சிரிக்கும் பெண்ணாக கே.ஆர் விஜயா..ம்ம் பாட்டு வரிகள் கிடைக்கலை..
நல்ல பாட்டு..லிங்க் இதோ இப்போ வரப்போகுதே ரா,வா,ம கோ கி கிட்ட இருந்து..
..
gkrishna
15th August 2014, 01:56 PM
லீலாவதி- வயது-76. கர்நாடக மாநிலம், பெல்தங்காடியில் 1938-இல் பிறந்தவர். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்பட பழம்பெரும் நடிகை. நடிகை மட்டுமல்லாது தயாரிப்பாளர், எழுத்தாளர், கொடையாளி. இவர் பிரபலமான நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், எம்.ஜி.ஆர்., என்.ரி.ராமராவ், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சங்கர் நாக், கமலஹாசன், சிரஞ்சீவி, வி.ரவிச்சந்திரன், சுதீப் ஆகியோருடன் நடித்துள்ளார். இவரது முதல் தமிழ்ப் படம் பட்டினத்தார். வளர்பிறை, அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், நான் அவனில்லை (ஜெமினிகணேசன்), புதிர் போன்ற பல தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் 400 படங்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றில் கன்னடத்தில் நாகரகாவு, தமிழில் அவர்கள் படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. லீலாவதிக்கு ஃபிலிம்பேர் விருது கன்னட மாநில அரசின் விருது 1999-இல் ராஜ்குமார் விருது போன்ற பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆரம்பத்தில் நாடக்குழுவில் பல்வேறு நாடகங்கள் நடித்துள்ளார். 1958-இல் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகவும் பின்னர் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கன்னடத்தில் இவரது முதல் படம் மாங்கல்ய யோகா. பக்த பிரகலாதா, ராஜா மலையசிம்மன், அப்பா ஆ குடுகி, தர்ம விஜயா, தஸாவதாரா, ராணி ஹொன்னம்மா, கந்த்ரேடு நோடு போன்றவை இவர் நடித்த துவக்க கால கன்னடப் படங்கள்.
அவள் ஒரு தொடர்கதை திரைபடத்தில் சுஜாதாவின் அம்மாவாகவும் அவர்கள் படத்தில் சுஜாதாவின் மாமியாராகவும் மிக அருமையாக நடித்து இருப்பார் .ராஜேஷ் சார் மது அண்ணா வாசு சார் மேல் அதிக தகவல்கள் கொடுக்க வேண்டுகிறேன்
http://antrukandamugam.files.wordpress.com/2014/08/leelavathi-aval-oru-thodarkathai-1974.jpg?w=593http://antrukandamugam.files.wordpress.com/2014/08/leelavathi-rajanikanth-sahodarara-saval-1977-kannada.jpg?w=593
http://www.youtube.com/watch?v=AGuuEpdDpTY
gkrishna
15th August 2014, 02:05 PM
காதல் என்ற அந்த வார்த்தை இருக்கிறதே.. ம்ம்
என்னடி சின்னப் பெண்ணே எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா துள்ளிவிழும் வேகமா..
*
படம் தேன்மழை பாடியவர் எம்.எஸ். ராஜேஷ்வரின்னு நினைக்கிறேன்.. படத்தில் பாடுபவர் சச்சு.. உடன் கனவு கண்டு அனிச்சப் பூவாய் சிரிக்கும் பெண்ணாக கே.ஆர் விஜயா..ம்ம் பாட்டு வரிகள் கிடைக்கலை..
நல்ல பாட்டு..லிங்க் இதோ இப்போ வரப்போகுதே ரா,வா,ம கோ கி கிட்ட இருந்து..
..
அது 'என்னடி செல்ல பெண்ணே ' இல்லையோ சி க
http://www.inbaminge.com/t/t/Then%20Mazhai/Ennadi%20Sellakkannu.vid.html
விடியோ லிங்க் கிடைக்கவில்லை
வாசு சார் இடம் கேட்டு பாப்போம்
முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில்
காதல் மன்னன் ஜெமினி கே ஆர் விஜய நடித்த படம்
அருமையான காமெடி நாகேஷ் சோ இணைந்து
(டாக்டர் நிரஞ்சன் குமார் அமெரிக்க டாக்டர் )
http://i1.ytimg.com/vi/H2EubWdEvSk/0.jpg
gkrishna
15th August 2014, 02:11 PM
https://i.ytimg.com/vi/99NeHO_lDrg/hqdefault.jpg
தேன் மழை சித்ரா & கோ காமெடி நினைவில் இருக்கணுமே சி கே சார்
Gopal.s
15th August 2014, 02:12 PM
இவரால் பாதிக்க பட்ட பல நல்ல இயக்குனர்களை எனக்கு தெரியும். இளையராஜா ,கொஞ்சம் இலக்கிய ரசனை உண்டு என்றாலும், நல்ல படங்களை பெரும்பாலும் உணர முடியாதவர் என்று இவர் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்.
இவருடைய அளவு மீறிய அகந்தை இவருக்கு எமனாக அமைந்தது.
இவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதையோ,அருமையான Re Recording Genius என்பதையோ நான் குறை சொல்ல மாட்டேன். செல்வராஜ்- பாரதிராஜாவின் அருமையான உழைப்பில் உருவான காவியத்தை ,இவர் உணராதது ,இவர் மன வளர்ச்சி குறைபாட்டை வெளிச்சமிடுகிறது என்பதை இவர் உணரவில்லை போல.
மேலும்,இவர் சொன்னது இசை துறைக்கு மட்டும் பொருந்துவது இல்லையே? எல்லா வேலை பார்க்கும் எல்லோருமே,எல்லாவற்றையும் மனதுக்கு பிடித்தா செய்கிறோம்?மனதுக்கு ஒவ்வாத விஷயத்தையும் perfect ஆகத்தானே செய்து கொண்டிருக்கிறோம்?இதில் என்ன தன்னை பற்றி மட்டும் அகந்தை பேச்சு?
chinnakkannan
15th August 2014, 02:12 PM
ஹையோ..அந்தக் காமடி.. கர்ணனும் சோழனும் எப்படிப்பா சந்திச்சுப்பாங்க, அதானே.. நாகேஷ் சோ ..மறக்க முடியாது..அப்புறம் அந்த சோ..அப்பா ரோலில் கொஞ்சம் வித்தியாசப் படுத்தி இருப்பார்..
gkrishna
15th August 2014, 02:16 PM
நம்ம குருஜி ராகவேந்தர் இணைத்து உள்ளார் தேன் மழை பாடல்களை
திரு டி.கே. ராமமூர்த்தி அவர்களின் இரண்டாவது படம் - முக்தா பிலிம்ஸின் தேன் மழை
ஆண்டு 1966
http://www.thehindu.com/multimedia/dynamic/01262/09FRTKR_1262587f.jpg
பாடல்கள்
நெஞ்சே நீ போய் சேதியை சொல்ல - பி.சுசீலா - வாலி
ஒளி வடிவம்
http://www.youtube.com/embed/C176zdjh-3s?
ஒலி வடிவம் -
http://ww.raaga.com/player4/?id=2326...27003298327327
விழியால் காதல் கடிதம் - டி.எம்.எஸ், பி.சுசீலா - வாலி
ஒளி வடிவம்
http://www.youtube.com/embed/Gd-a-Eogpcc?
ஒலி வடிவம் -
http://ww.raaga.com/player4/?id=1549...54130200576037
கல்யாண சந்தையிலே - பி.சுசீலா - நா. பாண்டுரங்கன்
ஒலி வடிவம்
http://ww.raaga.com/player4/?id=2326...56562785618007
ஆரம்பமே இப்படித்தான் - பி.சுசீலா, எஸ். சரளா - வாலி
ஒலி வடிவம்
http://ww.raaga.com/player4/?id=2326...30589475762099
என்னடி செல்லகண்ணு - எஸ்.சரளா -ஆலங்குடி சோமு
ஒளி வடிவம்
http://www.youtube.com/embed/1g5jVV2tUOo?
ஒலி வடிவம்
http://ww.raaga.com/player4/?id=2326...61199398804456
gkrishna
15th August 2014, 02:19 PM
இவரால் பாதிக்க பட்ட பல நல்ல இயக்குனர்களை எனக்கு தெரியும். இளையராஜா ,கொஞ்சம் இலக்கிய ரசனை உண்டு என்றாலும், நல்ல படங்களை பெரும்பாலும் உணர முடியாதவர் என்று இவர் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்.
இவருடைய அளவு மீறிய அகந்தை இவருக்கு எமனாக அமைந்தது.
இவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதையோ,அருமையான Re Recording Genius என்பதையோ நான் குறை சொல்ல மாட்டேன். செல்வராஜ்- பாரதிராஜாவின் அருமையான உழைப்பில் உருவான காவியத்தை ,இவர் உணராதது ,இவர் மன வளர்ச்சி குறைபாட்டை வெளிச்சமிடுகிறது என்பதை இவர் உணரவில்லை போல.
உண்மை கோபால் சார்
ஹென்றி டேனியல் (விஸ்வநாதனின் உதவியாளர்) இவரிடம் மிகவும் அவமானப்பட்டார் என்று கேள்வி பட்டு உள்ளேன்
Gopal.s
15th August 2014, 02:28 PM
உண்மை கோபால் சார்
ஹென்றி டேனியல் (விஸ்வநாதனின் உதவியாளர்) இவரிடம் மிகவும் அவமானப்பட்டார் என்று கேள்வி பட்டு உள்ளேன்
இவர் அவமான படுத்தியவர்கள் லிஸ்ட் சொல்லி மாளாது. யுவன்,கார்த்திக்,பவதாரிணி மட்டுமே விதிவிலக்கு.
இவர்,அன்றைய வளரும் இசையமைப்பாளர்களை எதிரி போல நடத்தி அவமான படுத்திய விதம்,எந்த விதத்திலும் இவருக்கு ஆன்மீக பெருமையை அளிக்கவொன்னாதது.
அப்போது உச்சத்தில் இருந்த எம்.எஸ்.வீ ,இவரை பெருந்தன்மையோடு நடத்தி அங்கீகரிக்கவில்லையா?
gkrishna
15th August 2014, 02:29 PM
'கேட்டு பார் கேட்டு பார் ' மாடி வீட்டு மாப்பிள்ளை கேட்டு உள்ளீர்களா cinna kannan sir
பாடகர் திலகம் சுசீலாவின் அருமையான கோரஸ்
http://www.youtube.com/watch?v=IyOxzckWL9M
gkrishna
15th August 2014, 02:40 PM
கியோ கியோ மசாஜ் மசாஜ் மசாஜ் ஒ கிய மசாஜ்
கால்கள் சிவகவில்லையோ
கல்லும் முள்ளும் வருக்கவில்லையோ
கொதிக்கதடி மூச்சு குளரதடி பேச்சு
பாடகர் திலகத்தின் வெரி rare சாங் (மாடி வீட்டு மாப்பிள்ளை )
வாசு சார் ஒரு நாள் இன்றைய ஸ்பெஷல் வரும்
ரவிச்சந்திரன் கலைச்செல்வி நாகேஷ் ரமாப்ரபா மேஜர் எல்லோரும் நடித்து இருப்பார்கள்
இசை சலபதி ராவ்
http://1.bp.blogspot.com/-wLyUENjVPMk/UAVKgz6N05I/AAAAAAAAAeQ/cFgZJsxNZP4/s320/Old+Tamil+Actor+Ravichandran.jpg
http://www.inbaminge.com/t/m/Maadi%20Veettu%20Mappillai/
RAGHAVENDRA
15th August 2014, 02:40 PM
பொங்கும் பூம்புனல்
கோபால் சார் குரோதம் வேண்டாம் ... என்று சொல்ல மாட்டேன்.. . வேண்டும்...
.
.
.
.
பிரேம் நடித்து ஹிட் ஆன படமாச்சே...
பாவை இதழ் தேன்மாதுளை ... சங்கர் கணேஷ் இசையில் இன்றும் நம் நெஞ்சில் நிலைத்த பாடலாச்சே...
https://www.youtube.com/watch?v=HjZ2-Zz7Iik
RAGHAVENDRA
15th August 2014, 02:43 PM
பொங்கும் பூம்புனல்
குரோதம் புகழ் பிரேம் என்று நிலைத்த புகழ் தந்த படமாச்சே..
சொல்லப் போனால் நமது ஹப்பர் ஒருவருடைய user id யே குரோதம் புகழ் பிரேம் என்று இருக்கிறது.
பிரேம் நடித்த இன்னொரு படம் என் ஆசை உன்னோடு தான்.. இதிலும் பாட்டு சூப்பர் ஹிட்...
இதோ நம் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொண்ட அருமையான பாடல். சங்கர் கணேஷ் இசையில் மறக்க முடியாத பாடல்
தேவி கூந்தலோ பிருந்தாவனம் ...
http://www.inbaminge.com/t/e/En%20Aasai%20Unnoduthaan/
RAGHAVENDRA
15th August 2014, 02:49 PM
பொங்கும் பூம்புனல்
சங்கர் கணேஷ் அவ்வப்போது பழைய படங்களின் பின்னணி இசை அல்லது மெட்டு அல்லது வேற்று மொழி படங்களிலிருந்து எடுத்து பயன்படுத்தினாலும் பாட்டு கேட்கும் போது நன்றாக இருக்கும்.
அப்படி ஒரு பாட்டு 1983ம் ஆண்டு வெளிவந்த அனல் காற்று படத்தில் இடம் பெற்ற தென்னகையாம் தென்றலிலே என்ற இந்தப் பாடல்.. ஒரு முறை ஒரு இசைத்தட்டு கடையில் இப்பாடலைக் கேட்டேன். ஆனால் எந்த வானொலியிலும் இப்பாடலைக் கேட்ட நினைவில்லை, இலங்கை வானொலி உள்பட..
கேளுங்கள்... நிச்சயம் ரசிப்பீர்கள்
http://www.inbaminge.com/t/a/Anal%20Katru/
gkrishna
15th August 2014, 02:50 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSG5BAW96vK-tcv1zFUMf9TVgOlUZB1XDvvB5lnoeOHsLUmYjGE
அருமையான நினைவு ஊட்டல் வேந்தர் சார்
80 களில் ஆரம்பித்து இன்னும் தமிழ் சினிமாவை விடவில்லை சமீபத்தில் இவரை சென்ற ஆண்டு பார்க் ஹோட்டல் இல் சந்தித்த நினைவு
குரோதம் பிரேம் பற்றி indiaglitz வலைபூ பதிந்த ஒரு தகவல்
Many enter cinema for its glitzy and glossy lifestyle and money. Some enter cinema with a dream to prove their talent and entertain people. A few enter cinema with a lot of money and wanted to get name and fame.
We can say that J K Rithish, Prem and Alex are the best examples of the people who turned stars with their wealth. Same way, Prem who entered Tamil cinema with dummy machine guns through 'Krodham' also made sequel of the film and did a great job in acting and in direction. Now the machinegun man is back in action with his 'Vazhipokkan'. But this time there won't be any use for his fancy machine guns coz, this one is a village oriented script. And as usual Prem will be handling the script, dialogue, direction production all by himself.
RAGHAVENDRA
15th August 2014, 02:59 PM
பொங்கும் பூம்புனல்
http://www.newsonweb.com/newsimages/November2010/8ee8cd92-824c-4b48-b268-63a97bce54731.jpg
இசையரசியின் இரு வேறு பரிமாணங்கள் ஒரே பாடலில் எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்.. மாடி வீட்டு மாப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற என்னை மன்னிக்க வேண்டும் என்ற இப்பாடலில் வசனமும் பேசி பாட்டும் பாடி அசத்தியிருப்பார் இசையரசி.
https://www.youtube.com/watch?v=ygdAJTxfRAA&index=16&list=UUbl71uA-GL1fowLuXe4KEbw
தாளம் போகும் வேகத்தில் புதிய பாடகர்களாயிருந்தால் நிச்சயம் திணறியிருப்பார்கள். இந்த தாளக்கட்டை எவ்வளவு எளிதாக அனுசரித்து பாடலைப் பாடியிருக்கிறார் என்பதை கவனிக்கும் போது நிச்சயம் பிரமிப்புத் தான் உண்டாகும்.
gkrishna
15th August 2014, 03:03 PM
http://cdn.spicyonion.com/cache/images/profile/movie/2000/krodham2-225x300.jpg
குரோதம் பிரேம் குறிஞ்சி மலர் மாதிரி அப்பப்ப சினிமாவில் தலை காட்டுவார்
குரோதம் ,என் ஆசை மச்சான் ,வீரமணி,வரார் சண்டியர்,அசோகா ,வழிப்போக்கன் குரோதம் 2 (கிழிஞ்சது போ ),புது பிறவி,வெற்றிகரங்கள்
இப்படி இந்த 30 ஆண்டுகளில் 10 படம் நடித்து இருக்கார் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கிலாந்து இல் வந்து படம் எடுத்து விட்டு மீண்டும் சென்று விடுவார் .
நம்ம காதலிக்க நேரமில்லை செல்லப்பா மாதிரி 'இங்க இருக்கிறவன் அவன் அவன் சாகனும் '
இவரோட ஒரு படத்தில் பூர்ணிமா ஜெயராம் ஜோடி ,
இன்னொரு படத்தில் இந்திரா நகர் புகழ் ராணி பத்மினி (கொஞ்சம் குள்ளமாக இருப்பார் இப்ப உள்ள கோ படத்தின் பியா மாதிரி ). 1985 களில் இந்திரா நகர் கொலை வழக்கு famous அதில் இந்த ராணி பத்மினி கொலை செய்யப்பட்டார் என்று நினைவு இந்த கொலை வழக்கு என்ன ஆச்சு என்று நினைவில் இல்லை . மாலை மலர் கால சுவடுகள் படிக்கணும்
வெற்றி கரங்கள் படத்தில் நம்ம இளைய திலகம் பிரபு உண்டு னு நினைவு
gkrishna
15th August 2014, 03:04 PM
பொங்கும் பூம்புனல்
இசையரசியின் இரு வேறு பரிமாணங்கள் ஒரே பாடலில் எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்.. மாடி வீட்டு மாப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற என்னை மன்னிக்க வேண்டும் என்ற இப்பாடலில் வசனமும் பேசி பாட்டும் பாடி அசத்தியிருப்பார் இசையரசி.
