View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
Pages :
1
2
3
4
5
6
7
8
[
9]
10
11
12
13
14
15
16
17
chinnakkannan
7th September 2014, 05:50 PM
//உங்கள் ஜொள்ளை நிறுத்த' ரொம்ப ரசித்தேன்.// வாசு சார் :sad:
ஜொள்ளெனச் சொல்வது யாதெனின் யாதொன்றும்
வன்மை இலாத செயல்
என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்.. :)
vasudevan31355
7th September 2014, 05:55 PM
சி.க.சார்,
பதிவுகளுக்கான பாராட்டுதல்களுக்கு நன்றி!
'அவளே என் காதலி' லிரிக்ஸ் தந்ததற்கு நன்றி ஏற்கனவே பாடல் பதிவிட்டிருந்தாலும்.
'கல்யாண ராமனுக்கும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜெய், லட்சுமி செம ஜோடி.
வலையில் மாட்டிய வாணிஸ்ரீ அருமை. நன்றி! சி.க.சார்.
vasudevan31355
7th September 2014, 05:57 PM
சி.க சார்,
நெசம்மா உங்களுக்கு வாணிஸ்ரீ எம்ஜிஆர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் தெரியாதா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?
http://i1.ytimg.com/vi/UbxEeGWQhoM/sddefault.jpg
vasudevan31355
7th September 2014, 06:14 PM
சி.க சார்,
அதே மேட்டா ரெங்ரூட்டா. வயசாயிடுத்தோன்னோ...
http://1.bp.blogspot.com/_vJf4GU6InG0/TMOLiBHPUxI/AAAAAAAABFA/27-iPZGRdyQ/s400/Role06.jpg
chinnakkannan
7th September 2014, 06:25 PM
//சி.க.சார்,
பதிவுகளுக்கான பாராட்டுதல்களுக்கு நன்றி!
'அவளே என் காதலி' லிரிக்ஸ் தந்ததற்கு நன்றி ஏற்கனவே பாடல் பதிவிட்டிருந்தாலும்.
'கல்யாண ராமனுக்கும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜெய், லட்சுமி செம ஜோடி.
வலையில் மாட்டிய வாணிஸ்ரீ அருமை. நன்றி! சி.க.சார்.// இதுல ஏதோ பொடி இருக்கா :) நினைவுக்கு வந்த ஜோக்..
“இன் டர் வியுவில எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டாங்க”
“அவ்வளவு சிம்ப்பிளாவா கேட்டாங்க..”
“ஆமா அதான் ஏதோ பொடி இருக்கும்னு ஆறு கால்னு சொல்லிட்டேன்!”
//நெசம்மா உங்களுக்கு வாணிஸ்ரீ எம்ஜிஆர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் தெரியாதா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?// நெசம்மாவே தெரியலைங்க..இந்த நீராழி மண்டபத்தில் வீடியோ முன்னாலேயே இங்க வந்திருந்தாலும் நான் பார்க்கலை.. நெஜம்மாவே நிறைய வீடியோக்கள் பார்க்கணும்.. பெண்டிங்க் ஒர்க்ஸ் நிறைய இருக்கு :)
//அதே மேட்டா ரெங்ரூட்டா. வயசாயிடுத்தோன்னோ// ஹப்பாடி.. இப்பத்தான் இது எங்க வாசு சார் :)
chinnakkannan
7th September 2014, 06:26 PM
இருந்தாலும் கொஞ்சம் வயசான படங்களைப் பதிவிடும் போது சொல்லிட்டுச் செய்ங்க வாசு சார்..பாப்பக்கு பயம்மா இருக்கு :) (எனக்குத் தான்)
chinnakkannan
7th September 2014, 06:30 PM
அவளே என் காதலியைப் பத்தியும் எழுதிட்டீங்களா வாசுசார்..தெரியாதே.. ஹப்பாடி மூணு பாட்டுக்கு ஒரு பாட்டு தேறிடுச்சு..
chinnakkannan
7th September 2014, 06:31 PM
காதல் படுத்தும் பாடு வில் தான் வாணிஸ்ரீயின் முதல் படம் என்று போட்டிருந்தார்கள்..அவருக்கு ராஜஸ்ரீ ரெகமண்ட் செய்தாராம்..உண்மையா.
mr_karthik
7th September 2014, 06:38 PM
கார்த்திக் சார்.. 134ம் பக்கத்தில் வந்திருக்கிறது.. நானும் பாராட்டியிருந்தேன்..ஆனால் மறந்து போய்விட்டேன்.. வயசாறதோல்லியோ..பங்குனி வந்தா இருபத்து நாலாய்டுச்சு. :)
என்னது?. வர்ர பங்குனியோட உங்க மகனுக்கு 24 வயசாகுதா?. அடுத்த வருஷமே பிள்ளையாண்டானுக்கு ஒரு கால்கட்டுப்போட்டு, அடுத்த வருஷம் பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஓய்...
vasudevan31355
7th September 2014, 06:53 PM
திரு.எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த 'நான் ஆணையிட்டால்' திரைப்படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். மெல்லிசை மன்னரும், சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். அருமையான பாடல்.
இப்பாடலை படத்தில் பார்த்ததாக நினைவில்லை. படத்தில் இப்பாடல் உண்டா?
எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் ஹம்மிங் குரல் தந்தாரா? ஆச்சரியமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படி ஒத்துக் கொண்டார்?
ஒருவேளை இப்பாடல் படத்தின் ரிலீஸ் சமயத்தில் இருந்து பின் தூக்கப்பட்டதா?
இப்பாடலின் ஷூட்டிங் நடந்ததா?
மேலதிக விவரங்களை வினோத் சாரும், கார்த்திக் சாரும் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
http://i.ytimg.com/vi/MgJPv59KO94/hqdefault.jpg
இனி பாடலின் வரிகள்.
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV: ...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே
MSV:...ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன் கதை படித்தேன்
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்.....
பாலும் புது தேனும் பனி போல் என் மேலே
படர்ந்தோட இடம் தேட அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹோ
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
MSV:...ஒஹொஹொஹொ
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹோ
ஆஹா......
சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
அணைத்தாய் அதில் நிலைத்தாய் சுவை அறிந்தாய் உடல் சிலிர்த்தேன்
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்
தேடும் வரை நானும் சிலை போல் நின்றேனே
சிலை பேச இசை பாட கதை போல் அதில் சேர்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
http://www.youtube.com/watch?v=4fYR-_jlZFo&feature=player_detailpage
Richardsof
7th September 2014, 06:55 PM
http://i62.tinypic.com/11uzxwm.jpg
http://youtu.be/fXdO8iCu6t4
JamesFague
7th September 2014, 07:30 PM
Enjoy the song from Sunayna from the one & only the great Dr Yesudoss. Honey soaked voice.
http://youtu.be/iiE_r0pjoec
JamesFague
7th September 2014, 07:36 PM
Enjoy one more song from the Movie Sajan Bina Suhagan sang by the one & only Dr Yesudoss. God's gift to the music industry. Honey sokaed voice. Great song.
http://youtu.be/zupNCGk__iQ
JamesFague
7th September 2014, 07:43 PM
Enjoy the classical beauty from the movie Chashm-e-buddoor. Mesmerising voice of one & only Dr Yesudoss. What a melody.
http://youtu.be/btEihqzggYw
mr_karthik
7th September 2014, 07:44 PM
'வைகை கரையினில்' பாடலுக்கு வாசு சாரின் பாராட்டுக்கு மிக்க நன்றி. உடனடியாக வீடியோவைத் தந்து பார்க்காதோரை பார்க்க வைத்த மது சார் அவர்களுக்கு மிக்க நன்றி.
வாசு சார்,
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே பாடல் நான் ஆணையிட்டால் படத்தில் நான் பார்க்கவில்லை. படம் வெளியானபோதே இல்லைஎன்று அப்போது பார்த்தவர்கள் சொன்னார்கள். எப்போது எந்த நிலையில் கழற்றி விடப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் வானொலியில் படத்தின் பெயரைச்சொல்லி ஒலிபரப்புவார்கள்.
இதுபோல வானொலியில் மட்டும் ஒலித்த, படத்தில் ஒளிந்துகொண்ட மேலும் சில பாடல்கள்...
கண்களினால் காண்பதெல்லாம் (நாடோடி)
பாடினார் கவிஞர் பாடினார் (நிச்சய தாம்பூலம்)
சின்னஞ்சிறு வீடு இது சிங்கார வீடு ( பணமா பாசமா)
தென்றல் வரும் சேதி வரும் (பாலும் பழமும்)
மலர்களே நாதஸ்வரங்கள் (கி.போ.ரயில்)
புத்தபுது காலை (அலைகள் ஓய்வதில்லை)
குழந்தையும் தெய்வமும் படத்தில் 'நான் நன்றி சொல்வேன்' பாடலில் எம்.எஸ்.வி. ஹம்மிங் கேட்கும்போது, 'கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே' பாடல் நினைவுக்கு வரும்.
பல்லவியின் முதல்வரியைக் கேட்கும்போது சென்சாரில் பாடல் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது...
vasudevan31355
7th September 2014, 07:55 PM
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் பாராட்டிற்கு நன்றி!
இழுக்க இழுக்க பாடல் அபூர்வமான ஒன்று. அதை நமது திரிக்கு அளித்து ஆனந்தப்பட வைத்து விட்டீர்கள். 'என்னைப் போல் ஒருவன்' படத்தில் இந்தப் பாடல் இல்லை. நடிகர் திலகம் ஹிப்பி வேடம் புனைந்திருக்கும் போது உஷா நந்தினியுடன் இப்பாடல் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படித்தானே!
அருமையான பாடல்.
vasudevan31355
7th September 2014, 08:05 PM
நன்றி கார்த்திக் சார் தங்கள் விளக்கத்திற்கு.
எனக்குத் தெரிந்த இன்னும் சில பாடல்கள் படத்தில் இடம் பெறாமல் வானொலியில் மட்டுமே கேட்டவை. நண்பர்கள் தொடருவார்களாக.
ஆழக் கடலில் தேடிய முத்து ..... சட்டம் என் கையில்
சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்.... அதே கண்கள்
தாழம்பூவே தங்க நிலாவே...... ரத்தத் திலகம்
அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன ........ வசந்த மாளிகை
vasudevan31355
7th September 2014, 08:11 PM
பாக்கியராஜின் சின்ன வீடு படத்தில் 'ஜாமம் ஆகிப் போச்சு என் மாமோ மாமோய்' என்று ஒரு பாடல்.
இப்பாடல் படத்தில் உண்டா இல்லையா என்று தெரியவில்லை.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Kvhy8MZl__g
vasudevan31355
7th September 2014, 09:04 PM
'ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி'
பாடல் 'பூவரசன்' படத்தில் இடம் பெற்றதா?
http://shakthi.fm/ta/album/show/621738e4
chinnakkannan
7th September 2014, 09:57 PM
//கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே// ஓ எனக்குப் பிடித்த பாடல் நன்றி வாசு சார்..எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்வி வாய்ஸ்.. பொருந்தியுமிருக்கும்..
நான் பார்க்க நினைத்து படத்தில் இல்லாத பாடல் எது தெரியுமா..விக் விக் விக்.. மகாராஜன் உலகை ஆளுவான் இந்த மகாராணி அவனைஆளுவாள்...
chinnakkannan
7th September 2014, 10:01 PM
அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன ...// இது அந்த மலைப்பகுதி வாழ் மக்களுடன் இருக்கும் போது இந்தப் பாட்டு இருந்திருக்கும் என நினைக்கிறேன்..சரியா..
பாடினார் கவிஞர் பாடினார், தென்றல் வரும் சேதிவரும் பாட்டெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் தாங்க்ஸ் டு கார்த்திக் சார்..
chinnakkannan
7th September 2014, 10:38 PM
ஹப்பாடி.. அஞ்சு பாட்டும் இப்போது தான் பார்த்து முடிச்சேன்..
கண்கள் இரண்டும் விடிவிளக்காக – நல்லபாட்டு அண்ட் டான்ஸ்..விஷீவலில் இளமை.
நீராழி மண்டபத்தில் கொஞ்சம் வானத்தில் பறந்தாலும் நன்றாக இருந்தது..
வைகைப் பாட்டு தான் கொஞ்சம் சோகமாக இருந்தது..இன்னொரு தடவை கேட்டுப் பார்க்க வேண்டும்..
சாமி சத்தியமாக அவளே என் காதலி விஷூவல் இப்படி இருக்குமென்று நினைக்கவில்லை.. இதைப் பற்றி எழுதியதாக வேறு வாசு சார் எழுதியிருந்தார்.. என்னை ப் பார்க்கவொண்ணாமல் தடுக்கவைத்தது எதுவாக இருக்கும்..
வானம் இங்கே மண்ணில் வந்தது..அதுவாசல் தேடி வாவா என்றது – கேட்ட பாடல் தான்.. விஷீவல் நன்றாக இருந்தது..
கண்கள் இரண்டும் விடிவிளக்காக கொடுத்த எஸ்.வி சார், நீராழி மண்டபத்திலும் வைகைப்பாட்டும். அவளே என் காதலியையும் கொடுத்த மதுண்ணா. வைகைப் பாட்டுப் பற்றி நன்றாக எழுதியிருந்த் கார்த்திக் சார் வானம் இங்கே மண்ணில் வந்தது பாடலை வழங்கிய வாசு சார் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி..
rajeshkrv
7th September 2014, 10:50 PM
ஒரிஜினல் சிவரஞ்சனி மிகப்பிரமாதமான படம்
அதையும் அதன் இசையயும் எப்படி சொதப்ப வேண்டும் என்று ஸ்ரீபிரியாவிடமும் சங்கர் கணேஷிடமும் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
ரமேஷ் நாயுடு உருகி உருகி போட்ட மெட்டுக்கள் ஆஹா ஜோருமீதுன்னாவோ தும்மெதா, நவமி நாட்டி வெண்ணெல நீவு தசமி நாட்டி (ஆஹா இசையரசியும் பாலுவும் இசைத்த காதல் காவியப்பாடல்)
http://www.youtube.com/watch?v=0-IYBCkQG6o
http://www.youtube.com/watch?v=lxrBUz7uSw4
தெலுங்கு ஒரிஜினலில் உள்ள உணர்ச்சிகரமான கதையமைப்போ நடிப்போ இசையோ தமிழில் இல்லவே இல்லை .. அதனால் தான் படம் தொபுக்கடீர் என ஊத்திக்கொண்டது. ஸ்ரீபிரியா நடிப்பார் தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனாலும் தெலுங்கு மலை என்றால் தமிழ் சிவரஞ்சனி மடுவிற்கும் கீழே
rajeshkrv
7th September 2014, 11:01 PM
Navami naati in Malayalam KJY With ISaiyarasi
navami_naalin.mp3 (http://www.4shared.com/mp3/yB7A61Ntce/navami_naalin.html)
Gopal.s
8th September 2014, 06:04 AM
எம்.எஸ்.வியின் புத்தம் புது பழுசுகள்.
Rare &Unique ones .
https://www.youtube.com/watch?v=JVfuAws-lpY
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம்
தேவமாதர் கூட்டம் காம தேவன் ஆடம்
ஆடும்போது நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்
Gopal.s
8th September 2014, 06:07 AM
எம்.எஸ்.வியின் புத்தம் புது பழுசுகள்.-2
https://www.youtube.com/watch?v=bXBgDtu5_AY
Gopal.s
8th September 2014, 06:08 AM
I will write an exclusive article on M.S.V.
vasudevan31355
8th September 2014, 07:49 AM
இன்றைய ஸ்பெஷல் (71)
படம்: எங்க வீட்டு பெண்
http://www.inbaminge.com/t/e/Enga%20Veettu%20Penn/folder.jpg
நடிகர்கள்: ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, நாகேஷ், தங்கவேலு, வசந்தா, 'ஞான ஒளி' நிர்மலா, மனோரமா, மாதவி
கதை: சக்ரபாணி
வசனம்: ச.அய்யாப் பிள்ளை
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்கள்: கண்ணதாசன், ஆலங்குடி சோமு
தயாரிப்பு: நாகிரெட்டி, சக்ரபாணி
இயக்கம்: சாணக்யா
பிரம்மாண்டமாக செலவு செய்து பல படங்களைத் தந்த ஏ.வி. எம்.நிறுவனம் செலவே செய்யாமல் 'சம்சாரம் அது மின்சாரம்' படம் எடுத்தது கல்லாவை நிரப்பியது போல அதிக பொருட்செலவில் பல படங்களை எடுத்த விஜயா வாகினி நிறுவனம் அப்போதைய துண்டு துக்கடா நடிகர்களை வைத்து 'எங்க வீட்டு பெண்' படத்தைத் தயாரித்து வெற்றி கண்டது.
1965 இல் தீபாவளித் திருநாளன்று வெளியான விஜயா கம்பைன்ஸ் தயாரித்த 'எங்க வீட்டு பெண்' திரைப்படத்திலிருந்து 'தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்' என்ற ஒரு அருமையான மென்மையான காதல் பாடல். தென்றல் உடலைத் தழுவும் சுகம் போல மனதுக்கு சுகம், இதம் தரும் பூ போன்ற பாடல் இது.
http://i.ytimg.com/vi/4Gz7wNu0dJo/hqdefault.jpg
ஏ.வி.எம்.ராஜனும், விஜயநிர்மலாவும் இணைந்து பாடும் மிக அருமையான காதல் பாடல். (மிக அபூர்வமான ஜோடி இது என்பதும் தனி சிறப்பு) இருவருமே மிக இளமையாக காட்சி தருகிறார்கள். முதல் சரணம் ராஜன் வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் சகிதம் புடவையுடன் மணப்பெண் போல விஜயநிர்மலாவுடன் வருவது 'பூவும் பொட்டும்' படத்தின் 'நாதஸ்வர ஓசையிலே' பாடலை நினைவு படுத்துகிறது. இரண்டாவது சரணத்தில் கோட் சூட் அணிந்த நடிப்புச் சுடரையும், நவநாகரீகமான சேலை உடுத்திய நிர்மலாவையும் காண கொள்ளை அழகு.
பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் படுபாந்தம். அதுவும் சுசீலா அம்மா
'தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம்'
என்று பாடுகையில் தெய்வாம்சம் அவர் குரலில் குடி கொண்டிருப்பதைக் காணலாம். கண்ணதாசனின் அழகழகான தமிழ் வரிகள். கேட்க, கேட்கஅவ்வளவு சுகம். 'திரை இசைத் திலகம்' மிக அமைதியாக, ஆழமாக டியூன் தந்து நம்மை மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கிறார்.
பாடல் சற்று பெரிய பாடல்தான். மாலையும், இரவும் சந்திக்கும் நேரத்தில் அமைதியான சிச்சுவேஷனில் இப்பாடலைக் கேளுங்கள். அப்படியே மேகங்களூடே சேர்ந்து நீங்களும் வானில் தவழ்வீர்கள். அமைதியாக நம் நெஞ்சை ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் பாடல்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/kar.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/kar.jpg.html)
இது மட்டுமலாமல் மிக அற்புதமான பாடல்களை இந்த 'எங்க வீட்டுப் பெண்' நமக்குத் தந்து நம்மை மகழ்வு கொள்ளச் செய்கிறாள்.
1. டைட்டில் சாங்கான
'இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கு சொந்தமடா'
சீர்காழியின் சிருங்காரங்களில் ஒன்று.
2. பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும்
'சிரிப்பு பாதி... அழுகை பாதி... சேர்ந்ததல்லவோ மனித ஜாதி'
3. பாடகர் திலகம், இசையரசி பட்டை கிளப்பும்
'கால்களே நில்லுங்கள்... கண்களே சொல்லுங்கள்'
4. சுசீலா குழுவினருடன் இணைந்து பாடும் தீபத் திருவிழாப் மங்கலப் பாடல்
'கார்த்திகை விளக்கு திரு கார்த்திகை விளக்கு'
என்று என்றும் சூப்பர் ஹிட்டாய் நம் மனத்தைக் கொள்ளை கொண்ட பாடல்கள்.
இப்போது நம் பாடலுக்கு வந்து விடுவோம்.
http://static.gaana.com/images/albums/55/18255/crop_175x175_18255.jpg
இனி பாடலின் முழு வரிகள்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும்
அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும்
மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும்
அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும்
குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்
அந்த குலத்தினிலே திருமகளின் துணை இருக்கும்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
பொட்டு மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து
அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டு வைத்து
பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து
பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து
அதில் பருவத்தையும் உருவத்தையும் சுற்றி வைத்து
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு
என்னை நாயகியாய்க் கொள்ள வந்த இறைவனுக்கு
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
http://www.youtube.com/watch?v=4Gz7wNu0dJo&feature=player_detailpage
Gopal.s
8th September 2014, 08:07 AM
சின்ன கண்ணன் போல மூணு பக்கம் முன்னிருப்பதை கூட பார்க்காமல்,காந்தியடிகள் செத்துட்டாராமே என்ற ரீதியில் வர முடியாததால் ,முந்தினதை படித்தேன்.
எல்லாமே வழக்கம் போல full form .வாசுதான் கொஞ்சம் பிஸி போல.
கார்த்திக்- உங்களுக்கு...
நான் 70 க்கு பிறகு நல்ல பாடல்களே வரவில்லை என்று சொன்னது போல ஏதோ சில பாடல்களை குறிப்பிட்டு ,பார்த்தியா...பார்த்தியா ரீதியில் சில வரிகள்.
தெளிவு படுத்தி விடுகிறேன்.M .S .V -T.K .R best composers in india ,all time best என்றெல்லாம் மற்ற திரியிலும் வாதாடும் என்னை எம்.எஸ்.வீ எதிரி போல சித்தரிக்க வேண்டாம். எம்.எஸ் .வீ யை தூக்கி பிடிக்க பலர். டி.கே .ஆர் என்ற மேதை, அவர் சாதனைகள் மறக்க,மறுக்க பட்டதால் ,அவருக்காக,ஆதாரங்களுடனே வாதாடினேன்.
சில மிகைகள் இருந்திருக்கலாம். ஒன்றதை ஓங்கி சொல்ல ,மற்றதை குறைக்கும் வழக்கமான பாணியே அன்றி, எம்.எஸ்.வீ க்கு நான் எதிர் கட்சியல்ல.
என் ஒரே கேள்வி.... ஆலயமாகும் மங்கை மனது, நல்ல பாடல்,நல்ல படமாக்கம்,புதுமையான காட்சியமைப்பு. ஆனால் சராசரி நல்ல பாடல்,1971 இல் வந்தது.
ஆனால் இதே ராகம் சார்ந்து 1965 இல் ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் என்ற படத்தில், இருவர் இணைப்பிசையில் வந்த காதல் நிலவே என்ற பாடல் ஒரு composition marvel .அதை ஒப்பிடும் போது ,ஆலயமாகும், ஒரு பலவீன நிழலே.
நான் சொல்ல வருவது புரிந்ததா?(உங்களுக்கு புரியாததா?அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாத து அனைத்தும் உணர்ந்தவராயிற்றே தாங்கள்?)
Gopal.s
8th September 2014, 08:08 AM
vasu, deivam malarodu, cute song. Thanks.
Richardsof
8th September 2014, 08:32 AM
வாசு சார்
அருமையான பாடல் -அடிக்கடி முணு முணுக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று .நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த பாடலை பார்த்ததில் எல்லையில்லா ஆனந்தம் .நன்றி .
Richardsof
8th September 2014, 08:35 AM
http://i62.tinypic.com/2s60bgm.jpg
http://youtu.be/oUrnn-lPcqM
vasudevan31355
8th September 2014, 08:49 AM
கோ,
வாங்க. எப்படி இருக்கீங்க? வியாபாரத் தொல்லைகளெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துதா? கலை களை கட்டுது. பிஸி இல்ல கோ. போட்டுக்கிட்டுதானே இருக்கேன். ஸ்பெஷலுக்கு தனி கேர் எடுத்துகிறதாலே அதுக்கே ரொம்ப டைம் ஆயிடுது.
என்னது காந்தியடிகள் செத்துட்டாரா? இது எப்போ?
Richardsof
8th September 2014, 09:02 AM
MELLISAI MANNAR - KANNADASAN - TMS- SUSEELA & MAKKAL THILAGAM - JAYA- SUPER COMBINATION HIT SONG.
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளைபுது
பூப் போல் பூப் போல் தொட்டு
தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தான் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறப்பாய்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கோ
மின்னும் கை வளைமிதக்கும்
பெண்களை அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு
http://youtu.be/_RdGKzMihhQ
vasudevan31355
8th September 2014, 09:07 AM
எஸ்வி சார்,
நன்றி! இந்தப் பாடல் தங்களுக்கு மிகப் பிடிக்கும் என்று தெரியும். நாமும் போனில் இப்பாடலைப் பற்றி ஒருமுறை பேசியுள்ளோம்.
'குமரிப் பெண்' ஆவணம் அசத்தல். எனக்கு ரொம்பப் பிடித்த ஜாலியான ஒரு படம்.
பாட்டுக்கள் அருமை.
ரவி வழக்கம் போல ரகளைதான்.
http://i1.ytimg.com/vi/L_t8ON6U4sQ/maxresdefault.jpg
கியூட் மேடம். திருஷ்டி படும் அழகு.
http://images.mavshack.com/PicturePublishing/IND-DVD-09-116--KUMARI_PENN--S_65e0d2be-fb59-421d-84df-ef77fdb23b8a.jpg
நாகேஷின் நகைச்சுவை தனி சுவை
https://i.ytimg.com/vi/6YJBW2HlKNY/0.jpg
வருஷத்தைப் பாரு ஈஸ்வரி ஈர்ப்பு
https://i.ytimg.com/vi/BkOgesr7AC0/0.jpg
நடந்தது என்னவென்று நீயே சொல்லு. பேக் புரஜெக்ஷன் சைக்கிள் ஷாட்ஸ்.
http://i.ytimg.com/vi/0MelToooF2s/0.jpg
நட்சத்திரப் பட்டாளம்
https://i.ytimg.com/vi/dta_rNZ3wQE/0.jpg
https://i.ytimg.com/vi/l5lrR0SbU2Q/0.jpg
http://i.ytimg.com/vi/oUrnn-lPcqM/hqdefault.jpg
குணச்சித்திர நடிப்பில் ரங்காராவ் கலக்கல்.
http://i1.ytimg.com/vi/gozJDiJRF3g/sddefault.jpg
வில்லன் ஜாபுக்கு நம்ம விஸ்வம்
http://i1.ytimg.com/vi/xwiiCyOFLNU/sddefault.jpg
vasudevan31355
8th September 2014, 09:20 AM
எஸ்வி சார்,
எவர்க்ரீன் பாடல் 'சின்னவளை முகம் சிவந்தவளை' க்கு நன்றி!
rajeshkrv
8th September 2014, 09:55 AM
வாசு ஜி
வாங்கோ வாங்கோ
தெய்வம் மலரோடு பாடல் அருமை அற்புதம்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இது தான் விஜய நிர்மலாவின் முதல் படம்
vasudevan31355
8th September 2014, 10:01 AM
நன்றி! ஆஹா! ராஜேஷ்ஜி! நீண்ட நாட்களானது போல் இருக்கிறது தங்களை சந்தித்து. நலமாய் இருக்கிறீர்களா?
'நட்சத்திரம்' பற்றிய தங்கள் கருத்துக்கள் அத்தனையும் நிஜம். ஸ்ரீப்ரியா சுரத்தே இல்லாமல் சுவாரஸ்யமில்லாமல் செய்திருப்பார். அலுப்பூட்டும் காட்சிகள் நிறைய. நடிகர் திலகம் ஒரு 5 நிமிடம் வந்தாரோ நாங்கள் பிழைத்தோம்.
சிவரஞ்சனி ஒரு அற்புதம்.
Richardsof
8th September 2014, 10:01 AM
http://i62.tinypic.com/2rcoajs.jpg
http://youtu.be/jav0YuCceQQ
vasudevan31355
8th September 2014, 10:04 AM
http://qa-temp.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Sivaranjani%20(1978)/posters/Sivaranjani%20(1978)1.jpg
vasudevan31355
8th September 2014, 10:06 AM
http://i.imgur.com/I8dVY.jpg
rajeshkrv
8th September 2014, 10:07 AM
ஆம் வாசு ஜி. நீண்ட நாட்களாயிற்று நலம் தானே....
சிவரஞ்சனி அருமை அற்புதம்
vasudevan31355
8th September 2014, 10:17 AM
http://www.pinkvilla.com/files/imagecache/ContentPreview/1972%2005fILMFARE.jpg
vasudevan31355
8th September 2014, 10:22 AM
Old film fare magazine Covers
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/1953%2011%20FILMFARE.jpg
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/1962%2009%20FILMFARE.jpg
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/1963%2010%20FILMFARE.jpg
http://www.pinkvilla.com/files/images/1967%2009%20FILMFARE.jpg
http://www.pinkvilla.com/files/images/1970%2011%20FILMFARE%202.jpg
http://www.pinkvilla.com/files/images/1971%2007%20FILMFARE.jpg
http://www.pinkvilla.com/files/images/1971%2008%20FILMFARE.jpg
http://www.pinkvilla.com/files/images/1972%2009%20STARDUST.JPG
http://www.pinkvilla.com/files/images/1974%2009%20Filmfare.jpg
http://www.pinkvilla.com/files/images/1980%20FILMFARE.jpg
chinnakkannan
8th September 2014, 10:27 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ராஜேஷ் நட்சத்திரம் பாடலுக்கு தாங்க்ஸ்.. ஆனால் இன்னும் பார்க்கவில்லை..
வாசு சார்..எங்க வீட்டுப் பெண் சிரிப்பு பாதிஅழுகை பாதி., கால்களே நில்லுங்கள் எல்லாம் பிடிக்கும்..இந்தப் பாட்டு கேட்காத ஒன்று..
எஸ்.வி சார்..சின்னவளை எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று தாங்க்ஸ்
கோபால் சார்..எம்.ஏஸ்.வியின் பு.பு பழசு இனிதான் கேட்க வேண்டும்..கேட்டுப் பார்த்துச் சொல்கிறேன்..
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாகத்தூங்கு..கனவினில் நானே மறுபடி வருவேன். நல்ல பாட்டு...
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.. இனி கொஞ்சம் பின்னூட்டம் இடமட்டும் வருவேன்..அதுவும் கொஞ்சம் இடைவெளிவிட்டு என்று சொல்லி (யார்ப்பா அது ஷாம்பெய்ன் உடைக்கறது) விடை பெறுவது..உங்கள் சி.க..:)
//சின்ன கண்ணன் போல மூணு பக்கம் முன்னிருப்பதை கூட பார்க்காமல்,காந்தியடிகள் செத்துட்டாராமே என்ற ரீதியில்
வர முடியாததால் ,முந்தினதை படித்தேன்.// கோபால் சார்... பட் ஒஙக் நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு! :)
vasudevan31355
8th September 2014, 10:27 AM
இந்த படத்தில் நடிகர் திலகம் அலங்கரிக்கும் பிலிம் பேர் இதழையும் காணலாம்.
http://satyamshot.files.wordpress.com/2010/02/filmfare25.jpg
vasudevan31355
8th September 2014, 10:34 AM
வினோத் சார்,
Jis desh mein Ganga Behti hai பாடலுக்கும், விழாமபரத்திற்கும் நன்றி.
எனக்கு மிக மிகப் பிடித்த ராஜ்கபூர் படங்களில் ஒன்று. நம்ம பத்மினி கொள்ளை அழகு போங்கள். கவர்ச்சியும் அதிகம். இந்த ஸ்டில்களைப் பாருங்கள்.
http://www.artsoftheearthindia.in/gallery/plog-content/images/arts-of-the-earth-gallery/historical-moments/01_jis-desh-mein-ganga-behti-hai_size-9x11_price-4_000.jpg
vasudevan31355
8th September 2014, 10:34 AM
http://roughinhere.files.wordpress.com/2008/09/jis-desh-31.jpghttp://1.bp.blogspot.com/-XiTNq4qjTI8/UGQFLdzBpUI/AAAAAAAAHJw/VXwxA3qOZkE/s400/2.jpg
vasudevan31355
8th September 2014, 10:35 AM
http://i.ytimg.com/vi/18CsNKxmChI/hqdefault.jpghttp://storage11.gear3rd.com/files/thumbs/2014/01/29/1391010192b889a-original-1.jpg
vasudevan31355
8th September 2014, 10:44 AM
இந்தியில் நாட்டியப் பேரொளியின் தாராளம்
http://i1323.photobucket.com/albums/u585/padminifan/pzadmini_zps9c29d27f.jpg
rajeshkrv
8th September 2014, 10:48 AM
வாசு ஜி, சில நாட்களுக்கு முன் பந்தே பருதாவா காலா கன்னட பாடல் கொடுத்திருந்தேன் கேட்டீர்களா
இதோ அற்புத பக்தி ரசம் அதுவும் இசையரசியின் குரலில் தேவராஜன் மாஸ்டரின் தேவ கீதம்
செத்தி மந்தாரம் துளசி பிச்சக மாலகள்
http://www.youtube.com/watch?v=MiZZxlJaeJ0
mahendra raj
8th September 2014, 11:41 AM
திரு.எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த 'நான் ஆணையிட்டால்' திரைப்படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். மெல்லிசை மன்னரும், சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். அருமையான பாடல்.
இப்பாடலை படத்தில் பார்த்ததாக நினைவில்லை. படத்தில் இப்பாடல் உண்டா?
எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் ஹம்மிங் குரல் தந்தாரா? ஆச்சரியமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படி ஒத்துக் கொண்டார்?
ஒருவேளை இப்பாடல் படத்தின் ரிலீஸ் சமயத்தில் இருந்து பின் தூக்கப்பட்டதா?
இப்பாடலின் ஷூட்டிங் நடந்ததா?
மேலதிக விவரங்களை வினோத் சாரும், கார்த்திக் சாரும் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
http://i.ytimg.com/vi/MgJPv59KO94/hqdefault.jpg
இனி பாடலின் வரிகள்.
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV: ...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே
MSV:...ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன் கதை படித்தேன்
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்.....
பாலும் புது தேனும் பனி போல் என் மேலே
படர்ந்தோட இடம் தேட அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹோ
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
MSV:...ஒஹொஹொஹொ
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹோ
ஆஹா......
சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
அணைத்தாய் அதில் நிலைத்தாய் சுவை அறிந்தாய் உடல் சிலிர்த்தேன்
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்
தேடும் வரை நானும் சிலை போல் நின்றேனே
சிலை பேச இசை பாட கதை போல் அதில் சேர்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
http://www.youtube.com/watch?v=4fYR-_jlZFo&feature=player_detailpage
I remember reading a long time ago that this song was recorded for KR Vijaya and Ashokan for 'Naan Aaniyittaal' but was precluded due to the film's length.
Gopal.s
8th September 2014, 11:49 AM
I remember reading a long time ago that this song was recorded for KR Vijaya and Ashokan for 'Naan Aaniyittaal' but was precluded due to the film's length.
Yes.You are right. It is picturised with Villain camp like azhagu oru ragam in padagotti but not used. Unfortunately,the best song in the movie suffered.
Richardsof
8th September 2014, 12:16 PM
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம்- 8-9-1933
http://youtu.be/DBCZWNfoR3k
vasudevan31355
8th September 2014, 01:40 PM
மிக்க நன்றி மகேந்திர ராஜ் சார். இதுவரை நான் கேள்விப்படாத நியூஸ். நல்லவேளையாக அப்பாடல் இல்லாமல் போனது. அசோகன் அப்பாடலுக்கு நடித்திருந்தால் நிச்சயமாக கேட்கும்போது கிடைக்கும் இன்பம் பார்க்கும் போது இருந்திருக்காது.
vasudevan31355
8th September 2014, 01:47 PM
இதோ அற்புத பக்தி ரசம் அதுவும் இசையரசியின் குரலில் தேவராஜன் மாஸ்டரின் தேவ கீதம்
செத்தி மந்தாரம் துளசி பிச்சக மாலகள்
ராஜேஷ்ஜி!
அருமையான பக்திப் பாடல். இசையரசியின் இனிமையான சாம்ராஜ்யம். சாரதா அண்டை வீட்டுப் பெண் போல் வெரி சிம்பிள். குருவாயூரப்பன் பக்தியில் பாடலை மெய்மறந்து ரசிக்கும் ஷீலா. அருமை.
Richardsof
8th September 2014, 01:57 PM
http://i57.tinypic.com/2i8ur2a.jpg
http://i60.tinypic.com/29xvo91.jpg
http://youtu.be/7zSmr5tOCOg
vasudevan31355
8th September 2014, 01:59 PM
வாசு ஜி, சில நாட்களுக்கு முன் பந்தே பருதாவா காலா கன்னட பாடல் கொடுத்திருந்தேன் கேட்டீர்களா
இதோ அற்புத பக்தி ரசம் அதுவும் இசையரசியின் குரலில் தேவராஜன் மாஸ்டரின் தேவ கீதம்
ராஜேஷ்ஜி
நீங்கள் குறிப்பிட்டிருந்த கன்னட பாடல் 'பந்தே பருதாவா காலா' கன்னடப் புகழ் சொல்லும் பாடல்தானே!படம் 'Spandana' தானே! சுசீலா அம்மா மிக வித்தியாசமாக அருமையாக பாடியிருந்த பாடல்.
chinnakkannan
8th September 2014, 02:05 PM
வாசு சார்..பத்மினியின் ஸ்டில்களுக்கு நன்றி..பொதுவாகப் பார்த்தால் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை ஹிந்தி தெலுகில் மட்டும் தாராளமயமாக்கல் கொள்கை தான் என நினைக்கிறேன்..இ.ஸ்பெ எழுதியாச்சா..கிருஷ்ணா சாரை எங்கே காணோம்..அப்புறம் பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி..ஒலிக்கிறது மனதுள்..
vasudevan31355
8th September 2014, 02:12 PM
..இ.ஸ்பெ எழுதியாச்சா
காலையிலேயே போட்டாச்சே! நீங்களும் இன்னும் பார்க்கல அப்படின்னு பதில் கொடுத்திட்டீங்களே! அதுக்குள்ளே மறந்து போச்சா? ஆபீஸ்ல வொர்க் அதிகமோ!:)
கிருஷ்ணா சார் ஓணம் பண்டிகை வேண்டி கோவில் யாத்திரை சென்றுள்ளார். நாளைக்கு வந்துவிடுவார்.
தங்கள் பாராட்டிற்கு நன்றி சி.க.சார்.
chinnakkannan
8th September 2014, 02:12 PM
மன்மதனுக்கு வேறு வேலையில்லை போல ..எப்பப்பாரு அம்பு எய்யறது தானா..ம்ம்.. பொல்லாதவன் படத்தில் எஸ்பிபி வாணிஜெயராம் இன் பாடல் எனக்குப் பிடிக்கும்..
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா
ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அந்த ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக..ன்னு இழுக்கறது நன்றாக இருக்கும்..
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
**
இங்கு வந்திருக்கவில்லை என்று தான் நினைக்கிறேன்..:)
chinnakkannan
8th September 2014, 02:14 PM
//அதுக்குள்ளே மறந்து போச்சா? ஆபீஸ்ல வொர்க் அதிகமோ// ஆமாம்..இப்ப லஞ்ச்..அதுக்குள்ற எட்டிப்பார்த்தேன்..ஆமா இந்த ரூபிணின்னு ஒருத்தங்க இருந்தாங்களே..அவங்க பாட்டெல்லாம் போட்டாச்சா (இத்துடன் இன்றைய வெடி வைப்பு இனிதே நிறைவேறியது!) :)
vasudevan31355
8th September 2014, 02:15 PM
சி.க.சார்,
இதோ உங்க பாட்டு. (பாட்டில் நிறைய சிட்டுக்கள். முற்றல்களும் கூட)
'மீரா பாடிய பாடலைக் கேட்க கண்ணன் வரவிலையோ
சின்னக் கண்ணன் வரவிலையோ':)
https://www.youtube.com/watch?v=rxGLqsqdvR8&feature=player_detailpage
chinnakkannan
8th September 2014, 02:17 PM
ரொம்ப தாங்க்ஸ் வாசு சார்..:) அதுவும் அந்த சுபா திக் திக் திக்குன்னு திக்கும்போது அகலக் கண் ஸ்ரீவித்யா டபக்குன்னு ஒக்காந்துக்கினு சேர்ந்து பாடறது அழகு..மீரா பாடின பாடலுக்கு சின்னக் கண்ணன் கிடையாது..பெரிய கண்ணனே வருவாரிலலை..கதைப்படி (மீராகதைப்படி) :)
(
சி.சி.வ.ப நினைவுக்குவரும்..ஒன்றும் புரியவில்லை ஓவ்வொரு நாளும் மாறுகின்ற உலகம் தெரியவில்லை..கனவினிலே தோன்றும் காட்சிகள் கோடி..)
vasudevan31355
8th September 2014, 06:51 PM
மாலை மதுரம். (1)
பி.லீலா அவர்கள் ஓர் அற்புதமான பாடகி. வித்தியாசமான வலிமையான குரல் வளம் மிக்கவர். இவர் குரலில் எவருக்கும் இருக்காத ஒரு வசீகர காந்த சக்தி உண்டு. முதலவர் ஜெயலலிதா அவர்களுக்கு இவரது குரல் ரொம்பப் பிடிக்குமாம்.
நம் வாசலுக்கு இவர் வழங்கிய பாடல்கள் ஏராளம். பாளை போல் சிரிப்பும், பக்குவமான குரலும் கொண்ட இவர் பாடிய பாடல் ஒன்று.
'மிஸ்ஸியம்மா' திரைப்படத்தில். எஸ்.ராஜேஷ்வர ராவின் இசையில்.
குளிர்தரும் நிலவிடம் தன்னை யாரோ காதலிப்பது போன்ற உணர்வு இருப்பதாக 'இது என்ன மாயம்' என்று காதல் உணர்வு மேலிட சாவித்திரி ஜெமினியை நினைத்து பாடும் அதியற்புத பாடல்.
மாயமே நான் அறியேன்...ஓ
தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நான் அறியேன்...ஓ
தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நான் அறியேன்
அழகு நிலாவே உனது மஹிமையை
அழகு நிலாவே உனது மஹிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
மறைமுகமாகவே நான் அறிவேனே
மாயமே நான் அறியேன்...ஓ
தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நான் அறியேன்
கண்ணில் கலிக்கமிடும் கதிரலையாலே
கண்ணில் கலிக்கமிடும் கதிரலையாலே
கரைந்திட உள்ளமே கனிந்தேனே
கரைந்திட உள்ளமே கனிந்தேனே
அன்பையே கோரி அருகினில் யாரோ
அன்பையே கோரி அருகினில் யாரோ
அழைப்பது போலே நான் உணர்ந்தேனே
மாயமே நான் அறியேன்...ஓ
தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நான் அறியேன்
http://www.youtube.com/watch?v=vH1njdJqim8&feature=player_detailpage
Gopal.s
8th September 2014, 08:11 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-1.
இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.
நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.
நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.
இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.
தொடர்ந்து ஆராய்வோம்.
(தொடரும்)
chinnakkannan
8th September 2014, 10:01 PM
மாயமே நானறியேன் எனக்கு , என் அன்னைக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.. என் அம்மா முணுமுணுத்துக் கொண்டிருந்தது புகையாக நினைவு..(அவர் மறைந்து கிட்டத் தட்ட க் கால் நூற்றாண்டுக்குக் கிட்ட ஆகிவிட்டது) மிக்க நன்றி வாசுசார்..மாலை மதுரம் புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்
என்னது..கோபால் சார் எம்.எஸ்.வி பத்தி எழுதறாரா..:) நைஸ்..
madhu
9th September 2014, 04:32 AM
மாயமே நானறியேன் ரொம்பவுமே மனதை வருடும் பாட்டு. லீலாவுக்கு அழுத்தமான குரல் என்றாலும் மென்மையான பெண்மையின் வாசம் சுற்றிலும் வீசியபடியே இருக்கும். லீலா .. நிலவு என்றதும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வந்தது.
வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா
வேறு துணை யாருமில்லை விதி வழியே வந்தேன்
நிலவே நிலவே வா
http://youtu.be/D2YsvbhzLCk
( ரெண்டு பாட்டிலுமே ஜெமினிதான் ஹீரோ என்பது கூடுதல் விஷயம் )
rajraj
9th September 2014, 07:06 AM
லீலா .. நிலவு என்றதும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வந்தது.
madhu: Don't give chinnakkaNNan ideas. He will write about 'nila' songs taking hundred pages! :lol:
I am sure he will include 'nilaa kaayudhu neram nalla neram....' :)
chinnakkannan
9th September 2014, 10:12 AM
குட்மார்னிங் ஆல்
குட்மார்னிங்க் ராஜ்ராஜ் சார்..:) எவ்ளோ நல்லா தெரிஞ்சுக்கிட்டிருக்கீங்க..ஆனா இங்கே நிறையப் பெரிய எழுத்தாளர்கள் இருக்காங்க..வாசுசார், கிருஷ்ணாஜி, கோபால்சார் கார்த்திக் சார்..ராஜேஷ்ஜி அண்ட் மதுண்ணா.. எனக்கு சுமாரா
பட்டுவுடை பாவையவள் பட்டுடலை தொட்டணைக்க
கொத்துமலர் கூந்தலிலே கொற்றமிட்டுத் தானிருக்க
கட்டவிழ்த்த கோபத்தில் கன்னியவள் பார்வையதோ
வட்டநிலாச் சுட்ட வடு
அப்படின்னு தான் எழுத வரும்( ஈற்றடி கொடுத்தது கண்ணதாசன் ‘தென்றல்” பத்திரிகையில வச்ச போட்டியில்-அ.காலத்தில்) - நா இப்போ எழுதிப் பார்த்தேன் :)
மதுண்ணா நிலாப் பாட்டுக்கு நன்றி
gkrishna
9th September 2014, 10:52 AM
எல்லோருக்கும் காலை இந்த காளையின் காளியின் காலியின் வணக்கம்
அடேங்கப்ப்பா திருவனந்தபுரம் சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகம் . ஓணம் பண்டிகை சிறப்பு கேரளா விஜயம் வாசு சார் தெரியபடுதியமைக்கு மிக்க நன்றி
மழை கொட்டோ கொட்டு கேரளாவில் . இங்கு நம் திரியில் பதிவுகள் கொட்டோ கொட்டு .
தேர் திரு விழா பாடல் நினைவில் பாடகர் திலகம் இசையரசி குரல்களில்
திரை இசை திலகம் மாமா இசை
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..
என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு
என்னமோ பண்ணுது என்னத்தை சொல்ல ..