தாளம் போகும் வேகத்தில் புதிய பாடகர்களாயிருந்தால் நிச்சயம் திணறியிருப்பார்கள். இந்த தாளக்கட்டை எவ்வளவு எளிதாக அனுசரித்து பாடலைப் பாடியிருக்கிறார் என்பதை கவனிக்கும் போது நிச்சயம் பிரமிப்புத் தான் உண்டாகும்.
அருமை ராகவேந்தர் சார்
இப்ப தான் இந்த பாட்டை டவுன்லோட் செய்து கேட்டு எழுத நினைத்தேன்
நீங்கள் அசத்தி விட்டீர்கள் . அருமையான எண்ண பரிமாற்றங்கள்
RAGHAVENDRA
15th August 2014, 03:07 PM
பொங்கும் பூம்புனல்
என்னைப் பார்..
என் அழகைப் பார்..
....
என்று மூன்று கவர்ச்சி நடிகைகள் போட்டி போட்டு தங்கள் திறமையைக் காட்டிய படம்.
அதில் இந்தப் பாடல் மிக அருமையாக மெலோடியாக இருக்கும்.
Simple music .. just flute, drums and guitar ...
இசையரசி, சசிரேகா மற்றும் ஷைலஜா மூவரும் போட்டி போட்டு இனிமையைத் தங்கள் குரலில் கொட்டிய பாடல்..
அம்மாடியோ போதும் போதும் என்று நீங்கள் நிச்சயம் சொல்ல மாட்டீர்கள்... பாட்டைக் கேட்டுக்கொண்டே இருப்பீ்ர்கள்..
http://www.inbaminge.com/t/e/Ennai%20Paar%20En%20Azhagai%20Paar/
RAGHAVENDRA
15th August 2014, 03:09 PM
கிருஷ்ணா ஜி...
நான் நெனச்சேன்... நீங்க சொல்லிட்டீங்க..
அதாங்க நமக்குள்ளே இருக்கற அதிசயம்...
தூக்குத்தூக்கி வசனம் ஞாபகம் வருதா...
gkrishna
15th August 2014, 03:18 PM
கிருஷ்ணா ஜி...
நான் நெனச்சேன்... நீங்க சொல்லிட்டீங்க..
அதாங்க நமக்குள்ளே இருக்கற அதிசயம்...
தூக்குத்தூக்கி வசனம் ஞாபகம் வருதா...
அதே அதே சபாபதே
சட்டம்பிள்ளை வெங்கட்ராமன்
நிழல் - சினிமா இதழ் ஆசிரியர் திருநாவுகரசு
இன்னும் வந்து கொண்டு இருக்கிறதா சார்
RAGHAVENDRA
15th August 2014, 03:19 PM
பொங்கும் பூம்புனல்
டி.எம்.எஸ். பி.சுசீலா, எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி, ஏ.எல்.ராகவன் எல்.ஆர்.ஈஸ்வரி .... இந்த வரிசையில் டூயட் பாடல்களுக்கென்று தனி இணையாக புகழ் பெற்ற குரல்கள் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம்.. அது என்னவோ இவர்கள் இரண்டு பேரும் இணைந்து பாடிய பாடல்களின் இனிமையே தனி.
ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடிய பாடல்களைக் கேட்க வேண்டுமென்றால்
1. மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை கேட்க வேண்டும்
2. அதுவும் மலைப்பிரதேசத்தில் கேட்க வேண்டும்
3. சுற்றி யாரும் இருக்கக் கூடாது.
4. டேப் ரிகார்டரில் இந்தப் பாட்டைப் போட்டு ஓட விட்டு தரையில் ஜமக்காளம் விரித்து கூடவே ஏதேனும் கொறிக்கத் தீனியை வைத்துக் கொண்டு சாய்ந்த நிலையில் கண்ணை மூடிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கால பாட்டுக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் தான் கேட்க வேண்டும்.
அப்படி ஒரு வரிசையைத் தரலாம் என இருக்கிறேன். தொடக்கமாக
இளைய பிறவிகள் படத்திலிருந்து கார்காலம் இது கார்காலம்... சங்கர் கணேஷ் இசையில்..
http://www.inbaminge.com/t/i/Ilaya%20piravigal/
RAGHAVENDRA
15th August 2014, 03:26 PM
பொங்கும் பூம்புனல் - ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் ஸ்பெஷல்
இந்த வரிசையில் கை நாட்டு திரைப்படத்திலிருந்து ஊரெங்கும் உன்னைத் தேடுதோ ... இசை சந்திரபோஸ்
https://www.youtube.com/watch?v=W7_CvNNXeKs
RAGHAVENDRA
15th August 2014, 03:33 PM
பொங்கும் பூம்புனல் - ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் ஸ்பெஷல்
கதை கதையாம் காரணமாம் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னரின் இசையில் அதிகம் வெளிவராத இனிமையான பாடல்.
கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள..
பாடல் வரிகள் வைரமுத்து அவர்கள்..
https://www.youtube.com/watch?v=xcVllVQwAm8
gkrishna
15th August 2014, 03:40 PM
பிலிமாலயா 1994 இதழில் வந்த இசை அமைப்பாளர் இளைய ராஜா அவர்களிடம் கண்ட வித்தியாச நேர்காணல் (இசை இல்லாமல் )
http://3.bp.blogspot.com/_jo1xsRVxX7o/TLZyaJdf4II/AAAAAAAAGF8/u7hCRrma8ZU/s1600/Ilayaraja+Hits.jpg
டாக்டர் இளையராஜாவிடம் கேட்கும் கேள்விகள் இசையைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டுமா? அரசியல், சமூக, இலக்கிய சிந்தனைகள் கொண்ட அவரிடம் சற்றே வித்தியாசமான கோணத்தில் கேள்வி கேட்டால் என்ன?
எனவே, இசையிலிருந்து ஒதுங்கி நின்று இன்னும் சொல்லப்போனால் திரையுலகிலிருந்தே தள்ளி நின்று கேட்ட சில கேள்விகளுக்கு துணிச்சல் கலந்த தன் பாணியில் பதிலளிக்கிறார் ராஜா.
ஆரம்ப காலத்தில் உங்களிடம் இருந்த அரசியல் உணர்வு இன்னும் அப்படியே உள்ளதா? கம்யூனிச சிந்தனையில் வளர்ந்தவர் நீங்கள் இன்று சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்டிருக்கும் கம்யூனிச வீழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்றைய இந்திய கம்யூனிச கட்சிகளைப் பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?
இயற்கையின் அமைப்பே கணத்திற்குக் கணம் மாறுகின்ற வகையில் அமைந்துள்ளது. கொஞ்ச நேரம் ஒரு நிலையில் உட்கார்ந்திருப்பவன், அந்த நிலையிலிருந்து மாறினால் அதில் ஒரு சுகம் காண்கிறான் இல்லையா? அந்த கொஞ்ச நேரத்திலே கூட ஒரு மாற்றம் அவசியமாகிறது. அதுதான் மனித மனம், அதற்கு ரஷ்யா, இந்தியா, ஜெர்மனி என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. உலகில் எந்தக் கொள்கையாக இருந்தாலும் ஜனங்கள் இதைத்தான் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என வரையறுக்கும்போது அதுவே சர்வாதிகாரமாக ஆகி, அதிலிருந்து விடுபட வேண்டும் எனும் உணர்வு மக்களுக்குத் தோன்றுவது இயல்பு. வீடுகளில் கூட அதிகக் கண்டிப்புடன் வளர்க்கப்படும் பிள்ளை வீட்டை விட்டு ஓடுவதில்லையா? அது போலத்தான் இதுவும். அன்று ரஷ்யாவில் வந்த கம்யூனிசம் என்வாழ்வை மாற்றவில்லை. அதுபோலவே வீழ்ச்சியும்.
நீங்கள் சிம்பொனி இசையமைத்தது பற்றி பாராளுமன்றத்தில் முதன்முதலாக புகழ்ந்து பேசியவர் வை. கோபால்சாமி. அவர் திமுகவிலிருந்த பிரிந்து வந்து விட்டதைப் பற்றி…
தி.க.வை இரண்டு கட்சிகளாக தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தி.க. தி.மு.க. என்ற பெயரில் பிரித்து நடத்தினார்கள். அந்த தி.மு.க.வை இன்று மூன்று கட்சிகளாக அ.தி.மு.க. வென்றும், கலைஞர் தி.மு.க., வைகோ தி.மு.க. என நடத்துகிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டை தி.க.தான் ஆளுகிறது. நீண்டகாலமாக.
தூய்மையான அரசியல் இயக்கங்கள் சினிமாக்காரர்களின் முற்றுகையால்தான் கீழ்த்தரமான சூழலுக்கு ஆளாயிற்று என்ற குற்றச்சாட்டைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
தூய்மை என்ற சொல் இறைவன் ஒருவனுக்கே உரியது. நாம் அழுக்காக இருக்கிறோம் என்ற காரணத்தால்தான் தூய்மை என்பதை நாம் சுட்டிக் காட்டுகிறோம். இதில் அரசியல் என்ன? சினிமா என்ன? பிறப்பே தூய்மை கெட்டதால் வந்ததுதானே?
உங்களுக்கு ஆளும் கட்சி தவிர மற்ற கட்சியினர் பாராட்டு விழா எடுத்துவிட்டார்கள். அந்த தவிர்ப்புக்கு காரணம் ஊகிக்க முடிகிறதா?
பாராட்டு என்பதே ஊக்கப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படுவது. ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவனைப் பாராட்ட வேண்டிய தேவை இல்லை. நடக்கமுடியாத குழந்தை ஒன்றை கைதட்டி உற்சாகப்படுத்தி நடக்க வைக்க நடைவண்டி பழக்குவதில்லையா? நான் இவைகளை ஏற்றுக் கொண்டது நடக்க முடியாதவன் என்பதால் அல்ல. நான் எல்லோருக்கும் பொதுவானவன்.
தமிழ், தமிழன் என்றெல்லாம் குரல் கொடுப்பது பற்றி உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன? இன உணர்வு அவசியமா?
தமிழர்கள் தமிழ் என்று குரல் கொடுக்காமல் தெலுங்கு என்றா குரல் கொடுப்பார்கள்? மனிதநேய உணர்வு ஒன்றே அவசியம்.
மதம் நம்மைப் பிரித்துவிடும் என்ற பயம் உங்களுக்கும் ஏற்படுகிறதா? இந்தியா இந்துக்களின் நாடு என்பது ஜீரணிக்க முடிகிறதா?
வேறுபட்ட மதங்கள் தோன்றுவதே பிரிப்பதற்குத்தானே. மனிதன் என்ற உணர்விலிருந்து நாம் ஏதோ ஒரு இனத்தையும், மதத்தையும் சார்ந்தவர்கள் எனக் கற்பனை செய்து கொள்வதில் என்ன லாபம்? மதங்கள் இறைவனை அடையும் வழி என்கிறார்கள். பாதைகள் ஊர் ஆகுமா? மதங்கள் இறைவனில்லை. மதங்கள் நமது விருப்பு வெறுப்புகள்.
இன்று திராவிட கட்சிகள் பல விதங்களில் உடைந்து போய் தனது உண்மையான முகத்தைத் தொலைத்துவிட்டு பரிதாபமாக நிற்கிறதே…. அனுதாபப்படுகிறீர்களா?
இரண்டாவது கேள்விக்கான பதில் இதற்குப் பொருந்தும்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறீர்களே… வயதும், வசதியும் தான் இறை நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன என்ற தத்துவ அடிப்படையிலா?
வயதும் வசதியும் உள்ள எத்தனையோ பேர் ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கிறார்களே. அதை நீங்கள் காணவில்லையா? நிலையில்லாது சுற்றிக்கொண்டிருக்கும் சூரியன் நிலைத்திருக்கும் வானத்தைத்தானே சுற்ற வேண்டியிருக்கிறது. நாம் எல்லோரும் நிலையில்லா உலகத்தில் வாழ்வதால்தான் நிலையான தன்மையை வாழ்க்கை முறையிலும், மன அமைப்பின் முறையிலும் விரும்புகிறோம்.
உங்கள் எதிர் முகாமிலிருந்து எக்கச்சக்கமான ஏவுகணைகள் தொடுத்தும் ஏன் மௌனியாக இருக்கிறீர்கள்?
அதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறது. எனக்கு நேரம் இல்லை. மேலும் அவர்கள் தங்களை யார் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். நான் ஏன் அதைத் தடுக்க வேண்டும்? எனக்கு வேறு வேலை இருக்கிறது.
புகைப்படம் எடுப்பதை பொழுது போக்காக கொண்டுள்ள தாங்கள் எந்த மாதிரியான காட்சிகளை சிறை பிடிக்க விரும்புகிறீர்கள்?
இயற்கை காட்சிகளை.
திரையுலகில் தொடர்பில்லாத மற்ற எவருடனாவது பொழுதைக் கழிப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறீர்களா?
ஆம். சாமியார்களிடம். ஆனால் நேரமில்லை.
இன்றைக்கிருக்கும் பொருளாதார, அரசியல், சமூகச் சூழ்நிலையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்ல மாற்றம் அமையும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இப்போதிருக்கும் ஆட்சி உங்களுக்குப் பிடிக்கவில்லை. அல்லது மாற்றம் வேண்டும் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது. எத்தனை மந்திரிசபைகள் மாறிய போதும் மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை என்பது அடிப்படையான உண்மை. எந்தக் கட்சி வந்தாலும் அவர்களுக்கு உள்ள எதிர்ப்பைச் சமாளிக்கவே நேரம் சரியாகப் போய் விடுகிறது.
உண்மையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை எந்தக் கட்சியாலும் மாற்ற முடியாது. சூழ்நிலை அப்படி. அந்தந்த குடும்பத்தில் உள்ளவர்களே உழைத்துப் பாடுபட்டு அவர்களின் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏமாற்றாது, உண்மையுடன் நமக்காகப் பாடுபடுவது நம்மை விட்டால் வேறு யார்?
இசை ரசிகர்களின் நீண்ட நாள் தாகத்தை நிறைவேற்றும் வண்ணம் உங்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் டாக்டர் பட்டம் கொடுத்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திறமைக்குக் கிடைக்கும் பரிசு ஒன்றே அதற்குரிய தகுதியைப் பெறுகிறது. திறமையின்றி சிபாரிசின் மூலமாக வாங்கிக் கொள்ளும் பரிசு. அதற்குரிய சிறப்பையும் இழந்து, பரிசு பெற்றவனையும் அது கேவலப்படுத்தி விடுகிறது. பல்கலைக்கழகத்தினரே என்னை அணுகி கேட்டதால், மறுப்பது மரியாதையாகாது என்ற உணர்வோடு. இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன். தவிர இந்த பட்டங்களிலும் பதவிகளிலும் எனக்கு மோகமில்லை. காரணம் இந்த உடம்பையே ஒரு சுமையாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.
சமுதாயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் ஒரு இசை அமைப்பாளராகிய நீங்கள், எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத செல்வாக்கைப் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லாதரப்பிலும் பெற்றிருக்கும் நீங்கள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று m.l.a. ஆகவோ m.p.ஆகவோ ஆகி மக்களின் வளர்ச்சிக்காக ஏன் பாடுபடக் கூடாது?
என்னைச் சாக்கடையில் தள்ளப் பார்க்கிறீர்களா? நான் முன்னமேயே குறிப்பிட்டது போல் யார் பதவிக்கு வந்தாலும் பதவிக்கு வந்தவரின் வாழ்க்கைத் தரம் மாறுமே தவிர மக்களின் வாழ்வில் மாற்றம் வராது. மேலும் வளர்ச்சி என்பதே அழிவுதான். நன்றாக யோசித்துப் பாருங்கள். குழந்தையாக இருந்து சிறுவனாகும் வளர்ச்சி குழந்தைப் பருவம் அழிந்ததால் வந்தது. சிறுவனாக இருந்து வாலிபனாகும் வளர்ச்சி சிறு பருவம் அழிந்ததால் வந்தது. வாலிபனாக இருந்து தந்தையாகும் வளர்ச்சி. வாலிபப் பருவம் அழிந்ததால் வந்தது. தந்தையாக இருந்து தாத்தாவாகும் வளர்ச்சியும், அதற்கு முன்னிருந்த நிலை அழிந்ததால் வந்தது.
இன்னும் நன்றாகச் சொன்னால், ஒரு கட்சியின் உச்சகட்ட வளர்ச்சி நாற்காலிதான். பதவியை அடைந்த கட்சி அதற்குமேல் வளரவே முடியாது. பதவியை விட்டு அந்தக் கட்சி என்றைக்குமேலேயோ, கீழேயோ முன்னாள் அமைச்சர், அல்லது முன்னாள் எம்.பி. என்று போட வேண்டும். என்னை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கிழவனாக ஊன்றுகோலின் உதவியுடன் இருந்தாலும் சாகும்வரை நான் இளையராஜா தான். அதில் ஒரு மாற்றமும் முன்னாள், இன்னாள் என்று வராதல்லவா?
இப்படி ஒரு மேடை கிடைத்தால் இதையெல்லாம் சொல்லலாமே என்று இதயத்தில் எதையாவது தேக்கி வைத்திருக்கிறீர்களா?
எந்தவொரு கட்சியையும் நம்பாதீர்கள். எந்தவொரு தலைவனையும் நம்பாதீர்கள். எந்த மதத்தையும் சாராதீர்கள். நீங்களே உங்கள் உலகம். திக்கு இல்லாது போனால்தான் தெய்வம் துணையிருக்குமே தவிர, எதை எதையோ நம்பி சுய பலத்தை இழந்தவனைத் தெய்வமும் கண்டு கொள்ளாது.
நமக்காக உழைக்க நம்மை விட்டால் வேறு யாருமில்லை. ஒரு தலைவனை நீங்கள் ஏற்கும் போது, எதிர்பார்க்கும் பொழுது உங்கள் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து உங்கள் சுயபலம் போய்விடுகிறது. உங்களையே நீங்கள் நம்புங்கள். வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
நன்றி : பிலிமாலயா 1994
gkrishna
15th August 2014, 03:44 PM
ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடிய பாடல்களைக் கேட்க வேண்டுமென்றால்
1. மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை கேட்க வேண்டும்
2. அதுவும் மலைப்பிரதேசத்தில் கேட்க வேண்டும்
3. சுற்றி யாரும் இருக்கக் கூடாது.
4. டேப் ரிகார்டரில் இந்தப் பாட்டைப் போட்டு ஓட விட்டு தரையில் ஜமக்காளம் விரித்து கூடவே ஏதேனும் கொறிக்கத் தீனியை வைத்துக் கொண்டு சாய்ந்த நிலையில் கண்ணை மூடிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அருமை ராகவேந்தர் சார்
கொறிக்க நொறுக்கு தீனி, மலை பிரேதேசம், ஜமுக்காளம் (பவானி)
தப்ப நினைக்க வில்லை என்றால் தொட்டு கொள்ள ஊறுகாய் எதாவது உண்டா ?
gkrishna
15th August 2014, 04:00 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02061/kadhalikka__1__2061345g.jpg
[ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்கள் இன்று மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. 1960-களில் வெளிவந்த பல படங்கள் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக இன்றும் மிளிர்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘காதலிக்க நேரமில்லை’. இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் 1964-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வெளிவந்த இப்படம் முழு நீள நகைச்சுவை கலந்த காதல் படம். இந்தப் படத்துக்கு இன்று வயது 50.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படம். முக்கோணக் காதல் கதைக்குப் பெயர் போன இயக்குநர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் காமெடியைக் கையில் எடுத்து விலா எலும்பு நோக சிரிக்க வைத்தார். முத்துராமனும் ரவிச்சந்திரனும் செய்யும் காமெடி கலாட்டாக்கள், அவர்களுக்கு இணையாக காமெடி செய்யும் காஞ்சனா, ராஜஸ்ரீ, ‘சினிமா எடுக்கிறேன்’ என்று பாலையாவுக்குப் பேய் கதை சொல்லும் நாகேஷ், இன்னும் சச்சு, ராகவன் என்று இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்தவர்கள் பலர்.
இந்தக் காவியத்தை இசை மூலம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெருகேற்றினார்கள். ‘மாடி மேலே’ , ‘என்ன பார்வை’, ‘ உங்கள் பொன்னான கைகள்’, ‘அனுபவம் புதுமை’, ‘ நாளாம் நாளாம்’, ‘மலரென்ற முகமொன்று’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘ நெஞ்சத்தை அள்ளிஅள்ளித் தா’ ஆகிய எட்டுப் பாடல்களும் இன்றும் என்றும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் பாடல்கள்.
இப்படிப் பல பெருமை பெற்ற காதலிக்க நேரமில்லை பொன்விழாக் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நாளை (16-8-14) மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் முயற்சியில் நடைபெறும் இந்த விழாவில் காதலிக்க நேரமில்லை படத்தில் பங்கெடுத்த நட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
இதுபற்றி ஒய்.ஜி. மகேந்திரன் கூறும்போது, “அந்தக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம் இது. இதுவரைக்கும் இந்தப் படத்தை 180 முறை பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை இடம் பெற்ற படமும் இதுதான். இப்படி ஒரு காவியத்தைத் தந்த இயக்குநர் ஸ்ரீதரைப் பாராட்டி 2005-ம் ஆண்டு பாராட்டு விழா நடத்தினேன். இப்போது இந்தப் படத்துக்கு விழா எடுக்கிறோம். இந்தப் படத்தில் பங்கெடுத்த கலைஞர்கள் விழாவில் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். விழாவில் காதலிக்க நேரமில்லை படப் பாடல்கள் ஆர்கெஸ்ட்ரா மூலம் இசைக்கப்படும். இடையிடையே படத்தின் காட்சிகள் திரையிடப்படும்” என்றார்.
ஆல்பா மைண்ட் பவர் நிறுவனம் முதன்மைப் புரவலராக இருந்து, இந்நிகழ்ச்சியை வழங்க, காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், அசோக் குரூப், ஹுண்டாய் மோட்டார் பிளாசா கிண்டி, வெற்றி ரியல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
chinnakkannan
15th August 2014, 04:04 PM
அம்பிகா லெமன் பிக்கிள், 777 கடாரங்காய் ஓகே..நல்லா இருக்கும்.. க்ராண்ட் ஸ்வீட்ஸ்ல சம் டைம் மாவடு நல்லா இருக்கும்..ஆமா எதுக்கு ஊறுகாய் :)
**
எனக்கென்னமோ குரு பாட்டு தான் நினைவுக்கு வருது..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா...
gkrishna
15th August 2014, 04:10 PM
பிற இந்திய மொழித் திரைப்பாடல்களைவிட மிகச் சிறந்தவை எனப் போற்றத்தக்க பல சுதந்திர உணர்வுப் பாடல்கள் தமிழ்த் திரையில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவையெல்லாம் மற்ற மொழிகளில் உள்ளதுபோல், ஒரு குறிப்பிட்ட படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள் அல்ல. இந்த வினோத நிலைக்கு இரண்டு சுவையான காரணங்கள் உள்ளன.
முதலாவது, இந்திய சுதந்திரம் என்பது இப்போதைக்குச் சாத்தியமல்ல என்ற அவநம்பிக்கையில் நாடே துவண்டு கிடந்த தருணத்தில், ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ போன்ற வரிகள் மூலம் பரவசம் ஏற்படுத்திய பாரதியின் சுதந்திர உணர்வுப் பாடல்கள். இந்திய சுதந்திரம், இந்திய தேசியக் கொடி, தேசத் தலைவர்கள், அவர்களின் தியாகம் ஆகியவை பற்றி மட்டுமின்றி, ‘அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாதப் பொருள் இல்லை அவனியிலே’ போன்ற வரிகள் வாயிலாக அன்றைய மக்களின் இயலாமை பற்றியும் பாரதி எழுதிய ஏராளமான பாடல்களைக் காப்புரிமை இன்றி எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பு தமிழ்த் திரைப் படங்களுக்கு இருந்தது. இதனால் காலத்தால் அழியாத ஏராளமான சுதந்திர உணர்வுத் திரைப் பாடல்கள் தமிழ்ப் படங்களில் ஒலித்திருக்கின்றன.
இரண்டாவது காரணம் தமிழ் உணர்வோடு தொடர்புடையது. திரையிசைக் கவிஞர்களின் பொற்காலம் என்று கொண்டாடப்பட்ட 50, 60-களில் கோலோச்சிய திரைப்படப் பாடலாசிரியர்கள் பலரும் - பின்னாளில் தேசிய மற்றும் ஆன்மிகவாதியாக மாற்றம் கொண்ட கண்ணதாசன் உட்பட பலரும்- திராவிட, தமிழக உணர்வுகளுக்கே அப்போது அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். எனவே இந்தக் காலகட்டத்தில் படத்துக்காகவே எழுதப்பட்ட தேசியப் பாடல்கள் குறைவாகவே இருந்தன.
உணர்வின் அடிப்படையில் தமிழ், இந்தித் திரைப்பாடல்கள் பல விதங்களில் ஒன்றுபட்டாலும், அவற்றை வெளிப்படுத்தும் முறையில், பாரதியின் பாடல்களைத் தவிர்த்து நோக்கினால், வேறுபடுகின்றன வழக்கப்படி முதலில் இந்திப் பாடல்.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்கூடப் பாடப்படும் உணர்வையும் பொருளையும் உள்ளடக்கிய இந்தப் பாடல், திலீப் குமார், வைஜயந்திமாலா நடித்து
1964-ல் வெளிவந்த ‘லீடர்’ என்ற வெற்றிப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஷகீல் பதாயீ எழுதி, திலீப் குமாரின் திரைக் குரல் எனப் போற்றப்பட்ட முகமது ரஃபி பாடியுள்ள உணர்ச்சி மிக்க இப்பாடலின் இசை அமைப்பாளர் நௌஷாத்.
பாடல்:
அப்னி ஆஜாதீ கி ஹம் ஹர் கிஜ் மிட்டா சக்தே நஹீன்
சர் கட்டா சக்தே ஹைன் லேக்கின் சர் ஜுக்கா சக்தே நஹீன்
ஹம்னே சதியோன் மே யே ஆஜாதீ கி நேமத் பாயீ ஹைன் நேமத் பாயீ ஹைன்
சேக்டோன் குர்பானியான் தேக்கர் யே தௌலத் பாயீ ஹைன் யே தௌலத் பாயீ ஹைன்
... ... ...
பொருள்:
எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது.
(எங்கள்) தலையை வெட்ட இயலுமேயன்றி அடிபணியச் செய்ய முடியாது.
நாங்கள் எத்தனையோ காலமாகப் போராடி இந்தச் சுதந்திரத்தின் உரிமையைப் பெற்றுள்ளோம்
எண்ணற்ற தியாகங்கள் மூலம் இந்தப் பொக்கிஷத்தைப் பெற்றுள்ளோம்
(அஞ்சாத) புன்னைகையுடன் எங்கள் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகளை ஏற்றுள்ளோம்
எத்தனை அவலங்களைத் தாண்டிய பிறகு இந்தச் சொர்க்கம் எங்களுக்குக் கிடைத்தது
சுய லாபத்திற்காக நாங்கள் எங்கள் தன்மானத்தை இழக்க முடியாது
எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது
அநீதி என்ன, மக்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்ல முடியுமா?
எவரும் வர முடியாது அனல் காற்றின் எதிரில்
அனல் காற்றின் எதிரில்
அமைதிக்கு எதிரியாக லட்சம் சிப்பாய்கள் வரட்டும்.
லட்சம் சிப்பாய்கள் வரட்டும்
நிற்க முடியாது எங்கள் ஒற்றுமைக்கு முன்
எங்கள் ஒற்றுமைக்கு முன்
எதிரிகள் அசைக்க முடியாத கற்கள் நாங்கள்
கற்கள் நாங்கள்
எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது.
(எங்கள்) தலையை வெட்ட இயலுமேயன்றி அடிபணியச் செய்ய முடியாது.
இனி தமிழ்ப் பாடல்.
மற்ற எல்லா உணர்வைப் போன்றே விடுதலை உணர்வையும் பாரதிக்கு அடுத்தபடியாக அழகாக வெளிப்படுத்தித் தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கண்ணதாசனின் இப்பாடல் இடம் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன்.
முதன்முதலாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்து 1965-ல் வெளிவந்த இந்த மாபெரும் வெற்றிப் படம் ‘கேப்டன் ப்ளட்’ என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் எனக் கூறப்பட்டது.
விடுதலை உணர்வை ஆழமாக வெளிப்படுத்தும் கண்ணதாசனின் வரிகளுக்கு டி.எம். சௌந்தரராஜனின் உணர்ச்சிகரமான உச்சரிப்பு, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொருத்தமான இசை, காட்சி அமைப்பு ஆகியவை இப்பாடலைக் காலத்தால் அழியாத சுதந்திர கீதமாக ஆக்கின.
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
சுதந்திர தினம், சுதந்திர உணர்வு என்றால் பாரதியாரின் பாடல்களுக்கு அடுத்தபடியாக உடனடியாக அனைவருக்கும் தோன்றும் இந்தப் பாடல் சுதந்திர இந்தியாவில் பிறந்த மகத்தான விடுதலை கீதம் என்று சொல்வதற்குத் தகுதியானது.
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02061/mgr_2061257g.jpg
Richardsof
15th August 2014, 04:21 PM
கிருஷ்ணா சார்
ஹிந்துவில் வந்த ஆயிரத்தில் ஒருவன் - பாடல் பற்றிய பதிவு அருமை .
ராகவேந்தரா சார் - பொங்கும் பூம்புனல் பதிவுகள் அருமை .
காதலிக்க நேரமில்லை - பொன் விழா தகவலுக்கு நன்றி .
Richardsof
15th August 2014, 04:29 PM
தப்ப நினைக்க வில்லை என்றால் தொட்டு கொள்ள ஊறுகாய் எதாவது உண்டா ?
http://youtu.be/M5kXafc5_q4
mr_karthik
15th August 2014, 04:50 PM
'தொழிலுக்கு துரோகம் செய்ததில்லை'- பாரதிராஜாவை கதறவைத்த 'முதல் மரியாதை' அனுபவத்தைப் பகிர்ந்த இளையராஜா
"நீங்கள் ஒரு தடவை பார்த்து 'த்தூ' என்று துப்பிய படத்தை எல்லாம் நான் 4 தடவை பார்த்து பின்னணி இசை பண்ணியிருக்கேன். ஏன்னா, ஒரு நாள் பின்னணி இசை இல்லாமல், ரீ-ரிக்காடிங் பண்ணும் போது இப்படி 4 தடவை பார்ப்பேன். அப்படி என்றால் என்னைப் போல பொறுமைசாலி இந்த உலகத்தில் எவனாவது இருக்கானா.
அதுதானே உன் வேலை?. அதுக்குத்தானே கோடிக்கணக்கில் பணம்?. என்னமோ இனாமா வேலை செய்யுற மாதிரி சலிச்சுக்குறே.
உன்னைத்தவிர மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல இசையத் தரவில்லையா?. அவர்களுக்கெல்லாம் பொறுமை இல்லையா?.
உன் மைனஸ் பாயிண்ட்டே உலகத்துலேயே நீதான் பெரிய கொம்பன்னு நினைச்சுக்கிறதுதான்.
RAGHAVENDRA
15th August 2014, 05:03 PM
பொங்கும் பூம்புனல் - ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் ஸ்பெஷல்
ஊஞ்சலாடும் உறவுகள் ...உல்லாச நினைவுகள் ... ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் ...
உறவுகள் சுமைகளாகுமா .. அவ்வாறென்றால் எத்தனை வகை ... சுமைகளை சுமப்பதும் இன்பமா..
இது எல்லாமே சாத்தியமே ... நீங்கள் காதலர்களாயிருந்தால்..
சொல்கிறார்கள் கேளுங்கள்...
வணக்கத்துக்குரிய காதலியே திரைப்படத்திலிருந்து..
http://www.youtube.com/watch?v=a2v8pIr_AJU
mr_karthik
15th August 2014, 05:03 PM
கோபால் சார், வினோத் சார்
ப்ளீஸ். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம்.
ஐயோ வாசு சார், இப்போதுதான் நினைத்தேன். "அங்கே" நுழைய ஹைதராபாத் கேட் தடையிருப்பதால், இங்கு நமது திரியில், முரளி சாருக்கு சப்போர்ட்டாக 'போலி ஆவணம்' பற்றிய பதிவொன்றை இங்கே இடலாம் என்று நினைத்தேன். என் கைகளைக் கட்டிவிட்டீர்களே.
பரவாயில்லை.., தங்களுக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை.
RAGHAVENDRA
15th August 2014, 05:08 PM
பொங்கும் பூம்புனல் - ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் ஸ்பெஷல்
அங்கே ஊஞ்சல் கட்டி அழைக்கிறார்.. இங்கோ ஊஞ்சல் கட்டினால் தான் வருவேன் என்கிறார்...
அதென்ன காதலுக்கும் ஊஞ்சலுக்கும் சம்பந்தம் உள்ளதா என்ன... யாராவது சொல்லுங்களேன்..
http://www.youtube.com/watch?v=ApTzhTxYpxY
RAGHAVENDRA
15th August 2014, 05:20 PM
பொங்கும் பூம்புனல்
மலர்கள் நனைகின்றன... வானின் மழையால்...
அந்த உற்சாகத்தில் பாடுகின்றன..
வசந்த காலம் மலர்கிறது...
பாடல் பிறக்கிறது..
வசந்த கால மலர்கள் காதல் ராகம் பாடுகிறது..
மாலை நேரத் தென்றலை மனம் நாடுகிறது..
http://www.youtube.com/watch?v=oZL3yo2Ukhk
காலாகாலமாய் நிலைத்து நிற்கும் படைப்பினை தரும் மனிதனுக்கு அதைப் பேணுவதற்கான குணங்களை மட்டும் இறைவன் ஏன் தரவில்லை ... இந்தக் கேள்விக்கு விடையை அந்தப் படைப்பாளியே தான் தேட வேண்டும்..
இசை என்பது தெய்வீகமானது. இறைவனுடன் நேரடி தொடர்பில் வைத்திருப்பது.. இடைவெளியில்லாமல் இருக்கும் நெருக்கம் ஆணவம் என்கிற சூறாவளி நுழையும் போது இறைவனிடமிருந்து மனிதனை மெல்ல மெல்ல விலக்குகிறது..
அப்போது அந்த இடைவெளியால் வருந்துவது அந்த படைப்பாளியா..
இல்லை இலலை..
அவனுடைய ஆன்மா.. அவனை நேசிக்கும் நெஞ்சங்கள்...
Gopal.s
15th August 2014, 08:32 PM
திரு கோபால் அவர்களுக்கு
இளையராஜாவின் பதிவு படித்த ஒரு தகவல்
நமது முதல் மரியாதை படம் நல்ல படம் அல்ல என்ற இளையராஜாவின் கூற்றில் எனக்கும் உடன்பாடு இல்லை
இந்த பாரதி ராஜா வைரமுத்து இளையராஜா கூட்டணி பிரிவதற்கு இது கூட காரணமாக இருந்து இருக்கலாம்
தெரியவில்லை
கிருஷ்ணாஜி,
பதிவுகளை இங்கு போடும் முன்பு ,அது இங்கு போட படும் தகுதி உள்ளதா என்று படித்து பார்த்து போடுங்கள். எல்லோருக்கும் p m அனுப்பி புண் படுத்தி விட்டேனா என்று கேட்குமுன், உங்கள் சொந்த பதிவுகளை போடுங்கள்.அல்லது ,படித்து விட்டு பிடித்தால் போடுங்கள். நானும்தான் இவற்றையெல்லாம் மற்ற சைட்டில் பார்க்கிறேன். அதே மாதிரி கம்பர் ஜெயராமன் பதிவு. சிலவற்றை நீக்கி விட்டாவது போடலாமே?