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது
கட்டுக் குலையாத அரும்பைத் தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
கட்டுக் குலையாத அரும்பைத் தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சி
அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சி
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளைப்
புட்டு புட்டு சொல்லுது
வெத்திலை பாக்கு வச்சி
விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
தாலி கட்டியே கை புடிச்சி
கலந்திட வேண்டும்
குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில்
பூ விரிச்சிஇனிக்கும் வித்தை எல்லாம்
படிச்சி சுகம் பெற வேண்டும்
வெத்திலை பாக்கு வச்சி
விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
தாலி கட்டியே கை புடிச்சி
கலந்திட வேண்டும்
குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில்
பூ விரிச்சிஇனிக்கும் வித்தை எல்லாம்
படிச்சி சுகம் பெற வேண்டும்
காலாட மேலாட கையாட முகம் சிவக்கும்
என் கைகளில் உன் பூ உடல் மிதக்கும்
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது
https://i.ytimg.com/vi/hCHMTax97uA/0.jpghttp://2.bp.blogspot.com/-MsRB-HGyCWo/UO_nqCgVDoI/AAAAAAAAJiI/Uf8uU-a-yYM/s1600/Raje.JPG
rajeshkrv
9th September 2014, 10:57 AM
நிலவு பாடல் என்றால் சிரிவெண்ணிலாவில் இசையரசி, பாலு, வசந்தாவின் குரலில் ஒலித்த
சந்தமாமா ராவே ஜாபில்லி ராவே பாடல் தான்
https://www.youtube.com/watch?v=5oLjJ7fqrS8
gkrishna
9th September 2014, 11:15 AM
சி கே சார்,முரளி சார்,வாசு சார்,எஸ்வி சார் எல்லோரும் வாணியின் அழகை குறிப்பிட்டு வர்ணித்த பதிவு மற்றும் கண்ணன் என் காதலன் ,தலைவன் பதிவு மனதில் சில எண்ணங்கள்
ஊருக்கு உழைப்பவன் 1977
கவிஞர் முத்துலிங்கம் என்று எல்லோரும் சொல்வார்கள்
ஆனால் புலவர் புலமை பித்தன் என்று கவிஞர் முத்துலிங்கம் ஒரு பேட்டியில் கூறிய நினைவு
ஜேசுதாஸ் சுசீலா குரல்களில்
மக்கள் திலகம் வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களும் பாடுவார்கள் படத்தில் . மெல்லிசை மன்னரின் இசை தனி தவில் போல் தனி தபேல உருளும்
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் -
கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிறு நகையில் -
நான் மூன்றாம் தமிழை பார்கிறேன் கண்ணே உந்தன் இடையசைவில்
(அழகெனும் ஓவியம் )
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை -
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
(இலக்கிய காவியம் )
ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
(அழகெனும் ஓவியம் )
gkrishna
9th September 2014, 11:24 AM
கோபால் அவர்களின் msv ஒரு சகாப்தம் எழுப்பிய நினைவு
May 5, 2008
இசை இல்லை என்ற நாளில்லை
இந்த வருடம் மே மாதம் 2 ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை. திருவான்மியூர் வால்மீகி நகரில் ஸ்ரீமயம் குடியிருப்பின் மூன்றாவது தளத்தின் மொட்டை மாடி. கடற்கரை காற்றுக்கு தடை போட்டுக்கொண்டிருந்தது கோடையின் சூடு. ஆனாலும் சூடு தெரியவில்லை. காரணம் எங்களுக்கு முன்பு இருந்தது ஒரு மெல்லிசை தென்றல்.அந்த தென்றலின் நெற்றியில் திருநீறு,நடுவில் வட்டமான குங்குமப் பொட்டு.அந்த வெண்மையான சட்டையிலிருந்து மணக்கும் அயல்நாட்டு வாசனை. கழத்தில் ரூத்திராட்சம். இடது கையில் பளபளக்கும் தங்க நிற கைகடிகாரம். உடல் மட்டும்தான் மெலிந்திருந்தது. அவரது கண்கள் காற்றில் கூட கானத்தை தேடிக்கொண்டிருந்தது.
எழத்தாளர் வாமனன் பாணியில் சொல்ல வேண்டுமானால்,` இசை மூலம் அமரத்துவம் நாடத்துடிக்கும் வித்தை அவருடையது! அது கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் சங்கமித்த சங்கீத காவேரி,மெல்லிசை தாமிரவருணி, நல்ல தமிழக்கு ஸ்வரம் பிடித்த தென்மதுரை வைகை நதி!
மலர்ந்தும் மலராத பாதி மலர்களை மலரச்செய்த மணி இதழ்கள்... ஆர்மோனியத்தின் கறுப்பு வெள்ளைக் கட்டைகள் மீது நூறாயிரம் வண்ணங்களை நூறாயிரம் நடைகளில் காட்டி, நடனமாடிய வைர விரல்கள் ... நட்சத்திரக்கூட்டங்களை மெல்லிசைத் தோரணங்கள் ஆக்கிவிட, சங்கீதக் கனவுகள் கண்ட கந்தர்வனுக்குரிய மின்காந்த விழிகள்...'' புரிந்ததா அவர் யாரென்று?
அவர்தான் 9.2.1932ல் கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் பிறந்த மனையங்கத்து சுப்ரமணியன் நாயர் விஸ்வநாதன். நமக்கெல்லாம் பின்னாளில் எம்.எஸ். விஸ்வநாதனாக அறியப்பட்டவர்.எனது பள்ளி நாள் தோழர் சி.பி, ராம்மோகன் ஒரு சங்கீத ரசிகர். மெல்லிசை மன்னரின் பாடலையும் எடுத்துக்கொண்டு அதன் பின்னனியில் இருக்கும் இசையை வாத்ய சுத்தமாக கொண்டு வரக்கூடியவர்.கடவுளுக்குப் பிறகு தன்னில் உள்ள நவரச குணங்களையும் தட்டி எழப்பியவர் எம்.எஸ்.வி. என்று நம்பக்கூடியவர்.அந்த ஒரு மணிநேரம் உணர்வுகள் சில்லிட்டுப் போனது. இன்னுமும் அந்த ராக அலைகள் உடலுக்குள் ஊடுருவிய உணர்வு. இத்தனைக்கும் அவர் எங்களுக்காக பாடவில்லை. அவர் ராக ராஜாங்கத்தின் ஆளுமையை பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தோம்.
பேசப்பேச அவர் கண்களில் இருந்து மறைந்துபோனார், காற்றோடு கலந்து போயிருக்கும் கானங்கள் செவிப்பாறைகளை வருடிக்கொடுத்தது.கானங்களை சுமந்த கதாபாத்திரங்கள் காட்சிகளாக விரிந்தார்கள்.எத்தனை விதமான பாடல்கள்.
தனது மூன்றாவது வயதில் தந்தையை இழந்து, அதற்கு ஆறு மாதத்தில் தன் தங்கையையும் இழந்தவர். தாய்தான் ஒரே ஆதரவு. தாய் வழித்தாத்தா கிருஷ்ணன் நாயர்,மீட்காவிட்டால் இந்த இசைக் கடல் ஏதாவது ஒரு குட்டையில் கரைந்துபோயிருக்கும்.
கேரளத்தின் வடகிழக்கில் இயற்கை எழில் கொஞ்சும் ஊர் கண்ணனூர். அங்கே கிருஷ்ணன் நாயருக்கு மாற்றலாகியது. அங்கேதான் நீலகண்ட பாகவதரின் வடிவிலே விஸ்வநாதனுக்காக இசை காத்துக்கொண்டிருந்தது.
மாதம் மூன்று ரூபாய் கொடுத்து இசைப்பள்ளியிலே சேர வசதியில்லாத விஸ்வநாதனை, தனது பள்ளியில் எடுபிடி வேலையாளாக சேர்த்துக்கொண்டார் நீலகண்ட பாகவதர்.
விஸ்வநாதனுக்கு கற்பூர புத்தி என்பதை அவர் புரிந்து கொண்டார் காசு வாங்காமலே சங்கீதம் கற்றுக்கொடுத்தார் நீலகண்ட பாகவதர்.நான்கு ஆண்டுகள் கர்நாடக சங்கீத பயிற்சிக்குப்பின் கண்ணனூர் டவுன் ஹாலில் மூன்று மணி நேரம் கச்சேரி செய்ய வைத்தார் நீலகண்ட பாகவதர்.
வாழ்க்கை திசை மாறியது, விஸ்வநாதன் திரை உலகில் சம்பாதிக்க தொடங்கியவுடன் தனது குரு தட்சிணையை எடுத்துக்கொண்டு கண்ணனூர் திரும்பினார். அதை ஏற்றுக்கொள்ள அப்போது நீலகண்ட பாகவதர் உயிரோடில்லை.இவருடைய இசையை ஏற்றுக்கொண்டவர் இசையமைப்பாளர் சி.ஆர், சுப்புராமன். இவருக்கு குருவாக இருந்தவர் மறைந்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு. ஜீபிடர் பிகசர்சில் அவர்தான் இவரை சிபாரிசு செய்தார். பிறகு எம்ஜீஆர் நடித்த ஜெனோவா படத்தில்தான் வாய்ப்பு வந்தது. முதலில் இவரை ஏற்றுக்கொள்ள மறுத்த எம்ஜீஆர் பின்னார் இவரது இசையில் மயங்கி, ` இனிமேல் என் படங்களுக்கு நீங்கள்தான் இசை' என்றார். தனது பாடல்களை தனது ஆசான் சுப்புராமன் கேட்கவேண்டுமென்று விரும்பினார் எம்.எஸ்.வி. அவருக்காக காத்திருந்தபோது, அவர் இறந்துவிட்ட செய்திதான் விஸ்வநாதனுக்கு கிடைத்தது.
அவர் இறக்கும் தருவாயில் அவர் இசையமைத்துக்கொண்டிருந்த படம் தேவதாஸ். அந்த பணியை முடித்துக்கொடுக்கும் வேலை அவரது உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு இருந்தது.தேவதாஸ் படத்தில் கண்டசாலா பாடிய ` உலகே மாயம்' பாலசரஸ்வதி பாடிய `சந்தோஷம் வேணும் என்றால்' பாராமுகம் ஏன் அய்யா ' ஆகிய மூன்று பாடலகளையும் மெட்டமைத்தது இந்த இரட்டையர்கள்தான்.
இருவரும் தனியாக இசையமைத்த முதல் படம் கலைவாணரின் பணம்.மெல்லிசை மன்னருக்கும். இளையராஜாவுக்கு ஒரு ஒற்றுமை உண்டு, ஐம்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டை இந்தி பாடல்கள் ஆக்ரமித்துக்கொண்டிருந்தது. அதை விரட்டி ரசிகர்களை தமிழ் பாடல்களின் பக்கம் இழத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. அதே நிலை 1976ல் இளையராஜாவுக்கு இருந்தது. ஆராதனா, பாபி, யாதோன் கீ பாரத் வெற்றிப் படங்களின் பாடல்கள் தமிழக்த்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து தமிழ் இசையை மீட்டவர் இளையராஜா.
1960 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர்கள் இந்த இரட்டையர்கள். எத்தனை விதமான பாடல்கள்.பீம்சிங், சிவாஜி கணேசன் கலப்பில் உருவான `பா' வரிசை ப்டங்கள்,. கூடவே எம்ஜீஆரின் படகோட்டி, தெய்வத்தாய். ஆயிரத்தில் ஒருவன், ஸ்ரீதரின் நெஞ்சில் ஒர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை. என்று இரட்டையர்களின் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டே போனது. காலம் இரட்டையர்களை 1965ல் பிரித்தது. அதற்கு பிறகு விஸ்வநாதனின் நாத படைக்கு பலம் கூடியது என்றே சொல்லலாம்.அடுத்த பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவிற்கு விலாசமே விஸ்வநாதன் என்றானது. அவர் பாடல்களில் பட்டியலை இங்கே கொடுப்பது நோக்கமில்லை.
பொதுவாக தமிழன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நிச்சயமாக கண்ணதாசன் விஸ்வநாதன் கலந்த பாடல்கள் நிச்சயமிருக்கும். உலகெங்கும் இன்று அவருக்கு கோடான கோடி ரசிகர்கள். சமீபத்தில் கோவையில் நடந்த சம்பவம் இது. ஒரு ரசிகர் கோமாவில் இருந்தார். எந்த மருத்துவ முயற்சியும் பலன் தரவில்லை. வேறு முயற்சியில் இறங்கலாம் என்று அவருக்குப் பிடித்த விஸ்வநாதனின் பாடல்களை போடுங்கள் என்றார்கள். அதிசயம் ஆனால் உண்மை. அவர் விழித்துக்கொண்டார். அதோடு ஏன் `சட்டி சுட்டதடா' பாடலை போடவில்லை என்று கேட்டார். அவருடைய உறவினர்கள் இதை விஸ்வநாதனுக்கே தெரிவித்தார்கள்.
இந்த இசைக்குள் வெளியே தெரியாத ஒரு இன்னிசை ஒளிந்திருக்கிறது. அதுதான் நன்றி உணர்ச்சி, அடக்கம், எளிமை, பணிவு. நன்றி உணர்ச்சிக்கு ஒரு உதாரணம். இவரது குருநாதர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிற்கு குழந்தைகள் இல்லை. அவர் படமில்லாமல் இருந்த காலத்தில், தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர் மறைந்த எம்.ஜீ.ஆர். அவரது தலைமையில் நடிகர் திலகத்தையும் வைத்து ஒரு நட்சத்திர இசை விழா நடத்தி அவருக்கு நிதி திரட்டி கொடுத்தார். பிறகு அந்த தம்பதிகள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களை தன் வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தார். எஸ்.எம்.எஸ். இறந்தபோது அவருக்கு மகனாக இருந்து கொள்ளிவைத்தார். அதற்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அவரது மனைவி இறந்தார். அவரும் இறுதிவரை விஸ்வநாதனோடு இருந்தார். அவருக்கும் கொள்ளி வைத்தவர் விஸ்வநாதன். அவருடைய பண்பிற்கு ஒரு உதாரணம்., ஸ்ரீதர் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஏ.எம். ராஜா. அவருக்கும் ஸ்ரீதருக்கும் கருத்து வேறுபாடு. ஸ்ரீதர் விஸ்வநாதனிடம் வந்தார். உடனே விஸ்வநாதன் ராஜாவை சந்தித்து, அனுமதி பெற்ற பிறகே ஒப்புக்கொண்டார்.
கர்ணன் படத்தை இந்தியில் எடுக்க முடிவானது. நடிகர்கள் கூட முடிவானது. ஆனால் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டது. காரணம் இந்த இசையை கொடுக்க அங்கே ஆளில்லாததால்!
இத்தனை சாதனை படைத்த ஒரு கலைஞனுக்கு, இன்று வரை ஒரு தேசியவிருது கிடைக்கவில்லை.இன்று டெல்லியை தாங்கி பிடித்துக்கொண்டிருப்பது திமுக. முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு தேசிய விருதை தீர்மானிப்பதும் அக்கட்சியின் தலைவர்தான்.விஸ்வநாதன் உருவாக்கிய பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்களுக்கெல்லாம் தேசிய விருது கிடைத்துவிட்டது. ஆனால் விஸ்வநாதனின் நினைவு இங்குள்ள தன்மான தமிழர்களுக்கு வரவில்லையா? அல்லது எம்.ஜீ.ஆர் மீதுள்ள கோபம் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மீது காட்டப்படுகிறதா? அப்படியானால் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைக்கு வரி கொடுத்த கவிஞர் வாலிக்கு மட்டும் அதுவும் காலதாமதமாக எப்படி பத்மஸ்ரீ கிடைத்தது.
உண்மையில் சொல்லப்போனால், தனக்கு தாமதமாக வந்த விருதை கவிஞர் வாலி திருப்பிக்கொடுத்திருக்க வேண்டும். காரணம் கவிஞர் வாலி கண்ணதாசனுக்கே சவால் விட்டவர். இப்போது எனக்கொரு ஆசை. விஸ்வநாதன் வாழ்நாளைக்குள் உலகமெங்கும் உள்ள அவரது கானத்தினால் கட்டுண்ட தமிழர்கள் உரக்க கம்பீர குரல் எழப்ப வேண்டும். அந்த குரல் கோபாலபுரத்திலிருந்து, குடியரசு தலைவர் மாளிகை வரை எட்ட வேண்டும். அந்த விருதை விஸ்வநாதன் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும். காரணம் இது வெறும் தேசிய விருதுதானே, அவருக்குத்தான் ரசிகர்கள் என்கிற சர்வதே விருது ஏற்கெனவே கிடைத்துவிட்டதே.இது நமது பெருமித திருப்தி.
அவரைப் பொறுத்தவரையில் அவர் அடிக்கடி சொல்வது இதுதான் `இல்லை என்ற நாளில்லை; இன்னும் என்னும் ஆசையில்லை'.
பேட்டியாளர் சுதாங்கன் வரிகளில் இருந்து
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQnVNR14qJuD-KzdLg7PELgEpWC8iiuyusZVHahj6nC3L7mRJXW
chinnakkannan
9th September 2014, 11:36 AM
வாங்கோ கிருஷ்ணா சார்..அனந்த பத்மனாபன ஸ்வாமி தரிசனம் ஆச்சா.. கல்லூரி முடித்தசிலவருடங்களில் போயிருக்கிறேன்..மிகப்பெரிய பிரகாரம்..இரண்டு தடுப்பு கொண்டு நாராயணனனை மூன்று பகுதியாக தரிசித்தது மறக்க இயலாதஓன்று..
மழை முத்து முத்துப் பந்தலிட்டு பாடல் கேட்டிருக்கிறேன்.. நல்ல பாட்டு தாங்க்ஸ்
ராஜேஷ் ஜி சந்தாமாமா பாட்டு மாலை கேட்கிறேன்..நன்றி..
கவிஞர் புலமைப் பித்தன் பாட்டு வெகு நைஸ் கிருஷ்ணா சார்.. அவர் விதம் விதமாக இனிய தமிழ்ப் பாடல் கள் எழுதியிருக்கிறார். வாலியா கண்ண தாசனா எனப் புருவம் உயர்த்தி நினைக்க வைக்கும் பாடல்கள்..சமீபத்தில் கூட வடிவேலின் தெனாலி ராமனில் அவர் தான் பாடல்கள்..ஆணழகு இப்படித் தான் இருக்குமா..என்ற பாட்டு..கேட்டபோது எனக்கு அவரது பளிச் கண்கள் வெண்ணிற திக்க் மீசை தான் நினைவுக்கு வந்தது.. நல்ல இனிய கவிஞர்.அழகெனும் ஓவியம் இங்கே..காதுகளில் ரீங்கரிக்கிறது..
//பொதுவாக தமிழன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நிச்சயமாக கண்ணதாசன் விஸ்வநாதன் கலந்த பாடல்கள் நிச்சயமிருக்கும்// ஹெள ட்ரூ.. உண்மை..ஆனால் இன்றைய ஜெனரேஷனுக்குப் போய்ச் சேர்கிறதாஎன நினைத்தால் கொஞ்சம் யோசனை தான்..எம்.எஸ்வி பற்றி கோபாலின் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்..சுதாங்க்ன் பேட்டிக்கு நன்றி கிருஷ்ணா சார்
gkrishna
9th September 2014, 11:41 AM
http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/08/zilj4h.jpg
கவிஞர் கண்ணதாசன் ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்காக "மதனமாளிகையில் மந்திர மாலைகளாம்" என்ற அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.
நடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், "அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.
"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்" என்று விரட்டினார் கவிஞர்.
அடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். "ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது.
நன்றி - ராணி மைந்தன் எழுதிய "எம்.எஸ்.வி ஒரு சகாப்தம்" என்ற நூல்
http://www.youtube.com/watch?v=ds_8nIPwc2I
gkrishna
9th September 2014, 11:44 AM
கவிஞர் புலமைப் பித்தன் தீபம் பாடல் மறக்க முடியுமா ? சி கே சார்
'சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலை '
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் '
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
gkrishna
9th September 2014, 11:50 AM
வாங்கோ கிருஷ்ணா சார்..அனந்த பத்மனாபன ஸ்வாமி தரிசனம் ஆச்சா.. கல்லூரி முடித்தசிலவருடங்களில் போயிருக்கிறேன்..மிகப்பெரிய பிரகாரம்..இரண்டு தடுப்பு கொண்டு நாராயணனனை மூன்று பகுதியாக தரிசித்தது மறக்க இயலாதஓன்று..
சி கே சார்
கேரளாவில் சென்ற இடங்கள்
திருவனந்தபுரம்,
வர்கலை(கொல்லம் அருகில்),
திருகடிதானம்(செங்கனாசேரி அருகில்),
திருவல்லா (ஒரு அருமையான ஊர் )
(டயானா என்ற நயன் தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் பிறந்த ஊர் )
அம்பலப்புழா (உன்னி கிருஷ்ணன் )
அரண்முழா
செங்கன்னூர்
மற்றும் குமரகோம் போட் வீடுகள்
மிக அருமையான தேசம் .எளிமையான மக்கள் ,எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்
Richardsof
9th September 2014, 12:08 PM
கிருஷ்ணா சார்
கேரளாவின் இயற்கை அழகை கண்டு ரசித்து வந்து உள்ளீர்கள் . மிக்க மகிழ்ச்சி .
அந்தபுரத்தில் ஒரு மகராணி -இனிமையான பாடல் .நினைவூட்டலுக்கு நன்றி .
http://i60.tinypic.com/2vilb28.jpg
http://youtu.be/RJXrqY-Df1M
gkrishna
9th September 2014, 12:09 PM
மிக்க நன்றி மகேந்திர ராஜ் சார். இதுவரை நான் கேள்விப்படாத நியூஸ். நல்லவேளையாக அப்பாடல் இல்லாமல் போனது. அசோகன் அப்பாடலுக்கு நடித்திருந்தால் நிச்சயமாக கேட்கும்போது கிடைக்கும் இன்பம் பார்க்கும் போது இருந்திருக்காது.
உண்மை வாசு சார்
நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது அசோகன் கே ஆர் விஜயா ஜோடியில் -'கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே ' -
பார்க்க பார்க்க நெஞ்சு பதறுமே
gkrishna
9th September 2014, 12:17 PM
அருமையான போட்டோ எஸ்வி சார்
கண்ணுக்கு குளிர்ச்சி
பாரதியார்
'காணி நிலம் வேண்டும் ..'
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்..'
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்'
என்றும் பின்னர்
அவரே 'கேரள நன்னாட்டிளம் பெண்கள் உடனே ' என்றும் பாடுகிறார்
இந்த பத்தினி பெண் கேரள பெண்ணாய் இருந்தால் சுகம் தான் :)
chinnakkannan
9th September 2014, 12:26 PM
wow..ஒரு இனிய வெகேஷன் மாதிரிப் போய்வந்திருக்கிறீர்கள் போல.. சுந்தரத்தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வந்தீர்களா.. திருவல்லா பற்பல வருடங்களுக்கு முன்பே -டயானா நடிக்க வருவதற்கு முன்பே - தெரியும் முன்பு பலவருடங்களுக்கு முன் வேலை பார்த்த ஆஃபீஸ் ஸ்டாஃப் ஒருவரின் ஊர்.(அவர் பெண்) மீராஜாஸ்மின் கல்யாணம் பண்ணிட்டாங்களா இல்லையா..(என்னா ஒருகேள்வி:) )
புலமைப்பித்தன் பாடல்களை மாலையாகத் தொடுங்கள் கிருஷ்ணா ஜி..(ஆயிரம் நிலவே வாவும் அவர்து தானே..பைக் சத்தம் கேக்குது!)
தொ.பூ.ம சாங்கிற்கு எஸ்வி சாருக்கு நன்றி..
சி கே சார்
கேரளாவில் சென்ற இடங்கள்
திருவனந்தபுரம்,
வர்கலை(கொல்லம் அருகில்),
திருகடிதானம்(செங்கனாசேரி அருகில்),
திருவல்லா (ஒரு அருமையான ஊர் )
(டயானா என்ற நயன் தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் பிறந்த ஊர் )
அம்பலப்புழா (உன்னி கிருஷ்ணன் )
அரண்முழா
செங்கன்னூர்
மற்றும் குமரகோம் போட் வீடுகள்
மிக அருமையான தேசம் .எளிமையான மக்கள் ,எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்
Richardsof
9th September 2014, 12:34 PM
கம்யூனிஸ்ட் சிந்தனைவாதியான இவரின் திரைப்பாடல்களின் வரிகளில் இலக்கியத் தரமும்,புரட்சி சிந்தனைகளும் ஓங்கி நிற்கும்.உன்னால் முடியும் தம்பி படத்திற்காக இவர் எழுதிய
"புஞ்சையுண்டு நஞ்சையுண்டு" பாடலில்
"வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது"
என்ற வரிகளில் சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வை சாடியிருப்பார்.குழந்தை வளர்ப்பில் ஒரு தாயின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை எடுத்துரைக்க இன்றளவும் மேற்கோள் காட்டப்படும் ."எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரும் இவரே.
இவரின் சில பாடல்கள்:
சாதிமல்லி பூச்சரமே -அழகன்
தத்திதோம் வித்தைகள் கற்றிட-அழகன்
அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
Richardsof
9th September 2014, 12:42 PM
MOVIE - VAYASUPONNU
http://youtu.be/V3K3A70LHP0
gkrishna
9th September 2014, 12:53 PM
அருமை எஸ்வி சார்
நீங்கள் குறிப்பிட்ட புலவர் புலமை பித்தன் சில பாடல்கள் அற்புதம்
இனியவளே என்று பாடி வந்தேன்
நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முதலாக புலவர் புலமைப் பித்தன் இடம் பெறக் காரணமாயிருந்த பாடல். நடிகர் திலகத்திற்கு புலமைப் பித்தன் எழுதிய முதல் பாடல் எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு என்ற பாடலும் இந்தப் பாடலும். ஆராதனா ஹிந்திப் படத்தின் கோரா காகஸுதா யே மனுமேரா என்கிற பாடலின் தமிழ் பதிப்பு இப் பாடல். முற்றிலும் வித்தியாசமான மெட்டு. நடிகர் திலகத்திற்கும் வாணிஸ்ரீ அவர்களுக்கும் புதிய உடைவடிவம் இப்பாடலின் உள்ளடக்கிய உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.
பாடல் வரிகளில் புலவரின் புலமை எப்படி வெளிப்படுகிறது...
இனியவளே என்று பாடி வந்தேன் ...
இனிமை நிறைந்தவளே என்கிற பொருள் தொனிக்கும் வகையில் இவ் விடத்தில் இனியவளே என்று தொடங்குகிறது.
இனியவள் தான் என்று ஆகி விட்டேன் ..
இந்த இடத்தில் வரும் இனியவள், அவளிடத்தில் காதலன் தன்னை முழுதும் ஒப்படைத்து விட்டான் என்பதை உணர்த்தும் விதமாக வெளிப்படுகிறது. டி.எம்.எஸ். பாடும் போது இனி அவள் தான் என்று உச்சரிக்கும் விதமாக பாடியிருப்பார்.
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனிமை கொண்டவள் -
இனி அவள் பாடும் வரிகள்
இனியவரே என்று பாடி வந்தேன்
இனி அவர் தான் என்று ஆகிவிட்டேன்
தமிழ் எப்படியெல்லாம் விளையாடுகிறது...
சரணத்தில் பார்ப்போம் .
அவன் - ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக
அவள் - ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக
அவன் - துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ
அவள் குணம் நான்கில் உருவான பெண்மை என்ன கூறுமோ
அவன் - திருநாள் வரும் அதோ பார்
அவள் - தருவார் சுகம் இதோ பார்
அவன் - பொன் மாலையில்
அவள் - பூமாலையாய்
அவன் - நெஞ்சில் சூடவோ
அவள் - சூடவோ
அவன் - சூடவோ
எளிமையான வரிகள் ஆனால் பொருள் ஆழம் பொதிந்த வரிகள் ...
இந்த இடத்தில் பல்லவியைத் தொடர்ந்து வரும் பின்னணி இசையில் புல்லாங்குழல் அந்த சூழலை அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்கிறது.
மீண்டும் அடுத்த சரணம்
அவன் - தாலாட்டிடும் நெஞ்சம் தன்னைத் தங்கம் என்றானோ
அவள் - பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ
அவன் - நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
அவள் - கொடுத்தாலும் நலம் தானே என்னைக் கொஞ்சும் ஓவியம்
அவன் - இதழால் உடல் அளந்தான்
அவள் - இவளோ தன்னை மறந்தாள்
அவன் - ஏனென்பதை
அவள் - யார் சொல்வது
அவன் - எங்கும் மௌனமே
அவள் - மௌனமே
அவன் - மௌனமே
ஒரு இலக்கிய ஆய்வையே புலவர் நடத்தியிருக்கிறார் இப்பாட்டில். விளக்கம் தேவையில்லை, பாடலை ஆழ்ந்து நோக்கினால் புரியும். எந்த எந்த வார்த்தையை யார் எப்போது பாடுவது, எப்படிப் பாடுவது என்பதெல்லாம் இசையமைப்பாளர்கள் தெரிந்து கொள்ள ஓர் இலக்கணமாய் அமைந்திருக்கிறது இப்பாடல் ... மௌனமே என்கிற வார்த்தையும் சரி, சூடவோ என்ற வார்த்தையும் சரி, அவன் சொல்ல, அவள் சொல்ல, அவன் மீண்டும் சொல்ல ...
அந்த இரண்டு உள்ளங்களின் உணர்வுகள் இங்கே வார்த்தையாய் உறவாடுகின்றன ...
இதை இசையால் பேச வைத்த பெருமை மெல்லிசை மன்னரை சாரும். புலமைப் பித்தன் அவர்கள் நடிகர் திலகத்தின் படத்தல் நுழையும் போதே ஒரு இலக்கிய வேள்வியே நடத்தியிருக்கிறார்.
http://www.youtube.com/watch?v=MUeGwllKFsU
நன்றி ராக சுதா - ராகவேந்தர் - MSV கிளப்
http://s2.dmcdn.net/dGXh.jpg
madhu
9th September 2014, 01:00 PM
கிருஷ்ணா ஜி..
இனியவளே பாட்டை கேட்கும்போதே மலை உச்சியில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் பின்னணி இசையோடு வெவ்வேறு விதங்களில் கூறப்படும் அந்த "சூடவோ", "மௌனமே" எனும் வார்த்தைகள்... "இனியவளேஏஏ.." என்று டி.எம்.எஸ் இழுத்துப் பாடும்போது நடிகர் திலகத்தின் இதழோரத்தில் வரும் சின்ன ஸ்மைல்.. "இனி அவன்தான்" என்று சுசீலாம்மா அழுத்தி உச்சரிக்கும் விதம்...
இந்தப் பாட்டு வீடியோ பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு கேட்டாலும் மூடிய கண் இமையின் உள் பக்கத்தில் திரை போட்டு படம் ஓடியே தீரும்.
gkrishna
9th September 2014, 01:02 PM
புலவர் புலமை பித்தனின் முதல் தத்துவ பாடல் .
பாடலின் வரிகளும் , பாடகரின் குரலும் , பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பும் என்னவென்று சொல்ல
'நான் யார் நீ யார் நான் யார் நாலும் தெரிந்தவர் யார் யார் '
தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்றால் அவர் யார் யார் '
ரமண மகரிஷியின் அருமையான் நான் யார் தத்துவ வரிகள் புலவரின் பாடல் வரிகளில் கையாண்ட விதம் என்ன சொல்ல என்ன சொல்ல
gkrishna
9th September 2014, 01:10 PM
'ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.
எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.
''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.
உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!
''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -
நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?
தாய் யார்? மகன் யார்? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார்- யார்?
உறவார்? பகை யார்?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?
'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...
இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே!
என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.
பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது - மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே...
என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.
என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.
எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே...
என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.
எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -
பொய்கையெனும்
நீர்மகளும்
பூவாடை போர்த்து
நின்றாள்
தென்றலெனும்
காதலனின்
கைவிலக்க வேர்த்து
நின்றாள்
என்ன துடிப்போ
அவள் நிலை
நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை
நான் உணரக் காட்டாயோ?
என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -
சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது
என்கிற வரிகள். காதலோடு நிறுத்திக்கொண்டுவிட முடியாதபடி என் சமூகச்சிந்தனை என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.. அதுதான் என்னை இயக்குவது.
புண்ணிய பூமி என்று இந்தியாவைச் சொல்கிறோம். இங்கு இல்லை என்பதே இல்லை. இந்தத் திருநாட்டில் கங்கை உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. வயல் எங்கும் உண்டு. உண்ணச் சோறு இல்லை. இந்த தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன. வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன. இதுதான் புண்ணிய பூமியா? இந்த ஆதங்கத்தில்தான் -
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...
என்று 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் எழுதினேன்.
வயித்துக்காக மனுஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு;
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம்தாண்டா சோறு
என்று 'நல்லநேரம்' படத்துக்கு நான் எழுதிய பாட்டு திரையரங்குக்கு வெளியே கேட்டாலும் கண்ணீரை வரவழைப்பதற்கு என் சமூக அக்கறைதான் காரணம்.
இரும்பாக இறுகுகிற நான்தான் மெழுகாகக் குழையவும் முடியும். எரிமலை வரிகளை எழுதிவிட்டு,
பாடும்போது நான் தென்றல்காற்று
என்றும் எழுதமுடிகிறது.
தனிப்பட்ட முறையில் எந்த உணர்வு மனதை ஆட்கொண்டிருந்தாலும் பாடல் எழுதுவதற்கான சூழல் சொல்லப்பட்டவுடன் கதாபாத்திரமாக மாறித்தான் எழுதுவேன். பள்ளிப்பக்கமே எட்டிப் பார்த்திராத ஒருவன், தனக்குத் தெரிந்த மொழியில் தன் சோகத்தைச் சொல்ல வேண்டிய சூழலில்,
வட்டுக் கருப்பட்டியை வாசமுள்ள
ரோசாவை
கட்டெறும்பு மொச்சுதுன்னு
சொன்னாங்க
கட்டுக்கதை அத்தனையும்
கட்டுக்கதை -
அதைச் சத்தியமா நம்ப மனம்
ஒத்துக்கல்லே...
என்று 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'க்காக எழுதினேன். தன் மனைவி பற்றி ஊருக்குள் ஏதேதோ பேசுவதை நம்ப முடியாமல் தன் நெஞ்சை அறுக்கிற சோகத்தை கண்ணீர் வழியக் கதாநாயகன் பாடுவதைப் பார்க்கும் போதே நமக்கும் நெஞ்சு விம்மிப் போகும்.
'அழகன்' படத்தில் தனக்குப் மிகவும் பிடித்த பாடல் என்று இயக்குனர் கே. பாலசந்தர் குறிப்பிடும் 'சாதி மல்லிப் பூச்சரமே..'
பாட்டின் சரணத்தில்,
எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு
சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா?
என்று எழுதியிருப்பேன்.
அதே படத்தில் மொழி விளையாட்டாக,
தத்தித்தோம் வித்தைகள்
கற்றிடும்
தத்தைகள் சொன்னது
தத்தித்தோம்
தித்தித்தோம் தத்தைகள்
சொன்னது
முத்தமிழ் என்றுளம்
தித்தித்தோம்
கண்ணில் பேசும் சங்கேத
மொழியிது
கண்ணன் அறிய
ஒண்ணாததா?
உன்னைத் தேடும் ஏக்கத்தில்
இரவினில்
கண்ணுக்கிமைகள்
முள்ளாவதா?
என்றும் எழுதியிருப்பேன்.
என்னை வெகுவாக ரசிக்கும் இசைஞானி இளையராஜா ஒருமுறை என்னை அழைத்துவிட்டிருந்தார். பாரதியின் வழித்தோன்றலாக என்னைக் கருதிக்கொண்டிருக்கிறேன். அதே பாரதி, தனக்குப் பிடித்த, வே`றாருவர் எழுதிய பாடலைப் பாடுவதுபோலக் காட்சிஅமைப்பு. அதற்கு என்னை எழுதச்சொன்னார். என் முப்பாட்டனையே கவர்ந்த பாடலை எழுதுகிற உற்சாகத்தில் நான் எழுதினேன்,
வரிப்புலி அதள் தரித்தவன் எழில்
கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன்
துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி
வகுத்திடத் துணை வேண்டும்
என்று நாத்திகனான நான், ஆத்திகம் பேசும் ஒரு பாடலை எழுதினேன். 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'எங்கும் எதிலும் இருப்பான் அவன் யாரோ?' என்கிற பாடல் பெற்ற வரவேற்பைப் பற்றி உங்களுக்கே தெரியும்.
எனக்குள் ஒரு அழல் இருக்கிறது. எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. சிலபொழுது எரிந்து கொண்டும் சிலபொழுது கனிந்து கொண்டும்.
அதனால்தான் இருபத்தொன்பது வயதில் தத்துவப்பாடலும், அறுபத்திரண்டு வயதில்,
உன்னைப் படைத்த பிரம்மனே
உன்னைப் பார்த்து ஏங்கினான்
காதல் பிச்சை வாங்கினான்
என்றும் எழுத முடிகிறது. அந்த நெருப்பு இருக்கும்வரை என் பாட்டுகளும் வந்துகொண்டுதான் இருக்கும்!''
" எனது வீடு எனது வாழ்வு, என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா?
http://tamilnation.co/images/literature/pulamaipithan.jpg
சந்திப்பு: ரமேஷ் வைத்யா
படங்கள்: என். விவேக்
Thanks to Vikatan
madhu
9th September 2014, 01:20 PM
புலமைப் பித்தன் என் அப்பாவுடன் பணியாற்றியவர். ஒரு முறை வீட்டுக்கு வந்தபோது என் அப்பா என்னிடம் கடைக்குச் சென்று ஒரு பொருள் வாங்கி வரச் சொன்னார். நான் சட்டென ஓட ஆரம்பிததும்.. "பையா.. பையா" என்று கவிஞர் அழைக்க நான் நின்று என்னவென்று கேட்டதற்கு "காலை எடுத்து விட்டு நடப்பா" என்றார். புரியாமல் விழித்தபோது "பையாவின் காலை எடுத்தால் பைய.. அதாவது மெல்ல... நீ ஓடாமல் மெதுவாக நடந்து போய்விட்டு வா" என்றார்.
அப்போது அதை ரசிக்கத் தெரியவில்லை. ( என் பெற்றோர் ரசித்தனர் ).. இப்போது புரிகிறது :)
chinnakkannan
9th September 2014, 01:46 PM
ஆஹா ஆஹா.. கொஞ்சம் பலூனைக் கிள்ளிவிட்டால் டபக்கென்று தேனிசையும் தகவல்களும் கொட்டுகின்றன..
எஸ்வி சார் ந்ன்றி.. அதோ மேக ஊர்வலம் புலமைப் பித்தனுடையது தெரியாது..
வந்தேன் வந்தேன்வந்தேன் கதையின் சூத்திரதாரி
தந்தேன் தந்தேன் தந்தேன் வணக்கம் சபையினை நாடி
என ஆரம்பித்து கோழிகூவும் நேரமாச்சு தள்ளிப் போ மாமா என்ற பாடலை இவர் வளமையாக எழுத அதற்கேற்ற கோரியாக்ராஃபி (கலா மாஸ்டர்?) அமைக்க மயிலறகு பறப்பது போல் பானுப்ரியாவால் துள்ளியாட முடிந்தது -அழகனில்..
கிருஷ்ணா சார்.. நன்றி இனியவளே பாடல் தந்ததற்கு.. ரியல்லி எ சூப்பர்ப் சாங்க்..அவ்வளவாக விவரம் தெரியாத வயதிலேயே பார்த்து அனுபவித்திருக்கிறேன்.. அகெய்ன் தாங்க்ஸ்..
//எனக்குள் ஒரு அழல் இருக்கிறது. எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. சிலபொழுது எரிந்து கொண்டும் சிலபொழுது கனிந்து கொண்டும்.
அதனால்தான் இருபத்தொன்பது வயதில் தத்துவப்பாடலும், அறுபத்திரண்டு வயதில், // கண்ணா உனக்குள்ள தழல் இருக்கா..
ஏன் கேக்கற மனசாட்சி
அப்பப்ப விடற ஜொள்ளால அது அணைஞ்சு அணைஞ்சு எரியுதே.. நீ எப்போ எழுதப் போற..
மனசாட்சி..விக் விக் விக்../ செமை ப் பேட்டி நன்றி கிருஷ்ணா ஜி..
மதுண்ணா..அதுக்கப்புறமாவது பைய நடந்தீங்களா. ம்ம் கொடுத்து வைத்தவ்ர் நீங்கள்..
chinnakkannan
9th September 2014, 01:49 PM
//அவள் - யார் சொல்வது
அவன் - எங்கும் மௌனமே
அவள் - மௌனமே
அவன் - மௌனமே // நிஜம்மாகவே உங்க அனலிஸிஸ் வெகு அழகு கிருஷ்ணா சார்.. அந்தப் படத்தில் எல்லாப் பாட்டும் ஹிந்தியைத் தழுவவே இல்லை என நினைக்கிறேன்..கடைசி பாட்டு நானில்லை தழுவலோ..(லத்துவிற்கு இன்னும் நல்ல டிரஸ் கொடுத்திருக்கலாம் :) //
gkrishna
9th September 2014, 02:09 PM
சி கே சார்
சிவகாமியின் செல்வன் படத்தில் லத்து இடம் பெற்றதே நடிகர் திரு மனோகர் அவர்களால் தான் என்று கேள்வி பட்டேன்.
நடிகர் திலகம் 'சிவகாமி சிவகாமி' என்று அழைக்கும் போது ஒரு ஹம்மிங் வருமே 'ஹே ஹே ஹே ஹே ' மறக்கமுடியுமா ?
chinnakkannan
9th September 2014, 02:12 PM
மறக்க முடியாது கிருஷ்ணா சார்.. நல்லா இருக்கும்..
ஓ மனோகர் ரெக்கமெண்டேஷனா..
அந்தப் புரத்தில் ஒரு மகாராணி - படம் பார்த்தப்ப பாட்டு ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜா இருந்தது..பிற்காலத்துல வானொலியில் சரி தமிழ்ல ரேடியோவில் கேட்டபோது யாராயிருக்கும் என வியந்திருக்கிறேன்..
gkrishna
9th September 2014, 02:30 PM
சுஜாதா பிலிம்ஸாரின் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – சுஜாதா திரையில் தோன்ற வெள்ளித்திரையில் வெளியான ‘தீபம்’ திரைப்படத்திற்காக எழுதப்பெற்ற பாடல்! தீண்டும் இன்பத்தைப் போல் தினம் கேட்கத் தூண்டிநின்ற பாடல்! டி.எம்.சௌந்தரராஜன் எஸ். ஜானகி பாடியிருக்க இராகதேவன் இளையராஜா இசையை வார்த்தெடுக்க.. புலவர் புலமைப்பித்தன் வரிகள் மின்னுகின்றன!..
வழக்கமான காதல் பாடல் என்றாலும் கதகதப்பில் வார்த்தைகளைவிட கவித்துவங்கள் விளையாடிக்கிடக்க.. கலிங்கத்துப்பரணிகண்ட காட்சிக்கு வார்த்தைகள் வழங்கியதுபோல.. இன்பத்தின் மத்தளங்கள் இனிதாய் முழங்க.. மூன்றாம் பால் மோகனத்தை இப்பாடல் முழுவதும் காணலாம்!
கவிஞர் ஒருவர் திரைப்பட ஊடகத்தில் கிடைக்கும் வாய்ப்பினை திறமை இருக்கும்போது எப்படியெல்லாம் கையாளலாம் என்பதற்கு புலவர் இலக்கணம் வகுக்கிறார்.
ஏதோ சரித்திர காலத்திற்கு தள்ளப்பட்டவர்களாய் நாம் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கடத்தப்படுகிறோம்!
காதலன் தோளில் காதலி சாய்ந்து காதலைப் பாடிடச் சொன்னால்.. அந்தப்புரமும் தெரியும் அதன் அந்தரங்கமும் புரியும் என்கிறாரோ புலமைப்பித்தன்!
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ
அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்
அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்
அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ…ஆராரி…ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ
Thanks to kaverimainthan
chinnakkannan
9th September 2014, 03:02 PM
தாங்க்ஸ் கிருஷ்ணா சார் அந்தப்புரத்தில் ஒரு மகாராணி பாடல் இட்டமைக்கு.. இந்த முத்துச்சிப்பிய எடுத்து ஆராய்ந்தா கொஞ்சம் இலக்கியமாப் போகும்!..கண்ணதாசனே கையாண்டிருக்கிறார்.. கண்ணேபாப்பா பாட்டு், அப்புறம் முத்துச்சிப்பி மெல்ல மெல்லத் திறந்து வரும் முத்தும் ஒன்று தத்தை ..பிரிந்துவரும்.. அம்மம்மா அப்பப்பா தித்திக்கும் சேதிவரும்
//அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு// என்ன வரிகள்..புலமைப் பித்தன்..
கல்யாணத் தேன் நிலாவும் இவர் தான்..
//கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா -
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா//
//தூக்கமருந்தினைப் போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள் -
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள்// ஓ..ஓ. அழகிய வரிகள்..
gkrishna
9th September 2014, 03:25 PM
வைர முத்து
மனசு மயங்கும்.... மனசு மயங்கும்
மெளன கீதம்... மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
மன்மதக் கடலில்... மன்மதக் கடலில்
சிப்பிக்குள் முத்து... சிப்பிக்குள் முத்து
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு
gangai amaran
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கன்னமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
chinnakkannan
9th September 2014, 03:40 PM
முத்தான முத்தல்லவோ - கண்ணதாசன்
ஆழ்க் கடலில் தேடிய முத்து - வாலி?
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் - கண்ணதாசன்?
கத்தும் கவியினிமை கண்களிலே புன்சிரிப்பு
பத்து விரலழகைப் பார்ப்பதுவும் பூரிப்பு
சித்தம் மகிழ்ந்திடவே சீர்மிகுந்த மத்தாப்பும்
முத்தாக வந்ததுவே ஆம்..
gkrishna
9th September 2014, 03:44 PM
'சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடம் மறைத்தாளே தேவி மடியல்லவோ பூஞ்சோலை உன் மகனாய் நான்'
இந்த பாடல் யார் எழுதியது சி கே சார்
chinnakkannan
9th September 2014, 03:52 PM
தெரியலையே கிருஷ்ணா சார்..யாருக்கு யார் காவல் படம் என்று தெரிந்தது.. (அது சுஜாதா எழுதிய ஜன்னல் மலர் என்ற குறு நாவலை பேஸ் பண்ணி வந்தது - வெளிவந்த தியேட்டர் மதுரை ஸ்ரீ தேவி.. படம் பார்க்கலை..இவ்ளோ டீடெய்ல் கொடுத்திருக்கினில்ல ( பாடலாசிரியர் தெரியலைங்கறதுக்கு சமாளிக்கறாங்களாம்)
mr_karthik
9th September 2014, 04:08 PM
சொல்ல வந்தது ஒரே விஷயத்தை, கையாண்ட வார்த்தைகள் மட்டுமே சற்று வித்த்யாசம்....
1) பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து
வந்தது முத்து என மன்னவன் சொத்து.
(கண்ணே பாப்பா என் கணிமுத்து பாப்பா - கண்ணே பாப்பா)
2) பனித்துளி விழ விழ முத்து விளையும் - ஆஹா
(கண்கள் இரண்டும் விடி விளக்காக - கண்ணன் என் காதலன்)
3) முத்துச்சிப்பி வாய்திந்து மோகம் கொண்டு களித்திருக்க
கொட்டும் பனித்துளி விழுந்து கொஞ்ச கொஞ்ச என்ன வரும்
ஆ.ஆ.ஆ.ஆ.. முத்து ஒன்று பிறந்து வரும்
(வெண்ணிலா வானில் வரும் வேளையில் - மன்னிப்பு)
4) முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப்பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
(அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - தீபம்)
5) சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
(பூந்தோட்ட காவல்காரன்)
கொசுறாக...
தாமரை பூவினில் தேன் சிதற.. நீ கொஞ்ச கொஞ்ச நான் கெஞ்ச கெஞ்ச,,
(நீ கேட்டால் நான் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா - இளமை ஊஞ்சலாடுகிறது)...
gkrishna
9th September 2014, 04:09 PM
யாருக்கு யார் காவல் படம் என்று தெரிந்தது.. (அது சுஜாதா எழுதிய ஜன்னல் மலர் என்ற குறு நாவலை பேஸ் பண்ணி வந்தது - வெளிவந்த தியேட்டர் மதுரை ஸ்ரீ தேவி.. படம் பார்க்கலை..
thanks to sarada madem
யாருக்கு யார் காவல் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சுஜாதா கூறுகிறார்……
என் பத்திரிகைத் தொடர்கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டு எதுவும் வியாபார வெற்றி பெறவில்லை. எனக்கும் சில்லறை புரளவில்லை. ஆனால், ஒரு நன்மை நிகழ்ந்தது. ‘வேண்டாங்க.. ராசியில்லாத எழுத்தாளர். ஏதும் சரியாப் போகலை. படம் பாதில நின்னு போய்டுது. எடுத்தாலும் படுத்துக்குது. எதுக்குங்க எழுத்தாளரை நாடணும் ? நூறு கதை நாமளே செய்துக்கலாம். தேவைப்பட்டா….” என்று என்னை விட்டுவிட்டார்கள். பத்திரிகைத் தொடர்கதைகளை சினிமா எடுக்கும் வழக்கமே ஒழிந்து போனதற்கு, என் கதைகள் முக்கியக் காரணம்.
படிக்க நன்றாக இருப்பது நடிக்க நன்றாக இருக்கும் என்பது கட்டாயமில்லை. ஆனால் நான் வசனம் மட்டும் எழுதிய படங்கள் பெரும்பாலும் வெற்றி கண்டன.
‘ஜன்னல் மலர்‘ பற்றி சுஜாதா…..