நண்பர்களின் ,உங்கள் மீதான மதிப்பு.அபாரமானது. அது குறைய நீங்களே வழி வகுத்து கொள்ளாதீர்கள்.
chinnakkannan
15th August 2014, 08:38 PM
க்ருஷ்ணா ஜி.. தேன்மழை ப் பாடல்க்ள் லிங்க்கிற்கு நன்றி..அதோ அந்தபறவை போல வாழ வேண்டும் பாடல் பற்றிய ரைட் அப்பிற்கும் தான்
ராகவேந்தர் சார்.. ஸ்விங் ஸ்விங்க் உனது ஊஞ்சல் நான் பிடிக்கும்..இளமை+அழகு ஸ்ரீ தேவி..அழகாய் ராஜேந்திர குமார் மாலை மதியில்எழுதிய கதையை விஷீவலுக்காக மாற்றுகிறேன் என்று சொதப்பி இருப்பார்கள்.. எல்லா பாத்திரங்களும் கரெக்டாகவே தேர்வு செய்தவர்கள் ஏன் கதையை மாற்றிச் சொதப்பவேண்டும் என்று இன்றும் எனக்குப்புரியவில்லை..இறுதியில் ரஜினி இன்னொரு ஸ்ரீதேவி காரக்டர் – நாவலில் தனியாக இருப்பது போலக் காட்டியிருப்பார்கள்.. படத்தில் ரஜினி ஸ்ரீ விஜயகுமாரைச் சேர்த்து வைப்பது போல் மாற்றிக் கெடுத்திருப்பார்கள்..ம்ம்
அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மாவும் பிடித்த பாடல்..கேட்க மட்டும்..
Gopal.s
15th August 2014, 08:50 PM
வசையில் முக்கிய பதிவை விட்டு விட்டீர்களே venkkiram ? 3 தான் போட்டீர்கள். மொத்தம் 4.
மற்றவர்கள் விமரிசனம் பொத்தாம் பொதுவானது. ஆனால் ,உங்களின் இளையராஜாவையும்,மற்ற இசையமைப்பாளர்களையும் ஒன்றாக வைப்பவர்களின் ரசனை கேள்விக்குரியது என்ற mud -slinging அறிவு பூர்வமானதோ?
இளைய ராஜாவை நீங்கள் வைத்திருக்கும் அதே இடத்தில் வைத்து,எல்லா உளறலையும் சகிக்க வேண்டுமா?நாங்கள் போப் ,சங்கராச்சாரி,சாய்பாபா,மற்றும் எந்த புனித பிம்பத்தையும் விடுவதில்லை. கடவுளை ஒழித்து விட்டு மனித சிலைகள் ஏன்?
உங்களை விட நான் கொடுக்கும் உயரம் அதிகம் இளையராஜாவிற்கு. ஆனால் என்னை முழுக்க எழுத விடுவார்களா பக்த கோடிகள் ?
rajeshkrv
15th August 2014, 09:04 PM
அன்பு நண்பர்களான கோபால் ஜி, எஸ்.வி ஜி, கிருஷ்ணா ஜி மற்றும் அனைவருக்கும்... திரி ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலேயே திருஷ்டி வேண்டுமா ...
மனதை மயக்கும் மதுர கானங்கள் தானே .. எந்த கானம் மனதை மயக்கியதோ அதை பதிவிடலாம் தானே ..
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே
பல விஷயங்கள் பரிமாறும் கலைக்கூடமாகவும் , எதையும் எதிரிப்பார்க்காமல் தரும் மழை மேகமாகவும் இந்த திரி இருக்க வேண்டும் என்று இந்த சிறியேனின் வேண்டுகோள்
கோபால் ஜி .. உங்களது பங்களிப்பு இத்திரிக்கு அவசியம் .. அதே போல் எஸ்.வி கொடுக்கும் படங்கள், கட்டிங் என அதுவும் அருமை .. இருவருமே அவரவர் செய்யும் விஷயங்களில் வல்லவர்களே ..
இருவருமே இத்திரிக்கு வேண்டும் .. இணைந்து இத்திரியின் வெற்றிக்கு உதவ வேண்டுகிறேன்..
நீ என்னடா சொல்வது என்று நினைக்கவேண்டாம்.. இது அடியேனின் வேண்டுகோள்
Gopal.s
15th August 2014, 09:16 PM
அன்பு நண்பர்களான கோபால் ஜி, எஸ்.வி ஜி, கிருஷ்ணா ஜி மற்றும் அனைவருக்கும்... திரி ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலேயே திருஷ்டி வேண்டுமா ...
இது அடியேனின் வேண்டுகோள்
எஸ்வி யை நான் தடுக்கவில்லை. அவர் நோக்கங்களைதான் கேள்வி கேட்கிறேன்.அவர் இங்கு வந்து proxy war நடத்த பார்ப்பதை எதிர்த்தேன்.எல்லோரும் உள்ளே மருகி கொண்டிருக்கும் விஷயத்தை நான் உடைப்பதால், நான் கெட்டவனாகிறேன் . அல்லவா? நான் அவரின் பங்களிப்பை தடுக்கவில்லை.ஆனால் யாருடையது முக்கியம் என்ற கேள்விக்கு ,எல்லோரும் தேவை என்ற ஜனநாயக முறையில் நம்பிக்கை இல்லாதவன். அந்த விதத்தில் நான் ஜார்ஜ் ஆர்வெல் கட்சி.
"All Animals are Equal but some animals are more equal" .
chinnakkannan
15th August 2014, 09:18 PM
சற்றே நெருங்கி உற்றுப்பார்த்தால்
*
என்ன செளக்கியமா
விசாரிக்கும் அலுவலக நட்பு
முகத்தில் சிரிப்பு
முதுகில் கத்தி
*
பிஞ்சு வெண்டை
பையனுக்குக் கொடுங்க
அறிவு விருத்தியாகும் என
சிரித்தபடி முற்றலைத் தள்ளும்
வியாபாரி..
*
இதவாங்கிட்டுப் போ சாமி
கொல்லுன்னு சம்சாரம் சிரிக்கும்
என
மலர்ந்த பூக்களைத்
தள்ளிவிடும் வாடிக்கைப் பூக்காரி..
*
நீயே உலக அழகி
என
இரவில்
மனையிடம் சொல்லும் நான்…
*
எல்லாம் போலி
எல்லாம் வேஷம்
எது நிஜம்..
நீ நிஜம்..அம்மா
உன் வலி நிஜம்..
**
இது பற்பல வருடங்களுக்கு முன் நான் எழுதிப்பார்த்த கவிதை
அன்னையைப் போல தெய்வம் ஒன்றுண்டா..என்ன சில பேருக்கு இருக்கும் போது அருமை தெரியாது..
அன்னையைப் பற்றிப் பல பாடல்கள் வந்தாலும் இந்தப் பாட்டு.. அடிக்கடி சிலோன் ரேடியோவில் கேட்டது தான்.. உருகி நின்று விடுவேன்..பாடகர் திலகம் இசையரசி குரல்..படம் கண்ணா நலமா.படம் பார்த்ததில்லை...
*
இனி பாடல் வரிகள்..
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என் கிறார்கள்
பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று சொல்லத் தெரியவில்லை
மன்னன் சாலமன் யோசித்தான்
ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ … நகல் யாரோ
அசல் யாரோ நகல் யாரோ
அறியேனென்று அதிசயித்த மன்னன் சொன்னான் முடிவில் ஒன்று
முடிவில் ஒன்று
இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே … காவலா, இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்..
காவலன் சென்றான் ..இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான் …..
மன்னா …மன்னா ஆஆ
அம்மா என்றொரு குரலில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும் புன்னகை புரிகின்றாள்
புன்னகை புரிகின்றாள்
பாதி கொடுங்கள் என்றே அவளோ மன்னனைக் கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ மன்னனைத் தடுக்கின்றாள்
இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம் மகனைத் தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென மன்னன் சாலமன் முடிக்கின்றான்
சாலமன் முடிக்கின்றான்
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள் தான் வளர்த்த கண்ணை கண்ணை
சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..
பக்தியிலும் அன்னை தான் முதலில் தெய்வம்
இந்தப் பார் முழுதும் அவள் வளத்த செல்வம் செல்வம்
பதியம் வைத்த மரம் புதிய தோட்டம் தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவு யாவும் அதன் சொந்தமாவ்தில்லை
உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை
பூவும் மஞ்சளுடன் பொங்கும் தேவி அவள் புவனேச்வரி
பூஜை செய்து வரும் மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி
பாசம் பொக்கி வரும் தேவி சக்தி அவள் ஜெகதீஸ்வரி
பார்வை தன்னில் உயர் நீதி சொல்ல வரும் பரமேஸ்வரி
• காவலன் சென்றான் உடை வாளை எடுத்தான் வாளை ஓங்கினான்..சொல்லிவிட்டு அம்மா..என்னும் பாவம்..பாடகர் திலகத்தின் குரல் அப்படியே உருக்கும்..
• நல்லபாட்டு தானே..(ஏற்கெனவே போடவில்லை தானே)
Gopal.s
15th August 2014, 09:29 PM
Superb Chinna Kannan.Thoroughly enjoyed your kavithai. Not the Kanna nalama one.
Gopal.s
15th August 2014, 09:34 PM
ஐயோ வாசு சார், இப்போதுதான் நினைத்தேன். "அங்கே" நுழைய ஹைதராபாத் கேட் தடையிருப்பதால், இங்கு நமது திரியில், முரளி சாருக்கு சப்போர்ட்டாக 'போலி ஆவணம்' பற்றிய பதிவொன்றை இங்கே இடலாம் என்று நினைத்தேன். என் கைகளைக் கட்டிவிட்டீர்களே.
பரவாயில்லை.., தங்களுக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை.
ஹைதராபாத் ,வேறு மாநிலத்துக்கு போய் (தெலுங்கானா) ரொம்ப காலமாகிறது. கேட் நொறுக்கியாயிற்று. எல்லோரும் அங்கே வாருங்கள் தலைவரே.திரியில் விடுபட்டு சதி-பதிகள் இன்ப வாழ்வு வாழ்கிறார்கள்.
rajeshkrv
15th August 2014, 09:56 PM
சி.க அருமை கவிதை அருமை ...உமது தமிழ் நடையே அருமை அருமை..
chinnakkannan
15th August 2014, 09:58 PM
கோபால் சார், ராஜேஷ் ஜி நன்றி..
*
யாருமே பாட்டுப் போட மாட்டேங்கறாங்க. ஒரு வேளை புதுப் படங்களுக்குப் போயிருப்பாங்களோ என்னவோ..
. என்ன செய்றது..ஓ தில்லை அம்பல நடராஜா எனக் கேட்டால் மனதுக்குள் மணி அடிக்கிறது.. கணீர்க் குரல் கட்டழகர் அந்தக்காலப் பெண்களின் கனவுக் காரிகன்(காரிகையின் ஆண்பால் ?!) எம்.கே.டி தான் நினைவுக்கு வருகிறார்..
ஹரி தாஸில் பாடிய கிருஷ்ணா முகுந்தா முராரேயை வச்சுக் கூப்பிடலாமா..
ஹரிதாஸ் மதுரை தேவித் தியேட்டரில் முழு வெர்ஷன் அம்மாவுடன் அரை டிராயர் சிறுவனாகப் பார்த்தது..பின் வயது வந்த பிறகு..கல்லூரிப் பருவத்தில் ஜெகதாவில் ரிலீஸ் செய்ய பார்க்க நினைத்து முடியாமல் போனது..
போய்விட்டு வந்த என் நண்பன் ரகுராமன் சொன்னான்.. நல்லா இருக்குப்பா ஷார்ட் ஃபில்ம் 14 ரீல் தான்.. என்னது ஷார்ட்டா பதினாலு ரீலா எனக் கேட்டால் பின் தான் தெரிந்தது..அவர்களே ஒரு எடிட்டட் வெர்ஷன் போட்டு விட்டார்கள் என்று..
இதில் அந்த கால கட்ட இளைஞர்கள் திடுதிப்பென்று எம்.கேடியின் ஃபோட்டோ போட்டு. திடீர் எம்.கே.டி ரசிகர் மன்ற போர்ட் வைத்திருந்தனர் என அவனே சொன்னான்..
*
ஆல் டைம் பக்தி பொங்க வைக்கும் சாங்க் அல்லவா..
*
கிருஷ்ணா!முகுந்தா!முராரே!
ஜெய கிருஷ்ணாமுகுந்தாமுராரே ஜெய
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
கனகாம்பர தாரீ கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுரமுரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்
கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே முராரே!
*
அந்த முராரேயில முடிக்குமொரு எண்ட் நோட்..அழகு..
Gopal.s
15th August 2014, 10:03 PM
சலில் சௌதரி.
வங்காளத்தை சேர்ந்த சலில் சௌதரி 1923 இல் பிறந்து 1995 இல் மறைந்தார். வளர்ந்தது அஸ்ஸாம் டீ எஸ்டேட் என்பதாலும்,தகப்பனார் நாடக விருப்பம் உள்ளவர் மற்றும் மேற்கத்திய இசையில் நாட்டம் உள்ளவர் என்பதால் சலில் சிறு வயதிலேயே ,இசை,நாடகம்,கம்யுனிசம் இவற்றில் ஈர்க்க பட்டார். 1949 இல் வங்காள படத்திற்கு இசையமைக்க தொடங்கி, ஹிந்திக்கு பிமல் ராய் (என்னுடைய பிடித்தமான இயக்குனர்)அவர்களால் 1953 இல் தோபிகா ஜமீனில் அறிமுகமாகி,மலையாளம் செம்மீன் மூலம் 1964 முதல் இங்கேயும் அவர் கொடி பறக்க ஆரம்பித்தது.
என்னுடைய பிடித்தங்கள் அவர் இசையில்.
மதுமதி, சாயா,ஜூலா,சாந்த் ஔர் சூரஜ்,பூனம் கி ராத்,செம்மீன்,ஆனந்த் ,நெல்லு,ராச லீலா,கோகிலா,அழியாத கோலங்கள்,வஸ்துஹாரா,சாமி விவேகானந்தா .
இவர் இசை திறனுக்கு சான்றுகள்.
மதுமதி - சுஹானா சபர்
https://www.youtube.com/watch?v=aSU74fpWsfQ
செம்மீன் -சாஹரா
https://www.youtube.com/watch?v=9lswDCuLwh8
ராச லீலா -ஆயில்யம் பாடத்து (கிளியே கிளி கிளியே)
https://www.youtube.com/watch?v=TY4lL68vqio
ஆனந்த் -ஜிந்தகி -கை சி ஹாய் பெஹலி
https://www.youtube.com/watch?v=dm0CFYwbngQ
chinnakkannan
15th August 2014, 10:28 PM
ஓ கோபால் சார்.. மதுமதி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல செம்மீன் தோணிக்காரா.. இந்த கிளி யே கிளி கிளியேவும் கேட்டிருக்கிறேன் பிடிக்கும்.. அடுத்த பாட்டைக்கேட்டுச் சொல்கிறேன்
ஆறுபெய்யும் மாறு பெய்யம் ஆறுச்சூடும்.. கிளியே கிளியெ நீலாஞ்சனப் பைங்கிளியே நீ பருவவயல் கூடுதய்யா..நீ கூடவா.. அர்த்தம்புரியாட்டாலும் வெரி நைஸ்.. மிக்க நன்றி வளர தாங்க்ஸானு.. ரொம்ப தாங்க்ஸ் ஹை.. ஆமா மதுமதி மத்தபாட்டும் போடலாமோன்னோ..
vasudevan31355
15th August 2014, 10:53 PM
டியர் ராஜேஷ்ஜி
இன்று இரண்டாம் ஷிப்ட் இப்போதுதான் முடிந்தது. (ஹைய்யா ஜாலி! இன்று விடுமுறைக்கு வேலைக்கு சென்றதால் டபுள் சம்பளம்) வந்தவுடன் வீட்டின் உள்ளே கூட நுழையவில்லை. நேரே சிஸ்டம்தான். நீங்கள் ஆன்லைனில் இருப்பதை முதலில் பார்த்தேன். அப்புறம் உங்கள் பதிவுகள் எத்தனை குறைந்துள்ளன என்று பார்த்தேன்.:) ம் இதானே வேணாம்கிறது என்கிறீர்களா?
சரி! இன்று உங்களுக்கு 'ஆண்டி பெற்ற செல்வத்'திலிருந்து ஒரு பாடல்.
ஜிக்கியம்மா என்னைப் போலே தங்களுக்கும் பிடிக்கும் என்பதால்.
'கண்ணைத் திறந்து பாரடா'
https://www.youtube.com/watch?v=krd6E1GTnjQ&feature=player_detailpage
rajeshkrv
15th August 2014, 10:57 PM
கோபால் ஜி
சலீல் செளத்ரியின் இசை அருமையோ அருமை ..அவுட் ஆப் த வெர்ல்ட்..
https://www.youtube.com/watch?v=sCsthdkR_yM
https://www.youtube.com/watch?v=Mivcj8fyU0o
எனக்கு மிகவும் பிடித்த நீயும் விதவையோ நிலவே
https://www.youtube.com/watch?v=y1iGl0xXPp8
rajeshkrv
15th August 2014, 10:58 PM
வாசு ஜி வாங்கோ வாங்கோ .. நலமா ...
vasudevan31355
15th August 2014, 11:10 PM
நலமே ராஜேஷ்ஜி. நாடலும் அதுவே..
vasudevan31355
15th August 2014, 11:11 PM
இங்கே செம மழை ராஜேஷ்ஜி. இப்பதான் ஆரம்பித்தது. நீங்கள் சூப்பர் இசை மழையில் நனைய வைத்திருக்கிறீர்கள்.
vasudevan31355
15th August 2014, 11:21 PM
http://4.bp.blogspot.com/-TBP0ozjne8Y/TdQPHRjgwCI/AAAAAAAAAP8/zr8v8mbP1rU/s1600/clap-animated-animation-clap-smiley-emoticon-000340-large.gif
ஆஹா! 'திங்கள் மாலை வெண்குடையான்'
அச்சச்சோ! மறந்தே போச்சே! இப்ப ஞாபகம் வந்துடுச்சே! எத்தனை வருஷம் ஆயிடுச்சு?
என்னஜி சர்வசாதரணமா போட்டுட்டீங்க? கையும் ஓடல காலும் ஓடல. அப்படியே நிஜமாவே அதிர்ச்சியில் உறைஞ்சுட்டேன்.
அய்யா! குரலா அது! அப்படியே வெண்ணை தான் ஓடுது அந்தக் காவேரியில்.
ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நாளைக்கு நாள் எப்படி ஓடப் போகுதுன்னு இப்பவே நல்லா புரிஞ்சு போச்சு. நாளைக்கு வேலைக்கு போறச்சே இந்தப் பாட்டைப் போட்டுக் காட்டி எங்க ஆளுங்கள ஒரு வழி பண்ணிட வேண்டியதுதான்.
ராஜேஷ்ஜி! இந்த சலீல என்ன பண்ணாத் தகும்? அப்படியே உருக்கி விடுறாரே மனுஷன்! எந்த வகைப் பாடானாலும். அப்படியே அணுக்களில் இறங்குவது தெரியுது சார்.
vasudevan31355
15th August 2014, 11:30 PM
ராஜேஷ்ஜி
'ஜில ஜில நெண்டு' 'கல்லிலே கலைவண்ணம் கண்டானை' ஞாபகப்படுத்துகிறது. அருமையான பாட்டு. இதான் முதல் தடவை. சலீல் பைத்தியம் வேறு. விடுவேனா? சந்திரகலா கொஞ்சம் வயானதுக்கப்புறம் நடிச்சதோ! கொடுங்கோ... கொடுங்கோ... கத்த கத்தையாய் கொடுங்கோ.. தர்ம பிரபு.:)
vasudevan31355
15th August 2014, 11:46 PM
இவ்வளவு அள்ளித் தரும் ராஜேஷ்ஜிக்கு பதிலுக்கு இதைவிட சூப்பரா ஏதாவது தரணுமே பதிலுக்கு. என்ன தரலாம்?
சரி! யாருக்கும் தெரியாம நான் ஒளிச்சி ஒளிச்சி வச்சிருந்த பாட்டை ஆருயிர் நண்பருக்காக கொடுத்திடுவோம்.
ஜி,
என் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட பாடல்ஜி. வெறித்தனமான பாடல். என் வாழ்க்கையிலேயே நான் அதிக தடவை கேட்ட இந்திப் பாடல் இந்தப் பாடல். இந்தியில் இதற்குதான் முதல் இடம். ஈடு இணை எதுவுமே இல்லாத பாடல். தினமும், இன்றும் கூட நான்கு முறைக்கு மேல் கேட்டேன்.
லதாவின் குரலில் அப்படியே சொக்கிப் போவேன் ஜி. இந்தப் பாடலைப் பற்றி எழுத எனக்கெல்லாம் அருகதையே இல்லை ஜி.
என் உயிரே இந்தப் பாடலில் அடங்கியிருக்கிறது ராஜேஷ்ஜி
'ஓ...சஜ்னா... பர்கா பஹார் ஆயி'
'Parakh' திரைப்படத்தில். சலீலின் கலக்கல் இசையில். சாதனாவின் பூரிக்கும் அழகில். எளிமையான இனிமையில்
இது பாட்டு இல்லேஜி. என் உயிர். என் வேதம். இதன் மூலமான பெங்காலி வெர்ஷனும் அருமை. இந்தப் பாடல் உங்களுக்காக. உங்களுக்காக மட்டுமே. என் உயிரையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். பத்திரம்.
https://www.youtube.com/watch?v=G_KCiPOmNEg&feature=player_detailpage
vasudevan31355
15th August 2014, 11:59 PM
G.N Rajeshji.
rajeshkrv
16th August 2014, 12:43 AM
வாசு ஜி .. ஆஹா ஓ சஜ்னா இனிமை அருமை
சலீல் ஒரு ஜீனியஸ் ..
குட் நைட் .... நாளை சந்திப்போம்
rajaramsgi
16th August 2014, 01:53 AM
என்ன ஒரு அகந்தை இவனுக்கு. இவன் வரதுக்கு முன்னாடி எவனுமே நல்ல படம் எடுக்கலியா? இல்லை உலக அளவில் எல்லா படமும் இவன் re recording க்கு காத்திருக்குதா?பாலசந்தரும்,மணிரத்னமும்,பாரதிராஜாவு ம் சேர்ந்து ஆப்பு வச்சு, தேவாவுக்கு கீழே தள்ளி விட்டும்(92 இலிருந்து)அடங்கலை.
உங்களை விட அதிகம் சாதித்த ஒருவரை,
உங்களை விட உயரத்தில் உள்ள ஒருவரை,
'என்ன அகந்தை இவனுக்கு' என்று
ஏக வசனத்தில் பேசிய உங்களை விட
அவருக்கு அகந்தை கம்மியாகத்தான் இருக்க வேண்டும்
Gopal.s
16th August 2014, 04:30 AM
உங்களை விட அதிகம் சாதித்த ஒருவரை,
உங்களை விட உயரத்தில் உள்ள ஒருவரை,
'என்ன அகந்தை இவனுக்கு' என்று
ஏக வசனத்தில் பேசிய உங்களை விட
அவருக்கு அகந்தை கம்மியாகத்தான் இருக்க வேண்டும்
தமிழ் நாட்டில் பிறந்திருந்தால், பத்திரிகைகள் 40 பக்கத்தில் 39 1/2 பக்கங்கள் சினிமாவிற்கு ஒதுக்கும் பொழுது, சினிமா துறையை தவிர, எந்த துறையிலும் யாருமே சாதித்தவர்கள் இல்லை.ஒப்பு கொள்கிறேன்.
ஏனென்றால் அசோக மித்திரன் என்ற மேதை எழுத்தாளரை உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்?சரத் என்ற தொழிலதிபரை உங்களுக்கு எப்படி தெரியும்?தமிழை காத்து தந்த உ .வே .சா பற்றி ஏதாவது தெரியுமா?குறைந்த பட்சம் ராஜா முன்னோடிகளாய் மதிக்கும் மும்மூர்த்திகளையாவது தெரியுமா? உங்களின் கடந்த கால,நிகழ் கால ,வருங்கால தலைவர்கள் கொட்டகைகளில் உருவாக்க பட்டு கொண்டிருக்கும் போது ?
நான் என்ன சாதித்தேன் என்று கேட்டிருந்தால் அது ஞாயம்.அதை விட்டு ,என்னை விட மற்றவர் அதிகம் சாதிததார் என்று தீர்ப்பு கூறும் உரிமையை நான் உங்களுக்கு தரவில்லை. அத்தனை சாதனையாளர்களும் ,தமிழக தலைப்பு செய்திகளில் இடம் பெரும் சூழலோ,அவர்களை தெரிந்து கொள்ளும் சூழலோ உங்களுக்கு இல்லை.
மேட்டரை பார்ப்பீர்களா அதை விட்டு?அப்படியே பார்த்தாலும், அவர் திரைக்கு பாடல் தந்த நாள் முதல்
நான் ராஜா ரசிகன்.
Gopal.s
16th August 2014, 04:40 AM
ஒளிச்சி ஒளிச்சி வச்சிருந்த பாட்டை ஆருயிர் நண்பருக்காக கொடுத்திடுவோம்.
பாட்டு இல்லேஜி. என் உயிர். என் வேதம். இதன் மூலமான பெங்காலி வெர்ஷனும் அருமை. இந்தப் பாடல் உங்களுக்காக. உங்களுக்காக மட்டுமே. என் உயிரையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். பத்திரம்.
வாசு,
சஜ்னா என் உயிரும் கூட. அதை நீ வைத்திருக்காமல் ,உரியவரிடம்
சேர்ப்பித்ததற்கு நன்றி.
Gopal.s
16th August 2014, 05:14 AM
இந்த திரியில் எனக்கு பிடித்த,கவர்ந்த அம்சமே உற்சாகம்,நட்பான சூழ்நிலை. எந்த நடிகரையோ அல்லது இசையமைப்பாளர்,பாடகரை,மொழியையோ சாராமல் எல்லோரை பற்றியும் பேசும் வாய்ப்பு.
ஆரம்பித்த வாசுவிற்கு முதல் நன்றி.
நிறைய பேர் திரியை ஆரம்பித்து ,ஒரு பக்கத்தில் அம்போ என்று விட்டு விடுவார்கள். அப்படி பண்ணாமல் எல்லோரையும் அரவணைத்து கூட்டி சென்று ,வெற்றிக்காக,பார்வையாளர்களுக்காக,பதிவாளர்களுக் காக இரவு பகல் பாராமல் உழைத்த வாசுவிற்கே இரண்டாம் நன்றியும்.(உன்னை பாராட்டுவது சுய பாராட்டு என்பதால் சந்தடி சாக்கில் இரண்டு முறை)
இந்த திரியின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாஜி ,திரி விசையுறு பந்து போல உயிர்ப்பித்து நின்றதன் தலையாய நாயகன்.நன்றி கிருஷ்ணாஜி.
கார்த்திக்- நான் திரிக்கு வரும் போது ,இவரை,முரளியை மனதில் வைத்தே வந்தேன்.அப்படியே தோளில் கை போட்டு அரவணைக்கும் இதத்தை ஒவ்வொருவருக்கும் தருவார். தென்றலாக,வாடையாக,புயலாக,ஈர காற்றாக என்று இவர் ஏற்காத பணியே திரியில் இல்லை.நான் திரியின் உள்ளே வரும் போதே இவர் இல்லாதது பெரும் குறை.
ராகவேந்தர்- நாங்கள் எல்லோரும் தலைமை பீடமாக மானசீகமாக ஒப்பு கொள்ளும் ஸ்வாமிகள்.அவ்வப்போது மோதினாலும்,என்னுடைய மதிப்பு எக்காலமும் சிதிலமாகாது.உங்களின் பாடல் இல்லாத நாள் வீண் நாளே.
ராஜேஷ்- வெறும் தங்க நகையாக மிளிர்ந்ததை, வைரமாக வந்து அதை வைர நகையாக புது அந்தஸ்து கொடுத்து ,ஜொலிக்க வைத்தவர் நீங்கள்.Hats off . அப்படியே எங்களை addict ஆக்கி, வாசுவின் நட்பை உன் பக்கம் திருப்பி விட்டாய்.(பொறாமை எல்லாம் இல்லேப்பா)
மது- வைரம் பதியும் முன் பட்டை தீட்டி polish கொடுத்த புண்ணியவான். என்ன பாடலுக்கு நாங்கள் திணறினாலும் ,அப்படியே கொண்டு கொட்டும் ,அதிசய பாடல் சுரங்கம் .நிஜமாகவே எங்களை குதுகலத்தில் ஆழ்த்திய பங்களிப்பு.
venkki ram - நீங்கள் எதை சார்ந்திருந்தாலும், நான் உங்கள் கருத்தை சாரா விட்டாலும், உங்களை ,நீங்கள் சொல்லும் முறையை ,வெளியிடும் திறமையை சார்ந்தே இருப்பேன். உங்களின் ஓங்கிய குரலுடன் கூடிய கருத்துக்கள் ,திரியின் உயரத்தை கூட்டவே செய்தது.நன்றி.
சின்ன கண்ணா- நீ என் செல்ல கண்ணன். என்ன ஒரு நகைச்சுவை. non -linear எழுத்து முறை. உன் பணி ,சுவாரஸ்யத்தை,ஆச்சர்யத்தை கூட்டி கொண்டே இருக்கிறது.
எஸ் வீ- உங்களின் அபூர்வ ஆவணங்கள் திரியின் நண்பர்களை அதிசயிக்க வைத்தது. பம்மலார் இல்லாத குறையை ஓரளவு
போக்கினீர்கள். நன்றி.(வாசுவின் வேண்டுகோளை ஏற்று, என்னை வேறிடத்தில் திட்டியதற்கும் சேர்த்தே நன்றி)
முரளி- நான் மதிக்கும் தமிழ் -ஆங்கில எழுத்து சித்தனே?உன் பங்களிப்பு வெகுவாக குறைந்து விட்டது பணி சுமைகளினால்.(moderator பணியும் சேர்த்து).ஆனாலும் அது கூட சுவைதான்.என்னதான் அமிர்தம் என்றாலும் ,அதை பெரிய வாளியில் வைத்து டம்ளர் டம்ளர் ஆக தந்து கொண்டிருந்தால் ,அது பானகமாகி விட வாய்ப்புள்ளதே?அதனால் நீ அபூர்வமாக வருவதே கூட உன் அருமையை இன்னும் உணர்த்துவதாகவே உள்ளது.
சாரதி -எங்கே கலிங்கன் என்று அன்னையின் ஆணை சிவாஜி தேடுவது போல ,எங்கே சாரதி என்று தேடி கொண்டுள்ளோம். உங்களுக்கு நன்றி சொல்லும் அளவு ஒன்றுமே தேறவில்லை சமீப நாட்களில். நன்றியை reserve செய்து வைக்கிறேன்.
முகம் தெரியா நண்பர்களே- இணை-எதிர்-புதிர் கருத்துக்கள் எதுவானாலும் இந்த திரி வரவேற்க காத்துள்ளது. பங்களிப்பு நிகழ்த்தி ,உயரம் கூட்டுங்கள்.மௌன பார்வையாளர்களுக்கும் நன்றி.
உங்கள் அனைவருடனும் உரையாடுவது,நெகிழ்வது, உரிமையாக சண்டை பிடிப்பது,பகிர்வது,எல்லாமே பள்ளி நண்பர்களுடன் உரையாடும் உச்ச பட்ச மகிழ்வுக்கு இணையானது.
madhu
16th August 2014, 05:38 AM
அம்மாடியோ.. கொஞ்சம் தாமதமாய் வந்தாலும் போச்சு... பக்கம் பக்கமாய் போயே போச்... படித்து முடிக்கும் முன் ( அங்கங்கே பதியப்பட்ட பாடல்களைக் கேட்க ஆரம்பிச்சா இன்னும் லேட் ) அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகுதே.. ( ஓ..கொஞ்சம் மாத்திக்குவோம். சின்ன அண்ணாமலை அவர்களிடம் ஒருவர் ஒரு முறை அமரர் கல்கியின் நாவல் நீண்டு கொண்டே போகிறதே என்றபோது அவர் பதிலாக குரங்குக்குத்தான் வால் நீண்டு போகக் கூடாது. மயிலுக்கு தோகை நீண்டால் என்ன என்று கேட்டாராம் )
நம்ம திரி ஒரு மயில் அதனால் தோகை நீஈஈஈஈளலாம்.
செல்லப் பெண் பாடல்கள் சுபர்ப். இன்னும் "அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க" என்று நம்ம சிக்காவுக்காகவே ஒரு பாட்டு உண்டு.
எல்.ஆர். ஈஸ்வரி பற்றிய பதிவுகள் குறைந்து போனதால் அவர் பாடிய "மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ" பாட்டை நண்பர்கள் அலசுமாறு வேண்டிக் கொள்கிறேன். ( அடுத்தடுத்த வரிகளை எழுதாமல் விட்டுவிட்டேன்.. அலசுறவங்க அலசிக்கலாம் )
இன்னும் பார்க்க வேண்டியவை இருக்கு. அப்புறம் வர்ர்ர்ரேன்.
Gopal.s
16th August 2014, 05:48 AM
அம்மாடியோ.. கொஞ்சம் தாமதமாய் வந்தாலும் போச்சு... பக்கம் பக்கமாய் போயே போச்... படித்து முடிக்கும் முன் ( அங்கங்கே பதியப்பட்ட பாடல்களைக் கேட்க ஆரம்பிச்சா இன்னும் லேட் ) அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகுதே.. ( ஓ..கொஞ்சம் மாத்திக்குவோம். சின்ன அண்ணாமலை அவர்களிடம் ஒருவர் ஒரு முறை அமரர் கல்கியின் நாவல் நீண்டு கொண்டே போகிறதே என்றபோது அவர் பதிலாக குரங்குக்குத்தான் வால் நீண்டு போகக் கூடாது. மயிலுக்கு தோகை நீண்டால் என்ன என்று கேட்டாராம் )
நம்ம திரி ஒரு மயில் அதனால் தோகை நீஈஈஈஈளலாம்.
செல்லப் பெண் பாடல்கள் சுபர்ப். இன்னும் "அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க" என்று நம்ம சிக்காவுக்காகவே ஒரு பாட்டு உண்டு.
எல்.ஆர். ஈஸ்வரி பற்றிய பதிவுகள் குறைந்து போனதால் அவர் பாடிய "மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ" பாட்டை நண்பர்கள் அலசுமாறு வேண்டிக் கொள்கிறேன். ( அடுத்தடுத்த வரிகளை எழுதாமல் விட்டுவிட்டேன்.. அலசுறவங்க அலசிக்கலாம் )
இன்னும் பார்க்க வேண்டியவை இருக்கு. அப்புறம் வர்ர்ர்ரேன்.
மது கண்ணா,
சிலதெல்லாம் நீள நீளத்தான் வேலையும் நடக்கும்.சுகமும் கிடைக்கும்.
உனக்கு தெரியாததா?