ஜன்னல் மலர்
சினிமாவாக எடுத்துக் கெடுக்கப்பட்ட என் கதைகளில் மற்றும் ஒன்று ‘ஜன்னல் மலர்’.
விகடனில் நான் எழுதிய முதல் தொடர்கதை ‘ஜன்னல் மலர்‘. தொடர்கதை என்பதைவிட குறுநாவல் என்று சொல்லலாம். அப்போது விகடனில் துணை ஆசிரியராக இருந்த பரணீதரன் எனக்கு ஒரு முறை போன் செய்து, ‘இந்தக் கதையின் முடிவில் ஒரே ஒரு வார்த்தை சேர்த்துக்கொள்கிறேன்’ என்று சொன்னார். நான் ‘தாராளமாக‘ என்று அனுமதி கொடுத்தேன். அந்த ஒரு வார்த்தை கதைக்கு மெருகூட்டியது.
சிறையிலிருந்து திரும்பி ஆவலுடன் மனைவியைச் சந்திக்க வரும் கணவன், தான் உள்ளே இருந்தபோது மனைவி எப்படி உயிர் வாழ்ந்தாள் என்பதை அறிந்து, அதிர்ச்சியுற்று மீண்டும் சிறைக்குச் சென்று விடுவான். இந்தக் கதையுடன் எந்த விதத்தொடர்பும் இல்லாமல் ஒரு படம் எடுத்தார்கள். நடிகவேள் எம்.ஆர். ராதாவும். ஸ்ரீப்ரியாவும், ஸ்ரீகாந்தும் நடித்தார்கள். வேறு எதுவும் எனக்குச் சுத்தமாக ஞாபகம் இல்லை. அதில், கே. ஜே. ஜாய் என்கிற மலையாள இசையமைப்பாளரின் ஒரு பாடலை இன்னும் சிலர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்கள் வைத்த பெயர் மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘யாருக்கு யார் காவல்?’ யாராயிருந்தால் எங்களுக்கென்ன என்று ரசிகர்கள் விலகிக்கொண்டார்கள்.
ஜன்னல் மலர்
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக புறக்கணிக்கும் உலகத்துடன் அவன் நடத்தும் போராட்டமே கதை. விறுவிறுப்பாகச் செல்லும் இக்கதை ‘சிறைச்சாலை உண்மையிலேயே ஒரு குற்றவாளியைத் திருத்துகிறதா?’ என்கிற கேள்வியையும் அழுத்தமாக முன் வைக்கிறது.
http://img1.chennaishopping.com/images/300x300/978-81-8493-566-0_b.jpghttp://t1.gstatic.com/images?q=tbn%3AMdmtor21DsAuDM%3Ahttp%3A%2F%2Fsorge nkind.files.wordpress.com%2F2008%2F02%2Fsujatha.jp g&w=95&h=120&w=95&h=120
mr_karthik
9th September 2014, 04:17 PM
1982 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது - வைரமுத்து (பயணங்கள் முடிவதில்லை)
1975 பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை - புலமைப்பித்தன் (நீதிக்கு தலைவணங்கு)
1962 பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது - கண்ணதாசன் (படித்தால் மட்டும் போதுமா)
எந்த ஒன்றையும் முதலில் சொன்னவன் கண்ணதாசன்....
gkrishna
9th September 2014, 04:32 PM
1982 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது - வைரமுத்து (பயணங்கள் முடிவதில்லை)
1975 பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை - புலமைப்பித்தன் (நீதிக்கு தலைவணங்கு)
1962 பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது - கண்ணதாசன் (படித்தால் மட்டும் போதுமா)
எந்த ஒன்றையும் முதலில் சொன்னவன் கண்ணதாசன்....
எல்லாவற்றிற்கும் மூலாதாரம் அதாவது பிள்ளையார் சுழி கவிஞர் தான்
சந்தேகமே இல்லை கார்த்திக் சார்
நீங்கள் தகவல் பெட்டகம் மட்டுமல்ல கருத்து பெட்டகம் கூட
chinnakkannan
9th September 2014, 05:16 PM
//எந்த ஒன்றையும் முதலில் சொன்னவன் கண்ணதாசன்....// உண்மை கார்த்திக் சார்..
madhu
9th September 2014, 07:18 PM
எஸ்.பி.பி.யின் ஒரு அருமையான பாடல்.. காற்றுக்கென்ன வேலி படத்தில் மோகன், கீதா நடிப்பில் ( கதா நாயகி என்னவோ ராதா-தான் :) ) சிவாஜி ராஜா இசையில்..
இது போல ஒரு பாட்டுக்கு இது மாதிரி டான்ஸை அமைத்தவர் எந்த மகானுபாவனோ ?
சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டு போகும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
( சின்ன )
பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்
மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்
கன்னி இளம்பூக்கள் கையெழுத்து கேட்கும்
உள்ளுறங்கும் சோகம் கண் திறந்து பார்க்கும்
ஞாபகங்கள் கண்ணில் இன்று முத்துக் குளிக்கும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
( சின்ன )
அனல் மீது பூக்கும் அந்த கொடிக்கின்று வேரில்லை
இதயத்தின் சுவரில் உந்தன் பெயரின்றி வேறில்லை
மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை
பார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை
கோதை மகள் பேரைச் சொன்னால் ராகம் இனிக்கும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
( சின்ன )
http://youtu.be/dDyWGn7HT90
gkrishna
9th September 2014, 07:54 PM
இரண்டு பாடல்கள் - இரண்டுமே ஏறத்தாழ லா லா என்றே முடியும்
இரு வேறு கவிஞர்களின் கற்பனை
ஒன்று மௌனம் சம்மதம் - புலவர் வரிகள் - இளையராஜா இசை
முதல் பாடல் காதலனும் காதலியும் இணைந்து பாடுவது
காதலன் காதலியை வர்ணிப்பது காதலி காதலனை வர்ணிப்பது
இரவு நேர வேளையில் விருந்தினர் விடுதியில்
http://www.indiat10.com/images/entertainment/movies-regional/top-10-tamil-films-of-mammooty/mounam-sammadham.jpg
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
மற்றொன்று
சற்றே பின்னோக்கி செல்வோம் ஒரு 13 ஆண்டுகள் 1977 கால கட்டம்
மாலை வேளை கடற்கரை மணல் வெளியில்
பட்டின பிரவேசம் - கவியரசர் வரிகள் - மெல்லிசை மன்னர் இசை
காதலன் தனித்து பாட காதலி அதை வாத்திய இசையாக்கி மகிழ
http://4.bp.blogspot.com/-H1AOJ-3GuYU/UfMyOwsbdrI/AAAAAAAABRo/O_3YP4Di_fE/s1600/Pattina-Pravesam.gifhttp://k24crazy.com/wp-content/plugins/k24_lyrics/file/upload/movie_img/th_1389-k24crazy-Pattina-Pravesam.png
வான் நிலா நிலா
அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லா(ம்)
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா
அல்ல உன் வாலிபம் நிலா
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா ?
பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ?
வான் நிலா நிலா..
தெய்வம் கல்லிலா ?
ஒரு தோகையின் சொல்லிலா ?
பொன்னிலா? பொட்டிலா?
புன்னகை மொட்டிலா ?
அவள் காட்டும் அன்பிலா ?
இன்பம் கட்டிலா ?அவள் தேகம் கட்டிலா ?
தீதிலா காதலா ? ஊடலா? கூடலா ?
அவள் மீட்டும் பன்னிலா ?
வான் நிலா நிலா ..
வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா ..
வான் நிலா நிலா ..
http://www.youtube.com/watch?v=AkupwBvSAG0
http://www.youtube.com/watch?v=cd29Lv-vi-g
இரண்டுமே வெற்றி பெற்ற அமரத்துவம் வாய்ந்த பாடல்கள்
mr_karthik
9th September 2014, 08:00 PM
சி கே சார்
சிவகாமியின் செல்வன் படத்தில் லத்து இடம் பெற்றதே நடிகர் திரு மனோகர் அவர்களால் தான் என்று கேள்வி பட்டேன்.
எம்.ஜி. ஆரிடம் லட்டுவை அறிமுகப்படுத்தியதும் மனோகர்தான்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தபோது, ராமநாதபுரம் ராஜா சேதுபதியின் மகளான குமாரி நளினியை எம்.ஜி.ஆருக்கு 'விஸ்வம்' மனோகர் அறிமுகப்படுத்த உடனே எம்.ஜி.ஆர். 'கண்டேன் என் கம்பெனியின் கதாநாயகியை' என்று நாகேஷ் பாணியில் கமெண்ட் அடித்து, குமாரி நளினியின் பெயரை 'லதா' என்று மாற்ற, ஜொள்ளு ரசிகர்களால் 'லட்டு லதா' ஆக்கப்பட்டார்...
mr_karthik
9th September 2014, 08:07 PM
கிருஷ்ணாஜி
முதலில் வந்த படம் மற்றும் பாடல் என்ற வகையில் 'பட்டினப்பிரவேசம்' பாடலைத்தான் நீங்கள் முதலில் பதிவிட்டிருக்க வேண்டும். 'மௌனம் சம்மதம்' பாடல் அதைப்பார்த்து காப்பி. இருப்பினும் பதிவு அருமையோ அருமை.
எங்கும் எதிலும் முதல்வர்கள் கவியரசரும், மெல்லிசை மன்னரும்தான்...
Gopal.s
9th September 2014, 09:19 PM
தமிழுக்கும் ,பக்தி பாடல்களுக்கும் அப்படி ஒரு பொருத்தம். என்னை கவர்ந்த மிக சிறந்த பக்தி பாடல்கள்.
விநாயக துதியோடு.(சீர்காழி )
https://www.youtube.com/watch?v=UjbH5oqWMac
முருகனின் அருள் பெற.(டி.எம்.எஸ்)
முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
முக்கண் பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண
பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?
தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட
திக்கு பரி அட்ட பயிரவர்
தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத
கொத்து பறை கொட்ட களம் மிசை
குக்கு குகு குக்கு குகுகுகு
குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே.
https://www.youtube.com/watch?v=cJI5hgdvsMg
சுசீலாவின் மாயீ மகமாயி
https://www.youtube.com/watch?v=Lk7WI1n7rBk
எஸ்.பீ.பியின் ஆயர்பாடி மாளிகையில்
https://www.youtube.com/watch?v=cuP2jzhmnh4
L .R ஈஸ்வரி முத்துமாரி அம்மனுக்கு
https://www.youtube.com/watch?v=v4dRSvIVFj8
பொம்ம பொம்ம தா ,பெங்களூர் ரமணி அம்மாள்
https://www.youtube.com/watch?v=wTYzw4uvz0Y
பள்ளி கட்டு சபரி மலைக்கு, வீரமணி
https://www.youtube.com/watch?v=h7t22ZU5CmE
ஜனனி ஜனனி ,இளைய ராஜா
https://www.youtube.com/watch?v=13lntOv55_0
rajeshkrv
9th September 2014, 09:41 PM
//எந்த ஒன்றையும் முதலில் சொன்னவன் கண்ணதாசன்....// உண்மை கார்த்திக் சார்..
கவிஞர் சொன்னார் தான் ஆனால் அதற்கு முன்பும் கா.மு ஷெரிப், மருதகாசி ஐயா, தஞ்சை ராமய்யா தாஸ் மற்றும் கு.மா.பா போன்றோரும் பல தத்துவ பாடல்களையும் ஆழமான சிந்தனைகளையும் சொல்லத்தான் செய்தனர்.
chinnakkannan
9th September 2014, 10:57 PM
//சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டு போகும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்// மதுண்ணா வாவ்.. என்னா பாட்டுங்க இது..இது கேட்க மட்டும் செய்திருக்கேன் பார்த்ததில்லை..ஆக்சுவலா கீதாவிற்கு அழகு நடிப்பு எல்லாம் இருந்தும் அவர் ஹீரோயினாக சோபிக்கவில்லை.. பாடல்வரிகளுக்கும், வீடியோவிற்கும் தாங்க்ஸ்..
வான் நிலாவிற்கும் கல்யாணத் தேன் நிலாவிற்கும் வரிகள்,கம்பேரிஸனுக்கு + காணொளிகள் சரி ஈ ஈ தமிழ்ல வீடியோக்களுக்கு நன்றி..இரண்டுமே என்னைக் கவர்ந்த பிடித்த பாடல்கள்.. ஒன்றில் பாடல் அழகு (சிவரஞ்சனி அவ்வளவாகக் கவரவில்லை) இன்னொன்றில் பாடலும் அழகு (அடக்க ஹேண்ட்ஸ்ம் மம்முட்டி ஒடுக்க அழகு சொர்ண புஷ்பம்)..
இந்த வான் நிலா பாடல் இருக்கிறதே.. வழக்கமாக மெட்டுப் போட்டுத்தான் பாட்டெழுதச் சொல்வார்கள்.. இது கவிஞர கண்ண தாசனைப் பாட்டெழுதச் சொல்லிவிட்டு மெட்டுப் போட்டார் என்பது போல் எம்.எஸ்.வியின் ஒரு பேட்டியில் படித்ததாக நினைவு.. என் நினைவில் பிழை கூட இருக்கலாம்..
//உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தபோது, ராமநாதபுரம் ராஜா சேதுபதியின் மகளான குமாரி நளினியை எம்.ஜி.ஆருக்கு 'விஸ்வம்' மனோகர் அறிமுகப்படுத்த உடனே எம்.ஜி.ஆர். 'கண்டேன் என் கம்பெனியின் கதாநாயகியை' என்று நாகேஷ் பாணியில் கமெண்ட் அடித்து, குமாரி நளினியின் பெயரை 'லதா' என்று மாற்ற, ஜொள்ளு ரசிகர்களால் 'லட்டு லதா' ஆக்கப்பட்டார்...// கார்த்திக் சார்..எனக்குத் தெரியாத தகவல் இது.. ராஜா வீட்டுப் பெண்ணா லதா.. நன்றி. (இருந்தாலும் அவர் லத்து தான்..!)
//கவிஞர் சொன்னார் தான் ஆனால் அதற்கு முன்பும் கா.மு ஷெரிப், மருதகாசி ஐயா, தஞ்சை ராமய்யா தாஸ் மற்றும் கு.மா.பா போன்றோரும் பல தத்துவ பாடல்களையும் ஆழமான சிந்தனைகளையும் சொல்லத்தான் செய்தனர். // இதுவும் உண்மைன்னு சொல்லட்டுமா.. :) ராஜேஷ் ஜி..அந்தந்த கால கட்டத்தில் தத்துவங்கள் வந்திருக்கின்றன..பிறந்திருக்கின்றன.. வழிமொழிந்த வகை என்பதைத் தான் கார்த்திக் சார் சொல்ல நான் வழி மொழிந்தேன் (ஹப்பாடா ஒருவகையா குழ்ப்பியாச்சு).. கவிஞர் கண்ண தாசன் கூட செங்கலின் வண்டு கலின் கலின் என்று - குற்றாலக் குறவஞ்சியில் இருந்து நிமிண்டி – எழுந்து வாராயோ கனிந்து வாராயோன்னு அபிராமியை எஸ்.வி.சுப்பையா கூப்பிடுவது போல எழுதியிருப்பார்..அங்கங்கே உள்ள நல்லவிஷயங்களை மற்ற காலங்களில் கவிஞர்கள் தம் சிந்தனைக்கேற்ப எழுதியதில் எதுவும் தவறுண்டோ..இல்லை என்று தான் நினைக்கிறேன்..
chinnakkannan
9th September 2014, 11:42 PM
நேற்று எதேச்சையாக கே.டிவியில் சிவகுமார் நதியா படம் பார்க்க நேரிட்டது படம் பெயர் பார்க்கவில்லை..இரண்டு பாடல்கள் இளஞ்சோலை பூத்ததா, கண்ணா உனைத் தேடுகிறேன் வா..இரண்டு பாடல்களும் நல்லமெலடி..( நதியாவை நடனமாட விட்ட்து தான் ஒரு கஷ்டம்)
rajeshkrv
10th September 2014, 12:46 AM
நேற்று எதேச்சையாக கே.டிவியில் சிவகுமார் நதியா படம் பார்க்க நேரிட்டது படம் பெயர் பார்க்கவில்லை..இரண்டு பாடல்கள் இளஞ்சோலை பூத்ததா, கண்ணா உனைத் தேடுகிறேன் வா..இரண்டு பாடல்களும் நல்லமெலடி..( நதியாவை நடனமாட விட்ட்து தான் ஒரு கஷ்டம்)
padam unakkagave vaazhgiren (interesting story knot ... sivakumar taking his wife(menaka) to hospital who has fire injury meets with accident with a car which suresh was driving .. and nadhiya goes insane ) and when she realises siva is the one who killed suresh she goes furious and then loves him .. appadi oru kadhai
chinnakkannan
10th September 2014, 01:05 AM
தாங்க்ஸ் ராஜேஷ்.. யா.. கொஞ்சம் போரடிக்காமல் சென்றது படம்.. எதிர்பாராத சர்ப்ரைஸாக சில பாடல்கள்..நடனம்..வேறு யார் புலியூர் சரோஜா தான் என நினைக்கிறேன்..அதில் வந்த வி.கோபாலகிருஷ்ணன் பற்றி.. நாடகக் கலைக்குத் தொண்டாற்றியவர்.. அவர்பற்றி இங்கு பேசவில்லை என நினைக்கி”றேன்.. நீங்கள் எழுதியிருக்கிறீர்களா..
Gopal.s
10th September 2014, 06:59 AM
Courtesy- Poem.
என்னோடு உன்னோடு இளையராசா – முருகன் மந்திரம்
என் இசை அறிவின் வட்டத்திற்குள் புதிதாக வருகிற ராசாவின் பாடலை…. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் கேட்கிறேன்… வெறி கொண்டலைபவன் போல மீண்டும் மீண்டும்… காதுக்குள் அந்த பாடலை அலையவிடுகிறேன்.
இதுவரை என் செவிகள் ருசித்துக்கொண்டிருக்கிற மெட்டுக்களை விட, எனக்கு இன்னும் அறிமுகமாகாத ராசாவின் பாடல்களைப் பற்றிய தேடல் பேராவலாய் எழுந்து நிற்கிறது.
உதவி இயக்குநராக சேரவேண்டும்… யாரிடம் சேரலாம். இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே உச்சரித்தது, என் விருப்பத்தின் குரல். என் விருப்பத்தின் குரல் உச்சரித்த, அந்த இரண்டு பெயர்களுமே இயக்கத்தின் உச்சத்தில் இருந்த நேரம்…
அந்த பெயர்களின் சொந்தக்காரர்களை நேராகப் பார்க்க வாய்ப்புகளை வழங்காத சந்தர்ப்பங்களோடு சண்டை செய்வதில் உடன்பாடில்லை. எனவே, கடிதத்தை உதவிக்கு அழைத்தேன். என் சார்பாக சென்று வாய்ப்பு கேட்டு வர என் கடிதங்கள் புறப்பட்டன. ஆனால் அந்த கடிதங்களை அவர்களிடம் அழைத்துச் செல்வது யார்?
அதில் முதல் பெயர்க்காரருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் பற்றிய பாட்டுக்கதை தான் இது… அந்த முதல் பெயர்க்காரர் இயக்குநர் பாலா.
உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைபவர்கள் யாவருமே.. அநாதையின் நிலையில் தான் இருப்பார்கள். நானும் அப்படியே… எந்த இழிநிலையிலும்.. நிலை பிறழாமல்…. கூடவே வரும் ராசாவின் பாடல்கள்.
இதயத்தில் இருள்குவிந்து இடிந்து கிடக்கும் இயலாமைப்பொழுதுகளில்.. தாய்போல மடியில் கிடத்தி, தன் இசையின் விரல்களால் தடவிக்கொடுக்கிறார் ராசா.
நீட்டுவதும் நிறுத்துவதுமாக,
போற்றுவதும் போதிப்பதுமாக,
உணர்தலும் உணர்த்துதலுமாக
ராசாவின் பாடல்கள், கேட்டல் என்ற நிலையை கடந்த ஒன்று. காதுகளோடு நின்று விடக்கூடிய ஒலிகள் அல்ல… ராசாவின் இசைக்கோர்வைகள். உயிரோடு பேசக்கூடிய மொழிகள்…
கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ
காலப்பெருவெள்ளத்தின் கண்கள் வழியாக கண்ணதாசன் கண்ட வாழ்வின் தத்துவத்தை… இசைஞானியின் ராகம்… தன் தோளில் சுமந்து வரும்பொழுது…
திசைகளை தொலைத்துவிட்டதொரு நிலப்பரப்பின் நடுவில்… தனியொருவனாய் வீசி எறியப்பட்டதைப்போல… ஒரு அமானுஷ்யத்திற்குள்… நிற்கிறோம் நாம்… அதை இன்னும் அதிகப்படுத்துகிறது… ராசாவின் இசையோடு இறுகிக் கசிகிற ஜென்சி, ஷைலஜா, மலேசியா வாசுதேவனின்
குரல்.
விதியின் கைகள் போல, ராசாவின் இசையின் கைகள், நம்மை தன்போக்கில் இழுத்துச் செல்கிற வல்லமை படைத்ததாய் இருக்கிறது.
வடபழனியில், விசாலமான வாகனம் நிறுத்தும் வசதி கொண்ட அந்த நட்சத்திர விடுதியில் பாலா, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இருப்பதாய்…. என்னை ரசிக்கிற, என்னை நேசிக்கிற, ஒரு தம்பி ராஜேஷ்குமார் எனக்கு அறிவித்தான். கூடவே எனக்கு மட்டும் தபால்காரனாகி உதவுகிறேன் என்று தன்னம்பிக்கை தந்தான். சில காகிதங்கள் என் கடிதமாக உருமாறியது. அந்தக் கடிதம் கை மாறியது. என் பிரத்யேக தபால்காரனால் பாலாவின் கைகளில் சேர்க்கப்பட்டது. என் எதிர்காலத்தை சுமந்துகொண்டிருப்பதாய் நான் நினைத்த என் கடிதம், ஒரு பாடலின் சில வரிகளையும் தனக்குள் கொண்டிருந்தது…
ராசாவின் மெட்டு, ராசாவின் வார்த்தை…. என்ற சிறப்புத்தகுதி கொண்ட பாடல்களில் அந்த பாடலும் ஒன்று. கூடுதலாக மதுபாலகிருஷ்ணனின் மாயக்குரலை தன்னோடு சேர்த்துக்கொண்டது அப்பாடல்…
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற…
அந்த பாடலில் இருந்து இந்த வரிகளை மட்டும் வெட்டி எடுத்து என் கடிதத்திற்குள் கொட்டி இருந்தேன்.
இந்தப்பாடல் வரிகள், நான் உன்னிடம் தான் உதவி இயக்குநராக சேரவேண்டும் என்று இன்னுமொரு முறை எனக்குச்சொன்னது. வார்த்தைகளின் கண்ணாடியில் வாழ்க்கையின் பிம்பத்தைக்காட்டுகிறாய். எப்படி உனக்கு மட்டும் இப்படி வாய்க்கிறது… என்று… வியப்பின் உச்சியில் நின்று பாலாவிடம் உரைத்துவிட்டு… அடுத்தவரியில் உண்மையையும் உளறி இருந்தேன்.
இந்த வரிகளை உன் அனுமதியோடு என் வரிகளாய் மாற்றிக்கொள்கிறேன். மன்னிக்கவும்… எனக்கான வரிகளாய், என் நிலையின் வரிகளாய் மாற்றிக்கொள்கிறேன். என் நிலை உனக்கு உரைக்க இந்த வரிகள் போதும்… எனக்கு வாய்ப்பு தருவது பற்றிய உன் நிலை பற்றி தெரியும் வரை, நிலை கொள்ளாமல் நான் திரிவேன் என்பதை மட்டும் உன்னிடம் சொல்லிக்கொள்கிறேன், என்று வேண்டுகோள் வைத்திருந்தேன்.
அவர் பாடலையே அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். வாசித்துவிட்டு பாலா என்ன நினைத்திருப்பாரோ என்று நினைத்தேன். இன்று வரை விடை தெரியாமல் அந்த நட்சத்திர விடுதியிலேயே என் கேள்வி சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது என்பது உபகதை.
ஆனால் இன்றும் அந்தப்பாடல்.., நான் சோர்வுறும் போதெல்லாம் என் அருகிலேயே நிற்பதாய் உணர்வேன். “பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்…” என்று முதல் வரியிலேயே ராசா… நான் என்பது ஒன்றுமில்லை என, இறைவனின் காலடியில் சரணாகதி அடைந்திருப்பார்.
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்
ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.
இடைவெளியற்ற தனிமையின் சர்வாதிகாரம், நம் தோல்விகளின் கண்ணீரை ருசித்துச் சிரிக்கிற பொழுதுகளிலும்…
நிகழ்காலம் என்ற ஒன்று எதிர்காலத்திற்குள் எட்டிப்பார்க்குமா… என்ற கேள்விக்குறியோடு… தற்காலிகமாய் மூளைச்சாவு நடந்தேறும் நிமிடங்களிலும்…
தேடல்களோடு திரிகிற நம்மை… திருப்பி அனுப்பியே தீருவதென்று துடிக்கிற தினசரி வாழ்வின் இரக்கமற்ற தேவைகளின் முன் மண்டியிடுகிற போதும்..
நம் அசாத்திய நம்பிக்கையின் முடிவில்லாப் பெருவெளியை… முட்டுச்சந்துகளாக மட்டுமே முடிவு செய்து நகைப்பவர்களின் முகங்களை…
முகம் சுழிக்காமல் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயங்களிலும்…
ராசாவின் பாடல்கள் தான்… காலாட்படையாக, குதிரைப்படையாக, யானைப்படையாக… வந்து நின்று நம் எதிரிகளை விரட்டி அடிக்கிறது.
ராசாவே மெட்டமைத்து, ராசாவே எழுதிய இந்த பாடல், எல்லா நிலையிலும் ஒரே நிலையில் இருப்பதாய், ஒரே நிலையை உரைப்பதாய் உணர்கிறேன். ஆதலினால் அடிக்கடி கேட்க விழைகிறேன்.
வாழ்தலுக்கான செல்வத்தைத் தாண்டிய, அத்தனை செல்வங்களும் என்னிடம் இருப்பதாய் உணர வைக்கிறது இந்த பிச்சைப்பாத்திரம். மிக மிக சொற்ப அளவில் கல்வியாக, கலையாக, என்னோடு இருக்கும் செல்வத்தை விட பெருஞ்செல்வம் ஏதுமில்லை, என்றுபிச்சைப்பாத்திரம் வழியாக உணர்த்திச் செல்கிறார் ராசா.
chinnakkannan
10th September 2014, 10:30 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..
ம்ம் காலையில் தத்துவ மழையா..எனக்குப் பிடித்த தத்துவப் பாடல்..அதற்கு முன் அடியேன் முன்பு எழுதிப் பார்த்த சில பாடல்கள்..(வேற வழியில்லை.. நீங்க படிச்சுத் தான் ஆகணும் :) )
மூப்பே என்னைச் சீண்டாதே
..முகத்தில் சுருக்கம் தாராதே
சீப்போ என்றே சொல்லிடுவேன்
..திரும்பி என்னைப் பார்க்காதே
காப்போம் என்றே எனைச்சுற்றி
..கடமை இருக்கு கேட்டாயோ
போப்பு என்றென் ஊர்த்தமிழில்
..சொல்வேன் நீயும் போய்விடப்பா..
*
பயமின்றி துள்ளித்தான் பாய்ந்தகாலம் போனது..
..பாரினிலே கண்டகாட்சி பாழ்மனதில் பூண்டது
சுயங்கொண்டே சோர்விலாமல் சூதுஎதும் கொண்டிரா
...சுறுசுறுப்பு மிகக்கொண்ட இளமையதும் போனதே
வயல்வரப்பில் விளைந்தநாற்று அசைந்தாடிக் காற்றிலே
..வானம்பார்த்து நின்றதுபோல் வாழ்ந்தகாலம் போனது
கயல்விழிகள் மனதினுள்ளே கலந்தாடி நீந்திய
..காலமெல்லாம் போச்சுபோச்சு முதுமைவந்து சேர்ந்ததே...!!
அதிசயமாய் இருப்பதெது என்று கேட்டால்
..அழகான மனிதரவர் வாழ்க்கை என்பேன்
நதிபோலே ஓரிடத்தில் ஆரம் பித்து
..நன்றாகப் பலவாறாய்ச் சுழித்து ஓடி
கதியில்லை என்பதுபோல் இன்னும் சுற்றி
..கடக்கென்றே நின்றுவிடும் செயல்தான் என்னே..
விதியென்பர் வேறென்பர் ஆனால் என்ன
..வாழ்வதனின் முடிவென்றும் அறிய மாட்டார்
*
நீர்போல இருப்பதுதான் வாழ்க்கை போல
..நிறைவாக அலசிடலாம் அதனை இன்று
தேர்போல அசைந்தோடி மெல்லச் செல்லும்
..தெளிவான நதியோதான் சுழலில் சுற்றும்
பார்த்தநிறம் தன்னுள்ளே வாங்கும் போல
...பலருக்கும் வாழ்க்கையிலே ஆசை தோன்றும்
ஆர்ப்பாட்ட அருவியொலி அடங்கல் போலே
..அடங்கிடுமே மனிதவாழ்வு ஓர்நாள் தானே..
**
திரைப்பாடலில் இதையே கொடுத்திருப்பார் இளையராஜா..கவிஞர் வைரமுத்துவின் உதவியுடன்..திடீரென வருகின்ற பாடல் இது படம் நீங்கள் கேட்டவை..
**
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன?
ஆசைகள் என்ன ஆணவம் என்ன?
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது
உடம்பு என்பது உண்மையில் என்ன?
கனவுகள் வாங்கும் பை தானே
காலங்கள் மாறும்
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்
**
//உடம்பு என்பது உண்மையில் என்ன?
கனவுகள் வாங்கும் பை தானே// ஹெள ட்ரூ..ம்ம் இதுக்குள்ள எவ்ளோ குழப்பம் எவ்ளோ சோதனை எவ்ளோ வேதனை எவ்ளோ போராட்டம் எவ்ளோ புன்சிரிப்பு எவ்ளோ பேரழுகை.. ஒரே ஸேடா இருக்குதுங்கோ..
யாரங்கே சூப்பரா ஒரு ரொமாண்டிக் சாங்க் எடுத்து விடுங்க.. :)
madhu
10th September 2014, 10:43 AM
தக்கிடத்தா.. ஹை ஹை திக்கிடத்தா
தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா
என்னை தட்டிக் கொண்டு போறா பாரு குயிலக்கா
டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் குரல் கொடுக்க ஜெயசுதாவும், ஜெய்சங்கரும் ஆடும் பிராயசித்தம் பாடல்.
"மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி" என்று லக்ஷ்மிக்காக சுசீலா பாடிய பாடல் பிரசித்தம். இந்தப் பாட்டின் தாளம் நம்மையும் தாளம் போட வைக்கும். கேட்டுப்பாருங்களேன்..
http://youtu.be/O1UlxI0syTE
madhu
10th September 2014, 10:47 AM
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
http://youtu.be/ds61fQM1Y4s
சிக்கா.. இதோ அதன் ஒரிஜினல்
Upkaar படத்திலிருந்து மன்னா டே
http://youtu.be/T7mJlK0RXQk
gkrishna
10th September 2014, 11:01 AM
http://lh6.ggpht.com/-ODM5SbM17TQ/VA5BeLR_mQI/AAAAAAAAMv0/wHbDBUD4REQ/w1280/100000.jpghttp://lh5.ggpht.com/-G_JJyYnfwpU/VA5BfB02-WI/AAAAAAAAMwA/Cvgrm2MetD4/w1280/100001.jpghttp://lh6.ggpht.com/-v-3ga2jG4Vc/VA5BgR2-r3I/AAAAAAAAMwU/XDDzpnzYu3M/w1280/100002.jpghttp://lh4.ggpht.com/-grPHR_QfBGg/VA5Bhx9-S3I/AAAAAAAAMws/pIvCNkYzR6o/w1280/100003.jpg
madhu
10th September 2014, 11:05 AM
செல்லக்கிளி... நான் பார்க்கவில்லை. ஆனால் "மதுரை மீனாட்சி மணிக்கரத்தில்" என்று ஆனந்த பைரவியில் இழையும் பாடல் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.
நன்றி கிருஷ்ணா ஜி
mr_karthik
10th September 2014, 11:28 AM
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் பகுதியில் முந்தாநாள் ஸ்பெஷலாக நீங்கள் அளித்த 'எங்கவீட்டுப் பெண்' படத்தின் தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் பாடல் ஆய்வு நன்றாக இருந்தது. மிகவும் அமைதியான அழகான பாடல், இசையரசியில் குரலில் மேலும் உயரத்தை அடைந்தது. 1965-ல் ஆர்ப்பாட்டமான பாடல்களுக்கிடையே சந்தடியில்லாமல் ஹிட்டான பாடல். வானொலிகளில் அடிக்கடி ஒலித்தது.
இப்படத்தின் இன்னொரு பாடலைப்பற்றி சொல்ல வேண்டும். (இப்போது பழைய பாடல்களின் மெட்டை, ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற போர்வையில், அப்பட்டமாக காப்பியடிப்பது சகஜமாகிவிட்டது). ஆனால் ரிப்பீட்டு ஆனால் சுலபமாக கண்டுபிடிக்கக் கூடிய காலத்திலேயே கே.வி.எம்.மாமா மிக சாதாரணமாக ரிப்பீட் செய்வார். அதற்கு உதாரணம் இப்படத்தில் வரும்
'கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்'
என்ற பல்லவி. இது ஏற்கெனவே மக்களைப்பெற்ற மகராசி படத்தில் இடம்பெற்ற
'சீமையிலே படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு'
என்ற பல்லவியின் ரிபீட். மாமா இதோடு நிற்கவில்லை. எங்கவீட்டுப் பெண் வந்து ஐந்தாண்டுகள் கழித்து வந்த மாட்டுக்கார வேலனில் இதே மெட்டில் பல்லவி அமைத்திருப்பார்..
'பட்டிக்காடா பட்டணமா ரெண்டுங்கெட்டான் லட்சணமா'
இப்படி ஒரு மெட்டை வைத்து பல பல்லவிகளை உருவாக்கினார் (மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணம்தான். தேர்தல் வாக்குறுதிகளை வேண்டுமானால் மறப்பார்கள். பாடல்களையும் மெட்டுக்களையும் மறப்பார்களா?)
எப்படியோ உங்கள் பதிவை வைத்து நானும் ஒரு சரவெடி கொளுத்த முடிந்தது...
mr_karthik
10th September 2014, 11:32 AM
டியர் கிருஷ்ணாஜி,
நீங்கள் பதித்த ஊருக்கு உழைப்பவன் படத்தில் இடம்பெற்ற 'அழகெனும் அழகெனும் ஓவியம் இங்கே' என்ற பாடலை பார்த்ததும் அப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு அழகான பாடல் நினைவுக்கு வருகிறது.
இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
மன்மதன் சேனை முன்வரும் வேளை
நீதானே எனைக்காக்கும் மந்திரி
உன் அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
ஜேசுதாஸும் வாணியம்மாவும் அசத்தும் இப்பாடல் எழுதியவர் புலமைப்பித்தனா என்பது தெரியாது. ஆனால் மெல்லிசை மன்னரின் கலக்கல் அற்புதம்.
mr_karthik
10th September 2014, 11:42 AM
டியர் கோபால் சார்,
மெல்லிசை மன்னரைப்பற்றி நீங்கள் எழுதத்துவங்கியிருக்கும் தொடர் துவக்கமே சுவையாக உள்ளது. தலைப்பு எம்.எஸ்.வி. பற்றியாக இருந்தாலும், உள்ளே கண்டெண்ட் என்னமோ மன்னர்கள் பற்றித்தான் துவங்கியுள்ளது ('இப்போதுதானே துவங்கியிருக்கிறேன், அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?' என்ற தங்கள் அதட்டல் கேட்கிறது). எப்படியோ பிள்ளையார் பிடித்து அது பிள்ளையாராகவே முடியவேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.
எந்த நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கணிக்க முடியாத, புரியாத புதிர் நீங்கள்.
பக்திப்பாடல்கள் வரிசை அருமையாக இருந்தது. அதிலும் அந்த 'ஆயர்பாடி மாளிகையில்' சூப்பர்...
gkrishna
10th September 2014, 12:05 PM
காலை வணக்கம் எல்லோருக்கும்
கார்த்திக் சார்
உங்கள் பாராட்டிற்கு நன்றி .
உங்கள் 'பாதை தவறிய கால்கள் ' பதிவின் பாதிப்பு தான் இந்த கவியரசர் புலவர் நிலா ஒப்பிடு . ஊருக்கு உழைப்பவன் 'இது தான் முதல் ராத்திரி '
அருமையான பாடல் .மேலும் சில பாடல்கள் நினைவில் உண்டு
'பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைகாக பாடுகிறேன் ஜேசுதாஸ் பில்லை என்று பாடுவார். 'இரவு பாடகன் ஒருவன் வந்தான் ' கவிஞர் முத்துலிங்கம் பாடல் .
சி கே சார்
காலையில் நீங்களும் கோபால் சார் அவர்களும் போட்ட தத்துவ பாடல்கள் கலக்கல் .
கோபால்
நேற்று போட்ட பக்தி பஞ்சாமிர்தம் பழனி பஞ்சாமிர்தம் .
இரண்டு நாட்களாக பக்தி தாண்டவம்
மது சார்
செல்ல கிளி சூப்பர் பாடல்.
வாசு சார்
அந்த செல்ல கிளி ஸ்ரீப்ரியா நிழல் படம் எப்புடி .
ராஜேஷ் சார்
எப்பவுமே உங்கள் கூட நான் பழம் தான்.
gkrishna
10th September 2014, 12:10 PM
http://i50.tinypic.com/34yzmro.jpg
ரத்ன குமாரி என்கிற வாணிஸ்ரீ மிக சொற்ப படங்களில் தான் எம் ஜி யாருடன் நடித்திருக்கிறார். (ஊருக்கு உழைப்பவன், கண்ணன் என் காதலன், தலைவன் போன்றவை).
இந்தப் பாடல் மிக நன்றாக பிரபலம் அடைந்தது. மெல்லிய, தங்கு தடையில்லாமல் ஓடும் இசையும், எளிய பாடல் வரிகளும், அழகான குரல்களும் இதற்கு காரணம்.
திரைப்படம்: ஊருக்கு உழைப்பவன் (1976)
இசை: M Sவிஸ்வநாதன்
பாடல்: வாலி
நடிப்பு: எம் ஜி யார், வாணிஸ்ரீ
இயக்கம்: M கிருஷ்ணன் நாயர்
பாடியவர்கள்: K J யேசுதாஸ், வாணி ஜெயராம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம்
இது தான் முதல் ராத்திரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவ ராக மாலிகை
கடல்போல் கொஞ்சும் கைகளில்
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
http://www.youtube.com/embed/HsYSDZATDks
mr_karthik
10th September 2014, 12:23 PM
ஹாய் குட்மார்னிங் ஆல்..
அடியேன் முன்பு எழுதிப் பார்த்த சில பாடல்கள்..(வேற வழியில்லை.. நீங்க படிச்சுத் தான் ஆகணும் :) )
மூப்பே என்னைச் சீண்டாதே
..முகத்தில் சுருக்கம் தாராதே
டியர் சி.க.
படித்துப்பார்த்தேன். அசந்து போனேன்.
எடுத்துப்போடப்பட்ட கவிதையைவிட, தாங்கள் எழுதிப்பார்த்த கவிதைகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. இதிலிருந்து புரிந்தது ஒன்று. திறமையுள்ளவர்கள் எங்கும் இருக்கிறார்கள், வாய்ப்புக்கிடைப்பவகள் மட்டுமே மேலே போகிறார்கள். அவர்கள் எது செய்தாலும் அது உலக அதிசயமாகிறது. காரணம், வெளிச்சம் படக்கூடிய இடத்தில் அவர்கள் இருப்பதுதான்.
தங்களோடு ஒப்பிடும்போது நானெல்லாம் சின்னவன் என்று சொல்லமுடியாது. ஒண்ணுமேயில்லை என்று சொல்வதே பொருத்தம்.
நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேறு...
gkrishna
10th September 2014, 12:51 PM
வழி மொழிகிறேன் கார்த்திக் சார்
அதிலும் சி கே அவர்களின் இன்றைய தத்துவ பாடல்கள் மிக அருமை .
நடிகர் திலகதின் தர்மம் எங்கே பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது
'எல்லா மலரும் இறைவன் படைப்பு உலகம் அவனது தோட்டம் '
'திறமை எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்
நீங்கள் கூட திரு சி கே அவர்களை நமது திரியின் கண்ணதாசன் என்று பாகம் ஒன்றில் கூறிய நினைவு உண்டு . இந்த நேரத்தில் கண்ணதாசன் பற்றிய புது கவிதை ஒன்று
கண்ணதாசன் - நல்
எண்ணதாசா
எல்லோருக்கும் புரியும் புடி
எளிய கவிதை சொன்னதாசா
தீந்தமிழில் பாடல் புனைந்தவனே
தீது அறியா நல் நெஞ்சனே
அஞ்சாத சிங்கமே - நல்
அரசவைக் கவிஞனே - அந்தத்
திரையுலகம் உனக்குத்
திரை செலுத்தியது
அமர்க்களம் உன்புலமை
அவையடக்கம் உன் உடைமை
கவிஞனாய் -தயாரிப்பாளனாய்
கதாசிரியனாய் நடிகனாய் -பல
அவதாரம் எடுத்தவனே
அரிதாரம் இல்லா அன்பாலனே
உன்பாடல் ஒவ்வொன்றும் முத்து ஐயா
என்றும் நீ எம் சொத்து ஐயா
அர்த்தமுள்ள இந்துமதம் தந்தவனே -நல்
அர்த்தமுடன் வாழ வழி சொன்னவனே
உன் பொன்னுடம்பு மறைந்து
போனால் போகட்டும் போடா!
உன் புகழ் உடம்பு -என்றும்
பூமியில் நிலையாய் வாழு மடா
நமது சி கே அவர்களுக்கும் உங்களுக்கும் இந்த கவிதை ஒரு சிறு பரிசு :)
chinnakkannan
10th September 2014, 01:27 PM
//டியர் சி.க.
படித்துப்பார்த்தேன். அசந்து போனேன். //
//வழி மொழிகிறேன் கார்த்திக் சார்//
அன்பின் கார்த்திக் சார், கிருஷ்ணா சார்.. என்ன சொல்வதெனத் தெரியவில்லை.. மிக்க நன்றி..இன்னும் வெகு தூரம் போக வேண்டும்..
கண்ணதாசன் பற்றிய புதுக்கவிதை பரிசுக்கு நன்றி கிருஷ்ணா சார்..
அன்புடன்
சி. க.
gkrishna
10th September 2014, 01:39 PM
http://jagdishk.dinstudio.com/files/kabhi.jpg
கபி கபி படம் சிறுவயதில் பார்த்தது. மீண்டும் பலமுறை டிவிடியில் பார்த்திருக்கிறேன். எப்போது பார்த்தாலும் சலிக்காத படம். நீண்ட படம்தான் திரைக்கதையில் தொய்வும் குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இளமையான அமிதாப்பும் கண்குளிர வைக்கும் ராக்கியும் பின்னர் நீதுசிங்கும் படத்துடன் ஒட்ட வைக்கிறார்கள். இதில் அற்புதமான இணைப்பாக சசிகபூர். நீ கடவுளா மனிதனா என்று அவரிடம் மனைவி கேட்கும்போது மனிதன்தான் என்றும் மனிதன் மனிதத்துவம் மிக்கவனாக இருப்பதுதான் மிகவும் நல்லது என்றும் அவர் விளக்கம் அளிப்பார். இதுபோன்ற கவித்துவமான தருணங்கள் இப்படத்தில் அதிகம். மிகவும் மெச்சூரிட்டியான ஒரு காதல் கதை.....அமித் என்ற அமிதாப் ஒரு கவிஞர். தமது காதலியின் நினைவாக எழுதிய கபி கபி புத்தகம் அச்சிட்டு முதல் பிரதியை காதலியின் திருமணப் பரிசாக தரவேண்டியிருக்கிறது.அத்துடன் அவர் எழுத்துலக வாழ்வும் முடிந்துபோகிறது. நீ நல்ல கவிஞன்தான் எழுது என தந்தை கூறும்போது எழுத மறுத்துவிடுகிறார்.எனக்குள் இருந்த படைப்பாளியை வழியிலேயே விட்டு வந்துவிட்டேன் என்பார். அவனை நீ மீண்டும் வழியில் சந்திக்க நேர்ந்தால் என்று தந்தையின் கேள்விக்கு அமித் பதிலளிப்பார். 'அவர் யார் என்று தெரியாதவர் போல கடந்து சென்றுவிடுவேன்.'
இப்படித்தான் காதலியை மீண்டும் சந்திக்கும் போது கடந்து சென்றுவிட நினைக்கிறார். ஆனால் அவர் மனைவி வகிதா ரஹ்மானுக்கு வேறொருவன் மூலம் பிறந்த பெண்ணை தன் மகளாக அங்கீகரிப்பதிலிருந்து காதலியின் மகனுடன் அவளை இணைத்து வைப்பது வரையிலான அவரது கடமையும் பாசமும் காதலியை கடந்து செல்ல முடியாதபடி அவரை கட்டிப் போடுகிறது.
வஹிதா ரஹ்மான் வீட்டுக்கு நீத்து சிங் வரும் காட்சியைத்தான் சிந்துபைரவியில் பாலசந்தர் சுகாசினியின் மூலம் சொன்னார் .இதில் என் வீட்டுக்கு ஒரு சிறிய பறவை வந்தது என்று வஹிதா பாடுவதை தமிழில் நானொரு சிந்து என சுகாசினி பாடுவார்.
இப்படத்தின் பாடல்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். சாஹிரின் அற்புதமான வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் கய்யாம்.
கிஷோர் குமார், லதா மங்கேஷ்கரின் தேனிசைப் பாடல்களுடன் முகேஷ் பாடிய கபி கபி டைட்டில் பாடலை யார்தான் மறக்க முடியும்
மறைந்த இயக்குனர் யஷ் சோப்ரா மீது மரியாதை கூடுவதற்கு இப்படமும் ஒரு காரணம்.
http://www.youtube.com/watch?v=EKMPf737pp0
http://www.dailymotion.com/video/x186082_mukesh-kabhi-kabhi-mere-dil-mein-khayal-aata-hai-kabhi-kabhi_music
நன்றி நண்பர் ஜகதீஷ் அவர்களுக்கு
chinnakkannan
10th September 2014, 01:40 PM
எல்லா க் காலத்துலயும் மனித மனசுக்கு மகிழ்ச்சி பெருக்க வைக்கிற சமாச்சாரம்., அமைதியைத் தருகிற சமாச்சாரம் ஒண்ணு உண்டு தெரியுமா ( நெனச்சேன்..தத்துவம்னு இவன் ஆரம்பிச்சப்பவே என நினைக்க வேண்டாம்..இது அது இல்லை!) அது தான் இயற்கை..
காலை நேரத் தென்றலைத் தடவியபடி பனித்துளி போர்த்திச் சிரிக்கும் புது மலர்கள், மெல்லிய காற்றில் அசைந்தாடும் பச்சை வயல்வெளிகள், தூரத்தே தெரியும் அருவியின் ஒற்றை வரி பின் தெரியும் பசுமை கிராமங்கள் இன்னும் பல..
பாரில் இருப்பதென்ன பார்ப்பதெலாம் வண்ணமயத்
தேரில் பவனிவரும் தெள்ளமுதம் - வாரியே
வள்ளலெனத் தான்வழங்கி வாகாய்ச் சிரித்தபடி
அள்ளும் இயற்கையே ஆம்
இயற்கையழகைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் உண்டா..அதுவும் கண்ணதாசன்..
என்னவாக்கும் சொல்றார் இந்தப் பாட்டில..காட்டோட அழகை..