JamesFague
16th August 2014, 06:27 AM
On the eve of Krishna Janmashtami beautiful song from Vanambadi for the benefit of fans of
Devika
http://youtu.be/v8LjdSLG1zo
vasudevan31355
16th August 2014, 06:58 AM
எல்.ஆர். ஈஸ்வரி பற்றிய பதிவுகள் குறைந்து போனதால் அவர் பாடிய "மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ" பாட்டை நண்பர்கள் அலசுமாறு வேண்டிக் கொள்கிறேன். ( அடுத்தடுத்த வரிகளை எழுதாமல் விட்டுவிட்டேன்.. அலசுறவங்க அலசிக்கலாம் )
இன்னும் பார்க்க வேண்டியவை இருக்கு. அப்புறம் வர்ர்ர்ரேன்.
ரொம்ப கஷ்டமான பாடம் கொடுக்குற வாத்தியார். மார்க்கே எடுக்க முடியாது போல இருக்கே!:)
gkrishna
16th August 2014, 07:07 AM
நம்ம திரி ஒரு மயில் அதனால் தோகை நீஈஈஈஈளலாம்.
செல்லப் பெண் பாடல்கள் சுபர்ப். இன்னும் "அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க" என்று நம்ம சிக்காவுக்காகவே ஒரு பாட்டு உண்டு.
உங்கள் மயில் தொகை உவமை அருமை
செல்ல பெண் 'அம்மா சொன்னது போலவே' ராஜேஸ்வரி (MS ) தானே
மிக அருமையான பாடல் .
இந்த படத்தில் உள்ள இன்னொரு பாடலை முதல் பாகத்தில்
குறிப்பிட்டு உள்ளோம் (கண்ணே கொஞ்சம் பாரு )
இந்த படத்திற்கு இசை யாரு ? v குமார் ஆ அல்லது பாண்டுரங்கன் ஆ
அல்லது வேறு யாருமா ?
rajeshkrv
16th August 2014, 07:14 AM
செல்லப்பெண் படத்திற்கு இசை பி.ஏ.சிதம்பரநாதன்
மலையாள படங்களுக்கு நிறைய இசையமைத்துள்ளார்.
இசையரசியின் குரலில் தூங்கவைக்கும் இரவெல்லாம் பாடல் மிக அருமையாக இருக்கும்
rajeshkrv
16th August 2014, 07:18 AM
கோபால் ஜி ,
அடேயப்பா கொஞ்சம் கொஞ்சமாக தலையை காட்டிவிட்டு இன்று திரியின் அசுர வளர்ச்சியையும் அதன் பங்களிப்பாளர்களையும் பற்றிய உங்கள் பதிவு அருமை அருமை .
ஒவ்வொருவரையும் அழகாக நினைவு கூர்ந்து அருமையாக பாராட்டியுள்ளீர்கள் . குறிப்பாக சின்னக்கண்ணன் செல்ல கண்ணனின் பாராட்டு அற்புதம்..
வாழ்த்துக்கள் ஜி, நீங்கள் சொன்ன அனைவரும் தவிற உங்களுக்கும் அதில் சிறப்பான பங்குண்டு என்பதை நாங்கள் மறக்கவில்லை.
rajeshkrv
16th August 2014, 07:20 AM
கிருஷ்ணா ஜி, கோபால் ஜி நீங்களெல்லாம் பங்கேற்ற நீயா நானா ஒளிபரப்பாகிவிட்டதா?
gkrishna
16th August 2014, 07:21 AM
கிருஷ்ணா சார்
ஹிந்துவில் வந்த ஆயிரத்தில் ஒருவன் - பாடல் பற்றிய பதிவு அருமை .
thanks esvee sir
அப்னி ஆஜாதீ கி ஹம் ஹர் கிஜ் மிட்டா சக்தே நஹீன்
இந்த லீடர் படத்தின் பாடல் பற்றி ஏதாவது மேல் தகவல் உண்டா ?
நௌஷட் இசையில் வெளி வந்த ஒரு நல்ல பாடல்
நான் படித்த ஒரு நல்ல தகவல்
"Apni Azadi Ko Hum Hargiz Mita Sakte Nahin" (English: We Cannot Ever Erase Our Freedom) is a popular song from the 1965 film Leader. The song, written by Shakeel Badayuni, composed by Naushad, and originally sung by Mohammed Rafi, is a patriotic song about freedom and the independence from the British occupation of India.[1][2][3][4]
The song has been covered by many artists worldwide,[5] and reissued, together with the film's soundtrack, in 2004 in digital format through Saregama.[6]
மேலும் சில நல்ல பாடல்கள் இந்த படத்தில்
"Ek Shahenshah Ne Banwa Ke" முஹம்மத் ரபி , லதா மங்கேஷ்கர்
"Dayya Re Dayya" ஆஷா போஸ்லே
"Aaj Hai Pyar Ka Faisla" லதா மங்கேஷ்கர்
https://www.youtube.com/watch?v=Ay_Z-po5DTk
Gopal.s
16th August 2014, 07:21 AM
சின்ன கண்ணா ,
உனக்காக மதுமதி. வாசுவிற்காக ஆனந்த் . சாப்பிடுங்கள்.
கடி கடி மேரே -லதா .
https://www.youtube.com/watch?v=0JRJHtk-ZkI
தில் தடப் - முகேஷ்,லதா. .
https://www.youtube.com/watch?v=o184v83-gkk
சாத் கையோ பாப்பி -மன்னாடே ,லதா.
https://www.youtube.com/watch?v=M0prEueTYTA
ஆஜாரே பர்தேசி - லதா
https://www.youtube.com/watch?v=Mm21SSgUHe8
gkrishna
16th August 2014, 07:24 AM
கிருஷ்ணா ஜி, கோபால் ஜி நீங்களெல்லாம் பங்கேற்ற நீயா நானா ஒளிபரப்பாகிவிட்டதா?
இன்னும் இல்லை என்றே நினைக்கிறன்
இது பற்றி முரளி சார் நடிகர் திலகம் திரியில் ஒரு பதிவு இட்டு உள்ளார்
Gopal.s
16th August 2014, 07:27 AM
ஆனந்த்
மேனே தேரே லியே- முகேஷ்
https://www.youtube.com/watch?v=moKsZOjoohA
கஹீ தூர் ஜபு தின் -முகேஷ்.
https://www.youtube.com/watch?v=Rh9-HvCUd3Q
gkrishna
16th August 2014, 07:31 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/cb/Geetameranaam.jpg/220px-Geetameranaam.jpghttp://www.webmallindia.com/img/film/hindi/geeta_mera_naam_1344063434.jpg
https://www.youtube.com/watch?v=VxAczNAgr6Y
கீதா மேரா நாம் னு படம் நினைவில் உண்டா சார்
சாதனா நடித்து அவரே இயக்கிய படம்
சுனில் தத் ,feroz கான் நடித்து இருப்பார்கள்
'சுனியே Zஅர தேக்ஹியே ந " லதா வின் அருமையான் பாடல்
லக்ஷ்மி காந்த ப்யாரிலால் இசை
Gopal.s
16th August 2014, 07:33 AM
இன்னும் இல்லை என்றே நினைக்கிறன்
இது பற்றி முரளி சார் நடிகர் திலகம் திரியில் ஒரு பதிவு இட்டு உள்ளார்
நான் மானசீகமாக மட்டுமே பங்கு பெற்றேன். என் சார்பில் முரளி,ராகவேந்தர்,சந்திரசேகர்,கிருஷ்ணா பங்கு பெற்றார்கள்.(இந்த நால்வருக்கும் நான் ஒருவன் சமம் என்றோ, அல்லது இந்த நால்வரும் எனக்கு சமம் என்றோ தவறான முடிவுக்கு வர வேண்டாம்)::-d:-d:-d:-d
RAGHAVENDRA
16th August 2014, 07:41 AM
புலவர் பி.ஏ. சிதம்பரநாதன் இயற்றி இசையமைத்து எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடி செல்லப்பெண் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல், அம்மா சொன்னது போலவே ...
இந்த இணைப்பில் கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/c/Chella%20Penn/
RAGHAVENDRA
16th August 2014, 07:48 AM
பொங்கும் பூம்புனல்
நம்ம வாசு சார் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். ஈஸ்வரி சீர்காழி இணையில் பாடல்களைப் பற்றி.. அந்த வரிசையில் இதுவும் ஒன்று... வேகமென்றால் அப்படி ஒரு வேகம் இந்த பாட்டில்... எடுத்தவுடனேயே ஜெட் ஸ்பீட்.... ஆரம்பிக்கும் முன்னே பாடல் முடிந்து விடும் என்கிற அளவிற்கு செம ஸ்பீடான பாடல்..
சுபதினம் படத்தில் சீர்காழி- ஈஸ்வரியின் சூப்பர் கலக்கல் வாய்ஸில் திரை இசைத் திலகம் அவர்களின் படைப்பு..
ஒரு நடைபாதை வாசியின் வாழ்க்கையைப் பற்றிய படம் சுபதினம்... வசனத்திற்காக வயது வந்தவர்களுக்கான படம் என்ற தணிக்கை சான்றிதழ் பெற்ற படம்..
சர்தான் போய்யா.. எங்களுக்குத் தெரியாதா ... பெரிசா சொல்ல வந்திட்டாரு ... என்று நீங்கள் அலுத்துக் கொள்வதற்கு முன் பாட்டுக்கு வழி விட்டு ஐயா.. எஸ்கேப்...
http://www.inbaminge.com/t/s/Subha%20Dhinam/
RAGHAVENDRA
16th August 2014, 07:53 AM
பொங்கும் பூம்புனல்
வேதா அவர்கள் தன்னுடைய தனி பாணியில் இசையமைத்த பாடல்.. வேற்று மொழி மெட்டில்லாமல் சுத்த சுயமான மெட்டில் ஈஸ்வரியின் குரலில் படைத்த அருமையான பாடல்...
கவியரசரை குமுதம் வாரு வாரு என்று வாரிய பாடல்...
உலகம் இவ்வளவு தான் திரைப்படத்தில் இடம் பெற்ற மாம்பழம் வாங்குங்க பாடலைக் கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/u/Ulagum%20Ivvalavudhan/
Gopal.s
16th August 2014, 07:55 AM
Ragavandhar sir,
Both are rare and favourites during my childhood.(pozhuthu vidinja same genre sirippen sirippen, manasirukkanum manasirukkanum)
mambazham vangunga- I remember at the age of 10 ,my senior friends madhu ,mani (from chennai -6 years elder),like a Tamil teacher explained the meaning word by word for three songs in particular- elantha payam, mambazham vangunga,ezhu vayasile).I consider this as a ultimate education in my life.
RAGHAVENDRA
16th August 2014, 07:57 AM
பொங்கும் பூம்புனல்
காலையிலேயே தூங்க வைக்கிறானே என எண்ணாதீர்கள்... நல்ல பாடலாச்சே என இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
பாடகர் திலகம் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இணைந்து பாடி ஹிட்டான பாடல்களில் இதுவும் ஒன்று. எம்.எல்.ஸ்ரீகாந்த் இசையில் தாலாட்டு திரைப்படத்தில் இடம் பெற்ற மல்லிகைப் பூப்போட்டு பாடலைத் தான் இப்போது கேட்க உள்ளீர்கள்..
பாடலுக்கான இணைப்பு
http://www.inbaminge.com/t/t/Thalattu/
பாடல் முடியும் சமயத்தில் ஹம்மிங் மனதை மயக்கி விடும்..
குறிப்பு.. பாடலின் இணைப்பு என்னென்று எந்த தலைப்பில் தரப்பட்டுள்ளது. புதிய தாலாட்டு படப்பாடலுடன் இணைக்கப் பட்டுள்ளது.
rajeshkrv
16th August 2014, 07:59 AM
மதுமதியின் பிச்சுவா பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்,அடேயப்பா அந்த மூங்கில் கம்புகளில் நடனம் என பட்டைய கிளப்பியிருப்பார்கள்
ஒவ்வொரு பாடலுக்கும் எடுத்து கொண்ட நேர்த்தி , காமிரா படம்பிடித்த விதம் என எல்லாமே அழகு
நன்றி கோபால் ஜி ....
RAGHAVENDRA
16th August 2014, 08:01 AM
பொங்கும் பூம்புனல்
பாதையிலே நீ நடந்தால் ஊர் போய் சேரும்
போதையிலே நீ நடந்தால் ஊரே மாறும்..
இசையரசியின் இந்தத் தொகையறாவை ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் ஒலிக்கச் செய்தாலே போதும்.. இந்த குரலே அந்தப் பழக்கத்தை மறக்கடிக்கச் செய்து விடும்.
குடிப்பழக்கத்தை மறக்க வைக்க அருமையான கருத்தைச் சொல்லும் பாடல்..
பெண்ணை வாழ விடுங்கள் திரைப்படத்தில் அருமையான பாடல்
http://www.inbaminge.com/t/p/Pennai%20Vaazha%20Vidungal/
RAGHAVENDRA
16th August 2014, 08:05 AM
பொங்கும் பூம்புனல்
இந்தப் பாட்டைப் போட்டால் வீட்டிலுள்ள பெரியவர்கள் முதல் வேலையாக ரேடியோவை அணைத்து விடுவார்கள்.. சிலர் அதை உடைத்தும் விடுவார்கள்.. இதெல்லாம் என்ன பாட்டுன்னு போடறாங்க... இப்படி அந்தக் காலத்தில் அலுத்துக் கொள்ளாத வீடே இல்லை..
இப்படி விமர்சனத்துக்கு ஆளான இந்தப் பாடல் மனசாட்சி படத்தில் இடம் பெற்ற லவ் பண்ணுங்க சார் பாட்டு தான்..
வேதா அவர்களின் இசையில் படத்தில் நாகேஷ் பாடுவதாக இடம் பெற்றது. துரதிருஷ்டவசமாக இப்போது வந்துள்ள டிவிடியிலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி, இப்பாடல் இடம் பெறவில்லை..
பல்லவி தான் விமர்சனத்துக்குள்ளானதே தவிர பாடலின் கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை.. லவ் என்ற வார்த்தையின் பல்வேறு பரிமாணங்களை மிக அழகாக சொல்லும் பாடல்...
கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/m/Manasaatchi/
rajeshkrv
16th August 2014, 08:05 AM
கங்கை கரைத்தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் பாடலை போட்டு ஜென்மாஷ்டமியை நினைவு செய்து விட்டீர்கள்
இதோ சில கண்ணன் பாடல்கள்
சதி சக்குபாய் கன்னட திரையில் இசையரசியின் அருமையான பாடல்
https://www.youtube.com/watch?v=7_T7AdiAcmA
சர்வமங்களா திரையில் அழகான பாடல்
https://www.youtube.com/watch?v=e2jevp08c6c
ஆதி நாராயணராவ் அவர்களின் இசையில் இசையரசி குரல் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்
https://www.youtube.com/watch?v=E1R_8mXBRh4
கலியுக கண்ணன் திரையில் வாலி ஐயாவின் வரிகள் இசையரசியின் குரலில்.
https://www.youtube.com/watch?v=2u3yasw2Y0I
RAGHAVENDRA
16th August 2014, 08:09 AM
பொங்கும் பூம்புனல்
திரை இசைத் திலகம்-இசையரசி கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் என்றைக்குமே சிரஞ்சீிவியாய் மக்கள் மனதில் நிலைத்து விட்டவை.. இதற்கு இன்னொரு சான்று குலவிளக்கு திரைப்படத்தில் இடம் பெற்ற பனைமரம் தென்னை மரம் வாழை மரம் பாடலாகும். ஒவ்வொரு மரத்தைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் விரிவாக விளக்கும் பாடல்.. மெலடி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தரும் மெட்டு...
இந்த மூன்று மரங்களையும் மக்களிடம் ஒப்பிடும் வரிகளும் இடம் பெற்றுள்ளன
http://www.inbaminge.com/t/k/Kula%20Vilakku/
rajeshkrv
16th August 2014, 08:09 AM
பொங்கும் பூம்புனல்
பாதையிலே நீ நடந்தால் ஊர் போய் சேரும்
போதையிலே நீ நடந்தால் ஊரே மாறும்..
இசையரசியின் இந்தத் தொகையறாவை ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் ஒலிக்கச் செய்தாலே போதும்.. இந்த குரலே அந்தப் பழக்கத்தை மறக்கடிக்கச் செய்து விடும்.
குடிப்பழக்கத்தை மறக்க வைக்க அருமையான கருத்தைச் சொல்லும் பாடல்..
பெண்ணை வாழ விடுங்கள் திரைப்படத்தில் அருமையான பாடல்
http://www.inbaminge.com/t/p/Pennai%20Vaazha%20Vidungal/
அய்யோ முடியல ... இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு , ராகவ் ஜி தூள் .. நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் அதைவிட சூப்பர்
https://www.youtube.com/watch?v=yEpPWFxDRKE
gkrishna
16th August 2014, 08:22 AM
பாட்டு பிருந்தாவனத்துக்கு வருகின்றேன் என்பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்! இசை அரசியின் இனிய குரலில் கண்ணன் பாட்டு
படம்..லட்சுமிகல்யாணம்
பாடியவர்.....சுசீலா
இசை...MSV
பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! - என்
பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்!
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? - என்
கேள்விக்கு பதில் என்ன கேலியோ?
(பிருந்தாவனத்துக்கு)
கீதையில் உன் குரல் கேட்டேனே! - என்
கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!
பாதையில் உன் துணை வரவில்லையே!
பகவான் திருவருள் தரவில்லையே!
(பிருந்தாவனத்துக்கு)
குங்குமம் அணிந்தால் உன் தேவி! - தன்
கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!
சங்கமம் என்பது எனக்கில்லையோ? - அந்த
மங்கல மரபுகள் உனக்கில்லையோ?
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ? - இல்லை
கன்னியர்கள் விடும் கண்ணீரோ?
கண்ணனின் மனமும் கல் மனமோ? - எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ?
(பிருந்தாவனத்துக்கு)
கிருஷ்ணா...கிருஷ்ணா...
கிருஷ்ணா...கிருஷ்ணா...
http://icdn.raaga.com/Catalog/CD/T/T0001668.jpg
https://www.youtube.com/watch?v=T6JLCKmwhbk
rajeshkrv
16th August 2014, 08:26 AM
கிருஷ்ணா ஜி. நெஞ்சை உருக்கும் பாடல் அந்த லெட்சுமி கல்யாண பாடல்
rajeshkrv
16th August 2014, 08:28 AM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/10550927_510938465703043_8969932416382809690_n.jpg
RAGHAVENDRA
16th August 2014, 08:29 AM
பொங்கும் பூம்புனல்
ஒவ்வொரு நாளும் நாம் கண்ணனை நினைத்துக் கொண்டுள்ளோம்.. என்றாலும் இந்த நாளுக்கென்று ஒரு விசேஷம் இருக்கிறதல்லவா.. அதைப் போலத்தான் நம் மனதிற்குகந்த மனிதர்களை நாம் அவ்வப்போது நினைத்துக் கொண்டாலும் நினைத்துக் கொள்ளாவிட்டாலும் பிறந்த நாள் போன்ற சிறப்பான நாட்களில் தவறாமல் நினைவு கூர்வோம்..
இந்த அடிப்படையில் கண்ணனை நினைக்காத நாளில்லையே..
http://www.youtube.com/watch?v=6ynZk2WmDXY
gkrishna
16th August 2014, 08:30 AM
கண்ணனை நினைக்காத நாளில்லையே!
கண்ணதாசன் அவர்கள் கண்ணனை மறப்பதாயில்லை. அற்ப காதல் பாட்டிற்குக் கூட கண்ணன் / ராதையிடம் அழைத்துச் சென்று, நம்மைப் பரவசப் பட வைப்பது கவியரசு அவர்களால் மட்டுமே முடியும்.
கண்ணனை நினைக்காத நாளில்லையே!
காதலில் துடிக்காத நாளில்லையே!
உண்ணும் போதும், உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே!
என்று பல்லவியின்போதே ‘அட!’ போடவைத்து,
கண்ணன் மணிவண்ணன் திருவாய் மொழி
உன்னால் மனம் எங்கும் யமுனா நதி
கண்ணா...உன்னை மறப்பேனோ?
நான் உன்னை மறப்பேனோ?
கேட்கும்போது நம்மை அறியாமல் உருக வைக்கிறார் கவியரசு.
காதல் ஜோடி லக்ஷ்மி, முத்துராமன் அவ்வளவு பாந்தமாயிருக்கிறார்கள் பாட்டில். அதுவும் ‘கண்ணனை’ என்று பல்லவியை மீண்டும் பாடும்போது முத்துராமன் பாவனை இயல்பு + அருமை. ஆனால், பாடலின் பெரும்பகுதி தேங்காய், மனோரமாவுக்குத்தான்.
சுசீலாம்மா, ஐஸ் வாட்டர் குரலோன்(ர்) எஸ்.பி.பி பாடுகையில் வரிக்கு மெருகு கூடுகிறது. எம்.எஸ்.வி இசை - தனியாகச் சொல்ல வேண்டுமா?
ராகவேந்தர் அவர்கள் இந்த பாடலின் இணைப்பை மேலே கொடுத்து உள்ளார்கள்
பாருங்களேன்!
gkrishna
16th August 2014, 08:34 AM
இந்த சீர்வரிசை பாடலை கேட்கும் போது மனதில் எழுந்த கேள்வி
ஆதித்ய சிரிப்பொலி போன்ற நகைசுவை தொலை காட்சிகளில்
தேங்காய் சம்பந்தப்பட்ட நகைச்சுவை நிறைய நான் பார்த்ததாக நினைவில் இல்லை
Gopal.s
16th August 2014, 08:37 AM
அற்புதமான சிவாஜி படங்களில் ஒன்று.வளர்பிறை. படம் நினைவிலே இல்லை. ரொம்ப சின்ன வயசில் பார்த்ததால் நினைவில் இல்லை.
சிவாஜியின் ஊமை நடிப்புக்காவும் ,கே.வீ.மகாதேவனின் இசைக்காகவும் பேச பட்டது.
இந்த படத்தில் இரண்டு பாடல்கள் அருமை.பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை (டி.எம்.எஸ்.), சல சலக்குது காத்து (டி.எம்.எஸ்.-பீ.எஸ்.)
கண்ணதாசன் ,ஆத்திக வாதியாக மாற துவங்கிய தருணம்.எதிலெல்லாம் இறைவனை தேடியலைகிறார் பாருங்கள்???
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே,தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே ,தேங்காயை போலிருப்பான் ஒருவன் ,அவனை தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் துறந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்,அவனை தொடர்ந்து சென்றால் அவனே இறைவன்.
முட்டைக்குள் கோழி வைத்து,கோழிக்குள் முட்டை வைத்து ,வாழைக்கும் கன்று வைப்பான் ஒருவன், அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்
http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Valarpirai.html
Gopal.s
16th August 2014, 08:40 AM
சீர்வரிசை சொர்ணம் கதை,வசனம்,இயக்கம் என்று ஞாபகம். எதோ மாமியார்-மருமகள் தகராறு வைத்து.
ரெண்டு அற்புத பாடல்கள்.
கண்ணனை நினைக்காத நாளில்லையே.
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ...
Richardsof
16th August 2014, 08:45 AM
புகுந்த வீட்டில் இடம் பெற்ற இந்த பாடல் ...
சுசீலாவின் இனிய குரலில் ......
http://youtu.be/FZotFXUdR-s
Gopal.s
16th August 2014, 08:54 AM
கிருஷ்ண ஜெயந்திக்காக ,எஸ்.வீக்கு அனாவசிய வேலை வைக்காமல் நானே இரண்டு பணிகளையும் செய்து விடுகிறேன்.
https://www.youtube.com/watch?v=1r4xuC_9hKo
https://www.youtube.com/watch?v=ppy75ti0WtA
https://www.youtube.com/watch?v=Dzsj5ghFDvU
vasudevan31355
16th August 2014, 08:57 AM
இன்றைய ஸ்பெஷல் (54)
http://i.ytimg.com/vi/27avq1GpIFo/movieposter.jpg
ஒரு அட்டகாசமான கிளப் சாங். கர்ணனின் 'கங்கா' படத்தில். சங்கர் கணேஷ் இரட்டையர்கள் ஹென்றி டேனியல், தாஸ் துணையுடன் புகுந்து விளையாட, ராட்சஸி ரகளை கச்சேரி நடத்துவார். அப்போது மிகவும் ஹிட். கச்சேரி மேடைகளில் கூட ஈஸ்வரி இப்பாடலைப் பாடி நான் கேட்டிருக்கிறேன். ஏனோ தானோ பாடல் போலத் தோன்றும். ஆனால் கில்லியடிக்கும்.
சி.ஐ.டி சகுதலாவின் காபரே. ஓ.ஏ.கே தேவரின் முறைத்த பார்வை, ஜெயசங்கரின் உஷார் பார்வை, அங்கங்கே நிற்கும் கொள்ளைக் காரர்களின் கழுகுப் பார்வை, சுழன்றடிக்கும் கர்ணனின் காமெரா, அதை விட கண்ணதாசனின் சிறப்பான போதை வரிகள்.
'மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு'
அட்டகாசமான வரிகள். சிச்சுவேஷனுக்குத் தகுந்தாற் மாதிரி.
'வேகம் வர மோதிப் பார்க்கலாம்'
கோபாலுக்காகவே எழுதப்பட்ட வரிகள் போன்று.:)
'பாவை எனை வஞ்சி என்று சொன்ன சொல்லை
அனுபவம் காட்டட்டும்'
இதற்கு அர்த்தம் எப்படிக் கூற முடியும்?
'சங்கு பிளந்து அங்கம் வடித்து
ஜாடைகளில் மேடை போட்டது'
அடேயப்பா! உச்சம் தொட்ட வரிகள்.
'கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்'
அருமை! ஆட்டம் முடிந்தவுடன் அம்மாவைக் கேட்கணுமாம். 'கோட்டையும், கோபுரமும் என்னய்யா பெரிய அழகு! என்னை விடவா?'
'நாளை வரை வாழப் போகும் வீரன்
என்னைத் திருமணம் செய்யட்டும்'
'செத்துப் போகும் வீரனுக்கல்லா நான். நாளை வரை வாழக் கூடிய வீரனாக இருக்கணும் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள'
'ரகளை' ராட்சஸி
பொறக்கணும்பா! இன்னொருத்தி பொறக்கணும். நெத்தியில் அடித்த மாதிரி வார்த்தைகள் வந்து விழும். அதுவும் 'பதம் பதம் இது பரம பதம்'
இருக்கிறதே. அருமையிலும் அருமை. திரும்பத் திரும்ப அதையே கற்கத் துடிக்கும் மனசு. 'பதம்' முடிந்தவுடன் பாம்பு சீறுவது போல் ஒரு 'ஸ்' சத்தம் வரும் பாருங்கள்!
'தேடுங்கள் சிவந்த கண்ணோடு' முடித்துவிட்டு ஒரு 'யா' அப்படியே வெட்டுமய்யா நம்மளை. கூச்ச நாச்சம், சபை நடுக்கம் எதுவும் இருக்காது. அழுத்தம் திருத்தமாக கருத்துக்கள் நம் நெஞ்சில் ஊன்றப்பட்டு விடும்.
'ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்ன ஹோய்' திடீர்க் கலக்கல்.
என்ன பாடகி! என்ன பாடகி! ஆர்ப்பாட்டத்துக்கு இந்த அரக்கியைத் தவிர வேறு யார்? கண்ணியத்துக்கு 'அவர்' என்றால் கலாட்டாவுக்கு 'இவர'ல்லவோ!
உலகம் உள்ளமட்டும் வாழட்டும் இந்த 'கலாட்டா கழுகு'. (மது அண்ணாவும், கார்த்திக் சாரும் உசுபபேத்திட்டாங்க)
இனி பாடலின் முழு வரிகள்.
http://i1.ytimg.com/vi/fTNjlfjmy3w/sddefault.jpg
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு.... யா
கட்டிப் பிடித்தால் முத்தம் கொடுத்தால்
காதலிலும் போதை ஏறலாம்
கொட்டிக் கொடுத்தால் கொஞ்சி அணைத்தால்
வேகம் வர மோதிப் பார்க்கலாம்
கட்டிப் பிடித்தால் முத்தம் கொடுத்தால்
காதலிலும் போதை ஏறலாம்
கொட்டிக் கொடுத்தால் கொஞ்சி அணைத்தால்
வேகம் வர மோதிப் பார்க்கலாம்
பாவை எனை வஞ்சி என்று சொன்ன சொல்லை
அனுபவம் காட்டட்டும்
ஸ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு.... யா
சங்கு பிளந்து அங்கம் வடித்து
ஜாடைகளில் மேடை போட்டது
செண்டு நடுவில் வண்டு அமர்ந்து
ஆடைகளை மூடி வைத்தது
மாது என்னை பூவை என்று
சொன்ன சொல்லை
மதுவுடன் பாருங்கள் (மது அண்ணாவுடனா!)
ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்ன ஹோய்
ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு யா
கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்.
கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்.
நாளை வரை வாழப் போகும் வீரன்
என்னைத் திருமணம் செய்யட்டும்
ஸ் ஹா ஸ் ஹா ஹா ஹா ஹா
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு
இந்த ஒரு பாட்டு போதுமய்யா வாழ்நாள் மூச்சூடிற்கும்.
https://www.youtube.com/watch?v=fTNjlfjmy3w&feature=player_detailpage
Gopal.s
16th August 2014, 09:02 AM
பெண்ணை வாழ விடுங்கள் படத்தில்தானே சமையலுக்கும் மையலுக்கும்? காலங்கள் உனக்காக ,நினைவு படுத்தியதற்கு நன்றி.ஆனால் இந்த படத்தின் highlight பாடல் அழகிலே கனி ரசம்.
Gopal.s
16th August 2014, 09:05 AM
வாசு,
வழக்கம் போலவே வித்தியாச பதிவு. காலம் வெல்லும்,கங்கா -கர்ணனின் அற்புதங்கள். நீ சொன்ன பாடல் நன்றாக படமாக்க பட்ட ஒன்று.
என்னா உழைப்பு!! மெனக்கெடல் !!!
vasudevan31355
16th August 2014, 09:13 AM
பெண்ணை வாழ விடுங்கள் படத்தில்தானே சமையலுக்கும் மையலுக்கும்? காலங்கள் உனக்காக ,நினைவு படுத்தியதற்கு நன்றி.ஆனால் இந்த படத்தின் highlight பாடல் அழகிலே கனி ரசம்.
அதிலேயேதான். வித்தியாசமான அற்புதம்.
https://www.youtube.com/watch?v=8rE0PoitDX0&feature=player_detailpage
Richardsof
16th August 2014, 09:34 AM
http://i62.tinypic.com/2cpwe90.jpg
http://youtu.be/fDJLRRgvNJk (http://youtu.be/fDJLRRgvNJk)
vasudevan31355
16th August 2014, 09:59 AM
ராகவேந்திரன் சார்,
பொங்கும் பூம்புனல் அபூர்வ புதையல்களை சேகரிக்கும் கிடங்காகி வருகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.
'மல்லிகைப் பூப்போட்டு' அருமை. நம்ம ராஜ பாண்டியன் நடித்தது. இந்த தாலாட்டில் 'விளக்கிலாமல் கணக்கெழுதி' என்ற உயிரை உருக்கும் சௌந்தரராஜன் பாடல் ஒன்று அருமை.
மது அண்ணா! வீடியோ இருந்தால் ப்ளீஸ்.
rajeshkrv
16th August 2014, 10:20 AM
தெலுங்கு தேவதா தமிழில் தெய்வப்பிறவி
இசை சங்கர் கணேஷ்
பாலாவும் இசையரசியும் ... அருமை இனிமை
https://www.youtube.com/watch?v=oVvjf6VRwmU
vasudevan31355
16th August 2014, 10:21 AM
கோ,
எனக்கு 'ஆனந்த'மான
https://www.youtube.com/watch?v=3vgDb4TQneA&feature=player_detailpage
'ஜிந்தகி... கைசே ஹே பெஹலி ஹாயே'
ரொம்பப் பிடிக்கும் கோ. படமாக்கப்பட்ட விதம் அற்புதம்.
'நீலவானம்' படத்தில் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் 'வணக்கம்' போடும் முன்னால் அந்த ஒரு சில வினாடிகளில் யாருமேயில்லா அந்த ரன்வேயில் காமெரா டிராலியில் சட்டென்று பின்னோக்கி வேகமாக நகர, நமக்கு முதுகைக் காட்டியவாறு (ஒருதரம் மட்டும் நம் பக்கம் திரும்புவார்) நம்ம தலைவர் விட்டேர்த்தியாக பொம்மையைத் தூக்கிப் போட்டு பிடித்து நடந்து கொண்டே நம் கண்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக லாங் ஷாட்டில் எறும்பு போல மறைவாரே.
அந்தக் காட்சி ஞாபகம் வந்து விட்டது. அப்படியே நம் இதயத்தின் மேல் இமயமலையை தூக்கி வைத்தது போல கனக்கும்.
Richardsof
16th August 2014, 10:21 AM
TO DAY 16.8.2014
http://i61.tinypic.com/2qusmz5.png
ACTRESS KANCHANA'S BIRTH DAY .
http://youtu.be/YEHvmgoYrOo
rajeshkrv
16th August 2014, 10:25 AM
வாசு ஜி காலை வணக்கங்கள்
எஸ்.வி ஜி, ஆஷா பாரிக் ஆஹா எனக்கு மிகவும் பிடித்த நடிகை .. என்ன டான்ஸ் ... ஆஹ்ஹா ஆ ஜா ... தூள் கிளப்புவார் ஷம்மியுடன்
mr_karthik
16th August 2014, 10:51 AM
நான் மானசீகமாக மட்டுமே பங்கு பெற்றேன். என் சார்பில் முரளி,ராகவேந்தர்,சந்திரசேகர்,கிருஷ்ணா பங்கு பெற்றார்கள்.(இந்த நால்வருக்கும் நான் ஒருவன் சமம் என்றோ, அல்லது இந்த நால்வரும் எனக்கு சமம் என்றோ தவறான முடிவுக்கு வர வேண்டாம்)::-d:-d:-d:-d
டியர் கோபால் சார்,
1962 தேர்தல் தி.மு.க.சந்தித்த இரண்டாவது தேர்தல். (57 தேர்தலில் தி.மு.க.வில் 15 பேர் வென்றிருக்க), 62 தேர்தலில் 50 எம்.எல்.ஏக்கள் வென்றனர். ஆனாலும் அக்கட்சியின் தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் தோற்று விட்டார். அப்போது அவர் விட்ட ஸ்டேட்மென்ட் "நான் தோற்றாலும் என் தம்பிகள் 50 பேர் உருவத்தில் சட்டமன்றம் செல்வேன்".
உங்களுக்கு பிடிக்காத உதாரணம்தான். என்ன செய்வது, வேறெதுவும் எனக்கு சட்டென்று தோணலையே...
chinnakkannan
16th August 2014, 10:52 AM
ஹாய் ஆல்.. குட்மார்னிங்க்..
கோபால் சார் மிக்க் நன்றி பராட்டுக்கும் அண்ட் மதுமதி பாடல்களுக்கும்.. வீட்டுக்காரி வெளியில் போவதற்கு ரெடியாகி வெய்ட்டிங்க்..கொஞ்சம் கோபம் கூட..பின்ன.. பிச்சுவாவும் தில் தட்ப்பையும் ஒரு சின்னப் பையன் வை.க.வாங்காமல் பாத்துக் கொண்டிருந்தால் எந்த வீட்டு வைஜயந்திக்கும் கோபம் வரத்தான் வரும்.
அதற்குள் இவ்ளோ பாட்டா..மதுண்ணா, கிருஷ்ணா ஜி ராகவேந்தர் சார், எஸ்வி சார், ராஜேஷ்ஜி என.. எல்லாருக்கும் நன்றி..வாசு சாருக்கு ஒரு ஸ்பெஷ்ல் தாங்க்ஸ் உயிர்ப்பாட்டுக்கு..