*
காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு
காவல் காக்கக் கடவுளையன்றி ஒருவருமில்லை
காட்டிக்காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலம் இல்லை இதிலே
கலந்து விட்டால் கால நேரம் தெரிவதுமில்லை
மேகமென்ற தந்தை கண்ணில் நீர் வழிந்தது இங்கே
விதவிதமாய்க் குழந்தைகள் போல் செடி வளர்ந்தது
பூமியென்ற தாய்மடியில் தவழ்ந்து வந்தது நோயில்
புலம்புகின்ற மனிதருக்கும் மருந்து தந்தது
காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு
காவல் காக்கக் கடவுளையன்றி ஒருவருமில்லை
*
அழகிய பாடல்..அதுவும் சுசீலாம்மா குரல் சரோஜா தேவியின் வாயசைப்பு என.. அள்ளும்..
*
மனதில் நினைவுக்கு வரும் இயற்கைகள்..
இயற்கை என்னும் இளைய கன்னி..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா.
இன்னும் இருக்கே :)
chinnakkannan
10th September 2014, 01:47 PM
//இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி// திதிக்கின்ற திராட்சை ப்பழத்தோட தேனா.. சுகர் ஜாஸ்தியாய்டுமோன்னோ :)
பாடல் வரிகளை இட்டமைக்கு நன்றி கிருஷ்ணா சார்..
கபி கபி ரொம்ப வருடங்களுக்கு முன் பார்த்திறேன் நல்ல படம்.. நல்ல பாடல்கள் கிருஷ்ணா சார்.. நன்றி..
gkrishna
10th September 2014, 01:55 PM
ஜெயசித்ரா நடித்த P சுசீலா அம்மா வழக்கம் போல தூள் பரத்தியிருக்கும் மற்றுமொரு பாடல். இசை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் என நினைப்போம் . ஆனால் V குமார் என்பது ஆச்சரியம்தான். அருமையான பாடல்.
திரைப் படம்: தேன் சிந்துதே வானம் (1975)
குரல்: P சுசீலா
இசை: V குமார்
நடிப்பு : ஜெயசித்ரா, சிவகுமார்
இயக்கம்: R A சங்கரன்
லா ல ல ல லா ல ல லா ல ல ல லா ல ல
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை
அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்
இந்தப் பாவைக்கு சூட்டி வைத்த மணி மகுடம்
பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்
இந்தப் பாவைக்கு சூட்டி வைத்த மணி மகுடம்
கொச்சை மொழி பேசுகின்ற பறவையினம்
இவள் கொலுவிருக்கும் மண்டபத்தில் புலவரினம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
லா ல ல ல லா ல ல லா ல ல ல லா ல ல
மலை மேல் தவழ்ந்த மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லார்க்கும்
தீரும் தாகங்களே
மலை மேல் தவழ்ந்த மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லார்க்கும்
தீரும் தாகங்களே
நீங்களும் நானும் ஒன்று
என் நினைவுகள் பறப்பது உண்டு
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
நான் ஒரு சுதந்திரப் பறவை
அந்த ஆண்டவன் எழுதிய கவிதை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை
அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
லா ல ல ல லா ல ல
http://www.youtube.com/embed/romRn94ke2M
gkrishna
10th September 2014, 02:01 PM
dear ceekay sir
அந்தி நேரத்து ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது
பல உயிர்கள் மகிழ்வதும் ஏது -
பாடல் : வாடிக்கை மறந்ததும் ஏனோ – கல்யாணப்பரிசு – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Richardsof
10th September 2014, 02:11 PM
http://i62.tinypic.com/2w4z70l.jpg
CHINNA MAPPILE - SONG
http://youtu.be/PwsXWmdZjHc
gkrishna
10th September 2014, 02:38 PM
தமிழ் படத்தில் முதல் பூனைக் கண் அழகி என பெயர் பெற்ற சிவரஞ்சனி பெரிய அளவில் புகழ் பெறவில்லை,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதல் மனம் புரிந்த இவர் ஊகா என்ற பெயரில் தெலுங்கில் நடித்தார் நடிகை மோகினி கூட பூனை கண் அழகி தான் (யார் சீனியர் ?:))
விஜயகாந்த் உடன் ராஜதுரை படத்தில்
http://i3.ytimg.com/vi/3MekIZH4V94/mqdefault.jpg
இன்றைய சிவரஞ்சனி
http://thebollywoodgallery.com/wp-content/uploads/2012/01/Sivaranjani-With-Her-Son-4.jpg
chinnakkannan
10th September 2014, 02:54 PM
வாசு சார் இல்லை..வரலை..சரி..ஒத்துக்கறேன்..அதற்காக அவரில்லாத குறையைப் போக்கணுமா கிருஷ்ணா சார்..:) பயம்மா இருக்கே..சிவரஞ்சனிபிக்சர்..
இந்த்ர ஜித்ல கமலோட நடிச்சுச் செத்துப் போவார்..
//அந்தி நேரத்து ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது
பல உயிர்கள் மகிழ்வதும் ஏது -
பாடல் : வாடிக்கை மறந்ததும் ஏனோ – கல்யாணப்பரிசு – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்// நல்ல பாட்டு நினைவூட்டலுக்கு நன்றி கிருஷ்ணாசார்..
எஸ்வி.சார். சி.ர புகைப்படத்துக்கும் பாடலுக்கும் நன்றி.. இவரோட கால கட்டத்துல மோகினி, சிந்துஜா வித்யாச அழகு..(அப்பாடா இன்றைய வெடி ஓவர்)
gkrishna
10th September 2014, 03:01 PM
கர்நாடக சங்கீதத்த சினிமாவில மிக அருமையா கையாண்ட பல music directors ல முதல் இடம், G.Ramanathan அதே போல் பாடல் எழுதிய பாபநாசம் சிவனுக்கு தான். அவரோட பாடல்கள், வெள்ளித் திரையிலிருந்து மேல் எழும்பி மேடைக் கட்சேரி களிலும் இடம் பிடித்தாலும், ரிக்ஷா ஓட்டும் ஒரு சாதாரண மனிதனுக்கும் சினிமா பாடல்களின் மூலம் கர்நாடக இசையை எடுத்துச் சென்ற பெருமை- இவரையே சாரும். "MKT" ங்கறது எவ்வளவு பெரிய "phenomenon" அப்டீங்கறது, ஜெயகாந்தனோட "இருளில் ஒரு துணை" படிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும். அந்த "icon status" அவருக்கு கிடைத்ததுக்கு பாபநாசம் சிவனோட பாடல்களுக்கும் ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு. ஒவ்வொரு வார்த்தை மற்றும் ராகத்தினுடைய குணாதிசயங்கள மனதில் வைத்துக் கொண்டு இசை அமைத்திருக்கர், இவர்- என்பதில்- நிறைய பேருக்கு ஒரு பெரிய ப்ரமிப்பு தான். அப்படிப்பட்ட ஒரு பாட்டு தான் 'சிவகவி' சினிமாவில் வரும் இந்த "வசந்த ருது மன மோகனமே" ங்கற இந்த பாட்டு.
வசந்த ருது மன மோகனமே – படம்:சிவகவி1943 -தியாகராஜா பாகவதர் + டி.ஆர்.ராஜகுமாரி – இசை: ஜி.ராமநாதன்
தமிழ் திரை இசையின் இசை அதிசயம் என்று கொண்டாடப்பட்ட MK தியாகராஜா பாகவதர் அவர்களும் ஜி.ராமநாதனும் நிகழ்த்திய அற்புதங்களில் விளைந்த பாடல். ராகங்களின் வீச்சுக்களை அறிந்து இசையமைத்த ஜி.ராமநாதன் என்ற இசைமேதையின் இனிய பாடல்.அருமையான கூட்டணியில் அமைந்த பாடல். இன்றும் அசைக்க முடியாத பாடல்.பாபநாசம் சிவன், ஜி.ராமநாதன் , எம்.கே.தியாகராஜா பாகவதர் வெற்றி கூட்டணி தந்த பாடல்.
வசந்தா-குந்தலவராளி-யதுகுலகாம்போதி-சுருட்டி-ன்னு ராகத்தினுடைய பெயரும் பாட்டிலேயே வரும். ரெண்டு வரி தான் ஒரு ராகத்துக்கு நாலும்- அந்த ராகத்தோட முழு சாரமும் அந்த ரெண்டு வரியில் இருக்கும்!
http://www.youtube.com/watch?v=dC202yUwBRw
http://upload.wikimedia.org/wikipedia/ta/7/73/Sivakavi.jpg
நன்றி மைத்துளிகள் /சௌந்தர்
chinnakkannan
10th September 2014, 04:03 PM
தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா 2010 மார்ச் முதல் நாள் (இன்று) தொடங்குகிறது.
மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.
÷தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம்.
திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள். எப்.ஜி.நடேச அய்யர் தமது திருச்சி ரசிக ரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. பத்து வயது சிறுவன் திடீரென்று ஓர் இரவில் ஒளிமிக்க நட்சத்திரமாக ஆகிவிட்டார்.
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எத்தகைய சன்மானமும் வேண்டாமென்று அவர் கூறிவிட்டார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.
ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு பாகவதர் என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.
1926-ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.
1934-ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.
அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936-பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படமாக வந்தபடி இருந்தன. வீதிகளில், வேலை செய்யும் இடங்களில், வயல்களில், சாலையோரங்களில், ஒற்றையடிப் பாதைகளில், தோட்டம், துரவுகளில், எங்கும் பாகவதரின் கந்தர்வ கானம் எதிரொலித்தது.
÷திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்கு வந்தது.
÷அதற்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் போலீஸôரிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். 1942 மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய லட்சுமிகாந்தன், "சினிமா தூது' என்ற கீழ்த்தரமான மஞ்சள் ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார்.
÷திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது போலீஸôர் விசாரணை செய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடைசெய்தனர். அதன் பிறகு, "இந்து நேசன்' என்ற மற்றொரு பத்திரிகை மூலம் பழையபடி வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் லட்சுமிகாந்தன் ஈடுபட்டார்.
1944 நவம்பர் 8-ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த லட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
1944 நவம்பர் 27-ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி லட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது.
சென்னை மாநில மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்மீது மேலும் லண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளால் மறுவிசாரணை தொடங்கியது. பிரபலமான வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன.
அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கத்தியைப் பார்த்து மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியதாவது: இந்தக் கத்தியால் ஓர் எலியைக்கூட கொன்றிருக்க முடியாது.
இந்த அளவுக்கு மோசமான ஆதாரங்கள் மீது திரையுலக நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முப்பது மாதங்களுக்கு இருண்ட சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
முன்னர் ஒரு மன்னர்போல வாழ்ந்த பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
நடிப்பதிலோ, பொருளீட்டுவதிலோ அவருக்கு நாட்டம் இல்லாமல் போனது. வறுமையால் அவர் வாடிவிட்டார் என்று கூற முடியாது. கடைசிவரை ஒரு கவரிமான்போல அவர் வாழ்ந்தார்.
பவளக்கொடி படம் தொடங்கி ஹரிதாஸ் வரை அவர் சிறை செல்வதற்குமுன் நடித்த ஒன்பது படங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றன. சிறையிலிருந்து வெளிவந்ததும் ராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், பல கோடி மக்கள் இதயத்தில் அவருடைய பாட்டுகள் என்றும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். நவம்பர் 1, 1959-ல் தியாகராஜ பாகவதர் மறைந்தாலும் அவர் வாரி வழங்கிய இசைச் செல்வம், தமிழ் மக்களுக்கு நிலையான பெரும் பேறாக இருந்து வருகிறது.
நன்றி.. தின மணி..
chinnakkannan
10th September 2014, 04:06 PM
இசைக்கு மயங்காத இதயங்கள் உண்டா? இன்னிசைக்கு வசமாகா உள்ளம் உண்டா? எம்.கே.டி.ஐப் பற்றிக் கவிஞர் வாலி புதுக்கவிதை பாடும்போது
“பிற நட்சத்திரங்கள் பருவ நட்சத்திரம்! தியாகராஜ பாகவதர் ஒருவர்தான் துருவ நட்சத்திரம்.
இன்னும் மின்னுகிறார், இசையால் – நம்
இதயங்களைத் தின்னுகிறார்
ஆடவரே ஆசைப்படும் ஆடவன்
அற்றை நாளில் அருந்தமிழர் செவிகளை
அடகு பிடித்த அபூர்வப் பாடகன்“
என்று சொன்ன கவிஞர் வாலி, ஏழிசை வேந்தராய் பாகவதர் ஜொலித்ததை அழகாகப் பதிவு செய்கிறார்.
”ஏழிசை அவனால் வாழிசை ஆனது, மகர
யாழிசை கூட அவன் குரலிடம் யாசகம் போனது,
இசைக்கு இசை சேர்த்தவன்,எண்
திசைக்கும் தித்திப்பை வார்த்தவன்
குரல் வழியே குடம் குடமாய்க்
குறிஞ்சித் தேனைக் கொட்டியவன்
கந்தருவ கானம் எனும்
மந்திரத்தால் மனங்களைக் கட்டியவன்
நற்றமிழர் நாக்குகளில் – எஞ்ஞான்றும்
நீங்கா வண்ணம் தன் நாமத்தை ஒட்டியவன்
எட்ட இனி எல்லையில்லை எனும்படி
புகழை எட்டியவன்“
என்று பாகவதரின் பண்ணைப் பாசத்தோடு கவிஞர் வாலிப் பாடிப் பரவுகிறார்.
நன்றி..செம்மொழித் தமிழ்
chinnakkannan
10th September 2014, 04:08 PM
அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது.
சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்!
ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீரோ. அப்புறம் இரண்டு மர ஸ்டூல்கள். தலைக்கு மேல் ஒரே ஒரு மின் விசிறி. அவ்வளவுதான் அந்த சங்கீதமேதையின் நினைவாக மிஞ்சியிருக்கும் சொத்து.
ராஜம்மாளின் வயதான தம்பி மணியும், பாகவதரின் பெண் வயிற்றுப் பேரன் கணேஷும் அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள். மீளாத சோகமும், வறுமையும் அந்த குடும்பத்தையே புரட்டிப் போட்டுள்ளதால் ஒரு வித வெறுத்துப் போன நிலையில் அவர்கள் இருந்தது புரிந்தது!
``பாகவதர் 1959-ல் இறக்கும்போது என் அக்காவை கவனிச்சுக்க யாரும் இல்லை. அக்கா பாகவதருக்கு இரண்டாவது தாரம். இவர்களுக்குப் பிறந்தவர்கள் ஒரு பெண், ஒரு பிள்ளை. பெண் லட்சுமிக்குப் பிறந்தது மூன்று மகன்கள். அதில் இந்தப் பையன் கணேஷ் மட்டும் என்னோட இருந்து பாட்டிய பார்த்துக்கிறான். மற்ற இரண்டு பேரப் பசங்களும் வருவதும் இல்லை. அவங்களே எங்கேயோ ஜீவனத்துக்கு கஷ்டப்படு கிறார்கள். அக்காவை காப்பாற்றணும்னு நானும் கல்யாணமும் பண்ணிக் காம, அவ கூடவே இருந்து வாழ நல்ல வழியும் தெரியாம எங்கெங்கோ அலைஞ்சு எண்பது வயசை ஓட்டிட்டேன்'' சுவரில் சாய்ந்து கண்களை மூடிய மணியின் இமையோரத்தில் நீர் கசிந்தது.
ஏதேச்சையாக ராஜம்மாள் படுத்திருக்கும் கட்டிலின் எதிரே சிமெண்ட் அலமாரியை பார்த்தபோது மனசுக்குள் பட்டாம்பூச்சி! தன் மகள் மற்றும் மகன் இருபுறமும் இருக்க நடுவே புன்னகை தவழ ராஜ கம்பீரமாக அங்கவஸ்திரம் சுற்றிய பாகவதர். இன்னொன்றில் வய லின், மிருதங்கம், கடம், கஞ்சிரா என்று சுற்றிலும் ஜமாசேர்ந்திருக்க, நடுவே பாகவதர்! நாம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ``இதைப் பாருங்க... எத்தனை தடவை இதுல எங்க அக்கா ராணி மாதிரி போயிருக்கு. இன்னிக்கு பிழிந்து போட்ட துணி மாதிரி கிடக்கு...'' என்று கண் கலங்கினார் மணி. அவர் காட்டிய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அட்டகாசமான காரில் சாய்ந்து நிற்கிறார் எம்.கே.டி.! ‘‘Opel ஜெர்மன் கார் இது! அறுபது வருஷம் முன்ன மெட்ராஸில் இந்த கார் வச்சிருக்கிற பெரிய மனுஷர்களை விரல் விட்டு எண்ணிடலாம்!'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.
பின் எப்படித்தான் அத்தனையும் அழிந்தது?
``லட்சுமி காந்தன் கொலைவழக்கில் சிக்கியதில் பாதிப் பணம் அழிந்தது. ஒரு பக்கம் வக்கீலுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் அவரை வைத்து படமெடுக்க அட்வான்ஸ் கொடுத்தவர்கள் இவருக்கு ஆயுள் தண்டனை என்றவுடன் பணத்தை திருப்பிக் கேட்டார்கள். மெட்ராஸில் தி.நகர் தணிகாசலம் ரோட்டில் கடைசியாக வாங்கிய வீட்டையும் அடமானம் வைத்தார். இரண்டரை வருஷத்தில் நிரபராதி என்று வெளியே வந்தார். மீண்டும் சினிமா தயாரிப்பாளர்கள் மொய்த்தபோது `நன்றி மறந்து அட்வான்ஸை திருப்பிக் கேட்டார்களே' என்று அவருக்கு கோபம். அந்த வைராக்யத்தில் `ராஜமுக்தி' என்று சொந்தப் படம் எடுத்தார். பெரிய ஃப்ளாப். அப்புறம் வந்த `அமரகவி', `சியாமளா', `புதுவாழ்வு' என்று எதுவும் ஓடவில்லை. தீராத மனக்கவலையோடு சர்க்கரையும், ரத்த அழுத்தமும் சேர்ந்து கொண்டன.'' பாகவதரின் வீழ்ச்சியை கோர்வையாக அசைபோட்டார் மணி. 1959ல் பாகவதர் இறுதிச் சடங்கிற்கு திரையுலகிலிருந்து வந்தவர் எம்.ஆர்.ராதா மட்டும்தானாம்!
ஹரிதாஸ், சிவகவி என்று எத்தனையோ மெகா ஹிட்களை தந்த அந்த சூப்பர் ஸ்டாரின் குடும்பம் இன்று நடிகர் சிவகுமார் மாதந்தோறும் தரும் ஆயிரம் ரூபாயில் ஓடிக்கொண்டிருப்பதை மணி சொல்லும்போது மனதில் இனம் புரியாத பாரம்! அந்தப் பணம் வீட்டு வாடகைக்கே போய்விடு கிறதாம்! தினசரி ஐம்பது ரூபாய்க்கு பைண்டிங் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பேரன் கணேஷும் இப்போது பாட்டியின் உடல்நலம் கருதி போகவில்லையாம்!
``இப்போதைக்கு அவரின் நினைவாக நாலு போட்டோவும் எங்க மூணு பேர் உசிரும்தான் பாக்கியிருக்கு'' என்று மணி நிறுத்தியபோது, உடம்பு அனிச்சையாக சிலிர்த்தது!
இப்போதெல்லாம் சொப்பன வாழ்வையும், ஜெய கிருஷ்ணா முகுந்தாவை யும் கேட்கப்பிடிக்கவில்லை!.
kumudam.com மே 2008
gkrishna
10th September 2014, 04:22 PM
அருமை சி கே சார்
MKT பற்றிய பல்வேறு தகவல்கள் திரட்டி உள்ளீர்கள்.
thanks
mr_karthik
10th September 2014, 06:58 PM
டியர் வாசு சார்,
தாங்கள் துவங்கியுள்ள புதிய தலைப்பான 'மாலை அமுதம்' சீரியலில் முதல் பாடலாக பதிவிட்டிருக்கும் பி.லீலா அவர்களின் 'மாயமே நான் அறியேன்' பாடலைக் கேட்டதும் மனம் பின்னோக்கி, அதாவது 1992 நோக்கி பயணித்தது. மிஸ்ஸியம்மா வெளியானது ஐம்பதுகளில் அல்லவா?. சம்மந்தம் இல்லாமல் ஒரு வருஷத்தைச் சொல்கிறானே என்று குழம்ப வேண்டாம். சம்மந்தம் இருக்கிறது.
1992-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று சென்னை காமராஜர் அரங்கில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த்திரை இசையுலகை ஆட்டிப்படைத்த 40 பின்னணி பாடகர்கள் கலந்துகொண்டு தங்கள் பாடலை அவர்களே நேரில் பாடி மக்களை மகிழ்வித்த மாபெரும் இசை நிகழ்ச்சி. மதுரா நியூஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த இசை விழாவில் கலந்து கொண்டு பாடகர்களுக்கு விருதுகள் வழங்கியவர் தலைவர் மூப்பனார்.
விழாவில் கலந்து கொள்ளாத மூன்றே பாடகர்கள் எஸ்.பி.பி., யேசுதாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் மட்டுமே.
கலந்து கொண்டு பாடல்களைப்பாடி மகிழ்வித்தவர்கள்....
டி.எம்.சௌந்தர்ராஜன்
பி.சுசீலா
எல்.ஆர்.ஈஸ்வரி
பி.பி.ஸ்ரீநிவாஸ்
சீர்காழி சிவசிதம்பரம்
ஏ.எல்.ராகவன்
கோவை சௌந்தர்ராஜன்
தாராபுரம் சுந்தர்ராஜன்
பி.லீலா
ஜிக்கி
வாணி ஜெயராம்
மனோ
சித்ரா
பி.எஸ்.சசிரேகா
டி.கே.கலா
ஸ்வர்ணலதா
மீரா கிருஷ்ணா
மோகன் (உருவத்தில் எஸ்.பி.பி.யை நினைவுபடுத்துவார்)
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
டி.கே.எஸ். நடராஜன்
டி.எஸ்.ராகவேந்தர் மற்றும் அவர் மகள் கல்பனா
நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர் பி.எச்.அப்துல் ஹமீத்.
இந்த இசை விழாவில்தான் பி.லீலா "மாயமே நானறியேன்" பாடலைப்பாடி மக்களின் கைதட்டலைப் பெற்றார்.
அப்போது சிறுமியாக இருந்த கல்பனா "சொன்னது நீதானா" பாடலைப்பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சி வீடியோ கேசட்டாக வெளியாகி விற்பனையில் சக்கைபோடு போட்டது. பின்னே இத்தனை ஒரிஜினல் பாடகர்கள் ஒரே மேடையில் பாடுகிறார்கள் என்றால் சும்மாவா...
mr_karthik
10th September 2014, 07:38 PM
டியர் சி.க.
எம்.கே.டி. பாகவதர் பற்றிய தொகுப்பு அருமை.
பாகவதர் மற்றும் என். எஸ்.கிருஷ்ணன் மீது நடந்த கொலை வழக்கு பற்றிய இருவேறு தகவல்கள் மக்கள் மத்தியில் பரவியதாம். ஒன்று இவர்களுக்கு சாதகமான தகவல்கள், மற்றொன்று இவர்களுக்குப் பாதகமான ஆனால் அவைதான் உண்மையென்று சொல்லப்பட்ட தகவல்கள்.
கொலை செய்யப்பட்ட லக்ஷ்மிகாந்தன் என்பவர் அப்போது பிரபலமாக இருந்த 'இந்து நேசன்' என்ற மோசமான மஞ்சள் பத்திரிகையின் ஆசிரியர். திரைப்பிரபலங்களின் அந்தரங்க விவரங்களை மோப்பம் பிடித்து பத்திரிகையில் போடுவதாக மிரட்டி பணம் பறிப்பது, கிடைக்காத பட்சத்தில் பத்திரிகையில் போட்டு அவர்களின் புகழை நாறடிப்பது என்பதை வழக்கமாக வைத்திருந்தவராம்.
அவரது மாய வலையில் மாட்டியவர்கள்தான் எம்.கே.டி.யும், என்.எஸ்.கே.யும். யாரோ பெண்களுடன் ஏதோ லீலையில் இருக்கும்போது, லக்ஷ்மிகாந்தன் மறைந்திருந்து புகைப்படம் எடுத்துவிட்டதாகவும், அதைச்சொல்லியே இவர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், தொல்லை எல்லை மீறியதால் தீர்த்துக்கட்ட முடிவெடுத்து, பட்டப்பகலில் ரிக்ஷாவில் போய்க்கொண்டிருந்த லக்ஷ்மிகாந்தனை ஆட்களை விட்டு சரமாரியாக வெட்ட, ரத்தவெள்ளத்தில் கிடந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க, அங்கு அவர் இறந்து விட்டதாகவும், அதனால் அன்றிருந்த பிரிட்டிஷ் போலீஸ் இவர்கள் இருவரையும் கைது செய்ததாகவும் அப்போதைய பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதுமட்டுமல்லாது, அப்போது சென்னையை உலுக்கிய 'ஆளவந்தார் கொலை வழக்கு' மற்றும் 'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு' பற்றி தனியாக புத்தகங்களே வந்தன. செல்லரித்துப்போன அந்தப் புத்தகங்களை நானும் படித்திருக்கிறேன்.
குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் வெளியே வந்தனர் என்று ஒரு கூற்றும், இல்லையில்லை சிறைத்தண்டனை பெற்று உள்ளே இருந்தவர்கள் இந்திய சுதந்திரத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர் என்று ஒரு கூற்றும் புழக்கத்தில் உண்டு.
எது உண்மையென்பதை அப்போதிருந்த பெரியவர்கள் யாராவது இருந்தால்தான் சொல்ல முடியும்...
gkrishna
10th September 2014, 07:39 PM
http://www.vijayramonline.com/kannan-page/ilankai%20kuilgal/ilankai%20kuilgal1_files/image001.jpghttp://www.vijayramonline.com/kannan-page/ilankai%20kuilgal/ilankai%20kuilgal1_files/image002.jpghttp://www.vijayramonline.com/kannan-page/ilankai%20kuilgal/ilankai%20kuilgal1_files/image003.jpg
gkrishna
10th September 2014, 07:44 PM
லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கும் தியாகராஜ பாகவதரும்
1940-களில் தியாகராஜ பாகவதர்தான் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவருடைய வெண்கலக் குரலுக்கு மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். மேடையிலோ திரையிலோ இவர் தோன்றினால் மக்கள் மெய் மறந்து சொக்கி நின்றனர். இவருடைய ஹரிதாஸ் படம் சென்னை பிராட்வே திரையரங்கில் சுமார் 700 நாள்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இவர் காரில் போகும்போதுகூட மக்கள் வழிமறித்து நிறுத்தி பாடச் சொல்லி கேட்பார்கள். இவர் நடித்து வெளியான சிந்தாமணி படத்தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தாமணி தியேட்டர் என்று பெயரிட்டது. திவான் பகதூர் என்று பட்டம் பெற்ற திரையுலகைச் சேர்ந்த ஒரே நடிகர் இவர்தான்.
இவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். இவர் குரல் மட்டுமல்ல, சிகையலங்காரமும் இளைஞர்களியே பிரபலம் அடைந்திருந்தது. பாகவதர் ஸ்டைல் என்று அதற்குப் பெயர். திரையுலகை இவர் அளவுக்கு ஆண்ட இன்னொருவரைச் சொல்வது கடினம். திரையுலகின் மூலம் இவர் அடைந்த லாபங்களும், திரையுலகம் இவர் மூலம் அடைந்த லாபங்களும் மகத்தானவை. தங்கத் தட்டில் உணவு உண்டவர். அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை ஒரு கொலை வழக்கால் தலைகீழாக மாறிப்போனது. அதுதான் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.
பாகவதரைப் போலவே இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொருவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். வில்லுப்பாட்டு, மேடை நாடகம், திரையுலகம் என்று பல துறைகளில் பிரசித்தி பெற்றவர். திரைப்படத்தில் தான் பங்குபெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு தானே வசனம் எழுதினார். சுமார் 150 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பல படங்களில் இவருக்கு ஜோடியாக பெண் கதாபாத்திரத்தில் நடித்த டி.எம்.மதுரம் கலைவாணரின் நிஜ வாழ்க்கையிலும் துணைவியாக ஆனார். திரைவானில் வெற்றிக்கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையையும் அதே லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தாக்கி சீரழித்தது.
இரு பெரும் நடிகர்களின் வாழ்வில் சுனாமியை ஏற்படுத்திய அந்த லட்சுமிகாந்தன் யார்? இன்றைய மஞ்சள் பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழந்த சினி கூத்து என்னும் சினிமா இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவர். சினி கூத்தில் சினிமாவைப் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல, சினிமாக்காரர்களைப் பற்றிய விமரிசனமும் இடம்பெற்றது. பரபரப்பான கிசுகிசுக்கள், எந்த நடிகருக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு போன்ற ‘சுவாரஸ்யமான’ செய்திகள் இடம் பெற்றன. நடிகர், நடிகைகளுடைய தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் என்ற பெயரில் பல புனைவுகள் தயார் செய்யப்பட்டு அச்சில் ஏற்றப்பட்டன. அதனால் பல நடிகர், நடிகைகளின் சமூக அந்தஸ்துக்கு பங்கம் ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் விதமாக தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு (இவர் பிரபல இயக்குனர். கோவை பக்ஷிராஜ் ஸ்டுடியோவின் உரிமையாளர்) மூவரும், அன்றைய சென்னை மாகாண ஆளுநரான ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிடம் சென்று லட்சுமிகாந்தனுக்கு சினி கூத்து பத்திரிக்கை நடத்த வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டி ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர். ஆளுநரும் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இசைந்து லட்சுமிகாந்தனுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார்.
ஆனால், லட்சுமிகாந்தன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளவில்லை. போலியான ஆவணங்களின் பேரில் தன் வெளியீட்டைத் தொடர்ந்து நடத்திவந்தான். அரசாங்கத்துக்கு இது தெரிய வரவே அந்த வெளியீட்டையும் முடக்கியது. லட்சுமிகாந்தன் இதற்கும் அசரவில்லை. ஹிந்து நேசன் என்ற வேறொரு பத்திரிகையைத் தொடங்கினான். மீண்டும் ஏகப்பட்ட கிசுகிசுக்களை எழுதினான். இம்முறை ஒரு முன்னேற்றம். சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள பெரும்புள்ளிகள், தொழில் அதிபர்கள் என்று அனைவரைப் பற்றிய ரகசியங்களையும், புனை கதைகளையும், கிசுகிசுக்களையும் எழுதித் தள்ளினான்.
லட்சுமிகாந்தன் எழுதும் கிசுகிசுக்களுக்கு பயந்தவர்கள், அவனுடைய நட்பைச் சம்பாதிக்க அவனுக்கு ஏகப்பட்ட பணத்தை வழங்கினர். இதன் காரணமாக லட்சுமிகாந்தன் சொந்தமாக ஒரு அச்சகத்தையே விலைக்கு வாங்கிவிட்டான். தனக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீ ராமுலு ஆகியோர்மீது நிறைய கிசுகிசுக்களை எழுதினான். அந்தக் காலகட்டத்தில் மேற்சொன்ன மூவரைத் தவிர்த்து லட்சுமிகாந்தனின் கிசுகிசுக்களால் பாதிக்கப்பட்டு அவனுக்குப் பல எதிரிகள் உருவாயினர்.
இந்நிலையில், 1944 ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சென்னை வெப்பேரி அருகே வந்து கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத சிலர் அவனைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர். கத்திக்குத்து காயத்துடன் அவன் மருத்துவமனைக்குச் செல்லாமல் அவனுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். அவனுடைய நண்பர் அவனை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். கூடவே தன்னுடைய ஜூனியரையும் லட்சுமிகாந்தனுக்கு துணையாக அனுப்பி வைத்தார். ஆனால் லட்சுமிகாந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், வெப்பேரி காவல் நிலையத்துக்குச் சென்று, நடந்த சம்பவங்களைப் பற்றிப் புகார் ஒன்றை கொடுத்தான். தன்னை அடையாளம் தெரியாத யாரோ குத்திவிட்டதாகத்தான் தெரிவித்தான். தியாகராஜ பாகவதரையோ என்.எஸ்.கிருஷ்ணனையோ புகாரில் குறிப்பிடவில்லை.
மருத்துவமனையிலும் அவன் புறநோயாளியாகத்தான் அனுமதிக்கப்பட்டான். காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அவன் எந்தவிதக் கவலையும் இல்லாமல் காணப்பட்டான். நகைச்சுவை உணர்வுடன் இருந்ததாகவும் சொல்வார்கள். மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்தவர்களிடம் லட்சுமிகாந்தன் ஒரு கொலை விஷயத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறான். சமீபத்தில் தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு வந்த போட் மெயில் ரயிலில், தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அது. அந்தக் கொலையில் ஒரு பிரபல சினிமா நடிகை சம்மந்தப்பட்டிருப்பதாகவும், கொலை நடந்த ரயிலில் அவள் பயணம் செய்ததாகவும், கொன்ற பிறகு, ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதாகவும் லட்சுமிகாந்தன் சொன்னான். அந்த நடிகைக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தான். தகுந்த ஆதாரங்களைக் கொண்டு அந்த நடிகையைச் சிக்கவைக்கப்போகதாகவும் தெரிவித்தான்.
மறு நாள் விடியற்காலையில் எதிர்பாராத விதமாக லட்சுமிகாந்தன் உயிரிழந்தான். லட்சுமிகாந்தனை யார் கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தபோது, தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் , ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய மூவரையும் அதற்குப் பொறுப்பாளிகளாக்கியது காவல் துறை. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், கோவிந் சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள். நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு நடந்த சமயத்தில் ஜூரி முறை இருந்தது. ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு தான், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இப்பொழுது இது நடைமுறையில் இல்லை.
வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது. ஆனால் ஸ்ரீராமுலு குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற முடிவையும் நீதிபதிக்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நாடு கடத்தும் தண்டனை நீக்கப்பட்டது).
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாகவதரும் கலைவாணரும் ப்ரிவி கவுன்சிலில் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்கள். ப்ரிவி கவுன்சில் லண்டனில் இருக்கிறது. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்படாத நிலையில், இந்திய உயர் நீதிமன்றங்களுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பியவர்கள் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலைத்தான் அணுக வேண்டியிருந்தது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்வது நிறுத்தப்பட்டது.
பாகவதர் மற்றும் கலைவாணருடய மேல்முறையீட்டை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபுதின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி ஷஹாபுதின் பின்னாளில் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கே அவர் பதவி உயர்வு அடைந்து இறுதியாக பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்). இம்முறை குற்றவாளிகளுக்காக வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ். வழக்கை விசாரித்த புதிய பெஞ்ச், தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு முடியும்வரை பாகவதரும் கலைவாணரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுபடுவதற்கு பாகவதரும் கலைவாணரும் தாங்கள் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் செலவு செய்திருந்தனர். தியாகராஜ பாகவதர், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 12 திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார். அவை அனைத்தும் கை நழுவிப் போனது. பாகவதரின் மவுசு காணாமல் போயிருந்தது. அவர் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மேடை கச்சேரிகளில் பாடினார்.
திராவிட இயக்கம் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த அண்ணாதுரை, தியாகராஜ பாகவதரைத் திராவிட இயக்கத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு பாகவதர் இணங்கவில்லை. பாகவதர் திரைப்படத்துறையிலிருந்து விலகிய பிறகு, தமிழ் திரைப்படங்கள் வேறொரு தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தது. நாத்திக கொள்கையையும், கடவுள் மறுப்புப் பிரசாரத்தையும் மக்களிடையே சேர்ப்பதற்கு திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன.
பாகவதரால் மீண்டும் உயரத்தைத் தொடமுடியாமலே போய்விட்டது. 1959ம் ஆண்டு, தன்னுடைய 49-வது வயதில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார். கலைவாணர் விடுதலையானபிறகு பல படங்களில் நடித்தார். புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். பல கலைஞர்களைத் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். மீண்டும் பாகவதர் போல் இல்லாமல், திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1957-ஆம் ஆண்டு தன்னுடைய 48வது வயதில் கலைவாணர் காலமானார்.
லட்சுமிகாந்தனை யார் கொலை செய்தார்கள் என்ற விவரம் இன்றுவரை மர்மமாகவே நீடிக்கிறது.
0
S.P. சொக்கலிங்கம் www.tamilpaper.net
http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2011/11/N-S-Krishnan1-300x168.jpghttp://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2011/11/12FRMKT_THYAGARAJA_B_62851e-237x300.jpg
Gopal.s
10th September 2014, 07:53 PM
Manayangathu Subramanyan Viswanathan
1991, HMV released the album Legends: Viswanathan Ramamurthy. I was given the job of producing a TV advertisement for this release. They wanted me to include bits from an interview with M.S. Viswanathan in the promo. I rushed to his Chennai residence on Santhome High Road with camera crew and this huge excitement of meeting M.S.Viswanathan. He was waiting, ready for the shoot in his white and white dhoti and shirt and with his trademark accompaniment, the harmonium. The composer of countless unforgettable film songs, one of India’s incomparable music geniuses was waiting for me there in flesh and blood!
He was humility personified as he welcomed us. The next three hours were a continuous and flowing stream of remembrances from his music life. His experiences and experiments in music, the stories behind many great songs, the way many songs that took their place in history were composed, tidbits of incidents, it was a magnificent tour of the world of South Indian film music. The interview he gave for a 30 second advertisement film was sufficient to craft a full length documentary of his music career! M.S.Viswanathan is a humble person but a spring well of endless musical ability even at a ripe old age.
Ilayaraja once said, “Countless are his songs which melted my heart totally enraptured by their charm. His every song is a priceless jewel. If I have achieved anything in music, I submit them as my humble offering at the feet of MSV.”
A.R.Rahman, in one of his rare interviews, recently admitted that M.S. Viswanathan was close to his heart as a great all-time-composer and that he was the true music genius of Tamil film music. “There are no music composers in Tamil film music who are not influenced by MSV nor will there ever be!” is Kamal Hasan’s comment. He goes on to add: “MSV’s tunes have filled my ears and heart and dominated my taste of music since my childhood. He infused life into film music by introducing new styles to light music composition. He is a legend in Indian film music.”
M.S. Viswanathan who has been ruling the air waves beyond one generation with his countless super hit melodies who counts millions as his fans even today. Undoubtedly he is the numero uno composer of Tamil film music. From his first song in 1952 to the late eighties he stayed at his creative heights. He composed the music for over 1740 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi. No other film music composer in India stayed at the top as long as M.S. Viswanathan did.
Recently in a discussion about him on the internet, a Kerala youngster asked: “Are you talking about the Viswanathan who sang the Malayalam song ‘Kannuneer Thulliye’?” For most Malayalees M.S.Viswanathan is a Tamilian, a Tamil film composer who also composed a few unforgettable songs in Malayalam and above everything, a singer who sang with great emotion ‘Kannuneer Thulliye Sthreeyodu Upamicha Kavya Bhaavane’ for the film Pani Theeratha Veedu- 1973, in an astounding high pitch to secure a place for it in the history of Malayalam songs forever.
According to an article written in the Malayalam journal Mathrubhumi by an ‘expert’ on Malayalm film music, MSV has composed music for a few Malayalam movies. He has sung only one song; the super hit ‘Kannuneer Thulliye’. He could not recollect another equally famous song in Malayalam sung by M.S.Viswanathan, ‘Hrudaya Vaahinee’. Actually M.S.Viswanathan had scored music for over 60 films in Malayalam and sung over ten songs there in.
Surprises greet you at every turn when you hear about the life and times of M.S.Viswanathan. Manayangathu Subramanian Viswanathan is a Malayalee was born in Elappulli village in the then Malabar (part of today’s Kerala) district of Palghat on 9th July of 1932. The first composition to be released in his name was in the bilingual Tamil-Malayalam film ‘Jenova’ in which MGR played the lead.
MGR, who too was a Malayalee, at that time strongly opposed M.S. Viswanathan being introduced as a music composer. He argued that he was as yet raw and unfit for the big assignment. The film’s producer, Eappachan, another Malayalee, supported M.S. Viswanathan and he got that chance along with T.A. Kalyanam and Gnana Mani as other composers of the film.
But MGR recognized the arrival of a genius, when he heard the songs recorded for ‘Jenova’. In flooding rain he called on M.S.Viswanathan in the thatched hut he was living in to hug him and congratulate him. It was a relationship that lasted till the end. MSV got some other partial film assignments during this time like ‘Panam’, ‘Devadas’ and ‘Chandi Rani’.
MSV always had the highest regard for Hindi film composer Naushad. He called him his guru. When a book on MSV’s life story was released in 2002, he humbly refused to sit with Naushad on the dais, out of his respect for Naushad. But Naushad himself had expressed differently about MSV. “I have learnt many things from him. So I ought to consider him my teacher. I was asked to compose for the Hindi version of Tamil film ‘Alayamani’. But after seeing the film, I pointed out that MSV has touched new heights in the film and there was little left for me to do. MSV has accorded me the status of a guru, but that is because of his humility. I always had goose pimples listening to many of his tunes.”
Naushad was quite right. It is MSV’s opinion which apart from showing his humility also has shades of confusion. Anyone who minutely analyses the compositions of both Naushad and MSV will agree that Naushad cannot be compared with Viswanathan on creativity and the control over the medium. In 1956, Viswanathan-Ramamurthy had composed for the Hindi film ‘Naya Aadmi’, ‘Laut Gaya Ghum ka Zamana’ sung by Hemant Kumar-Lata Mangeshkar duo. You can compare this song with any of Naushad’s songs. None will stand the test according to me.
If you listen to the Hindi versions of MSV’s songs you will realize that his music scores have remained unchallengeable. Where MSV’s scores have been massive hits, the Hindi versions were mere pale imitations. Listen to Lakshmikant Pyarelal’s compositions for the Hindi remake film ‘Pyar Kiye Ja’ and then listen MSV’s score for the original Tamil film ‘Kaadhalikka Neram Illai’. Or listen to Shankar Jaikishen’s scores for ‘Dharti’ and ‘Main Sundar Hoon’. Then listen to MSV’s scores for ‘Sivanda Mann’ and ‘Server Sundaram’. Then again look at what Music composer Ravi had to offer in ‘Do Kaliyan’ in place of MSV’s ‘Kuzhandayum Deivamum’ in Tamil. The lackluster Hindi scores are great testimonies of the brilliance of M S Viswanathan.
I am not calling M.S.Viswanathan a genius to merely praise him. A genius is not a natural extension of his circumstances. A genius easily breaks the barriers erected by his birth and circumstances. He stuns and leaves everyone wondering about his arrival and his gathering force. Long after his time is done, he lives on luminously through his creations. MSV is such a personality.
Tamil is a language with not less than two thousand years of music traditions. Two hundred years have passed since Carnatic music took its current form. Here the given was that music means traditional ragas. Before M.S.Viswanathan most of the film music composers took a part of the traditional raga and laced the lyrics with it. There ended their creativity and work as composers. MSV’s music creations could not be confined within the traditional ragas. There was a need to find a new designation for MSV’s creations. That is why, I believe, the term ‘Mellisai’ (light music) was created. Did the title ‘Mellisai Mannar’ (King of Light Music) really do justice to MSV’s stature? Was his music just ‘light’ music?
Viswanathan’s compositions look simple at first glance. It attracts the fan at once. But on a more careful analysis, one will realize the depth of his compositions. His music often graced by heavy movements of scales. At times, the song may be a composite of more than one tune. Or he may rearrange a single tune in many different ways. His music with its emotional undertones, at times, lends new meaning to words. He may take a totally different track after the Pallavi in some songs. Suddenly, the ending may be in a new tune. A thousand songs may be analyzed to illustrate these musical movements. For example in the song ‘Anbulla Man Vizhiye’ a new tune graces every quartet of the song.
What tradition MSV’s music, that straddled half a century of Tamil Film Music like a colossus, does belong? One cannot trace notes of the music of his native Kerala in his creations. Nor can it be associated directly with the Tamil folk music. Western music is not his forte either. These were merely the backgrounds that inspired him.
Music, for him, is not a continuation of tradition. It is a very personal language. He has often said that Sa Ri Ga Ma Pa Dha Ni is his language. He uses his language to lend emotional content to the dramatic scenes in films. He has often explained this with the way many tunes evolved for the occasion. He had once remarked that he had literally roamed for days together to find a tune for the song ‘Nenjam Marappadillai’ from the film of the same name till and finally he found inspiration from the sound of a retreating wave on the seashore. Countless were such songs! Today, those scenes have faded away with time. But his evergreen songs still stands tall.
M.S.Viswanathan is known to people of other languages as a Tamil film music composer. Even though he composed many super hit melodies in many other languages, he was never sufficiently recognized in them like Tamil. ‘Chandirani’ produced by actor Bhanumathy in 1953 in multiple languages including Hindi. ‘Naya Aadmi’ (1956), ‘Afsana Do Dil Ka’ (1983) etc were his other Hindi films.
He had composed music for over 60 Telugu films. The multi-lingual ‘Devadas’ was his first Telugu film. Every one of the ten songs he composed for ‘Santhosham’ (1956) was a super hit. Some of the all-time-hits of Telugu film music were his compositions. Viswanathan continued to score music for Telugu films till 1997. Viswanathan has scored far less for Kannada films. But most of his songs are considered big hits even today. His first Kannada film was ‘Bhaktha Markandeya’ in 1956.
After ‘Jenova’ Viswanathan scored music for a Malayalam film in 1958 named ‘Lilly’. But till ‘Lanka Dhahanam’ in 1971 he could not find time for Malayalam films. Then followed a great innings with ‘Pani Theeratha Veedu’, ‘Babumon’, ‘Chandrakandham’, ‘Dharmakshetre Kurukshetre’, ‘Divya Darshanam’, ‘Yezham Kadalinakkare’, ‘Iyer the Great’, ‘Jeevikkan Marannupoya Stree’, ‘Kolilakkam’, ‘Kutravum Shikshayum’, ‘Panchami’, ‘Sambhavami Yuge Yuge’, ‘Vaenalil Oru Mazha’, ‘Yaksha Ganam’ and ‘Shuddhi Kalasam’.
Viswanathan has composed some very great light music scores like ‘Kannuneer Thulliye’, ‘Easwaranorikkal’, ‘Nadan Paattinde Madisheela Kilungum’, ‘Katrumozhukkum Kizhakkottu’, ‘Suprabhatham’, ‘Swarganandhini’, ‘Veena Poove’, ‘Hrudhaya Vaahini’ and ‘Thiruvabharanam’. These great songs continue to be heard by Malayalees wherever they are. Since MSV continued to score music till nineties, it is possible to extend this list manifold.
Apart from these, Viswanathan has composed music for countless Devotional Songs and Independent albums in all the four South Indian languages. These fill our ears and mind on a daily basis. Fact is that it is unthinkable to spend a day in South India without listening to one of his songs. It is not an exaggeration to suggest that with his prodigious music output he has remolded the South Indian music taste. Many a new film songs that we hear even today are MSV’s songs in altered forms.
There is another fact which even film music connoisseurs have overlooked. The very purpose of this article is this one central fact that Viswanathan is essentially a singer. In reality he trained as a singer. In 1941, at the age of nine, he performed his first music concert as a Carnatic vocalist in Kannur, in Malabar.
He is a great singer but in the biography of his life written by Ranimaindhan with MSV’s blessings too only has a passing mention of his singing. In a 300 page book, there are not even three lines on MSV as a singer. Adding insult to injury, the book wrongly mentions “Allah, Allah” song, sung for the film ‘Mohammad Bin Tughlak’ as his first song as a singer.
‘Mohammad Bin Tughlak’ was a film released in 1972. In 1963 M.S.Viswanathan had sung the song ‘Paar Magale Paar’ for the film of the same name and this song was played in every hamlet in Tamilnadu. This is an often heard number even today. His voice was recorded for the ‘Palirukkum, Pazhamirukkum’ number of the film ‘Pava Mannippu’ as a background voice accompaniment after the lyric lines. After that he continued to sing many songs.
In India many composers have sung their own compositions and under other composers. The list extends from Pankaj Mallick to A.R. Rahman. But how many of them have passed muster as singers? When they compose a good score for themselves to suit their voices, they have half their job already done. But when the thought crosses our mind that a professional singer would have done better justice to the song, the composer is already defeated as a singer.
Salil Chowdhury used to instruct his singers on the minutest details of his score. But when his children wanted to record his great Bengali songs in his own voice, he developed cold feet and refused. But his children readied the track for ten of his best songs and fixed a date for recording it in his voice. Left with no alternative, a flustered Salilda woke up at four in the morning to practice singing. On day one, when the first song was recorded, he was nervous in the extreme. He was perspiring profusely when he came out of the recording room after the first recording. He could finish that album only after many faltering takes. And the songs recorded did not sound very great either. Salilda’s daughter, Sanchari Chowdhury, had given me this account of Salilda’s trepidation at recording his own voice.