அச்சா து ஹம் சல்தே ஹோ நல்ல பாட்டு.. ஜீவன் கே பகியா, ஓ தேரேகஸம் லீ லீ ஒலிக்கிறதே..அப்புறம் சஞ்சீவ் குமாரோட படத்துல இன்னொரு பாட்டு.. என்னவாக்கும்
கண்ணா பிறந்த் நாளா.. எங்களுக்கு அடுத்தமாதம் ( நாங்கள் ஆழ்வார்கடியான் சார்ந்தவர்கள்) இருப்பினும் எல்லா பாடல்களும் அழகு..குறிப்பாய்..பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்..என்ன உருக்கும் கானம்…
ம்ம்
எனக்கு என்னவாம் நினைவு.. கருணை பொங்கும் கண்கள் கொண்ட பெரியாழ்வாரும் கொழுக் மொழுக் ஆண்டாளும் திரையில் பாடுவது தான்..
ஹரி ஹரி கோகுல ரமணா உந்த்ன் திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா..
ம்ம் ஆற்றங்கரை தனிலே முன்னாமொரு நாள் எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி ஊர் முரசம் சாற்றுவேனென்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்..
ஆஹா பாரதி..
அப்புறம் குதித்துக் குதித்து ஆடத்தெரியாமல் பாடும் ராதிகா
கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம்..
லத்தும் நினைவுக்கு வருகிறார்..
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்..
இன்றைய வெடி.. திருமங்கை ஆழ்வார் எபிசோட்.திருமால் பெருமையில் சிவகுமாரின் மகாலட்சுமி ஜோடியாக வருபவர் யார்.. ஹையா பத்த வெச்சாச்சு..
ம்ம் சரி..ரெண்டு ம்க்கும் ஒலி கேட்டு விட்டது.. போய் வீக்லி பர்ச்சேஸ் பால் மோர் வாங்கப் போகவேண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கு.. போய்ட்ட்டு வர்றேன்..
அன்புடன்
சி.க.
rajeshkrv
16th August 2014, 10:58 AM
ஹாய் ஆல்.. குட்மார்னிங்க்..
இன்றைய வெடி.. திருமங்கை ஆழ்வார் எபிசோட்.திருமால் பெருமையில் சிவகுமாரின் மகாலட்சுமி ஜோடியாக வருபவர் யார்.. ஹையா பத்த வெச்சாச்சு..
ம்ம் சரி..ரெண்டு ம்க்கும் ஒலி கேட்டு விட்டது.. போய் வீக்லி பர்ச்சேஸ் பால் மோர் வாங்கப் போகவேண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கு.. போய்ட்ட்டு வர்றேன்..
அன்புடன்
சி.க.
சி.க அது எம்.பானுமதி .. அருமையான நடிகை . பல படங்களிலும் பல நல்ல நாடகங்களிலும் நடித்தவர்
நீலகிரி எக்ஸ்பிரஸ் திரையில் ஸ்ரீவித்யாவுடன் ஆடுவாரே அவரே தான்
https://www.youtube.com/watch?v=O3HbgyxHcW4
mr_karthik
16th August 2014, 11:04 AM
'நீலவானம்' படத்தில் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் 'வணக்கம்' போடும் முன்னால் அந்த ஒரு சில வினாடிகளில் யாருமேயில்லா அந்த ரன்வேயில் காமெரா டிராலியில் சட்டென்று பின்னோக்கி வேகமாக நகர, நமக்கு முதுகைக் காட்டியவாறு (ஒருதரம் மட்டும் நம் பக்கம் திரும்புவார்) நம்ம தலைவர் விட்டேர்த்தியாக பொம்மையைத் தூக்கிப் போட்டு பிடித்து நடந்து கொண்டே நம் கண்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக லாங் ஷாட்டில் எறும்பு போல மறைவாரே.
அந்தக் காட்சி ஞாபகம் வந்து விட்டது. அப்படியே நம் இதயத்தின் மேல் இமயமலையை தூக்கி வைத்தது போல கனக்கும்.
டியர் வாசு சார்,
ட்ராலி ஷாட்டில் அவ்வளவு வேகமாக ட்ராலியை நகர்த்த முடியாது. அது திறந்த ஜீப்பின் பின்பக்கம் கேமராவை பொருத்தி வேகமாக ஓடவிட்டு எடுத்த ஷாட்.
கலங்க வைக்கும் கவிதை நயமான முடிவு...
vasudevan31355
16th August 2014, 11:09 AM
டியர் வாசு சார்,
ட்ராலி ஷாட்டில் அவ்வளவு வேகமாக ட்ராலியை நகர்த்த முடியாது. அது திறந்த ஜீப்பின் பின்பக்கம் கேமராவை பொருத்தி வேகமாக ஓடவிட்டு எடுத்த ஷாட்.
கலங்க வைக்கும் கவிதை நயமான முடிவு...
super karthik sir.
vasudevan31355
16th August 2014, 11:18 AM
வணக்கம் ராஜேஷ் சார்.
உங்களுக்கும் ஆஷாவைப் பிடிக்குமா? அப்போ இதுதான் சரி! ஆஷா பண்ணியதிலேயே இது தூள் அமர்க்களம்.
'காரவான்' படத்தில் அந்த ஆஷா பாடிக் கலக்க, இந்த ஆஷா அற்புதமான மூவ்களில் ஆடி நம் நெஞ்சைக் கலக்க, (ஆஷா இன்னா ஒரு துள்ளல்!)
'Daiya Yeh Main Kahan Phasi'
செம அட்டகாசம் போங்கஜி.
https://www.youtube.com/watch?v=S1W076F6QMM&feature=player_detailpage
mr_karthik
16th August 2014, 11:21 AM
சி.க அது எம்.பானுமதி .. அருமையான நடிகை . பல படங்களிலும் பல நல்ல நாடகங்களிலும் நடித்தவர்
நீலகிரி எக்ஸ்பிரஸ் திரையில் ஸ்ரீவித்யாவுடன் ஆடுவாரே அவரே தான்.
அட நீங்க என்ன ராஜேஷ் சார், இவ்வளவு வெகுளியாக இருக்கீங்க.
சி.க. சரியான எமகாதகன். எல்லாம் தெரிந்துகொண்டே தெரியாதவர் போல கேட்கிறார். நீங்களும் மெனக்கெட்டு விலக்கிக்கொண்டு இருக்கிறீர்களே...
அவருக்கு, தில்லானா மோகனாம்பாள் நர்ஸைத் தெரியாதா?.
தெய்வமகனில் 'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' பாடலில் 'ஆடை கொஞ்சம் அசைந்தா... மீனா' என்றதும் உருகித்திரும்புவாரே, டைட் ஜீன்சும் பனியனும் அணிந்து, அவரைத்தெரியாதா?.
ராமன் எத்தனை ராமனடியில் நடிகர்திலகத்தின் வளர்ப்பு மகளாக வருவாரே அவரை சி.க.வுக்கு தெரியாதா?.
எங்கிருந்தோ வந்தாளில் நடிகர்திலகத்தின் தங்கையாக வருவாரே ('பக்கத்து வீட்டு சுகுமார் யாரைப்பார்க்க வந்தான், சொல்லு') அவரைத் தெரியாதா?.
காதல் ஜோதியில் 'உம்மேலே கொள்ளை ஆசை' பாடலுக்கு அட்டகாசமாக ஆடுவரே அவரை சி.க.வுக்கு தெரியாதா?...
சும்மா ஆட்டம் காட்டுறாரு. அவ்வளவுதான்...
vasudevan31355
16th August 2014, 11:25 AM
கார்த்திக் சார்,
உங்க போஸ்ட்டோட எண்ணிக்கையை பார்த்து நோட் பண்ணி வச்சுக்கோங்க. இதுவரை 2429 பதிவுகள் போட்டிருக்கீங்க. நாளைக்கு அது 2000 பதிவா உயர்ந்திடும் பாருங்க. :) :)
rajeshkrv
16th August 2014, 11:29 AM
அட நீங்க என்ன ராஜேஷ் சார், இவ்வளவு வெகுளியாக இருக்கீங்க.
சி.க. சரியான எமகாதகன். எல்லாம் தெரிந்துகொண்டே தெரியாதவர் போல கேட்கிறார். நீங்களும் மெனக்கெட்டு விலக்கிக்கொண்டு இருக்கிறீர்களே...
அவருக்கு, தில்லானா மோகனாம்பாள் நர்ஸைத் தெரியாதா?.
தெய்வமகனில் 'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' பாடலில் 'ஆடை கொஞ்சம் அசைந்தா... மீனா' என்றதும் உருகித்திரும்புவாரே, டைட் ஜீன்சும் பனியனும் அணிந்து, அவரைத்தெரியாதா?.
ராமன் எத்தனை ராமனடியில் நடிகர்திலகத்தின் வளர்ப்பு மகளாக வருவாரே அவரை சி.க.வுக்கு தெரியாதா?.
எங்கிருந்தோ வந்தாளில் நடிகர்திலகத்தின் தங்கையாக வருவாரே ('பக்கத்து வீட்டு சுகுமார் யாரைப்பார்க்க வந்தான், சொல்லு') அவரைத் தெரியாதா?.
காதல் ஜோதியில் 'உம்மேலே கொள்ளை ஆசை' பாடலுக்கு அட்டகாசமாக ஆடுவரே அவரை சி.க.வுக்கு தெரியாதா?...
சும்மா ஆட்டம் காட்டுறாரு. அவ்வளவுதான்...
ஓ இப்படி ஒன்னு இருக்கா .. இதப்பாருய்யா நான் இப்படி வெள்ளந்தியா இருந்துட்டேனே
rajeshkrv
16th August 2014, 11:30 AM
வாசு ஜி
ஆஷா பாட்டு சூப்பர்
vasudevan31355
16th August 2014, 11:42 AM
சரி! எப்படியும் சி.க.வந்து பானுமதி.எம்.பாட்டு ஒண்ணு போடச் சொல்லுவாரு. அவரு ஆசையை நாம் ஏன் கெடுப்பானேன்?
'டைகர் தாத்தாச்சாரி'யில் நம்ம சூலமங்கலமே மியூசிக் போட்டு கலக்குச்சே! (கல்யாணம் ஒரு விழா) பானுமதியும், சுகுமாரியும் 'ஏழுமலை வாசா வெங்கடேசா' என்று பக்தி சிரத்தையுடன் மேஜருடன் இணைந்து பாடும் பாடல்.
சி.கவுக்கு பக்திப் பாட்டு மட்டும்தான் பிடிக்குமாம்.:):)
https://www.youtube.com/watch?v=8CQHkTBjVyg&feature=player_detailpage
rajeshkrv
16th August 2014, 11:45 AM
வாசு ஜி,
டைகர் தாத்தாச்சரி பாடலுக்கு நன்றி ...
எனக்கு பிடித்த எம்.பானுமதி பாடல்
சங்கம் வளர்த்த தமிழ்
https://www.youtube.com/watch?v=2f9PSyqZ9ds
Gopal.s
16th August 2014, 11:46 AM
K Balachander bereaved
Son of K Balachander passes away
Aug 15, 2014
Son of legendary director K Balachander, Kailasam breathed his last today. He was 53. Kailasam was recently admitted in Apollo Hospitals, Chennai following multiple illnesses. He is survived by his wife Geetha, a daughter named Vilasini and son, Vishnu Bala.
The son of the legend was also heading his own production house, Min Bimbangal, which produces several television programs.
Nadigarthilagam Thread member convey their deepest condolences to director K Balachander and his family.
vasudevan31355
16th August 2014, 11:54 AM
நடிகர் திலகத்தின் சிவாஜி நாடக மன்றத்தில் முக்கியப் பங்கு வைத்த நடிகை எம்.பானுமதி. இவர்களைப் பற்றிய முழு விவரங்களை நடிகர் திலகம் திரியில் பதித்திருக்கிறேன். இப்போது ஒன்னும் தெரியாத நம்ம 'சின்ன'ப் பாப்பாவுக்காக.
நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற நாடகங்களான
ஜஹாங்கீர்
நீதியின் நிழல்
களம் கண்ட கவிஞன்
வேங்கையின் மைந்தன்
வியட்நாம் வீடு
அத்தனையிலும் பங்கு கொண்ட கொடுத்து வைத்த நடிகை.
சிவக்குமாருடன் நாடகத்தில்
http://www.thehindu.com/multimedia/dynamic/01439/26frBanuma_thi_4_j_1439127g.jpg
அகத்தியரில்
http://www.thehindu.com/multimedia/dynamic/01439/26frBanuma_thi_1_j_1439124g.jpg
vasudevan31355
16th August 2014, 11:57 AM
//சங்கம் வளர்த்த தமிழ்//
சங்கம் வளர்த்த தமிழ்
ராஜேஷ்ஜி காத்த தமிழ்
இசையரசி குரல் மூலம் எங்கும், என்றும் வெல்லும்.
rajeshkrv
16th August 2014, 12:01 PM
//சங்கம் வளர்த்த தமிழ்//
சங்கம் வளர்த்த தமிழ்
ராஜேஷ்ஜி காத்த தமிழ்
இசையரசி குரல் மூலம் எங்கும், என்றும் வெல்லும்.
செவ்வரி ஓடிய கண்களிரண்டினில் சேலொடு வேலாட .. அடேயப்பா இந்த வரிகளெல்லாம் தெள்ளத்தெளிவாக தெளிந்த நீராக தமிழுக்கே உரிய அழகு வந்து பாய்கிறது
Gopal.s
16th August 2014, 12:02 PM
Kailasam was my good friend during my College(B.Tech) days. I have been a steadfast fan of Sri.K.Balachandar since my school days (Infact I distinctly remember that my last brother was born the day we returned from his first movie Neerkumizhi.(6/1/1966 in Neyveli Amaravathy).I met balachandar on three occasions and been to his house in Warren Road once. Kailasam and I shared lot in common on aesthetics. His sister Pushpa studied M.Sc (Bio-Chemistry) in my campass. We knew eachother then but bond became stronger when our children shared the same school. His cousin J.K.B.Ashok Kumar was my Good Pal in Trichy.Our thread friend Mr.Sivan is closely related to J.K.B.Ashok Kumar.
I Condole and mourn my Friend's untimely demise and My deepest condolences to All Family members.
I remember a Zen story. A hermit was summoned by a king to bless him with few Good verses. Hermit told him that you will die,your son will die and his son also will die.Enraged king ordered to imprison the hermit. After awhile he got cool and went and met him in cell requesting him to take back and give few good words as blessings. The saint answered that this is the best blessing one can think of and asked him to think if it is happening in reverse order.
K.Balachandar Sir,We ardent fans are behind you and let god give you enough strength to get over this rude shock.
mr_karthik
16th August 2014, 12:04 PM
கார்த்திக் சார்,
உங்க போஸ்ட்டோட எண்ணிக்கையை பார்த்து நோட் பண்ணி வச்சுக்கோங்க. இதுவரை 2429 பதிவுகள் போட்டிருக்கீங்க. நாளைக்கு அது 2000 பதிவா உயர்ந்திடும் பாருங்க. :) :)
வாசு சார்,
நான் ஏற்கெனவே இரண்டு முறை 2,000-த்தை கடந்து மீண்டும் 1700 மற்றும் 1800 என்று இறங்கியவன். நான் மொத்தம் பதித்தவை 3,000-க்கும் மேல். நிறையப்பதிவுகள் மாயம். அதனால் பதிவுகள் எண்ணிக்கை பற்றி கவலை கொள்வதில்லை...
vasudevan31355
16th August 2014, 12:04 PM
கோ,
'ஆனந்த்' படத்தின் 'ஜிந்தகி' பாட்டைக் கேட்டுவிட்டு அப்படியே அதன் தொடர்ச்சியாக இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இனம் புரியா இன்பத்தை உணரலாம். டியூன்களின் ஒற்றுமைகளையும் சில இடங்களில் பரிபூரணமாக உணரலாம். 'சோட்டி சி பாத்' படத்தில் காலத்தில் அழிக்க முடியாத பாடல்.
http://i1306.photobucket.com/albums/s570/zyx55e/5_zps9fcac3c8.jpg
வித்யா சின்ஹா பக்கத்து ஊர் பெண் போல எளிமை. சலீல். சொல்லவும் வேண்டுமோ!
'na jaane kyon hota hai yeh zindagi ke saath'
https://www.youtube.com/watch?v=3h1Vc_ur0Dg&feature=player_detailpage
rajeshkrv
16th August 2014, 12:05 PM
முகனூலில் எம்.பானுமதி, எஸ்.ஆர் .சிவகாமி போன்ற நல்ல பாத்திரங்கள் செய்தவர்களை பற்றி நான் எழுதியது இதோ
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/p180x540/10299932_488289221301301_2661178661736555243_n.jpg
https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/488289221301301/?type=1&relevant_count=1
Gopal.s
16th August 2014, 12:05 PM
Just finished discussion about Neelavanam .The connected Script writer K.Balachander in mourning.
vasudevan31355
16th August 2014, 12:07 PM
வாசு சார்,
நான் ஏற்கெனவே இரண்டு முறை 2,000-த்தை கடந்து மீண்டும் 1700 மற்றும் 1800 என்று இறங்கியவன். நான் மொத்தம் பதித்தவை 3,000-க்கும் மேல். நிறையப்பதிவுகள் மாயம். அதனால் பதிவுகள் எண்ணிக்கை பற்றி கவலை கொள்வதில்லை...
தில்லுமுல்லு தில்லுமுல்லு:)
உள்ளமெல்லாம் கல்லுமுள்ளு
1000 நாடகம் 1000 வேஷங்கள்.
vasudevan31355
16th August 2014, 12:10 PM
முகனூலில் எம்.பானுமதி, எஸ்.ஆர் .சிவகாமி போன்ற நல்ல பாத்திரங்கள் செய்தவர்களை பற்றி நான் எழுதியது இதோ
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/p180x540/10299932_488289221301301_2661178661736555243_n.jpg
]
http://newparent.com/wp-content/uploads/2008/10/surprised-baby.jpg
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.