But MSV never found it difficult to sing. Only the singers felt small and inadequate in reproducing what he sang for them by way of illustration. T.M. Soundararajan once said: “When MSV sang the tune of the song ‘Yaar Andha Nilavu’ composed for the film ‘Shanti’ I was just too stunned and I wondered how I am going to sing it. It is impossible to sing like him. “P.B. Sreenivas used to say that he could reproduce only ten percent of what MSV illustrated while explaining his tunes to him.
P. Susheela said once that no singer has sung his tunes with the liveliness with which MSV sang for them. She had come away from recording theatres in tears many times; unable to sing the way MSV had illustrated his tunes in his own incredibly expressive voice. Vani Jayaram had commented that the subtle nuances that MSV brings out while singing are difficult for any singer to reproduce and that the song will be a great song if they can reproduce even ten percent of what he illustrated. All his singers have remarked the greatness of MSV as a singer.
M.S.Viswanathan occasionally used to sing his own compositions sung by others on the stage. Some of these are also available as records. Music fans will realize how his singing is livelier and more nuanced. We can see this MSV style of rendering in the many great songs sung by renowned singers.
When Viswanathan sits with his harmonium he becomes a singer not the composer. When he sings the same tune again and again, they keep coming with new refreshing changes every time. But singers would find it difficult to keep track of serial creative evolutions of tunes that MSV keeps stringing together all the time.
Viswanathan was not the typical singer with a cultured voice. It is nobody’s contention that he has a mellifluous voice or a pleasing flow. That may probably the reason why he did not consider himself a singer! His was not a voice that suited the actors of his time. That was the reason why his was either a disembodied voice in the background or the voice of miscellaneous characters in films. But his songs he sang were an exciting amalgam of countless play of nuanced differences. The creative energy of these songs was like the countless waves of the sea refreshing your mind unceasingly. The boundless emotions that they unleashed on us were truly amazing.
Let us take, for example, the song ‘Enakkoru Kadhali Irukkindral’ from the film ‘Muthana Muthallavo’ released in 1976. He sang this song with S.P. Balasubramaniam. The nuanced change of emotions he brought to every line he sang clearly illustrated the differences in singing by a professional singer and a creative composer- singer.
There is a saying in Tamil film world that ‘Pitch means Vichu’. MSV has sung most of his songs at unusually high pitch. He sang these songs himself, as other singers were diffident about singing at high pitch. He was able to sing these songs expressing a variety of emotions. One realizes this listening to his song ‘Etharkum Oru Kalam Undu Poruthiru Magale’ sung for ‘Sivagamiyin Selvan’ released in 1973. This song imparts a soft touch to expression of finer emotions of man.
MSV’s singing for disembodied voice conveys a wrong impression that he could sing only such songs. It is true that his voice does not suit many artistes donning the roles of heroes. But the extraordinary effect of his voice in the portrayals by artistes has been noted. His song ‘Jagame Mandiram ... Sivasambo’ in the film ‘Ninaithale Inikkum’ takes Rajnikant’s portrayal to a different level. Another great example is the song ‘Nee Ninaithal Innerathile’ in the film ‘Nilave Nee Satchi’.
In a previous article I have written on A.M. Rajah’s voice, its sweetness and conformity to the pitch. Without these two, there can be no sweetness in the song. But conformity to pitch is something which entered history of music much later. What is this conformity to pitch? It is, according to musicologists, the requirement that vocalist conform his pitch to the pitch of the accompanying instruments. Of course, the vocalist must be conscious of the need to conform to the pitch!
But how would the songs in the past before the need to conform to the pitch and for voice training emerged have sounded? It would have been an original and uncontrollable sense of enjoyment bubbling along on its own. When a singer can touch that height of music, voice training and conformity become secondary. In any kind of music environment we can identify a few raw geniuses of singers.
MSV is one such genius. Every song sung by him, including his own compositions, had been sung by him with a total application of his mind after a complete understanding of and empathy with the lines of the lyrics. The emotions expressed by his songs are completely natural and honest. That is why their boundless variety of expressions cascade effortlessly. The song ‘Sollathan Ninaikkiren’ from the film ‘Sollathan Ninaikkiren’ is an example. The emotions and longings of this song is smoldering and compelling beyond words.
Long is the list of such songs. ‘Kandathai Chollukiren’ from ‘Chila Nerangalil Chila Manidhargal’, ‘Allah, Allah’ from ‘Mohammad Bin Tughlak’, ‘Ikkaraikku Akkarai Pachai’ from ‘Akkarai Pachai’, ‘Uppai Thindravan Thanneer Kudippan’ from ‘Oru Kodiyil Iru Malargal’, ‘Dagathukku Thanni Kudichen’ from ‘Neelakkadal Orathile’ and ‘Idhu Raja Gopura Deepam’ from ‘Agal Vilakku’ are songs that come immediately to mind. We will do well to ponder whether any other singer could have brought about in the virtual parade of emotions infused in the hums and moans by MSV? He can launch a musical journey in any note of a song. His laughing in seven different music notes in the song ‘Enakkoru Kadhali Irukkindral’! Incredible to the core.
Other composers have recognized his rare and exciting talent as a singer. His song ‘Unakkenna Kuraichal Nee Oru Raja’ sung in the film ‘Velli Vizha’ for composer S.Kumar is a great example. He has sung for composer Govardhanam in the film ‘Varaprasadham’. He has sung for composer Ilayaraja in ‘Thai Moogambigai’ and ‘Yatramozhi’ (Malayalam). He has sung for A.R. Rahman in films like ‘Sangamam’ and ‘Kannathil Muthamittal’.
‘Vidaikodu Engal Naade’ in the film ‘Kannathil Muthamittal’ has a tune of considerable emotional depth. MSV’s singing made it even more tempestuous. But the tune of ‘Aalaala Kanta’ in the film ‘Sangamam’ is an average tune. But MSV through his lifelong experience in music and volcanic emotions of his vocalizing has lifted the song to its stunning height.
Now, well past eighty years of age, Viswanathan still scores music for films and television, sings and emotes. He is conducting music shows all over the world. For his achievements in film music, Tamil Music Association, in its Chennai Music Festival of the season of 2004 honoured him with the title of ‘Isai Perarignar’. An organization of traditional Carnatic music experts honouring a composer of film music was the first of its kind.
Viswanathan lost his father at the tender age of three. His childhood was filled with sadness and neglect. He was not blessed with even a rudimentary formal education. He learnt music from his guru by doing his household work as he could not afford to pay his guru dakshina. In his early days in Chennai he worked as a server in tea canteens and as a helper. From that humble position he rose to be the King of Music solely on account of his genius.
M.S. Viswanathan did not win any National Award during his lifelong innings in music. He was not even given a Tamilnadu state award. He was not given anything of note in recognition of his body of work by governments. He is a simple person not familiar with the ways of the world. He did not know the art of kowtowing to persons in authority. And he had none to speak up or lobby for him.
But, I say, it is nothing to be sorry about. Our awards, achieved mostly on the basis of reach or relationship, are not worthy of being dignified by the genius of MSV’s music. MSV used to regularly repeat a phrase in his stage shows. ‘Mortal Men, Immortal Melodies.’ True, awards of mere men perish with them. But MSV’s music which shaped the taste of millions will last for ever.
By Shaji.
gkrishna
10th September 2014, 07:58 PM
நடிகர் திலகத்துடன் திரு B H அப்துல் ஹமீது அவர்கள்
http://www.bhabdulhameed.com/images/sivaji.jpghttp://www.bhabdulhameed.com/galleryima/photo_B_40.jpg
madhu
11th September 2014, 05:37 AM
இரட்டைக் குழல் குழந்தைகள் சின்னம் கொண்ட ஜெமினியின் பிற்காலத் தயாரிப்பான "ஜனனி" என்ற படம் அதிகமாக பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
ஆனாலும் அந்தப் படத்தில் இரண்டு வெர்ஷன்களாக எம்.எஸ்.வி.யின் இசையில் ஒலித்த "மன்னிக்க மாட்டாயா" என்ற பாடல் மனதைக் கவர்ந்த பாடல்களின் வரிசையில் சேர்ந்து கொண்டது.
சுசீலா, ஜேசுதாஸ் இருவராலும் தனித்தனியே பாடப்பட்டாலும் இரண்டுமே மெல்லிய சோகப் பின்னணியில் இரக்கம் வேண்டுவதாக எழுதப் பட்டதால் அதற்கேற்ப மிக மென்மையான இசையுடன்
உருவாக்கப் பட்டன.
இதோ ஜேசுதாஸ் வெர்ஷன். ( யாரு அந்த ஹீரோ ? மலையாளப் பட நடிகர் (?) உதய குமாரா ? )
Ithu youtube-la unlisted category-l irukkuthaam. appadinna enna ? share seyya koodathaa ?
https://www.youtube.com/watch?v=7WyglqvbA9s#t=16
சுசீலா வெர்ஷன்
http://youtu.be/bf-d8d9TChU
Gopal.s
11th September 2014, 05:58 AM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-2.
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மிக மிக பிரத்யேக திறமையாக குறிப்பிடுவது பாடல்களின் போக்கை முன் கூட்டியே தீர்மானிக்காத ஒரு நீக்கு போக்கான தன்மை.(nebulous ).இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ராகங்கள்,தீர்மானமான நோட்ஸ் எதுவுமே அவசியமில்லாதவை. சில சத்தங்கள், அவற்றின் மன கிலேசங்கள்,உணர்வுகள்,அதிர்வுகள் போதுமானவை .அவற்றை வைத்து trial &error என்ற பாணியில், ஒரே வார்த்தையையோ, வரிகளையோ வித விதமாக உச்சரித்து , சோர்வேயில்லாமல் முப்பது நாற்பது tune கொடுப்பாராம். (டி.கே.ராமமுர்த்தி வேறு ரகம்.பாடல்கள் பிடிக்க வேண்டும். முன்தீர்மானம் செய்வார்.எனக்கு என்ன கொடுப்பது என்று தெரியும் என்று ஒன்றிரண்டு மட்டுமே தருவாராம்). இவர்களுக்கிடையே உள்ள முக்கிய வித்யாசமே இதுதான். ராமமூர்த்தியை குருவாக மதித்து,அவரிடம் இசை கற்றாலும், அவரை மிஞ்சி field இல் பலமாக நிற்க இதுவே முக்கிய காரணமானது.
பாடகர்களும் ,என்னிடம் குறிப்பிடுவது, அவர்களின் improvisation சுய தன் முயற்சியில் செய்ய படும் சோதனைகள்,நகாசுகளை அனுமதிப்பாராம். இரு முறை ,மூன்று முறை பாடி காட்டும் போது வெவ்வேறு மாற்றங்களை காட்டுவாராம். மேதை என்பதன் அறிகுறியே அதுதானே?
இவர் பாடல்களுக்கு ,ஒரு எதிர்பாரா புது புதிர் தன்மை அளித்தது ,இந்த ஒரு குணமே. மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு ராகத்தை மனதில் வைத்து,பாடல் கட்டமைப்பை உருவாக்குவது போல எம்.எஸ்.வீ செய்ததே இல்லை.(கர்ணன் போன்ற படங்கள் விதிவிலக்கு). தோன்றிய படி போகும் பல்லவி,சரணங்களினுடே ,ராகம் ஒன்றோ ,இரண்டோ,மூன்றொ கூட புதையலாம். ஆனால் அவை ஒட்டு போட்ட சட்டையாக தோன்றாமல், ஒரு யூகிக்க முடியாத புதிர்த்தன்மை கொண்டு, எம்.எஸ்.வியின் வெகு ஜன பிடித்தம் பற்றிய பரிச்சயம்,இசையறிவு கொண்ட தயாரிப்பாளர்,மற்றும் இயக்குனர்களின் தேர்வுகள்,அந்த தேர்வுகளுக்கு எம்.எஸ்.வீ அளித்த வற்றாத எண்ணிக்கை கொண்ட tunes , பிறகு அதற்கான இசை தொகுப்பை நிர்ணயிக்கும் முறை,இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ,இவற்றால் அவர் பாடல்கள் தனித்து தெரிந்ததில் அதிசயம் என்ன?
மேலும் தொடர்வோம், உதாரணங்கள்,விளக்கங்கள்,சுட்டிகள் இவற்றோடு?எங்கே வேறு பட்டார் என்ற ஆணித்தரமான விளக்கங்களோடு.(நானே உணர்ந்தவை,மற்றோரிடம் தெரிந்தவை எல்லாமே தொகுத்து).இவை முற்றிலும் வேறு பரிமாணத்தோடு ,மற்றும் வித்தியாச புரிதலோடு.
(தொடரும்)
gkrishna
11th September 2014, 09:47 AM
http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e8/Subramanya_Bharathi.jpg
காலை வணக்கம்
இன்று பாரதியார் நினைவு நாள் .மகாகவி பாரதியார் பாடல்கள் என்றும் மீட்டுப்பார்க்க வேண்டியது நம் தலைமுறையின் கடமை
சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா’ பாடல். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் வரும் பாடல் இது. பின்னணி இசை எதுவுமில்லாமல் வெறும் சுருதி மட்டும் ஒலிக்க ஹரிஹரன் பாடியிருப்பார். பாடும் பாட்டில் பாவத்தையும் கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே.
பாடலின் ஆரம்பத்தில் குழைவான குரலில் ஆரம்பிக்கும் பாடல். போகப்போக வார்த்தைகளின் பொருளுக்குத் தகுந்தாற்போல குரலை ஏற்றியும், இறக்கியும் பாடும் அழகே அழகு. ‘சாத்திரம் பேசுகிறாய், கண்ணம்மா, (குழையும் குரல்) சாத்திரம் ஏதுக்கடி? (குரல் விரிய ஆரம்பிக்கும்.) ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி? (குரலின் முழு வீச்சில் பாடுவார்) மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் (குரல் இறங்கும்) காத்திருப்பேனோடி இதுபார் கன்னத்தில் முத்தம் ஒன்று (காத்திருக்காமல் கொடுத்தே விட்டாரோ என்று தோன்றும்!)
‘பட்டுக் கருநீல புடவை பதித்த நல்வயிரம்’
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
இன்றைக்கும் எப்போதாவது நகரத்தை விட்டு வெளியிடத்தில் போய் நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் பார்க்கும்போது இந்த வரிகள் நினைவுக்கு வரும்.
பாடல்: சுட்டும்விழி சுடர் தான் கண்ணம்மா
எழுதியவர்: மகாகவி பாரதியார்
இசை: A.R. ரஹ்மான்|
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடியவர்: ஹரிஹரன்
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 1811-ல் வெளியான பிரபலமான sense and sensibility நாவலின் தழுவிய வடிவம் என்றொரு கருத்து உண்டு
http://www.youtube.com/embed/9M4JAXzuoHU?
rajeshkrv
11th September 2014, 09:51 AM
காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே
எங்கே ராகவ் ஜி, பொங்கும் பூம்புனல் காணவில்லையே
கிருஷ்ணா ஜி நானும் உங்க பேச்சு எப்பவுமே பழம் தான்
இதோ இன்றைய பாடல் வாசு ஜி கேட்டு மகிழுங்கள்
கேண்டூரா என்ற ஹிந்தி திரையில் வன்ராஜ் பாட்டியாவின் இசையில் இசையரசி இசைத்த கீதம்
http://www.youtube.com/watch?v=2dVyWPxxGIc
rajeshkrv
11th September 2014, 10:02 AM
மதுண்ணா
ஜனனி பாடலில் இசையரசியின் குரல் மட்டும் , மிகவும் மெல்லிய இசை.. ஆஹா ஆஹா .. என் நினைவும் உன் நினைவும்
gkrishna
11th September 2014, 10:05 AM
இரட்டைக் குழல் குழந்தைகள் சின்னம் கொண்ட ஜெமினியின் பிற்காலத் தயாரிப்பான "ஜனனி" என்ற படம் அதிகமாக பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
ஆனாலும் அந்தப் படத்தில் இரண்டு வெர்ஷன்களாக எம்.எஸ்.வி.யின் இசையில் ஒலித்த "மன்னிக்க மாட்டாயா" என்ற பாடல் மனதைக் கவர்ந்த பாடல்களின் வரிசையில் சேர்ந்து கொண்டது.
சுசீலா, ஜேசுதாஸ் இருவராலும் தனித்தனியே பாடப்பட்டாலும் இரண்டுமே மெல்லிய சோகப் பின்னணியில் இரக்கம் வேண்டுவதாக எழுதப் பட்டதால் அதற்கேற்ப மிக மென்மையான இசையுடன் உருவாக்கப் பட்டன.
இதோ ஜேசுதாஸ் வெர்ஷன். ( யாரு அந்த ஹீரோ ? மலையாளப் பட நடிகர் (?) உதய குமாரா ? )
சுசீலா வெர்ஷன்
மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும்
போதும்
மன்னிக்க மாட்டாயா
(மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி)
என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்
உன்னடிமை உன்னருளை
பெற ஒரு வழி இல்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா
(மன்னிக்கமாட்டாயா)
என் மனதில்
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில்
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் இதயம் உன் உடமை
உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால்
உனக்கது வலிக்காதா
( மன்னிக்க மாட்டாயா)
பாடல் வரிகளும் குரலும் இசையும் சிறிது நேரம் சூழலையே மறக்கடித்துப் போகிறது பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
மனதை கொள்ளைகொள்ளும் K J யேஸுதாஸின் இனிய குரலில் அழகான பாடல் ஒன்று. சுசீலா அம்மா குரலிலும் இதே பாடல் சிறிது மாற்றிய கவிதை வரிகளுடன்.
yes madhu sir udayakumar and bhavya
நேதாஜி என்று ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் (நினைவு) இயக்கிய படம் இந்த பாடல் கூட அவர் எழுதியதுதான் என்று நினைக்கிறன்
RV udayakumar ஜனனி" படத்திற்கு ஆசோசியேட் டைரக்டராகவும், தயாரிப்பு மேற்பார்வையாளராகவும் பணிசெய்தார்.
gkrishna
11th September 2014, 10:09 AM
good morning rajesh sir
chinnakkannan
11th September 2014, 10:11 AM
ஹாய் குட்மார்னிங்க் கிருஷ்ணா ஜி, கோபால் சார், மதுண்ணா,ராஜேஷ் ஜி வரப்போகும் கார்த்திக் சார் வாசு சார்..
கார்த்திக் சார், கிருஷ்ணா ஜி - எம்.கே.டி பற்றிய விளக்கப் பதிவுகள் அருமை..எல்லாமே காலம் செய்த கோலம் தான்..
மதுண்ணா ஜனனி சாங்க் மன்னிக்க மாட்டாயா பிடிக்கும் நன்றி.. ராஜேஷ் ஹிந்தி ப்பாடலுக்கு வழக்கம் போலத் தாங்க்ஸ்..
பாரதியார் சுட்டும் விழிச்சுடர்தான் பாடலிட்டமைக்கு நன்றி கிருஷ்ணா சார்..
chinnakkannan
11th September 2014, 10:16 AM
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.
நன்றி- கல்ச்சுரல் இந்தியா
chinnakkannan
11th September 2014, 10:22 AM
ஒரே பாட்டு தான்..திருமால் பெருமையில் பி.சுசீலா.. ஏழாவது மனிதனில் கே.ஜே.ஜேசுதாஸ்..
சுசீலாம்மா உருக்கம் என்றால் ஜேசுதாஸ் இன்னொரு வித உருக்கம்..
**
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா... நந்தலாலா...
**
gkrishna
11th September 2014, 10:23 AM
ஏற்கனவே திரு கோபால் அவர்களும் கார்த்திக சார் அவர்களும் இந்த பாடலை பற்றி எழுதி விட்டார்கள். இது நண்பர் தமிழ் இசை பா பார்வையில்
சிலரைப் பார்த்து நாம் வாய் கூசாமல், “நீ அடுத்த பிறவியில் மிருகமாய்… பறவையாய்… பாம்பாய்… பிறந்திடுவாய்” என்று திட்டி விடுகிறோம். அப்போது அவர்களுடைய மனது மிகவும் வேதனைப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்தப் பிறவியிலேயே சிலர் மிருகமாய்… பறவையாய்… பாம்பாய்த் திகழ்வதை நாம் காண முடிகிறது. மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது ஐந்தறிவுப் பிராணியாக மாறுகிறான் என்பதற்கு மகாகவி பாரதியார் விளக்கம் தந்திருக்கிறார்.
*வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத் தகுந்தபடி கபடங்கள் செய்து வாழ்பவன் நரி.
* உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பைத் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.
*மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.
*அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி.
*பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்பவன் நாய்.
*கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுபவன்வேட்டைநாய்.
*தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர் சொன்னதைச் சொல்லித் திரிபவன் கிளிப்பிள்ளை.
* மற்றவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினாலும் பொறுத்துப் போகிறவன் கழுதை.
*வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக வாழ்பவன் வான்கோழி.
*தான் சம்பாதிக்காமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு.
*மாற்றங்களை அங்கீகரிக்க மறுப்பவன் ஆந்தை.
படம்: பாரதி
பாடலாசிரியர்: மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா
************************************
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
(நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..)
Gopal.s
11th September 2014, 10:27 AM
Thirumal perumai- Sulamangalam rajalakshmi not suseela.
gkrishna
11th September 2014, 10:27 AM
சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா! சுசீலா குரலில் கங்கை அமரன் இசையில் கூட பாடிய நினைவு சி கே சார்
gkrishna
11th September 2014, 10:31 AM
சீர்காழி குரலில்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
இயற்றியவர்: மகாகவி பாரதியார்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்
gkrishna
11th September 2014, 10:34 AM
காக்கை சிறகினிலே நந்தலாலா
இப்பாடலின் கடைசி வரிகளை கவனியுங்கள்...
தீக்குள் விரலை வைத்தேன் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி நந்தலாலா!
ஜேசுதாஸ் லயித்து பாடி இருப்பார்! வரிகளுக்கு ஏற்ற இசையும், குரலும் அழகாக அமையப்பெற்ற ஒரு பாரதியின் பாடல்!
ஏழாவது மனிதன் l வைத்யநாதன் இசை
மகாகவி பாரதியார் இந்தப் பாடலை என்ன உணர்ச்சி நிலையில் பாடினாரோ ஒருவரும் அவ்வளவு சுலபமாக அதனைக் கையகப்படுத்திவிடமுடியாது. இந்தப் பாடலை கர்நாடக சங்கீத வித்வான்கள் முதல் சினிமா இசையமைப்பாளர்கள் வரை தங்களது கற்பனைக்கும், திரைக்காட்சிக்கும் பொருத்தமாக பாரதியின் இந்த அனாயாச அற்புத வரிகள் தகவமைக்கப்பட்டு டியூன் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு இருந்தாலும் 1981ஆம் ஆண்டில் வெளிவந்த ரகுவரன் நடித்த ஏழாவது மனிதன் திரைப்படத்தில் எல். வைத்தியநாதன் அமைத்த டியூன் உண்மையில் எந்த ஒரு ரசிகரையும் உணர்ச்சிமயத்தில் ஆழ்த்துவது.
இதில் "Pathos" - உடன் கூடிய ஒரு வித நவீன வகை டியூனாக இதனை எல்.வைத்தியநாதன் வடிவமைத்துள்ளார். மிகவும் அற்புதமான டியூன் நீங்கள் கேட்டிருப்பீர்கள், இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மனதை வருடும், இதமளிக்கும் ஒரு பாடலாகும் இது.
எல். வைத்தியநாதன் இவர் நிறைய திறமைகள் இருந்து பெரிய அளவில் வெற்றி பெறாத ஒரு இசையமைப்பாளர். ஓரிரு படங்களிலேயே இவர் இசை அமைத்திருந்தாலும் ஏழாவது மனிதனில் இவர் போட்ட அத்தனை பாடல்களும் மீண்டும் ஒருமுறை மறு உற்பத்தி செய்ய முடியாதது.! மறைந்த ரகுவரனின் இளமைக்கோலத்தையும் நாம் மறக்க முடியாது!
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Actors-Gallery/Raghuvaran/Raghuvaran-0001.jpg
chinnakkannan
11th September 2014, 10:34 AM
ஓ..சூலமங்கலம் ராஜலஷ்மியா..தவறாக எழுதிவிட்டேன்.. ந்ன்றி கோபால் சார்..
நிற்ப்துவே நடப்பதுவே எனக்குப் பிடித்தபாடல் கிருஷ்ணா ஜி..ஒரு சிறுகதை கூட எழுதியிருக்கிறேன்..(சுமாரான)..சுட்டும் விழிச்சுடர் கேட்ட நினைவு..பட் நண்பர்கள் கன்ஃபர்ம் பண்ணனும்..
chinnakkannan
11th September 2014, 10:36 AM
குரு.. எனக்கென்னவோ தீக்குள் விரலை வைத்தால்..சூலமங்கலத்தின் குரல் ரொம்ப உருக்கமாத் தெரியுது.. ( நல்ல தலைப்பு .. இதை வைத்து நாவல் எழுதியவர் .. வாஸந்தி)
rajeshkrv
11th September 2014, 10:38 AM
http://www.youtube.com/watch?v=Ic0Lzj-h_0M
Richardsof
11th September 2014, 10:48 AM
BHARATHIYAAR SONG- ANDHAMAN KAIDHI -1952
http://youtu.be/E_X7I18BeK0
gkrishna
11th September 2014, 10:49 AM
பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா*ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா*ரித்து ராஜா சாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய
'வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே' பாடல் ஒலித்தது.
thanks to tamil.webdunia.com
gkrishna
11th September 2014, 10:52 AM
BHARATHIYAAR SONG- ANDHAMAN KAIDHI -1952
அருமை எஸ்வி சார்
அதிகமாக வெளியில் தெரியாத பாடல்
நினைவு ஊட்டலுக்கு நன்றி
gkrishna
11th September 2014, 11:07 AM
தற்போது வெளியாகி இருக்கும் மோகன்லால் நடித்த 'பெருச்சாளி' மலையாள படத்தின் இயக்குனர் திரு அருண் வைத்யநாதன் அவர்கள் நியூ ஜெர்சி யில் நடந்த சிந்தனைவட்டம் திரைப்பட விழாவில் திரு எல் வைத்யநாதன் (7வது மனிதன் இசை அமைப்பாளர் )
இசை அமைத்த ஒருத்தி என்ற திரைப்படம் பற்றி இவ்வாறு எழுதுகிறார்
ஒருத்தி என்றொரு முழுநீளத் திரைப்படம் கடைசியாகத் திரையிடப்பட்டது. அன்றைய தினத்தில் தயாரிப்பு நேர்த்தி (Production Values) மற்றும் இயக்க உத்திகளில் அற்புதமாகவும், கி.ராஜநாராயணின் கதையைத் தழுவியும் எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம். இதன் இயக்குனர் அம்ஷன் குமாருக்கு மனமார்ந்தப் பாராட்டுக்கள். இதைத் தயாரித்தது திண்ணை ஆசிரியர் கோ.ராஜாராம் என்பதும், இணைத்தயாரிப்பு செய்தது காஞ்சனா தாமோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு தாழ்த்தப்பட்ட இளம் பெண், தனது புத்தி சாதுர்யத்தால் கிராமத்தைக் காப்பாற்றிய போதும், உயர்சாதிப் பையனோடு அவளுக்கேற்பட்டக் காதலைப் பெரியவர்கள் மறுக்கின்றனர். 'வேண்டுமென்றால் வேறு ஊரில் போய் கல்யாணம் செய்து கொள்' என்று பெருந்தன்மையாய் (?!) அனுமதியும் வழங்குகின்றனர். அவள் அதனைப் புறக்கணித்து, தன் மக்களுக்காகக் காதலைத் துறந்து ஊரோடு வாழ்வதில் மகிழ்ச்சி அடைகிறாள்.
படம் 1800ல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒரு காட்சிக் கூட தற்காலத்தைக் காட்டும் விதமாய் இல்லாமல், நன்றாக செய்திருந்தனர். செவனி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் நல்ல தேர்வு. படத்தில் பாலாசிங் போன்ற தெரிந்த முகங்களும் இருந்தது (நன்றாகச் செய்திருந்தார்) நல்ல பலம்! எல். வைத்தியநாதனின் பின்னணி இசை, காதல் காட்சிகளின் போது ரீங்காரமிட்டது.
அந்தக் காலத்தில், இரு தார மணத்தை சர்வசாதாரணமாய்ப் பெண்கள் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதை செவனிக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் சொல்லும் போது, வருத்தமாகத் தான் இருந்தது. ஆங்கிலத் துரை சம்பந்தப்பட்டக் காட்சிகளில் எல்லாம், கொஞ்சம் பிசகியிருந்தாலும், மக்கள் பொசுக்கென சிரித்திருப்பார்கள். ஆனால், இயக்குனர் புத்திசாதுர்யமாக அவற்றைக் கையாண்டிருக்கிறார்.
செவனி, ஆடு மேய்க்கும் கம்பின் மூலம் நிலப்பரப்பை துரைக்கு விளக்கும் போது, கை தட்ட வேண்டும் போல் இருந்தது. (நல்ல உத்தி). படத்தில் மிக மிக யதார்த்தமான காட்சிகள், மெல்லிய நகைச்சுவை, அற்புதமான களம் என்று சகலமும் சரியாய் இருந்ததோடு, கல்வியறிவு தான் ஒடுக்கப்பட்டவர்களை மீட்க முடியும் என்ற நல்லக் கருத்தோடு (பிரச்சார நெடி இல்லாமல்) குறிப்பால் உணர்த்திய வண்ணம், படத்தை தூக்கி நிறுத்தியது.
இந்தப் படமானது அன்பே சிவத்தோடு போட்டியிட்டு இந்தியன் பனோரமாவில் விருது பெற்றது (?!) என்று அறிவிக்கும் போது சொன்னதாய் ஞாபகம், அப்படி நடந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இயக்கிய அம்ஷன் குமாருக்கும், தயாரித்த ராஜாராமுக்கும், பங்குபெற்ற அத்தனைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்தப் பாராட்டுக்கள். நல்ல படம் வேண்டும் என்று நினைப்பவர்கள், இது போன்ற படங்களைக் கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
chinnakkannan
11th September 2014, 11:22 AM
//இது முன்பு வேறு ஒரு இழையில் எழுதியது..இங்கு கொடுக்கவில்லைஎன நினைக்கிறேன்//
தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
..….களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பலகாட்டல்; கண்ணீர்த்
துளிவளர உள் உருக்குதல் இங்கிவையெல்லாம் நீயருளும்…தொழில்களன்றோ
..ஒளிவளரும் தமிழ்வாணி! அடியேனற்கு இவையனைத்தும் உதவுவாயே..!
*
மகாகவி பாரதி பிறந்தஃ நாளில் இன்று அவரை வணங்கி, அவருடைய பாடலை வைத்து ஆரம்பித்துவிட்டு..இப்போது.. திரையில் வந்த சில பாடல்கள்..
.***
ம்ம் முன்வரிசைகட்டி வருவது..கப்பலோட்டிய தமிழன் பாடல் + அந்தப் படத்தின் பாரதி..
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடலென்றும் கப்பல் விடுவோம்..
பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் நம்
பாரத தேசமென்று தோள் தட்டுவோம்..
ம்ம் தீர்க்கமான கண்கள் தெளிவான பேச்சுடன் நடித்த எஸ்.வி.சுப்பையா..ப்ளஸ் படத்தில் இருக்கும் பாரதியார் பாடல்கள் மற்க்க முடியுமா.
.
**
ரொமான்ஸ் என்றால் – வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு – ஏழாவது மனிதன், காற்று வெளியிடைக் கண்ணம்மா உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – செக்கச் செவேல் ஜெமினியும் கொஞ்சம் நிறம் குறைந்த சாவித்திரியும் ப்ளாக் அண்ட் ஒய்ட்டாகப் பாடிய பாடல் என வரிசை கட்டுகையில்..இன்னொருபாடல் வந்து முன்னால் நிற்கிறது..
நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது..
**
இன்னும் சில..
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்..
*
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்..
(கொஞ்சம் சிரிக்கலாமா.. http://thiraipaadal.com/Lyrics.asp?l...gid=SNGOLD1044
இந்த லிங்க்ல தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்னு எழுதியிருக்காங்க.. (கிரிக்கெட்ல இண்ட்ரஸ்ட் இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா)கை நீட்டச் சொல்லி ஸ்கேலால நாலு போடுபோடணும்)
*
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்
(ஜானகியின் குரல் மெய்மறக்க வைக்கும்)
*
நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல்.
*
ஏழாவது மனிதனில்.. அச்சமில்லை அச்சமில்லை…பாடல்..எல்.வைத்தியநாதன் இசை என நினைக்கிறேன்.. உச்சி மீது வானிடிந்து..வீழுகின்ற போதிலும் – என்பது ஹைபிட்சாக வரும் என்று நினைவு..(எஸ்.பி.பி)
*
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி – சகியே வாய்ச்சொல்லில் வீரரடி (உருக வைக்கும் பாடல்)
இன்னும் இன்னும் நிறைய மனதை முட்டுகின்றன.. நீங்கள் சொல்ல மாட்டீர்களா என்ன ?
*
பின்னூட்டம் பை ராஜ்ராஜ் சார்..
More Bharathiyar songs in movies:
-theeraadha viLaiyaattu piLLai
-thooNdil puzhuvinaipol veLiye sudar viLakkinaippol
-kaaNi nilam veNdum
-vetri ettu thikkum etta kottu murase
-aaduvome paLLu paaduvome
-senthamizh naadenumpodhinile
-chinnanchiru kiLiye kaNNammaa
-engirundho vandhaan
-nenju porukkudhillaiye
-sOlai malar oLiyo(suttum vizhi chudardhaan)
-Odi viLaiyaadu paappaa
-manadhil urudhi veNdum
ChinnakkaNNan: I think I gave you more than enough to write about. Some of these are from old movies - vEdhaaLa ulagam,Naam iruvar, Parasakthi,......
மதுண்ணாவின் பின்னூட்டம் :
சிக்கா... வேதாள உலகத்தில் கடேசில.. ராஜா ராணி ( டி.ஆர்.மஹாலிங்கம், யோகமங்களம் ) ரிசப்ஷனில் குமாரி கமலா டான்ஸ்
gkrishna
11th September 2014, 01:10 PM
Nellore Kantha Rao
நெல்லூர் காந்தாராவ்- தெலுங்குத் திரையுலகில் ஓர் அசோகன். வில்லன் மற்றும் துணைக்கதாபாத்திரங்களில் கலக்கியவர். இவருக்கு “டைகர்” என்ற பெரும் உண்டு. இப்பெயரைக்கொண்டு ‘டைகர் புரொடக்*ஷன்ஸ்’ என்ற பட நிறுவனத்தைத் துவங்கி கிருஷ்ணாவைக் கதாநாயகனாகக் கொண்டு அசாத்தியாடு அகுண்டுடு மற்றும் ஸ்யேரா நா ராஜா, அல்லூரி சீத்தாராம ராஜு, சவட்டாயனு நேனு, வெல்லாகலிகிதே போன்ற படங்களையும் இவர் தயாரித்துமுள்ளார். தெலுங்கில் வெளிவந்த கிருஷ்ணாவுடன் ’நானன்றே நானே’, அசாத்தியாடு அகுண்டுடு, அக்கினேனி நாகேஷ்வர ராவுடன் ஜமீன்தார், என்.ரி.ராமாராவுடன் ‘மாயா பஜார்’, ’வீர அபிமன்யூ’, பாண்டவ வனவாசம், நர்த்தனசாலா, போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தமிழில் ‘குடியிருந்த கோயில்’ போன்ற சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய “நான்” திரைப்படம் தெலுங்கில் கருப்பு-வெள்ளைப் படமாக ’நானன்றே நானே’ என்ற பெயரில் 1968-இல் வெளிவந்தது. இப்படத்தில் எஸ்.ஏ.அசோகன் ஏற்று சிறப்பித்த வேடத்தை நெல்லூர் காந்தாராவ் ஏற்று நடித்திருந்தார்
நானன்றே நானே’ [1968] படத்தில் கிருஷ்ணம் ராஜுவுடன் (தமிழ் நான் படத்தில் மனோகர் (சிங்காரம்) வேடத்தில் நடித்தவர்) நெல்லூர் காந்தாராவ் .
http://antrukandamugam.files.wordpress.com/2014/09/nellore-kantha-rao-krishnam-raju-nenante-nene-1968.jpg?w=593
குடியிருந்த கோயில் திரை படத்தில் ராஜஸ்ரீ உடன்
http://antrukandamugam.files.wordpress.com/2014/09/nelloor-kantharao-kudiyiruntha-kovil-1968.jpg?w=593
அன்பே வா திரை படத்தில் இறுதி காட்சியில் மக்கள் திலகம் உடன் சண்டை காட்சி
http://www.youtube.com/watch?v=UYJlHdQeJ0I
நான் படத்தின் பிரபல வசனம்
சிங்காரம் ஆறு மாசமா ஆளையும் காணும் 6 லட்சத்தையும் காணும்
பாஸ் அப்படியே வைச்சிருக்கேன் பாஸ்
அப்படியே வைசுகலாம்னு பார்கிறியா
http://antrukandamugam.files.wordpress.com/2013/07/sa-ashokan-naan.jpg?w=593&h=435http://antrukandamugam.files.wordpress.com/2013/07/sa-ashokan-manokar-naan-1.jpg?w=593&h=447
mr_karthik
11th September 2014, 01:36 PM
// நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல். //
பாடலின் கடைசி பல்லவியில் மட்டுமே பூர்ணம் வாயசைப்பதைக் காட்டுவார்கள். வாய்பேச முடியாத ஓவியன் விபத்தில் இறந்துகிடப்பதில் துவங்கி, கமல் சம்மந்தப்பட்ட காட்சிகளினூடே பாடல் அசரீரியாகவே ஒலித்துக்கொண்டிருக்கும்.
எஸ்.பி.பி. என்ன ஒரு குரல் வளம், குறிப்பாக அந்த உச்ச ஸ்தாயியில் வரும் ஆலாபனை, மற்றும் 'சொல்லடி சிவசக்தீ' என்ற நீட்டல். பிரமாதம்...
mr_karthik
11th September 2014, 01:41 PM
காற்று வெளியிடை கண்ணம்மா
உந்தன் காதலை எண்ணிக்களிக்கிறேன்
அமுதூற்றினையொத்த இதழ்களும்
இப்படி சொல்லிக்கொண்டே வந்த பாரதியார் ஓரிடத்தில்
எந்தன் வாயினிலே அமுதூறுதே
என்று சொல்லி விட்டு, 'அடடா அவளை அமுதூற்றினையொத்த இதழ்கள் என்று சொல்லி விட்டு, இப்போது எந்தன் வாயினிலே அமுதூறுதே என்று சொல்லலாமா' என்று உஷாராகி சமாளிக்கிறாராம்...
எந்தன் வாயினிலே அமுதூறுதே
(எப்போது தெரியுமா?)
கண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே
- நெல்லை கண்ணன் அவர்கள் பேச்சிலிருந்து...
gkrishna
11th September 2014, 01:51 PM
// நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல். //
பாடலின் கடைசி பல்லவியில் மட்டுமே பூர்ணம் வாயசைப்பதைக் காட்டுவார்கள். வாய்பேச முடியாத ஓவியன் விபத்தில் இறந்துகிடப்பதில் துவங்கி, கமல் சம்மந்தப்பட்ட காட்சிகளினூடே பாடல் அசரீரியாகவே ஒலித்துக்கொண்டிருக்கும்.
எஸ்.பி.பி. என்ன ஒரு குரல் வளம், குறிப்பாக அந்த உச்ச ஸ்தாயியில் வரும் ஆலாபனை, மற்றும் 'சொல்லடி சிவசக்தீ' என்ற நீட்டல். பிரமாதம்...
கார்த்திக் சார் /சி கே சார்
அந்த பாட்டின் நடுவே
ஒரு ஆப்பிள் கிடைத்து அதுவும் சாக்கடையில் விழுந்து கமல் அதை தேடி எடுத்து கழுவி சாப்பிட எண்ணி கடிக்கும் தருவாயில் எல்லா பட்டதாரிகளும் அதற்கு சண்டை போடுவது போல்
wov பாலச்சந்தர்
gkrishna
11th September 2014, 02:09 PM
தமிழ்த் தாய் கண்ணீர் சிந்திய நாள் - 11.9.1921
'நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ'
பாடல் எழுதப்பட்ட பின்புலம்
இந்த நாளில் என் பெரிய தம்பி இறந்துவிட்டான். இரண்டு வயதுக் குழந்தை. சாதாரண சீதபேதி; பலவித மருந்துகள் கொடுத்தும் குணம் அடையவில்லை; குழந்தை போய்விட்ட அதிர்ச்சியில் என் தந்தை மனம் இடிந்துவிட்டார். சுதேசிக் கப்பலுக்காகக் கணக்கற்ற பணம் கை விட்டுப் போனபோதும், 'இந்தியா’ பத்திரிகை நிறுத்தப்பட்ட போதும், அரசாங்கம் பல கொடுமைகள் செய்தபோதும் சளைக்காது தைரியமாகவே இருந்தார். இந்தச் சம்பவம் நோயாளியை மேல் எறிந்து கலக்கியதைப் போல் அவரை மிகவும் துர்ப்பலமாக்கிவிட்டது. இந்தத் துக்கம் வந்த சமயத்தில் ஐயர், பாரதியார் இருவரும் இடைவிடாமல் அவரோடு பேசிக்கொண்டும் சதுரங்கம் ஆடிக்கொண்டும் பகலைக் கழிப்பார்கள். சாயங்காலம் நாலு மணிக்கு அரவிந்தரின் வீட்டிற்குப் போய் வேதம் உபநிஷத் இவைகளைச் சிந்தனை செய்வார்கள். இரவு பத்து மணி, பதினொரு மணிக்கு வருவார்கள்.
குழந்தை இறந்த அன்று அதை அடக்கம் செய்துவிட்டு இரண்டு மணிக்கு எல்லோரும் வீடு திரும்பினார்கள். பாரதியாருக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. வயிற்றில் மிகவும் சங்கடப்படுத்தியது. ‘கேட்பன’ என்ற தலைப்பில் நொண்டிச் சிந்து மெட்டில் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலைப் பாடினார். குழந்தைகளான எங்களுக்கு அதைப் பாடிக் காட்டினார். - யதுகிரி அம்மாள், யதுகிரி நினைவுகள்
யதுகிரி அம்மாள் என்று அறியப்படும் யதுகிரி பாரதி சில நினைவுகள் எனும் பாரதியார் குறித்த வரலாற்று நூலை எழுதியவர்.
யதுகிரி புதுச்சேரியில் சுதேசிகளுக்கு உதவி வந்த மண்டையம் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார் அவர்களின் புதல்வி. இவர் தான் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு இந்தியா பத்திரிக்கையை ஆரம்பித்தவர். யதுகிரி பாரதியின் வீட்டில் மூன்றாவது குழந்தையாகவே கருதப்பட்டார். பாரதியார் அடிக்கடி யதுகிரியின் வீட்டிற்கு வருவார். அப்போது தான் எழுதிய பாடல்களைப் பாடிக்காட்டுவார். அவற்றை யதுகிரி தனது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்வார். இப்படியாக பாரதியின் பாடல்களும் அவை தோன்றிய சூழல் குறித்தும் யதுகிரி அம்மாள் நன்றாக அறிந்திருந்தார். 1939 ஆம் ஆண்டு பாரதி சில நினைவுகள் எனும் நூலை யதுகிரி எழுதினார். ஆனால் எழுதப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்த பின்னே இந்நூல் வெளியானது. அதைப்பார்க்க யதுகிரி அம்மாள் உயிருடன் இல்லை.
gkrishna
11th September 2014, 02:20 PM
இந்த பதிவை அனுப்பி தந்த நண்பர் எஸ் பி காந்தன் (ஜெர்ரி பட இயக்குனர்)
அவர்களுக்கு நன்றி
என் கணவர் - திருமதி. செல்லம்மாள் பாரதி
(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.
அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.
சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.
புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.
மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.
மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.
தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
gkrishna
11th September 2014, 03:36 PM
படித்ததில் பிடித்தது - அபசகுனம்
“நான் இது போன்ற சென்டிமென்ட்கள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒரு படத்துக்கு எங்கள் ஆபீசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆபீசில் இருந்த கடவுள் படங்களையே படம் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா..? யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமிராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்ட்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.
ஆனால் திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவன் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை வின்சென்ட் கேமராவில் பதித்து கேமராவை இயக்கினார்.
வின்சென்ட்டின் மகன் பண்ணின கலாட்டா போதாதென்று அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரெண்ட் கட். மறுபடியும் அபசகுனமா என்ற முணுமுணுப்பு என் காது படவே கேட்டது.
நான் இதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் கோபு மனம் வாட்டமுற்றது. ‘இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம். எனக்குக் கதை மீது நம்பிக்கை இருக்கிறது’ என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழு திருப்தியில்லை. “வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்..” என்றேன். அதன்படியே சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.
மறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வர வேண்டிய ஐயர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த பிராமணர் ஒருவரை வைத்து பூஜையை முடித்துட்டு குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கை தொடங்கினோம்.
படத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி.. ‘அனுபவம் புதுமை’ பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்துபோக ஷூட்டிங் தடைபட்டது.
அபசகுனம் என கருதப்பட்ட அத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் காதலிக்க நேரமில்லை.”
புத்தகம் : திரும்பிப் பார்க்கிறேன் – சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர்
http://truetamilans.files.wordpress.com/2009/11/kadhalikkaneramillai.jpg?w=240
gkrishna
11th September 2014, 03:45 PM
இசைஞானி இளையராஜாவின் தெய்வீகக் கானங்களில் ஒன்று ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் பாடலான ‘ஆகாய கங்கை’ பாடல். அந்தப் பாடலை தனிமையில் வெறும் பாடலாகக் கேட்கும்போதெல்லாம் மனதில் எதையோ செய்கிறது.
பாடலின் துவக்கத்தில் வரும் ஜானகியின் ஹம்மிங் வாய்ஸை கேட்டவுடன் அதற்குள் நம்மை ஈர்க்க வைக்கிறது. இவ்வளவு அருமையான பாடலை திரைப்படத்தில் பார்த்தபோது சப்பென்று இருந்தது.
ரேஸ்கோர்ஸ் மைதானத்திலேயே முழுக்க முழுக்க ஷூட் செய்யப்பட்டிருக்கும், இந்தப் பாடல் காட்சி பாடலின் தரத்தை வெகுவாகக் குறைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பாடல் பற்றிய எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் சொன்ன விஷயம் திரைப்படத் துறையில் இருக்கும் சங்கடங்கள், சில விட்டுக் கொடுத்தல்கள், பிரச்சினைகள் பற்றி எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தது.
இந்த ஒரு பாடலை மட்டும் விட்டுவிட்டு மற்ற போர்ஷன்கள் அனைத்தையும் முடித்துவிட்டாராம் சக்தி ஸார்.. இந்த ஒரு பாடலையும் முடித்துவிட்டால் போதும் என்கிற நிலை இருக்கும்போது ரஜினியும், ஸ்ரீதேவியும் மிக மிக பிஸியாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் டேட் கிடைத்தால் இன்னொருவரின் டேட் கிடைக்காமல் போகிறது. இப்படியே ஒரு மாதம் முழுக்க கண்ணாமூச்சி நடந்திருக்கிறது.
எப்படியோ இருவரிடமும் ப்ரீயான டேட்களைக் கேட்டபோது தொடர்ச்சியான இரண்டு, மூன்று நாட்கள் கிடைக்கவே இல்லையாம். சரி விட்டுவிட்டு எடுத்துவிடலாம் என்றெண்ணத்தில் பாடல் காட்சிகளை ஊட்டியில் எடுப்பதற்காக பிளான் செய்திருக்கிறார் சக்தி ஸார்..
ஆனால் அதற்குள்ளாக ஸ்ரீதேவிக்கு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் போது காலில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் மாஞ்சா கட்டுபோட்டு படுத்துவிட்டாராம். ரஜினியை அந்தத் தேதியில் விட்டுவிட்டால் மீண்டும் ஒரு மாதம் கழித்துத்தான் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட.. தயாரிப்பு தரப்பு சக்தி ஸாரை போட்டு நெருக்க.. என்ன செய்வது என்ற குழப்பமாகிவிட்டதாம்.
இதன் பின்புதான் ஷூட்டிங்கை ஒரே நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ரஜினியிடம் ஓகே வாங்கியிருக்கிறார். மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதேவியிடமும், அவரது அம்மாவிடமும் பேசி “வேறு வழியில்லை. வந்தே தீரணும்..” என்று கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தார்களாம்.
ஸ்ரீதேவியின் காலில் போட்டிருந்த மாவுகட்டு வெளியே தெரியக் கூடாது என்பதால் சேலை அணிவித்தும், அவரை உட்கார வைத்தும், ரஜினியால் தூக்க வைத்தும், ஸ்ரீதேவியின் சிற்சில சிங்கிள் ஷாட்டுகளையும் வைத்தும் பாடல் காட்சியை முடித்துவிட்டாராம் சக்தி ஸார்.
முழுக் கதையையும் சொல்லி முடித்துவிட்டு, “எனக்கும் அந்தப் பாடலை இப்படி அவசரக்கதியாக படமாக்கியதில் திருப்தியில்லைதான் தம்பி.. ஆனா வேறென்னெ செய்றது..? படத்தை சொன்ன தேதில ரிலீஸ் செஞ்சாகணும்.. தயாரிப்பாளரையும் பார்க்கணும்ல..?” என்றார் சக்தி ஸார்.
காவியமாக படைத்திருக்க வேண்டியது.. வியாபாரச் சூழலால் இப்படி கற்பிழந்து போனது..!!!
(உண்மை தமிழன்-நன்றி )
http://truetamilans.files.wordpress.com/2009/08/8dharmathutham28629.jpg?w=300
http://www.youtube.com/watch?v=iETA1aeGKts
gkrishna
11th September 2014, 04:00 PM
படித்ததில் பிடித்தது - ஈகோ
‘பட்டிக்காடா பட்டணமா’ என்கிற படத்தில் இதே சிவாஜி-ஜெயலலிதா ஜோடி நடித்துக் கொண்டிருந்தார்கள். இதன் இயக்குனர் நண்பர் மாதவன் அவர்கள் அந்தக் காலத்தில் பெரிய ஹிட் பாடலாகக் கருதப்பட்ட ‘கேட்டுக்கோடி உறுமிமேளம்’ என்கிற பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.
இந்தப் பாடலைப் பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு. பாடலுக்கான கம்போஸிங் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதினார். “கேட்டுக்கோடு உறுமிமேளம்” என்கிற பல்லவியைத் தந்துவிட்டு கவிஞர் அடுத்த வரியை யோசித்துக் கொண்டிருந்தார்.
மாதவன் படப்பிடிப்புக்காக செட்டுக்கு போயிருந்தார். பாடலின் முதல் வரியை மாதவன் படப்பிடிப்பில் இருந்த ஜெயலலிதா அவர்களிடம்கூற உடனே அவர் “போட்டுக்கோடி கோ கோ தாளம்” என்று அடுத்த வரியைச் சொன்னார்.
உடனே மாதவன் ஓடி வந்து கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடம் செல்வி ஜெயலலிதா கூறிய வரிகளை கூறியுள்ளார். கவிஞர் கண்ணதாசனுக்கு ஈகோ பிரச்சனை என்றுமே இருந்ததில்லை. ஆகவே நன்றாக இருக்கிறது என்று கூறி உடனே அதனை ஏற்றுக் கொண்டுவிட்டார்.
அது மட்டுமன்றி உடனே பாடலின் மற்றப் பகுதிகளையும் மளமளவென்று முடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் கவிஞர். படம் வெளியானதும் இந்தப் பாட்டு பெரிய ஹிட் ஆனது அனைவரும் அறிந்த கதை.
(தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு – இரண்டாம் பாகம் என்கிற நூலில் இயக்குநர் முக்தா சீனிவாசன் எழுதியிருப்பது.)
http://truetamilans.files.wordpress.com/2009/12/pattikaada.jpg?w=130
http://www.youtube.com/watch?v=nUqazZZR3ms
Richardsof
11th September 2014, 04:19 PM
கிருஷ்ணா சார்
பல அபூர்வமான சினிமா செய்திகள் - புது தகவல்கள் .அருமை
.
வாகனங்களும் அதில் இடம் பெற்ற பாடல்களும்
மாட்டு வண்டி - பாரப்பா பழனியப்பா
குதிரை வண்டி - நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஜீப் - உள்ளம் ரெண்டும் ஓடும் வேகம்
கார் - பல பாடல்கள்
டிராக்டர் - விவசாயி விவசாயி ....
கப்பல் - அதோ அந்த பறவை போல
படகு - நான் அனுப்புவது கடிதம் அல்ல
பேருந்து - பயணம் எங்கே ...
ரயில் அந்தி நேர மஞ்சள் காற்று
விமானம் ஓ மானிட ஜாதியே
ஹெலிகாப்டெர் குரு படத்தில் இடம் பெற்ற பாடல் .
gkrishna
11th September 2014, 04:49 PM
தேவ் ஆனந்த்
http://jagdishk.dinstudio.com/files/prem_pujari.JPGhttp://upload.wikimedia.org/wikipedia/en/thumb/1/15/Prem_Pujari.jpg/220px-Prem_Pujari.jpg
தேவ் ஆனந்த் நடித்து இயக்கிய முக்கியமான படம் பிரேம் பூஜாரி. இதிலும் வகிதா ரஹ்மான்தான் ஜோடி.இப்படம் 1970ல் இந்தியா-சீனா, இந்தியா- பாகிஸ்தான் யுத்தங்களைப் பின்புலமாக கொண்டது.ராணுவ வீரராக நடித்திருப்பார் தேவ் ஆனந்த்.காதலையும் தேச பக்தியையும் இணைத்த இந்த படத்தில் கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்கள் அதே எஸ்.டி. பர்மன் தாதாவின் இசையில் இடம் பெற்றன . இதிலும் தாதா ஒரு பின்னணி பாடலைப் பாடினார். பிரேம் கே பூஜாரி ரே என்ற அந்தப் பாட்டும் ஒரு தொலைதூர எதிரொலி போல நமது மனத்தின் அடியாழங்களுக்குச் சென்று ஊடுருவக் கூடியது. எல்லா இசையமைப்பாளர்களும் சொந்தக் குரலில் பாடுகிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் பாடிய பல பாடல்கள் நீங்காத இடம் பெற்றுள்ளன. அதே போல் இந்தியில் தாதாவின் குரலில் ஒலித்த பாடல்களுக்கென தனி இசை ரசிகர்கள் உண்டு.
ராஜேஷ்கன்னா நடித்த ஆராதனா படத்திலும் தாதா ஒருபாட்டு பாடினார். காஹேகோ ரோயே....என்ற இந்தப் பாட்டுத்தான் தமிழில் சிவகாமியின் செல்வனாக மாறிய போது, எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே....இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே...என்று மெல்லிசை மன்னரின் குரலில் ஒலித்தது. தாதாவின் குரலுக்கும் எம்.எஸ்.வி.யின் குரலுக்கும் அப்படியொரு பொருத்தம்னா பொருத்தம்.
லதா பாடிய ரங்கீலா ரே பாட்டும் அதற்கு வகிதா ஆடிய ஆட்டமும் திரையில் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்றாக அதனை மாற்றியுள்ளது. அதே போல நேபாளி குழந்தைகளின் கோரசுடன் கிஷோர் பாடும் ஃபூலோன் கே ரங்சே என்ற பாட்டும் ஒரு நல்ல பாடல்.சினிமா பாடல்களின் பரவசமான அனுபவத்திற்கு இது பொன்னான சான்று.
Shokhiyon Mein Ghola Jaye
http://www.youtube.com/watch?v=u3YrJ0tn3WM
Rangeela Re Tere Rang Mein
http://www.youtube.com/watch?v=90yiyKegnqg
Phoolon Ke Rang Se
http://www.youtube.com/watch?v=Z4iYbxFBZKQ
gkrishna
11th September 2014, 04:56 PM
வாகனங்களும் அதில் இடம் பெற்ற பாடல்களும்
மாட்டு வண்டி - பாரப்பா பழனியப்பா
குதிரை வண்டி - நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
அருமை எஸ்வி சார்
மாட்டு வண்டி - வள்ளி மயில் மான் குட்டி எங்கே போறே
ஜீப் - இரண்டு கைகள் நாம் ஆனால்
கார் - போதுமோ இந்த இடம்
லாரி - உலகம் பெரிது சாலைகள் சிறிது
ரயில் - வெட்கப்படவோ ஆஹா
சைக்கிள் - ஒன்று எங்கள் ஜாதியே
விமானம் - மழை கால மேகம் ஒன்று
கப்பல் - உன்னை ஒன்று கேட்பேன்
குதிரை வண்டி - ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
mr_karthik
11th September 2014, 06:50 PM
குதிரை வண்டி - பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை
ஜீப் - நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
சைக்கிள் - வருக எங்கள் தெய்வங்களே (தியாகம்)
படகு - நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (தியாகம்)
ரயில் - சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
கார் - ஆண்டவன் படைச்சான்
Gopal.s
11th September 2014, 07:06 PM
குதிரை வண்டி - பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை
ஜீப் - நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
சைக்கிள் - வருக எங்கள் தெய்வங்களே (தியாகம்)
படகு - நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (தியாகம்)
ரயில் - சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
கார் - ஆண்டவன் படைச்சான்
இந்த லிஸ்ட் அற்புதம் கார்த்திக். அந்தந்த வாகனங்களுக்கே பெருமை சேர்க்கும் லிஸ்ட். நன்றி.
chinnakkannan
11th September 2014, 07:14 PM
அப்ஜெக்*ஷன் யுவர்ஹானர்.. ரயிலில் - சித்திரை மாத்ததை விட உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று - மிக அழகு என்பதை :)
குபு குபு குபு குபு நான் இஞ்சின் - ஓ இதுல ரயில் பாட்ட்ல்ன்னா வரும்..
என் நினைவுக்கு வரும் லிஸ்ட் ஆஃப் வாகனங்கள்
படகு - படகு படகு ஆசை படகு (ஓ இதுல படகு வராதோ) பள்ளியறைக்குள் வந்த புள்ளிமயிலே..படகு என்பதாய்த் தான் நினைவு..ஹப்புறம்..ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து (ஓடம் படகு ரெண்டும் ஒண்ணு தானே..
கப்பல் - ஏன் சிவந்தம்ண் பிஜிஎம் சேர்க்கப் படாது..
சைக்கிள் - வாடிக்கை மறந்ததும் ஏனோ, அக்கம்பக்கம் பார்க்காதே..
தேவ் ஆனந்த் போஸ்டிங்க்ஸ்க்கு நன்றி கிருஷ்ணா ஜி.. அவரைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் ..எழுதுங்களேன்..
chinnakkannan
11th September 2014, 07:15 PM
ஹெலிகாப்டர் - பறந்தாலும் விடமாட்டேன்..அன்று நான் உன்னிடம்கைதியானேன் இன்று நான் உன்னையே கைது செய்வேன்..
venkkiram
11th September 2014, 07:20 PM
படகு - வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்!
Gopal.s
11th September 2014, 08:16 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-3.
எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.
இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.
அடானா ராகத்தை முதலில் பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S )
அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம் படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.
ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.
தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???
(தொடரும்)
rajeshkrv
11th September 2014, 08:18 PM
படகு : நிலவும் மலரும் பாடுது
மூடு பனி குளிரெடுத்து
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
வெண்மதியே கொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
Gopal.s
11th September 2014, 08:33 PM
கார்- பறவைகள் பலவிதம்.,வா வா வா எனக்காகவா .
படகு-முல்லை மலர் மேலே.,வெள்ளி கிண்ணந்தான்.
குதிரை- பாட்டு பாடவா ,சமாதானமே .
எஞ்சின்- கேள்வி பிறந்தது அன்று.
விமானம்- ஒ மானிட ஜாதியே.
எருமை- தாழையாம் பூ முடிச்சு
ஜீப்- உள்ளம் ரெண்டும் .
மாட்டு வண்டி- வள்ளி மலை மான் குட்டி .
சைக்கிள்- வந்த நாள் முதல் .
ரிக்ஷா - இதோ எந்தன் தெய்வம்
ஸ்கூட்டர்- கள்ள பார்வை கண்ணுக்கு.
Gopal.s
12th September 2014, 04:00 AM
Viswanathan -ramamoorthy
The Duo composed for over 100 films from 1952-1965.[10]
1952 Panam Tamil N. S. Krishnan Madras Pictures
1953 Chandirani Tamil P. Bhanumathi Bharani Pictures assisted C. R. Subburaman
1953 Chandirani Telugu P. Bhanumathi Bharani Pictures assisted C. R. Subburaman
1953 Chandirani Hindi P. Bhanumathi Bharani Pictures assisted C. R. Subburaman
1953 Marumagal Tamil D. Yoganand Krishna Pictures
1954 Sorga Vasal Tamil A. Kasilingam Parimalam Pictures
1954 Sugam Enge Tamil K. Ramnoth Modern Theatres
1954 Vairamalai Tamil N. Jagannath Vaidhyaa Films
1954 Ratha Kanneer Tamil Krishnan-Panju National Films background music only
1955 Gulebakavali Tamil T. R. Ramanna RR Pictures co-music director K. V. Mahadevan (Mayakkum Malai Pozhudhe Nee Po Po)
1955 Kaveri Tamil D. Yoganand Krishna Pictures co-music director G. Ramanathan
1955 Needhipadhi Tamil A. S. A. Samy Vijaya Films
1955 Santhosham Telugu C. P. Dixit Jupiter Pictures
1955 Porter Kandhan Tamil K. Vembu Narasu's Studios
1956 Jaya Gopi Tamil B. S. Ranga Vikram Productions
1956 Maa Gopi Telugu B. S. Ranga Vikram Productions
1956 Pasavalai Tamil A. S. Nagarajan Modern Theatres
1956 Tenali Ramakrishna Telugu B. S. Ranga Vikram Productions
1956 Tenali Raman Tamil B. S. Ranga Vikram Productions
1957 Baktha Markandeya Tamil B. S. Ranga Vikram Productions
1957 Baktha Markandeya Telugu B. S. Ranga Vikram Productions
1957 Baktha Markandeya Kannada B. S. Ranga Vikram Productions
1957 Mahadhevi Tamil Sundar Rao Nadkarni Sri Ganesh Movietone
1957 Pathini Dheivam Tamil Ch. Narayana Murthy VRV Productions
1957 Pudhaiyal Tamil Krishnan-Panju Kamal Brothers
1958 Kudumba Gauravam Tamil B. S. Ranga Vikram Productions
1958 Kutumba Gauravam Telugu B. S. Ranga Vikram Productions
1958 Malaiyitta Mangai Tamil G. R. Nathan Kannadasan Films
1958 Padhi Bhakti Tamil A. Bhim Singh Buddha Pictures
1958 Petra Maganai Vitra Annai Tamil T. R. Sundaram Modern Theatres
1959 Amudha Valli Tamil A. K. Sekhar Jupiter Pictures
1959 Bhaaga Pirivinai Tamil A. Bhim Singh Saravana Films
1959 Raja Malaiya Simman Tamil B. S. Ranga Vikram Productions
1959 Raja Malaiya Simmha Telugu B. S. Ranga Vikram Productions
1959 Sivagangai Seemai Tamil K. Shankar Kannadasan Films
1959 Thalai Koduthan Thambi Tamil T. R. Sundaram Modern Theatres
1959 Thanga Padhumai Tamil A. S. A. Samy Jupiter Pictures
1960 Aalokkoru Veedu Tamil M. Krishnan Subash Movies
1960 Kavalai Illaadha Manithan Tamil K. Shankar Kannadasan Productions
1960 Mannadhi Mannan Tamil M. Natesan Natesh Art Pictures
1960 Ondru Pattal Undu Vazhvu Tamil T. R. Ramanna Ranga Pictures
1960 Rathinapuri Ilavarasi Tamil T. R. Ramanna Sri Vinayaga Pictures
1961 Bhagya Lakshmi Tamil K. V. Sreenivasan Kanaka Films
1961 Manapandhal Tamil T. R. Ramanna RR Pictures
1961 Palum Pazhamum Tamil A. Bhim Singh Saravana Films
1961 Pasamalar Tamil A. Bhim Singh Rajamani Films
1961 Pava Mannippu Tamil A. Bhim Singh Buddha Pictures
1962 Alayamani Tamil K. Shankar PSV Pictures
1962 Bale Pandiya Tamil B. R. Panthulu Padmini Pictures
1962 Bandha Pasam Tamil A. Bhim Singh Santhi Films
1962 Kathirundha Kangal Tamil T. Prakash Rao Vasumathi Pictures
1962 Nenjil Or Alayam Tamil C. V. Sridhar Chithralaya
1962 Nichaya Thambulam Tamil B. S. Ranga Vikram Productions
1962 Pelli Thambulam Telugu B. S. Ranga Vikram Productions
1962 Padha Kanikkai Tamil K. Shankar Saravana Films
1962 Padithaal Mattum Podhuma Tamil A. Bhim Singh Ranganathan Pictures
1962 Paarthaal Pasi Theerum Tamil A. Bhim Singh AVM Productions
1962 Paasam Tamil T. R. Ramanna RR Pictures
1962 Police Karan Magal Tamil C. V. Sridhar Chithrakala Pictures
1962 Senthamarai Tamil A. Bhim Singh ALS Productions
1962 Sumai Thangi Tamil C. V. Sridhar Visalakshi Productions
1962 Thendral Veesum Tamil B. S. Ranga Vikram Productions
1962 Veerathirumagan Tamil A. C. Tirulokchandar Murugan Brothers
1963 Anandha Jodhi Tamil V. N. Reddy & A. S. A. Samy PSV Pictures
1963 Idhayathil Nee Tamil Mukta V. Srinivasan Muktha Films
1963 Idhu Satthiyam Tamil K. Shankar Saravana Films
1963 Karpagam Tamil K. S. Gopalakrishnan Amarjothi Movies
1963 Mani Osai Tamil P. Madhavan ALS Productions
1963 Nenjam Marappadhillai Tamil C. V. Sridhar Manohar Pictures
1963 Paar Magale Paar Tamil A. Bhim Singh Kasthuri Films
1963 Panathottam Tamil K. Shankar Saravana Films
1963 Periya Idathu Penn Tamil T. R. Ramanna RR Pictures
1964 Andavan Kattalai Tamil K. Shankar PSV Pictures
1964 Dheiva Thaai Tamil P. Madhavan Sathya Movies
1964 En Kadamai Tamil M. Natesan Natesh Art Pictures
1964 Kai Koduttha Dheivam Tamil K. S. Gopalakrishnan Sri Ponni Productions
1964 Kalai Koyil Tamil C. V. Sridhar Bhagyalakshmi Pictures
1964 Karnan Tamil B. R. Panthulu Padmini Pictures
1964 Karuppu Panam Tamil G. R. Nathan Visalakshi Films
1964 Kaadhalikka Neramillai Tamil C. V. Sridhar Chithralaya
1964 Pachai Vilakku Tamil A. Bhim Singh Vel Pictures
1964 Padagotti Tamil T. Prakash Rao Saravana Films
1964 Panakkara Kudumbam Tamil T. R. Ramanna RR Pictures
1964 Puthiya Paravai Tamil Dada Mirasi Sivaji Productions
1964 Server Sundaram Tamil Krishnan-Panju AVM Productions
1964 Vazhkai Vazhvadharke Tamil Krishnan-Panju Kamal Brothers
1965 Panchavarna Kili Tamil K. Shankar Saravana Films
1965 Enga Veettu Pillai Tamil Chanakya Vijaya Productions
1965 Hello Mister Zamindar Tamil K. J. Mahadevan Sudharsanam Pictures
1965 Panam Padaithavan Tamil T. R. Ramanna RR Pictures
1965 Pazhani Tamil A. Bhim Singh Bharatha Matha Pictures
1965 Poojaikku Vandha Malar Tamil Mukta V. Srinivasan Muktha Fims
1965 Santhi Tamil A. Bhim Singh ALS Productions
1965 Vazhkai Padagu Tamil S. S. Vasan Gemini Studios
1965 Vennira Aadai Tamil C. V. Sridhar Chithralaya
1965 Aayirathil Oruvan Tamil B. R. Panthulu Padmini Pictures
1995 Engirundho Vandhaan Tamil Santhana Bharathi VSR Pictures
On 16 June 1963, at a special function M. S. Viswanathan and T. K. Ramamoorthy were each given the title of Mellisai Mannar(Kings of the Light Music).[11] It was granted by Nadigarthilagam Sivaji Ganesan at the Madras Triplicane Cultural Academy. The function was supported and facilitated by the Hindu Group of Publications, especially Mr. T. M. Ramachandran, Director C. V. Sridhar and Chitralaya Gobu.
About 25% of their total Films(25Films) are Nadigarthilagam Films .
madhu
12th September 2014, 04:30 AM
Gopal ji..
நல்ல வேளையாக மெல்லிசை மன்னர்கள் பட்டம் சரியான சமயத்தில் கொடுக்கப்பட்டது. இல்லா விட்டால் மற்ற சில விருதுகள் போல அரசியல் புகுந்து குழப்பி இருக்க சான்ஸ் உண்டு.
பழைய ஸ்ரீவள்ளி படத்தில் வந்த "யார் உந்தனைப் போல்" பாடலும் பின் வந்த ரத்தக் கண்ணீர் படத்தில் இடம் பெற்ற "கதவைச் சாத்தடி" பாடலும் அடாணா ராகம் அல்லவா ?
அவை இரண்டும் நடனக் காட்சிகளாக வந்தவை.
http://youtu.be/nJgLM1I7RaM
http://youtu.be/dfQKpknvyZw
அப்புறம் முன்பே வந்த அம்பிகாபதியில் இடம் பெற்ற "வாட மலரே தமிழ்த் தேனே" டூயட் பாட்டும் முகாரி இல்லையோ ?
http://youtu.be/45sjbjyko5I
"கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்" பாட்டு "எங்களுக்கும் காலம் வரும்" படம்தானே ? இந்தப் பாட்டுக்கு நடித்தவர்கள் யார் ? அந்தப் படத்தில் வேறு என்ன பாடல்கள் உண்டு ? ( பத்மினி நடிச்சாங்களா என்ன ... ஒரு குழப்பம். விவரம் ப்ளீஸ் )
Gopal.s
12th September 2014, 08:27 AM
Madhu,
You are right all on your Atana and Muhari.
RAGHAVENDRA
12th September 2014, 08:32 AM
பொங்கும் பூம்புனல்
சில நாட்களாக இத்திரியில் பங்கு கொள்ள இயலாமல் போனதில் எவ்வளவு பக்கங்கள் தாண்டி விட்டன. மலைக்க வைக்கும் வேகம்... சி.க. சொல்வது போல் சீக்கிரம் அரியர்ஸ் க்ளியர் செய்ய வேண்டும்...
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-113559.png
இன்றைய தினம் தமிழ்த்திரையுலகி்ல் மறக்க முடியாத நாள். 1964ம் ஆண்டு இதே நாளில் வெளியான புதிய பறவை திரைக்காவியம் இன்று ஐம்பது ஆண்டுகளைக் கடக்கிறது. ஸ்டைலின் உச்சமான நடிகர் திலகத்தின் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் பல்லவியே தமிழர் வாழ்வில் ஒன்றி விட்ட சொற்றொடராகி விட்டதே. அதுமட்டுமா மணியன் ஒரு வார இதழில் தொடர்கதைக்கு தலைப்பாக பயன்பட்டது. ஆனந்த் பாபு வின் படம் ஒன்றிற்கும் தலைப்பாய்ப் பயன்பட்டது.
http://upload.wikimedia.org/wikipedia/en/8/81/Puthiya_Paravai_New_Bird.jpg
அப்படிப்பட்ட பாடலுடன் பொங்கும் பூம்புனல் தொடர்கிறது.
http://www.youtube.com/watch?v=xNInBEF8E7M
rajeshkrv
12th September 2014, 09:24 AM
ராகவ் ஜி, வருக வருக
madhu
12th September 2014, 10:04 AM
அருமை ராகவ் ஜி... பெய்ருக்குத் தகுந்தபடி அது என்றுமே "புதிய" பறவைதான்..
இதோ இன்னொரு "பார்த்த ஞாபகம் இல்லையோ".. இதில் வேறு மாதிரியான நடிப்பு.
http://youtu.be/c3DFEitWaHI
gkrishna
12th September 2014, 10:41 AM
பட்டணத்தில் பூதம் (நன்றி – ஆனந்த விகடன் – விகடன் பொக்கிஷம் (24 -02 -2010 )
30/04/1967 - விகடன் இதழ்
காதலரைப் பிரிப்பதும், கடைசியில் அவர்களை ஒன்று சேர்ப்பதும், மூவாயிரம் வருடங்கள் ஒரு ஜாடியில் அடைபட்டுக் கிடந்த பூதத்தின் முக்கிய வேலை. அது நமக்கு முழு நேரப் பொழுதுபோக்கு.
ஆகா! எத்தனை விதமான தந்திரக் காட்சிகள்! எத்தனை அழகான வண்ணக் காட்சிகள்! பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே! பத்திரிகை விளம்பரத்தில் இருக்கும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பாடுகிறார்களே!
படத்தில் இருக்கும் கார் ஒன்று உயிர் பெற்று, பெரிதாகி, போர்டிகோவில் வந்து நிற்கிறது. ஹெலிகாப்டர், படகைத் துரத்துகிறது. அந்த ஹெலிகாப்டரை எதிர்த்து கார் ஒன்று வானத்தில் பறந்து செல்கிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்! துப்பாக்கிச் சண்டை – ஆவி கக்கும் பயங்கர டார்ச், மின்சாரக் கதவு… இங்கிலீஷ் சினிமா கெட்டுது போங்கள்!
நாகேஷ் அந்த ஜாடியைக் கையில் வைத்துக் கொண்டு, விருந்து சாப்பிட முடியாமல் திண்டாடும்போது வயிறு வலிக்கச் சிரிக்கிறோம். முதலில் காதல் மன்னனாக இருக்கும் ஜெய்சங்கர், பின்னால் புரட்சி நடிகராக மாறுகிறார். நீச்சல் உடையில் இருக்கும் கே.ஆர்.விஜயா மழையில் நன்றாக நனைகிறார். அப்படியிருந்தும் ஜலதோஷம் பிடிக்கவேயில்லை! வில்லன் பாலாஜி தோள்பட்டையைக் குலுக்கும் ஸ்டைலுக்கு, கை குலுக்கி ‘சபாஷ்’ சொல்ல வேண்டும்.முன்பு ஆங்கிலத்தில் பேசிய பூதத்தை இப்போது தமிழில் பேச வைத்திருப்பவர் ஜாவர் சீதாராமன். பூதமாக வரும் அவருடைய நடிப்பு அற்பூதம்!
பூதத்தின் சாதனை, ஒளிப்பதிவாளரின் வெற்றி!
-ஜெய் ரவிகாந்த் நிகாய்ச்!
பட்டணத்தில் பூதம் படத்தின் இசை அமைப்பாளர் திரு . ஆர் . கோவர்த்தனம் .
ஆர் .கோவர்த்தனம் அவர்கள் ” ட்யூன்” போட்டு விட்டு பாடலை எழுதச் சொல்வதில் அவருக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை ,
அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களுக்கும் , பாடல்கள் தான் முதலில் எழுதப்பட்டது . பிறகு தான் பாடலுக்கு ” ட்யூன் ” போடப்பட்டது !
அதனால் அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களும் ஜீவனுடன் இருக்கின்றன !
இப்படி ஒரு கொள்கையை வைத்திருந்த ஆர். கோ . அவர்களுக்கும் ஒரு சோதனை வந்தது !
” பட்டணத்தில் பூதம் ” படத்திற்கு அவர் இசை அமைத்தபோது , அவர் வழக்கம் போல பாட்டு எழுதச் சொல்லி “ட்யூன் ” போட்டார் .
ஆனால் ஒரே ஒரு ” டூயட்” பாடலுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்க அப்படத்தின் இயக்குனர் விரும்பினார் !
எனவே கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார் ! கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க முயன்றார் ! முடியவில்லை !
மறுபடியும் முயன்றார் ! முடியவில்லை ! கண்ணதாசனின் பாடல் வரிகளை மாற்றிக் கொடுத்தால் முடியும் .
ஆனால் கண்ணதாசன் அப்பாடலை மிகச சிறப்பாக எழுதிஇருந்ததால், கோவர்த்தனம் அதனை மாற்ற மறுத்துவிட்டார் .
(அதற்கு ஒரு காரணம் இருந்தது , அது பின்னர் உங்களுக்கு தெரியவரும் ! )
எனவே , இயக்குனரின் அனுமதி பெற்று , ” கஜல் ” இசையைத் தள்ளி வைத்து வீணையுடன் கூடிய மெல்லிசையை பயன்படுத்தி , ஓர் அழகான பாடலை நமக்கு கொடுத்தார் !
அந்தப் பாடல்தான் :
‘பட்டணத்தில் பூதம்’ (1967) படத்தில் இடம் பெற்ற,
சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – எனை
சேரும் நாள் பார்க்க சொல்லடி!
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி”
67 பொதுத் தேர்தலின் போது தீவிர தேர்தல் பணிக்காக தன்னை அழைக்க காமராஜருக்கு கண்ணதாசன் விடுத்த விண்ணப்பமாக அப்போது இவ்வரிகள் அர்த்தம் கொள்ளப்பட்டது
எழுத்தாளர் சுஜாதா அவர்களில் கேள்வி பதில் - பட்டணத்தில் பூதம் பற்றி
“பட்டணத்தில் பூதம்” என்கிற திரைப்படத்தில் பூதமாய் வருகிற ஜாவர் சீதாராமன் ஒரு செய்திப் பத்திரிகையைப் பார்ப்பார். அந்தப் பத்திரிகையில் சினிமா பார்ப்பதுபோல பாடல் காட்சி (பாட்டும் நானே பாவமும் நானே) வரும். அதுபோல இன்றைய விஞ்ஞானம் தருமா ?
அதுபோல இன்றைய விஞ்ஞானம் தந்துகொண்டிருப்பதுதான் இன்டர்நெட் இதழ்கள்.
http://www.vikatan.com/av/2010/feb/24022010/p69b.jpghttp://www.vikatan.com/av/2010/feb/24022010/p69c.jpg
பாட்டுகள்: கோவர்த்தனம் ஏன் பெரிய இசை அமைப்பாளராக வளர முடியவில்லை. இதிலும் சரி, இது வருவதற்கு ஐந்தாறு வருஷம் முன் வந்த கைராசி படத்திலும் சரி பாட்டுகள் பெரிய ஹிட். ஆனால் கோவர்த்தனம் எம் எஸ்வியின் உதவியாளராகத்தான் முடிந்தார். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கு இவர் ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான சுதர்சனத்தின் தம்பி. பல தொடர்புகள் இருந்திருக்கும்.
கோவர்தனம் ஒரு almost man. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர். சுதர்சனத்தின் தம்பி. 1953இலேயே தனியாக ஜாதகம் என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைத்த முக்கால்வாசி படங்களின் இசை வெற்றி அடைந்திருக்கிறது. கைராசி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களும் வெற்றி அடைந்தன. ஆனால் அவரது வாழ்க்கை உதவி இசை அமைப்பாளராகவே முடிந்துவிட்டது. சி.ஆர். சுப்பராமன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம்எஸ்வி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ் எல்லாருக்கும் உதவி! தேவாவுக்கு கூட உதவியாக இருந்தாராம்! இவ்வளவு திறமை இருந்தும் ஏன் அவரால் ஒரு இரண்டாம் தட்டு இசை அமைப்பாளராகக் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது ஒரு புதிர்தான்.
இளையராஜா வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் அவரும் கோவர்தனமும் சேர்ந்து ஒன்றாக இசை அமைப்பதாக இருந்ததாம். பஞ்சு அருணாசலம் வற்புறுத்தியதால் இளையராஜா தனியாக இசை அமைத்தாராம்.
கே.ஆர். விஜயா சிக்கென்று அழகாக இருந்த காலமும் உண்டு. 4 சிம்ரன் ஒன்றாக நிற்பது போல இருந்த காலமும் உண்டு. நல்ல வேளையாக இந்த படம் வந்த போது ஒல்லிதான். இதற்கப்புறம் நீச்சல் உடை போட்டுக் கொண்டு வரவில்லை.இரண்டு மூன்று வருஷம் கழித்து எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நீச்சல் உடை தேவைப்பட்டிருக்கும்! நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற வரிக்கு அவரை ஆடவிடலாம்!
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRn_V7kbjGGQhJoNEJ9zXQ5c3GAOd6S4 pY3DPke2VfUGmltksoi
படம் பிராஸ் பாட்டில் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாம். எஃப். அன்ஸ்டே எழுதிய நாவல் படமாகி இருக்கிறது
http://www.youtube.com/watch?v=GXBOY_RMHk8
gkrishna
12th September 2014, 11:24 AM
பொங்கும் பூம்புனல்
குருஜி வேந்தர் அவர்களே
புதிய பறவை மிக அருமையான நினைவு ஊட்டல்
நேற்று படித்த ஒரு பதிவு -
பசுமை நிறைந்த அறுபதுகள்-நன்றி சுதேசமித்திரன் - 15/03/2010
இந்தியாடுடே தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு புத்தகம் கொண்டுவர இருந்தது. நாற்பதுகள் தொடங்கி பத்து பத்து வருடங்களாக தமிழ் சினிமாவின் வரலாற்றைப் பிரித்து வேறு வேறு எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் கொடுத்த வகையில் என்னிடம் கொடுக்கப்பட்ட வருடங்கள் அறுபதுகள். எந்தக் காரணத்தாலோ அந்த முனைப்பு தள்ளிப்போடப்பட்டுவிட்டது. அதற்காக நான் எழுதிய கட்டுரையை கீழே கொடுக்கிறேன்.
குப்தர்களின் காலத்தைப் பொற்காலம் என்று சொல்கிற வழமையிலிருந்து நோக்கினால் தமிழ் சினிமாவின் பொற்காலம் கண்டிப்பாக அறுபதுகளாகத்தான் இருக்க முடியும். அறுபதுகளில்தான் வண்ணப்படங்களின் பிராபல்யம் தொடங்குகிறது. அறுபதுகளில்தான் பியார்பந்துலு, பீம்சிங், தாதா மிராஸி, ஏபீநாகராஜன், ஏஸிதிருலோகச்சந்தர், கேயெஸ்கோபலாகிருஷ்ணன் ஆகிய இயக்குனர்களின் கொடி வானளாவப் பறக்கிறது. தன் முதல் படத்திற்குப் பின் இயக்குனர் ஸ்ரீதர் அறுபதுகளில் தன் அருமையான படங்களின் வாயிலாக முக்கியத்துவத்தைப் பெறுகிறார். நாடகங்களைத் திரையாக்கம் செய்வதன் கடைசி காலம் என்கிற அளவிலும் முக்கியத்துவம் பெறுகிற பார்வையில் கேபாலச்சந்தர் எனும்; பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக விளங்கிய; இன்றைக்கும் தன் ஆளுமையோடு உலவி வருகிற இயக்குனரின் வருகையும் இந்தக் காலகட்டத்தில்தான் நேர்கிறது.
சினிமாவின் பரிணாமத்தைக் குறித்து பேச எழுகையில் இயக்குனர்களின் பரிணாமம் மற்றும் ஆளுமை குறித்து பேசுவதே முதல் செய்கையாக இருக்க முடியும். ஏனென்றால் ஓர் இயக்குனர் கனவு காண்கிற சினிமாவைத்தான் பார்வையாளன் பார்க்க முடியும். இயக்குனரின் கனவு உன்னதமானதாக இருந்தால் சினிமாவும் உன்னதமாகக் காலத்தில் நிலைத்து நிற்கும். இயக்குனர் காணும் கனவின் சக பயணிகளே நடிகர்களும் டெக்னீஷியன்களும். சில நேரங்களில் அவர்களின் உருவாக்கமும் இயல்பும்கூட இயக்குனர்களால்தான் சாத்தியமாகியிருப்பதையும் நாம் அறிந்தே வந்திருக்கிறோம்.
மணிரத்னம், ஷங்கர், கேயெஸ்ரவிக்குமார், பாலா, வசந்தபாலா, அமீர், ஹரி, பேரரசு என்று சொன்னால் தெரியும், அதைவிட்டு மேலே சொன்ன இயக்குனர்கள் எல்லாம் எதை சாதித்தார்கள் என்று கேட்கிற இளைய சமூகத்துக்காக கீழே ஒரு பட்டியலைக் கொடுக்கிறேன்.
கப்பலோட்டிய தமிழன், கர்ணன், பலே பாண்டியா, ஆயித்தில் ஒருவன், பாசமலர், ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, உயர்ந்த மனிதன், புதிய பறவை, தேன்நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள்…
இந்தப் பட்டியல் நீளமானது மட்டுமல்ல, மிகவும் நேர்த்தியானதும்கூட. அட்லீஸ்ட் இவை தமிழ்ப்படங்கள் என்கிற ஸ்மரணையாவது உங்களுக்கு இருந்தால் ரொம்ப சந்தோஷம். இந்தப் படங்களை மேற்சொன்ன இயக்குனர்கள்தான் நமக்குக் கொடுத்தார்கள். இவற்றை உண்மையிலேயே நீங்கள் பார்க்கவில்லை என்று சொன்னால் அருகாமை கிராமங்களில் உள்ள டூரிங் டாக்கீஸ்களையெல்லாம் நாட வேண்டியதில்லை. உங்கள் வீட்டையே திரைக்கொட்டிலாக மாற்றிவிட்ட தொலைக்காட்சி சானல்களின் பட அணிவரிசைகளை கவனித்துக்கொண்டிருந்தாலே போதும். இல்லையானால் இருக்கவே இருக்கிறது சி.டி. புதுப்படங்களை திருட்டுத்தனமாக வாங்கிப் பார்ப்பதற்கான சாதனம் என்பதாக நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் டிவிடி ப்ளேயர்களில் இந்தப் படங்களை வாங்கிப் போட்டுப் பாருங்கள். மலிவு விலையில் மார்க்கெட்டில் கிடைக்கின்ற அற்புதங்கள் இவை.
சினிமா 1930களில் தமிழுக்கு வருகிறது. ஆரம்ப காலத்தில் வளர்ச்சியுறா நிலையில் வெளிவந்த படங்களில் மிகச்சிலவே இன்றும் போற்றத்தக்க தமிழ் சினிமாக்களாக வலம் வருகின்றன. உதாரணமாக வாசனின் ஒளவையார், ஜெமினியின் சந்திரலேகா, எல்விபிரசாத்தின் இயக்கத்தில் விஜயா வாஹினியின் மிஸ்ஸியம்மா முதலானவை இந்தப் படங்கள் ஸ்டுடியோக்களின் ஆதிக்கத்தில் சினிமா இருந்ததனால் சாத்தியமானவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஹாலிவுட்டில் உள்ளதைப்போல் ஸ்டுடியோக்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இவை. அறுபதுகள் வாக்கில் அந்தப் போக்கு ஓரளவுக்கு மாற்றம் காண ஆரம்பித்திருந்தது. இருந்தாலும் அறுபதுகளும் ஸ்டுடியோக்களின் ஆதிக்கம் மிகுந்த காலமாகவே இருந்தது. ஆனால் ஸ்டுடியோக்களை வாடகைக்கு அமர்த்தி படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெருகியிருந்த காலம் என்பதால் பெரும் மாற்றம் நிகழ வாய்ப்பாக இருந்தது. இதனாலேயே இயக்குனர்களின் உருவாக்கம் பெரிதும் நிகழக்கூடிய சாத்தியத்தையும் அறுபதுகளின் சினிமா வழங்கி முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
பெரும் முதலீட்டில் ஸ்டியோக்களை நிர்மாணிக்க முடிபவர்கள்தான் சினிமா தயாரிக்க முடியும் என்கிற நிலை மாறாமல் இருந்திருந்தால் ஸ்ரீதர் போன்ற இயக்குனரால் காஷ்மீர் வரைக்கும் போய் தேன்நிலவு என்றொரு காலத்தால் அழியாத படத்தைக் கொடுத்திருக்க முடியாது. அதற்குப் பத்து வருடங்கள் முன்னால் ஸ்ரீதர் அந்தக் கதையைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால், மலைகளைத் திரைச்சீலைகளில் வரைந்து சிறு குட்டைகளை உருவாக்கி அதில் ஏன் படகை விடக்கூடாது என்றுதான் ஸ்ரீதரிடம் அவரது தயாரிப்பாளர் கேட்டிருப்பார். இருந்தாலும் தன் சிவந்த மண் படத்துக்காக ஒரு நதியையே செட் போட்டவர் ஸ்ரீதர். அவரது வேறு சில சாதனைகளும் குறிப்பிடத்தக்கவை. அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்துக்காகத்தான் மதராஸில் முதன்முதலில் கலர் ஃபிலிம் ப்ராஸஸிங் செய்யப்பட்டது. ஒரு காமெடிப் படத்துக்கு அதிகபட்ச செலவு செய்யலாம் என்கிற அவரது துணிச்சல் முதலில் பலராலும் ஏளனம் செய்யப்பட்டாலும் படத்தின் வெற்றி அவர்களின் வாயை அடைத்தது. அதேபோல் சிவந்த மண் படத்துக்காகத்தான் தமிழ்ப்படம் முதன் முறையாக வெளிநாட்டில் ஷøட் செய்யப்படுகிறது.
ஸ்ரீதரின் முதல் படமான கல்யாணப் பரிசு 59ல் வெளிவந்தது. அது ஒரு சூப்பர் சோகப்படம். ஸ்ரீதர் படம் என்றாலே அழுது வடியும் என்பதுபோன்ற மாயையை உருவாக்கியது அதுஙு அனால் அதைத் தொடர்ந்து வந்த தேன் நிலவு அந்த எண்ணத்தை உடைத்தெறிந்ததுங. ஸ்ரீதரால் காதலைக் காமெடியாகவும் தரமுடியும் என்பதை நிரூபித்தது அது. ஆனால் அதன்பிறகு வெளிவந்த அவரது நெஞ்சில் ஓர் ஆலயம் அவர் மீதான கவனத்தை மேம்படுத்தியது. அது திரும்பவும் டிராஜிடி. இந்தப் படங்கள் முறையே 61, 62, ஆகிய வருடங்களில் வெளிவந்தன. ஆனால் ஸ்ரீதர் பிற்காலத்தில் தனக்கான மார்க்கமாகக் கைக்கொண்டது தேன்நிலவு ஸ்டைல்தான். 64ல் வெளிவந்த கலர் படமான காதலிக்க நேரமில்லை, 67ல் வெளிவந்த ஊட்டி வரை உறவு ஆகியவை இதை நிரூபிக்கின்றன. 69ல் போராளிகளின் கதையை சிவந்த மண்ணில் அவர் கொடுத்தார். இருந்தாலும் இந்தப் போக்கு நீடிக்காமல் போனதால் பின்வந்த காலங்களில் அவர் காதல் காமெடி இவற்றுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களுக்கு மீண்டும் திரும்பிவிட்டார். இதன் காரணமாகவே தமிழுக்கு தவறான ஒரு பாதை போட்டுக்கொடுத்த இயக்குனர் என்கிற அவதூறையும் அவர் பெறவே செய்கிறார். ஏனென்றால் சாதனைகள் பாராட்டப்படுகின்ற இந்த உலகில் பிழைகள்தானே பின்பற்றப்படுகின்றன.
பிற்பாடு வந்தவர்கள் இந்த காதல் காமெடி ஆகியவற்றோடு கூட ஆக்ஷன் என்று ஒரு வரையறையை ஏற்படுத்திக்கொண்டு அதிலிருந்து மீளமுடியாமல் போனது ஸ்ரீதரின் ஒருசில படங்களின் வெற்றியைக் கண்டு தவறாகக் கற்றுக்கொண்ட பாடத்தினால்தான். அந்த அவலங்கள் எல்லாம் எழுபதுகளில்தான் தலையெடுக்கின்றன என்கிற வகையில்தான் அறுபதுகளின் சினிமா பொற்காலச் சினிமா என்று நான் சொல்கிறேன்.
அறுபதுகளின் மகத்தான மற்றொரு சாதனை ஏபீநாகராஜன் நிகழ்த்தியது. இலக்கியத்தில் சங்ககாலங்கள், பக்தி இலக்கியங்களின் காலம், சுதந்திரவேட்கைக் காலம் என்று வகைமைகள் உள்ளதுபோல், இந்த ஏபீநாகராஜன் திருவிளையாடல் என்கிற ஒரு பக்திப் படத்தை முதலில் கொடுத்தார். அதன் மகத்தான வெற்றி கொடுத்த தைரியத்தில் சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை என்று அறுபதுகளை ஒருவகையில் பக்தித் திரைப்படக் காலமாகவே உருவாக்கிக் காட்டினார். அந்தப் படங்களோடு அதன்பிறகு வந்த, தற்போதும் வெளிவருகிற பக்திப்படங்களை ஒப்பிட்டு நோக்கினால் இலக்கியத்துக்கும் மலிவிலக்கியத்துக்கும் ஊடான வித்தியாசம் என்ன என்பதும் விளங்கிவிடும். பக்தியைப் பரப்புவதற்காக என்பதாக இல்லாமல், உபன்யாசங்களிலும் காலட்சேபங்களிலும் கேட்டு வியந்திருந்த புராணங்களைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திய சாதனையில்தான் ஏபீநாகராஜன் இன்றும் நினைக்கப்படுகிறார்.
புலவரே, நீரே முக்கண் முதல்வனாகவும் ஆகுகஙு உமது நெற்றியில் ஒரு கண் காட்டிய போதிலும், உமது உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்ட போதிலும் குற்றம் குற்றமே! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்று ‘எம்பெருமான்’ ஈசன் மீதே வசன மழையைப் பொழிந்த நக்கீரக் கிழவரை நன்றாக உற்றுப் பாருங்கள். அந்த வசனத்தை எழுதியதும், அந்தப் பாத்திரத்தில் நடித்ததும், அந்தப் படத்தை இயக்கியதும் அவரேதான். அதுதான் ஏபீநாகராஜன்!
‘ப’ வரிசை இயக்குனர் என்பதாக வாழும் காலத்திலேயே குறிப்பிடப்பட்ட இயக்குனர் பீம்சிங்கின் (தற்போதைய எடிட்டர் லெனினின் தந்தை) உன்னதப் படைப்பான பாசமலர் 61ல் வெளிவந்தது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம், சினிமாவுக்குப் போகும்போது மறக்காமல் கர்ச்சீஃப் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்கிற விழிப்புணர்வை பார்வையாளர்களிடத்தே ஏற்படுத்தியது.
சிவாஜி கணேசனும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்த இந்தப் படத்தின் உணர்ச்சி ததும்பும் காட்சிகள் பார்வையாளர்களைத் தேம்பித் தேம்பி அழ வைத்தன. இந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து சேலத்தில் நான் சந்தித்த என் வயதையொத்த பெண்ணொருத்தி என்னிடம் இதைக் குறிப்பிட்டுச் சொன்னாள், எனக்கு ஓர் அண்ணன் இல்லையே என்கிற ஏக்கத்தை எனது நெஞ்சில் பதித்துவிட்டது இந்தப் படம் என்று. இன்றைக்கும் இது அப்படியே பொருந்தும். என்னதான் சிவாஜிகணேசனின் மிகை நடிப்பு உறுத்தினாலும் அதை நாடகபாணி நடிப்பின் வகைமையில் பார்க்கப் பழகிவிட்டால் தமிழுக்குக் கிடைத்த செல்வம்தான் அவர் என்பது விளங்கும். இருந்தாலும் இந்தக் குறை கூட இல்லாத அசல் நடிகை சாவித்திரி அந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.
தமிழ் சினிமா இதுவரை கண்ட நடிகைகளிலேயே மிகுந்த அழகானவர் வைஜந்திமாலா என்று சொன்னால் (இரண்டாவது அழகி நயன்தாரா) மிகச் சிறந்த நடிகை சாவித்திரிதான் என்பதை உங்கள் தாத்தாவிலிருந்து உங்கள் மகன் வரைக்கும் ஒப்புக்கொள்வார்கள். சிவாஜியும் சாவித்திரியும் இணைந்து நடித்த பல படங்களில் பாசமலர் ஆகச்சிறந்த படமாக பதிவு செய்யப்பட்டு பல காலமாகிறது.
இதைத் தொடர்ந்து பீம்சிங் தன் ப வரிசையில் பாலும் பழமும், பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை, பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பாதுகாப்பு என்று ஆகச்சிறந்த படங்களை தமிழுக்கு நல்கி, அறுபதுகளின் முடிசூடா மன்னனாக விளங்கினார். குறிப்பாக நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலை பெரிதும் பயன்படுத்திக்கொண்டவர் என்கிற அளவிலும் பீம்சிங்கின் பங்களிப்பு முக்கியமானது. பீம்சிங்கின் இந்தப் படங்கள் கதைக்கும் பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தருவனவாக அமைந்திருந்த வகையிலேயே தமிழில் சிறந்த படங்களும் சிறந்த நடிப்பாற்றலும் வெளிப்படுவது சுலப சாத்தியமாகியிருந்தது.
அறுபதுகள் வண்ணப்படங்களின் ஆரம்பகாலமாகத்தான் இருந்தன என்பதனால் பீம்சிங்கின் இந்தப் படங்கள் கருப்புவெள்ளைப் படங்களாகவே அமைந்திருந்தன. நல்ல சினிமா ரசிகர்கள் கருப்பு வெள்ளைப் படங்களின் அற்புதங்களை உணர்ந்தவர்களாகவே இருக்க முடியும். கருப்பு வெள்ளைப் படங்கள் காணாமற்போய் பல காலமான பின் சமீபத்தில் ஹாலிவுட்டில் ஸ்பீல்பெர்க் எடுத்த ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், காலத்தைப் பிரதிபலிக்கும்பொருட்டும், கருப்பு வெள்ளையின் நேர்த்தியை மீண்டும் ருசித்துப் பார்க்கும் வகையிலும் கருப்பு வெள்ளையில்தான் எடுக்கப்பட்டது. கருப்பு வெள்ளைப் படங்களுக்கென்று பிரத்யேக ஒளியமைப்பு செயல்படும். திரையில் காணும் பிம்பம் யாவும் நிழல் மற்றும் நிஜம் ஆகிய இரண்டின் கலவைதான் என்பதை வண்ணப்படங்களில் நாம் கண்டறிய இயலாது. வண்ணங்களில் சிக்குறும் மனம் நிழலின் அழகில் கவனத்தைச் செலுத்த இயலாது.
இந்த அடிப்படைதான் மேற்சொன்ன படங்களின் நேர்த்திக்கு பெரிதும் துணை செய்தன. அதே அறுபதுகளில் அதே சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த தில்லானா மோகனாம்பாள், புதிய பறவை ஆகியவை ஈஸ்ட்மென் கலர் படங்கள். ஈஸ்ட்மென் கலரின் அடிப்படைப் பிரச்சனை வண்ணங்கள் பெல்லட் நைஃபில் அப்பி வைத்த மாதிரி காணப்படுவதுதான். சரோஜாதேவிக்கு ரோஸ் கலரில் மேக்கப் போட்டால் அவர் பிங்க் கலரில் காணப்படுவது ஈஸ்ட்மென்னில் தவிர்க்க இயலாதது. பீம்சிங்கின் இந்தப் படங்கள் இந்த வம்பிலிருந்து தப்பிய வகையில் மிகவும் அழுத்தமான திரை ஆவணங்களாக இன்றைக்கும் நமக்காகக் காத்திருக்கின்றன.
பீம்சிங் உறவுகளின் பின்னல்கள் உணர்ச்சிகளின் பின்னல்கள் ஆகியவற்றைப் பிழிந்து கொடுத்தார் என்றால், பந்துலு பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவராகத் திகழ்ந்தவர்.
கப்பலோட்டிய தமிழன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் என்று முக்கியமான சில படங்கள் 60களில் அவரது பங்களிப்பாக இருக்கின்றன. அவர் இயக்கிய முரடன் முத்து சிவாஜி கணேசனுக்கு 99வது படம். அது ’64 திபாவளியன்று ரிலீஸ் ஆகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிவாஜியின் 100வது படமான நவராத்திரியும் அதே நாளில் வெளியானது. (ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களில் எதை முந்தையதாகவும் எதை பிந்தையதாகவும் கொள்வது என்பதில் எந்த அடிப்படையில் தீர்மானித்தார்கள் என்பது தெரியவில்லை). நவராத்திரியின் வெற்றி, முரடன் முத்துவை பாதித்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.***- முரடன் முத்து 99 அல்லது 101 ***
59ல் பந்துலு இயக்கத்தில் வெளியான வெற்றிப்படமான வீரபாண்டிய கட்டபொம்மன் போல 61ல் அவர் இயக்கிய கப்பலோட்டிய தமிழன் வெற்றிபடமாக அமைந்திக்கவில்லை. இருந்தாலும் அதற்கடுத்த வருடம் வெளிவந்த முழுநீள காமெடி படமான பலேபாண்டியா பெரும் வெற்றியைப் பெற்றது (இந்தப் படத்தின் காட்சிகள் அப்படியே லட்டு லட்டாகக் களவாடப்பட்டு தற்போதும் புதிய திரைப்படங்களில் காணக் கிடைக்கின்றன). 64ல் அவரது இன்னொரு பிரம்மாண்டமான படைப்பாக வெளிவருகிறது கர்ணன்ங. அந்தக் காலகட்டத்தில் இருந்த வழக்கப்படி, அது தமிழோ தெலுங்கோ, கிருஷ்ணன், ராமன் ஆகிய பாத்திரங்கள் என்றால் என்டிராமாராவ்தான் என்கிற மரபு இந்தப் படத்திலும் மீறப்படவில்லை. மாயாபஜார், சம்பூர்ணராமாயணம் ஆகிய படங்களைப் போலவே இதிலும் என்டியார்தான் கிருஷ்ணன். கர்ணனாக சிவாஜி, அர்ஜுனனாக முத்துராமன், துரியோதனனாக எஸ்.a. அசோகன், சகுனியாக டீ.யெஸ் முத்தையா என்று பொருத்தமான பாத்திரத் தேர்வாலும் முழுக்க முழுக்க ஹிந்துஸ்தானி அடிப்படையில் அமைந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையாலும் மிக உயரங்களை எட்டிய படம் கர்ணன்.
இதையும் ஒரு படம் அப்படியே தூக்கி விழுங்க வேண்டுமானால் அதையும் பந்துலுதானே இயக்கியாகவேண்டும்! அடுத்த வருடமே வெளிவருகிறது ‘ஆயிரத்தில் ஒருவன்!’
ஹாலிவுட்டில் வெளிவந்த பென்ஹர் முதலான படங்களை அடியொற்றி மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன்! என்னதான் பின்னாளில் கேசங்கரின் இயக்கத்தில் எம்ஜியார், அடிமைப்பெண் என்று ஒரு படம் கொடுத்திருந்தாலும் எம்ஜியாரின் திரைப்பாதையில் உச்சத்தில் பறக்கிற கொடி ஆயிரத்தில் ஒருவன்தான். அந்தப் படத்திற்கு முன்பே கன்னடத்தில் ஒரு படமும் தமிழில் ஒர படமும் நடித்திருந்தாலும் பின்னாளில் தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதா பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றதும் இந்தப் படத்தின் வாயிலாகத்தான். அவ்வகையில் தமிழகத்தின் இரண்டு பிற்கால அரசியல் ஆளுமைகளை உருவாக்க உதவிய படம் அது என்று சொன்னாலும் மிகையில்லை.
கடல் கொள்ளையர்கள், அடிமை வியாபாரம் என்பதாகவெல்லாம் ஆர்ப்பரிப்போடு வெளிவந்த படம் அது! ஒயிலான நாயகி, நேர்த்தியான விஸ்வநாதனின் இசை, கவித்துவமிக்க கண்ணதாசனின் பாடல்கள் என்று இந்தப்படம் சகல விதத்திலும் வெற்றிப்படமாக அமைந்த ஒன்று. அறுபதுகளில் மட்டமல்ல, தமிழ்த் திரை வரலாற்றிலேயே மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படும் படம் இது. இதன்பிறகு பந்துலு கன்னடப்படங்களை நோக்கி நகர்ந்துவிட்ட வகையில் பிற்பாடு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இவரது படம் ‘நாடோடி’ மட்டும்தான்!
இந்தக் காலகட்டத்தில் ஏஸிதிருலோகச்சந்தர் இயக்கிய ஒருசில படங்கள் வெளிவருகின்றன. தங்கை, அதே கண்கள், இருமலர்கள், என் தம்பி என்று அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படாத இந்தப் படங்களில் வரிசை 67லிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த அடுத்த வருடமான 66ல், ஏவியெம் தயாரிப்பில் ஏஸிதிருலோகச்சந்தர் இயக்கிய அன்பே வா தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்ஙு எம்ஜியாரை வைத்துக்கொண்டு இத்தனை லூட்டி அடிக்க முடியும் என்பதை இதற்கு முன்னால் யாராலும் நம்பியிருக்கவே முடியாது. ரஜினிகாந்த்துக்கு ஒரு தில்லுமுல்லு என்று சொன்னால், எம்ஜியாருக்கு ஒரு அன்பே வா! படத்தில் நாகேஷ் மட்டுமல்ல, எம்ஜியார், சரோஜாதேவி உள்ளிட்ட அனைவருமே காமெடியன்கள்தான் என்றுகூட சொல்லலாம். இந்தப்படம் கிட்டத்தட்ட ஸ்ரீதர் பாணியிலேயே அமைந்திருந்த வகையில் என் மனத்தில் வெகுநாட்கள் இது ஸ்ரீதர் படம் என்பதாகவே ஒரு பதிவு இருந்தது. இந்தப் படத்திற்காக ஆரூர் தாஸ் எழுதிய வசனங்கள் வெகுகாலம் ஒலிச்சித்திரமாக வலம் வந்துகொண்டிருந்தவை.
இந்த ஒலிச்சித்திரம் என்கிற வகைமையைக்கூட அறுபதுகளை முன்வைத்துத்தான் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது. டீவி அறிமுகமாகாத அந்தக் காலகட்டத்தில் வானொலியின் பாணியைப் பின்பற்றி, பாடல்களைப் போலவே திரைப்படங்களின் வசனங்களும் ஒலிப்பேழைகளாக வெளியிடப்படும் வழக்கம் தோன்றியிருந்தது. அதன் நீட்சியாக எழுபதுகளில் டேப்ரிகார்டர்கள் அறிமுகமானபோது இந்த வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் கவனித்துப் பார்த்தோமேயானால் எழுபதுகளிலும் ஏன் எண்பதுகளிலும்கூட ஒலிச்சித்திரமாக வெளிவந்த கேஸட்டுகள் அனைத்தும் அறுபதுகளில் வெளிவந்த படங்களினுடையவைதான். அந்த அளவுக்கு அந்தப் படங்களின் பிராபல்யமும், வசன அழகும், இயைந்த இசையமைப்பும் சிறந்து விளங்கின. உதாரணமாக நான் எசசெல்சி படிக்கும்போது எனக்கு மனப்பாடச் செய்யுளாக வந்த ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி…’ எனும் திருவிளையாடற்புராணப் பாடல் எனக்கு மனப்பாடமானது திருவிளையாடல் படத்தின் ஒலிச்சித்திரத்தைத் திரும்பத் திரும்ப கேட்ட வகையில்தான். எழுபதுகளிலும் எண்பதுகளிலும், இந்த அறுபதுகளின் திரைப்படங்களின் வசனங்களை பொது நிகழ்ச்சிகள் துவங்குமுன்பாக ஒலிபரப்புவது சகஜமான வழக்கமாக இருந்தது என்பதையும் இங்கே கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.
தாதாமிராஸி இயக்கிய இரண்டு முக்கியமான படங்களான புதிய பறவை மற்றும் ரத்தத்திலகம் ஆகியவை அறுபதுகளில் வெளிவந்தன. ஆங்கிலத்தில் வெளிவந்த க்ருகட் ஷேடோ எனும் படத்தை உல்டா செய்து எடுக்கப்பட்ட படம் எனும்போதும், புதிய பறவை மிகவும் ஸ்டைலாக எடுக்கப்பட்டிருந்த படம். பாடல்களும் திரைக்கதையும் சிவாஜிகணேசன் மற்றும் சௌக்கார் ஜானகி ஆகியோரின் அசத்தலான நடிப்புமாக இன்றைக்கும் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் திரைப்படம் அது. .இந்திய சீன யுத்தத்தின் பின்னணியில் தயாரிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் ரத்தத்திலகம். அந்தப்படத்தில் வெளியான கல்லூரி பிரிவுபசாரப் பாடலான ‘பசுமை நிறைந்த நினைவுகளே…’ இப்போதும் கல்லூரிகளின் கடைசி நாட்களில் ஒலித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. கண்ணதாசன் இன்னும் காற்றில் மிதந்துகொண்டிருப்பதற்கு இந்தப்பாடலும் ஒரு உதாரணம்!
கிருஷ்ணன் பஞ்சு எனும் இரட்டை இயக்குனர்கள் கொடுத்த உயர்ந்தமனிதன் எனும் உயரிய படம் 68ல் வெளிவருகிறது. சிவாஜிகணேசன் சிவக்குமார் மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்த இந்தப்படம் ஒரு ரீமேக் படமென்றபோதும் தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டதாய் அமைந்திருந்தது. அறுபதுகள் சிவாஜிகணேசனின் மிகை நடிப்பின் துவக்ககாலம் என்கிற வகையில் அவர் நடித்த அற்புதமான படங்களின் வரிசையில் இது மிகவும் முக்கியமான படமாகக் கருதப்படவேண்டியது. டீயெம்சௌந்தர்ராஜன் மூச்சு வாங்கிக்கொண்டு, ‘ஹந்த நாள் ஞாபஹம் நெஞ்ஸிலே வந்ஹதே நண்பனே நண்பனே நண்பனே’ என்று பாடிய அந்தப் பாடலை கொடைக்கானலில் அழகிய லொக்கேஷன்களில் படமாக்கியிருக்கும் நேர்த்தியை இப்போதும் நாம் வியக்கலாம். (இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதியது என்பதாகவே பலகாலம் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் இந்த மாதிரி பல அற்புதமான பாடல்களை இந்தக் காலகட்டத்தில் எழுதியுள்ளார் கவிஞர் வாலிஙு) பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவி என்றும் நூறு சொந்தம் வந்த பின்னும் தேடுகின்ற அமைதி எங்கே என்று வாழ்வின் உச்சங்களில் வாழும் ஒருவனின் நினைவுப் பாதையில் உள்ள குற்ற உணர்வும் தவிப்புமாக இந்தப் படம் அறுபதுகளில் சிவாஜிகணேசனின் கொடியை வானளாவப் பறக்கவிட்ட படங்களுள் முக்கியமானது.
இதே கிருஷ்ணன் பஞ்சுதான் பாலச்சந்தர் எழுதிய சர்வர் சுந்தரம் படத்தையும் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப்படம் 64ல் வெளி வருகிறது. அதற்கு அடுத்த வருடம்தான் பாலச்சந்தர் இயக்குனராக நீர்க்குமிழி மூலம் அறிமுகமாகிறார். இந்த இரண்டு படங்களிலும் நாயகன் மற்றும் திரைக்கதையாளன் ஒரே நபராக இருந்தும் இயக்குனர் என்பவரின் நேர்த்தி என்பதை சர்வர் சுந்தரம்தான் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு கவித்துவமான -அவர்களின் பாஷையில் சொன்னால்- டைரக்டோரியல் டச் உண்டு என்பதை நீங்கள் இப்போதும் பார்த்து உணர்ந்துகொள்ள முடியும். அதுவும் இந்த கேயார் விஜயாவின் பேரழகை நீங்கள் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு முழு உத்தரவாதமான படம் இந்த சர்வர் சுந்தரம். ஸ்ரீதரின் ஊட்டி வரை உறவில் கலர் கேயார்விஜயாவை நீங்கள் பார்க்கலாம், ஆனால் உண்மையில் அவர் மாநிறம் கொண்டவர் என்பதனால் கருப்பு வெள்ளைப் படத்தில்தான் அவரது பேரழகு ஒளிவீச வாய்ப்பாக அமைகிறது.
இயக்குனர் கேசங்கர் பின்னாளில் எம்ஜியார் படங்களையும் பக்திப் படங்களையும் இயக்க ஆரம்பித்த வகையில் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்ல என்கிற போக்கு பலரின் மனத்திலும் இருக்கக்கூடும். ஆனால் ஐம்பதுகளின் இறுதியில் இவர் இயக்கிய மருதுபாண்டியர்களின் வரலாற்றைச் சொல்லும் பிரம்மாண்டமான படமான சிவகங்கைச் சீமை, அறுபதுகளில் இவர் இயக்கிய ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, பாதகாணிக்கை, ஆடிப்பெருக்கு ஆகிய படங்கள் தமிழ் திரைப்பட வரலாற்றின் முத்திரைப் படங்கள். ( பாதகாணிக்கை-சிவாஜி படமல்ல] முதல் மூன்று படங்களும் சிவாஜியின் திரைப் பட்டியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் என்றால் ஆடிப்பெருக்கு ஜெமினிகணேசனின் படங்களில் முக்கியமான ஒன்றாக சொல்லப்படவேண்டியது.
இயக்குனர் கேயெஸ் கோபாலகிஷ்ணனின் பங்களிப்பும் அறுபதுகளில் நிறையவே காணப்படுகின்றது. கற்பகம், கை கொடுத்த தெய்வம், சித்தி, செல்வம், கண்கண்ட தெய்வம், பேசும் தெய்வம், குலவிளக்கு என்று இவரது பட்டியல் கிட்டத்தட்ட பீம்சிங்கின் ஏரியாவான சென்ட்டிமென்ட் வகைமையில் நீண்டு கிடக்கிறது.
இயக்குனர் பீமாதவனின் குழந்தைக்காக, வியட்நாம்வீடு, ராமன் எத்தனை ராமனடி ஆகிய படங்கள் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தவை. இவற்றில் வியட்நாம்வீடு மேடை நாடகத்தை அப்படியே திரையில் பார்க்கிற வகையிலேயே அமைந்திருந்த ஒன்று. இந்த பாணி பிற்பாடு அல்லது அதே காலகட்டத்தில் பாலச்சந்தரால் பெரிதும் கையாளப்பட்டது. இதை பாணி என்று சொல்வதை விடவும் சினிமா எனும் கலையின் நுட்பத்தை உணராது நாடகங்களை காமிராவில் பதிவு செய்தவை (லோக்கல் லாங்குவேஜில் சொன்னால், ‘video coverage’) என்பதாகவே இந்தப் படங்களைக் கொள்ள வேண்டும். சிவாஜியின் ஷேக்ஸ்பீரியன் பர்பார்மன்ஸை பெரிதும் நம்பி வெளிவந்த படங்கள்தான் இவையெல்லாம். பிற்பாடு 72ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த ஞானஒளி, நாற்பதுகளில் வெளிவந்த ஏழை படும் பாடு படத்தின் உல்டா என்றபோதும் (அதுவே லே மிஸரபிள்ஸின் உல்டா என்பதால் இது பிழையில்லை) திரும்பவும் ஒருதரம் சிவாஜிகணேசன், மேஜர் சுந்தரராஜன் ஆகியோரின் ஆர்ப்பாட்டத்தைத் திரைக்குக் கொண்டுவந்த சாதனையை நிகழ்த்திய படம். அதேபோல் ஆந்திர நடிகையான அற்புதமான அழகி சாரதாவையும் இந்தப் படத்தில் நீங்கள் ஆசை பொங்கப் பார்க்கலாம்.
இவர்களெல்லாம் ஒருபுறம் இருக்க, பிற்காலத்தில் தமிழ் சினிமாவையும் அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியையும் ஆளுகை செய்யப் போகிற கே.பாலச்சந்தரின் வருகை அறுபதுகளில் நிகழ்கிறது. 65லிருந்து 70க்குள்ளான ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட 13 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அவர் ஃபுல் த்ராட்டலில்தான் தன் பயணத்தைத் துவக்கினார் என்பதையே இது காட்டுகிறது. இந்தப் பட்டியலில் நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், எதிர்நீச்சல், இரு கோடுகள், காவியத் தலைவி ஆகிய அவரது மிக முக்கியமான படங்கள் அடக்கம். தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபிக்கும் விதமாக இவர் -அதாவது தமிழ் சினிமா அதைத் தொடர்ந்து பெரும் மாற்றத்தை எதிர்கொள்ளும் என்பதை உணர்த்தும் விதமாக- சில படங்களை அறுபதுகளில் கொடுக்க முயன்றார். இரு கோடுகள், எதிரொலி போன்றவை அதில் குறிப்பிடத் தக்கவை. இருந்தாலும் எழுபதுகளில்தான் இவரது மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை முதலான படங்கள் வெளிவந்து இவரது வித்தியாசத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்றன.
ஏனென்றால் அறுபதுகளில் ரஜினிகாந்த் இல்லை. கமலஹாசன் என்பதாக ஒரு சிறுவன் மட்டுமே காணப்படுகிறான். 60லிருந்து 63க்குள் களத்தூர் கண்ணம்மா, பார்த்தால் பசி தீரும், ஆனந்த ஜோதி என்று மூன்று படங்களில் சிறுவனாக நடித்த கமலஹாசன் வளர்ந்த இளைஞனாக 71ல்தான் நூற்றுக்கு நூறு படத்தில் அறிமுகமாகிறார். இவர்களின் வருகைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் வரலாறு முற்றிலும் மாறுபட்டுவிடுகிறது.
என்னதான் எம்ஜியார் ஏழைப்பங்காளனாக, அதர்மம் தலைதூக்குமிடத்தில் அவதரிக்கும் லார்ட் கிருஷ்ணாபோல ஜங்கென்று வந்து குதித்து குத்துச் சண்டையிடுபவராக, தாய்க்குலத்தை பெரிதும் மதிப்பவராகவெல்லாம் தனக்கென ஓர் இமேஜை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தார் என்றாலும் அறுபதுகளில் இந்த ஆட்டமெல்லாம் அத்தனை பலத்தோடு இருந்திருக்கவில்லை. அல்லது நல்ல இயக்குனர்கள் திறமை அல்லது கதை ஆகியவற்றால் அவை இட்டு நிரப்பப்பட்டன. அதேபோல் சிவாஜி எனும் மேடைக்கலைஞனின் உணர்ச்சிகரமான நடிப்புத் திறமையை மிகைநடிப்பின் அதிகபட்ச சாத்தியங்கள் தோன்றியிராத வகையில் தாங்கிப்பிடித்தவை அறுபதுகளின் படங்கள். இன்னொரு முக்கிய நாயகனான ஜெமினி கணேசனை காதல் மன்னன் என்று அடைமொழி வைத்து அழைக்க ஆரம்பித்த காலகட்டமும் அறுபதுகள்தான். ஐம்பதுகளின் இறுதியில் வெளிவந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது என்றாலும், அறுபதுகளில் இவர், சிவாஜி எம்ஜியார் ஆகியோர் நிரவமுடியாத ஒரு தளத்தில் தன் ஆதிக்கத்தைத் செலுத்த ஆரம்பித்த வகையில்தான் இவருக்கு இந்த அடைமொழி நிலைத்தது. ஸ்ரீதராகட்டும், பாலச்சந்தராகட்டும், இவரை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட காலகட்டம்தான் இந்த அறுபதுகள் (இதன்பிறகு 90களின் இறுதியில் வெளிவந்த அவ்வைஷண்முகியில்தான் இவரது அற்புதமான ஆற்றல் வெளிப்பட்டது என்பது எனது சொந்தக் கருத்து). ஆனால் எழுபதுகளில் இந்தப் போக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் போன வகையில்தான் அறுபதுகளின் சினிமாக்கள் அதி உன்னதமாக வரலாற்றில் நினைக்கப்படுகின்றன என்பதை பின்னாளில் வெளிவந்த படங்கள்தான் நமக்கு விளக்குகின்றன.
நண்பர்கள் பார்வைக்கு
கட்டுரையாளர் பல படங்களை விட்டு விட்டார் .மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை ,படகோட்டி,நம்நாடு போன்ற படங்களையும் ,நடிகர் திலகத்தின் தெய்வமகன்,மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்
chinnakkannan
12th September 2014, 11:41 AM
ஹாய் கிருஷ்ணா சார்,.கோபால் சார்..ராகவேந்தர் சார் மதுண்ணா ராஜேஷ் ஜி.. குட்மார்னிங்க்..
ஆஹா அழகான வாகனப் பாடல்கள் லிஸ்ட் நன்றி டு ஆல்
ராகங்கள் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது கோபால் சார்..உங்கள் இடுகையின் மூலம் தெரிந்துகொள்கிறேன்..தாங்க்யூ..
வாங்க வாங்க ராகவேந்தர் சார்..புதிய பறவை பற்றி முன்பு எழுதியிருந்ததைத் தேடி ப் பார்க்கணும்.. நினைவூட்டலுக்கு நன்றி..
பட்டணத்தில் பூதம்.. ஒரு நல்ல படம்..எவ்வளவு முறை பார்த்திருப்பேன்..சுஜாதாவிடம் பேப்பரில் படம் காட்டினார்களே பட்டணத்தில் பூத்த்தில் அது போன்று இன்று சாத்தியமா.. ஆகியிருக்கிறதே..அது தான் இண்டர் நெட் என க் கேள்வி பதில் படித்த நினைவு.. ஆமாம் அந்தக் காலத்தில் ஏன் எல்லாரும் நீச்சலுடை கண்டிப்பாக க் காட்சிகளில் வைத்தார்கள் என்பது எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது!
*
போன வருடம் விஸ்வ ரூபம் பட ரிலீஸ் சிக்கல்களின் போது படித்ததோ, அல்லது எழுதிப் பார்த்ததோ நினைவில்லை..(பரவால்ல நன்னா சமாளிக்கறடா கண்ணா) அது கீழே..
*
பக்கத்து பில்டிங்க் பத்ம நாபன் பரபரப்பாய் வந்தார்..”பாரும் ஓய்.. நானும் டெர்ரரிஸம் பத்தி ஒரு குறும் படம் எடுக்கப் போறேன்….யாருமே தடை பண்ண முடியாது.”
“உம்மையும் என்னையும் யார் ஓய் தடை பண்ணப் போறாங்க பாக்கக் கூட மாட்டாங்க….யாரெல்லாம் போடப் போறீங்க…என்ன கதை.”
“மொத்தமே மூணு கேரக்டர்ஸ்தான்.. கே.ஆர் விஜயா, முடிஞ்சா ரஜினிகாந்த், அப்புறம் பிரகாஷ் ராஜ் நிறைய துணை நடிகர்கள்..”
“ஒம்ம சொத்தையே எழுதிவைக்கணும் போல இருக்கே..பெரிய பட்ஜட்டால்ல இருக்கு..கதை என்ன.”
“கதை சொல்ல மாட்டேன்..காரெக்டர்ஸ் வேணும்னா சொல்றேன் –ஆதிசங்கரர், மண்டன மிச்ரர் அவரது மனைவி உபய பார்வதி என்ற சரஸ்வதி”
“என்ன ஓய்..இந்தக்கதையில் எங்க டெர்ரரிஸம் வருது…”
“டெர்ர்ரிஸ்ம்னாலே தீவிர வாதம் தானே…….அந்த ஒரு வார ஆர்க்யூமெண்ட்ஸ அஞ்சு நிமிஷத்துல கொண்டு வர்றோம்..என்னங்கறே”
“உம்மை உம்மை..”- அடிப்பதற்குள் பத்து எழுந்துஓடியே போய்விட்டார்..
gkrishna
12th September 2014, 11:52 AM
புதிய பறவை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல். சௌகார் ஜானகி மேடையில் ஆடிக்கொண்டு பாடலைப் பாடிக்கொண்டிருக்க இவர் ஒரு டைனிங் டேபிளில் அமர்ந்து கையில் சிகரெட் புகைய பாடலைப் பார்த்தபடி இருப்பார். அவ்வளவுதான்.
கவனியுங்கள்…………..வேறு எந்த நடிப்பும் இல்லை.
ஆனால் இவர் அந்த சிகரெட்டை இழுத்து இழுத்து வெளியேற்றும் ‘புகை வளையங்கள்தாம்’ அந்தக் காட்சி மொத்தத்துக்கும் ‘நடிக்கும்’.
http://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Singapore%20C%20I%20D%20(1965)/posters/thumbs/Singapore%20C%20I%20D%20(1965)%20posters_aptalkies 1E4519-1B2DBC.jpghttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRVOpQQ5kmmvF2nmOQDK5z9jer4n4ieO Z2wNYb_iDbRw9QdhgOp
gkrishna
12th September 2014, 12:14 PM
Film historian Randor Guy stated, "The movie has excellent music (Viswanathan-Ramamurthy; lyrics by Kannadasan) and many songs became hits — Paartha Gnaabakam Illayo...!, Unnai ondru ketpen (P. Sushila) and Engey nimmathee (T. M. Soundararajan)."[4] Malathi Rangarajan of The Hindu said, "Who can forget the everlasting flavour of MSV’s expertise that emanated through each and every number, beginning with ‘Unnai Ondru Kaetpaen’!"[2] Film critic Baradwaj Rangan called it a "stylish musical bonanza"
Puthiya Paravai received generally positive reviews. Ananda Vikatan said, "We can accept the film intellectually. However, it is tough to accept it in our heart due to the climax".[1] G. Dhananjayan, in his book The Best of Tamil Cinema: 1931 to 1976, called it "An innovative landmark film with international standards of direction".[1] Malathi Rangarajan of The Hindu said, "Pudhiya Paravai is a thriller in the whodunit genre. Dada Mirasi’s astute adaptation saw to it that the suspense was maintained till the very end, and the denouement neatly tied up the strands of suspense."[2] Film historian Randor Guy stated, "Sivaji Ganesan as the hero forced into a corner is excellent. Saroja Devi exudes glamour, while Sowcar Janaki as the boozing wife acquits her role with considerable conviction", concluding that the film would be "Remembered for the taut onscreen narration, the excellent performances by Sivaji Ganesan, Sowcar Janaki and M. R. Radha, and Saroja Devi’s glamour".[4] Film chronicler "Film News" Anandan praised it for being "the first film which had a classy, rich look right through."[5] Ramakrishnan T. of The Hindu called Saroja Devi's character a "brilliant role".[18] IndiaGlitz said, "In the colourful 'Puthiya Paravai' Sivaji's every movement with Saroja Devi talks love.
Gopal.s
12th September 2014, 12:20 PM
Thanks Ragavendharji.
chinnakkannan
12th September 2014, 12:35 PM
காலகாலமாக என்ன ஆகிக்கொண்டிருக்கிறது..ஆமாம் காலங்கள் தான் மாறிக் கொண்டிருக்கின்றன..வசந்தகாலம் பனிக்காலம் இலையுதிர்காலம் கோடைக்காலம் என்ற வெயிற்காலம் குளிர்காலம்….
ம்ம்..இந்த மஸ்கட்டில் முக்கால் வருடம் வெய்யில் கால் வருடம் கொஞ்சம் குறைந்த வெயில் என்றிருக்கும்..இந்த வருடம் செப்டம்பர் வந்த போதும் இன்னும் குறையவில்லை..இன்னிக்கு ஓக்கே.ஆனால் போனவாரம். கொஞ்சம் ஜாஸ்தி தான் 46 டிகிரி..
வெயில் பற்றி முன்னால் நான் எழுதிப் பார்த்த பாட்டு..
வானப் பெண்ணின் கோப வேட்கை
வேகமாகப் பாயுதோ
மீன மேஷம் பார்த்தி டாமல்
மேனியெங்கும் காயுதோ
மோனங் காட்டி மோது கின்ற
சீற்றமான காற்றிலும்
ஆன மட்டும் அனலின் வெக்கை
அலைக்கழித்தல் செய்குதே..
கொஞ்சம் கூட கருணை நெஞ்சம்
சூரியனுக் கில்லையோ
மிஞ்சும் பேச்சு பேசி டாமல்
மிரட்டுவதும் நியாயமோ
விஞ்சி விஞ்சிப் பாயு மொளி
வியர்வைகளைப் பெருக்குதே
கொஞ்சும் பேச்சும் இனிய மொழியும்
நெஞ்சுவிட்டுப் பறக்குதே..
இன்னும் கூடும் என்று சொல்வர்
இருந்தாலும் பிழையிலை
பண்ணில் யாழை மீட்ட மீட்ட
பதறிவரும் பாடலாய்
விண்ணில் கொஞ்சம் வேக மாக
மஞ்சுகளைக் கூட்டியே
மின்னல் கொஞ்சம் மாரி கொஞ்சம்
கொஞ்சமேனும் பெய்திடு
(*மஞ்சு - மேகம்)
*
எனில் இந்த வெயில் பற்றி ப் பாடல்கள் பார்க்கலாமெனில் கொஞ்சம் தான் இருக்கின்றன..
*
பானுமதி கண்டசாலா – கள்வனின் காதலியில் பாடிய பாட்டு ..
*
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு
வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி
வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ?
ஸ்வர்க்கம் வேறுண்டோ?
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
இந்தக் காதலனுக்கு என்ன ஆசை..ஆனா அவ ஸ்மார்ட்டாக்கும்
* மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
*
இந்தப் பொண்ணு பாவம் நிலாக்காய்கிறதுன்னு பாடிக்கிட்டே வர்றச்சே இப்படிப் பாடுது..
காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதுமில்லையே
வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்..
*
இந்தக் காதலன் என்ன சொல்றான்
மாதவிக் கொடிபூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும்
மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே..
.. நல்லாத் தான் இருக்குய்யா (சாலமன்பாப்பையா வாய்ஸில்!)
*
எனக்குத் தெரிஞ்ச பழைய வெயில் பாட்டு இவ்வளவு தான்.. புது வெயில் நெறய இருக்கு.. ம்ம்
k
இந்தக் காலப் பாடல்களில் வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே என ஒரு பாட்டு உண்டு. அது எனக்குப் பிடிக்கும்...
*
gkrishna
12th September 2014, 12:40 PM
thanks guruji ragavender
chinnakkannan
12th September 2014, 12:52 PM
எதுக்குன்னு தெரியலை.. நானும் போட்டு வைக்கறேன்.. தாங்க்ஸ் ராகவேந்தர் ஜி :)
madhu
12th September 2014, 01:38 PM
சிக்கா... அந்தக் கால வெயில் இன்னும் சிலது இதோ
காவேரியில் இந்தப் பாட்டு
http://youtu.be/LkP5SCh71MY
பூம்புகாரில் ராஜஸ்ரீ (மாதவி) ஆடும் "தமிழ் எங்கள் உயிரானது" பாடலில்
"அந்தி வெயில் பட்டு உடல் பொன்னாகட்டும் - கண்டு
ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்"
அப்படின்னு உங்களுக்காகவே பாடி இருக்காங்களே !
"அந்தி வெயில் பெற்ற மகளோ" என்று டி.ஆர்.மகாலிங்கமும் "உச்சி வெய்யில் சூடு பட்டு உடம்பு கருத்தது.. இந்த ஊருக்காக உழைச்சு உழைச்சு கண்கள் சிவந்தது" என்று டி.எம்.எஸ்., சுசீலாவும் "கொஞ்சி வரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென அந்தி வெயில் நேரத்திலே மின்னும்" என்று பி.பி.எஸ்., சுசீலாவும் பாடி இருக்காங்களே...
அதுக்கப்புறம் டி.எம்.எஸ் பாடிய ஒரு பாட்டு ... எந்தப் படம் என்று மறந்து போச்சு..
மழையும் பெய்யுது மஞ்ச வெய்யிலும் காயுது
மண்ணோடு மழை சேர்ந்து மணம் வீசுது.. வசந்த மணம் வீசுது
இன்னும் நிறைய இருக்கலாம்... தேடணும்
gkrishna
12th September 2014, 02:20 PM
மாலையில் சூரியன் குளிகின்றது அது மதுவை கடலிலே குடிகின்றது
காலை வரை குடித்து குடித்து சிவகின்றது
என் கண்களும் அது போல் இருக்கின்றது
மழை வருவது மயிலுக்கு தெரியும்
gkrishna
12th September 2014, 02:21 PM
மஞ்சள் வெயில் மாலையிட்டே பூவே
gkrishna
12th September 2014, 02:22 PM
மஞ்சள் வெயில் மாலையிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் கட்டுதே
gkrishna
12th September 2014, 02:26 PM
http://tamilsongsbypriya.files.wordpress.com/2014/08/image7.jpg?w=150
பாடல்: மஞ்சள் வெயில் மாலையிலே
திரைப்படம்: காம சாஸ்திரம்
பாடியவர்கள்: டி.எல்.மகராஜன் & எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
மஞ்சள் வெயில் மாலையிலே மல்லிகைப்பூ சிரிக்குது
மஞ்சள் வெயில் மாலையிலே மல்லிகைப்பூ சிரிக்குது
மங்கை மனம் தெரிந்து கொண்டே மாணிக்கத்தேர் அழைக்குது
மங்கை மனம் தெரிந்து கொண்டே மாணிக்கத்தேர் அழைக்குது
மஞ்சள் வெயில் போன பின்னே இன்ப இரவு விழிக்குது
மஞ்சள் வெயில் போன பின்னே இன்ப இரவு விழிக்குது
மன்னன் மனம் புரிந்து கொண்டேன் கண்ணன் ரதம் அழைக்குது
மன்னன் மனம் புரிந்து கொண்டேன் கண்ணன் ரதம் அழைக்குது
பூமிதனில் வந்த புத்தம் புது நிலவோ
என் பூஜைதனில் வந்த அன்புத்திரு மலரோ
பூமிதனில் வந்த புத்தம் புது நிலவோ
என் பூஜைதனில் வந்த அன்புத்திரு மலரோ
புன்னகை ராகம் பாட செவ்விதழ் இனிக்க இனிக்க
புன்னகை ராகம் பாட செவ்விதழ் இனிக்க இனிக்க
புது மோகன கதைகள் கோடி அரங்கேறுது அரங்கேறுது
மஞ்சள் வெயில் மாலையிலே மல்லிகைப்பூ சிரிக்குது
மங்கை மனம் தெரிந்து கொண்டே மாணிக்கத்தேர் அழைக்குது
காம சாஸ்திரத்தின் இலக்கணம் நானன்றோ
காதல் சாஸ்திரத்தின் முன்னுரை நீயன்றோ
காம சாஸ்திரத்தின் இலக்கணம் நானன்றோ
காதல் சாஸ்திரத்தின் முன்னுரை நீயன்றோ
வசந்தகாலம் வந்தது வாழ்வு கனிந்து நின்றது
வசந்தகாலம் வந்தது வாழ்வு கனிந்து நின்றது
இளம் சாகசக்கதைகள் இன்று அரங்கேறுது அரங்கேறுது
மஞ்சள் வெயில் மாலையிலே மல்லிகைப்பூ சிரிக்குது
மங்கை மனம் தெரிந்து கொண்டே மாணிக்கத்தேர் அழைக்குது
மஞ்சள் வெயில் போன பின்னே இன்ப இரவு விழிக்குது
மன்னன் மனம் புரிந்து கொண்டேன் கண்ணன் ரதம் அழைக்குது
மஞ்சள் வெயில் போன பின்னே இன்ப இரவு விழிக்குது
மன்னன் மனம் புரிந்து கொண்டேன் கண்ணன் ரதம் அழைக்குது
இந்த காம சாஸ்திரம் படத்தை பற்றி தகவல்கள் இருக்கா மது சார்,சி கே சார் , வாசு சார்
கதை வசனகர்த்தா பாலமுருகன் இயக்கம் என்று நினைவு
ஜெய்கணேஷ் நடித்து வெளி வந்த படம்
Richardsof
12th September 2014, 02:42 PM
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா...
நல்லது கண்ணா கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..ராமா...ராமா..ஸ்ரீ ராமா...
காலோடு கால்கள் பின்ன
ஊர்கோலம் போகும் மேகம்
மாப்பிள்ளை பெண்ணோடு
பன்னீரில் நீராடச் செல்கின்றதோ
( நல்லது கண்ணே)
தேடும் உறவுகள் இரவை நினைந்து
வாடும் நிலை கண்டேன்
பாடும் பறவைகள் பனியில் விழுந்து
கூடும் சுவை கண்டேன்
தேவைகள் ஆயிரம்
பார்வையில் தீருமோ
( நல்லது கண்ணா)
மாலைப் பொழுதினில் மன்னனின் மார்பின்
மஞ்சள் பதியாதோ
காலைப் பொழுதில் கட்டி அணைத்துக்
கண்கள் சிவக்காதோ
நீண்ட நாள் வாழ்வினை
வேண்டினேன் வந்தது
( நல்லது கண்ணே)
Richardsof
12th September 2014, 02:43 PM
மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக
கோடானுகோடி தருக
(மஞ்சள்)
Richardsof
12th September 2014, 02:47 PM
MELLISAI MANNAR M.S.V SUPERB TITLE MUSIC.
http://youtu.be/3HvyBAAopq0?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw
Richardsof
12th September 2014, 02:56 PM
http://youtu.be/_BZkw4UNZfc
gkrishna
12th September 2014, 06:39 PM
பாடல்: மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
திரைப்படம்: சங்கரி
இசை: வி.குமார்
பாடியவர்கள்: ராஜ்குமார் பாரதி & வாணி ஜெயராம்
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித
பறவைகள் சொல்ல சொல்ல
மணிவிழி மயங்குது மலருடல்
தழுவுது மெல்ல மெல்ல
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித
பறவைகள் சொல்ல சொல்ல
மணிவிழி மயங்குது மலருடல்
தழுவுது மெல்ல மெல்ல
உதடு எனும் கதவுகளை
திறந்துவிடு திறந்துவிடு
அன்பே நான் தேன் குடிக்க ஹா
இரவுவரை பொறுத்து இரு
தனிமையிலே தனிமையிலே
மெதுவாக நான் கொடுக்க
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
எல்லாமே உனக்காகத்தான்
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித
பறவைகள் சொல்ல சொல்ல
மணிவிழி மயங்குது மலருடல்
தழுவுது மெல்ல மெல்ல
பழுத்திருக்கும் பழம் நழுவி
பாலில் விழ பாலில் விழ
இந்நேரம் சுவைக்க ஹா
அனலில் விழும் மெழுகு என
உருகுவதேன் உருகுவதேன்
பொன்மேனி நான் அணைக்க
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டுப்பிள்ளை நீ
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டுப்பிள்ளை நீ
தாயாகித் தாலாட்டு நீ
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித
பறவைகள் சொல்ல சொல்ல
மணிவிழி மயங்குது மலருடல்
தழுவுது மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல…மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல…மெல்ல மெல்ல
sss
12th September 2014, 07:03 PM
கிருஷ்ணா ஜி அவர்களே
மஞ்சள் வெயில் மாலையிலே - பாடலும் , ஜெய்கணேஷ் சீமா ((பெரிதாக இருக்குமே அதுதான் உதடு) ஆடலும்
https://www.youtube.com/watch?v=2XMH6SyG538
சந்திர ஜோதி கிளம்பிய மாதிரி - என்கிற பாடல் மலேசிய வாசுதேவன் மற்றும் டி.கே.கலா பாடியது..
ஜெய்சங்கர் மற்றும் சீமா இருவரும் ஆடும் பாடல்
https://www.youtube.com/watch?v=yRVS2JqKpPQ
gkrishna
12th September 2014, 07:07 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02104/sherif_solo_2104618g.jpg
“ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும் அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடம் இருந்தது. ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமிருந்து நான் பயின்றேன். கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.
கள் வியாபாரம் செய்பவன் கள் அருந்த மாட்டான். அதுபோல் கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா? கவிஞர் ஷெரீப் கறி வியாபாரம் செய்பவராக இருந்தாலும் இருப்பாரே ஒழிய புலால் சாப்பிடமாட்டார். ஷெரீப் புகை பிடிப்பதில்லை. நான் அவர் எதிரில் ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகை பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன்” என்று ஷெரீப்பின் நற்பண்புகளைப் பட்டியலிடுகிறார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பன்முகக் கலைஞன்
கவி கா.மு. ஷெரீப் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
11.08.1914 அன்று கீழத் தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம் என்ற கிராமத்தில், காதர்ஷா இராவுத்தர்-பாத்துமா அம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ஷெரீப். அவர் முறையாகப் பள்ளிக்கூடம் சென்று பயின்றவரல்ல. 5 வயது முதல் 14 வயதுவரை சொந்தமாகவே ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றார். தந்தையாரின் தூண்டுதல் காரணமாகத் தமிழ் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றார். இளமையிலேயே அவர் கவிதை இயற்றும் திறன் பெற்றிருந்தார்.
அவரது முதல் கவிதை 1933-ம் ஆண்டு பெரியாரின் குடியரசு நாளிதழில் வெளிவந்தது. அக்கவிதை பெரியாரைப் போற்றி எழுதப்பட்ட கவிதை. ஆரம்ப காலத்தில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளன. காதல் வேண்டாம், காதலும் கடமையும், கனகாம்பரம் ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புகளாகும். நல்ல மனைவி, விதியை வெல்வோம், தஞ்சை இளவரசி ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.
எழுத்து - பேச்சு - அரசியல்
‘சிவாஜி’ என்ற இதழின் துணையாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1948-ல் ‘ஒளி’ என்ற மாத இதழைத் தொடங்கினார். 1952-க்கும் 1969-க்கும் இடைப்பட்ட காலத்தில் சாட்டை, தமிழ் முழக்கம் ஆகிய இதழ்களை வெற்றிகரமாக நடத்தினார். ம.பொ.சி.யின் ‘செங்கோல்’ வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.
சென்னை எல்லீஸ் சாலையை ஒட்டிய பச்சையப்ப செட்டித் தெருவில் இருந்த தனது இல்லத்தில் ‘சீதக்காதி பதிப்பகம்’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியீட்டகத்தைத் தொடங்கினார். அதற்கு முன்னர் தமிழ் முழக்கம் என்ற பதிப்பகத்தை நடத்தினார். அதன் மூலம் தான் எழுதிய வள்ளல் சீதக்காதி வரலாறு, ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ், சீறாப்புராணச் சொற்பொழிவு, இறையருள் வேட்டல் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
தனது வாலிபப் பருவத்தில் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் ‘1942 வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டார். பின்னர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் சேர்ந்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டார். பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய உறவுகொண்டிருந்தார்.
1970-ம் ஆண்டுக்குப் பின் ஆன்மிகப் பாதைக்குத் திரும்பி சீறாப்புராணத் தொடர் சொற்பொழிவுகளைப் பாடகர் குமரி அபூபக்கருடன் இணைந்து தமிழகமெங்கும் நடத்தினார். சீறாப்புராணத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் உரைகள் எழுதினார்.
இறைவனுக்காக வாழ்வது எப்படி, இஸ்லாமும் ஜீவகாருண்யமும், இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடுகள், மகளே கேள், கண்ணகி, விபீஷணன் வெளியேற்றம் ஆகியன இவர் எழுதியுள்ள பிற நூல்கள். அமுதக் கலசம், ஆன்ம கீதம், ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ், இறையருள் வேட்டல், ஒளி, நபியே எங்கள் நாயகமே, மச்சகந்தி, பல்கீஸ் நாச்சியார் காவியம், மச்சகந்தி, களப்பாட்டு, நீங்களும் பாடலாம் இசைப்பாட்டு ஆகியன இவரது கவிதைத் தொகுதிகள்.
திரைத் தமிழில் சாதனை
கவி கா.மு.ஷெரீப் தமிழக மக்களிடையே மிகவும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது திரைப்படப் பாடல்களே என்றால் அது மிகையில்லை. நாநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை அவர் இயற்றியுள்ளார். அவரது முதல் பாடல் இடம்பெற்ற படம் ‘பொன்முடி’. காலத்தால் நிலைத்து நிற்கும் கா.மு.ஷெரிப்பின் பாடல்களை இங்கே பட்டியலிட இடம்போதாது. என்றாலும் சில:
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…, வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன், நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?, அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா, உலவும் தென்றல் காற்றினிலே, போன்ற பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கவில்லை.
“ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே... என்ற முதலாளி திரைப்படத்தில் வரும் பாடலை கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு அவர்கள் அந்தப் பாடலிலே ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக்கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன். இலக்கியத்துக்கு நிகராகத் திரைப்படப் பாடல்களும்கூட நிலைத்து நிற்கமுடியும் என்பதற்கு அண்ணன் கா.மு.ஷெரீப் எழுதிய பல பாடல்களை எடுத்துக்காட்டலாம்.” என்று புகழாரம் சூட்டினார் மு.கருணாநிதி.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குன்னாகம் என்ற ஊரிலுள்ள தேநீர்க் கடையொன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அப்போது அங்கிருந்த வானொலிப் பெட்டியில் ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை’ என்ற கவியின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட அந்த இளைஞன் உணர்ச்சி வயப்பட்டு “கெட்டவருடன் சேர்ந்து பெற்ற தாயின் மனதை நோகடித்தவன் நான்; நன்றி கெட்டவன்” என்று குமுறி அழுதிருக்கிறார்.
“இப்படி திடீரென்று தேநீர்க் கடையில்தான் உன் தவறு புரிந்ததா? “ என அவனிடம் கடைக்காரர் கேட்டபோது அதற்கு அவன், “ஆமாம், இந்தப் பாடல் என் மனத்தை மாற்றிவிட்டது. இனி என் தாயை உயிரினும் மேலாகக் கொண்டாடிக் காப்பாற்றுவேன். உங்களுக்கு என் நன்றி” என்று கூற, அதற்கு அந்தக் கடைக்காரர், “உன் நன்றிக்கு உரியவர் தமிழ் முழக்கம் கா. மு. ஷெரிப். அவர்தான் இந்தப் பாடலை எழுதியவர்” என்றாராம்.
சிலோன் விஜயேந்திரன் எழுதியுள்ள ‘அறுபதாண்டு காலத் திரைப்பாடல்கள்’ என்ற நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” என்றார் அவர். அவர் சொன்னதற்கேற்ப இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது. இந்தப் பாடல் ‘அன்னையின் ஆணை’ படத்தில் இடம் பெற்றது.
பாடலாசிரியராக புகழ்பெற்ற அதேசமயம் அவர் பெண் தெய்வம், புது யுகம் படங்களுக்கான வசனத்தையும் எழுதினார். கா.மு. ஷெரீப் தனக்கென ஒரு கொள்கை வகுத்திருந்தார். “அழைத்தால் வருவோம், வாய்ப்பு கொடுத்தால் பாடுவோம், யாரையும் சார்ந்து வாழ மாட்டோம், யாரிடமும் எதையும் கேட்க மாட்டோம்” என்ற கொள்கைப்படியே வாழ்ந்த அவர் 1994-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி காலமானார். தமிழ்த் திரையிசையும், தமிழ்கூறு நல்லுலகும் கவி கா.மு.வை என்றென்றும் மறக்காது.
http://www.youtube.com/embed/U7LFlk8skas?
gkrishna
12th September 2014, 07:18 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02104/woww_2104561g.jpghttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQfD3IHykeRiQBhIO9AGgJwyoJnWD6b8 OZjtCcPImL99mmVcZlyhttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTs63sNB5TVfH0z6-KjpRIkGZVzAdoR8BARfFLQ-K71aeXESA9Fhttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQNEjo79IsGDjj6m1MAVZCY2peEvf9P8 USFTDdemeAUpPXKoB2v
தமிழ் சினிமாவின் கதைப்போக்கைத் தடம் மாற்றியவர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். உணர்ச்சிபூர்வமான கதைகளைப் படமாக்கியது மட்டுமல்ல, நேர்த்தியான திரைக்கதைகளில் தமது கதாபாத்திரங்களைப் பொருத்தியவர் அவர். கதாபாத்திரங்களின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க மிகப் பொருத்தமான நட்சத்திரங்களை அவற்றுக்குத் தேர்வு செய்தார்.
ஸ்ரீதரின் நம்பிக்கையைப் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் தேவிகா. ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் சோகச் சுமையை ஏற்றி வைத்தது கல்யாண்குமார் – தேவிகா ஜோடி. அந்த இணைக்கு ரசிகர்கள் கொடுத்த இடத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், அவர்களை அடுத்த ஆண்டே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் மீண்டும் இணைத்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்ரீதர் இயக்கத்தில் அடுத்து தேவிகா நடித்த ‘சுமைதாங்கி’ படமும் மறக்க முடியாத படமானது.
பாடியது சுசீலாவா? தேவிகாவா?
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் உருவான பல பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்றவை. தேவிகா நடித்த பெரும்பான்மையான படங்களில் இந்த மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அமைந்துபோயின. “ நான் பாட வைத்தது சுசீலாவையா இல்லை தேவிகாவையா?” என்று எம்.எஸ்.வி.யே வியந்து கேட்கும் அளவுக்குப் பாடல்களுக்குத் தேவிகா வாயசைக்கிறாரா அல்லது நேரடியாகப் பாடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்தது. அந்த அளவுக்குச் சிறப்பானதொரு நடிப்பைப் படத்திற்குப் படம் வெளிப்படுத்தினார் தேவிகா.
நாட்டியப் பேரொளி பத்மினியும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நீயா, நானாப் போட்டியிட்டு வந்த 60களில் தனக்கு யாரும் போட்டியில்லை என்று தனித்து வெற்றிக்கொடி நாட்டியவர் தேவிகா. தெலுங்கு தேசத்திலிருந்து தமிழுக்கு வந்த அவர், இரு மொழிகளிலும் சுமார் 150 படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தேவிகா என்ற நட்சத்திரத்தின் ஒளிவட்டம் இல்லாமல் கதாபாத்திரமாகக் கூடு பாய்ந்துவிடும் மாயத்தைச் செய்து காட்டினார்.
பானுமதியின் தேர்வு
முதலாளி படத்தில் எளிய குடும்பத்தின் வள்ளி என்ற பெண்ணாகத் தோன்றிய தேவிகாவின் அழகில் சொக்கிப்போனார்கள் அன்றைய ரசிகர்கள். ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்று டி.எம்.எஸ் கம்பீரமாகப் பாடிய பாடலுக்கு எஸ்.எஸ். ராஜேந்திரன் ரொமாண்டிக் நடிப்பில் பின்ன, அந்தப் பாடலில் தேவிகா காட்டும் வெட்க அழகுக்குக் கொட்டிக் கொடுக்கலாம். அதே படத்தில் வரும் ‘குங்குமப் போட்டுக்காரா..’ பாடலில் காதலனைப் பகடிசெய்யும் சுட்டித்தனம் எந்தப் பெண் நட்சத்திரத்தையும் நினைவூட்டாத தனி வண்ணம் கொண்டது.
“சொன்னது நீதானா” “கங்கை கரைத் தோட்டம்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “அமைதியான நதியினிலே”, “அலையே வா... அருகே வா”, “பாலிருக்கும் பழமிருக்கும்”, “கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே”, “இரவும் நிலவும் வளரட்டுமே”, “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு”, “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” போன்ற பாடல்களுக்கு அவர் காட்டும் முக நடிப்பில் சொக்கிப்போகாத ரசிகர்களே இருக்க முடியாது.
15 வயதில் அறிமுகம்
பிரமீளா தேவி என்ற இயற்பெயருடன் ‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்குப் படத்தில் 1956-ல் 15 வயதில் அறிமுகமாகியிருந்தார் தேவிகா. அதே ஆண்டு பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கிய ‘மணமகன் தேவை’ படத்துக்கு இரண்டாவது கதாநாயகி தேவைப்பட்டார். படத்தின் நாயகன் சிவாஜி. நாயகி பானுமதி. இரண்டாவது கதாநாயகியைத் தேர்வு செய்யும் பொறுப்பை மனைவி பானுமதியிடம் ஒப்படைத்தார் இயக்குநர். அன்று பானுமதியின் சாய்ஸாக இருந்தவர் பிரமீளா தேவிதான். அந்தப் படத்தில் நடித்தபோது பானுமதி தந்த அறிவுரையை ஏற்று நடிகர்
எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவில் சேர்ந்தார். சினிமாவில் நடித்துவிட்டு மேடை நாடகத்துக்குச் செல்வதாவது என்று நினைக்காமல் முத்துராமனுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார். நாடகத்தில் பிரமிளா தேவியைப் பார்த்த பட அதிபர் எம்.ஏ. வேணு முதல் முழுநீளக் கதாநாயகி வாய்ப்பைக் கொடுத்தார்.
முக்தா வி. சினிவாசன் இயக்குநராக அறிமுகமான அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்தார். 1957-ம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த இப்படம், ஜெமினி - சாவித்ரி நடிப்பில் வெளியான சௌபாக்கியவதி படத்தை வசூலில் தோற்கடித்தது. சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. பிரமிளா தேவி என்ற பெயரையும் தேவிகா என்று மாற்றிக்கொண்டார். அந்தப் படம்தான் ‘முதலாளி’. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த தேவிகா, சிவாஜி கணேசன் ஜோடியாகப் பல படங்களில் இணைந்து நடித்தார். ‘பாவமன்னிப்பு’, ‘பந்தபாசம்’, ‘அன்னை இல்லம்’, ‘குலமகள் ராதை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சாந்தி’, ‘நீலவானம்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நீலவானம் படத்தில் அன்று தேவிகாவின் நடிப்பைப் புகழாத பத்திரிகைகளே இல்லை.
குடும்பப்பாங்கு நட்சத்திரம்
கர்ணன் படத்தில் கர்ணம் குருசேஷத்திரப் போர்க் களத்துக்குப் புறப்படும் காட்சியில் மஞ்சள் நிறப் பட்டாடையில் நீராடிய கூந்தலைத் தளையவிட்டபடி தேவிகா வரும் அழகே தனி. ஆனால் அந்தக் காட்சியில் தேவிகா காட்டும் தவிப்பு இன்று பார்த்தாலும் பதறவைக்கும். நடிகர் திலகத்தோடு மட்டுமல்ல ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட அன்றைய முன்னணிக் கதாநாயகர்கள் பலருடனும் இணைந்து நடித்த தேவிகா, எம்.ஜி. ஆருடன் ‘ஆனந்த ஜோதி’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார். அதில் சிறுவன் கமலஹாஸன் நடித்திருந்தார்.
இயக்குநர் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தேவதாஸுக்கும் தேவிகாவுக்கும் காதல் பிறந்தது. 1972-ம் ஆண்டு வாழ்விலும் இணைந்தது இந்த ஜோடி. தேவதாஸ் - தேவிகா தம்பதியின் ஒரே மகள் நடிகை கனகா.
தனது கணவரை இயக்குநர் ஆவதற்காக ‘வெகுளிப்பெண்’ என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார் தேவிகா. அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தேவிகாவுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் கடைசிவரை கதாநாயகியாகவே வாழ்ந்து கடந்த 2002-ல் மறைந்த தேவிகா, குடும்பப் பாங்கான நாடகத் தன்மை மிகுந்த கதைகளில் நடிப்புச்சுமை மிகுந்த கதாபாத்திரங்களைத் தன் தோள்களில் தாங்கிய சுமைதாங்கியாக வலம் வந்தார்.
படங்கள் உதவி: ஞானம்
Thanks to Tamil Hindu 12/9/14
ராணி லலிதாங்கி திரை படத்தில் தேவிகா அவர்களை பிரமீள தேவி என்ற பெயரில் டைட்டில் கார்டு பார்த்த நினைவு. கட்டுரையாளர் அந்த படத்தை குறிப்பிடவில்லை
RAGHAVENDRA
12th September 2014, 07:38 PM
மிக்க நன்றி ராஜேஷ், மது, கோபால், சிக, கிருஷ்ணாஜி எஸ்வீ மற்றும் நண்பர்களுக்கு.
மஞ்சள் வெயில் என்றாலே என் மனதில் உடனே நினைவுக்கு வருவது இசைச் சித்தர் பாடி இசை மேதை ஜீயார் இசையமைத்து நடிகர் திலகத்தின் காவேரி திரைப்படத்திலிருந்து இப்பாடல் தான்..
http://www.youtube.com/watch?v=LkP5SCh71MY
இன்னும் பல்லாண்டுகளானாலும் சலிக்காத பாடல்...
gkrishna
12th September 2014, 07:50 PM
1979-ல் வெளியான படம் ‘நான் வாழ வைப்பேன்’. அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அதில், ‘என்னோடு பாடுங்கள்... நல்வாழ்த்துப் பாடல்கள்...’ என்று ஒரு பாட்டு. எஸ்.பி.பி. பாடிய பாட்டு அது. அந்தப் பாட்டு சிவாஜிக்கு என்பதால், முதலில் அதை டி.எம்.எஸ்ஸை வைத்து ரெக்கார்ட் செய்தார்கள். பிறகு, அது சரியாக இல்லை என்று எஸ்.பி.பி-யைப் பாட வைத்து, அதைத்தான் படத்திலும், இசைத்தட்டிலும் வெளியிட்டார்கள்.
இதில் டி.எம்.எஸ்ஸுக்குக் கோபமான கோபம். இருக்கத்தானே செய்யும்? அவர் கச்சேரிக்காக இலங்கைக்குப் போன இடத்தில் (மதுரை போல அங்கே டி.எம்.எஸ். ரசிகர்கள் அதிகம்.) இந்தத் தகவலைச் சொல்லி, அதே பாடலைப் பாடி, “நீங்களே சொல்லுங்க. இது நல்லாருக்கா, எஸ்.பி.பி. பாடியது நல்லாருக்கா?” என்று கேட்டாராம். ரசிகர்கள் ஏக மனதாக டி.எம்.எஸ். பாடியதுதான் நன்றாக உள்ளது என்று சொன்னார்களாம்.
இப்படியொரு செய்தியை அந்தக் காலத்தில் படித்து இருக்கலாம்
டி.எம்.எஸ்ஸுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
எஸ்.பி.பி-யின் பாடல் அளவுக்குச் சிறப்பானதா இளையராஜா அன்று எடுத்த முடிவு சரியா தவறா
என்றாலும், அதைக் கேட்கும்போது சிவாஜியின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை மனக் கண் முன் கொண்டு வர முடிந்தது.
ஒரு வேளை டி.எம்.எஸ்., இளையராஜா இருவரும் அன்றைக்குக் கருத்தொருமித்து, விட்டுக் கொடுத்து, இன்னும் ஓரிரு தடவை முயன்றிருந்தால், நிச்சயம் டி.எம்.எஸ்ஸிடமிருந்து இதை விடச் சிறப்பான பாடல் நமக்குக் கிடைத்திருக்கக்கூடும்!
(டி.எம்.எஸ். பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடலைக் கேட்க விரும்பினால், கீழே உள்ள வரியில் சொடுக்கவும்.)
இப்பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்!
http://www.muziboo.com/mp3/ennodu-padungal-0/
https://www.youtube.com/watch?v=Evy-0ZwCkYE
எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில்
https://www.youtube.com/watch?v=pzO8BBL_Zu8
தகவல் தந்து உதவிய ஆனந்த விகடன் ரவி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி
RAGHAVENDRA
12th September 2014, 07:51 PM
உள்ள(த்)தை அள்ளித்தா
இன்று நாம் பகிர்ந்து கொள்ள இருப்பது..
https://www.mediafire.com/?vsrxqwcb4wqdcn9
தெய்வாம்சம் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் அற்புதமான வளைகாப்புப் பாடல், ஈஸ்வர மற்றும் ஜானகியின் குரல்களில்..
JamesFague
12th September 2014, 09:00 PM
Mesmerising voice of the one & only Dr Yesudoss from the movie Swami. Enjoy the beautiful melody.
http://youtu.be/x5AantVDn4E
JamesFague
12th September 2014, 09:04 PM
These are all the songs which are called Madura Ganam. The one & Only voice of Dr Yesudoss. What a melody.
http://youtu.be/l6rYuCzxT9I
chinnakkannan
12th September 2014, 10:23 PM
வாழ்க்கையில் சில அவஸ்தையான தருணங்கள் தமிழில் அன்கம்ஃபர்டபிள் சிச்சுவேஷன்ஸ் எப்போதும் உண்டு.. உடல் உபாதையால் வரும் அவஸ்தையை விடுங்கள்…வேறு என்ன அவஸ்தைகள்..பெரிய லிஸ்டேபோடலாம்..
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ..போன்ற பாடலகள் மனதிற்கு என்ன கொடுக்கின்றன....யா மோடிவேஷனல் தாட்ஸ்.. சற்று மனதை உயர்த்தி விடுகின்றன..உயர்த்தி? யெஸ் லிஃப்ட். செய்கின்றன தானே..அதுவும் இந்த லிஃப்டில் செல்லும் தருணங்கள் இருக்கிறதே..வெகுகுறுகிய நிமிடங்கள்..
உடன் வருவது யார் என்று தெரியாது..யாரும் புன்னகைக்கக் கூட மாட்டார்கள்..அதுவும் நேரத்தைப் பொறுத்து.. காலை நேரம் என்றால் என்னவோ உலகமே இவர்கள் தலையில் இயங்குவது போன்ற நினைப்பு..ஆணென்றால் டையை அட்ஜஸ்ட் செய்துகொண்டு லிஃப்ட் எண்களில் கண் இருக்கும்.. பெண் என்றால் என்னவோ கண்ணகியின் ஒன்று விட்ட அக்கா அல்லது தங்கை போல கொஞ்சம் ஒதுங்கி.. நீயார் நான்யார் என்று அலட்சியப்பார்வை..அலலது என்ன விதமான எண்ணங்கள் எனக் கண்டே பிடிக்க முடியாது..
ஒரு பெண் என்ன சொல்கிறாள்..
நீ யாரோ என்னவோ
தெரியாது..
நீ என்னைப் பார்க்கிறாயா..
நான் உன்னைப் பார்க்கவில்லை..
மேலிருக்கும் விளக்கில் எவ்வளவு தூசி..
நடுவில்
சரியாய் அழுத்திய
ஆறு புன்னகைக்க, ஓ
நீ எட்டா.
. நல்ல எண் இல்லையேப்பா..
கீழே பார்த்தால்
கறுப்பு ஷூ தான் சற்றே வெளுப்பாய்..
சோம்பேறியோ..
என்ன செண்ட் பார்ஷேவா பாய்சனா..
நம் மூச்சுக் காற்றுக்கள்
நட்புடன் சற்றுத் தள்ளியே கலந்து
ககன வெளியில் செல்கின்றன..
ஓரக்கண்ணால் நீலச்சட்டை எனத் தெரிகிறது..
கடங்காரா
தனியாக வந்திருந்தால்
கண்ணாடியில் முகம் திருத்தியிருப்பேன்..
லேசாய் முகம் பார்க்கையில்
கடுகடுவென இருக்கே..
ஆஃபீஸ்ல நல்ல டோஸா..
வேணும் உம்மணா மூஞ்சிக்கு..
டபக்கென லிஃப்ட் திறக்க
தொலைந்து போடா டெம்ப்ரவரி நண்பா..!
*
மனக் குதிரையைப் புல்மேயவிடாமல் ஷ்ஷீ வா பா பா எனக் கூப்பிட்டு சமர்த்தோன்னோ கொஞ்சம் பின்னால் ஓடுப்பா என வேலை வாங்கி பல வருடங்கள் பின்னால் சென்றால்…
மதுரை அபிராமி தியேட்டர்..அந்த ஹிந்திப் படம் .. ஹிந்திப் படமெல்லாம் வம்படியாய்ப் பார்க்க வைத்தது என் நண்பன் ரகுராமன்.. அழைத்துச் சென்ற படம் இது..அதற்குப் பிறகு அதே படத்தை க் குறைந்த பட்சம் இருபது தடவையாவது பார்த்திருப்பான் ஓரிரு வருடங்களில்.. ஏனெனில் அவன் அப்போது காதல் வயப்பட்டிருந்தான்..
அதில் வரும் லிஃப்ட் பாட்டு..
இளம் இளம் வாலிப கமலஹாசன்.. கொஞ்சம் ஷார்ப் மூக்கு ஷார்ப் கண்ணு ஷார்ப்… ம்ம் உடல் என இருந்த ரத்தி அக்னிஹோத்ரி..ஏக் துஜே கேலியே.. (ஹப்பா பாட்டுக்கு வந்தாச்சு..)
மேரே ஜீவன் ஸாத்தி ப்யார்கியே ஜாய் ஜவானி திவானி
கூப் சூரத் ஸித்தி படோசன் சத்யம் சிவம் சுந்தரம் பென்ஹர்..(ஓ இங்க்லீஷ்)
என அவன் பாடிப் பாடி எனக்கு மனப்பாடம் ஆகி விட்டது..! விடேண்டா என்று நழுவி ஓடியிருக்கிறேன்..
பாட்டு நன்றாகத் தான் இருந்தது சல்திகா நாம் காடி பர்திகா நாம் தாடி மேப்யார்கிஸிஸோ..ஹோகயே ஜானேமன் பந்தன் ..எனப் பாடும் போது விழுந்து விழுந்து கண்ணாடித் தம்ள்ர்களில் விழுந்த பனிக்கட்டிகளைப் போலக் குலுங்கிக் குலுங்கி ரத்திப்பெண் சிரிக்கும் சிரிப்பு.. அழகு தான்..
பாடலில் ஒன்ற முடிந்ததற்கு இன்னுமொரு காரணம் எஸ்.பி.பி.. படம் ஏக் து ஜே கேலியே..பாலச்சந்தர் டைரக்ஷ்ன்..
ஆனால் அந்தப் படத்தில் எனக்கு ஹம்தும் தோனோ ஜப் மில் ஜாயேங்கே பிடிக்கும் நயா இதி ஹாஸ் பனாயேங்கே எனப் பாடி நிறுத்தி இதுல ஏண்டா ஹார்ஸ் வருது அதுவும் இதி ஹார்ஸ்னா என்ன என ரகுவிடம்கேட்டு அவன் தலையில் அடித்துக் கொண்டு..ஹார்ஸ்லாம் இல்லை இதிஹாஸ்..இதிகாசம் நயா இதிகாஸ் புது இதிகாசம் எனச் சொல்லியிருக்கிறான்..!
லிஃப்ட் பாடல்கள் என்று பார்த்தால் விரல் தான் விட முடியும்..எண்ணுவதற்கு.. போன டிகேட் பஞ்ச தந்திரம் என்னோடு காதலென்று சொல்லி வைத்தது நீயா இல்லை நானா வில் கொஞ்சூண்டு லிஃப்ட் வரும்..பாடலிலும் வரும். பாடல் வெகுசுமார்..
தேரேமேரே பீச் மே.. மே ப்யார்கலி..சலாம், எல்லாம் நல்ல பாடல் ஏக்துஜே கேலியேவில்.. ஆனால் சிலமாதங்க்ளுக்கு முன் அதைப் பார்த்த போது ஏனோ முழுக்கப் பார்க்கத் தோன்றவில்லை..ஒருவேளை எனக்கும் ரத்திக்கும் வயதானது காரணமாய் இருக்கலாம்!
எஸ்.வாசுதேவன் சாரா, எஸ்.வி சாரா மதுண்ணாவா பாடல்களைத் தரப் போவது யார்?:)
chinnakkannan
12th September 2014, 10:46 PM
கா.மு.ஷெரீப்., தே..வி..கா பற்றிய இடுகைகளுக்கு நன்றி கிருஷ்ணா சார்..
மஞ்சள் வெயில் மாலையிலே அண்ட் அதர் மஞ்சள் வெயில் லிரிக்ஸ்க்கு கிருஷ்ணாசாருக்கு நன்றி.. வீடியோவிற்கு எஸ் எஸ் எஸ் சாருக்கு நன்றி..
உசிலம்பட்டிப் பகக்த்துல பேயம்பட்டி சீமா ஊராமா.. (சந்திர ஜோதி கிளம்பிய மாதிரி பாடல்.. அகெய்ன் எஸ் எஸ் எஸ் சாருக்கு நன்றி..
மஞ்சள் வெயில் மாலையிலே தாங்க்ஸ் மதுண்ணா ராகவேந்தர் சார்..எப்படி மறந்தேன்..
//"அந்தி வெயில் பட்டு உடல் பொன்னாகட்டும் - கண்டு
ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்"
அப்படின்னு உங்களுக்காகவே பாடி இருக்காங்களே !// மதுண்ணா நா ரொம்ப சமர்த்தாக்கும்!
எஸ்வி சார்.,. மஞ்சள் முகமே வருகவிற்கும் சீதா சீதா மற்ற பாடல்களுக்கும் தாங்க்ஸ்..
கிருஷ்ணா ஜி.. என்னோடு பாடுங்கள்.. அது எஸ்.பி.பி தான் எனக்குப் பிடித்திருக்கிறது..
க்யாக்ரூ ஸஜினி.., சாந்த் ஜைஸே முகிடே பே பிந்தியா.. இரு பாடல்க்ளுக்கும் நன்றி எஸ்.வாசுதேவன் சார்..
rajraj
13th September 2014, 03:14 AM
க்யாக்ரூ ஸஜினி....
chinnakkaNNan: Listen to Bade Ghulam Ali Khan singing 'Kaa Karun Sajani Aaye Na Baalam...' :)
Richardsof
13th September 2014, 05:36 AM
''பூலோகம் '' தந்த '' சின்ன கண்ணன் '' - தமிழில் ''யானை '' பலத்துடன் கவிதைகள் படைத்து தமிழ் நடையில் ரசனைகள் நிறைந்த கவிதைகள் - காதல் மொழிகள் -இலக்கியம் - சினிமா - பாடல்கள் என்று ஆயிரமல்ல .......
5000 பதிவுகளை அள்ளி தந்த வள்ளல் . என்று மையம் திரி பெருமை பட்டு கொள்கிறது . கண்ணனின் இந்த சாதனைக்கு
இனிய வாழ்த்துக்கள் .மதுர கானம் திரிக்கு இன்று ''சின்ன கண்ணன் - 5000'' என்பது பொருத்தமாக உள்ளது .
http://youtu.be/XM9aIhxNCDU
Gopal.s
13th September 2014, 06:39 AM
சின்ன கண்ணன் ,
பாராட்டுக்கள். நிறைய பாட்டுக்கு பாட்டு ஜல்லி என்பதை கழித்தாலும்(சுமார் 3000), சும்மா cut &Paste ,பாடலை திருப்பி lyrics முழுக்க எழுதுவது என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல் ,அத்தனை பதிவுகளும் அசல்,சுவை,நகைச்சுவை,இலக்கிய தரம்,எதிர்பாரா தன்மை கொண்டவை. நான் ரசித்தே வந்துள்ளேன். (என்ன ஒன்று ,திடீரென்று ,ஹா காந்தியடிகள் செத்துட்டாரா ரீதியில் பதிவுகள் மட்டும் கொலை வெறி தூண்டும்)
வாழ்த்துக்கள்.:-D
Russellmai
13th September 2014, 07:44 AM
சின்னக்கண்ணன் சார்,
இந்த திரியில் 5000 பதிவுகள் மேற்கொண்டமைக்கு எனது
பாராட்டுக்கள்.
கோபு
Gopal.s
13th September 2014, 10:36 AM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-4.
ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.
எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )
எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு மூன்று உதாரணங்கள் .
1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?
2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.
3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.
4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)
எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.
இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.
(தொடரும்)
chinnakkannan
13th September 2014, 10:45 AM
ஹையாங்க்.. வந்துட்டேன்..:)
ஓ.. ஃபர்காட் டு ஸே குட்மார்னிங்க்.. குட்மார்னிங்க் ஆல்..:)
குளித்து விட்டு சமர்த்தாய் பக்கத்து பில்டிங்கில் இருக்கும் ஓமான் எக்ஸ்ப்ரஸ் போய் வடை, கீ மசாலா ரோஸ்ட் ஆர்டர் செய்தால் வழக்கத்துக்கு மாறாக சூடான வடை, தமன்னாவின் புன்சிரிப்பைப் போல சிவந்த இளம் முறுவலாய் ம.தோசை வந்த போதே நினைத்தேன்..அட நாள் நன்றாக இருக்கப் போகிறது என்று..
வந்தால் எஸ்வி சார்.. மிக்க நன்றி.. கண்ணன் எனக்கொரு பிள்ளை பாட்டுக்கும்.. இன்னும் வெகு தூரம் போகவேண்டும் ஓகே கொஞ்சம் ஆங்கிலத்தில் மாற்றி ஐ ஹேவ் டு கோ எ லாங்க் டிஸ்டன்ஸ் சார்..(பைக் கொஞ்சம் தரேளா!)
கோபால் சார்.. மிக்க நன்றி தங்கள் பாராட்டுக்களுக்கு….ஜல்லி அடிப்பதைத் தவிர்க்கவே இயலாது தான் இல்லையா..
இது என் கொள்ளுத் தாத்தா
நடந்த சாலை
பின் என் தாத்தா சைக்கிளில்
என் அப்பா மொபெட்டில்
நான் பைக்கில்
என் பையன் காரில்..
அதே சாலை தான்
காலங்கள் மாறத்
தொடரத் தான் செய்கிறது பயணம்..
என முன்பு ஜல்லி என்ற தலைப்பில் எழுதிப் பார்த்தது நினைவுக்கு வருகிற்து ஒன்ஸ் அகெய்ன் தாங்க்ஸ்..
கோபு சார்.. அவ்வப்போது நீங்கள் இடும் லைக்ஸ் அண்ட் தாங்க்ஸ் ஒரு மிகப் பெரிய ஆதரவு என்பது தெரியுமா உங்களுக்கு... மிக்க நன்றி..
rajeshkrv
13th September 2014, 11:00 AM
காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே
மிகச்சிறந்த பாடகியான ஸ்வர்ணலதாவின் நினைவு தினம். அவர் விட்டு சென்ற இடம் வெற்றிடமே ..
அவர் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது 2 பாடல்கள்
https://www.youtube.com/watch?v=v3sqYoUvNEg
https://www.youtube.com/watch?v=Ekb34OiX_O4 ( i rate this even more than porale ponnuthayee)
gkrishna
13th September 2014, 11:45 AM
[QUOTE=chinnakkannan;1163970]
காலை வணக்கம்.
அன்பு நண்பர் சின்னகண்ணன் அவர்களுக்கு
உங்கள் 5000 பதிவு சாதனைக்கு
பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர்கள் சிலர்,குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் , செண்பக பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்க தான் எழுதியதை தானே கொண்டு வராமல் ஒரு ஏழை புலவனிடம் கொடுத்து தமிழ் சங்கத்தில் வாசிக்க வைத்த சிவபெருமான்,சிவ பெருமானின் கோபத்திற்கு ஆளாகி பொற்றாமரை குளத்தில் சாம்பலாகி கிடந்த தமிழ் சங்கத்தின் தானை புலவர் நக்கீரன்,சிவ பெருமான் எழுதிய பாடலை கொண்டு கொடுத்து 1000 பொற்காசுகள் பரிசு பெற்ற தருமி புலவர் இப்படி பலவித கதாபாத்திரங்கள் நிறைந்த திருவிளையாடல் புராணம் நீங்கள் படித்து இருப்பீர்கள். சென்னைக்கு அருகில் இருக்கும் குன்றத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த சேக்கிழார் அவர்கள் எழுதியது. அந்த திருவிளையாடல் புராணம் போல் உங்கள் எழுத்து நடையில் சங்க கால பாடல்களின் அடிசுவடு நிறைய காண கிடைகின்றது. இது போல் மென்மேலும் பல பதிவுகள் எழுதி பல்வேறு சாதனைகள் புரிய உண்மையான வாழ்த்துகளை வழங்குகிறேன்.
திருவிளையாடல் என்றவுடன் நினைவுக்கு வருகிறது .
'பாட்டும் நானே பாவமும் நானே' கௌரி மனோஹரி ராகம் என்று நினைவு.சிலர் இதை கானடா ராகம் அடிப்படையில் அமைந்த பாடல் என்றும் சிலர் ஆபேரி ராகம் அடிப்படையில் அமைந்த பாடல் என்றும் சொல்வார்கள். ராகம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் உறுதி செய்யலாம்.
இந்த பாடலை எழுதியவர் கா மு ஷெரீப்பா அல்லது கண்ணதாசனா ?
ஜெயகாந்தனின் 'ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் ' புத்தகத்தில் பக்கம் 119-121 இந்த பாடலை எழுதியவர் கா மு ஷெரீப். ஆனால் திரை படத்தில் கண்ணதாசன் பெயரில் வெளி வந்தது என்று எழுதி உள்ளார்.
நன்றி ராஜேஷ் சார்
அருமையான காலை வணக்கம் .
பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி
gkrishna
13th September 2014, 12:02 PM
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஸ்வர்ணலதா (37). இவர் 1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி மெல்லிசை மன்னரால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.
எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 1990ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... பாடல்தான் இவரை பிரபலபடுத்தியது. அதேபோல அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... பாடல் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் ஸ்வர்ணலதாவின் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.
நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி 12/09/2010 அன்று காலமானார்
ஸ்வர்ணலதாவின் ஹிட்ஸ்களில் சில...
ஆட்டமா தேரோட்டமா (கேப்டன் பிரபாகரன்)
போவோமா ஊர்கோலம் (சின்ன தம்பி)
மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
அடி ராக்கம்ம கையத் தட்டு (தளபதி)
அந்தியில வானம் (சின்னவர்)
உசிலம்பட்டி பெண்குட்டி (*ஜென்டில் மேன்)
மலைக்கோயில் வாசலிலே... (வீரா)
மாடத்திலே கன்னி மாடத்திலே (வீரா)
என்னுள்ளே.. என்னுள்ளே (வள்ளி)
உளுந்து விதைக்கையிலே... (முதல்வன்)
எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே)
முக்காலா முக்காபுலா (காதலன்)
பூங்காற்றிலே உன் சுவாசத்தில்... (உயிரே)
அக்கடா நாங்க (இந்தியன்)
அன்புள்ள மன்னவனே (மேட்டுக்குடி)
குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)
மெல்லிசையே... (மிஸ்டர் ரோமியோ)
கட்ட கட்ட நாட்டு கட்ட (ஜெமினி)
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா (உடன்பிறப்பு)
ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஜோடி)
அஞ்சாதே ஜீவா (ஜோடி)
காதலெனும் தேர்வெழுதி... (காதலர் தினம்)
முத்தே முத்தம்மா... (உல்லாசம்)
மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் (மே மாசம்)
ஆர்ப்பரிப்பில்லாத மெலிதான இசையைக் கடந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஸ்வர்ணலதாவின் அந்த சோக நாதம். "அலைபாயுதே" படத்து "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாட்டு அதே அலைவரிசையில் பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு வைரம். "காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாட்டில் ஸ்வர்ணலதாவுக்கு ஜோடி கட்டி அவரை இன்னொரு வடிவிலும் தன் இசையால் நிரப்பியவர் ரஹ்மான்.
இசைஞானி இளையராஜாவுக்கு எண்பதுகளின் முதல் வரிசைப்பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றீடாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா. "குரு சிஷ்யன்" படத்தில் வரும் "உத்தமபுத்திரி நானு" என்ற பாடல் தான் ராஜாவின் பட்டறையில் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. சுனந்தா, மின்மினி ஆகியோர் அளவுக்கு ஒரு தேக்கம் இல்லாது கடகடவென்று உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார் ராஜாவின் மந்திர மெட்டுக்களோடு.
நடிகை குஷ்பு பரபரப்பான ஒரு பிரபலமாக மாறிய போது கச்சிதமாகப் பொருந்திப் போனது சுவர்ணலதாவின் குரல். குறிப்பாக சின்னத்தம்பி, இது நம்ம பூமி, பாண்டித்துரை ஆகியவை சாட்சியம் பறையும். என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட்டில் தன்னுடைய அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக் குவித்துப் படத்தின் பெருவெற்றியிலும் பங்காளி ஆனார்.
வள்ளி திரை படத்தில் இடம் பெற்ற 'என் உள்ளே என் உள்ளே பல மின்னல் ' ஒரு அருமையான முக்கல் முனகல் இல்லாத விரக தாப பாடல் காதுகளை ஊடுருவும் போது மயிர்க்கூச்செறியும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் வாலிப கவிஞர் வாலியின் வாலிப வரிகள் .
http://img3.allvoices.com/thumbs/image/609/480/73638054-singer-swarnalatha.jpg
http://www.youtube.com/watch?v=iBpFOpWVf2s
rajeshkrv
13th September 2014, 12:14 PM
krishna ji arumai arumai. Swarnaltha writeup arumai
gkrishna
13th September 2014, 12:17 PM
நன்றி ராஜேஷ் சார்
chinnakkannan
13th September 2014, 12:32 PM
ஹையாங்க் கிருஷ்ணா சார்.. ஹேம நாத பாகவதருடன் நானா என த் திகைத்த டி.ஆர் மகாலிங்கம் நிலையில் இருக்கிறேன்..சேக்கிழாருடன் நானா.. நான் ஒரு சிறு குறு மணல்..ஓ.கே.. கொஞ்சம் குண்டு மணல்.. மிக்க நன்றி..இன்னும்வெ.தூ.போ.வே.,. உங்கள் ஆசியுடன்..
chinnakkannan
13th September 2014, 12:34 PM
கிருஷ்ணா சார்.. ராஜேஷ் ஜி ஸ்வர்ணலதா நினைவு தினம் என்று பகன்றதும் நானும் ஒரு பதிவு எழுதிப் பார்த்தேன்..வந்து பார்த்தால் ஏற்கெனவே எழுதியிருக்கிறீர்கள்..அருமை.. நானும் இடுகிறேன் சற்றே எடிட் செய்து.. நன்றி
chinnakkannan
13th September 2014, 12:37 PM
ஸ்வர்ணலதா..
ஒரு ச்சிலீர் வனிலா ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்பின் மீது இரண்டு நாவற்பழங்களை வைத்தாற்போலக் கண்கள்..வெளிர்மஞ்சள் சாத்துக்குடிச் சுளையைப் போன்ற மூக்கு..செம்மாதுளை முத்துக்களின் நிறத்தைக் கொண்ட உதடு..கொஞ்சம் கவர்ச்சிகரமான காட்டுப் பெண்ணின் உடையுடன் அந்த நாயகி ரம்யா கிருஷ்ணன் கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில் பாடிய பாடல் தான் ஸ்வர்ணலதாவின் குரலில் நான் கேட்ட முதல் பாட்டு..
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத் தான்
கன்னி நான் வாடுறேன்.. நடை போடுறேன்..
என்ற உச்சரிப்பு ர விற்கும் றவிற்கும் உள்ள அழகிய வித்தியாசம் ப்ளஸ் இனிமையான வித்தியாசமான குரல்..ஹை யார் இது..என்று பார்த்தால் ஸ்வர்ண லதா..
அவர் பற்றி விக்கிப்பீடியா என்ன சொல்கிறது..
கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்ட ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார். சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உயர் கல்வியையும் கற்றர்.
சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உயர்ந்த மனிதன் படத்தில் பி. சுசீலா பாடிய பால் போலவே என்கிற பாடலைப் பாடிக்காண்பித்தார். சொர்ணலதாவின் குரலில் தனித்துவம் தெரிய அதே ஆண்டில் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் 'சின்னசிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14வயது மட்டுமே. பின் இவர் 1988இல் வெளியான குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானு என்னும் பாடலை இளையராஜாவின் இசையமைப்பில் பாடினார்.
பின் தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.
புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்" படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது. இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். இப்போட்டிப் பாடலை இரு வெவ்வேறு குரல்களிலும் சொர்ணலதா, சங்கர் கணேசின் இசையமைப்பில் பாடினார். சொர்ணலதாவின் திறமையை நவ்ஷாத் அலி பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மோதிரத்தையும் சொர்ணலதாவுக்கு விருதுபோல வழங்கினார்.
• 1994 - இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
• 1991 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்கோலம்
• 1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
தமிழக அரசு சிறப்பு விருது
• 1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான கலைமாமணி விருது
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
• 1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்கோலம்
• 1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
• 1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க , மாயா மச்சிந்ரா
• 1999 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : முதல்வன் , பாடல் : உழுந்து விதைக்கையில
• 2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
ஃபிலிம்பேர் விருதுகள்
• 1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
• 1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
• 1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க
• 2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
• 2002 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : பூவெல்லாம் உன் வாசம் , பாடல் : திருமண மலர்கள்
நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா 2010, செப்டம்பர் 12 தனது 37வது அகவையில் காலமானார்[3
*
அவர் பாடிய நீ எங்கே என் அன்பே.. யில் சிரிக்கின்ற கண்களைக் கொண்ட குஷ்பு உணர்ச்சி வசப்பட்டு அழுகையாய் வாயசைக்க அந்தக் குரல் டபக்கெனப் பொருந்திய அழகு.. சார்லி சாப்ளின் முதலாம் சந்திப்பில்.. ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு , குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா...எவ்வளவு அழகிய பாடல்கள்.. இந்த எவனோ ஒருவன் யாசிக்கிறான்.. இருட்டிலமர்ந்து நான் யோசிக்கிறேன் என உருக்கும் குரலாய் கதானாயகியின் மன நிலையைப் பிரதி பலிக்கும் அழகிய பாட்டு.. யாரது யாரது அன்பே – மேட்டுக்குடிப்பாட்டில்..இது கனவா கற்பனையா.. என வரும் குரல்..ம்ம் நிறையப் பிடிக்கும்.
ஆறிலும் சாகலாம் அறியாத வயது நூறிலும் சாகலாம் அனுபவிச்ச வயது..இடைப்பட்ட வயசுல யாரும் சாகக் கூடாது – என நீலவானத்தில் கான்சர் பேஷண்ட்டான தேவிகா பேசுவதாக வசனம் வரும்..
ஜஸ்ட் தர்ட்டி செவன்..அதற்குள் எவ்வளவு விருதுகள்.. எவ்வளவு இனிய பாடல்கள்.. வித்தியாசமான இனிய குரல்..
கேட்பதற்காகவே காலன் அழைத்துக் கொண்டான் போலும்.. குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா இனி.. அவர் குரல் மட்டும் இசை விரும்புபவர்களின் மனதில் எந்தக்காலத்திலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்..
gkrishna
13th September 2014, 12:39 PM
அந்த ஆணவம் பிடித்த ஹேமநாத பாகவதர் . ஓட ஓட விரட்டிய ஈசன் அருள் இருந்ததால் பாணபத்திரர் வெற்றி பெறும் போது நம்ம சி கே அவர்களுக்கு எல்லா அருளும் இருக்கு :)
சி கே சார் ஜெயம் நம்ம பக்கம்தேன் . ஹேமநாத பாகவதர் சொன்ன உடன் நினைவு
ஹேமா ஆனந்த தீர்த்தன் னு ஒரு ஆள் கதை எல்லாம் விடுவாரே அதாவது எழுதுவாரே இதயம் பேசுகிறது இதழில் நினைவு உண்டா ?
gkrishna
13th September 2014, 12:42 PM
ஸ்வர்ணலதா..
ஒரு ச்சிலீர் வனிலா ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்பின் மீது இரண்டு நாவற்பழங்களை வைத்தாற்போலக் கண்கள்..வெளிர்மஞ்சள் சாத்துக்குடிச் சுளையைப் போன்ற மூக்கு..செம்மாதுளை முத்துக்களின் நிறத்தைக் கொண்ட உதடு..கொஞ்சம் கவர்ச்சிகரமான காட்டுப் பெண்ணின் உடையுடன் அந்த நாயகி ரம்யா கிருஷ்ணன் கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில் பாடிய பாடல் தான் ஸ்வர்ணலதாவின் குரலில் நான் கேட்ட முதல் பாட்டு..
அருமை அருமை சி கே சார் ஸ்வர்ணலதா பற்றிய பதிவு
சந்தடியில் ரம்யா கிருஷ்ணன் அழகு வர்ணனை
Gopal.s
13th September 2014, 12:44 PM
ஸ்வர்ணலதா..
சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உயர்ந்த மண் படத்தில் பி. சுசீலா பாடிய பால் போலவே என்கிற பாடலைப் பாடிக்காண்பித்தார். சொர்ணலதாவின் குரலில் தனித்துவம் தெரிய அதே ஆண்டில் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் 'சின்னசிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14வயது மட்டுமே. பின் இவர் 1988இல் வெளியான குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானு என்னும் பாடலை இளையராஜாவின் இசையமைப்பில் பாடினார்.
உயர்ந்த மண் ,அட பேரு புதுமையாத்தான் இருக்கு. வச்சிட்டா போகுது.
chinnakkannan
13th September 2014, 12:52 PM
ஸாரி கோபால் சார் கட் பேஸ்ட் செய்த போதுசெக் செய்யவில்லை..மன்னிக்க திருத்தி விடுகிறேன்.. (வரலாறு முக்கியம் அமைச்சரே) யூ டோண்ட் பிலீவ்.. மூன்று முறைவேறு விக்கிப் பீடியாவைப் படித்தேன்.. அதுவும் நாளை இந்த வேளை ஸ்வர்ணலதாவின் குரலில் எவ்ளோ அழகா இருக்கும்னு எண்ணம் வந்ததே ஒழிய படத்தலைப்பில் தவறென்று கண்ணில் படவில்லை..
கிருஷ்ணா ஜி.. நன்றி..(கொஞ்சம் ஆரம்பிக்கறதுக்கு இப்படித் தான் வருது…ச்சிலீர்னு ஆரம்பிச்சா தான் படிக்க உள்ளிழுக்க முடியும்னு ஆன்றோர்கள் சொல்லியிருக்காங்க..
உங்கள் ஆசிகளுக்கும் நன்றி கிருஷ்ணா சார்..அப்ப்புறம் ஹேமா ஆனந்ததீர்த்தன் ரிஸர்வ் வங்கியில் மேலதிகாரி என நினைவு..சட்டென்று அவரது கதைத்தலைப்புகள் நினைவில் வரவில்லை..கொஞ்சம் சிருங்காரமாக எழுதுவார்.யதார்த்த நடையில்!
mahendra raj
13th September 2014, 01:13 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-4.
ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.
எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )
எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு மூன்று உதாரணங்கள் .
1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?
2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.
3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.
4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)
எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.
இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.
(தொடரும்)
Before 'Nenjil Oor Aalayam (1962) it was 'Policekkaaran Magal' (1961) where Sridhar used the combo of Viswanathan Ramamurthy and Kannadhasan.
Richardsof
13th September 2014, 01:17 PM
FLASH BACK
http://i61.tinypic.com/152jrlw.jpg
Richardsof
13th September 2014, 01:18 PM
CHENNAI - STAR TALKIES
http://i58.tinypic.com/2cpuydy.jpg
http://youtu.be/K-tmCoHv7aA
Gopal.s
13th September 2014, 01:22 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-5.
ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.
ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)
எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.
இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.
chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.
கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.
இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.
அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.
மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.
சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?
Gopal.s
13th September 2014, 01:23 PM
Before 'Nenjil Oor Aalayam (1962) it was 'Policekkaaran Magal' (1961) where Sridhar used the combo of Viswanathan Ramamurthy and Kannadhasan.
I am 100% right. both are released in 1962. But they are booked first time by sridhar for nenjil or alayam replacing A.M.Raja. next is policekaran magal. 1961 -Sridhar had only thennilavu to his credit as director.
Richardsof
13th September 2014, 01:37 PM
http://i61.tinypic.com/jubatv.jpg
Gopal.s
13th September 2014, 01:39 PM
அந்த ஆணவம் பிடித்த ஹேமநாத பாகவதர் . ஓட ஓட விரட்டிய ஈசன் அருள் இருந்ததால் பாணபத்திரர் வெற்றி பெறும் போது நம்ம சி கே அவர்களுக்கு எல்லா அருளும் இருக்கு :)
என்னதான் அகந்தை இருந்தாலும் ஹேம நாதர் திறமைக்கு உலகம் அடிமையே. அவரின் ஒரு நாள் போதுமா பாட்டை உலகம் மெச்சிய அளவு இசை தமிழையும்,பாட்டும் நானேயையும் மெச்சவில்லை.
என்ன content என்று கூட படிக்காமல் cut &paste பண்ணும் தருமியான உமக்கு,ஆயிரம் பொற்காசுகளுக்கு வழி செய்வான்.பிழைத்து கொள்ளுங்கள்.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.